Archive for the ‘ஸ்ரீ ராமனின் அருள் அமுதம்’ Category

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/மிகைப் பாடல்கள்- பாகம்-3-

January 7, 2021

28. இராவணன் சோகப் படலம்

902.
தொழும்பு செய்து உளர் ஆம் தேவர் துயரினர் போலத் தாமும்
பழங்கண் உற்று, உடைய வேந்தன் இணை அடி விடாது பற்றி,
உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர்; மைந்தன் ஆவி
இழந்தனன் என்னக் கேட்டு, ஆங்கு, இடி உறும் அரவை ஒத்தாள்.(43-1)

903.
உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல் ஆய
ஐம்பது கோடி தெய்வத் தாதியர் அழுது சூழ்ந்தார்;
தும்பியின் இனத்தை எல்லாம் தொலைத்திடும் குருளை மாய,
கம்பம் உற்று, அரியின் பேடு கலங்கியது என்னச் சோர்ந்தாள்.(43-2)

904.
பத்து எனும் திசையும் வென்று, கயிலையில் பரனை எய்தி,
அத் தலை அமர் செய்து, ஆற்றான்; அவன் இடத்து உமை அன்பால் தன்
கைத்தலக் கிளி நிற்கு ஈய, கவர்ந்து எனக்கு அளித்து நின்ற
வித்தகக் களிறே! இன்னும் வேண்டினேன்,எழுந்திராயே!(50-1)

905.
‘மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள், மன்னர் தோள் சேர்
நஞ்சு அன விழியால் அன்றி, நகை மணிப் புதல்வர்,நல்லோர்,
செஞ் சிலை மலரால் கோலித் திரிந்தவா என்னில்,செல்லும்,
வெஞ் சமர் இன்னும் காண வல்லனோ விதி இலாதேன்!'(52-1)

29. படைக் காட்சிப் படலம்

906.
தொல்லை சேர் அண்ட கோடித் தொகையில் மற்று அரக்கர் சேனை
இல்லையால் எவரும்; இன்னே எய்திய இலங்கை என்னும்
மல்லல் மா நகரும் போதா; வான் முதல் திசைகள் பத்தின்
எல்லை உற்றளவும் நின்று, அங்கு எழுந்தது, சேனை வெள்ளம்.(2-1)

907.
மேய சக்கரப் பொருப்பிடை மேவிய திறலோர்,
ஆயிரத் தொகை பெருந் தலை உடையவர், அடங்கா
மாயை கற்றவர், வரத்தினர், வலியினர், மறப் போர்த்
தீயர், இத் திசை வரும் படை அரக்கர் – திண் திறலோய்!(22-1)

908.
சீறு கோள் அரி முகத்தினர்; திறற் புலி முகத்துஐஞ் –
ஞூறு வான் தலை உடையவர்; நூற்றிதழ்க் கமலத்து
ஏறுவான் தரும் வரத்தினர்; ஏழ் பிலத்து உறைவோர்,
ஈறு இலாத பல் அரக்கர்; மற்று எவரினும் வலியோர்.(25-1)

909.
சாலும் மா பெருந் தலைவர்கள் தயங்கு எரி நுதற் கண்
சூலபாணிதன் வரத்தினர், தொகுத்த பல் கோடி
மேலையாம் அண்டத்து உறைபவர், இவர் பண்டு விறலால்
கோல வேலுடைக் குமரனைக் கொடுஞ் சமர் துரந்தோர்.(27-1)

910.
ஆதி அம் படைத் தலைவர்கள், வெள்ளம் நூறு; அடுபோர்
மோது வீரர், மற்று ஆயிர வெள்ளம்; மொய் மனத்தோர்
‘காது வெங் கொலைக் கரி, பரி, கடுந் திறல் காலாள்,
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி’ என்று உரைப்பார்.(30-1)

911.
அன்னது அன்றியும், ஆழி நீர்க்கு அப் புறத்து உலகில்,
துன்னுறும் சத கோடி வெள்ளத் தொகை அரக்கர் –
தன்னை ஓர் கணத்து எரித்தது, சலபதி வேண்ட,
மன் இராகவன் வாளி ஒன்று; அவை அறிந்திலிரோ? (43-1)

30. மூலபல வதைப் படலம்
912.
போனபின், பல புவனம் என்று உரைக்கின்ற பொறை சேர்
ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூலத்
தானைதன்னையும், ‘எழுக’ எனச் சாற்றினர் – தறுகண்
கோன் உரைத்தமை தலைக்கொளும் கொடும் படைத்தலைவர்.(3-1)

913.
மூன்றின் நூற்றினோடு ஆயிரம் முள்வன் வெள்ளம்
ஆன்ற தேர், பரி, கரியவை, ஆளையும், அடங்கி,
மூன்று லோகமும் முற்றும் போய் முடிவுறும் என்ன
ஏன்று சென்றது., அவ் இராமன்மேல், இராக்கதப் பரவை.(23-1)

914.
‘தான் அல்லாது ஒரு பொருள் இலை எனத் தகும் முதல்வன் –
தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும்
தவறோ?தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று அடக்கும்
தானம் மேவினர்க்கு இவர் ஒரு பொருள் எனத் தகுமோ?(26-1)

915.
‘நின்று காண்குதிர், இறைப் பொழுது; இங்கு நீர் வெருவல்;
இன்று இராகவன் பகழி மற்று இராக்கதப் புணரி
கொன்று வற்றிடக் குறைத்து உயிர் குடிக்கும்’ என்று அமரர்க்கு
அன்று முக்கனான் உரைத்தல் கேட்டு, அவர் உளம் தெளிந்தார்.(26-2)

916.
வானின் மேவிய அமரருக்கு இத் துணை மறுக்கம்
ஆனபோது, இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள்
ஈனம் எய்தியது இயம்பல் என்? எழுபது வெள்ளத்
தானை ஆகிய கவிப் படை சலித்தது, பெரிதால்.(26-3)

917.
வாய் உலர்ந்தன சில சில; வயிறு எரி தவழ்வுற்று
ஓய்தல் உந்தின சில சில; ஓடின நடுங்கிச்
சாய்தல் உந்தின சில சில; தாழ் கடற்கு இடையே
பாய்தல் உந்தின சில சில – படர் கவிப் படைகள்.(29-1)

918.
அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர்
தனுவின் ஆற்றலும், தங்களைத் தாங்குவர் தாங்கார்,
‘கனியும் காய்களும் உணவு உளோ; மலை உள காக்க
மனிதர் ஆளில் என், இராக்கதர் ஆளில் என்,வையம்?'(44-1)

919.
என்று, சாம்பவன் முதலிய தலைவர்கள் இயம்ப,
குன்று உலாம் புயத்து அங்கதன் குறுநகை புரிந்தே,
நன்று நும் உரை; நாயகர்ப் பிழைத்து, நம் உயிர்கொண்டு,
ஒன்றி வாழ்தலும் உரிமையதே?’ என உரைப்பான்.(44-2)

920.
‘ஆளி மா முகவர், சீறும் அடு புலி முகவர், மிக்க
யாளி மா முகவர், யானை முகவர், மற்று எரியும் வெங் கண்
கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார்;
ஊழி சென்றாலும் உட்கார்; ஒருவர் ஓர் அண்டம் உண்பார்.(52-1)

921.
என்று எடுத்து, எண்கின் தானைக்கு இறையவன் இயம்பலோடும்
வன் திறல் குலிசம் ஓச்சி, வரைச் சிறகு அரிந்து,வெள்ளிக்
குன்றிடை நீலக் கொண்மூ அமர்ந்தென, மதத் திண் குன்றில்
நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை நிகழ்த்தலுற்றான்.(54-1)

922.
‘இசைந்தனன் அமருக்கு; எல்லா உலகமும் இமைப்பின் வாரிப்
பிசைந்து, சிற்றுதரத்து உண்ணப்பெற்ற நாள் பிடித்த மூர்த்தம்
இசைந்தது போலும்!’ என்று, ஆங்கு, அயன் சிவன் இருவர் தத்தம்
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட, வயங்கி நின்றான்.(69-1)

923.
மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர்,
‘கொற்ற வில்லி வெல்க! வஞ்ச மாயர் வீக!
குவலயத்துஉற்ற தீமை தீர்க, இன்றொடு!’ என்று கூறினார்;
நிலம் துற்ற வெம் படைக் கை நீசர் இன்ன இன்ன சொல்லினார்:(72-1)

924.
அரைக் கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல் கோடி ஆவி போய்த்
தரைப் பட, பல் அண்ட கோடி தகர, அண்ணல்தன் கை வில்
இரைக்கும் நாண் இடிப்பினுக்கு உடைந்து, ‘இராம ராம!’ என்று
உரைக்கும் நாமமே எழுந்து, உம்பரோடும் இம்பரே. (76-1)

925.
சிரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; செஞ் சுடர்ப் படைக்
கரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; கல்லை வெல்லு மா
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; ஊழி காலம் வாழ்
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; – மண்ணின் மீது அரோ.(76-2)

926.
அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே,
மண்டி மூடி வாழ் அரக்கர்தாமும், வாகை வீரன்மேல்,
கொண்டல்எழும், ஊழிவாய், ஓர் குன்றில் மாரி பொழிவபோல்
சண்ட வேகம் ஏறி, வாளி மழை சொரிந்து தாக்கினார்.(83-1)

927.
தேரின்மீது அனந்த கோடி நிருதர், சீறு செம் முகக்
காரின்மீது அனந்த கோடி வஞ்சர், காலின் வாவு மாத்
தாரின்மீது அனந்த கோடி தறுகண் நீசர், தாழ்வு இலாப்
பாரின்மீது அனந்த கோடி பதகர், வந்த பற்றினார்.
928.
துடி, தவண்டை, சங்கு, பேரி, துந்துமிக் குலங்கள்,கைத்
தடி, துவண்ட ஞாண், இரங்கு தக்கையோடு பம்பை,மற்று
இடி பொதிந்த முரசம் ஆதி எண் இல் பல்லியக் குழாம்
படி நடுங்கவே, பகைக் களத்தின் ஓசை விஞ்சவே.(83-3)

929.
இரைத்து அடர்ந்து அரக்கர் வெள்ளம், எண் இல் கோடி, இடைவிடாது
உருத்தல் கண்டு, இராகவன் புன்முறுவல் கொண்டு,ஒவ்வொருவருக்கு
ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ,
சரத்தின் மாரி பெய்து, அரக்கர் தலை தரைக்கண் வீழ்த்தினான்.(83-4)

930.
‘நுனித்திடத்திற்கு அருங் கடுப்பின் நொடிவரைக்குள் எங்குமாய்க்
குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து கோறலால்,
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று’ எனா,
வினைத் திறத்து அரக்கர் விம்மிதத்தர் ஆய்,விளம்புவார்.(83-5)

931.
‘விண்ணின்மீது அனந்த கோடி வீரன்’ என்பர்; ‘அல்ல இம்
மண்ணின்மீது அனந்த கோடி மனிதன்’ என்பர்;அல்ல வெங்
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன்’ என்பர்;’அல்ல உம்
எண்ணமீது அனந்த கோடி உண்டு, இராமன்’என்பரால்.(83-6)
932.
இத் திறத்து அரக்கர் வெள்ளம் எங்கும் ஈது இயம்ப,நின்று
எத் திறத்தினும் விடாது, இராமன் எங்கும் எங்குமாய்
அத் திறத்து அரக்கரோடும், ஆனை, தேர், பரிக்குலம்,
தத்துறச் சரத்தின் மாரியால் தடிந்து, வீழ்த்தினான்.(83-7)

933.
இடைவிடாது அளப்பு இல் வெள்ளம் இற்று இறந்து போகவும்
படை விடாது அரக்கர் ஆளிபோல் வளைந்துபற்றவும்,
கொடைவிடாதவன் பொருள் குறைந்திடாதும் வீதல்போல்,
தொடைவிடாது இராமன் வாளி வஞ்சர்மீது தூவினான்.(83-8)

934.
இன்னவாறு இராமன் எய்து, சேனை வெள்ளம் யாவையும்,
சின்னபின்னமாக, நீறு செய்தல் கண்டு, திருகியே,
மின்னு வாள் அரக்கர் வெள்ளம், எண்ணில் கோடி,வெய்தினின்
துன்னி, மூடும் அந்தகாரம் என்ன வந்து சுற்றினார்.(96-1)

935.
வானின்மீது அனந்த கோடி மாய வஞ்சர் மண்டினார்,
ஆனைமீது அனந்த கோடி அடல் அரக்கர் அண்மினார்;
சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் சுற்றினார்,
மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார்.(96-2)

936.
அடல் வார் சிலை அமலன் சொரி கனல் வெங் கணை கதுவி,
தொடர் போர் வய நிருதக் கடல் சுவறும்படி பருக,
படுமாறு அயல் வரு தீயவர் பல கோடியர் பலரும்
சுடர் ஏறிய படை மாரிகள் சொரிந்தார், புடை வளைந்தார்.(101-1)

937.
கோல் பொத்திய நெடு நாணினில் கோமான் தொடை நெகிழ
மேல் பொத்திய நிருதக் குலம் வேரொடு உடன் விளிய,
தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று உடன் மடிய,
கால் பொத்திய கை ஒத்தன, காகுத்தன் வெங் கணையால்.(102-1)

938.
அது போது அகல் வானில் மறைந்து, அரு மாயை செய் அரக்கர்,
எது போதினும் அழிவு அற்றவர், இருள் வான் உற மூடி,
சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும் நிறைத்தார்;
சது மா மறை அமலன் அவை தடிந்தான், தழற் படையால்.(108-1)

939.
அமலன் விடும் அனல் வெம் படை அடு வெம் பொறி சிதறி
திமிலம்கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும்
பிமரம் கெட, அவர்தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய,
சமரம் புகும் அளவு இல்லவர்தமை வென்றது, ஓர் நொடியின்.(108-2)

940.
காலாள் எனும் நிருதப் படை வெள்ளம் கடைகணித்தற்கு
ஏலாதன பல கோடிகள் இமையோர் கரை காணார்;
பாலாழியின் மிசையே துயில் பரமன் சிலை பொழியும்
கோலால் அவர் குறைவுற்றனர்; குறையாதவர் கொதித்தார்.(112-1)
941.
கொதித்தார் எழு கடல்போல் வளைவுற்றார்; கொடு முசலம்
குதித்து ஓடிய சிலை வாளிகள், கூர் வேல், கதை,குலிசம்.
விதைத்தார், பொரும் அமலன்மிசை வெய்தே; பல உயிரும்
விதித்தானையும் விதித்தான் சிலை வளைத்தே, சரம் விதைத்தான்.(112-2)

942.
கொள்ளை வெஞ் சமர் கோலும் இராக்கத
வெள்ளமும் குறைவுற்றது; மேடொடு
பள்ளம் இன்றிப் படும் குருதிக் கடல்
உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால்.(127-1)

943.
தேயம் எங்கும் இடம் சிறிது இன்றியே,
மாய வஞ்சர் மடிய, பிண மலை
போய் வளர்ந்து விசும்பொடும் புல்லிற்றால்;
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே.(127-2)

944.
கடல் எரிக்க கனற் படை கார்முகத்து –
இடை தொடுத்து, அதை ஏவி, ‘இரும் பிணத்
திடல் அனைத்தையும் தீர்க்க’ எனச் செப்பினான்;
பொடி – படுத்தி இமைப்பில் புகுந்ததால்.(127-3)

945.
அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து
உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு
உண்டு எனற்கு அரிது என்? உளது இச் செயல்.
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால்.(127-4)

946.
இற்றது ஆக இராக்கத வீரர்கள்
உற்று, ஓர் ஆயிர வெள்ளம் உடன்று, எதிர்
சுற்றினார், படை மாரி சொரிந்துளார்;
வெற்றி வீரனும் கை வில் வணக்கினான்.(127-5)

947.
தலை அறுந்தவரும், தடத் திண் புய
மலை அறுந்தவரும், வயக் கையொடு
சிலை அறுந்தவரும், திமிரத்தின் மெய்ந்
நிலை அறுந்தவரும், அன்றி, நின்றது ஆர்?(127-6)

948.
தேர் அளப்பு இல பட்ட; சிறு கண் மாக்
கார் அளப்பு இல பட்ட; கடும் பரித்
தார் அளப்பு இல பட்ட; தடம் புயப்
பேர் அளப்பு இலர் பட்டனர், பீடு இலார்.(127-7)

949.
வானகத்தோடு மா நிலம், எண் திசை
ஆன திக்கு ஒரு பத்தும், அடுத்துறத்
தான் நெருக்கிய வஞ்சகர்தம் தலை,
போன திக்கு அறியாது, புரட்டினான்.(127-8)

950.
சுடரும் வேல், கணை, தோமரம், சக்கரம்
அடரும் மூஇலைச் சூலம், மற்று ஆதியாம்
படையின் மாரி பதகர் சொரிந்து, இடை
தொடர, வீரன் துணித்தனன் வாளியால்.(127-9)

951.
ஏனமோடு, எண்கு, சீயம், எழு மத
யானை, ஆளி, புலி என்று இவை முகம்
ஆன தீய அரக்கர் மடிந்திட,
வானவன் கணை மாரி வழங்கினான்.(127-10)

952.
வடி சுடர்க் கணை மாற்ற, அங்கு ஆயிர
முடியுடைத் தலையோர் தலையும் முடிந்து
இடுவது இத் தலத்தே, இடி ஏற்றில் வான்
வட வரைச் சிகரங்கள் மறிவபோல்.(127-11)

953.
இரதம், யானை, இவுளியோடு எண் இலா
நிருதர் வெள்ளம் நெடு நிலத்து இற்றிட,
சரதம் அன்னை சொல் தாங்கி, தவத்து உறும்
விரத வீரன் தன் வாளியின் வீட்டினான்.(127-12)

954.
கடு வைத்து ஆர் களன் கைப் படு கார்முகம்
ஒடியத் தாக்கும் ஒருவன் சிலையின்வாய்,
வடவைத் தீச் சொரி வாளியின் மா மழை
பட, மற்று ஆயிர வெள்ளமும் பட்டதால்.(127-13)
955.
பால் ஒத்து ஆழியில் பாம்பு – அணைமேல் துயில்
சீலத்தான், இமையோர் செய் தவத்தினின்
ஞாலத்து ஆய இறைவன், இராவணன்
மூலத் தானை முடிய முருக்கினான்.(127-14)

956.
ஈது அவர் சொல, கயிலை ஈசனும் நகைத்து,இமையவர்க்கும் ஒளி வான்
ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல் கடவுள் யாமும் உணராப்
பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் செய்யாது, பெருமான்
நீத உருவம் கொளும் இராமன் எனவே சுருதி நின்ற மொழி பொன்றி விடுமோ?(149-1)

957.
பாறு படர் பகழி மாரி நிரைகள் பட,
நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர,
வேறு படர அடர் விரவு சுடர் வலையம்,
மாறுபட, உலகின் மலைகள் அளறுபட,(154-1)

958.
திரிய அலகு இல் மலை, திரிய இரு சுடர்கள்
திரிய ஒருவன், எதிர் சின விலொடும் அடர
வரி கை ஒரு களிறு திரிய, விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் இடை திரிய.(163-1)

959.
கரிய திலத மலை திரிய, வளி சுடர்கள்
இரிய, ஒரு விலுடை இரு கை ஒரு களிறு
திரிய, விடு குயவர் திரிகை என உலகு
தெரிய, எழு கடலும் முழுதும் முறை திரிய.(164-1)

960.
ஆய வல் அரக்கர், மற்று அளவு இல்லாதவர்,
தீ எழும் விழியினர், சினம் கொள் சிந்தையர்
காயும் வெம் படையினர், கடலின் பொங்கியே
மேயினர், தம்தமில் இவை விளம்புவார்.(170-1)

961.
‘அன்றியும் ஒருவன், இங்கு அமரில், நம் படை
என்று உள கரி, பரி, இரதம், ஈறு இல் போர்
வென்றிடும் பதாதியர், அனந்த வெள்ளமும்
கொன்றனன், கொதித்து, ஒரு கடிகை ஏழினே.(171-1)

962.
இவ் உரை வன்னி அங்கு இயம்ப. ‘ஈதுபோல்
செவ் உரை வேறு இலை’ என்று, தீயவர்
அவ் உரைக்கு அனைவரும் அமைந்து, அங்கு
அண்ணலோடு எவ் உரையும் விடுத்து, அமரின் ஏற்றுவார்.

963.
இன்னவர் ஐ – இரு கோடி என்று உள
மன்னவர் சதமுகம் உடையர்; மற்று அவர்
துன்னினர், மனத்து அனல் கறுக்கொண்டு ஏறிட
உன்னினர், ஒருவருக்கு ஒருவர் ஓதுவார்.(184-1)

964.
அடல் ஐ – இரு கோடி அரக்கர் எனும்
மிடல் மன்னவர் வீரனொடும் பொருவார்;
கடை கண்டிலர், காய் கரி, தேர், பரிமாப்
படை கண்டிலர்; கண்டிலர், பட்ட திறம்.(206-1)

965.
அங்கு அங்கு அவர்தம்மொடும் ஐயன் உயிர்க்கு
அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு,
எங்கு இங்கும் இராமன் இராமன் எனா,
எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால்.(212-1)

966.
ஏயும் ஐ – இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர் சேனை
ஆயிர வெள்ளம்தானும் அத் துணை வெள்ளம் ஆகி,
தூயவன் அவர்தம் சேனை தொலைத்தபின், இறைவர் ஆவி
போய் அறப் பகழி மாரி பொழிந்தனன், பொன்றி வீழ்ந்தான்.

967.
இட்டதோர் பேயரின் ஈர் – ஐயாயிரம்
பட்டபோது, ஆடும் ஓர் படு குறைத்தலை
சுட்ட நூறாயிரம் கவந்தம் ஆடிடத்
தொட்டனன், சிலை அணி மணி நுணுக்கென.(220-1)
968.
மாத்திரைப் போதினில், மணி தொனித்திட,
போர்த் தொழில் அரக்கர்மேல் பொருத பூசலில்,
ஏத்திடை இடைவிடாது ஏழு நாழிகை
கீர்த்தியன் சிலை மணி கிணிகிணென்றதே.(220-20)

969.
மொய்த்தனர், நூறு வெள்ள முரண் படைத்தலைவர் கூட்டம்,
பத்து நூறு ஆய வெள்ளப் படையொடு மாயை பற்றி,
ஒத்த யோசனை நூறு என்ன ஓதிய வரைப்பின் ஓங்கி,
பத்து எனும் திசையும் மூடி, சொரிந்தனர் படையின் மாரி.

970.
யோசனை நூற்றின் வட்டம் இடையறாது உற்ற சேனைத்
தூசி வந்து, அண்ணல்தன்னைப் போக்கு அற வளைத்துச் சுற்றி,
வீசின படையும் அம்பும் மிடைதலின், விண்ணோர் யாக்கை
கூசினர், பொடியர் என்றும் குமிழ்த்தனர், ஓமக் கூடம்.

971.
முன்னவன் அதனை நோக்கி, முறுவலித்து, அவர்கள் ஏவும்
பல் நெடும் பருவ மாரிப் படை எலாம் பொடிபட்டு ஓட,
தன் நெடுஞ் சிலையின் மாரிதனக்கு எழு முகிலும் அஞ்சத்
துன்னுவித்து, அரக்கர் சேனையைத் தொலைத்தல் செய்தான்.

972.
கால வெங் கனலின் மாயக் கடும் படை சிலையின்பூட்டி,
மேலவன் விடுதலோடும், வெம் படை அரக்கர்
வெள்ளம்நாலும் மூ-இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் நண்ணி,
தாலமேல் படுத்து மீண்டது, அவன் சரம் தலைவர்த் தள்ளி.
973.
முடிந்தது மூலத்தானை; மூவுலகு இருண்ட தீமை
விடிந்தது; மேலை வானோர் வெந் துயர் அவரினோடும்
பொடிந்தது; புனிதன் வாளி போக்கு உறப் பொய்யர் ஆவி
படிந்தது, ககனம் எங்கும்; பலித்தது, தரும் அன்றே.

974.
‘ஈது ஒரு விளையாட்டு; அன்பின், இத்துணை தாழ்த்தான், ஐயன்;
எது அவன் துணியின் இப்பால்? நீசர் ஓர் பொருளோ? இன்னும்
போதுமோ? புவன கோடி போதினும், கணத்தில் பொன்றிப்
போதும்’ என்று, அயனோடு ஈசன் அமரர்க்குப் புகன்று நின்றான்.

975.
சேனை அம் தலைவர், சேனை முழுவதும் அழிந்து சிந்த,
தான் எரி கனலின் பொங்கி, தரிப்பு இலர், கடலின் சூழ்ந்தே
வானகம் மறைய, தம் தம் படைக் கல மாரி பெய்தார்
ஆனவை முழுதும் சிந்த அறுத்தனன், அமலன் அம்பால்.

976.
பகிரண்டப் பரப்பில் நின்ற பல பல கோடி வெள்ளத்
தொகை மீண்டும் அரக்கர் யாரும் துஞ்சினர், கருவும் துஞ்ச;
செகம் உண்ட ஒருவன் செங் கைச் சிலையுறு மணியின் ஓசை
புக, அண்டம் முழுதும் பாலின் பிரை எனப் பொலிந்தது அன்றே.

977.
நணியனாய்த் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர்
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த காலக்
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை; அக் கடிகைவாய் வில்
மணிஒலி எழும்ப, வானோர் வழுத்திட, வள்ளல் நின்றான் (225-2)

31. வேல் ஏற்ற படலம்

978.
அரக்கர் சேனை ஓராயிர வெள்ளத்தை, ‘அமரில்
துரக்க, மானுடர்தம்மை’ என்று, ஒருபுடை துரந்து,
வெருக் கொள் வானரச் சேனைமேல் தான் செல்வான் விரும்பி
இருக்கும் தேரொடும் இராவணன் கதுமென எழுந்தான்.(2-1)

32. வானரர் களம் காண் படலம்

979.
என்று உரைத்து, ‘உயர் வான் பிறப்பு எய்திய
வென்றி வெஞ் சின வேழங்கள்தம்மொடும்
துன்று வாசித் தொகைகளும் கேண்ம்’ எனா,
நின்ற வீடணன்தானும் நிகழ்த்துவான்.(27-1)

33. இராவணன் களம் காண் படலம்

980.
அலக்கண் எய்தி அமரர் அழிந்திட,
உலக்க வானர வீரரை ஒட்டி, அவ்
இலக்குவன்தனை வீட்டி, இராவணன்
துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே.

(இப்பாடல் இந்தப் படலத்தின் முதற் செய்யுளாக உள்ளது.)
981.
முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப,ஆவி
பெற்று, இயல் பெற்றி பெற்றாலென்ன, வாள் அரக்கர் யாக்கை,
சிற்றியல் குறுங் கால் ஓரிக் குரல் கொளை இசையா,பல் பேய்
கற்று இயல் பாணி கொட்ட, களி நடம் பயிலக் கண்டான்.

34. இராவணன் தேர் ஏறு படலம்

982.
ஏழ் – இருநூறு கோடி எனும் படைத் தலைவரோடும்
ஆழியின் வளைந்த சேனை ஐ – இருநூறு வெள்ளம்
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர் வேந்தன்
‘வாள் அமர் முடிப்பென் இன்றே’ என மணித் தவிசு நீத்தான்.

983.
உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை கேள்வன்
அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு ஆழி
முரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியா
விரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான்.

984.
அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை
கண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன்,
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது அளிக்கக்,
கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின்.

985.
ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன் நால் – ஐந்
தும், இந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள் ஒழிய
இம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு ஈசன்
வெம்மை ஆடு அமரர்க்கு எழுந்தென, தேர்மிசை விரைந்தான்.

35. இராமன் தேர் ஏறு படலம்

986.
இத் தகையன் ஆகி, ‘இகல் செய்து, இவனை இன்னே
கொத்து முடி கொய்வென்’ என, நின்று எதிர் குறிப்ப,
தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என, வானில்
சித்தர்கள், முனித் தலைவர், சிந்தை மகிழ்வுற்றார்.

36. இராவணன் வதைப் படலம்

987.
புரந்தரன் பகைவன் ஆவி போக்கிய புனிதன்,வென்றி
சுரந்தருள் அனுமன், நீலன், அங்கதன், சுக்கிரீவன்,
உரம் தரு வீரர் ஆதிக் கவிப் படைத் தலைவருள்ளார்
பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர், திரியலுற்றார்.

988.
வரம் படைத்து உயர்ந்த வன் போர் வயப் படைத் தலைவரோடு
நிரம்பிய வெள்ளச் சேனை நிருதரும், களிறும் தேரும்
மரம் படர் கானில் தீப்போல், வள்ளல்தன் பகழி மாரி,
பொரும்படி உடல்கள் சிந்தி, பொன்றினர் எவரும் அம்மா.

989.
பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் போக,
தங்கிய பிணத்தின் குப்பை தடுத்தது; சமரபூமி
எங்கணும் கவந்தம் ஆட, எய்தி அங்கு அரக்கிமார்கள்,
தங்கள்தம் கணவர்ப் பற்றி, தம் உடல் தாங்கள் நீத்தார்.

990.
எழும் படை வெள்ளம் எல்லாம், இரண்டு கை கடிகை தன்னில் ஆங்கு
களம் பட, கமலக்கண்ணன் கடுங் கனல் பகழி மாரி
வளம் படச் சிலையில் கோலி, பொழிந்து, அவை மடித்தான்; கண்டு,
உளம் கனல் கொளுந்த, தேரின் உருத்து, எதிர், அரக்கன் வந்தான்.

991.
மூஉலகு அடங்கலும் மூடும் அண்டமேல்
தாவினன் தேரொடும், அரக்கன்; தாவியே,
கூவினன்; அங்கு அறைகூவ, கொண்டலும்
மேவினன், அரக்கனை விடாது பற்றியே.(71-1)

992.
அண்டம் ஓராயிர கோடி எங்கணும்
மண்டினர், செருத் தொழில் மலைதல் விட்டிலர்
அண்டர்கள் கலங்கினர்; அரக்கராயுளோர்
உண்டு, இனிக் கரு’ என ஓதற்கு இல்லையால்.(71-2)

993.
உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது,
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது,
இமையவர் அடல் வலி பருகியது, எளிமையின்.(89-1)

994.
ஆசுரப் பெரும் படைக்கலம், அமரரை அமரின்
ஏசுவிப்பது, எவ் உலகமும் எவரையும் வென்று
வீசு வெற்பு இறத் துரந்த வெங் கணையது – விசையின்
பூசுரர்க்கு ஒரு கடவுள்மேல் சென்றது போலாம்.

995.
மயன் படைக்கலம் அழிந்தது கண்டு, இகல் மறவோன்,
‘சயம் படைத்தது நன்று; இவன் செருக்கினைத்
தடுக்க,பயன் படைத்துள தண்ட மாப் படைகள் உண்டு;அதனால்
நயம் படைப்பென்’ என்று, ஒரு கதை நாதன்மேல் எறிந்தான்.

996.
அன்ன மாக் கதை விசையொடு வருதலும், அமலன்
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான்
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய,
சின்னமாக்கினன்; அது கண்டு, அங்கு அரக்கனும் சினந்தான்.

997.
ஆயது ஆக்கிய செய்கை கண்டு, அரக்கனும்

(107-1)
சினந்தே

தீயின் மாப் படை செலுத்த, அப் படையினின்

செறுத்தான்,

தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட, அரக்கன்
ஏய அப் படை ஏவி, அங்கு அமலனும் இறுத்தான்.

998.
இரவிதன் படை ஏவினன், அரக்கன்; மற்று அமலன்
சுருதி, அன்ன திண் படைகொடு காத்தனன்;

(107-2)
மதியின்

விரவு வெம் படை வெய்யவன் விடுத்தலும், வீரன்,
உரவு திங்களின் படைகொண்டு, அங்கு அதனையும்

ஒறுத்தான்.

999.
வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும்

(107-3)
மறைத்தான்;

நேர் உதிக்க அப் படை கொண்டு நிமலனும் நீக்க
தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி,
‘பேருவிப்பென், மற்று இவன் உயிர்’ எனும் உளம்

பிடித்தான்.

1000.
முக்கணான் படை முதலிய தேவர்தம் படைகள்
ஒக்க வாரி, அங்கு அரக்கனும் ஊழ் முறை துரப்ப,
புக்கி, அண்ணலை வலங்கொண்டு போனதும்,

(107-4)
பொடிபட்டு

உக்கி, ஓடினதும் அன்றி, ஒன்று செய்துளதோ?

1001.
இத் திறம்பட மாயையின் படை வகுத்து, எழுந்து,

(118-1)
அங்கு

எத் திறங்களும் இடிஉரும் எறிந்திட வெருவி,
சித்திரம் பெற அடங்கிய கவிப் பெருஞ் சேனை
மொய்த்து மூடியது, அண்டங்கள் முழுவதும் மாய.

1002.
‘அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து,

(118-2)
உலையக்

கொண்ட காலம் ஈதோ!’ எனக் குலைகுலைந்து,

அமரர்

துண்டவான் பிறை சூடியைத் தொழ, அவன் துயரம்
கண்டு, ‘இராகவன் கடிந்திடும்; கலங்கலீர்’ என்றான்.

1003.
மாயையின் படை தொலைந்திட, வகுப்பொடும் எழுந்த
தீய வெவ் வினைச் செய்கைகள் யாவையும் சிதைந்தே
போயது; எங்கணும் இருள் அற ஒளித்தது; அப்

(123-1)
பொழுதில்

காயும் வெஞ் சினத்து அரக்கனும் கண்டு, உளம்

கறுத்தான்.

1004.
நெற்றி விழியான் – அயன், நிறைந்த மறையாளர்
மற்றை அமரர், புவியில் வானவர்கள், ‘ஈர் – ஐந்து
உற்ற தலை தானவன் விடும கொடிய சூலம்
இற்று ஒழிய ஆன்று அழியுமோ?’ என – இசைத்தான்.

(130-1)

1005.
‘வேதம் ஒரு நாலும், உள வேள்விகளும், வெவ்வேறு
ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும்
நீதியொடு கால்குலைய, நீசன் விடு சூலம்
ஈது அழியும்’ என்று இதயம் எண்ணினன், இராமன்.

(130-2)

1006.
எவ் வகை உரகமும் இரியல் போயின,
நொவ்வியல் உற்றென; நொடிப்பது என் இனி?
அவ் வயின் அரன் அணி அடல் அராவுமே
கவ்வையின் உழந்தன, சிறையின் காற்றினே.

(143-1)

1007.
பிறைத் தலைப் பகழியால் பின்னும் ஓர் தலை
அறுத்தனன், முளைத்தது, அங்கு அதுவும் ஆர்த்து;

(150-1)
உடன்

மறுத்து இரு தலைதனை மாற்ற, வள்ளலும்
குறைத்திலன் எனும்படி முளைத்த, குன்றுபோல்.

1008.
ஆயிரப் பதின் மடங்கு அரக்கன் மாத் தலை
தீமுகப் பகழியால் சினந்து, இராகவன்
ஓய்வு அறத் துணிக்கவும், உடன் முளைத்ததால்
தீயவன் தவப் பெருஞ் செயலின் வன்மையால்.

(150-2)

1009.
அண்ணலும் இடைவிடாது அறுத்து வீழ்த்தலால்,
மண்ணொடு வானகம், மருவும் எண் திசை
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை
நண்ணியது; அமரரும் நடுக்கம் எய்தினார்.

(151-1)

1010.
இத் திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின்
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால்,
அத் திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன் –
முத் திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான்.

(152-1)

1011.
தொடுத்த ஆழியின் தோமரம் தூள்பட,
விடுத்த வீரன் அவ் வெய்யவன் மாத் தலை
அடுத்து மீளவும் நின்று அறுத்தான்; உயிர்
முடித்திலன் விளையாடலை முன்னியே.

(159-1)
1012.
ஆனபோது, அங்கு அரக்கன் அத் தேரொடும்
வான்மீது எழ, மாதலி தூண்டிட,
ஞான நாயகன் தேரும் எழுந்துறப்
போனது; அண்டப்புறத்து அமர் கோலினார்.

(163-1)

1013.
அஞ்சல் இன்றி, அமர்க் களத்து, ஆரியன்
வெஞ் சினத்தோடு வேல் அரக்கன் பொர,
எஞ்ச ஏழு திவசம் இராப் பகல்,
விஞ்சு போர் செயும் வேலையில், வீரனும்.

(182-1)

1014.
ஆய கண்டு, அங்கு அமலன் விடும் சரம்
சாயகங்களை நூறி, தலைத் தொகை
போய் அகன்றிடச் செய்தலும், போக்கிலாத்
தீயவன் சினந்து, இம் மொழி செப்புவான்:

(182-2)

1015.
‘துறக்கும் என்பதை எண்ணி சிரத் தொகை
அறுக்குமுன் முளைத்து உய்குவது அன்றியே,
மறுக்கும் என்று மனக் கொளல், மா நிலத்து
இறக்கும் மானுடர் போன்று, என் உயிரும், நீ.

(182-3)

1016.
ஈது அரக்கன் புகல, இராமனும்
தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து
ஓது உரைக்கு எதிருற்று, என் பகழி இப்
போது உரைக்கும்’ எனக் கொடு பொங்கினான்.

(182-4)

1017.
மாறுபடத் தேவர்களை ஏவல்கொளும்

(199-1)
வாள் அரக்கன் மடிய, அன்னான்

ஏறி வரு பொன் தடந் தேர் பாகனும்

பொன்றிட பண்டு அங்கு இமையா முக் கண்

ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின்

ஏகியதால் – இடையே கூடித்

தேறு செய்து உழல் போதில், தீவினை

மாய்த்திடப் போம் நல் வினையே போல.

1018.
‘வான் கயிலை ஈசன், அயன், வானவர் கோன்,

முதல் அமரர் வாழ்த்தி ஏத்தி,
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து,

(219-1)
வைகிய நீ, தாய் சொல் தாங்கி,

கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள்

வாளி ஒன்று கடிதின் வந்து, உன்

ஊன் புகும் கல் உரம் உருவி ஓட,

உளம் நாணினையோ? உயிரும் உண்டோ?

1019.
‘அரு வினை வந்து எய்தியபோது, ஆர் அரசே!

(221-1)
உன்தன்

திரு வினை நீ பெறுவதற்குத் திருநாமங்களைப் பரவ,
ஒருபது வாய் உள; வணங்க, ஒண் முடி பத்து உள,

இறைஞ்ச,

இருபது கை உள; இலங்கை என்னாக வீந்தாயே!

1020.
‘அரு வினை வந்தெய்திய போழ்து

(221-2)
ஆர் தடுப்பார்? ஆர் அதனை அறிவார்?

வீட்டின்

திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன்

திருநாமங்கள் தமைச் சிந்தித்து ஏத்த,

ஒருபது நா உள; வணங்க, ஒண் முடிகள்,

பத்து உளவே; இறைஞ்ச, மேரு

இருபது கை உள; இலங்கை என்னாக

உயிரோடும் இழந்திட்டாயே!

1021.
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள்’

(242-1)
என்று

உன்னி உரைத்தேன்; உரை கேளாது, உத்தமனே!
பின்னை இராமன் சரத்தால் பிளப்புண்ட

உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால்

நோக்காயோ?

1022.
‘ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்;
ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார்

தேவிதனை;

பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்?

(242-2)

1023.
இந்தனத்து அகில் சந்தனம் இட்டு, மேல்
அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து,
எந்த ஓசையும் கீழுற ஆர்த்து, இடை
முந்து சங்கு ஒலி எங்கும். முழங்கிட,

(245-1)

1024.
கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து,
உற்ற ஈம விதியின் உடம்படீஇ,
சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர,
மற்ற வீரன் விதியின் வழங்கினான்.

(245-2)

1025.
இனைய வீரன் இளவலை நோக்கி, ‘நீ
புனையும் நன் முடி சூட்டுதி, போய்’ எனா,
அனைய வீரன் அடியின் இறைஞ்சவே,
‘அனையனோடும் அனுமனைச் சார்க’ எனா.

(248-1)

37. மீட்சிப் படலம்

1026.
மாருதிச் செல, மங்கலம் யாவையும்
மாருதிப் பெயர் கொண்டு உடன் வந்தனன்;
வீர விற் கை இளவல் அவ் வீடணன்
வீரபட்டம் என, நுதல் வீக்கினான்.

(4-1)

1027.
செய்த மா மணி மண்டபத்தே செழுந்
துய்ய நல் மணிப் பீடமும் தோற்றுவித்து,
எய்து வானவ………………………….கம்மி……..
……………………………………………………………………..

(5-1)

1028.
மேவி நாரதனே முதல் வேதியர்
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில்
கூவி, ஓம விதிமுறை கொண்டிட,
தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே.

(5-2)
1029.
பொய்யினுக்கு ஒரு வெ……………………………
……………………………………………………………………..
உய் திறத்தினுக்கே உவந்து உம்பர்கள்
கையினின் கலசப் புனல் ஆட்டினார்.

(5-3)

1030.
வேத ஓசை விழா ஒலி மேலிட,
நாத துந்துமி எங்கும் நடித்திட,
வேத பாரகர் ஆசி விளம்பிட,
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட,

(6-1)

1031.
வீர மா முடி சூடிய வீடணன்
வீர ராகவன் தாள் இணை மேவிட,
ஆர் மார்பொடு அழுந்திடப் புல்லினான்.
ஆரினானும் அறிவரும் ஆதியான்.

(10-1)

1032.
‘ஆதி நாளில், ”அருள் முடி நின்னது” என்று
ஓதினேன்; அவை உற்றுளது; உத்தம!
வேத பாரகர் வேறுளர் யாவரும்
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய்.

(11-1)

1033.
”வஞ்சகக் கொடியான் முனம் வவ்விட,
பஞ்சரக் கிளி என்னப் பதைப்பவள்,
நெஞ்சினில் துயர் நீக்கியது” என்று, நீ
அஞ்சனைப் புதல்வா! அருள்வாய்” என்றான்.

(13-1)

1034.
‘மங்கை சோபனம்! மா மயில், சோபனம்!
பங்கயத்து உறை பாவையே, சோபனம்
அங்கு அ(வ்) ஆளி அரக்கனை ஆரியச்
சிங்கம் இன்று சிதைத்தது, சோபனம்!

(16-1)

1035.
‘வல்லி, சோபனம்! மாதரே, சோபனம்!
சொல்லின் நல்ல நல் தோகையே சோபனம்!
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய
வல்லியங்கள் வதைத்தது, சோபனம்!

(16-2)

1036.
‘அன்னை, சோபனம்! ஆயிழை, சோபனம்!
மின்னின் நுண் இடை மெல்லியல், சோபனம்!
அன்ன ஆளி அரக்கனை ஆரிய
மன்னன் இன்று வதைத்தது, சோபனம்!

(16-3)

1037.
‘நாறு பூங் குழல் நாயகி, சோபனம்!
நாறு பூங் குழல் நாரியே, சோபனம்!
ஆறு வாளி அரக்கனை ஆரிய
ஏறும் இன்றும் எரித்தது, சோபனம்!’

(16-4)

1038.
சொன்ன சோபனம் தோகை செவி புக,
அன்னம் உன்னி, அனுமனை நோக்கியே,
‘அன்ன போரில் அறிந்துளது, ஐய! நீ
இன்னம் இன்னம் இயம்புதியால்’ என்றாள்.

(16-5)

1039.
சென்றவன்தன்னை நோக்கி, ‘திருவினாள் எங்கே?’

(46-1)
என்ன,

‘மன்றல் அம் கோதையாளும் வந்தனள்,

மானம்தன்னில்’

என்றனனின்; என்னலோடும், ‘ஈண்டு நீ கொணர்க’

என்ன,

‘நன்று! என வணங்கிப் போந்து நால்வரை,

‘கொணர்க!’ என்றான்.

1040.
காத்திரம் மிகுத்தோர், நால்வர், கஞ்சுகிப்

(46-2)
போர்வையாளர்,

வேத்திரக் கையோர், ஈண்டி, விரைவுடன்

வெள்ளம்தன்னைப்

பாத்திட, பரந்த சேனை பாறிட, பரமன் சீறி,
‘ஆர்த்த பேர் ஒலி என்?’ என்ன, ‘அரிகள்

ஆர்ப்பவாம்’ என்றார்.

1041.
என்றபோது இராமன், ‘ஐய! வீடணா! என்ன

கொள்கை!

மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம்
அன்றிதுன்றிய குழலினார்தம் சுயம்வர வாஞ்சை, சூழும்
வென்றி சேர் களத்தும், வீர! விழுமியது அன்று,

(46-3)
வேலோய்!’

1042.
அற்புதன் இனைய கூற, ஐய வீடணனும் எய்தி,
செப்பு இள முலையாள் தன்பால் செப்பவும்,

(46-4)
திருவனாளும்,

அப்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த

அண்ணல்

ஒப்பினைக் கண்ணின் கண்டே, உடம் நினைந்து,

இனைய சொன்னாள்.

1043.
‘அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால்,
பழிபடும் என்பரால், பாருளோர் எலாம்;
விழுமியது அன்று, நீ மீண்டது; இவ் இடம்
கழிபடும்’ என்றனன், கமலக்கண்ணனே.

(67-1)

1044.
கண்ணுடை நாயகன், ‘கழிப்பென்’ என்றபின்
மண்ணிடைத் தோன்றிய மாது சொல்லுவாள்:
‘எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான்
விண்ணிடை அடைவதே விழுமிது’ என்றனள்.

(67-2)

1045.
பொங்கி சிந்தையள் பொருமி, விம்முவாள்,
‘சங்கையென்’ என்ற சொல் தரிக்கிலாமையால்,
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே,
அங்கியின் வீழலே அழகிதான்அரோ.

(67-3)

1046.
‘அஞ்சினென், அஞ்சினென், ஐய! அஞ்சினென்;
பஞ்சு இவர் மெல்லடிப் பதுமத்தாள் தன்மேல்
விஞ்சிய கோபத்தால் விளையும் ஈது எலாம்;
தஞ்சமோ, மறை முதல் தலைவ! ஈது?’ என்றான்.

(86-1)

1047.
கற்பு எனும் கனல் சுட, கலங்கி, பாவகன்
சொல் பொலி துதியினன், தொழுத கையினன்,
‘வில் பொலி கரத்து ஒரு வேத நாயகா!
அற்புதனே! உனக்கு அபயம் யான்’ என்றான்.

(88-1)
1048.
‘இன்னும், என் ஐய! கேள்; இசைப்பென் மெய்,

(95-1)
உனக்கு;

அன்னவை மனக் கொள கருதும் ஆகையால்,

முன்னை வானவர் துயர் முடிக்குறும் பொருட்டு

அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள்.

1049.
‘யான் புரி மாயையின், சனகி என்று உணர்ந் –

(95-2)
தான் கவர் அரக்கன்; அம் மாயை என் சுடர்க்

கான் புகக் கரந்தது; இக் கமல நாயகி

தான் பரி தவத்து உனைத் தழுவ உற்றுளாள்.’

1050.
ஐயன் அம் மொழியினை அருளும் வேலையில்,

(97-1)
மை அறு மன்னுயிர்த் தொகைகள் வாய் திறந்து,

ஒய்யென ஒலித்ததால்; உவகை மீக்கொள,

துய்ய வானவர் துதித்து, இனைய சொல்லுவார்:

1051.
‘மிகுந்த மூன்றரைக் கோடியில் மெய் அரைக் கோடி

(97-2)
உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள

எம்

அகத்தின் நோய் அறுத்து, அருந் துயர் களைந்து,

எமக்கு அழியாச்

சுகத்தை நல்கிய சுருதி நாயக!’ எனத் தொழுதார்.

1052.
‘திருக் குவால் மலி செல்வத்துச் செருக்குவேம்

(109-1)
திறத்துத்

தருக்கு மாய்வுற, தானவர் அரக்கர் வெஞ் சமரில்

இரிக்க, மாழ்கி நொந்து, உனைப் புகல் யாம் புக,

இயையாக்,

கருக்குளாய் வந்து தோற்றுதி! ஈங்கு இது கடனோ?’

1053.
என்ற வாசகம் எறுழ் வலித் தோளினான் இயம்ப,

மன்றல் தாங்கிய மலரவன், வாசவற் கூவி,
‘துன்று தாரினோன் சுரருடன் துருவினை துடரச்

(114-1)
சென்று, மற்று அவன்-தருக’ என வணங்கினன்,

சென்றான்.

1054.
‘எனக்கும், எண்வகை முனிவர்க்கும், இமையவர்

(123-1)
உலகம்-

தனக்கும், மற்று இவள் தாய் என மனக் கொளத்

தகுதி;

மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள்

மலராள்;

புனத் துழாய் முடிப் புரவலன் நீ; நிறை புகழோய்!’

1055.
‘வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம்

(141-1)
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்

எங்குளார் எனும் இடம் உளது; அதன் மிசை ஏறி,

பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்’

என்றான்.

1056.
‘மங்கலா நிதி வடதிசை வானவன் மானம்;

(142-1)
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்,

எங்கு உளார்?’ எனும் இடம் உளது; இதன் மிசை

ஏறி,

பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்’

என்றான்.

1057.
‘வாங்கினான், அளகேசனைத் துரந்து, இந்த மானம்;

(142-2)
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும், உரவோய்!

ஆங்கு இடம் பினும் உடையதாம்; அதுதனில் ஏறி,

பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான்.

1058.
வாங்கினான் அது, மா நிதியோடு அவன் மானம்;

(142-3)
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால், இன்னும்,

ஆங்கு உளோர் எலாம் ஏறுவது; அதனை நீ ஏறி,

பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான்.

1059.
என்று, தெரினை வீடணன் எய்தியது என்றான்;

(142-3)
‘நன்றுதான்’ என நாயகன் ஏறினன், அவரோடு

அன்றுதான் இளங் கோவொடும் அக் கவி வெள்ளம்

ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும்.

1060.
ஏறினன் விமானம்தன்னில் இராமனும், இளைய

(142-5)
கோவும்,

மாறு இலாச் சனகியோடு, வள நகர் இலங்கை

வேந்தும்,

கூறிய அனுமன், சாம்பன், குமரன், வெங் கவி வந்து

ஏற,

மாறிலோர் நிலத்து நின்றார், வயந்தனார் கொத்தில்

உள்ளார்.

(இது முதல் 142-17 வரையில் ‘இமயப் படலம்’ என்றும், ‘வசந்தன்
உயிர்வரு படலம்’ என்றும், சில பிரதிகளில் உள்ளன.)

1061.
மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை

(142-6)
நோக்கி,

‘ஏறும் நீர் தேரில்’ என்ன, ‘கருணன் வந்து

எதிர்த்தபோது,

சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட, அரக்கன் சீறி,

நீறு எழப் பிசைந்தே இட்டான் நெற்றியில்’ என்னச்

சொன்னார்.

1062.
என்ற வாசகம் கேட்டலும், வானரர் இறங்கி,

(142-7)
நின்ற போதினின் இராகவன் தேரின்நின்று

இழிந்தான்:

‘பொன்றுமா வரக் காரணம் என்?’ எனப் புழுங்கா’

துன்று தார்ப் புயத்து இலக்குவ! பொறி’ எனச்

சொன்னான்.

1063.
‘வரி சிலை இராமன் ஓலை, மறம் புரி மறலி,

காண்க!

எரிகொளும் இலங்கைப் போரில், இன் உயிர் துறந்து

போந்தகுரிசிலை, வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க;

அன்றேல்,

உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென்’என்று

எழுதிவிட்டான்.

(142-8)

1064.
அக் கணத்து அருகு நின்ற அனுமன், கைத்

திருமுகத்தைத்

தக்கவன் நீட்ட, வாங்கி, தன் தலைமிசையில் சூடி,

‘இக்கணம் வருவென்; வாழி! இராம!’ என்று, இரு

தோள் கொட்டி,

மிக்க மா மடங்கல் போல, விண்ணிடை விசைத்துப்

பாய்ந்தான்.

(142-9)

1065.
மண்டிப் புக்கனன், மறலிதன் பெரும் பதம்; நரகில்

தண்டிப்புண்டு, அறுப்புண்டு, எரிப்புண்டவர் தம்மைக்

கண்டு, மாருதி கண் புதைத்து, ‘அரி! அரி’ என்ன,

மிண்டி ஏறினர், நரகிடை வீழ்ந்தவர் எல்லாம்.

(142-10)

1066.
துளங்கி, அந்தகன் வந்து, அடி தொழுதலும், தோலா

வளம் கொள் மாருதி, ‘வசந்தனைக் காட்டு’ என,

அவனும்

உளம் கலங்கி, ‘உன் நாயகன் அடியர் இங்கு

உறார்கள்;

விளங்கு கீர்த்தியாய்! தேடு விண்ணவர் புரத்து’

என்றான்.

(142-11)

1067.
சொன்ன கூற்றுவன் தன்னைத் தன் வாலிடைத்

துவக்கி,

பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப்

புகலும்,

முன்னை வந்து கண்டு, இந்திரன், ‘முனிவு எனோ?’

என்ன,

‘மன்ன! ஏகுவென்; வயந்தனைக் காட்டுதி’ என்றான்.

(142-12)
1068.
‘வல் அரக்கரை மடித்து, எமை எடுத்த மாருதியே!

(142-13)
இல்லை இங்கு; அயன் உலகிடை அறிதி’ என்று

இசைப்ப,

சொல்லும் அங்கு அவன் தன்னையும் வாலிடைத்

துவக்கி,

பல் உயிர்த் திறம் படைத்தவன் உலகிடைப்

பாய்ந்தான்.

1069.
சிந்தை தூயவன் செல, உளம் துளங்கு நான்முகனும்

(142-14)
‘வந்த காரியம் எது? என, ‘வயந்தனைப் பார்த்துச்

சுந்தரத் தடந்தோள் வில்லி நின்றனன்; அவன்தான்

உந்தன் நீள் பதத்துளான்எனின், காட்டு’ என

உணர்த்தும்.

1070.
‘என்னுடைப் பெரும் பதத்தின் மேலாகிய எந்தை

(142-15)
தன்னுடைப் பெருஞ் சோதியின் கீழதாய்த் தழைத்த

மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான்;

விறலோய்!

அன்னவன்தனைக் கொணருதி, ஆங்கு அணைந்து’

என்றான்.

1071.
என்ற நான்முகன்தன்னையும், இந்திரன் யமனோடு

(142-16)
ஒன்ற, வால்கொடு துவக்கினன், ஒரு

குதிகொண்டான்;

மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின்

பதத்தில்

சென்று, கண்டு கொண்டு இழிந்தனன், திசைமுகன்

பதியில்.

1072.
மலரின்மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க,

(142-17)
குலவு வாசவன், யமனை விட்டு, இரு நிலம் குறுகி,

அலகு இல் வீரன்தன் அடி இணை அவனொடும்

வணங்கி,

சலமும் தீர்த்தனன்; படையையும் ஏற்றினன்,

தேர்மேல்.

1073.
ஏறினான் இராமன் தேர்மேல் எழில் மலர்

(142-18)
மாதினோடும்;

ஏறினான் இளைய கோவும், இராக்கதர்

வேந்தனோடும்,

ஏறினான் அனுமன்; சாம்பன், இடபனே, முதலோர்

ஏற,

மாறினார் நிலத்து நின்றார், வசந்த

கோத்திரத்திலுள்ளார்.

1074.
ஏறினன், இளைய கோவும், இரவி சேய், சாம்பன்,

(142-19)
நீலன்

‘ஏறினன் வாலி மைந்தன்’ என்றனர்; பலரும் ஏற,

சீறிய கும்பகன்னன் சினத்திடைச் சிதைந்து பட்ட,

மாறிலா வசந்தன் சேனை நின்றது, மாறி மண்மேல்.

1075.
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும், மயிலும்

(142-20)
கண்டு கைதொழு வானரக் கடலும், மற்று யாரும்

எண் தவாத பொன் மானமீது இருந்திடும் இயற்கை

அண்டர் நாதனும், வானமும் அமரரும் ஆமால்.

1076.
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ளப் படை;

(142-21)
அவர்தம்மை,

‘வாரும் தேரின்மேல்’ என, ‘கும்பகர்ணன் வந்து ஏன்ற

போரில் எம் படைத் தலைவனோ பொன்றினான்;

அவனை

நீர் எழப் பிசைந்து, இட்டனன் நெற்றியில்’ என்றார்.

1077.
ஆழி வெள்ளம் ஓர் எழுபதும், அனுமனே முதலாம்

(142-22)
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படைத் தலைவரை

இராமன்

சூழ நோக்கினன்; சுக்கிரீவன்தனைப் பாரா,

‘வாழி மாப் படை அனைத்தும் வந்தன கொலோ?’

என்றான்.

1078.
இரவி கான்முளை இறங்கி வந்து, இராமனை

(142-23)
இறைஞ்சி,

‘சுருதியாய்! ஒரு பேர் அருள் சொல்லுவ; தொடர்ந்து

வருவதான இச் சேனையில் வசந்தன் என்று

உரைக்கும்

ஒருவன் வந்திலன்; கண்டருளுதி’ என உரைத்தான்.

1079.
கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன்

(142-24)
இசைந்த போரின் வந்து எய்தலும், இவன்தனை

எடுத்துத்,

தசைந்த தோல், மயிர், எலும்பு, இவைதமைத்

தெரியாமல்,

பிசைந்து மோந்து, உடற் பூசினன், பெரு நுதற்கு

அணிந்தே.

1080.
‘இசைந்த சீராமன் ஓலை; இலங்கையில் பூசல்தன்னில்

(152-25)
வசந்தனைக் கண்டதில்லை; மதித்தவாறு அழகிது

அம்மா!

வசந்தனைக் கொண்டுதானும் வருக! எனோ?

வாரானாகில்,

நமன் குலம் களைவென்’ என்றான் – ‘நாளை வா’

என்ற வீரன்.

(இதன்பின் 142-8, 9, 10, 11 என்ற பாடல்கள் உள்ளன.)

1081.
‘செல்வனே! இன்னம் கேளாய்; யான் தெரி பாசக்

(142-30)
கையால்

அல் எனும் அரக்கர்தம்மை வம்மின்!’ என்று

அழைத்து, மெள்ள

நல் இருட் பரவை மேனி நாரணன் தமரைக்

கண்டால்,

‘செல்லவே போமின்’ என்று விடுக்குவென், செவியில்,

செப்பி.

(இதன்பின் 142-12, 13, 14, 15, 16, 17 என்ற பாடல்கள் உள்ளன.)
1082.
‘மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து, மாதே!

செய்யளாகிய திரு எனப் பொலிந்து, இனிது இருத்தி’

கைகளால் மிகப் புல்கியே, கண்கள் நீர் ததும்ப,

பொய் இலா மனத் திரிசடை, ‘விடை’ எனப்

போனாள்.

(146-1)

1083.
என்ற காலையில், எழுந்தவன் இயற்கையை நோக்கி,

நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்;

சென்று சேனையை நாடினன், திரிந்து வந்து எய்தி,

வென்றி வீரரில் வசந்தனைக் கண்டிலர், வெறுத்தார்.

(157-3)

(சில பிரதிகளில், ‘சொன்ன வாசகம் பிற்பட’ (157) என்ற
பாடலுக்குப் பின், ‘வசந்தன் உயிர் வரு படலம்’ தொடங்குகிறது.
157-3 என்னும் இந்தப் பாடலுக்கு முன் இதன் முன்னர்த் தந்துள்ள
142-19, 21 என்ற இரு பாடல்களும் காணப்பெறுகின்றன. இதன்பின்
142-22 என்ற பாடல் உள்ளது.)

1084.
என்னும் காலை(யில்), இராமனும், யமபடர் யாரும்

மன்னும் தொல் புரம் நோக்கியே, ‘மணி நகை

முறுவல்

உன்னின் அன்றி, யான் தேவருக்கு உதவி செய்து’

என்னா,

பொன்னின் வார் சிலை எடுத்தனன், பொறுத்தனன்,

பொரவே.

(157-5)

1085.
எண் திசாமுகம் இரிந்து உக, யமபுரம் குலைய,

அண்டகோளகை அடுக்கு அழிந்து உலைவுற,

அழியாப்

புண்டரீகத்துப் புராதனன் முதலிய புலவோர்

தொண்டை வாய் உலர்ந்து அலமர, தொடு வில்

நாண் எறிந்தான்.

(157-6)

1086.
பாக வான் பிறையாம் என, பலர் நின்று துதிப்ப,

வாகை கொண்ட வெஞ் சிலையினை வளைவுற
வாங்கிமேக சாலங்கள் குலைவுற, வெயிற் கதிர் மாட்சி

சோகம் எய்தி மெய் துளங்கிட, சுடு சரம் துரந்தான்.

(157-7)

1087.
வல்லை மாதிரம் மறைந்திட, வானவர் மயங்க,

எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக,

வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த

தொல்லை நான்மறை துளங்கிட, சுடு சரம் துரந்தான்.

(157-8)

1088.
வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க,

மின் புலம் கொளும் உரும் என்ன, வீக்கிய வில்லைத்

தன் பொலங் கையில் தாங்கியே தொடுத்த அச்

சரங்கன்

தென் புலன்தனை நிறைத்தது; செறிந்தன, சேணில்.

(157-9)

1089.
தருமராசனும், காலனும், யமபடர்தாமும்,

உருமு வீழ்ந்தென, சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து,

மரும தாரையில் பட்டது ஓர் வடிக் காண வாங்கி

நிருமியா, ‘இது இராகவன் சரம்’ என நினைந்தார்.

(157-10)

1090.
‘கெட்டது இன்று இனித் தென்புலம்; கேடு வந்து

எய்தி;

பட்டனம்; இனிப் பிழைப்பு இலம்’ என்பது ஓர்

பயத்தால்,

முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப,

சிட்டர்தம் தனித் தேவனை வணங்கினர், சென்றார்.

(157-11)

1091.
‘சிறந்த நின் கருணை அல்லால், செய் தவம் பிறிது

இலார்மேல்

புறம் தரு முனிவு சாலப் போதுமோ? புத்தேள்!
நின்னைமறந்திருந்து உய்வது உண்டோ? மலர்மிசை

(157-12)
அயனைத் தந்த,

அறம் தரு சிந்தை ஐய! அபயம், நின் அபயம்’

என்றார்.

1092.
‘அய்யனே! எமை ஆளுடை அண்டர் நாயகனே!

(157-13)
மெய்யனே! என, சரணில் வந்து, யாவரும் வீழ்ந்தார்;

‘பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள்!’ என,

போர் மூண்டு

எய்ய நேரிலாச் சிலையினை மடக்கினன், இராமன்.

1093.
வந்து அடைந்து, ‘உனக்கு அபயம்’ என்று, அடியினில்

(157-14)
வணங்கி,

”எம் தனிப் பிழை பொறுத்தி” என்று, இயம்பினீர்;

இதனால்

உன்தன்மேல் சலம் தவிர்ந்தனம்; யூக நாயகன்தான்

தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக’

என்றான்.

1094.
தன் தனிச் சரண் வணங்கலும், இராகவன் சாற்றும்;

(157-15)
”என் தனிப் பிழை பொறுத்தி” என்று இயம்பினை;

அதனால்

உன்தன்மேல் சலம் தவிர்ந்தனம்; யூபநாயகன்தான்

தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக’

என்றான்.

1095.
அண்ணல் ஆரியன், ‘தருதி’ என்று அருளலும், அவர்

(157-16)
போய்,

விண் எலாம் புகுந்து ஓடியே, வசந்தனை விரைவில்

கண்ணின் நாடி, நல் உயிரினைக் காண்கிலாது

இருந்தார்;

‘திண்ணன் யாக்கை எங்கே?’ என, சாம்புவன்

செப்பும்.

(இதன்பின் 142-23, 142-8, 142-9 என்னும் பாடல்கள் உள்ளன.)
1096.
அன்னதே என, ‘அவன் உயிர்க்கு அமரர்தம்

(157-17)
பதிக்கே

முன்னர் ஓர் உடல் கொண்டு, இவண் தருக!’ என

மொழிய,

சொன்ன வாய்மை கேட்டு, அனுமனும் துணைவரைப்

பாரா,

‘பொன்னின் பாதுகம் பணிந்தனென், விடை’எனப்

போனான்.

(இதன்பின் 142-10, 11, 25, 12, 15, 16 என்னும் பாடல்கள் வர,
‘வசந்தன் உயிர் வரு படலம்’ முடிவு பெறுகிறது.)

1097.
அன்னது ஆதலின் அமரர் அந் நகரிடை ஆங்கண்

(157-29)
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட, முந்தச்

சொன்ன வாயுவைத் தரிசிக்க, வசந்தனும் தோன்றி,

பொன்னின் பாதுகம் புனைந்தனன்; தருமனும்

போனான்.

1098.
அன்னகாலையில், புட்பக விமானம் ஆங்கு அடைய,

(157-30)
முன் இராகவன், சானகி இலக்குவன் முதலா,

மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா

உன்னி ஏறலும், உச்சியில் சொருகு பூப் போன்ற.

1099.
என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்;

(158-2)
‘நன்றுதான்’ என நாயகன் ஏறினன் திருவோடு;

அன்றுதான் இளங்கோவொடும் அக் கவி வெள்ளம்

ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும்.

1100.
ஆய கண்டு, அமலன் உள்ளம் மகிழ்ந்தனன்;

(158-2)
அனுமன்தன்பால்

நேயம் மூண்டு அதுதான் நிற்க, நெடியவன் சரணம்

சூடி

மேயினன், தமர்களோடு வசந்தனும்; விண்மீதாகப்

போயினது, இராமன் சொல்லின், புட்பக விமானம்

அம்மா!

1101.
வென்றி சேர் கவியின் வெள்ளக் கடல் முகந்து

(162-1)
எழுந்து விண்மேல்

சென்றது விமானம்; செல்ல திசையோடு தேசம் ஆதி

என்றவை அனைத்தும் தோன்ற, இராமனும் இனிது

தேறி

தென் திசை இலங்கையின் சீர் சீதைக்குத்

தெரிக்கலுற்றான்.

1102.
‘மன்னு பொற் கொடிகள் ஆட, மாட மாளிகையின்

(162-2)
ஆங்குத்

துன்னு பைம் பொழில்கள் சுற்ற, தோரணம் துவன்றி,

”வானோர்

பொன்னகர் ஒக்கும்” என்று புகழ்தலின், புலவராலும்,

பன்ன அரும் இலங்கை மூதூர், பவளவாய் மயிலே!

பாராய்.

1103.
‘வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகைக்

(162-3)
கனி வாய் வல்லி!

எதிர் பொர வந்த விண்ணோர் – இறைவனைச்

சிறையில் வைத்த

அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு

செல்ல

கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும்

காணாய்.

1104.
‘வென்றி வேல் கருங் கண் மானே! என்னொடும்,

(162-4)
இகலி, வெய்ய

வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில்

நோக்காய்;

கன்றிய அரக்கன் சேனைக் காவலன் தன்னை நீலன்

கொன்று, உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில்

நோக்காய்.

1105.
‘மறத் திறல் வாலி மைந்தன், வச்சிரத்து எயிற்றோன்

தன்னைச்

செறுத்து, உயிர் செகுத்து, நின்ற தென் திசை

வாயில் நோக்காய்;அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன்தன்

(162-5)
உடலை ஆவி

வெறுத்து, எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில்

நோக்காய்.

1106.
கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும்

(162-6)
காணாய்;

மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை

வல்லி!

இருங் கட முகத்த யானை, இவுளி, தேர், காலாள்

துஞ்சி

பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப்

பாராய்.

1107.
‘கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த்

(162-7)
தோன்ற,

அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத்

தாக்கி,

சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை

வெம் போர்ப்

படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப்

பாராய்.

1108.
‘பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா

(162-8)
நின்றேன்;

மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன்

விலங்கலால் அன்று

ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து

நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும்

நோக்காய்.

1109.
ஆவினை, குரவரோடும் அரு மறை முனிவர்தம்மை

பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து

தம் இல்மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து

(169-1)
தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும்

சுரர்கள் ஆவார்.

1110.
மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால்

(169-2)
கீறித்

தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,

பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,

நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர்

அன்றே.

1111.
ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, ‘கமலம்

(170-1)
அன்ன

பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என்

பொருட்டால் செய்த

ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு’ என, இரதம் ஆங்கே

பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை

பகரலுற்றான்.

1112
‘அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு

(170-2)
இடுக்கண் செய்தோர்

செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர்

தம்பால்,

வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன்

நெஞ்சர், பெற்ற

தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச்

செற்றோர்.

1113.
‘குருக்களை இகழ்வோர் கொண்ட குலமகள் ஒழியத்

(170-3)
தங்கள்

செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர்

கொல் தீம்பர்,

இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள்

தின்று

பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை

செய்வோர்.

1114.
‘வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,

(170-4)
மை அறும் முன்னோன்தன்னை வலி செயும்

தம்பிமார்கள்

கை உள முதல்கள்தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று

ஈயார்,

துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச்

சுளித்துக் கொல்வோர்.

1115.
‘ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண

(170-5)
வந்தோர்க்கு

ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே

சென்று

நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர்,

சான்றோர்,

தாரமது அணைவோர், மூத்தோர்தமை இகழ்

அறிவிலாதோர்.

1116.
‘கண்டிலாது ”ஒன்று கண்டோம்” என்று கைக்கூலி

(170-6)
கொள்வோர்,

மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு

செய்வோர்,

மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால்

ஒருவன் சோற்றை

உண்டிருந்து, அவர்கள்தம்பால் இகழ்ச்சியை

உரைக்கும் தீயோர்.

1117.
‘பின்னை வா, தருவென்’ என்று பேசித் தட்டுவிக்கும்

(170-7)
பேதை

கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளும்

மாந்தர்,

துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து

இகழ்வோர், சுற்றம்

இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல்

செய்வோர்.

1118.
‘ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு

(170-8)
மீண்டோர்,

நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை

வஞ்சிப்போர், நன்மை

வேண்டிடாது இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை

நீப்போர்,

பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி

வாழ்வோர்.

1119.
‘கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர்

(170-9)
தங்கள்

வயிற்றிடைக் கருவைத் தாமே வதைப்பவர்,

மாற்றார்தம்மைச்

செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச்

செற்றோர்

மயிர்க் குருள ஒழியப் பெற்றம் வௌவுவோர்,

வாய்மை இல்லோர்.

1120.
‘கொண்டவன்தன்னைப் பேணாக் குலமகள்,

(170-10)
கோயிலுள்ளே

பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும்

பேதை,

உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள்

உலோபர், ஊரைத்

தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணுதும்

தறுகண்ணாளர்.

1121.
‘தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள்

(170-11)
வௌவும்

பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள் வந்து

‘கா’ எனா, ‘அபயம்’ என்று, கழல் அடைந்தோரை

விட்டோர்,

பூவைமார்தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று

போவோர்.

1122.
‘முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத்

(170-12)
தீயோர்,

மறையவர், நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும்

மாந்தர்,

கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில்

வாழும்

பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும்

பாவர்.

1123.
கார்க் கன வரை சேர் கானில் கடுங் குழி கல்லும்

(170-13)
கட்டர்,

நீர்க் கரை அதனில் ஒட்டி நெடுங் கலை முயல் மான்

கொல்வோர்,

ஊர்க் கெழு கூவல் வீழ்ந்த உயிர்ப் பசு எடாது

போவோர்,

வார்க் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும்

மாக்கள்.

1124.
வழி அடித்து உண்போர், கேட்டால் வழி

(170-14)
சொல்லாதவர்கள், வைப்பைப்

பொழி இருள் களவு காண்போர்

பொய் சொல்லிப் பண்டம் விற்போர்,

அழிவு இலா வாய்மை கொன்றோர்

அடைந்தது…………………………….

………………………………………………………

தெரிசிக்கத் தீர்க என்றான்.

1125.
‘ஆதியர் மூவர்க்கு அந் நாள், அரு மறை அறைந்த

(170-15)
அந்த

நீதியாம் புராணம்தன்னை இகழ்பவர், நிறையக்

கேளார்,

பாதியில் விட்டு வைப்போர், படித்தவர்ப்

பிரியப்படுத்தார்,

போதம் இலாதார்’ ”மற்றச் சமயம் பொல்லாதது”

என்பார்.

1126.
‘என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும்

(170-16)
பாவம்

ஒன்றிலர், நன்றிதன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர்

துன்றிய வினைகள் எல்லாம், சுடர் கண்ட இருளே

போல,

தென் திசை வந்து, சேதுத் தரிசிக்க, தீரும்’

என்றான்.

1127.
ஆங்கது கேட்டு, அருந்ததியே அனையாளும்,

(170-17)
‘அவதியுடன்

தீங்கு அணுகும் செய்ந் நன்றி மறந்திடும் தீ

மனத்தோர்கள்

தாங்க அரும் பாவங்களையும் எனக்காகத் தவிர்க்க’ என,

‘நீங்கிடுக அதுவும்’ என்றான் – நிலமடந்தை பொறை

தீர்த்தான்.

1128.
‘பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும்

(170-18)
சீர் எழுவு திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க’ என,

கார் எழுவு திரு மேனிக் கண்ணன் நினைப்பின்படியே

ஈர் – எழுவர் நால்வர் என்னும் இருடிகளும்

எழுதினரால்.

1129.
‘பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்ச மா பாதகமும்

(170-19)
சீர் மேவும் திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க’

எனா,

கார் மேவும் திரு மேனிக் காகுத்தன் கட்டுரைத்து,

வார் மேவும் முலைச் சனகி மாதோடும்

வழிக்கொண்டான்.

1130.
என்பன பலவும் அந்த ஏந்திழைக்கு இருந்து கூறி,

(170-20)
தன் பெருஞ் சேனையோடும் தம்பியும் அரக்கர்

கோவும்

பொன் பொரு விமானம்தன்மேல் போகின்றபோது,

மிக்க

இன்புடை இராமன் வேலைக்கு இப்புறத்து இழிந்து,

என் செய்வான்.

1131.
முன் பெல அரக்கன்தன்னை முனி கொலை

தொடரக், கண்டு, ஆங்கு

‘அன்பினால் அரி பால் தோன்றும் அரனை

அர்ச்சித்தால் அன்றி,

துன்பமே தொடரும் பொல்லாச் சூழ் கொலை

தொலையாது’ என்று ஆங்கு

இன்புறும் இராமன் வேலைக்கு இப் புறத்து இழந்து

நின்றான்.

(170-21)

1132.
திருவணை உயர் பதம் செப்பி மீண்டபின்,

அருகு அணை திருமகட்கு, ஆங்கு மற்று உள

தரு அணை திரள் புயச் சனக வல்லிக்கு, ஆம்

கரு வரை முகில் நிற வண்ணன் காட்டுவான்.

(170-22)

1133.
கப்பை எனும் கன்னியையும், கந்தனார் தாதையையும்

அப்பொழுதே திருவணைக்குக் காவலராய் அங்கு

இருத்தி,

செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,

ஒப்பு அரியாள்தன்னுடனே, உயர் சேனைக்

கடலுடனே.

(170-23)

1134.
வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே,

வாய்ந்த சாய்கையும் வந்தது; வானவர் வணங்க,

ஏந்து தோள் புயத்து இராமனும், இலக்குவன்தானும்

வாய்ந்த சீதையும், மானமும், வானர வேந்தும்.

(170-24)

1135.
பாய்ந்த வேலையின் கரையிடைப் பரமன் அங்கு

உறவே,

சாய்ந்த சாய்கையும் வந்து, அணுகாது அயல் கிடக்க,

ஏந்து திண் புயத்து இராமனும், இளையவன்தானும்

வாய்ந்த சீதையும், சேனையும், மற்றுள பேரும்.

(170-25)
1136.
நின்ற போதினில், நிகர் இலா அகத்தியன் முதலோர்

குன்றுபோல் புயத்து இராகவன்தனை வந்து குறுக,

”நன்று நின் வரவு” என்னவே, நாதனும் வணங்கி,

வென்றி வேந்தனும் வேதியர்தம்மொடு வியந்து.

(170-26)

1137.
சேதுவின் கரை சேர்ந்த அத் திறல் புனை இராமன்

‘ஏது இத் தலம்?’ எனக் குறுமுனிவனைக் கேட்ப,

‘வாத ராசனும் வாசுகிதானும் முன் மலைந்த

போது, தந்தது, இப் பொன் நகர்’ என்று அவன்

புகன்றான்.

(170-27)

1138.
புகன்றவன்தனைப் பூங் கழல் இராகவன் சாய்கை

அகன்ற காரணம் குறுமுனி உரைசெய, அவனும்,

‘பகர்ந்த தேவரும், பாற்கடல் பள்ளியான், பரமன்

புகுந்தது இவ் வழி; பூவில் வந்தவனும், மற்று யாரும்.

(170-28)

1139.
‘இருப்பது இத் தலம்; ஆகையால், இராவணன்

சாய்கை

அருத்தி இன்றியே, அகன்றது’ என்று அருள் முனி

அறைய,

பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி

‘கருத்து மற்று இனி உரை’ என, குறுமுனி கழறும்;

(170-29)

1140.
‘இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து,

உன்தன் மா நகர் எய்தினால், சாய்கை போம்,

உரவோய்!

‘அந்த நீதியே செய்தும்’ என்று, அனுமனை

அழைத்திட்டு,

‘எம்தம் நாதனை இமைப்பினில் கொடுவருக’

என்றான்.

(170-30)

1141.
அந்த வேலை, முனிவன் அளி தெருள்

இந்த மா நிலத்து யாவரும் இன்புற’கந்த மேவிய கங்கையில் ஓர் சிலை

தந்து காண்’ என மாருதி தாவினான்.

(170-31)

1142.
‘போதி’ என்று, அவற் போக்கிய இராமனும், இந்த

மாது சீதையும் மைந்தனாம் இலக்குவன்தானும்

தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி,

ஆதி நாதனும் இருந்தனன், அமரர்கள் வியப்ப.

(170-32)
1143.
ஆன போதினில், ஐயன் மனத்துளே

தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார்?

ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன்

மோனமாகி இருந்தனன், மூவரான்.

(170-33)

1144.
காலம் சென்றது எனக் கருதி, கையால்

கோலமான மணலினைக் கூட்டியே,

‘ஆலம் உண்ட தே இவர் ஆம்’ என

ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே.

(170-34)

1145.
‘முகுத்தம் ஆனதே’ என முனி மொழிதலும், இராமன்

மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண் மணல்

கூப்பி

அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி,

செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும்.

(170-35)

1146.
ஒத்த பூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்

சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்

அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி,

சித்தம் வாழ்தர நின்றனன், தேவர்கள் துதிப்ப.

(170-36)
1147.
நின்ற போதினில், நிறங்களும் படலமும் கொண்டு

வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து,

‘நன்று செய்தனை!’ என்னப் போய் நாதனைப்

பிடுங்கி,

வென்றி வால் அற்று, மேதினி வீழ்ந்தனன், வீரன்.

(170-37)
(இந்தப் பாடல் காணும் இடத்தில், இதற்குப் பிரதியாக,
பின்வரும் ஐந்து பாடல்கள் ஒரு பிரதியில் உள்ளன.)

1148.
ஆய வேலையில், கங்கையின் அருஞ் சிலை வாங்கி,

(170-37அ)
தூய வார் கழல் அனுமனும் தோன்றினன்; தோன்றா

சீயமாய் மலி அண்ணல் முன் திருச் சிலை வைத்து,

நேயமோடு இரு தாள் பணிந்து, அங்கு அவன்

நின்றான்.

1149.
நின்ற காலையில், அமலன் அங்கு அனுமனை

(170-37ஆ)
நோக்கி,

ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து, ‘நம்

பூசை

சென்றது ஆதலின், திருச் சிலை தாழ்த்தது; இப்

புளினக்

குன்றினால் சிவன் தன்னுருக் குறித்தனென், கோடி’

1150.
என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட,

(170-37இ)
இறைஞ்சி,

முன்னி மாருதி மொழிந்தனன்; ‘மூவுலகு உடையோய்!

இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடைப்

பிழையாது

அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை’

எனவே.

1151.
ஈர்த்தனன் வாலினாலே, இராகவன் பூசை கொள்ளும்

(170-37 ஈ)
கூத்தனை; அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி

வார்த்த பேர் உருவம் கொள்ள, வால் விசைத்து,

அனுமன் அந்த

மூர்த்தி என்று உணரான், நெஞ்சம் மூச்சு அற,

தளர்ந்து வீழ்ந்தான்.

1152.
மனுபரன் அனுமன்தன்னை வரவழைத்து, ஈசன்

வன்மை

தனை உரைத்து, ‘இடை நீ தந்த நாதனை நடுவே
நாட்டி,முனம் அதை ஏத்தி, பின் இம் மூர்த்தியை ஏத்தும்’

(170-37உ)
என்ன,

அனைவரும் அமரர்தாமும் அம் முறை ஏத்தி

நின்றார்.

1153.
விழுந்தவன்தனை வெந் திறல் இராகவன் நோக்கி

(170-38)
‘அழுந்து சிந்தையாய்! அறிவு இலாது அதனை என்

செய்தாய்?

பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி’ என்று

உரைப்ப,

எழுந்து போய், அவன், இறைவனை அருச்சனை

செய்தான்.

1154.
அவ் இடத்து, ‘அனுமன் தந்த, கங்கைமேல்

(170-39)
வவ்விடப்படும் வந்திடுவான் சிலை

இவ் இடத்தினில் யாவரும் ஏத்து, எனா,

தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான்.

1155.
‘எம்தன் நாதன் இவன்’ என்று இறைமகன்

(170-40)
தந்த நாமம் சராசரம் சார்ந்தபோது

இந்திரன், பிரமா முதல் எய்தினார்;

வந்து, வானவர் யாவரும் வாழ்த்தினார்.

1156.
‘இத் தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை

(170-41)
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார்,

நத்து உலாய கை நாரணன், நான்முகன்,

பித்தன், மூவரும் ஏத்தப் பெறுக’ எனா.

1157.
என்று, இராகவன் ஈசன் பெருமையின்

(170-42)
நன்றிதன்னை நவில, அடங்குமோ?

சென்ற சென்று, ‘செய, செய! போற்றி!’ என்று

அன்று இராச குமாரன் அறைகுவான்:

1158.
பூசனைத் தொழில் முடிந்தபின், பூங் கழல் இராமன்

தேவத் தச்சனை அழைத்து, ‘நீள் திரைக் கடல்
கிடந்தகாவல் மா மலை கொணர்ந்து, நீ கண்ணுதல்

(170-43)
கோயில்

பூவில் வந்தவன் சொல்வழிச் சமை’ எனப் புகன்றான்.

1159.
நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே,

(170-44)
‘இந்த மா மலை இரும்’, என, யாவையும் நல்கி,

‘விந்தை தங்கிய தோளினீர்! வேந்தனைப் பூசித்து,

இந்த மா நகர் இரும்’ என, இராமனும் அகன்றான்.

1160.
போன காலையில், பூங் கழல் இராகவன் பின்னே

(170-45)
சேனை தான் வர, தேவர்கள் யாவரும் வணங்கி,

மேல் நிலத்தவர் சென்றிட, விடை கொடுத்தருளி,

தானும், சீதையும், தம்பியும், சேதுவைச் சார்ந்தார்.

1161.
தேர் ஏறி, மா நாகம் சென்னிமிசைச் சென்று ஏற,

(170-46)
கார் ஏறு கண்ணபிரான், காவலன் கமழ் துளபத்

தார் ஏறு தடந் தோளான், தனி வயிரக் குனி சிலைக்

கைப்

போர் ஏறு, பொலிவுடனே வட திசையில்

போயினனால்.

1162.
சேர்ந்து, சேதுவின் தென் கரை கடந்து, வந்து எய்தி,

(170-47)
கூர்ந்த மானமேல் இருந்தவன் வட திசை குறுகிப்

போந்து, வானரப் புதுமையும் சனகிக்குப் புகன்று,

தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன், திறலோன்.

1163.
வரையலுற்றான், மலர்க் கரத்து இருந்த வன்

சிலையால்,

(170-48)
திரையில் உற்றிட மரக்கலத் தொகுதிகள் செல்ல,

விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே;

உரை செய்து உற்றனன், சனகிக்குப் பின்னும் அங்கு

உரவோன்.

1164.
‘நின்னை மீட்பதே நினைந்து, சில் நெறி எலாம் நீந்தி,

என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப,

சொன்ன வேற் படை அரக்கரைக் குறைத்த இச்

சேனை

மன்னனால் பெற்ற வலி இது; வென்றியும் அதனால்.

(170-49)

1165.
‘தேய்ந்த மா மதி போலும் சிலைநுதல்!

வாய்ந்த வானர வாரணம், மாருதி,

ஆய்ந்த மா மணி ஆழியை அன்றுதான்

பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால்.

(171-1)

1166.
‘மாருதி நின்னை நாடி வருபவன், ஏறிப் பாயப்

பாரிடைக் குளித்து நின்ற பவள மால் வரையைப்

பாராய்;

போரிடைப் பொலன் கொள் பொன் தார்ப் புரவிகள்

போக்கு இற்று என,

நீரிடைத் தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை

நோக்காய்!’

(171-2)

1167.
ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ஐய

வேரி அம் கமலை செப்பும்; ‘விரிந்த கிட்கிந்தை

உள்ளார்

சீரிய அயோத்தி சேரத் திருவுளம் செய்தி’ என்ன,

கார் நிற அண்ணல், ‘மானம் காசினி குறுக’

என்றான்.

(173-1)

1168.
என்றவன் சேயை நோக்கி, இசைந்து, கிட்கிந்தை

உள்ளார்,

நன்று நம் பதியைக் காண, நாயக! அழைத்தி’ என்ன,

சென்று அவன் சாம்பன்தன்னை, ‘திசை எட்டும்

திரியச் சாற்றி,

இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு’

என்றான்.

(174-1)
1169.

என்றபோது, எழுந்து சாம்பன், இசைந்த கிட்கிந்தை
உள்ளார்க்கு,

ஒன்று அழியாத வண்ணம் ஓதினான்; ஓதக் கேட்டே,

ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா

உற்றென்ன,

மன்றல்அம் குழலினார்கள் துவன்றினர், மகிழ்ச்சி

கூட.

(174-2)

1170.
சந்திர மானம்தன்மேல் தாரகை சூழ்ந்தது என்ன,

இந்திரன் மகனார் தாரத் தாரையும், ருமையும் கூடி

வந்தனர்; வந்து மொய்த்தார், வானர

மடந்தைமார்கள்;

இந்திரை கொழுநன்தன்னை ஏத்தினர்; இறைஞ்சி

நின்றார்.

(176-1)

1171.
நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழக்

கடைந்தபோது, அங்கு

ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே,

தன்னுடன் பிறந்த முத்து மாலையை, தரையில்

தோன்றி

மின் என நின்ற சீதைக்கு அளித்தனள், விரைவில்

தாரை.

(176-2)

1172.
தாரையைச் சீதை புல்கி, ‘தாமரைக்கண்ணன் அம்பால்

பாரை விட்டு அகன்றான் வாலி; பார்உளோர்க்கு

அவதி உண்டோ?

சீரிது மலரோன் செய்கை; தெரியுமோ? தெரியாது

அன்றே?

ஆர் இது தெரியகிற்பார், காலத்தின் அளவை

அம்மா?’

(176-3)

1173.
என்றிட, தாரை நிற்க; எரி கதிர்க் கடகம் ஒன்று,

மின் திரிந்தனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன்

ஈந்தது,அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது, அன்று

சென்று அடி இணையில் இட்டே, இறைஞ்சியே,

குமையும் நின்றாள்.

(176-4)

1174.
நின்றவள்தன்னை நங்கை அம் கையால் தழுவி

நின்று

வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்குச் சூழ

தன் திருக் கைகளாலே தழுவினள் என்னக்

கண்ணால்

ஒன்று அல பலவும் கூற, உணர்ந்து உளம் உவகை

உற்றே.

(176-5)

1175.
‘கடி கமழ் குழலினாளே! கார்காலம் யாங்கள்

வைகும்

வடிவுடைச் சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய்;

அடு திறல் பரிதி மைந்தன் நகர்அதன் அழகு பாராய்

வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும்

நோக்காய்.

(177-2)

1176.
‘கனி வளர் பவளச் செவ் வாய்க் கனங் குழை!

நின்னைக் காணாத்

துனி வளர் துன்பம் நீங்க, தோழமை நாங்கள்

கொண்ட

பனி வளர் இருளை மாற்றும் பகலவன் சேயும் யாமும்

நனி வளர் நட்புக் கொண்ட நலம் தரு நாகம்

நோக்காய்.

(177-2)

1177.
‘மாழை ஒண் கண்ணாய்! உன்னைப் பிரிந்து யான்

வருந்தும் நாளில்,

தாழ்வு இலாத் துயரம் நீங்க, தாமரை உந்தியான் கை

ஆழி அம் ஆற்றலானை, அனுமனை, அரக்கர்

அஞ்சும்,

பாழியான்தன்னை கண்ட பம்பையாறு அதனைப்

பாராய்.

(177-3)1178.
”பொய் வித்தி, வஞ்சம் காத்து, புலை விளைத்து,

அறைத்தைத் தின்றோன்

கை வித்தும் சாத்தினான் அக் கடல் பெரும்

படையை எல்லாம்

நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து, நம்மை

உய்வித்த வீரன்தன்னைக் கண்ட இடம் உது

கண்டாயே.

(177-4)

1179.
‘சவரியது இருக்கைதானும், கவந்தனைத் தடிந்த

கானும்,

இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த

பாரும்,

சவையுறு சுகுட்டன் மைந்தன், சரவங்கன் முதலோர்

காதல்

கவை அறு முனிவர்தங்கள் இடங்களும் கருதி

நோக்காய்.

(177-5)

1180.
‘விரை கமழ் ஓதி மாதே! விராதன் வந்து எதிர்ந்து

போர் செய்

நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை அதனை

நோக்காய்;

‘சரதம் நான் அரசு வேண்டேன்; தடமுடி சூடுக’

என்று

பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனைப்

பாராய்.

(177-6)

1181.
‘வளை பயில் தளிர்க் கை மாதே! வரு புனல்

பெருகக் கண்டு,

துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி, யான் துயரம்

இன்றி,

விளைதரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப,

வெல் போர்

இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனைப்

பாராய்.

(177-7)
1182.
பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை

பாராய்;

கயல் பொரு கங்கை யாறும், குகன் உறை நகரும்,

காணாய்;

அயன் முதல் அமரர் போற்ற அனந்தன்மேல்

ஆதிமூலம்

துயில் வரும் கடலே அன்ன அயோத்தியைத் தொழுது

நோக்காய்.

(177-8)

1183.
என்று உரைத்து, இளவலோடு சனகியும், இரவி

சேயும்

வென்றி வீடணனும், சேனை வெள்ளமும் விளங்கித்

தோன்ற,

பொன் திகழ் புட்பகத் தேர் பூதலத்து இழிய ஏவி,

இன் துணைப் பரத்துவாசன் இடவகை இழிந்தான்

அன்றே.

(177-9)

1184.
என்று, மன்னவன் பற்பல புதுமையும் யாவும்

மன்றல் அம் குழல் சனகிக்குக் காட்டினன், மகிழ்ந்து

குன்று துன்றிய நெறி பயில் குடதிசைச் செவ்வே

சென்று, கங்கையின் திருநதித் தென் கரை

சேர்ந்தான்.

(182-1)

1185.
ஆர்த்து, விண்ணவர் ஆடினர்; ஆடகத் தேரும்

பேர்த்த போதினில் நிலமிசை அணுகுற, பெரியோர்க்கு

ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து

தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான்.

(182-2)

1186.
மான மானம் மீப்போனது, வட திசை வருவது

ஆன காலையில், அறிவனும் ஆயிழை அறிய,

சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப,

தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார்.

(182-3)

1187.
‘பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை

ஆகும் ஈது’ என அறநெறி வழுவுறா அலங்கல்மேக வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி

தாகம் நீங்கினர்; அவ் இடைத் தேவரும் சார்ந்தார்.

(182-4)

1188.
இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி,

வெறித் துழாய் முடி வேத மெய்ப் பொருளினை

வியவா,

‘புறத்ததாம் உயிர் பெற்றனம்’ என அகம் பொங்க,

திறத்து இராமன்பால் திருமுனி அவனும் வந்துற்றான்.

(182-5)

1189.
வந்த மா முனிவோர்களை வணங்கும் முன், அவர்கள்

‘எந்தை! நீ இன்று இங்கு இருந்து, உள வருத்தமும்

நீக்கி,

செந்து, நாளை அத் திருநகர் அடைக’ எனச் செப்பி

உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார்.

(186-1)

1190.
‘தகும் அருந் தவங்கள் ஈட்டி, தசமுகத்து அரக்கன்

பெற்ற

யுகம் அரைக் கோடிகாறும் ஏவல் செய்து உழலும்

தேவர்

சுகம் உற, சிலை கைக் கொண்ட தொல் மறை

அமல! யார்க்கும்

இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி

உண்டோ?’

(188-1)

1191.
இந்த வாசகம் இயம்பினன், பின்னரும் இசைப்பான்,

‘எந்தை! நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும்

போக்கி

சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க!’

என்று

அந்தம் இல் பரத்துவன் சொல, அவ் இடத்து

அடைந்தான்.

(189-1)
1192.
அடைந்த மா முனித் தலைவனை அருச்சனை செய்து,

மிடைந்த சேனைஅம் பெருங் கடல் சூழ்தர, மேல்

நாள்

கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி, வானவர்கள்

படிந்து போற்றிட இருந்தென, பரிவுடன் இருந்தான்.

(189-2)

1193.
இருந்தபோது, இராமன்தன்னை இருடியும் இயம்பும்;

எந்தாய்!

பெருந் திறல் இலங்கைதன்னை எங்ஙனம்,

பெரியோய்! நீயே

வருந்தினை, குரங்கு கொண்டு, மாய வல் அரக்கன்

தன்னைத்

திருந்த அப் போரில் வென்று மீண்டவா செப்புக!

என்றான்.

(189-3)

1194.
இராகவன் அவனை நோக்கி, ‘இறந்த வாள் அரக்கர்

எல்லாம்

அராவின் மாருதியும், மேன்மை வீடணன்தானும்,

ஆங்கே

குராவருஞ் சேனை எல்லாம் கொன்றிட, கொற்றம்

கொண்டு

விராவியே மீண்டது’ என்று, மீளவும் பகரலுற்றான்:

(189-4)

1195.
‘தந்திரம் உற்ற சேனை தரைப்பட, மறுப்படாமல்

அந்தரம் உற்ற போது, அங்கு அரு மருந்து அனுமன்

தந்தான்;

மந்திர வித்தே! எம்பி வரி சிலை வளைத்த போரில்

இந்திரசித்தும் பட்டான்; இலங்கையும் அழிந்தது

அன்றே.

(189-5)

1196.
‘கறங்கு கால் செல்லா, வெய்ய கதிரவன் ஒளியும்

காணா,

மறம் புகா, நகரம்தன்னில் வானவர் புகுதல் வம்பே;திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர்; தேரும்

காலை,

அறம் புகா மறத்தினாலே அழிந்தது அப் பதியும்,

ஐயா!

(189-6)

1197.
‘மறக் கண், வெஞ் சினத்தில் வன்கண், வஞ்சக

அரக்கர் யாரும்

இறக்க, மற்று இறந்தது எல்லாம் எம்பிதன் ஈட்டின்,

எந்தாய்!

பிறப்பு மேல் உளதோ? சூழ்ந்த பெருந் திசை பேரின்,

பேராத்

துறக்கத்தோ, யாதோ, பெற்றார்? அறிந்தருள், சுருதி

நூலோய்!

(189-7)

1198.
என்ற வாசகம் இருந் தவன் கேட்டு, இகல் இராமன்

தன் துணைப் பெருந் தம்பியைத் தழுவி, ‘நீ

தக்கதோய்!

வென்று மீண்டிலைஆயின், அவ் விண்ணவர் முனிவர்

பொன்றுமாறு அன்றி, ஆர் உயிர் புரப்பது ஒன்று

உளதோ?

(189-8)

1199.
மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு,

மறையோன்

பாதம் முந்துற வணங்கி, மா முனிவனைப் பாரா,

‘ஏதும் யான் செய்தது இல்லை; அவ் இலங்கைமேல்

வெகுண்டு

வேத நாயகன் புருவத்தை நெரித்தனன்; விளிந்தார்.

(189-9)

1200.
‘அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென்;

அது அத்

துன்று தார் புனை மாருதி பெரும் புயத் துணையால்

வென்றி கொண்டனம், யாங்கள், மேல் விளம்புவது

எவனோ?’

என்று இயம்பினன், இருடிக்கும் இளவலும் இயைந்தே.

(189-10)
அனுமன் என்பவன் வாள்முகம் நோக்கினன்; அவனும்

புனித மா தவன்தனைத் தொழா, ‘புண்ணியப்

பொருளாம்

தனு வலம் கொண்ட தாமரைக்கண்ணவன் தனயன்

எனும்அது என்கொலோ? யாவர்க்கும் தந்தை நீ’

என்றான்.

(189-11)

1202.
அங்கு அவன் சொல, அனுமனும் உரைசெய்வான்,

அருணப்

பங்கயந்தனில் சீதையாம் பராபரையாட்டி

சங்கரன் அயன்தன்னையும் தரணி ஈர்-ஏழும்

தங்கு பொன் வயிற்று அன்னைதன் தன்மையை

நிகழ்த்தும்.

(189-12)

1203.
‘இராகவன் பெருங் குலத்தையும், இப் பெருஞ்

செல்வத்

தராதலம் புகழ் சனகன்தன் மரபையும், தந்து, என்

பராபரத்தினைப் பங்கயத்து அமுது எனப் பணிந்தாள்:

புராதனர்க்கு அரசே!’ என மாருதி புகன்றான்.

(189-13)

1204.
அன்ன வாசகம் கேட்டலும், அந்தணர் கோவும்,

‘என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது, யாம்?

என்று,

ஒன்றும் வாசகம் உரைத்திலன்; உள் அன்பு குளிர,

‘அன்னை வாசவன் திருவினைத் தந்தது’ என்று

அறைந்தான்.

(189-14)

1205.
பண் குலாவிய சுக்கிரீவன்தனைப் பாரா,

கண்குலா மனம் களித்தவன் கழல்மிசைப் பணிந்து,

மண்குலாம் புகழ் வீடணன், ‘நீலனே முதலாம்

எண்கின் வேந்தனும் அழித்தனர் இலங்கையை’

என்றான்.

(189-15)
1206.
என்று அவன் இயம்பக் கேட்டு, அங்கு இருந்த மா

தவனும், ‘இந்த

வென்றிஅம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம்

மேவிக்

குன்று என வருக!’ என்று கூறலும் இமையோர்

நாட்டில்

அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து

ஆங்கு வந்தார்.

(189-16)

1207.
பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண்

ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து, இழிந்தார்;

ஆன மெய்ப்படை தம்முடைப் போகத்துள் அழுந்த,

ஆன கற்பினாளுடன் எழுந்து, இராமனும் அறைவான்.

(189-17)

1208.
முனிவன் வாள் முகம் நோக்கி, ‘மெய் முழுது உணர்

முனியே!

அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று

எம்மேல்

நினையவும், உரை நிரப்பவும், அரிது; இனி, நீதிப்

புனித! உண்டி எம்முடன்’ எனப் புரவலன் புகன்றான்.

(189-18)

1209.
என்ற வாசகம் கேட்டலும், இருந் தவத்து எவரும்,

‘நன்று, நாயகன் கருணை!’ என்று உவகையின

நவில,

துன்று தாரவன் பாதுகம் தொழுது, ‘அருந

தொல்லோய்!

ஒன்று கேள்’ என, உவகையின் மாருதி உரைக்கும்:

(189-19)

1210.
‘செய்த மா தவம் உடைமையின், நினக்கு அன்பு

சிறந்து

பொய் இல் சாதனம் பூண்டனன்; புண்டரீகக் கண்

ஐய! நின் பெருங் கருணைதான் அடியனேற்கு

அமையும்;

உய்யுமாறு இதின் வேறு உளதோ?’ என்று

மொழிந்தான்.

(189-20)
1211.
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய,

ஆண்டு

இருந்தபோது, தன் திருவுளத்து இராகவன்

நினைந்தான்;

‘பொருந்த மா முடி புனைக!’ எனப் பொருந்துறான்,

போத

வருந்து தம்பிக்கு, ‘வருவென் யான்’ என்பதோர்

வாக்கை

(189-21)

1212.
முனிவன் இம் மொழி கூறலும், முது மறைப்

பெருமான் –

தனை நினைந்து உளம் வருந்திய தம்பிபால் அயரும்

மனம் நெகிழ்ந்து, இரு கண்கள் நீர் வார, அங்கு

அமலன்

நினைவின் முந்துறும் மாருதிக்கு, இனையன

நிகழ்த்தும்.

(193-1)

1213.
அன்று அவர் தம்மை நோக்கி, அந்த மா தவனும்

‘இந்த

வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு

சயனம் மற்றும்

குன்றினில் அருளும்’ என்று கூறலும், வான நாட்டுள்

ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து, ஒருங்கு

வந்தார்.

(198-1)

1214.
மாருதி விடைகொண்டு ஏக, வரதனும் மறையோன்

பாதம்

ஆர் அருளோடு நீட வணங்கினன்; அவனும் ஆசி

சீரிது கூறி, ‘சேறி’ என்றலும், மானம் சேர்ந்து,

போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து

போனான்.

(201-1)

1215.
‘மான் நேர் விழியாளுடனே வனம் முன்

போனான் ஒரு நாள்; வரும் நாள் இலதோ?

தேனே! அமுதே! தெளிவே! தெளிவின்

ஊனே! உயிரே! உலகு ஆளுடையாய்!

(201-2)
1216.
‘அம் பவளச் செவ் வாய், அணி கடகச் சேவகன்,

வம்பு அவிழும் சோலைக் கோசல நாடுடை வள்ளல்,

எம் பெருமான் என்னை, இழி குணத்து நாயேனை,

‘தம்பி’ என உரைத்த தாசரதி தோன்றானோ!

(201-3)

1217.
வாழி மலைத் திண் தோள் சனகன்தன் மா மயிலை,

ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை,

”தாழ்வு இல் பெருங் குணத்தாள்தான் உன்

கொழுந்தி; நீ

தோழன்” என உரைத்த தோன்றலார் தோன்றாரோ!’

(201-4)

1218.
‘துங்க வில் கரத் தோளினார் சொன்ன நாள்,

இங்கு வந்திலர், யான் இறப்பேன்’ எனா,

மங்கைமாரும் படையும் வன் சுற்றமும்

அங்கு நீர்க் கங்கை அம்பியில் ஏற்றினான்.

(201-5)

1219.
‘வேத நாதனும், வில்லியும், விரை மலர்த் திருவும்

ஏது செய்யினும், என் உயிர் முடிப்பேன்’ என்று

எண்ணி,

ஓத நீரிடை ஓடம்அது உடைத்து, உயிர் விடுவான்,

காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான்.

(201-6)

1220.
‘கண்ணும் தோளும் வலம் துடிக்கும்; கரை

வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே,

எண்ணும் காலையிலே, எழில் மாருதி,

‘அண்ணல் வந்தனன்’ என்று உரையாடினான்.

(201-7)

1221.
உள்ள வான் கிளை ஏற்றி, உயர் குகன்

வெள்ளக் கங்கையின் ஆக்கி, விரைந்து, அவண்

உள்ளும் நெற்றி உடைப்பளவில், புகும்

வள்ளலார் விடும் மாருதி தோன்றினான்.

(201-8)

1222.
ஓங்கு வாலினை ஒட்டி, அவ் ஓடங்கள்

தீங்கு உறாவகைச் சுற்றி, திருகி, நீர்

ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான்; அவை

தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால்.

(201-9)
223.
‘கை ஆர் வெய்ய சிலைக் கருணாகரற்குக்

காதலுடைத் தோழ-

மை ஆர், சிருங்கவேரபுரம் உடையாய்! மிகு கோசலை

களிறு,

மை ஆர் நிறத்தான், வந்தொழிந்தான், மிதிலை வல்லி

அவளுடனே;

ஐயா! வந்தான் தம்பியோடும்; அடியேன் உய்ய,

வந்தானே.

(201-10)

1224.
‘ஆர்? உனை உரை’ என, அனுமன் கூறுவான்;

‘சீரிய வாயுவின் தோன்றல்; சீரியோய்!

சூருடை, இராமற்குத் தூதன்’ என்று எனது

ஏருடைத் தலையின்மேல் எழுதப்பட்டுள்ளேன்.

(201-11)

1225.
பரதனனத் தீயையும் விலக்கி, பாருடை

வரதனை, இராமனை, மாறிக் காண்பது

சரதமே; இனி இறை தாழ்க்க ஒணாது’ என,

கரதலத்து ஆழியும் காட்டிப் போயினான்.

(201-12)

1226.
பரத்துவன் வருதலும், பரிந்து, இராமனும்

கரத் துணை குவித்தனன், இளைய காளையோடு,

எரித் திற முனியும் ஆசிகள் இயம்பிட,

விருப்பொடும் இடவகை இனிது மேயினான்.

(241-1)

1227.
கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம்,

மாவொடு கரிக் குலம், வாவு தேர் இனம்,

தாவு நீர் உடுத்த நல் தரணிதன்னுடன்,

ஏ வரும் சிலை வலான், யாவும் நல்கினான்.

(258-1)

1228.
நின்றவன், ‘இவ் வயின் நெடியவன்தனைச்

சென்று இறைப் பொழுதினில் கொணர்வென்,

சென்று’ எனா,

பொன் திணி பொலங் கழல் வணங்கிப் போயினான்,

வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான்.

(258-2)

1229.
ஆய காலையில், ஐயனைக் கொண்டு, தன்

தூய காவின் உறைவு இடம் துன்னினான்;
‘மேய சேனைக்கு அமைப்பென் விருந்து’ எனா,

(258-3)
தீயின் ஆகுதி செங் கையின் ஒக்கினான்.

1230.
பான நெய்யோடு, நானமும், சாந்தமும், பலவும்

(258-4)
ஆன வெள்ளிலையோடு அடைக்காய், கருப்பூரம்

தேன் அளாவிய முக் கனி காயொடு தேன், பால்,

வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு

இழிந்தார்.

1231.
கங்கை தரு கழலாற்கும், இளவலுக்கும்,

(258-5)
காரிகைக்கும்,

துங்க முடி வீடணற்கும், சுக்கிரிவப் பெருமாற்கும்,

தங்கு பெருஞ் சேனைக்கும், தனித்தனியே, பொன்

கலத்தால்,

அங்கு அடைவின் மண்டலம் இட்டு, அணி விளங்க

நிறைத்தனரால்.

1232.
வெள்ளை நறும் போனகமும், மிகு பருப்பும், பொரிக்

(258-6)
கறியும்,

தள்ள அரிய முக்கனியும், சருக்கரையும், நறு நெய்யும்,

எள்ள அரிய பலவிதத்துக் கறியமுதும், இமையவர்தம்

வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை

படைத்தனரால்.

1233.
நீர் உலவி, நீர் குடித்து, நினைந்திருந்து, ஆகுதி

(258-7)
பண்ணி,

கார் உலவு மேனியனும், காரிகையும், இளங் கோவும்,

தேர் இரவி திருமகனும், தென் இலங்கைப்

பெருமானும்,

போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர்,

பொலிவால்.

1234.
‘இரவி காதலன், இலங்கையர் கோன், இவர் உதவி

(258-8)
அரசின் ஆசையது என்னலாம்; அனுமனே! என்பால்

விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு

தருவது ஒன்று இலை, உடன் உணும் தரமது

அல்லால்’

இதன்பின் 189-18, 19, 20 எண்ணுள்ள பாடல்கள் உள்ளன.

1235.
‘கொற்றவன் உடன் உண்ணுமோ? – கோது இல்

மாதவனே!

வெற்றி வீரனே!’ என அஞ்சி நின்றனன்; விமலன்

மற்றப் போனகம் ஒரு கை வாய் வைத்தபின், வாராப்

பற்றி, அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான்.

(258-9)

1236.
பரிகலத்து அமுது ஏந்தியே, பந்திகள்தோறும்

இரவி காதலற்கு, அங்கதற்கு, இலங்கையர் வேந்தற்கு

உரிய வீரர்கட்கு அளித்து, தான் அவர்கள் ஓபாதி

வரிசையால் உண்ண, மா முனி விருந்தும்

உண்டனரால்.

(258-10)

1237.
பரிகலத்து ஒ(வ்)வோர் பிடிகொடு, பந்திகள்தோறும்

இரவி புத்திரற்கு, இலங்கையர், வேந்துக்கும் உதவி,

உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி, பின், அவனும்

வரிசையின் கொண்டு, மா முனி விருந்தும்

உண்டனனால்.

(258-11)

1238.
அன்ன காலையில் போனகம் அமரர் பொற்கலத்தே

முன்னம்போல் படைத்து, திருமுன்பு வைத்தனரால்,

உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும், பசி தீரா

மன்னன் மா முனி விருந்தும் உண்டு, அகம்

மகிழ்ந்தனனால்.

(258-12)

1239.
பான நல் அமுதுடன் கருப்பூரமும், பலவும்

ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி, முன் நிற்ப

தான மெய்ப் படைத் தம்முடைப் போகத்துள் தந்த

ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான்.

(258-13)

1240.
அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர் –

வண்ணனே முதல் வானரக் கடல் எலாம் வாய்ப
பெய்து,
உண்ணும் வாசகம் கேட்டு, இமையோர், முனிவோரும்

மண்ணும், நாகரும், யாவரும், அருந் துயர் மறந்தார்.

(258-14)

1241.
மான வேந்தரும் வள்ளலும் மலர்க் கரம் விளக்கி,

ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி,

ஞான மா முனி பெருமையைப் புகழ்ந்து, நாயகனும்

பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து.

(258-15)

1242.
ஆர் இருள் அகலும்காலை, அமலனும், மறையோன்

பாதம்,

ஆர்வமொடு எழுந்து சென்று, வணங்கலும், அவனும்

ஆசி,

சீரிது கூறி, ‘சேறி’ என்றலும், தேர்மேல் கொண்டு,

சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து

சென்றான்.

(258-16)

1243.
விருந்தும் உண்டு, மா முனிவனை விடைகொண்டு,

தேர்மேல்

அருந்ததிக் கற்பினாளொடும் படையொடும்

அமைந்தான்;

வருந்து கோசல நாடுடன், அயோத்தியும் வாழ,

பரிந்து, இராமனும் ஏகினன், பரதனைக் காண்பான்.

(258-17)

1244.
இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான்

அயோத்தி எய்தி,

தராதல மகளும் பூவில் தையலும் மகிழ, சூடும்

அராவு பொன் மௌலிக்கு எய்ந்த சிகாமணி,

குணபால அண்ணல்

விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம்

செய்தான்.

(258-18)

1245.
இளவலை, ”அண்ணலுக்கு எதிர் கொண்ம்” என்று,

நம்

வளை மதில் அயோத்தியில் வாழும் மக்களை,
”கிளையொடும் ஏகு” எனக் கிளத்தி, எங்கணும்

அளை ஒலி முரசுஇனம் அறைவிப்பாய்’ என்றான்.

(258-19)

1246.
”தோரணம நட்டு, மேல் துகில் பொதிந்து, நல்

பூரணப் பொற் குடம் பொலிய வைத்து, நீள்

வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்

சீர் அணி அணிக!” எனச் செப்புவாய்’ என்றான்.

(258-20)

1247.
பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம் பொன் நீள்

சிரத் தொகை மதில் புறத்து இறுதி சேர்தர,

வரத் தகு தரள மென் பந்தர் வைத்து, வான்,

புரத்தையும் புதுக்குமா புகறி, போய்’ என்றான்.

(258-21)

1248.
என்றலும், அவன் அடி இறைஞ்சி எய்தி, அக்

குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினான்,

நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன்,

தன் துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான்.

(258-22)

1249.
அவ் உரை கேட்டலும், அறிவின் வேலையான்,

கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான்,

‘வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும்

எவ்வம் இன்று, அறை பறை எற்றுக!’ என்றிட.

(258-23)

1250.
‘வானையும் திசையையும் கடந்த வான் புகழ்க்

கோனை இன்று எதிர்கொள்வான், கோல மா நகர்த்

தானையும் அரசரும் எழுகதான்’ எனா,

யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார்.

(258-24)

1251.
முரசு ஒலி கேட்டலும், முழங்கு மா நகர்

அரசரும் மாந்தரும் அந்தணாளரும்

கரை செயல் அரியது ஓர் உவகை கைதர,

திரை செறி கடல் என, எழுந்து சென்றவால்.

(258-25)
1252.
‘அனகனை எதிர்கொள்க’ என்று, அறைந்த பேரி, நல்

கனகம் நல்கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்,

சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய

வனை கடிப் பேரியும், ஒத்த ஆம்அரோ.

(258-26)

1253.
அறுபதினாயிரம் அக்குரோணி என்று

இறுதி செய் சேனையும், ஏனை வேந்தரும்

செறி நகர் மாந்தரும், தெரிவைமார்களும்

உறுபொருள் எதிர்ந்தென, உவந்து போயினார்.

(258-27)

1254.
அன்னையர் மூவரும், அமரர் போற்றிட,

பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்,

தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர,

மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா.

(258-28)

1255.
திருவடி இரண்டுமே செம் பொன் மௌலியா,

இரு புறம் சாமரை இரட்ட, ஏழ் கடல்

வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ,

பொரு அரு வெண்குடை நிழற்ற, போயினான்.

(258-29)

1256.
எல்லவன் மறைந்தனன் – என்னை ஆளுடை

வில்லியை எதிர் கொள, பரதன் மீச் செல்வான்,

அல்லி அம் கமலமே அனைய தாள்களில்

கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே.

(258-30)

1257.
அவ் வழி மாருதி அம் கை பற்றிய

செவ் வழி உள்ளத்தான், ‘திருவின் நாயகன்,

எவ் வழி உறைத்தது? அச் செயல் எலாம் விரிந்து,

இவ் வழி எமக்கு நீ இயம்புவாய்’ என்றான்.

(258-31)

1258.
என்றலும், மாருதி வணங்கி, ‘எம்பிரான்

மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மா நகர்

நின்றதும், மணவினை நிரப்பி மீண்டு கான்

சென்றதும், நாயினேன் செப்பல் வேண்டுமோ?’

(258-32)
1259.
”ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன்

முதலோர்க்கு எல்லாம்

வீடணன் கடன்கள் செய்து மீண்டனன்; அவனுக்கு

இன்னே

சூடுக மௌலி” என்ன, சந்தர இராமன் தம்பி

மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து

விட்டான்.

(258-33)

1260.
தோன்றலும், சுமந்திரன் தொழுத கையினன்,

ஈன்று, காத்து, அழித்து, அவை இயற்றும் அவ் உரு

மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல்

சான்றினைப் பரதற்குச் சுட்டி, சாற்றுவான்.

(305-1)

1261.
அப் பொழுது அவ் வயின் அடைந்துளோர்களைத்

‘தப்பு அறக் காண்பென்’ என்று ஐயன் தன் மனத்து

ஒப்பு அற எண்ணும் முன், உம்பர் நாடு வந்து

இப் புறத்து இழிந்தென இழிந்த, மானமும்.

(317-1)

1262.
அவ் வயின், ‘அயோத்தி வைகும் சனமொடும்,

அக்குரோணி

தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும், தாயரோடும்

இவ் வயின் அடைந்துளோரைக் காண்பென்’ என்று

இராமன்

செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது,

விமானம்தானும்.

(317-2)

1263.
எவ் வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய

செவ்விய புட்பகம் நிலத்தைச் சேர்தலும்

அவ் அவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும்

எவ்வம் இல் மானம் என்று இசைக்கல் ஆயதால்.

(317-3)

1264.
நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின்மலன்

வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர,

சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்;

ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி, எய்தினன்.

(329-1)

1265.
ஆயிடைக் குகனும் வந்து, ஆங்கு, ஆண்டவன்

அடியில் வீழ,

நாயகன் உவந்து புல்லி, ‘நண்ணி, என் பின்பு வந்த

தூயனே! கிளையினோடும் சுகம் இருந்தனையோ?’ என்று,

வாயிடை மொழிந்தான், – மற்றை மறைகளும் காணா

அண்ணல்.

(332-1)

1266.
வேறு வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி

கூறிய குழுவினோரும் குழுமி, அங்கு இராமன் பாதம்,

ஊறிய உவகை தூண்ட, தொழுதனர், உவந்த பின்பு

தேறிய கமலக்கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான்.

(332-2)

1267.
நம்பியும் பாதனோடு நந்தியம்பதியை நண்ணி,

‘வெம்பிய எரியின் பாங்கர், விலக்குவென்’ என்று

விம்மும்

கொம்பு இயல் மருங்குல் தெய்வக் கோசலை குளிர்

பொன் பாதம்

தம்பியரோடும் தாழ்ந்தான், தாமரைக் கண்ணீர் தாழ.

(332-3)

1268.
மூன்று என நின்ற தன்மைக் குணங்களின்

உயிர்கட்கு எல்லாம்

சான்று என நின்ற மானச் சிறுவனைத்

தலைப்பட்டாட்குத்

தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும்

சொல்லற்பாற்றோ?

ஈன்ற போது ஒத்தது அன்றே, எதிர்ந்த போது ஒத்த

தன்மை!

(332-4)

1269.
இணை மலர்த் தாளின் வீழ்ந்த இலக்குவன் தன்னை

ஏந்தி

பணை முலைப் பாலும் கண்ணீர்த் தாரையும் பாய,

நின்றாள்;பிணை எனத்தகைய நோக்கின் சீதையை, பேடை

அன்னத்

துணையினை, உலகில் கற்பின் பெருங் கதித்

துறையை, கண்டாள்.

(332-5)

1270.
நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி,

விம்மி

பால் முலை சோர நின்ற பல் பெருந் தவத்தினாளை,
கால்முதல் தொழுது, தங்கள் கட்டு இரும் பாவம்

விட்டார்

மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர்

எல்லாம்.

(332-6)

1271.
அவ் வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி

நோக்கி,

செவ்வையின் படரல் உற்ற, செகதல மடந்தையோடும்,

இவ் உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு

காண்பான்,

கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே.

(332-7)

1272.
வளம் கெழு கயிலை ஈசன், மலர் அயன், மறைகள்

நான்கும்,

ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு

எட்டா

விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து உயர் வெளிப்

பாழ் மேலாய்,

விளங்குறும் நேமிப் புத்தேள் மேவும் மா அயோத்தி

கண்டார்.

(332-8)

1273.
விளங்கிய புட்பகம் நிலத்தின்மீது உற,

தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட,

களங்கனி அனைய அக் கண்ணன் மாதொடும்

விளங்கினன் நகரிடை, விளைவு கூரவே.

(332-9)
1274.
புகுந்தனர் நகரிடை – பொங்கும் ஓசையின்

மிகுந்துள கவிப் பெருங் கடலும், மேதகு

மகம் பயில் முனிவனும், மற்று உளோர்களும்,

அகம்தனில் அருங் களிப்பு எழுந்து துள்ளவே.

(332-10)

1275.
நம்பியும் வசிட்டன் கூற, நந்தியம்பதியில் சென்று,

வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி,

மாதோடு

இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர்

உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பம் செய்தார்.

(332-11)

1276.
உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும்

மயிர் வினை செய்வித்து, ஆங்கே மாசு அற

மண்ணில் தாழும்,

செயிர் அறு சடிலக் கற்றைத் திரள் அறக் களைந்து

நீக்கி,

குயில் புரைமொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம்

கொண்டார்.

(332-12)

38. திருமுடி சூட்டுப் படலம்

1277.
எழு வகை முனிவரோடும், எண் திசைத்

திசைகாப்பாளர்

குழுவினர், திசைகள்தோறும் குழாம் கொண்டு

களித்துக் கூடி,

தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில்

துன்னி,

வழுவல் இல் மலர்கள் சிந்தி, மானிடம் சுருங்கச்

சார்ந்தார்.

(6-1)

1278.
ஆயது நிகழ, செங் கண் இராமனும் அயோத்தி நண்ணி,

தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத்

தாழ்ந்து,நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்

சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக்

கண்டான்.

(8-1)

1279.
உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன்தானே,

செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும்,

தம்பியர்தாமும், மற்றும் தாபதர் சங்கத்தோடும்,

அம் புவிதன்னில் மேலாம் அயோத்தியில், அமர்ந்தான்

அம்மா.

(8-2)

1280.
இருபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல்

வரிசைக்கு ஏற்ற

திரு ஒத்த சிறப்பர் ஆகி, மானிடச் செவ்வி வீரர்

உருவத் தோள் ஒளிரும் பூணர், உச்சி வெண்

குடையர், பச்சை

மரு ஒத்த அலங்கல் மார்பர், வானரத் தலைவர்

போனார்.

(11-1)

1281.
கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம்

அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து

மொய்த்தார்,

குயில் மொழிச் சீதை கொண்கன் நிலமகள்தன்னைக்

கொள்ளும்

இயல்புடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த.

(26-1)

1282.
வேறு இனி உரைப்பது என்னோ? வியன் தருக்

குலங்கள் ஆதி,

கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை

காண

தேறு தம் உருவு நீத்து, மானிட உருவில் சேர்ந்து,

ஆங்கு

ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற

அன்றே.

(26-2)
1283.
தேவர் கம்மியன்தான் செய்த செழு மணி மாட

கோடி

யாவரும் புகுந்து மொய்த்தார்; எழுந்த மங்கலத்தின்

ஓசை

நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள

மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி

கொண்டார்.

(29-1)

1284.
அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர், ஆலி

நாட்டுச்

சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய

சான்றோர்

‘உய்ந்தனம் அடியம்’ என்னும் உவகையின் உவரி

நாண

வந்தனர், இராமன் கோயில் மங்கலத்து உரிமை

மாக்கள்.

(32-1)

1285.
‘வான் உறு முகுர்த்தம் வந்தது’ என்று மா மறைகள்

நான்கும்

தான் உருக் கொண்டு போற்ற, சலம் தவிர்ந்து

அமரர் ஏத்தி,

தேன் உறு மலர்கள் சிந்தி, திசைமுகம் பரவ, தெய்வ

வான் உறை மகளிர் ஆட, மா தவர் மகிழ்ந்து

வாழ்த்த.

(37-1)

1286.
இப்படித் தழுவி, மாதர் இருவரும், இரண்டு பாலும்,

செப்புறல் அரிய இன்பச் செல்வத்துள் செலுத்தும்

நாளில்,

கப்புடைச் சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன்

காதல்

வைப்புடை வளாகம்தன்னில், மன்னுயிர் வாழ்த்த,

வந்தான்.

(41-1)

1287.
மறையவர் வாழி! வேத மனுநெறி வாழி! நன்னூல்

முறை செயும் அரக்கர், திங்கள் மும் மழை, வாழி!

மெய்ம்மைஇறையவன் இராமன் வாழி ! இக் கதை கேட்போர் வாழி !

அறை புகழ்ச் சடையன் வாழி ! அரும் புகழ் அனுமன்

வாழி !

(42-1)

39. விடை கொடுத்த படலம்

1288.
கெவனோடு கெவாக்கன், தூம்பன், கேசரி,

கெந்தமாதன்

தவன் உறு சரபன், சாம்பன், சுடேணன், சம்பாதி,

நீலன்,

நவை அறு பனசன், தாரன், கெசன், நளன், சுமீரன்

நண்பாம்

இவன் அரிலோமன், மின்போல் எயிற்றினன், இடபன்

என்பான்.

(7-1)

1289.
விரதன், வீமாக்கன், வேகதரிசியே, விந்தன், வெற்றிக்

கரமுடைச் சதுக்கன், சோதிமுகன், தெதிமுகன்,

கயந்தன்

அரன், விறல் கொடிய கோபன், இடும்பனோடு

அரம்பன், ஆண்மை

தெரிதரு வசந்தன், கொற்றத் துன்முகன், தீர்க்க

பாதன்.

(7-2)

1290.
வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே

என்றும்

தான் வளர்த்திடுக; நல்லோர்தம் கிளை தழைத்து

வாழ்க;

தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன்

செய்கை

யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க,

எங்கும்.

(37-1)

1291.
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு

எல்லாம்

முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம்

சொல்,சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை

செய்யும்,

அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக

வாழி.

(37-2)

1292.
வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!

வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த

வள்ளல்!

வாழிய, வலி மார்பும் மராமரம் ஏழும் சாய,

வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி!

(37-3)

1293.
இராவணன்தன்னை வீட்டி, இராமனாய் வந்து

தோன்றி

தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்

பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்

நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே.

(37-4)

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/மிகைப் பாடல்கள்- பாகம் -2–

January 4, 2021

16. மாயா சனகப் படலம்

793.
இம் மொழி அரக்கன் கூற, ஏந்திழை இரு காதூடும்
வெம்மை சேர் அழலின் வந்த வே ……………………….
………..ல் வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள்; மீட்டும்
விம்முறும் உளத்தினோடும் வெகுண்டு, இவை
விளம்பலுற்றான்:

(54-1)

794.
மங்கையை, குலத்துளாளை, தவத்தியை முனிந்து, வாளால்
சங்கை ஒன்று இன்றிக் கொன்றான், குலத்துக்கே தக்கான்
என்று
கங்கை அம் சென்னியாலும் கண்ணனும் கமலத்தோனும்
செங்கைகள் கொட்டி உன்னைச் சிரிப்பரால், சிறுமை என்னா.

(72-1)

795.
அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற,
நொந்து, ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினன் ஆய்,
சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின்
உந்தா, உளம் கொதித்து, ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான்.

(89-1)

17. அதிகாயன் வதைப் படலம்

796.
முதிர் போர் உறு மொய்ம்பன், முனைத்தலையில்
சதிர் ஏறிய தானை தழைத்திட, அங்கு
எதிர் தேரிடை ஏறினன்; மற்று ஒரு வெங்
கதிரோன் இகல் கண்டிட ஏகினனால்.

(20-1)

797.
தேர் வெள்ளம் அளப்பு இல; திண் புரவித்
தார் வெள்ளம் அளப்பு இல; தந்திஇனக்
கார் வெள்ளம் அளப்பு இல; கண்டகராம்
பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால்.

(20-2)

798.
மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து
எல் ஏறிய வாள், எழு, வல் முசலம்,
வில்லோடு அயில், வெங் கதை, வேல் முதலாம்
பல் ஆயுத பத்தி பரித்து உடையார்.

(25-1)

799.
என, வந்த நிசாசரன், இவ் உரையைத்
தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும்,
சனகன் மகள்தன் ஒரு நாயகன் ஆம்
அனகன் அது கேட்டு, இது அறைந்திடுவான்.

(50-1)

800.
என்றே உலகு ஏழினொடு ஏழினையும்
தன் தாமரைபோல் இரு தாள் அளவா –
நின்றான் உரை செய்ய, நிசாசரனும்
பின்றா உரை ஒன்று பிதற்றினனால்.

(52-1)

801.
வெங் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம்
துங்க நீள் வரைப் புயத்து அரக்கர் தூண்டினார்;
வெங் கணை இலக்குவன் வெகுண்டு, உகாந்தத்தில்
பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான்.

(103-1)

802.
முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின்
விடு கணை மழை நெடுந் தாரை, வெம் மதக்
கட களிறு அடங்கலும் கழிய, கால், கரம்,
குடல், தலை, குறைத்தமை கூறல் ஆவதோ?

(103-2)

803.
அறுந்தன, தலை, கழுத்து; அறுந்த, தாள், கரம்
அறுந்தன, செவி, முகம்; அறுந்த, வால், மருப்பு;
அறுந்தன, குடல், உடல்; அறுந்த, வாய், விழி;
அறுந்தன, கட களிறு ஆய நாமமே.

(103-3)

804.
அறுத்தன, சில கணை; அறுத்த கூறுகள்
செறுத்தன, சில கணை; சின்னபின்னமாய்
ஒறுத்தன, சில கணை; உம்பர் ஊர் புகத்
தெறித்தன, சில கணை; செப்பல் ஆவதோ?

(103-4)

805.
மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற,
முதிர் சினத்து இலக்குவன், கடிகை மூன்றினில்,
கொதி கொள் வெஞ் சர மழை கொழிப்பக் கண்டு, தாள்
அதிர்வுறு பொலன் கழல் அரக்கர் அண்மினார்.

(103-5)

806.
அடுத்தனர் ஆனை, தேர், புரவி, ஆழியை;
தொடுத்தனர் அணி படச் சூழ்ந்து, வள்ளல்மேல்
விடுத்தனர் படைக் கலம்; வெகுண்டு வீரனும்
தடுத்தனன், ஒரு தனித் தனுவின் வன்மையால்.

(103-6)

807.
பெருங் கடை யுக மழை பிறழ, தன் ஒரு
கரம் படு சிலையினின் கான்ற மாரியின்,
சரம் படச் சரம் பட, தாக்கு இராக்கதக்
கருங் கடல் வறந்தது கழறல் ஆகுமோ?

(103-7)

808.
இலக்குவக் கடவுள்தன் ஏவின் மாரியால்,
விலக்க அருங் கரி, பரி, இரதம், வீரர் என்று
உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற
நிலப் படச் சாய்ந்தமை நிகழ்ந்த போதிலே.

(119-1)

809.
காந்திய அரக்கனும் கணையின் மாரிகள்
பாய்ந்திட, பருஞ் சிலை விசையின் பற்றினான்;
மாய்ந்தது குரங்கு; அது கண்டு, மா மறை
வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே.

(121-1)

810.
கார்முக விசை உறும் கணையின் மாரியால்
பார வெஞ் சிலை அறுத்து, அவன்தன் பாய் பரித்
தேரினைப் பாகனோடு அழியச் சிந்தி, மற்று
ஓர் கணை அவன் சிரம் உருளத் தூண்டினான்.

(121-2)
தாருகன் எனும் படைத் தலைவன் தன் வயப்
போர் அழிந்தவன் உயிர் பொன்றினான்’ என,
கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே,
வீரனை வளைத்தனர், வெகுளி மிக்குளார்.

(122-1)

812.
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே
விழ உற்றன, வெறி வெங் கணை நிமிரப் பொறி சிதற,
முழை உற்றன முகில் சிந்தின முன்பு ஏறில முடிய,
உழை உற்றன உலவும்படி உலவுற்றன-கரிகள்.

(140-1)

813.
துள்ளிக் களி வய வானரர் ஆர்த்தார்; அவை தோன்றக்
கள்ளக் கடு நிருதக் குலம் கண்டப்படக் கண்டே,
உள்ளக் கடு வேகத்தொடு தேவாந்தகன், உளத்தே
கொள்ளைப் படை அனையஃது ஒரு கொடுஞ் சூலம் கைக்
கொண்டான்.

(169-1)

814.
ஆங்கு அது நிகழக் கண்ட அடல் அதிகாயன் சீறி,
தாங்கு பல் அண்ட கோடிதான் பிளந்து உடைய, தன் கை
வாங்கினன் சிலை; நாண் ஓசை படைத்தபின், வாளி மாரி
பாங்குறு கவியின் சேனைக் கடல்மிசைப் பரப்பி ஆர்த்தான்.

(186-1)

815.
ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும்
தூர்த்து, அடல் கவியின் சேனை துகள் படத் துணிந்து
சிந்தப்
பேர்த்தனன் சிலை நாண் ஓதை; பிறை முகப் பகழி
பின்னும்
கோத்தனன், அனந்த கோடி கோடியின்-கொதித்து
வெய்யோன்.

(186-2)
816.
உருத்து, அதிகாயன், மேன்மேல் ஒண் சுடர்ப் பகழி மாரி
நிரைத்தலின், இடைவிடாது நெடுங் கவிச் சேனை வெள்ளம்
தரைத் தலம்அதனில் பட்டுத் தலை உடல் சிதற, சோரி
இரைத்து எழு கடலின் பொங்க, இமையவர் அலக்கணுற்றார்.

(186-3)

817.
கரடியின் சேனையோடு கவிக் குலத் தானை எல்லாம்
தரைப் பட, சரத்தின் மாரித் தசமுகன் சிறுவன்-சீறா,
கரை அறு கவியின் சேனைத் தலைவர்கள் கனலின் பொங்கி,
வரையொடு மரமும் கல்லும் வாங்கினர், விரைவின் வந்தார்.

(186-4)

818.
வானரத் தலைவர் பொங்கி வருதலும், அரக்கன் மைந்தன்,
போன திக்கு அறிவுறாமல், பொழிந்திடும் பகழிதன்னால்
ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன்; குருதி பொங்க,
தான் அறிவு அழிந்து, யாரும் தனித் தனி தலத்தின
வீழ்ந்தார்.

(186-5)

819.
திசை முகம் கிழிய, தேவர் சிரம் பொதிர் எறிய, திண் தோள்
தசமுகன் சிறுவன், பின்னும், தடஞ் சிலை குழைய வாங்கி,
விசை கொள் நாண் எறிந்து, மேன்மேல் வெங் கவித் தானை
வெள்ளம்
பசை அறப் புலர்ந்து போகப் பொழிந்தனன், பகழி மாரி.

(186-6)
820.
‘வீரருக்கு ஒருவரான விறல், அதிகாயன் வெம் போர்
ஆர்இனித் தடுக்க வல்லார்?’ எனப் பதைத்து, அமரர்
எல்லாம்,
சோர்வுறத் துளங்கி, நில்லாது ஓடினர்; சுடரும் வை வேல்
போர் வலி அரக்கன் சேனை புகுந்தது, கடலின் பொங்கி.

(186-7)

821.
அங்கதன் தோளில் நின்ற அண்ணல், ஆங்கு அதனைக்
கண்டே,
செங் கையில் பிடித்த வீரச் சிலையை நாண் எறிந்து, தீரா,
வெங் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி,
துங்க வேல் நிருதர் சேனை துணி படச் சொரிந்தான், வாளி.

(186-8)

822.
உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து, ஏழு
கரு முகில் பொழிவதென்னக் கணை மழை சொரிந்து, காலாள்
இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்தி,
பொரு திறல் அரக்கனோடும் புகுந்து, அமர் கடிதின்
ஏன்றான்.

(186-9)

823.
புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம்
திரிதர, அரக்கன் சீறி, திண் சிலை குழைய வாங்கி,
எரி முகப் பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி
சொரிதர, அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார்.

(195-1)

824.
வில்லினுக்கு ஒருவன் ஆகி, உலகு ஒரு மூன்றும் வென்ற
வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஒயான்,
கல் இடும் மாரி என்னக் கணை மழை பொழியக் கண்ட
வில்லியும், விடாது, வெய்ய கணை மழை விலக்கி
நின்றான்.

(203-1)

825.
விறல் அதிகாயன் வீழ, வெந் திறல் அரக்கன் மைந்தர்
குறுகினர், மும்மையான ஆயிர கோடி உள்ளார்;
எறி கடற் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து,
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர், தெழிக்கும்
சொல்லார்.

(207-1)

826.
வருதலும் அரக்கன், மற்று(அவ்) வானரச் சேனை பின்னும்
பொரு சினம் திருகி முற்றா, பொங்கு அழல் என்னப்
பொங்கி,
மரமொடு மலைகள் ஏந்தி, மாதிரம் மறைய, வல்லே
உரும் எனச் சொரிய வீசி உடற்றினர், ஒழிவு இலாதார்.

(209-1)

827.
மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும்,
கொற்றம் கொள் இராவணன் மைந்தர் குலைந்தே
முற்றும்படி மோதினர்; மோத முடிந்தே
அற்று, அங்கு அவர் யாவரும் ஆவி அழிந்தார்.

(250-1)

828.
அளப்பு இல் மைந்தர் எல்லாம், ஆனை, தேர், பரி, ஆள்
என்னும்
வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய, தாமும்
களத்திடைக் கவிழ்ந்தார் என்ற மொழியினைக் காதில் கேளா.
துளக்கம்இல் அரக்கன், மேருத் துளங்கியது என்ன,
சோர்ந்தான்.

(261-1)
18. நாகபாசப் படலம்

829.
எரி முகப் பகழி மாரி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
எரி முகப் பகழி மாரி தொடுத்து, அவை இறுத்தான், எந்தை,
உரும்இனப் பகழி மாரி உருத்து விட்டு, அரக்கன்
ஆர்த்தான்;
உரும்இனப் பகழி மாரி உருத்து விட்டு, இளவல் கொன்றான்.

(106-1)

830.
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங்
கணை அரக்கன் கோத்தான்;
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங்
கணை நிமலன் மாய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக்
கணை அரக்கன் மொய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக்
கணை முடித்தான், மொய்ம்பன்.

(106-2)

831.
சிந்து வாளி செறிதலும், சேவகன்
ஐந்து நூறு கடுங் கணையால்; அவன்
உந்து தேரை ஒறுத்தனன்; வெய்யவன்
வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான்.

(128-1)

832.
அழித்தனன் தடத் தேர் என்று அழன்று, தீ
விழித்தனன்; கடு நெஞ்சம் வெகுண்டு எழத்
தெழித்தனன்; சிலையால் திறல் வாளிகள்
கொழித்தனன்; இமையோர் மெய் குலுங்கினார்.

(148-1)

833.
அங்கதன் தடந் தோளினும் மார்பினும்
புங்க வாளி புகப் புக, தேர் எதிர்,
சிங்கஏறு அனையான் திரள் தோள்வரை
மங்க, வேறொர் மராமரம் வீசினான்.

(148-2)
834.
மல் திண் தோளின் அடித்த மராமரம்
இற்று நூறு திறத்தது, இமைப்பிலோர்
பொன் திண் தேர்மிசைத் தாவினன் பொங்கெலி
முற்று நாளில் முயற்சி முரஞ்சவே.

(148-3)

835.
கண்ட வாலிதன் காதலனும், கனல்
விண்டதாம் என வெஞ் சினம் உற்றவன்
மண்டு தேர்மிசையில், குதியா வலி
கொண்டு, வான் இடிஏறு எனக் குத்தினான்.

(148-4)

836.
குத்தி, மற்று அவன் கொய் உளை மாப் பரி
பத்தி பத்தியின் வீழ, பரிந்து எதிர்
தத்தி, வல் வில் தடக் கையினால், சரம்
வித்துராமுனம் வீழ்த்தினன், தேர்அரோ.

(148-5)

837.
மாறு ஓர் தேரின் மடங்கல் என, கனன்று
ஏறினான், சரம் எண்-இரண்டு ஏவினான்;
ஊறு சோரி சொரிய, உயக்கம் உற்று,
ஆறினான் கடிது, அங்கதன் ஆண்மையான்.

(148-6)

838.
கோல் கொள் ஆளும் பரியும் குழம்பதாய்,
காலின் நூறி, கரங்களின் மற்று அவன்
தாலு மூலத்து அடிப்ப, தனு வலான்,
மால் உழந்தவர் போல மயங்கினான்.

(148-7)

839.
பல்ஆயிரத்தின் முடியாத டக்கம் அவை வீச வந்த படர்
கால்
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல, உடல் நின்ற வாளி
சிதறுற்று,
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி, அறனே
விளைக்கும் உரவோன்,
வல்லான் ஒருத்தன், இடையே படுத்த வடுஆன, மேனி
வடுவும்.

(264-1)

840.
பறவை நாயகன்தான் ஏக, படர் உறு துயரம் நீங்கி,
கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி,
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்;
மறை ஒரு நான்கும், மண்ணும், வானமும், மகிழ்ந்த மாதோ,

(270-1)

841.
இரு நிலம் கிழிய, பாயும் எறி கடல் இரைப்புத் தீர,
பரவும் எண் திசையைத் தாங்கும் பகட்டினம் இரியல் போக,
கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ,
அரு வரை அண்ட கோளம் பிளக்க, நின்று, அனுமன்
ஆர்த்தான்.

(273-1)

19. படைத் தலைவர் வதைப் படலம்

842.
‘அளப்ப அரும் வெள்ளச் சேனை நமர் திறத்து அழிந்தது
அல்லால்,
களப்படக் கிடந்தது இல்லை, கவிப் படை ஒன்றதேனும்;
இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும், என்னே
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது, விறலின்
மிக்கீர்!

(1-1)

843.
‘இகல் படைத் தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல்
தொகைப்பட நின்றோர் யாரும் சுடர்ப் படை கரத்தின் ஏந்தி,
மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்-ஐந்தோடு ஏகி, வெம்
போர்ப்
பகைப் பெருங் கவியின் சேனை படுத்து, இவண் வருதிர்’
என்றான்.

(1-2)

844.
‘மன்னவர் மன்னவ! மற்று இது கேண்மோ!
துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று, ஆங்கு
அந் நரன் அம்பினில் ஆவி அழிந்தார்.

(16-1)
845.
மத்த மதக் கரியோடு மணித் தேர்
தத்துறு வாசி, தணப்பு இல காலாள்,
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம்,
வித்தக மானிடன் வாளியின், வீந்த.

(16-2)

846.
இப் படையோடும் எழுந்து இரவின்வாய்
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை
எப் புறமும் செவிடு உற்றதை எண்ணி,
துப்புறு சிந்தையர் (வீரர்) தொடர்ந்தார்.

(20-1)

847.
தேர் நிரை சென்றது; திண் கரி வெள்ளக்
கார் நிரை சென்றது; கால் வய வாசித்
தார் நிரை சென்றது; தாழ்வு அறு காலாள்
பேர் நிரை சென்றது; பேசுவர் யாரே?

(22-1)

848.
‘ஐய! கேள்; சிவன் கை வாள் கொண்டு, அளப்ப அரும்
புவனம் காக்கும்
வெய்யவன் வெள்ளச் சேனைத் தலைவன் விழுமம் பெற்றோர்,
கை உறும் சேனையோடும், கடுகினர் கணக்கிலாதோர்,
மொய்படைத் தலைவர்’ என்று, ஆங்கு அவர் பெயர்
மொழியலுற்றான்.

(29-1)

849.
‘இன்னவர் ஆதியர் அளப்பிலோர்; இவர்
உன்ன அருந் தொகை தெரிந்து உரைக்கின், ஊழி நாள்
பின்னரும் செல்லும்’ என்று ஒழியப் பேசினான்;
அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார்.

(35-1)

850.
கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்கக்
கடிகை உற்றதில் களைந்தது கண்டு, விண்ணவர்கள்,
‘விடியலுற்றது நம் பெருந் துயர்’ என வியந்தார்.

(58-1)
851.
வெற்றி வெம் படைத் தலைவர் என்று உரைத்திடும்
வெள்ளத்து
உற்ற போர் வலி அரக்கர்கள், ஒரு தனி முதல்வன்
கொற்ற வெஞ் சரம் அறுத்திட, அளப்பு, இலர் குறைந்தார்;
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித் தனி மலைந்தார்.

(67-1)

852.
தேர் போய் அழிவுற்றது எனத் தெளியா,
போர் மாலி பொருந்து தரைப்பட, முன்
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு
ஏர் மார்பிடை போக எறிந்தனனால்.

(81-1)

853.
அப் போது அழல் வேள்வி அடல் பகைஞன்
வெப்பு ஏறிய வெங் கனல் போல வெகுண்டு,
‘இப் போர் தருக!’ என்ற இலக்குவன் மேல்
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால்.

(85-1)

854.
சொரி வெங் கணை மாரி தொலைத்து, இரதம்
பரி உந்திய பாகு படுத்து, அவன் வெம்
பொரு திண் திறல் போக, இலக்குவன் அங்கு
எரி வெங் கணை மாரி இறைத்தனனால்.

(85-2)

855.
முடிவுற்றனன். மாருதி மோதுதலால்,
கொடு வச்சிர, எயிற்றன் எனும் கொடியோன்;
விடம் ஒத்த பிசாசன் விறற் பனச-
னொடும் உற்று, இருவோரும் உடன்றனரால்.

(92-1)

856.
பொர நின்ற பணைப் புயவன் பனசன்
நிருதன் களமீது நெருக்கி, அதில்
பரி வெள்ளம் அளப்பு இல பட்டு அழியத்
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால்.

(92-2)

857.
பனசன் அயர்வுற்று ஒருபால் அடைய,
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெங்
கனல் என்ன வெகுண்டு, கவிப் படையின்
இனம் எங்கும் இரிந்திட, எய்தினனால்.

(93-1)
858.
விசை கண்டு உயர் வானவர் விண் இரிய,
குசை தங்கிய கோள் என, அண்டமொடு எண்
திசை எங்கணும் நின்று திரிந்துளதால்-
பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே.

(96-1)

859.
மற்றும் படை வீரர்கள் வந்த எலாம்
உற்று அங்கு எதிரேறி உடன்று, அமர்வாய்
வில் தங்கும் இலக்குவன் வெங் கணையால்,
முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால்.

(100-1)

20. மகரக்கண்ணன் வதைப் படலம்

860.
இந்திரியத்தை இகழ்ந்தவன், அந்தோ!
மந்திர வெற்றி வழங்க வழங்கும்
இந்திரம் அற்றது எனக் கடிதிகொல்?
வந்தது என், வில் தொழிலைக் கொலை மான?

(5-1)

861.
அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி,
தம்பிதன் கவசமீதே இரட்டி சாயகங்கள் தாக்கி,
வெம்பு இகல் அனுமன்மீதே வெங் கணை மாரி வித்தி,
உம்பர்தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான்.

(19-1)

862.
‘இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன்;
தந்திரக் குரக்குச் சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான்;
எந்திரம் ஆகிப் பார்த்த இடம் எலாம் தானே ஆனான்;
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர்?’ என அமலன்
சொன்னான்.

(29-1)

863.
மற்று அவன் இறத்தலோடும், மறைகளும் தேடிக் காணாக்
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ளப்
பற்றி, அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும்
பாரில்
அற்றவை அழிந்து சிந்த அறுத்து, ஒரு கணத்தில்
மாய்த்தான்.

(31-1)

864.
மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிரத் தோளான்;
தொடர்ந்தனர் அரக்கர், பின்னும்; தொடர்ந்தவர் தம்மை
எல்லாம்
கடந்தனர், கவியின் வீரர்; களத்திடைக் கணத்தில்
மாய்த்தார்;
நெடுந் திரைப் பரவைமீது நிறைந்தது, குருதி நீத்தம்.

(38-1)

21. பிரமாத்திரப் படலம்

865.
தலைகளை நோக்கும்; தான் தன் சரங்களை நோக்கும்;
தன்கைச்
சிலையினை நோக்கும்; செம் பொன் தேரினை நோக்கும்;
செய்த
கொலைகளை நோக்கும்; கொன்ற கொற்றவர் தம்மை
நோக்கும்;
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய
நோக்கும்.

(25-1)

866.
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய,
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய,
தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினைத் தொடர்ந்தான்.

(77-1)

867.
இன்னது இவ் வழி நிற்க, மற்று இருஞ் சமர்க்கு உடைந்தே,
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்,
பொன்னின் வார் சிலைக் கரத்தொடும் பொருக்கெனப்
புகுந்து,
தன்னை ஈன்றிடும் ஒரு தனித் தந்தையைக் கண்டான்.

(88-1)

868.
மாண்டனன் அகம்பன், மண்மேல்; மடிந்தன, நிருதர் சேனை;
மீண்டனர், குரக்கு வீரர்; விழுந்தன, சினக் கை வேழம்;
தூண்டின், கொடித் தேர்; அற்றுத் துணிந்தன, தொடுத்த
வாசி:-
ஆண்தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால்.

(137-1)

869.
அருந் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு, அளவு இல்
ஆற்றல்
பொரும் திறல் களிறு, காலாள், புரவி, தேர், அளப்பு இல்
கோடி,
இரிந்திடக் கொன்று, தான் அங்கு ஒரு திசை, யாரும்
இன்றிப்
பொருந்திய இருளின் பொம்மல் பொலிய, மாருதியும்
நின்றான்.

(140-1)

870.
தொடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்துமின்’
என்னச்சொன்னான்;
ஓடினார் சாரர்; வல்லை உணர்த்தினார்; துணுக்கம் எய்தா,
ஆடவர் திலகன், ‘யாண்டையான் இகல் அனுமன்? ஏனோர்,
வீடணன், யாங்கண் உள்ளார்? உணர்த்துமின்’ விரைவின்
என்றான்.

(157-1)

871.
தந்தை இறந்தும், தாயர் பிரிந்தும், தலம் விட்டும்,
பின் தனி மேவும் மாது பிரிந்தும், பிரிவு இல்லா
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன்; இது காணேன்;
வந்தனென், எம்பி! வந்தனென், எந்தாய்! இனி வாழேன்!

(202-1)
22. சீதை களம் காண் படலம்

872.
அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன்,
வியன் கர நேமி அம் படை அவ் வெற்பினை
நியங்கொடு தாங்கி விண் நின்றதால்; அதில்
இயங்கிய ஊதை வெங் களத்தின் எய்தவே.

(99-1)

873.
வந்த நல் மருந்தினை மருத்து வானவன்
சிந்தையில் பெரு மகிழ் சிறப்பச் சேர்ந்து உறீஇ,
அந்தரத்து அருக்கன் மா மகனொடு ஆயவர்
வந்து இரைத்து, ஆர்த்து, எழும்வகை செய்தான்அரோ.

(99-2)

23. மருத்துமலைப் படலம்

874.
மூன்று அரத் தாவொடும் புல்லின் முன்னம் வந்து,
ஊன்றின நிலத்து அடி, கடவுள் ஓங்கருள்;
வான் தனி நின்றது; வஞ்சர் ஊர் வர,
ஏன்றிலது; ஆதலால், அனுமன் எய்தினான்.

(97-1)

24. களியாட்டுப் படலம்

875.
வடித்திடும் அமுதத் தேறல் மாந்தினர் எவரும்; உள்ளம்
பிடித்தது களிப்பின் பெற்றி; பிறந்தது காம வேகம்;
எடுத்தனர், மகர யாழின் இன் இசை இனிமையோடு;
நடித்தனர், நங்கைமார்கள் நாடகத் தொகையின் பேதம்.

(3-1)

25. மாயா சீதைப் படலம்

876.
அரக்கரில் சிறந்த வீரர், ஆயிர வெள்ளம் என்னும்
திரைக் கடல் அரக்கர் யாரும் சிதைந்தனர்; திண் தேர்,
யானை,
சுருக்கம்இல் இவுளி, காலாள் எனும் தொகை அளப்பு இல்
வெள்ளம்,
உரைக்கு அடங்காதது எல்லாம், உலந்தது, அங்கு இருவர்
வில்லால்.

(5-1)

877.
என்று மாலியவான் கூற, பிறை எயிற்று எழிலி நாப்பண்
மின் தெரிந்தென்ன நக்கு, வெருவுற, உரப்பி, பேழ் வாய்
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து, ‘நீ உரைத்த மாற்றம்
நன்று, நன்று!’ என்று சீறி, உரைத்தனன், நலத்தை ஓரான்.

(8-1)

878.
என்றனன் மாருதி; இந்திரசித்தும்,
‘ஒன்று உரை கேள்; எனது எந்தையும் ஊரும்
பொன்றுதல் தீரும்; இதின் புகழ் உண்டே?
நன்று உரை!’ என்று, பின் நக்கு, உரைசெய்தான்.

(35-1)

879.
‘எந்தை உவந்த இலங்கு இழையாளைத்
தந்திடில், இன்று தரும் புகழ் உண்டோ?
சிந்துவென்; எந்தை தியங்கிய காம
வெந் துயர் தீரும் விழுப்பமும் உண்டால்?

(36-1)

880.
‘“எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை
இடந்து, என் தோள்மேல்
தழுவுற வைத்து, இன்று ஏகு” என்று
உரைத்தியேல், சமைவென், தக்கோய்!
பொழுது இறை தாழ்ப்பது, என்னோ?
புட்பகம் போதல் முன்னம்,
குழுவொடும் கொண்டு போவென்,
கணத்தினின், குதிப்பென், கூற்றின்.’

(83-1)

881.
கண்டு, தன் கருத்தில் கொண்ட கவலையைக் கடந்து, அங்கு
ஆவி
உண்டு எனத் தெளிந்து, தேறும் வீடணன், உற்றது எல்லாம்
கொண்டு தன் அகத்தில் உன்னி, குலவிய உவகை தூண்ட,
தொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும்
தொழுது நின்றான்.

(91-1)

26. நிகும்பலை யாகப் படலம்

882.
நூறு ஆகிய வெள்ளம் நுனித்த கணக்கு
ஆறாதன சேனை அரக்கர் உடற்கு
ஏறாதன இல்லை-இலக்குவன் (வில்)
தூறா நெடு வாளி துரந்திடவே.

(42-1)

883.
சிர நிரை அறுத்து, அவர் உடலைச் சிந்தி, மற்று
உர நிரை அறுத்து, அவர் ஒளிரும் வெம் படைக்
கர நிரை அறுத்து, வல் அரக்கர் கால் எனும்
தர நிரை அறுப்பது, அங்கு இலக்குவன் சரம்.

(51-1)

884.
ஆயின பொழுதில் அங்கு அளவு இல் மந்திரம்
ஓய்வு இலது உரைத்தனன்; ஓம ஆகுதித்
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல்
தீயவன், ‘என்!’ எனத் திகைத்து நோக்கினான்.

(52-1)

885.
‘ஆங்கு அது கிடக்க, நான் மனிதர்க்கு ஆற்றலேன்,
நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற,
சங்கு நின்று யாவரும் இயம்ப, என் குலத்து
ஓங்கு பேர் ஆற்றலும் ஒழியும்; ஒல்குமால்.

(64-1)

886.
‘நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய்;
சானகிதன்னை வாளால் தடிந்ததோ? தனதன் தந்த
மானமேல் சேனையோடும் வடதிசை நோக்கி மீது
போனதோ?-கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்!

(69-1)

887.
சூர் எலாம் திரண்ட பொன்-தோள் தாபதர்க்கு இளைய
தோன்றல்
நீர் எலாம் மறந்தீர் போலும்; யான் செரு ஏற்று நின்று,
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின்
வெள்ளம்
போர் எலாம் மடிந்து நூறி, இறத்தலும் இருகால் பெற்றீர்.

(84-1)

888.
‘விடு வாளிகள் கடிது ஓடுவ; வீற்று ஆகுவ; வீயா
நெடு நாணிடை சிதையாதவர், நேர் ஏவிய விசிகம்,
தொடு கார் விசை நுழையா, எதிர் மீளாது, இடை சோரா,
எடு பாணமும் அழியா, முதுகு இடு தூணியை அறுத்தான்.’

(126-1)

889.
அரு ஆகியும், உரு ஆகியும், அழியா முழுமுதல் ஆம்
கரு ஆகியும், எமை ஆளுறு கருணாகர வடிவாம்
பொருள் ஆகியும், இருள் ஆகியும், ஒளி ஆகியும், பொலியும்
திருமார்பிளன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார்?

(142-1)

890.
ஈது அங்கு அவை நெடு வானிடை நிகழ்கின்றது; இப்பாலில்
காதும் கொலை அரக்கன் அது கண்டான்; ‘தகை மலர்மேல்
போதன தரு படை போக்கினன் போலாம்’ எனப்
புகைந்தான்;
எது இங்கு இவன் வலி நன்று; மற்று இது காண்பென்’ என்று
இசைப்பான்.

(144-1)

891.
உமை பற்றிய பாகன் முதல் இமையோர் பல உருவம்
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே
அமைவுற்றது பகிரண்டமும் அழிகாலம் இது எனவே
குமைவுற்றிட, வடவைப் பொறி கொழிக்கின்றது, எவ்உலகும்.

(145-1)
27. இந்திரசித்து வதைப் படலம்

892.
என்று அவன் இகழ்ந்தது எல்லாம் இந்திரசித்து கேளான்,
நன்று நம் ஆணை என்னா, நகைசெய்யா, அவனைப் பார்த்து,
‘கொன்று நான் இருவர்தம்மைக் குரக்குஇனத்தோடும் மாய்த்து,
வென்று நான் வருவன,-எந்தாய்!-கேள்’ என, விளம்பலுற்றான்.

(10-1)

893.
‘வாசக் குழலாள் மயில் சீதையை நீ
ஆசைப்படுகின்றது நன்று அல காண்;
நாசத்தை உறும், உயிர் போய்; நானே
நேசப்படுகின்றனன்ட என்றனனே.

(10-2)

894.
‘சிறியோர் செயல் துன்மதி செய்தனை நீ;
வெறி ஆர் குழல் சீதையை விட்டு அகல,
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு, நின்
அறியாமையினால் அழிவானதுவே.

(10-3)

895.
‘வண்டு ஆர் குழலார் மலர்மாதினை நீ
கண்டே மனம் வைப்பது கற்பிலகாண்;
விண்டே எதிர் வாலிதன் மார்பு உருவக்
கண்டோன் அவனே, கணை ஒன்றதனால்.

(10-4)

896.
‘ஆரே, பிறர் தாரம் உறுப்புஅதனில்
நேரே நினைகின்றவர்? நீ நினைவாய்;
பாரே இழிவு ஆனது; தான் நிலையின்
பேரே ஒழிவு ஆனது’ என்று சொன்னான்.

(10-5)

897.
‘வட்ட மா மதி முகத்து எம் மங்கையை மூக்கு அரிந்த
கட்ட மானிடவர் தங்கள் கை வலி காட்டினாலும்,
இட்ட நாள் எல்லைதன்னை யாவரே விலக்க வல்லார்?
பட்டு, நான் விழுந்தால் அன்றி, பாவையை விடுவது
உண்டோ?

(11-1)
898.
‘பழுது இலா வடிவினாளை, பால் அன்ன மொழியினாளை,
தழுவினால் அன்றி, ஆசை தவிருமோ? தவம் இலாதாய்!
முழுதும் வானவரை வென்றேன்; மூவர் என் முன்
நில்லார்கள்;
அழிவுதான் எனக்கும் உண்டோ? ஆண் அலாய்; பேடி!’
என்றான்.

(11-2)

899.
சிறு தொழிற்கு உரியர் ஆகி, தீவினைக்கு உறவாய் நின்ற
எறி படை அரக்கர் என்னும் எண் இலா வெள்ளச் சேனை
மறி திரைக் கடலின் போத, வான் முரசு இயம்ப, வல்லே,
தெறு சினத்து அரக்கன், வானோர் திகைத்து உளம் குலைய,
சென்றான்.

(16-1)

900.
அச்சு எனலாக முன்பின் தோன்றலும், அறாத மெய்யன்
தச்சன பகழி மாரி எண்ணல்ஆம் தகவும் தத்தி,
பச்செனும் மரத்தவாறு பெருக்கவும், பதையாநின்றான்,
நிச்சயம் போரில் ஆற்றல் ஓய்வு இலன்; நெஞ்சம் அஞ்சான்.

(30-1)

901.
‘வான் தலை எடுக்க, வேலை மண் தலை எடுக்க, வானோர்
கோன் தலை எடுக்க, வேதக் குலம் எடுக்க, குன்றாத்
தேன் தலையெடுக்கும் தாராய்! தேவரை வென்றான் தீய
ஊன் தலை எடுத்தாய், நீ’ என்று உரைத்தனர், உவகை
மிக்கார்.

(62-1)

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/மிகைப் பாடல்கள்-1-

December 30, 2020

1. கடல் காண் படலம்

530. மூன்றரைக் கோடியின் உகத்து ஓர் மூர்த்தியாய்த்
தான் திகழ் தசமுகத்து அவுணன், சாலவும்
ஆன்ற தன் கருத்திடை, அயனோடே மயன்
தோன்றுற நினைதலும், அவரும் துன்னினார். (11-1)

531. வந்திடும் அவர் முகம் நோக்கி, மன்னவன்,
‘செந் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெறத்
தந்திடும், கணத்திடை’ என்று சாற்றலும்
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார். (11-2)

2. இராவணன் மந்திரப் படலம்

532. மின் அவிர் குழைகளும் கலனும் வில் இட,
சென்னியின் மணி முடி இருளைச் சீறிட,
அன்னபேர் அவையின் ஆண்டு இருந்த ஆண்டகை
முன்னியது உணர்த்துவான், முறையின் நோக்கினான். (6-1)

533. மோதரன் முதலிய அமைச்சர் தம் கணக்கு
ஓதும் நூறாயிர கோடியோரொடும்,
காது வெஞ் சேனையின் காவலோர் கணக்கு
ஓதிய வெள்ள நூறவர்கள்தம்மொடும். (10-1)

534. கும்பகம் மேவியோன், குறித்த வீடணத்
தம்பியர் தம்மொடும், தருக்கும் வாசவன்
வெம் புயம் பிணித்த போர் வீரன் ஆதியாம்,
உம்பரும் போற்றுதற்கு உரிய, மைந்தரும்,

535. மாலியவான் முதல் வரம்பு இல் முந்தையோர்
மேலவர் தம்மொடும், விளங்கு சுற்றமாம்
சால்வுறு கிளையொடும், தழுவி, மந்திரத்து
ஏலுறும் இராவணன் இசைத்தல் மேயினான்: (10-3)

536. பின்னும் ஒன்று உரைத்தனன்: ‘பிணங்கு மானிடர்
அன்னவர் அல்லர்; மற்று அரக்கர் என்பதற்கு
இந் நிலை பிடித்தனை; இறைவ! நீ’ எனா,
முன் இருபக்கன் ஈது உரைத்து முற்றினான். (21-1)

537. ‘எரி விழி நுதலினன், இசையும் நின் தவத்து
அருமை கண்டு, அளித்தனன் அழிவு இலாதது ஓர்
பெரு வரம் என்றிடின், பேதை மானிடர்
இருவரும் குரங்கும் என் செய்யல் ஆவதே?’ (26-1)

538. ‘கறை மிடற்று இறை அன்று; கமலத் தேவு அன்று;
நிறை கடல் துயில் பரன் அன்று; நின்று வாழ்
சிறு தொழில் குரங்கொடு சிறிய மானிடர்
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ?’ (40-1)

539. ‘ஓது பல் அருந் தவம் உஞற்றல் இலதேனும்,
கோதுறு குலச் சிறுமை கொண்டுடையதேனும்,
வாதுறு பகைத் திறம் மலிந்துடையதேனும்,
நீதியதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ? (52-1)

540. ‘உந்து தமரோடு உலகினூடு பல காலம்
நந்துதல் இலாது இறைவன் ஆயிட நயந்தோ,
சிந்தையில் விரும்புதல் மங்கையர் திறத்தோ,
புந்திகொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள்? (52-2)

541. ‘ஆசைகொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி,
காசு இல் ஒரு மங்கையவளைத் தனி கவர்ந்தும்,
கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய்,
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ?

542. ‘நிரம்பிடுகில் ஒன்றுஅதை நெடும் பகல் கழித்தும்,
விரும்பி முயல்வுற்று இடைவிடாது பெறல் மேன்மை;
வரும்படி வருந்தினும் வராத பொருள் ஒன்றை
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன், ஐயா! (52-4)

543. ‘ஆசு இல் பல அண்டம் உனதே அரசுஅது ஆக
ஈசன் முன் அளித்தது, உன் இருந் தவ வியப்பால்;
நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ?–
வாச மலரோன் மரபில் வந்த குல மன்னா! (52-5)

544. ‘ “ஆலம் அயில்கின்றவன் அருஞ் சிலை முறித்து,
வாலியை வதைத்து, எழு மராமரமும் உட்க,
கோல வரி வில் பகழி கொண்டுடையன்” என்றார்;
சீலம் உறு மானிடன் எனத் தெளியலாமோ? (52-6)

545. ‘ஆதிபரனாம் அவன் அடித் துணை வணங்கி,
சீதையை விடுத்து, “எளியர் செய் பிழை பொறுக்க” என்று
ஓதல் கடனாம்’ என ஒருப்பட உரைத்தான்;
மூதுரை கொள்வோனும், ‘அதுவே முறைமை’ என்றான். (52-7)

546. என்று அவன் உரைத்திட, இராவணனும், நெஞ்சம்
கன்றி, நயனத்திடை பிறந்தன கடைத் தீ;
‘இன்று முடிவுற்றது உலகு’ என்று எவரும் அஞ்ச,
குன்று உறழ் புயக் குவை குலுங்கிட நகைத்தான். (52-8)

547. நகைத்து, இளவலைக் கடிது நோக்கி, நவில்கின்றான்;
‘பகைத்துடைய மானுடர் வலிச் செயல் பகர்ந்தாய்;
திகைத்தனைகொலாம்; எனது சேவகம் அறிந்தும்,
வகைத்திறம் உரைத்திலை; மதித்திலை;
என்?–எம்பி! (52-10)

548. ‘புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன்தன்
வரங்களும் அழிந்திடுவதோ? மதியிலாதாய்!

தரம்கொடு இமையோர் எனது தாள் பரவ, யான்
என்
சிரம்கொடு வணங்குவதும், மானுடன் திறத்தோ? (52-10)

549. ‘பகுத்த புவனத் தொகை எனப் பகர் பரப்பும்,
மிகுத்த திறல் வானவரும், வேத முதல் யாவும்,
வகுத்து, அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே
உகுத்த பொழுதத்தினும், எனக்கு அழிவும்
உண்டோ? (52-11)

550. ‘நிறம்தனில் மறம் தொலைய, நீ துயில் விரும்பி,
துறந்தனை, அருஞ் சமரம்; ஆதல், இவை
சொன்னாய்;
இறந்துபட வந்திடினும், இப் பிறவிதன்னில்
மறந்தும் உளதோ, சனகன் மங்கையை விடுத்தல்?’ (52-12)

551. எனக் கதம் எழுந்து அவன் உரைக்க, இளையோனும்,
நினைத்தனன், மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல;
‘சினத்தொடும் மறுத்த இகழ்வு செய்தனன்; இது
ஊழின்
வினைத் திறம்; எவர்க்கும் அது செல்வது அரிது
அன்றே!’ (52-13)

552. கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலைகண்டே,
‘பொறுத்தருள் புகன்ற பிழை’ என்று அடி வணங்கி,
உறுத்தல் செய் கும்பகருணத் திறலினோனும்,
‘மறுத்தும் ஒரு வாய்மை இது கேள்’ என
உரைத்தான்: (52-14)

553. ‘ஏது இல் கருமச் செயல் துணிந்திடுதல் எண்ணி,
தீதொடு துணிந்து, பினும் எண்ணுதல் சிறப்போ?
யாதும் இனி எண்ணியதில் என்ன பயன்? ஐயா!
போதியது நம் அரசு, பொன்ற வரு காலம்.

554. என, அவன் அடித் துணை இறைஞ்சி, வாய்
புதைத்து,
இனிய சித்திரம் என ஏங்கி நின்று, தான்
நனை மலர்க் கண்கள் நீர் சொரிய, நல் நெறி
வினை பயில் வீடணன் விளம்பல் மேயினான்: (74-1)

555. ‘சானகி, உலகு உயிர் எவைக்கும் தாய் எனல்
ஆனவள், கற்பினால் எரிந்தது அல்லது,
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும்,
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?’ (74-2)

556. ‘ஈசன்தன்வயின் வரம் கொளும்முன்னம், யான்
அவனை
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற
எடுத்தேன்;
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து
ஊன்றக்
கூசி, என் வலி குறைந்திலென், பாதலத்து
அமர்ந்தேன்; (116-1)

557. ‘அமர்ந்து, நீங்குதற்கு அருமை கண்டு, “அவன் பதம்
அகத்தே
சுமந்து, நீ தவம் புரிக!” எனச் சுக்கிரன் உரைப்ப,
தமம் திரண்டு உறும் புலப் பகை சிமிழ்திதிடத்
தருக்கி
நிமிர்ந்து நின்றனென், நெடும் பகல் அருந் தவ
நிலையின் (116-2)

558. நின்று பல் பகல் கழிந்திட, நிமலன் நெஞ்சு உருகி,
“நன்று, நன்று!” என நயந்து, எனை வரும்படி
அழைத்து,
“ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழியச்
சென்று வாழுதி எனத் தந்த வரம் சிதைந்திடுமோ? (116-3)

559. ‘கார்த்தவீரியன், வாலி என்று அவர் வலி கடக்கும்
மூர்த்தம் என்னிடத்து இல் எனக் கோடலை; முதல்
நாள்
சீர்த்த நண்பினர் ஆயபின், சிவன் படை உவர்மேல்
கோத்து, வெஞ் சமம் புரிந்திலென், எனது உளம்
கூசி. (116-4)

560. ‘இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என்? இவ் வரம்
எனக்குத்
தந்த தேவனுக்குஆயினும் என் வலி தவிர்த்துச்
சிந்த ஒண்ணுமோ? மானிடர்திறத்து எனக்கு அழிவு
வந்தது என்று உரைத்தாய்; இது வாய்மையோ?–
மறவோய்! (116-5)

561. ‘ஆயது ஆக, மற்று அந்த மானுடவரோடு அணுகும்
தீய வான் குரங்கு அனைத்தையுஞ் செறுத்து,
அற நூறி,
தூய வானவர் யாரையும் சிறையிடைத் தொடுத்துக்
காய்வென்’ என்று தன் கண் சிவந்து இனையன
கழறும். (116-6)

3. இரணியன் வதைப் படலம்

562. ‘ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதல் ஆய்,
தாது உலாவிய தொடைப் புயத்து இரணியன்
தமரோடு
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன்; அவன் அருந்
தவத்துக்கு
ஏது வேறு இல்லை; யார் அவன்போல் தவம்
இழைத்தார்?

(இப் படலத்தின் தொடக்கச் செய்யுளாக, ‘வேதம் கண்ணிய’
எனத் தொடங்கும் பாடலின் முன்னர். அமைந்துள்ளது)

563. ‘இந்த இந்திரன் இமையவர் அவனுக்கு ஓர்
பொருளோ?
உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள
இந்திரரும்
அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும்,
வந்து, இவன் பதம் முறை முறை வணங்கிட
வாழ்ந்தான். (2-1)

564. ‘திருமகட்கு இறை உலகினும், சேண்படு புரம் மூன்று
எரிபடுத்திய ஈசன்தன் பொருப்பினும், ஏகி,
சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது, ஆங்கு
“இரணியாய நம!” என்று கொண்டு ஏத்தல்
கேட்டிருக்கும். (5-1)

565. ‘ “ஓம் அரியாய நம!” என ஒழிவுறாது ஓதும்
நாம நான் மறை விடுத்து அவன்தனக்கு உள்ள
நாமம்,
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர்-
ஆம் அது ஓதுகில், அவன் தனக்கு ஒப்பவர் யாரோ? (9-1)

566. ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அருந் தவப்
பெருமை
ஏலுமோ, எமக்கு இயம்பிட? இறைவ! மற்று அவன்
பேர்
மூல மா மறை இது என, மூஉலகு உள்ளோர்
தாலமே மொழிந்திட்டது சான்று எனத் தகுமால். (10-1)

567. ‘குனிப்பு இலாத பல் ஆயிர கோடி அண்டத்தின்
நுனிக்கும் வானவர் முதலிய உயிர்த் தொகை
நோக்கில்,
அனைத்தும் அன்னவன் ஏவலைத் தலைக்கொண்டு,
அங்கு அவன் பேர்
நினைத்து வாழ்த்திட, மூவர்போல் ஒரு தனி
நின்றான். (18-1)

568. ‘அன்னவன், புகழ், சீலம், நல் அறம், தனி மெய்ம்மை,
உன்னும் நான் மறையோடு அருள் நீதியும்
பொறையும்
இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என
உவந்தே,
மன்னுயிர்த் தொகை மகிழ்ந்திட, ஒரு தனி
வாழ்ந்தான் (19-1)

569. ‘நடுங்கி அந்தணன், நாப் புலர்ந்து அரும் புலன்
ஐந்தும்
ஒடுங்கி, உள்ளுயிர் சோர்ந்து, உடல் பதைத்து, உளம்
வெருவி,
“அடங்கும், இன்று நம் வாழ்வு” என அயர்ந்து
ஒருபடியாய்ப்
பிடுங்கும் மெல் உரை, புதல்வனுக்கு இனையன
பேசும். (23-1)

570. ‘என்று, அவ் வேதியன் இவை இவை இயம்பலும்,
இது கேட்டு,
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும்,
“உரவோய்!
நன்று நீ எனக்கு உரைத்தது?” என்று, இன் நகை
புரிந்து, ஆங்கு,
“இன்று கேள் இதின் உறுதி” என்று எடுத்து இவை
உரைப்பான்: (24-1)

571. ‘என்னும் வாசகம் கேட்டலும், எழுந்து நின்று,
இறைவன்
பொன்னின் வார் கழல் பணிந்து, வாய் புதைத்து,
அரும் புதல்வன்,
“மன்னர் மன்ன! யான் பழுது ஒன்றும்
உரைத்திலென்; மரபால்
உன்னும் உண்மையை உரைத்தனென்;கேள்”
என உரைப்பான். (39-1)

572. ‘அழிவு இல் வச்சிர யாக்கை என் அருந் தவத்து
அடைந்தேன்;
ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழியத்
தெளிவு பெற்று, இறை பூண்டுளேன்; யான் அலால் தெய்வம்,
மொழி இல் மூடரும், வேறு உளது ஆம் என்று
மொழியார். (55-1)

573. ‘உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை, பார்
அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல்போல்,
பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி, வேறு
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர், சீரியோர். (67-1)

574. ‘நான்முகத்து ஒருவனும், நாரி பாகனும்,
தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவத்-
தோன் இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய்,
ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான். (67-2)

575. ‘வையமேல் இனி வரும் பகை உள எனின்,
வருவது ஒன்று என்றாலும்,

“உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென்”
என்று என் முன் உரைசெய்தாய்;

செய்ய வேண்டுவது என் இனி? நின் உயிர்
செகுக்குவென்; சிறப்பு இல்லாப்

பொய்யிலாளனைப் பொருந்திய பெரும் பகை
போய பின், புகழ் ஐயா!

(79-1)

576. ‘ “இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர்மேல் ஏற்றிப்
புவனம் தன்னிலே நூக்கும்” என்று அவுணர் கோன்
புகல,
புவனம் உண்டவன் கழல் இணைப் புண்ணியன்
தன்னைப்
பவனன்தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார். (98-1)

577. ‘உற்று எழுந்தனர், மாளிகை உம்பர்மேல் கொண்டு,
கற்று அறிந்தவர்க்கு அரசனைக் கடுந் திறல்
அவுணர்
பற்றி நூக்கலும், பார் மகள் பரிவுடன், நார் ஆர்
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண்
நயந்தாள். (98-2)

578. ‘ஓதத்தில் மிதந்து ஓடிய கலமேல்
தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான்;
வேதத்து உச்சியின் மெய்ப் பொருள் நாமம்
ஓதிப் பின்னும் உரைப்பதை உற்றான்: (103-1)

579. ‘கயம் மேவும் இடங்கர் கழற் கதுவ,
பயம் மேவி அழைத்தது பன்முறை உன்
நயம் மேவிய நாமம்; மதக் கரி அன்று
உயுமாறு உதவுற்றிட, வந்திலையோ? (112-1)

580. ‘வேதன் சிரம் ஒன்றை வெறுத்தமையால்,
காதும் பிரமக் கொலை காய, உலைந்து,
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன்
ஏதம் கெட வந்து, இரவு ஓட்டிலையோ? (112-2)

581. ‘அது கண்டு, அடல் வஞ்சகர், அப் பொழுதில்,
கதம் மிஞ்சிய மன்னன் முனே கடுகி,
“புதல்வன் இறவாது பொருப்பு முநீர்
மிதவைப்பட மேவினன்” என்றனரால். (113-1)

582. ‘மிடல் கொண்டு அவர் வீசு கரம் பொடிபட்டு
உடல் சிந்திட, உட்கினர்; “மற்று அவனுக்கு
ஒடிவு ஒன்று இலது” என்று அவர் ஓதும் முனம்,
விடம் அஞ்ச எழுந்தனன், வெய்யவனே. (116-1)

583. ‘நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர்
செம் பொன்
தூணில் நின்றனனே அன்றி, தோன்றியது இலது’
என்று ஒன்ற,
வேணுதண்டு உடையோன் வெய்ய வெள்ளியே
விளம்ப, வெள்ளி
காண வந்து அனைய சீயம் கணத்திடைக் கதிர்த்தது
அம்மா! (128-1)
584. ‘ஈது அவன் மகிழ்தலோடும், இரணியன் எரியின்
பொங்கி,
“சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம்
எல்லாம்
போதும்; ஓர் கணத்தில் இன்னே போக்குவேன்
போக்குவேன்” என்று
ஓதினன், அண்ட கோளம் உடைந்திட உருத்துச்
சொல்வான். (128-2)

585. அப் புறத்து அளவுஇல் கோடி அண்டங்கள்
அனைத்து உள்ளாக,
வெப்புறும் அனந்த கோடி வெள்ளம் என்று உரைப்பர்,
மேலாம்
துப்புடைக் கனகன் சேனைத் தொகை; அவை
அனைத்தும் செந் தீ
ஒப்புற நகைத்து, நீறாய் எரித்தது, ஓர் கடவுள் சீயம். (142-1)

586. ‘இத் திறம் அமரின் ஏற்று, ஆங்கு இருவரும்
பொலிந்தகாலை,
பொய்த்திறற் கனகன் வேண்டும் போர் பல இயற்றி,
பின்னும்,
எத்தனை கோடி கோடி மாயங்கள் இயற்ற, நோக்கி,
முத்தனும் முறுவல்கொண்டு, ஆங்கு அவை எலாம்
முடித்து நின்றான். (149-1)

587. நெருப்பு எனக் கனகன் சீறி, நிலம் முதல் புவனம்
அஞ்ச,
பொருப்பு இனம் எவையும் சிந்திப் பொடிபடக்
குதித்து, போர் வாள்
தரிப்புறச் சுழற்றித் தாக்க வருதலும், தரும மூர்த்தி
பருப்பதம் கடந்த தோளான் பதம் இரண்டு ஒரு கை
பற்றா, (149-2)

588. ‘அழிவு இலான் வயிர மார்பத்து, அமலன் மானுடம்
ஆம் சீய
எழில் உலாம் உருவு கொண்டு, ஆங்குஇரு கையின்
உகிர் வாள் ஓச்சி,
கழியவே, பிளத்தலோடும், கனக மா மேரு விண்டு
கிழியவே, குருதி ஓதம் கிளர்ந்தபோல் கிளர்ந்தது
அம்மா! (153-1)

589. ‘இரணியன் வயிர மார்பும் இரு பிளவாகக் கீறிக்
கரை அறும் அவுண வெள்ளப் படை எலாம் கடிதின்
மாய்த்து,
தரை முதல் ஆன அண்டப் பரப்பு எலாம் தானே
ஆகி,
கருணை கொள் அமலன் பல்வேறு உயிர் எலாம்
காத்து நின்றான். (153-2)

590. ‘மங்கை ஒரு பாகன் முதல் அமரர், மா மலர்மேல்
நங்கைதனை ஏவுதலும், நாராயணக் கடவுள்
சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி,
பொங்கு பரஞ் சுடராய் எங்கும் பொலிய நின்றான். (164-1)

591. ‘ஈது ஆங்கு அமலன் இயம்ப, எழிற் புதல்வன்
நாதாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும்
பாதாம்புய மலரில் பல் முறையும் தான் பணிந்து,
‘வேதாந்த மெய்ப்பொருளே!’ என்று விளம்பலுற்றான். (168-1)

592. ‘ “சீலம் உறுவோய்!’ உனக்குச் செப்பும் திருநாமம்
மேலோர் புகழ் பிரகலாதன்” என, விரும்பி,
நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும்,
மேலாம் அமரர்களும், யாரும், விளம்ப’ என்றான். (173-1)

4. வீடணன் அடைக்கலப் படலம்

593. சிரத்தொகை அனைத்தையும் துளக்கி, தீ எழக்
கரத்தொடு கரம் பல புடைத்து, ‘காளை! நீ
உரைத்திடும் உறுதிகள் நன்று, நன்று!’ எனாச்
சிரித்தனன், கதம் எழுந்து இனைய செப்புவான்: (1-1)
594. ‘அன்று வானரம் வந்து, நம் சோலையை அழிப்ப,
“கொன்று தின்றிடுமின்” என, “தூதரைக் கோறல்
வென்றி அன்று” என விலக்கினை; மேல் விளைவு
எண்ணித்
துன்று தாரவன்-துணை எனக் கோடலே துணிந்தாய். (6-1)

595. ‘நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென்;
சீரிது என்று உணர்கிலை; சீறிப் பொங்கினாய்;
ஓர்தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார்,
தேர்வுறின், அவர்களின் சிறந்த பேதையோர்.’ (11-1)

596. ‘மற்று ஒரு பொருள் உளது என்? நின் மாறு இலாக்
கொற்றவ! சரண்’ எனக் கூயது ஓர் உரை
உற்றது, செவித்தலத்து; ஐயன் ஒல்லென
நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா, (33-1)

597. ‘ “எந்தையே இராகவ! சரணம்” என்ற சொல்
தந்தவர் எனைவரோ? சாற்றுமின்!’ என,
மந்தணம் உற்றுழீஇ, வய வெஞ் சேனையின்
முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம்அரோ: (33-2)

598. ‘மேலைநாள், அமுதமும் விடமும் வெண்கடல்
மூலமாய் உதித்தன; முறையின் முற்றுதல்
சாலுமோ, ஒன்று எனக் கருதல் தக்கதோ–
ஞால நாயக!–தெரிந்து எண்ணி நாடிலே? (86-1)

599. ‘ஒருவயிறு உதித்தனர், அதிதி, ஒண் திதி,
இருவர்; மற்று அவரிடத்து எண்ணில், எம்பிரான்!
சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார்;
கருதின் மற்று ஒன்று எனக் கழறலாகுமோ? (86-2)

600. ‘எப்பொருள்? ஏவரே? உலகின் ஓர் முறை
ஒப்பினும், குணத்து இயல் உணரின், பேதமாம்
அப் பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து,
அகம்
மெய்ப் பொருள் கோடலே விழுமிது’ என்பரால். (86-3)
601. ‘ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து
ஓவலின் இவர் தமக்கு உணர ஒண்ணுமோ?
தேவர்கள் தேவன் நீ; தெளியின், அன்னவர்க்
கூவி, இங்கு அறிவது கொள்கை ஆகுமால். (91-1)

602. மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து,
வேடன்
மீது ஒரு மரத்தில் சேர, வேண்டு உரை அரிக்குச்
சொல்லி,
பேதம் அற்று இருந்தும், அன்னான் பிரிந்த
வஞ்சத்தை ஓர்ந்தும்,
காதலின் கனி காய் நல்கிக் காத்ததும் கவியது
அன்றோ? (116-1)

603. என்ன முன் பருதிமைந்தன் எழுந்து அடி வணங்கி,
‘எந்தாய்
சொன்னதே துணிவது அல்லால், மறுத்து ஒரு
துணிவும் உண்டோ?
உன் உளத்து உணராது ஏது? உனக்கு அரிது
யாதோ?’ என்னாப்
பன்னி, மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து
உரைக்கலுற்றான். (117-1)

604. வானவர் இதனைக் கூற, வலங்கொடு தானை
வைப்பை,
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும்,
‘தாழாது
ஊனுடைப் பிறவி தீர்ந்தேன்’ என மனத்து உவந்து,
ஆங்கு அண்ணல்
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது
நின்றான். (151-1)

5. இலங்கை கேள்விப் படலம்

605. திரு மறு மார்பனை இறைஞ்ச, செல்வனும்,
அருள் சுரந்து, அரக்கனை அருகு இருத்தியே,
‘அரு வரை அனைய தோள் அறிஞ! நீ புகல்
பொருள் உளது எமக்கு; அது புகலக் கேட்டியால். (14-1)

606. மருக் கிளர் தாமரை வாச நாள்மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்.
திருக் கிளர் தாமரை பணிந்த செம்மலை,
‘இருக்க, ஈண்டு எழுந்து’ என இருந்தகாலையில். (14-2)

607. ‘வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு,
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனைத்
தலம் கொடு சமைத்து, நல் நகரும் தந்து, இதற்கு
“இலங்கை” என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள். (18-1)

608. ‘ஆய இந் நகரிடை, அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினைத் தெரிக்கின், எண் இல் நாள்
போயிடத் துணிந்து, அவை புந்தி ஓரினும்
ஓயுமோ? அறிந்தவை உரைப்பென், ஆழியாய்! (19-1)

609. ‘பேயர்கள் என்ன யான் பிதற்ற, பேர்கிலா
மா இரும் புற மதில் வகுத்த மாப் படை
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள்
ஆயிர வெள்ளமே அறிந்தது, ஆழியாய்! (28-1)

610. ‘ஈங்கு இவை அன்றியும், ஏழு தீவினும்,
ஓங்கு பாதலத்தினும், உயர்ந்த வானத்தும்,
தாங்கிய சக்கர வாளச் சார்பினும்,
ஆங்கு அவன் படைதனக்கு அளவை இல்லையால். (30-1)

611. ‘ஆயவர் அளவிலர், அறத்தை நுங்கிய
தீயவர், தேவரைச் செறுத்து, தேவர் ஊர்
காய் எரி படுத்திய கடுமையார்களில்,
நாயக! அறிந்தமை நவிலக் கேட்டியால். (32-1)
612. ‘இன்னும் மைந்தர்கள் இயம்பின், மூவாயிர கோடி
என்ன உண்டு; அவர் இரதமும், கரிகளும், பரியும்,
துன்னும் ஆள் வகைத் தொகுதியும், செறிந்திட,
மேல்நாள்
பன்னகாதிபன் உலகினைப் பரிபவப் படுத்தோர். (51-1)

613. கோ…ன் குடைப்பரா கடு களிற்றை மீக்கொள்ளா
வாடலிந்திர……ளடைவர வமரிற்
கோடி வெங்கரி கோள் அரி கண்டெனக் குலையா
ஓடினான் தரு முதலியர் பிற விழுந் துருகி. (56-1)

614. ‘பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன்
கொடுக்கும்
திண் திறல் பெறும் வானகத் தேர் ஒன்றின்
இவர்ந்தே,
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து, அரசுரிமை
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில்,
கொடியோன். (58-1)

615. ‘சுற்று தன் கிளைப் பரப்பொடும் தொலைவு இன்றி
வாழ்தற்கு
உற்ற மூன்றரைக் கோடியின் உகம் அவன் தவத்தின்
பெற்றனன், சிவன் கொடுத்திடப் பெரு வரம்;
பெரியோய்!
இற்று அவன் செயல்’ என்று கொண்டு இனையன
உரைப்பான்: (58-2)

616. “ஈது நிற்க, மற்று எந்தை! நீ ஏவிய தூதன்
மோது வாரிதி கடந்து, ஒரு கணத்தினில் முடுகி,
ஆதி நாயகிதன்னைக் கண்டு, அணி நகர் அரணும்,
காது வெஞ் சினத்து அரக்கர்தம் வலிமையும்,
கடந்தான். (59-1)

617. மழுவும் ஈட்டியும் தோட்டியும் முசலமும் மலையும்
தழுவு மாப் படை முடிவு இலாது அதனொடும் தாமும்,
எழுவர் சூட்சியின் தலைவர்கள், கிளர் ஒளி இரவிக்
குழுவின் வாய்ப்படு புழு என, வழுவுறக் குறைந்தார். (63-1)

618. ‘இலங்கை வெந்தது; வேறு இனி இயம்புவது
எவனோ?
அலங்கலோடு செஞ் சாந்தமும், அன்று தான்
அணிந்த
கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும், கதிர்
வாள்
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள்
இருந்தான். (65-1)

6. வருணனை வழி வேண்டு படலம்

619. என்று உரைத்து, இன்னும் சொல்வான்; ‘இறைவ!
கேள்; எனக்கு வெய்யோர்
என்றும் மெய்ப் பகைவர் ஆகி, ஏழு பாதலத்தின்
ஈறாய்
நின்றுள தீவின் வாழ்வார், நிமல! நின் கணையால்,
ஆவி
கொன்று எமைக் காத்தி!’ என்றான்; குரிசிலும்
கோறலுற்றான். (78-1)

7. சேது பந்தனப் படலம்

620. சாற்று மா முரசு ஒலி கேட்டு, தானையின்
ஏற்றமோடு எழுந்தனர், ‘எறி திரைக் கடல்
ஊற்றமீது ஒளித்து, ஒரு கணத்தில் உற்று, அணை
ஏற்றதும்’ எனப் படைத் தலைவர் யாருமே. (4-1)

621. வல் விலங்கு வழாத் தவர் மாட்டு அருள்
செல் வலம் பெறுஞ் சிந்தையின் தீர்வரோ?
‘இவ் விலங்கல் விடோம் இனி’ என்பபோல்,
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான். (25-1)
622. தம் இனத்து ஒருவற்கு ஒரு சார்வு உற,
விம்மல் உற்று, விடாது உறைவோர்கள்போல்,
செம்மை மிக்க குரக்கினம் சேர்க்கையால்,
எம் மலைக் குலமும் கடல் எய்துமே, (29-1)

623. இன்னவாறு அங்கு எழுபது வெள்ளமும்,
அன்ன சேனைத் தலைவரும், ஆழியைத்
துன்னி நின்று, விடாது இடை தூர்த்தலால்,
பொன் இலங்கை தொடுத்து அணை புக்கதே. (65-1)

8. ஒற்றுக் கேள்விப் படலம்

624. என்று, நளனைக் கருணையின் தழுவி, அன்பாய்
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து
துன்று கதிர் பொற்கலனும் மற்றுள தொகுத்தே,
‘வென்றி, இனி’ என்று, படையோடு உடன்
விரைந்தான். (4-1)

625. இறுத்தனன்–ஏழு-பத்து வெள்ளமாம் சேனையோடும்,
குறித்திடும், அறுபத்தேழு கோடியாம் வீரரோடும்,
பொறுத்த மூ-ஏழு தானைத் தலைவர்களோடும்,
பொய் தீர்
அலத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா
அமலன் அம்மா! (13-1)

(நளனுக்கு முடி சூட்டு படலம்)

626. என்று மகிழ் கொண்டு, இரவி மைந்தனை இராமன்,
‘வன் திறலினான் நளன் வகுத்த அணை, மானக்
குன்றம் நெடுநீரின்மிசை நின்று இலகு கொள்கை
நன்று என முயன்ற தவம் என்கொல்?நவில்க!’ என்றான். (13-2)

627. நவிற்றுதிர் எனக் கருணை வள்ளல் எதிர் நாமக்
கவிக்கு இறைவன் எய்தி, இரு கை மலர் குவித்தே,
‘புவிக்கு இறைவ! போதின் அமர் புங்கவனிடத்தே
உவப்புடன் உதித்தவர்கள் ஓர் பதின்மர் என்பார். (13-3)

628. ‘மலரவனிடத்தில் வரு காசிபன், மரீசி,
புலகனுடன் அத்திரி, புலத்தியன், வசிட்டன்,
இலகு விசுவன், பிருகு, தக்கன், இயல்பு ஆகும்
நலம் மருவு அங்கிரவு எனப் புகல்வர் நல்லோர். (13-4)

629. ‘மக்கள்தனில் ஒன்பதின்மர் வானம் முதலாக
மிக்க உலகைத் தர விதித்து, விசுவப் பேர்
தொக்க பிரமற்கு ஒரு தொழில்தனை விதித்தான்
அக் கணம் நினைத்தபடி அண்டம் முதல் ஆக. (13-5)

630. ‘அன்ன தொழிலால் விசுவகன்மன் எனல் ஆனான்,
பொன்னுலகை ஆதிய வகுத்திடுதல் போல,
நென்னல் இகல் மாருதி நெருப்பினில் அழிந்த
நன் நகரம் முன்னையினும் நன்கு உற அளித்தான். (13-6)

631. ‘மூ-உலகின் எவ் எவர்கள் முன்னு மணி மாடம்
ஆவது புரிந்து, மயன் ஆகவும் இருந்தான்;
தேவர் இகல் மா அசுரர் சொற்ற முறை செய்தற்கு
ஆவளவில் வானவர்கள் தச்சன் எனல் ஆனான். (13-7)

632. ‘அன்னவன் இயற்கை அறிதற்கு அரிய; மேல்நாள்
பன்னு மறை அந்தணன் விதித்தபடி, பார்மேல்
மன்னும் இறையோர் எவரும் வந்தபடி தானே
உன்னும் அவன் மைந்தன் நளன் என்றிட (13-8)
உதித்தான்.

633. ‘தாயரொடு தந்தை மகிழும் தனையன், வானின்
மேய மதி போல வளர் மெய்யின் மணி மாட
நாயகம்அது ஆன திரு வீதியில் நடந்தே
ஏய சிறு பாலருடன் ஆடி மனை எய்தும். (13-9)

634. ‘சிந்தை மகிழ் இல்லில் விளையாடு சிறுவன், தேர்
தந்தை வழிபாடுபுரியும் கடவுள்தன்னை
வந்து திகழ் மா மணி மலர்த்தவிசினோடே
கந்த மலர் வாவியினிடைக் கடிதின் இட்டான். (13-10)

635. ‘மற்றைய தினத்தின் இறை எங்கு என மருண்டே
பொற்றொடி மடந்தையை விளித்து, “உரை” என,
போய்
நல் தவ மகச் செயல் நடுக்கி, அயல் நண்ணிச்
சொற்றனள் எடுத்து; வழிபாடு புரி தூயோன். (13-11)

636. ‘பூசனை புரிந்தவன் வயத்து இறை புகாமே
கோசிகம் அமைத்து, மணி மாடம்அது கோலி,
நேசம் உற வைத்திடவும், நென்னல் என ஓடி
ஆசையின் எடுத்து, அவனும் ஆழ்புனலில் இட்டான். (13-12)

637. ‘இப்படி தினந்தொறும் இயற்றுவது கண்டே
மெய்ப் புதல்வனைச் சினம் மிகுத்திட வெகுண்டும்,
அப்படி செய் அத்திறம் அயர்த்திலன்; “இவன்தன்
கைப்படல் மிதக்க” என ஓர் உரை கதித்தான். (13-13)

638. ‘அன்று முதல் இன்னவன் எடுத்த புனல் ஆழா
என்று அரிய மாதவர் இசைத்தபடி இன்னே
குன்று கொடு அடுக்க, நிலைநின்றது, குணத்தோய்!
என்று நளன் வன்திறம் எடுத்துமுன் இசைத்தான். (13-14)

639. சொற்றவை அனைத்தையும் கேட்டு, தூய் மறை
கற்றவர் அறிவுறும் கடவுள், ‘இத் தொழில்
முற்றுவித்தனை உளம் மகிழ, மொய்ம்பினோய்!–
மற்று உனக்கு உரைப்பது என், முகமன்?
வாழியாய்!’ (13-15)

640. ‘ஐயன் நல் இயற்கை, எப் பொருளும் அன்பினால்
எய்தினர் மகிழ்ந்திட ஈயும், எண்ணினால்;
செய் தொழில் மனக்கொள, செய்த செய்கை கண்டு
உய் திறம் நளற்கும் அன்று உடைமை ஆதலான். (13-16)
641. ‘இத் திறம் புரி நளற்கு இன்பம் எய்தவே
வித்தக இயற்றிட வேண்டும்’ என்றனன்;
உத்தமன் உரைப்படி உஞற்றற்கு எய்தினார்
முத் திறத்து உலகையும் ஏந்தும் மொய்ம்பினார். (13-17)

642. இங்கு இவை தாதையை எண்ணும் முன்னமே
அங்கு அவன் வணங்கினன், அருகின் எய்தினான்;
‘புங்கவ நின் மகற்கு இனிய பொன் முடி
துங்க மா மணிக் கலன் தருதி, தூய்மையாய்!’ (13-19)

643. என்றலும், மணி முடி, கலன்கள், இன் நறாத்
துன்று மா மலர்த் தொடை, தூய பொன்-துகில்,
குன்று எனக் குவித்தனன்; கோல மா மலர்
மன்றல் செய் விதானமும் மருங்கு அமைத்து அரோ. (13-19)

644. முடி புனை மண்டபம் ஒன்று முற்றுவித்து,
இடி நிகர் பல் இயம் இயம்ப, வானரர்
நெடிய வான் கங்கையே முதல நீத்த நீர்
கடிது கொண்டு அணைந்தனர் கணத்தின் என்பவே. (13-20)

645. நளன்தனை விதிமுறை நானம் ஆடுவித்து,
இளங் கதிர் அனைய பொன்-துகிலும் ஈந்து, ஒளிர்
களங்கனி அனையவன் ஏவ, கண் அகல்
வளம் திகழ் மண்டப மருங்கின் எய்தினான். (13-21)

646. ஆனதோர் காலையின் அருக்கன் மைந்தனும்
ஏனைய வீரரும் இலங்கை மன்னனும்
வானரர் அனைவரும் மருங்கு சூழ்வர,
தேன் நிமிர் அலங்கலும் கலனும் சேர்த்தியே, (13-22)

647. பொலங்கிரி அனைய தோள்-தம்பி போந்து, ஒளி
இலங்கிய மணி முடி இரு கை ஏந்தினான்,
அலங்கல் அம் தோள் நளற்கு அன்பின்
சூட்டினான்–
‘குலங்களோடு இனிது வாழ்க!’ என்று கூறியே. (13-23)
648. இளையவன் திரு மலர்க் கையின் ஏந்திய
ஒளி முடி புனைந்திட உலகம் ஏழினும்
அளவு இலா உயிர்த்தொகை அனைத்தும் வாழ்த்தியே
‘நளன் இயற்றிய தவம் நன்று’ என்று ஓதினார். (13-24)

649. முடி புனை நளன் எழுந்து, இறைவன் மொய் கழல்
அடிமிசை வணங்கிட, அவனுக்கு அந்தம் இல்
படி புகழ் ஆசிகள் பகர்ந்து, ‘பார்மிசை
நெடிது உற நின் குலம்!’ என நிகழ்த்தினான். (13-25)

650. மற்றையர் அனைவரும் அருள் வழங்கவே
பொன்-திரள் மணி முடி புனைந்த போர்க் களிறு
உற்று, அடி வணங்கிட, உவந்து தாதையும்,
பெற்றனன் விடை கொடு, பெயர்ந்து போயினான். (13-26)

651. இன்னணம் நிகழ்ந்தபின், இனிதின், எம்பிரான்
தன் நிகர் சேதுவை நோக்கி, தையலாள்
இன்னல் தீர்த்திட எழுந்தருள எண்ணினான்;
பின் அவண் நிகழ்ந்தமை பேசுவாம்அரோ. (13-27)

652. கேட்டலும், நளன் என்று ஓதும் கேடு இலாத் தச்சன்,
கேள்வி
வாட்டம் இல் சிந்தையான், தன் மனத்தினும் கடுகி,
வல்லே
நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாகக்
காட்டினன், மதிலினோடும் பாசறை, கடிதின் அம்மா! (14-1)

653. போயினன், அமலன் பாதம் பொருக்கென வணங்கி,
‘இன்னே
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது, அமல!’
என்றான்;
நாயகன்தானும், வல்லே நோக்கினன் மகிழ்ந்து,
‘நன்று!’ என்று
ஏயினன், எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே. (16-1)
654. அவ் வகை அறிந்து நின்ற வீடணன், அரியின்
வீரர்க்கு
ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத,
செவ்விதின் மாயச் செய்கை தெளிந்திடுமாறு, தாமே
கைவலியதனால் பற்றிக் கொண்டனர், கவியின் வீரர். (25-1)

655. என அவர் இயம்பக் கேட்ட இறைவனுக்கு, இலங்கை
வேந்தன்
தனது ஒரு தம்பி, ‘அன்னோர் சாற்றிய வாய்மை
மெய்யும்
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும், இன்னே
காண்டி;
நினைவதன்முன்னே விஞ்சை நீக்குவென்’ என்று
நேர்ந்தான். (29-1)

656. ஆங்கு அவர் புகலக் கேட்ட ஐயனும், அவரை நோக்கி,
‘ஈங்கு இது கருமமாக எய்தினீர்என்னின், நீர் போய்,
தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே
ஓங்கிய உவகை வார்த்தை உரையும்’ என்று
ஓதலுற்றான். (32-1)

657. இன்னவாறு இவர்தம்மை இங்கு ஏவிய
மன்னர் மன்னவன் ஆய இராவணன்
அன்ன போது அங்கு அளவு இல் அமைச்சரோடு
உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம்: (38-1)

658. சொல்லும் மந்திரச் சாலையில், தூய் மதி
நல் அமைச்சர், நவை அறு கேள்வியர்,
எல்லை இல்லவர் தங்களை நோக்கியே,
அல் அரக்கர் பதியும் அங்கு ஓதுவான். (41-1)

659. ‘ஈது எலாம் உரைத்து என் பயன்? இன்று போய்க்
காதி, மானுடரோடு கவிக் குலம்
சாதல் ஆக்குவென், தான் ஓர் கணத்து’ எனும்
போதில், மாலியவானும் புகலுவான்: (46-1)

660. என்னும் வாய்மை இயம்புறு போதினில்,
முன்னமே சென்ற ஒற்றர் முடுகி, ‘எம்
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர்!’ எனா,
துன்னு காவலர்தம்மிடைச் சொல்லினார். (52-1)

661. வருணன் அஞ்சி, வழி கொடுத்து ‘ஐய! நின்
சரணம்’ என்று அடி தாழ்ந்து, அவன் தன் பகை
நிருதர் வெள்ளம் அனந்தம் நிகழ்த்து முன்,
திரிபுரச் செயல் செய்தது, அங்கு ஓர் கணை. (60-1)

662. செவித் துளை இருபதூடும், தீச் சொரிந்தென்னக்
கேட்டு
புவித்தலம் கிழிய, அண்டம் பொதிர் உற, திசையில்
நின்ற
இபத் திரள் இரிய, வானத்து இமையவர் நடுங்க,
கையால்
குவித் தடம் புயமே கொட்டி, கொதித்து இடை
பகரலுற்றான். (66-1)

663. தானை அம் தலைவன் ஈது சாற்றலும், தறுகண்
வெம் போர்க்
கோன் அழன்று உருத்து, ‘வீரம் குன்றிய மனிதரோடு
வானரக் குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின்
வாளால்
ஊன் அறக் குறைப்பென் நாளை, ஒரு கணப்
பொழுதில்’ என்றான்! (70-1)

664. மன்னவர் மன்னன் கூற, மைந்தனும் வணங்கி,
‘ஐயா!
என்னுடை அடிமை ஏதும் பிழைத்ததோ? இறைவ!
நீ போய்,
“மன்னிய மனித்தரோடும் குரங்கொடும் மலைவென்”
என்றால்,
பின்னை என் வீரம் என்னாம்?’ என்றனன்,
பேசலுற்றான்: (70-2)
665. ‘இந்திரன் செம்மல் தம்பி, யாவரும் எவரும் போற்றும்
சந்திரன் பதத்து முன்னோன்’ என்றனர்; ‘சமரை
வேட்டு,
வந்தனர்; நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும்
சுந்தரன் அவனும் இன்னோன்’ என்பதும் தெரியச்
சொன்னார். (75-1)

666. எரி எனச் சீறி, இவ்வாறு உரைத்து, இரு மருங்கில்
நின்ற
நிருதரைக் கணித்து நோக்கி, ‘நெடுங் கரி, இரதம்
வாசி,
விருதர்கள் ஆதி வெள்ளப் படைத் தொகை
விரைந்து, நாளைப்
பொரு திறம் அமையும்’ என்னா, புது மலர்ச் சேக்கை
புக்கான். (88-1)

9. இலங்கை காண் படலம்

667. கண்டு அகம் மகிழ்ந்து, ஆங்கு அண்ணல், கடி நகர்
இலங்கை மூதூர்
விண்தலம் அளவும் செம் பொற் கோபுரம், விளங்கும்
வீதி,
மண்டபம், சிகர கோடி, மாளிகை, மலர்க் கா ஆதி
எண் திசை அழகும் நோக்கி, இளவலுக்கு இயம்பு
கின்றான். (6-1)

10. இராவணன் வானரத் தானை காண் படலம்

668. ‘ஏறிட்ட கல்லு வீழும் இடம் அற, எண்கினாலே
நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலுபாலும்
சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன்
என்றே
கூறிட்ட வயிரத் திண் தோள் கொடுந் தொழில்
மடங்கல் போல்வான் (27-1)
669. ‘மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி,
வானவர்களே வந்து
உற்றனர் எனினும், பற்றி உயிர் உகப் பிசைந்திட்டு
ஊத,
கொற்றவன் அருளும் கொண்டோன்; குடாவடிக்கு
இறைவன்; கூற்றம்
பெற்றவன்; அடைந்தோர்தம்மை உயிர் எனப் பேணும்
நீரான். (27-2)

670. ‘ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடகக் குன்றம்
ஒன்றை
வாங்கு நீர் மகரவேலை வந்து உடன்
வளைந்ததென்ன
ஓங்கு மைம் முகத்தின் தானையுள் பொலிந்திடுவான்,
வெற்றி
ஓங்கிய குவவுத் திண் தோள் வினதன் என்று
உரைக்கும் வெய்யோன். (27-3)

671. ‘அன்னவன்தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம்
தன்னை வந்து இடையில் சுற்ற, தட வரை என்ன
நிற்பான்,
கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து
எதிர்கொடுக்கு மேனும்,
வென்னிடக் குமைக்கும் வேகதெரிசி என்று
உரைக்கும் வீரன். (27-4)

672. பிளக்கும் மன்பதையும், நாகர் பிலனையும்; கிளக்கும்
வேரோடு
இளக்கும் இக் குடுமிக் குன்றத்து இனம் எலாம்
பிடுங்கி, ஏந்தி,
அளக்கர் கட்டவனும் மாட்டாது அலக்கணுற்றிட
விட்டு, ஆர்க்கும்
துளக்கம் இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும்
என்பார். (27-5)
673. ‘குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள்
குரக்குச் சேனை
ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு
சுற்ற,
மின் தொகுத்து அமைந்த போல விளங்கு எயிறு
இலங்க, மேருச்
சென்றென வந்து நிற்பான், திறல் கெழு
தீர்க்கபாதன். (27-6)

674. ‘நூற்றிரண்டாய கோடி நோன் கவித் தானை சுற்ற,
காற்றின் மா மகற்குக் கீழ்பால் கன வரை என்ன
நிற்பான்,
கூற்றின் மா மைந்தன்; கூற்றும் குலுக்கமுற்று
அலக்கண் எய்தச்
சீற்றமே சிந்தும் செங் கண் தெதிமுகன் என்னும்
சீயம். (27-7)

675. ‘நாடில், இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ-எழுவர்
ஆடல் வெம் படைத் தலைவர்கள் ஆறு பத்து ஏழு
கோடி வீரர்கள், குன்று எனக் குவவிய தோளாய்!
கூடு சேனையும் எழுபது வெள்ளமாய்க் குறிப்பார். (33-1)

676. ‘அழிவு இலா வலி படைத்துள நம் படை அரக்கர்
ஒழிவு இலாத பல் ஆயிர வெள்ளத்துக்கு உறை ஓர்
துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை
சேர்
எளிய புன் குரங்கு என் செயும்?’ என்றனன்,
இகலோன். (35-1)

11. மகுட பங்கப் படலம்

677. பிடித்தவன் விழித் துணை பிதுங்கிட நெருக்கி,
இடித்து அலம்வரக் கதறி எய்த்திட, இரங்காது
அடிக் கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு
கையால்
எடுத்து உக, இராவணன் எறிந்து, இகலின்
ஆர்த்தான். (22-1)
678. எறிந்திட விழுந்து, இரவி சேய் அறிவு சோர்வுற்று,
அறிந்ததொர் இமைப்பளவில் ஆகமது தேறி,
பிறிந்திலன் எனத் தொனி பிறந்திட, மருங்கில்
செறிந்து, ‘அமர் அரக்கனொடு செய்வென்!’ என
வந்தான். (22-2)

679. என இவை அமலன் கூற, இரு கையும் எடுத்துக்
கூப்பி,
மனம் மிக நாணி, ஒன்றும் வாய் திறந்து
உரைக்கலாற்றான்,
பனியினை வென்றோன் மைந்தன் பின்னரும்
பணிந்து நின்றே
அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை
அறையலுற்றான். (38-1)

680. என்றனன்; என்றலோடும், இணை அடி இறைஞ்சி,
ஆங்கு,
குன்று உறழ் குவவுத் திண் தோள் கொற்ற வல்,
வீரற் காண,
தன் தனி உள்ள நாணால் தழல் விழிக் கொலை
வெஞ் சீயம்
நின்றென, எருத்தம் கோட்டி, நிலனுற நோக்கிக்
கூறும். (38-2)

681. ஏர் அணி மாட கூடம் இலங்கிய இலங்கை வேந்தை
காரணம் ஆக வாலால் கட்டிய வாலி, அன்றிப்
போரணம் ஆளும் அம்பால் புடைத்த மால் பாதம்
போற்றி
காரணச் சுடரோன் மைந்தன் தலைவனை
வணங்கிச் சொல்லும் (38-3)

682. இரவி போய் மறையும் முன்பு, அங்கு இராமனும்
இலங்கை நின்ற
வரை இழிந்து, அனைவரோடும் வந்து, தன்
இருக்கை எய்தி,
நிருதர்தம் குலத்தை எல்லாம் நீறு எழப் புரியுமாறே
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான்
எடுத்துக்கொண்டாம். (49-1)

683. தெய்வத் தாமரையோன் ஆகி யாவையும் தெரியக்
காட்டி,
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பிக்
காத்து
சைவத்தன் ஆகி, யாவும் தடிந்திடும் செயலின்
மேவும்
கை வைத்த நேமியோன்தன் கால் வைத்த
கருத்தமே, யாம். (49-2)

684. பூசலைக் குறித்து இராமன், பொரும் கவிச் சேனை
வெள்ளம்
மாசு அற வகுத்து, நாலு திக்கினும் வளையச்
செய்து,
பாசமுற்றுடைய நண்பின் படைத் துணை
யவர்களோடும்
பாசறை இருந்தான்; அந்தப் பதகனும் இழிந்து
போனான். (49-3)

12. அணி வகுப்புப் படலம்

685. இறைவன் மற்று இதனைக் கூற, எறுழ் வலி
அமைச்சர் பொங்கி,
‘பிறை முடிப் பரமனோடும் பெரு வரை எடுத்த
மேலோய்!
உறு சமர்க்கு எம்மைக் கூவி, ஏவிடாதொழிந்தாய்;
யாமும்
சிறு தொழில் குரங்கு அது என்ற திறத்தினும்
தாழ்த்தது என்றார். (11-1)

686. அமைச்சர் மற்று இதனைக் கூறி, ‘அரச! நீ
விடைதந்தீமோ?
இமைப்பிடைச் சென்று, வந்த குரங்குஇனப் படையை
எல்லாம்
கமைப்பு அறக் கடிது கொன்றே களைகுவம்’ என்ற
போதில்,
சுமைத் தட வரைத் தோள் கும்பகருணன்சேய்
நிகும்பன் சொல்வான்: (12-1)

687. எரி நெருப்பு என்னப் பொங்கி, இராவணன் என்னும்
மேலோன்
உரை செறி அமைச்சரோடும், உறு படைத்
தலைவரோடும்,
கரி, பரி, இரதம், காலாள், கணக்கு அறும் வெள்ளச்
சேனை
மருவுற, திசை நான்கு உம்பர் வகுத்து, அமர் புரியச்
சொன்னான். (17-1)

688. இம் முறை அரக்கர் கோமான் அணி வகுத்து
இலங்கை மூதூர்,
மும் மதில் நின்ற தானை நிற்க, மூதமைச்சரோடும்
விம்முறு சேனை வெள்ளத் தலைவர்க்கு விடையும்
நல்கி
கம்மெனக் கமழும் வாச மலர் அணை கருகச்
சேர்ந்தான். (22-1)

13. அங்கதன் தூதுப் படலம்

689. ‘சூளுறும் வஞ்சனாகத் தோன்றிய இலங்கை வேந்தன்
கோளுறும் சிறையை நீக்கி, குரை கழல் வணங்கும்
ஆகில்
வீழுறும் இலங்கைச் செல்வம் வீடணற்கு அளிப்பென்;
எம்பி
ஆளுறும் அயோத்திதன்னை இராவணற்கு
அளிப்பென்; என்றான். (7-1)

690. ‘தப்பு இல வீடணற்கு இலங்கை, தானமாச்
செப்பிய வாய்மைதான் சிதையலாகுமோ?
இப்பொழுது இராவணன் ஈங்கு வந்திடில்,
அப்பொழுது, அயோத்தி நாடு அளிப்பென்
ஆணையே.’ (7-2)

691. அரி முதல் தேவர் ஆதி அமரிடைக் கலந்த போதும்,
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது
அல்லால்,
புரம் ஒரு மூன்றும் தீயப் பொடி
செய்தோன்தன்னொடு, அந் நாள்,
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி
உண்டோ? (17-1)

692. வந்தது என், குரங்கு? ஒன்று இல்லை, அடைத்தது
என், கடல் வாய்? மந்தி
சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ?
தெரியாது ஆகில்,
இந்த எம் பதியைக் காக்கும் இறைவனோ? அறிதும்;
எங்கள்
விந்தை எம் பெருமான்! வாழி! வீடணன் என்னும்
வேந்தன். (19-1)

693. ‘முந்த ஓர் தசக்கிரீபன் ஆக்கையை மொய்ம்பால்
வீக்கும்
அந்த ஆயிரத்தோளானை அரக்கிய மழுவலாளன்
வந்து எதிர்கொள்ள, வீரச் சிலையும் வெவ் வலியும்
வாங்கும்
சுந்தரத் தோளன் விட்ட தூதன் நான்’ என்னச்
சொன்னான். (20-1)

694. ‘பசை அறு சிந்தையானைத் தமரொடும் படுத்த
போதும்,
இசை எனக்கு இல்லை அன்றே’ என்பது ஓர் இகழ்வு
கொண்டான்;
வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும்
வந்திலாதான்,
திசையினை வென்ற வென்றி வரவரச் சீர்த்தது!’
என்றான். (36-1)
695. ஆதி அம் பரன், அங்கதன் ஓதல் கேட்டு,
‘ஈது அவன் கருத்து என்றிடின் நன்று’ எனா,
சோதியான் மகன் ஆதித் துணைவருக்கு
ஓதினான், அங்கு அமரர்கள் உய்யவே. (43-1)

14. முதற் போர் புரி படலம்

696. ஆதி நாயகன் அங்கு அது கூறுமுன்;
பாதமீது பணிந்து, அருள் பற்றியே,
காது வெம் படைக் காவலர் ஆதியோர்
மோது போரை முயலுதல் மேயினார். (3-1)

697. அந்த வேலை, அரக்கர் அழன்று கண்,
சிந்து தீயில் திசை எரி சேர்த்தவன்
முந்து உரைத்த முறைமையின் முந்துற
வந்து எதிர்த்தனர், வாயில்கள்தோறுமே. (15-1)

698. அன்ன போது அங்கு அரக்கர் பிரான் படை
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா,
கன்னி மா மதிலின் புறம் காத்து, உடன்
முன்னி வெஞ் சமர் மூண்டு எழுந்துற்றதே. (15-2)

699. ஆனை பட்ட; அடு பரி பட்டன;
தானை பட்ட, தார் இரதம்; கணை
சோனைபட்டது; துன் அரும் வானரச்
சேனை பட்டது; பட்டது செங்களம். (50-1)

700. ஆர்த்த போதில், அருந் திறல் சிங்கனும்,
சூர்த்த நோக்குடைச் சூரனும், துற்கனும்,
கூர்த்த வெங் கதிர்க் கோபனொடு ஆதியாய்,
வேர்த்து, அரக்கர் வியன் படை வீசினார். (55-1)

701. போர் செய் காலை, இடும்பனும் பொங்கி, அக்
கார் செய் மேனி அரக்கனைக் கைகளால்
மேருமீது இடி வீழ்ந்தெனத் தாக்கலும்;
சோர்வு இலாத அரக்கனும் துள்ளினான். (65-1)
702. வரு சுமாலி மகன் பிரகத்தன் அங்கு
இரதம் ஒன்றதின் ஏறினன்; பின்னரும்
வரி நெடுஞ் சிலை வேறு ஒன்று வாங்கியே,
சொரியும் மா மழைபோல், சரம் தூவினான். (72-1)

703. வால் அறுந்து, வயிறு துணிந்து, இரு
கால் அறுந்து, கழுத்து அறுந்து, அங்கம் ஆம்
மேல் அறுந்து விளிந்தன-வெஞ் சமர்
ஆலும் வானரச் சேனை அனேகமே. (72-2)

704. நீலன் நெஞ்சிடை அஞ்சு நெடுஞ் சரம்
ஆலம் அன்ன அரக்கன் அழுத்தலும்,
சால நொந்தனன்; நொந்து, தருக்கு அறா,
கால வெங் கனல்போல் கனன்றான் அரோ. (72-3)

705. கனலும் வெங் கண் அரக்கன், கடுஞ் சிலை
புனையும் தேர் பரி பாகொடு போய் அற,
நினைவதற்குமுன் நீலன் அங்கு ஓர் நெடுந்
தனி மராமரம்தான் கொண்டு, தாக்கினான். (72-4)

706. நிருதர் தானை உடைந்தது; நேர்கிலாத்
தரும கோபன், சதமகன், சண்டியோடு
எரிமுகன் இவர் ஆதி இராக்கதர்
செருவின், வெற்றி திகழ, வந்து எய்தினார். (79-1)

707. ஏவி, மற்று அயல் நின்ற அரக்கரை,
‘தா இல் என் ஒரு தேரினைத் தம்’ எனக்
கூவ, மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார்,
தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென. (93-1)

708. ஆய்வு அருஞ் சத கோடி அடல் பரி
மாய்வு அருந் திரைபோல் வரப் பூண்டது;
தேயம் எங்கும் திரிந்தது; திண் திறல்
சாய, இந்திரனே பண்டு தந்தது. (93-2)

709. ஏறினான் இடத் தோள் துடித்தே; அறக்
கூறினான், ‘குரங்கோடு மனிதரை
நீறது ஆக்குவென்’ என்று, நெருப்பு எழச்
சீறினான், சிவன் போல அத் தேரின்மேல். (94-1)

710. ‘அண்ட கோடி அகிலமும் இன்றொடே
விண்டு நீங்குறும்’ என்று உயர் விண்ணவர்,
கொண்ட ஆகுலத்தால், மனம் கூசியே,
புண்டரீகன் பதியிடைப் போயினார். (99-1)

711. வெள்ளம் ஆங்கு அளப்பில; வெள்ளம், வாம் பரி;
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார்?
உள்ளம் ஆய்ந்து ஓது இரு நூறு வெள்ளம் ஆம்
கள்ள வாள் அரக்கர்கள் கடலின் சூழவே. (105-1)

712. நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர்
பொருதனர், அயில் முதல் படைகள் போக்கியே;
மரமொடு மலைகளைப் பிடுங்கி, வானரர்
செருவிடைத் தீயவர் சிதறத் தாக்கினார். (119-1)

713. அண்ட கோளகை வெடித்து, அவனி கீண்டுற,
எண் திசாமுகங்களும் இடிய, ஈசனைக்
கொண்ட வான் கயிலையும் சிகர கோடிகள்
விண்டு நீங்கியதுஎனில், விளம்ப வேண்டுமோ? (123-1)

714. வச்சிர வரைப் புயத்து அரக்கன் வாங்கிய
கைச் சிலை நாண் ஒலி கலந்த காலையில்,
அச்சம் இல் புரந்தரன் ஆதி தேவர்கள்,
உச்சிகள் பொதிர் எறிந்து, உரம்
மடங்கினார். (123-2)

715. இப் புறத்து உயிர்கள் எல்லாம் இரிந்திட, அரக்கர்
கோமான்
கைப் படு சிலையை வாங்கி, கால மா மழையும்
எஞ்ச,
முப் பறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன, மூளும்
அப்பு மா மாரி சிந்தி, அண்டமும் பிளக்க ஆர்த்தான். (127-1)
716. ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து, அரிச் சேனை
எல்லாம்
தீர்த்து, ஒரு கணத்தில் போக்க, செங் கதிர்ச்
சிறுவன் தானும்
பார்த்து, உளம் அழன்று பொங்கி, பரு வலி
அரக்கனோடும்
போர்த் தொழிற்கு ஒருவன் போலப் பொருப்பு ஒன்று
ஆங்கு ஏந்திப் புக்கான் (127-2)

717. அலக்கணுற்று அனுமன் சோர, அங்கதன் முதலாம்
வீரர்
மலைக்குற மரங்கள் வாங்கி வருதல் கண்டு,
அரக்கன், வாளி
சிலைக்கிடை தொடுத்து, அங்கு ஏந்து மா மலை
சிதைத்திட்டு, அன்னோர்
கலக்கமுற்று இரிய, ஒவ்வோர் பகழியின் காய்ந்து
கொல்வான். (138-1)

718. நகைத்து, ‘இது புரிந்தான்கொல்லோ?’ என்பதன்
முன்பு, நாண்வாய்த்
துகைத்து ஒலி ஒடுங்காமுன்னம், சோனை அம்
புயலும் எஞ்ச,
மிகைப் படு சரத்தின் மாரி வீரனுக்கு இளையோன்
மேவும்
பகைப் புலத்துஅரக்கன் சேனைப் பரவைமேல்
பொழிவதானான். (143-1)

719. எரி முகப் பகழி மாரி இலக்குவன் சிலையின்
கோலிச்
சொரிதர, களிறு, பொன் தேர், துரங்கமோடு
இசைந்த காலாள்
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படைத்
தலைவர், வல்லே
பொரு களமீதில் சிந்திப் பொன்றினர் என்ப
மன்னோ. (153-1)
720. எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன்தன்னை
நோக்கி,
‘மதியிலி! மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன்
போலாம்!
இது பொழுது என் கை வாளிக்கு இரை’ என
நகைத்தான்; வீரன்
முதிர்தரு கோபம் மூள, மொழிந்து அமர்
முடுக்கலுற்றான் (156-1)

721. அரக்கன் மனம் கொதித்து, ஆண்தகை
அமலன்தனக்கு இளையோன்
துரக்கும் பல விசிகம் துகள்பட நூறினன்; அது
கண்டு,
அருக்கன் குல மருமான், அழி காலத்திடை எழு
கார்
நெருக்கும்படி, சர தாரையின் நெடு மா மழை
சொரிந்தான். (158-1)

722. ‘மாயத்து உரு எடுத்து, என் எதிர் மதியாது, இது
பெரிது என்–
றே இத் தரை நின்றாய்; எனது அடல் வாரி
சிலையிடையே
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது
பொறுத்தேன்;
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர்
வரும் நீ. (171-1)

723. கல் தங்கிய முழுமார்பிடைக் கவியின் கரம்அதனால்
உற்று ஒன்றிய குத்தின் வலிஅதனால் உடல்
உளைவான்,
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான், ஒரு
படியால்
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தாலென
உய்ந்தான். (179-1)
724. கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடுங் கரம்
ஒன்றதின் வலியால்
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர, மேல்
புதைத்து ஆங்குறும் இடிஏறு எனப் பொறி சிந்திய
புவனம்;
விதித்தான் முதல் இமையோர் உளம் வெள்கும்படி
விட்டான். (184-1)

725. உருத்து, வெஞ் சினத்து அரக்கன் அங்கு ஒரு
கையின் புடைப்ப,
வரைத் தடம் புய மாருதி மயங்கியது அறிந்து, ஆங்கு
இரைத்த திண் பரித் தேர்நின்றும் இரு நிலத்து
இழியச்
சரித்து, வானரம் மடிந்திட, சர மழை பொழிந்தான். (186-1)

726. உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர்
ஊன்றிக்
கரத்தின் வெஞ் சிலை வளைக்குமுன், கடுஞ்
சினத்து அரக்கன்
சிரித்து, வெம் பொறி கதுவிட, திசைமுகம் அடையப்
பொருத்தி, வெஞ் சரம் பொழிந்து, ‘இவை விலக்கு’
எனப் புகன்றான். (200-1)

727. பண்டை நாள் தரு பனித் திரைப் புனல் சடை
ஏற்றுக்
கொண்ட தூயவன், கொடுந் தொழில் நிருதர்கள்
குழுமி
மண்டு வாள் அமர்க் களத்தில், அம் மலர்க் கழல்
சேறல்
கண்டு, கூசலன் நிற்கும் என்றால், அது கடனே? (216-1)

728. அனைய கண்டு, இகல் அரக்கருக்கு இறைவன், அப்
பொழுதில்,
மனம் நெருப்பு எழக் கொதித்து, ‘ஒரு மனிதன் என்
வலியை
நினையகிற்றிலன்; நெடுஞ் சமர் என்னொடும்
துணிந்த
வினையம் இன்றொடும் போக்குவென்’ என விழி
சிவந்தான். (225-1)

729. அடுக்கி நின்றிடு பகிரண்டப் பரப்பு எலாம் அதிர,
துடிக்கும் நெஞ்சகத்து இமையவர் துளங்குற, கூற்றும்
நடுக்கம் உற்றிட, நல் அறம் ஏங்கிட, கயிலை
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை
நாண்எறிந்தான் (225-2)

730. எறிந்து அடல் சிலை வளைத்து, ஒரு கணத்திடை
எரியின்
நிறம் தகும் பல நெடுஞ் சுடர்ப் பகழிகள், நெறியின்
அறிந்திடற்கு அரிது ஆகிய அளப்பு இல் பல் கோடி
செறிந்திட, திசை வானகம் வெளி இன்றிச்
செறித்தான். (225-3)

731. ஐயன் நோக்கினன், ‘நன்று!’ என நகைத்து, அவன்
சிலைவாய்
எய்த வெஞ் சரம் பொடிபட, யாவையும் முருக்கி,
வெய்தின் அங்கு அவன்மேற் செல, எழு கணை
விடுத்தான்;
கைதவன், கணை ஏழு கொண்டு, அக் கணை
கடிந்தான். (225-4)
732. எய்து வெள்ளம் நூற்று-இரண்டு எனத் திரண்ட
கால் வயவர்,
மொய் கொள் சேனை அம் தலைவர்கள், முரண்
கரி, பரி, தேர்,
வெய்ய வீரர்கள், அளப்பிலர் கோடியர், விறல் சேர்
ஐயன் வெஞ் சரம் அறுத்திட, அனைவரும்
அவிந்தார். (236-1)

733. அறுத்த வில் இழந்து அழியுமுன், ஐ-இரு கரத்தும்
பொறுத்து வெஞ் சிலை, நாண் ஒலி புடைத்து, அடற்
பகழி
நிறுத்தி வீசினன்–நெடுந் திசை விசும்பொடு
நிமிரக்
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும்
கடுப்பின். (240-1)

734. நிரைக்கும் ஐ-இரு சிலையிடைச் சர மழை நிருதன்
துரக்க, மாருதி, உடல் உறு குருதிகள் சொரிந்த;
குரக்கு வான் படை குறைந்தன; கூசி வானவர்கள்
இரக்கமுற்று உலைந்து ஓடினார்; இருண்டது எவ்
உலகும். (240-2)
735. எறுழ் வலிப் புயந்து இராகவன் இள நகை எழும்ப,
முறுவலித்து, அவன் பகழிகள் யாவையும் முருக்கி,
பிறை முகச் சரம் ஐ-இரண்டு ஒரு தொடை பிடித்து,
ஆங்கு
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும்
ஒறுத்தான். (240-3)

736. ‘வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின்
கிளைத்த யானையும் சேனையும் கெட்டது; இங்கு
இளைத்து நின்றனை; இன்று போய் நாளை வா,
விளைக்கும் வெஞ் சமர் செய் விருப்பு உள்ளதேல்’. (255-1)

737. என்று இராமன் இயம்ப, இராவணன்
ஒன்றும் ஓதலன்; ‘உள்ளத்தின், என் வலி
நின்ற நேர்மை நினைத்திலன், மானிடன்;
நன்று சொன்னது!’ என நகைத்து ஏகினான். (255-2)

15. கும்பகருணன் வதைப் படலம்

738. என்று எடுத்து உரைத்தோன், பின்னும் உளம்
கனன்று, இனைய சொல் வான்;
‘வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும்
வலியனேனும்,
பொன்றுதல் இல்லா என்னைப் போர் வெலற்கு
எளிதோ? காலம்
ஒன்று அல; உகங்கள் கோடி உடற்றினும்,
ஒழிவதுஉண்டோ? (31-1)

739. ‘மானிடன் என்றே நாணி, கடவுள் மாப் படைகள்
யாதும்
யான் எடுத்து ஏகல் விட்டேன்; இன்றை வெஞ்
சமரம் போக,
தான் அமர் அழிந்தேன் என்னத் தக்கதோ?’
என்றான், அந்த
மானம் இல் அரக்கன்; பின்னர், மாலியவானும்
சொல்வான்: (31-2)

740. ‘ “முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும்
முனிவர்தாமும்,
தப்பு அற உணர்தற்கு எட்டாத் தருமமே, கை வில்
ஏந்தி,
இப் பிறப்பு இராமன் என்றே, எம்மனோர் கிளையை
எல்லாம்
துப்பு அற, முருக்க வந்தான்” என்ற சொல்
பிழைப்பது உண்டோ? (31-3)

741. ‘ஆதலின் இறைவ! கேட்டி; அவன் பெருந் தேவி
ஆன
மாதினை விடுத்து, வானோர் முனிவரர் வருந்தச்
செய்யும்
தீதினை வெறுத்து, தேவர் தேவனாம் சிலை இராமன்
பாதமே பணியின், நம்பால் பகை விடுத்து, அவன்
போம்’ என்றான். (33-1)

742. ‘என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு
எலாம்
சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை
தேடினான்;
இன்று இறத்தல் திண்ணமாக, இன்னும் உன்
உறக்கமே?’
அன்று அலைத்த செங் கையால் அலைத்து
அலைத்து, உணர்த்தினார். (45-1)

743. சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார,
ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும்
தாராட்டு
ஏற்றதுஒத்து, அனந்தல் முன்னர்க்கு இரட்டி
கொண்டு உறங்க, மல்லர்,
கூற்றமும் குலைய, நெஞ்சம் குறித்து இவை
புரியலுற்றார். (51-1)

744. அன்னவர் உரைப்பக் கேளா, அரசன் மோதரனை
நோக்கி,
‘மின் எனும் எயிற்று வீர எம்பியைக் கொணர்தி!’
என்ன,
‘இன்னதே செய்வென்’ என்னா, எழுந்து அடி
வணங்கிப் போவான்,
பொன் என விளங்குவான் போய்த் தன் பெருங்
கோயில் புக்கான். (54-1)

745. இனைய கும்பகருணன், இராக்கதர்
தனை முனிந்து இடிஏறு எனச் சாற்றினான்;
‘எனை நெடுந் துயில் போக்கியது என்?’ என,
மனம் நடுங்கினர், வாய் புதைத்து ஓதினார். (69-1)

746. வட்ட விண்ணையும் மாதிரம் எட்டையும்
கட்டி, வீரம் கணிப்பு அரும் காவலான்
தொட்ட பல் கலனும் சுடர் மௌலியும்
தெட்ட சோதி திளைப்ப நின்றான் அரோ. (76-1)

747. என்ற போதில் எறுழ் வலிச் செம் மணிக்
குன்றம் ஐ-இரண்டு ஏந்திக் குல வரை
சென்றது என்னத் திரிந்து உலகு யாவையும்
வென்ற வீரன் இனைய விளம்பினான். (77-1)
748. அக் கணத்து அரக்கர் கோன், ‘அளப்பு இல் யானை,
தேர்
மிக்க வான் புரவி, கால் வயவர் வெள்ளமோடு,
ஒக்க வான் படைப் பெருந் தலைவர் ஒன்று அறப்
புக்குமின், இளவலைப் புறத்துச் சூழ்ந்து’ என்றான். (99-1)

749. வெள்ளம் நூறு இரதம்; மற்று இரட்டி வெங் கரி;
துள்ளு வான் பரி அதற்கு இரட்டி; தொக்குறும்
வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி; மேம்படும்
கொள்ளை வான் படைப் பெருந் தலைவர்
கோடியால். (102-1)

750. அன்ன போது இராவணற்கு இளவல் ஆகிய
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன்,
துன்னு போர் அணிகலம் யாவும் சூடியே,
தன் ஒரு தேரினைத் தொழுது தாவினான். (103-1)

751. தொண்டகம், துடி, கன பேரி, துந்துமி,
திண்டிமம், படகம், மா முரசு, திண் மணிக்
கண்டைகள், கடையுகத்து இடிக்கும் ஓதையின்
எண் திசை செவிடு எறிதரச் சென்று உற்றதால். (106-1)

752. எழு கருங் கடல் கரை எறிந்திட்டு, ஊழி நாள்,
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின்
தழுவியது என, தசமுகன் தன் ஆணையால்,
கிளர் பெரும் படைக் கடல் கெழுமிப்
போந்ததால், (106-2)

753. இரைக்கும் மும் மதம் பொழி தறுகண் யானையின்,
நெருக்கமும், நெடுங் கொடித் தொகையின் தேர்க்
குலப்
பெருக்கமும், புரவிகள் பிறங்கும் ஈட்டமும்
அரக்கர்தம் பெருக்கமும், ஆயது எங்குமே. (106-3)
754. நாற்படை வகை தொகை நடக்க, தூளிகள்
மேற்பட, விசும்பகம் மறைந்த; வெண் திரைப்
பாற்கடல் எனப் பொலி கவிப் பெரும் படை
காற் படு கதியினின் கரந்தது, ஓடியே. (108-1)

755. குரக்கினப் பெரும் படை குலைகுலைந்து போய்
வெருக் கொள, விசும்பிடை வெய்ய மாயையின்
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்கொலாம்? நினது
உருக் கொடே கரிய குன்று உற்றவேகொலாம்? (111-1)

756. ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி
பெற்றுள்ளான்;
சூழி வெங் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும்
தோளான்;
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன்
வரத்தினாலே
வீழ் பெருந் துயிலும் பெற்றான்-வெங் கடுங் கூற்றின்
வெய்யோன். (114-1)

757. சிலை பொழி பகழி, வேல், வாள், செறி சுடர்க்
குலிசம், ஈட்டி,
பல வகைப் படைகள் வாங்கி, நிருதர்கள் பல் போர்
செய்தார்;
மலையொடு மரங்கள் ஓச்சி, வயிரத் தோள்
கொண்டு, மாறாக்
கொலை அமர் எடுத்து, வாகை குரங்குகள் மலைந்த
அம்மா. (172-1)

758. பற்றினன் வசந்தன்தன்னை, பனைத் தடங்
கைகளாலே;
எற்றினன், ‘இவனை மீள விடவொண்ணாது’ என்று
சொல்லி,
‘கொற்றமும் உடையன்’ என்னா, குழம்பு எழப்
பிசைந்து கொண்டு
நெற்றியில் திலதமாக இட்டனன்-நிகர் இலாதான். (177-1)
759. அளப்பு இல் வெங் கரிகள், பூதம், அளி, வெம்
பரிகள் பூண்டு, ஆங்கு
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு, இரு நிலத்து
இழிந்து, வெம் போர்க்
களப் படக் கவியின் சேனைக் கடல் வறந்து உலைய,
‘கையால்
குளப் படுக’ என்று வெய்யோன் குறித்து, உளம்
கனன்று புக்கான். (177-2)

760. நிகர் அறு கவியின் சேனை நிலை கெட, சிலவர்
தம்மைத்
துகள் எழக் கயக்கி ஊதும்; சிலவரைத் துகைக்கும்,
காலின்;
தகர் படச் சிலவர்தம்மைத் தாக்கிடும், தடக்
கைதன்னால்;
புகவிடும் சிலவர்தம்மை, விசும்பிடைப் போக,
வெய்யோன். (177-3)

761. வலிதினின், சிலவர்தம்மை வன் கையால் பற்றிப்
பற்றி,
தலையொடு தலையைத் தாக்கும்; சிலவரைத் தனது
தாளால்
நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும்; சிலவர்
நெஞ்சைக்
கொலை நகப் படையின் கீறி, குருதி வாய்மடுத்துக்
கொள்ளும். (177-4)

762. கடும் பிணக் குவையினூடே சிலவரைப் புதைக்கும்;
கண்ணைப்
பிடுங்குறும் சிலவர்தம்மை; சிலவரைப் பிடித்து,
வெய்தின்
கொடுங் கொலை மறலி ஊரில் போய் விழக் குறித்து
வீசும்;
நெடும் பெரு வாலின் பற்றிச் சிலவரைச் சுழற்றி
நீக்கும். (177-5)
763. பருதி மண்டலத்தில் போகச் சிலவரைப் பற்றி வீசும்;
குருதி வாய் பொழியக் குத்திச் சிலவரைக்
குமைக்கும்; கூவித்
திரிதரத் தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்தம்மை;
நெரிதரச் சிலவர்தம்மைக் கொடுங் கையின்
நெருக்கும் அன்றே. (177-6)

764. ஆயிர கோடி மேலும் அடல் குரங்குஅதனை வாரி,
வாயிடைப் பெய்து மூட, வயிற்றிடைப் புகுந்து, வல்லே
கூய் உளம் திகைத்து, பின்னும் கொடியவன்
செவியினூடே,
போயது வெளியில் மீண்டும், புற்றிடைப் பறவை
என்றே. (179-1)

765. அவ் வழி அரியின் சேனை அதர்பட வசந்தன்
என்பான்
தவ் அழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன்
என்றான்;
எவ் வழி? பெயர்ந்து போவது எங்கு? என இரு
குன்று ஏந்தி,
வெவ் வழிஇசை அக் கும்பகருணன்மேல் செல்ல
விட்டான். (180-1)

766. விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல்
செல்ல,
இசைந்திடு தோளின் ஏற்றான், இற்று நீறு ஆகிப்
போக;
வசந்தனைச் சென்று பற்றி வாசம் கொண்டுவந்து
கையால்
பிசைந்து சிந்தூரமாகப் பெரு நுதற்கு அணிந்து
கொண்டான். (180-2)

767. நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழியத்
தள்ளி,
சூலம் அங்கு ஒரு கை சுற்றி, ‘தொடர்ந்திடும்
பகைஞர் ஆவி
காலன் ஊர்தன்னில் ஏற்றி, கடிதில் என் தமையன்
நெஞ்சில்
கோலிய துயரும்தீர்ப்பென்’ எனக் கொதித்து, அமரின்
ஏற்றான். (186-1)

768. செய்துறு பகையை வெல்வார், நின்னைப் போல்
அம்மை செய்து,
வைதுறு வந்த போது, வலுமுகம் காட்டி, யாங்கள்
தகைதுறு வினையை வென்று கடன் கொள்வார்
மார்க்கமுள்ளார்;
எய்துறும் இதற்கு என் போல் உன் தகை சிலை
உதவி என்றான். (193-1)

769. மாருதி போதலோடும், வயப் படைத் தலைவர், மற்று
ஓர்
மாருதம் என்னப் பொங்கி, வரையொடு மரங்கள்
வாரி,
போர் எதிர் புகக் கண்டு, அன்னோர் அனைவரும்
புரண்டு போரில்
சோர்தர படைகள் வாரிச் சொரிந்து, அடல் அரக்கன்
ஆர்த்தான். (203-1)

770. மழுவொடு கணிச்சி, சூலம், வாள், மணிக் குலிசம்,
ஈட்டி,
எழு, அயில், எஃகம் என்று இப் படை முதல்
எவையும் வாரி,
மழை எனப் பொழிந்து, நூறு யோசனை வரைப்பில்
மேவும்
அளவு அறு கவியின் சேனை அறுத்து, ஒரு
கணத்தில் வந்தான். (203-2)

771. இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி
கலக்கம் அற்றிடும் அரக்கர்தம் கரங்களைக் கடிந்தே.
முலைக்குவட்டு, அவர் கன்னியர், முன்றிலின் எறிய,
விலக்க அரும் விறலாளி கண்டு, அவர் உயிர்
விளிந்தார். (226-1)
772. வடி சுடர்ப் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து
அடல் அரக்கரும் சிலர் உளர்; அவர் தலை அறுத்து,
ஆங்கு
உடன் எடுத்து, அவர் மனையினுக்கு உரிய
கன்னியர்பால்
இட, உவப்பொடும் புழுக்கினர், ஊன் இவை
அறியார். (226-2)

773. குஞ்சரத் தொகை, தேர்த் தொகை, குதிரையின்
தொகை, மேல்
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்தம் தொகை எனும்
வெள்ளம்
பஞ்சினில் படும் எரி என, இலக்குவன் பகழி
அஞ்செனப் படு கணத்து, அவை அனைத்தையும்
அழித்த. (227-1)

774. வந்து அம் மாப் படை அளப்பு இல வெள்ளங்கள்
மடிய,
அந்தி வான் எனச் சிவந்தது, அங்கு அடு களம்;
அமரில்
சிந்தி ஓடிய அரக்கரில் சிலர், ‘தசமுகனுக்கு
இந்த அற்புதம் உரைத்தும்’ என்று ஓடினர், இப்பால் (227-2)

775. உரைத்து, நெஞ்சு அழன்று, ‘ஒரு கணத்து இவன்
உயிர் குடித்து, என்
கருத்து முற்றுவென்’ எனச் சினம் கதுவிட, கடுந்
தேர்
பரித்த திண் திறல் பாகரை, ‘பகைவனுக்கு எதிரே
பொருத்தும்’ என்று அடல் கும்பகன் பொருக்கெனப்
புகன்றான். (228-1)

776. நாண் தெறித்தனன், பகிரண்டப் பரப்பொடு நவை
போய்
மாண்ட விண்ணவர் மணித் தலை துளங்கிட, வயப்
போர்
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய,
தூண்டி, மற்று அவன் இலக்குவன்தனக்கு இவை
சொல்வான்: (233-1)

777. அது கண்டார் அடல் வானவர், ஆசிகள் கூறித்
துதி கொண்டார்; அடல் அரக்கனும் துணை விழி
சிவந்து ஆங்கு,
‘இது கண்டேன்; இனிக் கழிந்தது, உன் உயிர்’ எனக்
கனன்றே
கொதி கொண்டான், அடல் சிலையினைக் குழைவுற
வளைத்தான். (240-1)

778. புக்க போதில், அங்கு இலக்குவன் பொருக்கெனத்
துயர் தீர்ந்து,
அக் கணம்தனில் அரக்கர்தம் பெரும் படை அவிய,
மிக்க வார் சிலை வளைத்து, உரும் ஏறொடு
விசும்பும்
உட்க, நாண் எறிந்து, உக முடிவு என, சரம்
பொழிந்தான். (248-1)

779. ‘காய் கதிர்ச் சிறுவனைப் பிணித்த கையினன்,
போயினன் அரக்கன்’ என்று உரைத்த போழ்தின்வாய்,
நாயகன் பொருக்கென எழுந்து, நஞ்சு உமிழ்
தீ அன வெகுளியன், இனைய செய்தனன். (272-1)

780. ஆயிரம் பேய் சுமந்து அளித்தது, ஆங்கு, ஒரு
மா இருங் கேடகம் இடத்து வாங்கினான்;
பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர்
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான். (299-1)

781. வீசினன் கேடகம்; விசும்பின் மீன் எலாம்
கூசின; அமரரும் குடர் குழம்பினார்;
காய் சின அரக்கனும் கனன்ற போது, அவன்
நாசியும் செவியும் வெங் குருதி நான்றவே. (299-2)

782. கும்பகன் கொடுமையும், குலைகுலைந்து போம்
வெம்பு வெஞ் சேனையின் மெலிவும், நோக்கிய
நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும்
செம் பொனின் கேடகம் சிதைத்து வீழ்த்தினான். (301-1)

783. ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுறப்
போயின கேடகம் புரிந்து நோக்கினான்;
பேய் இரண்டாயிரம் சுமக்கப் பெற்றுடை
மா இருங் கேடகம் கடிதின் வாங்கினான். (301-2)

784. போயின கேடகம் போக நோக்கினன்,
ஆயிரம் பெயரவன், அறியும் முன்பு; அவன்
பேய் இரண்டு ஆயிரம் பேணும் கேடகம்
‘ஏ’ எனும் அளவினில் எய்தச் சென்றதால். (301-3)

785. ஆலம் உண்டவன் முதல் அளித்தது, அன்னவன்
சூலம் உண்டு; அளப்பு இல கோடி பேய் சுமந்து,
ஓலம் இட்டு அமரர்கள் ஓட, ஊழியில்
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது, அக் கணம். (310-1)

786. பிடித்தனன் வலக் கையில் சூலம், பெட்பொடு;
முடித்தனன், பூசனை மனத்தின் முன்னியே;
விடுத்தனன், ‘பகைவனை வென்று மீள்க’ எனா;
தடுப்ப அரிது எனத் தளர்ந்து, அமரர் ஓடினார். (315-1)

787. சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே,
ஞால நாயகன், அரிக் கடவுள் ஏந்திய
கால வெங் கனல் படை கடிதின் ஏவி, அச்
சூலம் அற்று இரண்டு எனத் துணித்து வீழ்த்தினான். (315-2)

788. அழிந்தது சூலம்; அங்கு அமரர் யாவரும்
தொழும் தகை அமலனைப் புகழ்ந்து துள்ளியே,
‘கழிந்தது, எம் மனத் துயர்’ என்று கண்ணன் மேல்
பொழிந்தனர், அவன் பெயர் புகன்று, பூமழை. (315-3)
789. வந்த வெஞ் சேனைகள் வளைந்த எல்லையில்
இந்திரன் முதலினர் ஏத்த, வள்ளலும்
சுந்தர நெடுங் கணை மாரி தூவினான்;
சிந்தியது, அப் பெருஞ் சேனை வெள்ளமே. (315-4)

790. இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம்
மற்று இன்றொடு முடிவு எய்திப்

புரண்டு தத்துறப் பொழிந்தனர், இருவர் தம்
பொரு சிலைக் கணை மாரி;

இருண்டது எத்திசை மருங்கினும், பறவையின்
இனம் பல படி மூடி;

திரண்ட வச்சிரக் கதை கரத்து எடுத்தனன்,
கும்பகன் சினம் மூள.

(321-1)

791. என்ற போதில், அரக்கனும் நோக்கினன்,
‘எம்பிரான் நுவல் மாற்றம்

நன்று, நன்று!’ எனா, சிரம் துளக்கினன்,
நகைத்து, இவை இவை நவில்கின்றான்;

‘வென்றி தந்து, தம் புறம் கொடுத்து ஓடிய
விண்ணவர் எதிர் போரில்

பொன்றுமாறு இளைத்து, இன்று போய் வருவெனேல்,
புகழுடைத்தது போலாம்.’

(324-1)

792. இனைய திண் திறல் அரக்கனுக்கு அவ் வழி
இதயத்தில் பெரு ஞான

நினைவு எழுந்தது; ‘இங்கு இவன் பெருங் கடவுள்;
மற்று இவன் பத நிழல் காண

வினை அறுந்தது; வேறு இனிப் பிறப்பு இலை’
என்று, தன் மன வேகம்-

தனை மறந்தனன்; மறந்து அவன் தன்மையை
நினைந்தனன், கருத்தோடும்.

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமிகள் அருளிச் செய்த சதுஸ் ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்–

December 29, 2020

ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமி இயற்றிய சதுஸ் ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்-
ஸ்ரீ. உ. வே. திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமிகள் -திருப்பாவை உபந்யாஸத்தில் மேற்கோள் காட்டப்பட்டது,
ஸ்வாமி இளைய வயசிலே நோய்வாய் பட கைங்கர்யங்கள் செய்து வாழவே பிரார்த்திக்க அருளிச் செய்த ஸ்லோகம்
சீதா பிராட்டி பிரிவை நேராக சொல்லாமல் -சொல்லி இருந்தால் -அத்துடன் ஆச்சார்யர் திருவடி சேர்ந்து இருந்தால் –
பிரிந்த வ்ருத்தாந்தத்துடன் போக திரு உள்ளம் இல்லாமல் -திருவடி அடையாளம் சொல்லும் முகத்தால் அருளிச் செய்துள்ளார் –
ஸ்ரீ சீதா பிராட்டி ராவணன் பிரிந்ததை சொல்லாமல் சிறை இருந்தவள் பற்றி ஸ்ரீ திருவடி மூலம் அறிந்து கொண்டான்
என்று மங்கள கரமாக அருளிச் செய்கிறார்
வைரஸ் தொற்றுகளிலிருந்து காக்க வல்லது-

1.ஸ்ரீ ராம: கௌசிகம் அன்வகாத் பதி முனே: வாசாவதீத் தாடகாம்
ஸத்ரம் தஸ்ய ரரக்ஷ தேன கதிதா: சுச்ராவ தாஸ்தா: கதா:
கத்வாதோ மிதிலாம் விதாய த்ருஷதம் யோஷின்மணிம் ஸன்முனே:
பங்க்த்வா தூர்ஜடி சாபம் ஆப ரமணீம் ஸீதாபிதானாம் அபி

2.ஸ்ரீ ஸீதாயா: கரலாலனேன ஸக்ருதீ ஜித்வா முனிம் பார்கவம்
ஸாகேதம் தரஸா ப்ரவிச்ய ஜனனீம் ஆனந்தயன் மத்யமாம்
ஆஸீத் யோ விபினே சதுர்தச ஸமா ரக்ஷன் முனீன் ஆனதான்
ரக்ஷஸ்ஸங்கம் அதாவதீத் அகடயத் ராஜ்யம் ச ஸூர்யாத்மஜே

3. வாயோராத்ம புவா ததோ ஹநுமதா பாதோதி பார ஸ்திதாம்
ப்ராணேப்யோபி கரீயஸீம் ப்ரியதமாம் விஜ்ஞாய ரக்ஷோஹ்ருதாம்
ஸேதும் வாரிநிதௌ விதாய விவிதானந்தாக வித்வம்ஸனம்
லங்காயாம் விலுலாவ ராவண சிரோ ப்ருந்தானி வந்தேய தம்

4. ஆருஹ்யாத விபீஷணேன ஸுபகம் பக்த்யா ஸமாவேதிதம்
மான்யம் புஷ்பகம் அஞ்ஜஸா நிஜபுரீம் ஆகத்ய மித்ரைர்வ்ருத:
ஆனந்தாய வஸிஷ்ட காச்யப முகை: பட்டாபிஷிக்தோ விபு:
தஸ்மின் ஜாக்ரதி ஜானகீ ப்ரியதமே கா நாம பீதிர்மம

தனுஷ்கர சதுச்லோகீ தனுஷ்புர கவீரிதா
மாரீகாதர சித்தானாம் மா ரீதிம் இதராம் திசேத்-

ஸ்ரீ வில்லி-வில் பிடித்தவன் பற்றிய ஸ்ரீ வில்லூர் ஸ்வாமி நான்கு ஸ்லோகங்கள் மாரி -viras -விலகி போவதாக பலன்

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ. உ. வே. திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கம்ப ராமாயணம்-ஸ்ரீ ஸூந்தர காண்டம்-மிகைப் பாடல்கள்–

December 25, 2020

1. கடல் தாவு படலம்

383.
சென்றனன்,இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி-
திண் தோள்
வன் திறல்அனுமன்-வாரி கடக்குமாறு உளத்தின்
எண்ணி,
பொன் திணிசிகர கோடி மயேந்திரப் பொருப்பின்
ஏறி,
நின்றிடும்தன்மை எம்மால் நிகழ்த்தலாம்
தகைமைத்து ஆமோ ?

அனுமன்இராமபிரானின் திருவடியை மனத்திலே தியானித்து கடலைக்
கடக்க எண்ணி மகேந்திர மலையில் நிற்கும் தன்மை எம்மால் கூறும் தன்மை
உடையதோ.

384.
இமையவர்ஏத்த வாழும் இராவணன் என்னும்
மேலோன்
அமை திரு நகரைச்சூழ்ந்த அளக்கரைக் கடக்க,
வீரன்,
சுமை பெறு சிகரகோடித் தொல் மயேந்திரத்தின்,
வெள்ளிச்
சிமையமேல்நின்ற தேவன் தன்மையின், சிறந்து
நின்றான்.

மகேந்திர மலையில்நிற்கும் அனுமன் கயிலை மலையில் நிற்கும்
சிவபெருமான் போன்றான். அளக்கர் – கடல் வெள்ளிச்சிமயம் – கயி்லை.
இவ்விரண்டு பாடல்கள் இப்படலத்தின் முன்னர் உள்ளன. இவற்றொடு
கிட்கிந்தா காண்டம் மயேந்திரப்படல இறுதி நான்கு பாடல்களும்
வரிசைமுறைமாறிக் கலந்துள்ளன.

385.
பெருஞ் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி
அரக்கர் யாரும்
பொரும் சின மடங்கல் வீரன் பொதுத்திட
மிதித்தலோடும்
அருஞ் சினம்அடங்கி, தம்தம் மாதரைத் தழுவி,
அங்கம்
நெரிஞ்சுற,கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம்
நுங்க

அனுமன் திருவடி ஊன்றநிலை குலைந்த அரக்கர் தம்மாதரைத்
தழுவிக்கடலில் விழுந்தனர். பொதுத்திட – துளை உண்டாக. நுங்க – உண்ண.
நெரிஞ்சுற – சிதைவுற. (7-1)

386.
விண்ணோர்அது கண்டனர், உள்ளம் வியந்து
மேல்மேல்
கண் ஓடியநெஞ்சினர், காதல் கவற்றலாலே,
எண்ணோடு இயைந்துதுணை ஆகும் இயக்கி ஆய
பெண்ணோடு இறைஇன்னன பெற்றி
உணர்த்தினாரால்.

தேவர்கள்,அனுமன் செல்வதைக் கண்டனர். சுரசையைப் பார்த்து
கூறினர். கண் ஓடிய – இரக்கமுற்ற. (64-1)

387.
பரவுக் குரல், பணிலக் குரல், பணையின் குரல்,
பறையின்
விரவுக் குரல்,சுருதிக் குரல், விசயக் குரல், விரவா,
அரவக் குலம்உயிர் உக்கு உக, அசனிக் குரல் அடு
போர்
உரவுக் கருடனும் உட்கிட, உயிர்க்கின்றன-ஒருபால்.

பல ஒலிகள்உண்டாகின்றன. பணிலம் – சங்கு. பணை – முரசம்,
அசனி- இடி. உயிர்த்தல் – ஒலித்தல். (74-1)

388.
வானோர் பசுந் தருவின் மா மலர்கள் தூவ,
ஏனோரும் நின்று,‘சயம் உண்டு’ என இயம்ப,
தான் ஓர் பெருங்கருடன் என்ன, எதிர் தாவிப்
போனான்,விரைந்து, கடிதே போகும் எல்லை.

பசுந்தரு -கற்பகம். (74-2)

389.
என்று தன் இதயத்து உன்னி, எறுழ் வலித் தடந்
தோள் வீரன்
நின்றனன், நெடியவெற்பின்; நினைப்ப அரும்
இலங்கை மூதூர்

ஒன்றிய வடிவம்கண்டு, ஆங்கு, உளத்திடைப்
பொறுக்கல் ஆற்றான்;
குன்று உறழ்புயத்து மேலோன் பின்னரும்
குறிக்கலுற்றான்.

எறுழ் – மிக்க. வீரன்- அனுமன், வெற்பு – மகேந்திரமலை (94-1)

2. ஊர் தேடு படலம்

390.
‘ஊறு மிகவேஉறினும், யானும் அமர் தேரேன்,
தேறல் இல்அரக்கர் புரி தீமை அது தீர்வுற்று,
ஏறும் வகை எங்குள? இராமனிடை அல்லால்,
மாறும் மதி வேறுபிறிது இல்’ என மதித்தான்.

கடல் தாவு படலம் 88ஆம்பாடலின் (கம்ப. 4828) மறுபதிப்பு.
(73-1)

391.
‘கண்டவனப்பான், மேனி கரக்கும் கருமத்தான்,
கொண்டல்செறிப்பான், வானரம் என்றும் கொளல்
அன்றே;
அண்டம்அனைத்தும் பூரணன் ஆகும் அவன்
ஆகும்;
சண்டைகொடுத்தும் கொள்வன்’ எனத் தான் சலம்
உற்றாள்.

அனுமனை இறைவனாகஇலங்கைமாதேவி கருதுதல். சலம் – கோபம்.
(86-1)

392.
ஆயவன்அருளால், மீட்டும் அந்தரி அறைந்தாள்,
‘முன் நாள்
மாய மா நகரம்தன்னை வகுத்து, அயன் என்னும்
மேலாம்
தூயவன் என்னைநோக்கி, “சுந்தரி ! காப்பாய்”
என்று, ஆங்கு,
ஏயினன், இதற்குநாமம் இலங்கை என்று எவரும்
போற்ற.

அந்தரி -இலங்கைமாதேவி (93-1)

393.
இத் திறம்அனந்த கோடி இராக்கதக் குழுவின்
உள்ளார்
தத்தம செய்கைஎல்லாம் தனித் தனி நோக்கி,
தாங்காது,
‘எத் திறம்இவர்தம் சீரை எண்ணுவது ?’ எனவே,
அண்ணல்
உத்தமன்தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான்.

இராக்கதரை எண்ணல்அரிது என்ற அனுமன் நினைவு. (120-1)

394.
கிடந்தனன்,வடவரை கிடந்தபோல்; இரு
தடம் புயம்திசைகளை அளக்கத் தாங்கிய
உடம்பு உறுமுயற்சியின் உறங்கினான், கடை
இடம் பெறுதீவினை யாவும் ஏத்தவே.

வடவரை – மேருமலை. (123-1)

395.
குடம் தரும்செவிகளும், குன்றம் நாணுறத்
தடந் தருகரங்களும், தாளும், தாங்குறாக்
கிடந்தது ஓர்இருள் எனக் கிடந்துளான்தனை
அடைந்தனன்,அஞ்சுறாது-அனுமன் ஆண்மையான்.

கும்பகர்ணனைக் கிடந்தஇருள் என்றார். (130-1)

3. காட்சிப்படலம்

396.
எயிலின்உட்படு நகரின் யோசனை எழு-நூறும்
அயிலினின் படர்இலங்கை மற்று அடங்கலும்
அணுகி,
மயல் அறத் தனிதேடிய மாருதி, வனசக்
குயில் இருந்தஅச் சோலை கண்டு, இதயத்தில்
குறித்தான்.

எயில் – மதில்.மயல் – மயக்கம். வனசக் குயில் – தாமரைக் குயில்
சீதையைக் குறித்தது. (1-1)

397.
அஞ்சனத்துஒளிர் அமலனை மாயையின் அகற்றி,
வஞ்சகத்தொழில் இராவணன் வவ்வினன்
கொடுவந்து,
இஞ்சி உட்படும்இலங்கையின் சிறையில் வைத்திட,
ஓர்
தஞ்சம் மற்றுஇலை; தான் ஒரு தனி இருந்து
அயர்வாள்.

இஞ்சி- மதில். தஞ்சம் – ஆதரவு. (2-1)

398.
கண்ணின்நீர்ப் பெருந் தாரைகள் முலைத் தடம்
கடந்து
மண்ணின்மீதிடைப் புனல் என வழிந்து அவை ஓட,
விண்ணைநோக்குறும்; இரு கரம் குவிக்கும்; வெய்து
உயிர்க்கும்;
எண்ணும் மாறுஇலாப் பிணியினால் இவை இவை
இயம்பும்

சீதையின் அவலம்கூறப்பெறுகிறது. (10-1)

399.
‘மாய மானின்பின் தொடர்ந்த நாள், “மாண்டனன்”
என்று
வாயினால் எடுத்துஉரைத்தது வாய்மை கொள்
இளையோன்
போய், அவன்செயல் கண்டு, உடல் பொன்றினன்
ஆகும்;
ஆயது இன்னது என்றுஅறிந்திலேன்’ என்று என்றும்
அயர்வாள்.

மாயமானின் பின்போய் இருவரும் இறந்தனரோ என்ற ஐயம் சீதைக்கு
எழுகிறது. (16-1)

400.
இன்னஎண்ணி, இடர் உறுவாள் மருங்கு,
உன் ஓர் ஆயிரகோடி அரக்கியர்
துன்னு காவலுள், தூய திரிசடை
என்னும் மங்கைதுணைஇன்றி, வேறுஇலாள்.

உன் – நினைக்கப்படும். (29-1)

401.
தரும நீதிதழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன்தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக்கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனதுஆவி பெற்று உய்ந்துளாள்.

வீடணன் மகள் திரிசடைதேற்றப்பிராட்டி உய்ந்தாள். (29-2)

402.
அன்னள் ஆயஅருந்ததிக் கற்பினாள்
மன்னு சோலையில்மாருதியும் வர,
தன் இடம் துடித்துஎய்துற, சானகி
என்னும் மங்கை,இனிது இருந்தாள் அரோ.

அனுமன்வர சானகிக்குஇடம்துடித்தது. (29-3)

403.
‘தாட்சிஇன்று’ என, திரிசடையும், ‘சாலவும்
மாட்சியின்அமைந்தது, மலர் உளாள் தொழும்
காட்சியாய் !இக் குறி கருதும் காலையில்,
ஆட்சியே கடன்என அறிந்து நல்குவாய்.

மலர் உளாள் -இலக்குமி. இக்குறி – நிமித்தம். (32-1)

404.
மீட்டும்,அத் திரிசடை என்னும் மென் சொலாள்,
‘தோள் தடம்பொரு குழைத் தொண்டைத்
தூய்மொழி
கேட்டி; வெங் கடுஎனாக் கிளர் உற்பாதம்ஆய்,
நாட்டினை;யாவரும் நடுக்கம் காண்டுமால்.

தொண்டை -தொண்டைக்கனி போன்ற வாய். கடு – விடம். உற்பாதம்
-துர்நிமித்தம். (53-1)

405.
சிரம் ஒருமூன்றினார்; திருக்கு மூன்றினார்;
கரம் ஒருமூன்றினார்; காலும் மூன்றினார்;
உரம் உறு வனமுலை வெரிநின் மூன்று உளார்;
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார்.

திருக்கு – கண்கள்.வெரிந் – முதுகு. (55-1)

406.
என்னவாழ்த்திய மாருதி, ‘ஈது நாம்
இன்னும்காண்டும்’ என, மறைந்து எய்தினான்;
சொன்ன வாள் அரக்கன் சுடு தீச் சுடும்
அன்னை வைகுறும்அவ் இடத்து ஆயினான்.

அரக்கன் -இராவணன். (101-1)

407.
‘இன்று நாளைஅருளும் திருவருள்
என்று கொண்டு,இதனால் அழிவேனை நீ
கொன்று இறந்தனைகூடுதியோ ? குழை
தின்று உறங்கிமறம் தவாச் செல்வியே !

காட்சிப்படலம்102ஆம்பாட்டை (கம்ப. 5171) தழுவியது. (103-1)

408.
என்றனன்,எயிறு தின்னா, எரி எழ விழித்து நோக்கி
நி….லத் தாவிநிலன் ஒளி கலனில் தோய,
மின்தனை மின்சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ,
மெல்லச்
சென்று,அவன்தன்னைச் சார்ந்தாள், மயன் அருள்
திலகம் அன்னாள்.

மயன் அருள் திலகம் -மண்டோதரி. (149-1)

409.
பொருக்கெனஅவனி…க…கொடி முறுவல் பூப்ப,
அரக்கர்கோமகனை நோக்கி, ‘ஆண்மை அன்று;
அழகும் அன்றால்
செருக்கு உறுதவத்தை, கற்பின் தெய்வத்தை,
திருவை இன்னே
வெருக் கொளச்செய்வது ! ஐயா !’ என, இவை
விளம்பலுற்றாள்;

அரக்கர் கோமகனை -இராவணனை. இங்கே ஐந்து பாடல்கள் 408
முதல் 412 வரை. மண்டோதரி இராவணனை நோக்கிப் பேசியதாகவருவன. இத்ததைய குறிப்பு கம்பர் வேறெங்கும்
அமைத்ததாக இல்லை. (149-2)

410.
‘செம் மலர்த் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம்
அன்னார்,
வெம்மை உற்றுஉன்மேல் வீழ்வார், வெள்கியே நகை
செய்து ஓத,
தம் மனத்து ஆசைவேறோர் தலைமகற்கு உடையாள்
தன்னை
அம்மலற்றுஇறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது
அன்றே.

நகை செய்து -இகழ்ந்து. இறைஞ்சும் வேட்கைதான் உள்ளதே அன்றி
வேறு பயன் இல்லை என்பதாம். (149-3)

411.
புலத்தியன்மரபின் வந்து புண்ணியம் புரிந்த
மேன்மைக்
குலத்து இயல்புஅதனுக்கு என்றும் பழி அன்றோ ?
என்றும் கொள்ளாய் !
வலத்து இயல்ஆண்மைக்கு ஈது மாசு’ மதிப்பி…….
…………………………………………………………………………….

வலத்து இயல் ஆண்மை -சென்ற போர் தொறும் வென்றியே
புனையும்வல்லமையாம். (149-4)

412.
வாச மென்குழலினாரால், மண்ணினில், வானில்,
யார்க்கும்
நாசம் வந்துஏன்று… மறைகளே நவிலும் மாற்றம்
பூசல் வண்டுஉறையும் தாராய் ! அறிந்தும் நீ,
புகழால், பொற்பால்,
தேசுடையவளோ, என்னின், சீதையும் ?……….

புகழ் பொற்பு தேசுஆகியவற்றில் யானும் சீதையும் ஒன்றே என்பது
மண்டோதரி வார்த்தை. (149-5)

413.
என்றார்;இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம்
மாறக்
கன்றாநின்றார்,காலும் எயிற்றார், கனல் கண்ணார்;
ஒன்றோ ?மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா !
பொன்றா வஞ்சம்கொண்டவர் இன்னும்
புகல்கின்றார்;

அரக்கியர் சீதையைமனங்கொளத் தேற்ற வெருட்டி உரப்பியவாறு
சொல்லப் பெறுகிறது. (156-2)

414.
தீயோர்செய்கைதானும், இராமன் ஒரு தேவித்
தாயாள் துன்பும்,மாருதி கண்டே தளர்வு எய்தி,
மாயாது ஒன்றேஅன்றி, மனத்தே மலி துன்பத்து
ஓயாது உன்னிச்சோர்பவன் ஒன்று அங்கு
உணர்வுற்றான்.

தாயாள் – சீதை.மனத்தே மிக்க துன்பத்தால், சலியாது கருதிச்
சோர்பவன் ஆயினன் அனுமன். (159-1)

4. உருக் காட்டுபடலம்

415.
சுற்றிய கொடி ஒன்றைத் துணிந்து, தூயள், ஓர்
பொன் தடங்கொம்பினில் பூட்டி, ‘பூமியே !
நல் தவம்உடையள் யான்ஆகின், நாயகன்
வெற்றி சேர்திருவடி மேவுவேன்’ என்றாள்.

ஒரு கொடியை வெட்டிக்கொம்பில் பூட்டித் தற்கொலைக்கு
முயற்சித்தாள் பிராட்டி. (21-1)

416.
என்றுஅருந்ததி, மனத்து, எம்மை ஆளுடைத்
துன்ற அருங் கற்பினாள், சுருதி நாயகன்
பொன் தரு மலர்ப் பதம் வழுத்தி, பூங் கொடி
தன் தனிக்கழுத்திடைத் தரிக்கும் ஏல்வையின்.

சுருதி நாயகன் -இராமன், ஏல்வை – பொழுது. (21-2)

417.
எய்தினள்,பின்னம் எண்ணாத எண்ணி, ‘ஈங்கு
உய் திறம்இல்லை !’ என்று ஒருப்பட்டு, ஆங்கு ஒரு
கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை
பெய்திடும்ஏல்வையில், தவத்தின் பெற்றியால்.

மேற்பாட்டு போன்றதே இதுவும். (21-3)

418.
தோன்றினன், தனது உருக் காண; தூயவள்
மூன்றுஉலகினுக்கும் ஓர் அன்னை, மொய்ம் மலர்
தேன் திகழ்திருவடி சென்னியால் தொழுது
ஆன்ற பேர் அன்புகொண்டு, அறைதல்மேயினான்;

அனுமன் சீதையைக் கண்டுதிருவடி தொழுதல். (22-1)

419.
நோக்கினேன்; அரக்கியர், நுனிப்பு இல் கோடியர்
நீக்கினர்துயிலினை; நின்னைக் காணுதற்கு
ஆக்கிய காலம்பார்த்து, அயல் மறைந்து, பின்
தாக்கு அணங்குஅவர் துயில் கண்டு, சார்ந்துளேன்.

நுனிப்பு – கணக்கு.தாக்கு அணங்கு அவர் – தீண்டி வருத்தும்
தெய்வம்போன்றலர் அரக்கியர். (23-1)

420.
‘நிலை பெற,அயன் இருந்து, இயற்று நீலத்தின்
சிலை மணிவள்ளமும் உவமை சேர்கல;
“அலவன், அது” என்பரால், அறிவு இலோர்; அவர்
உலைவு அறு திருமுழங்காலுக்கு ஒப்பு உண்டோ ?

இராமன் முழங்காலுக்குஒப்பு பிரமன் செய்த நீலமணியால் ஆகிய
வள்ளம். நண்டு என்பன பொருத்தமற்றன என்பது இப்பாடல் கருத்து. (43-1)

421.
‘எள்ளற்கு அரிய நிலை ஆகி, இயைந்து தம்மில்
இணை உர ஆய்
தள்ளப்படாத தகைஆகி, சார் கத்திரிகை வகை
ஒழுகா,
அள்ளற் பள்ளத்துஅகன் புனல் சூழ் அகன்ற
வாவிக்குள் நின்ற
வள்ளைத் தண்டின்வனப்பு அழித்த, மகரம்
செறியாக்குழை’ என்றான்

குண்டலம்அணியாச் செவிகளின் உவமை – கத்திரிக்கோலின் காது,
வள்ளைத் தண்டு. (49-1)

422.
தவம் தந்தநெஞ்சின் தனது ஆர் உயிர்த்
தம்பியோடும்
நவம் தந்தகுன்றும், கொடுங் கானமும், நாடி ஏகி,
கவந்தன்தனது ஆவிகவர்ந்து, ஒரு காலும் நீங்காச்
சிவம் தந்து,மெய்ம்மைச் சபரிக்குத் தீர்ந்து வந்தான்.

கவந்தனுக்கு சிவம்தந்தான் – சிவம் – மங்கலம். தீர்ந்து வந்தான் –
முடிபாகி வந்தான் என்று சாம்யப் பொருள் உரைக்கலாம். (88-1)

423.
‘சென்றேன்அடியேன், உனது இன்னல் சிறிதே
உணர்த்தும் அத்துணையும்
அன்றே, அரக்கர்வருக்கம் உடன் அடைவது;
அல்லாது, அரியின் கை
மன்றே கமழும்தொடை அன்றே, நிருதர் குழுவும்
மாநகரும்
என்றே இறைஞ்சி,பின்னரும், ஒன்று இசைப்பான்
உணர்ந்தான் ஈறு இல்லான்.

அனுமன், நான்இராமன்பால் சென்று தெரிவிக்கும் அளவுதான்
தாழ்த்தது. தெரிவித்தவுடன் அரக்கரும் இலங்கையும் ‘குரங்கின் கைப் பூமாலை
போல்’ ஆகிவிடும் என்று பிராட்டியை வணங்கி, பிறகும் ஒன்று சொல்ல
மனத்தில் உணர்ந்தான் ஈறு இல்லான் – அனுமன். சிரஞ்சீவி என்னும் பொருள்.
(117-1)

5. சூடாமணிப்படலம்

424.
‘சேண் தவாநெறி செல் பகல் தீங்கு அற,
மீண்டு,தம்பியும் வீரனும் ஊர் புக,
பூண்ட பேர்அன்பினோருடன் போதியால் !
ஈண்டு யான் வரம்வேண்டினென், ஈறு இலாய் !’

ஈறு இலாய் – முடிவுஇல்லாத அனுமனே ! ஊர் -அயோத்தி. (31-1)

425.
என்றுஉரைத்திடுதி; பின், அயோத்தி எய்தினால்,
வென்றி வெஞ்சிலையினான் மனம் விழைந்திடாது;
அன்றியே, மறைநெறிக்கு அருகன் அல்லனால்;
பொன் திணிமௌலியும் புனைதல் இல்லையால்.

இராமனோடு நான்அயோத்தி வந்தாலும் மறைநெறி இயற்றும் தகுதியும்,
முடிபுனையும் தகுதியும் எனக்கு இல்லை என்று தன்மனம் நொந்து பிராட்டி
கூறினாள். (38-1)

426.
“கொற்றவன்சரத்தினால் குலைகுலைந்து உக,
இற்றது இவ்இலங்கை” என்று, இரங்கி ஏங்கவே,
மற்று ஒரு மயன்மகள் வயிறு அலைத்து உக,
பொற்றொடி ! நீயும் கண்டு, இரங்கப் போதியால்

அனுமன் சீதையைத்தேற்றியது, கொற்றவன் – இராமன். பொற்றொடி –
சீதை. மண்டோதரி வயிற்றில் அடித்து அழ அதுகண்டு சீதை வருந்துவாள்
என்பதாம். (65-1)

427.
அங்கு, அதுஅஞ்சி நடுங்கி, அயன் பதி அண்மி,
“இங்கு நின் வரவுஎன்னை” எனக் கனல்வு எய்த,
மங்கை பங்கனொடுஎண் திசையும் செல, மற்றோர்
தங்கள் தங்கள்இடங்கள் மறுத்தமை தைப்பாய்.

அது – சயந்தன் ஆகியகாகம். மங்கைபங்கன் -சிவபிரான்.,

இதுமுதல் 5 பாடல்கள்5421 எண்ணுள்ள பாடலிற்கண்ட கதையின்
விரிவாகும். (77-1)

428.
‘இந்திரன்தரும் மைந்தன் உறும் துயர் யாவும்
அந்தரத்தினில்நின்றவர் கண்டு, “இனி, அந்தோ !
எந்தைதன் சரண்அன்றி, ஓர் தஞ்சமும் இன்றால்;
வந்து அவன் சரண்வீழ்க !” என உற்றதும்
வைப்பாய்.

மைந்தன் – சயந்தன்.எந்தை – இராமபிரான். (77-2)

429.
“ஐய நின்சரணம் சரண் !” என்று, அவன் அஞ்சி,
வையம் வந்துவணங்கிட, வள்ளல் மகிழ்ந்தே,
வெய்யவன் கண்இரண்டொடு போக !” என, விட்ட
தெய்வ வெம் படைஉற்றுள தன்மை தெரிப்பாய்.

அவன் – சயந்தன்.வள்ளல் – இராமன் “கண் இரண்டொடு போக”
சயந்தன் ஆகிய காகத்துக்கு இரண்டு கண்களை மட்டும் போக்கியது, ஆகும்.
தெய்வ வெம் படை – “அயல் கல் எழு புல்லால் வேக வெம்படை” என்று
(5421) முன்பு கூறப்பட்டது. (77-3)

430.
“எந்தை,நின் சரணம் சரண் !” என்ற இதன்னால்,
முந்தை உன்குறையும் பொறை தந்தனம்; முந்து உன்
சந்தம் ஒன்றுகொடித் திரள் கண்கள்தமக்கே
வந்து ஓர் நன்மணி நிற்க !” என, வைத்ததும்
வைப்பாய்.

காகம்எல்லாவற்றிற்கும் இரண்டு கண்களுக்கும் ஒரு மணி (ஒரு
பார்வை) நிற்க என வைத்து கூறப்பெறுகிறது. (77-4)

431.
‘வேகம் விண்டு சயந்தன் வணங்கி, விசும்பில்
போக, அண்டர்கள் கண்டு, அலர் கொண்டு
பொழிந்தார்;
நாக நம்பன்இளங் கிளை நன்கு உணராத,
பாகு தங்கியவென்றியின், இன் சொல் பணிப்பாய்.

இளம் கிளை -இலக்குவன். உணராத என்னாது ‘நன்கு உணராத’ என்ற
சொல்லாட்சி கருதுக. இதனைப் ‘பாகு தங்கிய வென்றி’ என்றது தன்னால்
மட்டுமே நுகர்ந்து இன்புறும் வெற்றியாதலின். தனக்காகத் தன் நாயகன்
மேற்கொண்ட செயல் ஆதலின் சீதை நினைந்து இன்புறற்கு ஏதுலாயிற்று.(77-5)

6. பொழில்இறுத்த படலம்

432.
எனப் பதம்வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை
கேளா,
கனக் குரல் உருமுவீழ, கனமலை சிதற, தேவர்
மனத்து அறிவுஅழிந்து சோர, மாக் கடல் இரைப்புத்
தீர,
சினத்து வாய்மடித்து, தீயோன், நகைத்து, இவை
செப்பலுற்றான்.

அனுமனால் சோலைஅழிந்தது கேட்ட இராவணன் சீறிய படி இதில்
சொல்லப் பெறுகிறது. தீயோன் -இராவணன். (57-1)

7. கிங்கரர்வதைப் படலம்

433.
ஓசையின்இடிப்பும் கேட்டு, ஆங்கு உருத்து எழு
சினத்தன் ஆகி,
‘ஈசன் மால் எனினும் ஒவ்வாது, ஈது ஒரு குரங்கு
போலாம் !
கூசிடாது இலங்கைபுக்கு, இக் குல மலர்ச்
சோலையோடு
மாசு அறு நகரைமாய்க்கும் வலிமை நன்று ! என்ன
நக்கான்.

இராவணன் நக்கான்என்க. (1-1)

434.
என்றலும்,இரு கை கூப்பி, இரு நிலம் நுதலில்
தோய,
சென்று அடிபணிந்து, ‘மண்ணும் தேவரும் திசையும்
உட்க,
வென்றி அன்றுஎனினும், வல்லே விரைந்து நாம்
போகி, வீரக்
குன்று அனகுரங்கைப் பற்றிக் கொணர்தும்’ என்று
இசைத்துப் போனார்.

‘வென்றி அன்று’ என்றதுகுரங்கினை வெல்வது ஒரு வெற்றியாகக்
கருதப்படாது என்றதாம். (2-1)

435.
அதுபொழுது, அவர் அது கண்டார்; அடு படை
பலவும் எறிந்தார்;
கதிகொடு சிலவர்தொடர்ந்தார்; கணை பலர்
சிலைகள் பொழிந்தார்;
குதிகொடு சிலவர்எழுந்தே குறுகினர்; கதைகொடு
அறைந்தார்;
மதியொடு சிலவர்வளைந்தார்; மழு, அயில், சிலவர்
எறிந்தார்.

கதி – வேகச்செலவு. கதை – தண்டு. (24-1)

436.
அனுமனும்,அவர் விடு படையால், அவர் உடல்
குருதிகள் எழவே,
சின அனல் எழ,ஒரு திணி மா மரம்அதில் உடல்
சிதறிடவும்
தனுவொடு தலைதுகள்படவும், சர மழை பல
பொடிபடவும்
தினவு உறு புயம்ஒடிபடவும், திசைதிசை ஒரு தனி
திரிவான்.

அவர் படையால் அவர்உடல் குருதி எழச் செய்தான். (24-2)

437.
உரைத்தஎண்பதினாயிர கோடி கிங்கரரோடு
இரைத்த வந்தமாப் பெரும் படை அரக்கர்
எண்ணிலரைத்
தரைத்தலத்தின்இட்டு அரைத்து, ஒரு தமியன்
நின்றது கண்டு,
உருத்து அவ்எண்பதினாயிர கோடியர் உடன்றார்.

எண்பதாயிரம் கோடிகிங்கரரோடு வந்த அரக்கர் மடிந்தனர். (39-1)

438.
சினந்துமற்று அவர், தீ எழப் படைக்கலம் சிதறி,
கனம் துவன்றியதுஎன, கரு மலை என, கடல் போல்
அனந்தனும் தலைதுளக்குற, அமரர்கள் அரவின்
மனம் துளக்குற,வளைத்தனர்,-எண் திசை மருங்கும்.

கனம் துவன்றியது -மேகம் நெருங்கியது. அனந்தன் – ஆதிசேடன்.
(39-2)

439.
எடுத்துஎறிந்தனர் எழு மழுச் சிலர்; சிலர் நெருக்கித்
தொடுத்துஎறிந்தனர் சூலங்கள்; சுடு கதைப்
படையால்
அடித்து நின்றனர்சிலர்; சிலர் அருஞ் சிலைப் பகழி
விடுத்துநின்றனர்-வெய்யவர் விளைந்த வெஞ்
செருவே.

கதை -தண்டு. (39-3)

440.
ஒழிந்திடும்கடை உகத்தினில் உற்ற கார்இனங்கள்
வளைந்து பொன்கிரிமேல் விழும் இடி என,
மறவோர்
பொழிந்த பல்படை யாவையும் புயத்திடைப்
பொடிபட்டு
அழுந்த,மற்றவரோடும் வந்து அடுத்தனன், அனுமன்.

பொன் மலை மேல்விழும் இடி – அனுமன் புயத் திடைப்பட்ட
படைகள். அனுமன் – பொன்மலை. (39-4)

441.
‘கட்டும்’ என்றனர்; ‘குரங்கு இது கடிய கைப்
படையால்
வெட்டும்’என்றனர்; விழி வழி நெருப்பு உக,
விறலோர்
கிட்டி நின்றுஅமர் விளைத்தனர்; மாருதி கிளர் வான்
முட்டும் மா மரம்ஒன்று கொண்டு, அவருடன்
முனைந்தான்.

கிட்டி நின்று -நெருங்கி. வான்முட்டும் மாமரம் – மாமரம் என்றும்
பெரிய மரம் என்றும் கூறலாம். (39-5)

442.
தலைஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; தாளின்
நிலை ஒடிந்திடஅடித்தனன்; சிலர்தமை; நெருக்கிச்
சிலை ஒடிந்திடஅடித்தனன், சிலர் தமை; வயப்
போர்க்
கலை ஒடிந்திடஅடித்தனன், அரக்கர்கள் கலங்க.

போர்க்கலை ஒடிந்திட- எதிர்ந்தார் கற்று வைத்திருந்த போர்த்திற
அறிவு இல்லையாம்படி. (40-1)

443.
என்றலும்அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன
நோக்கி
கன்றிய பவழச்செவ் வாய் எயிறு புக்கு அழுந்தக்
கவ்வி,
ஒன்றுஉரையாடற்கு இல்லான், உடலமும் விழியும்
சேப்ப,
நின்ற வாள்அரக்கர்தம்மை நெடிதுற நோக்கும்காலை.

வாய் எயிறு புக்குஅழுந்தக்கவ்வலும், உடலமும் விழியும் சிவத்தலும்
இராவணன் சினத்தின் மெய்பாடுகள். (61-1)

8. சம்பு மாலிவதைப் படலம்

444.
அது கண்டுஅரக்கன் சினம் திருகி, ஆடற் பகழி
அறுநூறு
முதிரும் வயப்போர் மாருதிதன் புயத்தில் மூழ்க
விடுவித்தான்;
புதையுண்டு உருவிப்புறம் போக, புழுங்கி அனுமன்
பொடி எழும்பக்
குதிகொண்டு,அவன் தேர் விடும் பாகன் தலையில்
சிதறக் குதித்தனனால்

அரக்கன் – சம்புமாலி.600 அம்புகளும் அனுமன் புயத்தில் புதைந்து
உருவிப் புறம் போயது. (45-1)

9. பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்

445.
என்று அவர்ஏவு சரங்கள் இறுத்தே,
‘பொன்றுவிர்நீர், இது போது’ என, அங்கு ஓர்
குன்று இரு கைக்கொடு எறிந்து, அவர் கொற்றம்
இன்று முடிந்ததுஎனத் தனி ஆர்த்தான்.

பொன்றுவிர் -அழிவீர். கொற்றம் – வெற்றி. (57-1)

446.
அப்பொழுதுஅங்கு அவர் ஆயிர கோடி
வெப்பு அடை வெஞ்சரம் வீசினர்; வீசி,
துப்புறுவெற்புஅதனைத் துகள் செய்தே;
மெய்ப்படுமாருதிமேல் சரம் விட்டார்.

வெப்பு அடை – வெம்மைபொருந்திய. துப்பு – வலிமை. (57-2)

447.
விட்டசரத்தை விலக்கி, அ(வ்) வீரன்,
வட்ட விசும்புறுமா மரம் வாங்கித்
தொட்டுஎறிதற்கு மு(ன்)னே, துகளாகப்
பட்டிட,வெய்யவர் பாணம் விடுத்தார்.

பாணம் -அம்பு. (57-3)

10.அக்ககுமாரன்வதைப் படலம்

448.
தடுவையின்மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க
உடுஇனம் ஆனதுஎல்லாம் உதிர்ந்த, பூ உதிர்ந்தது
என்ன;
அடு புலி அனையவீரர் அணிகல ஆர்ப்பும், ஆனை
நெடு மணிமுழக்கும், ஓங்கி, மண்ணுலகு அதிர்ந்தது
அன்றே.

இப்பாடலை 5737 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (12-1)

449.
பத்தியில்தேர்கள் செல்ல, பவளக் கால் புடைகள்
சுற்ற,
முத்தினில்கவிகை சூழ, முகில் என முரசம் ஆர்ப்ப,
மத்த வெங்கரிகள் யாவும் மழை என இருண்டு
தோன்ற
தத்திய பரிகள்தன்னின் சாமரை தழைப்ப,-போனான்.

இப்பாடலை 5729 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (15-1)

450.
தீய வல்அரக்கர்தம்மில் சிலர் சிலர் செம் பொற்
சின்னம்
வாயின் வைத்துஊத, வீரர் வழி இடம் பெறாது
செல்ல,
காயும் வெங்களிறு, காலாள் கடும் பரி, கடுகிச்
செல்ல
நாயகன்தூதன்தானும் நோக்கினன்; நகையும்
கொண்டான்

இப்பாடலை, 5731 ஆம்பாடலோடு ஒப்பிடுக. (16-1)

451.
புலிப் போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி, பரி,
தேர், பொங்க.
கலித்தார்கள்உம்பர் ஓட, கடையுகத்து எறியும்
காலின்
ஒலித்து, ஆழிஉவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை
முட்ட
வலித்தார் திண்சிலைகள் எல்லாம்; மண்டின
சரத்தின் மாரி.

இப்பாடலை. 5736ஆம் பாடலோடு ஒப்பிடுக. (23-1)

452.
எடுத்தனன்எழு ஒன்று; அங்கை எடுத்து இகல்
அரக்கர் சிந்தப்
பொடித்தனன்;இரதம், வாசி, பொரு களிறு, இதனை
எல்லாம்
முடித்தனன்,நொடிப்பில்; பின்னும், மூசு போர்
அரக்கர் வெள்ளம்
அடுத்து அமர்கோல, மேன்மேல் அடு படை தூவி
ஆத்தார்.

வாசி -குதிரை. (24-1)

453.
செறி நாண்உரும் ஒலி கொண்டான்; ஒருபது
திசைவாய்கிழிபட அழல்கின்றான்;
‘இறுவாய், இதுபொழுது’ என்றான்; எரி கணை
எழு கார்மழை பொழிவது போல,
பொறிவாய் திசைதொறும் மின் தாரையின் நிலை
பொலியச்சினமொடு பொழிகின்றான்;
உறு மாருதி உடல்உக வெங் குருதிகள்
ஒழியாது,அவனொடு மலைவுற்றான்.

ஒருபது திசை -எண்திசையோடு மேல், கீழ் சேர்ந்து பத்து எனல்
வழக்கு. (32-1)

454.
மலைபோல்உறு புய வலி மாருதி சினம்
வந்துஏறிட, எந்திரமும் தேர்த்
தொலையாது அவன்விடு சர மாரிகள் பல
துண்டப்படும் வகை மிண்டி, தன்
வலி சேர்கரம்அதில் எழுவால் முழுவதையும்
மண்டித்துகள் பட மடிவித்தான்;

புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல்
பொங்கிப்பொரு சிலை விளைவித்தான்.

மிண்டி – நெருங்கி.நிருதன் – அக்ககுமாரன். (32-2)

455.
‘மாய்ந்தான், மாருதி கையால், அகிலமும்
உடையான்மகன்’ என வானோர் கண்டு,
ஓய்ந்தார்இலர்,குதி கொண்டார்; உவகையின்
ஒழியா நறுமலர் சொரிகின்றார்;
சாய்ந்தார்நிருதர்கள் உள்ளார் தமர் உடல்
இடறித்திரைமிசை விழ ஓடித்
தேய்ந்தார்சிலர்; சிலர் பிடரியில் குதியடி
பட ஓடினர்;சிலர் செயல் அற்றார்.

அகிலமும் உடையான் -இராவணன். அவன் மகன் அக்ககுமாரன்.
பிடரியில் குதிபடல் – ஓட்டத்தின் விரைவைக் குறிக்கும் வழக்குச்சொல். (38-1)

456.
இன்னனநிகழ்வுழி, இராக்கதக் குழாம்
மன்னியசோதியும், அரக்கன் மைந்தனும்,
தன் நிகர்அனுமனால் இறந்த தன்மையை
முன்னினர் சொல,அவன் முன்பு கேட்டனன்.

மன்னிய சோதி -படைத்திரள் குறிக்கும் சொல் போலும். (47-1)

457.
அவ் வகைகண்டவர் அமரர் யாவரும்,
‘உய்வகை அரிது’என ஓடி, மன்னவன்
செவ்அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார்,
எவ் வகைப்பெரும் படை யாவும் மாய்ந்ததே.

மன்னவன் – இராவணன் -அமரர் – பருவத்தேர். (47-2)

458.
ஈது மற்றுஇசைவுற, இது கண்டு ஏங்கியே
மா துயரத்தொடுமறுகு நெஞ்சுடைத்
தூதர் உற்றுஓடினர்; தொழுது, மன்னனுக்கு
ஓதினர்; ஓதல்கேட்டு, உளம் துளங்கினான்.

தூதர் – பருவத்தேவர்.மன்னன் – இராவணன். (47-3)

459.
நாடினார்;நாடியே, நனை வரும் கொம்பு அனார்
வாடினார்; கணவர்தம் மார்பு உறத் தழுவியே
வீடினார்; அவ்வயின், வெருவி விண்ணவர்கள்தாம்
ஓடினார்;அரசன்மாட்டு அணுகி நின்று உரை
செய்வார்;

விண்ணவர் -பருவத்தேவர் நனைவரும் கொம்பு – அரும்பு தளிர்க்கும்
கொம்பை ஒத்தவர் (47-4)

.460.
“மைந்தனைமடித்தது குரங்கு” என்று ஓதவும்
வந்தது போலும்,நம் வாழ்வு நன்று !’ எனா,
சிந்தையின்அழன்று, எரி விழித்து, ‘சென்று, நீர்
இந்திரன்பகைஞனைக் கொணருவீர்’ என்றான்.

மைந்தன் -அக்ககுமாரன். இந்திரன் பகைஞன் – இந்திரசித்து. (49-1)

461.
என்றலும்,ஏவலுக்கு உரியர் ஓடியே
சென்று, மற்றுஅவன் அடி பணிந்து, தீமை வந்து
ஒன்றியதிறங்களும் உரைத்து, ‘நுந்தையும்
இன்று உனைக்கூவினன்’ எனவும் சொல்லினார்.

ஏவலர் -இந்திரசித்தை அழைத்தபடி. (49-2)

11.பாசப்படலம்

462.
என்றே,‘இவன் இப்பொழுது என்கையினால்
மடிந்தால்
நன்றே மலர்மேல்உறை நான்முகன் ஆதி தேவர்,
“பொன்றோம் இனி என்றும்; இருந்து உயிர்
போற்றுதற்கு
நின்றே துயர்தீர நிறுத்தினன்” என்ப மன்னோ.’

இவன் -இந்திரசித்து. ‘என்கையால் மடிந்தால் பிரமன் முதலிய
தேவர்கள் நம்துன்பம் நீங்கச் செய்தான் என்று சொல்வர்’ என்று அனுமன்
நினைத்ததாம். (50-1)

463.
எழுந்தான்;எழுந்த பொழுது, அங்கு அரக்கரும்
எண்இல் கோடி
பொழிந்தார்படைகள்; அவை யாவையும் பொடிந்து
சிந்திக்
கழிந்து ஓடிட,தன் கை மராமரம் கொண்டு வீசி,
செழுந் தார்ப்புயத்து அண்ணல் செறுத்து, உடன்
மோதலுற்றான்.

செழுந்தார்ப்புயத்துஅண்ணல் – அனுமன். பெயராய் நின்றது. (53-1)

464.
செறுத்துஎழுந்திடும் அரக்கர்கள் திசை திசை
நெருக்கி,
மறித்து வெஞ்சமர் மலைதலும், மாருதிக் கடவுள்
கறுத்து வஞ்சகர்சிரத்தொடு கரம் புயம் சிதறிப்
பொறித்தெறித்திடப் புடைத்தனன், பொரு பணை
மரத்தால்.

பொறி தெறித்திட -நெருப்புப் பொறி பறக்க. (59-1)

465.
புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளைப்
பொறியின்
தகைந்து, மற்றுஅவர் உடல்களைத் தலைகளைச்
சிதறி,
மிகும் திறல்கரி, பரி, மணித் தேர், இவை விளிய,
புகுந்துஅடித்தனன், மாருதி; அனைவரும் புரண்டார்.

பொறியின் தகைந்து -கலை வன்மையால் தடுத்து. (59-2)

466.
எடுத்து நாண்ஒலி எழுப்பினன்; எண் திசைக்
கரியும்
படித் தலங்களும்வெடி பட, பகிரண்டம் உடைய,
தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட, சினம்
கொண்டு
அடுத்து, அம்மாருதி அயர்ந்திட, அடு சரம்
துரந்தான்

இந்திரசித்துவின்செயல் (71-1)

12. பிணி வீட்டுபடலம்

467.
இனையனபற்பலர் இசைப்ப, வெந் திறல்
அனுமனை அமர்க்களம்நின்று, வஞ்சகர்
புனை திருநகரிடைக் கொண்டு போதலை
நினையினர்,நெடிதுற நெருக்கி நேர்ந்துளார்.

வஞ்சகர் அனுமனைப்பிணித்து நகர்க்குக் கொண்டு செல்லுதலை
நினைந்து நெருக்குகிறார்கள். (17-1)

468.
என்னக்கேட்ட அரக்கனுக்கு ஈறு இலாத்
தன் ஓர்ஆற்றலின் மாருதி சாற்றுவான்;
‘என் ஓர்நாயகன் ஏவலின், வாரிதி-
தன்னைத் தாண்டிவந்தேன், உனைக் காணவே.’

வாரிதி – கடல்.உனை – இங்கு இராவணனை. (108-1)

469.
தன் உறைக்குஉறுகண் வெய்யோர்தாம் இயற்றலும்
கேட்டு, ‘இன்னே,
அன்னவர்க்குஇறுதி ஆக, அணி நகர் அழிப்பல்’
என்னா,
செந் நிறச்சிகைய வெம் போர் மழு, பின்னர்ச்
சேறல் ஓக்கும்-
அல் நிறத்துஅண்ணல் தூதன் அனல் கெழு
கொற்ற நீள் வால்.

தன் இறை – இராமன்.உறுகண் – துன்பம். அனுமன் வால். மழு
பின்னால் செல்வது போன்றது. மழு – நெருப்புப்படை. அனுமன் வாலில்
நெருப்பு வைத்தபடியால் அது திருமாலின் மழு போன்றதாயிற்று. (135-1)

470.
உகக் கடை, உலகம் யாவும் உணங்குற, ஒரு தன்
நாட்டம்
சிகைக் கொழுங்கனலை வீசும் செயல் முனம்
பயில்வான் போல,
மிகைத்து எழுதீயர் ஆயோர் விரி நகர் வீய; போர்
வால்-
தகைத்தல் இல்நோன்மை சாலும் தனி வீரன்-
சேணில் உய்த்தான்.

உகக்கடை – ஊழிமுடிவு.உணங்குற – காய. தனிலீரன் – அனுமன்.
(136-1)

13. இலங்கைஎரியூட்டு படலம்

471.
தெய்வநாயகி கற்பு எனும் செந் தழல்
பெய்து மாருதிவாலிடைப் பேணியே,
பொய் கொள் வஞ்சகப் புல்லர் புரம் எலாம்
வெய்தின் உண்டதகைமை விளம்புவாம்.

சீதையின் கற்பு எனும்நெருப்பு மாருதி வாலிடைப் பாதுகாக்கப்பட்டு
வஞ்சகப் புல்லர் நகரை அழித்தது என்றார்.

(முதற்செய்யுள்)

472.
தேர்எரிந்தன; எரிந்தன திரள் பரி எவையும்;
தார் எரிந்தன;எரிந்தன தருக்கு உறு மதமா;
நீர் எரிந்தன;எரிந்தன நிதிக் குவை; இலங்கை
ஊர் எரிந்தன;எரிந்தன அரக்கர்தம் உடலம்.

தார் – மாலை. நீர்எரிதல் தீயின் மிகுதியால். (37-1)

473.
எரிந்தமாளிகை; எரிந்தன இலங்கு ஒளிப் பூண்கள்
எரிந்த பூந்துகில்; எரிந்தது முரசுஇனம் முதலாய்;
எரிந்த மாமணிப்பந்தர்கள்; எரிந்தது கடிகா;
எரிந்த சாமரை;எரிந்தது வெண்குடைத் தொகுதி.

கடி கா – காப்பமைந்த சோலை. (37-2)

474.
ஆடு அரங்குகள் எரிந்தன; அரக்கியர் சிறுவ-
ரோடு எரிந்தனர்; உலப்பில் பல் கொடிகளும் எரிந்த;
தேடு அரும் மணிச்சிவிகையோடு அருந் திறல்
அரக்கர்
வீடு எரிந்தன;எரிந்திடாது இருந்தது என், வினவில் ?

சிவிகை – பல்லக்கு.உலப்பு இல் – வற்றுதலற்ற. (37-3)

475.
இனையகாலையில் மயனும் முன் அமைத்தற்கு
இரட்டி
புனைய, மாருதிநோக்கின், இன்னன புகல்வான்;
‘வனையும் என்உருத் துவசம் நீ பெறுக’ என,
மகிழ்வோடு
அனையன்நீங்கிட, அனலியும் மறுபடி உண்டான்.

மயன் – தெய்வத்தச்சன். மயனுக்கு மிகுதி கூறியதாகிய செய்தி
புலப்படவில்லை. அனலி – தீ. (37-4)

476.
‘தா இல்மேலவர்க்கு அருந் துயர் விளைத்திடின்,
தமக்கே
மேவும், அத்துயர்’ எனும் பொருள் மெய்யுற,
மேல்நாள்
தேவர்தம்பதிக்கு இராவணன் இட்ட செந்
தழல்போல்,
ஓவிலாது எரித்துஉண்டமை உரைப்பதற்கு எளிதோ ?

அழகான கருத்து.‘மேலோர்க்குத் துன்பம் செய்தால் அத்துயர் தமக்கே
வரும்’ என்பதற் கிணங்க. அமராவதிக்கு இராவணன் இந்திரசித்து மூலமாக
இட்ட நெருப்பு இலங்கையை எரி்த்தது என்பதாம். (43-1)

477.
மற்று ஒருகோடியர் வந்தார்;
உற்று எதிர் ஓடிஉடன்றார்;
கற்று உறு மாருதிகாய்ந்தே,
சுற்றினன்வால்கொடு, தூங்க.

உடன்றார் -சீறினார். (58-1)

478.
உற்றவர் யாரும் உலந்தார்;
மற்றுஅதுபோதினில் வானோர்
வெற்றி கொள்மாருதிமீதே
பொன் தரு மா மலர் போர்த்தார்.

உலந்தார் -வற்றினார். பொன்தரு – கற்பகம். (60-1)

479.
வன் திறல்மாருதி கேண்மோ !
நின்றிடின், நீபழுது; இன்றே
சென்றிடுவாய் !’என, தேவர்
ஒன்றிய வானில்உரைத்தார்.

தேவர் அனுமனைச்செல்லப் பணித்தனர். (60-2)

480.
விண்ணவர்ஓதிய மெய்ம்மை
எண்ணி, ‘இராமனைஇன்றே
கண்ணுறலே கடன்’என்று, ஆங்கு
அண்ணலும் அவ்வயின் மீண்டான்,

கண்ணுறல் -சந்தித்தல். (60-3)

481.
வாலிதின்ஞான வலத்தால்,
மாலுறும் ஐம் பகைமாய்த்தே,
மேல் கதிமேவுறும் மேலோர்
போல், வயமாருதி போனான்.

வாலிதின் -தூய்மையான. ஐம்பகை – ஐம்பொறிகளாய பகை. மேல்கதி
செல்லும் மேலோர் போல் அனுமன் வானவழியில் இலங்கையினின்று
சென்றான். (63-1)

14. திருவடி தொழுதபடலம்

482.
போயினர்களிப்பினோடும், புங்கவன் சிலையின்
நின்றும்
ஏயின பகழி என்னஎழுந்து, விண் படர்ந்து, தாவி,
காய் கதிர்க்கடவுள், வானத்து உச்சியில் கலந்த
காலை,
ஆயின வீரரும்போய், மதுவனம் அதில் இறுத்தார்.
வானரர் இராமன்அம்பு போல் சென்றனர்; நன்பகலில் மதுவனம்
சேர்ந்தார். (11-1)

483.
“ஏத நாள்இறந்த சால” என்பது ஓர் வருத்தம்
நெஞ்சத்து
ஆதலான், உணர்வுதீர்ந்து வருந்தினம், அளியம்;
எம்மைச்
சாதல் தீர்த்துஅளித்த வீர ! தந்தருள் உணவும்’
என்ன,
‘போதும் நாம்,வாலி சேய்பால்’ என்று, உடன்
எழுந்து போனார்.

இப்பாடலை 6018ஆம்பாடலுடன் ஒப்பிடுக. வீர ! – அனுமனே. வாலி
சேய் – அங்கதன். (11-2)

484.

அங்கதன்தன்னை அண்மி, அனுமனும் இரு கை
கூப்பி
‘கொங்கு தங்குஅலங்கல் மார்ப ! நின்னுடைக்
குரக்குச் சேனை,
வெங் கதம்ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி;
இங்கு, இதற்குஅளித்தல் வேண்டும், இறால் உமிழ்
பிரசம்’ என்றான்.

கதம் – கோபம்.இங்கே வேகம் எழுச்சி எனலாம். வேடை களைப்பு.
(11-3)

485.
‘நன்று’ என,அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க
ஆர்த்து,
சென்று, உறுபிரசம் தூங்கும் செழு வனம்
அதனினூடே,
ஒன்றின் முன்ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென்
பிரசம் எல்லாம்
தின்றுதின்றுஉவகைகூரும்-தேன் நுகர் அளியின்
மொய்த்தே.

நரலை – கடல். மதுவனம்அழித்தல். (11-4)

486.
ஒருவர் வாய்க் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு
ஒழிவர்; உண்ண
ஒருவர் கைக்கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு
ஓடிப் போவர்;
ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர்; விழுவர்; ஓடி
ஒருவர்மேல்ஒருவர் தாவி ஒல்லென உவகை
கூர்வார்.

மதுவனத்தில்குரங்குகளின் கூத்தாட்டம். (11-5)

487.
இன்னனநிகழும்காலை, எரி விழித்து, எழுந்து சீறி,
அந் நெடு்ஞ்சோலை காக்கும் வானரர் அவரை
நோக்கி,
‘மன் நெடுங்கதிரோன் மைந்தன் ஆணையை
மறுத்து, நீயிர்,
என் நினைத்துஎன்ன செய்தீர் ? நும் உயிர்க்கு
இறுதி’என்ன.

மதுவனக் காவலர்அச்சுறுத்தல் (11-6)

488.
‘முனியுமால் எம்மை, எம் கோன்’ என்று, அவர்
மொழிந்து போந்து,
‘கனியும் மாமதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று,
நனி தரு கவியின்தானை, நண்ணலார் செய்கை
நாண;
இனி எம்மால்செயல் இன்று’ என்னா, ததிமுகற்கு
இயம்பினாரே.

ததிமுகன் – மதுவனக்காவல் தலைவன்; இவன் சுக்கிரீவன் ஏவலால்
மதுவனம் காக்கும் வானரன். (11-7)

489.
கேட்டவன்,‘யாவரே அம் மதுவனம் கேடு
சூழ்ந்தார் ?
காட்டிர்’ என்றுஎழுந்தான்; அன்னார்,‘வாலி சேய்
முதல கற்றோர்
ஈட்டம் வந்துஇறுத்தது ஆக, அங்கதன் ஏவல்
தன்னால்,
மாட்டின,கவியின் தானை, மது வளர் உல வை
ஈட்டம்.

மதுவளர் உலவை -தேன்கூடு. (11-8)

490.
‘உரம் கிளர் மதுகையான்தன் ஆணையால், உறுதி
கொண்டே,
குரங்கு இனம்தம்மை எல்லாம் விலக்கினம்;
கொடுமை கூறி;
கரங்களால் எற்றநொந்தேம்; காலலோய் !’
என்னலோடும்,
‘தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தநயன்
போலும்.’

தாதை – வாலி – தநயன்- அங்கதன். (11-9)

491.
என உரைத்து,அசனி என்ன எழுந்து, இரைத்து,
இரண்டுகோடி
கனை குரல்கவியின் சேனை ‘கல்’ எனக் கலந்து
புல்ல,
புனை மதுச் சோலைபுக்கான்; மது நுகர் புனிதச்
சேனை,
அனகனைவாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த.

அசனி – இடி. அனகன் -இராமன். (11-10)

492.
‘இந்திரன்வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின்
கானம்;
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை
தன்னைச்
சிந்தினை;கதிரோன் மைந்தன் திறலினை அறிதி
அன்றே ?
மந்தரம் அனையதோளாய் ! இற்றது உன் வாழ்க்கை
இன்றே.

ததிமுகன்அங்கதனை நோக்கிக் கூறியது. (11-11)

493.
‘மதுவனம்தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ’
என்னா,
கதுமென வாலிசேய்மேல் எறிந்தனன், கருங் கற்
பாறை;
அதுதனைப்புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி,
ததிமுகன்தன்னைப்பற்றிக் குத்தினன், தடக்
கைதன்னால்.

ததிமுகன் அங்கதன் போர். (11-12)

494.
குத்தினன்என்னலோடும், குலைந்திடும் மெய்யன்
ஆகி,
மற்று ஒருகுன்றம்தன்னை வாங்கினன்,
மதுவனத்தைச்
செற்றனன்மேலேஏவிச் சிரித்தனன், ததிமுகன்தான்;
‘இற்றனன், வாலிசேய்’ என்று இமையவர் இயம்பும்
காலை,

செற்றனன் -அங்கதன். (11-13)

495.
ஏற்று ஒருகையால் குன்றை இருந் துகள் ஆக்கி,
மைந்தன்
மாற்று ஒருகையால் மார்பில் அடித்தலும்,
மாண்டான் என்ன,
கூற்றின் வாய்உற்றான் என்ன, உம்பர் கால்
குலையப் பானு
மேல் திசைஉற்றான் என்ன, விளங்கினன், மேரு
ஒப்பான்.

பானு- சூரியன் (11-14)

496.
வாய் வழிக்குருதி சோர, மணிக் கையால் மலங்க
மோதி,
‘போய் மொழி, கதிரோன்மைந்தற்கு’ என்று, அவன்
தன்னைப்போக்கி,
தீ எழும் வெகுளிபொங்க, ‘மற்று அவன்
சேனைதன்னை,
காய் கனல்பொழியும் கையால் குத்துதிர், கட்டி’
என்றான்.

ததிமுகனை அடித்துசுக்கிரீவன் பால் சென்று சொல்க என்று அங்கதன்அனுப்புதல். (11-15)

497.
பிடித்தனர்;கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும்
முன்னும்
இடித்தனர், அசனிஅஞ்ச, எறுழ் வலிக் கரங்கள்
ஓச்சி;
துடித்தனர்,உடலம் சோர்ந்தார்; ‘சொல்லும் போய்
நீரும்’ என்னா,
விடுத்தனன்,வாலி மைந்தன்; விரைவினால் போன
வேலை,

ததிமுகன்சேனையினரை அங்கதன் சேனையைச் சேர்ந்தவர்
செய்தபடியைக் கூறியது. (11-16)

498.
அலை புனல் குடையுமாபோல், மதுக் குடைந்து ஆடி,
தம்தம்
தலைவர்கட்குஇனிய தேனும் கனிகளும் பிறவும்
தந்தே,
உலைவுறு வருத்தம்தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்;
இப்பால்
சிலை வளைத்துஉலவும் தேரோன் தெறும் வெயில்
தணிவு பார்த்தே.

மாலை நேரம் வருவதுபார்த்து மதுவுண்டு தேன், கனி, பிறவற்றைத்
தலைவர்களுக்குத் தந்து அங்கதன் சேனையினர் இருந்தபடி. 11-1 (482) முதல்
11-16 (498) வரை உள்ளபதினேழு பாடல்கள் வானரவீரர்கள் மதுவனம்
அழித்தமை கூறியது. (11-17)

499.
‘சேற்று இளமரை மலர்த் திருவைத் தேர்க !’ எனக்
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை,
நாற்றிசைமருங்கினும் ஏவி, நாயகன்-
தேற்றினன்இருந்தனன்-கதிரின் செம்மலே.

மரை – தாமரை;முதற்குறை, கதிரின் செம்மல் – சுக்ரீவன். (12-1)

500.
நோக்கின்தென் திசை அல்லது நோக்குறான்,
ஏக்குற்றுஏக்குற்று இரவி குலத்து உளான்,
‘வாக்கில் தூயஅனுமன் வரும்’ எனா,
போக்கிப்போக்கி, உயிர்க்கும் பொருமலான்.

இராமன் அனுமனை ஏவிஎதிர்பார்த்து இருந்தவாறு கூறியது. (14-1)

501.
என்றுஉரைத்து, இடர் உழந்து இருக்கும் ஏல்வையின்
வன் திறல்ததிமுகன் வானரேசன் முன்,
தன் தலைபொழிதரு குருதிதன்னொடும்,
குன்று எனப்பணிந்தனன், இரு கை கூப்பியே.

மதுவனக் காவலன்ததிமுகன் சுக்ரீவனைக் காணல். இது முதல் இருபது
பாடல்கள் ததிமுகன் வருகையால் வானரர் சீதையைக் கண்டு இனிது திரும்பிய
படியைக் குறிப்பால் அறிந்தது கூறப்பெறுகிறது. (19-1)

502.
எழுந்துநின்று, “ஐய ! கேள், இன்று நாளையோடு
அழிந்தது மதுவனம்அடைய’ என்றலும்,
வழிந்திடுகுருதியின் வதனம் நோக்கியே,
‘மொழிந்திடு,அங்கு யார் அது முடித்துளோர் ?’ என,

ததி முகன்கூற்று. (19-2)

503.
‘நீலனும், குமுதனும், நெடிய குன்றமே
போல் உயர்சாம்பனும், புணரி போர்த்தென
மேல் எழுசேனையும், விரைவின் வந்து உறா,
சால்புடைமதுவனம்தனை அழிப்பவே.

நீலன், குமுதன்,சாம்பன், வானர சேனைகள் மதுவனம் அழித்தார்
என்று ததிமுகன் கூறல். (19-3)

504.
தகைந்த அச்சேனையைத் தள்ளி, நின்னையும்,
இகழ்ந்துஉரைத்து, இயைந்தனன் வாலி சேய்;
மனக்கு
உகந்தன புகன்றஅவ் உரை பொறாமையே,
புகைந்து, ஒருபாறையின் புணர்ப்பு நீக்கியே,

அங்கதன் செயல்கூறியது (19-4)

505.
‘இமைத்தல்முன், “வாலி சேய், எழில் கொள்
யாக்கையைச்
சமைத்தி” என்றுஎறிதர, புறங்கையால் தகைந்து,
அமைத்தரு கனல்என அழன்று, எற் பற்றியே
குமைத்து, உயிர்பதைப்ப, “நீ கூறு போய்” என்றான்.

அங்கதன் என்னை அடித்து‘நீ போய் கூறு’ என அனுப்பினான் என்று
ததிமுகன் கூறல். (19-5)

506.
‘இன்று நான்இட்ட பாடு இயம்ப முற்றுமோ ?’
என்று உடல்நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில்,
அன்று அவன்உரைத்தல் கேட்டு, அருக்கன்
மைந்தனும்
ஒன்றியசிந்தையில் உணர்ந்திட்டான் அரோ.

ததிமுகன்கூற்றால் சுக்ரீவன் உணர்தல். (19-6)

507.
ஏம்பலோடுஎழுந்து நின்று, இரவி கான்முளை,
பாம்பு அணைஅமலனை வணங்கி, “பைந் தொடி
மேம்படுகற்பினள்” என்னும் மெய்ம்மையைத்
தாம்புகன்றிட்டது, இச் சலம்’ என்று ஓதினான்.

ததிமுகனுக்கும் வானரவீரர்க்கும் நிகழ்ந்த இச்சண்டை ‘பிராட்டி
மேம்படு கற்பினள்’ என்பதை நமக்குத் தெரிவிக்கிறது என்று சுக்ரீவன்
இராமனிடம் கூறல். (19-7)

508.
‘பண் தரு கிளவியாள்தன்னைப் பாங்குறக்
கண்டனர்; அன்னதுஓர் களிப்பினால், அவர்
வண்டு உறைமதுவனம் அழித்து மாந்தியது;
அண்டர் நாயக !இனி அவலம் தீர்க’ என்றான்.

சீதையைக் கண்டமகிழ்ச்சியால் வானரர் ‘மதுவனம் அழித்து மாந்தியது’
என்று சுக்ரீவன் உணர்த்துதல். (19-8)

509.
‘வந்தனர்தென் திசை வாவினார்’ என,
புந்தி நொந்து,‘என்னைகொல் புகலற் பாலர் ?’ என்று
எந்தையும்இருந்தனன்; இரவி கான்முளை,
நொந்த அத்ததிமுகன்தன்னை நோக்கியே.

சுக்ரீவன் ததிமுகனை வினாவுதல். (19-9)

510.
‘யார் அவண்இறுத்தவர், இயம்புவாய் ?’ என,
‘மாருதி, வாலிசேய், மயிந்தன், சாம்பவன்,
சோர்வு அறுபதினெழுவோர்கள் துன்னினார்,
ஆர்கலி நாணவந்து ஆர்க்கும் சேனையார்.’

ததிமுகன்பதில் (19-10)

511.
என்று,அவன் உரைத்த போது, இரவி காதலன்,
வன் திறல்ததிமுகன் வதனம் நோக்கியே,
‘ஒன்று உனக்குஉணர்த்துவது உளது; வாலி சேய்,
புன் தொழில்செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால்.

அங்கதன்நல்லவனே என்று ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல்.
(19-11)

512.
‘கொற்றவன்பணி தலைக்கொண்டு, தெண் திரை
சுற்றிய திசைஎலாம் துருவி, தோகையைப்
பற்றியபகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து
உற்றனர்; அவரையாம் உரைப்பது என்னையோ ?

அரசுப்பணி மேற்கொண்டு திரும்பியவர்களைக் கடிதல் ஒல்லாது என
சுக்ரீவன் உணர்த்தல். (19-12)

513.
‘அன்றியும், வாலி சேய் அரசு அது; ஆதலின்,
பின்றுதல்தீதுஅரோ; பிணங்கும் சிந்தையாய் !
ஒன்றும் நீஉணரலை; உறுதி வேண்டுமேல்,
சென்று,அவன்தனைச் சரண் சேர்தி, மீண்டு’
என்றான்.

அங்கதன் இளவரசன்ஆகவே அவனையே சரணமாக அடை என்று
ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல். (19-13)

514.
என்ற அத்ததிமுகன் தன்னை, ஏனைய
வன் திறல் அரசுஇளங் குரிசில் மைந்தனைப்
பின்றுதல் அவனைஎன் பேசற் பாற்று நீ;
இன்று போய்,அவன் அடி ஏத்துவாய்’ என்றான்.

இதுவும்அது. (19-14)

515.
வணங்கியசென்னியன்; மறைத்த வாயினன்;
உணங்கியசிந்தையன்; ஒடுங்கும் மேனியன்;
கணங்களோடு ஏகி,அக் கானம் நண்ணினான்-
மணம் கிளர்தாரினான் மறித்தும் வந்துஅரோ.

மீண்டும் ததிமுகன்மதுவனம் வருதல். (19-15)

516.
கண்டனன்வாலி சேய்; கறுவு கைம்மிக,
‘விண்டவன், நம்எதிர் மீண்டுளான்எனின்,
உண்டிடுகுதும்உயிர்’ என்ன, உன்னினான்;
‘தொண்டு’ என,ததிமுகன், தொழுது தோன்றினான்.

அங்கதன் கோபிக்கவும்ததிமுகன் அவன் அடி பணிதலும். (19-16)

517.
‘போழ்ந்தனயான் செய்த குறை பொறுக்க !’ எனா,
வீழ்ந்தனன்அடிமிசை; வீழ, வாலி சேய்,
தாழ்ந்து, கைப்பற்றி, மெய் தழீஇக்கொண்டு,
‘உம்மை யான்
சூழ்ந்ததும்பொறுக்க !’ எனா, முகமன் சொல்லினான்.

ததிமுகனும் அங்கதனும்ஒருவர்க்கொருவர் மன்னி்ப்புக் கேட்டு
சமாதானம் அடைதல். (19-17)
‘யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
ஏமுற, துயர்துடைத்து, அளித்த ஏற்றம்போல்,
தாமரைக்கண்ணவன் துயரம் தள்ள, நீர்
போம்’ என,தொழுது, முன் அனுமன் போயினான்.

அனுமனை முன்னர்இராமனிடம் அனுப்பல். (19-18)

519.
‘வன் திறல்குரிசிலும் முனிவு மாறினான்;
வென்று கொள்கதிரும் தன் வெம்மை ஆறினான்’
என்றுகொண்டு,யாவரும், ‘எழுந்து போதலே
நன்று’ என,ஏகினார், நவைக்கண் நீங்கினார்.

அனைவரும் மாலையில்மதுவனத்திருந்து புறப்படுதல். (19-19)

520.
இப்புறத்துஇராமனும், இரவி சேயினை
ஒப்புற நோக்கி,‘வந்துற்ற தானையர்;
தப்பு அறக்கண்டனம் என்பரோ ? தகாது
அப்புறத்துஎன்பரோ ? அறைதியால் !’ என்றான்.

இராமன் சுக்ரீவனைப்பார்த்து வினாவுதல். இதுவரை மதுவன
நிகழ்ச்சிக்குப் பின் நடந்தவை கூறப்பெற்றன. (19-20)

521.
வனை கருங்குழலியைப் பிரிந்த மாத் துயர்
அனகனுக்கு அவள்எதிர் அணைந்ததாம் எனும்
மன நிலை எழுந்தபேர் உவகை மாட்சி கண்டு,
அனுமனும்அண்ணலுக்கு அறியக் கூறுவான்;

இராமன் மகிழ்ச்சியும்அனுமன் கூற்றும். (23-1)

522.
மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால்
வைத்த
சேண் பிறந்துஅமைந்த காதல், கண்களின் தெவிட்டி,
தீராக்
காண்பிறந்தமையால், நீயே, கண் அகன் ஞாலம்
தன்னுள்,
ஆண் பிறந்துஅமைந்த செல்வம் உண்டனையாதி
அன்றோ ?

‘கற்பிற் சிறந்த ஒருபெண்ணின் உயரிய காதலை அப்பெண் தன்
கண்களில் திரட்டி வைத்துக் கொண்டு உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
செல்வம் பெற்ற நீயே உலகில் ஆடவராய்ப் பிறந்தவர் பெற வேண்டிய
செல்வத்தை முழுதும் பெற்றவனாக ஆனாய்’ என்று அனுமன் இராமனைப்
பாராட்டிய இப்பாடல் உயர்ந்த கருத்துடையதாகும். (35-1)

523.
‘அயிர்ப்பு இலர், காண்பார்; முன்னும் அறிந்திலர்
எனினும், ஐய !-
எயில் புனைஇலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு
ஏற்ற
மயில் புரைஇயலினாரும், மைந்தரும், நாளும் அங்கே
உயிர்ப்பொடும்,உயிரினோடும், ஊசல் நின்று
ஆடுவாரும்.’

இலங்கையில் ஆடவரும்மகளிரும் நுகர்ந்து நிற்கும் தன்மை கூறியது.
(35-9)

524.
ஆயிடை,கவிகளோடும், அங்கதன் முதலினாயோர்
மேயினர்,வணங்கிப் புக்கார், வீரனை, கவியின்
வேந்தை;
போயின கருமம்முற்றிப் புகுந்தது ஓர் பொம்மல்
தன்னால்,
சேயிரு மதியம்என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார்.

அங்கதன் முதலியோர் வருகை. (47-1)

525.
நீலனை நெடிதுநோக்கி, நேமியான் பணிப்பான்;
‘நம்தம்-
பால் வரும்சேனைதன்னைப் பகைஞர் வந்து அடரா
வண்ணம்,
சால்புறமுன்னர்ச் சென்று, சரி நெறி துருவிப் போதி,
மால் தரு களிறுபோலும் படைஞர் பின் மருங்கு
சூழ.’

இராமன் நீலனைநோக்கிச் சேனைகளை அழைத்துக் கொண்டு நேர்
வழியை ஆராய்ந்து செல்க எனப் பணித்தல். (49-1)

என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை
கூப்பி,
‘புன் தொழில்குரங்கு எனாது என் தோளிடைப்
புகுது’ என்னா,
தன் தலை படியில்தாழ்ந்தான்; அண்ணலும், சரணம்
வைத்தான்;
வன் திறல் வாலிசேயும் இளவலை வணங்கிச்
சொன்னான்;

இராமன் அனுமன் மேல்வீற்றிருத்தல். (49-2)

527.
‘நீ இனிஎன்தன் தோள்மேல் ஏறுதி, நிமல !’ என்ன,
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை
நோக்கி,
நாயகற்கு இளையகோவும். ‘நன்று’ என அவன்தன்
தோள்மேல்,
பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது
அன்றே.

இலக்குவன்அங்கதன் தோள் மேல் ஏறுதல். (49-3)

528.
கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப,
காலின்
அருள் தரு குமரன்தோள்மேல், அங்கதன் அலங்கல்
தோள்மேல்,
பொருள் தரும் வீரர் போத, பொங்கு ஒளி விசும்பில்
தங்கும்
தெருள் தகு புலவர்வாழ்த்திச் சிந்தினர், தெய்வப்
பொற் பூ.

திருமாலும்,சிவபெருமானும் போல இராமலக்குவர்; கருடனும், விடையும்
போல அனும அங்கதர் தோள் மேல் ஏறிப் புறப்படுதல். (49-4)

529.
‘வையகம் அதனில் மாக்கள் மயங்குவர்,வய வெஞ்
சேனை
எய்திடின்’என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ,
பெய் கனி,கிழங்கு, தேன் என்று இனையன
பெறுதற்கு ஒத்த
செய்ய மால்வரையே ஆறாச் சென்றது, தகைப்பு
இல் சேனை.

நாடுவழியாகச்சென்றால் மக்கள் மயங்கி வருந்துவர் என்று கருதிய
இராமன் ஏவ, வானர சேனை கனி, கிழங்கு, தேன் பெறுவதற்கு ஒத்த மலை
வழியாகத் தெற்கு நோக்கிச் சேறல். (49-5)

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சங்ஷேப ராமாயணம் —

December 25, 2020

ஸ்ரீ கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

ஸ்ரீ வால்மீகேர் முனிஸிம்ஹஸ்ய கவிதா வனசாரிண:
ச்ருண்வன் ராமகதா நாதம் கோ ந யாதி பராங்கதிம்

ய: பிபன் ஸததம் ராம சரிதாம்ருத ஸாகரம்
அத்ருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதஸ மகல்மஷம்

கோஷ்பதீக்ருத வாராசிம் மசகீக்ருத ராக்ஷஸம்
ஸ்ரீ ராமாயண மஹாமாலா ரத்னம் வந்தே(அ) நிலாத்மஜம்

அஞ்ஜனா நந்தனம் வீரம் ஜானகீசோக நாசனம்
கபீச மக்ஷஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்8

ஆஞ்ஜனேய மதிபாடலாலனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

க்யாத: ஸ்ரீராமதூத: பவனதனுபவ: பிங்கலாக்ஷ: சிகாவான்
ஸீதா சோகாபஹாரீ தசமுக விஜயீ லக்ஷ்மண: ப்ராணதாதா
ஆநேதா பேஷஜாத்ரேர் லவணஜலநிதேர் லங்கனே தீக்ஷிதோ ய:
வீர: ஸ்ரீமான் ஹனூமான் மம மனஸி வஸன் கார்யஸித்திம் தநோது

தூவரிக்ருத ஸீதார்த்தி: ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:

ஸ்ரீ வால்மீகி கிரிஸம்பூதா ராமஸாகர காமினீ
புனாது புவனம் புண்யா ராமாயண மஹாநதீ

ஸ்ரீ வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ரசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா

வைதேஹீ ஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்த்யே புஷ்பகமாஸனே மணிமயே வீராஸனே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜன ஸுதே தத்வம் முனிப்ப்ய: பரம்
வ்யாக்க்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ச்யாமளம்

நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை
நமோ(அ)ஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ப்யோ
நமோ(அ)ஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ப்ய:

————

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

————

வேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |
வேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||

வேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதாரம் பண்ண உடனே,
வேதம், ஸ்ரீ வால்மீகி முனிவர் வழியாக ஸ்ரீ ராமாயணமாக வெளிவந்துவிட்டது

———

ஸ்ரீ ராமம் ரகு குல திலகம்
சிவ தனு சாக்ரிஹத ஸீதா ஹஸ்த கரம்
அங்குல்யா பரண ஸோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய ஆஸ்ரயம்
வைதேஹி மநோ ஹரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கள கார்ய அநுகூலம்
ஸததம் ஸ்ரீ ராமசந்த்ர பாலயமாம்

—————-

தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வி வாக் விதாம் வரம்
நாரதம் பரிப்ரக்ஷூச்சா வால்மீகி முனி புங்கவம் –1-

தபோ நிரதம்’, ‘ஸ்வாத்யாய நிரதம்’, ‘வாக் விதாம்வரம்’ ‘முனிபுங்கவம்’, என்று
ஸ்ரீ நாரத மகரிஷிக்கு நாலு அடைமொழி கொடுத்து, இந்த ஸ்ரீ நாரத மகரிஷியிடம்,
ஸ்ரீ வால்மீகி பகவான் ஒரு விஷயத்தை கேட்கிறார் என்று ஆரம்பிக்கிறது.

தபோ நிரதம்’ – தபஸில் ஈடுபட்டவராய் இருக்க வேண்டும்.
‘ஸ்வாத்யாய நிரதம்’ – தனது படிப்பில் திரும்பத் திரும்ப மனசை செலுத்துவதில் விருப்பம் உள்ளவரை இருக்க வேண்டும்.
‘வாக் விதாம் வரம்’ – வாக்கிற்கு என்ன பிரயோஜனம்? பகவானை பற்றி பேசிக் கொண்டிருப்பது. அதைச் செய்து கொண்டிருப்பவர்.
‘முனி புங்கவம்’ – மௌனமாய் இருக்ககூடிய முனி புங்கவருக்குள் ஸ்ரேஷ்ட்டர்.

த‌ப‌:ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம் த‌ப‌ஸ்வீ வாக்விதாம் வ‌ர‌ம்|
நார‌த‌ம் ப‌ரிபப்ர‌ச்ச‌ வால்மீகி முநிபுங்க‌வ‌ம்||” (வா.ரா. பா.கா. ச‌ரு 1 சுலோ 1)

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

இது இராமாய‌ண‌த்தின் முத‌ல் சுலோக‌ம். இத‌னால் குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனிபுங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாதுஸேவீ ஸ‌முசித‌ச‌ரித‌ஸ் தத்வ‌போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ்த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணிப‌த‌ந‌ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌கால‌ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோதாந்தோ ந‌ஸூயுஸ்ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வித‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாதுஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌திய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த்த‌க்க‌து.

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளிவ‌ந்ததினால்
வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

——–

கோனு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் வீர்யவான் |
தர்மக்ஞ்ச: க்ரிதஞ்ச: சத்யவாக்ய: த்ரிடவிரத: ||–2-

அஸ்மின் லோகே – இந்த உலகத்தில்
சாம்ப்ரதம் லோகே – தற்காலத்தில்
தர்மக்ஞஸ்ச’ – தர்மங்களை அறிந்தவர்.
‘க்ருதக்ஞஸ்ச’ – செய்த நன்றியைப் பாராட்டுபவர்.
ஸத்யவாக்ய:’ – பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோ, வாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.

———

சாரித்ரேண ச கோ யுக்த: சர்வ புதேஷு கோ ஹித: |
வித்வான் க: க: சமர்தஸ்ச: ஏக பிரிய தர்சன: ||–3-

——–

ஆத்மவான் ஜிதக்ரோத: த்துதிமானு அன் அசூயக: |
கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே ||–4-

கஸ்ய பிப்யதி தேவா: ச ரோஷஸ்ய சங்க்யுகே–யுத்தத்தில் எவர் கோபம் கொண்டால் தேவர்கள் கூட
பயப்படுவாளோ அப்பேற்பட்ட பராக்கிரமம் – சமுத்திர ராஜனே பயந்தான் அன்றோ !

———–

ச்ருத்வா சைதத் த்ரிலோகக்ஞோ வால்மீகேர் நாரதோ வச: |
ச்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் ||–6-

‘ச்ருத்வா ஏதத் வால்மீகேர் வச:’ – இந்த வால்மீகியுடைய வார்தையைக் கேட்டு,
‘த்ரிலோகக்ஞ: நாரத:’ – மூவுலகையும் அறிந்த, எல்லாம் அறிந்த நாரத பகவான் சொல்ல
ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத்’ – அவரும் ரொம்ப சந்தோஷமா சொல்ல ஆரம்பிக்கிறார்.

———-

பஹவோ துர்லபாஸ்சைவ யே த்வயா கீர்திதா குணா: |
முநே லக்ஷ்யாம்யஹம் புத்தவா தைர்யுக்த: ச்ரூயதாம் நர: ||–7-

————

இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவோ ராமோ நாம ஜநை: ச்ருத: |
நியதாத்மா மஹாவீர்யோ த்யுதிமான் த்ருதிமாந்வசீ ||–8-

இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவ:’ – இக்ஷ்வாகு வம்சத்தில ஒளியோடு விளங்குபவன்
த்யுதிமான்’ – ஒளி மிகுந்தவன்–தேஜஸோட இருப்பான்.
‘த்ருதிமாந்’ – தைர்யசாலி.
‘வசீ’ – இந்திரியங்களைத் தன் வசத்தில் வைத்திருப்பவன்.

—————

புத்திமாந் நீதிமாந் வாக்மீ ஸ்ரீமாஞ்சத்ருநிபர்ஹண: |
விபுலாம்ஸோ மஹாபாஹு: கம்புக்ரீவோ மஹாஹநு: ||–9-

வாக்மீ’ – நல்ல வாக்கு. பேச்சு ‘மதுராபாஷி
விபுலாம்ஸ:’ – பரந்த தோள்கள்.
கம்புக்ரீவ:’ – கழுத்து சங்கு போல இருக்கும்.
‘மஹாஹநு:’ – ‘ஹநுமான்’னு கூட சொல்லுவோம் இல்லையா ‘ஹநு’ன்னா தாடை. பெரிய தாடை.

——–

மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூடஜத்ருரரிந்தம: |
ஆஜாநுபாஹு: ஸு சிரா: ஸுலலாட: ஸுவிக்ரம: ||–10-

‘மஹோரஸ்க:’ – ‘விபுலாம்ஸ:’ன்னா பரந்த தோள்கள். ‘மஹோரஸ்க:’ பெரிய மார்பு.
‘மஹேஷ்வாஸ:’ – பெரிய வில்லை வெச்சிண்டிருக்கறவன்
கூடஜத்ரு:’ – நல்ல சதைப்பற்றுள்ள collar bones தோள்களெல்லாம் இருக்கிறவர்
அரிந்தம:’ – எதிரிகளை தபிக்கப் பண்ணுபவர்.
ஆஜாநுபாஹு:’ – ‘ஜாநு’ன்னா முட்டி. முட்டி வரைக்கும் நீண்ட கைகள்.
‘ஸு சிரா:’ – அழகான தலை.
‘ஸுலலாட:’ – பெரிய பரந்த நெற்றி.
‘ஸுவிக்ரம:’ – மிகுந்த பராக்ரமம் கொண்டவர்.

———

ஸமஸ் ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்3த4வர்ண: பிரதாபவாந் |
பீந வக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 ||

ஸம:’ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப உயரமும் கிடையாது, சமமான உயரம்!
‘ஸமவிப4க்தாங்க3:’ – ! சமமா ‘விப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள்.
‘ஸ்நிக்3த4வர்ண:’ – ரொம்ப குளுமையான ஒரு வர்ணம். கருப்பு அப்படீன்னாக் கூட, ஒரு attractiveவான ஒரு கருப்பு!
‘பிரதாபவாந்’ – ரொம்ப powerful, ரொம்ப சக்திமான்!
‘பீநவக்ஷா:’ – அழகான மார்பு. நல்ல பரந்து விரிந்த, நன்னா அமைந்த ஒரு மார்பு ‘வக்ஷஸ்’.
‘விஶாலாக்ஷ:’ – விசாலமான கண்கள், தாமரை போன்ற கண்கள். பெரிய கண்.
‘லக்ஷ்மீவாந்’ – அவருடைய உறுப்புகள் எல்லாமே மங்களகரமா இருந்தது! .
‘ஶுப4லக்ஷண:’ – லக்ஷ்மீகரமா இருந்ததோட, இந்த ஸாமுத்ரிகா லக்ஷண -சக்கரவர்த்திக்குரிய எல்லா லக்ஷணங்களும் இருந்தது!

———–

த4ர்மஜ்ஞஸ் ஸத்ய ஸந்த4ஶ்ச ப்ரஜாநாம் ச ஹிதே ரத: |
யஶஸ்வீ ஜ்ஞான ஸம்பந்ந: ஶுசிர் வஶ்யஸ் ஸமாதி4மாந் || 12 ||

‘த4ர்மஜ்ஞ:’ – எல்லா தர்மங்களும் அறிந்தவர்!
‘ஸத்ய ஸந்த4ஶ்ச’ – சத்தியத்தை காப்பாற்றுபவர்!
‘ப்ரஜாநாம் ச ஹிதே ரத:’ – ‘ரஞ்சயதே இதி ராஜ’ –
யஶஸ்வீ ‘ – ரொம்ப புகழ் படைத்தவர்
ஜ்ஞான ஸம்பந்ந:’ – ஞானம் படைத்தவன்.
‘ஶுசி:’ – தூய்மையானவன்.
‘வஶ்ய:’-குணத்துனால வசியம் பண்ணி-அவன் எல்லாருக்கும் வசப்பட்டு-
‘ஸமாதி4மாந்’-தீர்க்க யோஜனை பண்றது

கௌசல்யா தேவியும் காட்டுக்கு கிளம்பும்போது,
யம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா ச நியமேன ச |
ஸவை ராகவ ஸார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

————–

ப்ரஜாபதி ஸமஶ் ஸ்ரீமாந் தா4தா ரிபுநிஷூத3ந: |
ரக்ஷிதா ஜீவலோகஸ்ய த4ர்மஸ்ய பரிரக்ஷிதா ৷৷ 13 ৷৷

‘ப்ரஜாபதி ஸம: ஸ்ரீமாந்’ – மங்களங்களை கொண்டவர்களுக்குள் பிரஜாபதியைப் போல இருப்பவர்!
‘தா4தா’ – எல்லா உலகத்தையும் எல்லாருக்கும் கொடுப்பவர், எல்லாரையும் காப்பாற்றுபவர்.
‘ரிபுநிஷூத3ந:’ – எதிரிகளை கண்டிப்பவர், தண்டிப்பவர்.
‘ரக்ஷிதா ஜீவலோகஸ்ய’ – உயிர்குலங்களை எல்லாம் காப்பாற்றுபவர்.
‘த4ர்மஸ்ய பரிரக்ஷிதா

———-

ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா |
வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞோ த4நுர்வேதே3 ச நிஷ்டித: ৷৷ 14 ||

‘ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய’ – தன்னுடைய தர்மங்களை எல்லாம் காப்பாத்தறார்.
‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’ – தன்னுடைய ஜனங்களையும் காப்பாற்றுபவர்.
“அபராத3 சஹஸ்ர பா4ஜனம் பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே
அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு”
‘அபராத3 சஹஸ்ர பா4ஜனம்’ – நூத்துக் கணக்கான, ஆயிரக் கணக்கான தப்புகள் பண்ணி,
‘பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே’ – இந்த பயங்கரமான பவக் கடல்ல விழுந்திருக்கேன்!
‘அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை!
‘சரணாக3தம்’ – உன்னை வந்து சரணாகதி பண்றேன்!
‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக்கோன்னு சொல்றவாளை,
‘ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர்! – ‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’
‘வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தங்கள் -அதன் உட்பொருளையும் உணர்ந்தவர்!
‘த4நுர்வேதே3 ச நிஷ்டித:’ – ‘தான் க்ஷத்ரியன்’ங்கிறதுனால அந்த தனுர் வேதத்துல ரொம்ப உறுதியோட இருக்கார்.

———–

ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ: ஸ்ம்ருதிமாந் பிரதிபா4நவாந் |
ஸர்வலோகப்ரியஸ்ஸாது4: அதீ3நாத்மா விசக்ஷண: ৷৷ 15 ৷৷

‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – சாஸ்திரங்களுடைய உண்மை பொருளை, தர்ம சூக்ஷ்மங்களை அறிந்தவர்!
‘ஸ்ம்ருதிமாந்’ – நல்ல ஞாபக சக்தி!
‘பிரதிபா4நவாந்’-சரியான நேரத்துல சரியான விஷயம் ஞாபகம்
‘ஸர்வலோகப்ரிய:’ – எல்லா உலகத்துக்கும் பிரியமானவர்!
ஸாது4-ஸாது குணங்கள் நிறைந்தவர்!

———–

ஸர்வதா3பி4க3தஸ்ஸத்3பி4ஸ்ஸமுத்3ர இவ ஸிந்து4பி4: |
ஆர்யஸ் ஸர்வஸமஶ்சைவ ஸதை3கப்ரியத3ர்ஶந: ৷৷ 16 ৷৷

‘ஸர்வதா3பி4 க3த: ஸத்3பி4: ஸமுத்3ர இவ ஸிந்து4பி4:’ – சமுத்திரத்தை நோக்கி எப்படி நதிகள் போகுமோ
அந்த மாதிரி சாதுக்கள் எப்பவும் ராமர் கிட்ட வருவர்
ஆர்ய:-பிறப்புலேயும் அவரோட நடத்தைலேயும் எல்லாத்துலயுமே ராமர் noble
ஸர்வஸமஶ்சைவ’ – எல்லார் கிட்டயும் சமமா இருப்பார்
ஸதை3கப்ரியத3ர்ஶந:’ – எப்பவும் பார்க்கறத்துக்கு ப்ரியமா இருப்பார்.

வாலி – ‘ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ ‘ராம கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோகர:’.

———

ஸ ச ஸர்வகு3ணோபேத: கௌஸல்யாநந்த3வர்த4ந: !
ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்யே தை4ர்யேண ஹிமவானிவ ৷৷ 17 ৷৷

‘ஸ ச ஸர்வகு3ணோபேத:’ – எல்லா குணங்களையும் பொருந்திய அந்த ராமன்,
‘கௌஸல்யா நந்த3வர்த4ந:’ – கௌசல்யையுடைய ஆனந்தத்தை மேலும் மேலும் வளர்ப்பவன்.
‘ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்ய’ – கம்பீரத்துல சமுத்திரம் போன்றவன்-சுகதுக்கத்துனால மாற்றம் அடையாம இருக்கறதுக்கு கம்பீரம்னு பேர்.
‘தை4ர்யேண ஹிமவானிவ’ – ஹிமவானைப் போல தைர்யம்!

—————-

விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே ஸோமவத்ப்ரிய த3ர்ஶந: |
காலாக்3நிஸத்3ருஶ: க்ரோதே4 க்ஷமயா ப்ருதி2வீஸம: ৷৷ 18 ৷৷

‘விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’ – வீரத்துல விஷ்ணுவைப் போன்றவர்.
‘ஸோமவத்ப்ரிய த3ர்ஶந:’ – பாக்கறதுக்கு சந்திரனைப் போல குளுமையானவன்!
‘காலாக்3நி ஸத்3ருஶ: க்ரோதே4‘-ஆனா கோபம் வந்தா காலாக்னிப் போல கோபம்!
‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’ – பொறுமையில பூமியைப் போன்றவன்-

————

த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ஸத்யே த4ர்ம இவாபர: |
தமேவம் குணஸம்பந்நம் ராமம் ஸத்யபராக்ரமம் ৷৷ 19 ৷৷

‘த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ‘ – த்யாகத்துல குபேரனைப் போல.
‘ஸத்யே த4ர்ம இவாபர:’ – ஸத்யத்ல அவன் தர்ம ராஜாவைப் போல இருக்கான்.
‘தம் ஏவம் குண ஸம்பந்ந:’ – இப்பேற்பட்ட எல்லா குணங்களும் நிரம்பினவனான தர்ம ஜ்யேஷ்டனான ராமனை,
‘ஸத்ய பராக்ரமம்’ –வீண் போகாத பராக்கிரமம் கொண்டவன்.

———–

ஜ்யேஷ்ட2ம் ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம் ப்ரியம் த3ஶரத2ஸ்ஸுதம் |
ப்ரக்ருதீநாம் ஹிதைர்யுக்தம் ப்ரக்ருதி ப்ரிய காம்யயா ৷৷ 20 ৷৷

‘ஜ்யேஷ்ட2ம்’ – மூத்த பிள்ளை
‘ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம்’ – எல்லா ஶ்ரேஷ்ட குணங்களும் நிரம்பின ,
‘ப்ரியம்’ – தனக்கு ரொம்ப ப்ரியமான,
‘ஸுதம்’ – பிள்ளையை,
‘த3ஶரத2:’ – தசரத மஹாராஜா ,
‘ப்ரக்ருதீநாம் ஹிதைர் யுக்தம்’ – ஜனங்களுடைய ஹிதத்தில் எப்பவும் நாட்டமாக இருப்பவனுமான அந்த ராமனை ,
‘ப்ரக்ருதி ப்ரிய காம்யயா’ – அந்த ஜனங்களும் இவன் ராஜா ஆகணும்னு ரொம்ப காத்துண்டு இருக்கா! அப்பேற்பட்ட ராமனை,

——————–

ஸ்ரீ ஸங்க்ஷேப ஸுந்தரகாண்டம்

ததோ ராவணநீதாயா: ஸீதாயா: சத்ரு கர்சன:
இயேஷ பதமன் வேஷ்டும் சாரணாசரிதே பதி –1.1 / 19

யதா ராகவ நிர்முக்த: சர: ச்வஸனவிக்ரம
கச்சேத்தத்வத் கமிஷ்யாமி லங்காம் ராவணபாலிதாம் –1.39 / 20

ப்ரவிச்ய நகரீம் லங்காம் கபிராஜ ஹிதங்கர:
சக்ரே(அ)த பாதம் ஸவ்யஞ்ச சத்ரூணாம் ஸ து மூர்த்தனி – 4.3 / 21

ப்ரவிசந் நிஷ்பதம்ச்சாபி ப்ரபதந்நுத் பதந்நபி
ஸர்வமப்யவகாசம் ஸ விச்சார மஹாகபி: — 12.1 / 22

த்ருஷ்டமந்த: புரம் ஸர்வம் த்ருஷ்டா ராவண யோஷித:
ந ஸீதா த்ருச்யதே ஸாத்த்வீ வ்ருதா ஜாதோ மம ச்ரம: –12.6 / 23

அசோகவநிகா சேயம் த்ருச்யதே யா மஹாத்ருமா
இமாமகமிஷ்யாமி ந ஹீயம் விசிதா மயா — 13.55 / 24

அசோகவநிகாயாம் து தஸ்யாம் வானரபுங்கவ:
ததோ மலினஸம்வீதாம் ராக்ஷஸீபி: ஸமாவ்ருதாம் — 15.18 / 25

உபவாஸக்ருசாம் தீனாம் நி:ச்வஸந்தீம் புன: புன:
ததர்ச சுக்லபக்ஷாதௌ சந்த்ரரேகாமிவாமலாம் — 15.19 / 26

தாம் ஸமீக்ஷ்ய விசாலாக்ஷீ மதிகம் க்ருசாம்
தர்க்கயாமாஸ ஸீதேதி காரணை ருபபாதிபி: –15.26 / 27

அஸ்யா தேவ்யா மனஸ்தஸ்மிம் ஸ்தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்ட்டிதம்
தேநேயம் ஸ ச தர்மாத்மா முஹூர்த்தமபி ஜீவதி– 15.51 / 28

ஏவம் ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட: பவனஸம்பவ:
ஜகாம மனஸா ராமம் ப்ரசசம்ஸ ச தம் ப்ரபும் — 15.54 / 29

ராஜா தசரதோ நாம ரத்குஞ்ஜர வாஜிமான்
தஸ்ய புத்ர: ப்ரியோ ஜ்யேஷ்ட ஸ்தாராதிப நிபானன — 31.2-6 / 30

ராமோ நாம விசேஷஜ்ஞ: ச்ரேஷ்ட: ஸர்வ தனுஷ்மதாம்
தஸ்ய ஸத்யாபிஸந்தஸ்ய வ்ருத்தஸ்ய வசனாத் பிது:
ஸபார்ய: ஸஹ ச ப்ராத்ரா வீர: ப்ரவ்ராஜிதோ வனம் –31.6-8 / 31

ததஸ்த்வமர்ஷாபஹ்ருதா ஜானகீ ராவணேன து
ஸ மார்க்கமாணஸ் தாம் தேவீம் ராம: ஸீதா மநிந்திதாம்
ஆஸஸாத வனே மித்ரம் ஸுக்ரீவம் நாம வாரணம் — 31.10-11 / 32

ஸுக்ரீவேணாபி ஸந்திஷ்டா ஹரய: காமரூபிண:
திக்ஷு ஸர்வாஸு தாம் தேவீம் விசின்வந்தி ஸஹஸ்ரச:– 31.13 / 33

அஸ்யா ஹேதோர் விசாலாக்ஷ்யா: ஸாகரம் வேகவான் ப்லுத:
யதா ரூபாம் யதா வர்ணாம் யதா லக்ஷ்மீஞ்ச நிச்சிதாம்
அச்ரௌஷம் ராகவஸ்யாஹம் ஸேயமாஸாதிதா மயா — 31.14-15 / 34

ஜானகீ சாபி தச்ச்ருத்வா விஸ்மயம் பரமம் கதா –31.16
ஸா ததர்ச கபிம் தத்ர ப்ரச்ரயம் ப்ரியவாதினம் –32.2 / 35

தாமப்ரவீன் மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ: — 33.2
அஹம் ராமஸ்ய ஸந்தேசாத் தேவி தூதஸ்தவாகத: — 34.2 / 36

வைதேஹி குசலீ ராமஸ்த்வாம் ச கௌசலமப்ரவீத்
லக்ஷ்மணச்ச மஹாதேஜா பர்த்துஸ்தே(அ)னுசர: ப்ரிய: — 34.4 / 37

ஸா தபோ குசலம் தேவீ நிசம்ய நரஸிஹ்மயோ
ப்ரீதி ஸம்ருஷ்ட ஸர்வாங்கீ ஹனுமந்த மதாப்ரவீத் — 34.5 / 38

கல்யாணீ பத காதேயம் லௌகிகீ ப்ரதிபாதி மா
ஏதி ஜீவந்த மானந்தோ நரம் வைஷ சதாதபி — 34.6 / 39

பூய ஏவ மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜ:
அப்ரவீத் ப்ரச்ரிதம் வாக்யம் ஸீதாப்ரத்யய காரணாத்
ராம நாமாங்கிதஞ்சேதம் பச்ய தேவ்யங்குலீயகம்
ப்ரத்ய யார்த்தம் தவாநீதம் தேந தத்தம் மஹாத்மனா — 36.1-3 / 40

க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து: கரவிபூஷணம்
பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜானகீ முதிதா (அ)பவத் –36.4 / 41

ததோ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம்
ப்ரதேயோ ராகவாயேதி ஸீதா ஹனுமதே ததௌ –38.6-7 / 42

ததஸ்து ஹனுமான் வீரோ பபஞ்ஜ ப்ரமதாவனம்
தாஸோ(அ)ஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மண:
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
அர்த்தயித்வா புரீம் லங்கா மபிவாத்ய ச மைதிலீம்
ஸம்ருத்தார்த்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் — 43.9-11 / 43

வேஷ்டயந்தி ஸ்ம லாங்கூலம் ஜீர்ணை: கார்ப்பாஸகை: படை:
தைலேன சாபிஷிச்யாத தே(அ)க்னிம் தத்ராப்யபாதயத் — 53.7 / 44

தீப்யமானே ததஸ்தஸ்ய லாங்கூலாக்ரே ஹனூமத:
ராக்ஷஸ்யஸ்தா விரூபாக்ஷ்ய: சம்ஸுர் தேவ்யாஸ்ததப்ரியம் — 53.23 / 45

மங்கலாபிமுகீ தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே:
உபதஸ்தே விசாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம்
யத்யஸ்தி பதி சுச்ரூஷா யத்யஸ்தி சரிதம் தப:
யதி வாப்யேகபத்னீத்வம் சீதோ பவ ஹனூமத: — 53.26-27 / 46

ஹனூமதா வேகவதா வானரேண மஹாத்மனா
லங்காபுரம் ப்ரதக்தம் தத் ருத்ரேண த்ரிபுரம் யதா– 54.32 / 47

ஏவமாச்வாஸ்ய வைதேஹீம் ஹனுமான் மாருதாத்மஜ:
கமனாய மதிம் க்ருத்வா வைதேஹீமப்ப்யவாதயத்
தத: ஸ கபிசார்த்தூல: ஸ்வாமி ஸந்தர்சனோத்ஸுக:
ஆருரோஹ கிரிச்ரேஷ்ட மரிஷ்ட மரிமர்த்தன –56.25 / 48

நிபபாத மஹேந்த்ரஸ்ய சிகரே பாதபாகுலே –57.29
த்ருஷ்டா ஸீதேதி விக்ராந்த: ஸம்க்ஷேபேண ந்யவேதயத் — 57.35 / 49

ப்ரீதிமந்தஸ்ததஸ்ஸர்வே வாயு புத்ர புரஸ்ஸரா:
மஹேந்த்ராத்ரிம் பரித்யஜ்ய புப்லுவு: ப்லவகர்ஷபா: — 61.2 / 50

நிபேதுர் ஹரிராஜஸ்ய ஸமீபே ராகவஸ்ய ச — 64.38

ஹனுமாம்ச்ச மஹாபாஹு: ப்ரணம்ய சிரஸா தத:
நியதா மக்ஷதாம் தேவீம் ராகவாய ந்யவேதயத் — 64.39 / 51

தௌ ஜாதாச்வாஸௌ ராஜபுத்ரௌ விதித்வா தச்சாபிஜ்ஞானம் ராகவாய ப்ரதாய
தேவ்யா சாக்க்யாதம் ஸர்வ மேவானுபூர்வ்யாத் வாசா ஸம்பூர்ணம் வாயுபுத்ர: சசம்ச:–65.26 / 52

———-

ஸ்ரீ ராமபட்டாபிஷேகம்

வஸிஷ்டோ வாமதேவச்ச ஜாபாலிரத காச்யப:
காத்யாயனோ கௌதமச்ச ஸுயஜ்ஞோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்க்ரம் ப்ரஸன்னேன ஸுகந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராக்ஷம் வஸவோ வாஸவம் யதா –53

ஆயுஷ்ய மாரோக்யகரம் யசஸ்யம் ஸௌப்ராத்ருகம் புத்திகரம் சுபம் ச
ச்ரோதவ்ய மேதந்நியமேன ஸத்பிராக்க்யான மோஜஸ்கரம் ருத்திகாமை:54

பாராயண ஸமர்ப்பணம்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ப்ய: பரிபாலயந்தாம் ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா:
கோப்ராஹ்மணேப்ப்ய: சுபமஸ்து நித்யம் லோகா: சமஸ்தா: ஸுகினோ பவந்து –55

ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: –56

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி –57

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ –58-

———–

ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ருணாதி என்பதைக் காட்டும்.
இங்கே ஹிம்ஸை என்ற சொல் போக்குதல் அல்லது அழித்தல் என்ற அர்த்தத்தில் வந்துள்ளது.
அதனால், ஶ்ருணாதி என்பது அழிக்கிறாள் – அதாவது எல்லா குற்றங்களையும் போக்குகிறாள் என்பதைக் காட்டுகிறது.
ஶ்ரூ-விஸ்தாரே என்பது மிகுதிப்படுத்துகிறாள் என்பதைச் சொல்லுகிறது.
இதிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ எனும் திருநாமம் ஶ்ரூணாதி என்பதைக் காட்டும்.
ஶ்ரூணாதி என்பது விஸ்தரிக்கிறாள் – அதாவது நல்ல குணங்களை அதிகரிக்கச் செய்கிறாள் என்பதை காட்டுகிறது.

பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே |

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே ||

——–

மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது,
காடென்பது செடிகளும் முட்களும் நிறைந்த பாதையைக் கொண்டது.
அங்கிருப்பது துக்கமுடைத்து (அத: வநம் துக்கம்), என்று சொல்லி அவளைத் தடை செய்யும் போது,
பிராட்டியின் வார்த்தை:
“ஓ! இராமனே! நான் வனத்தில் உன் முன்னே நடந்து செல்வேன் – தே கமிஷ்யாமி அக்ரத:.”
அது மட்டுமல்ல. அப்படிச் செல்லும் போது அந்தப் பாதைகளில் உள்ள புற்களையும் முட்களையும்
தலைமிதி யுண்ணும்படி செய்து (குஶ கண்டகாந் ம்ருதந்தி) உன் திருவடிகளுக்கு நான் வழி வகுப்பேன் என்றாள்.

அவள் சொன்ன பாதையும் சாதாரண காட்டு வழியன்று.
அவள் பாதையென்று கூறியது தர்மத்தின் வழி.
அதில் இராமனுக்கு அவள் என்றும் துணையாய் இருப்பாள் என்பதை ஸஹ தர்மசரீ தவ என்றானிறே ஜனகனும்.
இராமாயணத்தில் தொட்டவிடமெங்கும் எம்பெருமான் காட்டும் தர்மம் சரணாகதி தர்மம் என்று
ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆக பிராட்டி அவனுடன் காட்டுக்குச் சென்றது அந்தச் சரணாகதி தர்மத்தைக் காப்பாற்றவே.

அதைக் கொண்டு நோக்கும் போது, முன்னே சென்று அதைக் கடைப்பிடிப்பேன் என்றதையே
செய்திருக்கிறாள் என்பது தெளிபு.
தனிச்சிறையில் விளப்புற்ற கிளிமொழியாள் என்றார் ஆழ்வார்.
சிறை இருந்தவள் என்றார் பிள்ளை உலகாரியனும்.
அதற்காக, இராமனுக்கும் முன்னாக இலங்கைக்குச் சென்றதையே அவள் உமக்கு முன் நான் நடப்பேன் என்றது.
அப்படி அவள் எம்பெருமானுடைய தர்ம மார்க்கத்தில் போகும் போது, இடையில் இருக்கும்
முள்ளும், புல்லும் அவன் திருவடிக்கு – அதாவது அவன் திருவடியில் செய்யும் சரணாகதிக்கு
தடையாம்படி இருக்கும் என்றும், அதை தலை மடியச் செய்வதே தன் கார்யம் என்றும் சொன்னாள்.

இங்கே புல்லும், முள்ளுமாய் இருப்பது என்று அவள் சொன்னது அந்த ராவணப் பயலையன்றோ.
ராவணன் இவ்வுலகிற்கு ஒரு முள்ளாய் இருந்தான் என்று வேண்டித் தேவர் இரக்கவும், அவனும் விரும்பிப் பிறந்ததுவும்.
அவன் புல்லாயும் இருக்கிறான் என்பதாலேயே பிராட்டி த்ருணம் அந்தரத: என்று அவனுக்கும் தனக்கும் இடையே ஒரு புல்லை இட்டுப் பேசியது.
த்ருணமந்தர: க்ருத்வா என்று அஜ்ஞனாயிருக்கிற உன்னை, த்ருணமிவ லகு மேநே என்று
இத்ருணத்தோ பாதியாக நினைத்திருப்பது என்று பொகட்டாளாகவுமாம் என்றார் பெரியவாச்சான் பிள்ளை.

இப்படி புல்லாயும், முள்ளாயும் இருக்கும் அவனையும் அவன் அஹங்காரத்தையும் தலை மடியச் செய்து
அவனை இராமனின் திருவடியில் சேர்ப்பித்து, அத்திருவடிகளுக்கு ஒரு நோவும் வாராதபடி,
அதாவது நிறம் பெறச் செய்வேன் என்று பிராட்டி எம்பெருமானுக்கு உரைத்தாள்.
அப்படியே சிறை இருந்தும், மித்ரம் ஔபயிகம் கர்த்தும் என்றும்
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதுமிச்சஸி என்றும் உபதேசித்தும் தலைக்கட்டினாள்.
ஆனால் அவன் திருந்தாதொழிந்தது அவனுடைய பாபப்ராசுர்யமிறே என்றார் பிள்ளை லோகாசார்யர்.

இப்படி இலங்கைக்கு முன்னே நடந்து சென்றது மட்டுமன்று.
பெருமாள் “நாம் அதிகரித்த கார்யத்துக்கு ஸஹகாரியாக வேணுமே” என்ன,
அதிலும் அநுஷ்டானத்திலும் முற்பாடை என்கிறான் (ஜனகன்) என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
அவனுடைய தர்மத்துக்கு அவள் ஸஹகரிக்கையாவது, சரணாகத ரக்ஷணத்வத்தில்
அவனைக் காட்டிலும் முன்னிற்பவளாய் இருப்பாள் என்றது.

மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந என்றவனைக் காட்டிலும்,
முன்னின்று
பாபாநாம் வா ஶுபாநாம் வா என்று சரணம் அடையாத ராக்ஷஸிகளையும் ரக்ஷித்தவள் பிராட்டி.
இதை ஸ்ரீகுணரத்நகோசத்தில், பட்டரும்
மாதர் மைதிலி என்ற ஶ்லோகத்தில் அபராதம் செய்த கை உலராமலிருந்த ராக்ஷஸிகளை ரக்ஷித்த
உன்னால் சரணம் என்று சொன்ன பின் ரக்ஷித்த ராம கோஶ்டி சிறிதாக்கப்பட்டது என்றார்.

இதுவே அவள் காட்டிலே எம்பெருமானுக்கு முன்னே நடந்த நடையும், நடந்து கொண்டமையுமாம்.

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ காயத்ரி ராமாயணம்–

December 25, 2020

ஸ்ரீ காயத்ரி ராமாயணம்

ஸ்ரீ காயத்ரி -சந்தஸாம் மாதா -இதிஹாச ஸ்ரேஷிடம் ஸ்ரீ ராமாயணம் –

இந்த ஸ்ரீ காயத்ரி ராமாயணத்தை படிப்பதால் ஸ்ரீ காயத்ரி ஜபம் செய்த புணயமும்
ஸ்ரீ ராமாயணம் முழுவதும் படித்த பலனையும் பெறலாம்

தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் ப்ரிபப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம் //

ஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வான் யக்ஞக்நான் ரகுநந்தன:
ரிஷிபி: பூஜித: ஸம்யக் யதேந்த்ரோ விஜயீபுரா //

விஸ்வாமித்ரஸ்து தர்மாத்மா ஸ்ருத்வா ஜனகபாஷித:
வத்ஸ ராம் தனு: பஸ்ய இதி ராகவம்ப்ரவீத் //

துஷ்டாவாஸ்ய ததா வம்ஸம் ப்ரவிஸ்ய ஸ விஸாம்புதே
ஸயநீயம் நரேந்த்ரஸ்ய ததாசாத்ய வ்யதிஷ்டத //

வனவாசம் ஹி ஸங்க்யாய வாஸாம்ஸ்யாபரணானி ச
பர்தாரமனுகச்சந்த்யை சீதாயை ஸ்வஸுரோ ததௌ //

ராஜா ஸத்யம் ச தர்ம்ஸ்ச ராஜா குலவதாம் குலம்
ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம் //

நிரீக்ஷ்ய ஸ முஹூர்த்தம் து ததர்ஸ பரதோ குரும்
உடஜே ராமமாசீனம் ஜடாமண்டலதாரிணம் //

யதி: புத்தி: த்ருஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுனிம்
அத்யைவகமனே புத்திம் ரோசயஸ்வ மஹாயஸ: //

பரதஸ்யார்யபுத்ரஸ்ய ஸ்வஸ்ரூணாம் மம ச ப்ரபோ
ம்ருகரூபமிதம் வ்யக்தம் விஸ்மயம் ஜனயிஷ்யதி //

கச்ச ஸீக்ரமிதோ ராம ஸுக்ரீவ.ந்தம் மஹாபலம்
வ்யஸ்ய.ந்தம் குரு க்ஷிப்ரம் இதோ கத்வாத்ய ராகவ: //

தேஸகாலௌ ப்ரதீக்ஷஸ்வ சமமாண: ப்ரியாப்ரியே
ஸுகது:க்கஸஹ: காலே ஸுக்ரீவவஸகோ பவ: //

வந்த்யாஸ்தே து தபஸ்ஸித்தாஸ்தாபஸா வீதகல்மஷா:
ப்ரஷ்டவ்யா சாபி சீதயா: ப்ரவ்ருத்திர்வினையான் விதை:

ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காம்ரூபிணீம்
விக்ரமேண மஹா: தேஜா: ஹநுமான் மாருதாத்மஜ: //

தன்யா தேவா: ஸகந்தர்வா: ஸ்த்தாஸ்ச பரமர்ஷய:
மம பஸ்யந்தி யே நாதம் ராமம் ராஜீவலோசனம் //

மங்களாபிமுகே தஸ்ய ஸா ததாஸீன்மஹாகபே
உபதஸ்தே விஸாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹனம் //

ஹிதம் மஹார்த்தம் ம்ருதுஹேதுஸமிதம்
வ்யதீதகாலாயதிஸம்ப்ரதிக்ஷமம்
நிஸம்ய தத்வாக்யமுபஸ்திதஜ்வர
ப்ரஸங்கவானுத்தரமேததப்ரவீத் //

தர்மாத்மா ரக்ஷஸாம் ஸ்ரேஷ்ட:
ஸம்ப்ராப்தோsயம் விபீஷண:
லங்கைஸ்வர்யம் த்ருவம் ஸ்ரீமா
நயம் ப்ராப்நோத்யகண்டகம் //

யோ வஜ்ரபாதாஸனிஸன்னிபாதாத்
ந சுக்ஷூபே நாபி ச்சால ராஜா
ஸ ராமபாணார்பிஹதோ ப்ருஸார்த்த:
சசாலசாபம் ச முமோச வீர: //

யஸ்ய விக்ரமமாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா:
தம் மந்யே ராகவம் வீரம் நாராயணம்னாமயம் //

ந தே தத்ருஸிரே ராமம் தஹந்தமரிவாஹினீம்
மோஹிதா: பரமாஸ்த்ரேன காந்தர்வேண மஹாதமனா //

ப்ரணம்ய தேவதாப்யஸ்ச்ச ப்ராஹ்மணே ப்யஸ்ச மைத்லீ
பத்தாஞ் ஜலிபுடா சேதமுவாசாக்.நிஸமீபத: //

சல.நாத் பர்வதே.ந்த்ரஸ்ய கணா தேவாஸ்ச கம்பிதா:
சசால பார்வதீ சாபி ததாஸ்லிஷ்டா மஹேஸ்வரம் //

தாரா: புத்ரா: புரம் ராஷ்ற்றம் போகாச்சாதனபாஜனம்
ஸர்வமேவாவிபக்.நம் நோ பவிஷ்யதி ஹரீஸ்வர: //

யாமேவ ராத்ரிம் ஸத்ருக்ன: பர்ணஸாலாம் ஸமாவிஸத்
தாமேவ ராத்ரிம் சீதாபுஇ ப்ரஸூதா தாரகத்வயம் //

இதம் ராமாயணம் க்ருத்ஸ்னம் காயத்ரீபீஜஸம்யுதம்
த்ரிஸந்த்யம் ய: படே.ந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே //

ஸ்ரீ காயத்ரீ ராமாயணம் ஸம்பூர்ணம்

————-

‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி.

ஓம் பூர்புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ரசோதயாத் |–இது தான் காயத்ரி மந்திரம்.

ஓம்
பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய
ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள
வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின்
பர்கோ – தெய்வீகப் பேரொளி மீது
தீ மஹி – நாம் தியானிக்கின்றோம்
தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம்
நஹ – நம்
தியோ – அறிவுக்கு
ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்

அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி. அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி.
எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி!
அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி.
அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.

அக்ஷரங்களின் பயன்!
ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும்.
தத் என்பது ப்ரஹ்ம ஞானத்தையும்
‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும்,
‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும்,
‘து’ என்பது தைரியத்தையும்,
‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும்,
’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும்,
‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும்,
‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும்,
‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும்,
தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும்,
‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும்,
‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும்,
‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும்,
‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும்
‘ஹி’ என்பது நுண்ணறிவையும்,
‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும்,
‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும்,
‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும்
‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும்,
’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும்,
‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும்
‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும்
‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும்
‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.

காயத்ரி மந்திர தேவதைகள்!

ஆக்னேயம், பிரஜாபத்தியம், ஸௌம்யம், ஸமானம், சாவித்திரம், ஆதித்யம், பார்ஹஸ்பத்யம்,
மைத்ராவருணம், பகதெய்வதம், ஆர்யமைஸ்வரம், கணேசம், துவாஷ்ட் ரம், பௌஷ்ணம், ஐந்திராக்னம்,
வாயவ்யம், வாமதேவ்யம், மைத்ராவருணி, வைஸ்வதேவம், மாத்ருகம், வைஷ்ணவம், வததெய்வம்ஸும்,
ருத்ரதெய்வதம், கௌபேரம், ஆஸ்வினம் ஆகியவை காயத்ரி மந்திரத்திற்குள்ள 24 தேவதைகள்.

தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.

————

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ஸ்ரீராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே
ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

—————-

அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம:
விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் ||– வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்

சிவனும் அம்புய மலரில் அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு தொடரு செங் கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன் உலகில் வந்ததுகொல~ கம்பராமாயணம், அனுமபடலம்

————–

ஆயுர்வேத, சித்த மருந்துகள் மட்டும் அல்லாது ஆங்கில மருந்துகளை ஏற்போரும் மருந்துகளை விழுங்கும் முன்னால்,
ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் பாஹிமாம்
ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ஸ்ரீ ராமபாணம் ரக்ஷமாம் —என்று ஓதி மருந்துகளை,
மாத்திரைகளை, டானிக்குகளை உட்கொள்வதால் அந்த மருந்துகளின் முழுப் பலனையும் பெற்று உடனடி நிவாரணம் பெறலாம்.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சப்த ரிஷி ஸ்ரீ ராமாயணம்-

December 24, 2020

ஸ்ரீ காச்யப ரிஷி – ஸ்ரீ பாலகாண்டம்

ஜாதஸ்ரீ ரகு நாயகோ தசரதான், முனியாஸ்ரய தாடகாம்,
ஹத்வா ரக்ஷித கெளசிக க்ருதுவர: க்ருத்வாப்யஹல்யாம் ஷுபம் I
புங்க்த்வ்வா ருத்ர ஸராஸ ஜனகஜாம் பாணௌ க்ருஹித்வா
ததோ ஜித்வார்தாத்வனி பார்கவம் புனரகாத் சீதாசமேத: புரிம் ॥ 1 ॥

புத்திர பாக்கியம் வேண்டிய தசரதரின் புத்திர காமேஷ்டி யாகத்தில் உதித்து ரவி குல திலகமாக ஸ்ரீ ராமர் அவதரித்தார்.
சகல வித்தைகளையும் முதலில் ராஜரிஷி பின்னர் பிரம்ம ரிஷியாகிய விச்வாமித்ரரிடம் கற்றார்.
சகல அச்த்ரங்களையும் பிரயோகம் பண்ணுவதற்கு அவரிடம் பெற்றார்.
முதல் ராக்ஷச வதமாக தாடகையைக் கொன்று முனிவர்களை காப்பாற்றினார்.
விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்துக்கு ராக்ஷசர்களின் தடங்கல் எதுவும் வராமல் காத்தார்.
பின்னர் அவர் பாணங்களில் மாண்ட அரக்கர்கள் சுபாகுவும் மாரிச்சனும். பல நூறு வருஷங்கள் தவமிருந்த கல்லாக
சமைந்த அகலிகா அவர் பாதம் பட்டது முதல் மீண்டு ரிஷி பத்னியானாள் . விச்வாமித்ரரோடு மிதிலை விஜயம் செய்தார்.
எவராலும் அசைக்க முடியாத சிவ தனுசுவை நொடியில் எடுத்து நிறுத்தி எல்லோரும் ”எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்”
பூமாதேவி அம்சமான ஸ்ரீ சீதா தேவியை மணம் புரிந்தார். ஜானகி ராமனாய் அவர்கள் நடக்கையில் வழியில்
பரசுராமர் கர்வ பங்கம் நடந்தது. அயோத்தி திரும்பினார்கள் . நலமாக பல்லாண்டு வாழ்ந்தார்.

———

ஸ்ரீ அத்ரி மகரிஷி – ஸ்ரீ அயோத்யா காண்டம்

தாஸ்யா மந்தரய தயா ரஹிதயா துர்போதிதா கைகயி
ஸ்ரீ ராமப்ரதமாபிஷேக சமயே மாதாப்ய யாச த்வரௌ I
பர்த்தாரம் பரத: ப்ரஷாஸ்து தரணீம் ராமோ வனம் கச்சதா:
தித்யாகர்ண்ய ஸ சோதரம் ந ஹி ததௌ துக்கேன மூர்ச்சா கத: ॥ 2 ॥

ஒரு சேடி , பணியாள், மந்தரை இதமாகப் பேசி கைகேயியின் மனத்தைக் கல்லாக்கி, ராமனுக்கு பட்டாபிஷேக
சந்தோஷ சமயத்தில் பழைய நினைவூட்டி தசரன் வாக்களித்த இரு வரங்களை கேட்க வைத்தாள் பரதன் நாடாள, ராமன் காடாள .
ஒரு நாளோ மாதமோ வருஷமோ அல்ல, பன்னிரண்டு வருஷங்கள். ராஜாவாக அல்ல, மரவுரி தரித்து ரிஷியாக.
தாங்கமுடியாத பேரிடியாக சத்யத்தை நிலைநிறுத்த, கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மயங்கி விழுந்தான் தசரதன்.

————

ஸ்ரீ பாரத்வாஜ மகரிஷி – ஸ்ரீ ஆரண்ய காண்டம்

ஸ்ரீ ராம: பித்ருசாசனாத் வனமகாத் சௌமித்ரி சீதான்விதோ
கங்காம் ப்ராப்ய சதாம் நிபத்யா சகுஹ: சச்சித்ரகூடே வஸன் :
க்ருத்வா தத்ர பித்ருக்ரியாம் சபரதொ தத்வாஅபயம் தண்டகே :
ப்ராப்யா அகஸ்திய முனீஸ்வரம் ததுதிதம் த்ருத்வா தனுஸ்சாக்ஷ்யம் : ॥ 3 ॥

அப்பா கூட சொல்லவில்லை. அப்பா சொன்னதாக சிற்றன்னை சொன்னதையே வேத வாக்காகக் கொண்டு
ஸ்ரீ ராமன் ஸ்ரீ சீதா ஸ்ரீ லக்ஷ்மணர்களோடு வனவாசம் சென்றான். கங்கை அடைந்தான். ஜடாமுடி தரித்தான். குஹன் உதவ,
ஸ்ரீ சித்ரகூடம் அடைந்தான். ஸ்ரீ பரதன் வந்து தந்தை ஸ்ரீ விஷ்ணுபதம் சேர்ந்தார் என்றறிந்து ஈமக்ரியைகள் செய்தபின்
ஸ்ரீ தண்டகாரண்யத்தில் ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளித்தான். ஸ்ரீ அகஸ்தியரை சந்தித்து ஆசி பெற்றான்.
ஸ்ரீ கோதண்டம் வலுப்பெற்றது. தோளில் அமர்ந்தது.

——-

ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் – ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்

கதவா பஞ்சவடி அகஸ்த்ய வச்சனா திருத்வா அபயம் மௌநீனாம்;
சித்வா சூற்பனகச்ய கர்ண யுகளம் த்ராதும் சமஸ்தான் முனின் :
ஹத்வா தம் ச கரம் சுவர்ண ஹரிணபித்வா ததா வாலினம்;
தாரா ரத்ன மவைரி ராஜ்ய மகரோத் சர்வ ச சுக்ரீவஸாத்:. ॥ 4 ॥

ஸ்ரீ அகஸ்தியர் காட்டிய வழியில் பஞ்சவரி அடைந்தார்கள். காட்டில் முனிவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது.
சூர்பனகையை மூக்கு, காதுகளை வெட்டி பங்கப்படுத்தினர். கர தூஷணர்கள், மாயமானாக வந்த மாரீசன், வாலி
அனைவருமே வதம் செய்யப்பட்டனர். ஸ்ரீ சுக்ரீவனுக்கு ஸ்ரீ கிஷ்கிந்தா ராஜ்ய பட்டாபிஷேகம் நடத்தி
தாரையின் அறிவுரைப்படி ஆள்வாய் என்று ஆசிர்வதித்தார்.

———-

ஸ்ரீ கௌதம ரிஷி – ஸ்ரீ சுந்தர காண்டம்

தூதோ தசரதே: சலில முததிம் தீர்த்வாம் ஹனுமான் மகான் :
த்ருஷ்ட்வா அசோகவனே ஸ்திதாம் ஜனகஜாம் தத்வா அங்குலேர் முத்ரிகாம்
அக்ஷாதீன அசுறான் நிஹத்ய மஹதீம் லங்காம் ச தக்த்வா புன:
ஸ்ரீ ராமம் ச சமேத்ய தேவ ஜனனி த்ருஷ்டா மயேத்ய ப்ரவீத்.: ॥ 5 ॥

ஸ்ரீ ராம தூதனாக ஸ்ரீ ஹனுமான் கடலைத் தாண்டி இலங்கையில் பிரவேசித்து அசோகவனத்தில்
ஸ்ரீ சீதா தேவியைத் தரிசித்தான். முத்ரை ஸ்ரீ கணையாழியை அளித்தான். அசுரர்களையும் ராவணன் புத்திரன்
அக்ஷயகுமாரனையும் கொன்றான். தீவுக்கு தீ வைத்தான். ஸ்ரீ ராமனிடம் திரும்பி தாயைக் கண்டேன் என்றான்.

————

ஸ்ரீ ஜமதக்னி ரிஷி – ஸ்ரீ யுத்த காண்டம்

ராமோ பத பயோ நிதி: கபி வரை வீரைர்ன லாதயைர் வ்ருதோ
லங்காம் ப்ராப்ய ஸ கும்பகர்ண தனுஜம் ஹத்வா ரணே ராவணம்:
த்ஸ்யாம் ந்யஸ்ய விபீஷணம் புனரசௌ சீதாபதி புஷ்பகா:
ரூட: ஸன் புரமாகத : ச பரத: சிம்ஹாசனச்தோ பபௌ: ॥ 6 ॥

ஸ்ரீ ராமர் ஸ்ரீ சேது பந்தனத்தை வானர சைன்யங்களை வைத்துக்கொண்டு நளனின் மேற்பார்வையில் கட்டி முடித்தார்.
இலங்கையை அடைந்தார். கும்பகர்ணன் ராவணன் ஆகியோரை யுத்தத்தில் வதம் செய்தார்
ஸ்ரீ விபீஷணனை லங்காதிபதியாக்கினார். ஸ்ரீ சீதா தேவியோடு புஷ்பக விமானத்தில் ஆரோகணித்து
ஸ்ரீ நந்தி க்ராமத்தில் ஸ்ரீ பரதனைச் சந்தித்து பொறுப்பேற்று ஸ்ரீ அயோத்தி மன்னனாக அவருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

———

ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி – ஸ்ரீ உத்தர காண்டம்

ஸ்ரீ ராமோ ஹயமேத முக்ய மச்வா க்ருத் சமயக் பிரஜா பாலயன்;
க்ருத்வா ராஜ்ய மதான்னு ஜைஸ்ச சுசிரம் பூரிச்வ தர்மான்விதௌ ; புத்ரௌ
பிராத்ரு சமன்விதௌ குச லவௌ சம்ஸ்தாப்ய பூ மண்டலே;
ஸோ அயோத்யா புர வாஸி பிஸ்ச சரயுஸ் ஸ்நாத: ப்ரபேதே திவம்: ॥ 7 ॥

ராஜ்யத்தை பல்லாயிரம் ஆண்டு ஆட்சிசெய்து அஸ்வமேத யாகம் நடத்தி, குடிமக்களை சந்தோஷமாக வைத்து,
ஸ்ரீ ராம ராஜ்யம் என்ற மேன்மை பெற்ற பெயர் பெற்று, சகோதரர்களோடு தர்ம பரிபாலனம் செய்து இந்த
பூமண்டலத்தை சகோதரர்களுக்கும், அவர்கள் மக்களுக்கும்,லவ குசர்களுக்கும் அளித்து
ஸ்ரீ ராமர் தனது அவதாரத்தை ஸ்ரீ சரயு நதியில் முடித்தார்.

————

ஏழு ரிஷிகளும் சேர்ந்து :

ஸ்ரீ ராமஸ்ய கதா சுதாதி மதுரான் ச்லோகாநிமான் உத்தமான்;
யே ஸ்ருண் வந்தி படந்தி ச பிரதிதினம் தே;தௌதவித்வாம்ஸின
ஸ்ரீமந்தோ பஹு புத்திர பௌத்ர சாஹிதா புக்த்வேஹ போகாஸ்சிரம்;
போகாந்தே து சதார்ச்சிதம் சுரகணைர் விஷ்ணோர் லபந்தே பதம்:

ஒவ்வோர் காண்டத்துக்கும் ஒரு ஸ்லோகமாக 7 ரிஷிகளும் (ஸ்ரீ சப்த ரிஷிகள்) வழங்கிய ஸ்ரீ ராமாயணம் தான்
ஸ்ரீ சப்தரிஷி ராமாயணம். இது ஒரு ஈடிணையற்ற பூந்தேன். இதை தினமும் செவி மடுத்தாலும், படித்தாலும்,
சகல சாஸ்திரவானாக ஒருவன் மாறலாம்.சர்வ சம்பத்தும் பெருகும். புத்திர பௌத்ராதிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்துவர்.
உலக வாழ்க்கை எல்லாம் இன்பமயம் என்பதாகும். ஸ்ரீ விஷ்ணுபதம் சாஸ்வதமாகும்.

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/மிகைப் பாடல்கள்-

December 21, 2020

2. அனுமப் படலம்

312. அன்ன ஆம் என வெருவி,
அங்கண் நில்லாது, அருகு
துன்னு வானரர்களொடு தோம்
இலா மேரு நிகர்
என்னும் மாமலை முழையில்
எய்தினார்; எய்தியபின்,
நல் நலம் தெரி மனதின்
நாடி மாருதி மொழியும்:
முழை -குகை 2-1

313. தாரன், நீலனை, மருவு
தாம மாருதியை, முதல்
வீரரோடு, இரவிசுதன், மேரு
மால் வரையை நிகர்
பார மா மலையின் ஒரு
பாகம் ஓடுதல் புரிய,
ஆர மார்பரும், அதனின்
ஆகுமாறு உறல் கருதி,
இரவி சுதன் -சூரியன் மகனாகிய சுக்கிரீவன் 2-2

314. மானை நாடுதல் புரிஞர் –
‘வாலி ஏவலின் வருதல்
ஆனவாறு’ என மறுகி, ஆவி
சோர் நிலையர், தொடர்
ஏனைவானரர் சிலரும் ஏக,
மா முழையில், முழு
ஞான நாதரை, அறிவின்
நாடி, மாருதி மொழியும்:
மான் – மான்போல்வாளாகிய சீதை; நாடுதல் புரிஞர் – தேடுதலாகிய
பணியைச் செய்வோர். 2-3

315. உலகு தங்கிய பல தொல்
உயிர்கள் உயர்ந்திடு பரிசில்
இலகும் இங்கிதம் உடையர்;
இசையின் இன்புறு சுருதி
அலகு இல் விஞ்சைகள் உடையர்;
அகிலமும் தொழு கழலர்;
விலகு திண் கொடு வினைகள்
வெகுளிகொண்டு அடு விறலர்.
இங்கிதம் – குறிப்பு; விஞ்சைகள் – வித்தைகள் 8-1

316. சிவனும் அம்புய மலரில்
அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி
எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு
தொடரு செங்கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன்
உலகில் வந்ததுகொல் என.
அம்புய மலர் – தாமரை மலர்; இந்திரை – திருமகள்; கொழுநன் –
கணவன். 8-2

317. ‘மற்றும் இவ் உலகத்து உள்ள
முனிவர், வானவர்கள், ஆர், இச்
சொல் திறம் உடையார்? மற்று
எச் சுருதியின் தொகுதி யாவும்
முற்று அறிதரும் இம் மாணி
மொழிக்கு எதிர், முதல்வர் ஆய
பெற்றியர் மூவர்க்கேயும், பேர்
ஆற்றல் அரிது மன்னோ.’
சுருதி – வேதம் (கேட்கப்படுவது); மாணி – பிரமசாரி 19-1

318. இருக்கண் மா மைந்தரான
வாலியும், இளவல்தானும்,
செருக்கினோடு இருக்கும்காலை, செறுநரின்
சீறி வாலி
நெருக்குற, வெருவி, இந்த நெடுங்
குவட்டு இறுத்தான் தன்பால் –
மருக் குலாம் தாரீர்! – வந்தது
அவன் செய் மா தவத்தின் அன்றோ?
இருக்கண் – பிரமன்; நெடுங்குவடு – பெரிய மலை. 21-1

3. நட்புக் கோட் படலம்

319. ‘பிரிவு இல் கான்
அதுதனில், பெரிய சூர்ப்பணகைதன்
கரிய மா நகிலொடும்,
காதொடும், நாசியை
அரியினார்; அவள்
சொல, திரிசிராஅவனொடும்,
கரனொடும், அவுணரும், காலன்
வாய் ஆயினார்.
அரியினார் – அறுத்தனர 10-1

320. கடுத்து எழு தமத்தைச் சீறும்
கதிர்ச் சுடர்க் கடவுள் ஆய்ந்து
வடித்த நூல் முழுதும் தான்
ஓர்வைகலின், வரம்பு தோன்றப்
படித்தவன் வணங்கி, வாழ்த்தி,
பருமணிக் கனகத் தோள் மேல்
எடுத்தனன், இரண்டுபாலும்
இருவரை; ஏகலுற்றான்.
நமம் – இருள். 29-1

321. ‘இவன், உலைந்து உலைந்து,
எழு கடல் புறத்து
அவனியும் கடந்து,
எயில் அடைந்தனன்;
கவனம் ஒன்று இலான்,
கால் கடாயென,
அவனி வேலை ஏழ்,
அரியின் வாவினான்.
உலைந்து – தோற்று; எயில் – மதில் (இங்கே புற அண்டத்து
எல்லையிலுள்ள மதில்); கவனம் – கலக்கம்; கால் – காற்று; வாவினான் –
தாவினான். 64-1

322. ‘என்று கால்மகன்
இயம்ப, ஈசனும்,
”நன்று நன்று” எனா,
நனி தொடர்ந்து பின்
சென்ற வாலிமுன்
சென்ற செம்மல்தான்
அன்று வாவுதற்கு
அறிந்தனன்கொலாம்?’
கால்மகன் – வாயு தேவனின் மகன் (அனுமன்); ஈசன் – (இங்கே)
இராமபிரான். 64-2

323. இனையவா வியந்து
இளவல் தன்னொடும்,
வனையும் வார் கழல்
கருணை வள்ளல், பின்பு,
‘இனைய வீரர் செய்தமை
இயம்பு’ என,
புனையும் வாகையான்
புகறல் மேயினான்:
இனையவா(று) – இவ்வாறு 64-3

324. ‘நக்கரக் கடல் புறத்து நண்ணும் நாள்,
செக்கர் மெய்த் தனிச் சோதி சேர்கலாச்
சக்கரப் பொருப்பின் தலைக்கும் அப்
பக்கம் உற்று, அவன் கடிது பற்றினான்.
நக்கரம் – முதலை. 64-4

325. ‘திறத்து மா மறை அயனொடு
ஐம்முகன், பிறர், தேடிப்
புறத்து அகத்து உணர் அரிய
தன் பொலன் அடிக் கமலம்
உறச் சிவப்ப இத் தரைமிசை
உறல், அறம் ஆக்கல்,
மறத்தை வீட்டுதல், அன்றியே,
பிறிது மற்று உண்டோ?’
ஐம்முகன் – சிவபிரான். 70-1

326. ‘நீலகண்டனும், நேமியும்,
குலிசனும், மலரின்-
மேல் உளானும், வந்து, அவன்
உயிர்க்கு உதவினும், வீட்டி
ஆலும் உன் அரசு
உரிமையோடு அளிக்குவென்; அனலோன்
சாலும், இன்று எனது உரைக்கு
அருஞ்சான்று’ எனச் சமைந்தான்.
நீலகண்டன் – சிவபிரான்; நேமி – திருமால்; குலிசன் – (வச்சிரப்
படையான்)இந்திரன். 71-1

327. ‘மண்ணுள் ஓர் அரா முதுகிடை
முளைத்த மா மரங்கள்
எண்ணில் ஏழ் உள; அவற்றில்
ஒன்று உருவ எய்திடுவோன்,
விண்ணுள் வாலிதன் ஆர் உயிர்
விடுக்கும்’ என்ற உலகின்-
மண் உளோர்கள்தாம் கழறிடும்
கட்டுரை உளதால்.
அரா – பாம்பு (ஏழு மராமரங்களில் ஒன்றைத் தன் கணையால்
துளைப்பவனால் வாலி இறப்பான் என்று உலகில் ஒரு பேச்சு உண்டு என்கிறது
செய்யுள்).

5. துந்துபிப் படலம்

328. புயலும் வானகமும், அப்
புணரியும், புணரி சூழ்
அயலும் வீழ் தூளியால்
அறிவு அருந்தகையவாம்
மயனின் மாமகனும் வாலியும்
மறத்து உடலினார்.
இயலும் மா மதியம் ஈர்
ஆறும் வந்து எய்தவே.’
புயல் – மேகம்; புணரி – கடல். 9-1

7. வாலி வதைப் படலம்

329. பேர்வுற வலிக்கவும் மிடுக்கு
இல் பெற்றியார்
நோவுற உலந்தனர்; அதனை
நோக்கி, யான்
ஆர்கலிதனைக் கடைந்து,
அமுது கொண்டனென்;
போர் வலி அழிந்து போய்,
புறம் தந்து ஓடலேன்.
பேர்வுற – அசைந்திட; வலிக்க – இழுக்க; மிடுக்கு – வலிமை;
ஆர்கலி – கடல். 27-1

330. ஆற்றலன் வாலிக்கு ஆகி, அருங்
கதிர்ப் புதல்வன் மீண்டும்
ஏற்றிய சிலை இராமன் இணை
அடி இறைஞ்சி வீழ்ந்து,
‘தோற்றுமுன், ஆவி கொண்டு, இத்தொல்
உறை இருந்தேன்; உந்தன்
மாற்றமேவலி ஆய்ச் சென்றேன்;
உடல்வலி மாய்ந்தது’ என்றான்.
வாலிக்கு ஆற்றலன் ஆகி – வாலியின் வலிமைக்கு எதிரே
தாங்கமுடியாதவனாகி; கதிர்ப்புதல்வன் – கதிரவன் மகன் (சுக்கிரீவன்).61-1

331. என்றலும், இராமன், ‘நீங்கள்
இருவரும் எதிர்ந்த போரில்,
ஒன்றிடும் உடலினாலே உருத்தெரிவு
அரியது ஆகி,
கொன்றிடு பாணம் ஏவக்
குறித்தலேன்; குறியால் செய்த
மன்றலர் மாலை சூட்டி
ஏவுதும், மறித்தும்’ என்றான்.
61-2

332. இராமன் அஃது உரைப்பக் கேட்டே,
இரவி சேய் ஏழது ஆகும்
தராதலத்து அதிர ஆர்த்து, தம்
முனோன் முன்னர்ச் செல்ல,
பராபரம் ஆய மேருப்
பருப்பதம் தோற்றிற்று என்ன
கராதலம் மடித்து வாலி கனல்-
துகள் சிவந்து காட்ட.
பருப்பதம் – மலை (பர்வதம்); கராதலம் – கை. 61-3

333. சிவந்த கண்ணுடை வாலியும்,
செங்கதிர்ச் சேயும்,
வெவந்தபோது, அவர் இருவரும்
நோக்கின்ற வேலை,
கவந்த தம்பியைக் கையினால்
எடுத்து, அவன் உயிரை
அவந்த மற்றவன் ஆர்
உயிர் அந்தகற்கு அளிப்போன்.
வெவந்தபோது – பகை வெம்மையால் மோதிய போது; அந்தகன் –
இயமன். 62-1

334. வெற்றி வீரனது அடு கணை,
அவன் மிடல் உரத்தூடு
உற்றது; அப்புறத்து உறாதமுன்,
உறு வலிக் கரத்தால்
பற்றி, வாலினும் காலினும்
பிணித்து, அகப்படுத்தான்;
கொற்ற வெங் கொடு
மறலியும், சிரதலம் குலைந்தான்.
மிடல் உரம் – வலிமையான மார்பு; உறு வலி – மிகுந்த வலிமை.
66-1

335. ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை;
உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை;
வென்று ஆள்வதே என்னில், வேறு ஒன்றம் இல்லை;
வீணே பிடித்து; என்தன்மேல் அம்பு விட்டாய்;

தன்தாதை மாதா உடன் கூடி உண்ணத்
தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான்,
நின் தாதை; அன்றேயும், நீயும் பிடித்தாய்;
நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே!
செற்றம் – பகைமை; தாதை – தந்தை. 89-1

336. மா வலச் சூலியார்
வாழ்த்துநர்க்கு உயர் வரம்
ஓவல் அற்று உதவல், நின்
ஒரு தனி்ப் பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும்;
அப் பொருளை ஆம்
தேவ! நிற் கண்ட எற்கு
அரிது எனோ, தேரினே?
ஆவலிப்பு -பெருமிதம். 128-1

337. இடைக்கலம் அல்லன்; ஏவியது
ஓர் பணி
கிடைத்த போது, அது
செய்யும் இக் கேண்மையன்;
படைக்கலக் கைப்பழம் பேர்
அருளே! நினது
அடைக்கலம் – அடியேன்
பெற்ற ஐயனே.
இடைக்கலம் -இடையே வந்தவன். 158-1

8. அரசியற் படலம்

338. வள்ளலும், அவண் நின்று ஏகி,
மதங்கனது இருக்கை ஆன
வெள்ள வான் குடுமிக் குன்றத்து
ஒருசிறை மேவி, மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பி,
அன்பினால் அமைக்கப்பட்ட
எள்ளல் இல் சாலை எய்தி,
இனிதினின் இருந்த காலை,
வெள்ள வான் குடுமி -நீர்வளம் மிகுந்ததும் உயர்ந்ததுமான சிகரம்;
ஒரு சிறை -ஒருபக்கம்

10. கிட்கிந்தைப் படலம்

339. சென்று மாருதிதன்னிடம் சேர்ந்து, அவண்
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்,
வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை
ஒன்றுவான் அவன்தன்னை உசாவினான்.
வென்றி வீரன் -வெற்றி கொள்ளும் வீரன்; இங்கே (அனுமன்); மேல்
வினை -இனிமேல் செய்ய வேண்டிய செயல்கள்; அவன் தன்னை –
அவனை (அங்கதனை). 25-1

340. நீளும் மால் வரையின் நெறிதான் கடந்து,
ஊழி காலத்து ஒருமுதல் ஆகிய
ஆழிநாதனுக்கு அன்புடைத் தம்பியாம்
மீளிதான் வரும் வேகத்துக்க அஞ்சியே.
ஆழிநாதன் -சக்கரப் படை ஏந்திய தலைவன், திருமால் (இங்கே
இராமபிரான்);மீளி -வலிமையுடையவன். 32-1

341. மேவினான் கடை சேமித்த மென்மை கண்டு
ஓவு இலா மனத்து உன்னினன் -எங்கள்பால்
பாவியார்கள்தம் பற்று இதுவோ எனாத்
தேவரானும் சினத்தொடு நோக்கியே.
சேமித்த மென்மை -அடைந்து வைத்த சிறுமை;தேவரான் –
தேவனாகிய இலக்குவன். 34-1

342. அன்னை போன பின், அங்கதக் காளையை,
தன்னை நேர் இல் அச் சமீரணன் காதலன்,
‘இன்னம் நீ சென்று, இருந் துயில் நீக்கு’ என,
மன்னன் வைகு இடத்து ஏகினன், மாசு இலான்.
அன்னை -தாயாகிய தாரை;மாசு இலான் -குற்றம் இல்லாத
அங்கதன். 77-1

343. சேய்உயர் கீர்த்தியான்,
‘கதிரின் செம்மல்பால்
போயதும் அவ் வயின்
புகுந்த யாவையும்,
‘ஓய்வுறாது உணர்த்து’ என,
உணர்த்தினான் அரோ,
வாய்மையா – உணர்வுறு
வலி கொள் மொய்ம்பினோன்.

சேய் உயர் கீர்த்தியான் -நெடிதுயர்ந்த புகழ் கொண்ட இலக்குவன்.
137-1

11. தானை காண் படலம்

344. அன்று அவண் வானரச் சேனை யாவையும்,
வென்றி கொள் தலைவரும், எண்கின் வீரரும்,
குன்றுகள் ஒரு வழிக் கூடினாலென,
வன் திறல் இராமனை வாழ்த்தி, வந்தவே.
எண்கின் வீரர் -கரடி வீரர்கள். 1-1

345. இன்னது ஆகிய திறத்து அவர்
இருக்க, முன் போகச்
சொன்ன ஆயிர கோடியில்
தூதம் தம் திறத்தால்,
பன்ன ஆறு – இரு வெள்ளம் ஆம்
கவிப் படை பயில, –
பொன்னின் வார் கழல் இடபன் –
அக் கிட்கிந்தை புகுந்தான்.
அவர் இருக்க -இராம இலக்குவர்கள் காத்திருக்க;ஆறு இரு
வெள்ளம் -பன்னிரண்டு வெள்ளம்; கவிப் படை -குரங்குப் படை. 1-2

346. ‘தாமரை பெருந் தவிசு
உறை சதுமுகக் கடவுள்
ஓம அடஙகியில் உதித்தன,
உலப்பு இல கோடி
ஆம்’ எனப் புகல் வானரத்
தானை அங்கு அணித்தா, –
மா வயப் புயத்து எறுழ் வலி
மயிந்தன் – வந்து அடைந்தான்.
தவிசு -இருக்கை (ஆசனம்); சதுமுகக் கடவுள் -நான்கு முகங்
கொண்ட பிரமதேவன்;ஓம அங்கி -வேள்வித் தீ;தனை -சேனை. 1-3

347. கங்கைசூடிதன் கருணை பெற்றுடைய
முன் வாலி
பொங்கும் ஆணையின் எண்திசைப்
பொருப்பினும் பொலியத்
தங்கி வாழ் கவித் தானை
அங்கு ஆறு-ஐந்து கோடி
வங்க வேலையின் பரந்திட, –
வசந்தன் – வந்து அடைந்தான்.
கங்கை சூடி -சிவபெருமான்; வங்க வேலை -கப்பல்கள் இயங்கும்
கடல். 1-4

348. வட்ட விண்ணையும் மண்ணையும்
எடுக்குறும் வலிய,
நெட்டு அராவினைச் சினத்தொடு
பிடுங்குவ நிமிர்வ,
அட்ட திக்கையும் மறைப்பன,
ஆயிரம் கோடி
துட்ட எண்கு வெம்
படையொடு தூமிரன் வந்தான்.
நெட்டு அரா -நீண்ட பாம்பு (ஆதிசேடன்). 19-1

349. ஓங்கு மேருவை வேருடன்
பறித்து, ஒரு கையால்
வாங்கும் எண் அருங் கோடி
மேல் மந்தியின் சேனை
பாங்கு சூழ்தர, பரவை அது
ஆம் எனப் படியில்
ஆங்கு உயர்ந்திடு கபாடனும்
அக் கணத்து உற்றான்.
பரவை -கடல்;படி – உலகம். 19-2

350. வீரை ஏழையும் கலக்குறு
மிடுக்கினர், விரிந்த
பாரை வேரொடும் பறித்திட
வேண்டினும் பறிப்பர்,
ஈர் – ஐஞ்ஞூற்று எழு கோடி
வானரப் படை ஈண்ட,
தாரையைத் தந்த ததிமுகன்
நொடியினில் சார்ந்தான்.
வீரை -கடல்;தாரையைத் தந்த ததிமுகன் -தாரையின்
தந்தையாகியததிமுகன் 19-3

12. நாட விட்ட படலம்

351. சாரும் வீரர் சதவலி தம்மொடும்
கூரும் வீரர்கள் யாவரும் கூடியே,
நீரும் நும் பெருஞ் சேனையும் நின்றிடாப்
பேரும், பேதையைத் தேடுறும் பெற்றியால்.
சதவலி சாரும் வீரர் தம்மொடும் -சதவலி என்ற தலைவனைச்
சார்ந்துள்ள வீரர்களோடும்;கூரும் -(வலிமையால்) மிகும். 9-1

352. குட திசைப் படு பூமி, குபேரன் வாழ்
வட திரைப் படு மா நிலம் ஆறும் ஏற்று,
இடு திசைப் பரப்பு எங்கணும் ஓர் மதி
தொடர உற்றுத் துருவி இங்கு உற்றிரால்.
ஓர் மதி தொடர -ஒருமைப்பட்ட அறிவு உடன் தொழிற்பட 10-1

353. குடதிசைக் கண்
இடபன் குணதிசைக்
கடலின் மிக்க
பனசன் சதவலி
வடதிசைக்கண் அன்று ஏவினன் –
மான மாப்
படையின் வெள்ளத்துடன்
செலப் பான்மையால்.
மான மாப் படை -தன்னிலையில் தாழாத பெரும்படை 10-2

354. என்று கூறி, ஆங்கு ஏவினன்; யாவரும்
நின்று வாழ்த்தி விடை கொடு நீங்கினார்
அன்று மாருதிஆம் முதல் வீரர்க்குத்
துன்று செங்கதிரோன் மகன் சொல்லுவான்:
கதிரோன் மகன் -சுக்கிரீவன் 10-3

13. பிலம் புக்கு நீங்கு படலம்

355. ‘இந் நெடுங் கிரிகொலோ, எதுகொலோ?’ என
அந் நெடு மேருவோடு அயிர்க்கலாவது;
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய
பொன் நெடு முடி எனப் பொலியும் பொற்பது;
அயிர்க்கலாவது -ஐயப்படுதற்கு உரியது;அயிர்த்தல் -சந்தேகித்தல்.
12-1

356. வச்சிரமுடைக் குரிசில் வாள்
அமரின் மேல் நாள்,
மெச்சு அவுணர்
யாவரும் விளிந்தனர்களாக,
அச்சம் உறு தானவர்கள்
கம்மியனும் அஞ்சி,
வைச்ச பிலமூடிதன் மறைந்து
அயல் இருந்தான்.
வச்சிரமுடைக் குரிசில் -இந்திரன்;தானவர் தச்சன் -அசுரத்
தச்சனானமயன். 57-1

357. மாதுஅவள் உயிர்த்த மகவோர்
இருவர்; வாசப்
போது உறை நறைக் குழல் ஒருத்தி; –
புகழ் மேலோய்! –
ஏதம் உறு மைந்தர் தவம்
எய்த அயல் போனார்;
சீதள முலைச் சிறுமி
தாதையொடு சென்றாள்.
மாது -சுயம்பிரபையுடன் இருந்த தேவ மாது;போது -விரியும்
பக்குவத்திலுள்ள பூ;நறைக் குழல் -மணமுள்ள கூந்தல். 61-1

358. மத்த நெடு மா களிறு
வைத்த குலிசி வன் தாள்
சித்தமொடு மான்முகன் வணங்கி,
அயல் சென்றான்;
வித்தகனும், ஆயிர
விலோசனனும், மேன்மேல்,
முத்த நகையாளை நனி
நோக்கினன், முனிந்தான்.
களிறு -யானை (இங்கே இந்திரனின் ஐராவதம்);குலிசி –
வச்சிராயுதமுடைய இந்திரன்;ஆயிர விலோசனன் -இந்திரன். 61-2

359. மேருசவ் வருணி எனும்
மென்சொலினள், விஞ்சும்
ஏர் உறு மடந்தை, யுகம்
எண்ண அரு தவத்தாள்,
சீர் உறு சுயம்பிரபை,
ஏமை செறிவு எய்தும்
தாருவளர் பொற்றலமிசைக்
கடிது சார்ந்தாள்.
ஏர் -அழகு. 71-1

360. மேரு வரை மா முலையள்,
மென்சொலினள், – விஞ்சு
மாருதியினைப் பல உவந்து,
மகிழ்வுற்றே, –
ஏர் உறு சுயம்பிரபை,
ஏமை நெறி எய்த,
தாரு வளர் பொன் – தலனிடைக்
கடிது சார்ந்தாள்.
‘மேரு சவ்வருணி’ என்று தொடங்கும் முந்தைய பாடலும் இப்பாடலும்
ஒரே செய்தியைச் சொல்லும் மிகைப்பாடல்கள். சொற்களிலே சில மாற்றம்.
72-2

14. ஆறு செல் படலம்

361. இருவரும் கதம் எய்தி அங்கையில்
செரு மலைந்திடும் பொழுது, திண் திறல்
நிருதன் வெஞ்சினம் கதுவ, நின்றது ஓர்
பரு மராமரம் பறித்து வீசினான்.
இருவரும் -அங்கதனும் அசுரனும்;நிருதன் -அசுரன்;கதுவ –
சேர்ந்திட 7-1

362. வீசு மா மரம் சிந்த, வென்றி சேர்
ஆசு இல் அங்கதன் அங்கையால் மலைந்து,
ஓசை கொண்டு உறக் குத்தினான் உடல்;
கூசுறாத வன் குன்று ஒன்று ஏந்தினான்.
ஆசு இல் -குற்றம் இல்லாத 7-2

363. குன்று கையிடைக் கொண்டு எழுந்த, முன்
நின்ற அங்கதன், நெடு மராமரம்
ஒன்று வாங்கி மற்றவன் ஒடிந்திடச்
சென்று தாக்கினான், தேவர் வாழ்த்தவே.

364. ஆகையால் அங்கு அடைந்தவர் யாவர்க்கும்
ஓகையால் அமுது ஊட்டினர்; உண்டு உரம்
சோகம் மாறி, பின் தோகையை, அவ் வழி,
சேகு சேறு உறத் தேடினர், காண்கிலார்.
ஓகை -உவகை;சேகு -திண்மை (இங்கே வலிய நிலம்) 45-1

365. இனைய தண்டக நாட்டினுள் எய்தினார்;
அனைய நாட்டின் அருந் தவர் யாவரும்
நனி விரும்பி நயந்தனர், நான்மறைப்
புனிதர் என்று கொண்டு உள்ளுறும் புந்தியார்.
புந்தியார் -அறிவுடையார் 45-2

366. ‘செல்வர்’ என்றும், ‘வடகலை,
தென் தமிழ்ச்
சொல், வரம்பினர்’
என்றும், ‘சுமடரைக்
கொல்வர்’ என்றும், ‘கொடுப்பவர்’
என்றும், – அவ்
இல் வரம்பினர்க்கு ஈ
தேனும் ஈட்டதே.
சுமடர் -கீழ்மக்கள் 45-3

15. சம்பாதிப் படலம்

367. யாவரும் அவ் வயின்நின்றும், ‘மன் இயல்
பூ வரும், அருந்ததி பொருவும் கற்புடைத்
தேவியை எங்கணும் தேடிக் கண்டிலம்;
மேவினம்’ என்பது விளம்பினார்அரோ.
பூவரும் -தாமரை மலரின் வைகும்;அருந்ததி பொருவும் –
அருந்ததியைப் போன்ற 3-1

368. அன்னதோர் அளவையின் அங்க
நாடு ஒரீஇ,
தென் மலைநாட்டினைத் தேடிச்
சென்று, உடன்
இன் இசைத் தலைவரோடு
இரண்டு வெள்ளமும்
மன்று மா மயேந்திரத்
தலத்து வந்ததால்.
இசை -புகழ் 3-2

369. தாழந்த மா தவத்து
உலோகசாரங்கன் உறையும் சாரல்
வீழ்ந்தனென்; சிறைகள் தீய,
வெவ்வுயிர்த்து, உளமும் மெய்யும்
போழ்ந்தன துன்பம் ஊன்ற,
உயிர்ப்பொறை போற்றகில்லாது,
ஆழ்ந்தனென்; ஆழ்ந்த என்னை அருந்
தவன் எதிர்ந்து தேற்றி;
போழ்ந்தன துன்பம் -பிளப்பனவாகிய துன்பம்; உயிர்ப்பொறை –
உயிர்ச்சுமை. 56-1

370. ‘ ”கற்றிலார் போல உள்ளக்
களிப்பினால் அமரர் காப்பூடு
உற்றிடக் கருதி, மீப் போய்,
ஆதபத்து உனது மேனி முற்று
அழல் முருங்க, மண்ணை முயங்கினை;
இனி என்? சில் நாள்
மற்று நின் உயிரை ஓம்பாது
இகழ்வது மாலைத்து அன்றால்.
மீ -மேலே;ஆதபம் -வெயில்;முருங்க -எரிய;மாலைத்து
அன்று-இயல்பு அன்று 56-2

371. ”களித்தவர் கெடுதல் திண்ணம்; சனகியைக்
கபடன் வவ்வி, அன்று
ஒளித்த வாய் துருவி உற்ற
வானரர், இராம நாமம்
விளித்திட, சிறை வந்து ஓங்கும்;
வெவ்வுயிர்த்து அயரல்” என்று,
அளித்தனன்; அதனால் ஆவி
ஆற்றினேன் – ஆற்றல் மொய்ம்பீர்!
அயரல் -தளராதே;அளித்தனன் -அருளினான். 56-3

372. ‘அன்றியும், அலருள் வைகும்
அயனைநேர் முனிவர், வாய்மை
நன்றிகொள் ஈசற் காண்பான்
நணுகலும், வினையேன் உற்றது
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு, அது
யோகத்தின் உணர்ச்சி பேணி,
”பொன்றுதல் ஒழிமின்; யானே
புகல்வது கேண்மின்” என்றான்.
அயனை நேர் முனிவன் -நான்முகனை ஒத்த உலோக சாரங்க
முனிவன் 56-4

373. ‘ ”தசரத ராமன் தேவர் தவத்தினால்,
தாய் சொல் தாங்கி,
கச ரத துரகம் இன்றிக்
கானிடை இறுத்த காலை,
வசை தரும் இலங்கை வேந்தன்
வவ்விய திருவை நாடித்
திசை திரி கவிகள் உற்றால்,
சிறகு பெற்று எழுதி” என்ன,
கச, ரத, துரகம் -யானை, தேர், குதிரை;கவிகள் -குரங்குகள் 56-5

374. ‘எனக்கு உணவு இயற்றும் காதல்
என் மகன் சுபார்சுபன் பேர்
சினக் கொலை அரக்கன்
மூதூர் வடதிசைநின்று செல்வான்,
நினைக்கு முன் திருவோடு அந்த
நீசனை நோக்கி, ”எந்தை –
மனககு இரை எய்திற்று” என்னா,
சிறகினால் தகைந்து கொண்டான்.
தகைந்து -மோதி 58-1

375. காமத்தால் நலியப்பட்டு,
கனங்குழைதன்னைக் கொண்டு
போம்மத்தா! போகல்; எந்தை புன்
பசிக்கு அமைந்தாய்” என்று,
தாமத் தார் மௌலி மைந்தன்
தடுத்து இடை விலக்க, நீசன்

நாமத்தால் விரலைக் கவ்வ, நாணி
மீண்டு, எனக்குச் சொன்னான்.’
மத்தா -உன்மத்தனே;போகல் -போகாதே;நாமத்தால் –
அச்சத்தால் 58-2

376. முன்னர் அந் நிசாகர
முனி மொழிந்ததும்,
பின்னர் அச் சுபார்சுபன்
பெலத்து இராவணன் –
தன்னொடும் அமர் பொரச்
சமைந்து நின்றதும்,
கொன் இயல் சனகியைக்
கொண்டு போனதும்,
பெலத்து -வலிமையுடைய (பலம்);கொன் இயல் -பெருமைப் பண்பு
58-3

377. நினைந்து சம்பாதியும், நீதி யாவையும்
இனைந்தனன், வானரர் எவரும் கேட்கவே;
நினைந்து, கண்ணீர் விழ, நெடிது உயிர்த்தனர்;
வினைந்தனர், புரண்டனர்; விதியை நொந்தனர்.
இனைந்தனன் -வருந்தினான் 58-4

16. மயேந்திரப் படலம்

378. புள்ளரசு இன்ன வாய்மை சொல்லி
விண் போந்த பின்னர்,
தெள்ளிதின் உணர்ந்தார் யாரும்; அங்கு
அது சாம்பன் சிந்தித்து,
உள்ளவர் தன்னில் வல்லார் யார்
என உன்னி, யாண்டும்
தள்ளரும் புகழோன் வாயுத்
தனையனை நோக்கிச் செப்பும்:
புள்ளரசு -பறவைகளுக்கு அரசனான சம்பாதி;வாயுத் தனையன் –
வாயுவின் மகனாகிய அனுமன்.

379. ஆயவன் அங்குப் போகிய
பின்னர், அகமீதே
நோய் உறு தன்மைத்து
ஆகிய வீரர்தமை நோக்கி,
தூய மனத்தன் ஆகிய
வாலி தரு தொன்மைச்
சேயும் அவர்க்கே செப்பினன்,
நாடும் செயல் ஓர்வான்.
சேய் -மகன் (இங்கே அங்கதன்) (இப் படலத்தின் முதற் பாடலாக ஓர்
ஏட்டில் ‘புள்ளரசு’ எனத் தொடங்கும் பாடலும், பிறிதோர் ஏட்டில் ‘ஆயவன்’
எனத் தொடங்கும் பாடலும் காணப்பட்டது.)

380. ‘ஆரியன் மின்னி்ன் பேர்
எழில்கூறும் அமைவாலும்,
”காரியம் உன்னால் முற்றும்”
எனச் சொல் கடனாலும்,
மாருதி ஒப்பார் வேறு இலை
என்னா, மனம் எண்ணி,
சீரியன் மல் தோள் ஆண்மை
உரைத்தால் செயும், என்றே’
மின்னின் -மின்னல் போல்வளாகிய சீதை. 8-1

381. நாலு மறைக்கும் வேலியும்
ஆகி, நடு நிற்கும்
சீலம் மிகுந்தீர்! திங்கள்
மிலைச்சித் திகழ் வேணி,
ஆல மிடற்றான்மேலும் உதித்தீர்!
அது போதில்
காலின் நிறைக்கோ காலனும்
ஆகக் கடிது உற்றீர்.
திங்கள் மிலைச்சி -சந்திரன் சூடி;வேணி – சடை;
ஆலமிடற்றான் -நஞ்சினைக் கழுத்திலே கொண்ட சிவபிரான் 18-1

382. ஆதியர் இப் புத்தேள்
அடிப்பாரித்து அணவு ஆதற்கு
ஓது கருத்தில் சால
நினைத்திட்டு, ஒழிவு இல்லாப்
போது தளத்தில் புக்கிய
செய்கைத் திறனாலே
சாதல் கெடுத்துத் தான்
அழியாதீர் அதனாலே.
பாரித்து -விரும்பி;அணவு ஆதற்கு -அணுகுவதற்கு 18-2

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சிறை இருந்தவளின் இரண்டாம் மூன்றாம் பிரிவு–

December 19, 2020

ஸ்ரீ வசன பூஷணம்–சூரணை-8-

பிராட்டி முற்பட பிரிந்ததுதன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –

இந்த க்ருபாதி த்ரயத்தையும் எல்லாரும் அறியும் படி தானே வெளி இட்டு அருளின வைபவத்தை
ஸ்ரீ ராமாயணத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்தாலும் தர்சிப்பிக்கிறார் மேல் –

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வேச மானுஷீ
விஷ்ணோர் தேஹானு ரூபாம் வை கரோத்யே ஷாத்மனஸ் தானும் -என்கிறபடியே –
நாயகனான சர்வேஸ்வரனுடைய தத் தத் அவதார சஜாதீயமான விஹ்ரஹ பரிக்ரகம்
பண்ணி வந்து அவதரிக்கும் அவள் ஆகையாலே –
ராகவத்வேபவத் சீதா -என்கிறபடியே –
அவன் சக்கரவர்த்தி திரு மகன் ஆனவாறே தத் அநு ரூபமாக தானும் ஜனக ராஜன் திரு மகளான
பிராட்டி -தண்ட காரண்யத்திலே எழுந்து அருளி இருக்க செய்தே -ராவணன் பிரித்தான் என்ற ஒரு
வியாஜ்யத்தாலே –
பிரதமம் பெருமாளை பிரிந்து -இலங்கைக்கு எழுந்து அருளிற்று –

தேவ்யா காருண்யா ரூபாயா -என்று தத் குண சாரத்வத்தாலே –
காருண்யம் தானாக சொல்லும்படியான
தன்னுடைய பரம கிருபையை பிரகாசிப்பைக்காக -என்கை -எங்கனே என்னில் –

தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிகைக்காக தான் சிறை இருக்கையாலும் –
அவ் இருப்பில் தன்னை அல்லும் பகலும் தர்ஜன பர்ஜநம் பண்ணி அருவி தின்ற க்ரூர ராஷசிகள் -ராவணன் பராஜிதனாகவும்
பெருமாள் விஜயீகளாகவும்-திரிஜடை சொபனம் கண்டத்தாலே பீத பீதைகளாய் நடுங்குகிற தசையில் –
பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள் நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் –
நீங்கள் அஞ்ச வேண்டா என்று – அபய பிரதானம் பண்ணுகையாலும்-

அது உக்தி மாத்ரமாய் போகாமே -ராவண வாத அநந்தரம்
தனக்கு சோபனம் சொல்ல வந்த திருவடி அவர்களை சித்ர வதம் பண்ணும்படி காட்டித் தர வேணும் என்ன –
அவனோடே மன்றாடி ராஜ சம்ஸ்ரைய வச்யானாம்-இத்யாதியாலே அவர்கள் குற்றத்தை குணமாக உபபாதித்தும் –
மர்ஷயா மீஹா துர்பலா -என்று பிறர் நோவு கண்டு பொறுத்து இருக்க தக்க நெஞ்சுரம்
தனக்கு இல்ல்லாமையை முன்னிட்டும் -கார்யம் கருண மார்யென ந கச்சின் நா பராத்யதி -என்று
அவனுக்கு இரங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடி உபதேசித்தும் –
இப்படி ஒரு நிலை நின்று தான் அடியில் பண்ணின பிரதிக்ஜை அநு குணமாக
ஆர்த்ரா பராதரைகளை ரஷிக்கையாலும் -தன்னுடைய கிருபையை வெளி இட்டாள் இறே-

நடுவில் இத்யாதி -நடுவில் பிரிவாவது –
மீண்டு பெருமாளுடன் கூடி திரு அயோத்தியிலே எழுந்து அருளி திரு வயிறு வாய்த்து இருக்கிற காலத்தில் –
அபத்ய லாபோ வைதேஹி மமாயம் சமுபஸ்தித கிமிச்சசி சகாமா த்வம் ப்ரூஹி சர்வம் வரானனே -என்று
உனக்கு அபேஷை ஏது என்று கேட்டு அருள –
தபோ வனா நி புண்யா நி த்ருஷ்டும் இச்சாமி ராகவ-
கங்கா தீர நிவிஷடானி ருஷீணாம் புண்ய கர்மாணாம்
பல மூலாசினாம் வீர பாதமூலேஷூ வர்த்திதும்
ஏஷமே பரம காமோயன் மூல பல போகிஷூ
அப்யே கராத்ரம் காகுத்ச்த வசேயம் புண்ய கீர்த்திஷூ-என்று
தனக்கு உண்டான வன வாச ரஸ வாஞ்சையை விண்ணப்பம் செய்ய –

அத்தை பற்ற போக விடுவாரை போலே -லோக அபவாத பரிகார்த்தமாக –
பெருமாள் காட்டிலே போக விட போனது –
இப் பிரிவுக்கு பிரயோஜனம் -பெருமாள் கட்டிலே வைத்த போதொடு காட்டிலே விட்ட
போதொடு வாசியற -அவருடைய நினைவையே பின் செல்ல வேண்டும் படியான
தன்னுடையபத்நீத்வ பிரயுக்தமான -பாரதந்த்ர்யத்தை பிரகாசிப்பிக்கை-

கங்கை கரை ஏறின அநந்தரம் இளைய பெருமாள் கனக்க கிலேசப் பட்டு கொண்டு
பெருமாள் திரு உள்ளமாய் விட்ட கார்யத்தை விண்ணப்பம் செய்ய -அத்தை கேட்டு மிகவும் பிரலாபித்து –
ந கல்வத்யைவ ஸௌ மித்ரே -ஜீவிதம் ஜாஹ்ன வீஜலே
த்யஜேயம் ராகவம் வம்சே பரத்துர் மா பரிஹாச்யாதி -என்றாள் இறே –
இத்தால் ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்க தேட்டமாக நிற்க்கச் செய்தேயும் –
அது செய்ய மாட்டாதே
பெருமாள் நினைவை பின் சென்று தன பிராணனை நோக்கி கொண்டு இருக்க
வேண்டும் படியான -பாரதந்த்ர்யத்தை இறே பிரகாசிப்பித்தது –

பிறர்க்காக ஜீவிக்க வேண்டும் பரதந்தருக்கு முடிவு தேட்டமானாலும் முடிய போகாதே –
மாயும் வகை அறியேன் வல்வினையே பெண் பிறந்தே –திரு வாய் மொழி -5 -4 -3 – என்றார் இறே ஆழ்வார் –
பிரதம விச்லேஷத்தில் பத்து மாசத்துக்கு உள்ளே படுவது எல்லாம் பட்டவள் –
பதிர்ஹி தைவதம் நாரா பதிர்பந்து பதிர்கதி ப்ரானைரபி
ப்ரியம் தஸ்மாத் பார்த்து கார்யம் விசேஷத-என்று தான் அருளி செய்தபடியே
பதி சித்த அநு விதானமே நமக்கு ஸ்வரூபம் என்னும் பாரதந்திர புத்தியாலே இறே
அநேக சம்வத்சரம் பாடாற்று இருந்தது –
ஆக இப்படி இப் பிரிவிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை வெளி இட்டாள் இறே

அநந்தரம் -இத்யாதி –
அனந்தரத்தில் பிரிவாவது -மீண்டு பெருமாள் சன்னதியிலே வந்து இருக்க செய்தே பிரிந்து
பிறந்தகத்திலே புக்கு விட்டது –இப் பிரிவுக்கு பிரயோஜனம் –

அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அன்யாஹி மயா சீதா -என்று
உபய சம்மதமான தன்னுடைய அனந்யத்வ பிரயுக்தமான அனந்யார்ஹத்வத்தை
சர்வ சம்மதமாம் படி பிரகாசிப்பிக்கை -எங்கனே என்னில்

பெருமாள் அஸ்வமேதம் பண்ணி அருளா நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவானுடைய
நியோகத்தாலே குசலவர்கள் வந்து ஸ்ரீ ராமாயணத்தை பாடிக் கொண்டு திரியா நிற்க –
அத்தை பெருமாள் திரு செவி சாத்தி சன்னதியிலே அவர்களை அழைத்து விசெஷஞர் எல்லாரையும் கூட்டி
அவர்கள் பாட்டு கேளா நிற்கிற நாளிலே –
அவர்களை பிராட்டி உடைய பிள்ளைகள் என்று அறிந்த அநந்தரம்
பிராட்டி அளவிலே திரு உள்ளம் சென்று தனக்கேற சுத்தை ஆகில் கடுக-இத்திரளிலே நாளை வந்து
ப்ரத்யய முகத்தாலே தன சுத்தியை பிரகாசிப்பாளாக என்று தூத முகேன பெருமாள்
மகரிஷிக்கும் பிராட்டிக்கும் அறிவித்து விட –

அப்படியே ஸ்ரீ வால்மீகி பகவானை முன்னிட்டு கொண்டு
அந்த மகா பர்ஷத்திலே -பெருமாள் சன்னதியிலே -வந்து ஒடுங்கி நிற்க செய்தே -ஸ்ரீ வால்மீகி பகவான்
இவள் சுத்தை என்னும் இடத்தை பல முகத்தாலும் சொல்ல-பெருமாள் இவள் சுத்தை என்னும் இடம் நானும் அறிவன் –
மகரிஷி சொன்னதுவே போரும் -ஆனாலும் லோக அபவாத பரிகர்த்தமாக ஒரு ப்ரத்யயம் இத் திரளிலே
பண்ண வண்டும் என்று திரு உள்ளம் ஆன படியாலே –
சர்வான் சமாகதான் த்ருஷ்ட்வா சீதா காஷாய வாசி நீ
அப்ரவீத் ப்ராஞ்சலீர் வாக்கியம் அதோ திருஷ்டி ராவான்முகீ –என்கிறபடியே
கையும் அஞ்சலியுமா கவிழ தலை இட்டு கொண்டு நின்று –

யதாஹம் ராகவாதந்யம் மனசாபி ந சிந்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி
மனசா கர்மணா வாசா யதா ராமம் சமர்த்தையே
ததா மே மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி
யதைதத் சத்ய முக்தம் மே வேத்மி ராமாத் பரம் நச ததாமே
மாதவீ தேவி விவரம் தாது மர்ஹதி -என்று சபதம் பண்ண –

ததா சபந்த்யாம் வைதேஹ்யாம் ப்ராதுராசீன் மகாத்புதம் பூதலா
துத்திதம் திவ்யம் சிம்ஹாசன மனுத்தமம் த்ரியமாணம் சிரோபிச்து நாகைரமிதவிக்ரமை
திவ்யம் திவ்யேன வபுஷா சர்வ ரத்ன விபூஷிதம்
தச்மிம்ச்து தரணீ தேவீ பாஹூப்யாம் க்ருஹ்ய மைதலீம்
ச்வாகதே நாபி நன் யை நா மாசனே சோபவேசயத்
தாமாச நகதாம் த்ருஷ்ட்வா பிரவீ சந்தீம் ரசாதலம் புஷ்ப
வ்ருஷ்டிர விச்ச்சின திவ்யா சீதா மவாகிரத் -என்று

அவ்வளவிலே பூமியில் நின்றும் ஒரு திவ்ய சிம்ஹாசனம் வந்து தோன்ற –
அதிலே பூமி பிராட்டி இவளை ஸ்வாகத ப்ரசன பூர்வகமாக -இரண்டு கையாலும்
எடுத்து கொண்டு போய் வைக்க –
ஆசன கதையாய் கொண்டு ரஸா தலத்தை பிரவேசியா
நிற்க இவளைக் கண்டு திவ்ய புஷ்ப வ்ருஷ்டி இடைவிடாமல் இவள் மேல் விழுந்தது என்கையாலே –
இப் பிரிவிலே தன்னுடைய அனந்யார்ஹத்வத்தை பிரகாசித்தாள் இறே –

ஆக –
இவ் அவதாரத்தில் இவளுக்கு சொல்லப் பட்ட விஸ்லேஷ த்ரயத்துக்கும் ஹேது
இக் குணங்களை இப்படி வெளி இடுகைக்கு ஆய்த்து-
இங்கன் அன்றாகில் -அநபாயி நியாய்-அகர்மவச்யையாய் –
இருக்கிற இவளுக்கு கர்ம வச்யருக்கு போலே -இப்படி பிரிவு வருகைக்கு யோக்யதை இல்லை இறே —

தன்னுடைய புருஷகாரத்வ உபயோகியான குணங்களையும் –
புருஷகாரத்வத்தையும் பிரகாசிப்பைக்காக -வந்த அவதாரம் இறே இது –
ஆகை இறே யது தான்யதுதா ஹரந்தி சீத அவதார முகமேத தமுஷ்ய யோக்யா -என்று பட்டர் அருளி செய்தது –

இப்படி சேதனர் பக்கல் அனுக்ரஹத்துக்கு உடலான கிருபையும் –
ஈஸ்வரன் பக்கல் அணுகி வசீகரிக்கைக்கு உடலான பாரதந்த்ர்யாதிகளையும் -தானே வெளி இட்டது –

சாஸ்த்ரங்களில் கேட்கிற மாதரம் அன்றிக்கே -அனுஷ்டான பர்யந்தமாக காண்கையாலே –
தன்னை புருஷகாரமாக பற்றுவாருக்கு ருசி விச்வாசங்கள் உறைக்கைக்கு உறுப்பாக-

——————

உத்தர காண்டத்தை வாசிப்பு வசதிக்காக இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

முதற் பகுதியில் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு பல முனிவர்கள் ராமனை சந்திக்கின்றனர்.
அப்போது ராவணன், வாலி மற்றும் அனுமனின் தனி வரலாறுகள் நம்முன் வருகின்றன.

இரண்டாம் பகுதி யுத்த காண்டத்தின் முடிவில் சீதை அக்கினிப் பிரவேசம் செய்த சூழலின் தொடர்ச்சியாக வருகிறது.
லவ குசர்களின் பிறப்பு வளர்ப்பு, மற்றும் ராமனின் அசுவமேத யாகம் வழி தந்தை மகன்கள் சந்திப்பு ,
பிறகு சீதை பூமித்தாயின் மடியில் மறைதல், இறுதியாக ராமன் மற்றும் சகோதரர்களின் முடிவு ஆகியவை வருகின்றன.

சீதை மீண்டும் வனவாசம் சென்றது மிகவும் விவாதிக்கப்பட்ட ஒரு வரலாறாகும்.

முதலில் ஒட்டக்கூத்தரின் சொற்களில் காண்போம்:

வாளணி விசயன் பத்திரன் தந்தவக்கிரன்
காளியன் முதலோர் சொற் பரிகாசக் கதைகள் கேட்டினிது கொண்டாடி–(பாடல் 724 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஆங்கவரிவ்வாறு உரைத்திடக் கேட்ட அரசர் கோன் அவர்களை நோக்கி
நாங்கள் இந் நகரில் நாட்டினில் பிறக்கும் நன்மையுந் தீமையுங் கேட்டுத்
தீங்கவை அகற்றிச் சிறந்தன செய்ததும் செய்யும் இவ் விரண்டும் நீர் கேட்ட
நீங்கள் ஒன்றுக்கும் கூசலீர் என்ன நின் பல கேட்டி என்றுரைப்பார்–(பாடல் 729 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

மன்னவன் ராமன் மான பங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க்
கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடு போய் இடைவிடாது ஈராறு திங்கள்
நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு
பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெரு நிலத்தோர்-(பாடல் 728 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஓத நீர் வேலையுலகு உளோர் இல்லது உளது எனில் உள்ளது ஆம் உள்ளது
யாதொரு பொருளை இல்லை யென்று உரைக்கில் இல்லையாம் ஈது உலகியற்கை
ஆதலால் அவளை அருந் தவத்தோர்கள் ஆசிரமத்து அயல் விடுத்தும்
ஈது நான் துணிந்த காரியம் இனி வேறு எண்ணுவதொரு பொருளில்லை (பாடல் 732 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ராமனின் நம்பிக்கைக்குரிய படை வீரரான விசயன், தந்தவக்கிரன், காளியன் ஆகியோர் கூறிய நாட்டு நடப்பு பற்றிய
சுவையான நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்த ராமன்
”நீங்கள் நல்லதும் கெட்டதுமானவற்றைப் பார்த்துச் சொல்லுவதில் தள்ள வேண்டியவற்றைத் தள்ளி மீதியைச் சொன்னீர்கள்.
நடப்பு எதுவோ அதைக் கூசாமற் கூறுவீராக” என்றான்.

பிறகு அவர்கள் “ராமன் மானக்கேட்டான ஒரு விஷயத்தை நினைக்கவும் மாட்டார். வானவர்களுக்குத் தீங்கிழைத்த
ராவணனின் சிறையில் பன்னிரண்டு மாதம் இருந்தவளை மனைவியாக வாழ்க்கை நடத்துவது பேரிழுக்கே”
என மக்கள் பேசுகின்றனர் என்றார்கள்.

கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே உண்மை.
அவர்கள் இது இல்லை என்று கூறினால் இருக்காது என்று பொருள். இதுவே உலக இயற்கை.
எனவே அவளைத் தவம் புரியும் முனிவர்களது ஆசிரமத்துக்கு அருகே விடுவோம்.
இதுவே என் தீர்க்கமான முடிவு. இதில் மாற்றமில்லை.

இதைத் தொடர்ந்து லட்சுமணன் வால்மீகி ஆசிரமம் அருகே சீதையை விடும் போது கூறுகிறான்.

நன்னெறி நகரும் நாடும் கடந்து போய் அடவி நன்னித்
தன்னுயிர் தன்னை விட்டுத் தடம் புகழ் கொண்ட ஐயன்
இன்னுயிர்த் தோழனாய் வெழில் கொள் வான்மீகி வைகும்
பங்கை சாலையின் பாற் பாவையை விடுதி என்றான்

என்றவனியம்ப அண்ணல் ஏவலை மறுக்க அஞ்சி
இன்றுனைக் கொன்று போந்தேன் என்றிவை இளையோன் சொல்ல
கன்றிய கனலினூடு காய்ந்த நாராசம் சீதை
தன் துணைச் செவியில் ஏறத் தரணியில் தளர்ந்து வீழ்ந்தாள்–(பாடல் 752, 753 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

நன்னெறியில் வாழும் நாட்டின் மன்னரான தசரதன் நகர் நாடும் தாண்டிப் புகழ் பெற்றவர்.
அவது உயிர்த் தோழரான வால்மீகியின் ஆசிரமத்திற்கு அருகே அவளை விடுக என்றான்.

அண்ணல் ராமனின் ஏவலை மறுக்க அஞ்சி இன்று உன்னைக் கொண்டு வந்தேன் என்று லட்சுமணன் கூறியது
பழுக்கக் காய்ச்சிய இரும்பு செவியில் நுழைந்தது போல மனத் துயருற்றுத் தரையில் வீழ்ந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
பௌராபவாதஹ சுமஹா(ம்) ஸ்த்தா ஜன்பதஸ்ய ச
வர்த்ததே மயி பீபத்ஸா மே மர்மாணி க்ருந்ததி- (பாடல் 3, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

தற்சமயம் பொது மக்களிடையே என்னைப் பற்றியும் சீதையைப் பற்றியும் மிகவும் தவறான அபிப்ராயம் பரவி உள்ளது.
என் மீது அவர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். அவர்களது வெறுப்பு என் இதயத்தைப் பிளக்கிறது.

அப்யஹம் ஜீவிதம் ஜஹா(ன்) யுஷ்மான் வா புஷர்விபாஹா
அபவாத பயாத் பீதஹ கிம் புனர்ஜங்காத்மஜம்–(பாடல் 14, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

(ராமன் தன் சகோதரர்களைப் பார்த்துச் சொல்வது) மனிதருள் உயர்ந்த என் உறவுகளே ! மக்களின் நிந்தனைக்கு அஞ்சி
என் உயிரையும் உங்களையும் கூடத் தியாகம் செய்யத் தயார். சீதையைத் தியாகம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

கங்கா வாஸ்து பரே பாரே வால்மீகேஸ்து மவாத்மனஹ
ஆஷ்ரமோ திவ்யாஸ்ன்ஷஸ்தம்ஸாதிரமார்ஷிதஹ
தத்ரைதாம் விஜனே தேஷே விஸ்ருஜ்ய ரகுநந்தன
சீக்ரமாகச்ச சௌமித்ரே குருஷ்ய வசனம் மம
தஸ்மாத் த்வாம் க்ச்ச சௌமித்ரே நாத்ர கார்யோ விசாரணா
அப்ரீதர்ஹி பரா மஹ்யம் த்வயைதத் ப்ரதிவாரிதே–(பாடல் 17,18,19,20 ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

கங்கையின் அந்தக் கரையில் மகாத்மா வால்மீகி முனிவரின் திவ்ய ஆசிரமம் உள்ளது. நீ சீதையை அந்த ஆசிரமத்தின்
அருகில் விட்டு விடு. சீதை விஷயத்தில் நீ வேறு எந்த விஷயத்தையும் என்னிடம் கூறாதே

எனவே லட்சுமணா ! நீ இப்போது போ. இவ்விஷயத்தில் எதையும் யோசிக்காதே.
நீ எனது இந்த முடிவில் தடை ஏற்படுத்தினால் எனக்கு மிகவும் கஷ்டம்.

ஸாத்வம் த்யத்வா நிருபதினா நிர்தோஷா மம சன்னிதௌ
பௌராபவாத்பீதேன க்ராஹாம் தேவி ந தேஅன்யதா
அஷ்ரமாந்தேஹு ச் மயா த்ய்க்த்வ்யா த்வம் பவிஷ்யஸி
ராக்ஞஹ ஷாஸ்ன்மாதாய ததைவ சில தௌர்வாதம்–(பாடல் 13,14 ஸர்க்கம் 47 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

நீங்கள் என் முன்னே குற்றமற்றவராய் நிரூபித்துள்ளீர்கள். இருந்தாலும் மக்களின் அபவாத்திற்குப் பயந்து
மகாராஜா தங்களைத் துறந்து விட்டார். நான் அவரின் ஆணையாகவும் அதுவே தங்களின் விருப்பம் என்றும்
நினைத்துத் தங்களை ஆசிரமத்துக்கு அருகே விட்டு விடுவேன்.

லக்ஷ்மணஸ்ய வசஹ ஸ்ருத்வா தாருணம் ஜனகாத்மஜா
பரம் விவிதமாகம்ய வைதேஹி நிப பாத ஹ–(பாடல் 1, ஸர்க்கம் 48 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

லட்சுமணனின் இந்தக் கடுமையான் சொற்களைக் கேட்ட சனகன் மகள் சீதை மனமுடைந்தாள்.
மூர்ச்சையுற்று தரையில் விழுந்தாள்.

மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி என்பதே ராமனின் தீர்க்கமான முடிவாயிருந்தது.
இதன் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதை, மறுமலர்ச்சியை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதை
மக்கள் பின்பற்றும் ஆன்மீகவாதிகளிடம் சிந்தனையாளர்களிடமிருந்தே மன்னன் எதிர்பார்க்கிறான். இது ராமனின் தரப்பு.

சீதையைத் தனியே காட்டுக்கு அனுப்பியது இதே சூழலில் தான்.
அதுவும் அவள் கருவுற்றிருந்தாள் என்பது கவனிக்கப் படவேண்டிய ஒன்று.
அந்த நிலையிலும் அவள் காட்டுக்கு அனுப்பப் பட்டாள்.

பிறகு வால்மீகி என்னும் முனிவரின் பராமரிப்பில் மகன்களை வளர்த்து அம்மகன்கள் அசுவமேத யாகத்தின் போது
வந்த குதிரையைப் கைப்பற்றி சித்தப்பாக்களுடன் சண்டையிட
இறுதியில் அப்பாவை நோக்கி அம்பு எய்யும் முன் சீதை வந்து தடுக்கிறாள்.
மறுபடி அயோத்தி வந்த அவளைத் தன் தூய்மையை நிரூபிக்கும் படி ராமன் ஆணையிட
பூமித்தாயின் மடியில் ஐக்கியமாகிறாள்.

ஒட்டக்கூத்தரின் பாடல்களில் :

வால்மீகி முனிவரை நோக்கி ராமன் கூறுவான்:
முனிவ நீ அறுளிய மொழியை வானவர்
அனைவரும் யானும் முன்னறிவம் ஆயினும்
கனை கடல் உலகு உளோர் காணல் வேண்டும் என்று
இனையன இராகவன் எடுத்து இயம்பினான்-(பாடல் 1257 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

‘முனிவரே ! தாங்கள் கூறுவதை நானும் வானோரும் ஏற்கனவே நன்கு அறிவோம். ஆயினும் கடலால் சூழப்பட்ட
இவ்வுலகிலுள்ள மக்கள் சீதையின் கற்பின் சிறப்பை அறிய வேண்டும்.

விசைப் பாசத்தை அறுத்த முனி வேள்வி காத்து மிதிலை புகுந்து
எனக்கா ஈசன் வில்லிறுத்து அன்று எனக்கைப் பிடித்த எழிலாரும்
புனக்காயம் பூ நிறத்தானையன்று ம்ற்றொரு பூ மனலான்
மனத்தால் வாக்கால் நினையேனேல் வழிதா எனக்கு மண்மகளே-.(பாடல் 1264 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

பாசம் நீக்கிய பற்றற்ற விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்துப் பிறகு வில்லை ஒடித்து என்னைக் கைப் பிடித்த
ராமனை அன்றி வேறு ஒரு மன்னனை நான் மனதாலோ வாக்காலோ நினையாதும் சொல்லாதும் இருந்தது
உண்மை என்றால் மண்மகளே எனக்குப் பிளந்து வழி விடு.

சேணுலாவிய தலமடந்தை சீதை தன்
பூணுலாவிய புலம் பொருந்தப் புல்லுறுஇ
வாள் நிலாவிய கதிர் வழங்கல் செல்கலாக்
கீணிலைப் படலமும் கிழியப் போயினாள்

நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சீதையின் தோள்களைப் பற்றி தேவ லோகத்திலிருந்து வந்தவளான பூமாதேவி
சூரியனின் ஒளிகூட நுழைய முடியாத பூமியைப் பிளந்து உள்ளே சென்று மறைந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
ஷீவஹ ப்ரபாதே து ஷபர்த் மைதிலி ஜனகாத்மஜா
கரோது பரிஷன் மத்யே ஷோதனர்த்தே மமைவ ச-(பாடல் 6 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

நாளை காலை மிதிலை மன்னரின் மகள் நிறைந்த சபையில் வந்து எனது களங்கத்தைப் போக்கும் சபதம் செய்வாராக.

யனன தத் சத்யமுக்தம் மே வேம்தி ராமாத் பரம் ந ச
ததா மே மாதவி தேவி விவ்ரம் தாதுர்மஹதி (பாடல் 16 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

தஸ்மின்ஸ்து தரணி தேவி பாஹூப்யாம் க்ருஹ்ய மைதிலீம்
ஸ்வாகதேனாபி நந்த்யைநாமாசனே கோபவேஷயத் (பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

சிம்மாசனத்துடன் பூமாதேவி அழகிய வடிவுடன் வந்தாள். அவள் மிதிலாகுமாரி சீதையைத் தனது இரு கரங்களால்
எடுத்து மடியில் வைத்து வரவேற்கும் விதமாக அவளை வணங்கி சிம்மாசனத்தின் மீது அமர்த்தினாள்.
(பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஒட்டக்கூத்தர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-