Archive for the ‘ஸ்ரீ வசன பூஷணம்’ Category

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -160-174-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-சித்த உபாய நிஷ்டா வைபவம்– ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 17, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் – முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது- பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில்- முதல்- ஆறாவது – எட்டாவது- ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————————

சூரணை -160-
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

அவதாரிகை –
இப் பிரகரண ஆதியிலே உபாயத்துக்கு என்று தொடங்கி ,உபேய அதிகாரமும் சில சொல்லிற்றே ஆகிலும் ,அது
பிராசங்கிகம் இத்தனை–இனி உபேய அதிகார பரமான பிரகரண சேஷத்தாலும் உத்தர கண்ட அர்த்தத்தை அருளிச் செய்கிறார்-
அது செய்கிற இடத்தில் ,பாஷ்ய காரர் கத்யத்தில் ,உத்தர கண்ட அர்த்தம் அனுசந்த்து அருளின காலத்திலே நம சப்த
அர்த்தம் முன்னாக அருளி செய்கிறார் ..அதில் இந்த நமஸ் தான் பிராப்ய விரோதி நிவ்ருத்தி ,பிரதி பாதம் ஆகையாலே ,
பிராப்ய விரோதிகள் ஆனவற்றை ,தர்சிப்பதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் அவற்றிலே ஒன்றை அருளி செய்கிறார் -தனக்கு தான் என்று தொடங்கி–

சேஷத்வ பாரதந்த்ர்யம் ஸ்வரூப அந்தரங்க குணங்கள் -ஸூ கதமானவை -இவையும் தீமையாகும் -அவன் அனுபவத்துக்கும் போகத்துக்கும்-
இங்கே -இஷ்ட விநியோக அர்ஹமான சேஷத்வத்தால் வரும் தீமை —
பிரமிக்கிற தான் -இந்த தசையில் கூடாதே -சேஷி இத்தை அழித்து விநியோகிக்கும் தசை –
தான் என்னை முற்றப்பருக -ஆள் கொள்வான் ஒத்து -போகத்திலே தட்டு மாறுமே –
விண்ணாட்டவர் மூத்தவர் -இவர் இங்கே பட்டத்தை யார் படுவார்-ஆர் உயிர் பட்டது – என்கிறாரே ஆழ்வார்
மநோ வாக் காயை –என்று தொடங்கி -நாநா வித அபசாரங்கள் பிரதிபந்தகங்களை க்ஷமிக்க –க்ஷமஸ்வ -என்று பிரார்த்தித்தால் போலே –
நமஸ் -சப்தார்த்தம் முன்னால் –திருமந்திர நமஸ் இல்லை த்வயத்தில் உள்ள உத்தர வாக்ய நமஸ் அர்த்தம் –
ப்ராப்ய விரோதி -இந்த நமஸ் தான் -என்று மா முனிகள் காட்டி -அருளுகிறார் -ஸூ போக்த்ருத்வ புத்தி கூடாதே /
சேஷத்வத்தை -ஸூ அர்ஹ சேஷத்வம் ஆகிய நன்மை -பர அர்ஹம் இல்லாமல் -தனக்கு தான் தேடும் சேஷத்வம் ஆகிய நன்மை —
அநாதி கால ஆர்ஜித தீமைகள் -அக்ருத கரண –நாநா வித -அவற்றுக்கு சமம் ஆகுமே —
ஸூவ அர்ஹ சேஷத்வத்தையும் போக்கி அருள பிரார்த்திக்க வேண்டும் -பாஷ்யகாரர் அருளிச் செய்தவற்றுக்கு மேலே –

வியாக்யானம்-
கீழே  ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நன்மை தானே தீமை ஆய்த்து -என்று ஸ்கவத பிரபத்தி
சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது தீமையாய் தலைக் கட்டும் படி சொன்ன இத்தாலே
உபாய தசையிலே தனக்கு தான் தேடும் நன்மை தீமை ஆம் என்னும் இடம் அருளி செய்தாராய்-
இப் பிரசங்கத்திலே உபேய தசையிலும் தனக்கு தான் தேடும் நன்மை தீமையாய் விடும் என்னும் இடம்
அருளிச் செய்கிறார் என்று கீழோடு இதுக்கு சங்கதி —
தனக்கு -இத்யாதி –அதாவது சேஷி யானவன் போக தசையிலே தன் வியாமோஹத்தாலே
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -திருவாய்மொழி -9-6-9
என்னும் படி தன் திறத்தில் மிகவும் தாழ நின்று ,பரிமாறும் அளவில்,நாம் சேஷ பூதர் அன்றோ –நம் சேஷத்வத்தை நோக்க வேண்டாவோ
என்று ஸ்வ நைச்ச்ய அனுசந்தானத்தாலே பிற்காலித்து ,தனக்கு தான் தேடுகிற சேஷத்வம் ஆகிய நன்மை அநாதி காலம் – ஸ்வதந்த்ரோஹம்
என்று இருந்த தீமை யோபாதி அவன் போகத்துக்கு பிரதி பந்தகமாய் இருக்கும் என்கை —
தீமை என்று அக்ருத்ய கரணாதிகளை சொல்லவுமாம்

————————————————-

சூரணை -161—

அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப்  போல —

சேஷி உடைய விருப்பத்துக்கு உடலாய் ஆத்மாவுக்கு அலங்காரமாய் இருக்கும் சேஷத்வம்
போக விரோதி ஆகிற படி எங்கனே என்ன அருளிச் செய்கிறார்–அழகுக்கு -என்று தொடங்கி-

நாயகன் உகக்கும் அழகுக்கு இட்ட சட்டை -போக தசையில் அணைக்கைக்கு கழற்றி வைக்குமா போலே –
ஆத்ம அலங்காரம் சேஷத்வம் போகத்துக்கு ஏற்புடையாமல் இருந்தால் விலக்கி வைக்க வேண்டுமே-
கௌஸ்துபத்துக்கு பிரபை போலே -ஆத்மாவுக்கு அலங்காரம் –
சட்டை போலே ஸ்த்ரீக்கு -இந்த அலங்காரம் சப்தம் வியபதேச அர்ஹம் -பிரயோஜகத்வேனே–

அதாவது ஸ்திரீக்கு அழகுக்கு இட்ட சட்டை நாயகன் உகப்புக்கு விஷயமுமாய் அவளுக்கு அலங்காரமாய் இருந்தது ஆகிலும் ,
போக தசையில், ஆலிங்கன விரோதியாம் போலே இதுவும் போக விரோதி யாம் என்ற படி-

————————————–

சூரணை -162–

ஹாரோபி—162–

அழகுக்கு உடல் ஆனது அனுபவ விரோதி யாம் என்னும் இடம் சேஷி வசனத்தாலே ,தர்சிப்பிகிறார் மேல் ஹரோபி-என்று-

இப்படி இருந்தும் – நூறு யோஜனை கடலும் மலையும் மரங்களும் பிரித்து வைத்து உள்ளதே என்று /
சட்டை போலே ஹாரம் -அலங்காரத்துக்கு தானே இது –
அபிமத ஆபரணமும் தசா விசேஷத்தில் அநபிமதமானதே –
ஹாரோபி -ஹாரம் கூட –சின்மயமான நித்ய ஸூ ரிகள்-தானே -லௌகிக ஹாரம் இல்லையே –
ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -நித்ய ஸூ ரிகள் -பிரியா அமரர்கள் –கூட இல்லாமல் –
பால் வழு லிங்க வியாக்த்யாயம் -பீருவா ஸ்த்ரீ லிங்கம் வர வேண்டும் –
பீருணா-என்பது -ரிஷிகள் இந்த பால் வழு பண்ணலாமே —
பயப்பட்டது சீதை –பயந்து தன் கழுத்தில் தான் அணியவில்லை என்றவாறு –அன்றிக்கே
ராமன் என்றும் கொள்ளலாமே -ராமன் பயந்து அணிவிக்காமல் இருந்தான் என்றுமாம் –
எடுத்து கொடுத்து பூணுவாள் -இவருக்கு பிடித்த சேஷத்வம் –
இந்திரன் பட்டாபிஷேகத்துக்கு முத்து வடம் வர வளைத்து –
பிராட்டிக்கு பிடித்ததால் தான் திருக்கண்ணால் நோக்கி திருவடிக்கு ஆம் பரிசு அருளினார்கள்
ஸூ பிரகாசம் தானே விளங்கும் – மற்றவற்றை விலக்கும் –விலகாது இருந்தாலும் பீதி அதிசயத்தாலே அதுவும் பூண வில்லை

ஹாரோபி  நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா – என்று-
சம்ச்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை
என்றார் இறே பெருமாள் –பீருணா என்கிற லின்கவ்யத்யயம்  ஆர்ஷம் ..
அன்றிக்கே அழகுக்கு இட்டது அணைக்கைக்கு விரோதியாம் என்னும் இடம்
அறிவிக்கையே பிரயோஜனமாக்கி லிங்க அனுகுணமாக பெருமாள் தம் அளவிலே யோஜிக்க்கவுமாம் –
பீருணா சொல் ஆண் பால் என்பதால் அச்சம் கொண்ட சீதையாலே -பெருமாள் எந்த வித நகையும் அணிய வில்லை என்றும் கொள்ளலாம்
பிரதி கூல விஷய   ஸ்பர்சம்  விஷ ஸ்பர்சம் போலே–

——————————————

சூரணை -163–

புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவத்துக்கு  விலக்கு –

ஆனால் பின்னை பாரதந்தர்யமேயோ நல்ல தென்ன அருளி செய்கிறார் மேல்-

புண்யம் த்ருஷ்டாந்தம் -இங்கு -பாபங்களும் புண்யங்களும் விலக்காக வேண்டுமே —
பாபபுண்யம்- சேஷத்வ பாரதந்தர்யம் -சஜாதீயம் விஜாதீய சாம்யம் மூன்றும் உண்டே இவற்றுக்கும்
கர்மம் ஒரே ஜாதி இவை இரண்டும் / மோக்ஷ விரோதி என்பதால் சாம்யம் / சுகம் துக்கம் கொடுக்கும் என்பதால் விஜாதீயம்
சேஷிக்கு பிரியம் -சஜாதீயம் /சேஷத்வம் மட்டும் -நைச்ய அனுசந்தானம் பண்ணி நகரலாம் -பாரதந்தர்யம் அறிந்தவன் நகர முடியாதே -இதனால் -விஜாதீயம் -/
அனுபவிக்க இரண்டும் விரோதியாய் இருந்தால் அவனுக்கு பிடிக்காதே /புண்யம் -நன்மை என்றும் – ஸத்கர்மா போலவும் –துரும்பு போலே விலக்க வேண்டும் —
அநாதி கால ஆர்ஜித புண்யம் மோக்ஷத்துக்கு விலக்காகுமே–பர அனுபவத்துக்கும் மோக்ஷம் போவதற்கும் என்று –
ஸூ வாதீன சேஷத்வ பாரதந்தர்யங்கள் த்யாஜ்யம் -போக அதீனமானவை போக உபகரணங்கள் போலே உபாதேயம் –
தத் போக அனு ரூபமான சேஷத்வ பாரதந்தர்யங்கள் பர அதிசயத்வேன-சேஷித்வ ஸ்வ தந்த்ரனுடைய சரம -பரா காஷ்டை போலே இருக்க வேண்டுமே – –
போகத்துக்கு அனுகுணமாக எது இருப்பதோ அதுவே ஸ்வரூபம் –
கேவல பாரதந்தர்யம் -எதிர் விழி கொடுக்காமல் இருப்பது /கேவல சேஷத்வம் -நைச்ய அனுசந்தானம் பண்ணி விலகுவது –
இரண்டுமே அவனுக்கு – போக விரோதிகள் தானே –
நைச்ய அனுசந்தானம் பண்ணி விலக்க மாட்டானே இவன் -அனுபவிக்கும் போது விலக்காமல் இருக்க வேண்டும் -பரதந்த்ரன் விலக்க மாட்டான் –
எதிர் விழி கொடுக்க மாட்டான் -அவனை விட கொஞ்சம் தேவலை -அது விஜாதீயத்வம் –
கேவல இல்லாமல் சேஷத்வமும் பாரதந்த்ரயமும் சேர்ந்தே இருக்க வேண்டும் -என்றவாறு –

புண்யம் என்றது கீழ் நன்மை என்கிற சொல்லாலே சொன்ன சேஷத்வத்தை ..அது கீழ் சொன்ன படியே
ஸ்வ நைச்ய அனுசந்தாதாலே இறாய்க்கைக்கு உறுப்பாய் கொண்டு யாதொரு படி போக விரோதியாய் நிற்கும்
அப்படியே போக தசையிலே ,அவனுக்கு எதிர் விழி கொடாதே அசித் போலே கிடைக்கைக்கு உறுப்பான
கேவல பாரதந்த்ர்யமும் எதிர் விழி சாபேஷனான ஈஸ்வரனுடைய போகத்துக்கு இடறு படியாம் என்ற படி-
அன்றிக்கே புண்யம் என்கிறது சத் கர்மத்தையாய் அது யாதொரு படி பாபத்தை காட்டில் –
வியாவிருத்தமாய் இருக்கச் செய்தே பகவத் பிராப்தி பிரதி பந்தமாய் நிற்கும் .அப்படியே இறாய்க்கைக்கு உறுப்பான
சேஷத்வத்தில் காட்டில் ,அசித்து போலே எதிர் தலை இட்டது வழக்காய் இருக்கைக்கு உறுப்பு ஆகையாலே
வ்யாவிருதமான பாரதந்த்ர்யம் எதிர் விழி கொடுக்கைக்கு உறுப்பு அல்லாமையினாலே
பரனுடைய அனுபவத்துக்கு பிரதி பந்தகமுமாம்-என்னவுமாம்
இத்தாலே கேவல சேஷத்வமும் கேவல பாரதந்த்ர்யமும் ஓரோர் ஆகாரங்களாலே  போக விரோதியாய் நிற்கும்-
பாரதந்தர்யதோடு கூடின சேஷத்வமே உத்தேசம் என்கை

—————————————–

சூரணை -164–

குணம் போலே சேஷ நிவ்ருத்தி –164–

இப்படி உபேய தசையிலே சேஷத்வ பாரதந்தர்யங்கள் பர அனுபவத்துக்கு விலக்காம் படியை
அருளிச் செய்த அநந்தரம்
பிராப்தி தசையிலே இவன் உடைய நிர்பந்த மூலமாக உண்டான தோஷ நிவ்ருத்தி-
பர அனுபவத்துக்கு விலக்காம் படியை அருளிச் செய்கிறார் இத்தால்–

சரம சரீர ஆசை உண்டே / நிர்பந்திக்கக் கூடாதே -/கேவல சேஷத்வ பாரதந்தர்யங்கள் பிடிக்காதது போலே இதுவும் -பர அனுபவத்துக்கு இலக்கு /
நிச்சய அனுசந்தானம் கூடாதாப் போலேயும் / எதிர்விழி கொடுக்காமல் இருந்தாப் போலேயும் இதுவும் /
அருள் பெறுவார் தசையில் -திருவட்டாறு எம்பெருமானும் இருக்க –
ஆழ்வார் நிர்பந்திக்கும் சந்தர்ப்பம் பிராப்தி தசையில் இவனுடைய நிர்பந்தம் மூலமாக தோஷ நிவ்ருத்தியும் விலக்கு தானே /
குணம் ஏக வசனம் இங்கு -அந்தரங்க குணமாக இவை இருப்பதால் -ஏக வசனம் -ஜாதி ஏக வசனம் –
காம க்ரோத சத்ருவை வெல்ல வேண்டும் -ஒரே தாய் பிள்ளைகள் போலே /
தத்வமஸி போலே நடுவில் உள்ளவற்றை சேர்த்தே அர்த்தம் கொள்ள வேண்டும் இந்த சூரணைக்கு/
மங்க ஒட்டு உன் மா மாயை -விலக்கு ஆகுமே –எம்பார் ஸ்வாமி அரும் பொருளில் இதுக்கு சமாதானம் உண்டே -/
விமல சரம திருமேனியில் ரமித்து இருப்பான் -ரமதே தஸ்மத் ஜீரண -சுருதி /ஸ்வரூபஞ்ஞர் ஆழ்வார் -வேர் சூடுபவர் –விக்ரகத்தோடே ஆதரிக்கும் /
வஞ்சக் கள்வன் -பாட்டை / அவனுக்கே அருசி பிடிக்கும் படி உபதேசித்து –
தேகத்தின் ஹேயத்தை அறிவித்து அவனைக் கொண்டே விடுவித்துக் கொண்டாரே /
தோஷ நிவ்ருத்தி தன் விருப்பம் படி இல்லை-அவன் கேட்டு அவனே தள்ளினார் /
மாற்றி நினைக்கும் மருள் உண்டோ பகவானுக்கும் -ஆஸ்ரித வியாமோஹத்தால் வந்த மருள் தெருள் தானே /
ஸார்வ பவ்மன் உண்ணப் புக்கால் -நாலு ஆறும் அறிவிக்கும் ஆழ்வார் —
உண்மை ஸ்வ பாவம் அருளிச் செய்யத் தானே அடியிலே நீர் மயர்வற மதி நலம் அருளினீர் என்று –
அறிவிக்க -ஸ்வ பாவம் அறிந்த ஸார்வ பவ்மன்– – சொல்லிக் கொண்டு இருக்கும் தனது தொழிலை செய்யாமல் இருந்தால் மஹா அபராதம் /
சர்வ விஷயங்களையும் அறிவிக்க தானே இவன் கொடுத்த மதி நலம் / இதை பெற்ற இடத்திலேயே திரு நகரியிலே அங்கேயே சமித்து –
பொலிந்து நின்ற பிரான் தன் திவ்ய ஆஸ்தானத்திலே – இந்த சரீரம் பரம பதம் கூட்டி போக மாட்டேன்–இங்கேயே அனுபவிக்கக் குறை இல்லையே – –
பொலிந்து நின்ற பிரான் அனுபவித்திக் கொண்டே இருக்கிறானே -ஆத்மாவை அனுபவிக்கும் இடத்தில் அத்தை அங்கே அனுபவித்து –
இத்தை இங்கேயே அனுபவித்திக் கொண்டு இருக்கிறானே /

குணம் என்கிறது -கீழ் விரோதியாக சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டையும்-
இவை தான் ஆத்மாவுக்கு அந்தரங்க குணமாய்  இறே இருப்பது —
இது போலே தோஷ நிவ்ருத்தி என்றது
இவ் ஆத்மா குண துயமும் கீழ் சொன்ன படியே யாதொரு படி பர அனுபவத்துக்கு விலக்கு ஆகிறது
அப்படியே இவன் நிர்பந்தித்துக் கொள்ளுகிற பிரகிருதி சம்பந்தம் ஆகிற தோஷத்தின் உடைய நிவ்ருத்தியும் –
சரம சரீரம் ஆகையாலே இத்தோடு சிறிது தான் வைத்து அனுபவிக்க இச்சிக்கிற அவனுடைய அனுபவத்துக்கு- விலக்காம் என்கை ..
குணம் போல என்று பாரதந்த்ர்யம் ஒன்றையும் திருஷ்டாந்தம் ஆகிறதாகவுமாம்–

———————————————

சூரணை -165–

ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் நின்றது இறே  –

தோஷ நிவ்ருத்தியில் ஆத்ம ஸ்வரூபம் அத்யந்த பரிசுத்தமாய் போக்யமாயிருக்கும் அதனை அன்றோ-
ஆன பின்பு தோஷ நிவ்ருத்தி அநபிமதமாய் தோஷம் அபிமதமாய் இருக்க கூடுமோ என்ன அருளிச் செய்கிறார்-
ஆபரணம் என்று தொடங்கி-

தோஷம் அபிமதமாய் ஸூ தோஷத்தை போக்கும் அதுவும் அநபிமதமாகுமோ -என்னில் / கண் மூடி தனமாக ஒருவரை ஆசை கொண்டால் –
அசோகவனிகை பிராட்டி அணிந்த ஆபரணம் பெருமாளுக்கு அந பிதமாய் -பத்து மாதம் -உடை முடி பேணாத அழுக்கு அபிமதமாய் இருந்ததே –
அப்படியே ஸூ யத்ன க்ருத நிர் தோஷத்வம் –சரீரம் கழற்றும் பொறுப்பு அவரது -அங்கீ கார தசையில் அநபிமதமாய் –
ச தோஷத்வமே வத்சலனான ஸ்வாமிக்கு அபிமதமாய் இருக்குமே –
உண்ணும் சோற்றை திரு வாயில் இருந்து விலக்குவதுக்கு ஒக்குமே / லௌகீகத்திலே இப்படி காண்கிறோமே /
நீண்ட கண்கள் காது வரை நீலோத்பல புஷபம் போலே இருக்க வேறே பூ வேண்டுமோ வீண் தானே /அழுக்குடன் பீளை இருக்குமே -/அது உகந்தானே /
மலர்ந்த மார்பு இருக்க ஹாரம் பாரம் தானே / / இயற்க்கை மணம் இருக்க சந்தனம் வீணே

அதாவது லோகத்தில் விஷய பிரவணராய் இருப்பார்க்கு அபிமத விஷயத்தின் உடைய ஒவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம்
அநபிமதமாய் அனவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாயிரா நின்றது இறே என்கை-

——————————————-

சூரணை -166–

ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிபது  –166-

இது தான் லௌகிகத்தில்  அன்றிக்கே ,பிராட்டி திறத்தில் அவன் தனக்கும் இப்படி இருந்தமைக்கு
ஸூ சுகமான வார்த்தையை ஸ்மரிக்கிறார்-மேல் ஸ்நானம் -என்று தொடங்கி-

ராம வார்த்தை /சீதா வார்த்தை / இருவர் அபிப்ராயப்படி அருளிச் செய்த ஸ்லோகங்கள் உண்டே /திருவடி நினைவு படுத்த பரபரப்புடன் விபீஷண பெருமாள்
அஸ் நாதா தர்ச இதி த்ரஷ்டும் இச்சாமி சீதை சொல்ல- ராமர் வார்த்தையை உள்ளர்த்தம் புரியாமல் விபீஷணன் சொல்ல /
சதஸ் வார்த்தை -வேறே உள்ளக கருத்து வேறே -விபீஷணன் நிர்பந்தம் -பிராட்டி மருந்து ஸ்நாநம் /
முதலிகளை தள்ளிய அபசாரம் மூடு பல்லக்கில் கூட்டி வந்ததை தப்பாக கொண்டு -இது இரண்டாவது காரணம் பெருமாள் கோபம் கிளப்ப
/பார்க்க பிரதிகூலயை-கண் புரை வந்த வனுக்கு தீபம் போலே /
ராக்ஷஸாதிப -என்னை இப்படியே காட்ட ஆசைப்படுகிறேன் -பர்த்தா ஆஜ்ஜா இது -வாய் வார்த்தையாக சொன்னதை -/
திருவடி பிராட்டி கருத்து அறிந்து விபீஷணனுக்கு கண்ணும் கண்ணநீருமாய் அழுக்கு உடம்புடன் ஸ்நானம் பண்ணாமல் இருக்கும் தன் திரு உடம்பை
பெருமாளுக்கு காட்ட ஆசை கொண்டதை – அறிவிக்க / பெருமாளுக்கு உண்டான ஹார்த்த பாவம் கண் மூக்கு தோள் இவை காட்டினாலும் –
அறியாமல் வாய் வார்த்தை மட்டும் கேட்டு நிர்பந்தித்தான் –
ஸ்நானம் பண்ணி வந்தால் பர்தாவுக்கு ரோஷம் வரும் என்று பிராட்டி சொன்னதாகவும் கொள்ளலாமே –

அதாவது பிராட்டி திரு மஞ்சனம் செய்து வந்தது -பெருமாளுக்கு ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கிற
தீபோ நேத்ரா துரச்யேவ பிரதிகூலாசி மே த்வம் –என்கிற வார்த்தையை இவ் அர்த்தத்துக்கு உடலாம் ஸ்மரிப்பது என்கை-
சபங்கா மலங்காரம் – இத்யாதி படியே –பத்து மாசம் திரு மஞ்சனம் பண்ணாமல் அழுக்கு அடைந்து இருந்த வடிவை காண ஆசை பட்டு இருந்தவருக்கு
இவள் திரு மஞ்சனம் பண்ண இது  ரோஷ ஜனகம் என்பது சொல்ல வேண்டா இறே ..
ஆனால் தீர்க்க முஷ்ணம் விநிச்வச்ய மேதிநீவ மவலோகயன்  உவாச மேகசங்காசம் விபீஷண உபச்திதம் —
திவ்ய அங்க ராகம் வைதேகீம் திவ்ய ஆபரண பூஷிதாம்  இஹா சீதாம் சிரச்ச்னான முபச்தாபாய மாசிரம்-என்று
இவர் தாமே அன்றோ திரு மஞ்சனம் பண்ணி அலங்கரித்து கொண்டு வரும்படி ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் பார்த்து அருளிச் செய்தது ..
இப்படி இருக்கச் செய்தே பின்னை ரோஷம் ஜனிப்பான் என் என்னில் ..  நாம் நல் வார்த்தை சொல்லி விடக் கடவோம்- தானே அறியாளோ
என்று சொல்லி விட்டார் இத்தனை போக்கி அது சஹ்ருதமாய் சொன்ன வார்த்தை இல்லை– அல்லாத போது ருஷ்டராக கூடாது இறே ..
அவன் தான் -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்தாரம் ராஷசாதிப –என்று இருக்கச் செய்தே ,
யாதாஹா ராமோ   பார்த்தா தே ததாதத் கர்த்து மர்கசி–என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிர்பந்தித்துச் சொன்ன பின்பு அன்றோ திரு மஞ்சனம் பண்ணிற்று என் என்னில் —
அவன் பெருமாள் திரு உள்ளக் கருத்தை அறியாதே ,அருளிச் செய்த வார்த்தையைக் கொண்டு ,சொன்னான் இத்தனை இறே
எல்லாம் செய்தாலும் பத்து மாசம் ராவண பவனத்திலே இருந்த இவள் சிறை இருந்த வேஷத்தோடே சென்று காணும் அத்தனை அல்லது ,
திரு மஞ்சனம் பண்ணேன் என்று இருக்க வேணும் இறே ..அது செய்யாதே சடக்கென திரு மஞ்சனம் செய்து வந்தாள் இறே
அது அவ் இருப்பு காண ஆசை பட்டு இருப்பார்க்கு ரோஷ ஹேது ஆயத்து –ஆகையாலே ஸ்நானம் ரோஷ ஜனகம் என்னக் குறை இல்லை
அன்றிக்கே-ஸ்நானம் ரோஷ ஜனகம் என்ற வார்த்தை யாவது-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் திரு மஞ்சனம் செய்து
அருள சொன்ன போது ,பெருமாள் திரு உள்ளத்தை அறியும் அவள் ஆகையாலே அவர்க்கு இது அநபிதம் ஆகையாலே
ரோஷ ஜனகமாய் வந்து முடியும் என்று நினைத்து -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்த்தாரம் ராஷச அதிப -என்று
பிராட்டி அருளிச் செய்த வார்த்தையும் ஆகவுமாம்..
ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கும் வார்த்தை என்று கீழ் சொன்ன நியாயம் இங்கும் ஒக்கும்

——————————————

சூரணை -167–

வஞ்ச கள்வன் மங்க ஒட்டு —

இப்படி அபிமத விஷயத்தில் ,அழுக்கு உகக்குமா போலே
ஆத்ம ஞானம் பிறந்தவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இத் தேகத்தை
ஈஸ்வரன் விரும்ப எங்கே கண்டது என்ன அருளிச் செய்கிறார் -வஞ்ச கள்வன் -இத்யாதியாலே-

அனுஷ்டான சேஷமாக ஆஸ்ரிதர் அழுக்கை உகப்பது இதில் -கீழே அனுஷ்ட்டிக்க முடியாமல் கோபம் /-10–7-வஞ்சக கள்வன் தொடங்கி
மங்க ஒட்டு என்னும் அளவாக பத்து பாட்டுக்கள்
பூவோடு ஏறின நாறு -சம்பந்தம் கொண்டு விரும்புமா போலே ஒரு நீராகக் கலந்து –நின்றார் அறியா வண்ணம் -பெரிய பிராட்டியாரும் அறியாத படி
ஆத்மாத்மீயங்களை நெஞ்சும் உயிரும் உண்டு தானே போக்தாவாயும் பரிபூரணனனுமாய் ஆனான் –
விட இசையாமல் விரும்பி -ஆழ்வார் த்யாஜ்யமான தேகம் -அபிமத விஷயம் –ஆத்ம ஞானம் பிறந்த இவன்
அழுக்கு உடம்பு எச்சில் வாய் என்று கழிக்கும் தேகத்தை அன்றோ விரும்புகிறான் /
அதீத சபலமாக -விமல சரம திருமேனியுடன் திரு நாட்டுக்கு கொண்டு போக -இதனுடைய தோஷங்களை உணர்த்தி -மங்கும் படி இசைய கால் கட்டி –
நன்கு என் உடலம் கை விடான் -என்னை முற்றும் உயிர் உண்டான் –நாங்கள் குன்றம் கை விடான் -திருமலை அளவு இவர் இடம் வ்யாமோஹம் –

வியாக்யானம்
அதாவது வஞ்ச கள்வன் என்று தொடங்கி மங்கவோட்டு என்னும் அளவாக தன்னுடைய திரு மேனியிலே ,
அத்ய ஆதரத்தைத் பண்ணி அவன் அனுபவித்த படிகளையும்.
அவ் அளவுக்கு இன்றிக்கே அதி சாபலத்தாலே இத் திருமேனியோடு தம்மை திரு நாட்டில் கொண்டு
போவதாக அவன் அபிவிநிஷ்டானாய் இருக்கிற படியைக் கண்டு ,–பிரானே இப்படி செய்து அருள ஒண்ணாது –
என்று நிர்பந்தித்து இதின் உடைய தோஷத்தை அவனுக்கு உணர்த்தி ,இப்படி ஹேயமான இது  மங்கும் படி இசைய வேணும் என்று கால் கட்டி ,
அவன் இத்தை விடுவித்து கொண்டு ,போம்படி வருந்தி இசைவித்துக் கொண்ட படியும் அருளி செய்தார் இறே ஆழ்வார் –திருவாய்மொழி -10-7–

————————————

சூரணை -168–

வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —

த்யாஜ்ய தேக வியாமோஹம் / மணத்தின் வாசி அறிந்து போகிகள் -மண்ணை உதறினால் மணம் குன்றும் என்னுமா போலே
பரம போகியான எம்பெருமானும் விமல சரம தேகியான ஞானியை -விக்ரஹத்தை விடுவிக்கில் ஞான வாசனை செவ்வி குலையுமே என்று ஆதரிப்பான் –
அபிமத விஷயத்தில் –அழுக்கு போலே ஆதரிப்பது மட்டும் இல்லை -கோபம் வரும் -பிடிக்காதது மட்டும் இல்லை –கீழே பார்த்தோம் –/
ஆதரிப்பது மட்டும் இல்லை –தேகத்தை கழற்ற ஒட்டான்-/தேகம் படைத்த அனைவருக்கும் இப்படி பட்ட ஆழ்வாரை காண்பது கர்தவ்யம் அன்றோ –
ஞான பரிமளம் தோற்றும் இந்த விக்ரஹத்திலே -/

————————————

சூரணை -169–
பரம ஆர்த்தனான இவனுடைய
சரீர ஸ்திதிக்கு  ஹேது
கேவல பகவத் இச்சை இறே –

இன்னம் முகாந்தரத்தாலே இவன் தேஹத்தில்- அவன் விருப்பத்தை-தர்சிப்பிக்கிறார் –

பகவத் ஸ்வா தந்தர்யம் -யாராலும் தாண்ட முடியாதே / சம்சாரம் அடிக் கொதித்து -உடன் கூடுவது என்று கொலோ திருஷ்ணை அதிகரித்து –
பரம ஆர்த்த திருப்த பிரபன்னனுடைய நிர்மூல கர்ம சரீரத்தை, -வஸ்து வாசி அறிந்த அவன் இச்சையால் –
முமுஷுத்வ பரிபாகம் ஏற்பட்ட பின்பும் இருக்கைக்கு அடி -நித்ய போக்தாவின் இச்சையே -போக அனுகுண கேவல இச்சை –
முன்பு உள்ளது -லீலா அனுகுண கர்ம நிபந்தன இச்சை /
வேறே கோணத்தாலே -என்றது -கீழே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்தி கொண்டு மங்க ஒட்டு இத்யாதி / இப்பொழுது பிரபத்தி ஸ்வ பாவம் விளக்கும் சாஸ்திரம் –
பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பு சரீரம் தொலைந்து போவான் -இதுவும் அவன் இச்சித்தால் தான் நடக்கும் -சக ஹ்ருதயம் –வேண்டுமே –
பிராரப்த கர்மம் அடியாக இருக்கிற த்ருப்த விஷயத்திலும்-வர்த்தமான பிராரப்த கர்மம் உண்டே இவனுக்கு –
பகவத் இச்சை உண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் கேவல சப்தத்தாலே

பரம ஆர்த்தன் ஆகிறான் –
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை -திருவிருத்தம் -1
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -திருவாய்மொழி -3-2-2 –
எங்கு இனி தலை பெய்வன் -திருவாய்மொழி -3-2-9 – – –
நாளேல் அறியேன் -திருவாய்மொழி -9 -8 -4 –
தரியேன் இனி -திருவாய்மொழி – 5- 8- 7-
கூவிக் கொள்ளும்  காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6 -9 -9 – என்று
சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும் –
பகவத் அனுபவத்தில் பெரு விடாயாலும் –
இதுக்கும் மேல் இல்லை என்னும்படி ஆர்த்தி விளைந்தவன் -ஏவம் பூதனானவனுடைய சரீர ஸ்திக்குக்கு ஹேது- பிராரப்த  கர்மம் என்ன ஒண்ணாது இறே –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்றதோடு விரோதிக்கையாலே –
ஆர்த்தா  நா மாசுபலதா சக்ருதேவ  கருதா ஹ்யசவ் த்ருப்தா நாமபி ஜந்தூனாம் தேஹாந்தர  நிவாரிணீ-என்று இறே பிரபத்தி ஸ்வாபம் தான் இருப்பது –
ஆகையால் இவனுடைய  சரீர ஸ்திதுக்கு ஹேது -இன்னமும் சில நாள் இவனை  இச் சரீரத்தோடே வைத்து அனுபவிக்க வேணும் -என்கிற
ஈஸ்வர இச்சை ஒழிய வேறு ஓன்று இல்லாமையாலே -கேவல பகவத் இச்சை இறே -என்கிறார்-
பிராரப்த கர்மம் அடியாக இருக்கிற த்ருப்த விஷயத்திலும் -பகவத் இச்சை உண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் கேவல சப்தத்தாலே

——————————————————-

சூர்ணிகை -170-

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –

இப்படி தன் விருப்பத்துக்கு விஷயமான இவன் சரீரத்தை அவன் விரும்பும் பிரகாரம் அருளிச் செய்கிறார் மேல் –
திருமால் இரும் சோலை மலை-என்று தொடங்கி –

கேவல ஸூவ இச்சையாஸ்திதமான இவன் விமல சரம தேக ஏக தேசத்தில் –ஆழ்வார் -உகந்து அருளின நிலங்கள் –
இருப்பது கிடப்பது நிற்பது -மால் செய்கின்ற மால் அனைத்து வியாபாரங்களையும்
ஒரு மடை கொண்டு தான் உகந்து அருளின நிலமான-அவ்வுருவான – ஆழ்வார் திருமேனி ஏக தேசத்தில் செய்கிறார் –
இவ்வளவு நாளும் தன் விருப்பமான சரீரத்தை-வெறுத்து -மால் பால் மனம் சுளித்து முமுஷுவான பின்பு அதில் –
அவன் விருப்பம் கொள்ளும் பிரகாரத்தை அருளிச் செய்கிறார் -நாம் சரீரம் விரும்ப ஆத்மாவை அவன் வெறுப்பான் /
நாம் சரீரத்தை வெறுக்க -அவன் இந்த அசேதனத்தை கூட விரும்புகிறான் –
நாம் மேலோட்டமாக பாதுகாக்க அவன் திவ்ய தேசம் போலே அன்றோ பார்க்கிறான் –

அதாவது தெற்குத் திருமலையையும் திருப் பாற் கடலையும்-என் உத்தம அங்கத்தையும் ஓக்க விரும்பா நின்றான் –
ஸ்ரீ வைகுண்டத்தையும் வடக்குத் திரு மலையையும் -என்னுடைய சரீரத்தையும் ஓக்க விரும்பா நின்றான் என்றார் இ றே ஆழ்வார் –
இப்படி ஓரோர் அவயவங்களிலே இரண்டு இரண்டு திருப்பதிகளில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினான் என்ற இது
எல்லா திருப்பதிகளில் பண்ணிய விருப்பத்தை ஓரோர் அவயவங்களிலே பண்ணி நின்றான் என்னும் அதுக்கு உப லக்ஷணம் –
பிரதானம் -விபூதி அத்யாயம் அருளிச் செய்தது போலே -இங்கும் -பிரதான இந்த திவ்ய தேசங்களை அருளிச் செய்கிறார் –
அப்ரதானம் உப லக்ஷணம் உண்டே –
ஆகையால் அப்பாட்டில் சொல்லுகிறபடியே தனக்கு அபிமதமான திவ்ய தேசங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை ஞானியான
இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் என்கிறார் –

————————————————-

சூரணை -171-

அங்குத்தை வாசம் சாதனம் –
இங்குத்தை வாசம் சாத்யம் –

உகந்து அருளின தேசங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவ் விஷயம்
ஒன்றிலுமே பண்ணும் என்றார் கீழ் -இவ் விஷயம் சித்தித்தால் உகந்து அருளின நிலங்களில்
ஆதாரம் அவனுக்கு சங்குசிதமாம் என்னும் இடம் அருளி செய்கைக்காக -இரண்டு இடத்துக்கும்
உண்டான வாசியை அருளி செய்கிறார்-

இரண்டு இடத்துக்கும் உள்ள வாசியை அருளிச் செய்கிறார் -இரண்டும் சமம் இல்லை அவனுக்கு —
திருக்கடித்தானமும் -ஸாத்ய ஹ்ருத்யஸ்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் -கிருதஞ்ஞயா கந்தம்- தாயப்பதியிலே –
பரமபதாதி திவ்ய தேச அங்குத்தை வாஸம் – -அலப்ய வாஸம் பெற -சித்த சாதனங்கள் /
பிராப்யம் இங்குத்தை நிச்சிந்தை வாஸம் -அவனுக்கு ஆழ்வார் திரு மேனி /சரம சாத்தியம் –
சாதன அனுஷ்டான யோக்கியமான தத் தத் ஸ்தலங்கள் -திருமால் வைகுந்தமும் / அதுவும் -சாதன பூமி ஆழ்வார் திருமேனி அடைய /
இத்தால் சாபேஷ்ய சாதனத்தைப் பற்ற நிரபேஷ சாத்தியம் ஏற்றம் வைபவம் யுடையது என்றவாறு –
நான்கு யானைகள் -ஒருத்தனை வளைக்க ஊரை வளைப்பாரை போலே அன்றோ –
நாகத்தணை -குடந்தை வெக்கா எவ்வுள் அன்பில் திருப் பாற் கடலிலும் – கிடக்கும் -அணைப்பார் கருத்தனாவான் -/
மலை மேல் தான் நின்று -திருமலையின் நின்று என் மனத்துள் இருந்தவனை -சாதன சாத்தியம் இங்கும்
பனிக் கடலில் -பள்ளி கொள்ளுகையை மறந்து விட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல -சுகிக்க வல்ல –
ஆஸ்ரித ஹிருதய வாஸம் சாத்தியம் / நின்று திருமலையில் வாசத்துக்கு அங்கத்தவமும் -ஆழ்வார் திரு உள்ளம் அங்கி சித்திக்கும் /
பள்ளி கோள் வாழ்வு -சாதன ஸாத்ய தசைகள் ஸ்பஷ்டம் இங்கு எல்லாம் /
பனிக்கடலில் இவரை அடைய யோக நித்திரை சிந்தனை செய்து -இருந்தானே /

உகந்து அருளின நிலங்களில் விரும்பி வர்திக்கிறது -உசித உபாயங்களாலே சேதனரை
அகப்படுத்தி கொள்ளுகையாலே -அங்குத்தை வாசம் சாதனம் -என்கிறது –
இச் சேதனன் திருந்தி இவன்ஹ்ருதயத்தினுள்ளே தான் வசிக்க பெற்ற இது
அங்கு நின்று பண்ணின கிருஷி பலம் ஆகையாலே -இங்குத்தை வாசம் சாத்யம் -என்கிறது –
நாகத்தணை குடந்தை -நான்முகன் திரு வந்தாதி – -36 –
மலை மேல் தான் நின்று -திரு வாய் மொழி -10 -4 -4 –
பனிக் கடலில் பள்ளி கோளை -பெரிய ஆழ்வார் திரு மொழி -5 -4 -9 –
இத்யாதிகளிலே இவற்றினுடைய சாதன சாத்யத்வங்கள் தொடரா நின்றது இறே —

———————————————

சூரணை -172-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே
இது சித்தித்தால் –
அவற்றில் ஆதாரம்
மட்டமாய் இருக்கும் –

இந்த சாதன சாத்யத்வ பிரயுக்தமான ஆதர தாரதம்யத்தை
அருளி செய்கிறார் –

திவ்ய தேசங்கள் ஆதாரம் த்ருணவத் கரிக்கும் படியே இவர் திரு மேனியாகிய ஸாத்ய தேசம் தனக்கே அற்றுத் தீரும் படி நேராக சித்தித்து
அத்தால் சாதனமான அந்த திவ்ய தேசங்களின் ஆதாரம் முன்பு போல் அன்றியே இருக்கிலுமாம் போகிலுமாம் —
ஸாத்யத்தின் போக்யதா அதிசயம் -காண காண அதிசயிக்கிற சாதன அதிசயம் இது கிட்டினவாறே அதில் ஆதாரம் மட்டுப்படும்
இவருடைய சாத்தியம் அவனுக்கு சாதகமாய் அவனுக்கு சாத்தியம் இவருக்கு த்யாஜ்யமானதே /
சாத்யத்தில் – ஸ்வாரஸிக இச்சையும் -சாதனத்தில் தாதாத்மிக -ஆழ்வார் உகந்ததால் அவன் உகக்கிறான் -இது தான் அவனுடைய தாரதம்யம் /

அதாவது
தன் திரு உள்ளத்தில் புகுந்த பின்பு தனக்கு புறம்பு ஒன்றிலும் ஆதரம் இல்லை என்று தோற்றும்படி
அவன் இதிலே அத்ய ஆதரத்தை பண்ணி -நித்ய வாசம் பண்ணுகையாலே –
திரு மலையும் -தன் சந்நிதானத்தாலே கோஷிக்கிற திரு பாற் கடலும் – –
ஒருத்தருக்கும் எட்டாத பரம பதமான தேசமும்
புல்லிய வாய்த்தினவோ என்றார் இறே ஆழ்வார் –
இப்படியே சாத்தியமான இச் சேதன ஹ்ருதயம் சித்தித்தால் -இதுக்கு சாதன மாக முன்பு விரும்பி
போந்த திவ்ய தேசங்களில் ஆதரம் சங்குசிதமாய் இருக்கும் என்கை –
சாத்யம் கை புகுரும் அளவும் இறே சாதனத்தில் ஆதரம் மிக்கு இருப்பது –

———————————————

சூரணை -173-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று
இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –

ஆதரம் மட்டமாம் படிக்கு அவதியை தர்சிப்பிக்கிறார் –

ஆதரம் மட்டமாம் படிக்கு அவதியை தர்சிப்பிக்கிறார் –பாலாலயம் -பெரிய ஆலயம் ஆழ்வார் திரு உள்ளம் -/
வடக்கு திருமலையும் தெற்குத் திருமலையும் இவை தான் நமக்கு கிடைத்தன என்று நின்று கொண்டு இருந்தானாம் –
இவர் வலிய மூட்டும்படி யாயத்து அவனது ஆதாரம் இவற்றின் மேல் –
தியாக அபாவ பிரார்த்தனை -தியாக அதிசங்கை அர்த்த சித்தம் –க்ருதஞ்ஞா ஹேதுகை இதுவே –
உளம் கோயில் வைத்து உள்ளினேன் -முன்னம் சொல்லி இளம் கோயில் பின் இருப்பதாலே –

அதாவது-
ஸ்ரீ பூதத்தார் தம்மை பெருகைக்கு உறுப்பாக முன்பு தான் விரும்பின
திவ்ய தேசங்களில் முன்புத்தை ஆதரம் இன்றிக்கே -தன் திரு உள்ளத்திலே
அத்ய ஆதரத்தை பண்ணி செல்லுகிற படியை கண்டு -அவ்வோ திவ்ய
தேசங்களில் கை விட புகுகிறானோ என்று அதி சங்கை பண்ணி –
என் ஹிருதயத்திலே புகுந்து இருக்கைக்கு பால ஆலயமான திரு பாற் கடலை
கை விடாது ஒழிய வேணும் என்றார் இறே –
ஆகையால்-
இப்படி இவன் பிரார்த்திக்க வேண்டும்படி ஆய்த்து அவனுக்கு அவற்றில் ஆதரம்
மட்டமாம் படி -என்கை-

————————————————

சூரணை -174-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்
க்ருதஞ்சதையாலும்
பின்பு அவை
அபிமதங்களாய்  இருக்கும் —

இப்படி இவன் அர்த்திததாலும் -சாத்யம் சித்தித்த பின்பு அவனுக்கு அவை
அபிமதங்களாய்  இருக்குமோ என்ன -அருளி செய்கிறார் –

ப்ராப்ய ப்ரீதி விஷயத்துவத்தாலும் -ஆழ்வார் உகந்த திவ்யதேசங்கள்–மண்டியே இருப்பார்களே – என்பதாலும் /கிருதஞ்ஞதையாலும் –
பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் -சாத்தியம் கை புகுந்த பின்பும் ஏறி வந்த ஏணி விட்டு விடாமல் இருக்க இரண்டு காரணங்கள் –
அபிமத தமமான சாத்தியத்தை பற்றின பின்பு -அபிமத தார சாத்தியம் -அபிமத சாத்தியம் –ஆகார த்வயம் -/
மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் பொலிந்து நின்ற பிரான் -இவர்களுக்குள் சம்பந்தம் போலே இங்கும் –/
சரம ப்ராப்யம் ஆழ்வார் -போக்தாவான பெருமாள் -போக்யதா அதிசயமான ஆதாரம் மட்டும் அன்றிக்கே –
குயில் இனங்கள் சோலை இத்யாதி மட்டும் அன்றிக்கே —
பதின்மர் பாடும் பெருமாள் -இவர்கள் மண்டி இருப்பதால் -தத் சாதனத்வேன வந்த ஆதாரம்

பிராப்ய ப்ரீதி விஷயத்வம் ஆவது -தனக்கு பிராப்ய பூதனான இச் சேதனனுடைய
உகப்புக்கு விஷயமாய் இருக்கை-
கண்டியூர் அரங்கம் மேயம் கச்சி பேர் மலை -திரு குறும் தாண்டகம் – 19-
என்று மண்டி இறே இவன் இருப்பது –
க்ருதஜ்ஜதையாவது -இவ்வோ தேச வாசத்தால் அன்றோ நாம் இவனை பெற்றது என்று
அத்தேசம் தமக்கு பண்ணின உபகாரத்தை அநு சந்திக்கை –
இவை இரண்டாலும் சாத்தியமான இச் சேதனன் கை புகுந்து இருக்க செய்தேயும்
அவனுக்கு அவ்வோ தேசங்கள் அபிமதங்களாய்  இருக்கும் -என்கை

——————————————-

ஆக -11-சூரணை களாலே அருளிச் செய்தவற்றை தொகுத்து அருளிச் செய்கிறார்
குணம் போல் தோஷ நிவ்ருத்தி என்று கீழ் சொன்ன சேஷத்வ பார தந்த்ர்ய ரூப ஆத்ம குணம் போல தோஷ  நிவ்ருத்தியும் –164-
பர அனுபவத்துக்கு விலக்கு என்று பிரதிக்ஜை பண்ணி தத் உபபாதான அர்த்தமாக அபிமத விஷயத்தில்
அழுக்கு அபிமதமாய் இருக்கும்படியையும் —165-
இவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இதிலே  அவன் அத் ஆதாரத்தை பண்ணும் படியையும் -167-
ஞானியான இவனை ச விக்ரஹமாக ஆதரிக்கைக்கு ஹேது விசேஷத்வத்தையும்–168-
மண் பற்று -ரஹஸ்ய த்ரயம் விளைந்த மண் என்று மா முனிகள் அபிமதமாய் விடாமல் இருந்தால் போலேயும் –
பரமார்தனான இவன் தேக ஸ்திதி கொண்டே   இவன் தேஹத்தில் அவன் விருப்பம் அறியலாம் என்னும் அத்தையும் ,—169-
அவன் இவன் உடைய தேகத்தை விரும்பும் பிரகாரத்தையும் —-170-
சாத்தியமானது இது சித்தித்தால் சாதன ஆதாரம் மட்டமாம் படியையும்-172-
அதின் எல்லையையும்-173- ,இவன் அவ்வோ தேசங்களை கை விடாது ஒழிய வேணும் என்று அர்தித்தால் ஸ்வசாத்யம் சித்தித்து இருக்கச் செய்தேயும்
ஹேது துவயத்தாலே அவனுக்கு அது அபி மதங்களாய் இருக்கும் படியையும்–174-
அருளிச் செய்தார் ஆயிற்று-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -142-159-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /உபாயாந்தர தோஷம்– ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 16, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் – முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது- பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில்- முதல்- ஆறாவது – எட்டாவது- ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————————

சூரணை -142-

இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –

இப்படி பிரஸ்துதையான  பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
இது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் –
கீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –

ப்ராப்தா ப்ராப்யன் பாவம் இருவருக்கும் –சம்பந்தம் -/சரியான தலையில் இருக்க வேண்டுமே கார்யகரம் ஆவதற்கு-
இது முதல் -மேல் -ப்ரஹ்மாவாய் இழந்து போதல் – இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் –242 – சித்த உபாய வைபவம்
கீழ்ச் சொன்ன பிரபத்தி —பரதந்த்ரனான இவன் ஸ்வதந்த்ரனான அவனை தான் -பலியாய் -ப்ராப்தாவாய் –
பெற நினைக்கும் பொழுது -அவன் நினைவு கூடாதாகில் –
ஸ்வரூபத்துக்கு அனுரூபமான இதுவும் அவனை இழக்க ஹேது வாகுமே /
வேறே முகத்தால் இங்கு அருளிச் செய்கிறார் -அடுத்த நான்கு சூரணைகளால்-
ஆனந்தமயன் அறிந்தவன் அடைகிறான்–தூ மணி விஷய வாக்கியம்
அவன் இவனுக்கு ஆனந்தம் கொடுக்கிறான் -நோற்காமலே பெற்ற கோபி -நோற்று ஸ்வர்க்கம் பாசுரம் /
இயற்கையால் பரதந்த்ரன் நான் ஸ்வீ கரிக்கிறேன் என்ற ஸ்வ தந்த்ர நினைவு வந்தால் சாதனம் ஆகாது -பாதகம் ஆகும்
பிரபத்தியும் -கீழ் சொன்ன ஏற்றங்கள் இருந்தாலும் உபாயாந்தர கோஷ்ட்டிக்குள் புகும் –
சரண்ய ஹிருதய அனுசாரியாக இருப்பதும் இல்லாமையும் -வேறு முகமாக இதில் —
அபராத கோடி கடித அப்ரயுக்த ஷாமணீயத்வாதிகள் -பொறுத்து அருள் -என்று பண்ணின பிரபதிக்கும் கேட்க வேண்டுமே
அபராத கோடியில் சேராமல் -அவன் திரு உள்ளத்துக்கு சேரும் படி இருக்க வேண்டும் -/
பிரபத்வ்யன் ஸ்வ தந்த்ரன் தானே உபாயமாகும் / பக்தியும் ஸ்வா தந்தர்ய அபிமானதுடன் பண்ணி உபாயத்வம் வருமே /
இது– யாதிருச்சிகமாக –அவன் ஸ்வா தந்தர்யம் குறைக்க நாம் யார் —
ஸ்வரூப அனுரூபமாகவும் உபாயத்வமும் இல்லாமல் இருக்க வேண்டுமே /
உபாய பிரபத்திக்கு -உபாஸனாதிகளைப் போலே அஹங்கார கர்ப்பம் குற்றம் வரும் போலே அனுரூபமாய் இருக்காதே
பரத ஆழ்வான்-ஸ்ரீ பாஷ்ய காரர் பிரபத்திகள் –அதிகார விசேஷண பிரபத்தி -பல பிரபத்தி -அனுபாய பிரபத்தி -பர்யாய சப்தங்கள் —
அதிகாரி விசேஷணமாய் ஸ்வரூப அனுரூபமாய் உபாயத்வம் இல்லாமல் –இருந்தாலும் -பரத பிரபத்தி பலம் கிடைக்காதது –
ஷாமணியத்வம் -கத்யத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர் -பொறுத்து கொள்ள பிரார்த்திக்கிறாரே பிரபத்தி பண்ணினத்துக்கும் /
இருவருக்கும் கேட்டே பொழுதே இல்லையே –
சரண்ய ஹிருதய அனுசாரியாய் -இல்லாமல் பலம் இல்லை என்பது கண்டால் உபாய பிரபத்திக்கு சொல்ல வேணுமோ –
ஆகவே அவன் திரு உள்ள நினைவே உபாயம் என்றவாறு -உடைமையை -உடையவன் -ஸ்வாமி தானே அங்கீ கரிக்க வேண்டும் –
சொத்தை ஸ்வாமி தானே ரஷிப்பாரே/ நாதன் உள்ளவர் தங்கள் ரக்ஷணம் கார்யம் செய்ய மாட்டார்களே /

அதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று –
அவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –
அதாவது –
உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்க கண்டு இருக்க
பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –
அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல்லாப சாதனம் ஆகாது என்றபடி –

—————————————-

சூரணை-143-

அவன் இவனை பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —

இனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –

ஸூவ இச்சையால் -ஸ்வ தந்த்ர ஸ்வாமி / பரதந்த்ர சொத்தை பெற நினைக்கும் பொழுது -அநாதிகாலமாக புத்தி பூர்வகமாக
அநேக மஹா பாதகங்களும் -அவனை பெறுகைக்கு விலக்கு அன்று -/ பாவங்கள் பாதகங்களை விட சிறியவை /
லாப கிரியா நிஷ்பத்தி -இச்சாயம் சத்தா நிவாரகர் இல்லா ஸ்வா தந்திரம் –சங்கல்பத்தாலே அடைகிறான் /
லப்தவ்யம் அடையப்படும் பொருள் சொத்து /
நரகங்களில் விழப்பண்ணுவதால் பாதகம் -நிலையில் இருந்து நழுவுதலால் பாதகம் -என்றுமாம் –

அதாவது –
ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் –
பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
சித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யேது நைவாச்ய பிரதி ஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–

—————————————–

சூரணை -144-

இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –

இப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன –
அருளிச் செய்கிறார் –

உறவுள்ள ஸ்ரீ பரத ஆழ்வான் இழக்க / தோஷமே பச்சையாக பெருமாள் உறவு கொண்ட-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி – – ஸ்ரீ குகப் பெருமாள் பெற்றானே/

————————————-

சூரணை -145-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –

அவர்கள்  தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –

தானே ப்ராப்தாவாக நினைத்த ஸ்ரீ பரத ஆழ்வான் -பிரபதனமான நன்மை தானே -அனைத்துக்கும் பிராயச்சித்தம் இது என்ற நன்மை இருந்தாலும் – –
பெருமாள் திரு உள்ளம் கன்னி -அவ்வருகே -சித்ர கூடம் விட்டு தண்ட காரண்யம் போகும் படி பண்ணிற்றே
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு அஞ்ஞானம் இத்யாதிகள் நன்மையாயிற்றே –
ராச க்ரீடை -கொண்டாட்டம் -உன் திரு உள்ளம் உகந்து இருந்தால் புண்யம் -ஈஸ்வர ப்ரீதியும் கோபமும் / பாபம் புண்யம் இந்த லக்ஷணமே –
சிரஸா யாஜிதோ மயா பிராது சிஷ்யஸ்ய தாஸஸ்ய பிரசாதம் கர்த்தும் அர்ஹதி –தானே ப்ராப்தா என்ற மநோ ரதம்–ஆர்த்தி யுடன் –
இன்றே திரு அபிஷேகம் -ஆர்த்த பிரபத்தி இது -துடிப்பு –முன் நின்றே செய்தான் -ஆர்த்த பிரபத்திக்கு அங்கங்கள் எல்லாம் சரி -பூர்ணம் –
ராமஸ்ய பாதவ் சிரஸா ஜாக்ர -விதிவத் புன -விதி வழி திருவடிகளில் மேல் தலையை வைத்தான் –
-தேவ ப்ரபத்தியிவ் வ்யாவர்த்தி அது திருப்த பிரபத்தி -/ஆனாலும் பலம் விளம்பப் பெற்றானே —
சீக்ர கால சரணாகதி ராவண வதம் -ரூபம் அது –
தேவ பரத பிரபத்தி விருத்த பலன்கள் –காரண கிரமத்தால் கொடுத்தான் என்று சொல்ல முடியாதே –
இந்த பிரபத்தி லக்ஷணம் உடனே கொடுத்து இருக்க வேண்டுமே /
பிரபல பிரதபந்தகங்களும் இல்லை –பரத ஆழ்வான் அகர்ம வஸ்ய அவதாரம் அன்றோ –
பித்ரு வசனத்தில் பெருமாள் மனம் வைத்து –இவன் பண்ணின ஆர்த்த பிரபத்தியும் –நன்மையாகிய இது தீமையாகப் போனதே
நியதி சாதனத்வம் உண்டே பிரபத்திக்கு -இருந்தாலும் சாத்தியம் இல்லையே இங்கு –சாஸ்த்ர விசுவாசம் குறையுமே —
பலம் தள்ளி வந்ததே -உபாயம் ஆகாது என்று சொல்ல வந்தீரே அத்தை சொல்ல முடியாதே என்னில் -இவனது ஆர்த்த பிரபத்தி -அன்றோ /
திருப்த பிரபத்தி போலே பலன் கிடைத்தது -சர்வஞ்ஞனுக்கும் நித்ய சூரிக்கும் அங்கம் குறை சொல்ல முடியாதே /
அப்ராமாண்ய பிரசங்கம் இல்லை சாஸ்த்ரங்களுக்கும்/ சரண்ய ஹிருதய அனுசரணமாக இருக்க வேண்டும்
மதி -இச்சா / கமனம் அநிஷ்டம் -தத் த்வாரா இதுவும் அநிஷ்டம் /
சரண்யனுக்கு அதீனப்பட்ட பலன் கிடைக்காதே –திரு உள்ளம் – விருப்பம் இல்லையே /
ஏழை இத்யாதி ஞான ஹீனன் -இத்யாதி தோஷங்கள் / மீனை பிடித்து வெட்டுவது அவனுக்கு ஜீவனம் /
பெருமாளுக்கு ரக்ஷகமே ஜீவனம் /
புண்ய பாபங்கள் கடம் படம் போலே இல்லை -இந்த தேசம் இந்த காலம் புண்யம் வேறே மாறலாம் -நியதங்கள் இல்லை /
அவன் திரு உள்ளத்தைப் பொறுத்தே
இஷ்டாவஹம் புண்யம் அனிஷ்டவஹம் பாபம் / நன்மையையும் தீமையும் தீமையாகவும் நன்மையாகவும் குறை இல்லை –

வந்த கார்யம் இன்னது என்பதை சிற்றம் சிறுகாலையில் வைத்தாள் ஆண்டாள் –
அசமயத்தில் கேட்க்கும் பரத ஆழ்வானைப் போலே அசடு இல்லையே /
சர்வ லோக சரண்யன் -வேடன் வேடுவிச்சி பக்ஷி குரங்கு ராக்ஷசர் விஷயங்களில் தான் முற்பாடானாய் –
அவர்கள் இருக்கும் இடத்தில் தானே சென்று அனுக்ரஹிக்க திரு உள்ளம் இருக்க -அனுஷ்டான சேஷம் ஆக்கிக் காட்ட வேண்டும் –
பித்ரு வாக்ய பரிபாலனம் வியாஜ்யமாக -அனலோசித அசேஷ சரண்யன் என்று லோகத்துக்கு காட்ட வேண்டுமே /
பரதன் சொல்வதை சுமந்திரன் நிறை வேற்றாமல் -பண்ணாமல் இருக்க -பெருமாள் திரு உள்ளம் அறிந்து -அந்த பரதனோ என்னில் –
திரு உள்ளம் அறியாதவன் என்று –
அந்த திரு முகத்தையும் பார்த்த பின்பு தர்பம் தானே பரப்பி -கூட்டிக் கொண்டு போக துடிப்பாலே -ஆர்த்தியால் கலங்கி -திரு முன்பே
பிராய உபவாசம் வடக்கு பார்த்து பட்டினி இருந்து உயிர் விட இருக்க -விஸ்லேஷ பயத்தால் பெருமாளும் கலங்கி –
சர்வஞ்ஞான அவனும் ஸூவதந்திரத்தால் —
செய்த காரியத்தால் -ராஜன் என்று அவள் ஏத்தியதால் அழுதவன் தானே தலையில் ஏறிட்டுக் கொண்டு
ஸ்வ ரூப விரோதமான ஸூவ பிரவ்ருத்தியில் அன்வயித்து –
அக்ருத்யம் -செய்யக் கூடாதே–சேஷிக்கு சேஷ பூதனை -எதேஷ்டம் விநியோகம் கொள்ளுகை-சேஷிக்கு உண்டே – –
ஸ்வரூப அனுரூபம் தானே பிராயோ உபவாசம் -பிரபத்தி போலே
-அதை நடத்த என் திரு உள்ளம் இல்லையே –இருந்தால் தான் உனக்கு ஸ்வரூப அனுரூபம் /
எனக்கு தாண்ட முடியாதே – கடல் கரையை தாண்ட முடியாதபடி –
சரணாகதன் படி நடக்க வேண்டுமே இவனுக்கும் உன்னைப் பார்த்து வரவா என்னைப் பார்த்து போகவா -தர்ம சங்கடம் /
உபவாசமும் ஷத்ரியனுக்கு ஆகாது என்றும் அபிஷிக்த ராஜாவுக்கும் கூடாதே என்ற பெருமாள் சொன்னது நியாயம் இல்லை
-இவரே சமுத்திர ராஜன் இடம் செய்தாரே-
தனது பாதுகையே பட்டாபிஷேகம் -இரண்டு காரணத்தாலும் கூடாதே / சேது பந்தம் -சாகரம் வற்ற தபஸாக –
பிராய உபவாசம் -பிரதம ஹேதுவாக பண்ணினார் /
சாமர்த்தியம் உள்ள ஷத்ரியன் பண்ணக் கூடாதே /ஜலக்கடல் முன்னே குணக்கடல் கிடந்ததே /
மரணமோ தரணமோ இரண்டில் ஓன்று நடக்கும் என்று நிச்சயித்து -/
சர்வாதிகார பிராயோ உபவாச ரூப பிரபத்தி –யாரும் பண்ணலாம் -ஷத்ரியனும் பண்ணலாம் முடி சூடியவனும் பண்ணலாம் –
இவரே பண்ணி உள்ளாரே
சில அதிகார தோஷங்களை தப்பாக சொல்லி அத்தை அக்ருத்ய கரணமாக்கி –பிராயச்சித்தம் பண்ண சொல்ல-பெருமாள் தன்னைத் தொட்டு
நிஷ்கிருஷ்ட வேஷ பிராயச்சித்தம் பண்ண சொல்லியும் பரத ஆழ்வான் செய்யாமல் -நான் பண்ணினது உபாயம் இல்லை –
மடல் தூது போன்றவை தானே இவை –
ப்ராப்ய அந்தர்கதம் தானே -அதனால் பண்ணவில்லை பரதனும் துடிப்பால்— லோக அபவாதம் வரக் கூடாதே
மந்தாகினி தீர்த்தம் மட்டும் ஆடினான் அதனால் -விசிஷ்ட வேஷம் அனுகுணம் இது லோக அபவாதம் வரக் கூடாதே /

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது -விண்ணப்பம் கூட செய்யாமல் இருக்கவும் அங்கீ கரித்தானே -/ அகிஞ்சனன் -அநந்ய கதித்வம் -/
துக்க தர்சன மாத்ரத்தால் இரக்கம்
விஷய சபலமும் ஏழை / ஏதலன் – ஸ்வாபாவிக சர்வ ஐந்து சத்ருத்வம் / கீழ் மகன் – அத்யந்த கீழ் ஜென்மமும்
ஜென்ம ஞான விருத்த குறைகளைக் கண்டு –உத்கர்ஷ விரோதிகளைக் கண்டு -பெருமாள் இரங்கினான்
நன்மையே தீமையாயிற்று / தோஷமே பற்றாசாக – பசிக்குத் தகுந்த தொரு அன்னம் போலே மேல் விழுந்து அன்றோ அங்கீ கரித்தான் -/
வாத்சல்யத்துக்கு கிடைத்த அன்னம் -மூக்கு சுழியாமல் செய்தாரே / அபராத ஆலயமாக இருப்பான் ஒருவன் உண்டோ என்று தேடிக் கிடைத்த லாபம் /
நெஞ்சு உடையாமல் பெற்ற திருப்தி -இது ஒரு விஷயம் தெய்வாதீனத்தாலே கிடைக்கப் பெற்றேன் என்று சாஷாத் தர்மமே சொல்லிக் கொள்ளும் படி –
இது நிலைக்குமோ –நீசதைக்கு நின் இருள் என் கண் அன்றி புகல் ஒன்றுமே இல்லை -அருளுக்கும் அதே புகல் பயன் இருவருக்குமான பின்பு /
இனி நான் பழுதே அகலும் படி என் /உமக்கே லாபம் -ராம ராமானுஜர் நிலைகள் / அங்கே ஒரே குகன் இங்கு நாம் அனைவரும் /
தம்மோடு ஓக்க சமான -ஆத்ம சம சக /பர கத ஸ்வீ கார நிரூபகமே ஸ்ரீ குகப் பெருமாள் மட்டுமே தானே /
தனக்கு தாரகமாக நினைத்து -ஞானீத் ஆத்மை மே மதம் -அறிவார் உயிரானார் /
சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் வியாபாரம் -பிரதியுபகாரம் கனீசியாமல் இங்கு மட்டுமே தானே –
அங்கு எல்லாம் வேறே பிரயோஜனம் இல்லையே –
மற்ற நதிகளை இவர்களே தாண்டினார்களே
சீரணிந்த தோழமை கொண்டதும் ஒரு அடையாளம் –குகன் உடன் உம் ராமரை தவிர வேறு யாரால் முடியும் என்றவாறு /
இங்கு ஒழி–நீ இங்கு இரு –பிரிந்தால் தான் பின்பு சேரும் பொழுது கூடினால் ரசிக்கும் -தேன் உள-நாய் குகன் உளன் சொன்னாலும் /
வழி அடி கெடாமைக்காக -இங்கு ஒழி -வழி பறிப்ப்பாகிய இவனுடைய ஹீன விருத்தியையும் இப் பாசுரம் சொன்ன ஆழ்வாருடைய வழி
பறியைப் போலே போக்யமாக கொள்ளுவார் -புத்த விக்ரஹத்தை வைதிகம் ஆக்கி –
ஒழுங்காக திருந்தி வாழாமல் வழி பறி பண்ணிக் கொண்டு –
உன் குற்றத்தை பச்சையாக கொண்டதாகவே இருக்க வேண்டுமே –
படை வீடு கெடாமைக்கு ஒருத்தனை வைத்தோம் காடு கெடாமைக்கு உன்னை வைத்தோம் –
வழி பறிப்பாகிய வழி அடி -ஜென்ம ஸித்தமான ராஜ்ய பரிபாலனம் உகப்பது போலே உன்
ஜென்ம ஸித்தமான வழி பறி வேடனுக்கு இது தானே பிரியதமம் எனக்கு /
பிராணி ஹிம்சை -ஆட்டு -ஹோமத்தில் உண்டே -அதே போலே /சாஸ்த்ர சம்மதம் பெருமாளுக்கு பிடித்தது போலே வழி பறிப்பும் –
சிங்கி பேர புரத்தில் நான் வைக்க இருந்து கொண்டு -பரதனை நாட்டில் வைத்தது போலே -இந்த கார்யம் செய்து இரு –
ராமன் இருக்க சொல்லி இருப்பதால் -அவர் திரு உள்ளபடியே இருவரும் /
தான் போன பின்பு –அயோத்யை-என் வழி அடி அறியான் -காட்டி கொடும் ஆதி வாஹிகர் போலே காட்டவே இவனை வைத்து போந்தார் பெருமாள் /
காள மேகப் பெருமாள் –ஆப்தன் / குகனும் கரிய திரு மேனி / ராமன் உள்ள இடமே ஸ்ரீ வைகுண்டம் /
அயோத்யை மதுரை பெற்றும் பேர் இழக்க / காடு கோகுலமும் பூ முடி சூடிற்றே /
பராத் பர புருஷன் -சாஸ்த்ர மரியாதா லங்கனம் பண்ணலாமா– அந்தராத்மா இவன் தானே அனைவர் இடமும் /
கணவனோ பிள்ளையோ குரு ஜனங்களோ
புண்ணியமான படியாலோ அவனுக்கு அபிமதம் என்பது இல்லை / அவனுக்கு அபிமதம் என்பதால் புண்ணியம் /
அவன் இடம் உள்ளவற்றுக்கு நல்ல குணம் என்ற பெயர் கிட்டும் / ஸ்வ தந்த்ரனான படியால் இதுக்கு குறை இல்லையே –
ஸ்வாதந்திரத்தால் ஏற்றுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்தர்யம் அவனுக்கு

மஹா பாப ரூபமான அது ஜென்ம சித்தம் என்றாலும் அது பெருமாளுக்கு பிரியம் என்பதால் புண்ணியம் ஆகுமே /
பாபமானது அனுமதிக்கலாமா கேள்விக்கு
அவருக்கு அபிமதம் ஆனதாலேயே புண்ணியம் ஆகுமே
அவரை ஒதுக்கி சாஸ்திரம் மட்டும் பார்க்கக் கூடாதே -அதனாலே புண்ய பாப லக்ஷணம் மேலே அருளிச் செய்கிறார் /
ராஸக்ரீடை -கோபிகள் செய்த அதிக்ரமம் அபிமதமானால் போலே –

அதாவது –
பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –
தன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-
ஏபிச்ச  சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –
வழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்
திருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –
சரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமையாய் விட்டது –
ஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள்  தாமே வந்து
அங்கீகரிக்கப்   பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே –
பாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –
யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-
ஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –

————————————————

சூரணை -146-

சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான
பிரபத்தி தானும் –
அபராத கோடி யிலேயாய்
ஷாமணம் பண்ண வேண்டும் படி
நில்லா நின்றது இறே —

இவன் பண்ணும் பிரபதனம் -சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது –
அபராத கோடி கடிதமாம் என்னும் இடம் அருளிச் செய்தார் கீழ் –
இது தான் இவனுடைய பூர்வ விருத்தத்தை பார்த்தாலும் -அபராத கோடி யிலேயாய் இருக்கும்
என்னும் இடத்தை பிரகாசிப்பிக்கைகாக -பாஷ்ய காரருடைய அனுஷ்டான பிரகாரத்தை
அருளிச் செய்கிறார் மேல் –

சாஸ்த்ர சம்பிரதாய பரமாக அரும்பதம் / பெருமாள் திரு உள்ளம் கருத்தும் பார்த்தோம் / பிரபத்தியே அபராத கோடி –
வியபிசாரம்- காரணம் இருந்தும் கார்யம் இல்லாமல்- பலம் கிடைக்காத குற்றம் பரதன் இடம் /
ஷாமணம் பிரார்த்திக்கும் படியும் கத்யத்ரயத்தில் உண்டே /
திரு உள்ளக கருத்துக்கு அனுசாரியாய் இருக்க வேண்டுமே /
பகவத் அபசாராதி பாகவத அஸஹ்ய அபசாரங்களும் -ஆற்றி விட பிராயச்சித்தம் -பூர்வ கத்யத்தில் –
பண்ணின பிரபத்தியும் ஸ்வ கதயாம் என்னும் பீதியாலே
நாநா வித அபசாரங்களுடன் இத்தையும் சேர்த்து திரு உள்ளம் பற்றி புத்ராதிகள் குற்றத்தை பித்ராதிகள் பொறுப்பது போலே –
பந்த விசேஷங்களை விண்ணப்பம் செய்து கொண்டு
தஸ்மாத் ப்ரணம்ய முக்கரண பிரபத்தி திரு முன்பே கூசாமல் வந்து நின்று -பூர்வ விருத்தத்தை பார்க்காமல் -பிரபத்தி பண்ணின இதுக்கு ஷாமணம் –
இவ்வழியாலும் இது அபராத கோடி கடிதமாய் இருக்கும் / அநாதி காலம் அபராதம் பண்ணி ஆபி முக்கியம் பண்ணினான் ஆகிலும் –
அவனைப் பார்த்தால் அவருக்கு தேட்டம் அது -ராவணனனே வந்தாலும் கூட்டிவா -என்று இருக்கும் ஈஸ்வர ஹிருதயம் –
நம்மையும் நம் பூர்வ விருத்தத்தையும் பார்த்தால் பண்ண வேண்டி இருக்குமே பீதனான படியால் –
மாம் ஏகம் -பற்றும் பற்றும் உபாயம் ஆகாது -ஸ்வீ காரத்தில் உபாய பாவம் கூடாது- உபாய வரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும் /
ஸ்வீகார பர கத ஸ்வீ காரம் -பிராப்தா யார் – பலி-யார் – அடைபவன் யார் -நாமா அவனா என்ற வாசி உண்டே /
சரண்ய ஹ்ருதய அனுசாரி முன்னே சொல்லி இங்கு பூர்வ விருத்தத்தையும் பார்த்து உம்மைத் தொகை –
இரண்டு காரணங்களால் அபராத கோடியிலே ஆகுமே /
திருமுக மண்டல மலர்த்திக்காகவே சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அதி பிரசன்னமாகி ஆவான்- சொத்தை அடையப் பெற்றோமே என்று –
தான் ஏற இடம் பார்த்து மடி மாங்காய் இட்டு -அவன் இருக்க -நான் உன்னைப் பற்றுகிறேன் -என்றால் திரு உள்ளம் கன்னும் அன்றோ –
த்வமேவ -என்று தொடங்கி –உற்றேன் உகந்து பணி செய்தென் சொல்லாமல் –
பந்த விசேஷங்களை விண்ணப்பம் செய்து -குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை –
பரதன் அனைவரையும் கூட்டிப் போனது போலே அனைத்து உறவுகளையும் சொல்லிக் கொண்டு –
பிரபத்தி பிராயச்சித்தமாக அருளிச் செய்கிறார் –
சர்வ பாபங்கள் என்னாமல் அபராதங்கள் -அஹம் அஸ்ய அபராதானாம் ஆலய -என்பதால் –
பிராயா =பாவம் / சித்தம் -விஜானீய சோதனம் போக்கும் செயல் /த்வா-பிரபத்தி அதிகாரி விசேஷணமாக மீண்டும் –
கீழே சரணம் வ்ரஜ -சொல்லி இங்கு /
பாப நிவ்ருத்தி நிமித்தமாக சரணாகதி பண்ணு எங்கே உள்ளது என்னில் / பிராப்தி பந்தக நிவ்ருத்தி -பிரார்த்திக்கிற அடியேன் —
பிரபத்தி அனுஷ்டித்தவனை குறித்து –
ஸ்ரீ மன் விழித்து த்வயம் அர்த்தம் கொண்டால் த்வத் சரணம் -உன்னுடைய திருவடிகளை என்று அத்யாஹாரம் கொள்ள வேண்டும் /
ஸ்ரீ மன் நாராயண -சமஷடி யாக கொண்டால் அவர் திருவடிகளில் -என்று கொண்டு த்வத் வேண்டாமே /
ஸ்ருஷ்ட்டி அர்த்தமாக ரக்ஷித்து மாதா / பிதாவும் நீயே / உள்ளே நியமித்து நல் வழி படுத்தும் பந்து /குரு வித்யா தனம் சர்வரும் நீரே -தேவதேவ –
ஞானப்பிதா பூஜ்யத்தின் எல்லை ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -விஸ்வரூபம் கண்ட அர்ஜுனன் வார்த்தைகளை மீண்டும் கத்யத்தில் அருளி /
தேவரீரை பிரகாசப்படுத்த பிரதிபத்தி –அபராத ஷாமணம் -அபராத அனுகுண தண்டனை நிவர்திக்க சங்கல்பம் —
ஒரு பந்துவே இல்லாமல் சத்ருவாய் இருந்தாலும்
பிரபத்தி மாத்ரத்திலே ரஷிப்பவன் -ஆர்த்தோவா -சுக்ரீவன் இடம் பிராணனை விட்டே இஷுவாகு வம்ச சரணாகதி ஈசானம் தர்மம் பெருமாள் சொன்னாரே -/
அவதாரத்தில் மெய்ப்பாட்டாக முன்னோடியாக பாஷ்யகாரர் காட்டி அருளுகிறார் கத்யத்தில் -பாவனா மாத்ரமாகில் என்றால் –
வர பிரசாதமும் பாவனா மாத்ரமாகுமே —
ந்யாஸ திலகம் இறுதியும் ஆர்த்தி பிரபந்தம் இறுதி பாசுரமும் ஒரே கருத்து -நீர் கொடுத்த வரத்தை கேட்டு புது தெம்பு-
சாத்விக – அஹங்காரம் எனக்கு வந்தது –
அடியேன் ராமானுஜ தாசன் என்ற மதத்தால் சம்சார காட்டில் அலைகிறேன்–ஸ்ரீ ரெங்க நாதா –
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் நம்மதன்றோ மா முனிகள் /
பாவனா மாத்திரம் என்று சொல்ல ஒண்ணாது பாரமார்த்தகமாகும் / பிரஜை செய்த குற்றத்தை அத்தோடு உண்டான பந்தத்தால்
தங்களது என்று கொண்டு -ஏறிட்டுக் கொள்வது போலே /பாரமார்த்திகமே -தாச பூதம் -அடியேனை தாண்டுவிப்பாய் பிரார்த்தனை உண்டே –
என்னுடையவர் பாபங்களை என்னை குறித்து சொல்ல வேண்டாமோ என்னில் -மாம் -அஸ்மாதாதிகள் அந்தர்பூதம் ஆகையால் விரோதம் இல்லை /
நிழல் தாண்டாமல் நாம் அவருடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் அவருடைய மாம் சப்தத்துக்குள் இருக்க வேண்டுமே /
அபிமானத்துக்குள் ஒதுங்கியவர்களை தம்மோடு சேர்த்து கொள்ளலாமே –

அதாவது –
அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -என்கிறபடியே -அபராதங்களுக்கு எல்லாம் கொள்கலாமாய் இருக்கிற இச் சேதனன் பிரபத்தி பண்ணவே –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்னும் படி இவன் அளவில் சர்வேஸ்வரன் திரு உள்ளம் பிரசன்னமாய் விடுகையாலே –
சர்வ அபராதங்களுக்கும் பிராயச் சித்தமாய் இறே பிரபத்தி தான் இருப்பது –
இப்படி இருந்துள்ள பிரபத்தியை -த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் பிரபத்யே -என்று
பண்ணி அருளிய பாஷ்ய காரருக்கு -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்த வாறே -அது தானும் அபராத கோடி யிலேயாய் –
த்வமேவ  மாதாச -என்று தொடங்கி -இத் தலையில் அபராதத்தை பொறுக்கைக்கு
உறுப்பான பந்த விசேஷங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து கொண்டு –
தஸ்மாத் பிரணம்ய-இத்யாதியாலே இப்படி திரு முன்பு கூசாமல் வந்து நின்று பிரபத்தி பண்ணின
இவ் அபராதத்தை பொறுத்து அருள வேணும் என்று
ஷாமணம் பண்ண வேண்டும் படி நில்லா நின்றது இறே என்கை –
ஆகையால் இவ் வழியாலும் இது அபராத கோடி கடிதமாய் இருக்கும் -என்கை –
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணி பின்பு ஒரு நாளிலே ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும் –
ரிபூணாபி வத்சல –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று
இருக்கும் ஈஸ்வர ஹ்ருதயத்தை பார்த்தால் அவன் கைக் கொள்ளக் ஒரு  குறை இல்லை –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -தன் பூர்வ விருத்தத்தை உணர்ந்தால்
இவன் இத்தை அபராதமாகவே நினைத்து ஷாமணம் பண்ண வேண்டும் படியாய் இறே இருப்பது –

——————————————–

சூரணை -147-

நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –
இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –

இவன் பண்ணும் பிரபத்தி -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்தால் –
அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னுமத்தை -திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் -மேல் –

அழகிய மணவாளனே பார்த்தா -இங்கு –மாதரார் கயல் கண்
பண்டு காமன் ஆனவாறும் பாவையர் அமுது உண்டவாறும் -ஓடினேன் ஓடினேன் -இதை போலே முகம் சுளிக்கும் படி அன்றோ பிரபத்தி -கீழே
ஸ்ரீ பரத ஆழ்வான் – ஸ்ரீ பாஷ்யகாரர் அனுஷ்டானம் அருளிச் செய்து –
இங்கு நமக்கு தெரிந்த ஒன்றால் விளக்கி அருளுகிறார் -லஜ்ஜையும் பயமும் இல்லாமல் திரும்பி -சக்திமான் இடம் திரும்பி -துஸ் சரிதம் கேட்டு கண்டு
கிளர்ந்து இருக்கிற -ஸ்வ தந்த்ர பர்த்தா இடம் அருகே சென்று தொடை நடுங்காமல் காலில் விழுவது அதி சாஹசமாய்
அந்நிய பரனாய் அநாதி காலம் -பரம சேதனன் அறியும் படி -நிருபாதிக –சம்சாரத்தில் வந்த பொழுதும் -அர்ச்சாவதார -முன்னே போகாமல் –
திரிந்து -அவன் முன்னே வெட்கம் இல்லாமல் போக -பர புருஷ காமினி ஆசை என்றும் கமனம் -கூட செல்வதும் அர்த்தம் –
குற்றம் கணக்கிட்டு ஷிபாமி என்னும் ஸ்வ தந்த்ர ஸ்வாமி முன்னே -நின்று -சரண வரண ப்ரபத்தியும் –
பலித்தவ அபிமானம் அற்ற பர தந்த்ரன் பண்ணும் பிரபத்தி உபாயமாகாது
பலியுமாய் ஸ்வ தந்திரனுமாய் தான் வரிக்கும் உபாய பிரபத்தி அபாயகரமாகுமே
ஸஹஸாரம் -கூடவே போகும் காரணமும் காரியமும்– சார செல்லுதல் -அபிசார – வியபிசாரம்-வேறே வேறே சப்த பிரயோகங்கள் –

அதாவது –
நெடும்காலம் பர்த்தாவோடு ஓட்டற்று -பர புருஷ காமிநியாய் -தந் நிக்ரஹ பாத்ரமாய் -போந்தாள்  ஒரு பார்யை –
இப்படி பட்ட நாம் அவன் சந்நிதியிலே கூசாமல்  சென்று நிற்கும் படி என் -என்கிற லஜ்ஜையும் –
இத்தனை காலமும் நாம் செய்து திரிந்தது எல்லாம் கண்டு இருக்கிற இவன் -இப்போது  நம்மை வந்து இப்படி
நம்மை அபேஷிப்பதே என்று தண்டிக்கில்  செய்வது என் -என்னும் பயமும் இன்றிக்கே –
அவன் முன்னே சென்று நின்று என்னை அங்கீ கரிக்க வேணும் என்று அபேஷிக்கும் அளவில் –
எத்தனை அபராதம் உண்டு –அப்படியே இருப்பது ஓன்று இறே –
பகவத் அனந்யார்ஹனாய் வைத்து அநாதி காலம் அவனுடன் பற்று இன்றிக்கே அந்ய பரனாய் போந்த இவன் –
ஸ்வ பூர்வ விருத்த அனுசந்தத்தால் வரும் லஜ்ஜையும் –
ஸ்வ தந்த்ரனான அவன் தண்டிக்கில் செய்வது என் -என்ற பயமும் இன்றிகே
தத் சந்ந்நிதியிலே சென்று நின்று தன்னை அங்கீகரிக்க வேணும் என்று பண்ணுகிற சரண வரணம்-என்கை –

ஆக இவ்வளவும் ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும்-பரகத ஸ்வீகார  உபாயத்வமும் -பிரதி பாதிக்க பட்டது –

———————————————

சூரணை -148-

கிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்
ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –

இனி -இவன் ஸ்வீகாரம் கண்டு இரங்கி -அவன் இவனுக்கு பர தந்த்ரன் ஆவதிலும் –
தந் ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பரதந்த்ரன் ஆவதே பிரபலம் என்கிறார்-

அவிதேயாத்மா -அடங்காதவன் சங்கர பாஷ்யம் — விதேயாத்மா-அடங்கினவன் -பற்றுடை அடியவர்க்கு எளியவன் –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் / இரங்கி
கிருபா காரியமாகவும் ஸ்வா தந்த்ரமாகவும் பாரதந்தர்யம் வருமே /-தானே ஸ்வா தந்ரத்ரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் /-
குறுக்கே கேட்க ஆள் இல்லை -கிருபைக்கு குறுக்கே ஸ்வா தந்தர்யம் வரலாமே /
ஸ்வகத ஸ்வீ காரத்தால் இரக்கம் கிருபை வரும் / பரகத ஸ்வீ காரம் ஸ்வா தந்தர்யம் அடியாக /
சம்சார சக்கரத்தால் கர்மம் அடியாக சுற்றி -துக்கத்தில் உழல -காபி யார் இடமோ -காபி சபரி -தயா சதகம் –
கிருபா ஏற்பட்டு -பிரகாரதயா சேஷபூதன் –
கிருபைக்கு வசப்பட்டு -கடாக்ஷித்து அங்கீ கரிக்குமதில் காட்டில் — இத்தலையில் சுக துக்கங்கள் காணாமல்
இச்சா காரியமாக ஸ்வா தந்திரம் அடியாக பாரதந்த்ரன் –
உகந்தார் ஒருவனை யானை தலையிலே வைத்துக் கொள்ளுமா போலே -செருக்கால் மேல் விழுந்து அங்கீ கரிக்குமதே பிரபலம் –
இரக்கப்பட்டு அனைவருக்கும் மோக்ஷம் கொடுத்தால் லீலா விபூதி நீடிக்கவும் சாஸ்திரம் ஜீவிக்கவும் ஸ்வா தந்திரம் சொல்லலாமே —
சிறை இட்டவனே சிறை வெட்டுவதே சிறப்பு-கடாக்ஷ பிரேரகமாகும் அளவு இல்லாமல் மேல் விழுந்து அங்கீ கரிப்பதே உசிதம்
ஸூ இச்சா அனுரூப கிருபா விகாசகிய விசிஷ்டானாவதை விட / ஆகாராந்தர ஆபன்ன சிவா தந்த்ர விகாச விசிஷ்டானாவது உயர்ந்தது என்றபடி
ஸ்வ தந்த்ர ஸ்வரூபம்- ஸ்வதந்த்ர பரதந்த்ரமான -தனது குணத்துக்கு தானே -பரதந்த்ரம் படுகிறான் –
அவன் நினைவு கூடின போது -இவனுடைய ஆர்த்தி அதிசய காரி ஸ்வீ காரம் அவனுக்கு கிருபா ஜனகம் -ஸ்வ கத ஸ்வீ காரம் -தோற்றுவிக்கும் –
பரகத ஸ்வீ காரத்தோடு துல்யமாக இருக்காதே -பலத்தில் வேறு பாடு உண்டே -ஸ்வார்த்த பலம் அதுக்கு -பரார்த்த பலம் இதுக்கு /
கிருபையை ஸ்வா தந்தர்யம் தடுக்குமோ என்னில் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் அன்றோ –லீலா விபூதியும் நித்யம் அன்றோ –
தத் அபிமத நித்ய விபூதி விருத்தமான லீலா விபூதி வர்த்தமாவதற்கு தடுக்கலாம் /

அதாவது –
ஆர்த்தராய் -அநந்ய சரண்யராய் தன் திரு அடிகளில் வந்து சரணம் புகுந்தவர் அளவில் –
தனக்கு உண்டான கிருபையாலே -அவர்கள் சொன்னதே செய்யும்படி பரதந்த்ரன் ஆகையும் –
பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன் நிரந்குச ஸ்வாதந்த்ரத்தால் -நிர்ஹேதுகமாக சிலரை
அங்கீகரித்து -தன்னை அவர்கள் இட்ட வழக்காக்கி வைக்கையும்-
இரண்டும் ஈஸ்வரனுக்கு உள்ளது ஓன்று –
இதில் முற்பட்டது -ஒரோ திசைகளிலே ஸ்வாதந்த்ர்ய நிருத்தமாய் விபலிக்கவும்-(பலத்தோடு சேராமல் )  கூடும் –
பிற்பட்டது -அப்ரதிகதம் ஆகையாலே ஒருக்காலும் கண் அழிவு இல்லை –
ஆகையால் அதிலும் காட்டிலும் இது பிரபலம் என்கை –

——————————————–

சூரணை -149-

இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-

இவ் அர்த்தம் தான் வேத அபிமதம் என்கிறார் மேல் –

தானே வரித்து -என்ற பிரமாணம்–யாரோ ஒருவனை -என்றது -சேதனனுடைய அபேக்ஷை கல்பிதமாக உள்ளது -ரஷிக்க வேண்டும் என்று
அபேக்ஷித்தவனை என்றவாறு –பூர்வ பக்ஷம் / இல்லையாகில் வைஷம்யாதி தோஷம் வருமே -/
ரஷ்யாம் அபேக்ஷை சாஸ்திரமும் சொல்லுமே /புருஷ அபேக்ஷை இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே /
ஆகவே திருவடி குகப் பெருமாள் இருவருக்கும் அபேக்ஷை / ஏழை ஏதலன் / வாத மா மகன் -இரண்டும் பிரார்த்தித்து பெற்றார் என்பர் பூர்வபஷி -/
நாதவ் புருஷகாரம் -நாதவ் -புருஷகாரமும் வேண்டாம் -ஸூ இச்சையாலேயே யாரையாவது எப்போதோ கூட்டிப் போவேன் —
கஞ்சன-இந்த ஸ்லோகத்தில் -அபேஷித்த ஒருவனை என்று பூர்வபஷி –
ஏம வேஷாம்– ஏவ ஈஷா யார் ஒருவன் இந்த பரமாத்வாவின் இடத்தில் உபாசனத்தில் உள் அடங்காமல் காதல் உடன் உள்ளவன் ஸ்ரீ பாஷ்யகாரர்
நிர்வஹிக்க -பரகத ஸ்வீ காரம் என்று சொல்ல முடியாது –
நாய மாதமா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ச்ருதேன- யமேவைஷ வருணத தேன லப்ய
தச்யைஷா ஆத்மா விவ்ருனதே தநூம் ஸ்வாம்-
இந்த ஜீவன் -ஞான பிரசாதத்தால் – பரமாத்மாவை -எதனால் அடைய முடியாது -பிரவசனம் பண்ணி மனனம் பண்ணி லபிக்க முடியாது —
நமேதையா-பக்தி உபாசனத்தாலும் முடியாது -ப்ரீதி ரூபாபன்ன உபாசன பரம்
யாரை பரமாத்மா இச்சிகிறானோ அந்த சேதனனால் மட்டுமே லபிக்கப் படுகிறான் -தன்னுடைய ஸ்வரூபாதிகளை தர்சிப்பிக்கிறான் –
யமேவ-அநீயத வியக்தி -ஸ்வா தந்தர்யம் அடியாக வந்தது தானே —
கட வல்லி யிலும் முண்ட உபநிஷத்தில் -உம்மை தொகை அனைத்திலும் பர கத ஸ் வீ காரம் பிடித்ததாக உண்டே /
குகன் திருவடி விபீஷணன் மூவரும் கொஞ்சம் வந்தது -அபேஷா காரணம் என்பர் பூர்வபஷி /
தாத்பர்யம் அறிய உபக்ரம உபஸம்ஹாரம் திரும்ப திரும்ப சொல்வது-அசக்ருத் கீர்த்தனம்- அடையாளம் காட்டுவது /
தட்டுங்கள் திறக்கப்படும் என்பர் இத்தை கொண்டே அபேஷா கார்யம் /
யமேவ -யாரை வரிக்கிறானோ -சொல்வது ஸ்வா ரஷ்யம் -கல்பித்து பிரார்த்தனை பண்ணினவர்களுள் ஒருவனை சொன்னால் ரசிக்குமோ
பிரியதமத்தை-இதில் வைத்தால் அவனை விருப்பமுடன் ஏற்கிறான் –
பிரிய ரூப உபாசனத்தால் அடைய முடியாது சொன்ன பின்பு இது அதுக்கு விரோதம் வரும் -/
யமேவ என்பதால் – வைஷம்யம் குற்றம் வராது -தர்மி -பகவான் கிரஹநம் மான பிரமாணம் -இன்னான் என்று சொல்லும் பிரமாணம் –
வைஷம்யம் கிடையாது என்கிறதே வேதமும் இயற்கையில் இப்படி தானே கிரஹிக்க வேண்டும் -/மான சித்தம் ஆகையால் தோஷம் இல்லை /
சித் அசித்தாக பிறவி எடுக்க முடியாதே -அசேதனமும் சித்தாக முடியாது உருவாகாது அழியாது /வைஷம்யம் இது என்று சொல்ல முடியாது
ஸ்ரீ மஹா லஷ்மீ /பூமா தேவி வியக்திகள் மாறாமல் தானே உண்டு —
உபாசன விதி வையர்த்தமும் இல்லை -குக மாருதி விஷய அனுஷ்டானமும் சுருதி அர்த்த -பிடித்த பரகத ஸ்வீ காரமே என்றதாயிற்று
ரக்ஷகத்வம் நிருபாதிகம் கல்யாணத்வம் சித்தியாது அபேக்ஷை எதிர்பார்த்தால் -/ சிக்ஷணமும் ரக்ஷணமும் சமம் -தவறு செய்தால் சிக்ஷிக்கிறான் –
நல்லது செய்தால் ரசிக்கிறான் பூர்வபஷி ரக்ஷகத்வம் இயற்க்கை சிக்ஷகத்வம் வந்தேறி அன்றோ
ஈஸ்வரனே பலி -புருஷன் பிரார்த்திக்காமல் புருஷார்த்தம் இல்லை என்றால் –
ஈஸ்வரனே வெகு நாளாக இவனை அடைய யத்னம் பண்ணி இருக்கிறான் -அன்றோ
இவ்வாறு அனைத்து பூர்வ பாஷ வாதங்களையும் நிரசித்து அருளுகிறார் –

இவ் அர்த்தம் -என்கிறது -கீழ் பிரபலமாக சொல்லப் பட்ட பரகத ச்வீகாரத்தை –
வேதபுருஷன் இத்தை அபேஷித்தான் -என்றது –
நாய மாதமா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ச்ருதேன- யமேவைஷ வ்ருணத தேன லப்ய
தச்யைஷா ஆத்மா விவ்ருனதே தநூம் ஸ்வாம்-என்று
கட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –
அசக்ருத் கீர்த்தனம் அபேஷா கார்யம் இறே –

———————————-

சூரணை -150-

அபேஷா நிரபேஷமாக
திருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இது உண்டாயிற்று –

இத்தலையில் அபேஷை  இன்றிக்கே  இருக்க -இவ் விஷயீகாரம்
சித்திக்கப் பெற்றவர்கள் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் –

வைஷம்யம் அவனுக்கு இல்லையே -ஸ்வா தந்தர்யம் உள்ளது என்கிற வேத புருஷனே வைஷம்யம் இல்லை என்கிறான் –
திர்யக் ஜென்ம-மற்றோர் ஜாதி பாட்டு / -கீழ் மகன் இருவருக்கும் உண்டே / ஸ்வா தந்த்ரனுடைய அங்கீகாரம் நினைவற உண்டாயிற்றே
உப ப்ருஹ்மணம் – சுருதி போலே -த்வமேவ உபாய -/ரஷ்யாபேஷாம் ப்ரதீஷ்யதே -உபாசனம் விதித்து -அபேக்ஷை /
நாயமாத்மா -எத்தாலும் அடைய முடியாது -கேவலம் இச்சா ஏவ /யாரையோ எப்போதோ -/
கர்மத்தால் மட்டுமே -சம்சித்தி -ஜனகர் போலே / அதே போலே இடைவெளி இல்லாமல் சித்தி சொல்ல வில்லையே /
கடாக்ஷித்து பலம் உண்டு என்று சொல்ல வில்லையே -/
பல உபாதானம் வேணுமே -யாரையும் கடாஷிப்பேன் என்றாரே ஒழிய அத்தால் சம்சித்திம் சொல்ல வில்லையே /
பிரதம கடாக்ஷம் நிர்ஹேதுகம் தான் –
இதுக்கு பின்பும் விஷயாந்தர வாசனை ருசிகளால் பிரதிபந்தகங்கள் வருமே -பல சித்தி இவை தொலைந்த பிறவியில் தான்
ஆக கடாக்ஷத்துக்கு பின்பும் -மோக்ஷம் போகாதவர் உண்டே -பர கத ஸ் வீகாரம் மோக்ஷத்துடன் இணைக்க வேண்டுமே
அதுக்கு பதில் -இந்த சூர்ணிகை / அபேஷா எதிர்பார்க்காமல் -பம்பா தீரத்தில் -கூடினார் என்கிற இத்தையும் குகனை அடைந்து ஸந்தோஷம் –
இரண்டாம் வேற்றுமை உடன் வருவதே -கர்மா -தானே ப்ராப்யம் / குகனை -பிராப்யம் -ராமன் பிராப்தா -பலி இவன் என்றால் எல்லாம் பொருந்தும்
ஹநுமதா உடன் சேர்ந்தார் -த்ருதீய வேற்றுமை இங்கு -சைத்ரன் மைத்ரனோடே அடைந்தார் போலே -ராமன் ஹநுமானோடே சேர்ந்தான் –
கர்த்தா உடைய கிரியையாக மூன்றாவது வேற்றுமை -ராமனுக்கு தான் வேளை -கர்த்தா -இவன் தானே –
அத்யந்த தூரம் பெருமாளும் கிஞ்சித் தூரம் இவர்கள் / கபட சந்நியாசி வேஷம் -சரண் அடைய வரவில்லையே /
சாதூனாம் பரித்ராணாம் பெருமாள் வந்த காரணம்
ஹேத்வந்தரத்தால் வந்தது அசத்க ல்பமாகுமே / இரண்டாம் வேற்றுமை துணியை -உத்பாதகத்வம் /ஸம்ஸ்காரத்வம் /விகார்யத்வ /
மூன்றாலும்–இல்லை என்றால் அடைதல் மண்ணை குடமாக்கி தண்ணீரை தெளித்து போலே
ராமன் மூன்றாலும் இல்லை-அடைந்தார் -பலியாவார் பரகத ஸ் வீ காரம் தானே /
தர்மாத்மா ராமன் அடைந்தார் என்பதாலே அபேக்ஷை எதிர்பார்க்க வில்லையே /
அன்புக்கு இருப்பிடம் ராமன் விஷயம் குகன் -அங்கு தானே பிரபலமாய் இருக்கும் பிரியம் என்று தான் யாரை விரும்புகிறானோ –
விருப்பம் அவர் இடம் பிராப்யம் அவரே /
பர கத ஸ்வீ கார்த்தம் தெளிவாக -விவரணமாக அடுத்து -திருமந்திரம் த்வயம் சரம–விவரண பாவம் என்பதால் முமுஷுப்படியில் இந்த க்ரமம் /
திருமந்திரம் – சரம- த்வயம் -மற்ற இடங்களில் ஞானம் உபதேசம் அனுஷ்டானம் என்பதால் க்ரமம் /
இங்கு இரண்டாம் வேற்றுமையில் தெளிவாக ப்ராப்யம் அவன் என்று காட்டுவதால்-குகன் ஆஸாத்யா-இரண்டாம் வேற்றுமை /
ஹநுமாதா -மூன்றாம் வேற்றுமை –
அஸ்பஷ்டமானவற்றை முதலில் திருவடி விஷயத்தை -முதலில் சொல்லி பின்பு ஸ்பஷ்டமான குகன் விஷயத்தை பின்பு வைத்தார் –
முன்னால் இது நடந்ததாகிலும் –

அதாவது –
தம் தாம் பக்கல்-( -இருவர் உண்டே என்பதால் பன்மை ) அபேஷை இன்றிக்கே இருக்கச் செய்தே –
பம்பா தீரத்திலும் –
கங்கா கூலத்திலும் –
பெருமாள் தாமே சென்று அங்கீகரிக்கப் பெற்ற திரு வடிக்கும் ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இந்த பரகத ஸ்வீகாரம் உண்டாய்த்து -என்கை –

——————————————-

சூரணை -151-

இவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்
அபய பிரதா நத்திலும் காணலாம் –

இப்படி ஸ்வதந்த்ரனானாய் இவர்களை அங்கீகரித்த இடத்திலும் –
தமப்ய பாஷ ஸௌ மித்ரே  சுக்ரீவ  சசிவம் கபிம் -கிஷ்கிந்தா காண்டம் -3 -27 –
மாழை மான் மட நோக்கி வுன் தோழி உம்பி எம்பி- பெரிய திரு மொழி -5- 8- 1 என்று
இளைய பெருமாளையும் பிராட்டியையும் முன்னிட்டாப் போலே
மற்றும் புருஷகாரத்தை முன்னிட்டு அங்கீகரித்த இடம் காணலாமோ -என்ன
அருளிச் செய்கிறார் –

சம்பிரதாயத்தில் அபய பிரதானம் என்றால் ஸ்ரீ விபீஷண விஷயீ காரம் / புருஷகாரம் எதிர்பார்க்காமல் கேவலம் இச்சையால் என்பான் என்னில்
இதுவே இயற்க்கை -ஸ்வா பாவிகம் – இருந்தாலும் ஸ்வா தந்தர்யம் அடியாக புருஷகாரமாக ஏற்படுத்தி வைத்து உள்ளான்-நிரதிஷ்டா ஸ்ருதியும் சொல்லுமே
யாரும் யாதும் இல்லாமலும் இவன் பண்ணுவான் – -இவள் மூலமாகவே தான் பண்ணுவான் -இரண்டும் உண்மை /
நமக்கு கைங்கர்யம் தருமா போலே இவளுக்கும் இது /
ஆஸ்ரயண உன்முகனான சேதனன் ஸூ அபராத பய நிமித்தமாக -முன்னிட்டும் புருஷகார பூதனை முன்னிட்டே கைக் கொள்ளும் –
ஆஸ்ரயணீயனும் முன்னிட்டே கைக் கொள்ளும் -/ சுக்ரீவாதிகளை -பெருமாளும் முன்னிட்டு -ஸூ ஸ்பஷ்டமாக காணலாம் /
பிரதானரை முன்னிடவே அப்ரதானரும் அந்தர்கதம் தானே -விபீஷணன் வானர உத்தமர்களை முன்னிட்டு பெருமாள் சுக்ரீவனை அழைத்து வர சொன்னாரே –
பிராட்டியையும் முன்னிட்டு -உம்மை தொகை -மேலே வானர முதலிகளையும் புருஷகாரமாக பற்றினான்-என்பதால்
அவதார பிரயோஜனம் ஸ்ரீ விபீஷணனை அங்கீ கரிக்க தானே -கீழ் எல்லாம் முன்னுரை -அபய பிரதானம் சாரம் -பரதந்த்ரை -பிராட்டிக்கு ஸ்வரூபம் –
இதனாலே வலிய சிறை புகுந்தாள்–இதனாலே இங்கும் பரகத ஸ்வீ காரம் தானே
ஹனுமான் ப்ரஹ்ம பட்டத்துக்காக தபஸ் புராணாந்தரம் சொல்ல பகவத் விஷயீகாரம் உச்சிதமோ என்னில் –
பூர்வ சதகம் –57-விஷ்வக் சேனர் விபீஷணன் ஹனுமான் மோக்ஷம் உபேக்ஷித்து
ஸ்ரீ ரெங்காதனத்தில் பெரிய பெருமாளை ஸந்தோஷம் படுத்திக் கொண்டே –
குண அனுபவ ஏக பார்த்தார்கள்-அகிலமும் காணும் படி எழுந்து அருள-புராணாந்தரங்கள் கல்பாந்தர ஹனுமான் பற்றி –
நமக்கு தெரிந்த கல்ப திருவடியை சொல்ல வில்லை இது
மாழை-அழகு / மான் போன்ற பவ்யமான கண்கள் / வால்மீகி மித்ரன் -என்பர் -புதல்வரால் பொலிந்தான் கம்பர் /
முதல் வேற்றுமை கர்த்தா -இரண்டாம் வேற்றுமை கர்மா -மூன்றாம் வேற்றுமை-கருவி உண்டே / -கர்மீ பவித்தல் ஆளாவது என்றவாறு -/
விபீஷணன் விஷயத்தில் தான் பலர் எதிர்க்க இவன் அங்கீ கரித்தான் / ச பக்ஷ விஷயம் அபய பிரதானம் /
புகை ஹேது மலை பக்ஷம் நெருப்பு சாத்தியம் /
மடப்பள்ளி ச பக்ஷம் -என்பது போலே /
ஹநுமாதா சங்கதா- குகன் ஆஸாத்யா – விபீஷணன் சங்கமித்தான் -சுவாரஸ்யம் தத் தத் உத்தேச்யம் /தூரத்தில் நின்றும் தத் தத் தேசம் வரை வந்து –
தத் தத் சம்ச்லேஷ -தத் தத் இவர்களை கர்மமாக கொண்டு பகவான் கர்த்தா -பர கத ஸ் வீ காரம் சித்தம்
யாதிருச்சிகமாக இவர்களும் சில தூரம் நடக்க -/ ஆஜகாம -முஹுர்த்தேன/ அதி பலஸ்ய லஷ்மணன் -முன்னிட்டு திருவடி /
ஸுமித்ரே அவரையே பெருமாளும் முன்னிட்டு அங்கீ கரித்தது ஸ்பஷ்டம் /
குகனும் பிராட்டி மூலம் –சீதை யுடன் கூடி ரத்தத்தில் நின்றும் இறங்கினான் என்பதால் -/ தத்வ தர்சி வாக்கியத்தில் ஸ்பஷ்டம் /
நிர்ஹேதுக பரகத ஸ் வீகாரமே தாத்பர்யம் / யாதிருச்சிகமாக சரணாகதி போலே இவர்கள் கிஞ்சித் காரம் /
மித்ரா பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் -அபயம் சர்வ பூதானாம் /
நிவேதயதே கூட்டத்தை முன்னிட்டு-சுக்ரீவனையும் நோக்கி சொன்னான் -ஹரி சிரேஷ்ட சுக்ரீவ -சப்தம் –
அவனுக்குள் குரங்கு கூட்டமும் அடங்கும் – -சுக்ரீவன் மூலம் பெருமாள் /
ப்ராஹ்மணர்களும் வந்தார் வசிஷ்டரும் வந்தார் போலே பிரதானரை தனித்து சொன்னது போலே /
பிரதான கிருதம் ஸர்வத்ர கிருதம் பவதி -ஆச்சார்யருக்கு மட்டுமே அச்சதை கொடுக்க வேண்டும் –
கிருஷ்ணன் ஒரு பருக்கை சாப்பிட அனைவரும் உண்டதாகவும் உண்டே /
ஐந்து வானரங்களை பிராட்டி கண்டாள் ரிஷ்யமுக பர்வதம் -தேஷாம் மத்யே விசாலாட்ஷி –
கனக ப்ரபம் -பொன்னாடையில் பொன் ஆபரணம் –/ மாழை மான் மட நோக்கி வார்த்தை போலே இங்கே விசாலாட்ஷி சப்தம் -/
கடாக்ஷ விசேஷம் -நிர்ஹேதுக பகவத் அங்கீ காரத்துக்கு அவன் விரும்புவது அன்றோ இது /
த்ரிஜடை உடன் பிறந்தவள் — சரமா-மனைவி – அனலா -பெண் மூவரும் -துல்ய நியாயம் –
சரமா உடன் சீதா தோழமை என்பதால் விபீஷணன் உடன் பெருமாள் /
அபிபாகம் -வேறு பாடு இல்லையே இருவருக்குள்ளும் / ராவணனையே திருத்த பார்த்தாளே/
ராமஸ்ய வியவஸ்தாயா அது வழியே நடப்பதே இவளுக்கு ஸ்வரூபம் -/
இவளது கடாக்ஷம் பர கத ஸ் வீ கார உபயோகி -/

அதாவது –
இச் சேதனன் தான் ஆஸ்ரயிக்கிற போது புருஷகாரமாக முன்னிடும் அவர்களை
அவனும் அங்கீகரிக்கும் போதும் முன்னிடும் என்னும் இடம் –
திருவடியையும் ஸ்ரீ குகப் பெருமாளையும் அங்கீகரித்த ஸ்தலங்கள் மாத்ரம் அன்றிக்கே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த ஸ்தலத்திலும் காணலாம் என்கை –
எங்கனே என்னில் –
சோஹம் பருஷி தச்தேன தாசவச் சாவமானித த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று சரணம் புகுந்து –
சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயதே மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்-என்று நின்ற விபீஷண ஆழ்வானை
அபய பிரதான பூர்வகமாக -அங்கீகரிக்கிற இடத்தில் –
ஆனையேநம் ஸ்வயம் -என்று முதலிகளுக்கு எல்லாம் மூல பூதரான மகா ராஜரை முன்னிட்டு இறே அங்கீகரித்தது –
திருவடியையும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் அங்கீகரித்த இடத்தில் பிராட்டி சந்நிதிஹை
அல்லாமையாலே அவனை முன்னிட்டமை தோற்றிற்று இல்லை ஆகிலும் –
பிராட்டி இலங்கைக்கு எழுந்து அருளுகிற போது மகா ராஜரும் திருவடியும் நிற்கிற இடத்திலே –
திரு ஆபரணங்களை பொகட்டு கடாஷித்து வைத்துப் போகையாலும்-
இலங்கையிலே எழுந்து அருளின போது ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பெருமாள் திருவடிகளிலே வரும்படி கடாஷித்து அருளுகையாலும் –
பெருமாள் இருவரையும் அங்கீகரிக்கும் இடத்தில் பிராட்டியை முன்னிட்டு அங்கீகரித்தார் என்றே கொள்ள  வேண்டும் –
பரதந்த்ரையான அவளுக்கு இத்தலையில் நினைவு ஒழிய தனித்தொரு பிரவ்ருத்தி கூடாது இறே –
ஆகையால் இறே –
பரகத ஸ்வீகாரம் சொல்லுகிற இடத்திலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த அத்தையும் சஹ படித்தது

—————————————————-

சூரணை –152

இருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –

இவன் நிருபாதிக சேஷ பூதனாய் அவன் நிருபாதிக சேஷி பூதனாய் இருக்கையாலே-அவ்யவதாநேன , ஆஸ்ரயிக்கவும் அங்கீ கரிக்கவும் அமைந்து இருக்க –
இப்படி இருவரும் புருஷ காரத்தை முன் இடுகிறது எதுக்கு என்ன அருளிச் செய்கிறார்– இருவர் என்று தொடங்கி–

ஆஸ்ரய உன்முகனும் ஆஸ்ரயணீயனும் புருஷகாரரை முன்னிட்டு -அநாதி கால வைமுக்யம் / அநாதி காலம் உபேக்ஷிப்பதால் வந்த குற்றங்கள் /
என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமால் -/அவர்ஜனீய சம்பந்தம் -விட்டு ஒழிக்க ஒண்ணாத சம்பந்தம் / உசித உபாயம் எடுத்து சொல்லி சீறாமல்- —
சமிப்பிக்கைக்கு –போக்கி விடுகை -என்றவாறு -/பிராட்டி பேச நமக்கு பயம் போகும் -அவளது -கிருதி சாத்தியம் –
அனலா பற்றி-சுந்தர காண்டம் -தாயார் தூண்ட சீதை இடம் சொன்னதை-தோழி -என் கையைப் பிடித்து ஆசுவாசப்படுத்தினாள்-திருவடியிடம் தெரிவிக்கிறாள் —
மாத்ரா தாயாரால் தூண்ட இவள் தோழி போலே சொல்ல – ச குடும்பராக-அனலா சரமா திரிசடை — தன் திரு உள்ளத்திலே உகப்புக்கு ஊன்றி போனார்கள் –
இந்த விஷயத்தை பெருமாள் திரு உள்ளத்தில் படுத்த அன்றோ திருவடி இடம் தாயார் இவ்விடம் அருளிச் செய்கிறாள் –

சேதனனுக்கு குற்றம் ஆவது -அநாதி காலம் அவன் பக்கல் விமுகனாய்,அந்ய விஷய பிரவணனாய்
ததாஜ்ஞா அதி லங்கமே பண்ணி    கூடு பூரித்து வைத்த அபராதம்
ஈஸ்வரனுக்கு குற்றம் ஆவது –அவர்ஜநீயமான சம்பந்தம் உண்டாய் இருக்க –
அபராததையே கணக்கிட்டு ,அநாதி காலம் இவனை அகல அடித்து இருந்தது இது
இவன் தன குற்றத்தை சமிப்பிக்கையாவது –இத்தை பார்த்து ஈஸ்வரன் சீறாத படி பண்ணுகை-
அவன் தன குற்றத்தை சமிப்பிக்கை யாவது -இத்தை நினைத்து சேதனன் வெருவாத படி பண்ணுகை-

————————————

சூரணை-153 —

ஸ்வரூப சித்தியும் அத்தாலே –

இவ்வளவே அன்றி -இன்னும் இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார் -ஸ்வரூப இத்யாதியால்–

ரஷ்யமாயும் ரஷித்தும் போகிற இருவருக்கும் -ரஷிப்பிக்கும் புருஷகாரம் –இரண்டுமே நித்யமானாலும் -பிரேரிகை தூண்டுவது இவள் அன்றோ –
இதனால் ஸ்வரூபம் சித்திக்கும் இருவருக்கும் /
கீழே – குற்றத்தை சமிப்ப்பிக்கைக்காக புருஷகாரத்தைச் -சொல்லி இங்கு இன்னும் ஒரு பிரயோஜனம்
ஆஸ்ரியையும் ததீயையும் பிராட்டி தானே -நமக்கு ததீயா பாரதந்தர்யம் -அவனுக்கு ஆஸ்ரித பாரதந்தர்யம் -நடுவில் பிராட்டிக்கு இரண்டு ஆகாரங்கள் இதற்காக –
அவளே ததியை உடைமை / நம்மை ஆஸ்ரயித்தவள் சொல்வதால் நம்மை ரஷிக்க என்று அவனும் ரக்ஷிப்பானே /
தேவும் தன்னையும் -தானான தன்மை யன்றோ ஆஸ்ரித பாரதந்தர்யம் /
ஸ்வரூபமாவது -சேதனனுக்கு ததீய பாரதந்தர்யம் -உடைமைக்கு -பிரணவம் சப்த ஜாலம் அடங்கி இருப்பது போலே அறிகிறோம் –
ஈஸ்வரனுக்கு ஸ்வா தந்தர்யம் தானே ஸ்வரூபம் –பரதந்தர்யமானால் உபாயத்வம் வராதே -இத்தை ஸ்தாபிக்க -பிராமணம் -கொண்டு –
தேவத்வம் பரத்வம் தன்னையும் ஸ்வரூபம்- தத் ப்ரத்ய நீகமான ஆஸ்ரித பாரதந்தர்யம் – -ஆத்மாநாம் நாதி வர்த்ததே உன்னை நீ மீறாதே என்று
லஷ்மணனும் பரதனும் சொல்வதும் மர்மம் நாடி பிடித்து ஆஸ்ரித பாரதந்தர்யத்தை மீறாதே என்று பிரார்த்திக்கிறார்கள் –
கடலை தன் கரையை மீறி வராமல் இருக்கத் தானே பிரார்த்தனை -சமுத்திர இவை காம்பீரம் இவனுக்கு -கரை கடலுக்கு சொந்தமே தானே
வேதாந்தத்திலும் -ஈசித்திருத்தவம் ஸ்வரூபம் என்றும் – ப்ரணத ஸுலப்யம் ஸ்வ பாவம் என்றும் விடாக்யானம் உண்டே –

ஸ்வரூபம் ஆவது- இவனுக்கு ததீய பார தந்த்ர்யம் –தேவும் தன்னையும் என்று-
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து-
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என்-
பாவம் தனையும் பாற கைத்து எமர் எழ ஏழு பிறப்பும்-
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே-திரு வாய்மொழி -2-7-4-
ஆஸ்ரித பாரதந்தர்த்தை இறே

இவனுக்கு தானான தன்மையாக ஆழ்வார் அருளிச் செய்தது –இவை இரண்டும் இருவருக்கும் சித்திப்பது ,
புருஷ கார புரஸ் கரணத்தாலே என்கை–

—————————-

சூரணை-154–

ஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—

கீழே ஸ்வரூபம் என்று சொன்னதை உபபாதிகிறார்-
அதாவது சேதனனுக்கு இவ் விஷயத்தில் பாரதந்த்ர்யம் ததீயத்வ பிரயுக்தம் ஆகையாலே —

ஸ்வ தந்த்ர ரக்ஷணம் உள்ளவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் ரக்ஷித்தால் கொத்தை அன்றோ /
தத் ஏக பரதந்த்ரமான சேதனன் ஸ்வரூபத்துக்கும் கொத்தை வருமே என்னில்
இருவருக்கும் காரணத்தை பற்றி உபாதி ஓவ்பாதிகம் /காரணம் பற்றி வந்தால் காரணம் போனால் காரியம் போகும் —
பிராட்டிக்கு பரதந்த்ரன் -சொல் படி ரக்ஷித்தால் குறை -வராதோ /
தத் ஏக ரக்ஷகத்வம் சேதனனுக்கும் பிராட்டியால் பெற்ற ரக்ஷணம் குறை அன்றோ என்னில் -/ குறை இல்லை
காரணமே நித்யம் அன்றோ இங்கு -போகாமல் நித்யம் -/அவள் எப்போதும் உடைமை -ததியை ஆகாரமும் ஆஸ்ரயியை ஆகாரமும் போகாதே /
பிரனயி பிரணயினி சம்பந்தம் அபங்குரா-அழிவில்லாத காதல்- தொடர்ந்து இருக்கும் –
ஆஸ்ரித பாரதந்தர்யத்துக்கு மேலே இவள் இடம் ப்ரணயித பாரதந்தர்யமும் உண்டே
ததீயத்வ நிபந்தனம்–அவனுக்கும் அவன் உடைமைக்கும் உள்ள சம்பந்தமும் அபங்குரம் தானே /
இந்த உபாதி அடியாக வந்தவை அன்றியே -இயற்கையையிலே-நிருபாதிக – நிராங்குச ஸ்வாதந்த்ரயமும் –
தத் ஏக பாரதந்தர்யமும் நமக்கு உண்டே -இவை தானே இருவர் ஸ்வரூபம் /
இருவர்களுடைய-புருஷகார சாபேஷை -ரக்ஷகத்வ ரஷ்யத்வங்கள் -நிருபாதிக சம்பந்த சித்த -ஸ்வா தந்தர்ய பாரதந்தர்யங்களுக்கும் கொத்தை ஆகாதே

ஆக -ஈஸ்வரனுக்கு நிருபாதிக்கவுமாம் நித்யமுமாய் ஸ் வ சித்த வேஷம் ஸ் வா தந்திரம் /
ஒவ் பாதிகமாய் நித்யமுமாய் பிரணயித்தவ பாரதந்த்ரம்
சேதனனுக்கு நிருபாதிக நித்ய பகவத் பாரதந்தர்யம் ஸ்வ சித்த வேஷம் – ததீய பாரதந்தர்யம் ஓவ் பாதிக்கமாயும் நித்யமுமாயும் இருக்கும் என்றவாறு –
பிரணயித்தவ பாரதந்த்ர்யத்துக்கு பிரதம விஷயம் பிராட்டி -சரம விஷயம் ததியர் -நம் வரை அவன் விஷயீ கரிப்பானே
ததீய பாரதந்த்ரயத்துக்கு பிரதம விஷயம் பிராட்டி -சரம விஷயம் அவனும் ததீயரும் அடியார் அடியார் அடியோம் ஆக வேண்டுமே
இந்த இரண்டில் வலிமை -யுடையது -பிரணயித்தவம் போலே கதாசித் கலாய்ப்பதுக்கு சம்பாவனை இல்லை
ஊடல் திறமோ பிரிவோ இல்லையே
கிம் கார்யம் சீதயாம் மம -சுக்ரீவன் ஆஸ்ரித சம்பந்தம் முக்கியமாக கொண்டானே –
பத்நீத்வம் ஆஸ்ரிதத்வம் இரண்டும் பிராட்டிக்கு -இரண்டு ஆகாரங்கள் -இதிலும் ஆஸ்ரயித்வமே பிரதானம் –
நித்யத்வம் உத்பத்தி வி நாசம் இல்லை -பிரசித்த பிரமாணங்கள் — ஜீவ பிரதான– ஈஸ்வர ஈஸ்வரீ-மூன்று ஆகாரம்–
பும்ஸாம் சேதனானாம் த்ரிகுணம் பிரகிருதி ஈஸ்வரனுக்கு -ஸ்வரூபத்தையா ஜீவனுக்கு / பத்நீதவத்தால் அசேதனத்துக்கு ஈஸ்வரி -மனைவியான படி /
-பிரணயித்தவம் ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரி –இப்படி -தானான பத்னி காதல் மூன்று ஆகாரங்கள் /
ஸ்ரீ ச்ரயதே –ஆறு வித்புத்தி ஆஸ்ரயிக்கிறாள் ஆஸ்ரயிக்கப்படுகிறாள் –

ஒவ்பாதிககுமாய் – அவ் வுபாதி தான் நித்யம் ஆகையாலே ,நிருபாதிக பகவத் பாரதந்த்ர்யதோ பாதி-நித்யமுமாய் இருக்கும் —
ஈஸ்வரனுக்கு இவ் விஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆஸ்ரித்வ பிரயுக்தம் ஆகையாலே ஒவ்பாதிகமமாய்–
அவ் உபாதி நித்யம் ஆகையாலே அது தானும் நித்யமுமாய் இருக்கை என்கை–
இருவருக்கும் உண்டு என்னாதே- உண்டு இறே – என்றது இவ் அர்த்தத்திலே பிராமண பிரசித்தியை- தோற்று விக்கைகாக-
ஒவ்பாதிகம்-காரணத்தின் அடிப் படையில்-

————————————

சூரணை-155–

அநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —

இவ்வளவு இன்றி இன்னும் ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார்-

கர்ம பாரதந்தர்யம் அநித்தியம் தானே -/ நமக்கு மட்டும் இல்லை -பகவானும் நம் கர்மங்களுக்கு பர தந்திரம் -வைஷம்யம் இல்லை அவனுக்கு – –
கர்மங்களை எதிர்பார்த்தே தண்டனை /ஆகந்துக பாரதந்தர்யம் குலைக்கும்
புருஷகாரத்தால் -கர்மம் குலையும் -அநித்யமாய் -தான் பண்ணின கர்மம் தானே அனுபவிக்கிறான் -கர்மத்தின் தலையிலே ஸ்வாதந்தர்யம் வைத்து
தன்னைக் கொண்டு நழுவுகை தானே -ஈஸ்வரனுக்கு நம்முடைய கர்ம பாரதந்தர்யம்
கர்மத்துக்கு ஒரு மூச்சு உண்டோ –சாஸ்திரம் விதிக்கலாம் -பிராட்டி சொல்வாள் – உம்மை தவிர்த்தா இவை -சும்மெனாதே ஓடாதோ -புருஷகார பூர்வகமாக –
சித்த உபாய -ஸ்வீகார வர்ணத்தால் இவை விநாசம் அடையும் -அநித்தியம் -நெடும் காலம் கர்மம் இட்ட வழக்காய் -பகவத் பரதந்த்ரனாய் இல்லாமல்
கர்மத்துக்கு அன்றோ வசமாக்கி உழல்கிறான் என்று பிராட்டி திரு உள்ளம் கொள்ள- திருத்தி -குலைய வைக்கிறாள் –
சமிப்பிக்கும் அங்கு பிராட்டி கார்யம் செய்ய வேண்டும் அங்கு எல்லாம் -இங்கு கர்மம் குலையும் -குலைப்பிக்கும் என்பது இல்லையே –
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்றதும் தானே போகுமே தன்னடையே போகுமே நீயும் வேண்டா நானும் வேண்டா
ரஷ்ய ரஷக பாவேனே சேரும் படி அன்றோ அவள் கார்யம் –

அநித்தியமான பாரதந்த்ர்யம் ஆவது கர்ம பார தந்த்ர்யம்–
அதில் சேதனனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது
அவஸ்யம் அனு போக்தவ்யங்களான சுப அசுப கர்மங்களின் வசத்தில் இழுப்புண்டு சம்சரிக்கை–
ஈஸ்வரனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது –
தான் செய்த கர்மம் தான் அனுபவிக்கிறான் ஆகில் நாம் செய்வது என் என்று
இவன் செய்த கர்மத்தையே பிரதானம் ஆக்கி அதுக்கு ஈடாக நிர்வஹித்து போருகை–
இது நடப்பது -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி-என்னும் அளவும் ஆகையாலே இத்தை அநித்தியம் என்கிறது .-
இவை புருஷ கார புரஸ் கரணத்தாலே குலைகை ஆவது –இவன் முன்னிட்டும் அளவில் அத் தலையை திருத்தியும் ,
அவன் முன்னிடும் அளவில் இத் தலையை திருத்தியும்
இரண்டு தலையும் ரஷ்ய ரஷக பாவேன சேரும் படி பண்ணுகையாலே இவை தன்னடையே நிவ்ருத்தம் ஆகை-

———————————–

சூரணை-156–

ஸ ஸாஷிகம் ஆகையாலே-
இப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்ய போகாது —

அநாதி கால ஸ்வதந்த்ரனாய் யாதானும் பற்றி நீங்கி திரிந்தவன் இன்று இறே ஆபிமுக்யம் பண்ணிற்று
பிரகிருதியோடு இருக்கையாலே துர் வாசனை மேல் இட்டு  ஆஸ்ரயண அங்கீ காரங்களாலே உத்பூதமான
இந்த ரஷ்ய ரஷக பந்தத்தை இல்லை செய்து -பழைய படியே போக பார்க்குதல்-
நிரந்குச ஸ்வதந்த்ரனாய் கர்ம அனுகுணமாக இவனை லீலையிலே அநாதி காலம்
விநியோகம் கொண்டு போந்த ஈஸ்வரன் தான் இப் பந்தத்தை இல்லை செய்து
முன்பு போலே இவனை கர்ம அனுகுணமாக நிர்வகிக்கப் பார்க்குதல் செய்யிலோ என்ன
அருளிச் செய்கிறார் -ஸ ஸாஷிகம் என்று தொடங்கி–

உத்தர வாக்ய அவதாரிகை -பிரபன்னன் ஆகவே இருந்தாலும் ஹி பிரசித்தம் -கர்ம கிருத தேகம் ஒட்டிக் கொண்டே இருக்க -அதன் ஸ்வரூபம் காட்டுமே
சடக்கென பலாத்காரத்தாலே தீய பாதைக்கு இழுத்துக் கொண்டே போகுமே துரிதங்கள் வழியாக –
சாக்ஷி பிராட்டி இருப்பதால் ஆஸ்ரயணத்துக்கும் அங்கீ காரத்துக்கும் -இரண்டுக்கும் சாக்ஷி உண்டே -பந்தம் இருவராலும் ஒழிக்க முடியாதே –
புருஷகாரத்தால் வந்த நன்மை சாத்தியம் இதுவே உபய அனுமத சாக்ஷி இருவருக்கும் அபிமதம் தானே இவள் -/ரஷ்ய ரஷக சம்பந்தம் -ஸ்வத சித்தம் –
பந்தம் -சம்பந்தம் தெரியாமல் தவித்து இருக்க – / ரஷ்யமான அவனாலும் ரஷியாமல் இல்லை செய்ய ஒண்ணாது /
ரஷ்யகமான இவனால் அதுக்கு இலக்கு ஆகாமல் இல்லை செய்ய முடியாதே – -ரஷ்யமாக இல்லாமல் என்னாமல் அதுக்கு இலக்கு ஆகாமல் -என்று அருளிச் செய்தது –
கர்தவ்யம் ஈஸ்வரனுடையதே என்பதால் –

அதாவது இந்த ரஷக ரஷ்ய சம்பந்தம் இரண்டு தலையும் அறிந்ததாக வந்தது அன்றிக்கே -புருஷ கார
ரூப சாஷி சஹிதமாக வந்தது ஆகையாலே -இத்தை இருவராலும் அழிய மாறப் போகாது என்கை—

——————————————

சூரணை -157-

என்னை நெகிழ்க்கிலும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –

இதுக்கு பிரமாணம் காட்டுகிறார் மேல் –

பிரமாணம் காட்டுகிறார் கீழே சொன்ன அர்த்தத்துக்கு -/ என்னுடைய நல் நெஞ்சம் தன்னை அகல்விக்க கில்லான்-
நப்பின்னை பிராட்டி சாக்ஷி உண்டே /-ஆஸ்ரயணத்துக்கு இந்த பிரமாணம்
அமரர் முழு முதன் -நித்ய சூரிகள் நடுவே என்னை அங்கீ கரித்த பின்பு சர்வ சக்தியான தானும் கில்லான்
என் அன்பேயோ -சொல்வதற்கு முன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –அங்கீகாரத்துக்கு இந்த பிரமாணம் –
பிராட்டி பக்கல் உள்ள பரிவு அவள் பரிக்ரமமான என் அளவும் வந்ததே –
முற்பட்டதில் சம்பந்தத்தில் சிதிலம் ஆகாமையையும் -/கீழ்
அதில் பிராட்டி புருஷகார பூர்வகமாவதையும் ஸ்பஷ்டமாக உண்டே /
இவன் முன்னிட்டும் அவர்களை அவன் முன்னிட்டும் என்பதால் இந்த க்ரமத்திலே அருளிச் செய்கிறார் /
இருவராலும் -சொன்னாலும் அவன் விடாமல் இருப்பதே பிரதான்யம் -பரகத ஸ்வீ கார முக்யத்வ பிரகரணம்
நப்பின்னை -கடகத்வம்-பிராட்டி செய்யும் கைங்கர்யம் இவர்களாலும்-நிழல் போலவே –

நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக நித்ய சூரிகள் நடுவே –
அவனாலே இப்பந்தத்தை இல்லை செய்யப் போகாது என்பதற்கு பிரமாணம் -அகல்விக்க தானும் கில்லான் –
பெரிய பிராட்டியாருக்கு ஸ்னேஹி -அவள் பரிக்ராமான என் பக்கலிலே அதி ஸ்நேகிதியாய் —
அவள் இடம் அன்பு காட்டி என்னிடம் அன்பே உருவாக்கி -அதி சப்தம் இதனாலே –
அரியன செய்து-கோலா வராஹாம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் -இதனாலே –
வந்து என்னுடன் கலந்த-என்கிறார் -இனி நான் நழுவ விடுவேனோ -என்கிறார்
புருஷகாரம் முன்னாக வந்த பந்தத்தை சேதனனால் இல்லை செய்யப் போகாதே –
அங்கே அவனாலே இல்லை செய்யப் போகாது -இங்கே சேதனலாலேயும் போகப் போகாது –
உம்மைத் தொகை பகவானால் இல்லை செய்யாமல் போகாதே என்பதே முக்கிய அர்த்தம் என்றவாறு –

—————————–

சூரணை -158-
கர்மணி வ்யுத்பத்தியில்
ஸ்வரூப குணங்களால் வருகிற
கர்த்ரு சங்கோச ராஹித்யத்தை
நினைப்பது –

ஸ சாஷிகமான இப்பந்தத்தை இல்லை செய்ய போகாது -என்றது –
சாஷியான புருஷகார விஷயத்தில் இருவருக்கும் உண்டான
நித்ய பாரதந்த்ர்யத்தை பற்ற வகையாலே -இருவருக்கும் இவ் விஷயத்தில் உண்டான
நித்ய பாரதந்த்ர்யத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –

வாத பிரதிவாதங்கள் இருந்தால் தானே சாக்ஷி வேண்டும் -நீதிபதியே ஒரு கட்சி வக்கீலாக இருக்க சாக்ஷி எதற்க்காக //
கர்த்தா-நாமும் பகவானும் -பிராட்டியை குறித்து கர்த்தா =சேஷி சேஷ நமக்கு–ஸ்வரூபம் இது / பிரணயித்தவம் அடியால் அவருக்கு -குணம் இது /
-கர்த்ரு சங்கோசம் செய்ய ஆள்கள் இல்லாமல் —ஸ்ரீயதே -ஆஸ்ரயிக்கிறோம் -கர்தரி முதல் வேற்றுமை / கர்மணி இரண்டாம் வேற்றுமை –
கரணே வ்யுதோசத்தி மூன்றாம் வேற்றுமை – ராமன் ராவணனை வில்லாலே கொன்றான் –
இருவரையும் நியமிக்கும் சாமர்த்தியம் உண்டே இல்லை செய்ய முடியாமல் உபயருடைய சாக்ஷி பாரதந்தர்யம் -உண்டே -அன்பால் அவன் -ஸ்வரூபத்தால் நாம் –
இதுக்கு பிரமாணம் ஸ்ரீ -திரு நாமத்தின் வயுத்தபத்திகளே பிரமாணம்
ஸ்ரீ யதே கர்மணி வ்யுத்பத்தி மிதுன சேஷத்வ ஸ்வரூபம் /ஸ்வ ஸ்வ அனுகுணமாக அவளுடைய சேவா கர்த்தாக்கள் இல்லாமல் போகாதே –
அனைவரும் சேவா கர்த்தா -நாம் ஸ்வரூபத்தால் அவன் அன்பால் –புருஷகார பரதந்தர்யம் –நினைத்தாலே சாக்ஷி வீண் ஆகாதே –
இருவரும் பெரியதாக மதிக்கும் சம்பந்தம் இப்புருஷகாரத்துக்கு உண்டே -தூண்டி கிளப்பிய பந்தத்தை இருவராலும் இல்லை செய்யப் போகாதே –
நிருபாதிக சேஷத்வ லக்ஷணம் -ஸ்வரூபம் -நமக்கு தானே -பிரணயித்தவ சேஷத்வம் அவனுக்கு -ஆக இரண்டாலும் அனைவருக்கும் உண்டே –
நியாய சித்த அர்த்தத்தை -தான் ஆஸ்ரயிக்கிறாள் -அகிலமும் இவளை ஆஸ்ரயிக்கப்படுகிறாள் -சகல -அகில வாசி ஓன்று விடாமல் காட்ட அகில –
நிகில-வும் இதே அர்த்தம் -அகில புவன ஜென்ம -இதனால் –
சகல சொன்னால் கர்த்ரு சங்கோசம் வருமே -அகில பரமாத்வாயையும் சேர்த்து அகார வாஸ்யனையும் சேர்த்து சொல்லுமே –

கர்மணி வ்யுத்புத்தி யாவது -ச்ரீன் சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -என்ற வ்யுத்புத்தி -இதுக்கு அர்த்தம் -சேவிக்க படா நின்றாள்  என்று இறே –
இவ் வ்யுத்பத்தியில் -ஸ்வரூப குணங்களால் வருகிற கர்த்ரு சங்கோச ராஹித்யம் ஆவது –
சேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தாலும் -பிரணயித்வம் ஆகிற குணத்தாலும் -வருகிற சேதன
பரம சேதனர்கள் ஆகிற சேவா கர்த்தாக்களுக்கு சங்கோசம் இல்லாமை –
அதாவது –
இரண்டு தலைக்கும் இவள் விஷயத்தில் உண்டான சேவை அவிச் சின்னமாய் செல்லுகை-
இத்தை -நினைப்பது -என்றது -இவ் விஷயத்தில் இரண்டு தலைக்கும் உண்டான
பார தந்த்ர்யத்தை ஸ்மரிப்பது என்ற படி –

——————————————

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம்
அவர்ஜநீயம் –

இப்படி இருக்கையால் இப் புருஷகாரம் எல்லாருக்கும் அவஸ்ய அபேஷிதம் என்கிறார் மேல் –

அதிகாரி த்ர்யமாவது -அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர் -என்கின்ற மூன்று அதிகாரிகளும் –
இவர்களுக்கு -புருஷகாரம் அவர்ஜ நீயம் -என்கிறது -குற்றத்தை சமிப்பிக்கை -முதலான வற்றுக்கு
புருஷகாரம் அந்வயம் வேண்டுகையாலே -சர்வதா கை விட ஒண்ணாது என்கை –
அதவா –
இப் புருஷகாரம் தானே -அநந்ய பிரயோஜனராய் பிரபத்தி பண்ணும் அவர்களுக்கு யேயோ –
பிரயோஜனந்த பரராய் பண்ணும் அவர்க்கும் வேணுமோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதிகாரி சித்தி அர்த்தத்துக்கு புருஷகாரம் அவர்ஜனீயம் –அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர்/
ஐஸ்வர்யார்த்தி கைவல்ய பகவத் லாபார்த்தி மூவருக்கும் உண்டே என்பர் மா முனிகள் –
ஆயி ஸ்வாமிகள் அப்ரஸ்துதம் என்பர் -அவர்களுக்கு பிராயச்சித்தம் தவிர புருஷகாரம் வேண்டாம் என்பர் –
சூரணை -267-நாலாம் அதிகாரிக்கு -அனுக்ரஹத்துக்கு இலக்கு –
உபாயாந்தர நிஷ்டருக்கு பிராயாச்சித்தம் விசேஷம் என்று இவர் தாமே விசேஷிக்கையாலே -என்றுமாம் –
ஸ்ரீ யபதியைப் பற்ற வேண்டும் என்று சொல்வதாலேயே புருஷகாரம் வேண்டும் என்பது இல்லை –
நான்கு காரணங்களால் ஐஸ்வர்யாதிகளைச் சொல்ல முடியாது என்பர் ஆயி ஸ்வாமிகள் –
இங்கே நாம் பேசுவது பிரபத்தி நிஷ்டரை பற்றியே என்பதால் கொள்ளலாம் என்பர் மா முனிகள்
பிரபத்தி பண்ணியும் பிரயோஜனாந்தரம் பெறலாமே -பிரயோஜனம் பகவானே என்பதே அஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர் என்கிற மூவருக்கும் -268-13

அதிகாரி த்ரயம் என்கிறது -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்த்திகள்-
இவர்கள் மூவருக்கும்  புருஷகாரம் அவர்ஜ நீயம்  என்றது -ஸ்வ ஸ்வ அபிலஷித
சித்திக்கு ஈஸ்வரனை உபாயமாக சுவீகரிக்கும் அளவில் -இவர்கள்
அபராதங்களை பொறுத்து அவனை அங்கீகரிக்கும் படி பண்ணுகைக்கு புருஷகாரம் அவஸ்ய அபேஷிதம் என்கை –
பூர்வ வாக்யத்திலே -புருஷகார பூர்வகமான உபாய வர்ணம் பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாகையாலே இறே –
உத்தர வாக்யத்தாலே அநந்ய பிரயோஜனத்வத்தை பிரகாசிப்பிக்க வேண்டுகிறது –
பூர்வ வாக்யத்தில் பிரதி பாதனமான சாதன விசேஷம் -பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இறே இருப்பது –
அதில் இவ் அதிகாரிக்கு அபிலஷிதமான பல விசேஷம் இன்னது என்னும் இடத்தை பிரகாசிப்பிகிறது இவ் வாக்கியம் -என்று -பரந்த படியிலும் –
கீழ் சொன்ன சாதனம் பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இருக்கையாலே  இவனுக்கு அபேஷிதமானபல விசேஷத்தை சொல்லுகிறது -என்று ஸ்ரீ யபதிப்  படியிலும் –
உத்தர வாக்யத்தாலே பிராப்யம் சொல்லுகிறது -பிராப்யாந்தரதுக்கு அன்று என்கை – இத்யாதியாலே முமுஷு படியிலும் -இவர் தாமே அருளி செய்தார் இறே –
திருமாலைக் கை தொழுவர் -முதல் திருவந்தாதி -52 –
அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திருமாலை -திரு வாய் மொழி -1 -5 -7 – என்கிறபடியே புருஷகாரம் முன்னாகப் பற்றி
பிரயோஜனங்களை கொண்டு அகலாதே அவற்றை ஒழிந்து-
ஒண் டொடியாள் திருமகளும் அவனுமான சேர்த்தியில்-திரு வாய் மொழி -4 -9 -10 –
அடிமையை பேறு என்று
கீழ் சொன்ன உபாய பலத்தை காட்டுகிறது பிற்கூறு -என்று இறே இவர்  திருத் தம்பியாரும்
அருளி செயல் ரஹச்யத்தில் அருளி செய்தது –
ஐஸ்வர்யம் அக்ஷய மோக்ஷ கதிக்கும் அவள் தேவை -அனைத்தும் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று லஜ்ஜித்து இருப்பாள் –
ஆகையால் அனைவருக்கும் புருஷகாரம் அபேக்ஷிதம்
உத்தர வாக்கியம் அவனுக்கு நாம் சொல்லும் மா ஸூ ச -பூர்வ வாக்கியம் -பல சதுஷ்ட்யங்கள் நான்குக்கும் பொது அன்றோ
அப்ரஸ்துதம் -இல்லையே அஞ்ஞர் என்பதே ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்திகளையே —
சாதனாந்தரம் மூலம் பிரயோஜனாந்தரம் பெற புருஷகாரம் வேண்டாம் -பகவானைப் பற்றி பிரயோஜனாந்தரம் பெறும் பொழுது -பிரபத்திக்கு புருஷகாரம் வேணும் –
நாலாம் அதிகாரி பிரபன்னரே இல்லையே -267-சூர்ணிகையில் சொன்னது உபாயாந்தர நிஷ்டனுக்கு தானே –
அபின்ன -வக்தா -பிள்ளை லோகாச்சார்யார் -பிரபந்தாந்தரங்களில்-நிறைய அருளிச் செய்து -சமான அர்த்தம் —
தத் அனுஜராலே நாயனார் ஸ்ரீ ஸூ க்திகளும் உண்டே -ஆகவே நாலு தோஷங்களும் இல்லை -இரண்டு யோசனைகளும் உப பன்னமே

ஆக –
இவன் அவனை  பெற -சூரணை -142 – என்று தொடங்கி இவ்வளவாக –
ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும்- பரகத ஸ்வீகார உபாயத்வமும் -தத் பிராபல்யமும் –
அவனே ஸ்வீகரிக்கும் அளவில் புருஷகாரம் முன்னாகவே -ஸ்வீ கரிக்கும் படியையும் –
இருவரும் இப் புருஷகாரத்தை முன்னிடுகிறது தனக்கு பிரயோஜனம் இன்னது என்னும் இடமும் –
பிரபத்தி அதிகாரிகள் எல்லாருக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் என்னும் அதுவும்-சொல்லப் பட்டது –

பிரதம பிரகரணத்திலே புருஷகார வைபவ கதன முகேன ஸ்ரீமத் பத அர்த்தத்தையும் ,
உபாய வைபவ கதன முகேன -நாராயண சரணவ் சரணம் -என்கிற  பதங்களின் அர்த்தங்களையும்-பிரதி பாதித்த அனந்தரம்-
பிரபத்திக்கு தேச நியமம் என்று தொடங்கி–பிரபத்யே என்கிற பதத்தால்-
சொல்லப் படட பிரபத்தி உடைய தேச கால நியம அபாவத்தையும்-
அதுக்கு விஷயம் சொல்லுகைக்காக  -குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-என்று தொடங்கி
முக்த கண்டமாக மீளவும் நாராயண  -பத அர்த்தத்தையும்-
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -என்று உத்தமனாலே ஆஷிப்தனான அதிகாரி யையும்-
பிரபத்தியில் சாதனத்வம்  இல்லாமையையும்-
பிரபத்தி அதிகாரி அபேஷிதமான சக்தி லஜ்ஜா யத்ன நிவ்ருத்தி சமதம அதிசயம் முதலான வற்றையும்
பிரபத்தி அங்கதயா த்யாஜ்யமான உபாயாந்தரத்தின் உடைய தோஷ பூயஸ்வத்தையும்
தத் பிரதிகோடிதயா பிரபத்தியினுடைய நைர்  தோஷ் யாதிகளையும்  –பிரபத்தி பிரசங்கத்தாலே-
முக பேதென ஸ்வகத ஸ்வீகார அனுபாயத் வத்தையும் -பர கத ஸ்வீகார உபாயத் வத்தையும் –
தத் பிராபல் யத்தையும் அவனே ஸ்வீகரிக்கும் அளவிலும் -புருஷ காரத்தை முன் இட்டே ஸ்வீகரிக்கும் என்னும் இடத்தையும் ,
உபயரும் புருஷ காரத்தை முன் இடும் அதுக்கு உண்டான பிரயோஜன விசேஷங்களையும் ,
அதிகாரி த்ரயத்துக்கும் புருஷகார அவர்ஜநீயம் என்னும் அத்தையும் பிரதி பாதிக்கை யாலே ,
இவ்வளவும் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளி செய்தார் ஆய்த்து-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -115–141-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /உபாயாந்தர தோஷம்– – ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 14, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில் முதல் ஆறாவது ஏழாவது எட்டாவது ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————

சூரணை -115-

பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்
அஞ்ஞான அசக்திகள் அன்று –
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –

இதர விஷய பரித்யாகத்துக்கும் -பகவத் விஷய பரிக்ரஹத்துக்கும் பிரதான ஹேதுகள் இன்னது என்றார் கீழ் –
இந்த பிரசங்கத்திலே -இதர உபாய பரித்யாகத்துக்கு பிரதான ஹேது இன்னது என்கிறார் மேல் –

சித்த உபாய ஸ்வீகாரத்துக்கு பூர்வ பாவியாய்-தியாக விஷயமான -உபாயாந்தர -தியாக பிரகாரம் -தோஷம் -141-வரை சுக ரூபம் அளவாக —
அப்ராப்தம் என்று விடுகை விஷயாந்தரங்களுக்கும் மட்டும் அல்ல -சாதனாந்தரங்களுக்கும் அதுவே –சரம ஸ்லோகத்தில் -தர்ம சப்த வாசயங்களாய் –
தர்மத்தை -தர்மங்களை -அங்கங்களுடன் கூடியவை சர்வ தர்மான் –/
பொருளாய் -மோக்ஷ சாதனங்களாக கர்மா ஞானாதி -பக்தி யோகங்களுடைய -ச உப சர்க்க–பரி- த்யஜ்ய-லபந்ததாலும் கிடைத்த சவாசன தியாகத்துக்கு
பிரதான ஹேது -அஞ்ஞானம் அசக்தி இல்லை -தெரியாமையால் இல்லை-அறிய அருமை -அனுஷ்ட்டிக்க கடினம் – —
பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு ஸ்வ தந்த்ர க்ருத்யங்களானவை விரோதிகள் -என்று விடுமதே ஸ்வரூபஞ்ஞனுக்கு முக்கிய ஹேது —
இவற்றை அஞ்ஞானம் அசக்திகள் அடியாக விட்டால்-(-குளித்தே உண்ண-குளித்த பின்பே உண்ண -போலே /
விட்டு இருந்தாயாகில் என்னைப் பற்று என்பது இல்லை -விட்டே பற்ற வேண்டும் –என்றவாறு -)ஞான சக்திகள் உண்டான பின்பு பண்ண வேண்டுமே –
நாதமுனிகள் போல்வார் பண்ண வில்லையே -அத்யந்த பாரதந்தர்யம் ஸ்வரூபம் அறிந்து -அதுக்கு விரோதம் என்பதாலேயே -/சவாசன தியாகம் ஆகுமே –

பிரபத்தி எது- பிரபத்வயனான பகவானே -எங்கு இருக்கும் என்றால் பிரபன்னனுடைய புத்தியில் இருக்கும் –சார்ந்தே அதீனமாய் இருப்பதே பாரதந்தர்யம் –
அஞ்ஞானம் ஞானாதியம் பக்தி பாரவஸ்யங்கள் முக்கிய ஹேதுக்கள் அல்ல –இவை தூண்ட பிரபன்னன் ஆகிறார்கள் -ஸ்வரூப அனுரூபம் -ஒன்றே காரணம் –
பாரதந்தர்யம் -ஸூ யத்னம் —ஹேய ப்ரத்யநீக- இடத்தில் ஹேயம் இருக்குமா போலே -இருள் சூர்யன் -சேராதது போலே –
சாதனாந்தரம் ஆரோபித-வந்தேறி -அயோக்யதா ரூபம் -பாரதந்தர்ய விசிஷ்ட ஸ்வரூபம் தொடக் கூட யோக்யதை இல்லாதவை சாதனாந்தரங்கள்–
போகம் மோக்ஷம் அடைய -ஸ்வாதந்திரமே வடிவான கர்மாந்தரங்கள்–ஸாத்ய பகவானுக்கும் -15-வாசிகள் உண்டே –
தார தம்யம் -தார தம உயர்ந்ததும் மிக உயர்ந்ததும் -என்றவாறு –துல்ய விகல்பம் -இதுவோ அதுவோ முதல் நிலை –
அடுத்து விவஸ்தித விகல்பம்-மூன்றாவது நிலை – அவற்றை த்யஜ்யத்துக்கு -லஜ்ஜித்து இதுக்கு வர வேண்டும்
1–நாஸகத்வம்–ஸ்வரூபத்துக்கு நாசகாரம் -ஆத்மா அழியாதே -தர்ம ஸ்வரூபம் -பூ அழியாது மணம் போகலாமே –
ஸ்த்ரீக்கு சக்தி பாரதந்தர்யமே -ஆணுக்கு புருஷத்வம் போலே -பதி பத்னி –சங்கு சக்கரம் சக்தி போலே அஞ்சலிக்கும் சக்தி உண்டே /
அனைவரும் ஸ்த்ரீகள் -ஒருவனே புருஷோத்தமன் -ஸ்வ தந்த்ரன் / நெருப்புக்கு எரிக்கும் சக்தி -எதிர்க்கும் மந்த்ரம் -சீதா அருளியது போலே –
ஒளஷதம் மணி போன்றவை தடுப்பவை -நெருப்பை அழிக்காதே-அதே போலே பாரதந்தர்யத்தை தடுக்கும் இவை –
ஸூ ரக்ஷண ஸ்வான்வய அனர்ஹத்வ ரூபத்துக்கு விரோதம் ஆகும்
2—அயோக்யத்வம் –யோக்யதையே இல்லை –உபாயாந்தரங்கள் தொடவே முடியாதே உஜ்ஜவலமான பாரதந்ரயமே ஜீவனை -இவற்றால் தீண்ட முடியாதே
3–நிஷ்பலம் -விரும்பிய பலம் கிடைக்காதே –பக்தியால் கிடைக்குமே ஸ்ரீ கீதை -/ஸ்வார்த்த பரதை யுடன் கைங்கர்யம் -பரார்த்த கைங்கர்யம் வேறே –
அது கிடைக்காதே இவற்றால் -யதா க்ரது நியாயம் -உபாசனம் படியே பலனும் -அங்கும் -/பல்லாண்டு இங்கும் அங்கும் போலே –
ஸ்வரூபம் தெரிந்தால் பரார்த்த கைங்கர்யம் தானே விரும்பிய பலமாகும் -/
ஸ்வார்த்த அனுபவ கைங்கர்ய சாதனமே உபாயாந்தரங்கள் –பரார்த்த அனுபவ கைங்கர்யங்களுக்கு அசாதனங்கள் -ஆகுமே /
ஸூ பிரவ்ருத்தி உத்தேச்ய போகத்துக்கு எவ்விதத்திலும் தகுதி இல்லாததே –பாரதந்தர்யம் ரூப ஸ்வரூபம் –
4—-அநிஷ்ட ஹேதுத்வம் -பிடிக்காத ஒன்றையே கொடுக்கும் -/கீழே நிஷ்பலம் -இங்கு நீ விரும்பாதவற்றை தான் கொடுக்கும் -பாரதந்தர்யத்துக்கு –
நமோ நாராயணாயா அர்த்தம் –ஸூ போகம் நரகம் அவஸ்தை போலே ஆகுமே -மம-எனக்காக போகம் ஆகுமே /
அங்கே போனால் ஸ்வரூப ஆவிர்பாவம் வருமே -பாரதந்தர்ய ஞானம் வந்து மாற்றிக் கொள்வா-பிரபத்தி செய்து பரார்த்த கைங்கர்யம் பெற முடியாதே அங்கும்
கொடுத்த ஸ்வ தந்தர்யத்தை மதித்து அங்கும் அதே கைங்கர்யம் -சரீரத்தை சரியாக புரிந்தால் சம்பத்து ஆகும் -இல்லை என்றால் ஆபத்து ஆகுமே –
5–விவேக பரி பந்தி-எதிர்மறை என்றவாறு – ஞான சாரம் -16-பாசுரம் –தேவர் –யாவரும் அல்லன் ஜீவன் -பூவின் மீசை ஆரணங்கு கேள்வன் அமலன்
அறிவே வடிவம் -ஞாத்ருத்வ சேஷத்வங்கள் தானே ஸ்வரூபம் -நர ஹரி திருமேனி போன்ற தாச தாச அடியார்க்கு அடியான் என்றவாறு -/
ஆண் அல்லன் பெண் அல்லன் – அல்லா அலியும் அல்லன் -பகுத்து அறிவு -விவேகம் -இதுக்கே நேர் எதிர்மறை உபாயாந்தரம் –
தேஹாத்ம விவேகம் உடையார்க்கு-அதிகார போத யுக்தேஷு
-வர்ணாஸ்ரம பிரமம் – -விசேஷ ஞான கர்மங்கள் -நான் செத்து வாரும் -என்ற ஐதிக்யம் உண்டே /
6–அஹங்கார மிஸ்ரத்வம் -எனக்கு விரும்பிய பலத்தை நான் சாதித்து -/ உபாயாந்தரங்கள் அஹங்கார மமகார கர்ப்பமாய் இருக்கும் —
பகவத் அதிசயம் செய்ய முடியாதே / த்ரிவித தியாகம் கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் உண்டே என்னில் –பிரதானமாக விடச் சொல்லி –
முழுவதுமே விட்டால் -பக்தி வேலை செய்யாதே -பிரவ்ருத்தி மார்க்கம் அன்றோ -அடியோடு விட்டால் புருஷார்த்த சித்தி கிடையாதே -/
ஓம் நம-அவனுக்கு சேஷம் பிறருக்கும் தனக்கும் அல்லன் என்பதற்கு நேரே எதிராக துளி ஒட்டிக் கொள்ளும் இவை கூடாதே
7–ஓவ்பாதிகத்வம் -காரணத்வத்தை பற்றி -கர்மம் அனுபவிக்க கொடுத்த சரீரம் -பகவத் ஸ்வரூபம் திரோதானகம் ஸூ விஷய அனுபவ
போக்யத்வ புத்தி ஜனகமாய் -சரீரத்தை கொண்டு சாதிக்க வேண்டிய பக்தி -/பிரபன்னருக்கு சரீரம் வேண்டாவோ என்னில் —
இவர்களுக்கு சரீரம்-ஹேயா ஸ்பர்ச ரஹிதராய் -கல்லும் புல் என்று ஓழிந்தன -ஆசைப்பட்டு வந்த சரீரம் – –
ஸ்ரீ லஷ்மீ பதி வசிக்கும் க்ருஹம் அன்றோ -திரு மேனி -இவர்களுக்கு சரீரம் இல்லை –
8–சேஷத்வ பாரதந்தர்யத்துக்கு விரூபமாய் இருக்கும் -பர அதிசய ஆதானங்களுக்கு -அர்ஹனாய் இருக்கும் -/பக்தி செய்தால் தனக்கும் பரனுக்கும் அதிசயம் /
போக மோக்ஷ சாதன க்ருதி அனர்ஹத்வம் பாரதந்தர்யம் -இத்தை அறிந்து தத் தஸ்ய சத்ருசம் பவேத் –
நாஸகாத்வம் சக்திக்கு நாஸகம் -நெருப்பின் எரிப்புக்கு / அயோக்யத்வம் உபாயாந்தரம் பாரதந்தர்யம் இரண்டும் ஏக அதிகரணம் இல்லை -என்றது –
இங்கு ஞான பிரதிபத்யத்வம் என்று சொல்கிறது -மூன்றாவது விரூபத்வம் –ஆரோபிதமாகக் கொண்டே -வந்தேறி -அன்றோ –
பனை மரம் கீழே பாலைக் குடித்தாலும் -தப்பு சொல்வது போலே –பலத்வாரா நாசமாகும் –
9-ஐகாந்தித்வத்துக்கு பங்கம் -உபாய உபேயம் ப்ரஹ்மமே -அக்னி இந்திரன் அந்தர்யாமியாக உபாசனம் -குண உப சம்ஹார பாதம் –
அவாந்தர பலன்கள் இடையில் உண்டாகும் பலன்கள் -வித்யை அனுஷ்ட்டிக்க கர்மம் -செய்ய பலமுள்ள தேகம் -பெற்று மோக்ஷம் –
கடைசியிலே அங்கே போனாலும் இடையிலே ஒரு பலத்துக்கு போனால் காலை பிடித்து இழுக்கும் -ஒன்றே முடிவு என்பதற்கு பிரதிபந்தகம் தானே –
பித்ரு ரிஷி தேவர் ருணம்-மூன்று கடன்கள் உபாசகன் முடிக்க வேண்டுமே –வேதம் கற்று த்ரை வர்ணிகர் இருக்க வேண்டும் -பிரபன்னருக்கு இந்த நிர்பந்தம் இல்லையே —
சர்வ பாபேப்யோ -அனைத்தையும் அவனே போக்கி -சித்தனாய் -கையும் உழவு கோலும் -சுலபனாய் -அசாதாரணமான திவ்ய மங்கள விசிஷ்டானாய் –
லஷ்மி விசிஷ்டனாய் பரத்வ விசிஷ்டானாய் இருக்க -பஞ்ச பிரகார -அர்ச்சையில் தான் தானாக –கல்யாண குண பூர்ணம் இங்கே தானே –/
என் உடம்பில் அழுக்கை நானே போக்கி கொள்ளேனோ -/ நித்ய நைமித்திக கர்மம் தர்மம் ஹானி கூடாதே பரார்த்த கைங்கர்யமாக அவன் ப்ரீத்திக்கு –
பலாந்தர கந்த ரஹிதராய் -ஏகாந்தி – -நிஷ்டை –
11 -சேனாதி சாம்யம் ஆவது — சேனா யாகம் -விரோதி தொலைக்க -ஆரம்பித்து -சாஸ்த்ர விசுவாசம் பிறந்து -அல்பம் அஸ்திரம் உணர்ந்து
பர ந்யாசம் -நிலைக்கு வந்த பின்பு -/ உபாயாந்தரமும் இது போலே -ஸ்வ தந்தரராய் பாரதந்த்ர ஞானம் இல்லாமல் -சேஷத்வ ஸ்வரூபத்தில் விசுவாசம் வர பக்தி
அதுக்கே மேல் பாரதந்தர்யம் -அதுக்கும் மேலே ஏகாந்தி நிஷ்டை -/அநர்த்தாவஹம்-ஆகும் // உபாசகனுக்கும் காம்ய கர்மங்கள் த்யாஜ்யங்கள் போலே
பாரதந்தர்ய ஸ்வரூபம் தெரிந்தவனுக்கு பக்தி யோகமும் த்யாஜ்யமும் /
12—-பிராப்ய அந அனுகுணம்-பொருந்தாதே -ஸ்வரூப அனுரூப பிராப்யம் பரார்த்த கைங்கர்யம் -விபரீத பலம் -ஸ்வார்த்த அனுபவத்துக்குத் தானே இவை –
ப்ராப்ய வி சத்ருசம் -இவை -ஏற்றவை அல்ல–
13 –பாதகமாக இருக்கும் -முமுஷுக்களுக்கு புண்யம் மோக்ஷ பிரதிபந்தகங்கள் ஆகுமே –சர்வம் ஸ்ரீ கிருஷரார்ப்பணம் பண்ணுகிறோம் பலத்தில் த்யாஜ்யம் -அதே போலே
உபாயாந்தரங்கள் பாதகமாகும்-/ சத்ருக்ந நித்ய சத்ருக்கனன் அனலை பார்த்தோம் -ராம பக்தியாகிய சத்ருவை ஜெயித்தவன் -இவனுக்கு உத்தேச்யம் பரத கைங்கர்யம்
வல் வினையேன் சென்றேன் குடக்கூத்து பார்க்க – -மன்றம் அமரும் படி கூத்தாடிய மைந்தா என்னும் –மயங்கி கிருஷ்ண அனுபவம் இழந்தேன் -/ அநிஷ்ட பலன்களுக்கு சாதனம் ஆகுமே –
14–சிஷ்ட அபரிஹ்ரீஹிதம் -நாத யமுனா யதி -வர வர வர முனிகள் —வியாசர் கார்த்த வீர்யார்ஜுனன் பரசுராமன் -ஆவேச அவதாரம் உபாஸிக்க கூடாதே –
போக்கிய தேவனை போற்றும் புனிதன் –ராமானுஜர் உபாஸிக்க வில்லை -ஸ்தோத்ரம் பண்ணுகிறார் -/ இந்திராதி தேவர்கள் உபாஸிக்க த க்காதவர்கள் போலே -/
அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் -கள்ள பேச்சும்-இத்யாதி – -பரிக்ரீஹிதங்களாக இருக்க வேண்டுமே /வியாசாதிகள் சிஷ்டர்களில் முதன்மை அல்லர்
உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்பவர் அல்லர்
15–கலி தர்மத்துக்கு பொருந்தாது -த்வாபர யுகம் ஸ்ரீ கீதை / சர்வ தர்மான்-சரம ஸ்லோகம் கோடி காட்டிப் போனான் -ஹரி நாம சங்கீர்த்தனம் –
வேறே எந்த கதியும் இல்லை -உபாயாந்தரங்கள் காயோடு நீடு கனி உண்டு -அத்யந்த துஷ்க்கரம் ‘
மாதவன் என்பதே கொண்டு -திருமால் இரும் சோலை என்றேன் என்ன – -கேவலம் மதிய -பகவத் ஸ்வீகார வியாச பூதம் – நாம உச்சாரணம் தவிர வேறே ஒன்றே பொருந்தும்
இதுவும் உபாயம் இல்லை வியாஜ்யம் தான் / வாய் வார்த்தை /எண்ணிலும் வரும்/ த்வயம் வாயாலே சொன்னாலே போதும் –
நிர்ஹேதுக கடாக்ஷத்தால் மோக்ஷம் ஆசை வந்தவர்களுக்கு இவை விருத்தங்கள் –
தாமிரபரணி வைகை காவேரி பாலாற்று கரையில் அவதரிப்பார்கள்-என்றதே ஸ்ரீ மத் பாகவதம் –

உபாயாந்தர தியாகாதிகள் அதிகாரி நிஷ்டை அந்தரகதம் –/ பிரபகாந்தரன் -அந்நிய பிராபகம் –பிரபத்தி உபாயம் -என்றால் -அதிகாரி நிஷ்டை –
அதிகார பிரதிசம்பந்திதயா புத்திஸ்திதமான-கத்யர்த்த புத்யர்த்தா -அவனே உபாயம் என்ற எண்ணமே -/ வேறே உபாயம் என்ற எண்ணமே கூடாதே -/
பாரதந்தர்யம் தானே -அத்யந்த -மூன்று நிலைகள் –பராதீன பலத்தவம் -ராஜா சேவகன் போலே-ஐஸ்வர்ய கைவல்யார்த்திகள் -என்றும்–
பராதீன கர்த்ருத்வம் -தாய் சிறு குழந்தை –அதி பாரதந்த்ரம்-உபாசகன் இந்த நிலை -ஸூ வ கிருதி ஸாத்ய சாதனம் –
சாஸ்த்ரம் படி ப்ரீதியால் பலனை அடைகிறான் -என்றும் –
இதுக்கு மேலே ஸூ ரக்ஷண ஸூ வியாபார -பராதீன அகிலம் அயோக்யத்வம் -அத்யந்த பாரதந்தர்யம் –/பிரபன்னன் இந்த நிலை /
அபிமத தாரதம்யம் -உபாயாந்தரம் -பிரபத்தி -இரண்டிலும் -ப்ரீதியில் வேறுபாடு அவனுக்கு –
மம -த்வயம் சொல்லி மிருத்யு -சமம் -மூல மந்த்ரஸ்ய நமஸ் விவரண சம்ஹிதா வாக்கியம் –
பக்தி யோகத்தில் மமகாரம்
2–சித்த உபாயம் -சொல்லும் இடங்கைள நிஷேத வாக்கியம் உண்டே
3–உத்தம மத்திம அதிகாரி உண்டே
4–ஏகாந்தி பரமை காந்தி –ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே
5– பிராராப்தி கர்மா நிவ்ருத்தி ஏற்றம்
6–அனுபந்தி பர்யந்த பல சித்தி அபாவ ரூபம் -மரணமானால் சரணம் கொடுக்கும் -சரீராவாஸனாத்தில் முக்தி /கர்மாவாசனாத்தால் முக்தி பக்திக்கு
7–சரணாகதியில் பதினாறில் ஒரு பங்கே கலா மாத்திரம் பக்தியாதிகள்
8–மாமேஷை -பகவத் யுக்தி -என்னை அவன் அடைகிறான் / நான் அவனை விடுக்கிறேன் வாசி உண்டே
நானாகா பார்த்து ஸ்வயம் ஏவ தூக்கி விடுகிறேன் லஷ்மி தேவியிடம் சொல்லி / மநோ ஹரம் பிரபத்தி
இத்யாதி சுவாரஸ்யத்தால்-கர்மாதிகளில் குறை உண்டே –
பாரமாக பக்தி சக்தி அதிகாரம் -லகுவாக பிரபத்தி சர்வாதிகாரம் –சக்தர்களுக்கு மட்டும் என்றதால் தாழ்வு இல்லை –
பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –என்னில் -ஸ்வரூப பிராப்தம் —
ஜிதேந்த்ரிய அர்ஜனுக்கும் உபதேசம் உண்டே -குடாகேசன் அன்றோ -அர்த்தவாத வாக்கியம் இல்லை
தேகாவஸான முக்தி -விளம்பித்து பெற அஸஹாயம்-என்பதால் தான் -நாத முனியாதி களும் பிரபத்தி அனுஷ்ட்டித்தார்கள் -என்றும் சொல்ல முடியாதே –
பக்தி யோகத்திலும் அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை அறிந்து பண்ணினாலும் தேகாவஸானத்திலே உண்டே –
அத்தை பண்ணி இருக்கலாமே என்னில் -ஸ்வரூப அபிராப்தம் என்பதே முக்கிய காரணம் /
பிரதிபத்தி – அனு கல்பம்- இரண்டாம் பக்ஷம் – அல்ல என்றபடி -அனு பின் தொடர்ந்து -அர்த்தத்தில் -/இரண்டும் வேறே பாதைகள் -அதிகாரி பேதம் –
கவ்ண முக்கிய பாவங்கள் உண்டானால் –சர்வ தர்வான் பரித்யஜ்ய -ச வாசனமாக விட்டே பற்ற வேண்டுமே என்பதால் -விதி உண்டே –
பக்திக்கு ஆசைப்பட்ட பிரபன்னனுக்கும் பிராயாச்சித்தம் உண்டே -பாபங்கள் போலே /
உத்தம அதிகாரி பிரபன்னன்–பிரிய தமனாக உள்ளான் / மத்யம அதிகாரி உபாசகன் / உபாய அபாய ஸம்யோகம்-என்பார்களே
மானஸ ஸ்நானம் உயர்ந்தது -ப்ரோக்ஷணம் நிஜ ஸ்நாத்தை விட உயர்ந்தது -முடியாதவர்களுக்கு -அதே போலே பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி என்பது பொறுத்ததே
அபிமத தாரதம்யம் -விசிஷ்ட அபிமத ஜனகத்வம் இதுக்கே -பக்தி அநுசிதம் பிரபத்தி உசிதம் அத்யந்த பரதந்த்ரனுக்கு –
ஸ்வரூப நாசம் -ஆத்ம தர்மி போகாதே – பாரதந்த்ரம் என்கிற தர்மம் நாசகார என்கிறார் பார்த்தோம் -பிரபத்தியை ஸ்துதிக்கைக்கா அதிவாதம் என்பார்கள் பூர்வபஷிகள்
ஸ்வர்க்கத்தில் பசுக்கள் தலை கீழே நடக்கும் என்பது போலே / எறும்பி அப்பா தங்க மாளிகைகள் ஆழ்வார்களாசைப்பட்டு அருளிச் செய்தார்கள் -என்பது போலே /
ராகாதி விரோதிகளுக்கு சமம் பகுதிகள் -மோக்ஷத்துக்கு விதித்தாலும் பரார்த்த கைங்கர்யத்துக்கு விரோதி தானே -அத்யந்த பாரதந்தர்ய ஞானம் உள்ளவனுக்கு -/
ரஹஸ்யத்ரய சாரத்தில் ஸ்ரீ தேசிகன் இவற்றை விவரித்து அருளிச் செய்கிறார் -/ஸ்வரூப விரோதம் என்றது நாஸகம் என்றவாறு -/
ஸ்தான ப்ரமாணத்தாலே -உகாரம் அநந்யார்ஹத்வம் ஏவ -அர்த்தம் -ததேவ பூதம் தது சந்த்ரமா -ஏவ ஸ்தானத்தில் உகாரம் பிரயோகம் உண்டே –
இங்கு ஸ்தான பிரமாணம் -அபிராபத்தையால் இதர விஷயங்களை விடுகைக்கு -/ உபாயாந்தரங்களை விடுகைக்கு ஸ்வரூப நாசம் என்பதால்
ஸ்வரூப நாசமே அப்ராப்தம் என்றவாறு –/காம்ய கர்மங்களை போலே உபாயாந்தரங்கள் பந்தகங்கள் இல்லா விட்டாலும்
ஸ்வரூபத்துக்கு அநர்த்தம் வருவதால் -தள்ளுபடியே இவை –

பிரபகாந்தரங்கள் ஆவன -பிரபத்தி உபாயத்தை ஒழிந்த உபாயங்கள் –
அஞ்ஞான அசக்திகள் என்றது -அவற்றை அறிகைக்கும் அனுஷ்டிகைக்கும் ஈடான ஞான சக்திகள் இல்லாமை –
தத் த்யாகத்துக்கு பிரதான ஹேது அன்று என்றபடி –
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது-என்றது
பகவத் அத்யந்த பாரதந்த்ர்யம் ஆகிற ஸ்வரூபத்துக்கு சேராது என்னும் அதுவே முக்கிய ஹேது என்றபடி –
இத்தால் அஞ்ஞானத்தால் பிரபன்னர் என்கிற இடத்தில் சொன்ன அஞ்ஞான அசக்திகள் முக்கிய ஹேது அன்று என்னும் இடம் சொல்லுகிறது –
அஞ்ஞான அசக்திகள் அடியாகா விடில் -ஞான சக்திகள் உண்டாகில் பரிகிராஹ்யம் இறே –
ஸ்வரூப விரோதம் என்று விட்டால் இறே மறுவல் இடாது ஒழிவது–

————————————-

சூரணை -116-

பிரபாகாந்தரம் அஞ்ஞருக்கு  உபாயம் –

இப்படி பிரபாகாந்தரத்தை விரோதி என்று தள்ளலாமோ-அதுவும் மோஷ உபாயமாய் அன்றோ போருகிறது -அது பின்னை  யாருக்கு உபாயம் என –
அருளிச் செய்கிறார் –

இவையும் மோக்ஷ உபாயம் இல்லையோ என்னில் -உள்ளபடி உணர்ந்தவருக்கு இவை அபாயம் –நாசகரம் -விலக்கும்-அவன் இடம் இருந்து –
அதீத ப்ரீத்திக்கு ஆளாக மாட்டார்களே -நெறி காட்டி நீக்குதியோ -என்பார்களே / சேனையாகாதிகள் வேதத்தில் வேறே அதிகாரிகளுக்கு உண்டே அதே போலே –
அஞ்ஞார்களுக்கு உபாயம்–அத்யந்த பாரதந்தர்ய ஞானிகளுக்கு அபாயம் இங்கே என்றவாறு /ஸ்வரூப விரோதி –
அஞ்ஞான அசக்தியால் விட்டவர்களுக்கு உபாயம் ஆகும் -உபாயாந்தரங்களை விட்டவர்கள் –ஞானம் உள்ளவன் இவற்றை
உபாயம் என்றே நினைக்க மாட்டானே -உபாயம் என்னும் பிரம்மமே என்றவாறு –
ஸூ ரக்ஷண ஸூ யத்ன கந்த அஸஹமான ஸ்வரூபம் அன்றோ அத்யந்த பாரதந்தர்ய ஞானம் உள்ள பிரபன்னனுக்கு /
கீழே -42-அஞ்ஞானத்தாலே பிரபன்னர்கள் அஸ்மதாதிகள்
இங்கு பிரகபாந்தரம் அஞ்ஞர்க்கு உபாயம் -பக்தி போல்வன / பிரசத்தி ஞானிகளுக்கு உபாயம் /
அங்கே சொன்ன அஞ்ஞானி வேறே இங்கே சொன்ன அஞ்ஞானி வேறே -என்றபடி இங்கு ஸ்வரூப யாதாம்யா ஞானம் அத்யந்த பாரதந்தர்யம் ஞானம் இல்லாதவனுக்கு /
அங்கு சாமான்ய ஞானம் – என்னான் செய்கேன் -பாசுரம் தான் விஷய வாக்கியம் /
இப்படி இவற்றை விரோதிகள் என்னலாமோ என்னில் -அவையும் மோக்ஷ உபாயங்கள் -என்னில் உள்ளபடி உணர்ந்தவர்களுக்கு அபாயம் –
நாஸகம் நீக்கும் இரண்டும் கொடுக்கும் -/செய்வதற்கு அறியாது பிரபத்தி செய்ய எளியது என்று இரண்டையும் உபாயமாக கொள்பவன் அஞ்ஞானி –
ஸ்வரூப விரோதி என்று விடாமல் –அது தர்மமே இல்லை இதுவே தர்மம் என்று உணர வேண்டுமே / உபாயமாகத் தோற்றும் பக்தியாதிகள் -/
அத்யந்த பாரதந்தர்ய ஞானம் இல்லாதவனும் மோக்ஷம் -ஆனால் அங்கும் ஸ்வார்த்த அனுபவ கைங்கர்யம் தானே பெறுவான் /
நாம் இங்கும் அல்ல அங்கும் அல்ல -பிரபத்திக்கு ஆள் இல்லை அத்யந்த பாரதந்தர்ய ஞானம் இல்லாமல் / பக்திகளுக்கு ஞான சக்திகளும் இல்லை -/
விதாயக சாஸ்திரம் -விதித்தது பொய்யாக்க கூடாதே -சேனையாகம் போலே பக்தி -ஒன்றாக சொல்லி -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் புரட்சி இங்கே தான் வெடித்தது –
சர்வதர்மான் பரித்யஜ்ய -யாதாம்யார்த்தம் கொண்டு சாதிக்கிறார் –
திராவிட வேத சாஸ்த்ர விசாரம் தான் ஸ்ரீ வசன பூஷணம் -இதுவும் ப்ரஹ்ம சாஸ்திரம் போலே -சமஸ்க்ருத வேத விருத்தமாக இல்லை -முரண்பட்டு இல்லை மாறுபாடு —
சமான வித்தி வேத்யத்வம் -விசேஷண விசேஷயம் மாற்றி / ஸ்வரூப விரோதி பிராபரந்தரம் -திருப்பி எழுதி / பிரபகாந்தரம் ஸ்வரூப விரோதி /லோகத்தில் அனுஷ்டானம் வேதங்களில் விதி இல்லாமல் போகுமே–பக்தியை வேறே எதுக்கோ உபாயமாக சொல்ல வில்லையே – /பக்தியும் பிரபத்தியும் சமான விதியோ இரண்டும் மோக்ஷத்துக்க தானே -என்றால் -/
வேறு விதமாக அந்நிய பரத்வம் என்னலாமோ என்னில் -ஒப்பும்மை இல்லாத படி -என்றபடி -/
ஹோமம் பண்ண கருப்பு எள்ளாலோ தர்ப்பையாலோ / கிராம பசு காட்டு பசு ஹிம்சை கூடாது -/ப்ரஸம்ஸா பர வாக்கியம் -அஹிம்சையே சிறந்தது /
ஆஹுதி கொடுக்க அர்ஹதை இல்லை என்றும் வேறே வாக்கியம் -ஆட்டுப்பாலாலே ஹோமம் பண்ணு அடுத்த வாக்கியம் –நான்கு வாக்கியங்களையும் ஒற்றுமைப்படுத்த
அஹிம்சை -உடன் கொடுப்பது ஆட்டுப்பால் -வெட்டும் ஹிம்சையும் இல்லை -ஆடு தானாக கொடுக்கும் -கறக்கா விட்டால் ஆட்டுக்கு வலிக்குமே /
முதல் வரி விதியே இல்லை -அந்நிய பரம் -அதுக்கு பிரயஜனம் விதிக்க இல்லை -ஒன்ற உடன் ஒப்பிட பிரதியோகி வேண்டுமே —
இதை விட அது உசந்தது இத்யாதி -அனைத்தும் பண்ணத் தக்கது ஆகுமே என்கிற சங்கைக்கு -/அஹிம்சை தான் –கீழே இத்துடன் ஒப்பிட்டு கழிப்பதற்கு தான் –
அதே போலே இங்கும் பக்தி அந்நிய பரமாக சொன்னால் என்ன -இதுக்கு த்ருஷ்டாந்தம் தான் கீழே சொன்னது -/
மோக்ஷ உபாயமாக அன்றோ விதிக்கப்படுகிறது என்று அந்த த்ருஷ்டாந்தம் இங்கே செல்லுபடி யாகாதே என்னில்
பிரபத்தி ஸ்துதிக்க ப்ரதிஷேத பிரதியாக பக்தியோகத்தை -/ விவஸ்தித விகல்பம்-இது தான் இது இல்லாவிடில் அது – /துல்ய விகல்பம் -இதுவோ அதுவோ எதனாலும் /
ஸ்வரூபத்தை அறிந்து பக்தி யோகத்தை த்யஜிக்க —பிரசங்கிக்கும் /ஆகையால் அதிகாரியே இல்லாமல் போகுமே சாஸ்திரம் அப்ராமாண்யம் வருமே -/
குரு லகு உபாயங்களை விவஸ்தித விகல்பமே உசிதம் / முக்கிய அனுகல்ப பாவமாக நிர்வகிக்க பார்க்கில் –மஞ்சள் பழம் செவ்வாழை பழம்-விட்டே வர வேண்டாமே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய சொல்லி விலக்கி விட்டே அன்றோ வர வேண்டும் –
அனு கல்பத்தில் நிற்பவனுக்கு முக்கியம் நினைத்தால் பிராயாச்சித்தம் என்றும் அவன் -மத்யயம உத்தம அதிகாரி சொல்லுவோமோ /
விதி த்வயம் ஸ்வரூப ஞான அஞ்ஞான விதியாக கொள்ள வேண்டும் இரண்டையும் /
உன்னையே பற்றி மோக்ஷம் -சரணாகதி உத்தம அதிகாரி சொல்லுமே -/விவஸ்திதமாக்கி கொள்ள வேண்டும் –

அஞ்ஞருக்கு உபாயம் என்றது -ஸ்வ ரஷண ஸ்வ யதன கந்த அசஹமான ஸ்வரூபத்தை உள்ளபடி தர்சிப்பைக்கு ஈடான ஞானமில்லாதவர்களுக்கு
உபாயமாய் இருக்கும் என்றபடி –

—————————————–

சூரணை -117-

ஞானிகளுக்கு அபாயம் –

ஆனால் ஞானிகளுக்கு இது எங்கனே என்ன -ஞானிகளுக்கு அபாயம் –என்கிறார் –

பரதந்த்ர ஸ்வரூப விரோதி என்று உணர்ந்து விடும் ஞானிகளுக்கு –ப்ராப்யத்துக்கும் விரோதம் -ஸ்வ தந்த்ர ஸ்வாமியுடைய உபேக்ஷைக்கு ஹேது —
அதிமாத்ர ப்ரீதிக்கு எதிரியாகும் -இரண்டும் உண்டே -/ஸூ யத்னம் இல்லாமல் அவனை எதிர்பார்த்து இருந்தால் தான் அபேக்ஷிப்பார் –
சாஸ்திரங்கள் விதிக்கின்றனவே -என்னில் சேனையாகமும் சாஸ்திரத்தில் உண்டாம் போலே இதுக்கும் ஆள் உண்டு –
அத்யந்த பாரதந்தர்யம் அறியாத அதிகாரிக்கு என்ற சமாதானம்
சேனா யாகத்துக்கு சமம் -அவ்வதிகாரிக்கு மேற்படி உள்ளவர்க்கு தள்ளுபடி போலே -விட்டவர்கள் உள்ளார்கள் -ஞானிகளுக்கு அபாயம் என்று தள்ளுவார்கள் –
ஸூ யத்ன ரூபம் -ஸ்வரூப விரோதியாய் -நாசகமுமாய் -/ பெருமாளால் உபேக்ஷிக்க காரணனுமாய் / நெறி காட்டி நீக்குதியாய் –

அதாவது ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் உடையவர்களுக்கு அபாயமாய் இருக்கும் என்கை –

————————————————

சூரணை -118-

அபாயமாய் ஆயிற்று
ஸ்வரூப நாசகம் ஆகையாலே —

இவர்களுக்கு அபாயம் ஆவான் என் -என்ன-அபாயமாய் ஆயிற்று ஸ்வரூப நாசகம் ஆகையாலே -என்கிறார் –

ஸ்வ தந்த்ர க்ருத்யமாகக் கொண்டு பரதந்த்ர ஸ்வரூப நாசக ஹேது ஆகுமே –

அபாயம் -சப்தம் -நாசகர ஓன்று விஸ்லேஷம் ஏற்படுத்தும் –
துக்க ஜென்ம-ப்ரவ்ருத்தி தோஷ பிரவ்ருத்தி -ராக த்வேஷம் மித்யா ஞானம் -படிக்கட்டுகள் கௌதம நியாய சாஸ்திரம்
யுத்த உத்தர அபாயம் நாசம் ஆனால் அதுக்கு முன் முன் நாசகார ஆகி மோக்ஷம் அபவர்க்கம் கிட்டும் -அபாயம் -நாசகர பொருளில் உபயோகம் /
வியாகரணத்தில் அபாயம் =விஸ்லேஷம் உண்டே / இரண்டாவது அர்த்தம் அடுத்த சூர்ணிகை

ஸ்வரூபம் ஆவது அத்யந்த பாரதந்த்ர்யம் – இதுக்கு ஸ்வ யத்ன ரூபம் ஆன  அது நாசகம் இறே –

——————————-

சூரணை -119-

நெறி காட்டி நீக்குதியோ -என்னா நின்றது இறே –

தத் உபாயத்வத்தை ஞாநினாம் அக்ரேசனரான-ஆழ்வார்  பாசுரத்தாலே
தர்சிப்பிக்கிறார் -நெறி காட்டி-பெரிய திருவந்தாதி -6 -என்றுதொடங்கி –

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் —உன் பக்கலில் நின்று அகற்றப் பார்க்கைரையோ -விலக்கும் தன்மை அபாயம் –
திராவிட வேத ஸூ கத்தி -சாதனாந்தரங்களைக் காட்டி -அவனை அகற்றும் அபாயம் விஸ்லேஷ கரம் /
கர்மா ஞான யோகம் உபாயமாக -/ திருடுதல் பொய் சொல்லுதல் அபாயமாக சாஸ்திரம் சொல்லும் -ஸ்ரீ லஷ்மீ தந்திரம்
சாமான்ய சாஸ்திரம் அது – விசேஷ சாஸ்திரம் இது –அத்யந்த பாரதந்தர்யம் பார்த்து அத்யந்த அபிமதம் பிறக்கும் அதில் -த்வம்ஸம் பிறக்கும் உபாயாந்தரங்களில் இழிந்தால் /
உபாயாந்தர பரித்யா பூர்வகமாய் சித்த உபாய சுவீகார -ஸ்வரூப ஞானவான் மேல் அத்யந்த அபிநிவேசம் உண்டே அவனுக்கு /
அத்யந்த பாரதந்த்ரயம் அத்யந்த வியாமோஹத்துக்கு காரணம் -/உபாயாந்தரங்கள் அதுக்கு த்வம்ஸம் பிறக்க ஹேது வாகுமே

அதாவது
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயத்தை காட்டி உன் பக்கலின் நின்றும்
அகற்ற பார்க்கிறாயோ -என்கையாலே -பிரபாகாந்தர உபாயத்வம் சித்தம் இறே என்கை —
நீக்குகை யாவது -பாரதந்தரமான வஸ்துவை ஸ்வதந்திர க்ருத்யமான -உபாய அனுஷ்டானத்திலே மூட்டி தனக்கு அசல் ஆக்குகை இறே –

—————————————–

சூரணை -120-
வர்த்ததே மே மகத் பயம் -என்கையாலே
பய ஜநகம்-
மா ஸூச -என்கையாலே
சோக ஜநகம்-

இதனுடைய ஸ்வரூப நாசகத்வ பிரயுக்தமான
தூஷண விசேஷங்களை அருளி செய்கிறார் -வர்த்ததே -இத்யாதி  -வாக்ய த்வயத்தால் –

பயத்தையும் சோகத்தையும் உண்டாக்கும் / தூஷண விசேஷங்கள் / காலம் தேசம் சரீரம் –மூன்றும் உண்டாகியே இருக்க சேர்த்து பண்ண உபாயாந்தரங்களும் உண்டே –
இவையே மிகவும் பயம் வரக் காரணங்கள் ஆகும் -ஆகாமி சோகம் வரப்போகிறதே என்பது பயம் -வந்ததும் சோகம் அப்புறம் பயம் இருக்காதே
உபாயாந்தர ஸ்ரவண அனந்தரம் -அர்ஜுனனுக்கு சோகம் பிறக்க -ஸ்வரூப அனுரூப உபாயம் உபதேசித்து சோகத்தை ஒழித்து அருளினான் –
அபாயத்வம் -இரண்டையும் விளைக்குமே-/உமிழ்ந்ததை கவ்வி விக்குமா போலே -விட்டத்தை மீண்டும் மூட்டி –
ஆஸ்ரயித்து அளவில்லாத பெரிய பயம் -வந்திடப்போகிறதே என்ற எண்ணமே /
சாதனாந்தர தர்சனத்தாலே -ஸூ ரக்ஷண ஸூ யத்தனத்தாலே -பயந்து சோகம் —பயப்படாதே -நானே போக்குவிப்பேன் –
ஸ்வரூப அனுரூபம் இல்லாமல் இருக்குமே இது -அபாயங்கள் -ஸ்வரூப விரோதியத்துவமே காரணம் -பிரதான ஹேது -என்றவாறு –

அதாவது –
காலேஷ் வபிச சர்வேஷு  திஷூ சர்வாசூ சாச்யுதசரீரேச கதவ் சாபி வர்த்ததே  மே மகத் பயம் -என்று
உபாயாந்தர அனுஷ்டானதுக்கு யோக்யமான கால தேச தேக விஷயமாகவும் –
உபாயாந்தரங்கள் தன் விஷயமாகவும் எனக்கு மகா பயம் வர்த்தியா நின்றது
என்கையாலும்-உபாயந்தர ஸ்ரவண அநந்தரம் அர்ஜுனனுக்கு சோகம் பிறக்க
ஸ்வரூப அநுரூப உபாயத்தை உபதேசித்து -மா ஸூச -என்று சோகா பநோதனம் பண்ணி அருளுகையாலும்
ஸ்வரூப விரோதியான ப்ரபாகாந்தரம்-ஞானிகளுக்கு பய ஜனகமாய் -சோக ஜனகமுமாயும் -இருக்கும் என்கை

————————————–

சூரணை -121-

இப்படி கொள்ளாத போது
ஏதத் பிரவ்ருத்தியில்
பிராயச் சித்தி விதி  கூடாது –

கீழ் சொன்ன படி அர்த்தத்தை அங்கீகரியாத அளவில் விரோதம் காட்டுகிறார் -இப்படி கொள்ளாத போது-என்று தொடங்கி —

உபாயாந்தரங்கள் ஸ்வரூப விரோதித்வத்தை இசைவிக்கிறார் மேல் நியாய வாதங்களால் –உபாயமாக தோற்றுகிற இவற்றில்
பிரபன்னன் பிரவர்த்திக்கும் பொழுது-குற்றத்தைப் போக்க பிராயச்சித்தம் —
உபாயம் என்று பிரமிக்கும் அபாயங்கள் -உபாயாந்தரங்கள் -/அபாயங்கள் உபாயங்களாக பற்றும் பொழுது -தெரியாமல் ஸ்வீ கரித்தால் –
புத்தி பூர்வகம் இல்லாமல் கவனக் குறைவால் -பிரமாதிகமாக உபாயாந்தர ப்ரவ்ருத்தி வந்தால் —
அபாய ப்ரவ்ருத்தி என்றது -தீய பழக்கங்கள் -உபாயாந்தர சம்பந்தம் -ஸூ ரக்ஷணத்தில் ஸூ அன்வயம் என்றபடி –
சடக்கென பிராயச்சித்தம் பண்ண வேண்டும் -மீண்டும் சரணாகதியை பிராயச்சித்தமாக –நாம் சக்தி இல்லை என்று விட்டதால் நமக்கு மீண்டும்
போக மாட்டோம் என்று நம்புகிறோம் -ஸ்வரூப பிராப்தி என்ற விட்டவனுக்கு ஆபத்து ஒட்டிக் கொண்டே இருக்குமே -சக்தி இருந்தால் –
ஆழமாக யோஜித்து அருளிச் செய்கிறார் –
முன் செய்த சரணாகதியை நினைப்பதே மீண்டும் சரணாகதி -எல்லா தப்புக்களுக்கும் பண்ணின சரணாகதியை நினைப்பதே பிராயாச்சித்தம் -என்றவாறு –
அஹம் ஸ்மராமி மத்பக்தம் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் –
பக்தி யோகத்தை பொய் சொல்வது போன்றவற்றுக்கு சமனாக சொன்னது பிரபன்னனுக்கு -/புனச்ரணம்  விரஜேத்-மீண்டும் செய்யக் கடவேன் இல்லை
நினைப்பதை லஷிக்கிறது -மீண்டும் சரணாகதியை பண்ண வேண்டாம் -தாது ஸ்மரண ரூப ஞான பரம் -/ ஏற்பட்டுவிட்ட அநர்த்தம் நாசம் பண்ண பிராயாச்சித்தம் /
உப வாஸம் சமீப வாஸம் -சப்தார்த்தம் /வந்திடுமோ என்கிற பயத்தால் முதல் பிரபத்தி -வந்து விட்டதே என்ற சோகத்தால் இந்த நினைவு –
மீண்டும் செய்தால் முதலில் செய்தது விலகி விடும் -மீண்டும் நினைப்பது என்றது வேறே பிராயாச்சித்தம் தேட வேண்டாம் -என்றவாறு –
இது என்னிடம் உள்ளது என்ற உறுதி வருவதே இந்த நினைவு -பூர்வ க்ருத பிரார்த்தனையை ஸ்மரணம் -கொள்வதே யுக்தம் -மீண்டும் செய்வது அல்ல –
தத்வ தீபம் -விளக்கிச் சொல்லுமே -/பிள்ளை சந்நிதியில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் மீண்டும் நினைப்பது என் என்ன என்று வினவ – –
ஒரு குள்ளன் நெடியோன் ஒருவனை கைப் பிடித்து ஆற்றைக் கடக்க ஒரு பள்ளம் கண்டவாறே கையை இறுக பிடிப்பது போலே திட அத்யாவசயாத்தை சொன்னவாறு

இப்படி கொள்ளாத போது-என்றது -ஸ்வரூப நாசகம் என்று கொள்ளாத போது என்றபடி —
ஏதத் பிரவ்ருத்தியில் பிராயச் சித்தி விதி  கூடாது –என்றது –
சக்ரு தேவவஹி சாஸ்த்ரார்த்த க்ருதோயம் தாரயேன் நரேம் உபாய அபாய  சம்யோகே நிஷ்டையா  ஹீயதே அனையா
அபய சம்ப்லவே சத்தே பிராய சித்தம்  சமாசரேத் பிராயசித்திரியம்  சாத்ரா யத் புனச்ரணம்  விரஜேத்
உபயானாம் உபாயத்வ ச்வீகாரேப் ஏத தேவஹி -என்று
பிரபன்னனாவனுக்கு  பிரமாதிகமாக உபாயாந்தர பிரவ்ருத்தி வந்த காலத்தில் -அபாய பிரவ்ருத்தியில் போலே –
புன பிரபதன ரூப பிராயச்சித்தத்தை விதிக்க கூடாது என்கை –
புன பிரதனம் ஆவது -பூர்வ பிரபதன ஸ்மரணம் -புன பிரயோகம் அன்று .

———————————————

சூரணை-122-

திரு குருகை பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–

இப்படி ஸ்வரூப நாசகமான உபாயாந்தரத்தினுடைய அத்யந்த நிஷித்தத்வத்தை அபியுக்த வசனத்தாலே தர்சிப்பிக்கிறார் –

இப்படி ஸ்வரூப நாசகமான உபாயாந்தரத்தினுடைய அத்யந்த நிஷித்தத்வத்தை அபியுக்த வசனத்தாலே தர்சிப்பிக்கிறார் –
அஹங்கார லேஸம் -கள் பிந்து / தீர்த்த சலிலம் -பக்தி-ராஜ வித்யா ராஜ குஹ்யம் பாவனம் / கும்பம் ஜீவாத்மா ஆனந்தமயன் தானே /
கள்ளு ஒரு சொட்டு கலந்து – -ஸ்வர்ண பாத்திரம் -மய -முழுவதுமே ஸ்வர்ணம் தீர்த்த -சலிலம்–புண்ய தீர்த்தம் -தீர்த்தங்கள் ஆயிரம் – /த்ருஷ்டாந்தம்
உபாயாந்தரம் புத்தி விசேஷ பரிசுத்தம் -பக்தி ஞானம் முதிர்ந்த அவஸ்தை தானே -அஹங்காரம் கலசி -கர்ப்பமான -ஓன்று அன்றோ —
சர்வஞ்ஞர் -பகவானைப் போலே ஸ்ரீ ராமானுஜரும் -மா முனிகள் புனர் அவதாரம் -தன்னைப் பற்றியே யாதாவாக அருளிச் செய்கிறார் –
இங்கே பாஷ்யகாரர் என்றது –தேசிகர் சம்ப்ரதாயம் பாஷ்ய காரர் என்றும் தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் எம்பெருமானார் உடையவர் என்றும் தப்பாக அபிப்பிராயம் /
பர நியாசம் இங்கும் சரணாகதி அங்கும் பிரயோகங்கள் உண்டே –
பாஷ்யம் சாதிக்க வேதாந்தி யாக இருக்க வேண்டும் -ஆப்த தமர் சொல்ல வந்ததுக்கு ஏற்ப இங்கே பிரயோகம் –
நெய்-தங்க பாத்திரத்தில் உருக வைத்தால் -தங்க பசஸ்பம் -சகல பாபங்களும் போகும் -திருவடிகளே தனம் மதீயம் –
துக்கம் அஞ்ஞனம் மலம் மூன்றும் பிரகிருதி தர்மம் -ஆத்மாவுடையது இல்லையே
-ஸ்தாலீ -தண்ணீர் -நெருப்பு-சம்பந்தம் நேராக இல்லாமல் பானை நடுவில்-ஸ்தாலீ நியாயம் – – -அரிசி -ஆகாசம்-சாதம் வடித்து இடம் காண வேண்டுமே –
சம்பந்தம் -அன்னம் பஞ்ச பூதமயம் –ஆத்மா ஸூக துக்கம் அனுபவித்தது சரீர சம்பந்தத்தால் -இதே போலே ஸ்தாலீ சங்காதம் போலே -/
பக்திக்கு ஆஸ்ரயமான ஆத்மா -தீர்த்த சலிலம் தங்கக்குடம் போலே /
பக்தி அவனைக் குறித்தே -அதனாலே புனித தீர்த்தம் போலே -அஹங்காரம் கலசாமல் இருக்க கூடாதே -சாத்தியமாக கொண்டால் கலாசாதே –
சாத்ய ஸஹஜ பக்திகளாக இருக்க வேண்டும் -சாதன பக்தி தானே அஹங்காரம் கலந்த பக்தி
அவாஸ்ய த்ரவ்யத்தின் –அத்யல்ப பிந்து -லேசமான-ஸ்பர்சத்தால்-ஸ் ப்ருஹனீய பாவனை -உயர்ந்த தூய்மை -ஸ்வர்ணம் -பரிசுத்த தீர்த்தம்
நீர் நுமது என்று அவாஸ்யமான அஹங்காரம் -நான் எனது அருளிச் செய்ய வில்லையே ஆழ்வார் -லேச மிஸ்ரமாய்
பரிசுத்த சேஷத்வ ஞான அந்தர்கதமாய்-தத் கைங்கர்ய புத்தியா பரிசுத்தமுமான –இரண்டு பெருமை பக்திக்கும் -ஆனால் –ஸூ யத்ன ரூப -மோக்ஷ உபாயாந்தரங்கள் –
கொண்ட கொண்டை கோதை மீது தேன் உலாவு-பெருமைகளை சொல்லி ஒரு சிறுமை கூனி -பெருமாள் அப்படி -அவர் ஆராதித்த -சேஷத்வ ஞானம் தெரிய வைப்பார்-
இங்கே அஹங்காரம் – -கர்த்ருத்வ போக்த்ருத்வ அனுசந்தானம் -/ ஸ்ரீ கீதையில் இந்த்ரியங்களில் வைராக்யம் அஹங்காரம் இல்லாமல் பக்தி விதி உண்டே /
பக்தி யோக நிஷ்டனுக்கு எப்படி அஹங்காரம் –ஸூ கர்ம ஞான –வைராக்ய ஸாத்ய பக்தி –அன்றோ-உபாசனத்துக்கு அங்கம் அன்றோ -என்னில் /
ஹேது தானாக இருக்க வேண்டும் என்றும் உபாசகனுக்கு வேண்டுமே
வேறே வேறே அஹங்காரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -விஷ்ணு சித்தீயம் -சமாதானம் -ஸ்தூல அஹங்காரம் போனால் பக்திக்கு வரலாம் –
ஸூஷ்ம அஹங்காரம் இங்கே சொல்லிற்று -இது இருந்தால் தான் ஸூ யத்னம் -ஸாத்ய சித்த உபாயங்களை வாசி இருக்க வேண்டுமே /
மத் பல சாதனத்வாத் மத் நிமித்தம் இந்த கர்மா -இது சாதனம் என் பொருட்டு என்ற எண்ணம் கடைசி வரை ஒட்டிக் கொண்டே இருக்குமே /

திரு குருகைப் பிரான் பிள்ளான் ஆகிறார் -சர்வஞ்ஞரான பாஷ்யகாரர் திருவடிகளிலே சேவித்து தத் அபிமத விஷயமாய் –
சகல சாஸ்திரங்களும் ஆராய்ந்து அறுதி இட்டு இருக்குமவர் ஆகையாலே -ஆப்த தமராய் இருக்குமவர் அவர் இறே
பணிக்கும் படி என்றது -அருளி செய்யும் பிரகாரம் என்ற படி –
மதிரை யாவது -அத்யந்த நிஷித்த த்ரவ்யமாய் – ஸ்வஸ் ஸ்பர்ச லேசமுள்ள வஸ்துகளையும் தன்னைப் போலே நிஷித்தமாக்குமது இறே –
இத்தை அஹங்காரத்துக்கு திருஷ்டாந்தம் ஆக்குகையாலே -அதினுடைய அத்யந்த நிஷித்தத்வமும் –
தத் ஸ்பர்ச லேசமுள்ள வஸ்துவும் தத்வத் நிஷித்தம் என்னுமிடமும் தோற்றுகிறது –
சாத கும்ப மய மாவது – ஸூவர்ணம்-தந்மய கும்பம்-என்றது -உள்ளு த்ரவ்யாந்தரமாய் ஸூவர்ணம் மேல் பூச்சாய் இருக்கை-அன்றிக்கே
அது தானே உபாதாநமாக பண்ணின குடம் என்றபடி –
இத்தால் -பாத்திர சுத்தி சொல்லுகிறது -தத் கத தீர்த்த ஸலிலம்  என்கையாலே -அதுக்குள் இருக்கிற ஜலத்தின் பாவநதவம் சொல்லுகிறது –
அது போலே அஹங்கார மிஸ்ரமான உபாயாநதரம் என்கையாலே -இங்கும்
பாத்திர சுத்தியும் தத் கத பதார்த்த சுத்தியும் சொல்ல வேணும் -அதாவது –
ஆத்மா ஞான மயோ மல -என்கிற ஸ்வதோ நிர்மலதையலும் -பகவத் அனந்யார்ஹ சேஷதையாலும் பரிசுத்தமாய் இறே
பகவத் ஆஸ்ரயமான ஆத்மா வஸ்து இருப்பது –
தத் கத பக்தியும் பகவத் ஏக ஆகாரதயா பரிசுத்தை இறே –
அஹங்காரம் கலசிற்றில்லை ஆகில் ஒரு குறை இல்லையே –

ஆக -இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில் -சூவர்ண பாத்திர கதமான தீர்த்த ஜலம்-
பாத்திர சுத்தியும் உண்டாய் தானும் பரிசுத்தமாய் இருக்க -சூரா பிந்து மிஸ்ரதையாலே நிஷித்தம் ஆம் போலே –
ஸ்வதா நிர்மலத்வாதிகளாலே பரிசுத்தமான ஆத்மா வஸ்து கதையாய் -பகவத் ஏக விஷய தயா பரிசுத்தை யாய் இருக்கிற பக்தி தான் –
ஸ்வ யத்ன மூலமான அஹங்கார ஸ்பர்சத்தாலே-ஞானிகள் அங்கீகாராதாம் படி நிஷித்தையாய் இருக்கும் என்றது ஆய்த்து –
பணிக்கும் படி -என்றதுக்கு சேர -வாக்யத்தின் முடிவிலே -என்று என்ற இத்தனையும் கூட்டி நிர்வஹிப்பது –

————————————–

சூரணை -123-

ரத்னத்துக்கு பலகறை போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று –

இன்னமும் இதுக்கு பல வி சத்ருசத்வம் என்பதொரு
தூஷணம் உண்டு என்கிறார் –

ஆகிலும் இவற்றை சாதனம் என்று ஈஸ்வரன் மோக்ஷம் அருளுவது எதனால் என்னில் -இந்த பக்தி சத்ருசமான உபாயம் அல்ல என்றபடி –
லௌகீகத்தில் கஷ்டப்பட்டு கிடைப்பது உயர்ந்தது -பக்தி சத்ருசம் பிரபத்தி சத்ருசம் இல்லை என்று தப்பாக நினைப்போம்
அசேதனத்தை பற்றினாள் சத்ருசம் இல்லை -பரம சேதனனைப் பற்றினால் தானே சத்ருசம்
பிரபத்தி நம் செயல் இல்லையே பகவத் அனுக்ரஹம் என்று உணர வேண்டும் –
விற்கவும் பெறுவார்கள் -பக்திக்கு மயங்கி தன்னையே கொடுக்கிறான் –
பலகறை ஓட்டாஞ்சில் -கொடுத்து உதாரனான அரசன் இடம் ரத்னம் வாங்குமா போலேயும்-/ அபேக்ஷித அர்த்த ஸூசகங்களாக தான் இருக்கும்
பக்தி சபலனாய் – பரம உதாரனான மோக்ஷம் அருளுவதும் –பக்தி அநந்யார்ஹத்வம் காட்டுவதற்கே -உபயோகி /அத்வேஷம் மாத்திரமே போதுமே /
சத்ருசமும் அன்று சாதனமும் அன்று என்றபடி-சத்ருசம் என்றாலே சாதனமாக இருக்காதே என்று காட்ட இந்த இரண்டு த்ருஷ்டாந்தங்கள்
அந்நிய ப்ரயுக்தமான அவற்றிலே -நியதி பூர்வ வர்த்தி மாத்ரங்களான வியாஜ்யங்களாய் இருக்கும் இவை -இதுவே பக்தி / பகவத் நிர்ஹேதுக கிருபையே சாதனம்
நொண்டிச் சாக்காய் இருக்கும் / பக்தி விஷயத்திலே இப்படி என்றால் பிரபத்திக்கு சொல்ல வேண்டாமே
அல்ப கால ஸாத்ய கிருஷி யாகாதிகள் -ஸ்வர்க்கம் பெற்று கொடுக்க வில்லையோ -பஹு கால அனுபாவ்ய பல சாதனத்வம் காண்கிறோமே /
இங்கேயும் விதி பலத்தால் -பக்தி மோக்ஷ சாதனமாம் -என்ன ஒண்ணாது
சாஸ்திரம் விதித்தது -பக்தி ஒன்றாலேயே அடைகிறான் -/ இருந்தாலும்- ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் விட்டு விஷ்ணு போதம் -திரு நாவாய் முகுந்தன் –
அவனே காட்டினாள் தான் உண்டு -விதி இருப்பதால் சத்ருசம் இல்லை என்றாலும் உபாயம் ஆகுமே என்ன ஒண்ணாதே –
நிலை பெற்ற ஸ்ரீ வைகுண்டம் நிலை இல்லாத எதனாலும் அடைய முடியாது -சத்ருசம் வராதே -/பிரபல சுருதி வாக்கியங்கள் /
கீழ் உள்ளவை பிரபல வாக்கியங்கள் அல்ல -கிருத்து சாத்யத்வ மாத்ர பர விதி -தான் அது –அது நடந்த பின் கிட்டும் -அது உபாயம் இல்லை -என்பதே யுக்தம் -/
பகவானுக்கு இதர எதுவும் சாத்தியம் ஆகாதே / சத்ருச சாதனம் இல்லையாகிலும் பொருத்தம் இல்லாத சாதனம் என்னலாமோ என்னில் -விலக்ஷண உபேயம் –
தத் அனுரூபமான சாதனத்தாலே சாதிப்பதே திரு உள்ளம் குளிர்ந்து ஆஹ்லாத கரமாய் இருக்கும் -/ கீழே பக்தி அஞ்ஞருக்கு உபாயம் -அப்யமகத வாதம் –
இது அநப்யகம வாதம் வாதம் -உள்ளத்தை உள்ளபடி இங்கு அருளிச் செய்து –
கீழே பூர்பஷ வார்த்தையை உபாயம் என்று கொண்டாலும் தோஷங்கள் உள்ளன என்பதற்காக அருளிச் செய்தது –

அதாவது -த்வீபாந்தரந்களிலே சிலர் பல கறையை ஆபரணமாக பூண்கையாலே பலகறையை கொடுத்தவர்களுக்கு ரத்னத்தை கொடுப்பார்கள் –
உதாரரான ராஜாக்கள் ராஜ்ய அர்த்தியாய் வந்து ஓர் எலுமிச்சம் பழத்தை கொடுத்தவனுக்கு ராஜ்யத்தை கொடுப்பார்கள் –
இப்படி கொடுப்பார்கள் என்றால் -மகார்ககமான ரத்னத்துக்கும் மகா சம்பத்தான ராஜ்யத்துக்கும் -பல கறையும் எலுமிச்சம் பழமும்-சத்ருச சாதனம் அல்லாதா போலே –
பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா-பகவத் கீதை  -8 -22 -என்றும்
பக்த்யா த்வ அந்ய யா  சக்ய -பகவத் கீதை -11 -54 – என்கின்ற படி
பக்தி சபலனாய் -பரம உதாரனான ஈஸ்வரன் இவன் பக்கல் பக்தி மாத்ரமே பற்றாசாக -பரம புருஷார்த்த லஷண மோஷத்தை கொடுத்தாலும் –
பலத்துக்கு இது சத்ருச சாதனம் அன்று என்கை-

———————————————-

சூரணை -124-

தான் தரித்திரன் ஆகையாலே
தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –

ஆனால் விசத்ருசமான பலகறையும் எலுமிச்சம் பழத்தையும் -உபகாரமாக் கொடுத்து ரத்னத்தையும் ராஜ்யத்தையும் பெறுகிறவர்கள் தான் பெருகிறபடி என் -என்ன –
அவ்வோபாதி யாகிறது என்ன -அது தனக்கு யோக்யதை இல்லை என்கிறார் –

நித்ய தரித்ரன் என்பதாலே அங்கும் அப்படியே -/ பகவானை மட்டுமே -ஆத்மாத்மீயன்கள் வைராக்யம் -எறாளும் இறையோன் -திருவாயமொழி –
மதீயம் ஒன்றுமே இல்லையே – ததீயம் என்றே கொடுக்க வேண்டும் -ஆகையால் சிறிய அளவாவது கொடுக்க வேண்டும் என்பது வராதே -/
எடுத்த த்ருஷ்டாந்தத்தில் எலுமிச்சம் பழம் இவனது -இங்கு அதுவும் இல்லையே -அதுக்கும் யோக்யதை இல்லையே /
ராஜாவுக்கு உரியவன் அல்லன் அங்கு -இங்கு பகவானுக்கே உரியவன் -/சரீராத்மா பாவ நிபந்தம் யானே நீ என் உடந்தைமையும் நீ /
இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் அவன் உரு -சரீரமாக கொண்டவன் -நியத தத் சேஷத்வம் லபிக்கிறது -சரீர சரீர பாவத்தால் /
புஷபம் மணம் நியதி சேஷத்வம் உண்டே /பகவதீயம் என்றவாறு /இரண்டு அவதாரணங்கள் -யான் நீ -என் உடைமையும் நீ தான் சொல்லாமல் /
யானே நீ –யானும் நீயே -/ஒரு துளியும் எனக்கு இல்லையே -காட்டவே -அகிஞ்சனன் அன்றோ -தரித்ரன் என்றது ஆகிஞ்சனன் என்றவாறு –

அதாவது -அங்கு தானும் தனக்கு உரியவனாய் தனக்கு என்று ஒரு பலகறையும் எலுமிச்சம் பழமும் உண்டாகையாலே அது செய்யலாம் –
இங்கு அப்படி இன்றிக்கே –
யானும் நீ என்னுடைமையும் நீயே -திரு வாய் மொழி -2 -2 -9 -என்கிறபடியே ஆத்மா ஆத்மீயங்கள் இரண்டும் அங்குத்தையாய்-
தனக்கு என்று ஒன்றும் இல்லாத அகிஞ்சனன் ஆகையாலே -பேற்றுக்கு ஹேதுவாக அவன் விஷயத்தில் தனக்கு சமர்ப்பிக்கல் ஆவது ஒன்றும் இல்லை என்கை –

—————————————————-

சூரணை -125-

அவன் தந்த அத்தை கொடுக்கும் இடத்தில் –
அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம் –
அடைவு கெட கொடுக்கில் களவு வெளிப்படும் –

கோ தானத்தில் பிதாவுக்கு புத்திரன் தஷிணை கொடுக்குமா போலே -அவன் தந்தது தன்னை அவனுக்கு கொடுத்தாலோ என்ன -அருளிச் செய்கிறார் –

ஞானம் பக்தி இவைகளைக் கொடுத்தவன் அவன் தானே -அடைவு கெட கொடுப்பதே உசிதம் -புத்தி யோகம் -தாதாமி தம் -அத்தைக்கு கொண்டே அவன் என்னை அடைகிறான் –
பிதாவே ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து அவன் தந்ததை கொண்டு தக்ஷிணை தருவது போலே –உண்மையிலே ஒத்துக்க கொண்டு
ஸ்வ தந்த்ர ஸ்வாமி அவன் தந்த பக்தியையே -தரித்ரனான இவன் பூர்ணனான அவன் இடம் -சமர்ப்பித்து -/ கொடுத்தத்தை கொடுத்து நாக்கு நீட்டி நிற்கலாமோ -என்று
பரிகாசம் பண்ண தானே உடலாகும் –
அன்றிக்கே அவன் கொடுத்த பக்தியை தன்னதாகப் பாவித்து -பர த்ரவ்ய அபஹாரம் -கோயில் களவு -பரமாத்மா சொத்து -திருடுகை –
வருந்தியும் மறைக்க ஒண்ணாத படி பாவஞ்ஞர் அறியும்படி -வெளிப்பட்டு விடுமே -/ திரு ஆபரணத்தை களவு கண்டு மீண்டும் கொடுத்ததும் ஒக்குமே /

அவன் தந்ததை கொடுக்கை யாவது -விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ருதா பிரமன் ஹஸ்த பாதாதி சம்யுதா -என்றும் –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -ஆழ்வார் வேதம் தமிழ் செய்த -மாறன் –
கௌஸ்துப மணி போலே பச்சை திரு ஆபரணம் ராஜ மகேந்திரன் சமர்ப்பித்தது /
ஸ்ரீ வைகுண்டத்தில் பக்தி கைங்கர்யம் தத் தத் பிரதிதானம் -பலம் எதிர்பார்க்காமல் கொடுத்ததை திரும்பி தந்து -நீதி வானவர் -நாம் தானே அநீதி மண்ணவர்/
ஆச்சார்யரை வைத்து ப்ரஹ்ம உபதேசம் -அதிருஷ்ட பலம் சிஷ்யனுக்கு ஆச்சார்யருக்கு அபூர்வ வஸ்து கிடைக்குமே -தக்ஷிணை யாக /
பிதாவுக்கு அபூர்வ புதியதான வஸ்து பெற்ற ப்ரீதி இல்லையே
அதே போலே இங்கும் நமக்கும் மோக்ஷம் அதிருஷ்ட பலம் -பகவானுக்கு அபூர்வ வஸ்து லாபம் என்று ஒரு விஷயமே இல்லை /அஸ்மத் இஷ்ட பிராப்தி மட்டுமே கிட்டும் /
ஸ்வாமி சொத்து -பிதாவின் சொத்து பிள்ளை பிறந்த பின்பே பங்கு உண்டே -ஆஷேபம் -பகவான் பிதா என்று ஒத்துக் கொண்ட பொழுதே என் சொத்து ஆகுமே /
பிதா தானம் பண்ணி -தன் சொத்து இல்லை என்று கொடுத்த பின்பு பிள்ளை திரும்ப கொடுக்க அபூர்வ வஸ்து லாபம் ஆகுமே /
தக்ஷிணை தானம் கொடுத்தால் தான் அனுக்ரஹம் வரும் -/அபூர்வ அர்த்தம் கிடைத்த ப்ரீதியும் பிதாவுக்கு வரும் -/
பகவான் இடம் அப்படி இல்லையே எந்த சொத்தையும் தன்னது இல்லை என்று ஒழிக்க முடியாதே -ஒழிக்க முடியாத ஒன்பது சம்பந்தம் உண்டே -/
யாருக்கும் வாரமோ சாபமோ தண்ணீர் விட்டு எத்தையும் கொடுக்க வில்லை எந்த புராணங்களிலும் -இல்லையே -/
தானம் வாங்கப் போவான் -தானம் தார மாட்டார் -இவர் கொடுத்தால் வராதே இதம் ந மம சொல்ல முடியாதே அவனால் -/
அவனால் கொடுத்து பெற இயலாது -ஆகையால் பக்தி உபாயமாக மாட்டாதே –

அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும் -சொல்லுகிறபடியே அடியிலே அவன் தந்த கரண களேபரங்களை –
மன்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு -என்றும் –
சததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தச்ச திருட வ்ரதா -என்றும் -சொல்லுகிறபடியே –
த்யான அர்ச்சனா பிரமாணாதிகளாலே தச் சேஷமாம் படி பண்ணுகை-
அடைவிலே கொடுக்கையாவது -ததீயம் என்னும் புத்தியாலே சமர்ப்பிக்கை-
இப்படி கொடுக்கில் -அநு பாயமாம் -என்றது -அவனத்தை அவனுக்கே கொடுத்த இத்தனை ஒழிய -தான் ஓன்று கொடுத்தது ஆகாமையாலே-
அது பேற்றுக்கு சாதனம் ஆகாது -என்றபடி –
அடைவு கெட கொடுக்கை யாவது -மதியம் என்னும் புத்தியாலே சமர்பிக்கை –
இப்படி செய்யில் -களவு வெளிப்படும் -என்றது -பகவத் த்ரவ்ய அபஹாரம் பிரகாசிக்கும் என்ற படி –

—————————————

சூரணை -126-

பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம் –

இன்னமும் உபாயாந்தரதுக்கு ஒரு தூஷணம் சொல்கிறார் –

சேஷத்வ பாரதந்த்ரத்துக்கு விரூபம் -இவற்றை விலை பேசுவது போலே ஆகுமே -கீழே அஹங்கார கர்ப்பம் என்றார் /
களவு வெளிப்பதியம் அது மாத்திரம் இல்லை -பர்த்தா கொடுத்த போகமே போஜனமாக கொள்ள வேண்டுமே –
பதி விரதை இப்படி தானே நினைக்க வேண்டும் -சேஷத்வமும் ரக்ஷகத்வமும் போகுமே இல்லை யாகில் –
பக்தியை நம் கோணத்தில் பார்க்கக் கூடாதே -பகவான் ஜீவனை அனுபவிக்க பக்தி இருக்க வேண்டுமே -/ பரத்தை போலே இல்லாமல் பதி விரதை போலே
அவனையே நோக்கி இருக்க வேணுமே -பர போக உபகரணம் தானே பக்தி –இதுவே ஸூ போகத்துக்கு உறுப்பு என்று சேஷ பூதன் நினைக்கில் –
தத் ஏக போகனான தனக்கும் -அவனுக்கும் -நிலை நின்ற அவத்யமாக தலைக் கட்டுமே -/
விளைந்த பக்தி -அவன் இடம் சென்று தானே வளர்க்க வேண்டும் -ஈர நெல் வித்தி -காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -பக்தி உழவன் –
பக்தி பண்ண பண்ண ப்ரத்யக்ஷமாக முன்னே கொண்டு வந்து நிற்கப் பண்ணும் -போக ரூபமே -ஸூ ஸூ கரம்
/பக்தி அனுப ரூபம் -பிராபகம் தானே சாதனம் இல்லை / நித்ய முக்தர்களைப் போலே /
பக்தி உபாயம் ஆகாது –அன்பு என்னுடைய அளவு அல்லவே -எனக்கு அடங்கினது இல்லையே -அவா தத்வ த்ரயங்களிலும் விஞ்சி -பகவத் பெருமையால் -விளைந்தால்
பகவத் வை லக்ஷண்ய அனுபவத்தாலே விளைந்த போக ரூபை யான பக்தியை– விளைந்த -அவன் செயல் -/-
இருந்தாலும் இது விஷய ஆஸ்ரய-உபாயத்வ புத்தியை உருவாக்கும் -/ உண்மையான ஆகாரம் ப்ராப்ய சேஷியுடைய போக ரூபம் அனுபவிக்க கருவி /
உபாய பாவத்தை கண் வையாதே பிராப்ய வேஷத்தில் கண் வைத்து இருக்க ஸ்ரீ பாஷ்ய காரர் சரம தசையில் அருளிச் செய்தார் அன்றோ –
செல்லப்பிள்ளைக்கு கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க கீழே அருளிச் செய்தார் /
அடைவதற்காக அல்ல அனுபவிப்பதற்காகத் தானே பக்தி -நான் அவனை அனுபவிக்க இல்லை -அவன்- என்னை-அடியேனை-அனுபவிக்க தானே பக்தி –
இஷ்ட சாதனம் வேறே இஷ்ட ப்ரயோஜகம் பரம்பரையா காரணம் / பக்தி பிரயோஜகம் – பகவத் கிருபை ஒன்றே இஷ்ட சாதனம் –
பிரபத்தி என்றால் சாஷாத் சர்வேஸ்வரனையே சொல்லும் -அவன் ஒன்றே காரணம் /
சாஸ்திரம் பக்தியை சாதனமாக சொல்லுவதும் பிரயோஜகத்தை குறித்தே சொல்ல வந்தவை —
வியாஜம் -போலி காரணம் -/ராத்திரி பர்த்தாவோடே சம்ச்லேஷித்து விடிவோறே கைக்கூலி தர வேணும் –
யோக கால த்ருஷ்டாந்தம் -ராத்திரி/ / பார்த்தா -கணவன் சப்தம் இல்லாமல் -தாங்குபவன் பர்த்தா / புல்கு பற்று அற்றே -சம்ச்லேஷம் /
யோக அனுபவம் முடிந்து எழுந்து -விடிவோறே/மோக்ஷ உபாயமாக கொண்டு கைக்கூலி வேணும் –என்பது /வளைத்தல் -நிர்பந்தம் /பிள்ளான் வார்த்தை

அதாவது – ஸ்வோதர போஷணதுக்கு- (பக்தியை மோக்ஷத்துக்கு )
சாதனம் ஆக்கி கொள்ளும் அளவில் -தன்னை பார்யை யாக விரும்பின பர்த்தாவுக்கும் –
தத் பார்யை என்று பேர் இட்டு இருக்கிற தனக்கும் அவத்யம் ஆம் போலே –
பகவத் வை லக்ஷண்ய அனுபவத்தாலே விளைந்த போக ரூபை யான பக்தியை
மோஷ சாதனம் ஆக்கும் அளவில் -தன்னை சேஷ பூதனாக விரும்பி தன்னோடு
கலந்து பரிமாறின ஈஸ்வரனுக்கும் -தத் சேஷ பூதன் என்று பேர் இட்டு இருக்கிற தனக்கும்
அவத்யமாய் தலை கட்டும் என்கை –
ராத்திரி பர்த்தாவோடே சம்ச்லேஷித்து விடிவோறே கைக்கூலி தர வேணும் என்று
வளைக்குமா போலே -பக்தியை உபாயமாக கொள்ளுகை-என்று இறே பிள்ளானும் அருளி செய்தது –

————————————-

சூரணை -127-

வேதாந்தங்கள் உபாயமாக விதிக்கிறபடி என் என்னில் –

இதுக்கு பதில் அடுத்த சூர்ணிகை-ஸ்வரூப விரோதாதி தோஷ துஷ்டமான இத்தை-ஆதி பலத்துக்கு சத்ருசமாக இருக்காதே /
வேதாந்தங்கள் -சேனையாகாதிகளை தாமச ராஜஸ அதிகாரிகளுக்கு இல்லை / ஹிதத்தை அனுசானம் பண்ணுமே வேதாந்தங்கள்

இப்படி ஸ்வரூப விரோதாதி தோஷ துஷ்டமான இத்தை -ஹிதா தனுசாசனம் பண்ணுகிற வேதாந்தங்கள் –
ஒமித் யாத்மானம் த்யாயதா-
ஆத்மா நமேவ லோக முபாசீத –
ஆத்மாவா ஆர் த்ரஷ்டவ்யச் ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய-என்று
இச் சேதனனுக்கு மோஷ உபாயமாக விதிக்கிறதுக்கு நிதானம் அருளி செய்வதாக –
தத் ஜிஜ்ஞாசூ பிரச்னத்தை அநு வதிக்கிறார்-

——————————————————–

சூரணை -128-

ஒவ்ஷத சேவை பண்ணாதவர்களுக்கு-
அபிமத வஸ்துக்களிலே அத்தை கலசி இடுவாரை போலே –
ஈஸ்வரனை கலந்து விதிக்கிறது இத்தனை –

தந் திதானம் தன்னை அருளிச் செய்கிறார் –

பக்தி ஸ்வாதந்த்ர வாசனை உடன் இருக்குமே -/ வெல்லத்துக்குள்ளே மருந்து வைப்பது போலே /
பக்தி அங்கி ஈஸ்வரன் அங்கம் / அங்கம் தான் வேலை பார்க்கும் / அங்கே உள்ளே இருப்பது மருந்து கசக்கும் -இங்கு இவன் தேன் —
நச்சு மா மருந்து –நம்பிக்கைக்கு உரிய மருந்து -நஞ்சு என்று நாம் பிரமிக்க இந்த வார்த்தை -/
ஈஸ்வர கிருபை தான் சாதனம் -இருவருக்கும் அவத்யம் ஏற்படுத்தும் பக்தியை உபாயமாக சாஸ்திரம் விதிப்பது -/ ரோக அனுகுணமான –
திவ்ய மருந்துகளை -ஒப்புச் சொல்ல ஹிதைஷி -வைத்தியர் போலே -சம்சாரம் என்னும் மஹா ரோகம் -நாசகரமான மருந்து –உபதேசித்தாலும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய இத்யாதி உபதேசம் மூலம் ஆச்சார்யர்கள் – -சேஷ பூதரான சம்சாரிகளுக்கு –கலசி -எங்கும் அந்தராத்மா தானே /
யோகம் என்பதே உள்ளே உள்ள அவனை நோக்குவதே –அர்ச்சாவதாரம் கலியுகம் பிரதானம் -வெளியில் பார்த்தாலும் தன்னை நோக்க –
இவன் உள்ளே பார்க்காமல் வெளியிலே திரிகிறான் -/ அஹங்கார கர்ப்பமான ஸூ வ யத்னத்தை பக்தி என்ற பேராலே விதிக்கிறது
வத்ஸலையான மாதாவான சாஸ்திரம் -/ பகவானை உள்ளே இவன் தெரியாதபடி கலந்து இடுகிறது –
ஸ்வ தந்திரம் அந்நிய சேஷத்வங்களை போக்கும் மருந்து இது /இசைவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் –
ஸ்ரவணம் -அர்த்த கிரஹணம் உண்மை பொருளை / மனனம் விசாரம் பண்ணி நிலை /
நிதித்யாஸனம் இச்சா பூர்வக இடைவிடாமல் த்யானம் / போக அனுபவ ரூபம்
வாசனை பலத்தால் ஸூ வ யத்னத்திலே பிரார்த்தித்து -முதலிலே சர்வேஸ்வரனையே நோக்காமல் இருக்கப் பண்ணும் /

அதாவது -அத்யந்த ருக்ணராய் திரியா நிற்க செய்தே -அத்தை அவிளம்பேன போக்கும்
ஆப்தமான மகா ஒவ்ஷதத்தை சேவிக்க சொன்னால் -அதுக்கு இசையாத பால புத்ராதிகளுக்கு –
அவர்கள் ஆசைப் பட்டு விநியோகம் கொள்ளும் வஸ்துகளிலே அந்த ஒவ்ஷதத்தை கலசி இடும் –
வத்சலரான மாத்ராதிகளை போலே -சீக்ரமாக சம்சார வியாதியை தீர்க்கும் -சித்தோ உபாயமாகிற
நச்சு மா மருந்தை-திரு வாய் மொழி -3 -4 -5 –
ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வமாக சேவிக்க சொல்லி -முதலிலே உபதேசித்தால் –
அநாதியாய் வருகிற வாசநையால் அதுக்கு இசையாத சேதனரையும் விட மாட்டாமையாலே –
அவர்களுக்கு அபிமதமான ஸ்வ யத்ன ரூபமாய் இருக்கிற உபாசனத்திலே -தத் அங்கத்வேன-
சித்தோ உபாயமான ஈஸ்வரனை கலந்து தாத்ருசமான -உபாசனத்தை அவர்களுக்கு மோஷ உபாயமாக விதிக்கிற இத்தனை என்கை –
த்ருஷ்டாந்தத்தில் அபிமத வஸ்து வியாதிகரம் அன்றியே தந் மிஸ்ரமாக பிரயோகித்த ஒவ்ஷதமே வியாதிகரம் ஆகிறது போலே –
த்ருஷ்டாந்தகத்திலும் -உபாசனம் அன்றிக்கே -தந் மிஸ்ரமான ஈச்வரனே உபாயம் என்னும் இடம் சம்ப்ரதிபந்தம் –
அவ்யவதாநேன சேவிக்கும் அளவில் – அவிளம்பேன வியாதியை போக்கும் ஒவ்ஷதம் அபிமத வஸ்து மிஸ்ரமான போது-
விளம்பேன கார்யகரம் ஆகிறாப் போல் ஆய்த்து -உபாசன மிஸ்ரமான போது-ஈஸ்வரன் விளம்ப பலப்ரதன் ஆகிறதும் –

———————————————–

சூரணை -129-

இத்தை பிரவிர்ப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –

இனி இப்படி இது தன்னை விதித்தது கீழ் நின்ற நிலையை குலைத்து –
மேலே கொண்டு போகைக்காக இத்தனை என்கிறார் –

பர ஹிம்சை நிவர்த்திப்பது – என்றது-அபிசார – காம்ய கர்மாக்களை பண்ணுவதை நிவர்த்திக்க என்றபடி -/
தாமச ராஜஸ சாத்விக பரம ஸாத்விகன் -மேலே மேலே அதிகாரிகள் -சேனா யாகம் -தொடங்கி-பிரபத்தி பர்யந்தம் சாஸ்திரம் விதிக்கும் /
பர ஹிம்சை -உயர்ந்த -சேனையாதி ஹிம்சை போலே இல்லாமல் ஜ்யோதிஷ்டோஹோமாதி ஹிம்சைக்கு மேலே என்றபடி /
ஹிம்ஸா பரம் -ஹியோதிஷ்டிஹோமாதிக்கும் வெள்ளாட்டு ஹிம்சை உண்டே -இதுவும் ஹிம்சாபரமாய் இருக்கும்
பிரபன்னன் உபாசனம் தள்ளி என்ன ஹிம்சை என்னில் -ஹிம்ஸா பாரமாய் -ஹிம்சை போலே இருக்கும் –
இப்படி இரண்டு நிர்வாகம் -/ பிரவர்தகர் பக்தியை விதித்து -என்றைக்கும் பக்தி உண்டு -/ பராமசாத்விகனுக்கு தான் இது உபாயம் இல்லையே
பிரவர்த்திப்பார் -கர்த்ரு வேணும் -உபாசகன் பக்தி யோகன் –வேதம் விதிக்கும் –
சாஸ்த்ர பரம் வேத பரம் இங்கே -குறிக்கும் –முக்குணத்தவர்களுக்கும் சொல்லும்
வளர்த்த தாயாரின் வியாவர்த்தி பெற்ற தாய் -/
கண் குறை –தமோ குணம் -நிஷ்டன்-தர்மி ஸ்வரூபம் மறைக்கும்-இன்னாரை தெரியாதவன்-ரூபி தர்மி இங்கே சொல்லி /
தர்ம ஸ்வரூபம் மறைக்கும் காது–ரஜஸ் -அவன் பற்றி இன்னான் என்று கேட்டு அறியாதவன் /ஆகாச தர்ம -சப்தம் கிரஹிக்காதே/
படு கரணர்-சாத்விகர் -தர்மம் தர்மி யதாவத் அறிந்தவர் /
சாஸ்த்ர விசுவாச -முதல் நிலை / தேஹாத்ம விவேகம் அறிந்து இரண்டாம் நிலை /
அந்நிய சேஷத்வம் ஸூவ ஸ்வாதந்த்ர நிவ்ருத்தி-மூன்றாம் நிலை /
அத்யந்த பாரதந்தர்யம் நான்கு நிலைகள் -தமோ / ரஜஸ் / சாத்விக / பரம சாத்விக / நான்கு அதிகாரிகள் /
சேனையாக விதி / ஜ்யோதிஷடஹோமாதி விதி / உபாசன விதி / பிரபத்தி விதி /நான்கும்
நாஸ்திகர் தொடங்கி -தேகாத்ம பிரமம் -அந்நிய சேஷத்வ–ஸூ ஸ்வா தந்திரம் -தத் தத் -ப்ரத்ய நீக –எதிராக
ஆஸ்திக்ய -தேகாத்ம விவேக / அந்நிய சேஷத்வ–ஸூ ஸ்வா தந்திரம் அபாவ /
அனுசந்தான ரூபம் -சேதன புத்தி பக்குவம்-மூன்று நிலைகளை மட்டும் சொல்லி
நான்காவது பரம ஸாத்விகன் ஆணைன்பு பாகம் அடைய ஒன்றுமே இல்லை
பலத்தை பார்த்து ஆசை -சத்ரு வதம்/ ஸ்வர்க்கம் / மோக்ஷங்களில் உத்தர உத்தர -பக்தியும் பிரபத்தியும் மோக்ஷம் தானே பலம் /ப்ரவர்த்திப்பித்து –
பஞ்ச மஹா பாதகம் -ஆறாவது பக்தி -குடக் கூத்துக்கு போனது வினையால் போலே- ராம பக்தி சத்ரு போலே –

அத பாதகபீதஸ் த்வம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -மஹா பாரத ஸ்லோகம் -பாரதத்தில் தர்ம ராஜன் யமன் -தன்னுடைய புத்ரன்- –
கிருஷ்ணன் பக்கலில் இருக்கச் செய்தேயும் அவனே தஞ்சம் என்று விசுவாசம் இல்லாமல்
ஹிரண்யகசிபு தர்மத்தை தடுத்து யாகம் பண்ண ஒட்டாமல் -இங்கு சாஷாத் தர்மம்
யமன் சண்டாள வேஷத்துடன் அத்யந்த பசி யுடன் சோறு கேட்க –
பிராமணர் பூஜிப்பதற்கு முன்னே விட போகாதே -இடாவிடில் பிழையான -தர்ம சங்கடம் –
யாகத்தில் பிரார்த்திக்க பாதகமாக தலைக் கட்டிற்றே
யாகாமபாதகம் ஆனதே சாஷாத் பகவானை விட்டால் -சாஷாத் பிரபத்தி விட்டு பக்தி இனிதே போலே பாதகம்
அப்போது யமன் -அத பாதக பீதஸ்தம் -சாஷாத் தர்மம் விட்டு இங்கே பற்றினத்தால் –
பாதகம் -சர்வ பாவேந விமுக்த -எல்லா படிகளாலும் அந்நிய சமாரம்பம் –
பகவானை தவிர வேறே ஒன்றை பற்றுவதை விட்டவனாய் நாராயண பரனாகவே இரு – -சரம ஸ்லோக பூர்வார்த்த விவரணம் சொன்னான் –
அத -ஒரு வேளை நீ பயந்து இருந்தாய் ஆனால் -என்றபடி / பாத பீதஸ் -ஸ்வரூப விருத்தமான யாகம் கண்டு பயமுடையவனை –
அதிகாரி ஸ்வரூபம் -பிரபன்னனுக்கு அடையாளம் தகுதி -சொல்லுகிறது –
கேட்பதற்கு முன் அஞ்சுபவனும் பின் அஞ்சாதவனுமே இந்த ஸ்லோகம் கேட்க அதிகாரி –
உனக்கு ஒரு சொல் எனக்கு வாழ்வு– அஞ்சினது முன்னால் -அஞ்சி உன் சரண் அடைந்தேன் -நைமிசாரண்யத்துள் எந்தாய் /துர்லபம்
நாராயண பர -சர்வ பாவேனே எல்லா படிகளாலும் பயந்தவன் -விட்டவன் -பற்றினவன் மூன்றும் உண்டே
சர்வ பாவேந பாதக பீதஸ் -உபாயாந்தரங்களில் -பயந்து -அறியவும்- அனுஷ்டானத்துக்கும் முடியாது-
செய்தாலும் ஸ்வரூப விரோதம் -மூன்றும் உண்டே –
பாதக சப்தம் உபாயாந்தரங்களைக் காட்டுமோ என்னில் -இந்த ஸ்லோகார்த்தம் கேட்பதும் – தர்ம புத்ரன் -தர்ம சீலனாய் இருக்கையாலும்—
யாகம் பிரசக்தமாக இருக்கையாலும் -/ ப்ரஹ்மஹத்தி முதலான பாதகங்கள் வராமையாலும் -விமுக்த –
வேறு பட்ட அனைத்தையும் விட்டு விடு என்பதால்
அனைத்துக்குள்ளும் இது -சர்வ தர்மான் பரித்யஜ்ய தர்மங்களையே த்யாஜ்யமாக சொல்லுகையாலும்
யாகம் பாதகம்
மேலும் அளவுடையாருக்கு பய ஜனகம் -சாதனாந்தரங்கள் பய ஜனகமே –இத்தால் சர்வ பாவேந –
மேல் சர்வ பாவேந விமுக்த அந்நிய சமாரம்பா –அந்நிய சப்தம் பகவத் அந்நிய பரம் -சர்வ தர்மான் -ச பஹு வசன -/
அங்கங்கள் உடன் கொடிய தர்மங்களை-ருசி வாசனை யுடன்
லஜ்ஜை யுடன் விட்டு -விமுக்த -தாது -பரித்யஜ்ய அர்த்தம் -/
சர்வ பாவேந நாராயண மாத்ர பர -மாம் ஏகம் சரணம் வ்ரஜ அர்த்தம்-சர்வ வாக்கியம் சாவதாரணம் – நாராயணனையே -என்று –
மாம் சப்தார்த்தம் நாராயணன் /மாத்ர சப்தம் ஏகம் அர்த்தம் /
பர வ்ரஜ -தாத் அர்த்தம் அத்யாவசிய -கத்யர்த்த புத்யர்த்த புத்தியால் உறுதி கொள்வது /
சர்வ பாவேந–உபாயம் உபேயம் என்றும் -மாதா பிதா இத்யாதி யாகவும் —வாசுதேவ சர்வம் -எல்லாம் கண்ணன் —
தாரக போஷாக்கை போக்கிய -என்றும் –
ஸ்வீகாரத்தின் சர்வ பிரகாரத்தையும் சொல்லி -பர ஹிம்சை- ஹிம்ஸா பரமே என்பதை புரிய வைக்க இவ்வாறு அருளிச் செய்கிறார் –
ஸ்வரூப ஹானி தர அக்ருத்ய விசேஷம் காம்ய கர்மம் நிவர்த்தனமாக வேதாந்தம் -விதித்து -/ ஸ்வர்க்கத்துக்கு சாதனமான பர ஹிம்சை மீட்க
ஹிம்ஸா அபிசார கர்மம் மட்டும் இல்லை -தன் நிவர்த்தகம் ஸ்வர்க்காதி சாதன விதி -துக்க சாதனம் இல்லாமல்
சுக சாதனமான இவற்றை பர ஹிம்சை என்னலாமோ என்னில் -பண்ணும் கர்த்தாவும் ஆடும் ஸ்வர்க்கம் போனாலும் -சர்வம் துக்க மயம் –
பிராக்ருதத்திலே எங்கும் தூக்கமே ஸத்ய லோகம் வரை / வெறுக்கத்தக்க சுகம் -துக்க பிராயம் துக்கத்துக்கு ஒப்பு -என்று
முமுஷுக்களுக்கு தோன்றும்
பகவத் பாரதந்தர்யத்தை முறுக்கும் ஸ்வ தாந்தர்யம் -பிரம காரணமான பிரவர்திகள் —

அதாவது சாஸ்திரம் ஆகிறது -த்ரைகுண்யா விஷயா வேதா -என்கிறபடி
பெற்ற தாய் -அந்த பதிராதிகள் ஆன விகல கரணரோடு படு கரணரோடு வாசி அற வாத்சல்யையாய் இருக்குமா போலே –
மாதா பித்ரு சகஸ்ரங்களில் காட்டிலும் வத்சல தரம் ஆகையாலே –
தமப்ரசரோடு -ரஜ பிரசரோடு சத்ய பிரசரோடு வாசி அற -அவர்கள் அபேத பிரவ்ருத்தராய் நசிக்க விட ஷமம் அல்லாமையாலே –
அவ்வோருடைய குண அநு குணமாக புருஷார்த்தங்களையும் -தத் சாதனங்களையும் உபதேசித்து -கொள் கொம்பிலே ஏற்றுகைக்கு
சுள்ளிக் கால் நட்டுவாரோபாதி -இவ்வோ முகங்களால் தன்னுடைய தாத்பர்யாம்சத்திலே-யாரோபிக்கைக்காக ப்ரவர்த்திக்கிறது ஆகையாலே –
சேயேன விதி தொடங்கி-பிரபத்தி பர்யந்தமாக வரும் அளவும் சேதனர்  நின்ற அளவுக்கு ஈடாக உத்தரோத்தர புருஷார்த்த
சாதனங்களை ப்ரவர்பித்திப்பித்து பூர்வ பூர்வங்களை நிவர்திப்பிக்ககடவதாய் இருக்கும் –
ஆகையாலே இவ் உபாசனத்தை பிரவர்த்திப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –

பரஹிம்சை -என்றது -மேலான ஹிம்சை என்றபடி -பர தேவதை -பர கதி -என்கிற இடங்களில் –
மேலான தேவதை -மேலான கதி -என்று அர்த்தம் ஆகிறது போலே –
அதாவது சேயேன விதிக்கு மேலாக விதிக்கப் பட்ட பசவ அவலம்ப நாதிகளை சொன்ன படி –
அத்தை ஹிம்சை என்னலாமோ என்னில் -விஹித ஹிம்சை என்ன கடவது இறே-
அக்நி ஷோமீயம் பசுமாலபேத -என்கிற இடத்தில் ஆலம்ப சப்தம் -ஆலம்ப ஸ்பர்ச ஹிம்சயோ- என்கையாலே -ஹிம்சா வாசி இறே —
இத்தால் காம்ய கர்மத்தை சொன்னபடி -பூர்வ விஹித ஹிம்சை – என்று சேயேன விதியை சொல்லுகையாலும் –
தது பரி விஹிதமான காம்யமே இவ்விடத்தில் விவஷிதம் –
அன்றிக்கே –
விஹிதமே ஆகிலும் -பகவத் சேஷத்வ ஜ்ஞான பூர்வகமாக அநந்ய பிரயோஜனாய் கொண்டு –
அக்நி-இந்த்ராதி தேவதா அந்தர்யாமி சமாராதனமாகவே பண்ணும் பசவ ஆலம்ப நாதி யுக்த யாகாதி கர்மத்தை பற்ற
ஸ்வ தந்த்ரனாய் கொண்டு ஸ்வர்க்காதி பல சாதனமாக அக்நி இந்த்ராதி தேவதா மாத்ரங்களை உத்தேசித்து பண்ணும்
பச்வாலம்ப நாதி யுக்த காம்ய கர்மம்
விசேஷஞ்ஞர்க்கு பர ஹிம்சாப்ராயம் என்னலாம்படி யத்யந்த நிக்ருஷ்டமாய் இருக்கையாலே இவ்வாகாரத்தை இட்டு
அது தன்னை பர ஹிம்சை என்று அருளி செய்தார் ஆகவுமாம்–
சாஸ்திர விஹிதமுமாய் -பகவத் ஏக விஷயமுமாய்- இருக்கிற பிரபகாந்தரத்தை ஜ்ஞாநிகளுக்கு அபாயம் என்றவோபாதி –
இதுவும் அதிகாரி விசேஷத்தை இட்டு
சொல்லலாம் இறே —
அத பாதகபீதஸ் த்வம்-என்று உபாயாந்தரத்தை பாதகமாக சொல்லிற்று இறே
தர்ம தேவதையும் -புபுஷுக்கு உபாதேயமான புண்ணியமும் தானே முமுஷுக்கு பாப சப்த வாக்யமாகா நின்றது இறே —
ஆக -எல்லா வற்றாலும் -இவ்விடத்தில் காம்ய கர்மத்தையே சொல்லுகிறது –இப்படி தான் யோஜிக்கிறது-
உபாசன விதிக்கு நிவர்த்யம் காம்ய கர்மமாக இவர் தாமே -பரந்தபடி ரஹச்யத்திலே அருளி செய்கையாலே —

—————————————

சூரணை-130-

இது தான் பூர்வ விஹித ஹிம்சை போலே
விதி நிஷேதங்கள் இரண்டுக்கும் குறை இல்லை –

ஆனால் இப்படி விதித்ததை பின்னை நிஷேதிக்கிறது என் என்ன –
அருளிச் செய்கிறார் –

உபாசனம் விதிக்கப்பட்டதே -நிஷேதிப்பது எதற்கு என்னில் -/
நாஸ்திகர் தம பிரசுரரைப் பற்ற விதிக்கப்பட்டு -சாஸ்த்ர விசுவாசம் உடைய ஆஸ்திகரைப் பற்ற
நிஷேதிக்கப் படுகிற பூர்வ விஹித ஹிம்சை யாகிற அபிசார கர்மம் போலே /
அந்நிய சேஷத்வம் அற்ற ஆத்மாக்களை பற்ற -உபாசகர் பெருமாளைக் குறித்து தானே உபாசிக்கிறான் –
ஸ்வா தந்தர்யம் தான் ஒட்டிக் கொண்டு உள்ளது —
ஸூ ஷ்ம ஸ்தூல பாரதந்தர்யம் தியாகம் – முன்பே பார்த்தோம் – நிதித்யாசித்வய என்று விதித்து பரம சாத்விகரை பற்ற
பரித்யஜ்ய என்று நிஷேதிக்கவும் படத் தட்டு இல்லையே
ஒரே வார்த்தை விதிக்கும் நிஷேதிக்கவும் உட்படும் நிலை மாறின பின்பு /

இது தான் -என்கிறது -கீழ் சொன்ன உபாசனத்தை –
பூர்வ விஹித ஹிம்சையாவது -ச யே நே நாபி சரன்  யஜதே -என்று பிரதமத்தில்
விதிக்க பட்ட அபிசார கர்மம் -அது -தம பிரசுரராய் -நாஸ்திகராய் இருப்பாரை பற்ற விதிக்கப்பட்டு
ஆஸ்திகராய் காரீர்யாதி காம்ய கர்மங்களிலே இழிகைக்கு யோக்யரான ரஜ பிரசுரரை பற்ற நிஷேதிக்க படிகிறாப் போலே –
உபாசனமும் -ஸ்வ தந்த்ர அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமாக -பகவத் சேஷத்வத்திலே ஊன்றுவிக்கைக்கு யோக்யரான சத்வ பிரசுரரைப் பற்ற
விதிக்கப் பட்டு- பாரதந்த்ர்ய ஜ்ஞானம் பிறந்து பகவத் ஏக உபாயத்வத்திலே ஊன்றுகைக்கு யோக்யரான
பரம சத்வ நிஷ்டரைப் பற்ற நிஷேதிக்கப் படவும் குறை இல்லை –

—————————————–

சூரணை -131-

அத்தை சாஸ்திர விச்வாசத்துக்காக விதித்தது –
இத்தை ஸ்வரூப விச்வாசத்துக்காக விதித்தது –

இப்படி நிஷேதிக்க படுமவையான இவை தன்னை அடியிலே எதுக்காக விதித்தது
என்ன -அருளிச் செய்கிறார் –

நிஷேதயங்களான இவற்றை எதுக்காக விதித்தது- -கீழே விதித்தது எதற்க்காக யாருக்காக என்றவாறு –
பிரபத்தி அத்யந்த பாரதந்தர்யம் தானே ஸ்வரூபம்
க்ரூர கர்மம் அபிசார கர்மம் சாஸ்த்ர விசுவாசம் ஏற்படுத்த / அஹங்கார கர்ப்பமான உபாசனம் -அந்நிய சேஷம்
தவிர்க்க விதித்தது -அந்யதா ஞானிக்கு – ஸ்வர்க்காதிக்கு பண்ணுகிறான் காம்ய கர்மங்கள் –
ஸ்வரூபம் பகவத் சேஷத்வம் அறிந்து விஸ்வஸித்து சத்தை பெற விதித்தது —
கீழே சாஸ்த்ர விசுவாசம் மட்டும் -தத் ப்ரவர்த்தக -பகவானுக்கு சேஷம் என்று சேனையாகம் காட்டாதே
உபாசனமும் -/இதுவும் தத் யாதாம்யா ஞானம் அத்யந்த பாரதந்தர்யம் காட்டாதே -/அஹங்கார கர்ப்பமாக கொண்டு ஸ்வரூபத்தை அழிக்கும்/
நாஸ்திகன் -சட புத்தி -பிரகாராந்தரம் சாஸ்த்ர விசுவாசம் வந்தவனாயும் –
சத்ரு வத காமனாயும் இருப்பவன் -தமோ குணம் உந்த -/
சாஸ்திரம் பிரமாணம் இல்லை என்பானும் தத் பரிஷார்த்தமாகவும்- சத்ரு வதார்த்தமாகவும் இரண்டு வகை /
அஸ்தி நாஸ்தி -சாஸ்திரம் இல்லை செய்கை யாவது அப்ராமாண்ய புத்தி -உண்மையான ஞானம் கொடுக்கும் கருவி இல்லை என்று இருப்பர் –
பிரத்யக்ஷம் அனுமானம் மட்டும் ஒத்துக் கொண்டு / தத் ஹேதுக பர லோக அபாவ புத்தி யுடையவன் /
சட வக்ர சித்தன் -வாசகம் -/ நாஸ்திகன் தன் மூல பர லோக அபாவ புத்தி யுடையவன்

அதாவது -சட சித்த சாஸ்திர வசதோ பாயோபிசார சுருதி -என்கிறபடியே அபிசார கர்மத்தை விதித்தது
சாஸ்த்ரத்தை இல்லை என்று இருக்கும் நாஸ்திகனுக்கு சாஸ்திர விசுவாசம் பிறக்கைக்காக-உபாசனத்தை விதித்தது
தன்னை ஸ்வ தந்த்ரன் என்றும் அந்ய சேஷ பூதன் என்றும் பிரமித்து போந்த சேதனனுக்கு -அவை இரண்டும் வந்தேறி –
பகவத் சேஷத்வமே நிலை நின்ற வேஷம் என்று தன் ஸ்வரூபத்தில் விசுவாசம் பிறக்கைக்காக என்கை-

———————————————

சூரணை -132-

அது தோல் புரையே போம் –
இது மர்ம ஸ்பர்சி –

இப்படி ஒரோ விச்வாசத்துக்காக விதித்து நிஷேதித்தமை ஒத்து இருந்ததே ஆகிலும் –
இவ் உபாசனத்தை விடாமல் பற்றி நின்றால்-அபிசார கர்மம் போலே க்ரூரம் அன்றே இது என்ன –
அதிலும் காட்டிலும் க்ரூரம் என்கிறார் –

இது உபாசனம் / அது சேனையாதி காம்ய கர்மங்கள் /விரோதிகள் ஒத்து -இருந்தாலும்
அதிலும் இது கொடிது -/ஸ்வரூப விரோதி இது தான் –
அது சரீரத்துக்கு தானே -தப்பவும் முடியும் பின்னாலே /விசிஷ்ட வேஷ விரோதி அபிசார கர்மாக்கள் –
துக்க அனுபவ சாதனமான சில தேகங்களை பரிகரிப்பித்து ஆத்மாவில் தட்டாமல் மேலோட்டமாக போகும்
நிஷ்க்ருஷ்ட வேஷ விரோதியான இது ஸூ யத்ன பிரவ்ருத்தி அஹங்கார சேஷத்வ ஸ்வரூபம் நாசகமாய் ப்ராப்யம் அனுபவம் அளவாக தொடரும் –
ஸ்ரீ வைகுந்தம் போனாலும் -திரு உள்ளத்தில் வாசி இருக்குமே -மர்ம ஸ்பர்சி அன்றோ –
பல விசேஷம் அடியாக அபிசாராதிகள் அநர்த்தம் / இங்கு பலம் மோக்ஷம் ஆகையால் உபாசனம் சிறந்தது என்றால் –
பலத்துடன் நிர்பந்தமாக அநிஷ்ட அனுபந்தி -கட்டி வைக்கும் –
மர்மம் -எங்கு தொட்டால் சரீரீ பிராணன் போகுமோ அதுவே மர்ம ஸ்பர்சி /
ஆத்மா பிராணம் போவது என்பது ஸ்வரூப நாசம் -சேஷத்வம் பாரதந்தர்யத்தை தாக்குமே இது -/
முள் குத்துவது தோலுக்கு மட்டும் – புற்று நோய் உள்ளே உலுக்கும் நோய் போலே இது மகா துக்க ஜனகம் –

பர ஹிம்சா ரூபமான அந்த அபிசார கர்மம் -தேக ஆத்மா அபிமான செயலாய் –
விசிஷ்ட வேஷ விரோதியாய் -அத்தால் வரும் பலமும் -சில துக்க அனுபவ
மாத்ரமாய் கொண்டு மேல் எழ போகையாலே-தோல் புரையே போம் -என்கிறது
அஹங்கார கர்பமான இந்த உபாசனம் -ஆத்மா ஞானம் பிறந்தவன் செயலாய் –
நிஷ்க்ருஷ்ட வேஷ விரோதியாய் பகவத் ஏக பாரதந்த்ர்ய ரூப ஸ்வரூப
நாசகம் ஆகையாலே -மர்ம ஸ்பர்சி -என்கிறது –

———————————————–

சூரணை-133-

இது தான் கர்ம சாத்யம் ஆகையாலே –
துஷ்கரமுமாய் இருக்கும் –

இவ்வளவே அன்று –இது துஷ்கரமும் என்கிறார் –

பண்ணுவதற்கு மிகவும் கடினமாகவும் இருக்குமே -பிரபத்தி கிருபையால் சாதிக்கப்படுவதால் ஸூ கரமாய் இருக்கும்
சூரணை-115-தொடங்கி தோஷங்கள் பட்டியல் –
காய கிலேச கர கர்ம சாத்தியம் -எலி எலும்பன் இவன் ஆகையால் செய்து தலைக் கட்ட ஒண்ணாதே –
ஸ்வரூப விரோதி இது தான் -என்று தொடங்கி -மேலே -பய ஜனகம் -சோக ஜனகம் -அபாயம் -இத்யாதி -முன் அருளிச் செய்து
இறுதியில் இத்தை காட்டி அருளுகிறார் -முகம் கொள்ள அரிதாயும் இருக்கும் –
துஷ்கரமுமாய்–/ மர்ம ஸ்பர்சியாய் / நிஷித்தமுமாய் –ஷூத்ரமுமாய் / அஹங்கார மிஸ்ரமுமாய் /சோக பய ஜனகமுமாய் /அபாயமுமாய் /-
ஸ்வரூப விரோதியான ப்ராப்யாந்தரங்களை–என்று கீழோடே சம்பந்தம் -படியே
ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் என்று விட வேண்டும் –

துஷ்கரமும்-உம்மை தொகை -கீழே சொன்னவைகளை சமுச்சயம் / ஸ்வரூப விருத்தத்வ /அபாயத்வ -நாசகார -விஷலிஷ கரம் /
பய ஜனகத்வம் -120-/ சோக ஜனகத்வம் / அஹங்கார மிஸ்ரத்தா தள்ளத்தக்கது / அவத்யகரம் / பலத்துக்கு வி சத்ருசம் / மர்ம ஸ்பர்சி /
ப்ரஹ்மத்தை அறிய முயன்று அறிய -யஜ்ஜம் தானம் தாபம் செய்து விரதம் இருந்து
யஜ்ஞென தானென தபஸா அனாசகென பிராமணா விவிதி ஷந்தி–ப்ருஹதாரண்யம் -என்றும் –
யஜ்ஜம் ஜ்யோதிஷடஹோமாதிகள் / தானம் சத்பாத்திரத்துக்கு சொத்தை செலவு /தாபம் காய சோஷணம் /
ஆசனம் உண்ணுதல் -சேஷாசனர் சேஷ ஆசன சொல்லுகிறோம் / அநசனம் உபவாசம் –
அவித்யயா ம்ருத்யும்  தீர்த்தவா வித்ய யாம்ருத மச்நுதே-என்றும் –
வித்யா பின்னமான கர்ம யோகம் -செய்து -சம்சாரம் மிருத்யுவை தாண்டி -மோக்ஷ பிராப்தி உபாசனத்தால் அடைகிறான் -என்றபடி –
சர்வ அபேஷாசயஜ்ஜாதி ஸ்ருதே ரச்வவத்-ப்ரஹ்ம ஸூ த்ரம் -3-4-பாதம் -என்றும் –
அனைத்தையும் எதிர்பார்க்கும் அன்றோ யஜ்ஜாதிகள் -அஸ்வத்வத் குதிரையை போலே -என்றபடி /
கடிவாளம் இத்யாதிகள் வேண்டுமே –
அங்கங்கள் பலவற்றையும் அபேக்ஷிக்குமே /
கஷாய பங்க்யதே கர்மாணி ஞாநந்து பரமா கதி -என்றும் –
கஷாய பாபம் ரஜஸ் தமஸ் குணம் -கர்மங்கள் இவற்றை தொலைத்து உபாசனத்தால் மோக்ஷம் என்றபடி
கஷாய கர்மபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –
கர்மங்களால் பாபங்கள் தொலைந்து ஞானம் பிறந்து -என்றபடி
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி –
நராணாம் ஷீண பாபானாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே –
பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் ஒரு வகை / மோக்ஷ விரோதி பாபங்கள் வேற வகை /
உபாசன பலத்தால் இந்த மோக்ஷ பிரதிபந்தகங்கள் தொலையும்
ஆரம்ப விரோதிகளை தொலைக்க கர்ம ஞான யோகம் -சஹஸ்ர சஹஸ்ர ஜென்மங்களில் தபஸ் ஞானம் –
காய சோஷணாதி நியம கர்ம யோகம் குறிக்கும் தபஸ் என்பதால் / ஞானம் ஆத்ம அவலோகநம்-ஞாத்ருத்வ சேஷத்வம் பாரதந்தர்யம் அறிவது –
விசத ஞான விசேஷம் தெளிந்த ஞானம் சமாதி என்றவாறு -/
பர் ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே சமஸ்திதி நிலை பெற்று -பிரியாமல் சேர்ந்து நிலை பெற்று இருத்தல் –
அகில புவன ஜென்ம –ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -சேம பங்காதி லீலே -ஏழாம் வேற்றுமை
எல்லாம் அவன் இடத்தில் சேமுஷி பக்தி ரூப –
பக்தி பழுத்த ஞானம் -முதிர்ந்த நிலை என்றவாறு -/ ஞானான் மோக்ஷம் சாஸ்த்ர வாக்கியம் என்பதால்
யமம் நியமம் ஆசனம் இவற்றால் பெற்ற சமாதி இது அன்றோ -நினைவாலே ஒன்றி இருத்தல் -/
விசேஷ தியானம் / ப்ரீதி யுடன் உள்ள பக்தி / கார்ய காரண விபதேசம் -ஒவ் ஒன்றுமே -யமாதிகள் த்யானம் –
விசதம தியானம் சமாதி ப்ரீதி கலந்த பக்தி -தசா பேதம் -ப்ரஜ்ஜா அவஸ்தை தாய் தோழி மகள் போலே -மனத்தின் பக்குவ நிலை /
கஷ்டமான கர்மம் – -பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –

இப்படி ஸ்வரூப விரோதியாய் இருக்கிற இவ் உபாசனம் தான் –
யஜ்ஞென தானென தபஸா அனாசகென பிராமணா விவிதி ஷந்தி-என்றும் –
அவித்யயா ம்ருத்யும்  தீர்த்தவா வித்ய யாம்ருத மச்நுதே-என்றும் –
சர்வ அபேஷாசயஜ்ஜாதி ஸ்ருதே ரச்வவத் -என்றும் –
கஷாய பங்க்யதே கர்மாணி ஞாநந்து பரமா கதி -என்றும் –
கஷாய கர்மபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே –
ஜன்மாந்திர சகஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி –
நராணாம் ஷீண பாபானாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே –
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே -காய கிலேசகரமான கர்ம அனுஷ்டானத்தாலே
சாதிக்கபடும் அது ஆகையாலே -அசக்தனான இவனால் செய்து தலைக் கட்ட அரிதாய்
இருக்கும் என்கை –

ஆக -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் -115–என்று தொடங்கி -இவ்வளவாக
உபாயாந்தர தோஷம் விஸ்தரேண பிரதி பாதிக்கப் பட்டது –

————————————————–

சூர்ணிகை – 134–

பிரபத்தி உபாயத்துக்கு இக்குற்றங்கள் ஒன்றுமே இல்லை

இப்படி பிரபகாந்தரத்துக்கு அநேகம் குற்றங்களை ப்ரதிபாதித்தீர் –
பிரபத்தி உபாயத்துக்கு ஒரு குற்றமும் தான் இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

பிரசங்கிகமாக பிரபத்திக்கு உள்ள ப்ரபாவங்களை அருளிச் செய்கிறார் இது முதல் மேல் எட்டு சூரணைகளால்–
ஞான விசேஷம் -பிரார்த்தனா -மதி சரணாகதி –மஹா விசுவாச பூர்வகம் –
ஞான விசேஷமாய்க் கொண்டு – தத் வியதிரிக்த-பகவானைக் காட்டிலும் வேறு பட்ட – உபாயமான -/
ப்ரபதவ்யன் அவன் -பிரபத்தி செயல் -ப்ரபன்னன் இவன் /
கீழ் வந்த அனைத்து குற்றங்களும் வேறு பட்டத்துக்கு வாராதோ என்னில் –பிரபத்தி என்பது சர்வேஸ்வரன் /
நியாசம் சொல்லே ப்ரஹ்மத்தை குறிக்கும் செயலையும் குறிக்கும் /
விஷ்ணு பதம் வைகுண்டம் -ஸ்தான விசேஷம் இல்லை என்பர் சிலர் -/
திருவடியைக் குறிக்குமா ஸ்தானத்தை குறிக்குமா விசாரம் இரண்டையும் குறிக்கும் -/
இக்குற்றங்கள் -இதுவரை அருளிச் செய்தவை இல்லை -/ தானே உபாயம் என்று ஏற்றி வைக்கும் குற்றம் உண்டே /இதனால் -20-குறைகளும் வரும் -/
பிரபத்தி உபாயத்துக்கு -பகவானை உபாயமாக கொண்ட பிரபத்தி என்றபடி –
அவனே உபாயம் என்ற விசுவாசமே உறுதியே பிரபத்தி -/
பிரபத்தியுபாயம் என்றால் உபாயமான பெருமாளை உபாய விஷயமாகக் கொண்ட நம்பிக்கை –
திருவடிகளை உபாயமாக உறுதி கொள்ளுவதே-பிரபத்தி –கீழ் சொன்ன அபாயம் முதல் துஷ்கரம் வரை சொன்னவை இல்லை
வரணம்-அடியேன் வரித்தேன் -பெருமாள் அடியேனை ஏற்றுக் கொண்டார் என்று சொல்லாமல் –
பிரியதமனை தானே வரிக்கிறார் சுருதி உண்டே –
ஸூ கதமாய் நின்று ஸ்வரூப யாதாம்யாம் பாரதந்தர்யத்துக்கு கொத்தை வருமே –
சர்வேஸ்வரன் மட்டுமே உபாயம் -பிரபத்தி உபாயம் இல்லையே -மேலோட்டமாக பார்க்க தன்னை மோக்ஷ உபாயம் என்று
எண்ணுவதற்கு காரணமாக பிரபத்தி இருப்பதால் அந்த தோஷம் உண்டே –
பகவத் விஷயகத்தவ ஞான விசேஷம் -பக்தி போலே இதுவும் ஞான விசேஷம் /
விசேஷித்து நிஷேதித்தால் வேறே குற்றம் இருக்கு என்பது ஸூ சித்தம்
பிரபத்தி ஸ்த்ரீ லிங்கம் -உபாய வரண ரூபை இது / உபாயதா வாதம் நியதி அன்வய வியதிரேக பரம்
பிரபத்தி செய்து மோக்ஷம் நியதம் / பிரபத்தியால் மோக்ஷம் இல்லை வியதிரேகம் /
பகவானை தவிர வேறு உபாயம் ஆக மாட்டார் என்ற உறுதியே பிரபத்தி -/
காம்பற தலை சிறைத்து-பிரபத்தியை தள்ளி ஈஸ்வரனே என்ற தெளிவு /
உபாயத்வ பிரமம் பிரதிபத்தி -நியாய சித்தாஞ்சனம் -வாதம் செய்து சாஸ்திரம் சொன்னது -கவி தார்க்கிக ஸிம்ஹம்-கேசரி -/
தத்வ முக்தா கலாபம் /
இயம்-கேவல லஷ்மீ ச சோபாயத்வ -பிரத்யாத்மீக பறை சாற்றும் -அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை –
ஸூ வ ஹேதுத்வ புத்தியை வெட்டும் –
கிம் புன சஹகாரிணாம்-பக்தாதிகளை உபாயம் ஆகாது என்று சொல்ல வேண்டுமோ
ஸ்வஸ்மின் உபாய புத்திக்கு தானே நிவாரகமாய் இருக்கும் /
நியாஸ தசகத்தில் – ஆர்த்தேஷூ ஆசு பல -ஆர்த்தனுக்கு உடனே பலம் -மரணமாக்கி வைகுந்தம் /
தத் அந்நிய விஷயேபி-தேக அவசனத்தில் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் /–
ஸ்ரீ ரெங்கேஸ்வர/ பாரதந்த்ரத்துக்கு உசிதம் பிரபத்தி
நியாஸ திலகம் ஸ்ரீ வரதராஜர் மேல் / நியாஸ விம்சதி ஆச்சார்யர்கள் மேல் /
ஆபாத ப்ரதீதியில் வரும் குற்றங்கள் -நினைத்தால் -பக்திக்கு வரும் குற்றங்கள் வரும்
1- சேஷத்வ -ஸ்வரூப விரோதம்
2–அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூப விரோதம் வரும்
3–ஸ்வ அபிமத ஸ்வார்த்த அனுபவ கைங்கர்யம் தான் -கொடுக்கும்
4-அசலாக ஆக்குமே –
5–விஷலிஷ ஜனகம்
6–பிணம் எழுந்து கடிக்குமா போலே பய ஜனகம் -வர்த்ததே மகா பயம் -ஆணாக பிராமண புருஷன் சிக்கிக் கொள்வான்
7–மா ஸூ ச ஸ்ரவண மாத்ரத்தால் நடுங்க பண்ணும்
8–ஸ்வரூப யாதாத்மா ஞானம் -பிராயச்சித்தம் கொண்டு கழித்து கொள்ளும் படி இருக்கும்
9–அஹங்கார கர்ப்பமாய்
10–பல விசத்ருசமாய் இருக்கும்
11–வியாஜமாகியும் இருக்காதே சொத்தே நம்மது இல்லை
12–அஞ்ஞானத்தால் செய்ததாக இருக்கும்
13—பகவத் அபஹாரம்
14–அவத்யகரம் பர்த்தா பார்யை குற்றம் போலே
15–பரஹிம்ஸை ருசி அநுகுணமாக
16–ஸ்வயம் கார்யகரம்
17–விதித்தது அன்யார்த்தமாகும் -பர ஹிம்சை நிவர்த்திக்க / பக்தியை விலக்க இது என்றபடி -சேனையாகம் சமானம் ஆகுமே /
உபாய பிரபத்தி -பல பிரபத்தி-ஆச்சார பிரபத்தி -ஆச்சார்ய அபிமானம் கடைசியில்
18–துஷ்கரத்வ தோஷமும் –மானச துஷ் கரம் / பக்தி காய்க்க துஷ் கரம்

இக்குற்றங்கள் என்று ஸ்வரூப விரோதம் முதலாக துஷ்கரத்வ பர்யந்தமாகச் சொன்னவை எல்லாவற்றையும் பராமர்சிக்கிறது
ஒன்றுமே இல்லை என்றது -ஒரு தோஷமும் இதன் பக்கலில் இல்லை என்றபடி
இக்குற்றங்கள் ஒன்றுமே இல்லை என்கையாலே மற்ற ஒரு குற்றம் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது-
அதாவது -வஸ்து த உபாயத்வம் தனக்கு இன்றிக்கே இருக்கச் செய்தே ஆபாத ப்ரதீதியிலே உபாய பிரதிபத்ய அர்ஹமாம் படி இருக்கை –

—————————————-

சூர்ணிகை —135-

ஆத்ம யாதாம்ய ஞான கார்யம் ஆகையாலே
ஸ்வரூபத்துக்கு உசிதமாய்
சிற்ற வேண்டா என்கிறபடியே -நிவ்ருத்தி சாத்யமாகையாலே
ஸூ கரமுமாயும் இருக்கும்

இக்குற்றங்கள் இதுக்கு இல்லை என்னுமத்தை பிரகாசிப்பைக்காக இதனுடைய-1- ஸ்வரூப உசித -2-ஸூ கரத்வங்களை
அருளிச் செய்கிறார் –

ஏற்புடையதாகவும் எளியதாகவும் இருக்கும் / பாரதந்தர்யம் உணர்ந்து -ஸூ யத்ன நிவ்ருத்தி ரூபம் -/
அத்யந்த பரதந்த்ரன் -யாதாம்யா ஞானம் /
ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி தானே ஈஸ்வர ப்ரவ்ருத்தி -பிரபத்தி /
ஆயாசம் வேண்டாமே -காய கிலேசம் வேண்டாமே -முகம் கொள்ளும் படி ஸூ கரமாய் இருக்கும் –
அபாயம் -நாசகரம்- விஸ்லேஷம் -அநபாயினி / அத்யந்த அபிமதம் இருக்குமே பாரதந்த்ர பிரபன்னன் இடம் /
அதிருஷ்ட த்வார சாதனம் இல்லை -அத்யந்த அபிமத ஜனகமாய் இருக்கும் / இது பெருமாளை பெற்றுக் கொடுக்கும் சொல்லாமல்
அவன் அன்பைப் பெற்றுக் கொடுக்கும் -வளர்த்துக் கொடுக்கும் /
ஆத்ம சப்தம் ஸ்வ பாவ வாசி தன்மையைப் பற்றிய உண்மையான அறிவு -யாதாத்ம்யம் -/ நம-அநாதி வாசனாதீன-மித்யா ஞான நிபந்தன –
ஆத்மா ஆத்மீய பதார்த்தங்களில் -யா ஸ்வா தந்தர்ய மதி -எனக்கு இல்லை /ஆத்மா விஷயத்தில் ஸ்வா தந்தர்ய நிவர்த்தகம் சொல்லிற்று –
அது த்வேக உபாயத்வ புத்திக்கு வியதிரிக்த சாதன பிரவ்ருத்திக்கு யோக்யதையே இல்லை /
கிருபா ஜனகம் இல்லை -கிருபா ஜன்யம் தானே பிரபத்தி -/
அனுபாயம் -அத்யந்த அபிமதமாயும் இருக்கும் -/ ஸக்ருத் ஸ்ம்ருதி ஒரு முறை சிந்திப்பே அமையுமே –ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தியும் -/
பிரார்த்தனா பர்யவசாயா த்வேமேய உபாயம் விசுவாச பூர்வக -மூன்றும் இதுக்கும் உண்டு /விசிஷ்ட ஸ்வரூபம் விசேஷண அதீனம் —
நெய் சாப்பிட்டு முழு ஆயுசு -கார்ய காரண பாவம் /ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி கார்யம் -காரணம் மோக்ஷம் இல்லை /
நிர்ஹேதுகம் அன்றோ அவன் -/
மணம் புஷபத்துக்கு காரணம் இல்லையே -பிரயோஜ்ய பிரயோஜக பாவம் -அதே போலே இங்கும் /
ஸ்வரூப விரோதி பரமான குற்றங்கள் -அபாயத்வம் பய ஜனகம் -சோக ஜனகம் -அஹங்கார மிஸ்ரம்-
அவத்யகரம் இவைகள் எல்லாம் தானே –
பகவத் அத்யந்த அபிமத சம்சர்க்க-அபாவம் ப்ரயோஜகம் ரூபமான ஸ்வரூப விரோதித்வம் —
பல வி சத்ருசம் என்றால் -பல சாதனத்தவ ஸஹித உபாய -பல சத்ருச அபாவத்வம் -இரண்டும் சேர்ந்து இருக்க கூடாது /
ஈஸ்வரன் ஒருவன் தானே சத்ருச சாதனம் /
பிரபத்தி அத்யந்த அபிமதம் பெற்று கொடுக்கும் -தாய் அன்பு போலே -ஈஸ்வர கிருபை சாஷாத் உபாயம் -அத்தை கிளப்பி விடும் –
அபூர்வ ஸ்தானீய மோஷார்த்த உபாயம் இல்லை -இந்த அத்யந்த அபிமத ஜனகம் கிளப்பும் பிரபத்தி /
நித்ய முக்தர்களுக்கு ஸ்வயம் பிரயோஜனம் இது போலே -ப்ரீதி விசேஷ ஹேதுத்வ ரூபம் இவர்கள் பிரவ்ருத்தி /
சித்த உபாயமே பல சாதனம் -அதிருஷ்ட த்வாரா -பகவத் பிரசாத ரூப –உபாய பிரார்த்தனை ரூபதயா அனுபாயமாய் -பலத்துடன் அந்வயிக்கும் —
அர்ஹதா ரூபமாய் -தகுதி கொடுக்கும் -பலத்தை ரசிக்க யோக்யதை கொடுக்கும் என்றபடி –
அத்யந்த பாரதந்தர்யம் –யோக்யதை இல்லாமல் -அதிருஷ்ட துவார -சாதனம் பிரவ்ருத்திகள் –புண்யம் த்வாரா காம்ய யாகம்- முதல் நிலை –
ஈஸ்வர ப்ரீதி துவாரம் கர்மாதி யோகம் -ரிஷிகள் நிலை /
ஆழ்வார்கள் அனர்ஹத்வம்-/அடியேன் தேவரீர் அனுக்ரஹத்துக்கு பார்த்தமாக -கைங்கர்ய பிர வ்ருத்திகளில் தான் அர்ஹத்வம் /
அவனே உபாயம் -ஸூ அபேக்ஷித பிரதம் – பிரபத்தி –அத்யந்த அபிமத -அவனே உபாயம் என்னும் பிரபத்தி -/ ஸ்வரூபத்துக்கு உசிதம் -/

இப்பிரபத்தி -ஆத்ம யதான்ய ஞான கார்யமாகை யாவது –
திருமந்திரத்தில் மத்யம பதத்தில் சொல்லுகிறபடியே ஆத்மாவினுடைய யதாவஸ்தித வேஷமான
பகவத் அத்யந்த பாரதந்தர்யத்தை யுணருகையாலே வந்ததாய் இருக்கை –
ஸ்வரூபத்துக்கு உசிதமாகையாவது –
அந்த பாரதந்தர்யமாகிறது ஸ்வரூபத்துக்கு அனு ரூபமாய் இருக்கை –
சிற்ற வேண்டா -என்கிறது -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா என்கை
அதாவது ஒரு வியாபாரமும் பண்ண வேண்டாம் என்றபடி
நிவ்ருத்தி சாத்யமாகையாலே ஸூ கரமுமாய் இருக்கும் -என்றது
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்கிறபடியே
ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியாலே சாதிக்கப்படுமாதாகையாலே எளிதாகச் செய்யலுமாய் இருக்கும் என்கை –

இவை இரண்டையும் சொல்லவே -கீழ்ச் சொன்ன தோஷங்கள் ஒன்றுமே இதுக்கு இல்லை என்னும் இடம் சித்தித்தபடி என் என்னில்
1-அபாயத்வ -2- பய ஜகநத்வ 3–சோக ஜனத்வ 4–அஹங்கார மிஸ்ரதயா 5-நிஷித்தத்வ 6–அவத்ய கரங்கள்
ஸ்வரூப விரோதத்தைப் பற்றி வருகிறவை யாகையாலும் பல விசத்ருசம்
இது பல சாதனம் அன்றிக்கே சித்த உபாயமே பல சாதகமாய் -இது தத் வரண மாத்ரமாய் –
அதிகாரி விசேஷணமாய் இருப்பது ஓன்று ஆகையால்
இதில் பக்கல் வருகைக்கு அவகாசம் இல்லாமையாலும் இவ்வாறு தோஷமும் இதுக்கு இல்லாமை –
ஸ்வரூபத்துக்கு உசிதம் -என்றதிலே சித்தமாம் இ றே
கர்ம ஸாத்ய தயா வரும் துஷ்கரத்வம் இல்லை என்னும் இடம் -நிவ்ருத்தி சாத்தியம் ஆகையால் ஸூ கரம் -என்றதிலே ஸூ ஸ்பஷ்டம் இ றே
ஆகையால் ஸ்வரூப ஓவ்சித்திய ஸூ கரத்வங்கள் ஆகிய இவை இரண்டும் இதுக்கு உண்டு என்னவே
கீழ்ச் சொன்ன தோஷங்கள் ஒன்றுமே இதுக்கு இல்லை என்னும் இடம் ப்ரகாசமாய்த்து –

———————————————-

சூர்ணிகை –136-

பூர்ண விஷயமாகையாலே பெருமைக்கு ஈடாகப் பச்சை விட ஒண்ணாது –

இப்படி உபாயம் அவன் என்று அத்யவசித்து – ஸ்வ ப்ரவ்ருத்தியில் -நிவ்ருத்தனாய் இருந்து விட அமையுமோ –
தத் சந்தோஷ அர்த்தமாக இவன் சில பச்சை விட வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார் –

இவ்வளவு அல்லது அவனுக்கு செய்யலாவது இல்லையே -ஸூ ப்ராப்ய பூதன் அவாப்த ஸமஸ்த காமன் -/ பரி பூர்ண விஷயம் –
அபரிச்சின்னமான அவன் பெருமைக்கு ஈடாக -திருப்தி அடையும் படி -அபரி பூர்ணன் ஷூத்ரன் வருந்தியும் விட ஒண்ணாதே –
இயலாது என்றும் தேவை இல்லை என்றும் -/ தத் வைபவ அனுரூப ப்ரீதி ஜனக கிஞ்சித்காரம் துஸ் சகம் /
ஸ்வ ஹேதுக -ஸ்வ பிரசாத் த்வாரா ஸ்வயமேவ உபாயம் -மோஷார்த்த கிருபையை பெற்றுக் கொடுக்க ஒன்றுமே வேண்டாம் /
ஸ்வரூப வர்த்தகத்துக்கு கைங்கர்யம் வேண்டும் –
திருப்தி அடைய தேவையே இல்லையே அவனுக்கு –திருப்தனானாய் தானே இருக்கிறார் /பெருமைக்கு தகுந்த படி பச்சை இடப போகாது என்றது
இவனுக்கு தேவையும் இல்லை -ஆசையும் இல்லை -ஆகையால் இயலாது தேவை இல்லை கொடுக்கக் கூடாது -என்றபடி /
யதா வஸ்தித வஸ்து நிச்சயம் -ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி -இருவரையும் புரிந்து கொண்டு அதனால்– கிஞ்சித்க்கார ரூபம் இல்லாமையால் /

அதாவது லோகத்தில் -பச்சை இடுவார் அவ்வோ விஷயங்களின் தரத்துக்கு ஈடாக இ றே இடுவது –
இங்கும் பச்சை இடப் பார்க்கில் அப்படி இட வேணும் இறே
அவன் அவாப்த ஸமஸ்த காம தயா பரிபூர்ணனாய் இருக்குமவன் ஆகையால்
அவனுடைய வைபவத்துக்கு அனு குணமாக இவனால் ஒரு பச்சை இடப் போகாது என்கை –

———————————————

சூர்ணிகை –137-

ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்திலே ஸந்தோஷம் விளையும் –

ஆனால் அவனுக்கு இவன் அளவில் ஸந்தோஷம் விளையும் படி என் -என்ன அருளிச் செய்கிறார் –

ஸந்தோஷம்-அத்யந்த அபிமதம்–/ அநாதிகாலமே பிடித்து விமுகனாய் போந்த இவனுடைய ஆபி முக்கியத்தை ஸூசிப்புக்குமதான –
வைமுக்ய அபிசந்த விராம சிந்தனை மாத்திரம் —ஸ்ரீ கூரத் தாழ்வான ஸ்ரீ ஸூ க்தி/
பாபங்களில் இருந்து ஒய்வு எடுக்க நினைத்தாலே போதுமே /
இதனால் அவன் கவலை நீங்கி சந்தோஷிக்கிறானே -இதுக்கு மேலே வேறே ஒன்றுமே வேண்டாமே என்று
அவன் திரு உள்ளம் -அனவரத அபரிமித ஸந்தோஷம் பல பர்யந்தமாக விளையும் —
சர்வ தர்மான் பரித்யஜ்யம் பண்ணினேன் என்று காட்டினால் அவன் திரு உள்ளம் உகக்குமே
உபாயாந்தரங்களை பார்த்து பகவான் உபாயம் என்று பற்றாமல் -உபாயாந்தர சம்பந்தம் இல்லை -என்கிற
உபாயாந்தர விராக மாத்திரமே வேண்டியது -என்றவாறு

அதாவது அநாதிகாலம் யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு தன் பக்கல் விமுகனாய்ப் போந்தவன்
அந்நினைவு குலைந்து தன் பக்கல் அபிமுகன் ஆனமைக்கு ஸூ சகமானதொரு வியாபாரம் பெற்ற அளவிலே
இத்தனை காலம் விமுகனாய்ப் போந்தவன் இன்று அபிமுகனாகப் பெறுவதே -என்று அவன் திரு உள்ளம் மிக உகக்கும் -என்றபடி –

——————————————————-

சூர்ணிகை –138-

பூர்த்தி கை வாங்காதே மேல் விழுகைக்கு ஹேது வித்தனை

அவன் அப்படி இருந்தாலும் அவன் பூர்த்தியானது அகிஞ்சனரான நம்மால் அவனை யுகப்பித்து அணுகப் போகாது என்று
இவன் கை வாங்கும் படி பண்ணாது என்ன அருளிச் செய்கிறார் –

அவன் பூர்ணன் என்று நீ கை வாங்காமல் என்றபடி -/ இவனுக்கு ஜனகனான அவன் பூர்த்தி -அந்நியன் என்று கை வாங்காதே
நம்மது என்றோ நம் ஜனகனான இவன் பூர்த்தி -என்று கழித்து மேல் விழுகைக்கு ஹேதுவாகுமே /தேங்கி பிற்கால இடுகைக்கு ஹேது அன்று –
இருவரும் ஒருவரை ஒருவர் மேல் விழ ஹேதுவாகுமே –

அதாவது -அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வம்
ஆஸ்ரயண உன்முகனான இவன்
நம்மால் அவனை ஒருபடியாலும் சந்தோஷிப்பிக்கப் போகாது என்று தத் ஆஸ்ரயணத்தின் நின்றும் மீளுகை அன்றிக்கே
நாம் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாத பரிபூர்ணன் ஆகையால் நம் பக்கல் பெற்றது கொண்டு
சந்தோஷிக்கும் என்று அபி நிவேசித்துப் பற்றுகைக்கு உடலாம் இத்தனை -என்கை –
அன்றிக்கே – (நம் நினைவு இது வரை மேல் அவன் திரு உள்ளம் )
அவன் பூர்த்தி அவனை இப்படி சந்தோஷிக்க ஒட்டுமோ-உபேக்ஷித்துக கை வாங்கப் பண்ண ஒண்ணாதோ என்ன
பூர்த்தி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-
அதாவது அவனுடைய பூர்த்தியானது
இவன் பச்சை இட்டிலன் என்று அநாதரித்து அங்கீ காரத்தின் நின்றும் கை வாங்காதே ஆபி முக்கிய ஸூ சக மாத்ரத்துக்கு மேற்பட்ட
நமக்கு இவன் சில செய்ய வேண்டுவது உண்டோ என்று விரும்பிக் கைக் கொள்ளுகைக்கு உடலாம் இத்தனை என்கை

—————————————————

சூர்ணிகை–139—

பத்ரம் புஷ்பம் / அந்யாத் பூர்ணாத்/ புரிவதுவும் புகை பூவே –

இப்படி அவன் அல்ப ஸந்துஷ்டன் என்னும் அதுக்கு பிரமாணம் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –

அல்பம் இட்டது கொண்டு சந்தோஷம் -பிரமாணங்கள் -இவை /
பக்தி யுடன் இடப்பட்டதே- -அஹம் உண்ணுகிறேன் – அஹம் ஆன படியால் -என்று தோற்ற -/
பக்தி பாரவசயத்தாலே அடைவு கெட கொடுக்குமா போலே சினேக பாரவசயத்தாலே அடைவு கெட ஸ்வீ கரிப்பேன் -என்கிறான் –
தனக்கு என்று வெட்டி வேர் வைத்த கும்பத்தை காட்டினாலே போதும் -/ நன்னீர் தூவி புரிவதும் புகை பூவே -அநந்ய பிரயோஜனராய்
பக்தி பரவசப்பட்டு பிரயோஜனாந்தர ஸ்பர்சம் இல்லாமல் -அக்ரமமாக -இறைத்து -போர பொலிய கொடுப்பதும் -ஏதேனும் ஒரு புகை –
செருகை இட்டு பொசுக்கவுமாம்-பாவ சுத்தி காணும் அளவே -பதார்த்த வைலக்ஷண்யம் பாரான் /
பத்ரம் இத்யாதி தனித்தனி இரண்டாம் வேற்றுமை -உருபு -நான்கும் வேண்டாம் -ஏதேனும் ஒன்றே அமையும் -என்றபடி
துல்ய விகல்பம் இல்லை விகஸ்தித விகல்பம் -/எங்கும் பஹு வசனம் இல்லாமல் ஏக வசனம் -ஏதேனும் ஒன்றை ஒன்றையே கொண்டால் போதும் –
இப்படி அவன் அல்ப ஸந்துஷ்டன் என்னும் அதுக்கு பிரமாணம் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –
ப்ரயதாத்மன-ஆத்ம சப்தம் -மனசை சொல்லும் -அவனுடைய அப்படிப்பட்ட பக்தியுடன் தரப்பட்ட அத்தை —
இவ்வளவு சின்னதாய் வாங்க -அஹம் -அவாப்த ஸமஸ்த காமன் –
இலை தீர்த்தம் தானே முதலில் -தோயம் கடைசியில்-உள்ளதே அப்புறம் மாலை சமர்ப்பித்து –
பழம் கொடுத்து வெத்தலை -வரிசை கெட்டு பரவசம் /
சாமான்ய சாஸ்திரம் அதிதி போலே செய்தால் போதும் விசேஷ ஏற்றம் ஒன்றுமே வேண்டாமே இவனுக்கு /
அந்யத் இது தவிர வேறு ஒன்றையும் இச்சியான் –
என்று அறியாயோ -பிரசித்தம் அன்றோ -/முடியுமானால் –இடப்பட்ட த்ரவ்யத்துக்கு இல்ல -உள்ளத் தூய்மைக்கு- பக்தி உபஹ்ருதத்துக்கு —
புரிவதில் ஈசன் துக்கம் இல்லா- ஹேய ப்ரத்ய நீகன்-படி /அனுபவத்தில் விஸ்திருதராய் –பிரிவகை இன்றி -பச்சை இடப போமோ என்று அகலாமல் —
நன்னீர் -சம்ஸ்காரம் பண்ணாமல் -ஏலக்காய் இத்யாதிகள் வேண்டாம் -/ புரிவதுவும் -அருள் கொடையாகக் கொடுப்பது /சமர்ப்பிப்பது –
இவனுக்கு அருளால் என்று அவன் திரு உள்ளம் -அல்பத்தில் இஷ்டம் -அதிகம் கொடுத்தால் பிடிக்காது -என்றவாறு /
பக்த்யா பிரயச்சத்தி ததஹம் பக்த் யுப ஹ்ருத் மஸ்நாமி –பக்தியால் கலங்கி இட்டது போலே-ஆஸ்ரித வாத்சல்யத்தாலே –
ப்ரேமத்தால் கலங்கி கொண்டேன் என்றவாறு
பத்ரம் -உண்ணுவது துளசி என்று கொள்ளலாமோ என்னில் -எத்தை இட்டாலும் என்பதற்கு பொருந்தாதே -துளசி கேசவ பிரியா ஆகுமே –
அது அதுக்கு தகுந்தால் போலே -விநியோகம் கொள்ளுவதையே அஸ்னாமி என்கிறான் /
தானே -பாகவத புராணத்திலும் ஸ்ரீ கீதையிலும் உண்டே ஆதலால் தானே அருளிச் செய்தான் என்கிறார் /
ஏற்கனவே நிறைக்கப்பட்ட தண்ணீர் போதும் -இவனுக்காக வேண்டாம் -தான் குடிக்க குளிர வைத்த தண்ணீரே போதுமே /
கால் அலம்ப அதிதிக்கு எடுத்த வைத்தது போதும் / பூர்ண கும்பம் வாசலில் வைப்பர் /
அதிதிக்காக கொடுத்த தண்ணீர் கொடுக்காதது -இன்னொருக்காக எடுத்து வைத்த நல்லதும் வேண்டாம் –
தனியான ஸத்காரம் எனக்கு வேண்டாம் / அதிதியை விஷ்ணு போலவே பூஜிப்பாய் என்றும் உண்டே –
விஷ்ணுவே வந்தாலும் அதிதி போலே பூஜிக்கலாமே –
அந்யத் பூர்ணாதாபாம் கும்பா தந்யத் ஜனார்த்தன-நதே இச்சதி
அந்யத் பாதாவ நேஜனாத் அந்யத் ஜனார்த்தன-நதே இச்சதி
அந்யத் குசல சம்ப்ரஸ்நாந் ஜனார்த்தன-நதே இச்சதி
விகல்பத்தில் சொல்லப்பட்ட நாநா த்ரவ்யங்கள் அபேஷா விரஹம் இல்லை /
ஜல பரிமாண கௌரவ ஆபேஷை -கும்பத்தில் பூர்ண தீர்த்தம் தேவை இட்டார்
அத்தை அடுத்த பாதத்தில் கழித்து -இதில் சொன்ன காயிக வியாபாரமும் வேண்டாம் வாயாலே விசாரித்தால் போதும் -என்று காட்ட /
உத்தர உத்தர அபேஷா லாகவும் சொல்லிற்று -இவ்வளவுகளை ஒழிய –மேலே மேலே மறுத்து சொல்லி -ஏதோ ஓன்று வேணும் என்று
பெரிதாக அபேக்ஷை இருக்குமோ என்ற சங்கை தீர்க்க —
வேறு ஒன்றையும் ஜனார்த்தனன் எதிர்பார்க்க மாட்டான் என்பதை நதே இச்சேத்-என்று அருளிச் செய்கிறார் –
ஸூ ஸ்பஷ்டம்-புரிவதில் ஈசனை / ஸ்பஷ்டம்-அந்யத் பூர்ணாத் /அஸ்பஷ்டம் பத்ரம்
மேலே மேலே மறுக்கும் படி-எது வேணும் தெளிவு இல்லை / சாமான்ய பத்ரம் வாக்கியம் ஸ்பஷ்டம் -இன்னும் சங்கை ஒட்டிக் கொண்டு இருக்கும்
உபகரண வைகல்ய பிரதிஷ்டவ்ய பிரிவகை இன்றி -வாக்கியம் இங்கு தானே -எழுவார் விடை கொள்வார் –பிரியா
நன்னீர் தூய -குண த்ரவ்ய நிரபேஷ்யம் –நன்மையை பிரிவகை இன்றி உடன் சேர்த்து வியாக்யானம் /உயர்ந்ததாக இங்கே தானே தெளிவு /
அருள் கொடை கொடுப்பதே அபிஷாந்தி ஸூ சகம் -புரிவது -இங்கு தானே / பக்தி உபஹ்ருதம் -அருளை பெறுவதற்காக அங்கு /
இங்கே சேதனன் அருளால் தான் பெற்றது என்ற திரு உள்ளம் தெளிவு

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி ததஹம் பக்த் யுப ஹ்ருத் மஸ்நாமி ப்ரயதாத்மன-ஸ்ரீ கீதை -9–26–என்று
பத்ரத்தை யாகவுமாம்-புஷ்ப்பத்தை ஆகவுமாம் -பலத்தை ஆகவுமாம் -ஜலத்தை ஆகவுமாம் -யாவன் ஒருவன் பக்தியால் தருகிறான் –
அநந்ய ப்ரயோஜனதை யாகிற சுத்தியோடு கூடின மனசை யுடையனான அப்படிப்பட்ட பக்தியோடு தரப்பட்ட அத்தை –
அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கிற நான் -அவன் ப்ரேமத்தாலே கலங்கித் தருமாப் போலே
வியாமோஹத்தாலே கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுவன் என்று தானே அருளிச் செய்தான் இறே

அந்யத் பூர்ணாதாபாம் கும்பா தந்யத் பாதாவ நேஜனாத் அந்யத் குசல சம்ப்ரஸ்நாந் நதே இச்சதி ஜனார்த்தன-உத்யோக பர்வம் -என்று
ஸ்ரீ தூது எழுந்து அருளுகிற போது த்ருதராஷ்ட்ரன் -பாண்டவ பக்ஷபாதியாய் இருக்கிற கிருஷ்ணன் வாரா நின்றான் –
அவனுக்கு சில நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து நமக்கு ஆக்கிக் கொள்ளுகிறோம் -என்றால் போலே சிலவற்றைச் சொல்ல
நினைவும் சொல்லும் ஒத்து இராத அவன் கருத்தை அறிந்த சஞ்சயன் -வருகிறவன் அங்கண் ஒத்தவன் அல்ல காண்-
அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்றான்
அதாவது -தான் குடிக்கும் தண்ணீரை ஒரு குடத்தில் நிறைத்துக் குளிர வைக்கக் கடவனே-
அத்தை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும் -அதுக்கும் மேல் ஒன்றுமே வேண்டா
தன் க்ருஹத்திலே அதிதி வந்து புகுந்தால் காலைக் கழுவதுவதாக சாமான்ய சாஸ்திரம் வித்தித்து வைத்தது இறே
அவ்வோபாதி அவன் திருவடிகளை விளக்க அமையும் -அவனான வாசிக்கு விசேஷித்து ஒன்றுமே செய்ய வேண்டா
நெடும் தூரம் வந்தவனை குசல ப்ரச்னம் பண்ணக் கடவது இறே –
அவ்வோபாதி ஓர் இன் சொல் சொல்ல அமையும் -ஏற்றமாக ஒன்றுமே வேண்டா
இவ்வளவுகளை ஒழிய மாற்று ஒன்றை இச்சியான் காண் அவன் என்கை
இத்தால் நீ கொடுக்க நினைக்கிற நாட்டையும் பொன்னையும் ஒரு சரக்காக நினைத்து இருக்குமோ
வல்லையாகில் உன் ஆபி முக்கிய ஸூ சகமாக இவ்வளவுகளைச் செய்யப் பார் -என்றபடி –

புரிவதில் யீசனையென்று தொடங்கி -புரிவதுவும் புகை பூவே -1-61-என்று ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை
சம்சாரன் முக்தராய் அனுபவித்து
அவ்வனுபவ ஜனித்த ப்ரீதியாலே -ஏதத் சாம காயன் நாஸ்தே என்கிறபடியே பாடி விஸ்திருதராகையைப் பெற வேண்டி இருப்பீர்
உபகரணங்களில் குறைவு பார்த்து அகலுகை தவிர்த்து அசம்ஸ்க்ருதமான ஜலத்தை ஏதேனும் ஒரு படி பிரயோகித்து
பின்னை அவனுக்கு அருள் கொடையாகக் கொடுப்பதுவும்
ஏதேனும் ஒரு புடையும் ஏதேனும் ஒரு பூவும் இவ்வளவும் அமையும் கிடி கோள் அவனுக்கு என்று
அவனுடைய ஸ்வ ஆராதயையை ஸூ ஸ்பஷ்டமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

—————————————

சூர்ணிகை –140-

புல்லைக் காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –

பூர்ண விஷயம்–136- என்று தொடங்கி இவ்வளவும் ப்ரசக்த அனு பிரசக்தமாக வந்த இத்தனை இறே –
பிரபத்தி வை லக்ஷண்யம் இறே கீழே சொல்லப்பட்டது
ஆகையால் அதுக்கு இன்னம் ஒரு வை லக்ஷண்யம் சொல்லுகைக்காக சித்த உபாயத்துக்கும் பலத்துக்கும் உண்டான
ஐக்கியத்தை முந்துற அருளிச் செய்கிறார் –

இப்படி இவன் சில செய்வதும் அத்தால் ஸ்வரூபம் அந்தரர் தம் கைங்கர்யம் என்றால் பல சாதனம் எது என்ன
பலமான பகவானே சாதனம் வேறு இல்லை –
அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் -உபாதானம் தவிர வேறே நிமித்தம் தேட வேண்டாமே /
ஒன்றாகவே இருந்தது சத்தாகவே இருந்தது இரண்டாவதாக இல்லை –சாஸ்த்ர சித்தம் –
அபின்ன ப்ராப்ய ப்ராபகம் சம்பிரதாய சித்தம் / ஈஸ்வரனையும் ஜீவனையும் உபமேயமாக வைத்து இதுக்கு புல்லை காட்டி /
திருவடி அவர் விஷயம் / அஞ்சலி நமக்கு /
கறவை மாட்டை அழைக்கவும் கட்டி இடுவதுவும் புல் போலே திருவடிகளே சாதனம் சாத்தியம் /
வஸ்து பேதம் இல்லை / அனுசந்தான பேதமே உள்ளது-
விலக்ஷண குணம் விக்ரஹம் தேவை -சாதனம் -பிரபத்தி பண்ணுவதும் அர்ச்சையிலே–எளிமை அழகு –/
அனுபவத்துக்கும் குணங்களும் -பரத்வம் ஸ்வாமித்வம் -/ நாராயண பதம் பூர்வ உத்தர த்வய வாக்கியங்களில் உண்டே /
உபமேயம் அத்யகரித்து கொள்ள வேணும் யோக்யதா அனுகுணம் ஈஸ்வரன் -சேதனன் இரண்டாகவும்
ஈஸ்வரன் -திருவடிகள் / சேதனன் -இத்தை காட்டி -அஞ்சலியைக் காட்டி -அஞ்சலியை பண்ணுகிறான் /
பலமும் சாதனமும் ஒன்றே- –விசிஷ்ய அந்நிய தரம் -இரண்டில் ஓன்று நிர்தேசியாமல் விட்டார் /
அர்த்த சாமர்த்தியத்தால் இரண்டும் வரக் கடவுமே /
முற்று உவமை படி -உபமேயம் சொல்லாமல் விட்டது -உபமானத்தாலே கோடி காட்டி /
ஈஸ்வர பரதையாக யோசனையும் சேதனன் பரதையாக யோசனையும் ஒரே ஏற்றம் –

அதாவது கோவை வரவழைத்து -பின்னை அதுக்கு தாரகாதிகளை இட்டு நோக்க நினைப்பார் தத் போக்யமான புல்லு தன்னையே
தத் வசீகர சாதனமாக முன்னிட்டு அழைத்துக் கொண்டு அது தன்னையே மேலிடும் அளவில் பல சாதனங்களுக்கு
பேதம் இல்லாதாப் போலே -விலக்ஷண குண விக்ரஹ விசிஷ்டனான தானே முந்துற இவனைச் சேர்த்துக் கொள்ளுகைக்கு உபாயமுமாய்
பின்னை என்றும் ஓக்க இவனுக்கு உபேயமாய் இருக்கையாலே
பல சாதனங்கள் இரண்டும் ஏக வஸ்துவாய் இருக்கும் என்கை –

—————————————————–

சூர்ணிகை –141-

ஆகையால் ஸூக ரூபமாய் இருக்கும் –

இத்தால் பிரபத்திக்கு வை லக்ஷண்யம் பலித்த படியே அருளிச் செய்கிறார் –

நிரதிசய போக்யமான சாத்தியமே- நிரபேஷ நிரபாய சாதகமாய் —
அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்கு அனுரூபமாக ஸூ பிரயத்தன நிவ்ருத்தி –
ரூபமாய் கொண்டு தத் சரண வர ரூப பிரபத்தியும் -ஸூ க ரூபமாய் இருக்கும் –
ஆக -இப்பிரகரணத்தால் -அபாயத்வாதி தோஷ துஷ்டமான சாதனாந்தரங்கள் த்யாஜ்யங்கள் என்றும்
தத் தியாக அங்கியாய் தத் தோஷம் அற்ற பிரபத்தியுபாயம் -ஸ்வரூப உசிதத்வாதி ஸ்வரூப அனுரூப உசிதம் என்றதாயிற்று –
தேவையாய் இராதே -பிரபத்தி ராக பிராப்தம் / பக்தி விதிகள் உண்டு / இது அத்யந்த அபிமதமாய் இருக்க பிரயோஜகம்
அஞ்சலியாதி மாநஸமாகவும் காயகமாகவும் வாசகமாகவும் செய்யலாமே /-
தொழுது தொழுது -சாதனத்துக்கும் சாத்யத்துக்கும் இரட்டிப்பு /
ஞானாகத ஆனுகூல்ய பிரதிகூல்யங்களுக்கு –அறிவுக்கு விஷயம் உறுதி–
செய்ய வேண்டியது ஸ்வீகாரம்–பிரார்த்தனையை உள்ளடக்கிய விசுவாசம் /
உறுதி குலைந்து உபாயாந்தரங்களுக்கு செல்வது பிராதிகூல்ய கார்யம் – /
நிரதிசய ஆனந்த ரூப -விட்டுப்பிடிக்காத உறுதியாக சாதகமாய் இருக்கிறார் –
/ பக்திக்கும் ஸூ க ரூபம் உண்டே -ஸ்ரீ கீதையில் உண்டே / சாத்தியமாக உண்டு -சாதனமாக இல்லையே என்பதே சம்ப்ரதாயம் –
ஸூ ஸூ கரம் கர்தவ்யம்–அங்க பூத கர்மகத துக்கம் உண்டே /
பிரபத்திக்கு அங்கம் சர்வ தர்வான் பரித்யஜ்ய -நிவ்ருத்தி ரூபம் ஸூ க ரூபம் தானே /அங்கம் அங்கி இரண்டும் ஸூக ரூபமாக இருக்குமே
தேவையாய் இராதே -வித்யா அதீன -விதித்ததால் பிரவ்ருத்தி -விஷயத்வம் என்பதால் துக்க ரூபமாய் இருக்கும் -அந்த துக்கம் இங்கே இல்லையே

அதாவது -ஸாத்ய வஸ்து தானே சாதனம் ஆகையால் -தத் வரண ரூபமான இது தேவையாய் இராதே ஸூக ரூபமாய் இருக்கும் என்றபடி
அன்றிக்கே -இன்னுமும் பிரபத்திக்கு ஒரு வைலக்ஷண்யம் அருளிச் செய்கிறார் -புல்லை -இத்யாதியாலே –
அதாவது புல்லைக் காட்டி தேனுவை அழைத்துக் கொண்டு பின்னை அப்புல்லையே இடும் அளவில்
பல சாதனங்களுக்கு பேதம் இல்லாதாப் போலே
ஸக்ருத் க்ருத அஞ்சலி -என்றும் நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அஞ்சலியாதி ரூபையான ப்ரபத்தியை முன்னிட்டு ஈஸ்வரனை வசீகரித்தால்
பின்னை அவனுக்கு உகப்புக்காகச் செய்யும் அடிமையும்
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி ந –என்றும்
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை –3–8-4-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
தன் ஸ்வரூப அனுரூபமான அஞ்சலியாதி வ்ருத்தி விசேஷங்களாலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –
இப்படி பலமானது தானே சாதனமாகையாலே இப்பிரபத்தி தான் தேவை இராதே இவனுக்கு ஸூ க ரூபமாய் இருக்கும் என்கை —

ஆக – பிரபத்தி யுபாயத்துக்கு-134- என்று தொடங்கி இவ்வளவாக ப்ரபத்தியினுடைய தோஷ ராஹித்யமும் குண சாஹித்யமும் சொல்லப் பட்டது

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -94-114-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை — -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 10, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில் முதல் ஆறாவது ஏழாவது எட்டாவது ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————

சூரணை-94-

இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும்
பிரதான ஹேது
இந்த பிராவண்யம் –

ஏவம் பூதமான பிராவண்யம் விஷய வைலக்ஷண்ய அதீனம் அத்தனை அன்றோ –
சம தமாதி ஆத்ம குணங்கள் அன்றோ அதிகாரத்தை மினுங்குவிப்பது என்ன –
அவை தன்னையும் இது தானே உண்டாக்கும் என்கிறார் -மேல் –

பிராவண்யம்-அடியாக மடல் எடுக்கை -தேக த்யாஜ்யம் -இத்யாதி –
இது அடியாகவே சம தமாதி ஆத்ம குணங்கள் -ஆக ருசி பிராவண்யமே பிரதான்யம் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பதே கர்த்தவ்யம் -அவனுக்கும் பிராட்டிக்கு ஆச்சார்யர்களுக்கும் -ஹேதுக்கள்-சாஸ்த்ர அத்யாயனாதிகள்
சத்வ குணம் வளர வளர – ஆச்சார்ய சம்பந்தம் கிட்டி -அங்கீகாரம் -ஹேதுவாக பகவத் பிரசாசத்தால் பிறக்கும் -முமுஷுத்வ -முக்தித்வ –
ஜாயமானம் புருஷம் கடாக்ஷம் -சாத்வீகன் -ஆச்சார்ய உபதேசம் -மோக்ஷ இச்சையும் இதனால் பிறக்கும்
ஆத்ம குணங்களுக்கு ஹேது –பகவத் பிராவண்யம் சத்தா பிரயுக்தமாக துடிப்பிக்கும்
உபாய உபேய அதிகாரங்கள் மினுங்க -அழுக்கு போக்க -பல பிரதிபந்தகம் போக்க சம தம குணங்கள் -சாந்த மனஸ் அந்த கரணங்கள்-
உபாய உபேய பிரயோஜகத்வம் சொல்லுகிறது இங்கு – –
கீழே உபேயத்துக்கு அதிகாரம் சொல்லி –ப்ராவண்யம் -ருசி -ப்ராதான்யத்தை அருளிச் செய்கிறார்
அதி பிரவ்ருத்தி ஏற்படுத்தி -ஆத்ம குணங்களுக்கு அதிகாரமும் கொடுக்கும் –
சமதம நியதாத்மா –சர்வ ஜீவ ராசிகள் இடமும் அனுகம்பா -அறிவு ஒளி விட விஷயாந்தரங்களில் ஈடுபடாமல் –
அமாநித்வம்-ஸ்ரீ கீதை – -13-அத்யாயம் -பெரியோர்களை அவமதிக்காமல் –சாந்தி ஆர்ஜவம் ஆச்சார்ய உபாசனம் தூய்மை ஸ்தைர்யம்
ஆத்மாவையே நினைத்து -இந்திரிய விஷயங்களில் வைராக்யம் அஹங்காரம் இல்லாமல் -துர்மானம் இல்லாமல்
அனுகூல சகவாசம் -ஆச்சார்ய உபதேசம் ஆகார சுத்தி போல்வன அப்ரதான ஹேதுக்கள்

சமதம நியதாத்மா –
அமாநித்வம் –
இத்யாதியில் சொல்லுகிறபடியே -இச் சேதனனுக்கு உண்டாக்க தக்க ஆத்ம குணங்கள் தான் அநேகம் உண்டு இறே–
இவை எல்லாவற்றுக்கும் இந்த பிராவண்யம் -பிரதானம்  ஹேது ஆகையாவது –
அனுகூல சஹவாச-சாஸ்த்ராப்யாச ஆச்சார்ய உபதேசிகளான- ஹேத்வந்தரங்களில் காட்டில் -முக்ய ஹேதுவாய் இருக்கை–

————————————-

சூரணை -95-

மால் பால் மனம்  சுழிப்ப-
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –

இவ் அர்த்தத்தில் பிரமாண உபாதாநம் பண்ணுகிறார் –

மால் பால் மனம்  சுழிப்ப-பிராவண்யமே மனம் சுழிப்பது
பரமாத்மநி யோரக்த –விரக்தி வேறே இங்கே ரக்தி உண்டானால்
கண்டு கேட்டு உற்று மோந்து -சிற்றின்பம் ஒழிந்தேன்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு மிதுன சேர்த்தி கண்டு -பின்பே-
ஐஸ்ஸ்வர்ய கைவல்யம்-அளவில்லா சிற்றின்பம் -ஐஸ்வர்யம் பார்த்தால் அளவில்லா -பகவத் லாபத்தை பார்த்தால் சிற்றின்பம் ஒழிந்தது –
விரக்தியும் ஆத்ம குணமும் வேறே வேறே இல்லையே -/மனம் புலன்களை அடக்குவதே வைராக்யம் -அதுக்கு பகவத் பிராவண்யம் வேணும் என்றவாறு –
மனசிலே நசை கிடக்க -கேவலம் கை விடுகை அகிஞ்சித்க்கரம் –தோளிலே கை வைக்காததால் உறுதி பிறக்கும் –
மங்கையர் கை தோள் கை விட்டு விரக்தி ஹேதுத்வம்
நூல் பால் மனம் வைக்க-சாஸ்த்ர ஸ்ரவண உபயுக்த அவதான ரூப மனம் அடக்கம் –
நாம் ஆத்மா -நம்முடையது மனம் ஒரு கருவியே -நூல் வாயில் பட்டு இருக்க வேண்டுமே –
மனசின் மேலே மநோ குணமான கோபம் நமக்கு வர வேண்டும்
தன் இஷ்டத்துக்கு திரிந்தால் -பெண்ணையும் பிள்ளையும் கண்டிப்பது போலே –

மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு-நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் –மூன்றாம் திரு வந்தாதி -13 –
என்று சர்வேஸ்வரன் பக்கலில் -ஹிருதயம் பிரவணமாக-போக்யைகளான ஸ்திரீகளுடைய தோளுடன் அணைகையில்
நசை அற்று -பிரமாணங்களில் மனசை  வைக்க எளிதாம் என்றும் –
பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மநி-என்று பரமாத்மாவின் பக்கலிலே ரக்தனாய் –
அத்தாலே பரமாத்ம இதர விஷயத்தில் -விரக்தன் ஆவான் என்றும் –
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு கேட்டு உற்று
மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லா சிற்றின்பம் ஒழிந்தேன் –திருவாய் மொழி -என்று
பெரிய பிராட்டியாரும் தேவருமாய் ஒரு  தேச விசேஷத்திலே-எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியைக் கண்டு -அங்கே பிரவணனாய்-
ஐஸ்வர்ய கைவல்யங்களில் விரக்தன் ஆனேன் என்றும் –
பகவத் பிராவண்யம் இதர விஷய விரக்தி ஹேதுவாக சொல்லப் பட்டது இறே –

——————————————–

சூரணை -96-

ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும் –

பகவத் பிராவண்யம் ஆத்ம குணங்கள் எல்லாவற்றுக்கும் பிரதான ஹேது என்று பிரஸ்தாவித்து-
இதர விஷய விரக்தி -ஹேதுத்வ மாத்ரத்தில் -பிரமாணங்களை தர்சிப்பான் என் என்கிற சங்கையில் –
அருளிச் செய்கிறார் –

விசேஷண பஞ்சகம் -சாந்த சம தமாதி -பொறுமை மனஸ் வெளி இந்திரியங்களை அடக்கி —
வைராக்யம் -விரக்தி -/பிராவண்யம் ஹேதுக குண பிரதானம் சமமும் தமமும்
ஸூ அதிகார அபேக்ஷித-ஞானாதி ஆத்ம குணங்களில் –
அதில் அதிகார அன்வய பிரதானம் பாஹ்ய ரூப நியமன ரூபமான -சமம் / அந்தகரண நியமன ரூபமான தமமும் என்கிறார் –
மா முனிகள் அத்தை தமம் என்றும் இத்தை சமம் என்றும் அருளிச் செய்கிறார்
நியமனம் -நியமிக்கப்படுவது மனம் இந்திரியங்கள் -நியாந்தா ஆத்மா -இவை எல்லாம் அசேதனங்கள் –
சித்தம் பிரசாந்தமாக இருப்பதே சமம் / பிரதானத்தை மற்றவை பின் தொடரும் —
ஸ்ரீ கீதை -18–42-சமம் தமம் ஆர்ஜவம் சாந்தி -இங்கும் முதலில் சமம் தமம்/
சம தமம் என்பதற்கும் விரக்தி என்பதற்கும் அந்யோன்ய சின்ன பேதம் —
ராக ஹேதுக ஞான விசேஷ ஜனக -விஷய இந்திரிய சன்னிஹர்ஷம் —
நிரோதனம் தடுப்பதே சமம் தமம் -விஷயத்தையே விலக்கி வைக்க வேண்டும் –
தத் ப்ரயுக்த ராக அபாவம் விரக்தி -தடுத்தாலும் மனம் போகலாமே -இந்த சின்ன வாசியை உணர வேண்டுமே –
பிராவணயத்தால் விரக்தி -அனைத்து ஆத்ம குணங்களுக்கும் ஹேது -இவற்றில் சமம் தமம் பிரதான்யம் / உப லக்ஷணம் என்றுமாம் –
விரக்தி பிரதான்யமும் என்றும் சில பிரமாணங்கள் சொல்லுமே /அஹிம்சை பிரதானமும் / அஷ்ட குணங்களில் தயை பிரதானமும் -சொல்லுமே
விரக்தி அஹிம்சாதிகளுக்கு உப ஜீவனம் சமம் தமம் தானே –
இந்த பிரமாணங்களும் சமம் தமத்தில் ஆரம்பித்தே சொல்லுமே -பிரதானம் தலைமை முதன்மை –
இது ஏற்பட்டால் தான் அது வரும் -பெருமை மிக்கது என்பது இல்லை -இவை ஏற்பட்டால் மற்றவை பின் தொடரும் —
உப ஜீவ்யம்-உபஜீவக பாவத்தால் சமமும் தமமும் பிரதானம் என்னக் குறை இலை –

சமம் ஆவது -அந்த கரண நியமனம்-
தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
ஷமா சத்யம் தமச்சம-என்கிற இடத்தில் –
தமோ பாஹ்ய கர்ணா நா மனர்த்த விஷயேப்யோ நியமனம் –
சமோந்த  கரணச்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளிச் செய்தது -மாறி சொல்லும் இடமும் உண்டு –
இந்த சம தமங்கள் உண்டான இடத்தில் -அல்லாத குணங்கள் தன்னடையே வரும் ஆகையால் –
பிரதானமான இவற்றுக்கு ஹேது என்னும் இடத்தில் பிரமாணம் காட்டப் பட்டது என்று கருத்து –
அன்றிக்கே –
கீழ் சொன்ன விரக்தி ஹேதுத்வம்-சகல ஆத்ம குண உத்பத்திக்கும் ஹேது என்னும் இடத்துக்கு உப லஷணமாக்கி-
இவ் ஆத்ம குணங்களில் பிரதானம் எது என்கிற சங்கையில் –
ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் -என்று அருளிச் செய்தார் ஆகவுமாம்-

—————————————————-

சூரணை -97-

இந்த இரண்டும்  உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —

இந்த சம தமங்கள் உண்டானால் -இவனுக்கு உண்டாக கடவ-பல பரம்பரையை
அருளிச் செய்கிறார் மேல் –

இவை இரண்டாலும் வரும் பிரயோஜன விசேஷங்களை -பிரதான பயன் காரணங்கள்-அருளிச் செய்கிறார் –
சுருக்குப்பை திரு மந்த்ரம் —
சதாசார்ய பகவத் பிரசாதத்தாலே நிலை நிற்கப் பெறும் இவை இரண்டும் –
இதுக்கு மேலே -இவை கண்டு உகந்து-விசேஷண கடாக்ஷம்-ஹிதைஷியான ஸூவ ஆச்சார்யன் –
இது பிரதம அங்கீ காரம் அல்லாமையாலே ச ஹேது கதவை தோஷம் வராது /
பிரதம கடாக்ஷம் நிர்ஹேதுகமாக -அத்தை பெற்று ருசி வளர வளர
எங்கும் பக்கம் நோக்கு அறியாமல் விசேஷ கடாக்ஷம் சிலருக்கே /
முதலில் அங்கீகாரம் -சமதர்மம் வளர -பின்பு விசேஷ கடாக்ஷம் என்றவாறு -/
குருடனுக்கு புதையல் கிடைத்தால் போலே திருமந்திரம் —
அந்நிய சேக்ஷத்வாதிகள் அல் வழக்கு -திரு மந்த்ரம் –
ஸ்வரூபாதி பிரகாசமான மாணிக்கச் செப்பான திரு மந்த்ரம் -ஜீவ பர ஸ்வரூபங்களை பிரகாசிக்கும்
ஸ்வார்த்த அனுசந்தானம் -திரு மந்த்ரம் அர்த்தம் அநுஸந்திக்கும் படி அன்றோ விசேஷ கடாக்ஷம் -ஆழ்ந்து –
அனுஷ்டானத்துக்கு அப்புறம் -பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யம் பர்யந்தமாக –
ஸ்ரீ ஸ்தன ஆபரணமாக பெருமாள் ஸ்ரீ -ரெங்கேஸ்வரன் இனி நான் போகல் ஓட்டேன் என்னும் படி கை புகுரும்-
ஸூவதந்த்ரனான ஈஸ்வரன் பரதந்த்ரனாக கை கிடைத்ததான பின்பு –
மற்றது -அந்த உயர்ந்த -இதர வியாவர்த்த முக்த பிராப்ய பூமி –
பொன்னுலகு ஆளீரோ என்று தான் உகந்தாருக்கு கொடுக்கும் படி கை புகுரும் – –
விஷ்ணு லோகமணி மண்டப மார்க்க தாயி போலே –
ஆச்சார்ய உபதேச மூல மந்த்ர ஜன்ய ஆத்ம யாதாத்மா ஞான அனுகுண உபாய உபேய அதிகாரங்கள் –
உத்தர கால பாவி – -அந்யோன்ய ஆஸ்ரம தோஷம் இல்லாமல் —
பூர்வபாவியான சமதமங்கள்-உபதேசம் கேட்க ஸ்ரவனத்துக்கு உபயுக்தமான –
இது மால் பால் மனம் சுளிப்ப பரிபூர்ண சமதமங்கள் இல்லை —
தனக்காகவும் தெரியாது சொன்னாலும் கேட்க்காமல் இருக்கக் கூடாதே அந்த நிலைமை -/உபக்ரம அவஸ்தானம் -என்றபடி –
சாந்தி அநசூயை-குணம் படிப்பில் மேல் உள்ளாரையும் -வாழ்க்கையிலும் பணத்திலும் கீழ் உள்ளாரையும் பார்க்க வேண்டுமே -ஸ்ரத்தாவான்
குரு அர்த்தத்துக்காக- சுசி சுத்தம் பிரிய ஹிதம் சிஷ்ய லக்ஷணம் –பொதுவானவை /
மேலே வளர்ந்த பரிபூர்ண சமதமங்கள்
மந்த்ரம் ஆச்சார்ய அதீனம் –மந்த்ரார்த்தம் மனசில் நிற்க வேண்டும் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ராஹ்மணன் ஆச்சார்யர்
திருமந்திரம் இட்ட வழக்காய் ப்ரஹ்மம் இருக்கும் –தைவாதீனம் ஜகத் சர்வம் என்பதால் -ஜகத் உபய விபூதிகளும் -அவனதே –
பரிசுத்த குண பேதம் -விசுத்த ஆச்சார்ய தத் பரம் -விரதஞ்சா சகல பாபான் -குடும்ப பாலணம் -சாதம் தாந்தம் ஆர்ஜவம் பிரணவ பகவத் பரம் –
சந்தித்த ஹ்ருதயம் பக்தியில் ஆசை சம்சாரம் கொதிப்பை உணர்ந்து -ஸர்வார்த்த சாதகம் மஹா புத்திக்கு அர்த்தங்களை கிரஹிப்பதில் சத்யம் –
குசல பாணி -கை சாமர்த்தியம் கைங்கர்யங்களில் –இவை எல்லாம் சிஷ்ய லக்ஷணம் –சிஷ்யன் என்று கை கூப்பி வர வேண்டும் —
அன்புடன் கிருபையுடன் விருப்பத்துடன் உபதேசம்–சாந்தம் சாந்தம் பரிசாய் கிருபையா – –
கண்டு உகந்து -சம தமாதிகள் ஆச்சார்யர் கிருபையை கிளப்பும் –
சம்சார ஆர்ணவம் -தாண்டுவிக்கும் தோனி தான் அஷ்டாக்ஷரம் -/ஆச்சார்யர் உகந்து உபதேசிக்க –
துளி சம தமத்துடன் வந்தவனுக்கு -சொல்ல வேண்டும் சாஸ்திரம்
உபதேசம் விதி -ராகத்துடன் உபதேசிக்க இந்த லக்ஷணங்கள் சிஷ்யனுக்கு வேண்டும் என்றவாறு –

பகவத் ப்ராவண்யம் அடியாக வரும் -பரி பூரணமான சம தமங்களை கீழ் சொல்லிற்றே ஆகிலும் –
இவ் இடத்தில் ஆச்சார்ய அங்கீகாரத்துக்கு பூர்வ பாவியான அளவில் ஒதுக்கிச் சொல்லுகிறது –
இந்த சம தமங்கள் இரண்டும் உண்டானால் -ஆசார்யன் கை புகுருகை யாவது –
இவ் ஆத்ம குணம் கண்டு உகந்து -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசிக்கும் படி இவனுக்கு வச்யனாகை-
தஸ்மை ஸ வித்வான் உபசந்தாய சமயக் பிரசாந்த சித்தாய சமான்விதாய –
யேனா ஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்று
சம தம உபேதனாய்கொண்டு உபசன்னானவனுக்கு இறே ப்ரஹ்ம வித்யையை -தத்வத -உபதேசிக்கச் சொல்லிற்று –
இந்த ஸ்ருதியில் ஆசார்யுபதேசதுக்கு உடலாக சொன்ன சம தமங்களுக்கு -ஏதேன ஸ்ரவண உபயுக்தம் அவதானம் விவஷிதம் –
நதூபாச நோபயுக்தாத் யன்தேந்த்ரிய ஜயாதி -என்று இறே சுருதி பிரகாசிகாகாரர் வியாக்யானம் பண்ணிற்று –
ஆசார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுருகை யாவது –
மந்த்ரா தீநஞ்ச தைவதம் -என்று -திருமந்தரம் இட்ட வழக்காய் இருக்கும்
அவனாகையாலே -அர்த்த சஹிதமாக அது கை புகுந்தவாறே -தத் ப்ரதிபாத்யனான தான் இவனுக்கு –
அநிஷ்ட நிவ்ருத்த பூர்வ இஷ்ட ப்ராப்திக்கு ப்ராபகனான – ஈஸ்வரன் கை புகுந்தவாறே –
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்கிறபடியே
பிராப்ய பூமி  கை புகுருகை யாவது -தைவாதீனம் ஜகத் சர்வம் -என்று உபய விபூதியும்
ஈஸ்வரன் இட்ட வழக்கு ஆகையாலே -அவன் பிராபகனாய்  கை புகுந்தவாறே –
பிராப்ய பூமியான ஸ்ரீ வைகுண்டம் இவனுக்கு அத்யந்த சுலபமாகை–

———————————————

சூரணை -98-

பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே –

இப்படி சம தமங்கள் உண்டாகவே -உத்தரோத்தரம் இவை எல்லாம் சித்திக்கும் பிரகாரத்தை
ஆரோஹா க்ரமத்தாலே அருளிச் செய்து –
இதில் யாதொன்றுக்கு யாதொன்று ஹேதுவாக சொல்லிற்று ஆக நியதம்-என்னும் இடத்தை
அவரோஹா க்ரமத்தாலே அருளிச் செய்கிறார் –

ஆத்ம குணங்களாலே இல்லாமல் குணத்தால் என்றது ஜாதி ஏக வசனம் –
பரம பத பிராப்தம் ஸ்வ தந்த்ர பகவானால் -நமஸ் சப்தம் சரண சப்தங்களாலே –
நமஸ் விவரணம் சரணம் த்வயத்தில் -தத் பிரகாசம் ஸங்க்ரஹ விவரண ரூபம் -அர்த்த பிரகாசகமான திரு மந்திரத்தால் ப்ரஹ்மம் உண்டாம் –
விலக்காமை ஒன்றுமே வேண்டுவது- எனக்கு அல்லேன் என்றாலே போதுமே –பகவான் மந்த்ர அர்த்தம் -என்று விசேஷிக்கையாலே
ஸூ அர்த்த உபதேஷட பிரதான்யம் தோன்றுகிறது –ப்ராபகத்வம் பிரதான்யம் –
சதாசார்ய லாபம் தத்-பகவத் ப்ராவண்ய ஹேதுக சம தம ரூபமான ஆத்ம குணத்தால் உண்டாம் –
சம தம ஆரம்பித்து பரம புருஷார்த்தம் வரை -படிப்படியாக உபய க்ரமத்தாலும் கீழிலும் இங்கும் அருளிச் செய்கிறார் –
இதனாலே அது உறுதியாக சொல்லி –
பூர்வ பூர்வ காரண கீர்த்தனம் -உத்தர உத்தர கார்ய கீர்த்தனம் –
நேர் மறை எதிர்மறை -நின்றனர் –நின்றிலர் -அர்த்தம் திடமாக்க போலே இங்கும் –
அன்வயம் வியதிரேகம் -இன்ன இன்ன குணங்களை உடையவன் சிஷ்யன் ஆக மாட்டான் –
கிருபையுடன் உபதேசம் என்றும் -சத் உபதேசம் இல்லாமை வித்யை சித்திக்காது
அஷ்டாக்ஷரம் விட வேறே மந்த்ரம் இல்லை என்றும் -சம்சார ஆர்ணவம் மூழ்கி விஷயாந்தரங்களில் அழுந்தி உள்ளவர்களுக்கு விஷ்ணு போதம் –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றார்கள் -நியதம் -நேர் அடி தொடர்பு என்று இரண்டு வழியிலும் அருளிச் செய்கிறார் –
ப்ராப்யம் வைகுந்த மா நகரம் /ப்ராபகம் ஈஸ்வரன் -என்பதை உத்தேசித்து இந்த சப்த பிரயோகங்கள் –

இது தனக்கு பிரயோஜனம் -இது ஹேது பரம்பரையில் பிரதம ஹேது– சம தமங்கள் ஆகையாலே-அவஸ்யம் 
இவை இரண்டும் இவனுக்கு உண்டாக வேணும் என்கை –
ஈச்வரனே பிராபகன்  ஆகையாலே -பிராப்ய லாபம் ஈச்வரனாலே என்கிற -ஸ்தானத்திலே-பிராபகத்தாலே -என்று அருளிச் செய்தது-

————————————

சூரணை -99-

இது தான் ஐஸ்வர்ய காமர்க்கும் –
உபாசகருக்கும் –
பிரபன்னருக்கும் –
வேணும் —

இந்த சமதமதாதிகள் போக மோஷ காமர் எல்லாருக்கும் வேணும் என்கிறார் –
ஐஸ்வர்ய காமர்க்கு சப்தாதி காமமே புருஷார்த்தம் ஆகிலும் -தத் சாதன அனுஷ்டான தசையில் -சம தமதாதிகள் வேணும் –
இந்திரியாணி புராஜித்வா ஜிதம் திரிபுவனம் த்வயா-என்றும் –
படி மன்னு பல்கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று –திருவாய்மொழி -4 -1 -9-என்னக் கடவது இறே –
ஐம்புலன் வென்று -என்றது -மனோ நியமனத்துக்கு உப லஷணம்-
உபாசகருக்கு வித்யாங்கதையா சமாதி வேணும் –
தஸ்மா தேவம் வித் சாந்தோதாந்த உபரத ஸ்திதி ஷூஸ் சமாஹிதோ பூத்வாத்மன்யே வாத்மானம் பச்யேத் -என்றும்
புன்புல வழி அடைத்து அரக்கிலிச்சினை  செய்து நன்புல வழி திறந்து
ஞான நல்சுடர் கொளீ இ–திரு சந்த விருத்தம் -96-என்னக் கடவது இறே –
பிரபன்னர்க்கு அதிகார அர்த்தமாக சமாதி வேணும் –
ஏகாந்தீது விநிச்சித்ய தேவதா விஷயாந்தரை-பக்தி உபாயம் சமம் கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ணைக சாதன – என்றும்
அடக்கறும் புலன்கள் ஐந்தடக்கி யாசை யாமவை-துடக்கறுத்து வந்து
நின் தொழில் கண் நின்ற என்னை -திரு சந்த விருத்தம் – 95–என்னக் கடவது இறே –

இந்த சமதமதாதிகள் போக மோஷ காமர் எல்லாருக்கும் வேணும் என்கிறார் –

இவர்களுக்கும் வேண்டும் என்று பிரபன்னனுக்கு நிச்சயமாக வேண்டும் என்பதை சொல்ல வேண்டுமோ -என்று
விஷயத்தை த்ருடீகரிக்கிறார்-
சம தம ரூபமான விரக்தி -போக மோக்ஷ அபிலாஷிகளுக்கும் —
ஹிரண்ய கசிபு தபஸ் -புலனை அடிக்கித்தானே ஐஸ்வர்யம் பெற்றான் –
மண்டோதரி இந்திரியங்களை அடக்கி மூன்று லோகங்களையும் கொண்ட நீ -அடக்காமல் இப்படி அழிந்து போனாயே -என்றாளே-
சாதன அனுஷ்டாத்தின் பொழுது புலன்களை அடக்கி அனுபவிக்கும் தசையில் புலன்களை கொண்டு -என்பதால் முரண்பாடு இல்லையே
ஆப்த அங்கீ கார -ஆச்சார்ய அங்கீ கார -உண்மைக்கு அருகாமையில் உள்ளவரே-
நம் நன்மையில் ஆசை கொண்டவர் -உண்மை பேசுபவர் – ஆப்தன் –
ப்ரஹ்மம் சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம ஞானம் உள்ள ஆச்சார்யர் -அங்கீ காரத்துக்கு விரக்தி பிரதானம் –
அநந்ய போக்யமாக பகவானை அனுபவிக்க போக்யர்த்த சித்யர்த்தமாக —
வேறு ஒன்றில் விருப்பம் இல்லை -என்பதை காட்ட சம தமங்கள் வேண்டுமே –
பிரபன்னனுக்கு அதிகாரமாக -உபேய அணுகுணாக வேணும் -அதிகார ரூபமாக வேணும்
பக்தியையும் தேவதாந்தர விஷயாந்தரங்களுடன் சமமாக கொண்டு
கிருஷ்ணனே ப்ராப்யம் ப்ராபகம் என்று நினைக்கும் பிரபன்னன் -ஏகாங்கி என்றபடி –

ஐஸ்வர்ய காமர்க்கு சப்தாதி காமமே புருஷார்த்தம் ஆகிலும் -தத் சாதன அனுஷ்டான தசையில் -சம தமதாதிகள் வேணும் –
இந்திரியாணி புராஜித்வா ஜிதம் திரிபுவனம் த்வயா-என்றும் –
படி மன்னு பல்கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று –திருவாய்மொழி -4 -1 -9-என்னக் கடவது இறே –
ஐம்புலன் வென்று -என்றது -மனோ நியமனத்துக்கு உப லஷணம்-
உபாசகருக்கு வித்யாங்கதையா சமாதி வேணும் –
தஸ்மா தேவம் வித் சாந்தோ தாந்த உபரத ஸ்திதிஷூஸ் சமாஹிதோ பூத்வாத்மன்யே வாத்மானம் பச்யேத் -என்றும்
புன்புல வழி அடைத்து அரக்கிலிச்சினை  செய்து நன்புல வழி திறந்து
ஞான நல்சுடர் கொளீ இ–திரு சந்த விருத்தம் -96-என்னக் கடவது இறே –
பிரபன்னர்க்கு அதிகார அரர்த்தமாக சமாதி வேணும் –
ஏகாந்தீது விநிச்சித்ய தேவதா விஷயாந்தரை-பக்தி உபாயம் சமம் கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ணைக சாதன – என்றும்
அடக்கறும் புலன்கள் ஐந்தடக்கி யாசை யாமாவை-துடக்கறுத்து வந்து
நின் தொழில் கண் நின்ற என்னை -திரு சந்த விருத்தம் – 95–என்னக் கடவது இறே –

——————————————

சூரணை -100-
மூவரிலும் வைத்து கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு –

இப்படி அதிகாரி த்ரயத்துக்கும் அபேஷிதமே ஆகிலும் -அதிகமாக
வேண்டுவது பிரபன்னனுக்கு என்கிறார் –

பிரபன்னன் நிவ்ருத்தி மட்டுமே சொல்லுவோம்- யதா சக்தி அனுஷ்டானம் போதும் என்பார்களே என்னில் -மிகவும் வேண்டுவது –
அத்ருஷ்டத்தில் மட்டுமே -த்ருஷ்டங்களில் இல்லையே -ராக பிராப்தம் என்பதால் மிகவும் ஈடுபட்டு செய்வான் –
பகவத் ஏக போகனான பிரபன்னனுக்கு மிகவும் வேணும் -உபாசகனுக்கு கொஞ்சம்= ஸ்வார்த்ததா கந்தம் இருக்குமே –
அதனால் பகவத் ஏக போகனாக மாட்டான் -அங்கும் ஸ்வார்த்த கைங்கர்யம் தான் -பரார்த்த கைங்கர்யத்துக்கு போக மாட்டான் உபாசகன் –
அவன் திரு உள்ளம் ஆனந்தமே பரம பிரயோஜனம் பிரபன்னனுக்கு மட்டும் தானே –

இவனுக்கு இதில் ஆதிக்யம் சொல்லுகைக்கு ஆக இறே
அல்லாதவர்களை இவ்விடத்தில் பிரசங்கித்ததும்-

—————————————

சூரணை -101-

மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும் –
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன்  ஏற்றம் –

அவ் ஆதிக்யம் தன்னை அருளி செய்கிறார் –

ஆஸ்ரம தர்ம புத்தியாலும் – போக புத்தியால் -காமம் அனுபவிப்பான் -தாரத்துடன் –
பிரபன்னனுக்கு கூடாமல் இருக்கையே ஏற்றம் –
மிகவும் வேண்டும் என்பதை விவரிக்கிறார் இதில் -விஹித விஷயத்திலும் நிவ்ருத்தி வேண்டும்
பலத்தில் கலக்கம் உடைய ஐஸ்வர்யார்த்திக்கும் -சாதனத்தில் கலக்கம் உடைய உபாசகனுக்கும் பர தாரா நிவ்ருத்தி போதும் –
உபய கலக்கம் அற்ற பிரபன்னனுக்கு வேறே எங்கும் கண் போகக் கூடாதே -தத் ஏக பகத்வ தூஷணம் வரக் கூடாதே
விசிஷ்ட ஆகாரம் -நிஷேதம் பரதாரா பரத்தை இரண்டும் கூடாதே –
பிரபன்னன் நிஷ்க்ருஷ்ட ஆத்மாவைத் தானே பார்ப்பான்
உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் –என்று என்றே -சொல்லி முடிந்த உடன் பிரசாதங்களை ஸ்வீ கரிக்கிறோம் –
தன்னேற்றேம் அசாதாரண பெருமை –
முக்தன் பல தசையில் –ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாவம் -கர்ம வஸ்யம் இல்லை -சாரூப்பியம் பெற்றவன் –
கைங்கர்யத்துக்காக சரீரம் கொள்ளலாம் –
தூபம் தீபம் ஸ்த்ரீகள் ஏதாவாகிலும் இருக்கலாம் -/ போக சங்கோச அர்ஹதை கர்மத்தால் குறை இங்கே —
ஸ்ராட் பவதி என்றால் போலே அங்கே -போக சங்கோசம் அர்ஹதை இல்லை –
ஸ்ராட் ஸூ வ ராஜ்ஜியம் -சேஷ பூதன் தானே -கர்மத்துக்கு வசப்படாதவன் -ப்ரஹ்மதுக்கு வசப்பட்டவனே -அனுபவிப்பது ப்ரஹ்மத்தையே –
பிதரம் மாதரம் -தாரான் -விட்டே வந்தவன் பிரபன்னன் -அனுபவம் கூடாதே –
சந்த்யா வந்தனம் -இத்யாதி கூடுமா போலே ஸூவ தாரத்துடன் கூடக் கூடாதோ என்னில்
கைங்கர்ய புத்தியா கூடாதோ -அவற்றில் சுக அனுபவம் இல்லையே -/
போக்யதா புத்தி அவரஜனீயம் -ஆகுமே -அதிகார பங்கமே உண்டாகும் –
ஜீவன் மூன்று கடன்கள் -தேவ கடன் பித்ரு கடன் ரிஷி கடன் -தீர்க்க வேண்டுமே –
யாகங்கள் -தேக கடனை தீர்க்க -பகவத் கைங்கர்ய ரூபம் செய்கிறானே பிரபன்னன் –
அந்த அந்த தேவதைகளை ப்ரீதி படுத்த -தர்ம புத்தியா மற்றவர்கள் -அந்தர்யாமி ப்ரீதிக்காக பிரபன்னன் /அதே போலே –
பித்ரு கடனை தீர்க்க பகவத் கைங்கர்ய ரூபம் என்று நினைத்து கூடினால் என் என்னில் பிரஜா உத்பத்திக்காக –
பித்ருக்களுக்கு அந்தர்யாமியாக அவனை ப்ரீதி பண்ண -வேண்டாமோ என்னில் –
சாமான்ய விதி விசேஷ விதி இரண்டும் உண்டே –
அநந்ய போக்யமாக ப்ரஹ்மத்தையே கொண்டவன் -விரக்தியை விரோதித்து வருவதை விட வேண்டுமே
தாரான் -சந்தஜ்ய என்றது பிரஜா உத்பத்திக்காக கைப் பிடிக்க கூடாது –
கூரத் ஆழ்வான் ஆண்டாளை விட வில்லையே -பிரஜா உத்பத்தியை விடுவதையே சொல்லிற்று –
தர்ம பத்னி உடன் சேர்ந்து பிதாரான் தாரான் சொல்கிறோமே-/
ஆகார சுத்தி சத்வ சுத்தி என்று ராஜஸ தாமச அன்னம் நிஷேதம் -ஆபத்துக்கு விஷயமாகும் – /-
அன்னத்தையே விடச் சொல்ல வில்லையே -அதே போலே ஆச்சார்யர்கள் புத்ர -உஜ்ஜீவன அர்த்தமாக கொடுத்து
புன பிரபத்தி நினைவு படுத்தி பிராயாச்சித்தம் -ஆச்சார்யர் பெயரை வைக்கவும் -ஆளவந்தார் மூன்று விரல்கள் தெரியுமே –

அதாவது
சப்தாதி போக பரனான ஐஸ்வர்ய காமனுக்கும் -சாதனாந்தர பரனான உபாசகனுக்கும் –
சாஸ்திர நிஷித்த விஷயமான பர தாராதியில் நிவ்ருத்தி மாதரம் அமையும் –
தத் உபய வ்ருத்தனாய் இருக்கிற பிரபன்னனுக்கு -சாஸ்திர விஹித விஷயமான
ஸ்வ தாரத்தில் நிவ்ருத்தி -அவர்களை பற்ற ஏற்றம் என்கை –
அவர்கள் இருவரிலும் ஐஸ்வர்ய காமனுக்கு ஸ்வ தாரத்தில் சாதன தசையில்
தர்ம புத்த்யா பிரவ்ருத்தியும் -பல தசையில் போக்யதா புத்த்யா பிரவ்ருத்தியுமாய் இருக்கும் –
உபாசகனுக்கு பலம் பகவத் அனுபவம் ஆகையாலே அவனைப் போலே பல தசையில்
அன்வயம் இல்லையே ஆகிலும் -உபாசன தசையில் தர்ம புத்த்யா பிரவ்ருத்தி வேணும் –
பிரபன்னனுக்கு தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கையும் ஸ்வ அதிகார பஞ்சகம் ஆகையாலே
விஹித விஷயத்திலும்  நிவ்ருத்தி வேணும் என்றது ஆய்த்து–

—————————————

சூரணை -102-

இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும் –
சிலருக்கு அருளாலே பிறக்கும் –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் –

தர்ம புத்த்யா பிரவ்ருத்திக்கு பரிஹாரம் பண்ணுவது போக்யதா புத்த்யா-பிரவ்ருத்தி தான் தவிர்ந்தால் அன்றோ –
அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த விஷயங்களில் -நிவ்ருத்தி தான் பிறக்கும் படி எங்கனே என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –

போக்யதா வாசனை போக வேண்டுமே -அநாதிகாலம் வாசனை உண்டே -விஹித விஷய நிவ்ருத்தி பிறக்கும் வழி —
எவ்வாறு என்று அருளிச் செய்கிறார் –

தர்ம புத்த்யா பிரவ்ருத்திக்கு பரிஹாரம் பண்ணுவது போக்யதா புத்த்யா-பிரவ்ருத்தி தான் தவிர்ந்தால் அன்றோ –
அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த விஷயங்களில் -நிவ்ருத்தி தான் பிறக்கும் படி எங்கனே என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –

ஸூ பர விபாகம் இல்லாமல் இவ்விஷயாந்தர விரக்தி தான் -உள்ளபடி காட்டக் கண்டார் -ஆழ்வார்கள் -அர்ஜுனன் காட்டக் கண்டான் –
உள்ளபடி காட்ட வேண்டுமே –சிலருக்கு மற்று ஒன்றினைக் காணாவே என்னப் பண்ணும் —
நிர்ஹேதுகமாக -கையினால்-சரி சங்கு இத்யாதி –
நான்கு தோள்கள் உடன் -சித்த உபாயமான வடிவு அழகால் வருத்தமற அப்போதே பிறக்கும்
ஒன்றுக்கும் மீளாத விஷய மக்நரான சிலருக்கு -ஆச்சார்யர்களுக்கு இந்த பட்டம் –
அவனுக்கு இட்டுப் பிறந்த இவனும் இப்படிப்படுவதே -என்று அருளி -இவர்களது
யத்னம் இல்லாமல் பகவத் அருளாலே பிறக்கும் –
ஆழ்வார்களுக்கு சடக்கென அப்போதே -வருத்தமற பிறக்கும் என்றாரே –பகவத் சாஷாத்காரம் இவர்களுக்கு தானே இங்கே –
பிரகிருதி வாசனை உள்ள -தத்தவஞ்ஞாராயும் -நம் போல்வாருக்கு பூர்வாச்சார்யர்கள் அனுஷ்டானம் –
எம்பார் -தனி இடம் கண்டிலேன் என்றாரே –
இருட்டுத் தேட்டம் -காண வில்லையே பகல் கண்டேன் -எங்கும் வியாபித்து இருக்கிறானே -என்றாரே –
அவர்கள் ஆச்சாரம் பின் செல்லா விடில் அநர்த்தம்-என்று உணர்ந்து-
பயந்து -அவர்கள் பேற்றுக்கு அசலாய் போக கூடாதே -உபாய உபேய அதிகாரம் போகுமோ என்று –
சிஷ்டாசார -ஸ்ரவணம்-உபதேசம் மூலம் -க்ரமேண பிறக்கும் —
நாம சங்கீர்த்தனமும் இப்படி தான் -சரணாகதிக்கு இப்படி இடையிலே ஒன்றுமே இல்லை –
மேல் நிலை அழகு -அடுத்த நிலை அருள் -அடுத்த நிலை ஆச்சாரம் கேட்டு அச்சம் –
அவதார தசையில் அனுஷ்ட்டித்துக் காட்டி அருளுகிறார் -/
பர வ்யூஹ அர்ச்சா அந்தர்யாமிகளில் இல்லையே –அந்தர்யாமி இவனை வைத்தே கர்தவ்யம் /
பர வ்யூஹம் திருத்த வேண்டியது இல்லை -அர்ச்சை பராதீனம் ஏறிட்டுக் கொண்டவன் –
மர்யதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸா-
நான்கு வர்ணங்கள் ஆஸ்ரமங்கள் தர்மங்கள் அவதார பிரயோஜனமாக முமுஷுக்கள் தர்மங்களும்
பிரபன்ன தர்மங்களும் மர்யாதா-செய்தும் செய்வித்தும் காட்டுகிறார் –
இதுக்கும் மேலே ஞான அனுஷ்டானங்களில் சிறந்த பூர்வ ஆச்சார்யர்கள் ஆச்சாரங்களையும் கேட்டு –
சாஸ்த்ர முகத்தாலும் உபதேசத்தால் அறிந்து – -அனுசந்திக்க விஹித விஷய நிவ்ருத்தி-விரக்தி பிறக்கும் –
மரியாதையில் விஹித விஷய நிவ்ருத்தி சேர்க்க வேண்டுமே –
துவாதச வருஷம் அமானுஷன் போகான் அனுபவித்ததாக சொல்லி -ருது மாறியது கூட தெரியாமல் இருந்தார்களே –
அபத்ய லாப வைதேஹி கர்ப்பிணி ஆனதும் பரம திருப்தி என்றாரே பெருமாள் –
கால பேதேந–அபிரபன்னர்- பிரபன்னர்- பற்ற வேண்டியதை கொள்ள வேண்டுமே –
பெருமாள் அனைவருக்கும் பொது தானே -வேதம் போலே – –

சிலருக்கு  அழகாலே பிறக்கும் -என்றது -சாஷத்க்ருத  பகவத் தத்வரான-பக்தி பாரவச்ய பிரபன்னருக்கு –
சகல ஜகன் மோகனமான தத் விக்ரக சௌந்தர்ய அனுபவத்தாலே பிறக்கும் என்ற படி –
சிலர்க்கு அருளாலே பிறக்கும் -என்றது -தத்வ யாதாத்ம்ய தர்சிகளான-ஞானதிக்ய பிரபன்னருக்கு –
நம்மை அனுபவிக்க இட்டு பிறந்த வஸ்து இப்படி-அந்ய விஷய பிரவனமாய் அநர்த்த படுவதே -என்று அந்ய விஷய சங்கம் அறும்படி
அவன் பண்ணும் பரம கிருபையாலே பிறக்கும் என்றபடி –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் -என்றது -அளவிலிகளான-அஞ்ஞான  பிரபன்னருக்கு – அவதாரங்களில் –
மர்யதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸா-என்கிறபடியே –
அதிகார அனுகுணமாக அவன் ஆசாரித்தும் ஆசாரிப்பித்தும் போந்த படிகளையும் –
அளவுடையரான பூர்வாச்சார்யர்கள் ஆசரித்து போந்த படிகளையும் –
சாஸ்திர முகத்தாலும் -ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலும் அறிகையாலே –
அவ் ஆசாரங்களை அனுசந்திக்க அனுசந்திக்க பிறக்கும் -என்றபடி —

———————————————

சூரணை -103-

பிறக்கும் க்ரமம் என் என்னில் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் அருசியை விளைக்கும்  –
ஆசாரம் அச்சத்தை விளைக்கும் –

இவ்வோ ஹேதுக்களால் பிறக்கும் க்ரமத்தை தஜ் ஜிஜ்ஞாசூ  பிரச்னத்தை
அனுவதித்து கொண்டு அருளிச் செய்கிறார் –

விஹித விஷய நிவ்ருத்தி உடனே இல்லையே -விரக்தி பிரகாரம் —
வைர உருக்கான அவன் வடிவு அழகு விஷயாந்தர ஸத்பாவ-பிரதிபத்தி அபாவம் ஆகிய –
ஸூ தார விஷயம் உட்பட –விஷயாந்தரங்களில் அஞ்ஞானத்தை அவிச்சின்னமாக விளைக்கும்-
ஆகவே விஹித விஷய நிவ்ருத்தி -ஏற்படும் இவர்களுக்கு –
ரூப குணங்கள் -கண்ணையும் மனத்தையும் அபஹரிப்பாரே –
நமக்கும் பெருமாளை சேவிக்கும் பொழுது உண்டு -ஆழ்வார்களுக்கு அவிச்சின்னமாக -இருக்குமே –
பர துக்க அஸஹிஷ்ணுத்வ அருள் -ஹேயத்வ தர்சனம் அடியாக அருசியை கொழுந்து விட்டு விளைவிக்கும்
விஷயாந்தரங்கள் தெரியும்- ருசி இல்லாமை ஏற்படும் – ஞானாதிகர்களுக்கு -அருசி -த்வேஷம் -ருசிக்கு எதிர்மறை என்றபடி –
விசிஷ்ட சிஷ்ட ஆச்சர்ய ஆச்சார ஸ்மரணம் -விஷயாசக்தி -அநர்த்தம் உணர்ந்து -அச்சம் –
தொடவே பீதி ஏற்படுத்தும் -தத் சந்நிதியில் பிறக்கும் விகாரம் பீதி -விரக்தியை விளைவிக்கும் –

அழகு அஞ்ஞானத்தை விளைக்கை யாவது -சித்த அபஹாரி ஆகையாலே விஷயாந்தரம் தன்னை ஒன்றாக அறியாதபடி  ஆக்குகை –
அருள் அருசியை விளைக்கை யாவது -விஷயாந்தரங்களை காணும் போது அருவருத்து காரி உமிழ்ந்து போம் படி பண்ணுகை-
ஆசாரம் அச்சத்தை விளைக்கை யாவது -ருசி செல்லச் செய்தே -அவர்கள் ஆசாரித்தபடி செய்யாத போது நமக்கு அனர்த்தமே பலிக்கும்  என்று
விஷய ஸ்பர்சத்தில் இழிய நடுங்கும் படி பண்ணுகை –
ஆகையால் இக் க்ரமத்தில் பிறக்கும் என்று கருத்து —

———————————————

சூரணை -104-

இவையும் ஊற்றத்தைப் பற்றச்  சொல்லுகிறது –

இந்த த்ரிவித பிரபன்னருக்கும் -சௌந்தர்யாதி த்ரயத்தில் ஒரொன்றே
விரக்தி ஹேதுவாக சொல்லுகிறதுக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –

ஊற்றம் -பூயிஷ்டம் -நிரம்பி இருக்கும் என்றபடி -/
அழகுக்கு விஷய அஞ்ஞானத்தை பிறப்பிக்கையும் -யத்ர நான்யத்ர பஸ்யதி பூமா -வேறே ஒன்றையும் காணப் பண்ணாதே
அருளுக்கு அருசியை விளைவிக்கை-தோஷத்தை புரிய வைத்து /ஆச்சாரத்துக்கு அச்சம் விளைவிக்கை-
அழகும் -ஆச்சாரமும் அருசியை – ஏற்படுத்தாதா–அழகு அச்சத்தை ஏற்படுத்தாதா என்னில் -இவற்றையும் ஏற்படுத்தும்
ஓ ஓ உலகின் இயல்பே என்று அஞ்சி- அருளிச் செய்தவர்களும் உண்டே -என்றாலும் -/
ஸூ ஸூ அனு ரூபமான காரியங்களை நிறைய ஏற்படுத்தும் என்றபடி -/
ஆழ்வார்கள் பர வ்யூஹ விபவ அர்ச்சா அந்தர்யாமி அனைத்தையும் சாஷாத்காரித்தவர்கள் –
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற ஆழ்வார் -அக்காலத்திலே ஒன்றி நின்றவர் என்றும் வியாக்யானம் –
ஆச்சார்யர்கள் அர்ச்சாவதாரமும் அந்தர்யாமியும் தானே சாஷாத்காரம் –

அதாவது –
அஜ்ஞ்ஞானத்தாலே பிரபன்னர் -இத்யாதியால் -இவர்களுக்கு சொன்ன பிரபத்தி
ஹேதுக்களானவை ஒரோன்றின்  ஊற்றத்தை பற்றிச் சொன்னாப் போலே –
அழகாலே பிறக்கும் -என்று தொடங்கி சொன்ன -விரக்தி ஹேதுக்களான இவையும்
ஒரோன்றின்  ஊற்றத்தை பற்றி சொல்லுகிறது -என்கை-
இத்தால்-பக்தி பாராவச்ய பிரபன்னருக்கு -அருசிக்கு அடியான கிருபையும் –
அச்சத்துக்கு அடியான ஆசார அனுசந்தானாமும் உண்டாய் இருக்கச் செய்தே –
பகவத் விக்ரஹ வை லஷண்யத்தை சாஷாத்கரித்த்து அனுபவிப்பவர்கள் ஆகையால் –
எப்போதும் நெஞ்சு பற்றி கிடைக்கையால் -விஷயாந்தரங்களை அறியாதபடி பண்ணும் – அவ் அழகே அவர் பக்கல் உறைத்து இருக்கும் –
ஞானாதிக்ய பிரபன்னருக்கு -அஞ்ஞான ஹேதுவான விக்ரஹ சௌந்தர்யத்தை
அர்ச்சாவாதாரத்தில் கண்டு அனுபவிக்கையும் -பய ஹேதுவான ப்ராக்தன சிஷ்ட ஆசார
அனுசந்தானம் உண்டாய் இருக்கச் செய்தே -அவன் தன் கிருபையை முழுமடை செய்து எடுத்த
விஷயங்கள் ஆகையாலே -அருசிக்கு அடியான கிருபை அவர்கள் பக்கல் உறைத்து இருக்கும் –
அஞ்ஞான பிரபன்னருக்கு -அர்ச்சாவாதாரத்தில் காதாசித்கமகா -விக்ரஹ சௌந்தர்ய அனுபவமும் –
அருசி ஹேதுவான கிருபையும் -ஒரு மரியாதை உண்டாய் இருக்க செய்தே -பூர்வர்கள் ஆசாரங்களையே
பலகாலம் அனுசந்தித்து கொண்டு போருகையாலே -பய ஹேதுவான அவ் ஆசாரங்கள் அவர்கள் நெஞ்சில் ஊன்றி  இருக்கும் –
இவ் ஊற்றத்தை பற்ற ஒரொன்றே  விரக்தி ஹேதுவாக சொல்லுகிறது -என்று ஆய்த்து-

———————————————-

சூரணை-105-

அருசி பிறக்கும் போதைக்கு
தோஷ தர்சனம்
அபேஷிதமாய் இருக்கும் —

விஷய வைலக்ஷண்ய அதிசயத்தாலே -விஷயாந்தர ஞானம் விளையக் கூடும் –
ஆப்தரான சிஷ்டர்களுடைய  ஆசார அனுசந்தானத்தாலே -அவிஹித விஹித விஷய ஸ்பர்சத்தில் அச்சம் விளையவும் கூடும் –
அநாதி காலம் ஆசைப் பட்டு மேல் விழுந்து போந்த விஷயங்களில் அருசி பிறக்கை  அகடிதம் இறே-
அப்படிப்பட்ட அருசி தான் அவன் அருளாலே பிறக்கும் போதைக்கு அபேஷித அம்சத்தை -அருளிச் செய்கிறார் –

தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு உடலை
வீணே சுமந்து மெலிவேனோ -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பிரார்த்தனை –
விரக்திகளின் முக்கிய அமுக்கிய அம்சங்களை அருளிச் செய்கிறார் –
அழகை அடியாகக் கொண்ட விரக்தி -ஒதுக்கி வைத்து -அருள் அடியான விரக்தி –
ஹேதுவான அருசி பிறக்கும் பொழுது தோஷ தர்சனம் அவசியம் அபேக்ஷிதம் –
அருசி நிலைக்க தோஷ தர்சனம் வேணும்-இதுவோ பிரதானம் –
இந்திராதி சரீரங்களில் தோஷ தர்சனம் இருக்காதே -அத்தை விலக்க -மேலே அப்ராப்தம் பிரதானம் என்பார் –
தோஷ தர்சனம் இரண்டாம் பக்ஷம் அமுக்கிய ஹேது -ஆகுமே

தோஷ தர்சனம் ஆவது -போக்யதா புத்த்யா பரிஷ்வங்கிக்கிற யோஷி தேஹம்  மாம்சாஸ்ருக்
பூயவின் மூத்திரச்நாயும் அஜ்ஞ்ஞாச்தி சமுதாயமுமாய் சர்மாவனத்தமாய் துர் கந்தியாய் இருக்கும் படியையும் –
போகம் தான் அல்பமாய் -அஸ்திரமாய் -துக்க மிஸ்ரமாய் -அநர்த்த அவஹமாய் -இருக்கும் படியையும் –
பிரத்யஷாதி பிரமாணங்களால் தர்சிக்கை –

——————————————-

சூரணை -106-

அது பிரதான ஹேது அன்று –

ஆனால் அதுவோ பின்னை அருசி ஹேது என்ன –
அருளிச் செய்கிறார் –

தத்வ வித்துக்கள் -ஆச்சாரம் ஸ்ரவணம் சிந்தை வைத்துக் கொண்டே -அநர்த்தம் வரும் என்று அச்சம் வர வேண்டும் –
இஹ லோக விஷயங்களில் தோஷம் கண்டு -ஸ்வர்க்கத்தில்
காண விரகு அற்று அங்கே ருசி மண்டும் படியாய் வருந்தி கல்பித்து அறிய வேண்டுமே
இதுவும் கர்மாதீன பூமி என்று அறிய நாளாகுமே-விரக்தி பிறக்க அருமை உண்டே –
ஆகையால் விஷயங்களில் அருசி பிறக்கை விரக்திக்கு பிரதான ஹேது இல்லை —
அருள் -அருசி -விரக்தி அது தானே விஹித விஷய நிவ்ருத்தி –தோஷ தர்சனம் மட்டும் பிரதான ஹேது இல்லை என்றவாறு

பிரதான ஹேது அன்று -என்றது -அதுவும் ஒரு ஹேது -முக்கிய ஹேது அன்று -என்றபடி –

——————————————

சூரணை -106-

அது பிரதான ஹேது அன்று –

ஆனால் அதுவோ பின்னை அருசி ஹேது என்ன –
அருளிச் செய்கிறார் –

பிரதான ஹேது அன்று -என்றது -அதுவும் ஒரு ஹேது -முக்கிய ஹேது அன்று -என்றபடி –

—————————————

சூரணை -107-

அப்ராப்தையே பிரதான ஹேது –

ஆனால் பிரதான ஹேது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

வகுத்த விஷயம் அல்ல என்றவாறு /ஸ்வர்க்கம் ஸத்ய லோகங்களும் அப்ராப்யம் –
தத்வ வித்துக்கள் -இது அப்ராப்தம் என்று விடுவார்கள் –
அதத்துவ வித்துக்கள் தோஷம் என்று விடுவார்கள் –
அஸ்வதை மரம் மேலே வேர் நான்முகன் -சம்சாரம் மரத்தை வைராக்யம் கோடாலி வைத்து வெட்ட வேண்டும் —
பற்றின்மை -திடமான வைராக்யம் கொண்டே சம்சாரம் வெட்ட வேண்டும் –
அசங்க சஸ்திரம் திடேன-15-அத்யாயம் -முதலிலே ஸ்ரீ கீதையில் அருளிச் செய்கிறான் –
விஷயாந்தரங்களில் ஈடுபாடு ஸ்வரூப நாசகை யாகையாலும் – பிராப்தி பிரதிபந்தகம் ஆகையாலும் –சிஷ்ட கர்ஹிதை ஆகையாலும் –
நமக்கு அப்ராப்தம் என்றே விடுகை தான் விரக்திக்கு பிரதான ஹேது –
தோஷ தர்சனம் இன்றியிலும் அபிராப்த ஞானம் வந்து விடும் இடங்களில் வைராக்யம் தன்னடையே பிறக்கும்
மதுர கவி ஆழ்வார் சம்சார தோஷம் பற்றி இல்லாமல் / ஆண்டாள் வையத்து வாழ்வீர்காள் -போலே
தோஷ தர்சனம் உண்டானாலும் அப்ராப்தம் புத்தி வாரா விடில் விரக்தி நிலை நிற்காதே -ஆகவே அபிராப்தமே பிரதான ஹேது
அருள் -முதலில் -தானே பிராப்தம் என்று அறிந்து -மற்றவை அப்ராப்தம் என்று
அதுக்கு அப்புறம் அறிந்து-அருசி ஏற்பட்டு விரக்தி – -என்றபடி –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து-என்கிறாள் ஆண்டாள் – –
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் என்று ஆழ்வார்களை போலே விரிக்காமல் /
வருத்தம் -ஐஸ்வர்யம் உம் கைவல்யம்- மகிழ்ந்து பகவத் லாபம் ப்ரீதி காரித கைங்கர்யம் -இவளுக்கு
ஒண் கண்ட சதிர் கண்டு தெளிவில்லா சிற்றின்பம் ஒழிந்து-என்றும்
இப்பால் கை வளையும் –காணேன்– கண்டேன் இரண்டையும் சொல்லுவார்கள் –
குணம் உள்ள வஸ்துவும் அப்ராப்தம் என்று அன்றோ மதுரகவி நிஷ்டை -தேவு மற்று அறியேன் -என்பார்
பகவத் ஏக வரூபத்துக்கு சேரும் படி -அவன் ஒருவன் இடத்திலே அனுபவம் இனிமை யாருக்கோ அவனே பகவத் ஏக போகன் –
பகவானை விஷயமாகக் கொண்ட போக்யம் -அவனே / எனக்கு அவரே அனுபவம் -அவதாரணம் –
அத்யந்த அபிமத -அந்நிய -ஸூய அனுபவம் இல்லாமல் -பிராப்தி -எத்தை அனுபவித்தாலும் பிரதிபந்தகம் ஆகுமே –
அருளாலே தானே அப்ராப்தம் என்ற எண்ணம் வரும் பிரதானம் -தோஷ தர்சனம் அப்ரதானம் –
நிர்ஹேதுகமாக -அவன் -கர்மாதீனம் தேகம் தோஷம் சோபாதிகம் ஞானம் அப்ரதானம் என்றபடி –
இவை சஹகாரி இல்லை -அருளுக்கு இவை இரண்டும் வியாபாரங்களே என்றவாறு

அப்ராப்தை ஆவது -பகவத்யேக போகமான  ஸ்வரூபத்துக்கு சேராததாய் இருக்கை–இத்தால்-
அருள் அருசியை விளைக்கும் இடத்தில் -தோஷ தர்சனாதிகளை பண்ணுவித்து விளைப்பிக்கையால் –
தோஷ தர்சனமும் -அப்ராப்தி தர்சனமும் -தத்வ வித்துகளுடைய அருசிக்கு
கௌண முக்ய ஹேதுக்களாய்  இருக்கும் என்றது ஆய்த்து-

———————————–

சூரணை -108-
பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று –
ஸ்வரூப ப்ராப்தம் என்று —

மால் பால் மனம் சுளிப்ப -இத்யாதி படியே பிராவண்ய விஷயமாக சொன்ன
பகவத் விஷயத்தில் குணம் கண்டு இழிகிறவோபாதி-இதுவும் தோஷம் கண்டே விடுகிற தானாலோ-என்ன –
அருளிச் செய்கிறார் –

விடும் பொழுது அப்ராப்தம் என்று விடுவதே பிரதானம் என்றார் கீழே –
இங்கு அவனைப் பற்றுவதும் ஸ்வரூப ப்ராப்தத்தால் -என்கிறார் –
குணங்களை பிரிக்க முடியாதே அவன் இடம் இருந்து –
உம்மைத் தொகை -விஷயாந்தரங்களை விடுகிறதும் தோஷம் கண்டு அன்று -அது ஸ்வரூப அப்ராப்தம் –
தோஷம் பிரிக்க முடியாது விஷயாந்தரங்களில் இருந்து –
உபேதேயமான குண பூர்த்தி உள்ள பகவத் விஷயத்தில் இழிகிறதும் பிராப்தம் என்பதாலேயே –
கல்யாண குணங்களைக் கண்டு இல்லையே –
அப்ருதக் சித்த ஸ்வரூபத்துக்கு ஸ்வகதா பிராப்தம் என்றவாறு

பகவத் விஷயத்தில் இழிகிறதும்-குணம் கண்டு அன்று -ஸ்வரூப ப்ராப்தம் என்று-என்கிறார்
(வகுத்த விஷயம் என்றபடி -அப்ருதக் சித்த விசேஷணம் அன்றோ )

———————————–

சூரணை -109-

இப்படி கொள்ளாத போது-
குண ஹீனம் என்று நினைத்த தசையில்
பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அனுசந்தான தசையில்
சம்சாரத்தில் பிரவ்ருத்தியும்
கூடாது — (சேராது பொருந்தாது -அனுப பன்னம் என்றவாறு )

ஆகில் எத்தாலே -என்ன -ஸ்வரூப பிராப்தம் என்று -என்கிறார் –
பெண்ணின் வருத்தம் அறியாதவன் -என்றாலும் விடாமல் பற்றுவாளே-
கடியன் கொடியன் –ஆகிலும் விடமாட்டாமல் அவன் என்றே கிடக்குமே
குணஹீனன் ஆனாலும் காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகன் ஸ்வாமி என்பார்களே /
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று பிரவர்த்திக்கிறார்களே –
இதர விஷயம் அப்ராப்தம் அடியாக த்யாஜ்யம் / பகவத் விஷயம் பிராப்தி அடியாக உபாதேயம்-என்று கொள்ளாத போது
தோஷம் குணம் -இவையால் என்றால் -ஆற்றாமை விஞ்சி இருக்கும் திசையிலும் மேல் விழுந்து இருக்கும் ஆழ்வார்கள்
தேஹாத்ம விவேக ஞானம் இல்லாமல் சம்சார பிரவர்த்தியும் கூடாதே –
ஸ்வரூப பிராப்தம் -என்று பற்றி குணம் இல்லாயானாலும் விட முடியாதே –
அப்ராப்தம் என்று அறியாமல் தோஷ தர்சனம் கண்டும் சம்சாரத்தில் ஆழ்ந்து உள்ளார்கள் –
சம்சாரம் ரூடி அர்த்தம் பத்னி புத்ராதிகளால் அனுபவம் /
யோக அர்த்தம் -ஸமித்-ஏகி கார வாசி -சேர்ந்து கூடி அனுபவம் -என்றுமாம் சப்தாதிகள் அனுபவம் என்றவாறு
ரிஷிகளுக்கு -பிராப்த அபிராப்த விவேக ஞானம் இல்லை -பெருமாள் பிராட்டி விஷ்வக் சேனர் -மூலம் குரு பரம்பரா ஞானம் இல்லையே
முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாம்யா ஞானம் -நாயனார் -திங்கள் -என்பர் கலியன் -குளிர வைக்க –
ரிஷிகளுக்கு தபோ பலம் ஸஹேதுக கடாக்ஷம் -உபதேச பரம்பரா ஞானம் இல்லையே

அதாவது பகவத் விஷயத்தை பற்றுகிறது -அத்தலையில் கல்யாண குணங்கள்
அடியாக அன்று -இவ் ஆத்மாவுக்கு வகுத்த விஷயம் -என்கையாலே –
இப்படி கொள்ளாத போது -என்றது -இதர விஷயங்களில் அருசிக்கு ஹேது அப்ராப்தை –
பகவத் விஷயத்தில் ருசிக்கு ஹேது பிராப்தை  என்று கொள்ளாதே-
தோஷ தர்சனத்தையும் -குண தர்சனத்தையும் இவற்றுக்கு ஹேதுவாக கொள்ளும் போது என்றபடி –
குண ஹீனம் என்று நினைத்த தசையில் பகவத் விஷய பிரவ்ருத்தி யாவது –
பிரிவாற்றாமை கரை புரண்டு பெரு விடாய் பட்டு துடித்து அலமரா நிற்க சடக்கென வந்து
முகம் காட்டாமையாலே -குண ஹீனம் என்று சிந்தித்த தசையில் -பின்னையும் –
அவனை அல்லது அறியேன் -திருவாய் மொழி -5-3-5–என்று அவன் பக்கலிலே அத்ய அபிநிவேசத்தை பண்ணுகை-
தோஷ அனுசந்தான தசையில்  சம்சாரத்தில் பிரவ்ருத்தி யாவது –
மாதா பித்ராதிகளும் -பார்யா புத்ராதிகளும் -ஜ்ஞாதிகளும் -பந்துகளும் -க்ருக ஷேத்ராதிகளும் ஆக
சப்தாதி போகங்களை அனுபவித்து இருக்கை யாகிற சம்சாரத்தின் துக்க பஹூளத்வாதி தோஷத்தை –
பிரத்யஷாதிகளால் அறிந்து அனுசந்தியா நிற்கச் செய்தேயும் –
அதிலே அபிநிவேசம் நடந்து செல்லுகை -இவை இரண்டும் கூடாது என்ற படி –
அன்றிக்கே
தோஷ அனுசந்தான தசையில்  சம்சாரத்தில் பிரவ்ருத்தி யாவது –
தத்வ வித்துக்களான மகரிஷிகள் தொடக்கமானவர் –
சார அசார விவேக வத்தையா விஷய தோஷ அனுசந்தானம் உண்டாய் இருக்க செய்தே –
சாஸ்திர விஹித தயா பிராப்தம் என்கிற புத்தியால் -பண்ணுகிற ப்ரஜோத் பாதநாதி ரூப சம்சாரத்தில் பிரவ்ருத்தி ஆகவுமாம்-

இப்படி கொள்ளாத போது இவை கூடாது என்று விரோதம் காட்டுகையாலே
இப்படி கொள்ள வேணும் என்னும் இடம் ஸ்தாபிக்க பட்டது –

————————————

சூரணை -110-

கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் –
என்னா நின்றார்கள் இறே —

குண ஹீனம் என்று நினைத்த தசையில் -பகவத் விஷய பிரவ்ருத்தி எங்கே கண்டது என்ன –
அருளிச் செய்கிறார் –

பிரணய ரோஷத்தால் -குண ஹீனத்வத்தை அநுஸந்திக்கும் தசையில் -அவன் இடம் உள்ள ஈடுபாடு குறையாமல்
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாதே -சரசா வஸ்துவில் முகம் வையாதே –
சேஷி சேஷன்-பாவம் ஸ்வ பாவிகம் இன்னும் ஒரு சேஷியை பார்க்க மாட்டேன் –
இயற்கையில் கரும்பு போலே இருந்து என் விஷயத்தில் வேம்பாய் இருந்தாலும்-விரசனாக ரசம் யில்லாமல் இருந்தாலும் –
உன்னை அன்றி இலேன் நான் வேம்பின் புழு தானே இதுக்கு இட்டுப் பிறந்தது இத்தையே அனுபவிக்கும் என்றவாறு –

அதாவது –
கடியன் -என்று தொடங்கி -அறிவரு மேனி மாயத்தன்–திரு வாய் மொழி -5 -3 -5 -என்னும் அளவும் –
ஸ்வ கார்ய பரன் –
பிறர் நோவு அறியாதவன் -கொடியன்
ஒருவருக்கும் எட்டாதவன் -நெடிய மால்
வஞ்சகன் -மாயத்தன்/உலகம் கொண்ட அடியன்
துர் ஞேய  ஸ்வபாவன்-என்று-அறிவரு மேனி மாயத்தன்
அவன் குண ஹானியை சொல்லி -இப்படி இருந்தான் ஆகிலும் –
அதி லோக குரூரமான என் நெஞ்சு அவனை அல்லாது அறியாதே இருக்கும் என்றும் –
வேம்புக்கு இட்டு பிறந்த புழு அந்த வேம்பையே புஜிக்குமது ஒழிய
கரும்பை கண்டாலும் விரும்பாது -அப்படியே -கடல் மல்லைக் கிடந்த கரும்பு -பெரிய திரு மொழி -7 -1 -4 –என்னும்படி
நிரதிசய போக்யனான நீ தானே வேம்பு போல் விரசன்  ஆனவன்றும் –
த்வத் அனந்யார்க்க சேஷ பூதனான நான் -எனக்கு வகுத்த சேஷியான உன் திருவடிகளை ஒழிய ஆசைப் படன் என்றும் –
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்கள் -அருளிச் செய்யா நின்றார்கள் இறே —

———————————————-

சூரணை-111-

குண கிருத தாஸ்யத்திலும் காட்டிலும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம்
இறே பிரதானம் —

குணைர் தாஸ்யம் உபாகதா -என்றாரும் இல்லையோ என்ன –
அருளிச் செய்கிறார் –

தத்வ வித்துக்களை அனுஷ்ட்டித்து காட்டி உள்ளார்கள் –
திருவடி இடம் -அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் ஹி தாஸ்யம் உபாகதா –
இரண்டு அடையாளம் -தம்பி -தாஸ்யம் குணத்துக்கு தோற்று -இரண்டையும் / உபாகதா -வந்தேறி அப்ராதான்யம் -/
அப்ருதக் சித்த சேஷத்வ ரூப ஸ்வரூப ப்ரயுக்தமான ஸ்வாபாவிக தாஸ்யம்-இயற்க்கை இதுவே நிருபாதிகம்/
காரணத்தை பற்றி வந்தால் காரணம் இல்லா விடில் கார்யம் இருக்காதே -/சத்தா ப்ரயுக்தம் ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் –
ஆகதா என்னாமல் உபாகாதா என்று அப்ரசித்தி தோற்ற அருளிச் செய்த்தார் —
தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் -அழகு குணம் -பற்றி வந்ததாக அருளிச் செய்தாலும் –
தாஸ்யம் உறுதிப்பட ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் உணர வேண்டும் –
குண தர்சன ஹேதுவால் வந்த தாஸ்யம்-அதில் இருந்து பிறந்து -தத் ஜன்ய ஜனதத்வம்–
பெண் பாட்டிக்கு பிறந்தவள்-மகளுக்கு தாய் போலே –
தோஷ தர்சனம் அருளால் பிறந்து அது அருசியை பெற்றுக் கொடுப்பதாக இருக்கும் –
சேஷத்வத்தால் ஆத்ம நிரூபணம் -ஒன்றினால் -முக்கியமாக –ஞாத்ருத்வம் போல்வனவும் உண்டே -/
அவர்ஜனீயத்வம்-குண க்ருத தாஸ்யம் -விட்டு பிரியாத குணம் -.
குணங்களுக்கு ஸ்வரூபத்தை அனுவருத்தித்து வருவதாலும் தாஸ்யம் திடப்படுத்த இதுவும்
சேஷத்வம் ஒன்றினால் நிரூபித்த -நான் -த்ரேதா யுகத்து நான் -ஆதி சேஷன் க்ருத யுகம் –
சேஷன் தொக்கி இருக்கும் -சமாக்கியம் பெயரிலே உண்டே –
அடிமையாகி இருக்கும் நான் குணத்தை பார்த்தும் தோற்றேன் என்கிறான் -என்றவாறு –
லஷ்மணன் -சேஷத்வத்தால் நிரூபணம் லஷ்யதே இதி லஷ்மணன் –
சமாக்கியம் அவதார திசையிலும் -கீழே இயற்க்கை நித்ய ஸூரி தானே இங்கே /
இன்னாருக்கு அடிமை / நல்லவராக இருந்தால் தெம்பாகவும் இருக்கும் -யுத்தம்பகம் ஆகுமே –
தாஸ்யம் ஆகாத–ஸ்வரூபம் கண்டு -பின்பு – தாஸ்யம் உபாகாத குணத்தைக் கண்டு –

குண கிருத தாஸ்யம் ஆவது -அவன் குணங்களுக்கு தோற்று அடிமையாய் இருக்கை-
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் ஆவது -சேஷத்வைக நிருபணீயமான தன் ஸ்வரூபத்தை பார்த்து அடிமையாய் இருக்கை –
ஸ்வரூபம் இப்படி இருந்தாலும் -குணாதிக விஷயம் ஆகையாலே -குண கிருத தாஸ்யமும் இவ் விஷயத்தில் அனுவர்தியா நிற்கும் –
ஆகையால் இறே சேஷத்வைக நிரூபகரான இளைய பெருமாள் தாம் அப்படி அருளி செய்ததும் ..
ஆனாலும் குண கிருதமானது ஒவ்பாதிகம் ஆகையால் -அப்ரதானமாய் –
மற்றையது நிருபாதிகம் ஆகையாலே பிரதானமாய் இருக்கும் –
அத்தைப் பற்ற இறே -தத் பிரதான்ய பிரசித்தி தோற்ற அருளிச் செய்தது –

———————————————————-

சூரணை -112-

அநசூயைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை
ஸ்மரிப்பது–

இவ் அர்த்தத்துக்கு சம்வாதமாக பிராட்டி வார்த்தயை
ஸ்மரிப்பிக்கிறார் மேல் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திரு உள்ளம் அறிந்து மா முனிகள் வார்த்தைகளை காட்டி அருளிச் செய்கிறார் —
பிரதானத்துக்கு பிரமாணம் –
நித்ய அநபாயினியான பிராட்டி -பிரிவின்மை நித்தியமான பின்பு அழகை கண்டு பின் வந்தாள் / தர்மி விட்டு தர்மம் பிரியாதே –
பிரிந்து இருக்கும் யோக்யதை இல்லையே -நமக்கும் அப்படியே -சீதா பிராட்டிக்கு மட்டும் இல்லை -/
பெருமாள் விரூபர் ஆதல் -அவர் அழகையும் கண்ணுக்கு இலக்காகாதல் இரண்டில் ஓன்று நடந்தால் தான் என் திரு உள்ளம் நீ அறியலாம்
இதிஹாச சிரேஷ்ட பிரசித்த வார்த்தை -இதுக்கு பிரமாணம் -ஸ்வரூப க்ருதம் ஏற்றம் லஷ்மணன் வார்த்தையிலே அறிந்தோம்
அவரஜனீயம் என்பதற்கும் அதுக்கும் இந்த பிரமாணம் –
தெய்வ யோகம் -பாக்யத்தால் -உமக்கு கூடிற்று -என்ற வார்த்தை கேட்டு –
அதிருஷ்டம் ஸ்வரூப பிரயுக்தம் தானே / த்ருஷ்டமானால் தானே குண க்ருதம் /
தகப்பனார் பார்த்து பண்ணிய கல்யாணம் என்று ப்ரீதி பெருமாளுக்கு –
பிராட்டியுடைய ஆத்ம குணம் ரூப குணம் பெருமாள் ப்ரீத்தியை வளர்க்க /
வர்ணாஸ்ரம இத்யாதி விசிஷ்ட வேஷ விஷய சாமான்ய சாஸ்த்ர அனுகுணமாக மட்டும் இல்லாமல் –
ஆத்ம குணம் ரூப குணம் இவை அன்று –
பிராப்தி தகப்பனார் பார்த்து வைத்த கல்யாணமே முக்கிய காரணம்
அயோத்யா காண்டம் இறுதியில் – 117-சர்க்கம் -அத்ரி பகவான் ஆஸ்ரமம் வந்த -வனே ராமம் அனு கச்யதி தெய்வ யோகத்தால் –
ஸ்த்ரீனாம் ஆர்யா ஸ்வ பாவானாம் -ஆர்ய சப்தம் -ஷத்ரியருக்கு -ப்ராஹ்மணர் இல்லை மிக உயர்ந்த ஸ்வ பாவம் உள்ளவர்கள் என்றவாறு
அயோத்யா காண்டம் –26-குணங்களை பெருமாள் இடம் இருந்து பிரிக்க முடியாதே –
மக்களை குணம் என்னும் கயிற்றால் வசீகரித்து -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹரிநாம் –
இப்படி இருக்க தெய்வ யோகத்தை சொல்லுவான் என்னில் –
நாட்டார் நினைத்து இருப்பார் -என்று அநசூயை சீதாவுக்கு ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யமே என்று அறிந்து -இருப்பாள் –
அதனாலே தெய்வ யோகம் என்கிறாள் -அதிருஷ்ட காரணம் –
போகம் அனுபவிக்க ஸ்தானம் உபகரணங்கள் உள்ளன என்று போக அபேஷித்த -தனிமை -ஸம்ருத்தி –
த்ருஷ்ட ஹேது இருந்தாலும் தெய்வ யோகத்தால் -என்கிறாள்
வன அனுகமன ஹேது பாவ பந்த அதிசய பிரயோஜக நிரதிசய குண யோக யுக்த –பர்த்ரு சம்பந்தம்–தெய்வ யோகத்தால் –
தத் த்வாரா தைவ யோகமே வன அனு கமன ஹேது – -விருப்பமாக வளர — குண சாலிகள் இருவரும் –

அதாவது அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில் -பெருமாள் எழுந்து அருளி மகரிஷியையும் அனுவர்திந்த அநந்தரம்-
தத் பத்னியான அநசூயையை பிராட்டி சென்று அனுவர்த்திக்கிற அளவிலே அவள் பிராட்டியை பார்த்து –
பந்து ஜனத்தையும் -அபிமானத்தையும் -ஐஸ்வரத்தையும்  –
விட்டு பெருமாள் பின்னே காட்டிலே போந்த இது தைவ  யோகத்தாலே உமக்கு நன்றாக கூடிற்று –
நகரஸ்தன் ஆகிலுமாம்-வனஸ்தன் ஆகிலுமாம் -நல்லவன் ஆகிலுமாம் -தீயவன் ஆகிலுமாம்-ஸ்திரீகளுக்கு தைவம் பர்த்தாவே கிடீர் –
நீர் இப்படி எப்போதும் பெருமாள் விஷயமாக அனுகூலித்து போரும் -என்ன -பிராட்டி லஜ்ஜித்து கவிழ தலை இட்டு இருந்து –
எனக்கு பெருமாள் பக்கல் பாவ பந்தம் ஸ்வத உண்டாய் இருக்கச் செய்தே -அவர் தான் குணாதிகராக இருக்கையாலே –
என்னுடைய பாவ பந்தத்தை குண நிபந்தமே என்று இருப்பர்கள் நாட்டார் –
அவ் ஆஸ்ரயத்தை குணங்களோடு வ்யதிரேகித்து காட்ட ஒண்ணாமையாலே-
நான்  அவர் பக்கல் இருக்கும் இருப்பை அறிவிக்க பெருகிறிலேன்-
அவர் குண ஹீநருமாய்-விரூபருமான அன்றும் நான் அவர் பக்கல் இப்படி காணும் இருப்பது -என்று அருளிச் செய்த வார்த்தை –

————————————————–

சூரணை -113-

பகவத் விஷய பிரவ்ருத்தி பின்னை
சேருமோ  என்னில் –
அதுக்கடி பிராவண்யம் –
அதுக்கடி சம்பந்தம் –
அது தான் ஒவ்பாதிகம் அன்று –
சத்தா பிரயுக்தம் –

இப்படி ஸ்வரூப பிரயுக்தமான தாச்யமே பிரதானம் -ஆகில் –
சேஷி செய்தபடி கண்டு இருக்கும் அது ஒழிய -அநந்ய உபாயத்வாதிகள்
குலையும்படி அவ் விஷயத்தை குறித்து பண்ணுகிற ஸ்வ பிரவ்ருத்தி
சேருமோ என்கிற சங்கையை அனுவர்த்திகிறார் -பகவத் விஷய பிரவ்ருத்தி -இத்யாதியால் –

ததேக உபாயம் என்ற நிஷ்டை குலையும் படி –
மடல் எடுக்கை தூது விடுதல் இத்யாதிகள் -சேருமோ -என்னில் -அவனுக்கு அதிசயம் விளைவிப்பதே
சேஷிக்கு ஸ்வரூபம் -அனுரூபமான கைங்கர்யம் வேண்டுமே -ப்ராவண்யம் எதனால் வந்தது –
சேஷத்வம் உணர உணர –சம்பந்தம் -அடியாக பிராவண்யம் -/
சம்பந்தம் அடியாகவே ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யமே -சம்பந்தம் சத்தா ப்ரயுக்தம்– கிடைக்காமல் தவிக்க வேண்டுமே —
சேஷி சேஷ சம்பந்தம் நித்யம் அன்றோ -குடல் துவக்கு -/
ஈடுபட்டு பிரவ்ருத்தி –அதிக்ரமித்து-ஸ்வரூபம் கண்டாலும் சட்டத்தை மீறி அன்பு மேலிட்டு –
அன்பு உருகி நிற்கும் அது -என்கிற சத்தா நிபந்தமான நித்ய ப்ராவண்யம் –
ப்ராவண்யமும் வந்தேறி அல்ல -சம்பந்தம் போலே இதுவும் -ஆகையால் சட்டம் மீறுவதும் வந்தேறி அல்ல -எல்லாம் ஸ்வ பாவிகம் /
குண க்ருதம் தான் வந்தேறி -வளர்த்துக் கொடுக்க உதவும் இது என்றவாறு -/ ஏற்படுத்தித்தப்பட்ட தாஸ்யம் இல்லையே நித்ய தாஸ்யம்
பிராகிருத சம்பந்தம் போலே வந்தேறி இல்லையே இந்த சேஷி சேஷ சம்பந்தம் -கர்மா உபாதி பிரயுக்தம் இந்த பிரக்ருதியில் –/
இங்கு ஸ்வரூபம் -கர்மத்தால் இல்லையே -இத்தையே ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் என்கிறோம் -இயற்க்கை என்பதே சத்தா ப்ரயுக்தம்
விசேஷயமான சேஷிக்கு விசேஷண ரூபமான சேஷம் உதித்த தத் சத்தா பிரயுக்தம் –
விசேஷ விசேஷணத்துக்கு காரணம் இல்லையே நித்யம் தானே —

அத்தை பரிகரிக்கிறார் -அதக்கடி பிராவண்யம் -என்று தொடங்கி–
பிராவண்யம் ஆவது அதி மாத்திர சிநேகம் –
அந்த பிராவண்யத்துக்கு அடி விஷய வைலஷண்யம் அன்றோ என்ன  -அதுக்கடி சம்பந்தம் -என்கிறார் –
சம்பந்தம் ஆவது -சேஷ சேஷி பாவம் –
அதுதான் குண கிருதமாய் வாராதோ என்ன -அது தான் ஒவ்பாதிகம் அன்று -சத்தா பிரயுக்தம் -என்றது –
இவ் ஆத்மாவினுடைய சத்தையே பிடித்து உள்ளது ஓன்று என்கை-

—————————————————–

சூரணை -114-

அந்த சத்தை பிராவண்ய கார்யமான
அனுபவம் இல்லாத போது குலையும் –
அது குலையாமைக்காக வருமவை எல்லாம்
அவர்ஜநீயங்களுமாய்-பிராப்தங்களுமாய் -இருக்கும் –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் –

இத்தால் கீழ் பண்ணின சங்கைக்கு பரிகாரம் ஆனது எது என்ன –
அருளிச் செய்கிறார் -மேல் வாக்ய த்ரயத்தாலே –

சேஷி சேஷி பாவ ரூப சம்பந்தம் அது அடியாக –சத்தா -/ இன்னும் ஒரு பாதை –
சேஷி சேஷ ஞானம் ஏற்பட வேண்டுமே -அதன் பின்பு -இத்தனை நாள் இழந்தோமே – அதி மாத்ர ப்ராவண்யம் -அதனால் அனுபவம் /
இந்த அனுபவம் இல்லாவிடில் -சிநேகம் இல்லை -சம்பந்த ஞானம் இல்லை -சேஷி சேஷ பாவம் குலையும் -சத்தை கெட்டுப் போம் –
அந்த அனுபவம் ஏற்பட செய்யப்பட்டவை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டுமே –
மடல் தூது அநுகாரம் இவை எல்லாம் அனுபவம் கிடைக்காத ஆற்றாமையால் தானே –
சத்தை குலையக் கூடாதே என்றே -இந்த பிரவ்ருத்திகள் -சேரும் என்றபடி -அதுக்கும் மேலே -அவர்ஜனீயமாயும் பிராப்தமாயும் இருக்கும் —
சத்தா ப்ரயுக்த சம்பந்த நிபந்தன ப்ராவண்யம் கார்யமான தத் விக்ரஹ அனுபவம் இல்லாத போது -குலையும் படி வரும் –
ஒரு நாள் புறப்பாடு- காலம் தாழ்ந்து வந்தால் உயிருடன் இருக்க மாட்டார்களே சத்வ தர்சிகள் -பிராவண்ய அதீனமான சத்தை-
பிராவண்ய-அனுபவ ஹேதுவாக வரும்-அனுபவ அலாப்யத்தாலே- அநந்ய உபாயத்வங்கள் குலைந்து காமன் காலில் விழுந்து –
ஸூ யத்ன பிரவ்ருத்திகள் -பாரதந்தர்ய அனுசந்தானத்தால் அவர்ஜனீயங்களுமாய்–மடல் எடுக்க -அவனுக்கு அதிசயம் பெருமை பெருமிதம் –
கிருஷி பலித்ததே -ஸ்வரூப பிராப்தமாய் இருக்கும் -சத்தா பிரயுக்த ப்ராவண்யம் –சம்பந்த ஞானம் -அனுபவம் -ஸ்நேஹம் –
குறுக்கே குண ஞானம் –சம்பந்தம் ஒத்து இருந்தாலும் நமக்கு ஆழ்வார் போலே பிராவண்யமும் அனுபவமும் இல்லையே –
குண ஞானம் இல்லாமையால் ப்ராவண்யம் குறைத்து வளராமல் இருக்கிறது -/
சம்பந்த ஞானம் இருந்து -குண ஞானம் இல்லாமல் —
நிருபாதிக ஸ்வாமி இடம் ஆஸ்ரயண ரூப பிரவ்ருத்தி ஸ்வரூப பிராப்தி என்பதால் சேரும் அனைவருக்கும் –/
குணம் இருக்கு என்பதால் சரண் இல்லை -ஆனாலும் குணங்கள் உண்டே –
ஆக
பிரபத்தியில் நியமங்கள் எதுவும் இல்லை –
விஷய நித்தமும் மட்டுமே உள்ளது என்றும் –
அதிகாரி விசேஷணத்வமும் -அபேக்ஷித அனுமதி -64-என்னும் சித்த உபாயம்
பேற்றுக்கு நினைவு அவன் நினைவு –
அதிகாரி அனுகுண ஸ்வரூப நிரூபணமும் /உபய அனுஷ்டான சாதனமும் / விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம் என்றும்
பகவத் விஷய பிரவ்ருத்தியும் சொல்லி -நிகமிக்கிறார் –
பிரதான பிரமேயமும் -60–மேல் அடங்க ப்ராசங்கிக்க விஷய பிரசங்கம் –

அந்த சத்தை பிராவண்ய கார்யமான-அனுபவம் இல்லாத போது குலையும் -என்றது –
அப்படிப் பட்ட சத்தை தான் ஸ்வ பிரயுக்த சம்பந்தம் அடியாக வருகிற பிராவண்ய கார்யமான
பகவத் அனுபவம் இல்லாத போது ஷண காலும் நில்லாது -என்றபடி
அது குலையாமைக்கு வருமவை எல்லாம் அவர்ஜநீயங்களுமாய்-பிராப்தங்களுமாய் -இருக்கும் -என்றது –
அந்த சத்தை அழியாமைக்கு உறுப்பாக வருகிற மடல் எடுக்கை -முதலான சகல பிரவ்ருத்திகளும் –
பகவத் அனுபவம் ஒழிய தரிப்பு இல்லாமையாலே தவிறிவோம் என்றாலும் -தவிர போகாதவையுமாய் –
எல்லாம் சேஷிக்கு அதிசய கரங்கள் ஆகையாலே ஸ்வரூப பிரப்தங்களாய் இருக்கும் என்றபடி –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் -என்று
உக்தத்தை ஹேதுவாக கொண்டு பிரக்ருத சங்கையை பரிகரித்து தலைக் கட்டுகிறார் –

சத்தா வியாபக சேஷி சேஷ பாவ ரூப சம்பந்த –சத்தை வியாப்யம்-சம்பந்தம் வியாபகம் –
பெரிய வட்டத்துக்குள் சின்ன வட்டம் -/பிராவண்யம் -அனுபவம் வட்டம் -/
ஞான ஹேதுக அதிமாத்ரா ஸ்நேஹத்தினுடைய கார்யமான அனுபவம் -என்றபடி —
அனுபவம் இல்லாத பொழுது க்ஷண காலமும் சத்தா நில்லாதே என்றது –
அர்த்த கிரியா கார்யத்வம் / கால சம்பந்தித்தவம் -பிராமண சம்பந்த அர்ஹத்வம் -//நித்யையாக சொல்லப்பட்ட சத்தைக்கும்
ஹானி சொல்லும் படு அனுபவ லாபம் -பெரிய துன்பம் -ஆத்மாவே இல்லையோ என்னும் படி –
திரு நெடும் தாண்டகம் –கீழே அவனை மடல் மூலம் அழித்தாலும் கலங்காத அவன் –
ஆழ்வார் தன்னை அழிக்க சொல்ல -இவர் இல்லா விடில் -அவரை ரக்ஷித்து
தம் சத்தியை நோக்க வேணும் என்று -அவன் சத்தத்தையே போகும் படி பயப்பட்டாரே –
மகாத்மாக்கள் விரகம் சஹியாத மார்த்வம் உண்டே அவனுக்கும் -அதே போலே -இங்கும்
அன்றிக்கே
வேவேறா வேட்க்கை நோய் -மெல்லாவி உள் உலர்த்த –லௌகிக அக்னி தண்ணீர் கத்தி காத்து -முடியாதே
விரக அக்னி பற்றி இங்கு -வைதிக ஸாமக்ரி –
விரக அக்னிக்கு கொளுத்தலாம் -சத்தைக்கு நித்யத்வம் -அசித் வஸ்து நாஸகம் -ஸாமக்ரியால் நாசகம் என்பது இல்லை
துஷ் கரம் க்ருதவன் ராம -சீதையை விட்டு பிரிந்து உளனான பிரபு –தாரயத் -ஆத்மனோ தேகம் –
சோகத்தால் அழியாமல் -உள்ளாரே -திருவடி –
சத்தை ஏற்படுவதே இவளைக் கூடின பின்பே -மூல கத -அநந்ய உபாயத்வம் குலைவது –
மடல் அநந்ய உபேயத்வம் குலைவது -நமக்கே நலம் ஆதலின் –
அநந்ய தெய்வதம் குலைவது காமனை தொழுவது -ண சாஸ்த்ர நைவ க்ரமம்/ ஸ்வரூப ப்ராப்தமே-/ உபாய கோடியிலே அந்வயியாது –

புருஷகாரமாக பற்றி -உபாய உபய வைபவம் -மேலே உபாயாந்தர தோஷம் /
சித்த உபாயம் நிஷ்டை ஏற்றம் / பிரபன்ன தினசரியா / ஆச்சார்ய லக்ஷணம் -சிஷ்ய லக்ஷணம் /
ஹரியுடைய நிர்ஹேதுக கிருபா /கம்யமும் கதியும்-எல்லாம் வகுத்த இடம் ஆச்சார்யரே -என்றும்
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்றும் -ஒன்பது பிரகணம்– இதில் இரண்டாவது முற்றிற்று –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -80-93-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை — -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே .வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 9, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில் முதல் ஆறாவது ஏழாவது எட்டாவது ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————

சூரணை -80-

உபாயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
பிராட்டியையும்
திரௌபதியையும்-
திருக் கண்ண மங்கை ஆண்டானையும் –
போலே இருக்க வேணும் —
உபேயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
இளைய பெருமாளையும் –
பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-
சிந்தயந்தியையும் –
போலே இருக்க வேணும் —

அனந்தரம் அதிகாரி சோதனம் பண்ணுகிறது -உபாயம் உபேயார்த்தம் ஆகையாலும் –
உபேயத்தில் உகப்பு என்றும் –
பர பிரயோஜன பிரவ்ருத்தி பிரயத்ன பலம் -தத் விஷய ப்ரீதி சைதன்ய பலம் -என்றும் –
உபேய அதிகாரமும் கீழ் பிரசக்தம் ஆகையாலும் –
த்வய நிஷ்டன் ஆன அதிகாரிக்கு -உபயமும் -அபேஷிதம் ஆகையாலும் –
உபாய உபேய அதிகாரங்களில் இச் சேதனன்  இன்னபடி இருக்க வேணும் என்னும் அத்தை
தத் தந் நிஷ்டரை நிதர்சனம் ஆக்கி கொண்டு அருளிச் செய்கிறார் -இந்த வாக்ய த்வயத்தாலே –

உபகாரி -சஹகாரி -அதிகாரி -உபகாரமும் வேண்டாம்- சஹகாரமும் வேண்டாம்- தகுதியே வேண்டும் —
தகுதியுடன் இருந்த இவர்களைக் காட்டி அருளுகிறார் –
குரு பரம்பரை மஹா பாரதம் ஸ்ரீ ராமாயணம் படிக்க தூண்டும் இன்ன குணம் என்று இங்கே அருளிச் செய்யாமையாலே –
ஸூவதந்த்ரனே சித்த உபாயம்-என்று அத்யவசயா ரூபமான உபாயத்தில் –
தத் தஸ்ய சத்ருசம் பவேத்–என்று ஸூ சக்தியை விட்டு -பாரதந்தர்யத்தை நோக்கி-
லங்கா பவனத்தில் பெருமாள் வரவை எதிர்பார்த்து இருந்த பிராட்டியை போலே
உபாய அதிகாரியும் -ஸூ ரக்ஷண அர்த்த வியாபார சக்தியை விட்டு –
ஸூ யத்ன நிவ்ருத்தி -பாரதந்தர்ய பலம் -அநர்ஹ ஸ்வரூபத்தை பார்த்து–
துஸ் ஸஹமான சம்சாரத்திலே -ஸூ வதந்த்ரனான அங்கீ காரத்தை எதிர்பார்த்து இருக்க வேண்டும் –

சபா மத்யே ஸ்த்ரீத்வ ப்ரத்யுக்த லஜ்ஜையை விட்டு -பர்த்தாக்கள் ரக்ஷகர்கள் என்னும் பிரதிபத்தியும் விட்டு —
கிருஷ்ணனே ஆபத் ரக்ஷகன் என்று அத்யவசித்து திரௌபதி இருந்தால் போலே
லௌகிக சந்நிதியில் -தத் ஸங்க்ரஹ ப்ரவ்ருத்தி தியாக லஜ்ஜையை விட்டு –
உபாயாந்தரங்களில் உபாய பிரதிபத்தியை விட்டு -சுலப ஸ்வாமியே உபாயம் –
கிருஷ்ணனே சுலப ஸ்வாமி தானே -என்று அத்யவசித்து -பிரபன்னனாய் இருக்க வேண்டும் –

ஒரு சேவகன் ஒரு சேவகன் வாசலிலே நாயை அடிக்க –அந்த சேவகன் செய்த வியாபாரத்தை –பத்தராவி பெருமாள் வாசலில் -இருந்தவர் காண –
ஷூத்ர சேதனன் தன் அபிமானத்தில் ஒதுங்கினது என்று இத்தையே -தன்னையே அழிய மாறினதைக் கண்டால்
பரம சேதனன் திரு வாசலிலே ஒதுக்கினால் அவன் என் படுமோ -தண்டியில் குதித்து-நாயேன் வந்து அடைந்தேன் – –
பர வியாபாரமே ஸூ வியாபாரம் என்று கண் வளர்ந்து அருளினது போலே -ஸூ வியாபார யோக்ய ஜாதி ஸ்மரணமே இல்லாமல் –
காம்பற –வாழும் சோம்பரை உகத்தி போலும் -ஸ்வீ காரத்தில் இருக்கும் உபாய புத்தியும் கழித்து -உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்-
கைங்கர்யத்தில் இல்லை உபாய புத்தியாக -கூடாதே

சித்த உபாய பலமான பகவத் கைங்கர்ய ரூபமாயும் -தத் விஷய விக்ரஹமாயும் இருக்கிற-
பக்த பாகவத ஆச்சார்யர்கள் -உபேயத்தில் அதிகாரத்தில் —
சிந்தயந்தி-கடைசியில்- ஏற்றி ஏற்றிக் கொண்டு -இவள் தான் மற்ற கோபிகளில் கிருஷ்ண அனுபவத்தில் புதியவள் –
நம்மாழ்வார் தீர்க்க சித்தயந்தி அன்றோ –
உத்தவர் இந்த பக்தியைக் கண்டு -ஞான மார்க்கம் உபதேசிக்க வந்தவர் –
கண்ணன் இருப்பது போலே கோபிகள் பாவிக்க -பிரமத்தை அறிந்து திரும்பினார் –
ருசி வளர வேண்டுமே -நம் ஆழ்வாரை இங்கே வைத்து வளர்த்த பக்தி உழவன் நமக்காகத் தானே –

கைங்கர்ய அபி நிவேசியான இளைய பெருமாளும் -ஸ்ரீ கார்யம் நிமித்தமாக தன்னை அழிய மாறிய ஸ்ரீ ஜடாயு மஹா ராஜரும் –ஸ்ரீ சீதா பிராட்டியை ரஷிக்க
எம்பெருமான் திரு மேனியில் நெருப்புப் பட்டால் என் செய்ய என்று குடும்பத்தோடு -தன்னையே கோணி சாக்கு போலே அணைக்க திருமேனியை த்யஜித்த –
அங்கு அழிய மாறி -இங்கு தெரிந்து ஆத்மஹத்தி –குடும்பஸ்தற்கு முன்னே ஸ்ரீ வைகுண்டம் -பாகவத ரக்ஷணம் சீர்மை
திருக் குழல் ஓசை கேட்டு ஓடுகிற போது பர்த்தா கையைப் பிடித்து தகைய உன் எச்சில் சரக்கை நீயே வைத்துக் கொள்
இவ்வாத்மா அங்கே செல்லும் என்று சரீரத்தை விட்டு -தேகம் தன்னடையே போனதே -இவளுக்கு -சரணாகதியே இல்லை –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -ஸ்வ பாவம் அவள் இடம் இருந்ததே -உணர்தலே சரணாகதி –
ஆழ்ந்த சுக துக்கம் அனுபவத்தால் மொத்த புண்யம் பாபங்கள் போனதே -அவனுக்கு அது வரை தான் கால தாமதம் -சுருதி
நினைத்து துவண்டு அழிந்து அடைந்தாள் இவள் -அதனால் ஸ்ரேஷ்டம் நால்வருக்குள்-
கைங்கர்ய அபி நிவேசியாய் -தத் ததீய ப்ரேம-அங்கதையாலே-கண் தெரியாமல் –
ஸூ சரீரத்தை அழிய மாறும் படி பிரேமாதிகனாய் இருக்க வேணும்

சேஷத்வ வியபதேசம் உஜ்ஜீவன ஹேது –பகவத் சேஷத்வமே அந்தரங்க நித்ய நிரூபகம்-
சேஷ பூத சைதன்ய தத் கார்ய பலம் தத் விஷய ப்ரீதி பிரயோஜனங்கள் –
ஸூ பிரயோஜன பிரயத்தன நிவ்ருத்தி -சேஷத்வ பாரதந்தர்ய பலன் –
பிராப்தியும் கர்த்ருத்வங்களுக்கும் ப்ரீதியும் ஸ்வ தந்த்ர சேஷிக்கே -பிராப்தி திசையில் நினைவும் அவனது –
அதுவே அநாதி சித்தம் -இவன் ஸூவார்த்த நினைவு மாறினதும் கார்யகரம் ஆகும் –
ப்ராசங்கிகமான வற்றை நியமித்து / ப்ரஸ்துதமான உபாய உபேயங்களின் – –
சாதன கௌவ்ரவத்துக்கு தகுந்த அதிகாரியாம் போது -உபயத்தினுடைய அதிகாரி என்றுமாம் –
அதிகாரி இருக்கும் படியை அருளிச் செய்கிறார் மேல் –
அங்கம் தன்னை பொறாது என்றும் சுருக்கமாக அதிகாரி க்ருத்யம் கீழே சொல்லி இங்கே விவரிக்கிறார் என்றுமாம்
த்வய நிஷ்டனான அதிகாரிக்கு என்றுமாம் –
அதிகாரி ஆகும் பொழுது -இவர்களைப் போலே அவர்கள் குணங்கள் வர வேண்டும் என்றபடி –

உபாயத்துக்கு -என்றது -உபாயதுக்கு அதிகாரியாம்போது என்ற படி-
உபாய அதிகாரிக்கு -என்னவுமாம் –
அப்படியே உபேயதுக்கு -என்றதுவும் –
உபாயத்தில் -என்ற பாடம் ஆன போது-உபய விஷயத்தில் -என்ற படி-
இப்படி மற்றையதுவும் –

நிரபேஷ சித்த உபாயத்துக்கு கார்ய கரணத்தில் சஹகாரமும்
ஸ்வரூபம் பிரகாசிக்க உபகாரமும் வேண்டாம் –பெற்றுக் கொள்ள -அதிகாரியாம் போது -அத்யாஹாரம் —

——————————————–

சூரணை -81-

பிராட்டிக்கும் திரௌபதிக்கும் வாசி
சக்தியும் அசக்தியும் –

அவர்களை போலே இருக்க  வேணும்   என்றதின் கருத்தை தர்சிப்பிக்கைகாக
அவர்கள் தங்கள் படிகளை அடைவே அருளி செய்கிறார் மேல் –
அதில் பிராட்டி உடையவும் -திரௌபதி உடையவும் படிகளை அருளிச் செய்கைக்கு உடலாக பிரதமத்தில்
உபயருக்கும் வாசியை அருளிச் செய்கிறார் –

உபாய அதிகாரிகளில் நிதர்சன பூதர்கள்-அந்நிய பரையான திரௌபதியில் அநந்ய பரையான பிராட்டிக்கு நிவ்ருத்தி அதிகாரத்தில் வாசி –
சக்தி இருந்து விட்டு விலகி இருந்த பிராட்டி -விரோதி வர்க்கத்தை பஸ்மீ கரிக்க வல்லமை –
உரு உண்ட சேலையை எடுத்துக் கட்ட ஒண்ணாத அசக்தியும் –
பதி வ்ரத்யாதி தர்ம அனுஷ்டானத்தால் வந்த சக்தி உண்டே-என்னில் – –
கர்ணன் இடம் விருப்பம் -இருப்பதாக -காட்டியும் -அர்ஜுனன் இடம் பக்ஷபாதித்து இருந்ததாலும் -பதி வ்ரத்தை போனதே –
அதுக்கு உண்டான சாப சக்தி இல்லை -பிரயோஜனாந்தரம் கேட்டதால் ஸ்வரூப ஞானம் இல்லை –
சக்தி இருந்து இருந்தால் அத்தை உபயோகித்து இருப்பாள் -ரக்ஷ -பிரார்த்தநாயாம்-பகவத் ஏக கர்த்ருத்வ ரக்ஷ –
இச்சா பிரகாசம் பிரார்த்தனை -அடியேனால் முடியாது நீரே ரஷிக்க வேண்டும் –
தத் ஏக ரக்ஷமாம் உபயருக்கும் உண்டு /தத் தஸ்ய -என்று செய்தி சொல்லி
ஒரு மாசத்துக்கு மேல் -சொல்லி இவளோ ரக்ஷமாம் என்று சரணாகதி வியக்தம்

அதாவது –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருந்த பிராட்டிக்கும் –
ரஷமாம் -என்ற திரௌபதிக்கும் தம்மில் வாசி –
சீதோ பவ -என்று நெருப்பை நீர் ஆக்கினால் போலே -தக்தோ பவ -என்று
விரோதி வர்க்கத்தை பஸ்மம் ஆக்கி தன்னை ரஷித்து கொள்ள வல்ல சக்தி உண்டாகியும் –
ஸ்வ யத்னத்தாலே விரோதிகளைத் தள்ளி தன்னை நோக்கி கொள்ளப் பார்த்தாலும்-(இச்சை இருந்தாலும் )
நோக்கிக் கொள்கைக்கு ஈடான சக்தி தனக்கு இல்லாமையும் என்கை-

———————————————-

சூரணை -82-

பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் –

ஏவம் பூதர் ஆனவர்கள் செய்தவை தன்னை அருளி செய்கிறார் –

லஜ்ஜை விடுவது சக்தியை விடுவதை விட ஏற்றம் அன்றோ -விடுகை முக்கியம் -ஸூய வியாபாரம் விட்டது அதிலும் முக்கியம் –
நாயகன் சக்தியையே நோக்கும் -பிராட்டி ஸூ பாரதந்தர்ய ஹானியைப் பிறப்பிக்கும் -சக்தி தியாகம் -பர சக்தி ஆலம்பன ஸூ சகம் –
பெருமாளுக்கு ஏற்புடையவள் -சொல்லினால் சுடுவேன் -வில்லுக்கு மாசு வரும் என்று விட்டாள்-
ஆபத்சகன் கிருஷ்ணன் என்று விசுவசித்து- திரௌபதி சபா மதியத்தில் ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான வெட்கத்தை விட்டாள் –
ஸூவ ஸ்வபாவ தியாகம் ஸூ விசுவாச விசேஷ பலமாய் வந்தது இவளுக்கு
ஜாதி யாதிகளில் ஸ்ரேஷ்டரான -வர்ணாஸ்ரம வாசனா ருசிகள் உடன் விட்டார் –
பர சக்தியையே நோக்கி ஸூவ சக்தி விடுகையும் -பர ரக்ஷண விசுவாசம் கொண்டு ஸூவ ஸ்வ பாவம் விடுகையும் –
பர வியாபாரத்தை பற்றி நம் வியாபாரத்தை விடுகையும்
நாயகனை நம்பினால் நயனம் நம்மது இல்லையே அஹம் நயாமி மத் பக்தன் என்னுமவன் தானே

ஸ்வ சக்தி விடுகை யாவது -நாயகரான பெருமாள் ரஷிக்கும் அத்தனை அல்லது
நம்முடைய சக்தியால் நம்மை ரஷித்து கொள்ளுகை நம் பாரதந்த்ர்யத்துக்கு
நாசகம் என்று -ஸ்வ சக்தியை கொண்டு கார்யம் கொள்ளாது ஒழிகை –
அசந்தேசாத்து  ராமஸ்ய தபசஸ் சானுபாலநாத்ந த்வாம் குர்மி தசக்ரீவ பாசமா பச்மார்ஹா தேஜஸா என்றாள் இறே–
(ராமன் இடம் அப்படி செய்தி வர வில்லை -தபஸ் கைக் கொண்டவள் -பாரதந்தர்யம் ஆகிய தபஸ் உண்டே இவளுக்கு –
12-வித தபஸ் -நியாசம் மிக உயர்ந்தது நாராயண உபநிஷத் சொல்லும்- -ஸூ சம்பந்த தியாகம் பர சம்பந்தம் விசுவாசித்து இருப்பதே நியாசம் —
ஸூ ரக்ஷண அனர்ஹத்வ ரூப -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி -தானே பாரதந்தர்யம் –தேஜஸால் எரிக்க முடியும் -ஆனாலும் செய்ய வில்லை –
இந்த இரண்டு காரணங்களால் -யாக தீக்ஷையால் விசுவாமித்திரர் தம் சக்தியைக் காட்டவில்லை யாக சம்ரக்ஷணத்தில் )

லஜ்ஜையை விடுகையாவது -துச்சாசனன் சபாமத்யே துகிலை உரிக்கிற அளவில் –
லஜ்ஜா விஷ்டையாய் கொண்டு -தானொரு தலை இடுக்குகை அன்றிக்கே -இரண்டு கையும் விடுகை –
பேர் அளவு உடையாள் ஆகையாலே- (நிரதிசய ஞானம் உடைய –ராமன் இளைய பெருமாள் திரு உள்ளம் அறிந்தவள் )-பிராட்டிக்கு –
பெருமாளே ரஷகர் -என்று விஸ்வசித்து ஸ்வ சக்தியை விட்டு இருக்கலாம் -அத்தனை அளவு இன்றிகே இருக்க செய்தே –
மகாஆபத்து தசையிலே–(சீதைக்கு வந்தது ஆபத்து -இவளுக்கு மகா ஆபத்து -) –
இவ்வளவிலே கிருஷ்ணனே ரஷகன் -என்று மகா விசுவாசம் பண்ணி –
மகா சபா மத்யே இவள் லஜ்ஜையை விட்டது இறே அரிது –

திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் -அதாவது –
ஸ்வ ரக்ஷண ஹேதுவான ஸ்வ வியாபாரங்களை விட்டான் –
ஒரு சேவகனுடைய நாயை -ஒரு சேவகன் அடிக்க -அவன் அது பொறாமல் –
அடித்தவனோடே எதிர்த்து பொருது -அவனையும் கொன்று -தானும் குத்தி கொள்வதாக-( நாயைப் பிரிந்து இருக்க மாட்டாமல் )
இருக்கிற படியைக் கண்டு -ஒரு சூத்திர சேதனன் தந் அபிமானத்தில் ஒதுங்கினது என்னும்
இவ்வளவுக்காக தன்னை அழிய மாறின படி கண்டால்-பரம சேதனன் அபிமானத்தில் ஒதுங்கினால்
அவன் என் படுமோ என்று -ஸ்வ ரக்ஷண வியாபாரங்களை (அடைய முழுவதும் ) விட்டு அந்த நாயோபாதி யாகத் தம்மை அனுசந்தித்து கொண்டு
அப்போதே வந்து திரு கண்ண மங்கையில் பத்தராவி திரு வாசலில் கைப் புடையிலே புகுந்து கண் வளர்ந்தார் என்று பிரசித்தம் இறே-

( பகவான் கர்த்தா -நம் காவல் அவனால் செய்யப்படும் -சக்தி லஜ்ஜை வியாபாரம் விட்டமை -ஒன்றுக்கு ஓன்று ஸ்ரேஷ்டம்-
கிருஷ்ணனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களை நேராக கண்டவள் அன்றோ திரௌபதி –
விசுவாசம் பிறக்கலாம் -ஷூத்ர சேவகன் ஷூத்ர ஐந்து கண்டு அனுமானித்து இவருக்கு விசுவாசம் —
அதிருஷ்டம் பெற்று கொடுக்கும் வியாபாரங்களை விட வேண்டும் என்றபடி -உபாய பாவம் துளியும் கூடாதே —
வியாபாரம் விட்டது உபாய பரமான வியாபாரங்கள் என்றது போலே –
நாயேன் வந்து அடைந்தேன் -உயர்ந்தவர் கிஞ்சித் உண்டே -நாயைப் போலே அனுசந்தித்து -திரு வாசலிலே கைக் புடையில்
நாய் படுக்கும் அத்தை பார்த்து இவர் நினைவு -கிருஹ பாலநம் நாய் போலே கிருஹ த்வார சயனம் இவரது -என்றவாறு
ப்ராணான் பரித்யஜ்ய ஹரிகி ரஷிதவ்ய -பிராணனை விட்டாவது காப்பாற்ற வேண்டும் -அது அர்த்தம் இல்லை –
பிராணனை விட்டுத் தான் ரஷிக்க வேண்டும் என்றாரே பெருமாள் -)

—————————————-

சூரணை-83-

பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும்
அடுகிற சோறும் உண்ண வேணும் என்னுமா போலே –
காட்டுக்கு போகிற போது-இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு –
அடிமை செய்ய வேணும் –
எல்லா அடிமையும் செய்ய வேணும் –
ஏவிக் கொள்ளவும் வேணும் -என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு -காட்டில் தனி இடத்தில் –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கின படியால் –
ஒப்பூண் உண்ண மாட்டாதே –
ஒரு திருக் கையாலே திரு வெண் குற்றக் கொடையும் –
ஒரு திருக் கையாலே திரு வெண் சாமரத்தையும் –
தரித்து அடிமை செய்தார் –

இனி உபேய அதிகாரிகளில் பிரதானரான -இளைய பெருமாள் படியை விஸ்தரேண அருளி செய்கிறார் –

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவன் -நான் என் தந்தையை இழக்க வில்லை-இவன் இருக்கவே என்றாரே பெருமாளும் –
அழும்-தொழும் ஸ்நேஹ பாஷ்ப அஞ்சலியோடே ருசிர சானுக்களிலே கூவிக் கொள்ளும் பிரியா அடிமைக்குச் சரணே சரண் என்று
வாழும் வில்லும் கொண்டு பந்துவும் பிதாவும் அவரே என்கையும் –ஆச்சார்ய ஹிருதயம் –சூர்ணிகை -127-
அட்ட சோறு-ஆன உணவு / அடுகிற சோறு-ஆகும் உணவு / இங்கு த்ருஷ்டாந்தம் கைய்ங்கர்யத்தில் அபி நிவேசம் காட்ட –
உபேய அதிகாரி க்ருத்யம் -அருளிச் செய்யும் பொழுது ஆதி சேஷன் -இளைய பெருமாள் என்பதால் முதலிலே அருளிச் செய்கிறார் –
நாட்டுக்கு கட்டின காப்பு –பட்டாபிஷேகம் -வன வாசத்துக்கு மாற்றிய பெருமாள் -பித்ரு வசன பரிபாலனராய் -கங்கணம் கட்டி என்றவாறு
ரக்ஷணம் தீக்ஷை –கொடிய காட்டுக்கு -முகம் மலர்ந்து போகும் பொழுது -அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதே –
சிறு தொட்டில் இணை நீங்கும் படி ஸூ நிக்தரான இளைய பெருமாள் -பிரிந்தால் தரியாமையை முன்னிட்டு பின் சென்று
பிரியில் இலேன் -அக்குளத்தில் மீன் -போலே
முஹூர்த்தம் கூட ஜீவிக்க மாட்டோம் -தண்ணீர் பசை இருக்கும் வரை தானே -கை விட்டார் என்ற எண்ணம் உறைக்கும் வரை தான் ஜீவனம் –
கைங்கர்ய நிஷ்டனுக்கு பிரிந்தால் தரியாமை லக்ஷணம் –அப்புறம் அடுத்த பிரார்த்தனை -அஹம் சர்வம் கரிஷ்யாமி –
சேஷத்வம் நிலை நிற்க அடிமை -சேஷ விருத்தியான கைங்கர்யம் –சேஷிக்கு அபிமதமான எல்லா கைங்கர்யம் -செய்ய வேண்டும் —
தூங்கும் பொழுதும் மிதுனத்தில் கைங்கர்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை
இதுக்கும் மேலே முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் -ஸ்வதந்த்ர விஷம் தட்டாத படி –
சுக்ரீவ மாருதி விபீஷணன் திருவடி புண்ய பாதம் சஞ்சாரத்தால் -சோஷணம் உலர்த்த-சுக்ரீவன் -ஸூ ர்ய குமாரன் – –
தஹிக்கப் பட்டு மாருதியால் -வாயு குமாரன் அக்னியும் வாயு குமாரன் –நனைந்து விபீஷணன் நெக்கு உருகி – –
ராவணன் பின் பிறந்தான் கிடைப்பானா என்று பெருமாள் நிற்கும் நிலை கண்டு நீராக உருக கண்களால் பருகினார் பெருமாள் –
திரு படை வீட்டிலே -புண்யாவாசனம் இப்படி -பெருமாள் நாச்சியார் உடன் நாடு களிக்கப் புக்கு -புகுந்த போது
தாமேயாகி அடிமை செய்து கைங்கர்யம் அபி நிவேசம் பெருக்கி -தொடர்ந்து -ஸ்ரீ பரதாதிகள் உடன் ஒப்பூண் உண்ண மாட்டாமல் –
மற்றத் திருக் கைக்கு கூறு கொடுக்க மாட்டாத-சத்திரம் சாமரங்களை ஒரு கையாலே பிடித்து – -தம்முடைய ஆகாராந்தரம் சென்றால் குடையாம்
திரு வெண் சாமரத்தையும்-இரண்டையும் ஏந்தி -சேதன சமாதி -கத்ய த்ரயம் -அனுரூபமாய் இருக்கும் இவை நித்ய ஸூரிகளே குடையும் சாமரமும் –
ஆயுத ஆழ்வார் என்கிறோமே -பிரயோஜன கர்த்தாவாக இவர் நின்று தரித்து -பலர் செய்யும் அடிமையை ஒருவரே செய்தார்

அதாவது –
பசியராய் இருப்பவர் -தங்கள் பசியின் கனத்தாலே -இதுக்கு
முன்பு ஆக்கின சோறும் -இப்போது ஆக்குகிற சோறும் -எல்லாம் நாமே உண்ண வேணும்
என்று மநோ ரதிக்குமா போலே -பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது –
பால்யாத் ப்ரப்ருதி சூசநிக்தரான இளைய பெருமாள் -படை  வீட்டில் நின்றும் புறப்படுவதற்கு
முன்பே கூடப் போவதாக உத்யோக்கிற படியை கொண்டு -நீர் நில்லும் -என்று நிர்பந்தித்து அருள –
குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் நேக வித்யதே க்ருதார்த்தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்பதே -என்றும் —
கங்கை கடந்து  ஏறின அன்று மீள விடுகைக்கு உறுப்பாக அவர் அநேகம் அருளிச் செய்ய-
ந ச சீதா த்வயா ஹீனா ந சாஹமபி ராகவ -முகூர்த்தமபி ஜீவாவோ ஜலான்  மத்ஸ்யா விவோத்ருத்ருதவ் -என்றும் சொல்லுகையாலே –
பிரியில் தாம் உளராக மாட்டாமையை முன்னிட்டு -குருஷ்வ மாம் -என்று அனந்தரத்தில்-
தனுராதாய சகுணம் கனித்ர பிடகாதர அக்ரதாஸ் தே கமிஷ்யாமி பந்தா நமனு தர்சயன் ஆஹாரிஷ்யாமி தே நித்யம்
மூலாநிச பலாநிச வந்யாணி யாநி சாத்யணி ச்வஆகாராணி தபச்வினாம் -என்கையாலே
ஸ்வ சேஷத்வ அநு குணமாக -அடிமை செய்ய வேணும் -என்றும்
தத் அனந்தரத்திலே-பவாம்ச்து சஹா வைதேஹ்யா கிரிசா அனுசூ ரம்ச்யதே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ச்வபதச்ச ச -என்கையாலே —
அது தன்னிலும் இன்ன இன்னடிமை என்றுஒரு நியதி இன்றியே எல்லா அடிமையும் செய்ய வேணும் –
பஞ்சவடியில் எழுந்து அருளின  போது -நீரும் நிழலும் வாய்த்து இருப்பதொரு -பிரதேசத்தை பார்த்து -பர்ண சாலையை சமையும் என்ன-
ஏவ முக்தச்து ராமேன லஷ்மணஸ் சம்யதாஞ்சலி சீதா சமஷம் காகுத்ஸ்மிதம் வசதம பிரவீத் -என்று
நம் தலையிலே ச்வாதந்த்ர்யத்தை வைத்த போதே -பெருமாள் நம்மை கை விட்டார் என்று
விக்ருதராய் -பிராட்டி முன்னிலையாக கையும் அஞ்சலியுமாக நின்று –
பரவா நஸ்மி காகுஸ்த த்வயி வர்ஷசதம் ஸ்திதே ஸ்வயந்து ருசிரே தேச  க்ரிய நாமிதி மாம் வத-என்கையாலே அடிமை செய்யும் அளவில் –
ஸ்வா தந்தர்யம் ஆகிற தோஷம் கலசாதபடி -உசித கைங்கர்யங்களிலே ஏவிக் கொள்ள வேணும் என்று -பிரார்த்தித்தார் -என்கை –
படை வீட்டில் -இத்யாதி -திருப் படை வீட்டில் எழுந்து அருளி வந்து புகுந்து திரு அபிஷேகம்
பண்ணி அருளின போது -தம்மோடு கூட அடிமை செய்கைக்கு ஒருவரும் இல்லாத ஒரு
தனிக் காட்டில் -தாமே அடிமை செய்து -கைங்கர்ய அபி நிவேசத்தை பெருக்குகையாலே –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கினவன் ஒப்பூண் உண்ண மாட்டாதவன் போலே –
ஸ்ரீ பரதாழ்வான் தொடக்கமனவர்களோடு  ஒக்க தாமும் ஒரு அடிமை செய்து நிற்க மாட்டாதே —
திரு வெண் கொற்றக் குடையை எடுக்கை -திரு வெண் சாமரம் பரிமாறுகை -ஆகிய இரண்டு  அடிமையை -ஏககாலத்தில் செய்தார் -என்கை –
இந்த விருத்தாந்தம் தான் -ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை –
சத்ர சாமர பாணி ஸ்து லஷ்மண அனுஜகாமாகா-என்கிறது ஸ்ரீ ராமாயணம் அன்றோ என்னில் –
காட்டுக்கு எழுந்து அருளுவதற்கு முன்னே திரு அபிஷேக அர்த்தமாக அலங்கரித்து –
தம்முடைய திவ்ய அந்தபுரத்தில் நின்றும் புறப்பட்டு -சக்கரவர்த்தி திரு மாளிகையை நோக்கி
திரு தேரில் ஏறி பெருமாள் எழுந்து அருளின போது -இளைய பெருமாள் செய்த விருத்தாந்தமாக
திரு அயோத்யா காண்டத்தில் சொல்லப் பட்டது ஆகையாலே -இவ்விடத்துக்கு அது சேராது –
ஆனால் இவர் என் கொண்டு இப்படி அருளி செய்தார் என்னில் -பாத்ம புராணம் பிரக்ரியையாலே அருளி செய்தார் –
அத தஸ்மின் தினே புன்யே சுப லக்னே சுன்விதே
ராகவச்ய அபிஷேகார்த்தம்  மங்களம் சக்ரிரே ஜனா -என்று தொடங்கி பரக்க
சொல்லிக் கொண்டு வந்து -மந்திர பூத ஜலைஸ் சுத்தைர் முநயஸ் சம்ஸ்ரித வ்ரதா-
ஜபந்தோ வைஷ்ணவான் சூக்தான் சதுர்வேத மயான் சுபான்
அபிஷேகம் சுபஞ்ச்சக்று காகுஸ்தம் ஜகதாம் பதிம்
தஸ்மின் சுபதமே லக்னே தேவ துந்துபயோ திவி
நிநேது புஷ்ப வர்ஷாணி வவர்ஷூச்ச சமந்ததா
திவ்யாம்பரைர்  பூஷணைச்ச திவ்யகாந்த்  தானுலே பனை
புஷ்பைர்  நானா விதர் திவ்யர் தேவ்யா சஹா ரகூத்வஹா –
அலங்க்ருதச்ச சுசுபே முநிபிர் வேதபாரகை
சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவான் லஷ்மணஸ் ததா
பராச்வே  பரத சத்ருனவ் தாளவ்ருந்தம்  விவேஜது
தர்ப்பணம்  ப்ரதவ் ஸ்ரீ மான் ராஷசேந்தரோ விபீஷண
ததார பூர்ண கலசம் சூக்ரீவோ வானரேச்வர
ஜாம்பவாம்ச்ச  மகாதேஜோ புஷ்பமாலாம் மநோ ஹரம்
வாலி புத்ரஸ்து தாம்பூலம்  ச கர்ப்பூரம்  தாத்தாவ் பிரியாத்
ஹனுமான் தீபிகாம் திவ்யம்  சூஷேணச்து த்வஜம் சுபம்
பரிவார்யா  மகாத்மானாம் மந்த்ரினஸ் சமுபாசிரே -என்று
பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் நாற்பத்து ஒன்பதாம் அத்யாத்தில்-சொல்லப் பட்டது இறே-
சத்ரஞ்ச சாமரம் திவ்யம் த்ருதவான் -என்றது தோற்ற இறே –
திரு வெண் கொற்றக் குடையும் திரு வெண் சாமரத்தையும் தரித்து -என்று அருளிச் செய்தது –

ஸ்ரீ ராமாயணத்தில் யுத்த காண்டம் சத்ருக்கனன் பிடித்ததாக சொல்லி —
சத்ர- எடுத்துக் கை நீட்டி கொடுப்பதாக -உள்ளது -த்ருதவான்-இல்லையே –

——————————————————–

சூரணை -84-
பெரிய உடையாரும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
உடம்பை உபேஷித்தார்கள் –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று –

இளைய பெருமாளை தனித்து அருளிச் செய்து -ஏற்றத்துக்காக இங்கே மூவரையும் -/
பிராணனை விட்டு கைங்கர்யம் செய்த இவர்கள் ஸ்ரேஷ்டம் என்றவாறு —
இம் மூவரில் சிந்தயந்தி ஸ்ரேஷ்டம் -தானே தேகம் போனதே இவளுக்கு /
மிதுன விஸ்லேஷத்தில் தம்மை அழிய மாறி ரஷித்த பெரிய உடையாரும் -மங்களா சாசனம் பண்ணி /
சேஷிக்கு கைங்கர்யம் செய்ய உபகரணம் உபேக்ஷித்த இவர்கள்
ப்ரேம பாரவசயத்தால் -அழிவுக்கு இட்ட சரக்காக்கி –
பர ப்ரஹ்மம் நினைத்து தத் பவதி அபேதி ஐக்கியம் அடைந்து பாவனை நினைத்து அவனாகவே ஆகி
ஆடிப்பாடி -பிரகலாதன் நம்மாழ்வார் அநுகாரம் –
தத் பாவம் -அவனாக நினைத்துக் கொண்டு -இந்திரனும் மாம் உபாஸ்வ-/அந்தர்யாமி /
சிந்தையந்தியும் அப்படியே பர ப்ரஹ்ம ஸ்வரூபம் –
தன்னடையே போனது -உபேக்ஷித்து விட வேண்டாத படி —
ப்ரேமம் ருசி இருந்தால் தானே கைங்கர்யம் சித்திக்கும் இதுவே அதிகாரம் –
கிருஷ்ண விரக ஸ்நேஹம் ஆத்மாவை தாண்டி எலும்பை உருக்குவதற்கும் மேலே –
சதம் பித்ருசமம் -பெருமாள் தானே பெரிய உடையாரைப் பற்றி அருளிச் செய்ய -சிறகுக்கு கீழே வர்த்திக்க ஆசைப்பட்டு வந்து இழந்தேன் /
உடையார் பெருமாளை உடைய சக்கரவர்த்தி- இவர் பெரிய உடையார் –

பிரியில் தரியாமை -இளைய பெருமாள் -உடம்பை விடுகை அரிது /
தாம் ஒருவர் மட்டு இல்லாமல் குடும்பமாக உடம்பை விட்டது அரிது –
உடம்பு தன்னடையே விட்டது அரிதிலும் அரிது -காலத்தால் பிந்தியதாய் இருந்தாலும் சிந்தையந்தி விருத்தாந்தம் இறுதியில்
இதனாலே இளைய பெருமாளுக்கு பின்பு அருளிச் செய்தார்

பெரிய உடையாரும்  பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை உபேஷித்தார்கள் –
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை பெரிய உடையார் -என்று ஆய்த்து நம் முதலிகள் அருளி செய்தது –
இவர்தாம் -பஞ்சவடியில் பெருமாள் எழுந்து அருளி -தம்மை அங்கீகரித்து –
இஹா வத்ச்யாமி சௌமித்ரே  சார்த்த மேதென பஷிணா-என்றவன்று தொடங்கி
திருவடிகளுக்கு மிக்கவும் பரிவராய் -பெருமாள் எழுந்து அருளி இருக்கிற திவ்ய ஆஸ்ரமத்துக்கு
ஆசன்னமாக வர்த்தியா நிற்க செய்தே -அசிந்திதமாக ராவணன் வந்து பிராட்டியை பிரித்து கொண்டு போக-
அப்போது  பிராட்டி இவரை ஒரு வ்ருஷத்தின் மேல் கண்டு  -என்னை இவன் இப்படி
அபஹரித்து போகா நின்றான் -என்று இவர் பேரை சொல்லி கூப்பிட -உறங்குகிறவர் இந்த
ஆர்த்த த்வனியை கேட்டு உணர்ந்து -ராவணன் கொண்டு போகிற படியை கண்டு –
உனக்கு இது தகாது காண்-என்று தர்ம உபதேசம் பண்ணின அளவில் அவன் கேளாமையால்-
நம் பிராணனோடே இது கண்டு இருக்கக் கடவோம் அல்லோம் -யுத்தம் பண்ணி மீட்குதல் –
இல்லையாகில் முடிதல் செய்ய கடவோம் -என்று அத்யவசித்து -அதி பல பராக்ரம் ஆகையாலே
அவனோடே மகா யுத்தத்தை பண்ணி -அவன் கையாலே அடி பட்டு -விழுந்து தந் திரு மேனியை விட்டார்  -இறே

பிள்ளை திரு நறையூர் அரையர் ஸ குடும்பமாக -திரு நாராயண புரத்தில்
வேத நாராயண பெருமாளை -சேவிக்க சென்று புகுந்த அளவில் -பர சமயிகள்
அந்த கோவிலிலே அக்னி பிரஷேபத்தை பண்ணி உள்ளு நின்றார்கள் எல்லாரும்
புறப்பட்டு ஓடி போகச் செய்தே -அந்த எம்பெருமான் திரு மேனிக்கு அழிவு வருகிற படியை கண்டு
சகிக்க   மாட்டாதே பிரேமாதிசயத்தாலே -தாமும் ஒக்க முடிவதாக அத்யவசித்து இவர் நிற்க்கையாலே –
பிள்ளைகளும் இவரை விட்டு போகோம் என்று நிற்க -அவர்களும் தாமும் கூடுவதுக்கு உள்ளே நின்று
திரு மேனியை விட்டார் என்று பிரசித்தம் இறே –

சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று -அதாவது –
காசித்  ஆவச தச்யாந்தே  ச்தித்வ த்ருஷ்ட்வா  பஹிர் குரும்
தன்மயத்வேன கோவிந்தம்  தத்யவ் மீலித லோசன
தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததாததப்ராப்தி
மகா துக்க விலீ நாசேஷ பாதகா –
சிந்தயந்தீ ஜகத்சூதிம்  பர ப்ரஹ்ம   ஸ்வரூபினம்
நிருச்ச்வா சதயா முக்திம் கதாநயா கோப கன்யகா-என்கிறபடியே
திரு குரவை யினன்று -திருக் குழலோசை கேட்டு -ஸ்ரீ பிருந்தாவனம் ஏறப்
போவதாக புறப்பட்ட அளவிலே -குரு தர்சனத்தால் போக மாட்டாமல் நின்று –
கிருஷ்ணனை த்யானம் பண்ணி -தத்கத சித்தை யாகையாலே வந்த நிர்மல சுகத்தாலும் –
தத் அபிராப்தி நிபந்தனமான நிரவதிக துக்கத்தாலும் -ப்ரஷீண அசேஷ புண்ய பாபையாய்-
தத் ஸ்மரணம் செல்லா நிற்க -தத் பிராப்த்ய அலாப க்லேசத்தால் தரிக்க மாட்டாமல்
மூச்சு அடங்குகையாலே -இவளுக்கு தான் உபேஷிக்க வேண்டாதபடி
தேஹம் தன்னடையே விட்டு கொண்டு நின்றது -என்கை –

——————————————-

சூரணை-85
உபாயத்துக்கு
சக்தியையும்
லஜ்ஜையையும்
யத்னமும்
குலைய வேணும் —
உபேயத்துக்கு
பிரேமமும்
தன்னை பேணாமையும்
தரியாமையும்
வேணும் —

ஆக -இப்படி நிதர்சன பூதர் படிகளை சொல்லி  -இனி இவர்களைப் போலே இருக்க வேணும்
என்றதின் கருத்தை அருளிசெய்கிறார் –

தத் தத் கந்த ஸ்பர்சம் இல்லாத படி இருப்பதே கர்தவ்யம் -உபாய உபேய வைலக்ஷண்யம் நினைத்துக் கொண்டே –
அந்த மஹாத்ம்யத்தாலே இந்த அதிகாரங்களை கொள்ள வேண்டும்

அதாவது –
உபாயத்துக்கு அதிகாரியாம் போது –
தன்னுடைய ரக்ஷணம் தானே பண்ணிக் கொள்கைக்கு உறுப்பான சக்தியும் –
தான் பரிகிரஹிக்கிற உபாயத்துக்கு விரோதிகள் ஆனவற்றை விடும் அளவில்
நாட்டார் சிரிக்கும் அதுக்கு கூசும் லஜ்ஜையும் –
தந் பாரதந்த்ர்ய விரோதியான ஸ்வ யத்னமும் கை விட வேணும் —

உபேயத்துக்கு-அதிகாரி ஆகும் போது
சேஷியை பிரியாது நின்று -எல்லா அடிமையும் அவன் ஏவின படி செய்ய
வேணும் என்ற பிரேமமும் –
அத் தலைக்கு ஒரு தீங்கு வரில் அது கண்டு ஆற்ற மாட்டாமல்
தந் உடம்பை உபேஷிக்கையும் –
தத் விக்ரஹ அனுபவ அலாபத்தில் தரித்து இருக்க மாட்டாமல் மூச்சு அடங்கும்படி யாகவும்
வேணும் என்றபடி –
ஆகையாலே அவர்களை போலே இருக்கை யாவது -இவ் வதிகாரங்களை உடையார் ஆகை-என்று கருத்து –

—————————————————-

சூரணை-86-

இவனுக்கு வைதமாய் வரும் அது இறே
த்யஜிக்கலாவது –
ராக ப்ராப்தமாய் வருமது
த்யஜிக்க ஒண்ணாது இறே –

விஷ்ணோ கார்யம் சமுதிச்ய தேக த்யாகோ
யதா கருத ததா வைகுண்ட மாசாத்ய முக்தோ பவதி மானவே -என்று
ஆக்நேய புராணத்திலும் —
தேவ கார்ய பரோ பூத்வா ஸ்வாம் தநும் யா பரித்யஜேத் சாயாதி  விஷ்ணு
சாயுஜ்யமபி பாதக க்ருன்  நர -என்று வாயவ்யத்திலும் –
ரங்கநாதம் சமாஸ்ரித்ய தேஹ த்யாகம் கரோதிய
தஸ்ய வம்சே ம்ருதாஸ் சர்வே  கச்சந்த்யாத்யந்திகம் லயம் -என்று வாம நீயத்திலும் –
சொல்லுகையாலும் -விசேஷித்து ஆச்வமேதிக பர்வதத்தில் -வைஷ்ணவ தர்ம சாஸ்த்ரத்தில்
பஞ்சம அத்யாயத்திலே -அக்னி பிரவேசம் யச்சாபி குருதே மத்கதாத் மனா ச யாத்யக்னி
ப்ரகாசசேன வ்ரஜென் யானென மத க்ருஹம் -என்று பகவான் தானே அருளிச் செய்கையாலும் –
இப்படி மோஷ சாதனமாக சொல்லப் படுகிற -பகவத்தர்தமானே ஸ்வ தேக தியாகம்
அநந்ய சாதனான இவனுக்கு த்யாஜ்யம் அன்றோ –
பிரபன்னரராய் இருக்கிற பிள்ளை  திரு நறையூர் அரையர் இத்தை அனுஷ்டிப்பான் என் -என்ன
அருளிச் செய்கிறார் –

திருமேனியை வலிய த்யஜிக்கை சாஸ்த்ர விருத்தம் ஆகாதோ என்ன —வைதம் -சாஸ்த்ர விதிப்படி –ஆத்மஹத்தி கூடாதே –
பகவத் பிரேமானந்தனான இவனுக்கு –சரீர தியாகத்தை -த்யஜிக்கலாவது –
விதி பிரயக்தம் -மூலமாகவோ -கோபாதி -கோபம் தாபம் இத்யாதி -மூலமாகவோ
நிஷித்தம் -சாஸ்திரம் விலக்கிய-சரீர தியாகம் -த்யஜிக்க வேண்டும் -சரீரம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றபடி –
பண்ணில் சாஸ்திரம் மீறிய அதிக்ரம பீதி உண்டாகும்
ப்ராப்த விஷய ராக ப்ராப்தமாய் -ஆசையால் -கண்ட இடத்தில் ஆசை இல்லை –
அதனால் ப்ராப்த விஷய ஆசை -ஏற்புடையது -விதி அனுசாரம் பண்ண ஒட்டாதபடி காதல் கட்டுக்கு அடங்காமல் –
மடல் எடுப்பது -போல்வன –வாசவத்தை சீதை போல்வாரை புகழ்ந்தது போலே –
ராக ப்ரேரித்த-ந சாஸ்திரம் நைவ க்ரம-சரீர தியாகம் –வருமத்தில் கொத்தை இல்லையே –
ஸூ தோஷத்தால் வருமதுவே தோஷம் -பிராப்த ராகத்தால் வருமத்தில் தோஷம் வராதே –
தேச பக்தியால் வாஞ்சி நாதன் உயிர் விட்டாரே -கொண்டாடுகிறோம் -தியாகி பட்டம் வேறே –
பொன்னாச்சியார் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பாகவத கைங்கர்யம் தோடு -புரண்டு படுக்க —
அசேதனம் போலே படுத்து இருக்க வேண்டும் -சைதன்யம் காட்டுவது தப்பு -திருட்டு தப்பு இல்லையே அங்கே-
பாகவத ததீயாராதனம் பண்ணும் ஆசையால் அன்றோ –
மாம் அநாதரித்து தர்மம் செய்தாலும் பாபமே கிட்டும் -பிரமாணம் -/தர்மம் சாஷாத் அவனே தானே –
பக்தியுடன் தர்ம கார்யம் செய்ய வேண்டும் -மத் ப்ரபாவத்தாலே –
பண்ணப்பட்டது பாபமா புண்ணியமா என்பது இல்லை -இவர் விஷயமே முக்கியமே –
உலகில் கிரியைக்கு மாறி -அவன் உடன் சம்பந்தம் பட்டவை எல்லாம் குணமே -கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -சீறி அருளாதே -/
தேக தியாகத்தால் -விஷ்ணு காரியமாக மோக்ஷம் -பல பிரமாணங்கள்-/ வம்சத்தில் உள்ளாருக்கும் மோக்ஷம் /
வாமன புராணத்திலும் ஸ்ரீ ரெங்கநாதன் பற்றி உண்டே
பண்ணினது -உபாயாந்தரம் ஆகாதோ என்றது மேலே சங்கை –
சாஸ்த்ர வாக்கியங்கள் பார்த்தால் -நிஷ்க்ருஷ்ட வேஷம் -பார்த்தால் -குற்றம் வாராதோ –
விசிஷ்ட வேஷ குற்றம் வாராது என்பதற்கு காட்டிய பிரமாணங்களால் நிஷ்க்ருஷ்ட வேஷத்துக்கு குற்றம் வருமே -என்னில் –
இதுக்கும் ராக பிராப்தம் -என்பதால் –
போக்யமாயும் பிராப்தமுமான பகவத் விஷயத்தில் –அபி நிவேசத்தால் வருமது-கஷ்டப்பட்டாவது விட முடியாதே –
ஆகவே தேக தியாகத்தை கை விட வேண்டாம் -பிரபன்னனுக்கு -விசிஷ்ட வேஷம் தோஷம் வாராது என்றது
அவன் விஷயமாக பண்ணினால் சரி -அதுக்கு பிரபன்னனுக்கு கூடாதே என்பதற்கும் நிஷ்க்ருஷ்ட விஷத்துக்கும் குற்றம் இல்லை என்கிறார் –
இத்தை பண்ணினது மோக்ஷம் போவதற்காக இல்லையே -பொறுக்க முடியாமல் அன்றோ தேக தியாகம் –
இந்த புராண வசனங்களில் தேக தியாகம் பக்தி பிரஸ்தாபம் இல்லையே -பக்திக்கு அங்கமாக செய்வதாக சொல்ல வில்லையே —
அடுத்து பல சம்பந்தம் ஸ்ருதமாகையாலே-மம க்ருஹம் வருகிறான் -என்று பலத்துடன் சேர்ந்தே சொல்வதால் -ஸ்வதந்த்ர கார்யம் ஆகிறதே
இது கர்மம் -அவருக்காக விடுகிறோம் ஞானம் -இவற்றுக்கு உபாயம் இல்லையே –
கர்மா ஞானம் ஆத்மசாஷாத்காரம் தானே -சாஷாத் மோக்ஷம் கிடையாதே
கர்மா ஞானங்களுக்கும் ஸ்வ தந்த்ர சாதனம் -ஜனகன் கர்மத்தால் ஜடபரதர் ஞானத்தால் பெற்றதாக உண்டே –
கர்ம ஞான பக்தி அன்வயம் -என்று உண்டே –
மூன்றுமே அங்கி மற்றவை அங்கங்கள் என்றவாறு உண்டே –
ஸ்வ தந்த்ர உபாயம் இருக்குமே -பூர்வ பக்ஷம் வாதங்கள் இவை –
அதிருஷ்ட சாதனம் -த்யாஜ்யம் அன்றோ -ஸ்வரூப ஹானி / நிஷ்ட ஹானியும் வருமே -சங்கை
விதித்தித்தவை விட முடியாதே –நித்ய கர்மத்தில் -/-2-ராக ப்ராப்தத்தில் சாஸ்திரம் கூடாது என்றாலும் விட வேண்டும் /-
3-இங்கே தத் விபரீதம் கொள்ளலாமோ என்னில் –
மோக்ஷம் அதிருஷ்ட -சாதனம் -பாரதந்தர்ய ரஹிதனுக்கு பிராப்தம் -தேஹ தியாகம் பண்ணுவது ஒரு யத்னம் தானே –
பகவத் அத்யந்த திரு உள்ளம் படி நடப்பதே பிராப்தம் –
மற்றை இருவரையும் சொல்லாதது -பெரிய உடையார் யுத்தத்தில்-பெருமாள் கச்ச என்று அனுப்பியதாலும் –
தேக தியாகம் குற்றம்ந்தை இருந்தாலும் பெருமாள் போக்கினதாக கொள்ளலாம் —
சிந்தையந்திக்கு தன்னடையே போனதாலும் விரோதம் இல்லை -/ தாமே வேணும் என்று பிராணனை விட்டார் –
அக்னி பிரவேசம் உபாயம் தானே -குற்றம் குற்றமே என்னில் –
பிராப்தமுமான என்றது உசிதமுமான-ராக பிராப்தம் –பெருமாளை என்ன ஆனாலும் விடாதே -உசிதம் தானே –
இங்கு ராக பிராப்தம் உசித விஷயத்தில் தானே -விட முடியாதே –
வழி அல்லா வழி யாகிலும் பெறுவோம் மடல் தூது அநுகாரம் பிரணய ரோஷங்கள்
காமன் சாமானை தொழுவது எல்லாம் உசித விஷய கர்தவ்யங்கள் போலே –

அதாவது-
இதம் குர்யாத் -என்று ஒரு விதி பிரயுக்தமாய் வருமது இறே –
பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இவனுக்கு கை விடல் ஆகாது
அங்கன் இன்றிக்கே தன் விரஹத்தால் ஆற்ற போகாதபடி
போக்யமுமாய் பிராப்தமுமான விஷயத்தில் ராக பிரயுக்தமாய்
வருமது வருந்தியும் கை விடப் போகாது இறே -என்கை–

————————————

சூரணை -87-
உபாயத்வ அநு சந்தானம்
நிவர்தகம் –
உபேயத்வ அநு சந்தானம்
பிரவர்தகம் –

வைதவம் வரும் அளவில்  சூத்யஜமாய் -ராக ப்ராப்தமாய் -வரும் அளவில் -துஸ்த்யஜமாவான் என் என்ன -அருளி செய்கிறார் –

உபாயம் -நினைக்க ரத்னம் நீங்கும் –செய்யும் செயல்களில் உபாய பாவனை இல்லாமல் என்றும் -ஸாத்ய உபாயம் எண்ணியும் –
உபேயம் புருஷார்த்தம் என்ற நினைவால் கைங்கர்யம் -அனைத்தையும் செய்ய வைக்கும் –
ஸூ சரீர தியாக -ஸூ யத்னம் தானே –பாரதந்தர்ய தூஷணம் ஆகாதோ என்ன –
உபாய அதிகாரிக்குத் தான் தூஷணம் -உபேய அதிகாரிக்கு இல்லை
பற்றுவது -கத்யார்த்தா புத்யர்த்தா மானஸ கார்யம் -பிரார்த்தனா மதி சரணாகதி –
உபேய அதிகாரி வழு விலா அடிமை செய்ய வேண்டுமே -சென்றால் குடையாம் இத்யாதி
தோழி /தாயார் மகள் -சம்பந்தம் -தாயார் -உபேயத்தில் துணிவு தலை மகள் பாசுரம் –தூது விட்டது உபாயமாக என்று அஞ்சுவது தாயார் -/
ப்ராப்ய தவரையால் பண்ணலாமே -மோக்ஷ உபாயம் தப்பு கால விளம்பம் கூடாது என்பதற்காக பண்ணலாமே -/
ஸ்வ தந்த்ர வஸ்துவே உபாயம் என்று பரதந்த்ர வஸ்து அனுசந்திக்க-துரும்பு நறுக்க பிராப்தி இல்லை -மார்பிலே கை வைத்து உறங்கலாம்
பெரியநம்பி ஸ்ரீ ரெங்கம் வராமல் பிராணனை விட்ட ஐதிக்யம் –
நித்ய சேஷ விக்ரஹமே நித்ய உபேயம் என்கிற தத் விக்ரஹ வைலக்ஷண்ய ஞான அனுரூபமான அனுசந்தானம்
ஸூ யத்னத்திலே மூட்டும் -துரும்பும் கைங்கர்யத்துக்கு வரும் -எழுந்து ஆடும் படி -பணம் என்றாள் பிணமும் ஆடுமே போலே –
ஆகவே தன்னை ஸூ யத்னத்திலே பிரவர்த்திப்பிக்கும் -/ நித்ய உபாயம் -நிவ்ருத்தி நிஷ்டை /
நித்ய உபேயம் பிரவ்ருத்தி நிஷ்டை இரண்டையும் -பிறப்பித்து உபய அதிகாரத்தையும் நிலைப்பிக்கும் –
பெருமாள் இயற்கையிலே உபேயம் தான் -போக்கற்று உபாயம் ஆக்குகிறோம் -கருமுகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
தேக தியாகம் தன்னையே புருஷார்த்தமாக நினைப்பதால் அந்த நினைவே இதிலே மூட்டும் —
வெய்யோன் தோன்றான் பெண் பிறந்தார் துயரம் பார்க்க முடியாமல் –
வந்தால் தான் -இரவு நீங்கும் என்ற ஆழ்வார் -ஊர் எல்லாம் துஞ்சி நீள் இரவாய் நீண்டதே
முடிந்து பிழைக்க ஒண்ணாத படி -தேகத்தை முடித்து ஆத்மாவை பிழைப்பிக்க நினைவு என்றபடி –

உபாயத்வ அநு சந்தானம் நிவர்த்தகம் -என்றது –
வைதமாய் வரும் தசையில் -தேக த்யாக ரூப பிரவ்ருத்தியில் உபாயத்வ அநு சந்தானம் நடக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை
சாதனதயா சம் பிரதிபன்னமான இத் தேக த்யாக ரூப பிரவிருத்தியில் நின்று மீளுவிக்கும் -என்றபடி –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் -என்றது
ராக பிராப்தமாய் வரும் தசையில் -இவ் விஷயத்துக்கு ஹானி வர கண்டு இருப்பதில் -முடிகையே நல்லது என்று –
தேக த்யாகம் தன்னை புருஷார்த்தமாக
அநு சந்திக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை அதிலே மூளுவிக்கும் என்றபடி —
அன்றிக்கே –
வைதமாய் வரும் போது -பகவத் விஷயத்தில் உபாயத்வ அநு சந்தானம் இதுக்கு நிவர்தகமாம் –
ராக பிராப்தமாய் வரும் போது-அவ் விஷயத்தில் உபேயயத்வ அனுசந்தானம் இதுக்கு பிரவர்தகமாம் என்னவுமாம் –

———————————————–

சூரணை-88-

அப்ராப்த விஷயங்களிலே
சக்தனானவன்
அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய பரவணனுக்கு
சொல்ல வேண்டா இறே –

இப்படி ஒரு சாதன புத்த்யா அன்றிக்கே -தத் விஷய ப்ரவண்ய அதிசயத்தாலே –
ஸ்வ தேகத்தை விடும்படியான நிலை விளையக் கூடுமோ என்ன -அருளி செய்கிறார் –

உயிரை விட்டாலும் அனுபவிப்பார் உண்டோ என்னில் -பிரவர்த்தகமான -விலக்க முடியாத தத் விஷயமான அபி நிவேசம் –எது தான் பண்ணாது –
திருவாலி நகரிக்கோ இலங்கைக்கோ புகுவார் கொலோ – மடல் எடுக்கவோ அநுகாரம் பண்ணவோ வைக்கும் –
ஸ்வரூப நாஸகம் -அபிராப்த ஹேய விஷயங்களில் -வருந்தியும் லபிக்க அதி சாகசங்களை செய்து இரா நின்றால்-
ஸ்வரூப வர்த்தகமாகக் கொண்ட பிராப்தமாய் நிரதிசய போக்யமான பகவத் விஷயத்தை லபிக்க -விலக்கப் படாத உபேய அதிகாரிக்கு
தன்னை அழிய மாறி யாகிலும் அவனை அனுபவிக்க சொல்ல வேணுமோ –
வேசிக்காக தேவதை இடம் தனது தலையை அறுத்து கொண்டவன் விருத்தாந்தம் உண்டே

அதாவது -ஸ்வரூப பிராப்தம் அல்லாத தேக விஷயங்களிலே பிரவணன் ஆனவன் –
தன்னை அழிய மாறி யாகிலும் -அவ் விஷயத்தை லபிக்க வேணும் என்று –
ஸ்வ தேக த்யாகத்தில் பிரவர்தியா நின்றால்-ஸ்வரூப பிரப்தமான விலக்ஷண விஷயத்தில் பிரவணன் ஆனவனுக்கு –
அவ் விஷயத்தை பற்றி அழிய மாறுகை யாகிற இது கூடுமோ என்னும் இடம் கிம்புனர் நியாயம் சித்தம் அன்றோ -என்கை-
ஒரு வேச்யை அளவில் ஒருவன் அதி சக்தனாய்க் கொண்டு போருமவனாய் -அவளுக்கு வியாதி கனக்க வந்த அளவிலே –
இவள் ஆறி எழுந்தவாறே நான் என் தலையை அரிந்து தருகிறேன் -என்று ஒரு தேவதைக்கு பிரார்த்தித்து –
பின்பு தலையை அரிந்து -கொடுப்பது செய்தான் என்று பிரசித்தம் இறே –

——————————————

சூரணை -89-

அனுஷ்டானமும்
அந் அனுஷ்டானமும்
உபாய  கோடியில் அன்வயியாது —

உபாய உபேய அதிகாரங்களுக்கு உடலாக மற்றும் சொன்ன அனுஷ்டானங்கள் போல் அன்றிக்கே –
உபாய தயா சாஸ்திர சித்தம் ஆகையாலே -அநந்ய சாதனனுக்கு அந் அனுஷ்டானமான இந்த தேக த்யாகம் ராக ப்ராப்தம் ஆகையாலே –
துஸ்த்யஜமாய் இருந்ததே ஆகிலும் -உபாய கோடியிலே-அன்வயித்தது அன்றி -நில்லாதே -என்ன – அருளி செய்கிறார் –

சக்தி லஜ்ஜை வியாவாராம் விடுகை போல் அன்றிக்கே தேக தியாகம் -உபாயம் என்று சாஸ்த்ர சித்தம் –
அநந்ய சாத்யனுக்கு கொத்தை -செய்யக் கூடாதே –
காதல் ப்ரேமம் பேணாமை தரியாமை இல்லாததால் -இது உபாயம் என்று வேறே சாஸ்திரம் சொல்ல உபாய கோடியிலே சேரும் –
ராக பிராப்தியாக செய்தாலும் உபாய கோடியிலே சேரும் இதுவும் -என்ற ஆஷேபம் வர –
மேல் இரண்டு சூர்ணிகைகள் இதுக்கு சமாதானம் –
ஸூவ சக்தியாதிகள் உபாய அந்தர்பூதம் / பிரேமாதிகள் உபேய அந்தர்பூதம்/
ராக பிராப்தியாலே தானே பேணாமையும் தரியாமையும் -அதே போலே தேக தியாகமும் -உபேய கோடியிலே சேரும் –
அனுஷ்டானமும்–கீழே அருளிச் செய்த ஆறும் /அந் அனுஷ்டானமும்-தேக தியாகத்தை -இப்படி அருளிச் செய்கிறார் -/
ஜ்யோதிஷட ஹோமம் -சுவர்க்கம் -காம்ய கர்மம் -பலத்தில் விருப்பம் இல்லாமல் செய்தால் தத் அனு பாயம் ஆகும் -விநியோகம் பொறுத்து அர்த்தம் –
நடுவில் பல இச்சை நஷ்டமானாலும் -சிஷ்ட கர்ஹைக்காக பூர்த்தி பண்ணினால் சாதனம் ஆகாதே -பூர்வ மீமாம்சையில் படிக்கப் பட்டதே –
பராசரர் யாகம் பண்ண -சக்தி தன் தகப்பனாரை கொன்றதுக்கு -புலஸ்தியர் வஸிஷ்டர் சொல்ல நிறுத்த -தத்வ ஞானம் வர ஆசீர்வாதம் –
சர்ப்ப யாகம் பண்ண -தக்ஷகன் இந்திரன் தேர் காலை கட்டி பிரார்த்திக்க –
வியாசர் முதலானோர் தடுக்க பரிஷத் யாக பூர்த்தி பண்ணாமல் நிறுத்தி -இப்படி நடுவில் பல உண்டே –
-சர்வ தர்மான் பரித்யஜ்ய -த்ரிவித தியாகம் கீழேயே சொல்லி -தர்ம பலம் விட வேண்டும் என்று சொல்ல வேண்டாமே இங்கு /
தர்ம புத்தி உபாய புத்தி என்றே கொள்ள வேண்டும் -/விநியோக ப்ருதக் நியாயம் / கர்மா யோகம் பக்தி யோகத்துக்கு அங்கம்
கைங்கர்யம் ஆக்கமே பிரபன்னனுக்கு –/சாதனா புத்தி உடன் செய்தால் தானே சாதனம் ஆகும் -என்றால்
விஷம் முடிக்க என்று தெரியாமல் உண்டாலும் முடிக்கும் -நெருப்பும் சுடுமே -லௌகிக விவகாரம் வேறே –
அலௌகிக விவகாரம் வேறே என்று பிரிக்கிறார் -/
உபாய அன்வய கந்தம் இல்லை சாதன புத்தியால் இல்லாமல் ராகத்தால் பண்ணினால் /

அதாவது –
அனுஷ்டானமாக சொன்ன ஸ்வ சக்தி த்யாகாதிகளும் -ப்ரேமாதிகளும் –
உபாய உபேய அதிகார அந்தர்பூதம் ஆகையாலே -உபாய கோடியிலே அன்வயிதாப் போலே –
அந் அனுஷ்டானமாக சொன்ன -ஸ்வ தேக  த்யாகமும் -உபாய புத்தியா அனுஷ்டிதம் அன்றிக்கே –
ராக பிராப்தம் ஆகையாலே உபாய கோடியில் அன்வயியாது -உபேய அதிகாரத்தில் அந்தர் பவிக்கும் அத்தனை -என்கை –
உபாயதயா சாஸ்திர சித்தமே ஆகிலும் உபாய புத்த்யா அனுஷ்டிதம் ஆனதுக்கு இறே
உபாயத்வம் உள்ளது -அங்கன் அன்றாகில் -பிரபன்னனான அவன் உபாய புத்தி அற உபேய புத்த்யா பண்ணுகிற
புண்ய தேச வாசாதிகளும்-(ஆதி சப்தம் -நித்ய கைங்கர்யங்கள் ) உபாய கோடியிலே அன்வயிக்க வேணும் இறே –

————————————————

சூரணை -90-

அநந்ய உபயத்வமும்
அநந்ய உபேயத்வமும்
அநந்ய தைவத்வமும்
குலையும் படியான பிரவ்ருத்தி
காண நின்றோம் இறே –

அன்றிக்கே -இப் பிரவ்ருத்தி தான் -உபாய கோடியிலே அன்வயித்தது ஆகிலும் –
அநந்ய உபாயத்வத்துக்கு குலைதல் வரும் இத்தனை இறே -அது பிரேம பரவசருக்கு
அவத்யம் அன்று என்கைக்காக-பிரேம பரவசர் பிரவ்ருத்திகளை தர்சிப்பிக்கிறார் –

நாராயணனை நமக்கே பறை தருவான் -என்றவள்
நோற்கின்ற நோன்பினை குறிக் கொள் என்றாளே முதல் பாசுரங்களிலே-உபாயாந்தர ப்ரவ்ருத்தியும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் –உமக்கே ஆளாய் திரிகின்றோம் -குலையும் படி —
சூடகமே –யாம் அணிவோம் -ஸூ பிரயோஜனம் சொல்லி -அந்நிய உபேயத்வம்
ஓதி நாமம் குளித்து -நமக்கே நலம் ஆதலின் -ஸூ ரசத்வ அன்வயம் ஆகிய –உபாயாந்தர பிரவ்ருத்தி
உன்னையும் உம்பியும் தொழுதேன் -அநந்ய சேஷத்வ விருத்தமும் –
ப்ராவண்யம் அடியாக மயர்வற மதி நலம் அருளப் பெற்ற –தெளியப் பெற்றவர்கள் இடம் -காணா நின்றோமே –

நிஷித்த அனுஷ்டானத்தின் ஸ்வ பாவம் – போல் இல்லை நேரே நோன்பு -உபாய புத்தியா அனுஷ்டிதம் தானே இவை –
ப்ரேம பரவசருக்கு குற்றம் இல்லை -ஸூ வசத்தில் இல்லையே —
பரித்யஜ்ய –விட்டே பற்ற வேண்டும் -விட்டு இருந்தால் பற்று இல்லை -தியாகத்தை அனுவாதம் இல்லாமல் /
தியாகம் விதி விதேயம் என்றவாறு
விடாவிடில் குற்றம் இல்லை அனுவாத பக்ஷத்தில் -விதியானால் குற்றம் வரும் -/
நிஷித்த அனுஷ்டானம் செய்தால் -அநிஷ்ட அன்வயத்தில் கொண்டு விடும்
பரதந்த்ரன் யத்னம் செய்தால் -உபாயத்வ புத்தி உண்டா இல்லையா என்னாமல் அநிஷ்டத்தில் கொண்டு விடுமே என்னில்
உன்மத்தன் ஒருவன் -அழகிய மணவாளன் கிராமம் தெரியாமல் வர -பிராப்தி போலே -மாலை தொடுத்து விளக்கு எரிப்பதும்
உபாய புத்தியாக நினையானோ என்னில் இது வைதிக விவகாரம் -லௌகிக விவகாரம் இல்லை
ஏறிட்ட கட்டி ஆகாசத்தில் நில்லாமல் கீழே விழும் பலத்தோடு அன்வயம் உண்டே –
உபாய கோஷ்ட்டியில் அன்வயத்தாலும் குற்றம் இல்லை என்று அருளிச் செய்கிறார்
விநியோக நியாயம் -கைங்கர்ய ரூபமாக செய்தால் குற்றம் இல்லை –என்றவாறு

அநந்ய உபாயத்வம்  குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –
திருந்தவே தோற்கின்றேன் –
நோற்கின்ற நோன்பினை குறிக் கொள் –
குதிரியாய் மடலூர்த்தும் -குஸ்தித ஸ்திரீயாய் நேர் வழியாக போகாமல் –
ஓதி நாமம் –
ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –
உலகறிய ஊர்வன் நான் மன்னிய பூம் பெண்ணை மடல் –
(சாத்தியம் கைப்பட்டபின்பும் சாதனம் கை விடாமல் இன்றும் மடலை அஞ்சலி ஹஸ்தங்களுக்குள் வைத்து சேவை சாதிக்கிறார் –
உபாயாந்தரம் என்ற நினைவால் இல்லையே )
என்று -நோன்பு நோற்கை-மடல் எடுக்கை -முதலான வியாபாரங்களில் இழிகை-

அநந்ய உபேயத்வம் குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –
அத் தலைக்கு அதிசயத்தை விளைகையே புருஷார்த்தம் என்று இருக்கை தவிர்ந்து –
நமக்கே நலமாதலில் -என்றும்
தூ மலர் தண்  அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -என்றும்
(பர கத அதிசயம் இல்லாமல் ) தனக்கு அதிசயம் தேட தொடங்குகை –

அநந்ய தைவத்வம் குலையும் படியான பிரவ்ருத்தி யாவது –
காம தேவா உன்னையும் உம்பியையும் தொழுதேன் –
பேசுவது ஓன்று உண்டு இங்கு எம்பெருமான் -என்று
காமன் பக்கலிலே தேவதா புத்தி பண்ணி ஆராதிக்கை –
காணா நின்றோம் இறே -என்றது -பிராப்ய வஸ்துவின் ப்ராவண்ய அதிசயத்தாலே-
பேரளவு உடையவர்கள் பக்கலில் உண்டாக காணா நின்றோம் இறே என்கை –
முன்பு சொன்ன பிரவ்ருத்திக்கு உபாய கோட்ய அன்வயம் வச்துகதையா வரும் என்று
கொள்ளுகிற மாத்ரம் இறே -அங்கன் இன்றிகே நேரே உபாய புத்த்யா அனுஷ்டிதமானவை இறே இவை –
ஆகையால் பிரேம பரவசருக்கு இது அவத்யம் அன்று என்று கருத்து –

————————————————————–

சூரணை -91-

ஞான விபாக கார்யமான
அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்–

இத்தனையும் கலக்கத்தாலே வந்தவை இறே –
அஞ்ஞானம் மூலமாய் வருமவை ஒன்றும் ஆதரணீயம் அன்றே என்ன –
அருளி செய்கிறார் –

ஒரு அடி மண்ணுக்கு ஸ்வர்ணம் -சிறியது மிக விலை பெறும் -அடிக் கழஞ்சு பெறும்–ஞானம் பக்குவம் பட்டு விளையும்
அஞ்ஞானத்தால் செய்யும் கார்யங்கள் -இப்படி –
ஞானம் கனிந்த நலம் -இது தான் ஞான விபாக கார்யம் -/ அவனை அடைய வேண்டும் என்பது ஞானம் –
அது பக்குவமாகி அது எதனால் இப்பொழுதே கிடைக்க வில்லை ப்ரேமம் மிக்கு துடிப்பது –
பாரதந்தர்ய போகத்வ அநந்யார்ஹத்வ பஞ்சகங்கள் -மடல் எடுத்தவை போல்வன பாரதந்தர்யத்துக்கு பஞ்சகம் -விருத்தம் /
போகத்தவ அநந்யார்ஹத்வ -நமக்கே நலம் ஆதலால் போல்வன -ப்ரவ்ருத்திகள் ஹேது பேதத்தைப் பற்ற சிலாக்கியங்களாக இருக்கும் –
சாஷாத் கார ஞானத்தின் விசேஷ பக்குவ நிலை –பக்தி காரியமே மடல் எடுக்கை போன்ற விருத்தி விசேஷங்கள் –
கர்தவ்ய அகர்தவ்ய -விவேக ஞானம் ஒழிந்த -பாரவஸ்ய ரூப அஞ்ஞானத்தாலே –
பக்தி பரவசராய்- சரீரம் த்யாஜ்யம்- காம சோமா பஜனாதிகள் போல்வன சிலாக்கியங்களுமாய் பிரார்த்தனீயங்களாய்-இருக்கும் –
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நாம் –யாவதாத்மா பாவியாய் இருக்கும் நோய் –உற்ற நல் நோய் இது தேறினோம் –
ஞான தசையில் வரும் அஞ்ஞானம் வேறே-இது ஸ்வரூப ஹானியை விளைவிக்கும் —
ஞான விபாக தசையில் வரும் அஞ்ஞானம் -கொண்டாடப் பட வேண்டியதே–
பக்தி பாரவஸ்ய தசையில் -ஸ்வரூப வர்த்தகம் –
சிறிய திருமடலில் விபவம் அழித்து பெரிய திருமடலில் அர்ச்சாவதாரங்களை அழிக்க —
பகவான் சொத்துடன் சேர -பர பிரயோஜனத்துக்கு –
அவன் முக விலாசம் பிரயோஜனம் -ப்ரீத்யர்த்தம் -கைங்கர்யம் —
பதட்டம் பிரார்த்தனீயம் -விதுரர் இடம் பார்த்தோம் -மஹா மதி கொண்டாட்டம் உண்டே
நிரதிசய போக்யத்வ புத்தி ஞானம் / இதன் விபாகம் அனுகூல வஸ்து இன்னும் கிடைக்கவில்லையே -என்கிற துடிப்பு –
பழுதே பல பகலும் போயின —
சாத்விக அபிமானம் கூடுமே போலே இதுவும் -அவஸ்தா விசேஷமான பக்தி –
மேலீட்டால் பிராப்த அப்ராப்த விவேக ஞானம் இல்லாத அஞ்ஞானத்தால் வரும் பிரவ்ருத்திகள் அதி சிலாக்கியம்

ஞான விபாகம் ஆவது -ஞானம் கனிந்த நலம் -என்கிறபடியே
ஜ்ஞானத்தின் உடைய பரிபாக ரூபையான பக்தி -அதன் கார்யமான அஞ்ஞானம் ஆவது –
அந்த பக்தி அதிசயத்தாலே வரும் ப்ராப்த அப்ராப்த விவேக அபாவம் -அத்தாலே வரும்
பிரவ்ருத்தி  விசேஷங்கள் எல்லாம் -அடிக் கழஞ்சு பெறும் -என்றது -அதி ச்லாக்யங்களாய்-இருக்கும் என்றபடி –
கர்ம நிபந்தனமான அஞ்ஞாநத்தாலே வருமவையே ஹேயங்கள் என்று கருத்து-

———————————————

சூரணை -92-

உபாய பலமாய்
உபேய அந்தர்பூதமாய்
இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது –

ஆனாலும் இவ்வதிபிரவ்ருத்தி  -இத் தலையில் பிரவ்ருத்தியில் ஒன்றையும்
சஹியாத சித்த உபாயத்தின் கார்ய  கரத்வத்துக்கு பிரதி பந்தகம் ஆகாதோ என்ன –
அருளி செய்கிறார் –

நீராய் ஒரு கால் வந்து தோன்றாயே –வைகுந்ததில் இருப்பு கொள்ள முடியாமல்
கூப்பாடு தாங்காமல் -பெருமாள் பிரவ்ருத்தியை வளர்த்ததே –
நீ மருவி அஞ்சாதே நின்று -சாம தான பேத தண்டம் அறிபவன் இருந்தாலும் அஞ்சாதே —
உன்னை அனுப்பியவன் வேல் கொண்ட கலியன் பரகால நாயகி –
ஓர் மாது என்றாலே போதும் -பதறிக் கொண்டு ஓடி வருவான் -இறையே இயம்பி கண்டால் போதுமே –
அறிவிப்பார் இருந்தால் வருவான் -பொறுப்பு அவனது புருஷோத்தமன் –
தேரழுந்தூர் திருக்கண்ணபுரம் -வழியில் பார்த்து -என் விஷயத்தில் திக் பிரமம் பிடித்து அன்றோ இருப்பான்
த்வரிக்கப் பண்ணும் அவனையும் -ஞான விபாக செயல் –
பகவானுடைய கிருஷி பலம் -இத்தையே உபாய பலம் என்கிறார் -ஸ்ருஷ்ட்டி அவதாராதி -ஞானம் கொடுத்தல்-
மயர்வற மதிநலம் அருளி -பக்தி உழவன் –
இங்கு ஞான பிரதம்-மதி நலம் கொடுத்து தூது-மடல் இவை அனைத்தும் – -ஞானம் கனிந்த நலம் தானே இது
உபேய அந்தர்பூதம் -கிருஷிக்கு பலம் தானே உபேயம் -கைங்கர்ய ரூபமாகும் –
பக்தியால் தூண்டப்படும் விருத்திகள் -பூர்வ பாவி உபாயம் பகவான் -சித்த உபாயத்துக்கு தடுக்காது –
உபாய ஞான அனந்தர பாவியான உபேய ப்ராவண்ய கார்யம் தானே இவை –
தேக தியாகமும் இதிலே சேரும் –
உபாய ஸ்வீ கார அனந்த பாவியான அனுகூல்யாதிகள் போலே சம்பாவிதமான —
தத் பலமாக மடல் தூது -இத்யாதிகள் -உபேயத்தில் அந்தர்பூதம்
பூர்வ பாவியான உபாயத்துக்கு அனு தயா பாதக பிரதிபந்தகம் ஆகாது –
பெருமாளுக்கு அதிசயம் -திரு நறையூர் நம்பிக்கு ஏற்றம் மடல் எடுத்ததால் –
சேஷ விருத்தி தானே -சித்த சாத்தியமான கைங்கர்யத்துக்கு நிகர் இது –

உபாய பலம் -என்றது சித்த உபாயம் ஆனவன் பண்ணின கிருஷி பலம் என்றபடி –
மயர்வற மதி நலம் அருளினன் –
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -என்றும்-
(பக்திக்கு உத்பாதகன் -அருளி -வளர்த்தவன் அன்றோ -)
ஏவம் பூத பிரவ்ருத்தி ஹேதுவான பக்திக்கு உத்பாதகனும் வர்த்தகனும் அவனே இறே –
ஆகையால் பக்தி பாரவச்ய நிபந்தனமான இப் பிரவ்ருத்தியை -உபாய பலம் -என்கிறது –
உபேய அந்தர் பூதமாய் இருக்குமது -என்றது –
பிராப்ய தசையில் முறுகுதலாலே கண்ணாஞ்சுழலை இட்டு -இத் தலைபடுகிற
அலமாப்பு எல்லாம் -நம்மை ஆசைப்பட்டு இப்படி படப் பெறுவதே என்று அவன் முகம் மலருகைக்கு உறுப்பு ஆகையாலே –
மடல் எடுக்கை தொடக்கமான இந்த பிரவ்ருத்திகள் அவன் முக மலர்திக்காக பண்ணும்
கைங்கர்யத்தோ பாதியாக கொண்டு உபேயத்தில் அந்தர் பூதமாய் இருக்கும் என்கை –
உபாய பிரதி பந்தம் ஆகாது -என்றது-ஏவம் பூதமானது -உபாயத்தின் உடைய கார்ய கரத்வத்துக்கு விலக்காகாது-என்றபடி-

—————————————-

சூரணை -93-
சாத்ய சமானம்
விளம்ப அசஹம் என்று இறே
சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்ய ப்ராவண்யம்
அடியாக இறே
சாதனத்தில் இழிகிறது —

இப்படி மடல் எடுக்கை முதலானவை சித்த  உபாய பிரதி பந்தகம் ஆகாது என்னும் இடம் சொல்லி –
அவை தனக்கு சித்த உபாய சாம்யத்தை விவஷித்து அருளி செய்கிறார் மேல் –

தத் பிராப்யர்த்தமாக இவற்றுக்கு ஸாதன பாவம் வந்தால் தான் என் –சித்த உபாயமான பகவானுக்கு சமம் –
ஈஸ்வர ப்ரீத்திக்கு சமம் -ஈஸ்வர கைங்கர்யத்துக்கு சமம் –
இந்த மூன்றும் -தேக தியாகம் மடல் எடுப்பது தூது விடுவது இவைகள் -/
விளம்ப அஸஹத்வம் –ஸாத்ய சமானம் -இரண்டு காரணங்கள்-
சித்த உபாயத்தை பற்ற – -உபாயாந்தரங்கள் ப்ரஹ்மதுக்கு சமானம் ஆகாதே -/
இதே போலே மடல் எடுத்தல் தூது -தேக தியாகம் -இவற்றுக்கும் இதே இரண்டு காரணங்கள் -பகவான் கிருஷி பலம் தானே இவை -/
அவனைப் பற்றி காத்து இருக்காமல் விளம்பிக்காமல் பலன் கொடுக்கும்
மூன்றாவது காரணம் -சாத்திய ப்ராவண்யம் அடியாகத் தானே சாதனங்களில் இழிகிறான்–
ஆகவே உபாயத்துக்கு பிரதிபந்தகம் ஆகாதே இவை –
சாதனத்வம் தப்பு இல்லை -சாதனாந்தர கூடாதே என்ன –
இது அவனைக் காட்டிலும் வேறே பட்டது இல்லையே -சரணாகதி பண்ணி அதுக்கு பின்
மடல் தூது அப்புறம் பெருமாள் வந்து -ஆகவே விஷயீகாரம் முன்னால் நடந்ததே -பின் ஏற்பட்டதே –
சித்த சாதனம் பகவானை விட தூது விட்ட உடனே சரணாகதிக்கு அப்புறம் வந்தார் –
அவனே உபாயம் -எதுக்கு உடனே வந்தார் -சரணாகதிக்கு இல்லை
தூது விட்டதுக்கும் மடல் எடுத்ததுக்கும் தானே –
சித்த உபாயம் இவை என்ன தட்டு என் -சாத்தியம் -இது நமக்கு இல்லை ஈஸ்வர கிருஷிக்குத் தானே –
உபாய பாவம் வராதே – தன்னால் இல்லை என்பதை உணர வேண்டும்
பிரபன்ன ஜட கூடஸ்தருக்கு தான் கிருஷி பலித்தது -பரம சேதன சாத்தியம் தானே –/
சேஷிக்கு அதிசயகரம் ஆகையால்-சாத்தியமான -கைங்கர்யத்துக்கு சமானமாய் -சரணாகதி தான் இருப்பது —
இதர சாதனங்கள் போலே இல்லாமல் –
பலத்தில் வைஷம்யம் உண்டே பக்தனுக்கு பிரபன்னனுக்கும் -திரு உள்ளத்தில் பட்டு இருக்குமே –
ஸாத்ய சாமானத்தை மேலே கூட்டி -கீழே –
92-உபாய பலமாய் உபேய அந்தர்பூதமுமாய் இருக்குமது உபாயத்துக்கு பிரதிபந்தகம் ஆகாது -என்றாரே கீழே – –
உபாய சமானம் மட்டும் ஆகும் -அப்பொழுது இங்கே விளம்ப அஸஹம் மட்டுமே இருக்கும் –
இங்கே கூட்டினால் இரண்டு காரணங்களும் வரும் -ஹேது சாம்யத்தால் -இவையும் ஸாத்ய கைங்கர்யம் போலவே ஆகுமே —
சீக்கிரமாக போய் கைங்கர்யம் அதனாலே ஏற்றம் இவற்றுக்கு என்றவாறு —
தத் விக்ரஹ அனுபவ கைங்கர்யத்தில் அபி நிவேசத்தாலே இதிலே இழிகிறது-
ஆக பக்தி பரவஸ்ய கார்யமான காம பஜனாதிகள் உபேயத்தில் அன்வயமாகும் ஒழிய
உபாயத்துக்கு பிரதிபந்தகம் ஆகாது என்றவாறு

சாத்ய வஸ்துவே சாதனம் ஆகையாலே -சாத்தியத்துக்கு சமானம் என்றும் –
பல விளம்பத்தை சஹியாதே சீக்கிரமாக கார்யம் செய்து கொடுக்கும் என்று இறே –
இதர சாதனங்களில் காட்டில் சித்த சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்தியத்தில் பிராவண்யம் அடியாக இறே இந்த சாதக பரிக்ரகம் தன்னில் இழிகிறது –
அவை இரண்டும் இவற்றுக்கு உண்டு என்று கருத்து -எங்கனே என்னில் –
மடல் எடுக்கை முதலான பிரவ்ருத்திகள் சேஷிக்கு அதிசய கரங்கள் ஆகையாலே –
கைங்கர்ய ரூப சாத்தியத்துக்கு சமானங்களாய் இருக்கையாலும் –
மடலூர்தல்-நோன்பு நோற்க்குதல்-செய்வன் என்று துணிந்தபோதே –
சர்வேஸ்வரன் த்வரிதது கொண்டு வந்து இவர்கள் காலிலே விழும்படி
பண்ணிக் கொடுக்கையாலே -பல விளம்ப அசஹங்களாய் இருக்கையாலும் –
சித்த சாதனம் போலே இதர சாதனங்களில் காட்டிலும் ஏற்றத்தை உடையதாய் –
சாத்ய ப்ராவண்யம் அடியாக இவற்றில் இழிகிற ஆகாரமும் ஒத்து இருக்கையாலே –
இத்தால்-சித்த உபாயத்தை ஒழியவும் இது தானே கார்யம் செய்யவற்று ஆகையாலே-
தத் பிரதிபந்தகம் என்னும் தூஷணம் இல்லை என்று கருத்து –
அன்றிக்கே -(பாவானத்வ மாத்திரம் இல்லாமல் போக்யமாயும் இருக்குமே இவை )

உபாய பிரதி பந்தகம் ஆகாது -என்றத்தை இன்னமும் முக பேதத்தால் உபபாதிக்கிறார் -சாத்ய -இத்யாதி வாக்ய த்வ்யத்தாலே –
அதாவது -பால் மருந்தாம் போலே சாத்ய வஸ்து தானே சாதன ஆகையாலே-சாரச்யத்தில் சாத்யத்தோடு ஒத்து இருக்கும் என்றும் –
சாத்தியத்தை பிராபிக்கும் அளவில் கால விளம்பத்தை பொறாது கடுக பிரபித்து விடும் என்றும் அன்றே
சாதனாந்தரத்தில் காட்டில் சித்த சாதனத்துக்கு ஏற்றம்-இப்போது இது சொல்லுகிறது-இவ் ஆகார த்வயமும்
சாத்ய ப்ராவண்ய ஹேதுவாம் என்று தோற்றுகைக்காக-இப்படி ஆகையாலே –
தன் அடியாக விளைந்து -க்ஷண கால விளம்பம் பொறாமல்  துடிக்கும் படி முறுகடி இடுகிற
சாத்ய ப்ராவண்யம் அடியாக இறே மடல் எடுக்கை  முதலான இஸ் சாதனத்தில் இழிகிறது என்கை –
ஆகையால் ஏவம் பூத ப்ராவண்யத்தின் முறுகுதலாலே  கண்ணாஞ்சுழலை இட்டு செய்கிற இப் பிரவ்ருத்திகள்
உபாயம்-(பெருமாள் என்றபடி ) மேல் விழுந்து கார்யம் செய்கைக்கு உடலாம் இத்தனை அல்லது-
தத் பிரதி பந்தகம் ஆகாது என்று கருத்து –

ஆக
இவனுக்கு வைதமாய் வருமது இறே த்யஜிக்க  லாவது -சூரணை – 86-என்று தொடக்கி –
இவ்வளவு வர -பிள்ளை திரு நறையூர் அரையர் பிரவ்ருத்தி  வ்யாஜத்தாலே –
பகவத் பிரபன்னனாய் இருந்தானே ஆகிலும் -உபேய பரன் ஆனவனுக்கு
தத் விஷய ப்ராவண்யத்தால் வரும் ஸ்வ தேக த்யாகம் துச்த்யஜம் –
உபாய புத்தா அனுஷ்டிதம் அல்லாமையாலே -அது தான் உபாய கோடியில் அன்வயியாது –
வஸ்துகத்யா அன்வயித்தது ஆகிலும் பிரேம பரவஸ்ருக்கு  தோஷாயவன்று-
புத்தி பூர்வகமாக அனன்ய   உபாயத்வாதிகள் குலையும் படியான ப்ரவ்ருத்திகள்
தெளியக் கண்டவர்கள் பக்கலிலும் காண்கையாலே–இவை தான் அஞ்ஞான மூலமே ஆகிலும்
பிரேம கார்யமான அஞ்ஞாநத்தாலே வந்தவை ஆகையாலே -அதி ஸ்லாக்யங்கள் –
சித்தோ உபய பிரதி பந்தகம் ஆகாது -அவ்வளவு அன்றிக்கே அத்தோடு ஒக்க
சொல்லலாம் படி அன்றோ இவற்றின் பெருமை என்று சொல்லுகையாலே
உபேய அதிகாரத்தில் -தன்னை பேணாமை -என்று சொன்ன இது -அநந்ய
சாதனத்வத்துக்கு சேருமோ என்னும் அதி சங்கா பரிஹாரம் பண்ணப் பட்டது –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -60-79–சாதனஸ்ய கௌரவம் -ஆறு — உபாய பிரகரணம்-திருமால் திருவடி சேர் வழி நன்மை -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 7, 2017

உபாய ஸ்வீ கார வைபவம் -பிரகரணம்-சூர்ணிகை -23-40/41-59-/60-79/80-114/115-244
சாதனஸ்ய கௌரவம் -ஆறு-உபாய பிரகரணம் -திருமால் திருவடி சேர் வழி நன்மை / அவ் வழி ஒழிந்தன அனைத்தின் புன்மை –

சூரணை -60-

பலத்துக்கு ஆத்ம ஞானமும்
அப்ரதிஷேதமுமே
வேண்டுவது –

இப்படி இப் பிரபத்தி உபாயம் அல்லவா விட்டால் பல சித்திக்கு இவன் பக்கலிலும்
சில வேண்டாவோ என்ன -அருளிசெய்கிறார் –

ஸ்வதந்த்ர ஸ்வாமி கொடுக்கிற பல லாபத்துக்கு திருமந்த்ர யுக்தமான சேஷ சேஷி- சம்பந்த ஞானமும் –
தடுக்காமையும் -சாஸ்திரம் வீணாகாமல் இருக்க –
ஞானத்தால் மோக்ஷம் சாஸ்திரம் -சேஷ சேஷி சம்பந்த ஞானம் அதிகாரி விசேஷணம் -ஞான ஸ்வரூபம் தானே உபாயம் ஆகாதே –
சர்வ முக்தி பிரசங்கமும் வரக் கூடாதே -ச ஹேதுகத்வங்களும் வாராது -எதிர்பார்த்துக் கொடுக்க வில்லை –
இருப்பவனுக்குக் கொடுக்கிறார் -இவை ஹேதுக்கள் இல்லை –
த்வயம் பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம் -இடை வெளி இல்லாமல் -தடுப்பு நீங்கி –
அவன் ரஷிக்க வரும் பொழுது விலக்காமை -இருப்பதால் விளம்பம் இல்லாமல் பிராப்தி
ப்ரீதி காரித கைங்கர்யம் -மந்த்ர -விதி அனுஷ்டானம்-ரஹஸ்ய ஞானம் வந்ததும் –
ஆத்ம ஸ்வரூப ஞானம் முதலில் வந்தது -வந்ததும் -அந்த ஞான கார்யமான -அப்ரதிஷேதமும்-விலக்காமையும் – வர வேணும் —

இத்தை ஒழிந்தாலும் ஈஸ்வரன் கார்யம் செய்வான் -ஆத்மாவையும் அழிக்க சக்தி உள்ளது –
ஆனால் ஸத்யஸங்கல்பத்துவம் உண்டே -அதனால் நித்யத்வம் –
அதே போலே சாஸ்திரம் சிலுக்கிடாமைக்கு காரணம் -வீணாக போகக் கூடாதே –
ஜடாயுவுக்கு -பறவை -தகுதி இல்லை -ப்ராஹ்மணானால் கொலை உண்டவன் –ஆனால் கொடுத்தானே —
சாஸ்திரம் மீறுவதற்கு வல்லமையும் உண்டே அவனுக்கு -சதா காருணிகன்–
இங்கு சொல்வது சர்வ முக்தி பிரசங்கம் வாராமை -ச ஹேதுதவமும் வாராமைக்காக -ஸ்வரூபத்துக்கு பின்னமாக எதிர்பார்க்க வில்லையே –

பலத்துக்கு -என்றது -பல சித்திக்கு -என்றபடி –
ஆத்ம ஞானம் ஆவது -ஸ்வ ஸ்வரூப ஞானம் -அதாவது
தத் ஏக சேஷத்வ-தத் ஏக ரஷகத்வங்களை அறிகை-
அப்ரதிஷேதம் ஆவது -நிருபாதிக சேஷியாய்-நிருபாதிக ரக்ஷகனான அவன் பண்ணும் ரஷணத்தை விலக்காமை-அதாவது
ஸ்வ ரக்ஷணே ச்வான்வய நிவ்ருத்தி –
அவதாரணத்தால்-இவை இரண்டும் ஒழிய பின்னை ஒன்றும் வேண்டாதபடி –
சரம பதத்தில் சொல்லுகிற பலத்துக்கு -பிரதம பதத்தில் சொல்லுகிற-ஆத்ம ஞானமும் –
மத்யம பதத்தில் சொல்லுகிற அபிரதிஷேதமும் இறே வேண்டுவது..-

நிர் ஹேதுகம்-சேஷி ரக்ஷகன் –மே-ஏவ காரம் -வேறே ஒன்றுமே வேண்டாம் –
திருமந்திரத்தில் மூன்று பதங்களின் அர்த்தமே -இங்கே சொல்கிறது –
நாராயணாயா கைங்கர்யம் கிட்ட–சேஷத்வ சம்பந்த ஞானமும் பிரணவ அர்த்தமும் —
அப்ரதிஷேதமும் -நமஸ் அர்த்தமும் வேண்டும் -என்றவாறு

————————————-

சூரணை-61-

அல்லாத போது
பந்தத்துக்கும்
பூர்த்திக்கும்
கொத்தையாம் –

இப்படி அன்றிக்கே -பல சாதனமாக இவனுக்கு சில செய்ய வேணும் என்றால்
வரும் தீங்கு என் என்ன -அருளி செய்கிறார் –

இவற்றை ஒழிய -அவன் சா பேஷமாக இவன் சிறிது செய்யும் பொழுது நிருபாதிக ரஷ்ய ரஷக பாவ சம்பந்தத்துக்கும் –
சா பேஷத்வம் கந்தம் இல்லாத பூர்த்திக்கும் –சோ பாதிகத்வ அபூர்த்திகத்வங்களுக்கும் -உபாதியால் கொடுப்பது –
சம்பந்த பூர்த்திகளுக்கும்- இரண்டுக்கும் கொத்தையாம்
சார்வபவ்மன்-சா பேஷமாய் மஹிஷிக்கு சமானமான ஜீவனை ரக்ஷணம் பண்ணுகையும் -அவள் ஸூரக்ஷண அர்த்தமாக யத்னம்
பண்ணுகையும் சம்பந்த பூர்த்திகளுக்கு கொத்தையாகும் -நம் சேஷத்வ அனுகுணமாக சத்தைக்கு கொடுக்க வேண்டும்

அல்லாத போது -என்றது -இவ்வளவு அன்றிக்கே பல ஹேதுவாக இவன் சில செய்ய வேண்டும் போது என்றபடி –
பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாகை -யாவது -இவனுடைய ரஷணம் தன் பேறாம் படியான
அவனுடைய நிருபாதிக நிரபேஷ உபாயத்வத்துக்கும்-அவத்யமாய் தலை கட்டும்-என்கை–

————————————-

சூரணை -62-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று –
பிரமித்து –
அத்தை விளைத்து கொள்ளாது
ஒழிகையே வேண்டுவது –

ஆனாலும்–அநந்த க்லேச பாஜனமான -சம்சார சாகரத்தில் அழுந்தி கிடந்து
அலைகிற தன் ஆபத்தை உணர்ந்தால்-ஆபத் சகனான ஈஸ்வரனை
1-ஸ்வ  பிரபத்தியால்-2 வசீகரித்து 3-தத் பிரசாதத்தாலே இத்தை
கழித்து கொள்ள வேண்டாவோ -என்ன -அருளி செய்கிறார்-

அநிஷ்டம் அபிவிருத்தமாகுமே -சம்சார வர்த்தகமாய் விடும் –ஆமச்ஜுரத்தை -அஜீரண ஜுரத்தை ஆற்றக் கோலி ஆற்றிலே முழுகுவாரை போலே
விபரீத ஞானம் ஸ்வா தந்திரம் -ஸூ யத்னத்தால் -அபத்ய சேவையாலே சதா சாகமாக விளைத்துக் கொண்டு வளர்த்துக் கொண்டு –
அந்த பிரமத்தை விட்டு ஸூ யத்ன நிவ்ருத்தனாய் இருக்கை ஒன்றே தந் நிவ்ருத்திக்கு வேண்டுவது –
ஆபத்து போக்க நீ போக வேண்டும் -சகாதேவன் கண்ணா நீ தூதனாக போனதே யுத்தத்துக்காக -என்றால் போலே
அநிஷ்ட நிவ்ருத்திக்கு இவன் கை முடங்கவே -வெறும் கை வீரன் ராவணன் ஆனான் -ராமன் வில் கை வீரன் –
ஸூ ரக்ஷணம் ஸ்வான்மயம் ஒழிய வேண்டுமே -அஞ்சலி பரமா முத்ரா –

அதாவது –
சர்வேஸ்வரன் திருவடிகளிலே பிரபத்தி பண்ணி -சம்சாரம் ஆகிற ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம்
என்று -தான் பண்ணுகிற பிரபத்தியாலே தன் ஆபத்தை போக்கி கொள்ளுகிறனாக பிரமித்து –
தத் ஏக பார தந்த்ர்யா ரூப ஸ்வரூப ஹானியாகிற-ஆபத்தை விளைத்து கொள்ளாது ஒழிகையே
தந் நிவ்ருத்திக்கு இவன் செய்ய வேண்டுவது என்ற படி –
ஓர் ஆபத்தை பரிஹரிக்க புக்கு-ஓர் ஆபத்தை விளைத்து கொள்ளாதே-
இவன் ஸ்வ யத்னத்திலே நிவ்ருத்தனாய் இருக்கவே -எம்பெருமான் தானே ரஷிக்கும் என்று கருத்து –
அத்தை -என்றது -ஆபத் சாமான்யத்தை பற்ற -அல்லது- பர க்ருத ஆபத்து தன்னையே பராமர்சித்த படி என்று ..

பிரபத்தியால் ஈஸ்வரன் கிருபை கிளப்ப முடியாதே -கிருபையால் தானே பிரபதிக்கே வந்து அவனை ஸ்வீ கரிக்கிறான்
தான் பண்ணும் ப்ரபத்தியும் இல்லை-தன் ஆபத்தும் இல்லை -தன் திருமேனி அழுக்கை தானே போக்கிக் கொள்வான் அன்றோ –
ஸ்வரூபம் பாரதந்தர்யத்துக்கு ஆபத்து போக்க -வேறே ஒன்றும் வேண்டாம் –சம்சாரக் கடலையும் நீங்க பாரதந்த்ரயம் ஸ்வரூபத்துக்கும்
ஹானி வாராமைக்கு அவனை மட்டும் விலக்காமல் இருந்தால் போதுமே –
ஒன்றும் செய்ய வேண்டாம் மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி துரும்பு நறுக்க பிராப்தி இல்லை -என்பதால் —
உபாய பாவமாக செய்யாதே -அனைத்தும் கைங்கர்யமாக பண்ண வேண்டும் –
அத்தை –பாரதந்த்ர ஆபத்து -ஆபத் சாமான்யம் –

———————————————-

சூரணை -63-

ரஷணத்துக்கு
அபேஷிதம்
ரஷ்யத்வ
அனுமதியே –

ஆனாலும் -ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷதே -என்று ரஷகனான சர்வேஸ்வரன்
ரஷ்ய பூதனான இச் சேதனனுடைய அபேஷையை பார்த்து இருக்கும் -என்கையாலே –
அவன் பண்ணும் ரஷணத்துக்கு இவன் அபேஷையும் வேண்டும் அன்றோ இருக்கிறது -என்ன-அருளி செய்கிறார் –

பலம் வேறே ரக்ஷணம் வேறே -கிருபா விசிஷ்டன் பலம் கொடுப்பது -ரக்ஷணம் அநிஷ்டம் போக்கி இஷ்டம் தருவது –
அவன் திரு உள்ளத்துக்கு பின் செல்லுகையே வேண்டுவது –
அபேக்ஷையை எதிர்பார்க்கிறான் -பிரார்த்தனையை -என்றபடி -நிருபாதிக ஸ்வாமி -அவன் பண்ணும் ரக்ஷணம் அதுக்கு பக்ஷபாதி ஆகாமைக்கு –
நீ என்னால் ரக்ஷிக்கப் பட வேண்டியவன் என்று அவன் சொன்னால்- ஓம் ஒக்கும் -அனுமதி ஒன்றே வேண்டுவதே –
அது இல்லாமையால் அநாதி காலமும் இழந்தது –

அதாவது –
நிருபாதிக ரஷகனானவன் பண்ணும் ரஷணத்துக்கு -இச் சேதனன் பக்கல்  வேண்டுவது –
நீ எனக்கு ரஷ்யம் என்றால் -அல்லேன் என்னாதே–
தன்னுடைய ரஷ்யத்வத்தை இசையும் இவ்வளவே என்கை –
ரஷ்யா அபேஷாம் -என்கிற இடத்தில் -சொல்லுகிற அபேஷை
ரஷ்யத்வ அனுமதி த்யோதகம் இத்தனை -என்று கருத்து –
யாச்னா பிரபத்தி பிரார்த்தனா மதி -என்கிற ச்வீகாரத்தை அப்ரேதிஷேத த்யோதகம்
என்று இறே இவர் தாம் அருளி செய்தது -முமுஷுபடி -சூரணை -233 –

இசைவித்து உன் தாளிணை கீழ் இருத்தும் அம்மான் ஆழ்வாராதிகளுக்கு –
நமக்கு அனுமதியே தான் பிரார்த்தனை -விலக்காமையை சொல்ல ரஷ்யத்தை அனுமதி பண்ணி ஏத்துக் கொள்வதே –

பிரசாதம் அருள் அதிருஷ்டம் -ஏற்பட ஒன்றும் எதிர்பாராது -இதுக்கு ஜனகம் பிரபத்தி கார்யம் இல்லை -சித்த உபாயம் -நிர்ஹேதுகமாக அருள்கிறான் –
ஸ்வரூப ஞானம் வந்து விலக்காமையிலே மூட்டும் -இரண்டும் இருப்பதால் த்ருஷ்டா ரூபமான யோக்யதைக்கு பிரயோஜனம் –
சம்சாரம் தாண்டுவது த்ருஷ்டம் தானே -பிரதி பந்தக அபாய விதயா-விலக்காமை -அன்வய வ்யதிரேக சாலிதயம் –
திரை விலக்கி வெளிச்சம் காணுமா போலே காரணம் அல்லாத சாதனாந்தர நிவ்ருத்தி –இதுவே அப்ரதிஷேதம் –
அதிகார ரூபமாக அன்றிக்கே பிரசாதம் கிளப்ப ஏதேனும் செய்ய முயன்றால் -பாதகம் -நம் இடம் மட்டும் இல்லை –
பூர்த்திக்கும் பந்தத்துக்கும் கொத்தை
பல சாதனமாக பலமான அவனை வரித்தலே பிரபத்தி -அவன் உபாய அ நபேஷா ரக்ஷணம் பண்ணினால்-
ரக்ஷண ரூபா அதிசயம் ஜீவனுக்கு இல்லாமல் சேஷிக்கே ஆகும்
பலத்துக்கு சாதனா அனுஷ்டானம் பண்ண வேண்டும் என்று நினைத்து செய்து -அதனால் பலம் பெற்றால் அதிசயம் ஜீவனுக்கு ஆகுமே –
நிருபாதிக சேஷித்வத்துக்கு வைக்கலயம் குறைபாடு வரும் -சாவதாரண சேஷத்வ ப்ரதிஸம்மிதத்வத்துக்கு குறைபாடு வரும்
-அவனுக்கே அவதாரணம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –
1-ஸ்வ  பிரபத்தியால்-2 வசீகரித்து 3-தத் பிரசாதத்தாலே இத்தை-கழித்து கொள்ள வேண்டாவோ -என்ன -அருளி செய்கிறார்-
பக்தி யோகம் போலே பிரபத்தி என்று நினைத்து -இந்த வார்த்தைகள் –
அத்யந்த பாரதந்தர்யம் அறிந்தவன் இத்தை சாதனமாக நினைக்க மாட்டானே –
பக்தி செய்ய செய்ய அபூர்வமாக முன்பு பார்த்து இராத பிரசாதம் பார்த்து மோக்ஷம் –
இதுவே வசீகரித்து -பக்தி யோக ஸ்தானத்தில் இதுவும் வருமே –
தத் பிரசாதம் -பிரபத்தியால் ஜன்ய என்றவாறு -/
பிரசாதத்தால் வந்த உபாய வர்ண ரூபமான பிரபத்தி –
அனுபாய பிரபத்தி என்றும் பிரபத்தியால் வந்த பிரசாதம் உபாய பிரபத்தி என்றும் ஆகுமே /
சித்த உபாய ஸ்வீ காரத்தை சாதிய உபாயமாக பிரமித்து -விளம்பம் -இத்யாதி பக்திக்கு உள்ள குறைகள் இதுக்கும் வருமே –
ரக்ஷணத்துக்கு அவன் திரு உள்ளத்துக்கு பின் செல்வதே வேண்டும் -அபேக்ஷை -விருப்பம் -சித்தமாக இருக்க தடுக்காமையே அபேக்ஷை —
சர்வேஸ்வரன் சதா காருணிகனான-சாத்தியம் -நித்யம் -சம்சாரம் நிர்வஹிக்க-அபேக்ஷை -தடுக்காமல் இருக்கவே ரஷிப்பேன்-
என் இசைவினை -என்றும் இசைவித்து என் தாளிணை கீழ் இருத்தும் அம்மான் -தன்னைத் தவிர வேறே உபாயத்தை எதிர்பார்க்க மாட்டார்
திரு உள்ளத்தை பின் தொடர்ந்து அநுவிதமான அனுமதி ஒன்றே வேண்டுவது -அப்ரஷேதம் அனுமதி -சம்மதம் தடுக்காமல் இருப்பதும் ஒன்றே –
பிரார்த்தனை மதி சரணாகதி –யத்ர அனுமதி அபாவ-தத்ர உபாயத்வ பிரார்த்தனை அபாவம்–ஜ்யோதிஷடஹோமத்தை பார்த்து பிரார்த்தனை இல்லையே
இங்கு சித்தமாக இருப்பதால் பிரார்த்தனை -வேண்டுமே –ஸ்வீ காரமே விலக்காமை விண்ணப்பித்தல் -ஸ்வயம் உபாயம் இல்லை உபாயத்வ வரணம் —
அதிகாரி -பிரசாதம் பெற அடையாளம் தானே இந்த அப்ரதிஷேதம் –/ பக்தியில் அறிவிக்க வேண்டிய தேவை இல்லை -அதுவே உபாயமாக இருப்பதால் –

————————–

சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் –
சைதன்ய கார்யம் ஆகையாலும் –
பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் –
ஸ்வரூப வ்யதிரேகி யல்லாமையாலும்-
அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாகக ஒண்ணாது —

இப்படி அனுமதி சாபேஷனாய் ரஷிக்கும் ஆகில் –
இவ் அனுமதி தான் சாதனம் ஆகாதோ -என்ன -அருளி செய்கிறார் –

யாஜ்ஜா பிரார்த்தனா பிரபத்தி சரணாகதி –பிரபத்தியே அனுமதி ரூபம் -விருப்பப்படுகிற தசையை சொல்வதே –
பிரபத்தி சரணாகதி பர்யாயம் பிரார்த்தனா மதியே -பிரார்த்தனா ரூப ஞான விசேஷம்-
இதில் சரணாகதி ரஷ்யத்வ அத்வசாயாத்மகமான பிரபத்தி விசேஷத்தை வியாவர்த்திக்கிறது
கீழே உபாய அனு பாய பிரபத்தி இரண்டையும் பார்த்தோம் -பக்திக்கும் அனுமதி வேணும் -பக்தி பண்ணு- சாஸ்திரம் விதிக்க ஆம் பண்ணுகிறேன் –
அனுமதி உபாயம் இல்லை -பக்தி தானே உபாயம் – அனுமதி ஸ்வரூபம் -பாரதந்தர்யம் மூலம்- / ஈஸ்வரனுக்கு ஸ்வரூபம் உபாயத்வமும் ப்ராப்யமும் -/
உபாயம் ஸ்வரூப வியதிரேகமாக பரதந்த்ரனுக்கு இருக்குமே -அனுமதி ஸ்வரூபம் என்பதால் உபாயமாக ஒண்ணாதே –

எல்லா உபாயத்துக்கும்  பொதுவாகையாவது–போக மோஷ உபாயங்களில் -ஏதேனுமொன்றில் அதிகரிக்கும் அவனுக்கும் –
நீ இவ் உபாயத்தை அனுஷ்டி என்றால் -அப்படியே செய்கிறேன் என்று அனுமதி பூர்வகமாக அதில் இழிய வேண்டுகையாலே –
சகல உபாய சாதாரணமாய் இருக்கை-
இத்தால் ஓர் இடத்திலும் இவ் அனுமதிக்கு இவ் அதிகாரி விசேஷணத்வம் ஒழிய -பலசாதனத்வம் இல்லாமை  காட்டப் பட்டது –
சைதன்ய கார்யம் ஆகை யாவது -ரஷ்யத்வம் -சேதன அசேதன சாதாரணமாய்-இருக்க செய்தே -ஜ்ஞான சூன்யம் ஆகையாலே –
அவ் ஆகாரத்தை அறிகைக்கு-யோக்கியம் அல்லாத அசேதனம் போல் அன்றிக்கே -ஜ்ஞானாஸ்ரைய  பூதன்  ஆகையாலே –
அத்தை அறிகைக்கு யோக்யனாய் இருக்கிற இச் சேதனன் -பக்கல் உண்டான அனுமதி –
இவனுடைய ஜ்ஞான கார்யமாக கொண்டு வந்ததாய் இருக்கை –
இத்தால் இவ் அனுமதி இச் சேதனனுடைய வாசியை பற்றி வந்தது ஆகையாலே -சாதன கோடியில் அன்வயியாது-என்றபடி –

பிராப்ய தசையிலும் அன்வர்திகை யாவது -உபாய தசை  அளவில்  அன்றிக்கே -உபேய தசையிலும் –
அவன் வ்யாமோஹ அநு குணமாக கொள்ளும் விநியோக விசேஷங்களில் -திரு உள்ளமானபடி –
கொண்டு அருள வேணும் என்னும் அனுமதி இவனுக்கு நடந்து செல்லுகை-
இத்தால் சாதனம் ஆகில்-பல சித்தி அளவிலே மீள வேணும் என்று கருத்து –

ஸ்வரூப வ்யதிரேகி  அல்லாமை யாவது -சேஷி செய்யும் அதுக்கு உடன்பட்டு இருக்கை சேஷத்வ பாரதந்தர்ய கார்யம் ஆகையாலே –
இவ் அனுமதி ஸ்வரூபத்துக்கு  புறம்பு அன்றிக்கே ஸ்வரூபமாய் இருக்கை –
இத்தால் -சாதனம் ஆகில் -ஸ்வரூப வ்யதிரேகியாய் இருக்க வேணும் என்று கருத்து —
அசித் வ்யாவிருத்த வேஷம் ஆவது -ஜ்ஞாத்ருத்வத்தாலே -ஞான சூன்யமான அசித்தில் வேறு பட்டு இருக்கிற ஆத்மாவினுடைய ஆகாரம் –
இவ்விடத்தில் அவ் ஆகாரமாவது-ஜ்ஞான கார்யமான அனுமதி –
இத்தை சாதனம் ஆக ஒண்ணாது -என்றது -இப்படி இதனுடைய அசாதனத்வ ஹேதுக்கள்-
அநேகம் உண்டு ஆகையால் -இத்தை சாதனமாக ஆக்கப் போகாது என்றபடி –
அசித் வ்யாவ்ருத்தி வேஷம் -என்று பாடம் ஆகில் -ஜ்ஞான சூன்யமான அசித்தில் காட்டில்
ஆத்மாவுக்கு உண்டான ஜ்ஞாத்ருத்வ ரூப வ்யாவிருத்தியின் வேஷமான அனுமதியை-என்று சப்தார்த்தம் –

—————————————————

சூரணை -65-

அசித் வியாவிருத்திக்கு பிரயோஜனம்
உபாயத்தில் உபகார ஸ்ம்ருதியும்
உபேயத்தில் உகப்பும் –

ஆனால் இவ் அசித் வ்யாவிருத்தி தனக்கு ஒரு பிரயோஜனம் வேண்டாவோ என்ன –
அருளி செய்கிறார் –

பகவத் சேஷம் ஞான ஆனந்த ரூபமான அசித்தை விட வேறு பட்டு -பரம சேதனன் பக்கல்-உபகார ஸ்ம்ருதியும்
அதுக்கு மேலே நித்ய சேஷி பக்கல் நித்ய கைங்கர்யம் உகந்து
ஸ்ம்ருதி ப்ரீதி யோக்யதை அற்ற அசித்தைக் காட்டிலும் தத் உபய யோக்யதையே இவன் சேதனனாக பெற்ற பலம் –
பிரபலதர விரோதி -ஸூ போக்த்ருத்வ புத்தி கூடாதே -அவன் ப்ரீதியைக் கண்டு இவன் ஆனந்தப்பட வேண்டுமே

உபாயத்தில் உபகார ஸ்ம்ருதி யாவது –
என்னை தீ மனம் கெடுத்தாய் -திருவாய்மொழி – 2- 7- 8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி – 2- 7- 7-என்கிறபடியே
சித்த உபாயமான எம்பெருமான் தன் திறத்தில் பண்ணின உபகாரங்களை அனுசந்திக்கை –
உபேயத்தில் உகப்பு யாவது -அவன் திருவடிகளில் தான் பண்ணும் கைங்கர்யங்களில் –
உகந்து பணி செய்து -திருவாய்மொழி -10 -8 -10 -என்ற உகப்பும் –
அத்தால் அவனுக்கு விளைகிற ப்ரீதியை கண்டு தனக்கு விளைகிற ப்ரீதியும் –

———————————————–

சூரணை -66-

உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே
பிராப்திக்கு உபாயம்
அவன் நினைவு —

இப்படி இவன் பக்கல் உள்ளது ஒன்றும் உபாயம் அன்று ஆகில் –
இவனுக்கு தத் பிராப்தி உபாயம் தான் எது என்ன அருளி செய்கிறார்-

குவளையம் கண்ணி என்னும் ஞானமும் -கொல்லியம் பாவை என்கிற பாரதந்தர்யமும் –
நின் தாள் நயந்த ஸ்வரூப அனு ரூபமான பக்தியும் -உபாயம் ஆகாதே
அங்கீகார ஹேது அன்றியே -இவற்றைப் பார்த்து கை விடவோ -உன்னையே பார்த்து கைக் கொள்ளவோ
எது திரு உள்ளம் என்கிற திருமங்கை ஆழ்வார்
திரு உள்ளக் கருத்துப் படி பரதந்த்ரனான ஸ்வம்மானை இவன் ஸ்வ தந்த்ரன் ஸ்வாமியை அடைய நினைத்தபடி செய்து
தலைக் கட்ட வல்லவனுமாய் பிராப்தனான அவனுடைய நினைவு -இவனை உஜ்ஜீவிக்கப் பண்ண வேண்டும் என்ற நினைவே உபாயமாகும் –
ஸ்வீகாரம்- அனுமதி- வரணம்- ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி -நான்கும் உபாயம் இல்லை / இடவெந்தை எந்தை பிரானே –
பிரான் -உபகார ஸ்ம்ருதி /எந்தை கைங்கர்யத்தில் உகப்பு / அவன் நினைவு தான் பிரசாத ஜன்யம் என்றவாறு

அதாவது –
இத் தலையில் உள்ளது ஒன்றும் பேற்றுக்கு உபாயம் அல்லாமையாலே –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பெரிய திருமொழி -2 -7 -1 -என்று
கை கழிந்தவற்றுக்கும் ஒரு போக்கடி  பார்த்து இருக்க கடவ –
உன் திரு உள்ளத்தால் நினைத்து இருந்தது என் என்று -ஹிதைஷியான அவன் நினைவே உபாயம் என்று ஆழ்வார் அநு சந்தித்தபடியே-
அவனை பிராபிக்கைக்கு உபாயம் -சர்வஞ்ஞனாய்-சர்வ சக்தியாய் -பிராப்தனாய் –
பரம தயாளுவாய்-இருக்கிற அவனுடைய -இச் சேதன உஜ்ஜீவன அர்த்தமான நினைவு -என்றபடி –

———————————————————–

சூரணை -67-

அது தான் எப்போதும் உண்டு –

அந் நினைவுதான் அவனுக்கு எப்போது உண்டாவது என்ன –
அருளிச் செய்கிறார் –
சதா காருணிகன் சன் நித்ய காருணிகன் / உபாய உபேய அந்தர்பரனாய் திரிந்த காலத்திலும் –

எப்போதும் -என்றது -இவன் யாதானும் பற்றி நீங்கி திரிகிற-திரு விருத்தம் -96 – காலத்தோடு
இன்றோடு வாசி யற-சர்வ காலத்திலும் -என்றபடி –

—————————————–

சூரணை -68-

அது பலிப்பது
இவன் நினைவு மாறினால் –

ஆனால் இது நாள் வரை பலியாது இருப்பான் என் -என்ன
அருளிச் செய்கிறார் –

அநாதி ஸித்தமான அவன் நினைவு – பிராப்தி சாதனமாக பலிப்பது-தன் அனுமதி அளவாக தத் பிராப்தி சாதனம் –
இத்தை உபாயம் என்று பிரமிக்கிற அஞ்ஞனான சேதனனுடைய- -பிரதி பந்தகமாக ஸூ ரக்ஷண நிமித்தமாக நினைவும் —
சர்வஞ்ஞன் சர்வசக்தன் நினைவே தஞ்சம் என்னும் படி அவன் தன் நினைவாலே சவாசனமாக இத்தையும் மாற்றி-அதுவும் பலிப்பது

அதாவது –
அவன் நினைவு இவனுக்கு கார்ய கரமாவது
இவனுடைய ஸ்வ ரஷண சிந்தை மாறின காலத்தில் -என்றபடி –

————————————————–

சூரணை -69-

அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –

இவ் அர்த்தத்தினுடைய திட யர்த்தமாக நஞ்சீயர் வார்த்தையை அருளி செய்கிறார் –
அழகிய மணவாளா பட்டர் நோவு பட நஞ்சீயர் -எது தஞ்சம் எது தஞ்சம் என்று -அஹம் ஸ்மராமி மத் பக்தன் –
அவன் வாய் புகும் உணவை பறிப்பது போலே –
ஸூ ரக்ஷணம் சிந்தை விட்டு -பேறு இழவு தன்னதாம் படி பந்த விசேஷம் உடைய ஸ்வதந்த்ர ஸ்வாமி நினைவு பேற்றுக்கு உடலாய்
அத்தை தடுக்கும் இந்த நினைவு இழவுக்கு உடலாய் விடும்

அதாவது –
நஞ்சீயர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் உள்ளார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை -நோவறிகைக்காக
சென்று எழுந்து அருளி இருக்கிற அளவில் -அந்த ஸ்ரீ வைஷ்ணவர் -அடியேனுக்கு அந்திம
காலத்துக்கு தஞ்சமாய் இருப்பது ஓன்று அருளிச் செய்ய வேணும் -என்ன –
அந்திம காலத்துக்கு தஞ்சம்- நமக்கு இப்போது தஞ்சம் என் என்கிற
தன்னுடைய ஸ்வ ரஷண சிந்தை குலைகை காணும் -என்று அருளிச் செய்த வார்த்தை –
ஆகையால் ஈஸ்வரன் இவ் ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு  உறுப்பாக பண்ணும் சிந்தை
பலிப்பது இவனுடைய ஸ்வ ரஷண சிந்தை மாறினால் என்றது ஆய்த்து-

———————————————-

சூரணை -70-

பிராப்தாவும்
பிராபகனும்
பிராப்திக்கு உகப்பானும்
அவனே —

பிராபகன் ஈஸ்வரன் ஆனாலும் -பிராப்தாவும்  பிராப்திக்கு  உகப்பானும் இவன் அன்றோ –
ஆன பின்பு இவன் நினைவை  இப்படி நேராக துடைக்கலாமோ என்ன –
அருளி செய்கிறார் –
அன்றிக்கே –
இச் சேதனன் கையில் உள்ளவற்றில் உபாயத்வ கந்தம் அற துடைத்து
ஈஸ்வரனை உபாயம் என்று நிஷ்கர்ஷித்த  போதே -பிராப்த்ருத்வமும் -பிராப்தியில் வரும் உகப்பும் -இவனது அன்றிகே –
உபாய பூதனான ஈச்வரனேதயதாய் பலித்து விடுகையாலே -பிராப்தாவும் -ப்ராபகனும் -பிராப்திக்கு உகப்பானும் -அவனே -என்று
நிகமித்து அருளுகிறார் ஆகவுமாம்–

பிராப்தி பந்தகமான நினைவுடைய இவனுக்கு -ப்ராப்தாவாகும் தன்மை இல்லை -அடையாவிடில் -அடையும் விருப்பமும் இல்லை என்றதாகுமே –
பிராப்பகமும் இல்லை என்றால் ப்ராப்தியால் வரும் ப்ரீதி பிராப்தியும் இல்லையே இவனுக்கு -என்றதாகுமே –
அனைத்தும் அவனுக்கே -அடைபவனும் அடைவிப்பவனும் அடைந்து மகிழ்பவனும் அவனே -மூன்று இடங்களிலும் உம்மை -/
தன் சொத்தை பிராப்தியுடன் பிராபிக்கும் அவன் ஒருவனே –பிராபிக்கும் இடத்தில் -ஸ்வாமி ஸ்வதந்த்ரன்
சேஷி -சொத்து பரதந்த்ரன் சேஷமான தன்மைக்கு விரோதம் வாராமல் -சூர்ணிகை –
அவதார ரூபமாகவும் ஸூவ சங்கல்ப ரூபமாகவும்-பிரதான பலித்தவம் பலத்தை அனுபவிக்கவும் – யுக்த த்ரயமாக தானேயாய் –
அவதாரம் பிராப்தம் சித்தம் -சங்கல்பமே நினைவு -பிராபகத்வம் -மூன்றாவதில் பிரதானம் என்பதால் –
சேதனன் அமுக்கியம் -அவன் உகப்பை பார்த்து தானும் உகப்பான் –
ஈஸ்வர லாபம் ஆத்மாவுக்கு அன்றியே ஆத்ம லாபம் ஈஸ்வரனுக்கே -சொத்து ஸ்வாமி பாவ சம்பந்தம் -ஸ்வாமிக்கு அடங்கிய சொத்து —
பராதீனம் என்பதால்–இவனுடைய ப்ராப்திக்கு வேண்டிய கர்த்ருத்வம் இல்லாமல் –ஸ்வதந்த்ர ப்ராபகத்வம் –
உபாயம் என்று ஏற்றுக் கொண்டு யத்னம் இல்லாமல் –
ஸ்வாரத்த போக்த்ருத்வத்தை மூச்சு அறுத்தும் பராதீன பிரயோஜனம் -பராதீன போக்த்ருத்வம் –
அவனுக்கு அடங்கியவை-ஸ்வாதீன த்ரிவித சேதனம் அசேதனம் அவனுக்கு – –
சொத்வம் பாரதந்தர்யம் சேஷத்வ சித்தி -மூன்றும் இம் மூன்றால் சித்திக்கும் –
அவனால் தூண்டப்பட்டு அவனால் காக்கப் பட்டு அவனுக்காக இருக்கும் சேதனன் –

ப்ராப்தா அவன் ஆகையாவது –
ஸ்வத்வ மாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம்  ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிற
ஸ்வதஸ் சித்தமான ஸ்வ ஸ்வாமித்வ சம்பந்தம் அடியாக -உடைமையை பிராபிக்கும் உடையானை போலே
இவ் ஆத்மாவை பிராபிப்பான் தானாய் இருக்கை –
பிராபகன் அவன் ஆகையாவது -தான் இவனை பிராபிக்கும் இடத்தில் பிராப்திக்கு உபாயமும் –
சர்வஜ்ஞத்வ சர்வ சக்தித்வ சத்ய சங்கல்பத்வாதி குண விசிஷ்டனாய் -நிரந்குச ஸ்வதந்த்ரனான-தானாய் இருக்கை –
பிராப்திக்கு  உகப்பான் அவன் ஆகையாவது -ஸ்வத்தினுடைய லாபத்திலே – தத்-போக்தாவான ஸ்வாமி ஹ்ருஷ்டனாப் போலே –
இவனை பிராபித்தால் பிராபிக்க பெற்றோமே -என்று உகப்பானும் -இவ் ஆத்மாவுக்கு நித்ய போக்தாவான தானாய் இருக்கை –
இவை மூன்றும் -அவனே -என்கிற அவதாரணத்தாலே-இவற்றில் இவனோடு அன்வயிப்பது ஒன்றும் இல்லை என்கை –
இதில் -பிராப்தாவும்  பிராபகனும்  அவனே -என்கையாலே -இவனுக்கு ஸ்வ யத்னத்திலே-அன்வயம் இல்லை என்னும் இடமும் –
பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்கையாலே-ஸ்வ பிரயோஜனத்தில் அன்வயம் இல்லை என்னும் இடமும் சித்தம் ஆய்த்து –

சங்கா முகேன ஒருவர் கேட்க பதிலுக்கு சூர்ணிகை அவதாரம்– ப்ரஹ்மத்தை அறிந்து ப்ரஹ்மம் அடைகிறான் –
சுருதிகள் -இவனுக்கு அடையும் தன்மை அடையப்படும் தன்மை சொல்லும்
மேலும் -ப்ரஹ்மம் அடைகிறான் என்னில் -அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தும் -அபூர்த்தி வருமே –
ப்ரஹ்மதுக்கு கார்யமோ காரியத்துக்கு கரணங்களோ இல்லை -சாதம் அனுஷ்டானம் அபாவம் லபிக்கையாலும்
உபய லிங்க ப்ரஹ்மதுக்கு ஸூத்ரனான இவனை அடைவது அனுப பன்னமாகுமே-
ப்ரஹ்மத்தை அடைந்து ஆனந்தம் அடைகிறான் -கூடி இருந்து கல்யாண குணங்களை அனுபவித்து ஆனந்தம் அடைகிறான் என்றும் சுருதிகள் உண்டே
உபேயத்தில் உகப்பும் என்று கீழே -சாஸ்திரம் அனுஷ்டா சேதனன் தன் உகப்பாக வேண்டும் –
இவனுடைய நினைவு-ஸாத்ய உபாயமாய் – பகவத் பிரசாதத்தால் சாதிக்கப்பட்டதாய் -அப்ரதானமாய் இருக்கும் -என்னவும் கூடாது –
இப்படி பூர்வ பக்ஷம் வாதம் -இதுக்கு சமாதானம் இந்த சூர்ணிகை –
சொத்வம் பாரதந்தர்யம் சேஷம் மூன்றும் இவன் இடம் உண்டே –
சொத்தாய் இருந்தால் ஆசைப்பட்டபடி எடுத்து விநியோகம் பண்ண அர்ஹமாய் இருக்குமே
ஸ்வாமித்வம் – விருப்பப்பட்ட படி செய்யலாமே-ஸ்வாமித்வம் ஸ்நிதம்
லௌகிக சொத்து ஸ்வாமி போலே இல்லையே -ஜென்மத்தால் வந்தது போலே இல்லையே
வியாபாரிக்கு ரத்னம் அடைந்து -அதனால் குறை வராதே -யாக உபாசனம் கைங்கர்யம் பண்ணி அடைய
சாஸ்திரம் சொல்வது அபூர்ணன் என்பதால் இல்லையே
ஸ்ரத்தையா தேவதா -பிராட்டியால் தேவன் ஆனான் -அதிசயம் மேன்மையை சொல்ல வந்ததே
கௌஸ்துபம் ஸ்தானம் -அதிசயம் -வத்சலன் ஸ்வாமி -அஹம் அன்னம் அன்னாதா இவன் உகப்பு அவன் உகப்புக்கு ஹேது அஹம் அன்னாதா –
அத்தை கண்டு அடியேன் உகப்பும் உண்டே -அசித் வியாவருத்தம் ஆக வேண்டுமே
கரணங்கள் இல்லை என்றது லௌகிக வியாபாரங்களுக்கு-போலே இல்லாமல் –ஸ்வ சங்கல்பத்தாலே செய்பவன் அன்றோ –
ப்ரஹ்மத்தை அறிந்து அடைகிறான் -உபாயாந்தரம் பற்றும் ஸ்வ தந்த்ரனை பற்றி இங்கு பிரபன்னனை பற்றி அன்றோ –
பாரதந்தர்யமே ஸ்வரூபம் என்று அறிந்து சரணம் அடைந்தவன்
அநந்ய பிரயோஜன பக்தனை அடையவே -அர்ச்சாவதார பர்யந்த அவதார பிரயோஜனம் —
சாதுக்களை ரக்ஷணம் துஷ்டர்களை நிரசித்து -தர்ம சமஸ்தானம் மூன்றும் இல்லை
சங்கல்ப சாத்தியம் -துஷ்க்ருதிகளை நிரசிக்க -அந்தர்யாமி -சாது ரக்ஷணம் -ஆவேசலித்து தர்மம் ஸ்தாபிக்கலாமே –
சேதனனை அடைய அவதரித்து -சாஸ்திரம் படைத்து -இத்யாதி -செயல்கள் / பகவானுக்கு போக்யமாவதற்காக போக்தா ஆகிறான் /
மாலைக்கும் ஜீவாத்மா என்கிற மாலைக்கும் வாசி உண்டே -கோரா மா தவம் செய்து அடைந்து -எதிர் விழி கொடுத்து
அவன் ஆனந்தத்தை வர்த்திப்பானே- அப்ரதான போக்த்ருத்வம் என்றவாறே -/
வாரிக் கொண்டு –என்னில் முன்னம் பாரித்து காட்கரை அப்பன் -போகத்தில் தட்டு மாறுமே —
ஆப்நோதி பரஸ்மை பதம் பிரயோகம் -ஆத்மனி பிரயோகம் இல்லையே -இதனால் –

——————————————-

சூரணை -71-

ஸ்வ யத்ன நிவ்ருத்தி
பாரதந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி
சேஷத்வ பலம் –

ஆனால்  ஜ்ஞாத்ருத்வ கார்யமான -கர்த்ருத்த்வ  போக்த்ருத்வங்களை உடையவன் ஆகையாலே
ஸ்வயத்ன ஸ்வ பிரயோஜனங்களுக்கு அர்ஹனாய் இருக்க -இவை இரண்டின் உடைய நிவ்ருத்தி
இவனுக்கு எவ் வழியாலே வருகிறது  என்கிற சங்கையில் அத்தை அருளி செய்கிறார் -இந்த வாக்ய த்வத்தாலே –

சேஷ பூதனான ஜீவனுக்கு உண்டான ஞாத்ருத்வ போக்த்ருத்வங்களை பற்றி மேலே உள்ள சூரணைகள்-

பர இச்சா அதீன-ஸ்வரூப ஸ்தியை யுடையவனாய் இருக்கிற பாரதந்தர்யத்தின் சத்தா ஸ்திதியின்
பலநாள் ஸ்வ யத்னம் பண்ணாமல் இருக்க வேண்டுமே
பர ஏக பிரயோஜனத்வம் -அவரை தவிர எனக்கு இல்லை -ஸ்வரூப சித்தி–சேஷத்வத்தின் ரூபம் பலம்
யத்னமும் பிரயோஜனமும் -வந்தால் கிட்டும் கண்ட மாணிக்கம் போலே உருக் கெட்டு இருக்குமே –
அவை நிவர்த்தங்கள் ஆனால் மாணிக்கம் ஒளி பெற்று இருக்குமே
தத் த்வய நிவ்ருத்தியும் தத் உபய பலமாய் இருக்கும் –
அறிவாகவும் அறிவுடையவராயும் ஆனந்தம் உடையவராய் இருக்க -ஞாத்ருத்வம் இருந்தாலே கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் வருமே –
அசேதனம் இல்லை என்பதற்காக இத்தைச் சொல்ல -இப்படி விபரீதம் உண்டாகும் –வெறும் ஞானி இல்லையே –
பாரதந்தர்யம் சேஷத்வம் கொண்ட ஞானி அன்றோ –
நடக்க வேண்டும் முதல் நிலை -பகவத் திரு உள்ளம் படி நடக்க வேண்டும் -அடுத்த நிலை –
அவன் திரு உள்ளம் ஒன்றுமே பண்ணாமல் -உபாயதயா-ஒன்றும் வேண்டாமே –
இதே போலே போக்த்ருத்வமும் –மேல் மேலும் அதிசயம் -செய்யும் கார்யங்கள் -பர அதிசய ஏவ -மீமாம்சகன் –சொல்ல
நம் ஸ்ரீ ராமானுஜரோ ஆதாயகத்வேன -ஆனந்தம் சம்பாதித்துக் கொடுக்கும் கைங்கர்யம் ஈடுபட வேண்டுமே –
அவ்வாகாரங்கள் இருக்கவே -என்னாமல்- அறியவே என்றது- ராவணாதிகளுக்கும் இவை இருக்கும் -ஆனால் அவர்கள் அறிய வில்லையே

அதாவது –
ஜ்ஞாத்ருத்வ  நிபந்தநமான கர்த்த்ருத்வம் உண்டாய் இருக்க செய்தே –
பகவத் பிராப்திக்கு தானொரு யத்னம் பண்ணாமல் இருக்கை யாகிற –
இந்த ஸ்வ யத்ன நிவ்ருத்தி -பராதீன ஸ்வரூப ஸ்தித்யாதி மத்தவமாகிற-பாரதந்த்ர்யத்தின் கார்யம் –
அப்படியே –
போக்த்ருத்வமுண்டாய் இருக்க செய்தே -அத தலையை ரசிப்பிக்கும் அது ஒழிய
தனக்கு என்று ஒன்றில் ரசம் இன்றிக்கே இருக்கை யாகிற -ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி –
பராதிசய ஆதாயகத்வமே வடிவாய் இருக்கை யாகிற சேஷத்வத்தின் கார்யம் –
இத்தால்-
பாரதந்த்ர்ய சேஷத்வங்கள் இரண்டும் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையாலே –
அவ்வாகாரங்களை அறியவே -இவை இரண்டும் தன்னடையே வரும் என்றது -ஆய்த்து –
உபாசகனுக்கும் இப்படியே -அத்யந்த பாரதந்தர்யம் இல்லையே /
ஐஸ்வர்யாதிகளும் பிரயோஜனாந்தரங்களை விரும்புவதும் இவ்வாகாரங்களை அறியாமல் இருப்பதால்

—————————————————

சூரணை -72-

பர ப்ரயோஜன பிரவ்ருத்தி
பிரயத்ன பலம் –
தத் விஷய ப்ரீதி
சைதன்ய பலம் –

ஆனால் இப்படி ஸ்வ யத்ன ஸ்வ பிரயோஜனங்களில் அன்வயம் அற்று
இருக்கும் ஆகில் -இவனுடைய பிரயத்னத்துக்கும் -சைதன்யத்துக்கும் -பிரயோஜனம் என்ன-என்ன
அருளிச் செய்கிறார்-இந்த வாக்ய த்வயத்தாலே –

கைங்கர்யம் அவன் பிரயோஜனத்துக்கு –ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் போக்த்ருத்வங்கள் இல்லை என்பார்களே பாட்டர் மதஸ்தர் –
பிரயத்னத்துக்கும் ஞானத்துக்கும் வடிகால் -பரனுக்கு பிரயோஜனமாய் நாம் செய்யும் கைங்கர்யம் ஆகிய ப்ரவ்ருத்தி -பிரயத்தன பலம் –
கைங்கர்யம் செய்து வடிகால் என்றபடி -அதனால் ப்ரீதி அவன் அடைவது -கண்டு ஜீவன் ஆனந்தித்து
ஸூ பிரயோஜனம் இல்லை -இதுவே சைதன்ய பலம் –
பாரதந்தர்யங்களுக்கும் சேஷத்வங்களுக்கும் விரோதம் இல்லாத படி
அதிசய -மாலை தொடுத்து விளக்கு ஏத்தி -திரு நாம சங்கீர்த்தனம் -த்வயம் உச்சாரணம் முதலியவை சிஷ்டாசாரம் -ஸூ பிரயத்தனம் –
இதுக்கு பலம் விஷய பூதனுமாய் ப்ரேரகனுகமான அவனுக்கு ப்ரீதி ஏற்பட -ப்ரவ்ருத்திகள் –
சேதனனுக்கு சைதன்ய பலம் -அத்யந்த சேஷியை விஷயீ கரித்து-அவன் ஆனந்தம் கண்டு சேதனன் ப்ரீதி அடைவது –
இதை பார்த்து அவன் ப்ரீதி இரட்டிக்குமே –
தத் அனுபவத்தால் உண்டான ப்ரீதி அவனுக்கே -என்றவாறு –
அறிந்து –ஆசைப்பட்டு -பிரயத்தனம் -கரோதி-நான்கு நிலைகள் -கரிஷ்யாமி -செய்ய வேண்டும் –
நான்காவது நிலை -ஸ்வார்த்ததா லேஸம் இல்லை என்று காட்ட
வழு விலா அடிமை அடுத்து -/ உனக்கே நாம் ஆள் செய்வோம் –
இதுவே வழு விலா அடிமை -அவனுக்கே- தனக்கும் அவனுக்கும் இல்லை –
படியாய் கிடந்து –ப்ரவ்ருத்தி -உன் பவள வாய்-அவனது ப்ரீதி – காண்பேனே– சேதன கார்யம் -சேதனன் பெற்ற ப்ரீதி

அதாவது –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் –
உனக்கே நாம் ஆள் செய்வோம் -என்கிறபடி
பரனுக்கு பிரயோஜனமாக பண்ணும் கைங்கர்ய ரூப பிரவ்ருத்தி – இவனுடைய பிரவ்ருத்தி  உத்யோக ரூபமான ப்ரயத்னத்துக்கு பிரயோஜனம் –
நித்ய கிங்கர ப்ரஹர்ஷ இஷ்யாமி-ஸ்தோத்ர ரத்னம் -என்கிறபடியே -அத் தலையில் உகப்புக்கு உறுப்பாக
தான் பண்ணுகிற கைங்கர்யத்தாலே -அத்யந்த ஹ்ருஷ்டனாய் இருக்கிற அந்த பரனை விஷயமாக உடைத்தான ப்ரீதி-
இவனுடைய அசித் வ்யாவிருத்தி ரூபமான சைதன்யதுக்கு பிரயோஜனம் -என்கை –
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -என்னக் கடவது இறே –
இத்தால்-
பாரதந்த்ர்ய சேஷத்வங்களாலே பலித்த
ஸ்வ யத்ன ஸ்வ பிரயோஜன நிவ்ருத்திகளை உடையனான சேதனனுடைய-பிரயத்ன சைதன்யங்களுக்கு –
பாரதந்த்ர்ய சேஷத்வ அனுகுணமாக பிரயோஜனங்கள் சொல்லிற்று -ஆய்த்து –

——————————————————

சூரணை -73-

அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –

சேஷத்வாதிகளும் -ஜ்ஞாத்ருவாதிகளும் -ஆத்மா தர்மங்களாய்  இருக்க செய்தே –
சேஷத்வாதிகளை பிரதானம் ஆக்கி -ஜ்ஞாத்ருவாதிகளை தத் அநு குணமாக யோஜிக்கைக்கு நியாமகம் எது -மற்றை படி தானானாலோ என்ன –
அருளி செய்கிறார் –

பஹிரங்கம்-புற இதழ் -அந்தரங்கம் உள் இதழ்/ ஞான ஆனந்தங்கள் பஹிரங்கம் -சேஷத்வம் அந்தரங்கம் -ரஹஸ்யம்
தாஸ்யம்- உள் இதழ் /தடஸ்தம் -புற இதழ் -ஞான ஆனந்தங்களை வாசலில் வைக்கும் படி அன்றோ தாஸ்யம் –
சேஷத்வம் இருப்பது இதழ்கள் போலே இவையும் –
ப்ரத்யக்காயாய்க் கொண்டு ஸ்யவம் பிரகாசமாய் –ஆத்ம ஸ்வரூபம்– பிரக்ருதியும் காலமும் ஜடம் /
நான்கு அஜடம் ஸ்வயம் பிரகாசம் /
தர்ம பூத ஞானமும் நித்ய விபூதியும் ஸ்வயம் பிரகாசம் /ஜீவாத்மா பரமாத்மா ப்ரத்யக்காயும் பிரகாசமுமாய் -இந்த நான்கும் அஜடம் /
அனுகூலத்வ ஆகாரத்தை -ஞான -ஆனந்த குணங்களையும் –பஹிரங்கமாய்க் கொண்டு -புற இதழ் என்னும் படி பர அதிசயகரமே வேஷமான
தாஸ்யம் -அந்தரங்கமாகக் கொண்டு -தன்னை புற இதழ் ஆக்கும் ஸ்வரூப நிரூபகாந்தரம் இல்லாமல் இதுவே நிரூபக விசேஷணம் –
ஆத்மாவுக்கு ஸத்பாவம் -பிரகாரம்-அவனைச் சார்ந்தே இருக்கும் – இதனால் -சேஷம் -அதனாலே சத்தை -/
பிரகாரம் ஆகவே சத்தா ஆகவே சேஷத்வம் என்பது பொருந்தாது –
மணம் புஷபத்துக்கு சேஷம் – –
சேஷமாய் இருப்பதால் தான் சத்தை -என்று உணர வேண்டும் -பிரகாரத்வம் முதலில் -அடிமை என்று அறிந்த ஞானவான் –
அஹம் அர்த்தத்துக்கு சத்தை சேஷம் –நித்ய விசேஷணம் பிரகாரம் –வியாவர்த்தத்துக்கா ஞான ஆனந்தங்கள் -என்றவாறு —
ஸ்வயம் பிரயோஜன அன்வயம் கூடாதே சேஷமாக சார்ந்தே இருக்கும் அஹம் அர்த்தத்துக்கு –
சேஷத்வயே சதி சேதனத்வம் தாஸ்ய லக்ஷணம் -ஆத்ம லக்ஷணம் சேஷத்வயே சதி ஞாத்ருத்வம் —
தாஸ்ய சப்தத்துக்கு வியவஹாரம் ஞானம் வேண்டுமே — –
ஆனந்த ஞானங்கள் பிரகாசத்வம் அனுகூலங்கள் /
தாஸ்யம் ஈஸ்வர வியாவர்த்தமாய் —பிரகிருதி புருஷ விபாகம் ஞான ஆனந்தங்கள் -நிரூபக த்வயமும் வஸ்துவுக்கு அபேக்ஷிதம் —
ஆத்மா உளதாவது சத்தைக்கு காரணம் -அதுக்கு ப்ரஹ்ம பிரகாரமே காரணம் –பிரகார ப்ரயுக்தமான சேஷத்வமே அந்தரங்க நிரூபணம் –
எப்படிப்பட்டவர் கேட்ட பின்பு ஞான ஆனந்தங்கள் -இருப்பதற்கு சேஷத்வமும் எப்படி என்பதற்கு இவைகளும் -/
அசித்துக்கும் சேஷத்வம் இருப்பதற்கும்- ஞான ஆனந்தங்கள் அதனால் இவை உயர்ந்தவை என்ற தப்பான எண்ணம் கூடாது –

அஹம் அர்த்தமாவது –
பிரத்யக்த்வேன அஹம் புத்தி  வியவஹாரார்ஹமான ஆத்ம வஸ்து -ஞான ஆனந்தங்கள் ஆவன -தத்கதமான பிரகாசத்வ அநு கூலத்வங்கள் –
ஞான ஆனந்தமயஸ் த்வாத்மா ஸ்வரூபம் அணு மாத்ரம் ஸ்யாத் ஞானாந்தைக லஷணம்-என்று இவற்றை இட்டு இறே வஸ்துவை நிரூபிப்பது –
தடஸ்தம் என்னும் படி -என்றது -பஹிரங்க நிரூபகதயா புற விதழ்  என்னும் படி -என்றபடி –
தாஸ்யம் ஆவது -சேஷத்வம் –
இது அந்தரங்க நிரூபகம் ஆகையாவது –
பகவத் ஸ்வரூபத்துக்கு பிரகாரதயா சேஷமாக கொண்டு தன் சத்தையாம் படி இருக்கும் வஸ்து ஆகையாலே -பிரதமம்
சேஷத்வத்தை இட்டு நிரூபித்து கொண்டே மற்றுள்ள ஆகாரங்களை இட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கை –
இத்தால் நிரூபகம் ஆகையாவது –
வஸ்துவை வஸ்துவந்தரத்தில் காட்டில் வ்யவர்த்திப்பிக்கும் அது ஆகையாலே –
தாஸ்யம் ஈஸ்வர வ்யவர்த்தகமாய் -ஞாநானந்தங்கள் அசித் வயாவர்த்தங்களாய்  இருக்கும் –
இப்படி நிரூபக த்வயமும் வஸ்துவுக்கு அபேஷிதமாய் இருக்க செய்தே
பகவத் பிரகார தயா லப்த சத்தாகமான  வஸ்துவுக்கு அசித்தில் காட்டில் உண்டான வாசியை
அறிவிக்கிற மாத்ரமான ஞாநானந்தங்கள் புற இதழாம் படி
பிரகாரத்வ பிரயுக்தமான  சேஷத்வமே அந்தரங்க நிரூபகமாய் இருக்கும் என்றது -ஆய்த்து இறே -என்று -இவ் அர்த்தத்தில் பிரமாண பிரசித்தி –
பிரதமம் சேஷத்வத்தை இட்டு வஸ்துவை நிரூபித்து கொண்டு (தாதார்த்ய சதுர்த்தி முன்னே வந்ததே -சேஷத்வமே நிரூபனம் என்பதால் )-
பின்னை- ஞான ஆனந்த  லஷணமுமாய்-ஞான குணகமுமாய்-அசித் வ்யாவிருதமுமாய் -இருக்கும் என்னும் இடத்தை
த்ருதீய பதத்தாலே-மகாரத்தாலே- நிரூபிக்கிற பிரணவமும் –
சமஸ்த வஸ்துகளும்  சர்வேஸ்வரனுக்கு பிரகாரம் என்னும் அத்தை பிரதிபாதிக்கிற நாராயண பதமும் -முதலானவை இதில் பிரமாணம் –
(ஆய -பிரார்த்தநாயாம் சதுர்த்தி -சேஷத்வம் -அசித் பிரார்த்திக்காது- நீ பிரார்த்திக்க வேண்டும் சேதனனாய் இருப்பதால் )
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மானா பரமாத்மன ந அன்யதா லஷணம் தேஷாம் பந்தே  மோஷே ததைவ ச-ஹரிதஸ் ஸ்ம்ருதி -இத்யாதிகளும்  உண்டு இறே –
அடியேன் உள்ளான் -என்றார் இறே ஆழ்வாரும்- (அடி -திருவடி -அடியேன் -கர்த்ருத்வ-தாஸ்யத்தை செயல்படுத்துபவன் -உத்தம வருஷ ஏக வசனம் –
செய்தேன் பேசினேன் போலே அடியேன் -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் என்று விரித்ததை சுருக்கமாக ஆழ்வார் அருளிச் செய்கிறார் )
திரு கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே ஆறு மாசம் ஆழ்வான் சேவித்து நின்று மகா நிதியாய் பெற்ற அர்த்தம் இறே இது –
இப்படி சேஷத்வம் அந்தரங்க நிரூபகம் ஆகையால் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஞாத்ருவாதிகளையே
தத் அநு குணமாக யோஜிக்க வேணும் என்று கருத்து –

இதம் இத்தம் இன்னான் இணையான போலே இவை இரண்டும் -ஸ்வரூப நிரூபக தர்மத்தால் இதம் -இன்னான் -என்று அறிந்த பின்பு –
சேஷத்வம் வைத்து ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்த பின்பு –நிரூபித்த வஸ்துவின் விசேஷணங்கள்-இத்தம் -இணையான –
இவை போலே ஞாத்ருத்வ ஆனந்தங்கள் –
சேஷம் என்றே ஆத்மாவை ஆதரிக்கும் மணத்தை கொண்டு புஷ்ப்பத்தை ஆதரிப்பது போலே – சேஷத்வத்துக்கு பிரதானம் காரணங்கள்
1—தர்மியின் சத்தைக்கு காரணம் -வஸ்துவின் சாமர்த்தியம் –
2–லுப்த சதுர்த்தியால் முன்னால் சொல்லி உபக்ரம நியாயத்தால் —
3-முக்கிய கிரம நியாயத்தால் ஸூ சேஷஸ்த்வத்தை காட்டிலும் -இங்கு பிரதி யோகியும் அனு யோகியும் ஜீவனே –
பகவத் சேஷத்வத்துக்கு –பிரதி யோகி ப்ரஹ்மம் அனு யோகி ஜீவாத்மா -இங்கு —
4-தாச சப்த பிரவ்ருத்தி நிவ்ருத்தத்தில் சேஷத்வயே சதி சேதனத்வம் சேஷத்வமே முதலில் –
5 சேஷத்வம் அறியாமல் எத்தை அறிந்தாலும் ஒன்றுமே அறிந்தவனாக மாட்டான் –
அறிந்து ஒன்றும் அறியாமல் இருந்தாலும் எல்லாமே அறிந்தவன் ஆகிறான் –
பிரமாணம் உண்டே -தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணி போகலாமே போலே -/ஸ்வேதகேது உத்தாரகர் சம்பாஷணம் இதே போலே /
6-அஹம் சொல்வதற்கு முன்பே சேஷத்வம் சொல்லும் பிரமாணங்கள் பலவும் உண்டே

————————————-

சூரணை-74-

இது தான் வந்தேறி அன்று –

இது ஸ்வரூப நிரூபகம் ஆகில் -ஆத்மா உள்ள வன்றே தொடங்கி உண்டாய் -போர வேண்டாவோ
இதுக்கு முன்பு இன்றிக்கே–(ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷத்துக்கு முன்பு ) -இப்போது- உண்டாகையாலும் –
லோகத்தில் இது தான் ஓவ்பாதிகமாய் நடக்கக் காண்கையாலும்-
தாஸ்யம் ஆத்மாவுக்கு வந்தேறி அன்றே என்ன -அருளி செய்கிறார் –

தாஸ்யம் இயற்க்கை -நித்யம் -ஸ்வரூப நிரூபக தர்மம் / காதாசித்தம் இல்லை -ஸ்வஸ் சித்தம் –
மாதா பிதா சேஷத்வம் தானே வந்தேறி -பிறவியால் கர்மத்தால் -பூர்வ பஷ வாதம் —
திருமாலே நானும் உனக்கு -இவ்வளவு காலும் செருக்கித் திரிந்த நானும் -என்றவாறே -அது தான் வந்தேறி -அடிமைத் தானம் ஸ்வ பாவிகம் –
திருமாலே -அகாரம் குறை -நீக்கி ஸ்பஷ்டமாக அருளி /நானும் -மகார வாச்யனான -ஏக வசனம் ஜாதி சமஷடி வாசகம் -நாம் எல்லாரும் என்றபடி –
உனக்கு அகார வாச்யன் -அடியேன் ஆய லுப்த சதுர்த்தி அர்த்தம் / பழைமை -அடிமை த்வாரா தர்மியில் அந்வயிக்கும் –
அடியேன் -அடி என்பதால் தாஸ்யம் -யேன் என்பதால் ஆத்மா -பழமையை அடிமைத் தானத்தில் கூட்ட வேண்டும் –

இது தான் -என்று பிரக்ருதமான தாஸ்யத்தை பராமர்சிக்கிறது –
வந்தேறி -யாவது -ஆகந்துகம் –
அன்று -என்கையாலே -ஸ்வாபாவிகம் -என்ற படி –
ச்வோஜ் ஜிவநேச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்மதாச்யம் ஹரேஸ் ஸ்வாம்யம்  ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் –
நானும் உனக்கு பழ வடியேன் -என்னக் கடவது இறே-

———————————————-

சூரணை -75-

ஸ்வாதந்த்ர்யமும்
அந்ய சேஷத்வமும்
வந்தேறி —

ஆனால் வந்தேறியாக விவஷிதங்கள் எவை –
இதுக்கு விரோதிகள் ஆனவை எவை -என்று அருளிசெய்கிறார் –

சத்தா ப்ரயுக்தம் சேஷத்வம் -பிரகாரம் நித்ய சித்தம் -உபாதி கர்மத்தால் பிரயுக்தம் இவை -இவை தொலைய சேஷத்வம் சித்திக்கும்
கண்ணிலே பூ பட்டு இருக்கைப் போலே -மற்ற இடங்களில் தொண்டு பட்டு இருக்கை-தேவதாந்த்ரங்களிலே வேறே இடங்களிலோ –
அவித்யாதி -ஆதி கர்மா வாசனை ருசி இத்யாதி -உபாசகனுக்கு ஸ்வார்த்த பர கைங்கர்யம் -பிரபன்னனுக்கு அதுவும் இல்லை –
ஸ்வ சேஷத்வம் அங்கும் ஒட்டிக் கொண்டு இருக்கும் -பகவத் சங்கல்பம் என்கிற உபாதியால் -அவித்யாதிகள் அடியாக வருமே –

ஸ்வாதந்த்ர்யம் ஆவது -நான் எனக்கு உரியன் என்று இருக்கை-
அந்ய சேஷத்வம் ஆவது -பகவத் அந்ய விஷயங்களிலே தொண்டு பட்டு இருக்கை-
இவற்றை வந்தேறி என்கிறது -இவனுடைய அவித்யாதிகள் அடியாக வந்தவை ஆகையாலே –

————————————-

சூரணை -76-

சேஷத்வ விரோதி  ஸ்வாதந்த்ர்யம்-
தச் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் –

இவை இதுக்கு (பகவத் சேஷத்வத்துக்கு ) விரோதிகள் ஆனமையை உபபாதிக்கிறார் மேல் –

சேஷத்வ பிரகாச விரோதி –ஸூ சேஷத்வ புத்தி -ஸ்வாதந்தர்யம் -/
அடுத்த நிலை -பகவத் சேஷத்வம் -தத் சேஷத்வம் –இதுக்கு விரோதி தத் இதர சேஷத்வம் –
நிருபாதிக சேஷிக்கு நிருபாதிக சேஷமாகிற -மாதா பிதா சேஷம் போலே இல்லையே -தத் சேஷத்வத்தை மறைக்கும் பிரபல விரோதி –
மாதா பிதா தேவதாந்த்ரங்கள் -சேஷம் என்னும் உணர்வு –மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ அதிதி தேவோ பவ —
பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் -தர்ம சிந்தனை- சாஸ்த்ர வஸ்யராவாரே- இத்தை அறிந்தால்
தாயே -தந்தை -நோயே பட்டு ஒழிந்தேன் –பிதரம் மாதரம் –குரும் கூட விட்டுவிட்டு -சம்சார வர்த்தகமான உபதேசித்த குருவை சொல்லிற்று –
சம்சார நிவர்த்தகமான ரஹஸ்யார்த்தம் உபதேசித்த ஆச்சார்யரை சொல்ல வில்லை
-யதா வஸ்தித சேஷத்வம் பகவத் சேஷத்வம் ஒன்றுமே -அயதா சேஷத்வ பிரமம் –நீங்க வேண்டும் –

சேஷத்வ  விரோதி ஸ்வாதந்த்ர்யம் -என்றது நான் எனக்கு உரியேன் என்று இருக்கும் அளவில் –
ஒரு விஷயத்திலும்-(ஸூ வியதிரிக்த அனைத்தும் ) சேஷத்வம் இல்லாமையாலே -ஸ்வாதந்த்ர்யம் சேஷத்வத்தை உதிக்க ஒட்டாது என்ற படி –
தத் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் -என்றது -ஸ்வாதந்த்ர்யம் குலைந்து -சேஷத்வத்துக்கு இசைந்தாலும் –
பகவத் வ்யதிரிக்த  விஷயங்களிலே ஒன்றுக்கு தன்னை சேஷம் என்று இருக்குமது –
நிருபாதிக சேஷியாக-அவன் பக்கலிலே சேஷத்வத்தை தலை எடுக்க ஒட்டாது என்றபடி –

———————————————

சூரணை -77-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் –
ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான் -என்று இறே-

இது தான் வந்தேறி அன்று -என்று தொடங்கி –உபபாதித்த அர்த்தத்தை முதலிக்கிறார் மேல் –

ஆகந்துக மாலினியம் – வந்தேறிய அழுக்கு-ஸூ ஸ்வா தந்தர்யம் -இதர சேஷத்வம் போன்றவை –
போனால் -பகவத் ஏக சேஷத்வம் -ஸ்வரூப ஞானம் பிரகாசிக்கும் –
அடியேன் -தாஸ்யத்தை ஸ்வரூப நிரூபகமாக உடையவன் -/ குணம் குணவான் போலே -/
பிரகிருதி சம்பந்தம் சரீரத்தால் -அஹங்காரம் -மமகாராம் -தேகாத்ம அபிமானம் ஸூ ஸ்வா தந்திரம் இரண்டும் -மறைக்கும் /
அஹம் -புத்தி -எனக்கு நான் புத்தி அஹங்காரம் -பிறர்க்கு உரியவன் அல்லேன்-ஸூவ ஸ்வா தந்தர்யம் என்றவாறு –
வந்தேறி என்றாலே போக வேண்டுமே -ஆச்சார்யர் ஞானக்கை- உபதேசத்தால்- துடைக்க–உபதேசம் நீடித்து இருக்க அனுகூல ஸஹவாசமும் வேண்டும்
தேவத்வம் மனுஷ்யத்வம் வந்தேறி போகலாம் – தாஸ்யம் சேஷத்வம் இப்படி அல்ல -அங்கும் இருக்குமே –
சேஷத்வமே -உயிர்கள் ஆதிப்பரனோடு ஒன்றாம் இவ்வல்லல் எல்லாம் ஒழித்தான் நம் இராமானுசன்
ஐக்கிய வாதம் ஒழித்து சாம்யா பத்தி மோக்ஷம் -நிர்மல முக்தாத்மா –
அழியாத பெயரே சேஷத்வம் உண்டே –குல தொல் அடியேன் உன பாதம் -கூடுமாறு -நிர்மல சேஷத்வம் –
சர்மா வர்மா குப்தா தாசன் -நான்கு வர்ணங்களின் பெயர் -நான்காவது வர்ணம் இயற்கையிலே தாஸ்யம் -ஜென்ம சித்தம் இவர்களுக்கு –
அடியேன் ராமானுஜ தாசன் அத்ர பரத்ர தோள் மாறாமல் இங்கும் அங்கும் –

அஹங்காரம் தான் -தேக ஆத்மா அபிமான ரூபமாயும் –ஸ்வாதந்த்ர்ய ரூபமாயும் -இரண்டு வகை பட்டு இறே இருப்பது –
அதில் இங்கே -ஸ்வாதந்த்ர்யத்தை சொல்லுகிறது –
ஆர்ப்பு -என்கையாலே -அதனுடைய திரோதாயாகத்வமும் -ஆகந்துகத்வமும் -தோற்றுகிறது –
அத்தை -துடைக்கை யாவது -சதாசார்யா உபதேசாதி களாலே சவாசனமாக போக்குகை-
ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் -என்றது ஒவ்பதிகமான வர்ண ஆஸ்ரமாதிகளாலே வந்து அழிந்து போம் நாமங்கள் போல் அன்றிக்கே –
யாவதாத்மா அநு வர்த்தியான நாமம் தாசன்  -என்னும் அது என்ற படி – இறே -என்று இவ்வர்த்தத்தில் -பிரமாண பிரசித்தி  –
தாச பூதாஸ் ஸ்வத-
ஆத்மா தாஸ்யம் –
இத்யாதிகள் இவ்விடத்தில் விவஷிதங்கள் –
ஆகையால் -ஸ்வா தந்த்ர்யாதிகள் ஒவ்பாதிகம் -தாஸ்யம் ஸ்வாபாவிகம் -என்ன-குறையில்லை என்று கருத்து –

———————————————–

சூரணை -78-

க்ராம குலாதிகளால்
வரும்பேர்
அநர்த்த ஹேது –

அது என்-க்ராம குலதிகளால் வரும்  வ்யபதேசம் அன்றோ நடந்து போகிறதோ என்ன
அருளிச் செய்கிறார் –

ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ  க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம்  ச ஏவ ஹி-
வானமா மலை ரஹஸ்யம் பெண் பிள்ளை -ராமானுஜர் சம்பந்தம் பெற்ற அடியேன்-என்றாள்–
பகவத் சேஷத்வமே ஸ்வரூப நித்ய நிரூபனம் என்று -கட்ட -இந்த வசனம் / ஏகாந்தி -பரமை காந்தி -ஆர்த்தன திருப்தன்
விஷ்ணு சம்பந்தம் கொண்டே உள்ள இவனுக்கு அவனே ப்ராப்யம் ப்ராபகம் சர்வம் –
இந்த பிறவியில் உள்ள இந்த சரீரம் -பெயர் கொண்டு இல்லாமல் ஆத்மாவுக்கு நிலை நின்ற தாஸ்யம் –அடியேன் ராமானுஜ தாசன் –
ஜாதியாதி ப்ரயுக்தமான அழியும் பெயர் –/ முடும்பை உலகாசிரியர் ஏற்றுக் கொள்ள வேண்டும் -அத்தை விடுத்து தனக்கு என்று ஒன்றை கொள்ளாமல்
குலத்தை சொல்லி -இஷுவாகு குலம் போலே -ஆதி சப்தம் சரணம் சூத்ரம் -யஜுராதி சாகா விசேஷம் /
ஆபஸ்தம்பாதி சூத்ரம் / ரிஷிகள் வழி சொல்லி சாஸ்த்ர மரியாதை வழி நின்று
அலௌகிக புருஷார்த்தம் அடைய -உபாசகன் -ஸூ அதிசய ஆபாதகம் ஆகுமே –

அதாவது
க்ராம குலாதி வ்யபதேசம் அஹங்கார ஜனகம் ஆகையாலே
ஸ்வரூப ஹானி ரூப அநர்த்த கரம் என்ற படி –
ஆகையால் -அவற்றால் இவன்  வ்யபதேஷ்டவ்யன் அல்லன் என்று கருத்து –

————————————-

சூரணை -79-

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –

உக்தார்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் மேல் –

சாஸ்திரங்கள் விதிக்கும் அபிவாதய இத்யாதிகள் உண்டே என்னில் -இவை -சாமான்ய சாஸ்திரம் /
விசேஷ சாஸ்திரம் / முக்குணத்தாருக்கு வேதம் சொல்லுமே
காட்டு மார்க்கம் ததீயாராதனை பணம் கொண்டு போக சஹஸ்ர நாமம் சொல்லி ரக்ஷித்தால் பிரபன்னன் ஆக மாட்டான்–பட்டர் –
பாகவதர்களுக்காகவும் இப்படிக் கூடாது என்ற நம்பிக்கை வேண்டுமே / கண்ணனை சாதனமாக -கதி த்ரய மூலத்வாத் -மூன்றுக்கும் அவனே /
பரமை காந்தி -பகவத் ஏக பரன்
மாதா பிதா இத்யாதில் குலமும்/ நிவாஸ கிராமமும் சொல்லி -விசேஷ வசனம் -பகவானுக்கே அற்று தீர்ந்த -/
எல்லா நதிகளும் சமுத்திரம் -எல்லா பெயர்களும் கடல் வண்ணனான கேசவனை -சேரும் சேர்ந்த பின்பு பிரித்து பார்க்க முடியாதே /
தாமச ராஜஸ அடையாளம் கொண்டால் பக்தனுக்கு இழுக்கு ஆகுமே /

ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ  க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம்  ச ஏவ ஹி-விஷ்வக் சேனர் சம்ஹிதை -இத்தால் –
பகவத் ஏக பரனாய் இருக்கும் அவன் -க்ராம குலாதி சம்பந்தங்களை இட்டு -சொல்லப் படும் அவன் அல்லன் –
பகவத் சம்பந்தத்தை இட்டு  சொல்லப் படுமவன் –
அவனுக்கு அந்த க்ராம குலாதிகள் எல்லாம் பகவானே என்கிறது –

ப்ராப்தாவும் -இத்யாதி வாக்யத்திலே
இச் சேதனனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தாதிகளை-தோற்றினபடியால் இவற்றுக்கு இன்னது நிதானம் என்றும் –
ஏவம் பூதனுடைய -பிரயத்ன -சைதன்ய -பிரயோஜனமும் –
சேஷத்வாதி பிரதான்ய  ஹேது -ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய தாஸ்யம் அந்தரங்க-நிரூபகத்வம் என்றும் –
இப்படி இருக்கிற இது ஸ்வாபாவிகம் -ஏதத் விரோதிகள் ஒவ்பாதிகம் என்றும் –
தந் நிவ்ருத்தியில் ஆத்மாவுக்கு தாஸ்யமே நித்ய நிரூபகமாய் இருக்கும் என்கையாலே – இவ் அர்த்தத்தை மூதலித்தும்-
க்ராம குலாதிகளால் இவன் வ்யபதேஷ்டவ்யன் அல்லன் என்றும் –
உத்தார்த்தத்தில் பிரமாணமும்  சொல்லுகையாலே –
ஸ்வ யதன நிவ்ருத்தி -இத்யாதி வாக்கியம் தொடங்கி-இவ்வளவும் பிராசங்கிகம்-

ஆக இப் பிரகரணத்தால் –
பிரபத்திக்கு தேசாதி நியமங்கள் இல்லை -விஷய நியமமே உள்ளது என்னும் இடமும் –
அவ் விஷயம் தான் என்னது என்னும் இடமும் –
அவ் விஷயத்தின் உடைய வை லக்ஷண்யத்தையும் –
அதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் உடைய த்ரைவித்யமும் –
பிரபத்தியை உபாயம் ஆக்கினால் வரும் அவத்யமும் –
பிரபத்தி தன்னுடைய ஸ்வரூபாதிகளும்-
பிரபத்தவ்யனே உபாயம் என்னும் இடமும் –
பிரதி பாதிக்கப் பட்டது –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -41-59–சாதனஸ்ய கௌரவம் -ஆறு — உபாய பிரகரணம்-திருமால் திருவடி சேர் வழி நன்மை – ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 6, 2017

உபாய ஸ்வீகார வைபவம் -பிரகரணம்-சூர்ணிகை -23-40/41-59-/60-79/80-114/115-244
சாதனஸ்ய கௌரவம் -ஆறு-உபாய பிரகரணம் -திருமால் திருவடி சேர் வழி நன்மை / அவ் வழி ஒழிந்தன அனைத்தின் புன்மை –

சூரணை -41-

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –

பிரபத்திக்கு நியதி விஷயமான இந்த அர்ச்சாவதாரத்தில் பர சமர்ப்பண ரூப பிரபத்தி –
பர ந்யாஸம் -ந்யஸ்த பரன்-இந்த சப்தம் இரு கலையாரும் கொள்ள வேண்டும் –
பக்தி உபாயாந்தரம் -பிரபத்தி உபாயம் -உபாய பிரபத்தி மாற்றி -இரண்டாவது நிலை / பல பிரபத்தி மூன்றாவது நிலை /
பகவான் அனுக்ரஹத்தால் அதிகாரி விசேஷம் -திருவடிகளே உபாயம் என்று ஏற்றுக் கொள்வது –
பிரார்த்தனை சரண வரண ரூபமான கிரியை தான் பிரபத்தி ஸ்வீகாரம் பிரபத்தி –
பிரபத்திக்கும் உபாயத்வம் உண்டு தேசிக சம்ப்ரதாயம் –அவரும் பகவானே உபாயம் -பிரதான உபாயம் -இது வியாஜ்ய மாத்திரை அமுக்கிய உபாயம் –
பிள்ளை லோகாச்சார்யார் -பிரபத்திக்கு உபாயத்வம் இல்லை -மோக்ஷத்தை அனுபவிக்க யோக்யதை கொடுக்கும் –
ஏற்றுக் கொள்ளும் தகுதி அர்ஹத்தை கொடுக்கும் -விசேஷணம் -அர்ஹத்தை உள்ளாரையும் இல்லாரையும் பிரிக்க -அதிகாரி விசேஷணம் என்றவாறு –
ஸ்வதந்த்ர பிரபத்தி அங்க பிரபத்தி -என்று வேறே இரண்டு வகைகள் வேறே -இதுதான் கீதையில் சொல்லப்பட்டது –
உபாய பிரபத்தியா அனுபாய பிரபத்தி -லோக தேசிகர் -வேதாந்த தேசிகர் இரண்டு சம்பிரதாயங்கள் -என்றவாறு –
ந்யாஸ தசகம் -10 ஸ்லோகங்கள் அஹம் மத் ரக்ஷண பரம் பலம் என்னது இல்லை –
அஹம் ந மம நானும் என்னுடையவன் அல்லேன் -என்னை ரக்ஷிப்பவனும் நான் அல்லேன் பலனும் நான் அல்லேன் —
பொறுப்பை சமர்ப்பித்தல் பர சமர்ப்பணம் என்கிறார் -திருமந்திர அர்த்தம் -சப்தத்தில் குழப்பம் இல்லை -யோஜனா பேதம் தான் –
பிரபத்தி பண்ண வேண்டாம் என்று தென் ஆச்சார்ய சம்பிரதாயமும் இல்லை -உபாய ரூபம் தான் இல்லை -பல ரூபம் தான் –
பர சமர்ப்பணம் அனைவருக்கும் உண்டு பர சமர்ப்பண ரூப பிரவ்ருத்தியைப் -பிரபத்தியைப் பண்ணும் –நிவ்ருத்தி அதிகாரிகள் -என்கிறார் –
சாதனா ரூப பிரவ்ருத்தி இல்லை -பல ரூபமே -/ பிரபதன ஹேது ரூபத்தால் மூவர் -கீழே அதிகாரி நியமம் இல்லை என்றாரே –
சரணாகதி பண்ண வந்தவர்கள் மூவகைப்பட்டவர்கள் என்றபடி –அஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசரும்–அங்கே பன்மை – இங்கே மூவர் ஒருமை –
இந்த ஹேதுவின் படி வந்தவர்களுக்குள் அதிகாரி நியமம் இல்லை -என்று காட்டவே –

பிரபத்திக்கு தேச நியமம் -என்று -சூரணை -23 – தொடங்கி இவ்வளவும்
உபாய வர்ணாத்மிகையான பிரபத்தி யினுடைய–உபாய பிரபத்தி இல்லை -உபாய வரனாக வரிப்பதே -என்று காட்டி அருளுகிறார்
பகவானை வரிப்பதாக சொல்ல வில்லை -பெருமாளும் பண்ணினார் பார்த்தோம் —
அதனால் தான் இங்கே பகவத் வரணாத்மிகை என்று சொல்ல வில்லை
தேச காலாதி நியம அபாவத்தையும் -விஷய நியமும் தர்சிக்கப் பட்டது -இப்படி விஷய விசேஷத்தை தர்சிப்பித்த அநந்தரம் –
பகவத் சாஸ்த்ராதி-ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் படி – சித்தமான அதிகாரி விசேஷங்களையும் பிரகாசிப்பிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி -அதிகாரி விசேஷத்தை அருளி செய்கிறார் –
அதாவது –
சௌலப்யாதி குண பூர்த்தியாலே பிரபத்திக்கு நியத விஷயமான இச் அர்ச்சாவதாரத்தில்
பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் -பிரபதன ஹேது பேதத்தாலே -மூன்று வகை பட்டு
இருப்பர்கள்-என்கை–

————————————-

சூரணை -42-

அஞ்ஞரும்
ஞானாதிகரும்
பக்தி பரவசரும் —

அவர்கள் யார் என்னும் அபேஷையிலே அருளி செய்கிறார் –

அஞ்ஞர் ஆகிறார் -பகவல் லாபத்துக்கு உறுப்பாக சாதனா அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான
ஞானம் இல்லாதவர்கள் -அஞ்ஞானம் அசக்திக்கும் உப லஷணம்-
பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் அஞ்ஞான அசக்திகள் அன்று-
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -சூரணை – 115- -என்று மேலே இவர் தானே-அருளி செய்கிறார் இறே –
ஞானாதிகர் ஆகிறார் -ஞான சக்திகள் உண்டாய் இருக்க செய்தேயும் -பகவதத்யந்த-பரதந்த்ரமான ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனத்தாலே
உபயாந்தரங்கள் ஸ்வரூப வ்ருத்தம் என்று-பரித்யஜிக்கைக்கு ஈடான ஞான பூர்த்தி உடையவர்கள் –
பக்தி பரவச்ர் ஆகிறார் -ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க ஷமர் அல்லாதபடி-
பகவத் பிரேம அதிசயத்தாலே சிதில கரணராய் இருக்கும் அவர்கள் –

பக்தி யோக அனுஷ்டானத்துக்கு -1–ஸ்வாத்யாய -வேதம் கற்கும் ஞானம் -2–இந்திரியங்கள் வசம்-3-சாஸ்திரம் அனுமதித்த த்ரை வர்ணிகர்-
4-விளம்பமாக பிராப்தி வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் தன்மை ஆகிய நான்கும் வேண்டுமே –
இவற்றினுடைய -ஒவ் ஒன்றிலும் இல்லாதவர் பிரபத்திக்கு அதிகாரிகள் -நான்கும் இல்லா விட்டால் தான் என்று இல்லை –
திருமந்திரத்தில் நமஸ் சப்தம் -ஸூ ரக்ஷண உபாய பிரவ்ருத்தி அநர்ஹத்வ ரூப – அத்யந்த பாரதந்தர்யம் -யாதாம்யா ஸ்வரூப ஞானம் –
உபாய பிரவ்ருத்தியிவ் பிராயச்சித்த விதி சாஸ்திரம் விதிக்கும் -ஆகிஞ்சன்யம் –
-ஸூ அபேக்ஷிதா பிரத அத்யந்த அபிமத -அந்நிய ஸூ வீய உபாய பிரவ்ருத்தி -இதுவே உபாயாந்தரம் -பற்றாமல் – பகவத் அத்யந்த அபிமத ஜனங்கள்-
வியாசாதிகள் –உபாயாந்தர ப்ரவ்ருத்தி பிராரப்த அதீத வாசனையால் –வந்தது –இவர்களும் பிரபத்தி நிஷ்டர்கள் -பக்தி பாரவசயத்தால் கலங்க வில்லை
பர்வத அணு -வாசி -உண்ணும் சோறு இத்யாதி -ஆழ்வாராதிகள் -விளம்பம் பொறுக்காமல் –

———————————————–

சூரணை -43-

அஞ்ஞானத்தாலே    பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –

இப்படி இவ் வஞ்ஞானாதிகள்  அடியாக பிரபத்தி பண்ணினவர்கள் இன்னார் என்னும் இடம்
காணலாம் இடம் உண்டோ என்னும் ஆகாங்ஷையிலே அருளி செய்கிறார் –

சரணாகதி தவிர இதர சாதனங்கள் சொன்னால் சரணாகதி சாதனம் என்றதாகுமே -இதர சாதனங்கள் ஈஸ்வரனை தவிர என்றபடி
இதர சாதனங்களை பற்றி அறியாமலே வந்தான் -அன்றிக்கே அறிந்து பண்ண அரிது என்றும் அஞ்ஞானம் -எளிது என்னும் ஞானம் இருக்க வேண்டுமே –
அத்தையே செய்வான் -அறிவதற்கு அரியது என்றபடி ஸ்தூல தர்சிகள் நம் போல்வார் –அவை இரண்டுக்கும் எளிதான –
கர்ம ஞான பக்தி மூன்று உள்ளதே இரண்டு என்றது ஞான சக்திகளுக்கு -அறிவதற்கும் அனுஷ்டிப்பதற்கும் அரிது -அவை -தாழ்ச்சி
இதர சாதனம் ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் -அத்யந்த பரதந்தர்யம் —
பிரபதனம் ஸ்வரூப பிராப்தம் என்ற ஞானம் இல்லாமல் -என்றுமாம் -இப்படி மூன்று வகை அஞ்ஞானம் –
இந்த அறியாமை வந்தால் எப்படி வருவான் சங்கை -என்னில் தெரியாமலும் வருகிறார்கள் –
அறிந்து வந்தவன் அடுத்த கோஷ்ட்டியில் சேருவானே –
துஷ்கரத்வாதி பிரதிபத்தியால் விடுவது இரண்டுக்கும் ஒக்கும் அஞ்ஞானம் அசக்திக்கும் உப லக்ஷணம்
சாதனாந்தரம்-அத்யந்த பாரதந்த்ர ஸ்வரூபத்துக்கு நாடகம் -பிரபதனம் ஸ்வரூப அனுரூபம் அறிந்த -நாதமுனிகள் போலே
மூன்றாவது -பகவத் பிரசாதம் அடியாக -பக்தி -மயர்வற மதி நலம் அருளப்பெற்றவர் –சஹஜ பக்தி –பக்தியால் கலங்கி -துடிப்பால்-
த்வரை மிகுத்து -ஞான காலுஷ்யம் -தெளிவான ஞானம் கலங்கின பக்தியில் மூட்ட –

அஞ்ஞானத்தாலே    பிரபன்னர் -என்றது -இதர உபாய அனுஷ்டானத்தில் இழிகைக்கு
ஈடான ஞானாதிகள் முதலிலே இல்லாமையாலே–மேலோட்டமாக தெரிந்தவர்கள் – –
அநந்ய கதிகளாய் கொண்டு -பகவத் விஷயத்திலே பரந்யாசம் பண்ணினவர்கள் என்ற படி —
மேலே ந்யஸ்த பரர் இரண்டாவது -உபாயாந்தர சூன்யத்தை பரந்யாசம் / பர சமர்ப்பணம் சப்தம் மூன்றாவது வகைக்கு -/
அஸ்மாதாதிகள்  -என்று ஸ்வ நைச்ய அனுசந்தனத்தாலே மந்த அதிகாரிகளோடே தம்மையும் கூட்டி அருளி செய்கிறார் —
தோஷங்களை சொல்லிக் கொள்வார்கள் ஞானிகள் –

ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் -என்றது -உபாயாந்தரங்கள் ஸ்வரூப நாசகம் என்று
நடும்கும் படியான ஸ்வரூப யாதாத்ம்ய  தர்சனத்தாலே வந்த ஞான பூர்த்தியாலே
அநந்ய கதிகளாய் கொண்டு ஸ்வரூப  அனுரூபமாக பகவதி நியச்த பரர் ஆனவர்கள் -என்றபடி –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் -என்றது -பகவத் பிரேம பௌஷ்கல்யத்தாலே –ஆச்சார்யர்கள் -இந்த வர்க்கம் -/
தாயார் அவஸ்தை -அத்யந்த பாரதந்தர்யம் -நாத யமுனா யதிவராதிகள் –
உபாயாந்தரங்கள் என்று சொல்லும் படி த்வரையால் பிரவ்ருத்தியும் கூட கூடாதே –
சக்தி இருந்தவனுக்கு பக்தி தான் பண்ண வேணும் என்றால் பிரபத்திக்கு வர முடியாதே -நாத யாமுனாதிகளுக்கு பக்தி இருந்தாலும் –
விளம்பத்தி பலனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னவும் கூடாதே -அவதார ரஹஸ்யம்
அறிந்த பக்திமான்களும் சரீர அவசணத்தாலே பிராப்தி உண்டே -உபாயாந்தரங்கள் ஸ்வரூப நாஸகத்வம் -ஒரே ஞானாதியத்தாலே
கால் ஆலும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-என்றும் –
இட்ட கால் இட்ட கை –திருவாய் மொழி -7 -2 -4 -என்றும் சொல்லுகிறபடி
சிதில கரணராய் இருக்கையாலே -சாதனா அனுஷ்டானத்துக்கு ஆள் அன்றிக்கே –
அநந்ய கதிகளாய் கொண்டு -அவன் பக்கலிலே பர சமர்ப்பணம் பண்ணினவர்கள் என்ற படி –
மூன்றும் பர்யாய சப்தங்ககள் -ரஷ்யா பரம் நம்மது அல்ல என்பதே –

பக்தி பரவசருக்கு சாதனா அனுஷ்டானம் பண்ண போகாது என்னும் இடம் –
உன்னை காணும் அவாவில் வீழ்ந்து-பக்திக்குப் பரவசப்பட்டு- நான் எங்கு உற்றேனும் அல்லேன் –திரு வாய் மொழி -5 -7 -2 -என்றும் –
என் கொள்வன் –திருவாய் மொழி -5 -1 -4 -என்ற பாட்டிலும் ஆழ்வார் சூச்பஷ்டமாக அருளி செய்தார் இறே
கடலிலே விழுமா போலே -சித்த சாதனங்களிலும் சாதனா அனுஷ்டானம் பண்ணுபவர்களிலும் இல்லேன் –
இங்கு அங்கு -இங்கு மனசு ஓட்டலை -அங்கும் போகவில்லை -என்றுமாம் –
அனுபவம் பொழுது போக்கும் அருளிச் செயல்களிலே நம் பூர்வாச்சார்யர்கள் /
என் கொள்வன்-எந்த பிரயோஜனத்தை கொள்வேன் உன்னை தவிர -ஸ்வரூபத்துக்கு தக்க பாசுரம் சொல்லியும் –
பக்திக்கு வசப்பட்ட நெஞ்சை இரும்பு போல் வலிய நெஞ்சமாக்கி -கண்ணநீர் கரந்து மாற்றி நின் கண் நெருங்க வைத்து –
ஆத்மாவை சரீரத்துடன் பிரிய ஷமன் அல்லேன் –
கையார் சக்கரத்து -மெய்யே பெற்று ஒழிந்தேன் என்ற பதிகம் – -ஆசை இருப்பதாக நடித்தேன் -என்றவாறு –

———————————

சூரணை -44-

இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற —

இப்படி அஞ்ஞாதிகள் ஒரொன்றே இவர்களுக்கு பிரபதன ஹேதுவாக
சொல்லுகைக்கு  மூலம்  இன்னது என்கிறார் –
திவ்ய தேசம் ஒவ் ஒன்றிலும் ஒவ் ஒரு குணம் பிரதானம் என்று சொன்னால் போலே –

அதாவது
அஞ்ஞான அசக்திகளும்
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்
பகவத் பக்தியும் –
இவை மூன்றிலும் மூவருக்கும் அன்வயமுண்டாய் இருக்க செய்தே
ஒரொன்றே இவர்களுக்கு பிரபதன ஹேதுவாக சொல்லுகிறதும்
இவற்றில் ஒரொன்றே இவ் அதிகாரிகள் பக்கல் உறைத்து இருக்கையாலே என்கை
இத்தால் முற்பட்டவர்கள் பக்கல் ஞான பக்திகள் இரண்டும் குறைந்து -அஞ்ஞானமே விஞ்சி இருக்கும்-
சேஷத்வ பாரதந்தர்ய ஞானம் மேலோட்டமாக இருக்கும் –
சரணாகதி வந்தவர்கள் தானே இவர்களும் -முமுஷுத்வம் மாத்திரம் பக்தி இன்மையும் உண்டே இவர்களுக்கு

நடுவில் அவர்கள் பக்கல் -அஞ்ஞானம் அல்பமாய் -பக்தியும் அளவு பட்டு -ஞானமே விஞ்சி இருக்கும் –
வாசனை இன்னும் போகாமல் துளி மிஞ்சி இருக்கும் -சாஷாத்கார ரூப ஞானம் இல்லையே -இவர்களுக்கும் –
தர்சன சமானான ஆகாரம் இல்லை -பக்தியும் அளவுபட்டு என்றது ஆழ்வார்கள் போலே இல்லையே -என்றவாறு –

பிற்பட்டவர்கள் பக்கல் -அஞ்ஞானம் அத் அல்பமாய் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -ஆழ்வார்களுக்கு உருவ வெளிப்பாடு உண்டே
தர்சன சமானாத்காரம் உண்டு -இன்னும் துளி இருக்கும் -சரீரம் இருப்பதால் –ஸ்வரூப ஞானமும் குறைவற்று இருக்க செய்தே —
ப்ரேமமே கரை புரண்டு இருக்கும் –பக்தி பார்வஸ்யம் -எப்போது கொடுப்பானா காத்து இருப்போம் என்று இல்லாமல்
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ என்பார்களே –

ஆகையால் எல்லாம் எல்லார் பக்கலிலும் உண்டே ஆகிலும் -அல்பங்களானவை கிடக்க செய்தே
அதிகமானதுவே அவ்வவருக்கு பிரபதன ஹேதுவாம்  என்றது ஆய்த்து –
இந்த யோஜனைக்கு ஒரு குறை உண்டு –
மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களுக்கும் அஞ்ஞானம் சிறிது கிடக்கிறது உண்டு என்று
கொள்ள வேண்டி வருகையாலே -ஆனால் செய்வது என் என்னில் —
ஆழ்வார்கள் சரீரம் அவன் உகப்பதாலே தானே -ஆகவே அஞ்ஞானம் அத் அல்பம் கூட இல்லை –
ஆனால் தங்கள் அனுசந்தானம் பண்ணி பக்தி பாரவசயத்தால் வந்தோம் என்று அனுசந்தானம் பற்ற என்றபடி –
ஊற்றத்தை பற்ற -என்கிற இத்தை அனுசந்தான பரமாக்கி யோஜிக்கும் அளவில் இவ் விரோதம் இல்லை –
அப்போது -இப்படி -இத்யாதிக்கு -அஞ்ஞான  அசக்திகளும் -ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும் -பகவத் பக்தியும் –
ஆகிய இம் மூன்றின் உடையவும் அனுசந்தானம் மூவர்க்கும் ஏதேனும் ஒருபடி உண்டாய் இருக்க செய்தே
ஒரொன்றே இவ் அதிகாரிகளுக்கு பிரபதன ஹேதுவாக சொல்லுகிறதும் -இவற்றில் ஒரொன்றே இவ்  அதிகாரிகளுக்கு
ஊற்றம் ஆகையாலே என்று பொருளாக கடவது -அதாவது -அநந்ய கதிகளாய் பிரபன்னராகைக்கு உடலான
அஞ்ஞானாதி த்ரய அனுசந்தாநாமும் மூவர்க்கும் உண்டானாலும் -மூன்றிலும் வைத்து கொண்டு
பிரசுரமானதே தம்தாமுக்கு அநந்ய கதிகளாய் பிரபத்தியில்  இழிகைக்கு ஹேதுவாக அனுசந்தித்து இருக்கையாலே என்றபடி –

இதில் –
பிரதம அதிகாரிகளுக்கு அஞ்ஞான அனுசந்தானம் ஸ்வ ரசம் –
நடுவு சொன்னவர்களுக்கு பிரமாணிகர் ஆகையாலே -அஞ்ஞானத்தின் உடைய சவாசன நிவ்ருத்தி கூடாமையால்
அஞ்ஞான அனுசந்தானம் கூடும் -பிற்பட்டவர்கள் மயர்வற மதிநலம் பெற்றவர்கள் ஆகையாலே
அஞ்ஞான அனுசந்தானம் நைச்ய நிபந்தநமாம் இத்தனை

————————————————

சூரணை -45-

இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –

இவஞ்ஞானாதி த்ரயத்துக்கு காரணம் இன்னது என்கிறார் –
துஜ்ஜேயத்வமும் துஷ்கரத்வம் பிராகிருத கரண சங்கோச நிபந்தமாக வரும் —
பிராப்தி அபிராப்தி ஸ்வரூப அனுசந்தான நிபந்தம் -பாரவஸ்யம் பகவத் வைலக்ஷண்ய ஞானம் பற்றி வருவதால் –

மூன்று தத்வத்தையும் பற்றி வரும் -என்றது –
சாதன அனுஷ்டானத்திலே அஞ்ஞான அசக்திகளுக்கு மூலம் -கர்ம நிபந்தனமான
அசித் சம்பந்தம் ஆகையாலே -அஞ்ஞானம் அசித் தத்தவத்தை பற்றி வரும் –
நித்ய சூரிகள் இங்கே வருவது கர்ம நிபந்தம் இல்லை- பகவத் இச்சா நிபந்தமாக தானே இங்கே வருகிறார்கள்
இதர சாதனங்கள் ஸ்வரூப வ்ருத்தம் என்று பரித்யஜ்யைக்கு உடலான ஞான பூர்த்திக்கு அடி
மத்யம பதத்தில்-நம – சொல்லுகிற ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய தர்சனம் ஆகையாலே
உபாய த்வாரா ஸூ ரக்ஷகத்வம் இல்லை -அநந்யார்ஹ சரண்யன் -என்று அறிந்தவர்கள் -அத்யந்த பரதந்த்ரர்கள் –

ஞானாதிக்யம் ஆத்மா தத்தவத்தை பற்றி வரும் –
ஒன்றையும் அடைவு பட-அங்கங்களையும் அங்கி யையும் -அடைவு பட – அனுஷ்டிக்க மாட்டாதபடி கரண சைதில்யத்தை பண்ணும்

பக்தி வ்ருத்திக்கு காரணம் -காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -திருவாய் மொழி -5- 3- 4-
என்னும் பகவத் விக்ரஹ வைலஷண்யம் ஆகையாலே -பக்தி பாரவச்யம் பகவத் தத்தவத்தை பற்றி வரும் -என்றபடி —

——————————————————–

சூரணை -46-

என்னான் செய்கேன் -என்கிற இடத்தில்  இம் மூன்றும் உண்டு –

அதிகாரி த்ரயத்துக்கும் -அஞானாதி   த்ரயத்திலும் அந்வயம் உண்டாய் இருக்க
ஒரொன்றே பிரபதன ஹேதுவாக சொல்லுகிறது-ஊற்றத்தை பற்ற -என்று இறே சொல்லிற்று –
இப்படி ஏக அதிகாரி பக்கலிலே இம் மூன்றும் உண்டு என்னும் இடம் காணலாம் இடம் உண்டோ
என்ன-அருளி செய்கிறார் –
அங்கும் உள்ள மூன்றும் இல்லை –
என்னை என் இடத்தில் காட்டிவிட்டாலோ -பிறர் இடத்தில் காட்டி விட்டாலோ -நீயே இன்று இல்லாமல் பின்பு தரலாம் என்று உள்ளேயோ –
என் செய்கேன் -அஞ்ஞானம் / ஞானாதிகர் / பக்தி பாரவஸ்யம் மூவரும் இப்படி கேட்கலாமே -என்றவாறு -மூவர் நிலையும்-
அஸ்மதாதிகள் -ஆச்சார்யர்கள் -ஆழ்வாராதிகள் –
பிரபந்த உக்தியிலே -அஞ்ஞனான நான் என் செய்கேன் – அப்ராப்தன் -நான் என் செய்கேன் -பக்தி பரவசனான நான் என் செய்கேன் –

அதாவது-
எம்பெருமான் தம்முடைய  ஆர்த்தி கண்டு இரங்க காணாமையாலே –
தன்னை பெரும் இடத்தில் சில சாதன அனுஷ்டானம் பண்ண வேணும் என்று இருந்தானாக கொண்டு –
உபயாந்தர அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாதபடி அஞ்ஞனான நான் என் செய்கேன் –
அழகாக சேவை சாதிக்கிறாயே -ஆர்த்தி கண்டு இரங்காமல் துடிக்கிறார் –திருமழிசை ஆழ்வாருக்கு எழுந்தாயே –
உபாயந்தர அனுஷ்டானத்துக்கு அஞ்ஞானான நான் -சாஸ்திரம் கற்க தேகம் த்ரை வர்ணிகர் இல்லையே –
மயர்வற மதி நலம் அருளினாய் நான் வாங்கிக் கொள்ள யோக்யதை உண்டோ அஞ்ஞானத்தில் தவிக்கிறேன்
ஞானம் தந்தோமே என்னில் -நீ தந்த ஞானத்தால் ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை உணர்ந்து
சாதன அனுஷ்டானம் அப்ராப்தம் என்று இருக்கிற -நான் என் செய்கேன் –
அடியேன் சிறிய ஞானத்தன்-நீர் அருளின ஞானமே உபாயாந்தரம் கூடாது அப்ராப்தம் என்று சொன்னீரே
ஸ்வரூபத்துக்கு சேராதாகிலும்-உன்னை பெறலாமாகில்-இது தன்னை அனுஷ்டிக்கலாய்த்து இறே
ஞான மாத்ரத்தை தந்தாய் ஆகில் -பக்தி ரூபாபன்ன ஞானத்தை தருகையாலே –
ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க ஷமன் அல்லாதபடி -பக்தி பரவசனான -நான் என் செய்கேன் -என்று
இம் மூன்றும் ஆழ்வாருக்கு விவஷிதம் ஆகையாலே அவ்விடத்தில் இம்  மூன்றும் உண்டு என்கை –
ஆகையால் -இவ்விடத்திலே காணலாம் -என்று கருத்து –

———————————-
சூரணை -47-

அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும் –

ஆனால் இம் மூன்றும் அவ்விடத்தில் பிரபத்தி காரணம் ஆகிறதோ -என்ன –
அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும் -என்கிறார் –
அந்த ஸூக்தி-ஆழ்வார் அருளிச் செய்த என் செய்கேன் என்றதில் -என்றவாறு –
அஞ்ஞானம் அபிராப்திகள் இவர் கண்ணிலே படாதே -பக்திக்கு பரவசப் பட்டு உள்ளாரே

அதாவது –
அவ்விடத்தில் பிரபத்தி யானது மூன்றிலும் வைத்து கொண்டு
ஊன்றி இருக்கிற பக்தி பாரவச்யத்தையே தனக்கு ஹேதுவாக
பற்றி இருக்கும் என்றபடி –

——————————————

சூரணை -48-

முக்கியம் அதுவே –

ஈஸ்வர தத்துவத்தால் வந்த பக்தி பாரவஸ்யம் அடியாக செய்த பிரபத்தியே பிரதானம் –
பேற்றில் இருக்கும் ருசி குறையற்று இருக்குமே -இதில் –
அடியேன் சிறிய ஞானத்தன் இதில் மிக்கோர் அயர்வுண்டே–அஞ்ஞானம் அடியாக ஆழ்வாருக்கு இதில்
எனது யாவி யார் யான் யார் -ஆத்ம ஞானாதிக்யத்தால்-அப்ராப்தம் அடியாக –ஆழ்வாருக்கு இதில்
ஊரவை கவ்வை தோழி என் செய்யும் பக்தி பாரவசயத்தாலே நிஷேதம் -இதில் –
-மூன்றும் உண்டே ஆழ்வார் இடத்தில்
ப்ராப்ய ரசம் வளர்ந்து -தத் சீக்ர சித்தி ஹேதுதயா இதுவே ஏற்றம் என்றவாறு

இந்த ஹேது த்ரயமடியாக வரும் பிரபத்திகளில் முக்கியம் எது என்ன அருளி செய்கிறார் –

அதாவது பக்தி பாரவச்யம் அடியாக பிரபத்தி பண்ணும் இடத்தில்
ப்ராப்ய ருசி கண் அழிவு அற உண்டு ஆகையாலே -அதுவே முக்கியம் என்றபடி –

————————————————-

சூரணை -49-

அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –

இவ் அதிகாரி த்ரயத்துக்கு பிரமாணம் உண்டோ என்ன -பிரதமம் பட்டர் அருளி செய்த
ஒரு ஸ்லோகத்தை யுதாஹரிக்கிறார் –

இம் மூன்றும் -என்றது மூன்று அதிகாரிகளையும் சொன்னவாறு –
யுக்த அர்த்தத்துக்கு பிராமண உபாதானம் பண்ணுகிறார்
அஞ்ஞான ஹேதுகத்தவ ப்ரபத்தியையும் – ஞானாதிக்க -ஹேதுக பிரபத்தி –
பக்திர் பூம்யா -பக்தி பாரவஸ்யத்துக்கு -பக்தியின் எல்லை நிலம் ஹேதுக்கவாக
அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம் அவிதுஷாம்
கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே  சகலு பகவான் ஸௌ நகமுனி –
இச் ஸ்லோக அர்த்தம் -ஜிதந்தா வ்யாக்யானோ போத்காதத்திலே –
ஷடாசனம் நாலாயிரம் ஸ்தோத்திரங்கள் ரகஸ்ய த்ரயம் தனி ஸ்லோகாதி வியாக்கியானங்கள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
அவர் ஸ்ரீ ஸூ க்திகளை- அப்படியே இங்கு எடுத்துக் காட்டி அருளுகிறார் மா முனிகள்–
ஆழ்வார் ஆச்சார்யர்களை தவிர வேறு ஒன்றையும் சொல்லாமல் –
உபதேச ரத்னமாலை பிறந்ததே ஸ்ரீ வைஷ்ணவ வைபவம் -11-பாசுரங்கள் இதுக்கும் -8-பாசுரங்கள் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் வைபவம் பற்றியும் –

பிரபத்திக்கு அதிகாரிகள் -அஞ்ஞரும் சர்வஞ்ஞரும் பக்தி பரவசரும் என்று
த்ரிவிதமாக பட்டர் அருளி செய்தார் இறே -என்று தொடங்கி –
அஞ்ஞன் ஆகிறான் -பகவல்  லாபத்துக்கு தன் பக்கல் ஞான சக்திகள் இல்லாதவன் –
சர்வஞ்ஞன் ஆகிறான் -தேச கால வஸ்துகளால் பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை
உடையவன்-பரிப்ருட தயாவா-என்கிற சப்தத்தால் – ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்தியம் என்று இருக்கும் அவன் -ஞானாதிகன் –
-ஸ்வரூப யாதாம்யா ஞானம் உள்ளவர் -ஸூ பிரவ்ருத்தி ஆத்மாவின் பாரதந்தர்யத்துக்கு விருத்தம் —
வேறு ஒன்றால் சாத்தியம் என்றால் போவார்களோ என்னில் – போக மாட்டார்களே -இதனால் இரண்டுக்கும் விரோதம் இல்லையே
பக்தி பரவசன் ஆகிறான் -ஞான சக்திகள் உண்டாய் இருக்க செய்தே -அடைவு பட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும்-பகவத் விஷயமொழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு பிராபகனுமாய் பிராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று-கதிர் கம்யச்சாஸௌ ஹரி-
ஜிதந்தை என்று பேரை உடைத்தான மந்திர ரஹச்யத்தை  சர்வஞ்ஞனான  ஸ்ரீ  ஸௌநக பகவான்
வியாக்யானம் பப்ண்ணப் பெறுவதே -என்கிறார் -என்று ஆச்சான் பிள்ளை அருளி செய்தார்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் -என்ற இடத்தில் ஸ்வரூப யாதாத்ம்ய  ஞானம் பிரபதன-ஹேதுவாக சொல்லிற்று –
இந்த ஸ்லோகத்தில் பகவத் அநந்ய சாத்யத்வ ஞானம் பிரபத்ன ஹேதுவாக-சொல்லிற்று –
ஆகையால்-இரண்டும் ஞானாதிகருக்கு அநந்ய கதித்வ பூர்வகமான பிரபதனதுக்கு-ஹேதுவாம் என்று கொள்ள  வேண்டும் –
கீழும் இது தானே அர்த்தமானாலோ என்னில் -ஒண்ணாது -இம் மூன்றும் மூன்று தத்வத்தையும்-பற்றி வரும் -என்றத்தோடு சேராமையாலே-
பரமாத்மா ஸ்வரூப யாதாம்யா ஞானம் என்று அநந்ய சாத்தியம் என்று உணர்ந்தவர்கள் –இம் மூன்றையும் மூன்றையும் பற்றி வருபவர்கள் –
நடுவில் உள்ளார் ஜீவாத்மா யாதாம்யா ஞானத்தை பற்றி என்று சொன்னால் தானே பொருந்தும் -என்றவாறு –

————————————-

சூரணை -50-

இதம் சரணம் அஜ்ஞானாம் –

அநந்தரம் -இவ் அர்த்த விஷயமாக -அகில ஜகன் மாதாவாய் -ஆப்த தமையான -பிராட்டி
லஷ்மீ தந்த்ரத்தில் அருளி செய்த வசனத்தை உபாதானம் பண்ணுகிறார் –

அஞ்ஞானம் விஞ்ஞானம் திதிர்ஷா-மூன்றையும் சொல்லி -யுக்தம் -என்று இவ்வளவாய்
அர்ச்சாவதார பிரபத்தி பண்ணும் மூன்று அதிகாரிகளை அருளிச் செய்து —
ஆப்தர் -திரு மோகூர் ஆப்தன் -/ ஆப்ததமர்–ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் / -ஆப்த தமை-பிராட்டி
இதம் சரணம் அஞ்ஞானம் இதம் ஏவ விஜாநதாம்-இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்ய மிச்சதாம்–100 -இந்த ஸ்லோகத்தில் –
திதிர்ஷதாம் விருப்பம் /
இதம் என்று பராமர்சிக்கிறது -கீழ் சொன்ன சரணா கதியை –
அபாய உபாய நிர்முக்தா மத்யமாம் ஸ்திதி மாஸ்திதா-சரணாகதி ரக்ர்யைஷா சம்சார ஆர்ணவ தாரிணீ–99 -என்று இறே கீழ் சொல்லி நின்றது –
அபாயமாகிற உபாயாந்தரங்கள் -தொடாமல் நிர்முக்தர்கள் –
மத்திய பதம் நமஸ் பத நிஷ்டர்கள்-ஈஷா அக்ர -முன் நின்று சரணாகதி சம்சார கடலை தாண்டுவிக்கும்
உபாயத்தில் இருந்தும் அபாயத்தில் இருந்தும் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி இரண்டையும் விட்டு அவனைப் பற்றி –
அந்திம காலத்துக்கு பற்றுகையும் விடுகையும் உபாயம் இல்லை –
விடுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம் என்று இருப்பவர்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம் இதுக்கு –
இயம் -என்று ஸ்திரீ லிங்க நிர்த்தேசம் அன்றிக்கே -இதம் -என்று நபும்சக லிங்க வ்யத்யயம்-சில கோசாரங்களில் இப்படி உண்டு என்பர் –
சரண சப்த விவஷையாலே-இதில் அஞ்ஞா சர்வஞஞர்களை-ஸ்புடமாக சொல்லுகையாலே –
மேல் பக்தி பரவசரை சொல்லுகிறது  என்று கொள்ள  வேணும் —
அதாவது அடுத்த ஸ்லோகத்தில் 100-இதம் திதீர்ஷதாம் பாரம் -என்றது –
சடக்கென அநிஷ்ட நிவ்ருத்தி பிறக்க வேணும் என்னும்-த்வரையை உடையார்க்கு என்றபடி –
இது சம்சார ஆரணவத்தை சடக்கென தாண்ட விருப்பம் கொண்டவர்கள் என்றபடி
ஆனந்த்ய மிச்சதாம் -என்றது ஸ்வரூப ப்ராப்த பரிபூர்ண பகவத் அனுபவத்தை பெற்றால் அல்லது
தரிக்க மாட்டாதார்க்கு என்ற படி -இவை இரண்டும் பக்தி யினுடைய பூமாவாலே வரும் அவை இறே –
பக்தி பாரவச்யம் உபாயாந்திர அனுஷ்டானத்தில் -அசக்திக்கும் உறுப்பாய் -அநிஷ்ட நிவ்ருத்தியிலும் –
இஷ்ட பிராப்தியிலும் உண்டான விளம்ப அஷமதைக்கும் உடலாய் இறே இருப்பது –
அதில் விளம்ப அஷமதைக்கு உடலான ஆகாரத்தை இந்த ஸ்லோகத்தில் சொல்லுகிறது –
ஆனால்-கீழ் அசக்திக்கு உடலாய் அன்றோ சொல்லிப் போந்தது –
அதுக்கு இது பிரமாணமோ என்னில் -அதிகாரி த்ரைவித்யாம் தர்சிப்பிக்கிற இவ்வளவே-
இவ்விடத்தில் அபேஷிதம் ஆகையாலே இது பிரமாணமாக சொல்ல தட்டில்லை –
அவித்யாதா -என்கிற ஸ்லோகத்தில் -ஞானாதிக்யதுக்கு  உடலாக சொன்னதும் -கீழ் சொல்லி வந்ததும்
பின்னமாய் இருக்க செய்தே -அதிகாரி த்ரைவித்யத்துக்கு பிரமாணமாக அத்தை சொன்னாப் போலே –

————————————————————-

சூரணை -51-

பக்தி தன்னிலே அவஸ்தாபேதம் பிறந்தவாறே
இது தான் குலையகடவதாய் இருக்கும் –

ஆக –
பிரபத்திய அதிகாரி த்ரைவித்யத்துக்கு பிரமாணம் காட்டினாராய் நின்றார் கீழ் —
இந்த த்ரிவித பிரதிபத்தியிலும் -பக்தி பாரவச்ய பிரதிபத்யே முக்கியம் என்று இறே கீழ் சொல்லிற்று –
ஏவம் பூத பிரபத்தி நிஷ்டர் ஆனவர்கள்-ஆழ்வார்கள் -தந் நிஷ்டை குலைந்து -பகவல் லாப அர்த்தமாக
ஸ்வ யத்னத்திலே மூளுவது -அவன் வரக் கொள்ள அவனையும் உபேஷிப்பதாகிற இவற்றுக்கு
நிதானம் ஏது என்ன -அருளி செய்கிறார்

பக்தி பாரவஸ்யரை மட்டுமே இப்பொழுது பேசுகிறார் –
அஞ்ஞரையும் ஞானாதிக்கரையும் விட்டு இதுவே பிராப்தி விளம்பம் இல்லாமல் ருசி வளர என்பதால் –
அத்தைப் பற்றியே மேலே விவரித்து அருளுகிறார் –பக்தி பாரவஸ்யத்தியிலே வேறே வேறே அவஸ்தைகள் உண்டே –
பக்குவம் வளர வளர -போகு நம்பி -என்னுடைய களகம் ஏறேல்- பந்து தந்து போ என்னலாமோ –
பக்தி வளர வளர -ந சாஸ்திரம் -நைவ க்ரம-பாரவஸ்ய பாக விசேஷத்தாலே -இப்பிரபத்தி குலையாதோ
சத்தா நிபந்தன பக்தி -பேற்றிலே த்வரை உண்டாக பக்தி பண்ணிக் கொண்டே கைங்கர்யமாக ப்ராப்ய ருசி வளர –
இருப்பு -மாறி -வளர்ந்து -குலைந்து -தளர்ந்து அடைந்து -தசைகள் -அத்யாவசம் குலைந்து-ஆனந்தமாக அகலகில்லேன் -அடுத்து
துக்கம் மிக்கு -அழுது- 7-1-/ மேலும் -7-2-புன புன பிரபத்தி பண்ணி அநுகாரம் மடல் எடுத்து பிரணய ரோஷம் –
த்வரா -ஈடுபாட்டின் அதிசய ரூப அவஸ்தா பேதங்கள் –பக்தி உத்பாதக இச்சா -விருப்பம் வளர்த்து –
ஒரு தடவை பண்ண வேண்டும் உபாயாந்தரம் அஸஹ்யம் -மாஸூச -என்ன அருளிச் செய்தாலும் சோகப்படுவது–
அத்யவசாயம் குலைந்தது போலவே -சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே –

பக்தி தன்னிலே அவஸ்தா பேதம் பிறக்கை யாவது –வேறே வேறே தசைகள் உண்டே –
கரண சைதில்யத்தாலே ஸ்வயத்ன ஷமர் அன்றிக்கே அவனே உபாயமாக அத்யவசித்து
அவன் வரவு பார்த்து இருக்கும் அவஸ்தை அளவு அன்றிக்கே –
கண்ணாஞ் சுழலை இட்டு –
ஏதேனும் ஒருபடி ஆகிலும் -அவனை இப்போதே பெற வேண்டும் என்னும்
அதிமாத்ர த்வரை அவஸ்தை விளைகை–
மடல் எடுத்தல் தூது விடுதல் காமன் சாமான் அசேதனம் குயில் காலில் விழுந்து இருக்கும் அவஸ்தைகள் –
இது -என்று பிரபத்தியை சொல்லுகிறது –
தாத்ருசாவஸ்தை பிறந்தால் பிரபத்தி குலைகையாவது -என்னான் செய்கேன் -என்று
ஸ்வ பிரபத்தியில் அந்வயம் அற்று பகவதி நியச்த பரராய் இருக்கும் இருப்பு குலைகை-

ஆழ்வார்கள் பண்ணின பிரதிபத்தி பிராப்யம் தராதே -அவனாலே பேறு -ருசி வளர வைக்க பக்தி உழவன் இத்தைக் கண்டு
ஆனந்தித்து அன்றோ இவர்கள் விமல சரம சரீரத்தில் ஆசை கொண்டு இருக்கிறான் –

————————————————

சூரணை -52-

தன்னைப் பேணவும் பண்ணும் –
தரிக்கவும் பண்ணும் –

இப்படி பிரபத்தி நிஷ்டை குலையும்படி பிறந்த பக்தியும் –
அவஸ்தா பேதம் விளைக்கும் அத்தை அருளி செய்கிறார் –

மா மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே என்று தாயார் தலை மகளை பார்த்து அருளிச் செய்யும் அவஸ்தை -இதுக்கு மேலே
அயர்க்கும் -இந்த அலங்காரம் தன்னை உபேக்ஷிக்கப் பண்ணுமே என்று நினைத்து அயர்க்கும் -சீதா பிராட்டிக்கு வந்த நிலைமை
பின்பு தேறும் -அந்திம தசையில் தேறுமா போலே-மேலே மேலே தெளிவு பிறந்து வர மாட்டான் என்று நினைத்து தரிக்கவும் பண்ணும்-
இவ்வாறு -நாநா ஸ்வ பாவங்களை பக்தி விளைவிக்கும் –
இதனால் தான் பக்தி பாரவஸ்யம் அவனுக்கு மிகவும் திரு உள்ளம் உகக்கும்-ந சாஸ்திரம் -நைவ க்ரம-
நமக்கு விசுவாசம் குலைவது நம்மைப் பற்றி -ஆழ்வார்களுக்கு ஹேது அவன் விஷயத்திலே -நெடு வாசி உண்டே –

தன்னைப் பேணப் பண்ணுகை யாவது -காறை பூணும் -பெரிய ஆழ்வார் திரு மொழி -3 -7 -8 – இத்யாதியில் படியே
அவன் வரவுக்கு உடலாக தன்னை அலங்கரிக்கும் படி பண்ணுகை –
அதாவது பகவத் லாப அர்த்தமாக ஸ்வ யத்னத்திலே மூட்டும் என்ற படி –
இது -மடல் எடுக்கை -முதலான வற்றிலே மூட்டும் அதுக்கும் உப லஷணம் —
தூது விட்டது பிரணய ரோஷம் போன்றன சுயம் உத்தியோகத்தல் –
ஆத்ம ரக்ஷணம் -நமக்கே நலம் -ஓதி குளித்து இத்யாதி செய்வது –
தரிக்க பண்ணுகை யாவது -அரை ஷணம் அவனை ஒழிய தரிக்க மாட்டாமையாலே –
அவன் வரவுக்கு உடலாக ஸ்வ யத்னத்திலே மூளும்படி பண்ணுவது தானே –
அவன் வர கொள்ள விளம்ப ரோஷத்தாலே –
போகு நம்பி –ஏதுக்கு இது என் –
கழக மேறேல் நம்பி –
என்று அவனையும் உபேஷித்து தள்ளி தரித்து இருக்கும் படி பண்ணுகை –
ஆகை இவை இரண்டாலும்-பேணவும் பண்ணும் -தரிக்கவும் பண்ணும் என்ற இரண்டுமே -என்னான் செய்கேன் -என்றும் –
தரியேன் இனி -என்றும் -இருக்கும் இருப்பு பிரதிகோடியை விளக்கும் என்றபடி –
ஆகையாலே பிரபத்தி நிஷ்டை குலைந்து ஸ்வ பிரவர்த்தி யாதிகளில் இழிகைக்கு அடி
பக்தியினுடைய அவஸ்தா பேதம் என்று கருத்து –

————————————————-

சூரணை -53-

இந்த ஸ்வபாவ விசேஷங்கள்
கல்யாண குணங்களிலும்
திரு சரங்களிலும்
திரு நாமங்களிலும்
திரு குழல் ஓசையிலும்
காணலாம் –

தன்னை பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் -என்று எம்பெருமான் வருகைக்கு உடலாக க்ருஷி பண்ணுகையும்-
அவன்  வரக் கொள்ள அவனை உபேஷிக்கையுமாகிற பரஸ்பர விருத்த ஸ்வபாவங்களை விளைக்கும் படியை இறே சொல்லிற்று –
இப்படி பக்தியானது ஸ்வ அவஸ்தா விசேஷங்களாலே சேதனருக்கு விளைக்கும் பரஸ்பர விருத்த ஸ்வபாவங்கள்
தத் விஷய மாத்ரத்தில் அன்றிக்கே -தத் சம்பந்தி வஸ்துக்கள் விஷயமாகவும்-காணலாம் என்கிறார் மேல் –

அத்யந்த பக்தி யுக்தனுக்கு ந சாஸ்திரம் நைவ க்ரமம்-விருத்த ஸ்வ பாவங்கள் –
இதை ஸ்தான த்ரய -பர பக்தி பர ஞான பரம பக்தி -ஸ்லோக த்ரய –
ராமானுஜர் மூன்றையும் பிரார்த்தித்து –ஏழாவது அத்யாயம் அடுத்து அடுத்த ஸ்லோகங்கள் /
வேறு வேறு அத்யாய ஸ்லோகங்கள் -ஸ்தான த்ரயம் –
அங்கு அனுபவிக்க வேண்டியதையும் இங்கே பிரார்திக்கிறார் -ஆழ்வார்கள் பர ஞானம் பரம பக்தி இங்கு –
ஸ்வீ க்ருத சித்த சாதனர் இத்தை சாத்தியமாக இரக்க ப்ராப்திக்கு முன்னே சித்திக்கும் -ஆச்சார்ய ஹ்ருதயம் -100-
இங்கேயே சேவை சாதித்து அனைத்தையும் அருளி -இங்கேயே வைத்து இருந்தது பகவத் சங்கல்ப வசத்தால் மட்டுமே –

விஷயீ பக்தியின் அவஸ்தை –பகவத் தத்வம் மாறாது –இது மட்டும் இல்லை –
பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் என்றது -பக்தி பக்குவப்பட்டு
நான்கு இடங்கள் -ஒவ் ஒன்றுக்கும் இரண்டு பாசுரங்கள் —
கல்யாண குணங்கள் -திருச் சரங்கள் -திரு நாமங்கள் -திருக் குழலோசை —
அழகால் கட்டுவது அனுகூலரை –பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் —
பக்தி விஷய பகவத் சம்பந்தம் போலே அவன் சம்பந்தம் கொண்ட இவையும் பல ஸ்வ பாவங்கள் –
ஆச்ரய தோஷத்தால் குலையத்தால் தான் -அதிகாரம் போகும் –
அவன் குணங்களால் தானே குலைந்தது -ஜீவாத்மாவின் தோஷங்களால் குலைய வில்லை

வெல்லும் வ்ருத்த விபூதிமான் அன்றோ -ஒப்பில்லாத அப்பன் அன்றோ -விஷயம் பகவான் -விஷயீ பக்தி –
விஷய த்வகம் முதல் இரண்டும் விஷயி த்வகம் அடுத்த இரண்டும் ப்ரஹ்ம ஸூ த்ரம்-இங்கே விஷயீ பக்தியின் அவஸ்தைகள் –
இந்த ஸ்வபாவ விசேஷங்கள் -என்று -கீழ் சொன்னவை தன்னையே சொல்லுகிறது என்று  –
இப்படி பட்ட ஸ்வபாவ விசேஷங்கள் -என்றபடி –
அவை யாவன -அநு பாவ்ய விஷயம் ஒருபடி பட்டு இரா நிற்க செய்தே –
அத்தை அநு பவிக்கிறவர்களுக்கு தாரகமாய் தோற்றுகையும்-
பாதகமே தோற்றுகையும் –
கல்யாண குணங்கள்-இத்யாதி –
கோவிந்தன் குணம் பாடி யாவி காத்து இருப்பேனே –நாச்சியார் திரு மொழி – 8- 3- -என்று தாரகமாகவும் –
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் -திரு வாய் மொழி – 8- 1- 8-என்று
பாதகமாகவும் -சொல்லுகையலும்
கல்யாண குண விஷயம் ஆகவும் –
சரங்கள் ஆண்ட தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –பெரிய திரு மொழி -7 -3 -4
என்று தாரகமாகவும் –
சரங்களே கொடியதாய் அடுகின்ற-என்று பாதகமாகவும் –பெரிய திருமொழி -10- 2- 9-
சொல்லுகையாலே
திரு சர விஷயம் ஆகவும் –
திரு மாலை பாடக் கேட்டு மடக் கிளியை கை கூப்பி  வணங்கினாளே-திரு நெடும் தாண்டகம் -14 –
என்று தாரகமாகவும் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -திரு வாய் மொழி -9 -5 -8 என்று பாதகமாகவும் -சொல்லுகையாலே
திரு நாம விஷயம் ஆகவும் –
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத வுன் குழலின் இன்னிசை போதராதே –பெருமாள் திரு மொழி -6 -9 –
என்று தாரகமாகவும் –
அவனுடை தீம் குழலும் ஈருமாலோ -திரு வாய் மொழி -9 -8 -5 –
என்று பாதகமாகவும் சொல்லுகையாலே –
திரு குழலோசை விஷயமாகவும் காணலாம் என்றபடி –
என்றும் ஒக்க போக்யங்களாய் இருந்துள்ள கல்யாண குணாதிகள்
தாரகமாக தோற்றுவது பாதகமாக தோற்றுவது ஆகிறது –அது போக்தாக்களான
இவர்களுடைய பிரேம ஸ்வாபவ விசேஷங்களாலே இறே -அல்லது
குணாதிகளின் ஸ்வரூப பேதத்தால் அன்றே -ஆகையால்-பகத் த்வய அவஸ்தா பேத ஜநிதங்களான
ஸ்வபாவ விசேஷங்கள் இவ்வோ வஸ்துகள் விஷயமாகவும் காணலாம் என்கிறது –
குணாதிகள் தாரகங்களாகவும் பாதகங்களாகவும் பேசுகிற இடத்தில்-இரண்டும் ஒருவர் பேச்சு
அன்றிக்கே இருந்ததே ஆகிலும் -ஆழ்வார்கள் எல்லாரும் ஏக பிரகிருதிகள் ஆகையாலும் –
எல்லாருடைய பக்தியும் -பகவத் பிரசாத லப்தையான பர பக்தி ஆகையாலும் -அந்த
பக்தி ஸ்வபாவ விசேஷங்கள் காட்டுகிற மாத்ரமே இவ்விடத்தில்-அபேஷிதம் ஆகையாலே விரோதம் இல்லை –

சரங்களே கொடிதாய்  அடுகின்ற -என்கிற இது பராஜித ராஷசர் பாசுரம் அன்றோ -அத்தை
சரங்கள் ஆண்ட-என்கைக்கு பிரதி கோடியாக சொல்லாமோ என்னில் -ராம விஜயம் தனக்கு இஷ்டம் ஆகையாலே
அந்த விஜயத்துக்கு இலக்காய்-தோற்ற ராஷசர் தசை பிறந்து -பிராட்டிமார்  தசை பிறந்து பேசுமாப் போலே
தாமான தன்மை தோற்றாதே தோற்ற ராஷசர் பாசுரத்தாலே -விஜயத்தை பேசி அனுபவிக்கிறார்
என்று இறே இத் திரு மொழிக்கு வியாக்யானம் பண்ணி அருளுகிற ஆச்சார்யர்கள் அருளி செய்வது –
ஆகையால் தம்முடைய பிரேம ஸ்வபாவத்தாலே ததஸ்தாபன்னமான பின்பு -திரு சரங்கள்
பாதகமாய் ஆய்த்தும் தமக்கேயாய் தோற்றி பேசுகையாலே அப்படி சொல்லக்குறை இல்லை –
பக்தி முற்றி ராக்ஷசர் அவஸ்தை அடைந்ததும் இவருக்கு உண்டே –

அதவா –
தன்னை பேணவும் பண்ணும் தரிக்கவும் பண்ணும் -என்ற இவை இரண்டாலும் –
அவன் தானே வரும் அளவும் தரியாமல் வரவுக்கு உடலாய் யத்னிக்கப் பண்ணுவது –
வரக் கொள்ள ப்ரணய ரோஷத்தால் தள்ளித் தரித்து இருக்கப் பண்ணுவதாம் படியை  இறே சொல்லிற்று –
இப்படி விருத்த ச்வபாவங்களை ஓன்று தானே செய்கிறார் -இந்த -என்று தொடங்கி –
அதாவது –
இப்படிப் பட்ட  ஸ்வபாவ விசேஷங்கள் -கோவிந்தன் குணம்  பாடி -என்று தொடங்கி –
கீழ் சொன்ன படியே -ஒரு தசையில் தாரகமாகபேசுவது-ஒரு தலையில் பாதகமாக போவதாம் படி –
இவர்களுக்கு தரிப்பும் பாதையும் ஆகிற விருத்த ஸ்வபாவன்களை கல்யாண குணாதிகளிலேயும் காணலாம் என்கை –

ஆக
பிரபத்திக்கு –சூரணை – 37-என்று  தொடங்கி இவ்வளவாக
பிரபத்தி வைபவத்தையும்
தத் விஷய -அர்ச்சா வைபவத்தையும்
தத் அதிகாரி த்ரை வித்யத்தையும்
த்ரிவித பிரபத்தியிலும்  பக்தி பாரவச்ய ஹேதுக பிரபத்தி யினுடைய முக்க்யத்தையும்
அது தனக்கு ஸ்வ ஹேது பூத பக்த்ய அவஸ்தா பேதத்தால் வரும் குலைதலையும்
அந்த பக்த்யா அவஸ்தா பேதம் செய்விக்கும் சங்கை களையும்
அருளி செய்தார் –

—————————————–

சூரணை -54-

இது தன்னை பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால்
பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் )
பிதாவுக்கு புத்ரன்
எழுத்து வாங்குமா போலே
இருப்பது ஓன்று –

இப்பிரபத்தி  தனக்கு -தர்ம புத்ராதிகளும்-என்று தொடங்கி -கீழ் உக்தரான அதிகாரிகள்
பக்கலிலே -சாதன தயா அனுஷ்டானம் காண்கையாலும்-
கர்ம ஞான பக்தி பிரபத்திகள் -என்று உபாயங்களோடே சகபடிதமாய் போருகையாலும் –
யத் யேன காமகாமேன ந சாத்யம் சாதனந்தரை
முமுஷூணா யத் சாந்க்யேன யோகேன  நச பக்தித
ப்ராப்யதே பரமம் தாம யதோ நவர்த்ததே புன
தேன தேனாப்யதே தத் தந்ந்த்யா சேனைவ மகாமுனே
பரமாத்மாச தேனைவ சாத்யதே புருஷோத்தம -என்றும் –
இதம் சரணம் அஞ்ஞானம் -என்றும்
இப்படியே சாஸ்த்ரங்களில் இத்தை சாதனமாக சொல்லுகையாலும் –
உபாயத்வ பிரதிபத்தி யோக்யதை உண்டாகையாலே -அத்தை வ்யாவர்த்திக்கைக்காக –
அதுக்கு உடலான பலவற்றையும் அருளிச் செய்கிறார்-மேல் –

அதில் -பிரதமத்திலே -இப் ப்ரபத்தியை உபாயமாக கொண்டால் – வரும் அவத்யத்தை தர்சிப்பிக்கிறார் –
உபாயம் என்று ஸ்வீ கரிக்கிறோம் -வ்யாஜ ரூபேண உபாயம் தேசிகர் சம்ப்ரதாயம் –
உபாயமாக பலர் பற்றி இருப்பதாலும் -தர்ம புத்ராதிகளைப் போலே –
கர்ம ஞான பக்திகளைப் போலே பிரதிபத்தி ஸஹ படிதமாகையாலும் –
யத் யேன காம காமேன–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவல் லாபத்வம் வேறு ஒன்றால் அடைய முடியாதோ
அது பிரபத்தியால் -முமுஷு அடைகிறான் -பரமாத்வாவும் அதனாலே சாதிக்கப்படுகிறான் –
ஆல் -மூன்றாம் வேற்றுமை -உபாயத்வம் வருமே –பிரபத்தியே சாதனம் -என்று சாஸ்திரங்கள் சொல்லுவதாலும் –
உபாயமாக சங்கிக்கத் தகுதி உள்ளதே-இத்தை வியாவர்த்திக்க -சாத்திய சித்த பேதம் -சொல்லி உபாய வர்க்கங்களுக்குள் படிக்கப்பட்டாலும்–
சாத்தியம் என்பதால் விதி முறையே மாறுபடும் -ஸ்வர்க்க காமம் அடைய ஜ்யோதிஷட ஹோமம் -செய்ய வேண்டும் –
நன்றாக படித்தால் பரீஷையிலே தேறலாம் -அதில் அத்யாவசிய வேண்டும் –
இரண்டாவது -நம்பிக்கைப்படி படிக்க வேண்டும்- மூன்றாவது நிலை -படித்ததும் பலமாக நல்ல மார்க் வாங்கலாம்
ஆக – இப்படி நான்கும் உண்டே – வேத வாக்கியம் -நம்பிக்கை -அனுஷ்டானம் -இதுவே உபாயம் -பலம் –

சித்த உபாயத்துக்கு விதி மாறும் -மாம் ஏகம் -விதி வாக்கியம் -கேட்டு அத்யாவசியம் ஏற்பட்டு- -மூன்றாவது அனுஷ்டானம் என்று –
-பிரபத்தி செய்தல் உபாயம் ஆகுமா சங்கை -ஸாத்ய உபாயம் நாம் செய்ய வேண்டியது இல்லை -பகவானே சித்த உபாயம் –
மூன்றாவது -பகவானே உம் திருவடிகளே உபாயம் நம்பிக்கையே உபாயம் –
இரண்டாவது நிலை முன்பு எல்லாம் -மூன்றாவது என்ன -என்றால்
தேவரீர் உபாயமாக இருக்க வேண்டும் என்று நம்பி –பரகத -பகவத் கிருபையை பகவானே மூன்றாது நிலையிலே —
த்வமேவ உபாயம் ஏவ -பிரார்த்தனை பண்ணினோம் –
நம்பிக்கைக்கும் பலத்துக்கும் நடுவில் உள்ள மூன்றாவது நிலை அவன் இடம் தானே —
தீர்ப்பாரை -உன்னித்து -வண் துவாராபதி மன்னனை பாடினால் எழுந்து இருப்பாள் -என்று
சொன்னதை கேட்டதும் எழுந்தாள் -நடுவிலே வேறே ஒன்றுமே வேண்டாமே – —
பிரபத்தி ஸ்வரூபம் -தான் எத்தை ஆஸ்ரயித்து இருக்குமோ-அத்தை மற்றைவைகள் இடம் பிரித்து காட்டுமோ அதுவே ஸ்வரூபம் –
சாமந்தித்தவம் சாமந்திப் பூவுக்கு ஸ்வரூபம்-பிரபத்தி பக்தி இரண்டுமே ஜீவனை ஆஸ்ரயித்து இருந்தாலும் இரண்டும் உபாயம் இல்லை –
பிரபத்தி ஸ்வரூபமே ப்ரஹ்மமே உபாயம் என்று காட்டுவது அன்றோ –
பிரபத்தியை உபாயமாக கொண்டால் அதன் ஸ்வரூபத்துக்கே கொத்தை வருமே -எதுவும் உபாயம் ஆகாது நீரே உபாயம் என்பதே பிரபத்தி –
அத்தை உபாயம் என்றால் இதுக்கே கொத்தை வருமே –
சேதனன் ஈஸ்வரன் விஷயத்தில் பண்ணும் பிரபத்தி -ரஷிக்க இது தன்னை பார்த்தால் –
பிரபத்தி தன்னை பார்த்தால் என்றும் உபாயமாக பார்த்தால் என்றுமாம் -வார்த்தை தருவித்து -அத்யாஹாரம் -விளக்க வேண்டி பிரார்த்தித்தால் –
சத்தா காரண பூதனாய் -பிதா பிறக்க தானே காரணம் -இருப்புக்கும் பிரவிருத்தி நிவ்ருத்திக்கும் காரணம்-சர்வ திசையிலும் ரக்ஷகனாய்ப் போருகிற-
வைமுக்ய திசையிலும் -ரக்ஷகன் அவனே -சம்பந்த உபாய பலன்களில் உணர்த்தி – ஓங்காரம் – காரணத்வம் சேஷத்வம் -ரஷக ரஷ்ய சம்பந்தம் –
சேஷித்வ காரணத்வ ரக்ஷகத்வ ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே –
எழுத்து வாங்குகை பெயரை மார்பில் எழுதிக் கொள்ளுகை-
பிரபத்தி தன்னை நிரூபித்து -ரக்ஷகன் பண்ணும் ரக்ஷணத்துக்கு ஹேது வாக –
பிரார்த்தனா ரூபமான பிரபத்தியை -உண்மை தன்மை பார்த்தால்
ஹிதைஷியாய் -அறியாத திசையிலும் ரஷ்யை யாகிய பெற்ற பிதாவுக்கு சம்பந்தம் சொல்லி -ஸர்வதா காரணம் அன்றோ –
பிதா புத்ர சம்பந்தம் அறிந்த -உபநயனாதிகளை பண்ணி -நல்ல பிதா நல்ல புத்ரன் என்று நாட்டார் பழிக்கும் படி
உபய சம்பந்தம் கொத்தை விளையுமா போலே
விசேஷஞ்ஞர்கள் சிரிக்கும் படியும் உபய சம்பந்தத்துக்கு கொத்தையாகும் படியும் —

சங்கதி அருளிச் செய்கிறார்
1–கீழே யுக்தமான அதிகாரிகள் இடம் சாதனதயா காண்கையாலும்-/
2-உபாயாந்தரங்களுடன் ஸஹ படிதமாக போருகையாலும் –
3–ஆல் -மூன்றாம் வேற்றுமை லஷ்மீ தந்த்ர ஸ்லோகம் -காம காமேன ஐஸ்வர்யம் விரும்பும் ஐஸ்வர்யாத்தி -/
மேலே கைவல்யம் -பகவல் லாபத்வம் -பிரபத்தியால் –
மூன்று காரணங்களால் -உபாயத்வம் என்னும் படி உண்டே -உபாய பிரபதிக்கு தான் இம்மூன்றும் -அனு பாய பிரபத்தியே அருளிச் செயல்களிலே-
பக்திக்கு பரவசப்பட்டு-ஸூ யத்னம்– தூது விட்டது போன்றவை குறை இல்லை என்றால் போலே இத்தையும் உபாயம் என்பதுவும்
பக்தி பாரவஸ்யத்தால் என்று இதுவும் தோஷம் இல்லை என்று சொல்லக் கூடாது -அவத்யம் வரும் –என்கிறார் –
பிரதிகத்வ சாதனத்தவ பிரதிபத்திக்கு தர்ம புத்ராதிகளே உதாரணம் –
சாஸ்த்ர விருத்த ஆச்சாரத்தை பிரமாணிக்கர்களான தர்ம புத்ராதிகள் பண்ண மாட்டார்களே —
கர்ம ஞான பக்தி பிரபத்தி -அக்ரே பிராய நியாயத்தாலும் உபாயத்வம் என்னும் சங்கை வரும்
கர்ம ஞான பக்தி பிரபத்திகள் வேறே வேறே இடங்களில்
உபாய சாஹசர்யம் லிங்கம் உண்டே -கூடப் படிக்கும் -அடையாளம் என்றவாறே -சாஸ்த்ர விரோதம் வராதே –
கீதையில் முக்குணங்கள்- விபூதி யோகம்- தேவாசுர விபாகம் – புருஷோத்தம வித்யை போன்றவைகள் ஸஹ படிதங்கள் ஆனாலும்
அனைத்தும் மோக்ஷம் சாதனம் ஆக மாட்டாதே என்று பிரதி வாதம் வருமானால் -அது பொருந்தாது –
மூன்றாம் வேற்றுமை உருபு இருந்தால் சாதனம் என்று சொல்ல முடியாதே –
நல்ல ஞானத்தால் மோக்ஷம் -கங்கையில் பிராணன் விட்டால் மோக்ஷம் –
இரண்டும் சாதனமா -என்றால் -ஞானம் தான் சாதனம் –
ஞானம் உபாசனம் பக்தியால் மோக்ஷம் -கங்கையில் பிராணன் விட்டால் பக்தி பண்ணும் பிறவி கிடைக்கும் –
பிரதான சாதனத்துக்கு அங்கம் என்பதால் அது சாதனத்துக்கு சாதனம் –
ஸ்வஸ்மின் உபாயத்வ புத்தி ஸஹிஷ்ணுத்வம் -உபாய பிரபத்தி / தத் அஸஹிஷ்ணுத்வம் அனுபாய பிரபத்தி -இரண்டு வகை உண்டே /
பிரயோக பேதம்–1- -விதி-2- மந்த்ர -3-ஸ்வரூப-4- லக்ஷண -5-அதிகார-6- அங்க ஆறுமே-இவ்விரண்டுக்கும் மாறும்
பக்தியால் அடையலாம் வேறே ஒன்றால் இல்லை விதி / தமேவ சரணம் கச்ச இதுவும் விதி வாக்கியம் /
ஓம் என்று ஜீவனை சமர்ப்பிக்க -விதி / மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னை ஸ்வீ கரிப்பான் -விதி வாக்ய வாசி
மந்த்ரம் -திருமந்திரம் உபாய பிரபத்தி -த்வயம் அனு பாய பிரபதிக்கு
ஆத்ம சமர்ப்பணம் -ஸ்வரூபம் -அதுக்கு உபாய வரணம் -வரித்தல் –
லக்ஷணம் -அத்யாவசிய அதுக்கு -பிரார்த்தனை இதுக்கு
அதிகாரம் -ஸ்வார்த்த பல இச்சை -தன விருப்பம் படி / பரார்த்த பலம் இச்சா அதுக்கு
அங்கம் -நியாஸ பஞ்சாங்க -அனுகூல சங்கல்பம் இத்யாதிகள் -ஷடவிதா சரணாகதி -ந்யாஸம் உபாய பிரபத்தி ஐந்து அங்கங்கள் —
சரணாகதி அனு பாய பிரபத்தி -என்று கொள்ளுகிறார்கள் –300 வருஷங்களால் இப்படி –
தேசிகர் சம்ப்ரதாயம் பிரபத்தி / தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் சரணாகதி -அங்கங்கள் இல்லை
நியாசத்தில் ஆத்ம சமர்ப்பணம் அங்கி -ஐந்து அங்கங்கள் அனுகூலஸ்ய சங்கல்பம் –கார்ப்பண்யம் இத்யாதி ஐந்தும் –
இவை ஏற்பட்டால் தான் அங்கி சித்திக்கும் –இவற்றால் தான் அது உதிக்கும் –
சரணாகதிக்கு அங்கங்கள் இல்லை -நம்மை சமர்ப்பிக்க வேண்டாம் -அவனை வரித்தல் -அங்கங்கள் எதிர்பார்க்க மாட்டார் -உபாய வரணம் மட்டுமே
சொன்ன ஐந்தும் வேண்டாமா என்னில் உண்டு -அங்கத்வேன கிடையாது -ஆறையும்-நியாசயத்தையும் சேர்த்து ஆத்ம நிஷேப்ய ஷடவிதா சரணாகதி –
அவகாத ஸ்வேதம் போலே தன்னடையே ஏற்படும் -நெல்லு குத்த வியர்வை வருமா போலே இவ்வாறும் தானே ஏற்படும் –
சரணாகதி ஏற்பட்டால்-வரித்தவனுக்கு இவை ஆறும் தானே வரும் என்றவாறு –
சரணாகதிக்கு அங்கம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய விடுகையே அங்கம் –
இதுக்கும் ஒரு விதி விலக்கு -சவாசனமாக விடுவதே – நிவ்ருத்தி ரூபம் தானே
ஒன்றும் பண்ணுவதாக இல்லையே -குற்றம் இல்லை –
இப்படி விதி மந்த்ரம் ஸ்வரூபம் லக்ஷணம் அதிகாரம் அங்கம் இப்படி -உபாய அனு பாய பிரபதிக்கும் ஆறு -வாசிகள் -உண்டே —
கீழ் சொன்ன மூன்றும் -சாவகாசமாக இடம் கொடுக்கும் உபாய பிரபதிக்கு –அனுபாய பிரதிபதிக்கு பொருந்தாதே –
தனக்கு அடிமை பட்டது தான் –பாசுரம் -வனத்திடை ஏரி யாம் வண்ணம் –மாரி யார் பெய்விப்பார் மற்று
மழை வருவதற்கு சாதனம் இல்லை -மழை வந்தால் தங்குவதற்கு சாதனம்
பகவான் எப்பொழுதும் உண்டு -தான் அறியானேலும் -மனத்திடை வந்ததுக்கு சாதனம் இல்லை -மனத்தில் இருப்பவரை -வைப்பதால்
இருப்பதை இசைவதே கர்தவ்யம் -இருப்பவரை இருப்பதாக ஒத்துக் கொள்வதே வேண்டும் –
பிரபத்தி கிருபைக்கு சாதனம் இல்லை -கிருபை பொழிந்த பின்பு அனுபவிக்க சாதனம் -இத்தையே அதிகாரி வீசேஷணம் பிரபத்தி என்கிறோம் –
பசி அன்ன தாதா கொடுக்க வைக்க சாதனம் -அனுபவிக்க சாதனம் ஆகுமா போலே என்றவாறு –
பிரபத்தியால் கிருபையை கிளப்ப வில்லை – -கிருபையால் தானே சரணம் என்று நாக்கு பிரண்டு சொல்கிறோம் –
அவன் வந்து தான் சொல்ல வைக்கிறான்
சீதை போய் தானே விபீஷணன் வந்தான் -கிருபை முதலில் -சரணாகதி பின்பு அத்தை பெருமாள் கொண்டாடுகிறார் –
பிரபத்தி வியாஜ்யம் -பெருமாள் தானே உபாயம்
வியாஜ்யம் -பரம்பரையா சப்தம்- அஹேதுத்வ-குயவன் பானை -நூறு தடவை செய்து குடம் -அதுக்கு இது காரணம் -பரம்பராகாரணம்
குளத்தை வெட்டியது மழை பெய்ய காரணம் இல்லை -ஹேது இல்லை -வெட்டாமல் விட்ட அதி பிரசங்க நிவாரணம் வியாஜ்யம் –
மழை தங்க-வேண்டுமே –அடித்துக் கொண்டு போகாமல் ஆபத்தை போக்க —
அதி பிரசங்கம் -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக பிரபத்தி என்றவாறு –
அதி பிரசங்க நிவேதனம் -அதிகாரி விசேஷணம் என்றவாறு
ஆசைப்பட்டது ஸ்ரீ ரெங்கம் போக உபாயம் ஆகாதே -வண்டி தானே –
-உபாய க்ருஹ ரக்ஷகம் சரண -த்வயத்தில் உபாயம் என்கிறோமே -சரணாகதி விஷயத்திலும் அனு பாய பிரபத்தியிலும் ஸ்ருதம் ஆகையால்
த்வய நிஷ்டர்கள் -உபாய பிரபத்தி செய்தவர்கள் என்று சொல்ல குறை என்ன என்னில் –
ஆச்சார்ய தர்சநாத் -3-4-பாதம் / ப்ரஹ்ம வித்துக்கள் இடம் -ஜைமினி கர்மம் முக்கியம் –
வித்யை கர்மத்துக்கு அங்கம் -தத் ஸ்ருதியே -வித்யையால் கர்ம யோகம் —
பிரபத்திக்கு உபாயதயா-தர்ம புத்ராதிகள் அனுஷ்டானம் ஆல் மூன்றாம் வேற்றுமை பிரயோகம் என்று சொன்னால் வரும் அவத்யதையை
அவத்ய-இது தன்னை ஸ்வரூபத்தை பார்த்தால் -உபாயமாகப் பார்த்தால் -தான் அவத்யம் –
64-ஸூ ர்ணிகை இத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது என்று முடிக்கப் போகிறார் –
ஸ்வரூபேண பார்த்தால் அவத்யம் இல்லை என்றவாறு –
யுக்த பிரகாரத்தால் -சேதனன் -சரணாகதி பண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்பது – சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக –
சம்சாரம் நடத்த வேண்டுமே -ரஷிக்க வேணும் என்று பிரார்த்திப்பது உபாயம் ஆகாது -அதிகாரி விசேஷணமே —
பிரபத்யன் ஸ்வரூபம் அறிய வேண்டுமே -நம் பங்கு லவலேசமும் இல்லை -கைங்கர்யம் -ப்ராப்ய ருசி வளர –
உபாய பாவத்தில் கண் வைக்காமல் ப்ராப்யத்தில் ஊன்றி கைங்கர்யம் செய்வதே கர்தவ்யம் என்றாரே ஸ்ரீ பாஷ்யகாரர் –
பிதா புத்ரன் -காப்பவர் பிதா -யவ்கிகம் ரூடி இரண்டு அர்த்தங்கள் உண்டே —
உத்பாதகன் ரூடி அர்த்தம் -பெற்றவர் -அனைவருக்கும் பொது -ஹிதத்தையே பார்ப்பவர் /
காப்பாளர் -யோகார்த்தம் தன்னை ரஷிக்க படியால் பிதா -பாதீதி பிதா -/இவர் இரண்டுமே செய்பவர் -சஹ்ருதய ஒத்து இருந்து ரசம் அனுபவம் -/
ஸ்ருஷ்டித்து பேரேன் என்று புகுந்து / அகாரம் -மகாரம் -காரணத்வம் ரக்ஷகத்வம் -சேஷித்வம் -மூன்றுக்கும் கொத்தையாகுமே -/

——————————————————-

சூரணை -55-

இது தனக்கு ஸ்வரூபம்
தன்னை பொறாது
ஒழிகை –

ஆனால் இது தனக்கு ஸ்வரூபம்  ஏது என்ன அருளி செய்கிறார் –

நம்பாவதனை விட நம்பினவனை வேறுபடுத்தும் தன்மை தானே ஸ்வரூபம் -நம்பாதவன் அதிகாரி இல்லை –
நம்பினவனே அதிகாரி -நம்பிக்கை அதிகாரியுடைய விசேஷணம் -பண்பு -அடை மொழி -நம்பிக்கை தானே பிரபத்தி –
அத்யாவசிய அதிகாரி விசேஷணம் -ஸாத்ய சித்த உபாயங்கள் இரண்டுக்கும் இதுவே
முதல் விதி வாக்கியம் -அடுத்து நம்பிக்கை அதிகாரி விசேஷணம் -மூன்றாவது அனுஷ்டானம் -நான்காவது பலம் பார்த்தோமே
சாதனத்தவ ஆகாரம் அற்ற நிலை நின்ற ஆகாரம் -உண்மையான ஆகாரம் –அருளிச் செய்கிறார் இத்தால் –
இயம்-கேவல ஸ்ரீ யபதியே உபாயம்–ஸ்வ ஹேதுதவ புத்தியை தவிர்க்கும் —
கிம் புன சஹகாரின -தானே இல்லை என்றால் கர்மா ஞான பக்தி யாதிகளை பொறுக்குமோ –
சரண வரண ரூபையான இப்பிரபதிக்கு -அசாதாரண ஸ்வரூபம் -அதிகாரி விசேஷணம் ஆவதே நிலை நின்ற வேஷம் –
தன்னை பல சாதனமான உபாயம் என்ன-
ஸ்ரீ பரத ஆழ்வான் ராஜன் என்றதும் துடித்தால் போலே -ஸூ வியாவ்ருத்தி-அசாதாரண தர்மம் குலையும் படி பொறாது ஒழிகை –
பர ப்ரேரிதமாய்–வரண பூர்வ பாவியுமாய்-உபாயம் என்றாலே பொறுக்காதே -உபேயம் என்றாலும் பொறுக்காதே -இனிமை ஸ்ரீ லஷ்மீத்வம் இல்லையே –
உத்தர பாவியும் இல்லை –வரண அனந்தரை பாவியுமாயும் பொறாது -நான்கையும் சொல்வதால் தன்னைப் பொறாது என்கிறார் —
உபாயம் பொறாது என்பதே பிரகரணத்துக்கு சேரும் -பரகதமான -ஸூ கதமாக்கப் பாராதே -ஆஸ்ரய விஷய தூஷகம் ஆகுமே –
ஜீவனை அழித்து தன்னையும் அழித்துக் கொள்ளும் -ஸ்வ தந்த்ரன் இடம் பிரபத்தி வாழாதே –
பெருமாள் பண்ணிய சரணாகதி கார்யகரம் ஆக வில்லையே —
ஆனால் பரகதமான போது ஆஸ்ரய விஷய உத்தேஜகரம் ஆகுமே -பார தந்தர்ய சேஷத்வம் பிரகாசிக்கும் –
பக்தி உபாயம் -சாத்தனாந்தரம் -பிரபத்தி உபாயம்–உபாய பிரபத்தி -பகவான் உபாயம் -அனுபாய பிரபத்தி -என்றவாறு –

இது தனக்கு ஸ்வரூபம் -என்றது -இப் பிரபத்தி தனக்கு அசாதாராண காரம் என்றபடி –
தன்னை பொறாது ஒழிகையாவது-உபாய வரண ஆத்மகமான தன்னை -உபாயம் -என்ன-சஹியாத படியாய் இருக்கை –
அதாவது –
ஆபாத ப்ரதீதியில் ஒழிய உள்ளபடி நிரூபித்தால் -ஸ்வ ஸ்மின் நுபாயத்வ பிரதி பத்திக்கு
யோக்ய மாகமாட்டாத படி இருக்கை -என்றபடி –
அன்றிக்கே –
தன்னை பொறாது ஒழிகை -என்கிற இடத்தில் -உபாயத்வேன ப்ரதீதிமான தன்னை
பொறாது ஒழிகை என்று அநத்யா ஹாரேன யோஜிக்கவுமாம் -இப்படி சொன்னாலும்
ஸ்வ ஸ்மின் நுபாயத்வ பிரதிபதி அசஹத்வமே பொருளாம் இறே –

த்வம் ஏவ உபாய பூதோ மே பவ -நீயே என்ற எவகாரம் -நீ மட்டுமே -உபாயாந்தரங்கள் ஸ்பர்சம் இல்லாத அடியேனுக்கு -நீ மட்டுமே –
தான் வேண்டாம் நீயே வேண்டும் என்றபடி -நின் அருளே புரிந்து இருந்தேன் -நாராயணனே நமக்கே / நாகணை மீசை நம்பிரானே சரண் –
நான் பற்றும் பற்றுதலும் உபாயம் ஆகாதே -இதுவே ஏவம் சப்தத்துக்கு உள்ளுறைப் பொருள் –மற்றவை உபாயம் ஆகாது என்ற உறுதி -/
சித்த உபாயம் என்பதால் பிரதான்ய அர்த்தமே மற்றவை உபாயமாகாது என்பதே பிரதான்யம் –
காம்பற தலை சிறைத்து-/ மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸ்வீ காரத்தில் உபாய பிரதிபத்தியை தவிர்க்கிறது –
தன்னை பெறாதது இதன் ஸ்வரூபம் –
ஆபாத ப்ரதீதி ஸ்ரவணத்துக்கு அனந்தரம் விசாரத்துக்கு பூர்வம் -மேம்போக்காக பார்க்கும் பொழுது என்றபடி –
உபாயம் என்பதற்கு தகுதி இல்லாமல் இருக்குமே –
உபாயத்வ அஸஹிஷ்ணுத்வம் -அனுபாய பிரபத்தி —
முத்து சிப்பியை வெள்ளி என்னுமா போலே –பிராந்திக்கு விஷயம் மருந்து சொல்வதே -நிரூபணம் ஆராய்ந்து பார்க்காத படியால் —
அசாதாரண ஆகாரம் கொண்டே இத்தை விலக்கி அத்தை உண்மையாக அறிய வேண்டும் –
ஸ்வரூபம் இன்றியமையாத ஆகாரம் -ஸ்வம் ஆஸ்ரயம் மற்றவற்றில் இருந்து விலக்கி நன்கு – நிரூபித்து –
இது தன்னை உபாயம் என்ன பொறுக்காது என்பதே –
உபாய வரணமாக இருப்பதால் உபாயம் ஆகாதே -தத் ஏக ரஷ்யத்வ அத்யாவசாயமாக இருப்பதாய் –உபாயம் என்ன ஸஹிப்பது உபாய பிரபத்தி –
உபாயம் என்று நினைத்தால் -ஸ்வா தந்தர்ய கார்யம் -ஸாத்ய உபாயமாகும் -பல நீ காட்டி படுப்பாயோ -நெறி காட்டி நீக்குவாயோ -/
ஏவ சப்தம் உபாயத்வம் நிஷேதம் –
தான் செய்யும் உபாய வரணமும் உபாயம் இல்லை என்று சொல்லும் –
அந்நிய தமரில் அந்நிய தமர் தானே நான் என்பதும் -சித்த உபயாந்தர பிரதிக்ஷேபங்கள் —
சித்த உபாய பிரவ்ருத்திக்கு பிரதிபந்தகம் ஸூய பிரவ்ருத்தி–விளக்கு எரிய மூடினால்-தெரியாது -இது இல்லை என்றால் எரியும் –
இதன் பாவம் அபாவம் இருந்து பாதிக்கப்பட்டாலும் இதனால் உருவாகாதே -இது காரணம் இல்லை –
இதை பற்றி கவலைப் படாமல் இருக்க முடியாது –
பிரதி பந்தனம் இல்லாமை வேண்டும் -அது காரணம் ஆக மாட்டாதே -அதே போலே உபாயாந்தர சம்பந்தம் —
இன்மை இல்லாமை பகவத் ரக்ஷணத்துக்கு ஹேதுவாகாது –
உபாயமாகாது நாம் பற்றும் பற்றுதலும் –இதனால் பாதிக்கப்படுவது உண்மை இது காரணம் ஆகாது —
பர ந்யாஸ விசிஷ்ட வரண ரூபமான ஸூ ப்ரவ்ருத்தி ரூப பிரதிபந்தகம் இல்லாமை –
பல ப்ரதாதா மட்டும் உபாயம் இல்லை பகவான் என்று பிரித்து சொல்லவும் முடியாது –
பிரபத்தி செய்தவனுக்கு மோக்ஷம் -அதிகாரி விசேஷணம் பசி போலே -என்னில் -பலம் -விருப்பம் -உபாயம் மூன்றும் அதிகாரி விசேஷணம் –
ஆற்றை கடக்க ஆசை படகு கடந்தது இம் மூன்றும் போலே /பிரபத்தி இம் மூன்றுக்குள் இல்லையே -பலம் இல்லையே-மோக்ஷம் தான் பலம் – –
ஆசையும் இல்லை -நிமித்தமும் இல்லை -இப்படி ஆஷேபம் -விதி உடன் பிரபதிக்கு அன்வயமே இல்லை -கோபிஷ்டர் கோபம் உள்ளவர் –
பிரபதிக்கு விதி வாக்யத்துடன் அன்வயம் உள்ளதே -மாம் ஏகம் சரணம் வ்ரஜ விதியால் செய்தது அன்றோ –
மூன்றாவது -உபாயமாக வேறு ஓன்று விதிக்கப் படவில்லையே -இப்படி மூன்று காரணங்களால் ஆஷேபம் பூர்வ பஷி வாதம் –
அஹம் த்வா -உன்னை என்றது முதலில் சொன்ன பற்றின உன்னை என்றவரையா -அனைவரையுமா-/
அதிகாரிக்கு சித்தத்வம் முதல் வாக்கியத்தில் சொன்ன சர்வ தர்மான் பரித்யஜ்ய –
மாம் ஏகம் வ்ரஜ -என்று பண்ணினவனுக்கு
அஷ்ட வர்ஷம் உபநயனம் விதித்து ஆனவன் அத்யயனம் பண்ண வேண்டும் -அதிகாரி முதலில் சொன்ன விதி வாக்கியம் –
உபநயனம் அத்யயனம் பண்ண உபாயம் ஆகாதே -அதிகாரி விசேஷணம் தானே /
உபாயம் -அங்கம்-பலம் மூன்றும் – சுவர்க்கம் பலம் உபாயம் ஜ்யோதிஷடஹோமம் -அங்கம் -சக்தியால் அங்கி சித்திக்கும்
மோக்ஷம் பலம் -பலம் பகவான் -அங்கம் இதர உபயா த்யாஜ்யம் -பண்ணினவன் தான் தகுதி அடைகிறான் -அதனால் அதிகாரி விசேஷணம் சம்பாவிதம் –
சாஸ்த்ரா வித்தியாலும் ஸூ வகதமாகவும் அதிகாரி விசேஷணம் -பசித்தால் உண்கிறான் விதிக்க வேண்டாமே
உபாயமாக பற்று -விதி உண்டு -நீ உபாயத்தை அனுஷ்ட்டிப்பாய் சொல்ல வில்லை -சித்தம் அன்றோ அவன் -என்னை உபாயமாக ஸ்வீ கரிப்பாய் –
உபாயமாக புத்தி பண்ணுவாய் -பற்றினவனை -அதிகாரி விசேஷணம் –
சோகிக்காதே -உபாயம் நான் -அதனாலும் -வேறே யார் இடமும் பொறுப்பு இல்லை -உன்னிடமும் பொறுப்பு இல்லை –
அதிகாரம் உடையவனாய் நீ இருக்கிறாய் –
இந்த காரணங்களால் சோகிக்க வேண்டாமே –
வ்ரஜ -சொல்லி -த்வா -அனுவாதம் பின் வாக்கியத்தில் -மோக்ஷயிஷ்யாமி பிரத்யயம் உன்னை எதிர் பாராமல் நானே மோக்ஷம் கொடுத்து –
நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் -உபாயத்தை அபேக்ஷியாத சித்த உபாயம் அன்றோ -அஹம் -நெஞ்சை நிமித்து அருளுகிறார் –
அவாப்த ஸமஸ்த காமன் -ஸ்வாமித்வம் -மேலும் ஒரு சங்கை -பலத்தை அனுபவிக்கும் ஜீவன் உபாயம் செய்ய வேண்டாமோ என்னில் –
பலத்தை அடைபவனும் நானே -பிராப்தாவும் பிராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே -/ பலத்துக்கு சத்ருசமாக ஒன்றும் நம் கையில் இல்லை
மகத்தான பலத்துக்கு மகத்தான உபாயம் வேண்டுமே -அறியாதது அறிவித்த சித்த உபாயம் -/
பிரபத்தி பண்ணினவன் இடத்தில் உபாயத்தை அபேஷியாமல் ரஷிப்பார்-/
வெறிதே அருள் செய்வார் -அங்கம் -பிரபத்தி என்று சொல்ல முடியாது -கார்ய அனுகூல சக்தி உத்போதகம் -அங்கம் -/ நிவ்ருத்தி ரூபம் தானே இது –
அங்கி -சர்வ சக்தன் சர்வஞ்ஞன் இத்தை எதிர்பார்த்து இருந்தான் ஆகில் அவனுக்கு கொத்தை வருமே –
பக்திக்கும் -உபாயம் இல்லாமல் அதிகாரி விசேஷணம் என்று சொல்லலாமோ என்னில் -அங்கு மாம் ஏகம்-ஒருத்தன் ஏவகாரம்
பக்தி தவிர மற்று ஒன்றினால் அடைய முடியாதே ஏவ காரம் பக்தி தலையிலே வைத்து –அடைய காண அறிய பக்தியே காரணம்
-பக்தியாலேயே மூன்றாம் வேற்றுமை தான் அடையப்படுகிறேன் அடைவிக்கிறேன் இல்லையே –ப்ராப்யமாகவே மட்டுமே – பிராபகமாக இல்லையே –
ப்ராப்யம் பிராப்பகம் அதிகாரி விசேஷணம் மூன்றையும் நாராயணனே நமக்கே பறை தருவான் -வேதம் அனைத்துக்கும் வித்து அன்றோ –
ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கிறாள் –
கொடுக்கிற அவன் இடத்திலும் பெரும் நம் இடத்திலும் ஏவ காரம் சேர்த்து அருளியது அருளிச் செயல்களிலே இந்த ஒரே பாசுரம் –

பக்தி தவிர சேதனனால் செய்யப்படும் உபாயம் இல்லை -ஜீவனாலே சாத்யமாய் –
பிரபத்தி கூட சேதனன் செய்வதே -இது பகவத் அனுக்ரஹம் அடியாக –
கிரியாகத உபாய பாவ விலக்ஷணம் -பகவத் உபாயமாவதற்கு நிஷேத வாக்கியம் இல்லை –
விஷ்ணுவை உபாயமாக கொண்டு ப்ரயோஜனாந்தரம் பெற்றால் அதமன்
வேறே உபாயம் கொண்டு விஷ்ணுவை பெற்றால் மத்யமன்
அவனையே உபாயமாக கொண்டு அவனைப் பெற்றவன் உத்தமன் -மிகச் சிறந்தவன் –
பக்தி பண்ண பிராட்டி புருஷகாரம் ஆவதற்கு நிர்பந்தம் இல்லை -பிரபதிக்கு விதித்து இருப்பதால் -இது உபாயம்
பக்தி போலே – ஆக மாட்டாது
பரத்வம் -அனுகாம்பா உள்ளவன் -அனுக்ரஹம் உள்ளவன் -மூன்றும் -மேன்மையிலும் இரக்கத்திலும் அருளே முக்கியம்
யதா கர்மத்துக்கு தக்க பலப்ரதன் -உபேக்ஷகர் உதாசீனம் என்ற நினைவு -அனுக்ரஹத்தை அளிக்கும் -கொத்தையாகும் –
தப்பு பண்ணும் பொழுது உதாசீனம் -நாம் பண்ணுவது முக்கியம் இல்லை -அவனை இசைவதே முக்கியம் –
பிரார்த்தனையும் உபாயம் ஆகாதே -தேவரீர் உபாயமாக ரஷித்து அருள வேண்டும் என்பதே பிரார்த்தனை – -அபேக்ஷை எதிர்பார்க்கிறார்
பர நியாசம் -ரஷா பரத்தை அவன் திருவடிகளில் வைப்பது -உபாயம் என்றால் ரக்ஷணம் பொறுப்பு இங்கே நிற்குமே –
பர நியாசம் சொல்லும் அனுபாய ப்ரபத்தியே –
திடமாக இல்லாமல் யாக யஜ்ஜாதிகளால் அடைய முடியாதே -நாம் செய்யும் பிரவிருத்திகள் ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் –
க்ஷணம் காலம் வர்த்தித்தவம் -சங்கைக்கு இடம் உண்டே –
உபாயமாக பிரபத்தி யாக்கினால் ஒழுகல் ஓடம் போலே ஆகுமே -மத ஸ்வீ கார ஸ்வரூபம் -பிரபத்தியின் தலையில் உபாயத்தை ஏறிட்டால்
இன்னம் மனம் அடக்கம் இல்லாமல் பார தந்த்ர காஷடை – ஸ்வ தந்த்ர லேசமும் இல்லாமல் இருப்பவன் ஆவான் –
பிரபத்தி ஸாத்ய சித்த உபாய கோஷ்டிகளில் சேராதே -ஒன்றை விடும் ஒன்றை பிடிக்கும்– அவைகளாக இது இருக்காதே நடுவில் இருந்து –
சித்த உபாய வர்ணம் ஒன்றே இதுக்கு ஸ்வரூபம் —ஆழ்வார்கள் சரணாகதி செய்தது அதிகாரி விசேஷணம் சித்தம் –
பலத்தை அனுபவிக்க-அதிகாரம் சம்பவிக்க – 3–4- துல்யந் து தர்சநாத் –நித்ய நைமித்திக கர்மங்களை அனுஷ்ட்டித்து
காம்ய கர்மங்களை விட்டு -ப்ரஹ்ம வித்யைக்கு குந்தகமானவற்றை விட வேண்டுமே –
பிரபத்தியால் முக்தி என்பதுவும் -சாதனம் ஆகாது -பக்தியால் -விதி சாஸ்த்ர வாக்கியம் -இதனாலேயே பெறுகிறான் –
விதிக்கு உள்ள சக்தி போதகத்வம் போகுமே
அனுபாயம் என்ற புத்தி பண்ணி பகவானே சாதனம் -என்று சொன்னவாறே —
மூ வகைப்பட்ட அதிகாரிகள் –பிரபத்தி –உத்பத்தி வாக்கியம் -உபாயத்வம் நிஷேதம் –
அபாயமான உபாயத்தை விட்டு நம -எதுவும் என்னது இல்லை –
மாம் ஏவ என்று விசுவசித்து இருப்பவனே என்னை அடைகிறான் –
அப்புறம் அதிகார விபாக வாக்கியம் மூவகை அதிகாரிகளை சொல்லிய சுருதி வாக்கியம் –

————————————–

சூரணை -56-

அங்கம் தன்னை
ஒழிந்தவற்றை
பொறாது ஒழிகை –
சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –

யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிற நியாயம் இதுக்கும் வாராதோ என்ன –
அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிகவே அந்த நியாயம் இங்கு வாராது என்று பார்த்து  –
இது தன்னை அருளி செய்கிறார் –
பரித்யஜ்ய வ்ரஜ விட்டே பற்று -என்ற அங்கம் உண்டே -என்ன -ஸ்வரூபம் தன்னையே பொறாது -இது தன்னையே பொறாது –
தியாகமே ஸ்வரூபம் –

சித்த உபாய ஸ்வீ காரத்தைப் பற்ற -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸ்லோகத்தில் விதேயமான –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -விட்டே பற்று -விட்டு இருந்தாயாகில் பற்று என்றது இல்லை —
அதிகாரம் பங்கம் வராதபடி -வேறே ஒன்றிலும் அன்வயம் இருக்கக் கூடாதே -அவன் உபாயமாகும் பொழுது –
ஸ்வீ கார பூர்வ பாகம் மாத்ரத்தையே ஹேது வாக அங்கம் என்னைக் கூடாதே –
அங்கி உபாயமாக இருந்தால் தானே இத்தை அங்கம் என்னலாம்-அங்கியாய் தோற்றுகிறது உபாயமாகில் இ ரே இது அங்கம் –
அவனோ அங்கம் நிரபேஷனாய் சித்தம்
அன்றிக்கே
பிரபத்திக்கு அங்கமாக இருக்குமிது அங்கியாகிய பிரபத்தி தவிர மற்றவற்றை பொறாது
அன்றிக்கே
பிரவ்ருத்தி ரூபம் என்னவும் பொறாது -அங்கத்துவம் குலையும் என்பதால் இத்தை உபாயம் என்னவும் கூடாது
அனுவாதம் இல்லை -எல்லா தர்மங்களையும் விட்டு இருந்தாய் ஆனால் என்னைப் பற்று-என்பதே இது அனுவாதம் இல்லை

தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை யாவது -ஸ்வீகார ரூபமான தன்னை
ஒழிந்த சேதன பிரவ்ருத்திகள் ஒன்றையும் சஹியாத படி இருக்கை –
சாதன ரூப சகல பிரவ்ருத்திகளின் உடையவும் சவாசன த்யாகமிறே இதுக்கு அங்கம் –
யத் யத் சாங்கம் -என்கிற இடத்தில் -பிரவ்ருத்தி  ரூப அங்க சஹிதமனவற்றை  இறே
சாதனமாக சொல்லுகிறது –
அப்படி இன்றிக்கே –
இதனுடைய அங்கம் நிவ்ருத்தி ரூபம் ஆகையாலே -இது தானே இதனுடைய
அனுபாயத்வ சூசகம் என்று கருத்து-

—————————————————————–

சூரணை -57-

உபாயம் தன்னை பொறுக்கும்-

இதனுடைய அனுபாயத்வத்தை  த்ருடீகரிக்கைக்காக -சித்த சாத்திய உபாயங்களின்
படிகளை சொல்லி -அவை இரண்டையும் பற்ற -இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தியை
அருளி செய்கிறார் -மூன்று சூரணைகளால்–57/58/59

சித்த உபாயமான சேதனன் செயல் அறுதியாலே உபாயம் என்னப் பொறுப்பார் -கருமுகை மாலையை சும்மாடு என்னுமா போலே
பாவனை உடனே மாறனும் -திருவடியை மார்பிலே தாங்கி குங்குமப்பூ சாத்தி சந்தனம் பூசி கைங்கர்யம் பண்ண வேண்டி இருக்க
காட்டுக்கு மேட்டுக்கும் அலைய வைப்பதே
சித்த உபாயம் என்று மட்டும் சொல்ல பொருத்துக்கும் -அங்கி அங்கம் என்னப் பொறுக்க மாட்டான்
அங்கி என்றால்; சஹாயாந்தர அபேக்ஷை உண்டாகும் -அங்கி என்றால் ஸ்வா தந்தர்யம் குலையும் -நிராங்குச ஸ்வ தந்த்ரர் –
ஆஸ்ரித பாரதந்தர்யம் தானே ஸ்வா தந்த்ரயத்தால் ஏறிட்டுக் கொள்ளலாம் –

உபாயம் தன்னை பொறுக்கும் -என்றது –
சித்த உபாயமான சர்வேஸ்வரன் -இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகாரங்கள் இரண்டுக்கும்
ஸ்வயமேவ நிர்வாகன் ஆகையால் -தன்னை உபாயம் என்றால் -அதுக்கு தகுதியாய் இருக்கும் -என்றபடி –
உபாய உபேயத்வ ததிஹா தவ தத்வம்  நது குநௌ-என்று
உபேயத்வோபாதி வஸ்துவுக்கு ஸ்வரூபமாய் இறே உபாயத்வமும் இருப்பது –
ஏச வேதவிதோ விப்ரா யோசாத் யதமவிதோ ஜனா
தே வதந்தி மகாத்மானாம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் –
சரண்யம் சரணஞ்ச த்வமாகூர்  திவ்யா மகார்ஷய
அம்ருதம் சாதனம் சாத்யம் சம்பச்யந்தி மநீஷிணா-என்னக் கடவது இறே
தன்னை பொறுக்கும் -என்கிற இவ்வளவே சொல்லி விடுகையாலே –
தன்னை ஒழிந்தவற்றை பொறாமை அர்த்தாத் சித்தம் — தன்னைப் பொறாது என்றதும் —
தன்னை ஒழிந்த வற்றையும் பொறாது என்று முன்பே பார்த்தோமே
இந்த சித்த உபாயம் சஹாயாந்தர  சம்சர்க்க அசஹமாய் இறே இருப்பது –
இவ் உபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்தமா இருப்பதொன்றை சஹியாமை யாலே இறே
அனுகூல்ய சங்கல்பாதிகளுக்கு உபாயங்கத்வம் அன்றிக்கே-அவகாத சுவேதம் போலே
சம்பாவித ஸ்வபாவத்வம் -உண்டாகிறது -என்ற இவ் அர்த்தத்தை
பரந்த படியிலே இவர் தாமே அருளி செய்தார் இறே

————————————————-

சூரணை-58-

உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –
இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் –
அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –

சாத்தியமான கர்மாதிகள் அங்கம் அங்கி பொறுக்கும் -பக்தி அங்கி ஞானம் கர்மம் அங்கங்கள் / ஞானம் அங்கி கர்மா அங்கம் -என்னலாமே-
ஆத்மஞானத்தை அங்கமாக கொண்டால் தானே கர்ம யோகத்துக்கு வருவான் –
ஞானம் வளர பாபங்கள் போக்க அனுஷ்டானம் வேண்டுமே கர்மம் அங்கமாக இருக்குமே –
பக்தி கர்மா ஞான சாத்தியம் ஆகையால் தத் உபாயத்தையும் அங்கமாக கொள்ளும் —
பக்தி அங்கம் -ப்ரீத்தி பூர்வகமாக தானே ஞான கர்மா வரும் பக்தியை அங்கம்
இப்படி அன்யோன்ய அங்கி அங்க பாவங்கள் உண்டே –

சித்தோ உபாய தரமான சாத்திய உபாயம் -ஸ்வ பாரதந்த்ர்யா ஞான ரஹீதராய் –
ஸ்வ யத்ன பரராய் இருப்பார்க்கு -மோஷ சாதன தயா -சாஸ்திர விகிதம் ஆகையாலே –
ஸ்வ ஸ்மின் உபாயத்வ பிரதி பத்தி சஹமூகமாய் ச்வோத் பத்யாதிகளில்
பிரவ்ருத்தி ரூப அங்க சாபேஷம் ஆகையாலே ஸ்வ வ்யதிரிதக்தங்களையும்
சஹிக்குமதாய் இருக்கும் என்ற படி –
பக்த்யா லப்யஸ் தவ நன்யயா -உபாயபரிகர்மித  ச்வாந்தச்ய ஐ காந்தி காத்யந்திக 
பக்தி யோகைக லப்யா-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் /சித்தி த்ரயம் ஆளவந்தார்
ஜன்மாந்தர சகஸ்ரேஷூ தபோ த்யான சமாதிபி-நராணாம் ஷீன பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே –
என்னக் கடவது இறே-

—————————————————-

சூரணை -59-

இது இரண்டையும் பொறாது-

நிவ்ருத்தி ரூபமாய் இருக்க அங்கம் என்றால் பிரவ்ருத்தம் ஆகுமே அதனால் பொறுக்காது –
இது நிரபேஷ சித்தம் -சாதிக்க வேறே ஒன்றும் வேண்டாமே –
முன்னால் இதர த்யாஜ்யம் இருக்கிறதே என்னில் -அவை ஹேது வாகாதே –
ஆநுக்கூலஸ்யாதிகளும் அங்கங்கள் இல்லை சம்பாவிதங்கள் தானே இவை -உபாயமாக விதித்ததும் ஞான பாக அனுகுணமாக
சித்த உபாயத்தை பற்ற வழி படிக்கட்டு போலே
-சரணாகதி -பண்ணி – ருசி வளர்ந்தவனுக்கு பிராப்தி சித்தம் –பிரியதமனாக விஷயாந்தர வெறுப்புக்கள் வேண்டுமே –

இது இரண்டையும் பொறாது -என்றது
சித்தோ உபாய வர்ண ரூபமாய் –
நிவ்ருத்தி சாத்திய ரூபமாய் –
அதிகாரி விசேஷணமாய்-
ஸ்வரூப அனதிரேகையாய் -(ஸ்வரூபத்தை விட மாறுபடாமல் -பசித்தவன் என்பது -பசி உடன் விசிஷ்டம் நேற்று இன்று இல்லை –
அதிகாரி விசேஷணம் -ஸ்வரூபத்தில் இருந்து விரோதம் இல்லையே -)
இருக்கிற இந்த பிரபத்தி
உபய அசஹமாய் இருக்கும் என்ற படி –
ஆகையால் சித்த சாத்திய உபாய வ்யாவிருத்த வேஷையாய்
இருக்கிற இந்த பிரபத்திக்கு
உபாயத்வம் அசம்பாவிதம் என்றது ஆய்த்து-

அன்றிக்கே –
இது தனக்கு ஸ்வரூபம்-இத்யாதிக்கு -ஆனால் சாங்கமாக சாஸ்திர விஹிதமான
இந்த பிரபத்திக்கு ஸ்வரூபம் எது -இதுக்கு சொல்லுகிற அங்கம் தான் என்ன -அவை
இரண்டையும் அடைவே அருளி செய்கிறார் -இது தனக்கு -இத்யாதி வாக்யத்தாலே –
ஆனால் தன்னை பொறுப்பது எது என்ன அருளி செய்கிறார்-உபாயம் -இத்யாதி –
தன்னையும் தன்னை ஒழிந்தவற்றையும் பொறுக்கும் அது எது என்ன
அருளி செய்கிறார் -உபாயாந்தரம் -இத்யாதி-
இந்த சித்த சாத்திய உபாயங்கள்  இரண்டிலும் -இப் பிரபத்திக்கு உண்டான வ்யாவ்ருத்தியை
தர்சிப்பியா நின்று கொண்டு உக்தார்த்தை நிகமிக்கிறார் -இது இரண்டையும் -இத்யாதி –
என்று இங்கனே சங்கதி ஆகவுமாம்-
அதவா –
இதன் அனுபாயத்தை சாதிக்கைக்காக இதனுடைய ஸ்வரூப அங்கங்கள் இரண்டையும்
தாமே அருளி செய்கிறார் -இது தனக்கு-இத்யாதி வாக்ய த்வயத்தாலே-
இதன் அனுபாயத்வத்தை ஸ்புடம் ஆக்குகைக்காக சித்த சாத்திய உபாயங்களின் படிகளை
தர்சிப்போம் என்று திரு உள்ளம் பற்றி -பிரதமம் சித்த உபாயத்தின் படியை அருளி
செய்கிறார்-உபாயம்-இத்யாதியால் –
அநந்தரம்-சாத்திய உபாயத்தின் படியை அருளி செய்கிறார் -உபாயாந்தரம் -இத்யாதியால்
இவை இரண்டிலும் பிரபதிக்கு உண்டான வ்யாவ்ருத்தியை தர்சிப்பிக்கிறார் -இது இரண்டையும் -இத்யாதியால்-
என்று இங்கனே சங்கதி ஆகவுமாம்-
இவ் உபய சங்கதிக்கும் வாக்யங்களுக்கும் அர்த்தம் பூர்வவத் –

உபாயம் தன்னைப் பொறுக்கும் -பக்தியும் பகவானும் -உபாயம் என்றால் பொறுக்கும் -இங்கு சித்த உபாயமான பகவானை குறிக்கும் –
சித்தத்வம் -சேதனனுடைய செயலால் உருவாக்க வேண்டியது இல்லையே -பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் –
சர்வ சேஷி சர்வ நியாந்தா ஸ்வயமேவ நிர்வாஹகன்
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் –ஏவகாரம்-சேர்த்து
ஸ்வயம் பிராட்டி – ஏவ காரம் வரணாதிகளையும் நிவர்த்திக்கிறது / புருஷ சாபேக்ஷையுமாய் புருஷகார சாபேக்ஷையுமாய் இருக்கும் என்றாரே முன்
பசி எதிர்பார்த்து -காசு எதிர்பார்க்காமல் ததீயாராதனம் -அதிகாரி எதிர்பார்ப்பது போலே –
உத்கரிஷ்யாம்–நாமே தூக்கி விடுகிறோம் –பிராட்டி பார்த்து பகவான் வாக்கியம் -இந்த வார்த்தை கிளப்பி விடத்தான் பிராட்டி கர்தவ்யம் –
நாம் -என்றால் -அடியேனுக்கு ஸ்வா தந்தர்யம் வந்து பாரதந்தர்யம் போகுமே -நாமே சொல்லுவான் என்று தான் எதிர்பார்க்கிறாள் –
மாம் -திரு மார்பைத் தொட்டு அருளிச் செய்கிறான் -புருஷன் புருஷார்த்தை விரும்பி புருஷகாரம் ஜீவனை தூண்டி புருஷோத்தமன் -தானே அருளுகிறார் –
உபாயம் என்றால் அதுக்கு தகுதியாக இருக்கும்-என்றது -உபாய சப்த புத்திகளுக்கு -சப்தத்துக்கும் புத்திக்கும் –
பக்தி உபாய சப்தம் பொருந்தாது -புத்தி பொருந்தும் -/ பக்திக்கு உபாயம் பெயர் இல்லையே
அவனை மந்த்ரம் என்றும் பெயர் -சப்த சக்தியால் -நினைப்பவனை ரஷிப்பவன்-மந்திரத்தை மந்திரத்தால் மறவாமல் -வாழ –
பிரபதிக்கு உபாய – சப்தமும் பொருந்தாது புத்தியும் பொருந்தாது
பகவான் உபாய சப்த புத்திகளுக்கும் -அர்த்தங்களும் என்றவாறு – தகுதியாய் –
உபாயம் உபேயம் தத்துவமே நீ என்கிறார் பட்டர் கதியாகவும் கம்யமாகவும் அவனே —
ஷட் விதா சரணாகதி -ஷட் ஸ்வபாவம்/ கீழே நியாசத்துக்கு ஐந்து அங்கங்கள் /
ஆனுகூலஸ்ய சங்கல்பம் –கார்ப்பண்யம் -ஆறு விதம் சரணாகதி -எல்லாம் முதல் வேற்றுமையில் இங்கு
சம்பாவித ஸ்வ பாவங்கள் இவை -விதா சப்தம் ஸ்வபாவங்கள் இருக்கும் என்றவாறே –
நெல் குத்த வியர்வை வருமா போலே –விதிக்காமல் தானே ஏற்படும் —
ஆறு வகைகளாய் இருக்கும் ஷட் விதா என்று –ஆகிஞ்சன்யம் முன்னிட்டு நீயே உபாயமாக வேண்டும் -பிராத்தனா மதி சரணாகதி
ஆறில் ஓன்று தானே ஆத்ம நிஷேப்பியம் – சமர்ப்பணம் – சரணாகதி என்றால் -ந்யாஸம் பஞ்ச அங்கம் -அது உபாய பிரபத்தி /
இது அனுபாய பிரபத்தி என்றவாறு
இது ஒதுங்கின ஆஸ்ரயம் ஜீவனை பார்த்தால் இந்த ஆறு ஸ்வ பாவங்கள் உடன் கூடி அல்லது இருக்காதே –
விதா பிரகாரம் -என்றவாறு சாமானாதி கரண்யத்தில் படிக்கப்பட்டு உள்ளதே –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -23-40–சாதனஸ்ய கௌரவம் -ஆறு — உபாய பிரகரணம்-திருமால் திருவடி சேர்வழி நன்மை -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்–

December 1, 2017

உபாய ஸ்வீ கார வைபவம் -பிரகரணம்-சூர்ணிகை -23-114/115-244-
சாதனஸ்ய கௌரவம் -ஆறு-உபாய பிரகரணம் -திருமால் திருவடி சேர் வழி நன்மை / அவ் வழி ஒழிந்தன அனைத்தின் புன்மை –

—————————-

சூரணை -23-

பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-

கீழ் உக்தமான உபாயத்தின் உடைய ஸ்வீகார ரூபையாய்-பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் -என்று
ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதையான பிரபத்தியினுடைய படியை -விஸ்தரேண அருளி செய்கிறது மேல் –

சித்த உபாயம் ஸ்வீகாரம் -சரண வரணம் -கீழே உபாய வைபவம் பார்த்தோம் —
மேல் சரணாகதி -உபாயமாக வரிப்பது பற்றி –
அதிகாரி விசேஷம் -சரணாகதி -/

கீழே ஸ்ரீ மன் நாராயண -சொல்லி மேல்- சரணம் பிரபத்யே – 114 வரை -அர்ஜுனனுக்கு இவளுக்காக பிரபத்தி உபதேசம் –
ப்ராசங்கிக்கமாக கீழே சொல்லி -தேசாதி நியதி கண்டிலோம் -/ விஷய நியதி ஒன்றே உண்டு -எதை நோக்கி என்பதே உண்டு /
கர்ம ஞான பக்திகளுக்கு உண்டு -சித்த உபாய ஸ்வீகாரம் பிரபத்திக்கு இல்லை -உபாயாந்தர நிரபேஷன்-/
நிவ்ருத்தி ரூபம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -நிவ்ருத்தி பூர்வகம் அன்றோ
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் இத்யாதி பிரசித்தம் -நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபம் சரீரம் இல்லா ஆத்ம ஸ்வரூபம் –
உபாயாந்தரங்கள் விசிஷ்ட ஸ்வரூபம் வர்ணாஸ்ரமம் தர்மம் உண்டே /
அநந்யார்ஹ சேஷன் ஜீவாத்மா ஸ்வரூப அனுரூபம் -சரணாகதி –மஹா விசுவாச ரூப சித்த உபாயம் –
தர்ம க்ஷேத்ரே தேச விசேஷம் நியமம் இல்லை -பிரமாணம் உபாசகனுக்கு -சரம ஸ்லோகமும் அங்க பிரபத்தி –
ப்ரஹ்ம முஹூர்த்தம் கால நியமும் இல்லை -ஸ்நானம் பிரகார நியமும் இல்லை- த்ரைவர்ணிக அதிகாரி நியமும் இல்லை
பல நியமும் இல்லை -ஜ்யோதிஷட ஹோமாதிகள் போலே -சுவர்க்கம் மட்டும் இதுக்கு -போலே இல்லையே –

அதில் பிரதமத்தில் அர்ஜுனனுக்கு பிரபத்தி உபதேசம் பண்ணுகிற அளவில் -யுத்த பூமியில் -ஒரு கால விசேஷம் பாராமல் –
ஸ்நாநாதிகளும் இன்றிகே இருக்க -உபதேசிப்பான் என் –
இதுக்கு தேசாதி நியமங்கள் இல்லையோ -என்கிற சங்கையிலே அருளி செய்கிறார்

பிரபத்தி யாவது -பகவச் சரண வரணம்-
பகவத் ஏக உபாயமாக பிரார்த்தனை –மஹா விசுவாச பூர்வகம் -வரணம் =பிரார்த்தனம் –கிருபையால் தான் இதுவும் —
பிரார்த்தனைக்கு உபாயத்வம் கூடாதே -தத் ஏக உபாயம் தானே பிரார்த்தனை —
தேச நியமம் ஆவது -புண்ய தேசங்களில் செய்ய வேணும்-அந்ய தேசங்களில் ஆகாது என்னும் அது –
கால நியமம் ஆவது -வசந்தாதி காலங்களிலே செய்ய வேணும் –
அந்ய காலங்களில் ஆகாது என்னும் அது –வசந்தே வசந்தே ஜ்யோதிஷ்டோமம் யஜதே போலே இல்லை
பிரகார நியமம் ஆவது -ஸ்நான பாத ப்ரஷாள நாதி பூர்வகமாக செய்ய வேணும் -ஆதி -ஆசமனம் போல்வன வேண்டாம் –
பிரகாராந்தரத்தாலே செய்ய ஒண்ணாது என்னும் அது –
அதிகாரி நியமம் ஆவது -த்ரை   வர்ணிகராக வேணும் -அத்ரை வர்ணிகராக ஒண்ணாது என்னும் அது –
பல நியமம் ஆவது -த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் இன்ன பலத்துக்கு இது சாதனம் –த்ருஷ்டா பலம் மழை /
அதிருஷ்டம் சுவர்க்கம் -போலே இங்கு இல்லை –
அந்ய பலத்துக்கு சாதனம் அன்று என்னும் அது –
தேச கால சாத்குண்யா வைகுண்யங்கள் அடியாக வரும் அதிசய அனதிசயங்களை உடைத்தாவது ஓன்று அல்லாமையாலும் –
உத்கர்ஷம் அபகர்ஷம் -தேச காலம் பொறுத்து கர்மாதிகள் போலே இதுக்கு இல்லை –
தீர்த்தத்திலே அவஹாகிக்கும் அளவில் -சுத்த அசுத்த விபாகம் அற அவஹாக்கிக்கலாய் இருக்குமா போலே
ஸ்வயமேவ பவித்ரமாய் -சுத்த அசுத்த விபாகம் அற -தன்னோடு அன்வயிகலாம் படி இருக்கையாலும் –
வர்ணாத் அநு ரூபமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே -ஸ்வரூப அநு ரூபமாய் இருப்பது ஓன்று ஆகையாலும் –
சேதனருடைய ருசி அநு குணமான பல விசேஷங்களுக்கு சாதனம் ஆவது ஒன்றாலும் –
இந் நியமங்கள் ஒன்றும் இதுக்கு இல்லை என்கிறது –

ந ஜாதி பேதம் ந குலம் ந லிங்கம் ந குண க்ரியா
ந தேச காலவ் ந வஸ்தாம் யோகோ ஹயய மபேஷதே
பிரம்மா ஷத்ரே விச்ஸ் சூத்ரா ஸ்த்ரியச்சாந்தர ஜாதய
சர்வ ஏவ ப்ரபத்யேரன் சர்வ தாதர மச்யுதம் -என்று
பிரபத்திக்கு-தேச கால பிரகார அதிகாரி நியம அபாவம் பாரத்வாஜ சம்ஹிதையிலும் –
பிரபத்தே க்வசித ப்யேவம் பராபேஷா ந வித்யதே
சாஹி சர்வத்ர சர்வேஷாம்  சர்வகாம பலப்ரதா -என்று பல நியம அபாவம் சனத் குமார சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது இறே

—————————————-

சூரணை -24-

விஷய நியமமே உள்ளது –

இவை இல்லையாகில் -மற்றும் சில நியமங்கள் இதுக்கு உண்டோ என்ன
அருளி செய்கிறார் –

சுலபமான வஸ்துவே விஷயமாக வேணும் என்பது ஒன்றே உள்ளது
அதாவது
இன்ன விஷயத்தில் செய்ய வேணும் என்கிற நியமமே இதுக்கு உள்ளது என்ற படி –
இவை எல்லாம் தாமே மேலே உபபாதித்து அருளுகிறார் இறே-

———————————————

சூரணை-25-

கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த்ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம்
வ்யவஸ்திதங்களாய்  இருக்கும்  –

இதுக்கு இவை ஒன்றும் இல்லையாகில் பின்னை எதுக்கு தான் இவை எல்லாம் உள்ளது என்ன –
அருளிச் செய்கிறார் –

ப்ரவ்ருத்தி ரூபமான சாதனத்துக்கு இந்த நியதிகள் ஒன்றுமே குலைய ஒண்ணாது -விசிஷ்ட வேஷ அனுரூபமாய் –
வைதிக கர்மத்துக்கு -வேதம் கற்றவர்களுக்கே -காசி காஞ்சி போன்ற புண்ய க்ஷேத்ரம் வசந்தாதி காலமும்
ஸ்தாக்தா புஞ்சீத குளித்தே சாப்பிடு -தர்ம சாஸ்த்ர யுக்தமான -அக்னி வித்யா அங்கதா கர்ம த்ரை வர்ணிக்கர்
ஷேத்ராதி யான -சாபல்ய யோக்யதா -ஆபாத்தான யோக்யதா தத் அனுகுண தப்ப ஒண்ணாத வியவசதித்தங்களாய் இருக்கும்
ஸ்வரூபத்தை பற்றி வரும் இதுக்கு நியம விவஸ்தை இல்லை –
தோல் புரையே போமதுக்கு தத் தாது நியமம் தப்பில் விபரீதமாய் தலைக் கட்டும் – சரீரத்தை பார்த்து –
மர்ம ஸ்பர்சி இது மனமுடையீர் ஒன்றுமே போதும் –

கர்மம் ஆவது ஜியோதிஷ்டோமாதிகள் –
புண்ய ஷேத்ரங்கள் ஆவன சாஸ்த்ரங்களில் பாவன தயா அபிஹிதங்களான தேசங்கள் –
வசந்தாதி -என்கிற இடத்தில் ஆதி சப்தாதாலே -க்ரீஷ்ம சரச்சுக்ல கிருஷ்ண பஷ
பூர்வாஹ்ன அபராஹ்னாதி காலங்களை சொல்லுகிறது –
வசந்தே வசந்தே ஜியோதிஷா யஜதே -இத்யாதிகளாலே கால நியமம் சொல்லப் படா நின்றது இறே-
சாஸ்த்ரோத்தங்கள் ஆன தத்தத் பிரகாரங்களான ஸௌ சாமசமான -ஸ்நான -வ்ரத-ஜபாதி
ரூபேண அவ்வவ கர்மங்களுக்கு அநு குணமாக சாஸ்திர விஹிதங்களானஅவ்வவ பிரகாரங்கள் –
தர்ம தர்மான்-பன்மை – சர்வ தர்மான் -அங்கங்கள் உடன் -கூடி என்றபடி —
த்ரை வர்ணிகர் -என்றது உபநயன சம்ஸ்கார பூர்வகமாக வேதாதி  அதிகாரிகளானவர்களுக்கே
வைதிக கர்ம அதிகாரம் உள்ளது ஆகையாலே –சம்பூகன் -தண்டனை -ஸ்ரீ ராமாயணம் -உண்டே
இது தான் -க்ருக மேதித்வ கிருஷ்ண கேசித்வ வேத வேதாங்க உக்த த்வாதிகளுக்கும் உப லஷணம்—
க்ருஹஸ்தன் -ஆன தன்மை க்ருகமேதி / கறுப்புத் தலை மயிர் -உள்ளோர் -வாயோ விவஸ்திதமும் உண்டே /
வ்யவஸ்திதங்களாய் இருக்கும் -என்றது -நியதங்களாய் இருக்கும் என்ற படி-

————————————————

சூரணை -26-

ச ஏஷ தேச கால -என்கையாலே
இதுக்கு தேச கால நியமம் இல்லை –

பிரபத்திக்கு இவை ஒன்றும் இல்லை என்று கீழ் பண்ணின பிரதிக்ஜையை
உபபாதிகையிலே பிரவ்ருத்தராய் -பிரதமம்- தேச கால -நியம
ராஹித்யத்தை உபபாதிக்கிறார் –

அவன் வந்ததே தேசமும் காலமும் -என்றவாறு -திருவடி வாக்கியம் -இத்தைக் கேட்ட பின்பு தான் பெருமாள் திரு உள்ளம் மலர்ந்தது –
தோஷ துஷ்டனான ராவணன் த்யாஜ்யம்- ராவணனை விட்டு பெருமாளை பற்றும் எண்ணம் வந்தாலே போதும் -வந்ததே புண்ய தேசம் புண்ய காலம் –
குறை பார்க்க வேண்டாம் ஸூமத உபன்யாசம் திருவடி சொல்ல -இன்ன தேச கால நியதி இல்லை -என்றவாறு –

பத்த வைராச்ச பாபச்ச ராஷ சேந்தராத் விபீஷண
அதேச கால சம்ப்ராப்தஸ் சர்வதா சங்க்யதா மயம்-என்று முன்பு  ஸ்ரீ ஜாம்பவான் மகா ராஜர்-பயந்து –
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்த பஷத்தை தூஷிக்கிற திருவடி –
அதேச காலே சம்ப்ராப்த இத்யயம் ச விபீஷண
விவஷா சாத்ர மேஸ்தீயம் தாந்நிபோத யதாமதி
ச ஏஷ கால தேச காலச்ச  பவதீஹ யதா ததா
புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி
தவ் ராத்மயம்  ராவேணா த்ருஷ்ட்வா விக்ரமஞ்ச  ததா த்வயி யுக்தம் ஆகமனம்  தஸ்ய சத்ருசம் தஸ்யபுத்தித -என்று
ராவணனாலே அவமாநிதனாய்  ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டு கொண்டு-
ராவணன் அனுஜத்வம் தோஷம் -விசேஷேண பீஷயதி எல்லாரையும் பயப்படுத்தும் பெயரை சொல்வதே தன் தாழ்ச்சியை சொன்ன படி –
சரணம் என்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-அதேசத்திலே அகாலத்திலே வந்தான் என்று-சுக்ரீவனைப் பார்த்து
தேவருடைய மந்த்ரிகளாலே யாதொன்று சொல்லப் பட்டது -இந்த பஷத்திலே விசேஷித்து
எனக்கு இந்த விவஷை உண்டாகா நின்றது -அவன் வருகிற அளவில் யாதொரு தேசத்திலே
யாதொரு காலத்திலேயே வந்தான் -அவன் வரவுக்கு அந்த இதுவே தேசமும் அந்த இதுவே காலமும்
யாதொரு படி -அப்படி பட்ட விவஷையை நான் அறிந்த அளவு விண்ணப்பம் செய்ய கேட்டு அருள வேணும் –
எங்கனே என்னில்
தம பிரகிருதி ஆகையாலே -பர ஹிம்சையே யாத்ரையான ராவணனில் காட்டில்–பிறப்பால் தமஸ் இரு