Archive for the ‘ஸ்ரீ மணவாள மா முனிகள்’ Category

ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் சார அம்ருதம்– -முதல் பத்து –

October 9, 2021

1-1
இவர் தாம் முற்பட குணங்களிலே இழிவான் என் என்னில் -தாம் அகப்பட்ட துறை அதுவாகையாலே
இவரை குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது –
தாம் தொழாமல் நெஞ்சை கூப்பிடுவது பரீத் யதிசயத்தால் -உசாவ ஆள் தேட
இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே யாரும் கிடைக்காமல் திரு உள்ளத்தை கூப்பிடுகிறார்
நிற்க முடியாது -விழுந்திடு என்கிறார் –
ஸூஷ்மம்-அலை வரும் பொழுது குனிந்து நீர் வஞ்சிக் கொடி-குனிந்து பிழைத்ததை கண்டார் –
தொழுதால் எல்லாம் – தொழா விடில் விழுவோம் -குண வெள்ளம் -ஸ்வா தந்திர வெள்ளம் –

வாக்ய பேத நிர்வாஹம் -உயர்வற உயர்நலம் உடையவன் யாரோ அவன் -துயரறு சுடரடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார் –
உயர்வு -வருத்தம் -எல்லாருக்கும் உயர்த்தி உண்டாம் போது வருத்தம் உண்டு -அப்படி வருந்த வேணுமோ -என்றால் உயர்வற உயரா நிற்கும்-
யுவ கோடி சகஸ்ராணி விஷ்ணும் ஆராத்யாம் பத்ம பூ –
இத்தைப் பற்ற விறே ஆளவந்தார் -ஸ்வா பாவிக –வருத்தம் கலசாத –என்று அருளிச் செய்த சந்தை –

நலம் –
கண்ட இடம் எங்கும் பயிர் பட்டு இருக்கும் நிலம் போலே எங்கும் ஒக்க உபாதேயமாய் இருக்கும்

நலம் -என்று
1–ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லுதல் -என்னுதல்
2–குண சமூஹத்தை சொல்லுகிறது -என்னுதல்
3–ஆனந்தாவஹமான விபூதியைச் பற்றிச் சொல்லுகிறது -என்னுதல் –

உயர்வற உயர் விபூதி உடையவன் இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்

உயர் குணம் என்னாமல் உயர் நலம் –
அது நல்ல குணம் துர்குணம் இரண்டு வகை –அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை ஏக தானன் –
கல்யாண குணங்களுக்கு மட்டுமே இருப்பிடம் -இவனே இருப்புடன் -நலம் என்பதை கல்யாண குணத்தால் –

யவன் -என்று –
யதா சைந்தவகந- (உப்புக் கட்டி உள்ளும் வெளியிலும் உப்பாகவே இருப்பது போலே -ஞான மயமாகவே உள்ளவன்)
பிரமாண பிரசித்தியைப் பற்ற -யவன்-என்கிறார் –
இத்தால்
1–குண நிரபேஷமான ஸ்வரூப பிரசித்தியைச் சொல்லுதல் -எவன் உயர்வற உயர் நலம் உடையவன் –
2–குண விசிஷ்டமான ஸ்வரூப வைலஷண்யத்தைச் சொல்லுதல் –
குண சாபேஷ பஷத்தில்-உயர் நலம் உடையவன் உடையவன் எவன் -அடைவே அந்வயம் –

மயர்வற —
ஜ்ஞான அநு தயம் -அந்யதா ஜ்ஞானம் -விபரீத ஜ்ஞானம் –என்கிற இவை ச வாசனையோடு போம்படியாக –
ஜ்ஞான அநு தயமாவது –தேஹாத்ம அபிமானம் –
அந்யதா ஜ்ஞானம் ஆவது -தேவதாந்திர சேஷம் என்று இருக்கை –
விபரீத ஜ்ஞானமாவது -ஸ்வ தந்த்ரமாகவும் ஸ்வ போக்யமாகவும் நினைத்து இருக்கிற கேவலனுடைய ஜ்ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
தம் வாயாலே -மயர்வற -என்று சொல்லலாம் படி காணும் அவன் தான் இவர்க்கு அஜ்ஞ்ஞானத்தை வாசனையோடு போக்கின படி -அர்த்தாத் சித்தம்

என் ஆனந்ததுக்காக நான் கைங்கர்யம் பண்ணி அனுபவிக்கிறேன் -இரண்டு குற்றங்கள் –
பரதந்த்ரனாய் பர போக்யமாகக் கொள்ள வேண்டும்
அருளினன் –
1–நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
2–எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது –
பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு நம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே –
அருளினன் –
3–இத்தால் அர்த்திக்க வன்றிக்கே-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
தாதுபிரசாதான் மஹிமா நமீசம் -தைத்ரியம் -என்கிறபடியே நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
4–இத்தலையில் நினைவு இன்றிக்கே இருக்க வந்து அருளினவன் –

உயர்வற உயர்நலம் உடையவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்கையாலே பிராப்ய வேஷம் சொல்லிற்று –
மயர்வற -என்கையாலே -விரோதி போனபடி சொல்லிற்று –
அருளினன் -என்கையாலே -அவனே சாதனம் என்கிறது –
தொழுது எழு -என்கையாலே பிராப்தி பலமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று –
என் மனனே -என்கையாலே பரி ஸூத்த அந்த கர்ணனே அதிகாரி -என்னும் இடம் சொல்லுகிறது –

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன் –
முன் பாசுரம் -என் மனனே -சேதன சமாதியால் –இங்கு மனம் அசேதனம் -காட்டி அருளுகிறார்
மனன் -மனம் என்ற படி –
மனனகம் -மனனில் என்றபடி -மனசில் என்றபடி –
நிரவவயமாய் இருக்கிற இதுக்கு உள்வாய் புறவாய் இல்லாமையாலே –
அங்கன் இன்றிக்கே
இம் மனஸ்ஸூ பரகார்த்த விஷயமாகவும் பிரத்யகர்த்த விஷயமாகவும் போருகையாலே
பிரத்யகர்த்த விஷயமானத்தை -அகம் -என்று சொல்லிற்று ஆகவுமாம் –

உணர் முழு நலம் –
உணர்வு -என்று ஜ்ஞானம் –நலம் என்று ஆனந்தம் -முழு -என்று இரண்டு இடத்திலும்
கட்டடங்க ஞானமுமாய் கட்டடங்க ஆனந்தமுமாய் இருக்கும்
எனன் உயிர் -எனன் உயிர் -என் உயிர் என்றவாறு
இப்படி இருகிறவன் எனக்கு தாரகன் –யச்யாத்மா சரீரம் -என்கிறபடி -இத்தத் தனக்கு சரீரமாகக் கொண்டு –
தான் சரீரியாய் -தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவது ஓன்று இறே

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன்-பொறி உணர்வு யவை இலன் –
எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் -மிகுநிரையிலன் -உணர் முழு நலம் -இனன் எனன் உயிர் -என்று அந்வயம்

அன்றிக்கே
என் உயிரானவன் துயர் அடி தொழுது எழு என் மனனே -என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் –

முதல் பாட்டிலே –
பிரதான்யேன கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வைலஷண்யத்தையும் அனுபவித்து –
அவனைப் பேச பெற்ற நாக்கு என்று ஆழ்வார் அபிப்ராயத்தால் இவற்றைப் பிரதானம் என்கிறார் –
அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சித் அசித் விலஷணமுமாய்-உபமான ரஹிதமுமாய் இருக்கும் என்று
இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து நின்றார் –

அவற்றோடு சேர் ஓர் கோவையாய்த் தோற்றும் இறே -ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் இவர்க்கு –
நோ பஜநம் ஸ்மரன் நிதம் சரீரம் என்னா நிற்கச் செய்தே -ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேச்யம் ஆகா நின்றது இறே முக்தனுக்கு
இவருக்கும் கர்ம நிபந்தனமான ஆகாரம் கிடக்கச் செய்தே -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையால் ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார்

ராஜாக்களுக்கு நாடு எங்கும் செல்லா நிற்கச் செய்தே மகிஷிகளும் தாங்களுமாக சில பூம் தோட்டங்களுக்கு குடிநீர் வார்த்து
ஆக்குவது அழிப்பதுமாய் -லீலா ரசம் அனுபவிக்குமா போலே
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெரும்தேவுடை மூவுலகு -6-3-5- என்கிறபடியே
சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாய் கடாஷித்த போது வுண்டாய்-இல்லையாகில் இல்லையாய்-
அவர்களுக்கு லீலா ரச விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார்

நலனுடை -முதல் பாட்டின் சங்க்ரஹம்
ஒருவனை -இரண்டாம் பாட்டின் சங்க்ரஹம்
லீலா விபூதி யோகம் சொல்லிற்று –
ஐஸ்வர் யத்தையும் விபூதியையும் -ஸ்ரீ கீதை -10 அத்யாயம் -நியமன சாமர்த்தியம் ஐஸ்வர்யம் -அனைத்தும் இவன் அதீனம் —
நியமனதுக்காகவும் -ஸ்திதிக்காகவும்-அனுபிரவேசம் -வஸ்துத்வம்-அந்தபிரவிஷ்டா -சாஸ்தா -ஜனானாம் -சர்வாத்மா
சாஸ்தா ஜீவன் சாஸ்தா பரமாத்மா –அந்தராத்மா -சரீரி சரீர பாவம் –அந்தர்யாமி நியந்த்ரு -நியாமய பாவம்
நாமே –இவ்வனுபவத்துக்கு புறம்பான -பகவத் கந்த ரஹிதரான நாம் -நாமே-இது பொய்யோ

இனி ஒரு மூன்று பாட்டாலே -4/5/6-
இதினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் அதீனமாய் இருக்கும் என்று

அவரவர்
சத்வாதி குண பேதத்தால் வந்த பிரகிருதி பேதத்தைச் சொல்லுகிறது
தமதமது
குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது
அறிவறி
அதுக்கு அடியான ஜ்ஞான பதத்தைச் சொல்லுகிறது
வகைவகை
மார்க்க பேதங்களாலே

நாமவன்-4-என்கிற பாட்டில் ஸ்வரூபம் சொல்லுகையாலே
நின்றனர் இருந்தனர்-6- பிரவ்ருத்தி நிவ்ருத்தி மாத்ரத்தையே நினைக்கிறது

ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் சரீராத்மா பாவம் என்று -7-
குத்ருஷ்டிகளை நிரசித்து -8-
சூன்ய வாதியை நிரசித்து -9-
வ்யாப்தி சௌகர்யத்தைச் சொல்லி -10-
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் -11-

ஆகையாலே -தேவாதி பதார்த்தங்களை நாலு மூன்று வகையாலே சேர்த்து அவற்றினுடைய ஸ்வரூபம் அவன் அதீநம் -என்கிறார்
பெண்பால் -3-ஆண்பால் -3-பலவின்பால் -3-ஒன்றன்பால் -1-
அழியக் கூடியவை -1-நன்மை தீமை -1-கால பேதம் -1- ஆக 7-என்பதால் நான்கு மூன்று வகையாகச் சேர்த்து என்கிறார்

இதம் சர்வம் கலு ப்ரஹ்ம-தஜ் ஜலான் இதி சாந்த உபாசீதே
தஜ்ஜா -தது ஜ -படைத்து -தல்ல -அவன் இடம் லயித்து -தத்தனு –
கலு -அதுவோ என்னில் -சர்வ -கார்ய ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -கார்யா அவஸ்தை
தயோகோ -இருவருக்கும் உள்ளே ஜகம் ப்ரஹ்மம் -சாமா நாதி கரணியத்தால் -வந்த ஐக்யம்
தத்வமசி -தத் த்வம் அஸி-சேதனமும் ப்ரஹ்மமும் ஓன்று

பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு தாத்பர்யத்தால் வாசகமான இச் சப்தம் -அவற்றுக்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி
அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழிய -ப்ருதக் ஸ்திதி யாதல் -உபலம்பமாதல் -இல்லாமையாலே அவனளவும் காட்டுகிறது

பிரவ்ருத்தி அவன் அதீனை யாகிறது வேணுமாகில் -நிவ்ருத்திக்கு அவன் வேணுமோ -என்று எம்பாரைக் கேட்க
ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவை சக்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்று கண்டாயே —
அப்படியே நிவ்ருத்திக்கு அவன் வேணும் காண்-என்று அருளிச் செய்தார்

இவை யுண்ட சுரனே —
இவற்றை சம்ஹரித்த தேவன் முன்பே சிருஷ்டி ஸ்திதிகள்-அவன் அதீநம் என்று சொல்லிற்று –
சம்சாரம் வேறு ஒரு சேதனன் அதீனமாகில் -இது தன்னது அல்லாமையால் வரும் ஐஸ்வர்யம் குறையும் இறே
அதுக்காக சம்ஹாரம் அவன் இட்ட வழக்கு -என்கிறார் -அத்தா -நிர்த்தேசம் போலே உண்டான் என்கிறார் –
இத்தால் சிருஷ்டி சம்ஹாரங்களை ப்ரஹ்மாதிகளே நடத்துகிறார்கள் -என்கிற குத்ருஷ்டிகளை நிரசிக்கிறார் –
திட விசும்பு -லோகாயாதிகர் நிரசனம் –
உடல் மிசை ஸ்வரூபனே ஐக்யம் -தாதாம்யம் -சொல்லும் மாயாவாதிகள் நிரசனம் –
சுடர் மிகு சுருதியுள் -என்கையாலே நாராயண அனுவாகாதிகளில் சொல்லுகிற -பரத்வம் லஷ்மீ சம்பந்தம் -இவை
எல்லாவற்றையும் அங்கீகரித்தார் ஆகிறார் –

ஒழிவிலன் பரந்தே –
நான் உளன் என்கிற சொல்லாலே உண்மையை சாதித்தேன்
நீ இலன் என்கிற சொல்லாலே உண்மையை சாதித்தாய்
ஆக இருவருமே உண்மையை சாதித்தோம்
இனி அவன் உளனாகில் உளனாம் போலே ச விபூதிகனாகவே உளனாகவே அமையாதோ -என்கிறார்
பாவ தர்மம் -சத்பாவம் -அஸ்தித்வம் -ஸ்தூல –
அபாவ தர்மம் -அசத்பாவம் -நாச்தித்வம் -சூஷ்ம –
ச யதா பவதி -விபூதியும் அப்படியே –
அஸ்தித்வ தர்ம விசிஷ்டமானாலும் -நாஸ்தித்வ தர்ம விசிஷ்டமானாலும் -விபூதியும் அப்படியே

இவை யுண்ட கரனே
சிறிய வடிவைக் கொண்டு பெரியவற்றை எல்லாம் தன வயிற்றிலே வைத்தால் -ஓர் பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டானே-
தயிருண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் -பெரிய திரு -11-5-3–என்கிறபடி
பின்னையும் அவ்வயிறு இறே இடம் உடைத்தாம் படி இருக்க வல்ல சர்வ சக்தி -சிறிய வற்றில் குறைவற இருக்க மாட்டானோ என்கிறார் –
சிறிது நெய்யூண் மருந்தோ மாயோனே-கரனே -இப்படி ஸூ த்ருட பிரமான சித்தன்
இவை யுண்ட கரன் -பரந்த தண் பரவையுள் -நீர் தொறும் பரந்த வண்டமிதென பரந்துளன் -நில விசும்பு ஒழிவற பரந்துளன்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -கரந்து எங்கும் பரந்துளன் -என்று அந்வயம்

இவை பத்தும் -பரன் அடி மேல் வீடே
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சமர்பிக்கப் பட்டவை
மோஷ ப்ரதம் என்னவுமாம்
இச்செய்யடைய நெல் என்னுமா போலே -மோஷம் என்றது -மோஷ ப்ரதம் என்றபடி-

—————————————————————

1-2-

கீழில் திருவாய்மொழியில் அவனுடைய பரத்வத்தை அனுபவித்து ஒரு பெரிய திருநாள் போலே இறே போந்தது –
இவர் இப்போது நெஞ்சு ஒழிந்து இருந்து பிறருக்கு உபதேசிக்கிறபடி எங்கனே தான் –
தான் அனுபவித்த விஷயத்தை எல்லை கண்டோ –
அன்றிக்கே தாம் அவ்விஷயத்தில் விரக்தராயோ -என்னில்

விஷயமோ வென்றால் –
தனக்கும் தன தன்மை அறிவறியான்–8-4-6-என்கிறபடி அபரிச்சின்ன விஷயம் -கொள்ள மாளா இன்ப வெள்ளம் -4-7-2-இ றே
இனி தம் அபி நிவேசமோ வென்றால் -காதல் கடலின் மிகப் பெரிதால் -7-3-2–என்றும் –
மண் திணி ஜ்ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -7-3-8–என்றும்
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா -10-10-10–என்னும்படி பெருகி இருந்தது
ஆகிலும் ஒரு கால் அபி நிவேசம் பிறந்தால் அப்படிப்பட்ட விஷயம் தானே காலாந்தரத்தில் விரக்தி பிறக்கக் காணா நின்றோம் –

அப்படியே சில காலம் அனுபவித்து பின்பு விரக்தி பிறந்ததோ வென்னில் -அங்கனம் சொல்ல ஒண்ணாது
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொரும் அப் பொழுதைக்கு அப் பொழுது என் ஆராவமுதம் -2-5-4-என்னும்படி
நித்ய அபூர்வமாய் இருக்கும்
இனி ஆசார்ய பதம் நிர்வஹிக்கைக்காக அன்று -நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்பவர் இறே
க்யாதி லாப பூஜைகளுக்காக அன்று -கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக -என்று உபதேசிப்பவர் இறே –
ஓத வல்ல பிராக்கள் -என்று அவர்களையும் தமது யஜமானராக எண்ணுபவர் இறே
ப்ரப்ரூயாத் -முண்டக -1-2-13-என்ற ஒரு விதி பரதந்த்ரராய் அன்று –
குருகுல வாசம் செய்யாதவனுக்கு உபதேசிக்கக் கூடாது என்று இருப்பவரும் அன்றே

ஆனால் இது பின்னை எத்தாலே யாவது என்னில் -ஸ்வ அனுபவ பிரகர்ஷம் இருக்கிற படி -தான் அனுபவித்த விஷயம்
தனியே அனுபவிக்குமது அன்றிக்கே இருந்தது
சர்வேஸ்வரன் உடைய நன்மையையும் இவர்கள் பற்றின விஷயங்கள் அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்-பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை
பழைய சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் –
பற்றுவாருக்கு அனுசந்திக்கப் படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் –
வண் புகழ் நாரணன்
அவனுடைய பஜ நீயதயையும் -இறை சேர்மின் -அருளிச் செய்யா நின்று கொண்டு
இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயிங்கோள் –
புல்கு பற்று அற்றே -என்று பர உபதேச பிரவ்ருத்தர் ஆகிறார் –

வீடுமின் -என்கிற பன்மையால் சொல்லுகிறது என் என்னில்
ஒருவன் தந்தனாய் வந்து நிற்க -அவனுக்கு உபதேசிக்கிறார் அன்றே
சம்சார வெக்காயம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே-
ஒருவர் அல்லா ஒருவர்க்காகிலும் ருசி பிறக்குமோ என்று எல்லாருக்கும் உபதேசிக்கிறார்

வீடுமின் முற்றவும் -என்றார் ஆகில்
திரிய வீடு செய்து -என்கிற இதுக்கு கருத்து என் என்னில்
மேல் ஒரு பேறு பெறுவதிலும் -இவற்றை விட்டு நிற்கும் நிலை தானே பேறாகப் போருகையாலே –
விடுகையாகிற பேற்றைப் பெற்று என்கிறபடி –

ராஜ புத்திரன் அழுகு சிறையிலே கிடந்தால் முடி சூடி ராஜ்யம் பண்ணுவதிலும்
சிறை விடுகை தானே பிரயோஜனமாய் இருக்கும் இறே –
உம்முயிர் வீடுடை யானிடை-
இதுக்குப் பல படியாக அருளிச் செய்வர் -நஞ்சீயர்

1–யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிறபடியே உம் உயிரையும் அதினுடைய வீட்டையும் உடையவன் என்னுதல்-
2-உம் உயிரை வீடாக உடையவன் என்னுதல்
3-உம் உயிரை விடும் இடத்தில் -சமர்ப்பிக்கும் இடத்தில் -உடையான் பக்கலிலே என்னுதல் –
வீடுடையான் –
4–பரமபத நிலையன் பக்கலிலே -என்னுதல்

மன்னுயிர் ஆக்கைகள்
உயிர் மன்னி விடேன் என்று பற்றிக் கிடக்கிற சரீரங்கள்
நித்யனான ஆத்மாவினுடைய சரீரங்கள் என்னவுமாம்
உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக
அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக-

இறை உன்னுமின் நீரே —
இதில் அல்பத்தை ஆராயுங்கோள்-நீரே –
இது தனக்கு ஒரு பிரமாண அபேஷையும் இலை –
சதாசார்ய உபதேசமும் வேண்டா –

இறை சேர்மின் –
அப்ராப்த விஷயங்களை விட்டு வகுத்த சேஷி யானவனை சேரப் பாருங்கோள்-
சேர்மின் -என்கிறார் காணும் -பற்றுமின் -சொல்லாமல் சேர்மின்-
கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கையாலே -சம்சாரிக்கு பகவத் சமாஸ்ரயணம் –
மரக்கலம் ஆலம்பனம் -காற்று அடிக்க கப்பல் நகர -கரைக்கு வருகிறோம் விஷ்ணு போதம் கிருபாவான் -கிருபை காற்று
அதனால் சேர்மின் -வேலை நமக்கு இல்லையே

உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே-இத்தோடு ஒக்க சீரியது இல்லை -என்னுதல்-
நேர் -என்று ஒப்பாய் -நிறை என்று மிகுதியாய் -உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை -என்றுமாம்
பிரதமத்தில் -ஔஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் ஹிதமுமாய் -உதர்க்கத்தில் பிரியமுமாய் இருக்கும்
நித்தியமாய் ஜ்ஞானானந்த லஷணமான வஸ்துவுக்கு இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை –
சம்சார ஆர்ணவ மக்நாநாம் -இத்யாதி
விஷ்ணு போதம் இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருகு நடத்தும் ஓடம் –
சம்சார அர்ணவம் மக்னானான் விஷயாக்ராந்த -விஷ்ணு போதம் -நகராத ஓடம் -நாம் தான் நகரணும் –
பிரமம் விபு -நகர முடியாதே -ஏஷ சேது -இக்கரையும் அக்கரையும் இங்கேயே

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு -எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-
உரு -இங்கே ஸ்வரூபத்தை குறிக்கும் -அந்நலம் -உயர்வற உயர் நலம் –
பன்மையாக கீழே மூன்று பாசுரங்களிலும் -இங்கு புல்கு ஒருமை -த்யாஜ்யங்கள் -பல உண்டே –
அதிகாரிகள் பலரும் -புத்தி பேதங்கள் குணா பேதங்கள் -இங்கே பற்ற வேண்டிய விஷயமும் ஓன்று
புருஷார்த்த ஐக்கியம் –புத்தி ஐக்கியமும் உண்டே – அதிகாரி ஐக்கியம் -ஜாதி ஏக வசனம் -முமுஷு பிரபன்னன் ஒரு ஜாதி தானே

எல்லையில் அந்நலம் –
ஆனந்த மய -என்றும் –
உணர் முழு நலம் -1-1-2-என்றும் –
ஓடியாவின்பப் பெருமையொன் -8-8-2–என்றும்
சுடர் ஜ்ஞான இன்பம் -10-10-10-என்றும் –
சமஸ்த கல்யாண குணாத் மகோசௌ-என்றும் சொல்லலாம் படி இருக்கும்
சமஸ்த கல்யாணத்வம் என்பதே குணமாக -தன்மையாக கொண்டவன் -என்றுமாம் –

ஏவ காரம் -அற்றே புல்கு -இரு கரையன் ஆகை அன்றிக்கே புறம்பு உள்ள பற்று அற்றே புல்கு
பற்றிலார் பற்ற நின்றான்-7-2-7- இறே
அவன் -சாதனாந்தரங்களில் பற்று இல்லாத வர்கள் பற்றும் படி திருவரங்கன் –
ஆகையால் பற்று அற்றே புல்க வேணும்-

அற்றிறை பற்றே —
இதர விஷயங்களிலே தொற்று அற்று -சர்வேஸ்வரனைப் பற்று என்னுதல்
ஆஸ்ரயிக்கும் போதே உன்னை பகவச் சேஷமாக அத்யவசித்து ஸ்வாமி யானவனை ஆஸ்ரயி என்னவுமாம் –
அன்றிக்கே
விபக்தியை மாறாடி இறையைப் பற்றி அத்தை அறுங்கோள் என்னவுமாம் –

அற்றிறை பற்றே —
ஆச்ரயண காலத்தில் அவனுக்கு என்று அத்யவசித்து –சேஷியான அவனைப் பற்றப் பாருங்கோள்
அன்றிக்கே
விபக்தியை மாறாடி இறையைப் பற்றி இத்தை அறப் பார் என்னுதல்
இறையைப் பற்றி இத்தை அறப் பார் -அறுத்து இறையைப் பற்று -முதலி யாண்டான் கூரத் ஆழ்வான் சம்வாதம் –
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14–என்னுமா போலே –

பற்றிலன் –
பற்று -உண்டு சங்கம் -அத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவன் – அன்பை உறைவிடம் ஆக உடையவன்.
பற்றிலன் என்பது – பற்றிலான் என்பதன் விகாரம்;
இன்னான் இங்கு உண்டோ என்ன இங்கு இல்லை ‘அகத்திலான்’ என்பது போன்று;
அகத்திலான் – அகத்திலே இருப்பவன்.
பற்றிலே உள்ளான் -என்னவுமாம் -சங்க ஸ்வ பாவன் -என்றபடி –

அவன் முற்றில் அடங்கே
அவனாகிற எல்லாவற்றிலும் அடங்கு –
அவனே தாரகாதிகளும் சர்வவித பந்துவும் எல்லாவுமாகப் பற்று
மாதா மிதா ப்ராதா —
வா ஸூ தேவஸ் சர்வம் –
உண்ணும் சோறு பருகும் நீர்
சேலேய் கண்ணியர்-
ஏகைக பல லாபாய –
இது பட்டர் நிர்வாஹம் –

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-
ஆஸ்ரயணத்வேன சமனாய் நிற்கும் சர்வேஸ்வரன் பக்கல் சங்கத்தை உடையனாய் அவனுடைய
எல்லாக் கைங்கர்யங்களிலும் அந்வயிக்கப் பார் என்று பிரதம அர்த்தம்
ஸ்ரீ பட்டர் யோஜனையில் சர்வேஸ்வரன் இன்று ஆஸ்ரயித்தவர்கள் பக்கலிலே தாரகதவாதிகள் எல்லாமாக நின்றான் –
நீயும் சாம்சாரிக சங்கத்தை விட்டுவனாய் அவனுடைய தாரகதவாதி ஸமஸ்த பாவத்திலும் அந்தர்ப்பவிக்கப் பார் -என்று த்விதீயார்த்தம் –

ஓர் அயனத்தின் அன்று ஸ்ரீ குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச் சொல்லி,
‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க,
உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில்
ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ!’ என்று அருளிச் செய்தார்.
அன்றியே
ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!
பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

————–

தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இறே மோஷ சாஸ்திரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -தான் இருப்பது–
அனுபவ பரம் முதலில் உபதேச பரம் இதில் –
அதில் தத்வ பாரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியில் –
ஹிதம்–உபாசன பாரமாகச் சொல்ல வேண்டும் அவற்றுக்கு எல்லாம் சங்க்ரஹமாய் இருக்கிறது இத் திருவாய் மொழி –
இத் திருவாய்மொழி தன்னை ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக நிர்வஹித்திக் கொண்டு போந்து
எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து -பாஷ்யம் தலைக் கட்டின பின்பு
பக்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போருவர் – பின்பு எம்பாரும் அப்படியே அருளிச் செய்தார் –

———-

1-3-
சர்வ ஸ்மாத் பரன் ‘எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்;
பரனாகையாலே பஜனீயன் ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத் தக்கவன்’ என்று பல காலும் அருளிச் செய்யா நின்றார்
இரண்டாந்திருவாய்மொழியில்;
இத்திருவாய்மொழியில் அவனது சௌலப்யத்தை அருளிச்செய்கிறார்.

‘வாசத் தடம்’,
‘மரகத மணித் தடம்’ என்றும்,
‘வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை’,
‘ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை’,
‘வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி’ என்றும்
இறைவன் தடாகமாகவும் விளக்காகவும் கூறப்படுதல் காண்க.

இறைவன் ஸ்ரீ இராமன், ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் பண்ணிக்கொண்டு எளியனாம்;
ஆன பின்பு, அடைதல் கூடும்;

சாஸ்த்ரங்களில் -சமஸ்த கல்யாண குணாத் மகன் –சர்வாதிகன் -பரம போக்யன் -பரம உதாரன் -என்று கேட்ட மாத்ரத்திலே
ருசி பிறந்தவர்களுக்கு கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி க்ருபாதி குணங்களை பிரேரிக்க
அஜகத் ஸ்வபாவனாய்க் கொண்டு சங்கல்ப்பத்தாலே அப்ராக்ருத திவ்ய தேஹத்தை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு
சாது பரித்ராண துஷ்க்ருத் விநாச அர்த்தமாக ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே அவதரித்து ஸூலபனாம்
ஆகையாலே ஆஸ்ரயிக்கைக்கு ஒரு தட்டு இல்லை -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு, அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லை நிலமான ஸ்ரீ கிருஷணாவதாரத்திலே இழிந்து,
அது தன்னிலும் பரத்துவத்தோடு ஒக்கச் சொல்லக் கூடிய நிலைகளைக் கழித்து,
நவநீத சௌர்ய நகர க்ஷோபத்திலே அகப்பட்டு, இளமணற்பாய்ந்து ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.

—-

சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக அவதாரங்களை அனுசந்தித்தவர் -தொடங்கின உபதேசத்தை மறந்து
கிருஷ்ண அவதாரத்தில் நவநீத சௌர்ய சாரித்ரத்திலே தாம் அகப்பட்டு அழுந்துகிறார் –

‘தப்பச் செய்தோம்;தப்பச் சொன்னோம் அழித்துச் சூளுறவு-ப்ரதிஜ்ஜை – செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம் பாட்டில்.
அதாவது,
பிறர்க்கு உபதேசம் பண்ணப்புக்குத் தாம் அனுபவித்தார் முதற்பாட்டில்;
இப் பாட்டுத் தொடங்கிப் பிறர்க்கு உபதேசம் செய்கிறார் என்றபடி.
மேல் பாட்டில் கூறிய எளிமையினை வகைப்படுத்தி அருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

எல்லார்க்கும் ஒவ்வொரு காலத்தில் எளிமை கூடும்;
இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார் என்றபடி-

அவன் இங்கே வந்து அவதரிக்கிலும் சோக மோஹங்களைப் பண்ணும் இவ்விடம்;
இவன் அங்கே செல்லினும் தெளிவைப் பண்ணும் அவ்விடம்; ஆதலால், ‘வீடாம் தெளி’ என்கிறார்.

பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான்-
அந் நாம த்வாரா காணும் -அப் பெயர்களின் மூலமாகக் காண்கின்ற -பல திருமேனிகளை யுடையனாய் இருக்கை.
‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது.
இவர்தாமும் இதனைப் பின்னர்க் கூறுமிடத்து-அநு பாஷிக்கிற இடத்தில் –
‘பேரும் ஓர் உருவமும்’ என்று அருளிச் செய்தல் காண்க.

வணக்குடைத் தவநெறி வழி நின்று-
வனக்கத்தை யுடைய பத்தி மார்க்கமாகிற வழியிலே நின்று;
ஸ்ரீ பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில்
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா (‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ )என்று கூறி,
பின்னர்,(மாம் நமஸ்குரு )‘என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால்,
இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவ நெறி’ என்கிறார்.
பத்தியானது -அங்கனா பரிஷ்வ்ங்கம் -காதலியோடு கலக்கும் கலவி போன்று போக ரூபமாய் -இன்ப மயமாக இருக்குமாதலின்
‘அம் பகவன் தவநெறி’ என்கிறார்.
பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் பக்தியைச் சொல்லுகிறார்;

அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-
ஒரு உணர்த்தி, ஸ்வரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, ஸ்வபாவத்தைப் பற்றியது

நம் திருவுடை அடிகள் தம்-
திருமகள் கேள்வனான ஸ்வாமியினுடைய– இதனால், நித்திய யோகத்தை அருளிச் செய்கிறார்.
‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று
நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து,
அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி,
‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னா நின்றது கண்டீரே’ என்று அருளிச்செய்தார் பட்டர்.
அவள் முன்னாக பற்றுவாருடைய குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகள்-

‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே,’ என்பதற்கு
‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார்,’ என்று நஞ்சீயர் அருளிச் செய்த பொருள்
அதற்கு அடுத்த இத் திருவாய்மொழிக்கு மிகப் பொருந்தும்.
அவன் காட்டக் கண்ட நாம் அனுபவிப்போம் என்று அதிலே பாரிக்கிறார்-ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்
‘அனுபவிக்கிறார்’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த பொருள்,
இவ் வாழ்வாருக்கு ‘முனியே நான்முகனே’ என்னும் திருவாய்மொழி முடிய உள்ளது
மானச அநுபவமாகையாலே அதற்குப் பொருந்துவதாம்.

அநாதி காலம் இவ்வாழ்வாரைத் தன்னோடே சேர விடுகைக்குக் காலம் பார்த்து இருந்த-அவசர பிரதீஷனாய்ப் போந்தவன் –
இவர் பக்கல் அப்ரதிஷேதம் -வெறுப்பின்மை உண்டான சமயம் பார்த்து,
இவருக்கு மயர்வற மதிநலம் அருளல் ஈண்டுப் புணர்ச்சி-யாதிருச்சிக்க சம்ச்லேஷம் – எனப்படும்.
அவன் கொடுத்த அந்த ஞானம் பேற்றோடே தலைக் கட்டப் பெறாமை-விஸ்லேஷம் – பிரிவு எனப்படும்.

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு –
ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் கலவியாலும் சிவந்த திருக் கண்களை யுடையவர்
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர் யமும் -மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யமும்
இத் திருவாய் மொழியிலே கலவியும் –

விதியினம்
புண்ணியத்தை யுடையோம்.
‘களை கண் மற்று இலேன்’ என்றும்,
‘உன் சரண் அல்லால் சரண் இல்லை’ என்றும்,
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கு மற்றவை’ என்றும்,
‘நெறிவாசல் தானேயாய் நின்றானை’ என்றும்,
‘விழிக்குங் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்’ என்றும்,
‘வாழுஞ் சோம்பர்’ என்றும்
இப்படிகளிலே அன்றோ இவர்கள் கோஷ்டியில் வார்த்தைகளும் இருக்கும்படி?

கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்;
இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞான காரியம்.

வானோர் இறையை -என்றதுக்கு முதல் திருவாய் மொழயில் நோக்கு
கள்வா -என்றதுக்கு பத்துடை அடியவரிலே நோக்கு
ஏறு ஏழும் தழுவிய எந்தாய் -அஞ்சிறைய மட நாரையில் நோக்கு

முதல் திருவாய் மொழியில் நித்ய ஸூ ரிகளுக்கு அனுபாவ்யமான மேன்மையை தூஷித்தேன்
பத்துடை அடியவரில் யசோதைப் பிராட்டிக்கு அனுபாவ்யமான நீர்மையை தூஷித்தேன்
அஞ்சிறைய மட நாரையில் பிராட்டிமார் பாசுரத்தைச் சொன்னேன்

தானோர் உருவே தனி வித்தாய்
‘தான்’ என்கிற இதனால், உபாதானாந்தரம் -முதற்காரணம் வேறு இல்லை என்கை.
‘ஓர்’ என்கிற இதனால் சஹகார்யாந்தரம் -துணைக் காரணம் வேறு இல்லை என்கை.
‘தனி’ என்கிற இதனால், -நிமித்தாந்தரம் -நிமித்த காரணம் வேறு இல்லை என்கை.
உரு – அழகு, ஆக, ‘அழகிய த்ரிவித மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

‘சதேவ,’ ‘ஏகமேவ,’ ‘அத்விதீயம்’- இவை முறையே, துணைக்காரணம், முதற்காரணம், நிமித்த காரணம்
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதானம்
சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்தம்
ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி

பால் ஏய் தமிழர் –பால் போலே இனிய தமிழை யுடையவர்கள்.
இசைகாரர் –இயலுக்கு இசைய இசையிட வல்லவர்கள். அவர்களாவார், ஸ்ரீ மதுர கவிகளையும் ஸ்ரீ நாத முனிகளையும் போல்வார்.
பத்தர் – பகவத் குண அனுபவத்தில் இவர் தம்மைப் போலே ‘கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்’ என்று இருக்குமவர்கள்.

ஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை
‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;
இசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை;
பத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார்.

ஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;
பத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.

ஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,

மாதவன் பால் சடகோபன் தீது அவம் இன்றி உரைத்த ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து-1-6-11-
தீது -அவம் -ஏதம் –
இதனை, ‘தீது இல் மாதவன் பால், அவம் இன்றி இருக்கின்ற சடகோபன் உரைத்த,
ஏதம் இல் ஆயிரம்’ என்று சொற்களைக் கொண்டு கூட்டி,
பிரபந்தத் தலைவன் குற்றம் இல்லாதவன் என்றும்,
பிரபந்தத்தை அருளிச் செய்தவர் குற்றம் இல்லாதவர் என்றும்,
பிரபந்தம் குற்றம் இல்லாதது என்று பொருள் அருளிச் செய்தனர் முன்னைய பெரியோர்.
ஸ்ரீ பட்டர், அவ்வாறு அன்றி, ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே,-
த்ரிவித தோஷ ராஹித்யம் – முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்;
இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில்,
‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச் செய்தார்.
அதாவது, தீதாவது, ‘நான்-ஸ்ரீ யப்பதி திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது.
அவமாவது, ‘ஆஸ்ரயிக்கிறவன் அடைகின்றவன் நித்திய சம்சாரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கைவிடுமது.
இவை இல்லாமையைச் சொன்ன இப் பத்து என்றபடி.

ஆக ‘வைப்பாம் மருந்தாம்’-1-7-2- என்னும் இவ் விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச் செய்தார் ஆவர்.
எங்கள் ஆயர் கொழுந்தே-1-7-2-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு-பிராகிருத – சரீர சம்பந்தத்தினை விரும்பி,
‘எங்கள் ஆயர்’ என்கிறார்.

அவரால் புடை உண்ணும்-‘-1-7-3-
திருவாய்ப்பாடியில் உள்ள ஐந்து லட்சம் குடிகளிலும் ஸ்ரீ கிருஷ்ணனை நியமிக்க உரியர் அல்லாதார் இலர்’ என்பார்,
அவனால் அல்லது அவளால் என்று கூறாது, ‘அவரால்’ எனப் பன்மை வாசகத்தால் அருளிச் செய்கிறார்.
‘மரத்தாலே ஓர் அடி அடிப்பார் போலே காணும்’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும்படி.

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-

என் சொல்லி யான் விடுவேன் – ஈடு முப்பத்தாறாயிரம்-
1-‘சிறிது மயர்வு கிடந்தது’ என்று விடவோ? -மயர்வு அற
2-‘மயர்வைப் போக்கித் தான் கடக்க இருந்தான்’ என்று விடவோ?- என் மனத்தே மன்னினான்
3-‘எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித் தந்திலன்’ என்று விடவோ? -உயர் வினையே தரும்
4-‘தான் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு-ப்ரத்யுபகாரம் – கொள்ள இருந்தான்’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
5-‘வடிவழகு இல்லை’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
6-‘மேன்மை போராது’ என்று விடவோ? -அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
7-‘இப் பேற்றுக்கு-கிருஷி பண்ணினேன் – முயற்சி செய்தேன் நான்’ என்று விடவோ? என் இசைவினை
எதனைச் சொல்லி நான் விடுவேன்?’ என்கிறார்.-

என் சொல்லி யான் விடுவேனோ-இருபத்து நாலாயிரப்படி
1-என்ன கண் அழிவைச் சொல்லி -நான் கை வாங்குவது –
2-அஞ்ஞானம் அனுவர்த்தித்து விடவோ –
3-அஸந்நிஹிதன் என்று விடவோ –
4-அந்நிய பரன் என்று விடவோ –
5-நன்மைகளை பண்ணித் தந்திலன் என்று விடவோ –
6-பிரதியுபகாரம் கொள்ள இருந்தான் என்று விடவோ –
7-மேன்மை போராது என்று விடவோ –
8-இசைவுக்கு கிருஷி பண்ணினேன் நான் என்று விடவோ –
எத்தைச் சொல்லி விடுவது –

‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச் செய்தார்;
இத் திருவாய்மொழியில்-(1-8) ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்;
இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின்,
சௌலப்யமாவது, ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாக வுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர்
நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை.
சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழவிட்டோமே!’ என்று
தன் திரு வுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை.
ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு
தான் பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை.

ஸ்ரீ ஆளவந்தார் ‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச் செய்து,
பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச் செய்தார்.

கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே–1-8-3-
( திருவாய் மொழியில் முதல் ஸ்பஷ்டமாக திவ்ய தேச மங்களா சாசனப் பாசுரம் -)
விண்ணோர் வெற்பன்-
‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார்.
கானமும் வானரமுமான இவற்றிற்கு முகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நீர்மையை நினைத்து,
‘இது என்ன நீர்மை!’ என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களுடையதே திருமலை என்கிறார்
நித்ய விபூதியின் மேன்மையையும் திருமலையில் நிற்கிற நீர்மையையும் ஒரு போகியாக அனுபவித்துக் கொண்டு
விடாதே படுகாடு கிடக்கையாலே-விண்ணோர் வெற்பன் -என்கிறார்

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து எண் தான் ஆனானே–1-8-7-
என் எண் தான் ஆனானே –
நான் மநோரதித்தபடியே விரும்பியபடியே எனக்குக் கை புகுந்தான்.
அன்றிக்கே ‘என் மநோ ரதத்தைத் தான் கைக் கொண்டான்,’ என்று கூறலுமாம்.
அதாவது, ‘மாக வைகுந்தம் காண்பதற்கு என்மனம், ஏகம் எண்ணும்,’
‘கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்,’ என்கிறபடியே,
ஸ்ரீ வைகுண்டத்திற்குச் சேறல் வேண்டும்’ என்றும்,
‘அங்கே அனுபவிக்க வேண்டும்’ என்றும் நான் ஆசைப்பட,
ஸ்ரீ திருநகரிக்கு ஏறப் போக வேண்டும்;
ஸ்ரீ ஆழ்வாரை அனுபவிக்க வேண்டும்,’ என்று அவன் பாரிக்கிறான்’ என்றபடி.

திருவின் மணாளன் –1-9-1-
இவருடைய அமிர்தம் ஒரு மிதுனம் ஆயிற்று
இதனால், மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய் அருளிச் செய்கிறார்.
ரசிகத்வத்துக்கு-சிரமம் செய்த இடம் என்னுதல் –ரசிகத்வத்துக்கு விஷயம் அவள் என்னுதல் –
சுவையன் திருவின் மணாளன் -என் அமுதம் திருவின் மணாளன்-இரண்டாலும்
வாக்யத்வ யுக்தமான புருஷகாரத்வ உபேயத்வங்களைச் சொன்னபடி –

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் மடமகள் என்று இவர் மூவர் -1-9-4-
உடன் அமர் காதல் மகளிர்–
உடனே அமர வேண்டும்படியான காதலையுடைய ஸ்ரீ பிராட்டிமார் –
அகலகில்லேன் இறையும் என்று ஆயிற்று இவர்கள் இருப்பது -அவர்கள் யார் என்னில்

திருமகள்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் -பட்டத்துக்கு உரியவளாய் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியார்

மண் மகள்
முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய்
பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி

ஆயர் மட மகள்
அனுபவ ஸூகம் தானாய் தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்திலே
குற்றம் படாதபடி இருக்கும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி

திருமகள் அவன் ஐஸ்வர்யம்
மண் மகள் அது விளையும் பூமி
ஆயர் மட மகள் அத்தைப் புஜிக்கிற போக்தாவானவள் -என்றுமாம் –

என்று இவர் மூவர்
மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித்தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர்

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான்–1-9-7-

ஸ்ரீ ஆழ்வார் இருக்கும் இடத்திற்குச் செல்லும் ஸ்ரீ இறைவனும் ஸ்ரீ ஆழ்வார் விரும்பிய வாறே
திருத் துழாயால் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்றான்.
இவர் உகப்பதும் திருத் துழாயே, அவன் கொடுப்பதும் திருத் துழாயே அன்றோ?
‘புள் ஊர்திகள் ஊரும் துழாய்க் கொயல் வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர்.
‘எங்ஙனம்?’ எனின்,
திருத் தாயார் கூறும் போதும் ‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர்.
இவள் தானும் ‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’,
‘கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும்’,
அவனும், ‘தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே,
இவளுக்கு அன்றி நல்கான்.

அபிமத விஷயத்தை அணைவார் புழுகு நெய் ஒட்டிக் கொண்டு போமா போலே தாம் உகந்த படியே
திருத் துழாயாலே திருமேனியை எல்லாம் அலங்கரித்து வந்தபடி –

தோளிணை மேலும் –
ஸூ காடம் பரிஷஸ் வஜே -என்கிறபடியே
‘அன்பினால் கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்’ என்கிறபடியே,
அணைக்க-கணிசிக்கிற விரும்புகிற திருத் தோள்களிலும்,

நன் மார்பின் மேலும்-
அணைப்பிக்குமவள் இருக்கிற திரு மார்பிலும்
அவன் அப்படி அணைக்கைக்கு பற்றாசான பிராட்டி இருக்கிற திரு மார்பிலும்

சுடர் முடி மேலும் –
அணைத்துக்கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே
தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும்.
இவ்வணைக்கை தான் வகுத்த விஷயம் ஆகில் இ றே புருஷார்த்தம் ஆவது –
அந்த சேஷித்வ பிரகாசகமான சர்வாதிகத்வ லக்ஷணமான திரு அபிஷேகத்திலும் –

தாளிணை மேலும்-
தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயினை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்.
அந்த சேஷித்வத்துக்கு தோற்று விழும் திருவடிகளிலும்

புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான் –
சாத்தின திருத் துழாயை உடைய சர்வேஸ்வரன் -இது தான் சர்வாதிக லக்ஷணம் இறே

இனி, இவ்வடிகட்கு ஸ்ரீ பட்டர் மிக அழகாகவும் ரசோக்தியாகவும் விசேடப் பொருள் அருளிச் செய்வர்;
அப் பொருள் வருமாறு:
வீரராய் இருப்பார் முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான்.
பிரணயிகளாய்- காதலர்களாய் இருப்பவர்கள்-அபிமத விஷயத்துக்கு அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்;
அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் கோயில் கட்டணத்துக்குக் கொடுத்தான்;
ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத் தாம் தாம் அணிந்து கொள்ளுவார்கள் இத்தனை யன்றோ?
ஆதலின், தான் சூடினான்;
சேஷம் பின்னர் அடியார் அன்றோ கைக் கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்;
ஆபத்துக்குத் துணை செய்வார் அடியார் அன்றோ?
தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் அடியாரே அன்றோ?
‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய ஸ்ரீ இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’ எனின்,
நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும்
அவனுடைய ஆபத்துகளுக்கும் திருவடிகளே துணையாயினபடி.

———-

1-10-

இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று –
உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே,
இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்;
இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே,
அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான்
ஒருவனும் இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று,
கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை –
அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.

அத்வேஷம் என்ன பரிகணைனை என்ன பரம சக்தி என்ன
இவ்வளவுகளை நிர்ஹேதுக கிருபையாலே தமக்கு பிறப்பித்து தம்மோடு கலந்த படியைக் கண்டு
அத்வேஷாதிகள் உடையாரோடும் தம்மோடு கலந்தால் போலே கலக்கும் ஸ்வ பாவன் என்றும் அவர்களுக்கு
அவ்வளவுகளைப் பிறப்பிப்பான் அவனே -என்றும் அனுசந்தித்து நிர் வ்ருத்தர் ஆகிறார் –
முன்புள்ளார் -கீழ் பெற்ற பேற்றை அனுசந்தித்து நிர் வ்ருத்தர் ஆகிறார் -என்னும் அளவே யாயிற்று நிர்வஹிப்பது
பட்டர் தம்முடைய வைபவம் எல்லாம் காட்டும் திருவாய்மொழி யாயிற்று இது –

இறைவன், தன்னுடைய ஸ்வரூபத்தை உபதேசித்து, ‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா ‘மாஸூச:’ என்றது போன்று,
இவரும் இறைவனுடைய ஸ்வரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’-1-10-2- என்கிறார்.
இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,
அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.
சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –

தாம் ஒருகால் தேடி விடா நிற்க, த்விவா ராத்திரி விபாகமற எனக்கு ஸ்நேஹித்து பரிபூர்ணன் ஆனவன்
அபூர்ணனான என்னை ஸ்வீ கரித்து என்னை விட ஷமன் ஆகிறான் அல்லன்
இறைவன் இடைவிடாதே விரும்புகிறான் ஆதலின், ‘இடைவீடின்றி’ என்கிறார்.
இனி, ‘என்னை விடான் நம்பி நம்பியே’-1-10-8- என்பதற்கு,
‘என்னை –
அபூர்ணனான என்னை,
நம்பி –
பெருமதிப்பனாக -நினைத்து,
விடான் –
விடுகின்றிலன்’ என்று பொருள் கூறலுமாம்.
‘சம்சாரி சேதனனைப் பெற்று, பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற இவனையே
உலகத்தார் பரிபூர்ணன் என்கிறார்கள்,’ என்பார் ‘நம்பியே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.

என் சொல்லி மறப்பனோ –1-10-9-
எத்தைச் சொல்லி மறப்பேன்?
1-அபூர்ணன் என்று மறக்கவோ?
2-தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ?
3-வடிவழகு இல்லை என்று மறக்கவோ?
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ?
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ?
எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி.

என் சொல்லி மறப்பேனோ-
1-குண ஹீனன் என்று மறக்கவோ
2-அஸந்நிஹிதன் என்று மறக்கவோ
3-வடிவில் பசை இல்லை என்று மறக்கவோ
4-மதிப்பன் அல்லன் என்று மறக்கவோ
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ –

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை –1-10-11-
மணியை –
முந்தானையிலே முடிந்து ஆளலாம்படி கைப் புகுந்திருப்பான் என்று அவனுடைய சௌலப்பியத்தைச் சொல்லுகிறார்.
‘தென் குறுங்குடி நின்ற’ என்கிற இடத்தில் சௌலப்பியம்.
வானவர் கண்ணனை –
இதனால், ‘உம்பர் வானவர் ஆதியம் சோதி’ என்கிற மேன்மையைச் சொல்லுகிறார்.
தன்னதோர் அணியை-
இதனால் ‘அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தி’ என்கிற வடிவழகை நினைக்கிறார்.
இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.

————

1-1-

முதல் பாட்டிலே — கல்யாண குணயோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் -விக்ரக வைலஷண்யத்தையும் -என்றும்
இரண்டாம் பாட்டிலே -இவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சேதன அசேதன விலக்ஷணம் என்றும்
மூன்றாம் பாட்டில் -நித்ய விபூதியோபாதி ததீயத்வ ஆகாரத்தாலே அவனுக்கு அந்தரங்கமாய்த் தோற்றுகிற லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
நாலாம் பாட்டிலே அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம் அவன் ஆதீனம்-என்றார் –
ஐந்தாம் பாட்டிலே அதனுடைய ஸ்திதியும் அவன் ஆதீனம் என்றார்
ஆறாம் பாட்டிலே பிரவ்ருத்தி நிவ்ருத்தியும் பகவத் ஆதீனம் என்றார்
ஏழாம் பாட்டிலே சரீர சரீரிகளுக்கு உண்டான லக்ஷணம் ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டாகையாலே
இதுக்கும் அவனுக்கும் சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்றார் சரீர சரீரி
எட்டாம் பாட்டிலே குதிர்ஷ்டிகளை மிராசுதார்
ஒன்பதாம் பாட்டிலே சூன்ய வாதியை நிரசித்தார்
பத்தாம் பாட்டிலே வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்தார்
இப்படிகளாலே அவனுடைய பரத்வத்தை நிஷ்கர்ஷித்தாராய் நின்றார் கீழ்
இத்திருவாய் மொழியில் அந்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

————————

1-2-

முதல்பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல்
ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பாசனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.

—————

1-3-

முதற்பாட்டில்,ஸூலபன் -‘எளியவன்’ என்றார்;
இரண்டாம் பாட்டில்,-ப்ரஸ்துதமான ஸுலப்யத்தை – சொன்ன அவ்வெளிமையை வகைப்படுத்தி -ச பிரகாரமாக -அருளிச்செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அத்தன்மைகள் தாம் அடியார்க்கு அறியலாம்; அல்லாதார்க்கு அறியப்போகா,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயியுங்கோள் – அடைமின்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ஆஸ்ரயணீய வஸ்து -அடையத்தக்க பொருள் இன்னது’ என்றும், ஆஸ்ரயிக்கும் பிரகாரம் -அடையும் விதம் இன்னது என்றும் அருளிச் செய்தார்;
ஏழாம் பாட்டில், ‘நீங்கள் சில் வாழ் நாள் பல் பிணிச் சிற்றறிவினிர் ஆகையாலே, விளம்பிக்க ஒண்ணாது; கடுக அடைமின,’ என்றார்:
எட்டாம் பாட்டில், ‘பற்றிய அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், பிரமன் சிவன் முதலியோர்கட்கும் காரணமானவன் வந்து அவதரிக்கைக்குக் காரணம் அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், இப்படி எளியவனானவனை முக் கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்;
முடிவில், இதனைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்கு – பலன் அருளிச்செய்தார்.

———-

1-4-

முதற்பாட்டில், ஒரு நாரையைத் தூதுவிட்டாள்;
இரண்டாம் பாட்டில், அங்குப் போனால் சொல்லும் வார்த்தைகளைச் சில குயில்களுக்குச் சொன்னாள்;
மூன்றாம் பாட்டில், ‘நான் செய்த பாபமேயோ மாளாதது என்று சொல்லுங்கள்,’ என்று சில அன்னங்களை இரந்தாள்;
நாலாம் பாட்டில், சில மகன்றில்களைப் பார்த்து, ‘என் நிலையை அங்கே சென்று சொல்லுவீர்களோ, மாட்டீர்களோ?’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், சில குயில்களைப் பார்த்து, ‘தன்னுடைய நாராயணன் என்ற பெயர் ஒறுவாய்ப் போகாமே
நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கோள்,’ என்றாள்;
ஆறாம் பாட்டில், ஒரு வண்டைக் குறித்து, ‘தம்முடைய நாராயணன் என்ற பெயருக்கு ஒரு குறைவு வாராமே
எங்கள் சத்தையும் கிடக்கும்படி இத் தெருவே எழுந்தருளச்சொல்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ஒரு கிளியைக் குறித்து, ‘இத் தலையில் குற்றங்களைப் பார்க்கும் அத்தனையோ? தம்முடைய
குற்றங்களைப் பொறுக்குந் தன்மையையும் ஒருகால் பார்க்கச்சொல்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், தான் உறாவினவாறே முன் கையிலிருந்த பூவையும் உறாவ, ‘நானோ முடியா நின்றேன்;
நீ உன்னைக் காக்கின்றவரைத் தேடிக்கொள்’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ஒரு வாடையைக் குறித்து, ‘என் நிலையை அங்கே சென்று அறிவித்தால்,
அவன் ‘அவள் நமக்கு வேண்டா’ என்றானாகில், வந்து என்னை முடிக்க வேண்டும்,’ என்று இரந்தாள்;
பத்தாம் பாட்டில், தன் நெஞ்சைக் குறித்து, ‘நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீஅவனை விடாதேகொள்,’ என்று போக விட்டாள்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினாள்.

முதற்பாட்டில், ஆசாரியனுடைய ஞானத்தின் பெருமையை -வைபவத்தை -அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில்,மதுர பாஷியாய் – இனிமையாகப் பேசுகின்றவனாக இருப்பான் என்றார்;
மூன்றாம் பாட்டில், ஸாராஸாரங்களைப் பகுத்து அறிகின்றவன்-சாரசார விவேகாஞ்ஞன் – என்றார்;
நான்காம் பாட்டில், திருமேனியின் பேரழகினை-விக்ரஹ ஸுந்தர்யத்தை- அருளிச்செய்தார்;
ஐந்தாம் பாட்டில், ‘நினைத்தது கிட்டும் அளவும் சலியாத தூய தன்மையுடையான்’-சுத்த ஸ்வபாவன் என்றார்.
ஆறாம் பாட்டில், ‘பகவானையே அனுபவிக்கின்றவனாய் இருக்கும் -பகவத் ஏக போகனாய் -ரூபாவானாய் அழகனுமாய்ப்-
கிருபாவானுமாய் -கம்பீர ஸ்வ பாவனாயும் -பெருமிதமுடைவனுமாய் இருப்பான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘தான்-சர்வஞ்ஞன் – முற்றறிவினன் ஆகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை அல்லது அருளிச் செய்யான்,’
என்று அவனுடைய ஆப்தியை அருளிச் செய்தார்;
எட்டாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே இவனுக்கு ஆத்தும யாத்திரை’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே-சத்தா – இருப்புக்குத் தாரகம்; இதர ஸ்பர்சம் சத்தா பாதகம்
பத்தாம் பாட்டில்- -இப்படி ஞானவானுமாய் மதுரபாஷியுமாய் சாரசார விகேகஞ்ஞனுமாய் -தர்ச நீயனுமாய் -சுத்த ஸ்வபாவனாய் –
கிருபா கம்பீரயாதிகளை யுடையவனாய் சிரோபாதிஸ சத்வருத்த ஸேவ்யனாய்-
ஸச் சிஷ்யனாகையாலே ஏவம்பூதனான ஆச்சார்யனுடைய தேஹ யாத்திரையே தனக்கு ஆத்ம யாத்ரையாய் –
இதர ஸ்பர்சமும் தனக்கு பாதகமாய் -இப்படி சதாச்சார்ய சேவை பண்ணுகையாலே பகவத் கைங்கர்யத்தில் பிரவணமாய் –
நின்னடையேன் அல்லேன்-என்று நீங்கி ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஒப்ப
நாண் மலர்ப்பாதம் அடைந்தது தம் திரு உள்ளம் என்று தலைக் கட்டினார் –

ஞானத்தின் பெருமையை அருளிச்செய்தார்’ என்றது, ‘அஞ்சிறைய மடநாராய்’ என்றதில் நோக்கு;
இரண்டு சிறகுகளும் ஞான அநுஷ்டானங்களாகக் கூறப்படும்.
‘இனிமையாகப் பேசுகின்றவன்’ என்றது, குயிலின் ஒலி இனியதாயிருத்தல் நோக்கி,
‘சாராசாரங்களைப் பகுத்தறிகின்றவன்’ என்றது, ‘மென்னடைய அன்னங்காள்’ என்றதனை நோக்கி.
‘திருமேனியின் பேரழகினை’ என்றது –‘நன்னீல மகன்றில்காள்’ என்றதனை நோக்கி.
‘நினைத்தது கிட்டுமளவும் சலியாத நிலையினன்’ என்றது, ‘இரைதேர்’ என்றதனை நோக்கி.
பகவானையே அனுபவிக்கின்றவனாய் இருக்கும் அழகனுமாய்ப் பேரருள் வாய்ந்தவனுமாய்ப் பெருமிதமுடையவனுமாய்’ என்றது –
முறையே ‘வண்டு என்றதனையும்,’ ‘வரி’ என்றதனையும், ‘ஆழி’ என்றதனையும் நோக்கி.
‘வண்டு ஏகபோகமோ?’ எனின், வண்டு தேனையன்றி உண்ணாது; மதுகரம் என்ற பெயரின் பொருளையும் நோக்குக
‘தான் முற்றறிவினனாகிலும் ஆசாரியர்கள் பக்கல் கேட்ட வார்த்தை யல்லது அருளி ச்செய்யான்’ என்றது, ‘இளங்கிளியே’ என்றதனை நோக்கி.
‘ஆசாரியனுடைய தேக யாத்திரையே இவனுக்கு ஆத்தும யாத்திரை,’ என்றது, ‘இன்னடிசில் வைப்பாரை நாடாயே’ என்றதனை நோக்கி.
ஆசாரியனுடைய சம்பந்த மாத்திரமே சத்தாதாரகம், மற்றையோருடைய உறவு சத்தா பாதகம்’ என்றது, காற்றின் ஸ்பரிசம் பாதகம்
என்றதனால், எதிர்மறைப் பொருளில் ஆசாரிய சம்பந்தமே தாரகம் என்பது போதரும்.

இத் திருப்பதிகத்தில் ஏழாம் பாசுரம் முடிய, சதாசாரியனுடைய இலக்கணம்;
மேல் மூன்று பாசுரங்கள் ஸச் சிஷ்யனுடைய மாணாக்கனுடைய இலக்கணம்.

—————

1-5-

முதற்பாட்டில், ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;
இரண்டாம் பாட்டில், ‘அகலுவதற்கும் நான் அதிகாரி அல்லேன்’ என்றார்;
மூன்றாம் பாட்டில், சில குணத்தைக் காட்டித் துவக்கத் துவக்கு உண்டார்;
நான்காம் பாட்டில், ‘அகல ஒட்டுவார்களோ உடையவர்கள்?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி பார்த்தருளல் வேண்டும்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், அவன் அரைக் கணம் தாழ்க்க, ‘முடியப் புகுகின்றேன்’ என்றார்;
ஏழாம் பாட்டில், அவ்வளவில் இறைவன் வரக்கொள்ள, ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;
எட்டாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயைப் போன்று உம்முடைய சம்பந்தம் தாரகம்,’ என்றான் இறைவன்;
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படி அன்று; இது நஞ்சு,’ என்ன, ‘நஞ்சு தானே நமக்குத் தாரகம்?’ என்றான்;
பத்தாம் பாட்டில், தம்மை இசைவித்துப் பரம பதத்தை கோடிக்க- அலங்கரிக்கத் தொடங்கினான் என்றார்;
முடிவில், கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———————

1-6
முதற்பாட்டில், ‘இறைவனைப் பற்றுகின்றவர்கட்குப்-ஆஸ்ரயிக்கிறவனுக்கு த்ரவ்ய பொருள் நியதி இன்று,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘அதிகாரி நியதி இல்லை,’ என்றார்;
மூன்றாம் பாட்டில் தம்முடைய முக் கரணங்களும்-கரண த்ரயமும் – பகவானிடத்தில்-ப்ரவணமான – அன்பு கொண்ட-படியை அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில், ‘நித்திய சூரிகளைப் போன்று அதுவே யாத்திரை ஆயிற்று,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘தன்னையே பிரயோஜனமாக – பலமாகப் பற்றினார்க்கு அவன்-நிரதிசய போக்யன் – எல்லை இல்லாத இனியன்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘இப்படி-போக்கிய பூதனானவை – இனியன் ஆனவனை விட்டு வேறு பிரயோஜனத்தை –
பலத்தைக் கொண்டு அகலுவதே!’ என்று-ப்ரயோஜனாந்தர பரரை- தேவர்களை நிந்தித்தார்;
ஏழாம் பாட்டில், ‘இறைவனையே பலமாகப் பற்றினார்க்குக் காலத்தைப் போக்குதல்-கால ஷேபம்- இன்ன வகை’ என்றார்;
எட்டாம் பாட்டில்,-பிராப்தி விரோதிகளையும் – ‘இறைவனைப் பற்றுதற்குத் தடையாக உள்ளனவற்றையும் அவன் தானே போக்குவான்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘இது கூடுமோ!’ என்று ஐயம் உண்டாக, ‘வெறும் அவன் படியையோ பார்ப்பது?
அருகு இருப்பார் படியையும் பார்க்க வேண்டாவோ?’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘இவர்கள் விரோதிகளைப் போக்குவது எத்துணைக் காலத்தில்?’ என்ன, க்ஷண நேரத்திலே’ என்றார்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்கவே-அப்யஸிக்கவே பிறக்க வேண்டா,’ என்றார்-

————-

1-7
முதற்பாட்டில், கேவலரை நிந்தித்தார்;
இரண்டாம் பாட்டில்-அநந்ய பிரயோஜனர் – வேறு பயனைக் கருதாத அடியார்களிடத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘இவ்விரண்டு கோடியிலும் நீவிர் யாவிர்?’ என்ன,
‘உன்னை அனுபவியா நிற்க விரோதி கழிந்தவன் நான்,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘என்னை இவ்வளவாகப் புகுர நிறுத்தினவனை என்ன காரணத்தால் விடுவேன்?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விடும் அன்று அன்றோ, நான் அவனை விடுவேன்?’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘அவன் தான் விடிலோ?’ என்ன, ‘அவன் போக்கை இசையேன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘நீர்தாம் விடிலோ?’ என்ன, ‘அவன் என்னைப்போக ஒட்டான்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘இந்நாள் வரை போக விட்டிலனோ?’ என்ன, ‘நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாகப் பற்றின என்னை
இனி அவனாலும் விடப்போகாது, என்றார்;
ஒன்பதாம் பாட்டில், இப்பிரசங்கம் – -‘இவ்வார்த்தைகள் தாம் எற்றிற்கு?
ஒரு நீராகக் கலந்ததை ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது,’ என்றார்;
பத்தாம் பாட்டில். ‘அவனுடைய கல்யாண குணங்களை எல்லாக் காலத்தும் அனுபவித்து வருத்தமுடையேன் அல்லேன்,’ என்றார்;
முடிவில், இத் திருவாய்மொழியைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———–

1-8-
முதற்பாட்டில், நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச் செய்தார்;
இரண்டாம் பாட்டில், லீலா விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச் செய்தார்;
மூன்றாம் பாட்டில், இரண்டு உலகத்திலும் உள்ளார்க்கு முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கிற படியை அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில், அவ்வார்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், ‘நான் அவன் குணங்களை விரும்புமாறு போன்று, அவனும் என் தேகத்தை விரும்புகின்றான்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ‘என் தேகத்தின் அளவு அன்றிக்கே என் ஆத்துமாவையுங் கைக் கொண்டான்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், அவ்வளவே அன்று; நித்திய விபூதியில் செய்யும் ஆசையை என் பக்கலில் செலுத்துகிறான்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘என்னைக் குறித்து அவன் பிறந்த பிறவிகளுக்கு முடிவு இல்லை,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், ‘இப்படிப் பிறந்த பிறவிகள் தோறும் தன் இறைமைத் தன்மையோடே வந்து அவதரித்தான்,’ என்றார்;
பத்தாம் பாட்டில், ‘அவனுடைய ஆர்ஜவ குணத்தைப் பேசும் போது வேதமே பேச வேண்டும்,’ என்றார்;
முடிவில், ‘இத் திருவாய்மொழி சம்சாரிகளுக்கு எப்போதும் ஒக்க அநுசந்திக்கத் தக்கது,’ என்றார்.

———————-

1-9-
முதல் பாட்டில் என்னுடைய பர்யந்தத்திலே வந்து நின்றான் என்றார்
இரண்டாம் பாட்டிலே அது சாத்மித்தவாறே அருகே நின்றான் என்றார்
மூன்றாம் பாட்டில் தம்முடன் கூட நின்றான் என்றார்
நாலாம் பாட்டில் ஓக்கலையிலே வந்து நின்றான் என்றார்
அஞ்சாம் பாட்டில் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்றார்
ஆறாம் பாட்டிலே தோளிலே வந்து இருந்தான் என்றார்
ஏழாம் பாட்டில் நாவிலே வந்து புகுந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் கண்ணுள்ளே வந்து நின்றான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் நெற்றியிலே நின்றான் என்றார்
பத்தாம் பாட்டில் திருமுடியில் நின்றான் என்றார்
நிகமத்தில் -ஆக -இத்தால் தம்முடன் சாத்மிக்கும்படி கலக்கையாலே அவனை சிரஸா வகித்தார் –
பலம் சொல்லித் தலைக் கட்டினார்

———
1-10-
இத் திருவாய் மொழியில், மேல் பரக்க அருளிச் செய்யப் புகும் பொருள்களை எல்லாம் சுருக்கமாக முதற்பாட்டிலே அருளிச் செய்தார்;
இரண்டாம் பாட்டில் ‘பரம பத்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டும்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில், ‘கண்டாயே அவன் ஸ்வரூபம் இருந்தபடி; நீயும் உன் ஸ்வரூபத்துக்குத் தக்கபடி நிற்கப் பாராய்,’ என்றார்;
நான்காம் பாட்டில் ஸ்வரூபத்திற்குத் தகுதியாக நெஞ்சு தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடினார்;
ஐந்தாம் பாட்டில், மேல் ‘எண்ணிலும் வரும்’ என்றது, பலத்தோடே சேர்ந்து முடிவுற்ற படியை நெஞ்சுக்கு அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், ‘நாம் இருவரும் இப்படி நிற்கப் பெறில் நமக்கு ஒரு கேடும் வாராது,’ என்றார்;
ஏழாம் பாட்டில், மேல் இவர் அஞ்சினபடியே விடிந்தபடி அருளிச் செய்தார்;
எட்டாம் பாட்டில் திரு நாமத்தைக் கேட்டவாறே தம்முடைய காரணங்களுக்குப் பிறந்த வேறுபாட்டைச் சொன்னார்;
ஒன்பதாம் பாட்டில், ‘வேறுபட்டவர் ஆகாதே மறந்தாலோ?’ என்ன, ‘என் மனத்திலே இருக்கிறவனை மறக்கப் போமோ?’ என்றார்;
முடிவில், கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக் கட்டினார்.

முதற்பதிகத்தால்,-சர்வ ஸ்மாத் பரன் -‘எல்லாரினும் அறப் பெரியன் இறைவன்’ என்றார்;
இரண்டாம் பதிகத்தால்,பஜனீயன் ‘வணங்கத் தக்கவன்’ என்றார்;
மூன்றாம் பதிகத்தால், ‘அவன்தான் -ஸூலபன் எளியவன்,’ என்றார்;
நான்காம் பதிகத்தால்,ஸூலபனானவன் அபராத சஹன் ‘எளியனானவன் குற்றங்களைப் பொறுப்பவன்,’ என்றார்;
ஐந்தாம் பதிகத்தால், ‘அவன் சீலவான்,’ என்றார்;
ஆறாம் பதிகத்தால்,ஸ்வாராதன் ‘எளிதாக ஆராதிக்கத் தக்கவன்,’ என்றார்;
ஏழாம் பதிகத்தால்,நிரதிசய போக்யன் – ‘எல்லை இல்லாத இனியன்,’ என்றார்;
எட்டாம் பதிகத்தால், அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்;
ஒன்பதாம் பதிகத்தால்,-சாத்ம்ய போகப்பிரதன் – பொறுக்கப் பொறுக்க இன்பத்தினைக் கொடுப்பவன் என்றார்;
பத்தாம் பதிகத்தால், ஏவம்பூதனானவன் -‘இத் தன்மைகளை யுடையவன் ஒருவன் இறைவன் ஆதலின், நிர்ஹேதுகமாக
ஒருவிதக் காரணமும் இன்றியே -விஷயீ கரிப்பவன் -உயிர்களை அங்கீகரிப்பவன்,’ என்றார்;
ஆகையாலே,
‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே’ என்று
தம் திரு வுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து தலைக் கட்டினார்.

ஆக, ‘அடி தொழுது எழு’ என்று தொடங்கி,
‘கல்வி வாயும்’ என்று முடித்ததனால்,
ஒரு மனிதன் விரும்பிப் பெறத் தக்க உயர்வு அற உயர்ந்த
உறுதிப்பொருள் செய்யும் கைங்கரியமேயாம் என்பதனை
முதல் நூறு திருப் பாசுரங்களால் அறுதியிட்டு அருளிச் செய்தார் ஆயிற்று.

———

முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார்
இரண்டாம் பத்தால் அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்
ஏழாம் பத்தால் இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணரானார்
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் என்று அதிசங்கை பண்ண
நான் நாராயணன் -சர்வ சக்தி உக்தன் -உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்
பத்தாம் பத்தில் ஸ்ரீ ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு -ஸ்ரீ திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி –
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் –

———————

ஆச்சார்ய ஹிருதயம்—சூரணை-219-

(ஆழ்வார் அருளிச் செய்த இறைவனது குணங்களையும்
ஆழ்வாருக்கு அவன் செய்த உபகாரங்கள் இன்னது என்னுமத்தையும்
உலகோருக்கு உபதேசித்தவை இன்னது என்னுமத்தையும்
ஆக மூன்று பகுதியாக அருளிச் செய்கிறார் )

1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர்
வானவர் அதிபதி -மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி
2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்னி
அயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ
என்னும் படி தத்வ ஜ்ஞனர் ஆனவர்
3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும்
நானும் என்கிற சஹ்ருதய அனுபவம்
சம்சாரிகளுக்கு ஆம் படி
4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய
தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
5 -எளிதாக அவதரித்துப் பிழைகளை
சஹித்துப் புரையறக் கலந்து
அல்ப சந்துஷ்டனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
6 -நீர் புரையத் தன்னை நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
7-பக்தி கணனை களுக்கு
ஒக்க வருமவனுடைய சேவைக்கு
எளிமையும் இனிமையும் உண்டு
8-தொழுதால் அரும் பயனாய தரும்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று
இருபசை மலமற உணர்வு கொண்டு
10-நலம் செய்வது என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி
பஜனத்தில் சேர்க்கிறார்-

—————————–

திருவாய்மொழி நூற்றந்தாதி

உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வு ஏதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு –திருவாய்மொழி நூற்றந்தாதி -1-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து.-2-

பத்துடை யோர்க்கு என்றும் பரன் எளியனாம் பிறப்பால்;
முத்தி தரும் மா நிலத்தீர்! மூண்டு அவன் பால்-பத்தி செயும்’
என்று ரைத்த மாறன் றன் இன் சொல்லாற் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ் சிறை–3–

அஞ்சிறைய புட்கள் தமை ‘ஆழியா னுக்கு நீர்
எஞ் செயலைச் சொல்லும்’ என இரந்து – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்– -4-

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கு ஊடு உருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறன் மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடன் சேர்ந்தான் பரிந்து – -5-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி,
அரி யன் அலன் ஆராதானைக்கு என்று உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு––6-

பிறவி அற்று நீள் விசும்பில் பேர் இன்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அற வினியன்
பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு – -7-

ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை -நாடு அறிய
சார்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் யென
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை – -8-

இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் வந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவை யதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொன் தாள் நம் சென்னி பொரும் – -9-

பொரும் ஆழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது வறத் தன்னை -திரமாகப்
பார்த்து உரை செய் மாறன் பதம் பணிக என் சென்னி
வாழ்த்திடுக என்னுடைய வாய் – -10-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்–

October 8, 2021

ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/
அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/
வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்—
ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்;
ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து
அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும் அறிந்ததே.
ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்யங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால்
பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன

1.ராமானுஜருக்கு அவருடைய தாய் மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்
‘இளையாழ்வார்’ என்று பெயரிட்டார்.

மாமுனிகளுக்கு அவருடைய தாய் வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள்
‘அழகிய மணவாளன்’என்று பெயரிட்டார்.

2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கை நெறிக்கும்,கைங்கர்யங்களுக்கும் இல்லறம் தடையாக இருப்பதை
உணர்ந்து துறவறம் மேற்கொண்டார். காஞ்சி தேவப்பெருமாளிடம் காஷாயம் பெற்று’எதிராஜர்’ ஆனார்.

அழகிய மணவாளர் லெளகீக வாழ்க்கையின் தீட்டு முதலான தோஷங்கள் தம் கைங்கர்யங்களுக்கு இடையூறாக இருப்பதால்
துறவறம் மேற் கொண்டார்.தம் ஆசார்யர் திருவாய் மொழிப்பிள்ளையின் சந்நியாசி சீடர் ,
சடகோப யதியிடம், ஆழ்வார் திருநகரியில் துறவு பூண்டார்.’சடகோப முனி’ ஆனார்.

3.ராமானுஜர் அவரது மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் ஆசைப்படி,ஆசார்யர் திருவரங்கப் பெருமாள் அரையரால்
ஸ்ரீரங்கம் அழைத்து வரப்பட்டு,ஸ்ரீ வைஷ்ணவ பீடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளையின் ஆணைப்படி ஸ்ரீரங்கம் சென்று
ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

4.ஸ்ரீரங்கம் வந்த ராமானுஜரை தம்முடைய தகுதிப் பெயரான “உடையவர்”
(அனைத்து லீலாவிபூதிகளையும்,நித்ய விபூதியையும் உடையவர்)என்னும் பெயரால் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் அழைத்தார்.

ஸ்ரீரங்கம் வந்த மாமுனிகளை-சடகோபமுனியை,தம் பெயரான”அழகியமணவாளன்”என்னும் திருநாமத்தால்அழைத்தார்,
ஸ்ரீரங்கநாதர்.(மாமுனிகளின் இயற்பெயரே அழகிய மணவாளன்;ஆனாலும்,துறவு பூண்ட பின்’சடகோபமுனி’எனனும் பெயர் பெற்றார்.
ஆனால் நம்பெருமாள் அழகியமணவாளன் என்னும் பெயரிட்டே அழைத்தார்.
அந்தப் பெயராலேயே மணவாள மாமுனிகள் என்னும் பேறு பெற்றார்.

5.உடையவருக்கு, சேரன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு கோவில் மணியகாரரை நியமித்தார் நம்பெருமாள்.
அந்த சேரன் மடத்தில் தான் உடையவர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலம் முழுதும் வாசம் செய்தார்.
(வடக்கு உத்திர வீதியில் இருக்கும் இன்றைய ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடம்).

மாமுனிகளுக்கு,பல்லவராயன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு நியமித்தார் நம்பெருமாள்.
மாமுனிகள் தம் அந்திமக்காலம் வரை அந்தத் திருமாளிகையில் தான் இருந்தார்.
(தெற்கு உத்திர வீதியில் இருக்கும் மணவாள மாமுனிகள் சந்நிதி).

6.ராமானுஜரிடம் சங்கும், ஆழியும் பெற்று அவரைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார் திருவேங்கடவர்
(திருக்குறுங்குடி நம்பியும் உபதேசம் பெற்றும், திருமண்காப்பு சேஷம் தரித்தும் ராமானுஜரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்).
திருவேங்கடவர் திருமலை கோவில் வளாகத்தில் தம் ஆசார்யர் ராமானுஜருக்கு மட்டுமே, சந்நிதி தந்து ஏற்றம் அளித்துள்ளார்.
திருவேங்கடவர் அனந்தாழ்வானுக்கு அருளிய தனியனில்
“ஸ்ரீமத் ராமானுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்”என்று அனந்தாழ்வானை ராமானுஜரின் பொன்னடி என்று போற்றுகிறார்.

ஸ்ரீரங்கநாதர்-நம்பெருமாள், மணவாளமாமுனிகளிடம்,திருவாய்மொழி ஈடு காலட்சேபம் கேட்டு,தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்.
ஆசார்யருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதிகுணார்ணவம், யதீந்த்ரப்ரவணம்,
வந்தே ரம்ய ஜாமாதர முநிம்” என்னும் பிரசித்தி பெற்ற தனியனைச் சமர்ப்பித்தார்.
இங்கும் ‘யதீந்தரப்ரவணர்’ என்று ராமானுஜர் மீது மாமுனிகள் வைத்திருக்கும் பக்தியைக் கொண்டாடுகிறார்.
ஆசார்யர் மாமுனிகளுக்கு, தம்முடைய சொத்தான சேஷ பீடத்தையே,தந்து ஏற்றம் அளித்தார் நம்பெருமாள்.

7.ராமானுஜர்,திருவேங்கடவர் சந்நிதியில்”வேதார்த்த ஸங்க்ரஹம்” என்னும் உபநிஷத்துகளின் சாரத்தை இயற்றி அருளினார்.
மாமுனிகள், திருவேங்கடவருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடச் செய்தார்.
தம் சீடர் பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமிகளிடம் நியமிக்க அவர் இயற்றிய திருப்பள்ளி யெழுச்சிப் பாசுரங்களே,
“கெளசல்யா ஸுப்ரஜாராமா, பூர்வா ஸந்த்யா”என்று தொடங்கும் வேங்கடேச சுப்ரபாதம் ஆகும்.

8.ராமானுஜர் பிரம்ம சூத்திரங்களுக்கும், உபநிஷத்துகளுக்கும் விரிவுரைகளாக”ஸ்ரீபாஷ்யம்”
முதலான கிரந்தங்களை இயற்றினார்.

மாமுனிகள்( பிள்ளை லோகாசார்யரின்) ரஹஸ்ய கிரந்தங்களுக்கு விரிவுரைகள் இயற்றினார்.

9.ராமானு தம் மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் விருப்பத்துக்கிணங்க, திருவாய்மொழிக்கு விரிவான உரை எழுதச் செய்தார்
(திருக்குருகைப் பிள்ளானின் ஆறாயிரப்படி வ்யாக்யானம்).

மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப்பிள்ளையின் நியமனத்துக்கு ஏற்ப திருவாய்மொழி ஈடு
காலட்சேபம் செய்வதையே (நம்பெருமாளுக்கும் கூட) முக்கியமான கைங்கர்யமாகச் செய்து வந்தார்.

10.பெரிய கோவில் ஜீயர், என்று,பெரிய கோவில் பொறுப்பு அதிகாரியாக இருந்த திருவரங்கத்து அமுதனார்
ராமானுஜரைச் சரணடைந்து அவர் சீடரானார். பெரிய கோவில் சாவியை ராமானுஜரிடம் ஒப்படைத்தார்.
உடையவரைப் போற்றும் பிரபந்ந காயத்ரி என்று போற்றப்படும்”இராமாநுச நூற்றந்தாதி” அருளித் தந்தார்.

பெரிய கோவிலில் முக்கிய கைங்கர்யங்களைச் செய்து வந்த,கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி,
மாமுனிகளைச் சரணடைந்து, ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்
மாமுனிகள் மீது”மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாடினார்.

11.ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பரப்ப 74 சீடர்களை நியமித்து அவர்களைச் ‘சிம்மாசனாதிபதிகள்’ ஆக்கினார்.

மணவாள மாமுனிகள் 8 பிரதான சீடர்களை நியமித்து அவர்களை ‘அஷ்டதிக் கஜங்கள்’ ஆக்கினார்.

12.ராமானுஜரும்,மாமுனிகளும் தங்களை,ஆதிசேஷ அவதாரங்கள் என்று சில வைபவங்கள் மூலம் உணர்த்தினர்.

13.ராமானுஜர் பெரும்பாலும் ‘திருப்பாவை’யை அனுஸந்தானம் செய்து கொண்டேஇருப்பார்.
மாமுனிகள்’த்வயமந்த்ரம்’அனுஸந்தானம் செய்து கொண்டே இருப்பார்.

14.ராமானுஜர்,திருமாலிருஞ்சோலை அழகருக்கு,நூறு தடா அக்காரவடிசலும்,வெண்ணெயும் சமர்ப்பித்து விட்டு
ஸ்ரீவில்லிபுத்தார் சென்ற போது,ஆண்டாள் தம் நிலையிலிருந்து சற்றே முன்னே வந்து “நம்அண்ணாவோ”என்று விழித்தார்.
ஆண்டாளுக்கு அண்ணனான உடையவர் ‘கோவில்அண்ணா/கோதாக்ரஜர்’என்று போற்றப்பட்டார்.

மார்கழி மாத நீராட்டு உற்சவத்துக்கு,ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற மாமுனிகள், ஏழுநாள் நீராட்டு உற்சவம் முடிந்து தான் சென்று சேர முடிந்தது.
நீராட்டு உற்சவம் சேவிக்க முடிய வில்லையே,என்று ஏங்கிய மாமுனிகளுக்காக, எட்டாம் நாளன்றும்-
தைமுதல் நாள்-நீராட்டு சேவை சாதித்தார் கோதை நாச்சியார். அந்த வைபவம் இன்றும் தை முதல் நாள் நடைபெறுகிறது.

15.ராமானுஜர் தம் அந்திம திசை வரை, தம் சீடர்களுக்கு நல் வார்த்தைகளை உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்.

மாமுனிகளும் காலட்சேபம்/கிரந்தங்களை இயற்றுதல் ஆகியவற்றை இறுதி வரை செய்து கொண்டேயிருந்தார்.

16.ராமானுஜர் தாம் வாழ்ந்த காலத்திலேயே ,அவருடைய திருமேனிகள் இரண்டை நிர்மாணித்த பொழுது,
அவற்றுக்குத் தாமே உகந்து மங்களாசாசனம் செய்து அருளினார்.
அவற்றில் ஒன்று ஸ்ரீபெரும்புதூரில் நாம் சேவிக்கும் “தான் உகந்த திருமேனி”.
மற்றொன்று திருநாராயணபுரத்தில்(மேல்கோட்டை) எழுந்தருளியுள்ள “தமர் உகந்த திருமேனி”

மாமுனிகளும், தாம் வாழ்ந்த காலத்திலேயே தம் திருமேனிகள் இரண்டுக்கு மங்களாசாசனம் செய்து அருளினார்.
தம் சீடர்களில் ஒருவரான அப்பாச்சியார் அண்ணாவின் வேண்டுதலுக்கு இணங்க,
மாமுனிகள் தாம் உபயோகித்த ராமானுஜம் என்னும் சொம்பை உருக்கி இரண்டு திருமேனிகள் செய்யப் பணித்தார்.
அவற்றில் ஒன்று சிங்கப் பெருமாள் கோவில் (பூந்தமல்லி) முதலியாண்டான் திருமாளிகையில் எழுந்தருளப் பண்ணப்பட்டுள்ளது.
இன்னொரு திருமேனியை நாங்குநேரி வானமாமலை மடத்தில் சேவிக்கலாம்.
(முதல் அஷ்டதிக்கஜமும்,வானமாமலை மடத்தின் முதல் ஜீயருமான பொன்னடிக்கால் ஜீயருக்குத் தந்தருளியது).

17.ராமாநுஜர் அவதாரம் செய்து, வேதத்துக்குத் தவறான அர்த்தம் கற்பித்த வந்த
புறச் சமயவாதிகளையும்,குதிர்ஷ்டிகளையும் வாதில் வென்றும்,கிரந்தங்களை இயற்றியும்
ஸ்ரீமந்நாராயணின் விசிஷ்டாத்வைத நெறியை நன்றாக நிலை நாட்டினார்.
74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து அவர்கள் வம்சத்தார் மூலம் என்றென்றும்
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் செழித்து வளர வழிவகை செய்தார்.

12/13 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லீம் படையெடுப்புகளால்,
இந்து மத சம்பிரதாயங்களும், கோவில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.வைணவ சம்பிரதாயத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டது.
அந்தக் கால கட்டத்தில் தான், 1370 ஆம் ஆண்டு மாமுனிகள் அவதரித்தார்.
அவர் செய்த ரஹஸ்யக் கிரந்த வியாக்யானங்களும், திருவாய்மொழி காலட்சேபங் களும்
பல வித்வான்களையும் சாஸ்த்ர விற்பன்னர்களையும் அவருக்குச் சீடர்களாக்கின.
அவர்கள் மூலம் வைணவம் பெரிதும் வளர்ந்தது.திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செழித்தது.
மாமுனிகளால் உடையவர் காலத்தில் இருந்த மேன்மையை மீண்டும் அடைந்தது வைணவம்!!

18.ராமானுஜர் மனத்திலும், மாமுனிகள் மனத்திலும் இருந்து அருளும் பெருமான்:
அமுதனார், இராமாநுச நூற்றந்தாதியில்
“இருப்பிடம் வைகுந்தம், வேங்கடம்,மாலிருஞ்சோலை என்னும்,
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மோடும் வந்து,
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்றவன் வந்து இருப்பிடம்”என்று
பரவாசுதேவரானாலும்,திருவேங்கடவரானாலும்,அழகரானாலும் அவரவர் தம் இருப்பிடங் களுடனே வந்து,
ராமானுஜர் மனதில் இருந்து அருள்வார்கள் என்று பாடுகிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணா,ஸ்ரீவேங்கடேச மங்களாசாசனத்தில்,
“ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே!
ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீனிவாஸாய மங்களம்!!”
–(மணவாள மாமுனிகள் உளத்திருந்து பேருலகக் கணம் புரந்து,களித்தருளும் வேங்கடவா மங்களங்கள்) என்று பாடுகிறார்.

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–4–சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய்–

September 6, 2021

பர
வ்யூஹ
விபவ
அந்தர்யாமி
அர்ச்சாவதாரங்களான
இடங்களிலே எழுந்து அருளி நிற்கிறது
சேதனரைத் திருத்துகைக்கும்
திருந்தின சேதனரை அடிமை கொள்ளுகைக்கும் ஆய்த்து

அவை எல்லாவற்றிலும்
அவை மிக்கு இருப்பது திருமலையிலே நிற்கிற நிலை இறே

திருமால் இருஞ்சோலை மலை என்றேன் –இத்யாதி
வெற்பு என்று இருஞ்சோலை –இத்யாதி
வெற்பு என்று வேங்கடம் பாடும் –இத்யாதிகளிலே காணலாம்

ஆகையால் ஈஸ்வரன் ஆழ்வார்களுக்கு
பிரதம காலத்திலே
மயர்வற மதி நலம் அருளி விநியோகம் கொள்ளும்
அவர்கள் பின்பு இருக்கிறது பகவத் இச்சையாலே யாய்த்து

நமக்கு எல்லாம்
சரீர அவசானத்திலே இவற்றைப் பிறப்பித்துக் கார்யம் செய்யும்

ஊரவர் இத்யாதி –
பாகவத அங்கீ காரமாகிற எருவை இட்டு
ஆச்சார்ய உபதேச ஞானம் ஆகிற நீரைப் பாய்ச்சி
சங்கம் ஆகிற நெல்லை வித்தி இறே கிருஷி பண்ணுவது

இப்படி திருந்தின இவரைக் கண்டு அவன் உகக்க
அவன் உகப்பைக் கண்டு இவர் உகக்க
இவ்வுகப்புக்கு மேல் இனி வேறே ஒரு பேறும் இல்லை -என்று இவர் இருக்க

இவர் காரியத்தில் நாம் முதல் அடி இட்டிலோம் -என்று
அவன் பதறுகிற பதற்றத்தைக் கண்டு

விரோதிகள் அடையப் போய்த்தாகில்
அபேக்ஷிதங்களைப் பெற வேண்டும் அம்சம் அடையப் பெற்றதாகில்
இனி தேவர் பதறுகிறது என் -என்று
அவன் பதற்றத்தை அமைக்கிறார் –

———–

திருமலையிலே கல்யாண குண பூர்ணனாய்க் கொண்டு ஸந்நிஹிதனாய்
என்னை விஷயீ கரித்து உன் கிருபையை எனக்கு அவலம்பமாம் படி பண்ணினாய்
இனி மேல் தேவர்க்குத் திரு உள்ளம் ஏது என்கிறார் –

சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – –

பதவுரை

சென்னி ஓங்கு–கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற
தண்–குளிர்ந்த
திருவேங்கடம்–திருவேங்கட மலையை
உடையாய்–(இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை–உலகத்தவர்களை
வாழ–வாழ்விப்பதற்காக
நின்ற–எழுந்தருளி யிராநின்ற
நம்பீ–(கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!
தாமோதரா–தாமோதரனே!
சதிரா–(அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே!
என்னையும்–எனது ஆத்துமாவுக்கும்
என் உடைமையையும்–என் உடைமையான சரீரத்திற்கும்
உன்–உன்னுடைய
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு–ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து
நின்–உன்னுடைய
அருளே–கருணையே
புரிந்திருந்தேன்–(ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன்;
இனி–இப்படியான பின்பு
திருக் குறிப்பு–திரு வுள்ளக் கருத்து
என்–எதுவாயிருக்கின்றது?–

சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய்
உயர்ந்த கொடி முடியை யுடைத்தாய்
ஸ்ரம ஹரமான திருமலையை உனக்கு இருப்பிடமாக உடையவனே
உபய விபூதிக்கும் முகம் காட்டுகைக்கு நிற்கும் இடம் இறே த்ருதீய விபூதி இறே திருமலை –

உலகு தன்னை வாழ நின்ற நம்பீ
வை ஷம்யம் அற எல்லாரும் உன்னைக்கிட்டி வாழும்படி
நிலையார நின்ற கல்யாண குண பூர்ணனே
கானமும் வானரமும் ஆனவற்றுக்கும் முகம் கொடுக்கும் படி யாய்த்து நீர்மையில் பூர்த்தி
வாத்சல்யத்தி குண பூர்ணனே

தாமோதரா
அந்தப் பூர்த்தியை அனுஷ்டான பர்யந்தம் ஆக்கின படி
வெண்ணெயைக் களவு கண்டான் என்று கொண்டி யோடே பிடித்து
யசோதைப்பிராட்டி கட்டக் கட்டுண்டு
அத்தால் வந்த தழும்பை நிரூபகமாக யுடையவனே

இத்தால்
ஆஸ்ரித பவ்யதை சொல்லுகிறது

சதிரா
ஆஸ்ரித தோஷம் காணாத விரகு

என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
ஆத்மாவையும் ஆத்மீயங்களையும்
திருவாழியாலே முத்திரை இட்டு
ஆத்மாவுக்கு சேஷத்வ ஞானத்தை உண்டாக்குகை
ஆத்மீயங்களான தேஹாதிகளுக்குத் திரு இலச்சினை சாத்துகை

நின்னருளே புரிந்து இருந்தேன்
உன்னுடைய நிர்ஹேதுக கிருபையை நிரபேஷ உபாயமாக அபேக்ஷித்து
நிர்பரனாய் இருந்தேன்

இனி என் திருக் குறிப்பே
ஞான லாபத்தையும் பண்ணித் தந்து
விரோதி நிவ்ருத்த பூர்வமாக
அபேக்ஷிதங்களையும் தந்து அருளிற்றாகில்
இனித் திரு வுள்ளத்தில் நினைவு ஏது –

———-

கீழ் அவன் அருளாலே பேற்றுக்கு ஹேது என்றார்
இதில் அவன் அருளாலே தாம் பெற்ற பேறு சொல்லுகிறார் –

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –

பதவுரை

பறவை ஏறு–பெரிய திருவடி மேல் ஏ றுமவனான
பரம் புருடா–புருஷோத்தமனே!
நீ–(ஸர்வ ரக்ஷகனான) நீ
என்னை–(வேறு கதி யற்ற) என்னை
கைக் கொண்ட பின்–ஆட் படுத்திக் கொண்ட பிறகு
பிறவி என்னும் கடலும்–ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்
வற்றி–வறண்டு போய் (அதனால்)
பெரும் பதம் ஆகின்றது–பெரிய தரம் பெற்றதாகிறது;
இறவு செய்யும்–(இவ் வாத்துமாவை) முடிக்கிற
பாவக்காடு–பாப ஸமூஹமானது
தீக் கொளீஇ–நெருப்புப் பட்டு
வேகின்றது–வெந்திட்டது;
அறிவை என்னும்–ஞானமாகிற
அமுதம் ஆறு–அம்ருத நதியானது
தலைப் பற்றி வாய்க் கொண்டது–மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது–
கிரமம் -இராதே ராஜ குமாரன் என்று அறிந்த பின்பே கிரீடம் தலையிலே ஏறி
பின்பு தானே சிறை வெட்டி விடுவார்

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பெரிய திருவடியை வாகனமாக யுடைய பரம புருஷனே
சங்க ஸ்வ பாவனான நீ
உன்னால் அல்லது செல்லாத என்னை
அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட பின்பு

பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலும் சுவறிப்
பெரிய தரமும் உண்டாகா நின்றது
மேல் சாத்தும் பர்யட்டமும் வாரா நின்றது
பரம சாம்யா பத்தி உண்டாகா நின்றது

இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
இவ் வாத்மாவை முடிக்கிற கர்ம ஆரண்யம்
சீறா எரியும் திரு நேமியினுடைய ஜ்வாலாக்நி
கொழுந்தி தக்தமாகா நின்றது

அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே
ஞானம் ஆகிற அம்ருத ப்ரவாஹினியான நதி பெருகி
வாயளவாயத் தலைக்கு மேலே போகா நின்றது

அதனில் பெரிய அவா -என்கிறபடியே
இனி என் திருக்குறிப்பு -என்று கீழோடே அந்வயம் –

———-

பாப நிவ்ருத்தி என் அளவிலே அன்றிக்கே
நான் இருந்த தேசத்தில் உள்ள பாபங்களும் நசித்துப் போன பின்பு
நான் பெற்ற பேறு பெற்றார் உண்டோ என்கிறார் –

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

பதவுரை

எம் மனா–எமக்குத் தலைவனே!-தாய் -மன்னன் –
என் குல தெய்வமே–என் குடிக்குப் பரதேவதை யானவனே!
என்னுடைய நாயகனே–எனக்கு நாதனானவனே!
நின்னுளேன் ஆய்–உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய்
நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும்–உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்
நாடு சாஸ்திரம் என்றுமாம்
சும்மெனாதே–மூச்சு விடவும் மாட்டாமல்
பெற்ற நன்மை–பெற்ற நன்மையை
இ உலகினில்–இந்த உலகத்திலுள்ள
ஆர் பெறுவார்–மற்று யார் தான் பெறுவர்?
நம்மன் போல–பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து)
வீழ்ந்து அமுக்கும்–கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள
கை விட்டு–ஸவாஸநமாக விட்டிட்டு
ஓடி–ஓடிப் போய்
தூறுகள்–புதர்களில்
பாய்ந்தன–ஒளிந்து கொண்டன–

எம்மனா
எம்மன்னா -என்று வலித்து
எனக்குத் தாய் போலே பரிவன் ஆனவனே

அன்றிக்கே
மன்னா -என்று ராஜாவாய்
ஈரரசு தவிர்த்தவன் என்னவுமாம்
என் ஸ்வா தந்தர்யத்தைக் குலைத்தவனே

என் குல தெய்வமே
என் குலத்துக்குப் பர தேவதையானவனே
என் குல நாதனே

என்னுடை நாயகனே
என் குலத்தில் உள்ளாருக்கு ஸ்வாமி யானதும் என்னாலே என்னும்படி
எனக்கு நாதன் ஆனவனே
(அர்வாஞ்சோ இத்யாதி –திருமுடி சம்பந்தத்தால் ஏற்றம் )

இம் மூன்று பதத்தாலும்
ஸ்வரூப
சாதன
ப்ராப்ய விரோதிகளைப் போக்கி
ஆகார த்ரய பிரதி சம்பந்தி யானவன் என்னுமாம்

நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை
உன் அபிமானத்தில் அந்தர் பூதனாய்ப் பெற்ற பிரயோஜனம்

இவ்வுலகினில் யார் பெறுவார்
இஸ் ஸம்ஸாரத்தில் யாருக்கு லபிக்கும்
இது எனக்கு அலாப்ய லாபம் அன்றோ
இப்படி பேறு பெற்றார் உண்டோ

நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
யம படரைப் போலே விழவிட்டு அமுக்கும் படியான
என் நாட்டில் உள்ள பாபங்கள் எல்லாம்

சும்மேனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே
மூச்சு விடாதே போய்
முன்பு இருந்த இடத்தைக் கை விட்டு
துடர்ந்து பிடிக்க வருகிறார்களோ என்று புரிந்து பார்த்து ஓடிக்
காட்டிலே விழுந்து போயிற்றன

கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் (பெரிய திருவந்தாதி )-என்னக் கடவது இறே

ஸம்ஸார மருகாந்தரத்திலே போய்ப் புகுந்தன -என்கை –

———–

தாம் பகவத் விஷயத்திலே அவஹாகிக்கையாலே
தம்முடைய ஆஜ்ஜை நடக்கும் இடம் எல்லாம்
யம வஸ்யதை புகுரப் பெறாது என்கிறார்

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4 –

பதவுரை

தட வரை–பெரிய மலை போன்ற
தோள்–தோள்களை யுடையவனும்
சக்கரபாணீ–திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே!
சார்ங்கம் வில்–சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட
சேவகனே–வீரனே!
கடல்–திருப் பாற் கடலை
கடைந்து–(மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து
அமுதம் கொண்டு–(அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து
கலசத்தை–கலசத்தில்
நிறைந்த ஆ போல்–(நீ) நிறைந்தது போல
(அடியேன்)
உடல் உருகி–உடல் உருகப் பெற்ற
வாய் திறந்து–வாயைத் திறந்து கொண்டு
உன்னை–(ஆராவமுதாகிய) உன்னை
மடுத்து நிறைந்துக் கொண்டேன்–உட் கொண்டு தேக்கிக் கொண்டேன்;
(இனி)
கொடுமை செய்யும்–கொடிய தண்டங்களை நடத்துமவனான
கூற்றமும்–யமனும்
என் கோல் ஆடி–எனது செங்கோல் செல்லுமிடங்களில்
குறுகப் பெரு–அணுக வல்லவனல்லன்–

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
கடலைக் கடைந்து
அம்ருதத்தை வாங்கி
கலசத்தை நிறைத்தால் போலே

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
ஸரீரமானது அபி நிவேச அதிசயத்தாலே உருகி
ப்ரீதி ப்ரேரிக்க
வாய் திறந்து
இரண்டு கையையும் மடுத்து -என்னுமா போலே
மண்டிக் கொண்டு நிரதிசய போக்யனான உன்னைப் பூர்ணமாக அனுபவித்தேன்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்னுமா போலே

கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
பாபம் பண்ணினவர்களைக் கண்ணற்று நலிகிற மிருத்யுவும்
என் ஆஜ்ஜை நடக்கிற இடத்திலும் கிட்டப் பெறாது

தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே
மலை போலே பெரிய தோள்களை யுடையையாய்
பெரிய மலை என்னுமாம்

திருவாழியாலே அலங்க்ருதமான திருக்கைகளை யுடையையாய்
ஸ்ரீ சார்ங்கமாகிற வில்லை யுடைய ஸூரனே
உன்னை அண்டை கொண்ட பலம் இறே யமாதிகள் அஞ்சுகிறது –

———-

ஸ்லாக்யனான யுன்னை நாவால் ஹிருதயத்திலே வைத்துக் கொண்ட எனக்கு
வேறே அபேக்ஷிதம் உண்டோ என்கிறார் –

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5-

பதவுரை

என் அப்பா–எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா–எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே!
என் உயிர்–என் ஆத்மாவை
காவலனே–(அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே!
பொன்னை–ஸுவர்ணத்தை
நிறம் ஏழ–நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு–உரைக் கல்லில் இட்டு
உரைத்தால் போல்–உரைப்பது போல
உன்னை–(பரம போக்யனான) உன்னை
என் நா அகம் பால் கொண்டு–என் நாவினுட்கொண்டு
மாற்று இன்றி–மாற்று அழியும்படி
உரைத்துக் கொண்டேன்–உரைத்துக் கொண்டேன்.-பேசிக்கொண்டு நின்றேன்
உன்னை–(யோகி கட்கும் அரியனான) உன்னை
என்னுள்–என் நெஞ்சினுள்
கொண்டு வைத்தேன்–அமைத்தேன்;
என்னையும்–(நீசனான) அடியேனையும்
உன்னில் இட்டேன்–உனக்குச் சேஷப் படுத்தினேன்–
மேலைத்தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
அனுபவம் சரணாகதியை பண்ணத் தள்ளும் -கையாலாகாத் தனம்

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
பொன்னை உரை கல்லிலே நிறம் பிறக்கும் படி உரைக்குமா போலே

உன்னைக் கொண்டு என் நாவகம் பால்
பொன்னிவர் -என்னும் உன்னை
என் நாவாகிற உரை கல்லிலே
வேதங்களாலும் அளவிட ஒண்ணாத யுன்னை

மாற்றின்றி
மாற்று அற
ஸத்ருசம் அற

உரைத்துக் கொண்டேன்
வஸ்துவை உள்ளபடி வ்யஹரிக்க வல்ல வாசகமாக யுரைக்கப் பெற்றேன்

உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
ஸ்ப்ருஹணீயமான உன்னுடைய அங்கீகாரத்தைக் கொண்டு
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட -என்னும்படி
என்னுடைய அனுபவத்துக்கு விஷயம் ஆக்கினேன்

என்னையும் உன்னில் இட்டேன்
நீ இப்படி மேல்விழுந்து ஆதரிக்கைக்கு யோக்யனான என்னையும்
உனக்கு போக்யம் ஆக்கினேன்
நம இத்யேவ வாதீந -என்னுமா போலே

என்னப்பா
எனக்கு ஜனகன் ஆனவனே

என் இருடீகேசா
எனக்கு சர்வ இந்திரியங்களுக்கு விஷயம் ஆனவனே

என் உயிர்க் காவலனே
என் ஆத்மாவுக்கு ரக்ஷகன் ஆனவனே
நான் இனிப் பெறாதது உண்டோ என்கை –

—————

நீ என்னுடைய ஹிருதயத்திலே ஞான விஷயமாகக் கொண்டு ஸந்நிஹிதனான பின்பு
என்னை விட்டு இனி உனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்கிறார் –

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 –

பதவுரை

மன்–(துஷ்ட) க்ஷத்திரியர்கள்
அடங்க–அழியும்படி
மழு–மழு என்னும் ஆயுதத்தை
வலம் கை கொண்ட–வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள
இராமன்–பரசு ராமனாய்த் திரு வவதரித்த
விராம நம்பீ–குண பூர்த்தியை யுடையவனே
உன்னுடைய–உன்னுடைய
விக்கிரமம்–வீரச் செயல்களில்
ஒன்று ஒழியாமல்–ஒன்று தப்பாமல்
எல்லாம்–எல்லாவற்றையும்
என்னுடைய–என்னுடைய
நெஞ்சகம் பால்–நெஞ்சினுள்ளே
சுவர் வழி எழுதிக் கொண்டேன்–சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;
பிரகாசிக்கும் படி கொண்டேன்
எம் பெருமான்–எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே
கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்
என்னிடை வந்து–என் பக்கலில் எழுந்தருளி
இனி–இனி மேல்
போகின்றது–போவதானது
எங்கு–வேறு எவ்விடத்தைக் குறித்து?–

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
உன்னுடைய திவ்ய அபதானங்கள் ஓன்று ஒழியாமல் எல்லாவற்றையும்

என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
சுவரிலே சித்ரம் எழுதினால் கண்ணுக்குத் தோற்றுமா போலே
என்னுடைய நெஞ்சிலே இவற்றையும் பிரகாசிக்கும் படி பண்ணிக் கொண்டேன்
ரிஷிகளுக்கும் பிரகாசியாத அர்த்தங்களும் எனக்குப் பிரகாசித்து அனுசந்திக்கப் பெற்றேன்

மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
ஆஸூர ப்ரக்ருதிகளான ராஜாக்கள் முடியும்படியாக
மழு என்கிற திவ்ய ஆயுதத்தை வலக்கையில் தரித்து
ஞான சக்த்யாதிகளாலே பூர்ணனான
ஸ்ரீ பரஸூ ராமாவதாரத்தைப் பண்ணினவனே

என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே
என் சேஷத்வத்தையும்
உன் சேஷித்வத்தையும்
எனக்குப் பிரகாசித்து என்னைக் கைக் கொண்ட பின்பு
இனி உனக்கு ஒரு போக்கிடம் உண்டோ
போகிலும் கூடப் போம் அத்தனை –

————

என்னை உனக்கே அநந்யார்ஹம் ஆம் படி
நிர்ஹேதுகமாகக் கைக் கொண்டு வைத்து
இனிப் பொகட்டுப் போகலாமோ -என்கிறார் –

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 –

பதவுரை

பருப்பதத்து–மகா மேரு பர்வதத்தில்
கயல்–(தனது) மகர த்வஜத்தை
பொறித்த–நாட்டின்
பாண்டியர் குல பதி போல்–பாண்டிய வம்சத்து அரசனைப் போல்,
திருப் பொலிந்து–அழகு விளங்கா நின்றுள்ள
சே அடி–செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை
என் சென்னியின் மேல்–என் தலையின் மீது
பொறித்தாய் என்று–(அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும்,
மருப்பு ஒசித்தாய் என்று–(குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும்,
மல்–மல்லரை
அடர்ந்தாய் என்று–நிரஸித்தவனே! என்றும்
(இவ்வாறான)
உன் வாசகமே–உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே
உருப் பொலிந்த நாவினேனை–தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை.
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே–

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
பாண்டிய வம்சத்துக்கு நிர்வாஹனாய் இருப்பான் ஒரு ராஜா தன் தேசத்தின் நின்றும்
மஹா மேரு அளவும்
வழியில் உள்ள வன்னியம் அறுத்து ஜெயித்துக் கொடு சென்று
மஹா மேருவிலே தன் வெற்றி எல்லாம் தோற்றும்படி
தன் அடையாளமான கயலை இட்டுப் போந்தால் போலே

பரம பதம் கலவிருக்கையான ஈஸ்வரனான நீ
அங்கு நின்றும் என் பக்கலிலே வரும் அளவும் உண்டான
பாவக் காட்டைச் சீய்த்து
என்னுடைய ப்ராதிகூல்ய ரூப வன்னியம் அறுத்து
என்னிடத்தில் பாத இலச்சினை வைத்தாய்
உன் அடையாளம் இட்டுக் கொண்டாய்

திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல்
பொறித்தாய்
அழகு விஞ்சி இருப்பதாய்
ருஜுவான திருவடிகள்
ஆர்ஜவ ஸ்வ பாவமானது என்கை

அதவா
ஐஸ்வர்ய சிஹ்னங்களை யுடைத்தான திருவடிகள் என்றுமாம்
கதா புந–இத்யாதி
அமரர் சென்னிப் பூவான ப்ராப்யத்தை லபிக்கப் பெற்றேன்

மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை
ப்ராப்ய விரோதிகளை
குவலயா பீடத்தையும் சாணூர முஷ்டிகரையும் நிரசித்தால் போலே நிரசித்துப் பொகட்டு
அவ்வபதானங்களுக்குத் தோற்று நான் ஏத்தும் படி பண்ணினவனே –

யுனக்கு உரித்து ஆக்கினையே
இதுவே யாத்ரையாய் இருக்கும்படி இருக்கிற என்னை
உன்னை ஒழியப் புறம்பு ஆளாகாத படி பண்ணின பின்பு
இனி எங்குப் போவது –

——–

அநந்த கருடாதிகளிலும் காட்டில் என் பக்கலிலே அதி வ்யாமோஹத்தைப் பண்ணி
நீ என்னோடே ஸம்ஸ்லேஷிக்க
நானும் அத்தை அனுசந்தித்து விஸ்ராந்தனான பின்பு
இனி உனக்குப் போக்கிடம் உண்டோ என்கிறார் –

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பதவுரை

நேமி–திருவாழி யாழ்வானை யுடைய
நெடியவனே–ஸர்வாதிகனே!
எம் பிரான்–எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும்–திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும்–பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து–(அன்பை) மிகவும் அற்பமாக வைத்து
என் மனம் தன் உள்ளே–எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி–வந்து பொருந்தி
வாழச் செய்தாய்–(என்னை) வாழ்வித்தருளினாய்;
(இப்படி வாழ்வித்த உன்னை.)
என் உள்ளே–என் நெஞ்சில்
நினைந்து நின்று–அநுஸந்தித்துக் கொண்டு
நெக்கு–(அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக–கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே–(நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே
சிரமம் தீர்த்தேன்–இளைப்பாறப் பெற்றேன்–

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து
பிராட்டிமாரோ பாதி
தனக்கு போக்யரான திருவனந்த ஆழ்வான் பெரிய திருவடி இவர்கள் பக்கல்
தனக்கு உண்டான ஸ்நேஹம் அத்யல்பம் என்னும்படி
என் பக்கலிலே அதி வ்யாமோஹத்தைப் பண்ணி

என் மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
தான் மயர்வற மதி நலம் அருள
அத்தாலே
நெஞ்சு நாடு என்னும்படி திருந்தின என் ஹிருதயத்துக்கு உள்ளே
அஹேதுகமாக வந்து வர்த்தித்து
நான் அனுபவித்து ஸூகிக்கும் படி பண்ணின என் உபகாரகனனே

என்னாயன் செய்த உபகாரம் தான் என் என்ன
த்ரிபாத் விபூதியில் உள்ள எல்லோரோடும் பரிமாறும் பரிமாற்றத்தை எல்லாம்
இவர் ஒருவரோடும் பரிமாறும் உபகாரம்

நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
உன் வியாமோஹாதி கல்யாண குணங்களையும்
வடிவு அழகையும் என்னிலே நினைத்து
அத்தாலே வந்த ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே
ஸ்தப்த்தனாய்ப் பின்னை
சிதில அந்தக் கரணனாய்
அந்த ஸைதில்யம் கண்ண நீராகப் ப்ரவஹிக்க

உள் உருகுகின்றது
புற வெள்ளம் விட்டபடி

நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன்
நீ பண்ணின யுபகார பரம்பரைகளை அனுசந்தித்து
இளைப்பாறி இருந்து
உன்னைப் பெறாமையாலே வந்த ஸ்ரமம் எல்லாம் ஆறப் பெற்றேன்

நேமி நெடியவனே
திருக் கையும் திருவாழியுமான அழகுக்கு எல்லை இல்லாதவனே
ஆழ்வார் பக்கல் ப்ரேமத்துக்கு முடிவு இல்லாதவன் என்னவுமாம் –

———–

போக ஸ்தானங்களான ஷீராப்தி யாதிகளையும் உபேக்ஷித்து
என் நெஞ்சையே போக ஸ்தானமாகக் கொண்டான் என்கிறார்

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

பதவுரை

பனி–குளிர்ந்த
கடலில்–திருப்பாற் கடலில்
பள்ளி கோளை–பள்ளி கொள்ளுதலை
பழக விட்டு–பழகியதாக விட்டு (மறந்து விட்டு)
பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது
சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே -குகன் இடம் பெருமாள்
ஓடி வந்து–(அங்கு நின்றும்) ஓடி வந்து
என்–என்னுடைய
மனம் கடலில்–ஹ்ருதயமாகிற கடலில்
வாழ வல்ல–வாழ வல்லவனும்
மாயம் ஆச்சரிய சக்தியை யுடையவனும்
மணாள–(பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும்
நம்பீ–குண பூர்ணனுமான எம்பெருமானே!
தனி கடல் என்று–ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும்
தனி சுடர் என்று–ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும்
தனி உலகு என்று–ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை)
உனக்கு இடம் ஆய் இருக்க–உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு)
என்னை–(மிகவும் நீசனான) அடியேனை
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!)–

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு
திருமேனியில் ஸுகுமார்யத்துக்குப் போரும் படி ஸ்ரமஹரமாம் படி
குளிர்ந்த திருப் பாற் கடலிலே இறே பள்ளி கொண்டு அருளுவது –

அத்தைப் பழக விட்டு –
மறந்து விட்டு
அத்தை மறப்பித்தது இறே இவர் திரு உள்ளத்தில் குளிர்த்தி

ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல
கடுக நடையிட்டு வந்து
(காதக்குதிரை இட்டு –குதிரை போல் தானே நடை இட்டு )
என் உடைய நெஞ்சாகிற கடலிலே புக்கு
அபிமத லாபத்தாலே வந்த ஐஸ்வர்யத்தாலே குறைவற்று ஸூகிக்க வல்ல

மாய மணாளா நம்பீ
ஆச்சர்யமான வடிவு அழகாலும்
குணங்களாலும்
பூர்ணனானவனே

இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே
குணங்களும்
திருமேனியில் செவ்வியும்
பூர்த்தி பெற்றது

தனிக் கடலே
அத்விதீயமான கடல் போலே அபரிச்சேதயனானவனே

தனிச் சுடரே
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -என்கிறபடியே
வந்து திரு அவதரித்து ப்ரகாசகனான அத்வதீயனே
ஸ்வயம் பிரகாச ஸ்வரூப ஸ்வபாவன் என்னுமாம்
(விளக்கு தான் தன்னையும் விளக்கி மற்ற அனைத்தையும் விளக்கும்
அவனையும் விளக்கும் குத்து விளக்கு அன்றோ பிராட்டி )

தனி உலகே
அத்விதீயமான ப்ராப்யம்
ஒரு விபூதிக்காக ஒருவனுமே இறே ப்ராப்யம்
அந் நினைவிலே இறே விபூதியாக நடக்கிறது

என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே
இப்படிப்பட்ட திரு நாமங்களை மாறாதே ரஸ்யதையாலே சொல்லும்படி பண்ணி
உனக்கு ஷீராப்தியாதி தேசங்கள் அநேகங்கள் எல்லாம் உண்டாய் இருக்க
அவற்றை உபேக்ஷித்து
அவை எல்லாம் என்னுடைய ஹிருதயமாகவே விரும்புகையாலே
அவாப்த ஸமஸ்த காமனான யுனக்கு
சேஷ பூதனான என்னை
அநந்யார்ஹன் ஆக்கினாய் —

———

பரமபதம் முதலான தேசங்கள் எல்லாத்தையும் விட்டு
என் நெஞ்சில் புகுந்த பின்பு நீ உஜ்ஜவலன் ஆனாய் என்கிறார் –
(கீழே அவற்றை விட்டு ஓடி வந்தவர் உஜ்ஜவலமாக இருப்பதை இங்கு அருளிச் செய்கிறார் )

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

பதவுரை

தடவரை வாய்–பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து மின்னும்–மிகவும் விளங்கா நின்றுள்ள
தவளம் நெடு கொடி போல்–பரிசுத்தமான பெரியதொரு கொடி போல,
சுடர் ஒளி ஆய்–மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே–எனது ஹ்ருதயத்தினுள்
தோன்றும்–விளங்கா நின்றுள்ள
சோதி நம்பீ–ஒளியினால் நிரம்பியவனே!
வட தடமும்–வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்
வைகுந்தமும்–ஸ்ரீவைகுண்டமும்
மதிள்–மதில்களை யுடைய
துவராபதியும்–த்வாரகையும் (ஆகிற)
இட வகைகளை–இடங்களை யெல்லாம்
இகழ்ந்திட்டு–உபேஷித்து விட்டு,
என் பால்–என்னிடத்தில்
இடவகை கொண்டனையே–வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!)–

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
பரப்பை உடைத்தான மலையிடத்திலே பிரகாசகமுமாய்
தேஜஸ்ஸாலே விளங்கா நிற்பதாய்
பரி ஸூத்தமான பெரிய கொடி போலே

தடவரை -பெரிய பர்வதம் என்றபடி
மிளிருகை -ஒளி விடுகை –
தவழுகை என்றுமாம்

சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
நிரவதிக தேஜஸ்ஸாய்
நெஞ்சுக்குள்ளே தோன்றுகிற தேஜஸ்ஸாலே பூர்ணன் ஆனவனே

சுடர் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
ஒளி -திவ்ய மங்கள விக்ரஹம் -என்னவுமாம்
சோதி -குணங்கள் என்னவுமாம்
நம்பி -இவற்றால் குறைவற்று இருக்கும் படி
என் -இவற்றை எல்லாம் தமக்குப் பிரகாசிப்பித்த படி
இவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு
திருமேனியும் புகர் பெற்று
பூர்த்தியும் உண்டாய்த்து

வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு
சனகாதிகளுக்கு முகம் கொடுக்கிற திருப்பாற் கடலும்
நித்ய ஸூரிகளுக்கு முகம் கொடுக்கிற பரம பதமும்
பிரணயி நிகளுக்கு முகம் கொடுக்கிற ஸ்ரீ மத் த்வாரகையும்
அரணையும் உடைத்த தேசம் என்கை

இவை முதலான திவ்ய தேசங்கள் எல்லாத்தையும் அநாதரித்து
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி
முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் கொள்ளுமா போலே
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல்லென்று ஒழிந்தன -என்னக் கடவது இறே

என் பால் இடவகை கொண்டனையே
இவற்றில் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணினாய்

இப்படி ஆதரித்தது உன்னுடைய பிரயோஜனம் என்னும் இடம்
உன் திருமேனியிலே காணலாம்படி இருந்தாய்
இது என்ன வ்யாமோஹம் தான் -என்கிறார் –

———-

நிகமத்தில்
இத் திருமொழியை அப்யஸித்தாருக்குப் பலம் தம்மைப் போலே
எம்பெருமானுக்கு அநந்யார்ஹர் ஆகை என்கிறார் –

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –

பதவுரை

வேயர் தங்கள்–வேயர் வைதிகர்களுடைய
குலத்து–வம்சத்து-வைதிகர் குலம்
உதித்த–அவதரித்த
விட்டு சித்தன்–பெரியாழ்வாருடைய
மனத்து–ஹ்ருதயத்தில்
கோயில் கொண்ட–திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற
கோவலனை–கோபாலனும்
கொழு குளிர் முகில் வண்ணனை–கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும்.
ஆயரேற்றை–இடையர்களுக்குத் தலைவனும்
அமரர் கோவை–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும்
அந்தணர்–சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு
அமுதத்தினை–அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை
பாட வல்லார் தாம்–(இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள்
சாயைப் போல–நிழல் போல
அணுக்கர்களே–(எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள்–
பாத ரேகா சாயை போல் அணுக்கர்

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக்
ஜகத்துக்கு ஆதித்யன் உதித்து அந்தகாரத்தைப் போக்குமா போலே
வேயர் கோத்ரத்திலே இவர் வந்து அவதரித்து
ஜகத்தில் உண்டான அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கின படி

இப்படிப்பட்ட ஆழ்வாருடைய ஹிருதய கமலத்தையே தனக்கு
அசாதாரணமான கோயிலாக அங்கீ கரித்த கிருஷ்ணனை யாய்த்து
இப்பிரபந்தத்தாலே ப்ரதிபாதித்தது –

விட்டு சித்தன்
ஸர்வேஸ்வரனுக்கு ஹ்ருத்யரான ஆழ்வார்
இவர் திரு உள்ளத்திலே
பர வ்யூஹாதி ஸ்தலங்களான ஸ்ரீ வைகுண்டாதிகளை எல்லாம் உபேக்ஷித்து
ஆழ்வார் திரு உள்ளத்தையே அவை எல்லாமுமாகக் கொண்டான்

கோவலன்
நிமக்நரை உத்தரிப்பிக்கைக்காக தாழ்ந்த குலத்தில் வந்து அவதரித்தவனை

கொழும் குளிர் முகில் வண்ணனை
அழகியதாய் ஸ்ரம ஹரமான மேகம் போன்ற திரு மேனியை யுடையவனை
இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பாய்த்து
குளிர்ந்து செவ்வி யுண்டாய்த்
தன் நிறம் பெற்றது திரு மேனி

முகில் வண்ணன் -என்று
இவன் அவருக்குப் பண்ணின ஒவ்தார்யத்துக்கு த்ருஷ்டாந்தம் ஆகவுமாம்

ஆயர் ஏற்றை
இடையரோடே கலந்து பரிமாறுகையாலே மேனாணித்துச் செருக்கி இருக்கிறவனை

அமரர் கோவை
அனுபவம் மாறில் முடியும்படியான ஸ்வ பாவத்தை யுடைய நித்ய ஸூரிகளுக்கு ஸ்வாமியானவனை

அந்தணர் தம் அமுதத்தினை
இவ் விபூதியில் முமுஷுக்களாய்
நிரதிசய பக்திமான்களான ப்ராஹ்மணருக்கு நிரதிசய போக்யமான அம்ருதம் போலே ப்ராப்யனானவனை
அவர்களை விண்ணுளாரிலும் சீரியர் என்னக் கடவது இறே
இங்கேயே அவர்களை போலவே இவ் வமுருதத்தைப் பாநம் பண்ணுகையாலே

சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -–
பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்களே என்று எம்பார் யோஜனை

பாடுகையாவது
உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று
ப்ரீதி பிரேரிதராய்க் கொண்டு
ரஷ்ய ரக்ஷக பாவத்தை மாறாடி மங்களா ஸாஸனம் பண்ணுகை

சாயை போலே என்றது
புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கும் புறப்பட்ட இடத்தே புறப்பட்டு
அதன் பிரவிருத்தி நிவ்ருத்திகள் அடைய புருஷன் இட்ட வழக்கமாம் போலே

இத் திருமொழி கற்றாருக்கும் தங்களுக்கு என்று ஒரு ப்ரவ்ருத்தியாதிகள் இன்றிக்கே
ஈஸ்வரன் இட்ட வழக்காய் அவனுக்கு அந்தரங்கராகப் பெறுவார்கள் –

சாயா வா ஸத்வம் அநு கச்சேத் -என்றும்
நிழலும் அடி தாறும் ஆனோம் (பெரிய திருவந்தாதி )-என்று சொல்லக் கடவது இறே

அதவா
சாயை போலேப் பாட வல்லார்
சாயை என்று நிழலாய்
குளிரப்பாட வல்லார் என்றுமாம்
தங்கள் அந்தரங்கர்கள் ஆவார்கள் என்கை

ஆக
பத்துப் பட்டாலும்
தாம் பெற்ற பேற்றை அருளிச் செய்து
இது கற்றாருக்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்

ஆக
திருப் பல்லாண்டில் தொடங்கின மங்களா சாஸனமே யாத்திரையாகக் கொண்டு போந்து
நிகமிக்கிற இடத்திலும்
சாயை போலே பாட வல்லார் -என்றது
திருப் பல்லாண்டு பாட வல்லார் என்று
மங்களா ஸாசனத்தோடே தலைக் கட்டுகையாலே
இவருக்கு மங்களா சாஸனமே எவ் வஸ்தையிலும் யாத்ரை -என்றதாயிற்று –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–3–துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை-

September 5, 2021

கீழில் திருமொழியில்
திருமால் இருஞ்சோலை மலையிலும்
சூழ் விசும்பு அணி முகிலிலும் சொன்ன அர்த்தங்கள் சொல்லிற்று

இதில்
முனியே நான் முகனில் ஒன்பது பட்டாலும் சொன்ன அர்த்தத்தைச் சொல்லுகிறது

பத்தாம் பாட்டில் அர்த்தம்
மேலில் திரு மொழியிலே சொல்லுகிறது

அன்றிக்கே
கீழில் திருமொழியில்
அநிஷ்ட நிவ்ருத்தியைச் சொல்லி

இத் திருமொழியிலே
இஷ்ட ப்ராப்திக்கு
திருவாணை இட்டுத் தடுக்கிறார் -என்னவுமாம் –

—————————————–

அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக
உன்னைக் காணப் பெற்ற நான்
இனிப் போக விடுவேனோ என்கிறார் –

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 1-

பதவுரை

மக்கள் அறுவரை–உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்
கல் இடை மோத–(கம்ஸனானவன்) கல்லில் மோதி முடிக்க, (அதனால்)
இழந்தவள் தன்–(அம் மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய
வயிற்றில்–திரு வயிற்றில்
சிக்கென வந்து–சடக்கென வந்து
பிறந்து நின்றாய்–திருவவதரித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்–(எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
புக்கினில் புக்கு–(நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து
உன்னை
கண்டுகொண்டு–ஸேவித்து
துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த–துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற
வலையை–வலை போன்ற சரீரத்தில் நசையை
அற–அறும்படி
பறித்தேன்–போக்கிக் கொண்ட அடியேன்
இனி–(உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்ற பின்பும்
போக விடுவது உண்டே–(வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ?

துக்கச் சுழலையை
சுழல் ஆறு போலே வளைய வருகிற துக்கத்தை விளைப்பதாய் இருக்கை
கர்ப்ப வாஸம் போலே இவனைச் சுற்றிக் கிடக்கிற துக்கங்களை என்றுமாம் –

சூழ்ந்து கிடந்த வலையை
தப்ப ஒண்ணாத படி வீசின சரீரமாகிய வலையை
ஆத்மாவைச் சுற்றிக் கொண்டு கிடக்கிற அவித்யா கர்மாதிகள் -என்னுமாம்

அறப் பறித்து
ருசி வாசனைகளோடே போம்படி பண்ணி

புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன்
புக்க இடம் எல்லாம் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன்
பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதார அளவாகச் சொல்லுகை
எல்லா இடத்தலும் உன்னை ஸாஷாத் கரிக்கப் பெற்றேன்

இனிப் போக விடுவது உண்டே
கைப்பட்ட உன்னை நான் போக ஸம்மதிப்பேனோ
போகிலும் கூடப் போகும் அத்தனை
உன்னாலே பெற்ற நான் உன்னைப் போக விடுவேனோ

நான் உன்னைப் போக விடுவேனாய் இருந்தேனோ -என்று
அவனையே கிடக்கிறார் ஆகவுமாம்

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத விழுந்தவடன் வயிற்றில்
தேவகியார் இழவு தீர்ந்தால் போல்
என் இழவையும் தீர்த்து அருள வேணும் என்கிறார் –

கால நேமியோடே சம்பந்தம் உடையராய் ப்ரஹ்ம சாபத்தாலே பாதாளத்திலே வர்த்திப்பார்
ஆறு அஸூரர்களை யோக நித்ரையாலே தேவகி கர்ப்பத்தில் பிரவேசிப்பிக்க
அந்த அஸூரர்களை ஜனிக்க ஜனிக்க
கம்சன் கல்லோடே அடித்துப் பொகட்டான்

ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோஹிணியார் திரு வயிற்றிலே அவதரிப்பித்து
தான் அஷ்டம கர்ப்பமாக விறே திரு அவதரித்தது
இப்படி ஆறு புத்ரர்களைக் கல்லோடே மோத
இழந்த தேவகியார் திரு வயிற்றிலே

சிக்கனே வந்து பிறந்து நின்றாய்
அந்த கம்சனால் நலிவு பண்ணாதபடி வலியையாய்
அவன் தனக்கே பாதகனாய்க் கொண்டு
வந்து திரு அவதரித்தாய்

திரு மால் இரும் சோலை எந்தாய்
அந்த அவதாரத்தில் உதவப் பெறாத எனக்காகவே
திருமலையில் ஸந்நிஹிதனாய்
கிருஷியைப் பண்ணி
பல வேளையில்
பொகட்டுப் போகலாமோ –

————-

அவனுக்குப் போக ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் (பேரில் )ஆணை இடுகிறார்

வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உன் தன் இந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 2-

பதவுரை

நாடும்–நாட்டிலுள்ளாரும்-அவிசேஷஞ்ஞார்
நகரமும்–நகரத்திலுள்ளாரும்-விசேஷஞ்ஞார்
எங்கும்–மற்றெங்குமுள்ளவர்களும்
அளித்து–நெருங்கி
தம்முடைய–தங்கள் தங்களுடைய
தீ வினை–துஷ்ட கர்மங்களை
தீர்க்கல் உற்று–ஒழிப்பத்தில் விருப்புற்று
தெளித்து–ஆரவாரித்துக் கொண்டு
வலம் செய்யும்–பிரதக்ஷிணம் செய்யப் பெற்ற-பலத்தைக் கொடுக்கும் என்றுமாம்
தீர்த்தம் உடை –தீர்த்தம் விசேஷங்களையுடைய
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில்
(எழுந்தருளியிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
வளைத்து வைத்தேன்–(உன்னைச்) சூழ்ந்து கொண்டேன்
இனி–இனி மேல்
போகல் ஒட்டேன்–(நீ வேறிடந் தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்க மாட்டேன்.
உன் தன்–உனக்கு உள்ள
இந்திர ஞாலங்களால்–மாயச் செய்கையினால்- வல்லமையினால்
ஒளித்திடில்–(உன்னை நீ) ஒளித்துக் கொண்டால்
நின் திரு –நின் திரு உனக்கு சேஷ பூதை -–
திரு ஆணை-உனது பிராட்டியின் மேலாணை.
(அப்படி ஒளிக்கலாகாது)
நீ–நீ
ஒருவர்க்கும்–ஒருவரிடத்திலும்
மெய்யன் அல்லை–உண்மையான உக்தி அனுஷ்டானங்களை யுடையவனல்லை–

வளைத்து வைத்தேன்
ஸ்ரீ பரதாழ்வான் பெருமாளை வளைத்து
போக ஒண்ணாது -என் கார்யம் செய்து அல்லது -என்றால் போலே
இவரும் ஈஸ்வரனை வளைக்கிறார்
தம் செல்லாமை இறே வளைக்கிறது

இனி போகல் ஒட்டேன்
உன் சுவடு அறிந்த நான் இனிப் போக விடுவேனோ

உன் தன் இந்திர ஞாலங்களால் ஒளித்திடில்
உன்னுடைய ஐந்திர ஜாலங்களை இட்டு என்னை மறைத்து
நீ மறைய நிற்கில்
இங்கே இருத்தி ஒரு குண ஆவிஷ்காரத்தைப் பண்ணி மறப்பித்துத் தான் மறைய நிற்கை

அன்றிக்கே
மம மாயா துரத்தயா -என்கிற
பிரக்ருதியை இட்டு மறைக்கை என்னுமாம்

நின் திருவாணை கண்டாய்
உனக்கு அநன்யார்ஹமாய்
நிரதிசய போக்ய பூதையுமான
பெரிய பிராட்டியார் ஆணை கிடாய்

அவள் பக்கல் முகம் பெற வேண்டி இருந்தாய் யாகில்
அவள் பரிகரமான என் அபேக்ஷிதம் செய்து அல்லது
உனக்குத் தரம் சொல்ல ஒண்ணாது

இங்கனே நம்மை நிர்பந்திக்கைக்கு நாம் உமக்கு தப்பினது உண்டோ என்ன
நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
கரு மலர்க்கூந்தல் –இத்யாதி
ஒரு பேதைக்குப் பொய் குறித்து -என்கிறபடியே
நீ யாருடனே நிலை நிற்க ஸம்ஸ்லேஷித்தாய்

அளித்து எங்கும் நாடும் நகரமும்
அஞ்ஞரோடே
சர்வஞ்ஞரோடே
வாசியற
அவி சேஷஞ்ஞரோடு
வி சேஷஞ்ஞரோடு
வாசியற–என்கை
இப்படி எங்கும் ரஷித்து

தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்து அளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய்
தம் தாமாலே பண்ணப்பட்ட துஷ்கர்மங்களைப் போக்குகையிலே ஒருப்பட்டு இருக்கும்
அவர்களாலே
தீர்த்தங்களை ப்ரோக்ஷித்துக் கொண்டு ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ணப் படும்
தீர்த்தங்களை யுடையதான திரு மலையிலே
நின்று அருளின என் ஸ்வாமியே

அளித்து இத்யாதி
அழகருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

(நூபுர கங்கை திருமலை அழகர் -மூன்றுக்கும் விசேஷணமாகக் கொண்டு மூன்று நிர்வாகம் )

—————-

முதல் பாட்டில்
உன் ஸ்வரூப சித்திக்காக என் கார்யம் செய் என்றார்
இரண்டாம் பாட்டில்
உன் பிரணயித்வத்துக்காக என் கார்யம் செய் என்றார்
இப்பாட்டில்
உனக்கு தேஜோ ஹானி வராமல் இருக்க வேண்டில் என் கார்யம் செய் என்கிறார்

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர் புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –

பதவுரை

இனம் குறவர்–திரள் திரளாய்ச் சேர்ந்துள்ள குறவர்கள்
புனம்–புனத்திலுண்டான
தினை–தினைகளை
கிள்ளி–பறித்து
புது அவி காட்டி–(அதை எம்பெருமானுக்குப்) புதிய ஹவிஸ்ஸாக அமுது செய்யப் பண்ணி
(அதற்காகப் பிரயோஜ நாந்தரத்தை விரும்பாமல்)
உன் பொன் அடி வாழ்க என்று–“உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று
(மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு)
புதியது–புதியதாகிய அத் தினையை
உண்ணும்–உண்ணுதற்கு இடமான
எழில்–அழகு பொருந்திய
மாலிருஞ் சோலை–திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
உனக்கு–(சேஷியாகிய) உனக்கு
பணி செய்து இருக்கும் தவம் உடையேன்–கைங்கரியம் பண்ணிக் கொண்டிருக்கையாகிற (உனது) அநுக்ரஹத்தைப் பெற்றுள்ள அடியேன்
இனி–இனி மேல்
போய்–புறம்பே போய்
ஒருவன் தனக்கு பணிந்து–ஒரு க்ஷுத்ர புருஷனைப் பற்றி
கடைத்தலை–(அவனுடைய) வீட்டு வாசலில்
நிற்கை–(கதிதேடி) நிற்பதானது
நின் சாயை அழிவு கண்டாய்–உன்னுடைய மேன்மைக்குக் குறை யன்றோ?–

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்
வகுத்த விஷயமான உனக்கு
முற்பட சேஷத்வ ஞானம் பிறந்த பின்பு
சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து
கைங்கர்யமே யாத்ரையாய்
அது இல்லாத போது சத்தை குலையும் படியாய்
இப்படி கைங்கர்யம் பண்ணி அதுவே யாத்ரையாய் இருக்கும் படியான தபஸ்ஸை யுடையேன்

இவருக்குத் தபஸ்ஸூ அவன் பிரசாதம் ஆயிற்று

இனிப் போய்
இப்படி கைங்கர்யமே யாத்ரையான பின்பும்
இவற்றை விட்டுப் புறம்பே போய்
அந்நிய விஷய ஸா பேஷனாய்

ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை
ஷூத்ரனாய் இருப்பான் ஒரு சம்சாரி சேதனன் காலில் விழுந்து
அவன் வாசலைப் பற்றி நிற்கை

நின் சாயை அழிவு கண்டாய்
உனக்குத் தேஜோ ஹானி கிடாய்
உன் ஸ்வரூப ஹானிக்காய்த்து நான் கிலேசிக்கிறது

புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்றினக் குறவர் புதியது உண்ணும்
புனத்தினிலே புதுத் தினைக்கதிரை முறித்து
அக்னியிலே பக்வமாக்கி
அழகருடைய ஸ்ப்ருஹ ணீயமான திருவடிகளை சொல்லி
மங்களா ஸாஸனம் பண்ணி
உன் திவ்ய ஐஸ்வர்யம் ஸம்ருத்தமாக வேணும் -என்று திருப்பல்லாண்டு பாடி
திருமலையில் திருக் குறவர்
தங்களுடைய புத்ர தாரங்களோடும்
நவ போஜனம் பண்ணா நிற்பர்கள்

எழில் மால் இரும் சோலை எந்தாய்
அழகிய திருமலையிலே வர்த்திக்கிற ஸ்வாமியே
அந் நிலையிலே உன் ஸ்வாமித்வத்தை எனக்குப் பிரகாசிப்பித்தவனே –

————-

உன் திருவடிகளை ஒழிய புறம்பு போக்கிடம் இல்லாத என் கார்யம்
செய்து அருள வேணும் என்கிறார் –

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமால் இரும் சோலை எந்தாய் – 5-3- 4- –

பதவுரை

குரு-குரு வம்சத்திற் பிறந்த
பாண்டவர்க்காய்–பாண்டவர்களுக்காக
ஓர் பொய் சுற்றம் பேசி சென்று–ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு
அங்கு–துரியோதனாதியரிடத்து
தூது சென்றாய்–தூது போய்
பேதம் செய்து–ஆஸ்ரிதர் அநாஸ்ரிதர் -இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி
(பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்)
இல்லை–கண்டதில்லை
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
எங்கும்–துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல்
பிணம் படுத்தாய்–பிணமாக்கி யொழித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
காதம் பலவும்–பலகாத தூரமளவும்
திரிந்து உழன்றேற்கு–திரிந்து அலைந்த எனக்கு
அங்கு–அவ் விடங்களில்
ஓர் நிழல் இல்லை–(ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை;
(அன்றியும்)
நீர்–(தாபமாற்றக் கடவதான) தண்ணீரும்
மற்று ஓர்–மற்றொரு
இல்லை–கண்டதில்லை
ஆராய்ந்து பார்த்தவிடத்தில்
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
உயிர்ப்பு இடம்–மூச்சு விட இடம் -ஆச்வாஸ ஹேதுவான இடத்தை
நான் எங்கும் காண்கின்றிலேன்–நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை–

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை
நெஞ்சுக்கும் கண்ணுக்கும் எட்டின இடம் எல்லாம்
அலர்மந்து திரிந்த இடத்தில்
அவ்விடங்களில் ஒரு நிழலாதல் நீராதல் கண்டிலேன்-

கண்டது ஸம்ஸார விஷ விருஷத்தின் நிழலும்
மாரீசிகா ஜலமும் இறே
வாஸூ தேவ தருச்சாயையும்
அவன் திரு உள்ளத்தில் நீர்மையையும் இறே
நிழலும் நீரும் ஆவது

உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
அவனடி நிழல் தடம் -என்னக் கடவது இறே
இது ஒழிந்து மூச்சு விடுகைக்கு ஓர் இடமும் அநந்ய கதியான நான் காண்கிறிலேன்

அந் நிழலில் ஒதுங்கினார் உண்டோ என்ன
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய்
குரு குலத்தில் பிறந்த பாண்டு புத்ரர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டி தூது போய்த்து இல்லையோ
அவர்கள் அநந்ய கதித்வம் கண்டு அன்றோ நீ அது செய்தது

அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய்
அந்த துர்யோதனர்கள் பக்கல்
உங்களோடு அவர்களோடு வாசி என்
நீங்களும் எனக்கு பந்துக்கள் அன்றோ என்று
அஹ்ருதயமாக உறவு சொல்லிக் கொண்டு சென்று
ஸம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே
ஆஸ்ரித அநாஸ்ரித விபாகத்தைப் பண்ணி
பூ பாரமானவர்களை நிரஸித்துப் பொகட்டிலையோ

திருமால் இரும் சோலை எந்தாய்
அவ் வவதாரத்தில் உதவாத எனக்காகவேத் திருமலையிலே நின்று அருளினவனே —

————–

பக்தியாலே பரவசனான என் கார்யம் செய்து அருள வேணும் என்கிறார் –

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சமறா வென தோள்களும் வீழ் ஒழியா
மாலுகளா நிற்கும் என் மனமே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 5-

பதவுரை

சேல்–மீன்களானவை
உகளா நிற்கும்–துள்ளி விளையாடுதற்கு இடமான
நீள் சுனை சூழ்–பெரிய தடாகங்களாலே சூழப் பெற்ற
என–என்னுடைய
காலும்–கால்களும்
எழா–(வைத்து விடத்தை விட்டுப்) போகின்றனவில்லை;
கண்ண நீரும்–கண்ணீரும்
நில்லா–உள்ளே தங்குகின்றனவில்லை.
உடல்–சரீரமானது
சோர்ந்து நடுங்கி–கட்டுக் குலைந்து நடுங்கியதனால்
குரலும்–குரலும்
மேல் எழா–கிளம்புகின்றதில்லை;
மயிர் கூச்சும் அறா–மயிர்க் கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை;
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
(எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்)
தோள்களும்–தோள்களும்
வீழ்வு ஒழியா–விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை
( ஒரு வியாபாரமும் செய்ய முடியாமல் விழுந்தொழிந்தன);
என் மனம்–எனது நெஞ்சானது
மால் உகளா நிற்கும்–வியாமோஹத்தை அடைந்திரா நின்றது;
(இப்படிகளால்)
வாழ–வாழ்வுறும்படி
உன்னை–உன்னை
தலைப் பெய்திட்டேன்–சேர்ந்து விட்டேன்–

காலும் எழா
காலும் எழா –என்கிறபடியே
கால் நடை தாரா

கண்ண நீரும் நில்லா
கண்கள் நீர் மாறாது

உடல் சோர்ந்து நடுங்கி
ஸரீரமானது பரவசமாய்த் தடுமாறி

குரல் மேலும் எழா
வார்த்தை சொல்ல பலமில்லை

மயிர்க் கூச்சமறா
ரோமங்கள் புளகிதமாய் மாறுகிறது இல்லை

என தோள்களும் வீழ் ஒழியா
என் கைகளும் அஞ்சலி மாறா

மாலுகளா நிற்கும் என் மனமே
என் மனஸ்ஸானது மேல் மேல் என பித்தேறா நின்றது

உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
உன்னை அனுபவித்து வாழ வேணும் என்று தலைப்பட்டேன்

சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய்
சேல்களாகிற மத்ஸ்யங்கள் உகளிக்கும் படி பரப்பை யுடைத்தான தடாகங்கள் சூழப்பட்டு இருக்கிற
திருமலையிலே ஸந்நிஹிதனாய் எனக்கு இந்த பக்தியை விளைத்தவனே

இத்தால்
ஜலத்தைப் பிரிந்து தரிக்க மாட்டாத
மத்ஸ்யம் போலே உன்னைப் பிரிந்து ஆற்ற மாட்டேன் -என்கிறார் –

—————

நீர் மற்ற ஓர் இடம் இல்லை என்பான் என்
ப்ரஹ்ம ருத்ராதிகள் இல்லையோ -என்ன
அவர்கள் அஸக்தர் -என்கிறார் –

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3- 6-

பதவுரை

திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எருதுக் கொடி உடையானும்–வ்ருஷப த்வஜனான ருத்திரனும்
பிரமனும்–(அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும்
இந்திரனும்–தேவேந்திரனும்
மற்றும் ஒருத்தரும்–மற்றுள்ள எந்தத் தேவரும்
இப் பிறவி என்னும் நோய்க்கு–இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு
மருந்து அறிவார் இல்லை–மருந்து அறிய வல்லவரல்லர்;
மருத்துவன் ஆய் நின்ற–(இப் பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான-ஆச்சார்யராய்
மா மணி வண்ணா–நீல மணி போன்ற வடிவை யுடையவனே!
மறு பிறவி தவிர–(எனக்கு) ஜந்மாந்தரம் நேராத படி
திருத்தி–(அடியேனை) சிக்ஷித்து
உன் கோயில் கடை புக பெய்–உன் கோயில் வாசலில் வாழும்படி அருள் புரிய வேணும்–

எருத்துக் கொடி உடையானும்
அறிவு கேட்டுக்கு எல்லை யான விருஷபத்தை த்வஜமாக யுடைய ருத்ரனும்
இத்தால் அவனுடைய தமஸ் ஸூ பிராஸுர்யம் சொல்லிற்று

பிரமனும்
அவனுக்கு ஜனகனாய்
தேவர்களுக்கு ஞான பிரதானம் பண்ணினவன் என்னும்படி
ஞாதாவான ப்ரஹ்மாவும்
ஸ்ருஷ்ட்டி கர்த்தா வாகையாலே ராஜஸோத்தரன் என்று தோற்றுகிறது

இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
த்ரை லோக்ய அதிபதியான இந்திரனோடே கூட மற்றும் உண்டான தேவ ஜாதியும்
ஒருவரும் இஜ் ஜன்மம் ஆகிற வியாதிக்கு ஒவ்ஷதம் அறிவார் இல்லை –
ஸம்ஸார பீஜமாம் அத்தனை

சர்வேஸ்வரன் ஸம்ஸார நிவர்த்தகன் என்று அறியார்கள் –
ஈஸ்வரோஹம் என்று இருக்குமவர்கள் ஆகையாலே
கடிக் கமலம் இத்யாதி
கார் செறிந்த இத்யாதி
நீறாடி —

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
மருந்தாகும் அது அன்றிக்கே
மருந்து அறிவதும் செய்யும்
இது தான் மலை மேல் மருந்து

நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனே
இவருடைய மருந்து இவனுடைய வடிவு அழகு ஆய்த்து
நச்சு மா மருந்து இறே
மருந்தும் -இத்யாதி

மறு பிறவி தவிரத் திருத்தி
புனர் ஜென்மம் இல்லாத படி
ஜன்மாந்தர ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம் அறும் படி திருத்தி

உன் கோயில் கடை புக பெய்
உன் கோயிலில் திரு வாசலைப் பற்றி இருந்து வாழும்படி பண்ணி

திருமால் இரும் சோலை எந்தாய்
என் ஜென்மத்தை அறுக்கைக்கு அன்றோ
நீ திருமலையிலே ஸந்நிஹிதனாயிற்று
மா மாயையை மங்க ஓட்டுமவன் அன்றோ –

————–

உன் நிர்ஹேதுக கிருபையாலே விஷயீ க்ருதனான என்னை
அஞ்சாதே கொள் என்று
சோக நிவ்ருத்தியைப் பண்ணி அருளாய் என்கிறார் –

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும்
செக்கர் நிறத்து சிவப்புடையாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 7-

பதவுரை

சக்கரமும்–திருவாழியாழ்வானும்
தட கைகளும்–பெரிய திருக்கைகளும்
கண்களும்–திருக்கண்களும்
பீதக ஆடை யொடும்–திருப் பீதாம்பரமும்
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய்–செவ் வானத்தின் நிறம் போன்ற நிறத்தை உடையவையாய் இருக்கப் பெற்றவனே!
அக்கரை என்னும்–ஸம்ஸாரம் என்கிற
அநர்த்த கடலுள்–அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே
அழுந்தி–(நெடுநாள்) அழுந்திக் கிடந்து
இளைத்திருந்து–(அதில்) வருத்ப்பட்டுக் கொண்டிருந்தது
(பின்பு)
உன் பேர் அருளால்–உனது பரம கிருகையினால்
இக் கரை ஏறினேனை–இக் கரையேறிய அடியேனைக் குறித்து
அஞ்சேல் என்று கை கவியாய்–அபய ப்ரதாக முத்ரையைக் காட்டி யருள வேணும்–

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி
பகவத் விஷயத்துக்கு அவ்வருகாய்
ஆத்ம வஸ்துவுக்கு ஹானியை விளைப்பதான ஸம்ஸார சமுத்ரத்திலே அவகாஹித்து

உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை
உன்னுடைய நிர்ஹேதுக கிருபையினாலே
துயர் அறு சுடர் அடியான திருவடிகள் ஆகிற
இக்கரையை ஏறிப்
பின்னையும் ஞான லாபம் ஒழிய பிராப்தி இல்லாமையாலே
தளர்ந்து பதஸ் பந்தம் பண்ண மாட்டாதே இருக்கிற என்னை
ப்ராப்ய ருசியாலே த்வரித்து கிலேசிக்கிற என்னை

அஞ்சேல் என்று கை கவியாய்
பிராப்தியைப் பண்ணித் தந்து -மாஸூச -என்னாய்

ப்ராப்ய வேஷம் சொல்லுகிறது மேல்

சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும் செக்கர் நிறத்து சிவப்புடையாய்
திருக் கைகளுக்கு அழகை உண்டாக்கும் திருவாழியும்
வெறும் புறத்தே ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய திருக் கைகளும்
அவ் வாழ்வார்கள் அளவும் அலை எறிகிற திருக் கண்களும்
பும்ஸத்வ அவஹமாய் ஸ்ப்ருஹணீயமான திருப் பீதாம்பரத்தோடே கூட
ஸந்த்யா ராகம் போலே சிவந்த நிறத்தை யுடையையாய்

திரு மால் இரும் சோலை எந்தாய்
இவ் வடிவு அழகைத் திருமலையிலே எனக்குப் பிரகாசிப்பித்தவனே

ஸந்த்யா ராக ரஞ்சிதமான ஆகாசம் போலே யாய்த்துத் திருமேனியும்
திவ்ய அவயவங்களும்
திவ்ய ஆயுதங்களும்
திருப்பீதாம்பரமுமான
சேர்த்தி அழகு இருப்பது –

—————

அநாதி காலம் இழந்தது போராதோ
நீ கடாஷித்த பின்பும் போக ஸஹிப்பேனோ -என்கிறார்

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –

பதவுரை

மைத்துனன் மார்களை–உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை
வாழ்வித்து–வாழச் செய்து
மாற்றவர் நூற்றுவரை–(அவர்களுக்குச்) சத்துருக்களாகிய துரியோதநாதியர் நூறு பேரையும்
கெடுத்தாய்–ஒழித்தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
இன்றொடு நாளை என்றே–இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே
(கழித்த காலம்)
எத்தனை காலமும் எத்தனை ஊழியும்–எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ,
இத்தனை காலமும்–இத்தனை காலம் முழுவதும்
போய் கிறிப்பட்டேன்–(ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்;
இனி–(அதில் நின்றும் விடு பட்டு ஞானம் பெற்ற) இன்று முதலாக
போக விடுவது உண்டே–(ஸர்வ ரக்ஷகனான உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?
சித்தம்–(எனது) நெஞ்சானது
நின் பாலது–உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை
அறிதி அன்றே–அறிகின்றா யன்றோ?–

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே யித்தனை காலமும் போய்க்
இன்று நாளை நேற்று என்று தொடங்கி
அநேக கல்பங்களான இந்தக் காலம் எல்லாம்
இப்படி அநாதி காலம் எல்லாம் வியர்தமாகவே போயிற்றே

கிறிப் பட்டேன்
இதுக்கு அடியாய் இருபத்தொரு விரகிலே அகப்பட்டேன்
அதாவது
பிரம ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம்

அதவா
கீழே அநாதி காலம் பழுதே போம்படி இழந்த நான்
கிறிப்பட்டேன்
நல்ல விரகிலே அகப்பட்டேன்
பெரும் கிறியார் (திரு விருத்தம் )-என்கிற விரகிலே அகப்பட்டேன் என்னவுமாம் –

இனி உன்னைப் போகல் ஒட்டேன்
உன்னாலே நிர்ஹேதுகமாக விஷயீ க்ருதனாய்
உன்னால் அல்லது செல்லாமை பிறந்த பின்பு இனிப் போக ஒட்டுவேனோ

நீர் இங்கனே நிர்பந்திக்கக் கடவீரோ விரோதி கிடைக்க என்ன
பாண்டவர்கள் விரோதியிலும் காட்டில் பிரபலமோ என் விரோதி என்கிறார்

மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
பிரகிருதி சம்பந்த மாத்ரமான பாண்டவர்களை ராஜ்ய ஸ்ரீ யாலே ஸூகிக்கும் படி பண்ணி
அவர்களுக்கு விரோதியான துர்யோத நாதிகளை நரக ப்ராப்தராம் படி நசிப்பித்தாய்

அவர்களுக்கு நாம் அல்லது இல்லை ஆகையால் செய்தோம் என்ன
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய்
அவர்களை போலியோ நான்
உன் பக்கல் ப்ரவணமான நெஞ்சை உடையேன் என்னும் இடம்
அதுக்கு வாய்த்தலையான நீயே அறிவுதியே

என் நெஞ்சை நீ வஸீ கரித்து
திருமலையில் நின்ற நிலையைக் காட்டி அன்றோ (இவற்றைச் செய்து அருளினாய் )

—————-

ஜாயமான கால கடாக்ஷமே பிடித்துக் கைங்கர்ய அபேக்ஷை யுடையனாய்
பிரதி சம்பந்தியான உன்னைக் காணப் பெற்று இனிப் போக விடுவேனோ
என் விரோதியைப் போக்கி பிராப்தியைப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால்
சென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் -5 -3-9 –

பதவுரை

அங்கு–சோணித புரத்திற்கு
சென்று–எழுந்தருளி
வாணனை–பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும்–ஆயிரந் தோள்களும்
திசை திசை–திக்குகள் தோறும்
தென்றி வீழ–சிதறி விழும்படி
திருச் சக்கரம் அதனால்–சக்ராயுதத்தினால்
செற்றாய்–நெருக்கி யருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!
வயிற்றில் கிடந்திருந்து அன்றே–கர்ப்ப வாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே
அடிமை செய்யல்–(உனக்குக்) கைங்கரியம் பண்ணுவதில்
உற்றிருப்பன்–அபிநிவேசங் கொண்டிருந்த நான்
இன்று–இப்போது
இங்கு வந்து–இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து
உன்னை–(அனைவருக்கும் எளியனான) உன்னை
கண்டு கொண்டேன்–ஸேவித்துக் கொண்டேன்;
இனி போக விடுவது உண்டே:.–

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
கர்ப்பத்தில் கிடக்கிற காலத்திலேயே
அடிமை செய்கையே புருஷார்த்தம் என்று துணிந்து இருப்பன்

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
அன்று நான் பிரார்த்தித்த படியே
இப்போது உன்னைக் கிட்டி இங்கே காணப் பெற்றேன்
ப்ராப்ய தேசமான திருமலையில் காணப் பெற்றேன்
இப்படி ஸூ லபனான உன்னைக் கண்ட பின்பு போக விடுவேனோ

விரோதி கனத்து இருந்ததே என்ன
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால் சென்றித் திசை திசை வீழச் செற்றாய்
வாணனுடைய பஹு வனத்திலும் கனத்து இருந்ததோ என்னுடைய விரோதி என்கிறார்

ஸ்ரீ துவாரகையின் நின்றும் சோணித புரத்திலே எடுத்து விட்டுச் சென்று
பாணனுடைய புஜ வனத்தைத் திக்குகள் தோறும் தெறித்து விழும்படி
திருவாழியாலே அறுத்துப் பொகட்டு
உஷா அநிருத்த கடகன் ஆனவனே

திரு மால் இரும் சோலை எந்தாய்
அந்த கிருஷ்ண அவதாரத்துக்கு பிற்பாடானான எனக்காகவே அன்றோ
திருமலையில் ஸந்நிஹதன் ஆய்த்து-

————–

நிகமத்தில் இத்திருமொழியை அப்யசித்தவர்களுக்கு பலம் அருளிச் செய்கிறார் –

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே– 5-3- 10- –

பதவுரை

உலகம்–உலகத்தாரெல்லாரும்
சென்று–(தங்கள் தங்கள் இருப்பிடித்தில் நின்றும்) போய்
குடைந்து–அவகாஹித்து
ஆடும்–நீராடா நிற்கப் பெற்ற
சுனை–தீர்த்தங்களை யுடைய
திருமாலிருஞ்சோலை தன்னுள்–திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற பிரான்–எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானடைய
அடி மேல்–திருவடிகள் மேல்
அடிமைத் திறம்–கைங்கரிய விஷயமாக
பொன் திகழ்–ஸ்வர்ண மயமாய் விளங்கா நின்ற
மாடம்–மாடங்களினால்
பொலிந்து தோன்றும்–நிறைந்து விளங்கா நின்ற
புதுவை–ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு
கோன்–தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
நேர்பட–பொருந்தும்படி
விண்ணப்பம் செய்–அருளிச் செய்த
ஒன்றினோடு ஒன்பதும்–இப் பத்துப் பாசுரங்களையும்
பாட வல்லார்–பாட வல்லவர்கள்
உலகம் அளந்தான் தமர்–திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர்–

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல்
அஞ்ஞரோடு விசேஷஞ்ஞரோடு வாசியற தம்தாம் அபிமதங்கள் பெறுகைக்காகச் சென்று
ஆழ இழிந்து அவகாஹிக்கும் தலை அருவி தொடக்கமான தீர்த்தங்களை யுடைய
திருமலையில் ஸந்நிதி பண்ணி நிற்கிற உபகாரகன் திருவடிகளில்

அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
அடிமை விஷயமாக
கைங்கர்ய பிராப்தி பண்ண வேணும் என்று திரு உள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்த

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஸ்ப்ருஹ ணீயமாய் உஜ்ஜவலமான மாடங்களாலே நிறையப்பட்டு
ப்ரத்யக்ஷமாய் இருக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
ஆப்திக்கு உறுப்பாகத் சொல்லுகிறார்

ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார்
நின் திருவாணை கண்டாய் -என்ற ஒரு பாட்டோடு
அது பெறா ஆணை அல்லவாக்கின ஒன்பது பாட்டையும்

அன்றிக்கே
ப்ராப்ய துவரையை விண்ணப்பம் செய்த ஒன்பது பாட்டோடு
பலம் சொன்ன ஒரு பாட்டையும் கூட்டி
ப்ரீதி பிரேரிதராய் பாட வல்லார் என்றுமாம்

உலகம் அளந்தான் தமரே–
இவ்வாத்மாவினுடைய அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்த்ரங்களைப் போக்கின
செயலை யுடைய திரிவிக்ரமனுக்கு அநந்யார்ஹராகப் பெறுவர்

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார்
உலகம் அளந்தான் தமரே–
என்று அந்வயம்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–2–நெய்க் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள்–

September 4, 2021

தாம் அயோக்யதையை அனுசந்தித்து அகலச் செய்தேயும்
தம் கரணங்கள் மேல் விழுகிற படியைக் கண்டு க்ஷமை கொண்டார் கீழ்

நீர் தோஷம் பார்த்து நம்மை க்ஷமை கொள்ள வேண்டுவது
நாம் கடக்க இருக்கில் அன்றோ -என்று
தன் ஸுசீல்யத்தாலே மேல் விழுந்து வந்து
புகுந்த படியைக் காட்டிக் கொடுக்கக் கண்டு பேசுகிறார்
இத்திரு மொழியில்

(ஏற்கவே வந்து புகுந்து கிடந்தாலும் மறந்து இருக்க
பிரகாசப்படுத்தி -ஞானம் பெற்ற தசையை அருளிச் செய்கிறார்
யோகம் தியானிக்க தியானிக்க இருப்பதை உணர்கிறோம் )

இப்படி அவன் வந்து புகுர
அவித்யையும்
கர்மமும்
வியாதியும்
இந்திரியங்களையும்
யம படரையும் பார்த்து
நீங்கள் பண்டை தேஹமும் ஆத்மாவும் என்று இருக்க வேண்டா

அவன் திவ்ய தேசங்களில் பண்ணும் ஆதாரத்தை எல்லாம்
என் தேஹத்திலும் ஆத்மாவிலும் பண்ணிக் கொண்டு புகுந்தான்
இனி நீங்கள் ஜீவிக்க வேண்டி இருந்தீ கோளாகில்
இங்கு நின்றும் போகப் பாருங்கோள் -என்கிறார் –

—————-

நோய்களைப் பார்த்து நீங்கள் சடக்கெனப் போங்கோள் என்கிறார் –

நெய்க் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – 5-2-1-

பதவுரை

நெய்க் குடத்தை–நெய் வைத்திருக்கும் குடத்தை
பற்றி–பற்றிக் கொண்டு
ஏறும்–(அக் குடத்தின் மேல்) ஏறுகின்ற
எறும்புகள் போல்–எறும்புகளைப் போல்
நிரந்து எங்கும்–என்னுடைய உடம்பு முழுவதும் பரவி
கைக் கொண்டு–(என்னை) வசப்படுத்தி
நிற்கின்ற (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற
நோய்காள்–வியாதிகளே!
காலம்பெற–விரைவாக
உய்ய –(நீங்கள்) பிழைக்க வேண்டி
போமின்–(என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய் விடுங்கள்
வேதம் பிரானார்–(பிரமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான்.
பைக் கொண்ட–பரம்பினை படங்களை யுடைய
பாம்பு அணையோடும்–திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட
வந்து புகுந்து — எழுந்தருளி
மெய்–(எனது) சரீரத்தை
கொண்டு–(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
கிடந்தார்–(என் சரீரத்தை கொண்டு–(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
(என் சரீரத்தினுள்ளே) பள்ளி கொண்டிரா நின்றார், ஆதலால்
பட்டினம்–(அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று–பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு (அவனால்) காக்கப் பெற்றது–

நெய்க் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல்
ஸூத்தமாய் போக்யமான ஆஜ்யமாய் இருக்கிற கடத்தைப் பற்றிக் கொண்டு ஏறுகிற
ஷூத்ரமான பீபிலிகைகள் போலே

நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்
பரந்து இடைவிடாதே தர்ம பூத ஞானம் உள்ள இடம் எங்கும்
ஆக்ரமித்துப் போக்கு வரத்து இன்றிக்கே
அவஸர ப்ரதிக்ஷமாய் நிற்கிற வ்யாதிகாள்

காலம் பெற உய்யப் போமின்
நீங்கள் ஜீவிக்க வேண்டில் இப்போதே உடனே போங்கோள் –

எங்களுக்குப் போக வேண்டுகிறது என் என்ன

மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பணையோடும்
என்னுடைய தேஹத்தை போக்யமாகக் கொண்டு நான் இருக்கிற இடத்திலே தான் வந்து
என் ஹிருதயத்துக்கு உள்ளே புகுந்து
வேதைக ஸமதி கம்யனானவன்
தன்னை நமக்கு உபகரித்துக் கொண்டு பள்ளி கொண்டு அருளினான்
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகஸிதமான பணங்களை யுடைய திருவனந்த ஆழ்வானோடே யாய்த்துப்
பள்ளி கொண்டு அருளிற்று

பண்டு அன்று
பழைய தேஹமும்
நானும் அன்று

பட்டினம் காப்பே
பட்டினம் -பத்த நம் -ராஜ தானி
நிதி கிடக்கும் இடம்

நிதி யாவது -ஆத்மா விறே
அவன் இவரை ஆள் இட்டுக் காவாதே தானே காத்துக் கொண்டு கிடக்கிறான் இறே
அவன் இவரைக் காத்துக் கொண்டு கிடக்குமா போலே
இவரும் வைத்த மா நிதியான அவரைக் காக்கிற படி —

——–

யம படர் தாங்களே அஞ்சி ஒளித்தார்கள் என்கிறார் –

சித்தர குத்தன் எழுத்தால் தென் புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
முத்து திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே –5- 2-2 –

பதவுரை

சித்திர குத்தன்–சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப் பிள்ளையானவன்
தென் புலம் கோன்–தெற்குத் திசைக்குத் தலைவனான யமனுடைய
பொறி ஒற்றி–மேலெழுத்தை இடுவித்து
எழுத்தால் வைத்த–(தான்) எழுதி வைத்த
இலச்சினை–குறிப்புச் சீட்டை
தூதுவர்–யம கிங்கரர்கள்
மாற்றி–கிழித்துப் போட்டு விட்டு
ஓடி ஒளிந்தார்–கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்;
முத்து–முத்துக்களை (க்கொண்டு வீசுகிற)
திரை–அலைகளை யுடைய
கடல்–கடலில்
சேர்ப்பன–கண் வளர்ந்தருளுமவனும்,
மூது அறிவு ஆளர்–முதிர்ந்த அறிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு
முதல்வன்–தலைவனும்,
பத்தர்க்கு–அடியார்களுக்கு
அமுதன்–அம்ருதம் போல் இனியனுமான எம்பெருமானுக்கு
அடியேன் (யான்) தாஸனாயினேன்;
பண்டு அன்று பட்டினம் காப்பு–

சித்தர குத்தன் எழுத்தால்
ஸர்வ ஆத்மாக்கள் பண்ணும் புண்ய பாபங்களைப் பதினாலு பேர் ஸாக்ஷியாக
யமனுடைய கணக்கன் சித்ர குப்தன் பட்டோலை கொள்ளும்

தென் புலக் கோன் பொறி ஒற்றி
தெற்குத் திக்கான யம புரத்துக்கு ஸ்வாமியான யமன் மேல் எழுத்து இடா நிற்கும்

வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
இட்ட இலச்சினையை அழித்துக் கணக்கைச் சுட்டுப் பொகட்டு
யம படர் பகவத் தூதர்களுக்கு அஞ்சி ஓடி ஒளித்தார்கள்

முத்து திரை கடல் சேர்ப்பன்
திரையானவை முத்துக்களைக் கரையிலே கொடு வந்து சேரா நின்றுள்ள கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவன்

மூதறிவாளர் முதல்வன்
அநாதியாக ஸர்வஞ்ஞரான நித்ய ஸூரிகளுக்கு சத்தா ஹேது வானவன்

பத்தர்க்கு அமுதன்
தன்னால் அல்லது செல்லாத ஆஸ்ரிதற்கு நிரதிசய போக்யமானவன்

அடியேன்
நான் அவன் போக்யதையிலே தோற்று அவனுக்குப் பரியுமவன்

பண்டு அன்று
முன் போல் அன்று

பட்டினம் காப்பே
ஆத்மாவுக்குக் காவல் உண்டாய்த்து –

(தாம் இப்படிப்பட்ட அமுதத்தில் ஈடுபட்டு பாட
நாம் அறிந்து
பட்டர் பிரானுக்கு அமுதனாக முன்பு இருந்தவன்
இவர் பாசுரம் பிறந்த பின்பே பக்தருக்கு அமுதன் ஆகிறான் )

—————

என்னுடைய தேஹ அவஸ்யதையைத் தவிர்த்து
ஞான அனுஷ்டானங்களையும் உண்டாக்கினான் என்கிறார் –

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –

பதவுரை

(வராஹ ரூபியாய் திருவதரித்த போது.)
எயிற்றிடை–(தனது) கோரப் பல் மேல்
மண்–பூமியை
கொண்ட–தாங்கி யருள
எந்தை–எம்பெருமான் (அடியேனுக்கு)
வயிற்றில் தொழுவை–வயிற்றினுள் விலங்கிட்டுக் கொண்டிருக்கை யாகிற கர்ப்ப வாசத்தை
பிரித்து–கழித்தருளியும்
புலம்–இந்திரியங்களால்
வல் சேவை–கடுமையான ரிஷபங்களை
அதக்கி-(பட்டி மேய்ந்து திரிய வொட்டாமல்) அடக்கியும்
கயிற்றும்–நரம்புகளும்
அக்கு–எலும்புகளுமேயா யிருக்கின்ற
ஆணி–சரீரத்தில் (ஆசையை)
கழித்து–ஒழித்தருளியும்
பாசம்–(யம தூதர்களுடைய) பாசங்களை
காலிடை கழற்றி–காலிலே கட்டி இழுக்க வொண்ணாதபடி பண்ணியும்,
இரா பகல்–இரவும் பகலும்
ஓதுவித்து–நல்லறிவைப் போதித்து
பயிற்றி–(கற்பித்தவற்றை) அனுஷ்டிக்கச் செய்து அருளியும்
பணி செய்ய–நித்திய கைங்கர்யம் பண்ணும்படி
என்னை கொண்டான்–அடியேனைக் கைக் கொண்டருளினான்;
பண்டு அன்று பட்டினம் காப்பு–

வயிற்றில் தொழுவைப் பிரித்து
கர்ப்ப வாசமாகிற சிறைக் கூடத்தைக் கழற்றி

தொழு –
விலங்கு விசேஷம்

வன் புல சேவை அதக்கி
இந்த்ரியங்களான வலிய சேக்களை அதக்கி -நெருக்கி –

கயிறும் அக்கும் ஆணி கழித்து
நரம்பு எலும்புமான சரீரத்தில் நசை அறும்படி பண்ணி
அக்கு -எலும்பு

காலிடை பாசம் கழற்றி
யம படர் கையில் பாசத்தாலே காலிலே துவக்கி இழுப்பர்கள்
அத்தைத் தவிர்த்து

அன்றியே
கால் என்று காற்றாய்
பாசம் என்று ஆத்மாவை வரிந்து கொண்டு இருக்கிற ஸூஷ்ம ஸரீரம்

ஆக
உபய சரீர சம்பந்தத்தையும் அறுத்து என்றுமாம்

காலிடைப் பாசம்
கால் கட்டான தேஹ ஸம்பந்தம் என்னவுமாம்
கால் கட்டான விஷயாந்தர (சம்பந்தத்தைப் ) ஸங்கத்தைப் போக்கி என்றுமாம் –

எயிற்றிடை மண் கொண்ட எந்தை
பிரளய ஆர்ணவத்திலே அகப்பட்ட பூமியை எடுத்தாப் போலே
ஸம்ஸார பிரளயத்தின் நின்றும் என்னை எடுத்த என் ஸ்வாமி

யிராப் பகலா ஓதுவித்து
திவா ராத்ரி விபாகம் அற என்னை ஸிஷிப்பித்துக்
கீழ் உக்தமான த்யாஜ்யஉபா தேயங்களை யடைய அறிவிக்கை

என்னை பயிற்றிப் பணி செய்யக் கொண்டான்
பயிற்றி –
அனுஷ்டான பர்யந்தமாம் படி வாஸனை பண்ணுவித்து

பணி செய்யக் கொண்டான்
மங்களா ஸாஸன ரூப நித்ய கைங்கர்யம் கொண்டு அருளினான்

பண்டன்று
இந்திரியங்களுக்கு சேஷமான பண்டு போலே அன்று

பட்டினம் காப்பே
பத்தனம் காவல் உண்டாய்த்து

அவன் இத் தலையை நோக்க
நாம் அத்தலையை நோக்குகையாலே
காவல் உற்றது என்கை –

————-

நோய்களைப் பார்த்து நீங்கள் ஹிரண்யன் பட்டது படாதே போகப் பாருங்கோள் -என்கிறார் –

மங்கிய வல் வினை நோய்காள் உமக்கும் ஓர் வல் வினை கண்டீர்
இங்குப் புகேல்மின் புகேல்மின் எளிதன்று கண்டீர் புகேல்மின்
சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே 5-2- 4- –

பதவுரை

மங்கிய–(ஆத்துமா உருத் தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான
வல் வினை–வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த
நோய்காள்–வியாதிகளே
உமக்கும்–உங்களுக்கும் கூட
ஓர் வல் வினை–ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே-மிருத்யுவுக்கும் மிருத்யு போல்
கண்டீர்–(இன்று) பாருஙக்ள்
இங்கு–இவ்விடத்தும்
புகேன்மின் புகேன் மின்– வர வேண்டா, வர வேண்டா
(இனி நீங்கள் என்னைக் கிட்டுகை)
எளிது அன்று சுலபமான கரியமன்று;
புகேன்மின்–ஆகையால் இனி இங்கு வர வேண்டா
(என் ஆத்துமா)
எம்மான் அவன்–எமக்குத் தலைவனுமான எம்பெருமான்
சிங்கப் பிரான் -நரஸிம்ஹமாய் -எனக்கு உபகாரம் செய்து அருளினவன்
சேரும்–எழுந்தருளி யிருப்பதற்கிடமான
திரு கோவில் கண்டீர்‘–திருக் கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்
பங்கப்படாத–பரிபவப் படாமல்
உய்யப் போமின்–பிழைத்துப் போங்கள்.
பண்டு அன்று பட்டினம் காப்பு–

மங்கிய வல் வினை நோய்காள்
நான் உரு மாயும்படி பண்ணக் கடவ பிரபல பாப பலமான வியாதிகாள்
விபஜிக்க ஒண்ணாத படி கிடக்கிற பாபங்கள் என்னவுமாம் –

நீங்கள் இங்குப் புகுராதே கொள்ளுங்கோள்
வீப்சையாலே தனித் தனியே நியமிக்கிறமை தோற்றுகிறது

உமக்கும் ஓர் வல் வினை கண்டீர்
உங்களுக்கும் வலிய விரோதி கிடி கோள்
மிருத்யுவுக்கும் மிருத்யு கிடி கோள்

இங்குப் புகேல்மின் புகேல்மின்
இவற்றின் நெஞ்சில் படுகைக்காகப் பலகாலும் சொல்லுகிறார்

இங்கு என்று
திருப் பல்லாண்டில் அந்வயம் யுடையாரையும் கூட்டுகிறார் என்று பட்டர்

எளிதன்று
உங்களுக்கு இவ்விடம் ஸூலபம் அன்று
அது என் என்ன

கண்டீர்
ஹிரண்யன் பட்டபடி கண்டி கோளே

புகேல்மின்
ஆன பின்பு புகுராதே கொள்ளுங்கோள்

சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
ஸிம்ஹம் கிடக்கிற முழஞ்சிலே புகுவார் உண்டோ
ஸ்ரீ நரஸிம்ஹ ரூபியாய் ஆஸ்ரிதற்கு உதவினால் போல்
எனக்கும் உதவி என்னை அடிமை கொண்டவன்
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ விமானம் கிடி கோள்

பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே
பரிபவப் படாதே பிழைத்துப் போகப் பாருங்கோள்
பண்டு போல் உங்களுக்கு எளிது அன்று
பட்டினம் காவலுடைத்து –

————-

தேவ கார்யம் செய்தால் போல்
என் காரியமும் செய்வதாக வந்து புகுந்தான் –
சுக்ராதிகள் பட்டது படாதே போங்கோள் என்று
இந்த்ரியங்களுக்குச் சொல்லுகிறார் –

மாணிக் குறள் உருவாய மாயனை என் மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்களுள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே – 5-2- 5-

பதவுரை

மாணி–பிரமசாரி வேஷத்தை யுடைய
குறள் உரு–வாமனாய் அவதரித்தவனும்
மாணிக்கப் பண்டாரம்–மாணிக்க நிதி போல் இனியவனும்
மாயனை–ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை
பேணி–ஆசைப் பட்டு
கொணர்ந்து–எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து
என் மனத்துள்ளே–என் நெஞ்சினுள்ளே
புகுத–புகுந்திருக்கும்படி
பிறிது இன்றி–வேற்றுமை யில்லாமல்
வைத்துக் கொண்டேன்–அமைத்துக் கொண்டேன்.
வலி வல் குறும்பர்கள் உள்ளீர்–மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே!
நடமின்–(வேறிடந்தேடி) ஓடுங்கள்;
பாணிக்க வேண்டா–தாமதிக்க வேண்டியதில்லை,
பண்டு அன்று பட்டினம் காப்பு–

மாணிக் குறள் உருவாய மாயனை
இரப்பிலே தகண் ஏறி
நிரதிசய போக்யனுமாய்
தன் குண சேஷ்டிதங்களில் ஆச்சர்யத்தாலே அவனை வஸீ கரித்தவன்

மாணி -அழகு என்னவுமாம்

குறள் -சேர்ப்பால் போலே

உருவாய மாயன் -மாயம் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –

என் மனத்துள்ளே பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
என் நெஞ்சுக்கு உள்ளே ஸ்நேஹத்தோடே வைத்துக் கொண்டேன்

பேணுதல் -ஆசைப்படுத்தல்

ஆதரம் ஆகவுமாம்

பிறிதின்றி-
இரண்டு இன்றி
வேறு இன்றி என்றபடி

மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
உலகு அளந்த மாணிக்கம் (திரு விருத்தம் )என்கிறபடியே
நீல ரத்ன பண்டாரம் கிடி கோள்

வலி வன் குறும்பர்களுள்ளீர்
மிகவும் வலியராய் மூலையடியே நடந்து திரிகிற இந்திரியங்கள்
ஆகிற குறும்பராய் உள்ளீர்

வலி -பலம்

வன்மை -தொன்மை கேடு

குறும்பர் -கள்ளர்
ஏஷ இந்திரிய தஸ் யூநம்
கோவாய் இத்யாதி

பாணிக்க வேண்டா நடமின் விளம்பிக்க வேண்டா
கால் வாங்கிப் போங்கோள்

அது என் என்ன
பண்டன்று பட்டினம் காப்பே
பண்டு போலே இது அராஜகம் அன்று
ஸ ராஜகமாய்த்து என்கிறார் –

————-

பசுக்களை நோக்கினால் போலே என்னையும் நோக்குவதாக
கிருஷ்ணன் வந்து என் ஹிருதயத்திலே புகுந்தான்
நீங்கள் நலிவு படாதே போங்கோள் என்று
நோய்களைப் பார்த்துச் சொல்லுகிறார் –

உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றம் கண் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
அற்றம் உரைகின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே – 5-2- 6-

பதவுரை

உற்ற–நெடு நாளாக இருக்கிற
உறு பிணி–மிக்க வருத்தத்தைச் செய்கிற
நோய்காள்–நோய்களே!
உற்ற நோய்கள்–உறு பிணிகாள் -இரண்டும் மிக்க கொடுமையால்
உமக்கு–உங்களுக்கு
ஒன்று–ஒரு வார்த்தை
சொல்லுகேன்–சொல்லுகிறேன்:
கேண்மின்–கேளுங்கள்;
(நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது)
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்–பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளி யிருக்கைக்கு இடமான
திருக் கோயில்–திருக் கோயிலாயிற்று;
கண்டீர்–முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் பாருங்கள்;
ஆழ்–(ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின
வினை காள்–ஓ கொடுமைகளே!
இன்னம்–மறுபடியும்
அற்றம் உரைக்கின்றேன்–அறுதியாகச் சொல்லுகிறேன்;
உமக்கு–உங்களுக்கு
இங்கு–இவ்விடத்தில்
ஓர் பற்று இல்லை–ஒருவகை அவலம்பமும் கிடையாது;
நடமின்–(இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள்.
பண்டு அன்று பட்டினம் காப்பே–

உற்ற உறு பிணி நோய்காள்
அநாதி காலமே பிடித்து என்னை விடாதே வலி செய்கிற
துக்க ஹேதுவான நோய்காள்
பிணி -துக்கம்
நோய் -வியாதி

உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின்
உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன்
புத்தி பண்ணிக் கேளுங்கோள்
அது ஏது என்ன

பெற்றம் கண் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
பசுக்களை மேய்க்குமவனாய்
ஆஸ்ரிதர் விஷயத்தில் உபகாரத்தையே தனக்கு நிரூபகமாய் யுடையனான
கிருஷ்ணன் ஆதரித்து வர்த்திக்கிற திவ்ய விமானம் கிடி கோள்

அற்றம் உரைகின்றேன் இன்னம்
இன்னம் உங்களுக்கு அறுதி சொல்லுகிறேன்

ஆழ் வினைகாள்
நான் தரைப்படும் படி கொண்டு மூழ்த்துகிற நோய்காள்

உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர் நடமின்
உங்களுக்கு இங்கு ஒரு அவலம்பம் இல்லை கிடி கோள்
நீங்கள் போக அமையும்

பண்டன்று பட்டினம் காப்பே
அவன் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மாஸூச என்ற இன்று
பண்டு போல் அன்று
இது காவல் உடைத்து –

———-

என்னுடைய விஷய ப்ராவண்யத்துக்கு அடியான
பாபத்தைப் போக்கி ரக்ஷித்தான் -என்கிறார்

கொங்கை சிறுவரை என்றும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல்வினை யாயின மாற்றி
பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே -5 -2-7 –

பதவுரை

சிறு வரை–சிறிய மலை போன்ற
கொங்கை என்னும்–முலைகளாகிற
கொங்கை என்றும் சிறிய இடை என்றுமாம்
பொதும்பினில்–பொந்தில்
வழுக்கி வீழ்ந்து–வழுக்கி விழுந்து
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு–(நரகமென்கிற) பர லோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து
அழுந்திக் கிடந்த–(அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து
உழல்வேனை–(திரியப் போகிற என்னுடைய)
வல் வினை ஆயின–தீவினைகளா யிருப்பவைகளை
வங்கம் கடல் வண்ணன் அம்மாள்–கப்பல்களை யுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான்
மாற்றி–போக்கி யருளி
பங்கப்படா வண்ணம்–பரிபவப் படாதபடி
செய்தான்–செய்தருளினான்;
பண்டு அல்லது பட்டினம் காப்பு–

கொங்கை சிறுவரை என்றும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
முலையாகிய சிறு வரை
சிறிதான மலைகள் என்கிற குழியிலே வழுக்கி விழுந்து
சிறு வரை -தாழ்வரை என்னவுமாம்

அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை
அம்மலை அருகே யுண்டானதொரு பாழியிலே பிரவேசித்துக்
கால் வாங்க மாட்டாதே தடுமாறுகிற என்னை

வங்கக் கடல் வண்ணன் அம்மான்
மரக்கலங்களை யுடைத்தான கடல் போலே
ஸ்ரமஹரமாய் அழகியதான வடிவு அழகாலே என்னை அடிமை கொண்ட என் ஸ்வாமி

வல்வினை யாயின மாற்றி
விஷய ப்ராவண்யத்துக்கு அடியான பாபங்களை போக்கி

பங்கப் படா வண்ணம் செய்தான்
என்னைப் பரிபவப்படாத படி பண்ணினான்

பண்டன்று பட்டினம் காப்பே
முன்பு போலே அன்று
இது காவல் உடைத்து –

—————–

ஆச்சார்யனாய் நின்று
அஞ்ஞாத ஞாபகன் ஆனான் என்கிறார் –
(அறியாதன அறிவித்த அத்தா )

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –

பதவுரை

பீதக ஆடை பிரானர்–திருப் பீதாம்பரத்தை யுடையவனான எம்பெருமான்
பிரமகுரு ஆகிவந்து–ப்ரஹ்மோபதேசம் பண்ணக் கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி
போது இல்–அறிவுக்கு இருப்பிடானதும்
வல்–அந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையை யுடையதுமான
நெஞ்சம் கமலம்–ஹ்ருதய கமலத்தினுள்
1-1புகுந்து–பிரவேசித்து
என் னுள்ளே–எனது (அந்த) ஹிருதயத்தில்
ஏதங்கள் ஆயின எல்லாம்–தோஷங்களாக இருப்பவற்றை யெல்லாம்.
இறங்க விடுவித்து–நீக்கி
என்–என்னுடைய
சென்னித் திடரில்–தலையினிது
பாத விலச்சினை–ஸ்ரீபாத முத்திரையை
வைத்தார்–ஏறி யருளப் பண்ணினான்
பண்டு அன்று பட்டினம் காப்பு-

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து
ஏதம் -குற்றம்

குற்றங்கள் ஆனவை எல்லாம் -அவை யாவன
1-தேஹாத்ம அபிமானம்
2-அந்நிய சேஷத்வம்
3-ஸ்வ ஸ்வா தந்த்ரம்
4-ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்தி
5-ஸ்வ பிரயோஜனம்
இவை எல்லாவற்றையும் வாஸனையோடே நசித்துப் போம்படி பண்ணி

என்னுள்ளே
இப்படி நிர்தோஷமான என் நெஞ்சுக்கு உள்ளே

பீதக வாடைப் பிரானார்
பொற்கென்ற திருப் பீதாம்பரத்தை யுடைய உபகாரகர்

பிரம குருவாகி வந்து
ப்ரஹ்ம உபதேஷடாவான ஆச்சார்யராக வந்து
ஆச்சார்யனான விக்ரஹத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டு வந்தாய்த்து திருத்துவது

போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும்
ஹ்ருதய கமலமாகிற புஷ்பத்திலே என்னுதல்
ஹ்ருதய கமலத்தில் ஞானத்துக்கு இருப்பிடமான வலிய நெஞ்சு என்னுதல்

வன்மை
பகவத் வைமுக்யத்தால் வந்த வன்மை
தாமே ஆபி முக்யத்தை விளைத்துக் கொடு வந்து புகுந்து

என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார்
என் தலை யாகிய நீர் ஏறா மேட்டிலே தம் திருவடிகளாகிற
கால் ஏறிப் பாயும் படி திருவடி நிலைகளை வைத்தார்
கதா புந –இத்யாதி

பண்டு அன்று பட்டினம் காப்பே
முன்பு போல் அன்றிக்கே
இப்போது ஆச்சார்ய அபிமானத்தாலே ரக்ஷையை யுடைத்து
நீங்கள் போங்கோள் என்கிறார் –

———-

கீழ் தமக்கு அவன் காவலான படி சொன்னார்
தாம் அவனுக்கு காவலான படி சொல்கிறார் இதில்

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே யழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி யறை குறிக் கொள்மின் -5 -2-9 –

பதவுரை

ஒண் சுடர்–அழகிய தேஜஸ்ஸை யுடைய
ஆழியே–திருவாழி யாழ்வானே!
எறி–(எம்பெருமானால்) வீசப் படுகின்ற
நாந்தக வாளே!–நந்தகமென்கிற திருக் குற்றுடை வாளே!
அழகிய சார்ங்கமே–அழகு பொருந்திய சார்ங்கமே–சார்ங்கமென்கிற தநுஸ்ஸே!
தண்டே–(கௌமோதகி என்கிற) கதையே!
இருந்த–(எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இரா நின்ற
எண்மர் உலோக பாலீர்காள்–அஷ்ட திக்குப் பாலகர்களே!-இவர்கள் லீலா விபூதியில் உள்ளவர்கள்
இறவு படாமல்–தப்பிப் போகாமல்
சங்கே–ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே!
அற–(ஆச்ரித விரோதிகளின் உடல்) அறும்படி
உறகல் உறகல் உறகல்–உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்–

உறகல் உறகல்
உறங்காதே கொள்ளுங்கோள் -என்று பலகாலும் சொல்லுகிறார் இறே
அநவதாநம் (கவனக்குறைவு) வாராமைக்காக

யாரைத் தான் இப்படி உணர்த்துகிறது என்னில்
அ நிமிஷரான நித்ய ஸூரிகளை யாய்த்து

அவர்களையும் உறங்காதே கொள்ளுங்கோள் என்று நியமிக்கும் படி யாயிற்று
இவருடைய பரிவின் மிகுதி

ஒண் சுடர் ஆழியே
அழகிய பிரபையை யுடைய திருவாழி

சங்கே
வேறே ஒரு விசேஷணம் இட்டுச் சொல்ல ஒண்ணாத அழகை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்

அறவெறி நாந்தக வாளே
சத்ரு சரீரங்கள் அறும் படியாக எறியப்படுவதாய் நாந்தகம் என்னும்
திரு நாமத்தை யுடைய வாளாகிற திவ்ய ஆயுதம்

யழகிய சார்ங்கமே
அழகை யுடைய ஸ்ரீ சார்ங்கம்

தண்டே
அப்படிப்பட்ட கதை

ஆக
திவ்ய ஆயுதங்களையும் காவலாக அடைத்து
அதுக்கும் மேலே
திக் பாலர்களையும் காவலாக அடைக்கிறார்

இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள்
லோகங்களுக்கு அழிவு வராதபடி சர்வேஸ்வரனாலே திக் பாலநத்திலே நியோகிக்கப் பட்டு
பாலனத்தையே நிரூபகமாக யுடைய இந்த்ராதிகள் எட்டுப் போரையும் சொல்லுகிறது

இவர்களும் போராது என்று பெரிய திருவடியைத் தனிக்காவலாக அடைக்கிறார்
பறவை அரையா
பறவைக்கு அரசே -நீ -உறங்காதே கொள்

உறகல் பள்ளியறை குறிக் கொள்மின்
திருப்பள்ளி அறையைக் குறிக் கொண்டு நோக்கிக் கொள்

பள்ளி அறை என்கிறது
திருமேனியை இறே

—————-

தம்முடைய திருமேனி திருப்பள்ளி அறையான படி சொல்லுகிறார் –

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5- 2-10 –

பதவுரை

அரவத்து அமளியினோடும்–திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும்
அரவம் அத்து சரிகை
அழகிய பால் கடலோடும்–அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட
அரவிந்தப் பாவையும் தானும்–செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும்
வந்து– எழுந்து அருளி
அகம்படி–(எனது) உடம்பாகிற ஸ்தானத்தில்
புகுந்து–பிரவேசித்து,
பரவை–(அந்தத்) திருப்பாற்கடலினுடைய
பல திரை–பல அலைகள்
மோத–தளும்ப
பள்ளி கொள்கின்ற–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பிரானை–உபகாரகனான எம்பெருமானை
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
பட்டினம் காவல் பொருட்டே- ஆத்ம ரக்ஷண நிமித்தமாக
பரவுகின்றான்–போற்றுகின்றார்–

அரவத்து அமளியினோடும்
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையோடும்

அழகிய பாற் கடலோடும்திருப்பாற் கடலோடும்
சர்வேஸ்வரன் பள்ளி கொண்டு அருளுகையாலே வந்த அழகு என்கை

அரவிந்த பாவையும் தானும்
தாமரைப்பூவை பிறப்பிடமாக யுடையவள் ஆகையாலே
நிரதிசய போக்யையாய்
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை யுடைய
பெரிய பிராட்டியாரும்

தானும்
அவளுக்குத் தகுதியான
தானும்

அகம்படி வந்து புகுந்து
அடியார் குழாங்களுடனே வந்தாய்த்து புகுந்தது

பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
இப்படிப் புகுந்து
கடலிலே அலை கேட்க்கும் படி பள்ளி கொள்ளுகிற உபகாரகனை

பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே
உபகார ஸ்ம்ருதியாலே அக்ரமமாக ஏத்த
அது தானே பிரபந்தமாய்த் தலைக் கட்டின இத்தனை

திருப்பல்லாண்டில் தொடங்கின
மங்களா ஸாஸனத்தை
இங்கே நிகமிக்கிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–1–வாக்குத் தூய்மை யிலாமையினாலே–

September 3, 2021

அவதாரிகை –
கீழில் திரு மொழியில் –
சொல்லலாம் போதே உன்னாமம் எல்லாம் சொல்லினேன் -என்று
திரு நாமத்தின் போக்யதையை அனுபவித்தார் –

இத்தை அநாதி காலம் இழைக்கைக்கு அடி என் -என்று பார்த்தவாறே –
அதுக்கு ஹேது
இதர விஷயங்களிலே ப்ராவண்யமாகையாலே யாயிருந்தது -என்று வெறுத்து
இப்படி அயோக்யனான நான் இவ்விஷயத்திலே இழிந்து
அத்தை தூஷித்தது என் -என்றும்
அத்தைப் பொறுத்து அருள வேணும் என்றும்
க்ஷமை கொள்ளா நின்று கொண்டு
அவன் போக்யதையிலே தம்முடைய கரணங்கள் மேல் விழுகிறபடியை அருளிச் செய்கிறார் –

————

நான் அஸூத்தன் என்று அகலா நிற்க
என்னுடைய ஜிஹ்வை உன் பக்கலிலே மேல் விழா நின்றது என்கிறார் –

வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1- 1-

பதவுரை

மாதவா–ஸ்ரீ ய: பதியானவனே!
நாரணா–(உலகங்கட்கெல்லாம்) ஆதி காரணமானவனே!
கருளன்–பெரிய திருவடியை
கொடியானே–த்வஜமாக வுடையவனே!
வாக்கு–(என்னுடைய) வாய் மொழிக்கு
தூய்மை இலாமையினாலே–பரி சுத்தி இல்லாமையால்
உன்னை–(ஹேய ப்ரதிபடனான) உன்னை
வாய் கொள்ள மாட்டேன்–வாய் கொண்டு துதிக்க யோக்யதை அறற்வனா யிரா நின்றேன்
(வெறுமனே கிடப்போமென்று பார்த்தாலும்)
நாக்கு–(ரஸமறிந்த எனது) நாக்கானது
நின்னை அல்லால்–உன்னை யொழிய மற்றொருவரை
அறியாது–(வாய்க் கொள்ள) அறியாது;
அது–அசுத்தமான நாக்கு இங்ஙனே உன் பக்கம் ஈடுபடா நின்றதைக் குறித்து
நான் அஞ்சுவன்–நான் அஞ்சுகின்றேன்;
(அது) அந்த நாக்கானது
என் வசம் அன்று–எனக்கு வசப்பட்டு நிற்பதன்று;
இவன் மூர்க்கு பேசுகின்றான் என்று–“இவன் மூடர் பேசும் பேச்சைப் பேசா நின்றான்” என்று திருவுள்ளம் பற்றி
முனிவாயேலும்–நீ சீறி யருளினாலும்
என் நாவினுக்கு ஆற்றேன்–என்னுடைய நாக்கின் பதற்றத்தை நான் ஸஹகிக்க வல்வேனல்லேன்;
காக்கை வாயிலும்–காக்கையினுடைய வாயிலுண்டான சொல்லையும்
கட்டுரை–நற் சொல்லாக
கொள்வர்–(அறிவுடையார்) கொள்ளுவார்கள்–

வாக்குத் தூய்மை யிலாமையினாலே –
உன்னை அனுசந்திக்கைக்கு கரணமான வாக்குக்கு ஸூத்தி இல்லாமையாலே

வாக்குக்கு அஸூத்தியாவது
1-பகவத் ஸந்நிதியில் அஸத்யம் சொல்லுகையும்
2-பர ஸ்தோத்ரம் பண்ணுகையும்
3-ப்ரயோஜனத்துக்காக பகவத் ஸ்தோத்ரம் பண்ணுகையும்

வாக்கு -சொலவு

மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
ஸ்ரீ யபதியான உன்னை என் வாக்குக்கு விஷயம் ஆக்க விளையா )இளையா) நின்றேன்

ஆனால் தவருகிறீர் என்ன

நாக்கு நின்னை அல்லால் அறியாது
ரஸந இந்த்ரியமானது
ஸர்வ ரஸமான உன்னை அல்லது அறியாது –
அது விஷயாதீனமாய்ப் புறம்பு ஒன்றும் அறிகிறதில்லை

ஆனால் நீரும் அத்தோடே கூடினாலோ என்ன

நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
நான் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து அஞ்சா நின்றேன்
அது ரஸநை யாகையாலே மேல் விழா நின்றது
என் வசத்தில் வருகிறது இல்லை

இங்கன் சொல்லப் பெறுமோ என்ன

மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும்
என் பாசுரத்தைப் பார்க்கில்
மூர்க்கர் சொல்லும் பாசுரம் போலே தோற்றி
நீ சீறினாயே யாகிலும்

என் நாவி னுக்காற்றேன்
உன் முனிவுக்கு ஆற்றலாம்
என் நாவுக்கு ஆற்றப் போகாது
என்னால் தகையைப் போகிறது இல்லை
ஆனால் அது நமக்கு அவத்யம் ஆகாதோ என்னில்

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்
பெரியவர்கள் குற்றமாகக் கொள்ளாத அளவன்றிக்கே -குணமாகக் கொள்வார்கள்
காகமானது தனக்கு வேண்டியபடி கூப்பிடவற்றை
அறிவுடையார் தங்களுக்கு நன்மைக்கு ஹேது என்று கொள்வார்கள்

கட்டுரை
நற் சொல்லு

அப்படியே நான் வேண்டிற்றுச் சொன்னவற்றையும் குணமாகக் கொள்ள வேணும்

நமக்கு அப்படி செய்ய வேண்டுகிறது என் என்ன

காரணா கருளக் கொடியானே
உடையவன் ஆகையாலே எல்லாம் பொறுக்க வேணும்
இதுக்கு உத்பாதகன் அவன் அல்லையோ

1-இல்லாதவற்றை அடைய உண்டாக்குகைக்கும்
2-அபராத ஷாமணத்துவத்துக்கும்
3-ரக்ஷகத்துவத்துக்கும் கொடி கட்டி இருக்குமவன் அல்லையோ –

————

உனக்கு அடிமையான நான்
அயோக்கியமான நாவாலே சொன்ன இத்தைப் பொறுத்து அருள வேணும் என்கிறார் –

சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -5- 1-2 –

பதவுரை

சங்கு சக்கரம் ஏந்து கையானே!
ஊழி–பிரளயக் காலத்தில்
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–திரு வயிற்றில் வைத்துக் கொண்டு (பின்பு பிரளயம் கழிந்தவாறே)
உமிழ்ந்தானே (அவற்றை) வெளிப்படுத்தினவனே!
சழக்கு நாக்கொடு–பொல்லாத நாக்கினால்
புன் கவி–அற்பமான பாசுரங்களை
சொன்னேன்–நான் சொன்னேன்;
பிழைப்பர் ஆகிலும் (தாஸ பூதர்கள்) பிழை செய்தவர்களே யாகிலும்
தம் அடியார்–தமக்கு அடிமைப்பட்ட அவர்களுடைய
செயல்–சொல்லை.
பொறுப்பது–பொறுத்தருளுகை
பெரியோர் கடன் ஆனதே–பெருந்தன்மை யுடையவர்களுக்கு கடமை யன்றோ
நின் கண் அல்லால் மற்று விழிக்கும் கண் இலேன்–உன்னுடைய கடாஷம் அல்லால்
வேறு ஒருவருடைய கடாஷத்தை (ரஷகமாக) உடையேனல்லேன்;
(அன்றியும்)
வேறு ஒருவரோடு–மற்று ஒருவர் பக்கலிலும்
என் மனம்–என் நெஞ்சானது
பற்றாது–பொருந்த மாட்டாது
உழைக்கு–புள்ளிமானுக்கு
ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்–ஒரு புள்ளி (ஏறுவது) குற்றமதன்றோ?

சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன்
பிறரை முன்பு ஸ்துதித்துப் போருகையாலே
அஸூத்த மான நாவைக் கொண்டு
புல்லிதான கவிதைகளை சொன்னேன்
(காலத்தாலும் இடத்தாலும் முன்பு
அவனுக்கு முன்பே என்றுமாம் )

சழக்கு –பொல்லாங்கு

புன்கவி -உனக்கு அநர்ஹமாய் இருக்கை

சொன்னேன் –
நெஞ்சிலே நினைக்கவும் கூட அவத்யமாய் இருக்க
அதுக்கும் மேலே
சொல்லுவதும் செய்தேன்

சங்கு சக்கரம் ஏந்து கையானே
கையும் ஆழ்வார்களுமான அழகைப் பேச நான் அர்ஹனோ –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டிய கையில்
பூ ஏந்தினால் போலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திரு வாழியையும் தரித்தவனே

இப்படி அறிந்து வைத்தும் சொல்லிற்று என் கொண்டு என்ன

பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் என்றே
தப்பச் செய்தார்களே யாகிலும்
அநந்யார்ஹ சேஷ பூதர் செய்தவற்றைப் பெரியோருக்குப் பொறுக்கை உசிதம்
என்று நினைத்துச் சொன்னேன்

இங்கனம் செய்ய வேண்டுகிறது என்
உமக்குப் புறம்பு விஷயம் இல்லையோ என்ன

விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால்
உன்னுடைய குளிர்ந்த கடாக்ஷம் ஒழிய
வேறு குளிர நோக்குவாரை உடையேன் அல்லேன்

வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
நீ குளிர நோக்காது ஒழிந்தாலும்
வகுத்த உன்னை ஒழிய
என் மனஸ்ஸூ புறம்பு பற்றாது

ஆனால் உம்மைக் கைக்கொள்ளுகை நமக்கு அவத்யம் அன்றோ என்ன

உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே
அது நமக்கு அவத்யமாகாது
அபராத சஹன் -என்றதுவே உனக்கு நிரூபகமாம் என்கிறார்
புள்ளிமானுக்கு ஒரு புள்ளி ஏறி என் குறைந்தால் என்
சர்வாத்மாக்களுடையவும் அபராதங்களைப் பொறுக்கிற உனக்கு
என்னுடைய அபராத ஷாமணம் அவத்யமாகப் புகுகிறதோ

அதவா
இது உமக்கு அவத்யம் அன்றோ நாம் பொறுத்தாலும் என்ன

உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய்
புள்ளிமானுக்கு ஒரு புள்ளி ஏறி ஏறி என் குறைந்தால் என்
முன்பே சாபராதி
அத்தோடு இதுவும் கூட தேவரீர் க்ஷமைக்கு விஷயம் ஆகிறது என்றுமாம்

(தாரை -பெருமாளை அப்ரமேயஸ்ய -ச -ஜிதேந்த்ரிரஸ்ய ச –உத்தம தார்மிக –ஷிதி ஷாமாவான்
-ச -என்று சொல்லாமல்
பொறுப்பவன் இதற்கும் பொறுப்பானே
அதே போல் இங்கும் )

நாம் அப்படி அங்கீகரித்தது உண்டோ என்ன

ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே
சம்சாரிகளில் உனக்கு அபராதம் பண்ணாது இருப்பார் உண்டோ
அத்தைப் பாராதே யன்றோ
அவர்களை வயிற்றிலே வைத்துப் புறப்பட விட்டு ரஷித்தது
அப்படியே இதுவும் செய்து அருள வேணும் —

—————

உம்முடைய அடிமைக்கு அடி ஏது என்ன
உன் கோயிலில் வாழும் வைஷ்ணவன் என்னும் வன்மை என்கிறார் –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –

பதவுரை

திருமாலே–ஸ்ரீய: பதியானவனே!
நாரணா என்னும் இத்தனை அல்லால்–‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய
நன்மை தீமைகள் ஒன்றும்–(வேறு) நன்மை தீமை ஒன்றையும்
அறியேன்–அறிகிறேனில்லை.
புன்மையால்–(எனக்கு இயற்கையாக உள்ள-ப்ரயோஜனாந்தர நசையாலே ) அற்பத் தனத்தினால்
உன்னை–உன்னைக் குறித்து
புள்ளுவம் பேசி–வஞ்சகமான சொற்களைச் சொல்லி
புகழ்வான் அன்று கண்டாய்–புகழுவனல்லன் (அடியேன்)
உன்னை–உன்னை
உன்னும் ஆறு–இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத் தக்க வழிகளில்
ஒன்றும்–ஒரு வழியையும்
அறியேன்–அறிந்தேனில்லை;
ஓவாறே–(ஒரு நொடிப் பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்)
நமோ நாராயணா என்பன–நமோ நாராணாய என்னா நின்றேன்
வன்மை ஆனது–அடியேனுக்கு மிடுக்காவது
உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும்–உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு
இங்கு ஸ்ரீ ரெங்கம் இல்லை பகவத் சன்னிதானம் என்றவாறு
கண்டாய்–முன்னிலை யசைச் சொல்-

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
நான் திரு நாமத்தைச் சொல்லுகை அத்தலைக்கு நன்மையாய்த் தலைக்கட்டு கிறதோ
தீமையாய்த் தலைக்கட்டு கிறதோ
அறிகிறிலேன்

நாரணா என்னும் இத்தனை அல்லால்
நல்கத்தான் ஆகாதோ நாரணனை-என்று சொல்லுகிறபடியே
இந் நாராயண பதத்துக்கு அபராத ஸஹத்வம் அர்த்தமாகிறது
அபராதங்களைப் பொறுக்கைக்குத் திரு நாமமாக உடையவனே என்னுமது ஒழிய

புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய்
தண்மையாலே சர்வாதிகனான யுன்னைக் கிருத்ரிமம் சொல்லிப் புகழுமவன் அல்லேன்

திருமாலே
பிராட்டி முன்னாக இழிந்த எனக்கு
அபராததுக்கு அஞ்ச வேணுமோ

உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன்
ஸாஸ்த்ர யுக்தமான க்ரமத்திலே உன்னை அனவரத பாவனை பண்ண அறிகிறிலேன்

ஓவாதே நமோ நாரணா என்பன்
அநந்ய ப்ரயோஜநன் ஆகையால்
ஒரு காலும் இடைவிடாதே திரு மந்த்ரத்தை அர்த்த ஸஹிதமாக அனுசந்திப்பேன்

வன்மை யாவது
எனக்குப் பலமாக உள்ளது

உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் –
உன் எல்லைக்கு உள்ளே வர்த்திக்கிறோம் என்னும் பலம் இறே எனக்கு உள்ளது
பவத் விஷய வாஸிந -என்னக் கடவது இறே
பகவத் அபிமானம் உள்ள தேசத்திலே
வர்த்திக்கை இறே
இவ்வாத்மாவுக்குத் தஞ்சம் –

———-

அத்தேச வாசத்தாலே தமக்கு உண்டான
அநந்ய ப்ரயோஜனத்வத்தை அருளிச் செய்கிறார்

நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கு அங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே -5 -1-4 –

பதவுரை

நெடுமையால்–(குறிய மாணுருவை மாற்றி) நெடுக வளர்ந்ததனால்
உலகு எழும்–எல்லா வுலகங்களையும்
அளந்தாய்–அளந்தருளினவனே!
நின்மலா–பரிசுத்தமானவனே!
நெடியாய்–(அனைவர்க்கும்) தலைவனானவனே!
கொடுமை கஞ்சனை–கொடிய கம்ஸனை
கொன்று–உயிர்க் கொலை செய்து,
நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே–உனது தந்தையாகிய வஸுதேவருடைய காலில்
பூட்டப்பட்டிருந்த வலிய விலங்கின் பூட்டை தறித்துப் பொகட்டவனே!
அடியேனை–(உனக்கு) அடிமைப்பட்டுள்ள என்னை
குடிமை கொள்வதற்கு–கிங்கரனாகக் கொள்வதற்கு
ஐயுறு வேண்டா–ஸந்தேகிக்க வேண்டியதில்லை;
கூறை சோறு இல்லை–இக் கூறையையும் சோற்றையும்
வேண்டுவது இல்லை–(நான் உன்னிடத்து) விரும்புகிறேனில்லை;
அடிமை என்னும்–அடிமை யென்ற
அ கோயின்மையாலே–அந்த ராஜகுல மாஹாத்மியத்தினால்
அடிமையை அரசனாக இருப்பதே ஸ்வரூபம்
அவை–அக்கூறை சோறுகள்
அங்கு அங்கு–அவ்வவ் விடங்களில்
போதரும்–(தாமாகவே) கிடைக்கும்
(கண்டாய்- முன்னிலை யசைச் சொல்.)

நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய்
ஏக ரூபமான வடிவை அபரிச்சேதயமாக்கி வியாபித்து
ஸர்வ லோகங்களையும் அளந்து கொண்டவனே

நின்மலா
ஸ்வ ப்ரயோஜன ராஹித்யத்தால் வந்த நைர்மல்யம் –

நெடியாய்
அநாஸ்ரிதற்குக் கிட்ட ஒண்ணாமையால் வந்த அபரிச்சேதயத்தைச் சொல்லுகிறது

அடியேனை குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா
உனக்கு அநந்யார்ஹன் ஆகையாலே
அநந்ய ப்ரயோஜனான என்னை
ஸ்வரூப அனுரூபமான விருத்தியைக் கொண்டு அருளுகைக்கு சந்நே ஹிக்க வேண்டா
நான் அநந்ய பிரயோஜனன் என்ன

அது எங்கனே கூடும்படி
தேஹ யாத்ரை உமக்கு வேண்டாவோ என்ன

கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
நான் அன்ன பாநாதிகளால் தரிக்குமவன் அல்லேன்
கைங்கர்ய ஏக தாரகன் நான்

சேஷ பூதனுக்கு சேஷ பூத விருத்தியே தாரகாதிகள் இருக்கும் இறை
தேஹாதி விலக்ஷணன் ஆகையாலே சப்தாதிகள் தாரகங்கள் ஆகாது
பரதந்த்ரன் ஆகையாலே ஸ்வ அனுபவமும் அன்று
ஸ்வரூபம் நித்யமாகையாலே ஸ்வரூப விச்சேதமும் நித்ய ஞானாதி குண கத்வாத் குண வி நாஸமும் அன்று
புருஷார்த்தம் அன்று என்றதாய்த்து

ஆனால்
நாம் உமக்கு செய்ய வேண்டுவது என் –

அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கு அங்கே அவை போதரும் கண்டாய்
உனக்கு சேஷ பூதன் என்கிற ராஜ குலத்தாலே
அந்த அந்தக் கைங்கர்யங்களே எனக்கு தாரகாதி ஸகல புருஷார்த் தங்களும் ஆகையால்
நின்னையே தான் வேண்டி -இத்யாதி

கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே
அக் கைங்கர்ய விரோதிகளான இதர புருஷார்த்தங்களில் சங்கங்களையும்
அதுக்கு அடியான கர்மங்களையும்
க்ரூரனான கம்சனை நிரஸித்து
உனக்குப் பிதாவான ஸ்ரீ வாஸூ தேவர் காலில் வலிய விலங்கை வெட்டி விட்டால் போலே
போக்கி அருள வேணும் என்கிறார் –

————

எனக்கு கிருஹ ஷேத்ராதிகளான ஸர்வ ஐஸ்வர்யங்களும்
உன் திருவடிகளே என்கிறார் –

தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பு வகுத்து கொண்டு இருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –

பதவுரை

கேழல் ஒன்று ஆகி–ஒப்பற்ற வராஹ ரூபியாய்க் கொண்டு
கோடு–(தனது) கோரப் பல் நுனியில்
மண் கொண்ட–பூமியைத் தாங்குகையாகிற
கொள்கையினாளே–கால பாவத்ந யுடையவனே
குஞ்சரம்–(குவலயாபீடமென்ற) யானையானது
வீழ–முடியும்படி
கொம்பு–(அதன்) தந்தத்தை
ஓசித்தானே–முறித்தெறிந்தவனே!
தோட்டம்–தோட்டமும்
இல்லவள்–மனைவியும்
ஆ–பசுக்களும்
தொழு–மாட்டுத் தொழுவமும்
ஓடை-குளமும்
துடவையும்–விளை நிலமும்
கிணறும் இவை எல்லாம்–கிணறுமாகிற இவை யெல்லா வற்றையும்
வாட்டம் இன்றி–குறைவில்லாமல்
அடியேன்
உன் பொன் அடி கீழே–உனது அழகிய திருவடியிலே
வளைப்ப வகுத்துக் கொண்டிருந்தேன்–திரள வகுத்துக் கொண்டிரா நின்றேன்
எனக்கு–(எல்லாம் உன் திருவடியே என்றிருக்கிற) எனக்கு
நாடு மானிடத்தோடு–நாட்டிலுள்ள மநுஷ்யரோடு
அரிது–(ஸஹ வாஸம் செய்வது) அஸஹ்யம்;
பலர்–பல பேர்
நச்சுவார்–(இந்த ஸஹவாஸத்தை) விரும்புவர்கள்-

தோட்டம்
ஸஸ்யங்களுக்கு கிருஷி பண்ணும் இடம்

இல்லவள்
க்ரஹணி


பசு

தொழு
பசு நிற்கும் பிரதேசம்

ஓடை
குளம்

துடவையும்
விளை நிலம்

கிணறும்
துரவு

இவை எல்லாம் வாட்டம் இன்றி
இவை ஒன்றும் குறையாமல்

உன் பொன்னடிக் கீழே வளைப்ப அகம் வகுத்து கொண்டு இருந்தேன்
இனி உமக்கு ஒரு குறை இல்லையே என்ன
ஒரு குறை உண்டு
அது ஏது என்ன

நாட்டு மானித்தொடு எனக்கரிது
உன்னை ஒழியப் புறம்பே தாரக போஷக போக்யங்களாய் இருப்பாரோட்டை ஸஹவாசம்
எனக்கு துஸ் ஸகம்

நச்சுவார் பலர்
இத்தை ஆசைப்படுவார் பலர் உண்டாய் இருந்தது

கேழல் ஒன்றாகி கோட்டு மண் கொண்ட கொள்கையினானே
ஸர்வ லோகங்களும் பிரளயத்திலே அகப்படக் கொம்பிலே கோத்து எடுத்து
யதா ஸ்தானத்திலே வைத்து ரஷிக்கையை ஸ்வ பாவமாக யுடையவனே

குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே
குவலயா பீடத்தை விழ விட்டு அதன் கொம்பை முறித்தவனே
அப்படியே என்னுடைய சம்சார சம்பந்தத்தை அறுத்து
உன் திருவடிகளைத் தந்து அருள வேணும்

————

ப்ரக்ருதி சம்பந்தம் கிடக்க
தாரகாதிகள் எல்லாம் அன்ன பாநாதிகளாக வேண்டாவோ என்ன
அவற்றில் தமக்கு அபேக்ஷை இல்லாமையை அருளிச் செய்கிறார்

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – 5-1-6-

பதவுரை

காரணா–(லோக ஸருஷ்டிக்குக் காரணமானவனே!)
நான்முகனை–பிரமனை
படைத்தானே–(உந்தி மேல்) படைத்தருளினவளே!
கண்ணா–ஸர்வ ஸூ லபனான கண்ணபிரானே!
கரியாய்–காள மேகம்போல்) கறுத்த நிறத்தை யுடையவனே!
அடியேன் நான் (உனக்கு) அநந்யார்ஹ சேக்ஷபூதனான நான்
உண்ணா நாள்–உண்ணா தொழிந்த போது
பசி ஆவதொன்றுமில்லை–பசி என்பது மறந்து முண்டாவதில்லை.
ஓயாதே–இடைவிடாமல்
நமோ நாராயணா என்று–‘நமோ நாராயணாய’ என்று
எண்ணா நாளும்–அநுஸந்திக்கப் பெறாத நாளும்
இருக்கு எசுச் சாமவேதம்–ருக், யஜுர், ஸாமம் என்கிற வேதங்களை (ச்சொல்லிக் கொண்டும்)
நாண் மலர் கொண்டு–அப்போதலர்ந்த (புதிய) பூக்களை எடுத்துக் கொண்டும் (வந்து)
உன் பாதம்–உன் திருவடிகளை
நண்ணா நான்–கிட்டப் பெறாத நாள்களும்
அவை–(எனக்கு) அந்த உண்ணாதொழிந்த நாள்களாம்;
அவை–அந்த வேதாசந்தநமும் புஷ்ப ஸமர்ப்பணமும்
தத்துவம் ஆகில்–தட்டுப்படுமாகில்
அன்று–அந்த நாளானது
எனக்கு–எனக்கு
பட்டினி நாள்–உண்ணாதொழிந்த நாளாகும்–

கண்ணா
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஸூலபனானவனே –

நான்முகனைப் படைத்தானே
ப்ரஹ்மாவை திரு நாபியிலே ஸ்ருஷ்டித்தவன் கிடீர்
இப்படி ஸூலபனானான் என்கை

காரணா
ப்ரஹ்மாவுக்கு முன் உண்டான
ப்ராக்ருத ஸ்ருஷ்ட்டியைச் சொல்லுகிறது

கரியாய்
காரணத்வ நிபந்தனமான உபகாரம் இல்லை யாகிலும்
விட ஒண்ணாத படியான திருமேனி என்கை

காரணா -நான்முகனைப் படைத்தானே -கண்ணா -கரியானே -என்ற அந்வயம்
அத்தலை இருந்தபடி இது

அடியேன் நான் உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை
உனக்கு அநந்யார்ஹ சேஷ பூதனான நான்
வந்தேறியான தேஹம் கிடந்ததே யாகிலும்
அன்ன பாநாதிகள் ஜீவியாத போது ஷூதாதிகள் உண்டாகாது –

ஆனால் உனக்கு எதில் அபேக்ஷை என்ன
ஓவாதே நமோ நாராயணா என்று எண்ணா நாளும்
இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை
மாறாதே அஹங்கார நிவ்ருத்தி பூர்வகமான
ஸ்வரூப சாதன புருஷார்த்தங்களுக்கு வாசகமான திரு நாமத்தை
ப்ராப்ய புத்த்யா ப்ரீதி பிரேரிதனாய் அநுஸந்தியாத போதும்
அதின் விவரணமான ருக்யாதி வேத த்ரயங்கள் யாகிற செவ்விப் பூக்களைக் கொண்டு
உன் திருவடிகளைக் கிட்டி நின்று அனுபவியாத நான்

தத்துறுமாகில்
அப்படிப்பட்ட திவசங்கள் கூடுமாகில்

ஆகில் என்கையாலே
அது கூடாது என்கை

அன்று எனக்கு அவை பட்டினி நாளே
அது இறே சேஷ பூதனான எனக்கு உபவாஸ திவஸம்
அப்போது ஸ்வரூப ஹானி பிறக்கும் என்கை –

———–

கீழில் பாட்டிலே தமக்கு அவனே ப்ராப்யம் என்றார்
அந்தப் பிராப்யத்தை அப்போதே கிட்டப் பெறாமையாலே நோவு படுகிறார் இதில் –

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல்
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாம் கொல் என் ஆசையினாலே
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி வுரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே -5 -1-7 –

பதவுரை

வெள்ளை–பால் மயமான
வெள்ளத்தின் மேல்–பெருக்கிலே
ஒரு பாம்பை–ஒப்பற்ற திருவனந்தாழ்வானை
மெத்தை ஆக விரித்து–படுக்கையாக விரித்து
அதன் மேலே–அப் படுக்கையின் மீது
கள்ளம் நித்திரை கொள்கின்ற மார்க்கம்–(நீ) யோக நித்ரை செய்தருளும்படியை
காணலாம் கொல் என் ஆசையினாலே–காணக் கூடுமோ என்கிற விருப்பத்தினால்,
உள்ளம் சோர–நெஞ்சு அழிய
உகந்து எதிர் விம்மி–மகிழ்ச்சியின் மிகுதியால் (வார்த்தை சொல்ல வொண்ணாதபடி) மாறாகக் கலங்கி
உரோம கூபங்கள் ஆய்–(உடம்பு முழுவதும்) மயிர்க் குழி யெறியப் பெற்று
கண்ண நீர்கள்–கண்ணீர்
அணை–படுக்கையில்
துயில் கொள்ளேன்–உறங்கப் பெறுகிறேனில்லை;
யான்–(இப்படிப்பட்ட) அடியேன்
உன்னை–உன்னை
தத்துறும் ஆறு–கிட்டும் வழியை
சொல்லாய்–அருளிச் செய்ய வேணும்–

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து
நிர்மலமான ஜலத்தின் மேலே வெளுத்த நிறத்தை யுடைத்தான வெள்ளத்தின் மேலே
நாற்றம் குளிர்த்தி மென்மை தொடக்கமான குணங்களைப் ப்ரக்ருதியாக யுடையனாய்
கைங்கர்யத்துக்கு அத்விதீயனான திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக நிருத்தாத படி விரித்து

அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற
அப் படுக்கையின் மேலே படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் என்னும் படியாய்
ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணிக் கொண்டு பள்ளி கொள்ளுகிற பிரகாரம்

மார்க்கம்
வழி
நீ ரக்ஷண சிந்தை பண்ணுகிற வழி என்றபடி

காணலாம் கொல் என் ஆசையினாலே
காண வேணும் என்னும் ஸ்நேஹத்தாலே

உள்ளம் சோர
நெஞ்சம் அழிய
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும்–என்கிறபடியே

உகந்து எதிர் விம்மி
ப்ரீதி அதிசயத்தாலே வார்த்தை சொல்ல ஒண்ணாத படி
எதிர் விம்மிப் பொருமி

வுரோம கூபங்களாய்
உடம்பு எல்லாம் மயிர் கூச்சு எறிந்து
இவ்வநுஸந்தானம் ப்ரத்யக்ஷம் போலே பிரகாசித்து
பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பண்ணி
அது கிடையாமையாலே

கண்ண நீர்கள் துள்ளம் சோரத்
உள் அழிந்து கண்ண நீர் பாய

துயில் அணை கொள்ளேன்
படுக்கை சேர்த்தியை அனுசந்தித்த எனக்குப்
படுக்கை பொருந்துகிறது இல்லை

சொல்லாய் உன்னைத் தத்துறுமாறே
நான் உன்னைக் கிட்டும் வழி சொல்லாய்
எல்லாத் தசையிலும் அவனையே கேட்க்குமவர் இறே இவர்–

————-

கிட்டும் தனையும் உன்னை மாறாமல் ஏத்தும் படி பண்ணி அருள வேணும் என்கிறார்
(கிட்டிய பின்பு உன்னை மாறாமல் ஏத்த சொல்ல வேண்டாமே )

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே
எண்ணுவர் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருள் செய் எம் பிரானே -5-1-8 –

பதவுரை

காரணா–(உலகங்கட்குக்) காரணமானவனே!
என்ணுவார் இடரை களைவானே–(எப்போதும் உன்னையே தியானிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்குமவனே!
மது ஸூதா–மதுவைக் கொன்றவனே!
கரி கோள் விடுத்தானே–கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கினனனே!
கண்ணனே!
வண்ணம்–அழகிய
மால்–பெரிய
வரை–கோவர்த்தன மலை
குடை ஆக–குடையாக (அமைய)
மாரி–மழையினின்றும்
காத்தவனே–(பசுக்களையும் இடைகரையும்) காத்தருளினவனே!
களிறு–(குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட–முடித்த
பிரானே–உபகாரகனே!
ஏத்த அரும் பெரு கீர்த்தியினானே–ஸ்துதிக்க முடியாத அளவற்ற கீர்த்தியை யுடையவனே!
எம்பிரானே–எமக்குத் தலைவனே!
நான்–அடியேன்
உன்னை–உன்னை
நாள் தொறும்–தினந்தோறும்
நண்ணி–ஆஸ்ரயித்து
ஏத்தும் நன்மை–ஸ்துதிக்கையாகிற நன்மையை
அருள் செய்–அருள் செய்ய வேணும்–

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே
நாநா வர்ணமான தாதுக்களை யுடைத்தான பெரிய மலையைக் குடையாகக் கல் வர்ஷத்தைக் காத்தவனே

மதுசூதா
முதல் களையாகிற மெதுவான அசூரனை நிரசித்தவனே

கண்ணனே
ஸர்வ ஸூலபனான கிருஷ்ணனே

கரி கோள் விடுத்தானே
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய ஆபத்தைப் போக்கினவனே

காரணா
ஜகத் காரண பூதனே

களிறட்ட பிரானே
குவலயா பீடத்தை நிரசித்த உபகாரகனே

எண்ணுவர் இடரைக் களைவானே
உன்னை அனுபவிப்பாருடைய விரோதியைப் போக்குமவனே

ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
அபரிச்சேதயமாய் போக்யதை அளவிரந்த குணங்களை யுடையவனே

நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருளு செய்யும் பிரானே
ஏத்தி அல்லது தரிக்க மாட்டாத நான் உன்னைக் கிட்டி
நாள்தோறும் ஏத்தும்படிக்கு ஈடான நன்மையை அருள வேணும்
ஸ்ரேயஸ்ஸை உண்டாக்கி அருள வேணும்

எம்பிரானே
அநந்ய ரானவர்களுக்கு உபகாரகன் ஆனவனே

காரணா
எண்ணுவர் இடரைக் களைவானே
மதுசூதா
கரி கோள் விடுத்தானே
கண்ணனே
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே
களிறட்ட பிரானே
ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருள் செய்
எம் பிரானே
என்று அந்வயம்

ஆக
ஸர்வ ஸூ லபத்வமும்
ப்ராப்யத்வமும்
சொல்லிற்று –

———-

ரக்ஷகனுமாய்
ப்ராப்யனுமான
நீயே என் பிராப்தி விரோதியைப் போக்கி அருள வேணும் என்கிறார் –

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே – 5-1 -9-

பதவுரை

நம்பனே–(ரக்ஷகன் என்று) நம்பத் தகுந்தவனே!
நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே–(ஸ்தோத்திரங்களை) வாயாரச் சொல்லிப் புகழ வல்லவர்களுக்கு ரக்ஷகனே!
நரசிங்கம் அது ஆனாய்–நரசிங்க அவதராம் செய்தருளினவனே!
உம்பர்-நித்ய ஸூரிகளுக்கு
கோன்–தலைவனே!
உலகு ஏழும்–எல்லா வுலகங்களையும்
அளந்தாய்–(திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்து கொண்டவனே!
ஊழி ஆயினாய்–காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே!
முன்–முன்னே
ஆழி–திருவாழி யாழ்வானை
ஏத்தி–(திருக் கையில்) ஏந்திக் கொண்டு
(எழுந்தருளி)
மா கம்பம்–மிக்க நடுக்கத்தை அடைந்த-கம்பம் -கம்பநம் -நடுக்கம்
கரி–கஜேந்திர ஆழ்வானுடைய
கோள்–சிறையை
விடுத்தானே–விடுத்தருளினவனே!
காரணா–ஜகத் காரண பூதனே!
கடலை–(திருப்பாற்) கடலை
கடைந்தானே–(தேவர் களுக்காகக்) கடைந்தருளினவனே!
எம்பிரான்–எம்பிரானே!
என்னை–அடியேனை
ஆளுடை–ஆட்படுத்திக் கொண்டவனும்
தேனே–தேன் போல் இனியனுமானவனே!
ஏழையேன்–(உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய
இடரை–துன்பத்தை
களையாய்–களைந்தருள வேணும்.

நம்பனே
என்னை உன் கையிலே பொகடலாம் படி விஸ்வச நீயனானவனே

நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே
ஸ்நேஹ பூர்வகமாக பரிந்து ஏத்த வல்லார்களுக்கு ஸ்வாமி யானவனே

நரசிங்கமதானாய்
திரு நாமம் சொல்லப் பெறாத ஹிரண்யனை
அச் செய்கைக்காக
அவன் வரத்தில் அகப்படாத நரஸிம்ஹம் ஆனவவனே

அது என்று
அழகைச் சொல்லுகிறது

உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய்
தேவர்களை மெய் காட்டிக் கொண்டு போருகிற இந்திரனுக்காக
ஸப்த லோகங்களையும் அளந்தவனே
(கீழ் எல்லாம் ஒன்றாக்கி -மேல் ஆறும் -ஆக ஏழும் )

அன்றிக்கே
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் வைத்து
அங்கு நின்றும் போந்து அவதரித்து
உலகு ஏழையும் அளந்தான்
என்னவுமாம்

ஊழி யாயினாய்
ஊழிக் காலம் -கால உப லஷித ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன் ஆனவனே

ஆழி முன்னேந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே
ஏற்கவே திருவாழியைத் தரித்துக் கொண்டு இருந்து
முதலையின் கையில் அகப்பட்டு நடுங்குகிற யானையினுடைய பேய் சிறையை வெட்டி விட்டவனே
வடிவில் பெருமை யாகவுமாம்
கோள் முதலை முஞ்ச குறித்து எறிந்த சக்கரம் -என்னக் கடவது இறே

காரணா
ஜகத் காரண பூதனானவனே
காரணமாய் உத்பாதித்தவனே
ரக்ஷகன் என்கை

கடலைக் கடைந்தானே
இந்திராதி தேவர்களுக்காக மஹோ ததியைக் கடைந்தவனே
(உததி-கடல் –மஹா உததி -பெரும் கடல் )

எம்பிரான்
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்டவனே
அவற்றை எனக்கு அறிவித்த உபகாரகன் -என்னவுமாம்

என்னை ஆளுடைத் தேனே
உன் போக்யதையைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே

ஏழையேன் இடரைக் களைவாயே
உன் போக்யதையில் சபலனான நான்
என்னுடைய மங்களா ஸாஸன விரோதியை
வாஸனையோடே போக்கி அருள வேணும் –

——–

நிகமத்தில் இப்பத்தை அப்யசித்தவர்கள்
இதன் பாசுர மாத்ரத்தாலே சடக்கெனப் பரமபத்தைப் பிராபிப்பர்கள்-என்கிறார் –

காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதன் தன்னை
சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே – 5-1- 10-

பதவுரை

காமர் தாதை–மன்மதனுக்குத் தந்தையும்
கருதலர் சிங்கம்–(தன்னை) விரோதிப்பவராகிய யானைகட்கு சிங்கம் போன்றவனும்
காண–ஸேவிப்பதற்கு
இனிய–அழகாயிருக்கிற
கரும் குழல் குட்டன்–கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும்
வாமனன்–வாமாநாவதாரம் செய்தருளியவனும்
என்–எனக்குத் தலைவனும்
மரகத வண்ணன்–மரகதப் பச்சை போன்ற வடியை யுடையவனும்
மாதவன்–பிராட்டிக்குக் கணவனும்-ஸ்ரீ யபதி
மதுசூதனன் தன்னை–மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானைக் குறித்தருளிச்செய்த
சேமம்–க்ஷேமமானது
நன்கு–நன்றாக (குறைவின்றி)
அமரும்–அமைந்திருக்கப் பெற்ற
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரிள்ளார்க்குத் தலைவனான
விட்டு சித்தன்–பெரியாழ்வாரது
வியன் தமிழ் பத்தும்–பெருமையுள்ள (இத்) தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
நாமம் என்று–(எம்பெருமானது) திருநாமங்களாக பிரதிபத்தி பண்ணி
நவின்று–அன்பு கொண்டு
உரைப்பார்கள்–ஓதுமவவர்கள்
ஒல்லை–விரைவாக
நாரணன் உலகு–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார்–கிட்டப் பெறுவர்கள்–

காமர் தாதை
தன வடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற மன்மதனுக்கு ஜனகன் ஆனவனே
அவனுக்கு அவ் வைலக்ஷண்யத்துக்கு அடி இவன் என்கை

கருதலர் சிங்கம்
இவ்வடிவு அழகு காண வேண்டாதவர்களை ஸிம்ஹம் போலே
கிட்ட அரியனாய் இருக்குமவன்

காண இனிய கரும் குழல் குட்டன்
அனுகூலர் கண்ணுக்கு இனியனாய்
கறுத்த நிறத்தை யுடைய திருக்குழலை யுடைய பிள்ளை

காண இனிய கரும் குழல்-என்று
குழலுக்கு விசேஷணம் ஆகவுமாம்

வாமனன்
இவர்களை பெருகைக்குத் தான் அர்த்தி யாமவன்
அவ்வடிவு அழகைச் சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி
வாமனன் ஆனவன் என்னவுமாம்

என் மரகத வண்ணன்
மரகதம் போல் பசுத்துக் குளிர்ந்த திரு மேனியைக் காட்டி
என்னை வஸீ கரித்தவன்

மாதவன்
இவ்வடிவு அழகைப் பிராட்டிக்கு முற்றூட்டாகக் கொடுக்குமவன்
அவள் புருஷகாரமாகக் கிடீர்
அவ்வடிவு அழகை எனக்கு உபகரித்தவன் என்னவுமாம்

மது ஸூதன் தன்னை
அவ் வனுபவ விரோதிகளை மதுவைப் போக்கினால் போல் போக்குமவன்

சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
வஸ்துவுக்குத் தானே ரக்ஷகமாகப் போரும்படியான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த அழகிய தமிழான பத்துப் பாட்டும்
ரக்ஷை பொருந்தின ஊர்
மங்களா ஸாஸன பரரை உடைத்தது என்கை

(வியம் தமிழ் -வியப்பாக சொன்ன தமிழ் என்று சொன்ன அத்யாஹாரம் கொள்ள வேண்டும்
வியத்தல் -கொடுத்தல் -கடைக்குறையாக வியந் தமிழ் )

நாமம் என்று நவின்று உரைப்பார்கள்
ப்ராப்ய வாசகம் என்று
ஸ்நேஹத்தோடு அனுசந்திக்க வல்லார்

நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே
பரம பதத்தை சடக்கென கிட்டப் பெறுவார்கள்

நாரணர் உலகே
உபய விபூதி நாதனுடைய தேசம் என்கை
அவன் இறே முக்த ப்ராப்யன் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த – பிரமேய சாரம் –ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

September 1, 2021

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளி மண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே

பதவுரை

நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேசாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச்செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாளமாமுனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக்கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக

நீள்நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக.
“என்றும்” என்ற சொல்லை
“நீங்காமல்” என்றும்
“நினைத்து” என்றும்
இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.
அதாவது
“என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக.
பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப்
பிரமேயம் என்று பெயர்.
அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.

பிரமாணம் – அளக்கும் கருவி
பிரமேயம் – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம் – சுருக்கம்
மானம், மேயம் – சாரம் என்பர்

அதாவது பிரமாணம் திரும்ந்திரம்.
அதனுடைய பொருள் பிரமேயம்.
அப்பொருளின் சுருக்கம் பிரமேயசாரம் என்பதாம்.
நல்ல மறை என்பது போல நல்ல பிரமேய சாரம்
அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.

பாங்காக:
கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள்.
ஆகவே இந்நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
அதனால் இதற்கு பிரமேய சாரம் என்று பெயர்.

பரிந்தளிக்கும்:
அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும்
ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம்
நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.

அருளாள மாமுனி: என்பதால்
அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும்,
அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.
ஆதலால் “மாமுனி” என்றும் அம்முனிவருக்குரிய உயரிய பண்பு.
யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது.
அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.
வணங்கும்பொழுது அத்திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக.
அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர்.

(அம்பதம்) என்ற இடத்தில்
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது.
ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற
தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.

அம்பதத்தை: “அம்” என்றால் அழகு.
பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது.
“ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும்.
மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம்.
இறைவனும் முனியும் ஒன்றானதால்.

புதுப்புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.

மன்: வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள்.
புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட
செழிப்பான இடம் என்றவாறு.
இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்கநெறி முதலியவற்றிற்கு ஏற்புடயதான இடம் என்பது புலனாகிறது.

புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.

பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை
மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்க கூறியவரும்
பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும்
அறிஞர்களுக்குத் தலைவரும் செருக்கு மில்லாதவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.

———-

நூல் தோற்றுவாய்

அனைத்து வேதம் முதலிய நூல்களிலும் நுண்ணறிவு உடையராய் மெய்ப்பொருள் பற்றியும்
மெய்ப்பொருளை அடைவதற்கான செந்நெறி பற்றியும் அடைய வேண்டிய பயன் பற்றியும்
உண்மையை உள்ளது உள்ளபடி அரிந்தவர்களில் முதல்வராய் இருப்பவரும் ,
பிறப்பிறப்புகளில் சுழன்று வரும் அறிவுடைய ஆன்மாக்கள் எல்லோரும் வீடுபேறு அடையவேணும் என்னும்
அவாவுடையராயிருப்பவரும்

தம்மை ஆதியில் சீடராய் ஏற்றுக்கொண்ட எம்பெருமானார் திருவடிகளிலேயே நீண்ட நாள் (சுமார் 80 ஆண்டுகள்)
பணிவிடை செய்து (தத்துவம், ஹிதம், புருஷார்த்தம் ) மெய்ப்பொருள், நெறி,பயன் இவற்றின் சிறப்புக்களை எல்லாம்
அவர் அருளிச் செய்யக் கேட்டு அறின்து அவ்வொழுக்கத்தின் எல்லை நிலத்தில் நிலை நிற்பவரும் ,

அதாவது
தத்துவம்-இறைநிலை,
ஹிதம்-இறைவனை அடைவற்கான தக்க வழி ,
புருஷார்த்தம்- வாழ்வு இவற்றின் உண்மை .
இதனைத் “தல ஸ்பர்ஸ ஞானம்” என்பர்.
தலம் என்றால் பூமி. ஸ்பர்ஸம் என்றால் தொடுதல்.
நீர் நிலைகளில் இறங்குபவன் அதன் அடித்தலத்தில் சென்று மண்ணை எடுத்து வருவான்.
அது போல் அறிவுக்கடலில் முழுகித் திலைக்கும் இவர் அறிவின் எல்லையைக் கண்டவரென்று
இவருடைய அறிவின் கூர்மை சொல்லப்படுகிறது.

இறைவனைப் பற்றி அறிவது அதனுடைய முதல் நிலை.
அடியார்களைப் பற்றி அறிவது அதனுடைய எல்லை நிலை.
அடியார்கள் வரையிலும் அடியவராய் இருத்தல் என்பது கருத்து. வாழ்வாங்கு உணர்ந்தவர் என்பதாம்.

இவ்வாறு அறிய வேண்டியவற்றை முழுமையாக அறிந்தவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
தம்முடைய மிக்க கருணையாலே பிறவிப் பெருங்கடலில் உழலுல் உயிர்கள் வீடு பேறு அடைவதற்காக
வேதம் முதலிய அனைத்து நூல்களில் இருந்தும் ஓரோர் இடத்திலுள்ள கருத்துக்களை
அதாவது
எல்லோருக்கும் அறிவதற்கு முடியாதபடி இருக்கிற அவ்வரும் பொருள்களைச் சுருக்கி “ஞான சாரம்” என்கிற
நூல் மூலமாக இயற்றி முடித்த பிறகு
“பிரமேய சாரம்” என்னும் இந்நூலை இயற்றுகிறார்.

வேதம் என்பது “எழுதாமறை” என்று கூறப்படும்.
மிகப் பழமையான சாஸ்திரம். இறைவனைப் போல அதுவும் அநாதியாக வந்து கொண்டிருப்பது.
அதற்குப் பிரமாணம் என்று பெயர்.

அதனுடைய அனைத்துக் கருதுக்களையும் சுருக்கமாக எடுத்துரைப்பது “திருமந்திரம்” அதாவது எட்டெழுத்து மந்திரம்.
(ஓம் நமோ நாராயணாய) என்பது.
அதில் சொல்லப்படும் கருத்துக்களின் திரண்ட பொருளைச் சுருக்கி இந்நூலில் கூறப்படுகிறது.
ஆகையினால் இந்நூலுக்கு பிரமேய சாரம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது.

———–

திருமந்திரத்தின் சுருக்கம் “ஓம்” என்பது.
அதற்குப் பிரணவம் என்று பெயர்.
அதில் சொல்லப்படும் கருத்து திரட்டிக் கூறப்படுகிறது.

அவ் வானவருக்கு மவ்வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-

பதவுரை:

அவ்வானவர்க்கு –“அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு
மவ்வானவரெல்லாம் –‘ம” என்னும் எழுத்துக்குப் பொருளான உயிர்கள் எல்லாம்
அடிமை என்று–அடிமைப் பட்டவர் என்று
உவ்வானவர் –ஆசார்யர்கள்
உரைத்தார் –கூறினார்கள்
இவ்வாறு –அவர்கள் கூறிய இம் முறைகளை
கேட்டு –தெரிந்து கொண்டு
இருப்பார்க்கு –தெரிந்தபடி நிலை நிற்பார்க்கு
ஆள் என்று –அடிமை என்று
கண்டிருப்பர் –தங்களை அறிந்துகொண்டவர்
மீட்சி யில்லா –மீண்டும் பிறவாத
நாடு –திரு நாட்டில் போய்
இருப்பார் என்று –நித்யர், முக்தர் முதலிய அடியார்களுடன் சேர்ந்திருப்பாரென்று
நான் –எம்பெருமானாருடய அடியனான நான்
இருப்பன் –நம்பி இருப்பவன்

அவ்வானவர்க்கு :-
”அ’ காரம் என்ற சொல்லுக்குப் பொருளாய் விளங்குபவன் இறைவன் .
அவனுக்கு வேதத்தில் ‘அ’என்று பெர்யர் சொல்லியிருக்கிறது.
இங்கு ‘அ’ என்னும் எழுத்தையே கடவுளாகப் பேசியிருப்பது சொல்லுக்கும் பொருளுக்கும் உண்டான
இணைப்பு பற்றி சொல்லும் பொருளும் பிரித்து நில்லாது இயைந்தே இருப்பதால் அவ்வாறு கூறப்பட்டது.

மகாகவி காளிதாசன் இறைவனும் இறைவியும் இணைந்திருக்கும் நிலையைச் “சொல்லும் பொருளும் போல” என்று
ரகுவம்ச காவியக் கடவுள் வாழ்த்தில் கூறினான்.
உப்பு’ என்னும் குணத்தை வைத்து உப்பு என்னும் பொருளைச் சொல்வது போன்றது இது.
ஆகவே எழுத்துக்களுக்குள் நான் ‘அகாரமாயிருககிறேன் என்று பகவான் கண்ணன் கீதையில் கூறினான்.
இது பற்றியே திருவள்ளுவரும் ‘அகர முத்த எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார்.

இறைவன் இயங்குதினைக் கண்ணும், நிலத்தினைக் கண்ணும், பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய்
நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தார் போல்
அகாரமும், உயிர்க் கண்ணும் தனி மெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது
சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது.
‘அகர முதல’ என்றால் அகரமாகிய எழுத்துதைக் காரணமாக உடைய மற்றைய எழுத்துக்கள் எல்லாம் என்று பொருள்.
அதுபோல இறைவனாகிய காரணத்தை உடைய உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும்,
எழுத்துக்களில் நான் ‘அ’ கரமகின்றேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க.

இதனால் உண்மைத் தன்மையுஞ் சிறிது கூறினாராயிற்று. என்று தொல்காப்பிய எழுத்ததிகார ‘மெய்யின் இயக்கம்’ என்ற
சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் கூறியவாற்றால் அகரத்தைப் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.

‘பூ மகள் பொருளும்’ எனக் கம்பர் பால காண்டக் கடி மணப் படலத்துள் கூறினான்.
தனால் ஒன்றர்கொன்று இயைந்த பொருள்களில் ஒன்றைச் சொன்னால் அதனோடு இயைந்த மற்றொன்று தன்னடையே கூறினதாக ஆகும்.
இதனால் அ என்ற எழுத்தைச் சொன்னபோதே அதன் பொருளான கடவுள் சொல்லாமலேயே உணரப்படும்.
ஆக அவ்வானவர்க்கு என்றால் இறைவனுக்கு என்று பொருள்.

மவ்வானவரெல்லாம்:-
மவ் வானவர் என்று ‘ம’ காரத்தின் பொருளான உயிர்களைச் சொல்லுகிறது.
‘ம’காரம் உயிரைச் கொள்ளும் சொல்லாகும் என்பது சாஸ்திரம்.
இது ஒருமையாக இருந்தாலும் ‘இது ஒரு நெல்’ என்பது போல. சாதி ஒருமையாய் உயிர் சமுதாயமான எல்லாவித உயிரையும் குறிக்கும்.
எல்லாவிதமான உயிர் என்றது மூன்று வகைப்பட்டிருக்கும் உயிர்களை.
வினை வயத்தால் மாறி மாறிப் பிறந்து வரும் உயிர்களும்
இறைவன் அருளாலேயே தான் செய்யும் தவம் முதலிய முயற்சியாலேயோ,வினையிலிருந்து விடுபட்ட உயிர்களும்,
என்றைக்கும் வினை வயப்படாமல் இறைவனுக்கு ஒப்பாக இறைவனோடு கூடவே வீட்டுலுகத்தில் உறையும் உயிர்களும்
ஆகிய மூவகைப் பட்ட உயிர்களையும் குறிக்கும்.
இதனை, பக்தர், முக்தர் நித்யர் என்று சாஸ்திரம் கூறும்.
ஆக இம்மூவகையான ஆன்மாக்களையும் ஒருமைப்படுத்தி ‘மவ்வானவர் எல்லாம்’ என்று கூறப்பட்டது.

உவ் வானவர்:-
‘உ’ காரத்திற்குப் பொருளாயிருப்பவர் என்று பெயர். உகாரம் ஆச்சர்யனை உணர்த்தும் சொல்லாகும்.
எவ்வாறு என்றால் உகாரத்திற்கு நேர் பொருளாக இருப்பவர் பெரிய பிராட்டியாரான லட்சுமி தேவியாவாள். இது சாஸ்திர முடிவு.
பிராட்டி இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மை யுடையவள்.

அதுபோல
ஆசார்யனும் இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மையுடையவர்.
லட்சுமி தேவிக்கும் ஆசார்யனுக்கும் தொழில் ஒப்புமை யிருப்பதால் உகாரம் ஆசார்யனைச் சொல்லுகிறது.
மேலும் ஆசார்யன் பிரட்டி திருவடிகளில் பக்தி செய்து அவளது அன்பைப் பெற்று அவ்வன்பு காரணமாகத்
தன்னை நாடி வரும் சீடர்களைப் பிராட்டியிடம் ஈடுபடுத்தி அவர்களுக்கு அருள் கிடைக்கச் செய்பவர்.
இவ்வாறு ஆசார்யனைப் பற்றி வரும் உயிர்களுக்கு இறைவன் கருணை காட்டும்படி சிபாரிசு செய்வதால்
இருவருடைய செயல்களும் ஒற்றுமைப்படுகிறது.
ஆகையால் இறைவனிடம் சிபாரிசு செய்யும் செயல் ஒற்றுமையாலும்
அவளிடம் அன்பு பூண்டொழுகும் உறவினாலும் ஆசார்யனை உகாரத்திற்குப் பொருளாகச் சொல்லுகிறது.

இதைப் பற்றி முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக இங்கு கூறப்படுகிறது.
எம்பெருமானார் ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது அருகிலேயே இருக்கும் சீடரான
முதலியாண்டானுக்கு உகாரத்தின் பொருளைக் கூறியுள்ளார்.
அதனை அவருடைய குமாரரான கந்தாடை ஆண்டானுக்கு கூற அவரும் பட்டருக்குச் சொல்லி யுள்ளார்.
அக் கருத்துக்களை எல்லாம் தொகுத்து பிரணவ ஸங்க்ரகம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
அதில், ஆசார்யனை உகாரத்தின் பொருளாகச் சொல்லியிருப்பதை இங்கு மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளது.

அருளாளப்பெருமாள் எம்பெருமானாரும் எம்பெருமானார் (உடையவர்) திருவடிகளில் நீண்ட காலம் சேவை செய்து
அவருடைய அருளுக்கு இலக்கானவர் .ஆதலால் இவருக்கும் அப்பொருளை உணர்த்தி இருக்கலாம் அன்றோ!.
ஆகவே இவரும் எம்பெருமானார் சொல்லக் கேட்டு உகாரத்தின் பொருள் ஆசார்யன் என்று அறிந்து
அப் பொருளை இந்நூலில் கூறுவாராயிற்று .
ஆகவே உகாரம் அசார்யனைக் குறிக்கும் என்றவாறு.

அடிமை என்றுரைத்தார்:-
உயிர்கள் ஆகாரத்திற்கு அடிமைப் பட்டவை என்று சொன்னார்கள்.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் உண்டான உறவு முறையைக் காட்டிக் கொடுப்பவரான- நடுவரான ஆசார்யராவார்.
இறைவன் உயிர்களுக்குத் தலைவனாகவும் உயிர்கள் இறைவனுக்கு அடிமையாகவும்
இருவருக்கும் ஆண்டான் அடிமை என்னும் உறவென்றும் உபதேசத்தாலே சீடனுக்கு ஆசார்யன் உனர்த்தின போது
சீடனுக்கு அவ்வுறவு தெரிவதாகும்.
ஆகையால் ‘அ’ காரத்தின் பொருளான இறைவனுக்கு ‘ம’ காரத்தின் பொருளான உயிர்கள் அடிமையானவர் என்று
உகாரத்தின் பொருளான ஆச்சார்யர்கள் சொல்லி வைத்தார்கள்.
இக் கருத்து ‘அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லாம் அடிமை என்று உவ்வானவர் உரைத்தார் ‘ என்று கூறப்பட்டது.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் உண்டான உறவு முறையை உணர்த்துவதற்கு
ஒரு சிறு கதை திருவாய்மொழி ஈட்டுரையில் சொல்லப்படுவதுண்டு.

வாணியன் ஒருவன் கடல் தாண்டி வாணிபத்திற்கு செல்லும் பொழுது அவன் மனைவி கருவுற்றிருந்தாள்.
மனைவியிடம் தான் மீண்டு வரும் வரை பிறக்கும் குழந்தையை வாணிபத் துறையிலேயே வளர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அவ்வாறே ஆண் குழந்தையும் பிறந்து தக்க பருவத்தை அடைந்து தந்தையைப் போல கடல் தாண்டி வாணிபம் செய்யச் சென்றான்.
சென்ற இடம் தந்தை சென்ற இடமாகவே இருந்தது. ஒருநாள் சரக்குகள் வைப்பது காரணமாக தந்தைக்கும் மகனுக்கும்
பெரும் கலாய் (சண்டை) விளைந்தது. கூட்டமும் திரண்டு விட்டது.
அக்கூட்டத்திலிருந்த ஒருவர் அவ்விருவரையும் நன்கு அறிந்தவராயிருந்தார்.
அவ்விருவரையும் பார்த்து “நீர் தந்தை, இவன் மகன்” தந்தையும் மகனுமான நீங்கள் இப்படி சண்டை செய்து கொள்கிறீர்களே!
என்று இருவருக்குமுள்ள உறவு முறையை உணர்த்தி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார்.
இவ்வாறு நடுவர் ஒருவரால் ஒன்று சேர்ந்த தகப்பனும் மகனும் பெரு மகிழ்ச்சி எய்தினர்.
புதல்வனை அடைந்ததால் தந்தைக்கு மகிழ்வும், தந்தையை அடைந்ததால் மகனுக்கு மகிழ்வும் சொல்லும்
அளவையில்லாமல் அளவு கடந்ததாயிற்று.

இவ்வாறே நடுவர் நிலையில் நின்று ஆசார்யன் உயிர்களுக்கும் இறைவனுக்கும் உரிய ஆண்டான் அடிமை என்னும் உறவை உணர்த்துகிறான்.
தாயாய்த், தந்தையாய், மக்களாய், மற்றுமாய் எல்லா உறவாயும் இருப்பவன் என்பதையும் உணர்த்தி,
அதே சமயம் இறைவனிடம் ‘உன்னை விட்டுப் பிரிக்க முடியாத உறவாய் இருக்கும் இவ்வுயிர்களை,
குற்றங்களைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் இறைவனுக்கும் உணர்த்தி
இறைவனுடைய அருள் உயிர்களுக்குக் கிடைக்கச் செய்தும் உயிர்களை அவிறை யருளால் உயாவும் செய்கிறான்.
இது ஆசார்யனது செயல் என்று இங்கு சிறப்பாகக் குறிக்கப்பட்டது.

ஆள் என்று கண்டிருப்பார்:-
மேற்கூறியவாறு குரு உபதேசத்தால் இறைவனுக்கு அடியார்களாகி அச் சீரிய ஒழுக்கத்தில் நிலை நிற்பவருக்குச் சிலர்
அடியார்களாகி அடியார்க்கு அடியாராகும் தன்மையைப் பெறுகிறார்கள்.
இறைவனுக்கு அடிமையாயிருப்பது முதல் நிலை என்றும்,
அவ்வடியார்க்கு அடியராயிருக்கும் தன்மை கடைசி நிலை என்றும் சொல்லப்படுவதால்
‘கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் ‘ என்று அடியார்க்கு அடியாராம் தன்மை இங்குச் சொல்லப்பட்டது.

திருமந்திரத்தில் உயிரக்ளுக்குரிய மூன்று இலக்கணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை,
‘இவ்வுயிர்கள் இறைவனைத் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை.
உயிர்களுக்கு இறைவனைத் தவிர வேறு வழியில்லை.
உயிர்களுக்கு இறைவனைத் தவிர இன்பமில்லை’ என்பன.

இம்மூன்றையும் அடியார் வரையிலும் பெருக்கிப் பார்க்கையில்
அடியார் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை’என்றும்,
அடியார் தவிர வேறு வழி இல்லை என்றும்,
அடியார் தவிர வேறு இன்பம் இல்லையென்றும் என்றும் பெருக்கிக் கொண்டு
அடியார்கள் வரை பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அம் மூன்றை இங்குக் கூறிக் கொள்ள வேணும்.
இதனால் இறைவனுக்கு அடியராய் இருப்பார்க்கு அடியராய் இருக்கும் எல்லை நிலை கூறப்பட்டது.
ஆக, இங்கு கூறியவற்றால் ‘தங்களை அடியார்க்கு அடியராய் அறிந்து அந்நிலையில் இருப்பவர்கள் ‘ என்று பொருள்.

மீட்சியில்லா நாட்டிருபார் என்று இருப்பன் நான்:-
மேற் கூறிய ‘அடியார்க்கு அடியராய்’ இருப்பார் மீண்டு பிறப்பில்லாத திருநாட்டிலே போய்
அங்கு நித்ய முக்தர்களான அடியார் குழாங்களுடன் கூடி இருப்பார்கள். என்று நம்பி இருப்பவன் நான் என்பதாம்.
‘நான்’ என்று கூறுவதால் தம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்த்துகிறார் ஆசிரியர்.

மேலும் எம்பெருமானார் திருவடிகளிலே பணிந்து அனைத்து சாஸ்திரங்களின் உட்பொருட்களை எல்லாம் தெரிந்து கொண்டு
அதனால் மதிப்பு மிக்கவராய் மிக்க நம்பிக்கை உடையவராயிருப்பவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானார்.
வேத தாத்பர்யங்களில் தம்முடைய முடிவே இறுதி முடிவு என்பதை
உலகம் ஏற்கும்படியான மதிப்பு மிக்கவராதலால் அன்றோ’ என்றிருப்பவன் நான் என்று துணிந்து கூறுவாராயிற்று.

—————

கீழ்ப் பாட்டில் சொன்ன ‘மவ்வானவர்’ என்றதில் மூன்று வகையான உயிர்கள் சொல்லப்பட்டதைப் பார்த்தோம்.
அவர்களுள் வினை வயத்தால் ஏதோ ஒரு உடலில் கட்டுப்பட்டிருக்கும் உயிர்களுக்கு பிறப்பிறப்புக்கள்
மாறி மாறி ஆற்று வெள்ளம் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?
இப்பிறப்பாகிற துன்பம் தீர்வதற்கு வழி என்ன? என்னும் வினாக்களுக்கு இப் பாடல் விடையிறுக்கிறது.

குலம் ஓன்று உயிர் பல தம் குற்றத்தால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள்
பேணாமை காணும் பிழை –2-

பதவுரை:-

குலம் – தொண்டர் குலம்
ஒன்று – ஒன்றே உளது
உயிர் – தொண்டுத் தன்மையைக் கொண்ட உயிர்கள்
பல – எண்ணில் அடங்காதன
தம் குற்றத்தால் – அவ்வுயிர்கள் செய்யும் நல்வினை தீவினைகளால்
இட்ட – இறைவனால் இட்டு வைக்கப்பட்ட
கலம் – உடலாகிற பாண்டம்
ஒன்று – ஒரே மூலப் பொருளால் ஆன ஒன்றேயாகும்
காரியமும் – உயிர்களின் செயல்களும்
வேறாம் – வினை வேறுபாட்டால் வெவ்வேறு வகையாக இருக்கும்
பலம் ஒன்று – ஒரு பயனையும்
காணாமை – கருதாமல்
காணும் – உயிர்களைக் கடாக்ஷிக்கும்
கருத்தார் – ஆசார்யனுடய
திருத் தாள்கள் – திருவடிகளை
பேணாமை காணும் – பற்றாமை அன்றோ
பிழை – பிறப்புத் தொடர்வதற்கான குற்றம்

குலம் ஒன்று:
எல்லா உயிர்களுக்கும் ஒன்றே குலம். அது இறைவனுக்கு அடிமையாய் இருத்தல் ஆகும்.
அதாவது
தன் விருப்பத்திற்குச் செயல்பட இயலாமல் இறைவனுக்கு வயப்பட்டே இயங்குதல்.
இது உயிர்களின் இயல்பு என்றைக்கும் மாறாதது. நிலையாய் இருப்பது.
இதைத் தொண்டர் குலம் என்பர் ஞானியர்

“தொண்டக் குலத்துள்ளீர்”(திருப் பல்லாண்டு).

உயிர் பல:-
ஆன்மாக்கள் அளவற்றன.
அவை இறைவனுக்கு வயப்பட்டனவாய் பலவாக இருக்கின்றன.

தம் குற்றத்தாலிட்ட கலம் ஒன்று:-
அவ்வுயிர்கள் தாங்கள் பண்ணின நல்வினைகள் தீவினகலாகிற குற்றம் காரணமாக
அவற்றை இறைவன் இட்டு வைத்த பாண்டங்களே உடல்களாகும்
அவ்வுடல்கள் ஒரே வகையாய் ஆனது.
அதாவது
ப்ரக்ருதி என்னும் ஒரே பொருளால் உண்டானது.
ஆகையினால் அதுவும் ஒன்றே யாகும்.

மண்ணால் ஆன் பொருள் எதுவானாலும் மண் தான்.
பொன்னால் ஆனது எதுவானாலும் பொன் தான்.
அதுபோல ப்ரக்ருதியால் ஆன உடம்புகள் எதுவானாலும் ப்ரக்ருதி தான்.
‘தம் குற்றத்தால் இட்ட கலம் ஒன்று’ என்பதை இவ்வாறு விரித்து உணர வேண்டும்.

இறைவன் இவ்வுயிர்களை உடலில் இணைப்பது அவ் வவ்வுயிர்களின் வினைகளைத் தம் அறிவில் கொண்டு
அவற்றிற்குத் தக்கபடி பிறப்பித்ததாகும்.

கலம் ஒன்று என்று கூறியது
எல்லா உயிர்களின் உடல்களும் ப்ரக்ருதி என்று சொல்லப்படும் ஒரே பொருளால் ஆனது பற்றி அது.

“ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய
பந்தமாந்தேவர் பதினாலு அயன் படைத்த அந்தமில்சீர் தாவரம் நாலைந்து”–என்ற பாடலில்
உயிர்கள் எடுக்கும் உடல் வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ் வேறுபாடு ஒவ்வொன்றின் உட்பிரிவுகளால் ஆயிரம் ஆயிரமாகக் கணக்கில்லாதபடி பரந்திருக்கும்
என்பதையும் காண வேண்டும்
எத்தனை அளவற்றிருந்தாலும் எல்லாம் ஒரே பிரக்ருதியின் வடிவமேயாகும்
அதனால் உயிர்கள் கொண்டுள்ள உடலாகிற பாண்டம் ஒன்றே தான் என்று
‘கலம் ஒன்று’ என்பதால் சொல்லப்பட்டது.

‘பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்தியினாய்’ என்ற திருவாய்மொழியில்
அந்தந்த உயிர்கள் செய்த வினைப் பயனை எத்தனை படைப்பு எத்தனை அழிவு நடந்தாலும்
தவறிப் போகாமல் அந்தந்த உயிர்களே துய்க்கும்படி படைக்கிறதாக பேசப்படுகிறது.
இது இங்கு ஒப்பு நோக்கற்குரியது.

காரியமும் வேறாம்:-
உயிர்கள் வினைப்பயனால் எடுக்கும் உடல்களினால் செய்யும் செயல்களும் வேறுவேறாக இருக்கும்
அது வேறாகையாவது
நல்வினையின் பயனாக சுவர்க்கத்தில் இன்பம் துய்த்தலும் தீவினையின் பயனாக நரகத்தில் துன்பம் துய்த்தலும்
இரண்டும் கலந்த நிலையில் துன்ப இன்பங்களைக் கலந்து துய்ப்பதுமாயிருக்கு
‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தலரிது’
என்னும் குறளின் உரையில்
‘ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிரிதோருயிரின் கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின்
‘வகுத்தான்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வெறும் முயற்சிகளால் பொருட்களைப் படைத்தல் அல்லது நுகர்தலாகாது.
அதற்கு ஊழ் வேண்டும் என்பதாம். என்று கூறியது காண்க.

காரியமும்:-
என்ற உம்மையால் ஒரு குறிப்பு உணர்த்தப்படுகிறது.
உயிர் பல என்றும் குலம் ஒன்று என்றும் சொன்னது போல,
வினைப் பயனால் எடுத்த உடல் (பிரக்ருதியாகிற) ஒன்றாயிருக்க உயிர்களின் செயல்களும்
அவற்றால் நுகரப்படும் பயன்களும் பலவகை யாயிருக்கும் என்று உணர வேண்டும்.

உயிர்களுக்கு இயல்பான தன்மை இறைவனுக்கு அடிமையேயாகும்.
இத்தகைய உயிர்களுக்கு நல்வினை தீவினையாகிற வினைத் தொடர்பும்
அது காரணமாக பல்வகைப் பிறப்புக்களும்,
அப்பிறப்புக்களில் நுகரும் இன்ப துன்பங்களும்
இவ்வாறு ஆற்று ஒழுக்குப் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது எதனால் என்னும் எண்ணம் உண்டானால்
அதற்குத் தக்க விளக்கம் தரப்படுகிறது மேல் தொடரால்.

பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார் திருத்தார்கள் பேணாமை காணும் பிழை:
இதில் ‘கருத்தார் திருத்தார்கள்’ பேணாமை காணும் பிழை என்று
அதாவது
ஆசார்யனுடைய திருவடிகளை அணுகாததே குறையாகும். என்று பதில் கூறப்படுகிறது.
ஆசார்யனுடய சிறப்பு இவ்வாறு கூறப்படுகிறது.
‘பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார்’ என்று.

அதாவது
ஓர் உயிரை குரு, தான் ஏற்கும் பொழுது தனக்குப் புகழையோ ஒரு பயனையோ பணிவிடை முதலிய சிறப்புகளில்
ஏதேனும் ஒன்றிலும் மனம் வைக்காமல் இவ்வுயிரினுடைய சேமமே சேமம். (வீடு பேருஅடைதல்)
தனக்குப் பயன் என்று கருதி தன்னுடைய அருள் நோக்கத்தைச் செய்யும் நன்மனம் கொண்ட
ஆசார்யனுடய திருவடிகளைப் பற்றாமையே மாறி மாறிப் பிறப்புக்கள் தொடர்ந்து வருவதற்கு காரணமான குற்றமாம்.

இதனால் குரு கடாக்ஷம் உயிர்க்கு சேமம் தரும்.
அதற்கு சற்குருவை நாடி அவன் திருவடிகளைப் பற்ற வேண்டும்.
அதனால் வினைப் பாசங்கள் அகன்று சேமத்தையும் நல்வீடையும் அடைவான் என்று பொருள்.
இப்பாடலால் ஆசார்யனுடய சிறப்புக் கூறப்பட்டது.

“திருத்தாள்கள் பேணுதலாவது விரும்புகை. பேணாமை -விரும்பாமை. பிழை- குற்றம்.
ஆசார்ய வைபவத்தை ஸ்ரீ வசனபூஷணத்தில் காணலாம்.
“பகவல்லாபம் ஆசார்யனாலே. ஆசார்ய லாபம் பகவானாலே ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால்
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம்.
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் அவை (ஞான பக்தி) உண்டானாலும் ப்ரயோஜனமில்லை.
தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிப் பூணலாம்.
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை (பழிப்புக்கு இடமாகும்) விளைக்கும்.
ஸ்வாபிமாநத்தாலே ஈச்வராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானமொழிய கதியில்லை
என்று பிள்ளை (நம்பிள்ளை) பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.

ஸ்வஸ்வாதந்தர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று.
பகவத் ஸ்வாதந்தர்ய பயத்தாலே ப்ரபக்தி நழுவிற்று.
ஆசார்யனையும் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாகையாலே காலங்கொண்டு மோதிரமிடுமோபாதி.
ஆசார்யபிமானமே உத்தாரகம். (ஸ்ரீ வசனபூஷனம் சூத்திரம் எண் -434).

ஒருவன் வீடு பேறாகிற சேமத்தைப் பெறுவதற்கு சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பக்தியாலேயோ,
கருணைவடிவமான இறைவன் திருவடிகளில் செய்யும் அடைக்கலம் புகுதலாலேயோ முடியாது என்பது
பல காரணங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஓர் உயிர் பிறவி நோயிலிருந்து நீங்கி சேமநல்வீடு எனப்படும் இறை இன்பத்தைப் பெறுவதற்கு ஒரே வழி
நல்லறிவும் ஆன்ற ஒழுக்கமும் நிறைந்த நல ஆசான் ஒருவன் ‘இவன் நம்முடையவன்’ என்று பரிந்து நோக்குதலாகும்.
இதனால் ஆசார்யனுடய பார்வைக்கு இலக்காவான் சேமம் பெறுவான்.
அது இல்லை எனில் எவ்வுயிரும் சேமம் பெறாது என்ற கருத்து இப்பாடலால் உணரலாகும்.

———–

உயிரின் அடிமைத் தன்மைக்கு ஏற்றவாறு உயிர்கள் இறைத் தொண்டில் ஈடுபட வேண்டுமே
யல்லாமல் வேறு பயன்களில் ஈடுபடலாகாது.
இவ்வாறு இருக்க இதர பயன்களில் ஈடுபாடு இருந்தால் அடிமை என்னும் குலத்தால் என்ன உபயோகமாம்?
எவ்விதப் பயனும் இல்லை என்பதாம்.

திருமால் உலகளந்த காலத்தில் தன்னை ஒழிந்த அனைத்து
உயிர்களையும் தன்னடிக்கீழ் அளந்து கொண்டானல்லவா?
உயிர்கள் அப்பொழுதே அவன் அடிக்கீழ் பட்டதால் அவனுக்கு அடிமை ஆயிற்றே.
அதனால் உயிர்களுக்கு ஏதாவது பயன் ஏற்பட்டதுண்டோ? இல்லை என்றவாறு.

உலகளந்த அந்நாளில் ‘அவனடியில் நாம் இருந்தோம்’ என்னும் உணர்வு இல்லாததால் உயிர்கட்கு பிறவி தொடர்வதாயிற்று.
ஆகவே இறைவனுக்கு அடிமை என்ற உணர்வும் அவ் வுணர்வுக்கு ஏற்ப இறைத் தொண்டில் ஈடுபாடும்
உண்டானாலன்றோ உபயோகமாகும்
மேலும் இவ் வுணர்வு இல்லாத உயிர்கள் தொடர்ந்து பிறவியில் நீடித்துக் கொண்டே வரும்
என்னும் கருத்து இதில் கூறப்படுகிறது.

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் -தலம் கொண்ட
தாளிணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே யவன் –3-

பதவுரை:-

பலம் கொண்டு – இறைவனிடத்தில் செல்வம் முதலிய வேறு வேறு பயன்களைப் பெற்றுக் கொண்டு
மீளாத – ஆன்மீக அறிவால் திருந்தாத
பாவம் – தீவினை
உளதாகில் – இருக்குமானால்
குலம் கொண்டு – அடிமை என்னும் உறவு கொண்டு
காரியம் என் கூறீர் – என்ன பயன் சொல்லுவீராக!
தலம் கொண்ட – உலகமெல்லாம் அளந்து கொண்ட
தாளிணையான் – திருவடிகளை உடையவனான
அவன் – அவ்வுலகளந்தான்
அன்றே – அளந்துகொண்ட அக்காலத்திலேயே
யாவரையும் – எல்லா உயிர்களையும்
ஆளுடையவன் – தனக்கு அடிமையாகக் கொண்டான்
அன்றே – அல்லவா?

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்:-
செல்வம் முதலிய கவர்ச்சி மிக்க பொருள்களில் ஏதேனும் ஒன்றைத் தனக்கு விருப்பமாக அடைந்து,
ஞானிகள் அதன் குற்றங்களை எடுத்துக் கூறி அதை வேண்டாம் என்றாலும்
அப்பொருள் பற்றில் நின்றும் திருந்தி வராமல் அதிலேயே பற்றி நிற்கும் தீவினை என்று பொருள்.

அல்லது
இருக்குமானால் பாபம் என்பதற்கு நினைவு என்னும் பொருள் கொண்டு வேறு பயன்களை ஆசைப்படுவதிலிருந்து
மீள முடியாத நினவு இருக்குமானால் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆகவே பாபம் என்பதற்கு
தீவினை என்னும் நினவு என்றும் இரு பொருளில் கருத்துக் கொள்ளப்படுகிறது.

ஆன்மீகம் பற்றி ஆசார்யார்களிடம் உபதேசங்கள் கேட்டாலும் கீதை முதலிய தத்துவ நூல்களைக் கற்றாலும் ,
அவற்றில் தவிர்க்கப்படவேண்டும் என்று சொன்னவற்றைத் தவிர்க்காமல்
மீண்டும் மீண்டும் அவற்றையே செய்து வரும் கொடிய பாபம் உடைய மனிதகளுக்கு.

குலம் கொண்டு காரியம் என்? கூறீர்?;-
பகவானைத் தவிர வேறு வேறு பயன்களில் ஆசை இருந்தால் பகவான் இவ்வான்மாவை பிறவித் துன்பத்திலிருந்து மீட்க மாட்டான்.
பிற தொடர்புகளை அறவே நீக்க மாட்டன். தன திருவடிகளில் சேர்த்துக் கொள்ளவும் மாட்டான்.
அதனால் அடிமையாகிற அவ்வுரவினால் என்ன பயன் உண்டு? சொல்வீர்களாக என்று
உலகோர்களைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

ஒரு ஆன்மாவுக்கு ‘இறைவனுக்கு நாம் அடிமை என்னும் மெய்யறிவு உண்டானால் அதுவே போதாதா?
இவ்வறிவு உடையவனை இறைவன், ‘ இவன் நம்முடையவன் ‘ என்று தழுவிக் கொள்ளவும்
இவன் காரியங்களிச் செய்வதற்கு போதுமானதாக ஆகாதா? என்னும் வினாக்களுக்கு மேற் தொடரால் பதில் கூறப்படுகிறது.

தலம் கொண்ட தாளினையான்: என்று இத்தொடரில் ஓங்கி உலகளந்த வரலாறு குறிக்கப்படுகிறது.
மகாபலி சக்கரவர்த்தி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்ற மூவுலகங்களையும் ஆட்சி செய்ய அவாவுற்று வேள்வி இயற்றினான்.
இம்மூவுலகமும் இந்திரன் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதால் இந்திரன் திருமாலிடம் அடைக்கலம் புகுந்தான்.
தன்னிடம் அடைக்கலம் புகுந்த இந்திரனுக்காக மாவலி வேள்வி செய்யும் வேள்விச் சாலையில் குறளுருவாய்ச் சென்று
மாவலியிடம்” மூவடி மண் தா” என்று இரந்தான். மாவலியும் கேட்டபடி மூவடி மண்ணைத் தானமாக வழங்கினான்.

மூவடி மண்ணையும் அளந்து கொள்வதற்காக திருமால் திடீரென்று வளர்ந்தான்.
அவனது ஒரு பாதம் ப்போமி முழவதையும் பரப்பி நின்றது.
இரண்டே அடியாள் பதினான்கு உலகங்களையும் அளந்தான்.
மூன்றாம் அடிக்கு இடமில்லாததால் மாவலி தலையில் கால் வைத்து அழுத்தி அவனைப் பாதாளத்தில் தள்ளினான்.
இந்திரனுக்கு அவனாட்ச்சிக்குரிய மூன்று உலகங்களையும் அவன் அழும்படி கொடுத்தான் என்பது வரலாறு.

தலங்கொண்ட தாளினையான் என்பதற்கு
‘மண்ணும் விண்ணும் அளந்து கொண்ட த்ரிவடிகளையுடயவன்’ என்று பொருள்.

அன்றே:-
அவ்வாறு அளந்து கொண்ட அந்நாளில் தனை ஒழிந்த யாவரையும் ஆளுடையான் அன்றே அவன்.
தன்னை தவிர அனைத்து உயிர்களையும் தனக்கு அடிமையாகக் கொண்டவன் அன்றோ அவன் என்று பொருள்.

இதனால் உலகளந்த காலத்தில் எல்லோர்களுடைய தலைகளிலும் தன திருவடிகளை வைத்து அப்பொழுதே
எல்லா உயிர்களையும் தனக்கு அடிமையாக்கிக்கொண்டு அதனால் மகிழ்ந்து நின்றவன்
அவன் இதை உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து என்றார் திருப்பாணாழ்வார்.
தனக்கு அடிமைகளான ஆன்மாக்கள் அனைவரையும் தன் பாதத்தால் தீண்டி மகிழ்ந்தவன்.
மேலும் உறங்குகின்ற குழந்தையை தழுவி மகிழும் தாயைப் போல களித்தவன்.

இப்படி உயிர்களிடத்தில் அன்பு வைத்தவன். “ஏன் இவ்வுயிர்களைப் பிறவிக்கடல் துன்பங்களிலிருந்து எடாமலிருக்கின்றான்
என்று எண்ணிப் பார்த்தால் அதற்குக் காரணம் ‘இதுதான்’ என்று புலனாகிறது.
அதாவது
இவ்வுயிர்கள் அவனையும் அவன் செய்த உதவிகளையும் மறந்து இவ்வுலகையும் இவ்வுலகில் வாழ்வதையும்
அவ்வாழ்விற்கு வேண்டிய பொருள்களை ஆசைப்பட்டு அவனைக் காட்டிலும் அப்பொருள்களில் பற்றி நிற்பதையும் பார்த்து
அப்பற்றுதல்கள் அறவே நீங்கும் அன் நன்நாளை எதிர்பார்திருத்தாலன்றோ

இன்னமும் காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆகையால் இவ்வுயிர்கள் இறைவனுக்கு அடிமையாய் இருந்தாலும் ‘
தன்னைத் தவிர வேறு பயன்களில் ஆசை அறாத பொழுது இவ்வுயிர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து
இறைவன் எடுக்க மாட்டன் என்று உணர்த்தப் பட்டதாயிற்று.
இதரப் பொருள்களில் ஆசையை நிரம்ப வைத்துக் கொண்டு
‘அடியேன்’ என்று தன்னைச் சொல்லிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்பதாம்.

இங்குக் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் திரட்டி திருவள்ளுவர்
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவனடி சேராதார்’ என்றும் ,
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு ‘ என்று இவ்விரண்டு திருக் குறள்களாலும் உரைத்தார்.

நம்மாழ்வார் ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்’ என்று கூறினார்.

ஆக, கீழ்ச் சொன்ன
‘அவ்வானவர்’
‘குலம் ஒன்று ”
பலம் கொண்டு’ என்னும் இம் மூன்று பாடல்களாலும்
‘ஓம்’ என்னும் ப்ரணவத்தின் கருத்துச் சொல்லப்பட்டது.

இனிமேல் நாலு பாடல்களால் ‘நம’ என்னும் சொல்லின் கருத்தை உரைக்கிறார்.
‘நம’ என்னும் சொல்லுக்குப் பொருள் கூறப்படுகிறது.
அதற்கு இறைவனைத் தவிர வேறு (வழி) கதியில்லை என்று பொருள்.
இக்கருத்தை விளக்குவதற்குத் துணையாகும் கருத்துக்கள் இங்கு எடுத்துக் கூறப்படுகிறது.

சேர்தல் –
இடைவிடாது நினைத்தால்.உலகியலை நினையாது இறைவனடியையே நினைப்போர்க்கு பிறவியருதலும்
அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அது அறாமையுமாகிற இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன என்றும்
பரிமேலழகர் உரையில் உணரலாகும்.
‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’ என்னும் குறளில் காணலாம்.
(சேர்தல்-இடையறாது நினைத்தல்

————-

இறைவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அவனை யாரும் ஆணையிட முடியாது.
அவனுக்கும்’ சநிரங்குச ஸூதந்திரன்’ என்று பெயர். அவனை வளைக்கவோ, தடுக்கவோ இயலாது.
இவ்வாறு இருக்கையால் சாஸ்திரங்கள் அவனுடைய அருளைப் பெறுவதற்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்
முதலிய பல வழிகளைச் சொல்லி உள்ளன.
சாஸ்திரங்களின் நுட்பமறியாதார் மேற்சொன்ன கர்ம யோகம் முதலான யோகங்களைச் செய்து
அவ்வழியால் இறைவனை அடையலாம் என்று மிக்க முயற்ச்சிகளை மேற்கொள்ளுகிறார்கள்.
அவர்களை நோக்கி ஓர் உண்மை இங்கு உணர்த்தப்படுகிறது.
இறைவன் தன் திருவடிகளை இவ்வுயிர்களுக்குத் தானே கொடுத்தாலொழிய எந்த முயற்சியினாலும்
அவன் திருவடிகளை அடைய முடியாது.
ஆகவே அவன் தன் திருவடிகளை எப்பொழுது கொடுப்பானோ! என்று எதிர் பார்த்துக் கொண்டே இருங்கள்
என்னும் நுண்பொருள் இதில் கூறப்படுகிறது.

கருமத்தால் ஞானத்தால் காணும் வகையுண்டே
தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் -ஒரு மத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி –4-

பதவுரை:

ஒரு மத்தால் – மந்திர மலையாகிற ஒரு மத்தால்
முந்நீர் – ஆழ் கடலை ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் மூன்றும் கலந்து)
கடைந்தான் – தேவர்களுக்காகக் கடைந்தவனானான்
அடைத்தான் – சீதப்பிராட்டிக்காகக் கடலை அணை செய்தவனானான்
முதல் படைத்தான் – படைப்புக் காலத்தில் முதன் முதலாக அந்த நீரைப் படைத்தவனானான்
அந்நீர் – அந்த நீரில்
அமர்ந்தான் – பள்ளி கொண்டருளினான்
அடி – இத்தகையவரது திருவடிகளாகிற
இறை தாள்கள் – இறைவனுடைய திருவடிகள் தாமே தரும் அத்தால் அன்றி
தருகையாகிற அதனால் ஒழிய
கருமத்தால் – தன் முயற்சியால் சாதிக்கப்படும் கரும யோகத்தாலும்
ஞானத்தால் – அப்படிப்பட்ட ஞான பக்தி யோகங்களினாலும்
காணும் வகையுண்டே –காணும் முறைகள் உண்டோ?
இல்லை

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டோ?:-
கரும யோகத்தாலும் ஞான யோகத்தாலும் காணும் வழிகள் உண்டோ? இல்லை என்பது பொருள்.
ஞானம் என்பதில் பக்தியும் அடங்கும். பக்தி என்பது ஞானத்தின் முதிர்ந்த நிலயாதலால் இவ்வாறு சொல்லப்படுகிறது.

வேதாந்த நூல்களில் மேற்சொன்ன மூன்று யோகங்களும் இறைவனை அடைவதற்கு வழியாகச் சொல்லப் பட்டுள்ளது.
ஞான யோகத்தைப் போன்று தூய வழி வேறு எதுவுமில்லை என்று கீதையில் சொல்லியிருக்கிறது.
‘என்னை அடைய வேணும் என்ற கொள்கையுடையவன் மனதை என்னிடம் வைக்க வேணும்.
என்னையே இடையறாமல் நினைக்க வேணும். என்னை வணங்க வேணும்’ என்று
அர்ஜுனனுக்கு கண்ணனே போதித்திருக்கிறான்.

இவ்வாறு இருக்க இங்கு இவற்றால் காணும் வைகை உண்டோ -என்று சொல்லியிருப்பது எண்ணிப் பார்த்தற்குரியது.
இவ்வாறு அருளிச் செய்த நூல் ஆசிரியரான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
மேற்படி யோகங்களின் உண்மை நிலைகளையும்
இறைவனுடைய சிறப்பையும் தம்முடைய நுண் அறிவால் தெளிவாகக் கண்டிருப்பவர். ஆகையால் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்சொன்ன யோகங்களெல்லாம் பகவானுடைய திருவடிகளில் சரணாகதி பண்ணியே செய்ய வேண்டியதாயுள்ளன.
அச் சரணாகதி இந்த யோகங்களுக்குத் துணை நிற்பதாய் உள்ளது.
ஆகவே தன முயற்சியால் சாதிக்கப்படும் கர்ம யோகம்,ஞான யோகம் , பக்தி யோகங்களும்
சரணாகதியின் துணையினாலேயே சாதிக்கப்படுவன என்னும் சாஸ்திர நுட்பத்தைக் கொண்டு
மேல் வாரியான இந்த யோகங்களால் அடைய முடியாது என்று கூறுகிறார்.
பகவானை சரணாகதி பண்ணி அவன் அருளைப் பெறாத போது எந்த முயற்சியினாலும் அவனைப் பெற முடியாது
என்கிற மறைப் பொருளின் முடிவு (வேதாந்த விழுப் பொருள்) இங்குக் கூறப்படுகிறது.

இறைவனுக்கும் உயிர்களுக்கும் பிரிக்க முடியாத எல்லாவிதமான உறவுகளும் இருப்பதால் உரிமையுடன்
அவனை அடைவதற்கான எளிய வழி இருக்கும் பொழுது அரும்பாடு பட்டு சாதிக்கக் கூடிய
கர்ம, ஞான,பக்தி யோகங்களாகிற அரிய வழிகளைக் கைகொள்ள வேண்டாம் என்பது இதன் உட்கருத்து. .

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த கீதார்த்த ஸங்கிரத்தில்

“நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபயதாம் பரிதஜ்ய ந்யசேத் தேவேது தாமபீ:” என்று கூறியிருப்பதாலும்

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே – நன்றாக
நான் உன்னையன்றி இலனேன் கண்டாய்
நாரணனே நீ என்னை யன்றி இலை”–(நான்முகன்திருவந்தாதி-7)

என்ற திருமழிசைப்பிரான் பாடலாலும் இறைவனைத் தவிர வேறு உபாயமில்லை என்பதை உணரலாம்.

தருமத்தாலன்றி இறை தாள்கள்:-
இறை தாள்கள் தரும் அத்தாலன்றி என்று கொண்டு கூட்டுக.
அதாவது
தலைவனான இறைவனுடைய திருவடிகள் தானே தன்னைக் கொடுப்பதல்லாமல் என்று பொருள்.

இங்கு’எம்பெருமானுடைய திருவடியே தஞ்சம்’ என்னும் கருத்து சொல்லப்பட்டுள்ளது.
இதைப் பற்றியே ‘பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது திண்கழலாயிருக்கும்’ என்று முமூக்ஷுப்படியில் சொல்லப்படுகிறது.
இங்கு இறை என்று சொன்னது அஷ்டாக்ஷர மகா மந்திரத்தின் முதல் பதமான ‘ஓம்’ என்ற ப்ரணவத்தில்
முதல் பதமான அகாரத்தின் பொருள்.அதாவது நாராயணன் என்பதாம்.

தாள்கள் தரும் அத்தாலன்றி:- என்றது
இறைவன் திருவடிகளே தஞ்சம்.வேறில்லை என்று நூல்களில் சொன்ன முடிவு பற்றிச் சொல்லப்பட்டது.
த்வய மந்திரத்தின் முற்பகுதியில் தஞ்சமாகக் கொள்வது பற்றி சொல்லும் போது
‘திருவடிகளையே தஞ்சமாகப் பற்றுகிறேன்’ என்று சொல்லியிருப்பதைக் காண்க.

மற்றும் நம்மாழ்வார் திருவாய்மொழியில்
”ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றும்
‘கழல்களவையே சரணாக் கொண்ட’ என்றும்
‘அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்’ என்றும்
‘ சரணே சரண் நமக்கு ‘ என்றும்
‘திருவடிகளே தஞ்சம்’ என்பதை ஒருதரம் சொன்னது போல் பலதடவை சொல்லியிருப்பதைக் காணலாம்.

ஆகவே இறைவனுடைய திருவடிகள் தவிர வேறு எதுவும் தஞ்சமாகாது என்பது நிலைநாட்டப்பட்டது.
இதற்கு உதாரணமாகப் பல எடுத்துக்காட்டுக்கள் சொல்லப்படுகின்றன.

ஒருமத்தால் முந்நீர் கடைந்தான்:-
தேவ லோகத்தில் இந்திரன் இராவதம் என்னும் தன்னுடைய யானை மேலேறி பவனி வரும்போது துர்வாச முனிவர்
தேவி பூசையில் தனக்குக் கிடைத்த மாலை ப்ரசாதத்தை அவனுக்குக் கொடுத்தார்.
அவன் யானை அம்மாலையை துதிக்கையால் சிதற அடித்தது.
இதைப் பார்த்த முனிவர் ‘இந்திரன் செருக்கு அடங்கும்படி அவன் செல்வம் அழியுமாறு சாபம் கொடுத்தார்.
‘கணமேயும் காத்தலறிது’ என்னும் வாய்மொழிப்படி அவனது செல்வம் ஒரு கணத்தில் அழிந்தது.

அந்நிலையில் இந்திரன் மிகவும் வருந்தி பகவான் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தான்.
தன்னை அடைக்கலம் புகுந்த இந்திரனுக்காக மந்திர மலையை ஒரு மத்தாகக் கொண்டு வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி
தானே ஆமையாகி அம்மலையை முதுகில் தாங்கி கலக்க முடியாத நீர் நிறைந்த கடலை
‘ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான்’ என்று சொன்னவாறு கடலைக் கடைந்து
அமுதத்தையும் இந்திரன் இழந்த செல்வங்களையும் எடுத்துக் கொடுத்து அவனது துயர் தீர்த்தான்
என்னும் வரலாறு இங்கு கூறிக் கொள்ளத் தக்கது.

அடைத்தான்:-
இராமபிரானின் பிரிவாலே தளர்ந்த சீதைப் பிராட்டியின் முக மலர்த்திக்காக கடலை அணை செய்தான்.
நீரைக் கண்டால் பயந்து ஓடும் வானரங்களை அதற்கு உதவியாகக் கொண்டான்.
நீரிலே அமிழும் மலைகளை அணை கட்டுதலுக்குக் கருவியாகக் கொண்டான்.
ஒருவராலும் அளவிடமுடியாத வண்ணம் வியந்து பார்க்கும்படி ‘சேது’ என்னும் அணை கட்டினான்.

முதல் படைத்தான்:-
உலகமெல்லாம் அழிந்த மகாப்ரளைய காலத்தில் உயிர்கள் உடல்களைத் துறந்து
இன்ப துன்ப நுகர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாமல் ‘அத்திக் காயில் அருமான் ‘ போல மாய்ந்து கிடந்த அவற்றை,
கடலைப் படைத்து அதில் நான்முகனைப் படைத்து மற்றுமுள்ள அனைத்தையும் படைத்தான்.
அதில் முதல் முதலாக ‘நன்மைப் புனல் பண்ணி’ என்று சொன்னவாறு நீரைப் படைத்தான்.
இங்கு முதல் என்றது ‘நீர்த் தத்துவத்தை என்று பொருள்.

அந்நீர் அமர்ந்தான்:-
படைக்கப்பட்ட அனைத்து ஜீவ ராசிகளுடைய காவலுக்காக அந்நீரிலே கண் வளர்ந்தருளினான்.
‘வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேல் மருவி’ என்றும்
‘பாற்கடல் யோக நித்திரை செய்தாய்’
‘பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்’ என்றும்’
வெள்ள வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கிற மார்க்கம்’ என்றும்
இறைவன் உயிர்கள் நலனுக்க கடலில் கண் வளர்ந்தருளும் நிலை சொல்லப்பட்டது.

அடி:-
இத்தகைய திருவடிகளைக் காணும் வகை உண்டே என்று கொண்டு கூட்டுக.

இங்குக் கூறிய ‘கடல் கடைந்தது ,கடலை அடைத்தது. அதனை படைத்தான்.அதில் பள்ளி கொண்டு அமர்ந்தான் என்றும்
வரலாறுகளால் செல்வம் முதலிய வேறு பயனை விரும்பி அவற்றிற்காக சரணாகதி செய்த தேவர்களுக்கும்

தன்னை விட்டுப் பிரியாமல் உடன் உறையும் பிராட்டிக்கும் ,

பிரளயத்தில் அழிந்தும், படைப்பில் பிறந்தும் மாறி மாறி சுழன்று வரும் உயிர்களுக்கும் ஏற்றத் தாழ்வு இல்லாமல்
எல்லோரையும் காத்தவனுடைய திருவடிகளை என்று விவரித்துக் காண்க.

‘ஒருமத்தால் முந்நீர் கடைந்தான்'(முந்நீர் அடைத்தான்)
முதல் (நீர்) படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி இறைவனுடைய அடியாகிற இறை தாள்கள் தரும் அத்தாலின்றி
கர்மத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டே? என்று கொண்டு கூட்டுக.

உயிர்கள் நலத்திற்கு இறைவனுடைய திருவடிகள் தஞ்சமேயல்லாமல்
உயிர்கள் தங்கள் முயற்சியினால் சாதிக்கும் சாதனங்கள் எவையும்
பயன் தர மாட்டா என்பது இப்பாடலின் கருத்து.

————

திருமகள் மணாளனான பகவான் உயிர்களுக்கு வீடு பேறு அளிக்கும் பொழுது
தன்னுடைய இயல்பான அருளாலேயே அருளிகிறான் என்பது முடிவான கொள்கை.

இதன் காரணம் அவன் பேரறிவாளனாய்
மிக்க திரளுடையவனாய் உயிர்களோடு பிரிக்க முடியாத உறவு உடையவனாய்
நற்குணங்கள் நிறைந்தவனாய்ச்
செய்யும் செயல்களெல்லாம் தன்னலம் கருதியே செய்து கொள்பவனாயிருப்பவன் .

இருப்பினும் சாஸ்திரங்களில் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்றும் மற்றும் சிலவும்
பகவானை அடைவதற்குச் சாதனங்களாகும் (வழியாகும்) என்று சொல்லப்பட்டுள்ளன.
சாஸ்திரங்களும் உயிர்களின் அறிவைச் சோதிப்பதற்கு இறைவனை அடையும் வழிகளைப் பலவகையாகக் காட்டி உள்ளன.

பேரறிவாளனான ஒருவன் பயனில்லாத ஒன்றைச் செய்யமாட்டமையால் கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன
சாதனம் போன்று தோன்றினாலும் பகவானுடைய அருளைப் பெறுவதற்கு இவை சாதனமாக ஆகமாட்டா.
அதனால் இவற்றை சாதனமாக ஏற்கலாகாது.
ஆகவே அறிவாளிகள் பகவானையே தஞ்சம் புகுந்து அவன் அருளாலேயே வீடு பேறு அடைகிறார்கள்.

அவ்வாறு அடைவதிலும்
நாம் பகவானைத் தஞ்சமாக அடைந்திருக்கிறோம் என்னும் நினைவையும் அறவே விட்டுவிட்டு
நம்மிடத்தில் இறையருளைப் பெறுவதற்கான ஒன்றும் இல்லை என்று
தன்னுடைய வெறுமையை எண்ணி இருப்பானேயானால்
அது இறைவனுடைய அருளாலே வந்ததாகும் என்பது இப் பாடலில் குறிக்கப்படும் கருத்தாகும்.

வழியாவது ஓன்று என்றால் மற்றவையும் முற்றும்
ஒழியாவது ஓன்று என்றால் ஓம் என்று -இழியாதே
இத்தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத்ததலையால் வந்த வருள் –5-

பதவுரை:

வழியாவது – சரணாகதி என்னும் வழியானது
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தோன்றினால்
மற்றவை – கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன
முற்றும் – எல்லாவற்றையும்
ஒழியா – தடம் தெரியாமல் விட்டிட்டு
அது – கீழ்ச் சொன்ன சரணாகதி வழி
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தேறியதால்
ஓம் என்று – அதில் உடன் பட்டு
இழியாதே – கைக் கொள்ளாமல்
இத்தலையால் – நம்மால் செய்யலாகும் செயல்கள்
ஏதுமில்லை – ஒரு புண்ணியமுமில்லை .ஒரு நல்லதும் இல்லை
என்று – என்று தங்கள் வெறுமையை எண்ணி
இருந்தது தான் – அவ்வொழுக்கத்தில் நின்றது
அத் தலையால் வந்த அருள் – இறைவன் கொடுத்த அருளாகும்

வழியாவது ஒன்று என்றால்:
‘சரணாகதி’ என்னும் வழி ஒன்றே என்று உறுதியானால்,
கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி யோகம் முதலான சாதனங்களை நாலு வகையாக
சாஸ்திரங்கள் சொல்லியிருந்த போதிலும்
ப்ரபத்தி யோகம் (சரணாகதி) தவிர ஏனைய சாதனங்களெல்லாம் பலனைத் தரும் அதிகாரம் பகவான் ஒருவனுக்கே உள்ளதால்
ஏனைய சாதனங்கள் நேரடியாக பலன் தராது என்பது சாஸ்திர முடிவு.
ஆகவே அவற்றைச் சாதனங்களாகப் பற்றுவதில் பயனில்லை என்று தெளிவு.
ஆகவே, நாலாவதாகச் சொல்லப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) ஈச்வரனோடு நேரிடையாகத் தொடர்புடையதால்
இதுவே வழியாகச் சொல்லப்படுகிறது.
அதனால் “வழியாவது ஒன்று” என்று கூறப்பட்டது.

மற்றவை முற்றும் ஒழியா:
இவ்வாறு முடிவான பிறகு கர்ம யோகம், ஞான யோகம் பக்தி யோகம் முதலானவற்றையும் மற்ற சாதனங்களையும்
ஒட்டு மொத்தமாக விட்டுவிட வேண்டும் என்பது இதன் பொருள்.
மற்றவையும் என்று கூறியதால் சரணாகதி தவிர மற்ற மூன்று யோகங்களையும் என்று கொள்ள வேண்டும்.
“முற்றும்” என்பதற்கு முழுமையான என்று பொருள்.
அதாவது அவற்றை விடும்போது அவற்றின் தடமும் தெரியாமல் விட வேண்டும் என்பதாம்.
“ஒழியா” என்பது செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஒழித்து என்று பொருள் இது இருந்தது என்னும்
வினை கொண்டு முடிந்தது. இதை மறுவலிடாதபடி விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அது ஒன்று என்றால்:
அது-ப்ரபத்தி-சரணாகதி. இதற்குப் பகவான் என்று பெயர்.
“ஒன்று’ என்பது அவன் ஒருவனே என்னும் பொருளைக் குறிக்கிறது.
ஒருவனே என்று பிரிநிலை ஏகாரப் பொருளில் வந்து அவனைத் தவிர வேறு எந்த சாதனமும் சாதனமாகாது
என்னும் கருத்தைச் சொல்லுகிறது.
அடைக்கலம் புகும் பக்தன் ‘உன் திருவடியே தஞ்சம்” என்று சொல்லுவதும் சாதனம் ஆக மாட்டாது.
அவ்வெண்ணத்தையும் கூட சாதனமாகமாட்டாது. என்பது சாஸ்திர முடிவாகும்.
‘பவ சரணம்’ என்பதுவும் கழியுண்கிறது என்பது காண்க.
அவனே தஞ்சம் என்ற எண்ணம் இருந்தால் அந்த எண்ணமும் அவனுடைய அருளுக்குத் தடையாகிறது.
இவ்வாறு சரணாகதி செய்பவனிடத்திலுல்ல எதையுமே சாதனமாக ஏற்காதவன் பகவான்.

அவனைச் சரணாகதி என்னும் வார்த்தையால் சொல்லி ‘அது ஒன்று என்று இது அஃறிணையால் கூறப்பட்டது.
‘அது இது உது எது’ என்றார் நம்மாழ்வார்.
அவன் எப்படி வேண்டுமானாலும் கூறலாமல்லவா?
அதனால் அது ஒன்று என்றால் பகவானாகிற ஒருவனே வழி என்று முடிவானால் என்று பொருள் காண்க.

ஓம் என்று இழியாதே:
இம்முடிவுக்கு உடன்பட்டு அவனைப் பற்றுவதிலேயே முனைந்தால்
அதாவது
இறைவனுடைய திருவடிகளை நாம் பற்றினாலன்றோ அவன் நமக்கு அருள் செய்வான் என்று
நினைத்து அவனை அடைக்கலம் புகாமல்.

இத்தலையால் ஏதுமில்லை என்று இருந்தது தான்:
இவ்வருளைப் பெறுவதற்குச் சொல்லப்படும் சாதனங்கள் நம்மால் செய்யலாவது ஒன்றுமில்லை என்று
தனது வெறுமையை (ஒன்றுமில்லாமையை) எண்ணியிருக்கும் அவ்விருப்புத்தான்

அத்தலையால் வந்த அருள்:
அவன் உயிர்களிடம் வைத்துள்ள அருளினால் வந்ததாகும் என்பதாம்.

சாஸ்திரங்களில் ‘வீடுபேற்றுக்கு சாதனமாக சரணாகதி என்னும் ஒரே வழி தான் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முடிவான பிறகு ஏனைய கர்ம, ஞான பக்தி யோகங்கள் எல்லாவற்றையும் தடம் தெரியாமல் விட்டு விட வேண்டும்.
இவ்வாறு சொல்லப்பட்டதால் ‘அச்சரணாகதி நெறியே நமக்குத் தஞ்சம்’ என்னும் எண்ணம் உண்டாகும்.
அவ்வெண்ணத்தையும் கொள்ளலாகாது என்பதாம்.

ஏன் எனில்
‘இறைவனாகிற ஒருவனே அருள் செய்கிறான்’ என்று கூறுகையில் ஒருவனே என்ற இடத்தில் உள்ள பிரிநிலை ஏகாரம்
கர்ம, ஞான, பக்தி யோகங்களைப் பிரித்து நிற்கிறது.
அது போல இவனுடைய பற்றுதலையும் பற்றுதல் எண்ணத்தையும் பிரித்துக் காட்டுகிறது.

ஆகவே, இறைவன் அருளுவதற்கு உயிர்களிடம் சிறிதளவு எதையும் எதிர்பார்த்து அருளுவதில்லை என்பதும்
அவன் தன்னுடைய இயல்பான கருணை குணத்தால் மட்டுமே அருளிகிறான் என்பதும் உணர்த்தப்படுகிறது.

‘வெறிதே அருள் செய்வர்’ என்னும் திருவாய்மொழி பாடல் உரையில் இதை விளங்கக் காணலாம்.
இவ்வாறு இறைவன் தானே அருள் செய்கையில் அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லையாகிறது.
இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு சாதனங்களாக எதையும் செய்யாமால் வெறுமையாக இருக்கும் நிலை
ஒருவனுக்கு அமைந்தால் அது இறைவன் திருவருளாலே தான் வரவேண்டுமேயல்லாது அதை நம்மால் கொள்ள முடியாது.

வெறுமைக்கு இறைவன் அருள் வேண்டுமோ என்றால் கட்டாயம் வேண்டும்.
ஒருவன் செயல் எது இல்லாமல் வெறுமையாக இருப்பது மிகவும் அரியதாகும்.
ஒரு சிறு பொழுதுகூட செயலற்று இருக்க முடியாது. என்றும்
கை, கால் முதலிய உறுப்புக்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் கீதையில் சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே வெறுமையாக இருத்தலே நன்றாகும்.
அதாவது
இறைவனுடைய பற்றுதலையோ பற்றியுள்ளோம் என்னும் எண்ணத்தாலேயோ பயன் அடைவதில்லை என்பதாம்.
இக்கருத்தை ‘வாழும் சோம்பர்’ என்றார் தொண்டரடிப்பொடிகள்.
‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றார் பெரியாழ்வார்.
‘என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே’ என்றார் நம்மாழ்வார்.
‘உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்’ என்றார் திருமங்கையாழ்வார்.
‘நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே’ என்றார் திருமழிசைப்பிரான்.
‘சிறுமானிடவர் நாம் செய்வதென்’ என்றாள் ஆண்டாள்.
ஆசார்யர்களில் திருக் கண்ண மங்கை யாண்டான் இக்கொள்கையைக் கடை பிடித்தார்.

‘அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம், அவத்யகரம். அவனுடைய ச்வீகாரமே ரக்ஷகம்’ என்ற
முமுக்ஷுப்படி (சூத்திரம் எண் 230) தொடரிலே காணலாம்.
இதற்கு உதாரணம்: ஸ்ரீ இராமாயணத்தில் சீதை இராமனை அடைவதற்கு எந்த உபாயத்தையும் செய்யவில்லை.
ஆனால் ஸ்ரீ ராமபிரான் சீதையை அடைவதற்கு வில்லை முறித்தல் போன்ற பல சாதனங்களையும் நடத்தியிருக்கிறான்.
இதனால் சீதை இருக்கும் இடம் தேடி வந்து இராமன் அவளை அடைந்திருக்கிறான்.
இந்த உதாரணத்தை மனதில் கொண்டால் மேலே சொன்ன கருத்துக்கள் தெளிவாகும். இது வான்மீகியின் கதைப் போக்கு.

இவ்வாறு கூறியவற்றால் சரணாகதி தத்துவம் அசேதனம் போல் எவ்வித செயல்பாடுமின்றி இருத்தல் என்று தேறுகிறது.
இந்நிலை ஒருவனுக்கு வருவது இறைவனுடைய திருவருளால் தான் ஆகும் என்ற கருத்தை உரைத்துக் கூறுகிறது இப்பாடல்.

இதற்கு உதாரணமாக திருவாய்மொழி 6ம் பத்து 10ம் திருவாய்மொழி “உலகமுண்ட பெருவாயா” என்ற பதிகத்தில்
‘ஆவாவென்னும் ‘ பாசுர ஈட்டில் கூறப்படும் ஒரு ஐதீஹியத்தைக் காணலாம்.

நம்பிள்ளை, ஜீயரை ஒரு நாள் பஞ்சமோபாயம் என்று உண்டு என்று சொல்லுகிறார்கள்.
நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்றுண்டோ என்று கேட்டருள
‘நான் அறிகிலேன். இனி சதுர்த்தோபாயம் தான் பகவானேயாக இருக்க வ்யோமாதீதம் சொல்லுவாரைப் போல.
‘அவனுக்கும் அவ்வருகே ஒன்றுண்டு என்கையிறே’ அது நான் கேட்டறியேன்’ என்று அருளிச் செய்தார்.

இங்கு அரும்பதத்தில்
“சதுர்த்தோபாயமான ஈஸ்வரனை ஒழிய வேறு உபாயமில்லை என்கைக்கு சம்வாதமாக
ஐதீஹ்யம் நம்பிள்ளை இத்யாதி’ என்ற இந்த தொடர்களை ஊன்றி நோக்க வேணும்.

————

உள்ளபடி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகு இலதாய் விட்டதே -கொள்ளக்
குறையேதும் இல்லாற்குக் கூறுவது என் சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம் –6-

பதவுரை:

உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி
உணரில் – தெரிந்து கொண்டால்
ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று
நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு
உண்டென்று – இருக்கிறது என்று
விள்ள – வாயினால் சொல்லகூட
விரகிலதாய் – வழியில்லையாகிவிட்டது அல்லவா
விட்டதே – (சக்தி இல்லையாகி விட்டது அல்லவா)
கொள்ள – நம்மிடத்தில் பெற்றுக் கொள்ளவேண்டுவன
குறை – குறைபாடுகள்
ஏதும் இல்லார்க்கு – சிறிதும் இல்லாத இறைவனுக்கு
இறையேதும் இல்லாத – சிறிதளவுவேனும் தனக்கென்று ஒன்றுமில்லாத
யாம் – அடிமைத் தன்மையையே வடிவாக உள்ள நாம்
கூறுவது என் – நம்மை காப்பதற்குச் சொல்லும் வார்த்தை என்ன இருக்கிறது
சொல்லீர் – சொல்லுவீர்களாக

உள்ளபடி உணரில்:
உயிரின் உண்மை நிலையை உணர்ந்தால்

“எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற திருக்குறளில்
ஆன்மாவின் உண்மை நிலையை உணர்வதே அறிவாகும் என்று கூறப்படுள்ளது.

ஒருவன் ஒரு பொருளை உலகில் காணும் பொழுது மேல் தோற்றமான இயங்குதிணை, உயர்திணை ஆகிய இவற்றில்
மனிதன், விலங்கு, செடிகொடி என்னும் இவற்றாலே காண்கிறான்.
அனைத்துப் பொருளுக்கும் உள்ளிருக்கும் உயிரைப் பார்பதில்லை.
உயிரைப் பார்க்கின்ற அறிவொளி வெளி தோற்றத்தைப் பார்பதில்லை.

உதாரணமாக “கோச் சேரமான் யானைக் கண் சேய் மாந்தரம் சேரல் இரும் பொறை” என்னும் சிறப்பு பெயரும் கூடி
ஒரு பொருளைக் காட்டுகிறது. இவை எல்லாம் நிலை இல்லாததால் கற்பனயாகக் கருதப்படும்.
இக்கற்பனைக்கு அப்பாற்ப்பட்டதாய் இருப்பது உயிர்.
இத்தகைய உயிரின் உண்மை நிலையை சாஸ்திரங்கள் துணை கொண்டே அறிய வேண்டியுள்ளது.
உயிர் அறிவே ஆன்மா என்றும் அறிவு உடையது ஆன்மா என்றும் நூல்கள் கூறும்.

இதனால் ஆன்மாவுக்கு ‘நான் இதைச் செய்கிறவன் என்னும் செருக்குத் தன்னடையே தோன்றுகிறது.
இதைப்பற்றி கூர்ந்து ஆராய்ந்து பார்க்கையில் ஆன்மாவைப் பற்றி ஒரு உண்மை தெளிவாகிறது.
நுணுகி அறிவார்க்குப் புலனாவது ஒன்று.
அதாவது
உயிர்களெல்லாம் தன இச்சையில் செயல்பட முடியாத உடல்களாகவும்
இறைவன் அனைத்து உயிர்களையும் இயக்குகின்ற உயிராகவும் சொல்லப்படுவதால்
இறைவனுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையே உயிரின் உண்மை இயல்பாகும்.
ஆகவே நான் எனது என்று வாய் விடுவதற்கு தகுதி அற்றதாகிறது.

இவ்வாறு உயிர்களின் உண்மை நிலையை அறியும் போது தன்னைத்தான் காத்துக் கொள்ள,
தான் ஒன்று செய்வதற்கான வாய்ப்பே உயிர்கட்கு இல்லை என்று புலனாகிறது.
அதுவே உயிரைப் பற்றி உள்ளது உள்ளபடி அறியும் அறிவாகும்.

‘இயல்பாகவும் நோன்பிற்க ஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து’ என்ற குறளில்
மேற்கூறிய கருத்தைத் திருவள்ளுவரும் கூறியுள்ளார்.
இதன் கருத்து இறைவனைத் தவிர தனக்கு ஒரு பற்றப்படும் பொருளும் இல்லை என்றிருப்பதுவே
ஞானியர்க்கு பொருள் ஒன்று உண்டு என்று எண்ணினால் அது மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாகும் என்பதாம்.
இங்கு ஒன்று இன்மை இயல்பாகும், உடைமை மயலாகும் என்று கூறியது காண்க.
இதனால் ஒன்று உடையோம் என்றெண்ணுவது மடமையாகும் என்பதால்.

ஒன்று நமக்கு உண்டென்று விள்ள விரகிலதாய் விட்டதே:
“வீடு பேற்றுக்குக் கைமுதலாக ஒன்று நம்மிடம் இருக்கிறது” என்று சொல்வதற்கு வாய் திறக்க வழியில்லை என்று பொருள்.
“விள்ள” என்பதற்குச் சொல்ல என்று பொருள் கொள்ளப்பட்டது.

இவ்வாறன்றி “விள்ள -விலகி நிற்க” என்று பொருள் கொண்டு .
இறைவனுடைய (கருணை) அருள் நிழலில் பதுங்கிக் கிடப்பது அல்லாமல்
அதைவிட்டுப் பிரிந்து தனித்து நிற்கும் ஆற்றல் உண்டு என்று எண்ணி விலகி நிற்பதற்கு வழியற்றுவிட்டது என்றும் சொல்லலாம்.

இக்கருத்து உயிர்கள் எல்லாம் இறைவனுடைய உடலாகவும் இறைவன் அவற்றிற்கு உயிராகவும் சொல்லப்படுவதால் கூறப்பட்டது.
உயிரின் துணையின்றி உடல் இயங்க முடியாதல்லவா?
உயிர்க்கு உணர்வு என்னும் பண்பு இருப்பதால் செயலற்று உயிரில் பொருள் போல எப்படி இருக்க முடியும்?
அவ் வுணர்வுக்கு ஏற்ப இறைவனே நம்மைக் காக்க வேண்டும்என்று ஒரு வார்த்தையேனும் சொல்ல வேண்டுமா?
அதுவும் இல்லாமல் எப்படி முடியும்? என்ற வினாக்கள் இங்கு எழுகின்றன. அவற்றிற்கும் பதில் சொல்கிறது.

கொள்ளக் குறையேதும் இல்லார்க்கு என்ற இத்தொடர்.
இறைவன் உயிர்களைக் காக்கும் பொழுது உயிர்களிடத்தில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காப்பாற்றும் குறை அவனிடம் இல்லை.
ஒன்றை ஏற்றுக் கொண்டு அதற்காகக் காப்பவன் என்றால் அவனுடைய பெருமைக்கு இழுக்காகும்.
அதனால் அவன் எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டான். மேலும் நம்முடைய நிலையைப் பார்த்தால் ஒன்றும் இல்லாதவராய் இருக்கிறோம்.

இறையேதும்:இல்லாதயாம்:
உயிரும் உயிரைச் சார்ந்த உடல் முதலிய பொருள்களும் இறைவனுடைய உடைமைப் பொருள்களை இருக்கின்றன.
தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாததாய்த் தனக்கென்று ஒன்று சிறிதும் இல்லாததாய் இருக்கின்றன.
ஆகவே அவன் ஒரு பொருளையும் கொள்ள மாட்டான். இவனுக்கு ஒன்றும் இல்லாததா? இவன் கொடுக்க மாட்டான்.
இதை விளக்குவதற்கு இங்கு ஓர் உதாரணம் காட்டப்படுகிறது.

இறைவனை வணங்கச் சென்ற ஓர் அடியவர் இறைவன் முன் சென்று இறைவனே
! உனக்கு எப்பொருளை நான் தருவேன்? ஏன் எனில் நானே உன்னுடைய அடிமை. பொருள் எல்லாம் உன்னுடைய உடைமை.
எனக்கென்று எப்பொருள் இருக்கிறது? ஆகவே நான் உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை.
ஆயினும் நெடுங்காலமாக என்னுடைய வினைகள் எனக்குச் சொந்தமாக உள்ளன.
அவற்றை வேண்டுமானால் கொடுக்கலாம் என்று சொல்லி வணங்கியதாகக் கூறப்படுவதை இங்கு சொல்லலாம்.

மேலும் இராமாயணத்தில் பரதனுக்கும் வசிட்ட முனிவருக்கும் நடந்த உரையாடலில் இக்கருத்து மேலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இராமன் கானகம் சென்று விட்டான். தந்தை தசரதன் வானகம் எய்திவிட்டான்.
ஆகவே பரதா நீதான் அரசாள வேண்டும் என்றார் வசிட்டர்.

இதைக்கேட்ட பரதன் செவிகளைக் கைகளால் புதைத்துக் கொண்டு பின்வருமாறு பேசினான்.
இராமன் கானகம் சென்று விட்டான். என்றால் அவனுடைய உடைமைப் பொருளான அரசாட்சியை நான் ஏற்பது தகும்?
ஒருவனுடைய உடைமையை மற்றொருவன் கவர்வது கள்ளத்தனமாகுமன்றோ?
“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” என்றன்றோ நீதி நூல்கள் கூறுகின்றன என்றான்.

ஆனாலும் வசிட்டர் விடவில்லை.
தற்பொழுது இராமன் இல்லாததால் அவனுடைய உடைமையான அரசை அவன் வரும் வரை ஏற்கலாமே என்றார்.

அதற்கு பரதன் “உடையவன் தான் உடைமைப் பொருளைக் கொல்லவேணுமேயொழிய
ஒரு உடைமை மற்றொரு உடைமையை ஏற்க நியாயமில்லை.
நான் இராமனுடைய உடைமையாதளால் அரசாகிற மற்றொரு உடைமையை ஏற்கத் தகுந்தவனில்லை” என்றார்.

அப்பொழுது வசிட்டர் விடவில்லை.
அரசாகிற ராமனுடைய உடைமை அறிவற்றது. பரதனாகிற நீ அறிவுடையவன்.
ஆகவே அறிவற்ற அரசாகிற உடைமையை அறிவுடைய நீ ஏற்றுகொள்ளலாம் அல்லவா?
ஒருவனுக்கு அணிகலன்களும் அவற்றை இட்டுவைக்கும் உடைமைகளுள்
அணிகலன்களாகிற உடைமையை பெட்டியாகிற உடைமைப் பொருள் பாதுகாக்கவில்லையா?
அது போல அரசு இராமனுடையதாக இருந்தாலும் நீயும் இராமனுடைய உடைமையாக இருந்தாலும்
அரசை நகைப் பெட்டிபோல் ஏற்றுக்கொள்ளலாமே என்றார்.

அது கேட்ட பரதன் நீர் சொன்ன உதாரணத்தில் இரண்டும் அறிவில்லாதவை.
உடையவன் அணிய வேண்டிய உடைமைப் பொருளை நாம் அடக்கிக் கொண்டிருக்கிறோமே என்னும் அறிவில்லாததால்
அணிகலன்களைப் பெட்டி ஏற்றுக் கொண்டுள்ளது.
எனக்கு அறிவு இருப்பதால் இராமனுடைய உடைமையான அரசை நான் ஏற்க இயலாது.
யானும் இவ்வரசும் இராமனுடைய உடைமைகளே.
அரசைக் காட்டிலும் வேறுபட்ட நிலையில் எனக்கு அறிவிருப்பது நான் இராமனுடைய உடைமை என்பதை
எப்பொழுதும் நினைத்துக் கொண்டு அதற்கேற்ப இருப்பதுவே எனக்கு சிறப்பாகும்.
இந்த எண்ணம் அரசுக்கு இல்லாததால் அது எனக்கு வேறுபட்டதாயிற்று .
இருப்பினும் நானும் அரசும் இராமனுடைய உடைமைகளே என்று கூறி மறுத்து விட்டான்.

இதனால் உயிர்கள் உணர்வு உடையனவாயிருந்தாலும்
“நான் இறைவனுடைய உடைமை” என்பதை அறிந்து அடிமைத் தொழில் செய்வதற்கே உரியனாய்,
யான் என்றோ, எனது என்றோ சொல்வதற்குத் தகுதியுடையதில்லை என்றவாறு.
இக்கருத்துக்களை இங்கே உணர வேண்டும்.

இவற்றை எல்லாம் உள்ளடக்கி இறைவன் நிறைவுடையவன்.
ஆகவே யாரிடமும் எதையும் ஏற்க வேண்டாதவனாகிறான்.
உயிர்களுக்கு “உடைமை என்ற ஒன்றும் சிறிதும் இல்லாததால் அவனுக்குக் கொடுப்பதற்கு எதுவும் இல்லாதவனாகிறான்.
இறைவன் கொள்ளக் குறையேதுமில்லாதவன். உயிர்கள் சிறிதளவேனும் ஒன்றும் உடைமை இல்லாதவர்கள்.
ஆகவே அவன் கொள்ள மாட்டான். இவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்ற இவ்வுண்மைகளை விளக்கித்
தம் அருகில் இருப்பாரை நோக்கி இக்கருத்துக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார் ஆசிரியர்.

இங்கு “நாம்” என்கிற தன்மைப் பன்மை முன்னிலைப் பொருளையும் சேர்த்துக் கொண்டு
நாம் எல்லோரும் என்று அனைத்து உயிர்களையும் சுட்டிச் சொல்கிறதாகக் கொள்ள வேண்டும்.
அனைத்து உயிர்களும் அவனுடைய உடைமையாதலால் மேற்சொன்னக் கருத்து அனைத்துயிர்களுக்கும் பொதுவானதாகும்.

இறை என்ற இடத்தில் இறை என்ற சொல் சிறிதும் என்ற பொருளில் வந்தது
“இறையும் அகலகில்லேன்” போல இறை என்றவிடத்தில் இழிவு சிறப்பு உம்மை தொக்கு நின்றது.
இறையும் ஏதுமில்லாத என்று பொருள் கொள்க.

ஆன்மாவின் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் இறைவனுக்கு உடமைப் பொருளாயும்
அவன் வயப்பட்டுமிருத்தளால் தானாகச் செய்வதற்கு எதுவுமில்லை .
தனக்கு ஒரு உடைமையுமில்லை. .
அவன் நிறைவுடையவனாய் இருத்தலால் எதையும் கொள்ளமாட்டான்.
மிடியனுக்கு (தரித்திரனுக்கு) செல்வந்தனுக்குக் கொடுக்கத்தக்க பொருள் எதுவுமில்லை.
செல்வந்தன் தரித்திரனிடத்தில் ஒரு பொருளைப் பெற்றுக்கொள்ளத் தக்கக் குறைவுடயவனில்லை .
அப்படியிருக்க இவன் எதைக் கொடுப்பான்? அவன் எதைப் பெறுவான்?

ஆகவே அவனுக்கு உடைமையாய் அவன் அடிமையாய் இருக்கும் நிலையையே எண்ணி இருப்பதுவே உயிர்களின் கடமையாகும்.
என்னும் பொருள் இப்பாடலில் கூறப்படுவதாகும்.
இதுவே “நம” எனும் சொல்லின் சாரமாகும்.

இவ்விடத்தில் கீழ்வரும் ஸ்ரீவசனபூஷன சூத்திரங்கள் நினைதற்குரியான

“பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது அல்லாத போது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம்”
என்று சொல்லி “அந்திம காலத்துக்குத் தஞ்சம் .இப்போது தஞ்சமென் என்கிற நினவு குலைகை. என்று சீயர் அருளிச் செய்வர்”
என்னும் சூத்திரத்தில் ஒரு நிகழ்ச்ச்சியை எடுத்துக்காட்டி
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானவனும் அவனே என்பன் இங்கு நஞ்சீயர் சொன்னதாகக்
கூறிய வார்த்தையைக் காண வேண்டும்.

நஞ்சீயர் என்னும் பேராசான் ஒருவர் தம்முடைய சீடர் ஒருவர் நோய்வாய்ப் பட்டிருப்பதாகக் கேள்வியுற்று
அவரைப் பார்க்க அவரிடம் சென்றுள்ளார்.
அப்பொழுது அந்நோய்வாய்ப்பட்டவர் “அடியேனுக்கு இறுதிக்காலத்துக்குத் துணையாக இருக்கும் ஒன்றைச் சொல்ல வேண்டும்”
என்று கேட்க அதற்குப் பதிலாக அவர் இவ்வாறு சொல்கிறார்.

“நாம் பகவானுடைய உடைமைப் பொருளாய் இருப்பதால் உடைமைப் பொருளைப் பேணிப் பாதுகாப்பது
உடையவனுக்குப் பொறுப்பாதலால் அதைப் பற்றி நாம் நினைப்பதற்கு உரிமையில்லை.
இன்றைக்குத் துணையாக வேணும் கடைசி காலத்துக்குத் துணையாக வேணும் என்று என்னும் எண்ணம்
அதாவது (நம்மைக் காத்துக் கொள்ளும் எண்ணம்) அகல்வதுவே நமக்கு நலமாகும்.

ஆகவே தன்னைத்தான் காத்துக்கொள்ள வேணும் என்ற எண்ணத்தை எப்பொழுது இவன் விடுகிறானோ
அன்றைக்கு இவனைக் காக்கும் எண்ணத்தை இறைவன் செய்வான் என்பது இவ்வார்த்தையின் கருத்தாகும்.

ஸ்ரீ இராமபிரானை வனவாசிகளான முனிவர்கள் சந்தித்து உரையாடுகையில்
தங்களைக் கருப்பையிலுள்ள சிசுக்களாகச் சொல்லிக் கொண்டனர்.
இதன் கருத்து கருப்பையிலுள்ள சிசுவின் அனைத்து செயல்பாடுகளும் தாயாரும் வசத்தில் உள்ளன போல்
ஆன்மாவின் அனைத்து செயல்பாடுகளும் இறைவன் வசத்தில் உள்ளன என்பதைக் குறிக்கும்.

இவ்வாறான ஆன்மாவின் தன்வயமற்ற நிலை (இறைவன் வயப்பட்டதால்) அறியப்படுகிறது.
இதை சாஸ்திரம் “பாரதந்திரீயம்” என்று கூறும்.
அதில் “அசித்வத் பாரதந்திரீயம்” என்று சிறப்பித்துக் கூறும்.
“இதனை வைத்த இடத்திலிருந்தேனோ பாரதாழ்வானைப்போல” என்றும்
“படியாய்க் கிடந்தது உன்பவளவாய் காண்பேனே” என்னும் தொடர்களால் எடுத்துக் காட்டுவர் ஆன்றோர்.
மேலே சொன்ன ஒழுக்கத்தில் நிலைநிற்கும் உயிர்களை இறைவன் தானே வலிய வந்து காப்பாற்றுவான் என்பதாம்.
இதற்கு எடுத்துக் காடாகக் “கடற்கரையை நினைத்திருங்கள்” என்று கூறுவார்.

கடற்கரையில் “எழுபது வெள்ளம் வானரச் சேனைகளுக்கு நடுவில், இராமன் இலக்குவணன் இருவரும் இருக்க
அப்பொழுது வானரங்கள் அரக்கரிடமிருந்து இராமனையும் இலக்குவணனையும் நாம் காக்க வேண்டுமென்று பேசிக்கொண்டன.
இரவில் நெடுநேரமானதும் வாரங்கள் எல்லாம் உறங்கத் தொடங்கின அப்பொழுது இராமனும் இலக்குவணனும்
கையும் வில்லுமாய்க்கொண்டு வானரங்களைச் சுற்றி வந்து காத்தனர்.என்பதாம்.

இவ்வாறான எடுத்துக்காட்டுக்களால்
ஆன்மாக்களைக் காப்பது இறைவன் கடமை என்றும்
ஆன்மாக்கள் அவருடைய காத்தலைத் தடுக்காமல் இருக்கவேணும் என்பதும் இங்குக் கூறப்பட்டன.

—————

சென்ற பாடலில் இறைவனை
“கொள்ளைக் குறையேதும் இல்லாதவன் என்றும்
உயிர்களை இறை(யும்) ஏதுமில்லாத யாம்” என்றும்
இருவருக்கும் உள்ள இல்லாமை சொல்லப்பட்டது.

கம்பன், சீதையையும் இராமனையும் கட்டுரைக்கையில்
“மருங்கிலா நங்கையும் வசையில் அய்யனும்” என்று இருவருக்கும் ஒரு இல்லாமையைக் கூறினான்.
சீதைக்கு இடுப்பு இல்லை, இராமனுக்குப் பழிப்பில்லை என்று நகைச் சுவையாகக் கூறினான்.
அது போல இன்கம் இறைவனுக்குக் குறை ஒன்றுமில்லை என்றும்,
உயிர்களுக்கு கொடுப்பதற்கு சிறிதும் ஒன்றும் இல்லை என்றும் கூறப்பட்டதாக
இருவருடைய இல்லாமையும் தெளிவாக்கப்பட்டது.

அதன் தொடர்பாக இருவருக்குமுள்ள இல்லாமையை எண்ணி இறைவனை வெல்வார் இல்லை என்று கூறப்படுகிறது.
அதாவது
இவ்வுண்மையை உணர்ந்தவன் ஞானி எனப்படுவான்.” இத்தகைய ஞானியே எனக்கு உயிர்” என்று
கீதையில் கூறுகிறான் பகவான்.
மேலும் அவனே எனக்கு அன்புக்கு இடமானவன் என்றும் ஞானியிடம் நான் தோற்பவன் என்றும் கூறியுள்ளான்.
இப்படி இறைவனால் கூறப்படும் ஞானி எங்கேனும் இருக்கிறார்களோ ? என்று ஞானிகளின் பெருமை பேசப்படுகிறது இப்பாடலில்

ஸ்ரீ ஆண்டாளும் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்ற தொடரில்
கூடுவாரிடம் தோற்பவன் கோவிந்தன் என்றும் கருத்துக் கூறினாள்.
அத்தகைய ஞானிகள் கிடைப்பார்களோ ? என்பது இப்பாடலின் கருத்து.

இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -இல்லை
குறையுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7-

பதவுரை:

இருவருக்கும் – இறைவனுக்கும், ஆன்மாக்களுக்கும்
இல்லை என்று – ஓர் குறைவின்மை உண்டென்று எண்ணுதலால்
இறையை – இறைவனை
வென்றிருப்பார் இல்லை – வெற்றி கொள்வாரில்லை
அஃது – அவ்வண்ணம்
ஒருவருக்கு – ஒரு மனிதனுக்கு
எட்டுமதோ – கிடைக்குமா?
குறைதான் – கொள்ளுவதாகிற குறை தான்
இல்லை – இறைவனுக்கில்லை
என்று – இவ்வாறு
கூறினாரில்லா – யாராலும் சொல்லப்படாத
மறையுடைய மார்க்கத்தே – வேத வழியில் நின்று
காண் – கண்டு கொள்வீராக

இல்லை இருவருக்கும் என்று:
இறைவனுக்கும் உயிர்களுக்கும் ஓர் இன்மை உண்டு.
அதாவது
இறைவனுக்குக் குறையொன்றுமில்லை. அவன் குறை ஒன்றுமில்லாத கோவிந்தன்.
உயிர்களுக்குப் பொருள் ஒன்றும் இல்லை. “அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம்”
“பொருள் அல்லாத” என்பவற்றால் இருவருக்கும் உள்ள இன்மை புலனாகும்.

இதுவே இருவருடையவும் உண்மை நிலையாகும்.
இவ்வுண்மை நிலையை இடையறாது எண்ணி இருப்பதுவே உயிர்களின் கடமையாகும்.
இவ்வாறு எண்ணியிருப்பார்க்கு இறைவன் தாழ நிற்பான்.

இதற்கு உதாரணமாக ஆழ்வாரின் பாடல்களில் காணலாம்.
வளவேழுலகு,
மின்னிடை மடவார்,
கண்கள் சிவந்த,
ஓராயிரமாய்,
அறுக்கும் வினையாயின முதலிய திருவாய்மொழிகளில்
பகவான் ஆழ்வார் முன் வந்து அவருக்குத் தாழ நின்றி சேவை கொடுப்பதால் கண்டு கொள்ளலாம்.
இவ்விருவரின் உண்மை நிலையும் அறியாதர்க்கு எம்பெருமானைப் பணிய வைப்பது இயலாததாகும்.
அதை அடுத்த தொடரால் கூறுகிறார்

இறையை வென்றிருப்பார் இல்லை
இறைவன் யாருக்கும் கட்டுப்படாதாவன். சுதந்திரன் – தன்னுடைய விருப்பபடி நடப்பவன்.
அத்தகையவனை ஒருவன் தனக்கு வயப்ப்படும்படி செய்து கொள்ள முடியாது.
மேற்கூறிய இருவரின் இலக்கணங்களையும் எண்ணியிருப்பார்க்கு அவன் மிகவும் எளியனாவான்.
பத்துடை அடியவர்க்கு எளியனல்லவா? அவன்.
எளிவரும் இயல்வனாயிற்றே அத்தகைய பக்தர்களைக் காண முடியுமா?

அஃது ஒருவருக்கு எட்டுமதோ:
அதாவது
இறைவனுடைய தலைமையையும் தன்னுடைய அடிமையையும் இடையறாமல் நினைக்கும் தன்மை ஒருவரால் செய்ய முடியுமா?
நான் எனது என்று செருக்கி திரியும் உலகில் அது அவ்வளவு எளிதல்லவே! மிகவும் அரிதாயிற்றே!
ஆகவே தான் அவனைப் பணியச் செய்வது இயலாது என்று கூறப்பட்டது.
இடையறாமல் நினைக்க வேண்டிய அவ்விருவருடைய இயல்பு தான் எது என்றால் அதற்குப் பதில் உரைக்கிறது மேல் தொடர்.

இல்லை குறையுடமை தான் என்று:
குறை தான் இல்லை
உடைமை தான் இல்லை என்று
கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

தான் என்ற இடைச் சொல் ஏகாரப் பொருளில் வந்தது.
குறையே இல்லை. உடைமையே இல்லை என்று விரித்துப் பொருள் கொள்க.

அதாவது
இறைவனுக்கு உயிர்களிடம் ஒன்று பெற்றுக் கொள்ளத் தக்க குறையில்லை.
உயிர்களுக்கு அவனுக்குக் கொடுக்கத் தக்க பொருள் ஏதும் இல்லை.
இதுவே இருவருக்குமுள்ள இயல்பு.
இந்த அறிவு யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. காரணம் மேல் தொடரில் கூறப்படுகிறது.

கூறினார் இல்லா மறையுடைய மார்க்கத்தே காண்:
வேதத்தின் உட்பொருளாய் மறைந்து கிடக்கிறது ஆகவேதான் அரிதாய் உள்ளது.
வேதம் எவராலும் ஆக்கப்பட்டதில்லை.அது அநாதியானது. “ஐயம் திரிபு” முதலிய குற்றமற்றது.
ஆகவே நம்பிக்கை மிக்கது. அதைக் கற்று உணர்ந்த மேலோர்களால் உண்மை அறியத் தக்கது.
அதைக் கற்று மேல் கூறிய உண்மையைத் தெளிய வேண்டியுள்ளது.
தன் முன் நிற்பார் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போல ஆசிரியர் காண்-(காண்பாயாக) என்று கூறுவதாகத் தெரிகிறது.

இவ்வாறு “காண்” என்று உரையாசிரியர் மணவாளமாமுனிகள் அத்தகையவர்கள் காணக் கிடைப்பார்களா என்று ஏங்குகிறார்.
ஒருவர் மேல் வைத்துச் சொல்லப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் சொல்வதாகக் கொள்ள வேணும்.
இதனால் கூறப்பட்டதாவது.

இறைவன் நிறைவானவன். (பரிபூர்ணன்) உயிர் அவனுடைய உடைமை. அதனால் அதற்கு உடைமையானது ஒன்றுமில்லை.
இதுவே மறையில் சொல்லப்பட்ட இறை உயிர்களைப் பற்றிய இரகசியமாகும்.
வேதத்தைக் கற்று உணர்ந்தவர்களுக்கே தெளிவாதன்றி ஏனையோர்க்கு அறிய முடியாத ஒன்று.
இவ்விருவரது உண்மையையும் அறியும் ஞானிகளுக்கு இறைவன் மிகவும் எளியவனாவான்.
இவ்வுண்மையை அறியாத உலகத்தார்க்கு இறைவனைத் தமக்கு எளிமையாக்கும் பெருமை கிடைக்குமா? கிடைக்காது.

இதனால் ஆத்மா பரமாத்மா சிந்தனை இறைவனைப் பணிய வைக்கும் என்றும் அச்சிந்தனை இல்லாதார்க்கு
இறைவன் எளியனாகும் தன்மை கிடைக்காது என்பதும் கூறப்பட்டது.

இதைப் “பத்துடையடியவர்க்கு எளியவன்”, “பிறர்க்கு அரிய வித்தகன் ” என்றார் நம்மாழ்வார்.

இதனால் சாஸ்திரப்படி நடப்பவர்களுக்கு பகவான் எளியவனாயிருப்பன் என்றும்
அப்படி இல்லாதவர்களுக்குன்மிக அரியனாய் நெடுந்தொலைவில் இருப்பான் ” என்றும் அறியக் கிடைக்கிறது.

கீதையில் ஞானியைத் தனக்கு உயிர் என்றான் கண்ணன். அவர்களுக்கு எளியனாய் இருந்தான்
“காப்பிட வாராய்” “பூச்சூட வாராய்” “அம்மம் உண்ண வாராய்” என்றால் ஓடி வருவான்.
“விட்டு சித்தர் தங்கள் தேவர்” என்றாள் ஆண்டாள்.
இதனால் “ஞானியருக்கு ஒப்போரில்லை இவ்வுலகு தன்னில்” என்றார் மணவாள மாமுனிகள்.

————

இதுவரை “ஓம்” என்ற பிரணவத்தின் கருத்தை
“அவ்வானவர் ”
குலம் “ஒன்று”
“பலங்கொண்டு” என்ற மூன்று பாடல்களாலும் கூறி

அடுத்து “நம:” என்கிற பதத்தின் பொருளை
“கருமத்தால்”
“வழியாவது”
“உள்ளபடி உணரில்”
‘இல்லை இருவருக்கும்” என்ற நான்கு பாடால்களாலும் சொல்லிக்

கடைசியாக “நாராயணாய” என்னும் சொல்லின் பொருளை இப் பாடலால் கூறுகிறார்.

“நாராயணாய” என்னும் இச் சொல்லுக்குப் பொருளை
“நாராயணனுக்கு அடிமை செய்து வாழ்வதுவே பெரு வாழ்வு” என்று சொல்லப்படுகிறது.

நாராயணனான பரம்பொருளைக் கண்ணாரக் கண்டு இன்புற்று
அவ்வின்பம் தவிர வேறு ஒரு இன்பமில்லை என்றிருப்பதுவும்
அவனுக்குப் பணி செய்து வாழ்வதுவே லட்சியம் என்றிருப்பதுவும்,
அவனுக்குச் செய்யும் பணியின் முறைகளை விவரிப்பதுவும்,
நாராயணாய என்னும் பதத்தில் சொல்லப்படும் பொருட்களாகும்.

இக்கருத்தை இப்பாடல் சுருக்கமாக எடுத்துக்காட்டுகிறது.

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8-

பதவுரை:

வித்தம் – செல்வத்தினுடைய
இழவு – அழிவும்
இன்பம் – சுகமும்
துன்பம் – துக்கமும்
நோய் – நோய்களும்
வீகாலம் – மரண காலமும்
தத்தம் அவையே – தத்தமது வாழ்வினைப்படியே
தலையளிக்கும் – பயன் தரும்
அத்தை – அதனால் அவற்றைப் பற்றிய சிந்தனையை
விடீர் – விட்டுவிடுவீராக
இச்சியான் – இறை இன்பம் தவிர வேறு எதையும் விரும்பாதவன்
இச்சியாது – வேறு பயனைக் கருதாமல்
ஏத்த – அவனைத் துதி செய்ய
எழில் வானத்து – அழகிய வீட்டுலுகத்தில்
உச்சியான் – மேல்நிலத்தில் இருக்கும் இறைவனுக்கு
உச்சியான் ஆம் – தலையால் தாங்கத் தகுந்த பெருமை உடையவன் ஆவான்

“நாராயணாய” என்னும் பதத்திற்குக் கருத்துக் கூறுகையில் “
இளைய பெருமாளைப் போல இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை” என்றும்”
அதை நித்யமாகப் பிரார்த்தித்தே பெற வேணும்” என்றும்
“உனக்கே நாம் ஆட்செய்யவேணும்” என்னும்படி வேணும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது கைங்கர்யம் என்னும் லட்சியத்தை இராமாயணத்தில் இளைய பெருமாள் கடைப் பிடித்துக் காட்டினார்.
இராமனை உடன் பிறந்த வகைக் கருதாமல் தெய்வமாக எண்ணிப் பணிவிடைகள் செய்தான்.
இதைக் கம்பன் வாக்கில் காண்போம்.

“எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்த போது அலால்
சிந்தை வெங் கொடுந்துயர் தீர்கிலேன் “என்பது இலக்குவன் மொழி.–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – பள்ளிப்படலம்-58)

அனைத்து உறவும் ராமனே என்றும்
அவனுக்குப் பணிவிடை செய்வதே தன கடமை என்ற குறிக்கோளுடன் இலக்குவன் இராமன் பின் சென்றான்.

“ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போக உயிர்த்தாயர் நம்பூங்குழல் சீதை- என்றே
ஏகாய்; இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் ‘ என்றும்–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம் -146)

“பின்னும் பகர்வாள்,”மகனே!இவன் பின் செல்: தம்பி
என்னும்படி அன்று.அடியாரின் இவள செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி” என்றனள் வார் விழி சோர நின்றாள்”–(கம்பராமாயணம் -அயோத்திய காண்டம் -நகர் நீங்கு படலம்- 147)

என்றும் அவன் தாய் சுமித்திரை கூறினால் என்பது கம்பனின் வாக்கு.

இதில் ‘அடியாரினின் ஏவல் செய்தி” என்று
அறிவுறுத்தியது குறிப்பிடித்தக்கது.

அவ்வறிவுரையின்படி அனைத்து உறவுகளையும் துறந்து விட்டு இராமன் பின் சென்று
பதினான்கு ஆண்டுகளும் பற்றும் வாழ்நாள் முழுவதும் அடிமையே செய்து வாழ்ந்தான்.
இதுவே ஒரு ஆன்மா அடைய வேண்டிய லட்சியமாகும்.
இவ்வடிமையை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழான திருப்பாவையில் முடிந்த பொருளாக
“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று” என்று கூறப்பட்டுள்ளது.

’உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் “என்றார் பெரியாழ்வார்.

“ஒழிவில் காலமெல்லாம் உடனை மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்றார் நம்மாழ்வார்.

“ஆளும் பணியும் அடியேனை கொண்டான்”
“உனக்காகத் தொண்டுபட்ட நல்லேனை” என்று கூறினார் திருமங்கை ஆழ்வார்.

ஆகவே ஞானிகளான பெரியார்கள் இவ்வாறு இறைத்தொண்டையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டார்கள்.
இவர்களுக்கு இங்கு வாழ்ந்துவரும் நாட்களில் செல்வத்தால் வரும் லாபமும்
அதை இழத்தலால் வரும் துன்பங்களும் அவர்களுக்கு இல்லை.

”வேண்டேன் மனை வாழ்க்கையை” என்றும்
“கூரை சோறு இவை வேண்டுவதில்லை” என்றும்
“நீள் செல்வம் வேண்டாதான்” என்றும் ஆழ்வார்களால் துறக்கப்பட்டவைகள்.
எல்லாம் கண்ணன் என்பது அவர்கள் லட்சியம்.
அவர்களது லட்சியமான இறைத்தொண்டில் ஈடுபட்டுள்ள மனதை பணம் முதலியன வேதனைக்கு உள்ளாக்கும் அன்றோ.
அவற்றால் மனது கலங்காமல் இருந்தால் அன்றோ அடிமையைச் செவ்விதமாகச் செய்ய முடியும்.
இந்நிலையில் லட்சியவாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மேலே கூறுகிறார்.

வீதம் ராகம் – பணம் அதாவது தங்கம், வெள்ளி முதலியனவற்றில் ஆசை
இழவு – அவற்றின் அழிவு .அதாவது நிலையில்லாததால்–அவற்றிற்கு வரும் விநாசம்.

திருவள்ளுவரும்

“நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை” என்று இகழ்ந்து பேசினார்.

இன்பம் – இன்பம் தரும் துன்பம் தரும் பொருட்களால் கிடைக்கும் சுகம்
துன்பம் – துன்பம் தரும் பொருட்களின் சேர்க்கையால் வருகின்ற துக்கம்
நோய் – உடலைப் பற்றி வருகின்ற நோய்கள்
வீ காலம் – சரீரத்தினுடைய (உடல்) முடிவு காலம். (வீதல் – முடிதல்) இவை எல்லாவற்றையும்
தத்தம் அவையே – அதற்குக் காரணமான ஊழ்வினைகளே
தலை அளிக்கும் – பக்குவ காலத்தில் பலன் கொடுக்கும்.
பிறக்கும் பொழுது உடன் வந்ததான வினைகளின் பயன்களைத் துய்க்காமல் எவரும் தப்ப முடியாது அல்லவா.
திருவள்ளுவர் ஊழ் என்னும் ஓர் அதிகாரத்தில் கூறினார்.

ஆகூழாழ் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழாற் தோன்றும் மடி”

இதில் செல்வம் கிடைப்பதற்குக் காரணமான ஊழ்வினையால் முயற்சி உண்டாகும்.
அச் செல்வம் அழியும்போது அதற்குக் காரணமான ஊழ் வினையால் அழிவு உண்டாகும் என்றும்

“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை”

இதில் ஒருவன் எல்லா அறிவையும் பெற்றிருந்தாலும் கைப்பொருளை பறி கொடுக்கும்போது
அதற்குக் காரணமான ஊழ்வினை அவனை அந்த நேரத்தில் அறியாதவனாக்கி விடும்.
ஒருவன் அவ்வளவு அறியாதவனாக இருந்தாலும் பொருள் சேரும் காலம் வரும்போது
அவனுடைய அறியாமையை அகற்றிப் பொருள் சேர்வதற்குக் காரணமாகிற அறிவை விரிவு படுத்தும் என்றும்,
இவ்வாறே கல்வியறிவு பெருகுவதற்கும் சுருங்குவதற்கும் ஊழ்வினையே காரணம் என்றும்,
செல்வத்திற்கான ஊழ்வினையும் கல்விக்கான ஊழ்வினையும் வெவ்வேறாகும் என்றும்,
ஊழ்வினை நல்லது தீயதாகவும், தீயது நல்லதாகவும் மாறும் என்றும்,
இவ்வாறு ஊழ்வினையைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார் திருவள்ளுவர்.

ஆகவே வினைப்பயனால் வருவனவான நன்மை தீமைகளைப் பற்றி அறிவாளிகள் கவலை கொள்ளக் கூடாது
அத்தை விடீர்:
அவற்றில் மனம் வைக்க வேண்டாம் என்று மனதைத் தேற்றுவிக்கிறார்.

ஊழ் வினைக்குக் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் எவ்வாறு இறைத் தொண்டை செய்வார்கள்
என்பதைப் பற்றி மேல் தொடர் கூறுகிறது.

இச்சியான்:
செல்வம் முதலிய வேறு பயன்களில் ஒன்றையும் விரும்பாதவன்
(இத்தகையவனே இறைத் தொண்டுக்குத் தகுதியுடையவனாவான்.
“அடக்கரும் புலன்கள் இய்ந்தடக்கி ஆசையாமவை,
தொடக்கறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை” என்று இக்கருத்தைத் திருமழிசை ஆழ்வார் எடுத்துரைத்தார்.

இச்சியாதேத்த:
இறைவனைத் துதிப்பவர் அதற்குப் பயனாக வீடு பேற்றையோ,இறைத்தொண்டு முதலியவற்றையோ ஒன்றையும்
பயனாகக் கருதாமல் துதிப்பதையே பயனாகக் கருதித் துதிக்க வேண்டும் .
“பாவின் இன்னிசை பாடித் திரிவன்” என்று கூறியது போல துதிப்பவர்க்குப் பயன் வேறொன்றின்மையால்
தீவினையேன்,
வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாளெல்லாம் ,
கரந்துருவில் அம்மானை அஞ்ஞான்று பின் தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தாது அயர்த்து “(திருவந்தாதி)
இவற்றால் இறைவனை ஏத்துதல் கூறப்பட்டன.

இங்கு “ஏத்துதல்” என்று வாய்க்குச் சொன்ன பணி போன்று
மனத்தாலும், காயத்தாலும் (உடல்) செய்யும் பணிகட்கும் ஏற்பப் பொருள் கொள்க.
ஆக மனம் முதலிய முக்கரணங்களாலும் அடிமை செய்ய வேண்டும் என்பதாம்.

எழில் வானத்து உச்சியான் உச்சியானாம்:
வைகுண்ட மாநகர் என்று சொல்லப்படுகின்ற அழகிய திருநாட்டில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய
தலையால் தாங்கப் படுபவன் ஆவான்.

எழில் வானம் என்பது பரமபதத்தை. அது விண்தலை என்று சொல்லப்படும்.
அங்கிருக்கும் வைகுந்தநாதன் “விண்மீது இருப்பாய்” என்று அழைக்கப்படுவான்.
அத்தகையவன் இங்கு எழில் வானத்து உச்சியான் என்று சொல்லப்படுகிறான்.
எழில் வானம் என்பது வேதாந்தத்தில் “பரமாகாசம்” என்ற சொல்லால் சொல்லப்படும் மோட்ச பூமி.
அதில் உயர்ந்த நிலம். அவ்வானத்து உச்சி.
அதிலிருப்பவன் உச்சியான்.
எழில் வானத்து உச்சியான் அவ்வைகுண்டநாதன்.
அவனுடைய தலையால் தாங்கப்படுபவன் தொண்டன்.
அத்தொண்டனை “உச்சியானுக்கு உச்சியான்” என்று
இங்கு நான்காம் வேற்றுமைத் தொகையில் “உச்சியான் உச்சியான்” என்று கூறப்பட்டது.

இறைத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்கள்
செல்வத்தின் லாப நஷ்டங்கள்,இன்ப துன்பங்கள், நோய்,மரணம் இவற்றை அந்தந்த வினைப் பயனால் வருகின்றன
என்று எண்ணி அவற்றைப் பற்றி சிறிதும் நினையாமல் அவற்றை உதறி விடுவார்கள்.
அதனால் அவர்கள் மனம் தூயதாய் இருக்கும். அத்தூய மனத்தில் வேறு பயனை எதையும் விரும்ப மாட்டார்கள்
வேறு பயனை எதையும் விரும்பாமல் துதிப்பதையே பயனாகக் கொண்டு துதிப்பார்கள்.
இத்தகைய அடியார்கள் அழகிய பரம பதத்திற்குச் சென்று
அங்கு பரமபதநாதனுடைய தலையால் தாங்கப்படுவர் ஆவார் என்பது கருத்து.

இதனால் தொண்டு செய்பவர் ஊழ்வினையால் வரும் நல்லன தீயனவற்றில் மனம் வைக்காமலும்
தொண்டையே பயனாகக் கருதித் தொண்டு செய்ய வேணும் என்றும் சொல்லப்படுகிறது.

துதிப்பதற்காகவே இருக்க வேண்டும், வேறு பயன் இருக்கலாகாது என்பது தான் பொருள் .
இறைவனைத் துதிப்பது, இறைத் தொண்டாகும்.
மனம் மொழி மெய் என்னும் முக்காரணங்களாலும் செய்யும் தொண்டுகளில் துதித்தல் வாய்மொழித் தொண்டாகும்.
வாய்க்கு இதுவே பயனாக இருக்க வேண்டும்.

செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் திருக்குறள் தொடரில்
“வாய்ச்சொல்” என்பதற்கு “வாய்” என வேண்டாது கூறினார்.
“தீயசொல் பயிலாமை என்பது அறிவித்தற்கு “என்று பொருள் கூறியது காண்க.

இதற்கு உதாரணமாக நாலாயிர திவ்யப்ப்ரபந்தப் பாடல்கள் காணலாம்.

வாய் அவனையல்லது வாழ்த்தாது – 209
நாக்கு நின்னையல்லால் அறியாது – 433
எத்துகின்றோம் நாத்தழும்ப – 1863
நாத்தழும்ப நாராயணா என்றழைத்து – 561
இரவு நண்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ – 2954
பேசுமின் கூசமின்றி – 3681
வாயினால் பாடி – 478

————-

கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி
‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால்
‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும்
திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன.

இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் ,
அதற்குத் தகுந்தபடி அவரடி பணிந்து அவருக்குப் பணிவிடைகள் முதலியன செய்ய வேண்டும் என்றும்
சாஸ்திரம் கூறியபடி நடந்து கொள்ள வேணும் என்றும் சொல்லப்படுகிறது.

அவ்வாறு இல்லாமல் ஆசார்யன் நம்மைப்போல் “அவரும் ஒரு மனிதரே” என்று நினைத்து பழிப்பவர்களுக்கும்
ஆச்சர்யனின் பெருமை யறிந்து பெருமைக்குத் தக்கபடி பணிந்து பணிவிடைகள் செய்பவர்களுக்கும்
உண்டான வேறுபாடுகளும் எடுத்துரைக்கப் படுகின்றன.
இதனால் ஆச்சர்யனின் சிறப்புக் கூறப்படுவதாயிற்று.

தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கியிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-

பதவுரை:

தாளிணையை வைத்த – (தன் அறியாமை நீங்கும்படி) தம்முடைய பாதங்களை தன் முடியில் வைத்து அருளின
அவரை – அவ்வாச்சர்யனை
தத்தம் இறையின் – “நம்முடைய கடவுள்” என்று அனைவரும் போற்றக்கூடிய
வடிவு என்று – கடவுளின் திருவுருவம் என்று (வணங்கி இருக்க வேண்டும்)
வணங்கியிரா – இவ்வாறு முறைப்படி வணங்கிப் பணியாத
பித்தராய் – உண்மை அறியாதவராய்
நிந்திப்பார்க்கு – மனிதனாகக் கருதியிருப்பார்க்கு
ஏறா நீள் நிரயம் – கரையேறுவதற்கு அரிதான ஆழமான நரகம் தான்
உண்டு – கிடைக்கும்
நீதியால் – முறை தவறாமல்
வந்திப்பார்க்கு – பணிந்திருப்பார்க்கு
இழியாவான் – மறு பிறவி இல்லாத
வான் உண்டு – வைகுந்த நாடு கிடைக்கும்

தத்தம் இறையின் வடிவு என்று:
“தம் தம்” என்கிற சொல் ஒன்று வல் ஒற்றாகத் திரிந்து “தத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது.
அவரவர்களுடைய கடவுளின் உருவம் என்று பொருள்.
அதாவது
நாராயணனாகிற கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாயிருத்தலால் அவரவர் தாம் தாம் வணங்கும் பொழுது
“நம்முடைய கடவுள்” என்று உறவு சொல்லிப் பற்றலாம்.

இதனால்
நாராயணனாகிற கடவுள் அனைவருக்கும் தலைவனாவான் என்றும்
அவனுடைய தோற்றம் மனிதத் தோற்றத்தில் குருவாக வருகிறான் என்றும்,
அறிவொளியைக் கொடுக்கும் கடவுளே என்றும்
சாஸ்திரங்கள் ஆசார்யனைப் பகவானுடைய தோற்றமாகக் கூறியுள்ளன என்றும் அறிய வேண்டும்.

ஆகவே அவரவர்கள் தம் தம் ஆசார்யனைக் கடவுளின் தோற்றமாகக் கருத வேண்டும் என்பதாம்.

தாளிணையை வைத்தவவரை:
“வில்லார் மணி கொழிக்கும்” என்ற ஞான ஸாரம் 38வது பாடலில்
“மருளாம் இருளோட மத்தகத்துத் தந்தாள் அருளாலே வைத்த அவர்” என்று கூறிய வண்ணம்
தங்களுடைய அறியாமையாகிற இருள் அகலும்படி தங்கள் முடியில் பாதங்கள் இரண்டையும்
அருள் கூர்ந்து அருள் செய்த ஆசார்யன் என்று பொருள்.

வணங்கியிராப் பித்தராய்:
அவருடைய அடி பணிந்து அவரைப் பின் சென்று இராத அறிவிலிகளாய்
அதாவது
அடி பணியாதது மட்டுமில்லாமல் அவரை மனிதனாக எண்ணி இருப்பதுவே பழிப்பாகும்.

ஆச்சர்யனுடைய திருவடிகள் அறியாமையை நீக்கும் என்பதற்கு உதாரணம்.
“சாயைபோல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே”

“எம்பாரைச் சிலர் இப்பதத்துக்குப் பொருளென்?” என்று கேட்க,
நான் உடையவர் ஸ்ரீ பாதத்திலே இது கேட்டிலேன்.
ஆகிலும் நீங்கள் கேட்ட அர்த்தம் போராதென்ன வொண்ணாது”.
இப்போதே கேட்டு உங்களுக்குச் சொல்ல வொண்ணாதபடி உடையவரும் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்தேற எழுந்தருளினார்.
ஆகிலும் உங்களுக்கு இப்போதே சொன்னேனாக வேணும் என்று உடையவர் திருவடி நிலைகளை எடுத்துத்
தம் திருமுடியிலே வைத்துக் கொண்டு இப்போது உடையவர் எனக்கருளிச் செய்தார், கேட்கலாகாதோ’ என்று
‘பாடவல்லார்-சாயை போல தாமுமணுக்கர்களே ‘ என்றருளிச் செய்தார்.

குருவை மனிதனாக எண்ணிப் பழிப்பவர்களுக்குக் கிடைக்கும்
பயன் கூறப்படுகிறது மேல் தொடரால்.

ஏறாநீணிரயம் உண்டு:
(ஏறா – கரை ஏற முடியாத, நீள் -நீண்டதான, நிரயம்- நரகம் உண்டு-கிடைக்கும்)
அதாவது
குருவை வார்த்தைகளாலே குறைவாகப் பேசுவதல்லாமல் மனிதனாக நினைப்பதுவே அவனை நிந்திப்பதாகும்.
இப்படி மனிதனாக நினைப்பார்க்கு ஒரு போதும் கரையேற முடியாத ஆழமான நரகம் என்பதாம்.
எமன் தண்டனைக்குட்பட்ட நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டது. இது என்று குறிக்கப்படுகிறது.
எமன் தண்டனையான நரகத்திற்கு விடுதலை “நரகமே சுவர்க்கமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.
இங்கு அவ்வாறில்லாமல் விடியா வெந்நரகம் என்று சொன்னபடி தொடர்ச்சியாய் இருந்துவரும்.

இதனால்
ஆசார்யனை மனிதனாக என்னும் பெரும்பாவிகள் எக்காலத்திலும் உய்ய மாட்டார்கள்.
உய்வதற்குத் தகுதியையும் பெறமாட்டார்கள்.
இப்பிறவிப் பெருங்கடலில் மாறி மாறிச் சுழன்று கொண்டே வருவார்கள் என்பதாம்.

இதைத் திருவள்ளுவரும் “உறங்குவது போலும் சாக்காடு-உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று
உறங்குவதும் விழித்து எழுவதும் போறதாக்கும் பிறப்பிறப்பு என்றார்.

நீதியால் வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்:
கீழ்க்கூறிய வண்ணம் “தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால்
மானிடர்க்க இந்நிலத்தே தோன்றுதலால்”என்று கூறியபடி
ஆசார்யனைக் கடவுள் தோற்றமாக நம்பிக்கை வைத்து சாஸ்திர முறைப்படி பணிந்து
பின் செல்வர்களுக்கு மீண்டும் பிறப்பில்லாத வைகுந்தப்பதவி கிடைக்கும் என்பதாம்.

(நீதி) ஆசார்யனை வழிபடும் முறை.
வந்தித்தல்-வணங்குதல்.
(இழியாவன்)-மீண்டு பிறப்பில்லாத வைகுந்தம் மீளா நெறி என்பர்.

இதனால்
ஆசார்யனுடைய சிறப்புக்களை நன்றாக அறிந்து அவன் திருவடிகளில் அவனைத் தவிர வேறு ஒன்றுமறியாதவராய்
“தேவு மற்று அறியேன்” என்று மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி இருந்தது போல குருவைப் பணிந்து வாழும்
பெரியோர்கள் (நித்தியர்கள்) வாழுமிடமான திருநாட்டிற்குச் சென்று அங்குள்ளவரோடு கலந்து
அவர்களைப் போல இறையின்பம் துய்க்கப் பெறுவார்கள் என்பதாம்.
இதனால் குருவைத் தெய்வமாக மதித்து குருபக்தி யுடையவர்களான அடியார்கள் மீண்டும்
பிறப்பில்லாத வீடு பேற்றை அடைவார்கள் என்பது கருத்து.

————–

ஆசார்யன் பகவானுடைய அம்சமாக இருப்பவன் என்று கீழ்ச் சொல்லப்பட்டது.
“திருமாமகள் கொழுநன்தானே குருவாகி” என்ற ஞான சாரம் 38ம் பாடலில் கூறப்பட்டதை இங்கு நினைவு கூர்க.

இவ்வாறு ஆசார்யன் பெருமை சொல்லப்பட்டதை அடுத்து
இவ்வாச்சார்யன் செய்யும் பேருதவியின் பெருமையை உலகோர் எல்லாம் அறியும்படி
மிகத் தெளிவாகக் கூறி முடிக்கப்படுகிறது.

இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள
முறையும் முறையே மொழியும் –மறையையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
உணர்த்துவார் உண்டான போது –10-

பதவுரை:

இறையும் – “அ”காரப் பொருளான இறைவனையும்
உயிரும் – “ம”காரப் பொருளான ஆன்மாவையும்
இருவர்க்குமுள்ள முறையும் – இவ்விருவர்க்கும் உண்டான (நான்காம் வேற்றுமை உறுப்பால் சொல்லப்பட்ட)
இறைமை அடிமை என்னும் உறவு முறையையும்
முறையே மொழியும் – இவ்வுறவையே சிறப்பாக உணர்த்தும்
மறையும் – வேதாசாரமான திருமந்திரத்தையும்
உணர்த்துவார் இல்லா நாள் – உள்ளது உள்ளபடி அறிவிப்பார் இல்லாத காலத்தில்
ஒன்றல்ல – மேலே சொன்ன அனைத்தும் ஒரு பொருளாகத் தோன்றுவதில்லை (இருந்தும் இல்லாதது போல் இருப்பான்)
உணர்த்துவார் – மேற்கூறியபடி திருமந்திரத்தின் பொருளை
உண்டானபோது – ஆசார்யன் அறிவிக்கும் போது
ஆன – ஆகின்ற (இருப்பனவாக)

இந்நூல் முதல் பாடலில் சொல்லப்பட்ட “அ’ காரத்தின் பொருளான நாராயணான இறைவனும் (
உயிரும்) மேற்படி பாடலில் “மவ்வானவர்க்கு” என்று சொல்லப்பட்டதன் பொருளான ஆன்மாவும்
“இருவருக்குமுள்ள முறையும்” இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உண்டான உறவு முறையும்.
இது “அ” காரத்தினுடைய நாலாவது வேற்றுமை உருபின் பொருளாகும்.
அதாவது, “அகாரத்திற்கு மகாரம்” “தகப்பனுக்கு மகன்” என்பது போல் சொல்லப்படுகிறது.
இறைவனுக்கு ஆன்மா என்று உறவு முறையைத் தெரிவிக்கிறது.

“நான்காவதற்கு உருபாகும் கு வ்வே
கோடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல்
பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது பொருளே”–என்ற நன்னூல் இலக்கண நூலில்
நான்காம் வேற்றுமை உருபான “கு” உருபினுடைய பொருளை விவரிக்கையில்
‘முறை” என்று உறவு முறையைச் சொல்லி இருக்கிறது.
ஆகவே அவ்விலக்கணப்படி “அவ்வானவர்க்கு மவ்வானவர்” என்ற தொடரில் உறவு முறை காட்டப்படுகிறது.

முறையே மொழியும் மறையும்:
கீழ்ச் சொன்ன உறவு முறையையே முறைப்படி சொல்லுகின்ற வேத முடிவான திருமந்திரம் என்று பொருள்.
ஞான சாரம் முப்பத்தொன்றாம் (31ம் பாடலில்)
“வேதம் ஒருநான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்” என்ற இடத்தில்
வேதத்தின் உள்ளே சேமித்து வைக்கப்பட்டது என்று
இத்திருமந்திரம் வேதத்தில் விழுமியதாகச் சொல்லப்பட்டது. இத்தகைய திருமந்திரமும்.

உணர்த்துவார் இல்லாநாள் ஒன்றல்ல:
மேற்கூறிய இறைவனும் ஆன்மாவும் இருவருக்குமுள்ள முறைகளும் என்றைக்கும் இருந்து கொண்டிருந்தாலும்
இவற்றை விளக்கி எடுத்துச் சொல்லும் பொழுது தான் இவையெல்லாம் இருக்கின்றனவாக ஆகின்றன.
இவற்றை எடுத்துச் சொல்லாத பொது இருந்தும் இல்லாதன போல் ஆகின்றன.

ஆன உணர்த்துவார் உண்டான போது:
“ஆன” என்பது வினைச் சொல். இவையெல்லாம் அறிவிப்பார் உண்டான காலத்தில் இருக்கின்றனவாக ஆகின்றன.
இவற்றை உணர்த்துவார் ஆர் எனில்? அவரே ஆசார்யர் ஆவார்.
அதுதான் இந்நூல் முதற் பாடலில் “உவ்வானவர் உரைத்தார்” என்று கூறப்பட்டது.
இதுவே ஆசார்யன் செய்யும் பேருதவியாகும்.
இதையே “அறியாதன அறிவித்த அத்தா” என்றார் நம்மாழ்வார்.
“பீதக வாடிப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்றார் பெரியாழ்வார்.
இவ்வாறு ஆசார்ய வைபவம் பேசப்பட்டது.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்–பாசுரங்கள்– 31-40—ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

August 31, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

———

எல்லா வேதங்களுக்குள்ளும் மறைந்திருக்கும் உயர் பொருளும்
வேதப் பொருளைத் தெளிவு பட எடுத்துரைக்கும் மற்றைய சாஸ்திரங்கள் சொல்வதும்
ஆகிய சரணாகதி நன்னெறியைக் காட்டிக் கொடுத்த
ஆசார்யன் திருவடிகளே தஞ்சமாகும் என்று கூறும் கருத்தை இப் பாடலில் சொல்லப்படுகிறது.

வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-

பதவுரை:

தீதில்–குற்றமில்லாத
சரணாகதி–அடைக்கல நெறியை
தந்த–தனக்கு காட்டிக் கொடுத்த
தன்னிறைவன்–தனக்கு தெய்வமான ஆசார்யனுடய
தாளே–திருவடிகளே
அரணாகும்–தஞ்சமாகும்
என்னுமது–என்று சொல்லப்படும் அடைக்கல நெறியே
ஒரு நான்கு வேதம்–ஒப்பற்ற ரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்று சொல்லப்படும் நாலு வகை வேதங்களிலும்
உட்பொதிந்த–நிதி போல் உள்ளே மறைந்து கிடக்கும்
மெய்ப் பொருளும்–உண்மைப் பொருளும்
கோதில் –குற்றமற்ற
மனுமுதநூல்–மனு முதலான சாஸ்திரங்களும்
கூறுவதும்–உரைக்கும் கருத்துக்களும் (எல்லாம்)
அதுவே–ஆச்சார்யனை அடைக்கலம் புகும் நெறியே யாகும்

வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்:
இங்கு’ஒரு’ என்ற சொல் வேதத்தின் ஒப்பற்ற தன்மையைக் கூறுகிறது.
அதாவது
ஒரு மனிதனால் உருவாக்கபடாதது. எழுதா மறை என்றும் கூறப்படுவது.
ஐயம், திரிபு, மயக்கம் முதலிய குற்றங்கள் எதுவுமே இல்லாதது.
உள்ளதை உள்ளபடி கூறுவது முதலிய சிறப்புக்கள் பற்றி ஒப்பில்லாதது என்று பொருள்.

நான்கு:
“வேதம் ரிக்கு,யஜுர் , சாம ,அதர்வணம் என்று நான்கு வகையாகும்.
இத்தகைய வேதங்கள் தம்முள்ளே எட்டு புரி கொண்ட கயிற்றினால் ஒரு பொருளைக் கட்டி வைப்பது போல
எட்டு எழுத்துக் கொண்ட திருமந்திரத்தினுள் பரம்பொருளை மறைத்து வைத்துள்ளது.”
அதாவது
அஷ்டாக்ஷர மகா மந்திரம் எல்லா வேதத்தின் உள்ளேயும் நிதி போல் மறைந்து கிடக்கிறது என்பதாம்.
(எட்டினோடிரண்டெனும் கயிற்றினால் மனந்தனைக் கட்டி (திருச்சந்தவிருத்தம்,)

“வேதம்” அனைத்தையும் அளக்கும் கருவி என்ற சொல்லால்
இம்மந்திரப் பொருளைச் சொல்லும் மற்றைய எல்லா நூல்களிலும் சிறப்புடையது என்பதும்
“நான்கு” என்பதால்
அவ் வேதத்தில் எங்கேனும் ஒரு மூலையில் சொல்லப்படும் பொருளாயில்லாமல்
“அனேக கிளைகளாக விரிந்துள்ள வேதமனைத்துக்கும் உட்பொருள் இவ் வஷ்டாசார மந்திரப் பொருள்
மேல் நோக்கில் இல்லாமல் உள்ளே சேமித்து வைக்கப்பட்ட நிதி போன்றது என்பதும்
“மெய்ப் பொருள்” என்றதால்
அம் மறைப் பொருள் பொருளைக் கூறுகிறது என்பதும் அறியக் கிடக்கிறது.

கோதில் மனு முதனூல் கூறுவதும்:
கோது-குற்றம் .
அது இல்லாமையாவது குற்றமில்லை.
அதாவது
ஒன்றை வேரு ஒன்றாகத் திரித்துக் கூறும் குற்றமில்லாமை என்று பொருள்.

உதாரணமாக முத்துச்சிப்பியின் வெண்மையைப் பார்த்து வெள்ளி என்று வேறாகச் சொல்லாமல் முத்துச்சிப்பி என்றே சொல்வது.
இத்தகைய குற்றங்கள் எதுவும் இல்லாதது மனுதர்ம சாஸ்திரம்.

“கோதில்” என்ற அடைமொழியை மனுவுக்குச் சொன்னபோது
மனு சொன்னது மருந்து என்று கூறப்பட்ட அதன் சிறப்பு உணரப்படும்.
அதில் எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டாம் என்ற கருத்து.

இவ் வடைமொழி ஏனையவற்றிற்கு ஆனபோது அந்தந்த நூல்களுடைய நம்பிக்கையை சொல்லுகிறது.
அதாவது
ஐயம் திரிபு அறஉள்ளதை உள்ளபடி சொல்லுதல் .
அவையாவன
சாத்வீக ச்ம்ரிதிகளும் ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதம் முதலிய இதிகாசங்களும்,
பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்களுமாகிற சாஸ்திரங்களுமாம்.

இத்தகைய மனு முதலிய சாஸ்திரங்கள் எல்லாம் ஒரே குரலால் வேதத்தின் இதயமான
அஷ்டாக்ஷர மகா மந்திரத்தின் உள்ளே மறைவாக பொதிந்து கிடக்கும் சரணாகதிப் பொருளை
வெளிப்படையாக விளக்கமாக உரைப்பவை அன்றோ மனு முதலிய நூல்களுக்குப் பணி.
ஆகவே சரணாகதி தத்துவமே வேதம் முதலிய நூல்களாலும் சொல்லப்படும் நெறியாகும்
என்பது இதனால் உணர்த்தப்பட்டது.

தீதில் சரணாகதி தந்த:
எந்தக் குற்றமும் சொல்ல முடியாதது. சரணாகதி நெறி தைக் காட்டிக் கொடுத்த அதே நூல்களில் சொல்லப்பட்ட
ஏனைய கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலிய நெறிகளுக்கு
“இன்னார் செய்யக் கூடாது ” என்பன போன்ற கட்டுப்பட்டுக் குற்றமும்
அன்னெறிகளைக் கடைப்பிடிகையில் நூல்கள் சொன்னபடி செய்யமுடியாத நழுவுதல் குற்றமும் உள்ளன.

சரணாகதியாகிற எளிய வழி இருக்கையில் மேற்கூறிய அரிய வழியைப பின்பற்றுகை தேவையற்றது.
குற்றங்கள் எதுவும் சொல்ல முடியாதது. சரணாகதி ஆகிற நெறி நேரடியாக இறைவனைப் பற்றுவது. இதுவே தன சிறப்பு.
(ப்ரபத்தி) -ஈஸ்வர என்பது பகவத் விஷய வாக்கியம். சரணாகதி என்பதற்கு இறைவன் என்றே பொருள் சொல்லப்படுகிறது.
இத்தகைய சரணகதியாகிற நெறியை வறுமையுடவனுக்கு அளப்பரும் சீரிய நிதியைக் கொடுப்பது போல
காட்டிக் கொடுத்த என்றவாறு. இத்தகைய சரணாகதி நெறியை உபதேசித்த என்று பொருள்.

தன்னிறைவன்:
தன்னுடைய ஆசார்யனை “மாடும் மனையும்:” என்கிற பாடலில் எட்டெழுத்தும் தந்தவனே என்று கூறப்பட்டது.
இப் பாடலில் “சரணாகதி தந்தவன்: என்று கூறப்படுகிறது. இதிலிருந்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்ததற்கும்
சரணாகதி மந்திரத்தை உபதேசித்ததற்கும் நீண்ட வேறுபாடு இருப்பது புலனாகிறது.
அதாவது
இங்கு “சரணாகதி” என்ற சொல்லல் மறைத்துக் கூறப்பட்டது. அங்கு எட்டெழுத்து என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது.
திருமந்திரம், த்வயம்,சரமச்லோகம் எனப்படும் மூன்று மந்திரங்களுள் முதல் இறுதி மந்திரங்களின் பொருளை மறைத்து
மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டு வருவது முன்னோர்களின் பழக்கமாகும்.

அவை போலன்றி சரணாகதியைக் கூறும் த்வயம் எனப்படும் மந்திரத்தின் பொருளை மறைப்பதோடு
இம்மந்திரத்தின் ஒலி வடிவையும் மறைத்து மனதுக்குள்ளேயே கூறி வரும் மரபு கூறப்படுகிறது.
இதனால் த்வய மந்திரத்தின் சிறப்பு அறியக் கிடக்கிறது.

இதைப்பற்றி நஞ்சீயர் என்னும் ஆசார்யன் கூறுகையில்
” த்வய மந்திரத்தில் பகவானுடைய அழகிய திருமேனி பற்றியும் அதன் குணங்களும் பரமாத்ம இலக்கணமும்
அவனது எண்ணில் பல குணங்களும் நித்யர்களும் முக்தர்களும் பேரின்பமாய் இருப்பது போல
இங்கு வீடு பேறு அடைவதில் ஆசையினால் சரணாகதி பண்ணின அடியார்க்கு
த்வய மந்திரத்தின் உருவமே பேரின்பமாயிருக்கும் என்று கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தையை ஈண்டு எண்ணிப் பார்க்கலாம்.

இத்தகைய மிகவும் சீரிய சரணாகதியைக் கூறும் மந்திரமான த்வய மந்திரத்தை அன்றோ சீடனாகிற
இவனுக்கு ஆசார்யன் உபதேசித்தது. தனக்கு த்வய மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனே “இறைவன்” என்பதாம்.
தன்னிறைவன் என்றதால் எல்லோரும் தெய்வமான பகவானைப் போல அல்லாமல்
தனக்கே தெய்வமாக விளங்குவது பற்றித் தன்னிறைவன் என்று கூறப்பட்டது.

தாளே:
அத்தகைய தனக்குத் தெய்வமாய் விளங்கும் ஆசார்யன் திருவடிகளே.
தாளே என்ற சொல்லை மட்டும் நோக்குகையில்
பகவானாகிற இறைவனைப் பற்றினவர்களுக்கும்
ஆசார்யனாகிற இறவனைப் பற்றினவர்களுக்கும் ஆகிய இருவருக்கும் திருவடிகளே தஞ்சம் என்ற பொருள் புலனாகிறது.

தாளே என்ற யிடத்திலுள்ள ஏகாரத்தால்
சீடனுக்குச் செய்யும் நன்மைகளைப் பிறர் உதவியின்றி தானே செய்யும் என்கிற சிறப்பும் உணரக் கிடக்கிறது.

அரணாகும் என்றுமது:
அரண் என்பது தஞ்சம்.
அதாவது
ஆசார்யன் திருவடிகளே தனக்குத் தஞ்சமாகும் என்று பொருள்.
இறைவன் என்ற சொல்லில் தலைமை, நெறி,பயன் என்ற மூன்று கருத்தும் பொதுவாகச் சொல்லப்படும்.
இம்மூன்றுமாய் இருப்பவன் இறைவன்.

தன்னிறைவன் என்றதில் தலைமையும்
‘அரணாகும்’ என்றதில் நெறியும் கூறப்பட்டன.
பயன் கூறாமல் போனாலும் அதையும் இங்கு கூட்டிக் கொள்ள வேணும்.
அதாவது
ஆசார்யன் திருவடிகளே தனக்குத் தலைமையாகவும்
தஞ்சமாகவும் (நெறி)
அடைய வேண்டிய பயனாகவும் இருக்கிற ஏற்றம் சொல்லப்படுகிறது

————

‘மாடும் மனையும் ‘ என்ற பாடலில் ;
பெரிய திருமந்திரம்’ என்று சொல்லப்படும் திருவஷ்டாசார மந்திரத்தை உபதேசம் பண்ணின ஆசார்யன் திருவடிகளே
எல்லாப் பயனுமாகும் என்றறிந்து கொள்ளாத அறிவிலிகளோடு ஏற்படும் உறவை அறவே விட்டிடுகை
சாஸ்திரக் கட்டளையாகும் என்று கூறப்பட்டது.

‘வேதம் ஒரு நான்கின் என்ற 31ம் பாடலில்
அனைத்து சாஸ்திரங்களும் கூறுவது ‘சரணாகதிப் பொருளை உள்ளடிக்கிய த்வய மந்திரத்தை உபதேசித்த
ஆசார்யன் திருவடிகளே தஞ்சமாகும் ‘ என்று கூறப்பட்டது. இப்படி ஆசார்யனின் சிறப்பு விளக்கப்பட்டது.

இவ்வறு கீழ்ச் சொன்ன இரண்டு பாடல்களில் சிறப்பிக்கப்பட்ட ஆசார்யனை பகவானுடைய
(இராமன், கண்ணன் முதலிய அவதாரங்கள் ) போல ஓர் சிறப்பு அவதாரம் என்று ஈடு படவேண்டும்.
அவ்வாறு ஈடு படாமல் மனிதத் தோற்றமாகவே எண்ணும் மூடர்களுக்கு வரக்கூடிய கேடுகளையும் ,
பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திருக்கோயில்களில் அமையப் பெற்ற இறை உருவங்களை
எந்தப் பொருளால் உருவாக்கப்பட்டது போன்ற ஆராச்சிகள் பண்ணும் மூடனுக்கும்
வரக்கூடிய கேடுகளையும் இப்பாட்டு எடுத்துக் காட்டுகிறது.

மானிடவர் என்றும் குருவை மலர்மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் -ஈனமதா
வெண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழா நரகு –32-

பதவுரை:

குருவை –தனக்கு மந்திரத்தை உபதேசம் பண்ணின ஆச்சார்யனை
மானிடவன் என்றும்–சாதாரண மனிதர்களைப்போல் இவரும் ஒரு மனிதர் என்றும்
மலர்மகள் கோன் –தாமரையாள் நாயகனான ஸ்ரீமன் நாராயணன்
தானுகந்த கோலம்–தான் விரும்பி ஏற்றுக்கொண்டதான சிலை வடிவங்ககளை
உலோகம் என்றும்–பஞ்ச லோகம் முதலிய பொருட்கள் என்றும்
ஈனமதா –கீழ்த் தரமாக
எண்ணுகின்ற–நினைக்கின்ற
நீசர்–கீழ் மக்களான
இருவரும்–இவர்கள் இருவருமே
எக்காலும்–காலம் உள்ளவரையும்
நரகு–நரகத்தை
நண்ணிடுவர்–அடைவார்கள்

மானிடவன் என்றும் குருவை:
பிறவிப் பெருங்கடலில் உழலும் ஆன்மாக்களை அக் கடலிலிருந்து கரையேற்றுவிப்பதற்காக தெய்வம்
மனித உருவங்கொண்ட குரு வடிவத்தில் தோன்றி இருக்கிறான் என்ற நம்பிக்கை கொள்ள வேணும் .
நாராயணனாகிற தேவனே மனித வடிவம் கொண்டான் என்று நூல்கள் பகர்கின்றன.
இவ்வாறு தெய்வமாகக் கூறப்படும் குருவை மனிதன் என்று நினைக்கிறவனது எண்ணம் பொல்லாதது என்றும்
அவன் கற்ற கல்வி எல்லாம் பயனற்றது என்றும் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

மலர்மகள் கோன் தானுகந்த கோலம் உலோகம் என்றும்:
திருமகள் நாயகனான பகவான் தான் விரும்பி ஏற்றுக் கொண்ட சிலை உருவத்தை பஞ்ச லோகங்கள் என்றும்
மற்றும் வேற வேறு பொருட்கள் என்றும் அதாவது மரம் முதலிய பொருட்கள் என்று
ஆராய்ச்சி செய்வது மிகவும் பாபகரமாகும்.

இந்த உருவங்களை “உமருகந்தவுருவம் நின்னுருவம்” (திருவாய்மொழி 8-1-4) என்ற பாடலில்
நம்மாழ்வார் விளக்கி இருக்கிறார்.
அதாவது
தன்னிடத்தில் அன்புடையவர்கள் எந்த உருவத்தில் தன்னை வழிபட என்று விரும்புகிறர்களோ அந்த உருவமாகத் தான் ஆகிறான்.
அவ்வுருவத்தில் தனக்கே உரித்தான தெய்வீகத் திருவுருவத்தில் தான் செய்யும் விருப்பத்தை இந்த சிலை உருவத்திலும் செய்கிறான்.
இந்த ‘உருவம்’ என்பது பக்தன் நிர்மாணித்த உருவம்.
அதனால் இதுவும் தெய்வீக உருவமாக ஆகிறது.
இப்படி ஒரு பக்தன் நிர்மாணித்த விக்ரஹத்தில் தனக்கே உரித்தான தெய்வீக உருவத்தில்
தான் செய்யும் விருப்பத்தைச் செய்வதால் அவனுடைய விருப்பத்தைப் பொறுத்து இதுவும் தெய்வீகமகி விடுகிறது.
அவ்வுருவத்திற்கு அணிவிக்கும் ஆபரணங்களும் மற்றும் அனைத்தும் உலகியலுக்கு மாறுபட்டு தெய்வீகமாக ஆகிறது.
இதை “அப்ராக்ருதம்” என்று சாஸ்திரம் கூறும்.
இந்த சாஸ்திர நுட்பத்தை அறியாதார் மேலெழத் தோன்றுகிற பஞ்சலோகம் முதலான உருவத்தையே பார்த்து
அதி அராய்ச்சி பண்ணுவது கொடிய பாபமாக சாஸ்திரம் கூறுகிறது.
இப்பாபம் எது போரது எனில்
‘பெற்ற தாயிடம் தான் பிறந்த இடத்தைக் குறித்து ஆராய்ந்து பார்ப்பது போலும்” என்று
சாஸ்திரம் மிகக் கொடூரமாக கூறியுள்ளது.

ஈனமதா:
தாழ்வாக –
மிகவும் தாழ்வாக எண்ணுகின்ற நீசர்கள்
அதாவது ‘குருவை மனிதன்’ என்றும் ;
தெய்வ உருவத்தைப் பஞ்சலோகம் முதலியன என்றும் எண்ணுகின்ற கீழ்த்தரமானவர்கள் என்பதாம்.

கீழ்த்தரம் என்றால் இவர்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்ற கருத்து.
அதாவது மந்திரோபதேசம் செய்த ஆசார்யனையும்,
வழிபாட்டிற்குரிய இறை உருவங்களையும் கீழ்க்கூறிய வண்ணம் தாழ்வாக நினைப்பவர்கள்
கர்ம சண்டாளர்கள் என்று சொல்லப்படும் பாபிகள் ஆவர் என்பதாம்.
அதாவது
எண்ணத்தால் தாழ்ந்தவராவர். ‘
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று கூறும் தமிழ் வழக்கு இங்கு காணத் தக்கதாகும்.
‘உயர்வை எண்ணவேண்டிஅய் உள்ளத்தில் தாழ்வை எண்ணுவது பாபமாகும்.

இருவருமே:
அதாவது கீழ்ச்சொன்ன குருவை மனிதனாக எண்ணுபவனும்
இறைவனது திருவுருவங்களை உலோகமாக எண்ணுபவனும்
ஆக இவ் விருவரும் ஓரி நிகரான பாபிகளாயிருப்பதால் மேல் கூறப் போகும் கேடு
இவ்விருவருக்குமே உரித்தாகும்.

(இருவருக்கும் வரும் கேடாவது)
எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு:
எல்லாக் காலத்திலும்
அதாவது, காலம் என்கிற தத்துவம் உள்ளதனையும் கீழான நரகத்தை அடைவர் என்று பொருள்.

கீழாம் நரகு என்றால்
இதுக்கு மேல் கீழான நரகம் என்று ஒரில்லை என்று சொல்லத்தகுந்த நரகம் என்பதாம்.
நரகம் என்பது இன்பம் கலவாது துன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் இடம் என்று பொருள்.

இத்தகைய ‘நரகத்தை எக்காலும் நண்ணிடுவர்’ என்றது.
நரகத்திலேயே பிறந்து நரகத்திலேயே வளர்ந்து நரகத்திலேயே முடிவதாம்.
கரையேறுவதற்கு அரிதான கரை காண முடியாத பிறவிப் பெருங்கடலில் மாறி மாறி பல பிறப்புகளிலும் பிறந்து
இங்கேயே உழன்று வரும் மூடர்கள் ஆவார்கள் என்றும் கூறலாம்.

ஆகவே மேற்கூறிய இரண்டு பாபிகளும் துன்பத்திலிருந்து விடுபடுதல் இல்லை என்றவாறாம் .
குருவை மானிடன் என்று கருதுவோரையும்
கடவுள் திருவுருவத்தை உலோகம் என்று கருதுவோரையும் உடன் கூறுவதால்
இது உடன் நவிற்சிப் பொருள் என்ற இலக்கணத்தின் பால் படும்.

————-

அருகில் இருக்கிற ஆசார்யனை மனிதன் என்று கைவிட்டு நீண்ட தொலைவிலுள்ள (கட்புலனாகாத) இறைவனை
‘வேண்டின சமயத்தில் உதவுவான்’ என்று நினைத்து அவ் இறைவனை ஆவலுருகிறவன்
அறிவு கெட்டவன் ஆவான் என்னும் உண்மையைத் தக்க உதாரணத்துடன் இதில் எடுத்துரைக்கப்படுகிறது.

எட்டவிருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விருப்புறுதல்-பொட்டெனத் தன்
கண் செம்பளித்திருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று –33-

பதவுரை:

எட்ட இருந்த–மிக அருகில் எட்டும் இடத்தில் இருக்கிற
குருவை –ஆசார்யனை
இறையன்று–தலைவன் இல்லை என்று
விட்டு–புறக்கணித்து
ஓர் பரனை–அணுக அரிதாயிருக்கும் கடவுளை
விருப்புறுதல்–அடைய வேணுமென்று அவாவுதல்
(எது போன்றது எனில்)
பொட்டன–சடக்கென்று
தன் கண்–தன்னுடைய கண்ணை
செம்பளித்திருந்து –மூடிக் கொண்டிருந்து(மேல் விளைவதை ஆராயாதிருந்து)
கைத்துருத்தி நீர் –விடாய் தணிக்க வைத்திருந்த துருத்தி நீரை
தூவி–தரையில் ஊற்றி விட்டு
அம்புதத்தை–மேகத்தின் நீரை
பார்த்திருப்பானற்று–எதிர் நோக்கி இருப்பவன் போல ஆகும்.

எட்ட இருந்த குருவை:
எட்டுதல்-கிட்டுதல் அருகில் என்று பொருள் .
அதாவது
கை அருகில் இருக்கும் ஆசார்யனை என்று பொருள்.
கட்புலனுக்கு இலக்காய் எப்பொழுதும் பார்த்துக்
கொண்டிருப்பதற்கு உரியவனாயும் தனக்குக் காப்பாளர் வேண்டியபோது
காப்பாளனகவும்,
இனியனாய் இருக்கையும்.
ஆத்ம நலனுக்கு உதவியாய் இருப்பவனும்
எப்பொழுதும் கலந்து பரிமாறுவதற்கு உரியனாய்த்
தனக்கு அருகில் இருப்பவனும் ஆனா ஆசார்யனை என்று பொருள்.

இறையன்று என்று விட்டு:
இவர் தலைவர் இல்லை என்று குருவை விட்டிட்டு 31ம் பாடலில் ‘சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்’ என்று
கூறியதற்கு மாறாக அவ் ஆசார்யனைத் தனக்குத் தலைவனாகக் கொள்ளாமல் ‘நம்மைப் போன்றவர்’ என்று
மனிதன் எண்ணத்தால் அவரைத் தலைமையாக மதிப்பதை விட்டு

ஓர் பரனை விருப்புறுதல்:
எல்லோருக்கும் மேலானவனாக விருக்கும் கடவுளை அவாவுறுதல் என்று பொருள்.
அதாவது
சாஸ்திரங்களினால் அறியத் தக்கவனாய் மிகத் தொலைவில் இருப்பவனைத்
தனுக்கு அணுக அரியனாய் இருக்கும் கடவுளைத் தன்னைக் காப்பவனாகவும் இன்யனாகவும் கருதி
அவனை அடைய வேணுமென்று ஆசைப்படுதலாம்.இது எது போன்றது என்றால்

பொட்டென:
சடக்கென்று பின்வரும் விளைவை ஆராயாமல் என்பதாம்.

தன் கண் செம்பளித்திருந்து:
தூங்குவாரைப் போல தன்னுடைய கண்களை மூடிக்கொண்டிருந்து
பின் வரும் விளைவை அறியாமல் என்ற கருத்து.

கைத்துருத்தி நீர் தூவி:
விடாய் பிறந்த போது விடாய் அகற்றிக் கொள்ளலாம் என்றெண்ணி துருத்தி (water can) யில் நிரப்பித்
தன் கைவசம் இருக்கிற குடிநீரைப்ப் பூமியில் வார்த்து விட்டு.

அம்புதத்தைப் பார்த்திருப்பான் அன்று:
மேகத்திலுள்ள நீரை விடாய் தணிப்பதற்கு உதவும் என்று நினைத்து
வானத்தில் உள்ளதும் மிக்கத் தொலைவில் இருப்பதுமான மழைத் தண்ணீரையே
எதிர் பார்த்திருப்பான் செயல் போன்றது என்று பொருள்.

அவனைப் போல் என்றது அவன் செயல் போல என்றவாறு.
பரனை விருப்புறுதல் தொழிலுக்கும்
அம்புதத்தைப் பார்த்திருப்பான் செயலுக்கும்
பொருத்தமாயிருப்பதால் இதற்குத் தொழில் உவமம் என்று பெயர்.

இப்பாடல் கருத்துக்கு “ஸ்ரீ வசனபூஷனத்தில்”
‘விடாய் பிறந்தபோது கரச்தமான உதகத்தை உபேக்ஷித்து ஜீமுத ஜலத்தையும் சாகர ஜலத்தையும்
ஸரித் ஸவித்தையும் வாபீ கூப பயஸ்ஸுக்களையும் வாஞ்சிக்கக் கடவனல்லன்
என்ற வாக்கியத்தை மேற்கோளாகக் காண்க.

————–

மிகவும் எளியனாய்த் தனக்குக் கிடைத்திருக்கிற ஆசார்யனை மானிடத் தோற்றத்தாலே புறக்கணித்து
மிக அரியனாய் யோகங்கள்முதலிய அநேக முயற்சிகள் செய்து காண வேண்டிய இறைவனை
வேண்டிய சமயத்தில் நமக்கு உதவுவான் என்று நினைத்து அவனைப் பின்தொடர்தல் அறியாமை ஆகும்
என்னும் கருத்தை மேலும் ஒரு உதாரனத்தாலே இதி சொல்லப்படுகிறது.

பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழிபடுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டு ஆரேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று –34-

பதவுரை:

பற்று குருவை–தன்னாலே பற்றப்படுகிற ஆசார்யனை
பரன் அன்று என்று–இவன் இறைவன் இல்லை என்று
மற்றோர் பரனை –வேறு ஒரு கடவுளை
வழிப்படுதல்–தனக்குத் தஞ்சமாகக் கொள்ளுதல் எது போன்றது எனில்
தன் கைப்பொருள்–தன் கையில் இருக்கும் பணத்தை
விட்டு–அல்பம் என்ற நினைவால்
ஆரேனும்–எவராயினும்
தாம்–தாங்கள்
காசினியில்–பூமிக்குள்ளே
புதைத்த –புதைத்து வைத்த
அப்பொருள்–அந்தப் புதைப் பொருளை
தேடித்திரிவான்–தேடித்திரிபவன் செயல் போன்றதாகும்
எற்றே –என்ன மடமையோ?

பற்று குருவை:
தன்னாலே பற்றப் பட்டிருக்கிற ஆசார்யனை.
அதாவது
மிக எளியனாய்த் தனக்கு வேண்டும் போது தன்னைக் காக்கும் துணையாகவும்
பழகுவதற்கு இனியனாகவும் தன்னால் குருவாகப் பற்றப்பட்டிருக்கும் ஆசார்யனை என்று பொருள்.

பரன் அன்று என இகழ்ந்து:
ஆசார்யனை பகவானுடைய தோற்றமாகச் சொல்லி இருக்க, அதில் நம்பிக்கை கொள்ளாமல்
மானிடவன் என்று கருதும் தீய எண்ணத்தினால்
‘இவன் பகவானுடைய தோற்றமில்லை மனிதனே ‘ என்று சிறுமை செய்து அவனைப் புறக்கணித்து.

மற்றோர் பரனை வழிப்படுதல்:
வேறு ஒரு இறைவனை வழிபடுகை.
அதாவது
‘மிகவும் அரியனாய்த் தன் கட்புலனுக்குத் தோன்றாமல் யோகம் முதலிய அரிய முயற்சிகள் செய்து
மிக வருந்திக் காணத்தகும் இறைவனைத் தனக்குக் காவல் துணையாகவும் பழக இனியனாகவும் நினைத்து
அப்பரனை அடைவதற்காக அவனைப் பின் தொடர்க’ என்பதாகும்.

எற்றே:
என்னே! இரக்கப் பொருளில் வந்தது.
இவன் புறக்கணித்த ஆசார்யனுக்கும் பற்றிக் கொண்ட இறைவனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு
மன வேதனையுடன் என்னே! என்று மனம் நொந்து கூறும் கருத்தைக் காட்டுகிறது.
எற்றே– என்னே என்று இளி வரவில் வந்த இடைச் சொல்.
இது எது போன்றது எனில்.

தன் கைப்பொருள் விட்டு:
தன் கைப் பொருளை உதறி எறிந்து விட்டு, வேண்டின போது பயன் படுத்திக் கொள்ளும்படி
தன் முந்தானையில் கட்டி வைத்திருக்கும் பணத்தை அல்பம் என்று எண்ணி உதறி விட்டு

ஆரேனும் காசினியில் தாம் புதைத்த:
யாராவது பூமிக்குள் புதைத்து வைத்த
அதாவது
முன்பின் தெரியாத யாராவது பூமிக்கு மேல் இல்லாமல் பூமிக்கு உள்ளே அவர்கள் புதைத்து வைத்த

அப்பொருள் தேடித் திரிவான் அற்று:
அவன் புதைத்த பணத்தை தான் அடைவதற்காகப் பூமியைத் தோண்டித் தோண்டித் திரிபவன் செயல் போல என்று பொருள்
(திரிபவன் போல என்பதற்குத் திரிபவன் செயல் போல என்று பொருள் சொல்லப்பட்டது)
மற்றோர் பரனை வழிபடுதல் என்னும் செயலுக்கு உதாரணமாகச் சொல்லுவதால்
தேடித் திரிபவன் செயல் போல என்று கூறப்பட்டது.
இதுவும் தொழிலுவமம் ஆகும்.

ஆகவே அருகிலுருக்கும் குருவைப் புறக்கணித்து விட்டுக் காண முடியாது நெடுந்தொலைவிலிருக்கும் கடவுள் பின் செல்லுதல்
தன் கையிலுள்ள பொருளை அற்பம் என்று எண்ணி உதறிவிட்டு யாரேனும் பூமியில் பணத்தைப்
புதைத்து வைத்திருக்க மாட்டார்களா என்று பேராசையுடன் பூமியைத் தோண்டித் தோண்டித் திரிகின்ற
அறிவிலியின் செயல் போன்றது என்று மன நோவுடன் ஐயோ என்று இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

இப்பாடல் கருத்தை ஸ்ரீவசனபூஷணத்தில்
‘ கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளை கணிசிக்கக் கடவனல்லன்’
என்று கூறியுள்ளது காண்க.

————-

அருகில் இருப்பவனாய் எளியவனுமான ஆசார்யனைப் புறக்கணித்துவிட்டு
மிகத் தொலைவில் இருப்பவனுமாய்க் கிட்டுதற்கு அரியவனுமான இறைவனை ஆசைப்படுவார்
அறிவிலிகளாவர் என்று இரண்டு உதாரணங்களால்
(எட்டவிருந்த, பற்றுகுருவை) என்ற 33, 34 பாடல்களால் காட்டப்பட்டது.

‘இவ்வாறு குருவினிடத்தில் அன்பு இல்லாதவனுக்குப் பகவான் ஒரு நாளும் அருள் பண்ண மாட்டான்.
தண்டித்தே தீருவான் என்பதை உதாரணத்துடன் உணர்த்துகிறது இப்பாடல்.

என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும்
அன்றும் தன்னாரியன் பால் அன்பு ஒழியில்-நின்ற
புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன்
அனல் உமிழ்ந்து தானுலர்த்தி யற்று –35-

பதவுரை:

நின்ற புனல்–தனக்கு ஆதாரமாய் இருக்கின்ற தண்ணீரை
பிரிந்த–விட்டு அகன்ற
பங்கயத்தை–தாமரைப் பூவை
பொங்கு சுடர்–கிளர்ந்து எழுகின்ற ஒளியுடைய
வெய்யோன்–உஷ்ண கிரணத்தை உடைய சூரியன்
தான்–முன்பு மலரப் பண்ணின அவன் தானே
அனலுமிழ்ந்து–பின் நெருப்பைக் கக்கி
உலர்த்தியற்று–உலர்த்துவது போன்றதாகும்.
என்றும் –எப்பொழுதும்—எக்காலத்திலும்,-
அதாவது கழிவு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலங்களிலும் என்று பொருள்.
அனைத்துயிர்க்கும்–எல்லா உயிர்களுக்கும்-எல்லா ஆன்மாக்களுக்கும்
ஈரஞ்செய்–கருணை காட்டும்
நாரணனும்–நாராயணனும்
தன்னாரியன்பால் –தனக்கு ஆதரமான குருவினிடத்தில்
அன்பு ஒழியில் –பக்தி அகன்று போனால்
அன்றும் –சீற்றத்தால் எரிப்பான்.

ஈரம் செய் நாரணனும்:
அருளே பண்ணிக் கொண்டிருக்கும் நாராயணனும்.
இங்கு நாராயணன் என்று கூறியது
உயிர்க்கும் இறைவனுக்கும் பிரிக்க முடியாத உறவைக் காட்டுகிறது.

அதாவது
‘நாரம் ‘ என்றால் அனைத்து உயிர்கள்
‘அயனம்’ என்றால் உயிர்களுக்கும் உயிராய் உள் நின்று அவற்றைத் தாங்கி நின்று இயக்குகின்றதோ
அது போன்று அனைத்து உயிர்களுக்கும் உயிராய் நின்று அனைத்தையும் நடத்துபவன் என்ற பொருளை
நாரம்+ அயனம் என்ற இரண்டு சொற்களும் கூடி நின்று நாராயணன் என்ற ஒரு சொல்லாகி
மேற் சொன்ன கருத்தைக் காட்டுகிறது.

இக்கருத்தை
‘உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ என்ற ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையில் காண்க.
‘”நான் உன்னையன்றிலேன் நாரணனே நீ என்னை அன்றி இலை’” என்று திருமழிசை ஆழ்வாரும் கூறினார்.

இதனால்
அறிவுடைய ஆன்மாவாகிற பொருளும் அறிவில்லாத ஜடப் பொருளுமாகிய நாரங்கள்
அனைத்துக்கும் உயிராய் உள் நின்று பொருள் அனைத்தையும் இயக்குபவன், நாராயணன் என்று
நாராயண பதத்தினுடைய கருத்தைக் கூறியவாறாம்.

இதனால்
அனைத்து உயிர்கள் செய்யும் குற்றங்களையும் குணமாகக் கொள்ளுபவன். வத்சலன் என்ற
பகவானுடைய சிறப்புக் குணம் இங்கு தெளியப்படுகிறது.
இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் அருளே செய்யும் இயல்புடை யவனும்

அன்றும்: சீறுவான்
‘அன்றுதல்’ சீறுதல் தண்டனை செய்வான் என்று பொருள்.
‘அன்றிய வாணன்’ (பெரிய திருமொழி -1275) என்றவிடத்தில் அ
ன்றிய என்ற சொல் கோபித்த என்ற பொருளில் வழங்கியது போல இங்கும் அப்பொருளில் வந்தது.
எப்பொழுது இவ்வாறு அக்கருனைக் கடலான இறைவன் சீறி எழுவான் என்றால் அதைக் கூறுகிறது மேல் தொடர்.

தன்னாரியன்பால் அன்பு ஒழியில்:
தன் குருவினிடம் பக்தியில்லையானால் (சீறுவான்)
அதாவது
கீழே எட்டயிருந்த குருவை‘ பற்று குருவை’ என்ற இரண்டு பாடல்களிலும்
குருவின் மனிதத் தோற்றத்தைப் பார்த்து இவன் இறை அன்று என்றும்,
‘பரன் அன்று என்றும்’ நினைத்து விட்டு விடுதல் கூறப்பட்டது.
அவ்வாறு குருவினிடம் அன்பு அகன்றால் என்று பொருள்.
இதற்குத் தக்க உதாரணம் மேல் தொடரால் சொல்லப்படுகிறது.

நீன்ற புனல் பிரிந்த பங்கயத்தை:
மிக்க ஒளியுடையவனும் உஷ்ண கிரணங்களை உடையவனுமான சூரியன்.
அதாவது
‘செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால்’ என்று குலசேகராழ்வார் சொன்னதற்கிணங்க
அதாவது
தாமரை சூரிய ஒளிக்கல்லாமல் வேறு ஒளிக்கு மலராது என்பது இயல்பு.
நீரைப் பிரியாமல் இருக்கும் பொழுது எக்காலத்திலும் தன்னுடைய கிரணங்களால் அலற்த்திக் கொண்டு வரும் சூரியன்.

அனல் உமிழ்ந்து தான் உலர்தியற்று:
நெருப்பைக் கக்கி தானே அத்தாமரையை உலர்த்துவது போன்றது ஆகும்.
இதனால் நீரைப் பிரியாமல் இருக்கும்போது தாமரையை அலர்த்தி வந்த சூரியன்
நீரைப் பிரிந்த போது தனது உஷ்ண கிரணத்தைக் கக்கி அத்தாமரையை உலர்த்திவிடுவது போல.
ஆசார்யனிடம் அன்பு குறையாமல் தொடர்பு கொண்ட காலத்தில் எப்பொழுதும் இவனுக்கு அருள் செய்து வந்த பகவான்,
குருவினிடம் அன்பு குலைந்து அவனை விட்டுப் பிரிந்த போது அப்பகவானே இவனைக் கோபித்து அழித்து விடுவான் என்பதாம்.

இங்கு அருள் செய்வது என்றால் சீடனுடைய அறிவை விளங்க வைப்பன் என்றும்
கோபித்து அழித்து என்றால் இவனுடைய அறிவை மங்க வைத்து விடுவான் என்றும் அறியவேணும்

தனக்கு மந்திரோபதேசம் செய்த ஆசார்யனிடம் அன்பு அகன்றால்
எல்லா உயிர்களுக்கும் கருணை காட்டும் நாராயணனும் கூடச் சீறிவிடுவான் இது எது போன்றது எனில்
தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு நின்ற தாமரையை அத்தண்ணீரைப் பிரித்துக் கரையில் சேர்த்தால்
அத்தாமரை உஷ்ண கிரணங்களையுடைய சூரியன் அனலைக் கக்கி உலர்த்துவது போன்றதாம்.

அதாவது
சீடனுடைய உயிர் தத்துவத்தை விளங்க வைக்கும் இறைவனே குருபக்தி குலைந்ததும் தண்டித்து விடுவான்.
சீடனின் நல்லறிவை மறைத்து அறிவிலியாக்கி விடுவான்.
சீடன் அறிவுடையவனாக இருந்து அது இல்லாதவனாகிவிடுவான் என்ற கருத்து

‘ உளரெனினும் இல்லாரோடொப்பர்.’ என்று வள்ளுவர் கூறியது போல் குருபக்தி குலையக் கூடாது என்பதாம்.

இப்பாடலில் கூறிய கருத்தை ஸ்ரீவசனபூஷணத்தில்
“தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை உலர்த்துமாப் போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆசார்ய சம்பந்தங்குலைத்து வாடப் பண்ணும்” என்று கூறியுள்ளது காண்க.

————-

நற்சீடனாய் நல்லாசிரியனிடம் மிக்க அன்புடயவனாய் இருப்பவனுக்கு
அனைத்து திவ்ய தேசங்களும் தன் ஆசார்யனே யன்றி வேறில்லை என்று கூறப்படுகிறது.

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-

பதவுரை:

வில்லார் –ஒளி நிறைந்த
மணி –ரத்தினங்களை
கொழிக்கும்–குவித்துத் தள்ளும்
வில்லார் மணி கொழிக்கும் – வில்-ஒளி ஆர் -மிகுதி-ஒளி மிகுந்த ரத்தினங்களை
வேங்கடம்–அழகிய திருமலை முதலான
செல்லார்–மேகங்கள் வந்து படிகின்ற
பொழில் –சோலைகளாலே
சூழ்–சூழப்பட்ட
திருப்பதிகள் எல்லாம்–திவ்ய தேசங்கள் எல்லாம்
மருளாம் இருள்–அறியாமையாகிற இருளை
ஓட–விரைவில் அகலும்படி
மத்தகத்து–சீடன் தலைமேல்
தன்தாள் –தம்முடைய திருவடிகளை
அருளாலே–மிக்க கருணையினாலே
வைத்த –வைத்து அருளின
அவர் –ஆசார்யரான அவரே ஆவார்

” நன்மணி வண்ணனுர் ஆவியும் கோளரியும்
பொன்மணியும் முத்தமும் பூமரமும் – பன்மணி
நீரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம்.” –(நான்முகன் திருவந்தாதி – 48)என்ற திருமழிசைப்பிரான் பாடலில்
யாழிகளையும் சிங்கங்களையும் பொன், ரத்தினம்,முத்து முதலிய பொருட்களையும்
மற்றும் அனேக மணிகளையும் பூமரங்களையும் இழுத்துக்கொண்டு புரண்டு விழுகின்ற அருவிகளோடு
காடுகளையும் வானரங்களையும் வேடர்களையும் உடைய திருவேங்கடம் என்று உரைத்ததை இங்கு ஒப்பு நோக்குக.

வேங்கடப் பொற்குன்று முதல்:
இவ்வாறு சிறப்பிக்கப் படுகின்ற திருவேங்கடம் என்ற பெயர் கொண்டதாய்
எல்லா இயற்கைகளாலும் மிக அழகான திருமலை முதலான

செல்லார் பொழில் சூழ்:
உயர்ந்து நிற்பதால் மேகங்கள் வந்து படியும்படி இருக்கும் சோலைகளாலே சூழ்ந்த
(செல்-மேகம்-ஆர்த்த-படிதல்)

திருப்பதிகள் எல்லாம்:
பகவான் உகந்து எழுந்தருளியுள்ள திவ்ய தேசங்களெல்லாம்

மருளாம் இருளோட:
அறியாமையாகிற இருள் விரைவில் அகல

மத்தகத்துத்தன் தாள் அருளாலே வைத்த அவர்:
சீடனது முடியில் தன்னுடைய திருவடிகளைத் தம்முடைய கருணையினாலே வைத்தருளின குருவானவர்
அருளாலே வைத்தார் என்றதால் இதற்கு காரணம் எதுவுமில்லை என்பதாம்.
சீடனது பணிவிடை முதலியவற்றைக் காரணமாகச் சொல்லலாமல்லவா?
அப்படி எதையும் எதிர்பார்த்து அருளவில்லை என்பது கருத்து.

இங்கு திருமலை முதலான அர்ச்சா ஸ்தலங்களைக் குறிப்பிட்டது
ஏனைய பரமபதம், பாற்கடல் முதலிய இடங்களைக் கூட்டிகொள்ளவேணும் என்பது குறிப்பு.
ஆகவே பகவான் எழுந்தருளியுள்ள பரமபதம், திருப்பாற்கடல், இராமன், கண்ணன் முதலிய விபவ அவதாரங்கள்,
எல்லாப் பொருள் உள்ளும் மறைந்திருக்கும் அந்தர்யாமித்வம் ஆகிய ஐந்து நிலைகளும் அடங்கும்.
ஆக இவ்வைந்து நிலைகளும் தனக்கு ஆச்சார்யனே என்று இருக்க வேண்டும் என்பது கருத்து.
இக்கருத்தை சீடனிலக்கணம் சொல்லும் ஸ்ரீவசனபூஷணத்தில்
” பாட்டுக் கேட்குமிடமும் கூப்பீடு கேட்குமிடமும் குதித்த இடமும் வளைத்த இடமும் ஊட்டுமிடமும்
எல்லாம் வகுத்த இடமே என்றிருக்கக் கடவன்” என்று கூறப்பட்டுள்ளது ஒப்பு நோக்குக.

இதன் பொருள்,

பாட்டுக் கேட்குமிடம் – பரமபதம்
கூப்பீடு கேட்குமிடம் – திருப்பாற்கடல்
குதித்த இடம் – இராமன், கண்ணன் முதலிய விபவ அவதாரங்கள்
வளைத்த இடம் – அந்தர்யாமித்வம் (உள்ளும் புறமும் உளனாயிருத்தல்)
ஊட்டுமிடம் – விக்ரஹ வடிவில் எழுந்தருளி சேவை கொடுக்கும் திருக்கோயில்கள்
இவையெல்லாம் – இவ்வைந்து நிலைகளும் ஆச்சார்யனே என்று இருக்க வேண்டும்
வகுத்த இடம் – ஆச்சார்யன் என்பதாம்

108 திருத்தலங்களும் மற்றும் பகவான் எழுந்தருளியுள்ள அனைத்து இடங்களும் ஆச்சார்யனே என்று
இருப்பதுவே நற் சீடனிலக்கணமாகும் .
இதனால் அச்சர்யனை பகவான் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்கு ஒப்பாகக் கருத வேண்டும் என்பது கருத்து.

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலைஎன்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர் அவை தன்னொடு வந்
திருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள்ளே தனக்கின்புறவே” –(இராமனுச நூற்றந்தாதி 106)
என்ற நூற்றந்தாதி பாடலும் இக்கருத்து பற்றியே சொல்லப்பட்டது.

————

பணம், உயிர், உடல் முதலான அனைத்தும் அச்சார்யனுடைய சொத்தாக நினைத்திருப்பாரது மனம்
இறைவனுக்கு எந்நாளும் இருப்பிடமாகும் என்கிறது இப்பாடல்.

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் -அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
எந்நாளும் மாலுக்கு இடம் –37-

பதவுரை:

பொருளும்–தன்னுடைய செல்வமும்
உயிரும் –தன் உயிரும்
உடம்பும் –தன் உடம்பும்
புகலும் –தன் குடியிருப்பும்
தெருளும்–தன் அறிவும்
குணமும்–தன்னுடைய நற்பண்புகளும்
செயலும்–தான் செய்யும் அனைத்துக் காரியங்களும்
அருள் புரிந்த–தன்னைச் சீடனாக ஏற்றுக் கருணை காட்டிய
தன்னரியன் பொருட்டா–தன்னுடய ஆச்சாரியனுக்கு உடமையாக
சங்கற்பம் செய்பவர்–எண்ணி இருப்பவர்
நெஞ்சு–இதயம்
எந்நாளும்–எக்காலத்திலும்
மாலுக்கு –பகவானுக்கு
இடம்–உறையுமிடமாகும்.

பொருளும்:
தனக்குரிய அனைத்துச் செல்வங்களும்

உயிரும்:
தன்னுடைய மூச்சும்

உடம்பும்:
தன்னுடைய சரீரமும்

புகலும்:
தன்னுடைய குடியிருப்பும்

தெருளும்:
தன்னுடைய கல்வி அறிவும்

குணமும்:
தன்னிடமுள்ள அடக்கம் முதலிய நற்குணங்களும்

செயலும்:
தான் செய்யும் அனைத்துச் செயல்பாடுகளும் இவற்றை எல்லாம் அருள் புரிந்த தன் ஆரியன் பொருட்டா:
அதாவது காணிக்கை கொடுத்தல் , பணிவிடை செய்தல் முதலிய எதையும் எதிர் நோக்காமல்
தன்னிடம் கருணை காட்டித் தன்னைச் சீடனாக ஏற்றுத் தனக்கு மந்திரங்களை உபதேசம் செய்த ஆச்சார்யனுக்குச் சொந்தமானதாக

சங்கற்பம் செய்பவர் நெஞ்சு:
எப்பொழுதும் எண்ணி இருப்பவர் இதயம்

எந்நாளும் மாலுக்கிடம்:
எல்லாக் காலமும் பகவானுக்கு விருப்பத்துடன் உறையுமிடமாகும் சீடன் தன்னுடைய எல்லாவற்றையும்
தன்னுடைய ஆச்சார்யனுக்கு உடமையாகும் என்று எண்ணுவதால் இத்தகைய தூய நெஞ்சு
இறைவனுக்கும் விரும்பி உறையுமிடமளிக்கிறது .
மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை ஆச்சார்யனாக அடைந்தவர்.அவரைத் தவிர ” தேவு மற்று அறியேன்: என்று
வேறு தெய்வத்தை அறியாதவராக இருந்தார்.
அன்னையாயத்தனா என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபனென் நம்பியே” என்று
அனைத்தும் நம்மாழ்வாரே என்று வாழ்ந்தவர்.
அத்தகைய தூய ஆச்சார்ய அன்புடயவரது இதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கண்ணன் விரும்பினான்.
தேவு மற்று அறியாத இவருடைய இதயம் தேவபிரானுக்கு உகந்து உரைஉமிடமாகும் என்ற கருத்துச் சொல்லப்பட்டது.
“தெருளாகும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே” என்று இந்நூலாசிரியர் போற்றப்பட்டவர்.
அதனால் இவருடைய ஒழுக்க நெறியான குருபக்தியும் குறிப்பாக உய்த்துரைக்கபடுகிறது.
ஸ்ரீ ஆண்டாள் நிலையும் இதுவாகவே சொல்லப்பட்டுள்ளது.
“வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே”
(நாச்சியார் திருமொழி 10-10) என்று கூறியது காண்க.

————–

ஆச்சார்ய வைபவம் 26வது பாடலான ‘தப்பில் குருவருளால்’ என்ற
பாடல் தொடங்கி 37வது பாடலான ‘பொருளும் உயிரும்’ என்ற பாடல் வரை பல கோணங்களில் கூறப்பட்டது.

அதாவது
(26) குருவருளால் இறைவனிடம் சரணாகதி பண்ணினவர் வைகுந்தம் சென்று அங்கு இறை அடிமை செய்வர் ,
(27) ஆசார்யனை அணுகாதவர் வைகுந்தம் சேராமல் இடத் அழுந்துவார் என்றும்
(29) குருவின் அருள் பெற்றவர் இடரை வென்று எளிதில் வீடு அடைவர் என்றும்
(30) குருவை அணுகாதவர் உறவை விடுகை சாஸ்திரக் கட்டளை என்றும்
(31) வேதம் முதலிய நூல்கள் கூறுவதெல்லாம் குருவின் திருவடிகளே தஞ்சமாகும் என்றும்
(32)குருவை மனிதனாக எண்ணுபவன் நரகு எய்துவான் என்றும்
(33+34) அருகில் இருக்கும் குருவைப் புறக்கணித்துத் தொலைவில் இருக்கும் இறைவனைத் தொடர்வது அறியாமையாகும் என்றும்
(35) குருவினிடம் அன்பு ஒழிந்தால் கருணையுடைய கடவுளே சுட்டு சாம்பலாக்கி விடிவான் என்றும்
(36) கடவுள் குடியிருக்கும் திருத்தலங்களும் பிறவும் குருவே என்று இருப்பதுவுமே
நற் சீடன் இலக்கணம் என்றும் தன்னுடைய செல்வம் உயிர் அனைத்தும் குருவுக்கு உடைமையாகும்
என்று எண்ணுவனது இதயம் கடவுள் உறையுமிடமாகும் என்றும்
(36)பொருளும், உயிரும், உடம்பும், புகழும், தெருளும், குணமும், செயலும் மற்றும் வேண்டுவதை
எல்லாம் ஆசார்யன் தன்னருளால் சீடனுக்குத் தேறுவான்–என்றும் சொல்லியதை நினவு கூர்தல் வேண்டும்.

“குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா ஏன்னும் நாமம்” (திருமங்கை ஆழ்வார்)

இங்கு நாராயணா என்னும் இறைவன் நாமத்தைச் சொன்னவர்க்கு எல்லாம் கிட்டும் என்று சொன்னது போல
குரு பக்தனுக்கு பொருள் முதலிய அனைத்தையும் அருளுவான் என்பதாம்.
ஆகையால் குரு பகவானுடைய தோற்றமே ஆவார் என்ற கருத்துப் புலனாகிறது.
அதனால் அனைவருக்கும் குருவின் திருவடிகளை எப்பொழுதும் எண்ணியிருப்பதுவே பொருத்தமுடையது என்றும்
கூறி நூலின் கருத்து இத்துடன் முடிக்கப்படுகிறது.

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-

பதவுரை:

தேனார் – தேன் நிரம்பிய
கமலம் – கமலப்பூவை இருப்பிடமாக உடைய
திருமாமகள் – பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன – கணவனான பகவான்
தானே – மேலான தானே
குருவாகி – மனித உருவத்தில் குருவாகி வந்து
தன்னருளால் – தன்னுடைய மிக்க கருணையினால்
மானிடர்க்கா -திருந்த தக்க மனிதர்களைத் திருத்துவதற்காக
இந்நிலத்தே – இப்பூவுலகத்தே
தோன்றுதலால் – மனிதனாக அவதரித்ததனால்
யார்க்கும் – அனைத்துத் தரப்பினர்க்கும்
அவன் தாளிணையை – தலைவனான குருவின் திருவடிகளை
உன்னுவதே – எப்பொழுதும் எண்ணி இருப்பதுவே
சாலவுறும் – மிகவும் பொருத்தமாகும்

தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்:
பிராட்டி தாமரையில் இருப்பதால் அவளது உராய்தல் பட்டு அது அழகு பெற்றது.
மேலும் தேன் இடையறாமல் ஒழுகுவதால் மேலும் அழகியதாய் உள்ளது.
இவ்வாறு தாமரைக்கு அழகு கொடுக்கும் பெரிய பிராட்டியாருக்கு மணாளன் என்று பகவான் சிறப்பிக்கப்பட்டான்
“திரு” என்று பெரிய பிரட்டியாருக்குப் பெயர். இது ஸ்ரீ என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்.
திருப்பாவையில் ஸ்ரீ ஆண்டாள் “திருவே துயிலெழாய்” என்று கூறினாள்.
தானே திருவுக்கு மணாளனானதால் தனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாதவன்.

“திருவுடையார் தேவரெனில் தேவர்க்கும் தேவன்
மருவு திருமங்கை மகிழ்நன் கொழுநன் -ஒருவனே
அல்லோர் தலைவரெனல், அன்பினால் மெய் மறந்து
புல்லோரை நல்லரேணல் போம்: (மதுரை தமிழ்ச் சங்கப் புலவர் திரு.நா. அப்பனையங்கார்)
இதனால் அனைவருக்கும் மேலானவன் திருமாமகள் கொழுநன என்பதாம்.

குருவாகி:
தனது தெய்வ உருவத்தை மறைத்துக் கொண்டு மனித உருவத்தில் ஆசார்யனாய்
இவ்வாறு உருவம் மாறிவரக் காரணம் என்னவெனில்.

தன்னருளால்:
தன்னுடைய மிக்க பெரும் கருணை என்று சொன்னதால் இதற்கு வேறு காரணமில்லை என்பது கருத்து.
இப்படி உருவம் மாறி வந்தது யாருக்காகவென்றால்

மானிடர்க்கா:
மனித உடலிலே பிறந்து சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டு உபதேசத்திலே திருந்தி
சேமத்தைப் பெற உரியரான ஆன்மாக்களுக்காக என்பது பொருள்.

இந்நிலத்தே தோன்றுதலால்:
குழந்தை கிணற்றிலே விழுந்தால் உடன் குதிக்கும் தாயைப் போல ஆன்மாக்கள்
பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கிடக்கிற இப்பூமியில் பிறக்கையால்

யார்க்கும்:
அந்தணர் முதலிய சாதி வேறுபாட்டாலும் பிரமச்சர்யம் முதலிய நிலை வேறு பாட்டாலும்
ஆண், பெண் என்ற வேறுபாட்டாலும் பலவகைப் பட்டிருக்கும் ஆன்மாக்கள் அனைவருக்கும்

அவன் தாளிணையை உன்னுவதே:
“அவன்” என்ற தில் இறைவனுடைய அனைத்துச் சிறப்புக்களும் அடங்கி உள்ளன.
அதாவது
ஆன்மாக்கள் அனைவருக்கும் தலைவனாய் புகளிடமாய்ப் பயனாய் இருக்கிறவன் என்பதும்,
அவனுடைய திருவடிகள் இரண்டையும் அடைவதே லட்சியமாகவும் அடையத் தகுந்ததாகவும்
அடைவதற்கு வழியாகவும் என்றிப்படிப்பட்ட சிறப்புக்களை எண்ணியிரு ப்பதுவே என்று பொருள்.

“உன்னுவதே” என்ற ஏகாரத்தால்
இது தவிர வேறு ஒன்று எண்ண வேண்டாம் என்பது குறிப்பு.

சாலவுறும்:
மிகவும் பொருத்தம்.
சால- மிகவும்.
உறும்- பொருத்தம்.
இதனால் மேல் சொன்னபடி எண்ணியிருப்பது
ஆன்மாவின் இயல்புக்கு மிகவும் பொருத்தமாகும் என்பதாம்.

“திருமாமகள் நாயகனான பகவானே இடர்கடலில் துவளும் மனிதர்களை உபதேசத்தால் கரை எற்றுவதற்காகத்
தன்னுடய மிக்க கருணை குணத்தால் குருவாகி மனித உருவத்தில் தோன்றுகிறான்.
அவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாயும் புகழையும் அடையத் தகுந்தவனாயும் இருக்கிறான்.
அத்தகையவனுடைய திருவடிகளே அனைத்துயிர்க்கும் அடைய வேண்டிய லட்சியப் பொருளாகவும்
அவசியம் அடையத் தகுந்ததாகவும் அடைவதற்கு வழியாகவும்
எப்பொழுதும் மனதில் நினைத்த வண்ணம் இருப்பது தான் ஆன்மாக்களின் சேமத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
”இப்படி எண்ணுவது தவிர வேறு காரியங்கள் செய்தால் பயனேதுமில்லை.

ஆகவே “குரு” என்பவன் கடவுளுடைய தோற்றமாய் மனிதர்களின் நலத்திற்காகவே அவதரித்திருப்பவன் என்றும்
அவன் திருவடிகளை நினைத்திருப்பதுவே ஆன்மாக்கள் அனைவருக்கும் தகுந்ததாகும் என்று உரைக்கப்பட்டது.
இதை எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்ற பிக எளிய தொடரால் பண்டை தமிழர்கள் உணர்த்தினர்.

———–

மேல் கூறிவந்த குருவின் சிறப்பை அறிந்து குருவினிடத்திலேயே ஒன்றி நிற்பார் பெருமையை அறிபவர்
மிக்க அறிவாளியாக இருப்பார்கள் அன்றோ!
குரு பக்தி உடையவரின் பெருமையை அறிய மாட்டாத உலோகர்கள்
“பகவானைக் காட்டிலும் குருவையே லட்சியமாகக் கொண்டு அவர்பின் திரிகிறார்களே என்று
பழி தூற்றுவார்களேயானாலும் அதற்குத் தக்க விடை யிறுக்கிரது இப்பாடல்.

மேல் சொன்ன உலோகர்கள் கூறும் கேள்விக் குறியில் மற்றொரு கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது.
அதாவது பகவானிடத்தில் அவனுடைய உருவம், குணம், செயல் அவதாரங்கள் ,கதைகள் முதலியவற்றில்
ஈடுபாடு கொண்டுள்ள பகவத் பக்தர்கள் குருவின் மேன்மை அறியாமல் குரு பக்தர்களை நோக்கி
” கடவுள் பின் செல்லாமல் மனிதனான குருவின் பின் செல்கிறீர்களே ” என்று குரு பக்தர்களை நோக்கி
இகழ்ந்து பேசுவதற்கும் வாய்ப்பிருந்தால்
இப்பாடல் மூலம் சாமான்யரான உலோகர்க்கும் சிறப்புடயரான பகவத் பெருமை நிலை நாட்டப்படுகிறது.

அதனால் குரு பக்தர்களைப் பழித்தால் அப்பழிப்பும் அவர்களுக்குத் துதியாகும் என்று கூறப்படுகிறது.
இது வஞ்சப் புகழ்ச்சியணி என்ற இலக்கணத்தின் பாற்படும்.

இதற்கு ஓர் உதாரணம் காணலாம்.
”உடையவர் காலத்தில் ஒரு நாள் திருவரங்கத்தில் பெருமாள் திருப்புன்னை அருகில் எழுந்தருளி நிற்க,
உடையவரும் மற்றும் பக்த ஜனகளும் பெருமாள் புறப்பாடு காண பெரும் திரளாய்க் கூடியிருக்கும் சமயத்தில்,
சிலர் பெருமாள் திருமுன்பு உடையவர் திருவடிகளைத் தண்டனிட்டு அவரை ஆதரித்து நிற்கிற வேளையில்,
சோழ மன்னன் அவைப்புலவரான “உடையார் சுப்ரமணிய பட்டர்” என்பவர்
இக்காட்சியை அருகில் வந்து இவ்வாறு வினவினார்.

“ஜீயரே, நாம் உம்மிடம் கேட்டுத் தெரிய வேண்டிய ஒன்று உண்டு” என்று சொல்ல
உடையவரும்”அது என்னது” என்று கேட்க
அப்பொழுது பெருமாள் புறப்பாட்டில் எழுந்தருளியிருக்கும்போது உம்மைச் சிலர் வணங்கிச் செல்கிறார்களே!
அவர்களும் உம்மை வணங்குவதில் மிகவும் விருப்புடையவராக இருக்கிறார்கள்.
நீரும் அவர்கள் வணங்குவதைக் குறித்து பெருமாள் திருமுன்பு என்னை வணங்க வேண்டாம் என்று கூறுவதில்லை.
இப்படிப் பேசாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

இவ்வாறு கேட்டதற்கு உடையவரும் கீழ் வருமாறு பதில் கூறினார்.
“இந்த கேள்வி அவசியம் கேட்கப் பட வேடியது தான். ஆனாலும் நீர் கேட்பது அதிசயமாயிருக்கிறது.” என்று பதில் கூறினார்.

அதற்கு சுப்ரமணிய பட்டர் எனக்கு அப்படி என்ன சிறப்பு? என்று கேட்க

அதற்கு பதிலாக நீர் ராஜ சேவை பண்ணித் திரிகிறீர் அல்லவா?
ராஜாவிடம் ஒருவன் ஒரு காரியத்தைப் பெற்றுப் போகவந்தால் ராஜாவினுடைய பாதுகைகளை எடுத்துத்
தலையிலே வைத்துக் கொண்டு கௌரவிப்பான். அப்பொழுது அதனைப் பார்த்த அரசன்
“தன் பாதுகைகளைத் தலையில் வைத்துக் கொண்டாடும் அவனை அரசன் தன்னிடம் அன்பு காட்டுவதற்காகவன்றோ
அவ்வாறு செய்கிறான் என்று மகிழ்ந்து அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பன்.
விருப்பத்தைப் பாதுகையா செய்விக்கிறது? அரசன் அல்லவா செய்கிறான்.
தனது பாதுகையைத் தலையில் தாங்கும் ஒருவனை அரசன் அன்பு செய்து
அவனவன் விருப்பத்தை நிறைவேற்றுவதை நீர் பார்த்ததில்லையா?
அது போல இங்கும் பெருமாள் அரசன் போலேயும் , அடியேன் அவருடைய பாதுகையைப் போலேயும் இருப்பதால்
பகவானுடைய அருள் வேண்டி அவனுடைய பாதுகையான என்னை வணகிப் போகிறார்கள்.
என்னிடம் அன்புடயவரைப் பெருமாள் அன்பு செய்கிறார்.
ஆகவே தான் பெருமாள் திருமுன்பு என்னை வணங்கிப் போகிறார்கள் என்று உடையவர் பதிலுரைத்தார்.
சுப்ரமணிய பட்டரும் இவ்வரும் பெரும் பெருமை உடையவர் வாய் மூலம் அறிந்து மிகவும் களிப்புற்றார்.
“இச்செய்தியைத் திருவிருத்த உரையில் காணலாம்)

ஆகவே பகவத் பக்தியுடையவர் ஆசார்ய பக்தி உடையவரைப் பார்த்து குறைவாக நினைப்பார் என்பதும்
அவ்வாறு நினைப்போர்க்கு ஆசார்ய பக்தி உடையாரின் பெருமை தெரிய வேண்டுமென்றும்
அவர்களது பெருமை தெரியாமல் ஒருகால் அவர்களைத் தூற்றினாலும்
அது அவர்களது பெருமையையே காட்டும் என்னும் நுண் கருத்து இப்பாடலில் கூறப்படுகிறது.

அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம் –39-

பதவுரை:

அலகை முலை – பூதனையாகிற பேயின் முலைப்பாலை
சுவைத்தாற்கு – பருகின கண்ணனுக்கு
அன்பரடிக்கு – பக்தர்களான அடியவர்களின் திருவடிகளில்
திலதமென – நெற்றித் திலகம் போன்று சிறப்புடையவர் என்று கூறும்படி
திரிவார் தம்மை – நடமாடுகிற பெரியோர்களை
உலகர் – உலகியலில் வாழ்பவர்கள்
பழி தூற்றில் – இறைவன் பின் செல்லாமல் மனிதன் பின் செல்கிறார்களே என்று பழித்துப் பேசினால்
துதியாகும் – அது இவர்களது அடியார் பக்தியை வெளிப்படுத்துவதால் போற்றுவதேயாகும்.
அவர் – அந்த உலகர்கள்
தூற்றாது – அவ்வாறு பழிக்காமல்
இவரை – அடியார் பக்தரான இவரை
போற்றில் – நல்லவர் என்று புகழ்ந்தால்
அது – அப்புகழ்ச்சி
புன்மையேயாம் – பழிப்பதேயாகும்

அலகைமுலை சுவைத்தாற்கு:
அலகை என்று பேய்க்கு பெயர்..
திருவள்ளுவரும் “வையத்துள் அலகையா வைக்கப்படும்” பேயை அலகை என்று கூறினார்.
இங்கு அலகை என்றது பூதனையாகிற அரக்கியை,
திருவாய்ப்பாடியில் கண்ணன் ஒளித்து வளரும்போது கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்ற அரக்கி
யசோதை உருவத்தில் அங்கு வந்து குழந்தையாகிற கண்ணனை மடியில் எடுத்து வைத்து
முலைப்பாலுடன் சேர்த்து வைத்த விஷத்தையும் கொடுத்தாள்.
கண்ணன் அவ்விடப் பாலையும் அவளது உயிரையும் ஒரே சமயத்தில் சுவைத்து உறிஞ்சி உண்டான்.
இவ்வரலாறு அலகை முலை சுவைத்தாற்கு என்று குறிக்கப்படுகிறது. இதைத் திருமங்கையாழ்வார்

“பெற்ற தாய் போல் வந்த பேய்சசி பெருமுளையூடு உயிரை வற்ற வங்கி உண்டவாயன்” என்றும்

“கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை மண்சோற முலையுண்ட மாமதலொய்” என்றும் கூறினார்.

நம்மாழ்வாரும்
“விடப்பால் அமுதா (க) அமுது செய்திட்ட மாயன்” என்று கூறினார்.
இவ்வாறு கண்ணபிரானின் சரிதையில் மனம் பறிகொடுத்த அன்பர்கள் என்றவாறாம்.

அன்பரடிக்கன்பர்:
இவ்வாறான கண்ணபிரான் கதையில் மனம் பறியுண்ட பக்தர்களின் திருவடிகளில் அன்பு பூண்டவர் என்று பொருள்.
பூதனைக் கண்ணனைக் கொல்ல வந்தாள். கண்ணன் அவளை முடித்தான்.
இச்சரிதத்தை நினைக்கும் பக்தர்கள் “தன்னைக் கொல்ல வந்த பூதனையைத் தான் கொன்று உலகத்துக்கு எல்லாம்
ஆணி வேரான தன்னை நமக்குக் காத்துக் கொடுத்தானே.!
அப் பேயைக் கொல்லாமல் போனால் கண்ணன் நமக்கு கிடைப்பானா? என்று அவனது குணங்களுக்கு அடிமையாகி
அவனிடம் ஈடுபட்டு காதலே மிகுந்த தொண்டர்களாகிறார்கள்.
அவர்களது திருவடிகளில் காதல் செய்பவர்களுக்கு “அன்பரடிக்கன்பர்” என்று சிறப்பு.

திலதமெனத் திரிவார் தம்மை:
இப்படி அடியார்க்கு அடியாராய் அடியார் பால் அன்புடையாராய் உலகத்துக்கே இவர்கள் ஒரு திலகம் என்று
பேரரறிஞர்கள் கொண்டாடும்படி நடமாடித் திரிகின்ற பெரியோர்களை என்று பொருள்.
அல்லது “அடியார்க்கு அடியாராய் இருப்பார்க்கு இவர்கள் திலகமாய் விளங்குபவர்கள் என்று
அறிவுடையார் கொண்டாடும்படி நடமாடி திரியும் பெரொயோர்கள் என்றும் சொல்லலாம்.
(திலதம்-பெண்கள்நெற்றிகரமானது மங்களகரமானது)

இதனால் அடியார்க்கு அடியாராய் இருப்பாரின் சிறப்புக் கூறப்பட்டது.
இச்சிறப்பினை நம்மாழ்வார் “பயிலும் சுடரொளி”, “நெடுமாற்கடிமை” என்ற இரண்டு திருவாய்மொழிகளிலும்
திருமங்கையாழ்வார் “கன்சோரவெங்குருதி”நண்ணாத வாள வுணரிடைப்புக்கு ” என்ற இரண்டு திருமொழிகளிலும்,
குலசேகராழ்வர் “தேட்டறும் திறன்” என்னும் திருமொழியிலும்,
தொண்டரடிப்பொடியாழ்வார் :மேம்பொருளுக்கு மேலிற்பாட்டுக்களிலும்
மற்றும் இதிகாச புராணங்களிலும் கூறிச் சிறப்பித்தத்தைக் காணலாம்.
ஸ்ரீவசனபூஷணம் சூத்திரம் 226ல் இவ்வாறு கூறப்பட்டுளதைக் காணலாம்.

உலகர் பழிதூற்றில் துதியாகும்: இப்படிப் பெருமைப் பட நிற்கும் அடியாரை சாதி, ஆசிரமம்,முதலிய வேறுபாடுகள்
ஒன்றும் பாராமல் “பாகவதர் (பகவத் பக்தர்) என்கின்ற ஒன்றை மட்டுமே பார்த்து
அதையே பற்றுக் கோடாகக் கொண்டு பகவானைக் காட்டிலும் இவர்களே அடையத் தகுந்தவர்கள் என்று நினைத்து
அவர்கள் பின்னால் திரிகிரார்கள் என்று சாமான்யரான உலகர்கள் பழி கூறினால்
அப்பழி அவ்வடியார்க்கு அடியாராகும் குணங்களை வெளிப்படுத்துவதால் பாராட்டப் படுவதாகுமேயொழிய பழியாகாது.

தூற்றாது அவர் இவரைப் போற்றில் அது புன்மையேயாம்:
உலகோர்கள் (சாமான்யர்கள்) இவ்வாறு அடியார்க்கு அடியாரை மேற்சொன்ன பழிகளைக் கூறாமல்
தங்களுக்காகச் செய்ய வெடிய சாஸ்திர ஒழுக்கங்கள் எவையும் தாங்கள் செய்ய வேண்டாத போதிலும்
சாமான்யரான உலகத்தார் கெட்டுப் போவார்களே என்னும் இரக்கத்தால் அவர்களுக்காகச் செய்யும் சில ஒழுக்கங்கள் உண்டலவா?
அவ்வொழுக்கங்களை மனப்பூர்வமாகச் செய்யாமல் மேல்வாரியாகச் செய்கையில் அவற்றைக் கண்டு,:
”சாஸ்திரப்படி தங்களைகடமைகளைச் செய்யும் நல்லொழுக்கம் உடையவர்களாக இருக்கிறார்களே ” என்று
புகழ்மது பேசினால் அது அவ்வடியார்க்கு அடியாராய் இருக்கும் இவர்கள் தகுதிக்குப் பொருந்தாததால்
மேல் வாரியாக அவைகள் செய்யும் ஒழுக்கம் குற்றமுடையதேயாகும்.
அதாவது நிந்தைக்கே இடமாகும். என்றவாறு

பகவானுடைய அடியார்க்கு அன்பு பூண்ட அடியார்.
அடியார்க்கு அடியார்: “உலகத்துக்கே திலத” மென்று அல்லது “அடியார்க்குத் திலத” மென்று சான்றோர்களால்
புகழும்படி நடமாடித் திரியும் பெரியோர்களை என்றவாறு
சாமான்ய உலகர்கள் “பகவானைப் புறக்கணித்து அவரடியாரிடம் ஈடுபட்டுத் திரிகிறார்களே” என்று
பழி சொன்னால் அப்பழி துதியிலே சேர்ந்ததாகும்.
அவ்வாறு துதிக்காமல் இவ்வுலகர்கள் அவர்கள் மேல் வாரியாகச் செய்யும் நல்லொழுக்கங்களைப் பார்த்து புகழ்வரேல்
அப் புகழ்ச்சி அவர்கள் நிலைமைக்குப் பழிப்பாகவேயாகும். இதனால் அடியார்க்கு அடியாராம் சிறப்புக் கூறப்பட்டது.

“இராமாயணத்தில் நல அறம் நிறுத்தத் தோன்றிய இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கனன் என்னும்
இந்நால்வருள் சத்ருக்கனனது ஒழுக்கமே அனைவரிலும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் இராமபக்தனான பரதனுக்குத் தொண்டு செய்து பரதன் அடியனை
(இராமனுக்கு அன்பர் பரதன். பாரதரடிக்கு அன்பன் சத்ருக்கனன்)
அடியார்க்கு அடியாராய் இருக்கும் சிறப்புக் கூறப்பட்டதாம்.”

” தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டனம் சடகோபன் ”
அடியார் அடியார் அடியார் எங்கோக்கள்” என்ற நம்மாழ்வார்
அவாவுற்ற அடியார்க்கு அடியாராம் நிலையும் இங்கு ஒப்பு நோக்குக.

மற்றும் ” அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்: என்று திருப்பாணரும்,
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய்” என்று தொண்டரடிபொடிகளும்
“அடியார்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே” என்று பெரியாழ்வாரும்
“தொண்டர் தொண்டர்கலாவர்” என்று குலசேகரரும்
அடியார்க்கு அடியாராம் தன்மையை ஆசைப்பட்டுப் பேசியிருப்பதையும் உற்று நோக்குக.

இந்நூல் ஆசிரியரான ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் இராமனுஜருக்கு அடியாராய் வாழ்ந்து
“அன்பரடிக்கன்பர்: என்றும்
“திலதமெனத் திரிவார்” என்றும் இங்கு கூறிய சிறப்புக்கு எடுத்துக்காட்டாக இவ்வாசிரியர் திகழ்ந்தார் என்பதையும் உணரலாம்.

இதைப் பற்றியே மதுரகவியாழ்வாரையும் இவரையும் இணைத்து
தெருளாரும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே” என்று இவர் போற்றப்பட்டார்.

அடியார்க்கு அடியாராய் வாழ்பவரின் சிறப்புக்கு மேலும் பல உதாரணங்கள் காணலாம்.
திருவரங்கத்து அமுதனார் இராமானுஜரடியார்க்கு அடியாராய் வாழ்ந்து இராமனுஜ நூற்றந்தாதி பாடினார்.
பட்டருக்கு நஞ்சீயர் அடியாராய் வாழ்ந்தார் என்பது பட்டர் வைபவத்தில் காணலாம்.

மணவாளமாமுனிகளும் இவ்வாறே அடியார்க்கு அடியாராய் யதிராஜவிம்சதை பாடினார்.
எறும்பியப்பா என்னும் ஆசாரியர் மணவாள மாமுனிகளுக்கு அடியாராய்”
பூர்வ தினசரி: முதலிய ஸ்தோத்திரங்களைப் பண்ணினார்.
அதில் ஒன்று “செருக்கில்லாதவர்களும் ஆசார்ய நிஷ்டைகளில் இருப்பவரும் சாஸ்திர சாரார்த்தங்களை அறிந்தவரும்
பணத்தாசை பெண்ணாசை முதலிய ஆசை அற்றவர்களும் பெருமையுற்றவர்களும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்புடயவர்களும்,
கோபம், உலோபம் முதலிய குற்றங்களைக் கடிந்தவர்களுமான மணவாளமாமுனிகளின் அடியார்களோடு அடியேனுக்கு
என்றும் உறவு உண்டாகட்டும் என்று கூறிய வார்த்தைகளையும் காணலாம்.

ஆக
“ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அடியார்க்கு அடியாராக இருப்பதையே விருபினார்கள்.
இதுவே அறிய வேண்டிய சாரங்களின் சாரமாகும்.”
அதனால் இக்கருத்து நூல் இறுதியில் கூறப்பட்டது.

—————

ஆசார்ய பக்தியும் அடியார்க்கு அடியராய் இருக்கும் அடியார் பக்தியும்
கீழே பல பாடல்களால் விளக்கமாக எடுத்துரைக்கபட்டது.
இப்படி விளக்கமாகக் கூறினாலும் அவ்வடியார்களின் பெருமை உலகோர்க்கு உணர்த்த வேண்டியதாயுள்ளது.
அவர்க்ள் சொற்கள் ஆசார்யனைப் பற்றியும் அடியார்களைப் பற்றியும் உள்ளன.
அவர்கள் செயலும் ஆசார்ய கைங்கர்யமாகவும் அடியார் தொன்டாகவும் உள்ளன.
இவர்களுடய குறிக்கோள் அப்படியே உள்லன. உலகியலுக்கு வேறாக உள்ளது.

இதற்கு உதாரணமாக வடுக நம்பி வரலாற்றைக் காணலாம்.
வடுக நம்பி உடையவருக்கு பால் காய்ச்சிக் கொண்டிருக்கும் பொழுது பெருமாள் பெரிய திரு நாளில்
அலங்காரஙளுடன் வீதியில் புறப்பட்டருள உடயவரும் பெருமாளை சேவிக்கப் புறப்பய்ட்டு
“வடுகா பெருமாளை சேவிக்க வா” என்ரு கூப்பிட,
அப்பொழுது வடுகா நம்பியும் “உம்முடய பெருமாளை சேவிக்க வந்தால் என்னுடய பெருமாளுக்குக் காய்ச்சுகின்ற
பால் பொங்க்ப் போகும். ஆதலால் வர இயலாது” என்று வராமலே இருந்துவிட்டர்.
இவ்வாறான உதாரணங்கள் பலவும் காணலாம்.

இத்தகை யவர்களுடய ஒழுக்கத்தையும் நாட்டர் பார்க்கையில் உலகியலுக்கு மாறாகத் தோன்றுவதால்
அவர்களுடைய ஒழுக்கத்தைப் பழிக்கக் கூடுமல்லவா?
மேலும் நாட்டார் என்னும் இவ்வெண்ணம் போலவே இறைவனடியார்களும் அடியார்கடியாரை நோக்கி
இது என்ன இவர்களுடய ஒழுக்கம்? பகவானை அணுகாமல் ஆசர்யனயும் அடியார்களையும் பின் தொடர்கிறார்களே?
அருள் செய்பவன்பகவானாயிருக்க இவர்களைத் தொடர்வது எதற்காக?
என்று இவர்கள் மீது பழி சொன்னால் என்ன செய்வது? என்ற வினா எழுகிறது.
நாட்டார்க்கும் பகவத் பக்தருக்கும் தோன்றும் இவ்வெண்ணெங்களுக்குப் பதில் சொல்லப்படுகிறது.
இப்பாடலில் மேலும் இவ்வாறு பதில் சொல்கிற முகத்தால் அப்பெரியார்களுடய பேச்சுக்களும் செயல்களும் பார்வைகளும்
உலகத்தாருடய நடத்தைகளும் வேறு பட்டிருக்கும் என்றும் இதுவே அவர்களுடய சிறப்பு என்றும் சொல்லி
இந்நூல் முடிக்கப்படுகிறது.

அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ –40-

பதவுரை:

அல்லிமலர்ப் பாவைக்கு — பெரிய பிராட்டியாரிடத்தில்
அன்பர் –காதலனாயிருக்கும் பகவானுடய
அடிக்கு அன்பர் — திருவடிகளில் பக்தராயிருக்குமவர்க்ள்
அவிடு சொல்லும் — வேடிக்கையாகச் சொல்லும் வார்த்தையும்
சுருதியால் — வேதத்துக்கு ஒப்பாகும்
அவர் சரிதை — அவர்களுடய செயல்கள்
மனுநூற்கு நல்லபடியாம் — மனுதர்ம ஸாஸ்திரத்திற்குநல்ல உதாரணமாகும்.
பார்வை — அவர்களுடய நோக்கு
செடியார்– தூறு மண்டிக்கிடக்கிற
வினைத் தொகைக்கு– பாவ கூட்டத்தை அழிப்பதற்கு
தீ–நெருப்புப் போன்றதாகும்.

அல்லிமலர்ப் பாவைக்கு –
தாமரையில் தோன்றிய இலக்குமிக்கு (அன்பர்) அவளிடம் அன்பாகவே இருக்கும் பகவான்.
பகவானே இப்பிராட்டியை முன்னிட்டு “அவளுக்கு அன்பனே” என்று அழைத்து
பகவானே அறிவதற்குப் பிராட்டி அடையாளமாய் இருப்பாள்” என்னும் குறிப்புத் தெரிகிறது.
மேலும் பிராட்டியிடம் அவன் ஆராத காதலாகயிருப்பான் என்னும் கருத்தும் புலனாகிறது.
இத்தகய பிராட்டியிடத்தில் அன்பனாய் இருக்கும் பகவானுடய திருவடிகலில் அன்புடயவர்கள்
“அல்லிமலர்ப் பாவைக்கு அன்பரடிக்கு அன்பர்” என்று சொல்லப்பட்டனர்.
அதாவது
இறைவன் திருவடிகலில் செய்யும் அன்பையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டிருக்கும் பாகவதர்கள்.

சொல்லும் அவிடு சுருதியாம்:
அத்தகைய பாகவதர்கள் வேடிக்கை வினோதமாகச் சொல்ல்ம் வார்தைகள் வேதக் கருத்துக்க்களய் இருப்பதால்
வேதம் போன்று நம்பிக்கை உடையதாய் ஏற்கலாயிருக்கும் என்பதாம்.
குரு பரம்பரையில் இத்தகைய வார்த்தைகளைக் காணலாம்.
உடையவைர் வார்த்தை, பட்டர் வார்த்தை, ஆழ்வான் வார்த்தை, நம்பிள்ளை வார்த்தை, திருக்கோளூர் பெண்பிள்ளை வார்தை
என்று இப்படிப் பெரியோர்கள் சொல்லும் வார்த்தைக்ள் எல்லாம் வேத வேதாந்தங்களை எளிமையாகச் சொன்ன வார்த்தைகளாகும்.

”வாய் தந்தன கூறுதியோ மறை தந்த வாயால்” என்று கம்ப நாட்டாழ்வாரும்
இராமபிரான் இலக்குவனை நோக்கிக் கூறும் கவியில் குறிப்பிட்டார்.
“பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந்தடைந்த பேதை வேடனுக்கு உதவி செய்து
விறகிடை வெந்தீ மூட்டி பாடுறு பஸியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்
வீடு பெற்று உயர்ந்த வார்தை வேதத்தின் விழுமிது அன்றோ” என்ற கம்பராமாயணப் பாடலில் சொல்லப்பட்ட
புறாக் கதையில் புறாவின் வாயினால் சொல்லப்பட்ட சரணாகதி
தர்மம் வேதத்தைக் காட்டினாலும் சிறப்பானதாகச் சொல்லப்பட்டுள்ளது அறியலாம்.

நல்லபடியாம் மனுநூற்கு அவர் சரிதை:
அவர்களுடய சரிதையாவது அவர்களுடய நடத்தையாகும்.
அதாவது
மனுநூலில் சொல்லப்பட்ட ஒழுக்க நெறிகளுக்கு அடியார்களுடைய அன்றாட நடத்தைகள் மாதிரியாக விளங்கும் .
தர்ம ஸாஸ்திரஙள் வர்ணாஸ்ரமஙளுக்கு ஏற்ப அவரவர்க்குரிய ஒழுக்கஙளைக் கட்டளையிட்டுள்ளன.
அவற்றைக் கற்றுணர்ந்தவர்கள் அதன்படி ஒழுகுவார்கள். சாதாரண மக்கள் அதைக் கற்கவோ கற்றபடி நடக்கவோ இயலாது.
ஆனாலும் தர்மஸாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த மேலோர்கள் நடப்பதைப் பார்த்து சாதரண மக்களும் அவற்றைக் கடைப் பிடிப்பார்கள்.
ஆகவே அத்தகைய பெரியோர்களுடைய நடத்தை மற்றவர்கள் பின் பற்றுவதற்குரியதாக இருக்கிறது.
அவர்களுடைய நடத்தயைக் கொண்டு தர்ம ஸாஸ்திரம் உண்டாயிற்று. என்று சொல்லும்படியாகவும் இருக்கும்.
அப்பொழுது இவர்களுடய நடத்தை அசல் போலவும் ஸாஸ்திரங்களிலே சொல்லப்பட்டவை நகல் போலவும் இருக்கிறது.
அவ்வாறு இவர்களுடைய ஒழுக்கதிற்கு நம்பிக்கைக் கூறப்பப்டுகிறது.
இதற்கு உதாரணமாக கம்ப ராமாயணத்தில் ஓரிடம் காணலாம்.

“எனைத்து உளமறை அவை இயம்பற் பாலன
பனைத்திறன் கரக்கரிப் பரதன் செய்கையே
அனைத்டிறம் அல்லன அல்ல: அன்னது
நினைத்திலை என்வயின் நேய நெஞ்ஜினால்”–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் -திருவடி சூட்டு படலம்)

இது இராமபிரான் இலக்குவனை நோக்கிக் கூறுவதாகும்.

உலகத்துக்கெல்லம் ஒழுக்கங்களை வரையருத்துக் கூறுகிறது.வேதம்.
பரதனுடய ஒழுக்கம் எவையோ அவை வேதத்தில் கூறப்பட்டவையே.
அவனிடத்தில் காணப்படாத ஒழுக்கங்கள் வேதத்தில் கூறிருந்தாலும் அவை ஏற்கத் தக்கதல்ல.
பரதனது நடையில் உள்ளன எவையோ அவையே ஏற்கத் தக்கனவாம் என்ற உண்மையை
இராமன் இலக்குவனுக்கு எடுத்துரைப்பதாகக் கம்பன் கூறியுள்ளான்.
இங்குச் சொல்லப்பட்ட பரதன் சரிதை: மனு நூற்கு நல்லபடியாம்” என்று கூறப்படும் கருத்துக்கு ஒப்பு நோக்கலாம்.

பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ
பாகவதப் பெருமக்களான அப் பெரியோர்களுடய பார்வையானது தூறு மண்டிக் கிடக்கிற வினைக் குவியலை
அழிக்க வல்லதாக இருக்கும்.
அதாவது
பெரியோர்களுடைய பார்வை வல்வினை இருந்த சுவடு தெரியாமல் போக்கும் ஆற்றலுடயதாகும் என்பதால்
ஆன்ம ஞானத்தைக் விரிவு படுத்தும் என்பது உட்கருத்து.

பெரிய பிராட்டியாருக்கு அன்பான பகவானுடைய திருவடிகளில் அன்பு செய்வார்
வினோதமாகச் சொல்லும் வார்தைகளும் வேதமாகவே ஏற்றுக் கொள்ளப்படும்.
அவர்களுடைய நடைத்தைகள் ஒழுக்க நெறியைக் கற்பிக்கும் நூலான மனு நூலாகும்.
சரியான அசலாய் விளந்கும்
அதாவது
இவர்கள் ஒழுக்கம் அசலாகவும் நூலில் சொல்லப்படுவது நகலாகவும் கொள்ளப்படும்.
இவர்களுடைய பார்வை தூரு மண்டிக்கிடக்கிற பாவக் குவியலுக்கு தீ பொன்று அழிக்கும் கருவியாய் இருக்கும்.
இவர்களுடைய பார்வை பட்டவர்கள் வினையிலிருந்து விடுபட்டு தூயவராய் ஜ்ஞாநத்தைப் பெற்று வாழ்வார்கள் என்பதாம்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்–பாசுரங்கள்– 21-30—ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

August 30, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

———

திருமகள் மணாளனான இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு மிகத் துன்பங்களை கொடுத்தாலும்
அத் துன்பங்கள் அவர்களிடம் தான் கொண்ட அன்பினால் ஆகும் என்பது
உதாரணத்துடன் விளக்கப்படுகிறது இப் பாடலில்.

ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய் நலமாம் –தேரில்
பொறுத்தர்கரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை யற்று –21-

பதவுரை:

வேரிச் சரோருகை கோன் -நறுமணம் நிறைந்த தாமரைப் பூவை இருப்பிடமாக கொண்ட பெரிய பிராட்டியாருக்கு மணவாளன்
அன்பர்கள் பால் -பக்தி உடையவார்களிடத்தில்
ஆரப் பெருந்துயர் -மிக்க பெரும் துன்பத்தை
செய்திடினும் -தந்த போதிலும்
தேரில் -இதை ஆராய்கையில்
மெய்ந் நலமாம் -உண்மையான அன்பிலே யாகும்
பொறுத்தற்கு அரிது எனினும் -தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும்
அப்படித் தருவது
மைந்தன் -பிள்ளையினுடைய
உடற் புண்ணை -உடலில் உண்டான புண்ணை
அறுத்தற்கு -அறுவை சிகிச்சைக்கு
இசைதாதையற்று – அனுமதிக்கும் தந்தை போலவாம்

ஆரப்பெருந்துயரே –
துயர் – துன்பம், பெருந்துயர் – பெருந்துன்பர். ஆரப் பெருந்துயர் – மிக்க பெருந்துன்பம் என்றவாறாம்.
துயரே என்கிற ஏகாரத்தால்
நடுவில் ஒரு இன்பம் கலவாத துன்பம் என்று புலனாகிறது.

செய்திடினும் – கொடுத்தாலும் என்று பொருள்.

ஆன்மாக்களுடைய முன் வினைப் பயனால் துன்பங்கள் வந்தனவானாலும் அவற்றை நடத்துபவன்
இறைவனாகையாலே “போயபிழை” எனப்பட்ட பழவினைகளும்
‘புகுதருவான்’ எனப்பட்ட வரும் வினைகளும்
தற்பொழுது உடலுடன் கொண்டு வந்த வினைகளும் ஆகிய
மூன்று வினைகளையும் கழிக்கின்றவன் இறைவனாதலால்
அவனுக்கு மேற்சொன்ன மிக்க பெருந்துன்பங்களைக் கழிக்க முடியாதவையல்ல. அவர் எண்ணினால் அகற்ற முடியும்.
ஆயினும் தன் பக்தர்களின் தன்மைக்காக அப் பெரும் துன்பங்களைப் பக்தர்கள் துய்க்கும்படி செய்கிறான்.
அதனால் பக்தர்கள் துன்பம் துய்க்கும்படி ஆகிறது. ஏனெனில் பக்தர்கள் உலகப் பற்றிலிருந்து விடுபடவேண்டுமல்லவா?

இக்கருத்து ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற பழமொழியால் கூறப்பட்டது.

‘இயல்பாகவும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடமை
மயலாகம் மற்றும் பெயர்த்து’–என்ற குறளுக்கு
எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை மட்டும் விடாது போனால் அதைத் தொடர்ந்து விட்டனவெல்லாம்
மீண்டு வந்து தவத்திற்கு இடையூறாய் மனக்கலக்கம் செய்யும் என்ற பரிமேலழகர் உரையைக் காண்க.

வேரிச் சரோருகை கோன் – வேரி – நறுமணம், சரோருகம் – தாமரை

வேரிச் சரோருகம் – நறுமணமே வடிவாகவுடைய தாமரை

வேரிச் சரோருகை – அத் தகைய தாமரையை இருப்பிடமாக உடையவள் இலக்குமி.

சரோருகை கோன் :- அவளுக்குக் கணவனான திருமால் ‘கோன்’ என்ற சொல்லுக்கு
‘வேரிச்சரோருகை’ என்பது கருத்து அடையாக வந்தது.
அதாவது
பக்தர்களுக்குத் துன்பத்தை விளைப்பதற்காகப் பகவானோடு பிராட்டியும் துணை நிற்கிறாள் என்று தெரிகிறது.
காரணம் பக்தனுக்குப் பகவான் துன்பம் தருவது, அவனுடைய நன்மைக்காகவே என்று சொல்லுகையாலே
அந்நன்மைக்கு அவளும் துணை நிற்பது தவறல்லவே என்பதாம்.

மெய்ந்நலமாம் – உண்மையான அன்பின் அதாவது உண்மையான சினேகம் என்பதாம்.

தேரில் – ஆராயில், தேறுதல் – ஆராய்தல்

வேரிச் சரோருகைகோன், அன்பர்கள் பால் ஆரப்பெருந்துயரே செய்திடினும் தேரில் மெய்ந்நலமாம் என்று கொண்டு கூட்டுக.
இதற்கு எடுத்துக் காட்டாக கட்டுரைக்கப்படுகிறது மேல்தொடரில்.

பொறுத்தார்க்கு அரிதெனினும் மைந்தன் உடல் புண்ணை அறுத்தற்கு இசைதாதையற்று –
தன் புதல்வனுக்குத் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் அவன் உடலில் எழும்பிய கட்டியை
அறுவை மருத்துவத்திற்கு நல்லெண்ணத்துடன் ஏற்கும் தகப்பனைப் போல என்று பொருள்.
அதாவது
மகனுக்குத் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் அவனுடைய நன்மைக்காக அவனுடைய உடம்பில் எழும்பிய கட்டியை
அறுத்து எறிவதற்கு நல் எண்ணத்தாலே ஏற்றுக் கொள்ளும் பிதாவைப் போல,
பகவானும் தன் பக்தர்கள் வினைப்பயனைத் தீர்ப்பதற்கு மிக்க பெரும் துன்பங்களைக் கொடுத்து
அவ்வினையிலிருந்து அவர்களை மீட்பதற்காகவாம். இது பக்தனிடம் தான் கொண்ட உண்மையான நேசத்தாலே யாகும்.
இந் நற்செயலுக்கு இரக்கமே வடிவான பெரிய பிராட்டியாரும் துணை நிற்க இறைவன் செய்யும் செயலாகும் என்று பொருள்.

————

வினைப் பயன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது. ‘
உரற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா’ என்றது நீதி நூல்.
அதாவது
வந்து கூடுகின்ற தீ வினைகளைத் தடுப்பது தேவர்களுக்கும் முடியாவாம்.
அதுபோல பெறக் கூடிய நல் வினைகளையும் தடுக்க முடியாவாம்.
மழை வறண்டால் அதனை யாரும் தரமுடியாது. அதிக மழை பெய்தால் அதைக் குறைக்க வல்லவருமில்லை.
இதனால் வினைப் பயன்களைத் துய்த்தே ஆக வேண்டும் என்பது இறைவனால் இடப்பட்ட நியதி.
முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பில் நுகரப்படுவதாலும் இப்பிறப்பில் செய்த வினை வரும் பிறப்பில் நுகரப்படுதலுமாகிய
சுழல் போல் மாறி மாறி வந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு பிறவிச் சுழலில் சுழன்று வரும் ஆன்மாவுக்கு அதிலிருந்து தப்ப முடியுமா? என்று வினா எழுந்த பொழுது
அதற்கு பதில் கூறுகிறது இப்பாடல்.

பிறவிக்குக் காரணமான பழவினைகள் கழிதலால், பின் ஒரு பிறவி பிறந்து நுகரவிருக்கும் வினையும் இருக்குமோ? இராது.
ஆகவே வினைகளெல்லாம் ஆன்ம ஞானத்தால் தீயினில் பட்ட பஞ்சு போல் கருகி விடும்.
‘தீயினில் தூசாகும்’ என்பது தமிழ் வேதம். ஆகவே, பிறவித் தொடர் என்ற துயரமில்லை என்பதாம்-

உடைமை நான் என்று உடையான் உயிரை
வடமதுரை வந்து உதித்தான் என்றும் -திடமாக
அறிந்தவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படு நீள் துயரம் பின் –22-

பதவுரை:

நான் -நான் என்கிற ஆன்மா
உடைமை -இறைவனுடைய உடைமைப் பொருள் என்றும்
உயிரை உடையான் -இவ்வாத்மாவை சொத்தாக உடையவன்
வடமதுரை வந்துதித்தான் என்றும் -பிறந்தான் என்றும்
திடமாக அறிந்து -உறுதியாக அறிந்து
அவன்தன் தாளில் -இறைவனான அவன் திருவடிகளில்
அடைந்தவர்க்கும் -அடைக்கலம் புகுந்தவர்க்கும்
பின் பிறந்து படும் -இனி மேலும் ஒரு பிறப்பெடுத்து நுகரத்தக்க பழவினைகள்
நீள் துயரம் -பழ வினைகள்
உண்டோ -இருக்குமோ? இல்லை என்றவாறு –

உடைமை நானென்றும் –
நான் இறைவனுடைய உடைமைப் பொருள் என்றும்,
அதாவது
வேதம் முதலிய சாஸ்திரங்களில் ஆன்மாக்கள் இறைவனுடைய உடைமைகள் என்று
சொல்லப்பட்டதறிந்து அதன்படி இருத்தல்.

உடையான் உயிரை வடமதுரை வந்து உதித்தான் என்றும் –
நான் என்று சொல்லப்படுகிற இவ்வாத்மாவை உடைமையாகக் கொண்டவன்
வடமதுரையில் கண்ணனாக வந்து பிறந்தவன் என்றும்,
பகவத் கீதையில் தானே பரம்பொருள் என்றும், உலகமெல்லாம் என் உடைமைகள் என்றும்,
பிறவிப் பெருங்கடல் சுழலும் ஆன்மாக்களில் யாவர் என் பாதத்தையே அடைக்கலம் புகுகிறார்களோ
அவர்களை நான் பிறவியிலிருந்து கரையேற்றுவேன் என்றும் சொன்ன கண்ணபிரானுடைய தலைமையை.

திடமாக அறிந்து –
உறுதியாக அறிந்து
அதாவது
உண்மையை சாஸ்திரங்களால் ஆராய்ந்தால் ஆன்மாவுக்கு உடைமைத் தன்மையும்
இறைவனுக்கு உடையவனாம் தன்மையும் வகுக்கப்பட்டுள்ளது தெரியவரும்.
அதனால் உடைமை – உடையான் என்று இங்கு இரு பொருளில்,
உடைமை என்று உயிர்களுக்கும், உடையான் என்று இறைவனுக்கும் வகுத்துக் கூறப்பட்ட பெயராகும்.

ஆகையால் உடைமையான ஆன்மா இருக்குமிடத்திற்கு வருவானும்,
அதனைத் தன்னுடனே சேர்த்துக் கொள்வானும் அவனே.
இதனால் ஆன்மாவை வந்து அடைபவனும், அடைவதற்கு வழியாயிருப்பவனும் ,
அடைந்து மகிழ்வானும் அவனே என்று சொல்லப்பட்டது.

திடமாக அறிகையாவது
இறைவனுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள உடைமை உடையான் என்னும் அநாதியான இவ்வுறவை ஐயம் திரிவற அறிதல்.
இவ்வாறு இருவருக்குமுள்ள உறவு முறையை அறிந்து.

அவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் –
ஆன்மாவுக்கு உடையவனான இறைவன் திருவடிகளில் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு
அடைக்கலம் புகுந்தவர்களுக்கும் என்று பொருள்.
அதாவது
த்வய மந்திரத்தில் முன் பாதியில் சொன்னபடி சரணாகதி செய்தவர்களுக்கும் என்று கருத்து.

உண்டோ பிறந்து படு நீள்துயரம் பின் –
நீள் துயரம் என்றது பழவினையை,
பிறப்புக்குக் காரணமாகிற பழைய வினைகள் சரணாகதி செய்த பிறகு இருக்குமோ?
சரணாகதி செய்த உடன் உயிரைப் பற்றி நின்ற வினையெல்லாம்.

“வானோ மறிகடலோ, மாருதமோ, தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் – ஆனின்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதித்தார் தாள் பணிந்தோம்
வன்துயரை அவா மருங்கு”–(பெரிய திருவந்தாதி – 54)

என்று நம்மாழ்வார் அருளியபடி வினை போனயிடம் தெரியாமல் போய்விடும்.
ஆகவே சரணாகதி செய்த பின்பு ஒருபிறவி பிறந்து நுகரத்தக்க பழைய வினையும் கழியாமல் இருக்குமோ?.
உடனடியாக வீடு பெற வேணும் என்னும் வேகத்துடன் அப்பொழுதே வீடுபேறு அடைவதும்
உடல் வீழ்ந்த பிறகு வீடு பேறு கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு
உடல் கழிந்த பிறகு வீடு பேறு கிடைப்பதும் உறுதியாக உண்டு.
இதனால் சரணாகதி செய்தவர்களுக்கு மறுபிறப்பின் தொடர்ச்சி இல்லை. “உறுதியாக இல்லை.”

————-

முன் செய்த வினைகளை எண்ணி, “அவ்வினை நம்மைப் பற்றிக் கொண்டு துன்புறுத்துமே” என்று
வருந்துகிற மனதுக்கு ஆறுதல் கூறுகிற பாடல் இது.
இறைவன் திருவடிகளில் சரணாகதியடைந்த பின்பு முன் வினைகளின் பயனான துன்ப நுகர்ச்சி இல்லை
என்னும் உண்மையை அனைவரும் அறிய இதில் உணர்த்தப்படுகிறது.

ஊழி வினைக் குறும்பர் ஓட்டருவர் என்று அஞ்சி
ஏழை மனமே யினித் தளரேல் -ஆழி வண்ணன்
தன்னடிக் கீழ் வீழ்ந்து சரண் என்று இரந்து ஒரு கால்
சொன்னதர் பின் உண்டோ துயர் –23-

பதவுரை:

ஊழிவினை -பழையதாக செய்யப்பட்ட வினைகளாகிற
குறும்பர் -கயவர்கள்
ஓட்டருவர் -ஓடிவந்து துன்புறுத்துவர் என்று
அஞ்சி -பயந்து
ஏழை மனமே -அறிவிலாத நெஞ்சமே
இனித்தளரேல் -இனிமேல் வருந்த வேண்டாம் ஏனெனில்?
ஆழிவண்ணன்தன் -கடல்போன்ற நிறமுடைய இறைவனது
அடிக்கீழ் -திருவடிகளில்
வீழ்ந்து -விழுந்து (சேவித்து)
சரண் என்று -நீயே தஞ்சமாக வேணும் என்று
இரந்து -வேண்டிக்கொண்டு
ஒருக்கால் -ஒரு தடவை
சொன்னதற்பின் -அடைக்கல வார்த்தை சொன்ன பின்பு
துயர் உண்டோ -வினைப்பயனால் வரும் துன்பம் உண்டாகுமோ உண்டாகாது என்பதாம்.

ஊழி வினைக்குறும்பர் –
பல பிறப்புகளிலும் சேர்க்கப்பட்ட வினைகளாகிற கயவர்.
ஊழ் என்பது பழமையை.
ஊழ்வினை என்பது பழைய வினை என்றவாறு. இதனால் முன் செய்த வினை கூறப்படுகிறது.

வினைகளைக் குறும்பர் என்று சொல்வது அவற்றின் கொடுமைத் தன்மைப் பற்றி
“அழுக்காறு என ஒரு பாவி” என்று சொல்வது போலக் கூறப்பட்டது.
“கயமை என்னும் பண்புச் சொல்’. பொருள் கொடுமை பற்றிக் கயவர் என்று உயர்திணையில் கூறப்பட்டது.
கயவர்கள் தங்கள் மறத்தால் (வலிமையால்) நாட்டைத் தன் வயமாக்கித் தாம் நினைத்தபடி நடத்துவது போல
வினைகளும் ஆன்மாவைத் தம் வழியே இழுத்துத் தான் விரும்பிய படி நடத்துவதால் குறும்பர் என்று கூறப்பட்டது.
‘கங்குல் குறும்பர்’ என்ற இடத்தில் இரவைக் குறும்பராகவும்,
ஐம்புலன்களை ‘ஐவர்’ என்றும் கூறும் வழக்குப் பற்றி இங்கு வினையைக் குறும்பர் என்று கூறப்பட்டது.

ஓட்டருவர் என்று அஞ்சி –
ஓடி வருவார் என்று பயப்பட்டு
குறும்பராகையாலே ஓடிவருவார் என்று சொல்லப்பட்டது.
கீழ்க் கூறிய வினைகள் விரைவாக வந்து துன்புறுத்ததலுக்கு பயப்பட்டு.

ஏழை மனமே –
அறிவிலியான நெஞ்சே!
அதாவது
அடைக்கலம் புகுந்தவரை ‘அஞ்சேல்’ என்ற கைவிளித்துக் காக்கும் இயல்புடைய இறைவன் பெருமையும்
(வீடு பேற்றுக்குச் சொல்லப்பட்ட பல நெறிகளிலும்) அடைக்கல நெறியின் சிறப்பும்,
அடைக்கலம் அடைந்தவன் பெறும் பயனும் அறிவதற்குத் தக்க ஞானமில்லாத நெஞ்சே! என்று
நெஞ்சின் அறியாமையைக் கூறியவாறு.
இத்தகைய நெஞ்சுக்கு மேல் தொடரால் ஆறுதல் கூறப்படுகிறது.

இனித்தளரேல் –
சரணாகதி செய்வதற்கு முன்பு தளர்ச்சி அடைந்தாலும் அது செய்த பிறகு தளர வேண்டாம்.
சரணாகதியின் பெருமை அத்தகையது என்பது இதனால் உள்ளத்தை நோக்கி
கவலைப்படாதே’ என்று ஆறுதல் கூறுகிறார் ஆசிரியர்.
இது கண்ணன் தேர்த்தட்டில் இருந்து கொண்டு அர்ஜுனனைப் பார்த்து ‘கவலைப்படாதே. அஞ்சற்க’ என்று சொன்னது போன்றது.

இனி என்று சொன்னதின் கருத்து
மேல் வெளிப்படையாகக் கூறப்படுகிறது.

ஆழி வண்ணன் –
கடல் போன்ற ஆழமான இயல்புடையவன்
அல்லது
கடல் போன்று துயர் தீர்க்கும் நீல நிற உருவை உடையவன் என்று பொருள்.

தன்னடிக்கீழ் வீழ்ந்து –
அவன் திருவடிகளின் கீழ் விழுந்து “ஆழி வண்ணன் நின்னடியினை அடைந்தேன்” என்று
திருமங்கை ஆழ்வார் கூறியது போல விழுந்து

சரண் என்று இரந்து –
நீயே எனக்குப் புகலாயிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஒருக்கால் சொன்னதற்பின் இவ்வாறு ஒரு தரம் வேண்டிக் கொண்ட பிறகு.
அதாவது
இறைவன் அடிகீழ் வீழ்ந்து வேண்டுதலுக்குப் பிரபத்தி அல்லது சரணாகதி என்று பெயர்.
இது ஒரு தடவையே செய்ய வேண்டியது. ஒரு தடவைக்கு மேல் செய்யத் தேவையில்லை.
அதனால் ஒருக்கால் சொன்னதற்பின் என்று கூறப்பட்டது.

உண்டோ –
இவ்வாறு சரணாகதி செய்த பிறகு முன்வினைகள் காரணமாக வருகின்ற – துன்பங்கள் உண்டாகுமோ? உண்டாகாது.
இறைவன் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த போதே முன் வினைகளும் வரு வினைகளும் எல்லாம் அழிந்து விடும்
என்று சாஸ்திரம் கூறுகின்ற வார்த்தைகளை நினைத்து
‘துயர் உண்டோ’ (போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்) என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இறைவன் திருவடிகளில் முறைப்படி அடைக்கலம் புகுந்தவனுக்கு
அனைத்து வினைகளும் அழிந்து விடுகின்றன என்பதும்.
அவற்றால் வரும் துன்பங்களும் வரமாட்டா என்பதும் இதனால் சொல்லப்பட்டன.

———–

ஊழ்வினை பற்றி சாஸ்திரம் கூறுகையில் முன்னை வினைகள், வரும் வினைகள், எடுத்த வினைகள் என்றும்
மூன்று வகையாகக் கூறுகின்றன. அவற்றுள் முன்னைய வினைப்பற்றி சென்ற பாடலில் கூறினார்.

எதிர் வருகின்ற வினைகளை நினைத்துத் தளர்கின்ற மனதை நோக்கி தேற்றுகிறது போன்று கூறுகிற பாடல் இது.
தன்னை அடைக்கலம் புகுந்த பக்தனிடம், அவனறியாமல் செய்யும் குற்றங்களில் இறைவன் கண் வைக்க மாட்டான் என்கிறது.
அதாவது
பார்த்தும் பாராமல் இருப்பான் என்று கருத்து.
(இது) அனைவரும் அறியக் கூறப்பட்டது.

வண்டு படி துளப மார்பன் இடைச் செய்த பிழை
உண்டு பல வென்று உளம் தளரேல் -தொண்டர் செய்யும்
பல்லாயிரம் பிழைகள் பார்த்து இருந்தும் காணும் கண்
இல்லாதான் காண் இறை –24-

பதவுரை:

வண்டுபடி -தேனைப் பருகுவதற்காக வண்டுகள் வந்து மொய்க்கின்ற
துளப மார்பனிடை -திருத்துழாயாலே அழகு செய்யப்பட்ட திருமார்பை உடைய பகவானிடத்தில்
செய்த பிழை -இழைத்த குற்றங்கள்
பல உண்டு என்று -அனேகங்கள் இருக்கின்றன என்று
உளம் -ஏ மனமே
தளரேல் -வருந்தாதே
இறை -(அடைக்கலம் புகுந்தாரை அஞ்சேல் என்று அருளும்) நம் தலைவர்
தொண்டர் செய்யும் -தன்னுடைய பக்தர்கள் செய்கின்ற
பல்லாயிரம் பிழைகள் -அனேகமாயிரம் குற்றங்களை
பார்த்திருந்தும் -தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தும்
காணும் -பக்தர்களது பிழைகளைப் பார்க்கும் விஷயத்தில்
கண் இல்லாதவன் -கண் பார்த்தும் பாராதவனாகவே இருக்கிறான்

வண்டு படி துளப மார்பனிடைச் செய்த பிழை –
தேன் பருகுவதற்காக வண்டுகள் படிந்துள்ள திருத்துழாய் மாலையை மார்பில் அணிந்திருக்கும் இறைவனிடம்
செய்த குற்றங்கள் என்று பொருள்.

இப்பொழுது மார்பின் அழகை அடைமொழி கொடுத்துச் சொன்னதின் கருத்து
தன் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த பக்தர்களைத் தன் அழகின் இன்பத்தை நுகர்விப்பதற்காக
எப்பொழுதும் தன்னை அழகு படக் காட்டிக் கொண்டிருப்பவன்
புகுந்த பிறகு குற்றம் எதையும் செய்யமாட்டார்கள்.
அவர்களையும் அறியாமல் ஏதேனும் குற்றம் செய்ய நேர்ந்துவிட்டால் அத்தகைய குற்றங்களைப் பாராமலேயே இருந்து விடுவான்.

இக்கருத்தை உணர்த்துவதற்காகவே
திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டு அவ்வழகைக் காட்டிக் கொண்டிருக்கிறான்
என்று குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

உண்டு பல வென்று –
சரணாகதி பண்ணி யிருந்தாலும் ஐம்பொறிகள் அடங்கிய உடலோடு இருக்கையில்
அவ் வுடல் தீய காரியங்களைச் செய்வதற்கு ஏதுவாகயிருக்கும்.
“உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்” என்ற திருக்குறளில்
ஐம்பொறிகளையும் யானையாகவும்
மனதை அவற்றை அடங்கும் அங்குசமாகவும் கூறியிருப்பதால்
ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்வது மிகவும் அரிது என்று தோன்றுகிறது.
மேலும் “ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்” என்றும்
‘உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி’ என்னும் சொல்லப்பட்ட ஆழ்வார்கள் பாடலாலும் உணரலாம்.

ஆக
அடக்கரும் புலன்கள் ஐந்து அடக்கி, வாழ்வது அரிதலால்
குற்றங்கள் பலவும் புகுகின்ற குற்றங்களை நினைத்து உள்ளம் தளர்கின்ற பொழுது.

உளம் தளரேல் –
அவ்வுள்ளத்தை நோக்கி ‘ஏ நெஞ்சே தளர வேண்டாம்’ என்று தேற்றுவதாயிருக்கிறது.
உளம் – உள்ளம். இங்கு மகர ஈறு விளி வேற்றுமையில் வந்தது. ‘உள்ளமே’ என்றவாறு.
தளராமல் இருப்பதற்கான காரணம் கூறப்படுகிறது மேல் தொடரால்.

தொண்டர் செய்யும் –
தன்னுடைய பக்தர்கள் செய்யும் தொண்டர் என்றதற்கு (சபலர்) உழல்பவர் என்று பொருள் கொண்டு
தன்னிடம் உழல்பவரான பக்தர்கள் என்று பொருள் காட்டப்பட்டுள்ளது.
அல்லது
தனக்கு அடிமைப்பட்டவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஆக,
தனக்கு அடிமைப்பட்டவரான தன்னுடைய பக்தர்கள் செய்யும்’ என்று இதற்குப் பொருளாகிறது.

பல்லாயிரம் பிழைகள் –
முக்குண வயப்பட்ட உடல் காரணமாக மதி மயங்கி மனம், மொழி, மெய் என்பவனற்றால்,
தன்னை அறியாமல் நாள் தோறும் செய்யும் பாபங்கள் அளவு கடந்திருக்கின்றனவாதலால்
“அநேகமாயிரம் பிழைகள்” என்று கூறப்படுகிறது.
பிழை – குற்றம் (பாவம்)

ஒரு ஜீவன் அரைக்கணத்தில் செய்யும் பாப பலன்களை பல்லாயிரம் நான்முகக் கடவுள்கள் ஆட்சி செய்யும் காலம்
துய்த்தாலும் கழியாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
அத்தகைய குற்றங்களாவன:-

சாஸ்திரம் விலக்கியவற்றை செய்தல்,
அதாவது
பிறரைத் துன்புறுத்துதல், பிறர் புகழ்பாடல், பிறர் மனையாளை விரும்புதல், பிறர் பொருள் வவ்வல்,
பொய் கூறல், உண்ணக் கூடாதனவற்றை உண்ணுதல் முதலியன ஆகும்.

சாஸ்திரம் விதித்தனவற்றைச் செய்யாமை என்பது பகவானிடம் பிழை செய்தல்.
அதாவது
உயர்ந்த தெய்வத்தை அற்பமான தேவர்களோடு ஒப்பிடுகை. அவனுடைய அவதாரங்களில் குற்றம் சாடுகை,
அர்ச்சா உருவத்தை எடை போட்டுச் சோதித்து ஆராய்ச்சி செய்தல், பூஜை குறைபாடுகள்,
பூஜைக்குரிய பொருள்களை மறைவாகவோ வெளிப்படையாகவோ களவு செய்தல்,
தான் நேரில் களவு செய்யாமல் போனாலும், களவு செய்பவருக்கு உடந்தையாதல்,
அத்தகைய களவுப் பொருட்களை இரந்தோ உரிமையாலோ பெறுதல் முதலான பாபங்கள் தெய்வக் குற்றங்கள் எனப்படும்.

பொருள் இன்பம் முதலியவைகளுக்காக அடியார்களிடம் பகை கொள்ளுதல்
இவ்வாறான பாவங்களும் ‘பிழைபல’ என்றதில் அடங்கும்.

இறை பார்த்திருந்தும் –
எல்லாப் பொருள்களுக்கும் உள்ளிருந்தும் அவற்றின் செயல்களை எப்பொழுதும் கண்டு கொண்டிருப்பவன் இறைவன்.
அத்தகையவன் தொண்டர்கள் செய்யும் பிழைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாலும்
காணும் கண் இல்லாதவன் போல அவர்களது குற்றங்களைப் பார்த்தும் பார்க்காதது போல் இருப்பான் என்பதாம்.
இங்கு ‘கண்’ என்றது ஞானத்தை.

கண் இல்லாதவன் – என்பதால் ஞானமில்லாதவன் என்று பொருளாகும்.
இதனால் தன் அடியார் செய்யும் குற்றங்களை அறியாதவனாயிருப்பான் என்று பொருளாயிற்று.

இறை என்பதற்குச் சிறிது என்று பொருள் கொண்டு
அடியார்கள் செய்யும் பிழையைச் சிறிதளவு கூட அறிய மாட்டான் என்று கூறலாம்.
இக் கருத்து விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் அறியாதவன் என்ற பொருளில்
“அவிஜ்ஞாதா” என்று கூறப்படுவதைக் காணலாம்.

ஆக,
இறைவன் அடைக்கலம் புகுந்த பிறகு பாபங்களைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை.
“இறைவன் தொண்டர்கள் செய்யும் பிழைகள் அறியாமல் இருந்து விடுவான்”.
இக் கருத்துக்கு நூல்கள் கூறுவதே சான்றாகும் என்பதாம்.

—————-

“அடைக்கலம் புகுந்தார் அறியாமல் செய்யும் பிழைகள் அறிய மாட்டான்” என்று
மனதுக்கு ஆறுதல் கூறப்பட்டது கீழ்ப்பாடலில்.
பழைய வினைகளில் ஏதேனும் ஒன்றை எவரேனும் நிரூபித்துக் காட்டினாலும் அதனை இன்பமாகக் கொள்வானேயன்றி
அது குறித்து அடியார்களை இகழ மாட்டான்.
காரணம் அவனுக்கு வத்சலன் என்று பெயர் உள்ளதால் குற்றத்தையும் குணமாகக் கொள்வதே அக்குணமாம்.
அக்குணத்திற்குத் தக்கபடி அடியார்களின் பழைய குற்றங்களையும் குணமாகக் கொள்வதனால்
பழவினகளைப் பற்றியும் கவலை வேண்டாம் என்று உதாரணத்துடன் எடுத்துரைக்கிறது இப்பாடல்.

அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா –25-

பதவுரை:

அற்றம் உரைக்கில்–முடிவாகச் சொல்லில்
அம்புயை கோன் -தாமரை மணாளன்
அடைந்தவர்பால் -தன்னிடம் அடைக்கலம் அடைந்தவரது
குற்றம் -பாபங்களை
உணர்ந்து–அறிந்து (கண்டு கொண்டு)
இகழும் கொள்கையனோ –அவை காரணமாக வெறுக்கும் இயல்புடையவனோ வெறுக்கமாட்டான்
எற்றே –என்ன வியப்பு
ஆ –பசுவானது
தன் கன்றின் –தன் கன்றினுடைய
உடம்பின் –உடம்பிலுள்ள
வழுவன்றோ –கருப்பப்பையின் அழுக்கை
அதனை ஈன்று உகந்து –கன்றை ஈன்று மகிழ்ந்த
அன்று –அப்பொழுது
காதலிப்பது–ஆசையுடன் நாவால் சுவைப்பது

அற்றம் உரைக்கில் –
அற்றம் – முடிவு – முடிவாகச் சொல்லில்.
அதாவது
முடிவான பொருள் இது என்று சொன்னால் (அது இதுவேயாகும்).

அடைந்தவர் பால் –
தன்னை அடைக்கலமாக அடைந்த தொண்டர்கள் இடத்தில்,

அம்புயை கோன் –
திருவின் நாயகன் இலக்குவனுக்கு அண்ணன் என்று இராம பிரானைக் கூறுவது போல,
பால் – ஏழம் வேற்றுமை இடப்பொருள்.

இங்கு ‘அம்புயை கோன்’ என்று
பிராட்டியை முன்னிட்டு இறைவனடியாரை ஏற்றுக் கொள்பவன் என்ற குறிப்புப் புலனாகிறது.
இவ்வாறு பிராட்டிக்காக ஏற்றுக் கொண்டால் பின்பு
என்றைக்கும் அவ்வடியாரிடம் குற்றங்களைக் காணாதவனாகவே இருப்பான் என்று பொருள்.

இவ்வாறு தன் சிபாரிசு பண்ணின அடியவர்களை இறைவன் ஏற்றுக் கொண்டதன் உறுதிப்பாட்டை அறிவதற்காக
பிராட்டி தானே தன் அடியார்களின் குற்றங்களைக் கூறினாலும் இறைவன்
‘என் அடியார் அது செய்யார். செய்தாரேல் நன்று செய்தார்’ என்று கூறுவான்.
இதனால் பிராட்டி சிபாரிசுக்காக அடியரை இறைவன் ஏற்றுக் கொண்டது உறுதியாயிற்று.
பிராட்டியே தன் அடியாரது குற்றத்தைச் சொன்னாலும் அதை ஏற்க மறுத்து
‘என் அடியார்கள் குற்றங்களே செய்ய மாட்டார்கள்’ அப்படிச் செய்ததாகச் சொன்னாலும் அதை நான் குற்றமாக ஏற்க மாட்டேன்.
அதை நல்லாதாகவே நான் ஏற்றுக் கொள்வேன் என்று பகவானுக்கும் பிராட்டிக்கும் நடக்கும் உரையாடலைக் கொண்டு
இவ் வுண்மையை அறியலாம். பெரியாழ்வார் பாடலில் இக்கருத்து இங்கு ஒப்பு நோக்கற்குரியது (தன்னடியார் திறத்தகத்து).

குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ –
அடியவரின் குற்றங்களைக் குறித்து அது காரணமாக அவர்களை வெறுக்கும் இயல்பை உடையவனோ
அத்தகையவன் இல்லை என்பதாம்.
கொள்கை – இயல்பு (சுபாவம்) என்பதாம்.
பிராட்டி சிபாரிசு பண்ண அதனால் அத் தொண்டரை ஏற்றுக் கொள்பவன் என்பது கருத்து.

பகவான் அடியாரின் குற்றங்களைப் பற்றி அறியவே மாட்டான்.
ஒருகால் குற்றத்தை பிராட்டியே உணர்த்தினாலும் அடியாரது குற்றத்தை இன்பமாக ஏற்பானேயொழிய
அதைக் குறியிட்டு அவர்களை ஒருபோதும் வெறுக்க மாட்டான். இதுவே அவனுடைய இயல்பு என்பதாம்.
இவ்வாறான இயல்புக்கே வாத்சல்ய குணம் என்று பெயர்.
இக்குணத்தைக் குறித்து ‘வாத்சலன்’ என்று இறைவன் சொல்லப்படலானான்.
அடியாரது குற்றத்தையும் குணமாகக் கொள்பவன் என்று இதற்குப் பொருள்.
‘வத்ஸலம்’ என்றால் அப்பொழுது ஈன்ற கன்று அதனிடத்தில் தாய்ப் பசுவுக்குண்டான அன்பு வாத்ஸல்யம்,
அதையுடைய வத்ஸலன். குற்றத்தையும் குணமாகக் கொள்ளும் இயல்பு எங்கேனும் கண்டதுண்டோ என்று வினவினால்
அதற்கு உதாரணத்துடன் பதில் கூறப்படுகிறது மேல் தொடரால்.

எற்றே தன் கன்றினுடம்பின் வழுவன்றோ காதலிப்பது அன்று அதனையீன்று உகந்த ஆ:-
எற்றே – என்னே! வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்.
இறைவனுடைய வாத்சல்ய குணத்தின் பொருளை அறியாதாரன்றோ! ‘குற்றம் கண்டு இகழ்வான்’ என்று நினைப்பார்.
இப்படியும் நினைப்பார் உண்டோ என்று வருந்தி ஐயோ! (எற்றே) என்று ஆசிரியர் இரங்குகிறார்.
இதற்கு ஒரு உதாரணமும் மேல் தொடரால் காட்டப்படுகிறது.

(சுவடுபட்ட தரையில்) கால் மிதிபட்ட தரையில் புல் கவ்வாத பசு தன் கர்ப்ப பையிலிருந்து பூமியில் விழுந்த
தன் கன்றினுடைய உடம்பின் வழுவழுப்பை அல்லவா சுவைத்து பூசிக்கிறது.
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்’ என்பது போல,
அப்பொழுது அதைப் பெற்ற அன்பினால் அதனிடம் நேசத்தைக் காட்டுகிறதல்லவா அப்பசு.
இது போன்று தன்னிடம் அடைக்கலம் புகுந்தவனது குற்றத்தையும் குணமாகக் கொண்டு அவனை ஏற்றுக் கொள்வான்.
பகவான் ஒரு போதும் வெறுக்க மாட்டான் என்று கருத்து உணர வேண்டும்.

இறைவனுடைய ‘வாத்ஸல்யம்’ என்னும் குணத்தை விளக்குகையில், இவ்வுதாரணத்தையே உரையாசிரியர்கள்
அனைவரும் எடுத்துரைக்கிறார்கள். வத்ஸம் – கன்று. கன்றினிடத்தில் தாய் பசு கொண்டுள்ள நேசம் (அன்பு) வாத்ஸல்யம் எனப்படும்.
அதை உடையவர் வத்ஸலர். இத்தகைய அன்பு இறைவன் ஒருவனிடமே காணத் தக்கதன்றி உலகில் காண இயலாது.
ஆகவே, இப்பண்பு தெய்வீகமானது என்று உணரலாகும்.
இப் பண்பின் சிறப்பை நோக்கி ‘எற்றே’ என்று வியந்து கூறப்பட்டதாம்.

——–

சரணாகதி என்பது இறைவனாலே சொல்லப்பட்ட நெறியாகும்.
திருவள்ளுவர், ‘பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி’ என்று கூறினார்.
இங்கு ‘ஐந்தவித்தானாகிற இறைவனால் சொல்லப்பட்ட உண்மையான ஒழுக்க நெறி’ என்று பொருள் கூறப்பட்டது.
இதையே ‘பற்றற்றான் பற்றினை என்ற திருக்குறளிலும் இறைவன் ஓதிய வீட்டு நெறி’ என்று கூறப்பட்டது.
அதுவே இங்கு சரணாகதி (அடைக்கலம் புகுதல்) என்று கூறப்படுகிறது.
இறைவனுடைய திருவடிகளில் அடைக்கலம் புகுவதான சரணாகதி என்பது குருவின் துணை கொண்டு செய்ய வேண்டிய ஒன்றாகும்.
சரணாகதியின் ஆழ் பொருள்களை எல்லாம் குருவினிடமிருந்து அறிந்து கொண்ட பின் அதில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள்,
‘வீட்டு உலகத்தில் சென்று அங்கு இறைத் தொண்டிலே ஊன்றி இருப்பார்கள்’ என்ற கருத்து இப் பாடலில் சொல்லப் படுகிறது.

தப்பில் குருவருளால் தாமரையாள் நாயகன் தன்
ஒப்பில் அடிகள் நமக்கு உள்ளது -வைப்பு என்று
தேறி இருப்பார்கள் தேசு பொலி வைகுந்தத்து
ஏறி இருப்பார் பணிகட்கு ஏய்ந்து–26-

பதவுரை:-

தப்பு இல்–அறிவு ஒழுக்கங்களில் ஒரு குறைதலுமில்லாத
குரு -குருவினுடைய
அருளால்–நல்லருளால்
தாமரையாள் நாயகன் –தன் திருவின் மணாளனான இறைவனுடைய
ஒப்பில் –உவமை யில்லாத
அடிகள் –திருவடிகள்
நமக்கு –அறிவு ஆற்றலில்லாத நமக்கு
உள்ளத்து இதயத்தில் இருக்கும்
‘வைப்பு’ என்று சேமநிதி என்று
தேறியிருப்பார்கள்–நம்பியிருக்குமவர்கள்
தேசுபொலி–ஒளிமிக்குயிருக்கிற
வைகுந்தத்து–வீட்டுலகத்தில்
ஏறி–அதற்கான வழியிலே சென்றடைந்து
பணிகட்கு–அங்கு செய்யும் இறைத் தொண்டுகளுக்கு
ஏய்ந்திருப்பார் –பொருத்தமுடைய அடியராயிருப்பார்

தப்பில் குருவருளால் –
தவறு இழைக்காத குருவினுடைய அருளாலே.
அதாவது,
கற்க – அதற்குத் தக நிற்க’ என்று கூறியவாறு
அறிவு ஒழுக்கங்களினுடைய அருளால் என்றவாறு.

தாமரையாள் நாயகன் தன் –
திருவின் மணாளனுடைய என்று பொருள்.
இதனால், “த்வய மந்திரத்தின்” முற்கூற்றில் சொல்லப்பட்ட ஸ்ரீமன் என்ற சொல்லிலும்
நாராயண என்ற சொல்லிலும் கூறப்பட்ட பொருள்கள் இங்கு உணர்த்தப்படுகின்றன.

தாமரையாள் நாயகன் என்ற தொடரில் பிராட்டியோடு சேர்ந்துள்ள பிரியா உடன் உறைதலைக் குறிக்கிறது.
இது ‘ஸ்ரீமன்’ என்றதன் பொருளும்
‘நாயகன் தன்’ என்கிறதில் நாராயண பதத்தின் பொருளும் அடங்கி உள்ளன.
அவை அடியவரை ஆதரிக்கும் பண்புகளாம்.
அவையாவன.
அடைக்கலம் புகவருகின்ற அடியார்களுக்கு உதவியாக இருப்பனவான
வாத்சல்யம், ஸ்வாமித்வம், சௌசீல்யம், சௌலப்யம் என்று சொல்லப்படும் நான்கு குணங்களும்,
அடைக்கலம் புகுந்த பிறகு அவர்கள் காரியம் செய்வதற்கு ஏற்றதான
ஞானமும், சக்தி (அறிவும், ஆற்றலும்) ஆகிய இரண்டு குணங்களும் மற்றும் ப்ராப்தி, பூர்த்தி என்பனவும் அடங்கும்.
நாயகன் தன் என்ற இதில்
‘ நாராயண’ என்ற சொல்லில் கூறப்படும் பொருள்கள் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளன.

ஒப்பிலடிகள் –
ஒப்பற்ற திருவடிகள்.
இதனால்
த்வய மந்திரத்தில் சொல்லப்பட்ட ‘சரணௌ’ என்ற சொல்லின் பொருள் சொல்லப்படுகிறது.
திருவடிகளுக்கு ஒப்பற்ற தன்மையாவது அடியவர்க்கு அருள் செய்யும் போது
எந்த உதவியையும் அவரிடம் எதிர்பாராமல் செய்யும் தனி ஆற்றலைக் குறிக்கிறது.

நமக்கு உள்ளத்து வைப்பென்று –
அடியவர்களான நமக்கு. பகவானுடைய அருள் பெறுவதற்கு எந்த ஆன்மாவுக்கும் வேறு புகலுமில்லை.
வேறு வழியுமில்லை என்பது சாஸ்திர உண்மை.
உண்மை உணர்வுடைய நமக்கு. இதயத்தில் இருக்கும் திருவடிகளே வைப்பு நிதி (சேமநிதி) ஆகும் என்று பொருள்.
இதனால் த்வய மந்திரத்திலுள்ள ‘சரணௌ’ என்ற சொல்லிலும்,
‘ப்ரபத்தி’ யே என்ற சொல்லிலும் சொல்லப்பட்ட பொருள்கள் கூறப்படுகின்றன. எவ்வாறு எனில் ?
ஒருவரிடம் வைப்பு நிதி இருந்தால் அதைக்கொண்டு எல்லாக் காரியங்களையும் சாதித்துக் கொள்ளலாம்.

அதுபோல இறைவனது திருவடிகளை, “அதுவே நமக்கு தஞ்சம்” என்று பற்றிக்கொண்டு
இதயத்தில் தியானித்தால் எதையும் சாதிக்கலாம்.
ஆகவே திருவடிகளை சேமநிதியாகக் கூறுவதில் எவ்விதக் குறையுமில்லை.
இறைவன் திருவடிகளைப் பற்றுவது மனதினால் ஆகையால் இதற்கு மானச சுவீகாரம் என்று பெயர்.
அதாவது
மனதினால் பற்றுதல் என்று பொருள்.
இவ்வாறு மனதில் எண்ணி

தேறியிருப்பார்கள் –
உறுதியாய் நம்பி இருப்பவர்கள் என்றவாறு.
திருவடியே தஞ்சம் என்று அத்திருவடியை உள்ளத்தில் வைத்து தியானத்தாலும் நம்பிக்கை வருவது அரிதாகும்.
ஆகவே, “அத்திருவடிகளையே தஞ்சமாக நம்பியிருப்பவர்கள் என்று பெயர்.
சரணாகதி பண்ணினவனுக்கு இறுதிவரை இந்த நம்பிக்கையே கைம்முதலாக இருக்க வேண்டியதொன்று.
நம்பிக்கை குலைந்தால் வீடு பேறு இல்லையாகி விடும்.
நம்பிக்கை குலையாதவர்களைத் ‘தேறியிருப்பார்கள்’ என்று இங்கு சொல்லப்படுகிறது.
அத்தகையவர்களுக்குக் கிடைக்கும் பயன் சொல்லப்படுகிறது மேல்.

தேசு பொலி வைகுந்தத்து ஏறி –
அதாவது
‘அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடு’ என்று
சொல்லப்படுகிற ஒளி மிகுந்த ஸ்ரீவைகுண்டத்தில் போய் என்று இதற்குப் பொருள்.
ஸ்ரீவைகுண்டமாகிற அத்திருநாடு பேரின்பத்தை நுகர்வதற்கும்
இறைவன் உகந்த தொண்டுகள் செய்வதற்கும் ஏற்ற இடமாகும் என்பதாம்.

இருப்பார் பணிகட்கேய்ந்து –
அங்கு போய்ப் பணிகளுக்கு ஏய்ந்திருப்பார். இறைத் தொண்டுகளுக்குத் தகுந்திருப்பார் என்று பொருள்.
‘பணிகள்’ என்றது இறைவனுக்குச் செய்யும் தொண்டுகளாகும்.
அதற்கு ஏய்ந்து இருக்கையாவது தகுதியுடைய அடியார்களாய் இருக்கை.
இருப்பார் என்றது இருப்பார்கள் என்றிவ்வாறு சொற்பொருள் காணலாம்.

இவ்வாறன்றி ‘பணி என்று
ஆதிசேஷனான திருவனந்தாழ்வானுக்குப் பெயராகக் கொண்டு
திருவனந்தாழ்வானுக்கு ஒப்பாய் இருப்பார் என்றும் பொருள் காணலாம்.
அதாவது
திருவனந்தாழ்வான் பரமபதநாதனாக பகவானுக்கு,
‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள் கடலுள்
என்றும் புனையாம் மணி விளக்காம், பூம் பட்டாம், புல்கும் அணையாம் திருமாற்கு அரவு’ என்று
சொல்லியபடி எல்லாத் தொண்டுகளிலும் தேர்ந்து இருக்குமாப் போல
இவர்களும் எல்லாத் தொண்டுகளிலும் செயல்படுபவர்களாய் இருப்பர் என்று பொருள்.

————–

ஆன்ம நலனுக்கு வழி அறியாதவரும் ஆன்ம நலனை உபதேசிக்கும் குருவைச் சேராதவரும்
கண்ணபிரான் சொன்ன கீதைப் பேருரையில் சொன்ன ‘சரணாகதி’ நெறியில் நம்பிக்கையில்லாதவர்களும்
வீடு பேற்றை அடைய மாட்டார்கள்.
பிறவிப் பெருங்கடலாகிற துன்பக்கடலுள் அழுந்தினராய்
பல பிறப்புக்களையும் எடுத்து உழன்று வருவார்கள் என்று கூறுகிறது இப்பாடல்.

நெறி அறியா தாரும் அறிந்தவர் பால் சென்று
செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் -இறை யுரையைத்
தேறாதவரும் திரு மடந்தை கோன் உலகத்
தேறார் இடர் அழுந்துவார் –27-

பதவுரை:-

நெறி -உபாயம்
அறியாதாரும்–அறிந்து கொள்ளாதவரும்
அறிந்தவர்பால் சென்று–வழி அறிந்தவர்களான குருவிடம் சென்று
செறிதல் செய்யா பணிவுடையவராய் –வணங்கித் தொழுது குருவை மகிழ்விக்காத
தீமனத்தர் தாமும் –தீ மனம் உடையவர்களும்
திருமடந்தை கோன் உலகத்து–இலக்குமி நாதனுக்குச் சொந்தமான ஸ்ரீவைகுந்தத்தை
ஏறார்–அடைய மாட்டார்கள்
இடர்–பிறவிப் பெருங்கடலாகிற துன்பத்தில்
அழுந்துவார்–முழுகித் தவிப்பார்கள்

நெறியறியாதாரும் –
“மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” சுழன்று வரும் பிறவிச் சுழற்சியிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாதவரும்.
நெறி – வழி. இது தப்பிவிக்கும் உபாயத்தை காட்டுகிறது.
அது தெரியாதவர்.

அறிந்தவர் பால் சென்று செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் –
பிறவிப் பெருங்கடலைக் கடத்தி விடும் வழி அறிந்த ஆசார்யர்களிடம் சென்று சேராதவர்கள் மேலும்
தங்களுக்கு அவ்வழியை உபதேசிக்க ஏதுவாக
அவர்கள் மனம் இரங்கும் வண்ணம் பணிதல்,
அடி வீழ்தல் வழியைச் சொல்லும்படி வினாவுதல்
மற்றும் அவர்கள் சொல்லும் பணியைச் செய்தல் முதலியன செய்து நெருங்கிப் பழகாமல்,
அப் பெரியோர்களை நம்மைப் போன்ற மனிதர்களாகக் குறைவாக எண்ணி
அவர்களிடம் குற்றங்களைக் கண்டு கொண்டிருக்கும் தீயமனம் உடையவர்களும்.

இறை உரையைத் தேறாதவரும் –
எல்லா உயிர்களையும் உள்ளிருந்து நடத்துபவனும் கீதையாகிற உபநிஷத்தை
ஆசார்யனாய் நின்று உபதேசித்தவனும்
அதாவது
எல்லா ஆன்மாக்களும் வீடு பேற்றை அடைவதற்கு உபயோகமாக அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு
அருளிச் செய்த கீதையின் 18ம் அத்தியாயத்தில் கடைசியாகச் சொல்லப்பட்ட
“சரணாகதி நெறியில்” நம்பிக்கை இல்லாதவர்களும்.

திருமடந்தை கோன் உலகத்து ஏறார் –
திருமால் வைகுந்தம் என்று சொன்னபடி திருமகள் நாயகனுடைய உலகமான ஸ்ரீவைகுண்டத்திற்குச் செல்லமாட்டார்கள்.

இடர் அழுந்துவார் –
பிறவிப் பெருங்கடலில் பிறவியாகிற துன்பத்தில் முழுகித் தவிப்பார்கள் என்பதாம்.

—————–

கீழே சொன்ன “தப்பில் குருவருளால்” என்ற பாடலில் வீட்டுலகத்தை அடைபவர்
ஆசார்யன் காட்டிக் கொடுத்த சரணாகதியின் பொருளை உள்ளத்திலே இருத்தி
அவ்வழியில் வீடு பேறு அடைவர் என்றும்
“நெறி அறியாதார்” என்ற அடுத்த பாடலில் சரணாகதியை குரு முகமாக அறியாதவரும்
கீதையில் சொன்ன கண்ணன் வார்த்தையில் நம்பிக்கை இல்லாதவரும் வீடு பேறு அடையமாட்டார்கள்,
பிறவிப்பிணியில் அழுந்தி துன்புறுவர் என்றும்
இவ்விரண்டு பாடல்களினால் வீடு செல்வாரது நிலையம் வீடு செல்லமாட்டாதார் நிலையம் உரைக்கபட்டன.

இனி இப்பாடலில் வீடு பேறு அடைவார்க்குச் சொல்லப்பட்ட நல்வழியான சரணாகதியின் உண்மைகள் கூறப்படுகின்றன.
“சரணாகதி” என்பது பிராட்டியோடு கூடிய பகவானுடைய திருவடிகளில்
“உன் திருவடிகளே சரணம் எனக்கு தஞ்சம் வேறு புகல் இல்லை” என்று அடி வீழ்ந்து வேண்டுவது.
“ஊழி வினைக்குறும்பர்” என்ற 23 ஆம் பாடலில் சரணாகதி பற்றிச் சொல்லப்பட்டது (அதை இங்கு நினைவு கூர்க).

இவ்வாறு பகவான் திருவடிகளே தஞ்சம் என்று அடைந்த பிறகு இப் பற்றுதல் நம் சேமத்திற்கு
போதுமோ போதாதோ என்று மனதில் சஞ்சலம் பிறந்து உறுதி நிலை ஏற்படாமல்
தன் முயற்சியில் வேறு வேறு புண்ணியங்களையும் செய்வானே யானால் பகவான்
இவன் செய்த சரணாகதியை மதிக்கமாட்டான், கை விட்டு விடுவான்,
நெறி இவனை கை விட்டு விடும் என்கிற சரணாகதியின் சிறப்பு தக்க உதாரணத்துடன் இதில் எடுத்துறைக்கபடுகிறது.

சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை -முரண் அழியக்
கட்டியது வேறோர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் –28-

பதவுரை:

சரணாகதி–பகவான் திருவடிகளில் நம்பிக்கையுடன் செய்யும் அடைக்கலம்
மற்றோர் சாதனத்தை–அடைக்கலத்தில் நம்பிக்கை குறைந்து தன்னால் செய்யப்படும் வேறு வேறு முயற்சிகளை
பற்றில் –தனக்கு பலன் கொடுக்கும் புண்ணியமாகக் கருதினால்
அரணாகாது–முதலில் செய்கிற அடைகலமாகிற சரணாகதி இவனைக்காவாது விட்டு விடும்
அஞ்சனை தன் சேயை –அஞ்சனை தேவியின் மகனான அனுமனை
முரண் அழிய –அவனது பலம் தொலையும்படி
கட்டியது –இந்திரஜித்தாகிற அரக்கனாலே கட்டப்பட்ட பிரம்மாஸ்திரமான ஆயுதம்
வேறோர் கயிறு கொண்டு –பிரம்மாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் வேறு வேறு சணல் கயிறு முதலிய கயிறுகளை (முயற்சிகளைக்) கொண்டு
ஆர்ப்பதன் முன் –கட்டும் பொழுதே
விட்ட படைபோல் –அனுமனை கட்டிலிருந்து விட்ட பிரம்மாஸ்திரம் போல
விடும் –சரணாகதி இவனைக்காவாது கை விட்டு விடும்

பகவானை அடைவதற்கு சாஸ்திரங்கள் பல புண்ணியங்களைச் சொல்லியிருகின்றன.
அவற்றுள் “சரணாகதி” என்ற ஒரே புண்ணியம் தான் பகவானை அடைவதற்கு சரியான புண்ணியமாகும்.
வேறு வேறு புண்ணியங்கள் எல்லாம் ஒருவரால் செய்யப்படும்போது உண்டாகிறது.
செய்யாதபோது அவைகள் இருப்பதில்லை.
சரணாகதி என்ற புண்ணியம் மற்ற புண்ணியங்கள் போல் ஒரு காலத்தில் உண்டாவதோ
ஒரு காலத்தில் இல்லாமல் போவதோ இல்லை. எப்பொழுதும் தயாராக இருந்து கொண்டிருகிறது.
மேலும் பகவனாகிய புண்ணியம் அறிவு ஆற்றல் முதலிய சிறப்புகளைக் கொண்டது.
இத்தன்மை மற்ற புண்ணியங்களுக்கு இல்லை.

அனைத்து புண்ணியங்களின் உருவமாய் இருப்பதால் சாஸ்திரம் ஆகுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது
தன்னையே நம்பித் தன் திருவடிகளைப் பற்றுவார்களுக்கு தானே புண்ணியமாக இருந்து அருள் செய்கிறான் என்று கருத்து.

இத்தகைய பகவானாகிற புண்ணியத்தை நீயே எனக்கு வேறில்லை என்று சொல்லி
அவன் திருவடிகளில் தலை சாய்ப்பதே சரணாகதி என்று சொல்லப்படுகிறது.
இதுவே “அடைக்கலம்” எனப்படும் இதற்க்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியமாகும்.
இந்த நம்பிக்கையை “மகா விசுவாசம்” என்றும் “அத்யாவசாயம்” என்றும் சாஸ்திரம் கூறும்.

மகா விசுவாசமாகிற நம்பிக்கை குறைந்தால் பகவானாகிற புண்ணியம் பலன் அளிக்காது.
மேலும் இதனைச் செய்பவன் “யான்” “எனது” என்னும் செருக்குகளை அறவே விட்டவனாகவும் இருக்க வேண்டும்.
தன்னை வறியவனாகவும் துணை அற்றவனாகவும் உணர வேண்டும்.
இவற்றை உடையவனே சரணகதி செய்து கொள்வதற்கு தகுதி உடையவனாவான்.
இதையே “புகலொன்றில்லா அடியேன்” என்று கூறினார் ஆழ்வார்.
இம்மை வாழ்வில் வேதனைப்பட்டு உடனடியாக இறைவனை அடையவேண்டும் என்ற நோக்குடன்
இறைவன் அடி வீழ்ந்தால் அப்பொழுதே அவனுக்கு வீடு பேறு கிடைக்குமென்றும் கீழே கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு நுல்கள் சரணாகதி பற்றி விளக்கி உள்ளன.

மற்றோர் சாதனத்தைப் பற்றில்:
சரணாகதியின் சிறப்பை அறிந்து இதுவே நமக்கு தஞ்சமென்று நம்பிக்கைக் கொண்டு அடைக்கலம் புகுந்தபின்
இறுதிவரை இக்குறிகோளில் இல்லாமல் “இதுக்குத் துணையாக நாமும் சில செய்வோம்” என்று
தன் முயற்சியால் செய்யப்படும் எதாவது ஒன்றைச் செய்தால் அது அரணாகாது.
இவன் செய்த சரணாகதி இவனுக்கு துணை நில்லாமல் இவனை கை விட்டுப் போய்விடும்.
ஆகவே பகவானிடம் சரணகதி செய்தவன் ஒரே நம்பிக்கையில் இருக்க வேண்டுமேயொழிய
சரணாகதியில் அவநம்பிக்கை கொண்டு வேறு வேறு புண்ணியங்கள் செய்யக் கூடாது.
ஏதாவது செய்தால் சரணாகதி பலிக்காது என்று கருத்து.
இதற்க்கு உதாரணமாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

அஞ்சனை தன் சேயை:
அஞ்சனாதேவியின் புதல்வனான அனுமனை

முரண் அழியக்கட்டியது:
முரண்: பலம்; அது அழியும்படி கட்டின பிரம்மாஸ்திரம்

வேறோர் கயிறு கொண்டார்பதன்முன்:
அதனிடம் அவநம்பிக்கை வைத்து வேறு ஒரு சணல் கயிற்றைக்கொண்டு
கட்டுவதற்குத் தொடங்கும் பொழுதே (ஆர்த்தல் – கட்டுதல்)

விட்ட படைபோல் விடும்:
விட்டுப் போன பிரம்மாஸ்திரம் போல சரணாகதி இவனை விட்டு விடும் என்பதாம்

இராமாயணத்தில் அனுமன் இராம தூதனாக இலங்கை சென்ற போது அசோகவனத்தை முறித்து பாழ் படுத்தினான்.
இராவணன் புதல்வனான இந்திரஜித் அனுமனோடு போர் புரிந்து பிரம்மாச்திரதினால் அவனைக் கட்டினான்.
அனுமன் செய்த வீரச் செயல்களும் அரக்கர்கள் பலர் அவனால் அழிக்கப்பட்டதையும் கண்டு பயந்து,
“இவனைக் கட்டுவதற்கு ப்ரஹ்மாச்த்ரதுக்கு வலி போதுமோ?” என்று
பிரம்மாஸ்திரத்தை குறித்து அவநம்பிக்கை கொண்டான். அதனால், சணல் கயிறுகளைக் கொண்டு வந்து கட்டினான்.
கட்டும் போது பிரம்மாஸ்திரம் அனுமனை விட்டு விட்டது. இது போல பகவானிடம் சரணாகதி பண்ணின பிறகு
சரணாகதியில் அவநம்பிக்கை வைத்து வேறு வேறு புண்ணியங்களையும் முயன்று செய்வானே யானால்
முன்னம் பண்ணிய சரணாகதி பலனை அளிகாது அவனை விட்டு விடும் கை விட்டு விடும் என்பதாகும்.

சரணாகதிக்கு பிரம்மாஸ்திரமும் வேறு புண்ணியங்களுக்கு சணல் கயிறும் இங்கு எடுதுக்காட்டாகும்.

———–

எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்திலும்
அம் மந்திரத்தை உபதேசித்த குருவினிடத்திலும்
மந்திரத்திற்கு பொருளான பகவானிடத்திலும்
ஆக இம்மூன்றினுடையவும் அருளுக்கு எப்பொழுதும் இலக்காயிருப்பவர்கள்
பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடுவர் என்கிறது இப் பாடல்

மந்த்ரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திருமாலும் -நந்தலிலா
தென்று மருள் புரிவர் யாவரவரிடரை
வென்று கடிதடைவர் வீடு –29-

பதவுரை:

மந்திரமும்–திருமந்திரமும்
ஈந்த குருவும்–அம் மந்திரத்தை உபதேசித்த ஆச்சர்யரும்
அம் மந்திரத்தால் –அத் திருமந்திரதால்
சிந்தனை செய்கின்ற–மனனம் செய்கின்ற
திருமாலும்–ஸ்ரீமன் நாராயணனும்
நந்தலிலாது–(இடைவிடாமல்) – கேடில்லாமல்
என்றும் –எப்பொழுதும் (செய்யும்)
அருள் புரிவர்–அருளுக்கு இலக்காவார்
யாவர்–யாவரோ
அவர்–அவர்களே
இடரை வென்று–பிறவித் துன்பத்தை வெற்றி கண்டு
கடிது–விரைவில்
வீடு அடைவர்–வீடு பேற்றை அடைவார்கள்

மந்திரமும்:
தன்னை உருச்சொல்பவரைக் காப்பாற்றுவது மந்திரமாகும்.
உருவாவது திரும்பத் திரும்பச் சொல்லுவது.
ஆர்வத்துடன் சொல்லுவதும் ஆகும்.
இங்கு “மந்திரம்” என்று சொன்னது எட்டுழுத்தைக் கொண்ட திருமந்திரமாகும்.
“எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வானம் அளவே” என்பர் திருமழிசைப்பிரான்.

ஈந்த குருவும்:
அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனும்

அம் மந்திரத்தால் சிந்தனை செய்கின்ற திருமாலும்:
அம் மந்திரத்திற்குப் பொருளாய் மனனம் செய்யப்படுகின்ற ஸ்ரீமன் நாராயணன் ஆகிய மூவரும்.

நந்தலிலாது:
நந்துதல் – கேடு
அது இல்லை என்றது. தடையில்லாமல் என்று பொருள்.

என்றும் அருள் புரிவர் யாவர்:
எல்லாக் காலத்திலும் அருள் செய்யும் போது அதற்கு இலக்காய் இருப்பார் யாவர் சிலரோ

அவர் இடரை வென்று கடிதடைவர் வீடு:
அம்மூவரது அருளுக்கும் இலக்காயிருப்பவர் பிறவித்துன்பத்தை வென்று
விரைவில் அந்தமில் பேரின்பத்து அழிவில் விட்டுலகத்தை அடைவார்கள்.

இக்கருத்தை முமூக்ஷுபடியில்
“மந்திரத்திலும் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கணக்க உண்டானால் கார்ய கரமாவது” என்று கூறியதை ஒப்பு நோக்குக.

—————–

தனக்குத் தேவையான அதாவது இம்மை மறுமைகளுக்கான பொருட்கள் எல்லாம்
‘திருவட்டாட்சர மந்திரத்தை (எட்டெழுத்து மந்திரத்தை) உபதேசித்த ஆசார்யனே என்று
குறிக்கோள் இல்லாதவர்களோடு கொண்டுள்ள உறவை அறவே விடுகை
சாஸ்திரக் கட்டளையாகும் என்கிறது இப்பாடல்.

மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –30-

பதவுரை :

மாடும்–பாலைக்கொடுக்கும் பசுக்களும்
மனையும்–இன்ப நுகர்ச்சிக்கு இடமான வீடும்
கிளையும்–உறவினர்களும்
மறை முனிவர் தேடும்–வேதம் பயின்ற முனிவர்கள் நாடுகின்ற
உயர் வீடும்–மேலான வீட்டுலகமும்
சென்னெறியும்–அவ் வீட்டுலகத்தை அடைவிக்கும் அர்ச்சிராதி வழியும் எல்லாம்
பீடுடைய –பெருமையுடைய
எட்டெழுத்தும்–பெரிய திருமந்திரத்தை (அஷ்டாக்ஷர) மகா மந்திரத்தை
தந்தவனே–உபதேசித்த ஆசார்யனே
என்று இராதார்–என்று குறிக்கோள் இலாதாரின்
உறவை –தொடர்பை
விட்டிடுகை–சேராதபடி விட்டிடுகை
விதி–சாஸ்திரக் கட்டளையாகும்
கண்டீர் –காணுங்கோள் (நன்றாக அறிவீர்களாக)

மாடும்:
தனக்குச் சுவையான பால், தயிர் முதலிய சத்துணவுகளை கொடுப்பவை என்றதால்
பேணப்படும் கறவைகளும் (செல்வமும்)

மனையும்:
இன்ப நுகர்ச்சிக்கு (ஏதுவான) அடிப்படையான வீடும் கிளையும்:
கூடியிருந்து குளிர்தலே ஆனந்தம் என்றிருக்கும் உறவினர்களும்

இங்குச் சொன்ன இவை
மற்றும் இம்மை சுகத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களுக்கும் குறிப்பாகும்.

மறை முனிவர்:
வேத விற்பன்னர்களான பெரியோர்கள்
அதாவது
எப்பொழுதும் பகவானை மனதிலே எண்ணிக் கொண்டிருப்பவர்கள்

தேடும் உயர் வீடும்:
இதுவே நமக்கு அடையத் தகுந்தது என்று விரும்பி நாடி நிற்கும்.
இங்கு உயர் வீடு என்றதால் தாழ்வான வீடு ஒன்றுண்டு என்று குறிக்கப்படுகிறது.
அது கைவல்யம் எனப்படும்.
அது தன்னை தானே அனுபவித்தலாகும். அது தாழ்வான மோக்ஷம் என்று அறிவாளிகள் கூறுவர்.
அதனால் அதை கழித்து உயர்வீடி என்று “வைகுந்த வான் போகம் ” இங்கு கூறப்படுகிறது.
சிறப்பாக கூறப்படும் வைகுந்தத்தை அடைதலாகிற மோக்ஷமும் சென்நெறியும்
அந்த மோட்ஷத்தை அடைவதற்கு வழியாக சொல்லப்படும் அர்ச்சிராதி வழிகளும் அல்லது
மோட்ஷத்தை அடைவதற்கு காரணமான சாதனங்களும் புண்ணியங்களும் என்று சொல்லலாம்.

பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதார் உறவை:
கீழ்ச் சொன்னவை எல்லாம் பிறவித் துன்பத்தை வளர்ப்பனவாய் அற்பங்களுமாய் இருப்பன.என்றும்
பெரிய திருமந்திரம் மற்ற மந்திரங்கள் போலில்லாமல் பிறவிக் கடலைத் தண்டிவிப்பதற்கு உரியதான
ஏற்றத்தை உடையதாய் இருப்பதால் அம்மந்திரத்தை உபதேசித்தருளின ஆசார்யனே எல்லாம்
என்ற குறிக்கோள் இல்லாதவர்களோடு ஏற்படும் உறவுகளை

விட்டிடுகை:
அறவே விட வேண்டியது

விதி:
இது சாஸ்திரக் கட்டளையாகும்.

கண்டீர்:
காண்பீர்களாக., அறிவீர்களாக.

இதனால் திருமந்திரோபதேசம் செய்த ஆச்சர்ய சம்பந்தம் இல்லாதவரோடு உறவு கொள்ளலாகாது.
அவர்களை அவசியம் விட்டு விட வேண்டும் என்று கூறப்படுகிறது.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்–பாசுரங்கள்– 11-20—ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

August 29, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

———

கீழே சொன்ன இரண்டு பாடல்களில்,
“ஆசிலருளால்” என்ற பாடலில் வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்தில் திருமகள் மணாளனான இறைவன்
விருப்பத்துடன் இருக்கும் இருப்பையும்,
“நாளும் உலகை” என்ற பாடலில் இறைவனைப் பற்றிக் கொண்டே வேறு ஒன்றை எண்ணுவாரது உள்ளத்தில்
இறைவன் துன்பத்துடன் இருக்கும் இருப்பையும் அருளிச் செய்தார்.

இப்பாட்டில்
தன் திருவடிகளில் வேறு பயனைக் கருதாது பக்தி செய்யும் உண்மையான பக்திமான்கள் மிக அன்புடன் கொடுக்கும்
பொருள் மிகச் சிறியனவாக இருந்தாலும் இறைவன் அச்சிறிய அளவான பொருளையும் மிகப் பெரியதாக நினைத்து
ஏற்பான் என்னும் கருத்தை அருளிச் செய்கிறார்.

“தினைத் துணை நன்றி செய்யினும் பனைத் துணையாகக் கொள்வார் பயன் தெரிவார்” என்று
பொய்யா மொழியும் இக் கருத்தைக் கூறுகின்றது.

உலகளந்த நிலையை வருணிக்கையில் “உயர்ந்தவர்க்கு உதவிய உதவியொப்பவே” என்றான் கம்பன்.

தன் பொன்னடி யன்றி மற்று ஒன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்து இட்ட அணு வெனினும் -பொன் பிறழும்
மேருவாய்க் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மாரிமாக் கொண்டல் நிகர் மால் –11-

பதவுரை:

விரையார் –நறுமணம் நிறைந்த
துழாய் அலங்கல் –திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டவனாய்
மாரி மாக் கொண்டல் நிகர்–மழை பொழியும் மேகத்தை நிகர்த்த வடிவுடையவனான
மால்–திருமால்
தன் பொன்னடி யன்றி–தன்னுடைய அழகிய திருவடிகளையொழிய
மற்றொன்றில் -வேறு பயன்களில்
தாழ்வு செய்யா -ஈடுபாடு கொள்ளாத
அன்பர் -பக்தியை உடையவர்கள்
உகந்திட்டது-மகிழ்ச்சியுடன் கொடுப்பது
அணுவெனினும் -மிகச் சிறியதாகயிருந்தாலும் அப்பொருளை
பொன் பிறழும் -பொன் மிளிரும்
மேருவாய் -பொன் மலையாய்
கொள்ளும் -ஏற்றுக் கொள்வான்

தன் பொன்னடியன்றி –
தன் என்பதற்கு
இறைவன் எக்காரணமும் இல்லாமல் இயல்பாகவே அனைத்து ஆன்மாக்களுக்கும்
தலைவனாக இருப்பவன் என்று பொருள்.

பொன்னடி அன்றி என்பதற்கு
மிக அழகாகவும் விரும்பத் தக்கதாகவும் உள்ள திருவடிகளை அல்லாமல் என்று பொருள்.

இங்கு
தன்னடி என்று கூறுவதால்
இறைவனுடைய திருவடிகள்
ஆன்மாக்கள் அனைவருக்கும் அவை உரிமையுடையன என்பதும்

“பொன்னடி” என்று கூறுவதால்
அவ்வடிவினுடைய
உயர்வும்
இன்பமும் சொல்லப்படுகின்றன.

மற்றொன்றில் தாழ்வு செய்யாவன்பர் –
கீழே சொன்ன இறைவன் திருவடிகள் ஆன்மாக்கள் அனைவருக்கும் உரிமையுடையதாய்
மிகவும் இனிமையுமாய் இருப்பதால் அத்திருவடிகளை யொழிய
வேறு பயனில் ஈடுபடாத அன்பை உடையவர் என்று பொருள்.

மற்றொன்று என்ற சொல்
செல்வம், ஆன்மா அனுபவம் முதலிய வேறு பயன்களைக் குறிக்கிறது.

தாழ்வாவது:- ‘தாழ்ச்சி’
அதாவது ஈடுபாடு என்பதாம்.

இங்கு ‘சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது’ என்ற பாடலில்
‘தாழ்ச்சி’ என்பதற்குப் பொருள் சொல்வது போல இங்கும் பொருள் கொள்ள வேணும்.

அதாவது ‘தாழ்ச்சி மற்றும் எங்கும் தவிர்த்து’ என்ற இடத்தில்
‘உன்னை ஒழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கடவதான தாழ்ச்சியையும் தவிர்த்து’ என்பதையும் ஒப்பு நோக்குக.

ஆக இவ்வாறு, “பகவானைத் தவிர வேறு பயன்களில் ஈடுபடாத பேரன்பர்கள்” என்று பொருள்.

உகந்திட்டது:–
உகப்பு – களிப்பு (மகிழ்ச்சி) –
இட்டது கொடுத்தது மகிழ்ந்து கொடுக்கும் பொருள்.

அடிமை செய்வதில் இரண்டு வகை உண்டு.
சாஸ்திரக் கட்டளைப்படி செய்வது ஒன்று. அதாவது அடியவனாயிருப்பவன். தொண்டே செய்து வரவேணும் என்பது.
மற்றொன்று, அன்பின் மிகுதியால் தொண்டு செய்வது.
உதாரணம், மனைவி கணவனுக்கு செய்யும் தொண்டு கற்புடைமை என்னும் சாஸ்திரக் கட்டளையாகும்.
‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி’ என்றார் திருவள்ளுவர்.
கணவன் மனைவிக்கு செய்யும் (சேவகம்) பணிகள் அன்பின் மிகுதியால் செய்ததாகும்.
அன்பர்கள் இறைவனுக்குச் செய்யும் தொண்டுகள் எல்லாம் கட்டளை என்று செய்யாமல்
அன்பின் மிகுதியால் செய்ய வேண்டுமென்பது மேலோர் கொள்கை.
இதை, “உகந்து பணி செய்வது” என்பர்.

“உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன், ஈதேயின்மை வேண்டுவதெந்தாய்”-(திருவாய்மொழி-10-8-10)
என்ற இடத்தில் “உகந்து பணி செய்து” என்று ஆழ்வார் கூறியதைக் காண்க.

இவ்வாறு அடியவர் அன்புடன் அர்ப்பணிக்கும் பொருள்
அணுவெனினும் மிகச் சிறிய அளவில் இருந்தாலும்.

பொன் பிறழும் மேருவாய் கொள்ளும் –
அதாவது
பொன் மயமாய் விளங்கும் மகா மேருவைப் போல மிகப் பெரியதாக நினைத்து ஏற்றுக் கொள்வான் என்பதாம்.
இறைவன் வறியவனாக இருந்தால் இவன் கொடுத்ததை ஏற்று நிரம்பியவனாவான்.
அதனால் இவன் கொடுக்கும் பொருள் மிகச் சிறிதளவாக இருந்தால் அதை அவன் ஆதரிப்பான்.
இதை ‘அல்பத்தனம்’ என்று உலகம் கூறும்.
இவ்வாறின்றி, இறைவன் குறை ஒன்றுமில்லாத நிறைவாளனாக இருப்பதால்
குறையை நிரப்பிக் கொள்ள வேண்டிய நிலை அவனுக்கில்லை.
ஆகையினால் அன்பர் தனக்கு அன்பினால் கொடுக்கும் பொருள் சிறிதளவாயினும்
அதை பொன்மலை போல் பெரிதாக மதித்து ஏற்பான் என்பது பொருள்.
இவ்வாறு ஏற்பவன் எத்தகையவன் என்றால்:-

விரையார் துழாயலங்கல் மாரிமாக் கொண்டல் நிதர் மால் –
‘நறுமணம் நிறைந்த திருத் துழாய் மாலையாலே அழகுறத் திகழ்பவன்.
நீருண்ட காளமேகம் போன்று இருக்கிற காரார்ந்த திருமேனி அழகுடையவன்.
‘இத்தகைய திருமால்’ என்று பொருள்.
விரை-நறுமணம்
அலங்கல்-மாலை,
மாரி-மழை,
மா-பெரிய,
கொண்டல்-மேகம் என்று பொருள் காண்க.

இவ்வாறு நிறைவாளன் என்று கூறியதால்
வேறு பயனை விரும்பாமல் தன்னிடம் மனதை வைத்தவர்களுக்குத் தன்னுடைய அழகான
அணிகலங்கள் பூண்ட வடிவழகைக் காட்டி எப்பொழுதும் அவ் வடிவழகையே அனுபவித்து பக்தியை வளர்ப்பவன்’ என்று கொள்க.

விரையார் துழாய் அலங்கல், மாரிமாக்கொண்டல் நிகர்மால்,
தன் பொன்னடியன்றி மற்றொன்றில் தாழ்வு செய்யா அன்பர் உகந்திட்டது
அணுவெனினும் பொன் பிறளும் மேருவாய்க் கொள்ளும்
என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

———-

வேறு பயன்களை விரும்புவார் மிகப் பெரிய செல்வத்தைத் தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும்
திருமகள் மணாளனான இறைவன் அச் செல்வத்தை விரும்பி ஏற்க மாட்டான்
என்று கூறுகிறார் இப்பாட்டில்.

மாறாய் இணைந்த மருதம் இறத் தவழ்ந்த
சேறார் அரவிந்தச் சேவடியைப் –பேறாக
உள்ளாதார் ஒள் நிதியை ஈந்திடினும் தான் உகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன்–12–

பதவுரை:

மலர் மடந்தை கோன்-திருமகள் தலைவனான பகவான்
மாறாயிணைந்த -தன்னிடம் பகை கொண்டு சேர்ந்து நின்ற
மருதம் -இரட்டை மருத மரங்களான அசுரர்களை
இற -முறிந்து விழும்படி
தவழ்ந்த -தவழ்ந்து போன
சேறார் -சேற்றில் அலர்ந்த
அரவிந்தம்-செந்தாமரை போன்ற
வேறாக -சிறப்பாக (அதுவே பயனாக)
உள்ளாதார்-நெஞ்சால் நினையாதார்
ஒண்நிதியை-மிகப் பெருஞ்செல்வத்தை
ஈந்திடினும்-தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும்
தான்-பரிபூரணனான இறைவன்
உகந்து கொள்ளான்-மகிழ்வுடன் ஏற்க மாட்டான்

மாறாயிணைந்த மருதம் –
தன்னிடம் பகை உணர்வோடு இடைவெளி இல்லாமல் நெருங்கிருந்த மருத மரங்கள்
‘எமளார்ச்சனம்’ என்ற பெயர் உடைய வகைகள் (இறத் தவழ்ந்த) முறிந்து விழும்படி தவழ்ந்து போன என்று பொருள்.

கண்ண பிரானைத் தொட்டிலில் இட்டு யசோதை யமுனை நீராடப் போனாள். அப்பொழுது அவன் பசியினால் அழுதான்.
முலைப்பால் கொடுக்கும் தாய் அருகில் இல்லை. சீற்றத்தினால் திருவடிகளை நிமிர்ந்து உதைத்தான்.
கண்ணனைக் கொல்வதற்காக அசுரன் மறைந்திருந்த வண்டி அவனை அழிக்க வந்தது.
அப்போது தன் சிறு பாதத்தால் உதைத்தான். அவ்வளவில் அவ்வண்டி சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது என்பது முன் வரலாறு.

அது போல இங்கு சாபத்தினால் இரட்டையாய் இணைந்துள்ள எமளார்ச்சனம் என்ற மருத மரங்களும்
இவனுடைய உராய்தலால் கீழே சாய்ந்தன. அதாவது, கண்ணன் வெண்ணையைக் களவிலே அமுது செய்தான்,
ஊரார் காணவே அவனை உரலிலே கட்டிப் போட்டுவிட்டு வேலையிலே ஈடுபட்டாள் யசோதை.
குழந்தைத் தனத்தால் உரலை இழுத்துக் கொண்டு கண்ணன் தன்னை இணைத்திருந்த மருத மரங்களின் நடுவே தவழ்ந்து நுழைந்தான்.

உரல் தடைப்பட்டது. பலத்து இழுக்கும் பொழுது அவன் ஊர்ந்து சென்ற தொடைகள் உராய்தலால் இரட்டை மருத மரங்களும் முறிந்து விழுந்தன,
மருத மரத்தில் மறைந்திருந்த அசுரர்கள் பலியானார்கள். எமளார்ச்சனர்கள் கம்சனுக்கு உதவியாக
மருத மரவடிவில் மறைந்து நின்று கண்ணனைக் கொல்ல எண்ணினார்கள். அவனாலேயே பலியானார்கள்.
பிறர்க்காகக் கண்ணனைப் பகைத்துக் கிட்டினாலும் கண்ணனாலே அழிக்கப்பட்டார்கள்.
ஆகவே, பிறர்க்காக எதிர்த்தாலும் அவர்களும் கண்ணபிரானால் அழியும்படி ஆவார்கள்.
எதிரிகள் யாரானாலும் அவர்களை அழிப்பது கண்ணன் இயல்பு என்பது கருத்து.

இயற்கையான தாமரைக் குளத்தில் அலர்ந்த செந்தாமரை போலே சிவந்த திருவடிகள்.

சேவடி என்று திருவடியின் சிவப்பைச் சொன்ன இடத்தில் மற்றும் உண்டான அலர்த்தி, குளிர்ச்சி, அழகு, நறுமணம்
இவை எல்லாவற்றையும் ஏற்புளிக் கோடல் என்ற உத்தியால் சேர்த்துக் கொள்ள வேணும்.

இக்கதையைச் சொல்ல வந்த பராசரமுனிவர் கண்ணன் மருத மரங்கள் நடுவே தவழ்ந்து போனபோது
அவை முறிந்து விழுகின்ற ஒசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து அவ்வழகிய பார்வையாலே
சிவந்து மலர்ந்த திருக்கண்களின் அழகைக் கட்டுரைத்தார்.
இக்கதையை இப்பாடலில் கூறிய அருளாள மாமுனிவர் கண்ணன் தவழ்ந்து போகிற போது
மருத மரங்களை முறித்திட்டுப் போன திருவடிகளில் அழகைக் கட்டுரைக்கிறார் என்பது மணவாளமாமுனிகள் உரை.

“பொருந்திய மாமரு தின்னிடை போய வெம்
பெருந்தகாய், உன் கழல் காணியே பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே
இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே” –(திருவாய்மொழி – 3-8-10) என்றும்

“போனாய் மாமருதின் நடுவே என் பொல்லா மணியே” என்றும் ஆழ்வாரும் அனுபவிக்க ஆசைப்பட்டது
மருதத்தின் நடுவே போன திருவடிகளை அன்றோ?

வேறாக உள்ளாதார் – வேறுபடுத்தி எண்ணாதவர்கள்.

‘அதாவது வேறுபயன் எதிலும் சிறிதும் தொடர்பின்றி இத்திருவடிகளே நமக்கு மேலான பயன் என்று நினையாதவர்கள்’ என்று கருத்து.
அதாவது
கண்ணபிரான் மருதமரமாயுள்ள எமளார்ச்சனர்கள் கையில் அகப்படாமல் தன்னைத் தானே காத்து நமக்குத் தன்னை
அனுபவிக்கும்படி தந்ததால் அவன் திருவடிகளே அடையத் தகுந்த மேலான பலன்’ என்று
எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டு கிடப்பதன்றோ அடியவரானவர்க்குத் தருவதாகும்.
அவ்வாறு இருக்க வேண்டியதை விட்டுவிட்டு மனதை வேறு வேறு பயன்களில் ஈடுபடுத்தும் அவர்கள் என்பதாம்.

ஒண் நிதியை ஈந்திடினும் –
ஒண்மை – அதாவது சீரிய அளவற்ற நிதியைக் கொடுத்தாலும்

தான் உகந்து கொள்ளான் மலர் மடந்தை கோன் –
‘தான் திருவுக்கும் திருவாகிய செல்வனாகையால் எல்லாம் நிரம்பப் பெற்றவன். குறையொன்றுமில்லாதவன்.
ஆகவே மேலே சொல்லப் பட்டவர்கள் மிக்க பெரு நிதியைக் கொடுத்தாலும் அதை விரும்பி ஏற்க மாட்டான்’ என்பது பொருள்.
அவன் குறையுடையவனாய் இருந்தாலன்றோ கொடுக்கிற பொருளை பெருநிதி என்று அவாவுற்று ஏற்பான்!
இதை அவனிடம் சொல்ல முடியாது அல்லவா ?
மேலும் கொடுப்பவரது நெஞ்சின் தூய்மையைப் பார்த்து ஏற்கும் பெருமான் அன்றோ அவன்.
‘ஆகையாலே தன்னிடம் பக்தியில்லாது வேறுபயனை விரும்புவார் கொடுப்பதை மகிழ்ந்து ஏற்கமாட்டான்’ என்பதாம்.

‘மகிழ்ந்து ஏற்க மாட்டான்’ என்றதால் ‘தலைவிதியே’ என்று ஏற்பானாகத் தெரிகிறது.
இறைவன் எல்லோராலும் பற்றப் படுவனாதலால் அவன் யார் கொடுப்பதையும் ஏற்க வேணுமே!
கடமைக்காக ஏற்பானே அன்றி மகிழ்ந்து ஏற்க மாட்டான் என்பது இதன் குறிப்புப் பொருள்.

பெற்றோர்கள், நற்குணமுடைய குழந்தைகள் கொடுப்பதை ஏற்பது போல,
அக்குணமில்லாதவர்கள் கொடுப்பதையும் ஏற்க வேண்டுமல்லவா அதுபோல என்பதாம்.

————-

பகவானிடத்தில் வேறு பயன் எதையும் விரும்பாமல் தொண்டு செய்யும் தன்மை உண்டானாலும், ஆன்ம விவேகமில்லாமல் உடலில் பற்றுதல் உடைய உலகியல் மக்களோடு, (உண்ணல், உடுத்தல், திரிதல்) இவற்றையே லட்சியமாகக் கொண்டவர்களோடு தொடர்புடையவராயிருந்தால், இறைப் பணியையே இலக்காகக் கொண்ட அவ்வடியார்க்குப் பழுதாகுமன்றோ? என்று வினா எழும். அதற்கு விடையளிக்கப்படுகிறது இப்பாடலில். அதாவது, ஆன்மாவின் உண்மை நிலையான இறைப்பணியைக் கண்டறிந்தவர்களுக்கு உலகியல் மக்களோடு உறவு ஏற்படாது என்பதாகும்.

பண்டே உயிர் அனைத்தும் பங்கயத்தாள் நாயகற்கே
தொண்டாம் எனத் தெளிந்த தூ மனத்தார்க்கு -உண்டோ
பல கற்றும் தம்முடம்பைப் பார்த்து அபிமாநிக்கும்
உலகத்தவரோடு உறவு –13-

பதவுரை:

பண்டே -தொன்று தொட்டே
உயிரனைத்தும் -அனைத்து உயிர்களும்
பங்கயத்தாள் நாயகற்கே -லக்ஷ்மீ நாதனுக்கே
தொண்டாம் -அடிமையாகும்
எனத் தெளிந்த -என்ற உண்மையை அறிந்த
தூ மனத்தார்க்கு -தூய மனம் படைத்தார்க்கு
பலவும் கற்று -சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்று
தம் உடம்பைப் பார்த்து -தமது உடலில் காணப்படும் சாதி முதலியவற்றைப் பார்த்து
அபிமானிக்கும் -செருக்கித் திரியும்
உலகத்தவரோடு -உலகியல் மக்களோடு
உறவு உண்டோ -தொடர்பு உண்டாகுமோ?

பண்டே, உயிர் தொண்டாம் (என்று கொண்டு கூட்டிப் பொருள் சொல்லப்படுகிறது)
அதாவது உயிர்கள் எல்லாம் இயல்பாகவே இறைவனுக்கு அடிமை யாயிருத்தல் அநாதியாகும் என்பதை உணர்த்துகிறது.

உயிர் அனைத்தும் என்று கூறுவதால்,
ஆன்மாக்களுக்குரிய அவ்வடிமைத் தன்மை தான் சிலருக்கு உண்டாய், சிலருக்கு இல்லையாய், இல்லாமல்
அனைத்து ஆன்மாக்களுக்கும் பொதுவாகும் என்று உணர்த்தப்படுகிறது.

பங்கயத்தாள் நாயகற்கே
மேற்கூறிய அவ்வடிமை தான் யாருக்கு என்பதைத் தெளிவாக்குகிறது இத்தொடர்.
தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு நாயகனான ஸ்ரீயபதிக்கு என்று பொருள்.
உயிர்கள் திருமாலுக்கே அடிமையாகும் என்றதாயிற்று.
இதனால் அடியவர்களான ஆன்மாக்களுக்குத் தலைமையாயிருப்பவர் பிராட்டியும் பெருமாளுமான
இருவருமாவர் என்னும் கருத்துப் புலனாகிறது.

மேலும் நாயகற்கு என்ற நான்காம் வேற்றுமை உருபாலும்
“ஏ” என்ற தேற்றேகாரம் இடை நிலையாலும்,
ஆன்மாக்கள் அவ்விருவருக்கு மட்டுமே அடிமை, பிறர்க்கு அடிமையானவரில்லை என்ற கருத்தும் அறியப்படுகிறது.

தொண்டாம் எனத் தெளிந்த தூமனத்தார்க்கு –
மேற்சொன்ன ‘பங்கயத்தாள் நாயகற்கே இவ்வான்மா அடிமை’ என்று சாஸ்திரங்களால் தெளிவடைந்த
தூய மனத்தரான தொண்டர்களுக்கு, திருமந்திரம் சகல வேதங்களுடையவும் திரட்சியாகும்.
இக் கருத்து திருமந்திரத்தை உணர்ந்தவர்க்கு நன்கு தெரியும்.
திருமந்திரத்தின் பொருளுணர்ந்தவர்கள் தான் “தூமனத்தர்”.

உண்டோ – கிடையாது.
இவ்வினைச் சொல்லுக்கு மேல் வரும் உறவு என்ற சொல்லோடு கொண்டு கூட்ட வேணும்.
உறவு உண்டோ என்பதால் உறவு கிடையாது என்பது பொருளாகும்.

பல கற்றும் தம் உடம்பைப் பார்த்து அபிமானிக்கும் –
பல கற்றல் – அதாவது வேதம், மனு முதலிய ஸ்மிருதிகள், தர்க்கம், வியாகரணம் முதலிய சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்றலாம்.

(தம் உடம்பைப் பார்த்து அபிமானிக்கும்) – என்ற தொடரில் ‘தம் உடம்பு’ என்றது
அந்தணர் முதலிய வர்ணங்களுக்கு பிரம்மசரியம் முதலிய நிலைகளுக்கும் எல்லாம் இருப்பிடமாயிருக்கும்
தங்கள் தங்கள் உடம்பைப் பார்த்து ‘நாம் இன்ன சாதி அன்றோ நாம் இன்ன வர்ணம் அன்றோ,
நாம் இன்ன நிலை (பிரம்மசரியம்) முதலிய நிலைகள் இருப்பவர் அன்றோ என்று
இவற்றை குறியிட்டுத் தங்களை மிக உயர்வாக எண்ணி இருக்கும்’ என்று பொருள்.

உலகத்தவரோடு உறவு – இப்படித் தங்களைச் சாதி முதலியவற்றால் உயர்வாக எண்ணியிருக்கும் உலகத்தவரோடு.

தூமனத்தார்க்கு – தொடர்பு உண்டாகுமோ என்று வினை கூட்டிப் பொருள் முடிக்க,

“ஓம்” என்ற ப்ரணவத்தில்
அகாரத்தின் பொருளான நாராயணனுக்கே ஆன்மாக்கள் அனைவரும் அடிமை ஆவார் என்று சொல்லப்பட்டது.
இவ்வாறு சொல்லப்பட்ட அடிமைக்கு நிலைக்களமான ஆன்மாவை ‘ம’ காரத்திற்கு அர்த்தமாகக் காண வேண்டும்.
அவ்வான்மா அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டதாய்
ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய்க் கொண்டதாய்,
ஞான வடிவமாய் என்றும் இருப்பதாய்,
இவ்வாறான இலக்கணங்களோடு கூடியிருக்கும் ஆன்மாவைப் பற்றித் தெரிந்திருக்கும் தூய மனத்தினருக்கு,
இத்தெளிந்த அறிவில்லாத உலகத்தவரோடு தொடர்பு உண்டாகுமோ?

அதாவது
உலகத்தவர் உடலையே முக்கியமாகக் கொண்டு அவ்வுடலைப் பற்றி வரும் சாதி முதலியவற்றைக் குறித்துத்
தங்களை மிக மதிப்பாக நினைத்து செருக்கித் திரியும் உலகத்தவர்’ என்று உலகர்களை அறிந்தால்
ஆன்மாவின் உண்மையை உணர்ந்தவர்களுக்கு அதை அறியாத உலகத்தவரோடு தொடர்பு உண்டாகுமோ? உண்டாகாது என்றவாறாம்.
அவர்களைக் கண்டால் உறவற வார்த்தை சொல்லிப் போதல் இத்தனை அன்றோ உள்ளது காண்க.

இதற்கு உதாரணமாக ஒரு பழைய வரலாறு இங்குச் சொல்லப்படுகிறது.
திருவயிந்திபுரம் என்ற ஊரிலே வில்லிபுத்தூர்ப் பகவர் என்று பிரபலமாய் இருப்பார் ஒரு சன்னியாசி (துறவி).
பிராமணர்கள் எல்லோரும் நீராடிக் கடன் செய்யும் துறையை விட்டிட்டு தாம்
வேறு ஒரு படித்துறையில் தம்முடைய கடன்களைச் செய்து வருகையில்
ஒரு நாள் பிராமணர்கள் அவரை நோக்கி, ‘எங்கள் துறையில் உமக்கு நீராட்டம் பண்ணக் கூடாதா? என்று கேட்க’
அதற்கு அவர் இவ்வாறு பதில் கூறினார்.
ஓ அந்தணர்களே! நாங்கள் விஷ்ணுவின் அடியார்கள். நீங்கள் சாதி, தர்மங்களைக் கடைபிடிக்கும் பிராமணர்கள்.
விஷ்ணு தாசர்களான எங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு கிடையாது. நீங்கள் சரீரத்திற்கு அடிமைப்பட்டவர்கள்.
நாங்கள் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள். நம் இருவருக்கும் உறவு ஏற்படுவதற்கு வழியில்லை என்று
உறவற வார்த்தை சொல்லிப்போனார் அன்றோ என்ற இவ்வரலாறு
இப்பாடல் உரையில் மாமுனிகளால் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஞானிகளுக்கு உலகத்தவர்களோடு தொடர்பு உண்டாகாது என்பதாம்.

———-

உடம்பு இருக்கும் வரையும் சாதி முதலிய வேறுபாடுகளின் பற்றுதல் தொடர்ந்து வருமல்லவா?
என்று வினா உண்டாக, “அவற்றால் என்ன பயன்” என்று விடை கூறி
எல்லா ஆன்மாக்களுக்கும் திருமகள் நாயகன் திருவடிகளே புகலாய்க் காண்பீர்கள்!
என்னும் உண்மை கூறப்படுகிறது இப் பாடலில்.

பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண் –14-

பதவுரை:

பூதங்கள் ஐந்தும் பொருந்தும்-நிலம், நீர், தீ, காற்று, வானம், என்னும் ஐந்து பொருட்களுடைய கூட்டுறவால் உண்டான
உடம்பினால்-உடலை அடிப்படையாக வைத்துப் பிறந்த
சாதங்கள்-சாதிகள்
நான்கினொடும்-அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாலு வகைப் பிரிவோடும்
சங்கதமாம்-சேர்ந்திருக்கிற
பேதங்கொண்டு-உயர்வு தாழ்வாகிற வேற்றுமைகளைக் கொண்டு
என்னபயன் பெறுவீர்-என்ன லாபத்தை அடைவீர்?
எவ்வுயிர்க்கும்-அனைத்து உயிர்களுக்கும்
இந்திரைகோன்-லக்ஷ்மீ நாயகனான
தன்னடியே-எம்பெருமானுடைய திருவடிகளே
சரண்-புகலாகும் என்று
காணும் -அறிவீர்களாக (குறிப்பு) காணும் முன்னிலை

“பூதங்களைந்தும் பொருந்து உடலினாற் பிறந்த” :
“மஞ்சு சேர் வானெரி நீர் நிலம் காலிவை மயக்கிநின்ற
அஞ்சுசேர் ஆக்கை -என்று திருமங்கை ஆழ்வாரும்

“சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவ்வைந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு” -என்று திருவள்ளுவரும் சொன்னபடி,

மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினுடைய கூட்டுறவே உடம்புகளாக உண்டாகி இருக்கின்றன.
இவ்வாறு கூறுவதால் ஆன்மாவுக்கும், உடலுக்கும் தொடர்பில்லை என்பதை நன்கு உணரலாம்.
மேலும் உடல், பேதை, குழவி, பால்யம், இளமை முதுமை முதலிய மாறுபட்ட தோற்றங்களைக் கொண்டதாய்
நிலை இல்லாததாகவும்,
பழிப்புக்கு இடமாகவும் இருக்கிறது.
இதனால் ஆன்மாவுக்கு இத்தகைய உடல் தாற்காலிகமாக ஏற்பட்டது என்று புலனாகிறது.

சாதங்கள் நான்கினொடும் –
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று சொல்லப்படும் சாதிகள் நான்கு.
சாதங்கள் என்பதற்கு சாதிகள் என்று பொருள்.
இந் நான்கு சாதிகளும் மேலே சொன்ன ஐம்பூதங்களால் ஆகிய உடலினால் ஏற்பட்டவைகளே.

நான்கினொடும் சங்கதமாம் பேதம் கொண்டு –
இவ்வாறான நான்கு சாதிகளோடு சேர்ந்திருக்கிற பற்பல சாதி வேறுபாடுகள் உயர்வு தாழ்வுகளுக்குக் காரணமாயிருப்பன.
அந்தணர் முதலிய சாதியைப் பற்றிக்கொண்டு பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் என்று வேறுபாடுகள் வருகின்றன.
உடலைப் பற்றி வருகின்ற இவ்வாறான வேறுபாடுகள் எவ்வளவோ கூறலாம்.

இக் கருத்தை பரிமேலழகர்
நால் வகை நிலைத்தாய் வர்ணம் தோறும் வேறுபாடுடைமையின் என்று கூறினார்.

என்ன பயன் பெறுவீர் –
இவ்வேறுபாடுகள் கொண்டு என்ன பயன் அடையப் போகிறீர்கள் என்று உலகோரை நோக்கிக் கேட்கப்படுகிறது.
பயன் எதுவுமில்லை என்பதுவே இதற்கு பதிலாகும்.
இதனால் உணர்த்தப்படும் குறிப்புப் பொருள் “யான்” “எனது” என்னும் குற்றங்களுக்குக் காரணமாயிருப்பதால்
சாதி வேறுபாடுகள் ஆன்மாவுக்குக் கேடுகளையே விளைவிக்கும் என்பதாம்.

இங்கு ‘என்ன பயன் கெடுவீர்! என்று பாடபேதம் கொண்டு
அதற்கு ‘கெடுவீர்கள்’ என்று விளி வேற்றுமை யாக்கி
அருகிலிருப்பவரை நோக்கிக் கூறுவதாகப் பொருளும் கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வுயிர்க்கும் இந்திரைகோன் தன்னடியே காணும் சரண் –
‘எவ்வுயிர்க்கும்’ என்றதால் “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்ற சிறப்புக்கேற்ப
இன்னார் இனியார் என்று வேறுபாடு இல்லாமல் எல்லா ஆன்மாக்களுக்கும்
திருமகள் மணாளன் திருவடிகளே புகலாகக் காண்பீர்களாக.
‘அனைத்துயிருக்கும் அவன் திருவடிகளே புகல்’ என்று கூறுவதால் அனைத்துயிர்களும்
அவன் திருவடிகளைச் சார்ந்திருப்பதால் பேதங்கள் ஒன்றுமில்லை
ஆகையால் பேதம் சொல்வது எல்லாம் உண்மை இல்லை.

இறைவனடியார் என்று சொல்வதே எல்லா உயிர்களுக்கும் நிலைநின்ற தன்மையாம்.
இது பற்றியே
“பொதுநின்ற பொன்னங்கழலே தொழுமின் முழு வினைகள் முன்னங்கழலும் தொழுமின்” -என்றார் பூதத்தாழ்வார்.

இங்கு “பொதுநின்ற பொன்னங்கழல்” என்று
இறைவனுடைய திருவடி அனைவருக்கும் பொது என்று கூறப்பட்டது.
இது பற்றியே வைணவத் திருக்கோயில்களில் வழிபாட்டுக்கு வரும் அனைவர் தலைகளிலும்
திருவடி நிலையை (சடாரி) வைப்பதைப் பார்க்கிறோம்.

—————-

எவ்வுயிர்க்கும் இந்திரை கோன் தன்னடியே காணும் சரண்:- என்று கீழ்க்கூறிய கருத்தை எடுத்துக்காட்டுடன்
இப்பாடல் நிலை நிறுத்துகிறது.
“திருமகள் மணாளனுக்கு அடியார்” என்னும் பெயரையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டவர்களுக்கு,
ஞானம் பிறப்பதற்கு முன்பு அடையாளமாகக் குறிப்பிட்ட ஊர் பெயர், குலப்பெயர், மற்றும் சிறப்புடைய
அடையாளங்கள் எல்லாம் ஞானம் பிறந்த பிறகு அவன் திருவடிகளேயாகும் என்று கூறப்படுகிறது.

குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே யாகும் படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர்கலியைச் சேர்ந்திட மாய்ந்தற்று –15-

பதவுரை:

குடியும் -பிறந்த ஊரும்
குலமும் -பிறந்த கோத்திரமும்
எல்லாம் 0மற்றும் பிறப்பு (குறி) அடையாளங்கள் எல்லாம்
கோனகை-திருமங்கை மணாளன்
கேள்வனடியார்க்கு-தொண்டர்களுக்கு
அவனடியே யாகும்-இறைவனான அவனுடைய திருவடிகளே அனைத்தும் ஆகும்
இதற்கு எடுத்துக்காட்டு
படியின்மேல்-பூமியில்
நீர் கெழுவும்-நீர் நிறைந்த
ஆறுகளின்-நதிகளுடைய
பேரும்-கங்கை முதலிய பெயரும்
நிறமும்-சிவப்பு, வெளுப்பு, கருப்பு முதலிய
எல்லாம் வேற்றுமைகள் எல்லாம்
ஆர்கலி-சமுத்திரத்தை
சேர்ந்து-கலந்து
மாய்ந்திடும் அற்று-அழிந்து போவது போன்று

(குடியும் குலமுமெல்லாம்)
“சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன்” என்னும், புறநானூற்றுப் பாடலிலும்

“வெங்கண்மா களிறுந்தி விண்ணியேற்ற விறல் மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச் சோழன்” -என்றும்

“இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன்” -என்றும் திருமங்கையாழ்வார் பாடல்களிலும்

வரும் குடி, குலம், கோத்திரம் மற்றும் சிறப்பு அடையாளங்கள் சொல்லியிருப்பனவற்றைக் காணலாம்.

குடி – பிறந்த கிராமம் அல்லது ஊர்

குலம் – கோத்திரம் எல்லாம் என்றது மற்றும் அடையாளமாகச் சொல்லப்படுபவை.

கோகனகை கேள்வன் அடியார்க்கு – திருமால் அடியார்களுக்கு,
கோகனகம் – தாமரை கோகனகை – தாமரையாள், கேள்வன் – நாயகன், திருவின் மணாளன் என்று பொருள்.
இப்படிப்பட்ட திருவின் நாயகனான இறைவன் திருவடிகளில் அடிமையே.
அதாவது
திருமால் அடியார் என்பதையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டவர்க்கு.

அவனடியே யாகும் –
அதாவது
அடியவராவதற்கு முன்பு குடி, குலம், கோத்திரம், சூத்திரம் முதலிய காரணங்களைப் பற்றி வந்த
அடையாளப் பெயர்கள் எல்லாம் அடியரான பிறகு அழிந்து போய்,
திருமால் அடியார் என்ற ஒரு பெயரே நிலைத்து நிற்கும் என்பதாம்.
இறைவன் திருவடி உறவையே அடையாளமாய்க் கொண்டவராய் அதைப் பற்றியே ‘திருமாலடியார்’ என்று
அழைக்கப்படுவார் என்றதாயிற்று. இதற்குச் சரியான உதாரணம் மேலே சொல்லப்படுகிறது.

படியின் மேல் – பூமியின் மேல்

நீர் கெழுவும் ஆறுகளின் –
நீர் நிறைதலை யுடைய நதிகளின் பேரும் நிறமும் எல்லாம் அதாவது
கங்கை, யமுனை முதலிய பெயர்களும், செம்மை, கருமை, வெண்மை முதலிய நிறங்கள் எல்லாம் என்றவாறு.

ஆர்கலியைச் சேர்ந்து – சமுத்திரத்தைச் சேர்ந்து கலந்த பின்

மாய்ந்திடும் அற்று – அழிந்து போவது போன்று

அதாவது அடியவராவதற்கு முன்புள்ள குடி, குலம் முதலிய அனைத்தும் அடியவரான பிறகு மறைந்து போய்விடும்.
இது எது போன்றது எனில், பூமியில் நீர் நிறைந்து பெருகும் ஆறுகளின் பெயர்களும் நிறங்களும்
சமுத்திரத்தில் கலந்து காணாமல் போவது போன்றதாகும்.
ஆகவே நிலை நில்லாது மாயும் சாதி, குலம் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமென்றும்
நிலையான இறைவன் அடியராம் தன்மைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும்.

(அடியராம் தன்மை) –
எல்லா ஆன்மாக்களுக்கும் பொதுவானது என்றும் உணர வேண்டும்.
இவ் வுணர்வினால் வேற்று மனப்பான்மைகள் ஒழியும் திருமாலடியார் என்னும் உணர்வு உண்டாகும் என்பதாம்.

———

ஆன்மாவின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள் எப்பொழுதும் தங்களின் நிலைத்து இருக்கும்
நிலையைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறும் முகத்தால் விளக்குகிறார் ஆசிரியர்.

தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்
யாவையும் அல்லன் இலகும் உயிர் பூவின் மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாட்கே யடிமை நான் –16-

பதவுரை:

நான்-உயிராகிற நான்
தேவர்-இந்திரன் முதலிய தேவர்கள்
மனிசர் -அந்தணர், அரசர் முதலியோர்
திரியக்கு-பசு, பறவை முதலிய விலங்குகள்
தாவரமாம்-மரம், செடி, கொடிகளாகிற தாவரங்கள்
யாவையுமல்லேன்-எவையுமாய் சொல்லப்பட மாட்டேன்
(இவையெல்லாம் நிலை நில்லாதனவாய் சிறிது பொழுது ஆத்மாவைப் பற்றி நின்று கழிவன.
ஆதலால் அவற்றைக் கொண்டு ஆத்மாவைக் குறிப்பிடுவது முறையில்லை என்பது)
நான்-நான் (அடியேன்)
பூவின் மிசை-தாமரை மலரில் வீற்றிருக்கும்
ஆரணங்கின்-தெய்வப் பெண்ணான திரு மகளின்
கேள்வன்-மணாளனும்
அமலன் -குற்றங்கள் இல்லாதவனும்
அறிவே வடிவாம் -அறிவு மயமாய் இன்பமயமாய் விளங்குபவனுமான
நாரணன்-நாராயணனுடைய
தாட்கே-திருவடிகளுக்கே
இலகும் -அறிவும் இன்பமுமாய் விளங்கும்
உயிர் -உயிர்கள்
அடிமை -அடிமையாகும்
“உயிர்கள் எல்லாம் நாராயணனுடைய அடிமைகள் ஆகும்.” -அடிமையே உயிர்களின் இயற்கையாம்.

தேவர் மனிசர், திரியக்குத் தாவரமாம் –
தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், செடி, கொடி, தாவரங்களாகிற (யாவையும் அல்லன்)
எந்தப் பெயரும் உடையவன் அல்லன். ஆன்மாவாகிற நான்.

ஓர் ஆன்மா தான் செய்த பற்பல நல்வினை, தீவினை வேறுபாட்டால்
தேவ சரீரம், மனித சரீரம், விலங்கு சரீரம், தாவர சரீரம், முதலிய பல உடல்களிலும் பிறக்கிறது.

இவற்றைத் திருக்குறள் உரை முதலியவற்றில் காணலாம்.
அவை வருமாறு:-

“ஊர்வ பதினொன்றாம், ஒன்பது மானிடம், நீர், பறவை நால்கால், ஒர் பப்பத்து,
சீரிய பந்தமாந் தேவர் பதினாலு, அயன் படைத்த அந்தமில் சீர்த் தாவரம் நாலைந்து,
மக்கள் விலங்கு, பறவை யூர்வன, நீருந் திரிவன பருப்பதம எனவினை யெழு பிறப்பாகு மென்ப”

வினைப்பயனால் ஆன்மாக்கள் எடுக்கும் பிறப்புக்களைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டவற்றை இங்கு ஒப்பு நோக்குக.
இவ்வாறு ஆன்மா பற்பல உடல்களை எடுத்தால் அந்தந்த உடலில் இருக்கும் போது
நான் தேவன், நான் மனிதன், நான் விலங்கு, நான் தாவரம் என்று
அது அதற்கு ஏற்ப நான் என்ற அகந்தையை எண்ணுகிறது.

இந்நிலை ஆன்மாவின் உண்மை நிலையை அதாவது,
‘இறைவனுக்கு மனிசர், விலங்கு, தாவரம் முதலிய யாவையும் அல்லன் நான் என்று தன்னை உணர்வான்.
மேலும் ‘நான் இறைவன் அடியேன்’ என்று தன்னை நினைப்பான்.

(இலகும் உயிர் நான்) என்று கொண்டு கூட்டுக.
உயிராகிற நான் என்று அறிக.
இதில் இலகும் என்ற அடைமொழியால் உயிருக்குரிய இலக்கணங்களை சாஸ்திரங்களில் கூறியபடி உணரவேண்டும்.
அதாவது
‘ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய் உடையவனும்,
ஒளி மயமானவனுமான உயிராகிற நான்’ என்று பொருள்.

மேலும், அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டதாய்
ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய்க் கொண்டதாய்
ஞான வடிவமாய் இருப்பதாய் உள்ளது ஆன்மா என்பதையும் இங்கு காண்க.

மேலும் தத்வத்ரயம் என்னும் நூலில், சித் ப்ரகரணத்தில் ஆன்மாவினுடைய இலக்கணத்தை அருளிச் செய்கையில்
“ஆத்ம ஸ்வரூபம் சென்று சென்று பரம்பரமாய் என்கிறபடியே
தேஹேந்திரிய மந: ப்ராண புத்தி விலக்ஷணமாய், அஜடமாய், ஆநந்த ரூபமாய், நித்யமாய், அணுவாய்,
அவ்யக்தமாய், அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞானாச்ரயமாய்,
ஈச்வரனுக்கு நியாம்யமாய், தார்யமாய், சேஷமாயிருக்கும்” என்று கூறியதையும் இங்குக் காண வேண்டும்

பூவின் மிசை ஆரணங்கின் கேள்வன் – “மலர்மேல் உறைவாள்” (திருவாய்மொழி – 4-5-2) என்று
நம்மாழ்வார் அருளிச்செய்தபடி
தாமரைப் பூவின்மேல் வசிப்பவளாய்,
அழகான வடிவை உடையவளான பெரிய பிராட்டியாருக்கு மணாளனாய் இருப்பவன் என்று இதற்குப் பொருள்.

அணங்கு – தெய்வப்பெண்
அழகு முதலிய தெய்வ குணங்கள் எல்லாம் நிறைந்த பெரிய பிராட்டியார்.
கேள்வன் – அவளுக்கு மணாளன்.

அமலன் – தீய குணங்களுக்கு எதிரியாய் இருப்பவன்.

அறிவே வடிவாம் – ஞானத்தையும் ஆனந்தத்தையும் தனக்கு வடிவமாய்க் கொண்டிருப்பவனான நாராயணனுடைய

தாட்கே அடிமை – திருவடிகளுக்கே ஆத்மா அடிமையானவன்

நாராயணன் என்றது தன்னை ஒழிந்த அனைத்துப் பொருள்களும் தனக்குச் சரீரமாய்த் தான் சரீரியாய் (சரீரி – உயிர்)
அதாவது
எல்லாவற்றுக்கும் தான் உயிராய் இருப்பவன் என்று பொருள்.

அறிவு மயமாய் சுகமயமாய் விளங்குகிற ஆன்மாவாகிற நான்,
தேவனல்லன், மனிதனல்லன், விலங்கல்லன், செடி, கொடி தாவரம் அல்லன், கூறிய யாவையும் அல்லன்.
தாமரை மலரில் தோன்றிய அழகிய தெய்வமான இலக்குமி தேவிக்கு மணாளனும்,
குற்றங்களுக்கு எதிரியாய் இருப்பவனும் ஞானத்தையே உருவமாகக் கொண்டவனும்,
அனைத்துப் பொருள்களுக்கும் உயிரானவனுமான நாராயணன் திருவடிகளுக்கே
அடிமைப்பட்டவனாவேன் என்பது பாடல் கருத்தாகும்.

——–

ஆத்ம ஞானம் பிறந்தவன் அதாவது,
‘ஆத்மா பகவானுக்கு அடிமையாய் இருப்பதுவே, ஆத்மாவின் உண்மை நிலையாகும்’ என்பதை உணர்ந்தவன்.
தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் இயல்பைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறுகின்ற முகத்தால்
அருளிச் செய்யப்பட்டது கீழ்.

இதில் பெருஞ்செல்வம் சேர்வதும் அது அழிவதும் வாழ்நாள் நீள்வதும், அது குறைவதும்,
ஆன்மாவின் உண்மையை உணராதவர்களுக்குச் செருக்கையும் துன்பத்தையும் உண்டு பண்ணுவனவாகும்.
அவ்வாறின்றி ஆன்மாவின் உண்மை நிலையை அறிந்தவர்களுக்குச் செல்வம் வருவதும் போவதும் பற்றியோ
வாழ்நாள் நீள்வது குறைவது பற்றியோ, செருக்கு, துன்பங்கள் உண்டாகமாட்டா என்னும்
உயரிய கருத்தை இப்பாடல் உணர்த்துகிறது.

ஆன்மாவின் உண்மை நிலை அறிந்தவர்களுக்கு
செல்வம் வருவதிலும்
அது தன்னை விட்டுப் போவதிலும்
செருக்குத் துன்பங்கள் உண்டாக மாட்டா என்பது கருத்து.

ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவரவும் இவற்றால்
பிறக்குமோ தன் தெளிந்த பின் –17-

பதவுரை:

விண்ணவர் கோன்-தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய
செல்வம் மிக்க -பெருஞ்செல்வம்
ஒன்றிடுக-ஒருவர் வேண்டாது இருக்கும்போது தானே வந்து சேர்ந்திடுக
ஒழிந்திடுக-அல்லது அதுவே தன்னைவிட்டு நீங்கிடுக
என்றும் இறவாது இருந்திடுக-எக்காலத்திலும் மரணம் இல்லாமல் வாழ்ந்திடுக (அல்லது)
இன்றே இறக்க-இப்பொழுதே மரணம் ஆயிடுக
தன் தெளிந்த பின்-ஆத்மாவான தன்னுடைய உண்மை நிலையை நன்றாக அறிந்த பின்பு
இவற்றால்-இந்த அறிவினால்
களிப்பும் கவர்வும்-இன்பமும் துன்பமும்
பிறக்குமோ-உண்டாகுமோ (ஆகாது)

ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் –
தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய மிக்க பெரிய செல்வம்.
அதாவது
பூ உலகம், புவர் உலகம், சுவர் உலகம் என்று சொல்லப்படுகிற மூன்று உலகங்களையும்
ஆள்கின்ற செல்வமானது விரும்பாது இருக்கும்போதே தானே வந்து சேரட்டும்.

ஒழிந்திடுக –
அத்தகைய பெருஞ்செல்வம் இனி ஒரு நாளும் கை கூடாது என்னும் அளவுக்குத்
தன்னோடு தொடர்பில்லாமல் மாய்ந்து போகட்டும்.

என்றும் இறவாது இருந்திடுக –
எக்காலத்திலும் மரணம் இல்லாதவனாய் வாழட்டும்.

இன்றே இறக்க
அவ்வாறு நீண்ட ஆயுள் இல்லாமல் இப்பொழுதே மரணம் வரக்கடவதாக.

களிப்பும் கவர்வும் இவற்றால் பிறக்குமோ தற்றெளிந்த பின் –
செல்வத்தால் களிப்பும், அது அழிவதால் துன்பமும் வாழ்வதால் மகிழ்வும்,
சாவதால் துன்பமும் உலகத்தாருக்கு இவை இயல்பாக உண்டாகும்.
ஆனால் தன்னைத் தெளிவாக அறிந்தவர்க்கு இத்தகைய செருக்கும் துன்பமும்
ஒரு போதும் உண்டாக மாட்டா என்பது இப்பாடலின் கருத்து.

தற்றெளிந்தபின் –
தன்னைத் தெளிவாக அறிகை.
அதாவது
ஆன்மா இறைவனுக்கு அடிமை என்னும் உண்மை நிலையை அறிகை.

————-

பகவான், தன்னிடம் பக்தி யுடையவராய் இருந்தாலும் (ஆத்ம ஞானம் இல்லாத) தெய்வ சிந்தனை இல்லாமல்
முகம் திரும்பிச் செல்லும் உலக மக்களோடு தொடர்பற்றவர்களுக்கே எளியவனாய் இருப்பதால்
அத்தகைய உலகியல் மக்களோடு தொடர்புடையவர்களுக்கு மிகவும் அரியனாய் இருப்பான்
என்னும் கருத்தை அனைவரும் அறிய இதில் அருளிச் செய்யப்படுகிறது.

ஈனமிலா வன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வணத்தாலும்-தான் அறிய
விட்டார்க்கு எளியன் விடாதார்க்கு அறவரியன்
மாட்டார் துழாய் அலங்கல் மால் –18-

பதவுரை:

மட்டு ஆர்-தேன் பெருகுகிற
துழாய் அலங்கல் -திருத்துழாய் மாலையுடைய
மால்-திருமால்
ஈனமில்லாத அன்பர்-தன் திருவடிகளில் பழுதற்ற
என்றாலும்-பக்தி யுடையவர்கள் ஆனாலும்
எய்திலா -பகவானுக்கு எதிரிகளான
மானிடரை-கீழ் மக்களை
எல்லா வண்ணத்தாலும்-பேச்சு முதலிய அனைத்து உறவுகளாலும்
தானறிய-வாலறிவனான இறைவனறிய
விட்டார்க்கு-துறந்தார்க்கு
எளியன் அவ்வாறு -அவர்களை விடாதவர்களுக்கு
அறவரியன்-மிகவும் அரியனாய் இருப்பான்

ஈனமிலா அன்பர் என்றாலும் –
ஈனமாவது பொல்லாத் தன்மை
இதை
‘பொல்லா அரக்கனை என்று இராவணன் செயல்களுக்கு அடைமொழி கொடுத்து சொன்னது காண்க.
“முன்பொலா இராவணன்” என்று திருமங்கையாழ்வார் பாசுரமும் கூறுகிறது.
“தீய புந்திக் கஞ்சன்” என்று கம்சனுடைய பொல்லாங்கும் பெரியாழ்வாரால் சொல்லப்பட்டது.

ஆக, இராவணன், கம்சன் போன்றவர்கள் செய்யும் செயல்கள் பொல்லாங்கு என்ற சொல்லால் உணர்த்தப்பட்டது.
இத்தகைய பொல்லாங்கு இல்லாதவர்கள் என்பதாம்.
தன் திருவடிகளில் பழுதற்ற பக்தியுடையவர்கள் என்று தேறி நின்றது.
கீதையில் “மனதில் வேறு எதையும் கருதாமல் என்னையே கருதும் பக்தனுக்கு நான் அடையத் தகுந்தவன்” என்று
கூறியவாறு. அத்தகைய பக்தியுடையவர்களை ‘ஈனமிலா அன்பர்’ என்று கூறியவாறு.

எய்திலா மானிடரை –
பகவானிடம் சிறிதளவு கூட நெருங்காத மனிதர்களை மனிதப் பிறப்பு இறைவழிபாட்டிற்கென்றே படைக்கப்பட்டதொன்று.
அவ்வழிபாட்டைச் செய்யாதவர்கள் “விலங்கொடு மக்களனையர்” என்ற பொய்யாமொழிக்கு இணங்க விலங்காவார்.

இக்கருத்தை
“ஆன் விடையேழன்றடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவரல்லர் என்று என் மனத்து வைத்தேனே” என்று திருமங்கையாழ்வாரும்,

செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடமாவையேன்” என்று பூதத்தாழ்வாரும்

இறைவனை மறந்தவர்கள் மனிதரல்லர் என்று கூறியதைக் காணலாம்.

“பேரறிவாளர்களான ஆழ்வார்கள் இகழும் வண்ணம் பகவானை மதியாது திரிகின்ற
பெரும் பாவிகளான அற்ப மனிதர்களை” என்று இத்தொடருக்குப் பொருள்.

இதனை நம்மாழ்வார் ‘யாதானும் பற்றி நீங்கும் விரதமுடையார்’ என்று அறிவிலிகளான மானிடரைக் கூறுவார்.

இங்கு “எய்திலா” என்றில்லாமல்
“எய்திலராம்” என்று பாடம் கொண்டால்
பகவானுக்கு எதிரிகளான மானிடரை என்று பொருள் கிடைக்கிறது.
இதைத் திருவள்ளுவர் “ஏதிலார் குற்றம் போல” என்ற குறளில்
‘பகைவர்’ என்ற பொருளில் ஏதிலார் என்ற சொல்லைக் கூறியது காணலாம்.

எல்லா வண்ணத்தாலும் –
அதாவது உடனுறைதல், பொருள்கள் கொடுத்துக் கொள்ளுதல், (பேச்சு) அளவளாவுதல் மற்றும்
உலகியல் பழக்கங்கள் எல்லாவற்றாலும் என்று பொருள்.

தானறிய விட்டார்க்கு –
தாங்களும் பிறரும் அறிந்த அவ்வளவோடு நில்லாமல்
இதயத்திற்குள்ளிருக்கும் இறைவன் அறியும்படி விடவேண்டும்.
அவ்வாறு விட்டவர்களுக்கு இறைவன் எளியவனாயிருப்பான்
‘உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறியும் அவனல்லவா’
இத்தகைய அவன் அறியும்படிக்கு மூடர்களின் தொடர்பை அறவே விடவேண்டும் என்பது கருத்து.

தானறிந்த வைணவத்துவமும், வைணவத்துவமல்ல.
நாடறிந்த வைணவத்துவமும் வைணவத்துவமல்ல.
நாராயணனறிந்த வைணவத்துவமே வைணவத்துவம் என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் என்ற எடுத்துக்காட்டு உரையில் கூறப்பட்டுள்ளது.

விடாதார்க்கு அறவரியன் –
அவ்வாறு விடாதவர்களுக்கு அருகில் நெருங்கவும் முடியாதவாறு மிகவும் எட்டாக்
கையனாய் இருப்பான். இதை நம்மாழ்வார் ‘அடியார்க்கு எளியவன். பிறர்களுக்கு அரிய வித்தகன்’ என்று கூறினார்.
இதனால் பக்தர்கள் உலகியல் மக்களோடு உறவாடலாகாது என்பது கருத்து.

மட்டார் துழாயலங்கல் மால் –
பகவானின் திருத்தோள்களிலும் திருமுடியிலும் திருத்துழாய் மாலை அணிந்துள்ள திருமால் என்பது.
பகவானுடைய திருமேனியில் உராய்தலால் மிக அழகு பெற்றுத் தேன் பெருகுகிறது திருத்துழாய்.
இத்தகைய தேன் பெருகும் அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமால் என்று பொருள்.
திருத்துழாய் மாலை திருமாலின் மேன்மையைக் குறிப்பதற்கு அடையாளமாகும்.

“மட்டார் துழாயலங்கல் மால்,
ஈனமிலா அன்பர் என்றாலும்
எய்திலா மானிடரை
எல்லா வண்ணத்தாலும்
தானரிய விட்டார்க்கு எளியன்
விடாதார்க்கு அறவரியன்” என்று கொண்டு கூட்டுக.

———–

புதல்வர், மனைவி, உறவினர், வீடு, நிலம் இவை முதலியன எல்லாம் நெருப்புக்கு ஒப்பாய்ச்
சுடுதல் நிலை அடைந்தவர்களுக்குப் பரமபதமான வீடு பேறு எளிதாகும் என்று கூறப்படுகிறது.

நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவை அனைத்தும் -அல்லல் எனத்
தோற்றி எரி தீயில் சுடுமேல் அவர்க்கு எளிதாம்
ஏற்றரும் வைகுந்தத்து இருப்பு -19-

பதவுரை:-

நல்ல புதல்வர்-நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள்
மனையாள்-நற்குண நற் செய்கையுடைய வாழ்க்கைத் துணைவி
நவையில் கிளை -குற்றமில்லாத உறவினர்கள்
இல்லம் -குடியிருப்புக்கு ஏற்ற வீடு
நிலம்-பொன் விளையும் பூமி
மாடு-வள்ளல் பெரும்பசுக்கள் (குடம் குடமாகப் பால் கறக்கும் பசுக்கள்)
இவை யனைத்தும்-இவை யெல்லாம்
அல்லலென-துன்பம் தருவன என்று
தோன்றி -மனதுக்குத் தோன்றி
எரிதீயில்-கொழுந்து விட்டு எரிகின்ற தீபோல
சுடுமேல் -எரியுமாகில் (எரிக்குமாகில்)
அவர்க்கு-அத்தகைய நிலை பிறந்தவர்களுக்கு
ஏற்றரும் -தன் முயற்சியால் பெறுதற்கரிய
வைகுந்தத்து-அழிவில்லாத வீட்டு உலகத்தில் போய்
இருப்பு-அடியார் குழாங்களுடன் கூடியிருக்கும் இருப்பு
எளிதாம் -மிக எளிதாகும்

நல்ல புதல்வர் –
பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய மக்கள் அதாவது குணக்கேடராய்
துன்பம் தருபவராய் இல்லாமல் தங்கள் பிரிவு பொறுக்க மாட்டாத
நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள் என்று பொருள்.

மனையாள் – நல்ல என்று மேற்கூறிய அடைமொழியை இங்கு கூட்டிக் கொள்க
“நல்ல மனையாள்” என்றவாறு நற்குணமுடையவளாய்

“மனைத்தக்க மாண்புடையளாகித் தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (திருக்குறள்) என்றபடியும்,
அறவோர்க்களித்தலும், அந்தணர் ஓம்பலும், துறந்தோர்க்கெதிர்தலும், தொல்லோர் மரபில் விருந்தெதிர் கோடலும் (சிலம்பு)
என்ற வாய்மொழிக்கிணங்க
துறந்தார்ப் பேணலும், விருந்தயர்தலும் வறியார் மாட்டு அருளுடைமையும் முதலிய நற்குணங்களும்,
வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், சமையல் தொழிலில் வண்மையும்,
தான, தர்மங்கள் செய்தலும் முதலிய நற்குண செய்கைகள் பொருந்திய மற்றும் கணவன் கருத்தறிந்து ஒழுகும் மனையாள்.

நவையில் கிளை – நவை – குற்றம், இல் – இல்லாத, கிளை – உறவு

அதாவது, பெயரளவில் உறவினராயும் செயல்பாட்டில் பகைவராயும் இல்லாமல்
அவர்களோடு உடனுறைதல் தகும் என்று ஆசைப்படத்தக்க குற்றமற்ற உறவினர்கள் (இல்லம்).
(கீழ்ச்சொன்ன “நல்ல” என்ற அடைமொழியை இது முதலாக மேல் வருவனவற்றோடும் கூட்டுக.)

நல்ல இல்லமாவது –
கண்ட கண்ட இடமெங்கும் இடிபாடு உடையதாய் குடியிருப்புக்குத் தகுதியற்றதாய் இல்லாமல்
பல நிலைகள் கொண்ட இடங்களும் உப்பரிகைகளும் கூடிய மிக அழகான குடியிருப்பு.

நல்ல நிலமாவது –
உவர் நிறைந்ததாய் ஒரு விதையும் முளைக்காத நிலமாய் இல்லாமல் உரமிடுதலின்றி
பயிர் தானே வளர்ந்து ஒன்றுக்கு நூறாக கட்டுகலம் மிக விளையக்கூடிய நல்ல நிலங்கள்
‘விளைவதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று’ (குறள்) என்று கூறியது போன்ற நிலங்கள்.
விடிந்தபோது நாற்று நட்டு மாலைப்போது வந்து பார்த்தால் கைகவித்துப் பார்க்கும்படி பயிர்களை விளைவிக்கும் நல்ல நிலங்கள்.
ஒரு நாற்று நிலம் முழுதும் பனைத்தெழும் விளைநிலங்கள்
‘செய் கொள் செந்நெல் கரும்பொடோங்கு’
‘புரவி முகம் செய்து செந்நெல்’ என்று கட்டுரைக்கும்படி வளங்கொழிக்கும் நன்செய், புன்செய் நிலங்கள்.

நல்ல மாடாவது –
கொடுவையாய் (கொடூரமாய்) அதாவது கட்டவும் பிடிக்கவும் முடியாமல் கொண்டியி