Archive for the ‘ஸ்ரீ ராமானுஜர்’ Category

ஸ்ரீ ராமானுஜர் தர்சனம் – முக்கிய தாத்பர்யங்கள்/ஸ்ரீ இராமானுச திருநாமம் விளக்கம் / ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரங்கள் விளக்கும் –

April 29, 2019

ஸ்ரீ யபதியே பரத்வம் -அர்ச்சையே / ஆழ்வார்கள் / ஆச்சார்யர்கள் /
குருபரம்பரை -விசிஷ்டாத்வைத சித்தாந்தம் -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி –

ஸ்ரீ ராமானுஜர் தர்சனம் ஏழு முக்கிய தாத்பர்யங்கள்
1-சரீராத்மா பாவம்
2-ஸ்ரீ மன் நாராயணன் பாராம்யம்
3-ஸமஸ்த வாஸ்ய -சர்வாத்ம பாவம் -சர்வ காரணத்வம்-
4-சர்வ கர்ம சமாராதத்வம்
5-பக்தி பிரபத்தி வசீகரத்வம்-இதயம் நல்ல எண்ணம் இதய எண்ணெய் ஒழுக்கு போலே இடைவிடாமல் தியானமே பக்தி
6-சரணாகதி எளிமை கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து கொக்கு பிடிக்கும் கதை
7-போக சாம்யம் –நான் உன்னை அன்றி இலேன் –
அவள் இல்லாமல் நான் இல்லை சினிமா பாடல் இதைப் பின்பற்றியே என்று வாலியே சொல்லிக் கொண்டார்
திரு மழிசை ஆழ்வார் பாடலை பின் பற்றி எழுதினேன் /நித்ய விபூதி அனைவருக்கும் -கிட்டும் /
நரை கமழ் பால் குடிக்கும் கலவுக்கு பிள்ளைப் பெருமாள் –ஏலக்காய் பால் கறக்கும் பசு —

———————————

1–ஸ்ரீ யபதித்தவம்

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -1-
கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் -10-
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் -16-
வெறி தரு பூ மகள் நாதனும் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே-19-
நாங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் -28-
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -33-
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லா உலகோர்கள்-41-
மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் -42-
மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் -60-
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் -66-
மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் -78-
அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப்பாவையைப் போற்றுதும் -108-

————————————

2–சரீராத்மா பாவம் —

வந்து நீ என்னை யுற்ற பின் உன் சீரே யுயிர்க்கு யுயிராய் அடியேற்கு இன்று தித்திக்கும் -25-
கொழுந்து விட்டு ஓங்கிய யுன் வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் -27-
மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் -42-
பற்பல் உயிர்களும் பல்லுலகு யாவும் பரனது என்னும் நற்பொருள் தன்னை இந் நாநிலத்தே வந்து நாட்டினனே -53-
உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ் வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம்மிராமாநுசன் மெய்ம் மதிக்கடலே -58-
உயிரை யுடையவன் நாரணன் -59-
எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் எம்மிராமாநுசன் மிக்க புண்ணியனே -91-
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே பண்ணும் பரனும் -95-
அவை தன்னோடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் -106-

————————————————————————————–

3–ஸமஸ்த வாஸ்ய -சர்வாத்ம பாவம் -சர்வ காரணத்வம்-

ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமானுசன் -4 –
மூவுலகும் பூத்தவனே என்று போற்றிட -22-
மன் பல்லுயிர்கட்க்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமானுசன் -30-
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன் -47-
பற் பல்லுயிர்களும் பல்லுளுக்கு யாவும் பரனது என்னும் நற் பொருள் -53-
யாவும் சிதைந்து முன்னாள் அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு அவை என் தனக்கு அன்று அருளால் தந்த வரங்கன் -69-
எல்லா யுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் -91-

—————————-

4-சர்வ கர்ம சமாராதத்வம்
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற் காமமும் என்று இவை நான்கு என்பர்
நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் -40-
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை-71-

———————————————-

5-பக்தி பிரபத்தி வசீகரத்வம்-
தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே -10-
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன் -29-
தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே -31-
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -37-
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் உற்றவர் தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் -57-
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நாய்பாவர்க்கு வானம் கொடுப்பது மாதவன்
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -66-

———————

6-சரணாகதி எளிமை –
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -66-
அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் தான் அது தந்து எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே -69-
உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய கார் கொண்ட வன்மை இராமானுச இது கண்டு கொள்ளே -83-
பத்தி எல்லாம் தங்கியது என்னத்த தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே -108-

————————

7-போக சாம்யம் —
வந்து நீ என்னை உற்ற பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே-25-
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரும் ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே -41-
இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே -47-
இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே -52-
அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே -84-
தவம் தரும் செல்வம் தகவும் தரும் சலியாப்பிறவிப் பவம் தரும் தீ வினை பாற்றித் தரும்
பரந்தாபம் என்னும் திவம் தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்க்கு -94-

——————————-

ஸ்ரீ இராமானுச திருநாமம் விளக்கம்

மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்
பொருவரும் சீர் ஆரியன்
திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன்
பூதத்திருவடி தாள்கள் நெஞ்சத்துறைய வைத்து ஆளும் இராமானுசன்
தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்

பாண் பெருமாள் சரணாம் பதுமத்தாரியல் சென்னி இராமானுசன்
மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது அடங்கும் இதயத்து இராமானுசன்
சீர் அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன்
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையான் தாள் பேராத உள்ளத்து இராமானுசன்

சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்
நீலன் தனக்கு உலகில் இனியான்
சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும் இராமானுசன்

மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே இராமானுசன் எனக்கு ஆரமுதே
நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன் என் தன் மா நிதியே
யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்
வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்
நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசன்

புறச்சமயங்கள் நிலத்து அவியக் கைத்த மெய்ஞ் ஞானத்து இராமாநுசன் என்னும் கார்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
பல்லுயிர்கட்க்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் அநகன்
தென் அத்தி யூரர் கழலிணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன்

பொன்னரங்கம் என்னில் மயிலே பெருகும் இராமானுசன்
இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில்
புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே
அண்ணல் இராமானுசன்

தீதில் இராமானுசன்
நல்லார் பரவும் இராமானுசன்
தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தான் அதில் மன்னும் இராமானுசன்
தொல் சீர் எதித் தலை நாதன்
தேர் விடும் கோனை முழுது உணர்ந்த அடியவர்க்கு அமுதம்

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை ஆளவந்த கற்பகம்
தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன்
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிடப்பார்த்து அருளும் கொண்டல்
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஓர் கூர் மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன்
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன்

எம் இராமானுசன் மெய்ம்மதிக் கடலே–சத்யம் ஞானம் அநந்தம் -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
அரு முனிவர் தொழும் தவத்தோன்
இராமானுசன் மிக்க பண்டிதனே
பண் தரும் மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
இராமானுச எம் பெரும் தகையே

இராமானுசன் என்னும் சீர் முகிலே
கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்
போற்ற அரும் சீலத்து இராமானுச
இந் நீணிலத்தே என்னை ஆள வந்த இராமானுசன்
எம் இராமானுசன் மிக்க புண்ணியனே

இராமானுசன் என்னும் மெய்த் தவனே
இந் நீணிலத்தே பொற் கற்பகம் எம் இராமானுசன்
இராமானுச என் செழும் கொண்டலே
நல் வேதியர்கள் தொழும் திருப் பாதன்

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் பெரிய/பரமன் -பத பிரயோகங்கள் – –

April 1, 2019

ஸ்ரீ பாதுகா பட்டாபிஷேகம்-பெரியோருக்கு ஆட்பட்டால்-பெறாப் பேறு-பெறலாம் -திருவடி தீண்டப் பெற்று பெற்றதே –

பெரியார் -யான் பெரியன் -நீ பெரியை என்பதனை யார் அறிவார் –பெரிய திருவந்தாதி–75-

பெரியவர் சீர் -ராமானுஜ நூற்று அந்தாதியில் பெரியோர் பல இடங்களில்

மஹதே தெய்வம் -நாராயணன் -ஜகந்நாதன் ஸஹ விசாலாக்ஷி -பெருமாள்

பிரபத்தி ஸக்ருத் பஸ்யந்தி சதா -பெரிய உபாயம்

ஸ்தாவர பாரிஜாதம் -அர்ச்சை / ஜங்கம பாரிஜாதம் வைபவம்

“அப்ரமேயம் ஹி தத்தேஜ: யஸ்ய ஸா ஜநகாத்மஜா நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும்
ராம சாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா-ஆரண். 37 : 18.
எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக இருக்கின்றாளோ அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம்
அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது” என்கிறபடியே,
பெரியவர்களுடைய பெருமையும் தன் சம்பந்தத்தாலே யாம்படி இருக்குமவளன்றோ.
திருமகள் கேள்வனாகையாலே சர்வாதிகன்’ என்னக் கடவதன்றோ.

வாள் வலியால் கேட்க
நீ என் செவியின் வழி புகுந்து -என்கிறபடியே செவிக்கு இனிய செஞ்சொல்லாய்
ருசோய ஜூம்ஷி சாமாநி ததைவா தர்வாணா நிச சர்வம் அஷ்டாக்ஷராந்தஸ் ஸ்தம் யச்சாந் யதபி வாங்மயம் -என்றும்
சர்வ வேதாந்த சாரார்த்தஸ் சம்சார ஆர்ணவ தாரக கதிர் அஷ்டாக்ஷர அந்ரூணாம் அபுநர் பவ காங்ஷீணாம்-என்றும்
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம்–கைவல்யம் பகவந்தஞ்ச மந்த்ரோ
அயம் சாதயிஷ்யதி-என்றும் சொல்லுகிறபடியே -சகல வேத ஸங்க்ரஹமாய் அனந்த கிலேச பாஜனமான
சம்சார ஆர்ணவத்தின் நின்றும் கரையேற்ற வற்றாய்
ஐஹிக ஆமுஷ்மிக ஐஸ்வர்ய கைவல்ய அபுநரா வ்ருத்தி லக்ஷண பரம புருஷார்த்தம் முதலான அகிலார்த்த பிரதமாய்
ஓமித் யக்ரே வ்யாஹரேத் நம இதி பஸ்சாத் நாராயணாயேத் யுபரிஷ்டாத்
ஓம் இத் ஏக அக்ஷரம் நமே இதி த்வே அக்ஷரே நாராயணாயேதி பஞ்ச அக்ஷராணி -என்கிறபடியே
அவன் பெயர் எட்டு எழுத்தும் -என்று எட்டுத் திரு அக்ஷரமாய் -உபநிஷத் படி பத த்ரயாத்மகமாய்
அவற்றால் ஸ்வரூப உபாய புருஷார்த்த ப்ரகாசகமுமாய் -மற்றை வியாபக மந்த்ர த்வயம் போல் அன்றிக்கே
இதிலே நார சப்தம் உண்டாகையாலே சப்த பூர்த்தியும் உடைத்தாய்
பேராளன் பேர் ஓதும் பெரியோர் என்கிறபடியே சிஷ்ட பரிக்ரஹ யுக்தமாய்
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யானாம் குஹ்யம் உத்தமம் பவித்ரஞ்ச பவித்ராமாம் மூல மந்த்ரஸ் சனாதன -என்கிறபடியே
உத்க்ருஷ்ட தமமாகச் சொல்லப்படுகிற மூல மந்திரமான பெரிய திரு மந்த்ரத்தை நர நாராயணனாய்த் தனக்குத் தானே
உபதேசித்துக் கொண்ட இழவு தீர கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே
பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் என்று தம் வாயாரச் சொல்லும்படி
ஆழ்வாருடைய வலத் திருச் செவியில் உபதேசித்து அருள அநந்தரம்

காய்ச்சினப் பறவை யூர்நது பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போல் -என்றும்
ஸூபர்ண ப்ருஷ்டே ப்ரபபவ் ஸ்யாம பீதாம்பரோ ஹரி காஞ்ச நஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே
ச தடித்தோய தோயதா -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான பெரிய திருவடி மேல் கொண்டு வந்து நீல மேக நிபமாய் கனக கிரி மீதில் கார் முகில் படிந்து உலாவுமா போலே
விளங்குகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை இவ் வாழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளி சாஷாத் கரிப்பித்து அருள

நித்ய ஸூரிகளும் ஸ்வேத த்வீப வாசிகளும் இவ்வாழ்வார் வைபவத்தைக் காண்கைக்காக வந்து நிற்க அவர்களை சேவித்து
பொலிக பொலிக என்று மங்களா சாசனம் பண்ணி அவர்கள் வைபவத்தை அறிந்து அனுபவித்த தமக்கு
மாறுளதோ இம் மண்ணின் மிசையே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
யான் பெரியன் நீ பெரிய என்பதனை யார் அறிவார் -என்றும்
எம்பெருமானோடே மார் தட்டி உபய விபூதியிலும் தமக்கு சத்ருசர் இல்லாதவராய்
ஒருவராலும் அறிய அறியதான ப்ரபாவத்தை உடையராய்

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் –
வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து என்கிறபடியே முக்தனாய் போருமவனை ஸ்ரீ வைகுண்ட நாதன் எதிர் கொள்ளுமா போலே
ஸ்ரீ நம்பெருமாள் திருக் கைத் தலத்திலே எழுந்து அருளிப் புறப்பட்டு அழகிய மணவாளன் திரு மண்டபத்து அளவாக எழுந்து அருளி
எதிர் கொண்டு உள்ளே புகுந்து அருள ஸ்ரீ உடையவரும் விழுவது எழுவது தொழுவதாய் சேவித்து திருப் பள்ளி அறையிலே புகுந்து –
அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உகந்து –
மணத் தூணே பற்றி நின்று -வாயார வாழ்த்தி ப்ரேம பரவசராய் -அமலனாதி பிரான் படியே பாதாதி கேசாந்தமாக
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே என்னும்படி
ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவித்து திருப் பல்லாண்டையும் அனுசந்தித்து –
நமோ நமோ வாங் மனசாதி பூமயே நமோ நமோ வாங் மனஸைக பூமயே நமோ நமோ அனந்த மஹா விபூதயே
நமோ நமோ அனந்த தயைக சிந்தவே ந தர்ம நிஷ்டோஸ்மி ந ச ஆத்மவேதீ ந பக்திமாம்ஸ் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சன அநந்ய கதிஸ் சரண்ய த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று
தம் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தியை அனுசந்தித்து சேவித்து நிற்க

ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ ராமானுசனை கிருபை பண்ணி அருளி
தீர்த்த ப்ரசாதங்களும் ப்ரசாதித்து -நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே-
தேனே மலரும் திருக் கமல பாதமான துயரறு சுடர் அடிகளாலே இவருடைய உத்தம அங்கத்தை அலங்கரிக்க இவரும்
தாளிணைக் கீழ் வாழ்ச்சியைப் பெற்று நிரதிசய ஆனந்த நிர்ப்பரராய் சேவித்துக் கொண்டு நிற்க
ஸ்ரீ பெரிய பெருமாளும் ஸ்ரீ உடையவரை தம் தாமரைக் கண்களால் நோக்கி -சோதிவாய் திறந்து –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் -என்கிற உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்கும் உம் உடையார்க்கும் தந்தோம் –
நம்முடைய வீட்டின் கார்யம் எல்லாம் ஆராய்ந்து நடத்தும் என்று திரு உள்ளமாய் அருளி
ஸ்ரீ உடையவர் என்ற திரு நாமமும் பிரசாதித்து அருளி –
ஸ்ரீ உடையவரும் தீர்த்த பிரசாதமும் சூடிக் களைந்த தண் துழாய்
விரை நாறு கண்ணித் திரு மாலை பிரசாதமும் –
பொது நின்ற பொன் அம் கழலான ஸ்ரீ சடகோபனும் வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்
என்கிற உபய விபூதி ஐஸ்வர்யமும் கரதலாமலமாக ப்ரசாதிக்கப் பெற்று

ஸ்ரீ பெரிய திரு நம்பி திரு முக மண்டலத்தைப் பார்த்து அருளி பெரியாருக்கு ஆட் பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு என்று
தேவரீர் திருவடிகள் சம்பந்தத்தை இட்டு ஸ்ரீ பெருமாள் இப்படி அடியேனை வாழ்வித்து அருளினார் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெரிய நம்பியும் கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பவிஷ்யத்தர்த்தம் ப்ரத்யக்ஷமாச்சது -என்று
அருளிச் செய்து ஸ்ரீ பெருமாள் நியமித்து அருளின கார்யம் செய்து அருளலாகாதோ என்று அருளிச் செய்து அருளினார்–

——————————-

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –ஸ்ரீ திருப்பல்லாண்டு -12-

பரமன் தன் நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே
வாள் நுதலீர் வந்து காணீரே-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -1-2-7–

சிற்றில் இழைத்துத் திரி தருவோர்களை பற்றி பறித்துக் கொண்டோடும் பரமன் தன் நெற்றி இருந்தவா காணீரே -1-2-19–

ஆலின் இலையதன் மேல் பையவுயோகு துயில் கொண்ட பரம் பரனே பங்கய நீள் அயனத்து அஞ்சன மேனியனே -1-5-1-

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன் -2-5-5–

எம் புருடோத்தமன் இருக்கை கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே -4-7-1–

புருடோத்தமன் வாழ்வு-2 -.இருக்கை -3-/-நகர் தான் -4 -/ வாழ்வு -7-/அமர்வு -8-/ இருக்கை -9-/ இருக்கை -10-/ அடி மேல் -11-

திருக் கோட்டியூர் கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா வென்று பேசுவார் அடியார்கள்
எந்தம்மை விற்கவும் பெறுவார்களே -4-4-19-

கேசவா புருடோத்தமா வென்றும் கேழலாகிய கேடிலீ என்றும் பேசுவார் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே -4-5-1–

இன்னமுதே ஏழு உலகு உடையாய் என்னப்பா –அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4-10-7–

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -5-4-1-

ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5-4-11-

———————–

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி –ஸ்ரீ திருப்பாவை -2-

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி -3-

அம்பரமூடறுத்து ஓங்கி யுலகளந்த உம்பர் கோமானே -17-

ஆற்றப் படைத்தாய் மகனே அறிவுறாய் ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் -21-

நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் -25-

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் —ஸ்ரீ நாச்சியார் -9-8-

நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர்-10-10-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -11-3-

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீர் ஏற்று எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் -11-5-

அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே -14-7-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை -14-10-

கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாளுடைய பிரான் அடிக்கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே -14-10-

——————————————————————

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

அரங்கன் அடியிணை தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் — ஸ்ரீ பெருமாள் திருமொழி -3-9-

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா -ஸ்ரீ பெருமாள் திருமொழி -4-9-

—————————–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

என்றும் யார்க்கும் எண்ணிறந்த ஆதியாய் நின்னுந்தி வாய் அன்று நான்முகற் பயந்த ஆதிதேவன் –ஸ்ரீ திருச்சந்த -5-

ஆதியான வானவர்க்கு அண்ட மாய வப்புறத்து ஆதியான வானவர்க்கு ஆதியான வாதி நீ
ஆதியான வாணர் அந்த கால நீ யுரைத்தி ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே -8-

உலகு தன்னை நீ படைத்து உள்ளொடுக்கி வைத்தி மீண்டு உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை யல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி யாதலால் உலகில் நின்னை யுள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே -12-

பரத்திலும் பரத்தை-29-

இரக்க மண் கொடுத்தவருக்கு இருக்க ஒன்றும் இன்றியே பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப பாதன்-32-

விண்ணினோடு மண்ணுமாய் ஆதியாகி யாயனாய மாயம் என்ன மாயமே -34-

வரம்பிலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி ஏத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய் -96-

அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதியந்தம் இல்லவன் நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -117-

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள் என்னதாவி என்னும் வல்வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே -119-

———————————————————–

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் –ஸ்ரீ திருமாலை -11-

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக்கொண்ட எந்தாய் -35-

ஆதி மூர்த்தி அரங்க மா நகருளானே -36-

———————————————————-

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன் –அமலனாதி -2-

அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே -6-

அரங்கத்து அமலன் முகத்து கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப்பெரிய வாய கண்கள் -8-

ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான் -9-

————————————————-

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில் –கண்ணி -1-

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே -3-

———————————————————-

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயல்களில் பெரிய பத பிரயோகம் –

ஓடினேன் ஓடி யுய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –ஸ்ரீ பெரிய திருமொழி -1-1-1-

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின வெல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெரு நிலம் அளிக்கும் -1-1-9-

பணங்கள் ஆயிரமுடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா என்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து -1-2-6-

இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-7–

அருவரை இமயத்து பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று எண்ணி
இமையோர்கள் பிரமனோடு சென்று அடி தொழும் பிரிதி -1-2-8-

ஓதி ஆயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதமின்றி நின்று அருளும்
நம் பெரும் தகை இருந்த நல் இமயத்து -1-2-9-

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று பெரிய மா சுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி -1-2-10-

தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி வலம் கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே -1-3-9-

தேனுடைக் கமலத்தயனோடு தேவர் சென்று இறைஞ்சிட பெருகு வானிடை
முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே -1-4-2-

தொழுது எழு தொண்டர்கள் தமக்கு பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமான் -1-4-4-

அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனி யாளலமர
பெருகு மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே -1-4-9-

பேர் ஆயிரமுடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-4-

மூவடி மண் இன்றே தா வென்று உலகு ஏழும் தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே -1-5-5-

ஓர் சந்தார் தலை கொண்டு உலகு எழும் திரியும் பெரியோன் தான் சென்று
என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுத நீர் திரு மார்பில் தந்தான் -1-5-8-

அமரர் நன்னாட்டு அரசு ஆள பேர் ஆயிரமும் ஓதுமின்கள் -1-5-10–

நமனார் பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் -1-6-6-

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் அல்லி மாதர் புளிக்க நின்ற ஆயிரம் தோளன் -1-7-9-

பாரு நீர் எறி காற்றினோடு ஆகாசமும் இவையாயினான் பேருமோர் ஆயிரம்
பேச நின்ற பிறப்பிலி பெருக்குமிடம் –திருவேங்கடம் -1-9-7–

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசிக் கேட்டிருந்தே என் நெஞ்சம் என்பாய்
எனக்கு ஓன்று சொல்லாதே –வேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -2-1-8-

நீரான் பேரன் நெடுமால் அவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே -2-4-6-

வென்றி கொள் வாள் அவுணன் பகராத அவன் ஆயிர நாமம்-2-4-7-

ஏனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை யெம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே -2-5-6-

உருகும் நின் திரு உரு நினைந்து காதன்மை பெரிது –பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது -2-7-5-

வருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான்
திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் -3-2-4-

அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடே திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்துள்ளானே -3-3-3–

ஓதி ஆயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

தனியே நெடுமால் துணையா போயின பூங் கொடியாள் புனலாலி புகுவர்-3-7-10-

இப்பத்தும் வல்லார் உலகில் எண்ணிலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவர் -4-2-10–

நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே வலம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை -4-3-9-

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்ப-4-4-8-

சேயன் என்றும் மிகப் பெரியன் நுண்ணேர்மையினாய இம்மாயை யாரும் அறியா வகையான இடம் –தென்னரங்கமே -5-4-9-

எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள் -5-5-7-

பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டு ஒரு நாள் அளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-4-

ஒரு கால் பெரு நிலம் விழுங்கியது உமிழ்ந்த வாயனாய் -5-7-9-

என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் -5-8-6-

அணி பொழில் திருவரங்கத்து அம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை
எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் பத்து இவை -5-8-10-

பெருமான் திரு மார்பா சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே –6-2-2-

தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளார் ஏத்த நின்ற பேராளன்
ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கும் மணவாளன் பெருமை -6-6-9-

அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் –நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-3–

தேனும் பாலும் அமுதமாய் திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே -6-10-6-

தண் சேறை எம்பெருமான் உம்பர் ஆளும் பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -7-4-4-

பெரியானை அமரர் தலைவருக்கும் பிரமனுக்கும் அரியானை யுகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு அரியானை 7-6-6-

சந்தோகா பவ்ழியா தைத்ரியா சாம வேதியனே நெடுமாலே -7-7-2-

நெடியானே கடியார் கலி நம்பீ –அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-8–

பரிமுகமாய் அருளிய எம் பரமன் -7-8-2-

பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் 7-8-10-

பேர் ஆயிரமுடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் -8-1-6-

திருக் கண்ணபுரத்து உறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே -8-3-9–

திருமாலை எம்மானை அமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே -8-9-2-

பரமன் பரஞ்சோதி -8-9-3-

அரவு நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரிய மா மேனி
அண்டமூடுருவப் பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் -9-1-8-

பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனருக்கு உய்த்த மா மாயன் -9-1-9-

அஞ்சன மா மலையும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-7-

என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் –புல்லாணியே -9-3-1-

பெருகு காதன்மை என்னுள்ளம் எய்த்தப் பிரிந்தான் இடம் –புல்லாணியே -9-3-2–

சிங்கமதாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த பங்கய மா மலர்க்கண் பரனை எம் பரஞ்சுடரை —
திருமாலிருஞ்சோலை நின்ற நங்கள் பிரானை -9-9-4-

திருக்கோட்டியூரானை நீல மா முகில் வண்ணனை நெடுமாலை இந்த தமிழால் நினைந்த இந் நாலும் ஆறும் -9-10-10-

பற்று அறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயர் எல்லாம் ஒழித்திட்டவரைத் தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் -10-6-6-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர் பாடியாட-11-3-2-

ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து –11-3-8-

பெற்றாரார் ஆயிரம் பேரானை பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -11-3-10-

பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை ஆள்வர் பெரிதே -11-4-6-

உலகு அளந்த யும்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-

செங்கண் நெடியானைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் கண்டோமே -11-7-8-

ஐவாய்ப் பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதி -11-8-7-

மணியே மணி மாணிக்கமே மது சூதா பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-

—————————–

அண்டமாய் எண்டிசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரம சோதி
நின்னையே பரவுவேனே –திருக் குறும் தாண்டகம் -11-

பார் இடந்து பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட
பேராளன் பேர் ஓதும் பெண்ணை –திரு நெடும் தாண்டகம் -20-

ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து -24-

மின்னிலங்கு திருவுருவம் பெரிய தோளும் –காட்டி -25-

தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -29-

———————————

கரந்த சில இடம் தோறும் இடம் திகழ் பொருள் தோறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே ஸ்ரீ திருவாய்மொழி -1-1-10-

பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே -1-3-4-

நெடுமாலார்க்கு என் தூதாய் -1-4-8-

சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசாரம் அல்லன்–1-9-6-

நிமிர்ந்து மண் கொண்ட மால் தனில் மிக்குமோர் தேவுமுளதே -2-2-3-

ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா -2-3-2-

விண்ணவர் பெருமான் படிவானம் இறந்த பரமன் பவித்ரன் -2-3-9-

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் பல பல -2-5-6–

நாரணன் முழு எழு உலகுக்கும் நாதன் வேதமயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை -2-7-2-

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை -2-7-13-

வேர் முதல் வித்தாய் பரந்து தனி நின்ற கார்முகில் போல் வண்ணன் என் கண்ணனை -2-8-10-

பரஞ்சோதி நீ பரமாய் நின்நிகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே -3-1-3-

பற்பல ஆயிரம் உயிர் செய்த பரமா நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே -3-2-6-

பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே -3-2-8-

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே -3-3-4-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர்
திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை யோயுமே -3-3-8-

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யஞ்சோதி யுருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வனைப் பாடி -3-5-5

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை யவித்த
பரஞ்சுடரை நினைந்து ஆடி -3-5-7-

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை -3-6-2-

பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியை -3-6-3-

உயர நின்றதோர் சோதியாய் உலகேழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை -3-6-8-

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கரு மாணிக்கம் எனதாருயிர்
பட வரவின் அணைக் கிடந்த பரஞ்சுடர் -3-6-10–

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் பங்கயக்கண்ணனை பயிலவினிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை -3-7-1-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்றி ஐவருக்கு அருள் செய்த நெடியோனை
தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் -3-7-11-

பொருந்திய மா மருத்தினிடை போய எம் பெரும்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி
நான் வாசக மாலை கொண்டு 3-9-10-

சேரும் கொடை புகழ் எல்லையிலானை ஓர் ஆயிரம் பேருமுடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன் -3-9 7–

ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே -4-3-2–

புரைப்பிலாத பரம் பரனே பொய்யிலாத பரஞ்சுடரே 4-3-9 —

சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள் பரன் திறம் அன்றிப்
பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே -4-1-3-

நாமங்கள் ஆயிரமுடைய நம் பெருமான் -5-8-11-

பரஞ்சுடர் உடம்பாய் –விண்ணோர்கள் சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் -6-3-7-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி -6-4-10-

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு மண் புரை வையம் கிடந்த வராகற்கு-6-6-5–

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டிகள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி ஏழும்-6-7-3–

அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனை தினைத்தனையும் விடாள் -6-7-10-

பாயோரடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் ஓரடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன் -6-9-6–

உலகமுண்ட பெரு வாயா உலகில் கீர்த்தி அம்மானே நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆர் உயிரே -6-10-1-

பொருள் பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடர் -7-1-9-

கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடும் சேனை தடித்து ஆற்றல் மிக்கான்
பெரிய பரஞ்சோதி புக்க அரியே -7-6-10-

ஏர்விலா வென்னைத் தன்னாக்கி என்னால் தன்னை பார் பரவி இன் கவி பாடும் பரமரே -7-9-5-

யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே அடியனேன் பெரிய வம்மானே -8-1-3

பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த சீர் உயிரேயோ
மனிசர்க்குத் தேவர் பொல்லாத தேவர்க்கும் தேவாவோ -8-1-5-

பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை
உலகுக்கோர் தனி அப்பன் தன்னை பெரிய வண் குருகூர் வண் சடகோபன் -8-2-11-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் கிடந்த எம்பெருமான் -8-4-3-

பிரிதில்லை எனக்குப் பெரிய மூ உலகும் நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த குறிய மாண் எம்மான்-8-4-4-

படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம் பரன் சிவபிரான் அவனே -8-4-9-

கடிசேர் கண்ணிப் பெருமானே -8-5-3-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ இன்னே சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவுமாய பெருமானே -8-5-10-

பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான் தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே -8-7-2-

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை அடி சேர் வகை -8-7-11-

கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து -8-8-1-

படியே இது என்று உரைக்கலாம் படியான அல்லன் பரம் பரன்-8-8-2-

முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ் புகுதல் அன்றி
அவன் அடியார் நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -8-10-7-

ஓர் ஆயிரமாய் உலகு ஏழு அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின
காள நன் மேனியினன் நாராயணன் நாங்கள் பிரானே -9-3-1-

மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் -9-3-4-

அரியாய வம்மானை அமரர் பிரானை பெரியானைப் பிரமனை முன் படைத்தவனை -9-4-5-

அடியான் இவன் என்று – ஆர் அருள் செய்யும் நெடியானை -9-4-10 –

திருக் கண்ண புரம் பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே –9-10-8-

ஆயிரம் பேருடை யம்மான் நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி அறியோமே-10-1-2–

திரு மோகூர் பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே -10-1-8-

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து வாசமே கமழும் சோலை வயல் அணி ஆனந்தபுரம் -10-2-4-

உலகு உயிர் தேவும் மற்றும் படைத்த எம் பரம மூர்த்தி -10-2-7-

பணி நெஞ்சே நாளும் பரம பரம் பரனை -10-4-7-

பற்று என்று பற்றி பரம பரம் பரனை -10-4-11-

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -10-5-8–

நெடியோன் அருள் சூடும் படியான் சடகோபன் -10-5-11-

பெரியாருக்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினனே-10-6-10-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன் -10-8-8-

முதல் தனி வித்தேயோ முழு மூ வுலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி யுன்னை -10-10-9-

———————————-

கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் –ஸ்ரீ முதல் திருவந்தாதி -7-

முதலாவார் மூவரே அம் மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் முதலாய
நல்லான் அருள் அல்லால் நாமநீர் வையகத்து பல்லார் அருளும் பழுது -15-

நின்றதுவும் வேங்கடமே பேர் ஓத வண்ணர் பெரிது -39-

நினைத்தற்கு அரியானைச் சேயானை ஆயிரம் பேர் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால் -65-

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியனார் –ஸ்ரீ இரண்டாம் -52-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் -73-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே –ஸ்ரீ மூன்றாம் -8-

தேசம் திறலும் திருவும் உருவமும் மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில் வலம் புரிந்த
வான் சங்கம் கொண்டான் பேரோத நலம் புரிந்து சென்று அடையும் நன்கு -10-

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின் அளந்து கோடல் பெரிது ஒன்றே –
என்னே திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே நீ இதனைப் பேசு -20-

நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா -47-

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு கரிய முகிலினிடை மின் போலே திரியுங்கால் -55-

தான் ஒரு கை பற்றி அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று–ஸ்ரீ நான்முகன் -49-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் -71-

ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த பேராழியான் -73-

என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை -92-

——————-

இருள் விரி சோதி பெருமான் உறையும் எறி கடலே –ஸ்ரீ திரு விருத்தம் –17-

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம் பிரான் கண்ணன் கோலங்களே-39 –

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -45-

புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -69-

பார் அளந்த பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே அருளாய் -80-

உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பார் இல்லா ஆணிப் பொன்னே அடியேன் ஆவி அடைக்கலமே -85

இமையோர்கள் குழாம் தொழுதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -97-

——————–

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வத் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தித்
தனிப் பெரு நாயக மூ வுலகு அளந்த சேவடியோயே –ஸ்ரீ திருவாசிரியம் -1-

மூ உலகம் விளைத்த யுந்தி மாயக்கடவுள் மா முதல் அடியே -4-

கற்பகக் காவு பற்பல வன்ன முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய்-5-

படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் -6-

ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரும் மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே -7-

————-

கரும் ஜோதிக் கண்ணன் கடல் புரையும் செல்லப் பெரும் சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று –ஸ்ரீ பெரிய திருவந்தாதி -4-

நெடியாய் செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் சென்று உலகம் எல்லாம் -27-

திரைக் கண் வளரும் பேராளன் பேரோதச் சிந்திக்க -59-

தீ யரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்த்த பரன் -63-

தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு -65-

நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத் தகம் -68-

குன்று குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே புடை தான் பெரிதே புவி -74-

அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் -75-

கணை நாணில் ஓவாது தொழில் சாரங்கன் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண் -78-

——————————————

மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே —–ஆடு அரவம் அளியில் அறி துயில் அமர்ந்த பரம
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே –ஸ்ரீ திரு எழு கூற்று இருக்கை

பேர் ஆயிரமுடையான் என்றாள்—பேர் ஆயிரமுடையான் பேய்ப்பெண்டீர் நும் மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தாள் —
செங்கண் நெடியானைத் தேன் துழாய்த் தாரணி தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப் பேர் ஆயிரமும் பிதற்றி
பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் –ஸ்ரீ சிறிய திருமடல்

என்னுடைய இன்னமுதை எவ்வுள் பெரு மலையை —வானவர் தம் முன்னவனை -ஸ்ரீ பெரிய திருமடல் –

——————————-

ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமானுசன் பரன் ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி –4-

தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் இராமானுசன் எம் இறைவனே –8-

செய்யும் பசும் துலாபாத் தொழில் மாலையும் செந்தமிழ் பெய்யும் மறைத்த தமிழ் மாலையும் பெறாத சீர்
அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன் இராமானுசன் -13-

கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் இராமானுசன் -14-

சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் -16-

சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் -18-

இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39-

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் -47-

பல்லுலகு யாவும் பரனது என்னும் நற் பொருள் தன்னை இந் நாநிலத்தே வந்து நாட்டினானே -53-

உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அல்லல் எல்லாம் வாதில் வென்றான் -58-

பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே -62-

இராமானுச எம் பெரும் தகையே -71-

பேதைமை தீர்த்த இராமானுசனைத் தொழும் பெரியோர் பாதம் அல்லால்
என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே -85-

கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் யாவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே -86-

இராமானுசனை இரும் கவிகள் புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல் வனையார்
பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே -90-

இராமானுசனைத் தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே -105-

————————————————-

பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் –ஸ்ரீ உபதேச ரத்னமாலை -18-

உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -1-

திண்ணிதா மாறன் திருமால் பரத்வத்தை நண்ணி அவதாரத்தே நன்கு உரைத்த -12-

நம்முடைய வாழ் முதலாம் மாறன் மலர்த்தாள் இணை சூடி கீழ்மை அற்று நெஞ்சே கிளர் -19-

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய் துய்ய விபவமாய்த் தோன்றி அவற்றுள் எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதார எளிது என்றான் பன்னு தமிழ் மாறன் பயின்று -26-

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் தண்டற நீ செய்து
அருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையே உய் துணை என்று உள்ளமே ஓர் -82-

திருமால் தன் விருப்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு அருமாயத்து அன்று அகல்விப்பான் என் பெருமாள் நீ
இன்று என் பால் செய்வான் என் என்ன இடர் உற்று நின்றான் துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து -98-

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் முடி மகிழ் சேர் ஞான முனி -99-

முனி மாறன் முன்புரை செய் முற்று இன்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை ஒருமை உற்றுச் சேர்ந்தான் உயர்ந்து -100-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா விவரணம் —

March 7, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————————–

ஸ்ரீ யபதியாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அனுபாவ்யனாய்-நிரதிசய ஆனந்த யுக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய் வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும்-அத்தை இழந்து
அசன்நேவ ச பவதி-என்கிறபடியே அசத் கல்பராய் -போக மோக்ஷ ஸூந்யராய்-சம்யுக்த மேகம் ஷரம் அக்ஷரஞ்ச -என்கிறபடியே
திலதைலவத் தாருவஹ் நிவத் துர்விவேச த்ரிகுண துரத்யயா நாத்யசித் சம்பந்த திரோஹித ஸ்வ ப்ரகாசராய்க் கிடக்கிற
சம்சாரி சேதனருடைய இழவை அனுசந்தித்து
ச ஏகாகீ ந ரமேத -என்றும் ப்ருசம் பவதி துக்கித-என்றும் சொல்லுகிறபடி அத்யந்த வியாகுல சித்தனாய் –
இவர்கள் கரண களேபரங்களை இழந்து லூன பஷா இவாண்டஜ-என்கிறபடியே இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையில் –
நாம ரூபே வ்யாகரவாணி -என்றும் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி -என்றும் சொல்லுகிறபடியே இவர்களுக்கு கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபாரிக்கைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
தேஹாத்ம அபிமானமும் -அந்நிய சேஷத்வமும் -ஸ்வ ஸ்வா தந்தர்யமுமான படு குழியிலே விழுந்து அநர்த்தப் படாதே –
தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கைக்கு உடலாக -அபதோஷமபும்பவம்-என்கிறபடியே
அபவ்ருஷேயமாய்-அத ஏவ புருஷ சேமுஷீ தோஷ மாலின்ய வி நிர்முக்தமாய் -வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி என்கிறபடியே

தனக்கு மேற்பட்டதொரு சாஸ்திரம் இன்றிக்கே இருப்பதாய் ஸ்வத பிரமாணமான வேதத்தை –
யோவை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி-என்றும் அருமறையை வெளிப்படுத்திய அம்மான் -என்றும் சொல்லுகிறபடியே
நாராயணத்வ ப்ரயுக்தமான தன் உதரத் தெறிப்பாலே தானே ப்ரவர்ப்பித்த இடத்திலும் ததர்த்த நிர்ணயம் தான்
சர்வ சாகா ப்ரத்யய ந்யாயாதி சாபேஷமாய் இருக்கையாலே -அல்ப மதிகளுக்கு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அரிது -என்றும் –
இம்முகத்தாலே இவர்கள் திருந்திக் கரை மரம் சேருகை அரிது என்றும்-உபதேச பரம்பரையாலே இவர்களைத் திருத்தி
உஜ்ஜீவிப்பிக்கை எளிது என்றும் திரு உள்ளம் பற்றி -ஆச்சார்யாணாம் அசாவசா வித்யா பகவத்த-என்று உபதேசம் தான்
பகவான் தான் அடியாக வந்ததாய் இருக்குமதாகையாலே -அதுக்காக முன்னை வண்ணம் பாலின் வண்ணம் -என்றும் –
சசி வர்ணம் -என்றும் -வல்லன் எம்பிரான் விட்டுவே-என்றும் சொல்லுகிறபடியே ஒரு மந்த்ரத்தை உபதேசிக்கும் இடத்தில்
தத் உபதேஷ்டாவுக்கு வடிவாய் இருந்துள்ள ஸூத்த ஸ்வ பாவத்வ அகடி தகடநா சாமர்த்யாதிகளை யுடையனாய் –
பஹுதா விஜாயதே-என்றும் ஜன்மம் பல பல செய்தும் -என்றும் சொல்லுகிறபடியே பலவகைப்பட்ட விபவங்களில் வைத்துக் கொண்டு
மத்யே விரிஞ்சி கிரிசம் பிரதம அவதார -என்னும்படி பிரதம அவதாரமான மஹா விஷ்ணுவாய்க் கொண்டு –
இவ்வண்டாந்த வர்த்தியான சர்வ லோகத்துக்கும் அவ்வருகாய் இருந்துள்ள ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் –
ஜகத் உபக்ருதயே சோயமிச்சாம் அவதார -என்கிறபடியே இஜ்ஜகத்தை வாழ்விப்பதாக-ஸ்ரோனா நக்ஷத்ரம் விஷ்ணுர் தேவதா -என்னும்படி
ஸ்ரீ விஷ்ணு தேவதாகமான திருவோணம் என்கிற திரு நக்ஷத்ரத்திலே ஸ்வ இச்சையால் ஸ்வயமேவ திருவவதரித்து அருளி
உடனே இறையும் அகலகில்லேன் என்று இருக்கும் பெரிய பிராட்டியாரையும்

அந்த ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் தானே -பத்மேஸ்திதாம் -என்றும் -தேனமரும் பூ மேல் திரு -என்றும் -ஸ்ரீ விஷ்ணு பத்னீ -என்றும் –
சொல்லுகிறபடியே அப்போது அலர்ந்த தாமரைப் பூவிலே ஸ்ரீ மஹா லஷ்மீ என்கிற திரு நாமத்தை யுடையாளாய் ஸ்வ மஹிஷியாகத்
தானே திரு அவதரிப்பித்து அருளி -தாப புண்டரஸ் ததா நாம மந்த்ரோ யாகஸ் ச பஞ்சம -என்று ஸ்ரீ ரஹஸ்ய த்ரய உபதேசம் தான்
தாப ஊர்த்வ புண்ட்ர தாஸ்ய நாம பூர்வகமாய் இருக்கிறவோபாதி –
பரம்பராம் உபதிசேத் குரூணாம் பிரதமோ குரு-ஆத்ம வித்யா விஸூத்யர்த்தம் ஸ்வா ச்சார்யாத்யாம் த்விஜோத்தம -என்றும் –
சஹஸ்ர புருஷம் வாபி சத பூருஷ மேவவா த்ரி சப்த புருஷம் வாபி த்வி சப்த தச பூருஷம்-என்றும் –
ஆதா உபதி சேத்வேதே கிலருக்வாக சம்ஜகம்-அஸ்மத் குருப்ய -இத்யாதி வாக்ய த்ரய மரிந்தம – என்றும் இத்யாதிகளிலே
குரு பரம்பரா ஸங்க்ரஹமாய் இருந்துள்ள -அஸ்மத் குருப்யோ நம-இத்யாதி வாக்ய த்ரய உபதேச பூர்வகமாய் இருக்குமாகையாலே
ஸ்ரீ விஷ்ணு லோகே பகவான் விஷ்ணுர் நாராயணஸ் ஸ்வயம் -ப்ரோக்தவான் மந்த்ர ராஜா தீந் லஷ்ம்யா சதா பாதி பூர்வகம் -என்றும் –
விஷ்ணும் ஆதி குரும் லஷ்ம்யா மந்த்ர ரத்னம் பிரதமம் பஜே-என்றும் சொல்லுகிறபடியே -அவளுக்கு தாப ஊர்த்வ புண்ட்ர தாஸ்ய நாம
பிரதான பரஸ் சரமான இந்த வாக்ய த்ரய உபதேச பூர்வகமாக ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய ப்ரதிபாதகமான
ரஹஸ்ய த்ரயத்தைத் தானே நேராக உபதேசித்து அருளி அப்படியே

சோபாதிஷ்டவதீ ப்ரீத்யா தாப புண்டராதி பூர்வகம் -விஷ்ணு லோக அவதீர்ணாய ப்ரியாய சததம் ஹரே சேநேசாய ப்ரியா
விஷ்ணோர் மூல மந்த்ர த்வயாதிகம் -என்கிறபடியே அவளைக் கொண்டு அந்த விஷ்ணு லோகத்தில் தானே அவதீர்ணரான
சேனை முதலியாருக்கு இந்த கிரமத்தில் இந்த ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து பின்னையும் அப்படியே

சேநேசஸ் ஸ்வ யமாகத்ய ப்ரீத்யா ஸ்ரீ நகரீம் ஸூபாம் சடகோபாயா முனயே திந்த்ருணீ மூல வாசிநே -தாபாதி
பூர்வகம் மந்த்ர த்வயஸ்லோகாந் பராந் க்ரமாத்-விஷ்ணு பத்ந்யா மஹா லஷ்ம்யா நியோகா துபதிஷ்டவான்-என்கிறபடியே –
இந்த க்ரமத்திலே தானே ஸ்ரீ சேனை முதலியாரைக் கொண்டு திரு நகரியிலே திருப் புளி ஆழ்வார் அடியிலே எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ ஆழ்வாருக்கு ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து உடனே அவருக்கு மயர்வற மதி நலம் அருளி

புநஸ் ச நாத முநயே பஞ்ச ஸம்ஸ்கார பூர்வகம் -பட்ட நாத ப்ரப்ருதிர் நிர்மி தைர் திவ்ய யோகிபி-திவ்யைர் விம்சதி சங்க்யாகை –
பிரபந்தைஸ் ஸஹ தேசிக ஸ்வோக்த திராவிட வேதா நாம் சதுர்ணாம் உபதேச க்ருத -என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வாரைக் கொண்டு அத்திரு நகரியில் திருப் புளி ஆழ்வார் அடியிலே தானே ஸ்ரீ நாத முனிகளுக்கு இந்த க்ரமத்திலே
ரஹஸ்ய த்ரய உபதேசத்தை திவ்ய பிரபந்த உபதேச சிரஸ்கமாகப் பண்ணுவித்து பின்னையும் அப்படியே

அந்த ஸ்ரீ நாத முனிகளைக் கொண்டு ஸ்ரீ உய்யக் கொண்டார் தொடக்கமானவர்க்கும் –
ஸ்ரீ உய்யக் கொண்டாரைக் கொண்டு ஸ்ரீ மணக்கால் நம்பி தொடக்கமானவர்க்கும்
ஸ்ரீ மணக்கால் நம்பியைக் கொண்டு ஸ்ரீ ஆளவந்தார் தொடக்கமானவர்க்கும்
ஸ்ரீ ஆளவந்தாரைக் கொண்டு ஸ்ரீ பெரிய நம்பி தொடக்கமானவர்க்கும்
ஸ்ரீ பெரிய நம்பியைக் கொண்டு ஸ்ரீ உடையவருக்கும் இந்த க்ரமத்திலே ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து
பின்னையும் அப்படியே ஸ்ரீ உடையவரைக் கொண்டு ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் முதலான எழுபத்து நாலு முதலிகளுக்கும்
ஸ்ரீ எம்பார் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தொடக்கமான ஏழு நூறு ஜீயர்களுக்கும்
மற்றும் அநேக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் இந்த க்ரமம் தப்பாமே ரஹஸ்ய த்ரய உபதேசத்தைப் பண்ணுவித்து –
பின்னையும் அப்படியே ஸ்ரீ உடையார் தாம் தரிசனத்தை நிர்வஹித்துக் கொண்டு போரா நிற்கிற காலத்திலே

ப்ரீத்யா ப்ருதக் ப்ருதக் சிஷ்ய ப்ரணமேதீஸ் வராதி-ஸ்வார்யாத்யாந் யாவதாஜ் ஞாதும் ஸக்யந்தாவ தநுஸ்மரேத்-என்றும்
ப்ரத்யஹம் பிரணதைஸ் சிஷ்யை ப்ரபாதே பத்ம சம்பவ தத்யதா விதிவந் நித்யம் ப்ராவக்த வ்யங்குரோ குலம் -என்கிறபடியே –
இம்மூன்று வாக்யத்துடனே -ஸ்ரீ மதே ராமாநுஜாய நம-என்கிற வாக்யம் தொடங்கி -ஸ்ரீ தராய நம -என்கிற வாக்யத்து அளவான
பத்து வாக்யத்தையும் சேர்த்து பதின்மூன்று வாக்யமாக்கி
அஸ்மத் குருப்யோ நம- அஸ்மத் பரம குருப்யோ நம -அஸ்மத் சர்வ குருப்யோ நம -ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -ஸ்ரீ பராங்குச தாசாய நம
ஸ்ரீ மத் யமுன முநயே நம -ஸ்ரீ ராம மிஸ்ராய நம -ஸ்ரீ புண்டரீகாஷாய நம -ஸ்ரீ மத் நாத முநயே நம -ஸ்ரீ மதே சடகோபாய நம
ஸ்ரீ மதே விஷ்வக் ஸேனாய நம -ஸ்ரீ ரியை நம -ஸ்ரீ தராய நம –
இத்தை மேலோரான நம் ஆச்சார்யர்கள் தந்தாமுக்கும் தஞ்சமாக அனுசந்திப்பதும் தந்தமை ஆஸ்ரயித்தாருக்கும் உபதேசிக்கவும்
செய்யக் கடவர்கள் என்று தாமே ஸ்ரீ ஆழ்வானைக் கொண்டு நியமித்து அருளி
இப் புடைகளிலே சேதன ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கியும் புஷ்பிதமாக்கியும் பலபர்யந்தம் ஆக்கியும்
செய்ததுவாய்த்த செல்வனாய் -துளக்கற்ற அமுதமாய் -விஜ்வர பிரமுமோத ஹா -என்கிறபடியே-
உள் வெதுப்பு தீர்ந்து நிவ்ருத்தனாய் இருந்தான்

அந்வ யாதபிஸை கஸ்ய சம்யங் ந்யஸ்தாத் மநோ ஹரவ் -சர்வ ஏவ ப்ரமுஸ்யேரந்நரா பூர்வே பரே ததா -என்றும் –
அர்வாஞ்சோ யத்பத சரஸிஜ த்வந்த்வ மாஸ்ரித்ய பூர்வே மூர்த் நாயஸ் யாந்வயமுபகதா தேசிகா முக்திமாபு -என்றும் சொல்லுகிறபடியே
முன்புள்ள முதலிகளுக்கும் பின்புள்ள முதலிகளுக்கும் ஓக்க உத்தாரகரான ஸ்ரீ உடையவர் சர்வஞ்ஞராய் இருக்கச் செய்தேயும்-
ததாபி சமயாசாரம் ஸ்தாபயந் சாம்ப்ரதாயிகம் -என்கிறபடி தமக்கு சத் சம்பிரதாய பரி ஸூத்தி உண்டு என்னும் இடம் தோற்ற
அஸ்மத் குருப்ய இத்யாதி வாக்ய த்ரயத்தையும் தாம் அநுஸந்திக்கும் போது முந்தின வாக்கியத்தில் குருபத ப்ரதிபாத்யர்
ஸ்ரீ பெரிய நம்பி என்றும் அதில் பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ திருக் கச்சி நம்பியும் ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாளும் என்றும் –
இரண்டாம் வாக்கியத்தில் பரம குரு ப்ரதிபாத்யர் ஸ்ரீ ஆளவந்தார் என்றும் –
அதில் பஹு வசன ப்ரதிபாத்யர் தத் சப்ரஹ்மசாரிகளான பெரியோர்கள் என்றும்
மூன்றாம் வாக்கியத்தில் குருபத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ மணக்கால் நம்பி தொடக்கமான
மேலோர் எல்லாரும் என்று கண்டு கொள்வது –

அப்படியே ஸ்ரீ உடையவருக்கு முன்புள்ள முதலிகளில் வைத்துக் கொண்டு ஸ்ரீ பெரிய நம்பி இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
முந்தின வாக்கியத்தில் குருபத ப்ரதிபாத்யர் ஸ்ரீ ஆளவந்தார் என்றும் –
இரண்டாம் வாக்கியத்தில் பரம குரு ப்ரதிபாத்யர் ஸ்ரீ மணக்கால் நம்பி என்றும் -இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர்
இவர்களுக்கு குரூபசத்தியிலே ருசியை ஜெநிப்பித்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் -அவர்களோடே சங்கதியை யுண்டாக்கின சர்வேஸ்வரன் என்றும் –
மூன்றாம் வாக்கியத்தில் குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ உய்யக் கொண்டார் தொடங்கி
ஸ்ரீ யப்பதி அளவாய் உள்ள அனைவரும் என்று கண்டு கொள்வது –

அப்படியே ஸ்ரீ ஆளவந்தார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது குருபத ப்ரதிபாத்யர் ஸ்ரீ மணக்கால் நம்பி என்றும் –
த்விதீய வாக்கியத்தில் பரம குரு ப்ரதிபாத்யர் ஸ்ரீ உய்யக் கொண்டார் என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதா சம்பவம் இதில் ருசியைப் பிறப்பித்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் சர்வேஸ்வரனும் என்றும்
மூன்றாம் வாக்கியத்தில் குரு பாத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ மன் நாத முனிகள் தொடங்கி
ஸ்ரீ தரன் அளவாயுள்ள அனைவரும் என்று கண்டு கொள்வது –

அப்படியே ஸ்ரீ மணக்கால் நம்பி இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது பிரதம த்வதீய வாக்யஸ்த குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் –
ஸ்ரீ உய்யக் கொண்டாரும் ஸ்ரீ மன் நாதமுனிகளும் என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதாசம்பவம் இத்தை இசைவித்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் சர்வேஸ்வரனும் என்றும் –
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ ஆழ்வார் தொடக்கமான எல்லாரும் என்று கண்டு கொள்வது –

அப்படியே ஸ்ரீ உய்யக் கொண்டார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம -பிரதம த்வதீய வாக்யஸ்த
குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் – ஸ்ரீ மன் நாதமுனிகளும் ஸ்ரீ ஆழ்வாரும் என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதாசம்பவம் இத்தை இசைவித்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் -பெரியோர்களும் -சர்வேஸ்வரனும் என்றும் –
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ சேனை முதலியார் தொடக்கமான
மேலோர் அனைவரும் என்று கண்டு கொள்வது –

அப்படியே ஸ்ரீ மன் நாதமுனிகள் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம -பிரதம த்வதீய வாக்யஸ்த
குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் – ஸ்ரீ ஆழ்வாரும் ஸ்ரீ சேனை முதலியாரும் என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் யதாசம்பவம் இத்தை இசைவித்த-தத் சம்பந்த கடகரான –
ஸ்ரீ வைஷ்ணவர்களும் -பெரியோர்களும் -சர்வேஸ்வரனும் என்றும் –
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ பிராட்டியாரும் ஸ்ரீ எம்பெருமானும்
மற்றும் அங்குள்ள அனைவரும் என்று கண்டு கொள்வது –

அப்படியே ஸ்ரீ ஆழ்வார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம -பிரதம த்வதீய வாக்யஸ்த
குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் – ஸ்ரீ சேனை முதலியாரும் என்றும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் -என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் இவ்விருவருக்கும் உயிர் நிலையாய் இருப்பார் சிலர் என்றும் –
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் ஸ்ரீ எம்பெருமானும் வ்யூஹமும் விபவமும்
நித்ய ஸூரி களும் என்றும் கண்டு கொள்வது –

அப்படியே ஸ்ரீ சேனை முதலியார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம -பிரதம த்வதீய வாக்யஸ்த
குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் – ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ விஷ்ணு அவதாரமான எம்பெருமான் -என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் -அவளுக்கு ஸ்தந பாஹு த்ருஷ்ட்டி ஸ்தாந னீயரான மற்றைப் பிராட்டிமார்களும்
இவ்விருவருக்கும் உயிர் நிலையாய் இருப்பார் -இவர் அடிமை கொள்ளும் மற்றைய சிலர் என்றும் – –
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் இவ்வாதாரங்களுக்கு நாற்றங்காலான ஸ்ரீ ஷீரார்ணவ நிகேதனனும்
மற்றும் உள்ள வ்யூஹமும் விபவமும் ஸ்வேதா தீப வாசிகளும் என்றும் இப்புடைகளிலே இவற்றுக்குப் பொருள் சொல்லக் கடவது

அப்படியே ஸ்ரீ பெரிய பிராட்டியார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது ஆதி மத்யம -பிரதம த்வதீய வாக்யஸ்த
குரு பரமகுரு பத ப்ரதிபாத்யர் – ஸ்ரீ விஷ்ணு அவதாரமான எம்பெருமான் தானும்
அவ்வவதார கந்தமான ஸ்ரீ வ்யூஹ வாஸூ தேவனும் -என்றும் –
இரண்டிலும் பஹு வசன ப்ரதிபாத்யர் -இவ்விருவருக்கும் உயிர் நிலையாய் இருப்பார் -இவர் அடிமை கொள்ளும்
ஸ்ரீ பெரிய திருவடி தொடக்கமான மற்றைய சிலர் என்றும் – -சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்த கள் என்றும்
த்ருதீய வாக்யஸ்த குரு பத சர்வ சப்த பஹு வசன ப்ரதிபாத்யர் வான் இளவரசு வைகுண்ட குட்டனும் ஓடும் புள்ளேறிப் படியே
இச்சேதனனுக்காக அவ்விபூதியிலே அவன் பரிக்ரஹிக்கும் சில அவதாரங்களும் நித்ய சித்தரும்
என்றும் யதாசம்பவம் இப்புடைகளிலே இவற்றுக்குப் பொருள் சொல்லக் கடவது

பிரதம அவதாரமான ஸ்ரீ விஷ்ணு அவதாரமும் அவ்வவதார கந்தமான பாற் கடலுள் பையத் துயின்ற பரமனும் –
நிதானமான ஸ்ரீ வைகுண்ட நாட்டில் இருக்கும் ஸ்ரீ பர வாஸூ தேவனும் தர்மி ஐக்யத்தாலே பேதம் இன்றிக்கே
ஏக தத்வமாய் இருந்தார்களே ஆகிலும் -ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும் ஸ்ரீ பெருமாளுக்கும் தர்மி ஐக்கியம் இருக்கச் செய்தே –
ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -என்று விக்ரஹ பேதத்தாலே உப கந்தவ்ய உப கந்த்ருத்வங்களை சொன்னவோ பாதி
இவ்விடத்திலும் விக்ரஹ பேதத்தை இட்டு இம்மூவருக்கும் இங்கன்-குருத்வ -பரம குருத்வ -சர்வ குருத்வங்களை சொல்லக் குறை இல்லை

ஸ்ரீ உடையவருக்கு பின்புள்ள முதலிகளில் வைத்துக் கொண்டு -ராமானுஜ பதாச்சாயா -என்னும்படி அவர் திருவடிகளில் ஆஸ்ரயித்து
அவருக்கு நிழலும் அடிதாறுமாய்க் கொண்டு குரு பரம்பரா அனுபிரவிஷ்டரான ஸ்ரீ எம்பார் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
குரு பரம குரு சர்வ குரு பாத பஹு வசன ப்ரதிபாத்யர் கோபலீ வர்க்க ந்யாயத்தாலே ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும்
ஸ்ரீ அனந்தாழ்வானும் அவர்களுக்கு அபிமதராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும் என்று இங்கனே விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது –

அப்படியே ஸ்ரீ எம்பார் திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ பட்டர் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
குரு பரம குரு சர்வ குரு பாத பஹு வசன ப்ரதிபாத்யர் அடைவே ஸ்ரீ எம்பாரும் ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும்
ஸ்ரீ அனந்தாழ்வானும் அவர்களுக்கு அபிமதராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும் என்று
இங்கனே பூர்வம் போலே விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது –

பின்னையும் அப்படியே ஸ்ரீ பட்டர் திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ நஞ்சீயர் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
குரு பரம குரு சர்வ குரு பாத பஹு வசன ப்ரதிபாத்யர் அடைவேஸ்ரீ பட்டரும் ஸ்ரீ எம்பாரும் ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும்
ஸ்ரீ அனந்தாழ்வானும் அவர்களுக்கு அபிமதராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும் என்று இங்கனே
பூர்வம் போலே யதா சம்பவம் விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது –

பின்னையும் அப்படியே ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ நம்பிள்ளை இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
குரு பரம குரு சர்வ குரு பாத பஹு வசன ப்ரதிபாத்யர் அடைவே ஸ்ரீ நஞ்சீயரும் ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ எம்பாரும் ஸ்ரீ பிள்ளானும்
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ அனந்தாழ்வானும் அவர்களுக்கு அபிமதராய் இருந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-
ச ப்ரஹ்மசாரிகளாய் பஹு மந்தவ்யராய் இருந்துள்ள ஸ்ரீ ராமானுஜனைத் தோளும் பெரியோர்கள் என்று
இங்கனே பூர்வம் போலே யதா சம்பவம் விபஜித்துப் பொருள் சொல்லக் கடவது –

இக் குரு பரம்பரை தான் ஆரோஹ க்ரமத்திலே ஆ பகவதத்த-என்று ஸ்ரீ பகவான் அளவும் சென்று அவர்களுக்குச் செல்லக் கடவது ஓன்று –
இங்கனே இருந்தாலும் அவரோஹ க்ரமத்திலே வந்தால் ஸ்ரீ ராமானுசனைத் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி இத்யாதிப்படியே
மேன்மேல் கொழுந்து விட்டுப் படர்ந்து செல்லக் கடவது ஓன்று ஆகையால்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளையும் அவர் திருவடிகளை ஆஸ்ரயித்த
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் தொடக்கமானாரும் இவ்வாக்கிய த்ரயத்தை அநுஸந்திக்கும் போது
குரு பரம குரு சர்வ குரு பாத ப்ரதிபாத்யர் அடைவே இன்னார் இன்னார் என்ற இடமும் ஆச்சார்யர்களுடைய திரு நாமங்களில் கண்டு கொள்வது
அப்படியே பஹு வசன ப்ரதிபாத்யர் அவர்களுக்கு உயிர் நிலையாய் தத்தமக்கு பஹு மந்தவ்யராய்க் கொண்டு
கொடியைக் கொள் கொம்பிலே துவக்கும் சுள்ளிக் கால் போலே தம்தாமை அவர் அவர்கள் திருவடிகளில் சேர்க்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று கண்டு கொள்வது –

இனி ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -இத்யாதி வாக்ய தசகத்திலும் வைத்துக் கொண்டு -ஸ்ரீ யை நம -ஸ்ரீ தராய நம -என்கிற வாக்ய த்வயத்தில் –
ஸ்ரீ ரிதி பிரமம் நாம லஷ்ம்யா -என்று ஸ்ரீ ரித்யே வசநாமதே -என்றும் சொல்லுகையாலே
ஸ்ரீ சப்தம் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வாசகமாய் இருக்கும் -மற்றை எட்டு வாக்யத்திலும்
ஸ்ரீ சப்தம் நஜ்ஞான துல்யம் தநமஸ்தி கிஞ்சித் -என்றும் பகவத் பக்திரே வாத்ர ப்ரபந்நா நாம் மஹத் தநம்-என்றும் சொல்லுகையாலே
ஞான பக்திகளாகிற மஹா சம்பத்துக்கு வாசகமாய் இருக்கும்

இதில் சில வாக்கியங்களில் ஸ்ரீ சப்தம் ச விபக்திக மதுப் ப்ரத்யயோ பேதமாயும் -சில வாக்கியங்களில் லுப்தா விபக்திக மது ப்ரத்யயோ பேதமாயும் –
சில வாக்கியங்களில் மது ப்ரத்யய ரஹிதமாயும் இங்கன் வைரூப்யேண நிர்த்தேசிகைக்கு நிபந்தம்-
சிலருடைய ஞான பக்திகள் விசத தரங்களாய் -சிலருடைய ஞான பக்திகள் விசதங்களாய் இருக்கையாலே -அது எங்கனே என்னில்
ஸ்ரீ பங்கயத்தாள் திருவடியைப் பற்றின ஸ்ரீ சேனை முதலியார் உடையவும் அவர் திருவடிகளை பற்றின ஆழ்வார் உடையவும்
அவர் திருவடி பணிந்து உய்ந்த ஸ்ரீ உடையவர் உடையவும் ஞான பக்திகள் விசத தமங்களாய் இருக்கும்
ஸ்ரீ திருக் குருகூர் நம்பிக்கு நண்பரான ஸ்ரீ மன் நாதமுனிகள் உடையவும் -தத் விஷயீ கார பாத்திர பூதரான
ஸ்ரீ யமுனைத் துறையவர் உடையவும் ஞான பக்திகள் விசத தரங்களாய் இருக்கும்
சீல மிகு ஸ்ரீ மன் நாதமுனி சீர் உரைக்கும் பிரிய சிஷ்யரான ஸ்ரீ உய்யக் கொண்டார் உடையவும்
தத் சிஷ்யரான ஸ்ரீ மணக்கால் நம்பி உடையவும் தத் பிரியா சிஷ்யரான ஸ்ரீ பெரிய நம்பி உடையவும்
ஞான பக்திகள் விசதங்களாய் இருக்கும் –

இவர்களுடைய ஞான பக்திகள் ஏக ரூபமாய் இராதே இங்கன் தர தம பாவேந இருக்கைக்கு ஹேது என் என்னில்
ஸ்ரீ சேனை முதலியார் உடையவும் ஸ்ரீ நம்மாழ்வார் உடையவும் ஞான பக்திகள் தாம் -பிரபத்தி மார்க்கத்தை ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதையில்
பரக்கத் தர்சிப்பிக்கைக்கும் -பிரபத் தவ்யனான ஸ்ரீ எம்பெருமான் படிகளை உள்ளபடி அனைவருக்கும் அறிவிக்கைக்கும் –
அப்படியே -ப்ரியேண சேநாபதி நாந்வேதி தத் தத் அநு ஜானந்தம் உதார வீக்ஷணைஎன்று மதிப்புடையார் சொல்லும்படிக்கும்
அவன் அடியாகப் பிறந்தவையாய் இருக்கையாலும்-ஸ்ரீ திருவாய் மொழி முகத்தாலே-தந்தான் தன தாள் நிழலே–
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே -என்றும் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
பிரபத்தி மார்க்கத்தைப் பல படியாலும் தம்முடைய யுக்தி அனுஷ்டானங்களாலே ஸ்பஷ்டம் ஆக்குகைக்கும் –
உயர்வற உயர் நலம் உடையவன் -மயர்வற மதிநலம் அருளினன் -தேவர்க்கும் தேவாவோ -என்று பிரபத்தவ்யனுடைய படிகளைப்
பத்தும் பத்தாக ஏற்றி எடுக்கைக்கும்
உம்முயிர் வீடு உடையான் -யானே நீ என்னுடைமையும் நீயே -தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் -என்று பிரபத்தாவின்
படிகளைப் பல வகையாகப் பிரகாசிப்பைக்கும்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த -கொண்ட என் காதல் உரைக்கில் தோழி மண் தினி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும்
கழியப் பெரிதால் -சூழ்ந்து அதனில் பெரிய அவா -என்று பிராட்டிமார் பேச்சாலும் தம் பேச்சாலும்
தம்முடைய ஆற்றாமையை அறிவிக்கைக்கும் உறுப்பாய் இருக்கையாலும் விசத தமங்களாய் இருக்கும்

ஸ்ரீ உடையவருடைய ஞான பக்திகள் -பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா -என்று தாமும் –
அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹத -என்று ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்யலாம் படி அவன் அடியாகப் பிறந்தவையாய் –
ஸ்ரீ கத்யத்ரய ஸ்ரீ பாஷ்யாதி முகத்தால் சரணாகதி பக்தி சாஸ்திரங்களை அடைவே வெளியிடுகைக்கும்
அவ்வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே -என்கிறபடியே தம்முடைய தாதாத்விக பிரதிபையாலே
பிரதிவாதி வாரண பிரகடாடோப விபாட நத்துக்கும்
நூறு தடாவில் வெண்ணெயையும் நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலையும் ஸ்ரீ நாச்சியார் மநோ ரதித்த படியே
பரம ஸ்வாமியான ஸ்ரீ அழகருக்கு தாம் அமுது செய்து அருளப் பண்ணுகைக்கும்
துருஷ்கன் படை வீட்டிலே சென்று அவன் மக்கள் மாளிகையில் இருந்த ஸ்ரீ ராமப்ரியரை -வருக வருக வருக இங்கே இத்யாதிப்படியே
தாமே அழைத்து அருளி அவர் தம் அருகே ஓடி ஓடி வந்தவாறே -என் செல்வாய் பிள்ளாய் வாராய் -என்று அவருக்குத் திரு நாமம் சாத்தித்
தம் திரு மார்பிலே அணைத்துக் கொள்ளுகைக்கும் –
புழுவன் பட்ட வ்ருத்தாந்தத்தைத் திருக் கல்யாணிக் கரையிலே தம் சந்நிதியில் சென்று ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதி ஆண்டான்
விண்ணப்பம் செய்யக் கேட்டு பெரிய ப்ரீதியோடே செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரான ஸ்ரீ பெரிய பெருமாளை
மங்களா சாசனம் பண்ணுவதாகக் கோலி ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளும் போது தாமே ஐம்பத்து இருவரைச் செயல் நன்றாகத் திருத்தி
தத் விஷயத்திலே பரிவராய் இருக்கும்படி நியமிக்கைக்கும்
கரை கட்டாக் காவேரி போலே கரை புரண்டு ஆஸ்ரயித்து அளவு அன்றிக்கே இருக்கைக்கு உடலாய் இருக்கையாலே
விசத தமங்களாய் இருக்கும்

ஸ்ரீ மத் நாத முனிகளுடையவும் ஸ்ரீ ஆளவந்தார் உடையவும் ஞான பக்திகள் இங்கனே விஸ்ருங்கலமாய்க் கரை புரண்டு இராதே
அளவு பட்டு அரையாறு பட்டுத் தம் தாமை ஆஸ்ரயித்தார் அளவில் தானே அடங்கி ஓன்று இரண்டு பிரபந்தங்களை
இட்டு அருளுகைக்கு உடலாய் இருக்கையாலே விசத தரங்களாய் இருக்கும்

ஸ்ரீ உய்யக் கொண்டார் உடையவும் ஸ்ரீ மணக்கால் நம்பி உடையவும் ஸ்ரீ பெரிய நம்பி உடையவும் ஞான பக்திகள்
கீழ்ச் சொன்னபடி இராதே சினையாறு பட்டுப் பரிமதங்களாய் இருக்கையாலே விசதங்களாய் இருக்கும்

இப்பதின் மூன்று வாக்யங்களிலும் முந்தின வாக்கியங்கள் மூன்றும் வேதம் ஆகிற சாஸ்த்ர ருசி பரிக்ருஹீதங்களாய் இருக்கும் –
மற்றை வாக்கியங்கள் பத்தும் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதங்களாய் இருக்கும் –

அபவ்ருஷேயமாயும்-பவ்ருஷேயமாயும் இருக்கிற ரஹஸ்ய த்ரயத்துக்கு ஏகாவயவித்வம் சொன்னவோ பாதி இப்படி
அபவ்ருஷேயமாயும் பவ்ருஷேயமாயும் இருந்துள்ள இப்பதின் மூன்று வாக்யத்துக்கும் ஏகாவயவித்வம் சொல்லத் தட்டில்லை–
அப்படியே நமருஷிப்ய -என்று அபவ்ருஷேயமானாப் போலே நமஸ் சப்தம் முன்னாக இவ்வாக்கிய த்ரயத்தையும் நிர்த்தேசியாதே
அஸ்மத் சப்தம் முன்னாக நிர்த்தேசித்து-அகில புவன ஜென்ம -என்கிற இடத்தில் மாங்களிகமான அகாரத்தைப் போலே
மாங்களிகமான அகார உபக்ரம சித்யர்த்தமாக அஸ்மத் சப்தத்தை முன்னிட்டு நிர்த்தேசித்தவோபாதி மற்றை இரண்டு வாக்கியங்களையும்
அஸ்மத் சப்தத்தைத் தானே முன்னிட்டு நிர்த்தேசித்தது-சந்நோ மித்ரஸ் சம் வருண-சந்நோ பவத் வர்யமா-என்னுமா போலே –

த்ரயோதச வாக்யாத்மகமான இக்குரு பரம்பரா ரூப மந்த்ரம் தான் ஸ்ரீ சஹஸ்ர நாம மாலா மந்த்ரம் போலே அநேக நமஸ் சப்த சரீரகமாய் –
ஸ்ரீ த்வார சேஷிகளுக்கும் ஸ்ரீ பிரதான சேஷிகளுக்கும் அடைவே ப்ரதிபாதகமாய் -பிரதம -மத்திய -சரம -அவதி ரூபமான பர்வத த்ரய ப்ரகாசகமாய் –
உபதேஷ்ட்ரு -உபதேச -உபதேஸ்ய-ரூப மூன்று வர்க்கத்துக்கும் சாம்ப்ரதாயிகத்வ சாத் குண்ய யோக்யதைகளுக்கும் சம்பாதகமாய்
வக்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -என்கையாலே ஸ்ரீ த்வயத்தோ பாதி சதா அனுசந்தேயமாய் –
தன்னை முன்னிட்டு ரஹஸ்ய த்ரயத்தை அனுசந்திப்பாரை
நாவ காரியம் சொல் இல்லாதவர் -என்று மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் கொண்டாடும்படி பண்ணக் கடவதாய்
அஸ்மத்-என்று அகாராதியாக உபக்ராந்தமாய்-அப்படியே ஸ்ரீ நமஸ் சப்தங்களைப் பல இடங்களிலும் இடையிலே உடைத்தாய்
ஸ்ரீ தராய நம -என்று மாங்களிகமான நமஸ் சப்தத்தோடு நிகமிக்கப் பட்டதாய் இருக்கையாலே கார்த்ஸ்ந்யேந மங்களாத்மகமாய் இருக்கும்

ஸ்ரீ குரு பரம்பரா விவரணம் சம்பூர்ணம் –

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை வைபவங்கள் – –

March 6, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

————————————————

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை வைபவங்கள் –

அநந்தரம் வேதாந்திகளான ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டர் நல்லருள் கொண்டு திருவாய் மொழிக்கு ஒன்பதினாயிரமாக ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியையிலே
ஒரு வ்யாக்யானம் அருளிச் செய்து முற்றப் பட்டோலை கொண்டு இத்தை ஒரு சம்புடத்திலே நன்றாக எழுதித் தர வல்லார் உண்டோ என்று
தம் திருப் பாதத்து முதலிகளைக் கேட்க அவர்களும் தென்கரையினின்றும் ஸ்ரீ நம்பூர் வரதராஜர் என்பார் ஒருவர் பலகாலும் இங்கே வருவர் –
அவர் நன்றாக எழுதுவர் என்று ஸ்ரீ நஞ்சீயருக்கு விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ ஜீயரும் ஸ்ரீ வரதராஜரை அழைப்பித்து ஒரு கிரந்தம் எழுதிக் காட்டிக் கண்ணீர் -என்ன ஸ்ரீ வரதராஜரும் எழுதிக் காட்ட –
ஸ்ரீ ஜீயரும் அத்தைத் திருக் கண் சாத்தி அருளி எழுத்து முத்துப் போலே நன்றாக இருந்தது -ஆகிலும் இது ஸ்ரீ திருவாய் மொழி வியாக்யானம்
ஆகையால் ஒரு விலக்ஷணரைக் கொண்டு எழுதுவிக்க வேண்டுகையாலே திரு இலச்சினை திரு நாமம் மாத்திரம் உண்டான இவரைக் கொண்டு
எங்கனே எழுதுவிப்பது -விசேஷஞ்ஞரைக் கொண்டே எழுதுவிக்க வேணும் இறே என்று சந்தேகிக்க
ஸ்ரீ வரதராஜரும் ஸ்ரீ ஜீயர் திரு உள்ளத்தை அறிந்து அடியேனையும் தேவரீர் திரு உள்ளத்துக்கு வரும்படியே திருத்திப் பணி கொள்ளலாகாதோ என்ன –

அவ்வளவில் ஸ்ரீ ஜீயரும் மிகவும் திரு உள்ளம் உகந்து அப்போதே ஸ்ரீ வரதராஜரை அங்கீ கரித்து அருளி
பஞ்சாஸ் த்ராங்கா – பஞ்ச ஸம்ஸ்கார யுக்தா பஞ்சார்த்த ஞான- பஞ்சம உபாய நிஷ்டா -தேவர்ணானாம் பஞ்சமாஸ் சாஸ்ரமாணாம்-
விஷ்ணோர் பக்தா -பஞ்ச கால பிரபன்னா -என்கிற ஸ்லோகத்தில் சொன்ன பிரபன்ன நிஷ்டை எல்லாம் பூர்ணமாம் படி விசேஷ கடாக்ஷம் செய்து அருளி –
பட்டோலையில் எழுதின ஒன்பதினாயிரத்தையும் முற்ற ஒரு உரு ஸ்ரீ வரதராஜருக்கு அருளிச் செய்து காட்டி அருளி இப்படியே தப்பாமல் எழுதித் தாரும் என்று
பட்டோலையை ஸ்ரீ வரதராஜர் திருக்கையில் கொடுத்து அருள -அவரும் அத்தை வாங்கிக் கொண்டு அடியேன் ஊரில் போய் எழுதிக் கொண்டு வருகிறேன்
என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ ஜீயரும் அப்படியே செய்யும் என்று விட அநந்தரம் ஸ்ரீ வரதராஜர் திருக் காவேரியிலே எழுந்து அருளின அளவிலே
சிற்றிடம் நீஞ்சிப் போக வேண்டுகையாலே பட்டோலையை திரு முடியில் கட்டிக் கொண்டு நீஞ்சிப் போகச் செய்தே ஒரு அலை வந்து அடித்து
கிரந்தம் ஆற்றுக்கு உள்ளே விழுந்து போக ஸ்ரீ வரதராஜரும் அக்கரையில் ஏறி பட்டோலை போய் விட்டதே -இனி நாம் என் செய்யக் கடவோம் என்று
விசாரித்து-ஒரு அலேகத்தை உண்டாக்கிக் கொண்டு
ஸ்ரீ நஞ்சீயர் பிரசாதித்து அருளின அர்த்தம் ஒன்றும் தப்பாமல் ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதி அருளித் தாம் தமிழுக்கு மிகவும் உத்தம விரகர் ஆகையால்-
ஓர் ஒரு பாட்டுக்களிலே -யுக்தார்த்த விசதிகார யுக்தாதாந்தர போதனம் மதம் விவரணந்த்ர மஹிதாமாம் மநீஷினிம்-என்கிறபடியே
உசிதமான ஸ்தலங்களுக்கு பிரசன்ன கம்பீர பதங்களாலே அர்த்த விசேஷங்களையும் எழுதிக் கொண்டு போய் ஸ்ரீ ஜீயர் திருக்கையிலே கொடுக்க

ஸ்ரீ ஜீயரும் ஸ்ரீ கோசத்தை அவிழ்த்துப் பார்த்த அளவிலே தாம் அருளிச் செய்த கட்டளையாய் இருக்கச் செய்தேயும்-சப்தங்களுக்கு மிகவும் அனுகுணமாகப்
பல இடங்களிலும் அநேக விசேஷ அர்த்தங்கள் எழுதி இருக்கையாலே அத்தைக்கு கண்டு மிகவும் திரு உள்ளம் உகந்து அருளி
ஸ்ரீ வரதராஜரைப் பார்த்து -இது மிகவும் நன்றாய் இரா நின்றது இது என் என்று கேட்க -அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாது இருக்க –
ஸ்ரீ ஜீயரும் நீர் பயப்பட வேண்டா உண்மையைச் சொல்லும் என்ன-
ஸ்ரீ வரதராஜரும் -ஸ்ரீ சீயா திருக் காவேரி நீச்சாகையாலே பட்டோலையை அடியேன் தலையிலே கட்டிக் கொண்டு நீஞ்சப் புக்கவாறே
ஒரு அலை வந்து அடிக்கையாலே அது ஆற்றிலே விழுந்து அமிழ்ந்து போயிற்று -இது தேவரீர் ஒரு உரு முற்றப் பிரசாதித்து அருளின
கட்டளையிலே எழுதினேன் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நஞ்சீயரும் -இவருடைய புத்தி விசேஷம் இருந்தபடி என் தான் -இவர் மஹா சமர்த்தராய் இருந்தார் -நன்றாக எழுதினார் என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளி ஸ்ரீ வரதராஜரை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு –
இவர் நம்முடைய பிள்ளை -திருக் கலி கன்றி தாசர் -என்ற திரு நாமம் சாத்தி தம்முடைய சந்நிதியில் அரை க்ஷணமும் பிரியாமல்
வைத்துக் கொண்டு ஸ்ரீ பிள்ளைக்கு சகல அர்த்தங்களையும் கரதலா மலகமாம் படி பிரசாதித்து அருளினார் –
அவரும் ஸ்ரீ ஜீயரை அல்லது தேவி மற்று அறியேன் என்று எழுந்து அருளி இருந்தார் –
ஆகையால் ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ நம்பிள்ளை என்று அருளிச் செய்த அன்று தொடங்கி ஸ்ரீ வரதராஜருக்கு ஸ்ரீ நம்பிள்ளை என்ற திரு நாமம் உண்டாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயரை -இதர உபாயங்களுக்கு பிரமாணமும் பஹுளமாய்-அனுஷ்டாதாக்களும் பலராய் இருக்க –
இதுக்கு பிரமாணமும் சுருங்கி -அனுஷ்டாதாக்களும் சுருங்கி -ருஷிச் சந்தோதி தைவதாதிகளும் அனுசந்தேங்கள் அன்றியே
இருப்பான் என் என்று கேட்க – ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்த படி -இருவர் கூடி ஓர் ஆற்றிலே இறங்கிப் போகா நின்றால்-
ஆற்றில் அமிழ்ந்தவனை அமிழாதவன் கையைப் பிடித்து கரை யேற்றுகைக்கு ஒரு பிராமண அபேக்ஷை வேணுமோ –
பிரமாண அபேக்ஷை உண்டு என்று நினைத்தீர் ஆகிலும் –
முமுஷுர் வை சரணம் அஹம் பிரபத்யே -என்றும்-தஸ்மான் ந்யாஸ மோஷான் தபஸாம் அதிரிக்த மாஹு-என்றும் –
ந்யாஸ இத்யாஹுர் மநீஷினோ ப்ரஹ்மாணம்-என்றும்
நிஷேபா பர பர்யாயோ ந்யாஸ பஞ்சாங்க சம்யுத சந்ந்யாஸஸ் தியாக இதயுக்தஸ் சரணா அதிரித்யபி -என்றும் ஏவமாதி பிரமாணங்கள்
பலவற்றையும் அருளிச் செய்து -பிரமாணங்களில் குறை இல்லை -நான் இவ்வர்த்தத்தில் பிரமாணம் தான் வேண்டாம் என்று இருப்பன் –
அதற்கு அடி -ஒரு குள்ளனும் நெடியனுமாக ஆற்றிலே இழிந்தால் -குள்ளன் அமிழா நின்றால் நெடியவன் கையைப் பிடிக்கும் போது
கரையிலே இருந்து ஒருவன் சொல்ல வேண்டுவது இல்லை இறே -இவனுடைய தர்மி க்ராஹ பிரமாணம் தானே அமையும் இறே –
அவன் கையை அவன் பிடிக்கைக்கு ஒரு விதி வேணுமோ என்று அருளிச் செய்து –

ப்ராஹ்மணோ யஜேத-என்று ஜாதி நிபந்தனமாக சாஸ்திரங்கள் சொன்னாலும் க்வசித் கோணே யஜிப்பார் அற்பமாய் இறே இருப்பது –
ஆகையால் அதிகாரி சுருங்கி இருக்கும் காணும்
இனி ஒரு அதிகாரி சுருக்கம் பார்க்கில் லோகத்தில் இருந்ததே குடியாக சர்வரும் சம்சாரிகளாய் இருக்க அதில் நாலு இரண்டு பேர்
உத்தம ஆஸ்ரமிகள் ஆனால் சம்சாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சன்யாசிகளுக்கு ஒரு அபகரக்ஷமும் உண்டோ -இனி
ஜ்யோதிஷ்டோமே நஸ்வர்காமோ யஜேத-என்று ஸ்வர்க்க அனுபவத்துக்கு சாதனத்தை சாஸ்திரம் விதியா நின்றால்
ஒரு ஊரில் ஒருவன் அன்றோ யஜித்தான் என்று கேட்கிறது-இதுக்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது –
ருஷ்யா தீம்ஸ் சகர ந்யாஸம் அங்கன்யா சஞ்ச வர்ஜயேத்-என்கையாலே -இதுக்கு ருஷ்யாதி அபேக்ஷை இல்லை –
இதில் அர்த்தத்துக்கு கூட்டு வேண்டில் இறே இதற்கும் கூட்டு வேண்டுவது –
இதுவே எனக்கு கருத்து என்று திரு உள்ளமாக ஸ்ரீ பிள்ளையும் க்ருதார்த்தராய் அருளினார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயரைக் குறித்து ஒருவன் தனக்கு ஸ்ரீ வைஷ்ணவத்மம் உண்டு என்று அறியலாவது
எவ்வஸ்தை பிறந்தால் என்ன ஸ்ரீ ஜீயரும்
அர்ச்சாவதாரத்துக்கு பரத்வம் உண்டு என்று அறிந்த அளவிலும் -ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் பக்கல் புத்ர தாராதிகள் பக்கல் உள்ள
ஸ்னேகத்து அளவாகிலும் சிநேகம் பிறந்த அளவிலும்
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கடுத்து வார்த்தை அருளிச் செய்தால் தன் நெஞ்சில் சிவிட்க்குத் தட்டாதே போக ரூபமாய் இருந்த அளவிலும்
ஸ்ரீ வைஷ்ணவத்வம் உண்டு என்று அறியலாம் –
ஆகையால் அர்ச்சாவதார பரத்வ புத்தியும்-பாகவத ப்ரேமமும் -தத் கடிந யுக்தி போக்யதா புத்தியும்
உண்டான போது ஸ்ரீ வைஷ்ணவத்வம் சித்தம் என்கிறது –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயர் திருப் பாதத்தில் ஸ்ரீ பாஷ்யம் வாசித்து அருளா நிற்கச் செய்தே -திருப் போனகம் சமைந்து என்றவாறே –
ஸ்ரீ சொக்கத் தேவரையும் திருவாராதனம் பண்ணும் என்று அருளிச் செய்ய -ஸ்ரீ நம்பிள்ளையும் அடியேன் திருவாராதன க்ரமத்தை
அறிந்தேனோ என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ ஜீயரும் நானோ சால க்ரமம் அறிந்து இருக்கிறேன்-
ஸ்ரீ த்வயத்தில் உத்தர வாக்கியத்தை அனுசந்தித்துத் திருவடி விளக்கி அமுது செய்யப் பண்ண மாட்டீரோ -என்று அருளிச் செய்தார் –
உகந்து அருளின இடங்கள் பல இடமாய்த் திருப் போனகம் படைப்பது ஒன்றிலே யாகில் அமுது செய்து அருளப் பண்ணும் படி
எங்கனே என்று ஸ்ரீ பிள்ளை ஸ்ரீ ஜீயரைக் கேட்க
ஸ்ரீ ஜீயரும் ஸ்ரீ த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களில் இரண்டுக்கும் நடுவே -சர்வ மங்கள விக்ரஹாய -என்கிற விசேஷண ஸஹிதமாக
உச்சரித்து அமுது செய்யப் பண்ணுவது -என்று அருளிச் செய்தார்
இத்தால் உபய கண்ட மத்யே இத்தை உச்சரிக்க அருளிச் செய்தது -கைங்கர்ய வாசக சதுர்த்தியுடன் இச்சதுர்த்தி சேர்ந்து இருக்கைக்காகவும் –
உபய நாராயண பத சித்த விக்ரஹ சமர்ப்பக மாகைக்காகவும்-அநந்ய ப்ரயோஜனத்வ த்யோதன அர்த்தகமாகவும் இறே
இத்தால் நம் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ த்வயம் ஒழிந்த வேறே மந்த்ரம் கொண்டு திருவடி விளக்கார்கள் -என்று கருத்து –

ஸ்ரீ சீயரை ஸ்ரீ பிள்ளை -திரு அவதாரங்கள் ஏதுக்காக என்று கேட்க-ஸ்ரீ ஜீயரும் ஒரோ அவதாரங்களால் பண்ணின
ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பண்ணினவனை அந்தப் பலத்தை அனுபவிப்பைக்காக -என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ பிள்ளையும் பாகவத அபசாரம் தான் எது -என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ ஜீயரும் -ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டக்கால்
தங்களோபாதி ப்ரக்ருதிமான்களாக நினைத்து இருக்கும் புல்லிமை-எங்கனே என்னில் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் -திருவுடை மன்னர்-செழு மா மணிகள் -நிலத்தேவர் -பெரு மக்கள்-தெள்ளியார் -பெரும் தவத்தார் –
உருவடியார் இளையார்கள் நல்லார் -வேதம் வல்லார் -செய்த வேள்வியர் -தக்கார் மிக்கார் -வேத விமலர் -சிறு மா மனுசர்-
எம்பிரான் தன் சின்னங்கள் -பேராளன் பேரோதும் பெரியோர் -என்று இப்படி பலபடியாக மிகவும் விரும்பி -நம் குலா நாதராய் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் பஹுமதி பண்ணித் திரு நாமங்கள் சாத்தி வாய் புலத்தி அருளிச் செய்கையாலே
ஸ்ரீ வைஷ்ணவர்களை தங்களோடு ஒத்த பிரக்ருதிமான்களாக நினைத்து இருக்கை நேரே பாகவத அபசாரம் என்று அருளிச் செய்தார் –
ஆகையால் ஸ்ரீ ஆழ்வார்களும் உட்பட ஸ்ரீ கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரைக் கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே
என்று பஹு மதி பண்ணி விரும்பும் ஸ்ரீ வைஷ்ணவ விஷயத்தில் ஸ்வ சாம்ய புத்தியே அநர்த்த ஹேது இறே

ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பிள்ளையைக் குறித்து பகவத் அனுபவம் பண்ணுமவனுக்கு விஷய அனுபவத்தில் அந்வயம் இல்லை –
இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் பல இடங்களிலும் அருளிச் செய்தார்கள் இறே -எங்கனே என்னில் –
ஸ்ரீ வாஸூ தேவன் வலையுள் அகப்படுதல் -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் உட்படுத்தல் –
மதுரக் கொழும் சாறு கொண்ட ஸூந்தரத் தோளிலே அகப்படுதல் –
சாந்தேந்து மென் முலையார் தடம் தோளிலே அகப்படுதல் -வானவர்க்கு வன் துணையான அரங்கத்து உறையும்
இன் துணைவனைத் துணை என்று இருத்தல் -ஆவியே அமுதே யென நினைந்து உருகி அவரவர் பணை முலை துணை என்று இருத்தல் –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதத்தை பானம் பண்ணுதல் -பாவையர் அமுதத்தைப் பானம் பண்ணுதல் –
நான்கு வேதப்பயனைப் பேணுதல் -மாதரார் வன முலைப் பயனே பேணுதல்
ஒன்றில் இதுவாதல் -ஒன்றில் அதுவாதல் என்று ஏவமாதிகளாலே பஹு முகமாக அருளிச் செய்தார்கள் இறே
ஆகையால் அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் -என்றும்
முந்துற யுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடு -என்று ஸ்ரீ பரகாலனான ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பிரதமம் விஷய ருசியைக்
காறி உமிழ்ந்தே பகவத் ஸமாச்ரயணம் பண்ண வேணும் என்று நிஷ்கர்ஷித்து அருளிச் செய்து அருளுகையாலே –
ஷூத்ர விஷயத்தை ச வாசனமாகப் பரித்யஜித்தே ப்ராப்த விஷயத்தைப் பற்ற வேணும் என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ பிள்ளையும் க்ருதார்த்தராய் ஸ்ரீ ஜீயரை அரை க்ஷணமும் பிரியா அடிமை செய்து கொண்டு வாழ்ந்து அருளும் காலத்திலே
ஸ்ரீ ஜீயர் நூறு உரு ஸ்ரீ திருவாய் மொழிக்கு அர்த்தம் நிர்வகித்து அருளுகையாலே
ஸ்ரீ பிள்ளை ஸ்ரீ ஜீயருக்கு சதாபிஷேகம் பண்ணி அருளினார் என்று பிரசித்தம் இறே

ஸ்ரீ நஞ்சீயர் பக்கலிலும் ஸ்ரீ நம்பிள்ளை பக்கலிலும் சார்வார்த்தங்களும் வந்து குடி புகுருகையாலே
ஸ்ரீ பிள்ளையும் தீபா துத்பன்ன ப்ரதீபம் போலே தர்சனம் நிர்வகிக்க கண்டு ஸ்ரீ ஜீயரும் க்ருதார்த்தராய் இருக்கும் காலத்தில்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ பாதத்தில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை – ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் –
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -முதலான அநேக ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய் இருந்தார்கள் –

இவர்களில் ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் ஊணும் உறக்கமும் இன்றியே ஸ்ரீ பிள்ளை திருவடிகளில் வழுவிலா அடிமை செய்து
கொண்டு வாழ்ந்து அருளும் காலத்தில் ஒருகால் திருமேனி பாங்கு இன்றியே கண் வளர்ந்து அருளுகிற போது தமக்கு அந்தரங்கரான
ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைத்து -அடியேன் இப்போது திருவடி சாராமல் இங்கே இன்னம் சிறிது நாள் இருக்கும்படி
ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் சென்று ஏழை ஏதலனமும்-ஆழி எழ சங்கும் விண்ணப்பம் செய்து பிரபத்தி பண்ணி வேண்டிக் கொள்ளுங்கோள்-என்ன
அவர்களும் அப்படியே செய்து நிற்க ஸ்ரீ ஜீயருக்கு திருமேனி பண்டு போலே பாங்காயிற்று –
இத்தைக் கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ நம்பிள்ளை சந்நிதியில் சென்று தண்டன் சமர்ப்பித்து -ஞான வ்ருத்தருமாய் வ்யோ வ்ருத்தருமாய்
இருக்கும் ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் இப்படிச் செய்தார் -இது இவர் ஸ்வரூபத்துக்குச் சேருமோ -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பிள்ளையும் -அவருடைய அபிப்ராயம் அறிகிலோம் -சகல சாஸ்திரங்களும் போருவது ஸ்ரீ பிள்ளை எங்கள் ஆழ்வானுக்கு ஆய்த்து-
அவர் பக்கலிலே சென்று கேளுங்கோள் என்ன -ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஸ்ரீ எங்கள் ஆழ்வானைக் கேட்க –
அவரும் ஸ்ரீ ரெங்க ஐஸ்வர்யத்திலே சங்கம் போலே காணும் என்ன –
ஸ்ரீ பிள்ளையும் இத்தைக் கேட்டு -அழகிது ஸ்ரீ திரு நாராயண புரத்து அரையரைச் சென்று கேளுங்கோள் என்ன –
அவர்களும் அவரைக் கிட்டிக் கேட்ட இடத்தில் -அவரும் இங்கு துவங்கின கைங்கர்யம் தலைக்கட்டாமையாலே காணும் என்ன –
ஸ்ரீ பிள்ளை இத்தையும் கேட்டு -ஸ்ரீ அம்மங்கி அம்மாளைக் கேளுங்கோள் என்ன –
அவரும் ஸ்ரீ பிள்ளை கோஷ்ட்டியில் இருந்து ஸ்ரீ பகவத் விஷயம் கேட்க்கிறவர்களுக்கும் ஒரு தேச விசேஷம் ருசிக்குமோ -என்ன –
ஸ்ரீ பிள்ளையும் கேட்டு நல்லது என்று விட்டு ஸ்ரீ அம்மங்கி பெரிய முதலியாரைக் கேளுங்கோள் என்ன-
அவரும் -ஸ்ரீ நம்பெருமாள் சிவந்த திரு முக மண்டலமும் கஸ்தூரித் திரு நாமமும் ஸ்ரீ பரமபதத்தில் கண்டிலேன் ஆகில் ஒரு மூலையடியே
முறித்துக் கொண்டு வருவேன் என்று அன்றோ ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தது –
அப்படியே இவரும் ஸ்ரீ நம்பெருமாள் சிவந்த திரு முக மண்டலத்தையும் திரு நுதலில் கஸ்தூரித் திரு நாமத்தையும்
விட்டுப் போக மாட்டாராக வேணும் என்றார் –

ஸ்ரீ பிள்ளை இவற்றை எல்ல்லாம் திரு உள்ளம் பற்றி அருளி ஸ்ரீ ஜீயர் திரு முக மண்டலத்தைப் பார்த்து சிரித்து –
இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ என்ன –இவை அத்தனையும் அன்று என்று விண்ணப்பம் செய்ய –
ஆகில் உம்முடைய அபிப்ராயத்தை நாம் அறிந்தோம் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்ய –
ஸ்ரீ ஜீயர் -தேவரீர் சர்வஞ்ஞர் ஆகையால் அறிந்து அருளாதது இல்லை -அடியேனைக் கொண்டு வெளியிடத்
திரு உள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்
திருமஞ்சனச் சாலைக்கு எழுந்து அருளித் தேவரீர் திருமஞ்சன முறைகளில் திருமஞ்சனம் கொண்டு அருளித் தூய யுடையாடித்
திரு உத்தரீயம் சாத்தி அருளி உலாவி அருளும் போது குறு வேர்ப்போடு கூடின திரு முக மண்டலச் செவ்வியையும் அடியேன்
சுற்றிச் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு அடியேனுக்கு ஸ்ரீ பரமபதத்துக்குப் போக இச்சையாய் இருந்தது இல்லை –
பெரும் முக உல்லாசமும் இன்னம் சிறிது காலம் இங்கே இருந்து பெற வேணும் என்று நினைத்துச் செய்தேன்-என்று விண்ணப்பம் செய்தார் –
இத்தைக் கேட்டருளி ஸ்ரீ பிள்ளையும் முதலிகளும் -இவ்வுடம்போடே இவ்வைஸ்வர்யம் கூடுவதே-என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளினார்கள் –

ஒருநாள் ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ பகவத் விஷயம் அருளிச் செய்து கோஷ்டி கலைந்த அளவிலே ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் ஸ்ரீ பிள்ளை திருவடிகளில்
தண்டன் சமர்ப்பித்து இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் இவை என்று அருளிச் செய்ய வேணும் -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பிள்ளையும் இச்சை ஸ்வரூபம் -இரக்கமே உபாயம் -இனிமை உபேயம் என்று அருளிச் செய்ய
அப்படி அன்று அடியேன் நினைத்து இருப்பது என்று விண்ணப்பம் செய்ய –ஸ்ரீ ஜீயரும் -ஆகில் உமக்கு என்று
சில பிள்ளைக் கிணறுகள் உண்டோ -நீர் எங்கனே நினைத்து இருப்பது -அத்தைச் சொல்லிக் கண்ணீர் -என்ன
தேவரீர் திருவடிகளே தஞ்சம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமையாய் இருக்கையை அடியேனுக்கு ஸ்வரூபம் –
அவர்களுடைய அபிமானமே அடியேனுக்கு உபாயம் -அவர்களுடைய முக மலர்த்தியே அடியேனுக்கு உபேயம் என்று இருப்பன் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ஜீயரையும் ஸ்ரீ பிள்ளை போரப் பிரியப்பட்டு அருளினார் –

ஒரு கால் ஸ்ரீ பிள்ளை ஸ்ரீ பகவத் விஷயம் அருளிச் செய்து கோஷ்டி கலைந்து போகா நிற்கச் செய்தே-
ஸ்ரீ வைஷ்ணவானாய் இருப்பான் ஒரு ராஜா வருகிற பெரும் திரளைக் கண்டு ஸ்ரீ நம் பெருமாள் திருலோக்கம் கலைந்ததோ –
ஸ்ரீ நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ என்று கேட்டான் என்பார்கள்
இப்படி மஹா சம்ருத்தமான ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீயோடே ஸ்ரீ நம்பிள்ளை வாழ்ந்து அருளும் காலத்தில் ஸ்ரீ முதலியாண்டான் திருப்பேரனாய்
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருக்குமாரரான ஸ்ரீ கந்தாடை தோழப்பர் ஸ்ரீ நம்பிள்ளையுடைய பெரு மதிப்பையும் வைபவத்தையும் கண்டு
அஸூ யாளுவாய் பொறுக்க மாட்டாமல் இருக்குமவர் -ஒரு நாள் ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ பெருமாளை சேவித்துக் கொண்டு
இருக்கும் அளவிலே ஸ்ரீ பிள்ளையும் முதலிகளுமாய் பெரும் திரளாக ஸ்ரீ பெருமாளை சேவிக்க என்று ஸ்ரீ கோயிலுக்கு உள்ளே எழுந்து அருள
ஸ்ரீ தோழப்பர் ஸ்ரீ பிள்ளையுடைய பெருமையைக் கண்டு பொறுக்க மாட்டாமல் சீறிப் பகவத் சந்நிதியில் ஸ்ரீ நம்பிள்ளையைப் பஹு வாகப்
பருஷ யுக்திகளை சொல்லி அநேகமாக நிந்திக்க -ஸ்ரீ பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக் கொண்டு ஸ்ரீ பெருமாளை சேவித்துப் புறப்பட்டு
எழுந்து அருள-இச் செய்தியை ஞானாதிகையாய் இருக்கிற ஸ்ரீ தோழப்பர் திருத் தேவிகள் கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத்
திரு மாளிகைக்குள் செய்கிற கைங்கர்யங்களையும் செய்யாமல் விட்டு வெறுத்து எழுந்து அருளி இருக்க

அவ்வளவில் ஸ்ரீ தோழப்பரும் ஸ்ரீ பெருமாளை சேவித்து மீண்டு தம் திரு மாளிகையில் எழுந்து அருள –
ஸ்ரீ தேவிகளும் முன்பு போலே எதிரே புறப்பட்டு வந்து ப்ரீதியுடன் தமக்கு ஒரு கைங்கர்யமும் பண்ணாமையாலே ஸ்ரீ தோழப்பர்
தம் திருத்த தேவியாரைப் பார்த்து -உன்னை நாம் அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்று அளவாக நம்மைக் கண்டால் ஆச்சார்ய பிரதிபத்தி
பண்ணிக் கொண்டு போந்தாய்-இன்று உதாசீனம் பண்ணி இருந்தாய் -இதற்கு அடி என் என்று கேட்டு அருள –
திருத் தேவியாரும் ஸ்ரீ தோழப்பரைப் பார்த்து -வாரீர் ஸ்ரீ ஆழ்வாருடைய திரு அவதாரம் என்னலாம் படி ஒரு அவதார விசேஷமாய்
ஸ்ரீ பெருமாளுக்குப் பிராண பூதருமாய் இருந்துள்ள ஸ்ரீ நம்பிள்ளையை ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் கூசாமல் அநேகமாக பருஷ யுக்திகளைப்
பண்ணித் தூஷித்து -இப்படி செய்தோமே -என்ற அனுதாபமும் அற்று உஜ்ஜீவிக்க இருக்கிற உம்மோடு எனக்கு என்ன சம்பந்தம் உண்டு –
நீர் என்னை வெறுத்தீர் ஆகில் என்னுடைய மாதா பிதாக்கள் என்னைப் பெற்று வளர்த்து உம்முடைய கையில் காட்டித் தந்த இந்த சரீரத்தை
உமக்கு வேண்டின படி செய்து கொள்ளும் -எங்கள் ஆச்சார்யர் என் ஆத்மாவை அடியிலே அங்கீ கரித்து அருளின அன்றே நான் உஜ்ஜீவித்தேன் –
ஆன பின்பு பத்ம கோடி சதேந அபி ந ஷமாமி கதாசன -என்று பாகவத நிந்தனை பண்ணினவர்களை ஒரு காலும் ஷமிப்பது இல்லை என்று
ஸ்ரீ பெருமாள் தாமே அருளிச் செய்த திருமுகப் பாசுரம் அறிந்தும் அறியாதவர் போலே இருக்கிற உம்மோடு எனக்கு ஸஹவாசமும் கூடாது –

ஆகையால் நிலம் பிளந்தால் இழை இட ஒண்ணாதது போலவும் -கடல் உடைந்தால் கட்ட ஒண்ணாதது போலேயும்-
மலை முறிந்தால் தங்க ஒண்ணாதது போலேயும் அனுதாபம் பிறவாத பாகவத அபசாரம் தீர்த்துக் கொள்ளக் கூடாதது இ றே –
ஆன பின்பு நான் என் இஷ்டத்திலே இருந்து யீடு ஏறிப் போகிறேன் என்ன ஸ்ரீ தோழப்பரும் தேவிகள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுச்
சற்றுப் போது திகைத்து எழுந்து அருளி இருந்து -பெரிய வித்வான் ஆகையாலும் திரு வம்ச பிரபாவத்தாலும் அஸூயையால் வந்த
திரு உள்ளத்தின் கலக்கம் தீர்ந்து தெளிந்து வந்து திருத் தேவிகளைப் பார்த்து-நீ சொன்னது எல்லாம் ஒக்கும் -நாம் தப்பச் செய்தோம் –
இனி மேல் செய்ய அடுக்குமது எது-என்ன திருத் தேவிகளும்-ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே-கெடுத்த இடத்தே தேடிக் கொள்ளீர் -என்ன –
ஸ்ரீ தோழப்பரும் ஆவது என் -என்ன -திருத் தேவிகளும் பரம தயாளுவான ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் சென்று சேவித்து
அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டு அவர் கிருபை பண்ணி அருள யீடு ஏறீர் என்ன –
ஸ்ரீ தோழப்பரும் அவரை ஸ்ரீ பெருமாளுடைய பெரும் திரு ஓலக்கத்திலே பரிபவித்து -இப்போது அவர் சந்நிதியில் போய் நிற்க என்றால்
எனக்கு லஜ்ஜா பயங்கள் அனுவர்த்தியா நின்றது -நீ கூட வந்து ஷமிப்பிக்க வேணும் -என்ன திருத் தேவிகளும் ஸ்ரீ தோழப்பர் சொல்லும்
வார்த்தையைக் கேட்டு -அப்படியே செய்கிறேன் என்று கடுக எழுந்து அருளி இருந்து அவரையும் கூட்டிக் கொண்டு
ஸ்ரீ நம்பிள்ளை திரு மாளிகைக்கு எழுந்து அருளுவதாக புறப்பட்ட அளவிலே

ஸ்ரீ நம்பிள்ளை செய்தபடி -ஸ்ரீ கோயிலிலும் இருந்து எழுந்து அருளின பின்பு முதலிகள் எல்லாரையும் அனுப்பி அருளி
பகல் எல்லாம் அமுது செய்து அருளாமல் தம் திரு மாளிகைக்கு உள்ளே எழுந்து அருளி இருந்து சாயங்காலமான வாறே
ஆவஸயக கர்மத்தைச் செய்து அருளி ஒற்றைத் திருப்பரி யட்டத்துடனே முட்டாக்கு இட்டுக் கொண்டு தாம் ஒருவருமே எழுந்து அருளி
ஸ்ரீ கந்தாடைத் தோழப்பர் திரு மாளிகை வாசலிலே கைப்புடையிலே வந்து கண் வளர்ந்து அருள –
ஸ்ரீ தோழப்பரும் திருத் தேவிகளுமாக திரு விளக்கை ஏற்றிக் கொண்டு ஸ்ரீ பிள்ளை திருமாளிகைக்கு எழுந்து அருளுவதாகத்
திரு மாளிகை வாசலிலே புறப்பட்ட அளவிலே -திரு விளக்கு ஒளியாலே கைப்புடையிலே ஒரு வெள்ளை கிடக்கிறதைக் கண்டு-
ஸ்ரீ தோழப்பர் இங்கே யார் கிடக்கிறார் -என்று கேட்க -ஸ்ரீ பிள்ளையும் -அடியேன் திருக் கலிகன்றி தாசர் -என்ன

அவ்வளவில் ஸ்ரீ தோழப்பர் -இது என் என்று திகைத்து -ஸ்ரீ பிள்ளையைப் பார்த்து -நாம் மஹா தேஜஸ்வீ -நம்மை ஸ்ரீ நம்பெருமாள்
திரு ஓலக்கத்திலே பரிபவிக்கலாவது என் -என்கிற கோப அதிசயத்தாலே நம்முடைய திரு வாசலிலே வந்து
மௌர்க்யம் செய்வதாகக் கிடக்கிறீரோ என்ன -ஸ்ரீ நம்பிள்ளையும் ஸ்ரீ தோழப்பரைக் குறித்து -அடியேன் அப்படிச் செய்ய வரவில்லை -என்ன –
ஆகில் இங்கு வந்து கிடப்பான் என்று என்று ஸ்ரீதோழப்பர் கேட்க -ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தபடி –
ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ முதலியாண்டான் திருப்பேரனான தேவரீர் திரு உள்ளம் கலங்கும்படி வர்த்தித்த மஹா பாபியான
அடியேனுக்குத் தேவரீர் திரு மாளிகை வாசல் அல்லது புகுவாசம் மாண்டு வந்து கிடக்கிறேன் -என்ன

இவரை அநு வர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற ஸ்ரீ தோழப்பர் ஸ்ரீ பிள்ளை கண் வளர்ந்து அருளுகிற தைன்யத்தைக் கண்டு
அவருடைய நைச்ய வார்த்தைகளையும் கேட்டு -இது ஒரு அதிகாரம் இருந்தபடி என் -என்று போர வித்தராய் ஸ்ரீ பிள்ளையை வாரி எடுத்து
அணைத்துக் கொண்டு-இத்தனை நாளும் சிறிது பேருக்கு ஆச்சார்யர் என்று இருந்தேன் -இப்போது லோகத்துக்கு எல்லாம்
நீரே ஆச்சார்யர் ஆகைக்கு ப்ராப்தர் என்று அறிந்தேன் என்று ஸ்ரீ தோழப்பர் உகந்து -ஸ்ரீ லோகாச்சார்யார் -என்று ஸ்ரீ பிள்ளைக்குத்
திரு நாமம் சாத்தி அருளித் தம்முடைய திரு மாளிகையில் கொண்டு புக்குத் தாமும் திருத் தேவிகளுமாய் ஸ்ரீ பிள்ளையை
அநேகமாக அனுவர்த்தித்து அவர் திரு உள்ளத்தை மிகவும் உகப்பித்து தமக்கு வேண்டும் அர்த்த விசேஷங்களை
எல்லாம் கேட்டுக் கொண்டு ஸ்ரீ பிள்ளை திருவடிகளில் ப்ரவணராய் க்ருதார்த்தராய் அருளினார் –

இப்படி ஸ்ரீ நம்பிள்ளை மஹா வைபவம் உடையவராய் வாழ்ந்து அருளுமது கண்டு ஸ்ரீ நஞ்சீயர் செய்தது வாய்த்து
ஸ்ரீ மானாய் நூறு திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்து அந்திம தசையில் திருமேனி நோவு சாத்திக் கண் வளர்ந்து அருள
ஸ்ரீ ஜீயர் சிஷ்யரான ஸ்ரீ குட்டிச் குறி இளை யாழ்வார் ஸ்ரீ ஜீயரைப் பார்த்து ஸ்ரீ த்வயத்தை அனுசந்திக்கலாகாதோ என்ன
ஸ்ரீ நஞ்சீயரான பெரிய ஜீயர் அவரைக் குறித்து -அது என் -உனக்கு வேண்டாதே எனக்கு இப்போதாக வேண்டுகிறது என் –
நடையாடித் திரிவாருக்கு வேண்டாதே கிடைக்கப்பட்டார்க்கு வேண்டியோ ஸ்ரீ த்வயம் இருப்பது -என்ன
அவரும் நிருத்தராய் லஜ்ஜிதரானார் இறே-
இத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீ த்வயம் சதா அனுசந்தேயாம் என்றபடி –

இத்தைக் கேட்டுத் தெற்கு ஆழ்வார் பட்டர் ஸ்ரீ ஜீயர் திருப்பாதத்தில் சென்று சேவித்து -உமக்குச் செய்ய வேண்டுவது என் என்று கேட்டு அருள –
ஸ்ரீ ஜீயரும் ஸ்ரீ பெரிய பெருமாள் சர்வ ஸ்வ தானம் பண்ண அனுபவிக்க வேண்டி இரா நின்றது -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ தெற்கு ஆழ்வார் பட்டரும் இத்தை ஸ்ரீ திருமாலை தந்த பெருமாளுக்கு அறிவிக்க -அவரும் இத்தை ஸ்ரீ பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெருமாளும் புறப்பட்டு அருளி திரு மடத்து வாசலிலே சென்று சேலையைக் களைந்து ஸ்ரீ ஜீயரை அனுபவிப்பித்து அருள –
ஸ்ரீ ஜீயரும் அனுபவித்து ஹ்ருஷ்டராய் ஸ்ரீ பிள்ளை முதலான முதலிகளைக் குறித்து -ஸ்ரீ பெருமாள் எனக்கு சர்வ ஸ்வ தானம்பண்ணி அருளினார் –
நாம் உங்களுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணுவதாக ஒருப்பட்டோம்-அபேக்ஷை உடையார் உடையபடியே அபேக்ஷித்துக் கொள்ளுங்கோள் -என்று அருளிச் செய்ய –
ஸ்ரீ பிள்ளையும் அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதோர் வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ ஜீயரும் -மணக் கோலத்தில் முள்ளைத் தெளிப்பாரைப் போலே இப்போது தஞ்சமாய் கேட்பது ஒரு வார்த்தை உண்டோ -என்று
ஸ்ரீ பிள்ளைக்கு அருளிச் செய்த வார்த்தை –
ஆத்ம வினியோகம் ஈஸ்வரன் என்று இராதே ஈஸ்வர விநியோகம் ஆத்மா என்று இரும் -என்று அருளிச் செய்ய –
அதில் ஸ்ரீ பிள்ளை திரு உள்ளம் பிரசன்னம் ஆகாமையாலே பேசாதே நிற்க -ஸ்ரீ ஜீயரும் -உம்முடைய நினைவு எது சொல்லிக் கண்ணீர் என்ன –
ஸ்ரீ பிள்ளையும் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பரமபதத்துக்கு எழுந்து அருளினால் இங்கு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்ன நினைத்து இருக்கக் கடவர் என்ன –
ஸ்ரீ ஜீயரும் -அது அதிகார அனுகுணமாக வன்றோ இருப்பது -திருப்தனாகில் ஆர்த்தன் ஆகிறான் –
ஆர்த்தனாகில் திருப்தனாகிறான் -என்று அருளிச் செய்து அருளி

பின்னையும் ஸ்ரீ பிள்ளையைக் குறித்து -ஞான காரியத்தில் உமக்கு கர்தவ்யம் இல்லை -ஸ்ரீ பெருமாளுக்கு உகப்பாக முதலிகளையும்
கூட்டிக் கொண்டு தர்சன அர்த்தம் நிர்வஹித்துப் போரீர்-என்று அருளிச் செய்து அருளி
வாரீர் பிள்ளாய் -ஸ்ரீ பட்டர் அடியேனுக்கு ஹித உபதேசம் செய்து -வேதாந்தி என்கிற பேரை யுடையோம் -நம் பக்கல் ஆஸ்ரயித்தோம் –
பஹு த்ரவ்யத்தை ஆச்சார்ய தக்ஷிணையாகக் கொடுத்தோம் -என்று இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்தார் –
நீரும் அப்படியே லோகாச்சார்யர் என்கிற பேரை யுடையோம் -அருளிச் செயல் நாலாயிரத்துக்கும் பொருள் சொல்ல வல்லோம் –
ஸ்ரீ பாஷ்யத்துக்கும் பிரவர்த்தகர் -என்று மேன்மையை நினைந்து இராதே -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும்
என்று அருளிச் செய்து -ஸ்ரீ பிள்ளை முதலான முதலிகளை ஷமை கொண்டு தீர்த்தம் கொண்டு அமுது செய்து அருளப் பண்ணி
ஸ்ரீ கோயிலுக்கு நேரே ஸ்ரீ பகவத் சேனாபதி ஜீயர் திரு மடியிலே திரு முடியையும் ஸ்ரீ பின்பு அழகிய ஜீயர் திரு மடியிலே
திருவடிகளுமாகக் கண் வளர்ந்து அருளி ஸ்ரீ பட்டர் திருவடிகளைத் தியானித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –

ஸ்ரீ பிள்ளையும் ஆச்சார்ய விஸ்லேஷத்தை ஸஹிக்க மாட்டாதே -மல்கு நீர் கண்ணோடு மையல் உற்றுக் கிலேசித்து அருள –
முதலிகளும் -தேவரீர் இங்கனே சோகிக்கக் கூடுமோ -என்ன ஸ்ரீ பிள்ளையும் தம்மிலே தேறி நின்று-ஸ்ரீ பெருமாள் சாத்தி வீட்டுக்
களைந்து அருளின திருமாலையையும் திருப் பரியட்டங்களையும் கொண்டு ஸ்ரீ கோயில் அணைத்துக் கொத்தும் வந்து சேவிக்க –
யதி ஸம்ஸ்கார விதியால் ப்ரஹ்ம மெத்த விதி யடங்கச் செய்து ஸ்ரீ ஜீயரை அதி சம்பிரமத்துடனே சமஸ்கரித்து –
பள்ளிப்படுத்தி அருளி பின்பு உண்டான க்ருத்யங்களை எல்லாம் செய்து ஸ்ரீ ஜீயருக்கு சீர்மையுடனே திரு அத்யயனமும் நடத்தி அருளினார்கள் –

அந்திம தசையில் ஸ்ரீ ஈஸ்வரன் தானே விஷ யீ கரித்து எழுந்து அருளி சர்வ ஸ்வ தானம் பண்ணப் பெற்ற தன்னேற்றமும்
நூறுரு ஸ்ரீ திருவாய் மொழிக்கு அர்த்தம் அருளிச் செய்து நிர்வஹித்து அருளி சதாபிஷேகம் பண்ணப் பெற்ற தன்னேற்றமும்
ஆச்சார்ய அனுவர்த்தன பிரதிபந்தகங்களான களத்ர புத்ர க்ஷேத்ர மித்ர தன தேச வாசங்களை நேராக நிவர்த்தித்து
ஆச்சார்யன் எழுந்து அருளின தேசமே பரம ப்ராப்யம் என்று எழுந்து அருளி வந்து தம் சர்வஸ்வத்தையும் அத்தலைக்கே சேஷமாக்கி –
தத் கைங்கர்யமே யாத்ரையாய் அதுவே சத்தா தாரகமாகப் பெற்ற தன்னேற்றமும் இவர் ஒருவருக்கும் உள்ளது ஓன்று இறே

ஸ்ரீ நஞ்சீயர் திரு நக்ஷத்ரம் –திரு பங்குனி -திரு உத்தரம் –

அவர் தனியன்
நமோ வேதாந்த வேத்யாய ஜெகன் மங்கள ஹேதவே -யஸ்வ வாக் அம்ருதாசார பூரிதம் புவனத்ரயம்

யத்வ சஸ் சகலம் சாஸ்திரம் யத் க்ரியா வைதிகோ விதி -யத் கடாஷோ ஜகத் ரஷா தம் வந்தே மாதவம் முனிம்

இதில் ஸ்ரீ பெருமாள் இரங்கின சர்வ ஸ்வ தானம் -மறைவு அறத் திருமேனி காட்டுகை
ஸ்ரீ நஞ்சீயர் பண்ணின சர்வ ஸ்வ தானம் மறைவு அறச் சரமார்த்த விசேஷங்களை வெளியிடுகை
ஆத்ம விநியோகம் ஈஸ்வரன் அன்று என்று இராமைக்கு அடி பலித்வ அபிமானத்வம் இல்லாமை
ஈஸ்வர விநியோகம் ஆத்மா என்று இருக்கைக்கு அடி -பலியுமாய் அபிமானியுமான சேஷிக்கு இஷ்ட விநியோக அர்ஹனாகை-
ஆர்த்தனாகில் திருப்பதனாகையாவது -ததீய விஸ்லேஷத்தில் சரீர விஸ்லேஷம் பிறக்கும்படியான பரம ஆர்த்தி விளையில்
இப்போதே ஸம்ஸ்லேஷிக்க அன்றோ போகிறோம் என்று திருப்தி பிறக்கை–
திருப்தனாகில் ஆர்த்தன் ஆகையாவது -ததீயரை விஸ்லேஷித்தும் சரீர விஸ்லேஷம் பிறக்கும்படி அதிசயித்த ஆர்த்தி இன்றியே
ஸ்வ சரீர விஸ்லேஷத்து அளவும் பொறுக்கும்படியான ஆர்த்தி அனுவர்த்திக்க திருப்தி உண்டாய்
இப்போதே உசாத் துணை இழந்தோம்-என்னும் அளவே யாகை என்றபடி –

ஸ்ரீ பிள்ளையும் இவ்வர்த்தத்தைக் கேட்டு அனுஷ்டான பர்யந்தமாகக் கண்டு அருளினார் -எங்கனே என்னில்
ஸ்ரீ அம்மங்கி அம்மாள் ஸ்ரீ பரமபதத்துக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ பிள்ளை அவர் திருமாளிகை ஏற எழுந்து அருள
ஸ்ரீ அம்மாள் திருத் தேவிகள் பிரசன்னையாய் இருக்கக் கண்டு -ஸ்ரீ பாதத்து முதலிகள் -இதற்கு அடி என் என்று ஸ்ரீ பிள்ளையைக் கேட்க –
ஸ்ரீ பிள்ளையும் திருத் தேவிகள் விஷயத்தில் இதற்கு முன்பு ஸ்ரீ அம்மாள் பண்ணின விரோதம் உண்டாகில் இ றே
அவர் பேற்றுக்கு இவர் வெறுப்பது-என்று அருளினார் –
தம்முடைய ஸ்ரீ பாதத்து முதலிகளில் ஒருவர் ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருள தத் பார்யா புத்ராதிகள் வந்து தம் ஸ்ரீ பாதத்தில் வந்து
விழுந்து அழ -இதுக்கு அடி என் என்று முதலிகள் கேட்க –
ஸ்ரீ பிள்ளையும் பெறுகிற தேசம் கொந்தளிக்கிற படி கண்டால் இழக்கும் தேசம் எப்பாடு படக் கடவதோ -என்று அருளினார் –
ஆகையால் சத் வஸ்துவை இழந்த தேசம் கை எடுத்துக் கூப்பிடச் சொல்ல வேண்டா இறே என்று கருத்து –

ஸ்ரீ நம்பிள்ளையும் ஸ்ரீ பாதத்து முதலிகளும் ஸ்ரீ திரு வெள்ளறை நாச்சியாரை சேவித்து மீண்டு ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே –
திருக் காவேரி இரு கரையும் ஒத்து அதி கம்பீரமாய் நாநா வர்த்தக ஷாகுலமாய்த் தடவரை அதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக்
கரை மரஞ்சாடிக் கடலினை கலங்கக் கடுத்திழி கங்கை போலே புங்காநுபுங்கமாக ப்ரவஹியா நிற்க ஓடம் கிடையாத படியால்
ஒரு தாழியிலே எழுந்து அருள-நட்டாற்றில் சென்றவாறே -போதும் அஸ்தமித்து மழையும் இருட்டுமாய் அக்கரை இக்கரை முன்னாடி தெரியுமே
திக் விப்ரமம் பிறந்து தாழி அமிழத் தேட -இந்த அவஸ்தையில் நாலு இரண்டு பேர் தாழியை விட்டால் கரையிலே ஏறலாம் –
ஒருவரும் விடாதே இருக்கில் ஸ்ரீ நம்பிள்ளை முதலாக எல்லாரும் அமிழ்ந்து தட்டுப் பட்டுப் போகிறது -என்று தாழிக்காரன் கூப்பிட-
அவ்வளவிலும் நட்டாற்றாகையாலும் பய அதிசயத்தாலும் ஒருவரும் அதற்கு இசைந்து விட்டார்கள் இல்லை –
அவ்வளவில் ஒரு சாத்விகையான அம்மையார் தாழி விடுகிறவனைப் பார்த்து நீ நூறு பிராயம் புகுவாய் –
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரான ஸ்ரீ நம்பிள்ளையைப் பேணிக் கொண்டு கரையிலே விடு -என்று அவனை ஆசீர்வதித்து
அந்தகாரத்தையும் பாராமல் ஆற்றிலே விழுந்தாள்-அவ்வளவு கொண்டு தாழி கரையிலே போக ஸ்ரீ பிள்ளையும் அக்கரை ஏறி

ஓர் ஆத்மா தட்டுப் பட்டுப் போச்சுதே -என்று பல காலும் அருளிச் செய்து வியாகுல சித்தராய் இருக்கும் அளவில் அப்போது அம்மையார்
நாலடி விட்டுப் போன அளவிலே ஒரு திடர் சந்திக்க அதிலே தரித்து நின்று -இராக் குரலாகையாலும் கரை ஆசன்னமாகையாலும்
ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ நம்பிள்ளை வ்யாகுலப்பட்டு அருளிச் செய்கிற வார்த்தையைக் கேட்டு -ஸ்வாமீ தேவரீர் வ்யாகுலப்பட்டு அருள வேண்டா –
அடியேன் இங்கே இருக்கிறேன் என்று குரல் காட்ட ஸ்ரீ பிள்ளையும் திடர்கள் மரங்கள் சந்தித்தாகக் கூடும் என்று திரு உள்ளம் பற்றித்
தாழிக்காரனை இட்டு அவளையும் அக்கரையில் அழைப்பித்துக் கொள்ள -அவளும் வந்து ஸ்ரீ பிள்ளை திருவடிகளில் சேவித்து
ஆச்சார்யனை அல்லது ரக்ஷகாந்தரம் அறியாதவள் ஆகையால் -அடியாள் ஆற்றிலே ஒழுகிப் போகிற போதும் தேவரீர் அங்கே
ஒரு கோரை மேடாய் வந்து ரஷித்து அருளிற்று என்று கேட்க ஸ்ரீ பிள்ளையும் உம்முடைய விஸ்வாசம் இதுவானபின்பு
அதுவும் அப்படியே ஆகாதோ என்று அருளினார் —
இத்தால் ஸ்வ சரீர அர்த்த பிராணங்களை அழிய மாறி ஆகிலும் ஆச்சார்யனைப் பேண வேணும் என்னும் நிஷ்டை உண்டாகவே
ஈஸ்வரன் அவனைப் பேணி ரஷிக்கும் என்னும் அதுவும் சொல்ல வேண்டா இறே

அநந்தரம் ஸ்ரீ பிள்ளையும் முதலிகளுமாக ஸ்ரீ கோயிலிலே எழுந்து அருளி இருந்து தர்சனம் நிர்வஹித்துக் கொண்டு வாழ்ந்து அருளுகிற காலத்தில்
ஸ்ரீ நம்பிள்ளை திருப் பாதத்தில் ஆஸ்ரயித் திருப்பாள் ஒரு அம்மையாருக்குத் திரு மாளிகை அருகே ஒரு கோல் துறை நிவேசம் உண்டாய்
அங்கே குடியாய் இருக்கும் -அவளுக்கு ச ப்ரஹ்மச்சாரியார் இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -ஸ்ரீ பிள்ளை திரு மாளிகை நெருக்கமாய் இருக்கிறது –
இந்த கோல் துறையை ஆச்சார்யருக்கு சமர்ப்பியும் என்று அம்மையாருக்கு பலகாலும் அருளிச் செய்ய –
அவளும் ஸ்ரீ கோயிலிலே ஒரு கோல் துறை ஆருக்குக் கிடைக்கும் -நான் திருவடி சாரும் தனையும் கொடேன் -என்ன
ஸ்ரீ வைஷ்ணவரும் இந்த விசேஷத்தை ஸ்ரீ பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பிள்ளையும் அம்மையாரை அழைத்து அருளி –
உனக்கு ஒரு சரீரத்துக்கு சற்று இடம் வேண்டுவது
முதலிகள் எழுந்து அருளி இருக்க நெருக்கமாய் இருக்கிறது -உன் ஒரு கோல் துறையை நமக்குத் தர வேணும் என்ன –
அம்மையாரும் அப்படியே செய்கிறேன் -தேவரீர் ஸ்ரீ பரமபதத்தில் அடியேனுக்கு ஒரு கோல் துறையை தந்து அருள வேணும் -என்ன –
அதற்கு ஸ்ரீ வைகுண்ட நாதன் அன்றோ கடவன் -அவனுக்கு விண்ணப்பம் செய்து கொண்டு தருகிறோம் என்று அருளிச் செய்ய –
அவளும் அடியேன் சாது -அதிலே பெண்டாட்டி -தருகிறோம் என்ற வார்த்தையால் போராது-எழுதி எழுதிட்டுத் தர வேணும் -என்ன –
ஸ்ரீ பிள்ளையும் இப்படியும் கேட்பதே என்று திரு உள்ளம் உகந்து -இன்ன வருஷம் இன்ன மாசம் இத்தனாம் தேதி இந்த அம்மையாருக்கு
திருக் கலிகன்றி தாசர் ஸ்ரீ பரமபதத்தில் ஒரு கோல் துறையை எழுதிக் கொடுக்கிறேன் -அகில லோக ஸ்வாமியும் அஸ்மத் ஸ்வாமியுமான
ஸ்ரீ வைகுண்ட நாதன் கிரயம் செலுத்தி கொடுத்து அருள வேணும் -என்று சாசனம் எழுதித் தம்முடைய திரு எழுத்திச் சாத்திக் கொடுத்து அருளினார் –
அம்மையாரும் திரு முகத்தை சிரஸா வஹித்து ப்ரீதியுடன் வாங்கிக் கொண்டு தீர்த்த பிரசாதங்கையும் ஸ்வீ கரித்து அன்றும் மற்றைய நாளும்
ஸ்ரீ பிள்ளையை சேவித்துக் கொண்டு இருந்து மூன்றாம் நாள் ஸ்ரீ பரமபதத்தில் சென்றாள்-
இத்தால் ஆச்சார்யன் இரங்கி ப்ரசாதித்த ஒன்றையே தஞ்சம் என்று இருக்க வேணும் –
உபய விபூதியும் ஆச்சார்யன் இட்ட வழக்காய் இருக்கும் என்று தோன்றா நின்றது இறே

ஸ்ரீ மஹா பாஷ்ய பட்டர் ஸ்ரீ பிள்ளையை -சைதன்ய வஸ்துவாய் இருக்கிற ஆத்மாவுக்கு சரீர விஸ்லேஷம் பிறந்தால்
ஸ்ரீ பரமபதம் சித்தம் என்று அறுதி இட்டு இருக்கலாவது எவ்வர்த்தத்தாலே என்று கேட்க
ஸ்ரீ யப்பதியையே உபாயம் உபேயம் என்று அறுதியிட்டு இருப்பது -நெடும் காலம் இழந்து கிடந்த வஸ்துவைக் காட்டித் தந்த
ஆச்சார்யன் பக்கல் கனக்க விஸ்வாசம் உண்டாய் இருப்பது – அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யத்தின் படியே ஸ்ரீ எம்பருமானார் தர்சனமே சித்தாந்தம்
என்று இருப்பது -ஸ்ரீ ராமாயணத்தாலே திருக் குண அனுசந்தானம் பண்ணுவது – ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செயல்களால் பொழுது போக்குவது –
சரீர விஸ்லேஷம் பிறந்தால் சந்தேகிக்க வேண்டா -மீட்சி இன்றி வைகுண்ட மா நகரம் மற்றது கையதுவே -என்று அருளிச் செய்து அருளினார்
ஆகையால் உபாய உபேய நிர்ணயமும் -ஆச்சார்ய விஸ்வாசமும்–தர்சன விஸ்வாசமும் -ஸ்ரீ பகவத் குண அனுபவ பாரவஸ்யமும்
உண்டாகவே ப்ராப்ய சித்தி உண்டாம் என்று உத்தரம் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ பாதத்தில் பாண்டிய நாட்டின் நின்றும் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்து கண்டு -எங்களுக்குத் தஞ்சமாய் இருபத்தொரு
வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பிள்ளையும் -கடற்கரை வெளியை நினைத்து இருங்கோள்-என்று அருளினார் –
அவர்களும் மணல் குன்றையும் நாவல் காட்டையும் நினைத்து இருக்கவோ -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பிள்ளையும் புன்முறுவல் செய்து அருளிச் செய்த படி -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் கடற்கரையிலே விட்டு இருக்கச் செய்தே
ஸ்ரீ வானர வீரர்கள் ஸ்ரீ ராகவார்த்தே பராக்ராந்தரராய் த் தங்களை உபேக்ஷித்து ஸ்ரீ பெருமாளையே நோக்கிக் கொண்டு கிடக்க
இவர்கள் கண் உறங்கும் தனையும் தான் உறங்கி இவர்கள் கண் உறங்கினவாறே அம்பறாத் துணியை முதுகிலே கட்டித் திருக்கையிலே
பிடித்த சார்ங்கமும் திருச்சரமுமாய் இரா முற்றும் நோக்கின ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுடைய
திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் -என்று அருளிச் செய்து அருளினார் –
ஆகையால் ஸ்வ ரக்ஷண சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக் கொண்டு ரஷிக்கும் என்கிறது –

ஸ்ரீ பிள்ளையை ஒருவன் -ஸ்ரீ எம்பெருமானை ஒழிந்த தேவதாந்தரங்களை பஜிக்கலாகாது என்கிற நீங்கள்
நித்ய நைமித்தி காதிகளிலே அக்னி இந்திராதி தேவதைகளை பஜிப்பான் என் -ஆலயங்களைப் பஜியாது ஒழிவான் என் -என்ன
ஸ்ரீ பிள்ளையும் -வாராய் -அக்னி ஹோத்ர அக்னியை உபாசித்தும் ஸ்மசந அக்னியை நிவர்த்தித்தும் போகிறாப் போலே –
இரண்டுக்கும் வாசி -எங்கனே என்னில் –
நித்யாதிகளில் ஸ்ரீ பகவத் பிரகார புத்யா பண்ணுகிற உபாசனம் ஸ்ரீ பகவத் உபாசனமேயாக விசேஷ சாஸ்திரம் விதிக்கையாலும் –
ஆலய பிரதிஷ்டைகளிலே பராவர தத்வ வ்யத்வம் பண்ணி இருக்கும் தாமச புருஷர்களாலே விருத்த ஆகம மந்த்ர தந்த்ரப் ப்ரக்ரியையாலே –
ஸ்வ தந்த்ரப் புத்தியா தேவதாந்த்ரங்கள் க்ருத பிரதிஷ்ட ஆகரங்கள் ஆகையாலும்-
இவ்விடத்தில் ஸ்ரீ பகவத் பிரகார புத்யா உபாஸிக்க விதி இல்லாமையாலும் –
அதுவும் அன்றியே -தேவதாந்த்ர வர்க்கம் தன்னில் தூரதோ வர்ஜ நீயத்வம் ருத்ரனுக்கு மிகவும் உண்டு இறே -எங்கனே என்னில்
சத்வ குணாத்யந்த விரோதியான தமோ குண பிரசுரனாகையாலே நித்யாதிகளைப் போலே ஆலயங்களிலும் ஸ்ரீ பகவத் பிரகார புத்யா
உபாசிக்கலாகாது -த்யாஜ்யதயா ஞாதவ்யங்களான ஸ்ரீ பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் ஸ்வீ காரத்துக்கு உடலாகவும் –
உபாதேய தயா ஞாதவ்யமான ஸ்ரீ பகவத் விஷயம் தியாகத்துக்கு உடலாகவும் கடவதோ -என்று அருளிச் செய்து அருளினார் –
ஆகையால் வேதாந்த விஹித ஸ்ரீ பகவத் பிரகார பூத ஆலயஸ்த அந்ய தேவதா பஜனமும் அநர்த்த கரம் என்கிறது –

ஸ்ரீ நம்பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்து சேவித்து -திருமேனி அற இளைத்து இருந்தது -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பிள்ளையும் ஓன்று தேய்தல் ஓன்று வளருதல் அன்றோ -என்று அருளினார் -இத்தால் ஞான பக்தி வைராக்யங்கள் வளர
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி சரீரம் தேயும் என்றபடி –

ஸ்ரீ பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்து கண்டு -ஆரோக்யம் ஒன்றும் இல்லையோ -என்று கேட்க –
ஸ்ரீ பிள்ளையும் -யுத்தம் பண்ணப் போகிறோமோ -ஸ்ரீ பெருமாளை சேவித்து இருக்கைக்கு வேண்டும் ஆரோக்யம் உண்டு –
ஒரு குறையும் இல்லை -என்று அருளிச் செய்து அருளினார் –
ஆகையால் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆரோக்ய அபேக்ஷை வேண்டா என்கிறது –

ஸ்ரீ நம்பிள்ளை திருமேனி நோவு சாத்தி இருந்தமை கேட்டு ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சென்று ஸ்ரீ பாதத்தில் சேவித்து நோயைக் கண்டு வெறுக்க –
ஸ்ரீ பிள்ளையும் அவரைக் குறித்து இஸ் சரீரத்தில் வந்த வியாதியை நல் விருந்து வந்ததாகக் காணும்
நான் நினைத்து இருப்பது என்று அருளிச் செய்து அருளினார்
இத்தால் -க்ருதக்ருத்யா பிரதீஷந்தே ம்ருத்யும் ப்ரியமிவாதிதம் -என்கிற இதுவே திரு உள்ளக் கருத்து –

ஸ்ரீ நம்பிள்ளை திருமேனியில் நோவு சாத்தி எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ பிள்ளை எங்கள் ஆழ்வாரும் ஸ்ரீ அம்மங்கி அம்மாளும்
அறிவதாக எழுந்து அருளி -ஸ்ரீ எங்கள் ஆழ்வான் நியமனத்தாலே ஸ்ரீ அம்மங்கி அம்மாள் ஸ்ரீ பிள்ளை பக்கல் பரிவாலே
ஒரு யந்திரத்தைத் திருக் கையிலே இட்டுத் தொடப் புக -ஸ்ரீ பிள்ளை திரு மேனியை இறாய்த்து அருள-அவர்களும் விஷண்ணராய்-
உம்முடைய விஷயமாக நீர் ப்ரவர்த்திக்கில் அன்றோ ஸ்வரூப ஹானி -உம்முடைய விஷயமாக நாங்கள் ப்ரவர்த்தித்தால்
உமக்கு ஸ்வரூப ஹானி இல்லை காணும் -என்று சில வசனங்களைப் படிக்க –
எனக்கும் போம் -சில வசனங்களை அன்றோ நீங்கள் விஸ்வசித்து இருக்கிறது – நானும் ஒரு வசனத்தை தஞ்சம் என்று இருப்பன்
காணுங்கோள் என்ன -அவர்களும் அது என் சொல்லிக் கண்ணீர் -என்ன –
ஸ்ரீ பிள்ளையும் -ஸ்ரீ ஜீயர் தம் சரம தசையில் ஸ்ரீ த்வயம் ஒழிந்த மந்த்ரங்களோடு சிவ பஞ்சாக்ஷரம் முதலான ஷூத்ர மந்த்ரங்களோடே
ஒரு வாசி இல்லை என்று அருளிச் செய்து அருளினார் – என்ன -அவர்களும் -ஸ்ரீ பிள்ளை திரு மந்த்ரம் செய்வது என் -என்ன
ஸ்ரீ பிள்ளையும் -அது தான் செய்வது என் -விவரண விவரணி பாவேந ஸ்ரீ த்வய அந்தரகதம்-என்ன –
அவர்களும் ஆகில் ஸ்ரீ த்வயத்தைக் கொண்டு செய்யக் குறை என்ன –
இவரும் விடாய்த்தவன் விலவறத் தண்ணீர் குடிக்குமா போலே இருப்பது ஓன்று இறே இது-
ஆகையால் ஸ்வ வியாதி ஸாந்த்யர்த்தமான பிரபதனமும் ஸ்வரூப ஹானி -பர விஷய ஸாந்த்யர்த்தமான பிரபதனமும் ஸ்வரூப ஹானி –
எங்கனே என்னில் -ஸ்வ விஷயமாக பிரவர்த்திக்குமாகில் ஸ்வ ஸ்வரூப பாரதந்தர்ய தூஷணமாம் அத்தனை –
பர விஷயமாக ப்ரவர்த்திக்கில் பர ஞான பர சக்திகளுக்குத் தூஷணமாம் என்று அருளிச் செய்து அருளினார் –
ஆகையால் தொடக் குழையும் பூப் போலே மந்த்ராந்தர ஸ்வரூபம் பொறாத ஸ்ரீ த்வய ஏக நிஷ்டை அதிசயமும் –
ஸ்ரீ த்வயத்தை மற்று ஒன்றுக்கும் சாதனம் ஆக்கிப் பிசக்கி முசிக்கப் பெறாமையும் –
ஸ்வ பர விஷய வியாதி ஸாந்த்யர்த்த பிரபதன தோஷ விசேஷமும் சொல்லப் பட்டது இறே

அநந்தரம் -ஸ்ரீ பிள்ளைக்குத் திருமேனி வாட்டம் தீர்ந்து -பண்டு போலே ஆரோக்யம் உண்டாய் ஸ்ரீ பாதத்தில் முதலிகளுக்கு
தர்சன தாத்பர்யங்களை ப்ரசாதித்துக் கொண்டு ஸூகமே எழுந்து அருளி இருக்கும் நாளிலே –
ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய திருப்பேரனான ஸ்ரீ நடுவில் திரு வீதிப்பிள்ளை பட்டர் -ஸ்ரீ நம்பிள்ளையுடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –
பாகவத ஸம்ருத்தியையும் -லோக பரிக்ரஹத்தையும் -சிஷ்ய சம்பத்தையும் கண்டு பொறுக்க மாட்டாமல் கடி கடி என்று கொண்டு போருவாராய் இருப்பர் –
அக்காலத்தில் அந்த ஸ்ரீ பட்டர் ராஜ ஸ்தானத்துக்கு எழுந்து அருளா நிற்க -வழியிலே ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயரைக் கண்டு –
ஜீயா நாம் ராஜ கோஷ்டிக்குப் போகிறோம் கூட வாரும் என்று அழைக்க -இவரும் நாம் பரமாச்சார்ய வம்ஸயர் அன்றோ -என்று
ஸ்ரீ பட்டருடன் ராஜ ஸ்தானத்துக்கு ஏற எழுந்து அருள -ராஜாவும் ஸ்ரீ பட்டரை எதிர் கொண்டு பஹு மானம் பண்ணி
ஆசனத்தில் எழுந்து அருளுவித்து சேவித்துக் கொண்டு பெரிய திரு ஓலக்கமாக இருந்து தான் பஹு ஸ்ருதனாகையாலும்
வ்யுத்பன்னனாகையாலும் ஸ்ரீ பட்டருடைய வைதுஷ்ய சோதந அர்த்தமாக -ஸ்ரீ பட்டரே -ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்-என்று
பரத்வம் தோன்றாமல் வர்த்திக்கிற ஸ்ரீ பெருமாள் ஜடாயுவைக் குறித்து கச்ச லோகாந் அநுத்தமாந் -என்று
மோக்ஷம் கொடுத்த படி எங்கனே என்று கேட்க -ஸ்ரீ பட்டரும் அதற்கு உத்தரம் அருளிச் செய்யச் சிறிது விசாரிக்க வேண்டி இருக்க –
அவ்வளவில் ராஜாவுக்கு வேறே பராக்காக -ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ ஜீயரைப் பார்த்து-ஸ்ரீ பிள்ளை பெரிய உடையாருக்கு ஸ்ரீ பெருமாள் மோக்ஷம் கொடுத்து
அருளினதை எப்படி நிர்வஹிப்பார் என்ன -ஸ்ரீ ஜீயரும் -சத்யேந லோகான் ஜயதி-என்கிற ஸ்லோகம் கொண்டு நிர்வஹித்து அருளுவார் என்ன-
ஸ்ரீ பட்டரும் ஆமோ என்று அத்தை திரு உள்ளத்திலே யோஜித்து ஓக்கும்-என்று எழுந்து அருளி இருக்க -ராஜாவும் அபிமுகமாகத் திரும்பி –
ஸ்ரீ பட்டரே நாம் கேட்டதற்கு உத்தரம் அருளிச் செய்தீர் இல்லையே என்ன -ஸ்ரீ பட்டரும் -நீர் பராக் அடித்து இருக்க
நான் சொல்லலாவதொரு அர்த்தம் உண்டோ -ஸமாஹித மநவாய்க் கேளீர் என்று

சத்யேந லோகான் ஜயதி தீ நாந்தா நே ந ராகவ குரூன் ஸூஷ் ரூஷயா வீரோ தனுஷா யுதி சாத்ரவான்-என்கிற ஸ்லோகத்தை
ஸ்ரீ பட்டர் அருளிச் செய்ய -ராஜா கேட்டு ஸூ தராம் ப்ரீதனாய் -தேவரீர் அருளிச் செய்தது ஒக்கும் என்று சிரஸ் கம்பம் பண்ணி வணங்கி
அடிக்கடி கொண்டாடி -அநர்க்கங்களான அநேக ஆபரணங்களும் அநேக வஸ்த்ரங்களும் பஹு தனங்களையும் எல்லா வற்றையும் கொடுத்துப்
பஹு மதித்து -தான் நிருத்தரானாய் ஸ்ரீ பட்டர் திருவடிகளில் விழுந்து சேவித்து -ஸ்ரீ கோயிலிலே ஏற எழுந்து அருளும் -என்று சத்கரித்து விட –
ஸ்ரீ பட்டரும் ராஜா கொடுத்த வஸ்திர பூஷணங்களையும் தனங்களையும் அங்கீ கரித்து அங்கு இருந்து புறப்பட்டு
ஸ்ரீ ஜீயர் திருக்கையைப் பிடித்துக் கொண்டு -ஸ்ரீ ஜீயர் என்னையும் இந்தத்தனத்தையும் ஸ்ரீ பிள்ளை திருவடிகளில்
கொண்டு போய்க் காட்டிக் கொடும் -என்று போர ஆர்த்தியோடே அனுவர்த்தித்துச் சொல்ல –
ஸ்ரீ ஜீயரும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தபடியே ஸ்ரீ பிள்ளை கோஷ்டியிலே கொண்டு போய்க் காட்டிக் கொடுக்க –
ஸ்ரீ பிள்ளையும் தம் பரமாச்சார்ய வம்சயரான ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளையை சேவித்து மிகவும் ஆதரித்து –
இது எது ஐயா -என்று கேட்டருள -ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ பிள்ளை திரு முக மண்டலத்தைப் பார்த்து -தேவரீருடைய திவ்ய ஸூக்தியிலே
பதினாராயிரம் கோடியிலே ஒன்றுக்குப் பெற்ற தனம் இது – ஆகையால் அடியேனையும் இந்தத் த்ரவ்யங்களையும் அங்கீ கரித்து அருள வேணும் என்ன –
ஸ்ரீ பிள்ளையும் -ஆகிறது என் -ஸ்ரீ கூரத்தாழ்வான் திருப்பேரனாரான நீர் இப்படிச் செய்ய பிராப்தம் அன்று காணும் என்ன

ஸ்ரீ பட்டரும் நித்ய சம்சாரியான ராஜா தேவரீருடைய திவ்ய ஸூக்தியில் சிந்தின சொல்லுக்குத் தோற்றுக் கொடுத்த கொடை இது-
ஆனபின்பு ஸ்ரீ கூரத்தாழ்வான் குடல் துடக்கில் பிறந்த அடியேன் அந்த பிரபாவத்துக்குத் தகுதியாகத் தேவரீருக்கு சமர்ப்பிக்கலாவது
ஒன்றும் இல்லையே யாகிலும் -அசலகத்தே இருந்தும் இத்தனை நாள் தேவரீர் திருவடிகளை இழந்து கிடந்த மாத்திரம் அன்றிக்கே –
தேவரீர் வைபவத்தைக் கண்டு -அஸூயா பிரஸவபூ -என்கிறபடியே அஸூயை பண்ணித் திரிந்த இவ்வாத்மாவை தேவரீருக்கு
சமரிப்பிக்கை அல்லது வேறே எனக்கு ஒரு கைம்முதல் இல்லை -ஆகையால் அடியேனை அவசியம் அங்கீ கரித்து அருள வேணும் என்று
கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு-ஸ்ரீ பிள்ளை திருவடிகளில் சேவித்துக் கிடக்க –
ஸ்ரீ பிள்ளையும் ஸ்ரீ பட்டரை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு-விசேஷ கடாக்ஷம் செய்து அருளி –
தம் திரு உள்ளத்திலே தேங்கிக் கிடக்கிற அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் ஒன்றும் தப்பாமல் இவருக்கு பிரசாதித்து அருள –
ஸ்ரீ பட்டரும் க்ருதார்த்தராய் ஒரு க்ஷணமும் பிரியாமல் ஸ்ரீ பிள்ளை சந்நிதியில் சதா அனுபவம் பண்ணிக் கொண்டு
சேவித்துக் கொண்டு ஸந்துஷ்டராய் எழுந்து அருளி இருந்தார் –

அக்காலத்திலே ஸ்ரீ பட்டருக்கு ஓர் உரு திருவாய் மொழிக்கு அர்த்தம் பிரசாதித்து அருள –
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தது ஒன்றும் தப்பாமல் பதறாமல் கேட்டுத் தரித்து இரா முற்ற எழுதித் தலைக்கட்டினவாறே –
ஸ்ரீ பட்டர் தாம் எழுதின கிரந்தங்களை ஸ்ரீ பிள்ளை சந்நதியில் கொண்டு போய் வைக்க -ஸ்ரீ பிள்ளையும் இது என் என்று கேட்க —
ஸ்ரீ பட்டரும் -தேவரீர் இந்த உரு திருவாய் மொழிக்கு நிர்வஹித்த கட்டளை என்ன -ஸ்ரீ பிள்ளையும் -ஆமோ -என்று கிரந்தங்களை
அவிழ்த்துப் பார்த்த அளவிலே -ச பாத லக்ஷம் க்ரந்தமாய் மஹா பாரத ஸங்க்யையாய் இருக்க -அத்தைக் கண்டு
ஸ்ரீ பிள்ளை பெருக்க வ்யாகுலப்பட்டு ஸ்ரீ பட்டரைப் பார்த்து -நம்முடைய அனுமதி இன்றிக்கே நாட்டுக்கு பாட்டுரையாம் படி
நீர் நினைத்தபடியே திருவாய் மொழியை வெளியிடுவான் என் -என்ன -ஸ்ரீ பட்டரும் தேவரீர் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை எழுதினேன் –
அது ஒழிய கால் கொம்பு சுழி ஏற எழுதினது உண்டாகில் பார்த்து அருள வேணும் -என்ன
ஸ்ரீ பிள்ளை ஸ்ரீ பட்டரைப் பார்த்து -வாரீர் திருவாய் மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னதை எழுதினீர் ஆகில்
நம்முடைய சித்தஸ்தமான பொருளை எழுதப் பற்றீரோ -என்று வெறுத்து அருளிச் செய்து
ஸ்ரீ உடையவர் காலத்திலே ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவாய் மொழிக்கு ஸ்ரீ விஷ்ணு புராண ப்ரக்ரியையாலே
ஆறாயிரமாக இடுகைக்கு ஸ்ரீ உடையவரை அனுமதி கொள்ளப்பட்ட யத்னத்துக்கு மட்டு முடிவில்லை —
ஆன பின்பு நம்முடைய காலத்திலே நம்மையும் கேளாமல் லக்ஷத்து இருபத்தைந்து ஆயிரம் கிரந்தமாக இப்படி பரக்க எழுதினால்
ஒரு சிஷ்ய ஆச்சார்ய கிராமத்துக்கு அஸம்ப் ரதாயமாய்ப் போம் காணும் -என்று அருளிச் செய்து –
அவர் கையிலும் கிரந்தங்களை வாங்கிக் கொண்டு நீரைச் சொரிந்து கறையானுக்கு கொடுக்க அவை அன்றே ம்ருத்தாய்ப் போய்த்து

அநந்தரம் ஸ்ரீ பிள்ளை தமக்கு பிரிய சிஷ்யராய் தம் பக்கலில் அகில அர்த்தங்களையும் அலகலகாகக் கற்று இருக்கும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை -திருவாய் மொழிக்கு ஒரு வியாக்யானம் பண்ணும் என்று நியமித்து அருள –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும் ஸ்ரீ இராமாயண ஸங்க்யையிலே ஒரு வியாக்யானம் செய்து அருளினார் –

பின்னையும் ஸ்ரீ நம்பிள்ளை ஒரு திருவாய் மொழிக்கு அர்த்தம் நிர்வஹிக்கிற கட்டளையை அந்தரங்க சிஷ்யரான
ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை பகல் எல்லாம் கேட்டுத் தரித்து ராத்திரியிலே எழுதித் தலைக்கட்டினவாறே –
அத்தை ஸ்ரீ பிள்ளை சந்நிதியில் கொண்டு போய் வைக்க -பிள்ளையும் இது என் என்று கேட்டருள -அவரும் தேவரீர்
இந்த உரு திருவாய் மொழி நிர்வஹித்த கட்டளை -என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பிள்ளையும் அந்த ஸ்ரீ கோசத்தை
அவிழ்த்துப் பார்த்து அருள -அதி சங்க்ஷேபமும் இன்றியே அதி விஸ்தாரமும் இன்றிக்கே ஆனை கோலம் செய்து புறப்பட்டால் போலே
மிகவும் அழகாய் ஸ்ருத பிரகாசிகை கட்டளையிலே முப்பத்தாறாயிரமாய் இருக்கையாலே ஸ்ரீ பிள்ளையும் அத்தைக் கண்டு போர ப்ரீதராய் அருளி –
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளையைப் பார்த்து-நன்றாக எழுதினீர் -ஆகிலும் நம்முடைய அனுமதி இன்றியே எழுதினீர் –
ஆகையால் கிரந்தங்களைத் தாரும் என்று அவர் திருக்கையிலும் வாங்கிக் கட்டி உள்ளே வைத்து அருளினார்

இத்தைக் கண்டு ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாள் நெடுநாள் ஸ்ரீ நம்பெருமாளை ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் செய்து வேண்டிக் கொள்ள
ஒருநாள் ஸ்ரீ பெருமாள் அர்ச்சக முகேன ஸ்ரீ ஈ யுண்ணி சிறி யாழ்வான் பிள்ளையை அருளப் பாடிட்டு அருளி
ஏன் காணும் நம்மை பஹு வாக உபவாசியா நின்றீர் என்று கேட்டருள -ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாளும் –
ஸ்வாமீ ஸ்ரீ நம்பிள்ளை திருக்கையிலே திருவாய் மொழி ஈடு முப்பத்தாறாயிரம் என்ற ஒரு வ்யாக்யான கிரந்தம் இருக்கிறது —
அத்தை அடியேனுக்கு அவர் இரங்கி ப்ரசாதிக்கும்படி நியமித்து அருள வேணும் என்று பிரார்த்திக்க –
ஸ்ரீ பெருமாளும் அப்படியே செய்கிறோம் -என்று திரு உள்ளம் பற்றி இருக்கச் செய்தே -ஸ்ரீ நம்பிள்ளையும் முதலிகளுமாக
ஸ்ரீ பெருமாளை திருவடி தொழச் சென்றவாறே -ஸ்ரீ பெருமாள் பிள்ளையைக் குறித்து தீர்த்தம் திருமாலை திருப்பரியட்டம்
ஸ்ரீ சடகோபனும் பிரசாதித்து அருளி அர்ச்சக முகேன-ஸ்ரீ பிள்ளாய் ஈடு முப்பத்தாறாயிரத்தை ஸ்ரீ ஈ யுண்ணி சிறி யாழ்வான் பிள்ளைக்குப் பிரசாதியும் –
என்று திரு உள்ளமாக -ஸ்ரீ பிள்ளையும் மஹா பிரசாதம் என்று ஸ்ரீ பெருமாள் அருளப்பாட்டை சிரஸா வஹித்துக் கொண்டு புறப்பட்டுத்
தம் திரு மாளிகையில் எழுந்து அருளி தமக்கு அபிமத சிஷ்யரான ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாள் என்கிற
ஸ்ரீ சிறி யாழ்வான் பிள்ளைக்கு ஈடு முப்பத்தாறாயிரமும் கொடுத்து வாழ்வித்து அருளினார் –

ஸ்ரீ நம்பிள்ளை வைபவத்தை –
இந்திரன் வார்த்தையும் நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன் சொல் வார்த்தையும் கற்பவராம் இந்தக் காசினிக்கே
நந்தின முத்தெறி நம்பூர் வரதர் தம் மாளிகையில்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறைக் கொள்வரே–என்று ஸ்ரீ பாதத்து முதலிகள் அனுசந்தித்தார்கள் இறே

வாழி பதின்மர் உடன் ஆண்டாள் மதுரகவி
வாழிய நாதன் முதலா மா மறையோர் -வாழி
ஒருக்கோலரை நெருக்கி ஓட்டும் எதிராசன்
திருத்தாள் வணங்கினார் சீர் —

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – – ஸ்ரீ அந்தரங்க அணுக்கர் தனியன்கள்/ ஸ்ரீ எம்பார்- ஸ்ரீ பட்டர் வைபவங்கள்-/

March 4, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ ப்ராப்ய தேசத்திலும் ஆச்சார்ய சேஷத்வம் முறை தவற ஒண்ணாது என்னும் த்வரையும்–
சரம தசையிலும் பிராண பிரயாண பாதேயமாக ஸ்வாச்சார்யன் தானே ஸ்ரீ த்வயத்தை விடாய் கெட உபதேசிக்கப் பெற்ற தன்னேற்றமும்
பாகவத அபிமானபிஸ்தலத்திலும் ததீய அபிமான ஸ்தலமே சரம தேசமாகப் பெற்ற தன்னேற்றமும் –
சரம அதிகார பாக விசேஷமும் ஸ்ரீ ஆழ்வான் பக்கலிலே அனுஷ்டான சேஷமாகக் கண்டது இறே

——————–

ஸ்ரீ முதலியாண்டான் திருநக்ஷத்ரம் -சித்திரையில் ஸ்ரீ புனர்வஸூ –

அவர் தனியன் –
ஸ்ரீ பாதுகே யதிராஜஸ்ய கதயந்திய தாக்யயா தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்-

அஹஹத் பாகி நேயத்வம் பாது காத் வந்த்ரிதண்டதாம் –ஸம்ப்ராப்தோ யதிராஜஸ்ய குணைஸ் தத் ப்ரீதி ஹேதுபி-
ஸ்ரீ வைஷ்ணவா நாந்தா சத்வம் ஸ்வாமித்வம் பிரபுதாம் ஸ்வயம் -வாதூல குல தவ்ரேயம்-வந்தே தாசாரதிம் குரும் –

———————

திருக் குருகைப் பிரான் பிள்ளான் தனியன் –
யா பர்யாப்த கல க்யாதோ யதிராஜாப்தி சந்த்ரமா –குசலந்தி சதாம் மே அசவ் குருகேச்வர தேசிக –

விக்யா தோயாதி ஸார்வ பவ்ம ஜலதேஸ் சந்த்ரோபமத்வே நய-ஸ்ரீ பாஷ்யே சயதன்வயாஸ் ஸூ விதிதாஸ் ஸ்ரீ விஷ்ணு சித்தாதய-
வ்யாக்யாம் பாஷ்ய க்ருதாஞ்ஞ யோபநிஷதாம் யோ த்ராமிடீ நாம் வ்யதாத் பூவந்தங் குரு கேஸ்வரங் காருண்ய பூர்ணம் பஜே

———————————-

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் தனியன்
ஸ்ரீ ராமானுஜ பதாம்போஜ யுகளீ யஸ்யதீமத ப்ராப்யஞ்ச பிராபகம் வந்தே ப்ரணதார்த்தி ஹரம் குரும்-

ஆஸ்தி காக்ரேசரம் வந்தே பரி வ்ராட் குரு பாசகம் யாசிதங் குரு கேசேந ப்ரணதார்த்தி ஹரம் குரும்

ஸ்ரீ பாஷ்யம் தர்சயித்வா யதிபதி ரசிதம் சார தாயை நிவ்ருத்தோ நத்வா ஸ்ரீ வேங்கடேசம்பதி பரமபதந் தத்த வாங்கோபிகாயை —
ஆக்யாம் வேதோத்த மாங்கோ தயந இதி ததத் பாஷ்ய காரேண தத்தா மாத்ரேயாசார்ய விஷ்ணோ ரனுஜமனுதினம் சாதரந்தன் நமாமி

————————————-

ஸ்ரீ எங்கள் ஆழ்வான் தனியன் –
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ ஸம்ஸ்ரயாய சேதோ மமஸ் ப்ருஹய தேகி மத பரேண நோசேந் மமாபியதி சேகர
பாரதீ நாம் பாவ கதம் பவிதுமர்ஹதி வாக் விதேய

——————————–

ஸ்ரீ நடாதூர் ஆழ்வான் தனியன்
யஸ்மின் பதம் யதிவரஸ்ய முகாத் பிரணேதுன் நிஷ்க்ராம தேவ நிததே நிகமாந்த பாஷ்யம் –
தஸ்யை வதம் பகவத் பிரிய பாகி நேயம் வந்தே குரும் வரத விஷ்ணு பதாபிதாநம்

ஞாநோத்த மோத்ததி நிரா ரண ப்ரதுஷ்யத் ராமாநுஜார்ய கருணா பரிணாஹ பாத்ரம் –
வத்ஸான்வவாய திலகம் வசதிங் குணானாம் வந்தாமஹே வரத விஷ்ணு குரும் வரேண்யம்

————————————————

ஸ்ரீ சோமாசி ஆண்டான் தனியன்
நவ்மி லஷ்மண யோகீந்த்ர பாத சேவை கதாரகம் -ஸ்ரீ ராம க்ரது நாதார்யம் ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாகரம்

—————————————

ஸ்ரீ நடுவில் ஆழ்வான் தனியன்
யேந அனந்தாக்ய மஹம் பஜே ப்ரோத் சகலதே நித்யங்கார்க்ய வம்ச மஹாம்புதி-மந் மஹேதம் சதா சித்தே மத்யமார்ய கலா நிதிம்

————————–

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தனியன்

தயா பாலந தேவாய ஞான சார ப்ரதாயச ப்ரமேய சாரந்தே நமோ அஸ்து பிரேம சாலிநே

யதிராஜ தயா பாத்திரம் யதி பங்க்தி விபூஷணம் தயா பால முனிம் வந்தே தேசிகாக்ரே சரம்சதா

————————————–

ஸ்ரீ அனந்தாழ்வான் திரு நக்ஷத்ரம் -திருச் சித்திரையில் திருச் சித்திரை

அகிலாத்ம குணா வாசம் அஞ்ஞான திமிரா பஹம் ஆஸ்ரிதா நாம் ஸூ சரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்

ஸ்ரீ மத் ராமாநுஜாசார்ய ஸ்ரீ பாதாம் போருஹ த்வயம் சத் உத்தமாங்க சந்தார்யம் அனந்தாஹ்ய மஹம் பஜே -(அனந்தார்ய குரும் பஜே )

ஸ்ரீ யதீந்த்ர பதாம் புஜ சஞ்சரீகம் ஸ்ரீ மத் தயா பால தயைக பாத்ரம்-ஸ்ரீ வேங்கடேச அங்க்ரி யுகாந்தரங்கம் நமாம் யனந்தார்ய மனந்த க்ருத்வ

———————————–

ஸ்ரீ எச்சான் தனியன் –
யேந வைஷ்ணவ சேஷத்வ பர்யந்தம் பரமாத் நம-சேஷத்வ மாத்ம நோஜஜேயம் யஜ்ஜே சந்தம் உபாஸ்மஹே

———————————–

ஸ்ரீ வடுக நம்பி தனியன் –
ஸ்ரீ ராமாநுஜார்ய சரண பிரணவம் பரதேவவத் -வடு பூர்ணம் அஹம் வந்தே பரஞ்ஞான பயோ நிதிம்

——————————————-

ஸ்ரீ எழுபத்து நான்கு ஆச்சார்யர்களுக்கும் சமுதாய தனியன்
ஸ்ரீ ராமாநுஜார்யாச் சுருதி மௌலி பாஷ்யம் அர்த்தம் ரஹஸ்யந்த்ரமிட சுருதீனாம் –
ஸம்ப்ராப்தே நைவ குரூக்ருதாம்ஸ் தாந் பஜே சதுஸ் சப்ததி பீட ஸம்ஸ்தான்

———————————-

ஸ்ரீ மாருதிச் சிறியாண்டான் தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை
ஸ்ரீ திருவேங்கடமுடையான் தன் ஸ்வரூபத்தை மறந்து என் ஸ்வரூபத்தை நினைத்தான் ஆகில் பழைய நரகங்கள் ஒழிய
வேறே எனக்கு என்று சில நரகங்களை ஸ்ருஷ்டிக்க வேண்டும் இறே
அன்றிக்கே என் ஸ்வரூபத்தை மறந்து தன் ஸ்வரூபத்தை உணர்ந்தான் ஆகில் பழைய திரு நாடு போராது-
எனக்கு என்று வேறே ஒரு திரு நாடு ஸ்ருஷ்டிக்க வேண்டும் இறே
அதாவது ஸ்வ க்ருத தோஷ ஸ்மரணம் அனந்த துக்க பிரதான ஹேது
ஈஸ்வர வாத்சல்ய ஸ்மரணம் அனந்த ஆச்சர்ய ஸூக பிரதான ஹேது -என்றபடி

இவர் தனியன் –
ஞாதும் கூர குலாதி பங்க்ரி மிகுளாத் ப்ராப்த பதம் ப்ரேஷித-ஸ்ரீ ராமா வரஜேந கோசல பதிர் த்ருஷ்ட் வாததீ யாம்ஸ்திதிம் –
ஸம்ப்ராப்தஸ் த்வரயா புராந்தக புராத் கல்யாண வாபீ தடேயோ சவ் மாருதிரித்யசம் சதவ யந்தஸ்மை நமஸ் குர் மஹே

——————————–

ஸ்ரீ மருதூர் நம்பி தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை
மூன்று ஜென்மம் தம் திருவடிகளில் அபராதம் ப ண்ணின சிஸூ பாலன் திருவடிகளை அடைந்தான் –
அனந்த ஜென்மங்கள் திருவடிகளில் அபராதம் பண்ணின நான் இழந்து இருக்கை வழக்கோ என்ன
ஸ்ரீ சிங்கர் அன்றே திருவடிகளைத் தந்து அருளினார் –
அதாவது இத்தலையில் அபராதமே அவன் அங்கீ காரத்துக்கு பச்சை என்று உணர்கை சரம ஞான பரிபாகம் என்றபடி

———————————

ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் தம்முடைய அந்திம தசையில் முதலிகள் எல்லாரையும் அழைப்பித்துத் தீர்த்தம் கொண்டு
க்ஷமை கொண்டு ஸ்ரீ பொன்னாச்சியாரைப் பார்த்து -நம்முடைய விஸ்லேஷத்தில் நீ பிழை நினையாதே கொள் என்று ஆணை இட்டு
ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளைத் தம் திரு முடியில் வைத்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –
அனந்தரம் பொன்னாச்சியாரும் கிலேசியாமல் தரித்து இருந்து திருவாசலைத் திரு அலகிட்டுத் தெளிநீர் தெளித்துத் திருப்பிண்டி இட்டுத்
திருக் காவணம் இடுவித்து நிற்க ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ உடையவர் நீராடும் துறையிலே திரு மஞ்சனம் எடுத்துக் கொண்டு வந்து
ஸ்ரீ த்வய அனுசந்தானத்துடன் நீராட்டி திரு நாமம் திருச் சூர்ணம் முதலாக ஸ்ரீ வைஷ்ணவ அலங்காரங்கள் எல்லாம் செய்து
ஸ்ரீ பெருமாள் சாத்திக் களைந்து வர விட்டு அருளின திருமாலையும் திருப்பரி யட்டமும் சாத்தி அலங்கரிக்க
தாமும் சர்வ ஆபரண பூஷிதையாய்க் கஸ்தூரி மிருகம் போலே உலாவி நின்று
ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தீர்த்தம் கொண்டு சுருள் அமுது திருத்தித் திரு மாளிகையில் உள்ள த்ரவ்யங்கள் அடங்கலும் சமர்ப்பிக்க கரும்புகளும் எடுத்து
ஸ்ரீ நூற்று அந்தாதி இயலாக அனுசந்தித்து வரப் பின்பு திருச் சூர்ணம் இடித்து எல்லாரும் எண்ணெய் சுண்ணம் கொண்டாடி
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசருடைய விமல சரம விக்ரஹத்தை திவ்ய விமானத்தில் எழுந்து அருள பண்ணி வைத்துக் கொண்டு
ஏகாங்கிகளும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் மற்றும் உள்ள முதலிகளும் மாறி மாறி ஸ்ரீ பாதம் தாங்க விமானமும் தூர மறைந்த அளவில்

ஸ்ரீ பொன்னாச்சியாரும் சோகார்த்தையாய்
மாரி மாக் கடல் வலை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில் தாயாரின் ஆசையில் போயின நெஞ்சுமும் தாழ்ந்தது
ஓர் துணை காணேன் -ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்று
திசைகளும் மறைந்தன செய்வது அறியேனே -என்று கை எடுத்துக் கூப்பிட்டு அழுது கொண்டு விழுந்து பாகவத விஸ்லேஷ அஸஹிஷ்ணுவாய்
மூர்ச்சித்துக் கிடந்து அப்போதே அங்கே ஸ்ரீ திருநாட்டுக்கு எழுந்து அருள முதலிகளும் அங்கே அவருக்கு திருச் சூர்ணம் இடித்து
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசருடன் திருப் பள்ளி படுத்தார்கள் என்பர்கள்-
இவருக்கு ததீயா விஸ்லேஷத்தில் அப்போதே சரீர விஸ்லேஷம் வரும்படியான ததீயா பிரேமா சரம பாகம் முற்றி வளர்ந்த படி இ றே இது

இவர் தனியன்
ஜாக ரூக தனுஷ் பாணிம் பாணவ் கடக்க ஸமந்விதம்-ராமானுஜ ஸ்பர்ச வேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் பாகி நேயத்வ யுகம்
ஸ்ரீ பாஷ்யகார பரம் வஹம் ரங்கேச மங்களகரந் தனுர்த்தாசம் அஹம் பஜே

—————————————–

ஸ்ரீ நம்பி திரு வள நாடு தாசர் திருநாட்டுக்கு எழுந்து அருளுகிற சமயத்தில் தம் ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருந்த ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அழ-
அதற்கு ஸ்ரீ நம்பி -கெடுவாய் செத்துப் போகிற நான் போகா நின்றேன் -ஸ்ரீ பராசர பட்டர் வாசிக்கக் கேட்க இருக்கிற
நீயோ அழுகிறாய் -என்று அருளிச் செய்தார் இறே
அதாவது சதாச்சார்ய வ்யாக்யான வசன ஸ்வாரஸ்யாசக்தி அபவர்க்க பல ப்ராப்தியிலும் அருசி பிறப்பிக்கும் என்றபடி

————————————

ஸ்ரீ பிள்ளை திரு வழுதி வள நாட்டு அரையர் தம் அந்திம தசையில் கிலேஸிக்க சுற்றிலும் இருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
அன்யோன்யம் திரு முகம் பார்த்து இருக்க -அவரும் இவர்களுடைய அபிப்ராயத்தைத் தம் திரு உள்ளத்திலே கோலி அருளி –
வாரிகோள் முதலிகாள் சம்சாரிகள் இழவுக்குப் போர நொந்தோம் காணுங்கோள்-
அவர்களுக்கும் நமக்கும் அல்ப மாய்த்து வாசி உள்ளது -எங்கனே என்னில்
நாம் இடுவது ஒரு தண்டம் -பண்ணுவது ஒரு பிரபத்தி -இழப்பது ஒரு ஹேயமான சரீரம் -பெறுவது ஒரு விலக்ஷணமான ஸ்ரீ பரமபதம் –
இத்தை அறியாதே அதிபதிக்கிறார்களே என்ற கிலேசமாய்த்து காணுங்கோள் என்ன முதலிகளும் க்ருதார்த்தரானார்கள்
அதாவது -பர துக்க அஸஹிஷ்ணுதவமும் -பாரா சம்ருத்ய ஏக பிரயோஜனத்வமும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு உண்டாக வேணும் என்று கருத்து

———————————————-

ஸ்ரீ எம்பார் வைபவம் –

ஸ்ரீ எம்பார் ஸ்ரீ உடையவர் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது-அவர் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு-
நாயந்தே ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸூக்தி கையிலே ரஜத புத்தி பண்ணுவாரைப் போலே அபரமாத்மா விஷயே பரமாத்மா புத்தி பண்ணி
விபரீத ஞான நிஷ்டனாய் ஸ்ரீ காளஹஸ்தி ஆகிற கடும் காட்டிலே இருந்த என்னைப் போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து
தன் பால் ஆதரம் பெருகும்படி திருத்தி மாயப் பற்று அறுத்து அடியேனுடைய துர்வாச நாச்சேதனத்தைப் பண்ணி அருளி –
பொருள் இல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டு அருளி -தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -என்கிறபடியே
சர்வவித பந்துவும் த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டையும் தேவரீர் திருவடிகளே என்று காட்டிக் கொடுத்து அருளினார் –

தேவரீரும் அப்படியே அடியேன் ஸ்ரீ நம்பி திருவடிகளை அகன்ற இலவு எல்லாம் தீர சர்வவித உத்தாரக பந்துவாய் நிற்க –
தேவரீர் திருவடிகளே ப்ராப்யம் ப்ராபகமும் என்று அத்யவசித்து இருந்த அடியேன்
நச சீதா த்வயா ஹீனா ந ச அஹம் அபி ராகவ முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதவ் -என்கிறபடியே
என் உயிர் நிலையான தேவரீர் திருவடிகளை அகன்று ஒரு க்ஷண மாத்ரமும் தரிக்க மாட்டேன் –
தேஹி விட்டுப் போனால் தேகம் நிற்குமோ -நிழலும் அடி தாறும் ஆனோம் -என்கிறபடியே ஸ்ரீ பாதாச்சாய பன்னனான அடியேன்
எங்கனே தரித்து இருப்பேன் என்று திருவடிகளில் போர ஆர்த்தியோடே விழுந்து எழுந்து இராமல் கிடக்க
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ எம்பாரை குளிர நோக்கி அருள -நாம் ஸ்ரீ நம்பி திருக்கையாலே உம்மை உதக பூர்வகமாகப் பரிஹரித்த பின்பு
நமக்கும் உம்மைப் பிரியக் கூடுமோ –
நம்முடைய ஸ்ரீ வைகுண்ட நாதனும் அப்படியே செய்து அருளுகிறான் -பதறாதே கொள்ளும் -என்று ஸ்ரீ எம்பாரை வாரி எடுத்து
அணைத்துக் கொண்டு தம் பொன் அம் கழல் தாமரைப் பூக்களால் அவர் திருமுடியை அலங்கரித்து அருளி ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருள
ஸ்ரீ எம்பாரும் தாயைப் பிரிந்த ஸ்தநந்த்ய பிரஜையைப் போலே சிதில அந்தக்கரணனாய் பெரிய ஆர்த்தியோடே
ஸ்ரீ உடையவர் பிரசாதித்து அருளின அர்த்த விசேஷங்களை ஸ்ரீ பட்டர் முதலான முதலிகளுக்கு
ப்ரசாதித்துக் கொண்டு எழுந்து அருளி இரா நிற்க

ஒரு நாளாக ஸ்ரீ உடையவர் திருவடிகளைத் திரு உள்ளத்தே நினைந்து நைந்து உள் கரைந்து உருகி -தாய் நாடு கன்றே போல் –
எப்போது காணப் பெறுவேன் -என்று தவறை விஞ்சி ஆச்சார்ய விஸ்லேஷம் பொறுக்க மாட்டாமல் –
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா -என்கிறபடி ஸ்ரீ உடையவரை அகன்று இருக்க மாட்டாதே ஆற்றாமை கரை புரண்டு மிகவும் விஞ்சி
ஸ்ரீ பெரியபெருமாள் சந்நிதியில் சென்று -நாயந்தே அடியேன் ஸ்ரீ உடையவர் திருவடிகள் ஏறப் போக நினையா நின்றேன் –
தேவரீர் விடை பிரசாதித்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பெருமாளும் அப்படியே செய்யும் -என்று
திரு உள்ளம் பற்றி அருளி -ஸ்ரீ எம்பாருக்குத் தீர்த்த பிரசாதமும் ஸ்ரீ சடகோபனும் இரங்கிப் பிரசாதித்து அருள -இவரும்

திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-என்று அங்கீ கரித்து அருளி -ஸ்ரீ அமலனாதிப்பிரான் படியே
ஸ்ரீ பாதாதி ஸ்ரீ கேசாந்தமாக அனுபவித்து அருளி
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே-என்று கொண்டு அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பனை
தன் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நீங்காத படியாக நிறைத்துக் கொண்டு புறப்பட்டு அருளி ஸ்ரீ உடையவர் திரு மடத்தேற எழுந்து அருளி –
யோ நித்யம் -என்று தொடங்கி-ராமாநுஜஸ்ய சரணவ சரணம் ப்ரபத்யே -என்று அனுசந்தித்துக் கொண்டு தண்டனை சமர்ப்பித்து திருமடம்
எழுந்து அருளித் தம் திரு ஆராதனமான ஸ்ரீ அரங்க நகர் அப்பனைத் திருவடி விளக்கி ஸ்ரீ பட்டரை அழைத்து அருளி

வாரீர் ஸ்ரீ பட்டரே-நாம் ஸ்ரீ ஆழ்வான் திருக் குமாரர் – அகில சாஸ்திரங்களையும் அதிகரித்தோம் -ஸ்ரீ நம்பெருமாள் நம்மை
புத்ர ஸ்வீ காரம் பண்ணி அருளினார் என்னும் மேன்மைகளை நினைந்து இறுமாந்து இராதே –
நம் ஆணை ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே உபாய உபேயம் என்று அத்யவசித்து இரும்-என்று அருளிச் செய்து –
ஸ்ரீ கணியனூர் சிறி யாச்சான் -ஸ்ரீ சட்டம் பளிச் சீயர் -ஸ்ரீ ஈச்சம் பாடிச் சீயர் முதலானோர்க்கும் மற்றும் உள்ள முதலிகளுக்கும்
ஸ்ரீ உடையவர் பிரசாதித்து அருளின அர்த்த விசேஷங்களையும் ப்ரசாதித்துக் கொண்டு தர்சனம் நிர்வகித்து வாழ்ந்து அருள வேணும்
என்று மங்களா சாசனம் செய்து அருளி அவர்களை ஸ்ரீ பட்டர் திருக்கையிலே கொடுத்து அருளி
சர்வ அபராதங்களையும் பொறுத்து அருள வேணும் என்று தண்டனை சமர்ப்பித்து ஸ்ரீ பட்டர் முதலான முதலிகளைத் தீர்த்தம் கொண்டு
அமுது செய்யப் பண்ணி ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனே வழித் துணையாக நினைத்துக் கொண்டு
ஸ்ரீ உடையவர் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

ஸ்ரீ பட்டரும் ஆச்சார்ய விஸ்லேஷம் பொறுக்க மாட்டாமல் மிகவும் சோகார்த்தராய் கிலேசிக்க-அருகில் இருந்த முதலிகளும்
வாரீர் ஸ்ரீ பட்டரே தேவரீர் இப்படி கிலேசிக்கலாமோ -என்று தேற்றமிட ஸ்ரீ பட்டரும் தம்மிலே தெளிந்து கொண்டு இருக்கிற அளவிலே
ஸ்ரீ பெருமாள் சாத்திக் களைந்த திருமாலை திருப் பரியட்டம் முதலானவற்றையும் கொண்டு அனைத்துக் கொத்தில் உள்ளவர்களும் வர
ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாள் திருக்கையாலே ப்ரஹ்ம மேத விதி யடங்கச் செய்வித்து
ஸ்ரீ எம்பாருடைய விமல சரம விக்ரஹத்தைப் பீடயாநத்திலே எழுந்து அருளுவித்துக் கொண்டு போய் யதி ஸம்ஸ்கார விதி யுக்தப் பிரகாரேண
சமஸ்கரித்து கனித்துத் திருப் பள்ளிப் படுத்தி -அவப்ருதம் கொண்டாடிப் பெருக்கத் திரு அத்யயனமும் நடத்தி அருளினார் –

ஆச்சார்ய கைங்கர்யமே பரம பிரயோஜனமாய்த் தன்னைப் பேணாமையும் -ஆச்சார்ய விஷயத்தில் க்ரய விக்ரய அர்ஹராய்
ஸ்வ வியாபாரம் அற்று இருந்த படியையும்-ஆச்சார்ய திறத்தில் சாயாவத் பாரதந்தர்யமும் –
ஆச்சார்யரை அகன்று தரியாத அனுஷ்டானமும் இவருக்கே உள்ளது ஓன்று இறே

ஸ்ரீ எம்பார் திரு நக்ஷத்ரம் -திருத் தையில் திரு புனர்வஸூ
இவர் தனியன்
ஸ்ரீ ராமானுஜ பதாச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயநீ ததாயத்த ஸ்வரூபா சா ஜீயான்மத் விஸ்ரமஸ்தலீ –

வம்பார் மலர்க்கணை களைந்தாலு மேவு மாதர் வழி அம்பால் இடர ஒன்றிலன் ஒரு காலும் அரிவையர்க்குத்
தம்பாடு ஒரு காலும் ஏகாந்தம் இல் என்று தாம் உரைத்த எம்பார் அடி சரண் என்பார் அடி சரணம் எங்களுக்கே

ஸ்ரீ பட்டார்யா ப்ரபத்திம்வ்ய பதி சத துலன் த்ராவிடாம் நர்ய மவ்லேரர்த்தம் ஸ்ரீ பாஷ்ய மந்யாநபி சயதிவரா தேசதோ அந்யாந் ரஹஸ்யான்
யஸ் தோக்தோ தேசி கேந்த்ரோ யதிபதி சரணச் சாயா நாமார்ய வர்யஸ் தங் கோவிந்தார்ய மஸ்மாத் குலகுரு மமித ஞான வைராக்யமீடே
ஹ்ருதி நாராயணம் பஸ்யன் நாப்யச் சத ர ஹஸ் சதா -யஸ் ஸ்வாதார ரதவ்ஷாபி கோவிந்தம் உபாஸ்மஹே

———————————————–

ஸ்ரீ ஆழ்வார்களுக்கும் ஸ்ரீ உடையவருக்கும் தீர்த்த திவசம் சொல்லாது ஒழிவான்-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பரிபாலித்து ப்ரசித்திப் படுத்தாமல் இருப்பது – என் என்னில்-
அத்யாபி அகிலாத்ம உத்தாரணார்த்தமாக ஸ்ரீ அர்ச்சா விக்ரகங்களை அங்கீ கரித்து இங்கே எழுந்து அருளி இருக்கிறார்கள் ஆகையால் –
அன்றிக்கே-அவர்கள் அங்கிளும் கால் வாங்கிப் போகில் ஆத்ம கோடிகளுக்கு ஈடேற வழி இல்லை இறே -இத்தை நினைத்து இறே
நம் ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் தீர்த்தம் கொண்டாடித் திதி பரிபாலனம் பண்ணாது ஒழி கிறதும்
ஆர்த்ராயா முதிதோ மஹா புரிகதோ ஹஸ்த்யத்ரி மாத்தாஸ்ரமஸ் ஸ்ரீ ரங்க ஸ்ரீய மேத்ய சிஷ்ய மஹிதோ வேதாந்த பாஷ்பம் வதன் –
தீப்ரோ திக் விஜயம் விதாய சகதைர் விப்ரைர் த்வி பஞ்சா சதைர்பா தி ஸ்ரீ யது பூதரே யதிவரஸ் சம்பத் குமாரம் பஜன் என்று –
சித்திரையில் செய்ய திருவாதிரையில் ஸ்ரீ பெரும் பூதூரிலே அகில ஆத்ம உத்தாரண அர்த்தமாக வந்து அவதரித்து
சகல சாஸ்திரங்களையும் அப்யஸித்து ஸ்ரீ பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பேர் அருளாளர் நியமனத்தாலே ஸ்ரீ பெரிய நம்பியை ஆஸ்ரயித்துப்
பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் பெற்று
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியில்
ஆஸ்ரம பிராப்தி பண்ணி அருளி ஸ்ரீ ரங்க ஐஸ்வர்யத்தைப் பெற்று
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து திக் விஜயம் பண்ணித் ஸ்ரீ திருவரங்கர் பரத்வத்தை நிலை நிறுத்தி அருளி-புழுவன் வ்யாஜேன
மேல் நாட்டுக்கு எழுந்து அருளி ஸ்ரீ திரு நாரணற்கு அனைத்து அழகும் கண்டு அருள பண்ணி ஸ்ரீ செல்வப் பிள்ளையை
பெற்று எடுத்து வந்து ப்ரதிஷ்டிப்பித்து அருளி ஐம்பத்து இருவர்க்காக அர்ச்சாவதாரா ரூப விக்ரஹத்தை அங்கீ கரித்து
அதிலே தம் சர்வவித சக்தியையும் ப்ரதிஷ்டிப்பித்துக் கொண்டு அவர்களால் ஸேவ்யமானராய் –
செம் பொன் கழல் அடி திரு உரு ஸ்ரீ செல்வப்பிள்ளையை மங்களாசாசனம் செய்து கொண்டு கால தத்வம் உள்ளதனையும் இங்கே
ஸூ ப்ரதிஷ்டிதராய் விளங்கா நின்று கொண்டு வாழ்ந்து அருளுகிறார் ஸ்ரீ உடையவருமாய்த்து –

————————————

ஸ்ரீ பட்டர் வைபவம்

அநந்தரம் ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்து முதலிகளுடனே பெரும் கூட்டத்து திரு ஓலக்கமாக எழுந்து அருளி இருந்து தர்சனம் நிர்வகித்து
அருளுகிற காலத்திலே ஒரு தீர்த்த வாசி ப்ராஹ்மணன் வந்து ஸ்ரீ பட்டரை சேவித்து அவருடைய வேதாந்த உபன்யாச
சாதுர்யத்தையும் கோஷ்டியின் வைபவத்தையும் கண்டு நின்று
ஸ்ரீ பட்டரே மேல் நாட்டில் ஸ்ரீ வேதாந்தி என்று ஒரு வித்வான் இருக்கிறான் -அவனுடைய வித்யையும் கோஷ்டியம் போலே உமக்கும் இருந்தது என்ன –
ஸ்ரீ பட்டரும் ப்ராஹ்மணன் சொன்ன வார்த்தையைக் கேட்டு அருளி -ஆமோ அப்படியும் ஒரு வித்வான் உண்டோ -என்ன –
உண்டு என்று சொல்லி -அந்த ப்ராஹ்மணன் இங்கு நின்றும் புறப்பட்டு மேல் நாட்டுக்குப் போய் வேதாந்தி கோஷ்டியிலே சென்று-

வேதாந்திகளே உம்முடைய வித்யைக்கும் கோஷ்டிக்கும் சத்ருசராய் ஸ்ரீ பட்டர் என்பார் ஒருவர்
இரண்டு ஆற்றுக்கும் நடுவே எழுந்து அருளி இருக்கிறார் என்ன
வேதாந்திகளும் ப்ராஹ்மணனைப் பார்த்து -ஆமோ ஸ்ரீ பட்டர் நமக்கு ஒத்த வித்வானோ என்ன -அவனும் உம்மிலும் அதிகர் என்ன
அவனும் அவருக்கு எந்த சாஸ்திரம் போரும் என்ன -ப்ராஹ்மணனும் -சப்த தர்க்க பூர்வ உத்தர மீமாம்ச தொடக்கமான சகல சாஸ்திரங்களும்
ஸ்ரீ பட்டருக்குப் போரும் என்ன வேதாந்தியும் இவன் சொன்னத்தைக் கேட்டு -இவ்விபூதியில் நமக்கு ஒருவரும் எதிரில்லை என்று
ஷட் தர்சனத்துக்கும் ஆறு ஆசனம் இட்டு அதன் மேலே உயர இருந்தோம் -ஸ்ரீ பட்டர் நம்மிலும் அதிகர் என்று ப்ராஹ்மணன் சொன்னானே
என்று அன்று தொடங்கி திடுக்கிட்டு இருந்தான் –
அவ்வளவில் அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்து ஸ்ரீ பட்டர் சந்நிதியில் வந்து –

ஸ்ரீ பட்டரே உம்முடைய வைபவம் எல்லாம் வேதாந்திக்குச் சொன்னேன் என்ன -ஸ்ரீ பட்டரும் ப்ராஹ்மணனைக் குறித்து
அதுக்கு அவன் என்ன சொன்னான் -என்ன -அவனும் -ஸ்ரீ பட்டருக்கு எந்த சாஸ்திரம் போரும் என்று கேட்டான் என்ன –
ஸ்ரீ பட்டரும் ப்ராஹ்மணா அதுக்கு நீ வேதாந்திகளுக்கு என்ன சொன்னாய் என்ன -அவனும் ஸ்ரீ பட்டருக்கு சப்த தர்க்கங்களும்
பூர்வ உத்தர மீமாம்சைகளும் நன்றாகப் போரும் என்று வேதாந்தி யுடன் சொன்னேன் என்ன –
ஸ்ரீ பட்டரும் அந்த ப்ராஹ்மணனைக் குறித்து தீர்த்த வாசியாய் தேசங்கள் எல்லாம் நடையாடி வித்யா மஹாத்ம்யங்களை எல்லாம் அறிந்து
நாகரீகனாய் இருக்கிற நீ நமக்குப் போருமது எல்லாம் அறிந்து வேதாந்திக்குச் சொல்லாதே கேவலம் வேதாந்த சாஸ்த்ரங்களே போரும்
என்று தப்பச் சொன்னாயே -என்ன ப்ராஹ்மணனும் ஸ்ரீ பட்டரைக் குறித்து-இந்த லோகத்தில் நடையாடுகிற சாஸ்திரம் ஒழிய உமக்கு
மற்று எது போரும் என்று வேதாந்திக்குச் சொல்வது -என்ன

ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் போரும் என்று வேதாந்திக்குக் சொல்லாது இருந்தாயே என்று வெறுத்து அருளிச் செய்து விட –
அவனும் பின்னையும் மேல் நாட்டுக்குப் போய் வேதாந்தியுடன் இச்செய்தியைச் சொல்ல –
வேதாந்தியும் ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் என்கிற சப்தத்துக்குத் தானே அர்த்தம் ஆகிறது இல்லை –
அவர் எப்படிப்பட்ட வித்வானோ என்று விஸ்மயப் பட்டு இருக்கச் செய்தே
ஸ்ரீ பட்டரும் -வேதாந்தியை நம்முடைய தர்சனத்திலே அந்தர்ப்பூதராம்படி திருத்தும் என்று ஸ்ரீ உடையவர் நியமித்து அருளினது
அவசியம் கர்தவ்யம் என்று தம் திரு உள்ளத்திலே கொண்டு ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் சென்று சேவித்து நின்று –
நாயந்தே மேல் நாட்டில் வேதாந்தி என்று ஒரு பெரிய வித்வான் இருக்கிறான் -அவனைத் திருத்தி நம் தரிசன பிரவர்த்தகனாம் படி
பண்ண வேண்டும் என்று அங்கேற விடை கொள்வதாக இரா நின்றேன் -தேவரீர் அவனை நன்றாகத் திருத்தி
ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தத்துக்கு நிர்வாஹனமாம் படி திரு உள்ளம் பற்றி அருள வேணும் என்று ஸ்ரீ பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெருமாளும் அப்படியே ஆகக் கடவன் -த்வரித்துப் போய் வாரும் -என்று திரு உள்ளம் உகந்து-தீர்த்தம் திருமாலை திருப்பரியட்டம் இவற்றுடன்
தம் திருக்குமாரரான வாசி தோன்ற அநேகம் திரு ஆபரணம் திருப்பரியட்டம் ந்ருத்த கீத வாத்யங்களையும் தமக்கு உண்டான
சகல பரிஜன பரிச்சதங்களையும் கூட்டி போம் என்று விடை கொடுத்து அருள –

ஸ்ரீ பட்டரும் புறப்பட்டு மேல் நாட்டிலே எழுந்து அருளி திருக் காவேரி கரையிலே ஸ்ரீ சிறுப்புத்தூர் அண்டையிலே நின்று அருள
ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ ஆழ்வான் திருக்குமாரர் ஸ்ரீ பட்டர் எழுந்து அருளினார் என்று கேட்டு சடக்கெனப் புறப்பட்டு எழுந்து அருளி
திருக் காவேரிக்கரையிலே ஸ்ரீ பட்டரைக் கண்டு சேவித்து –
ஐயோ ஸூ குமாரரான நீர் காடும் மலையும் கடந்து இத்தனை தூரம் எழுந்து அருளலாமோ -என்ன
ஸ்ரீ பட்டரும் திருவடிகளில் விழுந்து ஸ்ரீ அனந்தாழ்வானை சேவித்து ஸ்ரீ உடையவர் மேல் நாட்டிலே போய் வேதாந்தியைத் திருத்தி
நம் தரிசன பிரவர்த்தகராம் படி பண்ணு என்று நியமித்து அருளினார் –
அப்படியே ஸ்ரீ நம்பெருமாளை விடை சாதித்து அனுப்பி அருளினார் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ அனந்தாழ்வானும் -எங்கள் குடிக்கு அரசே வாரும் என்று ஸ்ரீ பட்டரை எடுத்து அனைத்துக் கொண்டு போய்

ஸ்ரீ யாதவாத்ரேர்ஜி நிமிஷா யேஷாங்கே ஷாஞ்ச வித்யதே -தேஷான் தேசே யமபடா நாகச்சந்தி கதாசன-என்று
ஸ்ரீ யதிசைலயியாசை யாவர் சிலருக்கு உண்டாய் இருக்கும் -அவர்கள் வசிக்கும் தேசத்தில் யமபடர் மறந்தும் புகுரார்கள்-என்றும்
சஹஸ்ர சிகரஸ் சோயம் சாஷாச் சேஷாத்ம கோ கிரி -வைகுண்டாதபி யத்ராஹம் ராமயா சஹி தோரமே-என்று
சஹஸ்ர பணா மண்டலமுடைய திருவனந்த ஆழ்வான் திருவவதாரமான ஸ்ரீ யதுகிரி சிகரத்தில் ஸமஸ்த கல்யாண குணங்களும்
குன்றில் இட்ட விளக்காய் பிரகாசிக்கும்படி ஸ்ரீ பரமபதத்தையும் ஸ்ரீ திருப் பாற் கடலையும் உபேக்ஷித்து –
ஸ்ரீ அரவிந்தப்பாவையும் தானுமாய்-அல்லி மலர் மகள் போக மயக்குகளாய் நிற்க-

ஸ்ரீ வைகுண்ட வாசிநஸ் சர்வே சேஷ சேஷாசநாதய-திர்யக் ஸ்தாவர ஜன்மா நிச்ரயந்தேயது பூதரே-என்று ஸ்ரீ வைகுண்ட நாட்டில் வாழும்
ஸ்ரீ சேனை முதலியார் ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் முதலான நித்ய முக்தர் எல்லாரும் ஸ்ரீ திருநாடு புல் எழுந்து போம்படி குடி வாங்கி வந்து
இஸ் ஸுசீல்ய ஸுலப்ய அனுபவ அர்த்தமாக திர்யக் ஸ்தாவர ஜென்மங்களைப் பரிக்ரஹித்து ஸூ பிரதிஷ்டராய் இங்கே வர்த்திக்கிறார்கள்
என்றும் சொல்லும்படியான வைபவத்தை யுடைய ஸ்ரீ யாதவகிரியைக் கிட்டி சேதனன் பாத பீடத்தில் ஏறும் பாவனை கொண்டு
செம்பொன் ஸ்ரீ யதுகிரி ஏறித் திருக் கல்யாண சரஸ்ஸைக் கிட்டி
காலே காலேச சேவந்தாம் கல்யாண தீர்த்தம் அத்புதம் -யத்ர தீர்த்தே நிமஜ் ஐந்தோ யத யஸ்ஸம்சித வ்ரதா உன்மஞ்சந்தி பவாம் போதி
கல்லோல கலஹாந்தராத் புஷ்கரே நததா ப்ரீதிர் ந கங்காயாம் நா யாமுநே-யதா கல்யாண தீர்த்தஸ்ய தீர்த்தே கல்யாண சேதஸாம் தீர்த்தே
தத்ரா மலேஸ் நாத்வா முச்யந்தே சர்வ கில்பிஷை-நாஸ்தி கஸ்ச க்ருதக்நஸ்ஸ பரீவாத பரோபிச-
பர ப்ரஸம்ஸா நிஷ்டஸ்ஸ ஸ்வ ப்ரஸம்சா பாராயண -யஜ்ஜ விக் நகரஸ் சைவ வேதாத்யயன தூஷக -பர தாரா நுரக்தஸ்ஸ பாக பேதக ரோபிச
பர த்ரவ்யா பஹாரீ ச பாஷண்டா மதத்பர ஷூத்ர அன்ன பக்ஷகஸ் சைவ ஸ்வாதீநா முபலாளக தர்ம விக்ரய சீலஸ்ஸ ஸ்ராத்த புக்க்ராம
யாஜக தேவதாத்ர வ்யாஹாரீச தரப்படம் பஸ்மன்வித பாவாங்க் லேசகரஸ் சாபி ப்ராஹ்மணா நாஞ்ச நிந்தக விஷ்ணு பக்தி விகாதீச வ்ருஷலீபதி ரேவச -என்று
இப்படிப்பட்டவர்களுடைய பாபங்களை போக்க வல்ல திருக் கல்யாணியிலே நீராடி கேசவாதியான துவாதச திரு நாமம் சாத்தி அருளி
எழுந்து அருள அங்கு இருந்த ஐம்பத்து இருவர் முதலான அனைவரும் ஸ்ரீ சடகோபன் முன்னிலையாக வந்து எதிர் கொள்ள
ஸ்ரீ பட்டரும் சாஷ்டாங்கமாக சேவித்து திவ்ய நகரிக்குள்ளே எழுந்து அருளி சதுராநந திவ்ய கோபுரத்தை அஞ்சலித்து உள்ளே புகுந்து
ஸ்ரீ பலி பீடத்து அருகே தாளும் தடக்கையும் கூப்பி தண்டன் சமர்ப்பித்து

ஸ்ரீ உடையவர் சந்நிதிக்கு எழுந்து அருளி -யோ நித்யம் -என்று தொடங்கி –ராமாநுஜஸ்ய சரணவ சரணம் ப்ரபத்யே -என்று சேவித்து –
ஸ்ரீ ராமானுஜ திவாகரரையும் திருவடி தொழுது வாழ்த்தி தீர்த்த பிரசாதங்களும் பெற்று அவர் புருஷகாரமாக பிரதக்ஷிணமாக எழுந்து அருளி
பஸ்ஸாதாபி விமானஸ்ய பிரகாராந்தர மத்யத ஸ்ரீ ஸூதர்சன நஞ்ச ஸ்ரீ லஷ்மீஸ் ச வர்த்ததே சர்வ காமதே என்று சொல்லப்பட்ட –
ஸ்ரீ திருவாழி ஆழ்வானையும் ஸ்ரீ யதுகிரி நாச்சியாரையும் சேவித்து ஆனந்தமயமான திவ்ய விமானத்தையும் தொழுது உள்ளே எழுந்து அருளி
சாஷ்டாங்கமாக சேவித்து ஸ்ரீ நம்மாழ்வாரையும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரையும் சேவித்து ஸ்ரீ செல்வப்பிள்ளையையும் திருவடி தொழுது
அவ்விக்ரஹ ஸுந்தர்யத்திலே ஆழங்கால் பட்டு நிற்க ஸ்ரீ செல்வப்பிள்ளையும் உகந்து தீர்த்தம் திருமாலை சடகோபன் பிரசாதித்து அருளப்
பெற்றுப் புறப்பட்டு ஸ்ரீ சேனை முதலியாரையும் திருவடி தொழுது சண்ட ப்ரசண்டர்களான த்வாபர பாலர்கள் அனுமதி கொண்டு
உள்ளே சென்று திருப்பல்லாண்டை அனுசந்தித்து ஸ்ரீ திரு நாராயணப் பெருமாளைப் பாதாதி கேசாந்தமாக சேவித்து அஞ்சலித்து நிற்க
ஸ்ரீ திரு நாராயணரும் மிகவும் உகப்போடே ஸ்ரீ பட்டருக்குத் திருமாலை திருப்பரியட்டம் தீர்த்தம் சடகோபனும் பிரசாதித்து விடை கொடுத்து அருள

ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ அனந்தாழ்வானுடன் புறப்பட்டு எழுந்து அருளி வேதாந்திகள் இருக்கிற ஊர் ஆசன்னமானவாறே
ஸ்ரீ ஆழ்வான் திருக்குமாரர் ஸ்ரீ பட்டர் வந்தார் -ஸ்ரீ அணி அரங்கன் திருக்குமாரர் பட்டர் வந்தார் -வேதாந்தாசார்ய பட்டர் வந்தார் –
வேதியர்கள் தனித்தலைவர் வந்தார் -ஸ்ரீ பராசர பட்டர் வந்தார் -பரவாத மத ஹஸ்தி பஞ்சா நநர் வந்தார் -என்று பல திருச்சின்னம்
பணிமாறுகை முதலான தூர்ய கோஷத்துடன் பெரும் திரளாக மஹா சம்பிரமத்துடனே சர்வாபரண பூஷிதராய் –
சத்ர சாமர தால வ்ருந்தாதிகள் சேவிக்க மணிப்பல்லக்கிலே எழுந்து அருளா நிற்க அவ்வளவில் இரண்டு ப்ராஹ்மணர்கள் எதிரே வந்து
ஸ்ரீ பட்டரைப் பார்த்து -நீர் ஆர் -அநேக சம்பிரமத்துடனே வந்தீர் -எங்கிற எழுந்து அருளுகிறீர் என்று கேட்க
ஸ்ரீ பட்டரும் -நாம் ஸ்ரீ ரெங்கராஜ பட்டர் -வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம் என்ன –

அந்த ப்ராஹ்மணர்கள் சொன்னபடி -நீர் இப்படி சம்பிரமத்துடனே எழுந்து அருளினால் வேதாந்திகளை உமக்குக் காணப் போகாது காணும் –
அவர் க்ருஹத்துக்கு உள்ளே இருந்து விடுவார் -அவருடைய சிஷ்ய பிரசிஷ்யர்கள் தலை வாசலிலே இருந்து வந்த வித்வான்களுடனே
நாலு ஆறு மாசம் தர்க்கித்து அவர்களை உள்ளே புகுர ஒட்டாதே புறம்பே தள்ளி விடுவார்கள் என்ன –
ஸ்ரீ பட்டரும் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து -ஆகில் நாம் நேரே சென்று அவர் க்ருஹத்திலே புகுந்து வேதாந்திகளைக் காணும் விரகு என்ன-
என்று கேட்டருள-அவர்கள் சொன்னபடி -வேதாந்திகள் தனவான் ஆகையால் -அவாரியாக – தடை இல்லாமல் –
ப்ராஹ்மணருக்கு சத்ர போஜனம் இடுவர் -அந்த சத்ரபுக் ப்ராஹ்மணரோடே கலசி அவர்கள் வேஷத்தையும் தரித்துக் கொண்டு உள்ளே சென்றால்
புஜிக்க வருகிற ப்ராஹ்மணரை நிரீக்ஷித்து இருப்பர் -அங்கே வேதாந்திகளைக் காணலாம் -ஆகையால் உங்கள் சம்பரங்களை எல்லாம்
இங்கே நிறுத்தி நீர் ஒருவருமே சத்ராசிகளுடனே உள்ளே எழுந்து அருளும் என்று சொல்லிப் போனார்கள் –

அநந்தரம் ஸ்ரீ பட்டரும் இவர்கள் சொன்னது கார்யகரமாம் என்று திரு உள்ளம் பற்றி தம்முடைய அனைத்துப் பரிகரத்தையும்
ஊருக்குத் தூரத்திலே நிறுத்தி-தாம் சாத்தி அருளி இருந்த சர்வ ஆபரணங்களையும் களைந்து ஒரு அரசு இலைக் கல்லையைக் குத்தி
இடுத்திக் கொண்டு-தொன்னையை தைத்து எடுத்துக் கொண்டு – காவி வேஷ்ட்டியும் தரித்து ஒரு கமண்டலமும் கையிலே தூக்கிக் கொண்டு
ஸ்ரீ அனந்தாழ்வானும் தாமுமாய் சத்ராசிகளுடனே கூடிக் கார்ப்பண்ய வேஷத்துடன் உள்ளே எழுந்து அருள
வேதாந்திகளும் ப்ராஹ்மணர் புஜிக்கையைப் பார்த்துக் கொண்டு ஒரு மண்டபத்திலே ஆறு ஆசனம் இட்டு அதன் மேலே
பெரிய மதிப்புடன் இரா நிற்க ப்ராஹ்மணர் எல்லாரும் சத்ர சாலையிலே புகுர
ஸ்ரீ பட்டர் அங்கே எழுந்து அருளாமல் வேதாந்திகளை நோக்கி எழுந்து அருள
வேதாந்திகளும் -பிள்ளாய் இங்கு ஏன் வருகிறீர் என்ன – ஸ்ரீ பட்டரும் பிக்ஷைக்கு வருகிறேன் என்ன –
எல்லாரும் புஜிக்கிற இடத்தில் போகீர் பிக்ஷைக்கு என்ன -ஸ்ரீ பட்டரும் எனக்குச் சோற்றுப் பிக்ஷை அன்று என்ன –
வேதாந்திகளும் -இவர் சத்ராஸியானாலும் கிஞ்சித் வித்வானாகக் கூடும் என்று விசாரித்து -கா பிஷா -என்ன ஸ்ரீ பட்டரும் -தர்க்க பிஷா -என்ன
வேதாந்திகள் இத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு -முன்னே தீர்த்த வாசிப் ப்ராஹ்மணன் வந்து நமக்குச் சொன்ன ஸ்ரீ பட்டர் அல்லது நம் முன்னே
வந்து கூசாமல் நின்று தர்க்க பிக்ஷை என்று கேட்க வல்லவர் இந்த லோகத்தில் ஒருவரும் இல்லை –
வேஷம் கார்ப்பண்யமாய் இருந்ததே ஆகிலும் இவர் ஸ்ரீ பட்டராகவே வேணும் என்று நிச்சயித்து

நம்மைத் தர்க்க பிக்ஷை கேட்டீர் நீர் ஸ்ரீ பட்டரோ என்ன -இவரும் ஆம் என்று -கமண்டலம் -கல்லை -காவி வேஷ்ட்டி -இவற்றை
எல்லாம் சுருட்டி எறிந்துஎழுந்து அருளி இருந்து மஹா வேகமாக உபந்யஸிக்க-அவ்வளவில் வேதாந்திகளும்
ஸ்ரீ பட்டர் வைபவம் கேட்டு இருந்தும் -இவர் வித்யா மஹாத்ம்யம் காண வேணும் என்று இவருடன் தர்க்கிக்க –
இப்படி ஒருவருக்கு ஒருவர் மத்த வாரணம் பிணங்குமா போலே தர்க்கிக்க இங்கனே ஒன்பது நாள் சென்ற பின்பு பத்தாம் நாள்
ஸ்ரீ பட்டர் தர்க்கிக்கச் செய்தே-மாயி சித்தாந்தத்தை சத்தாவாகக் கண்டித்து விசிஷ்டாத்வைத பரமாக உபந்யஸிக்க –
இத்தைக் கண்ட வேதாந்திகள் எழுந்து இருந்து நடுங்கி வேறு ஒன்றும் சொல்லாதேமனுஷ்ய மாத்திரமே என்று இருந்தேன் –
ஸ்ரீ நம்பெருமாள் என்ன நீர் என்ன பேதம் இல்லை -உறங்கும் பெருமாள் அவர் -உலாவும் பெருமாள் நீர் -ஆனபின்பு வாய் திறந்து
ஒரு வார்த்தை சொல்லக் கூடாது என்று அரை குலையத் தலை குலைய வந்து ஸ்ரீ பட்டர் திருவடிகளில் அடைவு கெட விழுந்து
சேவித்து அடியேனை இரங்கி அருள வேணும் என்று மிகவும் அனுவர்த்திக்க -ஸ்ரீ பட்டரும் தாம் எழுந்து அருளின கார்யம் சீக்கிரமாக
பலித்தவாறே மிகவும் திரு உள்ளம் உகந்து அருளி வேதாந்திகளை அங்கீ கரித்து அருளி அவருக்கு
அர்த்த பஞ்சக தத்வஞ்சா பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதா -என்று சொல்லப்பட்ட தாப புண்டராதி பஞ்ச ஸம்ஸ்காராதிகளையும் ப்ரசாதித்து
வர்த்தக பஞ்சக ஞானத்தையும் உண்டாக்கி ஆகார த்ரய சம்பன்னரான மஹா பாகவத உத்தமராக்கி விசேஷ கடாக்ஷம் செய்து அருளி –

வேதாந்திகளே நீர் சர்வஞ்ஞராய் இருந்தீர்-ஆகையால் நாம் உமக்குப் பரக்கச் சொல்லலாவது ஒன்றும் இல்லை –
விஷ்டாத்வைதமே பொருள் -நீர் மாயாவாத ரீதியை ச வாசனமாக த்யஜித்து
ஸ்ரீ யபதியைப் பற்றி ஸ்ரீ ராமானுஜ சித்தாந்தத்தையே நிர்வஹித்துப் போரும் -என்று அருளிச் செய்து -ஆழ்வார்கள் அருளிச் செயல்
நாலாயிரமும் ஓதும்படி நியமித்து அருளி இனி நாம் ஸ்ரீ நம்பெருமாளை சேவிக்கப் போகிறோம் என்று உத்யோகித்துப் புறப்பட்ட அளவில்
ஊருக்குப் புறம்பே நிறுத்தின அனைத்துப் பரிகரமும் ஊரிலே வந்து அவர்கள் மஹா சம்பிரமத்துடனே ஸ்ரீ பட்டரைச் சூழ்ந்து சேவித்து
பூர்வம் போலே சர்வ ஆபரணங்களாலும் பூஷித்து ஒப்பித்து மணிப்பல்லக்கிலே ஏற்றி உபய சாமர தால வ்ருத்தாந்திகள் பரிமாற
சகல வாத்தியங்களும் முழங்க திருச்சின்னம் பணிமாறிப் புறப்படக் கண்டு வேதாந்திகள் ஸ்ரீ பட்டருடைய பெருமையையும் சம்பத்தையும்
நன்றாக கண் குளிர நோக்கி -இந்த ஸ்ரீ மான் இத்தனை தூரம் காடும் மலையும் கஷ்டமும் கடந்து எழுந்து அருளி
நித்ய சம்சாரிகளிலும் கடை கெட்டு ம்ருஷாவாதியாய் இருந்த அடியேனுடைய துர்க்கதியே பற்றாசாக அங்கீ கரித்து அருளுவதே என்று
மிகவும் வித்தராய்க் கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு ஸ்ரீ பட்டர் திருவடிகளில் விழுந்து க்லேசித்து

ஸ்ரீ பெரிய பெருமாள் தாமான தன்மையாய் ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகளை யுடையராய் எழுந்து அருளின தேவரீர் –
அநாதி காலம் தப்பித்திருந்து அலம் புரிந்த நெடும் தடக்கைக்கும் எட்டாதபடி கை கழிந்து போன இவ்வாத்மா இன்னம் தப்பிப்போம் என்று
திரு உள்ளம் பற்றி அருளி -இப்படி அதி கார்ப்பண்யமாய் இருபத்தொரு வேஷத்தையும் தரித்துக் கொண்டு சத்ராதிகளுடனே கூட
எழுந்து அருளி அதி துர்மானியான அடியேனை அங்கீ கரித்து அருளின அந்த வேஷத்தை நினைத்தால் அடியேனுக்குப் பொறுக்க போகிறது இல்லை
என்று சொல்லி வாய் விட்டு அழுது கொண்டு திருவடிகளில் விழுந்து கிடக்க-ஸ்ரீ பட்டரும் வேதாந்திகளை திரு முடியைப் பிடித்து எடுத்து நிறுத்தி தேற்றி –
நீர் இங்கே ததீயாராதன ஏக பரராய் ஸூகமே இரும் -என்று அருளிச் செய்து ஸ்ரீ கோயிலை நோக்கி புறப்பட்டு எழுந்து அருளா நிற்க –
மின்னு மா முகில் மேவு தண் திருவேங்கடம் -என்கிறபடியே அம்பு தர சும்பியது பூதர ஸ்ருங்க நிலயனான ஸ்ரீ நரஸிம்ஹ திவ்ய விமானம்
தூரத்திலே தோன்றக் கண்டு அஞ்சலித்து பின்னையும் ஸ்ரீ திருநாராயண புரம் வழியாக எழுந்து அருளி ஸ்ரீ அனந்தாழ்வான் முன்னிலையாக –
நயனம் ஸ்ரீ நாரஸிம்ஹம் ஹரி ப்ரஹ்ம மஹா ஸ்தானம் – ( பரிப்ருட ஸ்தானம் ) சீதாரண்யம் ஞானஸ்த்வம் ஆகிற
பஞ்ச பாகவத ஸ்தலம் ஸ்வேத அம்ருத் பரிதான சிலை ஆகிற சப்த ஷேத்ரங்களையும்
ஸ்ரீ வேத புஷ்கரணி தர்ப்ப தீர்த்தம் பலாச தீர்த்தம் பத்ம தீர்த்தம் யாதவ மஹா நதி வைகுண்ட கங்கா தீர்த்தம் நாராயண தீர்த்தம்
மைத்ரேய குண்ட தீர்த்தங்களும் சேவித்து அவகாஹித்து -இவற்றின் மத்ய கதமான திருக் கல்யாணி யிலே நீராடி –
கேசவாதி துவாதச ஊர்த்வ புண்ட்ர தரராய் முன்பு போலே சேவாக்ரமம் தப்பாமல் சேவித்துத் தீர்த்த பிரசாதங்களும் பெற்றுப் புறப்பட்டுத்
திருமலை இறங்கி எழுந்து அருளி ஸ்ரீ சிறுப்புத்தூரிலே ஸ்ரீ அனந்தாழ்வானை நிறுத்தி பயணகதியிலே த்வரித்து

ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி திருக் காவேரியில் நீராடி அருளி கேசவாதி துவாதச ஊர்த்வ புண்ட்ர தரராய் சகல பரிஜன பரிச் சதங்களோடே
ஸ்ரீ வேதாந்தாசார்ய பட்டர் வந்தார் -வேதாந்திகளை வென்ற விரகர் வந்தார்-என்ற திருச்சின்னம் பணிமாற
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் எதிர் கொள்ள எழுந்து அருளி சேவா கிரமம் தப்பாமல் சேவித்துக் கொண்டு உள்ளே புகுந்து
மாயோனை மணத் தூணைப் பற்றி நின்று வாயார வாழ்த்தி நிற்க -ஸ்ரீ பெருமாளும் பெரிய ப்ரீதியோடே திருமாலை திருப்பரியட்டம்
தீர்த்தம் சடகோபன் ப்ரசாதித்து திரு மாளிகையில் போக விட்டு அருள ஸ்ரீ பட்டரும் தம் திரு மாளிகையில் எழுந்து அருளி
அங்கே ஸ்ரீ ஆண்டாளை சேவித்து ஸ்ரீ பாதத்து முதலிகளுக்குத் தரிசன அர்த்தம் நிர்வகித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்

அநந்தரம் அங்கே காங்கோரையில் வேதாந்திகள் திருமால் அடியார்களை பூசித்துக் கொண்டு இருக்கும் நாளிலே
இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் இளைத்து வேதாந்திகள் திரு மாளிகைக்கு எழுந்து அருளி ஷூத்து நலியா நின்றது -என்று
அமுது செய்யத் தேட வேதாந்திகள் தேவிகள் இருவரும் பார்த்து -உங்கள் வேதாந்திகள் தீர்த்தம் ஆடப் போனார் –
இங்கு ஒன்றும் இல்லை -நீங்கள் அங்கு ஏறப் போங்கோள்-என்று சொல்லி உதாசீனம் பண்ணி விட –
அந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் வேதாந்திகள் பக்கல் சென்று இத்தை அறிவிக்க -அவரும் அது கேட்டு அனுதபித்து
தம் திரு மாளிகையில் எழுந்து அருளி தேவிகள் இருவரையும் சீறி அப்போதே புறப்பட்டு ஸ்ரீ கோயிலுக்குஎழுந்து அருளத் தேட –
அங்குள்ளவர்கள் வேதாந்திகளைப் போக ஒண்ணாது என்று தகைய இவரும் தமக்கு நிரவதிக தனம் உண்டாகையாலே
அத்தை மூன்று அம்சமாகப் பிரித்து -இரண்டு தேவைகளுக்கும் இரண்டு அம்சம் கொடுத்து மற்றை அம்சத்தை ஸ்வாச்சார்யருக்காக
எடுப்பித்துக் கொண்டு அத்தேசத்தையும் சவாசனமாக விட்டு -இல்லறம் அல்லேல் துறவறம்-என்று அதிதி சதிகார யோக்யதை இல்லாத
பார்யயை த்யஜித்து சன்யசிக்கக் கடவன் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே-சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக அங்கே சன்யசித்து அருளி
ஸ்ரீ கோயிலை நோக்கி எழுந்து அருளா நிற்கச் செய்தே

திருக் காவேரிக் கரையில் உள்ள ஸ்ரீ சிறுப்புத்தூரிலே ஸ்ரீ அனந்தாழ்வானைக் கண்டு சேவித்து நிற்க –
ஸ்ரீ அனந்தாழ்வானும் -வாரீர் வேதாந்திகளே ஸூகுமாரரான நீர் இங்கனே செய்யலாமா –
வேர்த்த போது நீராடிப் பசித்த போது அமுது செய்து ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம் என்று இருந்தால் உம்மைப் பரமபதத்தில்
நின்றும் தள்ளி விடுவார் உண்டோ -இனி என் -திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராவீர் என்று
ஆசீர் வதித்து போம் என்று விட்டார் –
அதாவது திருமந்திரம் ஆத்ம ஸ்வரூப பரம் ஆகையால் சேஷத்வ ஞான உத்பத்தி ஆகிற ஆபீஜாத்யம் உண்டாய் த்வயத்திலும்
ஸ்ரீ மச் சப்த யுக்தமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் புருஷகாரத்தாலே வர்த்தமான அர்த்தத்தில் வர்த்தித்து
உத்தர வாக்ய யுக்தங்களைப் பற்றக் கைங்கர்ய ஏக நிஷ்டராவீர் என்று சொன்னபடி –

வேதாந்திகளும் பயணகதியிலே போய் ஸ்ரீ கோயிலிலே எழுந்து அருளி ஸ்ரீ பட்டர் திருவடிகளில் சேவித்து தாம் கொண்டு வந்த தனத்தை
தம்மது என்கிற அபிமானத்தை விட்டு ஸ்ரீ பட்டருக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம்படி அவர் திருவடிகளில் சமர்ப்பித்து நிர்மமராய் நிற்க –
அவ்வளவில் ஸ்ரீ பட்டரும் மிகவும் உகந்து அருளி -நம்முடைய சீயர் வந்தார் என்று வாரி எடுத்துக் கட்டிக் கொண்டு அருளி
ஒரு க்ஷண காலமும் பிரியாமல் தம்முடைய சந்நிதியிலே வைத்துக் கொண்டு சகல அர்த்தங்களையும் பிரசாதித்து அருள
ஸ்ரீ சீயரும் ஸ்ரீ பட்டரை அல்லது மற்று ஒரு தெய்வம் அறியாது இருந்தார் –

ஸ்ரீ பட்டரும் நம்முடைய சீயர் என்று சொ ல்லி அனைத்துக் கொண்ட அன்று தொடங்கி வேதாந்திகளுக்கு
ஸ்ரீ நஞ்சீயர் என்று திரு நாமம் உண்டாய்த்து-
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரைப் பார்த்து ஸ்ரீ பெருமாள் சந்த்ர புஷ்கரணிக் கரையிலே கண் வளர்ந்து அருளுகைக்கு
கருத்து என் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பட்டரும் -நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் என்று கூப்பிட்ட பின்பு இ றே அந்த மடுவின் கரையில் எழுந்து அருளிற்று –
இங்கு கண் வளர்ந்து அருளுகிறது நான் கூப்பிடுவதற்கு முன்னே என்னை எடுக்கைக்காக நான் அகப்பட்ட பொய்கைக் கரையிலே
ஏற்கவே வந்து கண் வளர்ந்து அருளுகிறான் அத்தனை –
நீர் இவ்வர்த்தம் கேட்டது உம்முடைய வசத்தால் அன்று காணும் -உம்மைக் கொண்டு ஸ்ரீ நம்பெருமாள் என் நினைவினை
வெளியிட்டு அருளினார் என்று அருளிச் செய்தார்
அதாவது -ஸ்ரீ பகவத் திரு அவதாரங்கள் அடங்க ஸ்வார்த்தமாகவே என்று இறே ஞானாதிகர் அனுசந்திப்பர் என்றபடி –

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பட்டரை ஸ்ரீ பாதம் தாங்குவதாகத் தோளிலே தண்டை வைக்கப் புக-ஸ்ரீ பட்டரும் உம்முடைய வேஷத்துக்கு
இது விருத்தம் காணும் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ ஜீயரும் அங்குத்தை அடிமைக்கு ஏகாந்தம் என்று இவ்வேஷத்தை பரிக்ரஹம் பண்ணினேன் –
அது தானே இதுக்கு விரோதம் ஆகில் பழைய வெள்ளையை உடுக்கிறேன் என்று விண்ணப்பம் செய்தார்
அதாவது ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு அனுரூபம் ஆகாத வர்ணாஸ்ரம தரமும் பரித்யாஜ்யம் என்றபடி

அநந்தரம் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருந்து –
பூகி கண்ட த்வய ச சரசஸ் நிக்த நீரோபகண்டா மாவிர்மோத ஸ்திமிதசகுநா நூதித ப்ரஹ்ம கோஷம் -மார்க்கே மார்க்கே பதிக நிவஹை
ருஞ்ச்யமாநா பவர்க்காம் பஸ்யே யந்தாம்பு நரபி புரீம் ஸ்ரீ பதீம் ரங்க தாம்ந-என்று சொல்லிக் கொண்டு
ஸ்ரீ கோயிலையும் ஸ்ரீ பெருமாளையும் விட்டுப் பிரிந்து இருக்கையாலே மிகவும் கிலேசப்பட்டு -என்று கொலோ கண் குளிரக் காணு நாளே –
என்று கொண்டு எழுந்து அருளி இருக்கும் காலத்திலேயே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பட்டரை சேவித்து அடியேனுக்கு ஸ்ரீ திரு விருத்தத்துக்கு
அர்த்தம் ஒரு உரு ப்ரசாதித்து அருள வேணும் என்று மிகவும் அனுவர்த்திக்க -ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து -ஸ்ரீ சீயா எனக்கு
ஸ்ரீ கோயிலையும் ஸ்ரீ பெருமாளையும் விட்டுப் பிரிந்த கிலேச அதிசயேன செவிகள் சீப்பாயா நின்றன -ஆகையால் வாய் திறந்து
வார்த்தை சொல்லப் போகிறது இல்லை -நீர் ஸ்ரீ திரு விருத்தத்துக்கு ஒரு உரு இந்த ஸ்ரீ வைஷ்ணவருக்குச் சொல்லும் என்று
அவரை ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பாதத்தில் காட்டிக் கொடுத்து இங்கனே நடந்து செல்லுகிற நாளிலே

கடலைக் கலக்கினால் போலே ஸ்ரீ பட்டர் திரு உள்ளத்தைக் கலக்கி விரோதித்த வீரஸூந்தரன் மரித்துப் போக
அவ்வளவில் ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ பட்டர் திருத்தாயார் ஸ்ரீ ஆண்டாளை சேவித்து இருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ஸ்ரீ பட்டருடைய விரோதி போனான் என்று தங்கள் திருப் பரியட்டங்களை முடிந்து ஆகாசத்தில் எறிந்து நின்றார் நின்ற திக்கில்
சந்தோஷித்துக் கூத்தாடி ஸ்ரீ ஆண்டாளுக்கு அறிவிக்க அது கேட்டு ஸ்ரீ ஆண்டாள் செய்த படி -திரு மாளிகைக்கு உள்ளே புகுந்து
திருக்காப்புச் சாத்தி சிக்கென தாளிட்டுக் கொண்டு வயிறு பிடித்து மிகவும் கிலேசித்து வாய் விட்டு உச்சை ஸ்வரமாக அழத்தொடங்கினாள் –
அது கேட்டு சந்தோஷ அதிசயேன தடு குட்டமாய் கும்பிடு நட்டமிட்டுக் கூத்தாடுகிற முதலிகள் ஸ்ரீ ஆண்டாளைக் குறித்து –
ஸ்ரீ பட்டரை இங்கே இருக்கவும் கூட ஒட்டாமல் விரோதித்த பாபிஷ்டன் போனான் என்று சந்தோஷியாதே கிலேசிப்பான் என்
ஸ்ரீ பட்டருடைய விரோதி போகவும் ஸ்ரீ பட்டரும் முதலிகளும் இங்கே எழுந்து அருளவும் நாம் எல்லாரும் கூடி வாழவும் உமக்கு
அஸஹ்யமாய் இருந்ததோ -என்ன –

ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து அருளிச் செய்த படி –
பிள்ளைகாள் நீங்கள் ஒன்றும் அறிகிறிகோள் இல்லை -வீர ஸூ ந்தரன் தான் நேரே ஸ்ரீ ஆழ்வானுடைய சிஷ்யனாய் இருந்து
ஆச்சார்ய புத்திரரான ஸ்ரீ பட்டரை திண்டாட்டம் கண்டு அவர் திறத்திலே மஹா அபராதத்தைத் தீரக் கழியப் பண்ணி –
அறியாமல் செய்தேன்-இத்தைப் பொறுத்து அருள வேணும் -என்று ஸ்ரீ பட்டர் திருவடிகளில் தலை சாய்ப்பதும் செய்யாதே –
இப்படிச் செய்தோமே என்கிற அனுதாபமும் இன்றியே செத்துப் போனான் -ஆகையால் அவன் சரீரம் விட்ட போதே யமபடர் கையிலே அகப்பட்டு
கலங்க அடியுண்டு மலங்க விழிக்கும் ஆகையால் அத்ருஷ்டத்தை இழந்தான் -சில நாளைக்கு இருந்தாகிலும் த்ருஷ்டா ஸூ கத்தை
அனுபவிக்கிறான் என்று இருந்தேன் -அதுவும் கூட இழந்தான் ஆகாதே –
ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளில் சம்பந்தமுடையது ஒரு ஆத்மா இப்படித் தட்டுப்பட்டுப் போவதே என்று இத்தை நினைத்து என் வயிறு எரிகிறபடி
உங்கள் ஒருவருக்கும் தெரிகிறது இல்லை என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்தாள்–
குற்றம் செய்தவர்கள் பக்கலிலும் அகப்பட ஹித பரராய்த் தயார்த்த சித்தராய்ப் போருவது
ஸ்ரீ ஆழ்வான் சம்பந்தம் உடையவர்களுக்கே உள்ளது ஓன்று இறே

ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் இவ்விஷயம் கேட்டு ஸ்ரீ கோயிலிலும் ஸ்ரீ திருக் கோஷ்டி யூருக்கு எழுந்து அருளி இத்தை அருளிச் செய்ய
ஸ்ரீ பட்டரும் கேட்டு ஸந்துஷ்டாராய் -நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே-என்கிறபடியே அவர் கழல்களை அடிக்கடி வணங்கி
அவருடனே கூடி தத் க்ஷணமே ஸ்ரீ கோஷ்டி புரத்தில் நின்றும் புறப்பட்டு ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளி
பண்டு போலே தர்சனார்த்தம் நிர்வகித்துக் கொண்டு இருந்தார்

ஸ்ரீ அம்மணி ஆழ்வான் இருநூறு காத வழி நடந்து வந்து ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்தில் தண்டன் சமர்ப்பித்து
அடியேனுக்கு தஞ்சமாய் இருபத்தொரு அர்த்தம் பிரசாதித்து அருள வேணும் -என்று பிரார்த்திக்க –
ஸ்ரீ பட்டரும் நெடுமாற்கு அடிமை அர்த்தம் பிரசாதித்து அருளி ஸ்ரீ எம்பெருமானை அறிக்கை யாவது -அவனை அரை வயிறு பட்டு அறிக்கை –
ததீயரை அறிகையாவது -அவனை முழுக்க அறிகை என்று அருளிச் செய்து அருள –
அவரும் பலபடி சொல்லி என் -மறப்பன் -இவ்வளவே அமையும் -என்று அது தன்னையே தாரகமாகப் பண்ணிக் கொண்டு எழுந்து அருளினார் –
ந்யக்ரோத பீஜே வடவத் பிரணவே சப்த ஜாலவத் சித்தே ததீய சேஷத்வே சார்வார்த்தாஸ் சம்ப வந்திஹி -என்கையாலே
சச் சிஷ்யன் சதாச்சார்யன் அருளிச் செய்ததொரு சரம அர்த்தத்தையே தஞ்சம் என்று விஸ்வசிக்க வேணும் என்றபடி –

வீர சிகாமணிப் பல்லவ ராயன் ஸ்ரீ பட்டரைக் குறித்து -ஸ்ரீ பட்டரே ராஜ கார்யம் செய்கையாலே அடியேனுக்கு பகவத் விஷய வைபவம்
கேட்க விரகு இல்லை -எனக்குத் தஞ்சமாய் இருபத்தொரு அர்த்தம் பிரசாதித்து அருள வேணும் என்று அபேக்ஷிக்க –
ஸ்ரீ பட்டரும் கடற்கரை வெளியை நினைத்து இரும் -என்று அருளிச் செய்து அருள -அது தெரியாமையாலே அவன் கையைப் பிசைந்து நிற்க –
இவரும் கடற்கரையிலே ஒரு அம்ருதக்கடல் போலே பெருமாள் பெரிய வானர சேனையோடே விட்டு இருக்க –
அக்கரையில் பிணம் தின்னிப் பையல் ராவணன் இருக்க -எழுத்து கோடி மஹா கபி சேனை உணர்ந்து ஸ்ரீ பெருமாளைக் குறிக் கொண்டு
நோக்கிக் கொண்டு போர-அவர்கள் ப்ரக்ருதிமான்கள் ஆகையால் கண்ணுறங்கி கால் ஓய்ந்து கை சோர்ந்த அளவிலே
தாமும் தம் திருத் தம்பியாருமாகத் திருவரையில் கட்டிய கச்சும் சுருக்கிய சீராவும் நாணியும் முதுகிலே அம்பறாத் தூணி கட்டிக்
கையிலே தெறித்துப் பிடித்துப் பெருக்கின திருச் சரமும் தரித்த திரு வில்லும் தாமுமாய் சில அண்டஜங்கள் முட்டையிட்டுத்
தம் சிறகின் கீழே நோக்கியிட்டு வைக்குமா போலே எழுபது வெள்ளம் ப்லவங்க குலபதி மஹா சேனையையும் நடையாடும் மதிள்கள் போலே
ரஷித்துக் கொண்டு ஓர் இரவு எல்லாம் சாரிகையாய் வந்த சக்கரவர்த்தித் திருமகனுடைய
கையும் வில்லேமே தஞ்சம் என்று ஸூகமாய் இரும் -என்று அருளினார்
தர்சன ரஹஸ்யமாவது -உறங்குகின்ற போது நம்மை ரக்ஷிக்குமவன் உணர்ந்தால் நம்மை நோக்கும் என்று சொல்ல வேண்டாம் இறே என்றபடி –

ஒரு நாள் திரிபுர வீர தேவ ராயன் ஸ்ரீ பட்டருடைய வைபவம் கொண்டு -ஸ்ரீ பட்டரே -நீர் நம் பக்கல் ஒரு நாள் வந்து போகீர் என்ன –
ஸ்ரீ பட்டரும் -ஸ்ரீ பெருமாள் அஞ்சேல் என்ற திருக் கை மறுத்தாலும்-அவ்வாசல் ஒழிய வேறு ஒரு போக்கு உண்டோ -என்று அருளினார் –
அதாவது ஏதத் விரதம் மம -என்று ஸ்வ ஆஸ்ரித ரக்ஷண ஏக தீக்ஷிதனான ஸ்ரீ எம்பெருமான் இருக்க
கதிபய க்ராமேச கஞ்சித் புருஷ அதமன் வாசலிலே துவளக் கடவோம் அல்லோம் என்றபடி –

ஒரு நாள் ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பெருமாளைத் திருக் கைத்தலத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே திருவடி தொழப் புக
திருமுன் அடிக்கிற வேத்ர பாணிகள் ஸ்ரீ பட்டரைப் பாராமல் சில பருஷ யுக்திகளை சொல்ல
ஸ்ரீ பாதத்தில் ஸ்ரீ வைஷ்ணவர் அவரோடே எதிர் உத்தரம் சொல்லப் புக
ஸ்ரீ பட்டரும் -வாரீர் பிள்ளாய் -கேளும் ஸ்ரீ பெருமாளுக்கு ஏகாந்தத்தில் என் குற்றம் விண்ணப்பம் செய்ய ஒரு காலம் பற்றாதாய்
ஸ்ரீ பெருமாளும் திருச்செவி சாத்தாமல் போந்த இத்தை ஸ்ரீ பெருமாளுக்கு அந்தரங்க பரிகரமாய் இருப்பார் ஒருவர் நம் தோஷத்தை
ஏகாந்தத்தில் விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் திருச் செவி சாத்தினது கண்டால் நம்மைப் பார்க்கில்
அத்தை விலக்குகிற நீர் பெற்ற பேறு என் -என்று அருளினார் –
இத்தால் பகவத் சந்நிதியில் ஏகாந்தத்தில் பரக்ருத ஸ்வ தோஷக்யாபநம் தத் வாத்ஸல்ய கார்யமாய்த்
தத் அங்கீகார ஹேதுவுமாம் நினைக்கக் கடவன் என்றபடி –

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்தில் சம்பந்தம் உடையராய் சோமயாஜியாய் இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பட்டரை அடியேனுக்கு
திருவாராதன க்ரமம் ப்ரசாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ உடையவர் நித்யத்தை
ஒரு யாமப்போது திருவாராதனம் பண்ண வேண்டும் க்ரமத்தை ப்ரசாதித்து அருள –
அவரும் அது கொண்டு நெடுநாள் திருவாராதனம் பண்ணிப் போரச் செய்தே-
ஓன்று இரண்டு நாள் ஸ்ரீ பட்டர் திரு வாராதனத்தை சேவித்து இருக்க -அங்கு தமக்கு அருளிச் செய்த க்ரமம் ஒன்றும் கண்டிலர் –
ஸ்ரீ பட்டர் திருவாராதனம் செய்த படி -ஸ்ரீ பட்டர் நீராடித் தூய திருப்பரியட்டம் சாத்தி அருளித் திருமண் காப்பு சாத்தி அருளி
உள்ளே அமுது செய்யத் தளிகையை அமர்த்தின அளவிலே தளிகை முன்னே எழுந்து அருளி இருந்து
ஸ்ரீ தெற்கு ஆழ்வாரை எழுந்து அருளுவித்துக் கொண்டு வாருங்கோள்-என்ன –
அவர்களும் அப்படியே எழுந்து அருளுவித்துக் கொண்டு வந்து கைத்தலத்திலே பிடித்த அளவிலே தமக்குப் படைத்த
திருப் போனகத்தையும் சேர்ந்த தண்ணீர் அமுதத்தையும் அமுது செய்வித்து அருளி ப்ரசாதத் பட்டு அருளினார் –

அத்தைக் கண்டு ஸ்ரீ வைஷ்ணவரும் ஸ்ரீ பட்டரைத் தண்டன் இட்டு ச விநயராய்-ஒரு விண்ணப்பம் உண்டு –
சொல்லப் பயமாய் இருக்கிறது என்று சொல்ல -ஸ்ரீ பட்டரும் அஞ்சாதே சொல்லும் என்ன –
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் திருவாராதனப் படியை அடியேனுக்கு இப்படி அருளிச் செய்திற்று -தேவரீர் இப்படி செய்து அருளுகிறது –
இதற்கு அடி என் -என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பட்டரும் -சகல சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்த்த இடத்தே
உமக்கு அப்படி ஒழியச் சொல்லுகைக்கு ஒரு வார்த்தை கண்டிலேன் –
என்னை நிரூபித்த இடத்தில் இப்படி ஒழியச் செய்கைக்கு ஒரு சொல் கண்டிலேன் -என்று அருளிச் செய்து அருளினார் –
இத்தால் ஹிதைஷியான ஆச்சார்யன் சிஷ்யனுக்கு ஞான பரிபாக அனுகுணமாகக் கொண்டிப் பசுவுக்கு தடி கட்டி விடுவாரைப் போலே
சப்தாதி விஷயங்களில் மண்டித் திரிகிற கரணங்களைப் பகவத் விஷய ப்ரவணமாம் படி திருத்தும் என்னுமதுவும் –
ஆச்சார்யனுடைய யத்னமாய் பகவத் விஷய ஏக பரமான அனுஷ்டான விசேஷத்துக்கு கருத்து
அவிசேஷஞ்ஞர்க்குத் தோற்றாது என்னுமதுவும் தோன்றா நின்றது இறே

ஸ்ரீ பட்டரை ஒருவன் தேவதாந்த்ரங்களை ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுவர்த்தியாது ஒழிவான் என் -என்ன
பிரமாண விரோதம் உண்டாகில் அன்றோ ஸந்தேஹம் உள்ளது-இங்கே ஸந்தேஹம் இல்லை -என்று அருளிச் செய்தார் –
அது எங்கனே என்னில் -சத்வ பிரசுரரை ரஜஸ் தமஸ் பிரசுரர் அனுவர்த்திக்குமது போக்கி
சத்வ பிரசுரர் ரஜஸ் தமஸ் பிரசுரரை அனுவர்த்திக்கக் கடவதோ -என்று அருளிச் செய்தார் –
ஆகையால் தேவதாந்தரங்கள் குண தோஷங்கள் இரண்டாலும் ஒரு காலும் அனுவர்த்தநீயர் அன்று என்றபடி –

ஸ்ரீ பட்டர் அறியில் சம்மதியார்-என்று -ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்தை வேறு ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருக்கையாலே விளக்குவித்து
ஸ்ரீ ஆண்டாள் ஸ்வீ கரிப்பாள்-இத்தை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கண்டு நீர் திருத் தாயாராய் இருந்து இப்படிச் செய்து அருளலாமோ என்ன –
ஸ்ரீ ஆண்டாளும் அது என் -பிறர் திரு ஆராதனத்தின் தீர்த்தமே ஸ்வீ கார்யமாய் தான் ஏறி அருளப் பண்ணின விக்ரஹத்தை
தீர்த்தம் ஸ்வீ கார்யம் ஆகாதோ என்ன -அவரும் அதற்கு அடி என் என்று கேட்க –
ஸ்ரீ ஆண்டாளும் -ஸ்ரீ கணபுரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே-என்று அருளிச் செய்து அருளினாள்-
இத்தால் சிஷ்ய புத்ரர்களே யாகிலும் ஞானாதிகர் ததீயத்வேன அனுவர்த்த நீயர் என்றபடி –

ஸ்ரீ பட்டர் தம் ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரைப் பார்த்து நீர் ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் சென்று
ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் இருக்கும்படி எங்கனே என்று கேட்டு வாரும் என்று அருளிச் செய்ய –
அவரும் ஸ்ரீ அனந்தாழ்வான் சந்நிதிக்கு எழுந்து அருள அன்று அங்கே பல ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்து அருள
இவரும் இடம் போதாமையால் அவர்கள் அமுது செய்து எழுந்து இருக்கும் அளவும் பேசாது இருக்க -பின்பு ஸ்ரீ அனந்தாழ்வானும் இவரைக் கண்டு –
நெடும் போது உண்டே -அமுது செய்து அருளப் பெற்றது இல்லையே-இளைப்போடு இருக்கிறதே என்று போர நொந்து சடக்கென
அமுது செய்து அருளப் பண்ணி தாமும் தேவிகளுமாக சேஷித்து இருந்த திருப் போனகத்தை அமுது செய்து அருளி எழுந்து அருளி இருந்து –
ஸ்ரீ வைஷ்ணவரைக் குறித்து எங்கு நின்றும் எழுந்து அருளிற்று என்று கேட்டு அருள –அவரும் ஸ்ரீ பட்டர்
தேவரீர் ஸ்ரீ பாதத்தில் சென்று ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் இருக்கும்படி எங்கனே என்று கேட்டு வரச் சொல்லி
வர விட்டு அருளினார் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ அனந்தாழ்வானும் -ஆகில் கொக்குப் போலே இருக்கும் -கோழி போலே இருக்கும் -உப்புப் போலே இருக்கும் –
உம்மைப் போலே இருக்கும் -என்று அருளினார் –
இத்தால் தன் ஞான அனுஷ்டான அபிமாநாதி நிமித்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே முற்பாட்டுக்கு ஆசைப்படாதே பிற்பாட்டுக்கே
ஆசைப்பட்டு ததீயா சேஷத்வத்தை பேணுகை ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்று உத்தரம் அருளிச் செய்து விட்டாராயிற்று –

ஒரு நாள் ஸ்ரீ பட்டர் ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருப்பார் ஒரு வைஷ்ணவர் ஸஹவாஸ தோஷத்தால் கலங்கி விஷய ப்ராவண்யம் தலை எடுத்து
ஸ்ரீ பட்டர் சந்நிதியில் சென்று ஸ்ரீ பட்டரே நமக்கும் உமக்கும் பணி இல்லை என்று சொல்ல -ஸ்ரீ பட்டரும் -வாராய் பிள்ளாய் –
அது உன் நினைவாலே அன்றோ -நீ விட்டாலும் நாம் விடுவோமோ -என்று அருளிச் செய்து அருள -அவனும் அகன்று போகத் தேட-
இவரும் அவனைப் பலாத்கரித்துப் பிடித்து உபாயேந ஞான உபதேச முகத்தால் வருந்தித் திருத்தி
ஸ்ரீ பாதத்துக்கு அந்தரங்கராக்கிக் கொண்டு அருள அவரும் மஹா விரக்தராய் நிலையிலே நின்று அருளினார் –
ஆகையால் அஞ்ஞானம் தலையெடுத்து அகன்று போவாரையும் உட்பட விடாதே யத்நேந திருத்திச் சேர்த்துக் கொள்ளுகையே
சதாச்சார்ய லக்ஷணம் என்கிறது –

ஒரு நாள் ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுமாக பெரும் கூட்டத் திரு ஓலக்கமாக எழுந்து அருளி இருந்து பகவத் கல்யாண குண
அனுசந்தானம் நடவா நிற்க -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நாம் பண்ணின ஸூஹ்ருதம் அன்றோ இப்படி இருக்கப் பெற்றது-என்ன
அவ்வளவில் ஸ்ரீ சிறி யாச்சான் எழுந்து இருந்து நின்று -நெடும் காலம் ஸ்ரீ பெருமாள் ரக்ஷகர் என்று சிஷித்து வைத்து இப்போதாக
ஒரு ஸூஹ்ருத தேவர் உண்டாவதே -என்று அருளினார்
இத்தால் உஜ்ஜிஜீவயிஷுவான சர்வேஸ்வரன் இருக்க ஆனுகூல்யங்களுக்கு ஸூஹ்ருதம் அடி என்கை ஸ்வரூப நாசம் என்றபடி –

ஸ்ரீ பட்டரோடு ஸ்ரீ அமுதனார் வெறுத்து அருளி -தாம் ஸ்ரீ ஆழ்வானுடைய வெற்றிலைச் செருக்கிலே பிறந்தவர் –
நான் ஸ்ரீ ஆழ்வானுடைய ஞானச் செருக்கிலே பிறந்தவன் அன்றோ -என்று சொல்லி விட அத்தை ஸ்ரீ பட்டர் கேட்டு அருளி
பாசுரம் அழகிது ஆகிலும் இத்தைத் தாமே சொன்னாரே -என்று அருளிச் செய்தார் –
இத்தால் ஆச்சார்ய அபிமான ஜெனித ஸ்வ உதகர்ஷ ரூப ஸ்லாகா வசனம்–( ஸ்வ வாக் வ்யவஹ்ருத வசனம் )
ஸ்வரூப அநுசிதம் என்றபடி –

ஒருநாள் ஸ்ரீ பெருமாள் புறப்பட்டு அருளி ஒரு திரு மண்டபத்திலே எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ பட்டர் திரு ஆலவட்டம் சேவித்து இரா நிற்க
ஸ்ரீ பாதத்து முதலிகள் ஸந்த்யாவந்தனத்துக்கு காலம் தப்புகிறது என்று விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ பட்டரும் பகவத் கைங்கர்ய நிரதற்கு
சந்த்யா வந்தன வைகல்ய தோஷம் வாராது என்று அருளிச் செய்துஅருளினார் -இதற்கு கருத்து
மத் கர்ம குர்வதாம் பும்ஸாம் கர்ம லோபோ பவேத்யதி-தத் கர்மதே ப்ரகுர்வந்தி திஸ்ர கோட்யோ மஹர்ஷய -என்று திருமுகப் பாசுரம்
இருக்கையாலே பகவத் கைங்கர்யத்தை இழந்து நித்ய கர்மா அனுஷ்டான அர்த்தமாகப் போகை ஸ்வரூப விருத்தம் என்றபடி –

ஒருகால் ஸ்ரீ பட்டருடனே அநேக வித்வான்கள் திரண்டு வந்து தர்க்கிக்க ஸ்ரீ பட்டர் அவர்கள் எல்லாரையும் வாய் மூடுவித்து ஜெயித்து அருள –
பின்னையும் அவர்கள் இவருடைய சர்வஞ்ஞதையை பரீஷிப்போம் என்று ஒரு குடத்தில் ஒரு பாம்பை அடக்கிக் காட்டி –
இக்குடத்திலே இருக்கும் வஸ்து என் என்று கேட்க -ஸ்ரீ பட்டரும் திரு வெண் கொட்றக் குடை இருக்கிறது என்ன –
அவர்களும் சிரித்து குடத்தைக் கட்டை அவிழ்த்து விட்ட அளவிலே போகி புறப்பட-அவர்களும் இது கொற்றக் குடையோ என்ன –
ஸ்ரீ பட்டரும் அன்றோ -சென்றால் குடையாம் என்று அன்றோ ஆழ்வார் அருளிச் செய்தது-என்ன
அவர்களும் இவருடைய சர்வஞ்ஞதைக்கு விஸ்மயப்பட்டு க்ருதார்த்தராய்ப் போனார்கள் –

முன்பு ஸ்ரீ உடையவர் காலத்திலே ஆச்சார்யர்கள் எல்லாரும் உடையவருக்கு மானஸ புத்திரரான ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளானை
அனுவர்த்தித்து -ஸ்ரீ ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் அரும் பொருள் தெரியும்படிக்கு தேவரீர் வ்யாக்யானம் அருளிச் செய்து
அருளும் படி ஸ்ரீ உடையவரை வேண்டிக் கொள்ள வேணும் என்று ஸ்ரீ பிள்ளானுக்கு விண்ணப்பம் செய்ய-
ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ உடையவர் பெரும் கூட்டத் திருலோக்கமாக எழுந்து அருளி இருக்கச் செய்தே சாஷ்டாங்க பிராணாமம் பண்ணி
ச விநயராய் இரப்புடனே ஒரு விண்ணப்பம் உண்டு என்று சொல்ல -ஸ்ரீ உடையவரும் என் என்று கேட்டு அருள –
ஸ்ரீ பிள்ளானும் தேவரீர் ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து திக்விஜயம் பண்ணி தரிசனத்தை நிலை நிறுத்தி அருளிற்று –
இனி திருவாய் மொழி முதலான ஸ்ரீ ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தங்களும் வ்யாக்யானம் அருளி ரஷித்து அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்ய-ஸ்ரீ உடையவரும் திரு உள்ளத்திலே விசாரித்து அருளி -அப்படியும் -நாம் அருளிச் செயல்களுக்கு வ்யாக்யானம்
பண்ணினால் மந்த மதிகளுக்கு இதற்கு இவ்வளவே அர்த்தம் உள்ளது என்று தோற்றும் –அதில் அபசாரமாம் -ஸ்ரீ ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு
அவ்வவருடைய புத்திக்கு ஈடாக பஹுவாகச் சுரக்கும் -ஆகையால் நாம் அருளிச் செயல்களுக்கு வரம்பு கட்டினால் போலே யாம் –
நீர் ஒருபடி திருவாய் மொழிக்கு வ்யாக்யானம் செய்யும் என்று நியமித்து அருளினார்

ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளானும் ஸ்ரீ யதிராஜர் அனுமதி கொண்டு ஸ்ரீ விஷ்ணு புராண பிரகிரியையாலே திருவாய் மொழிக்கு
முந்துற முன்னம் இனிதாக ஆறாயிரப்படி உரைத்து அருளினார் –
ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ நஞ்சீயருக்கு ஸ்ரீ பிள்ளான் படி ஆறாயிரமும் நன்றாக பிரசாதித்து அருளினார்
ஸ்ரீ நஞ்சீயரும் அத்தை நன்றாக அதிகரித்து -ஸ்ரீ பட்டரை அநேகமாக அனுவர்த்தித்து அவருடைய அனுமதி கொண்டு திருவாய் மொழிக்கு
ஒன்பதினாயிரம் படியாக ஒரு வ்யாக்யானம் பண்ணா நிற்கச் செய்தே

ஸ்ரீ பட்டருக்கு இருபத்து எட்டாம் திரு நக்ஷத்ரத்திலே ஒரு கைசிக துவாதசி அன்று ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் கைசிக புராணம் வாசித்து
அருளா நிற்க என்றையும் போல் அன்றியே ஒரு பதத்தில் நின்று பஹு முகமாக பாவ அர்த்தங்களை அருளிச் செய்கிற படிகளைக் கண்டு
ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி உகந்து இவருக்கு தாம் சாத்தி இருந்த திரு மாலை திருப்பரியட்டம் திரு ஆபரணம் முதலியவற்றையும்
தாம் எழுந்து அருளி இருக்கும் திவ்ய சிம்ஹாசனத்தையும் பின்னையும் சிலவற்றையும் பரிசிலாகி இரங்கி அருளி மார்பும் தோளும் பூரித்து
திரு மேனி தெரியாமல் த்வரை விஞ்சி மாறி இவருக்கு மற்று எது கொடுப்போம் என்று சந்தோஷ அதிசயத்தால் –
ஸ்ரீ பட்டரே உமக்கு மேலை வீடு தந்தோம் என்று திரு உள்ளமாக-இவரும் மஹா பிரசாதம் -என்று அங்கீ கரித்து அருள –
திரு ஓலக்கம் அடைய கடல் குழம்பினால் போலே-இப்படி திரு உள்ளம் ஆவான் என் என்று கலங்கி வயிறு பிடிக்க

ஸ்ரீ பட்டரும் ஹர்ஷ பிரகர்ஷத்துடன் ஸ்ரீ பெருமாள் திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து க்ருதாஞ்சலி புடராய் நின்று கொண்டு –
நாயந்தே தேவரீர் அர்ஜுனனைக் குறித்து மோக்ஷயிஷ்யாமி என்று அருளிச் செய்து அருளிற்று என்று கேட்பார் வார்த்தை கேட்டு இருக்கை
அன்றிக்கே தேவரீர் தாமே இப்படி திருவாய் மலர்ந்து அருளப் பெற்ற இப்பேற்றுக்கு அடி
ஸ்ரீ உடையவர் தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும் -ஸ்ரீ ஆழ்வானோடு உண்டான குடல் துடக்கும்-ஸ்ரீ எம்பார் அருளும் இறே -என்று
விண்ணப்பம் செய்ய திரு ஓலக்கத்தில் இருந்த ஸ்ரீ ரெங்கமறையோர் ஸ்ரீ பட்டரைப் பார்த்து -ஸ்ரீ பெருமாள் உகப்பு தலை மண்டி இட்டு
விசாரியாமல் ஒரு வார்த்தை அருளிச் செய்து அருளினார் -நீர் இங்கனே உகந்து அங்கீ கரிக்கிறது என் –
உம்மைக் கொண்டு இவ்விபூதியை திருத்த வேணும் என்று அன்றோ ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் பற்றி இருக்கிறது என்ன –
ஸ்ரீ பட்டரும் -ஆனால் -இவ்விபூதியும் இவ்விபூதியில் உள்ளாரும் பாக்ய ஹீனர் ஆனால் அடியேன் செய்வது என் –
நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்குமோ -என்னை இவ் விபூதி பொறுக்குமோ -இன்னம் சிறுது நாள் இங்கே அடிமை கொண்டு அருளில்
ஸ்ரீ பரமபதத்துக்கும் இதுக்கும் சுருளும்படியும் காட்டேனோ என்று பெருமாள் தம்மை விசேஷ கடாக்ஷம் செய்து அருளின
ராஜகுல மஹாத்ம்யத்தால் உண்டான செருக்குத் தலை மண்டியிட்டு ஹ்ருஷ்ட உக்தியைப் பண்ணி-

நாயந்தே ஆசன பத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித் தாமரைகளும் அஞ்சல் என்ற கையும் கவித்த முடியும் முறுவல் பூரித்த
சிவந்த திரு முக மண்டலமும் -திரு நுதலில் கஸ்தூரித் திரு நாமமும் ஸ்ரீ பரமபதத்தில் கண்டிலேன் ஆகில்
ஒரு மூலை அடியே முறித்துக் கொண்டு குதித்து மீண்டு வருவேன் -என்று விண்ணப்பம் செய்து
ஸ்ரீ நம்பெருமாளையும் ஸ்ரீ பெரிய பெருமாளையும் ஆ பாத சூடம் அனுபவித்து ஸ்ரீ கோயில் ஆழ்வாரையும் ஸ்ரீ ஆழ்வாரையும்
கண்ணார சேவித்து நிற்க ஸ்ரீ பெருமாள் தம் வரிசைகள் எல்லாவற்றுடன் ப்ரஹ்ம ரதம் பண்ணுவித்து
ஸ்ரீ கோயில் அனைத்துக் கொத்தும் அகில ஸ்ரீ வைஷ்ணவர்களும் எல்லா ஆச்சார்யர்களும் மற்றும் உள்ள விப்ர வர்க்கமும் சூழ்ந்து சேவித்து வர
அவர் திரு மாளிகையில் எழுந்து அருளி ஸ்ரீ ஆண்டாளை சேவித்து நிற்க -அவரும் நலம் அந்தம் இல்லதோர் நாடு புகுவீர் -என்று ஆசீர்வதிக்க
ஸ்ரீ பட்டரும் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று உகந்து அருளி

ஸ்ரீ திருப்பதியில் உள்ளவர்கள் அடங்கத் திரு மாளிகையில் அமுது செய்து அருளின பின்பு பெரும் கூட்டமாக எழுந்து இருந்து
என்றைக்கும் போலே ஸ்ரீ திரு நெடும் தாண்டகத்துக்கு அர்த்தம் அருளிச் செய்யா நிற்கச் செய்தே-
அஃலம் புரிந்த நெடும் தடக்கை -என்கிற பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்கிற போது -அஞ்சிறைப்புள் தனிப் பாகன் -என்கிற இடத்தில் –
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் -என்ற இத்தை
இரட்டித்து அனுசந்தித்து அருளித் திருக் கண்களை மலர விழித்துத் திரு மேனியைச் சிலிர்ப்பித்துப் புன்முறுவல் செய்து
திரு முடியில் அஞ்சலி செய்து கொண்டு அணையில் சாய்ந்து நிற்கச் செய்தே சிறை கபாலம் வெடித்து
ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருள -முதலிகளும் உள்ளே சென்று

ஸ்ரீ பட்டர் இளைத்து எழுந்து அருளி இருக்கிறார் என்று ஸ்ரீ ஆண்டாளுக்கு அறிவிக்க
ஸ்ரீ ஆண்டாளும் சடக்கென எழுந்து அருளி ஸ்ரீ பட்டரை வாரி எடுத்து மார்பிலே அணைத்துக் கொண்டு ஸ்ரீ திருநாட்டுக்கு எழுந்து அருளின
விஸ்மயத்தைக் கண்டு திரு உள்ளம் கலங்குதல் திரு முகம் கன்றுதல் கண்ணீர் மல்குதல் செய்யாதே வண்டுகள் பூவின் பரிமளம் அறிந்து
ஆக்ராணித்து கிரஹிக்குமா போலே ஸ்ரீ பட்டருடைய ஸுகுமார்யம் அறிந்து கலக்காமல் இவர் ஹ்ருத் கமலத்தை அலர்த்தித்
தான் தெய்வ வண்டான தன்மை தோன்ற ஸ்ரீ வைகுண்ட நாதன் இவரைக் கைக் கொண்டு அருளுவதே –
ஸ்ரீ பெருமாளுக்கும் ஸ்ரீ நாச்சிமாருக்கும் பேர் இழவும் பெரும் கிலேசமும் பெரு வயிற்று எரிச்சலுமாகச் செல்லா நிற்க-
ஸ்ரீ பரமபத நிலையனுக்கும் அங்குள்ள ஸ்ரீ நாச்சிமாருக்கும் பெரு வாழும் பெரும் செல்வமும் பெரும் களிப்புமாய்ச் செல்லுகிறதே -என்று
புத்ர சோக லேச ஸ்பர்சமும் அற்று-உடையவன் உடைமையைக் கைக் கொண்டால் நாம் வெறுக்கலாமோ என்று ஸ்ரீ ஆண்டாள் இருக்க –

கடல் கலங்கினால் போலே ஸ்ரீ கோயிலில் உள்ளார் அடங்க சோகார்த்தராய்க் கிடந்து துடிக்க
வேதாந்திகளும் வேர் அற்ற மரம் போலே கோஷித்துக் கொண்டு விழுந்து சோகார்த்தராய் பஹுவாய் பிரலாபித்து மழைக் கண்ணீர் மல்கி நிற்க
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமாரும் திரு முத்தின் பணி காளாஞ்சி திரு வெண் சாமரம் திரு ஆலவட்டம் திரு வெண் கொற்றக் கொடை
வெண் முத்தின் கலசம் மேற்கட்டு முத்துத் தாமம் தொடக்கமான தம்முடைய சர்வ பரிஜன பரிச் சதங்கள் அடங்கக் கொடுத்து விட்டு –
நம்முடைய அவப்ருத உத்சவம் கொண்டாடுமா போலே ஸ்ரீ பட்டருக்கு அவப்ருத உத்சவம் கொண்டாடுங்கோள் என்று திரு உள்ளமாய் –
திரு முகம் கன்றி -திரு முத்து உதிர்த்து ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமாரும் கூடத் திருமஞ்சனம் ஆடி அருளி –
இப்போது நமக்குச் செவ்வாய் வக்ரமாய்த்து என்று திரு உள்ளம் நொந்து -நாம் புத்ரனை இழந்தோமே என்று சுருள் அமுதும்
அமுது செய்யாமல் முசித்து எழுந்து அருளி இருக்க –
ஸ்ரீ வேதாந்தி முதலான முதலிகள் ஸ்ரீ ராமப் பிள்ளையைக் கொண்டு ஸ்ரீ பட்டரை ப்ரஹ்ம மேதத்தால் சமஸ்கரித்து திருப் பள்ளி படுத்தி
அவப்ருதம் கொண்டாடி மீண்டு வரும் போது ஸ்ரீ நஞ்சீயர் முட்டாக்கு இட்டு மூடிக் கொண்டு புழக்கடை வழியால் தம் திருமடம் எழுந்து அருள –
ஸ்ரீ பாதத்து முதலிகள் இதுக்கு அடி என் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நஞ்சீயரும் புதுக்க அறுத்த விதவை தெருவிலே வெளிப்பட வருமோ -என்று அருளிச் செய்து அருளினார் –
அதாவது ஸச் சிஷ்யன் சதாசார்யன் திறத்துப் பார்யா சமனாய் இருக்கை ஸ்வரூப சித்தி என்று கருத்து –

பின்பு ஸ்ரீ ஆண்டாளும் முதலிகளும் திரு மாளிகையில் புக்க அளவிலே வெறிச்சான திரு மாளிகையைக் கண்டு
ஸ்ரீ பட்டர் திருத்த தம்பியாரான ஸ்ரீ ராமப் பிள்ளை
நல்லதோர் தாமரைப் பொய்கை நாள் மலர் மேல் பனி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தது ஒத்ததாலோ –
இல்லம் வெறிவோடிற்று ஆலோ -என்று பாடிக் கொண்டு விழுந்து பெரு மிடறு செய்து ஆர்த்தராய் கூப்பிட்டு சோகிக்க-
ஸ்ரீ ஆண்டாளும் அவ்வார்த்தியைக் கண்டு -இவர் ஸ்ரீ ஆழ்வான் திரு வயிற்றில் பிறக்கத்தக்கவர் அல்லர் என்று முசித்து
முதலிகளைப் பார்த்து அருளிச் செய்து -பிள்ளாய் பெற்ற பேற்றுக்குப் பொறாமல் ஞாதித்வம் கொண்டாடுகிறீரோ –
நீர் இப்படி செய்கையில் நான் ஒரு கைப்புடையிலே இருக்கிறேன் என்ன -ஸ்ரீ ராமப் பிள்ளையும் சோகத்தை விட்டு துணுக்கு யென
எழுந்து இருந்து ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து அபசாரப் பட்டேன் பொறுத்து அருள வேணும் -என்று ஷமை கொண்டு
ஸ்ரீ பட்டருக்கு தீர்த்தம் திருஅத்யயனம் செய்து அருளி நிறைவேற்றிய பின்பு ஸ்ரீ பெருமாளைத் திருவடி தொழச் சென்ற அளவிலே
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ராமப் பிள்ளையை அருள் பாடிட்டு அருளி -ஸ்ரீ பட்டரை இழந்தோம் நாம் -உமக்கு நாம் இருக்கிறோம் -முசியாதே கொள்ளும் –
என்று ஸ்ரீ பட்டருடைய வரிசைகள் அடங்கக் கொடுத்து அருளி ப்ரஹ்ம ரதம் பண்ணுவித்துத் திரு மாளிகையில் போக விட
ஸ்ரீ ராமப் பிள்ளையும் முசிப்பற்று ஹ்ருஷ்டராய் தர்சனம் நிர்வகித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

இத்தால் மஞ்சள் நீர் குடிப்பித்து பெற்று வளர்த்தவரே தம் பெரு வீடு கொடுக்கும்படியான தன்னேற்றமும்
அர்த்த அனுசந்தான வேளையிலே ஹார்த்தன் சாஷாத் கரித்து வழி நடத்தும் படியான தன்னேற்றமும்
பேறு இழவு இரண்டுக்கும் பெருமாள் தாமாய் அதில் கலக்கம் அற்ற தன்னேற்றமும்
ஸ்ரீ ஆழ்வான் குடல் துவக்குடைய ஸ்ரீ பட்டருக்கே உள்ளது ஓன்று இறே
ஸ்ரீ பட்டர் வைபவம் முற்றச் சொல்லி முடியாது இறே–யதா மதி யதா ஸ்ருதமாகச் சொன்னது அத்தனை

ஸ்ரீ பட்டர் திரு நக்ஷத்ரம் வைகாசி அனுராதம்
இவர் தனியன்
ஸ்ரீ பராசார்ய பட்டார்யாஸ் ஸ்ரீ ரெங்கேச புரோஹித ஸ்ரீ வத்சாங்க ஸூதஸ் ஸ்ரீ மான் ஸ்ரேயசே ஸ் மேஸ்து பூயதே —

————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -சரம உபதேச அர்த்த -சரம விமல கைங்கர்ய விசேஷங்கள் –

February 28, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ மன் நாதமுனிகள் தொடக்கமான ஆச்சார்யர்களில் காட்டில் ஸ்ரீ எம்பெருமானார்க்கு ப்ராதான்யம் கொள்ளும்படி எங்கனே என்னில்
ஸ்ரீ பகவத் அவதாரங்கள் எல்லாம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ ராம கிருஷ்ண அவதாரங்களுக்கு ப்ராதான்யம் உண்டானால் போலேயும்
திவ்ய தேசங்கள் எல்லாம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ கோயில் திருமலை பெருமாள் கோயில்
திரு நாராயண புரங்களுக்கு பிரதான்யம் உண்டானால் போலேயும்
ரிஷிகள் எல்லாரிலும் வைத்துக் கொண்டு ஸ்ரீ வ்யாஸ பராசர ஸூக ஸுவ்நக நாரதாதிகளுக்கு பிரதான்யம் உண்டானால் போலேயும்
ஆழ்வார்கள் எல்லாரும் ஒத்து இருக்க ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிரதான்யம் உண்டானால் போலேயும்
ஆச்சார்யர்களில் எல்லாரையும் வைத்துக் கொண்டு ஸ்ரீ உடையவருக்கு ப்ராதான்யம் கொள்ளத் தட்டில்லை இறே-

ஸ்ரீ ராமாவதாரத்துக்கு ப்ராதான்யம் எத்தாலே என்னில்
ஸ்ரீ பெருமாள் அபயப்பிரதானம் அருளிச் செய்தும்
ஸ்ரீ குஹப் பெருமாளுடன் சீரணிந்த தோழமை கொண்டும்
ஸ்ரீ பெரிய உடையாரை ப்ரஹ்ம மேதத்தால் சமஸ்கரித்து பள்ளிப் படுத்தியும்
ஸ்ரீ சபரி திருக் கையால் சம்யக் போஜனம் செய்தும்
ஸ்ரீ திருவடியுடன் -உண்பன் நான் என்ற ஒண் பொருள் – என்கிறபடியே ஸஹ போஜனம் பண்ணியும் போருகையாலே –

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு ப்ராதான்யம் எத்தாலே என்னில்
ஸ்ரீ கீதோபநிஷத்தை வெளியிட்டு ஸ்ரீ சரம ஸ்லோகத்தை அருளிச் செய்கையாலும்
ஸ்ரீ பீஷ்ம த்ரோணாதிகளுடைய க்ருஹங்களை விட்டு ஸ்ரீ விதுரர் திரு மாளிகையில் -ஸூசீநி குண வந்திச -என்கிற
பாவனத்வ போக்யத்வங்களை யுடைத்தாய் இருந்தது என்று அமுது செய்து -த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் -என்று
முறை கூறுகிற சோற்றை நிராகரித்து இது தன்னையே சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தம் ஆக்குகையாலும் –

ஸ்ரீ கோயிலுக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் -ஸ்ரீ திருப் பாணாழ்வாரோடு கலந்து பரிமாறுகையாலே

ஸ்ரீ திருமலைக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் ஸ்ரீ குறும்பு அறுத்த நம்பிக்கும் ஸ்ரீ தொண்டைமான் சக்கரவர்த்திக்கும்
வார்த்தை அருளிச் செய்து பரிமாறுகையாலும்

ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் ஸ்ரீ திருக் கச்சி நம்பியோடே ஸ்மித பூர்வகமாக
சம்பாஷணம் பண்ணி மிகவும் கலந்து பரிமாறுகையாலும்

ஸ்ரீ திரு நாராயண புரத்துக்கு ப்ராதான்யம் எத்தாலே என்னில் ஸூசரிதத நயன் பக்கல் ஆதராதி அதிசயத்தாலே
தன் நிவேதித அன்னத்தை சம்யக் போஜனம் பண்ணி அவனை வாழ்விக்கையாலும்
ஸ்ரீ யதிராஜ புத்ரரான ஸுசீல்யத்தாலும்

ஸ்ரீ வேத வ்யாஸ பகவானுக்கு -வேதங்களை விஸ்தரிப்பித்து -அதில் கர்ம காண்டத்தை விட்டு
ப்ரஹ்ம பாகத்தில் புருஷ ஸூக்த சாந்தோக்ய வாஜசநேய தைத்ரீயக ஸ்வேதாஸ்வதர மஹா உபநிஷதாதி களிலும்
தத் உப ப்ரும்ஹணங்களான புராண இதிஹாசாதிகளிலும்
சத்யம் சத்யம் என்று தொடங்கி –நதைவம் கேஸவாத் பரம் -என்று ஸத்ய புரஸ்சரமாக பரதத்வ நிர்ணயம் பண்ணுகையாலே –

ஸ்ரீ பராசர மஹ ரிஷிக்கு ப்ராதான்யம் -புராணேஷு ச வைஷ்ணவம் -என்னும்படியான ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
சித் அசித் ஈஸ்வர தத்வங்களை விசத தமமாகப் ப்ரதிபாதித்த உதாரன் என்று ஸ்ரீ ஆளவந்தார் நமஸ்கரித்து அருளுகையாலே

ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம ரிஷிக்கு பிரதான்யம் -ஸ்ரீ பரீக்ஷித்து ராஜாவுக்கு ஸ்ரீ மத பாகவதத்தில் தத்வ நிர்ணயத்தைப் பண்ணி –
ஸூகோமுக்த-என்னும்படியான வைபவத்தை யுடையவர் ஆகையால் –

ஸ்ரீ ஸுவ்நக பகவானுக்கு ப்ராதான்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் பல இடங்களிலும் தத்வ நிர்ணயம் பண்ணுகையாலே –

ஸ்ரீ நாரத பகவானுக்கு பிரதான்யம் -புஜயுகமபி சிஹ்னை ரங்கிதம் யஸ்ய விஷ்ணோ பரம புருஷாநாம் நாம் கீர்த்தனம் யஸ்ய வாசி –
ருஜு தரமபி புண்ட்ரம் மஸ்தகே யஸ்ய கண்டே சரஸிஜ மணி மாலா யஸ்ய தஸ்யாஸ்மி தாசா -என்று இப்படிப்பட்ட
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தாசன் என்று சொல்லுகையாலும் –
ஸ்ரீ பெரியாழ்வாரும் சேமமுடை நாரதனார்-என்னும்படியான வைபவத்தாலும்

ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிரதான்யம் எத்தாலே என்னில் -சஹஸ்ர சாகையான நாலு வேதத்தினுடைய பொருளையும்
நாலு திவ்ய பிரபந்த முகத்தால் சர்வாதிகாரம் ஆக்குகையாலும் –
ஸ்ரீ நாதமுனிகளுக்கு ப்ரசன்னராய் அருளிச் செயல் நாலாயிரத்தையும் ப்ரசாதித்து மற்றும் உண்டான தர்சன தாத்பர்யங்களை
எல்லாம் அருளிச் செய்து தர்சனத்தை நிலை நிறுத்துகையாலும்
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -முதலான இடங்களிலே வாரநாத் யுத்கர்ஷங்களை நிராகரித்து
வேத பிராமண முக்ய தாத்பர்யமான ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் எல்லாருக்கும் தெரியும்படி அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ உடையவர் கீழ்ச் சொன்னவர்களைப் போல் அன்றிக்கே ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த
அபய பிரதானத்தை விசதமாக்குகையாலும்
ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தத்தை பிரகாசிப்பிக்கையாலும்
ரிஷி ப்ரோக்தமான ப்ரமாணங்களுக்கு அர்த்தம் அருளிச் செய்கையாலும்
மற்றைய ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களை அங்க உபாங்கமாக யுடைய திருவாய் மொழி திவ்ய பிரபந்தத்தை
அர்த்தவத்தாக விசதமாகப் பிரகாசிப்பிக்கையாலும்
ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களையும் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்களையும் கொண்டு
ஸூத்ர வாக்கியங்களை ஒருங்க விட்டும்
ஸ்ரீ பாஷ்யம் கத்யத்ரயம் முதலான திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்து –
நிகில குமதி சமயங்களையும் நிராகரித்து ஸ்வ மத ஸ்தாபனம் பண்ணி ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் -என்னும்படி
பண்ணுகையாலும் இவர் எல்லாரிலும் பிரதானர் இறே
இனி சிஷ்யர்களான ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலியாண்டான் தொடக்கமானவர்களில் பிரதானர் என்னும்
இடம் சொல்ல வேண்டா இறே

ஆக இவரது பிரதான்யம் சொல்லிற்று ஆயிற்று –

——————————–

ஆச்சார்யவான் புருஷோ வேத -என்றும்
பாபிஷ்ட க்ஷத்ர பந்துஸ் ச புண்டரீகஸ் ச புண்ய க்ருத்–ஆச்சார்யவத் தயா முக்த தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் -என்றும்
ஆச்சார்யஸ் ச ஹரிஸ் சாஷாச் சர ரூபி ந சம்சய -என்றும்
ஆசிநோதி ஹீ சாஸ்த்ரார்த்தா நாசா ரேஸ்தா பயத்யபி -ஸ்வயம் ஆசரதே யஸ்து ஆச்சார்யஸ் ஸோ அபிதீயதே -என்றும்
குரு ரேவ பரம் ப்ரஹ்ம குரு ரேவ பராம் கதி குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பரந்தனம் குரு ரேவ பரம் காமோ
குரு ரேவ பாராயணம் யஸ்மாத் தத் உபதேஷ்டா அசவ் தஸ்மாத் குரு தரோ குரு -என்றும்
பீதாக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்றும்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி என்றும்
ஈஸ்வரன் தானாகச் சொல்லப்பட்ட ஆச்சார்யனே சிஷ்யனுக்கு -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
திருப் பாற் கடல் முதல் நூற்று எட்டு திருப்பதிகளும் அன்னையாய் அத்தனாய் என்னும்படியான சர்வ வித உத்தாரக பந்துவும்
மாடும் மனையும் தேடும் பொருளும் பூமியும் எல்லாம் ஆககே கடவன் –

ஸ்ரீ ஆழ்வான்-ஸ்ரீ ஆண்டான் -ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் -ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ பராசர பட்டர் –
முதலானோர் தம் தம் சிஷ்யர்களுக்கு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் – என்கைக்கு ஹேது என் என்னில்
ஸ்வாச்சார்ய ப்ரீதி நிபந்தனமாகவும்
ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ உடையவருக்கும் நடுவுள்ள ஆச்சார்யர்கள் ஸ்ரீ நம்மாழ்வாருக்குக் கரண பூதர் ஆகையாலே
இவருக்கு நேரே ஆச்சார்யர் ஸ்ரீ திருக் குருகூர் நம்பி ஆகையாலும்
அவர் கலியும் கெடும் என்று இவர் திரு அவதாரத்தைக் குறித்து அருளிச் செய்கையாலே
ஸ்ரீ ஆழ்வாராலே பிரவர்த்திதமான தர்சனத்தை நிலை நிறுத்தி அவர் வைபவத்தை
குரும் பிரகாசயேத் தீமான் -என்று பிரகாசிப்பிக்கையாலும் ஸ்ரீ ஆழ்வாருக்கு நேரே சிஷ்யர் ஸ்ரீ உடையவராகக் கடவர்
ஸ்ரீ பெரிய நம்பி முதலான பூர்வாச்சார்யர்கள் இவருக்கு ஆச்சார்யர்களாக வீறு பெற்றார்கள் –
ஸ்ரீ ஆழ்வான் முதலான சிஷ்யர்கள் இவருக்கு சிஷ்யராய் பேறு பெற்றார்கள் –
ஆகையாலே சர்வ ஆச்சார்யத்வ பூர்த்தி உள்ளது ஸ்ரீ உடையவர்க்கே யாகையாலே அருளிச் செய்து அருளினார்கள் இறே-

ஸ்ரீ ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தை அனுஷ்டித்துக் காட்டி அருளினார் -எங்கனே என்னில்
ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ உய்யக் கொண்டார் இவர்கள் உகப்பை பின் சென்று
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத -என்றும்
நாதாய நாத முனையே அத்ர பரத்ர சாபி நித்யம் -என்றும்
அங்கும் இங்கும் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் -ஆச்சார்ய விஷயத்தில் க்ருதஜ்ஞதை யாவதாத்மபாவி -என்று அருளினார் –
ஆகையால் ஸ்வரூப உஜ்ஜீவனத்துக்கு ஆச்சார்யனே தஞ்சம் என்று பற்றுதல் ஒழிய வேறே
இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை இறே
இவ்வர்த்தத்தை அனுஷ்ட்டித்தார் ஆர் என்னில் ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சஜ் ஜனங்கள் இறே

ஸ்ரீ உடையவர் புழுவன் வ்யாஜேந மேல் நாட்டுக்கு எழுந்து அருளினை போது உபந்யஸித்த கட்டளையைக் கேட்டு
ஆச்சார்யர்கள் எல்லாம் ஆச்சர்யப் பட
ஸ்ரீ உடையவரும் -என் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் வார்த்தை கொண்டு சொன்னேன் இது –
ஸ்ரீ ஆளவந்தார் கோஷ்டியில் ஒரு நாளாகிலும் சேவிக்கப் பெற்றேன் ஆகில் ஸ்ரீ பரமபதத்துக்கும் இங்கும் சுருளும் படியும்
கட்டி விடேனோ-என்று அருளிச் செய்தார் இறே

ஸ்ரீ உடையவர் அபயப்ரதானம் அருளிச் செய்யா நிற்க ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் கோஷ்டியின் நின்றும் எழுந்து நிற்க
இது என் பிள்ளாய் -என்று ஸ்ரீ உடையவர் கேட்டு அருள
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநிச -பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநிச -என்றும்
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணங்கத -என்றும்
பகவத் ஸமாச்ரயணத்துக்கு விலக்கடி யானவைகளை அடைய விட்டு ஸ்ரீ பெருமாள் திருவடிகளே தஞ்சம் என்று வந்து –
கஸ்ய ஏவ வ்யதிஷ்டித -என்று நிலத்திலே கால் பாவாதே ககநஸ்தனாய்-நிராலம்பநனாய் நின்று ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் அகப்பட –
வத்யதாம் -என்று கல்லும் தடியும் கொண்ட ஸ்ரீ ராம கோஷ்டிக்குப் பஸூ பத்நியாதிகளோடே கூடின அடியேன் ஆளாகப் புகுகிறேனோ -என்றார்
ஸ்ரீ உடையவரும் -கேளாய் பிள்ளாய் -அஞ்சாதே கொள்ளும் -நான் பெற்றேனாகில் நீர் பெறுகிறீர்-
ஸ்ரீ பெரிய நம்பி பெற்றாராகில் அடியேன் பெறுகிறேன் -ஸ்ரீ ஆளவந்தார் பெற்றார் ஆகில் ஸ்ரீ பெரிய நம்பி பெறுகிறார் –
மற்றும் மேல் உள்ளோர் பெற்றார்கள் ஆகில் இவர்களும் பெறுகிறார்கள்
நம் ஸ்ரீ சடகோபர் அவா அற்று வீடு பெற்ற-என்று தம் வாக்காலே அருளிச் செய்கையாலே அவர் பெற்றது சித்தம் –
ஆனபின்பு நமக்கும் சித்தம் என்று இரும் -எல்லார்க்கும் நாச்சியார் புருஷகாரம் உண்டாம் போது அச்சம் வேண்டா –
ஆகை இறே நித்ய யோகம் -ஆனபின்பு நித்ய சம்சாரிகளும் ஸ்ரீ எம்பெருமானும் ஒரு சங்கிலி துவக்கிலே காணும் இருப்பது –
ஆகையால் நம்முடைய ஒழுக்குக் கூட்டம் நம்மை விட்டு அகலாது என்று இரீர்-கமுகு உண்ணில் வாளையும் உண்ணும் என்று இரும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானோடு வந்த நால்வரையும் அருளப்பாடிட்ட போது தனித்து அருளப் பாடிட்டது இல்லையே –
தகை என்ற போதும் தனித்துத் தகை என்றது இல்லையே –
ஆனபின்பு நான் பெற்றேன் ஆகில் நீர் பெறுகிறீர் -அஞ்சாதே ஸூகமே இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஏத்தி இருப்பாரே வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்-
ஏத்தி இருந்தார் -ஸ்ரீ பரதாழ்வான்-அவரைச் சார்த்திஇருந்தார் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான்
ஏத்தி இருந்தார் ஸ்ரீ நம்மாழ்வார் -அவரைச் சார்த்தி இருந்தார் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
ஏத்தி இருந்தார் ஸ்ரீ பெரியாழ்வார் -அவரைச் சார்த்தி இருந்தார் ஸ்ரீ நாச்சியார்
இனி ஸ்வ ஆச்சார்ய பரமாச்சார்யார்களைப் பற்றும் அவ்வளவே -இதுவே ஸ்ரீ எம்பெருமானாரை பற்றுமதுவே
ஸ்வரூபம் ஆகில் திவ்ய தேசங்களைக் கை விட்டான் ஆகானோ -என்னில் -கை விட்டா ன் ஆகான் -அது எங்கனே என்னில்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தன்னோடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து -என்கையாலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளைத் தொழவே திவ்ய தேசங்கள் எல்லாம் திருவடி தொழுதானாகக் கடவன் –
ஸ்ரீ உடையவராய் ஆராதித்து அமுது செய்யப் பண்ணவே -எல்லா திவ்ய தேசங்களில் ஸ்ரீ எம்பெருமான்களை எல்லாரையும்
ஆராதித்து அமுது செய்யப் பண்ணினாகக் கடவன் –

நின்ற வண் கீர்த்தியும்-என்கிற பாட்டிலும் -பேறு ஓன்று மற்று இல்லை -என்கிற பாட்டிலும்
கர்மமும் உபாயம் அன்று -ஞானமும் உபாயம் அன்று -பக்தியும் உபாயம் அன்று -பிரபத்தியும் உபாயம் அன்று –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே உபாய உபேயம் என்கையாலே -ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றுகையே பிரபத்தி –
ஸ்ரீ ராமானுஜன் என்கிற சதுரஷரியே திரு மந்த்ரம் -அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
இதுவே நிச்சயித்த அர்த்தமான என் சித்தாந்தம் என்று ஸ்ரீ நடாதூர் அம்மாள் அருளிச் செய்து அருளுவார்

ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ நாராயண ஸ்ரீ ராமானுஜ என்கிற திரு மந்திரங்களுக்கு வாசி
பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாகையும் -மோக்ஷ ஏக ஹேதுவாகையும் ஆகிற இது தோன்ற
ராமானுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ -என்றார் இறே
கையில் கனி -என்கிற பாட்டில் -ஸ்ரீ சர்வேஸ்வரனை கர தலாமலகமாகக் காட்டித் தந்தாலும்
உன் திவ்ய விக்ரஹ ஸுந்தர்ய அனுபவமே பரம ப்ராப்யம் என்றும்
இராமானுசனைத் தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடம் -என்று
ஸ்ரீ ராமானுசனைத் தொழும் பெரியோர் நித்ய வாசம் பண்ணும் இடமே அடியேனுக்கு ப்ராப்ய பூமி என்றும்
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -என்று
ஸ்ரீ ராமானுசா உன் அடியார் திறத்தில் ஊற்றம் மாறாத பக்தியை உண்டாக்கி அவர்களுக்கே என்னை ஆட் படுத்தாய் -என்று
ஸ்ரீ உடையவர் திரு முக மண்டலத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்ய இசைந்து எழுந்து அருளி இருந்தார் இறே
இதுவே இவ்வர்த்த நிர்ணயத்துக்கு த்ருட தர முக்ய பிரமாணம் என்று நமக்கு எல்லாம் புத்தி பண்ணக் குறையில்லை –
எங்கனே என்னில்
அங்கயல் பாய் வயல் -என்கிற பாட்டில் படியே -சர்வ ஸ்மாத் பரனாய் சர்வ நியாந்தாவான ஸ்ரீ எம்பெருமானையும் ஸ்ரீ நாச்சியாரையும்
புருஷகாரமாகக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை பெற வேணும் என்று
தம் திவ்ய பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளினார் இறே ஸ்ரீ அமுதனாரும் –

இங்கன் அன்றிக்கே-
வேதாந்தான் சங்கராத்யை குமதி பிரச தர்த்தான் ஹி நீதரம்ஸ் ச பூயஸ் ஸ்வார்த்தே தாத்பர்ய யுக்தான்
கல யிதுமபிச ஸ்ரீ சடார்யாத்ய பக்தை ப்ரோக்தான் திவ்ய பிரபந்தான் ஸ்ரண வரண யோகாத் மகான் ப்ரஸ் புடார்த்தான்
க்ருத்வோத்தர்த்தும் பவாப்தே ரகில ஜென்ம பூத்யோ மஹா பூத தாம்நி -என்றும்
வேதாந்தா நாம ஸீம் நாங் குரு தரகஹ நார்த்தைக வாக்யத்வ பூர்வம் வ்யாக்யா த்ருத் வாச்ச சேஷங் குரு பரவஹநா தீசி துஸ்
ஸைன்ய நாதம் -சாது த்ராணாத் ததன்ய ப்ரமதந கரணாச்சாபி தத் பஞ்ச ஹேதீ நா சார்யத் வஸ்ய
பூர்த்யா யமுரு தரக்ருபம் ஸ்ரீ பதிஞ்சா ஹுரார்ய -என்றும்
ஸ்ருத் யர்த்தான் ப்ராப்ய தத்வேந சவரதமுகா தாஜ்ஞயா தஸ்ய சர்வம் ஸ்ங் கந்த யக்த்வா த்ரிதண்டாஞ்சி தமஹி தகரோ
ரங்க தாம் ந்யாஸ் தபஸ் சாத்-ஆர்யைஸ் சா கஞ்ச லஷ்மீ ரமண க்ருதப தாந்தி வ்யதேசாந்த ராயாம் சேவம்சே வம்ப்ர
கல்ப்யாத சமஹித சமாராதனம் தத்ர தத்ர -என்றும்
யாதோயஸ் சார தாயாஸ் ஸவிதமத தயாஸத் க்ருத ஸ்வ பிரபந்தோ பாஹ்யான் வேதாத் குத்ருஷ்டீ நபிக பட படூன்
வாததோ நிர்ஜிகாய -ப்ராதக்ஷிண்யே ந கச்சன் புவமகிலஜனம் வைஷ்ணவாக்ர் யஞ்ச குர்வன் ந்யாஸாக் யந்தேவ குஹ்யம்
பரமஹிதமபி த்ராக் ப்ரகாசஞ்ச க்ருத்வா -என்றும்
ரங்கே வேதாந்த பாஷ்யம் வ்யத நுத சதத -கீட கண்டஸ்ய ஹேதோர்கத்வா யோஹோசலாக்யம் ஜனபத மமலே யாதவாத்ரவ் நிவேஸ்ய –
பஸ் சாதா கத்ய ரங்கங் குரு வர முகதோ வைதிகாக்ர்யம் விசிஷ்டா த்வைதம் சித்தாந்த மஸ்மின்
ஜகதி பஹு முகம் விஸ்த்ருதங்கார யித்வா -என்றும்
அத்யாப்யாஸ் தேய துஷ் மாப்ருதி மஹித உயஸ் சாஷுஷீம்ஸ் வீய மூர்த்திங் குர்வாணஸ் தம்யதீந்த் ரங்குரு குல
நிரூபதிம் நவ்மி ராமாநுஜார்யம் -என்றும் –
கீதா பாஷ்யம் பூஷ்ய வேதாந்த பாஷ்யம் சாரந்தீ பங்கிஞ்ச கத்ய த்ரயஞ்ச -வேதார்த்தானாம் ஸங்க்ரஹம் நித்ய யாகம்
பிராஹை தான்யஸ் தம்யதீந்த்ரம் பஜே அஹம் -என்றும்
ஹஸ்த்ய த்ரீச பிரசாதா ததிகத நிகமாந்தார்த்த கோ யோஹி ஜித்வா பாஹ்யாந் வேதாத் குத்ருஷ்டீ நபி நிகில ஜனம்
வைஷ்ணவாக்ர் யஞ்ச க்ருத்வா -ரங்கே வேதாந்த பாஷ்யம் வ்யத நுததமஹம் நவ்மி ராமாநுஜார்யம்
ஸ்ரீ ரெங்காத் யாலயேஷு பிரகட குண கணம் ஸ்ரீ பதிம் சேவமானம்-என்றும்
இப்படி ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானோர் பஹு முகமாக பேசி வெளியிட்டார்கள் –

இப்படி சத்துக்களால் பராக் யுக்த வைபவம் ஸங்க்ரஹேன யுக்தமாய்த்து

—————————–

ஏவம் வித வைபவ யுக்தரான ஸ்ரீ எம்பெருமானாரைத் தத் பாகி நேய ஸூனுவாய்த் தன் நாமத்தை யுடையராய்த்
தன் நாம குண ஹர்ஷிதரான ஸ்ரீ கந்தாடை ஆண்டான் கனக்க அனுவர்த்தித்து-பரித்ராணாயா -இத்யாதிப்படியே -தேவரீர்
புண்யாம் போஜ விகாசாய பாபத்வாந்த ஷயாயச -ஸ்ரீ மான் ஆவீரபூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்னும்படி அவதரித்து அருளின
ஸ்ரீ பெரும் பூதூரிலே சர்வ காலத்திலும் சர்வ சேதனர்க்கும் ஸேவ்யமாம் படி தேவரீருடைய
அர்ச்சா விக்ரஹத்தை ஏறி அருளப் பண்ண வேணும் என்று விண்ணப்பம் செய்ய -ஸ்வாமியும் அப்படியே செய்யும் என்று
அனுமதி பண்ணி அருள அப்பொழுதே ஸ்ரீ ஆண்டானும் அனுகூலனான சில்பியை அழைப்பித்து
புண்ட்ரைர் துவாதச பிர்யுதம் விலஸிதன் த ண்டை ச த்ரிபிர் மண்டிதங் காஷாயேண சிகோபவீதருசி ரந்தோர் மூல சக்ராம்புஜம்
ஆஸீ நஞ்சல ஜரச நேச துளஸீ பத்மஜா மாலாஞ்சிதம் யுக்தஞ்ச அஞ்சலி முத்ரயார வி நிபம் ஸ்ரீ பாஷ்யகாரம் பஜே -என்கிற
பரார்த்யமான வார்த்தக விக்ரஹ ஆகாரத்தை சேவிக்கப் பண்ண
அவனும் ஆதி யஞ்சோதி யுருவை யங்கு வைத்து இங்கு பிறந்த -என்கிறபடியே அர்ச்சா விக்ரஹமாக எழுந்து அருளப் பண்ணி
சந்நிதியில் கொண்டு வந்து வைக்க -திருக்கண் சாத்தி உகந்து அருளி அந்த விக்ரஹத்திலே தம்முடைய சர்வ சக்தியும்
பிரகாசிக்கும் படி காடா லிங்கனம் பண்ணி -இவ்விக்ரஹத்தை புஷ்ப மாசத்தில் குரு புஷ்யத்திலே ப்ரதிஷ்டிப்பியும் என்று
திருமுகம் எழுதி தினம் குறித்து அனுப்பி அருள –
ஸ்ரீ ஆண்டானும் அப்படியே திருவடிகளில் சேவித்து அந்த விக்ரஹத்தை எழுந்து அருளிவித்துக் கொண்டு வந்து
மூல விக்ரஹத்தையும் ஏறி அருளப் பண்ணுவித்துத் திரு முகப்படியே திரு பிரதிஷ்டையும் செய்வித்து அருளினார்-

இங்கே ப்ரதிஷ்டிப்பிக்கிற அற்றைத் திவசத்திலே திரு மேனியில் மிகவும் தளர்ச்சியாய்ப் பல ஹானி யுண்டாக
ஸ்ரீ இராமானுசனும் இது என் என்று பராமர்சித்து -ஸ்ரீ ஆண்டானுக்கு எழுதிக் கொடுத்த திவசம் எது என்று கேட்டு அருள –
அந்த திவசம் அந்த தானாய் இருக்கக் கண்டு விஸ்மயப்பட்டு-சீக்ரம் வருவது -என்று ஆண்டானுக்குத் திருமுகம் போக விட்டு அருள –
அவரும் திரு முகத்தை சிரஸா வகித்து அப்படியே மீண்டு எனது அருளித் திருவடிகளை சேவித்துக் கொண்டு இருந்தார் –

அநந்தரம் அங்குத்தைக்கு அத்யந்தம் அந்தரங்கரான ஸ்ரீ ஆண்டான் முதலான முதலிகள் எல்லாம் பழுத்து இருக்கிற தேமாவைக்
கிளித் திரள்கள் காத்துக் கொண்டு இருக்குமா போலே-தத் துல்யரான இவர்களும் விமல சரம விக்ரஹத்தை கையில் கனி இத்யாதிப்படியே
மெய்யில் பிறங்கிய சீரைப் பழுக்க சேவித்துக் கொண்டு
அடையார் கமலத்து அலர் மலர் கேள்வன் கையாழி என்னும் படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடையார் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று இடையே இராமானுச முனி யாயின இந்நிலத்தே -என்றும்
சேஷோ வா ஸைன்ய நாதோ வா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை விதர்க்யாய மஹா பிராஜ்ஜைர் யதிராஜாய -என்றும்
தத்ரோதஞ்சதி மண்டபே யதிவர கஷ்யாந் தரஸ் தேவசன் பூர்வம் ராவண கம்ச முக்ய தனுஜான் ராமாநுஜாப்யாம்ஹதான்
மத்வா சங்கர யாதவாதி முகதோ பூயோ அவதீர்ணாம் புவன் தத் பங்காய க்ருதோ தயஸ் ததுசிதாம் ராமாநுஜாக்யாம் வஹன்-என்றும்
வ்யாசோவா பகவான் பராசர முனிஸ் ஸ்ரீ ஸுவ்நகோ வா அதவா சாஷான் நாரத ஏவ வா சடாரிபுர் வாகீஸ்வரோ வா
ஸ்வயம் லோகேச புருஷோத்தம பணிபதிஸ் சேஷீ ஜகச் சேஷிணீ த்யாக்யாதும் ஜெகதாம் ஹிதாய சமபூத் ராமாநுஜார்யோ முனி -என்றும்
சொல்லுகிறபடியே அநேக அவதார விசேஷம் என்று ஆதரித்துக் கொண்டு இருந்தார்கள் –

இத்தால் ஏவம் வித மஹாத்ம்ய யுக்தரான இவருடைய வைபவமும் -சரிதம் ரகுநாதஸ்ய சத கோடிப் ப்ரவிஸ்தரம்-என்கிற
சக்கரவர்த்தி திருமகன் வைபவம் போலே அவாங் மனச கோசாரம் இறே
சாகரத்தை கை நீச்சாலே கடந்து அக்கரை ஏறினாலும் -உததியைச் சிறாங்கித்தாலும்
ஸ்ரீ உடையவர் வைபவம் அடையச் சொல்லப் போகாது இறே
யதா மதி யதா ஸ்ருதமாகச் சொன்னது அத்தனை –
பஹு ஸ்ருதராய்ப் புத்தி பாஹுள்யம் உடைய பெரியோர்கள் விசதமாகக் கண்டு கொள்ளக் கடவர் இறே

இப்படி அவதார விசேஷமான இவருக்கு சரச் சதம் வ்யதீயாய ச விம்சமதிகம் ப்ரபோ -என்கிறபடியே
நூற்று இருப்பத்தஞ்சிலே நூற்று இருபது திரு நக்ஷத்ரம் பூர்ணம் ஆய்த்து-
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே -என்னும்படியான இவர்
தம்முடைய அவதார ரஹஸ்ய ஞானத்தாலும் -தம்முடைய விக்ரஹ சேவையாலும் -தத் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகளாலும் –
சதுரஷரியாய்ச் சதுரமான தம்முடைய திரு நாம வைபவத்தாலும் -ஸ்வ திவ்ய மங்கள விக்ரஹ த்யானத்தாலும் –
தத் ஏக நிஷ்டையாலும் தத் கைங்கர்ய ஏக பரதையாலும் -ஸ்ரீ பாஷ்யாம்ருத ப்ரதானாதிகளாலும்-
ஸ்ரீ மந்த்ர ரத்ன ப்ரதானாதிகளாலும்-ததர்த்த ப்ரதிபாதனத்தாலும் -ஸ்வ பாதுகா பிரதானத்தாலும் -ஸ்வ பாத தீர்த்த ஸ்வீ காரத்தாலும் –
ஸூ பாவனமான பிரசாத ஸ்வீ காரத்தாலும் -ஸ்ரீ பாத ஸ்பர்ச பவித்ரதையாலும் -சஞ்சார பூதமான பாத சஞ்சரணத்தாலும்-
ஸ்வ பாவன கர ஸ்பர்சத்தாலும் -அப்படியேயான கடாக்ஷ விசேஷத்தாலும் -பஞ்ச ஸம்ஸ்காராதிகளால் உண்டான சம்பந்த விசேஷத்தாலும்
புநந்தி புவனம் யஸ்ய பாதாஸ் ரித பதாஸ்ரித கடாஷாதி பிரே வாத்ர-என்ற ஸ்வ கீ ய சம்பந்தத்தாலும்
பால மூக ஜடாந்தாஸ் ச பங்கவோ பதி ராஸ்ததா -ஸதாசார்யேண சந்த்ருஷ்டா ப்ராப்னுவந்தி பாரங்கதிம்-என்றும்
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வாமர்த்ய மயீந்தனும் மக்நானுத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா -என்றும்
அன்வயதாபிசை கஸ்ய சம்யங் ந்யஸ்தாத்மநோ ஹரவ் -சர்வ ஏவ ப்ரமுஸ்யே ரன்னரா பூர்வே அபரே ததா-என்றும்
பஸூர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸரயா தேனவைதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பரம் -என்றும்
சொல்லுகிறபடியே ஏதேனுமாய் உள்ளதொரு ஸ்வ சம்பந்த விசேஷத்தாலும்
ஞாத்ர ஞாத்ரு விபாகமற ஜகாத்தை எல்லாம் உஜ்ஜீவிப்பித்தும்
இனி மேலும் ஸ்வ சம்பந்திகளாய் உள்ளவர்களை -ஆரியர்காள் கூறும் -என்று நியமித்தும்
இப்படி அவதார கார்யம் தலைக் கட்டினவாறே

அங்கே-அயர்வறும் அமரர்களோடே கூடி அடிமை செய்யத் திரு உள்ளமாய் -சேணுயர் வானத்து இருக்கும் தேவ பிரானாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -பாம்பணை மேலார்க்கு -பல பலவே யாபரணம் -என்னும்படி
பன் மணிப் பூண் ஆரத்தை யுமுடையவனாய் -உடையார்ந்த ஆடையன்-இத்யாதிப்படியே -நடையா உடைத் திரு நாரணனாய்-
அரவின் அணை அம்மானாய் -எழில் மலர் மாதரும் தானும் இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து அமர்ந்து –
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கேள்வனாய் -ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இப்படி
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் என்னும்படி -தத் ஏக போகமாய் உள்ள போக விபூதியில் –
அம் மிதுனச் சேர்த்தியாய் எழுந்து அருளி இருக்கிற அவ்விருப்பிலே

தேவிமாராவார் திரு மகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்ய -கருளப் புட் கொடிச் சக்கரப் படை வான நாட
எம் கார் முகில் வண்ணனாய் -வைகுந்தம் கோயில் கொண்டு எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு –
சென்றால் -ஊரும் நிவாஸ தாச பேதம் கொண்டு வழுவிலா அடிமை செய்ய வேண்டும் -என்று
அபி வ்ருத்த மநோ ரதத்தை யுடையராய் -அது செய்யும் இடத்து முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் –
செம்மா பாத பற்பை தலை சேர்க்க வேணும் -ஈறில் இன்பத்து இரு வெள்ளத்தில் முழுக வேணும் –
தாமரைக் கண்களால் குளிர நோக்க வேணும் -என்றால் போலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு

வானார் சோதி மணி வண்ணா -மது சூதா -நீ அருளாய் -உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே-என்றும் –
இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செ ய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்
உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும் சொல்லுகிறபடியே கண்ணழிவு அற்ற ப்ராப்ய த்வரையை யுடையராய் –
அத்தை ஆராத காதலை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அர்த்தித்த படியே இவரும் அத்தை அடி ஒற்றிக் கொண்டு
ஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே என்று தொட ங்கி-ஆத்ம அனுரூபயா ஸ்ரீயா சஹாஸீநம் -என்றும்
ப்ரத்யக்ரோன் மீலித ஸரஸிஜ சத்ருச நயன யுகளம்-என்று தொடங்கி –
தத ஷனோன் மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம் -என்னும் அளவும் –
இணைப்பாதங்களின் இடையில் உண்டான வற்றின் வடிவு அழகுகளையும் –

அநந்தரம் -அதி மநோ ஹர கிரீட மகுட நூபுராந்தமாக -முடிச் சோதி தொடங்கி
அடிச் சோதி அளவும் சாத்தின திரு அணிகலன்களின் அழகையும்
ஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலையா விராஜிதம்-என்று கீழில் ஆபரண சோபைக்குப் பிரபை போலவும்
அதன் காந்தி பூரம் நிறம் பெற வெள்ளம் இட்டால் போலே இருக்கிற மங்கல நல் வன மாலையையும் –
கீழில் ஆபரணத்தோபாதியாய் இருக்கிற அணியார் ஆழியும் சங்கும்-என்னும்படியான
சங்க சக்கர கதா அஸி ஸார்ங்காதிகளாய் உள்ள அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படைகளையும்
ஸ்ரீ மத் விஷ்வக்ஸேன -என்று தொடங்கி பகவத் பரிசார்ய ஏக போகைர் நித்ய சித்தியைர் அனந்தை-என்னும் அளவும்
அமரர் கோன் அர்ச்சிக்கின்ற அங்குப் பணி செய்வார் விண்ணோர்களையும் -அதுக்கு மேலே –

திவ்ய அமல கோமல அவலோக நேந விஸ்வம் ஆஹ்லாத யந்தம் -என்று தொடங்கி
வானாட மருங்குளிர் விழிகளால் குளிர நோக்கும் படியையும்
பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து -சோதி வாய் திறந்து திவ்ய லீலா ஆலாப அம்ருதங்களாலே
அகில ஜனங்களையும் ஆனந்திப்பித்து தளிர்ப்பிக்கும் படியையும் –
பகவந்தம் நாராயணம் த்யான யோகேந த்ருஷ்ட்வா -என்று ப்ராப்ய பக்தி யோக ரீதியாலே –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்று காணும் படியையும்
நித்ய தாஸ்யஞ்சயா தாவத் ஸ்திதம் அனுசந்தாயா -என்று அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே -என்கிற
ஸ்வ பாவிக சம்பந்தத்தை அநுஸந்திக்கும் படியையும்
கதா அஹம் பகவந்தம் நாராயணம் –சாஷாத் கரவாணி சஷுஷா -என்று
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரை பாதங்கள் காண்பது எஞ்ஞான்று கொலோ -என்றும்
பை கொள் பாம்பேறி யுறை பரனே -உன்னை மெய் கொள் காண விரும்பும் என் கண்களே என்றும் சஷுஸ்ஸூக்களாலே
ப்ரத்யக்ஷ சாஷாத் காரம் பண்ணும் படியையும்
கதாவா பகவத் பாதாம் புஜ த்வயம் சிரஸா சங்க்ரஹீஷ்யாமி-என்று திரு வல்ல வாழ் நகரில் நின்ற பிரான் அடி நீறு
அடியோம் கொண்டு சூடுவது என்று கொலோ -என்றும்
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர்ப் பூம் தாமரை சூடுதற்கு அவா -என்றும் சொல்லுகிறபடியே
பாதாரவிந்தங்களை ஸீரோ பூஷணமாக தரிக்கும் படியையும்
கதா அஹம் பகவத் பாதாம் புஜத்வய பரிசர்யா சயா என்று தொடங்கி -தத் பாதாம் புஜ த்வயம் பிரவேஷ்யாமி -என்னும் அளவாக
பாதம் அடைவதன் பாசத்தால் மற்ற வன் பாசங்கள் முற்ற விடும் படியையும்

திருவடிக் கீழ் குற்றேவல் செய்யும் படியையும்
கதா மாம் பகவான் அதி சீதலயா ஸ்வகீய யாத்ருசா அவலோக்ய -என்று தொடங்கி மேல் எல்லாவற்றாலும் பக்கம் நோக்கு அறியாதே
அமலங்களாக விழுங்கும் படியையும்
முகப்பே கூவிப் பணி கொள்ளும்படியையும் அனுசந்தித்து திருவடிக் கீழ் குற்றேவல் செய்யப் பெரிய காதலை யுடையராய் –
அத்தாலே-அடியேன் அடைந்தேன் -என்னும்படி மாநஸமாகக் கிட்டி
தூராதேவ -என்று தொடங்கி அப் பேர் ஓலக்கத்தைத் தூரக் கண்டு சேவிக்கும் படியையும்
அணைவது அரவணை மேல் பூம் பாவை ஆகம் புணருமவனான இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்
தொல்லை மாலைக் கண்ணாரக் காணும் படியையும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் இதே இன்னம் வேண்டுவது எந்தாய் என்று மீளவும்
பஹு மநோ ரதங்களைப் பண்ணா நின்று கொண்டு
வாசலில் வானவர் அனுமதியுடன் உள்ளே புகும்படியையும் மநோ ரதித்து

அடைந்தேன் உன் திருவடியே-என்று அவனைக் கிட்டி -நாராயணாய நம -என்று வழுவிலா அடிமையை அர்த்தித்து-
தத் சித்திக்கு -அடியேனுடைய ஆவி அடைக்கலமே என்று ஆத்மாவை நிவேதிக்க -அவனும் குளிர் விழிகளாலே
கரை அழியும் படி கடாக்ஷிக்க -எது ஏது என் பணி என்னாது -எல்லா அடிமைகளையும் செய்ய ஒருப்பட்டு-
கைகளால் ஆரத் தொழுது தொழுது என்றும் -இரங்கி நீர் தொழுது -என்னும்படி ப்ரஹ்வ அஞ்சலி புடராய் அனுபவியா நின்று கொண்டு –
அத்யந்தம் ப்ரீதி யுக்தனாய் ப்ரீதி பிரகர்க்ஷத்தாலே கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணுடன் நிற்கும் படியையும்
ததோ பகவதா-என்று தொடங்கி -அம்ருத சாகராந்தர் நிமக்ந சர்வ அவயவஸ் ஸூகமா ஸீத-என்று மீளவும் தாமரைக் கண்களால்
அவலோகநதானம் பண்ணும் படியையும் அபேக்ஷித்து-சோதிச் செவ்வாய் முகுளம் அவலோகியா அலரா இருந்தது –
இப்போது ச விலாச ஸ்மிதத்தாலே அலர்ந்து-ஆநயைநம் -என்று ஆளிட்டு அழையாதே தானே வா என்று அழைத்து –
துயர் அறு சுடர் அடி என்றும் -பாத பங்கயமே தலைக்கு அணியாய் என்றும் சொல்லும்படியான கமலம் அன்ன குரை கழல்களை –
தலை சேர்த்து -தன் தாளிணைக் கீழ் சேர்த்து என்னும்படியே பாத உபதானம் போலே சேர்த்து அருள வேணும்

மாயன் கோல மலரடிக் கீழ்ச் சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளமான அமுத வெள்ளத்து -இன்பத்து இரு வெள்ளத்திலே –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா என்னும்படி அவகாஹித்து –
இங்கே சோகாபி கர்சிதமான சாஸ்த்ரங்களாலே தாப த்ரயங்கள் போல் அன்றிக்கே அங்கே நிரதிசய ஸூகத்தை அனுபவிக்க வேணும் –
என்று ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே அர்த்தியா நின்று கொண்டு –
பரம பக்தி தலை எடுத்துப் பெரிய அபிநிவேசத்துடனே ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதியில் எழுந்து அருளி
ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டுக் கொண்டு பெரிய கத்யமான ஸ்ரீ சரணாகதி கத்யத்தை பெரிய ஆற்றாமையோடே
திரு உள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்து சரணம் புக்கு அநந்தரம்
ஸ்ரீ ரெங்க கத்யத்தையும் விண்ணப்பம் செய்து அத்தலையில் உண்டான சர்வ சக்தித்வாதி கல்யாண குணங்களையும் ஆவிஷ்கரித்து
ஆகிஞ்சன்யத்தையும் அறிவியா நின்று கொண்டு சரணம் புக்கு
ஸ்ரீ பெரிய பெருமாளும் இவர் அபிப்பிராயம் அறிந்து உமக்கு வேண்டுவது என் என்று வினவி அருள
இவ்வாறு ஸ்ரீ உடையவர் திரு உள்ளத்திலே பெரிய ஆர்த்தியோடே விசாரித்து அருளி ஸ்ரீ நம்பெருமாளைத் திருவடி தொழுது
சம்சாரத்திலே அருசி பிறந்து வய பரிணாம காலாதி க்ரமணம் பிறந்தது என்று விண்ணப்பம் செய்து அத்யார்த்தராய் நிற்க

காலத்துக்கு நாம் அன்றோ கடவோம்-இன்னும் சிறிது காலம் உம்மைக் கொண்டு இவ் வுலகம் திருத்தப் பார்த்தோம் –
அறப் பதறினீரே-என்று திரு உள்ளம் உடை குலைப் பட்டு -இனி உமக்குச் செய்ய வேண்டுவது என் என்று கேட்டு அருள –
அதுக்கு ஸ்ரீ உடையவரும் அடியேனைக் காலக் கழிவு செய்யாமல் -உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக
எஞ்ஞான்றும் விடாது ஒழிய வேணும் என்ன -ஸ்ரீ பெரிய பெருமாளும் உகந்து -சதுர்த்தசே அஹ்நி சம்பூர்ணே-என்று
நாள் கடலாகத் தம்பிக்கு இட்டது ஆகாமல் -சப்தாஹம் ஜீவிதாவதி -என்கிறபடியே கர்ம ஆபாச ப்ரக்ரிதித-என்று
இவருக்கு இற்றைக்கு ஏழாம் நாள் அப்படியே செய்கிறோம் என்ன –
ஸ்ரீ உடையவரும் நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா -என்ற ஹர்ஷ பிரகர்ஷத்துடன் -என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் எல்லாரும்
நான் பெற்ற லோகம் பெற வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ பெருமாளும் அப்படியே பெறக் கடவர்கள் என்று திருவாய் மலர்ந்து அருளி

ஸ்ரீ உடையவருக்குத் தீர்த்தம் திருமாலை திருப் பரியட்டம் பூவார் கழல் பிரசாதம் பிரசாதித்து அருளி விடை கொடுத்து அருள –
இவரும் மஹா பிரசாதம் என்று ஸார்வ பவ்மரான ராஜாக்கள் பக்கல் நின்றும் நாடு பெற்றவர்கள் பெரிய ப்ரீதியோடே
ராஜ பவனத்தில் நின்றும் புறப்படுமா போலே -பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற
எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனாரான ஸ்ரீ ரெங்கராஜர் பக்கல் நின்றும் ஸ்ரீ திருநாடு ஆகிற மஹா ராஜ்யத்தைப் பெற்று
அந்த ராஜ குல மஹாத்ம்யத்தாலே வந்த ப்ரீதியுத்ருதி தோன்ற ஸ்ரீ ரெங்க ராஜதானியிலும் புறப்பட்டு திரு மடமே எழுந்து அருளி
அனைத்துக் கொத்தில் உண்டானவர்களும் சித்த மகிழ்ச்சியுடன் அனுப்பி அருளி -சிஷ்ய வர்க்கங்களாய் யுள்ளவர் எல்லாருக்கும்
ஒரு காலும் அருளிச் செய்யாத அர்த்த விசேஷங்களை எல்லாம் மூன்று நாளாக பிரசாதித்து அருளி –
இவ்வர்த்த விசேஷங்களை எல்லாம் நீங்களும் விஸ்வசித்து உங்களை பற்றினாருக்கும் பரம்பரையாய் உபதேசித்துப் போருங்கோள் என்று
அருளிச் செய்ய முதலிகள் எல்லாரும் அதி சங்கை பண்ணி இது என் என்று விண்ணப்பம் செய்ய –
இனி ஒளிக்க ஒண்ணாது என்று திரு உள்ளம் பற்றி -இற்றைக்கு நாலாம் நாள் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் ஏறப் போக
நினையா நின்றோம் -என்று அருளிச் செய்து அருள -இத்தைக் கேட்டு

முதலிகள் எல்லாரும் கடல் கலங்கினால் போலே கலங்கி ஸ்ரீ உடையவர் வ்யோகத்திலே ஆத்ம தியாகம் பண்ணக் கடவோம் என்று
தேறி இருந்தமையைத் திரு உள்ளம் பற்றி அருளி (அவர்கள் போர விஷண்ணராய்-இனி அடியோங்களுக்குச் செய்ய அடுப்பது என்
என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் )-ஸ்ரீ உடையவரும் -வாரி கோள் முதலிகாள்-நம்முடைய வ்யோகத்தில்
ஆத்ம தியாகம் பண்ணினார் உண்டாகில் -ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பாதமே -நம்மோடு அவர்களுக்கு சம்பந்தம் இல்லையாய்-
நித்ய ஸூரிகள் ஓலக்கத்திலும் புகுரப் பெறாதே நம் ஸ்ரீ சடகோபர் திரு உள்ளத்தையும் மறுத்தவர்களாய் அதிபதிக்கக் கடவீர்கள் என்று
அருளிச் செய்து -அவர்களைத் தேற்றித் தரிக்கப் பண்ணினார் –

அநந்தரம் -அத்யை வாஹங்க மிஷ்யாமி லஷ்மணே நகதரங்கதிம்-என்கிறபடியே தாமும் ஸ்ரீ ஆழ்வான் வழியே பின் சென்று
இத்தம் ராப்தே சபதி பரம வ்யோம சிஷ்டாக்ர கண்யே கூராதிஸே நிகம சிகர வியாக்ரியாலம் படத்வம் -சிஷ்யஸ் தோமான் சுருதி
குரு முகோங்கி கார்யேண சாகம் வின்யஸ் யோச்சை பரமகமதரோடு மைச்சத் யதீந்த்ர -என்றும்
காசாராதிம திவ்யஸூரி க்ருதி சத் சோபான பத்தாம் த்வய ஸ்ரீ மன் த்ரோபய பார்ஸ்வ தண்ட கடிதாம் ஸ்ரீ பாஷ்ய கீலஸ்திராம் –
நிஸ்ரேணிம் நிகிலோ ஜனஸ் ச பரம வ்யோமஸ் தலீ பிராபிகாம் ஸ்வ ஸ்வாசார்யா நிரூபிதார்த் தவசத ப்ராப்யாதி ரோஹேத் சதா -என்றும்
இத்யாசாஸ்ய சரஸ் சடாந்தகமுக ஸ்ரீ திவ்ய ஸூர் யாக்ருதீ ராசார்யஸ்ய சதத் பிரபந்த நிவ ஹைஸ் சார்த்தம் ப்ரதிஷ்டாப்யச-
ஸ்ரீ ரெங்காதி மதாமஸூ சவயம பூச்ச்ரீ திவ்ய ஸூரி வ்ரஜைஸ் சாகன் தத் பரமம் பதம் ஜிக்மி ஷுஸ் ஸ்ரீ மான் ச ராமானுஜ -என்கிறபடியே
இங்குச் செய்ய வேண்டும் கார்யங்கள் எல்லாம் செய்து தலைக் கட்டி க்ருதக்ருத்யராய் நாலாம் நாள்
அங்கே ஸ்ரீ திருநாடு ஏற எழுந்து அருளத் திரு உள்ளமாய் இருக்க

அவ்வளவில் பெரிய பெருமாளைத் திரு வாராதனம் பண்ணிப் போரும் ஸ்ரீ ரெங்கராஜ பட்டர் ஸ்ரீ பெரிய பெருமாள் பட்டர் முதலானோர்
ஸ்ரீ பெரிய பெருமாள் உடுத்துக் களைந்த பீதக வாடை சூடிக் களைந்த திவ்ய மால்யப்படி-சாத்துப்படிகள் அவர் பிரசாதம் தொடக்கமான
பிரசாத விசேஷங்களையும் போரத் தளிகையிலே எடுப்பித்துக் கொண்டு சர்வ வாத்ய கோஷத்துடன் கொண்டு வந்து பிரசாதித்தவற்றை
சிரஸா ஆதரித்து சேவித்து ஸ்வீ கரித்த அநந்தரம் அவர்களுக்கு உகப்பான பாஞ்ச ராத்ர சம்ஹிதைகளில் ஞான காண்டங்களை அனுசந்தித்து
சேவித்துக் கொண்டு இருந்து ஏவம் விதமான தூர்ய கோஷத்தைக் கேட்டு ஹ்ருஷ்டராய்
வைகுண்ட நிர்யாண நிரதராய்-அதுக்கு பிரயாண பாதேயமான த்வயத்தை ஆவ்ருத்தி பண்ணா நிற்கிறவர்

தடஸ்தரைக் கடாக்ஷித்து அருளித்
தாம்ரஸ்தமான கூடஸ்த ஸ்ரீ ஸூக்தியையும் ஸ்ரீ பாஷ்யத்தையும் ஷேமமான நிக்ஷேபமாக ஸ்தாபிக்கும் படி ஆஜ்ஜாபித்து –
ஸ்ரீ பாஷ்யத்தை வர்த்தித்து நடத்திக் கொண்டு போரும்படி ஸ்ரீ நடாதூர் ஆழ்வானைக் கடாக்ஷித்து அவருக்கு
சத் குர்வதாசம் சதி சிஷ்ய வர்க்கா நநன்யலப்யை ரதிகைஸ் ச சிஹ்னை ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனமாத்ம கீயம் யஸ்மை
சதத் தம்யதி சேகரேண-என்னும்படி ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தை பிரசாதித்து
அநந்தரம் முந்துற ப்ரசாதித்த வேதாந்தாசார்ய பதத்துக்கு மேலே -கிந்து பிரபத்தி பலதாரித விஷ்ணுமாய மத்வம்ஸ்ய ராஜ குல –
என்னும்படியான ராஜ குல மஹாத்ம்யத்தை யுடையராகையாலே பிரபத்தி அர்த்த பிரதிபாதகமாய் பிராமண சரமமான
ஸ்ரீ ஸூக்தி சிம்ஹாசனத்தையும் அந்தப் பெரிய பரிஷத்திலே பெரிய பட்டருக்கு இட்டு அருளி
ஸ்ரீ கந்தாடை ஆண்டானைக் கடாக்ஷித்து ப்ரமாத்ரு சரமமான தம்முடைய சரம விக்ரஹ கைங்கர்யத்தை கல்பித்து அருளி
திருக் குருகைப் பிரான் பிள்ளான் முதலான முதலிகளைப் பார்த்து ஸ்ரீ பட்டருக்கு இஷ்டமாய் இருங்கோள் என்று அருளிச் செய்து
ஸ்ரீ கோயில் அனைத்துக் கொத்தையும் அழைப்பித்து அபராத ஸாதனம் பண்ணிக் கொண்டு வேண்டிக் கொள்ள
அவர்களும் -தேவரீருக்கு ஒரு அபராதம் உண்டோ -உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரான தேவரீரை இழந்து
எங்கனே தரிப்போம் என்று கண் பனி சோர நிற்க
ஸ்ரீ உடையவரும் அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணி அரங்கன் இருக்க உங்களுக்கு ஒரு தாழ்வு இல்லை –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ கார்யம் ஆராயும் இடத்து ஸ்ரீ பட்டரை முன்னிட்டு ஆராய்ந்து போருங்கோள்-
ஸ்ரீ நம்பெருமாள் கைங்கர்யத்தைக் குறைவற நடத்திக் கொண்டு ஸ்ரீ வைஷ்ணவர்களையும் அரவணைத்துக் கொண்டு போருங்கோள்
என்று கல்பித்து அருளி அவர்களை ஸ்ரீ பட்டர் திருக் கையிலே காட்டிக் கொடுத்து அருளி ஸ்ரீ பட்டரைப் பார்த்து அருளி –
உமக்குத் தந்தையும் தாயுமாவாராய் ப்ரமேய சரமமான ஸ்ரீ பெரிய பெருமாள் திரு ஆராதனத்தைப் பெருக்க நடத்திக் கொண்டு
நம்முடைய தரிசனத்தையும் நன்றாக பராமர்சித்து நடத்திக் கொண்டு போரும் என்று நியமித்து அருளினார் –

அனந்தரம் சமூகத்தில் உண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து பின்னையும் அவர்களுக்கு அருளிச் செய்த படி –
ஒருவன் பிரபன்னன் ஆனால் அவனுடைய ஆத்ம யாத்திரை ஈஸ்வர அதீனம் ஆகையாலே அதுக்குக் கரைய வேண்டா –
கரைந்தான் ஆகில் ஆத்ம சமர்ப்பணம் பொய்யாம் அத்தனை –
இனி இவனுடைய தேஹ யாத்திரை கர்ம அதீனம் ஆகையாலே அதுக்குக் கரைய வேண்டா -கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை –
ஆகையால் உபய யாத்திரையிலும் இவனுக்கு அன்வயம் இல்லை என்று அருளிச் செய்ய

முதலிகளும்-ஆகில் எங்களுக்கு இருக்கும் நாளைக்கு கால ஷேபம் இருக்கும் படி எங்கனே என்ன –
ஸ்ரீ உடையவரும் உபாய அம்சத்தில் அந்வயியாதே ப்ராப்யமான பகவத் பாகவத கைங்கர்யத்தில் அந்வயியுங்கோள்-
ப்ரபந்ந அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவன மூன்று விஷயம் உண்டு –
அவை யாவன -அனுகூலர் என்றும் பிரதிகூலர் என்றும் அநுபயர் என்றும்-
அனுகூலராவார் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் / பிரதிகூலராவார் -பகவத் த்வேஷிகள் / அநுபயர் ஆவார் -சம்சாரிகள்
இதில் அனுகூலரைக் கண்டால் -சந்தன குஸூம தாம்பூலாதிகளைக் கண்டால் போலேயும்-நிலா தென்றல்களைக் கண்டால் போலேயும்
அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் உகந்து போரக் கடவன் –
பிரதிகூலரைக் கண்டால் சர்ப்ப அக்னிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திக்கக் கடவன்
அனுபயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே த்ருணீ கரித்து வர்த்திக்கக் கடவன் –
அவர்கள் அநு கூலித்தார்கள் ஆகில் ஆத்ம ஞானத்தை உபதேசிக்கவும் –
அநு கூலியார்கள் ஆகில் ஐயோ என்று கிருபை பண்ணிப் போரவும்-

இப்படிச் செய்ய ஒட்டாது ஒழிகிறது அர்த்த காம பிராவண்யம்-
அர்த்த காமம் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களை அநாதரிக்குமாகில் ஸார்வ பவ்மனான ராஜ புத்ரனை ராஜ சந்நிதியில் பரிபவித்தால்
ராஜா வெறுத்து இருக்குமா போலே ஸ்ரீ எம்பெருமான் திரு உள்ளம் வெறுக்கும்
அர்த்த காமம் அடியாக பிரதி கூலரை ஆதரிக்குமாகில் ஸார்வ பவ்மனான ராஜாவின் மஹிஷீ ஷூத்ர ஜந்துக்கள் பக்கல் மடிப்பிச்சை
புக்கால் ராஜாவுக்கு அவத்யம் ஆகையால் ராஜா வெறுக்குமா போலே ஸ்ரீ எம்பெருமான் இவனை வெறுத்து இருக்கிறோம்
அர்த்த காமம் அடியாக அனுபயரை ஆதரிக்குமாகில் ரத்னத்துக்கும் பலகறைக்கும் வாசி அறியாதாப் போலே பிறந்த ஞானம்
கார்யகரம் ஆய்த்து இல்லை என்று ஸ்ரீ எம்பெருமான் இவனை அநாதரிக்கும் -என்று அருளிச் செய்து அருளினார் –
பின்பு ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ நம் பெருமாள் சந்நிதிக்கு ஸ்ரீ பட்டரைக் கூட்டிக் கொண்டு எழுந்து அருளிப் பெருமாளை சேவித்து
ஸ்ரீ பட்டருக்கு முன்னாகத் தீர்த்த பிரசாதங்களை ப்ரசாதிப்பித்து பின்பு தாமும் தீர்த்த பிரசாதம் பெற்று முதலிகளைக் குறித்து –
முன்னுக்குத் தர்சன ப்ரவர்த்தகர் ஆவார் இவர் என்று ஸ்ரீ பட்டரைக் காட்டி அருளி –
வாரீர் ஸ்ரீ பட்டரே-மேல் நாட்டிலே வேதாந்தி என்று பெரிய வித்வான் இருக்கிறான் என்று கேட்டோம் -நீர் அங்கேறப் போய் அவனை
நம் தர்சன ப்ரவர்த்தகனாம் படி திருத்தும் என்று அருளிச் செய்து ஸ்ரீ பட்டரையும் கூட்டிக் கொண்டு திரு மடமே எழுந்து அருளி –
ஸ்ரீ பாதத்து முதலிகள் எல்லாரையும் அழைத்து -நம்முடைய விஸ்லேஷத்தில் அவிவேகம் பண்ணினீர்கள் ஆகில் நம் ஆணை
என்று ஆஜ்ஜாபித்து எல்லார் கையாலும் தம் திருவடிகளைத் தொழுவித்து சூளூருவு கொண்டு
முதலிகளைத் தீர்த்தம் கொண்டு அமுது செய்யப் பண்ணி

ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்-ஸ்ரீ உக்கல் ஆழ்வான் -ஸ்ரீ கோமடத்து ஆழ்வான் -ஸ்ரீ சேட்டலூர் சிறியாழ்வான்-
ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான் முதலானவர்களை ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ எச்சான் -ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ தொண்டனூர் நம்பி -ஸ்ரீ மருதூர் நம்பி -முதலானவர்களை
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருக் கையிலே காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ பட்டர் -ஸ்ரீ கணியனூர் சிறி யாச்சான்-ஸ்ரீ சட்டம் பள்ளிச் சீயர் பெரியாண்டான் -சிறி யாண்டான் -முதலானவர்களை
ஸ்ரீ எம்பார் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் -ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள் -ஸ்ரீ எங்கள் ஆழ்வான் -ஸ்ரீ நடாதூர் ஆழ்வான் -முதலானவர்களை
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான் -ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறி யாண்டான் -ஸ்ரீ அரணபுரத் தாழ்வான் -ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள் –
ஸ்ரீ முனிப் பெருமாள் -ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் முதலானவர்களை ஸ்ரீ நடுவில் ஆழ்வான் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்
இன்னும் இருந்தவர்களை இருந்தவர்கள் திருக் கையில் காட்டிக் கொடுத்து அருளியும்

பின்பு ஸ்ரீ பட்டரைப் பார்த்து அருளி ஸ்ரீ கூரத்தில் ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ கந்தாடை ஆண்டானையும் போலேயும்-
ஸ்ரீ கூர குல திலகரான நீரும் ஸ்ரீ வாதூல குல திலகரான ஸ்ரீ கந்தாடை ஆண்டானும் நம்மடியாக உண்டான சவ்ப் ராத்ரத்தை யுடையராய் –
மச்சித்தா மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் -என்னும்படியாய் இருங்கோள்-என்று அருளிச் செய்து -ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து –
படித்வா பாஷ்யம் தத் பிரவசனம் அசக்தவ் ஸ்டரி போர் கிரி ஸ்ரத்தா வாச பிரபு பரிசித ஸ்தாந நிவேஹ ப்ரபோ கைங்கர்யம் வா
பிரபதன மநோ ரர்த்த மனனம் ப்ரபந்ந நாம் மே பவது பரிசர்யா பரிசய குடீங்க்ருத்வா தஸ்மிந் யதுகிரி தடே நித்ய வசதிஷ்
ஷஷ்டர்த்தஸ் ஸ்ரீ ஸஸ்ய பிரபதன நவிதவ் சாதகமா -என்று இருக்கும் நாள் பண்ணலாம் கைங்கர்யங்கள் ஆறு உண்டு
அவை ஆவன-ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை-
அதற்கு யோக்யதை இல்லாவிடில் அருளிச் செயலை ஓதியும் ஓதுவித்தும் போருகை-
அதுக்கும் யோக்யதை இல்லாவிடில் உகந்து அருளின நிலங்களில் அமுது படி சாத்துப் படி முதலானவற்றை
உண்டாக்கி நடத்திக் கொண்டு போருகை –
அதற்கும் யோக்யதை இல்லையாகில் ஸ்ரீ திரு நாராயண புரத்தில் ஒரு குடில் கட்டிக் கொண்டு இருக்கை-
அதற்கும் யோக்யதை இல்லையாகில் ஸ்ரீ த்வயத்தை அர்த்த அனுசந்தானம் பண்ணிப் போருகை-
அதற்கும் யோக்யதை இல்லையாகில் என்னுடையவன் என்று அபிமானிப்பவன் யாவன் ஒருவன் பரம பாகவதன்-அவனுடைய
அபிமானத்திலே ஒதுங்கிப் போருகை
என்றும் -இவற்றின் பிரிய -பிரியதர -பிரிய தர்மங்கள் இன்னது என்றும் -பிராப்தி பிரதிபந்தகமான –
பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் வருந்தியும் பரிஹரித்துப் போருங்கோள் -என்றும் இவை முதலானவைகளாய் உள்ள
அநேக ஹிதங்களைப் ப்ரசாதித்து அவற்றை உப சம்ஹரித்து அருளினார் –

அநந்தரம் சகல மங்கள வாத்தியங்களும் ஆரவாரிக்க -அநேக திவ்ய பிரபந்த அனுசந்தான த்வனி எங்கும் பூரிதமாக
அலங்காரத் திரு மஞ்சனம் கண்டு அருளித் திரு ஒற்றாடை சாத்தி -திருப் பரி யட்டம் சாத்தி ஸூத்த ஆசமான பூர்வகமாக
நித்ய அனுஷ்டானங்கள் நடத்தி அருளுகையில் அசக்தி பாராமல் மார்க்கத்தையும் உத்திஷ்டமானராய் நின்றே செய்து அருளி
தத் சேஷத்யத்தையும் தலைக் கட்டி அருளி திருத் துவாதச நாமங்களையும் தரித்து அருளி -திரு மணி வடம் -திருப் பவித்ரம் –
திருமாலை பிரசாதம் -பரி யட்ட பிரசாதங்களை ஸ்வீ கரித்து-குரு பரம்பரா பூர்வகமாக ரஹஸ்யத்ரயத்தையும் சார்த்தமாக அனுசந்தித்து
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளை உத்தேசித்து தண்டனை சமர்ப்பித்து -முதலி களையும் அனுவர்த்தித்து அனுமதி கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானித்துக் கொண்டு பத்மானஸ்தராய் எழுந்து அருளி இருந்து
ஸ்ரீ பர வாஸூ தேவர் இடத்தில் பரம பக்தி நடந்து செல்ல

அநந்தரம் யோகத்தில் பரம யோகியான தம்மை பரம யோகி கம்ய விஷயமான தத் விஷயத்தில் விநியோகித்து பின்பு –
பத்ம நேத்ரேந்ய மீலயத்–என்கிறபடியே திருகே கண்களைச் செம்பளித்து அருளி பரவச காத்ரராய் –
ஸ்ரீ எம்பார் திருமடியிலே திரு முடியும் -ஸ்ரீ வடுக நம்பி திருமடியிலே திருவடிகளுமாக கண் வளர்ந்து அருளி –
மாக ஸூத்த தசம் யாந்து மத்யாஹனே மந்த வாஸரே -யோகி ராஜஸ் ஸ்வ போகீச பாவம் ஸ்வேபே சமப்யபாத்-என்னும்படியான திவசத்திலே
தம்முடைய பூர்வ அவதாரமான ஆயிரம் சுடர் வாய் அரவணையோடே நம்பி மூத்த பிரானைப் போலே ஸ்ரீ எம்பெருமானாரான இவரும்
ஸ்ரீ பாதித்து முதலிகள் ப்ரஹ்ம வல்லி பிருகு வல்லி சூழ் விசும்பு அணி முகில் முதலானவற்றை சேவித்து அருள
சிரஸ் கபாலம் பேதித்து ப்ரஹ்ம ரந்தரத்தாலே ஸ்ரீ உடையவர் திருநாட்டில் கூடி அருளினார்

இவ்விருத்தாந்தத்தை பின்னும்
பின்பும் அன்பருடன் களித்த சீர் பெரும்பூதூர் எதிராசன் இன்பமுடனும் இசைந்து ஒருநூற்று இருப்பது ஆண்டு இங்கு இருந்ததன் பின்
அன்பான ஆழ்வான் ஆண்டான் நல் குமரற்கு அடியா முடி புனைந்து மன்பதையை வாழ்வித்தாங் கமருமென வாழ்வித்து அருளா -என்றும்
ஆராமம் சூழ் அரங்கர் தமை அலர் மா மகளை அடி இறைஞ்சி தாரீர் சரணம் எனத் தந்தோம் எனலும் எதிராசன் பாரோர் பரவும் பாகவதர்
பிரிவால் பரிவில் படர் கூரச் சீரார் திரு நாடு அடைந்து இருந்த சீடனுடன் சேர்ந்தனனால்-இப்படி சொல்லப்படுமாதான வைபவத்தை யுடைய இவரும் –
யதா பாதோ தரஸ் த்வசா நிர்முக்த -என்றும் -யாவஜ்ஜிஹா மிகாத்ராணி ஜீர்ணான் த்வசமி வோரக-என்றும் சொல்லுகிறபடியே
ஜீர்ணமிவ வஸ்த்ரம் ஸூகே நேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய -என்று
ஸூகமாகவே திரு மேனியை உபேக்ஷையோடே விட

அநந்தரம் ஸ்ரீ கந்தாடை ஆண்டான் -ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் -ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ வடுக நம்பி முதலான முதலிகள்
எல்லாரும் கோஷித்துகே கொண்டு வேர் அற்ற மரம் போலே விழுந்து கிடந்தது துடித்து -திரு மிடறு தழு தழுப்ப திரு மூக்கு வெப்படிக்க
அவசராய்க் கிடந்தது -இட்ட கால் இட்ட கைகளாய்ச் சிந்தித்துத் திகைத்து -இணை மலர்கே கண்ணீர் ததும்ப தாரா வர்ஷகமாக திரு முத்து
உதிர்த்து பிரலாபித்து -இவர் அவதாரத்தில் தீர் லப்தா -இவர் அந்திம தசையில் தர்மோ நஷ்டா என்றும் இப்படி வருவதே என்று
ஆச்சர்யப்பட்டு விஷண்ணாராய் நிற்க

அவ்வளவில் பெருமாளும் நம் உடையவரை இழந்தோமே -என்று திரு உள்ளம் நொந்து -நமக்கு செவ்வாய் வக்ரமாய்த்து -என்று
சுருள் அமுதும் அமுது செய்யாமல் ஸ்ரீ நாச்சிமாருடனே புறப்பட்டு அருள -அவ்வளவில் ஸ்ரீ பராங்குசன் பரகாலன் முதலான ஆழ்வார்கள்
பதின்மர்களும் சேவித்துச் செல்ல ஆயிரக்கால் திரு மண்டபத்திலே எழுந்து அருளி இருந்து திரு முத்தின் பணி காளாஞ்சி திரு வெண் சாமரம்
திரு வாலவட்டம் திரு வெண் கொற்றக் குடை வெண் முத்தின் கலசம் திரு மேல் கட்டு முத்துத் தாமம் தொடக்கமானவற்றையும்
உடுத்துக் களைந்த பீதகவாடை -சூடிக் களைந்த தொடுத்த துழாய் மலர் -எண்ணம் சுண்ணம் எல்லாம் பொன் தளிகையிலே
கொண்டு போம்படி ஸ்ரீ உத்தம நம்பிக்கு விடை கொடுத்து அருள

ஸ்ரீ நம்பியும் அப்படியே தரித்துக் கொண்டு ஸ்ரீ பெருமாள் பரிகரம் அனைத்துக் கொத்துடன் சகல வாத்யத்துடனே திரு மடத்து வாசலிலே செல்ல –
அது கண்டு முதலிகள் எல்லாம் தேறி நின்று -இனிச் செய்ய வேண்டிய க்ருத்யத்தை செய்ய வேணும் -என்று
ஸ்ரீ எம்பெருமானாருடைய விமல சரம விக்ரஹத்தை தூயதாக நீராடப் பண்ணிவைத்து அலங்கரித்து கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரங்களையும் சாத்தி
ஸ்ரீ பெருமாள் சாத்திக் களைந்து வரவிட்டு அருளின ஸ்ரீ பெருமாள் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு திரு முடியில் சாத்தி –
அவர் மார்வு அணிந்த ஸ்ரீ வனமாலையையும் சாத்தி அலங்கரித்து ஸ்ரீ உடையவர் திருவடிகளைத் தங்கள் கண்ணிலும் மார்பிலும் நெஞ்சிலும்
ஒற்றிக் கொன்டு ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுக்களாய்
ஐயோ கண்ணபிரான் அறையோ முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே என்று கை எடுத்து
போர பெரு மிடறு செய்து கூப்பிட்டு மூர்ச்சித்துக் கிடக்க-அருகு இருந்த முதலிகள் வந்து எடுத்துத் தேற்ற தேறி நின்று
ஸ்ரீ உடையவருக்குச் சாத்திக் களைந்து தத் சேஷமாய் இருந்துள்ள எண்ணெய் சுண்ணம் திரு மண் ஸ்ரீ சூர்ணங்கள் எல்லாரும் பிரசாதப்பட்டு
தீர்த்தம் கொண்டு -ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருக் கையாலே ஸ்ரீ ஆளவந்தாருக்குப் போலே ஸ்ரீ உடையவருக்கு
ப்ரஹ்ம மேதத்தாலே சமஸ்கரித்து பீடயாநமான திவ்ய விமானத்தில் ஏறி அருளப் பண்ணி சகல வாத்தியங்களும் முழங்க
ஸ்ரீ பெருமாள் பரிகரமடைய சத்ர சாமர தால வ்ருந்தாதிகளைத் தரித்து சேவிக்க –
அவ்வளவில் ஸ்ரீ ஆட்கொண்ட வில்லிசீயர் யதிவர சீயர் உள்ளிட்ட ஏழு நூறு சீயர்களும் ப்ரஹ்ம வல்லி பிருகு வல்லி நாராயண அநுவாகம்
முதலான உபநிஷத்துக்களை ஓத –
ஸ்ரீ பட்டர் -ஸ்ரீ கந்தாடை யாண்டான் -ஸ்ரீ நடாதூர் ஆழ்வான் உள்ளிட்ட முதலிகளும் தத் தத் பரிசர்ய சாதனங்களை தரித்துக் கொண்டு
பரிவுடன் பரிவ்ருத்தராய் சேவித்துக் கொண்டு வர
மற்றும் உண்டான உபவீத தாரிகளான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒன்பதினாயிரம் பேரும் தத் பாவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பன்னீராயிரம் பேரும்
ஸ்ரீ அருளிச் செயல் மூவாயிரமும் முன்னடி பின்னடியாகச் சேவிக்க
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் பரிகரமான திருவாய் மொழி அரையர் ஸ்ரீ திரு நறையூர் அரையர் -ஸ்ரீ அழகிய மணவாள அரையர் –
முதலான எழுநூறு திருவாய் மொழி விண்ணப்பம் செய்யும் தம்பிரான்மார் பண்ணிசை தாளத்துடன் திருவாய் மொழி பாட
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் -ஸ்ரீ பெரிய கோயில் வள்ளலார் -ஸ்ரீ பொய்யில் வள்ளலார் தொடக்கமானவர்கள் ஸ்ரீ உடையவர் நூற்றந்தாதி சேவிக்க
ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பிள்ளான் உள்ளிட்டவர்கள் ததிக ப்ரீதி ஹேதுவான ஸ்ரீ ஸ்தோத்ர ஸ்ரீ கத்யங்களை சேவிக்க –
ஸ்ரீ வடுக நம்பியும் ஸ்ரீ ராமானுஜ தாசரான ஸ்ரீ கோமடத்து சிறி யாழ்வானும் ஸ்ரீ உடையவர் பிரபத்தியை அனுசந்தித்துக் கொண்டு வர
திரு வீதி எங்கும் கோடித்துப் பொரியும் புஷ்பமும் சிதற -நடை பாவாடை இட்டு கரும்பும் குடமும் ஏந்த

திருப்பதியில் ஸூ மங்கலிகள் மங்கள தீபம் ஏந்தி முன்னே செல்ல இருபக்கமும் சாமரம் இரட்டிப்பிக்க -வெள்ளை வட்டம் இட-
தரிசனத்தில் நம் ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்று ஒற்றைத் திருச் சின்னம் பரிமாற
திரு வீதிகள் தோறும் எழுந்து அருளுவித்துக் கொண்டு போய் -ஸ்ரீ பெரிய பெருமாளும் அந்தத் திருமேனியில் அபிமத விஷயத்தில்
அழுக்கு உகக்குமா போலே அதி சபலராய் -மங்க ஒட்டு -என்னும்படி இவர் விக்ரஹத்தை ஆதரித்து புறம்பே கொண்டு போக ஒட்டாமல் –
அந்தப்புர மஹிஷிகளை தத் பரிசாரத்திலே ஆராமத்திலே அடக்கி வைக்குமா போலேயும்-நிதியை உள்ளே இட்டு வைக்குமா போலேயும்
ஸ்ரீ லஷ்மீ துல்யராம்படியான ஸ்ரீ லஷ்ம்யங்களை யுடையராய் விலக்ஷண நிதி போலே-ஸ்ரீ இராமானுசன் என் தன் மா நிதி —
ஸ்ரீ இராமானுசன் என் தன் சேம வைப்பு-என்னும்படியான இவர் திருமேனியையும் ஸ்ரீ ஆழ்வார் திருமேனியை ஆவரணத்துக்கு உள்ளே
திருப் பள்ளி படுத்தால் போலே ஆவரணத்துள்ளில் உட்கோப்பில் அந்தரங்கமாக கௌந்தேயனான அர்ஜுனனைப் போலே
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருமுடி காத்து நோக்க -தத் அனுகுணமாக யதி ஸம்ஸ்கார விதி அடங்கச் செய்து
கனித்துத் திருப் பள்ளி படுத்தினார்கள்

இப்படி நிதியை நிஷேபித்த அநந்தரம் ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சிமாருடன் கூடத் திரு மஞ்சனம் கண்டு அருளித்
திரு முத்து உதிர்த்துத் திரு முகம் கன்றிச் சுருள் அமுதும் அமுது செய்யாமல் அலப்புப் பட விடத் திரு உள்ளமாய் –
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் ஸ்ரீ பட்டர் முதலானோரைப் பார்த்து நம்முடைய அவப்ருத உத்சவம் கொண்டாடுமா போலே
நம் ஸ்ரீ உடையவருக்கும் அவப்ருத உத்சவம் கொண்டாடுங்கோள்-என்று திரு உள்ளம் பற்றிச் சேர்த்தியிலே ஏறி அருளி
ஸ்ரீ உடையவருக்கு அக்கார வடிசில் தளிகை அனுப்பி அருளினார்
இவ்வாறு செய்ய வேண்டிய க்ருத்யங்களை எல்லாம் செய்து பெருக்கத் திரு அத்யயனமும் நடத்தி அருளினார்கள்
அநந்தரம் ஸ்ரீ கந்தாடை ஆண்டான் தொடக்கமான அனைவரும் புத்ர சிஷ்யர் செய்யும் கார்யங்களை எல்லாம் செய்து கொண்டு
அவப்ருத ஸ்நானமாக எல்லாரும் நீராடி அருளித் தத்விஸ்லேஷ அசஹராய்ப் பரிதபித்துக் கொண்டு இருக்க –
பின்பு ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ நம்பெருமாள் அனுமதியுடன் ஸ்ரீ எம்பெருமானாரை எல்லாரும் சேவித்து உஜ்ஜீவிக்கும் படி மீளவும்
அவ்விடத்திலே ஆவிர்ப்பவித்தால் போலே இருக்க அர்ச்சாவதாரமாக ஏறி அருளப் பண்ணி பிரதிஷ்டிப்பித்து அருளினார்
ஸ்வ அவதார ஸ்தலே அர்ச்சா அபூத் ஸ்ரீ ரெங்கேசய தீஸ்வர -யன்முதே தங்குணா வாசம் ராமானுஜ குரும் பஜே-என்றார்கள் –

அநந்தரம் சாஸ்த்ரார்த்தமான கைங்கர்யங்களையும் ஆப்தரான தங்கள் ஸமாப்தமாக நடத்தி-ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ கந்தாடை ஆண்டானும்
மிகவும் ஸுப்ராத்ரத்தை யுடையராய் -ஸ்ரீ உடையவர் காலத்தில் அர்த்த விசேஷங்களையும் ஒருவருக்கு ஒருவர் உசாவிக் கொண்டு –
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதிகளுடைய திரு புனர்வசாதி திரு நக்ஷத்ரங்களோ பாதியும் -ஸ்ரீ ஆழ்வாராதிகளுடைய ஸ்ரீ சரவணாதிகளோ பாதியும்
இவருடைய சித்திரையில் திருவாதிரையையும் மற்றும் மாசம் தோறும் வருவதாக அந்தத் திரு நக்ஷத்ரத்தையும்
மஹா உத்சவமாக நடத்திக் கொண்டு வாசா மகோசரமான தத் வைபவங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு
ஸ்ரீ கிடாம்பி யாச்சான் தொடக்கமானவரோடே பாடாற்றிக் கொண்டு இருந்தார்கள் –

அநந்தரம் ஸ்ரீ திருவேங்கட நாட்டின் நின்றும் ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ குஹ தாசர் முதலான முதலிகளையும் கூட்டிக் கொண்டு
ஸ்ரீ அனந்த அம்சமான இவர் திரு அவதார சமாதியை ஆராய்ந்து அறியும் படி எழுந்து அருளி திருக் காவேரி அருகே பரந்து இருக்கிற
தத் ஸூசகங்களைக் கண்டு எழுந்து அருளினபடி அறிந்து சோகாவிஷ்டராய் -அநந்தரம் ஸ்ரீ பட்டரையும் ஸ்ரீ ஆண்டானையும் கண்டு
ஆஸ்வசித்து உடனே ஊர் ஏற மீண்டு எழுந்து அருளினார்
அநந்தரம் அப்படியே கீழைத் திக்கில் சோழ வளநாட்டுத் திருக் கண்ணபுரம் முதலான திருப்பதிகளில் ஸ்ரீ எச்சான் முதலானவர்களும்
தெற்குத் திக்கான பாண்டி நாட்டு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி திருக் குமாரரான ஸ்ரீ யமுனாச்சார்யர் சொக்கத்தேவர்-
ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரரான ஸ்ரீ சுந்தரத் தோளுடையார் முதலானவர்களும்
மேல் நாட்டிலும் ஸ்ரீ சோமாசி ஆண்டான் ஸ்ரீ மருதூர் நம்பி -ஸ்ரீ தொண்டனூர் நம்பி முதலானோரும் –
மற்றும் அங்கே ஸ்ரீ எம்பெருமானாராலே திருத்தப்பட்ட ஸ்ரீ திரு நாராயண புரம் முதலான ஸ்தலங்களில் ஸ்ரீ வைஷ்ணவர்களும் –
மற்றும் உண்டான தேசாந்திரஸ்தர் எல்லாரும் திரண்டு பெரும் கூட்டமாக ஸ்ரீ கோயிலிலே வந்து
ஸ்ரீ எம்பெருமானாருடைய விஸ்லேஷத்தாலே மிகவும் கிலேசித்து

அநந்தரம் ஸ்ரீ பட்டரை சேவித்து தங்கள் வியசனம் எல்லாம் தீர்ந்து ஸ்ரீ பட்டரையே இஷ்ட தேவதையான
ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே கண்டு -தாமதாமுக்கு வேண்டும் இஷ்டார்த்தங்களையும் கேட்டுக் கொண்டு தத் லாபத்தாலே
ஸ்ரீ பராசார்ய பட்டார்யா சரணவ் ஸம்ஸ்ரயே மஹி யத் வக்த்ர ரங்கே ரங்கேச கோஷ்ட்யாம் ப்ராஹ்மீ ப்ரந்ருத்யதி -என்றும்
பிரமாண நக நிரப்பிண்ண வாதி மத்தேப மஸ்தக ராஜதே நிகமாங்கர்ஜன் ஸ்ரீ பராசர கேஸரீ -என்றும்
ஸ்ரீ பராசார்ய பட்டார்யாம் பூயோ பூயோ நமாம்யஹம் யதாத்மநாசவயம் ரங்கீ பேஜே கூரேச புத்ரதாம்-என்றும்
இத்யேவமாதி ஸூக்திகளையும்-தத் விஷயத்தில் அனுசந்தித்துக் கொண்டு தத் அநுஜ்ஜையோடே தம்தாமூர்களிலே சேர்ந்தார்கள்

சம்சார ஸ்திதிய ருசி நிவேதனமும் -தத் அநு குணமான பகவ துக்தாந்தி மதின நிச்சயமும் -சரம காலத்து அளவும் ஸ்வ அபிமான
அந்தர்பூதரான வர்களுக்கு உபகார அநு குணமாக வ்ருத்தி விசேஷ உபதேசமும் -பரிஹரணீய வ்ருத்தி விசேஷ உபதேசமும் –
சரம காலத்தில் ஸ்வ அபிமத சரம அதிகாரி ஸ்பர்ச விசேஷமும் -திரு முடியைப் பற்றி பூர்வாச்சார்யர்கள் விளங்கத்
திருவடிகளைப் பற்றி அபராச்சார்யர்கள் விளங்கப் பூர்வா பராசர்ய ரூப ஹார நாயக ரத்னமான ஸ்ரீ உடையவர்க்கே உள்ளது ஓன்று இறே
இத்தால் ஸ்ரீ ராம கிருஷ்ண சரிதங்கள் போலே ஸ்ரீ ராமாநுஜாய சரிதமும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சதா அனுசந்தேயாம் என்றதாய்த்து

ஸ்ரீ எம்பெருமானார் திரு நக்ஷத்ரம் சித்திரையில் திருவாதிரை

இவர் தனியன் -யோ நித்யம் அச்யுத- இத்யாதி -பிரசித்தம் இறே

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் –ஸ்ரீ எம்பெருமான்கள் ஆச்சார்யர்கள் சிஷ்யர்கள் பிரகாசிப்பித்த பிரபாவங்கள்–

February 25, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ வடுக நம்பி வைபவம்-

இவர்களில் ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே உபாயம் உபேயம் என்று விஸ்வசித்து அவர் திருவடி நிலைகளையே
திரு ஆராதனம் பண்ணிப் போருவர் -இப்படி இருக்கிற ஸ்ரீ வடுக நம்பி ஒரு பயண கதியில் ஸ்ரீ உடையவர் திரு ஆராதனத்தையும்
தம்முடைய திரு ஆராதனத்தையும் சேர எழுந்து அருளிப் பண்ணுவித்துக் கொண்டு வர -ஸ்ரீ உடையவர் கண்டு –
ஸ்ரீ வடுகா இது என் செய்தாய் என்ன -இவரும்-உங்கள் தேவரில் எங்கள் தேவருக்கு வந்த குறை என் என்று விண்ணப்பம் செய்தார் –
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ உடையவருடன் ஸ்ரீ பெருமாளை சேவிக்கப் போனாலும் ஸ்ரீ உடையவர் விக்ரஹத்தையே சேவித்துக் கொண்டு போருவர் –
ஒரு நாள் எம்பெருமானார் இத்தைக் கண்டு ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருக் கண் அழகைப் பாராய் என்ன –
இவரும் ஸ்ரீ பெருமாள் திருக் கண் அழகையும் ஸ்ரீ உடையவர் கண் அழகையும் பார்த்து -என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று
ஒன்றினைக் காணாவே என்ன -ஸ்ரீ உடையவரும் இது ஓன்று இருந்தபடி என் -என்று உகந்து
ஸ்ரீ வடுக நம்பியை பூர்ண கடாக்ஷம் செய்து அருளினார் –

ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானார் அமுது செய்து அருளி தளிகைப் பிரசாதம் பிரசாதித்தால்-இரண்டு திருக் கைகளாலும் ஏற்றுக் கொண்டு
பிரசாத ஸ்வீ காரம் பண்ணித் தம் திரு முடியில் திருக் கைகளைத் தடவிக் கொண்டு போருவர் –
இத்தை ஒரு நாள் ஸ்ரீ உடையவர் கண்டு கனக்கக் கோபித்து -ஸ்ரீ வடுகா கையைக் கழுவிக் கொள் என்ன -கழுவிக் கொண்டு –
மற்றை நாள் ஸ்ரீ நம்பெருமாள் அமுது செய்து அருளுகிற காலத்தில் ஸ்ரீ உடையவருடன் சென்ற அளவிலே ஸ்ரீ உடையவரும்
தமக்கு பிரசாதித்த ஸ்ரீ பெருமாள் பிரசாதத்தை தாமும் ஸ்வீ கரித்து அருளி – வடுகா இதோ -என்று இவரும் ப்ரசாதிக்க
இவரும் இரண்டு திருக் கைகளாலும் ஏற்றுக் கொண்டு பிரசாதப்பட்டு-ஸ்ரீ வைஷ்ணவர் திருக் கை விளக்க ப்ரசாதிக்கத்
திருக் கை விளக்கிக் கொண்டார் -ஸ்ரீ உடையவர் இது கண்டு இது என் செய்தாய் வடுகா என்ன –
நேற்று அருளிச் செய்தபடி செய்தேன் என்றார் –
ஸ்ரீ உடையவரும் இது கேட்டு உமக்குத் தோற்றோம் -என்று அருளினார் –

ஸ்ரீ வடுக நம்பி ஒரு நாள் ஸ்ரீ உடையவருக்குப் பங்காக பால் அமுது காய்ச்சா நிற்க ஸ்ரீ பெருமாள் பெரிய திருநாளில்
உடுத்து முடித்துப் பூண்டு புறப்பட்டு அருள ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பெருமாளை சேவிக்கப் புறப்பட்டு –
ஸ்ரீ வடுகா பெருமாளை சேவிக்க வா என்ன -ஸ்ரீ நம்பியும் உம்முடைய பெருமாளை சேவிக்க வந்தால் –
என்னுடைய பெருமாளுக்குக் காயா நிற்கிற பால் அமுது பொங்கிப் போம் -வரக் கூடாது என்று அருளினார்
ஸ்ரீ வடுக நம்பி அகத்தே பூர்வ சம்பந்திகளாய் இருப்பார் சிலர் வந்து தங்கிப் போக -அகத்தை எல்லாம் சுற்றிச் சோதித்து
தத் ஸ்ப்ருஷ்ட பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டுப் பூசி -இதற்கு பிராயச்சித்தம் என் என்று விசாரித்து –
ஸ்ரீ முதலியாண்டான் புழக்கடையில் கழித்துக் கிடந்த பாண்டங்களைக் கொண்டு போய் விநியோகம் கொண்டார்
ஆகையால் ஆச்சர்ய சம்பந்தம் உடையார் எல்லைக்கு உட்பட்டதில் அபாவநத்வ புத்தி இன்றியே ஸூபாவநத்வ புத்தி முற்றின படி
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதம் அல்லது மாற்று ஒருவர் ஸ்ரீ பாதம் கொள்ளார் -ஸ்ரீ தீர்த்த நியதியும் இவருக்கே உள்ளது ஓன்று இறே-
இப்படி தீர்த்த நியதி உடையராய் அவர் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஸ்ரீ சாளக்ராமத்தில் தாம் சேர்த்த தனமாக சேர்த்து வைத்துப் பேணிக் கொண்டு
ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளையே திருவாராதனமாக உடையராய் அவை தன்னையே அங்கே ப்ரதிஷ்டிப்பித்து நோக்கிக் கொண்டு போந்து
தம் சரம திசையிலும் தமக்கு அந்தரங்கரான சரம அதிகாரிகளுக்கும் தஞ்சமாகக் காட்டிக் கொடுத்து –
சீர்த்த தனம் இது வருந்தியும் பேணிக் கொண்டு போருங்கோள் என்று அடைக்கலம் காட்டிக் கொடுத்து அருளினார் –

————————————-

ஸ்ரீ அனந்தாழ்வான் வைபவம்

ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ ராமாநுசப்புத் தேரி கட்டி வைக்கும் போது மண் சுமாவா நிற்க -பிள்ளைகளில் ஒருவர் சென்று கூடையை வாங்கப் புக –
நான் அத்தை விடில் இளைப்பன்–நீ இத்தை தொட்டில் இளைப்புதி என்று அருளிச் செய்ய –
இளைப்பாகாது என்று பிள்ளை பின்னையும் கூடையை வாங்கப் புக -ஆகில் நான் ஜீவிக்கிற ஜீவனத்தையும் வாங்க வேணுமோ –
நீயும் வேணுமாகில் ஒரு கூடையை வாங்கிக் கொண்டு சுமக்க மாட்டாயோ என்று அருளினார்
பின்னையும் ஒரு நாள் கர்ப்பவதியான தம் தேவிகள் மேலே மண் சுமத்தா நிற்க இது ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஒரு பிள்ளையாய்
எதிரே வந்து கூடையை வாங்கிக் கொண்டு போக தேவிகள் கடுக வருமது கண்டு – இது என் கடுக வருகிறாய் -என்ன –
அவளும் ஒரு பிள்ளை எதிரே வந்து கூடையை வாங்கிக் கொண்டு போகிறான் -என்று சொல்ல -கேட்டு உடனே சென்று கண்டு –
கைங்கர்ய விக்ந காரீ -நீ கூடையைத் தொடாதே கொள்-என்று கொட்டு எடுத்து அடிக்கப் புக
ஸ்ரீ திருவேங்கடச் செல்வன் ஓடிச் சென்று ஸ்ரீ கோயிலிலே புகுந்தான் என்பர்கள் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திரு நந்தவனத்தில் போகி சந்தஷ்டமாக-பின்னையும் போய் நீராடிக் கைங்கர்யத்தில் போர-
ஸ்ரீ பாதத்துக்கு பரிவராய் இருப்பார் -விஷம் தீர்க்கப் பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்று அத்தை நிவர்த்திப்பித்து அருளினார் –
பின்பு ஸ்ரீ கோயில் எழுந்து அருளினவாறே ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவாய் மலர்ந்து விஷம் தீர்க்க வேண்டா என்று என் நினைத்துச் சொன்னீர்
என்று கேட்டருள இவரும் கடியுண்ட பாம்பு வலிதாகில் திருக்கோணேறியிலே தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானை சேவிக்கிறேன் –
கடித்த பாம்பு வலிதாகில் விரஜையில் தீர்த்தமாடி ஸ்ரீ வைகுண்ட நாதனை சேவிக்கிறேன் என்று இருந்தேன் என்று விண்ணப்பம் செய்தார் –
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ கோசல ராஜ்யத்துக்கு எழுந்து அருளுகிற போது கட்டுத் திரு போனகம் கட்டிக் கொண்டு போய் அமுது செய்யப்
புக்கவாறே பட்டை அடங்களும் சிற்று எறும்பாய் கிடக்க அத்தைக் கண்டு துணுக் என்று தம் முதலிகளைப் பார்த்து
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -என்னுமவர்களிலே சிலராய்த்து இவர்கள் -இப்படியே கொண்டு போய்
ஸ்ரீ திருமலையில் வைத்து வாருங்கோள் என்று அருளிச் செய்தார் –

ஸ்ரீ அனந்தாழ்வான் யமுனைத் துறைவனிலே திருமாலை கட்டா நிற்க ஸ்ரீ திருவேங்கடமுடையான் அருள்பாடிடப் பேசாதே இருந்து
திருமாலை சேர்த்துக் கொண்டு உள்ளே புக்கவாறே ஸ்ரீ திருவேங்கடமுடையானும் -நாம் அழைக்க ஸ்ரீ அனந்தாழ்வான் நீர் வாராது இருந்தது என் –
என்று திரு உள்ளமாக-இவரும் கருமுகை மொட்டு வெடியா நிற்க எனக்குத் தேசரீரைக் கொண்டு கார்யம் என் என்றார் –
ஸ்ரீ திருவேங்கடமுடையானும் -ஆகில் நாம் உம்மை இங்கு நின்றும் போகச் சொன்னோமாகில் நீர் செய்தவது என் என்று திரு உள்ளமாக
இவரும் பரன் சென்று சேர் திருவேங்கடம் என்கிறபடியே தேவரீர் அன்றோ வந்தேறிகள் –இவ்விடம் தேவரீரை ஆஸ்ரயித்தவர்களது அன்றோ –
தேவரீர் ஒரு கிழமை முற்பட்டார் அத்தனை -இவரும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயித்தோம் அத்தனை அன்றோ என்று விண்ணப்பம் செய்தார்

—————————————————

ஸ்ரீ கூரத்தாழ்வான் வைபவம் –

இப்படிப்பட்ட சிஷ்ய சம்பத்துடன் ஸ்ரீ உடையவர் வாழ்ந்து வரும் காலத்திலே ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்யாதே
ஸ்ரீ நம்பெருமாள் சந்நிதியில் சென்று சேவித்து இரா நிற்க ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ ஆழ்வான் நீ ஓன்று சொல்லுவான் போல் இருந்தாயீ -என்று
திரு உள்ளமாய் அருள -இவருமொரு ஸ்லோகத்தை விண்ணப்பம் செய்து உபந்யஸிக்க –
உமக்கு வேண்டியது எல்லாம் தருகிறோம் -வேண்டிக் கொள்ளும் -என்று உகப்பின் மிகுதியால் திருவாய் மலர்ந்து அருளிச் செய்ய –
ஸ்ரீ ஆழ்வானும் -நாயந்தே-அடியேனுக்கு பண்டே எல்லாம் தந்து அருளிற்றே என்ன
ஸ்ரீ பெருமாளும் -அப்படி அன்று -இப்போதே வேண்டிக் கொள்ளும் -நம் பெண்கள் ஆணை -நம் இராமானுசன் ஆணையே தருகிறோம் –
என்று திரு உள்ளமாக -ஸ்ரீ ஆழ்வானும் த்வத் அனுபவ விரோதியான இச் சரீரத்தை விடுவித்து த்வத் அனுபவத்தை தந்து அருள வேணும் –
என்று அபேக்ஷிக்க -ஸ்ரீ பெருமாளும் -அத்தை ஒழியச் சொல்லும் என்ன -இவரும் தாம் வேண்டும் காமமே காடடும் கடிது-என்கிறபடியே
அடியேன் அபேக்ஷித்தத்தை பிரசாதிக்க வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஆகில் உமக்கும் உம்முடைய சம்பந்தம் உடையாருக்கும் ஸ்ரீ பரமபதம் தந்தோம் -என்று அருளிச் செய்து அருளி
திருப் பரியட்டமும் தளிகைப் பிரசாதமும் பூம் தண் மாலைத் தண் துழாயும் திருக் கைச் சிறப்பும் ப்ரசாதித்து விடை கொடுத்து அருளினார் –
ஸ்ரீ ஆழ்வான் அர்ச்சிராதி கதி மார்க்கத்துக்கு பிரதம அலங்காரம் போலே இருக்கப் புறப்பட்டுத் தம் திரு மாளிகையிலும் புகுராதே
ஸ்ரீ ஆழ்வார் திருமாளிகையிலே புற வீடு விட்டு எழுந்து அருளி இருந்தார் –

ஸ்ரீ உடையவரும் இத்தைக் கேட்டு உடுத்த காஷாயத்தை வாங்கி ஆகாசத்தே ஏற எறிந்து ஏற்றுக் கொள்ள –
ஸ்ரீ பாதத்து முதலிகள் -இது என் சீயா என்று கேட்க –
உடையவரும் நமக்கும் ஸ்ரீ ஆழ்வான் சம்பந்தம் உண்டே -ஸ்ரீ பரமபதம் பெறலாம் அன்றோ என்று அருளிச் செய்தார் –
ஆகையால் சதாச்சார்ய சம்பத்தோடே சச் சிஷ்ய சம்பத்தோடு வாசி இல்லை இறே –
ஸ்ரீ உடையவரும் சோகாவிஷ்டராய் ஸ்ரீ பாதித்து முதலைகளை எல்லாம் கூட்டிக் கொண்டு ஸ்ரீ ஆழ்வான் இருந்த இடத்தே ஏறச் சென்று –
ஸ்ரீ ஆழ்வான் நீர் இப்படிச் செய்து அருளலாமோ -என்ன ஸ்ரீ ஆழ்வானும் பேசாதே இருந்தார் –
ஸ்ரீ உடையவரும் -ஸ்ரீ ஆழ்வான் உமக்கு முற்பட வேண்டும் அபிப்பிராயம் என் -பேசாது இருக்கிறது என் என்று கேட்டருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பரமபதத்தில் நடக்கும் அடைவு கேட்டுக்கு அஞ்சி என்ன -ஸ்ரீ உடையவரும் அது சொல்லிக் காணீர் என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் -முடிவுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள என்று முற்பட்டவர்கள் நித்ய ஸூரி களுடன் பிற்பட்டவர்களை
எதிர் கொள்ள வருவார்கள் -அது அடியேன் பிற்படில் அடைவு கேடாம் என்ன

ஸ்ரீ உடையவர் அது கேட்டு -ந சாஸ்திரம் நைவ ச க்ரம-என்று அடைவு கெட்டு இருக்கும் போக விபூதியில்
நீ அடைவு தேடுவதே -இது ஒரு சேஷத்வம் இருந்தபடியே -என்று போர வித்தராய் திரு முத்து உதிர்த்து இவருக்கு ஓடுகிற
நினைவை அறிந்து இவர் திருச் செவியில் திரு த்வயத்தை அருளிச் செய்ய -முதலிகளும் இப்போதாக இது என் என்ன –
நீங்கள் அறியீர்களோ -ராஜ குமாரனுக்குக் கற்பூர நிகரம் இல்லாத போது நாக்கு வறளுமா போலே இவருக்கு த்வயம் இல்லாத போது
நாக்கு வறளும் -என்று அருளிச் செய்து ஸ்ரீ ஆழ்வானை அணைத்துக் கொண்டு விம்மல் பொருமலாய்த் திரு உள்ளம் உடை குலைப்பட்டு –
ஸ்ரீ ஆழ்வான் என் உயிர்நிலையான உம்மை இழந்து எங்கனம் தரிப்பேன் -என்னையும் உடன் கொண்டு போகத் திரு உள்ளம் பெற்றிலீர் –
விட்டுப் போக உமக்கு ருசிப்பதே – ஸ்ரீ பரமபத நிலையான பக்கல் சங்கம் பும்ஸாம் த்ருஷ்ட்டி அபஹாரியான ஸ்ரீ பெருமாள் பக்கல்
சங்கத்தை அறுத்து உம்மை முந்துறப் பண்ணுவதே -ஸ்ரீ பரமபத நாதனும் அங்குள்ள நித்ய முக்தரும் என்ன பாக்யம் பண்ணினார்களோ –
இங்கு உறங்குகின்ற ஸ்ரீ பெருமாளும் இங்கு உள்ள நாங்களும் என்ன பாபம் பண்ணினோமோ -உம் திரு உள்ளம் கலங்கச் சொல்லி
என்ன பிரயோஜனம் உண்டு -உம் பேற்றுக்கு நாம் விலக்கடி ஆகலாமோ -ஸூ கமே நித்ய விபூதி ஏற எழுந்து அருளீர் என்று
ஸ்ரீ ஆழ்வான் திரு முகத்தைத் தடவி அஞ்சலித்து விடை கொடுத்து அருள -ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் வேர் அற்ற மரம்
போலே விழுந்து கிடக்க ஸ்ரீ உடையவரும் இரண்டு திருக்கைகளாலும் வாரி எடுக்க எழுந்து இருந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளை
தம் திருக்கண்களாலும் திருக்கைகளாலும் ஒற்றிக் கொண்டு ஸ்வ ஸீரோ பூஷணமாக்கிக் கொண்டு தீர்த்தம் கொள்ள
ஸ்ரீ உடையவரும் திருக்கைகளால் பிரசாதிக்க பிரசாதிக்கப்பட்டு –

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹாதஸ் தத் இதராணி த்ருணாய மேந -அஸ்மத் குரோர் பகவதோ அஸ்ய
தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்று அனுசந்தித்திக் கொண்டு க்ருதாஞ்சலி புடராய் –
இனி திரு மடமே எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்து வட ஆற்றங்கரை அளவாக ஸ்ரீ உடையவர் பின்னே செல்ல –
ஸ்ரீ ஆழ்வான் இனி நில்லும் என்ன -தண்டனை சமர்ப்பித்து மீண்டு ஸ்ரீ ஆழ்வார் திருமாளிகைக்கு அருகிலிட்ட திருக் காவணத்தின் நடுவே
எழுந்து அருளி இருந்து ஸ்ரீ ஆண்டாளை பார்த்து என் நினைத்து இருக்கிறாய் என்ன –
ஸ்ரீ ஆண்டாளும் தேவரீர் திரு உள்ளத்தை பின் செல்லுகை ஒழிய அடியேனுக்கு வேறு ஒரு நினைவுண்டோ என்று
திருவடிகளில் தெண்டன் இட்டு அஞ்சலித்து நிற்க
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பட்டரையும் ஸ்ரீ ராமப் பிள்ளையும் அழைத்து அருளி ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சியாரும் எழுந்து அருளி இருக்க
உங்களுக்கு ஒரு தாழ்வு இல்லை -ஸ்ரீ நம்பெருமாள் பெற்று வளர்த்தார் என்று அதுவே தஞ்சம் என்று இராதே ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே
தஞ்சம் என்று இருங்கோள் -ஸ்ரீ ஆண்டாள் சொன்னபடியே வர்த்தியுங்கோள்-பாகவத விஷயத்திலே த்ரிவிதகரணங்களாலும் அபராதம் பண்ணாதே
அவர்களை அனுவர்த்தித்துக் கொண்டு போருங்கோள் என்று அருளிச் செய்து தம் திருவடிகளில் விழுந்து கிடக்கிற ஸ்ரீ பட்டரையும் ஸ்ரீ ராம பிள்ளையையும்
எடுத்துத் திருக்கையாலே கண்ணநீரைத் துடைத்து –
நீங்கள் பிராகிருத சம்பந்தத்தை நினைத்து க்லேசித்தீர்கள் ஆகில் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் சம்பந்தத்தை தூஷித்தீர் ஆவுதீர்கோள் —
ஆத்ம சம்பந்தத்தை நினைத்து கிலேசித்தீர்கள் ஆகில் ஒழிக்க ஒழியாத உறைவை அறிந்திலீர் ஆவுதீர்கோள் என்று அவர்களைத் தேற்றி
ஸ்ரீ கோயிலுக்கு நேரே ஸ்ரீ பிள்ளைப் பிள்ளான் திருமுடியில் திரு முடியையும் ஸ்ரீ ஆண்டாள் திருமுடியில் திருவடிகளையும் த்யானித்துக் கொண்டு
அன்றே ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

ஸ்ரீ உடையவரும் இது கேட்டு அங்கு ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வான் திருக் குமாரரான ஸ்ரீ பட்டரைப் பார்த்து கிலேசியாதே என்று அருளிச் செய்து –
ஸ்ரீ ஆழ்வானுக்கு சரம கைங்கர்யம் செய்யும் என்ன ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ பெருமாள் பரிகரத்தையும் அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு –
சர்வ கர்மணி ஸூக்தேன காயத்ர்யா வைஷ்ணவேநச -நாராயண அனுவாகேன ஸ்நாபயேத் பிதரம் ஸூத-என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வானை நீராடப் பண்ணி கேசவாதி திரு நாமங்களைச் சாத்தி
அலங்கரித்து ஸ்ரீ சூர்ண பரிபாலனம் பண்ணி எழுந்து அருளுவித்துக் கொண்டு போய்
கேசவார்ப்பித சர்வாங்கம் சரீரம் மங்களாவஹம் நவ்ருதா தாஹயேத் விப்ரோ ப்ரஹ்ம மேத விதிம் விநா -என்றும்
ப்ரஹ்ம மேத வ்ரதம் ப்ரோக்தம் முநிபிர் ப்ரஹ்ம தத் பரை-மஹா பாகவதாநாம் ஹி கர்த்தவ்யம் இதம் உத்தமம் -என்றும்
கேசவன் தமரான முமுஷுக்கள் திருமேனி விட்டால் அத்திரு மேனியை ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் ஒழிய வேறு ஒன்றால் சமஸ்கரிக்க ஒண்ணாது
என்கையாலே மஹா பாகவத உத்தமரான ஸ்ரீ கூரத்தாழ்வானை ஸ்ரீ பட்டர் ப்ரஹ்ம மேதம் விதிப்படி சமஸ்கரித்துப் பள்ளிப் படுத்தி அருளி
பன்னிரண்டு நாளும் செய்யும் க்ருத்யங்களை சாஸ்த்ர யுக்த பிரகாரமாகச் செய்து அருளி ஸ்ரீ உடையவரையும் முதலிகளையும்
எழுந்து அருளுவித்துக் கொண்டு போய்

நாத பரந்தரம் தீர்த்தம் வைஷ்ணவ அங்க்ரி யுஜலாச் சுபம் -தேஷாம் பாதோ தகம் புண்யம் கங்காம் அபி புநாதி ஹி –
என்னும் வைபவம் உடைய பாகவத ஸ்ரீ பாத தீர்த்தத்தையும் ஸ்வீகரித்து அருளி
ஸூபாதவ் த்விஜ வைரஸ்ய சர்வ சம்பவச் சுபா வஹம்-சஹஸ்ர சாகா அத்யயனம் காரயேத் வைதிக உத்தம -அஸூபாந் தேவி சேஷேண
த்ராமிடீ ப்ரஹ்ம சம்ஹிதா அத்யேத வ்யாத் விஜவரைராசவ் சாக விநாசிநீ -என்றும்
வ்ருத்தா வாதவ் ஷயே சாந்தே த்ராமிடீ ப்ரஹ்ம சம்ஹிதா அத்யேத வ்யாத் விஜ ஸ்ரேஷ்டைராத்யா கீத சஹஸ்ரகீ -என்று
ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணத்தில் சொல்லுகிறபடியே திருவாய் மொழி திவ்ய பிரபந்தத்தை அனுசந்தித்து –
அநந்தரம் புஷ்பாஞ்சாலி பண்ணி சாத்தி அருளி
யதா துஷ்யதி தேவேஸோ மஹா பாகவத அர்ச்சனாத் -ததாக துஷ்யதே விஷ்ணுர் விதி வத் ஸ்வார்ச்ச நாதபி -என்று சொல்லுகையாலே
ஸ்ரீ வைஷ்ணவர்களையும் அமுது செய்யப் பண்ணி சத்கரித்து அருளினார்

ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு நக்ஷத்ரம் -தையில் ஹஸ்தம்

இவர் தனியன் –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நாம யுக்தி மதீ மஹே யத் யுக்த்யஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரம்
ஸ்ரீ மத் கூர குலாதீசம் ஸ்ரீ வத்சாங்க முபாசமஹே அக்ர்யம் யதீந்த்ர சிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதானாம்

———————————–

அதின் மற்றை நாள் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பட்டரை அழைத்துக் கொண்டு ஸ்ரீ நம்பெருமாளை சேவிக்க எழுந்து அருளி
ஸ்ரீ அழகிய மணவாளன் திரு மண்டபத்திலே தண்டன் சமர்ப்பித்து -ஸ்ரீ பட்டரை கையைப் பிடித்துக் கொண்டு போய்
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளைக் காட்டிக் கொடுக்க ஸ்ரீ பெருமாளும் மீளவும் மஞ்சள் நீர் குடித்து ஸ்ரீ பட்டரை விசேஷித்துப்
புத்ர ஸ்வீ காரம் பண்ணி அருளி அர்ச்சக முகேன திருவாய் மலர்ந்து ஸ்ரீ ஆழ்வானை இழந்தோமே -என்று வியாகுலப் படாதே
நம்மை ஸ்ரீ ஆழ்வானாகவே நினைத்து இரும் என்று அருளிச் செய்ய ஸ்ரீ உடையவரும் இத்தைக் கண்டு சந்தோஷித்து
ஸ்ரீ பெருமாளைக் குறித்து தேவர்ர்ர் இவருக்கு ஆயுஸ்ஸை ப்ரசாதித்து அருளும் -அடியேன் வித்யைகளை அப்யசிக்கிறேன் என்று
விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் திருவாய் திறவாதே தீர்த்த பிரசாதமும் பிரசாதித்து விடை கொடுத்து அருள
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பட்டரை அழைத்துக் கொண்டு மீண்டு தம் திரு மடமே எழுந்து அருளி ஸ்ரீ எம்பாரைப் பார்த்து –
இவரை நம் தர்சன பிரவர்த்தகராம் படி சாஸ்த்ர அப்பியாசம் பண்ணுவியும் என்று அவர் கையிலே காட்டிக் கொடுத்து
முதலிகளுக்கு பகவத் விஷயம் அருளிச் செய்யா நின்று கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

இப்படி இருக்கிற ஸ்ரீ உடையவர் பிரபாவத்தை- ஸ்ரீ பெரிய பெருமாளும் -ஸ்ரீ திரு வேங்கடமுடையானும் -ஸ்ரீ பேர் அருளாளரும் –
ஸ்ரீ திரு நாராயணப் பெருமாளும் -ஸ்ரீ அழகருக்கு -ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியும் -ஸ்ரீ நம்மாழ்வாரும் -ஸ்ரீ மன் நாத முனிகளும் –
ஸ்ரீ ஆளவந்தாரும் -ஸ்ரீ பெரிய நம்பியும்-ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியும் -ஸ்ரீ திருமலை நம்பியும் -ஸ்ரீ திருமாலை ஆண்டானும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரும் -மற்றும் ஸ்ரீ பாதத்து முதலிகளும் -ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸும்-ஊமையும்-வெளியிட்டார்கள் –

ஸ்ரீ பெரிய பெருமாள் வெளியிட்டு அருளிய படி எங்கனே என்னில்
திருப்பவளச் செவ்வாய் திறந்து –
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம் என்று அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ அப்பன் வெளியிட்டபடி எங்கனே என்னில் –
உமக்கும் உம்முடையார்க்கும் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் தந்தோம் என்று
நம் தெற்கு வீட்டிலே சொன்னோமே என்று திருப்பவள வாய் திறந்து அருளிச் செய்கையாலும் –
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளும் போது ததிவிக்கிரயம் பண்ணுமவளுமான தும்பையூர் கொண்டி என்பாள்
ஒரு கோபாங்கை வந்து க்ரயத்ரவ்யர்த்தமாக ஸ்ரீ உடையவரையும் முதலிகளையும் சேவித்து நிற்க
ஸ்ரீ உடையவர் அவளுக்கு தளிகை பிரசாதம் ப்ரசாதிக்கச் சொல்லி ஸ்ரீ கிடாம்பி ஆச்சானை நியமித்து அருள –
அவரும் அப்படியே செய்து அருள அவர் பிரசாதித்த ஸ்ரீ பாத தீர்த்த தளிகை பிரசாதங்களாலே சம்யக் ஞான உதயம் உண்டாய்
அடியேனுக்கு ததி மூல்யம் தர வேண்டா மோக்ஷம் தர வேணும் என்று பிரார்த்திக்க –
ஸ்ரீ உடையவர் அதற்கு ஸ்ரீ திருவேங்கடமுடையான் கடவர் என்ன —
அவளும் அதற்கு தேவரீர் ஒரு சிறு முறி தர வேணும் என்ன
ஸ்ரீ உடையவரும் உகந்து தரப்பெற்று ஸ்ரீ திருமலை ஏறித் த்வரித்து வரக் கண்டு ஸ்ரீ திருவேங்கடவர் எதிரே சென்று
அச் சிறு முறியை வாங்கி வாசித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாடு தந்து அருளுகையாலும்

ஸ்ரீ பேர் அருளாளர் வெளியிட்ட படி எங்கனே என்னில் –
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடன் தர்க்கித்த போது உத்தரம் சொல்ல மாட்டாமல் ஸ்ரீ பேர் அருளாளருக்கு விண்ணப்பம் செய்ய
அப்போது இன்னபடி உத்தரம் சொல்லும் என்று செங்கனி வாய் முறுவல் தோன்ற அருளிச் செய்கையாலும்
ஸ்ரீ யாதவ ப்ரகாசனுக்கு ஸ்வப்ன முகேன நம் இராமானுஜனை ஒரு ப்ரதக்ஷிணம் பண்ணி த்ரிதண்டி சந்நியாசி ஆவாய் –
என்று அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ திரு நாராயணப் பெருமாள் வெளியிட்ட படி எங்கனே என்னில் –
ஸ்ரீ தொண்டனூரிலே ஸ்வப்னம் காட்டி அருளி அழைத்துக் கொண்டு போய் அவருக்கு ப்ரசன்னரராய் அருளுகையாலும் –
என்னுடைய ஸ்ரீ செல்வப்பிள்ளை அன்றோ என்று எடுத்து அணைக்கும் படி ஸ்ரீ யதிராஜகுமாரரான சௌசீல்யத்தாலும்-

ஸ்ரீ அழகர் வெளியிட்டு அருளியபடி எங்கனே என்னில்
நம் இராமானுசன் அடியாருக்கு அருளப் பாடு என்று திரு உள்ளமாய் அருள -நாயந்தே -என்று எல்லா ஆச்சார்யர்களும் எழுந்து அருளித்
திருவடிகளில் சேவித்து நிற்க -ஸ்ரீ பெரிய நம்பி வழியில் சிலர் வராமல் இருக்க –
ஸ்ரீ அழகரும்-அது என் நீங்கள் நாம் அழைக்க வாராது இருப்பது என் -என்று கேட்டருள –
அவர்களும் -ராமானுஜன் அடியார்க்கு அருள்பாடு என்று தேவரீர் திரு உள்ளமாய் அருளுகையாலே -அவர் எங்களுக்கு சிஷ்யர் என்று
வாராது இருந்தோம் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ அழகரும் -ஸ்ரீ தசரத ஸ்ரீ வஸூதேவாதிகள் நம்மைப் புத்ரப் பிரதிபத்தி பண்ணினால் போலே இருந்தது நீங்கள் ஸ்ரீ இராமானுஜனை
சிஷ்ய பிரதிபத்தி பண்ணினது என்றும்
பின்பு ஒரு நாள் ஸ்ரீ கிடாம்பி ஆச்சானை அருளப் பாடிட்டு ஓன்று சொல்லாய் என்று திரு உள்ளமாய் அருள
அவரும் அபராத சஹஸ்ர பாஜனம் என்று தொடங்கி-அகதிம் -என்று சொல்ல –
ஸ்ரீ அழகரும் நம் ஸ்ரீ ராமானுசனை யுடையனாய் இருந்து அகதிம் என்று சொல்லப் பெறாய் என்றும் திரு உள்ளமாய் அருளுகையாலும்

ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி வெளியிட்டு அருளியபடி எங்கனே என்னில்
ஸ்ரீ உடையவரும் முதலிகளும் ஸ்ரீ நம்பியை சேவிக்க எழுந்து அருளின அளவிலே ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியும் திரு ஓலக்கமாக
எழுந்து அருளி இருந்து ஸ்ரீ உடையவராய் அருளப்பாடிட்டு –
பஹுநி மேவ்யதீதாநி ஜன்மா நிதவசார்ஜூந-என்கிறபடியே இத்தனை ஜென்மம் பிறந்தோம் என்று தெரியாது –
அஜ் ஜென்மங்களில் ஒருவரும் நமக்கு அகப்படாமல் -ஆஸூரீம் யோநிம் ஆபன்னா மூடா ஜென்மநி ஜென்ம மாம் அப்ராப்யைவ
கௌந்தேய ததோ யாந்த்யத மாங்கதிம் -என்கிற படியே ஆஸூர பிரப்ருதிகளாய் பிறந்து
பிறந்த ஜென்மங்கள் தோறும் மூடராய் நம்மை வந்து கிட்டாதே அதமமான கதியை அடைந்தார்கள் -இவ்வாத்மாக்கள் எல்லாரும்
உமக்கு அகப்பட்ட விரகை நமக்குச் சொல்ல வேணும் என்று திரு உள்ளமாக –
ஸ்ரீ உடையவரும் தேவரீர் கேட்கும் க்ரமத்தில் கேட்கில் சொல்லுகிறேன் என்ன ஸ்ரீ நம்பியும் திவ்ய சிம்ஹாசனத்தில் நின்றும் இறங்கி அருளி
நிலத்தில் ஒரு ரத்ன கம்பளத்தில் எழுந்து அருளி இருந்து இவருக்கு ஒரு திவ்ய சிம்ஹாசனத்தை இட்டு -இனிச் சொல்லும் -என்ன –
ஸ்ரீ உடையவரும் அவ்வாசனத்திலே ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ஆளவந்தார் எழுந்து அருளி இருக்கிறார்களாக பாவித்துக் கொண்டு
அவர் திருச் செவியிலே ஹிதத்தை விண்ணப்பம் செய்ய அன்று தொடங்கி
ஸ்ரீ நம்பியும் -நம் இராமானுஜம் உடையோம் -என்று அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ நம்மாழ்வார் வெளியிட்ட படி எங்கனே என்னில் –
லோகத்தைத் திருத்துவதாக எம்பெருமானோடே மார் தட்டி -நின் கண் வேட்கை எழுவிப்பேனே-என்றவர் தாமே -ஏ பாவம் பரமே -என்று
க்லேசித்து அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு அவதரித்து திருத்த ஒண்ணாத லோகத்தை நாமோ
திருத்தக் கடவோம் என்று கை வாங்கி -யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம்-என்று தாமும் தம் திரு உள்ளமுமேயாய்
த்ரிகாலஞ்ஞர் ஆகையால் -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று ஸ்ரீ உடையவர் திரு அவதாரத்தைக் குறித்து அருளிச் செய்கையாலும்

ஸ்ரீ மன் நாதமுனிகள் வெளியிட்ட படி எங்கனே என்னில்
குளப்படியில் தேங்கினால் குருவி குடித்துப் போம் -ஸ்ரீ வீர நாராயண புரத்து ஏரியில் தேங்கினால் நாடு விளையும் -என்று
அருளிச் செய்தது ஸ்ரீ உடையவர் திரு அவதாரத்தைக் குறித்து என்னும் இடம் –
ஸ்ரீ எம்பார் -ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும் கடலிலே ஸ்ரீ ஆழ்வார் ஆகிற காள மேகம் படிந்து
தத் கல்யாண குண அம்ருதத்தைப் பருகி வந்து -ஸ்ரீ நாதமுனிகள் ஆகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ உய்யக் கொண்டார் ஸ்ரீ மணக்கால் நம்பி ஆகிற அருவிகளாலே இறங்கி -ஸ்ரீ ஆளவந்தார் ஆகிற பேர் ஆற்றிலே கூடி
ஸ்ரீ பெரிய நம்பி யாகிற வாய்க்காலாலே புறப்பட்டு ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற பெரிய ஏரியில் வந்து தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு இஸ் சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறிப் பாய்கிறது -என்று
அருளிச் செய்த இடத்தில் ஒத்து இருக்கையாலும்

ஸ்ரீ ஆளவந்தார் வெளியிட்ட படி எங்கனே என்னில்
இம்மஹா நுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தான் ஆகிலோ என்றும் -இவன் முதல்வன் ஆம் -என்று அருளிச் செய்கையாலும்
சரம தசையில் -சரம விக்ரஹ சேவையில் குஞ்சிதஸ் வாங்குளி த்ரய மோசநத்தாலும்

ஸ்ரீ பெரிய நம்பி வெளியிட்ட படி எங்கனே என்னில்
ஸ்ரீ அத்துழாயும் தாமுமாக எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக எழுந்து அருள –
ஸ்ரீ பெரிய நம்பி எழுந்து இருந்து தண்டன் இட-இது என் -ஸ்ரீ உடையவர் உமக்கு சிஷ்யர் அன்றோ -இப்படிச் செய்யலாமோ -என்று
ஸ்ரீ அத்துழாய் விண்ணப்பம் செய்ய -ஸ்ரீ நம்பியும் அத்தாளுக்குக் தக்க தலை காண் இது என்றும்
ஒரு நாள் ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக நீராடி எழுந்து அருளும் போது ஸ்ரீ பெரிய நம்பி எதிரே கண்டு தாளும் தடக்கையும் கூப்பித்
தண்டன் இட ஸ்ரீ உடையவரும் அஞ்சலித்து கிருபை செய்து எழுந்து அருள -இத்தை முதலிகள் கண்டு இது என் சீயா -என்ன
ஸ்ரீ உடையவரும் இப்போது அவர் இஷ்டம் அனுவர்த்திக்கை அன்றோ நமக்கு உள்ளது என்ன –
முதலிகளும் ஸ்ரீ பெரிய நம்பி சந்நிதியில் சென்று -ஸ்ரீ உடையவராய் நீர் சாஷ்டாங்க ப்ராணாமம் பண்ணுகைக்கு அடி என் என்று கேட்க
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ ஆளவந்தாரும் முதலிகளும் என்று இருந்தேன் என்ன -அவர்களும் இதுக்கு நிதானம் என் என்ன –
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ ஆளவந்தார்க்கு பின்பு அகிலார்த்த ஸ்திதி பூர்த்தி உள்ளது இவருக்கே ஆகையால் சதாச்சார்ய சந்நிதியோடு
சச்சிஷ்ய சந்நிதியோடே வாசி இல்லாதாமையாலே சேவித்தேன் என்று அருளிச் செய்து
தம் திருக் குமாரர் புண்டரீகாக்ஷரையும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி வெளியிட்ட படி எங் கனே என்னில்
தாம் திருமந்த்ரார்த்தம் ப்ரசாதிக்கும் போது -ஆறுக்கும் சொல்லாதே கொள்ளும் -என்று ஆஜ்ஜாபித்து அருளிச் செய்ய –
இவரும் அதை தெற்கு ஆழ்வார் திரு ஓலக்கத்திலே தூளி தானமாக சார்வார்க்கும் அருளிச் செய்ய –
ஸ்ரீ நம்பியும் அத்தைக்கு கேட்டு குபிதராய் – ஸ்ரீ உடையவரை அழைத்து -ஆச்சார்ய ஆஜ்ஜாதி லங்கனத்துக்கு பலம் எது என்ன –
ஸ்ரீ உடையவரும் நரகமே பலம் என்ன –ஸ்ரீ நம்பியும் ஆகிலும் அறிந்தும் செய்வான் என் என்ன –
இவரும் -அடியேன் ஒருவனும் அன்றோ நரகம் புகுவது -தேவரீர் சம்பந்தத்தால் இவ்வாத்மாக்கள் எல்லாம் உஜ்ஜீவிக்கும்
என்று சொன்னேன் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ நம்பியும் போர ப்ரீதராய் -ஸ்ரீ எம்பெருமானாரே வாரும் -என்று எடுத்து அணைத்துக் கொண்டு இந்த பர ஸம்ருத்தி நமக்கு
இல்லையாய் விட்டதே -அவரோ நீர் -என்று அருளிச் செய்து -இன்று முதல் எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று சொல்லி
தம் திருக் குமாரர் ஸ்ரீ தெற்கு ஆழ்வாரையும் அவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும் –

ஸ்ரீ திருமலை நம்பி வெளியிட்ட படி எங்கனே என்னில்
ஸ்ரீ உடையவர் திருமலைக்கு எழுந்து அருளும் போது திருப் பரியட்ட பாறை அளவாக எதிரே சென்று தீர்த்த பிரசாதம் ப்ரசாதிக்க –
ஸ்ரீ உடையவரும் ஸ்வீ கரித்து அருளி ஸ்ரீ நம்பியைப் பார்த்து தேவரீர் எழுந்து அருள வேணுமோ -வேறே சிறியவர்கள் இல்லையோ என்ன –
ஸ்ரீ நம்பியும் நாலு திரு வீதியிலும் ஆராய்ந்த இடத்திலும் என்னிலும் சிறியோரைக் கண்டிலேன் என்கையாலும்
ஸ்ரீ எம்பாரை ஸ்ரீ உடையவருக்கு உதக பூர்வகமாகக் கொடுக்கையாலும்
தம் திருக் குமாரர்கள் ஸ்ரீ ராமானுசனையும் ஸ்ரீ பிள்ளை திருமலை நம்பியையும் அவர் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ திருமாலை ஆண்டான் வெளியிட்ட படி எங்கனே என்னில்
அவர் தம் பக்கல் திருவாய் மொழி கேளா நிற்க -அறியாக் காலத்துள்ளே-என்கிற பாட்டுக்கு இவர் உபகார ஸ்ம்ருதி பாரமாக
விசேஷ அர்த்தம் அருளிச் செய்ய -ஸ்ரீ ஆண்டானும் இது விச்வாமித்ர ஸ்ருஷ்ட்டி என்று அருளிச் செய்கை தவிர்ந்து இருக்க –
பின்பு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி எழுந்து அருளி ஸ்ரீ ஆண்டானை அழைத்து ஸ்ரீ சாந்தீபினி பக்கலிலே ஸ்ரீ கிருஷ்ணன்
அத்யயனம் பண்ணினால் போலே காணும் இவர் உம்முடைய பக்கல் திருவாய் மொழி கேட்கிறது-
இவ்விரண்டு அர்த்தமும் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார் காணும் -என்ன –
ஸ்ரீ உடையவரும் ஒரு அர்த்த பிரஸ்தாவத்திலே-ஸ்ரீ ஆளவந்தார் இப்படி அருளிச் செய்யார் என்ன –
ஸ்ரீ ஆண்டானும் நீர் ஸ்ரீ ஆளவந்தாரைக் கண்ணாலும் காணாது இருக்க இப்படி அருளிச் செய்யார் என்கைக்கு ஹேது என் என்ன –
இவரும் நான் ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் அன்றோ என்ன –
ஸ்ரீ ஆண்டான் தண்டன் இட்டு இதுவும் ஒரு திரு அவதாரமோ என்று அருளிச் செய்து
தம் திருக் குமாரர் சுந்தரத் தோலுடையாரை ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் வெளியிட்ட படி எங்கனே என்னில்
தம் பக்கல் ஸ்ரீ உடையவர் ஆறு மாசம் சேவித்து இருந்து பங்காக மஞ்சள் காப்பு அரைத்துச் சாத்தி நீராடப் பண்ணுவித்து அருள
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரும் ப்ரீதராய் -என்னுடைய சர்வஸ்வத்தையும் கொள்ளை கொள்ளவோ நீர் இப்படிச் செய்தது
என்று அருளிச் செய்து பஞ்சம உபாய நிஷ்டையையும் அருளிச் செய்து
தம் திருக் குமாரர் திருவாய் மொழி அரையரையும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆஸ்ரயிப்பிக்கையாலும்

ஸ்ரீ வடுக நம்பி – ஆச்சார்ய பதம் என்று தனிஸ்ரீயே ஒரு பதம் உண்டு -அது உள்ளத்து ஸ்ரீ எம்பெருமானாருக்கே யாகையாலே
எல்லாருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஒழிய வேறு உபாய உபேயம் இல்லை –
அவர் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் -என்று அருளிச் செய்து அருளுவர் –

ஸ்ரீ கணியனூர் சிறிய ஆச்சான் ச சேலஸ் நாந பூர்வகமாக ஆர்த்தியோடே உபசன்னராய்த் திவ்ய ஆஜ்ஜை இட்டு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் ஒழிய வேறே தஞ்சம் இல்லை என்று அருளினார்
எங்கனே என்னில் -சத்யம் சத்யம் புநஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரோ ச ஏவ சர்வ லோகாநம் உத்தர்த்தா நாத்ர சம்சய -என்று
இவர் தாமே ஸ்ரீ பெரிய பெருமாள் திரு ஓலக்கத்திலே ஸ்ரீ சடகோபனை தம் திருமுடியில் நிறுத்திக் கொண்டு அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த ஸ்ரீ எச்சான் -ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ தொண்டனூர் நம்பி –
ஸ்ரீ மருதூர் நம்பி இவர்களுக்கு ஹித உபதேசம் செய்து ஸ்ரீ உடையவர் குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டினால் போலே
செய்து அருளினர் -நீங்கள் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயித்த அளவிலே ஸ்ரீ ஆழ்வான் ஆச்சார்ய தக்ஷிணையாக
த்ரிவித கரணங்களையும் பரிஹரித்துக் கொண்டு பாகவதர்கள் இடத்தே ஆனுகூல்ய ஏக ரசராய்ப் போரும் என்று அருளிச் செய்ய –
அவரும் இது பரிஹரித்து முடியாது என்று பயப்பட்டு முசித்துக் கிடக்க ஸ்ரீ ஆழ்வான் அவரை அழைத்து –
எதிரியைக் குத்தினால் எதிரி கூடக் குத்தும் -ராஜ தண்டமும் வரும் -ஆகையால் காயிக அபராதம் செய்யக் கூடாது
யதீச்ச சிவசீ கர்த்தும் ஜெகதே கேந கர்மணா பரா பவாத சஸ் யேப்யோ காஸ்ச ரந்தீர் நிவாரய -என்கிறபடியே
பர அபவாதம் சொல்லுகிற வாக்கு ஒன்றையும் பரிஹரித்துக் கொள்ளும் என்று அருளிச் செய்து
இனி மனஸ்ஸாலே நினைத்தீராகில் அனுதபித்து-இது ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்தே படாதபடி
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஸ்ரீ மிளகு ஆழ்வான் ஸ்ரீ முதலியாண்டானை என்னோடே தர்க்கிக்க வாரும் என்ன –
ஸ்ரீ முதலியாண்டானும் நீர் தோற்றீர் ஆகில் செய்வது என் என்ன ஸ்ரீ மிளகு ஆழ்வானும் நான் தோற்றேன் ஆகில்
உம்மை என் தோளிலே சுமந்து கொண்டு போகிறேன் என்ன -அநந்தரம் உபயரும் தர்க்கிக்க ஸ்ரீ மிளகு ஆழ்வான் தோற்று
ஸ்ரீ முதலியாண்டானை ஸ்ரீ பாதம் தாங்கிக் கொண்டு சுற்றிடம் போய் -இனி அடியேனை இரங்கி அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் காட்டிக் கொடுத்து ஆஸ்ரயிப்பித்து அருளி
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டரைப் பார்த்து ஸ்ரீ நம்பெருமாள் நம்மை புத்ர ஸ்வீ காரம் பண்ணி அருளினார் -நாம் ஸ்ரீ ஆழ்வானுடைய பிள்ளை –
அகில சாஸ்திரங்களையும் அதிகரித்தோம் -என்கிற மேன்மையை நினைத்து இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து வேதாந்தி என்கிற பேரை உடையோம் -நம்முடைய பக்கல் ஆஸ்ரயித்தோம் –
நமக்கு பஹு த்ரவ்யத்தை ஆசார்ய தக்ஷிணையாகத் தந்தோம் என்று இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளையைப் பார்த்து லோகாச்சார்யார் என்கிற பேரை யுடையோம் –
திருவாய் மொழிக்கு பொருள் சொல்ல வல்லோம் -என்று இறுமாந்து இராதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ சிவக்கரைப் (சிவிக்கரை )பிள்ளையைத் திருக்கையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளா நிற்க
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ நம்பிள்ளை திருமாளிகை திரு இடை கழியிலே கண் வளரா நிற்க
ஸ்ரீ சிவக்கரைப் பிள்ளை அவர் காலை முடக்கும் என்ன -ஸ்ரீ நம்பிள்ளையும் -மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஆழ்வார் -திருத் தாள் -என்று
அருளிச் செய்ய -நீரோ கால் என்பீர் -என்ன என்று அவர் கையை விட்டு அருள அவரும் சிவக்கரையிலே போய் இருந்து
பின்பு சோகார்த்தராய் இரண்டு ஆற்றுக்கு நடுவு நின்று கவணிலே கல்லை வைத்து வீசினால் போலே தள்ளி விட்டு அருளிற்றே
இனி அடியேனுக்கு கதி என் என்று ஸ்ரீ நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்து வரக் காட்டி அருள
ஸ்ரீ நம்பிள்ளையும் உமக்கு ஒரு குறையும் இல்லை -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருப்பது என்று அருளிச் செய்து
போக விட்டு அழைத்து கிருபை செய்து அருளினார் –

ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்ரீ சிறுப் புத்தூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ சோமாசி ஆண்டான்
ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ பாதத்தில் மூன்று உரு ஸ்ரீ பாஷ்யம் வாசித்து அருளி மீண்டு எழுந்து அருளும் போது
ஸ்ரீ சோமாசி ஆண்டான் அனுவர்த்தித்து -அடியேன் இருக்கிற தேசம் இதுவாய் இருந்தது –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பது ஓன்று அருளிச் செய்ய வேணும் என்ன –
ஸ்ரீ பிள்ளானும் ஸ்ரீ ஆண்டானைக் குறித்து நீர் பாட்ட பிரபாகர் மீமாம்சை இவை இத்தனைக்கும் பொருள் சொல்ல வல்ல கர்த்தா –
ஸ்ரீ பாஷ்யத்துக்கு பிரவர்த்தகர் -என்று மேன்மை பாராட்டித் திரியாதே
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று இரும் என்று அருளினார் –

ஸ்ரீ கோமடத்துப் பிள்ளான் தம் ஸ்ரீ பாதத்தில் ஸ்ரீ காக்கைப் பாடி (காக்கையாடி)ஆச்சான் பிள்ளை மூன்று உரு ஸ்ரீ பாஷ்யம் வாசித்து
அத்தால் மிகவும் மேன்மையை யுடையராய் இருக்குமது கண்டு இவருக்கு இம்முகத்தாலே அபசாரம் வரும் என்று அஞ்சி
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளையைப் பார்த்து உம்மைப் பெருமாள் முனிந்து அருளும் போது
என் நினைந்து இருந்தீர் என்று கேட்டு அருள
அவரும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருந்தேன் -என்று விண்ணப்பம் செய்தார் –

ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ பாதத்தில் பத்து பன்னிரண்டு திரு நாமம் ஸ்ரீ பாஷ்யம் வாசிக்கிற போது ஸ்ரீ அம்மாள் அவர்களுக்கு
ஸ்ரீ பாஷ்யத்தை உபந்யஸித்துக் காட்டி அருள -அவர்களும் பக்தி குரு உபாயமாக இருந்தது என்ன –
பின்பு அவரும் பிரபத்தி உபாயத்தை அருளிச் செய்து காட்டி அருள பக்தியிலும் பிரபத்தி தான் அரிதாய் இருந்தது
என்று அவர்கள் விண்ணப்பம் செய்ய
ஆகில் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று விஸ்வசித்து உஜ்ஜீவியுங்கோள் என்று அருளினார்

ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர் ஸ்ரீ திரு நாராயண புரத்திலே ஸ்ரீ எம்பெருமானார் திரு முன்பே கோஷ்டி பண்ணி ஸ்ரீ பாஷ்யத்தை உபந்யஸிக்க
இது கங்கா பிரவாஹமாய் இருந்து -எங்களால் அவகாஹிக்கப் போகாது என்று ஐம்பத்து இருவர் விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பட்டரும் ஆகில் உங்கள் குல தெய்வமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று உஜ்ஜீவியுங்கோள் என்று அருளினார் –

ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை ஸ்ரீ வெள்ளைக் குளத்து ஆனை காத்த சிங்கர் முன்பே கோஷ்டி பண்ணி ஸ்ரீ பாஷ்யம் உபந்யஸிக்க
தம் சிஷ்யரான ஸ்ரீ இளைய அழகியார் எழுந்து இருந்து இது கங்கா ப்ரவாஹமாய் இருந்தது –
என்னால் அவகாஹிக்கப் போகாது என்று விண்ணப்பம் செய்ய
ஆகில் ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே சரணம் என்று இரும் என்று அருளிச் செய்து அருளினார்

ஸ்ரீ வடுக நம்பி -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -ஸ்ரீ நம் பெருமாள் திருவடிகளே சரணம் என்று இரண்டையும் சேர
அநுஸந்திக்கும் ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ ஆண்டானையும் இரு கரையர் என்பர் –
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ பட்டர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ திருக் கச்சி நம்பி ஸ்ரீ பேர் அருளாளர் திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ செல்வப்பிள்ளை திருவடிகளே சரணம் என்னுமா போலேயும்
ஒருவருக்கும் இசைந்து இராது –

ப்ரஹ்ம ரஜஸ் ஸூ வெளியிட்ட படி எங்கனே என்னில் ஸ்ரீ யாதவ பிரகாசனுக்கு ஸ்ரீ உடையவரைக் காட்டி
இவர் நித்ய ஸூரி களில் தலைவர் என்று சொல்லுகையாலே

ஊமை வெளியிட்ட படி எங்கனே என்னில்
ஸ்ரீ பெருமாள் கோயிலிலே பாகவத ஜென்மத்தில் பிறந்தான் ஒரு பிள்ளை ஐந்தாறு வயஸ்ஸூ அளவாக ஊமையாய் இருந்து –
பின்பு இரண்டு சம்வத்சரம் காணாது இருந்து -பின்பு எல்லாரும் காண வந்து வார்த்தை சொல்ல வல்லனாக –
இவ் வாச்சர்யத்தைக் கண்டு எல்லாரும் திரளாக இருந்து ஊமையைப் பார்த்து -நீ இத்தனை நாளும் எங்கே ஏறப் போனாய் -என்று கேட்க –
அவனும் நான் ஷீராப்திக்குப் போனேன் என்ன -இவர்களும் -அங்கே விசேஷம் என் -என்று கேட்க –
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் ஸ்ரீ உடையவராய் வந்து அவதரித்து வந்து அருளினார் என்று ஒரு விசேஷம் -என்ற அநந்தரம்
அவனைக் கண்டது இல்லை என்று ஸ்ரீ பகவத் சேனாபதி சீயர் அருளிச் செய்கையாலே
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் பிரபாவத்தை அனைவரும் பிரகாசிப்பித்தார்கள் –

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் –/ஸ்ரீ முதலிகள் திரு நாமங்கள் –

February 20, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ திருநாராயண புரத்தில் நின்றும் ஸ்ரீ கோயில் ஏற பயண கதியில் எழுந்து அருளிப் புகுந்து திரு முகத்துறையிலே நீராடி
கேசவாதி துவாதச ஊர்த்வ புண்டரராய் எழுந்து அருள அங்கு உள்ளார் எல்லாம் எதிர் கொண்டு சேவிக்க அவர்களையும் கிருபை பண்ணி
எழுந்து அருளிப் புகுந்து சேவா க்ரமம் தப்பாமல் சேவித்து ஸ்ரீ அழகிய மணவாளன் திரு மண்டபத்தில் சென்று தண்டன் சமர்ப்பித்து
உரை கோயிலின் உள்ளே புகுந்து ஸ்ரீ பெரிய பெருமாளையும் ஸ்ரீ நம்பெருமாளையும் திருவடி தொழுது மனம் உருகி மலர்க்கண்கள்
துளிக்கக் கண்ணாலே பருகி வாயார வாழ்த்தி நிற்க
ஸ்ரீ பெருமாளும் திருப்பவளச் செவ்வாய் திறந்து ஸ்ரீ உடையவரை நோக்கி நெடு நாள் தேசாந்தரம் சென்று போர மெலிந்தீரே என்று வினவி அருள –
ஸ்ரீ எம்பெருமானாரும் ஸ்ரீ பெரிய பெருமாளைக் குறித்து -அகம் மகிழும் தொண்டர் வாழ அன்போடு தென் திசை நோக்கி தேவரீர் பள்ளி கொண்டு
அருளுகையாலே வன்பெரு வானகத்தில் சொல்லும்படியே உபய விபூதியில் உள்ளார்க்கும் என்ன கிலேசம் உண்டு -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் உகந்து தீர்த்தம் திருமாலை திருப் பரியட்டம் தளிகை பிரசாதங்களும் பிரசாதிக்க ஸ்வீ கரித்து க்ருதார்த்தராய் நிற்க
ஸ்ரீ பெருமாளும் திரு மடமே போம் என்று விடை கொடுத்து அருள இவரும் புறப்பட்டு திவ்ய உத்சவம் கொண்டாடும்
திரு மண்டபங்கள் திருக் கோபுரங்கள் திரு மதிள்கள் தொடக்கமான திவ்ய நகர ஸ்ரீ யை எல்லாம் சுற்றி சேவித்து

முதலிகளும் தாமுமாக ஸ்ரீ ஆழ்வான் திருமாளிகை ஏற எழுந்து அருள ஸ்ரீ ஆழ்வானும் எதிரே எழுந்து அருளி
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே விழுந்து சேவித்து உகப்பின் மிகுதியால் திருவடிகளை பூண்டு கொண்டு கிடக்க
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆழ்வானை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு கிலேச அதிசயேநே சோக அஸ்ருவானது தாரா வர்ஷகமாக வர்ஷிக்க
நெடும் போது ஒரு வார்த்தையும் அருளிச் செய்ய மாட்டாதே விம்மல் பொருமலாய் துக்க ஆர்ணவ மக்நராய் தழுதழுத்த திரு மிடற்று ஒலியுடன்
ஸ்ரீ ஆழ்வான் இத்தர்சனத்துக்காக த்ருஷ்ட்டி பூதரான உமக்கு இப்படி கண் போவதே என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ வைஷ்ணவர் திரு நாமம் கோணிற்று என்றாகிலும் நினைத்திரேனோ என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ உடையவரும் அது உமக்கு உண்டோ -அடியேன் துஷ்கர்மம் அன்றோ உமக்கு இப்படி வருகைக்கு அடி என்று திரு உள்ளம் புண்பட்டு
துக்க உபநோதனம் பண்ணி அருள ஸ்ரீ ஆழ்வானும் தேறி நிற்க
மற்றும் உண்டான ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்துடன் கூட திரு மடமே எழுந்து அருளி இருந்தார் –

பின்பு அந்நாட்டில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்து ஏறச் சென்று தண்டன் சமர்ப்பித்து –
ஸ்ரீ பெரிய நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளினாரே-ஸ்ரீ ஆழ்வானுக்கும் திருக் கண் மலர் போயிற்றே என்று துக்க உபநோதநம் பண்ணி –
தேவரீரை யாகிலும் சேவிக்கப் பெற்றோமே என்று சொல்லி எல்லாரும் ப்ரீதரராய் இருக்கும் காலத்திலே
ஸ்ரீ திருச் சித்ர கூடம் அழிந்தது என்று சிலர் வந்து ஸ்ரீ உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –
அது கேட்டு துக்க ஆகுலராய் சோகித்து திரு முத்து உதிர்த்து அருளி -அங்குத்தையில் உத்சவ பேரம் திருப்பதிக்கு
எழுந்து அருளினார் என்று கேட்டு அருளி அந்த இழவு எல்லாம் ஆறும்படி திருப்பதிக்கு எழுந்து அருளி
ஸ்ரீ கோவிந்த ராஜனை மூல பேர ஸஹிதமாக திரு பிரதிஷ்டையும் பண்ணி வைத்து –
தென் தில்லைத் திருச் சித்ர கூடத்து என் செல்வனை மின்னி மழை தவழும் வேங்கடத்து என் வித்தகனை -என்றதுவே
பொய்ம் மொழி ஓன்று இல்லாத மெய்ம் மொழியாக இப்படிப் பலிப்பதே -என்று அருளிச் செய்து இழவு தீர்ந்து அருளி
திருமலை ஏறி திருவேங்கட மா முகிலையும் திருவடி தொழுது அப்போதே மீண்டு திருமலை இறங்கித் திருத் தாழ்வரையிலே
ஆழ்வார்களையும் சேவித்துப் புறப்பட்டு ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளிப் பேர் அருளாளரையும் திருவடி தொழுது மீண்டு
பயண கதியில் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளிப் புகுந்து ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து தம் திருமடம் எழுந்து அருளி
ஸ்வ அபிமான அந்தர்பூதர்க்குத் தென்றலும் சிறு துளியும் போலே தர்சன தாத்பர்யம் அருளிச் செய்யா நின்று கொண்டு
ஸூகமே எழுந்து அருளி இருந்தார் –

அதின் மற்றை நாள் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வானை அழைத்து -ஸ்ரீ பேர் அருளாளர் அர்த்திதார்த்த பரிதான தீஷிதராய் இருப்பர் –
நீர் அவரை கண் தந்து அருள வேணும் -என்று ஒரு ஸ்தோத்ரம் விண்ணப்பம் செய்யும் என்று அருளிச் செய்ய —
ஸ்ரீ ஆழ்வானும் அடியேனுக்கு இக்கண் வேண்டா -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ எம்பெருமானாரும் அப்படி அன்று -சொல்ல வேணும் -என்று பல நாளும் நிர்பந்தித்து அருளிச் செய்து அருள –
ஸ்ரீ ஆழ்வானும் கண் அழியாமல் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை அருளிச் செய்ய உபக்ரமித்து –
ஸ்வஸ்தி ஹஸ்திகிரி மஸ்த சேகரஸ் சந்தநோது மயி சந்ததம் ஹரி -நிஸ் சாமாப்யதிகம் அப்யதத்தயன் தேவம்
ஒவ்பநிஷதீ ஸரஸ்வதீ -என்று சொல்லி
நீல மேக நிபஞ்சந புஞ்சஸ்யாம குந்தலம் அனந்த சயந்த்வாம்–அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம் நேத்ர ஸாத் குரு கரீச ஸதாமே-என்ற
இஸ் ஸ்லோகத்தாலே சதா தர்சனம் பண்ண யோக்கியமான அப்ராக்ருத திவ்ய நேத்ரம் அடியேனுக்கு தந்து அருள வேணும் -என்று
விஞ்ஞாபிக்க -அன்று இரவே ஸ்ரீ பேர் அருளாளரும் தந்தோம் என்று ஸ்வப்ன முகேன அருளிச் செய்ய

ஸ்ரீ ஆழ்வானும் பிரத்யூஷ காலத்திலே பெரிய ப்ரீதியோடே எழுந்து அருளி இருந்து அனுஷ்டானத்தைச் செய்து
ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை நிறைவேற அருளிச் செய்து -ஸ்ரீ உடையவர் சந்நிதிக்குச் சென்று தண்டன் இட்டு –
தேவரீர் நியமனப்படி ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை விண்ணப்பம் செய்தேன் என்று ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தை முற்றவும்
விண்ணப்பம் செய்து காட்ட -ஸ்ரீ உடையவரும் கேட்டு உகந்து அருளின அளவிலே ஸ்ரீ ஆழ்வானும் –
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் ஸ்ரீ பேர் அருளாளன் ஆகையால் அடியேன் கேட்டபடியே
ஸ்ரீ வைகுண்டேது பரே லோகே நித்யத்வேந வ்யவஸ்திதம் பஸ்யந்தி ச சதா தேவம் நேத்ரைர் ஞானேந சாமர என்று
சொல்லப்படுகிற ஸ்ரீ வைகுண்ட நாதனை சதா தர்சனம் பண்ணுகிற அப்ராக்ருத திவ்ய சஷூஸ்ஸை ப்ரசாதித்து அருளினார் என்ன –
ஸ்ரீ உடையவரும் அங்கன் அன்று அங்கு ஏறப் போவோம் வாரும் என்று ஸ்ரீ ஆழ்வானைக் கையைப் பிடித்துக் கொண்டு
ஸ்ரீ பெருமாள் கோயில் ஏற எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தைப் பேர் அருளாளர் சந்நிதியில்
விண்ணப்பம் செய்து தலைக் காட்டுகிற போது ஸ்ரீ உடையவர் காலாந்தரத்திலே தாழ்க்க-ஸ்ரீ ஸ்தவம் திருச் செவி சாத்தி
ஸ்ரீ பேர் அருளாளரும் ப்ரசன்னராய் ஸ்ரீ உடையவர் வருவதற்கு முன்னே -ஸ்ரீ ஆழ்வான் உமக்கு அபேக்ஷிதம் என் என்று கேட்டருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ உடையவர் திரு உள்ளம் பற்றினத்தை வேண்டிக் கொள்ளாதே –
நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும் -என்று விண்ணப்பம் செய்ய -அப்படியே பெறக் கடவன் என்று
ஸ்ரீ பெருமாளும் திருவாய் மலர்ந்த அளவிலே

ஸ்ரீ உடையவர் கேட்டுப் பதறி ஓடி வந்து திரு உள்ளம் உளைந்து ஸ்ரீ பெருமாளைக் குறித்து சர்வஞ்ஞரான தேவரீர்
இப்போது என் நினைவினைத் தலைக் கட்டிற்று இலீரே –
ஸ்ரீ ஆழ்வான் நீ ஸ்வ தந்திரனாய் என் நினைவைத் தலைக் கட்டாதே அதி லங்கித்து நான் வருவதற்கு முன்னே இப்படிச் செய்தாயே
என்று இருவரையும் வெறுத்து -இனி என் -என்று திகைத்து நிற்க-
ஸ்ரீ பேர் அருளாளப் பெருமாளும் நம்மையும் உம்மையும் காணும் இடத்து கட் கண்ணாலே காணக் கடவர்-என்று வர பிரதானம் பண்ணி அருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பெருமாளைத் தம் கட் கண்ணாலே சேவித்துச் சாத்தின திவ்யாபரண திவ்ய விக்ரஹ அவயாதிகளை
இவை இவை என்று குறித்துக் காட்டி அருளி ஸ்ரீ உடையவர் விக்ரஹத்தையும் சேவித்துக் காட்டி அருள
இவரும் க்ருதார்த்தராய் ஸ்ரீ ஆழ்வானுடன் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளி பூர்வம் போலே வ்யாக்யானித்துக் கொண்டு இருக்கச் செய்தே –

ஸ்ரீ நாச்சியார் திருமொழி வ்யாக்யானத்தில் -நாறு நறும் பொழில் -என்கிற பாட்டு ப்ரஸ்துதமாக-
ஸ்ரீ ஆண்டாள் பிரார்த்தனையை நாம் தலைக்கட்ட வேணும் -என்று அப்போதே புறப்பட்டு ஸ்ரீ திருமால் இருஞ்சோலை திருமலைக்கு
எழுந்து அருளி ஸ்ரீ கோதை பிரார்த்தித்த படியே நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலும் பரிவுடன்
ஸ்ரீ நம்பிக்கு அமுது செய்வித்து அருளி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏற எழுந்து அருளி ஸ்ரீ வட பெரும் கோயிலுடையானையும் சேவித்து
ஸ்ரீ நாச்சியார் திருமாளிகைக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வார் திருமகளாரை அடி வணங்கி நிற்க
ஸ்ரீ கோதையும் ஸ்ரீ குல முனிவனைக் குறித்து தம் பிரார்த்தனையைத் தலைக் கட்டினத்துக்கு மிகவும் உகந்து –
நம் கோயில் அண்ணர் – என்று அர்ச்சக முகேன திரு நாமம் பிரசாதித்து தீர்த்த பிரசாதங்களை பிரசாதித்து விடை கொடுத்து அருள –
அங்கு இருந்து புறப்பட்டு ஸ்ரீ திரு நகரிக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆழ்வாரையும் சேவித்து தீர்த்த பிரசாதமும் பெற்று மீண்டு
பயண கதியில் ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளி ஸ்ரீ பாதத்து முதலிகளுக்கு தர்சனார்த்தம் பிரசாதித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார்

————————-

இப்படி எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்த
முதலிகளுடைய திருமுடி யடைவு எங்கனே என்னில்

ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஸ்ரீ மாட பூசி ஆழ்வான்
ஸ்ரீ சேட்டலூர் சிறியாழ்வான்
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ அரணபுரத்து ஆழ்வான்
ஸ்ரீ அளங்க நாட்டாழ்வான்
ஸ்ரீ நெய்யுண்டான் ஆழ்வான்
ஸ்ரீ உக்கலாழ்வான்
ஸ்ரீ கோமடத்தாழ்வான்
ஸ்ரீ வேதாந்தி யாழ்வான்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ பிள்ளை ஆழ்வான்
ஸ்ரீ மிளகு ஆழ்வான்
ஸ்ரீ காராஞ்சி ஆழ்வான்
ஸ்ரீ ஈயுண்ணி ஆழ்வான்
ஸ்ரீ கோயில் ஆழ்வான்
ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்
ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்

ஸ்ரீ முதலியாண்டான்
ஸ்ரீ பெரியாண்டான்
ஸ்ரீ சிறியாண்டான்
ஸ்ரீ அம்மங்கி யாண்டான்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ சோமாசி யாண்டான்
ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
ஸ்ரீ ஈஸ்வர ஆண்டான்
ஸ்ரீ ஈயுண்ணி யாண்டான்
ஸ்ரீ பிள்ளை யாண்டான்
ஸ்ரீ குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்
ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்
ஸ்ரீ சீயராண்டான்

ஸ்ரீ கிடாம்பி யாச்சான்
ஸ்ரீ சிறியாச்சான்
ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
ஸ்ரீ கொங்கில் யாச்சான்
ஸ்ரீ ஈச்சம்பாடி யாச்சான்
ஸ்ரீ என்னாச்சான்
ஸ்ரீ ஐயம்பிள்ளை யாச்சான்
ஸ்ரீ தூயபிள்ளை யாச்சான்
ஸ்ரீ ஆச்சி யாச்சான்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் (மளூர் )நம்பி
ஸ்ரீ சொட்டை நம்பி
ஸ்ரீ குரவை நம்பி
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி
ஸ்ரீ முடும்பை நம்பி
ஸ்ரீ பராங்குச நம்பி
ஸ்ரீ வில்லிபுத்தூர் நம்பி
ஸ்ரீ வடுக நம்பி
ஸ்ரீ திருக் குருகூர் நம்பி
ஸ்ரீ கொமாண்டூர் பிள்ளை நம்பி

ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பராங்குச பட்டர்
ஸ்ரீ வரம் தரும் பெரிய பெருமாள் பட்டர்
ஸ்ரீ அழகிய மணவாள பட்டர்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர்
ஸ்ரீ சிறுப்பள்ளி தேவ ராஜ பட்டர்
ஸ்ரீ கோவிந்த பட்டர்
ஸ்ரீ திருவரங்க பட்டர்
ஸ்ரீ நம்பியாரில் ஸ்ரீ ரெங்கராஜ பட்டர்
ஸ்ரீ உள்ளூரில் பெரிய பெருமாள் பட்டர்

ஸ்ரீ சட்டம் பள்ளிச் சீயர்
ஸ்ரீ ஈச்சம்பாடிச் சீயர்
ஸ்ரீ குலசேகர சீயர்
ஸ்ரீ திரு வெள்ளறைச் சீயர்
ஸ்ரீ ஆட் கொண்ட வில்லி சீயர்
ஸ்ரீ திரு மழிசைச் சீயர்
ஸ்ரீ திருவாய் மொழிச் சீயர்
ஸ்ரீ திரு நாராயண புரச் சீயர்
ஸ்ரீ சாளக்ராமச் சீயர்
ஸ்ரீ கோவிந்த சீயர்
ஸ்ரீ திருமாலிருஞ்சோலைச் சீயர்
ஸ்ரீ திருப் புட் குழிச் சீயர்
ஸ்ரீ திருக் குடந்தைச் சீயர்
ஸ்ரீ திரு முட்டஞ் சீயர்
ஸ்ரீ திருநின்றவூர்ச் சீயர்

ஸ்ரீ திரு நாராயண புரத்து அரையர்
ஸ்ரீ பெருமாள் கோயில் பெருமாள் அரையர்
ஸ்ரீ ராஜ நாராயண பெருமாள் அரையர்
ஸ்ரீ திருவரங்க மாளிகை அரையர்
ஸ்ரீ திருவாய் மொழி அரையர்
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்
ஸ்ரீ திருக் குறுங்குடி அரையர்
ஸ்ரீ திரு நகரி அரையர்
ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்
ஸ்ரீ திரு மாலிருஞ்சோலை அரையர்
ஸ்ரீ திரு வனந்த புரத்தரையர்
ஸ்ரீ ராஜ மகேந்திர பெருமாள் அரையர்
ஸ்ரீ பிள்ளை விழுப்பத்தூர் அரையர்
ஸ்ரீ திருவேங்கடத்து அரையர்

ஸ்ரீ ஆட் கொண்ட அம்மாள்
ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
ஸ்ரீ முடும்பை அம்மாள்
ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
ஸ்ரீ உக்கல் அம்மாள்
ஸ்ரீ சொட்டை அம்மாள்

ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள்
ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ பட்டினப் பெருமாள்

ஸ்ரீ திருமலை நல்லான்

ஸ்ரீ எம்பார்

ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார்

ஸ்ரீ பெரிய கோயில் வள்ளலார்

ஸ்ரீ அலங்கார வேங்கடவர்

ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ ஆர்க்காட்டுப் பிள்ளான்
ஸ்ரீ இராமானுசப் பிள்ளான்
ஸ்ரீ திரு நகரிப் பிள்ளான்

ஸ்ரீ கோமடத்து ஐயன்
ஸ்ரீ வைத்த மா நிதிச் சிறியப்பன்
ஸ்ரீ பெரியப்பன்

ஸ்ரீ அணி அரங்கத்து அமுதனார்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார்

ஸ்ரீ கொமாண்டூர் இளைய வல்லி

ஸ்ரீ கரும் தேவர்

ஸ்ரீ ஐம்பத்து இருவர்

ஸ்ரீ எம்பெருமானார் செல்வப்பிள்ளை

——————————–

ஸ்ரீ சாத்தாத முதலிகள்

ஸ்ரீ குணசேகரப் பெருமாள்
ஸ்ரீ பட்டர் பிரான் தாசர்
ஸ்ரீ பகை வில்லி தாசர்
ஸ்ரீ வில்லிபுத்தூர் தாசர்
ஸ்ரீ நாராயண தாசர்
ஸ்ரீ கோவர்த்தன தாசர்
ஸ்ரீ திருவழுதி வளநாடு தாசர்
ஸ்ரீ ராமானுஜ தாசர்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர்
ஸ்ரீ வண்டர்
ஸ்ரீ சுண்டர்
ஸ்ரீ ராமானுஜ வேளைக்காரர்

———————————-

ஸ்ரீ நத்தத்து முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ திருவரங்க தாசர்
ஸ்ரீ திருமாலிருஞ்சோலை தாசர்
ஸ்ரீ வானமாமலை தாசர்

——————————–

ஸ்ரீ கொங்கில் முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ அழகிய மணவாள தாசர்
ஸ்ரீ திரு வேங்கட தாசர்
ஸ்ரீ பேர் அருளாள தாசர்

————————————

ஸ்ரீ மழலைக் கூர்நத்தில் முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ யதிவர சூடாமணி தாசர் –
ஸ்ரீ யதிராஜ தாசர்
ஸ்ரீ இளையாழ்வார் தாசர்

—————————————–

ஸ்ரீ பாண்டிய நாட்டு முதலிகள் மூவர் திரு நாமம்

ஸ்ரீ மகிழ் அலங்கார தாசர்
ஸ்ரீ சடகோப தாசர்
ஸ்ரீ பிள்ளை திருவாய் மொழி தாசர்

——————————-

ஸ்ரீ ஸ்தானத்தாரில்

ஸ்ரீ சேநா நாத ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ வீர ஸூந்தர ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ ஜெகந்நாத ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ வீர ராகவ ப்ரஹ்ம ராயர்
ஸ்ரீ பிள்ளை யுறைந்தை யுடையார்
ஸ்ரீ திரு மஞ்சனம் எடுக்கும் தூய முனி வேழம்
ஸ்ரீ பண்டாரம் காவல் திருவரங்கத்து மாளிகையார்
ஸ்ரீ ஆண்டவர்
ஸ்ரீ அரியவர்

——————————-

ஸ்ரீ அம்மைமார்கள்

ஸ்ரீ திருவனந்த புரத்து அம்மை
ஸ்ரீ திரு வாட்டாற்று அம்மை
ஸ்ரீ திரு வண் பரிசாரத்து அம்மை
ஸ்ரீ மன்னனார் கோயில் போர் ஏற்று அம்மை
ஸ்ரீ திருநறையூர் அம்மை
ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அம்மை
ஸ்ரீ திருப்பதி ஸ்ரீ கார்யம் செய்யும் அம்மை
ஸ்ரீ ஆண்டாள் அம்மை
ஸ்ரீ நாயகத்தேவியார்
ஸ்ரீ துய்ய பெருந்தேவியார்
ஸ்ரீ பெரிய பெரும் தேவியார்
ஸ்ரீ சிறிய பெரும் தேவியார்
ஸ்ரீ பெரும் புதூர் திருவரங்கம் திருக் குடந்தை துய்ய வாயிரம்
ஸ்ரீ கொங்கில் பிராட்டியார்
ஸ்ரீ அத்துழாய் அம்மை
ஸ்ரீ அம்மங்கி அம்மை
ஸ்ரீ கூரத்தாண்டாள்
ஸ்ரீ தேவகிப் பிராட்டியார்
ஸ்ரீ யதிராஜ வல்லியார்
ஸ்ரீ பங்கயச் செல்வியார்
ஸ்ரீ பொன்னாச்சியார்
ஸ்ரீ இன்னிள வஞ்சியார்
ஸ்ரீ சூடிக் கொடுத்தாள்
ஸ்ரீ திருப் பாவை பாடினாள்

————————————-

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ஆஸ்ரயித்த முதலிகள் எழுபத்து நான்கு ஆச்சார்யர்கள் யார் என்னில்

ஸ்ரீ ஆளவந்தார் திருக் குமாரர் ஸ்ரீ சொட்டை நம்பி திருக் குமாரர் ஸ்ரீ என்னாச்சான் திருக் குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்
ஸ்ரீ பெரிய நம்பி திருக் குமாரர் ஸ்ரீ புண்டரீகர்
ஸ்ரீ திருக் கோஷ்டியூர் நம்பி திருக் குமாரர் ஸ்ரீ தெற்கு ஆழ்வான்
ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் ஸ்ரீ சுந்தரத் தோளுடையார்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருக் குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளையும் ஸ்ரீ திருமலை நம்பியும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் திருக் குமாரர் ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும்
ஸ்ரீ முதலியாண்டானும் அவர் திருக் குமாரரும் ஸ்ரீ கந்தாடை ஆண்டானும்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ கோமடத்தாழ்வான்
ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்

ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்
ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ மிளகு ஆழ்வான்
ஸ்ரீ நெய் யுண்ட ஆழ்வான்
ஸ்ரீ சேட்டலூர்ச் சிறியாழ்வான்
ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான்
ஸ்ரீ கோயில் ஆழ்வான்

ஸ்ரீ உக்கல் ஆழ்வான்
ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ எம்பார்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்
ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
ஸ்ரீ ஈச்சம்பாடி யாச்சான்
ஸ்ரீ கொங்கில் ஆச்சான்
ஸ்ரீ ஈச்சம் பாடி சீயர்
ஸ்ரீ திருமலை நல்லான்
ஸ்ரீ சட்டம் பள்ளிச் சீயர்

ஸ்ரீ திரு வெள்ளறை சீயர்
ஸ்ரீ ஆட் கொண்ட வில்லி சீயர்
ஸ்ரீ திரு நகரிப் பிள்ளான்
ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார்
ஸ்ரீ அலங்கார வேங்கடவர்
ஸ்ரீ நம்பி கருந்தேவர்
ஸ்ரீ சிறுப்பள்ளி தேவ ராஜ பட்டர்
ஸ்ரீ பிள்ளை யுறந்தை யுடையார்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
ஸ்ரீ பெரிய கோயில் வள்ளலார்

ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்
ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ சோமாசி ஆண்டான்
ஸ்ரீ சீயர் ஆண்டான்
ஸ்ரீ ஈஸ்வர ஆண்டான்
ஸ்ரீ ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான்

ஸ்ரீ பெரியாண்டான்
ஸ்ரீ சிறியாண்டான்
ஸ்ரீ குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்
ஸ்ரீ அம்மங்கி ஆண்டான்
ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் நம்பி
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி

ஸ்ரீ குரவை நம்பி
ஸ்ரீ முடும்பை நம்பி
ஸ்ரீ வடுக நம்பி
ஸ்ரீ வங்கிப்புரத்து நம்பி
ஸ்ரீ பராங்குச நம்பி
ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
ஸ்ரீ உக்கல் அம்மாள்
ஸ்ரீ சொட்டை அம்மாள்
ஸ்ரீ முடும்பை அம்மாள்

ஸ்ரீ கொமாண்டூர்ப் பிள்ளை
ஸ்ரீ கொமாண்டூர் இளைய வல்லி
ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள்
ஸ்ரீ ஆர்க்காட்டுப் பிள்ளான்

———————————————

சம்சேவிதஸ் சம்யமி சப்த சத்யா பீடைஸ் சதுஸ் சப்ததி பிஸ்ஸமேதை -அந்யைரநந்தைரபி விஷ்ணு பக்தை ராஸ்தே அதி ரங்கம்
யதி ஸார்வ பவ்ம–என்கிறபடியே எழுநூறு உத்தம ஆஸ்ரமிகளாலும்-எழுபத்து நாலு ஸிம்ஹாஸனஸ்த்ரான ஆச்சார்ய புருஷர்களாலும் –
அசங்க்யாதரான சாற்றின -சாத்தாத -முதலிகளாலும் -பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும்-முன்னூறு கொற்றி அம்மைமார்களாலும் –
எண்ணிறந்த ராஜாக்களாலும் -இப்படி அகிலராலும் ஸேவ்யமானராய் இவ்வைஸ்வர்யத்துடனே –
ஸ்ரீ ரெங்க நாதோ ஜெயது ஸ்ரீஸ் ச வர்த்ததாம் -என்று ஸ்ரீ நம்பெருமாளை மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு சேவித்து இருந்தார் –

இப்படி இருக்கிற ஸ்ரீ உடையவர் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ணும் முதலிகள்
ஸ்ரீ கூரத்தாழ்வானும் -ஸ்ரீ முதலியாண்டானும் -ஸ்ரீ நடாதூர் ஆழ்வானும் -ஸ்ரீ பட்ட வர்க்கமும் ஸ்ரீ பாஷ்யத்துக்கு உசாத் துணையாக இருப்பார்கள் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவாராதனம் செய்து அருளுவார்
ஸ்ரீ கிடாம்பி பெருமாளும் ஸ்ரீ கிடாம்பி ஆச்சானும் திரு மடைப்பள்ளிக்கு கடவராய் இருப்பார்கள்
ஸ்ரீ வடுக நம்பி எண்ணெய் காப்பு சாத்தி அருளுவார்
ஸ்ரீ கோமடத்து சிறி யாழ்வான் கலப்பானையையும் ஸ்ரீ பாத ரக்ஷையையும் எடுப்பர்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் கருவூலம் நோக்குவர்
அம்மங்கி அம்மாள் பால் அமுது காய்ச்சுவர்
ஸ்ரீ உக்கல் ஆழ்வான் பிரசாத காலம் எடுப்பர்
ஸ்ரீ உக்கல் அம்மாள் திருவால வட்டம் பரிமாறுவர்
ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான் திருக் கைச் செம்பு பிடிப்பர்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறி யாண்டான் திரு மடத்துக்கு அமுதுபடி கறியமுது நெய்யமுது முதலானவை நடத்திப் போருவர்
ஸ்ரீ தூய முனி வேழம் திரு மஞ்சனம் எடுப்பர்
ஸ்ரீ திருவரங்க மாளிகையார் ஸ்ரீ பண்டாரம் நோக்குவார் –
ஸ்ரீ வண்டரும் சுண்டரும் கைக்காயிரம் பொன்னுக்கு ராஜ சேவை பண்ணி திரு மடத்துக்கு திருக்கை வழக்காக்கி அருள்வார்கள்
ஸ்ரீ ராமானுஜ வேளைக்காரர் திரு மேனிக் காவலாய்ப் போருவர்
ஸ்ரீ அளங்க நாட்டாழ்வான் பிரதிபக்ஷ நிராசனம் பண்ணிப் போருவர் —

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் – -ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் —

February 19, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ திரு நாராயண புரம் விருத்தாந்தம் —

மற்றை நாள் மேற்கே வஹ்நி புஷ்கரணியாகிற கிராமத்து ஏற எழுந்து அருளி அங்கே சிறிது காலம் எழுந்து அருளி இருந்து –
அங்கு நின்றும் ஸ்ரீ மிரிளா புரி சாளக்கிராமத்துக்கு ஏற எழுந்து அருள ஊர் அடைய ப்ரசன்ன விரோதிகள் ஆகையால்
ஸ்ரீ உடையவரை அநாதரித்து இருக்க ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ முதலியாண்டானை அழைத்து இவ்வூரார் நீர் முகக்கும் துறையிலே
நீர் உமது ஸ்ரீ பாதத்தை நீட்டிக் கொண்டு இரும் என்று நியமித்து அருள ஸ்ரீ ஆண்டானும் அப்படியே செய்து அருள
அவ்வூரார் இவர் ஸ்ரீ பாத வைபவத்தாலே நிவ்ருத்த அஹங்காரராய் மற்றை நாளே தெளிந்து வந்து ஸ்ரீ உடையவர்
திருவடிகளிலே ஆஸ்ரயிக்க அத்தீர்த்த பிரபாவத்தை இட்டு இன்று முதல் இவ்வூர் ஸ்ரீ சாளக்கிராமம் -என்று அருளிச் செய்தார் –
அங்கே ஸ்ரீ வடுக நம்பியை ஸ்வ பாதாச்சாயா பன்னராம் படி விசேஷ கடாக்ஷம் செய்து அருளி
அவருக்கு தர்சன அர்த்தங்கள் பிரசாதித்துக் கொண்டு ஸ்ரீ சிங்கர் கோயிலிலே சிறிது நாள் எழுந்து இருந்து
ஸ்ரீ விஷ்ணு வைஷ்ணவ த்வேஷியான சோழன் கிருமி கண்டனாய் நசிக்கும்படியாக அபிசாரம் பண்ணி
அங்கு நின்றும் ஸ்ரீ தொண்டனூர் ஏற எழுந்து அருளினார் –

அங்கே அத்தேசத்துக்கு அதிபதியான விட்டல தேவ ராயன் மகள் பிசாசாவிஷ்டையாய் இருக்க –
அவனும் மந்திரவாதிகள் பலரையும் கொண்டு தீர்க்கத் தேடின இடத்திலும் தீராத படியால் துக்கிதனாய் இருக்க
தத் பத்னியும் நிர்வாணமாக ஓடித்திரிகிற தன் பெண்ணைக் கண்டு மிகவும் வ்யாகுலப்பட்டு இருக்கும் அளவில்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி உபாதான அர்த்தமாக ராஜ க்ருஹத்து ஏற எழுந்து அருளினவர் துக்கிதையான ராஜ பத்னியைக் கண்டு
துக்க ஹேது என்ன என்று கேட்டு அருள -அவளும் தத் காரணத்தைச் சொல்ல -ஸ்ரீ நம்பியும் கேட்டு அருளி –
நம் ஆச்சார்யர் ஸ்ரீ எம்பெருமானார் எழுந்து அருளினார் அவர் கடாக்ஷத்தால் இப்பேய் காடு ஏறிப்போம் -என்று
ப்ரஹ்ம ரஜஸ்ஸின் கதையை ச விஸ்தாரமாக அவளுக்கு அருளிச் செய்ய -அவளும் கேட்டு ஆச்சர்யப்பட்டு தன் பர்த்தாவுக்கு அறிவிக்க –
அவனும் ஸ்ரீ உடையவர் இப்பேயை விடுவிக்கில் அவரே நமக்கு ஆச்சார்யர் -அவர் திருவடிகளில் ஆஸ்ரயிக்கக் கடவேன் -என்ன

அவ்வளவில் அவன் ஸ்வ குருக்களுக்கு விருந்து இடத் தேடி -இவளும் தன் பர்த்தாவைக் குறித்து
நீர் அங்க ஹீனர் என்று அவர்கள் இங்கே வாரார்கள் -சொல்லாதே கொள்ளும் என்ன -அவனும் அவர்கள் வாராது இருப்பார்களோ என்று
இவள் வார்த்தையை அதிக்ரமித்துச் சொல்லிப் போக விட -அவர்களும் முன்பு டில்லீஸ்வரனான துருஷ்கன் இவனை ஆக்ரமித்துப்
பிடித்துக் கொண்டு போய்ப் பட்டார்ஹன் அன்றிக்கே போம்படி ஒரு அங்குலிச்சேதம் பண்ண –
அத்தாலே விட்டலதேவராயன் ப்ரஸித்தமாகையாலே ஹீனாங்கன் அகத்தே புஜிக்க ஒண்ணாது என்று தவிர்ந்து விட்டார்கள் –

அது கண்டு அவன் அவர்கள் இடத்தே அதி குபிதனாய் அவர்களை திரஸ்கரித்து இருக்கும் அளவில்
அவனுடைய ஸ்திரீயும் அவனைக் குறித்து ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாகாதோ –
இவர்களால் என்ன பிரயோஜனம் உண்டு என்ன -அவனும் இசைந்து ஸ்ரீ உடையவரை ஸ்வ க்ருஹத்தே ஏற எழுந்து அருள வேணும்
என்று பிரார்த்திக்க ஸ்ரீ ராமானுசனும் நாம் ராஜதானியை மிதிக்கக் கடவோம் அல்லோம் -என்று அருளிச் செய்ய –
அவ்வளவில் ஸ்ரீ தொண்டனூர் நம்பி முதலான முதலிகள் இவனை விசேஷ கடாக்ஷம் செய்து அருளினால் தரிசனத்துக்கு
பஹு உபகாரம் உண்டு என்று பஹுஸா வேண்டிக் கொள்ள –
ஸ்ரீ உடையவரும் சம்மதித்து அவன் அகத்து ஏற எழுந்து அருளின அளவிலே -அவனும் அதி ஸந்துஷ்டனாய்த் திருவடிகளில்
சாஷ்டாங்க பிரணாமம் பண்ணி ச விநயனாய் நிற்க முதலிகளும் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தத்தை அவன் புத்ரிக்குப் பிரசாதித்து
தத் தீர்த்தாலே ப்ரோக்ஷிக்க அவளுடைய சித்தப்ரமம் போய்த் தெளிந்து வந்து சேலையும் உடுத்து ஸ்ரீ உடையவரையும் சேவிக்க –
இத்தை விட்டல தேவராயன் கண்டு அத்தியாச்சார்யப் பட்டுத் தத் க்ஷணமே ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயிக்க அவனையும் இரங்கி அருளித்
திருவடிகளுக்கு அந்தரங்கனாம் படி கடாக்ஷித்து அருளினார்

இப்படி அவனையும் ஸ்வ வைபவத்தால் சிஷ்யனாக்கிக் கொண்டு அவனுக்கு விஷ்ணு வர்த்தன ராயன் என்று திரு நாமம் பிரசாதித்து அருளி
அதி ஸந்துஷ்டராய் நிற்க -அவ்வளவில் -எங்கள் சிஷ்யனை இங்கனே மயக்கி நீர் சிஷ்யன் ஆக்கிக் கொள்ளும் போது எங்களை ஜெயித்து
அன்றோ செய்யலாவது -என்று பன்னீராயிரம் ஷபனர் ஏக காலத்திலே வந்து தர்க்கிக்கக் தொடங்க –
ஸ்ரீ உடையவரும் மின்னலுக்கு அஞ்சுமவர்கள் இந்தியன் கையில் அகப்பட்டால் போலேயும் -தேளுக்கு அஞ்சி பாம்பின் வாயில் அகப்பட்டால்
போலேயும் ஆச்சுதே இனி என் செய்யக் கடவோம் என்று விசாரக் ராந்தராய் இருக்க –
ஸ்ரீ தொண்டனூர் நம்பி முதலான முதலிகள் எல்லாரும் தேவரீருடைய ப்ரபாவத்தை எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி வெளியிட வேணும்
என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் இனி நம்மை வெளிடாது இருக்க ஒண்ணாது என்று பார்த்து
ஒரு திரு மண்டபத்திலே திருத் திரையை வளைத்துக் கொண்டு உள்ளே எழுந்து அருளி இருந்து சஹஸ்ர பணா மண்டலமுடைய
திரு அனந்த ஆழ்வானாய் ஓர் ஒருத்தருக்கும் அநேக பிரகாரமாக ப்ரத்யுத்தரம் அருளிச் செய்து அவர்களை வாய் மூடுவித்து ஜெயிக்க
அவர்களிலே சிலர் அதி விஸ்மிதராய் வந்து திருவடிகளிலே ஆஸ்ரயிக்கத் தேட அவர்களை அடிமை கொண்டு
ஸ்ரீ வைஷ்ணவர்களாம் படி பண்ணி விசேஷ கடாக்ஷம் செய்து அருளித் தம் திவ்ய சக்தியைப் ப்ரகடிப்பிக்க-
இத்தைக் கண்டு போய் சிலர் ராஜ்யாதிபனான விஷ்ணு வர்த்தன ராயனுக்குச் சொல்ல -அத்தைக் கேட்டு விஷ்ணு வர்த்தனனும்
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே அதி பிரவணனாய் இரா நிற்க அங்குத்தையில் ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ தொண்டனூர் நம்பி அபிமானித்து
இருக்கையாலே அவருக்கு ஸ்ரீ நம்பி தம்பிரான் -என்ற திரு நாமம் சாத்தி உகந்து அருளி ஸ்ரீ சிங்கர் கோயிலிலே எழுந்து அருளி
வேதாந்த வ்யாக்யானம் செய்து கொண்டு இருக்கும் காலத்திலே

திருக்கையில் திருமண் மாண்டு -சாத்துகைக்கு திருமண் பெற்றிலோமே என்று சிந்தித்துக் கொண்டு கண் வளர்ந்து வளர
அன்று ராத்ரி ஸ்ரீ திரு நாராயணப் பெருமாளும் அணித்தாக ஸ்ரீ யதுகிரியிலே உம்முடைய வரவு பார்த்துக் கொண்டு நில்லா நின்றோம்
உம் திரு உள்ளம் போன்ற திரு மண்ணும் இங்கே உண்டு -சடக்கெனப் புறப்பட்டு வாரீர் என்று ஸ்வப்னம் காட்டி அருள
ஸ்ரீ உடையவர் விடிவோரை ப்ரீதராய் எழுந்து இருந்து இத்தை முதலிகளுக்கு அருளிச் செய்து விஷ்ணு வர்த்தன ராயரையும்
அழைப்பித்துத் தாம் ஸ்வப்னம் கண்டபடியை அருளிச் செய்ய அவனும் கேட்டு ப்ரசன்னனாய் சம்மதித்துக் காடு வெட்டுவித்துக் கொண்டு
ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்துக் கொண்டு செல்ல -பஹு தான்ய சம்வத்சரம் -தை மாசத்தில் -ஸ்ரீ எம்பெருமானாரும் –
செம் பொன் யது கிரி ஏறி வேத புஷ்கரணி கரையிலே எழுந்து அருளி -பரிதான சிலாந் த்ருஷ்ட்வா பிரணமந்தி த்விஜோத்தமா -என்கிறபடியே
பரிதான சிலையும் சேவித்து அங்கே நீராடி
வேத புஷ்கரணீ தீரே விசாலே சசிலா தலே பரிதாநம் ச ஜக்ராஹ காஷாயம் பரம புமான் -என்கிற தத்தாத்ரேயரைத் போலே
தாமும் மீளவும் காஷாயம் தரித்து அருளி முன்னே நடந்து திரு நாராயணப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிற இடத்தை தேடிக் காணாமல் –
பகவத் பிரபாவத்துக்குக் குறைவாக என் செய்தோம் என்று திரு உள்ளம் கலங்கி அயர்ந்து கண் வளர்ந்து அருள அவ்வளவில்

திரு நாராயணப் பெருமாளும் இவர் கனவில் எழுந்து அருளி ஸ்ரீ கல்யாண சரஸ்ஸிலே தென்மேலை மூலையிலே செண்பகச் சோலைக்கு அருகே
திரு மகிழுக்குத் தேன் பார்ஸ்வத்திலே வளர்ந்த திருத் துழாயின் கீழே பெரிய புற்றுக்குள்ளே இரா நின்றோம்
திருமணும் அந்தக் கல்யாண சரஸ்ஸூக்கு வடமேலை மூலையிலே –
ஸ்வேத த்வீபாத் ககேசேந ஸூத்தம் ருத் த்ரவ்ய மாஹ்ருதம் –யாதவாதரவ் விநிஷிப்தம் அஷ யந்தன்ம மாஜ்ஞாயா -என்கிறபடியே
பெரிய திருவடியாலே ஸ்வேத த்வீபத்தின் நின்றும் கொணர்ந்து ஸ்ரீ யது கிரியிலே நிக்ஷேபிக்கப் பட்டு மத் ப்ரபாவத்தால் அக்ஷயமாக
சேமிப்பது இரா நின்றது -நீர் கிலேசிப்பான் என் -நாம் உமக்கு அடையாளமாக இவ்விடம் தொடங்கி நாம் இருக்கும் புற்று அளவாக முறித்திட்ட
திருத் துழாய்க் கொழுந்தே குறியாக வாரீர் என்று ப்ரத்யக்ஷ சாமானகாரமாக ஸ்வப்ன முகேன அருளிச் செய்ய –
ஸ்ரீ உடையவரும் உகந்து உணர்ந்து எழுந்து இருந்து முறித்திட்ட திருத் துழாய் கொழுந்தே குறியாக ஸ்ரீ கல்யாண சரஸ் கரை யிலே
எழுந்து அருளி திரு முகப்படியே சம்பகவன சமீபத்தில் கப்பும் கவருமாய்ப் பணைத்துக் கொழுந்து விட்ட திருத் துழாய் மரத்தைக் கண்டு
களித்து ஆனந்தத்துடன் பலகாலும் தண்டன் இட்டு அத்திருத் துழாய் மரத்தின் மண் காப்பு நீக்கின அளவிலே –
கமபியது கிரிஸ் தங்காந்தி சிந்துந் ததர்ச -என்கிறபடியே புற்றினுள்ளே ஸ்ரீ பொற் கோயில் தோன்றிய பின்பு

மற்று அங்கு இனிது அமர்ந்த மாயவனுடைய நீல சிகா மணி தோன்ற சக வருஷம் ஆயிரத்துக்கும் மேல்
பன்னிரண்டு சென்ற வர்த்தமான பஹு தான்ய வர்ஷம் தை மாசம் ஸூக்ல பக்ஷ சதுர்த்தசியும் வியாழக் கிழமையும் கூடின
புனர்பூச நக்ஷத்ரத்திலே திரு நாரணன் உருவம் கண்டு நலம் மிகுத்துக் கொந்தளித்து எல்லாரும் குணாலக் கூத்தடித்து
மங்கள சங்க மிருதங்க பட ஹாத்யகில வாத்ய ஜய சப்த கோஷம் பண்ணி ராஜாவையும் அழைத்துக் காட்டி அருளிப்
பாலாலே திருமஞ்சனம் பண்ணி -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக் கண்டேன் மீண்டு அவனை
மெய்யே மிகக் கண்டேன் -என்கிறபடியே திரு நாராயணப் பெருமாளைத் திருவடி முதல் திருமுடி அளவும் -கண்ணாரக் கண்டு
அனுபவித்துத் தம் திருக்கையாலே மூன்று நாள் திரு ஆராதனம் செய்து அருளி மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று
பரமாச்சார்யரான ஸ்ரீ பராங்குசர் தமக்குத் தாம் அத்யந்த அபிமத சிஷ்யர் ஆகையாலும் –
தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் ஆகையாலும்
பித்ரு தனத்தைப் புத்ரன் விநியோகம் கொள்ளுமா போலே ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற ஸூத்ர புருஷார்த்தங்களை இகழ்ந்து
காற் கடைக் கொண்டு திரு நாரணன் தாளே உபாய உபேயம் என்று நிஷ்கர்ஷிக்கிற
ஒரு நாயகத் திருவாய் மொழியைத் திருநாராணனுக்கு சமர்ப்பித்து அருளினார் –

பின்பு ஸ்ரீ கல்யாண சரஸ்ஸின் வடமேலை மூலையிலே தம் த்ரிதண்டாலே கீற பாலாறு போலே பொங்கிக் கிளம்புகிற
திருமண் குவைகளைக் கண்டு மண்டுகிற ஆனந்த அதிசயேந அத்திருமண் கொண்டு பன்னிரண்டு திரு நாமம் சாத்தி அருளி
த்ரிதண்ட மண்டித கர புண்டரீகராய் விளங்கி அருளி -காடு வெட்டி -ஊரும் கோயிலும் சமைப்பித்துத் திரு நாராயணப் பெருமாளுக்கு
ஸ்ரீ பாஞ்சராத்ர சாத்விக சம்ஹிதையாலே ப்ரோஷணாதிகளை ஸ்ரீ ரெங்கராஜ பட்டர் திருக்கையால் செய்வித்து அருளி –
திரு நாரணற்கு நித்ய உத்சவ பக்ஷ உத்சவ மாச உத்சவ சம்வஸ்த்ர உத்சவங்கள் எல்லாம் மஹோத்ஸவமாக நடத்துகைக்கு
உத்சவ பேரம் இல்லையே என்று மிகவும் வ்யாகுலித சித்தராய் திருக் கண் வளர்ந்து அருள –
அப்போது இவர் ஸ்வப்னத்திலே திரு நாரணப் பெருமாள் எழுந்து அருளி -நம் உத்சவ பேரமான ஸ்ரீ ராம பிரியர்
இப்போது டில்லி ஏற எழுந்து அருளி துருஷ்க ராஜ க்ருஹத்திலே லீலை கொண்டாடி எழுந்து அருளி இருக்கிறார் –
அங்கு ஏறப் போய் எழுந்து அருளுவித்துக் கொண்டு வாரீர் என்று திரு உள்ளமாய் அருள –

ஸ்ரீ உடையவரும் பிராத காலமானவாறே எழுந்து இருந்து ஸ்வப்னத்தை முதலிகளுடன் ஆலோசித்துக் கொண்டு பயணகதியில் த்வரித்து
டில்லி ஏற எழுந்து அருளினவாறே டில்லி புரீந்தரரான ராஜாவும் இவரைக் கண்டு ப்ரத்யுத்தான ப்ரணதி பூர்வகமாக பஹு உபகாரம் செய்து
எழுந்து அருளின கார்யம் அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் எங்கள் குல தெய்வமான ஸ்ரீ ராமபிரியர் இங்கே எழுந்து அருளி இருக்கிறார் -அவரைத்தர வேணும் என்று அபேக்ஷிக்க
ராஜாவும் அப்படியே செய்கிறோம் என்று கொள்ளை கொண்டு சிறை வைத்த எம்பெருமான்கள் சிறைச் சாலையை சோதித்துக் கொள்ளீர்
என்று அப்பணை இட்டு விட இவரும் அங்கு ஏற எழுந்து அருளி சோதித்து -திரு நாரணர் வடிவுக்கு ஒத்து இராமையாலே
இத்தேவர்கள் ஒருவரும் அன்று என்று ஸ்ரீ ராம பிரியரை அவர்கள் காணாமையாலே முசித்துக் கிடக்க அன்று இரவில்
ஸ்ரீ ராம பிரியர் இவர் ஸ்வப்னத்திலே எழுந்து அருளி நீர் முசிப்பான் என் -நாம் அவன் மகளாலே பூஜை கொண்டு
அவள் சஜ்ஜா க்ருஹத்திலே இரா நின்றோம் -நம்மைக் கொண்டு போகும்படியாக அங்கே வாரீர் என்று அருளிச் செய்ய

ஸ்ரீ உடையவரும் இச் செய்தியை ராஜாவுக்கு அறிவிக்க அவனும் இப்படி உம்முடைய பக்கல் வ்யாமுக்தராகிறவர் தாமே வரக் கடவர் என்ன –
இவரும் அவரைக் கண்டு திருவடி தொழுதல் ஆகாதோ என்ன -அப்படியே ஆகிறது என்று இவரை அவனும் தன் மகள் சஜ்ஜா க்ருஹத்து ஏற
எழுந்து அருளுவித்துக் கொண்டு போக அங்கே ஸ்ரீ ராமபிரியரும் ஸ்ரீ உடையவரைக் கண்டு ஆஸ்ரித வாத்சல்யம் தோற்ற –
இட்ட சட்டையும் கட்டின சிறுச் சதங்கையும் இட்ட கஸ்தூரி திரு நாமமும் முடித்த மை வண்ண நறும் குஞ்சியும் –
செம் பொற் சதங்கைகள் சல சல என்று ஒலிக்க அகிலரும் காணும்படி வந்து ஸ்ரீ உடையவர் திருமடியிலே இருக்க
ஸ்ரீ உடையவரும் ஆனந்த அஸ்ருக்கள் பனிப்ப ஆனந்த ஏக ஆர்ணவ அந்தர் நிமக்நராய் புளகித நிகில அங்கராய் மார்பும் தோளும் பூரித்து –
என்னுடைய செல்வப் பிள்ளையோ என்று எடுத்து அணைத்துக் கொண்டு அருளினார் –
அன்று முதல் ஸ்ரீ ராம பிரியர்க்கு ஸ்ரீ செல்வப்பிள்ளை என்று திருநாமம் ஆய்த்து –
இத்தைக் கண்ட ராஜாவும் அத்யாச்சார்ய யுக்தனாய் அவர் திருவடிகளிலே விழுந்து சேவித்து அநேக விதமாக சத்கரித்து
பஹு உபசார ஸஹிதமாக சம்பத் குமாரரை யதி ஸார்வ பவ்மர்க்கு எழுந்து அருளுவித்துக் கொடுத்து அனுப்பினான்

ஸ்ரீ உடையவரும் அங்கு நின்றும் புறப்பட்டு இவரை எழுந்து அருளுவித்துக் கொண்டு த்வரித்து பயணகதியிலே
ஸ்ரீ யாதவாத்ரிக்கு எழுந்து அருளி சர்வரும் ஸ்ரீ யதிராஜகுமாரர் என்னும்படி விசேஷித்து புத்ர வாத்சல்யம் பண்ணி அபிமானித்து அருளி
ப்ரோஷணாதி பிரதிஷ்டா புரஸ் ஸரமாகத் திரு நாரணருடன் சேர்த்துத் திரு நாராயணப் பெருமாளுடைய திவ்ய உத்சவ கர்த்தாவாக்கி
நித்ய பக்ஷ மாச அயன சம்வஸ்த்ர உத்ஸவாதி மஹோத்சவத் திரு நாள்களும் நடத்தி அருளித் தீர்த்த பிரசாதமும் பெற்று
ஸ்ரீ யதிராஜ மடமும் கட்டி வைத்து ஐம்பத்து இருவர்கட்க்கு அன்பான ஊழிய கைங்கர்யத்தையும் கல்பித்து அருளி
ஐம்பத்து இருவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று சமுதாயத் திரு நாமமும் பிரத்யேகமாகத் தாஸ்ய நாமமும் ப்ரசாதித்து
அங்கே அவர்களை பிரதிஷ்டிப்பித்து குறைவறத் திரு ஆராதனமும் நடத்திக் கொண்டு இருக்க ஒரு நாள் வரையிலே
ஸ்ரீ பாஷ்யகாரர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் உள்ள ஆச்சார்யர்கள் உடனேயும் சீயர்கள் உடனேயும் ஐம்பத்து இவர்கள் உடனேயும்
சாற்றாத சாற்றின முதலிகள் உடனேயும் கொற்றி அம்மை மார்கள் உடனேயும் திருமேனிக் காவல் திரு வேணைக்காரர் உடனேயும்
பெரும் கூட்டத் திரு ஓலக்கமாக ஸ்ரீ ராமானுசனில் எழுந்து அருளி இருந்து –
திரு நாராயண புரம் என்று அந்நகரத்துக்கு திரு நாமம் சாத்தி அருளி
இத்திரு நாராயண புரத்திலே நித்ய வாசம் பண்ணுமவர்களுக்குப் பெரியோர்க்கும் நமக்கும் உண்டான
ஸ்ரீ பரமபதமும் ஆச்சார்ய கைங்கர்யமும் உண்டாம் -என்று அருளிச் செய்து அருளினார் –

இத் திரு மலை க்ருத யுகத்தில் சனத் குமாரர் ஸத்ய லோகத்தில் நின்றும் ஆனந்த மய திவ்ய விமானத்தோடே எழுந்து
அருளுவித்துக் கொண்டு வந்து ஸ்ரீ திரு நாராயணனை இங்கே பிரதிஷ்டிப்பிக்கையாலே ஸ்ரீ நாராயணாத்ரி என்றும்
த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயர் நாலு வேத புருஷர்களையும் சிஷ்யராக்கிக் கொண்டு வந்து வேத புஷ்கரணி கரையிலே
சதா வேத அத்யயன நிரதராய் இருக்கையாலே வேதாத்ரி என்றும் –
த்வாபர யுகத்திலே நம்பி மூத்த பிரானாலும் ஸ்ரீ கிருஷ்ணனாலும் ஆராதிக்கப் படுக்கையாலே யாதவாத்ரி என்றும் –
யுகே கலவ் து ஸம்ப்ராப்தே யதி ராஜேந பூஜநாத் -யதிசைல இதி ப்ரோக்தம் நாமதே யாந்த ரங்கிரே –என்கிறபடியே
கலி யுகத்திலே ஸ்ரீ எம்பெருமானார் எழுந்து அருளி ஜீர்ண உத்தாரணம் பண்ணி அபிமானிக்கையாலே –
யதி சைலம் -என்று ப்ரஸித்தமாய்த்து –

அநந்தரம் பத்ம கிரியில் சென்று புத்த சமயங்களை வென்று என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் எங்கனம் ஆவர்களே-
என்னும்படி -அவர்களைக் கற் காணந் தன்னில் அரைப்பித்து நிஸ் சேஷமாக நிரசித்து நிஷ் கண்டகம் ஆக்கி அருளி
ஸ்ரீ பாஷ்யமும் வ்யாக்யானித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாராயணப் பெருமாள் திருவடிகளில் பன்னிரண்டு சம்வத்சரம்
வாழ்ந்து அருளுகிற காலத்தில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ கோயிலில் நின்றும் எழுந்து அருளி
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே சேவித்து இருக்க –
இவரும் ஸ்ரீ பெரிய பெருமாளும் பெரும் திருச் செல்வமும் செய்கிறபடி என் என்று கேட்டு அருள
அவரும் தேவரீர் இல்லாத குறை ஓன்று ஒழிய மற்று ஒரு குறையும் இல்லை -என்ன
இவரும் சோழன் பக்கல் எழுந்து அருளின ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பெரிய நம்பியும் செய்தபடி என் என்று கேட்டு அருள –

ஸ்ரீ வைஷ்ணவரும் -ஸ்ரீ கோயிலில் நின்றும் ஸ்ரீ கூரத்தாழ்வானையும் ஸ்ரீ பெரிய நம்பியையும் ராஜ மனுஷ்யர் அழைத்துக் கொண்டு
போய்ச் சோழன் முன்னே விட அவனும் இவர்களைப் பார்த்து -சிவாத் பரதரம் நாஸ்தி -என்று ஓலைக்கு
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணாதிகளாலே பஹு பிரகாரமாக ஸ்ரீ மன் நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -ஜகத் காரண பூதன் –
த்யேயனானவனும் அவனே -சர்க்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவும் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் அவனுக்குப் புத்ர பவ்த்ராதிகளாய்
நியமனத்தில் இருக்குமவர்கள் -அவ்வளவும் அன்றியே
ஏக ப்ராஸீ சரத்பாத மந்ய பிராஷாள யந்முதா -அபரோஅதீ தரந் மூர்த்நா கோ அதிகஸ் தேஷு புண்யதாம் -என்று
திருவடிகளை நீட்டினவன் ஒருவன் -கமண்ட லூதகத்தாலே பக்தி புரஸ்சரமாகத் திருவடிகளை விளக்கினவன் ஒருவன் –
தத் தீர்த்தத்தை ப்ரீதியோடே சிரஸா வஹித்தவன் ஒருவன் -இவர்களில் பெரியவன் ஆர் என்று நீயே விசாரித்துக் காணாய் என்ன –
அவனும் இசையாது இருக்க -இவரும் இம் மாத்திரமேயோ –

யச்சவ் ச நிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோதகேந தீர்த்தேந மூர்த்நி வித்ருதேந சிவஸ் சிவோ அபூத்-என்று ஸ்ரீ த்ரிவிக்ரம பாத ஜல சங்கத்தால்
கபாலித்தவம் போய் சிவத்தவம் உண்டானவன் இறே இவன் என்று அருளிச் செய்ய –
சோழனும் அது கேட்டு அதி க்ருத்தனாய்-நீர் பெரிய வித்வான் ஆகையால் உமக்கு வேண்டியபடி எல்லாம் சொல்ல வல்லீர் -அங்கன் அன்று
நான் சொன்னபடி -சிவாத் பரதரம் நாஸ்தி -என்று ஓலைக்கு எழுத்திடும் என்று ஓலையைக் கையில் கொடுத்து கனக்க நிர்பந்திக்க
ஸ்ரீ கூரத்தாழ்வானும் தம்முடைய த்ருட அத்யவசாயமாம் படியே -சிவாத் பரதரம் நாஸ்தி த்ரோணம் அஸ்தித பரம் – என்று ஓலைக்கு
எழுதிட்டு அருளினார் -சோழனும் இவர் இப்படி பரிஹஸித்து ஓலைக்கு ஒப்பம் இட்டபடி கண்டு அத்யந்த கோபாக்ர சித்தனாய் –
ஸ்ரீ பெரிய நம்பியை அழைத்து நீர் எழுத்திடும் என்ன -அவரும் ஸ்ரீ மன் நாராயணனே பரன் -என்று பஹு முகமாக அருளிச் செய்ய –
ஸ்ரீ ஆழ்வானையும் ஸ்ரீ நம்பியையும் நேத்ர உத்பாடனம் பண்ணச் சொல்ல -அவ்வளவில் ஸ்ரீ கூரத்தாழ்வானும் சோழனைக் குறித்து –
நீ மஹா வீர சைவன் ஆகையால் உன்னைப் பார்த்த கண்கள் எனக்கு ஆகாது என்று தம்முடைய திவ்ய நகங்களால் கீறிக்
கண்ணை வாங்கிப் பொகட –

ராஜ மநுஷ்யர்களும் ஸ்ரீ பெரிய நம்பியைப் பிடித்துக் கொண்டு போய் அவன் சொன்னால் போலே செய்து படை வீட்டில் நின்றும்
புறப்பட விட -ஸ்ரீ ஆழ்வானும் தரிசனத்துக்கு தர்சனம் கொடுக்கப் பெற்றோமே என்று ப்ரீதராய் இருக்க –
ஸ்ரீ பெரிய நம்பியும் வ்ருத்தராகையாலே -அவ்வேதனை பொறுக்க மாட்டாமல் அங்கே ஒரு கொல்லைத் தலை மாட்டிலே
ஸ்ரீ ஆழ்வான் திருமடியில் திரு முடியும் -ஸ்ரீ அத்துழாய் திரு மடியிலே திருவடிகளுமாய் -இளைத்துக் கண் வளர்ந்து அருள –
ஸ்ரீ நம்பியை ஆபத் தசையில் ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ அத்துழாயும் -அங்கு நின்றும் ஸ்ரீ கோயில் ஏறப் போனாலோ -என்ன
ஸ்ரீ நம்பியும் -நாம் அங்கே போய் பிரக்ருதியை விடில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ நம்பிக்கும் உட்படத் திருவடி சாரும் போது
ஸ்ரீ கோயில் ஏறப் போக வேண்டிற்று இல்லையோ என்று சங்கிப்பர்கள் என்று அருளிச் செய்து –
அடியிலே ஆச்சார்யர் கிருபை பண்ணினத்துக்கு ஸ்ரீ பரமபதம் சித்தம் என்று ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை த்யானித்துக் கொண்டு
அங்கே ஸ்ரீ திருநாட்டுக்கு எழுந்து அருளினார் -ஆகையால் பிரபன்னனுக்கு அந்திம தேச நியதி இல்லை என்றபடி –

பின்பு அங்கே அநாத பிரேத சம்ஸ்காரம் பண்ணிக் கொண்டு திரிவார் சிலர் வந்து -இவருக்கும் அப்படி பண்ணக் கடவோம் என்று
தங்கள் சம்ஸ்காரம் செய்வதாக உத்யோகிக்க ஸ்ரீ ஆழ்வானும் அத்யாவசாயம் குலையாமல் -வாருங்கோள் மாணிகாள்-
ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு கிஞ்சித் கரிக்க இருக்க ஸ்ரீ வைஷ்ணவனுமாய் அறவையுமாய் இருப்பவனை
நீங்கள் எங்கே தேடுவுதிகோள்-என்று அவர்களை உபேக்ஷித்து விட்டார் -பின்பு சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்ரீ பெரிய நம்பியை சமஸ்கரித்துப் பள்ளிப் படுத்தி ஸ்ரீ ஆழ்வானை ஒரு கட்டணத்தில் எழுந்து அருளுவித்துக் கொண்டு
ராத்திரியிலே ஒருவரும் காணாமல் ஸ்ரீ கோயிலிலே வந்து புகுந்தார்கள் -ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ பெரிய நம்பியைப் போலே
அடியேனுக்கும் இச் சரீரம் போய்த்தில்லையே- என்று கொண்டு -முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
என்று போர கிலேசித்து அருளினார் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ உடையவரும் கேட்பார் செவி சுடு வார்த்தை கேட்டு ஐயோ கண்ணபிரான் அறையோ என்று கோஷித்துக் கொண்டு
வேர் அற்ற மரம் போலே விழுந்து கிடந்து துடித்துத் திரு மிடறு தழு தழுப்ப அத்யந்தம் அவசன்னராய் திரு முத்து உதிர்த்து –
கண்ண நீர் கைகளால் இறைத்து க்லேசிக்கும்படி கண்டு அருகு இருந்த முதலிகள் தேற்ற -தேறி
ஸ்ரீ ஆழ்வான் ஆகிலும் திருமேனி உடன் இருக்கப் பெற்றோமே -என்று அருளிச் செய்து
ஸ்ரீ பெரிய நம்பிக்கு சூர்ண பரிபாலனம் செய்து பெருக்கத் திரு அத்யயனம் நடத்தி அருளி –
ஸ்ரீ ஆழ்வானுக்குத் திருக்கண் போச்சுதே -என்று வியாகுல ஹ்ருதராய் மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டானை-
ஸ்ரீ ஆழ்வானையும் ஆராய்ந்து அங்குள்ள விசேஷங்களையும் அறிந்து வாரும் என்று ஸ்ரீ கோயிலுக்குப் போக விட்டு
பூர்வம் போலே வ்யாக்யானித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

—————————————

ஸ்ரீ உடையவரின் ஆச்சார்யர்களுடைய திரு நக்ஷத்ரமும் தனியன்களும்

பெரிய நம்பி திரு நக்ஷத்ரம் -திரு மார்கழிக் கேட்டை

அவர் தனியன் –
கமலா பதி கல்யாண குண அம்ருத நிஷே வயாபூர்ண காமாய சததம் பூர்ணா யமஹதே நம

ஆச்சார்யாத் யாமுனேயாததிபத நிகமாந்தார்த்த ஜாதம் பிரபத்திஞ் சோபாதி க்ஷத்ர ஹஸ்யாந்ய பியதி பதயே
கிஞ்சதத் ரக்ஷணார்த்தம் -சோழேந்திரம் ப்ராப்ய சோக்த்வாச தசி பர புமான் ஸ்ரீ பதிர் ஹேதி பீடாம் சாரீராம்
தத் க்ருதாஞ் சாப்ய ஸஹ தமந வைதம் மஹா பூர்ணமார்யம்

—————–

ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பியை அந்திம தசையில் தேவரீர் திரு உள்ளத்திலே நினைத்து இருக்கிற நினைவு என் என்று
ஸ்ரீ பாதத்து முதலிகள் கேட்க ஸ்ரீ நம்பியும் -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திரு உள்ளத்தை ஒரு பஷி புண் படுத்திற்று என்று
சொல்லி நிர்ப்பரராய் ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை த்யானித்துக் கொண்டு ஸ்ரீ திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –

அதாவது சரணாகத பரித்ராணமும் போராது என்று இருக்குமவன் இருக்க நமக்கு இனி வேறே ஒரு நினைவு உண்டோ என்று கருத்து –
இது கண்டு ஸ்ரீ பாதத்து முதலிகள் பிராயேண துக்கித்துத் தேறி ஸ்ரீ தெற்காழ்வாரைக் கொண்டு
ஸ்ரீ நம்பிக்குத் தீர்த்தம் கொண்டாடித் திரு அத்யயனமும் நடத்தி அருளினார்கள்

அவர் திரு நக்ஷத்ரம் திரு வைகாசி ரோஹிணி

அவர் தனியன்
சம தம குண பூர்ணம் யாமுனார்ய ப்ரஸாதாத் அதிகத பரமார்த்தம் ஞான பக்த்யாதி சிந்தும் –
யதிபதிநத பாதம் ஸ்லோக தத்வார்த்த நிஷ்டம் ஸ்ரித துரித தரம் ஸ்ரீ கோஷ்டி பூர்ணம் நமாமி

ஸ்ரீ வல்ல பதாம் போஜ -(யாமுனார்ய பதாம் போஜ -பாட பேதம்-)தீ பக்த்யாம்ருத சாகரம் –
ஸ்ரீ மத் கோஷ்டீ புரீ பூர்ணன் தேசிகேந்த்ரம் பஜாமஹே

—————————————

திருமாலை ஆண்டான் திரு நக்ஷத்ரம் மாசியில் மகம்

அவர் தனியன்
ராமாநுஜாய முனீந்ராயா த்ராமிடீ ஸம்ஹிதார்த்தம் -மாலாதர குரும் வந்தே வாவ தூகம் விபஸ்சிதம்

—————–

திருவரங்கப் பெருமாள் அரையர் திரு நக்ஷத்ரம் வைகாசி கேட்டை

அவர் தனியன்
அத்யாபயத் யதீந்த்ராய பராங்குச சஹஸ்ரிகாம் –தந் நாத வம்ஸயம் வந்தே அஹம் ஸ்ரீ ரெங்காப தேசிகம்

————————-

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திரு நக்ஷத்ரம் -சித்திரையில் ஸ்வாதி

அவர் தனியன்
பிதா மஹஸ்யாபி பிதா மஹாயா ப்ராசேத சாதேச பல ப்ரதாய ஸ்ரீ பாஷ்யகார உத்தம தேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்தாத்

—————————————

ஸ்ரீ திருக் கச்சி நம்பி திரு நக்ஷத்ரம் -மாசியில் ம்ருக சீர்ஷம்

அவர் தனியன்
கருணாகர பாதாப்ஜ சரணாய மஹாத்மனே ஸ்ரீ மத் கஜேந்திர தாஸாயா காஞ்சீ பூர்ணாய தே நம

———————-

அநந்தரம் ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான் தவரித்துப் பயண கதியில் ஸ்ரீ கோயிலிலே சென்று
ஸ்ரீ கூரத்தாழ்வானை சேவித்து நிற்க ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ சிறியாண்டானைக் கண்டு ஸ்ரீ உடையவரை சேவித்தால் போலே ஸந்துஷ்டராய் –
ஸ்ரீ உடையவர் செய்து அருளுகிறபடி என் என்று வினவி அருள இங்குத்தை விசேஷம் எல்லாம் ச விஸ்தரமாக
விவரித்துச் சொல்லக் கேட்டு ஆனந்தத்தை இரா நிற்க ஸ்ரீ ஆண்டானும் ஸ்ரீ உடையவர் ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுவாய்
தேவரீருக்கும் திருக்கண் போச்சுதே -என்று மிகவும் ஆர்த்தராய் அடியேனை ஆராய்ந்து வா என்று விட்டு அருளினார் என்ன –
ஸ்ரீ ஆழ்வானும் உலகங்களுக்கு எல்லாம் ஒரு உயிரான தாம் ஸூகமே இருக்கப் பெறில் இவ்விபத்து அடியேன் கண் அழிவு மாத்திரமே
கொண்டு போகப் பெற்றதே -என்று ஹ்ருஷ்டராய் இருக்கிறார் என்று விண்ணப்பம் செய்யும் என்று விட –
அவ்வளவில் சோழனுக்கு கழுத்தில் புண்ணாகி புழுத்துப் புரண்டான் என்று கேட்டு ஸ்ரீ கங்கை கொண்ட சோழ புரத்து ஏற
ஸ்ரீ ஆண்டானும் சென்று அச்செவிக்கு இனிய செஞ்சொல்லை நிச்சயித்து கொண்டு எழுந்து அருள வழியிலே சந்தித்த
ஸ்ரீ அம்மங்கி அம்மாளையும் கூட்டிக் கொண்டு தவரித்துப் எழுந்து அருளி ஒரு நாள் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்து முதலிகளுடன்
அனுஷ்டான அர்த்தமாக திருக்கல்யாண கரையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே ஸ்ரீ கோயிலில் நின்றும் எழுந்து அருளின
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டானும் ஸ்ரீ அம்மங்கி அம்மாளும் ஸ்ரீ உடையவர் திருவடிகளைத் தங்கள்
ஆனந்த அஸ்ருக்களால் நனைத்து தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ ஆழ்வானுக்கும் ஸ்ரீ பெரிய நம்பிக்கும் அபராதம் பண்ணின சோழன்
கழுத்திலே புண்ணாய்ப் புழுத்து புரண்டு போனான் -என்று விண்ணப்பம் செய்ய

ஸ்ரீ உடையவரும் கர்ணாம்ருதமான கட்டுரையைக் கேட்டு திரு மார்பும் திருத் தோளும் பூரித்து
சந்தோஷ அதிசயத்துடன் இவர்களை வாரி அணைத்துக் கொண்டு ஆனந்த அஸ்ருக்கள் கொண்டு அவர்களை வழிய வார்த்து
இவ்வளவு தூரம் இவ்விசேஷம் கொண்டு எழுந்து அருளின இவர்களுக்கு சிறக்க கனக்க கொடுக்கலாவது த்வயம் அல்லது இல்லை என்று
நிச்சயித்து மீளவும் த்வயத்தையே அவர்களுக்குப் பரிசிலாக இரங்கி அருளி தம் சந்நிதியில் முதலிகளைப் பார்த்து
இது கல்யாண சரஸ் ஸூ என்னுமது அந்வர்த்தமாகக் கண்டோம் என்ன முதலிகளும் அப்படியே யாம் என்று அத்தைக் கொண்டாட
அவர்களையும் கூட்டிக் கொண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத வரதரான அழகிய ஸிம்ஹர் திருமலை ஏறி அவரையும் திருவடி வணங்கி
பகவத் பாகவத விஷயம் என்றால் அசஹமானனாய் போந்த ஹிரண்யனை முன்பு நிரசித்து அருளினால் போலே
இப்போது பரதத்வமான தேவரீரை இல்லை என்று ஸாதூநாமுபமான பூதரான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஒப்பான
ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கும் ஸ்ரீ பெரிய நம்பிக்கும் அபராதம் பண்ணின இவனையும் கிருமி கண்டனாக்கி நசிப்பித்து அருளிற்றே-என்று
விண்ணப்பம் செய்து தீர்த்த பிரசாத ஸ்வீ காரம் பெற்று விடை கொண்டு அப்போதே புறப்பட்டு

ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக பெரிய ப்ரீதியோடே ஸ்ரீ திரு நாராயணப் பெருமாள் திரு முன்பே சென்று திருவடி தொழுது
திருப்பல்லாண்டை அனுசந்தித்து மங்களா சாசனம் பண்ணி நமோ நாராயணாயா என்று க்ருதாஞ்சலி புடராய்த் திருவடிகளை
நோக்கிக் கொண்டு -இனி அடியேன் ஸ்ரீ கோயில் ஏறப் போய் வருகிறேன் என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ திரு நாராயணனும் நெடும் போது வாய் விட மாட்டாதபடி நிற்க ஸ்ரீ உடையவரும் நீர் உள்ளதனையும் இங்கேயே இரும் என்று
நியமித்து அருளிற்றே என்ன -ஆகில் அப்படியே செய்யும் என்று அர்ச்சக முகேன திரு உள்ளமாய் அருள

ஸ்ரீ எம்பெருமானாரும் புறப்பட்டு அருளி ஐம்பத்து இருவரைப் பார்த்து ஸ்ரீ திருநாரணனையும் ஸ்ரீ செல்வப்பிள்ளையையும்
மங்களா சாசனத்துடனே சதா தர்சனம் பண்ணிக் கொண்டு காலே காலே திருப்பணி திரு ஆராதனமும் நடத்திக் கொண்டு
சேவித்து இருங்கள் என்று நியமித்து அருள ஐம்பத்து இருவரும் ஸ்ரீ பாதத்தில் விழுந்து சேவித்து தேவரீர் திருவடிகளைப் பிரியில்
தரிக்க மாட்டோம் என்று ஆர்த்தராய் தலை இறக்கிட்டு நிற்க ஸ்ரீ உடையவரும் அப்போதே ஒரு சிந்தை செய்து
தம் விக்ரஹத்துக்குப் படி எடுத்தால் போலே விளங்குகிற தம்முடைய அர்ச்சா ரூப விக்ரஹத்தை அவதரிப்பித்து அதிலே
தம் திவ்ய சக்தியையும் பிரதிஷ்டிப்பித்து ஐம்பத்து இருவரை அழைத்து நாம் உங்களுக்காக இங்கே இரா நின்றோம் -என்று
ஸ்வ திவ்ய சக்தி பரிபூர்ணமான அவ்விக்ரகத்தை அவர்களுக்கு திரு ஆராதனமாக இரங்கி அருளி அவர்களைக் குறித்து –
ஸ்ரீ செல்வப்பிள்ளை கிணற்றின் கரையில் பிள்ளையாய் இருக்கும் -பேணிக் கொண்டு போருங்கோள் என்று நியமித்து அருளி –
அவர்கள் கையிலே ஸ்ரீ செல்வப்பிள்ளையை அடைக்கலமாகக் காட்டிக் கொடுத்து அருளி -திரு விளக்கு திருமாலை அமுதுபடி சாத்துப்படி
முதலான உபசாரங்கள் எல்லாம் நன்றாகப் பேணிச் செய்து கொண்டு துரோக புத்தியால் ஒரு காலும் தீங்கு நினையாதே
அன்யோன்யம் சஹ்ருதராய் ஊழிய கைங்கர்யங்களையும் மறவாதே புத்தி புரஸ்சரமாக பண்ணிப் போருங்கோள் என்று
தம் திருவடிகளைத் தொடுவித்துக் கொண்டு நியமித்து அருளி ஸ்ரீ செல்வப்பிள்ளையை பிரிய மாட்டாமல்
திருவடிகளை முகந்து விழுவது எழுவது தொழுவ தாய்த் திரு உள்ளம் உருகித் திருக் கண்கள் துளிக்கத் திவ்ய விமானத்தையும்
திருப்பதியையும் திருச் சோலை எழில்களையும் திருமண் குவைகளையும் புரிந்து புரிந்து பார்த்து பார்த்து அஞ்சலித்து
மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு புத்ர வாத்சல்யம் பின்னே தள்ள ஸ்ரீ நம்பெருமாள் அருள் முன்னே நடத்த –
ஒரு நடையிலே ஒன்பது நடை நடந்து ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளினார் –

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி– -ஸ்ரீ இளையாழ்வார் வைபவம் -/ஸ்ரீ பட்டர் வைபவம்-/வெள்ளை சாத்துதல்–ஸ்ரீ கொங்கு பிராட்டி வ்ருத்தாந்தம் —

February 18, 2019

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –

——————————————————————————-

ஸ்ரீ பட்டர் வைபவம்-

ஸ்ரீ உடையவரும் இப்படி ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கி வாழ்ந்து அருளுகிற காலத்திலே இவரை ஆஸ்ரயித்த முதலிகளில்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சகல ஸாஸ்த்ர வித்தமராய் -ஆச்சார்ய பத ஏக நிஷ்டராய் -அபிகமந உபாதான இஜ்யா ஸ்வாத்யாய யோகங்கள் ஆகிற
பஞ்சகால பராயணராய் -விகித விஷய விரக்தராய் இரா நிற்க -ஒரு வர்ஷா காலத்திலே மத்யாஹ்ந காலம் அளவாக வர்ஷம் வர்ஷிக்க
சங்கவ காலம் தவறி மத்யாஹந காலம் ஆனவாறே உபாதான காலம் தவறி அஹந்யஹநி சிஷ்டாக்ர புண்ய ஜன க்ருஹங்களில்
உபாதானம் பண்ணி வந்தே திருமேனி யாத்ரை நடக்க வேண்டுகையாலும் அற்றைக்குத் திரு மாளிகையில் சஞ்சித பதார்த்தம் ஒன்றும்
இல்லாமையாலும் நீராடி எழுந்து அருளி திருவடி விளக்கி ஒரு பலத்தை அமுது செய்யப் பண்ணி தீர்த்த ஸ்வீ காரம் பண்ணி இருக்க
சாயம் காலமானவாறே தத் காலிக கர்மத்தைச் செய்து அருளி ஸ்ரீ நம்பெருமாளை சேவித்து திருவாய் மொழி அனுசந்தானமே தாரகமாக
பட்டினியே கண் வளர்ந்து அருள அவ்வளவில் நம்பெருமாள் பெரிய அவசரம் அமுது செய்து அருளி திருச் சின்னம் பணிமாற

ஸ்ரீ ஆண்டாள் காஹள நாதம் கேட்டு -உம்முடைய பக்தர் பட்டினியே இருக்க நீர் என்ன குலாவி குலாவி அமுது செய்து அருளுகிறீர் என்ன
அவ்வாக்கியம் பெரிய பெருமாள் திருச் செவியில் உறுத்தி திண்ணையிலே நித்திரை பண்ணிக் கொண்டு இருந்த ஸ்ரீ உத்தம நம்பி கனவிலே
ஸ்ரீ பெருமாள் எழுந்து அருளி -நம்பீ ஆழ்வான் இன்றைக்கு உபவசித்து இருக்கிறார் -நம் அக்கார அடிசில் தளிகையை உபய சத்ர சாமர சகல வாத்ய
ஸஹிதமாக சிரஸா வஹித்துக் கொண்டு போய்க் கொடும் என்று அருளிச் செய்ய
ஸ்ரீ உத்தம நம்பியும் ஸ்வப்னம் தெளிந்து கண்களை விழித்துப் பார்த்து த்வரித்து எழுந்து இருந்து ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த படியே
தளிகையை தாமே சிரஸா வஹித்துக் கொண்டு அகில வாத்யத்துடன் ஸ்ரீ ஆழ்வான் திரு மாளிகை செல்ல
ஸ்ரீ ஆழ்வானும் பதறி எழுந்து இது என் என்று திகைத்து எதிரே செல்ல ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ நம்பெருமாள் உமக்கு அக்கார வடிசில் தளிகை
அனுப்பி உள்ளார் அங்கீ கரியும் என்ன ஸ்ரீ ஆழ்வானும் தளிகையை மஹா பிரசாதம் என்று சிரஸா வஹித்துக் கொண்டு
அடியேனுக்கு அடியிலே சர்வ அபீஷ்டமும் தந்து அருளினார் -இது கிரயத்தளிகையாய் இருக்கும் -என்று தமக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்குமாக
இரண்டு திரளை அங்கீ கரித்து சேஷித்ததை போக விட்டு அருளி ஸ்ரீ ஆண்டாளை பார்த்து நீ என்ன நினைத்தாய் என்ன –
அவளும் அடியேன் ஒன்றும் நினைக்கவில்லை -ஸ்ரீ பெருமாள் அவசரம் அமுது செய்து அருளி திருச் சின்னம் பணி மாறினவாறே-
உம்முடைய பக்தர் இப்படி பட்டினியாய் இருக்க நீர் என்ன குலாவி குலாவி அமுது செய்கிறீர் என்றேன் அத்தனை என்று விண்ணப்பம் செய்ய
நீ இப்படிச் சொல்லலாமோ என்று ஸ்ரீ ஆண்டாளை வெறுத்து பிரசாதத்தை தாமும் ஸ்வீ கரித்து அவளுக்கும் பிரசாதித்து அருளினார் –
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் அவதரிக்கைக்கு ஹேது இத்திரள்கள் இறே

இப்படி ஸ்ரீ நம்பெருமாள் அனுக்ரஹத்தால் ஸ்ரீ ஆழ்வானுக்கு ஒரு குமாரர் வைகாசி அனுராதத்தில் திருவவதரித்து அருள
திரு நாமம் சாத்துகைக்கு முதலான உஜ்ஜீவன அம்சத்துக்கு ஸ்ரீ உடையவரே கடவர் என்று ஸ்ரீ ஆழ்வான் தமக்கு அதில்
அந்வயம் அற்று இருக்க ஸூத்யாசவ்ச நிவ்ருத்தி யானவுடனே பத்து நாளும் கடந்த இரண்டா நாள் ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ ஆழ்வான் திரு மாளிகை ஏற எழுந்து அருளி ஸ்ரீ எம்பாரைப் பார்த்து ஸ்ரீ ஆழ்வான் திருக் குமாரரை எடுத்துக் கொண்டு
வாரும் என்ன அவரும் உள்ளே ஸ்ரீ ஆண்டாள் பக்கலிலே சென்று குலக் கொழுந்தான குமாரரை தம் மார்பிலே அணைத்துக் கொண்டு
த்ருஷ்ட்டி தோஷாதிகள் வாராத படி பந்தணை தீரக் குழந்தைக்கு ரக்ஷணார்த்தமாக த்வய அனுசந்தானத்துடன் மங்களா சாசனம்
பண்ணிக் கொண்டு வந்து ஸ்ரீ எம்பெருமானார் தண் தாமரைக் கண்களால் குளிரக் கடாக்ஷித்து அருளும்படி திருக்கைத்தலத்தே
பிடித்து அருள ஸ்ரீ உடையவரும் ஹர்ஷ பிரகர்ஷத்துடன் ஆனந்த அஸ்ருக்கள் பனிப்பக் கடாஷிக்கும் அளவில் சிஸூவினுடைய
பசுகு பசுகு என்கிற தேஜோ விசேஷத்தையும் திருமுக ஒளியையும் கண்டு ஸ்ரீ எம்பாரே த்வயம் பரிமளியா நின்றது என் செய்தீர் என்ன
அவரும் சிஸூவுக்கு காப்பாக திவ்ய அனுசந்தானம் பண்ணிக் கொண்டு எடுத்து விடை கொண்டேன் என்ன
ஸ்ரீ உடையவரும் கர்த்தவ்ய அம்சத்துக்கு முற்பட்டீரே என்று திருமேனி பேணுதலுக்கு உகந்து அருளி
இவர் உஜ்ஜீவன அம்சத்துக்கும் நீரே கடவீர் என்று நியமித்து அருளி பசும் குழந்தைக்கு பஞ்சாயுதத் திரு ஆபரணமும் தம் திருக்கையாலே சாத்தி அருள
நாம கரணத்திலே ஸ்ரீ எம்பார் திருக்கையாலே திரு இலச்சினையும் சாத்துவித்து ஸ்ரீ பராசர பகவான் திரு நாமமாக ஸ்ரீ பராசர பட்டர் என்ற
திரு நாமத்தையும் சாத்தி ஸ்ரீ ஆளவந்தாருடைய இரண்டாம் இழவையும் தீர்த்து அருளினார் –
புத்ரீ க்ருதோ ரங்க துரந்த ரேண பராசர கூர குல ப்ரதீப-கோவிந்த சிஷ்யஸ் ச து யாமுநார்ய மநோ ரதம் பூரித வாந்த்விதீயம் -என்று
இவ்வர்த்தம் ஸ்ரீ லஷ்மீ காவ்யத்திலே ஸ்ரீ உத்தம நம்பியாலும் சொல்லப்பட்டது இறே

அநந்தரம் ஸ்ரீ எம்பார் திருத் தம்பியார் ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒரு குமாரர் அவதரித்து அருள அத்தைக்கு கேட்டு உகந்து
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆளவந்தார் கிருஷி பலிக்கப் பெற்றதே என்று அவர் திருமாளிகை ஏற எழுந்து அருளி அவர் குமாரரையும் கிருபையாலே
கடாக்ஷித்து அருளி அக்குமாரருக்கு ஸ்ரீ பராங்குச நம்பி என்று ஸ்ரீ நம்மாழ்வார் திரு நாமம் சாத்தி அருளி
ஸ்ரீ ஆளவந்தாருடைய மூன்றாம் இழவையும் தீர்த்து அருளினார் —
கோவிந்த ராஜாந்வயஜோ மநீஷீ பரங்குசோ யமுனவை மநஸ்யம் அபா சகார பிரசபன் த்ருதீயம் விராஜதே வ்ருத்தமணி ப்ரதீப -என்று
இதுவும் ஸ்ரீ லஷ்மீ காவ்யத்திலே சொல்லப் பட்டது இறே

பின்பு ஸ்ரீ பெருமாள் மஞ்சள் நீர் குடிப்பித்து ஸ்ரீ பட்டரை புத்ர ஸ்வீ காரம் பண்ணி அருளி திரு மணத் தூண் அருகே
தொட்டில் இட்டு ஸ்ரீ நாச்சியார் சீராட்டி வளர்க்க வளர்ந்து அருளுகிறவர் ஸ்ரீ பெருமாள் அமுது செய்வதற்கு முன்னே தவழ்ந்து சென்று
படைத்து இருந்த தளிகையில் அள்ளி அமுது செய்யும் படி யாயிற்று வளர்ந்து அருளினது
ஸ்ரீ பட்டர் ஐந்து திரு நக்ஷத்ரத்திலே நெடுமாற்கு அடிமை அனுசந்திக்கிற ஸ்ரீ ஆழ்வானை ஐயா சிறுமை பெருமை ஆகிற பரஸ்பர வ்ருத்த
தர்ம த்வயம் ஒரு வஸ்துவில் கிடக்குமோ -ஸ்ரீ ஆழ்வார் சிறு மா மனுசர் என்று இரண்டையும் சேர அருளிச் செய்வான் என் என்று கேட்க –
ஸ்ரீ ஆழ்வானும் நல்லீர் கேட்டபடி அழகு ஈது -நீர் அநுபநீதர் ஆகையால் உமக்கு இப்போது சாஸ்திரம் கொண்டு இசைவிக்க ஒண்ணாது –
ப்ரத்யக்ஷத்தில் உமக்கு காட்டுகிறோம் -கேளீர் திருமேனி சிறுத்து ஞானம் பெருத்து இருக்கிற
ஸ்ரீ சிறியாச்சான் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போல்வாரைக் காணும் சிறு மா மனுசர்-என்கிறது
என்று இசைவித்து அருளிச் செய்தார்

ஸ்ரீ பட்டர் பின்னையும் ஒரு நாள் திரு வீதியிலே புழுதி அளைந்து விளையாடா நிற்க ஒருவன் சர்வஞ்ஞன் பட்டன் வந்தான் -என்று
அதி சம்பிரமத்துடன் காளமூதி வர இவரும் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
முதலான பெரியோர்கள் இருக்கும் இடத்தில் இவன் யாரடா சர்வஞ்ஞ பட்டன் என்று விருதூதி வருகிறான் என்று இரண்டு திருக்கையாலும்
புழுதியை அள்ளிக் கொண்டு அவனைப் பார்த்து நீ சர்வஞ்ஞன் அன்றோ இது எத்தனை சொல் என்ன –
அவன் அதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டாதே லஜ்ஜித்து வாய் அடைத்து கவிழ் தலையிட்டு நிற்க ஸ்ரீ பட்டரும் அவனைப்பார்த்து –
கெடுவாய் இது ஒரு கைப்புழுதி என்று சொல்லி சர்வஞ்ஞன் என்று விருதூதித் திரிய மாட்டாதே அஞ்ஞனாய் விட்டாயே –
இனி உன்னுடைய சர்வஞ்ஞன் என்கிற விருதையும் ஸம்ப்ரமத்தையும் பொகடு என்று காளத்தையும் பறியுங்கோள்-என்கிற மழலைச் சொல்லக் சொல்ல
அது கேட்டு இவர் ஆருடைய குமாரர் என்ன ஸ்ரீ ஆழ்வான் குமாரர் -என்று அங்குள்ளார் சொல்ல கேட்டு அவன் புறப்பதன் குட்டி தவழுமோ என்று
ஆச்சர்யப்பட்டு ஸ்ரீ பட்டரை தன் தண்டிகையிலே வைத்துக் கொண்டு ஸ்ரீ ஆழ்வான் திருமாளிகை வாசலிலே சென்றவாறே
ஸ்ரீ பொன்னாச்சியார் கண்டு இவர் செய்த சிறுச் சேவகத்தைக் காட்டி வாரி எடுத்துக் கொண்டு த்வய அனுசந்தானத்தாலே ரக்ஷை இட்டு
தம்பரமல்லன ஆண்மைகளைத் தனியே நின்று தான் செய்வாரோ எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் என்று
முந்தானையால் இவரை முட்டாக்கியிட்டு உள்ளே கொண்டு புகுந்து கண் எச்சில் உண்டாக இவரைத் திரு வீதியிலே போக விடுவார்களோ -என்று வெறுத்து
ஸ்ரீ ஆண்டாள் திருக்கையிலே கொடுத்து ஸ்ரீ பாத தீரத்தத்தைத் தெளித்து இவ்விபூதியில் இவர் நெடுநாள் தங்குமவரோ -என்று வயிறு பிடித்து அருளினார்

ஸ்ரீ பட்டரை உபநீதரான பின்பு வேத அத்யயனம் பண்ணுவிக்க இவர் மேதை இருக்கும்படி -ஒரு நாள் சந்தை இட ஓதி அதின் மற்றை நாள்
ஓதுகைக்கு எழுந்து அருள மறித்துச் சந்தையிடப் புக்கவாறே ஓதுகிற கடையிலே நின்றும் போந்து விளையாடிக் கொண்டு எழுந்து அருளி இருக்க
எல்லாரும் ஓதா நிற்க இவர் புறப்பட்டு வந்தார் என்று ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டாளும் கேட்டு
அப்பரே எல்லாரும் ஓதா நிற்க நீர் ஓதாமல் வருவானேன் என்ன
இவரும் அவர்கள் ஓதின இடத்தையே ஓதா நின்றார்கள் என்ன -ஆகில் நீர் நேற்றைச் சந்தை இட்ட ப்ரஸ்னத்தைச் சொல்லிக் காணீர் என்ன
சந்தை விட்டபடியே உச்சரித்துக் காட்டி அருள ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டாளும் பயப்பட்டு
இன்னம் சிறிது நாள் இவரை ஓத விட ஒண்ணாது -என்று தங்களிலே சங்கித்து இருந்தார்கள் –

பின்பு ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ எம்பாரும் ஸ்ரீ பட்டருக்கு அர்த்த சிஷைகளும் தத்வ சிஷைகளும் பண்ணி வைத்தார்கள்
ஸ்ரீ பெருமாள் ஒரு கால் திருத் திரையை வளைத்துக் கொண்டு ஏகாந்தமாக எழுந்து அருளி இருக்க ஸ்ரீ பட்டர் திருவடி தொழப் புக
ஸ்ரீ பெருமாள் முனிந்து புறப்பட விடத் திரு உள்ளமாக அவர் புறப்பட அளவிலே அவனை அழையுங்கோள்-நம் ஸ்ரீ பட்டருக்கு அருளப்பாடு என்ன –
இவரும் உள்ளே புகுந்து தண்டன் இட்டு நின்ற அளவில் ஸ்ரீ பெருமாளும் நாம் புறப்பட விட்ட போது என் நினைந்து இருந்தாய் என்ன –
ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ நாச்சியாருமாக நினைத்து இருந்தேன் -என்ன -முன்பு நம்மை நினைத்து இருந்தபடி எங்கனே என்று கேட்டு அருள –
ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ ஆண்டாளுமாக நினைத்து இருந்தேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ பெருமாளும் நம் ஆணை நம்மை முன்பு போலே நினைத்து இரும் -என்று திரு உள்ளமாய் அருளினார் –

ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ பட்டருடைய விவாஹோசி தவய பரிணாமத்தைக் கண்டு ஸ்ரீ உடையவருடன் பிள்ளைக்கு விவாஹம் பண்ணி வைக்கும்படி
எங்கனே -நம் உறவு முறையார் ப்ராக்ருதராய் இரா நின்றார்கள் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ பெரிய நம்பி திருமேனி சம்பந்திகளான ஸ்ரீ வைஷ்ணவர் சந்தானிகர் இடத்திலே றே என்ன
ஸ்ரீ ஆழ்வானும் சம்மதித்து ஸ்ரீ ஆண்டாளுடன் ஆலோசித்து ஸ்ரீ உடையவரை முன்னிட்டுக் கொண்டு அவர்கள் இடத்தே பெண் கேட்க
அவர்களும் ஸ்ரீ பட்டருடைய ஆபிஜாத்யம் கண்டு கொடுக்கத் தேட புது சம்பந்தம் என்று ஒரு கால் இசையாது இருந்தார்கள்
ஸ்ரீ ஆண்டாள் ஒருநாள் ஸ்ரீ ஆழ்வானைப் பார்த்து பிள்ளைகள் பெருத்தார்கள் -ஒரு கார்யம் செய்விக்க வேண்டாவோ என்ன
ஸ்ரீ ஆழ்வானும் ஈஸ்வர குடும்பத்துக்கு என்னைக் கரையச் சொல்லுகிறாயோ என்று அருளிச் செய்து
ஸ்ரீ பெரிய பெருமாளைத் திருவடி தொழுது மடங்குகிற போது -பிள்ளைகள் பெருத்தார்கள் -ஒரு கார்யம் செய்விக்க வேண்டாவோ
என்று சொல்லுகிறார்கள் என்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ பெருமாளும் திரு உள்ளம் பற்றி -நீரோ அதற்க்கு கடவீர் – நாம் அன்றோ –
தகுதியாகச் செய்விக்கிறோம் நீர் போம் என்று திரு உள்ளமாய் அருளிப் பெண் கொடுக்கும் படி அவர்களுக்கு ஸ்வப்னம் காட்டி அருள
மற்றை நாள் தாங்களே கொடுக்கிறோம் என்று வந்து

—————————————–

ஸ்ரீ உடையவர் சந்நியசித்து அருளுகிற போது சரீர சம்பந்தியை விட வேண்டுகிறதோ என்ன –
நம் ஸ்ரீ முதலி ஆண்டானை ஒழிய சன்னியசித்தோம் என்று அருளிச் செய்ய –
இப்படி அருளிச் செய்யலாமோ என்று ஸ்ரீ பாதத்து முதலிகள் கேட்க
இவரும் கையில் த்ரி தண்டத்தை விடில் அன்றோ நம் ஸ்ரீ முதலி ஆண்டானை விடுவது என்று அருளினார்

ஸ்ரீ முதலியாண்டான் திருவாய் மொழி ஓதினபடி -ஒரு நாள் ஸ்ரீ எம்பெருமானார் திருப் பள்ளிக் கட்டிலிலே ஏறி அருளி
ஒரு பாட்டுச் சந்தை இட்டவாறே -ஸ்ரீ முதலியாண்டான் பரவசராய் அருள இத்தைக்கண்ட ஸ்ரீ எம்பெருமானாரும் –
வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசாரதாத்மஜே வேத ப்ராசேதசாதா சாஷாத் ராமாயணாத்மநோ -என்னுமா போலே
வேதங்களும் ஸ்ரீ ஆழ்வார் முகேன திருவாய் மொழியாக வந்து அவதரித்தது ஓன்று அன்றோ என்று அருளிச் செய்தார் –

ஸ்ரீ பெருமாள் பெரிய திருநாள் கண்டு அருளித் திருக் காவேரியில் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்து அருளுகிற போது
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ முதலியாண்டான் திருக்கைத்தலம் பற்றி எழுந்து அருளி நீராடி மீண்டு எழுந்து அருளும் போது
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் திருக்கைத்தலம் பற்றி எழுந்து அருள சேவித்து இருந்த முதலிகள் இதுக்கு அடி என் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் ஜென்மம் உயர்ந்து இருக்கச் செய்தே தாழ நில்லா நின்றோமே என்கிற அபிமானம் உண்டே அல்லாதார்க்கு –
அக்கொத்தையும் இல்லாதவர் இறே இவர் என்று அருளினார்

ஸ்ரீ பெரிய நம்பி திருமகளாரான ஸ்ரீ அத்துழாய் புக்கத்திலே வாழும் காலத்திலே ஒரு நாள் தீர்த்த மாடத் துணை வர வேணும் -என்று
மாமியாரை அபேக்ஷிக்க அவளும் உன் சீதன வெள்ளாட்டியைக் கொண்டு போ என்று கடுத்துச் சொல்ல ஸ்ரீ நம்பி பக்கலிலே வந்து
ஐயா என்னை இப்படிச் சொன்னாள் என்ன -ஸ்ரீ நம்பியும் நாம் அறியோம் உங்கள் சீயருக்கு சொல் என்ன
இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் அருகில் இருந்த ஸ்ரீ முதலியாண்டானை -உமக்கு இந்தாரும் சீதன வெள்ளாட்டி –
என்று கொடுத்து போம் என்ன -ஸ்ரீ ஆண்டானும் கூட எழுந்து அருளி நீராடக் பண்ணுவித்துக் கொண்டு வந்து அவருடைய புக்ககத்திலே நின்று
தாச வ்ருத்திகளைச் செய்யத் தொடங்க -அவருடைய புக்ககத்தார் ஸ்ரீ ஆண்டான் இது என் என்ன -என்னை வரவிட்ட ஸ்ரீ உடையவரைக் கேளுங்கோள்-
ஆச்சார்யர் சொன்னது செய்ய வேணுமே -என்ன அவர்களும் ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்து ஏறப் போய் ஸ்ரீ நம்பீ ஸ்ரீ முதலியாண்டானை வரவிட்டு
எங்களை இப்படி நசிப்பிக்க வேணுமோ என்ன ஸ்ரீ நம்பியும் நாம் அறிந்தோமோ ஸ்ரீ உடையவரைக் கேளுங்கோள் என்ன
அவர்களும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ ஆண்டானை ஸ்ரீ அத்துழாயுக்கு சீதன அடிமையாகத் தந்தோம் –
அவர் அங்கு நிற்கை உங்களுக்கு அநிஷ்டமாகில் இங்கு இருந்து அடிமை செய்கிறார் என்று அழைப்பித்துக் கொண்டு அருளினார் –

ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பியை ப்ரஹ்மேதத்தால் சமஸ்கரித்துப் பள்ளிப் படுத்து அருள இது கேட்டு ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ நம்பி ஸ்ரீ பாதத்து ஏறச் சென்று தண்டன் சமர்ப்பித்து -சீயா சம்சாரம் சிலுகிடாத படி அடியேன் ஒரு வழியாலே வேலியிட்டு வர
தேவரீர் ஒரு வழியாலே பிரித்து அருளா நின்றதே என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் வாரீர் ஸ்ரீ உடையவரே இஷுவாகு வம்சத்தில் அவதரித்து சாமான்ய தர்மத்தை வெளியிட்டு அருளின ஸ்ரீ பெருமாளைக்
காட்டில் நான் பெரியவனோ-பெரிய உடையாரைக் காட்டில் இவர் தண்ணியரோ
சாமான்ய தர்மநிஷ்டரான தர்மபுத்திரரைக் காட்டில் நான் பெரியவனோ ஸ்ரீ விதுரைக் காட்டில் இவர் தண்ணியரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை கடல் ஓசையோ என்று அருளிச் செய்ய ஸ்ரீ உடையவரும் உகந்து சம்மதித்து இருக்கச் செய்தே
ஸ்ரீ மாறனேர் நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளே சரணம் என்னுதல்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் என்னுதல் செய்யக் கண்டிலோமே இது என் என்று ஸ்ரீ உடையவருடனே ஸ்ரீ பெரிய நம்பி அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் அப்போது அவருக்கு ஸ்லோஹ த்வய அனுசந்தானமாய் இருந்ததாய் கொள்ளீர் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ நம்பியும் அது பெண் கண்ட பிச்சன் வார்த்தை அன்றோ என்று அருளிச் செய்து அருள
ஸ்ரீ உடையவரும் பெண்ணினுடைய நித்ய யோகத்தை திரு உள்ளம் பற்றாது ஒழிகிறது என் என்று விண்ணப்பம் செய்தார்

ஸ்ரீ உடையவர் ஒரு நாள் ஒருமையை அழைத்துக் கொண்டு உள்ளே எழுந்து அருளி கதவை அடைத்து ஏகாந்தத்தில் சஞ்ஜையாலே
தம் திருவடிகளைத் தொட்டிக் காட்டி அருள -அவனும் அதுவே தஞ்சம் என்று புத்தி பண்ணி இருக்க-
ஸ்ரீ ஆழ்வான் இத்தை கதவின் புரையிலே கண்டு ஐயோ ஸ்ரீ கூரத்தாழ்வானாகப் பிறந்து பறக்க சாஸ்திரங்களைக் கற்றுக் கெட்டேன்-
ஒன்றும் அறியாத ஊமையாகப் பிறந்தால் அடியேனுக்கும் ஸ்ரீ உடையவர் இரங்கி அருளுவாரே என்று மோஹித்தார் என்பது பிரசித்தம் இறே

ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி திருக் கோட்டியூரிலே மேல் தளத்தின் மேலே படிக்கதவை விழ விட்டு த்யானித்துக் கொண்டு இருக்க
ஸ்ரீ உடையவர் அங்கே எழுந்து அருளி ஸ்ரீ நம்பியைக் குறித்து -த்யானம் எது -மந்த்ரம் எது -என்று கேட்டு அருள –
ஸ்ரீ நம்பியும் ஸ்ரீ ஆளவந்தார் வடவாற்றிலே நீராடி அருளும் போது அகமர்ஷணம் பண்ணி முழுகி இருந்தால்
அவர் திரு முதுகு வல்லான் கடாரம் கடாரம் கவிழ்த்தால் போலே இருக்கும் அதுவே த்யானம் –
யமுனைத்துறைவர் என்கிற இதுவே மந்த்ரம் என்று அருளிச் செய்து அருளினார்
ஆகையால் ஆச்சார்ய விக்ரஹமே சதா த்யேயம் என்றும் தன் நாமமே சதா ஜப்யம் என்றும் ஸ்ரீ உடையவருக்கு உபதேசித்தார் ஆய்த்து

——————————————–

வெள்ளை சாத்துதல்–ஸ்ரீ கொங்கு பிராட்டி வ்ருத்தாந்தம் –

பாலமூக ஜடாந்தாஸ் ச பங்கவோ பதிராஸ் ததா -சதா சார்யேண சந்த்ருஷ்டா ப்ராப்நு வந்தி பராங்கதிம் -என்கிறபடியே
பெண்ணும் பேதையும் எல்லாரும் சம்சார உத்தீர்ணமாம் படி சர்வரையும் இப்படி விசேஷ கடாக்ஷம் செய்து கொண்டும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் முதலான முதலிகளுக்கு
ஸ்ரீ பாஷ்யம் பிரசாதியா நின்று கொண்டும் ஸூகமே வாழ்ந்து அருளுகிற காலத்தில்
ராஜ்யம் பண்ணுகிற சோழ ராஜா துஸ் சைவன் ஆகையால் வேத வருத்தமான கள்ளப் பொய் நூலாகிய சைவ ஆகமத்தை
த்ருடதர ப்ரமாணமான மெய்ந்நூல் என்று அத்யவசித்துத் தானும் தன் புரோஹிதனுமாய் கூட இருந்து தன்னுடைய நாட்டில் உள்ள
வித்வான்களை எல்லாம் திரட்டி -சிவாத் பரதரம் நாஸ்தி -என்று ஓலைக்கு எழுத்திடச் சொல்லித் தண்டிக்க
சிலர் அவனுடைய ஆஜ்ஜைக்கு அஞ்சியும் சிலர் அர்த்த ஷேத்ராதிகளையும் ஆசைப்பட்டு எழுத்திட்டார்கள் –
இத்தைக் கண்ட நாலூரான் இந்த ஆபாசர் திட்டத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -ஸ்ரீ ராமானுசனும் ஸ்ரீ கூரத்தாழ்வானும் இட்டால் அன்றோ
இட்டாவது என்ன சோழனும் அப்பொழுதே சில மனுஷ்யரைப் பார்த்து ஸ்ரீ ராமானுசனை அழைத்துக் கொண்டு வாருங்கோள் என்று
ஸ்ரீ கோயிலுக்கு வரக் காட்ட அந்த ராஜ மனுஷ்யர் ஸ்ரீ உடையவர் திரு மடத்து வாசலிலே வந்து இராமானுசன் எங்கே என்று கேட்க
இச் செய்தியை ஸ்ரீ உடையவருக்கு நீராட்டத் திரு மஞ்சனம் முகந்து கொடுக்கிற ஸ்ரீ கூரத்தாழ்வான் திருச்செவியிலே ஒரு வைஷ்ணவர் வந்து
ரஹஸ்யமாக விண்ணப்பம் செய்ய ஸ்ரீ ஆழ்வானும் ஸ்ரீ உடையவருடைய த்ரிதண்ட காஷாயாதிகளைத் தரித்துக் கொண்டு
ஸ்ரீ உடையவருக்கும் விண்ணப்பம் செய்யாதே ராஜ மனுஷ்யருடன் போகத்தேட அவ்விசேஷம் கேட்டு
ஸ்ரீ ஆழ்வானுடன் ஸ்ரீ பெரிய நம்பியும் புறப்பட்டு எழுந்து அருள அவர்களை அழைத்துக் கொண்டு போனார்கள் –

அநந்தரம் ஸ்ரீ உடையவரும் த்ரிதண்ட காஷாயாதிகளைத் தாருங்கோள் என்ன ஸ்ரீ கூரத்தாழ்வான் தரித்துக் கொண்டு
ராஜ மனுஷ்யருடன் எழுந்து அருளினார் என்று ஸ்ரீ முதலியாண்டான் விண்ணப்பம் செய்ய -ஆகில் அவருடைய வெள்ளையைத் தாருங்கோள்
என்று வாங்கித் தாம் சாத்திக் கொண்டு ஸ்ரீ ஆழ்வானுக்கும் ஸ்ரீ பெரிய நம்பிக்கும் என்ன தீங்கு வரப் புகுகிறதோ என்று போரக் கிலேசித்து இருக்க
ஸ்ரீ முதலியாண்டான் உள்ளிட்ட முதலிகள் எல்லாம் தேவரீர் இங்கு இருக்க ஒண்ணாது என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவரும் இனிச் செய்ய அடுப்பது என் என்று வியாகுல அந்தக்கரணராய் ஸ்ரீ பெரிய பெருமாள் திரு முன்பே சென்று திருவடிகளிலே சரணம் புக்கு
வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியனகள் பேசில் என்று தொடங்கி -தலையை ஆங்கே அறுப்பதே
கருமம் கண்டாய் அரங்க மா நகருளானே-என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தபடி இப்போது சடக்கென அவன் தலையை அறுக்கக் கூடாது –
அவன் பரிகரவானாகையாலே முகாந்தரேண செய்து வாரா நின்றேன் -என்று விண்ணப்பம் செய்து முதலிகளும் தாமுமாக எழுந்து அருளா நிற்க
பின்னையும் ராஜ மனுஷ்யர் பின் தொடர -பின்னே ஆள் தவரித்து வருகிறது என்று முதலிகள் விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ உடையவரும் வழியில் மணலை அள்ளி -கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா தடவரைத்தோள் சக்ரபாணீ
சார்ங்க வில் சேவகனே -என்று இத்தை ஓதி அவர்கள் வருகிற வழியிலே ஒழுக்கி வாருங்கோள் என்ன
முதலிகளும் அப்படியே செய்ய ராஜ மனுஷ்யர் அந்த மணலை மிதித்து அப்பால் அடியிடப் போகாமல் போகிற பார்ப்பார் மந்த்ர வாதம்
பண்ணிப் போனார்கள் என்று மீண்டு போக -ஸ்ரீ உடையவரும் முதலிகளுமாக அரங்கத்து உறையும் இந்த துணைவனே
வழித் துணையாக எழுந்து அருளினார்கள்

ஒரு மலை அடியிலே ஸ்ரீ திருமலை நல்லான் சிஷ்யர்களான சில வேட முதலிகள் புலம்பாவா நிற்க அங்கே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ எம்பெருமானாரை தேடித் கொண்டு எழுந்து அருள அவர்கள் இவரை திரு நாமமே குறியாக –
நீர் எங்கிருந்து எழுந்து அருளுகிறீர் என்று கேட்க -ஸ்ரீ கோயிலில் நின்றும் வருகிறோம் என்ன –
அவர்களும் எம்பெருமானாருக்கு ஒரு குறையும் இல்லையே -ஸ்ரீ பெரிய பெருமாள் திருச் செல்வத்துக்கு ஒரு குறையும் இல்லையே என்ன –
என்று கேட்க -இவரும் என்ன பெரிய பெருமாள் -என்ன திருச் செல்வம் -ஸ்ரீ எம்பெருமானார் சோழன் வ்யாஜேன வெண் பரிதானம் தரித்து
எழுந்து அருளினார் -இன்ன இடத்தே எழுந்து அருளினார் என்று தெரியாது என்று அருளிச் செய்ய –
அவர்களும் அவ்வார்த்தை கேட்டு வ்யாகுலப்பட்டு புலம்பாவுகை தவிர்ந்து அன்று முதல் ஆறு நாள் பட்டினியே கிடக்க
ஆறாம் நாள் ராத்ரி அம்மலை அடியிலே ஸ்ரீ எம்பெருமானாரும் முதலிகளும் மழையிலே நனைந்து குளிரில் ஈடுபட்டு இவர்கள் புனத்தில்
நெருப்பு ஒளி கண்டு ஸ்ரீ உடையவரும் நம்மை அங்கே ஏறக் கொண்டு போங்கள் என்று அருளிச் செய்ய முதலிகளும் அங்கே ஏற எழுத்து எழுந்து
அருளுவித்துக் கொண்டு போய் வழி எங்கே பிள்ளைகாள் என்ன அவர்களும் ப்ராஹ்மணர் குரலாய் இருந்தது பெரு விடாயோடே
ஒரு குரலாய் இரா நின்றது என்று ஓடி வந்து வேலியைப் பிரித்து இங்கே வாருங்கோள் என்று அழைத்துக் கொண்டு போய்
சாத்துகைக்கு திருப் பரியட்டங்களும் கொடுத்து சாத்தி இருந்த திருப் பரி யட்டங்களையும் உலர விட்டுக் குளிர் போகக் காய்ச்சி ஒற்றி
எங்கு நின்றும் எழுந்து அருளுகிறீர்கள் என்று கேட்க
இவர்களும் ஸ்ரீ கோயிலில் நின்றும் வருகிறோம் என்ன
ஸ்ரீ எம்பெருமானார் செய்கிறது என் என்று கேட்க
முதலிகளும் நீங்கள் எம்பெருமானாரை அறிந்தபடி எங்கனே என்ன
நாங்கள் நல்லான் அடிமைகள் -அவர் எங்களுக்கு ஹிதம் பிரசாதிக்கும் போது -நமக்கு எல்லாம் பரமாச்சாரியார் ஸ்ரீ எம்பெருமானாராய் இருக்கும் –
ஆகையால் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்வார் என்று விண்ணப்பம் செய்ய
முதலிகளும் ஆகில் இவரே ஸ்ரீ உடையவர் என்று காட்டி அருள அவர்களும் ஸ்ரீ பாதத்தைக் காட்டிக் கொண்டு அழுது வ்யாகுலப்பட்டுத்
திருவடிகளிலே விழுந்து சேவித்துத் தேனும் தினையும் கொண்டு வந்து சமர்ப்பித்து
இக்கதிரை வறுத்து இடித்துத் தேனில் கலந்து அமுது செய்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
முதலிகளும் அப்படியே அமுது செய்து அருளி அற்றைக்குக் கண் வளர்ந்து அருளினார்கள் –

மற்றை நாள் விடிவோரை வேட முதலிகளில் ஒருவரையும் தம் ஸ்ரீ பாதத்து முதலிகளில் ஒருவரையுமாக ஸ்ரீ கோயிலுக்குப் போகவிட்டு
ஸ்ரீ உடையவருடனே மற்ற நாற்பத்தஞ்சு திரு நாமமும் எழுந்து அருளினார்கள் -அவ்வேட முதலிகளும் இவர்களை மலைக்கு மேலே
அறுபது காத வழி கொண்டு போய் ஒரு வேட முதலியகத்தே விட -அவ்வேட முதலி பகல் எல்லாம் வேட்டைக்குப் போய் வந்து உண்ணப் புக்கவாறே –
ப்ராஹ்மணர்கள் பட்டினியே இருக்க நாம் உண்ணலாகாது என்று அருகாக ஒரு கிராமத்தில் கட்டளை வாரி என்பான் ஒரு ப்ராஹ்மணன் அகத்திலே
இவர்களைக் கொண்டு போய் விட்டு வேண்டும் கட்டளைகளையும் பண்ணி இப்போதே அமுது செய்யப் பண்ணுவியுங்கோள் என்று சொல்லுங்கோள்
என்று ஆள் கொடுத்துப் போக விட அவர்களும் ஸ்ரீ உடையவரையும் முதலிகளையும் கூட்டிக் கொண்டு போய் அவன் அகத்தே விட்டு
இவர்களை இப்போதே அமுது செய்யப் பண்ணுவியுங்கோள் என்று சொல்லு வேண்டும் கட்டளைகளும் பண்ணுவித்து மீண்டு போனார்கள்

அவ்வகமுடையானுடைய பத்னியும் தண்டன் சமர்ப்பித்து உங்களுக்கு அமுது செய்ய வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்ய –
முதலிகளும் வேண்டா என்று அருளிச் செய்து அருள -அவளும் உங்களுக்கு சந்தேகிக்க வேண்டா –
அடியேனும் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை உடையேன் -என்றாள் –
முதலிகளும் நீ ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தபடி எங்கனே என்று கேட்க
அவளும் -நாங்கள் இவ்விடம் வர்ஷம் இன்றியே இருந்தவாறே ஸ்ரீ கோயிலிலே வந்து இருந்தோம் -அங்கே என் அகமுடையாரும் நானும்
ஒரு மச்சு மேலே இருக்கையாய் இருக்கும் -அப்போது ஸ்ரீ எம்பெருமானார் ஏழு திருமாளிகைகளிலே மாதுகரம் பண்ணி அமுது செய்து அருளுவர் –
அவர் திரு வீதியிலே எழுந்து அருளும் போது அகளங்க நாட்டாழ்வான் உள்ளிட்ட முதலிகளும் எல்லாரும் அவர் திருவடிகளிலே சேவிப்பார்கள் –
அவர் ஒரு நாள் மாதுகரத்துக்கு அந்தத் திருமாளிகை ஏற எழுந்து அருள அடியேனும் மச்சில் நின்றும் இறங்கி வந்து இடை கழியிலே தகைந்து நின்றேன் –
அவர் இது என்ன பெண்ணே என்று கேட்டு அருள -நீர் மாதுகரம் பண்ணா நின்றீர் -உம்மை ராஜாக்களும் பட்டணத்து முதலிகளும் தண்டன் இடா நின்றார்கள்
இதுக்கு அடி என் என்றவாறே -ஸ்ரீ உடையவரும் நாம் அவர்களுக்கு பகவத் விஷயத்தில் சில நல்ல வார்த்தை சொல்லுகையாலே
காண் என்று அருளிச் செய்து அருள அந்த நல் வார்த்தையை அடியேனுக்கும் பிரசாதித்து அருளல் ஆகாதோ -என்றேன் –
அப்போது ஹிதம் அருளிச் செய்து எழுந்து அருளினார் -பின்பு எங்கள் நாட்டில் வர்ஷம் உண்டாய் நாங்கள் எங்கள் நாடு ஏறப் போகும் போது
அவர் அருளிச் செய்த நல் வார்த்தையை மறந்தேன் -ஸ்ரீ உடையவரை சேவிக்கப் பெற்றிலேன் என்ற இழவோடே நினைத்து இருக்க –
அற்றைக்கும் அங்கு ஏற எழுந்து அருள அடியேனும் மச்சில் நின்றும் இறங்கி வந்து தண்டன் இட்டு நின்று நாங்கள் எங்கள் நாடு ஏறப் போகா நின்றோம் –
தேவரீர் முன்பு அருளிச் செய்த நல் வார்த்தையை மறந்தேன் என்ன இப்போது ஸ்ரீ உடையவரும் மீளவும் த்வயத்தை நெஞ்சிலே நிலை நிற்கும்படி
குரு பரம்பரா பூர்வகமாக உபதேசித்து மீண்டு எழுந்து அருளத் தேட -அடியேனுக்கு ஆத்ம ரஷையாக ஏதேனும் ஓன்று தந்து அருள வேணும்
என்று விண்ணப்பம் செய்தேன் -அப்போது சாத்தி இருந்த ஸ்ரீ பாதுகைகளை ப்ரசாதித்து அருளினார் –

அடியோங்களும் அன்றே போந்தோம் -பின்னை சேவிக்கப் பெற்றிலோம் -என்றவாறே -ஸ்ரீ உடையவரும் தம் திரு உள்ளத்திலே விசாரித்து அருளி
திருப் போனகம் சமைக்க அருளிச் செய்து -இவள் செய்யுமது பார்த்து இரும் -என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை வைக்க –
அவரும் பார்த்து இருக்க அவளும் அடைவாகச் சமைத்து உடுத்துப் புடைவையை அவிழ்த்து ஸூத்தமான புடைவையை உடுத்து உள்ளே புகுந்து
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று உச்சரித்து அவர் ஸ்ரீ பாதுகைகளை ஏறி அருளப் பண்ணித் திருவடி விளக்கி
அமுது செய்யப் பண்ணப் புறப்பட்டு முதலிகளுக்கு தெண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ பாதம் விளக்கி -அமுது செய்ய எழுந்து அருள வேணும் -என்று
விண்ணப்பம் செய்ய முன்பு பார்த்து இருக்கச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவரை அழைத்து -இவள் செய்தபடி என் -என்று கேட்டு அருள –
அவரும் இவள் திருப் போனகம் அடைவாகச் சமைத்து முன்பு உடுத்த புடவையையும் விடுத்து ஸூத்தமான புடைவையையும் உடுத்துத்
திருப் போனகத்தை எடுத்துக் கொண்டு போய் உள்ளே புகுந்து கதவை அடைத்து த்யானம் பண்ணி இருந்து அமுது செய்யப் பண்ணினாள்-

அது கறுத்து நீண்டு இருந்தது – எம்பெருமானாய் இருந்தது இல்லை -என்றவாறே அவளை அழைத்து நீ உள்ளே செய்தது என் என்று கேட்டு அருள
அவளும் முன்பு அடியேனுக்கு தஞ்சமாக பிரசாதித்து அருளின ஸ்ரீ பாதுகைகளை திருவடி விளக்கி அமுது செய்து அருளப் பண்ணி யாய்த்து பிரசாதம் சூடுவது –
இப்போதும் அப்படியே செய்தேன் -என்று விண்ணப்பம் செய்ய -ஆகில் அவை தன்னை இங்கே கொண்டு வந்து காட்டு என்ன –
அவளும் கொண்டு வந்து காட்ட-அவை அங்குத்தைக்கு எதித் தலை நாதன் இராமானுசன் தன் இணை அடிகளுக்கு ஒத்து இருந்தது –
அப்பொழுது ஆகில் இந்தக் கோஷ்டியில் ஸ்ரீ எம்பெருமானார் உண்டோ பார்த்துக் காணாய் என்ன அவளும் திரு விளக்கை ஏற்றிக் கொண்டு வந்து
அடைவே பார்த்து ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளைப் போலே இரா நின்றது -காஷாயம் இல்லாமையால் தெரிகிறது இல்லை என்றவாறே
நான் காண் என்று அருளிச் செய்ய -அவளும் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அழப் புக்கவாறே கண்ணைத் துடைத்து
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தை ஒத்து இருந்தது இல்லையாகில் முதலிகள் அமுது செய்யார்கள்-
அத்தை என் செவியில் சொல்லிக் காணாய் என்ன அவளும் விண்ணப்பம் செய்ய -அந்த வார்த்தையும் ஒத்து இருந்தது –
ஆகில் விதுர அந்நாநி புபுஜே ஸூஸீ நிகுண வந்திச-என்கிற பாவனத்வ போக்யத்வங்களை உடைத்தாய் இருந்தது –
இனி முதலிகள் அமுது செய்யக் குறையில்லை என்று அருளிச் செய்து நமக்கு மாத்திரம் கூடாது -ஒரு பகவத் விக்ரஹம் அமுது செய்ய வில்லை -என்ன
அவளும் ஆகில் பாலும் பழமும் சக்கரையும் கொண்டு வந்து சமர்ப்பிக்கிறேன் என்று சமர்ப்பிக்க
இவரும் தம்முடைய எம்பெருமானுக்கு அமுது செய்யப் பண்ணித் தாமும் அமுது செய்து அருள –
முதலிகளும் அமுது செய்து கண் வளர்ந்து அருள –

அப் பெண்பிள்ளை முதலிகள் தளிகை பிரசாதத்தையும் கூட்டிக் கலந்து மச்சிலே இருக்கிற தன் பார்த்தாவை எழுப்பி பிரசாதம் இட்டு
ப்ரஸாதப்படப் பண்ணித் தான் ப்ரஸாதப்படாமல் இருக்க -அவனும் இது என் என்று கேட்க -அவளும் ஸ்ரீ கோயிலில் நின்றும்
ஸ்ரீ எம்பெருமானாரும் முதலிகளும் எழுந்து அருளி இருந்து அமுது செய்ய மாட்டோம் என்று கண் வளர்ந்து அருளினார்கள் என்றவாறே –
அவனும் அதற்கு நான் என்ன செய்ய வேணும் என்ன -நீர் ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிக்க வல்லீரோ என்ன –
அவனும் இசைந்து பிரத்யயயம் பண்ணிக் கொடுக்க அவளும் உகப்புடன் பிரஸாதப்பட்டு நித்திரை பண்ணினாள் –
மற்றை நாள் பொழுது விடிந்தவாறே எழுந்து இருந்து வந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளில் தண்டன் சமர்ப்பித்து -இற்றைக்கு எழுந்து அருளி
இருந்து இவரை கிருபை செய்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ எம்பெருமானாரும் அற்றைக்கு அங்கே அவசரித்து அருளி அவளுக்காக அவனுக்கு ஹித உபதேசம் பண்ணி விசேஷ கடாக்ஷம் செய்து அருளி
அங்கே நாலு ஐந்து நாள் எழுந்து அருளி இருந்து த்ரிதண்ட காஷாயாதிகளையும் சம்பாதித்துத் தம் திரு ஆராதனமான
ஸ்ரீ பேர் அருளாளர் சந்நிதியில் வைத்துத் தண்டன் சமர்ப்பித்து முன்பு போலே அவற்றைத் தரித்து அருளினார் –

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-