Archive for the ‘ஸ்ரீ யதிராஜ விம்சதி’ Category

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -11-

October 29, 2020

பதினோராவது அத்யாயம் -தந்த்ர அத்யாயம்
தந்திரம் என்பது ஒரு கர்மத்தை ஒரே தடவை அனுஷ்டிப்பதால் இரண்டு காரியங்களுக்கு
உபயோகப்படுத்துவத்தைச் சொல்லும்
தந்திரம் -ஸக்ருத் க்ருதம் என்ற பொருள்
ப்ரஹ்ம நிஷ்டர் நித்ய கர்மங்களை அனுஷ்டிப்பது அவர்கள் பக்தி நிஷ்டைக்கும் அங்கம் ஆகும் –
பக்தி யோகத்துக்காக ஒரு முறை அனுஷ்டிப்பது வர்ணாஸ்ரம தர்மத்துக்காக
ஒரு முறை அனுஷ்டிப்பது என்பது இல்லை
ஸர்வதாபி த ஏவ உபய லிங்காத -என்னும் ப்ரஹ்ம ஸூ திறத்தால் இது காட்டப்பட்டது
ஒரே தடவை செய்வது தந்திரம் -பல தடவை செய்வது ஆவ்ருத்தி
ஏழு முதல் பத்து அத்தியாயங்கள் வரை விக்ருதிகளில் ப்ரக்ருதிகளில் இருந்து
தர்மங்களை வாங்கிக் கொள்வதைப் பற்றின விசாரம்
தந்திரமா ஆவ்ருத்தியா என்ற விசாரம் ப்ரக்ருதி விக்ருதி என்ற இரண்டு கர்மங்களுக்கும் பொது

தானியத்தை உலக்கையால் உரலில் குத்தி உமியை எடுக்க வேணும் என்பது இரண்டிலும் உண்டு –
ஒரு தடவையா பல தடவையா என்ற விசாரம் இரண்டுக்கும் பொது
ஒரு தடவை குத்தினால் உமி போவது இல்லை -உமியைப் போக்கி மாவாக்கி புரோடாசத்தைத் தட்ட வேணும்
இந்த மாவாக்கும் த்ருஷ்ட ப்ரயோஜனத்துக்கு உலக்கை குத்துக்களை திரும்ப திரும்ப
மாவாக்கும் வரையில் ஆவ்ருத்தி செய்ய வேணும்
ப்ரயாஜன்கள் என்னும் அத்ருஷ்ட பிரயோஜனமாக அங்கங்களை ஒரு தடவை செய்தால் போதும் –
அது அத்ருஷ்டத்திற்காக
ஸக்ருத் க்ருத சாஸ்த்ரார்த்த -அத்ருஷ்ட ப்ரயோஜனத்துக்காக சாஸ்திரம் செய்ய விதிப்பதை
ஒரு தடவை செய்தால் போதும் என்பது சாமான்ய நியாயம்
கார்ய கர்மங்களை பல தடவை செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும்
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய -பிரபத்தி என்னும் சாஸ்த்ரார்த்துக்கு ஒரு அனுஷ்டானம்
ஆவிருத்திர் அஸக்ருத் -என்று பக்தி ஸ்மரணத்துக்கு யாவதாயுஷம்
ஆவ்ருத்திக்க வேண்டும் என்று ஸூத்ரம் –

நான் பாபம் செய்தாலும் தந்திரமாக ஒரு தடவை செய்து விட்டு விடுகிறேனோ –
திரும்பவும் திரும்பவும் ஆவ்ருத்தி செய்கிறேனே என்று
தந்திரம் ஆவ்ருத்தி என்ற பத்தாவது அத்யாய விஷயத்தை இங்கே ஸூசிப்பது ஸ்பஷ்டம் என்பது
ரசிகர் ரசிக்கத் தக்க விஷயம்
புன புன கரணம் என்பது தந்த்ரத்துக்கு எதிர்த்தட்டான ஆவ்ருத்தி சாஸ்த்ரார்த்தமான அத்ருஷ்டத்துக்கு
அனுஷ்டிப்பது அல்லவோ ஒரே தடவை என்னும் ஸக்ருத் மரியாதை
ருசியினால் ஸ்வ இச்சையினால் அதிக சற்று இன்பத்துக்காக பாபம் செய்கையில் அதில்
ஆவ்ருத்தியே போக்யமாய் இருக்கும் என்று பாபத்தை புன புன கரணத்தைக் கூறுகிறார்
பதினோராம் அத்யாயம் நான்காம் பாதத்தில்
தஸ்ய புன பிரயோகாத் மந்த்ரஸ்ய ச தத் ஸ்மரண்த்வாத் புன பிரயோக என்று
வேத மந்த்ரங்களை -ப்ரோக்தங்களை –
மந்த்ர அப்பியாச கர்மண புன பிரயோகாத் -என்றது முதலான ஸூ த்ரங்கள் விசதம் ஆக்குகின்றன –

பாபே க்ருதே யதி பவந்தி பய அனுதாப –
லஜ்ஜா புன கரணம் அஸ்ய கதம் கடேத
மோஹேந மே ந பவதி இஹ பயாதிலேச-
தஸ்மாத் புன புன அகம் யதிராஜ குர்வே–11-

யதிராஜ-யதிராஜனே
பாபே க்ருதே -பாபம் செய்யப் பட்ட அளவிலே
பய அனுதாப -லஜ்ஜா-என்ன தீங்கு விளையும் என்கிற பயம் -தீமை செய்து விட்டோமே
என்கிற பச்சாதாபம் -வருத்தம் – வெட்கம் ஆகிய இவை
யதி பவந்தி -உண்டாகுமே யானால் -இருக்குமே யாகில்
அஸ்ய -இவ்விதமான செய்கையை
புன கரணம் -திரும்பவும் செய்வது என்பது
கதம் கடேத-எப்படிக் கூடும்
மோஹேந –மோஹத்தால் -மதி மயக்கத்தால்
மே -எனக்கு
இஹ-இந்த விஷயத்தில் –பாபம் செய்தலில் –
பயாதிலேச-பயம் முதலியவைகள் ஈஷத்தேனும்
ந பவதி -உண்டாகிறதே இல்லை –
தஸ்மாத் -அதனால்
அஹம் புன புன அகம் குர்வே-நான் திரும்பவும் திரும்பவும் தீங்கையே செய்கிறேன்

பாபே க்ருதே
க்ருதே பாபே அநு தாபோ வை யஸ்ய பும்ஸ ப்ரஜாயதே -பிராயச்சித்தம் து தஸ் யைகம்
ஹரி ஸம் ஸ்மரணம் ஸ்ம்ருதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6 ஸ்லோகத்தை ஸ்மரித்து
அதே பதங்களுடன் தொடங்குகிறார் –
ஆனால் ருஷி பேசிய கிரமப்படி பாவியேனும் பேசலாமோ என்று நினைத்து க்ரமத்தை மாற்றுகிறார்
அநு தாபம் உள்ளவனுக்குத் தான் ப்ராயச்சித்தத்தில் அதிகாரம் -ஹரி ஸ்மரணம் ப்ராயச்சித்தமே –
ஆனாலும் அனுதாபம் இருந்து தீர வேணும் -என்று ஸ்ரீ விஷ்ணு சித்தர் வியாக்யானம் –

க்ருதே என்றால் ஒரு தடவை செய்யப்பட அளவில் என்று ஆகலாம் –
ஒரு தடவை செய்தால் மறு தடவை செய்ய வேண்டியது இல்லை என்கிற நியாயம் தர்ம அனுஷ்டான விஷயம்
பாப்பம் செய்வது சாஸ்த்ரார்த்தம் அல்ல -பாபத்தை ஒரு தடவை கூட செய்யக் கூடாது சாஸ்திரத்தை மீறி
ஸ்வதந்த்ரனாகச் செய்யத் துணிந்த போது கூட ஸக்ருத் என்கிற சாஸ்த்ர நியதி உண்டோ என்பது இதில் ரஸம்

பய அநு தாப லஜ்ஜா
சிஷை வருமோ என்கிற பயம்
பாப்பம் செய்கிறோமே என்கிற பச்சாதாபம்
பாபியான பான் எங்கனே ஜனங்கள் முகத்தில் விழிப்பது -தலை காட்டுவது என்கிற வெட்கம்
திக சுசி மவி நீதம் நிர்த்தயம் -நிர்ப்பயம் -மாமலஜ்ஜம் –என்கிறபடி
பாப்பம் செய்தும் பயமும் அனுதாபமும் லஜ்ஜையும் இல்லாது இருப்பது தீமை
பாபம் செய்ததும் லஜ்ஜையும் அனுதாபமும் பின்னொரு தடவை பாபம் செய்கிறது இல்லை
என்கிற உப ரதியும் நிறுத்தலும் -வேண்டும் –

அநுதாபாது பரமாத் பிராயச்சித்த உன் முகத்வத -என்பர்
இவை பாபத்தை லகு படுத்திக் கழிக்க உபாயங்கள்

யதி பவந்தி
உண்டாகுமே யானால்

அஸ்ய
இந்தப் பாபத்தை
பாபத்தை இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூட நா எழும்ப வில்லை
பொதுவான பேச்சே இங்கு -இன்னது என்று குறிப்பிட்டு பேசக் கூடாதலால்
இது -என்று பொதுவான பேச்சு 0பேதை பாலகன் அது ஆகும் போல்
இது என்பதால் செய்த பாபம் எதிரே நிற்கிறது என்றும் பொருள் கிடைக்குமே –

புன கரணம்
இரண்டாவது தடவை செய்தால் ஆவிருத்தி -நினைப்பதோடு நிற்காமல் செய்து தீருவது இங்கே புன கரணம்
நான்காவது பாதத்தில் புன புன அகம் யதிராஜ குர்வே-என்கிறார்

கதம் கடேத
எப்படிக் கூடும்
பயம் அனுதாபம் லஜ்ஜை இவைகள் ஒருந்தால் அதை திரும்பவும் செய்வாரோ
மறுபடியும் மறுபடியும் செய்வதால் நிறுத்துவதற்குக் காரணமான இவற்றின் லேசமும் இல்லை என்று தீர்மானம்
விருத்த கார்ய ஸத்வாத் காரணா பாவ –வ்யாபக விருத்தோ பலப்தி
பாபத்தின் உப ரதி -நிறுத்துதல் -என்றகார்யம் இல்லாததால் நிறுத்துவதற்குக் காரணங்களான
இவைகளின் லேசமும் இல்லை என்பது திண்ணம் –

மோஹேந
மோஹத்தால்
பாப ருசி வெறி மயக்கத்தால் விவேகம் இருள் மூடிப்போய்
புகையால் அக்னி போலும்
அழுக்கால் கண்ணாடி போலும்
கர்ப்பப்பையினால் கர்ப்பம் போலும்
ஞானம் மூடித் தலை எடுக்க மாளாமல் அழுந்திப் போய் விட்டது
பாப அனுதாப லஜ்ஜைகள் ஏன் உண்டாக வில்லை என்று கேட்பீரோ
அவை உண்டாகாமல் செய்யும் காரணம் மோஹம் என்னும் இருள் சூழ்ந்து இருப்பதே –
பாபா ருசி என்னும் விகாரம் வெறி மோகம் மண்டிப் போய்விட்டது –

மே
எனக்கு

பயாதிலேச
மூன்றும் உண்டாக வேண்டாம்
ஒன்றில் துளியாவது உண்டாக வில்லையே

ந பவதி இஹ –
இந்த தர்ம க்ஷேத்ரமான கோயிலிலும்
ஸந்யாசியான எனக்கும்
ஸத்யம் தலை எடுக்காமல் மோகம் மூடுகிறதே
பீட் யந்தே க்ருஹீண கதம் நு -சம்சாரிகள் என்ன பாடு படுவரோ –

தஸ்மாத் புன
அதனாலே அல்லவோ
இம்மூன்றின் லேசமும் இல்லாத காரணத்தில் அல்லவோ என்று அன்வயம்
புன –
காரணம் சம்வபிக்குமோ என்று முதலில் கேட்டதுக்கு
புன
கரணம் மட்டும் அல்ல
புன புன
கரணமும் சம்பவிக்கலாம் என்பதை ஸ்தாபிப்பதாகும்

புன புன
திரும்பவும் திரும்பவும் -இத்தனை தடவை என்று கணக்கு இல்லை
சப்தத்தால் இரண்டு தடவை வீப்ஸை செய்ததற்கு எண்ணற்ற அநேகம் தடவைகள் என்று பொருள்

அகம் குர்வே
பாபத்தைச் செய்கிறேன்
என் சந்தோஷத்துக்கே செய்கிறேன்
செய்து சந்தோஷிக்கிறேன்
ஆத்மநே பத பிரயோகம் அழகு –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -10-

October 29, 2020

மீமாம்ஸையில் பத்தாவது அத்யாயம் பாத அத்யாயம்
மூலமான ப்ரக்ருதியில் உள்ள தர்மங்கள் விக்ருதியில் பொருந்தக் கூடாமல் போனால்
அந்த தர்மங்கள் பாதிக்கப் பட்டு அவை வராமல் நிவர்த்திக்கும்
தர்மங்களைப் பாதிப்பதும் பாதத்தால் தர்ம நிவ்ருத்தியும் அந்த அத்தியாயத்தில் விஷயம்
தர்மங்களை அதர்மம் பாதிக்கும்
அதர்மோ தர்ம நாஸன -என்றார் திருவடி ராவணன் இடம் அவன் சதஸ்ஸில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி என்பதில் ப்ரபன்னருக்கு நிவ்ருத்தி தர்மம் ஆகும்
நான் பலவிதமான கொடிய அபசாரங்களால் தர்மங்களைப் பாதிக்கிறேன்
அவஸ்ய கர்தவ்யங்களான தர்மங்களைச் செய்யாமல் நிவர்த்திப்பதால் எனக்கு நிவ்ருத்தி உண்டு என்று காட்டி
இந்த இரண்டு விதங்களால் பாத அத்யாய விஷயங்களை இந்த
பத்தாவது ஸ்லோகத்தில் ஒருவாறு ஸூ சிக்கிறார்
அவ் வத்யாயத்தில் உபபாதித்த படி இல்லாவிடினும்
ஒருவாறு தர்மங்கள் பாதமும் நிவ்ருத்தியும் தம்மிடம் உள என்று பேசும் ரஸம் ரசிக்க மநோ ஹரம் –

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா –
யோஹம் சராமி சத்தம் த்ரிவித அபசாரான்
சோஹம் தவாப்ரியகர ப்ரியக்ருத்வ தேவம் –
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க–10-

யதிராஜ-யதிராஜனே
ஹா ஹந்த ஹந்த -ஆ ஆ ஐயோ ஐயோ
ய அஹம் -யாது ஒரு நான்
மநஸா க்ரியயா ச வாசா -மனத்தாலும் செய்கையாலும் சொல்லாலும்
சத்தம்-சர்வ காலத்திலும்
த்ரிவித அபசாரான்-மூன்று வித அபசாரங்களையும்
சராமி -ஆசரிக்கிறேனோ
சோஹம் -அந்த நானே
தவ அப்ரியகர ஏவ -உனக்கு அப்ரியமானதையே செய்து கொண்டு
ப்ரிய க்ருத்வ தேவ-பிரியத்தையே செய்பவன் போல் நடித்துக் கொண்டு
காலம் நயாமி -கால ஷேபம் செய்து வருகிறேன்
ததோஸ்மி மூர்க்க-ஆகையால் யான் மூர்க்கனே ஆவேன் –

யதிராஜ-
தானே குற்றம் செய்து இருந்தாலும் தன் குற்றத்துக்கு ராஜ தண்டனையை ராஜன் இடம் சென்று
தானே கோறி சுத்தி பெற வேண்டும்
ராஜபி க்ருத தண்டாஸ் தத -என்ற மனு ஸ்லோகத்தை பெருமாள் வாலியிடம் உதாஹரித்துக் காட்டினார்
ராஜ தந்தத்தால் குற்றம் நீங்கி சுத்தி பெறலாம்
அதனால் யதிராஜன் இடம் சென்று அவரை முறையிடுகிறார் –

ஹா ஹந்த ஹந்த
ஹா ஹந்த ஹந்த பவத சரணாரவிந்த த்வந்த்வம் கதா நுப விதா விஷயோ மமாஷ் னோ -என்று ஆழ்வான்
அதி மானுஷ ஸ்தவத்தில் கதறியதை நினைக்கிறார்
மரங்கள் புல் பூண்டுகள் -அன்று சராசரங்கள் -எல்லாம் தமஸ் நீங்கப் பெற்று நற்பாலுக்கு உய்ந்த
சமயத்தையும் இழந்த எனக்கு என்று கொலோ உன் தாமரை அடியிணை கண்ணுக்கு விஷயம் ஆவது
என்று ஆழ்வான் ஆ ஆ மோசம் போனேனே மோசம் போனேனே என்று கதறினார்
இங்கே ஜகத் குரு பீடத்தில் இருக்கும் நான் இப்படி அபசார சீலனாக இருக்கிறேனே என்று கதறுகிறார்
கஷ்டம் கஷ்ட தரம் கஷ்ட தமம்-என்று பிள்ளை லோகம் ஜீயர் உரை –

மநஸா
மனத்தினாலும் –
கரண த்ரயங்களின் ஸாரூப்யம் ஆர்ஜவம்
கரண த்ரய ஸாரூப்யம் இதி ஸுக்ய ரஸாயனம்
மூன்று கரணங்களும் கெடுதலிலேயே பிரவர்த்திப்பது என்கிற ஒரே விதமான ஸாரூப்யம் என்னிடம் உள்ளது –

க்ரியயா ச
என்னும் அதோடு நிற்கிறது இல்லை
செய்யவும் செய்கிறேன் -செய்யக் கூசுவது இல்லை

வாசா ச –
ஜகத் குருவாகப் பிறருக்கு உபதேசம் செய்யும் வாங்கினாலும் தீதே பேசுகிறேன்
வெளிக்கு ஆகிலும் ஸாது வேஷம் போடக்கூடாதோ -வாயாலும் பாபமே பேசுகிறேன்
அருந் முகான் யதீன் ஸாலா வ்ருகேப்ய ப்ராயச்சம் -பகவன் நாமங்களை உச்சரியாமல் இருக்கும்
யதிகளை ஓநாய்களுக்குத் தின்னக் கொடுத்தேன் -என்று ப்ரதர்தன வித்யையில் இந்த்ரன் கூறினான் –
க்ருஹஸ்தர் ஏதாவது ஸம்ஸாரிக வார்த்தைகள் பேசினால் பேசட்டும்
ஸந்யாஸிகள் வம்பு பேசுவது மிகவும் கொடியது என்பதே அந்த ஸ்ருதியின் கருத்து –

யோஹம்
ஸோஹம் என்று பெருமாளை வர்ணிக்கத் தொடங்கிய வேதம் இப்படி அப்படி என்று வர்ணிக்க முடியாமல்
யோ ஸி ஸோ ஸி – நீர் யாரோ அவர் தான் நீர் என்றது
எனது தீமை வர்ணனைக்கு உள் அடங்காது -நான் யாவனோ அவன் தான் நான் -எனக்கு உவமை இல்லை
பெருமாள் குணங்கள் எண்ணில் அடங்காததால் அவரை வர்ணிக்க முடியாது
எனது தோஷங்கள் எண்ணற்றவை யாதலாலும் குணம் சூன்யம் ஆனதாலும் என்னையும் வர்ணிக்க முடியாது
வர்ணனைக்கு இயலாத நான் –

த்ரிவித அபசாரான்-
மூன்று விதமான கொடிய அபசாரங்களையும்
அபசாரங்கள் தர்மத்தைப் பாதிப்பவை
நிவ்ருத்தி தர்ம நிஷ்டராய் இருந்தாலும் பாகவத அபசாரம் இருந்தால் முக்தி பலத்துக்கு பிரதிபந்தகம் ஏற்படுவது
நிச்சயம் என்கிறார் ஸூ த்ரகாரர் சாதன அத்தியாயத்தின் முடிவு ஸூ த்ரத்தில்
த்ரஸ்ய ப்ரஹ்ம விதா கஸ
அநக தத்வ வின் நிக்ரஹ -என்றபடி பாகவத அபசாரத்துக்கு நடுங்க வேண்டும்
நான் ஒன்றுக்கும் பயப்படுவது இல்லையே –

சராமி சத்தம் சோஹம்
ஓயாமல் எக்காலமும் அனுஷ்ட்டிக்கிறேனோ
ரமணீய சரணராய் இருக்க வேண்டும் -கபூய சரணராய் இருக்கலாகாது -என்பர்
அப சரணமே என் சரணம்
அப்படி அப சரணத்தையே சரணமாக சீலமாக யுடைய நான் –

தவ அப்ரிய கர
உமது திரு உள்ளம் நோவச் செய்து கொண்டு
பத்தாவது அத்யாயம் இரண்டாவது பாதம் -11-அதிகரணத்தில் -தர்ச பூர்ண மாசத்தில் நைச்வான ரேஷ்டியில்
ஒரு வயசு பசு மாட்டை தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும் – என்று விதிக்கப் பட்டு இருப்பதில்
தக்ஷிணையைக் கொடுத்து யாகத்தில் ஊழியமாக ரித்விக்கை கிரயம் வாங்க வேண்டியதாலே
ரித்விக்குத் தான் இந்த தக்ஷிணை கொடுக்க வேண்டும் என்று பூர்வ பக்ஷம்
ரித்விக்கான ஆச்சார்யர் புரோஹிதன் த்வேஷ்யன் ஆக மாட்டான்
ரித்விகா சார்யவ் நாபி சரிதவ்யவ் -என்று ஸாஸ்த்ரம் இருப்பது ப்ரஸித்தம் அல்லவா
ஆகையால் த்வேஷ்யனாய் இருப்பவன் யாதாம் ஒருவனுக்கு அந்த தக்ஷிணையை அத்ருஷ்டத்தின்
பொருட்டு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள்
நான் ஆச்சார்யராக உமக்கே அப்ரியனாய் இருக்கிறேன் -த்வேஷ்யன் ஆகிறேன் –
உம்முடைய திவ்ய ஆஜ்ஜையை உல்லங்கநம் செய்து உமக்குத் த்ரோஹியாகிறேன் -என்று நிந்தை –

ப்ரியக்ருத்வ தேவம் -காலம் நயாமி
உமது திரு உள்ளப்படி நடந்து உம்மை உகப்பிக்குமவனைப் போல் காலத்தைக் கழிக்கிறேன்
இது தான் உண்மையில் நான்செய்யும் கால ஷேபம் -என்று ஆத்ம நிந்தை

ததோஸ்மி மூர்க்க
ஆகையால் நான் மூர்க்கனே
இப்படி ஊ ஹா போஹங்கள் செய்து தாம் மூர்க்கர் என்று தீர்மானித்துக் கொள்கிறார் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -9-

October 29, 2020

மந்த்ரத்திலும்
மந்த்ர பிரதானனான ஆச்சார்யர் பக்கலிலும்
மந்த்ர ப்ரதிபாத்யமான தேவதையின் இடமும்
மிகுந்த பக்தி இருக்க வேண்டும் என்பது ஸாஸ்த்ர -கட்டளை
திரு மந்த்ரத்தை ஆச்சார்யர் உபதேசிக்கும் அழகிய க்ரமம் ப்ரக்ருதி ஆகும்
யதாவத்தாக அர்த்த ஞானத்தோடு ஸ்ரத்தையோடு ஸ்வர வர்ணாதிகளோடு உச்சரித்து எனக்குக் கற்பித்தார்கள் –
நான் அநுஸந்திக்கும் க்ரமம் விகாரமே யாகும்
ஸ்ரத்தை அல்லவோ முக்ய தனம்
அ ஸ்ரத்தையோடு மந்த்ர ஜப அனுசந்தானங்கள் விகாரமே -ஆபாசமே ஆகும் –

ஊஹம்-என்பது மாறுபாடு -வி பரிணாமம்
ஆச்சார்யர்கள் கற்பித்த விதத்துக்கும் நான் உச்சரிப்பதும் அன்சந்திப்பதும் மாறுபாடே ஆகும்
என்று ஆத்ம நிந்தை

தர்ச பூர்ண மாச ப்ரக்ருதியில் -அக்நேர் அஹம் உஜ்ஜிதி மநூஜ் ஜேஷம் -என்று இருப்பதை
ஸுவ்ர்ய விக்ருதியில் -ஸூர் யஸ்ய -என்று மாறு படுத்துவர்
அக்நயே ஜூஷ்டம் -என்பதை ஸூர்யாய ஜூஷ்டம் –என்று மாறு படுத்துவர்
அப்படி மாறு படுத்துவது ஊஹம் -எனப்படும் -இது மீமாம்ஸை -9-வது அத்யாய விஷயம்
மந்த்ர சாம ஸம்ஸ்காரங்களின் அந்யதா பாவாத்மகம் ஊஹம்
ப்ரோக்ஷிக்கப்பட்ட உரல் உலக்கைகளைக் கொண்டு வ்ரீஹி தான்யத்தைக் குத்தி மாவாக்க வேணும் -என்று
மூல ப்ரக்ருதியில் இருப்பதை
நைரு தசரு என்ற விக்ருதியில்
கிருஷ்ணா நாம் வ்ரீஹிணாம் நக நிர் பின்னம் -என்று இருப்பதில் நகங்களை ப்ரோக்ஷிக்க வேண்டும்
பிரக்ருதியில் உள்ள ப்ரோக்ஷணத்தை இங்கே நகங்கள் விஷயத்தில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச –
மந்த்ரம் தத்தேவதாமபி ந கிஞ்சித் அஹோ பிபேமி
இத்தம் சடோப்ய சடவத் பவதீய சங்கே –
ஹ்ருஷ்ட சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க–9-

யதிராஜ-யதிராஜனே
அஹம் -நான்
நித்யம் து -நித்ய காலமும்
குரும்-மந்த்ர உபதேசம் செய்து அருளிய ஆச்சார்யரையும்
மந்த்ரம் -மனனம் செய்தவனை ரக்ஷிக்கும் மந்திரத்தையும்
தத் தேவதா மபி-பலத்தைக் கொடுக்கும் மந்த்ர ப்ரதிபாத்யமான தேவதையையும்
பரிபவாமி -பரிபவிக்கிறேன் -அவமதிக்கிறேன்
ந கிஞ்சித் பிபேமி-சிறிதும் அச்சமும் படுவது இல்லை
அஹோ -இது என்ன விந்தை
இத்தம் -இப்படி
சடோப்ய -ஏமாற்றும் சீலம் உடையவனாய் இருந்தும்
பவதீய சங்கே -உமது அடியார்கள் திரளில்
அ சடவத் -மோசக்காரார் அல்லாதவர் போல்
ஹ்ருஷ்ட சராமி -சந்தோஷமாக நடிக்கிறேன் -திரிகிறேன்
ததோஸ்மி மூர்க்க-ஆகையால் -நான் மூர்க்கன்
பிஷா டனம் எனிலும் பிஷாசர்யத்தை ஸந்யாஸி வேஷத்தோடு சரிக்கிறேன் –

நித்யம் து
சர்வ காலமுமே –
ஒரு காலத்திலேயாவது நன்றாய் நடக்கிறேன் என்பது இல்லை

அஹம்
நான்

பரிபவாமி குரும் ச -மந்த்ரம் தத்தேவதாமபி
குருவையும் -அவர் உபதேசித்த மந்திரத்தையும் -அந்த மந்திரத்தின் தேவதையையும்
பரிபவம் செய்கிறேன் -அவமதிக்கிறேன்
முனி த்ரயம் நமஸ்க்ருத்ய தத் உக்தீ பரிபாவ்ய ச -என்பர் வையாகரணர்
மும் முனிகளை நமஸ்கரிப்பர் பூஜிப்பர் அவர்கள் ஸ்ரீ ஸூ க்திகளை நன்றாக ஆலோசனை பண்ணுவார்
நம் ஸம்ப்ரதாயத்திலும் ஸ்ரீ மன் நாதமுனி ஸ்ரீ மத் யாமுன முனி ஸ்ரீ மத் ராமானுஜ முனி –
மூவரையும் நமஸ்கரிக்க வேண்டியது
அவர்கள் விவரித்து இருக்கும் மந்திரங்களையும் அவர்கள் ஸ்ரீ ஸூ க்திகளையும் பரி பாவனம்
செய்ய வேண்டி இருக்க -பரி பவம் செய்கிறேன் என்று ரஸம்
தீர்க்கம் ஹ்ரஸ்வம் ஆயிற்று -பரி பாவயாமி -என்றபடி நடந்தால் அது உசிதம்

ந கிஞ்சித் அஹோ பிபேமி
திக ஸூ சி மவிநீதம் நிர்ப்பயம் மாம லஜ்ஜம் -பெரிய முதலியாரின் ஆத்ம நிந்தையை நினைக்கிறார் –
குரு -மந்த்ரம் -தேவதை -மூவர் இடமும் நிச்சேதம் இல்லாத நிஷ்டை இருக்க வேண்டும்
சிறிதேனும் விச்சேதம் வந்தால் -அத தஸ்ய பயம் பவதி-பயம் உண்டாக வேண்டும் -நடுங்க வேண்டும் –
மதி -நிஷ்டை இல்லை என்பது மட்டும் இல்லை -அவமதிக்கவும் செய்து பய லேசமும் கூட இல்லாமல்
அன்றோ இருக்கிறேன் –

ததோஸ்மி மூர்க்க
தத்வேவ பயம் விதுஷோ மன்வா நஸ்ய -நிஷ்டையில் சோர்வு வந்தால் பய காரணம் –
வித்வானுக்கு அல்லவோ பயம் -மூர்க்கனுக்கு பயம் ஏது ஸ்ருதியை நினைத்து பயம் இல்லாமை யாலே
அவித்வான் என்பதை அனுமானம் செய்கிறார் -ததோஸ்மி மூர்க்க -என்று
மன்வா நஸ்ய
ப்ரஹ்ம மதி செய்பவனுக்கு நிஷ்டா விச்சேதம் பயம்
அவமதி செய்யும் அவித்வானுக்கு என்ன பயம்
மதி செய்ய நொடிப் பொழுது தவறுவதற்கே நடுங்குவாரே -அவமதி செய்யும் நான் அஞ்ச வில்லையே என்று பாவம் –
நபி பேதி குதச்சன நபி பேதி கதாசன -என்று ப்ரஹ்ம ஆனந்த அனுபவம் உள்ள விஷயத்தில் நிர்ப்பயத்வம் ஓதப்பட்டது
விஷயாந்தர ஆனந்த வித்வானும் ப்ரஹ்மானந்த அவித்வானுமான எனக்குப் பயம் இல்லை என்றும் பாவம் –

அஹோ
இது என்ன விபரீதம் -என்று ஆச்சர்ய சோகங்கள் –
ஸ்காலித்யே சாஸி தாவான குருவின் இடத்தில் பயம் இல்லை
மந்த்ரம் என்றால் நியமம் தவறக் கூடாது என்று உலகம் பயந்து நடுங்கும்
மந்த்ரலோபத்திலும் பயம் இல்லை
விஸ்வ ஸாஸ்தா வும் தண்டதரனும்
பீஷாஸ் மாத் வாத பவதே -என்றும்
மஹத் பயம் வஜ்ர மீவோத்யதம் -என்றும் ஓதப்படும்
ஜகத் கம்பகமான மந்த்ர தேவதை இடமும் பயம் இல்லை
வித்வானாக இருந்தால் இப்படி பயம் இல்லாமல் -இருப்பேனா

இத்தம் சடோபி
இப்படி சாட்ய ஸ்வ பாவனாய் இருந்தும்
ஊஹ அத்யாயமான ஒன்பதாம் அத்யாயம் இரண்டாம் பாதத்தில் சாம கான க்ரம விஷயமாக
பல அதிகரணங்கள் உண்டு
ஊஹம் என்றே ஒரு ஸாம கிரந்தம் உண்டு
சாந்தோக்யே தலவகாராதி ஸஹஸ்ர ஸாம ஸாகா கதா நாம் கீதி பிரகாராணாம் -என்று
கீத சம்பாதக அக்ஷர விகார விகல்ப அதிகரணத்தில் ஸாஸ்த்ர தீபிகை –

வேதம் தமிழ் செய்த மாறன் தமிழ் முறையே மகத்தான ஒரு ஊஹ மாகக் கூடும்
மூல மறையின் ஒரு மாற்றம் -ஊஹம் -மாறன் மறை –
இங்கே ஊஹ அத்யாய ஸ்மரணத்தில் சடகோபனையும் அவர் திருவாய் மொழியையும் நினைத்து
திருவாய் மொழிப் பிள்ளையை ஆஸ்ரயித்து சடகோபன் மறையையும் ஈட்டையும் ப்ரவர்த்திப்பதையே
தமக்கு அசாதாரணமான ஸ்வரூபத்தை உடையவர் எட்டு திக்குகளிலும் யஸஸ் பரவிய தாம்
அசடராக இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தும் சடராக இருக்கிறோமே என்று தம்மை
இங்கே விசேஷித்து நிந்தை செய்கிறார் –

குருவுக்குப் பயப்பட வேண்டாம் -மந்திரத்துக்குப் பயப்பட வேண்டாம் -பெருமாளுக்குப் பயப்பட வேண்டாம் –
சடனாய் இருந்தால் சடகோபருடைய கோபத்துக்கு அஞ்ச வேண்டாவோ -அதற்கும் அச்சம் இல்லையே
என்று திரு உள்ளம்
நான் அவர் கோபத்துக்குப் பயப்பட வேண்டி இருக்க
பிபேத் அல்ப ஸ்ருதாத் வேத -என்ற கணக்கில் என்னைக் கண்டு அவர் தாமும் அவர் வேதமும்
பயப்படும் படி செய்கிறேன்

அசடவத்
சாட்ய லேசமும் இல்லாமல் இருந்தால் தானே சடகோபன் மறையை பிரவசனம் செய்யலாம்
சடன் எப்படி மறையை அணுகலாம்
அதற்காக அசடன் போல் நடிக்கிறேன்

பவதீய சங்கே –
திருவாய் மொழியை ஈன்ற தாய் சடகோபன்
வளர்த்த தாய் நீர்
அப்படிப்பட்ட உம்முடைய கடாக்ஷ பாத்ரரான உத்தம சீலரான உமது அடியார்கள் அநேகர் குழாம் நடுவில்
ஒருவரும் உண்மையை அறியாதபடி மறைத்து வஞ்சிக்கிறேனே
என்னிலும் சடர் உண்டோ

தேவ்யா நிந் ஹோது மிச்சோ இதி ஸூர சரித சாட்ய மவ்யாத்வி போர்வ -என்று
முத்ரா ராக்ஷஸ நாடக நாந்தீ ஸ்லோகம்
சடையில் உள்ள கங்கையை பார்வதீ தேவிக்கும் மறைக்கும் தந்திரத்தை சாட்யம் என்கிறார் கவி

ஹ்ருஷ்ட சராமி
துளி பயமும் இல்லாமல்
துளியும் நெஞ்சம் நோவாமல்
சந்தோஷத்தோடு ஸ்ருதி சொல்லுகிறபடி
ஜ்யோக்காய் -திரிகிறேனே

யதிராஜ
யதிகட்க்கு நீர் இறைவர் ஆயிற்றே
ராஜரான உமது ராஜ தண்டனை வரும் என்ற அச்சமும் இல்லையே

மூர்க்க
இப்படி பஹு அபாயமான நடத்தையில் இருந்தும் வரும் தண்டனைகளை ப்ரத்யவாயங்களை நினையாமல்
நிர்ப்பயனாய் இருப்பதற்கு காரணம் மூர்க்கனாய் இருப்பதே –
பிறரை ஏமாற்றுவதால் பலிப்பது ஆத்ம வஞ்சனையே என்று அறியாத மூர்க்கனாய் இருப்பதே
யச்ச மூட தமோ லோகே யச்ச புத்தே பரம் கத தாவு பவ் ஸூக மே தே தே க்லிஸ் யத் யந்தரிதோ -என்றார் ஸூகர்

அடியோடு மதி கேடனான மூர்க்கன்
ஞானத்தின் கரையை அடைந்த தத்வ தர்சி இவ்விருவரும் மேலும் மேலும் ஸூகப் பெருக்கை அடைகிறார்கள் –
இரண்டிலும் சேராமல் நடுவில் இருப்பவர் க்லேசப்பட்டுத் திண்டாடுகிறார்கள் –
நான் மூட தமன் என்னும் கோஷ்ட்டியில் சேர்ந்தவன் ஆகையால் ஹ்ருஷ்டனாய் ஸஞ்சரிக்கிறேன்
பிஷ ஆசர்யம் சரிக்கிறேன் -பிக்ஷையையும் ஹ்ருஷ்டனாய் உண்கிறேன்
சர கதி பாஷணயோ

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -8-

October 28, 2020

பசுவன் மூர்க்கோ பவேத்
வித்யா விஹீன பசு
ஞாநேந ஹீந பசுபிர் ஸமான
நான் பசு விருத்தி உடையவன் -பசு ப்ரக்ருதி என்றார் கீழ்
ஆகையால் நான் மூர்க்கன் என்று அனுமானம் செய்கிறார் இதில்
பசு ப்ரக்ருதியாய் இருப்பவர் மூர்க்கராக தானே இருக்க வேண்டும்
மூர்கத்தவம் என்னும் பசு தர்மத்தை தமக்கு அனுமானத்தால் அதிதேசம் செய்து கொள்கிறார் –

8 வது அத்தியாயத்தில் அதிதேச விசேஷங்கள் நிரூபிக்கப் படுகின்றன
அப்படியே இங்கும் பசு தர்மம் தமக்கு அதிதேசம் செய்து கொள்ளப் படுகிறது –

மாஸம் அக்னி ஹோத்ரம் ஜுஹோதி -என்னும் இடத்தில் அக்னி ஹோத்ரம் என்னும் பெயரின் சாம்யத்தால்
நித்ய அக்னி ஹோத்ர தர்மங்களை மாச அக்னி ஹோத்ரம் என்னும் கர்மத்தில் அதி தேசம் செய்வர்
நாமதேயத்தைக் கொண்டு -ஆக்ஜையைக் கொண்டு அதற்கு உரிய தர்மங்களை அதி தேசம் செய்வர்
எனக்கோ சரணாகதன் என்ற ஆக்ஜை பெயரில் மட்டும் தான் -அந்தப் பெயரைக் கொண்டு பிரபன்னருக்கு
உள்ள தர்மங்கள் எல்லாம் என் இடம் இருக்க வேண்டும் என்று அனுமானித்து
அதி தேசம் செய்து ஏமாந்து போகிறார்கள்
எனக்கு உம் சரணாகதன் என்ற நாமதேயம் இருந்தாலும் நான் உண்மையில் பசு பிரகிருதி
பசு தர்மமான மூர்க்கத்தனம் தான் என்னிடம் அதி தேசம் செய்யப்பட வேண்டும் என்று நைகிறார் இதில்

அக்ர்ய பிராய நியாயத்தையும் இங்கே ஸூ சிக்கிறார்
அக்ர்யரான ஸ்ரேஷ்டர் உடன் கூடி இருப்பதால் இவரும் ஸ்ரேஷ்டராக இருக்க வேண்டும்
என்று கொள்வதே இந்த நியாயம்
குரு பீடம் அலங்கரிக்கும் ஸ்ரேஷ்டர்களான பரம்பரையில் நான் இருப்பத்தையே கொண்டு
என்னையும் ஸ்ரேஷ்ட அக்ர்யராக நினைத்து விடுகிறார்கள்
உண்மையில் நான் பசுக் கூட்டத்தோடு பசுவாகவே இருக்கத் தக்கவன்
பசுவைப் போன்று மூர்க்கரோடு மூர்க்கராய் இருக்கத் தக்கவன் என்கிறார் இதில்

துக்காவஹா அஹம் அநிசம் தவ துஷ்ட சேஷ்ட –
சப்தாதி போக நிரத –சரணா கதாக்க்ய
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே –
மித்த்யா சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –8-

யதிராஜ-யதி ராஜனே
அஹம் -நான்
அநிசம்-அல்லும் பகலும்
துஷ்ட சேஷ்ட-துஷ்ட வியாபாரங்களைச் செய்பவனாகவும்
துக்காவஹா தவ -உமக்குத் துக்கத்தைத் தருபவனாகவும்
சரணா கதாக்க்ய-சரணாகதன் என்று பெயர் வைத்துக் கொண்டு
சப்தாதி போக நிரத –விஷயாந்தர போகத்தையே மிக்க ருசியுடன் அனுபவித்துக் கொண்டு
சிஷ்ட ஜநௌக மத்யே-சாதுக்களாய் உயர்ந்த சீலம் உள்ள பெரியோர்களின் திரளின் நடுவில்
த்வத் பாத பக்த இவ -உமது திருவடிகளில் பக்தியை போலவே
மித்த்யா சராமி -பொய்யாக வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கிறேன்
ஆகையால்
அஸ்மி மூர்க்க -ஞான ஹீனன் -பொல்லாதவன் -ஆகிறேன் –

அநிசம்
ஓயாமல் –
மாத்திரைப்போதும் ஓர் இடை வீடின்றி எப்பொழுதும் –
நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும்

துக்காவஹ தவ
உமது திரு உள்ளம் நோவும்படி செய்பவன்
மக்கள் போன்றவர் ஆவார் சிஷ்ய ஜனங்கள்
சிஷ்ய ஜனங்களால் ஸுகம் பெற வேண்டி இருக்க என்னால் சுகமே இல்லாத தோடு
ஓயாத் துக்கமே விளைந்து கொண்டு இருக்கிறது –
பர தர்மோ பயாவஹ –
நான் எனது ஆச்சார்ய ஸ்தானம் ஆஸ்ரமம் இவர்களுக்குத் தக்க தர்மங்களை உள்ளபடி
ஆசரித்தால் அல்லவோ உமக்கு இன்பம் உண்டாகும்

துஷ்ட சேஷ்ட –
கொடிய சேஷ்டங்களை ஆசாரங்களை உடையவனாகவே உள்ளேன்

மித்த்யா சராமி
மித்ய ஆசாரமே உடையவராகக் கூறிக் கொள்கிறார்
கர்மேந்திரியாணி ஸம் யம்யய ஆஸ்தா மனஸா ஸ்மரன்-இந்த்ரிய அர்த்தான் விமூடாத்மா மித்யாசார ச உச்யதே –
கர்ம இந்திரியங்களை ஒடுக்கி எந்த மூடாத்மா இந்திரியங்களை மைனஸ்ஸால் ஸ்மரித்துக் கொண்டே இருக்கிறானோ
அவனே மித்யாசாரன் என்று கொல்லப்படுவான் -கீதாச்சார்யர் –
மனத்தில் தோஷங்களை நினைத்த படியோடே நிற்காமல் -சேஷ்டை-செய்கள்களிலும் அப்படியே இருப்பதால்
கீதையில் சொல்லப்பட்ட மித்யாசாரனுக்கும் மேல் பட்ட விலஷண அதிகாரி விசேஷம் என்று ஆத்ம நிந்தை

சப்தாதி போக நிரத –
புலன் விஷயங்களின் அனுபவத்திலேயே விசேஷ ருசி உடையவனாய்
சுகம் அத்யா பயா மாச நிவ்ருத்தி நிரதம் முனிம் -விஷய நிவ்ருத்தியில் ஸூகர் நிரதராய் இருந்தது பற்றி
அவருக்கு ஸ்ரீ பாகவதம் வியாசர் அத்யாபநம் செய்தார்
ஏன் ஆஸ்ரமத்துக்கு நிவ்ருத்தி ரதியே ஸ்வரூபம்-ஆத்ம ரதியாயே இருக்க வேணுமே
பராசர்ய ப்ரஹ்ம ஸூத்ரங்கள் -ஸ்ரீ பாஷ்ய ஸூஹ்ருத அம்ருதம் என்னும் வசஸ் ஸூ தையை
அன்வஹம் பானம் செய்வர்கில் ரதி இல்லை –

சரணா கதாக்க்ய
சரணாகதி ஸப்த பாக் -என்று கூரநாதன் சாதித்த படி பேர் மட்டும் சரணாகதன்
அந்தப் பெயருக்கு உரிய ப்ரபந்ந தர்மங்களில் அன்வயம் இல்லை –
ஆயினும் என்னிடத்தில் அதற்கு உரிய தர்மங்களின் அதி தேசம் செய்கிறார்கள் சிஷ்யர்கள் –
அந்தப் பெயருக்கு உரிய தர்மங்கள் என்னிடம் பாதிதம்

த்வத் பாத பக்த இவ
உம் திருவடிகளில் பக்தி உடையவன் போல் அநு கரணம் மட்டும்
போலி பக்தனே அல்லது உண்மை பக்தன் அல்லவே

சிஷ்ட ஜநௌக மத்யே –
உத்தமமான சீலம் உடைய ஸத்வ உத்தமரான அரும் பெரியோர்கள் கூட்டத்தின் நடுவில்
என்னைப் பெரியவராக நினைத்து என்னைச் சூழ்ந்து இருக்கும் உண்மையான பெரியோர்களுக்குக் கணக்கு இல்லை
இத்தனை ஸாத்விகப் பெரியோர்கள் நடுவில் இப்படி நான் இருக்கிறேனே என்று ஆத்ம நிந்தா ரூபா நைச்யம்

மித்த்யா சராமி
உள் ஒன்றாகவும் வெளி ஒன்றாகவும் பொய்யாகவே ஆசரிக்கிறேன்
மனத்தில் ஒரு விதமாக சங்கல்பித்து அதற்கு வேறு பாடாக நடப்பவன் மித்யா சாரன் எனப்படுவான் -கீதா பாஷ்யம்
எங்கும் மாயை -மித்யாத்வம் என்பது உள்ளதை வேறாகக் காட்டுவதே என்று முடியும் -தாத்பர்ய சந்திரிகை
பிறர் மித்யா வாதிகள்
நான் மித்யா சாரன்

ததோஸ்மி மூர்க்க
ஆகையால் நான் மூர்க்கனே
மித்யாசாரா வி மூடாத்மா -என்றார் கீதாச்சார்யர்
மித்யாசரனாய் இருப்பதால் கீதா ஸ்லோகம் படி நான் மூர்க்கன் என்பது திண்ணம்
பசு வ்ருத்தனாய் இருப்பதாலும் நான் மூர்க்கனே
தாஸோஸ்மி என்று அநு சந்திக்க ப்ராப்தமாய் இருக்க மூரக்கோஸ்மி -என்று உண்மை முடிந்தது

பலம் நியமம் கர்த்தா
இவற்றுக்கு ப்ரக்ருதியைப் போல் விக்ருதியில் அதி தேசம் இல்லை
ஆசார்யரான மூல ப்ரக்ருதிக்கு உள்ள பலம் எனக்கு சித்திக்க மாட்டாது
ஞானீ த்வாத்மைவ மே மதம் -என்று பெருமாளுக்கு உயிரான பிரியம் என்று புகழப் பட்ட
ஞானி யாவாரோ என் போன்றார்
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -7-

October 28, 2020

ஆறாவது அதிகார ஸூ சனம் கீழ் -உபதேச ஷட்கம் முடிந்து ஏழாவது அத்தியாயத்தில்
அதி தேச ஷட்கம் தொடங்குகிறது
அதில் பிரகிருதி யின் தர்மங்களை விக்ருதியிலும் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று
சாமான்யமாக பிரதர்சனம் செய்கிறது –
ஒரு யாகம் முதலிய வைதிக கர்மங்களில் அங்கங்களை எல்லாம் விஸ்தாரமாய் வாசனிமாக விதித்து
இருப்பதை -பிரகிருதி -மூலம் -என்பர் –
விக்ருதி என்பது அதன் சாத்ருஸ்யம் உள்ள மற்ற யாகாதி கர்மம் –
மூலமான ப்ரக்ருதியில் விதிக்கப்பட்டு இருக்கும் அங்கங்களை விக்ருதியிலும் அனுஷ்ட்டிக்க வேண்டும்
என்று விதிப்பது

ப்ரக்ருதி வத் விக்ருதி கர்தவ்யா -என்று சாமான்யமான அதிதேச விதி
எம்பெருமானார் -ப்ரக்ருதி பூதரான நம் சம்பிரதாய ஆச்சார்யர்
நான் அந்த பரம்பரையில் அந்த ஸ்தானத்தில் ஆச்சார்யனாய் நிவேசனம் செய்யப்பட்டு இருக்கும் விக்ருதி
யுகாதி கர்மங்கள் அசேதனங்கள்
அந்த விஷயத்தில் -ப்ரக்ருதி வத் விக்ருதி கர்தவ்யா-என்று செய்யப்படும் பொருளாக
கர்மணி பிரயோகம் தான் சம்பவிக்கும் கர்த்ருத்வம் சம்பவியாது
இங்கு மூல ப்ரக்ருதி ஸர்வஞ்ஞரான ஸ்ரேஷ்ட தம ஞானி ஆச்சார்யர்
விக்ருதியான நானும் சைதன்யவானே -பசு விருத்தியாய் இருந்தாலும் சைதன்யத்துக்குக் குறை இல்லை –

எம்பெருமாருடைய லோக உத்தர ஆசார்ய தர்ம சீலா சரணாதிகள் போல் கூடிய வரையில் அந்த ஸ்தானத்தில்
இருக்கும் ஆச்சார்யர்களும் ஆசார்ய தர்ம சம்பத்துக்களோடு ஸம்பன்னராய் இருக்க வேணும்
ப்ரக்ருதி வத் விக்ருதி கரோதி -என்று இங்கு அதி தேசத்தை மாற்றிக் கொள்ள வேணும்
மூல ஆச்சார்ய சம்பத்தைப் போன்ற சம்பத்தை விக்ருதியாய் இருப்பவரும் அனுஷ்ட்டிக்க வேணும்
தேஹத்தைப் பற்றிய பாஹ்ய காஷாய வசன யஜ்ஜோ பவீத த்ரி தண்ட தாரணாதி வேஷங்கள் எல்லாம்
மூல ஆச்சார்யரைப் போலவே அநு கரணம் செய்கிறேன்
கர்ம இந்த்ரியங்களைப் பற்றிய பாஹ்ய ஸந்யாஸ ஆசாரங்களை எல்லாம் அப்படியே அநு கரணம் செய்கிறேன்

ஆந்தரமான சம தமாதி குணங்களையும் ஞான இந்திரியங்களையும் நைத்யத்தையும் அநு சரிப்பது இல்லை —
மேலுக்கு மட்டும் பாவனையே –
பிரக்ருதியைப் போல் தேஹ வேஷங்களிலும் கர்ம இந்த்ரிய நிர்வர்த்யமான பாஹ்ய ஆசாரங்களில்
மட்டும் அநு கரணம் உண்டு –
ஆந்த்ர சம தமாதி இந்திரிய நிக்ரஹம் கூடிய மனச்சுத்தியை அனுஷ்டிப்பது இல்லை -தத் விபரீத சீலமே உள்ளது –
ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்று ஆசார்யரை முண்டகம் வர்ணித்தது –
ஸம்ஸ்க்ருத திராவிட உபய வேதங்களையும் அத்யயனம் செய்த ஸ்ரோத்ரிய லக்ஷணம் சம்பாதித்து இருந்தாலும்
சாந்தோ தாந்த உபரத திதிஷு ஸமாஹிதோ பூத்வா ஆத்மன் யே வாத்மா நம் பஸ்யேத் -ப்ருஹதாரண்யம்
ப்ரஹ்ம நிஷ்டைக்கு அவஸ்யம் அபேக்ஷிதமாக விதிக்கப் பட்டு இருக்கும் சம தமாதி அந்தரங்க
ஸம்பத்துக்களைத் தேடவில்லை -அனுஷ்ட்டிக்க வில்லை -அதுக்கு விபரீதமாகவே நடக்கிறேன்
ஸாது தமரான பெரியோர்கள் வர்த்திப்பவரைப் போல் ஆச்சார்ய ஸ்தானத்தில் இருப்பவர் வர்த்திக்க வேணும் –
என்னுடைய ஆந்த்ர விருத்திகள் விபரீதமாகவே இருக்கின்றன –
தேஹ விருத்திகள் மூலத்தைப் போலவே விஷமாக நடிப்பு – நான் உண்மையில் மூல விபரீதமாகவே வர்த்திக்கிறேன் –
வஞ்சனத்தில் என்னிலும் நிபுணர் இல்லை -வஞ்சனையே ஒரு வ்யஸனமாகவும் வ்ருத்தியாகவும் கொண்டு
வஞ்சன பரனாகவே வர்த்திக்கிறேன் –
வஞ்சன பர -என்று யாமுனர் நிச்சயத்தால் செய்தது நைச்ய அனுசந்தானம் –
எனக்கு வஞ்சகம் உண்மையான வ்ருத்தி

பிரக்ருதிகளுக்கு உள்ள அங்க தர்மங்களை விக்ருதியிலும் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று அதி தேசம் –
ப்ரக்ருதிக்கும் விக்ருதிக்கும் சாத்ருசம் இருக்க வேண்டும்
ப்ரத்யக்ஷ வசனம் நாமதேயம் சோதனா லிங்க அநு மித வசனம் -மூன்றையும் கொண்டு
எந்த பிரக்ருதிக்கு எந்த விக்ருதி என்று அறிய வேணும்
த்ரி வித ச அதி தேச ப்ரத்யக்ஷ வஸனாத் நாமதேயாத் சாதனா லிங்க அநு மிதி வஸனாச் ச -ஸாஸ்த்ர தீபிகை
ஸ்ரீ பாஷ்யகாரர் போற்றிய ஸதாசாரங்களையே அவர் ஸ்தானத்தில் இருக்கும் பின்புள்ள ஆச்சார்யர்களும் பின் பற்ற வேணும்
சடகோபர் பரம்பரையில் வந்த ஆச்சார்யர்களே சடராய் வஞ்சன பரராய் இருக்கலாமா
எனது வஞ்சனை பரதையால் அவர் திரு உள்ளம் புண் படாதா
ஆதி குருவான பத்ரிகாஸ்ரம தாபஸ நாராயணனைப் போல் இருக்க வேண்டாவோ

த தாத்ம நிரதே உபநிஷத் ஸூ யே தர்மா தே மயி ஸந்து தே மயி சந்து -என்று
தினமும் சாந்தி பாடம் ஓதுவிக்கிறேன்
அக்னி ஹோத்ரம் என்ற சத்ருசமான நாம தேயத்தைக் கொண்டே குண்ட பாயிகளின் அயனம் என்னும் விக்ருதியில்
நித்ய அக்னி ஹோத்ர தர்மங்களைச் செய்ய வேண்டும் என்று
பூர்வ மீமாம்ஸை 7 வது அத்யாயம் 3 வது பாதத்தில் முதல் அதிகரணத்தில் நிர்ணயிக்கப் பட்டது
அதே பாதத்தில் ஆறாவது அதிகரணத்தில்
ஆதித்யாயாம் வைஷ்ணவோ நவக பாலோ பவ தி -என்று விதிக்கப்பட்ட ப்ரக்ருதிக்குள்ள அங்க தர்மங்கள் எல்லாம்
ராஜ ஸூய யாகத்தில் வைஷ்ணவ த்ரி க பால-என்று விதிக்கப்பட்ட மூன்று ஒட்டு புரோடாச கர்மத்தில்
வைஷ்ணவ என்ற பேர் ஒற்றுமையைக் கொண்டு அதிதேசத்தால் வருமோ என்று பூர்வ பக்ஷம் பண்ணி
வைஷ்ணவ என்கிற பதம் தத்தித ப்ரத்யய த்தால் விஷ்ணு தேவதா உத்தேச்யகம் -என்பதை மட்டுமே விதிக்கும் –
வைஷ்ணவ நவ கபால கர்மத்தில் உள்ள அங்கங்களைக் கொண்டு வராது என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ந்யாயத்தாலே வைஷ்ணவ என்ற பெயர் விஷ்ணு விஷ்ணு தேவதையை வழி படுபவர் என்பது
ஒன்றையே ஸித்திக்கும் அல்லது சீலாதி குணாதிகள் ஸித்திக்க மாட்டாது என்றும் ஒரு ரஸ ப்ரஸ்னம் –

விஷ்ணு லிங்கம் என்று ஸந்யாஸ ஆஸ்ரமத்துக்கு பெயர்
பெயருக்கு சத்ருசமாக காஷாய த்ரி தண்ட யஜ்ஜோ பவீதாதி தாரிகளான பாஹ்ய ஆசார வேஷம் உண்டே
ஒழிய வைஷ்ணவ யாதிகளுக்கு இன்றியமையாத ஆத்ம குணங்களான யதி தர்மங்களை
கொள்ள வில்லை என்று நைச்யம் நிர்வேதம் –

ஹ்ருதய பேஷயா து மனுஷ்ய அதிகாரத்வாத் -மநுஷ்யர்களே ஸாஸ்த்ர விதிகளுக்கு கட்டுப் பட்டவர்கள்
திர்யக்குகளுக்கு இல்லை –
ஆறாவது அதிகாரம் முதல் பாதம் இரண்டாம் அதிகாரணத்தில் நிர்ணயிக்கப் பட்ட விஷயம்
வ்ருத்தியாலும் ஸ்வ பாவத்தாலும் பசுவாயாயே உள்ளேன் என்று நைச்சிய பிரதர்சனம்

சீல வ்ருத்த பலம் ஸ்ருதம்-சபா பர்வம் -நாரதர் தர்மபுத்ரருக்கு உபதேசம் -நைச்யத்தால் ஆத்ம சிந்தனை
ஞானேந ஹீந பஸூபிர் சமான
ஞான ஹீநம் குரும் ப்ராப்ய
ஞானி ந தத்வ தர்சின
நான் ஞான ஹீந பசு என்று ஆத்ம நிந்தனை
மனுஜ பசுபிர் நிர்மரியாதை -வே ணீ சம்ஹாரத்தில் அஸ்வத்தாமாவின் நிந்தை சொல் போல்
நான் மனுஜ பசு என்று ஆத்ம நிந்தை

பசுவத் மூர்க்கோ பவேத் -இங்கே பசு என்றும் அடுத்த ஸ்லோகத்தில்
மூர்க்க-ஸ்வ நிந்தை -பசுத்தன்மையால் மூர்க்கத்தவம் சித்தம்
சித்தம் -ஸத் ஸம்ப்ரதாயே -ஸ்த்திரதிய மனகம் -ஸ்ரோத்ரியம் -ப்ரஹ்ம நிஷ்டம் -ஸத்வஸ்த்தம்-ஸத்ய வாஸம்
சமய நியதயா சாது வ்ருத்யா ஸமேதம் –டம்ப அஸூ யாதி வர்ஜம் -ஜித விஷய கணம் -தீர்க்க பந்தும் -தயாளும் –
ஸ்க்கா வித்யே ஸாசீ தாரம் -ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணு ரீப்சேத் –ஆச்சார்ய லக்ஷண ஸ்லோகம் –
இதையே ஸ்வாமி உதாஹரித்துள்ளார் –

வ்ருத்யா பசுர் நரவபு த்வஹம் ஈத்ருசோபி-
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோயம்
இத்யாதரேண க்ருதி நோபி மித ப்ரவக்தும் –
அத்யாபி வஞ்சன பரோத்ர யதீந்திர வர்த்தே—7-

யதீந்திர-யதிகட்க்கு இறைவரே
அஹம் து -நானோ என்றால்
வ்ருத்யா -நடத்தையினால் -சீலத்தினால்
பசுர் -ஞானம் இல்லாத மிருகம் போல் வர்த்திப்பவாய் இருக்கிறேன்
நரவபு -நடத்தையினால் பசு -ஆகாரத்தால் -சரீரத்தால் – மனுஷ்ய வடிவாய் இருக்கிறேன்
ஈத்ருசோபி-விசித்திர சங்கர ஜந்துவாய் இருந்தாலும் துர்லப மனுஷ்ய தேகம் பெற்றும்
சாஸ்த்ர வஸ்யதை இல்லாத பசு துல்யனாக இருந்தாலும்
அயம் -இவர் எம்பெருமானார் ஆச்சார்ய பரம்பரை ஸிம்ஹாஸனத்தில் வீற்று இருக்கும் இவர்
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோயம் இதி -சதாச்சார்யர்களுக்கு நியதமாய் இருக்க வேண்டியதாக
சுருதி ஸ்ம்ருதி ஸதாச்ஸாரங்களால் ஸித்தமாய் ஏற்பட்டுள்ள சமதமாதி ஆத்ம குணங்கள் யாவற்றுக்கும்
நித்தியமாய் இருப்பவர் என்று ஆஸ்ரய பூதர் என்று
க்ருதி நோபி-என்னை ஆஸ்ரயித்து என்னைச் சுற்றி இருக்கும் ஞானாதி பூர்ணரான அக்ர கண்யர்களும்
யாதரேண -மிக்க பக்தியோடும் அன்போடும்
மித–ஒருவருக்கு ஒருவர் ரஹஸ்யமாய்
ப்ரவக்தும் வஞ்சன பரோத்ர -விஸ்தாரமாய் என்னைப் புகழ்ந்து பேசுவிக்கும் படியாக அத்தனை வஞ்சனையிலேயே
ஆழ்ந்து -ஏமாற்றுவதையே வ்ருத்தியாகக் கொண்ட
அத்யாபி -பரம ஹம்ஸ பரிவ்ராக ஆஸ்ரமத்தைப் பரிக்ரஹித்து இந்த ஸ்தானத்தில் அபி ஷிக்தனாய் இருக்கும் இப்பொழுதும்
வர்த்தே-வர்த்திக்கிறேன் -நடந்து வருகிறேன்

வ்ருத்யா பசுர்
தமது மூர்கத்வத்தை சாதிக்க பசு சாத்ருஸ்யத்தைக் காட்டினால் போதும் பகவந் மூர்க்கோ பவேத் –
பசுவாதிர் ச அவிசேஷாத் -சங்கரர் பாஷ்ய தொடக்கம்
ப்ரஹ்ம ஞானம் பெற ஆசையும் யத்னமும் இல்லாதவர்
பசும்புல் போல் ஆஹாரத்திலும் -அதைக் கொடுப்பவர் இடம் பிரியமும் -அச்சம் இன்மையும் –
தடி எடுத்து ஓங்குபவர் இடம் பயமும்
பசுக்களுக்கும் மநுஷ்யர்களுக்கும் துல்யம் என்று காட்டுகிறார் –
ஆஹார நித்ரா பயாதிகள் இருவருக்கும் பொதுவான வ்ருத்தி
தேஹத்தையும் ஜீவனத்தையும் பற்றியவை
ஆத்ம உஜ்ஜீவனம் என்பதே பசுக்களுக்குத் தெரியாதே

மனுஷ்ய தேகம் ஆத்ம உஜ்ஜீவ நத்துக்காகவே கொடுக்கப்பட்டது
ப்ரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் பசுவைப் போலவே -ஸாஸ்த்ர ஹித வ்ருத்தி இல்லை –
இரண்டு கால் பசுவாகவே உள்ளேன்
வருத்தத்தால் பசு தேஹத்தால் மனுஷ்யன் என்று ப்ரதர்சனம்
அஹம் து
நானோ என்றால் -மேலும் கீழும் அந்வயம்
பசுவிலும் விஜாதீயமான பசு
வ்ருத்தி ஞாப்ய நர பசுத்வ வான்
வ்ருத்யா -ஸ்லோக தொடக்கம் ஹேதுவாக படிப்பது மிக்க ரசம்
வ்ருத்யா–வஞ்சன பரோத்ர -என்று மேலும் அந்வயம் கொள்ள இடம் உண்டு

நரவபு
தேகத்தில் மட்டும் மனுஷ்யன் விவேகம் -த்யாஜ்ய உபாதிய பகுத்து அறியும் தன்மை இல்லாதவன்
ஆஹார நித்ர க்ரமாதி விருத்திகள் பொதுவானவை பசுவைப் போல்
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்ய மயீம் தநும் மக்நான் உத்தரதே
லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணிநா –
ஜஹ்னுர் நாராயண நர -சஹஸ்ர நாமம்
ந ரீயதே இதி நர-அவ்யயமான சாஸ்வத புருஷன்
ஸத் சம்பிரதாய ஆச்சார்யர்கள் நர நாராயணனே
அதற்கு நான் ஒரு அபவாதம் –
நாராயண தேஹமாய் இருக்க வேண்டியது போய் கேவல மனுஷ்ய தேஹமான இருப்புக்கு வெறுக்கிறார் –
பசு மனுஷ்ய தேஹத்தைப் பூண்டு இருக்கிறது என்று வெறுப்பு

சிறு மா மனிசர் என்று இருக்க வேண்டியவர் சிறு மிருகம் ஆனதே
ப்ரஹ்ம ப்ராயனாய் வர்த்திக்க வேண்டிய இருப்பு போய் பசு ப்ராயனாய் வர்த்திக்கிறேன்
நர என்பது விஷ்ணு வாசகம் -விஷ்ணு லிங்கம் சன்யாசம் -லிங்கம் என்பது சரீரத்தையும் சொல்வது —
சந்நியாசியின் திரு மேனி விஷ்ணுவின் திரு மேனி –
நர வபு -என்பதால் ஸந்யாஸி வேஷமும் ஸூ சிதம் –
விஷயாந்தர -தேஹ சம்பந்திகளை துறந்து ஆத்ம குண சம்பன்னராய் அத்யாத்ம ஞான நித்யராய்
இருக்க வேண்டியது போய் இப்படி பசு வ்ருத்தியாய் இருப்பதும் நிர்வேதம் –

அஹம் ஈத்ருசோபி-
உண்மையில் ஆந்தரமாய் பசு பிராயனாய் இருந்தாலும்
சாஷாத் நாராயணனே என் மனுஷ்ய சரீரத்தைப் பரிக்ரஹித்து உள் இருந்து நான் என்னும் ஆசார்யனாக
விளங்குகிறான் என்ற வசனத்துக்கு ஏற்ப நான் சகல உபநிஷத் ஆத்ம குண சீல ஸம்பன்னனாய்
இருக்க வேண்டியது அவஸ்யமாயினும்
எம்பெருமானார் குரு பரம்பரா பீடத்தில் இப்பொழுது நிவேசிக்கப் பட்டு விஷ்ணு லிங்க ஸந்யாசியாய்
இருப்பதும் தக்க ஞான ஆத்ம குணாதி சம்பத்துக்களோடே இருக்க வேண்டி இருந்தும்
பிரகார சாத்ருஸ்யத்தைக் காட்டும் ஈத்ருச ஸப்த பிரயோகத்தால் அதிதேசத்துக்கு மூலமான
ஸாத்ருஸ்ய நியமம் த்வனிக்கப் படுகிறது –

ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோயம்
ஸ்ருதி முதலிய ப்ரமாணங்களால் ப்ரஹ்ம நிஷ்டருக்கு நியதமாய் இருக்க வேண்டிய
ஆத்ம குணங்கள் விதிக்கப் பட்டு உள்ளன –
ப்ரஹ்ம உபாசனத்துக்கு அவஸ்யமான ஆத்ம குணங்கள் கர்மம் ஆசாரம் முதலிய அங்கங்கள் விதிக்கப் பட்டுள்ளன –
ஆதி -ஸ்ம்ருதிகள் -ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் -ஸதாசாரங்கள் – ஸம் ப்ரதாயா சரணைகள் -இவற்றைச் சொன்னவாறு –

மீமாம்ஸை -3 வது அத்தியாயத்தால் யாகாதிகளுக்கு அங்கங்கள் எவை என்று தீர்மானிக்க –
ஸ்ருதி -லிங்கம் – வாக்ய பிரகரண ஸ்தான சமாக்யைகள்-என்னும் பிரமாணங்கள் காட்டப் பட்டுள்ளன –
ஸ்ருத் யாதி பலீயஸ் த்வாச்ச ந பாத -ப்ரஹ்ம ஸூத்ரத்தாலும் – ஸ்ருத்யாதி ப்ரமாணங்களையும்
அவற்றின் பலாபலமும் ஆதரிக்கப் பட்டு உள்ளன
ஆதி -லிங்காதி ஐந்து பிரமாணங்களும் கொள்ள வேண்டும் –

சம தமாத் யுபேத ஸ்யாத் ததாபி தத் அங்க தயா தத் விதே –என்கிற ப்ரஹ்ம ஸூ த்ரத்தால்
சமம் தமம் உபரதி திதிஷை சமாதாநம் ஸ்ரத்தை முதலிய ஆந்த்ர ஆத்ம குணங்கள் க்ருஹஸ்தரான
ப்ரஹ்ம உபாஸகருக்கும் அவஸ்யமான அங்கங்களாக விதிக்கப் பட்டு உள்ளன –
ஸந்யாசியான ஆச்சார்யர்களுக்கு அவை அவஸ்யம் என்பது கைமுத்ய ஸித்தம் –
ப்ரபன்னரான க்ருத்யக்ருத்ய ப்ரஹ்ம நிஷ்டருக்கும் அவை ஸித்தமான அதிகாரி விசேஷணங்கள்
அவிச்சின்னமாய் யாவதாயுஷம் தொடர்ந்து இருக்க வேண்டும் –
நா விரதோ துச்சரிதாத் நா சாந்தோ நா ஸமாஹித-என்கிற ஸ்ருதியையும் நினைக்க வேணும் –
அத்வேஷ்டா ஸர்வ பூதாநாம் –என்று தொடங்கினதும் -அமானித்வம் அதம்பித்வம் -என்று தொடங்கினதும்
அபயம் ஸத்வ ஸம் ஸூ த்தி -என்று தொடங்கிய பல கீதா ஸ்லோகங்களையும் நினைக்க வேணும் –
இந்த ஆத்ம குணங்களில் பரம ஆதரத்துடன் பகவான் திரும்ப திரும்ப இவற்றைப் பாடியது –

யஸ்யை தேசத் வாரிம் சத் ஸம்ஸ்காரா அஷ்ட ஆத்ம குணா -என்று
எட்டு ஆத்ம குணங்கள் கௌதம ஸூத்ரத்தில் விதிக்கப் பட்டு உள்ளன –
ஸித்த -என்று நிர்விவாதமாய் சர்வ வேதாந்த சித்தாந்த ஸித்தம்
நிகில -அசேஷ குணங்களும் சம்பூர்ணமாய் இருக்க வேண்டும் என்பது ஸூ சனம் –
ப்ரத்யேகம் ஸம்பூர்ணமாய் இந்த அசேஷ குணங்களும் இவரையே ஆஸ்ரயித்து இருக்கின்றன –
இந்த ஆஸ்ரயம் இல்லா விடில் அவை நிராஸ்ரயமாய் திண்டாடும் – என்றும் ரஸ ஸூசனம்
குணங்களுக்கு ஆஸ்ரய அபேக்ஷை நியதம் –

இந்த குண சமுதாயம் பூர்ணமாக என்னிடம் இருப்பதாக நினைத்து ஆச்சர்யமாக பேசிக் கொள்கிறார்கள் –
அயமேய -இவர் ஒருவரே என்று ஏமாந்து போகிறார்கள்
அவர்கள் நை புண்யத்துக்கு மேல் பட்டது என்னுடைய ஏமாற்றும் நை புண்யம்
ஆஸ்ரய -உத்தேஸ்யம் என்றும்
அயம் -விதேய சமர்ப்பகம் -என்றும்
உத்தேச்யம் பூர்வம் விதேயம் பரம் -என்பது நியாயம் –

முன் பதம் உத்தேச்யத்தைச் சொல்லும் -பின் பதம் விதேயத்தைச் சொல்லும்
ஆஸ்ரய பதம் முன்பும் அடுத்து அயம் பதம்
ஸ்ரீ ராமாயணத்தில் குணங்கள் கூட்டங்களை சொல்லி அவை அனைத்தும் ஓன்று சேர்ந்து உள்ள வியக்தி யார்
என்று அன்வேஷணம் செய்து ஆஸ்ரயத்தை நிர்ணயித்துக் கொள்வது போல் இங்கும்
அயம் -ஏவ -அவதாரணத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் –

ஸ்ருத்யாதி நிகில ஆத்ம குண ஆஸ்ரயம் உத்திஸ்ய அயமிதி தாதாத்ம் யேந விதி –
தேநச உத்தேச்யதா வச்சேத கவ்யா பகத்வம் விதேய உபாஸதே

இத்யாதரேண
இப்படி அத்புத ரஸ அனுபவத்தோடு -ஆச்சர்யம் ஆச்சர்யம் -என்று மனம் ஆர்ந்த பரிவோடு
குரும் ப்ரகாஸயேத் தீமான் -என்ற விதியினால் சோதிதராய் புகழ்வர் அல்லர்
ப்ரீத் யைவ காரிதராய் உள்ளே நாபியில் இருந்து வரும் சொல் –

க்ருதி நோபி
ஸர்வஞ்ஞரும் -குண தோஷ விசார நிபுணரும் -தோஷஞ்ஞாருமான வித்வான்கள்
வித்வான் -விபச்சித- தோஷஞ்ஞன்- கோவிதன்-ப்ராஞ்ஞன்–சங்க்யா வான் –பண்டிதன் -கவி –
தீ மான் –ஸூரி -க்ருதீ -விசஷண ன் -அமரர் காட்டும் க்ருதி ஸப்த பர்யாயங்கள் –
சங்க்யா -விசாரணா -அஸ்தி -அஸ்ய இதி சங்க்யா வான் –என்று ஸூதை உரை-
இத்தனை பொருள்களையும் இங்கே க்ருதி பதம் காட்டும் – –
ஸதா -கூடவே இருக்கும் விசாரணா குசலரான அந்தே வாசிகள் –
அவர்கள் கால ஷேபம் முடிந்து மஹா வித்வான்களாகி க்ருதார்த்தர்களாக இருந்தும் வெளியே சென்று
ஸ்வயம் ஆச்சார்யக நிர்வஹணம் செய்யக் கூடிய க்ருதிகளாய் இருந்தும் என்னை விட்டு அகலாமல் இருக்கிறார்கள் –
இந்தப்பத்தை -இப்படிக்கொத்த நிபுண மஹான்களையும் -என்று இரண்டாம் வேற்றுமை உருபாகவும் கொள்ளலாம் –
ப்ரதமையாகவும் உரைகள்
இப்படிக்கொத்த திக் கஜங்களான விபச்சித்துக்களும் தங்களுக்கு உள்ளே ஒருவருக்கு ஒருவர்
பேசிக் கொள்ளும் படி என்று முதல் வேற்றுமையாகவும் உரை –

மித ப்ரவக்தும் –
மித -ஒருவருக்கு ஒருவர் என்றும் ரஹஸ்யமாகவும் என்றும்
ஒருவருக்கு ஒருவர் ரஹஸ்யமாகப் பேசிக் கொள்ளும் படி
என் ப்ரீதிக்காக என் காதில் விழும்படி பேசிக் கொள்வது இல்லை –
ஏகாந்தமாய் ஆசார்ய நாமசவ் -இவரே உத்தம ஆத்ம குண சம்பன்னர் -என்று ஹார்த்தத்தைப் பேசுவது
ப்ரத்யஷே குரவ ஸ்துதியா -என்ற நியமத்துக்குக் கட்டுப்பட்டு என் முன் பேசுவது அல்ல –
வக்தும் என்பதை
அந்தர் பாவித ணிச்சாக்க கொண்டு ப்ரவாசயிதும் -அவர்களைப் பேசுவிக்கும்படி என்றுமாம்
இப்படி உள்ள நிபுணர்களையும் பேசுவிக்கும் படி நான் அதி நிபுணமாய் ஏமாற்றிக் கொண்டே
வர்த்திக்கிறேன் என்ற பொருள் தெரிகிறது
நான் வர்த்திக்கிறேன் என்ற வர்த்தக கிரியைக்குக் கர்த்தாவே பேசுவிக்கச் செய்ய என்ற
ப்ரவசன கிரியைக்கும் ப்ரயோஜக கர்த்தா ஆகிறார் –
பேசுகிறவர்கள் பிரயோஜ்ய கர்த்தாக்கள் மட்டுமே
காரயித்ருத்வம் இவருக்கு -கர்த்ருத்வம் அவர்களுக்கு
இப்படி இவர்கள் பேசிக் கொள்ள வேணும் -என் ப்ரயோஜனத்துக்காக நான் ஏமாற்றி வர்த்திக்கிறேன் என்றுமாம்
ஆதாரத்தோடு இப்படி என்னைப் புகழும்படி -அறிவில் தலை நின்றவர்கள் எல்லாரும் தங்களுள் ஏக கண்டராய்
ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் புகழும்படி அன்றோ அடியேன் வர்த்திப்பது –

க்ருதி ந முதல் வேற்றுமையாகக் கொண்டும் உரைகள் உண்டு
க்ருதி ந -பன்மைக்கு நிஸ் சேஷமாய் எல்லாரும் என்றதாயிற்று
ப்ர-ப்ரகரஷேன வக்தும் -பல் கால் பேசுவிக்கும் படி
புன புன வசனம் ஹார்த்த தாத்பர்யத்துக்கு அசையாளம்
ஸ்வயம் ஆசாரதே யஸ்மாத் -ஆச்சார்ய லக்ஷணத்துக்கு ஒரு அம்சம்
ஸ்வயம் -எனக்கு ஆச்சார்ய குண சம்பத்து இல்லை
ஆசாரே ஸ்தா பயத் யபி -என்பதற்கு அடியோடு இடம் இல்லை
என் அந்தே வாசிகளான மஹான்கள் ஸ்வயம் ஸித்தர் போன்ற க்ருதிகள்

அத்யாபி அத்ர
இந்த உத்துங்க ஆச்சார்ய சிம்ஹாசனத்தில் அபி ஷேசனம் செய்யப்பட்டு இதில் வீற்று இருந்து
ஆசார்யகம் நடத்திக் கொண்டு இருக்கையிலும்
முன் இப்படி இருந்தது போகட்டும் -இப்பொழுதும் அப்படியே தொடர்ந்து வர்த்திக்கிறேன்
இந்த ஸ்ரீ ரெங்க ஷேத்ரத்திலே ஸ்ரீ பெரிய பெருமாளும் திருச்செவி சாற்றி அருளும்படி அவர் சந்நிதியில்
மஹத் கோஷ்டியிலே சுத்தானந்த ஸீமாவான சடகோபன் சாரஸ்வத சாரத்துக்கு
ஈடு முப்பத்தாறாயிரம் பிரவசனம் செய்த பிறகும்
ஸ்ரீ சைல –ஸ்ரீ தீ பக்த்யாதி குணார்ணவம் -என்று புகழப் பெற்ற பிறகும்

வஞ்சன பர
ஞானாதி கரான விசாரண குசல சிஷ்யர்களை ஏமாற்றுவதையே வியசனமாகக் கொண்டு அதிலே ஆசக்தனாய்
ஆளவந்தார் நைச்ய அனுசந்தானத்தை ஸூ சிக்கிறார்
என் அந்தே வாசிகள் ஞான சீலாதிகளிலே க்ருதிகள் -நான் வஞ்சனத்தில் க்ருதீ -அதி குசலன்

வர்த்தே-
வஞ்சனை விருத்தியோடே வர்த்திக்கிறேன்
அனுஷ்டான பூர்த்தி உடைய ஆசார்ய மூலமான பிரகிருதி –
அவர்களை போலவே விக்ருதிகளான பின் உள்ளார் வர்த்திக்க வேணும் என்று ஸ்ருதி கூறும்
இந்த சிஷ்ட அனு கரண அநு சந்தான சுருதி ஒரு அதிதேச நியமனம்
மூல ப்ரக்ருதிகளான யதீந்த்ராதிகளைப் போல் அந்த ஸ்தானத்தில் உள்ள விக்ருதியான
நான் வர்த்திக்க வில்லை
ப்ரவக்தும் யதா ததா -என்று அன்வயத்து உரை

யதீந்திர
தேவரீர் சம்யமீந்திரர்
தேவரீர் வர்த்தித்த பீடத்தில் நான் உட்கார்ந்து கொண்டு இங்கே இப்படி வர்த்திக்கிறேன்
யாதிகளுக்கு ராஜாவான உம்மிடத்தில் இப்படி பயம் இல்லாமல் வர்த்திக்கிறேன்

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -6-

October 27, 2020

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி –
சப்தாதி போக ருசி அந்வஹம் ஏதத்தே ஹா
மத் பாபம் ஏவ ஹி நிதாதம் அமுஷ்ய நாந்யத்-
தத்வாரய ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ–6-

தயைக சிந்தோ-கருணை ஒன்றாலே நிறைந்த சமுத்ரமே
ஆர்ய -உத்தம ஆச்சார்யரே
யதிராஜ -யதித்தலை நாதனே
மே -எனக்கு
பவதீய பதாப்ஜ பக்தி-தேவரீருடைய திருவடித் தாமரைகளில் பக்தி என்பது
அல்பாபி ந -கொஞ்சம் கூட இல்லை
சப்தாதி போக ருசி -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் ஆகிய புலன் விஷய அனுபவங்களில் ஆசை
அந்வஹம் ஏதத்தே -தினம் தோறும் வளர்கிறதே
ஹா-என் செய்கேன் பாவியேன்
அமுஷ்ய-இதற்கு
மத் பாபம் ஏவ ஹி நிதாதம் -என் பாபம் தான் மூல காரணம்
நாந்யத்-தத்வாரய -மற்ற ஒரு காரணம் கிடையாது–தேவரீர் தடுத்துத் தகைய வேணும் –

பகவான் என்னும் தேவன் இடத்தில் எல்லை கடந்த உத்க்ருஷ்டமான பக்தி இருந்தது போல்
குரு என்னும் தேவன் இடமும் அப்படியே
எல்லை கடந்த பர பக்தி இருப்பவருக்குத் தான் ஆச்சார்யர் உபதேசிக்கும் தத்வார்த்தங்கள் பிரகாசிக்கும் என்று
தகுந்த சிஷ்யனின் அதிகாரத்தில் ஆச்சார்யர் இடம் பர பக்தியை முக்கியமான அம்சமாகக் கூறி உள்ளது –

பூர்வ மீமாம்ஸையில் -6 வது அதிகாரம்-அதிகார அத்யாயம் என்று பெயர் –
இங்கு தொடக்கத்திலேயே அல்பமேனும் தமக்கு ஆச்சார்யர் திருவடிகளில் பக்தியே கிடையவே கிடையாது
என்று கூறிக் கொண்டு இந்த 6 வைத்து ஸ்லோகத்தில் அந்த அதிகார அத்தியாயத்தை ஸூ சிக்கிறார்
ஆனால் ப்ரஹ்ம வித்யா விசேஷத்தில் சிஷ்யத்வ அதிகாரத்தில் குறைவுகள் இருந்தாலும்
அவை ஆச்சாயர் கருணையாலும் பிராட்டி பகவான் கருணையாலும் யதேஷ்டமாய் திருத்தல்கள் செய்து
அதிகாரக் குறைகளை நீக்கி பூர்த்தி செய்வைத்து உண்டு

கர்ம காண்டத்தில் அதிகாரம் முதலியவற்றைப் பற்றிய விதிகளும் இந்திரியங்களின் துச்சரணங்களுக்கு
ஏற்பட்ட தண்டனை விதிகளும் தயைக்கு இடம் கொடாமல் மிகவும் கடினமாகவே உள்ளன –
தவறுகளுக்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தங்களும் கடினமாகவே இருக்கும் –
அவற்றைச் செய்யும் பொழுதும் லோபங்கள் வரும் -அவற்றுக்கும் ப்ராயச்சித்தங்கள் –
அவற்றுக்கு லாபங்கள் இப்படி அநவஸ்திதமாய் மீளும்
தயாளியால் ஆச்சார்யர்ப்பிராட்டி பெருமாள் திரு உள்ளம் உகந்து க்ஷமித்து மன்னித்து விடும் ஞான விசேஷம்
தயா சாதகத்தில் -நிஷ் க்ருதி ர் ஆத்யா -செய்ய வேண்டாத ப்ராயச்சித்தமான – ஞான விசேஷம் என்கிறார்

இதையே தயை ஏக ஸிந்தோ -என்று கூரத்தாழ்வான் அருளிச் செய்த தனியனில் உள்ள
அதே சொல் தொடர் இங்கு அருளிச் செய்கிறார்
அனுக்ரஹமயீம் வந்தே நித்யம் அஞ்ஞான நிக்ரஹாம் -என்று தாயாருக்கும் தாய் போன்ற வாத்சல்யம்
உள்ள ஆச்சார்யர்களுக்கும் தயை ஒன்றே சமுத்ரமாக பெருகி உள்ளது
பாபா நாம் வா சுபா நாம் வா வதர்ஹானாம் பிலவங்கம் கார்யம் கருணம் ஆர்யேண –
பிராட்டி உபயோகித்த ஆர்ய பதம் இங்கும்
ந பக்திமான் த்வச் சரணார விந்தே -பகவான் ஆளவந்தார் ஸ்ரீஸூ க்திகளை இங்கு
இவர் எம்பெருமானார் விஷயத்தில் பிரயோகிக்கிறார் –

சப்தாதி போக ருசி அந்வஹம் ஏதத்தே ஹா
விஷயாந்தர ப்ராவண்யமே கடலாக பெருகி இங்கே
இப்படி இருக்க தேவரீர் இடம் பக்தி ரஸம் எப்படி உண்டாகும்
பக்தி நிஷ்டைக்கு பகவத் நிஷ்டை போல் சமம் தமம் விஷய ரஸ உபரதி போன்றவை
இருந்தால் தானே அதிகாரம்

ஸத் புத்தி -சாது சேவீ -சமுசித சரித -தத்வ போத அபிலாஷீ -ஸூஸ்ருஷு -த்யக்தமான –
ப்ரணி பதந பர -ப்ரஸ்ன கால ப்ரதீக்ஷ -சாந்தோ தாந்த -திதிஷு -சரணம் உபகத –
ஸாஸ்த்ர விசுவாஸ சாலீ சிஷ்ய -ப்ராப்த பரீஷாம் -க்ருத வித் அபிமதம் –
தத்வத சிக்ஷணீய -ந்யாஸ திலக ஸ்தோத்ரம் -சிஷ்யத்வ லக்ஷணங்கள்
அதிகாரமே இல்லாதவன் உம திருவடித்தாமரைகளில் நிறைந்த நிஷ்டையை எப்படி அடைய முடியும்
ஹா
நைராஸ்யத்தையும் நிர்வேதத்தையும் கூக்குரல் இட்டுக் காட்டுகிறார் –

மத் பாபம் ஏவ ஹி நிதாதம் அமுஷ்ய நாந்யத்-
என் ஆத்மாவுக்கு வந்து இருக்கும் விஷயாந்தர ப்ராவண்யத்துக்கு என்ன மருந்து என்று தேட வேண்டும்
அதற்கு முன் நோய்க்கு மூல காரணமான நிதானம் தேட வேண்டும்
நிதானத்தை பராமர்சிக்கையில் என்னுடைய மிகுந்த பாபமே மூல காரணம் என்று தெளிகிறது –

தத்வாரய-
இந்த பாபக்கூட்டத்தை அழிக்க வல்ல எளிய மார்க்கம் தேவரீர் இடமே உள்ளது
அதற்கு வெளியே போக வேண்டியது இல்லை
பாபங்கள் புண்யங்கள் ஈஸ்வர கோபமும் ப்ரீதியுமே
அவன் உமக்கு வசப்பட்டவன்
உம்முடைய கடாக்ஷம் பெற்று உம்முடைய சம்பந்தம் பெற்றதும் அவன் கடாக்ஷமும் கூடவே விழுந்து
பாபங்கள் போகுமே -ஆத்ம ரோகம் தீர்ந்து விடும்
இந்திரியங்கள் -திருடர்கள் கொள்ளை அடிக்காமல் காக்கும் பொறுப்பு ராஜாவுக்கும் அவனைச் சார்ந்த
அதிகாரி புருஷர்களுடைய பரம் அன்றோ
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம்-கீழே முதல் ஸ்லோகத்தில் அருளிச் செய்ததை நினைவூட்டுகிறார்
அகபரி ஹரணாத் -பாபங்களைப் போக்குவது பகவான் என்னும் தேவனுக்கும் ஆச்சார்யர் என்னும் தேவனுக்கும்
பொதுவான அதிகாரம் தானே –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -5-

October 27, 2020

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரய அர்த்த நிஷ்டாம் –
மம அத்ர விதர அத்ய யதீந்திர நாத
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே-
ஹ்ருஷ்டாஸ்து நித்யம் அனுபூய மம அஸ்ய புத்தி –5-

யதீந்திர-யதிகளில் ஸ்ரேஷ்டரே
நாத-ஸ்ரீ வைஷ்ணவ பிரபன்ன குலத்திற்கு ஸ்வாமியே
யதீந்திர நாத-யதி ஸ்ரேஷ்டர் களுக்குள் தலைவரே
அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரய அர்த்த நிஷ்டாம் -எட்டு எழுத்து என்கிற பெயரை உடைய
ஸ்ரேஷ்ட மந்திரத்தில் உள்ள மூன்று பதங்களின் பொருள்களில் வழுவாத நிஷ்டையை
மம அத்ர விதர அத்ய -எனக்கு -இங்கேயே -இப்பொழுதே -தானம் செய்து அருள வேண்டும்
ஆத்ய -என்று பதம் பிரித்தால் -ப்ராஸீம் பதவீம் யதிராஜ த்ருஷ்டாம் -என்றபடி
இந்த ப்ராஸீனமான தர்சனத்தை மஹரிஷியாக ஸாஷாத் கரித்த முதல்வரே -என்றும்
நாத உபஞ்ஞன மான இந்த தர்சனத்தை -த்ராதம் சம்யக் யதீந்த்ரை -என்று அகில தம தர்சனம் ஆகும் படி
நன்கு பரி ரக்ஷணம் செய்து அருளினை ப்ரதானரே -என்று கொள்ள வேண்டும்
அஸ்ய மம புத்தி -இந்த -சிஷ்டாக்ர கண்யர் அல்லாத என்னுடைய புத்தி
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே—சிஷ்டர்களில் உயர்ந்தவராக மதிக்கப் படுபவரால் நெருங்கி
சேவிக்கத் தக்க உம்முடைய தாமரை திருவடி இணையை
ஹ்ருஷ்டாஸ்து நித்யம் அனுபூய புத்தி –எக்காலமும் அநுபவித்து அநுபவித்து ஓயாமல்
மகிழ்ச்சியோடு இருக்க அருள வேணும் –

அஷ்டாஷராக்ய மநுராஜ
அஷ்டாக்ஷரம் என்கிற ஆக்யை-பெயர் உடைய மூல மந்த்ரம் –
மந்த்ர ராஜம் என்பது நரஸிம்ஹ விஷயமான மந்த்ர ஸ்லோகத்துக்கு ரூடமான பெயர்
இங்கு மந்த்ர ராஜம் என்ற பத பிரயோகம் இருந்தால் அத்தையே குறிக்கும்
மந்த்ரம் பொருளில் -மநு சப்தம் -பிரயோகித்து மநு ராஜ -அஷ்டாக்ஷரம் -மந்திரங்களில் ஸ்ரேஷ்டம் புஷ்கலம் –
என்பதை காட்டவே மநு ராஜ ஸப்த பிரயோகம்

வைவஸ்தோ மனுர் நாம மான நீயோ மநீஷிணாம் ஆஸீன் மஹீ ப்ருதாம் ஆத்ய
பிரணவ சந்தஸா மிவ -ரகுவம்ச முதல் ஸ்லோகம்
விவஸ்வான் ஸூர்ய குமாரர்களில் மனு ராஜாக்களுக்குள் முதல்வர் மூல பூதர் -பிரணவம் வேதங்களுக்கு மூலமான
ஆதி போல் மனு சிஷ்டர்களான மநீஷி களுக்கு மான நீயரான சிஷ்டாக்ர கண்யர் –
மேலும் அவர் சிஷ்டாக்ர கண்யர் களான மனீஷிகளால் ஸேவ்யர் -காளி தாசர் வாக்கியமும் ஸ்வாமி நெஞ்சில் உள்ளது –
இந்த மநுராஜம் மநு ராஜ்யரைப் போல் ஆத்யமான மூல மந்த்ரம் –

மநு ராஜருடைய ஸ்ம்ருதி தொடக்கத்தில் மஹரிஷிகள் கூடி அவரை சேவித்து பரி ப்ரஸ்னம் புண்ணியத்தில் அவர்
ஆபோ நாரா இதி ப்ரோக்தா -ஆபோவை நர ஸூநவ தாய தஸ்யா யநம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருதா -என்றும்
ஸோபித்யாய சரீராத் ஸ்வாத் ஸுஸ்ருஷுர் விவிதா ப்ரஜா -அப ஏவ சசர்ஜா தவ் தாஸூ வீர்ய மவாஸ்ருஜத்-என்ற
ஸ்லோகங்களால் நாராயண சப்தத்தின் உத்பத்தியையும்
ஆதி காரணமான நாராயணன் அநேக விதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்ப மாத்ரத்தால்
முதலிலே தன் சரீரத்தில் இருந்து அப்புக்களை ஸ்ருஷ்டித்தார் -என்று
நாராயணன் தன் சரீரத்தில் இருந்து சித் அசித்துக்களை ஸ்ருஷ்டிக்கிறார் என்ற சித்தாந்தத்தையும் கூறினார் –
இவ்வாறு மநு ஸ்பஷ்டமாகக் கூறியதை ஸூத்ர காரரும் பிரகிருதி அதிகரணத்தில் -முதல் அத்யாய முடிவில் –
அபித்யோ பதே சாச்சா -என்கிற ஸூ த்ரத்தில் பராமர்ச்சித்து ஹேதுவாக அமைத்தார் –
மற்ற ஸ்ருஷ்டி வாக்கியங்களில் ஐஷத –அகாமயத -போன்ற கிரியா பதங்களால் ஸங்கல்பத்தைப் பேசியுள்ளது –
ஸூத்ரகாரர் படித்த அபித்யா சப்தம் இந்த மநு ஸ்லோகத்தில் உள்ளது –

இது ஸூ த்ரகாரர் ஹ்ருதயத்தில் அபித்யா ஸூத்ரத்தில் இருப்பது ஸ்வ ரஸம்
ராம சந்திரருடைய மநு ஸ்ம்ருதி வியாக்யானத்தில் -அப்புக்கள் என்கிற நர ஸூ நுக்களான நாரங்கள்
நரனாகிய பரமாத்மாவினிடம் இருந்து உண்டாகும் ஜீவ ஸமூஹங்கள் -என்று கூறி உள்ளார் –
ரஹஸ்ய கிரந்தங்களில் நாராயண பத உத்பத்தி பரமான மநு ஸ்ம்ருதி ஸ்லோகம் முக்ய பிரமாணமாக
பூர்வர்கள் காட்டி அருளி உள்ளார்கள் –

ஆம்னாய யுக்தம் பதம் அவ்யதாம் ஸார்த்தம் ஆச்சார்ய தத்தம் -என்கிறபடி ஆச்சார்ய உபதேஸத்தாலே
பதங்களின் ஞானம் பெற்று அவற்றுக்குத் தக்க அனுஷ்டானமும் பெற வேண்டும் என்று பிரார்திக்கிறார்
இங்கு பதம் என்பதற்கு வாக்கியம் என்றும் அபிப்பிரேதம்
ஒவ்வொரு பதமும் ஒவ்வொரு வாக்யமாகக் கொண்டு மூன்று வாக்கியங்களையும் ஏக வாக்யமாகக் கொண்டு
மஹா வாக்யமாகவும் யோஜனை உண்டு –

வாக்ய ஏக வாக்கியமாக பொருள் காட்டியதில் கண்டா வாக்கியங்களில் ஒவ்வொன்றையும் ஓர் பதம்
என்று மீமாம்ஸகர் வியவஹரிப்பர்
மீமாம்ஸையில் ஐந்தாவது அத்யாயம் க்ரம அத்யாயம் என்று பெயர்
சுருதி அர்த்தம் பாடம் முதலிய ஆறு க்ரம விஷயமான பிரமாணங்கள் அங்கெ கூறப்பட்டுள்ளதில்
இங்கு -பத த்ரய அர்த்த-என்னும் இடத்தில் பதம் -என்று பதபாடம் பொருளில் மூன்று பாதங்களின் பாத க்ரமத்தையும்
அர்த்த -என்பதால் அர்த்த க்ரமத்தையும்
ஆக்யை-என்பதால் ஸ்ருதியாலேயே தம் கண்டத்தினில் ஸ்பஷ்டமாக க்ரமத்தை ஆக்யானம் செய்யும்
ஸ்ருதி க்ரமத்தையும் ஸூசிக்கிறார் –
திரு மந்த்ர மூன்று பாதங்களின் பொருள் வர்ணனத்தில் பத பாட க்ரமத்தை அநுசரிப்பதும் உண்டு –
அத்தை மாற்றி அர்த்த க்ரமத்தை அனுசரித்தும் உண்டு

இந்த ஸ்லோகத்தில் முன் பாதியில் நாராயண நிஷ்டையை திரு மந்திர அர்த்தத்தின் நித்ய அனுசந்தான
மூலமாக அளிக்க வேணும் என்று
எம்பெருமானாரை ஆச்சார்யராக வரித்து பிரார்த்தித்து விட்டு பிறகு ஆச்சார்யரான எம்பெருமானார்
திருவடித் தாமரைகளில் ஹர்ஷத்தோடே அனுபவத்தை பிரார்த்திக்கிறார்
பரீஷ்ய லோகான் கர்மஸிதான் – -என்கிற முண்டக சுருதியில்
ஸமித் பாணியாய் ப்ரஹ்ம நிஷ்டரான ஸ்ரோத்ரியரான குருவையே அபி கமனம் பண்ணி
அவரிடம் தாத்விகமாக ப்ரஹ்ம வித்யையை ஸ்ரவணம் செய்து நன்கு பெற வேணும்
என்று கூறியுள்ள க்ரமத்தில் ஆச்சார்ய உபாஸனம் முந்தியும் அவரிடம் இருந்து ப்ரஹ்ம வித்யா நிஷ்டை பெறுவது
பின்புமாகும் என்னும் கிரமத்தை முன் பின்னாக மாற்றி உள்ளது போல் காண்கிறது

நன்கு பராமர்சித்தால் இங்கு அப்படி இல்லை என்று தெளியலாம்
திரு மந்த்ரார்த்தத்தைத் தெளியச் செய்து ப்ரஹ்ம வித்யை யாகிய அதில் எனக்கு ஸந்ததமும் நிஷ்டையை
தேவரீர் விதிப்படி கொடுக்க வேண்டும் என்று சாதிப்பதாலேயே முன்பே குருவை அபி கமநம் செய்து
வித்யா தான பிரார்த்தநம் செய்ததாகத் தெளிவாகிறது –
அஷ்டாக்ஷர பத த்ரயார்த்தம் ப்ரஹ்ம வித்யையே ஆகும்
சாரீரகம் நான்கு அத்தியாயங்களும் இம்மந்திரத்தினுடையவும் அதிலும் நாராயண பதத்தினுடையவும் பொருளில்
அடங்கி உள்ளது என்று ரகஸ்ய கிரந்தங்களில் –
காரணத்வம் -அபாத்யத்வம் -உபாயத்வம் -உபேயதா -இதி சாரீரக ப்ரோக்தம் இஹ சாபி வியவஸ்திதம்
என்று விளக்கப் பட்டுள்ளது –
மநுராஜர் தம் ஸ்ம்ருதி தொடக்கத்திலேயே நாராயணனே தன் சரீர விசிஷ்டனாய் ஜகத்துக்குக் காரணம்
ஆகிறான் – என்பதைக் காட்டினார் என்பதை இங்கே மநுராஜ ஸூஸித்தத்தை முன்பே பார்த்தோம் –

நாராயண நிஷ்டை சித்திக்கையில் அவருக்குச் செய்யும் கைங்கர்ய ஆனந்தம் தத் அபிமத பர்யந்தம் ஆக்கி
பாகவத கைங்கர்யத்தில் அதிலும் பகவானைப் போல்
முக்தியிலும் நித்ய சேஷித்வத்தை யுடைய ஆச்சார்யன் இடத்தில் புருஷார்த்த காஷ்டையாக-எல்லையற்ற ஹர்ஷமாக –
பலத்தில் ஸித்திப்பதை இங்கே இரண்டாம் பாதியில் காட்டப் பட்டுள்ளது –
முன் பாதியில் பகவத் நிஷ்டையைப் பிரார்த்தித்து -பின் பாதியில் ஆச்சார்யர் இடம் நித்ய நிஷ்டையை பிரார்த்திப்பதில்
நித்யமும் உம்முடைய திருவடித் தாமரைகளை அனுபவித்து அனுபவித்து என்னுடைய புத்தி மிகவும்
ஹர்ஷத்தோடு கூடி இருக்க வேணும் -என்று
பிரார்த்திப்பதால் ஆனந்தம் என்னும் புருஷார்த்தத்தின் அதிகப் பெருக்கை விளக்குகிறார் –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் -ஸ்தோத்ர ரத்னம் போல் –
ஈஸ்வர தேவனைப் போல் ஆச்சார்ய தேவனையும் உபாஸிக்க வேண்டும் என்று இருவருக்கும் உள்ள
சத்ருசமான அத்புத மஹிமைகளை
அஞ்ஞான த்வந்த ரோதாத் அக பரி ஹரணாத் ஆத்ம சாம்யா வஹத்வாத் -ஜன்ம ப்ரத்வம்ஸி ஜன்ம பிரத கரி மதயா
திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத் நிஷ ப்ரத்யூஹா ந்ருசம்ஸ்யாத் நியதர சதயா நித்ய சேஷித்வ யோகாத் ஆசார்ய
சத் ப்ரப்ரத்யு பகரண தியா தேவவத் ஸ்யாது பாஸ்ய -ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்லோகம்
ஸ்வாமியின் வியாக்யானங்களில் உதாஹரிக்கப் பட்டுள்ளது –

எம்பெருமானார் இடத்தில் இவர் சாஷாத்தாக ஆஸ்ரயிக்கா விடிலும் –
யத் பதாம் போருஹ த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ வஸ்து தாம் உபயா தோஹம் யாமுநேயம் நமாமி தம் -என்கிற
ஸ்ரீ கீதா பாஷ்ய மங்கள ஸ்லோக வியாக்யானத்தில் அவதாரிகையில் துரோணாச்சார்யார் இடம் ஏகலவ்யன் போல்
ஸ்ரீ பாஷ்யகாரர் ஆளவந்தார் திருவடிகளை த்யானம் செய்து கொண்டே அவருக்கு சிஷ்யராகி வஸ்து ஆனதாக
அனுசந்தித்தாக காட்டியது போல் எம்பெருமானார் விஷயத்தில் இவருக்கு சிஷ்யத்வ அபிமானம் –

பத்யு ஸம் யமி நாம் ப்ரணம்ய சரணவ் தத் பாத கோடீ ரயோ சம்பந்தேன சமித்யமான
விபவான் தன்யாம் ஸ்தான்யான் குரூன் -நியாய பரிசுத்தி மங்கள ஸ்லோகத்தில்
எம்பெருமானார் திருமுபை சம்பந்தத்தால் முன்னோர்களும் திருவடி சம்பந்தத்தால் பின்புள்ளோரும் தன்யரானார் என்றும்
இவரே நடு நாயகமாய் எக்காலத்திலும் திகழ்கிறார் என்றும்
அமுநா தப நாதி சாயி பூம்நா யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி விபுதா நாம்
ஹ்ருத யங்க மா விபாதி -யதிராஜா சப்தாதி ஸ்லோகம்
இவருடைய திவ்ய ஆஜ்ஜை அங்கும் இங்கும் செல்லும் என்பர் –
இவர் விஷயத்தில் எத்தனை பூஜித்தாலும் புகழ்ந்தாலும் மிகை யாகாதே

சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே-ஹ்ருஷ்டாஸ்து நித்யம் அனுபூய மம அஸ்ய புத்தி –என்ற இடத்தில்
அஸ்ய மம என்பதால்
தாம் சிஷ்டர் அல்லர் என்றும்
அதிலும்-அக்ர கண்யர் அல்லர் என்றும்
நைச்ய அனுசந்தானம் வியஞ்ஜிதம்

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -4-

October 26, 2020

ஆழ்வான் பிள்ளான் முதலிய புராண புருஷர்களுடைய கரண த்ரயங்களும்
எம்பெருமானார் திருவடி த்வந்தத்தில் ஈடுபட்டு இருந்தன –
அவர்கள் திருவடிகளில் எனக்கு நிரந்தர பக்தியை அருள வேண்டும் என்கிறார் –

வேதாந்தங்களில் தத்க்ரது நியாயம் உண்டு –
ப்ரஹ்ம க்ரதுவாக யாவதாயுஷம் ப்ரஹ்மத்தைத் தியானிக்க வேண்டும் –
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா அய நாய வித்யதே
திரு நாரணன் தாள் சிந்தித்து உய்ய வேண்டும்

முன் ஸ்லோகத்தில் என்ன என்னமோ பிரார்த்தித்தீரே
நீர் பிரார்த்திப்பது ப்ரஹ்ம க்ரது என்னும் ப்ரஹ்ம உபாசன ஸித்திக்காகவோ அல்லது
நீராக உத்தேசிக்கும் வேறு புருஷார்த்துக்காகவா என்ற கேள்வி வரக் கூறுகிறார் –
மீமாம்ஸை நான்காவது அத்தியாயத்தில் சில கிரியைகள் க்ரத் வர்த்தமா -யாக ஸ்வரூபத்தை ஸித்திக்காகவா –
அல்லது கோறும் அடுத்த பலத்துக்காகவா -என்று விசாரம் –
ப்ரஹ்ம பிராப்தி பரம புருஷார்த்தம் -பரம பிரயோஜனம் என்பது உண்மையே
அது ப்ரஹ்ம க்ரதுவினால் ஸித்திப்பதே
ப்ரஹ்ம த்யானம் ப்ரஹ்ம க்ரது தத் க்ரத்வர்த்தம் -அடியார்கள் சேவை -புருஷார்த்த காஷ்டை என்று
இங்கே 4 வது அத்யாய விஷயத்தை ஒருவாறு ஸூ சிப்பதில் திரு உள்ளம்

த்ரிகரணங்களாலும் உம்மையே ஆழ்வான் முதலிய பெரியோர்கள் உபாசித்தார்கள் –
என் கரண த்ரயங்களும் உம் திருவடிகளில் லயிக்கும் படி அனுக்ரஹிக்க வேண்டும்
என்று இங்கே பிரார்த்திக்கிறார்
அந்வய மூலமாகவும் வ்யதிரேக மூலமாகவும் பிரார்த்திக்கிறார்
உமது திருவடிகள் விஷயத்தில் இன்புற்று சக்தமாய் இருக்க வேண்டும் என்பது அந்வயம் –
மற்ற எதையும் கண் எடுத்துப் பார்க்கக் கூடாது என்பது வியதிரேகம்
மூன்று பாதங்களில் அந்வயத்தையும்
நான்காம் பாதத்தில் வியதிரேகத்தையும் கூறுகிறார் –

நித்யம் யதீந்திர தவ திவ்ய வபு சம்ருதௌ மே-
சக்தம் மநோ பவது வாக் குண கீர்த்தநேசௌ-
க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய –
வ்ருத்யந்த்தரேஸ்து விமுகம் கரணத்ரயம் ச–4-

யதீந்திர-யதித் தலை நாதனே
நித்யம் -ஒழிவில் காலம் எல்லாம்
தவ திவ்ய வபு ஸ்ம்ருதௌ -உன் திருமேனியின் நினைவில்
மே-சக்தம் மநோ பவது -அடியேன் மனம் ஆசை கொண்டு இருக்க வேண்டும்
அசௌ வாக் –இந்த என் வாக்கு
குண கீர்த்தநே– உமது குண கீர்த்தனத்திலேயே
ஸததம் ஸக்தம் பவது-ஆ சக்தமாய் இருக்க வேண்டும்
க்ருத்யம் கர த்வயஸ்ய -இரு கைகளின் செய்கையும்
ச தாஸ்ய கரணம் து ஸக்தம் பவது-சேஷ வ்ருத்தியிலேயே இன்புற வேண்டும்
கரணத்ரயம் ச-முக்கரணங்களும்
வ்ருத்யந்த்தரே அஸ்து விமுகம் -மற்ற வியாபாரங்களில் கண் எடுத்துக் கூடப் பார்க்காமல் இருக்க வேண்டும் –

நித்யம்
நித்தியமாக ஆச்சார்ய உபாஸனத்தை விரும்புவோம்
இது கோறும் புருஷார்த்த காஷ்டையைத் தரும் காம்ய கர்மமாய் இருக்க வேண்டும்
என்று வைச்சித்ர்ய ரஸம் ரசிக்கத் தக்கது –
காம்யம் நித்யம் ஆகிறது என்று விரோதா பர்யாய அலங்காரமும் த்வநிக்கிறது –

யதீந்திர
யதித் தலை நாத
யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹத -என்று ஆழ்வான் பாடிய படி
நீர் நித்யம் அச்யுதன் திருவடிகளில் ஸக்தர் –
உம்முடைய திருமேனியின் ஸ்மரணத்தில் எமக்கு நித்ய வியாமோஹம் வேண்டும்
எத்தனை ஆச்சார்யர்கள் பின் வந்தாலும் நீரே குரு பரம்பரையின் நடு நாயகம்

நித்யம் யதீந்த்ர-
நித்ய காலமும் -கால தத்வம் உள்ளதனையும் நீரே எதித்தலை நாதர் என்று
நித்யம் யதீந்த்ர என்று சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும் –

தவ திவ்ய வபு சம்ருதௌ
அப்ரதீ காலம்பனருக்கு அர்ச்சிராதி கதி உண்டு என்பர் –
உம திவ்ய சரண ஆலம்பனராய் இருக்க அதுவும் லபிக்கும்
இங்கு யோகத்தை -நிரந்தர பாவனையைப் -பிரார்த்திப்பதால் மனஸ்ஸூ வாக்குக்கு முன் வந்து விட்டது –

மே-சக்தம் மநோ பவது
மனஸ்ஸூக்கு வ்யாமோஹம் நீங்காமல் இருக்க வேண்டும் –

வாக் அசௌ
இது என் வாக்கு
என் பொல்லா வாக்கு
தோஷ கீர்த்தனத்தையே செய்து கொண்டு பாபத்தில் சாக்தமான என் வாக்கு என்று ஓர் கருத்து
இப்போது உம் குண கீர்த்தனத்திலே சக்தமாக ஸ்துதி பாடிக் கொண்டு இருக்கும் இந்த என் வாக்கு –

குண கீர்த்தநே
தவ-என்பதை இங்கேயும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
முதல் அடியில் உள்ள திவ்ய -பதத்தின் -ஸ்மரணத்தைக் கொண்டு இங்கும்
உம்முடைய திவ்ய குணங்களைக் கீர்த்தனம் செய்வதில் -என்றும் பொருள் கொள்ளலாம்
தைவீ சம்பத்து என்று ஸ்ரீ கீதையில் வர்ணித்த குணங்கள் திவ்ய குணங்கள்
கீர்த்தநம் -என்கிற பதத்தால் பகவத் குண கீர்த்தநம் போல் பரம சுத்தியையும் அனுபவத்தையும் தருவது
என்று பகவத் துல்யமான கௌரவத்தை ஸூசிக்கிறார்

அசௌ வாக் –
என்று சொல்வது இந்த என் நாக்கு என்று அபிநயத்தோடு கூடக் காட்டுவதையும் குறிக்கும்

ஸூ தரிடம் ஸ்ரீ பாகவதம் ஸ்ரவணம் செய்த ஸுவ்நக மகரிஷி-2 ஸ்கந்தம் 3 அத்தியாயத்தில்
ஜிஹ்வா அசதீ –ஸூதந சோபகாயத்யுருகாயா காதா -என்றது
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி -என்று கொத்தப்பிராட்டி
வி சக்ர மாணஸ் த்ரேதாருகாய -என்று வேதம் டிண்டிமம் போல் உத் கோஷத்தை ஸூசித்தது
உரு காயன் என்பது அநேகம் பேர் களால் உச்ச ஸ்வரத்தில் ஆரவாரத்தோடு பாடப் படுபவனைச் சொல்லும்
உலகம் முழுவதும் தன் திருவடி முத்ரை பதியும் படி திருவடியை ஒத்தித் தந்தவர் த்ரிவிக்ரமர்
உலகம் முழுவதும் அவர் திருவடியின் ஸ்வம் என்று உலகம் எங்கும் எப்பொருளிலும் முத்ரை வைத்துக் காட்டியது
த்ரிவிக்ரமன் யஸஸ் விஷயமான காதைகளை ஓங்கி மகிழ்ந்து பரம ஆதரத்துடன் பாடாத நாக்கு
அஸதீ -இல்லது என்றே சொல்ல வேணும் –
ஸூத மஹரிஷியே அந்த நாக்கு ஸதீ உள்ளதாகக் காணப்படுகிறதே என்று சிலர் ஆபேஷித்தால்
அது ஸதீ உளதேல் -தார் துரிகா ஏவ ஸூத அது தவளை நாக்கே -மனுஷ்ய நாக்கு அல்ல என்று
அறுதி இடலாம் என்று அந்த ஸ்லோகத்தின் ரஸம் –
இந்த என் நாக்கு உன் குண கீர்த்தனத்தில் ஸக்தா பவது -எப்பொழுதும் பற்று உடையதாய் இருந்து
அதிலேயே வ்யாபரிக்க வேணும் –

க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய
இரண்டு கைகளின் செய்கை முழுவதும் உனக்குப் பணிவிடை செய்வதிலேயே மன்னி இருக்க வேண்டும்
இங்கு து -ஏவ என்று பொருள்
ச என்று முன் இரண்டு அடிகளில் கூறின மநோ வாக்குகள் போக மிகுந்தத்தைக் கூட்டுவது –

ஸ்ரீ மத் பாகவதம் -9 ஸ்கந்தத்தில் அம்பரீஷ உபாக்யானத்தில் அம்பரீஷருடைய பகவ நிஷ்டையை
ச வை மந கிருஷ்ண பதார விந்தயோ வஸாம்சி வைகுண்ட குண அநு வர்ணேந கரௌ
ஹரேர் மந்திர மார்ஜுன திஷு -என்று தொடங்கி
மநோ வாக் காயங்கள் மூன்றும் பகவானிடம் மன்னி வழு விலா அடிமை செய்தன என்றும்
தசம ஸ்கந்தம் 80 அத்யாயம் குசேலர் உபாக்யானத்தில்
ச வாக் யயா தஸ்ய குணான் க்ருணீத கரௌ ச தத் கர்ம கரௌ மனஸ் ச ஸ்மரேத் வசந்தம்
ஸ்திர ஜங்கமேஷு என்று வாக் காய மனங்களின் முக்கிய க்ருத்யங்கள் எவை என்று வர்ணித்ததையும்
இங்கே ஸ்வாமி நினைத்ததாகக் கொள்ளலாம்

அங்கும் இங்கும் பதங்களின் ஒற்றுமையும் பொருள்களின் ஒற்றுமையும் காணலாம்
அம்பரீஷ உபாக்யானத்தில் இம்மூன்று கரணங்களின் க்ரமத்தை அநு சரித்துள்ளது
மநோ வாக் காயங்கள் என்று சொல்லும் நிர்தேசத்துக்குப் பொருந்தும்
மநோ பூர்வ வாக் உத்தர -என்கிற கிரமத்தையும் இங்கு அநுசரிப்பதாகும் –
சா வாக் என்று குசேல உபாக்யானத்தில் -இங்கு அ சவ் வாக் என்று மாற்றியது
தம்முடைய இந்த நாக்கு என்று அபி நயித்துக் காட்டி அருளவே
அங்கு சா அது என்று பரோக்ஷ நிர்தேசம்

கரௌ ச தத் கர்ம கரௌ-என்று பாகவத ஸ்லோகத்தில் மிக்க ரசம் உண்டு
பகவத் கர்மங்களைக் கரணம் செய்யும் கரங்களே ஜீவன் தன உயிர் உடன் இருப்பவன் கரங்களே ஆகும்
இல்லையேல் சவ்நகர் 2 ஸ்கந்தத்தில் முன் கூறிய பிரகரணத்தில் -சாவவ் கரௌ -அவை பிணங்களின் கரங்களே –
உயிர் உள்ளவன் கரங்கள் அல்ல என்று நிந்தனைக்கு விஷயங்கள் ஆகும்
இந்த ரசத்தை க்ருத்யம் ச தாஸ்ய கரணம் -என்பதால் வியஞ்சனம் செய்கிறார் –
அது எங்கனம் என்னில்
தாஸ்ய கரணம் தான் க்ருத்யமாகும் -இல்லையேல் அது செய்கையே ஆகாது -என்று
வியாப்தியையும் க்ருத்யம் என்பதற்கு லக்ஷணத்தையும் காட்டுவது என்பது ஸ்பஷ்டம் –
என் செய்கை முழுவதும் உம் தாஸ்ய க்ருத்யமாகவே இருக்க வேணும்
இங்கே கரண சப்த்தத்தை புனருக்தம் போலே பிரயோகித்து இருப்பதால் தாஸ்ய கரணம் தான் க்ருத்யம் தான்
என்று அறுதி இடுவதோடு அடுத்து நான்காம் பாதத்தில் உள்ள கரண த்ரயம் என்ற பதத்தில்
கரண பாதத்தை பொறி இந்திரியம் என்னும் பொருளில் பிரயோகித்து
பகவான் ஆச்சார்யர் இவர்களுக்கு தாஸ்ய கரணம் செய்தால் தான் கரணங்கள் என்னும்
இந்திரியங்கள் கரணங்கள் ஆகும் -இல்லையேல் இவை துஷ் கரணங்கள் -அல்லது வி கரணங்கள்
அல்லது அகரணங்கள் ஆகும் என்பதையும் வியஞ்சனம் செய்கிறார்

வ்ருத்யந்த்தரேஸ்து விமுகம் கரணத்ரயம் ச-
முன் மூன்று பாதங்களாலும் மநோ வாக் காயங்கள் உளது என்று கூறும் யோக்யதையைப் பெறுவதற்கு
யதிராஜன் விஷயமாகவே நித்யமும் விநியோகிக்கப் பட வேணும் என்பதை அன்வய முறையில் காட்டி அருளி
அத்தை த்ருடீ கரிக்க வியதிரேக முறையில் நான்காம் அடியில் ஒரே பதத்தால்
மூன்றையும் சேர்த்து ஸங்க்ரஹித்து அருளுகிறார்
யத் சத்வே யத் சத்வம் -என்பது அன்வய முறை
யத பாவே யத பாவ -என்பது வியதிரேக முறை

யதிராஜ பக்தி நிஷ்டையில் நித்யமும் அன்வயம் இருந்தால் இவை மூன்றில் ஓன்று ஒன்றும் உளதாகும்
என்று முதல் மூன்று பாதங்களிலும் காட்டிய அந்வய முறை
அந்த நிஷ்டை இல்லையேல் இவை மூன்றும் இல்லனவே யாகும் என்று இந்த
நான்காம் பாதத்தில் காட்டுவது வியதிரேக முறை –
விருத் யந்த்ரத்தை வி முகத்வத்தை பிரார்த்திப்பதால் எம்பெருமானார் விஷயத்திலேயே இங்கு கூறும்
மனோ வ்ருத்தி வாக் வ்ருத்தி காய வ்ருத்தி மூன்றும் அபிமுகமாக இருக்க வேண்டும் என்றும்

யோக சித்த வ்ருத்தி நிரோத-என்கிற யோக ஸூ த்ரத்தில் கூறிய லக்ஷணம் படி
எம்பெருமானாரை உபாசனம் செய்யும் யோகம் ஆகும் இது என்று ஸூசிக்கிறார்
அமானித்வம் அதம்பித்வம் முதலிய இருபது ப்ரஹ்ம ஞான சாதனங்களை ஸ்ரீ கீதை -13 அத்யாயம்
கணக்கிடுகையில் -ஆச்சார்ய உபாஸனம் என்று ஆச்சார்ய விஷயமான உபாஸனத்தையும்
சாதனமாக பரிகணநம் செய்தார்
தேவம் இவ ஆச்சார்யம் உபா ஸீத என்று -இரண்டு தேவர்களையும் -பகவான் ஆகிற தேவரையும்
ஆச்சார்யரான தேவரையும் உபாஸிக்க வேண்டியதில் பகவானைப் போலவே
ஆச்சார்யரையும் உபாஸிக்க வேணும் என்று ஸ்ருதி விதித்தது –

ஸ்வேதர உபநிஷத்தில் முடிவில் கடைசி மந்திரத்துக்கு முன் மந்த்ரத்தல்
தபஸ் ப்ரபாவாத் தேவ ப்ரஸாதாத் -என்று பக்தி யோகம் என்னும் தவத்தின் வலிமையாலும்
தேவனுடைய கடாக்ஷத்தாலும் ஸ்வே தாஸ்வதரர் ப்ரஹ்ம ஸாஷாத் காரம் பெற்று
ப்ரஹ்ம வித்வனாகி மோக்ஷ சித்தியைப் பெற்றார் என்று கூறி விட்டு
தேவ ப்ரஸாதம் என்பதற்கு குரு தேவன் ப்ரஹ்மம் ஆகிய தேவன் இரண்டு தேவர்கள் இடத்திலும்
துல்யமாய் பக்தி செய்ய வேணும் என்றும்
ஆச்சார்யன் இடத்தில் தேவன் இடத்தில் போல் அத்யுத் க்ருஷ்டமான பக்தி நிஷ்டையை அனுஷ்டித்து
அவன் பிரஸாதத்தைப் பெற்றால் அம் மஹானுக்கு உபதேசிக்கப்பட்ட எல்லா விஷயங்களும்
உள்ளங்கை நெல்லிக்கனி போல் பிரகாசிக்கும் என்றும் முடிவு மந்திரத்தில் இது பரம சாரம் என்றும்
உபநிஷத் உப சம்ஹாரம் செய்தது –

யஸ்ய தேவே பரா பக்தி யதா தேவே குரவ் ததா பரா பக்தி தஸ்ய மஹாத்மன ஹி ஏதே கதிதா
அர்த்தா ப்ரகாஸந்தே என்று -என்று உபநிஷத் பதங்கள் உள்ளபடியே அந்வயிப்பதே உசிதம் என்று பெரியோர் அருளிச் செய்வர்
இந்த அன்வயத்தில் முன் கூறிய தேவ சப்தத்துக்கு ஆச்சார்ய தேவரும் பொருள் கிடைப்பதால்
ஞான சித்திக்கும் மோக்ஷ சித்திக்கும் இருவர் கடாக்ஷமும் வேண்டும் என்பதும்
தேவே குரவ் -என்று ஸாமா நாதி கரணமாக அபேத அந்வயத்தாலே குருவை தேவனோடு அபின்னமாக
நினைக்க வேணும் என்றும் கிடைக்கிறது
ஆச்சார்ய பரம்பரையில் நித்யமும் நடு நாயகரான யதிராஜர் என்னும் நம் சித்தாந்த தீர்த்த காரரை உபாசித்து
ப்ரஹ்ம உபாஸனத்துக்கு உபஷ் டம்பகம் ஆகுமே ஒழிய விரோதம் ஆகாது

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -3-

October 26, 2020

முதல் ஸ்லோகத்தில் ஸ்ரீ மாதவர்கள் திருவடிகள் சடகோபர் திருவடிகள்
எம்பெருமானார் திருவடிகள் ப்ரஸ்த்துதம்
இரண்டாம் ஸ்லோகத்தில் கோதை பட்டர் பிரான் பரகாலர் முதலிய ஆழ்வார்கள்
திருவடிகளும் ஸ்ரீ கூர நாதனுடைய சென்னியும் சேர்ந்தன
இங்கு கூர நாதன் பிள்ளான் முதலிய சிறு மா மானிடராய் ஆச்சார்யர்கள் திருவடிகள்
நிரந்தரம் பஜநம் பிரார்த்திக்கப் படுகிறது –
எம்பெருமானார் திருவடிகளைப் பணிந்த ஆச்சார்யர்களின் திரு வடிகளைப் பஜிப்பது
எம்பெருமானார் தியான பாரமான விம்சதி என்னும் பாவனையில் ஏக ரஸமாகச் சேருகிறது

மீமாம்ஸை மூன்றாம் அத்தியாயத்தில் சேஷ சேஷி பாவ விசாரணை –
சேஷ சேஷி பாவம் தானே நம் சித்தாந்தம் -ததீய சேஷத்வம் தத் சேஷத்துவத்துக்கு அங்கம் –
சேஷி பரம்பரை தாழத் தாழ கீழ்ப் பர்வத்தில் சேஷத்வம் ஸ்வரூபத்துக்கு மிகவும் ஏற்கும்
ஸ்ருதி லிங்கம் வாக்கியம் முதலிய பிரமாணங்கள் கர்ம மீமாம்ஸையில் சேஷ சேஷி பாவ நிர்ணாயகம்
வாசா என்பது நிரபேஷ கண்டாவரமான சப்தம் என்னும் ஸ்ருதி பிரமாணத்தை ஸூ சிக்கும்
ஸ்ருதியினால் சேஷித்வம்
வாக்கினால் -வாக்யத்தால் சேஷத்வம்
லிங்க ப்ரமாணத்துக்கு ஐ ந்தர்யா கார்ஹ பத்யம் உப திஷ்டதே என்னும் பிராமண வாக்கியத்தையும்
நேந்த்ர சச்ச ஸதா சஷே -என்கிற இந்த மந்திரத்தையும் உதா ஹரிப்பர் –

வச நாத்து அயதார்த்தம் ஐந்த்ரீ ஸ்யாத் -என்ற இரண்டாம் பாதம் இரண்டாம் அதிகரணத்தில் –
வசனம் -என்னும் ஸ்ருதியாலே இந்திரனை ஸ்துதிப்பது போல் உள்ள
மந்த்ரத்தைச் சொல்லி கார்ஹ பத்யம் என்னும் அக்னியை உபஸ்தானம் பண்ண வேண்டும் –
மந்திரத்தில் உள்ள இந்த்ர பதத்துக்கு அமுக்யமாக அக்னி பரமாகப் பொருள் கொள்ள வேண்டும்
என்று சித்தாந்தித்தார்கள் –
அக்னவ் வசன சாமர்த்யாத் விநியோக பிரதீயதே நாத்யந்தம சமர்த்தத்வம் கௌண சாமர்த்ய சம்பவாத் –
என்று அங்கே வார்திகம்

இந்த ஸ்லோகத்தில் -யதீந்த்ர -என்று இந்த்ர சப்தத்தை -கௌண மாக -அமுக்யமாக -பிரயோகிப்பதாலும்
ஸ்ருதி லிங்க பலாபலாதி கரணத்தை ஸூசிக்கிறார் –
அங்கங்கள் கரணங்கள் சாதனங்கள் -இங்கே மூன்று கரணங்களாலும் கூரநாதர் பிள்ளான் முதலான பிரதான குருக்கள்
யதிராஜர் திருவடித் தாமரை நிரந்தரம் முடி சூடி உபாசித்தார்கள் -என்கிறார் –

அங்க அத்யாயமான மூன்றாம் அத்தியாயத்தை அனு சரிக்கும் மூன்றாம் ஸ்லோகத்தில்
மூன்று கரணங்களாலும் ஏக ரீதியாக ச ரூபமாக பரம ஆர்ஜவத்தோடு ஆச்சார்ய உபாசனம் செய்தார்கள் என்கிறார் –

உபாசனத்துக்கு கரண த்ரயங்களும் அவற்றின் ஸாரூப்யமும் அங்கம் ஆகும் –
எம்பெருமான் திருவடிகளை உபாஸித்த ஆச்சார்யரின் திருவடிகளை உபாஸிப்பது
எம்பெருமான் திருவடிகளை உபாஸிப்பதுக்கு அங்கம் –
அங்கங்கள் பிரதானத்துக்கு அனுக்ராஹம் என்பர் மீமாம்ஸகர் -இந்தக் கிரமத்தில் எம்பெருமானார்
அடி பணிந்து உய்ந்த ஆச்சார்யர் பாத சேவை எம்பெருமான் பாத சேவைக்கு அனுக்ராஹம் ஆகும் –
அமானித்வம் என்று தொடங்கிப் படித்த 20 சாதனங்களில் ஆச்சார்ய உபாசனம் ஓன்று
முண்டக உபநிஷத்தில் -தஸ்மாத் ஆத்மஜ்ஞம் ஹி அர்ச்சயேத் -என்று ப்ரஹ்ம நிஷ்டரை பூஜிப்பதை விதித்து
உடனே அடுத்த மந்திரத்தில்
ச வேத ஏதத் பரமம் ப்ரஹ்ம தாம -என்று அப்படிப் பூஜிப்பவன் பர ப்ரஹ்மத்தை அறிவான் என்று கூறப்பட்டது –

வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம்
பாதா நு சிந்தன பர சததம் பவேயம் –3-

யதீந்திர -யதித் தலைவனே
வாசா -வாக்கினாலும்
மநஸா -மனத்தினாலும்
வபுஷா ச -காயத்தினாலும் கூட
யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் -உம் திருவடித் தாமரைகளை
பஜதாம் -இடைவிடாமல் உபாசிக்கும்
குருணாம்-ஆச்சார்யர்களான
கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம் -கூரத்தாழ்வான் திருக்குருகைப் பிரான் பிள்ளான்
முதலிய ஆதி புருஷர்களின்
பாதா நு சிந்தன பர –திருவடிகளை அனுஸ்யூதமாக ஸ்மரிப்பதிலேயே நோக்கோடு
சததம் பவேயம் – சர்வ காலமும் இருப்பேனாக

வாசா
வாங்கினாலும்
மநோ வாக் காயங்கள்
மனஸா வாஸா ஹஸ்தாப்யாம்
காயேந மனஸா வாசா
இங்கு வாஸா -என்று முதலில் வைத்ததுக்கு மூன்று காரணங்கள் –
1- ஸ்ருதி லிங்க வாக்யாதி ப்ரமாணங்களில் சப்தம் ஸ்ருதி என்பதை முதலிலேயே காட்ட வாஸா என்று தொடங்குகிறார்
வாஸா என்பது வாக்யத்தையும் சொல்லுமானதால் மூன்றாவது பிராமணமான வாக்யமும் ஸூசகம்
2-குரூம் ப்ரகாசயேத்தீ மான் -என்று குரு பிதா முதலானவர்களைப் புகழ வேண்டும் –
மனத்தில் வைத்து இருந்தால் போதாது – உலகம் அறிய உரக்க ஸ்துதிக்க வேண்டும்
ஆகையால் இது விஷயத்தில் வாக்கு பிரதானம் –
3-இப்போது பிரக்ருதத்தில் அபேக்ஷிப்பது ஸ்துதி தலைக்கட்ட வேண்டும் என்பதே –
எம்பெருமானாரை உபாசித்த ஆழ்வான் போல்வார் ஸ்துதி வாக்குகளை முதலில் நினைக்க வேண்டும் -பேச வேண்டும்
ஜிஹ்வே கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீ தரம் பாணி த்வந்த்வ சமர்ச்சய -என்ற
முகுந்த மாலை கிரமத்தையும் நினைக்கிறார் –

யதீந்த்ர
இங்கு தான் முதன் முதலில் நேரில் ஆஹ்வானம் பண்ணுகிறார் –
இந்த்ர ஆயாஹி வீதயே –ஹவிஷ்க்ருத் ஏஹி -என்பது போல் கூப்பிடுகிறார்
தேவரீர் திருவடிகளில் உபாசகர் திருவடிகளில் நிறைந்த பக்தியை அருள வேண்டும் என்று
இங்கு யதீந்த்ரரைப் பிரார்த்திக்கிறார்
இந்த்ராதிகளை இப்படிப் பிரார்த்தித்தால் கோபம் வருமே
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் என்று வர்ணிக்கப் பட்ட பர ப்ரஹ்மம் போல்
மம சாதர்ம் யம் ஆகதா -என்றபடி ப்ரஹ்ம சாதரம்யம் உள்ள எம்பெருமானாருக்கும் அதே சீலம்
இங்கே யதீந்த்ர என்று கூப்பிடத் தொடங்கி -நித்யம் யதீந்திர-4- / யதீந்திர நாத-5-/யதீந்திர-7-/யதீந்திர-12 /
யதீந்திர-15-/யதீந்திர-16 /யதீந்திர -18 /ஸ்ரீ மன் யதீந்திர-19–என்று கூப்பிட்டு முடிக்கிறார் –
யதித்தலை நாதன் -யதீ நாம் இந்திரன் –

மனஸா
ஓர் பிரகரணம் முழுவதும் ஏக புத்யா ரூடமாக -ஒரே வாக்யமாக மனதில் க்ரோ டீகரிக்க வேண்டும்
இதில் பிரகரணம் என்று மூன்றாம் பிரமாணத்தை ஸூ சிக்கிறார் -அந்தர் இந்த்ரியம்

வபுஷா ச
அங்கு என ஆடும் என் அங்கம் -என்றது போல் எம்பெருமானார் விஷயத்தில்
அங்கங்கள் எல்லாம் பரவசமாகப் பஜித்துக் கூத்தாடும் –

யுஷ்மத் –பாதாரவிந்த யுகளம் பஜதாம்
நிரந்தரமாக -அவிச்சின்னமாக பஜிக்கும் தேவரீர் திருவடிகளைப் பஜிப்பவர் திருவடிகளை
அடியேன் பஜ்ஜிக்க அனுக்ரஹிக்க வேண்டும்

குருணாம்-
உம்முடைய திருவடிகளைப் பஜித்து உம் சிஷ்யர்கள் ஜகத் குருக்கள் ஆனார்கள்
உம்மைப் பஜிப்பவர்க்கும் உம் சாம்யத்தை நீர் அருளினீர்
ஆத்ம சாம்யா வஹத்வாத் பத்யு ஸம் யமி நாம் ப்ரணம்ய சரணவ் தத் பாத கோடீ ரயோ –
சம்பந்தேன ஸமித்யமான விபவான் தான்யம்ஸ்த தான்யான் குரூன் -முதலியவற்றை நினைக்க வேண்டும் –

கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம் –
கூரப்பிரான் -கூரேசர் –குருகைப்பிரான் குருகேசர் -முதலிய பகவத் குணங்களில் ஆழ்ந்து
முழுகும் குருகை நகர் முனிவர் போன்றவர்கள் – கூரேச குருசேகர்கள் –
ப்ரேமார்த்த விஹ் வல கிர -புருஷா -புராணா -என்பதைக் கணிசித்து ஆத்ய புமான்கள் என்கிறார் –

ஆத்ய புமான்கள் –
புராண புருஷர்கள்
தாசாரதி -முதலியாண்டான் முதலிய பெரியோரும் ஆதி ஸப்த க்ராஹ்யர்

பாதா நு சிந்தன பர
பக்தி என்பது த்ருவ அநு ஸ்ம்ருதி
அநு ஸ்ம்ருதி என்பது உபாஸனம் என்று ஸ்ருதி பிரகாசிகை -தொடர்ந்து ப்ரீதி நினைப்பு
அநு -பின் தொடர்ச்சியாக என்றும் பொருள் உண்டே
உன் திருவடி த்வந்வத்தை முடியில் வஹிப்பவர்கள் திருவடிகளில் பக்தி -உம் திருவடியை மேலும் அத்தை ஒட்டி

சததம்
இந்த ஸ்துதியில் நெடுகிலும் -ஒழி வில் காலம் எல்லாம் -எல்லையற்றதாக
முடிவில்லா அன்புடன் அடிமைத்தன்மை கோரப்படுகிறது –
நித்ய சேவா பிரேம ஆவில ஆசய -முதல் ஸ்லோகம்
நித்யம் சக்தம் பவது-4 th ஸ்லோகம்
நித்யம் அனுபூய மம அஸ்ய புத்தி –-6th ஸ்லோகம்
அந்வஹம் ஏததே-நாள் தொறும் வளர்ந்து வருகிறது-7th ஸ்லோகம்
அநிசம் -8th ஸ்லோகம்
நித்யம் -9th ஸ்லோகம்
சததம் சராமி -10th ஸ்லோகம்
புன புன–11th ஸ்லோகம்
சததம் பவாமி–12th ஸ்லோகம்
ஏக ரசதா–16th ஸ்லோகம்
சதா பவதி தே–16th ஸ்லோகம்
கால த்ரயேபி–17th ஸ்லோகம்
அந்வஹம் மம விவர்த்தய–18th ஸ்லோகம்
ஸ்ரீ மன் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-19- என்று ஒத்துகிறபடி யதிராஜா பாத ஸேவையே
இங்கே கோறும் பலன்
ஆழ்வான் பிள்ளான் திருவடிகளிலே நிரதிசயமான ப்ரீதி வந்தால் தானே அவர்கள்
தைவமான யதிராஜன் திருவடிகளின் பக்தி கூடவே வரும் –

பவேயம் –
இங்கே எல்லாம் அஸ்து -பவேயம்-பவது-என்றே ஓடுகிறது –
இதுவே சத்தா ஹேது
இல்லையேல் அஸன்நேவ பவதி –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் –பாசுரம் -2-

October 24, 2020

ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்தையும்
அதில் விஸ்தரிக்கப்பட்ட பஞ்ச கால பாராயணத்வம் அர்ச்சாதி திவ்ய மங்கள அர்ச்சனாதிகள்
வேதங்களை ஓன்று படுத்தி ஸ்ரீ வைஷ்ணவ தரிசனத்தை த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை –
முதலிய உபகாரங்களைக் கொண்டு அல்லவோ எம்பெருமானார் ஸ்துதி இருக்க வேண்டும்
ஸ்ரீ மாதவன் என்றால் எந்த திவ்ய தேச எம்பெருமான்
பராங்குச பாத பக்தர் என்றதால் நாதோப்ஜ் ஞமான விசிஷ்டாத்வைத தர்சனம் என்பதில்
நாதனுக்கு நாதனான வரும் முனி நாதன் ஆக்கி நாலாயிரம் வழங்கி அருளிய சேனை நாதன் என்னும் சடகோபர் ஸ்மரணம் உண்டே
லஷ்மீ நாத ஸமாரம்பாம் -திவ்ய தம்பதிகள் சமரணம் ஸ்ரீ மாதவாங்க்ரி கிடைத்தது
வந்தே கமலா க்ருஹமேதிம்-போல் லஷ்மீ நாத ஸமாரம்பமாகும் இஸ் ஸ்லோகமும்

பாஞ்ச ராத்ர ப்ரதிபாத்யமான எந்த திவ்ய தேசத்தில் ஸூ காஸீனராக பகவத் நியமனத்தால்
எம்பெருமானார் தம் சிஷ்ய பரிகாரங்களோடே ஆ பிரயாணம் எழுந்து அருளி இருந்தார்
எந்த திவ்ய தேசத்தில் சிரகாலம் ப்ருங்கமாக -மதுகரமாக -மாதுகர வ்ருத்தியாலே திரு வீதிகளில்
பிஷாடன் உத்ஸவங்கள் செய்தது
யதிகள் ஞான கர்மங்கள் பக்ஷங்களால் ஹம்ஸங்களாய் விளையாடி ரமிக்க வேணுமே
ஸ்ரீ ரங்க ராஜனே வேதாதியில் விளங்கும் பரம் பொருள் -உபய வேதாந்த சர்வ ஸாகா ப்ரத்யயமான பொருள்
யதிராஜ ஹம்ஸ பக்ஷியை ராமானுஜ திவாகரர் என்பர் -எந்தக் கமலங்களை மலரச் செய்து மகிழ்விப்பவர் இவர்
குரு சிஷ்யர்களை சேர்ந்தே அனுசந்திப்பது வியாஸ சம்ப்ரதாயம்
இவர் சிஷ்யர்களில் உத்தமர் யார்
இந்தக் கேள்விகளுக்கு உத்தரம் அளிக்கிறார் இதில்

பூர்வ மீமாம்சையின் இரண்டாவது அத்யாயம் சப்தாந்தரம் -அப்யாசம் முதலியவைகளால்
கர்ம பேதத்தைச் சொல்லி சாகாந்தர அதிகரணம் என்ற சர்வ சாகா ப்ரத்யய ஐக்ய அதிகரணத்தோடே முடிந்தது
ஆச்சார்ய தேவோ பவ
தேவ மிவ ஆசார்யம் உபாஸீத
தஸ்மாத் ஆத்மஞ்ஞம் ஹயர்ச்சயேத் பூதி காம் -இப்படி பல இடங்களில்
பண்டை நான் மறையில் ஆச்சார்ய உபாஸனம் விதிக்கப்படுகிறது
ப்ரஹ்ம வித்யைகளில் -32-யிலும் ஆச்சார்ய உபாஸனம் தனியான வித்யை இல்லை
அது சர்வ வித்யை அநு யாயி
ஆச்சார்யார்க்கு அடிமை -அடியார்க்கு அடிமை -நெடுமாற்கு அடிமை -இவற்றை உபாய கோடியிலும் பல கோடியிலும்
சேர்த்து சாகாந்த்ர அதிகரணம் ஸூசகம் இங்கு
சடஜித் த்ருஷ்ட ஸர்வீய ஸாகா காதா -ரத்னாவளியில் மாறன் மறை சர்வாதிகாரமாக சர்வ சாகா என்கிறார்
சர்வருக்கு பொதுவான சாம சாகை சர்வ சாகை –

ஸர்வ ஸாகா ப்ரத்யயர் -சர்வ வேதாந்த ப்ரத்யயர் -பதின்மர் பாடும் பெரிய பெருமாளே அந்த மூர்த்தி –
முதலில் பேசப்படுபவனும் -பிரணவத்தில் விளங்கும் பரம் பொருளும் -ஸ்ரீ ரெங்க ராஜனே –
ப்ரஹ்மண பிரணவம் குர்யாத் ஆதவ் அந்தேச -எந்த வேதத்தைப் பேசினாலும் முதலில் பிரணவம் உண்டே
செழு மறையின் முதல் எழுத்துச் சேரும் கோயில்
ப்ரணவாகார விமானத்துக்குள் ப்ரணவ வாஸ்யமான ரெங்கராஜன் -சர்வ வேத வாத்யன் -சர்வ வேத ப்ரத்யயன் –

ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம் –
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் யதிராஜ மீடே –2-

ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம் –
ஸ்ரீ ரெங்கராஜருடைய திருவடித் தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்ஸமாயும் –
ஹம்ஸ ஸ்ரேஷ்டராயும்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
ஸ்ரீ பராங்குசர் திருவடித் தாமரைகளில் மது பானம் செய்து ரீங்காரத்துடன் பாடி வட்டமிடும்
ஸ்ரேஷ்டமான வண்டை ஒத்தவராயும்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் -ஸ்ரீ பட்டர் பிரான் ஆகிய பெரியாழ்வார் பரகாலர் இவர்களுடைய
முகங்களாகிய தாமரைகளுக்கு மகிழ்ச்சி தரும் ஸூர்யனாகவும் மித்ரராகவும்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -கூரத்தாழ்வானுக்கு அடைக்கலமாயும் உள்ள
யதிராஜ மீடே –ஸ்ரீ எதிராஜரை ஸ்துதிக்கிறேன் –

ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூ கமாஸ்வ -என்று ஸ்ரீ ரெங்க ராஜ நியமனம்
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன்
மொய்ம் பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் -என்று பிள்ளான் அருளியபடி
இரண்டு தாய்களையும் கீழே அனுசந்தித்தார்
திருவாய் மொழி ரெங்க ராஜன் புகழ் விஷயம்
பத்து சதக விஷயங்களும் கங்குலும் பகலும் பதிகத்தில் உண்டே

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –127- ஸ்லோகங்களுக்கு நடுவில் -63- ஸ்லோகத்தில்
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ் மே சீத மிவ ஹ்ரதம் -போல் மானஸ சரஸூ போன்ற சீதளமான
தாமரைத் தடாகம் ஸ்ரீ ரெங்கராஜர் திவ்ய மங்கள விக்ரஹ நிரூபணம்
திருவடிகளை அத் தடாகத்தில் தாமரைகளாய் மிதப்பன –
அவற்றின் போக்யதையை ரஸித்துக் கொண்டு -திரு மேனி யாகிய மானஸ ஸரஸ்ஸூ போன்ற
பங்கஜ தடாகத்தில் விஹரிக்கும் ராஜ ஹம்ஸம் ஆவார்
ஸ்ரீ ராமானுஜ பரம ஹம்ஸர் -ராஜ ஹம்ஸர் -பரம ஹம்ஸர் -ஹம்ஸா நாம் ராஜா என்பதும்
பரமரான ஹம்ஸர் என்பதும் ஒன்றே –

அரங்கத்தம்மான் திருக் கமல பாதத்தில் அலை எறிகிற மது ப்ரவாஹத்தில் சிறகு அடித்துக் கொண்டு
வர்த்திக்கிற ஹம்ஸ ஸ்ரேஷ்டர் -பிள்ளை லோகம் ஜீயர்
ரதிம் கத -ஸ்ரீ ரெங்கத்தில் அரங்கனுக்கு ரதி
அரங்கன் தாமரை அடிகளில் ராமானுஜ ராஜ ஹம்சருக்கு ரதி –

ந பத் நாதி ரதிம் ஹம்ஸ கதாசித் கர்த்த மாம்பஸி -என்பர் ரமந்தி ஹம்ஸா உசி கஷயா -என்று ஸூ கர் –
இரண்டாம் அத்யாயம் மூன்றாம் பாதம் -அவேஷ்ட் யதிகரண விஷயம் திரு உள்ளத்தில் ஓடி இந்த இரண்டாம் ஸ்லோகம்
ராஜா சப்தம் க்ஷத்ரியர் என்றே பொருள் -குமாரில பட்டர் வார்த்திகம்
ரெங்க ராஜன் -என்ற இடத்தில் ராம கிருஷ்ண அவதார தசையைக் கொண்டு ஒருவாறு ஷத்ரியத்வத்தை நினைக்கலாம்
அரங்கமேய அந்தணன் –
அரங்கம் ஆளி -அந்தண அரசனாகவும் கொள்ளலாம்
ரங்கத்தை ரஞ்ஜீப்பிக்கும் ராஜாதி ராஜன்
இந்த ஸ்லோகத்தில் நான்கு ராஜ -சப்தங்கள்
ஷத்ரிய ராஜா அந்தணர் ராஜா முதலில்
இரண்டாவது மூன்றாவது மனுஷ்யர் அல்லாத கேவல பிராணியைச் சொல்லுவதால் ஜாதி ப்ரஸக்தி இல்லை –
ஸ்ரேஷ்டர் என்னும் பொருளிலே உபயோகம்
யதிராஜர் என்னும் இடத்திலும் ஸ்ரேஷ்டர் பொருளிலிலே தான் -ஷத்ரிய பொருளில் இல்லை –

ரெங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ஸ –சப்தாதி ஸ்லோகம் –
பக்தர்கள் மானஸ ஸரஸ்ஸில் விஹரிக்கும் மானஸ ஹம்ஸம்
ராஜன் திருவடித் தாமரைகளில் விஹரிப்பது ஹம்ஸ ராஜர் என்று ஆநு ரூப்யம்
ரெங்க ராஜரும் ஆதியில் ஹம்ஸ அவதாரம் செய்து ஹம்ஸர்
வேறே எந்த ராஜனை இந்த ராஜ ஹம்சர் அடி பணியக் கூடும்
ஹம்சங்களுக்கு ராஜா பரம ஹம்ஸர் -பரம ஹம்ஸர் வணங்க ஏற்பவர் –
ரெங்க ராஜர் வராத ராஜர் வேங்கடேஸ்வரர் முதலிய ஆதி ஹம்ஸரான ஸர்வேஸ்வரர்களே –
பல ராஜ பத அப்யாசம் செய்வதால் -இரண்டாம் அத்யாயம் அப்யாஸ விசாரமும் ராஜ சப்த விசாரமும் ஸூ சகம் –

எம்பெருமான் சரண ஸரோஜ ஹம்ஸ குலபதி யதிராஜர்
இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே என்பதையும்
சிற்று எயிற்று முற்றல் மூங்கில் முன்று தண்டர் ஒன்றின் அற்ற பத்தர் சுற்றி வாழும்
அந்தணீர் அரங்கமே -என்பதையும் நினைக்கிறார் –

ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
பெருமாள் திருவடிகளோடு பாதுகையான ஸ்ரீ சடகோபனுடைய திருவடிகளும் கூடவே நெஞ்சில் வசித்து இன்பம் பயக்கின்றன –
ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –என்று ஆழ்வார் திருவடிகளைச் சென்னி மேல் கொள்ளவே
யன் மூர்த்தி மே -என்று உடனே பெருமாள் திருவடிகளும் சிரஸ்ஸிலே விளங்கின –
இங்கே யதிராஜன் திருவடிகளைச் சென்னி மேல் கொண்டதும் கூடவே
அவர் சென்னி மேல் உள்ள நம்மாழ்வார் திருவடிகளும்
அவருக்கு அவயவமான ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ பட்டர் பிரான் பரகாலன் திருவடிகளும்
யதிராஜருக்கு அவயவமான ஸ்ரீ கூர நாதரும் புத்திஸ்த்தர் ஆகிறார் –

விஷ்ணோ பதே மத்வ உத்ஸ-வேதம்
தவாம்ருத ஸ்யந்திநி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்ய திச்சதி –
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நே ஷு ரகம் ஹி வீக்ஷதே -என்று
பெருமாள் திருவடிகளில் பெருகும் தேனைச் சுவைத்து அதில் நீங்காத இன்பமுறும்
மதுகரமாகத் தன்னை ஆளவந்தார் நிரூபித்தார்
யதிராஜரை ஆழ்வார் திருவடிகளில் அதே போல் ரசிக்கும் ப்ருங்க ராஜர் என்கிறார்

அணி குருகை நகர் நம்பி நாவுக்கு இசைந்த ஸூகர் கோதிய பழம் –
ஸூக முகத் அம்ருத த்ரவ ஸம்யுதம்-ஆழ்வார் நாவுக்குச் சுவைத்த திருவடித் தாமரைகள்
யதி ராஜர் பிருங்க ராஜர்
மதுகர வ்ருத்தி பரம ஹம்சர் வ்ருத்தி
என் நாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் தென்னா தெனா என்று
வண்டு முரல் திரு வேங்கடத்து என் ஆனை என் அப்பன் எம்பெருமான் உளனாகவே -என்றபடி
திருவேங்கடவன் திருவடிகளில் செந்தேனை அருந்தி மத்தமாகி அங்கே மதுரமாகப் பாடும்
வண்டே போல் தான் இன் கவி பாடுவதாக அனுசந்தித்தார் –
ஸ்திதோ அரவிந்தே என்கிற அனுபவம் அத்தை அநுசரித்தது –
பராங்குச பிரமரத்தின் ஷட் சரணங்கள் ஆகிற தாமரைகளில் தேன் அருந்தி ஆடிப்பாடும் ஷட் சரணர்-
ப்ருங்கத்தின் திருவடியில் ஓர் தலைமையான ஆண் வண்டு பராங்குச நாயகி ராணி வண்டு
அதைப் பணியும் மற்ற வண்டுகளின் தலைவர் யதிராஜர் –

ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்-
ஸ்ரீ ரெங்க ராஜன் சுடர் அடி தொழுது எழுபவர் சடகோபர்
அவர் அடி பணிந்து உய்ந்தவர் ராமானுஜர்
சடகோபருக்கு அவயவமான மற்ற ஆழ்வார்களின் திருவடித் தாமரைகளை எம்பெருமானார் தொழுது எழுவாராயினும்
தாமரை ஸமூஹங்களை வர்ணிக்கும் இவ்விடத்தில் அவர்கள் திரு முகங்கள் ஆகிற தாமரைகளைப் பேசுவது ரஸம்
அந்தத் தாமரைகளை மலரச் செய்யும் ஸூ ர்யன் ராமானுஜ திவாகரன் –
அந்த ஸூ ர்யன் விஷயமான அந்தாதியும் காயத்ரி யாயிற்று
பட்ட நாத ஸ்ரீ என்னும் தனியனில் ஆண்டாள் பட்டர் பிரான் என்று பொருள் பணிப்பர்
அரங்கன் பிரஸ்தாவத்தில் ஆண்டாளை மறக்கலாகாதே
ஸ்ரீ பட்ட நாத -என்று இங்கே மாற்றி வைத்து இருப்பதில் ஆழ்வார்களின் பிரபந்த பிரஸ்தாவத்தில்
ஸ்ரீ என்று ஸ்ரீ அம்சமான ஆண்டாளை முதலில் கொள்ளலாம் –

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம்-
ஸ்ரீ ரெங்க ராஜன் ப்ரஸ்தாவத்திலும் -ஆழ்வார்கள் பிரஸ்தாவத்திலும் –
ஸ்ரீ ரெங்கேச புரோஹிதரான ஆழ்வானை மறக்கலாகாது –
யதிராஜர் ப்ரஸ்தாவத்திலும் ஆழ்வானை மறக்கலாகாது
ஸ்ரீ ஸூ ந்தர பாஹுவை விஸ்தாரமாக ஸ்துதித்து ஸ்ரீ அரங்கத்தில்
ஸ்ரீ ராமானுஜர் திருவடி வாரத்தில் வாஸம் அருள பிரார்த்தித்தார்

ஸ்ரீ ரெங்க தாமநீ யதாபுர மேகதோஹம்
ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–129-
அடியேன் முன்பு போலே
திருவரங்கம் பெரிய கோயிலிலே ஒரு புறத்திலே எம்பெருமானார் திருவடி நிழலிலே வாழ்வேனாக –
எம்பெருமானாரும் கோயில் வந்து சேர –
அடியேன் அவர் திருவடிகளில் சேர்ந்து வாழ்வேனாம் படி அருள் செய்ய வேணும் என்கிறார் –

ஸ்ரீ ரெங்க ஸ்ரியம் அந்வஹம் ப்ரகுணயந் த்வத் பக்த போக்யாம் குரு
ப்ரத்யக்ஷம் ஸூ நிரஸ்த மேவ விததத் ப்ரத்யர்த்தி நாம் ப்ரார்த்தநம் –130-
தென் திருவரங்கம் கோயில் செல்வத்தை
நாள் தோறும் அபி வ்ருத்தமாக்கி தேவரீருடைய பக்தர்களுக்கே போக்யமாம்படி செய்து அருள வேணும் –

தத் போக்யாம் நிசம் குருஷவ பகவந் ஸ்ரீ ரெங்க தாம் ஆஸ்ரியம்–131-
திருவரங்கம் பெரிய கோயில் செல்வம் எந்நாளும்
சத்புருஷர்களுக்கே போக்யமாம் படி செய்து அருள வேணும்
இதில் காட்டிலும் வேறே ப்ரார்த்த நீயம் இல்லை என்றதாயிற்று

இயம் பூயோ பூய புநரபி ச பூய புநரபி
ஸ்புடம் விஜ்ஞாப்சாமித்யக் அகதி அபுதஸ் அநந்ய சரண–132-
இது தன்னையே மீண்டும் மீண்டும் திருப்பித் திருப்பி விண்ணப்பம் செய்யா நின்றேன்
இதி -இந்த விஞ்ஞாபநத்தையே மீண்டும் மீண்டும் செய்கிறேன் என்ற காரணத்தினாலேயே
க்ருதாகா துஷ்டாத்மா கலுஷமதிர் த்யக் அஸ்மீ –குற்றவாளனாகிறேன்-துஷ்ட ஸ்வ பாவமுடையவன் ஆகிறேன்-
கலங்கின புத்தி உடையவன் ஆகிறேன்-

ஸ்ரேய கிரந்து கிரணாச் சரணாரவிந்த
நிஷ்யந்தமான மகரந்த ரஸவ்க சேஸ்யா
தஜ்ஜா ஸ்ருதேர் மதுந உத்ஸ இதி ப்ரதீதா
மாங்கல்ய ரங்க நிலயஸ்ய பரஸ்ய தாம்ந –ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் -2-
அனைவருக்கும் ஷேமங்கரமான ஸ்ரீ ரெங்க விமானத்தை வாஸஸ் ஸ்தானமாக உடையவனாய்
பரஞ்சோதி என்று பிரசித்தமான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் நின்றும் பெருகா நின்ற
மகரந்த ரஸ ப்ரவாஹம் என்னலாம் படியாய் மதுவின் ப்ரவாஹம் என்று-வேதத்தினால் பிரதிபன்னனாய்
அந்த திருவருள் நின்றும் கிரணங்கள் நன்மையை விருத்தி பண்ணட்டும் –

அநாரத ததுத்தி தாரக யோகம்
ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜம் உந்நயாம –3-
அந்த அநு ராக ரஸ சமஞ்சனத்தால் உண்டான ராக சம்பந்தம் மாறாமல் இறுக்கப் பெற்ற
ஸ்ரீ ரெங்க நாதனுடைய திருவடித்தாமரையை சிரஸா தரிக்கிறோம் –

வஜ்ர த்வஜ அங்குச ஸூதா கலச ஆதபாத்ர
பங்கேருஹ அங்க பரிகர்ம பரீதம் அந்த
ஆபாத பங்கஜ விச்ருங்கல தீப்ர மௌலே
ஸ்ரீ ரெங்கிண சரணயோர் யுகம் ஆஸ்ரயாம–4-

திருவடித்தாமரை அளவும் நிரர்கனமாக ஜ்வலித்துக் கொண்டு இருக்கிற திரு அபிஷேகத்தை யுடையனான
அந்த ஸ்ரீ ரெங்கநாதனின் திருவடியின் உடபுறத்தில் வஜ்ரம் -த்வஜம் மாவட்டி -அம்ருத கலசம் -குடை -தாமரைப்பூ –
இந்த சின்னங்கள் ஆகிற அலங்காரத்தாலே வ்யாப்தமாய் இருக்கிற திருவடியை ஆஸ்ரயிக்கிறோம் –

ஸ்ரீ ரெங்க ராஜ சரணவ் ப்ரணுமோ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-5-
ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ணுகிறோம்

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-

தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2-

தேவ த்வதீய சரண ப்ரணய ப்ரவீண ராமாநுஜார்ய விஷயீ க்ருதம் அப்யஹோ மாம்
பூய பிரதர்ஷயதி வைஷயிகோ விமோஹ
மத் கர்மண கதரத் அத்ர சமானசாரம்–90-

எம்பெருமானே உன் திருவடிகளில் அன்பு பூண்டு இருப்பதில் தலை சிறந்தவரான எம்பெருமானாரால்
ஆட்படுத்திக் கொள்ளப்பட்ட அடியேனையும் விஷய வியாமோஹம் பரிபவிக்கின்றது அந்தோ
என்னுடைய கருமத்தோடு ஒத்த வலிதான கருமம் வேறு ஒருவருக்கு உண்டோ இவ்வுலகில்
இந்த நிலைமையில் ஆச்சார்ய நாம உச்சாரணம் செய்வது ச்ரேயஸ்கரம் என்று திரு உள்ளம் பற்றி
ஒருவாறு அது தன்னைச் செய்கிறார்-

இவற்றைத் திரு உள்ளம் பற்றியே இங்கு முதல் இரண்டு ஸ்லோகங்கள் –

யதிராஜ மீடே –

இங்கு ராஜ சப்தத்துக்கு ஷத்ரிய வர்ண பொருள் பாதிதம் ஆகும்
ஸந்யாஸ ஆஸ்ரமம் ஷத்ரியர்களுக்கு இல்லை
திவாகரனாக வர்ணித்த யதிராஜரை சந்திரனாக வர்ணிப்பது அழகு
ஸகல குமதி மாயா சர்வரீ பால ஸூர்ய-நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்த்ர -சப்ததி ஸ்லோகம் –
இங்கு ராஜ சப்தத்துக்கு சந்திரன் பொருள் கொண்டு யதி சந்திரர் என்று சந்த்ரத்வ வர்ணனும் திரு உள்ளம் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோபாலாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-