Archive for the ‘ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்’ Category

”ஸ்ரீ” சப்தார்த்தம்–

January 5, 2022

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-த்வய பிரகரணம் -பூர்வ கண்ட விவரணம் –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —

ஆக –
திருமந்த்ரார்த்தத்தை விசதீ கரிக்கிற த்வயத்திலே
பூர்வார்த்தம் -பத த்ரயாத் மகமாய்
தஸ்மான் நியாச மேஷாம் தபசாமதிரிக்த மாஹூ -என்றும்
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-என்றும்
சோஹம் த்வாம் சரணம பாரமப்ரமேயம் சம்ப்ராப்த -என்றும்
சரணம் தேவ்ரஜம் விபோ –சரண்யம் சரணம் யாதோ கோவிந்தம் நாவசீததி –சரணம் வ்ரஜ –
மாமேகம் சரணம் வ்ரஜ -இத்யாதிகளிலே
முமுஷூவுக்குக் கர்த்தவ்யமாகச் சொல்லப் படுகிற பிரபத்தியையும் –
பிரபதவ்ய விஷய விசேஷத்தையும் –
அத்தை அச்சமற ஆஸ்ரயிக்கலாம் படி பண்ணித் தரும் புருஷகார விசேஷத்தையும் -சொல்லுகிறது –

—————————————————————————————-

ஸ்ரீ சப்தார்த்தம் –
அதில் பத த்ராயாத் மகமான பிரதம பதத்தில் ஸ்ரீ சப்தம் -புருஷகாரத்தைச் சொல்லுகிறது –
உபாயம் உபேயயார்த்த மாய் இருக்கச் செய்தேயும் –
வ்யுத்பத்தி வேளை இன்றியிலே -அனுஷ்டான வேளையாய்-
உபாய அனுஷ்டான அனந்தரம் உபேய சித்தி யாகையாலே
பிரதமோபாத்த மானவோபாதி இவ் யுபாய ஸ்வீகாரத்துக்கு முன்னே வேணுமே சேர விடும் புருஷகாரமும் –
ஆகையாலே பிரதமத்திலே பிருஷகார பாவத்துக்கு ஏகாந்தமான ஸ்வபாவ விசேஷங்களோடு கூடி இருக்கிற
வஸ்து விசேஷத்தை நிர்தேசிக்கிறது – ஸ்ரீ சப்தம்

அந்த ஸ்வ பாவங்கள் ஆவன –
புருஷகாரமாக நினைக்கிற வஸ்துவைப் பற்றும் போது வேறு ஒரு புருஷகாரம் தேட வேண்டாத படி
இவனோடு ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும்-
இவன் நினைக்கிற விஷயத்தோடு சேர்க்கும் போது இவன் தன்னோ பாதி தனக்கு வேறு ஒரு புருஷகாரம் வேண்டாதபடி
அவ்விஷயத்தோடே ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும் –
ஆக இரண்டும் இறே புருஷகார வஸ்துவுக்கு அபேஷிதம்-

அவை இரண்டு ஸ்வ பாவ விசேஷத்தையும் –
ஸ் ரிங் -சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -ஸ் ரயதே-என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலுமாக பிரகாசிப்பிக்கிறது –

வ்யுத்பத்தித் த்வயத்தாலும் –
சேவிக்கப் படா நின்றாள் –
சேவியா நின்றாள் -என்று
சேவா விஷயமாய் இருக்கும் –சேவைக்கு ஆஸ்ரயமுமாய் இருக்கும் என்கிறது –

ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் –
அஸ்யே ஸாநா ஜகத -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் வ்யதிரிக்த சகல பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரியாய் இருக்கையாலே
த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும் சேவிக்கப் படா நிற்கும் –
ஆகையாலே சேவா விஷய பூதையாய் இருக்கக் கடவள் –

விஷ்ணு பத்நீ –
விஷ்ணோஸ் ஸ்ரீ ரீ –
ஹ்ரீஸ்ஸ தே லஷ்மீஸ்ஸ பத்ன்யௌ-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பத்நீத்வேந ஈஸ்வரனுக்கு சேஷ பூதையாய் இருக்கையாலே அவனை சேவியா நிற்கும் —
ஆகையாலே சேவைக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –

ஆன போது இறே -கர்ம கர்த்ரு பாவ விரோதம் இன்றிக்கே ஒழிவது –
மாதாவாகில் பிரஜைகளுக்கு ஸ்வாமிநீயுமாய்
பர்த்தாவுக்கு சேஷ பூதையுமாய் இறே இருப்பது –
த்வம் மாதா சர்வலோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா -என்னக் கடவது இறே –

ஆக –
மாத்ருத்வத்தாலே சேதன ரோடு நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்-
பத்நீத்வேந ஈஸ்வரனோடே நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்
புருஷகார பூதை பிராட்டி என்னும் இடத்தை வ்யுத்பத்தித் த்வயத்தாலும் சொல்லிற்று ஆயிற்று –

புருஷகார பாவத்துக்கு ஏகாந்தமாக இவளுக்கு சொன்ன உபய சம்பந்ததத்துக்கும் யுண்டான
பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது –
ஸ்ருணோ தீதி ஸ்ரீ –
ஸ்ராவயதீதி ஸ்ரீ -என்கிற நிருத்தம்-

ஸ்ருணோதி -என்று கேட்கும் என்கையாலே –
சேதன ரோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –
ஸ்ராவயதி-என்று கேட்பியா நிற்கும் என்கையாலே
ஈஸ்வரனோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –

அதாவது –
இவன் -ஈஸ்வரத்வம் இல்லை -என்று எழுத்திடும் என்றும் –
இவன் உரு மாயாதபடி இரா மடமூட்டுவாரோ பாதி
கண் காணாமல் நோக்கிப் போருவது-

கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய்க் கிடக்க –
அபேஷா நிரபேஷமாகவே தயமான மனவாய்க் கொண்டு
கரண களேபரங்களைக் கொடுப்பது –

பின்பு –
இவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி யுண்டாகைக்காக அநு பிரவேசிப்பது –

பின்பு
அஸூர ராஷசாதிகள் காலிலே துகை யுண்ணும் போது –
நாட்டில் பிறந்து -படாதன பட்டு
ராம கிருஷ்ணாதி ரூபேண மார்பிலே அம்பேற்று எதிரிகளை இடறிக் கொடுப்பது –

நம்மைப் பெருகைக்கு ஈடாய் இருப்பதொரு அறிவுண்டாமோ -என்னும் நோயாசையாலே –
வேதங்களையும் வைதிகரையும் ப்ரவர்த்திப்பித்து

இவை படுகிற நோவைக் கண்டு –
இவர்களிலும் ப்ருசம் பவதி துக்கித -என்று திரு உள்ளம் மிகவும் உடை குலைப் படுவது –

சாதனங்களாகக் கொடுத்த கரண களேபரங்களே பாதகங்கள் ஆனால் அவற்றைக் கொண்டு
அத பதியாமைக்காக அவற்றை ஓடித்திட்டு வைப்பது

பின்பு -ஸ ஏகாகி ந ரமேத -என்று
நித்ய விபூதி யுக்தனான தான் இவற்றை ஒழியச் செல்லாமை
யுடம்பு வெளுப்பதாம் படியான நிருபாதிக பந்தமும்

ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே
இவை படுகிற நோவு பொறுக்க மாட்டாமையாலே
நாம் இழிந்து நோக்குகைக்கு சிறிது இடம் பண்ணித் தருவது காண்-என்று அவசர ப்ரதீஷனாவது

அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -என்று –
நான் அழிந்தே யாகிலும் ஆஸ்ரிதரை ரஷிக்கக் கடவேன் -எனபது –

தோஷோ யத்யபி தச்யஸ்யாத் ந கதஞ்சன -சமோஹம் சர்வ பூதேஷு என்னும் ஸ்வ பாவ விசேஷமும் –
ஏவ மாதிகள் அடைய ஆஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் பக்கலிலே சம வேதமாய் இரா நிற்கச் செய்தேயும்
அப்படிப் பட்டிருக்கிற அவனுடைய வாத்சல்ய சீதளமான திரு உள்ளத்தை –
க்ரோத மாஹாரயத் தீவரம் -என்கிறபடியே –
க்ரோதத்துக்கு இரையாக்கிக் கடல் கொதித்தாப் போலே கொதிக்கும் படி பண்ணுவது –

ப்ரியம் வத-என்கிறபடியே
ம்ருத சஞ்சீவிநியான வாக்ம்ருதத்தை -ஷிபாமி -ந ஷமாமி -ஹன்யாம்-என்கிறபடியே
விஷ தாரை போலே ஸ்ரவண கடுகமாம் படி பண்ணுவது –

சர்வ உஜ்ஜீவன ஹேதுவான அவனுடைய திவ்ய வியாபாரங்களை நரகாதி களிலே தள்ளிக் குட்டிக் கொலையாக
நிறுத்து அறுத்துத் தீர்த்துகையிலே அதி க்ருதமாம்படியும்
அநாதி காலம் பண்ணிப் போருகிற பகவத அபசார -பாகவத அபசார -அசஹ்ய அபசார நாநாவித
அநந்த அபசார அனுசந்தானத்தாலே குடல் கரிந்து
அநாதி காலம் கர்மங்களை நிறுத்து அறுத்துத் தீர்த்துப் போருகிற அவனை ஆஸ்ரயிக்கப் புகுகிறது –

அவன் உதிரக் கை கழுவாத படி பண்ணிப் போந்த நான் ஆஸ்ரயிக்கப் புகுகிறேன்
அதுக்குக் கை தொடுமான கர்மம் இலச்சினைப் படியே குறி அழியாமல் கிடக்கிறது -என்கிற பயாதி சயத்தாலே தேங்கி
சம்சாரத்தில் வெம்மையும் பகவத் விஷயத்தில் வை லஷண்யமும் வடிம்பிடுகையாலே பண்டு போலே
ஆஸ்ரயண விமுகன் ஆக மாட்டாதே துஷ்கரத்வாதிகளாலே சாதனாந்தரங்களில் காலிடக் கூசி
புறம்பே போக்கடி அற்றுத் தெகிடாடுகிற இச் சேதனன்

ஈஸ்வரன் திரு உள்ளத்தில் நடையாடுகிற அழல் தீயை ஆற்றி -நம்மைச் சேர விடுகைக்கு
நம்மோடும் அவனோடும் நிருபாதிக சம்பந்தத்தை யுடையளாய்-
ந கச்சின் ந அபராத்யதி -என்னும்

இவளை ஒழியப் புகு வாசல் இல்லை -என்று காக வ்ருத்தாந்தாதி முகத்தாலே அறுதி இட்டு
ப்ரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று
புருஷகார நிரபேஷமாக அஞ்சலி மாத்ர ஸூலபையான இவளை வந்து கிட்டி

மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்ரா பராதாஸ் த்வயா ரஷந்த்யா பவ நாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா-என்கிறபடியே
புறம்புள்ள பொருத்தம் அடைய அற்று ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வ அபதாரத்தாலே அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜநநியான தேவரீர் திருவடிகள் ஒழியப் புகல் இல்லை –

இனி நான் ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரஷிதன் ஆதல் –
அவனுக்கு ஸ்வ தந்த்ர்யா பாத்ரமாய் நாசத்தோடே தலைக் கட்டுதல் ஒழிய
இளைப்பாறுகைக்கு இடம் இல்லாத படி -அனன்ய கதி -இனி அடியேனுக்கு ஹிதம் இன்னது என்று அறிந்து
ரஷித்து அருளுகை தேவரீருக்கே பரம் -என்று இவன் சொன்ன வார்த்தையைக் கேட்கையும் –

அதுக்கு மேலே வெந்நீருக்கு குளிர் நீர் போலே நிரந்குச ஸ்வா தந்தர்யத்தாலே –
அபிதா பாவ கோபமாம் -என்கிறபடியே –
அநபிபவ நீயனான ஈஸ்வரனைத் தன்னுடைய போக்யதாதி சயத்தாலே பதமாக்கி –

நாயந்தே
இச் சேதனனை அங்கீ கரித்து அருளீர் -என்னும் –

ஆவாதென்-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா-என்று
நம்முடைய ஆஜ்ஞா ரூபமான சாஸ்திர மரியாதையை அதிலங்கித்து நம் நெஞ்சு புண்படும்படி
தீரக் கழிய அபராதம் பண்ணிப் போந்தவன் அல்லனோ –
இவனை அங்கீ கரிக்கை யாவது என்-என்னும் ஈஸ்வரன் –

அவனுடைய பூர்வ அபராதங்களை உம்முடைய பொறைக்கு இலக்காக்கி ரஷித்து அருளீர் -என்னும் பிராட்டி –

பொறையை நோக்குகைக்காக சாஸ்திர மர்யாதையைக் குட நீர் வழியவோ-என்னும் ஈஸ்வரன் –

சாஸ்திர மர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வா பாவிகமான ஷமா தத்வத்தைக் குட நீர் வழியவோ -என்னும் பிராட்டி –

ஷமையை நோக்கில் சாஸ்திர மர்யாதை குலையும் -சாஸ்திர மர்யாதையை நோக்கினால் ஷமா தத்வம் குலையும் –
இரண்டும் குலையாது ஒழிய வேண்டும் -செய்யப் படுவது என் -என்னும் ஈஸ்வரன் –

கிங்கர்த்தவ்ய தாகுலனாய் இருந்தால் அத்தனையே –
அவை இரண்டும் குலையாதபடி வழி சொல்லுகிறேன் –

அப்படியே செய்தருளீர் -என்னும் பிராட்டி –

இரண்டும் குலையாமல் இச் சேதனனை நோக்க வழி யுண்டாமாகில் நமக்குப் பொல்லாததோ –
சொல்லிக் காண்-என்னும் ஈஸ்வரன் –

ஆனால் சாஸ்திர மர்யாதை விமுகர் விஷயம் ஆக்குவது –
உம்முடைய ஷமையை அபிமுக விஷயம் ஆக்குவது
இரண்டும் ஜீவித்ததாய் அறும்-என்னும் விஷய விபாகம் பண்ணிக் கொடுக்கும் பிராட்டி –

அத்தைக் கேட்டு -அழகிய விபாகம் -என்று
இச் சேதனனை அங்கீ கரித்து அருளும் ஈஸ்வரன் –

ஆக –
இப்படி சாபராத ஜந்துவை ஈஸ்வரன் அங்கீ கரித்து அருளும்படியான வார்த்தைகளைக் கேட்பித்து அருளுகையும் –

————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ பரந்த படி -த்வய -பிரகரணம்

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

——————————————————————————–

ஸ்ரீ சப்தார்த்தம்
1- அதில் ஸ்ரீ மத் என்கிற அம்சத்தாலே புருஷகாரத்தையும் –
புருஷகாரத்தினுடைய நித்ய சந்நிதியையும் சொல்லுகிறது –
ஸ்ரீ சப்தம் -ஸ்ரீ யதே ஸ்ரயதே -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும்
பிராட்டியுடைய புருஷகார பாவத்துக்கு உபயுக்தங்களான குண விசேஷங்களைச் சொல்லுகிறது –

அக்குண விசேஷம் ஆகிறது உபய சம்பந்தம் –
அதில் கர்மணி வ்யுத்பத்தி சேதனனோடு உண்டான பந்த விசேஷத்துக்கு பிரகாசகமாய் இருக்கும்
கர்த்தரி வ்யுத்பத்தி ஈச்வரனோட்டை சம்பந்தத்துக்கு பிரகாசகமாய் இருக்கும் –

சேதனனோடே மாத்ருத்வ லஷண பந்தம் உண்டாய் இருக்கும் –
ஈஸ்வரனோடே மஹிஷீத்வ லஷண பந்தம் உண்டாய் இருக்கும் –

மாத்ருத்வ லஷண பந்தத்தாலே புருஷகார நிரபேஷமாக சகல சேதனர்க்கும் ஆஸ்ரயணீயையாய் இருக்கும் –
மஹிஷீத்வ பிரயுக்தமாக ஈஸ்வரனோடே நித்ய சம்யுக்தையாய் இருக்கையாலே புருஷகார நிரபேஷமாக ஈஸ்வரனை சேவியா நிற்கும் –

யஸ்யா கடாஷணம் அநு ஷணம்-இத்யாதியாலே
வ்யுத்பத்தி த்வயத்தாலும் உண்டான அர்த்தத்தை ஆழ்வான் அருளிச் செய்தார்

ஸ்ருணோதி ஸ்ராவயதி என்கிற நிறுக்தி விசேஷத்தாலே
ஸ்ரீ யதே ஸ்ரயதே என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பலிதமான அர்த்த விசேஷத்தைச் சொல்லுகிறது
ஸ்ருணோதி என்றது கேளா நிற்கும் என்றபடி –
ஸ்ராவயதி என்றது கேட்பியா நிற்கும் என்றபடி –

ப்ரதீப்த சரணத்தில் பொருந்தாதாப் போலே சம்சாரம் அடிக் கொதித்து
பகவத் விஷயத்தை கிட்டி யல்லது தரிக்க மாட்டாத படியான தசா விசேஷத்தை யுடையனாய் –
பகவத் சமாஸ்ரயண உன்முகனான சேதனன் –
யத் ப்ரஹ்ம கல்ப இத்யாதிப் படியே கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும்
சிறிது வரையிட்டுக் காட்டக் கடவதல்லாத படி க்ரூரங்களாய் இருக்கிற
அக்ருத்யகரண க்ருத்யாகரண பிரமுகங்களான அபராத விசேஷங்களை கரண த்ரயத்தாலும்
அநாதி காலம் கூடு பூரித்து ஈஸ்வரனுடைய -ஷிபாமி – ந ஷமாமி -என்கிற
வெட்டிய சொற்களுக்கு விஷயபூதனாய் போந்தான் ஒருவன் ஆகையாலே
அநாதி கால ஆர்ஜிதங்களான தன்னுடைய அபராத விசேஷங்களையும் –
ஈஸ்வரனுடைய நிரந்குச ஸ்வா தந்த்ர்யத்தையும் அனுசந்தித்து பீதனாய்
பிராட்டியுடைய நிரவதிகமான காருண்யாதி குணங்களையும் தன்னோடு அவளுக்கு உண்டான பந்த விசேஷத்தையும் புரச்கரித்து
சாபராதனாய் அநந்ய சரணனாய் இருக்கிற எனக்கு அபராத நிவ்ருத்தி மாத்ரத்திலே ப்ரசன்னையாய்
அசரண்ய சரண்யையாய் இருக்கிறவள் திருவடிகளை ஒழியப் புகல் இல்லை என்று
இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தையை தானே கேளா நிற்கும் –
ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்யும் வார்த்தையை அவன் கேட்கும்படி பண்ணா நிற்கும் –

இச் சேதனனுக்கு இருவரோடும் பந்தம் உண்டாய் இருக்க அவனுக்கு அவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில்
மாத்ருத்வ நிபந்தனமான வாத்சல்யாதி ரேகத்தாலும்
ஈச்வரனோபாதி காடின்ய மார்த்தவங்கள் கலந்து இருக்கை யன்றிக்கே கேவல மார்த்தவமேயாய்
சாபராதரான சேதனரை அபராதா நுகுணமாக நியமிக்கும் இடத்தில்
மர்ஷயாமீஹ துர்பலா -என்கிறபடியே அசக்நையாய் இருக்கையாலும்
தவம் நீசச்சவத் ஸ்ம்ருத என்கிறபடியே தன் திருவாயாலே இப்படி புல்லிதமான வார்த்தையை அருளிச் செய்ய வேண்டும்படி
விபரீத புத்தியாய்-தன் திறத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ணி
ராவணோ லோக ராவண -என்கிறபடியே இருந்ததே குடியாகக் கையெடுத்துக் கூப்பிட வேண்டும்படி
பர ஹிம்சையே யாத்ரையாக யுடையனாய் இருக்கிற
ராவணனுடைய தண்ணிமையைப் பாராதே
அவனைக் குறித்து -தேன மைத்ரி பவது -என்றும் –
மித்ர மௌபயிகம்கர்த்தும் -என்றும் ஹிதோபதேசம் பண்ணுகையாலும்

ராஷசிகள் ராவணன் பராஜிதனாகவும் பெருமாள் விஜயிகளாகவும் ஸ்வப்னம் கண்டு அத்தாலே பீத பீதைகளாக -த்ரிஜடை-
அலமேஷா பரித்ராதும் ராஷச்யோ மஹதோ பயாத்-என்று
நாம் விடாதே இருந்து தர்ஜன பர்த்சனங்களைப் பண்ணி நலிய
நம்மாலே நலிவு படுகிறவள் தானே நமக்கு ஆபத்து உண்டான காலத்திலேயே
நம்மைக் கைவிடாதே ரஷிக்கும் என்று சொல்லுகையாலும்

இப்படி பிறர் சொன்ன அளவன்றிக்கே பிராட்டி தானும் இவர்கள் நோவுபடுகிற சமயத்தில்
பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள்
நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச வேண்டா -என்று அபய பிரதானம் பண்ணுகையாலும்

இப்படி வ்யவஹார மாத்ரமேயாய் அனுஷ்டானம் விபரீதமாகை யன்றிக்கே திருவடி வந்து
ராவணன் பட்டான் -பெருமாள் விஜயிகளானார்-என்று
விண்ணப்பம் செய்த வார்த்தையைக் கேட்டு இவன் பண்ணின உபகாரத்துக்கு
சத்ருச பிரத்யுபகாரங்கள் காணாதே தடுமாறுகிற அவஸ்தையிலே

பத்து மாசம் தேவரீரை தர்ஜன பர்த்சனங்கள் பண்ணி நலிந்து போந்த இப்பெண் பயல்களை
நான் நினைத்த வகைகளிலே நலியும்படி அவர்களைக் காட்டித்தர வேணும்
நான் முன்பு தேவர் திருவடிகளிலே வந்த போது இவர்கள் பண்ணின நலிவைப் பொறுக்க மாட்டாதே நொந்து போனேன் –
இப்போது இவர்களை நிரசிக்கைக்கு ஒரு ப்ரதிபந்தகம் இல்லை –
இவர்களை ஐம்பது அறுபது வகைகளாலே கொல்லும் வகை சொல்லா நின்றேன் –
இவனுக்கு நாம் பரிசிலாகக் கொடுக்கலாவது என் என்று தடுமாற வேண்டா –
இவர்களை நிரசிக்கும் படி என்கையிலே காட்டித் தருமது ஒழிய
எனக்குப் பண்ணும் பிரத்யுபகாரம் வேறில்லை என்று விண்ணப்பம் செய்ய

திருவடி பண்ணின உபகாரத்தையும் ராஷசிகள் பண்ணின அபகாரத்தையும் பாராதே
அப்போது அவர்களுடைய அச்சம் ஒன்றுமே திரு உள்ளத்திலே பட்டு
அவர்களுடைய கண் குழிவு காண மாட்டாதபடியான மார்த்தவத்தாலே
ந கச்சின்னா பராத்யதி -என்றும் -க குப்யேத்-என்றும் -துர்ப்பலா -என்றும்
திருவடியோடே மன்றாடி ஆர்த்ராபராதைகளான ராஷசிகளை ரஷிக்கையாலும்

இளைய பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது பெருமாள் நிறுத்திப் போகத் தேடின அளவிலே
சீதாமுவாச -என்று பிராட்டி புருஷகாரமாகப் பெருமாளோடு கூடப் போகையாலும்

ஸ்ரீ விபீஷணப் பெருமாள் ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ என்று ஜீவிக்க வேண்டி இருந்தாயாகில்
பெருமாள் தம்முடைமையும் தாமுமாகச் சேர இருக்கும் படி
பண்ணப் பார் என்று ராவணனைக் குறித்து பெருமாளும் பிராட்டியும் சேர இருக்கைக்கு உறுப்பான
வார்த்தைகளைச் சொல்லியும்
த்ரிஜடையைப் பிராட்டிக்கு வ்யசனங்களில் உசாத் துணையாக வைத்தும் இப்படி
பிராட்டி முன்னாக பெருமாளை சரணம் புகுகையாலும்

மஹா ராஜர் திருவாபாரணம் முன்னாகப் பெருமாளைப் பற்றுகையாலும் –
காகம் அபராதத்தைப் பண்ணி வைத்து பிராட்டி சந்நிதியிலே தலை யறுப்புண்ணாதே பிழைக்கை யாலும்

ராவணனுக்கு அத்தனை அபராதம் இன்றிக்கே இருக்க பிராட்டி சந்நிதி இல்லாமையாலே தலை யறுப்புண்கையாலும்

பின்னையும் இளைய பெருமாளைக் குறித்து பிராட்டி தன்னை வனத்திலே விட்டுப் போகா நிற்க
தம்பிமாரோடே ஒக்க நாட்டை ரஷிக்க விண்ணப்பம் செய்யும் என்று அருளிச் செய்கையாலும்

மற்றும் இவை தொடக்கமான ஸ்வ பாவ விசேஷங்கள் எல்லாவற்றாலுமாக
ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் போது இவள் புருஷகார பூதையாகக் கடவள் –

முக்யமாக எம்பெருமானை ஆஸ்ரயிக்கை யாவது -பிராட்டி முன்னாக ஆஸ்ரயிக்கை –
ஆச்சி சிறியாத்தானுக்கு பகவச் சேஷமாய் அவற்றை நெடும் காலம் அகன்று போந்த இவ்வாத்மாவை
எம்பெருமானோடே இணைக்கக்குப் பற்றாசாக நமக்குப் பிராட்டி யுளள் என்று நிர்ப்பரனாய் இரு என்று அருளிச் செய்தார் –

சர்வஜ்ஞனாய் சர்வசக்தியாய் இருக்கும் ஈஸ்வரன் உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -என்கிறபடியே
ஹ்ருதிச்தனாய்க் கொண்டு
சேதனர் பண்ணும் அபராதங்களைக் குறித்து அவற்றுக்கு ஈடாக நியமிக்கையாலே
சாபராதரான சேதனர் சரண உக்தியைப் பிரயோகித்தால் அதுவும் அபராத கோடிகடிதமாய் இருக்கும் இறே

ஆகையாலே அநாதி காலம் தான் பண்ணிப் போந்த அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்யும் போது
அந்தபுர பரிகரமாய் நின்று விண்ணப்பம் செய்ய வேண்டுகையாலே –
சர்வஜ்ஞனான ஈஸ்வரனையும் கூட நிருத்தரனாம் படி பண்ணவற்றான தன்னுடைய உக்தி விசேஷங்களாலும் –
பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -என்றும் –
மலராள் தனத்துள்ளான் -என்றும் –
மா மலர் மங்கை மண நோக்கமுண்டான் -என்றும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -என்றும்
தன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தாலும்
மற்றும் உண்டான உசித உபாய விசேஷங்களாலும்
சேதனனுடைய அபராதங்கள் ஈஸ்வரன் திரு வுள்ளத்தில் படாதபடி பண்ணி
அநாதி காலம் அகன்று போந்த இருவரையும் சேர்க்கக் கடவதாய் இருக்கிற பிராட்டி ஸ்வரூபம் சொல்லிற்று

——————————————————————————————————————-

”ஸ்ரீ” சப்தார்த்தம்.
” ஸ்ரீ ” என்று பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம்.
இச்சப்தத்துக்கு சாஸ்திரங்களில் ஆறுவிதமாக அர்த்தம் கூறப்படுகின்றது.

(1) அருவமான சேதன வஸ்துக்கள், உருவுடைய அசேதன வஸ்துக்கள் என்ற சகல வஸ்துக்களும் தன்னை ஆச்ரயித்திருக்க,

(2) தான் பகவானை அடைந்து, (அன்றிக்கே அந்த வஸ்துக்களை உள்ளே புகுந்து வ்யாபரித்து நின்று)

(3) அவை அலற்றுகிற வார்த்தைகளைத் தான் கேட்டு,

(4) அவற்றைப் பகவானும் கேட்கும்படி செய்து,

(5) பகவானை அடைய வொட்டாமலும், ஆச்ரயிக்க வொட்டாமலும் தடுத்துக்கொண்டு நிற்கிற பாவங்களைப் போக்கடித்து,

(6) சேஷபூதர்களான ஆத்மாக்களிடத்திலும் சேஷியான பகவானிடத்திலும் ஆக இரண்டு விஷயத்திலும் உண்டான
அன்பினால் சம்சாரிகளான நம்மை போக்யமான பகவானுடைய திருவடிகளைச் சேர்க்கிற
(அன்றிக்கே புருஷார்த்தத்துக்கு அநுகுணமான அருளைப்பண்ணுகிற) திருவே இலக்குமி.

அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் தான் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து அகற்றும் வினை விலக்கி
யிருதலை யன்புதனால் எமை இன்னடி சேர்த்து அருளும்
திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே –2–

அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் -சேதனம் அசேதனங்கள் ஆகிய அனைத்தும் தன்னை அடைந்து நிற்க
தான் அடைந்து -பிராட்டியாகிய தான் சர்வேஸ்வரனையும் சகல வஸ்துக்களையும் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து-சேதனர்கள் பயத்தால் கூறும் வார்த்தைகளை கேட்டும் அவற்றை எம்பெருமானை கேட்ப்பித்தும்
அகற்றும் வினை விலக்கி யிருதலை யன்புதனால் -சேதனர் எம்பெருமானார் இரண்டு பக்கங்களிலும் உள்ள அன்பினால்
எமை இன்னடி சேர்த்து அருளும் திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே

ஸ்ரீ -ஆறுவித வ்யுத்பத்திகள் உண்டே –
ஸ்ரேயதே அடையப்படுகிறாள் -ஸ்ரீயதே -அடைகின்றாள் –
அவனையும் அடைகிறாள் -சேதனர்களுக்குள் உள்ளும் புறமும் அடைகிறாள்
கேட்கிறாள்-கேட்ப்பிக்கிறாள்
கர்மங்களை நீக்குகின்றாள்-பரிபக்குவ நிலை கைங்கர்யம் செய்ய அருளுகிறாள்

இந்த மிதுனம் நம் மனத்தை விட்டு அகலாது நித்ய வாஸம் செய்து அருளுகின்றார்கள் என்றவாறு –

சேர்க்கும் திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப் பெரியோருக்கு
ஏற்கும் குணங்கள் இலக்காம் வடிவில் இணை யடிகள்
பார்க்கும் சரண் அதில் பற்றுதல் நம் நிலை நாம் பெரும்பேறு
ஏற்கின்ற வெல்லைகள் எல்லாக் களையற வெண்ணினமே –12-

இலக்காம் வடிவில் இணை யடிகள் -ஆஸ்ரிதர்கள் தியானிக்க இலக்காகும் திரு மேனியில் ஒரு பாகமாகிய இரண்டு திருவடிகளும்
பார்க்கும் சரண் -சேதனர்கள் பிரதானமாக கருதும் உபாயமான ஸ்ரீ மன் நாராயணனும்
நாம் பெரும் பேறு ஏற்கின்ற வெல்லைகள் -நாம் அடையும் பிரதான பலனான ஸ்ரீ மன் நாராயணனும்
கைக்கொள்ளும் சரம புருஷார்த்தமான பகவத் பாகவத கைங்கர்யங்கள் முதலியன –

1-சேர்க்கும் திருமகள்-ஸ்ரீ சப்தார்த்தம்
2-சேர்த்தியில் மன்னுதல் -மதுப்பின் அர்த்தம்
3-சீர்ப் பெரியோருக்கு ஏற்கும் குணங்கள்-நாராயண சப்தார்த்தம்
4-இலக்காம் வடிவில் இணை யடிகள் -சரண பதார்த்தம்
5-பார்க்கும் சரண் -சரணம் பதார்த்தம்
6-அதில் பற்றுதல் -பிரபத்யே யார்த்தம்
7-நம் நிலை -அகிஞ்சனர் அநந்ய கதிகள் ஆகிய நம் நிலை
8-நாம் பெரும் பேறு -ஸ்ரீ மன் நாராயண பதார்த்தம்
9-ஏற்கின்ற வெல்லைகள் -ஆய சப்தார்த்தம்
10-எல்லாக் களையற-நம சப்தார்த்தம்

வெண்ணினமே–ஆக இந்த பத்து அர்த்தங்களையும் அருளும் ஸ்ரீ த்வய அனுசந்தானம் செய்வதே காலஷேபம் -என்றவாறு –

அருள் தரு மடியவர்பான் மெய்யை வைத்து தெருள் தர நின்ற தெய்வநாயக! நின்
அருளெனுஞ் சீரோரரிவை யானதென இருள் செக வெமக்கோரின்னொளி விளக்காய்
மணிவரை யன்ன. நின் திருவுருவில் அணியமராக வலங்கலா யிலங்கி
நின்படிக்கெல்லாம் தன்படியேற்க அன்புடனுன்னோடவதரித்தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித் தீண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமருனை யணுக நின்னுடன் சேர்ந்து நிற்கு நின் திருவே.”– –(மும்மணிக்கோவை. 1)

[தெருள் – பூர்ண ஜ்ஞாநம் ;
அருள் எனும் சீர் – கிருபை என்கிற கல்யாண குணம் ;
ஓர் — ஒப்பற்ற;
அரிவை – பெண் (இருபது முதல் இருபத்தைந்தளவுமான பருவமுடையவள்);
இருள் – அஜ்ஞாநாத்யந்தகாரம் ;
செக – நசிக்க ;
விளக்கு — நிரதிசயாநந்த ரூபமான பகவத் ஸ்வரூபம்,
அபராதாநுகுணமாக தண்ட தரனான அவன்படி ஒளி விளக்கு,
பெரிய பிராட்டியின்படி இன் விளக்கு,
ஏகதத்வம் என்னலாம்படி ஸர்வாவஸ்தையிலும் ஸ்ரீ விசிஷ்டனான எம்பெருமான்படி இன்னொளி விளக்கு.
ஆகையாலே த்வத் விசிஷ்டையான பெரிய பிராட்டியாரின்படி ஓரின்னொளி விளக்கு ;
மணிவரை – மரகதமலை ;
திருவுருவில் – திருமேனியில் ;
ஆகம் – திருமார்பு;
அலங்கலாய் — மாலையாய் ;
இலங்கி – விளங்கி ;
நின்படிக்கெல்லாம் – என்னென்ன யோனியுமாய்ப் பிறக்குமுன் வகைகளுக்கெல்லாம் ;
அன்புடன் – இருதலையன்புதனால்.) என்றும் ;

வினை விடுத்து வியன் குணத்தா லெம்மையாக்கி வெருவுரை கேட்டவை கேட்க விளம்பினாளும்
தனையனைத்து மடைந்திடத் தானடைந்து நின்ற தன்றிரு மாதுடனிறையுந் தனியா நாதன் -(அமிருதாசுவாதினி. 8) –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த – ஸ்ரீ ஞான சாரம்–ஸ்ரீ பிரமேய சாரம் -தனியன் வியாக்யானம் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள்

December 19, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும்,
துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும்,
தமது ஞான ஸார, ப்ரமேய ஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான
அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன்.

——–

ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த் தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும்,
நான்காவது நிலையான துறவறத்தை மேற்கொண்டவருமான அருளாள மாமுனியை வணங்குகிறேன்.

(ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம்)
யக்ஞ மூர்த்தி என்னும் பூர்வாசார பெயருடன் முன்னைய நிலையில்
எம்பெருமானாரோடு பதினெட்டு நாட்கள் நடத்திய வேதாந்த விசாரத்தில் தர்க்கம் செய்து
எம்பெருமானாரைச் சோர்வுறச் செய்கையில்,
பேரருளாளரான அத்திகிரி வரதராஜப் பெருமாள் கனவில் தோன்றி,
“எம்பெருமானாரே! நீர் சோர்வுற வேண்டா, உமக்குத் திறமையுடைய ஒரு நற்சீடனை உண்டாக்கிக் கொடுத்தோம்.
அவனை வெல்வீராக” என்று உரைத்த குருபரம்பரைத் தொடர்களை இங்கு நினைவு கூர்க.

(வேத சாஸ்திரார்த்த ஸம்பதம்) –
உடையவரோடு பதினெட்டு நாட்கள் தர்க்கம் பண்ணின திறமையாலும் ஞானஸார ப்ரமேயஸார நூல்களில்
வேதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து சாரமான கருத்துக்களை அழகிய வெண் பாக்களினால்
எடுத்துரைத்தமையாலும், இவரது சாஸ்திர புலமை நன்கு விளங்கும்.

(தேவராஜ முனிம்) –
தேவராஜனான பேரருளாளனுடைய திருவருளால் எம்பெருமானாருக்கு சீடரான பெருமையும்,
ஞான, பக்தி, வைராக்யங்களில் ராமாநுஜ முனிக்கு நிகராக விளங்கிய சிறப்பும் பற்றி
“அருளாள முனி” என்று திருநாமம் பெற்றமையும் உணரப்படுகிறது.

————-

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

நான்கு வேதங்களிலிருந்து உட்பொதிந்த ஆழ் பொருள்களையும், திருமந்திரத்தின் மெய்ப் பொருள்களையும்
ஞான ஸார ப்ரமேய ஸாரம் என்னும் நூல்களைக் கொண்டு அறிவைப் புகட்டியவரும்,
ஞானச் சுடர் விளக்காய் விளங்குபவரும், அருளாள மாமுனி என்னும் திருநாமம் உடையவருமான ஆசார்யருடைய,
அழகியதும், அனைவருக்கும் அடையத் தகுந்ததுமான அவரது திருவடிகளை அடைந்த பிறகு,
ஊழ் வினைகள் அழிவதற்கான வழியை அறிந்து கொண்டேன்.
ஊழ் வினையால் அறிவில் மயக்கம் ஏற்படுகிறது. அவ்வறிவு மயக்கத்தால் பெண்வழிச் சேரலில் துவழ்ச்சி ஏற்படுகிறது.
அத் துவழ்ச்சிக் காரணமாக அவர்களது சுருண்ட கருங்கூந்தலிலும் வேல் போன்ற பார்வையிலும் மனம் நெகிழ்கிறது.
அருளாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த பிறகு காமம் முதலிய
இக் குற்றங்களிலிருந்து நீங்குவதற்கு வழி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாராகிற ஆசார்யருடைய திருவடிகளைப் பற்றின பிறகு
அவர் அருளிச் செய்த ஞான ஸார ப்ரமேய ஸார ப்ரபந்தங்களால் அறிவுக்குத் தெளிவு பிறந்தது.
அதனால் பெண்களின் அழகிய கூந்தலிலும் வேல் போன்ற விழியிலும்
மனம் நெகிழும் தீய வினைகளை அழிக்கும் வழிகளை அறியப் பெற்றேன் என்று கருத்து.

பெண்ணாசையைச் சொன்ன இதில் மற்றும் உண்டான கோபம், உலோபம், மோகம், மதம், பொறாமை
முதலிய குற்றங்களும் அடங்கும்.
“காமம், வெகுளி, மயக்கம் இம் மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” என்ற திருக்குறளின் சொல்படி
மனிதப் பண்பாட்டை அழிக்கும் குற்றங்கள் ஆசார்ய கடாக்ஷத்தால் தீரும் என்பது பாடலின் அருங்கிய கருத்து.
இதனால் இவ்வாசிரியருடைய பெருமை கூறப்பட்டது.

————

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளி மண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே

பதவுரை

நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேசாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச் செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாள மா முனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக் கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக

நீள்நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக.
“என்றும்” என்ற சொல்லை
“நீங்காமல்” என்றும்
“நினைத்து” என்றும்
இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

அதாவது
“என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக.

பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப்
பிரமேயம் என்று பெயர்.
அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.

பிரமாணம் – அளக்கும் கருவி
பிரமேயம் – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம் – சுருக்கம்
மானம், மேயம் – சாரம் என்பர்

அதாவது பிரமாணம் திரும்ந்திரம்.
அதனுடைய பொருள் பிரமேயம்.
அப்பொருளின் சுருக்கம் பிரமேய சாரம் என்பதாம்.
நல்ல மறை என்பது போல நல்ல பிரமேய சாரம்
அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.

பாங்காக:
கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள்.
ஆகவே இந் நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
அதனால் இதற்கு பிரமேய சாரம் என்று பெயர்.

பரிந்தளிக்கும்:
அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும்
ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம்
நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.

அருளாள மாமுனி: என்பதால்
அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும்,
அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.
ஆதலால் “மா முனி” என்றும் அம் முனிவருக்குரிய உயரிய பண்பு.
யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது.
அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.
வணங்கும் பொழுது அத் திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக.
அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர்.

(அம்பதம்) என்ற இடத்தில்
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது.
ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற
தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.

அம்பதத்தை: “அம்” என்றால் அழகு.
பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது.
“ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும்.
மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம்.
இறைவனும் முனியும் ஒன்றானதால்.

புதுப் புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.

மன்: வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள்.
புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட
செழிப்பான இடம் என்றவாறு.
இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்கநெறி முதலியவற்றிற்கு ஏற்புடயதான இடம் என்பது புலனாகிறது.

புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.

பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை
மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்க கூறியவரும்
பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும்
அறிஞர்களுக்குத் தலைவரும் செருக்கு மில்லாதவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-1-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–

October 31, 2021

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

யதீந்திர மத தீபிகா :

ஸர்வம் வஸ்து ஜாதம் .
அவை ஜடம் + அஜடம் எனவாய்
பிரகிருதி, காலம் 2ம் ஜட வஸ்து.
நித்ய விபூதி, தர்மபூத ஞானம், ஜீவன், ஈஸ்வரன் இவை 4ம் அஜட வஸ்து ஆகும்.

இந்த அஜட வஸ்த்துக்கள் 4ல் முதல் இரண்டும், அதாவது நித்ய விபூதி, தர்மபூத ஞானம் 2ம் பிரத்யக் என்றும்,
ஜீவனும் ஈஸ்வரனும் பராக் என்றும்,

ஜடம், அஜடம், இரண்டும் திரவ்யத்திலும் ,
ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களும் அதிரவ்யங்களுமாய்
கீழ் கண்ட Chart மூலம் அறியலாம்.

வஸ்து பிரமாணம் (3) ; பிரத்யக்ஷம் + அனுமானம் + சப்தம்.
பிரமேயம் (7)
|
அதிரவியம் -; ஸத்வம் + ஸப்த + ஸம்யோகம்
| ரஜஸ் ஸ்பர்ச சக்தி
| தமஸ் ரூப
| ரஸ
| கந்தம்
திரவ்யம்
|
அஜடம் + ஜடம் ; பிரகிருதி (24) + காலம் (3)
|
பிரத்யக் + பராக் -; நித்ய விபூதி + தர்ம பூத க்ஞானம்
| தர்மி பூத க்ஞானம்
|
ஜீவன் + ஈஸ்வரன் ; பர +
| வியூக (4) +
| விபவ ; ஆவேசம் + அம்சம் + பூர்ணாவதாரம் | அந்தர்யாமி +
| அர்சை (106 +ஆழ்-ஆசா-அபிமான-அந்திம
| ஸ்தலங்கள்)
நித்யன்
முக்தன்
பத்தன்
|
புபுக்ஷு -; அர்த்தகாம பரன் + தர்ம பரன்
| |
| தேவதாந்த்ர பரன் + பகவத் பரன்
முமுக்ஷு
|
பரம மோக்ஷர்த்தி + கைவல்யார்த்தி
|
பிரபன்னன் + பக்தன்
|
பரமைகாந்தி + ஏகாந்தி
|
ஆர்த்தன் + திருப்தன்

—————–

ஜட வஸ்துவில் ஒன்றான பிரக்ருதி 23 தத்வங்களாய் பார்க்கப் படுகின்றன. அவை:
மூல பிரகிருதி. மஹான், (சாத்விக + ராஜச + தாமச ) அஹங்காரம் – 3
ஆகாசம், வாயு, அக்நி , ஜலம், பிருதிவி ஆகிற – 5
ஞான இந்திரியம் – சப்த, ஸ்பர்ச, ரூப ரச கந்தம் – 5
கர்மேந்திரியம் – காது , தோல், கண், நாக்கு, மூக்கு – 5
பஞ்ச தன்மாத்ரைகள் . சக்ஷுர், கிரண, ஷோத்ரிய, பாயு, உபஸ்தங்கள் – 5
இவற்றுக்குமேல் மனசு 24 வது தத்வம் . ஆத்மா 25. பரமாத்மா 26 வது தத்வம் என்றும் அறியவும்.

————–

பிரத்யக் + பராக்
என வஸ்துக்கள் ஐந்திரியமாகவும்; அதீந்த்ரிய மாகவும் காணக் கிடைக்கின்றன.

பிரமா ; உள்ளதை உள்ளபடி அறிகை பிரமா .
பிரமாணம்; பிரமா கரணத்வம் பிரமாணம். அதிசயித்த ஞானத்தை கால விளம்பம் இன்றி சாதித்துக் கொடுப்பது பிரமாணம்.

பிரமா -; ஞானம் ; லக்ஷியம்.
பிரமாணம் -; கருவி ; லக்ஷணம்.
பிரமேயம் ; பிரத்யக்ஷ, அனுமான, ஸப்த பிரமாணங்களால் அறியப் படுமவை பிரமேயம்.

பஞ்சேந்திரியங்களைக் கொண்டு நேராக உள்ளதை உள்ளபடி அறிய ஹேதுவாக இருப்பது பிரத்யக்ஷம்.

ஸவிகல்ப ஸாக்ஷத்காரம் ; இரண்டு, அதற்கு மேற்படவும் குணங்களை கிரஹிப்பது .
நிர்விகல்ப ஸாக்ஷத்காரம் ; பிரதம பிண்ட கிரஹணம் – விசேஷணங்களை சமூகமாக முதல் முறையாக அறிதல்.
சம்யோகம் -; இந்திரிய திரவ்ய சம்பந்தம் ஸம்யோகம்
சம்யுக்த சம்யோகம் -; திரவிய ஆஸ்ரய குணத்தை அறிகை .உ.ம். வர்ண கலாபமான மண் குடத்தின் வர்ணம் இன்னது என்று அறிகை.

நம்முடைய ஞானம் இந்திரிய ஸம்யோகத்தால் உண்டாவது -; அர்வாசீனம்.
ரிஷிகளுடைய ஞானம் யோக ஸம்யோகத்தால் உண்டாவது. -; அநர்வாசீனம் – ஸ்வயம் சித்தம்.
ஆழ்வார்களுடைய ஞானம் பகவத் அனுக்கிரஹ ஸம்யோகத்தால் உண்டாவது. – மயர்வற மதி நலமான பகவத் பிரசாதம்..

ஸம்ஸ்காரம் -; பிரத்யக்ஷத்தால் ஏற்படும் ஞானம்.
ஸ்மிருதி – பூர்வ அனுபவ ஜன்ய ஸம்ஸ்கார ஜன்ய ஞானம் ஸ்மிருதி.(நினவுப் பதிவு).
ஊகம் , சம்சயம், பிரதிபா, பிரமம் இவை அனைத்தும் பிரயக்ஷத்துள் அடக்கம்.
சம்ஸயம் -; இதுவா, அதுவா என்பது – ஸ்தம்போவா புருஷோவா என்கிற சந்தேகம்.
விபர்யயம் -; அன்யதா ஞானம் + விபரீத ஞானம் வஸ்து, குணம் இவைகளை மாறாடி நினைகை .
பிரமம் ; பாம்பை பழுதென நினைப்பிடுகை பிரமம்.
அசம்பவம் -; கூடாத அடையாளம் – காணலாக ஜீவனை காணும்படியானவன் ஜீவன் என்னல்.
ஸக்கியாதி -; உண்மை அறிவு. இந்த உண்மை அறிவால் அறியப்படும் அனைத்தும் உண்மை / சத்யம்.
அ+கியாதி =; சுக்தியை வெள்ளி என்று பார்க்கும் போது பிரத்யக்ஷத்தில் கிளிஞ்சல் இருந்தாலும்
அதன் பளபளப்பினால் வெள்ளியின் நினைவு வருகிறது.
இங்கே பிரயக்ஷமும், ஸ்ம்ருதியும் இருக்கின்றன. சுக்திக்கும் வெள்ளிக்கும் உள்ள பேதத்தை உணர முடியாத
அறியாமையோடு கூடிய ஞானம் அக்யாதி /அன்யதா கியாதி என்கிறான் மீமாம்ஸகன்.

ஆத்மாவின் ஞானம் ஒன்று தான் எங்கும் இருப்பது. அதற்கு விஷயமாக வெளிப் பொருள் எதுவுமில்லை.
சுக்தியானாலும், வெள்ளியானாலும் பார்க்கப்பதுவது ஞானம் தான் என்கிறான் யோகாசாரன் (பௌத்தன்). இது ஆத்மகியாதி.

சுக்த்தியில் வெள்ளி உண்டாகி பிறகு போய் விடுகிறது.
இப்படி வெள்ளி என்கிற ஞானம் உண்டாகி மறைவது அநிர்வநீயக்யாதி என்கிறான் அத்வைதி..

விசேஷணம் -; சிறப்பம்சம் , ஒன்றிலிருந்து மற்றதை வியாரவர்த்திக்கை / கழித்து வேறுபடுத்தல் பிரயோஜனம்.
உ.ம். கடம் என்றால் படத்வ பின்னம்.

சங்க : பீத : என்பது மருள் (அக்ஞானம்=குணத்தை மாறாடி நினைத்தல் ) – பார்ப்பவன் குறையே ஒழிய பொருளில் குறை இல்லை..
முத்துச் சிப்பியை வெள்ளி என்று அறிதல் மயர்வு (அன்யதா ஞானம்=வஸ்துவை மாறாடி நினைத்தல் ) பயன் பாட்டின் குறை.
மாறாக , தெருள் = பிரமா – வியவஹார பூர்த்தியோடு கூடிய ஞானம்.

——–

வேதாந்தம் ; விசேஷ ஸாஸ்த்ரம் .

வியாகரணம்
தர்க்கம்
மீமாம்சை இவை -; சாமான்ய ஸாஸ்த்ரம் .

உத்திஷ்ட ; எழு – Arise
ஜாக்ரத ; விழித்துக் கொள் – Awake and
பிராப்பியவரான் நிபோதித -; முயற்சி செய் – Stop not till the Goal is reached.
என்று ஞான ஸந்தர்சன கார்யம் விவேகம்.
ஐந்த்ரியத்தை பிரத்யக்ஷ த்தாலும், அனுமானத்தாலும் சாதிக்கலாம்.
அதீந்திரியமான பகவத் தத்வத்தை சப்த பிரமாணத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
பிரத்யக்ஷ அனுமானங்கள் ஐந்திரிக சாதன மாகையாலே.

———————————-

இது இப்படி, இது ஆனபடியாலே .
இது இப்படி இல்லை; இது இல்லாத படியாலே .
என்று யூகிப்பது அனுமானம்.

அனுமிதி -; பிரமிதி -; ஞானம் .
அனுமானம் -; கருவி (பிரமாணம்). ஆக அனுமிதிக்கு கரணம் அனுமானம். அப்படிப்பட்ட அனுமானம் பலிக்க :
ஹேது வியாப்தியால் இருக்க வேண்டும்.
பக்ஷத்தில் ஹேது தர்மம் இருக்க வேண்டும்.
ஸபக்ஷத்தில் கண்டிருக்க வேண்டும்.
ஹேது வியாவர்த்திக்கக் கூடாது.
ஹேது பிரத்யக்ஷத்தில் பாதிக்கப் பட கூடாது.
பிரதி பக்ஷம் இருக்கக் கூடாது.

வியாப்தி -; எங்கெல்லாம் புகை இருக்கிறதோ அங்கு நெருப்பு உண்டு என்று பொதுப்படுத்திக் கூறுவது வியாப்தி..
வியாபகம் -; ஆதிக்யம் உடையது. – அதிக இடத்தில் அதிக காலத்தில் இருக்கும்.
புகை இருக்குமிடம் எல்லாம் நெருப்பு உண்டு. ஆகையால் நெருப்பு வியாபகம். உ.ம். மடைப்பள்ளி. பூஜை அறை etc
வியாப்பியம் -; நியூனதையோடே கூடி இருக்கும். – குறைந்த இடத்தில், குறைந்த காலத்தில் இருப்பது.
நெருப்பு இருக்கும் இடமெல்லாம் புகை இருப்பதில்லை. ஆகையால் புகை வியாபியம். உ.ம். அயப்பிண்டம்.
சாகசர்யம் -; இது இருந்தால் அது உண்டு . புகை (வியாப்பியம்) இருந்தால் நெருப்பு (வியாபகம்) உண்டு
என்கிற நியத சாகசர்யம் என்பது -; நியத சாமான்யாதிகரண்யம்

பர்வதோ வன்னிமான், தூமத்வாத்.

இதில்
பர்வதம் – பக்ஷம். வன்னிமான் – சாத்யம் . தூமத்வாத் – ஹேது .
சாத்தியம் எதிலே சாதிக்கப் படுகிறதோ அது பக்ஷம்.
நெருப்பு மலையில் சாதிக்கப் படுவதால், மலை = பக்ஷம்.
எதை சாதிக்கிறோமோ அது சாத்தியம் .
மலையில் நெருப்பை சாதிப்பதால், நெருப்பு = சாத்தியம்.
எதனால் (எந்த காரணத்தைக் கொண்டு) சாதிக்கிறோமோ, அது ஹேது = லிங்கம் = சாதனம்.
புகையைக் கொண்டு மலையில் நெருப்பை சாதிப்பதால், புகை = ஹேது .

சபக்ஷம் -; எங்கெல்லாம் புகை இருந்ததோ அங்கெல்லாம் நெருப்பு இருந்ததாகக் காண்கிறோம்.. உ.ம். மலை, அடுப்பு, ஊதுவத்தி etc .
விபக்ஷம் -; நெருப்பாகிற வியாபகம் சேராத இடம் உ.ம். குளம்.
லிங்க பராமர்சம் ; புகை என்கிற அடையாளம் (ஹேது ) மலை என்கிற பக்ஷத்தில் இருப்பதாக காண்பது.

ஈர விறகு என்றால் புகையும்

1. அன்வய வியாப்தி . 2. வியதிரேக வியாப்தி. 3. அன்வய வியதிரேகி 4. பாவ வியாப்தி. 5. அபாவ வியாப்தி என ஐந்து வகை.

அன்வய வியதிரேகி -; அந்வயம், வியதிரேகம் இரண்டிலும் சொல்லலாம்.
கேவல அன்வயி -; அன்வயத்தில் மட்டுமே சொல்லலாம். உ.ம். பிரம்மத்தை வார்த்தையால் சொல்லத் தகும், வஸ்த்துவாய் இருக்கையாலே..
இதுக்கு விபக்ஷம் சொல்ல முடியாதாகையால் இது கேவல அன்வயி யாகும், அவஸ்து என்ற ஒன்று இல்லையாதலால்.

அவியாபதி -; உ. ம். வெளிய பசு என்றால் வேறு நிற பசுக்கள் உண்டாகையால் ;
அதிவியாப்தி -; உ.ம். கொம்புள்ள பசு என்றால், கொம்புள்ள வேறு மிருகங்களும் உண்டாகையால்.
அசம்பவம் -; கூடாத அடையாளம் உ.ம். காணலா ஜீவனை காணும் படியான ஜீவன் என்னால்.

இனி உ.ம். பார்க்கலாம் :
ஜீவன் முக்குணத்தன், என்றால், நித்ய முக்தர்கள் பக்கல் அவியாப்தி
ஜீவன் ஞான குணகன் என்றால்,, பரமாத்மாவும் ஞான குணகன் ஆகையால் அதிவியாப்தி .
சக்ஷுர் விஷயம் ஜீவன் என்றால், கூடாத அடையாளம் ஆதலால் அசம்பவம்..

இதில் இன்னது இருக்கிற படியாலே இப்படி இருக்க வேண்டும், இதை போலே .
எங்கெல்லாம் புகை உண்டோ, அங்கு நெருப்பு இருக்கிறது, சமையல் அறை அடுப்பு போலே.
இந்த மலை புகை உடைத்தது,.
ஆகையாலே , இந்த மலை நெருப்பை உடைத்ததாய் இருக்கிறது,–என்பதையே
பர்வதோ வந்நிமான், தூமத்வாத் என அனுமானிக்கிறோம்.

ஆக அனுமானிக்க 5 அங்கங்கள் வேண்டும். :அவை
1-பக்ஷம் – மலை.
2-ஹேது – புகை.
3-சாத்யம் – நெருப்பு.
4-ஸபக்ஷம் – சமையலறை.
5-விபிக்ஷம் – குளம்.

————

உபமானம் – வியாப்திக்கு சம்பந்தப் பட்ட மற்றுமோர் இடம் – பூஜை அறை .
அன்வய வியாப்தி -; புகை இருக்கும் இடத்தல் நெருப்பு இருக்கும்
வியதிரேக வியாப்தி ; நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருக்காது.
இதில் புகை – ஹேது , நெருப்பு சாத்தியம். ஆக சாத்தியம் இல்லையேல் ஹேது இருக்காது.
அனுமானம் துஷ்ட மாகாத போது ஏற்படும் ஞானம் ஸாது .

அனுமான பிரக்ரியை -;

1. பிரதிக்ஞா – பக்ஷத்தில் ஸாத்யம் இருப்பதாக அறிவது.
2. ஸத் ஹேது – ஹேதுவை காண்பது.
3. உதாரணம் – எங்கெல்லாம் புகை இருக்குமோ, அங்கே நெருப்பு இருக்கும், மடைப் பள்ளி போலே .
4. உபமானம் – மடப் பள்ளியில் புகை-நெருப்பு சம்பந்தத்தை , மலையில் உள்ள புகையோடு ஒப்பிட்டு மலையில் நெருப்பு இருக்க வேண்டும் என யூகிப்பது.
5. நிகமனம் – ஆக, இம்மலை நெருப்போடு கூடியது (அன்வயம்)
அதவா இம்மலை நெருப்பின்மை யோடு கூடியது அல்ல (வியதிரேகம்) என முடிப்பது.
தூம சதுர்ச தூசி மண்டலம் ஹேதுவாபாச மாகக் கடவது.

நையாயிகன் – 1 -; 5 அவஸ்யா பேக்ஷிதம் .
மீமாம்சகன் – 1 -; 3 மட்டும்.
பௌத்தன் – 2ம் 4லும் .
விசிஷ்டாத்வைதி – அநியமம்

துஷ்ட அனுமானம் :

1. அசித்தம் -;
a . ஸ்வரூப அசித்தம் – ஜீவன் அநித்யன், கண்ணால் பார்க்கப் படும் குடத்தைப் போலே .
b .ஆஸ்ரய அசித்தம் – ஆகாசத் தாமரை போலே .
c . வியாப்தி அசித்தம் – எது எது உள்ளதோ அது அநித்தியம் என்பதில்,
உதாரணம் காட்டப் படவில்லை யாதலால், உதாரண ராஹித்யத்தால் அசித்தி .

2. விருத்தம் -; பிரகிருதி நித்யா, கிருதகிருத்தவாத் , காலவது ..
உலகம் அழிவில்லாதது, படைக்கப் பட்டதால், கால தத்வத்தைப் போலே .
படைக்கப்படுமவை யாவும் அழியக் கூடியவை ஆகையாலே , நித்யம் என்று சாதிப்பது விருத்த அனுமானம்.

3. அனைகாந்திகம் (வியபிசாரம்) -; ஹேதுவும், சாத்தியமும் சேருமிடம் ஏகாந்தம். உ.ம். புகை+நெருப்பு கூடிய மலை .
சேராத இடம் தோஷம் (அ ) வியபிசாரம்.உ.ம். புகை இல்லாத நெருப்பு பழுக்கக் காச்சின இரும்பு.

a . ஹேது – பக்ஷம், ஸபக்ஷம், விபக்ஷம் 3லும் இருந்தால், அது சாதாரண ஹேது.
உ.ம். ஸப்தம் அழிவற்றது, அறியப் படுவதால், ஆத்மாவைப் போலே .
”அழிவற்றது” என்கிற ஹேது , ஸப்தத்தில் (பக்ஷத்தில்) உள்ளது. ச பக்ஷமாகிற ஆத்மாவுக்குப் பொருந்தும் .
ஆனால் உதாரணத்துக்காக எடுத்துக் கொண்ட விபக்ஷமான கடத்துக்குப் பொருந்தாது,
கடம் அழியக் கூடியது ஆகையாலே . அனுமானமும் தோஷமாய் முடியும்.

b . ஹேது – பக்ஷத்தில் இருந்து, சபக்ஷம், விபக்ஷம் இரண்டிலும் இல்லாது போனால், அது அசாதாரண ஹேது .
உ.ம். பூமி அழிவற்றது, கந்தவது பிருதிவி. ”அழிவற்றது” என்கிற ஹேது பக்ஷத்தில் மட்டும் இருந்து,
மற்ற இரண்டில், சபக்ஷம், விபக்ஷம் இரண்டிலும் இல்லையாய்ப் போவது.

4. பிரகரண சமம் (ஸத் பிரதி பக்ஷம்) ;
உ. ம். பகவான் நித்யம், அநித்ய தர்மம் இல்லாத படியால்.
இதில் ஹேது ”நித்யம்”.
பகவான் அநித்தியம், நித்ய தர்மம் இல்லாதபடியால்.
இதில் வரும் ” அநித்தியம்” பூர்வ வாக்யத்துக்கு ஹேத்வந்தரம் எதிர்மறை ஹேத்வபாவமாகையால், ஏற்படும் அனுமானம் தோஷதுஷ்ட்டம்.

5. காலாத்யபாவம் -;
உ.ம். நெருப்பு உஷ்ணமில்லாதது, வஸ்துவாய் இருக்கிறபடியாலே , ஜலத்தைப் போலே .
பிரத்யக்ஷத்தில் நெருப்பு உஷ்ணமானது. ஆகையால், சாத்தியம் பக்ஷத்தில் இல்லாத போது அபாவம்.

—————

தர்க்கம் -;

a நிஸ்சய வாதம். – தர்க்க அனுகிருஹீத பிரமாண பூர்வக தத்வ அவதாரணம்.
பிரமாணங்களின் உதவி கொண்டு உண்மைப் பொருளை நிரூபித்தல் .
வாதி பிரதிவாதி பக்கல் சாராமல் , பக்ஷபாத மில்லாமல் செய்யப்படுமது.
b ஜல்பம் – ஜன்னி வந்தாப் போலே சொன்னதை விடாமல் மீண்டும் மீண்டும் பேசி வாதடுவது.
c விதண்டா – தன் பக்ஷ ஸ்தாபனத்தை விட்டு, எதிரி பக்ஷ தவற்றையே பேசுவது.
d சலம் – எதிரி பக்ஷம் நினைப்பிடாததை ஆரோபித்து மடக்கி பேசுவது..
e ஜாதி – ஸ்வ பக்ஷ விரோதமாய் நிக்ரஹத்தில் முடியும் வாதம் ஜாதிஹி.
f நிக்ரஹ ஸ்தானம் – பராஜாய ஸ்தானம் . தவறான உத்தரத்தால், தன் பக்ஷம் தோற்றுப்போ போவது.
இவை 6ம் அனுமானத்துக்குள்ளும் பிரத்யக்ஷயத்துக்குள் அந்தர்கதம் .

—————-

ஸப்த பிரமாணம் —

பிரத்யக்ஷம் அனுமானத்தால் பாதிக்கப் படலாம். அதே போல் அனுமானம் பிரத்யக்ஷத்தால் பாதிக்கப்படலாம்.
ஆனால் சப்த பிரமாணங்களில் ஒன்றான வேதம் ஸவ்த சித்தம்.
அதீந்ரியமான பிரம்மத்தை அறிய சப்த பிரமாணமாகிற வேதம் ஒன்றே வழி. அது கால ஆராய்ச்சிக்கு உட்படாதது. அநாதியானது.
ஒரு புருஷனால் சொல்லப் பட்டது அல்லதாய் அபௌருஷேயம். அபூர்வார்த்த பிரதிபாதனே ஸதி சத்ய வாதத்துவம் தெரியாத
புதிய அர்த்தங்களைத் தருவதோடு சத்யமான வற்றையே பேசும்.

பிரத்யக்ஷத்துள் ஒன்றான ஸ்ரோத்ர ஐந்திரிய கரண சப்தம் வார்த்தை அளவிலானது.
வேதமாகிய பிரமாணத்துக்கு கரணம் (கருவி) சப்தம் அது சப்த்தத் தால் குறிப்பிடப் படும் பொருள் வரையிலுமாக உணர்த்த வல்லது.

வேதம் ஆப்த வசனம் என்பது நையாயிக பக்ஷம். சத்ய வசனமாகிலும் ஆப்தன், புருஷனாலே சொல்லப்பட்டது என்றால்
அபௌருஷேயத்வம் சித்திக்காது.ஆகவே அநாப்பதனாலே சொல்லப் படாதது என்று
வியதிரேகத்திலே கொள்வோமேயானால், அதுவே சாதுவான பக்ஷம். இராமானுஜ சம்மதம் .

அநாப்தனாலே சொல்லப்படாத வாக்கியத்தாலே ஏற்படும் அர்த்த ஞானம் , சப்த பிரமாணம் எனப்படும்.

காரணத்வ, பாதகத்வங்கள் இதுக்கு இல்லை.. வேத பிரமாணத்துக்கு பகவானும் காரணமில்லை..
அவனும் முன்னிருந்தபடி புத்தி செய்து படைப்பு காலத்தில், பிரமனுக்கு உபதேசித்தானாகில் இதுக்கு காரணத்வ தோஷம் இல்லை.

”பசுவை அழைத்து வா .கட்டு” என்ற வாக்கியத்தின் படி இன்னது பசு என்கிற காரிய-காரணத்வ சம்பந்தத்தால்
ஏற்படும் அறிவு ப்ரஹ்மத்தின் விஷயத்தில் உதவாது. காரணம் ப்ரஹ்மம் சித்த வஸ்து ஒழிய காரிய வஸ்து அல்லவே.
ஆக சப்த வாக்கிய பிரமாணம் ப்ரஹ்மத்தை சொல்லாது என்பது பூர்வ பக்ஷம் .

இதுக்கு பிரதிபக்ஷம் என்ன வென்றால் – ஒரு தாய் தன் குழந்தைக்கு இன்னார் தந்தை என்று காட்டும் போது
வாயால் ”அப்பா” என்று சொல்லி ஜாடை செய்யும் போது குழந்தை புரிந்து கொள்கிறது.
இவ்விடத்தில் வருதல் , காட்டுதல் போல காரிய விவகாரம் இல்லை ஆகிலும் குழந்தைக்கு இன்னார் தான்
தந்தை என்கிற அறிவு சித்த வஸ்துவைக் காட்டி சப்த சூசனையால் சாதிக்கப் படுவதால்,
ப்ரஹ்மத்தின் விஷயத்திலும் காரியபரதையாகிற அபேக்ஷை இல்லை.

”ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதிதாஸ்யவ்ய: என்கிற உபாசன காரிய பரதை ப்ரஹ்மத்தின் விஷயத்திலும்
சொல்லலா மாகையாலே , ப்ரஹ்மம் சித்த வஸ்து வானாலும் சப்த பிரமாணம் கொண்டு அப்பியகம வாதம்,
அனப்பியகம வாதம் இரண்டாலும் – எதிராளி சொல்வதை ஏற்றுக் கொண்டோ அல்லது நிராகரித்தோ பிரஹ்மத்தை சாதிக்கலாம்.

பில்லி சூன்யம் சேன யாகாதி அபிச்சாரி கர்மங்கள் அடங்கிய வேத பாகம் பிராமணம் ஆகுமோ என்னில் ,
திருஷ்ட பலத்தைக் காட்டி, அதிருஷ்ட பலமாகிற மோக்ஷத்தில் மூட்டுகிற படியால் வேதம் முழுவதுமாக பிரமாணம் ஆகும்.
திரைகுண்யா விஷயா வேதா: என்பதால் தாமச பிரகிருதிக்கு உண்டான வேத பாகம் சாத்விகருக்கு
அன்வயமில்லை ஆனாலும், அவைகளின் பிராமாண்யதைக்கு குறை இல்லை.

பூர்வ பாகம் கர்ம மீமாம்ஸா – உத்தர பாகம் ப்ரஹ்ம மீமாம்ஸா
கர்ம பாகம் தேவதா ஆராதன விதிகளையும்
ப்ரஹ்ம பாகம் ஆராத்ய தேவதா பிரகாரமும் சொல்லும்.

மந்த்ர அனுஷ்டான விதி பாகம் கர்ம காண்டம். அதில் சொல்லப் பட்ட செயலில் தூண்டி அதில்
உத்தியோகிக்க வேண்டி போற்றிப் பேசும் கொண்டாட்டம் அர்த்த வாதம் – ஹிதைஷி வாக்கியம் விதி.எனப்படும்.

விதி வாக்கியங்கள் அபூர்வம், , பரசங்கியா , நியமம் என மூன்றாய் நித்ய, நைமித்யக, காம்ய கர்மங்கள் என பிரிந்து இருக்கும்.

விரீன் புரோக்ஷய என்கிற விதி வாக்கியம் அபூர்வ விதி. யாக திரவ்யமான நெல்லை ஹவிஸாக பயன்படுத்தும் முன்
புரோக்ஷிப்பாய் என்கிற இந்த விதி நூதனமாக சொல்லப் படுவதால் இது அபூர்வம்.

இரண்டு விதமான செயலில் ஒன்றை முதலில் செய் என்று ஆணை இடுவது ப்ரசங்கியா விதி.

பலவழிகளில் செய்யப்படுமதை ”குரும் அபிகமநாத்’
என்று ஞனத்தை சம்பாதிக்கிற விஷயத்தில் படித்து தெரிந்து கொள்வது , ஆசாரியனை அடைந்து தெரிந்து கொள்வது
என்கிற பல வழிகள் இருக்க, ”குருவை” அடைவாய் என்று உபதேசிப்பது நியமம்.

சந்தியாவந்தனாதி விதிகள் நித்ய விதி.
ஒரு காரணத்தைப் பற்ற வருகிற விதி நைமித்திகம். உ.ம்.கிரஹண தர்ப்பணம்.
ஜோதிஷ்ட்டேன காம்ய கார்ய அபிஸந்தி விதி காம்ய. விதியாகும்.

சந்தா – அனுஷ்டுபு (32 எழுத்து) , த்ரிஷ்டுப்பு (44 எழுத்து) என சந்தஸில் உள்ள எழுத்து, பாத கணக்கு பற்றியது.

கல்பம் – எழுத்து விதி சௌதா ஸ்மார்த்த விதிகளாகக் கடவது.

ஸிக்ஷஆ – ஸ்வரம் சம்பந்தப் பட்டது.

நிரூக்தம் – அபூர்வ அர்த்த வார்த்தைகள் சம்பந்தப் பட்டது.

ஜோதிஷம் – – கால நிர்ணய வானவியல் சாஸ்திரம் ஆகக் கடவது.

வியாகரணம் – இலக்கண சாஸ்திரம்.இவை 6ம் வேதாங்கங்கள் .

மனு, யாக்ஞய வல்கிய , போதாயன, ஆஸ்பலதாயர் இவை போல ஸ்மிருதிகளும் வேதாங்கம் ஆகும் .
பிரம்மா, கபிலர் இவர்கள் இயற்றிய யோக சாஸ்திரம், தள்ளத்தக்கது , அவை வேத விரோதமாம்போது.

ஸ்மிருதிகள் போலே இதிஹாச புராணங்களும் வேதத்துக்கு அவை உப பிராம்மணங்கள் ஆகும்.
ஸ்மிருதிகள் கர்ம பாகத்துக்கு அங்கமானால் , இதிஹாச புராணங்கள் உபநிஷத் பாகத்தின் அங்கமாகும்.

புராணங்கள் வகை 18. அவையுள் சாத்விக புராணங்கள் 6ம் , வேத அனுரோத ராஜஸ., தாமஸ புராண பாகங்களும் பிரமாணம்.
மற்ற பாகங்கள் தள்ளத்தக்கன. பாசுபத ஆகமமும் அப்படியே.

வைகானஸ சாஸ்திரம் போலே பாஞ்ச்ராத்ர ஆகமம் முழுவதும் பகவானாலே வேதத்ததை அனுசரித்து சொல்லப் பட்ட படியால் அதுவும் பிரமாணமே .

வைத்திய சாஸ்திரம் (ஆயுர்வேதம்) , சில்ப சாஸ்திரம் (Temple architecture ) , காந்தர்வம் (Musicology ),
பரதம் (நிருத்யம்), தத்வ, உபாய புருஷார்த்தம் சம்பந்தப் பட்ட பாகங்கள் ஆய கலைகள் 64லிலும் பிரமாணமே

(a)ஆக்காங்க்ஷ (b) யோக்கியதை (c) சந்நிதி ஆகிற 3ம் இருக்கிற லௌகிக கிரந்தங்களும் பிரமாணமாகும் .

சடகோபமுனி .சாதித்த திராவிட வேதம் 4ம் , அதற்கு அங்கமான ஏனைய ஆழ்வார்கள் பிரபந்தங் களும் பிராமண தரம் .
காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லை என்பது ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி .

பகவத் ராமானுஜர் சாதித்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்கள், ஏனைய ஆச்சார்யர் களுடைய ஸ்ரீ ஸூக்திகள் அனைத்தும் பிராமண தமம்

மொத்தத்தில் உண்மை அறிவை போதிக்கும் எந்த வாக்கியமும் பிரமாணம் தான்.

அதில் வேத வாக்கியம் வைதிகம். லோக வியவகார வாக்கியம் லௌகீகம் .

முக்கிய விருத்தி – சிங்கம் என்ற சொல் மிருக ராஜனை குறிப்பது முக்கிய விருத்தி

அபிதா விருத்தி – யோகம் – ரூடி என இரண்டு வகை காரணப் பெயர், இடுகுறிப் பெயர் என்பதே அவை. உ.ம். பாசகன் = .
பச + ஆக என்கிற சேர்க்கையால் (யோகம்) சமையல் காரன் என்ற பொருளில் வருவது.

பங்கஜம் – பங்க + ஜ என்று சேற்றில் எழ செந்தாமரையாக தாமரை மலரைக் குறிப்பது ரூடியர்த்தம் .
குமுத மலரும் ஆம்பலும் சேற்றிலே மலர்ந்தாலும் தாமரையை அது உணர்த்துவதாக அறிவது லோக வழக்கம் கொண்டு.

முக்கியார்த்தத்தை சொல்ல முடியாத போது அருகாமையான லக்ஷணையாலே குறிப்பது கௌணார்த்தம் .
இது தமிழில் ஆகு பெயர் எனப்படுவது. கங்காயாம் கோச : என்றால் கங்கைக் கரையிலுள்ள தான குடிசையை குறிக்கும் .
உலகம் என்றால் உலகத்திலுள்ள மக்களைக் குறிப்பது போலே.

புஷ்பம் என்றால் அது பழம், பறவை, என்பதான இதர பொருள்களில் இருந்து வேறுபடுகிறது.
நீலோத்பலம் என்றால் செந்தாமரையில் இருந்து வேறுபடுகிறது. ஆக உலகத்தில் எந்தப் பொருளும் ,
விசேஷண விசிஷ்டமாய் விசேஷ்யத்தைக் குறிக்கும் – நிர்விசேஷணமாய் எந்த வஸ்துவும் இருத்தல் ஆகாது என்று தேறுகிறது .

மேலும் வஸ்துக்களைக் குறிக்கும் எந்த சொல்லும் அது அந்த வஸ்துவைத் தாங்கும் ஆத்மா மூலமாக
அந்தராத்மா வான நாராயணன் வரை பர்யவசிக்கும் (சென்று குறிக்கும்) காரணம் ,
பிரம்மா, ருத்ரன்,இந்திரன், அக்நி ஆகிய சேதனர்கள் , பிரகிருதி, காலம், ஆகாசம், பிராணன் ஆகிய
அசேதன வஸ்து விசிஷ்டமான ப்ரஹ்மம் அவனாகையாலே.
இத்தால் , சர்வ சப்த வாச்யார்த்தம் நாராயணன் என்பது வேதாந்த விழுப் பொருள்.

பிரமேயம் – பிரகர்ஷேண மேயம் – நன்கு அறியப்படுவது பிரமேயம்.
பிரமா + இயம் = எது எப்படிப் பட்டது என்று அறிவது பிரமேயம்
எதைக் கொண்டு அறிகிறோமோ அது பிரமாணம் .

யார் அறிகிறாரோ அவர் பிரமாதா.

இவை

திரவ்யம் + அதிரவ்யம் என்று இரண்டாய் ,
அதில்
திரவ்யம் : உபாதான (அவஸ்தா விசேஷம்) பேதம் திரவ்யம் .
பிரக்ருதி (அ) லீலா விபூதி – சரீரம் தொடங்கி மூலப் ப்ரக்ருதியினின்றும் படைக்கப் பட்ட பிராக்ருதங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
கர்ம , சாமான்ய, விசேஷ, ஸமவாய அபாவங்கள் – ஆகிய நையாயிக பக்ஷ 5ம் – திரவ்யத்தோடே அடங்கும்.
மேல், கீழ், சுருங்கல்,விரித்தல் , சலித்தல் ஆகிய நிலை = அவஸ்தை கர்ம.

சலநாத்மகம் கர்மா என்று ஒன்றை 5ஆக விரித்துக் கூறுகை கௌரவம் என்கிற குற்றத்துக்கு உள்ளாகும்.
லாகவம் =சுருங்க உரைத்தல்; கௌரவம் =பரக்கப் பேசுதல் .
இந்த சலனமும் ஸம்யோகத்தோடே சேர்த்து படிக்கலாம்.
கடத்வ படத்வ ஜாதி விசேஷம் இதை அதிலிருந்து வேறு படுத்த போதுமானதாக இருக்க சாமான்யம் என்கிற ஒன்று அவசியம் இல்லை.
ஒன்றை நிரூபிக்க இன்னொன்றை புதிது புதிதாக கல்பித்தலாகிற அநவாஸ்தான தோஷம் ஸமவாயத்துக்கு உண்டு. ஆக அதுவும் விலக்கு.

இனி அபாவம் – பிராக் அபாவும், பிரத்வம்ஸா அபாவும், அன்யோன்யா அபாவம் ,
அத்யந்த அபாவமாவது முன்.பின்,ஒன்றினோடு இன்னொன்று ,
எப்போதுமான ”கடத்தில் மறொன்றின் இன்மை ” படத்தில் இன்னொன்றின் இன்மை”
ஸ்வதசித்தம் . தனித்து அபாவாத்தின் அவசியம் இல்லை.

குடம் இன்மை என்கிற நிலை குடத்தை செய்வதற்கு முன் ,(மண் என்கிற நிலை ), அந்த
குடம் உடைந்த பின் (ஓட்டு சில்லு அல்லது சூர்ணம் என்கிற நிலை)
குடத்தின் இடத்தில் இன்னொன்று இருக்கும் பக்ஷத்திலும் (அன்யோன்யா அபாவம்)
குடம் இருந்ததே இல்லை என்கிற அத்யந்த அபாமாகிற 4 ஆக நையாயிகன் பிரித்து திரவ்யங்கள் மொத்தம் 7 என்று கணக்கிடுகிறான்.
இந்த 4ம் பூதல ஸ்வபாவமாய், பிரத்யக்ஷத்தில் அடங்கும் என்பது வைதிகர் – ராமானுஜ பக்ஷம் .

இனி திரவ்யம் என்பது வெவ்வேறு (உபாதானங்களாய்) தசா விசேஷங்களாய், குண ஆஸ்ரயமாய் இருக்கும்.

மஞ்சள் குடம் என்றால் மஞ்சள் வர்ணத்தோடு கூடிய குடம் என்றும் மண்ணாய் இருந்த தன்மை போய்
கடமான தன்மையில் மஞ்சள் பூச்சு ஆசிரயணீயம்.

பிரக்ருதி , காலம் ஆகிற ஜட வஸ்து இரண்டும் ஸ்வயம் பிரகாசம் இல்லாதது.
நித்ய விபூதி , தர்மபூத ஞானம் , ஜீவன் , ஈஸ்வரன் ஆகிற அஜட வஸ்து 4லும் ஸ்வயம் பிரகாசிதம் .
இவை 6ம் திரவ்யம் – முக்குணங்கள் அதிரவ்யம் என்றும் அறியவும்.

– – – – — – – – – – – – – – – – – – – – – – – – – – – — – – – – – – – – – – – – – – –

பகவானுக்கு சரீரமாக இருக்கிற பிரக்ருதியை மூலப் பொருளாக கொண்டு
அத்வாரக + ஸத்வாரக ஸ்ருஷ்டி
சமஷ்டி + வியஷ்டி ஸ்ருஷ்டி
என்பவை சிருஷ்டிப் பிரகாரம்.

வைகாரிக + தைஜஸ + பூதாதி ; ஸாத்விக , ராஜஸ, தாமச அகங்காரங்களின் வேறு பெயர்கள்.

சாத்விகா அஹங்காரம் -; 11 இந்திரியங்கள்.
மனசு -; (நிச்சிதா) புத்தி -; அஹங்காரம் = மனசின் வேறு நிலைகள்.
ஞானேந்ரியம் + 5 தன்மாத்ரங்கள் (= சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தம் ) + பஞ்ச பூதம்.
கர்மேந்த்ரியம் ; வாக், பாணி, பாத, மல, ஜல உபஸ்தங்கள்.
ஞானேந்ரியம் சாத்விக அஹங்கார பரிணாமம்.
கர்மேந்த்ரியம் தாமஸ அஹங்கார பரிணாமம்.
சாத்விக தாமஸ அஹங்கார பரிணாம சககாரி ராஜச அகங்காரம்.

குறிப்பு: ஒருவன் மறித்து விட்டால் பயணமாகும் ஆத்மாவோடு , கர்ம வினைகளும், இந்திரிய ஸூக்ஷ்மங்களும் எடுத்து செல்லப்படும்.
கர்ம வினைகளுக்குச் சேர கிடைக்கிற சரீரத்துக்கு அதனதன் பயன்பாட்டுக்கு அவைகள் ஆட்படும்.
இது பிராகிருத பிரளயம் வரை அழிவதில்லை. பிரம்மா வுடைய காலம் முடிந்து, பிராகிருத பிரளயத்தில்,
பஞ்சபூதங்கள் மஹான்-பிரக்ருதியில் லயம் அடையும் போது மட்டுமே இந்த இந்திரிய ஸூக்ஷ்மங்கள் முடிவுக்கு வரும்.
அந்த நிலையிலும் தொலையாதது கர்ம பயன்.

ஒருவேளை அந்த ஆத்மாவுக்கு மோக்ஷம் கிட்டினால் , அப்ராக்ருத தேசமான அங்கு பிரகிருதி பிராக்ருதமான
இந்திரிய ஸூக்ஷ்மங்கள் புகுற வழியில்லை. விரஜைக்கு இப்பால் அவைகள் விடப்பட்டு , பிரளயத்தோடே நசியும்.
அல்லது அதன் குறைபாடு உள்ள ஆத்மாவுக்கு உபயோகி ஆகலாம்.

பாலை உறையவிட்டு தயிராக்கும் போது , பாலாகிற தன்மை போய் தயிர் என்றாவதாகிற கால அளவைக்கு
இடைப்பட்ட நிலை போன்றதானது , தாமஸ அஹங்காரம் பஞ்ச பூதங்களாக மாறுவதற்கு முன்னான (அவ்யவஹித தசை)
பஞ்சதன் மாத்ரங்களாகிற நிலை எனலாம்..

ஸப்த தன் மாத்திரத்தில் இருந்து உருவாவது ஆகாசம். அதாவது தாமஸ அஹங்காரம் ஆகாசமாக மாறுவதற்கு
இடைப்பட்ட நிலையிலுள்ள திரவ்யம் ஸப்த தன்மாத்ரம். அடுத்து வாயு, அக்நி , அப்பு, பிருதிவி இவர்களுக்குரிய
ஸ்பர்ச, ரூப ரஸ , கந்த தன்மாத்ராங்கள் படைக்கப் படுகின்றன.

ஆகாசத்துக்கு ஒலியின் குணம் மட்டும் உண்டு. அடுத்து வரும் வாயுவிற்கு ஸப்தம் , ஸ்பர்சம் இரண்டின் குணங்கள் உண்டு.
அக்கினியில் ஸப்தம் , ஸ்பர்சம் ரூபம் முக்குணங்கள்; ; தண்ணீரில் ஸப்தம் , ஸ்பர்சம் ரூபம் ரசம் ஆகிய 4ம் ;
பூமியில் கந்தம் சேர 5ன் குணங்களும் உண்டு.

ஆகாசத்தை தொடு உணர்ச்சியால் உணர முடியாது. அதாவது தொட்டு உணர முடியாது.
சூரியன், சந்திரன், உலகம், உலகில் உள்ள எல்லாவிதமான பொருள்களுக்கும் இடம் கொடுப்பதாய் ஆகாசம் இருக்கும்.
ஆகாசம் உண்டாவதில்லை, நித்யம் என்கிற சிலர் வாதமும் தவறு,
ஏனென்றால் ஸப்த தன்மாத்திரத்தில் இருந்து ஆகாசம் உருவாகிறது என்று இங்கு படிக்கப்படுவதால்.

ஆகாசத்துக்கு ஒலி மட்டும் குணம் என்றால் அது நீல நிறமான அக்கினியின் குணத்தில் ஒன்றான
ரூபத்தைக் கூட்டிக் கொண்டு காண்பது ஏன்?
இதற்கு விடை ஒவ்வொன்றின் தன்மை மற்ற பூதங்களில் பஞ்சீகரண முறையில் பகிரப் படுவதுதான் காரணம்.

ஆகாசம்,காற்று நெருப்பு ஆபப் பிருத்வி கால திக்கு ஆத்மா மனசு என வைசேஷிகர்கள் திரவ்யங்களை 9ஆக பிரிக்கின்றனர் .
அது தேவை இல்லை என்பது வைதிக பக்ஷம். திஸ ஸ்ரோத்ராத் என்கிற விடத்தில் திசைகள் படைக்கப் படுகின்றன என்று கொள்ளாமல் ,
திசையில் உள்ள லோகங்கள் படைக்கப் படுகின்றன என்றே பொருள் கொள்ள வேண்டும். ஆக திக்கு என்ற பதார்த்தம் கிடையாது. .

ஆகாசம் படைக்கப் பட்ட பிறகு, ஸ்பர்ச தன்மாத்திரத்தில் இருந்து உருவாவது வாயு. இது தொடு உணர்ச்சியால் அறியப்படுவதாய் ,
உஷ்ணம் குளிர்த்தி ரூபம் இல்லாதது. காற்று சப்த, ஸ்பர்ச இந்த்ரியங்களுக்குப் புலப்படுவது.
பிராண (ஹ்ருதய ஸ்தானம்), அபான (பிருஷ்ட பாகம்), வியான (சரீரம் முழுவதும்), உதான (கண்டம்) ,
சமான (நாபி தேசத்தில் ) வர்த்திக்கும் பஞ்ச பிராண சக்தி மனிதன், விலங்கு போன்ற ஜங்கம (mobile life form)
ஜீவராசிகளில் பூர்ணமாய், ஸ்தாவர வர்கங்களில் ஸ்வல்பமாயும் உபகாரமாகிறது.

ரூப தன்மாதரத்தைக் கொண்டு உருவாவது தேஜஸ் . இது அக்நி சூரியன் போன்ற பதார்த்தங்களில் இருந்து ,
தொட்டால் சுடுவதுமாய், ஒளியோடே கூடியது. ஜாடராக்நி யாய் வைச்வாநரன் என்ற பெயரில் பிராணிகளின் வயிற்றில்
ஆகாரத்தை ஜெரிக்கச் செய்கிறது. வெளிச்ச ரூபத்தில் நம்முடைய சக்ஷுர் இந்த்ரியத்துக்கு பதார்த்தங்களைக் கண்டு
அறிய உதவவும் செய்கிறது. பகல் குருடு ஆந்தை இதுக்கு விதிவிலக்கு. இதை 4ஆக பிரிக்கலாம்..

பௌமம் -; எண்ணை விறகு போன்ற பூமியில் கிடைக்கும் பொருள் கொண்டு எரிவது .
திவ்யம் -; சூரியன், மின்னல் இவை பிரகாசிப்பது ஜலத்தைக் கொண்டு.
உதரியம் ; ஜாடராக்நி இதற்கு இந்தநம் தண்ணீரும், பௌமமும்.
ஆகரஜம் -; தங்கம், வைரம் போன்ற சுரங்க கனிமங்கள் – நிரிந்தனம்
.
தங்கம், வைரம் இவைகளில் ஒளஷ்ணியம் இல்லையே என்றால் அவைகளில்
பிருதிவி அம்சம் அதிகமாய் தேஜஸ் அம்சம் அல்பமாய் இருப்பதே காரணம்.

ஞானம் ஆத்மாவுக்கு குணம். அதுபோல் ஒளி தீபத்துக்கு குணம். இதில் ஞானம், ஆத்மா, ஒளி
இவை மூன்றும் திரவ்ய கோஷ்டியிலும் சேரும் குண கோஷ்டியிலும் சேரும்.

திரவ்யம் இடத்தை அடைக்கும். குணம் இடத்தை அடைக்காது. ஆத்மா, ஒளி (தேஜஸ்) இரண்டும் திரவியம் ஆனாலும் ,
இடத்தை அடைக்காது குணங்களைப் போலே . ஒலி ,உணர்வு, உருவம் இவை மூன்றும், தேஜசின் குணங்கள்.

ரஸ தன்மாத்திரத்தில் இருந்து உண்டாவது ஜலம். குளிர்த்தி, சுவை, வாசனை அற்ற தன்மை நீரினுடையது.
கடல்,ஆறு கிணறு என பலவாக ஆஸ்ரயணத்துக்குச் சேர நிறம் மணம் பெற்றாலும் உண்மையில் அவை இல்லாதது.

அடுத்து, கந்த தன்மாத்திரத்தில் இருந்து உருவவாது பிருதிவீ . கந்தம் , அஉஷ்ண சீத ரஹித ஸ்பர்ஸ யோக்யதா லக்ஷணம் பிருத்வி.
மண் கல் கட்டி என்று இருப்பதோடு உணவு, மூலிகை விளையவும் உதவுவது பூமி. மற்ற பூதங்களுடன் சேர்ந்து பக்குவப் படும் போது
நிறம், மணம் ரூபம் மாறக் கூடியது. பொருள்களையும் தாங்குவதாய் நிறம் மணம் உரு ஒலி ஒளி என்று 5ன் குணமும் இதில் உண்டு.

தமஸ் (அ ) இருட்டு என்பது ஒளியின்மை என்பது சிலர் வாதம். அது தவறு. தமஸ் பூமியின் ஒருபகுதி, அது கருநீலமாக இருக்கிறபடியால்.

படைக்கப் பட்ட 5 பூதங்கள் பஞ்சிகரண முறையில் கலப்படம் செய்யப்பட்டு சரீரமானது உருவாகிறது.
உருவான சரீரத்தில் – தங்க தோட்டில் வைரம் பதிப்பது போல் – இந்திரியம், மனசு இவை பதிக்கப்பட்டு
அவை அந்தந்த சரீரத்தை ஆக்ரமிக்கின்றன.

சரீரத்துக்கு லக்ஷணம் : ஜீவாத்மாவால்
1. ஆதேயத்வம் – தாங்கப் படுமது.
2. விதேயத்வம் – ஏவப்படுமது.
3. சேஷத்வம் – ஜீவாத்மாவுக்கு சொத்தாய்
4. அப்பிரதத் சித்தமாய் – பிரிக்க முடியாததான திரவியம் சரீரம். (அ )

ஈஸ்வரனும் அவனுடைய ஞானம் நீங்கலாக உள்ள அனைத்துமே சரீர சப்த வாச்யம்.. இதை
நித்யம் Vs அநித்தியம் என பிரிக்கலாம்.
பகவானுக்கு சரீரமாக உள்ள அனைத்தும் நித்யம்.
பிரக்ருதி காலம் ஜீவாத்மாக்கள், பகவத் திவ்ய மங்கள விக்ரகம் இவை அனைத்தும் அவனுக்குச் சரீரமான படியாலே நித்யம்.

நித்யஸூரிகள் கர்மத்தால் பிறவாதவர்கள். மற்றவை
கர்மத்தால் பிறப்பன Vs கர்மத்தால் அல்லாது பிறப்பவை இவை இரண்டும் அநித்தியம் .
மஹான், அஹங்காரம் இத்யாதி , இச்சா கிருஹீத நித்ய, முக்தர்களுடைய பார்த்திவ சரீரம் அநித்யஸ்ய அகர்ம கிருதம்.
சங்கல்ப வர்ஜித கர்ம கிருதம் Vs சங்கல்பத்வேன கர்மகிருதம்

நாமும் சௌபரியும் (ஆபாச அனுபவத்துக்கு 50 சரீரம்?

மரம், செடி. கொடி புதர் ; ஸ்தாவரம்
தேவ, மனுஷ்ய, திர்யகு , நாரகி ; ஜங்கமம்
இவை அனைத்தும் கர்மாதீனமாய்ப் பிறப்பன.

உத்பிஜ்ஜ (விதை வெடித்து) ஸ்வேதஜ (வியர்வை யிலிருந்து) அண்டஜ (முட்டையிலிருந்து)
ஜராயு (கர்பப் பையிலிருந்து) பிறப்பவை என மேலும் 4 வகையாக சரீரத்தைப் பிரிக்கலாம்.

சீதை, ஆண்டாள் முதலாழ்வார்கள் அயோநிஜர்களாய் பிறந்த இன்னோரு வகுப்பும் உண்டு.

இப்படி ஸ்ருஷ்டியானது , பனை ஓலையிலிருந்து காது ஓலை பிறந்தாப் போலே – ஒன்றின் கார்யம் மற்றொன்றின் காரணமாய் –
பகவத் சங்கல்பத்தாலே பரிணமிப்பதே ஒழிய எதுவும் புதிதாக உற்பத்தி ஆவதில்லை.

முன்னது பின்னத்துக்குக் காரணம் என்றால் பிரஹ்ம காரணத்வ வாதம் தொலையாது? என்னில் அப்படி அன்று!

மண் குடமாம்போது , களி மண் என்ற ஆகாரம் போய் வாயும் வயிறுமான குடம் என்ற ஆகாரம் வந்ததே ஒழிய .
இதில் அவஸ்தா பேதம் தவிற உபாதான பேதம் உண்டோ? இல்லை.

அதுபோலவே பிரகிருதி மஹானாகவும், மஹான் சாத்விக தாமஸ அகங்காரத்தின் வழி 21 தத்துவங்களாக பிரிவது காரண பிரஹ்மம் -;
காரிய பிரஹ்மம் ஆவது அவனுடைய சரீரத்துக்குண்டான அவஸ்தா பேதமே ஒழிய இரண்டுக்கும் சேர
அவனுடய உபாதான காரணத்வத்துக்கு நசிவில்லை, எப்படி மண்ணானது குடமானபோதும் அதை மண்குடமாகவே வியவகரிப்பது போலே.

பிரஹ்மமே பலவற்றின் காரிய காரணமாக ஆவது அவனுடய சங்கல்ப மாத்திரத்தாலேயே என்பதால்,
சிருஷ்டிக்கு நிமித்த , சககாரி காரணமும் அவனே.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

பிரக்ருதி பரமாத்மா ஜீவாத்மா இரண்டுக்குமாக போக போகஸ்தான போகோப கரணமாக இருப்பது .
சக்கரை பொங்கல் – போகம் , உபகரணம் – தொன்னை. போகஸ்தானம் – கோயில் .

கண் மூக்கு நாக்கு செவி தோலிவை போகோபகரணம். பார்த்தல் நுகர்தல் சுவைத்தல் கேட்டல் உணர்தல் இவை போகம். .
அங்கண் மா ஞாலம் போக ஸ்தானம். அதாவது அண்டமும் அண்டத்துகுள்ளீடான இந்த பிரபஞ்மும்.

ஆக இந்த அண்டமானது திரவ்யமாய் இருக்கும். பிராகிருதமாய் இருக்கும். பஞ்சீகிருத பஞ்ச பூதத்தால் ஆக்கப் பட்டிருக்கும்.
விளாம்பழ வடிவில் இருக்கும் அதில் ஒரு பத்மத்தின் வடிவில் இருப்பது பூமி.
பூமியின் நடுவில் தலைகீழாய் குத்திய ஆணிபோல் இருப்பது மேரு மலை.
அதன் தெற்கு பகுதியில் இருப்பது பாரத, ஹரி, கிம்புருஷ வர்ஷங்கள். ரம்யகம், ஹிரண்யக, குரு வர்ஷங்கள் வடக்கிலும் அமையப் பெற்றுள்ளன.
பார்தஸ்வம் கிழக்கிலும், கேதுமால வர்ஷம் மேற்கிலும் அமைந்துள்ளன. மத்தியில் இளா வருஷம் சேர ஆக மொத்தம் ஒன்பது வர்ஷங்கள்.

இந்த ஜம்பூ த்வீபம் ஒரு லக்ஷம் யோஜனை விஸ்தீர்ணம் கொன்டது.
இதை சுற்றி வளைத்து இருப்பது உப்புக்கடல். அடுத்து
பிலக்க்ஷ தீபம். கடல் கரும்புச் சாறு. விஸ்தீர்ணம் இரண்டு லக்ஷம் யோஜனை. மூன்றாவது
சால்மலித் த்வீபம். கள்ளுக் கடல். விஸ்தீர்ணம் நான்கு லக்ஷம் யோஜனை. .
குசத்வீபம் – நெய்கடல் – 800000 யோஜனை.
கிரௌஞ்ச த்வீபம். – தயிர்க்கடல் – 1600000 யோஜனை
சாக த்வீபம் – பாற்கடல் – 3200000 யோஜனை
புஷ்கர த்வீபம் – மானலோத்ர பர்வதம் – ஸுத்த தீர்த்தம் – 6400000 யோஜனை.
ஸ்வர்ண பூமி – லோகாலோகம்
கர்த்தம் (ஒருவித ஜலம்)
அண்ட ஓடு.
பெருவெளி.
இப்படி ஒன்றை அடுத்து ஒன்றாக கோள வடிவில் ஒரு விளாம்பழம் போல் அமைந்திருப்பது இந்த அண்டகடாகம் .

– – – – – – – – – – – – – – –

தமஶ்**
ஸத்ய லோகம்
தபோ லோகம்
மஹர் லோகம்
ஸுவர் லோகம்
புவர்லோகம்
||
த்ருவ பதம்
ஸப்த ரிஷி மன்டலம்
சனி
வியாழன்
செவ்வாய்
வெள்ளி
புதன்
நக்ஷத்ரங்கள்
சந்திரன்
ஸூரியன்
||
புவர்லோகம்
||பூமி||
அதள
விதள
ஸுதள
தலாதள
மஹாதள
ரஸாதள
பாதளம்
நரகம் (பாப பூமி)
தமஸ்**
கர்த்தம்
அண்ட ஓடு
பெருவெளி.
தமசிலிருன்து தமஸ் ஐம்பது கோடி யோஜனை விஸ்தீர்ண்யம்.

– – – – – – – – – — – – – – –

திரவ்யம் -; சேதனம்(2) அசேதனம் (4)
சேதனத்தில் அடங்கும் திரவ்யம் இரண்டு ஈஸ்வரனும் ஜீவனும்.
அசேதனத்தில் அடங்கும் திரவ்யம் பிரக்ருதி, காலம், ஸுத்த ஸத்வமாகிற நித்ய விபூதி, தர்ம பூத ஞானம் ஆகியவை.

இதில் அஜடமான சேதனனும், ஈஸ்வரனும் ஶ்வயம் பிரகாஸமாய்,
பிரத்யக் என்று, தீபத்தைப் போலே தன்னைக் காட்டி , பிரவற்றையும் காட்டித் தரும்.
இதையே ஶ்வயம் பிரகாஸிதம், ஶ்வஶ்மை பிரகாஸிதம் என்று சொல்லுவர்.

அசேதன திரவ்யமான பிரக்ருதி, காலம் இரண்டும் தானாகவும், தனக்காகவும் பிரகாசிக்காது.
அஶ்வயம் பிரகாசிதம், ஜடமான படியாலே.

நித்ய விபூதியும், தர்ம பூத ஞானமும் அசேதன, அஜட திரவ்யம் பராக் என்று அழைக்கப்பட்டு தானே பிரகாஸிக்கும், தனக்கு பிரகாஸிக்காது .

– – – – – – – – – – – – – –

இனி கால தத்வத்தைப் பார்ப்போம் :

இது ஒரு ஜடப்பொருள். முக்குணத்துக்கு அப்பாற்பட்டது
ஶ்வஶ்மை பிரகாஸத்வம், ஸ்வயம் பிரகாஸத்வம் இல்லாதது.
இது அகண்ட காலம் ஸகண்ட காலம் என நித்யாநித்யமாய் இரண்டு.
அகண்ட காலம் ஶகண்ட காலத்துக்கு உபாதானமாய் இருக்கும்.
அகண்ட காலம் நித்யம். ஶகண்ட காலம் கார்யமாய், ஸதத பரிணாமியாய் அநித்யம்.

அகண்டகாலம் – பூத, பவத், பவிஷ்யத் காலம் என்றும், யுகபத (ஒரே ஸமயம்);
க்ஷிப்ர (ஸீக்ர/விரைவானதாய்); சிராதி என்று (நீண்டதாயும்) இருக்குமது.

ஶகண்ட காலம் – விநாடி, நிமிடம், மணி, நாள், வாரம், பக்ஷம், ருது, அயனம், ஶம்வத்சரம்
என்று மாறிமாறி சுழலுமது. இவை மநுஷ்ய மாண நேரம்.

பித்ருக்கள் நேரம் :
மநுஷ்ய மாதம் அவர்களுக்கு 1 நாள். வளர் பிறை – பகல். தேய்பிறை – இரவு. அம்மாவாசை மதியம்.

தேவர்கள் நேரம் :
மநுஷ்யர்களின் ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள்.
உத்தராயணம் – பகல்.
தக்ஷ்ணாயனம் – இரவு.
தேவ வருஷம் 12000 = ஒரு சதுர் யுகம். அதில்

கிருத யுகம் 4000 யுக சந்தி 800(700) தர்மம் 1 கால்.
திரேதா யுகம் 3000 – 600(500) – 3/4.
த்வாபர யுகம் – 2000 – 400(500) – 1/2.
கலி யுகம் – 1000 – 200(300) – 1/4.

தேவமாண 1000 சதுர் யுகம் பிரம்மாவுக்கு பகல்.
இந்த 1000 சதுர் யுகத்தில், 71 சதுர் யுகம் என்கிற விகிதத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள், சப்த ரிஷிக்கள் வந்து போவார்கள்.
பிரம்மாவுடைய ஆயுசு 2000 சதுர்யுகம் x 30 x 365

பிரளயம் :

௧. நித்ய பிரளயம் – சரீர வியோகம் (அ) மரணத்தில் ஏற்படுவது.

௨. நைமித்யிக பிரளயம் – பிரம்மாவுக்கு பகல் முடிந்தால் பூ, புவ, ஸுவர் லோகங்கள் அழியும் .
பிரம்மாவின் ஆயுட்காலதில் நடுநடுவே ஏற்படுவதால், இது அவாந்தர பிரளயம் என்றும் – கிருதம் என்றும் அழைக்கப்படும்..
இந்த சமயத்தில், மஹர்லோக வாசிகள் குடிபெயர்ந்து ஜனர்லோகத்தில் இருப்பர்.
அதாவது பிரம்மாவுடைய இரவுக்காலத்தில், முதல் மூன்று லோகங்கள் அழிய, மற்ற நான்கு உலகங்களும் அழிவதில்லை.
மறுபடியும் பிரம்மவுக்கு பகல்போது ஆகும் போது, அழிந்த மூன்று உலகங்களும் படைக்கப்பதும்.
ஆகவே இந்த மூன்று உலகங்களும், கிருதம் என்றும், மஹர் லோகம் – கிருதகிருத்யம் (அழியாதது ஆனால் வசிப்பார் அற்றது) என்றும்,
அதன்மேல் உள்ள சத்ய, தபோ, ஜநைர் லோகங்கள், அழிவதில்லை யாதலால், அகிருதம் என்றும் அழைக்கப் படுகின்றன.

௩. பிராகிருத பிரளயம் :

பிரம்மவினுடைய ஆயுஸு முடியும் போது 14 உலகங்களும் அழிந்து, ப்ருத்வி நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும்,
காற்று அண்ட வெளியிலும், இப்படி பஞ்ச பூதங்களும் கலந்த ஆகாஸம் அஹங்காரம், மஹாந் பிரகிருதி என்று
எம்பெருமான் திருமேனியிலும் லீநமடையும்.

அப்படி அவைகள் அநாதியாய் ஸூக்ஷ்ம தசையில் ஒன்றிக் கிடக்க, காலத்தால் உணர்த்தப் பட்டு,
பிராட்டி அனுஞையோடே மீண்டும் உண்டாவது தான் படைப்பு.
இப்படியான யோகபத்யம் அநுகிரஹ கார்யம் என்பது பிரசித்தி.

ஆக லீலா விபூதி காலாதீனம். பகவானும் இங்கு காலத்துக்கு கட்டுப் பட்டே கார்யம் செய்கிறான்.

நித்ய விபூதியில் காலம் உண்டு ஆனால் அதன் ஆட்சி இல்லை. ”நவைகால தத்ர பிரபுஹு” என்கிற பிர்சித்தியோடே,
ஒன்றின் அடுத்து ஒன்று என்கிற கிரமம்தான் உண்டு. அந்த ஒவொன்றும் எத்தனை காலம் என்பது கிடையாது,
பகவாக்ஞா ஸீமிதமானது என்றே சொல்ல வேண்டும்.
நித்யவிபூதியில் காலம் ஷடிந்திரிய கிராஹ்யமாய், ஆறு இந்திரியங்களாலும் அறியத்தக்கதாயிருக்கும்..

௪. அத்யந்திக பிரளயம் – ஜீவன் முக்தி அடைவதாகும்.

1, 4 ஜீவாத்மா சம்பந்தப் பட்டது.
2, 3 லோகங்கள் சம்பந்தப் பட்டது.

– – – – – – – – – – – – –

நித்ய விபூதி / வைகுந்தம் :

திரவ்யமாய், பராக் கோஷ்டியில் அன்வயிப்பதாய், அஜடமாய் இருக்கும்.
ஶ்வயம் பிரகாசம், ஶ்வஶ்மை பிரகாசத்வத் தோடு கூடியது. அதாவது பிறர்க்கு ஒளிவிடும்.
தனக்கு ஒளிவிடாது. ஸுத்த சத்வமாய், மிஶ்ர தத்வம் கலசாதது. தூமணி துவளில் மாமணி விளக்கம் இங்கு நோக்கத்தக்கது.

மேல் பக்க வாட்டங்களில் அசீமிதமாய், கீழ்வாட்டில் லீலாவிபூதியால் சீமிதமானது.
ஆனாலும் முக்குணத்தால் ஆன ப்ரக்ருதி தத்வதினிற்றும் தனித்து, ஸுத்த சத்வமயமானது.
அசேதனம். ஆனந்தாவஹம். பஞ்ச உபனிஷத் மய- பூத தத்வத்தாலும், பஞ்ச சக்தி- இந்திரிய விசேஷங்களாலும் ஆன
சரீரங்களோடு கோடிய நித்ய, முக்த ஜீவாத்மாக்களுக்கு இடம்.

அங்கு போகம் – பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹம்.
போகோபகரணம் – சந்தன, புஷ்ப, குசுமாதிகள். (லீலாவிபூதிபோல் இந்த்ரியங்கள் அன்று).
போகஸ்தானம் – கோபுர, பிராகார, விமான, மண்டபம் இத்யாதிகள்.

நித்ய, முக்தர்கள் பரிகிரஹிக்கிற சரீரம், ஸுத்த சத்வமயமாய், ஈஶ்வர சங்கல்ப்பத்தாலே அமைவது. கர்மத்தால் அன்று.
பகவத், வியூக, விபவ, அர்சா திருமேனியும் அப்ராகிருதம்தான். வேறு சிலர் அவன் அர்சா திருமேனியை
பிராகிருதம் என்று சொனாலும் அதுவும் அப்ராகிருத ஆவிர்பாகம் என்றே நம் சித்தாந்தம்.

சிலர் அவனுக்கு சரீர்மே இல்லை என்று வாதிக்க, நித்ய முக்த்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கைகாக
பரமபதத்தில் அவன் ஒரு அபிராகிருத சரீரத்தோடே இருத்தல் அவஸ்யம்.

நித்ய முக்தர்கள் அசரீரியாக, ஆத்ம வடிவமாகவே இருந்து அனுபவிக்கலாமே என்றால்,
திருவாராதன, உற்சவ கைங்கர்யங்களைச் சமர்ப்பிக்க, அவர்களுக்கும் கரண களேபரங்கள் அவஶய்மாகின்றன.

ஞான பல ஐஶ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் பகவத் சரீரத்தாலே பிரகாஸிதம். மேலும்
நித்ய, நிரவத்ய, நிரதிசய, ஔஜல்ய , ஸௌகந்த, ஸௌகுமார்ய, லாவண்ய, யவ்வன, மார்த்வ, ஆர்ஜவ குண ஸம்பன்னன்.
அவனுடைய திருமேனி இப்படியாக அபிராகிருதம் – ஹேய குண பிரதிபடம்.

அவர் ஆத்மாவாலும், ஸ்வரூபத்தாலும் விபு – வியாபிக்கக் கூடிய சக்தி சாமர்த்தியம் உடையவர்.
இதற்கு கண்ணனெம் பெருமான் குருக்ஷேத்ரத்தில் காட்டிய, விராட் ஶ்வரூபமே சாக்ஷி.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

ஸ்வயம் பிரகாசம் :
ஆத்மா ஞானதால் ஆனது. ஞானவான். ஞான குணகனும் கூட. மற்றப் பொருள்களை தன் ஞானம் கொண்டு அறிவதோடு
தனக்கு ஞானம் உண்டு என்பதும் அறிபவர். இதையே தனக்கு பிரகாசிப்பவர். தானே பிரகாசிப்பவர் என்கிறது.
ஸுத்த ஸத்வத்தால் ஆன நித்ய விபூதி ஸ்வயம் பிரகாஸம். ஆனால் ஶ்வஸ்மை பிரகாஸிதம் இல்லை.
முக்குணத்தால் ஆன லீலா விபூதியில் எம்பெருமான் அவதரிக்கும் போதும் , அர்ச்சா திருமேனியோடு இருக்கும் போதும்
ஸுத்த ஸத்வ மயமாமன திவ்யமங்கள விக்ரகத்தோடே எழுந்தருளுவதால், லீலா விபூதியிலும் ஸுத்த ஸத்வதுக்கு அவகாசம் உண்டு.

ஶ்ரீ விஶ்ணுபுராண அஸ்த்ரபூஷணா அத்யாயத்தின்படி லீலா விபூதியில் காண்கிற ஒவ்வொன்றுக்கும்
எம்பெருமான் திருமேனியில் பிரதிநித்வம் (ஸர்வ அபாஸ்ரயத்வம்) உண்டு.
கௌஸ்துபம்=ஜீவாத்மா.
ஶ்ரீவத்ஸம் என்கிற திருமார்பில் மரு = பிரக்ருதி.
கதை = மஹான்
சங்கு= ஶாத்விக அஹங்காரம்.
சார்ங்கம்=ராஜஸ அஹங்காரம்.
கட்கம்=ஞானம்.
கட்கத்தின் உறை=அஞானம்.
சக்ரம்=மனசு.
அம்ராதூளியில் உள்ள 10 அம்பு=ஞாநேந்திரியம், கர்மேந்திரியம்.
வைஜயந்தி,வனமாலா =பூத ஸூக்ஷ்மங்களும், பஞ்ச பூதமும்.

ஆமோத, பிரமோத, ஸம்மோத, வைகுந்தம் என்று நித்ய விபூதியில் அடைகிற ஆனந்தத்தின் நான்கு நிலைகள் தான் அவை.
அதாவது பார்த்துக் களிப்பது. பார்த்ததை அடைந்து ஆனந்திப்பது. அடைந்ததை அநுபவித்து இன்புருவது.
கிடைத்த ஆனந்தத்தை தக்க வைத்து சிரகாலம் அநுபவிப்பது என்கிற நாலு நிலைக்கு நித்ய விபூதியில் உண்டான நான்கு விபாகங்கள்.

திரிபாத் விபூதி, பரமபதம், பரமவியோமம், பரமாகாச, அம்ருத, நாத, அப்ராக்ருத, ஆனந்த, வைகுண்ட, அயோத்யா
என்று பரம பதமான நித்யவிபூதிக்கு பர்யாய சப்தங்கள்.
அப்படிபட்ட தேசத்தில் இருகிற ஊர் வைகுந்தம். அது 12 மதில்களால் சூழப்பெற்றது.
அங்கு ஆனந்த மண்டபம் என்கிற கோயிலில் 1000 கால் மண்டபத்தில், திரு மாமணி மண்டபம் என்கிற திரு ஓலக்க சபை உண்டு.
அதில் ஆயிரம்தலை பணாமண்டலம் கொண்ட ஸேஷபீடம் –
அதில் (தர்மம், அதர்மம்-ஞானம், அஞானம்-வைராகியம், அவைராகியம்-ஐஸ்வர்யம், அநைஸ்வர்யம் என்கிற எட்டு கால்களை) உடைய தர்மாதி பீடம்.
அஷ்டதள தாமரை மலர்போல ஆசனம், சத்ர, சாமர, ஆலவட்ட கைங்கர்ய பரர்கள் சூழ
வீரா சனத்தில் தேதீப்யமான திவ்யமங்கள விக்ர்ஹதோடே நம்பெருமாள் சேவை சாதிகும் படியான தேசம் நித்ய விபூதி.

—————–

இனி தர்மபூத ஞானம் விவரிக்கப்படுகிறது:
ஜீவ-பர தர்மமாய் (குணமாக) இருகிற ஞானம், தர்ம பூத ஞானம். பரமாத்மாவுக்கு அது பூர்ணமாக விகஸித்திருக்கும்.
ஜீவாத்மாகளுக்கு அது கர்மத்தால் மழுங்கி இருக்கும். பரம பதத்தில் கர்மா இல்லையாய், விகஸித்தபடி காணலாம்.
ஸ்வந்திரன் என்கிற ஞான ஸங்கோசம் போய், சேஷ பூதன் என்கிற விகசித ஞானம் பெறுகை.
புத்தி (அ) தர்மபூத ஞானம் – ஸ்வயம் பிரகாசம். ஸ்வஸ்மை பிரகாசிதம் இல்லையாய் பராக் என்றும், அசேதனமாயும் இருப்பது.
ஸூர்யனுக்கு பிரகாசம் போலே, விளக்குக்கு ஒளி போலே, ஆத்மாவுக்கு ஞானம்.
அணுவான ஆத்மாவுக்கு குணமான ஞானம் விபுத்வத்தோடே கூடியது.
அதாவது ஆத்மா ஓரிடத்தில் இருக்க, சரீரம் முழுவதுமாய் வியாபிப்பது. அதுக்குண்டான, தர்மபூத ஞானம்.

பரமாத்மாவோ என்னில் அவன் ஸ்வரூபத்தாலும் விபு. அவருடைய ஞானமாகிற குணத்தாலும் விபு.
தனக்குத் தானே ஒளிவிடும் ஜீவாத்மா. தனக்குத் தானே ஒளிவிடுவார் பரமாத்மா.
தானே ஒளிவிடும் தனக்கு ஒளிவிடாது ஞானம். தானும் ஒளிவிடாது, தனக்கும் ஒளிவிடாது ஜடப்பொருள்கள்.
ஞானத்தைக் கொண்டு மற்ற பொருள்களை ஆத்மா கிரகிக்கிறது.
ஆக பொருள்கள் ஞானத்துக்கு விஷயம். ஞானமே விஷயமாம்போது, விஷயி ஆகிறது.

இந்த தர்மபூத ஞானம் பகவானுக்கும், நித்ய ஸூரிகளுக்கும் எங்குமே எப்போதுமே விபுவாயிருக்கும்.
பத்தர்கள் விஷயத்தில் இது மூடப்பட்டு குறைய பிரஸரிக்கும். முக்தர்களுக்கு இது மறைவு வெளிப்பட்டு, நித்யர்களுக்குப் போலே ஒளிவிடும்.
பிறந்திறவாத ஆத்மாவை பிறந்தார், இறந்தார் என்னுமாபோலே, ஞான உத்பந்நம், நஷ்ட்டம் என்கிற வியவகாரம்,
அது கர்மத்தால் சங்குசிமாவதும், கர்மம் தொலைந்தால் விகசிப்பதுமான நிலையைக் குறிக்கும்.
எதைப்பற்றிய ஞானம், யாருக்கு ஞானம் என்பதைக் கொண்டு கர்மக-ஞானம் கருத்ருக-ஞானம் என்று ஞான விபாகம்.

இது விளக்கு என்று புரிதலாகிற ஞானம் உண்டாகும்போது, விளக்கு கர்மா, அறிபவர் கர்த்தா.
தீபம் அஹம் ஞானாமி அன்ற வாக்கியத்தில், தீபம் ஞானத்துக்கு விஷயம். அஹம் ஞானத்துக்கு ஆஶ்ரயம்.
இத்தால் ஞானம் ஸகர்மக-ஸகர்த்ருக மாகத்தான் எப்போதும் இருக்க வேண்டும் என்பது தேறுகிறது.
வேகம், நுண்மை, லகு இத்தோடு தான் இருக்கும் போது, பிரகாசியாமல் இருக்காது ஞானம் என்பது.
ஞன பிரஸர த்வாரம் இந்திரியம். இந்திரிய நிஸ்ருஜ்ய ஞானம் என்பது விஷயத்துக்கும் (பொருள்கள்) இந்திரியத் துக்குமான இரு-வழி பாலம்.
அதாவது – ஆத்மாவிலிருந்து புறப்படும் ஞானம் மனம் மொழி காயங்கள் ஆகிற இந்திரியங்கள் வழியாக
பொருட்களைக் கிரஹித்து மீண்டு புத்திக்கு விஷய மாக்குகை.
ஆக ஞனத்துக்கு கமனம், பாம்பின் உடல் குண்டலத்தைப் போல் – சுருங்கி விரிவது ஞானம்.

ஞானம் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருப்பதால் ”குணம்” என்றும், சுருங்கல் விரிதல், கமனம் ஆகிய மாறுதலுக்கு உட்பட்டுவதாய்,
அக்ஞானம், ஞான சங்கோசம், ஞான விகாசம் என்கிற நிலையை அடைவதாலும் ”திரவ்யம்” என்று கூறலாம்.
விளக்கு போலே தன்னைக் காட்டி பிறவற்றைக் காட்டும், தான் ஆஸ்ரயித்து இருக்கிற ஆத்மாவுக்கு மட்டிலும்,
ஏனெனில் அந்தந்த ஆத்மாவுக்கான ஞானம் அதனதன் இந்திரிய சன்நிகர்ஷத்தாலே ஏற்படுமே அன்றி
ஒருவருடைய ஞானம் மற்றவருக்கு ஒளிர வழியில்லை.

ஆனால் ஒரு விஷயத்தை பற்றிய ஞானம் தனக்கு போல் இன்னொருவருக்கும் ஏற்பட வழி உண்டாகையால்,
அதை அநுமானத்தல் அறியலாம் அன்றி தன்னுடைய ஞானம் அவர் அளவாக பிரஸரிப்பதாகிற பிரத்யக்ஷ பிரமாணத்தை கொண்டு இல்லை எனலாம்.
ஞானம் ஸ்வத ஏவ பிரமாணம்-எந்த ஞானமும் உண்மை ஞானம் என்பது ராமனுஜ சம்பிர தாயத்தின் அடிப்படைக் கொள்கை.
இது விளக்கு என்ற அறிவுக்கு சஜாதீயமான இன்னொரு விளக்கு தேவை இல்லை.
விஜாதீயமான கர்தாவும், கார்யத்தையும் மட்டுமே எதிர்பார்க்கும். ஆக அது ஸ்வயம் பிரகாசம்.

ஞானம் க்ஷணிகம் (பௌத்தன்), த்ரிக்ஷணிகதம் (நையாயிகன்), ஞான குணகன் ஆதமா என்னாமல் ஞானமே ஆத்மா (அத்வைத மதம்),
முத்து சிப்பியை வெள்ளி என்று பிரமிக்கிற ப்ராதிபாஸ ஞானம் (மாயா வாதம்)அனைத்தும் மேற்சொன்னவைகளால் நிரஸிக்கப் பட்டன.
ஒரு விஷயத்தைப் பற்றி பலமுறை ஏற்படுகிற ஞானம் வெவ்வேறு அல்ல ஒரே ஞானம் தான்.
தமோ குண சன்னிதியால் மயக்கம், தூக்கம் இவை எற்பட்டு ஞானம் மூடப்படலாமே ஒழிய அது ஞான அபாவம் என்று சொல்லு வதற்கில்லை.
எதை போலே என்றால் , யவ்வன பருவத்தை பாலய பருவம் மூடினால் போலே, கௌமாரம் நீங்கி யுவா ஆனவாரே ஸுக்லம் பிரஸரிப்பது போலே இது.

மதி, பிரக்ஞா, ஸம்விது, தீ, மணீஷா, ஸேமுஷி, மேதா, புத்தி என்பது தர்மபூத ஞானத்துக்குண்டான ஒரு பொருள் பல சொல்.
சுக, துக்க, இச்சா, துவேஷ பிரேமம் அனைத்தும் ஞான விபாகமே. அனுகூல ஞானம் சுகம். பிரதிகூல ஞானம் துக்கம்.
இப்படி ஸில பல உபாதியால் வேறுப்டுகிற ஞானம் இவை அறிவின் வேறு வேறு நிலைகள்.
நினைவு கூறுதலாவது முன் நிகழ்ந்த ஒன்றை, பார்த்த, கேட்ட ஸம்பவம், பொருள் அல்லது மனிதரை ஞாபகப் படுத்திக் கொள்வது.
இது இரண்டு வகையில் ஏற்படலாம். அதே சம்பவம் மீண்டும் நிகழ மறு நினைவு ஏற்படலாம்.
இதை ஸ்மரணை என்பர். அல்லது ஒன்றின் நினைவு இன்னொன்றின் எண்ணத்தை மீட்க்கலாம்.
இதுக்கு பிரத்யபிக்ஞா என்று பெயர். அப்படியான அறிவின் மாறுபாடுகளே சுக, துக்காதிகள்.

——————————————————————————–

சேமுஷி பக்தி ரூபா – ஜ்ஞானம் கலந்த நலம் – மதி நலம் என்ற இவை முதிர்ந்த பகவத் பத்தியை குறிக்கும்.
இந்த பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் மோஷோபாயம். இந்த ஜ்ஞானம் ஜீவனுக்கும்,ஈஸ்வரனுக்கு குணமாய் இருப்பதால்
அதை தர்ம பூத ஜ்ஞானம் என்கிறோம்.

இந்த தர்மபூத ஜ்ஞானம் திரவியமாய் , அசேதனமாய், அஜடமாய் இருப்பது. வெறுமனே ஜ்ஞானம் பக்தியாகி விடாது,
ஏனென்றால் கர்மத்தால் அது மூடப்பட்டுள்ளது, வெட்டி எடுக்கப்பட்ட வைரம் போலே.
அதன் ஒளியை கூட்ட பட்டை தீட்டுவது போல், அதை நன்றாக
(1) ஆச்சார்ய உபதேசங்களாலும்
(2) உபதேச உசித அநுஷ்டானத்தாலும் பரிஷ்கரிக்கப்பட வேண்டும்.
ஆத்மா வா அரே ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: திர்ஷ்டவ்ய: நிதித்யாஸி தவ்ய : என பரிபக்வமாக வேண்டும்.

காமம் (விருப்பம்) சங்கல்பம் (உறுதி) சிரத்தை (ஈடுபாடு),விசிக்கிச்ஸா (அறிந்து கொள்ளும் ஆசை)
திருதி (தைர்யம்) ஹ்ரீஹி ( வெட்கம் ) தீஹி (புத்தி) பீஹி (பயம்)
இவை அனைத்தும் ஜ்ஞானத்தின் வெளிப்பாடுகளே. இவை மனதின் வெளிப்பாடு என்று சாஸ்த்ர வசனம் இருக்கிறதே,
மனம் ஜடப் பொருளாயிற்றே ? அஜடமான ஜ்ஞானத்தின் வெளிப்பாடு என்று எப்படிச் சொல்லலாம்? என்று கேட்டால்.
அவை ஜ்ஞான காரியமாக இருக்க, மனக் காரியம் என்றது உபசார வழக்காகக் கொள்ள வேண்டும்,
ஜ்ஞானம், மன சாகாய மின்றி நடவாதாகையால்.

பிரத்யக்ஷம், அனுமிதி, சாஸ்திர (ஆகம) ஜ்ஞானம், ஸ்மிருதி, சம்ஸயம் (இதுவா அதுவா என்று தடுமாறுகிற அறிவு),
விபர்யயம் (இதுதான் என்று தவறாக முடிவு பண்ணுகிற அறிவு), மயக்கம் (வஸ்துவை மறாடி நினைக்கை)
விவேகம் (பகுத்து அறிதல்), வ்யவசாயம் (துணிவு), மோஹம் (கிறக்கம்) ராகம், த்வேஷம், மதம் (செறுக்கு )
மாத்சர்யம், தைர்யம், சாபல்யம், டம்பம் (தர்ம காரியத்தை படாடோபத்துக்குச் செய்வது),
லோபம், க்ரோதம், தர்ப்பம் (செருக்கு) ஸ்தம்பித்தவம் (திகைப்பு) துரோகம், அபிமானம், நிர்வேதம் (மன வெறுப்பு) ஆனந்தம் ,
நல்ல அறிவு, தீய அறிவு, அன்பு, திருப்தி, சாந்தி, கீர்த்தி, வைராக்கியம், மன அழுத்தம், இன்பம், நட்பு, கருணை, இச்சை,
மென்மை, பொருமை , வெறுப்பு,, பாவனை,பேராசை, துராசை ,சர்ச்சை, சக்தி,பக்தி, பிரபத்தி இவை முதலான ஆத்மாவின் குணங்கள்.

ஜ்ஞான, சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் வாத்சல்ய, காருண்ய இத்யாதி பகவத் குணங்கள்.
அவருடைய ஜ்ஞானம் இறந்த காலம் நிகழ் காலம், வருங்காலம் அனைத்தும், பிரத்யக்ஷத்தில் காண்பது போல் அறிபவர்.
மநுஷ்யர்களுக்கு இறந்த காலத்தில் சிலவும், நிகழ் காலமும் வியக்தம்.
ரிஷி, முனிகளுக்கு இறந்த காலமும், வரும் காலமும் ஸ்புரிக்குமே ஒழிய, கண்முன் நடப்பதுபோல் தோன்றாது .
ஆனால் பகவானுக்கு அவைகள் பிரத்யக்ஷத்தில் பார்ப்பதுபோல் ஒளிவிடக்கூடியது.

சக்தி அகடித கடனா சாமர்த்தியம்.
பலம் ஜகத் தாரண சாமர்த்தியம்.
ஐஸ்வர்யம் நியமன சாமர்த்தியம் .
வீர்யம் அவிகாரத்வம் .தன்னுடன் சேர்ந்தவைகள் மாற்றம் அடைந்தாலும், தான் மாறுதல் இல்லாத.
தேஜஸ் பராபிவன சாமர்த்தியம்.
சௌசீல்யம் – நீரந்தரேண சம்ஸ்லேஷம்
வாத்சல்யம் – குற்றத்தையே குணமாக பார்த்தல்.
மார்த்தவம் – அடியார்கள் பிரிவை சகியாதவன்.
ஆர்ஜவம் – ஒன்றே நினைத்து ஒன்றே பேசி ஒன்றே செய்வது.
சௌஹார்த்தம் – தனக்கு இழுக்கான செயலானாலும், பிறர் ரக்ஷணத்தில் முனைப்பு.
சாம்யம் – ஆஸ்ருதர்களிடத்தில் உயர்வு தாழ்வு பாராதவன். யதிவா ராவண ஸ்வயம் என்ற இடம் காண்க.
ஆனால் அபக்தன், பக்தன் இவர்களிடம் வேறுபாடு பார்க்கமாட்டான் என்பது இல்லை.
காருண்யம் – பரதுக்க துக்கித்தவம், பரதுக்க அஸஹிஷ்ணுத்வம் . பிறர் வருத்தம் கண்டு பொறாதா தன்மை
மாதுர்யம் – போக்கிய வஸ்துவான பால் மருந்தாமாப் போலே, உபாய உபேயம் இரண்டிலும் மதுரமாம் தன்மை.
காம்பீர்யம் – ஆழங்கால் காண முடியாத கொடையாளி. திரௌபதி விஷயத்தில் எல்லாம் செய்தும், என்ன செய்தோம் என்ற அதிருப்த்தி .
சாமர்த்தியம் – அடியார்கள் அபராதங்களை தான் கணிசியாததோடு , மறைக்கிறார்.
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் என்னடியார் அது செய்யார் என்று தோஷ கோபத்வம்.
ஸ்தைர்யம் – பக்தர்கள் ரக்ஷண விஷயத்தில் யார் எதுசொன்னாலும் அசராதவன் தடங்கலைக் கண்டு கலங்காதவர் .
தைர்யம் – பழுதாகாத பிரதிக்ஞை உடையவர்.
சௌர்யம் – பரபல பிரவேஸ சாமர்த்தியம்.
பராக்கிரமம் – பரர்களை சின்னாபின்ன மாக்கல் .
என்று எண்ண முடியாததாய், அனுபவித்து முடிக்க முடியாததாய் இருக்கும் பரமாத்மாவுடைய ஜ்ஞானம்.

இனி பக்தி பிரபத்தியின் தன்மைகளை கிஞ்சிது பார்ப்போம்,
ஏனெனில் அவைகளை பற்றி முழுவதுமாக ஒரு ஆசாரியனை வணங்கியே அறியலாவது.

பக்தி பிரபத்திகளை வியாஜமாகக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனே உபாயமாக இருந்து
மோக்ஷத்தை அளிக்கிறான் என்பது தேர்ந்த உண்மை.

மோக்ஷோபாயத்தை சித்தோபாயம் சாத்யோபாயம் என்று இரண்டாக பிரிக்கலாம்
இதில் சித்தோபாயம் பகவான். சாத்யோபாயம் பக்தி/பிரபத்தி.
இது விஷயமான கலா பேதம் பிள்ளைலோகாச்சார்யார் (தென்கலை) சம்பிரதாயம் என்றும்;
வேதாந்த தேசிகர் (வடகலை) சம்பிரதாயம் என்றும் இரண்டு.
பக்தியோ பிரபத்தியோ வியாஜ உபாயமே. பகவானே முக்கிய உபாயம் என்பது தேசிக பக்ஷம்.
அவை அதிகாரி விசேஷணம் மாத்திரமே வியாஜ மாத்ர உபாயமும் இல்லை என்பது பிள்ளை லோகாச்சார்யர் பக்ஷம்.
இருவருக்கும் பகவானே உபாயம் என்பதில் பேதமில்லை.
ஆனால் அவனுடைய அந்த உபாயத்வம்; கிருபா ஜன்யமா? கிருபா ஜனகமா? என்பதிலேயே பேதம் சொல்லப்படுகிறது. .’
‘அதுவும் அவனது இன்னருளே ” என்கிறபடி கிருபா ஜன்யம் . இது பிள்ளை லோகாசார்யர் அபிப்ராயம்.
இவன் செய்யும் பிரபத்தி கிருபா ஜனகம் என்பது தேசிகர் அபிப்ராயம்.

பக்திக்குச் சாதனம் கர்மயோகமும், ஜ்ஞான யோகமும். கர்மயோகம் சித்த சுத்தியை ஏற்படுத்தும் அது ஜ்ஞான யோகத்திலும்,
ஜ்ஞான யோகம் ஆத்ம சாக்ஷத்காரத்தை வரவழைத்து, பகவத் பக்தியிலே மூட்டும்.

இவை மூன்றும் தனித்தனியே மோக்ஷோபாயம் என்று சொல்பவர்களும் உண்டு.
ந தர்ம நிஷ்டோஸ்மி நசாத்மவேதி ந பக்திமான் — ஆளவந்தார். பக்திக்கு அங்கமாக மற்றை இரண்டும் வைத்து,
பக்தியே மோக்ஷோபாயம் என்று சொல்பவர்களும் உண்டு. நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன் — நம்மாழ்வார்.
பக்திக்கு அங்கமான இவை இரண்டும் இல்லை என்றால், மோக்ஷோபாயமான பக்தியம் இல்லை என்று சொல்ல பிரசக்தியே இல்லை என்கிறார்.

கர்மயோகமாவது :

வர்ணாஸ்ரம தர்மத்தில் நின்று
தேவதா ஆராதனா, யாக யஜ்ஞம், தான தர்மாதிகளை செய்வது
ஆச்சார்யனை அண்டி தத்வ ஜ்ஞானம் பெற்று, அதற்கநுகுணமான ஆசாரத்தில் நிற்பது
அகிருத்ய கிருத்யம் , கிருத்ய அகிருத்யம் இவைகளை தவிர்ப்பது
கர்த்ருத்வ தியாகம், பலத் தியாகம் , பல சங்கத் தியாகம் கூடிய நித்ய கர்மாநுஷ்டான வர்தனம்
தாழ்ந்த பலன்களில் கண் வையாமை
செய்பவை யாவும் பகவத் கைங்கர்யமாக செய்தல் இத்யாதி.

கர்ம யோகத்தால் மனதின் அழுக்கு நீங்கி ஜ்ஞான யோகத்துக்கு வழி வகுக்கும்.

ஜ்ஞான யோகமாவது :

வேதாந்த விசாரமும்
பகவத் சேஷமான
நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்வரூப
தியான, ஆசன, யோக முறைகளும் (அ )
நாம சங்கீர்த்தனம் (அ )
திவ்ய தேச வாசம் (அ)
பக்திக்கு அங்கமான சரணாகதியாலே

பகவத் பக்தியில் ஈடுபட உள்ள தடங்கல்கள் விலகி
பக்தி யோகத்திலே மூட்டும்.

பக்தி யோகமாவது :

யமம் நியமம் ஆஸனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணம் தியானம் ஸமாதி என்று எட்டு அங்கங்களோடு கூடியதான
தைல தாராவது அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தானம் (அ)

விவேக, விமோக, அவ்யாச, கிரியா, கல்யாண, அநவசாத, அனுதர்ஸ்வ ; சாதன சப்தகம் பக்தி.

இந்த மேலே விளக்கமாகப் பார்க்கலாம்:

பக்தி பிரபத்தி இரண்டுமே ஜ்ஞானத்தின் வெளிப்பாடுதான். தர்மிபூத ஜ்ஞானம் நெருப்பு என்றால்,
அந்த தீயின் பொறி போன்றது தர்ம பூத ஜ்ஞானம். ஜ்ஞானத்தின் முதிர்ந்த நிலை பக்தி.
கர்ம, ஜ்ஞான யோகத்தாலேயே பெறப்படும் ஒன்று. இந்த பக்தியே முக்தியைப் பெற்றுக் கொடுக்கும் என்று ஒரு சாரார் கருத்து.
இல்லை கர்ம, ஜ்ஞாம, பக்தி யோகங்களே தனியாக, நேரே மோக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பது இன்னொரு சாரார் கருத்து.

கர்ம ஜ்ஞான ஸகக்ருதையான பக்தி யோகம் என்பது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து,
தூமலர் தூவித் தொழுது என்கிறபடி மனம் மொழி காயம் என்று மூன்றாலும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருத்தல்.
அர்ச்சனம் செய்தல், நமஸ்காரம், பூத் தொடுத்தல், நாம சங்கீர்த்தனம் செய்தல்,
”மத் கதா ப்ரீதிஹி” என்று அவனுடைய கதையைக் கேட்டல் , அவரை விட்டுப் பிரிந்தால் தாங்க மாட்டாமை ,
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருத்தல் பத்திக்கு லக்ஷணம்.
இது 8 அங்கங்களைக் கொண்டு , பக்தி அங்கியாய் இருக்கும்.

யமம் – சத்தியம் பேசுதல், திருடாமை, அஹிம்சை, பிரஹ்மசரியம் ,
அபரிக்ரஹம் (= தேவைக்கு அதிகமான பொருள்கைளின்மேல் பற்றின்மை) யமம் .

நியமம் – வேதம் (அ ) அதுக்கு நிகரான ஆழ்வார் பாசுரங்களை ஓதுதல், சுத்தியோடு இருத்தல்=
சரீரத்துக்கு அழுக்கு சேறு, சகதி, வியர்வை, மலஜலம்.
மனசுக்கு அழுக்கு காம, குரோதாதி அரிஷட் வர்க்கங்கள்.
ஆத்மாவுக்கு அழுக்கு பாப புண்யங்கள். துஷ்டி = இருப்பதைக் கொண்டு நிறைவடைதல்.
காய கிலேசமான சுத்தி = தேகமாய் போஷிக்காமல், சரிரமாய் நோக்கிப் போதல். மனதை நியமித்து பகவானிடத்தில் ஈடுபடுத்தல் நியமம்.

ஆசனம் – தியானத்துக்கு உசித (துதிகால் தொடையில் தொட அமர்ந்து கொள்கிற பத்மாசனம் போன்ற ) அமர்வு நிலை.

பிராணாயாமம் – கும்பகம் (உள்வாங்கல்), பூரகம் (இழுத்து நிறுத்தல்), ரேசகம் (வெளியேற்றல்) இவைகளை சமமான கால அளவில் செய்தல்.

பிரத்யாஹாரம் – புறப்பொருள்களில் ஈடுபட்டுள்ள புலன்களை வாங்கி, ஆத்ம, பரமாத்ம விஷயத்தில் திருப்பி விடுகை.

தாரணம் – அவைகளை பரமாத்ம விஷயத்தில் நிலை நிறுத்தல் .

தியானம் – நிறுத்திய மனதை மற்றது கலசாத சதத பகவத் நினைவு.

சமாதி – இப்படிப்பட்ட முயற்சிகளால் அந்த பகவானை வசீகரித்தல்.

தைல தாரை போலேயுள்ள விடுபடாத தொடர் நினைவுச் சங்கிலி சாதன பக்தி.
மோக்ஷத்துக்கு சாதனமாக இருக்கிற பக்தி சாதன பக்தி. இது உபாசகர்களுக்கு வழி.

பிரபன்னர்கள் செய்கிற பக்தி சாத்ய பக்தி. மோக்ஷத்துக்கு
சாதனமாக இல்லாது அதுவே பிரயோஜனமாய், பகவானால் அருளப்படும் (பிரசாதிக்கப்படும்) பக்தி சாத்ய பக்தி (அ) பலபக்தி யாகும்.

பிரபத்தி அனுஷ்ட்டித்த பிறகு, மோக்ஷம் போவதற்கு இடையில் உண்டான – இருக்கும் நாள் –
பிராப்ய ருசியினாலே செய்கிற பக்தி ஸ்வயம் பிரயோஜன (சாத்ய) பக்தி. கொடுத்துக் கொள்ளாதே,
கொண்டதுக்கு கைக்கூலி கொடுக்க வேண்டுமாய் –
ஒன்று நூறாக பின்னும் ஆளும் செய்வன் என்கிற ஸ்வயம் பிரயோஜன பக்தி. இவை 8ம் ஒருவகை.

சாதன சப்தகமடியாக செய்கிற பக்தி இன்னொரு வகை.

விவேகம் – ஆகார சுத்தி = ஜாதி துஷ்டமான, ஆச்ரய துஷ்டமான, நிமித்த துஷ்டமான (=தலை மயிர், புழு விழுந்த ) பண்டங்களை ஸ்வீகரியாமை .

விமோகம் – பற்று அற்று இருத்தல் = லௌகீகர்கள் விரும்புகிற விஷயங்களில் இருந்து விலகி இருத்தல்.

அப்பியாசம் – பகவத் விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திப்பது.

கிரியா – பஞ்ச மஹா யக்ஞங்களை ( ப்ரஹ்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவைகளை), விடாமல் செய்வது.

கல்யாணம் – உண்மை பேசுதல், ஆர்ஜவத்தோடு (=மனஸ் ஏகம் , வசஸ் ஏகம் , கர்மண் ஏகம் என்று) நேர்மையாய் நடத்தல்,
கருணையோடு இருத்தல், தான, தர்மம் செய்தல், அஹிம்சை, பிறர் பொருள் நச்சுதல் செய்யாமை இவை .

அநவசாதம் – துக்கம் கண்டு துவளாமை. நிர்வேதம் கொள்ளாமை .

அனுர்தர்ஷம் – சந்தோஷம் வரும்போது உன்மத்தர் ஆகாமை.

இந்த 7 னாலும் கிட்டுவதும் பக்தியே .

பக்திக்கு பிரயோஜனம் தரிசன சமானாகார பகவத் சாக்ஷத்காரம் . இதை மோக்ஷ பர்யந்தம் அனுஷ்டிக்க வேண்டுவதாய்,
மோக்ஷம் அடைந்து அங்கு செய்கிற பக்தி , சாதன பக்தியாய் இல்லாது, சாத்ய பக்தியாய் இருக்கும்.

யாருக்கு எப்போது மோக்ஷம் என்ற கேள்வி வரும் போது,
சாஸ்திரம் ”கர்மாவசாநே மோக்ஷம்” என்கிறது. கர்மங்கள் முழுவதுமாக தொலைவது எப்போது என்றால்

பக்தி நிஷ்டனுக்கு பக்தி யோகத்தில் இழியும் நிலையில் சஞ்சித கர்மங்கள் தீயினில் தூசாகும்.
உபாசன மாஹாத்ம்யத்தாலே ஜன்மாந்தரத்தில் பிராரப்த கர்மம் முடிந்த நிலையில், அந்திம ஸ்மிருதி ஏற்பட்டு மோக்ஷம் கிட்டும் .
இப்படி உபாசகர்கள் விஷயத்தில் பிராரப்த கர்மத்தைக் தொலைத்துக் கொள்வது அவர்களுடைய பொருப்பு .

பிரபன்னனுக்கு சரணாகதி அனுஷ்ட்டிக்கும் போது சஞ்சித கர்மமும், தேஹாந்தர ஆரப்த கர்மமும் நசியும்.
வர்த்தமான சரீர ஆராப்த கர்மம் தேஹாவசாநே தொலைந்து இந்த ஜன்மத்தின் முடிவிலேயே மோக்ஷம் கிட்டும்.
இவர்களுக்கு அந்திம ஸ்ம்ருதி நியமமில்லை. அத்தோடு இவர்களின் பிராரப்த கர்மாவை போக்கிக் கொடுப்பது பகவானின் பொருப்பு.

பூர்வாகங்கள் (சரணாகதிக்கு முன்செய்தவை) இப்படிக் கழியுமாகில், உத்தராகங்கள் க்ஞாதம், அக்ஞாதம் என்று இரண்டாய்,
க்ஞாதம் பஸ்சாதாபத்தால் கழியப் பெற்று, அதில்லாது தெரிந்தே செய்தவையாய், வருத்தமும் படாததாய் உள்ளவை யாவை,
அவை அனைத்தும் வர்த்தமான சரீர ஆரப்தத்தோடே சேர்க்கப்பட்டு அதிகப்படி அனுபவிக்க வேண்டியதாய் வரும்.

”ஆக, ஸர்வ பாபேப்யோ மோக்ஷ இஷ்யாமி ” என்கிற இதுக்குப் பொருள், மேல் சொன்ன சஞ்சித பாபங்கள் வரை பக்தனுக்கும் ,
தேஹாந்த்ர ஆராப்த கர்மம் வரை சரணாகதனுக்கும் போக்கித் தருவேன் என்பது கூடார்த்தம் .
அதுவா, வர்த்தமான சரீர ஆராப்த கர்மம் மோக்ஷ பர்யந்தம் அனுபவித்தே அற வேண்டும் என்பதிலே கிருஷ்ண கீதைக்கு நோக்கு.

இங்கு ஒரு சந்தேகம் வரலாம். அதாவது ஒருவனுக்கு ஆயுசு 80 என்று வைத்துக் கொண்டால் ,
அவன் 60 வயதில் பிரபத்தியை அனுஷ்டிக்க, மீதம் உள்ள 20 வயதுக்கான ஆரப்த கர்மத்தோடு,
உத்தராகங்களையும் சேர்த்து அந்த 20 வருடத்தில் தீவ்ரமாக அனுபவிக்க வேண்டி வரும்..
அங்கனன்றி, அவரே 20 வயதில் பிரபத்தியை அனுஷ்டிக்க, அனுபவ காலம் நீண்டு தீக்ஷண்யம் மிதமாய் இருக்க ஹேது உண்டு.

வேதனம், தியானம், உபாஸனம் என்கிற எல்லாம் பக்தியையே குறிக்கும்.
இந்த பக்திக்கு அங்கமான சரணாகதியும் ஜ்ஞான விபாகமே.
இத்தை பரபக்தி , பரஜ்ஞான, பரம பக்தி என்று பக்தியின் மூன்று நிலைகளாகச் சொல்லுவார்.

ஜ்ஞாதும், திரஷ்ட்டும் , பிரவேஷ்ட்டும்
அறிகை, காண்கை , அடைகை
ஜ்ஞான, தரிசன , பிராப்தி
இவை ஒவ்வொன்றும் பக்திக்கு அங்கமான பிரபத்தியின் ஆவிஷ்காரமே.

அறிகை – பகவானாப் பற்றிய ஜ்ஞானம் ஏற்படுகை., ஸம்ஸ்லேஷத்தில் தரிப்பும் , விஸ்லேஷத்தில் தரியாமையுமாகிற பரபக்தி நிலை.
காண்கை – பிரத்யக்ஷ தர்சன ஸமானாகாரமான பர ஜ்ஞானம். சாட்சாத்காரமாவது நேரில் காண்பது போன்ற மானச அநுபவம் .
அடைகை – பகவான் திருவடிகளை அடையப் பெற்று மீளா இன்பத்தில் திளைக்கை பரம பக்தி.

பிரபன்னாதிகாரிக்கு சரீர அவஸாந பர்யந்தம் பரபக்தியாலே செல்லும். சரீர வியோகத்தில், அர்ச்சிராதி மார்க கதி மத்தியில்
பரஜ்ஞான தசையான தரிசன ஸமாநாகாரம் லபிக்கும் . பரம பதத்தை சேர்ந்தவாரே பரம பக்தி தலை எடுக்கும்.

ஆழ்வாருக்கு இவைமூன்றும் திருப்புளியாழ்வார் அடியிலேயே பிராப்தமாம்பட்டி வைத்தது,
இவரைக் கொண்டு ஊரும் நாடும் திருத்த வேண்டிய படியாலே. அது ஆழ்வார் பால் அவனுக்குண்டான கருணை என்பதை விட
ஆழ்வார்மேல் அவன் கொண்ட பிரேமம் என்றே சொல்ல வேண்டும். கணவன் மனைக்கு மத்தியில் நியமங்கள் நடக்கலாம் ,
காமுகன் காமுகிக்கு இடையில் அக்ரமமே ஸக்ரமம் அன்றோ?

சாதன பக்தியானது கீழ்ச் சொன்ன அஷ்டாங்க யோகத்தாலோ (அ) சாதன சப்தகத்தாலோ உண்டாவது.
பல பக்தியோ வென்னில் ஈஸ்வர கிருபையாலே ஏற்படுவது. நம் பூர்வாச்சார்ய கோஷ்டியில்
நம்மாழ்வார் தொடக்கமாக நாதமுனிகள், எம்பெருமானார் என்று அனைவரும் பல பக்தி நிஷ்டர்களேயாவர் .
பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி என்று கொண்டு பக்தியில் அவர்கள் இழிந்தார் இல்லையோ என்னில், அங்கனன்று.

அவதார ரஹஸ்யம், புருஷோத்தம வித்தை இதன் படிக்கு பக்தி உபாசகனாக இருந்து ”புனர் ஜன்ம ந இதி” என்கிற விதி விலக்கால்,
அந்த ஜன்மத்தின் இருதியில் , பிரபன்னனைப் போலவே முக்தி அடைய வழி உண்டானாலும் ,
கால விளம்ப அசகதவமும் காரணமன்று. ஸ்வரூப விரோதமே காரணம். பக்தி ஸ்வாதந்த்ரிய அனுரோதாமான படியாலே .
தங்கமயமான பாத்திரத்தில் வைத்த பாலேயானாலும் , ஒரு துளி கள்ளு சேர்ந்தால் எப்படி நிஷித்தமோ அதுபோலே ,
ஆத்மா = தங்கபாத்ரம். பக்தி = பால். ஸ்வாதந்திரியம் = கள்ளு, என்பதாலே அஸ்வீகாரம்.

அங்கனாகில் பூர்வாச்சார்ய கோஷ்டியில் பக்திக்கு அங்கீகாரமில்லையோ என்னில் , தவறு.
சாதன பக்தியை விட்டு, சாத்ய பக்தியை அன்றோ அவர்கள் ஆதரித்தது.
”சார்வே தவ நெறிக்கு தாமோதிரன் தாள்கள் …” என்கிற திருவாய்மொழி (10-4-1) வியாக்கியானம் இங்கு அனுசந்தேயம் .

ஸ்வ பிரயோஜனம், ஸ்வயம் பிரயோஜனம், பர பிரயோஜனம் என்கிறத்தின் அடிப்படையில் வந்தவை இத்தனையும்.

ஸ்துதி, நமஸ்காரம் போன்கிற பிரயோகம் பக்தியை குறிக்குமோ என்னில் , இல்லை. அவை உபசார வழக்கே ஆகும்.

ஆத்மாவா அரே திரஷ்டவ்ய : ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதிவ்ய: என்றவிதில்
எது விதி வாக்கியம் , எது ராக பிராப்தம் என்று விசாரித்ததில்
வேத படன வனந்தரம் ப்ரஹ்ம தியான விஷயமாக கேட்பதற்கும், மனனம் பண்ணுவதற்கும்
ஒருவன் ஆசைகொண்டு வருவது பிராப்தமாகையால் , ஸ்ரோத்ரம், மந்தாரம் இரண்டும் ராக பிராப்யமாய் ,
ப்ரஹ்ம சாட்சாத்காரத்துக்கு நிதித்யாஸனமே விதி வாக்கியம் என்று கொள்வதே அநுமதம்.

தியானம் என்கிற பக்தியை, வித்யா பேதத்தால் இரண்டாக பார்க்கப் படுகின்றது.
இகலோக பலத்தைக் குறித்தாக்கில், ஐஹிக்க-பலா என்றும், மோக்ஷ பலத்தைக் குறித்து செய்யும் தியானம்
பாரமார்த்திக-பலா என்றும் இரண்டு வகை. இதையே உத்கீத வித்யா, மற்றும் பிரம்மா வித்யா என்றும் கூறுவார்.

அக்ஷி வித்யா – கண்ணில் சூரியனை வைத்து செய்யும் தியானம்.

அந்தராதித்ய வித்யா – சூர்ய மண்டல மத்திய வர்தியான ப்ரஹ்மத்தைக் குறித்துச் செய்யும் உபாசனம்.

தகர வித்யா – ஹ்ருதயத்து தகராகாசத்தில் உள்ள ப்ரஹ்மத்தை தியானிப்பது.
.
பூமா வித்யா – நிரதிசய சுகம் முதலிய குணங்களுக்கு ஆஸ்ரயனாக செய்யும் வித்தை.

ஸத் வித்யா – ஸத் சப்த வாச்யனான பகவானைத் தியானிப்பது.

மது வித்யா – வஸ்வாதிகளுக்கு அந்தராத்மாவாககே கொண்டு தியானிப்பது.

பஞ்சாக்கினி வித்யா – பகவானை ஆத்மாவாகவும், தன் ஆத்மாவை அவருக்கு சரீரமாகவும் வைத்து செய்யும் வித்யை.

அந்தரிக்ஷ வித்யா –

உப போசல வித்யா –

சாண்டில்ய வித்யா –

புருஷ வித்யா –

பிரதர்தன வித்யா –

வைஸ்வானர வித்யா –

என்று ப்ரஹ்ம வித்தைகள் 32. அதில் ஒன்று

நியாஸ வித்தை – இதுதான் சரணாகதி.

அநன்ய ஸாத்யே ஸாபீஷ்டா மஹா விஸ்வாசா பூர்வகம் ததேக உபாயதா யாஞ்சா பிரபத்தி சரணாகதி ஹி – என்கிற
பிரபதனம் சரணாகதி. பிரபத்யே என்கிறதில் உள்ள கத்யர்தே புத்யர்த்தம் ஜ்ஞான கார்யமான படியாலே ,
இந்த பிரபத்தி ஜ்ஞான விபாகமாக சொல்லப்படுகிறது.

பஞ்ச அங்க வித்யையே பரண்யாசம்.

ஆனுகூல்யஸ்ய சங்கல்பம்
பிராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரக்ஷிஷ்யதீதி விசஸ்வாச:
கோப்திருப்த வரணம் ததா
கார்ப்பணயம்
இவை ஐந்தும் அங்கங்களாகக் கொண்ட ஞாசமாகிற = ஆத்ம ரக்ஷணாபர ஸமர்ப்பணமே
பிரபத்தி என்பது ஸ்வாமி தேசிகர் பக்ஷம்.

இத்துடன்
ஆத்ம நிக்ஷேபமாகிற
ஆத்ம ஸமர்பணம் சேர்த்து ஷடங்கியாக இருப்பது சரணாகதி.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய – என்கிற ஒன்றே பிரபத்திக்கு அங்கம்.
மேற்சொன்ன 6ம் அவகாத-ஸ்வேதம் = நெல் குத்த வியர்வை தானே சுரக்குமா போலே
சம்பாவித ஸ்வபாவம் என்பது ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யர் பக்ஷம்.

ஈஸ்வர பிரவிருத்தி விரோதி ஸ்வ பிரவிருத்தி தந் நிவிர்த்தி ஏவ பிரபத்திஹி என்கிற இத்தால்,
ஸ்வ பிரவிருத்தி நிவிருத்திக்கு ஈடான ஸர்வ தர்ம பரித்யாகம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமாகாதோ என்னில் ,

அங்கங்களை எதிர்பார்க்கும் பிரபத்தியால் பகவான் கார்யம் செய்கிறான் என்றால்
அது சாதன பக்தியாகுமே ஒழிய சாத்ய பக்தி ஆகாது.
அந்த விதத்தில் மேற்சொன்ன ஸர்வ தர்ம பரித்யாகம் நிவிர்த்தி தர்மம் மாகையாலே அது, அங்கமாக கணக்கிடப் படாது.

பிரபதியின் விசேஷங்களாவன :
தேஹாவஸாநே மோக்ஷம்.
அந்திம ஸ்மிருதி வர்ஜனம்.
ஸக்ருத் = ஒருமுறையே செய்யப்பட வேண்டியதான் அபேக்ஷை .
ஜ்ஞான விசேஷ ரூபம் = ஜ்ஞானத்தின் செறிந்த நிலையோடு .
ஒரு சதாசார்யனை அண்டி அறிய வேண்டும் ரஹஸ்யம் இது.

சணல் கயிறு கண்ட பிரம்மாஸ்திரம் போலே , பிரபத்திக்கு விஷய நியமம் அதிமுக்யம்.
இத்தால், தேவதாந்திர சம்பந்தமும், பாகவதா பச்சாரத்தையும் இது பொறாது . ஆர்த்தி தலை எடுத்து,
ஆர்த்தியில் பூர்த்தி ஏற்பட்ட வன்றே (= விஷயாந்தர ஸ்பர்சம் லவலேசமும் இல்லையான பின்பே) மோக்ஷம் சுநிஸ்ச்சிதம் .

”இன்நின்ற நீர்மை இனியாமுறாமை” என்று தொடங்கின ஆழ்வாருக்கு உடனே கிட்டாத மோக்ஷம்,
நாலு பிரபந்தம் பாடி, வைகுந்தத்தில் நின்று, வரகுண மங்கை இருந்து, புளிங்குடிக்கிடந்து என்றபடி
ஆழ்வாராகிற ஆத்ம = அன்னம் பரிபக்குவமாக பார்த்தானாய், நமக்கும்
”மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” பிரானான அவன், அந்திம தசையில்
அவைகளை உண்டாகித் தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வான்.

தேகமே ஆத்மா என்றிருக்கிற லோகாயதனுக்கு ஸ்வர்க, நரக , பாப, புண்யங்கள் கிடையா தாகையாலே
பக்தி, பிரபத்தி இவை பொருந்தாது .

க்ஷணிக வாதியான பௌத்தன், க்ஷணிக ஜ்ஞானமே ஆத்மா என்பதால், முக்தி, உபாயங்களின் பிரசங்கமில்லை.
ஒன்று இன்னொன்றில் மூட்டுக்கையாகிற ஜ்ஞான பரம்பரை வைத்துக் கொண்டு பார்க்கில்,
உபாசிக்கும் ஆத்மா ஒன்றாக, மோக்ஷ பல சித்தி அடையும் ஆத்மா வேறு என்று முடியும் .
ஒருத்தன் நோவுபட்ட இன்னொருத்தன் அனுபவிப்பது சாத்தியமல்லவே.

சப்த பங்கி வாதிகளான க்ஷபணர்கள் மோக்ஷத்தை இருக்கு, இல்லை, இருந்தும் இல்லை, இல்லையாய் இருக்கும்
என்று பேசி சேருமிடம் அறியமாட்டாத அவர்களுக்கும் பக்தி, பிரபத்தி பொருந்தாது.

வைசேஷிகர்கள் பாஷாண கல்பமான ஸ்திதியை மோக்ஷம் என்றும்,
சாங்கியன் சித் , அசித் தத்வங்களை ஒப்புக்கொண்டு,
ஈஸ்வரனை இல்லை செய்கிறபடியால், யாருக்கு எதனால் மோக்ஷம் என்பது அஸ்பஷ்ட்டம்.

மாய வாதிகளான அத்வைதிகள் வியாவஹாரிக பிரஹ்ம வாதத்தால் பாரமார்த்திக மோக்ஷத்தை ஒப்புக்கொள்வ தில்லை .
பாஸ்கர, யாதவ பிரகாசர்கள் கர்ம – ஜ்ஞான சமுச்சயம் மோக்ஷ சாதனம் என்ன, வேதமானது பக்தியையே
மோக்ஷ சாதனமாக சொல்லுகிற படியால், இவர்கள் மதம் குதிருஷ்டி மதமாகிறது.
வேத பிராமாண்யத்தை ஒப்புக் கொண்டும், அதற்கு விருத்தமான கொள்கையை பேசுவதால் அதுவும் தள்ளுபடி.

சைவம், லைங்கியம் , பாசுபதம் போன்ற மதங்களில், பிராப்யம் சிவன் என்று பேச, அதுவும்
அநுத்தேஸ்ய மாயிற்று.

இத்துடன் தர்மபூத ஜ்ஞான விளக்கம் முற்றுப் பெறுகிறது.

———————————————————————————-

8 வது அவதாரம் ஜீவனைப் பற்றியது.
கீழே சொல்லப்பட்டவையுள் பிரமாணங்கள் 3 அவதாரம் .
பிரமேயத்தில் அடங்கின திரவ்யங்களைப் பற்றியதான 4 அவதாரங்கள்.
பிரகிருதி, காலம், தர்ம பூத ஜ்ஞானம், சுத்த சத்வமான பரம பதம்.
இவை பராக் என்றும், திரவ்யங்களில் அடங்கின ஜீவனும் , ஈஸ்வரனும் பிரத்யக் என்றும் பார்த்தோம்.

ஜீவன் என்பது :
அணுவாய், நித்தியமாய், ஜ்ஞானமாய், ஜ்ஞான குணகனாய் பகவத் சேஷ பூதனாய் விளங்குமவர்.
தேக, இந்திரிய, மனப் பிராண, தீ: விலக்ஷணர்.

சித், அசித், ஈஸ்வரன் இவை மூன்றிற்கும் சாமான்ய லக்ஷணம் சொல்லப் புகில் :

சித்தும், அசித்தும் பகவத் சேஷ வஸ்து.
சித்தும், ஈஸ்வரனும் ஜ்ஞானம் உடைத்து.
அசித்தும், ஈஸ்வரனும் தன்னை சேர்ந்தவர்களை தன்னைப் போல் ஆக்கும் ஸ்வபாவம் படைத்தவர்கள்.
அசித் சம்பந்தம் அவஷ்டப்யம் . பகவத் சம்பந்தம் உன்மீயம்.

பிரத்யக்த்வம் – தனக்குத் தானே ஒளி விடுபவர். தானே பிரகாசிப்பவர். ஸ்வயம் பிரகாசத்வம்.
சேதனத்வம் – அறிவுடையவர். தனக்குப் பிரகாசிப்பவர். ஸ்வஸ்மை பிரகாசத்வம்.
ஆத்மத்வம் – அநாத்மா அல்லாதது. சரீரத்துக்கு பிரதி சம்பந்தியாய், ஈஸ்வரனுக்குத் தான் சரீரமாக இருப்பது.
கர்திருத்வரம் – செயல் திறன் உடையது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, மோக்ஷ பிரதத்வம் நீங்கலாக ,
லௌகிக கார்ய, மோக்ஷ சாதன அனுஷ்டான பர்யந்தமான கர்திருத்தவம் உடையவர். சங்கல்ப ஜ்ஞான ஆஸ்ரயத்வம் கர்திருத்தவம் .

இவை 4ம் ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கு உண்டான சாமான்ய (பொதுவான) லக்ஷணம்.

ஆத்மா, அறிவு, பொருள் (அசேதனம்) இவையில்,

ஆத்மா – ஜ்ஞானம் உடையதாய், ஜ்ஞானமுமாய் – இரண்டுமாய் இருக்கும்.

அறிவு – ஜ்ஞானமாய் இருக்கும். ஜ்ஞான முடையதாய் இருக்காது.

பொருள்கள் – ஜ்ஞான ஆகாரமோ, பாசமோ – இரண்டும் இல்லாதது.

இல்லதும் , உள்ளதும் அல்ல தவனுரு — நம்மாழ்வார்.

இல்லது – ஜ்ஞானம் அற்றது, அசித்து .
உள்ளது – ஜ்ஞானம் உள்ளது. சித்து .
அல்லது அவனுரு – சித் , அசித் விலக்ஷணன் என்கிற வியாவர்த்தம் சொல்ல வந்த பாசுரம் இது.

கணவனுக்கு மனைவி, பிரதி சம்பந்தி.
சேஷனுக்கு சேஷி, பிரதி சம்பந்தி. அது போல
சரீரத்துக்கு ஆத்மா, பிரதிசம்பந்தி –
ஒன்றிருந்தால்தான் , இன்னொன்று இருக்கும் என்கிற சம்பந்தம், பிரதி சம்பந்தத்வம்.

இனி ஆத்மாவுக்குண்டான அசாதாரண லக்ஷ்ணம் :

1. அணுவாய் இருக்கும் போதே அறிவுடையதாய் இருக்கும்.
2. பகவத் சேஷமாய் இருக்கும் போதே ஜ்ஞானத்தோடே இருப்பவர்.

சேஷத்வத்தை முதலில் சொல்லி ஜ்ஞாத்ருத்வத்தை அடுத்து சொன்ன படியால், ஆத்ம ஸ்வரூபத்துக்கு சேஷத்வமே பிரதானம்.

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் (திருவாய் 8-8-2)

ஈஸ்வரனுக்குண்டான சரீர-ஆத்ம அந்தராத்மதையைச் சொல்லும்போது, ஆத்மாவை ஆழ்வார்
அடியேன் என்று சொன்னபடி காணலாம். ”உள்ளான்” என்கிற வியாபக ஜ்ஞானம் உடைய ஆழ்வார் தன்னை,
என்னுள் உள்ளான் என்று சொல்லாமல் அடியேன் உள்ளான் என்று சொன்ன படியாலே,
ஜ்ஞாதிருத்துவத்தைக் காட்டிலும், சேஷத்வமே ஆத்மாவுக்குண்டான விசேஷ தர்மமாய் தேறுகிறது .

யானும் தானாய் ஒழிந்தானே (நம்மாழ்வார் 8-8-3) என்ற இடத்தில் ஜீவ-பர ஐக்கியம் அர்த்தம் ஆகுமோ என்னில்,
”ஆய்” என்கிற சாமானாதிகரண்யத்தாலே சரீராத்மா பாவத்தைக் காட்டியதாகவே பார்க்கலாம்.

பகவத் சேஷத்வம் சித் அசித் இரண்டுக்கும் பொது. அந்த சேஷத்வமாகிற வைரத்தை ஜ்ஞாத்ருத்வமுடைய
தங்க பெட்டியில் இருப்பது அசித்தோடு இருப்பதைக் காட்டிலும் உயர்வு.
அது தோற்ற சேஷத்வத்தைச் சொல்லி பிறகு ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லுகிறது.

அப்படிப்பட்ட உயர்ந்த பகவத் சேஷத்வத்தை மறந்து வர்த்திக்கை அசித் சமானமன்றோ?
ராஜ புத்திரன் அத்தை அறியாது கிடக்க, சம்பந்த ஜ்ஞானம் பெற்றவாரே உண்மை யான அறிவு பிறக்குமா போலே,
ஒரு சதாசாரியனை அண்டி வருகிற சேஷத்வ ஜ்ஞானம் , ஆத்மாவை அழகு படுத்தும்.

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல்நெஞ்சே ! (திருமழிசை ஆழ்வார்) அப்போது தான்
பகவத் தத்வம் நெஞ்சுக்கு நன்கு பிரகாசிக்கும். நெஞ்சும் நல் நெஞ்சாகும்.

ஆதேயத்வம் (தாங்கப் படுமவர் )
விதேயத்வம் (ஆணைப்படி நடப்பவர்)
பராதீன கர்த்ருத்வம் (எண்ணப்படி செய்பவர்)
பரதந்திரம் (பகவானையே பரம பிரயோஜனமாக கொண்டிருப்பவர்)

தேக, இந்திரிய, மனப் பிராண, தீ: விலக்ஷணர்.

தேகமே ஆத்மா என்பது பொருந்தாது. நான் உடல் என்பது வழக்கு இல்லை. என்னுடைய உடல் என்பது தான் வழக்கு.
”உடைய” என்கிற வேற்றுமை உறுபு தேக அதிரிக்தன் ஆத்மா என்பதை உறுதி படுத்துகிறது.

கண்களால் பார்க்கிறேன் என்பதிலுள்ள ”ஆல்” 3ஆம் வேற்றுமை உறுபு வெளி இந்திரியங்கள் ஆத்மா இல்லை,
அவை கருவி , ஆத்மா கர்த்தா என்பதை உறுதி படுத்துகின்றன. த்ரிதீயா விபத்தே கருத்ருத்வாத் என்பது சூத்திரம்.

மனஸா ஸ்மராமி , நெஞ்சால் நினைக்கிறேன் என்கிற வழக்கும் – ”ஆல்” வேற்றுமை உறுபு –
அந்தக் கரணமான மனசைக் காட்டிலும் ஆத்மா வேறு என்பதை தெரிவிக்கிறது.

மம பிராணாஹி – என்னுடைய பிராணன் என்கிற வழக்கும்
”உடைய” என்கிற வேற்றுமை உறுபு கொண்டு ஆத்ம பரிச்சேதம் சொல்லிற்று.

தீ = ஜ்ஞானம். தர்ம ஜ்ஞானத்தை உடையது ஆத்மா. ”யான்” தர்மி ஜ்ஞானம். ”எனது” தர்ம (பூத) ஜ்ஞானம்.
ஆக தர்ம பூத ஜ்ஞானமும், ஆத்மாவும் வேறு.

ஆத்மா அணு, வேத உபநிஷத் பாகங்களில் இப்படி சொல்லி இருக்கிறபடியால். .
ஆனையின் ஆத்மா ஆனை அளவு, பூனையின் ஆத்மா பூனை அளவு என்கிற ஜைன சம்பிரதாயம் பொருந்தாமையோடு கூடியது.
அவர்கள் சொல்லுகிற படியானால், ஆத்மாக்கள், வேறு வேறு பிறவிகளில் , எடுத்துக் கொள்கிற தேகத்துக்கு ஏற்ப
சுருங்கல் , விரித்தல் செய்ய வேண்டும். அதாவது ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் உண்டு என்பதை நியாயப் படுத்த வேண்டும்.
உண்மையில் ஆத்மாவுக்கு இன்ப துன்பங்களை அனுபவித்தலாகிற ஸ்வபாவ விகாரம் உண்டு. ஸ்வரூப விகாரம் கிடையாதே .
ஆகவே அது ஏகதா அணுவாகவே இருக்கும், ஒரு கால விசேஷத்தில் சரீரத்தை விட்டு ஆத்மா, உத்கிரமித்து,
அர்ச்சிராதி மார்க்கத்தில் பரமபதத்தை அடைகிற படியால். ஆத்மா விபுவாக இருந்தால், பயணப்பட வாய்ப்பில்லை யாகையாலே.

ஆத்மா ஒரு இடத்தில் இருந்தாலும், அதனுடைய தர்மபூத ஜ்ஞானம் சரீரம் முழுவதும் வியாபிக்கும்.
ஸ்வப்ன சரீரத்திலும் வியாபிக்கும். ஆபாச இன்பத்துக்கு ஐம்பது சரீரம் என்று சௌபரிக்குப் போலே
அத்தனைக்கும் வியாபிக்கும். கூடு விட்டு கூடு பாய்கிறபோது அந்த இரண்டு சரீரமளவும் வியாபிக்கும்.

ஆத்மா நித்யம். பௌத்த, சார்வாக மதத்தில் சொல்லியது போல் ஆத்மா அநித்யமாய், சரீரத்தோடே அழிவதாகில் ,
கிருத பிரணாசம் (=செய்தவை களுக்கு பலன் கிட்டாமை)
அகிருத அப்பியாகமம் (=செய்யாதவைகளுக்கு அனுபவிக்கை)
ஆகிற தோஷம் வரும்.
ஆத்மாவுக்கு உற்பத்தி, நஷ்ட்டம் தேக சம்பந்தமும், வியோகமும் ஸ்வரூபேண உண்டாதல் சாதல் கிடையாது.
ஜீவராசிகளுக்கு ஜ்ஞானத்தில் உண்டான தாரதம்யத்துக்குச் சேர மனுஷ்ய, மிருக, ஸ்தாவர, ஜங்கம பிறவிகள் கிடைக்கின்றன.
அவர்களின் ஜ்ஞானம் கர்மத்தால் மறைக்கப் படும் அளவைப் பொருத்து
ஜ்ஞான சங்கோச, விகாச பரிமாணத்தின் அளவையைக் கொண்டு அந்தந்த பிறவி கிட்டுகிறது எனலாம்.

மனுஷ்ய சரீரத்தில் நகம் முதல், மயிர் கால் வரை பல ஆத்மாக்கள் உண்டு.
அவைகள் கல்லுக்குள் இருக்கிற ஆத்மாவைப் போலே ஜ்ஞானம் மழுங்கின நிலையில் உள்ள படியாலே
அதிஷ்டான ஆத்மாவுக்குண்டான சுக துக்க அனுபவங்கள் வியாபரியாத ஆத்மாக்களுக்கு கிடையாது.

ஆக ஆத்மா ஒன்றல்ல, பின்னமே. ஒவ்வொரு சரீரத் துக்குள்ளேயும் உள்ள ஆத்மாக்கள் வேறு வேறு என்பது அத்வைத சித்தாந்த பிரதிபடம் .
ஜ்ஞானத்தில் சமண ஆகாரத்தைக் கொண்டு, ஜாத்யேக வசனமாய் அவை ஒன்று என்று சொல்லும் வழக்கு உண்டு.
பரமாகாச-கடாகாசம் போலன்று.

ஆகாசத்தில் உள்ள சூரியன், குளத்தில், கிணற்றில், கண்ணாடியில் பட்டு ஒன்று பலவாக தெரிவது போல்,
ப்ரஹ்மம் ஒன்றே. சரீரமாகிற உபாதியால் அவை பலவாக தோற்றுகின்றன.
சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தால், பல என்ற அந்த பிரமம் விலகும் . என்பது உண்மையானால்

நித்யோ நித்யானாம், சேதன சேதனாநாம் என்கிற பஹு வசன பிரயோகம் ஆத்மாக்கள் ஒன்றல்ல,
பல என்று பேசுவதை எப்படிப் பரிஹரிப்பது? ”ஏஷாம் – தேஷம் ” என்கிற கீதா ஸ்லோகத்தை எப்படிப் பொருந்த விடுவது?
ஆக அத்வைதம் பொய்யாகி, ஆத்மாக்கள் பல என்பதே நிரூப்யம்.

அஹம் அல்லாததை அஹம் புத்தி பண்ணுகை

ஆத்மா கர்த்தா – லௌகிக வியாபாரங்கள், மற்றும் மோக்ஷோபாய சாதனா அனுஷ்டான, உபாசனா கிரியா கர்தாவாகையாலே.
போக்தா-பாப புண்ய விஷயானுபவங்கள் நடக்கிற படியாலே .
சரீரி, சரீரம் – இந்த உடலோடும் , பரமாத்மாவோடும் வைத்துப் பார்க்கையில்,
உடலை தாங்குபவராயும், ஈஸ்வரனால் தாங்கப் படுமவராயும் இருக்கையாலே.
அமலத்வம்-குற்றமற்ற தன்மை. இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள்.

ஆத்மா -; ஜ்ஞானம் ஜ்ஞாதா ஞேயம் 3 மாய் இருக்கும்

ஜ்ஞானம் -; ஜ்ஞானம் ஞேயம் 2ஆய் மட்டும் இருக்கும் . ஜ்ஞாதாவாய் இருக்கமாட்டார் அசேதன மாகையாலே.

பிரகிருதி -; ஞேயமாய் மட்டும் இருக்கும்.

ஈஸ்வரன் -; ஆத்மாவைப் போலே ஜ்ஞானம் ஜ்ஞாதா ஞேயம் 3 மாய் இருப்பர்.
கூடவே தாதாவாய் இருப்பர், மூன்றன் பிரதாதா அவரானபடியாலே.

—————————————————————————

பர பக்ஷம் :

பௌத்தன் – ஆத்மா க்ஷணிகம். ஏனெனில் அவர்கள் மதத்தின் படி ஜ்ஞானமே ஆத்மா. ஜ்ஞானம் க்ஷணிகம்.
ஆகவே ஆத்மாவும் க்ஷணிகம். ஒருகாலத்தில் ஏற்படும் ஜ்ஞானம் மறறொரு காலத்தில் ஏற்படும் ஜ்ஞானத்தைக் காட்டிலும் வேறு பட்டது,
காலத்தால். அப்படிப் பார்த்தால் நோற்பும் பயனும் வெவ்வேறு ஆத்மாக்களதாய் ஸ்ரமிசிதவனுக்கு பலன் இல்லாமல் போகும்.
உலகியல் நடைமுறை இப்படி இல்லை ஆதலால், ஜ்ஞானமும் க்ஷணிகமல்ல. ஆத்மாவும் க்ஷணிக மல்ல .

சாருவாகன் – பூத சதுஷ்டயத்தால் (ஆகாசம் தவிர்ந்த பிருதிவி, அப்பு தேஜஸ் வாயு இவற்றால்) ஆன தேகமே ஆத்மா.
தேக அதிருக்த ஆத்மா என்பது இல்லை. ஸ்வர்க்க நரகங்கள் இல்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்கிற நாஸ்திக வாதம்.
உயிருள்ள தேகம், உயிரற்ற உடல் என்கிற வித்யாசம் தெரிகிற படியால் இவர்கள் பக்ஷமும் உண்மைக்குப் புறம்பானது.

ஜைனர் – யானைக்கு யானை அளவு பெரிய ஆத்மா . எறும்புக்கு எறும்பளவு ஆத்மா என்கிற இவர்கள் பக்ஷமும் நிரஸ்த்தம் .
இந்த ஜென்மத்தில் யானையாக இருந்து அடுத்த ஜென்மத்தில் எறும்பாக பிறக்க வேண்டுமானால்,
ஆத்மா சுருங்கல், விரித்தலுக்கு உள்ளாக வேண்டும்.
சாஸ்திரங்கள் ஆத்மாவை அணு என்று சொல்லி இருக்கிற படியால்,, இவர்கள் வாதமும் தவறு.

சாங்கியம் – கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் பிரகிருதி புருஷன்கள் அளவே. மூன்றாவதான ஈஸ்வர தத்துவம் இல்லை என்று மறுப்பவர்கள் .
செயல் உடலதாகவும், அனுபவம் ஆத்மா வுடையதாகவும் பார்ப்பவர்கள்.
இது நிரீஸ்வர் சாங்கியம். ஸேஸ்வர சாங்கியர் ஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலும்,
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் பூத பரிமாண உடலுக்கேயாய்,
ஜெபா குஸும – ஸ்படிக உதாரணத்தின் மூலம், எப்படி புஷ்பத்தின் சிகப்பு நிறம் ஸ்படிகத்தில் பட்டு, ஸ்படிகம் சிகப்பாக தெரிகிறதோ,
அதுபோல, தேகத்துக்குண்டானது ஆத்மாவுக்குப் போலே தெரிகிறது என்பர்.
உண்மையில் கருத்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜீவனுக்கே என்பது வைதிக பக்ஷம். ராமானுஜ சம்பிரதாயமும் கூட.

யாதவ பக்ஷம் – பிரம்மத்தின் அம்சம் ஜீவன் என்பது . அதுவும் தவறு ஏனென்றால், பிரமத்துக்கு சரீரம் பிரக்ருதியும், ஆத்மாவும்.

பாஸ்கர பக்ஷம் – சரீரமாகிற உபாதியாலே பிரம்மத்தின் ஒரு கண்டமாக (பகுதியாக) சோபாதிக ஜீவன் இவர்களால் பார்க்கப் படுகிறது.
அதுவும் தவறு ஏனெனில், ஆத்மா அணுவாகவும், பிரமத்துக்கு சரீரமாகவும் இருக்கிற படியால்.

அத்வைதம் – பிரம்மத்துக்கு அஜ்ஞானம். தன்னைப் பலவாக பிரமிக்கிறது அப்படி இல்லை என்கிற ஐக்கிய ஜ்ஞானம் வந்தால்,
அதுவே மோக்ஷம். இதிலே பல கேள்விகள்.

1. பிரம்மத்துக்கு பிரமம் என்பது இயற்கையா? செயற்கையா?
2. அதாவது, ஸ்வரூபமா? ஸ்வரூப வியதிரேகியா?
3. ஸ்வரூபம் (இயற்கை) என்றால், அவித்யை விலக வாய்ப்பில்லை. அப்படியானால்,
பிரமத்தால் வந்த ஜகத் வியாவிர்த்தி விலகாது / அஸ்த்தமிக்காது .அங்கனாகில் மோக்ஷம் சித்திக்காது .
4. இயற்கை இல்லை. செயற்கைதான் என்றால், அத்வைதம் நிற்காது. பிரம்மம் என்கிற ஒருதத்வம்.
பிரம்மத்துடைய அஜ்ஞானம் என்கிற ரெண்டாவது தத்வம் சித்திக்கும்.
5. இதில் எது உண்மை? பிரம்மம் பாரமார்த்திகமா? அதன் அஜ்ஞானம் பாரமார்த்திகமா?
6. பிரமத்தை பொய் என்று சொல்ல வாய்ப்பில்லை. அவித்யை பொய்யானால், பொய்யான ஒன்றை எப்படிப் போக்க?
7. முடிவாக, அவித்யா சபளித்த பிரம்மத்தின், அஜ்ஞானத்தை யார் போக்க?
அதுவும் பொய்யான ஒரு ஆசாரியானால் , பொய்யான ஜ்ஞானத்தால் மறைக்கப் பட்ட உண்மையான
பிரம்மத்தினிட மிருந்து பிரமத்தை எப்படிப் போக்க முடியும்?
என்பதான 7 வித (ஸப்தவித) அனுபபத்தி சித்திக்கும் . இதனால் ஏக ஜீவ பக்ஷமும் நிரஸநமாகிறது .

வாசஸ்பதி மதம் – பிரம்மத்துக்கு பல அந்தக் கரணங்கள் (மனசு) இருப்பதால், பல ஜீவர்களாக தோற்றுகிறது
என்பதும் ஆத்மா விபு என்கிற வாதம் உள்பட அனைத்தும் தவறு. ஏனென்றால்,

1. ஆத்மாக்கள் அநேகம்.
2. அதனதன் கர்மத்தால், வெவ்வேறு சரீரங்களை எடுத்துக் கொள்கின்றன.
3. பிராகிருத சரீரம் அசேதனம். கர்மத்தால் அதனுள் விலங்கிடப் பட்டுள்ள ஆத்மாக்கள் அனைத்தும் சேதனம்.
4. அவை அனைத்தும் பிரம்மத்துக்கு சரீரமாய் (உடலாய்) பிரகாரமாய் இருக்கும்.
5. சாஸ்திர ஜ்ஞானத்தாலும், ஆச்சாரிய உபதேசத்தாலும் , கர்ம, ஜ்ஞான, பக்தி யோகங்களை
அனுஷ்ட்டித்து (அ) பகவானை சரணமடைந்து அவனுடைய கருணையால் பாபங்கள் விலக்கப் பெற்று
சம்சாரத்தைக் கடந்து மோக்ஷமடைகிறான். என்கிற, இதுவே சாஸ்திர சம்மதமான மார்க்கம். மற்றவை குத்ருஷ்டிகள் மதமாகின்றன.

6. ஆத்மா விபுவல்ல அணுவே. அதன் தர்ம பூத ஜ்ஞானம் பல சரீரங்களில் பிரசுரிக்க ஒருவர் பல சரீரம் எடுக்கவோ
அவர் புகழ், பெருமை பல இடங்களில் வியாபிக்கவோ, வாய்ப்புண்டு .
அது யோக சக்தியாலோ / அதிருஷ்ட பலத்தாலோ உண்டாவது.

இங்கு அதிருஷ்டமாவது பகவானுக்கு பிரீதியை விளைவிக்கிற , ஜீவனாலே செய்யப் பட்ட கர்ம விசேஷம்.
சுருங்கச் சொல்லில், பகவத் கிருபை (அ) பகவத் ப்ரீதி விசேஷ ஜ்ஞான ரூபம் அதிருஷ்டம்.
”விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?” என்று ஆழ்வார் விளக்கம்.
அது பகவான் ஒருவனிடத்தில் மட்டும் நிலைப்பது., தேவதாந்தரங்கள் அநித்யமாகையாலே.

—————–

அந்த ஜீவாத்மா 1. பத்தர். 2.முக்தர். 3. நித்யர் என மூவகைப் பட்டவர்கள்.
இதில் பத்தர்கள் கர்மத்துக்கு வசப்பட்டு, பிராகிருத பூமியில் இன்னும் உழன்று கொண்டு இருப்பவர்கள்.
முக்தர்கள் கர்மங்களில் இருந்தும், பிறவித் தளையிலிருந்தும் விடுபட்டு, அர்ச்சிராதி மார்க்கத்தில்
”அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை” என்ற கணக்கில் வைகுந்தம் புகுந்தவர்கள்.
நித்யர்கள், அநந்த,கருட,விஸ்வக்ஷேணர் போல, கர்ம வாசனையே இல்லாதவர்களாய்,
பரமபதத்தில் நித்ய கைங்கர்யத்தில் இருப்பவர்கள்.

1. பத்தர்கள் : 1. தேவர்கள் :

பிரம்மா ; சிவன்.
||
V
நாரதாதி தேவர ரிஷிகள்
விசிஷ்டாதி பிரம்ம ரிஷிகள் (ராஜ ரிஷி, மகா ரிஷி, ரிஷி என்று அவர்களின் யோக/வைராக்யங்களை இட்டு தார தம்யாம்)
புலஸ்திய, மரீசி, கச்யப, தக்ஷ நவ பிரஜாபதிகள்
திக்பாலகர்க்ள் -; வ – குபேரன் ; கி – இந்திரன்; தெ – எமன்; மே – வருணன்)
14 – இந்திரர்கள் (பிரம்மா பகல் போதில் படைக்கப் படுமவர்கள்)
14 – மநுக்கள்
அஸுரர்கள்
பித்ருக்கள்
கந்தர்வ யக்ஷ
கின்ன
கிம்புருஷ
சித்த
வித்யாதரர்கள்
8 – வஸுக்கள்
11 – ருத்ரர்கள்
12 – ஆதித்யர்கள்
2 – அஸ்வினி தேவதைகள்
தானவ யக்ஷ ராக்ஷஸ
பிசாசங்கள் .

2. பத்தர்கள் : மநுஷ்யர்கள் :
||
v
பிராஹ்மண
க்ஷத்ரிய
வைஸ்ய
சதுர்த்தர்கள்

3. பத்தர்கள் : திர்யக்கு :
||
v
பசு
பக்ஷி
ஊர்வன (பாம்பு முதலான)
பறப்பன (விட்டல் பூச்சி முதலான)
கீடங்கள் (புழு பூச்சிகள்)

4. பத்தர்கள் : ஸ்தாவரம் :
||
v
விருக்ஷம்
குல்மம் (புதர்)
லதா (கொடி)
வீறு (அறுக்க, அறுக்க முடியாதன)

இந்த நான்கையும் வேறுவிதமாகவும் பிரிக்கலாம்.

ஜராயுஜ (கர்ப பையிலிருந்து உண்டாவன ) = 1,2;3.
அண்டஜ ( முட்டையிலிருந்து உண்டாவன ) = 3
உத்பிஜ்ஜ (முளைவிட்டு உண்டாவன) = 4
ஸ்வேதஜ (வியர்வையில் உண்டாவன ) = 3
அயோநிஜ (யோநியில் சேராத)
||
v
பிரம்மா (நாபி கமலம்)
சிவன் (பிரம்மாவின் புருவ நெறிப்பு)
ஸநகாதிகள் (பிரம்மாவின் மனசிலிருந்து )
சீதா (பூமியிலிருந்து)
முதலாழ்வார்கள் (பூவிலிருந்து)
திரௌபதி, (நெருப்பிலிருந்து)
திருஷ்ட துயும்னன்
பூத, வேதாளங்கள்.

கர்ம பிரவாக சக்ரம் :

அவித்யா (அறியாமை)
ருசி (தூண்டுதல்)
கர்மா
(தவறான செயல்)
ஜென்மம்
(அழுத்தம்)
வாசனை
விதை செடி பூ காய் பழம் விதை போலே பிறவியும்

கர்ப ஜன்ம சைஸவ பால்ய யௌவன
ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்தி மூர்ச்சா
ஜரா மரண
ஸ்வர்க்க நரகாதி
ஆத்யாத்மிக ஆதி தைவீக ஆதி பௌதிக தாப த்ரய சுழற்சி .

ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து, ஈஸ்வர கைங்கர்யத்தியும் இழந்து,
இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபடு கிறவர்களே பத்தர்கள்..

——————————————————————

சாஸ்திரத்துக்கு வசப்படாதவை -; விலங்குகளும், ஸ்தாவரங்களும்..

சாஸ்திரத்துக்கு வசப்பட்டவர்கள் -; தேவர்களும், மநுஷ்யர்களும். விவேக ஜ்ஞானம் உள்ளபடியால்.
||
V
புபுக்ஷுக்கள் ; தேஹாத்மாபிமானிகளாய்
அர்த்தத்தில், காமத்திலும் இச்சை உடையவர்கள்.

முமுக்ஷுக்கள் -; தேஹ அதிருக்த ஆத்ம பிரசம்ஸை உள்ளவர்கள். தர்மத்தில் பற்றுடையவர்கள்.

பரலோக அனுபவ ச்ரேயஸ் சாதனம் தர்மம் . யக்ஞ, தான, தபஸ், தீர்த்த யாத்திரை, திவ்ய தேச வாசம் இத்யாதி இதில் அடங்கும்.
||
V
தேவதாந்த்ர பரர்கள் ; தர்மார்த்த புருஷார்த்த துக்காக அன்ய தேவதைகளை உபாசிப்பவர்கள்.

பகவதாஸ்ருதர்கள் -; பக்தன். தர்மார்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களில் ,
வீட்டின்பத்தை விட்டு இதர பலன்களுக்காக பகவானை ஆச்ரயிப்பவர்கள்.
பிரபன்னன் -; மோக்ஷ லாபார்த்தி.

ஆர்த்தன் -; பிரஷ்ட ஐஸ்வர்ய காமன்.
அர்த்தார்த்தி -; அபூர்வ ஐஸ்வர்ய காமன்.
ஜிக்ஞாஸி -; கைவல்யார்த்தி.

கேவலன் -; ஆத்மானுபவம் தவிர்ந்த இரண்டாவதான பகவதனுபவ பர்யந்தம் வராதவன்.

தேசிக பக்ஷம் -; கேவலன் புபுக்ஷுக்கள் கோஷ்டியிலேயாய் , பிரகிருதி நியுக்த ஸ்வாத்மானுபவ நிஷ்டராய்
விரஜைக்கு இப்பால் வர்த்திப்பவர். திருந்தி பகவன் லாபார்த்தியாக வழியுண்டு.

பிள்ளை லோகாச்சாரியர் பக்ஷம் =; கேவலன் முமுக்ஷுக்கள் கோஷ்டியிலேயாய் ,
ப்ரக்ருதி நியுக்த ஸ்வாத்மானுபவம் விரஜைக்கு அப்பால். கர்ம பூமியை விட்டு விலகி
போக பூமியுள் வந்துவிடுகிற படியால் ஸ்வானுபவத்தை விட்டு, பதி -தியக்த பத்நி போலே ,
பகவன் லாபார்த்தியாக வழியில்லை.

பகவத் பக்தனுக்கும் , பிரபன்னனுக்கும் வேண்டியவை :

வேதத்தை அதன் அங்கங்களோடே வாசிக்கை. அதாவது கர்ம காண்டம் + தேவதா காண்டம் + ஜ்ஞான காண்டங்கள் கற்று
பூர்வ மீமாம்ஸா + உத்தர மீமாம்ஸா இவைகளில் தேர்ந்து
சித், அசித்தினின்றும் வேறுபட்ட
அதிசய, ஆச்சர்ய, ஆனந்த நிலையனாய்
ஹேய குணங்கள் இல்லாதவனாய்
கல்யாண குணைகதானனாந பகவான்
அவனை, ஸ்த்ரீ. சதுர்த்த வர்ணத்தவர்கள் நீங்கலாக
அடைய அங்கங்களோடே கூடிய பக்தியை உபாயமாகக் கொண்டு மோக்ஷமடைபவன் பக்தன். இவர்கள் சாத்யோபாய நிஷ்டர்கள்.

ஆர்த்தித்தவம் , சாமர்த்தியம் இரண்டும் பக்திக்கு யோக்யதைகள்.

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன்தந்த அந்தணன் ஒருவன்
காதலென் மகன் புகலிடம் காணேன்
கண்டுநீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உன்னை வேண்டிய
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்–(பெரிய திருமொழி 5-8-7)

வைதிகன் பிள்ளை மோக்ஷ பூமியை பிராபித்தும் திரும்ப சம்சாரத்தில் வந்தது மோக்ஷ மடைய சாமர்த்தியம் இல்லையான படியால்.
அர்ஜூணனும் வைதிகனும், மோக்ஷத்தின் வாயில் வரை சென்றார்களாயினும்,
மோக்ஷ பூமியைப் பிராபிக்காதது அவர்களிடத்தில் ஆர்த்தித்தவம் இல்லை யானபடியாலே.
அத்தகைய பக்தியானது புத்தி பரிச்சேத ஜ்ஞான விசேஷம் (அ ) முதிர்ந்த ஜ்ஞானம் என்பர்.

வியாசர் முதலானோர் -; சாதன பக்தி நிஷ்டர்கள். அறம், பொருள், இன்பமாகிற திரைவர்கிக பலம் உத்தேஸ்யம்.

நாதமுனி முதலானோர் -; சாத்ய பக்தி (பல பக்தி) நிஷ்டர்கள். மோக்ஷ பலம் உத்தேஸ்யம்.

பிரபத்திக்கு உறுப்பு ஆகிஞ்சின்யமும் , அநன்யகதித்வமும் .
நம்மாழ்வாருடைய நோற்ற நோன்பிலேன், ஆராவமுதே திருவாய்மொழிகள் இதுக்கு லக்ஷணம்.

வீடடைய வேண்டுவது :
சத்ஸங்கம்
நித்ய, அநித்ய வஸ்து விவேகம்
ஸம்சாரத்தில் நிர்வேதம்
வைராக்கிய சீலராய்
மோக்ஷத்தில் விருப்பம்
த்வேஷ மற்றவனாய், விஷ்ணு பக்தனாய், வேத சாஸ்திர விற்பன்னனாய் இருக்கிற ஆசாரியனை அடைந்து
அவர் மூலமாக புருஷகார பூதையான பிராட்டியை ஆஸ்ரயித்து
பக்தி முதலான மற்ற உபாயங்களை (அசத்தி ஆயாசங்களுக்காயும், பிராப்தி இன்மைக்குமாக) விட்டவனாய்
ஆகிஞ்சின்யத்வ , அனன்ய கதித்வங்களை (கர்ம, ஜ்ஞான, பக்தி இல்லை. வேறு கதி இல்லை என்று) பிரார்த்திப்பவராய்

1. ஆனுகூல்யஸ்ய சங்கல்பம்;
2. பிராதி கூல்யஸ்ய வர்ஜனம்;
3.ரக்ஷஸ்யதி இதி விச்வாஸ:
4.கோப்த்ருத்வ வரணம்;
5.கார்ப்பண்யம்;
6. ஆத்ம நிக்ஷேபம்

இந்த ஆறும் ஏற்பட்டவனாய்
ஸ்ரீமன் நாராயணனுடைய சரணங்களையே உபாயமாக சுவீகரிப்பவன் பிரபன்னன்.

தேசிக பக்ஷம் =; ஆத்ம சமர்ப்பணத்துக்குக் கீழ் சொன்ன
5 ம் அங்கமாய் அங்க பிரபத்தியிலே சேரும்.

லோகாசார்ய பக்ஷம் =; அங்கமாகக் கொண்டு செய்கிற பிரபத்தி சாதன பக்தியில் போய் முடியுமாகையால்
கீழ்ச் சொன்ன 5 ம் ஸம்பாவித ஸ்வபாவங்களாய் – நெல் குத்த வியர்க்குமா போலே –
இவை 6ம் தானே ஏற்பட, ஸ்வதந்த்ர பிரபத்தியிலே சேரும்.

பிரபதிக்கு ஸர்வரும் அதிகாரிகள்.
||
V
ஏகாந்தி :
தேஹ யாத்திரை நிமித்தமாக மற்றதும் கேட்டு, மோக்ஷமும் பிரார்திப்பார்..
இரண்டும் பகவானிடத்திலேயாய், தேவதாந்தரங்கள் பக்கல் போகாதவர்கள்.

பரமைகாந்தி:
பரமனான பகவானை மட்டுமே பலமாக பிரார்த்திப்பவர். இவரும் பகவானைத் தவிர
வேறு இடத்தில் கை ஏந்தாதவர்கள். பிராப்பியா பிராபக ஐக்கியம் இங்கே உண்டு.
||
V
திருப்தன் -; அஸ்மதாதிகள் . இவர்களுக்கு தேஹாவஸானே மோக்ஷம். மரணமானால் வைகுந்தம் தரும்.

ஆர்த்தன் -; ஆழ்வார், ஆசாரியர் போல்வார். பிரபத்தி உத்தர க்ஷணத்திலே மோக்ஷம். .மரணமாக்கி வைகுந்தம் தரும் .

இதுவரை சொல்லப் பட்டவர்கள் பக்தர்கள். கர்மத்தால் தளைப் பட்டவர்கள். பகவத் கிருபையால் மோக்ஷ மடைபவர்கள்.

——————————————————————————

இனி முக்தர்கள் :

உபாய சுவீகார அனந்தரம்
ஆஜ்ஞா கைங்கர்யம் (அகரனே பிரத்யவாயங்கள் – செய்யத் தவறினால் பாபம் )
அநுஜ்ஞா கைங்கர்யம் (பாபம் ஸம்பவிக்காது – செய்யாமல் விட்டால் அவன் முகமலத்திக்கு குந்தகம் ஏற்படும்).
ஸ்வயம் பிரயோஜனமாய் (வேறு எந்த பலனையும் எதிர்பாராது அல்ல அல்ல செய்வதே பிரயோஜனமாய்)
பகவத், பாகவத, ஆச்சார்ய, அசக்கியா அபசார விமுக்தராய்/தவிர்ந்தவராய்
தேஹாவாசானே / சரீரம் விழும் போது
புண்யங்களை மித்ரர்களுக்கும் , பாபங்களை அமித்ரர்களுக்கும் பகவானாலே கொடுக்கப் பட
ஹ்ருதய வாசியான பெருமானிடம் விடை பெற்று
ஸுஷும்நா நாடியை அடைந்து
பிரம்ம ரந்தரம் வழி வெளிப்பட்டு
சூரிய கிரணங்களை வாகனமாகப் பற்றி

அர்ச்சிஸ் மார்க்கத்தில் முதலில் அக்கினி லோகம்
பகல்
ஸுக்ல
உத்தராயணம் வாயு
சூர்ய லோகம்
சந்திர
வித்யுத் / மின்னல்
வருண
இந்திர
சத்ய லோகம் இவைகளை ஆதிவாகர்கள் கடத்த , அவ்வோ லோகங்களின் அபிமானிநி தேவதைகள் ஸத்கரிக்க

பரமபத வாசலில் உள்ள விரஜையில் குளித்து
ஸூக்ஷ்ம சரீரத்தை உதிரி
அமானவனால் ஒளிக்கொண்ட சோதியும் பெற்று
அபிராக்ருத திருமேனியும்
பிரம்மாலங்காரமும் செய்யப் பெற்று
நகர பாலகர்களுடைய அனுமதி கிட்டி

வைகுந்தம் புகுதலும்
அனந்த கருட விஸ்வகஸேனர்களைச் ஸேவித்து
திருமாமணி மண்டபத்தில், ஸ்வ ஆச்சார்ய கூடஸ்தரையும் ஸேவித்து
பர்யங்க சயனத்தில், தர்மாதி பீடத்தில் தேவிமார் மூவருடன் ஜாஜுல்யமாய் எழுந்தருளி இருக்கும்
திவ்ய பூஷணார் பூஷிதம், அபரிமித கல்யாண குண பூர்ணராய் ஸேவை சாதிக்கும்
பகவான் திருவடிகளை தலைகளால் வணங்கி
பர்யங்கத்தில் கால் வைத்து மிதித்து ஏறலும்

பகவான் கைபிடித்து தூக்கி மடியில் அமர்த்தி
”கோஸி ?” என்று விளிக்க
அஹம் பிரஹ்ம பிரகார:
பிரஹ்ம பரிகார:
பிரஹ்ம பிரகாஸ: அஸ்மி என்று சொல்லி நிற்க
பகவான் தன்னுடைய குளிர்ந்த கண்களால் கடாக்ஷிக்க
அந்த அனுபவம் தந்த ஆனந்தம் பல்கிப் பெருக
ஸர்வ தேச ஸர்வ கால சர்வாவதோசித சகலவித கைங்கர்யங்களையும் செய்ய விரும்புவனாய்
ஸாலோக ஸாமீப்ய ஸாரூப ஸாயுஜ்ய மாகிற
( ஜகத் வியாபார வர்ஜம் – போக மாத்ர ஸாம்ய லிங்காஸ்ச — ஸ்ரீபாஷ்யம் இத்யாதிகளில் தெரிவித்த )
அஷ்டவித ஆவிர்பாகத்தை அடைந்து எல்லை யற்ற பிரம்மானந்தத்தில் தோய்கிறவன் முக்தன்.

”ஸோஸ்ணுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா ” என்று
ஆனந்தத்தில் ஸாம்யம் அடைவதன்றி ஸ்வரூப ஐக்கியம் அடைகிறான் அன்று .

———————————————————————————-

வேத வேதாந்தங்களிலே பிரஹ்மத்தைப் பற்றி சொன்ன வாக்கியங்களுக்கு அர்த்தம் பார்க்கும் போது
எந்தவித முரண்பாடும் கிடையாது. அப்படி விரோதம் தோற்றினாலும் அதை பரிஹரிக்கவே
சுவாமி எம்பெருமானார் பல கிரந்தங்களை அனுகிரகித்தார்.
அவருடைய மதத்தை வெளிச்சம் போட்டு காட்ட அவதரித்த கிரந்தமே ”யதீந்த்ர மத தீபிகா என்கிற இந்த நூல்.

இதிலுள்ள 10 அவதாரங்களில், 9 வது அவதாரம் ”ஈஸ்வரனைப் ” பற்றிய விசாரம்.

ஸர்வேஸ்வரத்வம் .= நியந்திருத்தவம். ஈஸ் +வரச் =ஈஸ்வரன். நியமன சாமர்த்தியம்.
ஸ்வபாவார்த்தே வரச். ஈசன சீல: நாராயண: என்று சங்கராச்சாரியார் வியாக்கியானம்.
ஸர்வ சப்தத்தால் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருக்குமான ஈஸ்வரன், தனக்கொரு ஈஸ்வரன் இல்லாத என்று பொருள்படும்.
அவன் ஈஸ்வரன். அவனுடைய செயல் ஈசனம் நாம் ஈஸிதவ்யர்கள்.

ஸர்வ சேஷித்வம் = எல்லோருக்கும் ஸ்வாமியாய் , சேஷியாய் இருத்தல். கைங்கர்ய பிரதி சம்மந்தி.
பகவானுக்கு பெருமை சேர்க்க வல்ல கார்யங்களையே எவனொருவன் செய்கிறானோ அவனே சேஷன். பகவான் சேஷி.

ஸர்வ கர்ம ஸமாராத்யத்வம்.= எல்லாருடைய (சந்தியா வந்தனம், தர்ப்பணம், ஸ்ரார்த்தமித்யாதி)
கர்மங்களாலும் ஆராதிக்கப் படுமவர். ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி.
.
ஸர்வ கர்ம பலபிரதத்வம்.= எல்லா கர்மங்களுக்கும் பலன் கொடுப்பவர் நாராயணனே..
தேவதாந்தரங்கள் கொடுக்கிற பலன்கள் இவன் அவர்களுக்கு கொடுத்திருக்கிற சக்தி சாமர்த்தியத்தைக் கொண்டு.
அப்படிக் அவர்கள் கொடுக்கும் போதும் இவன் அவர்களுக்குள் அந்தராத்மாவாக இருந்தே கொடுக்கிறான்.

ஸர்வ ஆதாரத்வம்.= எல்லாவற்றையும் தாங்குமவர். அவன் ஆதாரம். நாம் ஆதேயம்.

ஸர்வ கார்ய உத்பாதகத்வம்.=
”செய்கின்ற கிரியெல்லாம் யானே என்னும், செய்வா நின்றகளும் யானே என்னும் ,
செய்து முநிறந்தவையும் யானே என்னும், செயகைப் பயநுண்னுபேம் யானே என்னும் ” (திருவாயிமொழி-5-6-4) என்றபடி
செய்வார்கள் செய்யும் கிரியைகள் அனைத்துக்கும் ஊற்றுவாய் அவரே.

ஸர்வ வாச்யத்வம். = எல்லா சொல்லின் பொருளும் அவரே. திருமால் , சிவன், இந்திரன் என்று எது சொன்னாலும்
அவை அனைத்தும் பர்யவஸான விதியின் படி சரீரியான நாராயணனையே குறிக்கும். வாசகம் = சொல். வாச்யம் = பொருள்.

ஸ்வக்ஞான ஸ்வேதிர ஸமஸ்த திரவ்ய ஸரீரத்வம் = தன்னையும், தன் ஜ்ஞானம் இரண்டும் தவிர்ந்த அனைத்தும் அவருக்கு சரீரம்.
ஜ்ஞானம் அவருக்கு குணமாதலால் அவர் குணியாகிறார். அவர் மற்றவைகளை தாங்குபவராக இருக்கிறாரே ஒழிய,
தன்னைத் தான் தங்குபவராக இல்லை. எனவே தன்னையும், தன் ஜ்ஞானமும் தவிர மற்றவைகளுக்கு சரீரியாக இருக்கிறார் என்று சொல்லப் பட்டது..

இவை ஈச்வரனுக்குண்டான அடையாளங்கள். இந்த பிரஹ்மம் ஜகத்துக்கு திரிவித – உபாதான, நிமித்த, சககாரி – காரணங்களாக இருக்கிறார்.

எது எதுவாக மாறுகிறதோ, அது அதுக்கு உபாதானம். மண் குடத்துக்கு உபாதானம்.
தங்கம் சங்கிலிக்கு உபாதானம். பஞ்சு வேஷ்ட்டிக்கு உபாதானம். மூலப் பொருள் உபாதானம்.
செய்கிறவர் சங்கல்பமடியாக பொருள்கள் படைக்கப் படிகின்றன.
எனவே குயவன், தட்டான், நெசவாளி இவர்கள் குடத்துக்கு, சங்கிலிக்கு, வேஷ்டிக்கு நிமித்த காரணம்.
இப்படி படைக்க உதவும் கருவிகளுக்கு – சககாரி காரணம் என்று பெயர்.
குயவனுக்கு தண்ட ,சக்ரம். தட்டானுக்கு நெருப்பு துருத்தி, ஊது குழல், நெசவாளிக்கு ராட்டை,
நெய்கிற இயந்திரம் இவைகள் அவரவர்களுக்கு சககாரி காரணம்.

சித் அசித் விஷிஷ்ட பிரஹ்மம் ஏகம் .

பிரஹ்மத்தோடு கூட இரண்டாவது கிடையாது. – அதுவைதம்

சித் அசித்தோடு கூடிய பிராஹ்மம் (போல ) இரண்டாவது கிடையாது – விஷிஷ்டாத்வைதம்

விஷிஷ்ட யோகோ அதுவைதம் விஷிஷ்டாத்வைதம் –
பிரஹ்மத்தோடு கூடி இருக்கிற (ஜாத்யேக வஸ்துக்களான) சித் அசித் போலே இரண்டாவது கிடையாது.
விஷிஷ்ட அஸ்ய அத்வைதம் விஷிஷ்டாத்வைதம் – சித் அசித் கூடி இருக்கிற பிரஹ்மத்தைப் போல இரண்டாவது கிடையாது .-
ந த்வத் சமஸ்ச அப்யதிகஸ்ச திருஸ்யதே என்றபடி.

ஸத் வித்யா பிரகரணம் :(சாந்தோக்ய உபநிஷத்)

ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞானம் – பிரதிக்ஞை.

ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் ஜ்ஞானம்.

மண் என்கிற காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யமான குடம், மடக்கு, பொம்மை அனைத்தும் அறிந்ததாகும் அல்லவா? அதுபோல

காரண பிரஹ்மத்தை அறிந்தால், அதன் காரியமான ஜகத் அனைத்தும் அறிந்ததாகும்.

குடம் என்றும், மடக்கு என்றும் பொம்மை என்றும் பலவாக பார்ப்பது வியவகார வழக்கு.
ஆனால் எல்லாம் மண் என்பதே உண்மை. காரண ரூபத்திலான மண்ணுக்கும் காரிய ரூபத்திலான
மண்ணுக்கும் நாம (குடம்) ரூப (வாயும், வயிறுமான ஆகாரம்) வியவகார வித்யாசம் உண்டு போலே ,
காரண பிரஹ்மமான ஈஸ்வரனுக்கும் கார்ய பிரஹ்மமான ஜகத்துக்கும் குடத்துக்கும் மிருக் பிண்டத்துக்குமான
வேறுபாடு போலே ஆதார ஆதேயத்தவ, சேஷ சேஷிதவ வியவகார பேதம் உண்டு.

மண், மண்ணால் ஆன குடம். பிரஹ்மம். பிரஹ்மத்தால் ஆன ஜகத் என்பதே உண்மை.
எது எதுவாகிறதோ அது அதுக்கு உபாதாந காரணம் என்று வைத்து பார்க்கில், ஜகத்துக்கு ஈஸ்வரன் உபாதாந காரணம்.

பிரளயம் காரண தசை. ஸ்ருஷ்டி கார்ய தசை. காரண பிரஹ்ம விசிஷ்டமான சித்தசித் ஸூக்ஷ்ம தசையிலும் ,
கார்ய பிரஹ்மமான ஜகத் நாம-ரூப வியார்த்தமாய் ஸ்தூல தசையை அடைவதே ஸ்ருஷ்டி.

” பஹுஸ்யாம் பிரஜாயேய ”என்று பிரஹ்மம் சங்கல்பிப் பதால் பிரஹ்மமே நிமித்த காரணம்.
நான் பலவாக ஆகிறேன் ”அநேந அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி ” என்று தான்
தன்னை கார்ய வஸ்துக்களாக மாற்ற நினைப்பதால், ”அபிந்ன நிமித்த உபாதான காரணம் பிரஹ்ம”
என்கிற சாஸ்திர வசனத்தின்படி உபாதாந காரணமாகவும் அவரே ஆகிறார்.

தண்ட, சக்ரம் போலே பிரஹ்மம் தன்னிடத்தேயான பிரக்ருதி, காலம், ஜ்ஞானம், சக்தி இவைகளைக் கொண்டே படைப்பதால் ,
சககாரி காரணமும் பிரஹ்மமே என்று தேறுகிறது.

”ஸதேவ ஸோம்ய ஏகமேவ அக்ர ஆஸீத், அத்விதீயம் ”

ஸத்தாகவே இருந்தது, ஒன்றாகவே இருந்தது, இரண்டாவது இல்லை என்றால்

1. ஸதேவ = உள்ளத்திலிருந்து உள்ளது வந்தது (ஸத் கார்ய வாதம்) அன்றி இல்லத்திலிருந்து உள்ளது வர (அஸத் கார்ய வாதம்) இல்லை ‘
2. ஏகமேவ = நாம ரூபம் இல்லாது ஒன்றே என்று சொல்லும்படியாக ஸூக்ஷ்ம தசையில் இருந்த சேதநா சேதன விஸிஷ்ட காரண பிரஹ்மம் அதுவே
3. அதுவிதீயம் = ஸ்தூல தசையிலான சேதநா சேதன விசிஷ்ட காரிய பிரஹ்மமாயித்து, இரணடாவது இல்லை.
வஸ்து இரண்டாவது இல்லை என்ற பொருள் அல்ல. காரண பிரஹ்மமே காரிய பிரஹ்மம் ஆனபடியால் இரண்டாவது இல்லை என்கிறது.

சைஸவம், பால்யம், யௌவனம் , யுவா, குமார விருத்த என்று ஒருவருக்கு பல அவஸ்தை உண்டு போலே,
பிரஹ்மத்தின் சரீரமான சித்தசித் பிரகிருதி பிராகிருதங்களாக விகாரமடைகிறதே ஒழிய,
ஆத்மாவுக்குப் போலே பிரஹ்மத்துக்கும் எந்தவித விகாரமும் ஏற்படுவது இல்லை . பிரஹ்மம் நிர்விகாரம்

”தத்வமஸி ஸ்வேத கேதோ” = தது + த்வம் +அஸி .

விட்டு (ஜகல்) இலக்கணம்
விடாத (அஜகல் ) இலக்கணம்
விட்டு விடா (ஜகாலஜகல்) இலக்கணம்

விசேஷணத்தை (அடைமொழி) விட்டு விசேஷ்யத்தை (அடைகொளியைப் ) பார்ப்பது விட்டிலக்கணம் .
சேர்த்துப் பார்ப்பது விடாவிலக்கணம்.

தது = த்வம் அஸி
விசிஷ்ட பிரஹ்மமே = ஸ்வேதகேதோ, உனக்கு அந்தராத்மாவான பிரஹ்மம் ஆகிறது.

ஸூக்ஷ்ம சேதநாசேதன விசிஷ்டமாய் பிரஹ்மம் இருக்கிறபடியால் அது உபாதான காரணம் ஆகிறது.
கார்ய ரூபமாக விகாரம் அடையக் கூடிய வஸ்து உபாதான வஸ்து . மண் குடமாவதற்கு இடையில் பல நிலைகள் உள்ளன.
மண்ணைப் பிசைந்து உருட்டி, சக்கரத்தில் இட்டு சுழற்றி வாயும் வயிறுமாகப் பிடித்தால் குடம் உண்டாகும் .
இப்படியான அடுத்தடுத்த நிலைகளின் (நியத) முன் நிலை, அதன் அதன் உபாதானப் பொருள் ஆகும்.

சங்கல்ப விசிஷ்ட பிரஹ்மமாய் இருக்கிறபடியால் அதுவே நிமித்த காரணம் ஆகிறது.
காரணப் பொருளை கார்யப் பொருளாக யார் பரிணமிக்கச் செய்கிறாரோ அவர் நிமித்தம்.
தான் மாறாமல் தன்னோடு கூடிய சேதநாசேதனங்களை மாற்றமடையச் செய்கிறபடியால்.

காலம் , ஜ்ஞான, சக்தியாதிகளுக்கு அந்தர்யாமி பிரஹ்மம்மாய் இருக்கிறபடியால் சககாரி காரணமும் அதுவே ஆகிறது.
கார்ய உத்பத்தியில் உதவி செப்பவை ஸஹகாரி.

இப்படியாகப் படைப்பவர் நாராயணன் என்று சொல்லலாம். அதுதான் எப்படி? என்றால் :

கஸ்ய த்யேய:? காரணம்து த்யேய:

உள்ளது காரணமா? இல்லது காரணமா? உள்ளது காரணம் என்றால் ”ஸத் ” காரணம். ‘ஸதேவ ஸோம மக்ரம் ஆஸீத்”.

ஜ்ஞானம் உள்ளது காரணமா? ஜ்ஞானம் அற்றது காரணமா? ஜ்ஞானம் உள்ளது காரணம் என்றால் ‘
‘ஆத்மா ” காரணம். ”ஆத்மா வா இதம் ஆக்ர ஆஸீத் ”

சிறியது காரணமா? பெரியது காரணமா? பெரியது காரணம் என்றால், ”உள்ளதாய் ,
” ஜ்ஞானம் உள்ளதாய்” இருக்கிற ”பிரஹ்மம் ” காரணம். ஆகும்.

அந்த பிரஹ்மம் நாராயணனே என்றது எந்த நியாயத்தாலே?

1. ஸர்வ சாகா பிரத்யயம் நியாயம். – பூர்வ பாகத்தில், பல சாகைகளில் பலபடி சொல்லப்பட்ட
ஒன்றை சமன்வயப் படுத்தி பொருள் கொள்ளல்.

2. ஸகல வேதாந்த பிரத்யயம் நியாயம். – பல பல உபநிஷத்துக்களில் சொன்ன விஷயத்தை ஒன்றுக்கொன்று
முரண்படாமல் பொருள் கூறல். ஸத் , ஆத்மா , பிரஹ்மம் என்று வெவ்வேறு சொல்லால் குறிப்பிட்ட பிரஹ்மத்தை ,
வேதாந்தங்களில் பூர்ணமாக பிரஹ்மத்தைப் பற்றி சொன்னதுக்கு முரண் படாமல் இன்னது அன்று அறுதி இடல்.

3. சாமான்ய விசேஷ நியாயம். – பொதுவாக சொன்னவைகளை விசேஷித்து சொன்னதனோடு சேர்த்துப் படித்தல்.
அதாவது, ஸத்; ஆத்மா; என்கிற சாமான்ய சப்தங்களை , பிரம்மா; சிவன்; இந்திரன் என்று விசேஷித்துச் சொன்ன சப்தங்களோடு சேர்ப்பது.

4.சாக-பசுந் நியாயம். – பசுவைக் (4 கால்மிருகம்) கொண்டு யாகம் செய் என்று சாஸ்திரம் சொல்ல,
எந்த நாலுகால் பசு? என்ற விசாரம் வந்தது. அதற்கு சாஸ்திரம் சாக-பசு என்று விசேஷித்து
”வெள்ளாட்டைக்” கொண்டு யாகம் செய் என்று நிர்தேசித்தது.

சப்தங்களுக்கு பொருள் இரண்டு வகையில் சொல்லலாம்.
ஒன்று யோகம்.= சப்த சேர்க்கை.
இரண்டாவது ரூடி = பிரசித்த வழக்கு.
பங்கஜ -; தாமரை. நாய்க்குடை, ஆம்பல், அல்லி எல்லாம் தாமரையை போலவே நீர் அளரில் தோன்றினாலும்,
ரூடி அர்த்தம் தாமரை என்பதே.

வேதாந்தத்தில் பிரம்மா, சிவன், இந்திரன், ருத்ரன், ஹிரண்யகர்பன், நாராயணன் என்று பல படி சொல்லி இருப்பதால்,
இவர்களில் காரண பிரஹ்மம் யார் என்ற விசாரம் வந்தது. இந்த சப்தங்களின் ரூடி அர்த்தத்தை மாற்ற முடியாது.
யோக அர்த்தத்தைக் கொண்டு மற்றவர்களின் பெயர்களை நாராயணனுக்கு பொருந்த விட வழி உள்ளது போல்
மற்றவர்களின் பெயருக்கு நாராயணன் என்பதும் அர்த்தமாகச் சொல்ல வழி இல்லை. காரணம்:

பூர்வ பததாது ஸம்க்ஞா: அக: என்ற பாணினி சூத்திரத்தின் படி
நாரா: + அயன = நாராயன என்பதற்கு பதிலாக நாராயண என்றாகும் என்கிறார்.
அதாவது ஒருசொல் ”ர ” வில் முடிந்து அடுத்த சொல் ”க ” வில் தொடங்காவிடில், ”ன ” என்பது ”ண ” என்று மாறி,
விசேஷித்து ஒருத்தரை மட்டுமே குறிக்கும் என்பது வியாகரணம்.

ஆதலால் யோகிகப் பொருள் கொண்டு ”நாராயணன் ‘ என்ற சொல்லை, இந்திரன், சிவன், ருத்ரன் பிரம்மன்
இவர்களுக்கு பொருந்த விட முடியாதோ , என்றால், ‘ண ” த்வம் ஒரு தேவதா விசேஷத்தைத்தான் குறிக்கும்
என்பது பாணினி சூத்திரத்தின் விதி.
அவர்கள் எல்லாம் ”ஸ்ரஷ்டம் ” என்பது பிரசித்தமும் கூட.
எனவே ”ஸத் ” ஆத்மா ” பிரஹ்மம் ” என்ற நாமங்கள் நாராயணனை மட்டுமே குறிக்கும்
ஆதலால், நாராயணனே ஸ்ருஷ்டி கர்த்தா, பர பிரஹ்மம் என்பது கரதலாமலகமாய் விளங்குமன்றோ?

பிரகிருதி காரணமா? என்றால் அதுக்கு உபாதான காரணத்வம் சொல்லப் போனாலும்,
நிமித்த காரணம் சொல்லப் போகாது , ஜ்ஞானம் இல்லையாதலால்.

சாந்தோக்கியத்தில் ஸத், ஆகாச, பிராண, சப்தங்களைச் சொல்லி ஜகத் காரணம் என்றது..
வாஜஸநேயத்தில் பிரஹ்ம்ம சப்தம் சொல்லி காரணத்வம் கூறப்பட்டது.

ஸகல வேதாந்த பிரத்யய நியாயத்தைக் கொண்டு சாமான்ய சப்தங்களை பிரஹ்மத்தினிடத்தில் சேர்க்க வேண்டும்.
பிரஹ்ம சப்தத்தை சாக-பசுந் நியாயத்தாலே ஒரு தேவதா விசேஷத்தில் சேர்க்க வேண்டும்.
அந்த பிரஹ்மம் எது என்று கேள்வி எழ, தைத்ரீய உபநிஷத்தின் படி ஆத்ம சப்தத்திலே சேர்க்க வேண்டும்.

அந்த ஆத்மா யார் என்ற கேள்வி வர, ஸ்ருதிகளில் சொல்லப்பட்ட இந்திரனா?
அல்லது அவரைப் போல பிரசித்தமாய் இருக்கிற அக்நியா? உபாஸ்ய விஷயமான ஸூர்யனா?
அல்லது ஸோமந் தான் பிரஹ்மமா? குபேரனா? வருணனா? எமனா? என்ற சந்தேகம் எழ,
கர்ம வஸ்யராய் படைப்புக்கு உள்ளாகி, பரிமித ஐஸ்வர்ய தேவதைகளாகவும், பிரம்மாவினுடைய ஆயுஸ்
காலத்துக்குள்ளாக அழிவராகவும் இருக்கும் பக்ஷத்தில், அவர்களுக்கு பிரஹ்மத்துவம் சித்திக்க வழி உண்டோ? இல்லையே.

ஸ்வேதஸ்வேதா உபநிஷத்தில் ”சிவவஸ்ச காரணன் ” என்று சொல்லப் பட்டு இருக்கிறதே ?
அவர்தான் பிரஹ்மமோ? அதர்வ சிகையிலே சம்புவை காரணம் , சர்வத்துக்கும் ஆத்மா என்கிறதே?
தைத்ரீய உபநிஷத்தில் ஹிரண்யகர்பர்க்கு இதே காரணத்வம் சொல்லப் பட்டிருக்கிறதே? என்றால்
ஸாமான்ய-விசேஷ நியாயத்தாலே ஸம்பு, சிவன், ருத்ர வாச்யர்களை , ஹிரண்யகர்பர் என்கிற
பிரம்மாவிடத்திலே சேர்க்க வேணுமாகும் . காரணம் – சிவன், சம்பு என்று சொல்லப் படுகிற ருத்ரன்,
பிரம்மாவினுடைய கோபத்தால் புருவ நெறிப்பின் நடுவில் இருந்து பிறந்தான் என்றும்,
கபாலித்தவம் பவிஷ்யத்தலாகிற பாபங்கள் அவருக்கு புராணங்களில் படிக்கிற படியால்.

மஹோபநிஷது , நாராயண உபநிஷது , ஸுபாலோபநிஷது , மைத்ராயணி, புருஷ ஸூக்தம் ,
நாராயண அநுவாகம் , அந்தர்யாமி பிராஹ்மணம் இத்யாதிகளில்
பரம காரணத்வம்
ஸர்வ ஸப்த வாச்யத்வம்
மோக்ஷ பிரதத்வம்
ஸர்வ ஸரீரகத்வம்
நாராயணனுக்கே என்கிறபடியால், பிரம்மாவுக்குண்டான ஸ்வயம்பூ , ஹிரண்யகர்ப, பிரஜாபதி சப்தங்கள்
நாராயணிடத்தே பர்யவசானமாக , சாக – பசுந் நியாயத்தாலே நாராயணனே காரண பிரஹ்மம் என்று இறுதியாகத் தேறுகிறது.

அந்தராதித்ய வித்யா பிரகாரணத்தில் , சூர்ய மண்டல மத்திய வர்த்தி பர்க்க: = சிவன் என்று இருப்பதால்,
நாராயண பரத்வம் ஏற்பல்ல என்கிற வாதம் வந்ததாகில் அதற்கு சமாதானம் :

ஹர : சிவ: பர்க: சிவனைக் குறித்தாலும், தது ஸவிதுஹு வரேண்யம் பர்க: என்று இருப்பதால்,
தது – வரேண்யம் என்று ”நபும்ஸஹ ” லிங்கத்தோடே வருகிற பர்க: சப்தத்தையும்,
அது புல்லிங்க மானாலும், ”ஹார்ஷ பிரயோகமாக”, நபும்ஸக லிங்கமாகவே கொள்ள வேண்டும்.
அப்படி ”அ ”காரத்தில் முடிவதை ”ஸ ” காரமாகக் கொண்டால் , ”உயர்ந்த ஒளி ” என்றுதான் பொருள் படும்,
”சிவன் ” என்று அர்த்தம் வராது. ஆக அந்தராதித்ய வித்யா பிரகரணத்தில் சிவ தியானம் சொன்னதாக ஆகாது.
என்றால் நாராயண பரத்வத்துக்கு குறை இல்லை.

இதே போல தகர வித்யா பிரகரணத்தில் ”தஸ்ய பிரகிருதி லீனஸ்ய யப்பரஸ்ய மஹேஸ்வர:” என்று
ஹிருதய மத்தியில் இருக்கிற ஆகாசத்தை விஷ்ணுவாகச் சொல்லி, விஷ்ணுவுக்கு அந்தராத்மாவான சிவனை
தியானம் பண்ண வேண்டும் என்கிறது என்பர்.
”வி சோக:” என்பதற்கு சிவன் என்று கொள்ளாமல் அஷ்ட குணங்களில் உள்ள ”வி சோக:” என்கிற குணமாகக் கொண்டு,
அந்தராத்மாவான நாராயணனுடைய குணங்களை உபாசிப்பாய் என்றே கொள்ள வேண்டும்.
ஆக அந்த விதத்திலும் நாராயண பரத்வத்துக்குக் குறை இல்லை.

ஸப்ரஹ்மா ஸசிவஸ் ஸேந்திர ஸோ அக்ஷரப் பரம ஸ்வராட்| —
அந்த பரமாத்மாவே சிவன், இந்திரன், அக்ஷரம் அனைத்துமே என்கிறது விஷ்ணு ஸூக்தம்.
அவனே கல்யாண குணாத்மகனாய் , பிரகிருதி புருஷர்களோடு கூடியவராய், அவர்களைக் காட்டிலும் வேறு பட்டவராய்
இருக்கிற நாராயணன். அவரே ஜகத் காரணம் . மற்ற தேவதைகளின் பெயர்கள் ஜகத் காரண விஷயத்தில் ,
சரீராத்ம சம்பந்தத்தாலே அவை அனைத்தும் நாராயணனையே சொன்னதாக அமையும். காரணம்:

ப்ரஹ்மாச நாராயண: சிவச்ச நாராயண: என்று நாராயண உபநிஷத்திலும்;
முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று ஆழ்வாரும் சொல்லி இருக்கிறபடியால்
சரீராத்ம பாவம் அவருக்கே பிரஸித்தம் .
மேலும் ”நீராய் நிலனாய் ..சீரார் சுடர்கள் இரண்டாய், சிவனாய் அயனானாய் (திருவாயமொழி-6-9-1) என்று
சாமான்யதிகரணத்தில் ( முதல் வேற்றுமை உறுப்பில்) படித்ததும் சரீராத்ம சம்பந்தத்தைக் கொண்டே எனலாம்.

—————————————————————————————————————————————–

ஆத்மா – பரமாத்மா = இருவருக்கும் ஜ்ஞானம் பொது.
சேதனன் – பரம சேதனன்
தத்வம் – பரதத்வம் / பர பிருஹ்மம்
பிருஹ்மம் என்று சொல்ல தகுதி படைத்தவர் ஒருவரே. அவரே பர பிருஹ்மம் ஸ்ரீமந் நாராயணன்.
அவரே அகில ஜகத்துக்கும் மூன்று வித காரணமாயும் இருக்கிறார். ஆனால் தான் விகாரமடைவதில்லை.
தன்னோடு கூடி இருக்கிற சேதநா சேதனங்கள் நிலை பெருத்தலும் நீக்கலும் உடையன.
ஸ்தூல சேதநா சேதன விசிஷ்ட காரிய பிரஹ்மம் ஸூக்ஷ்ம சேதநா சேதன விசிஷ்ட காரண பிருஹ்மமாய்
இருக்கையை நிலை பெருத்தலும் நீக்கலும் ஆகும்.
எதுபோல என்றால், 25 வயது கட்டிளங் காளை 60 வயது முதியவர் ஆகும்போது
அவருடைய சரீர கத மாற்றங்கள் ஆத்மாவை பாதியாது போலத்தான்

அங்கனாகில், ஆத்மா இந்த உடலோடு கூடி இருக்கும்போது, படுகிற இன்ப துன்பங்கள் ,
சேதநா சேதன விசிஷ்ட பிருஹ்மத்துக்கும் உண்டோ என்னில்? கிடையாது.

ஸம்ஸார பத்தமான ஆத்மாவுக்கு இன்ப துன்பங்களாகிற ஸ்வபாவ விகாரம் உண்டே ஒழிய,
ஸ்வரூப விகாரம் கிடையாது. இவை அனைத்தும் கர்மத்தால் வருவன. தோஷ பூயிஷ்டம்..

மாறாக பரமாத்மா விஷயத்தில், ஸ்வரூப-ஸ்வபாவ விகாரம் இரண்டுமே கிடையாது,
காரணம் அவருக்குச் சரீரமான சேதநா சேதனங்கள் அவருடன் கூடியிருப்பது அவருடைய சங்கல்பத்தாலே யாகி குண கோடியிலே சேரும்.

ஆனால், முக்த ஆத்மாவுக்கு பரமாத்மாவைப் போலே ஸ்வரூப-ஸ்வபாவ விகாரம் இரண்டும் கிடையாது,
அங்கு சென்றதும் கர்மம் தொலைந்து, ஸாரூப ஸாயுஜ்யம் பெறுவதாலே .

அத்துவைதிகள் பிருஹ்மம் ஒன்றே சத்தியம் . ஜகத்து கானல் நீரைப் போலே பொய்த் தோற்றம்.
ஆத்மாக்கள் பலவாக தோற்றுவது மாயை. அந்த மாயை எப்படிப் பட்டது என்றால், அநிர்வசனீயம்.
பிருஹ்மம் அவித்தையால் மறைக்கப்பட்டு, ஒன்றை பலவாக பிரமிக்கிறது. (அபேத ஸ்ருதி) வாக்கிய ஜன்ய (தத்வமஸி)
வாக்கியார்த்த (ஐக்கிய) ஜ்ஞானத்தாலே, அவித்தையாகிற திரை விலகி,
பிரஹ்மமே மோக்ஷம் அடைகிறது என்பது அவர்களுடைய மதம்.

பிரக்ருதி பிராக்ருதங்களுக்கு ஸ்வரூப, ஸ்பாவ விகாரம் இரண்டும் உண்டு.
பத்த ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் கிடையாது. ஸ்வபாவ விகாரம் மட்டும் உண்டு.
தத்வம் எல்லாம் ஒன்று என்றால், இப்படியான தோஷங்கள் பிருஹம்மத்துக்கும் வந்து சேரும் அல்லவா?
என்கிற விசிஷ்டாத்வைத வாதத்துக்கு எதிர்வாதம் :

நேஹ நாநாஸ்தி கிஞ்சந …பல என்பது இல்லை. பல என்று படித்தால் சம்ஸாரம் சித்திக்கும் என்பதும்
சாத்திர வசனம் தானே இது போன்ற ஆக்ஷேபங்கள் வருமே? என்றால்

போக்தா போக்கியம் பிரேரிதாம் ச மத்வா க்ஷரம் பிரதானம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மாநா ஈஷதே தேவ ஏக: என்று
பேத ஸ்ருதிகள் தத்வங்களை மூன்றாகப் பிரிக்கின்றன.

யஸ்ய ஆத்மா சரீரம், யஆத்மா நவேத யஸ்ய பிருதிவி சரீரம், யம்பிருதிவி நவேத என்கிற
அந்தர்யாமி ப்ராஹ்மணங்களில் சொல்லப் பட்ட கடக வாக்கியங்களை முக்கியமாகக் கொண்டு,
அத்துவைத -துவைத மத சங்கடங்களைப் பரிகரிக்கலாவது.

ஸஜாதீய பேதம் = ஒரே ஜாதியில் வெவ்வேறு வகை = மா, பலா என்று மரங்களிலேயே வேறு வகை.
விஜாதீய பேதம் = வேறு ஜாதி வேறு பொருள் = மலை, மரம் என்கிற இரு வேறு ஜாதி
ஸ்வகத பேதம் = ஒரு வகையில், வேறு வேறு பிரிவு, பாகங்கள் = மரம், கிளை, பூ, காய், பழம் என்பன.

சங்கரர் இந்த மூன்றுவித பேதங்களும் பிரஹ்மத்துக்குக் கிடையாது என்கிறார். அதாவது

பிரஹ்மம் ஜ்ஞான முடைத்து. சஜாதீயமான (ஜ்ஞான வாச்சயமான) ஆத்மா தனிப்பட இல்லை யாதலால் ஸஜாதிய பேதமில்லை.

ஜடப் பொருள்களுக்கு ஜ்ஞானமில்லை. ஜெகன் மித்யா வாதத்தால் விஜாதீயமான பேதமும் இல்லை.

ஜ்ஞான முடைய பிரஹ்மத்துக்கு, குணங்கள் இல்லை யாதலால் , ஸ்வகத பேதமும் இல்லை என்பர்,

ஆத்மா, பிரக்ருதி , குணங்கள் மூன்றும் பிரஹ்மத்தைப் போலே சத்தியம், நித்தியம் அனந்தம் ஆகையால் ,
ராமானுஜ ஸம்பிரதாயத்தில் திரிவித பேதமும் ஒப்புக் கொள்ளப் படுகின்றன.

இந்த மூறு பேதமும் கிடையாது என்கிற அத்துவைதிகள் , சரீர கத தோஷம் ஆத்மாவுக்கு உண்டு போல் ,
அந்தர்யாமி பிரம்மத்துக்கும் சேதநா சேதன விகாரங்கள் வாராதோ என்று ஆக்ஷேபிக்க , அதற்கு உத்தரம் என்ன வென்றால் :

ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா , அபகத பாப்மா – என்று வியாப்பியம் சொன்ன விடத்தில்,
வியாப்பிய கத தோஷமும் தட்டாதவர் என்கிற வாக்கியங்களும் சேர்த்தே படிக்கிற படியால்,
அமலன், விமலன், நின்மலன் நீதி வானவன் – என்றார் திருப்பாணாழ்வாரும்.

யோகபத்யம் அனுக்கிருஹ கார்யம். விஷம ஸ்ருஷ்டிக்கு ( படைக்கப் பட்டவைகளுள் ஏற்ற தாழ்வுக்கு)
அவரவர் கர்மா காரணமே ஒழிய, பிரஹ்மம் காரணமன்று.
வீட்டை பண்ணி விளையாடும், விமலன் ..(நாச்சியார் திருமொழி) என்றபடியால்
பிரஹ்மத்துக்கு வைஷம்ய நைர்கிருண்ய தோஷம் இல்லை என்பது ஆண்டாள் திருவாக்கும் கூட .

படைப்பாளி பிருஹ்மம் நாராயணன் என்று தேறின பிறகு

கர்திருத்வ (செய்ப்பவர்)
காரயித்வ (செய்விப்பவர்)
நியந்திருத்தவ (உள்ளிருந்து நடத்துபவராய்)
பிரகாசயித்தவ (பிரகாசப் படுத்துவராய் )
அநுமந்திருத்வ (ஜீவ சுவாதந்ரியத்தைக் கொண்டு செய்யப் புகுகிற காரியங்களில் அனுமதிப்பிரதானம் பண்ணி )
சககாரித்தவ (கர்மானுசாரமாய் மேன்மேலும் பிரவர்திப்பித்து)
உதாசீனத்தவம் (சாஸ்த்ர வஸ்யத்தை இன்றி புறம்பே போகும் போது தடுக்கவும் தடுக்காமல் ,
ஆதரிக்கவும் செய்யாமல் திருந்துவான் என்று உதாசீனவது ஆசீனம் – நித்ய, நிரவதிக, நிருபாதிக, நிர்ஹேதுக கிருபை காரணம் )

இவை அனைத்தும் நாராயணனுக்கே குறைவின்றிப் பொருந்தும்.

ஆதார-ஆதேயத்வம்.
விதாதா-விதேயத்வம்.
சேஷி-சேஷத்வம்.

என்று சரீரத்துக்கும் ஆத்மாவுக்குமான தொடர்பு போல,
ஆத்மாவுக்கும் (சரீரம்) பரமாத்மா (ஈஸ்வரன்) வுக்குமான தொடர்பு இவையாகும்.

அந்த ஈஸ்வரன் விபுவாக (எங்கும் நீக்கமற நிறைந்து) இருக்கிறார். இப்படி அவர் வியாபிப்பதுவும் மூன்று படியாலே .

ஸ்வரூப வியாப்தி.
விக்ரக வியாப்தி
தர்ம பூத ஜ்ஞானத்தாலே வியாப்தி.

ஆத்மா அணுவாகையால், தர்ம பூத ஜ்ஞான வியாப்தி தவிர்ந்த மற்ற இரண்டும் கிடையாது.

ஈஸ்வரன் அனந்தன் . அதாவது அந்த மற்றவன்.

கால அபரிச்சினன் (நித்யமானபடியாலே)
தேச அபரிச்சினன் (எங்கும் வியாபித்திருக்கிற படியாலே )
வஸ்து அபரிச்சினன் (ஸமஸ்த வஸ்துக்களும் அவருக்கு சரீரமான படியாலே ).

சத்யத்வம்
நித்யத்வம்
ஆனந்தத்வம்
அமலத்வம்

இவை அவருக்கு ஸ்வரூப நிரூபக தர்மங்கள்.

ஸ்ருஷ்டி உபஹிருதங்களான ஸர்வக்ஜ்ஞத்வம்
சர்வ சக்தித்வம் நிரூபித ஸ்வரூப குணங்கள்.

சௌலப்யம்
சௌசீல்யம்
வாத்சல்யம் இத்யாதி ஆச்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்.

காருண்யம் முதலியன ரக்ஷணத்துக்கு உபயோகியான குணங்கள்.

அந்த ஈஸ்வரன் அண்டங்களை படைப்பதற்கு ஸமஷ்டி ஸ்ருஷ்டி என்று பெயர்..
பிறகு சதுர்முக பிரம்மா, தக்ஷ பிரஜாபதி இவர்களுக்கு அந்தர்யாமியாக இருந்து வியஷ்டி ஸ்ருஷ்டிகளைத்த தொடங்குகிறார்.
தான் விஷ்ணுவாக அவதரித்து காலம், மனுவாதிகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ரக்ஷணத் தொழிலைச் செய்கிறார்.
ருத்ரன், மிருத்யு தேவதைகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ஸம்ஹாரத் தொழிலைச் செய்கிறார்.
ஆக, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்தும் இவரே செய்கிறார்.

இப்படியான ஈஸ்வரனின் நிலைகள் ஐந்து. இதை

விண்மீதிருப்பாய், மலைமேல் நிற்பாய், கடல் சேர்ப்பாய் , மண்மீதுழல்வாய், இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் (திருவாய்மொழி -6-9-5)
பாட்டு கேட்குமிடம்; கூப்பீடு கேட்குமிடம், குதித்த விடம் , வளைத்த விடம் , ஊட்டுமிடம் என்று ஆழ்வார்களில்
நம்மாழ்வாரும், ஆச்சாரியர்களில் பிள்ளை லோகாச்சாரியரும் பேசியுள்ளனர்.

பர – பரம பதத்தில் இருப்பு. – பரபிருஹ்மம் , பர வாசுதேவனான ஸ்ரீமந் நாராயணனாய் ஸர்வ லோக மஹேஸ்வரனாய் இருக்கும் இருப்பு.

வியூகம் – திருப்பாற்கடல் சயன வியூக வாசுதேவன் தன்னை நான்காக வகுத்துக் கொண்டு முத்தொழிலும் நடாத்துகின்ற கார்ய வைகுண்டம் வாசம்..

வியூக வாசுதேவன் -ஷாட்குண பூர்ணன் -கேசவன் சக்ரதாரி தங்க வர்ணம் ; நாராயணன் சங்கம் கருநீல வர்ணம் ; மாதவன் கதை மணியின் வர்ணம் ;
ஸங்கர்ஷணன் – ஜ்ஞான, பலம் – ஸம்ஹாரம் – கோவிந்தன் சார்ங்கம் நிலாவின் ஒளி ;
விஷ்ணு கலப்பை தாமரை மகரந்த வர்ணம் ; மதுசூதனன் கல் உலக்கை செந்தாமரை வர்ணம்;
பிரத்யுமனன் – ஐஸ்வர்ய, வீர்யம் – ஸ்ருஷ்டி- திருவிக்ரமன் வாள் நெருப்பு வர்ணம் ;
வாமனன் வஜ்ராயுதம் உதய சூர்ய வர்ணம் ; ஸ்ரீதரன் கோடாரி வெண்டாமரை வர்ணம்;
அநிருத்தன் – சக்தி, தேஜஸ் – ஸ்திதி – ஹிருஷீகேசன் மின்னல் வர்ணம் இரும்பு உலக்கை ;
பத்மநாபன் – சூரிய ரஷ்மி வர்ணம் பஞ்சாயுதம் ; தாமோதரன் இந்திரகோப வர்ணம் (பட்டாம்பூச்சி வர்ணம்) பாசக்கயிறு பிடித்திருப்பார்.

விபவம் – ராம, கிருஷ்ணாத் யவதாரங்கள் .
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் ராமனாய் தாமோதரனாய் கற்கியுமானான் .
தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகளில் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் ! இமையோர் தலைவா ! – என்று ஆழ்வார் காட்டினபடி.

முக்கியாவதாரம் – ராம, கிருஷ்ணாத் யவதாரங்கள். இவர்கள் மட்டுமே உபாசிக்கத் தக்கவர்கள். மற்ற.அநுபாஸ்யங்களான கௌணாவதாரத்தில்
ஸ்வரூப ஆவேசாவதாரம் – பரசுராம, பலராமர்கள்
சக்தி (அம்ச) ஆவேசாவதாரம் – பிரம்மா, ருத்ரன், மரீசி, வியாசர் இவர்கள்.

1. நம்முடையது பிறப்பு. அவனுடையது அவதாரம். நம் பிறப்பு கர்மத்தால். அவன் அவதாரம் தன் இச்சையால் (ஸ்வ சங்கல்ப்பத்தால்).
2. நாம் பிறந்து சிரமப் படுகிறோம். அவன் அவதரித்து மேன்மை அடைகிறான். ஸௌ ஸ்ரேயான் பவதி ஜாயமான:
3. நம்முடையது பாஞ்ச பௌதிக தேகம். (பிறந்த இடத்தும்) அவனுடையது அபிராக்ருத திருமேனி.
4. தர்மம் செய்து மேன்மை அடைய நம் பிறவி. நலிவுற்ற தர்மத்தை உத்தரிக்க அவன் அவதாரம்.
5. கர்மம் கழிய வேண்டி நாம் பிறக்கிறோம் . அதர்மத்தை அழித்து, ஸாதுக்களை ரக்ஷிப்பது பகவதவதார பிரயோஜனம்.
6. நாம் பிறவாதிருக்க வேண்டி அவன் பிறக்கிறான்

அந்தர்யாமி – ஹார்த்த ரூபியான – தகராகாஸ வாசி. தன்னை அநாதரிப்பவர்களையும் ஆதரித்துப் போருகிற இடம்.
இவனுடைய ஸ்வர்க்க நரகாதி யானத்திலும் விடாதே பற்றி இருக்கும் நிலை. உடன் கேடனாய் இருக்குமிடத்தும்,
தோஷ அஸம்ஸ்பிருஷ்ட்டனாய். ரிஷி யோகிகளுக்கும் பிரத்யக்ஷம்.

அர்ச்சை .- திருவாளன் திருப்பதிகள் தோறும் விக்ரக ரூபத்தில் எழுந்தருளி இருத்தல்.
தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்று கிருஹார்ச்சையாய் சந்நிதி பண்ணி அபூர்ணனைப் போலேயும்
அசகத்தனைப் போலேயும் இட்டது கொண்டு நிறைவு அடைபவனாய் ரக்ஷணம் பண்ணி போருமவன்.

ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
வானமாமலை , திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம் திருவேங்கடம் நைமிசாரண்யம் புஷ்கரம் பத்ரிநாத் முக்திநாத்.

தெய்வ
சித்த
மநுஷ்யர்களால்
ஏறி அருளப் பெற்ற க்ஷேத்ரங்கள் என அர்ச்சாவதார க்ஷேத்ரங்கள் நான்கு வகை.

பகவத் விபவ அவதார காலங்களிலும் ஆராதிக்கப் பெற்ற பெரிய பெருமாள், ராமப்பிரியன் போன்று
பெருமை உடைய அவதாரம் அர்ச்சாவதாரம். ஸர்வம் பூர்ணம் ஸஹோம் என்று பிரபத்திக்கு உகந்தவிடம் அர்ச்சாவதாரம் .
ஆழ்வார்களும், பகவத் ராமானுஜரும் பிரபத்தி பண்ணித்து அர்ச்சையிலே .

இந்த 5 நிலைகளிலும் ” அகலகில்லேன் இறையும் என்று லக்ஷ்மி விசிஷ்டனாகவே அவன் கோயில் கொள்கிறான் என்பது
வேத, இதிஹாச, புராண, ஆழ்வார் பாசுரங்களில் பிரசித்தம்.
ஆக, இது ஒரு மிதுன ஸம்பிரதாயமாய் ஏகாயான மதம் நிரசிக்கப் பட்டது .

—————————————————————————–

கடிகாசலம் என்கிற சோள சிம்ம புரம் தொட்டையாச்சார் ஸ்வாமியின் சிஷ்யர்
ஸ்ரீநிவாஸ குரு சாதித்த பால போத கிரந்தம் ”யதீந்திர மத தீபிகா” என்கிற இந்த நூல்,
பகவத் அவதாரங்கள் 10 போலே , ஆழ்வார்கள் அவதாரங்கள் 10 போலேயும் 10 அவதாரங்களைக் கொண்டது.
அவை பிரமாணங்கள் விஷயமான 3ம் + பிரமேயங்கள் விஷயமான 7 மாக 10 அவதாரங்கள். அவையாவன:

பிரத்யக்ஷ பிரமாணம்.
அனுமானப் பிரமாணம்,
சப்த பிரமாணம்
என்ற மூன்று.

அடுத்து பிரமேயத்துக்கான 7ல் திரவியம் 6 + அதிரவ்யம் 1. திரயங்களில் ஜடம் 4 + அஜெடம் 2.

பிரகிருதி;
காலம்;
தர்மபூத ஜ்ஞானம்; (பராக்)
சுத்த சத்வமாகிற பரம பதம் (பராக்) 4ம் ஜடம்.

ஜீவாத்மா; (பிரத்யக்)
பரமாத்மா (பிரத்யக்) 2ம் அஜடம்.

லக்ஷ்மி லக்ஷியா அனயா தேவி. பூ நீளா தேவிகளோடு சேர்ந்து நம் குற்றங்களைப் பொறுப்பிக்குமவள் அவளே.
ஜீவாத்மாவுக்கு ஒரு மிதுனமே உத்தேச்யம். பகவான் உபாயமும், பிராப்பியமுமாய் இருக்க,.
பிராட்டி புருஷகார பூதை மற்றும் கைங்கர்ய பிரதி சம்மந்தியுமாவள். அவளை பற்றித்தான் பகவானைப் பற்ற வேண்டும்.
புருஷம் கரோதி இதி புருஷகார: நம்மை அருளாலே திருத்தி, அவனை அழகால் திருத்தும்,
பிராட்டியை முதலில் பற்றுவதற்குக் காரணம், உபாய அத்யாவசாயம் பலிக்கவே.
இவளுடைய அருளாலே அவனுடைய ஸ்வாதந்திரியம் மடிந்தால், தலை எடுக்கும் குணங்கள் :
நீரிலே நெருப்பு கிளருமா போலே ,
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம். கார்யம் செய்யுமென்று துணிக்கைக்கு ஸ்வாமித்வம் .
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீலயம் . கண்டு பற்றுகைக்கு சௌலப்யம்.
விரோதியைப் போக்கி தன்னை கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்.

அஸ்ய ஈஸானா ஜகத: விஷ்ணு பத்நி என்று அவள் நமக்கு சேஷியாய், விஷ்ணுவுக்கு பத்நியாய் , பிரதம கிங்கரியாய் விளங்குமவள்.

இந்த விஷயத்தில் ஒரு யோஜனா பேதம் உண்டு. பிராட்டியை பிருஹ்ம கோடியிலே சேர்ப்பதா? சேஷ கோடியிலே சேர்ப்பதா ? என்பதே அது.
விசிஷ்ட அத்வைதம் என்று பிரஹ்ம ஏக வாதமாய் இருக்க, பிராட்டியை ஆத்ம கோடியில் இல்லாது பிரஹ்ம கோடியில் சேர்த்தால்,
விசிஷ்ட துவைத்த சம்பிரதமாக வன்றோ தேறும்? என்பது தென்னாசார்ய பக்ஷம்.

நம் விஷயத்தில் அவளுக்கான ஆகாரத் திரயம் :(லோகாசார்ய பக்ஷம்)

புருஷகாரத்வம்.
சேஷித்வம்.
பிராபியத்வம்.
ஸ்வரூபதயா அணுத்வம்.
பகவத்விக்ரக வியாப்திதயா விபுத்வம் ஸம்பாவிதம்.

அவளுக்கு உபாயத்வம் இல்லை என்பதாம். உபாயத்வம் ஸ்வதந்திரனான பரமாத்மாவுக்கே அசாதாரணம்.
பிராட்டி உட்பட அனிதரர்கள் அவனுக்கு பரதந்திரப் பட்டவர்கள் என்பது கொண்டு.

தேசிக பக்ஷம்:

புருஷகாரத்வம்.
உபாயத்வம்.
பிராபியத்வம் .
ஸ்வரூபத்தாலேயே விபுத்வம் வியவஸ்திதம்.

—————————————————————————————–

இனி பத்தாவது அவதாரம் அ திரவ்யம்.

சம்யோக ரஹிதம் அதிரவ்யம். (Dimensionless-non object ) அதாவது அதிரவ்யங்கள் ஒன்றோடு ஒன்று சேர இயலாதன.

குணங்கள் ஒன்றொடு ஒன்று சேர இயலாது. ஆனால் அவை ஓரிடத்தில் ஆஸ்ரயித்து இருக்கலாம்.
அதாவது ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய குணங்கள் ஒன்றோடு ஒன்று சேராது
ஆனால் அவை சரீரமாகிய ஓரிடத்தில் ஆஸ்ரயித்து இருக்கலாம். குணம் சரீரத்தை ஆஸ்ரயித்து இருக்கலாம்.
குணம் குணத்தை ஆஸ்ரயித்து இருக்கலாகாது.

அவஸ்தாஸ்ரயம் (மாறுதலுக்கு உட்படுவது) திரவ்யம் = உபாதானம்.

அ-திரவியங்களாவன :

ஸத்வம் = உண்மை அறிவாய், சுகமாய் லாகவமாய் அதீந்திரியமாய் சக்தி அதிரிக்தமானது. மோக்ஷ ஹேது .
அதுவும் இரண்டு வகை.
1. சுத்த ஸத்வம் = ரஜஸ் தமஸ் ரஹித விருத்தி (ரஜஸ் தமஸ் இல்லாத ஆஸ்ரயம்).
அவைதான் பரம பதமும் , பகவத் திவ்ய மங்கள விக்கிரகமும்.
2. மிஸ்ர ஸத்வம் = ரஜஸ் தமஸ் சகசாரி . பிரகிருதி, பிராகிருத்தங்கள்.

ரஜஸ் = அதீந்திரியமாய் சக்தி அதிரிக்தமானது. உலக விஷயங்களில் விருப்பம், ஆசை, பேராசை செயல்பாடு இவைகளுக்கு காரணம்.
ஸ்வர்க்க, பித்ரு லோக பிறப்பிக்குமதாய், அல்ப, அஸ்திர, ஆமுஷ்கிக பல, துக்க ஹேது .
மாறாக, பகவத் விஷயத்திலான விருப்பம், ஆசை, பேராசை, செயல் பாடு சத்வ குண பிராசர்யத்தால் வருவது.

தமஸ் = மறதி , மயக்கம், சோம்பல், தூக்கம், கவனக் குறைவு இவைகளுக்கு காரணமாகிறது. அஜ்ஞான ரூப, நரக ஹேது.

இம்மூன்றும் பிரளய தசையில் சமமாய் இருக்க , சிருஷ்டியின் போது வி சமமாய் (ஆகவே தான் ஸ்ருஷ்டி விஷம சிருஷ்டி யாகிறது?).
உபயுக்த மாகின்றன. ஸ்ருஷ்டி ரஜோ குண கார்யம். சம்ஹாரம் தமோகுண கார்யம். ரக்ஷணம் ஸத்வ குண கார்யம் .
பகவானுக்கு முக்குணங்கள் உண்டா என்றால் இல்லை. லீலார்த்தமாக, தன் இச்சையால் அவைகளை அவலம்பித்து கார்யம் செய்வார்.

ஸப்த = காற்றின் உதவியால் காதால் உணரப் படுவது. பஞ்ச பூதத்தால் ஆனது.
இதுதானும் வர்ணாத்மகம். அவரணாத்மகம் என இரண்டு வகை.
உயிர் எழுத்து (13), மெய்யெழுத்து (18), உயிர்மெய்எழுத்து (216) அனைத்தும் வர்ணாத்மகம்.
இவை மனுஷ்ய, தேவ உதட்டசைவுகளால் ஏற்படுவன.
மற்ற ஒலி வடிவங்கள் (பட்சிகளின் சப்தம், வாத்தியங்களின் சப்தம் இவை) அவர்ணாத்மகம் .

விஜாதீயமாய் பரமபதத்தில் உணரப்படிகிற சப்த ரூப ரஸ கந்தம் இங்கு சொல்லப் பட்டவைகளைக் காட்டிலும்
விலக்ஷணமானவை.வேறுபட்டவை.

பிரணவத்தின் உள்ள அகாரம் , சப்தங்களுக்கு உபாதானமாய் சொல்லப்படுவதால்,
சப்தம் அதிரவ்யம் என்பது பொருந்தாதே என்னில் , ”அ ” என்பது விஷ்ணுவைக் குறிக்குமாதலால்,
எப்படி விஷ்ணு ஜகத்துக்கு உபாதான காரணமோ, அதுபோல் சப்த ராசிகளுக்கு அகாரம் உபாதான காரணம் என்று
கொள்வதும் ஒளபசாரிகமாய் ஒழிய வஸ்துதா இல்லை.

ஸ்பர்ச = தொடு உணர்ச்சியால் அறியப் படுவது. வெப்பம், குளிர்த்தி, இரண்டும் அற்ற தன்மை என மூன்று வகையாக உணரப்படும்.
தண்ணீர் குளிர்த்தி. நெருப்பில் இருப்பது வெப்பம். நிலம், காற்று இவைகளில் இரண்டும் அற்ற தன்மையைப் பார்க்கலாம்.
இந்த ஸ்வபாவ குணங்கள் அவையவை நெருப்போடு சம்பந்தப் படும்போது மாறலாம்.
ஆனால் அவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். நெருப்போடு சம்பந்தப் பட்டால்
”பாகஜம்” என்றும், மற்ற நிலை ”பாகஜ அபேதம் ” என்றும் பிரிக்கலாம். உ.ம். அமிர்தம், பஞ்சு நெருப்பு, கல்லு, பசு இவை.

ரூப = நிறம், பளபளப்பு எனப்படுகிற அதிரவ்யம் ரூபம். அத்தை கண்களால் மட்டுமே உணர முடியும் .
மஞ்சளான அக்ஷதையை கண்ணால் பார்த்தும் , கைகளாகிற தொடு உணர்ச்சியாலும் அறியலாம்.
ஆனால் அதன் மஞ்சள் நிறத்தை கண்களால் மட்டுமே கிரஹிக்க முடியும். துவக் இந்திரியத்தால் ஆகாது.
எனவே ரூபம் கண்களுக்கு மட்டுமே விஷயம்.
நிறங்களில், வெண்மை, சிகப்பு, மஞ்சள், கறுப்பு என்று நால்வகை வர்ண பேதம் பார்க்கப் படுகின்றன.
பாஸ்வரம் =ஒளிவிடக் கூடிய (நெருப்பில் உள்ள சிகப்பு)
ஆபாஸ்வரம் = ஒளிவிடாத (ஜெபா குசுமாம் ) என்று நிறங்களை வேறு விதமாவும் பிரிக்கலாம்.

ரஸ = வாயிலுள்ள நுனி நாக்கால் உணரப்படும் சுவைகள் 6 – இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கரிப்பு , காரம்.
அடியார்களுக்கு ஆறு சுவை அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்கிற ஷட் ரஸமாகும்

கந்தம் = மூக்காகிற இந்திரியத்தினால் உணரப்படுவது. பூ, சந்தனம் இவைகளில் உள்ள நறுமணம்,
மல, மூத்திராதிகளில் உள்ள துர்நாற்றம் என்று இரண்டு வகை.
காற்று, ஜலம் இவைகளுக்கு இயற்கையில் மணம் இல்லாவிட்டாலும், ‘
‘கந்தவது பிரிதிவி ” என்ற வகையில் பூமியில் இருந்து உண்டாகும் பூக்களின் மகரந்த சேர்க்கையால்
காற்றுக்கும், ஏலம், கிராம்பு போன்றவைகளின் சேர்க்கையால் ஜலத்துக்கும் மணம் பாக பேதத்தால் சம்பாவிதம்.

ஆகாசம் – சப்தம் – காது
நெருப்பு – ரூபம் – கண் –
காற்று – ஸ்பர்சம் – தொடு உணர்சி
நீர் – சுவை – நாக்கு
நிலம் – மணம் – மூக்கு.

பஞ்சிகரணத்தால் எல்லாவற்றிலும் எல்லா குணங்களும் இருக்குமானால் , பிரதானமான குணங்கள் இவை.
பாகம் படும்போது மற்றைய குணங்கள் வெளிப்படுவது உண்டானாலும் அது நேரம் போகப் போக பழைய நிலைக்கே திரும்பிவிடும்.
இரும்பு கொதிக்கிறது என்றால், காய்ச்சும் போது கடின பதார்த்தம் திரவம் போல் ஆனாலும்,
உஷ்ணம் நீங்கும் போது மீண்டும் கெட்டிப் படும் என்பது இயற்கை.

ஸம்யோகம் – கூட்டறவுக்கான புரிதல் ஸம்யோகம். உ.ம். மேசை மேல் புத்தகம் இருக்கும் போது
புத்தகத்தின் ஒரு பகுதியும் மேசையின் குறிப்பிட்ட பகுதியும் சம்பந்தப் பட்டிருக்கும்.
அப்படியான மேசையின் ”மேல் ” புத்தகத்துக்கான சம்பந்தத்தை ” மேல்” என்கிற புரிதலால் அறிகிறோம். அந்த அறிவு ஸம்யோகம்.

கார்ய ச சயோகம் – இரண்டு ஆடுகள் முட்டிக் கொள்ளும்போது அதன் தலைக்கான சம்பந்தம்.
மரக் கிளையின் மேல் கிளி வந்து உட்காருதலால் ஏற்படுகிற சம்பந்தம். கையில் புத்தகத்தை எடுக்கும் போது உண்டாகும் சம்பந்தம் இவை.

கையோக ச சயோகம் – கையில் புத்தகம் இருக்க, உடலுக்கும் புத்தகத்துக்குமான சம்பந்தம்.
இது கையோகத்தில் அடக்கமாதலால், அதிவாதமாய் மறுக்கப் படுகிறது.
அதே கையில் உள்ள புத்தகத்தை கீழே வைத்து விட்டால் ஏற்படும் எதிர் நிலை விபாகச விபாகம் என்பர் தாரிக்கிகர் .
இதுவும் மறுக்கப் படுகிறது. இத்தை சையோகச அபாவத்தில் அடக்கிவிட முடியுமாதலால்.

ஆகார்யச சையோகம் – இரண்டு விபு தத்வங்களுக்கான சம்பந்தம். பிரஹ்மமும் காலமும் சம்பந்தப் பட்டிருத்தல்.
பிரஹ்மமும் பிரகிருதியும் சேர்ந்து இருத்தல்.

சக்தி.- நெருப்புக்கு சுடுதலாகிற தன்மையை எது செய்கிறதோ அதை சக்தி என்கிறோம்.
அதேபோல் எல்லாப் பொருட்களுக்கும் அதனதன் தன்மையை நிர்வகிக்கும் அதிரவ்யம் ”சத்தி” எனப்படும்.
காந்தமும்-இரும்பும் போலே . மந்த்ரம், மருந்து, இவைகளால் கட்டி இடாதபோது வெளிப்படுமது .

பரா அஸ்ய சக்திஹி விவிதைஸ்ச ஸ்ரூயதே — என்று சொல்லப்பட்ட விஷ்ணு சக்தி அதுவாகும்.
அது இந்திரியங்களுக்கு கோசரம் இல்லை.

தார்க்கிகள் சொல்லும் மேலும் 14 விதமான குணங்கள் தனித்து சொல்லாமல் மேல் சொன்ன 10 அதிரவ்யங்க ளுக்குள்ளேயே
அடக்கிவிடலாம் என்பது ராமானுஜ பக்ஷம்.

புத்தி, இச்சை சுகம் துக்கம் த்வேஷம் யத்தனம் இந்த 6ம் ஜ்ஞானத்தின் வெளிப்பாடு ஆகையால்
தனிப்பட்ட சொல்ல வேண்டியதில்லை ஜீவனுடைய ஜ்ஞாத்துக்குள் அந்தர்கதம் .

தர்ம அதர்மமௌ பாப புண்யௌ ஈஸ்வ்ர ப்ரீதி கோபௌ என தர்ம அதர்மங்களை ஈஸ்வர ஜ்ஞானத்துள் படிக்கலாம்.

சம்ஸ்காரம் எனப்படும் பாவனை, வேகம் , ஸ்திதி ஸ்தாபனம் (எத்தனைப் பிரயத்னப் பட்டாலும்
அதன் முன் நிலைக்கே திரும்புவது, நாய் வால் போலே ) மூன்றும் ஜ்ஞான விபாகமாகவும்,
வஸ்து ஸ்வரூபமாகவும், சையோகத்து க்குள்ளாகவும் சேர்த்து விடலாம்.

விபாகம் (பிரிவு) பிரதத்வம் (தனிமை) இரண்டும் அப் பாவ நிலையாய், சையோகத்துக்குள் அடங்கும்.

சங்கியா (எண்ணிக்கை), பரிமாண (மாறுதல்), திரவத்வ (நீரான தன்மெய்), ஸ்நேஹானாம் (பிசு பிசுப்பு)
இவை வஸ்து ஸ்வபாவமாய், தனிப்பட சொல்ல வேண்டியதில்லை.

குருத்வம் (எடை கூடிய நிலை) சக்தி- அதிரவ்யத்துக்குள் அடக்கி விடலாம். ஆக அதிரவ்யங்கள் 24 (அ ) 38 இல்லை 10 மட்டுமே.

சத்வ, ரஜஸ் , தமோ குணங்கள் பிரகிருதி சம்பந்தப் பட்டது. ஆத்மாவுக்கு இல்லை.
ஆனால் சரீரத்துக்குள்ளான ஆத்மாவுடைய தர்மபூத ஜ்ஞானம் முக்குணங்களால் மறைக்கப் படுவதால்
ஆத்மாவை அவை பாதிப்பதாக சொல்லப் படுகிறது.

சாத்விக ஜ்ஞானம் , சாத்விக காலம் என்கிற வழக்கு உபசார வழக்கே. உண்மையில் சரீரத்தில் சாத்விக தாதுக்கள்
மேலோங்கின காலத்து ஜ்ஞானம், சாத்விக வஸ்து பரிமித காலம் என்று கொண்டு ஒளபசாரிகமாக கொள்ளவேண்டும்.

ஆகாசம் – சப்தம்
நெருப்பு – ரூபம் + சப்தம்
காற்று – ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
நீர் – சுவை + ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
நிலம் – மணம் + சுவை + ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
என கலசி இருக்கும்.

சுத்த சத்வம் திரிபாத் விபூதியிலும் அதனை வளர்த்துக் கொடுக்கும் பகவானி டத்திலுமாய் இருக்கும் .

சையோக சக்தி கீழ்ச் சொன்ன
பிரகிருதி;
காலம்;
தர்மபூத ஜ்ஞானம்;
சுத்த சத்வமாகிற பரம பதம்
ஜீவாத்மா;
பரமாத்மாவாகிற
6 திரவ்யங்களில் இருக்கும்.

ஆத்யாத்கமி சாஸ்திரமான இதில் தத்வ ஹித புருஷார்த்தங்கள் சொல்லப்பட்டதும் இப்புடைகளாலே :

பிரகிருதி, ஜீவ பர பரிச்சேதம் சொல்லு முகேண தத்துவமும்; புத்தி பரிச்சேத முகேண ஹிதமும் (பக்தி, பிரபத்தி முதலான உபாயமும் ) ;
நித்ய விபூதி, ஈஸ்வர பரிச்சேத முகேண புருஷார்த்தமும்
(நித்ய விபூதியைப் பிராபிக்கை பிராப்தி என்றும் ஈஸ்வர கைங்கர்யம் பிராப்தி பலம் என்றும்) விளக்கப்பட்டன.

தத்வம் ஏகம் என்று சூரிகளும் ; அதுவே
ஆத்மா (ஜீவ, பரர்கள்) அநாத்மாவாய் (பிரகிருதி) இரண்டு என்று ரிஷிகளும்
போக்யம், போக்தா பிரேரிதா என்று மூன்றாய் ஸ்ருதியிலும் ;
ஹேயம் (சரீரம்), தஸ்ய நிவர்த்தகம் (கழிய வழி ) உபாதேயம் (கொள்ளத்தக்கது )
தஸ்ய உபாயம் ( அதை அடைய வழி) என நான்காய் இதர ஆசாரியர்களும் ;
பிராப்பியம், பிராப்தா, உபாயம், பலம், விரோதி என் அர்த்த பஞ்சகமாய் அஸ்மத் ஆசாரியர்களும்
அத்தோடு ஜீவா-பர சம்பந்தம் சேர்த்து தத்துவங்கள் ஆறு என்று சொல்பவரும் உண்டு.

எப்படிச் சொன்னாலும், சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் ஏக மேவ என்பதே வேதாந்தத்தின் முடிவு..
அதையே வேத வியாசரும் தன்னுடைய பிரஹ்ம சூத்திரத்தில் பிரஹ்ம ஜகத் காரணத்வத்தை முதல் இரண்டு அத்தியாயத்திலும்,
அத்தை அடைய உபாயம் பக்தியே என்று 3வது அத்யாயத்திலும், பிரஹ்ம சாயுஜ்யமாகிற முக்தியை 4வது அத்தியாயத்திலும்
காட்டியதான அந்த பிரஹ்மம் ஸ்ரீமந் நாராயணனே தத்வம் என்பது விசிஷ்டாத்வைதிகளின் தர்சனமாகும் .

அற நூல் அளித்த அறிவின் வழி யாத்த
மறை நூல் ”யதிபதி போதநல் — நிறை கொள்
விளக்கம்” திருவளர் சீனிவாச மா குருநாம்
ஆள வகுத்த தொழுகு

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த – ஸ்ரீ பிரமேய சாரம் –ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

September 1, 2021

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளி மண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே

பதவுரை

நீள் நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேய சாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச் செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாள மா முனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக் கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக

நீள் நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக.
“என்றும்” என்ற சொல்லை
“நீங்காமல்” என்றும்
“நினைத்து” என்றும்
இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

அதாவது
“என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக.

பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப்
பிரமேயம் என்று பெயர்.
அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.

பிரமாணம் – அளக்கும் கருவி
பிரமேயம் – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம் – சுருக்கம்
மானம், மேயம் – சாரம் என்பர்

அதாவது பிரமாணம் திரும்ந்திரம்.
அதனுடைய பொருள் பிரமேயம்.
அப்பொருளின் சுருக்கம் பிரமேய சாரம் என்பதாம்.
நல்ல மறை என்பது போல நல்ல பிரமேய சாரம்
அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.

பாங்காக:
கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள்.
ஆகவே இந் நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
அதனால் இதற்கு பிரமேய சாரம் என்று பெயர்.

பரிந்தளிக்கும்:
அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும்
ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம்
நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.

அருளாள மாமுனி: என்பதால்
அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும்,
அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.
ஆதலால் “மா முனி” என்றும் அம் முனிவருக்குரிய உயரிய பண்பு.
யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது.
அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.
வணங்கும் பொழுது அத் திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக.
அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர்.

(அம்பதம்) என்ற இடத்தில்
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது.
ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற
தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.

அம்பதத்தை: “அம்” என்றால் அழகு.
பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது.
“ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும்.
மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம்.
இறைவனும் முனியும் ஒன்றானதால்.

புதுப் புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.

மன்: வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள்.
புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட
செழிப்பான இடம் என்றவாறு.
இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்க நெறி முதலியவற்றிற்கு ஏற்புடையதான இடம் என்பது புலனாகிறது.

புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.

பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை
மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்க கூறியவரும்
பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும்
அறிஞர்களுக்குத் தலைவரும்
செருக்கு மில்லாதவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.

———-

நூல் தோற்றுவாய்

அனைத்து வேதம் முதலிய நூல்களிலும் நுண்ணறிவு உடையராய்
மெய்ப்பொருள் பற்றியும்
மெய்ப்பொருளை அடைவதற்கான செந்நெறி பற்றியும்
அடைய வேண்டிய பயன் பற்றியும்
உண்மையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்களில் முதல்வராய் இருப்பவரும் ,
பிறப்பிறப்புகளில் சுழன்று வரும் அறிவுடைய ஆன்மாக்கள் எல்லோரும் வீடு பேறு அடையவேணும் என்னும்
அவாவுடையராயிருப்பவரும்

தம்மை ஆதியில் சீடராய் ஏற்றுக்கொண்ட எம்பெருமானார் திருவடிகளிலேயே நீண்ட நாள் (சுமார் 80 ஆண்டுகள்)
பணிவிடை செய்து (தத்துவம், ஹிதம், புருஷார்த்தம் ) மெய்ப்பொருள், நெறி,பயன் இவற்றின் சிறப்புக்களை எல்லாம்
அவர் அருளிச் செய்யக் கேட்டு அறிந்து அவ்வொழுக்கத்தின் எல்லை நிலத்தில் நிலை நிற்பவரும் ,

அதாவது
தத்துவம்-இறை நிலை,
ஹிதம்-இறைவனை அடைவற்கான தக்க வழி ,
புருஷார்த்தம்- வாழ்வு இவற்றின் உண்மை .
இதனைத் “தல ஸ்பர்ஸ ஞானம்” என்பர்.
தலம் என்றால் பூமி. ஸ்பர்ஸம் என்றால் தொடுதல்.
நீர் நிலைகளில் இறங்குபவன் அதன் அடித்தலத்தில் சென்று மண்ணை எடுத்து வருவான்.
அது போல் அறிவுக் கடலில் முழுகித் திலைக்கும் இவர் அறிவின் எல்லையைக் கண்டவரென்று
இவருடைய அறிவின் கூர்மை சொல்லப்படுகிறது.

இறைவனைப் பற்றி அறிவது அதனுடைய முதல் நிலை.
அடியார்களைப் பற்றி அறிவது அதனுடைய எல்லை நிலை.
அடியார்கள் வரையிலும் அடியவராய் இருத்தல் என்பது கருத்து. வாழ்வாங்கு உணர்ந்தவர் என்பதாம்.

இவ்வாறு அறிய வேண்டியவற்றை முழுமையாக அறிந்தவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
தம்முடைய மிக்க கருணையாலே பிறவிப் பெருங்கடலில் உழலுல் உயிர்கள் வீடு பேறு அடைவதற்காக
வேதம் முதலிய அனைத்து நூல்களில் இருந்தும் ஓரோர் இடத்திலுள்ள கருத்துக்களை
அதாவது
எல்லோருக்கும் அறிவதற்கு முடியாதபடி இருக்கிற அவ்வரும் பொருள்களைச் சுருக்கி “ஞான சாரம்” என்கிற
நூல் மூலமாக இயற்றி முடித்த பிறகு
“பிரமேய சாரம்” என்னும் இந்நூலை இயற்றுகிறார்.

வேதம் என்பது “எழுதா மறை” என்று கூறப்படும்.
மிகப் பழமையான சாஸ்திரம். இறைவனைப் போல அதுவும் அநாதியாக வந்து கொண்டிருப்பது.
அதற்குப் பிரமாணம் என்று பெயர்.

அதனுடைய அனைத்துக் கருதுக்களையும் சுருக்கமாக எடுத்துரைப்பது “திரு மந்திரம்” அதாவது எட்டெழுத்து மந்திரம்.
(ஓம் நமோ நாராயணாய) என்பது.
அதில் சொல்லப்படும் கருத்துக்களின் திரண்ட பொருளைச் சுருக்கி இந்நூலில் கூறப்படுகிறது.
ஆகையினால் இந்நூலுக்கு பிரமேய சாரம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது.

———–

திரு மந்திரத்தின் சுருக்கம் “ஓம்” என்பது.
அதற்குப் பிரணவம் என்று பெயர்.
அதில் சொல்லப்படும் கருத்து திரட்டிக் கூறப்படுகிறது.

அவ் வானவருக்கு மவ்வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-

பதவுரை:

அவ் வானவர்க்கு –“அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு
மவ் வானவரெல்லாம் –‘ம” என்னும் எழுத்துக்குப் பொருளான உயிர்கள் எல்லாம்
அடிமை என்று–அடிமைப் பட்டவர் என்று
உவ் வானவர் –ஆசார்யர்கள்
உரைத்தார் –கூறினார்கள்
இவ்வாறு –அவர்கள் கூறிய இம் முறைகளை
கேட்டு –தெரிந்து கொண்டு
இருப்பார்க்கு –தெரிந்தபடி நிலை நிற்பார்க்கு
ஆள் என்று –அடிமை என்று
கண்டிருப்பர் –தங்களை அறிந்து கொண்டவர்
மீட்சி யில்லா –மீண்டும் பிறவாத
நாடு –திரு நாட்டில் போய்
இருப்பார் என்று –நித்யர், முக்தர் முதலிய அடியார்களுடன் சேர்ந்திருப்பாரென்று
நான் –எம்பெருமானாருடய அடியனான நான்
இருப்பன் –நம்பி இருப்பவன்

அவ் வானவர்க்கு :-
”அ’ காரம் என்ற சொல்லுக்குப் பொருளாய் விளங்குபவன் இறைவன் .
அவனுக்கு வேதத்தில் ‘அ’என்று பெயர் சொல்லி யிருக்கிறது.
இங்கு ‘அ’ என்னும் எழுத்தையே கடவுளாகப் பேசியிருப்பது சொல்லுக்கும் பொருளுக்கும் உண்டான
இணைப்பு பற்றி சொல்லும் பொருளும் பிரித்து நில்லாது இயைந்தே இருப்பதால் அவ்வாறு கூறப்பட்டது.

மகாகவி காளிதாசன் இறைவனும் இறைவியும் இணைந்திருக்கும் நிலையைச் “சொல்லும் பொருளும் போல” என்று
ரகு வம்ச காவியக் கடவுள் வாழ்த்தில் கூறினான்.
உப்பு’ என்னும் குணத்தை வைத்து உப்பு என்னும் பொருளைச் சொல்வது போன்றது இது.
ஆகவே எழுத்துக்களுக்குள் நான் ‘அகாரமாயிருககிறேன் என்று பகவான் கண்ணன் கீதையில் கூறினான்.
இது பற்றியே திருவள்ளுவரும் ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்றார்.

இறைவன் இயங்குதினைக் கண்ணும், நிலத்தினைக் கண்ணும், பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய்
நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தார் போல்
அகாரமும், உயிர்க் கண்ணும் தனி மெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது
சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது.
‘அகர முதல’ என்றால் அகரமாகிய எழுத்துதைக் காரணமாக உடைய மற்றைய எழுத்துக்கள் எல்லாம் என்று பொருள்.
அதுபோல இறைவனாகிய காரணத்தை உடைய உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும்,
எழுத்துக்களில் நான் ‘அ’ கரமகின்றேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியவாற்றானும் பிற நூல்களாலும் உணர்க.

இதனால் உண்மைத் தன்மையுஞ் சிறிது கூறினாராயிற்று. என்று தொல்காப்பிய எழுத்ததிகார ‘மெய்யின் இயக்கம்’ என்ற
சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் கூறியவாற்றால் அகரத்தைப் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.

‘பூ மகள் பொருளும்’ எனக் கம்பர் பால காண்டக் கடி மணப் படலத்துள் கூறினான்.
இதனால் ஒன்றர்கொன்று இயைந்த பொருள்களில் ஒன்றைச் சொன்னால் அதனோடு இயைந்த மற்றொன்று தன்னடையே கூறினதாக ஆகும்.
இதனால் அ என்ற எழுத்தைச் சொன்ன போதே அதன் பொருளான கடவுள் சொல்லாமலேயே உணரப்படும்.
ஆக அவ் வானவர்க்கு என்றால் இறைவனுக்கு என்று பொருள்.

மவ் வானவரெல்லாம்:-
மவ் வானவர் என்று ‘ம’ காரத்தின் பொருளான உயிர்களைச் சொல்லுகிறது.
‘ம’காரம் உயிரைச் கொள்ளும் சொல்லாகும் என்பது சாஸ்திரம்.
இது ஒருமையாக இருந்தாலும் ‘இது ஒரு நெல்’ என்பது போல. சாதி ஒருமையாய் உயிர் சமுதாயமான எல்லாவித உயிரையும் குறிக்கும்.
எல்லாவிதமான உயிர் என்றது மூன்று வகைப்பட்டிருக்கும் உயிர்களை.
வினை வயத்தால் மாறி மாறிப் பிறந்து வரும் உயிர்களும்
இறைவன் அருளாலேயே தான் செய்யும் தவம் முதலிய முயற்சியாலேயோ,வினையிலிருந்து விடுபட்ட உயிர்களும்,
என்றைக்கும் வினை வயப்படாமல் இறைவனுக்கு ஒப்பாக இறைவனோடு கூடவே வீட்டுலுகத்தில் உறையும் உயிர்களும்
ஆகிய மூவகைப் பட்ட உயிர்களையும் குறிக்கும்.
இதனை, பக்தர், முக்தர் நித்யர் என்று சாஸ்திரம் கூறும்.
ஆக இம் மூவகையான ஆன்மாக்களையும் ஒருமைப்படுத்தி ‘மவ் வானவர் எல்லாம்’ என்று கூறப்பட்டது.

உவ் வானவர்:-
‘உ’ காரத்திற்குப் பொருளாயிருப்பவர் என்று பெயர். உகாரம் ஆச்சர்யனை உணர்த்தும் சொல்லாகும்.
எவ்வாறு என்றால் உகாரத்திற்கு நேர் பொருளாக இருப்பவர் பெரிய பிராட்டியாரான லட்சுமி தேவியாவாள். இது சாஸ்திர முடிவு.
பிராட்டி இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மை யுடையவள்.

அது போல
ஆசார்யனும் இறைவனுக்கும் உயிர்களுக்கும் நடுவிலிருந்து உயிர்களை இறைவனிடம் சேர்த்து வைக்கும் தன்மை யுடையவர்.
லட்சுமி தேவிக்கும் ஆசார்யனுக்கும் தொழில் ஒப்புமை யிருப்பதால் உகாரம் ஆசார்யனைச் சொல்லுகிறது.
மேலும் ஆசார்யன் பிரட்டி திருவடிகளில் பக்தி செய்து அவளது அன்பைப் பெற்று அவ் வன்பு காரணமாகத்
தன்னை நாடி வரும் சீடர்களைப் பிராட்டியிடம் ஈடுபடுத்தி அவர்களுக்கு அருள் கிடைக்கச் செய்பவர்.
இவ்வாறு ஆசார்யனைப் பற்றி வரும் உயிர்களுக்கு இறைவன் கருணை காட்டும்படி சிபாரிசு செய்வதால்
இருவருடைய செயல்களும் ஒற்றுமைப்படுகிறது.
ஆகையால் இறைவனிடம் சிபாரிசு செய்யும் செயல் ஒற்றுமையாலும்
அவளிடம் அன்பு பூண்டொழுகும் உறவினாலும் ஆசார்யனை உகாரத்திற்குப் பொருளாகச் சொல்லுகிறது.

இதைப் பற்றி முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக இங்கு கூறப்படுகிறது.
எம்பெருமானார் ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது அருகிலேயே இருக்கும் சீடரான
முதலியாண்டானுக்கு உகாரத்தின் பொருளைக் கூறியுள்ளார்.
அதனை அவருடைய குமாரரான கந்தாடை ஆண்டானுக்கு கூற அவரும் பட்டருக்குச் சொல்லி யுள்ளார்.
அக் கருத்துக்களை எல்லாம் தொகுத்து பிரணவ ஸங்க்ரகம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
அதில், ஆசார்யனை உகாரத்தின் பொருளாகச் சொல்லியிருப்பதை இங்கு மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளது.

அருளாளப்பெருமாள் எம்பெருமானாரும் எம்பெருமானார் (உடையவர்) திருவடிகளில் நீண்ட காலம் சேவை செய்து
அவருடைய அருளுக்கு இலக்கானவர் .
ஆதலால் இவருக்கும் அப்பொருளை உணர்த்தி இருக்கலாம் அன்றோ!.
ஆகவே இவரும் எம்பெருமானார் சொல்லக் கேட்டு உகாரத்தின் பொருள் ஆசார்யன் என்று அறிந்து
அப் பொருளை இந்நூலில் கூறுவாராயிற்று .
ஆகவே உகாரம் அசார்யனைக் குறிக்கும் என்றவாறு.

அடிமை என்றுரைத்தார்:-
உயிர்கள் ஆகாரத்திற்கு அடிமைப் பட்டவை என்று சொன்னார்கள்.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் உண்டான உறவு முறையைக் காட்டிக் கொடுப்பவரான- நடுவரான ஆசார்யராவார்.
இறைவன் உயிர்களுக்குத் தலைவனாகவும் உயிர்கள் இறைவனுக்கு அடிமையாகவும்
இருவருக்கும் ஆண்டான் அடிமை என்னும் உறவென்றும் உபதேசத்தாலே சீடனுக்கு ஆசார்யன் உனர்த்தின போது
சீடனுக்கு அவ்வுறவு தெரிவதாகும்.
ஆகையால் ‘அ’ காரத்தின் பொருளான இறைவனுக்கு ‘ம’ காரத்தின் பொருளான உயிர்கள் அடிமையானவர் என்று
உகாரத்தின் பொருளான ஆச்சார்யர்கள் சொல்லி வைத்தார்கள்.
இக் கருத்து ‘அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லாம் அடிமை என்று உவ்வானவர் உரைத்தார் ‘ என்று கூறப்பட்டது.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் உண்டான உறவு முறையை உணர்த்துவதற்கு
ஒரு சிறு கதை திருவாய்மொழி ஈட்டுரையில் சொல்லப்படுவதுண்டு.

வாணியன் ஒருவன் கடல் தாண்டி வாணிபத்திற்கு செல்லும் பொழுது அவன் மனைவி கருவுற்றிருந்தாள்.
மனைவியிடம் தான் மீண்டு வரும் வரை பிறக்கும் குழந்தையை வாணிபத் துறையிலேயே வளர்க்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அவ்வாறே ஆண் குழந்தையும் பிறந்து தக்க பருவத்தை அடைந்து தந்தையைப் போல கடல் தாண்டி வாணிபம் செய்யச் சென்றான்.
சென்ற இடம் தந்தை சென்ற இடமாகவே இருந்தது. ஒருநாள் சரக்குகள் வைப்பது காரணமாக தந்தைக்கும் மகனுக்கும்
பெரும் கலாய் (சண்டை) விளைந்தது. கூட்டமும் திரண்டு விட்டது.
அக்கூட்டத்திலிருந்த ஒருவர் அவ்விருவரையும் நன்கு அறிந்தவராயிருந்தார்.
அவ்விருவரையும் பார்த்து “நீர் தந்தை, இவன் மகன்” தந்தையும் மகனுமான நீங்கள் இப்படி சண்டை செய்து கொள்கிறீர்களே!
என்று இருவருக்குமுள்ள உறவு முறையை உணர்த்தி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார்.
இவ்வாறு நடுவர் ஒருவரால் ஒன்று சேர்ந்த தகப்பனும் மகனும் பெரு மகிழ்ச்சி எய்தினர்.
புதல்வனை அடைந்ததால் தந்தைக்கு மகிழ்வும், தந்தையை அடைந்ததால் மகனுக்கு மகிழ்வும் சொல்லும்
அளவையில்லாமல் அளவு கடந்ததாயிற்று.

இவ்வாறே நடுவர் நிலையில் நின்று ஆசார்யன் உயிர்களுக்கும் இறைவனுக்கும் உரிய ஆண்டான் அடிமை என்னும் உறவை உணர்த்துகிறான்.
தாயாய்த், தந்தையாய், மக்களாய், மற்றுமாய் எல்லா உறவாயும் இருப்பவன் என்பதையும் உணர்த்தி,
அதே சமயம் இறைவனிடம் ‘உன்னை விட்டுப் பிரிக்க முடியாத உறவாய் இருக்கும் இவ் வுயிர்களை,
குற்றங்களைப் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் இறைவனுக்கும் உணர்த்தி
இறைவனுடைய அருள் உயிர்களுக்குக் கிடைக்கச் செய்தும் உயிர்களை அவிறை யருளால் உயாவும் செய்கிறான்.
இது ஆசார்யனது செயல் என்று இங்கு சிறப்பாகக் குறிக்கப்பட்டது.

ஆள் என்று கண்டிருப்பார்:-
மேற்கூறியவாறு குரு உபதேசத்தால் இறைவனுக்கு அடியார்களாகி அச் சீரிய ஒழுக்கத்தில் நிலை நிற்பவருக்குச் சிலர்
அடியார்களாகி அடியார்க்கு அடியாராகும் தன்மையைப் பெறுகிறார்கள்.
இறைவனுக்கு அடிமையாயிருப்பது முதல் நிலை என்றும்,
அவ்வடியார்க்கு அடியராயிருக்கும் தன்மை கடைசி நிலை என்றும் சொல்லப்படுவதால்
‘கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் ‘ என்று அடியார்க்கு அடியாராம் தன்மை இங்குச் சொல்லப்பட்டது.

திருமந்திரத்தில் உயிரக்ளுக்குரிய மூன்று இலக்கணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை,
‘இவ்வுயிர்கள் இறைவனைத் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை.
உயிர்களுக்கு இறைவனைத் தவிர வேறு வழியில்லை.
உயிர்களுக்கு இறைவனைத் தவிர இன்பமில்லை’ என்பன.

இம்மூன்றையும் அடியார் வரையிலும் பெருக்கிப் பார்க்கையில்
அடியார் தவிர வேறு யார்க்கும் அடிமை இல்லை’என்றும்,
அடியார் தவிர வேறு வழி இல்லை என்றும்,
அடியார் தவிர வேறு இன்பம் இல்லையென்றும் என்றும் பெருக்கிக் கொண்டு
அடியார்கள் வரை பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அம் மூன்றை இங்குக் கூறிக் கொள்ள வேணும்.
இதனால் இறைவனுக்கு அடியராய் இருப்பார்க்கு அடியராய் இருக்கும் எல்லை நிலை கூறப்பட்டது.
ஆக, இங்கு கூறியவற்றால் ‘தங்களை அடியார்க்கு அடியராய் அறிந்து அந்நிலையில் இருப்பவர்கள் ‘ என்று பொருள்.

மீட்சியில்லா நாட்டிருப்பார் என்று இருப்பன் நான்:-
மேற் கூறிய ‘அடியார்க்கு அடியராய்’ இருப்பார் மீண்டு பிறப்பில்லாத திருநாட்டிலே போய்
அங்கு நித்ய முக்தர்களான அடியார் குழாங்களுடன் கூடி இருப்பார்கள். என்று நம்பி இருப்பவன் நான் என்பதாம்.
‘நான்’ என்று கூறுவதால் தம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்த்துகிறார் ஆசிரியர்.

மேலும் எம்பெருமானார் திருவடிகளிலே பணிந்து அனைத்து சாஸ்திரங்களின் உட்பொருட்களை எல்லாம் தெரிந்து கொண்டு
அதனால் மதிப்பு மிக்கவராய் மிக்க நம்பிக்கை உடையவராயிருப்பவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானார்.
வேத தாத்பர்யங்களில் தம்முடைய முடிவே இறுதி முடிவு என்பதை
உலகம் ஏற்கும்படியான மதிப்பு மிக்கவராதலால் அன்றோ’ என்றிருப்பவன் நான் என்று துணிந்து கூறுவாராயிற்று.

—————

கீழ்ப் பாட்டில் சொன்ன ‘மவ் வானவர்’ என்றதில் மூன்று வகையான உயிர்கள் சொல்லப்பட்டதைப் பார்த்தோம்.
அவர்களுள் வினை வயத்தால் ஏதோ ஒரு உடலில் கட்டுப்பட்டிருக்கும் உயிர்களுக்கு பிறப்பிறப்புக்கள்
மாறி மாறி ஆற்று வெள்ளம் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?
இப்பிறப்பாகிற துன்பம் தீர்வதற்கு வழி என்ன? என்னும் வினாக்களுக்கு இப் பாடல் விடையிறுக்கிறது.

குலம் ஓன்று உயிர் பல தம் குற்றத்தால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள்
பேணாமை காணும் பிழை –2-

பதவுரை:-

குலம் – தொண்டர் குலம்
ஒன்று – ஒன்றே உளது
உயிர் – தொண்டுத் தன்மையைக் கொண்ட உயிர்கள்
பல – எண்ணில் அடங்காதன
தம் குற்றத்தால் – அவ்வுயிர்கள் செய்யும் நல்வினை தீவினைகளால்
இட்ட – இறைவனால் இட்டு வைக்கப்பட்ட
கலம் – உடலாகிற பாண்டம்
ஒன்று – ஒரே மூலப் பொருளால் ஆன ஒன்றேயாகும்
காரியமும் – உயிர்களின் செயல்களும்
வேறாம் – வினை வேறுபாட்டால் வெவ்வேறு வகையாக இருக்கும்
பலம் ஒன்று – ஒரு பயனையும்
காணாமை – கருதாமல்
காணும் – உயிர்களைக் கடாக்ஷிக்கும்
கருத்தார் – ஆசார்யனுடய
திருத் தாள்கள் – திருவடிகளை
பேணாமை காணும் – பற்றாமை அன்றோ
பிழை – பிறப்புத் தொடர்வதற்கான குற்றம்

குலம் ஒன்று:
எல்லா உயிர்களுக்கும் ஒன்றே குலம். அது இறைவனுக்கு அடிமையாய் இருத்தல் ஆகும்.
அதாவது
தன் விருப்பத்திற்குச் செயல்பட இயலாமல் இறைவனுக்கு வயப்பட்டே இயங்குதல்.
இது உயிர்களின் இயல்பு என்றைக்கும் மாறாதது. நிலையாய் இருப்பது.
இதைத் தொண்டர் குலம் என்பர் ஞானியர்

“தொண்டக் குலத்துள்ளீர்”(திருப் பல்லாண்டு).

உயிர் பல:-
ஆன்மாக்கள் அளவற்றன.
அவை இறைவனுக்கு வயப்பட்டனவாய் பலவாக இருக்கின்றன.

தம் குற்றத்தாலிட்ட கலம் ஒன்று:-
அவ்வுயிர்கள் தாங்கள் பண்ணின நல் வினைகள் தீ வினகளாகிற குற்றம் காரணமாக
அவற்றை இறைவன் இட்டு வைத்த பாண்டங்களே உடல்களாகும்
அவ் வுடல்கள் ஒரே வகையாய் ஆனது.
அதாவது
ப்ரக்ருதி என்னும் ஒரே பொருளால் உண்டானது.
ஆகையினால் அதுவும் ஒன்றே யாகும்.

மண்ணால் ஆன பொருள் எதுவானாலும் மண் தான்.
பொன்னால் ஆனது எதுவானாலும் பொன் தான்.
அது போல ப்ரக்ருதியால் ஆன உடம்புகள் எதுவானாலும் ப்ரக்ருதி தான்.
‘தம் குற்றத்தால் இட்ட கலம் ஒன்று’ என்பதை இவ்வாறு விரித்து உணர வேண்டும்.

இறைவன் இவ் வுயிர்களை உடலில் இணைப்பது அவ் வவ்வுயிர்களின் வினைகளைத் தம் அறிவில் கொண்டு
அவற்றிற்குத் தக்கபடி பிறப்பித்ததாகும்.

கலம் ஒன்று என்று கூறியது
எல்லா உயிர்களின் உடல்களும் ப்ரக்ருதி என்று சொல்லப்படும் ஒரே பொருளால் ஆனது பற்றி அது.

“ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம் நீர் பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய
பந்தமாந்தேவர் பதினாலு அயன் படைத்த அந்தமில் சீர் தாவரம் நாலைந்து”–என்ற பாடலில்
உயிர்கள் எடுக்கும் உடல் வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ் வேறுபாடு ஒவ்வொன்றின் உட் பிரிவுகளால் ஆயிரம் ஆயிரமாகக் கணக்கில்லாதபடி பரந்திருக்கும்
என்பதையும் காண வேண்டும்
எத்தனை அளவற்றிருந்தாலும் எல்லாம் ஒரே பிரக்ருதியின் வடிவமே யாகும்
அதனால் உயிர்கள் கொண்டுள்ள உடலாகிற பாண்டம் ஒன்றே தான் என்று
‘கலம் ஒன்று’ என்பதால் சொல்லப்பட்டது.

‘பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்தியினாய்’ என்ற திருவாய்மொழியில்
அந்தந்த உயிர்கள் செய்த வினைப் பயனை எத்தனை படைப்பு எத்தனை அழிவு நடந்தாலும்
தவறிப் போகாமல் அந்தந்த உயிர்களே துய்க்கும்படி படைக்கிறதாக பேசப்படுகிறது.
இது இங்கு ஒப்பு நோக்கற்குரியது.

காரியமும் வேறாம்:-
உயிர்கள் வினைப்பயனால் எடுக்கும் உடல்களினால்
செய்யும் செயல்களும் வேறுவேறாக இருக்கும்

அது வேறாகையாவது
நல் வினையின் பயனாக சுவர்க்கத்தில் இன்பம் துய்த்தலும்
தீ வினையின் பயனாக நரகத்தில் துன்பம் துய்த்தலும்
இரண்டும் கலந்த நிலையில் துன்ப இன்பங்களைக் கலந்து துய்ப்பதுமாயிருக்கு
‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தலரிது’
என்னும் குறளின் உரையில்
‘ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிரிதோருயிரின் கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின்
‘வகுத்தான்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வெறும் முயற்சிகளால் பொருட்களைப் படைத்தல் அல்லது நுகர்தலாகாது.
அதற்கு ஊழ் வேண்டும் என்பதாம். என்று கூறியது காண்க.

காரியமும்:-
என்ற உம்மையால் ஒரு குறிப்பு உணர்த்தப்படுகிறது.
உயிர் பல என்றும் குலம் ஒன்று என்றும் சொன்னது போல,
வினைப் பயனால் எடுத்த உடல் (பிரக்ருதியாகிற) ஒன்றாயிருக்க உயிர்களின் செயல்களும்
அவற்றால் நுகரப்படும் பயன்களும் பலவகை யாயிருக்கும் என்று உணர வேண்டும்.

உயிர்களுக்கு இயல்பான தன்மை இறைவனுக்கு அடிமையே யாகும்.
இத்தகைய உயிர்களுக்கு நல் வினை தீ வினையாகிற வினைத் தொடர்பும்
அது காரணமாக பல்வகைப் பிறப்புக்களும்,
அப் பிறப்புக்களில் நுகரும் இன்ப துன்பங்களும்
இவ்வாறு ஆற்று ஒழுக்குப் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது எதனால் என்னும் எண்ணம் உண்டானால்
அதற்குத் தக்க விளக்கம் தரப்படுகிறது மேல் தொடரால்.

பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார் திருத்தாள்கள் பேணாமை காணும் பிழை:
இதில் ‘கருத்தார் திருத்தாள்கள்’ பேணாமை காணும் பிழை என்று
அதாவது
ஆசார்யனுடைய திருவடிகளை அணுகாததே குறையாகும். என்று பதில் கூறப்படுகிறது.
ஆசார்யனுடய சிறப்பு இவ்வாறு கூறப்படுகிறது.
‘பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார்’ என்று.

அதாவது
ஓர் உயிரை குரு, தான் ஏற்கும் பொழுது தனக்குப் புகழையோ ஒரு பயனையோ பணிவிடை முதலிய சிறப்புகளில்
ஏதேனும் ஒன்றிலும் மனம் வைக்காமல் இவ்வுயிரினுடைய சேமமே சேமம். (வீடு பேறு அடைதல்)
தனக்குப் பயன் என்று கருதி தன்னுடைய அருள் நோக்கத்தைச் செய்யும் நன்மனம் கொண்ட
ஆசார்யனுடய திருவடிகளைப் பற்றாமையே மாறி மாறிப் பிறப்புக்கள் தொடர்ந்து வருவதற்கு காரணமான குற்றமாம்.

இதனால் குரு கடாக்ஷம் உயிர்க்கு சேமம் தரும்.
அதற்கு சற்குருவை நாடி அவன் திருவடிகளைப் பற்ற வேண்டும்.
அதனால் வினைப் பாசங்கள் அகன்று சேமத்தையும் நல்வீடையும் அடைவான் என்று பொருள்.
இப் பாடலால் ஆசார்யனுடய சிறப்புக் கூறப்பட்டது.

“திருத் தாள்கள் பேணுதலாவது விரும்புகை. பேணாமை -விரும்பாமை. பிழை- குற்றம்.
ஆசார்ய வைபவத்தை ஸ்ரீ வசன பூஷணத்தில் காணலாம்.
“பகவல்லாபம் ஆசார்யனாலே. ஆசார்ய லாபம் பகவானாலே ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால்
ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம்.
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் அவை (ஞான பக்தி) உண்டானாலும் ப்ரயோஜனமில்லை.
தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிப் பூணலாம்.
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை (பழிப்புக்கு இடமாகும்) விளைக்கும்.
ஸ்வாபிமாநத்தாலே ஈஸ்வராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானமொழிய கதியில்லை
என்று பிள்ளை (நம்பிள்ளை) பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.

ஸ்வஸ்வாதந்தர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று.
பகவத் ஸ்வாதந்தர்ய பயத்தாலே ப்ரபக்தி நழுவிற்று.
ஆசார்யனையும் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாகையாலே காலங்கொண்டு மோதிரமிடுமோபாதி.
ஆசார்யபிமானமே உத்தாரகம். (ஸ்ரீ வசனபூஷனம் சூத்திரம் எண் -434).

ஒருவன் வீடு பேறாகிற சேமத்தைப் பெறுவதற்கு சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட பக்தியாலேயோ,
கருணை வடிவமான இறைவன் திருவடிகளில் செய்யும் அடைக்கலம் புகுதலாலேயோ முடியாது என்பது
பல காரணங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் ஓர் உயிர் பிறவி நோயிலிருந்து நீங்கி சேம நல் வீடு எனப்படும் இறை இன்பத்தைப் பெறுவதற்கு ஒரே வழி
நல்லறிவும் ஆன்ற ஒழுக்கமும் நிறைந்த நல ஆசான் ஒருவன் ‘இவன் நம்முடையவன்’ என்று பரிந்து நோக்குதலாகும்.
இதனால் ஆசார்யனுடய பார்வைக்கு இலக்காவான் சேமம் பெறுவான்.
அது இல்லை எனில் எவ்வுயிரும் சேமம் பெறாது என்ற கருத்து இப் பாடலால் உணரலாகும்.

———–

உயிரின் அடிமைத் தன்மைக்கு ஏற்றவாறு உயிர்கள் இறைத் தொண்டில் ஈடுபட வேண்டுமே
யல்லாமல் வேறு பயன்களில் ஈடுபடலாகாது.
இவ்வாறு இருக்க இதர பயன்களில் ஈடுபாடு இருந்தால் அடிமை என்னும் குலத்தால் என்ன உபயோகமாம்?
எவ்விதப் பயனும் இல்லை என்பதாம்.

திருமால் உலகளந்த காலத்தில் தன்னை ஒழிந்த அனைத்து
உயிர்களையும் தன்னடிக்கீழ் அளந்து கொண்டானல்லவா?
உயிர்கள் அப்பொழுதே அவன் அடிக் கீழ் பட்டதால் அவனுக்கு அடிமை ஆயிற்றே.
அதனால் உயிர்களுக்கு ஏதாவது பயன் ஏற்பட்டதுண்டோ? இல்லை என்றவாறு.

உலகளந்த அந்நாளில் ‘அவனடியில் நாம் இருந்தோம்’ என்னும் உணர்வு இல்லாததால் உயிர்கட்கு பிறவி தொடர்வதாயிற்று.
ஆகவே இறைவனுக்கு அடிமை என்ற உணர்வும் அவ் வுணர்வுக்கு ஏற்ப இறைத் தொண்டில் ஈடுபாடும்
உண்டானாலன்றோ உபயோகமாகும்
மேலும் இவ் வுணர்வு இல்லாத உயிர்கள் தொடர்ந்து பிறவியில் நீடித்துக் கொண்டே வரும்
என்னும் கருத்து இதில் கூறப்படுகிறது.

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் -தலம் கொண்ட
தாளிணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே யவன் –3-

பதவுரை:-

பலம் கொண்டு – இறைவனிடத்தில் செல்வம் முதலிய வேறு வேறு பயன்களைப் பெற்றுக் கொண்டு
மீளாத – ஆன்மீக அறிவால் திருந்தாத
பாவம் – தீ வினை
உளதாகில் – இருக்குமானால்
குலம் கொண்டு – அடிமை என்னும் உறவு கொண்டு
காரியம் என் கூறீர் – என்ன பயன் சொல்லுவீராக!
தலம் கொண்ட – உலகமெல்லாம் அளந்து கொண்ட
தாளிணையான் – திருவடிகளை உடையவனான
அவன் – அவ்வுலகளந்தான்
அன்றே – அளந்து கொண்ட அக் காலத்திலேயே
யாவரையும் – எல்லா உயிர்களையும்
ஆளுடையவன் – தனக்கு அடிமையாகக் கொண்டான்
அன்றே – அல்லவா?

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்:-
செல்வம் முதலிய கவர்ச்சி மிக்க பொருள்களில் ஏதேனும் ஒன்றைத் தனக்கு விருப்பமாக அடைந்து,
ஞானிகள் அதன் குற்றங்களை எடுத்துக் கூறி அதை வேண்டாம் என்றாலும்
அப் பொருள் பற்றில் நின்றும் திருந்தி வராமல் அதிலேயே பற்றி நிற்கும் தீவினை என்று பொருள்.

அல்லது
இருக்குமானால் பாபம் என்பதற்கு நினைவு என்னும் பொருள் கொண்டு
வேறு பயன்களை ஆசைப்படுவதிலிருந்து
மீள முடியாத நினவு இருக்குமானால் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆகவே பாபம் என்பதற்கு
தீ வினை என்றும்
நினவு என்றும் இரு பொருளில் கருத்துக் கொள்ளப்படுகிறது.

ஆன்மீகம் பற்றி ஆசார்யார்களிடம் உபதேசங்கள் கேட்டாலும்
கீதை முதலிய தத்துவ நூல்களைக் கற்றாலும் ,
அவற்றில் தவிர்க்கப்பட வேண்டும் என்று சொன்னவற்றைத் தவிர்க்காமல்
மீண்டும் மீண்டும் அவற்றையே செய்து வரும் கொடிய பாபம் உடைய மனிதகளுக்கு.

குலம் கொண்டு காரியம் என்? கூறீர்?;-
பகவானைத் தவிர வேறு வேறு பயன்களில் ஆசை இருந்தால்
பகவான் இவ்வான்மாவை பிறவித் துன்பத்திலிருந்து மீட்க மாட்டான்.
பிற தொடர்புகளை அறவே நீக்க மாட்டன்.
தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளவும் மாட்டான்.
அதனால் அடிமையாகிற அவ் வுறவினால் என்ன பயன் உண்டு? சொல்வீர்களாக என்று
உலகோர்களைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

ஒரு ஆன்மாவுக்கு ‘இறைவனுக்கு நாம் அடிமை என்னும் மெய்யறிவு உண்டானால் அதுவே போதாதா?
இவ்வறிவு உடையவனை இறைவன், ‘ இவன் நம்முடையவன் ‘ என்று தழுவிக் கொள்ளவும்
இவன் காரியங்களிச் செய்வதற்கு போதுமானதாக ஆகாதா? என்னும்
வினாக்களுக்கு மேற் தொடரால் பதில் கூறப்படுகிறது.

தலம் கொண்ட தாளினையான்: என்று
இத் தொடரில் ஓங்கி உலகளந்த வரலாறு குறிக்கப்படுகிறது.
மகாபலி சக்கரவர்த்தி பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்ற மூவுலகங்களையும் ஆட்சி செய்ய அவாவுற்று வேள்வி இயற்றினான்.
இம்மூவுலகமும் இந்திரன் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதால் இந்திரன் திருமாலிடம் அடைக்கலம் புகுந்தான்.
தன்னிடம் அடைக்கலம் புகுந்த இந்திரனுக்காக மாவலி வேள்வி செய்யும் வேள்விச் சாலையில் குறளுருவாய்ச் சென்று
மாவலியிடம்” மூவடி மண் தா” என்று இரந்தான். மாவலியும் கேட்டபடி மூவடி மண்ணைத் தானமாக வழங்கினான்.

மூவடி மண்ணையும் அளந்து கொள்வதற்காக திருமால் திடீரென்று வளர்ந்தான்.
அவனது ஒரு பாதம் பூமி முழவதையும் பரப்பி நின்றது.
இரண்டே அடியால் பதினான்கு உலகங்களையும் அளந்தான்.
மூன்றாம் அடிக்கு இடமில்லாததால் மாவலி தலையில் கால் வைத்து அழுத்தி அவனைப் பாதாளத்தில் தள்ளினான்.
இந்திரனுக்கு அவனாட்ச்சிக்குரிய மூன்று உலகங்களையும் அவன் அழும்படி கொடுத்தான் என்பது வரலாறு.

தலங்கொண்ட தாளினையான் என்பதற்கு
‘மண்ணும் விண்ணும் அளந்து கொண்ட திருவடிகளை யுடையவன்’ என்று பொருள்.

அன்றே:-
அவ்வாறு அளந்து கொண்ட அந்நாளில் தனை ஒழிந்த யாவரையும் ஆளுடையான் அன்றே அவன்.
தன்னை தவிர அனைத்து உயிர்களையும் தனக்கு அடிமையாகக் கொண்டவன் அன்றோ அவன் என்று பொருள்.

இதனால் உலகளந்த காலத்தில் எல்லோர்களுடைய தலைகளிலும் தன் திருவடிகளை வைத்து அப்பொழுதே
எல்லா உயிர்களையும் தனக்கு அடிமையாக்கிக் கொண்டு அதனால் மகிழ்ந்து நின்றவன்
அவன் இதை உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து என்றார் திருப்பாணாழ்வார்.
தனக்கு அடிமைகளான ஆன்மாக்கள் அனைவரையும் தன் பாதத்தால் தீண்டி மகிழ்ந்தவன்.
மேலும் உறங்குகின்ற குழந்தையை தழுவி மகிழும் தாயைப் போல களித்தவன்.

இப்படி உயிர்களிடத்தில் அன்பு வைத்தவன் “ஏன் இவ்வுயிர்களைப் பிறவிக்கடல் துன்பங்களிலிருந்து எடாமலிருக்கின்றான்
என்று எண்ணிப் பார்த்தால் அதற்குக் காரணம் ‘இது தான்’ என்று புலனாகிறது.
அதாவது
இவ் வுயிர்கள் அவனையும் அவன் செய்த உதவிகளையும் மறந்து இவ்வுலகையும் இவ்வுலகில் வாழ்வதையும்
அவ் வாழ்விற்கு வேண்டிய பொருள்களை ஆசைப்பட்டு அவனைக் காட்டிலும் அப்பொருள்களில் பற்றி நிற்பதையும் பார்த்து
அப் பற்றுதல்கள் அறவே நீங்கும் அன் நன் நாளை எதிர்பார்திருத்தாலன்றோ

இன்னமும் காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆகையால் இவ் வுயிர்கள் இறைவனுக்கு அடிமையாய் இருந்தாலும் ‘
தன்னைத் தவிர வேறு பயன்களில் ஆசை அறாத பொழுது இவ் வுயிர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து
இறைவன் எடுக்க மாட்டன் என்று உணர்த்தப் பட்டதாயிற்று.
இதரப் பொருள்களில் ஆசையை நிரம்ப வைத்துக் கொண்டு
‘அடியேன்’ என்று தன்னைச் சொல்லிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்பதாம்.

இங்குக் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் திரட்டி திருவள்ளுவர்
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவனடி சேராதார்’ என்றும் ,
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு ‘ என்று
இவ்விரண்டு திருக் குறள்களாலும் உரைத்தார்.

நம்மாழ்வார் ‘அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர்’ என்று கூறினார்.

ஆக, கீழ்ச் சொன்ன
‘அவ் வானவர்’
‘குலம் ஒன்று ”
பலம் கொண்டு’ என்னும் இம் மூன்று பாடல்களாலும்
‘ஓம்’ என்னும் ப்ரணவத்தின் கருத்துச் சொல்லப்பட்டது.

இனி மேல் நாலு பாடல்களால் ‘நம’ என்னும் சொல்லின் கருத்தை உரைக்கிறார்.
‘நம’ என்னும் சொல்லுக்குப் பொருள் கூறப்படுகிறது.
அதற்கு இறைவனைத் தவிர வேறு (வழி) கதியில்லை என்று பொருள்.
இக் கருத்தை விளக்குவதற்குத் துணையாகும் கருத்துக்கள் இங்கு எடுத்துக் கூறப்படுகிறது.

சேர்தல் –
இடைவிடாது நினைத்தல்-உலகியலை நினையாது இறைவனடியையே நினைப்போர்க்கு பிறவியறுதலும்
அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அது அறாமையுமாகிற இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன என்றும்
பரிமேலழகர் உரையில் உணரலாகும்.
‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’ என்னும் குறளில் காணலாம்.
(சேர்தல்-இடையறாது நினைத்தல்

————-

இறைவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவன். அவனை யாரும் ஆணையிட முடியாது.
அவனுக்கும்’ ச நிரங்குச ஸூதந்திரன்’ என்று பெயர். அவனை வளைக்கவோ, தடுக்கவோ இயலாது.
இவ்வாறு இருக்கையால் சாஸ்திரங்கள் அவனுடைய அருளைப் பெறுவதற்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்
முதலிய பல வழிகளைச் சொல்லி உள்ளன.
சாஸ்திரங்களின் நுட்பமறியாதார் மேற்சொன்ன கர்ம யோகம் முதலான யோகங்களைச் செய்து
அவ் வழியால் இறைவனை அடையலாம் என்று மிக்க முயற்ச்சிகளை மேற்கொள்ளுகிறார்கள்.
அவர்களை நோக்கி ஓர் உண்மை இங்கு உணர்த்தப்படுகிறது.
இறைவன் தன் திருவடிகளை இவ்வுயிர்களுக்குத் தானே கொடுத்தாலொழிய எந்த முயற்சியினாலும்
அவன் திருவடிகளை அடைய முடியாது.
ஆகவே அவன் தன் திருவடிகளை எப்பொழுது கொடுப்பானோ! என்று எதிர் பார்த்துக் கொண்டே இருங்கள்
என்னும் நுண் பொருள் இதில் கூறப்படுகிறது.

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டே
தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் -ஒரு மத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி –4-

பதவுரை:

ஒரு மத்தால் – மந்திர மலையாகிற ஒரு மத்தால்
முந்நீர் – ஆழ் கடலை ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் மூன்றும் கலந்து)
கடைந்தான் – தேவர்களுக்காகக் கடைந்தவனானான்
அடைத்தான் – சீதாப் பிராட்டிக்காகக் கடலை அணை செய்தவனானான்
முதல் படைத்தான் – படைப்புக் காலத்தில் முதன் முதலாக அந்த நீரைப் படைத்தவனானான்
அந்நீர் – அந்த நீரில்
அமர்ந்தான் – பள்ளி கொண்டருளினான்
அடி – இத்தகையவரது திருவடிகளாகிற
இறை தாள்கள் – இறைவனுடைய திருவடிகள் தாமே தரும்
அத்தால் அன்றி -தருகையாகிற அதனால் ஒழிய
கருமத்தால் – தன் முயற்சியால் சாதிக்கப்படும் கரும யோகத்தாலும்
ஞானத்தால் – அப்படிப்பட்ட ஞான பக்தி யோகங்களினாலும்
காணும் வகை யுண்டே –காணும் முறைகள் உண்டோ?
இல்லை

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டோ?:-
கரும யோகத்தாலும் ஞான யோகத்தாலும் காணும் வழிகள் உண்டோ?
இல்லை என்பது பொருள்.
ஞானம் என்பதில் பக்தியும் அடங்கும்.
பக்தி என்பது ஞானத்தின் முதிர்ந்த நிலயாதலால் இவ்வாறு சொல்லப்படுகிறது.

வேதாந்த நூல்களில் மேற்சொன்ன மூன்று யோகங்களும் இறைவனை அடைவதற்கு வழியாகச் சொல்லப் பட்டுள்ளது.
ஞான யோகத்தைப் போன்று தூய வழி வேறு எதுவுமில்லை என்று கீதையில் சொல்லியிருக்கிறது.
‘என்னை அடைய வேணும் என்ற கொள்கை யுடையவன் மனதை என்னிடம் வைக்க வேணும்.
என்னையே இடையறாமல் நினைக்க வேணும். என்னை வணங்க வேணும்’ என்று
அர்ஜுனனுக்கு கண்ணனே போதித்திருக்கிறான்.

இவ்வாறு இருக்க இங்கு இவற்றால் காணும் வைகை உண்டோ -என்று சொல்லி யிருப்பது எண்ணிப் பார்த்தற்குரியது.
இவ்வாறு அருளிச் செய்த நூல் ஆசிரியரான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
மேற்படி யோகங்களின் உண்மை நிலைகளையும்
இறைவனுடைய சிறப்பையும் தம்முடைய நுண் அறிவால் தெளிவாகக் கண்டிருப்பவர் ஆகையால் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்சொன்ன யோகங்களெல்லாம் பகவானுடைய திருவடிகளில் சரணாகதி பண்ணியே செய்ய வேண்டியதாயுள்ளன.
அச் சரணாகதி இந்த யோகங்களுக்குத் துணை நிற்பதாய் உள்ளது.
ஆகவே தன் முயற்சியால் சாதிக்கப்படும் கர்ம யோகம்,ஞான யோகம் , பக்தி யோகங்களும்
சரணாகதியின் துணையினாலேயே சாதிக்கப்படுவன என்னும் சாஸ்திர நுட்பத்தைக் கொண்டு
மேல் வாரியான இந்த யோகங்களால் அடைய முடியாது என்று கூறுகிறார்.
பகவானை சரணாகதி பண்ணி அவன் அருளைப் பெறாத போது எந்த முயற்சியினாலும் அவனைப் பெற முடியாது
என்கிற மறைப் பொருளின் முடிவு (வேதாந்த விழுப் பொருள்) இங்குக் கூறப்படுகிறது.

இறைவனுக்கும் உயிர்களுக்கும் பிரிக்க முடியாத எல்லா விதமான உறவுகளும் இருப்பதால் உரிமையுடன்
அவனை அடைவதற்கான எளிய வழி இருக்கும் பொழுது அரும்பாடு பட்டு சாதிக்கக் கூடிய
கர்ம, ஞான,பக்தி யோகங்களாகிற அரிய வழிகளைக் கைக் கொள்ள வேண்டாம் என்பது இதன் உட்கருத்து. .

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த கீதார்த்த ஸங்கிரத்தில்

“நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபயதாம் பரிதஜ்ய ந்யசேத் தேவேது தாமபீ:” என்று கூறியிருப்பதாலும்

இன்றாக நாளையே யாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என் பாலதே – நன்றாக
நான் உன்னை யன்றி இலனேன் கண்டாய்
நாரணனே நீ என்னை யன்றி இலை”–(நான்முகன் திருவந்தாதி-7)

என்ற திருமழிசைப்பிரான் பாடலாலும் இறைவனைத் தவிர வேறு உபாயமில்லை என்பதை உணரலாம்.

தருமத்தாலன்றி இறை தாள்கள்:-
இறை தாள்கள் தரும் அத்தாலன்றி என்று கொண்டு கூட்டுக.
அதாவது
தலைவனான இறைவனுடைய திருவடிகள் தானே தன்னைக் கொடுப்பதல்லாமல் என்று பொருள்.

இங்கு’எம்பெருமானுடைய திருவடியே தஞ்சம்’ என்னும் கருத்து சொல்லப்பட்டுள்ளது.
இதைப் பற்றியே ‘பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது திண் கழலாயிருக்கும்’ என்று
முமூக்ஷுப்படியில் சொல்லப்படுகிறது.
இங்கு இறை என்று சொன்னது அஷ்டாக்ஷர மகா மந்திரத்தின் முதல் பதமான ‘ஓம்’ என்ற ப்ரணவத்தில்
முதல் பதமான அகாரத்தின் பொருள்.அதாவது நாராயணன் என்பதாம்.

தாள்கள் தரும் அத்தாலன்றி:- என்றது
இறைவன் திருவடிகளே தஞ்சம்.வேறில்லை என்று நூல்களில் சொன்ன முடிவு பற்றிச் சொல்லப்பட்டது.
த்வய மந்திரத்தின் முற்பகுதியில் தஞ்சமாகக் கொள்வது பற்றி சொல்லும் போது
‘திருவடிகளையே தஞ்சமாகப் பற்றுகிறேன்’ என்று சொல்லி யிருப்பதைக் காண்க.

மற்றும் நம்மாழ்வார் திருவாய்மொழியில்
”ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றும்
‘கழல்களவையே சரணாக் கொண்ட’ என்றும்
‘அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன்’ என்றும்
‘ சரணே சரண் நமக்கு ‘ என்றும்
‘திருவடிகளே தஞ்சம்’ என்பதை ஒருதரம் சொன்னது போல் பல தடவை சொல்லியிருப்பதைக் காணலாம்.

ஆகவே இறைவனுடைய திருவடிகள் தவிர வேறு எதுவும் தஞ்சமாகாது என்பது நிலைநாட்டப்பட்டது.
இதற்கு உதாரணமாகப் பல எடுத்துக்காட்டுக்கள் சொல்லப்படுகின்றன.

ஒருமத்தால் முந்நீர் கடைந்தான்:-
தேவ லோகத்தில் இந்திரன் இராவதம் என்னும் தன்னுடைய யானை மேலேறி பவனி வரும்போது துர்வாச முனிவர்
தேவி பூசையில் தனக்குக் கிடைத்த மாலை ப்ரசாதத்தை அவனுக்குக் கொடுத்தார்.
அவன் யானை அம் மாலையை துதிக்கையால் சிதற அடித்தது.
இதைப் பார்த்த முனிவர் ‘இந்திரன் செருக்கு அடங்கும்படி அவன் செல்வம் அழியுமாறு சாபம் கொடுத்தார்.
‘கணமேயும் காத்தலறிது’ என்னும் வாய்மொழிப்படி அவனது செல்வம் ஒரு கணத்தில் அழிந்தது.

அந்நிலையில் இந்திரன் மிகவும் வருந்தி பகவான் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தான்.
தன்னை அடைக்கலம் புகுந்த இந்திரனுக்காக மந்திர மலையை ஒரு மத்தாகக் கொண்டு
வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி
தானே ஆமையாகி அம்மலையை முதுகில் தாங்கி கலக்க முடியாத நீர் நிறைந்த கடலை
‘ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்’ என்று சொன்னவாறு கடலைக் கடைந்து
அமுதத்தையும் இந்திரன் இழந்த செல்வங்களையும் எடுத்துக் கொடுத்து அவனது துயர் தீர்த்தான்
என்னும் வரலாறு இங்கு கூறிக் கொள்ளத் தக்கது.

அடைத்தான்:-
இராமபிரானின் பிரிவாலே தளர்ந்த சீதைப் பிராட்டியின் முக மலர்த்திக்காக கடலை அணை செய்தான்.
நீரைக் கண்டால் பயந்து ஓடும் வானரங்களை அதற்கு உதவியாகக் கொண்டான்.
நீரிலே அமிழும் மலைகளை அணை கட்டுதலுக்குக் கருவியாகக் கொண்டான்.
ஒருவராலும் அளவிட முடியாத வண்ணம் வியந்து பார்க்கும்படி ‘சேது’ என்னும் அணை கட்டினான்.

முதல் படைத்தான்:-
உலகமெல்லாம் அழிந்த மகா ப்ரளைய காலத்தில் உயிர்கள் உடல்களைத் துறந்து
இன்ப துன்ப நுகர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாமல் ‘அத்திக் காயில் அருமான் ‘ போல மாய்ந்து கிடந்த அவற்றை,
கடலைப் படைத்து அதில் நான்முகனைப் படைத்து மற்றுமுள்ள அனைத்தையும் படைத்தான்.
அதில் முதல் முதலாக ‘நன்மைப் புனல் பண்ணி’ என்று சொன்னவாறு நீரைப் படைத்தான்.
இங்கு முதல் என்றது ‘நீர்த் தத்துவத்தை என்று பொருள்.

அந்நீர் அமர்ந்தான்:-
படைக்கப்பட்ட அனைத்து ஜீவ ராசிகளுடைய காவலுக்காக அந்நீரிலே கண் வளர்ந்தருளினான்.
‘வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேல் மருவி’ என்றும்
‘பாற்கடல் யோக நித்திரை செய்தாய்’
‘பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்’ என்றும்’
வெள்ள வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கிற மார்க்கம்’ என்றும்
இறைவன் உயிர்கள் நலனுக்காக கடலில் கண் வளர்ந்தருளும் நிலை சொல்லப்பட்டது.

அடி:-
இத்தகைய திருவடிகளைக் காணும் வகை உண்டே என்று கொண்டு கூட்டுக.

இங்குக் கூறிய ‘கடல் கடைந்தது ,கடலை அடைத்தது. அதனை படைத்தான்.அதில் பள்ளி கொண்டு அமர்ந்தான் என்றும்
வரலாறுகளால் செல்வம் முதலிய வேறு பயனை விரும்பி அவற்றிற்காக சரணாகதி செய்த தேவர்களுக்கும்
தன்னை விட்டுப் பிரியாமல் உடன் உறையும் பிராட்டிக்கும் ,
பிரளயத்தில் அழிந்தும், படைப்பில் பிறந்தும் மாறி மாறி சுழன்று வரும் உயிர்களுக்கும் ஏற்றத் தாழ்வு இல்லாமல்
எல்லோரையும் காத்தவனுடைய திருவடிகளை என்று விவரித்துக் காண்க.

‘ஒருமத்தால் முந்நீர் கடைந்தான்'(முந்நீர் அடைத்தான்)
முதல் (நீர்) படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி இறைவனுடைய அடியாகிற இறை தாள்கள் தரும் அத்தாலின்றி
கர்மத்தால் ஞானத்தால் காணும் வகை உண்டே? என்று கொண்டு கூட்டுக.

உயிர்கள் நலத்திற்கு இறைவனுடைய திருவடிகள் தஞ்சமே யல்லாமல்
உயிர்கள் தங்கள் முயற்சியினால் சாதிக்கும் சாதனங்கள் எவையும்
பயன் தர மாட்டா என்பது இப்பாடலின் கருத்து.

————

திருமகள் மணாளனான பகவான் உயிர்களுக்கு வீடு பேறு அளிக்கும் பொழுது
தன்னுடைய இயல்பான அருளாலேயே அருளிகிறான் என்பது முடிவான கொள்கை.

இதன் காரணம் அவன் பேரறிவாளனாய்
மிக்க திரளுடையவனாய் உயிர்களோடு பிரிக்க முடியாத உறவு உடையவனாய்
நற்குணங்கள் நிறைந்தவனாய்ச்
செய்யும் செயல்களெல்லாம் தன்னலம் கருதியே செய்து கொள்பவனாயிருப்பவன் .

இருப்பினும் சாஸ்திரங்களில் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்றும் மற்றும் சிலவும்
பகவானை அடைவதற்குச் சாதனங்களாகும் (வழியாகும்) என்று சொல்லப்பட்டுள்ளன.
சாஸ்திரங்களும் உயிர்களின் அறிவைச் சோதிப்பதற்கு இறைவனை அடையும் வழிகளைப் பலவகையாகக் காட்டி உள்ளன.

பேரறிவாளனான ஒருவன் பயனில்லாத ஒன்றைச் செய்ய மாட்டமையால் கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன
சாதனம் போன்று தோன்றினாலும் பகவானுடைய அருளைப் பெறுவதற்கு இவை சாதனமாக ஆக மாட்டா.
அதனால் இவற்றை சாதனமாக ஏற்கலாகாது.
ஆகவே அறிவாளிகள் பகவானையே தஞ்சம் புகுந்து அவன் அருளாலேயே வீடு பேறு அடைகிறார்கள்.

அவ்வாறு அடைவதிலும்
நாம் பகவானைத் தஞ்சமாக அடைந்திருக்கிறோம் என்னும் நினைவையும் அறவே விட்டு விட்டு
நம்மிடத்தில் இறையருளைப் பெறுவதற்கான ஒன்றும் இல்லை என்று
தன்னுடைய வெறுமையை எண்ணி இருப்பானே யானால்
அது இறைவனுடைய அருளாலே வந்ததாகும் என்பது இப் பாடலில் குறிக்கப்படும் கருத்தாகும்.

வழியாவது ஓன்று என்றால் மற்றவையும் முற்றும்
ஒழியாவது ஓன்று என்றால் ஓம் என்று -இழியாதே
இத் தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத் ததலையால் வந்த வருள் –5-

பதவுரை:

வழியாவது – சரணாகதி என்னும் வழியானது
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தோன்றினால்
மற்றவை – கர்ம,ஞான பக்தி யோகங்கள் முதலியன
முற்றும் – எல்லாவற்றையும்
ஒழியா – தடம் தெரியாமல் விட்டிட்டு
அது – கீழ்ச் சொன்ன சரணாகதி வழி
ஒன்று என்றால் – ஒரே வழி என்று தேறியதால்
ஓம் என்று – அதில் உடன் பட்டு
இழியாதே – கைக் கொள்ளாமல்
இத்தலையால் – நம்மால் செய்யலாகும் செயல்கள்
ஏதுமில்லை – ஒரு புண்ணியமுமில்லை .ஒரு நல்லதும் இல்லை
என்று – என்று தங்கள் வெறுமையை எண்ணி
இருந்தது தான் – அவ்வொழுக்கத்தில் நின்றது
அத் தலையால் வந்த அருள் – இறைவன் கொடுத்த அருளாகும்

வழியாவது ஒன்று என்றால்:
‘சரணாகதி’ என்னும் வழி ஒன்றே என்று உறுதியானால்,
கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி யோகம் முதலான சாதனங்களை நாலு வகையாக
சாஸ்திரங்கள் சொல்லியிருந்த போதிலும்
ப்ரபத்தி யோகம் (சரணாகதி) தவிர ஏனைய சாதனங்களெல்லாம் பலனைத் தரும் அதிகாரம் பகவான் ஒருவனுக்கே உள்ளதால்
ஏனைய சாதனங்கள் நேரடியாக பலன் தராது என்பது சாஸ்திர முடிவு.
ஆகவே அவற்றைச் சாதனங்களாகப் பற்றுவதில் பயனில்லை என்று தெளிவு.
ஆகவே, நாலாவதாகச் சொல்லப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) ஈச்வரனோடு நேரிடையாகத் தொடர்புடையதால்
இதுவே வழியாகச் சொல்லப்படுகிறது.
அதனால் “வழியாவது ஒன்று” என்று கூறப்பட்டது.

மற்றவை முற்றும் ஒழியா:
இவ்வாறு முடிவான பிறகு கர்ம யோகம், ஞான யோகம் பக்தி யோகம் முதலானவற்றையும் மற்ற சாதனங்களையும்
ஒட்டு மொத்தமாக விட்டு விட வேண்டும் என்பது இதன் பொருள்.
மற்றவையும் என்று கூறியதால் சரணாகதி தவிர மற்ற மூன்று யோகங்களையும் என்று கொள்ள வேண்டும்.
“முற்றும்” என்பதற்கு முழுமையான என்று பொருள்.
அதாவது அவற்றை விடும் போது அவற்றின் தடமும் தெரியாமல் விட வேண்டும் என்பதாம்.
“ஒழியா” என்பது செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஒழித்து என்று பொருள் இது இருந்தது என்னும்
வினை கொண்டு முடிந்தது. இதை மறுவலிடாதபடி விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அது ஒன்று என்றால்:
அது-ப்ரபத்தி-சரணாகதி. இதற்குப் பகவான் என்று பெயர்.
“ஒன்று’ என்பது அவன் ஒருவனே என்னும் பொருளைக் குறிக்கிறது.
ஒருவனே என்று பிரிநிலை ஏகாரப் பொருளில் வந்து அவனைத் தவிர வேறு எந்த சாதனமும் சாதனமாகாது
என்னும் கருத்தைச் சொல்லுகிறது.
அடைக்கலம் புகும் பக்தன் ‘உன் திருவடியே தஞ்சம்” என்று சொல்லுவதும் சாதனம் ஆக மாட்டாது.
அவ்வெண்ணத்தையும் கூட சாதனமாக மாட்டாது. என்பது சாஸ்திர முடிவாகும்.
‘பவ சரணம்’ என்பதுவும் கழி யுண்கிறது என்பது காண்க.
அவனே தஞ்சம் என்ற எண்ணம் இருந்தால் அந்த எண்ணமும் அவனுடைய அருளுக்குத் தடையாகிறது.
இவ்வாறு சரணாகதி செய்பவனிடத்திலுல்ல எதையுமே சாதனமாக ஏற்காதவன் பகவான்.

அவனைச் சரணாகதி என்னும் வார்த்தையால் சொல்லி ‘அது ஒன்று என்று இது அஃறிணையால் கூறப்பட்டது.
‘அது இது உது எது’ என்றார் நம்மாழ்வார்.
அவன் எப்படி வேண்டுமானாலும் கூறலாமல்லவா?
அதனால் அது ஒன்று என்றால் பகவானாகிற ஒருவனே வழி என்று முடிவானால் என்று பொருள் காண்க.

ஓம் என்று இழியாதே:
இம் முடிவுக்கு உடன்பட்டு அவனைப் பற்றுவதிலேயே முனைந்தால்
அதாவது
இறைவனுடைய திருவடிகளை நாம் பற்றினாலன்றோ அவன் நமக்கு அருள் செய்வான் என்று
நினைத்து அவனை அடைக்கலம் புகாமல்.

இத் தலையால் ஏதுமில்லை என்று இருந்தது தான்:
இவ் வருளைப் பெறுவதற்குச் சொல்லப்படும் சாதனங்கள் நம்மால் செய்யலாவது ஒன்றுமில்லை என்று
தனது வெறுமையை (ஒன்றுமில்லாமையை) எண்ணியிருக்கும் அவ் விருப்புத் தான்

அத் தலையால் வந்த அருள்:
அவன் உயிர்களிடம் வைத்துள்ள அருளினால் வந்ததாகும் என்பதாம்.

சாஸ்திரங்களில் ‘வீடு பேற்றுக்கு சாதனமாக சரணாகதி என்னும் ஒரே வழி தான் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முடிவான பிறகு ஏனைய கர்ம, ஞான பக்தி யோகங்கள் எல்லாவற்றையும் தடம் தெரியாமல் விட்டு விட வேண்டும்.
இவ்வாறு சொல்லப்பட்டதால் ‘அச் சரணாகதி நெறியே நமக்குத் தஞ்சம்’ என்னும் எண்ணம் உண்டாகும்.
அவ் வெண்ணத்தையும் கொள்ளலாகாது என்பதாம்.

ஏன் எனில்
‘இறைவனாகிற ஒருவனே அருள் செய்கிறான்’ என்று கூறுகையில் ஒருவனே என்ற இடத்தில் உள்ள பிரிநிலை ஏகாரம்
கர்ம, ஞான, பக்தி யோகங்களைப் பிரித்து நிற்கிறது.
அது போல இவனுடைய பற்றுதலையும் பற்றுதல் எண்ணத்தையும் பிரித்துக் காட்டுகிறது.

ஆகவே, இறைவன் அருளுவதற்கு உயிர்களிடம் சிறிதளவு எதையும் எதிர்பார்த்து அருளுவதில்லை என்பதும்
அவன் தன்னுடைய இயல்பான கருணை குணத்தால் மட்டுமே அருளிகிறான் என்பதும் உணர்த்தப்படுகிறது.

‘வெறிதே அருள் செய்வர்’ என்னும் திருவாய்மொழி பாடல் உரையில் இதை விளங்கக் காணலாம்.
இவ்வாறு இறைவன் தானே அருள் செய்கையில் அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லையாகிறது.
இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு சாதனங்களாக எதையும் செய்யாமால் வெறுமையாக இருக்கும் நிலை
ஒருவனுக்கு அமைந்தால் அது இறைவன் திருவருளாலே தான் வரவேண்டுமேயல்லாது அதை நம்மால் கொள்ள முடியாது.

வெறுமைக்கு இறைவன் அருள் வேண்டுமோ என்றால் கட்டாயம் வேண்டும்.
ஒருவன் செயல் எது இல்லாமல் வெறுமையாக இருப்பது மிகவும் அரியதாகும்.
ஒரு சிறு பொழுதுகூட செயலற்று இருக்க முடியாது. என்றும்
கை, கால் முதலிய உறுப்புக்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் கீதையில் சொல்லப் பட்டுள்ளது.

ஆகவே வெறுமையாக இருத்தலே நன்றாகும்.
அதாவது
இறைவனுடைய பற்றுதலையோ பற்றியுள்ளோம் என்னும் எண்ணத்தாலேயோ பயன் அடைவதில்லை என்பதாம்.
இக் கருத்தை ‘வாழும் சோம்பர்’ என்றார் தொண்டரடிப் பொடிகள்.
‘நின்னருளே புரிந்திருந்தேன்’ என்றார் பெரியாழ்வார்.
‘என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே’ என்றார் நம்மாழ்வார்.
‘உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்’ என்றார் திருமங்கையாழ்வார்.
‘நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே’ என்றார் திருமழிசைப்பிரான்.
‘சிறுமானிடவர் நாம் செய்வதென்’ என்றாள் ஆண்டாள்.
ஆசார்யர்களில் திருக் கண்ண மங்கை யாண்டான் இக்கொள்கையைக் கடை பிடித்தார்.

‘அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம், அவத்யகரம். அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்’ என்ற
முமுக்ஷுப்படி (ஸூத்திரம் எண் 230) தொடரிலே காணலாம்.
இதற்கு உதாரணம்: ஸ்ரீ இராமாயணத்தில் சீதை இராமனை அடைவதற்கு எந்த உபாயத்தையும் செய்ய வில்லை.
ஆனால் ஸ்ரீ ராமபிரான் சீதையை அடைவதற்கு வில்லை முறித்தல் போன்ற பல சாதனங்களையும் நடத்தி யிருக்கிறான்.
இதனால் சீதை இருக்கும் இடம் தேடி வந்து இராமன் அவளை அடைந்திருக்கிறான்.
இந்த உதாரணத்தை மனதில் கொண்டால் மேலே சொன்ன கருத்துக்கள் தெளிவாகும். இது வான்மீகியின் கதைப் போக்கு.

இவ்வாறு கூறியவற்றால் சரணாகதி தத்துவம் அசேதனம் போல் எவ்வித செயல்பாடுமின்றி இருத்தல் என்று தேறுகிறது.
இந்நிலை ஒருவனுக்கு வருவது இறைவனுடைய திருவருளால் தான் ஆகும் என்ற கருத்தை உரைத்துக் கூறுகிறது இப்பாடல்.

இதற்கு உதாரணமாக திருவாய்மொழி 6ம் பத்து 10ம் திருவாய்மொழி “உலகமுண்ட பெருவாயா” என்ற பதிகத்தில்
‘ஆவாவென்னும் – பாசுர ஈட்டில் கூறப்படும் ஒரு ஐதீஹியத்தைக் காணலாம்.

நம்பிள்ளை, ஜீயரை ஒரு நாள் பஞ்சமோபாயம் என்று உண்டு என்று சொல்லுகிறார்கள்.
நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்றுண்டோ என்று கேட்டருள
‘நான் அறிகிலேன். இனி சதுர்த்தோபாயம் தான் பகவானேயாக இருக்க வ்யோமாதீதம் சொல்லுவாரைப் போல.
‘அவனுக்கும் அவ்வருகே ஒன்றுண்டு என்கையிறே’ அது நான் கேட்டறியேன்’ என்று அருளிச் செய்தார்.

இங்கு அரும் பதத்தில்
“சதுர்த்தோபாயமான ஈஸ்வரனை ஒழிய வேறு உபாயமில்லை என்கைக்கு சம்வாதமாக
ஐதீஹ்யம் நம்பிள்ளை இத்யாதி’ என்ற இந்த தொடர்களை ஊன்றி நோக்க வேணும்.

————

உள்ளபடி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகு இலதாய் விட்டதே -கொள்ளக்
குறையேதும் இல்லாற்குக் கூறுவது என் சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம் –6-

பதவுரை:

உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி
உணரில் – தெரிந்து கொண்டால்
ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று
நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு
உண்டென்று – இருக்கிறது என்று
விள்ள – வாயினால் சொல்லகூட
விரகிலதாய் – வழி யில்லையாகி விட்டது அல்லவா
விட்டதே – (சக்தி இல்லையாகி விட்டது அல்லவா)
கொள்ள – நம்மிடத்தில் பெற்றுக் கொள்ள வேண்டுவன
குறை – குறைபாடுகள்
ஏதும் இல்லார்க்கு – சிறிதும் இல்லாத இறைவனுக்கு
இறையேதும் இல்லாத – சிறிதளவுவேனும் தனக்கென்று ஒன்றுமில்லாத
யாம் – அடிமைத் தன்மையையே வடிவாக உள்ள நாம்
கூறுவது என் – நம்மை காப்பதற்குச் சொல்லும் வார்த்தை என்ன இருக்கிறது
சொல்லீர் – சொல்லுவீர்களாக

உள்ளபடி உணரில்:
உயிரின் உண்மை நிலையை உணர்ந்தால்

“எப்பொருள் எத்தன்மை தாயினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு” என்ற திருக்குறளில்
ஆன்மாவின் உண்மை நிலையை உணர்வதே அறிவாகும் என்று கூறப்படுள்ளது.

ஒருவன் ஒரு பொருளை உலகில் காணும் பொழுது மேல் தோற்றமான இயங்குதிணை, உயர்திணை ஆகிய இவற்றில்
மனிதன், விலங்கு, செடிகொடி என்னும் இவற்றாலே காண்கிறான்.
அனைத்துப் பொருளுக்கும் உள்ளிருக்கும் உயிரைப் பார்பதில்லை.
உயிரைப் பார்க்கின்ற அறிவொளி வெளி தோற்றத்தைப் பார்பதில்லை.

உதாரணமாக “கோச் சேரமான் யானைக் கண் சேய் மாந்தரம் சேரல் இரும் பொறை” என்னும் சிறப்பு பெயரும் கூடி
ஒரு பொருளைக் காட்டுகிறது. இவை எல்லாம் நிலை இல்லாததால் கற்பனயாகக் கருதப்படும்.
இக் கற்பனைக்கு அப்பாற்ப்பட்டதாய் இருப்பது உயிர்.
இத்தகைய உயிரின் உண்மை நிலையை சாஸ்திரங்கள் துணை கொண்டே அறிய வேண்டி யுள்ளது.
உயிர் அறிவே ஆன்மா என்றும் அறிவு உடையது ஆன்மா என்றும் நூல்கள் கூறும்.

இதனால் ஆன்மாவுக்கு ‘நான் இதைச் செய்கிறவன் என்னும் செருக்குத் தன்னடையே தோன்றுகிறது.
இதைப் பற்றி கூர்ந்து ஆராய்ந்து பார்க்கையில் ஆன்மாவைப் பற்றி ஒரு உண்மை தெளிவாகிறது.
நுணுகி அறிவார்க்குப் புலனாவது ஒன்று.
அதாவது
உயிர்களெல்லாம் தன இச்சையில் செயல்பட முடியாத உடல்களாகவும்
இறைவன் அனைத்து உயிர்களையும் இயக்குகின்ற உயிராகவும் சொல்லப்படுவதால்
இறைவனுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையே உயிரின் உண்மை இயல்பாகும்.
ஆகவே நான் எனது என்று வாய் விடுவதற்கு தகுதி அற்றதாகிறது.

இவ்வாறு உயிர்களின் உண்மை நிலையை அறியும் போது தன்னைத்தான் காத்துக் கொள்ள,
தான் ஒன்று செய்வதற்கான வாய்ப்பே உயிர்கட்கு இல்லை என்று புலனாகிறது.
அதுவே உயிரைப் பற்றி உள்ளது உள்ளபடி அறியும் அறிவாகும்.

‘இயல்பாகவும் நோன்பிற்க ஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து’ என்ற குறளில்
மேற்கூறிய கருத்தைத் திருவள்ளுவரும் கூறியுள்ளார்.
இதன் கருத்து இறைவனைத் தவிர தனக்கு ஒரு பற்றப்படும் பொருளும் இல்லை என்றிருப்பதுவே
ஞானியர்க்கு பொருள் ஒன்று உண்டு என்று எண்ணினால் அது மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாகும் என்பதாம்.
இங்கு ஒன்று இன்மை இயல்பாகும், உடைமை மயலாகும் என்று கூறியது காண்க.
இதனால் ஒன்று உடையோம் என்றெண்ணுவது மடமையாகும் என்பதால்.

ஒன்று நமக்கு உண்டென்று விள்ள விரகிலதாய் விட்டதே:
“வீடு பேற்றுக்குக் கைமுதலாக ஒன்று நம்மிடம் இருக்கிறது” என்று சொல்வதற்கு வாய் திறக்க வழியில்லை என்று பொருள்.
“விள்ள” என்பதற்குச் சொல்ல என்று பொருள் கொள்ளப்பட்டது.

இவ்வாறன்றி “விள்ள -விலகி நிற்க” என்று பொருள் கொண்டு .
இறைவனுடைய (கருணை) அருள் நிழலில் பதுங்கிக் கிடப்பது அல்லாமல்
அதை விட்டுப் பிரிந்து தனித்து நிற்கும் ஆற்றல் உண்டு என்று எண்ணி விலகி நிற்பதற்கு வழியற்றுவிட்டது என்றும் சொல்லலாம்.

இக் கருத்து உயிர்கள் எல்லாம் இறைவனுடைய உடலாகவும் இறைவன் அவற்றிற்கு உயிராகவும் சொல்லப்படுவதால் கூறப்பட்டது.
உயிரின் துணையின்றி உடல் இயங்க முடியாதல்லவா?
உயிர்க்கு உணர்வு என்னும் பண்பு இருப்பதால் செயலற்று உயிரில் பொருள் போல எப்படி இருக்க முடியும்?
அவ் வுணர்வுக்கு ஏற்ப இறைவனே நம்மைக் காக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையேனும் சொல்ல வேண்டுமா?
அதுவும் இல்லாமல் எப்படி முடியும்? என்ற வினாக்கள் இங்கு எழுகின்றன. அவற்றிற்கும் பதில் சொல்கிறது.

கொள்ளக் குறையேதும் இல்லார்க்கு என்ற இத்தொடர்.
இறைவன் உயிர்களைக் காக்கும் பொழுது உயிர்களிடத்தில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காப்பாற்றும் குறை அவனிடம் இல்லை.
ஒன்றை ஏற்றுக் கொண்டு அதற்காகக் காப்பவன் என்றால் அவனுடைய பெருமைக்கு இழுக்காகும்.
அதனால் அவன் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மேலும் நம்முடைய நிலையைப் பார்த்தால் ஒன்றும் இல்லாதவராய் இருக்கிறோம்.

இறை யேதும்:இல்லாதயாம்:
உயிரும் உயிரைச் சார்ந்த உடல் முதலிய பொருள்களும் இறைவனுடைய உடைமைப் பொருள்களை இருக்கின்றன.
தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாததாய்த் தனக்கென்று ஒன்று சிறிதும் இல்லாததாய் இருக்கின்றன.
ஆகவே அவன் ஒரு பொருளையும் கொள்ள மாட்டான். இவனுக்கு ஒன்றும் இல்லாததா? இவன் கொடுக்க மாட்டான்.
இதை விளக்குவதற்கு இங்கு ஓர் உதாரணம் காட்டப்படுகிறது.

இறைவனை வணங்கச் சென்ற ஓர் அடியவர் இறைவன் முன் சென்று இறைவனே
! உனக்கு எப்பொருளை நான் தருவேன்? ஏன் எனில் நானே உன்னுடைய அடிமை. பொருள் எல்லாம் உன்னுடைய உடைமை.
எனக்கென்று எப்பொருள் இருக்கிறது? ஆகவே நான் உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை.
ஆயினும் நெடுங்காலமாக என்னுடைய வினைகள் எனக்குச் சொந்தமாக உள்ளன.
அவற்றை வேண்டுமானால் கொடுக்கலாம் என்று சொல்லி வணங்கியதாகக் கூறப்படுவதை இங்கு சொல்லலாம்.

மேலும் இராமாயணத்தில் பரதனுக்கும் வசிட்ட முனிவருக்கும் நடந்த உரையாடலில் இக்கருத்து மேலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இராமன் கானகம் சென்று விட்டான். தந்தை தசரதன் வானகம் எய்திவிட்டான்.
ஆகவே பரதா நீதான் அரசாள வேண்டும் என்றார் வசிட்டர்.

இதைக்கேட்ட பரதன் செவிகளைக் கைகளால் புதைத்துக் கொண்டு பின்வருமாறு பேசினான்.
இராமன் கானகம் சென்று விட்டான். என்றால் அவனுடைய உடைமைப் பொருளான அரசாட்சியை நான் ஏற்பது தகும்?
ஒருவனுடைய உடைமையை மற்றொருவன் கவர்வது கள்ளத்தனமாகுமன்றோ?
“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” என்றன்றோ நீதி நூல்கள் கூறுகின்றன என்றான்.

ஆனாலும் வசிட்டர் விடவில்லை.
தற்பொழுது இராமன் இல்லாததால் அவனுடைய உடைமையான அரசை அவன் வரும் வரை ஏற்கலாமே என்றார்.

அதற்கு பரதன் “உடையவன் தான் உடைமைப் பொருளைக் கொல்லவேணுமேயொழிய
ஒரு உடைமை மற்றொரு உடைமையை ஏற்க நியாயமில்லை.
நான் இராமனுடைய உடைமையாதளால் அரசாகிற மற்றொரு உடைமையை ஏற்கத் தகுந்தவனில்லை” என்றார்.

அப்பொழுது வசிட்டர் விடவில்லை.
அரசாகிற ராமனுடைய உடைமை அறிவற்றது. பரதனாகிற நீ அறிவுடையவன்.
ஆகவே அறிவற்ற அரசாகிற உடைமையை அறிவுடைய நீ ஏற்றுகொள்ளலாம் அல்லவா?
ஒருவனுக்கு அணிகலன்களும் அவற்றை இட்டுவைக்கும் உடைமைகளுள்
அணிகலன்களாகிற உடைமையை பெட்டியாகிற உடைமைப் பொருள் பாதுகாக்கவில்லையா?
அது போல அரசு இராமனுடையதாக இருந்தாலும் நீயும் இராமனுடைய உடைமையாக இருந்தாலும்
அரசை நகைப் பெட்டி போல் ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.

அது கேட்ட பரதன் நீர் சொன்ன உதாரணத்தில் இரண்டும் அறிவில்லாதவை.
உடையவன் அணிய வேண்டிய உடைமைப் பொருளை நாம் அடக்கிக் கொண்டிருக்கிறோமே என்னும் அறிவில்லாததால்
அணிகலன்களைப் பெட்டி ஏற்றுக் கொண்டுள்ளது.
எனக்கு அறிவு இருப்பதால் இராமனுடைய உடைமையான அரசை நான் ஏற்க இயலாது.
யானும் இவ்வரசும் இராமனுடைய உடைமைகளே.
அரசைக் காட்டிலும் வேறுபட்ட நிலையில் எனக்கு அறிவிருப்பது நான் இராமனுடைய உடைமை என்பதை
எப்பொழுதும் நினைத்துக் கொண்டு அதற்கேற்ப இருப்பதுவே எனக்கு சிறப்பாகும்.
இந்த எண்ணம் அரசுக்கு இல்லாததால் அது எனக்கு வேறுபட்டதாயிற்று .
இருப்பினும் நானும் அரசும் இராமனுடைய உடைமைகளே என்று கூறி மறுத்து விட்டான்.

இதனால் உயிர்கள் உணர்வு உடையனவாயிருந்தாலும்
“நான் இறைவனுடைய உடைமை” என்பதை அறிந்து அடிமைத் தொழில் செய்வதற்கே உரியனாய்,
யான் என்றோ, எனது என்றோ சொல்வதற்குத் தகுதியுடையதில்லை என்றவாறு.
இக் கருத்துக்களை இங்கே உணர வேண்டும்.

இவற்றை எல்லாம் உள்ளடக்கி இறைவன் நிறைவுடையவன்.
ஆகவே யாரிடமும் எதையும் ஏற்க வேண்டாதவனாகிறான்.
உயிர்களுக்கு “உடைமை என்ற ஒன்றும் சிறிதும் இல்லாததால் அவனுக்குக் கொடுப்பதற்கு எதுவும் இல்லாதவனாகிறான்.
இறைவன் கொள்ளக் குறையேதுமில்லாதவன். உயிர்கள் சிறிதளவேனும் ஒன்றும் உடைமை இல்லாதவர்கள்.
ஆகவே அவன் கொள்ள மாட்டான். இவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்ற இவ்வுண்மைகளை விளக்கித்
தம் அருகில் இருப்பாரை நோக்கி இக் கருத்துக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார் ஆசிரியர்.

இங்கு “நாம்” என்கிற தன்மைப் பன்மை முன்னிலைப் பொருளையும் சேர்த்துக் கொண்டு
நாம் எல்லோரும் என்று அனைத்து உயிர்களையும் சுட்டிச் சொல்கிறதாகக் கொள்ள வேண்டும்.
அனைத்து உயிர்களும் அவனுடைய உடைமையாதலால் மேற்சொன்னக் கருத்து அனைத்துயிர்களுக்கும் பொதுவானதாகும்.

இறை என்ற இடத்தில் இறை என்ற சொல் சிறிதும் என்ற பொருளில் வந்தது
“இறையும் அகலகில்லேன்” போல இறை என்றவிடத்தில் இழிவு சிறப்பு உம்மை தொக்கு நின்றது.
இறையும் ஏதுமில்லாத என்று பொருள் கொள்க.

ஆன்மாவின் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் இறைவனுக்கு உடமைப் பொருளாயும்
அவன் வயப்பட்டுமிருத்தளால் தானாகச் செய்வதற்கு எதுவுமில்லை .
தனக்கு ஒரு உடைமையுமில்லை. .
அவன் நிறைவுடையவனாய் இருத்தலால் எதையும் கொள்ளமாட்டான்.
மிடியனுக்கு (தரித்திரனுக்கு) செல்வந்தனுக்குக் கொடுக்கத்தக்க பொருள் எதுவுமில்லை.
செல்வந்தன் தரித்திரனிடத்தில் ஒரு பொருளைப் பெற்றுக்கொள்ளத் தக்கக் குறைவுடயவனில்லை .
அப்படியிருக்க இவன் எதைக் கொடுப்பான்? அவன் எதைப் பெறுவான்?

ஆகவே அவனுக்கு உடைமையாய் அவன் அடிமையாய் இருக்கும் நிலையையே எண்ணி இருப்பதுவே
உயிர்களின் கடமையாகும் என்னும் பொருள் இப்பாடலில் கூறப்படுவதாகும்.
இதுவே “நம” எனும் சொல்லின் சாரமாகும்.

இவ் விடத்தில் கீழ்வரும் ஸ்ரீவசன பூஷண சூத்திரங்கள் நினைதற்குரியான

“பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது அல்லாத போது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம்”
என்று சொல்லி “அந்திம காலத்துக்குத் தஞ்சம் .இப்போது தஞ்சமென் என்கிற நினவு குலைகை. என்று சீயர் அருளிச் செய்வர்”
என்னும் ஸூத்திரத்தில் ஒரு நிகழ்ச்ச்சியை எடுத்துக் காட்டி
ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானவனும் அவனே என்பன் இங்கு நஞ்சீயர் சொன்னதாகக்
கூறிய வார்த்தையைக் காண வேண்டும்.

நஞ்சீயர் என்னும் பேராசான் ஒருவர் தம்முடைய சீடர் ஒருவர் நோய் வாய்ப் பட்டிருப்பதாகக் கேள்வியுற்று
அவரைப் பார்க்க அவரிடம் சென்றுள்ளார்.
அப்பொழுது அந்நோய்வாய்ப்பட்டவர் “அடியேனுக்கு இறுதிக் காலத்துக்குத் துணையாக இருக்கும் ஒன்றைச் சொல்ல வேண்டும்”
என்று கேட்க அதற்குப் பதிலாக அவர் இவ்வாறு சொல்கிறார்.

“நாம் பகவானுடைய உடைமைப் பொருளாய் இருப்பதால் உடைமைப் பொருளைப் பேணிப் பாதுகாப்பது
உடையவனுக்குப் பொறுப்பாதலால் அதைப் பற்றி நாம் நினைப்பதற்கு உரிமையில்லை.
இன்றைக்குத் துணையாக வேணும் கடைசி காலத்துக்குத் துணையாக வேணும் என்று என்னும் எண்ணம்
அதாவது (நம்மைக் காத்துக் கொள்ளும் எண்ணம்) அகல்வதுவே நமக்கு நலமாகும்.

ஆகவே தன்னைத் தான் காத்துக் கொள்ள வேணும் என்ற எண்ணத்தை எப்பொழுது இவன் விடுகிறானோ
அன்றைக்கு இவனைக் காக்கும் எண்ணத்தை இறைவன் செய்வான் என்பது இவ்வார்த்தையின் கருத்தாகும்.

ஸ்ரீ இராமபிரானை வனவாசிகளான முனிவர்கள் சந்தித்து உரையாடுகையில்
தங்களைக் கருப்பையிலுள்ள சிசுக்களாகச் சொல்லிக் கொண்டனர்.
இதன் கருத்து கருப்பையிலுள்ள சிசுவின் அனைத்து செயல்பாடுகளும் தாயாரும் வசத்தில் உள்ளன போல்
ஆன்மாவின் அனைத்து செயல்பாடுகளும் இறைவன் வசத்தில் உள்ளன என்பதைக் குறிக்கும்.

இவ்வாறான ஆன்மாவின் தன்வயமற்ற நிலை (இறைவன் வயப்பட்டதால்) அறியப்படுகிறது.
இதை சாஸ்திரம் “பாரதந்திரீயம்” என்று கூறும்.
அதில் “அசித்வத் பாரதந்திரீயம்” என்று சிறப்பித்துக் கூறும்.
“இதனை வைத்த இடத்திலிருந்தேனோ பாரதாழ்வானைப் போல” என்றும்
“படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே” என்னும் தொடர்களால் எடுத்துக் காட்டுவர் ஆன்றோர்.
மேலே சொன்ன ஒழுக்கத்தில் நிலை நிற்கும் உயிர்களை இறைவன் தானே வலிய வந்து காப்பாற்றுவான் என்பதாம்.
இதற்கு எடுத்துக் காடாகக் “கடற்கரையை நினைத்திருங்கள்” என்று கூறுவார்.

கடற்கரையில் “எழுபது வெள்ளம் வானரச் சேனைகளுக்கு நடுவில், இராமன் இலக்குவணன் இருவரும் இருக்க
அப்பொழுது வானரங்கள் அரக்கரிடமிருந்து இராமனையும் இலக்குவணனையும் நாம் காக்க வேண்டுமென்று பேசிக் கொண்டன.
இரவில் நெடுநேரமானதும் வாரங்கள் எல்லாம் உறங்கத் தொடங்கின அப்பொழுது இராமனும் இலக்குவணனும்
கையும் வில்லுமாய்க் கொண்டு வானரங்களைச் சுற்றி வந்து காத்தனர்.என்பதாம்.

இவ்வாறான எடுத்துக் காட்டுக்களால்
ஆன்மாக்களைக் காப்பது இறைவன் கடமை என்றும்
ஆன்மாக்கள் அவருடைய காத்தலைத் தடுக்காமல் இருக்க வேணும் என்பதும் இங்குக் கூறப்பட்டன.

—————

சென்ற பாடலில் இறைவனை
“கொள்ளைக் குறையேதும் இல்லாதவன் என்றும்
உயிர்களை இறை(யும்) ஏதுமில்லாத யாம்” என்றும்
இருவருக்கும் உள்ள இல்லாமை சொல்லப்பட்டது.

கம்பன், சீதையையும் இராமனையும் கட்டுரைக்கையில்
“மருங்கிலா நங்கையும் வசையில் அய்யனும்” என்று இருவருக்கும் ஒரு இல்லாமையைக் கூறினான்.
சீதைக்கு இடுப்பு இல்லை, இராமனுக்குப் பழிப்பில்லை என்று நகைச் சுவையாகக் கூறினான்.
அது போலே இங்கும் இறைவனுக்குக் குறை ஒன்றுமில்லை என்றும்,
உயிர்களுக்கு கொடுப்பதற்கு சிறிதும் ஒன்றும் இல்லை என்றும் கூறப்பட்டதாக
இருவருடைய இல்லாமையும் தெளிவாக்கப்பட்டது.

அதன் தொடர்பாக இருவருக்குமுள்ள இல்லாமையை எண்ணி இறைவனை வெல்வார் இல்லை என்று கூறப்படுகிறது.
அதாவது
இவ் வுண்மையை உணர்ந்தவன் ஞானி எனப்படுவான்.” இத்தகைய ஞானியே எனக்கு உயிர்” என்று
கீதையில் கூறுகிறான் பகவான்.
மேலும் அவனே எனக்கு அன்புக்கு இடமானவன் என்றும் ஞானியிடம் நான் தோற்பவன் என்றும் கூறியுள்ளான்.
இப்படி இறைவனால் கூறப்படும் ஞானி எங்கேனும் இருக்கிறார்களோ ? என்று ஞானிகளின் பெருமை பேசப்படுகிறது இப்பாடலில்

ஸ்ரீ ஆண்டாளும் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்ற தொடரில்
கூடுவாரிடம் தோற்பவன் கோவிந்தன் என்றும் கருத்துக் கூறினாள்.
அத்தகைய ஞானிகள் கிடைப்பார்களோ ? என்பது இப்பாடலின் கருத்து.

இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -இல்லை
குறையுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7-

பதவுரை:

இருவருக்கும் – இறைவனுக்கும், ஆன்மாக்களுக்கும்
இல்லை என்று – ஓர் குறைவின்மை உண்டென்று எண்ணுதலால்
இறையை – இறைவனை
வென்றிருப்பார் இல்லை – வெற்றி கொள்வாரில்லை
அஃது – அவ் வண்ணம்
ஒருவருக்கு – ஒரு மனிதனுக்கு
எட்டுமதோ – கிடைக்குமா?
குறைதான் – கொள்ளுவதாகிற குறை தான்
இல்லை – இறைவனுக்கில்லை
என்று – இவ்வாறு
கூறினாரில்லா – யாராலும் சொல்லப்படாத
மறையுடைய மார்க்கத்தே – வேத வழியில் நின்று
காண் – கண்டு கொள்வீராக

இல்லை இருவருக்கும் என்று:
இறைவனுக்கும் உயிர்களுக்கும் ஓர் இன்மை உண்டு.
அதாவது
இறைவனுக்குக் குறையொன்றுமில்லை. அவன் குறை ஒன்றுமில்லாத கோவிந்தன்.
உயிர்களுக்குப் பொருள் ஒன்றும் இல்லை. “அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம்”
“பொருள் அல்லாத” என்பவற்றால் இருவருக்கும் உள்ள இன்மை புலனாகும்.

இதுவே இருவருடையவும் உண்மை நிலையாகும்.
இவ் வுண்மை நிலையை இடையறாது எண்ணி இருப்பதுவே உயிர்களின் கடமையாகும்.
இவ்வாறு எண்ணியிருப்பார்க்கு இறைவன் தாழ நிற்பான்.

இதற்கு உதாரணமாக ஆழ்வாரின் பாடல்களில் காணலாம்.
வளவேழுலகு,
மின்னிடை மடவார்,
கண்கள் சிவந்த,
ஓராயிரமாய்,
அறுக்கும் வினையாயின முதலிய திருவாய்மொழிகளில்
பகவான் ஆழ்வார் முன் வந்து அவருக்குத் தாழ நின்றி சேவை கொடுப்பதால் கண்டு கொள்ளலாம்.
இவ் விருவரின் உண்மை நிலையும் அறியாதர்க்கு எம்பெருமானைப் பணிய வைப்பது இயலாததாகும்.
அதை அடுத்த தொடரால் கூறுகிறார்

இறையை வென்றிருப்பார் இல்லை
இறைவன் யாருக்கும் கட்டுப்படாதாவன். ஸ்வதந்திரன் – தன்னுடைய விருப்பபடி நடப்பவன்.
அத்தகையவனை ஒருவன் தனக்கு வயப்ப்படும்படி செய்து கொள்ள முடியாது.
மேற்கூறிய இருவரின் இலக்கணங்களையும் எண்ணியிருப்பார்க்கு அவன் மிகவும் எளியனாவான்.
பத்துடை அடியவர்க்கு எளியனல்லவா? அவன்.
எளிவரும் இயல்வனாயிற்றே அத்தகைய பக்தர்களைக் காண முடியுமா?

அஃது ஒருவருக்கு எட்டுமதோ:
அதாவது
இறைவனுடைய தலைமையையும் தன்னுடைய அடிமையையும் இடையறாமல் நினைக்கும் தன்மை ஒருவரால் செய்ய முடியுமா?
நான் எனது என்று செருக்கி திரியும் உலகில் அது அவ்வளவு எளிதல்லவே! மிகவும் அரிதாயிற்றே!
ஆகவே தான் அவனைப் பணியச் செய்வது இயலாது என்று கூறப்பட்டது.
இடையறாமல் நினைக்க வேண்டிய அவ்விருவருடைய இயல்பு தான் எது என்றால் அதற்குப் பதில் உரைக்கிறது மேல் தொடர்.

இல்லை குறையுடமை தான் என்று:
குறை தான் இல்லை
உடைமை தான் இல்லை என்று
கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

தான் என்ற இடைச் சொல் ஏகாரப் பொருளில் வந்தது.
குறையே இல்லை. உடைமையே இல்லை என்று விரித்துப் பொருள் கொள்க.

அதாவது
இறைவனுக்கு உயிர்களிடம் ஒன்று பெற்றுக் கொள்ளத் தக்க குறையில்லை.
உயிர்களுக்கு அவனுக்குக் கொடுக்கத் தக்க பொருள் ஏதும் இல்லை.
இதுவே இருவருக்குமுள்ள இயல்பு.
இந்த அறிவு யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. காரணம் மேல் தொடரில் கூறப்படுகிறது.

கூறினார் இல்லா மறையுடைய மார்க்கத்தே காண்:
வேதத்தின் உட்பொருளாய் மறைந்து கிடக்கிறது ஆகவே தான் அரிதாய் உள்ளது.
வேதம் எவராலும் ஆக்கப்பட்டதில்லை.அது அநாதியானது. “ஐயம் திரிபு” முதலிய குற்றமற்றது.
ஆகவே நம்பிக்கை மிக்கது. அதைக் கற்று உணர்ந்த மேலோர்களால் உண்மை அறியத் தக்கது.
அதைக் கற்று மேல் கூறிய உண்மையைத் தெளிய வேண்டியுள்ளது.
தன் முன் நிற்பார் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போல ஆசிரியர் காண்-(காண்பாயாக) என்று கூறுவதாகத் தெரிகிறது.

இவ்வாறு “காண்” என்று உரையாசிரியர் மணவாளமாமுனிகள் அத்தகையவர்கள் காணக் கிடைப்பார்களா என்று ஏங்குகிறார்.
ஒருவர் மேல் வைத்துச் சொல்லப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் சொல்வதாகக் கொள்ள வேணும்.
இதனால் கூறப்பட்டதாவது.

இறைவன் நிறைவானவன். (பரிபூர்ணன்) உயிர் அவனுடைய உடைமை. அதனால் அதற்கு உடைமையானது ஒன்றுமில்லை.
இதுவே மறையில் சொல்லப்பட்ட இறை உயிர்களைப் பற்றிய இரகசியமாகும்.
வேதத்தைக் கற்று உணர்ந்தவர்களுக்கே தெளிவாதன்றி ஏனையோர்க்கு அறிய முடியாத ஒன்று.
இவ் விருவரது உண்மையையும் அறியும் ஞானிகளுக்கு இறைவன் மிகவும் எளியவனாவான்.
இவ் வுண்மையை அறியாத உலகத்தார்க்கு இறைவனைத் தமக்கு எளிமையாக்கும் பெருமை கிடைக்குமா? கிடைக்காது.

இதனால் ஆத்மா பரமாத்மா சிந்தனை இறைவனைப் பணிய வைக்கும் என்றும் அச்சிந்தனை இல்லாதார்க்கு
இறைவன் எளியனாகும் தன்மை கிடைக்காது என்பதும் கூறப்பட்டது.

இதைப் “பத்துடையடியவர்க்கு எளியவன்”, “பிறர்க்கு அரிய வித்தகன் ” என்றார் நம்மாழ்வார்.

இதனால் சாஸ்திரப்படி நடப்பவர்களுக்கு பகவான் எளியவனாயிருப்பன் என்றும்
அப்படி இல்லாதவர்களுக்குன்மிக அரியனாய் நெடுந்தொலைவில் இருப்பான் ” என்றும் அறியக் கிடைக்கிறது.

கீதையில் ஞானியைத் தனக்கு உயிர் என்றான் கண்ணன். அவர்களுக்கு எளியனாய் இருந்தான்
“காப்பிட வாராய்” “பூச்சூட வாராய்” “அம்மம் உண்ண வாராய்” என்றால் ஓடி வருவான்.
“விட்டு சித்தர் தங்கள் தேவர்” என்றாள் ஆண்டாள்.
இதனால் “ஞானியருக்கு ஒப்போரில்லை இவ்வுலகு தன்னில்” என்றார் மணவாள மாமுனிகள்.

————

இதுவரை “ஓம்” என்ற பிரணவத்தின் கருத்தை
“அவ்வானவர் ”
குலம் ஒன்று”
“பலங்கொண்டு” என்ற மூன்று பாடல்களாலும் கூறி

அடுத்து “நம:” என்கிற பதத்தின் பொருளை
“கருமத்தால்”
“வழியாவது”
“உள்ளபடி உணரில்”
‘இல்லை இருவருக்கும்” என்ற நான்கு பாடால்களாலும் சொல்லிக்

கடைசியாக “நாராயணாய” என்னும் சொல்லின் பொருளை இப் பாடலால் கூறுகிறார்.

“நாராயணாய” என்னும் இச் சொல்லுக்குப் பொருளை
“நாராயணனுக்கு அடிமை செய்து வாழ்வதுவே பெரு வாழ்வு” என்று சொல்லப்படுகிறது.

நாராயணனான பரம்பொருளைக் கண்ணாரக் கண்டு இன்புற்று
அவ்வின்பம் தவிர வேறு ஒரு இன்பமில்லை என்றிருப்பதுவும்
அவனுக்குப் பணி செய்து வாழ்வதுவே லட்சியம் என்றிருப்பதுவும்,
அவனுக்குச் செய்யும் பணியின் முறைகளை விவரிப்பதுவும்,
நாராயணாய என்னும் பதத்தில் சொல்லப்படும் பொருட்களாகும்.

இக் கருத்தை இப் பாடல் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8-

பதவுரை:

வித்தம் – செல்வத்தினுடைய
இழவு – அழிவும்
இன்பம் – சுகமும்
துன்பம் – துக்கமும்
நோய் – நோய்களும்
வீகாலம் – மரண காலமும்
தத் தம் அவையே – தத் தமது வாழ்வினைப் படியே
தலை யளிக்கும் – பயன் தரும்
அத்தை – அதனால் அவற்றைப் பற்றிய சிந்தனையை
விடீர் – விட்டு விடுவீராக
இச்சியான் – இறை இன்பம் தவிர வேறு எதையும் விரும்பாதவன்
இச்சியாது – வேறு பயனைக் கருதாமல்
ஏத்த – அவனைத் துதி செய்ய
எழில் வானத்து – அழகிய வீட்டுலுகத்தில்
உச்சியான் – மேல் நிலத்தில் இருக்கும் இறைவனுக்கு
உச்சியான் ஆம் – தலையால் தாங்கத் தகுந்த பெருமை உடையவன் ஆவான்

“நாராயணாய” என்னும் பதத்திற்குக் கருத்துக் கூறுகையில் “
இளைய பெருமாளைப் போல இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறை” என்றும்”
அதை நித்யமாகப் பிரார்த்தித்தே பெற வேணும்” என்றும்
“உனக்கே நாம் ஆட் செய்ய வேணும்” என்னும்படி வேணும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது கைங்கர்யம் என்னும் லட்சியத்தை இராமாயணத்தில் இளைய பெருமாள் கடைப் பிடித்துக் காட்டினார்.
இராமனை உடன் பிறந்த வகைக் கருதாமல் தெய்வமாக எண்ணிப் பணிவிடைகள் செய்தான்.
இதைக் கம்பன் வாக்கில் காண்போம்.

“எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன் கழல் வைத்த போது அலால்
சிந்தை வெங் கொடுந்துயர் தீர்கிலேன் “என்பது இலக்குவன் மொழி.–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – பள்ளிப்படலம்-58)

அனைத்து உறவும் ராமனே என்றும்
அவனுக்குப் பணிவிடை செய்வதே தன கடமை என்ற குறிக்கோளுடன் இலக்குவன் இராமன் பின் சென்றான்.

“ஆகாதது அன்றால் உனக்கு அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போக உயிர்த்தாயர் நம்பூங்குழல் சீதை- என்றே
ஏகாய்; இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் ‘ என்றும்–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் – நகர் நீங்கு படலம் -146)

“பின்னும் பகர்வாள்,”மகனே!இவன் பின் செல்: தம்பி
என்னும்படி அன்று.அடியாரின் இவள செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல்
முன்னம் முடி” என்றனள் வார் விழி சோர நின்றாள்”–(கம்பராமாயணம் -அயோத்திய காண்டம் -நகர் நீங்கு படலம்- 147)

என்றும் அவன் தாய் சுமித்திரை கூறினால் என்பது கம்பனின் வாக்கு.

இதில் ‘அடியாரினின் ஏவல் செய்தி” என்று
அறிவுறுத்தியது குறிப்பிடித்தக்கது.

அவ்வறிவுரையின்படி அனைத்து உறவுகளையும் துறந்து விட்டு இராமன் பின் சென்று
பதினான்கு ஆண்டுகளும் பற்றும் வாழ்நாள் முழுவதும் அடிமையே செய்து வாழ்ந்தான்.
இதுவே ஒரு ஆன்மா அடைய வேண்டிய லட்சியமாகும்.
இவ்வடிமையை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும்.

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழான திருப்பாவையில் முடிந்த பொருளாக
“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று” என்று கூறப்பட்டுள்ளது.

’உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் “என்றார் பெரியாழ்வார்.

“ஒழிவில் காலமெல்லாம் உடனை மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்றார் நம்மாழ்வார்.

“ஆளும் பணியும் அடியேனை கொண்டான்”
“உனக்காகத் தொண்டுபட்ட நல்லேனை” என்று கூறினார் திருமங்கை ஆழ்வார்.

ஆகவே ஞானிகளான பெரியார்கள் இவ்வாறு இறைத்தொண்டையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டார்கள்.
இவர்களுக்கு இங்கு வாழ்ந்துவரும் நாட்களில் செல்வத்தால் வரும் லாபமும்
அதை இழத்தலால் வரும் துன்பங்களும் அவர்களுக்கு இல்லை.

”வேண்டேன் மனை வாழ்க்கையை” என்றும்
“கூரை சோறு இவை வேண்டுவதில்லை” என்றும்
“நீள் செல்வம் வேண்டாதான்” என்றும் ஆழ்வார்களால் துறக்கப் பட்டவைகள்.
எல்லாம் கண்ணன் என்பது அவர்கள் லட்சியம்.
அவர்களது லட்சியமான இறைத் தொண்டில் ஈடுபட்டுள்ள மனதை பணம் முதலியன வேதனைக்கு உள்ளாக்கும் அன்றோ.
அவற்றால் மனது கலங்காமல் இருந்தால் அன்றோ அடிமையைச் செவ்விதமாகச் செய்ய முடியும்.
இந்நிலையில் லட்சியவாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மேலே கூறுகிறார்.

வீதம் ராகம் – பணம் அதாவது தங்கம், வெள்ளி முதலியனவற்றில் ஆசை
இழவு – அவற்றின் அழிவு .அதாவது நிலையில்லாததால்–அவற்றிற்கு வரும் விநாசம்.

திருவள்ளுவரும்

“நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை” என்று இகழ்ந்து பேசினார்.

இன்பம் – இன்பம் தரும் துன்பம் தரும் பொருட்களால் கிடைக்கும் சுகம்
துன்பம் – துன்பம் தரும் பொருட்களின் சேர்க்கையால் வருகின்ற துக்கம்
நோய் – உடலைப் பற்றி வருகின்ற நோய்கள்
வீ காலம் – சரீரத்தினுடைய (உடல்) முடிவு காலம். (வீதல் – முடிதல்) இவை எல்லாவற்றையும்
தத்தம் அவையே – அதற்குக் காரணமான ஊழ்வினைகளே
தலை அளிக்கும் – பக்குவ காலத்தில் பலன் கொடுக்கும்.
பிறக்கும் பொழுது உடன் வந்ததான வினைகளின் பயன்களைத் துய்க்காமல் எவரும் தப்ப முடியாது அல்லவா.
திருவள்ளுவர் ஊழ் என்னும் ஓர் அதிகாரத்தில் கூறினார்.

ஆகூழாழ் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழாற் தோன்றும் மடி”

இதில் செல்வம் கிடைப்பதற்குக் காரணமான ஊழ்வினையால் முயற்சி உண்டாகும்.
அச் செல்வம் அழியும்போது அதற்குக் காரணமான ஊழ் வினையால் அழிவு உண்டாகும் என்றும்

“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை”

இதில் ஒருவன் எல்லா அறிவையும் பெற்றிருந்தாலும் கைப் பொருளை பறி கொடுக்கும் போது
அதற்குக் காரணமான ஊழ்வினை அவனை அந்த நேரத்தில் அறியாதவனாக்கி விடும்.
ஒருவன் அவ்வளவு அறியாதவனாக இருந்தாலும் பொருள் சேரும் காலம் வரும் போது
அவனுடைய அறியாமையை அகற்றிப் பொருள் சேர்வதற்குக் காரணமாகிற அறிவை விரிவு படுத்தும் என்றும்,
இவ்வாறே கல்வியறிவு பெருகுவதற்கும் சுருங்குவதற்கும் ஊழ் வினையே காரணம் என்றும்,
செல்வத்திற்கான ஊழ்வினையும் கல்விக்கான ஊழ்வினையும் வெவ்வேறாகும் என்றும்,
ஊழ்வினை நல்லது தீயதாகவும், தீயது நல்லதாகவும் மாறும் என்றும்,
இவ்வாறு ஊழ்வினையைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார் திருவள்ளுவர்.

ஆகவே வினைப்பயனால் வருவனவான நன்மை தீமைகளைப் பற்றி அறிவாளிகள் கவலை கொள்ளக் கூடாது
அத்தை விடீர்:
அவற்றில் மனம் வைக்க வேண்டாம் என்று மனதைத் தேற்றுவிக்கிறார்.

ஊழ் வினைக்குக் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் எவ்வாறு இறைத் தொண்டை செய்வார்கள்
என்பதைப் பற்றி மேல் தொடர் கூறுகிறது.

இச்சியான்:
செல்வம் முதலிய வேறு பயன்களில் ஒன்றையும் விரும்பாதவன்
(இத்தகையவனே இறைத் தொண்டுக்குத் தகுதியுடையவனாவான்.
“அடக்கரும் புலன்கள் இய்ந்தடக்கி ஆசையாமவை,
தொடக்கறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை” என்று இக்கருத்தைத் திருமழிசை ஆழ்வார் எடுத்துரைத்தார்.

இச்சியாதேத்த:
இறைவனைத் துதிப்பவர் அதற்குப் பயனாக வீடு பேற்றையோ,இறைத்தொண்டு முதலியவற்றையோ ஒன்றையும்
பயனாகக் கருதாமல் துதிப்பதையே பயனாகக் கருதித் துதிக்க வேண்டும் .
“பாவின் இன்னிசை பாடித் திரிவன்” என்று கூறியது போல துதிப்பவர்க்குப் பயன் வேறொன்றின்மையால்

தீவினையேன்,
வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாளெல்லாம் ,
கரந்துருவில் அம்மானை அஞ்ஞான்று பின் தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தாது அயர்த்து “(திருவந்தாதி)
இவற்றால் இறைவனை ஏத்துதல் கூறப்பட்டன.

இங்கு “ஏத்துதல்” என்று வாய்க்குச் சொன்ன பணி போன்று
மனத்தாலும், காயத்தாலும் (உடல்) செய்யும் பணிகட்கும் ஏற்பப் பொருள் கொள்க.
ஆக மனம் முதலிய முக்கரணங்களாலும் அடிமை செய்ய வேண்டும் என்பதாம்.

எழில் வானத்து உச்சியான் உச்சியானாம்:
வைகுண்ட மாநகர் என்று சொல்லப்படுகின்ற அழகிய திருநாட்டில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய
தலையால் தாங்கப் படுபவன் ஆவான்.

எழில் வானம் என்பது பரமபதத்தை. அது விண் தலை என்று சொல்லப்படும்.
அங்கிருக்கும் வைகுந்தநாதன் “விண் மீது இருப்பாய்” என்று அழைக்கப்படுவான்.
அத்தகையவன் இங்கு எழில் வானத்து உச்சியான் என்று சொல்லப்படுகிறான்.
எழில் வானம் என்பது வேதாந்தத்தில் “பரமாகாசம்” என்ற சொல்லால் சொல்லப்படும் மோட்ச பூமி.
அதில் உயர்ந்த நிலம். அவ்வானத்து உச்சி.
அதிலிருப்பவன் உச்சியான்.
எழில் வானத்து உச்சியான் அவ் வைகுண்ட நாதன்.
அவனுடைய தலையால் தாங்கப்படுபவன் தொண்டன்.
அத் தொண்டனை “உச்சியானுக்கு உச்சியான்” என்று
இங்கு நான்காம் வேற்றுமைத் தொகையில் “உச்சியான் உச்சியான்” என்று கூறப்பட்டது.

இறைத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்கள்
செல்வத்தின் லாப நஷ்டங்கள்,இன்ப துன்பங்கள், நோய்,மரணம் இவற்றை அந்தந்த வினைப் பயனால் வருகின்றன
என்று எண்ணி அவற்றைப் பற்றி சிறிதும் நினையாமல் அவற்றை உதறி விடுவார்கள்.
அதனால் அவர்கள் மனம் தூயதாய் இருக்கும். அத்தூய மனத்தில் வேறு பயனை எதையும் விரும்ப மாட்டார்கள்
வேறு பயனை எதையும் விரும்பாமல் துதிப்பதையே பயனாகக் கொண்டு துதிப்பார்கள்.
இத்தகைய அடியார்கள் அழகிய பரம பதத்திற்குச் சென்று
அங்கு பரமபதநாதனுடைய தலையால் தாங்கப்படுவர் ஆவார் என்பது கருத்து.

இதனால் தொண்டு செய்பவர் ஊழ்வினையால் வரும் நல்லன தீயனவற்றில் மனம் வைக்காமலும்
தொண்டையே பயனாகக் கருதித் தொண்டு செய்ய வேணும் என்றும் சொல்லப்படுகிறது.

துதிப்பதற்காகவே இருக்க வேண்டும், வேறு பயன் இருக்கலாகாது என்பது தான் பொருள் .
இறைவனைத் துதிப்பது, இறைத் தொண்டாகும்.
மனம் மொழி மெய் என்னும் முக்காரணங்களாலும் செய்யும் தொண்டுகளில் துதித்தல் வாய்மொழித் தொண்டாகும்.
வாய்க்கு இதுவே பயனாக இருக்க வேண்டும்.

செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் திருக்குறள் தொடரில்
“வாய்ச்சொல்” என்பதற்கு “வாய்” என வேண்டாது கூறினார்.
“தீயசொல் பயிலாமை என்பது அறிவித்தற்கு “என்று பொருள் கூறியது காண்க.

இதற்கு உதாரணமாக நாலாயிர திவ்யப்ப்ரபந்தப் பாடல்கள் காணலாம்.

வாய் அவனையல்லது வாழ்த்தாது – 209
நாக்கு நின்னையல்லால் அறியாது – 433
எத்துகின்றோம் நாத்தழும்ப – 1863
நாத்தழும்ப நாராயணா என்றழைத்து – 561
இரவு நண்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ – 2954
பேசுமின் கூசமின்றி – 3681
வாயினால் பாடி – 478

————-

கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி
‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால்
‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும்
திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன.

இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் ,
அதற்குத் தகுந்தபடி அவரடி பணிந்து அவருக்குப் பணிவிடைகள் முதலியன செய்ய வேண்டும் என்றும்
சாஸ்திரம் கூறியபடி நடந்து கொள்ள வேணும் என்றும் சொல்லப்படுகிறது.

அவ்வாறு இல்லாமல் ஆசார்யன் நம்மைப் போல் “அவரும் ஒரு மனிதரே” என்று நினைத்து பழிப்பவர்களுக்கும்
ஆச்சர்யனின் பெருமை யறிந்து பெருமைக்குத் தக்கபடி பணிந்து பணிவிடைகள் செய்பவர்களுக்கும்
உண்டான வேறுபாடுகளும் எடுத்துரைக்கப் படுகின்றன.
இதனால் ஆச்சர்யனின் சிறப்புக் கூறப்படுவதாயிற்று.

தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கி யிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-

பதவுரை:

தாளிணையை வைத்த – (தன் அறியாமை நீங்கும்படி) தம்முடைய பாதங்களை தன் முடியில் வைத்து அருளின
அவரை – அவ்வாச்சர்யனை
தத் தம் இறையின் – “நம்முடைய கடவுள்” என்று அனைவரும் போற்றக்கூடிய
வடிவு என்று – கடவுளின் திருவுருவம் என்று (வணங்கி இருக்க வேண்டும்)
வணங்கியிரா – இவ்வாறு முறைப்படி வணங்கிப் பணியாத
பித்தராய் – உண்மை அறியாதவராய்
நிந்திப்பார்க்கு – மனிதனாகக் கருதியிருப்பார்க்கு
ஏறா நீள் நிரயம் – கரையேறுவதற்கு அரிதான ஆழமான நரகம் தான்
உண்டு – கிடைக்கும்
நீதியால் – முறை தவறாமல்
வந்திப்பார்க்கு – பணிந்திருப்பார்க்கு
இழியாவான் – மறு பிறவி இல்லாத
வான் உண்டு – வைகுந்த நாடு கிடைக்கும்

தத் தம் இறையின் வடிவு என்று:
“தம் தம்” என்கிற சொல் ஒன்று வல் ஒற்றாகத் திரிந்து “தத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது.
அவரவர்களுடைய கடவுளின் உருவம் என்று பொருள்.
அதாவது
நாராயணனாகிற கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாயிருத்தலால் அவரவர் தாம் தாம் வணங்கும் பொழுது
“நம்முடைய கடவுள்” என்று உறவு சொல்லிப் பற்றலாம்.

இதனால்
நாராயணனாகிற கடவுள் அனைவருக்கும் தலைவனாவான் என்றும்
அவனுடைய தோற்றம் மனிதத் தோற்றத்தில் குருவாக வருகிறான் என்றும்,
அறிவொளியைக் கொடுக்கும் கடவுளே என்றும்
சாஸ்திரங்கள் ஆசார்யனைப் பகவானுடைய தோற்றமாகக் கூறியுள்ளன என்றும் அறிய வேண்டும்.

ஆகவே அவரவர்கள் தம் தம் ஆசார்யனைக் கடவுளின் தோற்றமாகக் கருத வேண்டும் என்பதாம்.

தாளிணையை வைத்தவவரை:
“வில்லார் மணி கொழிக்கும்” என்ற ஞான ஸாரம் 38வது பாடலில்
“மருளாம் இருளோட மத்தகத்துத் தந்தாள் அருளாலே வைத்த அவர்” என்று கூறிய வண்ணம்
தங்களுடைய அறியாமையாகிற இருள் அகலும்படி தங்கள் முடியில் பாதங்கள் இரண்டையும்
அருள் கூர்ந்து அருள் செய்த ஆசார்யன் என்று பொருள்.

வணங்கியிராப் பித்தராய்:
அவருடைய அடி பணிந்து அவரைப் பின் சென்று இராத அறிவிலிகளாய்
அதாவது
அடி பணியாதது மட்டுமில்லாமல் அவரை மனிதனாக எண்ணி இருப்பதுவே பழிப்பாகும்.

ஆச்சர்யனுடைய திருவடிகள் அறியாமையை நீக்கும் என்பதற்கு உதாரணம்.
“சாயைபோல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே”

“எம்பாரைச் சிலர் இப்பதத்துக்குப் பொருளென்?” என்று கேட்க,
நான் உடையவர் ஸ்ரீ பாதத்திலே இது கேட்டிலேன்.
ஆகிலும் நீங்கள் கேட்ட அர்த்தம் போராதென்ன வொண்ணாது”.
இப்போதே கேட்டு உங்களுக்குச் சொல்ல வொண்ணாதபடி உடையவரும் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்தேற எழுந்தருளினார்.
ஆகிலும் உங்களுக்கு இப்போதே சொன்னேனாக வேணும் என்று உடையவர் திருவடி நிலைகளை எடுத்துத்
தம் திருமுடியிலே வைத்துக் கொண்டு இப்போது உடையவர் எனக்கருளிச் செய்தார், கேட்கலாகாதோ’ என்று
‘பாடவல்லார்-சாயை போல தாமுமணுக்கர்களே ‘ என்றருளிச் செய்தார்.

குருவை மனிதனாக எண்ணிப் பழிப்பவர்களுக்குக் கிடைக்கும்
பயன் கூறப்படுகிறது மேல் தொடரால்.

ஏறாநீணிரயம் உண்டு:
(ஏறா – கரை ஏற முடியாத, நீள் -நீண்டதான, நிரயம்- நரகம் உண்டு-கிடைக்கும்)
அதாவது
குருவை வார்த்தைகளாலே குறைவாகப் பேசுவதல்லாமல் மனிதனாக நினைப்பதுவே அவனை நிந்திப்பதாகும்.
இப்படி மனிதனாக நினைப்பார்க்கு ஒரு போதும் கரையேற முடியாத ஆழமான நரகம் என்பதாம்.
எமன் தண்டனைக்குட்பட்ட நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டது. இது என்று குறிக்கப்படுகிறது.
எமன் தண்டனையான நரகத்திற்கு விடுதலை “நரகமே சுவர்க்கமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.
இங்கு அவ்வாறில்லாமல் விடியா வெந்நரகம் என்று சொன்னபடி தொடர்ச்சியாய் இருந்துவரும்.

இதனால்
ஆசார்யனை மனிதனாக என்னும் பெரும் பாவிகள் எக் காலத்திலும் உய்ய மாட்டார்கள்.
உய்வதற்குத் தகுதியையும் பெறமாட்டார்கள்.
இப்பிறவிப் பெருங்கடலில் மாறி மாறிச் சுழன்று கொண்டே வருவார்கள் என்பதாம்.

இதைத் திருவள்ளுவரும் “உறங்குவது போலும் சாக்காடு-உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று
உறங்குவதும் விழித்து எழுவதும் போறதாக்கும் பிறப்பிறப்பு என்றார்.

நீதியால் வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்:
கீழ்க்கூறிய வண்ணம் “தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால்
மானிடர்க்க இந்நிலத்தே தோன்றுதலால்”என்று கூறியபடி
ஆசார்யனைக் கடவுள் தோற்றமாக நம்பிக்கை வைத்து சாஸ்திர முறைப்படி பணிந்து
பின் செல்வர்களுக்கு மீண்டும் பிறப்பில்லாத வைகுந்தப்பதவி கிடைக்கும் என்பதாம்.

(நீதி) ஆசார்யனை வழிபடும் முறை.
வந்தித்தல்-வணங்குதல்.
(இழியாவன்)-மீண்டு பிறப்பில்லாத வைகுந்தம் மீளா நெறி என்பர்.

இதனால்
ஆசார்யனுடைய சிறப்புக்களை நன்றாக அறிந்து அவன் திருவடிகளில் அவனைத் தவிர வேறு ஒன்றுமறியாதவராய்
“தேவு மற்று அறியேன்” என்று மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி இருந்தது போல குருவைப் பணிந்து வாழும்
பெரியோர்கள் (நித்தியர்கள்) வாழுமிடமான திருநாட்டிற்குச் சென்று அங்குள்ளவரோடு கலந்து
அவர்களைப் போல இறையின்பம் துய்க்கப் பெறுவார்கள் என்பதாம்.

இதனால் குருவைத் தெய்வமாக மதித்து குருபக்தி யுடையவர்களான அடியார்கள் மீண்டும்
பிறப்பில்லாத வீடு பேற்றை அடைவார்கள் என்பது கருத்து.

————–

ஆசார்யன் பகவானுடைய அம்சமாக இருப்பவன் என்று கீழ்ச் சொல்லப்பட்டது.
“திருமாமகள் கொழுநன்தானே குருவாகி” என்ற ஞான சாரம் 38ம் பாடலில் கூறப்பட்டதை இங்கு நினைவு கூர்க.

இவ்வாறு ஆசார்யன் பெருமை சொல்லப்பட்டதை அடுத்து
இவ் வாச்சார்யன் செய்யும் பேருதவியின் பெருமையை உலகோர் எல்லாம் அறியும்படி
மிகத் தெளிவாகக் கூறி முடிக்கப்படுகிறது.

இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள
முறையும் முறையே மொழியும் –மறையையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
உணர்த்துவார் உண்டான போது –10-

பதவுரை:

இறையும் – “அ”காரப் பொருளான இறைவனையும்
உயிரும் – “ம”காரப் பொருளான ஆன்மாவையும்
இருவர்க்குமுள்ள முறையும் – இவ்விருவர்க்கும் உண்டான (நான்காம் வேற்றுமை உறுப்பால் சொல்லப்பட்ட)
இறைமை அடிமை என்னும் உறவு முறையையும்
முறையே மொழியும் – இவ்வுறவையே சிறப்பாக உணர்த்தும்
மறையும் – வேதாசாரமான திருமந்திரத்தையும்
உணர்த்துவார் இல்லா நாள் – உள்ளது உள்ளபடி அறிவிப்பார் இல்லாத காலத்தில்
ஒன்றல்ல – மேலே சொன்ன அனைத்தும் ஒரு பொருளாகத் தோன்றுவதில்லை (இருந்தும் இல்லாதது போல் இருப்பான்)
உணர்த்துவார் – மேற்கூறியபடி திருமந்திரத்தின் பொருளை
உண்டானபோது – ஆசார்யன் அறிவிக்கும் போது
ஆன – ஆகின்ற (இருப்பனவாக)

இந்நூல் முதல் பாடலில் சொல்லப்பட்ட “அ’ காரத்தின் பொருளான நாராயணான இறைவனும்
(உயிரும்) மேற்படி பாடலில் “மவ்வானவர்க்கு” என்று சொல்லப்பட்டதன் பொருளான ஆன்மாவும்
“இருவருக்குமுள்ள முறையும்” இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உண்டான உறவு முறையும்.
இது “அ” காரத்தினுடைய நாலாவது வேற்றுமை உருபின் பொருளாகும்.
அதாவது,
“அகாரத்திற்கு மகாரம்” “தகப்பனுக்கு மகன்” என்பது போல் சொல்லப்படுகிறது.
இறைவனுக்கு ஆன்மா என்று உறவு முறையைத் தெரிவிக்கிறது.

“நான்காவதற்கு உருபாகும் கு வ்வேகோடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல்
பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது பொருளே”–என்ற நன்னூல் இலக்கண நூலில்
நான்காம் வேற்றுமை உருபான “கு” உருபினுடைய பொருளை விவரிக்கையில்
‘முறை” என்று உறவு முறையைச் சொல்லி இருக்கிறது.
ஆகவே அவ் விலக்கணப்படி “அவ்வானவர்க்கு மவ்வானவர்” என்ற தொடரில் உறவு முறை காட்டப்படுகிறது.

முறையே மொழியும் மறையும்:
கீழ்ச் சொன்ன உறவு முறையையே முறைப்படி சொல்லுகின்ற வேத முடிவான திருமந்திரம் என்று பொருள்.
ஞான சாரம் முப்பத்தொன்றாம் (31ம் பாடலில்)
“வேதம் ஒரு நான்கின் உட் பொதிந்த மெய்ப் பொருளும்” என்ற இடத்தில்
வேதத்தின் உள்ளே சேமித்து வைக்கப்பட்டது என்று
இத்திருமந்திரம் வேதத்தில் விழுமியதாகச் சொல்லப்பட்டது. இத்தகைய திருமந்திரமும்.

உணர்த்துவார் இல்லா நாள் ஒன்றல்ல:
மேற்கூறிய இறைவனும் ஆன்மாவும் இருவருக்குமுள்ள முறைகளும் என்றைக்கும் இருந்து கொண்டிருந்தாலும்
இவற்றை விளக்கி எடுத்துச் சொல்லும் பொழுது தான் இவையெல்லாம் இருக்கின்றனவாக ஆகின்றன.
இவற்றை எடுத்துச் சொல்லாத பொது இருந்தும் இல்லாதன போல் ஆகின்றன.

ஆன உணர்த்துவார் உண்டான போது:
“ஆன” என்பது வினைச் சொல். இவையெல்லாம் அறிவிப்பார் உண்டான காலத்தில் இருக்கின்றனவாக ஆகின்றன.
இவற்றை உணர்த்துவார் ஆர் எனில்? அவரே ஆசார்யர் ஆவார்.

அதுதான் இந்நூல் முதற் பாடலில் “உவ்வானவர் உரைத்தார்” என்று கூறப்பட்டது.
இதுவே ஆசார்யன் செய்யும் பேருதவியாகும்.

இதையே “அறியாதன அறிவித்த அத்தா” என்றார் நம்மாழ்வார்.
“பீதக வாடிப் பிரானார் பிரம குருவாகி வந்து” என்றார் பெரியாழ்வார்.

இவ்வாறு ஆசார்ய வைபவம் பேசப்பட்டது.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் – பேச்சு- சொல் – வார்த்தை -பத பிரயோகங்கள் –

June 14, 2021

ஸ்ரீ நம்பிள்ளை திரு அவதாரம் -1147
ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் திரு அவதாரம் –1127
ஸ்ரீ எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்து அருளியது –1137
குரு பரம்பரா பிரபாவம் எம்பெருமானாரைப் பற்றியே மிக்கு -முன்னோர் சொல்லக்கேட்டே ஏடு படுத்தி இருக்க வேண்டும் –

——————

பல்லாண்டென்று பவித்திரனைப் பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்–ஸ்ரீ திருப்பல்லாண்டு-12-

செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே–-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி-1-3-10-

சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலி யிடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்
நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்–1-4-8-

மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனையும் சொல்ல வல்ல வர்க்கு இட ரில்லையே–1-4-10-

புதுவைப் பட்ட னுரைத்த தமிழ் இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் உலகில்
எண் திசையும் புகழ் மிக்கு இன்பமது எய்துவரே-1-5-11-

தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது
போருத்து வந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி–1-6-6-தந்தை–(எல்லார்க்கும்) பிதாவாகிய உனது சொல்

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக வென்று ஆய்ச்சி யுரைத்தன-1-8-11-

ஆய்ச்சி யன்றாழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த் தடந் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே–1-9-10-

விட்டு சித்தன் விரித்த சொல்லார்ந்த அப் பூச்சிப் பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே–2-1-10-

வாசுதேவா தாயர் வாய்ச் சொல் தருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா–2-2-5-

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை யெய்துவித்த இருடீகேசா முலை யுணாயே–2-2-6-

திரி இட்டுச் சொல்லுகேன் மெய்யே –2-3-8—

மெய் என்று சொல்லுவார் சொல்லக் கருதித் தொடுப் புண்டாய் வெண்ணையை என்று
கையைப் பிடித்து கரை யுரலோடே என்னைக் காணவே கட்டிற்று இலையே –2-3-9-

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடுப்பை நோவ –2-3-12-

மகரக் குழை இட வேண்டி சீரால் யசோதை திருமாலைச் சொன்ன சொல் –2-3-13-

செப்பிள மென் முலையார்கள் சிறு புறம் பேசிச் சிரிப்பர் –2-4-5–

பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனமாட நீ வாராய் –2-4-7-

உற்றன பேசி நீ ஓடித் திரியாதே –வந்து குழல் வாராய் –2-5-5-

குழல் வாராய் என்ற ஆய்ச்சி சொல் விண் தோய் மதிள் வில்லி புத்தூர்க் கோன் பட்டன் சொல் –2- 5–10-

ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் –2-6-4-

நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் –2-8-2–

ஞானச் சுடரே யுன் மேனி சொல்லார வாழ்த்தி நின்று ஏத்திச் சொப்படக் காப்பிட வாராய் –2-8-5-

கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு–2-8-6-

அசல் அகத்தார் பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் –2-9-2-

உண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம்புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே -2 9-4 – –

மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்–2-9-5-

ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்–2-9-6-

தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- –

தாயவள் சொல்லிய சொல்லைத் தண் புதுவைப் பட்டன் சொன்ன –3-8-10-

கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன –3-9-4-

அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான் –3-10-8-

அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8-

கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்–4-2-11-

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று இப்படி அவன் ஸ்வபாவங்களுக்கு
தோற்று பேசும் அவர்களுக்கு அடியார் ஆனவர்கள் –
இப்படி பேசுபவர்கள் அன்றே நமக்கு உத்தேயம்
இவர்கள் வாசி அறிந்து பேசுவதே -என்று அவர்கள் ஸ்வபாவத்துக்கு தோற்று அடிமையாய்
இருக்கும் அவர்களே நமக்கு உத்தேச்யர் -என்கை
இவர்களுக்கு உத்தேச்யர் ஆவது எவ்வளவே என்னில்
எம் தம்மை விற்கவும் பெறுவார்களே -என்கிறார் –
இவர்களுக்கு சேஷம் ஆகுகையே புருஷார்த்தம் என்று இருக்கும் எங்களை –
தங்கள் இஷ்ட விநியோகத்துக்கு உறுப்பாக விற்றுக் கொள்ளவும் உரியவர்கள் –
தத் பக்தி நிக்ன மனசாம் க்ரைய விக்ரய அர்ஹா -என்னக் கடவது -இறே

கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

அவர்கள் ஏற்றத்துக்கு பாசுரம் இடப் போகாது–அவர் -என்னும் இத்தனை இறே
அவர்கள் பேரும் பேற்றை நம்மால் பேசப் போகாது-
நம்மால் பேசித் தலைக் கட்டப் போகாது- கொடுக்கிறவன் தான் அறியும் இத்தனை
அதாவது
இதர சங்கம் குலைய பெறுவதாம்
சரம காலத்தில் அவர்களை அழையாது ஒழிய பெறுவதாம்
நம்முடைய பேச்சுக்களை சொல்லப் பெறுவதாம்
இது என்ன ஏற்றம் இது என்ன ஏற்றம் -என்று இதன் ஏற்றம் அறிந்து ஈடுபடுவான் அவன் இறே

—–

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்டம் என்னும் கடிநகரே -4 -7-1 –

ஏதேனும் ஓர் இடத்தில் ஸ்நானம் பண்ணுமவர்கள் அவகாஹிக்கிற ஜலத்தை
கங்கையாக நினைத்து -கங்கை கங்கை -என்கிற சப்தத்தைச் சொல்ல -இந்த வாசகத்தாலே –
அவர்களுடைய அவஸ்ய அனுபோக்தவ்யமான பாபத்தை போக்க வல்ல –
இப்படி இருந்துள்ள கங்கையினுடைய கரையில் விசேஷஜ்ஞர் எல்லாரும் கை எடுத்து தொழும் படியாய் நின்ற
கண்டம் என்கிற சிறப்பை உடைத்தான நகரம்
இத்தால்
ப்ராப்ய பூதனான ஸ்ரீ புருஷோத்தமனிலும் காட்டிலும் அவன் வர்த்திக்கிற தேசமே
சரம அவதி ஆகையாலே -அத் தேசத்தை வர்ணித்துக் கொண்டு அனுபவிக்கிறார்-

———-

தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8- 6-

ஹர்ஷ பிரகர்ஷத்தாலே -யாழ் ஓசை போல் இருக்கிற இனிய இசையை உடைய வண்டின் உடைய திரள் ஆனவை
பாடுகைக்கு அடிக் கொண்டு தென தென என்று ஆளத்தி வையா நிற்கும் அரங்கமே

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே- 4-10-1-

அக்காலத்துக்கு உடலாக -கரண களேபரங்கள் இளைப்பற்று தெளிந்து இருக்கிற
இப்போதே சொல்லி வைத்தேன் -இப்படி நீர் சொல்லி வைத்தால் இத்தை நினைத்து இருந்து
உம்மை ரஷிக்க வேண்டும் நிர்பந்தம் எது நமக்கு என்ன – அரங்கத்து அரவணைப் பள்ளியானே-

நமன் தமர்கள் போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4- 10-2 –

சொல்லலாம் போதே உன்னாமம் எல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொள் என்றும்
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10- 3-

——–

வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1- 1-

உன் போக்யதைக்கு தோற்று ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடக்கமானார் சொல்லும் பாசுரத்தை –
இதர விஷயங்களின் போக்யதைக்கு தோற்று ஸ்தோத்ரம் பண்ணின நாக்கால் சொல்ல மாட்டேன்
அது -என் வசம் அன்று –உன் வசம் –நாக்கு நின்னை அல்லால் அறியாது
உன் முனிவுக்கு ஆற்றலாம் -என் நாவுக்கு ஆற்றப் போகாது
நான் வேண்டிற்று சொன்னதையும் -குணமாக்கி கொள்ள வேணும் –
ரஷகத்துவதுக்கு கொடி கட்டி அன்றோ கிடக்கிறது என்கிறார் –
உடையவன் ஆகையாலே எல்லாம் பொறுக்க வேணும்-

—-

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே-
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்-5-1-3-

புன்மை -பிரயோஜனத்தை ஆசைப் படுகை நன்மை -மோஷத்தை ஆசைப் படுகை –
சாஸ்த்ரோக்தமான நிரந்தர ஸம்ருத்தி பண்ண அறியேன்
ஓவாதே நமோ நாரணா என்பன் –
பிரயோஜனம் பெற்றவாறே குலையும் ஐஸ்வர்ய காமற்கு
அங்கி கைப் பட்டவாறே குலையும் உபாசகர்க்கு
இது தானே பிரயோஜனம் ஆகையாலே -பிரபன்னர்க்கு குலையாது
இது மாறினால் எனக்கு சத்தை குலையும் –

——

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–ஸ்ரீ திருப்பாவை-.5-

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே–7-

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.–9-

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்–14-

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.–15-

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்–19-

——

மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே -நாச்சியார் திரு மொழி–1-5–

நானும் அறியாது இருக்க -அவனும் அறியாது இருக்க -மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம்
பரிமாறும் ஆகில்-அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —உனக்கே நாம் ஆட்செய்வோம் –என்ற உறுதி உள்ள இவளுக்கு –
ராவணன் மாயா சிரசைக் காட்டின போது இதர ஸ்திரீகளோ பாதி தரித்து இருந்ததுக்கு கருத்து என் -என்று ஜீயரைக் கேட்க –
இவளுடைய சத்தைக்கு ஹேது பெருமாள் சத்தை யாய்த்து –
அதற்கு தைவம் அறிய ஒரு குறை இல்லாமையாலே தரித்து இருந்தாள்-
இவள் சத்தைக்கு ஹேது பிரதிபத்தி அபிரதிபத்திகள் இல்லை அத்தலையில் சத்தை யாய்த்து -என்று அருளி செய்வர் –

—–

பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

நான் சொல்வது ஓன்று உண்டு -எனக்கு ஸ்வாமி யானவனே –
என் சத்தை தலைமை பெருவதொரு பிரகாரம் –
விரோதி நிரசன சீலனாய் -கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிறவனை
நான் ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணு கிடாய்
முலையாலே அணைக்க வென்றே தான் ஆசைப் பட்டது -முதல் அடியே பிடித்து அடிமை செய்யத் தேடுகிறாள் —
முதலில் இருந்து -முதலான திருவடிகளையே அடைந்து கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநு ரூபமான பரம புருஷார்த்தம் –

——-

பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ–2-4-

இவர்கள் தன் வடிவிலே தோற்று ஈடுபட்டமை தோற்ற வார்த்தை சொன்னவாறே
அதுவே அவகாசமாக அடியேன் குடியேன் என்றால் போலே சில தாழ்வுகள் சொல்வது
விரல் கவ்வுவதாய்க் கொண்டு சிலவற்றைச் செய்யப் புக்கான்-அதிலே துவக்குண்டு அறிவு கெட்டு
உன் தாழ்ந்த பேச்சுக்களும் வியாபாரங்களும் எங்களைப் பிச்சேற்றி அறிவு கெடுக்க
உன் முகம் அம்மான் பொடியோ -என்கிறார்கள்

———–

பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை
யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் ஒதமா கடல் வண்ணா —–2-7-

சில வார்த்தைகளைச் சொல்லுகிறான் -சொல்லப் புக்க வார்த்தையினுடைய பலன் -வேறு ஒன்றினுடைய
பலத்தைப் பலிப்பதாக சொல்லத் தொடங்கினான் -இரு பொருள் பட –
நீ சொல்லுகிற வற்றினுடைய கருத்து அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு இத்தால் பிரயோஜனம் உள்ளது
எங்களோடு சொன்னால் என்ன பிரயோஜனம் உண்டு –
வார்த்தை வாசி அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
அவர்கள் ஒன்றுக்கு பத்தாக மர்மத்தில் சொல்லுவார்களே -அது உனக்கு மிகவும் இனிதாய் இருக்கும் இறே
தண்ணீர் -என்றால் தண்ணீரே கொண்டு வரும்படி பாலைகளாய் இருக்கிற எங்களை நெருக்கினால் உனக்கு என்ன பலம் உண்டு –
இவர்கள் இப்படி தங்கள் ஈடுபாடு தோற்ற-நலிவு பட்டு தோற்ற – வார்த்தை சொன்னவாறே
வடிவு இட்டு மாறினால் போலே இரட்டித்தது-ஒதமா கடல் வண்ணா —

———-

எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –2-9-

உங்களுக்கு இது சால அசஹ்யமாய் இருந்ததோ -நம்மோடு அணைகை பொல்லாததோ -எத்தனையேனும் யோகிகளும்
நம் உடம்புடன் அணைய அன்றோ ஆசைப் படுவது -உங்களுக்குப் பொல்லாததோ -என்ன –
எங்களுக்கும் அழகிது -ஆனாலும் இந்தப் பக்கம் நின்றவர் -என் சொல்லார் – அவர்கள் தோற்றிற்றுச் சொல்லார்களோ –
இத்தால் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்கிறது –
ஆண் பெண்ணாய் வார்த்தை-ஒரு நான்று தடி பிணக்கே -திருவாய் மொழி -6-2-7- என்றும்
பந்தும் கழலும் தந்து போகு நம்பி -திருவாய்மொழி -6-2-1–என்றும் –
என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திருமொழி -6-8- என்றும் வன்மையுடன் சொல்வது போல்வன சொல்லிற்றாகை அன்றிக்கே
பெண் தனக்கே -அதுக்கு மேலே -ஒரு மென்மை பிறந்து வார்த்தை சொல்லுகிறது என்னும் இடம் தோற்றி இருக்கிறபடி காணும் -என்று
நம் பிள்ளை தாமும் வித்தராய் அருளிச் செய்து அருளின வார்த்தை –
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் -என்று தனக்கு சம்ச்லேஷத்தில் உண்டான இசைவை மார்த்தவம் தோற்றச் சொல்லுவதே -என்றபடி –

——

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே––2-10-

எல்லாரும் திரளும் இடத்தில்
மறைக்க வேண்டுமவை மறைக்கை அறியாதே பரியட்டங்களை இட்டு வைத்து -ஸ்வைரமாக விளையாடுகிற பருவம்
நிரம்பாத இடைப் பெண்கள் உடைய நிரம்பா மென் சொல்லை –
வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –
திரு மகளுடைய -பகவத் அனுபவம் -வாச க்ரம வர்த்தித்வாத் -வழிந்து புறப்பட்ட சொல்லை அப்யசிக்க வல்லவர்கள் –

———

சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்–3-8-

வாராய் -நீயும் நாங்களுமான பரிமாற்றம் உருவச் செல்ல வேணும் என்று இங்கன் சொல்லிப் போருவது உண்டு –
அதுக்கு உடல் அல்ல கிடாய் நீ இப்போது செய்கிறவை –
இவை ரஷை பெற்று போருவது ஓன்று அல்ல -இவ்வளவிலே தலைக் கட்டும் கிடாய் என்ன -இது ஆர் தான் சொன்னார் என்றான்
நாம் இது சொன்னோம் -என்றார்கள் –
அத்தைக் கேட்டு பயந்தது போலே நடித்து -ஆகில் இவ்வாச்சார்யா வசனம் அதி லங்கிக்கல் ஆகாது -ஒக்கும் ஒக்கும் –
உங்கள் வார்த்தை அன்றோ -என்றான் -அப்படி அல்ல காண் –
பிரதிபத்தி பண்ணாதார்க்கு குற்றத்தாலே வந்ததாம் அத்தனை கிடாய் இனி மேல் வரும் அநர்த்தம்-என்றார்கள் –
ஓம் இந்த குருகுல வசநாதி லங்கநம் பண்ணின நான் புக்க லோகத்திலே புகுகிறேன் என்று அவற்றில்-
திருவரைக்குத் தகுதியாய் இருப்பன சில பரியட்டங்களை திருவரையிலே சாத்தி -சேஷித்த வற்றை குருந்திலே இட்டு வைத்து
கண்டி கோளே இவை நம் சௌகுமார்யத்துக்கு சேர்ந்து இருந்த படி -என்ன
அழகியதாய் இருந்தது
நாங்கள் தான் அவற்றைத் தரச் சொன்னோமோ மேன்மை இல்லாத மரத்திலே கிடக்கிற வற்றைத் தா -என்கிறார்கள்

——-

குயிலே பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்–5-1-

ஒரு கால் சொல்லி விடுகை அன்றிக்கே பலகாலும் இருந்து ஆனை இடர்பட்ட மடுவின் கரையிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்தால் போலே விரைந்து வந்து
என்னோடு கலந்து போகிற சமயத்தில் அணைத்து ஸ்மிதம் பண்ணி வரும் அளவும் ஜீவித்து இருக்கும்படி
விளை நீர் அடைத்து போன போதை செவ்வியோடும்
அதரத்தில் பழுப்போடும் வந்து அணைக்கும் படியாக கூவப் பாராய் -என்கிறாள்

——–

குயிலே மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

அருகே இருந்து நிரம்பா மென் சொற்களைச் சொல்லி விலாச சேஷ்டிதங்களைப் பண்ணாதே
ஸ்ரீ மிதிலையில் புறச் சோலையிலே பிராட்டியைக் கைப் பிடிக்கைக்காக வந்து விட்டுக் கொண்டு இருந்தால் போலே
எனக்காக திரு மலையிலே இருந்தான் – நாலடியும் வரும்படியாக நீ கூவ வல்லையே –
பரமபதத்தை விட்டு திருமலையிலே வந்து நிற்கிற நிலை தன்னுடைய ஸ்வயம்வரத்துக்காக-என்று இருக்கிறாள்

——–

காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-

தன் வடிவைக் காட்டி என்னை அனந்யார்ஹம் ஆக்கினவன் வரக் கூவாய் -என்கிறாள் –
நல்ல அங்கக் காரனாய் இருந்தான் -அவன் வரும்படி கூவு -அழகிய அங்கங்களை உடைய சூரன் என்றபடி

———

குயிலே பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

பிறர் நோவு பட பொறுக்க மாட்டாதவன் நெஞ்சு திருத்த வேண்டா
நீ சென்று கிணுக்க அமையும் காண் அவன் வருகைக்கு -என்கிறாள் –
சிறிது உணர்த்தினாயாகில் -என்றபடி -அல்பம் ஸூ சிப்பிக்க அமையும் –

——-

இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

கார்யம் -கூவுகை -அல்பம் -பேறு அதிகம் -சம்ச்லேஷம் நித்யமாய் நிரதிவகமாய் இருக்குமே –
இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு –பேறு எனக்குக் கைப்படும் –
எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் —
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே –வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய் –

——-

இளங்குயிலே என் தத்துவனை வரக் கூகிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே –5-6-

எனக்கு சத்தா ஹேது வானவன் வரும்படி கூவ வல்லையாகில் –
இது கூவி அழைக்க வேண்டும்படி அவன் வரவு தாழ்க்கச் செய்தேயும் தன் சத்தை அவன் என்று இருக்கிறாள் காணும்

——-

அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி–5-7-

எப்போதும் கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87- என்கிறபடியே வினை உண்டான போதாக தேட ஒண்ணாத படி
ஆஸ்ரித ரஷணத்துக்காக எப்போதும் தரித்துக் கொண்டு இருக்கிறவன் வரும்படி கூவுதியாகில்
வாசா தர்ம மவாப் நுஹி -சுத்தர 39-10-என் சத்தை பெறுகிற்று உனக்கு ஒரு உக்தியே நேர வேண்டுவது
ஒரு வாய்ச் சொல்லாலே தண்ணீர் -ஆறி இராதே இத்தனையும் செய் பந்தலாம் –

———-

சிறு குயிலே திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே–5-8-

நீ அத்தலையிலே சென்று அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
நம் குற்றங்களைப் பொறுப்பித்து பதறி நடந்து வரப் பண்ணுவார் அருகே யுண்டு

——

குயிலே குறிக் கொண்டிது நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-

குயிலே நீ இச் சோலையில் இருந்து ஜீவிகிக்க வேணுமே-என்னை அலட்ஷியம் செய்தால் இதிலே உனக்கு வாழ முடியுமோ
நான் முடிந்து போனால் இச் சோலையை உனக்கு நோக்கித் தருவார் யார்
வலங்கை ஆழி இடக்கை சங்கம் உடையானான எம்பெருமான் இங்கே வரும்படி கூவுதல் ஓன்று
என் கையில் வளைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் ஓன்று-இவை இரண்டினுள் ஒன்றை நீ செய்தாக வேணும் என்கிறாள்-
கை வளை தங்குவது எம்பெருமான் சம்ச்லேஷத்தால் மட்டுமே ஆகும்-அதுவும் அவன் வந்தால் அன்றி ஆகாதே
இரண்டு பஷமாக அருளிச் செய்வான் என் என்னில்
சத்யவான் உயிர் மீட்ச சாவித்திரி யமன் இடம்-பல பிள்ளைகள் பிறக்கும்படி அருள வேணும் என்றால் போலே
இதுவும் ஒரு சமத்காரமான உக்தி-ஒரு கார்யத்தாலே இரண்டும் தலைக் கட்டும் இறே
நாராயணாதி நாமங்களை குறிப்பிடாதே சங்கோடு சக்கரத்தான் -என்கையாலே
அவனுடைய ஆபரணத்தை யாவது இங்கே கொண்டு சேர்
அல்லது
என்னுடைய ஆபரணத்தை யாவது கொண்டு கொடு -என்கிற ரசோக்தி

——–

குயிலே இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

இத்தை உடையவனாய் -உடைமை தான் அசித் சம்ஸ்ருஷ்டமாய்த்து என்று கால் கடைக் கொள்ளாதே
அழுக்கு உகப்பாரைப் போலே அது தன்னோடு விரும்பும்படியாய் இருக்கிறவனை வரும்படி கூவாயாகில் –

——-

கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன நண்ணுற வாசக மாலை–5-11-

உன் வடிவைக் காட்டி அவன் வடிவுக்கு ஸ்மாகரமான நீ என்னையும் அவனையும் சேர்க்க வேணும் -என்று சொன்ன பாசுரமாய்த்து –
ஸ்வர பிரதானமான நாலு வேதங்களும் வைத்து இருப்பவர்கள் -ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் சொன்ன –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இத்தை

———

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே–8-2-

இவற்றுக்கு இன்றிக்கே அவனுக்கு உண்டான ஏற்றம் பிறருக்காக கண்ட உடம்பை தனக்கு என்று இருக்குமவன் ஆயத்து
பக்தாநாம் –என்று இருக்கிற உடம்பை தனக்கு என்று இருக்கிறவன் –
இவ்வடிவு படைத்த நாமோ சென்று அணைவோம்-இதில் அபேஷை உடையார் வேணுமாகில் தாங்களே வருகிறார்கள் -என்று
எழ வாங்கி இருக்குமவன்
வார்த்தை என்னே –
இங்கே வாராராகிலும் -இழவு தமக்கு என்று இருந்தாராகில் வார்த்தை சொல்லி விடாமை இல்லை இறே
என்னே
நாம் முற்பாடராய் உதவப் பெற்றிலோம் -என்ற லஜ்ஜையாலே
நீங்கள் அவள் செய்தது என் என்று அறிந்து வாருங்கோள் என்னுதல்
அன்றிக்கே – நஜீ வேயம் ஷணம் அபி -என்னுதல்
அங்கன் இருப்பார் உண்டாவதாக நாம் அறிந்திலோமே என்னுதல்
துஷ்யந்தனுடையவும் சகுந்தலையுடையவும் கதையைச் சொல்லிக் கொள்வது -ஒன்றும் சொல்லாமை இறே
ஒரு வார்த்தை கொண்டு தரித்து இருக்கலாமோ இவளுக்கு -என்னில் -ஒரு வார்த்தை கேட்கில்
ஸ்திதோச்மி-ஸ்ரீ கீதை -18-73-என்று இருக்கலாம் இறே
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய் –4-7-3–என்றாவது கேட்க ஆசைப் பட்டார் அன்றோ-
வார்த்தை என்னே -என்ற இடத்தில் இன்னது என்று சொல்லக் கேட்டிலள்

———

நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–8-6-

என்னை சர்வஸ் வஹரணம் பண்ணின நாரணற்கு –தம் உடம்பில் அழுக்கு போக்யமாய் இருக்குமவர்க்கு –
என் நடலை நோய் செப்புமினே—
தம் வாத்சல்யத்துக்கும் என் ஆற்றாமைக்கும் என்ன சேர்த்தி யுண்டு என்று சொல்லுங்கோள்-
என் நடலை நோய்-தமக்கும் இந் நடலை நோய் யுண்டாகில் அறிவிக்க இரார் இறே
நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்ப் படுகிற என் ஆற்றாமையை அறிவியுங்கோள்
அறிவிக்க வேண்டியது ஒன்றே வேண்டுவது –வாய் வார்த்தையால் தண்ணீர் பந்தல் வையுங்கோள் –

———–

வேங்கடத்துப் போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி–8-8-

விரோதிகளைப் போக்கி உதவி தான் நிறம் பெரும் படியும்–பேர் சொல்லி-
இந்த தசையில் திரு நாம சங்கீர்த்தனத்தாலே தரிக்கலாம் என்று இருந்தோம் –
அது தானே சைதில்ய ஹேதுவாக நின்றது –

——

பாம்பணையான் வார்த்தை என்னே-8-9-

படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் -வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு –
அந்தரங்கர்க்கு தெரியும் இறே

——–

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்–8-10-

நம் வரவுக்கு உறுப்பாக படுக்கை படுத்து சாய்ந்து கிடந்தான்-வேங்கடக் கோன் என்கையாலே
நன்னுதலாள்-அப்படுக்கையிலே துகைத்து ஏறத் தகும் அவயவ சோபை உடையவள்
நயந்து உரை செய்-ஆசைப் பட்டுச் சொன்ன விண்ணப்பம்
ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டது
இங்கே திருமலையிலே மேகங்களை தூதாக விடா நின்றாள்–இதுவே வாசி
அங்கு நின்று வந்தாரையே விடுகை இரண்டு இடத்திலும் ஒக்கும்
அவ்வதாரத்தில் பிற் பாடர்க்கு இழக்க வேண்டாத படி -திருமலையிலே வந்து தூது விடுவார் ஆரோ என்று
அவசரம் பார்த்து இரா நின்றான் யாய்த்து –

———

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்–9-3-

முடிக்கும் வழக்கயோ நீங்கள் கற்றது–உஜ்ஜீவிக்கும் வழக்கு சொன்னால் ஆகாதோ
நீ அஞ்சாதே கொள் -நாங்கள் மறைய நிற்கிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ
பூப் போலே வந்து புலி யானி கோளீ-
ஓன்று உரையீர் – இவையே சைதன்யம் பெற்று ஒரு வார்த்தை சொன்னால் அது கேட்டு பின்பு
அவற்றைக் கொண்டு தரிக்க வேண்டும் தசை காணும் இவளுக்கு

——–

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்–9-6–

இத்தலைக்கு நினைவில் மட்டும் போதாது வாயாலும் சொல்லி வைத்தேன்
பெண் பிள்ளை பிரார்த்தித்து வைத்தாள்-கொடுத்தாளாகச் சொல்லக் கேட்டிலோம்
பிரார்த்தித்த வற்றை இறுக்கை அச்சந்தான ஜாதர்க்கு பரம் இறே -என்று தாம் அமுது செய்வித்து அருளினாராம்

——-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து – அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி
மருள் இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ
எல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்
பதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்
ப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன் அவன் வார்த்தை சொல்லா நின்றன –

——–

கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-

ஆஸீத சம்ச்லேஷ விரோதிகளை போக்கும் இடத்தில் அர்த்த க்ரியா கார்யமாம் படி பண்ணித் தலைக் கட்டுமவர்
இங்கு உக்தியையும் தலைக் கட்டு கிறிலர்-
தம்மை ஆஸ்ரயித்தவர்கள் விரோதியைப் போக்கக் கடவ அவர் தம்மையும் -அப்போது நியமிக்க மாட்டு கிறிலர் –
அவ்வார்த்தை பொய்யாம் என்று பொய்யானால் -என்கிறாள் அல்லள்
அதுக்கு விஷயம் நாமாகையாலே தப்பிலும் தப்பும் என்கிறாள் –
நானும் பிறந்தமை பொய்யன்றே-
இது வ்யபிசரித்தாலும் வ்ய்பிசரியாது என்று நாம் நினைத்து இருந்தது பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பே இறே
அதுக்கும் இலக்கு நாம் ஆனபின்பு இனி அது தான் நமக்கு கார்யகரமாய்ப் புகா நின்றதோ
பெரியாழ்வாரோட்டை சம்பந்தம் பகவல் லாபத்தோடு நம்மை சந்திப்பித்து விடும் என்று இருந்தோம்
இனி அதுவும் தப்பிற்று இறே
பொய்யன்றே -என்றது பொய்யாம் இறே -என்கை
பூதார்த்ததோடு-பவிஷ்யத்ரத்ததோடு வாசி என் இப்போது கார்யகரம் ஆகா விட்டால் –

————-

நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

வேதார்த்தம் -வேத பிரதிபாத்யன்
ஓலைப் புறத்தில் கேட்டுப் போரும் வஸ்து கண்ணுக்கு இலக்காய் வந்து கிட்டி
இட்டீட்டுக் கொள்ளும் உடம்பைக் கொண்டு தன்னை புஜிக்குமவர்கள் ஸ்வரூபங்களை விட்டு திரு மேனியை விரும்புமா போலே
தானும் ததீய விஷயத்தில் ஸ்வரூபாதிகளை விட்டு உடம்பை யாய்த்து விரும்புவது
இருவரும் உடம்பை யாய்த்து விரும்புவது
திருமாலை ஆண்டான் -பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யாஜ்யம் என்று கேட்டுப் போரா நிற்கச் செய்தேயும்
இத்தை விட வேண்டி இருக்கிறது இல்லை
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாம் என்று ஆதரியா நின்றேன் -என்றாராம் –
மெய்ப்பொருள் – ஆத்மா/ கைப்பொருள்- ஆத்மீயம்

———

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

செல்வர் சொல்லுக்கு அஞ்சாரே
விபூதி விஷயமாகவும் ஆஸ்ரிதர் விஷயமாகவும் சொல்லி இருக்குமவை –சரம ஸ்லோகங்கள் -என்னுதல்
அன்றிக்கே
நின்னைப் பிரியேன் -பிரியிலும் ஆற்றேன் -என்றால் போலே கூடி இருந்த போது சொன்னவை என்னுதல்
இவற்றை மறந்து பிழைக்க வென்று பார்த்தால் -நெஞ்சில் நின்று பேர்க்கவும் பேருகிறது இல்லை

———-

செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-

ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் -ஸ்ரீ கீதை -5-29-என்கிறபடியே -சோபனமான ஹ்ருதயத்தை உடையராய் இருப்பார்
குற்றம் செய்தாரையும் விட மாட்டாதே –ந த்யேஜ்யம்-என்று வார்த்தை சொல்லுமவர்
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாக்கிக் கொண்டு கோயிலிலே சாய்ந்து அருளினார் –

தாம் பணித்த-
நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப் பட்டவர் தாம் அருளிச் செய்த –

மெய்ம்மைப் பெரு வார்த்தை –
யதார்த்தமுமாய் –-மெய்மை –சீரியதுமாய் —பெரு —ஸூ லபமுமான –வார்த்தை என்பதால் -மூன்றும் சேர்ந்த வார்த்தை யாய்த்து -அதாவது –
உன் கார்யத்துக்குனான் உளேன் -நீ ஒன்றுக்கும் கரையாதே -உன் சர்வ பரத்தையும் என் தலையிலே சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு -என்று
திருத் தேர் தட்டிலே அருளிச் செய்த வார்த்தை
பிள்ளை அர்ஜுனனுக்கு அன்றோ சொல்லிற்று இவர்க்கு என் என்னில் அவன் சர்வ சமனாகையாலே-
என் கார்யம் என்னால் செய்ய ஒண்ணாது -என்று இருப்பார் எல்லாருக்குமாக அடியிலே சொன்ன வார்த்தை இறே
ஆகையாலே இவர் கேட்டிருக்கக் குறை இல்லை –
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
நாட்டு வார்த்தை –
நீ ஆர்க்கு நல்லை என்றால்-நல்லார்க்கு நல்லான் -என்ற ஒரு வழக்குச் சொல் உண்டு –
நல்லாருக்கு தீயார் உண்டோ என்றும் உண்டு
இவை இரண்டும்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —
தாமே இத்தை அந்யதா கரிக்கப் புக்கால்
இங்கனே செய்யக் கடவது அல்ல -என்று தம்மை நியமிக்க வல்லார் உண்டோ
உண்டானால் தான் செய்வது என்
உம்மை உகந்தவளை நீரும் உகக்க வேணும் -என்று கட்டி அடித்து உகப்பிக்கவோ –

———–

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை–12-1-

என் தசையை அறியாதே சில சொல்லுகிற உங்களுக்கும் எனக்கு வார்த்தை சொல்ல பிராப்தி இல்லை —
உங்கள் வார்த்தையைச் செவி தாழ்த்துக் கேட்கைக்கும் எனக்கு பிராப்தி இல்லை என்கிறாள் –
மற்று –வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –
மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-

————

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்–12-9-

இவள் விரஹத்தாலே தரிப்பற்று நோவு படுகிற சமயத்திலே -வளர்த்த கிளியானது முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தை
இவளுக்கு சாத்மியாதே தசையிலே சொல்லிக் கொண்டு அங்கே இங்கே திரியத் தொடங்கிற்று
இது தான் ச்வைரமாக சஞ்சரிக்கும் போது அன்றோ நம்மை நலிகிறது -என்று பார்த்து கூட்டிலே பிடித்து அடைத்தாள்-
(கண்ணன் நாமமே குழறிக் கொல்ல கூட்டில் அடைக்க கோவிந்தா என்றதே )
அங்கே இருந்து கோவிந்தா கோவிந்தா என்னத் தொடங்கிற்று –
கோவிந்தா கோவிந்தா –-நாராயணாதி நாமங்களும் உண்டு இறே –
இவள் தான் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று கற்பித்து வைக்கும் இறே
அது மர்மம் அறிந்து உயிர் நிலையிலே நலியா நின்றது –
இவன் தான் பசுக்களை விட்டுக் கொண்டு தன்னைப் பேணாதே அவற்றினுடைய ரஷணத்துக்காக அவற்றின் பின்னே போம்
தனிமையிலே யாய்த்து -கோவிந்தன் -பசுக்களை அடைபவன் -இவள் தான் நெஞ்சு உருகிக் கிடப்பது –
இப்போது அந்த மர்மம் அறிந்து சொல்லா நின்றதாய்த்து –

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
இது சோற்றுச் செருக்காலே இறே இப்படிச் சொல்லுகிறது -அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இறே அவள் நினைவு –
விண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்
பாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது
அவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது
கிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –

——-

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே–13-1-

புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே
புறம் நின்று -வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்
என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –இதுவே அகம் –-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய
மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே
என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே
எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே
அழகு சொல்லாதே –
இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே-
அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி
இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் -மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மை
பேசாதே
இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று -காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி –
நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்

———

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே–13-2-

வேலைக் கொண்டு -உடலில் பாய்ந்த வேலின் மேலே என்றுமாம் –
ஸ்வ பிரயோஜன பரராய் இருப்பார்க்கு சொல்லுமா போலே சிலவற்றைச் சொல்லாதே
வேலால் துன்னம் பெய்தால் போல் -என்னுதல்
வேல் உள்ளே கிடக்க துன்னம் பெய்தால் போல் என்னுதல் –
புண்ணிலே புளியைப் பிரவேசிப்பித்தால் -எரியும் அத்தனை இறே -இதாகிறது புண்ணைப் பெருப்பிக்கும் அத்தனை இறே –
எனக்கு ஓடுகிற தசை அறியாதே உங்களுக்கு பிரதிபந்தங்களைச் சொல்லாதே –

———–

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே–14-3-

ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால் இது எல்லாம் எங்கிலும் பெற்றாய் என்று கேட்டால்
மற்று உண்டோ நான் புறம்பு அறிவேனோ -என்னும்
மெய் சொல்லுகை தேட்டமாகில் ராமாவதாரத்திலே போக அமையாதோ-( – பொய் நம்பி– புள்ளுவம்–இவன் அன்றோ )
ப்ரியவாதீ ச பூதா நாம் சத்யா வாதி ச ராகவ -அயோத்யா -2-32-என்னக் கடவது இறே –
கண்டபடியே உரைக்கையும் மெய்யாகும் என்னக் கடவது இறே
உபாயமாய் பூத ஹிதமுமாய் இருக்கும்
இரண்டு வார்த்தை சொல்லாமையாலே அப்போதே மெய்யாய் இருக்கும் -பெருமாள் வார்த்தை-
இவன் வார்த்தை விழுக்காட்டில் மெய்யாய் இருக்கும் –
பொய் போலே தோற்றினாலும் நன்மையே விளைப்பதால் கார்ய காலத்தில் மெய்யாய் இருக்கும்
ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் இறே ஆஸ்ரிதர்க்குத் தஞ்சம்-
ஏக ரூபனாய்-இரண்டு வார்த்தை சொல்லாதே -ஆஸ்ரித ரஷணம் பண்ணும் அவன்
தன்னை அழிய மாறி பொய் சொல்லி ரஷிக்கும் இவன்
பகலை இரவாக்குவது -ஆயுதம் எடேன் என்று சொல்லி ஆயுதம் எடுப்பது
எதிரிகள் மர்மங்களைக் காட்டிக் கொடுப்பதாய் இ றே ரஷிப்பது
பொய்கள் உரைப்பானை
ஓன்று போலே இருப்பது -நூறாயிரம் பொய்கள் யாய்த்து சொல்லுவது –
இவன் பொய் தேட்டமாய் இறே -இங்கே போதக் கண்டீரே -என்கிறது –

——-

ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

இந்த சீலாதி குணங்களையே நினைந்து இவற்றை நினைக்கும் அது ஒழிய வேறொரு பிரயோஜனத்தையும் கணிசியாதே –
ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே ஆடிப்பாடி
ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி யாற்ற மாட்டாதே கூப்பிடும்

———-

பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —3-8-

நிலை நின்ற புருஷார்த்தை விட்டு அஸ்திரமான பிராக்ருத போகங்களை விரும்புவதே —
பேயராய் இருந்தார்கள் என்று விட்டேன் நான் –
கண்ணால் காண்கிறது ஒழிய வேறு ஓன்று உண்டு என்று பிரமியா நின்றான் -பித்தனாய் இருந்தான்
என்று விட்டார்கள் இவர்களும் என்னைஇத்தைப் பரக்கச் சொல்லுகிறது என்
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவோடே தலைக் கட்டாத படி ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளின ஸ்ரீ பெரிய பெருமாள்
திரு நாமத்தைச் சொல்லி அடைவு கெடக் கூப்பிடா நின்றேன்

——–

ஆங்கே ஒருத்தி தன் பால் மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்கு பொய் குறித்து–6-3-

இவள் பக்கலிலே கண் செல்லா நிற்க வேர் ஒருத்தி பக்கலிலே –
அவளை அல்லது அறியோன் என்னும் படி மனஸை அங்கே வைத்து –
மனஸ் ஸூ அவள் பக்கலிலே இருக்கச் செய்தே வேறே ஒருத்திக்கு அடியேன் -என்று சொல்லி –
சொன்ன வார்த்தையை விஸ்வசித்து -அகவாய் அறியாதாள் ஒரு முக்தைக்கு இன்ன இடத்திலே போய் நில்லு –
நான் அங்கே வருகிறேன் என்று இடம் குறித்து

———–

புள்ளுவம் பேசாதே போகு நம்பி !—- 6-7–

வஞ்சனம் -வஞ்சனங்கள் எல்லாம் அறிந்த எங்கள் பக்கல் பிரயோகியாதே போ
என்னை போ என்கிறது என் உங்களை ஒழியப் புகலிடம் உண்டோ என்ன
நம்பீ-பூரணராய் இருக்கிற நீர் குறைவாளரைப் போலே சொல்லக் கடவீரோ
சொலவுக்கும் செயலுக்கும் அடியில்லை என்னும் படி நிரபேஷர் என்று அறிந்த பின்பு
சில சாபேஷரைப் போலே சொல்லக் கடவீரோ நடவீர் –

———

உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ் விரலினும் கடை கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன்–7-3-

இப்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி உங்கள் தமப்பனார் ஆர் என்று கேட்க
சிவந்த விரலாலும் கண்ணாலும் காட்ட ஸ்ரீ நந்த கோபர் பெற்றார்

——–

சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –8-6–

பெற்ற தாயான நான் உம்மைப் பிரியில் தரியேன் என்று ஸ்ரீ கௌசலையார் பின் தொடரச் செய்தேயும்
மாற்றுத் தாயான கைகேசி சொல்லு மாறாதே வனத்தே போந்தவனே –

———

கேகயர் கோன் மகளாய் பெற்ற அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன்
என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–

கேகேய ராஜன் மகளாய் பெற்றது ஒரு மஹா பாபத்தை யாய்த்து -அவள் வார்த்தையிலே அகப்பட்ட
பிரதிகிரியை அல்லாத செயலைச் செய்த என்னால் செய்யலாம் பரிஹாரம் இல்லை –

——

கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு–9-10-

வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட
கைகேயியுடைய வார்த்தையிலே அகப்பட்டு-

———

ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே–திருச்சந்த விருத்தம் –8-

ஜகத்துக்கு கடவர்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளி செய்கிறாய்
இனிமேல் ஜகத்துக்கு நிர்வாஹகமான கால தத்வமும் தேவரீர் இட்ட வழக்கு என்கிறது –
ஜகத் ஸ்ர்ஷ்டியாதி கர்த்தாக்களாய் ஊர்த்தவ லோகங்களுக்கு அத்யஷராய் வர்த்திக்கிற
ப்ரஹ்மாதிகள் உடைய பதங்களுடைய அவ்வவ காலத்துக்கு நியாமகனாய்
நீ உரைத்தி – என்கிறது
சஹச்ர யுக பர்யந்தமஹர்யத் ப்ரஹ்மணோ விது -என்று இத்யாதிகளிலே நீ அருளிச் செய்து இருக்கையாலே

——–

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –-11-

சொல்லினால் தொடர்ச்சி நீ –
சப்தத்தாலே சித்தமான புருஷார்த்தத்திலே இழிந்தாருக்கு அதிலே உறவு பிறப்பிப்பாயும் நீ –
தொடர் -உறவு -அதாவது ப்ரத்யட்ஷ விஷயமான சப்தாதிகளே புருஷார்த்தம் என்று இருக்கும் சம்சாரிகளை
ஒழிய வேதாந்த முகத்தாலே வேதைக ஸமதி கம்யமான வஸ்துவை அறிந்து அவ்வஸ்துவைப்
பெற ஆசைப்பட்டவர்களுக்கும் உபக்ர்ம தசையிலே ருசி ஜநகன் -ப்ரஹ்மாதிகள் ப்ரப்த்ரான
ஜநகர் அல்லாமையாலே ருசி ஜநகரும் அல்லர்
சொலப்படும் பொருளும் நீ –
ஸ்ருதி ஸ்ம்ர்தியாதிகளிலே ஆஸ்ரயணீயாராகத் தோற்றுகிற தேவதைகளுக்கு ஆத்மாவும் நீ –
ஏநமேகேவ தந்த்யக்நிம் -என்றும்
சதுர் ஹோதாரோ யத்ர சம்பதம் கச்சந்தி -என்றும் –
யேய ஜந்தி -என்றும் –
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ –
வேதாதந்தத்தால் பரிச்சேதிகப் படாது என்று தோன்றுகிற தேஜஸ் சப்த வாச்யன் நீ
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் –
அவிஜ்ஞா தம் விஜாந தாம -என்றும் –
யஸ்யாமதம் தஸ்யமதம் -என்றும் –
பரஞ்சோதி ரூப சம்பத்ய -என்றும் –
நாராயண பரஞ்சோதி
இத்யாதிகளிலே உன் ஸ்வரூபாதிகள் அபரிச்சிந்நங்கள் என்றும் –
பரஞ்சோதி சப்த வாச்யன் நீ என்றும் சொல்லப்படா நின்றது இறே
சொல்லினால் படைக்க-
யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோ தி தஸ்மை -நீ கொடுத்த வேதத்தை த்ர்ஷ்டியாகக் கொண்டு-
ஜகத் சிருஷ்டி பண்ணுவாராக -ஸ பூரி திவ்யாஹரத்
நீ படைக்க வந்து தோன்றினார் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்கிறபடியே நீ ஸ்ருஷ்டிக்க உன் திரு நாபீ
கமலத்திலே வந்து தோன்றின ப்ரஹ்மா முதலான தேவர்கள் –
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே —
உன் குணங்களை அறிந்து -பரக்க பேச மாட்டாமை அன்றியே ஒரோ பிரயோஜனங்களிலே
சங்ஷேபேண உன் குணங்களைப் பேசவும் மாட்டார்
பரத்வ சாதகமான குணங்கள் -ஜகத் காரணத்வ சாதகமான குணங்கள் -ஆஸ்ரித அர்த்தமான குணங்கள்
இவற்றிலே ஒரோ கோடியைக் கரை காண மாட்டார்கள் –

————

கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

கண் வளர்ந்து அருளுவதுக்கு ஹேதுவை -கண் வளர்ந்து அருளா நிற்க -அருளிச் செய்ய ஒண்ணாது
என் பயம் கெட எழுந்து இருந்து அருளிச் செய்ய வேணும் –
எழுந்து இருக்கும் போதை சேஷ்டிதத்தாலும் –அருளிச் செய்யும் பொழுது ஸ்வரத்தாலும் –
எனக்கு பயம் கெட வேணும்

———

நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
அவனதுஊர் அரங்கம் என்னா அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவர்கின்றேனே–திரு மாலை-12–

யமன் முன்பே திருநாமம் சொன்னாய் காண் என்று சொன்ன இவ்வளவே யாய்த்து பிறந்தது –
யமன் தனக்கு பாவனமாக திரு நாமத்தைச் சொப்ன்னானும் அல்லன்
உத்கல பகவான் கேட்க அவனுக்கு உபதேசித்தானும் அல்லன் –
நாரகிகளை தன கை சலிக்க நலிந்து இவற்றுக்கு இனி போக்கடி இது என்று சொன்னானும் அல்லன் –
திரு நாமம் சொன்னான் ஒருவன்-இங்கனே -பிரசக்த அனுபிரசக்தமான -இத்தை -நரக அனுபவம் பண்ணுகிறவர்கள் கேட்ட அனந்தரம்
அவ்விடம் தானே பிராப்ய பூமியாய்த்து என்று
சொல்லிப் போருவது கதை உண்டு -அத்தை இங்கே சொல்லுகிறது-
பாபம் பண்ணுகிற சமயத்திலே அனுதபித்து
மீண்டு பிராயச் சித்தம்பண்ணும் சமயத்தில் கேட்டாருமஅல்லர் –
பாபத்தின் உடைய பல அனுபவம் பண்ணுகிற சமயத்திலே யாய்த்து கேட்டது
அப்போது தானும் சமித்து பாணியாய் கேட்டாரும் அல்லர்
பிராசங்கிகமாக திரு நாமம் செவிப்பட்டது இத்தனை –

——–

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது–22-

உக்தி பிராக்ருத விஷயங்களை பேசுகிறது இல்லையோ -என்ன -அவை பரிச்சின்னம் ஆகையாலே –
இதி அபரிச்சின்னம் ஆகையாலே பேச ஒண்ணாது –
ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தௌதி -என்கிற விஷயத்தை கை வாங்கி இருக்கும் அத்தனையோ -என்னில் –
பேசிற்றே பேசல் அல்லால்-
முன்பு வேதங்கள் வைதிக புருஷர்கள் பேசிப் போந்தவை தன்னையே பேசினோம் இத்தனை போக்கி
இவ் விஷயத்துக்கு ச்த்ர்சமாக ஒரு பாசுரம் இட்டு பேசி தலைக் கட்ட ஒண்ணாது –
பேசிப் போந்தவை தான் எங்கனே என்னில் –
நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லகேவ-என்றும்
நீலமுண்ட மின்னன்ன மேனி -என்றும்
அதஸீ புஷ்ப சங்காசம் -என்றும்
ஹிரண்மய புருஷோ த்ர்சயே -என்றும்
ருக் மாபம் -என்றும்
சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது -இத்யாதி –
இந்த பிராக்ருத விஷயங்கள் அப்ராக்ருத வஸ்துவுக்கு வித்ர்சம் இறே
இது தன்னைக் கொண்டு இழிவான் என் என்னில்
அதீந்த்ரிய விஷயத்தில் இழியும் போது -ஒரு நிதச்னத்தை கொண்டு இலிய
வேண்டுகையாலே சொன்ன இத்தனை ஒழிய உள்ளபடி சொல்லிற்றாய் தலைக் கட்ட ஒண்ணாது –
வேதங்கள் பேசும் படியே பேசும் அத்தனை அல்லது நம்மால் பேசி முடியாது –
அவை பேசினபடி என் -என்னில் –
அப்ராப்ய -என்று பேசின இத்தனை
அப்படியே பேச ஒண்ணாது என்று பேசும் அத்தனை என்றுமாம்
அதுக்கடி என் என்னில் –
பெருமை ஓன்று உணரலாகாது –
இன்னது போலே என்று ஸதர்ச திருஷ்டாந்தம் உண்டாதல் –
ஏவம் பூதம் என்று பரிச்சேதித்தல்-செய்ய ஒண்ணாது –
இதர விஷயங்களில் வந்தால் உபமானத்து அளவும் உபமேயம் வர மாட்டாது –
இவ் விஷயத்தில் உபமேயத்து அளவும் உபமானம் வர மாட்டாது
ஸ்வரூபம் என்ன குணங்கள் என்ன விக்ரஹம் என்ன விபூதி என்ன –
இவற்றில் ஒன்றையும் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கை

————

ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே–பெரிய திருமொழி –1-2-7-

———-

பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்—திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-7-

——

பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்—திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-

——–

வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

——-

வளங்கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே யென்று வாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே வலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-7-

——–

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்ற்றது இதுவே காணும் இந்தளூரீரே-4-9-3-

———

பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7

———-

சொல்லாய் திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ
மல்லா குடமாடி மதுசூதனே யுலகில்
செல்லா நல்லிசையாய் திருவிண்ணகரானே -6-3-9-

———–

யுலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-

கேழல் ஆகி யுலகை ஈரடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-

தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-

விபீடணற்கு நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-4-

தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம்
நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5-

தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-

குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-

———-

அத்தா அரியே என்று உன்னை அழைக்கப்
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை–7-1-8-

———

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீயோம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுனதடியார் மனத்தாயோ வறியேனே –7-9-7-

———-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

————

பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று
பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்–9-7-3-

மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்–9-7-5-

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்–9-7-7-

———

வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-

சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே —10-3-7-

———

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் –11-3-3-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு–11-3-4-

——-

வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

——–

உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-

——-

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி
ஏசினர் உய்ந்து போனார் என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தேற்கு
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே––ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் — 17-

——-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்–ஸ்ரீ திருவாய் மொழி–1-3-5-

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

———-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே–1-4-2-

மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-

அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10-

——

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

——

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

———

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா–2-8-8-

—–

படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-

பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-

———-

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

——–

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

——-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்–3-9-1-

———

பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

——

மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-

வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-

நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-

தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-

——–

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

———

பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காண வந்தே.–4-7-3-

———

பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்–4-10-4-

———

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே–5-1-3-

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து–5-1-4-

——–

ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்–5-3-4-

——–

உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8-

——

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-

——

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

———-

கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!–6-1-7-

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய்!–6-1-8-

கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9-

மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-

——–

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ!–6-2-3-

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11-

——–

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

——–

முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!-6-8-5-

கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-

என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே.–6-8-10-

———-

பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?–7-1-7-

——–

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே –7-5-9-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?–7-5-10-

——–

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-

ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-

——–

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

——-

வண் கார் நீல முகில் போலே தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே-8-5-4-

சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா–8-5-5-

—–

படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன்–8-8-2-

———

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ–9-1-7-

——

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

——

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-

——–

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்–9-6-2-

———–

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

———–

சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே–9-9-7-

——-

தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-

திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

———-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3

——–

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

———

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் –ஸ்ரீ முதல் திருவந்தாதி–95-

———-

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -39-

அவன் பக்கலிலே சர்வார்த்தமும் யுண்டானாப் போலே அதன் பக்கலிலே சர்வ சப்தமும் யுண்டு

———–

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பரிபூர்ண விஷயத்தை அபரிபூர்ணமாகச் சொன்னேன் -அதுக்கு மேல் கேட்டார் செவி கன்றும்படி வெட்டிதாகவும் சொன்னேன் –
விசத்ருசமாகச் சொன்ன அளவேயோ –ஓன்று சொன்னேனாய் அதுக்குப் பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன் –
இவர் பின்னை ஒரு பிரயோஜனத்துக்காக கவி பாடுவாரோ என்னில்
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக் கடாஷிக்குமாகில் -அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு
என்று இருப்பார் ஒருத்தர் இறே -அத்தாலே குறை இல்லை –

————-

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

அறிந்து கவி பாடினேன் அல்லேன் -ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –
ஏத்தி நவின்று – மிகவும் ஆதரித்து ஏத்தினேன் -ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி
நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

——–

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ——ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி—8–

பிச்சர் வாழைத் தோட்டம் புக்கால் போலே தோற்றின திரு நாமங்களை அடங்கச் சொல்லி –
அவை எல்லாவற்றுக்கும் அடியான பிரதான நாமத்தைச் சொல்லி-

———-

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

இஸ் சம்பத்துக்கள் எல்லாம் நமக்கு-இவ் வாஸ்ரயத்தை சென்று கிட்டி ஸ்வரூபம் பெற வேணும் என்று கொண்டு
ஸ்நேஹித்துச் சென்று மேல் விழும் தன் பேறாகச் சென்று அடையும்-
இவன் திரு நாமம் சொல்லி அல்லது நிற்க மாட்டாதாப் போலே அவையும் இவனை அடைந்து அல்லது நிற்க மாட்டா –

————–

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

சர்வேஸ்வரனே உன்னது அல்லாததை அளந்து கொண்டாயோ-என்னுடைமையை நான் விடுவேனோ
மீட்டுக் கொண்ட பின்பு நீ அஞ்ச வேண்டா -என்று அருளிச் செய்ய வேணும்-

———

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

இச் செயல்களைச் செய்யும் இத்தனையோ–சொன்னால் ஆகாதோ
இவர் பேச்சுக் கேட்டு இனியனாய் இருந்தான் அவன்
அவன் பேச்சுக் கேட்டு வாழ நினைக்கிறார் இவர்

———

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

பரிச்சேதித்துப் பேச ஒண்ணாமைக்கு தனித் தனியே ஹேதுக்களை அருளிச் செய்து –வடிவு பிரகாரம்
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே –உள்ளபடி கண்டு பேச ஒண்ணாது-

————-

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று ––நான்முகன் திருவந்தாதி–6–

——–

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14–

————-

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

——

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

———

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை–ஸ்ரீ திரு விருத்தம்–15-

முக்தர் சம்சார யாத்திரையை நினையாதார் போல ,இவனும் இவர்கள் கண்களை கண்ட பின் ,
வேறு ஒன்றை நினைக்க அறியாது இருந்த படி-

——–

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்–32-

அவை ஒரு வார்த்தை சொல்லுமாகில் சத்தை தரிக்கும் என்று இருக்கிறாள் –
வாய் பேச மாட்டாத அசேதனமும் கூட வாய் பேச வேண்டும்படியான தசையைச் சொல்லுகிறாள் –

———-

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –கேசவன் தமர் -2-7–

இத்தால் தூத ப்ரேஷண வியாஜத்தாலே தம் ஆற்றாமையை அவன் திரு உள்ளத்தில் படுத்துகிறார்

————-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம்–55-

———-

மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –அறுக்கும் வினையாயின -9-8-

————

வாசகம் செய்வது நம் பரமே –61-

——-

நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –கெடுமிடராய-10-2-

——-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- செஞ்சொல் கவிகாள் -10-7-

———

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி–20-

நாம் பேசில் –நாம் பேசும் வார்த்தை களுக்கு –வெட்கப் பட வேண்டும் அன்றோ –

———-

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

—–

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப்படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

——-

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

——-

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

——

இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
அம் மூன்றும் ஆராயில் தானே -அறம் பொருள் இன்பம் என்று –ஸ்ரீ சிறிய திருமடல்

ஆரானும்உண்டு என்பார் எனபது தான் அதுவும் ஒராமை யன்றே –
அது ஒராமை ஆம் ஆறு உரைக்கேன்

சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே – ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –

அது கண்டு மற்று ஆங்கே ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொல்லப்படும் கட்டுப் படுத்திரேல் ஆரானும் மெய்ப்படுவான் என்றார்

பேர் ஆயிரம் உடையான் பேய்ப்பெண்டிர் நும் மகளை தீரா நோய் செய்தான் என வுரைத்தாள்-

சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்

வாரார் வனமுலை வாசவத்தை என்று ஆரானும் சொல்லப் படுவாள் அவளும்பெரும் தெருவே
தாரார் தடம் தோள் தளைக் காலன் பின் போனாள்

———-

தொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால் இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவதில்லை-ஸ்ரீ பெரிய திருமடல்–

வீடு என்னும் தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே —
அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே அது நிற்க —

துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும் அன்ன நடைய வணங்கு நடந்திலளே
பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் —

மற்றிவை தான் என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்

பன்னி யுரைக்கும் கால் பாரதமாம்-

என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு

மற்றிவை தான்—உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த மன்னிய பூம் பெண்ணை மடல் –

———–

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -1 –

—–

ரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11-

——–

கொல்லி காவகன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசன் என்னைச் சோர்விலனே -14 –

—–

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

——–

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

——

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-

—–

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

——

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தறம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

———

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 –

——–

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87-

—-

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93

——-

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102-

——

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107- –

—-

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”–

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

விகாஹே நிகமாந்தார்யம் ,விஷ்ணுபாத ஸமுத்பவாம் |
ரஹஸ்யத்ரய ஸாராக்யாம் த்ரிஸ்த்ரோதரஸம் அகல்மஷாம் ||

அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதம் அவிஜாநதாம் |
ரஹஸ்யத்ரய ஸாராக்யம் பரம் ப்ரஹ்மாஸ்து மே ஹ்ருதி ||

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்று சொன்ன பழமொழியில் —-ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு .

———–

ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”

* குருப்யஸ்தத்குருப்யஸ்ய நமோவாக மதீமகே |
வ்ருணீமகே ச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம் பதீ ||

அர்த்தம் —— அடியோங்களுடைய ஆசார்யன் ,அந்த ஆசார்யனின் ஆசார்யர்கள்—-
இவர்களுக்காக, அடிக்கடி ”நம ” என்று சொல்கிறோம்.
உலகுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ மஹாலக்ஷ்மி
திவ்ய தம்பதிகளை, அடியோங்கள் ,ப்ரார்த்திக்கிறோம்

* பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வரும் குருகேசன் விட்டுசித்தன்
துய்ய குலசேகரன் நம் பாணநாதன்
தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி
வையமெலாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே– ——————அதிகார ஸங்க்ரஹம்——-

அர்த்தம்– பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மிக்க குளிர்ச்சியான
தாமிரவருணி நதிக்கரையில் அவதரித்த நம்மாழ்வார் (குருகேசன் )
விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார், தூய உள்ளமுடைய
குலசேகர ஆழ்வார், நம்முடைய திருப்பாணாழ்வார் , தொண்டரடிப்பொடி ஆழ்வார் ,
திருமழிசையில் வந்து அவதரித்த, திருமழிசைப் பிரான், உலகம் எங்கும்
வேதங்களின் ஒலி ,சப்தம் விளங்க—வாள் ஆயுதமும், வில் ஆயுதமும்
ஏந்திய திருமங்கை மன்னன் –ஆகிய ஆழ்வார்கள் மகிழ்ந்து பாடிய (அருளிய )
இனிமையான பாசுரங்களை நாம் நன்கு தெளிந்து ஓதி, அத்யயனம் செய்து,
எளிதில் பொருள் தெரிந்து கொள்ள இயலாத வேதங்கள், உபநிஷத்துக்கள் –
இவைகளின் உண்மையான பொருள்களைத் தெரியாத இடங்களில், தெளிந்து(குழப்பமே இல்லாமல், தெளிவாக ) அறிந்தோம்

செய்ய தமிழ்மாலைகள்
1.பொய்கை ஆழ்வார்—–முதல் திருவந்தாதி ——————————–100 பாசுரங்கள்
2.பூதத்தாழ்வார் ——–2ம் திருவந்தாதி——————-————————–100 பாசுரங்கள்
3. பேயாழ்வார் ———-3ம் திருவந்தாதி ———————————————100 பாசுரங்கள்
4. ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்–ருக் வேத ஸாரம் —————– 100 பாசுரங்கள்
—-திருவாசிரியம் –யஜுர் வேத ஸாரம் ———- 7 பாசுரங்கள்
—பெரிய திருவந்தாதி –அதர்வண வேத ஸாரம்– 87 பாசுரங்கள்
—திருவாய்மொழி——ஸாமவேத ஸாரம் ———- 1102 பாசுரங்கள்
5. பெரியாழ்வார் —-பெரியாழ்வார் திருமொழி —————————– 473 பாசுரங்கள்
6. குலசேகரப் பெருமாள்—பெருமாள் திருமொழி ————————– 105 பாசுரங்கள்
7. திருப்பாணாழ்வார் ——அமலனாதிபிரான் ——————————— 10 பாசுரங்கள்
8. தொண்டரடிப் பொடி ஆழ்வார் ————திருமாலை —————————45 பாசுரங்கள்
———–திருப்பள்ளியெழுச்சி ——— 10 பாசுரங்கள்
9. திருமழிசை ஆழ்வார் ——————நான்முகன் திருவந்தாதி ———- 96 பாசுரங்கள்
————திருச்சந்த விருத்தம்———————— 120 பாசுரங்கள்
10. திருமங்கை மன்னன் ——————பெரிய திருமொழி ———————-1084 பாசுரங்கள்
——- திருக்குறுந்தாண்டகம் ———————- 20 பாசுரங்கள்
————திருநெடுந்தாண்டகம் ————————- 30 பாசுரங்கள்
—————திருவெழுகூற்றிருக்கை ————– 1 பாசுரம்
————–சிறிய திருமடல் —————————– 40 பாசுரங்கள்
————–பெரிய திருமடல்———————-——– 78 பாசுரங்கள்
ஆக ———————————————————————————– 3,708 பாசுரங்கள் இந்தச் செய்யத் தமிழ் மாலைகள் 3708 பாசுரங்களை,
அர்த்தங்கள் நன்கு புரியும்படி பாராயணம் (படித்து/சொல்லி ) செய்து, வேதங்களும் ,உபநிஷத்துக்களும் சொல்லும்
கடினமான அர்த்தங்களை ,நன்கு தெளிந்தோம் —என்கிறார் ,ஸ்வாமி தேசிகன்

* இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகமாற்றில் தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில் அன்பர்க்கே அவதரிக்குமாயனிற்க
அருமறைகள் தமிழ்ச்செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுரகவி தோன்றக்காட்டும்
தொல்வழியே நல்வழிகள் துணிவார்கட்கே .

அர்த்தம்—- ஆயன்—-அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் —பக்தர்களுக்காகவே அவதாரம் செய்பவன்
கண்ணன் , நிற்க—–ஸ்ரீ க்ருஷ்ணன் தயாராக இருக்க —– எதற்கு—-? தனது பக்தர்கள்ளுக்கு ஆனந்தரூபமான அனுபவத்தைக்கொடுக்க
சரணம் என்று இறைஞ்சுபவரைக் காக்க புருஷார்த்தத்தை உணர்த்த இகழ்ச்சியே இல்லாத பலவித ஸம்பந்தத்தை உணர்த்த ,
உலக விஷயங்களில் வைத்துள்ள பற்றுதலை–அதாவது, தகாத விஷயங்களில் பற்றை அழிக்க, தன் விஷயத்தில் பற்றுதலை உண்டாக்க
பாபங்களை ஒழிக்க கருணையை வெளிப்படுத்த. தத்துவ விளக்கங்களைச் சொல்ல
தன்னுடைய சுபாவத்தை அருள —ஆகியஇந்தப் 10 விஷயங்களுக்காகத் தயாராக இருந்தான்.
ஆனாலும், அவரை ஏறெடுத்தும் பாராமல், குற்றமில்லாக் கவியான மதுரகவி ஆழ்வார் , அறிவதற்கு மிகக் கடினமான
வேதங்களின் பொருளைத் தமிழில் அருளிய ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளையே சரணமாகப் பற்றினார்.
இவர் துன்பற்ற மதுரகவி (குற்றமில்லா மதுரகவி )
இவருக்குத் தோன்றிய வழி— இதுவே தொல்வழி —தொன்மையான வழி/ பழமையான வழி — என்றும்,
நல்வழி–ஸம்ஸார பந்தத்திலிருந்து வெளியே வர மிக நல்ல வழி என்றும் நமக்கு காண்பித்தார் .
யாருக்கு—? எது தொன்மையான வழி என்று துணிந்து வருவார்க்கும், ஸம்ஸாரம் என்கிற காட்டிலிருந்து
விடுதலை பெறத் துணிந்தவர்கட்கும் நாயகன் கிருஷ்ணன் ,அருளுவதற்குத் தயாராக இருந்தாலும்,
மதுரகவிகள் நம்மாழ்வாரான ஆசார்யன் திருவடிகளைச் சரணம் என்று வந்து அடைந்தார்– இதை அனுஷ்டித்து நமக்கு காண்பித்தார்.
மதுரகவி ஆழ்வார் அருளியது—கண்ணிநுண் சிறுத்தாம்பு–10 பாசுரங்கள். இந்தப் 10 பாசுரங்களின் பொருளை,
இந்த ஒரே பாசுரத்தில் ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். இப்படிப் 10 விஷயங்களாலே ஸ்ரீ நம்மாழ்வார் , பகவானைச் சரணடைந்தார்.
மதுரகவிகளோ, ஆசார்யனை—ஸ்ரீ நம்மாழ்வாரைச் சரணடைந்தார். மோக்ஷத்துக்கு உபாயம் ஆசார்யனே —ஆசார்ய பரம்பரையை அநுசந்திக்க வேணும்

பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் | ஆசார்யவத்தயா முக்தெள தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் ||
என்று ஆசார்யவத்தையே ஸர்வருக்கும் மோக்ஷ காரணமென்று அறுதியிட்டார்கள் .
முமுக்ஷுவுக்கு ஆசார்யவம்சம் பகவானானளவுஞ் செல்ல அநுசந்திக்க வேண்டுமென்று ஓதப்பட்டது.

வ்யாக்யானம் :—–
ஸ்ம்ருதி சொல்கிறது—பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் |
ஆசார்யவத்தயா முக்தெள தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் ||
மிகவும் பாபியான க்ஷத்ரபந்து, மிகவும் புண்ணியனான புண்டரீகன் இருவருடைய சரிதத்தை மேற்கோள் காட்டி,
அவர்கள் இருவருமே ஆசார்யனின் அநுக்ரஹத்தால்தான் மோக்ஷம் அடைந்தார்கள் என்று ஸ்ம்ருதி சொல்கிறது

க்ஷத்ர பந்து சரிதம் :—- ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் சொல்லப்படுகிறது ——–
க்ஷத்ரபந்து ஒரு அரசன்–எப்போதும் பாபச் செயல்களையே செய்துவந்தான்.
அதனால் ராஜ்யத்தைவிட்டு விலக்கி வைக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்து வந்தான்.
பிறரைத் துன்புறுத்தி ,ஜீவ ஹிம்ஸை செய்வதே வழக்கமாக இருந்தது. ஒருநாள், நட்ட நடுப்பகல் உச்சி வெய்யிலில்,
வழிதவறி வந்த முனிவரைப் பார்த்து, இரங்கினான். தண்ணீர் தாகத்தால் தவித்த அவர், தண்ணீர் அருந்த அருகில் உள்ள
குளத்தில் இறங்கும்போது அதில் விழுந்துவிட, க்ஷத்ரபந்து அவரைக்காப்பாற்றி,
அவரது பசிக்குத் தாமரைக் கிழங்குகளைக் கொடுத்து, உபசரித்தான். முனிவர் , அவனது வ்ருத்தாந்தத்தைக் கேட்க,
அவன் தனது பாப கார்யங்களை எல்லாம் சொல்லித் திருந்தவும் இயலாத நிலையில் இருப்பதாகச் சொல்ல,
அந்த முனிவர், ”கோவிந்தா, கோவிந்தா” என்றாவது சொல்லிக்கொண்டிரு என்று புத்திமதி சொன்னார்.
க்ஷத்ரபந்துவும், அப்படியே சொல்லக் சொல்ல, பாபச் செயல்களை ஒழித்து, மோக்ஷத்துக்கான உபாயத்தைச் செய்து மோக்ஷம் அடைந்தான்.

உபதேச பரம்பரையில் உள்ளது——-
க்ஷத்ரபந்து ஒரு கெட்ட அரசன். கெட்ட நடத்தை உடையவன். உறவினர்கள்,அரசனைக் காட்டில் தள்ளி விட்டார்கள்.
அங்கும் கெட்ட வழியில் முனிவர்களைத் துன்புறுத்தினான். ஒரு நாள், அந்த வழியில் நாரதர் வந்தார்.அவரைத் துன்புறுத்தத் தொடங்கினான்.
அவர், ”ஹே —அரசனே–உன்குடும்பத்தாரைக் காப்பாற்ற, நிறைய பாபச் செயல்களை செய்கிறாய் ;
இதில் ஒரு பங்கையாவது உன் குடும்பத்தார் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்வார்களா — என்று கேட்டு வா ” என்று சொல்லி அனுப்பினார்.
நாரதரின் தர்சனத்தால் ,சிறிதளவு ஞானம் உண்டான க்ஷத்ரபந்து, அப்படியே செய்கிறேன் என்று சொல்லிச் சென்றான்.
திரும்பி வந்த அரசன், ”எல்லோரும் மறுக்கிறார்கள்; நிறையப் பாபங்களைச் செய்திருக்கிறேன்; என்னைக் காத்தருள்க —என்று நாரதரை வேண்ட,
அவர், அவனுக்கு மோக்ஷ உபாயங்களை உபதேசித்து, அவன் மோக்ஷம் அடையுமாறு செய்தார்.

புண்டரீகனின் சரிதம் :— ஸ்ரீ பாத்மோத்தர புராணம் சொல்கிறது—— இவன் ப்ராம்மணன் —பெரிய செல்வந்தன். வேதாத்யானம் செய்தவன்.
பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்தவன். புண்ய தீர்த்தங்களில் நீராடியவன். பக்தி யோகத்தில் இழிந்தும்,
பகவானின் அருள் கிட்டவில்லை.ஒரு சமயம் நாரதரைத் தரிசிக்க, அவர் அவனுக்கு அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசித்து, நல்வழிகாட்ட,
இந்த பிராம்மணன் , அஷ்டாக்ஷர மந்த்ர ஜபத்தால், பகவானின் அருளை பெற்று மோக்ஷம் அடைந்தான்.இப்படியாக,
ஆசார்யன் அருளினால்தான் மோக்ஷம் சித்திக்கும் என்று தெளிந்தது.மோக்ஷம் அடையத் தீராத ஆசை உடையவன்,
தனது ஆசார்ய பரம்பரையை ,பகவான் வரையிலும் சொல்ல வேண்டும்.

பகவான் ஸ்ரீமந் நாராயணனே முதல் ஆசார்யன்
தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் என்றும்,
மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : என்றும் ,
த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ என்றும், குருரஸி கதிச்ச ஸி ஜகதாம் என்றும் , சொல்லுகிறபடியே
ஸர்வலோகத்துக்கும் பரமாசார்யனான ஸர்வேச்வரன் —-
1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும் இவன்முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும்
2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகதவிஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : என்னும்படி பண்ணி ,
அவர்கள் முகங்களாலே ஹிதப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ,
3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளையிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,
4.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும்,
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற
வ்யாஸாதிகளை அனுப்ரவேசித்து மகாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும்,
5. ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,
6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு முதலிப்பித்தும்
7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை
ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை:
ஸவகர்மஸு ஸாத்வதம் விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதெள கலியுகஸ்ய ச என்கிறபடியே
அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்
8. பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத : என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி
ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கும்
அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்
9. இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக ,
ஏ சாட்ஷாத் நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ என்றும்
10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே
அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் . இத்தைக் கணிசித்து :
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு ச பூரிச :
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்

வ்யாக்யானம்–
எம்பெருமானே , எல்லா உலகங்களுக்கும் முதல் ஆசார்யன் –பரமாசார்யன் என்பதை பல உதாரணங்களிலிருந்து உணரலாம்.

தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் (மஹாபாரதம்–ஸபா பர்வம்) எல்லாக் கல்யாண குணங்கள் உள்ளவனும்,
முதலாவதாகப் பூஜிப்பதற்குத் தேவையான குணங்களைப் பெற்றிருப்பவனும்,தகுதி உடையவனும், பிதாவும், ஆசார்யனும் ,
பூஜிக்கத்தகுந்தவனும் ஆன ,இந்தக் க்ருஷ்ணனை பூஜிக்கலாம் —-சம்மதியுங்கள்—
( ராஜ ஸுய யாகத்தில் ,முதலில் யாருக்கு அக்ர பூஜை செய்யவேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, ஸஹதேவன் ,
அங்குள்ள சபையில் கூடி இருந்தவர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் —-ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பவன் –ஆசார்யன் .
வேதத்தைச் சொல்லிக் கொடுப்பவன் –குரு )
மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : —-விஷ்ணு புராணம் (5–1–14) எல்லா உலகங்களுக்கும் குருவான நாராயணன்,
எனக்கும் குரு —ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் சொல்கிறது—–தனக்கென்று ,எந்த ஆசார்யனும் இல்லாத , பரமாசார்யன் –நாராயணன்.
(இங்கு குருவும் அவனே;ஆசார்யனும் அவனே ).
த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ —–நீரே பந்து–எல்ல உறவும். நீரே குரு –காந்தாரி,
க்ருஷ்ணனைப் பார்த்துச் சொல்லும் வாக்யம் குருரஸி கதிச்ச ஸி ஜகதாம்—-

ஸ்தோத்ர ரத்னம் (60 ) பிதா த்வம் , மாதா த்வம், தயிததநயஸ்த்வம் , ப்ரியஸுஹ்ருத் த்வமேவ ,த்வம் பந்து: குருரஸி கதிஸ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதிஅஹமபி தவைவாஸ்மி ஹி பாரா : ||
ஸ்தோத்ர ரத்னம் (60 ) முழு ச்லோகம்
எல்லா உலகங்களுக்கும், நீரே பிதா ;நீரே மாதா; பிரியமான புத்ரன்;இஷ்டமான மித்ரன்; எல்லா பந்துவும்;
அக இருள் நீக்கும் ஆசார்யன் ;அடியோங்கள் அடையும் பேறு . பகவானுக்கும் , நமக்கும் நவவித ஸம்பந்தம் –ஒன்பதுவிதமான உறவுகள் பகவான் நாம் 1.பரமாத்மா ஜீவாத்மா 2.யஜமானன் கிங்கரர்கள் –வேலையாட்கள் 3.பிதா புத்ரன் /புத்ரி 4.ஆசார்யன் சிஷ்யன்
5.பதி பத்னி 6.போக்தா –அனுபவிப்பவன் போக்யம் –அனுபவிக்கப்படும் பொருள் 7.ரக்ஷிப்பவன் ரக்ஷிக்கப்படுபவர்
8.நியமிப்பவன் நியமிக்கப்படுபவன் 9.சேஷீ சேஷன் –சேஷபூதன் இப்படிப்பட்ட எல்லா லோகங்களுக்கும் பரமாசார்யனான எம்பெருமான்,

நமக்குச் செய்த உபாயங்களை, ஸ்வாமி தேசிகன் இப்போது சொல்கிறார்.
1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும்
இவன்முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும் —-

வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவுக்குத் தொடக்கத்திலே வேதங்களைக் கொடுத்தான், ,காணாமல்போன வேதங்களைக் கண்டுபிடிப்பதாக வாக்குக் கொடுத்து,
அப்படியே கண்டுபிடித்து, வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, அவன் மூலமாகவே , வேத சாஸ்த்ர ஞானத்தை உலகத்தாருக்கு வழங்கியும்,

2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகதவிஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : (பாரதம்–சாந்தி பர்வம் )என்னும்படி பண்ணி ,
அவர்கள் முகங்களாலே ஹிதப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ——,
வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவின் புத்ரர்களான ஸநத்குமாரர்கள் ,—இவர்கள்–தானாகவே ஞானிகள், நிவ்ருத்தி தர்மத்தில் இழிபவர்கள்—–
இவர்கள் மூலமாக நன்மைகளைச் செய்தும்,

3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளையிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,

வ்யாக்யானம் —- மற்றும், நாரதர், பராசரர், சுகப்ரம்மம் , சௌனகரிஷி இன்னும் பல மஹரிஷிகள் மூலமாக,
அத்யாத்ம ஸம்ப்ரதாயமான ஜீவாத்மா –பரமாத்ம விஷயமான உபதேச க்ரமம் அழியாதபடி செய்தும்,

4.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும்,
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற வ்யாஸாதிகளை அனுப்ரவேசித்து
மகாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும்,

வ்யாக்யானம் —–
.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ
பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? (விஷ்ணு புராணம் ) க்ருஷ்ணத்வைபாயனர் என்று கொண்டாடப்படும்
வ்யாஸ மஹரிஷி —ஸ்ரீமந் நாராயணனே !ஹே—-மைத்ரேயரே , மஹாபாரதம் என்கிற இதிஹாசத்தை இயற்ற, இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் (மஹாபாரதம் —ஆதிபர்வம் )
மஹர்ஷியான , வ்யாஸரின் திருநாமத்தைச் சொல்லும்போது, பீஷ்மர், கைகளைக் கூப்பியவண்ணம் பேசினார்.
பகவான் நாராயணன், வ்யாஸாதி மஹரிஷிகளிடம் அநுபிரவேசித்து, சாரீராதிகளை—- மஹாபாரதம், ப்ரஹ்மஸூத்ரம் முதலியவைகளைப் படைத்தும்,

5. ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,

வ்யாக்யானம்—- பகவான் நாராயணனே, ஹம்ஸ , மத்ஸ்ய ,ஹயக்ரீவ,நரநாராயண, கீதாசார்ய க்ருஷ்ண அவதாரங்கள் எடுத்து,
தத்வங்களையும்,ஹிதத்தையும், புருஷார்த்தத்தையும் ப்ரகாசமாக எடுத்துச் சொல்லியும்——

ஹம்ஸாவதாரம்—-ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—– ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்கள்—ஸநகாதிகள்—–
இவர்கள், தங்களுடைய பிதாவான, ப்ரஹ்மாவிடம் ,ஸூக்ஷ்மயோகத்தை விளக்கும்படி ப்ரார்த்தித்தார்கள்.
இந்த யோகத்தை இதுவரை அறியாத அவர் , மிகவும் வேண்டி, எம்பெருமானைத் த்யானித்தார்.
பகவான் மிகவும் கருணையுடன் ஹம்ஸரூப அவதாரமெடுத்து, ப்ரஹ்மாவின் முன்பு தோன்றி, அவருக்கும் ஸநகாதி முனிவர்களுக்கும்,
விசிஷ்டாத்வைத தத்வமான ஜீவபர—சரீரஆத்மபாவ ரூபத்தை உபதேசித்தார்.

மத்ஸ்யாவதாரம் —–இந்த அவதாரமும் ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—–
ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், ப்ரஹ்மா நித்திரை வசப்படுவார். அப்போது, நைமித்திகப் ப்ரளயம் ஏற்படும்.
உலகங்கள் யாவும் ,கடலில் மூழ்கி எங்கும் ஜலம் காக்ஷி அளிக்கும். நித்திரை வசப்பட்ட ப்ரஹ்மாவின் வாயிலிருந்து வேதங்கள் வெளிப்பட,
அப்போது, அருகே இருந்த ஹயக்ரீவன் என்கிற அசுரன், அவற்றை அபகரிக்க,பகவான் இதை அறிந்தார்.
ஸத்யவ்ரதன் என்கிற ராஜரிஷி க்ருதமாலா என்கிற நதியில் நித்ய அநுஷ்டானங்களைச் செய்துகொண்டிருந்தபோது,
அவர், ஜலதர்ப்பணம் செய்யும் சமயத்தில், அவருடைய உள்ளங்கையில் சிறிய மத்ஸ்யமாக (மீன் )அவதரித்து,
அவராலேயே, கமண்டலு, தொட்டி,குளம், நதி இவற்றில் விடப்பட்டு, ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய மீனாக வளர்ந்து,
கடைசியில் ஸமுத்ரத்தில் அவராலேயே விடப்பட்டார். இந்த ஆச்சர்யத்தைக் கண்டு ,அனுபவித்து, மெய்சிலிர்த்த ஸத்யவ்ரதன்
இவர் எம்பெருமானே என்று நிச்சயித்து, அவரைத் துதித்து ,ஆசார்யனாக இருந்து தத்வங்களை உபதேசிக்க வேண்டினார்.
எம்பெருமானும் தத்துவங்களை உபதேசித்து, மத்ஸ்ய புராண சம்ஹிதையையும் சொல்லி, ஹயக்ரீவன் என்கிற அந்த அசுரனை வதைத்து,
வேதங்களைக் காப்பாற்றி மீட்டு, ப்ரஹ்மாவுக்கே மீண்டும் கொடுத்தார்

ஹயக்ரீவாவதாரம் —-மஹாபாரதம் சொல்கிறது—
ப்ரளய காலம் —-எங்கும் ஜலம்.ஜீவாத்மாக்கள், கருப்பான மெழுகில் தங்கத்தூள்கள் ஒட்டுவதுபோல,
மூல ப்ரக்ருதி என்கிற சூக்ஷ்ம ரூபத்தில் ஒட்டிக்கொண்டு, அறிவிழந்து இருக்கிறார்கள்.
பகவான் ப்ரளய ஜலத்தில், பள்ளிகொண்டு இருக்கிறான்;யோக நித்ரைஇப்படியே பல காலம் கழிகிறது.
யோக நித்ரையில் , பகவான் மறுபடியும் உலகங்களை ஸ்ருஷ்டிக்கவும், ஜீவாத்மாக்களை மறுபடியும் உயிர் பெற்று எழச் செய்து,
அவர்கள் உய்வதற்கு வழிகாணவும் யோசித்து, தன்னுடைய நாபியிலிருந்து, தாமரை மலரையும், அதில் ப்ரஹ்மாவையும் ஸ்ருஷ்டிக்கிறான் .
தாமரை மலர் ஸ்ருஷ்டி ஆவதற்கு முன்பே தாமரை இலையில் இரண்டு நீர்த்துளிகள் ,அவனுடைய சங்கல்பத்தாலேயே உண்டாகின.
இதில் ஒரு நீர்த்துளி ,மது என்கிற அஸுரனாகவும் , இன்னொரு துளி ,கைடபன் என்கிற அஸுரனாகவும் ஆகி,
தாமரைத் தண்டின் உள்ளே புகுந்து ,ப்ரஹ்மா அமர்ந்துள்ள மலருக்கு வந்தனர் எம்பெருமான், ப்ரஹ்மாவுக்கு , சிருஷ்டித்தொழிலை உபதேசித்து,
அதை நன்கு தெளிய நான்கு வேதங்களையும் அருள்கிறான். ப்ரஹ்மா, நான்கு வேதங்களையும் நான்கு அழகான குழந்தைகளாக ஆக்கும் சமயத்தில்,
தாமரை மலருக்கு வந்த , மது கைடபர் என்கிற இந்த இரண்டு அஸுரர்களும் ,அழகிய நான்கு வேதங்களையும்( குழந்தைகள் ) அபஹரித்துக்கொண்டு
பாதாள லோகத்துக்குச் சென்று , அங்கு மறைத்துவைத்தனர். ப்ரஹ்மா பதறினான்; நான்கு வேதங்களின் உதவி இல்லாமல்,
ஸ்ருஷ்டி செய்ய இயலாமல்தவித்தான். எம்பெருமானைத் துதித்தான், பகவான் அநிருத்தனாகி , ஹயக்ரீவ அவதாரமெடுத்து,
பாதாள லோகத்துக்குச் சென்று, ”உத்கீதம்” என்கிற ஸ்வரத்தை எழுப்ப, இரண்டு அஸுரர்களும் சப்தம் வந்த திசையை நோக்கிப் போகும்போது,
ஹயக்ரீவனாக அவதரித்த பகவான், வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, மறுபடியும் யோக நித்ரை செய்யலானார்.
அசுரர்கள், ஹயக்ரீவ அவதார எம்பெருமானிடம் சண்டையிட, பகவான் அவ்வஸுரர்களை வதைத்து, ஸ்ருஷ்டி செய்வதற்கான ஞானத்தை ப்ரஹ்மாவுக்கு அருளினார்.

நரநாராயணாவதாரம் —-ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது– தக்ஷ ப்ரஜாபதியின் பெண் மூர்த்தி என்பவள்–அவள்,
தர்ம ப்ரஜாபதியைத் திருமணம் செய்துகொண்டு, பகவானின் ஸ்வரூபமாக, நர நாராயணர்களைப் பெற்றெடுத்தாள் .
நாராயண ரிஷி, பத்ரிகாஸ்ரமத்தில் நாரதர் முதலானவர்களுக்கு , ஆத்ம ஸ்வரூபமான கர்ம யோகத்தை உபதேசித்தார் இவரால்,
தன்னுடைய ”இந்த்ர ”பதவி பறிபோய் விடுமோ என்று இந்த்ரன் அஞ்சி,இவருடைய தபஸ்ஸைக் கெடுக்க, அப்ஸரஸ்களை அனுப்ப,
நாராயண ரிஷியோ,தனக்குப் பணிவிடை செய்யும் அதிரூப சுந்தரிகளை அவர்களுக்குக் காண்பித்து,
இவர்களில் உங்களுக்கு ஒத்த அழகுள்ளவர் இருப்பின், நீங்கள் அவளை இந்த்ர லோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல,
அவர்களும் ,மிகவும் வேண்டி, ஊர்வசியை அழைத்துச் சென்று ,இந்த்ரனிடம் சொல்ல, இந்திரன் மிகவும் நடுங்கியதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
நரநாராயணர்கள்தான், திருவஷ்டாக்ஷரம், அதன் பொருள், மஹிமை, அநுஷ்டானமுறை இவற்றையெல்லாம் வெளியிட்டவர்கள் .

கீதாசார்யன் —– குருக்ஷேத்ர யுத்தத்தில், அர்ஜுனனுக்கு, பகவான் அருளிய உபதேசங்கள்—18 அத்தியாயங்கள்– பகவத் கீதை
என்கிற மிக உயர்ந்த, தத்வ விளக்கம்–இதனாலும் பகவான் ஆசார்யன்

6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு மூதலிப்பித்தும்

வ்யாக்யானம்——– தான் அருளிய எல்லாவற்றையும், பீஷ்மர் முதலான ஞானிகள் மூலமாக வெளியில் பரவச் செய்தான்

7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை
ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை:
ஸவகர்மஸு ஸாத்வதம் விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதெள கலியுகஸ்ய ச
என்கிறபடியே அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்

வ்யாக்யானம்–விளக்கம்–
பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் —-மஹாபாரதம்—சாந்தி பர்வம்– பகவான் நாராயணனே,
பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முழுவதையும் , சொன்னான்.
இந்த சாஸ்த்ரம் மறைந்தபோது, த்வாபர யுகத்தின் முடிவில், கலியுகத் தொடக்கத்தில், அவனே மறுபடியும் உபதேசித்தான்.
நான்கு வர்ணத்தவர்களும், அவரவர்களுக்கு உரிய முறையில், பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய, ஸங்கர்ஷணாகி ,உபதேசித்தான்.
இவர்கள், தத்தம் ஆசார்யனிடம் ”பஞ்ச சம்ஸ்காரம்”செய்துகொண்டு, தன்னை ஆராதிக்குமாறு செய்தான்.

8. பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத : என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி
ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை
ஸர்வருக்கும் அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்

வ்யாக்யானம்—விளக்கம்–
பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத —-விஷ்ணு தர்மம் சொல்கிறது—
கலியுகத்தில் அந்தந்த ஜீவன்களுக்குள் புகுந்து, அச்யுதன், தனக்கு விருப்பமானத்தைச் செய்கிறான், என்பதற்கு ஏற்ப,
பராங்குச (நம்மாழ்வார் முதலாக ), பரகால ( திருமங்கை ஆழ்வார்) என்கிற பத்து அவதாரங்களை எடுத்தான்.
இப்படி, பகவான் செய்த உபகாரம் என்ன ? மேகங்கள், சமுத்ரத்திலிருந்து, நீரை உறிஞ்சி எடுத்து, அந்த நீரை,
எல்லா ஜீவன்களுக்கும் மழையாகப் பொழியுமாப்போலே ,வேதங்களின் சாரத்தை எல்லாம் எடுத்து, எல்லோருக்கும் எளிதில் புரியும்படி,
நாலாயிர திவ்ய ப்ரபந்தமாகத் தமிழில் அளித்தான்.

9. இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக ,
ஏ ஸாக்ஷாத் நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ என்றும்

வ்யாக்யானம்—–விளக்கம் — இப்படியாகத் தான் ஸங்கல்பித்த –ஏற்படுத்திய நல்ல பாதைக்கு, நாராயணனை, மற்ற பரிவார தெய்வங்களோடுச் சமமாக நினைப்பவர்கள்,வேதநெறிப்படையாக வாழ்க்கையை வாழாத- பாஷாண்டிகள்,நாராயணனைத் தாழ்வாக எண்ணுபவர்கள், —
இவர்களைப்போல் உள்ளவர்களால், இடைஞ்சல்–தடங்கல் ஏற்படாதிருக்க, பகவான் செய்தது என்னவெனில் ?
ஏ சாக்ஷாத் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான்
உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ ——— (ஜயாக்ய ஸம்ஹிதை )
நாராயணன், மனுஷ்ய சரீரத்தை எடுத்து, ஸம்ஸாரத்தில் மூழ்கி இருக்கிற ஜீவாத்மாக்களை, சாஸ்த்ரம் என்கிற
கையினால், கருணையுடன், தானே , கரையேற்றுகிறான்.

10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே
அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் . இத்தைக் கணிசித்து :

வ்யாக்யானம்—-விளக்கம் —– ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து , என்னுள்ளே பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகிவந்து,
போதில்கமல வன்னெஞ்சம் புகுந்து என்சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே ————பெரியாழ்வார் திருமொழி
அவன் பகவான், நாராயணன்—பீதாம்பரதாரி—என்னுள்ளே வந்தான்—எப்படி ? பிரமகுருவாக வந்தான் —வந்து ஹ்ருதயத்திலே புகுந்தான்—
புகுந்தவன் , என் சிரஸ்ஸில் திருவடியை வைத்து , அது அழியாத அடையாளமாக ஆயிற்று— என்று இப்படி விவரிக்கிறார்—
பகவான், ஆசார்ய ரூபமாக வந்து, ப்ரஹ்மோபதேசம் செய்கிறானாம்.
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு ச பூரிச :
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்

வ்யாக்யானம் —விளக்கம் ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது—-
இந்தக் கலியுகத்தில், நாராயணனையே உபாயமாகவும் உபேயமாகவும்
கொண்ட விஷ்ணு பக்தர்கள், தமிழ் பேசும் பிரதேசத்தில் ,தாமிரவருணி, வைகை,பாலாறு, காவேரி, மேற்கே கடலில் கலக்கும் மகாநதி (பெரியாறு )
இந்த நதிகளின் கரைகளில் பிறப்பார்கள். ஸ்ரீ உடையவர் வரை ஆசார்ய பரம்பரை இவ்வாசார்யர்களில் ,
ஈச்வரமுனிகள் பிள்ளை நாதமுனிகள் . இவர் ந்யாயதத்துவமென்கிற சாஸ்த்ரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார்.
இவருக்கு ஸ்ரீ மதுரகவிகள் முதலாக ஸம்ப்ரதாயபரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும்
யோகதசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் .
நாதமுனிகள் பிள்ளை ஈச்வர பட்டாழ்வான் . ஈச்வரப்பட்டாழ்வான் பிள்ளை ஆளவந்தார்.
இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஆகமப்ராமாண்யமும் புருஷநிர்ணயமும் , ஆத்ம ஸித்தி–ஈச்வர ஸித்தி –ஸம்வித் ஸித்தி என்கிற ஸித்தித்ரயமும் ,
கீதார்த்த ஸங்க்ரஹமும் ,சதுச்லோகியுமாக எட்டு.
ஆளவந்தார் பிள்ளை சொட்டை நம்பி. சொட்டை நம்பி பிள்ளை என்னாச்சான் . என்னாச்சான் பிள்ளைகள் நால்வர்.
இவர்களில் ஒருவர் பிள்ளையப்பர்.பிள்ளையப்பர் பிள்ளை தோழப்பர். தோழப்பருக்குப் பெண்பிள்ளைகள் இருவர்.

வ்யாக்யானம்—-விளக்கம்—- கலியுகத்தில் ,நதிதீரங்களில் ,ஆசார்யர்கள் ,அவதரிப்பார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொன்னதை ,மேற்கோள் காட்டியவர்,
இப்போது ஆசார்யர்களைப் பற்றிக் கூறுகிறார்.
முதலில் ஸ்ரீமந் நாதமுனிகள் . இவர் ஈச்வரமுனியின் குமாரர். இவர், ந்யாயதத்வம், யோகரஹஸ்யம் என்கிற இரண்டு பொக்கிஷ க்ரந்தங்களை அருளினார்.
இவருக்கு, மதுரகவி ஆழ்வாரின் உபதேச பரம்பரையும், திருவாய்மொழியை உபதேசமாகப் பெற்று, யோகத்தில் இழிந்ததால்,
நேரிடையாகவே ஸ்ரீ நம்மாழ்வாரை ,ஆசார்யனாகப் பெரும் பாக்யத்தைப் பெற்றார்.
நாதமுனிகள் குமாரர் ஈச்வர பட்டாழ்வான். இவருடைய பிள்ளை ஆளவந்தார்.
ஸ்ரீ ஆளவந்தார் அருளியவை–ஆகமப்ரமாண்யம்,புருஷ நிர்ணயம், ஆத்ம ஸித்தி ,ஈச்வர ஸித்தி ,ஸம்வித் ஸித்தி ,
கீதார்த்த ஸங்க்ரஹம் , ஸ்தோத்ர ரத்னம் சதுஸ்லோகி –ஆகிய எட்டு.
பிள்ளை , சொட்டை நம்பி. சொட்டை நம்பியின் பிள்ளை எண்ணாச்சான்.இவரது பிள்ளைகள் நால்வர்.
அதில் ஒருவரான பிள்ளையப்பரின் குமாரர் தோழப்பர். இவருக்கு இரண்டு பெண்கள்.

நாதமுனிகள் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்த முதலிகள்,உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன்,
உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான்
வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் என்பர் .

உய்யக்கொண்டார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர்.
அவர்களாகிறார், மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் ,
ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை.

மணக்கால் நம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர் .அவர்களாகிறார், ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத்
திருவிண்ணகரப்பன் , சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி

வ்யாக்யானம்—விளக்கம்—
ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் என்றால், அவரது திருவடிகளைப் பற்றிய சிஷ்யர்கள் என்று பொருள்.
நாதமுனிகளை ஆச்ரயித்தவர்கள்–உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,
நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான் , வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் ஆகிய எண்மர்

உய்யக்கொண்டாரை ஆச்ரயித்தவர்கள்—-மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் ,
ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை ஆகிய ஐவர்

மணக்கால் நம்பியை ஆச்ரயித்தவர்கள்—-ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத் திருவிண்ணகரப்பன் ,
சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி ஆகிய ஐவர்

ஆளவந்தார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் பதினைவர் .அவர்களாகிறார், பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான்,
ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான், சிறியாண்டான் , திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் ,
தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் , மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர்

வ்யாக்யானம்—-விளக்கம்– நாதமுனிகள் திருப்பேரரான ஆளவந்தாரை -ஆச்ரயித்தவர்கள்—-பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி,
திருமாலையாண்டான், ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான்,சிறியாண்டான் ,
திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் , தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் ,
மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர் .

பெரியநம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அறுவர். அவர்களாகிறார், எம்பெருமானார், மலைகுனிய நின்றார்,
ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பி

வ்யாக்யானம்—-விளக்கம்–
பெரியநம்பிகளை ஆச்ரயித்தவர்கள்—-எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,மலைகுனிய நின்றார்,
ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பிகள் ஆகிய அறுவர் .
எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ரகஸ்யார்த்தங்களை சிக்ஷித்தார்.
திருமாலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்.
ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழியும் ஓதி ஸ்தோத்ராதிகளும், அருளிச் செய்யும் நல்வார்த்தைகளும் கேட்டருளினார்.
திருமலைநம்பி ஸ்ரீபாதத்திலே ஸ்ரீமத் ராமாயணம் கேட்டருளினார்.
இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஸ்ரீபாஷ்யமும், தீபமும், ஸாரமும் , வேதார்த்த ஸங்க்ரஹமும் , ஸ்ரீ கீதாபாஷ்யமும்
சிறிய கத்யமும், பெரிய கத்யமும் ஸ்ரீ வைகுண்ட கத்யமும் ,நித்யமும் ஆக ஒன்பது.
இவர் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகளை, தம் தம் ஸம்ப்ரதாயப்படிகளிலே அறிந்து கொள்வது

வ்யாக்யானம்—–விளக்கம் —
எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரஹஸ்யார்த்தங்களையும் ,
திருமாலையாண்டானிடத்திலே திருவாய்மொழிஅர்த்தங்களையும்,கற்றார்.
ஆளவந்தாராழ்வார் பக்கலில் திருவாய்மொழியும் , ஸ்தோத்ர ரத்னம், அருளிச் செயலும், கற்றார்.
திருமலை நம்பிகளிடம் , ஸ்ரீமத் ராமாயணத்தைக் கேட்டார்.
இவர் அருளிய க்ரந்தங்கள் —— ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம் , வேதார்த்த ஸங்க்ரஹம் , கீதா பாஷ்யம்,
ஸ்ரீரங்க கத்யம் ( சிறிய கத்யம் ), ஸரணாகதி கத்யம் ( பெரிய கத்யம் ), ஸ்ரீவைகுண்ட கத்யம்,நித்யம் ஆக ஒன்பது க்ரந்தங்கள் .
எம்பெருமானாரின் சிஷ்யர்களை, அவரவர் ஸம்ப்ரதாயத்துக்கு ஏற்ப அறிந்துகொள்ளவேண்டும்.

ஆசார்ய பக்தி வேண்டும்; மந்த்ர அர்த்தங்களை மறைத்தலும் வேண்டும்
குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ என்றார்கள்
குருவை ஒருவன் ப்ரகாசிப்பிக்கிறதவும் ஒருவன் ப்ரகாசிப்பியாதொழிகிறதுவும் குரு பக்தியில் தாரதம்யத்தாலேயிறே .
பகவத் விஷயத்தில் போலே குருவிஷயத்திலும் பரையான பக்தியுடைவனுக்கு அபேக்ஷிதார்த்தங்கள் எல்லாம் ப்ரகாசிக்கும்
என்னுமிடம் கட —ஜாபாலாதி ச்ருதிகளிலும்
ஸஞ்சயாதி வ்ருத்தாந்தங்களிலும் ப்ரஸித்தம் .
இங்ஙனல்லார்க்கு இப்படி ஞான ஸம்பத்து உண்டாகாது என்னுமிடம் சிஷ்யர்களுடைய ஞானதாரதம்யத்தாலே கண்டுகொள்வது.
மிகவும் குணாதிகரனான சிஷ்யர்களுக்கும் கடுக அத்யாத்ம விஷயங்களை ப்ரகாசிப்பியாதார்க்கு நிஷ்ட்டை குலையாது என்னுமிடம்
ரைக்வாதி வ்ருத்தாந்தங்களிலே ப்ரஸித்தம் .
பெற்றது குணமாக உபதேசித்தால் , சிஷ்ய பாபம் குரோரபி என்கையாலே ஆசார்யனுக்கு நிஷ்ட்டை குலையும்படியாமென்னுமிடம் ,
வருவது விசாரியாதே இந்த்ரனுக்கு உபதேசித்துத் தானும் ப்ரஹ்மவித்யையை மறந்து , தன் சிஷ்யனான நாரத பகவானை இட்டு
ஸர்வேச்வரன் உணர்த்துவிக்க வேண்டும்படியிருந்த சதுர்முகன் பக்கலிலே கண்டுகொள்வது.
இப்படி, அப்ரகாசப்ரகாசாப்யாம் என்கிற இரண்டுக்கும் க்ஷீயதே ஸம்பதாயுஷீ என்கிற பலங்களை
ஒளசித்யத்தாலும் ப்ரமாண ப்ரஸித்தியாலும் க்ரமத்தாலே உதாகரித்தவித்தனை,
இரண்டிலும் இரண்டு அந்வயித்தாலும் வாக்யத்தில் வரும் விரோதம் இல்லை.
ஆகையால், சர்வாவஸ்தையிலும் குருபக்தியின் பரீவாகமாக குருவை ப்ரகாசிப்பிக்கவும் மகாரத்னகர்ப்பமான மாணிக்கச் செப்புப்போலே
இருக்கிற திருமந்த்ரத்தினுடைய சீர்மையும் தன் நிஷ்ட்டையும் குலையாமைக்காக சிலவான ப்ரயோஜனங்களைப் பற்ற
சிஷ்யகுணபூதிம் இல்லாத சபலர்க்கு வெளியிடாதே , மந்த்ரத்தை மிகவும் சேமிக்கவும் ப்ராப்தம் .
இவ்விடத்தில் குரு சப்தம் பரமகுருக்களுக்கும் உபலக்ஷணம் ஸாமான்யமாகவுமாம் மந்த்ர சப்தம் மந்த்ரார்த்தம் முதலான ரகஸ்யங்களுக்கும் ப்ரதர்சனபரம் .
தான் இந்த ரகஸ்யங்களை அநுஸந்திக்கும்போதெல்லாம் ஆசார்ய பரம்பரையை அநுஸந்திக்கையும் விதிபலப்ராப்தம் .
இவ்வாசார்யர்களுடைய அநுஸந்தானம் , ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மனஸா த்யாயேத் என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்

வ்யாக்யானம்——விளக்கம்—- சேஷ ஸம்ஹிதை கூறுகிறது.
குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ புத்திசாலியானவன் ,
தனது ஆசார்யனைப் பற்றிப் பிறரிடம் புகழ்ந்து பேசவேண்டும். அவர் உபதேசித்த மந்த்ரங்களைப் பொக்கிஷம்போலப் பாதுகாக்க வேண்டும்.
இப்படியாக, ஆசார்யனின் பெருமையைப் பேசாமலும், மந்த்ரத்தைப் பாதுகாக்காமலும் இருந்தால், ஐச்வர்யம் குறையும்; ஆயுளும் குறையும்.
ஒரு சிஷ்யன், இப்படித் தன் குருவைப் புகழ்வதும் , புகழாமலும் இருப்பதும், குருவிடம் அவன் வைத்துள்ள
அதிக பக்தியும், குறைந்த பக்தியுமே காரணமாகிறது.
பகவானிடம் எவ்வளவு பக்தியுடன் இருக்கிறானோஅதைப்போன்று ஆசார்யனிடமும் பக்தியோடு இருக்க வேண்டும்.
அப்போது எல்லா ஞானமும் வந்து சேரும் ; ஆசார்யன் உபதேசிக்காத அர்த்த விசேஷங்களும்
ஆசார்யபக்தி பரிவாஹத்தால் ஸ்புரிக்கும் என்று ச்வேதாச்வதரம் சொல்கிறது.
ஆத்ம விஷயமான ஞானம், இப்படிப் பக்தி உள்ளவனுக்கு ஏற்படும் என்று, ,கடோபநிஷத்தும் ,ஜாபால உபநிஷத்தும் கூறுகின்றன..
சிஷ்யர்கள் மிக குணவான்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஆசார்யன் தத்வங்கள் முழுவதையும் உபதேசிக்கவில்லையென்றாலும்,
ஆசார்யனுக்கு ,அதனால் எந்தக் குறையும் வராது. சாந்தோக்ய உபநிஷத்தில் ஜாபாலையின் குமாரன்–ஸத்யகாமனின் சரிதத்தை
ஸ்வாமி தேசிகன் இங்கு உதாஹரிக்கிறார்.
ஜாபாலை என்கிற ஸ்திரீயின் குமாரன்–ஸத்யகாமன் . இவன், ப்ரஹ்மவித்யைக் கற்க ஆசார்யரை அணுகினான்
ஜானஸ்ருதி ஒரு அரசன். இவன் பலமுறை வேண்டிக்கொண்ட பிறகே , பலபரீக்ஷைகள் செய்து, இவனுக்கு, உபதேசித்தார்.
ரைக்வர் .இதுவே ரைக்வ வித்யை.

ஆனால் சிஷ்யனை முழுவதும் அப்படியே உடனே ஏற்றுக்கொண்டு உபதேசித்தால்
அந்தத் தகுதியில்லா சிஷ்யன் செய்த பாபங்கள் ஆசார்யனுக்குச் சேர்கின்றன.
இந்த்ரன் தனக்குச் சிஷ்யனாகக் கிடைத்தான் என்று அதைப் பெருமையாக நினைத்து, ப்ரஹ்மா
அவனிடம் சிஷ்ய லக்ஷணம் இருக்கிறதா என்பதை ஆராயாமல், உபதேசித்தார்.
இதன் பலன் அவருக்கு, பாஞ்சராத்ர அர்த்தங்கள் மறந்து போயின.
பிறகு நாரதர், அவற்றை ப்ரஹ்மாவுக்கு நினைவு படுத்தினார். பிறகு, ப்ரஹ்மா, பாஞ்சராத்ரத்தை சிவன் முதலியோருக்கு உபதேசித்தார்—என்று,
ப்ருஹந்நாரதீய வாக்கியமாக , ஸாரஸங்க்ரஹத்தில் சொல்லப்படுகிறது.

ஸஞ்ஜய விஷயம்—-இவர், தன் ஆசார்யரான வ்யாஸ ரிஷியிடம் ,எம்பெருமானிடம் உள்ள பக்தியைப்போலப் பக்தி கொண்டவர்.
அதனாலேயே, ஸ்ரீ க்ருஷ்ணன் ,குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததை மட்டுமல்லாது,
போர்க்களத்தில் நடந்தவற்றையெல்லாம் வ்யாஸ மஹரிஷியின் அருளாலே காணப்பெற்று த்ருதாஷ்டிரனுக்கு சொன்னவர்.
”அரசே—நான் ஆசார்யனின் பெருமையைப் பரப்பாமல் /புகழாமல் இருந்தாலும், நேர்மாறான வழியில் மந்த்ரத்தை வெளியே சொன்னாலும்,
செல்வம் மங்கும்;ஆயுள் குறையும். ஒருவனுக்கு ஆசார்ய பக்தி மிகவும் அவச்யம்; சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய லக்ஷணங்கள் இல்லாதவனுக்கு,
ஆசார்யன் உபதேசிக்கலாகாது; சிஷ்யன் மந்த்ரங்களை ஜெபிக்கும்போது, குருபரம்பரையை அவச்யம் த்யானிக்கவேண்டும் .

ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மனஸா த்யாயேத் என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்——கௌதம தர்ம ஸுத்ரம் -சொல்கிறது-
பேசக்கூடாதவர்களிடம் பேச நேர்ந்துவிட்டால்,அப்போது புண்யம் செய்த ஆசார்யர்களை மனதில் த்யானிக்கவேண்டும்.
என் உயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கி யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின் அருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி
நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன் அமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே

வ்யாக்யானம் —விளக்கம்
இந்த ஆத்மா, எம்பெருமானுக்கு ”சேஷன்” என்கிற ஞானத்தைக் கொடுத்து, ஆத்மாவைக் காப்பாற்றிய என் ஆசார்யனை
சரணம் என்று அடைந்து, அவரது ஆசார்யர்களை வரிசைக் க்ரமமாக நமஸ்கரித்து, பின்பு கருணையுடன்
ஸ்ரீ பெரும்பூதூரில் அவதரித்த வள்ளலான ஸ்ரீ பாஷ்யகாரர் , பெரியநம்பி ஆசார்யன், ஆளவந்தாராகிய ஆசார்யன் ,
மணக்கால்நம்பி என்கிற ஆசார்யன், ப்ரபத்தி மார்க்கத்தை மணக்கால் நம்பிக்கு உபதேசித்த உய்யக்கொண்டார்,
அவரது ஆசார்யன் நாதமுனிகள், அவரது ஆசார்யன் சடகோபன் என்கிற ஸ்ரீ நம்மாழ்வார், பிறகு ஸ்ரீ விஷ்வக் ஸேனர் ,
இனிமையான அமுதம் போன்ற பெரியபிராட்டியார், இவர்களை முற்பட நமஸ்கரித்து,
எம்பெருமானின் திருவடிகளை அடைகின்றேன்
ஏதே மஹ்யம் அபோட மன்மத ஸார உன்மாதாய நாதாதய : த்ரய்யந்த ப்ரதிநந்தனீய விவித உதந்தா : ஸ்வதந்தாமிஹ |
ஸ்ரத்தாதவ்ய சரண்ய தம்பதி தயா திவ்யாபகா வ்யாபகா : ஸ்பர்த்தா விப்லவ விப்ரலம்ப பதவீ வைதேஸிகா தேஸிகா : ||

வ்யாக்யானம்—விளக்கம்
வேதாந்தங்கள் கொண்டாடும்படியான தூய்மையான சரிதம் உடையவர்களும் , கல்யாணகுணங்கள் நிறைந்தவர்களும் ,
திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் கங்கா ப்ரவாஹத்தைநம்மிடம் பரவும்படி செய்தவர்களும்,வஞ்சித்தல்,போட்டி
இவற்றுக்கெல்லாம் எதிராக உள்ளவர்களும், சரணம் என்று அடைவதற்கு ஹேதுவாக இருப்பவர்களும் இப்படிப்பட்ட இவர்கள்,
(மேற்சொன்ன ஆசார்யர்கள்)மன்மதன் பிடியிலிருந்து என்னை விலக்கி , பரமபதத்தை அடைந்து, ஆனந்தமடைய ,
இந்த ஆசார்யர்கள் மூலமாகக் கிட்டும்படி அநுக்ரஹம் செய்ய வேண்டும் .

ஹ்ருத்யா ஹ்ருத்பத்ம ஸிம்ஹாஸநரஸிக — ஹயக்ரீவ ஹேஷோர் மிகோஷ— க்ஷிப்தப்ரத்யர்த்தி த்ருப்திர்ஜயதி பஹுகுணா பங்க்திரஸ்மத்குரூணாம் | திக்ஸௌதாபத்தஜைத்ரத்வஜபட பவந — ஸ்பாதிநிர்த்தூததத்தத் — ஸித்தாந்தஸ்தோமதூலஸ்த பகவிகமந — வ்யக்த ஸத்வர்த்த நீகா ||

வ்யாக்யானம்—-விளக்கம் ஸ்ரீ ஹயக்ரீவன் , நமது ஆசார்யர்களின் ஹ்ருதயங்களில் வீற்றிருந்து, நமது உடையவர் சித்தாந்தத்தை
எதிர்ப்பவர்களை,அவர்களின் கர்வத்தை அடக்க உதவுகிறான்.இப்படிப்பட்ட ஆசார்யர்களின் புகழ் ,
திசைகள்தோறும் உள்ள வெற்றித் தூண்களின்மீது கட்டப்பட்டுள்ளது.அந்தத் தூண்களில் உள்ள கொடிகள்,
மற்றவரின் வாதங்களை பஞ்சுக் கொத்துக்களைக் காற்று விரட்டுமாப்போலே விரட்டித்த தள்ளுகின்றன.
விமரிசையாக இருக்கிற ,நல்மார்க்கதர்ஸிகளான நமது ஆசார்யர்களின் வரிசை இப்படியாக மேன்மையுற்று விளங்குகிறது.

ஆரணநூல் வழிச்செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாயவர் வாதக்கதலிகள் மாய்த்த பிரான் என்றநகீர்த்தி
இராமாநுசமுனி இன்னுரைசேர் சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித்தீவினையே

வ்யாக்யானம்—-விளக்கம் வேதங்களின்உட்கருத்தை விளக்கும் நூல் ”ப்ரஹ்மஸுத்ரம் ”.
அது கூறும் உண்மையான வழியை ,தவறான வாதங்களை சொல்லிப் பலரும் அழித்தபோது,
அவற்றையெல்லாம்,வாழைத் தோப்பை நாசம் செய்யும் ஒப்பற்ற யானையைப் போல , உபகாரகர் ,
உலகுக்கு பொருத்தமான அலங்காரமான சிறந்த புகழை உடைய இராமாநுச முனி என்னும் ஸ்ரீ பாஷ்யகாரர்
இனிமையான தன்னுடைய ஸ்ரீ ஸூக்திகளால் சாய்த்தார்.ஸ்ரீ பாஷ்யகாரரின் இன்சொற்களிலும்
அவரது சிறந்த குணங்களிலும் எங்கள் மனம் முழுதும் ஈடுபட்டுள்ளது .
இனி நாங்கள், வேறு சாஸ்த்ரங்களையும்கர்மாக்களையும் ,தீயச் செயல்களையும் மனதால்கூட நினைக்கமாட்டோம் .

நீளவந்தின்று விதிவகையால் நினைவொன்றிய நாம்
மீள வந்தின்னும் வினையுடம்பொன்றி விழுந்துழலாது
ஆள வந்தாரென வென்று அருள்தந்து விளங்கிய சீர்
ஆளவந்தாரடியோம் படியோம் இனி அல்வழக்கே

வ்யாக்யானம்—-விளக்கம்
நாம், நீண்ட நெடுங்காலமாக சம்ஸாரப் பிடியில் சிக்கி இருக்கிறோம்.இந்தப் பிறவிக்குப் பிறகும் கர்மவினையின் காரணமாக ,
வேறொருப் பிறவியை எடுத்து அல்லல்படாமல், நம்மைக்காக்க ,ஆளவந்தார் அவதரித்தார்.
அவர் எதிர்வாதம் செய்பவர்களை வென்று, கருணை புரிந்தார் , அத்தகு கல்யாணகுணங்களை உடைய ஆளவந்தாருக்குத் தாஸரான நாம்,
இனிமேலும் ஸத்தில்லாத –அஸத்தான சாஸ்த்ரங்களைப் படிக்கமாட்டோம் .

காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத் தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த
வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார்நிகர் நானிலத்தே

வ்யாக்யானம்—விளக்கம் திருச்ச்சின்னம் வாத்யம்போலும் ,வலம்புரிச் சங்குபோலும் நல்ல பக்திமான்களான
கீழையகத்தாழ்வான் ,மேலையகத்தாழ்வான் ஆகிய இரண்டு சிஷ்யர்களுக்கு, தாள வித்யையைச் சொல்லிக்கொடுத்து,
தமிழ்வேதமெனப் போற்றப்படும் திவ்யப்ரபந்தத்தின் இனிமையான கானத்தையும் உபதேசித்து,
மஹா உதாரகுணவள்ளலும் யோகமார்க்கத்தை உலகில் பரவச் செய்தவருமான ஸ்ரீமந் நாதமுனிகளின் திருவடிகளைத் தினமும் ஸேவித்து வாழ்வோம் .

நான்கு வகையான இந்தப்பூமியில் நமக்குச் சமமானவர் யார் உள்ளார்கள் ? எவருமில்லை !

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் –13—க்ருதக்ருத்யாதிகாரம்–

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் –13—க்ருதக்ருத்யாதிகாரம்–(ப்ரபத்தி செய்த பிறகு ,ப்ரபன்னனின் நிலை )

அதிகாரத்திலிருந்து

ஸமர்த்தே ஸர்வஜ்ஞ ஸஹஜ ஸஹ்ருதி ஸ்வீக்ருத பரே
யத் அர்த்தம் கர்த்தவ்யம் ந புநரிஹ யத் கிஞ்சித் அபி ந :
நியச்சந்தஸ்தஸ்மிந் நிருபாதி மஹாநந்த ஜலதெள
க்ருதார்த்தீகுர்ம : ஸ்வம் க்ருபணம் அபி கைங்கர்ய தநிந :

வ்யாக்யானம்

பகவான் எல்லாவற்றையும் செய்யும் சமர்த்தன்; எல்லாவற்றையும் நன்கு
அறிந்தவன்;அனந்தகல்யாண குணபரன் ;நமது ப்ரபத்தியை அங்கீகரித்தபிறகு
இந்த மோக்ஷம் என்கிற பலத்துக்காக எதையும் செய்யவேண்டியதில்லை.
ஆதலால், நாம் க்ருதக்ருத்யர் . ஆத்மாவை, பகவானை அனுபவித்தல் என்கிற ஆனந்தத்தில்
நிலைநிறுத்தியுள்ளோம்
இப்போது ,பகவானுக்கு கைங்கர்யம் என்கிற தனம் ப்ராப்தமாகையால் க்ருதார்த்தம்
ஆபாச புருஷார்த்தங்களை எல்லாம் விட்டோம். மஹா புருஷார்த்தங்களைப் பெறுகிறோம்.
இதையும், பலப்பல ஜன்மங்களில் பக்தி முதலிய உபாயங்களில் இறங்கி காலதாமதம்
செய்யாமல் க்ஷணகால ஸாத்யமான ப்ரபத்தியாலே பெறுகிறோம் என்கிற மகிழ்ச்சி

அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தி செய்தவனை,”செய்யவேண்டியத்தைச் செய்தவன் ” என்று அழைப்பது ஏன் ?

இவ்வுபாய விசேஷ நிஷ்டன் ப்ராப்திக்கு அநந்தரகாலம் தொடங்கித் தான் இதுக்குக்
கோலின பலத்தைப் பற்றத் தனக்குக் கர்த்தவ்யாம்சத்தில் அந்வயமில்லாமையாலும்
கர்த்தவ்யாம்சம் ஸக்ருதநுஷ்டானத்தாலே க்ருதமாகையாலும் ,ஸ்வதந்த்ரனாய்
ஸத்ய ஸங்கல்பனான பலப்ரதன் ”மா சுச : ” என்று அருளிச்செய்கையாலும்
தனக்குப் பிறந்த பரந்யாஸரூப தசையைப் பார்த்து நிர்பரனாய் ;

”மாமேகம் சரணம் வ்ரஜ ” என்கிறபடியே ஸித்தோபாயத்வேந ஸ்வீக்ருதனான
ஸர்வேச்வரன் , ”அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி ” என்று
பலப்ரதாந ஸங்கல்பத்தைப் பண்ணுகையாலே இப்படி விச்வஸநீயனுமாய்
ஸமர்த்தனுமாய் உபாயபூதனுமான ஈச்வரனைப் பார்த்து பலஸித்தியில்
நிஸ்ஸம்சயனுமாய் , நிர்பயனுமாய் ,கடையேறவிட்ட அந்ய புருஷார்த்தங்களையும்
காம்பறவிட்ட உபாயாந்தரங்களையும் அகிஞ்சநன்அயத்நமாக மஹாநிதியைப்
பெறுமாப்போலே தான் பெறப்புகுகிற பரம புருஷார்த்தத்தையும் பார்த்து
ஹஷ்டமநாவாய் ;

தேவர்ஷி பூதாத் மந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந்
ஸர்வாத்மநா ய :சரணம் சரண்யம் நாராயணம் லோககுரும் ப்ரபந்ந :

என்கிற ச்லோகத்தின்படியே ப்ரஜாபதி பசுபதி என்றாற்போலே பேரிட்டுக் கொண்டிருக்கிற
ஸஜாயதீயரான க்ஷேத்ரஜ்ஞரைப் பற்ற ஓரோர் அவஸரங்களிலே கைக்கூலி போலே
சில உபாதிகளடியாக எழுதாமறையிலே ஏறிட்டுக் கிடக்கிற அடிமை தீட்டும்
முதல் மாளாதே பொலிசையிட்டுப் போகிற தனிசுதீட்டும் கிழித்தவனாகையாலே
பஞ்சமஹா யஜ்ஞாதிகளான நித்ய நைமித்தகங்களில் அவர்கள் பேர் சொல்லும்போது

யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந்
ஸர்வ பூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே

இத்யாதிகளில் மஹர்ஷிகள் அறுதியிட்டபடியே ராஜஸேவகர் ராஜாவுக்குச் சட்டை மேலே
மாலையையும் ஆபரணத்தையும் இட்டாலும் சட்டையில் துவக்கற்று ராஜாவின் ப்ரீதியே
ப்ரயோஜனமாகத் தெளிந்திருக்குமாப்போலவும் யஜ்ஞ அக்ரஹர அத்யாயாதிகளிலும்
ஸ்ரீ ஹஸ்தகிரிமஹாத்ம்யத்திலும் ஸாக்ஷா தர்ப்யாவரோதம் ஜைமிநி :என்கிற
ஸூத்ரத்திலும் சொல்லுகிறபடியே தேவர்கள் பித்ருக்கள் என்கிற சட்டைகளோடு
துவக்கற அவ்வோ சப்தங்கள் அவயவ சக்தி பௌஷ்கல்யங்களாலே ஈச்வரன் பக்கலிலே
நாராயணாதி சப்தங்கள் போலே நிற்கிற நிலையையுங்கண்டு அவற்றினுடைய
உச்சாரணாதிகளில் ச்வேததீபவாஸிகளான சுத்தயஜாதிகளுக்குப் போலே தன்
பரமைகாந்தித்வம் குறையாதே நிற்கிறபடியை நிரூபித்துத் தன் வர்ண ஆச்ரம நிமித்த
குணாத்யதிகாரத்துக்கு அநுரூபமாக அடிமை கொள்ள ஸங்கல்பித்திருக்கிற சாஸிதாவான
சேஷியினுடைய சாஸ்த்ரவேத்ய ஆஜ்ஞாநுஜ்ஞா பரிபாலநரூப கைங்கர்யமுகத்தாலே
ப்ரத்யக்ஷ விதித பரமபுருஷாபிப்ராயரான முக்தரைப்போலே கிஞ்சித்கரனாய்க் கொண்டு
முக்ததுல்யனாய் , உபாயபூர்த்தியாலே க்ருதக்ருத்யனென்றும் , புருஷார்த்த பூர்த்தியாலே
க்ருதார்த்தனென்றும் சாஸ்த்ரங்களாலும் தந்நிஷ்டராலும் கொண்டாடப்பட்டிருக்கும்

வ்யாக்யானம்

ப்ரபத்தி உபாயத்தில் இழிந்தவன் ,இந்த உபாயத்தைத் தொடங்கியதுமுதல் ,அதன் பலனைப்
பெறுவதற்கு, வேறு எதையும் செய்யவேண்டியதில்லை.ஒருமுறை இப்பிரபத்தி செய்ததிலேயே
யாவும் அடங்கியுள்ளது .
ஸ்வதந்த்ரன், எண்ணிய செயலை முடிப்பவன், ப்ரபத்தி பலனை
அளிப்பவன் —ஸர்வேச்வரன் ஸ்ரீமத் பகவத் கீதையில் ( 18–66 ) ,
”மா சுச : ” –கவலைப்படாதே என்கிறான்
இவற்றால்,ப்ரபந்நன் ,தனது பாரங்களைப்
பகவானிடம் ஸமர்ப்பித்து விட்டதால், கவலையில்லாமல் உள்ளான்.
மோக்ஷத்துக்கு என்று வேறு ஒன்றும் செய்யவேண்டாம். வேறு புருஷார்த்தங்களை விட்டபடியால்
அதற்கான காம்யகர்மாக்களைச் செய்யவேண்டாம். காம்யம் என்றால்–தேவதாந்த்ரம் —
தேவதாந்த்ர கர்மாக்கள். காம்யங்கள் வேண்டாதபோது, அதற்கு என்று இருக்கிற
நித்ய—நைமித்திக கர்மாக்கள் வேண்டாம். ஆனால், சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட
நித்ய கர்மாநுஷ்டானங்கள் கட்டாயம் செய்தாகவேண்டும். இது தேவதாந்த்ர பூஜை அல்ல.
வைதீக கர்மாக்கள் , தேவதாந்த்ர கர்மாக்கள் ஆகாது.
ப்ரபத்தி செய்துகொள்வதற்கு முன்பு கவலைகள் —சோகம் இருந்திருக்கலாம்
ஆனால், ப்ரபத்திக்குப் பிறகு சோகிக்கலாகாது.
{ இந்த சோகம் –கர்மாக்களை அநுபவித்துத் தீர்க்கவேண்டும் ,எப்படி இதைத் தீர்ப்பது,
நிவ்ருத்திக்குப் பிறகுதானே மோக்ஷம் , பகவான் நம்மை எப்படி அநுக்ரஹிப்பான்
என்றெல்லாம் நினைத்து கவலை–சோகம் }

இப்படியாக உபாயமாக இருக்கிற பகவான் ஸ்ரீமத் பகவத் கீதையில்
என்னை மட்டும் சரணமாக அடைவாயாக என்கிறான். மற்றும் இதற்கான பலனைத்
தானே அளிப்பதாயும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் காப்பாற்றுவதாகவும் உறுதி
அளிக்கிறான் .
இப்படி , நம்பத்தகுந்த , எதையும் தங்குதடையின்றி க்ஷணகாலத்தில் செய்யும்
வல்லவனான , உபாயமாக உள்ளவனான பகவானிடம் ,இப்ப்ரபந்நன் , சந்தேகங்களை
விடுத்து, பயத்தைத் துறந்து, மற்ற புருஷார்த்தங்கள் அவற்றின் வாஸனை யாவையும்
விட்டொழித்து, ஆனந்தமடைகிறான்.
எவ்வித முயற்சியும் இன்றி, பரம ஏழைக்குப் பெரும் செல்வம் கிடைத்தால் மகிழ்வதைப்போல்
ப்ரபந்நன் ,பரமபுருஷார்த்தத்தை அடைவது எண்ணி மகிழ்கிறான்

ஸ்ரீமத் பாகவதம்

தேவர்ஷி பூதாத் மந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந்
ஸர்வாத்மநா ய :சரணம் சரண்யம் நாராயணம் லோககுரும் ப்ரபந்ந :

எல்லோராலும் அடையத்தக்கவனும் , எல்லோருக்கும் ஆசார்யனுமான நாராயணனைச்
சரணமடைந்தவன், தேவர், முனிவர் , மனிதர், பித்ருக்கள் என்கிற எவருக்கும்
அடிமையில்லை. கடன்பட்டவனுமல்ல . நித்ய நைமித்திக கர்மாக்களில், ப்ரஜாபதி,
பசுபதி என்கிற நாமாக்களை சொன்னாலும், வர்ணாச்ரம தர்மப்படி வேதங்களுக்குக்
கடன்பட்டவர்களாக அந்தக்கடனுக்கு வட்டி செலுத்துவதைப்போலத் தொண்டு செய்தாலும்,
ப்ரபந்நன் –ப்ரபத்தி செய்தவனுக்கு இந்தக் கடன் சீட்டு கிழிக்கப்பட்டதாகிறது .
பஞ்சமஹா யஜ்ஞங்களில் இவர்களின் பெயர்களை சொன்னாலும், அவை எம்பெருமானையே
சொல்வதாகும்.

மஹாபாரதம்
யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந்
ஸர்வ பூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே

எந்தப் பரமைகாந்திகள், பித்ருக்களையும் , தேவதைகளையும் ,ப்ராஹ்மணர்களையும் ,
அக்னியையும் கூறி யாகம் செய்கிறார்களோ, அவர்கள் அந்த பித்ராதிகளுக்கு
அந்தர்யாமியான விஷ்ணுவையே ஆராதிக்கிறார்கள்.
பரமைகாந்திகள் அல்லாதவர்கள், பரமாத்மாவை அறியாதவர்கள் செய்யும் யாகாதிகள்கூட
விஷ்ணுவுக்குச் செய்யும் ஆராதனமே .ஆனால், பரமாத்மாவை இவர்கள் அறியாததால்,
ஸ்பஷ்டமாக இவர்களுக்குப் புரிவதில்லை.
ராஜாவின் சேவகர்கள் , ராஜாவின் உடலில் உள்ள வஸ்த்ரத்தின்மீது ( சட்டை ) ஆபரணங்கள்
அணிவித்தாலும், அவை, ராஜாவுக்கே அணிவித்ததைப்போல ஆகிறதல்லவா !
யஜ்ஞ அக்ரஹரம்

யஜ்ஞ அக்ரஹர அத்யாயம் –மஹாபாரதம்—-சாந்தி பர்வம்

வேத வ்யாஸர் , தன்னுடைய சிஷ்யர்களான ஸுமந்து , ஜைமினி , பைலர் ,வைசம்பாயனர்
சுகப்ரஹ்மம் ஆகிய 5 சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்.
கல்பத்தின் துவக்கத்தில் நாராயணன் ப்ரக்ருதியையும் , ப்ரஹ்மாவையும் ,பஞ்சபூதங்களையும்
மரீசி ,, மநு முதலிய எட்டுப் போரையும் ச்ருஷ்டித்தார் .
ப்ருஹ்மா —-வேதங்கள், வேதாந்தங்கள் , யஜ்ஞம் , அதன் அங்கம் ,ருத்ரன், இவைகளைச்
ச்ருஷ்டித்தார் . ருத்ரன் , 10 ருத்ரர்களை ச்ருஷ்டித்தார்.
ப்ருஹ்மா , தேவர்கள் தேவரிஷிகளிடம் உலகை அமைக்கவேண்டிய பொறுப்பைக் கொடுத்தார்.
ஆனால், அவர்களோ பொறுப்புக்களை நிறைவேற்ற இயலவில்லை என்று ப்ருஹ்மாவிடம்
சொன்னார்கள். அதற்கான சக்தியைப் பெறுவதற்கு, ப்ருஹ்மா இவர்களுடன் திருப்பாற்கடலுக்குச்
சென்று , கைகளை உயரத் தூக்கி ஒற்றைக்காலால் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார்கள்.
அப்போது, ”நீங்கள் என்னை ஆராதித்த பலனை விரைவில் அடைவீர்கள் ;எல்லோரும்
தினந்தோறும் யாகம் செய்து அதில் எனக்கு ”ஹவிஸ் ” அளியுங்கள் . நான் உங்களுக்கு
ச்ரேயஸ்ஸைக் கொடுக்கிறேன் ” என்று அசரீரி ஒலித்தது .இதைக்கேட்டு மகிழ்ந்த
தேவர்கள் வைஷ்ணவ யாகத்தைச் செய்தார்கள்.

பாரதத்தில், யாகங்களில் முக்யமான பாகத்தைக் பகவான் ஸ்வீகரிக்கிறான்என்பதை
விரிவாகச் சொல்வது யஜ்ஞ அக்ரஹர அத்யாயம் —
ப்ரஹ்ம —ருத்ராதி தேவர்கள் தாங்கள் செய்யும் லோக நிர்வாகத்தைச் சரியாகச்
செய்வதற்கு, பகவானை வேண்டினார்கள். அவர், ”வைஷ்ணவ யாகம் ”செய்யும்படியும்
அதில், அவரவர்கள் தங்களுக்கு முடிந்தவரையில் தன்னை ஆராதிக்கும்படியும்
யார் யார் எவ்வளவு தூரம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு , யாகத்தில் உங்களுக்கும்
பங்கு கிடைக்கும் .ப்ரவர்த்தி தர்மம், நிவ்ருத்தி தர்மம் இரண்டில் மோக்ஷம் தவிர
வேறு பலன்களுக்குப் ப்ரவர்த்தி தர்மம் என்கிறவற்றைச் செய்பவர் –உங்களை ஆராதிப்பர் .
அவர்கள் அளிப்பவை, உங்களைப் புஷ்டியாக்கி நிர்வாஹம் செய்ய உதவும்.
ப்ரஹ்மா ருத்ரன் இருவரும் இந்த வரப்ரதான சக்தியை விசேஷமாகப் பெறுவார்கள்.
முமுக்ஷுக்கள், நிஷிகாம்யமாக நிவ்ருத்தி தர்மமாகச் செய்வர் —
அதனால், அதில் நானே ஆராதிக்கப்படுகிறேன் —–

ஹஸ்தகிரி மஹாத்ம்யம்

ப்ருஹ்மா செய்த அச்வமேத யாகத்தில் அக்நி மத்தியில் இருந்துகொண்டு,
எம்பெருமானே வரதனே எல்லா ஹவிஸ்ஸையும் ஸ்வீகரித்தார்

தேவதைகள், ப்ருஹ்மாவிடம் ” தேவரீர் , எங்கள் பெயரைச் சொல்லி ஹவிஸ்ஸை
அக்நியில் சேர்க்கும்போது , அந்த ஹவிஸ்ஸுக்கள் எங்களுக்கு வரவில்லையே –”
என்று கேட்டார்கள். அதற்கு, ப்ருஹ்மா , ”நான் ஒருபோதும் உங்களை ஆராதிக்கவில்லை.
முமுக்ஷுக்கள் செய்யும் கர்மாக்களில், பகவானே நேரில் ஹவிஸ்ஸை ஸ்வீகரிக்கிறான் ”என்றார்

ப்ரஹ்ம ஸூத்ரம் ( 1–2–29 )
அக்நி போன்ற சொற்கள் எம்பெருமானையே குறிக்கிறது. அதனால், விரோதமில்லை என்று
ஜைமினி கூறுகிறார்
தேவர்கள் , பித்ருக்கள் என்னும் சொற்கள் பகவானின் சட்டை போன்று உள்ளவர்களைக்
குறிக்கவில்லை; பகவானையே குறிக்கிறது.
ச்வேத த்வீபத்தில் உள்ளவர்கள் நாராயணன் என்கிற திருநாமத்தில் ”நார ”
என்கிற சப்தம் செய்தாலும், அது அவன்மீது மட்டுமே உறுதியான பக்தியை வெளிப்படுத்துமோ
அதைப்போன்று, ப்ரபந்நன் தனது கர்மாக்களைச் செய்யும்போது ப்ரஜாபதி , பசுபதி
என்று சொன்னாலும் எந்தத் தோஷமும் அண்டுவதில்லை.அவரவர் வர்ணாச்ரமத்துக்கு
ஏற்ப அவரவர்களை ,பகவான் சேவகனாக மகிழ்வுடன் ஏற்கிறான்.ஆதலால், சேஷியான
அவனுக்குக் கைங்கர்யம் செய்வது சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டதாகும்.
முக்தர்கள், எவ்விதம் பகவானின் திருவுளத்தை நேரிடையாகவே அறிந்து கைங்கர்யம்
செய்கிறார்களோ அவ்விதமே ப்ரபந்நனும் சிறிது சிறிதாகக்கைங்கர்யம் செய்ய
முயற்சிப்பான்.இவன், சரியான உபாயத்தைச் செய்ததால் ”க்ருதக்ருத்யன் ” என்றும்,
தான் அடையவேண்டிய புருஷார்த்தத்தை அடைந்துவிட்டதால் ”க்ருதார்த்தன்”
எனவும் மெச்சப்படுகிறான்.

அதிகாரத்திலிருந்து

சரணாகதி கத்யம் –உதாரணம்

இவனுடைய இந்தக் க்ருதக்ருத்ய அநுஸந்தானத்தை அதஸ்த்வம் தவ தத்த்வதோ
மத்ஜ்ஞான தர்சன ப்ராப்திஷு நிச்சய : ஸுகமாஸ்ஸ்வ என்று சரணாகதி கத்யத்திலே
நிகமித்தருளினார் . இதுக்குக் கருத்து —அநாதிகாலம் அஜ்ஞாதிலங்கனமடியாகவுண்டான
பகவந்நிக்ரஹத்திலே ஸம்ஸரித்துப்போந்த நமக்கு அவஸர ப்ரதீக்ஷை பகவத்
க்ருபையடியாக உண்டான ஸதாசார்ய கடாக்ஷ விஷயீகாரத்தாலே வந்த த்வயோச்சரண
அநுச் சாரணத்தாலே ப்ரபத்த்யநுஷ்டானம் பிறந்தபின்பு சரண்ய ப்ரஸாதநங்களில்
இதுக்குமேல ஒன்றில்லாமையாலே நிக்ரஹஹேதுக்களையெல்லாம் க்ஷமித்துத்
தீர்த்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ளவல்ல ஸர்வசேஷியான ஸ்ரீ ய :பதி
தன் பேறாகத் தானே ரக்ஷிக்குமென்று தேறி நிர்பரனாயிரு—-என்கை. இது,
மா சுச : ” என்கிற சரண்யவாக்கிலும் தீர்ந்த பொருள்

வ்யாக்யானம்

இந்தக் க்ருதக்ருத்யன் , தான் செய்யவேண்டியத்தைச் செய்துவிட்டதால் ,அடைவதை
எம்பெருமானார் ,சரணாகதிகத்யத்தில்
அந்மதம் நோக்த பூர்வம் மே ந ச வக்ஷ்ய கதாசன ராமோ த்விர்நாபி பாஷதே ,
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யா ச தே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம ||
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ :
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச :

இதி மயைவஹ்யுக்தம் || அதஸ்த்வம் தவ தத்வதோ மத்
ஜ்ஞான தர்ஸந ப்ராப்திஷு நிஸ்ஸம்சய :ஸுகமாஸ்வ ||

கணக்கில்லாக் காலமாக பகவானின் கட்டளையை ,நமது அறியாமை காரணமாக,
மீறி நடந்ததால், அதற்கான தண்டனையான ஸம்ஸாரத்தில் உழன்று துக்கப்படுகிறோம்;
கஷ்டப்படுகிறோம்.நம்மைக் கரையேற்றச் சரியான சந்தர்ப்பத்தை பகவான் ஏற்படுத்தி,
ஆசார்யனானின் கடாக்ஷம் கிட்டச் செய்கிறான். ஆசார்யனின் கிருபையால், த்வய
அநுஸந்தானம் செய்து ப்ரபத்தி செய்துகொள்கிறோம் . அடுப்பில், களைந்து வைக்கப்பட்ட
நீரில் உள்ள அரிசி கொதிக்கும்போது, அதை அக்நி பக்குவப்படுத்தி கீழிருந்து
மேலுக்குக் கொண்டுபோய்விடுகிறது;மேலே போனதும் கொதிக்கும் சப்தம் நின்றுவிடும்.

இந்த சப்த சக்தி –நாராயணாதி ஸப்தங்கள் — ஸம்ஸாரியான நம்மை, மேலே, பகவானிடம்
கொண்டு சேர்க்கும்வரை இருக்கும்;

பெரிய பெருமாள் திருவாய் மலர்வதாக , சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ உடையவர் சொல்வது—

இதில் கொஞ்சமும் சந்தேகம் வேண்டாம்.; யாம் பொய் கூறியதில்லை;இனியும் கூறமாட்டோம் .
ஸ்ரீ ராமன் இரண்டுவிதமாகச் சொல்லமாட்டான். ”ஒருக்காலே சரணம் என்பார்க்கும்
உமக்கே தொண்டன் என்பார்க்கும் எல்லாரிடமிருந்தும் அபாயம் அளிக்கிறேன் ;
இது என் வ்ரதம்.

உரிய சாதனங்களைச் செய்ய இயலாத நீர் ,என்னைச் சரணமாக அடைவீராக . நான்,
உம்மைச் , சகல பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் . சோகத்தை விடும் —-
ஆதலால் நீர் சந்தேகமும் அறிவில் குழப்பமும் இல்லாமல் ஆசார்ய அநுக்ரஹத்தால்
வந்த எம்மைப் பற்றிய ஜ்ஞானம் மாறாமல், குறையாமல், தொடர்ந்து இருப்பதிலும்
எம்மை நேரில் தரிசிப்பது போன்ற நினைவிலும் எம்மை அடைவதிலும் ,சந்தேகம்
சிறிதும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பீராக—-” என்று பெரிய பெருமாள்
திருவாய் மலர்ந்து அருள்கிறார்

பெரியபிராட்டியின் நாயகனான பெரியபெருமாள், நம்மைத் தூய்மையாக்கி
தனது கைங்கர்யத்தில் இழியச் செய்கிறான்.இப்படியாக பகவான் நம்மைக்
காப்பான் என்கிற நம்பிக்கையுடன் ப்ரபந்நன் எவ்வித வருத்தமில்லாமல்
இருக்கவேண்டும் –இதையே ,கீதையில் மா சுச :” என்கிறான்–

அதிகாரத்திலிருந்து
க்ருதக்ருத்யன் –யார்

இவனுக்குப் ப்ரபத்திக்கு முன்புற்ற சோகம் அதிகாரத்திலே சொருகுகையாலே முன்பு
சோகித்திலனாகில்அதிகாரியல்லாமையாலே காராணாபாவாத் கார்யபாவ : என்கிற
ந்யாயத்தாலே உபாய நிஷ்பத்தி உண்டாகாது. உபாயஸ்வீகாரம் பண்ணினானாகத்
தன்னை நினைத்திருந்த பின்பு சரண்யோக்தியிலே நெகிழ்ச்சி உடையவனாய்
சோகித்தானாகில் கார்யபாவாத் ஸாமக்ரஞ்ய பாவ : என்கிற ந்யாயத்தாலே
பூர்ணோபாயநல்லாமையாலே பலம் உபாயபூர்த்தி ஸாபேக்ஷமாய்க்கொண்டு
விளம்பிக்குமென்று அறியலாம். முன்பு ப்ரஸக்த சோகனாய் பின்பு ”மா சுச : ”
என்று ப்ரதிஷேகிக்கிறபடியே வீதசோகனானவன் க்ருதக்ருத்யனென்று அறியலாம்

வ்யாக்யானம்

ஸம்ஸாரத் துன்பங்கள், ஆத்மஸ்வரூபத்துக்கு விரோதமாக நடப்பது–இவற்றால் ஏற்படும்
வருத்தம், ப்ரபத்திக்குத் தகுதியானவாக ஆக்குகிறது.இவ்வருத்தம் இல்லையெனில்,
ப்ரபத்திக்கு அருகதை இல்லை எனலாம். இதையே, காராணாபாவாத் கார்யபாவ :
என்கிறார்கள். காரணம் இல்லையெனில் , கார்யம் இல்லை. ப்ரபத்திக்குப் பிறகும்,
நம்பிக்கைக்கு குறைவால், வருத்தம் நீடிக்கக்கூடும். கார்யபாவாத் ஸாமக்ரஞ்ய பாவ :
கார்யம் இல்லையெனில், காரணம் இல்லை. இவர்களுக்கு, ப்ரபத்தி பூர்த்தியாகாது.
ப்ரபத்தி பூர்த்தியாகாதவரை ,அதன்மூலமாக எதிர்பார்க்கும் பலனும் தள்ளிப்போகும் .

எவன், ப்ரபத்திக்கு முன்புவரை வருத்தத்தில் அல்லல்பட்டு, ப்ரபத்திக்குப்பிறகு
”மா சுச : ” என்கிற பகவானின் ஆறுதல் வார்த்தையை, மனதில் ஏத்தி, வருத்தமில்லாமல்
வசிக்கிறானோ , அவனே க்ருதக்ருத்யன் ஆகிறான் .

அதிகாரத்திலிருந்து

மன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வாங்கருத்தோர்
அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் அன்புடையார்க்கு
என்ன வரம் தர என்ற நம் அத்திகிரித் திருமால்
முன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே

பகவதி ஹரௌ பாரம் கந்தும் பரந்யஸநம் க்ருதம்
பரிமித ஸுக ப்ராப்த்யை க்ருத்யம் ப்ரஹீணம் அக்ருத்யவத்
பவதி ச வபுவ்ருத்தி : பூர்வம் க்ருதை : நியதக்ரமா
பரம் இஹ விபோ : ஆஜ்ஞாஸேது : புதை : அனுபால்யதே

வ்யாக்யானம்

யார் = மன்னவர்—-நமக்கு அரசர்கள்
யார் = விண்ணவர் —–தேவதைகளைப் போல நம்மால் ஆராதிக்கத் தகுந்தவர்
யார் = வானோரிறை —நித்ய ஸூரி களுக்கு ஸ்வாமியான பகவான்
யார் = ஒன்றும் வான் கருத்தோர் —-வசிக்கும் பரமபதத்திலேயே ஆசையுடையவர்கள்
யார் = அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் —நல்லது,கெட்டதுகளைப்
பிரித்து அறிபவர்கள் ,செய்யவேண்டிய
யாகங்கள் யாவும் செய்துமுடித்தனர்

இவர்கள்

அன்புடையார்க்கு என்னவரம் தரவென்ற —தன்னிடம் பக்தி உடையோர்க்கும்
அவர்களைச் சேர்ந்தோர்க்கும்
மோக்ஷம் கொடுத்தபின்பும்,இன்னும்
என்ன வரம் கொடுக்கலாம் எனச் சிந்திக்கிற
நம் அத்திகிரித் திருமால் —ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் நம் பேரருளாளனால்
முன்னம் வருந்தி—–முன்பு ப்ரயாசைப்பட்டு
அடைக்கலம்கொண்ட நம் முக்கியரே –ரக்ஷிக்கப்பட வேண்டியவர்களாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட நமக்கு முக்கியர்களான ப்ரபந்நர்கள்

தன்னிடம் பக்தியுள்ளவர்கட்கு ,என்ன வரம் அளிக்கலாம் என்று எண்ணியபடி
ஹஸ்திகிரியில் எழுந்தருளியுள்ள பேரருளாளன், தன்னால் காக்கப்படவேண்டியவர்கள் என்று
அவர்களை ப்ரபன்னர்களாக்குகிறான் இப்படிப்பட்ட ப்ரபன்னர்கள் , நமக்கு அரசர்
போன்றவர்கள்; தேவர்களைப்போல நம்மால் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள்;
நித்யஸூரிகளின் தலைவனான எம்பெருமானின் வைகுண்டத்தில்வஸிக்க ஆர்வமுடையவர்கள்
நல்லது , கெட்டது அறியக்கூடிய அன்னம் போன்றவர்கள்; இவர்கள் செய்யவேண்டியத்தைச்
செய்து முடித்தவர் ஆவர்

ஸம்ஸாரத்திலிருந்து விடுபட,விரோதியை அழிக்கும் பகவானின் திருவடிகளில் ப்ரபத்தி
செய்யப்பட்டது.அல்பபலனைக் கொடுக்கும் காம்ய கர்மாக்களை விட்டொழித்து,
ப்ரபத்திக்குப் பிறகு பகவானின் கட்டளையாகிற நித்ய, நைமித்திக கர்மாக்களைச்
செய்வது ஸ்வரூபம் அறிந்த ப்ரபன்னர்களின் கடமையாகும்.

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –13 வது அதிகாரம் —-க்ருதக்ருத்யாதிகாரம் — நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் —12–ஸாங்கப்ரபதநாதிகாரம்–

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் —12-ஸாங்கப்ரபதநாதிகாரம்-
(ப்ரபத்தியை எப்படிச் செய்வது —அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் முறை )

அதிகாரத்திலிருந்து

ஆபீஷ்ட்டே துஸ்ஸாதே ஸ்வத இதரதோ வா க்வசன தத்
பரந்யாஸம் யாச்சா அந்விதம் அபிவதந்தி ப்ரபதநம்
இத : பச்சாத் அஸ்மத் யதந நிரபேக்ஷண பவதா
ஸமர்த்ய : அஸௌ அர்த்த : து இதி மதிவிசேஷம் ததாவிது :

வ்யாக்யானம்
விரும்பும் பலன் ஒன்றை சுய முயற்சியில் பெறமுடியாத சமயத்திலும்
வேறு எந்த முயற்சியிலும் பெறமுடியாதபோது, அந்தப் பலனை
அடைய ஒருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது –ப்ரபத்தி
இது ஆசார்யர்கள் கூறுவது
இந்த க்ஷணம் முதல், என்பொருட்டு இந்தச் செயலை எனக்காக
முடித்தருள்க—அடியேன் இதற்காக எவ்வித முயற்சியும் செய்யமாட்டேன்
என்கிற மன உறுதி என்றும் சொல்லலாம்

அதிகாரத்திலிருந்து

முமுக்ஷுவான அதிகாரிக்கு இவ்வுபாயத்தில் அங்கிஸ்வரூபமாவது ஆபரணத்தை உடையவனுக்கு
அவன் தானே ரக்ஷித்துக்கொண்டு பூணக்கொடுக்குமாப்போலே யதாவஸ்திதமான ஆத்மநிக்ஷேபம் .
அதாவது ப்ரணவத்தில் ப்ரதமாக்ஷரத்தில் ப்ரக்ருதி ப்ரத்யயங்களாலே ஸர்வரக்ஷகனாய் ஸர்வசேஷியாய்த் தோற்றின ஸர்வேச்வரனைப் பற்ற
ஆத்மாத்மீய ரக்ஷணவ்யாபாரத்திலும் ஆத்மாத்மீய ரக்ஷண பலத்திலும்
ஸ்வாநீநமாகவும் ஸ்வார்த்தமாகவும் தனக்கு அந்வயமில்லாதபடி பரந்யாஸ ப்ரதானமான அத்யந்த பாரதந்த்ரியவிசிஷ்ட்ட சேஷத்வாநு
ஸந்தான விசேஷம்

வ்யாக்யானம்

அங்கங்களுடன் கூடிய அங்கியானது ஆத்மஸமர்ப்பணம் . இது முமுக்ஷுக்கள் கைக்கொள்வது .
அவ்விதம் ஆத்மஸமர்ப்பணம் செய்யும்போது ,ப்ரபத்தியிலோ அதன் பலனிலோ தனக்கு எவ்வித
ஸ்வதந்த்ரமும் இல்லை என்கிற எண்ணம் வேண்டும்.
ஆத்மஸமர்ப்பணம் என்பது, ஒருவன் தன்னுடைய ஆபரணத்தை
பாதுகாப்பு கருதிக் கொடுத்துவைத்து ,பிறகு அதன் சொந்தக்காரன்
திரும்பிவந்தவுடன் அவனிடம் அந்த ஆபரணத்தைத் திரும்ப
ஒப்படைப்பதாகும் .
ப்ரணவத்தின் முதல் எழுத்தான ”அ ” மூலம் கூறப்படுபவன் ;எல்லோருக்கும்
எஜமானன் ;எல்லாவற்றையும் காப்பவன் –இந்த ஸர்வேச்வரனிடம்
தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையுமான காப்பாற்றுகிற பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தாமே அப்பொறுப்பை ஏற்பதோ,
அதன் பலனை ஏற்பதோ இல்லாமல் பற்று அற்று இருத்தல். இந்த நிலை
எஜமானன் –அடிமை எனப்படுகிறது.நம்மைக் காக்கும் பொறுப்பு
முழுவதையும் அவனிடம் ஒப்படைப்பது மிக விசேஷம்.

அதிகாரத்திலிருந்து

பரந்யாஸத்தை அநுஷ்டிக்கும் முறை

ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் என்று சோதிதமான இவ்வநுஸந்தான
விசேஷத்தை அநுஷ்டிக்கும்படி :

சேஷியாய் ஸ்வதந்த்ரனான ஈச்வரன் தன் ப்ரயோஜனமாகவே தானே ரக்ஷிக்கும்படிக்கு ஈடாக
அநந்யார்ஹ அநந்யாதீந சேஷபூதனாய் அத்யந்த பரதந்த்ரனான நான் ஆத்மாபிசாயம் ந மம என்கிறபடியே
எனக்குரியனல்லேன்; ஒன்றை நிரூபாதிகமாக என்னது என்னவும் உரியனல்லேன் ;

ஸ்வயம் ம்ருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந :
ஸ்வரக்ஷணே அபி அசக்தஸ்ய கோ ஹேது : பரரக்ஷணே

என்கிறபடியே என்னையும் என்னதென்று பேர் பெற்றவையும் நானே
ஸ்வதந்த்ரனாயும் ப்ரதானபலியாயும் ரக்ஷித்துக்கொள்ள யோக்யனுமல்லேன்;

ஆத்மா ராஜ்யம் தனம் சைவ களத்ரம் வாஹநாநி ச
ஏதத் பகவதே ஸர்வம் இதி தத்ப்ரேக்ஷிதம் ஸதா

என்று விவேகிகள் அநுஸந்தித்த க்ரமத்திலே என்னுடைய ஆத்மாத்மீயங்களும் அவனதே ;

”ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹி ஆத்ம நிக்ஷேப உச்யதே ” என்கையால்
இவற்றினுடைய எல்லாவற்றையும் ரக்ஷணபரமும்
” ந ஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேச்வரம் ஹரிம் ” என்கிறபடியே ஸர்வ ரக்ஷகனான அவனதே ;

தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்யவியுக்ததா
கேசவார்ப்பண பர்யந்தா ஹி ஆத்மநிக்ஷேப உச்யதே

என்கிறபடியே ரக்ஷண பலமும் ப்ரதான பலியான அவனதே என்று பாவிக்கை

வ்யாக்யானம்

ஸாத்யகி தந்த்ரம் சொல்கிறது

ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் =தன்னுடைய ஆத்மாவை என்னிடம் ஒப்படைப்பது —கடைப்பிடிக்கப்படும் முறை
ஆத்மாவை ஒப்படைப்பவன், ”நான் எம்பெருமானை முழுதும் நம்பி நான் அவனின் அடிமை ;அவனுக்காகவே உள்ளேன் ;
என்னுடைய அடிமையானது வேறு ஒருவருக்குமில்லை ;நான் வேறு யாரையும் நம்பவில்லை;
ஆதலால், எல்லாவற்றுக்கும் யஜமானனும் எதையும் சார்ந்து இல்லாமலிருப்பவனுமான எம்பெருமானுக்கு ,
தனது ப்ரயோஜனத்துக்காகவே , என்னைக்காக்கும் பொறுப்பு உள்ளது என்று எண்ணுதல் வேண்டும்.

ஸாத்யகி தந்தரம்
இந்த மந்த்ரத்தாலே ஒருவன் , தன்னுடைய ஆத்மாவை என்னிடம் ஸமர்ப்பிக்கவேண்டும் .
இங்ஙனம் செய்யவேண்டியதை, என்னிடத்தில் செய்தவன் க்ருதக்ருத்யன் ( செய்யவேண்டியதைச் செய்தவன் ) ஆவான்.
தனது என்கிற ”ப்ராந்தி ” அநாதியாய் எல்லா ஜன்மங்களிலும் தொடர்ந்து
வருகிறது. ”தனது இல்லை ”என்கிற எண்ணம் எந்த ஜன்மத்தில் வருகிறதோ
‘அது,’ஸ்வ ஸம்பந்த த்யாகம் ”.

மஹாபாரதம்
ஆத்மாபி சாயம் ந மம = என்னுடைய ஆத்மா என்னைச் சார்ந்ததல்ல;என்பதைப்போல,
என் ஆத்மா என்னுடையதல்ல; வேறு எதனையும் என்னுடையது என்று
சொந்தம் கொண்டாட உரிமையுமில்லை

ஸ்வயம் ம்ருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந :
ஸ்வரக்ஷணே அபி அசக்தஸ்ய கோ ஹேது : பரரக்ஷணே

ஆத்மாத்மீய ரக்ஷணம் = ஜீவன், மண்கட்டி போன்றவன்;தன்னைக் காத்துக்கொள்ளும்
திறனற்றவன் ;எம்பெருமானையே நம்பி இருப்பான் –இப்படி இருப்பவன் ,மற்றவர்களைக்
காப்பது இயலாதது .ஆகவே , தன்னையும் ,தன்னைச் சேர்ந்தவர்களையும் ,சுயமாகக்
காக்கும் திறனற்றவன்.பகவானின் அருள் வேண்டும் .

ஆத்மா ராஜ்யம் தனம் சைவ களத்ரம் வாஹநாநி ச
ஏதத் பகவதே ஸர்வம் இதி தத்ப்ரேக்ஷிதம் ஸதா

உபரிசரவஸு என்பவன் ஒரு அரசன் —அவன் சொன்னதாவது—ஆத்மா ,ராஜ்யம்,
பொருட்செல்வம் ,மக்கள் மனைவி, வாஹனங்கள் போன்ற யாவும் எம்பெருமானுக்காகவே
உள்ளன. இவ்விதம் , அறிவாளிகள் கூறுவதைப்போல என்னுடையது என்று
நினைக்கிற எல்லாமும் பகவானுக்கே உரியது
உபரிசரவஸு =வஸு என்கிற அரசனுக்கு ,இந்த்ரனால் வானத்தில் செல்லும் விமானம்
கொடுக்கப்பட்டிருந்தது;அதனால், வஸு என்கிற அரசன், உபரிச்ரவசு ஆனான்

லக்ஷ்மீ தந்த்ரம்

”ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹி ஆத்ம நிக்ஷேப உச்யதே ”

ஆத்மாவையும் அதைச் சேர்ந்தவற்றையும்/சார்ந்தவற்றையும் காப்பாற்றும் பொறுப்பை
பகவானிடம் ஸமர்ப்பிப்பதே ”ஆத்ம நிக்ஷேபம் ‘ எனப்படும். ஆதலால், எல்லாவற்றையும்
காக்கும் பொறுப்பு , எல்லாவற்றையும் காப்பாற்றும் அவனைச் சேர்ந்தது

விஷ்ணு புராணம்

”ந ஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேச்வரம் ஹரிம் ” =எல்லாவற்றையும் நியமிக்கும்
அந்த ஸ்ரீ ஹரி தான், எல்லோரையும் காக்கும் திறன் உள்ளவன்;அந்தத் திறன் வேறு யாருக்கும் இல்லை .

லக்ஷ்மீ தந்த்ரம்

தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்யவியுக்ததா
கேசவார்ப்பண பர்யந்தா ஹி ஆத்மநிக்ஷேப உச்யதே

பகவானால் காக்கப்படும் ஆத்மாவை ,பலனில்கூடத் தனக்கு உரிமையில்லை என்கிற உறுதியுடன்
கேசவனிடம் ஸமர்ப்பிப்பதே , ”ஆத்ம நிக்ஷேபம் ” இப்படி, ஸமர்ப்பணம் செய்வதால் உண்டாகும்
பலனும் அவனுடையதே என்கிற எண்ணம் வேண்டும்.

சிபிச் சக்ரவர்த்தியை, புறா சரணம் என்று அடைகிறது.என்னை ரக்ஷித்துக்கொள்ளச் சக்தியில்லை;நீயே
அதற்கு வழி செய்யவேண்டும் என்றுதானே கேட்கமுடியும்
! சிபி, தன்னுடைய தொடையிலிருந்து மாம்ஸத்தை அறுத்துக் கொடுத்து புறாவைக் காப்பாற்றினான்.வேறு
வழி செய்ய முடிந்தால் அதையும் செய்திருப்பான்.

அதிகாரத்திலிருந்து
அதிகாரிகள்–விசேஷங்கள்

முமுக்ஷு மாத்ர ஸாமாந்யம் ஸ்வரூபாதி ஸமர்ப்பணம்
அமிஞ்சிநே பரந்யாஸ : த்வதிக : அங்கிதயா ஸ்தித :
அத்ரரக்ஷாபரந்யாஸ : ஸமஸ்ஸர்வே பலார்த்திநாம்
ஸ்வரூப பல நிக்ஷேபஸ்த்வதிகோ மோக்ஷ காங்க்ஷிணாம்

முமுக்ஷுக்கள் தங்களுடைய ஸ்வரூபம், பலன் இவற்றை சமர்ப்பணம் செய்கின்றனர்.
தன்னைக்காக்கும் பொறுப்பையும் ஸமர்ப்பிப்பது, முமுக்ஷுக்களுக்கு மேலும் ஒரு அங்கியாகிறது.
மோக்ஷத்தை விரும்புபவர் ஸ்வரூபம், பலன் தன்னைக் காக்கும் பொறுப்பு யாவற்றையும் சமர்ப்பணம்
செய்கின்றனர்

அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தியின் பலனும் பகவானுக்கே

பலார்த்தியாய் உபாயாநுஷ்டானம் பண்ணுகிற ஜீவன் பலியாயிருக்க ஈச்வரன் இங்குப்
ப்ரதான பலியானபடி எங்ஙனேயெனில் —-அசித்தின் பரிணாமங்கள்போலே சித்துக்குத்
தான் கொடுத்த புருஷார்த்தங்களும் ஸர்வ சேஷியான தனக்கு உகப்பாயிருக்கையாலே
ஈச்வரன் ப்ரதான பலியாயிருக்கிறான். அசேதனமான குழமண்ணை அழித்துப் பண்ணியும்
ஆபரணம் பூட்டியும் அழகு கண்டு உகக்கிறதோடு சேதநமான கிளியைப் பஞ்ஜரத்தில்
வைத்துப் பால் கொடுத்தும் வேண்டினபடி பறக்கவிட்டும் அதின் உகப்பு கண்டு உகக்கிறதோடு
வாசியில்லையிறே நிரபேக்ஷரான ரஸிகர்க்கு

வ்யாக்யானம்

ப்ரபத்தியின் பலனையும் ஈச்வரன் எப்படி அடைகிறான் என்பது சொல்லப்படுகிறது
அசித்துக்கு உண்டான தன்னால் தரப்பட்ட மாற்றங்களால் மகிழ்வதைப்போல ,
சித் என்கிற ஜீவனுக்குத் தன்னால் தரப்பட்ட புருஷார்த்தங்களால் பகவான் மகிழ்கிறான் .
இதன் காரணம், அனைத்துக்கும் அவ எஜமானனாக இருப்பதால்.
குயவன் ,மண்ணைக் குழைத்து ஒரு மண் பொம்மை செய்கிறான் .பிறகு , அதை
வேண்டாம் என்று அழிக்கிறான். வேறு ஒரு பொம்மை செய்கிறான். அதற்கு வஸ்த்ரம்
சாற்றுகிறான். ஆபரணம் பூட்டுகிறான் .அவையெல்லாம் அந்தப் பொம்மைக்குப்
புருஷார்த்தம் இல்லை. குயவனுக்கு உகப்பு. அதைப்போலவே பகவான் உகப்படைகிறான்.

1.கிளி, கூட்டில் இருக்கும்போது கிளியின் அழகு, பேசும் திறமை கிளியின் சொந்தக்காரனுக்கு
உகப்பு. 2. பால் அளித்து வெளியில் பறக்கும்படி விடுவது கிளிக்குக் களிப்பு.3. ஆனால், கூட்டில்
அடைப்பது வருத்தம். ஆனால் இந்த மூன்றிலும் , கிளியின் சொந்தக்காரனுக்கு உகப்பு.

அதிகாரத்திலிருந்து

ஆத்ம ஸமர்ப்பணம்

ஆனபின்பு இங்கு

ஸ்வநிர்பரத்வ பர்யந்த ரக்ஷகைகார்த்ய பாவநம்
த்யுக்த ரக்ஷாபல ஸ்வாம்யம் ரக்ஷ்யஸ்யாத்ம ஸமர்ப்பணம்

வ்யாக்யானம்

ஆத்ம ஸமர்ப்பணம் என்பது
1. தன்னுடைய ஆத்மா என்பது ,தன்னைக் காப்பாற்றுகிற பகவானுக்காகவே உள்ளது
2. ஆத்மா குறித்த தனது பொறுப்பு கிடையாது
3.இப்படி ஸமர்ப்பணம் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் தனக்கல்ல
இவ்வாறு உறுதியிட்டுச் செய்வது ஆத்மஸமர்ப்பணம்

அதிகாரத்திலிருந்து

ஸ்வரூப ஞானம் இல்லாதவருக்கு ஸ்ரீ ஆளவந்தார் சொல்வது

ஸ்தோத்ரத்தில்

வபுராதிஷு யோ அபி கோ அபி வா குணத : அஸாநி யதாததாவித :
ததயம் தவ பாதபத்மயோரஹமத்யைவ மயா ஸமர்ப்பித :

என்கிறதுக்குத் தாத்பர்யமென்னமெனில் —-முத்திரையிட்டிருக்கிற ராஜாவின் கிழிச்சீரை
ஒரு ஹேதுவாலே தன் கையிலே இருந்தால் ராஜா கைக்கொள்ளுமென்று உள்ளிருக்கிற
மாணிக்கத்தின் ஸ்வரூப ஸ்வபாவங்களை விசதமாக அறியாதே கிழிச்சீரையோடே
மீளக்கொடுக்குமாப்போலே தேஹாத்யத்ரிக்த ஆத்மாவின் ஸ்வரூப ஸ்வபாவ ஸ்திதிகளை
விசதமாக விவேகிக்க அறியாதாரும் உள்ள அறிவைக்கொண்டு ஆத்ம ஸமர்ப்பணம்
பண்ணினால் அவ்வளவாலும் அநாதிகாலம் பண்ணின ஆத்மபஹார சைர்யத்தால்
உண்டான பகவந் நிக்ரஹம் சமிக்குமென்கிற சாஸ்த்ரார்த்தத்திலே திருவுள்ளம்

வ்யாக்யானம்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் கூறுகிறார் ( 52 )

வபுராதிஷு யோ அபி கோ அபி வா குணத : அஸாநி யதாததாவித :
ததயம் தவ பாதபத்மயோரஹமத்யைவ மயா ஸமர்ப்பித :

( ப்ரபத்தி பண்ணுகிற நான் என்று சேர்த்து வாசிக்க–)

த்ரேகம் முதலான ரூபமான வஸ்துக்களிலே ஏதேனுமாகவும் ஆத்மகுணங்களிலே
ஏதேனும் உடையவனாகவும் ஆகக்கடவேன் .என் ஸ்வரூபங்களை நான் உள்ளது உள்ளபடி
அறியாமலிருக்கலாம்.அறியாமலே,ப்ரபத்தி அதிகாரியாகையாலே ஏதேனும் ஒரு
ஸ்வரூபஸ்வபாவம் உடைய நான் , உனது திருவடித் தாமரைகளில் இப்போதே
என்னாலே ஸமர்ப்பிக்கப்பட்டேன்

ஆத்மவிசாரம்
தேஹமே ஆத்மா என்பர் ; தேஹம் இருந்தும் அறிவு இல்லையென்றால் ,இந்த்ரியம்
ஆத்மா என்பர் ;கண் , காது முதலிய இந்த்ரியங்கள் பலவாக ஒரே தேஹத்தில்
இருப்பதால், ஒரே ஆத்மா என்பதற்காக ”மனஸ் ” ஸே ஆத்மா என்பர் ; ப்ராணவாயுவால்
ஜீவிப்பதால் அதையே ஆத்மா என்பர் ;இப்படிப் பலவிதமாகச் சொல்வர் .
ஆதலால் எனக்கு ஸ்வரூப நிச்சயம் ஏற்படவில்லை . இதனால், குண விஷயத்திலும்
நிச்சயமில்லை.பக்தியோகம் செய்பவர்கள் ஆத்மா நித்யமா அநித்யமா அணுவா விபுவா
உடல் அளவா ஜடமா , ஸ்வயம்ப்ரகாஸமா ஞானம் என்கிற நிலை உள்ளதா ,இல்லையா
என்று ஆத்ம ஸ்வரூபத்தைத் தேடுகிறார்கள்.
எனக்கு அதெல்லாம் தேவையில்லை .நான் ப்ரபத்தி பண்ணுகிறேன்.உனக்கே
நான் சேஷன் என்று ,இதை உனக்கே அர்ப்பணம் செய்கிறேன்.எந்த ஸ்வரூபம்
ஆனாலும் ,எந்த ஸ்வபாவம் உனக்கே சேஷம்.

இந்த ச்லோகத்தால் ஆத்மாவை உள்ளபடி சாஸ்த்ரப்படி அறியாதவர்கள் ப்ரபத்தி
பண்ணிக்கொள்ளலாம் பகவானுக்கே சேஷன் ; நான் ஸ்வதந்த்ரனல்லேன் என்பது
முக்யம் .
இந்த சேஷத்வம் , ஸ்வரூப நிரூபகம் என்று ஸ்ரீ பாஷ்யகாரருக்கு , திருக்கோட்டியூர்
நம்பி அருளினார் என்று சொல்வர்.இந்தச் ச்லோகம் அதற்கு மூலம் .
முதலில் ஆத்மாவைத் தெரிந்துகொண்டுதானே ,பகவானுக்கு சேஷன் என்பதை
அறியவேண்டும் என்றால், அஹம் —–என்பதே போதுமானது. சேஷத்வ ஜ்ஞானம்
மட்டும் போதுமானது .

ஒரு உதாரணத்தால் விளக்குகிறார்
ஒருவன் நடந்து செல்லும்போது வழியில் அரசாங்க முத்ரையுடன் உள்ள மூட்டை
விழுந்துகிடப்பதைக் காண்கிறான் என்று வைத்துக்கொண்டால் , அவன் அந்த மூட்டைக்குள்
இருக்கும் உயர்ந்த கற்களை அறியவில்லையென்றாலும் ,அரசாங்க முத்ரையுடன்
இருப்பதால், அதை , அரசனிடம் கொடுக்க முயற்சிப்பான் அல்லவா ! அதைப்போல,
உடலைக்காட்டிலும் வேறுபட்டதான ஆத்மாவின் ஸ்வரூபம் ஸ்வபாவம் இருப்பு ஆகியவற்றை
அறியாதபோதிலும் ஒருவன் தனக்குள்ள அற்பமான அறிவைக்கொண்டு மட்டுமே
ஆத்மாவைப் பகவானிடம் ஸமர்ப்பித்தால் , இதனாலேயே, கணக்கில்லாக் காலமாக
ஆத்மாவை அபஹரித்த காரணத்தால் இவன் பெறும் தண்டனையைப்
பகவான் நீக்கிவிடுகிறான் . சாஸ்த்ரங்களில் உள்ள இந்தக் கருத்தே ஸ்ரீ ஆளவந்தார்
திருவுள்ளத்தில் இருந்தது.

அதிகாரத்திலிருந்து

ஆத்ம ஸமர்ப்பணம் குறித்து ஸ்ரீ ஆளவந்தாரின் தாத்பர்யம்

இதுக்குமேல் மம நாத யாஸிதி என்கிற ச்லோகத்தில் இஸ் ஸமர்ப்பணத்தைப் பற்ற அநுசயம்
பண்ணிற்றும் ஸ்வரூபாதி விவேகமின்றிக்கே ஸமர்ப்பிக்கப்புக்காலும் தன்னுடைய த்ரவ்யத்தை
ராஜாவுக்கு உபஹாரமாகக் கொடுப்பாரைப் போலே , ”என்னது ” என்கிற அபிமானத்தோடே
ஸமர்ப்பிக்கில் ஆத்மபஹாரசைர்யம் அடியற்றதாதாதென்கைக்காகவத்தனை ; அல்லது
சாஸ்த்ர சோதிதமாய்த் தாம் அநுஷ்டித்த ஸமர்ப்பணத்தை அஜ்ஞக்ருத்யமாக்கினபடியன்று .
ஆக இரண்டு ச்லோகத்தாலும் யதாவஸ்தித ஸ்வரூபாதி விவேகமில்லையேயாகிலும் ,”ந மம ”
என்று ஸ்வஸம்பந்தம் அறுக்கையே அஹமபி தவைவாஸ்மி ஹி பர : என்னும்படி
பரஸமர்ப்பணப்ரதானமான சாஸ்த்ரார்த்தத்தில் சாரமென்றதாயிற்று

வ்யாக்யானம்

52 வது ச்லோகத்தில் ,உன் திருவடிகளில் என்னை ஸமர்ப்பிக்கிறேன் என்றதும் ,
பகவான் கேட்கிறானாம் —
இதுவரை யாருக்கு சேஷனாய் இருந்தாய் ? ஸ்வதந்த்ரமாகவும் இருந்தாய்.இப்படி
உம் இஷ்டப்படி இருந்துவிட்டு ,இப்போது உம்முடைய ஸ்வாதந்தர்யத்தை ஏன் விடுகிறீர் ?
எனக்கு மட்டும்தான் ஸமர்ப்பணம் என்கிறீர் .பிராட்டிக்கும் எனக்குமாக , ஆக இருவருக்குமாக
இந்த ஸமர்ப்பணம் இல்லையென்றால் இதற்கு நான் எப்படி சம்மதிப்பது ?
பலபேருக்கு சேஷமாக இருந்தீர். ஸ்வதந்த்ரமாக இருந்தீர். –இப்போது, உன்
திருவடித்தாமரைகளில் என்னை ஸமர்ப்பிக்கிறேன் என்பதை மாற்றினால் —-
உமக்கு ஸ்வாதந்த்ரியம் இருப்பது , ”மயா ” என்கிற உம்முடைய சொல்லாலே வெளியாகிறதே —

அதற்குப் பதில் 53 வது ச்லோகம் —-

அடியேன் அப்படிக் கருதவில்லை—அந்தச் சொல்லுக்கு அது பொருள் அல்ல !

மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹம் ஸகலம் தத்த்தி தைவ வ மாதவ |
நியத ஸ்வம் இதி ப்ரபுத்த தீ : அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

நாதனே—பகவானே—–எந்தப்பொருள் எனதாக உள்ளதோ நான் எதுவாக இருக்கிறேனோ
அது எல்லாமே பிராட்டியுடன் சேர்க்கை உனக்கேதானே ! பகவானே ! எப்போதும்
உடைமை சொத்து இவ்வாறு தெளிவான அறிவை உடைய நான் அந்த அறிவுக்குப்
பின்னால்கூட உனக்கு எதைத்தான் எனதாகக்கொண்டு நானாக ஸமர்ப்பிப்பேன் ?

நானும் , என்னைச் சேர்ந்த சேதநாசேதந வஸ்துக்களும் என் பரம் முதலானவையும்
எல்லாமே உனக்கும் பிராட்டிக்கும் என்றும் பொதுவாக சேஷமாக இருப்பதை
நான் முன்னமேயே உணர்ந்து இருக்கிறேன் நான் செய்தது எல்லாம் சேதனனான என்னை
உனக்கு அதீனமாக்கினேன்

ஸ்வாத் மாநம் மயி நிக்ஷிபேத் —-என்று என்னைப் பார்த்து ,எப்படிச் செய்யவேண்டும்
என்று கட்டளை இட்டாயோ அவ்வாறே செய்தேன் .

54 வது ச்லோகத்தில் —-இங்கு சிலகாலம் வாழ்ந்து இருந்து , அதன்பிறகு திருவடியை
அடைவதற்கு இணங்க அந்த இடைப்பட்ட காலத்தில் —சில க்ஷேமங்களை
வேண்டுகிறார்—–பக்தி —இப்படி—-

55 வது ச்லோகத்தில் பாகவத பக்தி வேண்டுகிறார்
56ல் பாகவத கடாக்ஷம் வேண்டுகிறார்
57 ல் அநிஷ்ட நிவ்ருத்தி
58 ல் பகவத அபசார ,பாகவத அபசாரம் செய்தவன் , ஆசாரம் இல்லாதவன் ,
பரிஹாரம் செய்ய வல்லவன் அல்லேன் , உனது கருணை முதலிய குணங்களால்
ஈர்க்கப்பட்டு ,அச்சமின்றி ஆசைப்படுகிறேன், அருள்வாயாக என்கிறார்
59 ல் நான் வேண்டியும் , நீ அளிக்கவில்லை என்று பிறர் பழிக்க , நீ, இடம்கொடாமல்
என்னைத் திருத்தி அருள்க என்கிறார்

60ம் ச்லோகம்

பிதா த்வம் மாதாத்வம் , தயித நயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத் த்வமேவ , த்வபந்து :
கு ருரஸி கதிஸ் சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவபரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதி அஹமபி
தவைவாஸ்மி ஹி பர : ||

ஜகதாம் த்வம் ஏவ பிதா = எல்லா உலகங்களுக்கும் நீயே பிதா. மாதா = தாய்
தயித தநய : =பிரியமான புத்ரன் .ப்ரிய ஸுஹ்ருத் =இஷ்டமான மித்ரன்
பந்து = உறவு . குரு = இருள்நீக்கும் ஆசார்யன் . கதி = எல்லோருக்கும் கதி .
அஹம் த்வதீய =நான் உனக்கு சேஷன் . த்வத் ப்ருத்ய = உன்னால் வளர்க்கப்படவேண்டியவன்
தவ பரிஜந : = உனக்கு ஊழியன் . த்வத் கதி = உன்னையே பேறாக உடையவன்
ப்ரபந்ந ச = ஸரணாகதி செய்தவன் . ஏவம் ஸதி = இப்படி இருக்கும்போது
அஹம் அபி தவ ஏவ பர அஸ்மிஹி =நானும் உனக்கே பரமாகிறேன் –உன்னால் ரக்ஷிக்கவேண்டியவனாக
இருக்கிறேன்

அதிகாரத்திலிருந்து

த்வயத்தில் பரஸமர்ப்பணம்

இப்படி சேஷத்வாநுஸந்தான விசிஷ்டமான ஸ்வரக்ஷாபர ஸமர்ப்பணம் த்வயத்தில்
உபாயபரமான பூர்வகண்டத்தில் மஹாவிச்வாஸபூர்வக கோப்த்ருத்வவரண கர்ப்பமான
சரணசப்தோபலிஷ்ட க்ரியா பதத்திலே சேர்ந்து அநுஸந்திக்கப் ப்ராப்தம்

வ்யாக்யானம்

த்வயத்தின் முதல் பகுதியில் ,தன்னை ரக்ஷிக்கப் பகவானைச் சரணமடை என்று சொல்லப்படுகிறது.
இது, அவனது அடிமை என்பதையும், அவனுக்காகவே உள்ளேன் என்பதையும் குறிக்கிறது.
”ப்ரபத்யே ” –இது ”சரணம் ” என்கிற பதத்துடன் இருப்பதால், ”சரணம் என்பதற்கு ”காப்பாற்றுக ”
என்னும் வேண்டுதலுடன் தொடங்கி மஹாவிச்வாஸத்தை உள்ளடக்கியுள்ளது

அதிகாரத்திலிருந்து

இப்படி, இவை ஆறும் இம்மந்த்ரத்திலே விமர்சதசையில் தனித்தனியே அநுஸந்தித்தாலும்
வாக்யார்த்த ப்ரதிபத்தி தசையில் அல்லாத வாக்யார்த்தங்கள்போலே ஸாங்கமான ப்ரதானம்
ஏகபுத்தயாரூடமாம் . ஆகையால் யதாசாஸ்த்ரம் ஸாங்கப்ரதானாநுஷ்டானம்
ஸக்ருத் கர்த்தவ்யமாயிற்று . அநேக வ்யாபார ஸாத்ய தாநுஷ்கனுடைய லக்ஷ்ய வேதார்த்தமான
பாணமோக்ஷம் க்ஷணக்ருத்யமாகிறாற்போலே இவ்வாத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணமிருக்கும்படியென்று
ச்ருதிஸித்தம்

வ்யாக்யானம்

இங்ஙனம் இந்த ஐந்து அங்கங்களும் ஒரு அங்கியும் ,ஆக ஆறும் தனித்தனியே அநுஸந்தித்தாலும்
ஒரே பொருளை அளிக்கவல்ல வாக்யமாகும்.
இது, ஆத்மரக்ஷ ஸமர்ப்பணம் –ஒரு முறை செய்தாலே போதுமானது.
அம்பை எய்யும் ஒருவன் ,அமபை எடுப்பது , நாண் ஏற்றுவது,குறி பார்ப்பது என்று பல செயல்களைச்
செய்தாலும் ,அம்பு எய்தல் ஒரு நொடியில் முடிகிறது.இதைப்போலவே , எம்பெருமானைச்
சரணமடைதல் ஒருநொடிப்போதில் பூர்ணமாகிறது

முண்டகோபநிஷத் சொல்கிறது —- ( 2–2–4 )

ப்ரணவோ தனு : சரோஹ்யாத்மா ,
ப்ரஹ்ம தல்லக்ஷ்ய முச்யதே |
அப்ரமத்தேன வேத்தவ்யம்
சரவத் —தன்மயோ பவேத் ||

ப்ரணவமே —வில்.
ஆத்மாவே —-அம்பு
ப்ரஹ்மமே —அதன் குறி
அம்பைப்போல ,கொஞ்சங்கூடக் கவனம் பிசகாமல் எய்யப்படவேண்டும்.
அப்படி எய்தால் , லக்ஷ்யத்துடன் ஒன்றுபட்ட நிலை வரும்

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்தி மந்த்ரங்களில் ,பரஸமர்ப்பணமே ப்ரதானம்

இப் பரஸமர்ப்பணமே ப்ரபத்தி மந்த்ரங்களில் ப்ரதானமாக அநுஸந்தேயமென்னுமிடத்தை

அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத்
மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய : க்ருதக்ருத்யோ பவிஷ்யதி

என்று ஸாத்யகி தந்த்ரத்திலே பரஸ்வீகாரம் பண்ணுகிற சரண்யன்தானே தெளியவருளிச் செய்தான்

வ்யாக்யானம்

நம்மைக் காப்பதாக உறுதி செய்கிற எம்பெருமான், ஸாத்யகி தந்த்ரத்திலே,
ப்ரபத்தி மந்த்ரங்களில் பரஸமர்ப்பணமே அநுஸந்திக்கப்படுவதாகச்
சொல்கிறான்
அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத்
மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய : க்ருதக்ருத்யோ பவிஷ்யதி

லக்ஷ்யத்தில் –இலக்கு –தைத்த அம்பு, இலக்கோடு ஒன்றிவிடுவதைப்போல ,
பகவானிடத்தில் ப்ரணவத்தினால் ஸமர்ப்பிக்கப்பட்ட ஜீவாத்மா, பகவானுடன்
ஒன்றி முக்திநிலையைத் த்யானிக்கவேண்டும்.

இந்த மந்த்ரம் ”ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணத்தைச் சொல்கிறது. இதை அம்பை
எய்வதற்கு ஒப்பிடுகிறது.அம்பை எடுப்பது, வில்லில் நாணேற்றுவது, அம்பைத்
தொடுப்பது,இழுப்பது , குறிபார்ப்பது என்று பற்பலச் செயல்கள் ஒன்றன்பின்
ஒன்றாகச் செய்யப்பட்டாலும் ,அம்பை விடுவது ஒரு நொடியில் நடந்து விடுகிறது.
அதைப்போல,ப்ரபத்திக்கு ஸர்வ அங்கங்கள் இருந்தபோதிலும்
”ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் ” நொடியில் முடிகிறது.( பகவானுக்குச் சேஷமாகவே
த்யானம் செய்யவேண்டும் —-என்று பொருள் )
இப்படிச் செய்யவேண்டியத்தை என்னிடம் செய்தவன், செய்யவேண்டியத்தைச்
செய்துள்ளான் –என்று கருத்தாகும்

அதிகாரத்திலிருந்து

அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தி முறை

இதில் ஸாங்காநுஷ்டாநமாயற்றது கர்த்ருத்வ த்யாக மமதா த்யாக பல த்யாக
பலோபாயத்வ த்யாக பூர்வகமான ஆநுகூல்யஸங்கல்பாதி அர்த்தாநுஸந்தானத்தோடே
குருபரம்பரோபசத்திபூர்வக த்வ்யவசந முகத்தாலே ஸ்வரூப பல ந்யாஸ கர்மமான
ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் பண்ணுகை

வ்யாக்யானம்

ஐந்து அங்கங்களுடன் அங்கியை அநுஷ்டித்து தன்னைக் பொறுப்பை பகவானிடம்
அளிப்பது என்பதற்கு முன்பு,
தானே எல்லாமும் என்கிற எண்ணத்தையும்
எல்லாமே, எனது என்கிற எண்ணத்தையும்
பலன்களில் உள்ள பற்றையும்
பலனைக் கொடுக்குமுபாயத்தைத் தானாகவே பின்பற்றுவதாக எண்ணும் எண்ணத்தையும்
கைவிடவேண்டும்.

பிறகு,பகவானுக்கு ஏற்றவனாக நடந்துகொள்வேன் ( ஆநு கூல்யஸங்கல்பம் )என்னும் உறுதி
போன்றவற்றை உள்ளபடி உணர்ந்து அதன்வழி நிற்கவேண்டும்.
தொடர்ந்து குருபரம்பரையைத் த்யானித்தபடி இருக்கவேண்டும்.
த்வயமந்த்ரம் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்

தன்னைக் காக்கவேணும் என்று பரஸமர்ப்பணம் என்பது—
1.ஸ்வரூபத்தை அர்ப்பணிப்பது மற்றும்
2.பரஸமர்ப்பணம் மூலமாகக் கிடைக்கும் பலனையும் அர்ப்பணிப்பது

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்தியில் உள்ள த்யாகங்களின் காரணம்

இக்கர்த்ருத்வத்யாகத்துக்கு நிபந்தனம் தன் கர்த்ருத்வமும் அவனடியாக வந்ததென்று தனக்கு
யாவதாத்மபாவியான பகவதேக பார தந்த்யர்த்தை அறிகை .
மமதாத்யாகத்துக்கும் பலத்யாகத்துக்கும் நிபந்தனம் ஆத்மாத்மீயங்களுடைய
ஸ்வரூபாநுபந்தி பகவதேக சேஷத்வஞானம். பலோபாயத்வ த்யாகத்துக்கு நிபந்தனம் சரண்ய
ப்ரஸாதமான இவனுடைய அநுஷ்டானம் ப்ரதானபலத்துக்கு வ்யவஹித காரணமாகையும்
அசேதநமாகையாலே பலப்ரதாந ஸங்கல்பாச்ரயமல்லாமையும்

வ்யாக்யானம்

ஜீவாத்மாவாகிய நாம், பகவானையே சார்ந்து இருக்கிறோம் என்கிற சிந்தனை நமக்கு வரும்போது,
நாமே நமது செயல்களைச் செய்கிறோம் என்கிற கர்வம் நீங்கும்.
இந்தக் கர்வம் நீங்கியதும், செயல்களை செய்வது என்பது பகவான் கொடுத்த திறமை என்கிற
ஜ்ஞானம் வரும்.
இந்த ஜ்ஞானத்தால், என்னுடையது, ப்ரபத்தியின் பலன்மீது ஆசை ,யாவும் ,நீங்கி தானும்
தன்னைச் சார்ந்தவையும் பகவானுக்காகவே அவனுடைய அடிமையாக இருக்கிறோம்
என்கிற எண்ணமுண்டாகும்
இந்த எண்ணம் வந்ததும், ப்ரபத்தி என்பது அசேதனமாக உள்ளது; அது, நேரிடையாகவோ
மறைமுகமாகவோ மோக்ஷபலன் அளிக்கும் ஸங்கல்பம் கொண்டதல்ல; அந்தப் பலனை
அளிக்க பகவானே உபாயம் என்கிற ஜ்ஞானம் ஏற்படும் .

அதிகாரத்திலிருந்து

பகவான், பலனுக்கு நேர் உபாயம்

ஈச்வரன் பலோபாயமாகிறது ஸஹஜஸௌஹார்த்தத்தாலே கரண களேபர ப்ரதானம்
தொடங்கி த்வயோச்சாரணபர்யந்தமாக ஸர்வத்துக்கும் ஆதிகாரணமான தானே
ப்ரஸாதபூர்வக ஸங்கல்பவிசேஷ விசிஷ்டனாய்க் கொண்டு அவ்யவஹித
காரணமாகையாலும் உபாயாந்தர சூந்யனுக்கு அவ்வோ உபாயஸ்தானத்திலே
நிவேசிக்கையாலும் இங்ஙனிருக்கும்படி தர்மி க்ராஹகமான சாஸ்த்ரத்திலே
அவகதமான வஸ்துஸ்வபாவமாகையால் , இவ்வர்த்தம் யுக்திகளால் சலிப்பிக்க
வொண்ணாது

வ்யாக்யானம்

பகவான், மனிதர்களின் அவயவங்கள் வளரும் காலம் முதலாக த்வயத்தைச் சொல்லும்
காலம்வரை,அனைத்துக்கும்காரணமாகிறான்.அவன் ஸத்யஸங்கல்பன்;கருணாஸமுத்ரம் .
கருணையை வெளிப்படுத்த ஆவலோடு உள்ளான் .மோக்ஷத்துக்கு நேர்க்காரணமாக
இருக்கிறான்.மற்ற உபாயங்களைச் செய்ய இயலாதவர்களுக்கு ,இவனே உபாயமாக
இருக்கிறான்.இவைகளை சாஸ்த்ரங்கள் மூலம் அறியலாம். சாஸ்த்ரங்கள் , மேலேசொல்லப்பட்ட
குணங்களை உடையவன் என்றும், வேறு எந்தக்காரணங்களாலும் மறுக்க இயலாது
என்றும் அறுதியிட்டுக் கூறுகின்றன

அதிகாரத்திலிருந்து

ஸ்ரீ நடாதூரம்மாள் சொல்லும் ப்ரபத்தி

இது ஸாங்காநுஷ்டானத்துக்கு நடாதூரம்மாள் அருளிச் செய்யும் சுருக்கு : —
”அநாதிகாலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே ஸம்ஸரித்துப் போந்தேன் .
இன்றுமுதல் அநுகூலனாய் வர்த்திக்கக்கடவேன் . ப்ரதிகூலாசரணம் பண்ணக்கடவேனல்லேன் .
தேவரீரைப் பெறுகைக்கு ஏன் கையில் ஒரு கைம்முதலில்லை .தேவரீரையே
உபாயமாக அறுதியிட்டேன்.தேவரீரே உபாயமாகவேணும் .அநிஷ்டநிவ்ருத்தியிலாதல்
இஷ்டப்ராப்தியிலாதல் எனக்கினி பாரமுண்டோ ? என்று

வ்யாக்யானம்

நடாதூரம்மாள், ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் முறையைச் சுருக்கமாகச் சொல்கிறார்

(இவர் ஸ்ரீ வாத்ஸ்ய வரதகுரு. தேசிகனின் ஆசார்யரான அப்புள்ளாரின் ஆசார்யர் )

கணக்கற்ற காலமாக உனக்குப் பிடிக்காதவற்றைச் செய்து ஸம்ஸாரத்தில் உழன்றேன்.
இன்று முதல், உனக்கு விருப்பமானதை மட்டும் செய்வேன்;உனக்கு வருத்தமேற்படும்
எதையும் செய்யமாட்டேன்;உன்னை அடைய என்னிடம் எந்தக் கைமுதலுமில்லை ;
உன்னையே உபாயமாக அண்டினேன் ; எனக்குக்கஷ்டங்களை வருவதைத் தவிர்ப்பது,
ஸுகத்தை உண்டாக்குவது என்கிற செயல்களில் என் பொறுப்பு ஏதுமில்லை;
அவை யாவும் உன்னுடையதே

அதிகாரத்திலிருந்து

அங்கங்களை அநுஷ்டிப்பது

இவ்விடத்தில் ஆநுகூல்யஸங்கல்பாதிகள் உபாயபரிகரமாய் ஸக்ருத்தாயிருக்கும் .
மேல் இவன் கோலின அநுகூல வ்ருத்யாதிகளோடே போகிறவிடமும் உபாயபலமாய்
யாவதாத்மபாவியாய் இருக்கும். இவற்றில் ப்ராதிகூல்ய வர்ஜனமும் அம்மாள்
அருளிச் செய்தபடியே ஆநுகூல்யஸங்கல்பம்போலே ஸங்கல்பரூபமானாலும்
ஸக்ருத் கர்த்தவ்ய மென்னுமிடம் ஸ்பஷ்டம் . அபாயேப்யோ நிவ்ருத்த : அஸ்மி என்கிறபடியே
அபிஸந்திவிராமமாதல் ப்ராதிகூல்ய ஸ்வரூப நிவ்ருத்தியாதலானாலும் அதில்
ப்ரதமக்ஷணம் அங்கமாய் மேலுள்ளது பலமாய்க்கடவது. இப்படி விச்வாஸத்திலும் பார்ப்பது

ப்ரவ்ருத்தி :அநுகூலேஷு நிவ்ருத்தி: ச அந்யத : பலம்
ப்ராரப்த ஸுக்ருதாச்ச ஸ்யாத் ஸங்கல்பே ச ப்ரபத்தி :

வ்யாக்யானம்

உபாயத்தின் அங்கமாக பகவானுக்கு விருப்பமில்லாததைச் செய்யாதிருப்பது ,
விருப்பமானதைச் செய்வது என்பவைகளை கடைப்பிடித்தாலே இவை அவன் ஆத்மா உள்ளவரை
நீடிக்கும்.
பகவானுக்கு விருப்பமில்லாததைச் செய்யாதிருத்தல் என்பதை ப்ரபத்தி சமயத்தில் ஒருமுறை
செய்தாலே போதுமானது.
லக்ஷ்மீ தந்த்ரம் ( 50–215 )
அபாயேப்யோ நிவ்ருத்த : அஸ்மி ==ஸம்ஸாரத்தில் தள்ளக்கூடிய பாவங்களிலிருந்து
விலகினேன்
விருப்பம் இல்லாதவற்றைச் செய்யாமலிருப்பது –அவற்றின் தொடர்பு இல்லாமலிருத்தல்
அவற்றைச் செய்யாமல் இருப்பதில் உறுதி—இந்த இரண்டில் ஒன்றாக இருக்கலாம்.
இருந்தாலும் , இது ஒரு அங்கமே .பிறகு, விருப்பமில்லாதவற்றை விலக்குதலென்பது
ப்ரபத்தியின் பலனாகவே ஆகும்.இதையே விச்வாஸத்திலும் நிலைநிறுத்தலாம் .

ப்ரவ்ருத்தி :அநுகூலேஷு நிவ்ருத்தி: ச அந்யத : பலம்
ப்ராரப்த ஸுக்ருதாச்ச ஸ்யாத் ஸங்கல்பே ச ப்ரபத்தி :

ப்ரபத்தி செய்துகொண்ட பிறகு பகவானுக்கு உகப்பைச் செய்வதும் ,உகப்பில்லாததைத்
தள்ளுவதும் ப்ரபன்னனின் பூர்வ ஜந்ம புண்யத்தாலும் ,ப்ரபத்தி சமயத்தில் செய்துகொண்ட
சங்கல்பத்தாலும் –அவற்றின் பலனாக அமைகிறது .
ப்ரபத்தி செய்தபிறகு ப்ரபந்நன் இவ்வுலகில் ஜீவிக்கும் காலத்திலும் ப்ரபத்தி
பலனைக் கொடுக்கிறது. எப்படியெனில் , பகவானுக்கு உகப்பில்லாததைவிலக்குதல்
உகப்பானதைச் செய்தல் –தானாகவே ப்ரபத்தியின் பலனாகவே ப்ரபந்நன் செய்கிறான்

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்தி அநுஷ்டிப்பது

ஆகையால் இருந்த நாளில் நிரபராத கைங்கர்யத்தையும் ப்ராரப்த சரீராநந்தரம் மோக்ஷத்தையும்
சேரப் பலமாகக் கோலிப் ப்ரபத்தி பண்ணுவார்கள் நிபுணர்

வ்யாக்யானம்

எல்லாமறிந்த நிபுணத்வம் உள்ளவர்கள் இவ்வுலகில் வாழும்வரை தொய்வின்றிக் கைங்கர்யம்
செய்யவேணுமென்றும், பலன்தரத் தொடங்கிவிட்ட கர்மாக்கள் முடிந்து ,உடலை விடும்
நேரத்தில் மோக்ஷம் அடையவேணுமென்றும் ப்ரபத்தி செய்வர்

அறவே பரமென்று அடைக்கலம் வைத்தனரென்று நம்மைப்
பெறவே கருதிப் பெருந்தகவுற்ற பிரானடிக்கீழ்
உறவே இவனுயிர் காக்கின்ற ஒருயிருண்மையை நீ
மறவேலென நம் மறைமுடி சூடிய மன்னவர்

வ்யாக்யானம்

நமது ஆசார்யர்கள் வேதஸாம்ராஜ்யத்தின் மன்னர்கள்;இவர்கள் ,அவர்களது
சிஷ்யர்களாகிய நம்மை, கருணாமூர்த்தியான ,கணக்கில்லாக் காலமாக
நம்மை ரக்ஷிப்பேன் என்று உறுதியுடன் இருக்கிற பகவானின் திருவடியில்
சேர்த்து நம்மை ரக்ஷிக்கும் பொறுப்பை நம்மிடமிருந்து நீக்கி, பகவானே
ரக்ஷிக்கவேண்டும் என்பதாக, ரக்ஷிக்கப்பட வேண்டிய பொருளாகச்
ஸமர்ப்பிக்கின்றனர் .
நமக்கு,”அந்தர்யாமியாக உன் ஹ்ருதயத்தில் உள்ள பகவான் எப்போதும்
உன்னை ரக்ஷிப்பான் ” என்று உபதேசிக்கின்றனர்

யுக்ய ஸ்யந்தந ஸாரதி க்ரமவதி த்ரயந்த ஸந்தர்சிதே
தத்வாநாம் த்ரிதயே யதார்ஹ விவித வ்யாபாரஸந்தாநிநி
ஹேதுத்வம் த்ரிஷு கர்த்துபாவ உபயோ : ஸ்வாதீநதைகத்ர தத்
ஸ்வாமி ஸ்வீக்ருத யத் பர :அயம் அலஸ : தத்ர ஸ்வயம் நிர்பர :

சித் , அசித் , ஈஸ்வரன் —-குதிரை, ரத்தம், ரதசாரதி
இப்படி இந்த மூன்றும் தன்மை செயல்கள் இவைகளில் ஒத்திருக்கின்றன,
என்று வேதாந்தங்கள் சொல்கின்றன .
இவற்றில் செயலாற்றுதல் சித் மற்றும் அசித்திடமும் , செயலற்ற தன்மை
ஈச்வரனிடமும் காணப்படுகின்றன.ஆதலால், யஜமானான எம்பெருமானால்,
காப்பாற்றும் பொறுப்பு ஏற்கப்படுவதால் ஜீவன் ( சித் ) தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும்
பொறுப்பு இல்லாதவனாகிறான்

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –12 வது அதிகாரம் —- ஸாங்கப்ரபதநாதிகாரம் —நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் —11–பரிகரவிபாகாதிகாரம் —

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் —11-பரிகரவிபாகாதிகாரம்
ப்ரபத்திக்கு பரிகரங்கள் –அதாவது அங்கங்களைச் சொல்வது

அதிகாரத்திலிருந்து

இயாந் இத்தம்பூத : ஸக்ருத் அயம் அவச்யம்பவநவாந்
தயா திவ்ய அம்போதெள ஜகத் அகிலம் அந்த : யமயதி
பவ த்வம்ச உத்யுக்தே பகவதி பரந்யாஸ வபுஷ :
பரபத்தே : ஆதிஷ்ட : பரிகர விசேஷ : ச்ருதிமுகை :

வ்யாக்யானம்
கருணைக்கடல் என்றால் இவனையே குறிக்கும்படியானகருணைக்குக்குச்
சிறந்த ஸமுத்ரமாகவும் ,எல்லா ஜீவராசிகளுக்கும் ஹ்ருதயத்தின் உள்ளே
இருந்து நியமிக்கும் பரமாத்மாவாகவும் ,ஸம்ஸார நாசகனாகவும் இருக்கிற
பகவானிடம் பொறுப்பை ஸமர்ப்பிக்கிற ப்ரபத்தியின் அங்கங்களின்
விசேஷம், வேதம் இவற்றால் இது என்றும் இத்தனை என்றும் , இவைகளின்
ஸ்வரூபம், உபயோகம் இவற்றைப்பற்றியும் ,ப்ரபத்தி செய்யும்போது
இந்த அங்கங்கள் அனுஷ்டிக்கப்படவேண்டும் என்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்தியின் அங்கங்கள் சொல்லப்படுகின்றன

இவ்வித்யைக்குப் பரிகாரமாவது ஆநுகூல்ய ஸங்கல்பமும் , ப்ராதிகூல்யவர்ஜனமும் ,
கார்பண்யமும் , மஹாவிச்வாஸமும் , கோப்த்ருவவரணமும் .

வ்யாக்யானம்

ப்ரபத்தி என்கிற இந்த ந்யாஸ வித்யைக்கு அங்கங்களாவன —-
1.பகவானுக்கு உகந்தவை ,எவையோ அவற்றை மட்டும் செய்தல் –ஆநுகூல்ய ஸங்கல்பம்
2.பகவானுக்கு உகப்பில்லாதவற்றை செய்யாது தவிர்த்தல் — ப்ராதிகூல்யவர்ஜனம்
3.பகவானைத் தவிர வேறு உதவியில்லை என்று இருத்தல் –கார்பண்யம்
4. பகவானிடம் அசஞ்சலமான விச்வாஸம் –மஹாவிச்வாஸ
5. பகவான்தான் ரக்ஷிக்க வேண்டும் என ப்ரார்த்திப்பது — கோப்த்ருவவரணம்

அதிகாரத்திலிருந்து

இவ்விடத்தில்
ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப : ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம்
ரக்ஷிப்யதீதி விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா
ஆத்ம நிக்ஷேப கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி :

இத்யாதிகளிற் சொல்லுகிற ஷாட்வித்யமும் அஷ்டாங்கயோகமென்னுமாப்போலே
அங்க அங்கி ஸமுச்சயத்தாலே ஆகக்கடவதென்னுமிடமும் ,இவற்றில் இன்னது
ஒன்றுமே ,இதரங்கள் அங்கங்களென்னுமிடமும் ,

நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ : பஞ்சாங்க ஸம்யுத :
ஸந்ந்யாஸஸ்த்யாக இத்யுக்த : சரணாகதிரித்யபி

என்கிற ச்லோகத்தாலே ந்யாய நிரபேக்ஷமாக ஸித்தம்

வ்யாக்யானம்

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை சொல்கிறது ( 37 வது அத்யாயம் —28, 29 பகுதிகள் )

நாரதர், ருத்ரனை—பரமேஸ்வரனை , ந்யாஸத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார் —
நாரதர் :— மஹேஸ்வரா ! வெளிப்படையானதும் ,ம