Archive for the ‘ஸ்ரீ பாஷ்யம்’ Category

ஸ்ரீ அருளிச் செயல்களைக் கொண்டே ஒருங்க விடுவார் ஸ்ரீ பாஷ்யகாரர் –

November 5, 2020

ஸ்ரீ லக்ஷ்மிகாந்த பதாரவிந்தயுகலைகாந்தாப்ரமேயாத்புத
சடகோபஸூரிமத தத்ஸுக்த்யப்திமக்நாசயம் |
ஸ்ரீமத்பாஷ்யக்ருதம் யதீந்த்ரமத தத்பூயோ’வதாராயிதம்
ஸ்ரீமத்ரம்யவரோபயந்த்ருயமிநம் ஸம்சிந்தயே ஸந்ததம் ||

ஸ்ரீமத்வரவரயமிந: க்ருபயா பரயா ப்ரபோதிதாநர்த்தாந் |
ஸம்தர்ஷ்யந் லிகாமி த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்||

ப்ராதாந்யேந ப்ரபந்தே த்விஹ யதிபதிநா த்ராவிடாம்நாயவாசாம்
ஸாஹாய்யேநைவ பாஷ்யாத்யநக க்ருதிததிர்நிர்மிதேதி ப்ரஸித்தா|
வார்த்தா யுக்த்யா ப்ரமாணைரபி ச ஸுவிஷதம் ஸம்ப்ரதிஷ்டாப்யதே போ:
மாத்ஸர்யம் தூரதோ ஸ்யந் விபுதஜந இதம் வீக்ஷ்ய மோமோத்தும் தந்ய:||

திவ்யப்ரபந்தேஷு ந வேததௌல்யம் ந சாபி வேதாததிகத்வமஸ்தி|
ராமானுஜார்யோ பி ந தத்ர ராகீத்யேவம் லிகந்த: குத்ருசோ நமந்து|

ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமானுச முனிதன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற

வான் திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்

“எங்கள் கதியே இராமானுச முனியே ! சங்கை கெடுத்தாண்ட தவராசா !
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும், தங்குமனம் நீயெனக்குத் தா!”

“ மாறனுரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே!”

“உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும் வெறிதரு பூமகள்நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறிதருஞ் செந்தமிழாரணமே யென்றிந் நீணிலத்தோர்அறிதரநின்ற இராமானுசனெனக் காரமுதே”!

வேதங்களில் பௌருஷ மானவ கீதா வைஷ்ணவங்கள்போலே, அருளிச்செயல் ஸாரம்.

ருக் ஸாமத்தாலே ஸரஸமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவையாயிரமாயிற்று.

ஆதித்ய ராமதிவாகர அச்யுதபாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி
விகஸியாத போதிற்கமல மலர்ந்தது வகுளபூஷணபாஸ்கரோதயத்திலே”.

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
தல்பம் கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்||

காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத் தன்னில் கொண்டதாய்,
அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய்,
சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை, வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை
அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக் கொண்டு கடைகிறேன்.

யத்கோஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந்மண்டலம் ச்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய|| “

“த்யேயஸ்ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருதசங்கசக்ர: “

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக் குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு
தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….

————————–

ஸ்ரீபாஷ்யம் இரண்டாம் அத்யாயம் தொடக்கம் –
“ப்ரதமே அத்யாயே ப்ரத்யக்ஷாதி ப்ரமாண கோசராத் அசேதநாத் தத் சம்ஸ்ருஷ்டாத் வியுக்தாச்ச சேதநாத்
அர்தாந்தர பூதம் நிரஸ்த நிகில அவித்யாதி அபுருஷார்த்த கந்தம் அனந்த ஞானானந்தைக தானம் அபரிமிதோதார
குண ஸாகரம் நிகில ஜகத் காரணம் சர்வாந்தராத்ம பூதம் பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்யம் இத்யுக்தம்”.

இதன் பொருளாவது… வேதாந்த சூத்ரத்தில் முதல் அத்யாயத்தில் பர ப்ரம்ஹம் புலன்களால் அறியப் படுமவற்றிநின்று
வேறு பட்டு, பௌதிகப் பொருள்களுக்குக் கட்டுப் பட்ட ஜீவாத்மாவில் நின்று வேறுபட்டு, இப்பொருள்களினின்றும்
விடுபட்ட ஜீவாத்மாவிலிருந்தும் வேறுபட்டு அஞ்ஞானம் போன்ற அனைத்துக் குறைகளிலிருந்தும் நீங்கி,
எல்லையற்ற ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் இருப்பிடமாய் நற்குணக் கடலாய் அண்ட சராசரங்கள் அனைத்துக்கும் தானே
ஒரே காரணமாய் யாவற்றுக்கும் அந்தர்யாமியாய் வேதாந்தத்தால் அறியப்படுகிறது.

எம்பெருமானே கடல்; நீர்க் கடல் அல்லன், திவ்யகுணக்கடல் என்பது தத்புருஷ சமாசத்தின் பொருள்.
பஹுவ்ரீஹி சமாசத்தில் குணங்களே கடல், அக்கடலொத்த குணங்களை உடையவன் எம்பெருமான்

“அகாத பகவத் பக்தி சிந்து”, நாதமுனிகள் பக்தியாகிற ஆழ் கடலை உடையவர் என்று ஸ்தோத்ரம் செய்து தொடங்குகிறார்.
இங்கு, நாதமுனிகளே பக்திக்கடலா? (தத்புருஷம்) அல்லது பக்தி என்னும் கடலை உடையவரா? (பஹுவ்ரீஹி) என்கிற கேள்வி எழுகிறது.
வியாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான்பிள்ளை இதை ஆழ்வார்கள் மரபில் நின்று பஹுவ்ரீஹியாகவே நிர்வஹிக்கிறார்.
இதற்கு அவர் நம்மாழ்வாரின் “காதல் கடலின் மிகப் பெரிது” (திருவாய்மொழி 7-3-6) பாசுரத்தையும்
திருமங்கை ஆழ்வாரின் “ஆசை என்னும் கடல்” (பெரிய திருமொழி 4-9-3) பாசுரத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.
இவ்விளக்கம் சுவாமி வேதாந்த தேசிகனாலும் ஆதரிக்கப்பட்டது.
அவர் தம் உரையில் முதலில் தத்புருஷ அர்த்தமும் பின்பு பஹுவ்ரீஹி அர்த்தமும் சாதித்தருளுகிறார்.
“பக்திம்வா சிந்துத்வேன ரூபயித்வா பஹுவ்ரீஹி”, பக்தியை ஒரு கடலாக உருவஹித்தல்.

—————————–

அந்தஸ்தத் தர்மோபதேசாத்” (1-1-21) என்பதை விளக்கும்போது
ஸ்வாமி -பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே-
கீதை ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியருளுகிறார்.
பிறகு, ஸ்வாமி “ஸாதவோஹி உபாசகா:, தத் பரித்ராண மேவோத்தேச்யம், ஆநுஷங்கிகஸ்து துஷ் க்ருதம் விநாச,
ஸங்கல்ப மாத்ரேணாபி ததுப பத்தே” என்றருளிச் செய்கிறார்.

அவதாரத்தின் ப்ரதான நோக்கம் லக்ஷ்யம் உபாசகனை, பக்தியோடு வணங்குபவனைப் பாதுகாப்பதேயாம்.
தீயோரை அழிப்பது இரண்டாம்பக்ஷமே ஏனெனில்
அவதாரம் செய்யாமல் எம்பெருமான் தன ஸங்கல்ப மாத்ரத்தாலேயே அதைச் செய்து முடிக்கவல்லவன்.

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே”

“நாஹம் கலேவரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மதுசூதன! கரஸ்த கமலான்யேவ பாதயோர் அர்ப்பிதம் தவ” (மதுசுதன!
என் சரீரத்தைக் காத்துக்கொள்ள நான் உன்னை அழைக்கவில்லை.
என் துதிக்கையில் உள்ள இந்தத் தாமரை மலர்களை உனக்கு ஸமர்ப்பிக்கவே அழைத்தேன்”)

———–

ஸ்ரீரங்க கத்யம், “ஸ்வாதீநத்ரிவித சேதனா சேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்” என்று தொடங்குகிறது.

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவையுவை அவை நலம் தீங்கவை
ஆம் அவை ஆய் அவை ஆய் நின்ற அவரே

அவரவர் தமதமது அறிவறிவறி வகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவரியவ்ர்
என்றும் ஓர் இயல்வொடு நின்றவெம் திடரே,

———————–

“கிரீட மகுட சூடா வதம்ச” என்ற சொற்கள் வருகின்றன.

பாரளந்த பேரரசே! எம் விசும்பரசே! எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்கிறார்.
ஆழ்வார் அரசே அரசே அரசே என மும்முறை விளிக்கிறார்..

பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.
த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.

எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி.
அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.

எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

ஆசார்ய ஹ்ருதயத்தில் “பாரளந்த என்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு” என்று காட்டுகிறார்.

———————————–

“அடியேனுள்ளான் உடனுள்ளான்

“ஞானவான்” என்பான் வருமிடங்களிலெல்லாம் கீதா பாஷ்யத்தில் மேற்கொள்கிறார்.
ஸ்ரீ சங்கரர் பொதுவாகவே தெளிவுற்ற சேதனனைப் பற்றி
“விஷ்ணோ: தத்த்வவித்” (விஷ்ணுவின் உண்மைநிலை அறிந்தவன்) என்கிறார்.
ஸ்வாமியோ “பகவத் சேஷதைக ரஸ ஆத்ம-ஸ்வரூபவித் -ஞாநி “ என்கிறார்.
தெளிந்த அறிவுடையோன், ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டவன் என அறிந்தவனே என்பதாம்.

ஸ்ரீ ஆழ்வார் “நான்” என்னாமல் “அடியேன்” என்றருளிச் செய்ததை அடியொற்றியே
ஸ்ரீ ஸ்வாமியும் ஞானத்தைப் பார்க்கிலும் சேஷத்வமே மேன்மையுடைத்தென்பதைக் காட்டியருளினார்.

————-

“மஹா விபூதே! ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீவைகுண்டநாத!”

”அபார காருண்ய ஸௌசீல்ய வாத்ஸல்யௌதார்ய ஸௌந்தர்ய மஹோததே!”.
ஸ்ரீ எம்பெருமான் ஓர் ஆழ் பெருங்கடல். அவன் கல்யாண குணங்களாலான கடல்
“ஆச்ரித வாத்ஸல்ய ஜலதே!” என.

வாத்ஸல்யம் அவனது எண்ணற்ற கல்யாண குணங்களில் ஒன்றே. ஆனால் அது தன்னிகர் அற்ற தனிப் பெரும் குணம்.
“நிகரில் புகழாய்!”

——————–

அருளிச்செயல் “செவிக்கினிய செஞ்சொல்” என அறியப்படுகிறது.
ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி 10-6-11ல் “கேட்பார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வாரின் திருவாய்மொழியின் ஈரச்சொல்லிலேயே சிந்தை நனைந்து கிடந்த ஸ்வாமி ,
“ஸ்ரீ ஸூக்தை: ஸ்தோத்ரை: அபிஸ்தூய” என்கிறார்.
அருளிச்செயல் என்பது ஒரு சொற்றொடர். அது ஸ்தோத்ரம் ,
ஏதோ ஒரு ஸ்தோத்ரம அன்று அது ஸ்ரீ ஸூக்த ஸ்தோத்ரம் …செவிக்கு இனிய செஞ்சொல்.

—————————–

ஸ்ரீ ஆழ்வார், “உடல் மிசை உயிர் எனக கரந்தெங்கும் பரந்துளன்” என்றார். (திருவாய்மொழி 1-1-7).
உபநிஷத வாக்யங்களின் அர்த்த விசேஷத்தை ஸ்ரீ ஸ்வாமி போல் விசிஷ்டாத்வைதிகள்,
ஸ்ரீ ஆழ்வார் அருளிசெயல்களில் கண்டனர் எனில் மிகையே அன்று.

ஸ்ரீ எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:

உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸந்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குணகண
யவனவன்=புருஷோத்தமன்

ஸ்ரீ ஸ்வாமியின் திருவாக்கில் ஸ்ரீ ஆழ்வார் திருமிடறு எதிரொலிப்பதைக் காணக் கூடியவர்களே பாக்யசாலிகள்.

———–

செய்ய தமிழ் மறைகளை நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!”

இக்கருத்தை அவர், த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி நாலாம் ச்லோகத்தில்,
“யத் தத் க்ருத்யம் ச்ருதீநாம் முநிகண விஹிதைஸ் ஸேதிஹாசை: புராணை: தத்ராஸு ஸத்வ ஸீம்னா:
சட மதா நாமுநேஸ் ஸம்ஹிதா ஸார்வ பௌமி“ என வலியுறுத்துகிறார்.

முனிவர்களருளிய இதிஹாச புராணங்களால் வேதங்களின் பொருள் அறிய எளிதாகிறது.
ஆகிலும் இவற்றில் சில போதுகளில் இவ்வர்த்தங்கள் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் கலந்தே வரும்.
மாறாக ஸ்ரீ ஆழ்வார் திருவாக்குகளோ சுத்த ஸத்வமே வடிவெடுத்து வேதப்பொருள் விளக்குவன.
இதையே ஸத்வ ஸீம்னா என்றார். ஆகவே ஸ்ரீ சடகோப ஸம்ஹிதையே சாலச் சிறந்தது என்றபடி.

இறுதியாக ஸ்ரீ தேசிகன் தம்மையே “திராவிட வேதாந்த வித்வான்” என்று கூறிக்கொள்கிறார்.
“சந்தமிகு தமிழ் மறையோன் தூப்பில் தோன்றும் வேதாந்தகுரு” என்பது அவர் திருவாக்கு,

ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்த்து

இன்பம் என்னும் பனிமூட்டத்திலும், இருள் என்னும் துன்பத்திலும், அருளிச்செயல் என்னும் ஒளி
நம் மனத்தில் ப்ரகாசமாக எப்பொழுதும் மலரட்டும்.

ஸ்ரீ எம்பெருமானாரே! இதை மட்டும் அளித்து அருள்.

—————————–

ஸ்ரீ கோயில் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஆச்சார்யர் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய அம்ருதம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

November 5, 2020

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர மங்கள ஸ்லோகம் –

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு.

இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும்.
இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோக ரக்ஷணம் அடங்கும்.
இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்ரீ ஸ்வாமி மீண்டும்,
”விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.

ஸ்ரீ ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல் “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில்
ஸ்ரீ எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
மீண்டும் அவனது மோக் ஷப்ரதத்வம் எனும் எக் காலத்தும் வீடு பேறளிக்கும் மஹா குணத்தை
“வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார்.
முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள்,
மோக் ஷப்ரதத்வம் ஸ்ரீ எம்பெருமானின் மிகத் தனித்ததொரு குண விசேஷம் என்பதால் இது புனருக்தியன்று என்றனர்.

அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.
ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது.
இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.

ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ரீ ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,
“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே

இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன?
வினத=சமர்ப்பிக்கப்பட்ட
விவித=வெவ்வேறுபட்ட
பூத=உயிர்வாழிகள்/ஆத்மாக்கள்
வ்ராத=குழுக்கள்
ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது.

இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11),
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.

ஸ்ரீநிவாச

ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ச்ரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பக்தி ரூபா சேமுஷீ பவது

ஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை.
ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ
ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது,
ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.
ஸ்ரீ ஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” .
அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது,
பக்தி என்பது ஸ்ரீ எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார்.
ஸ்ரீ ஆழ்வார் காட்டிய நெறியை ஸ்ரீ எம்பெருமானார் நன்கு பின்பற்றினார்.
அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.

அதே மங்கள ச்லோகம் ஸ்ரீ நம்மாழ்வாரையும் எப்படிக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அகில-புவன -ஜந்ம -ஸ்தேம -பங்காதி -லீலே

அகில புவன ஸ்தேம பங்காதியாய் இருப்பவன் ஸ்ரீ எம்பெருமான்.
“தேன ஸஹ லீலா யஸ்ய” இந்த ஸ்ரீஎம்பெருமானோடு அவனாகிய லீலையை விளையாடுபவர் ஸ்ரீ ஆழ்வார்.
ஆகவே அகில புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா எனும் அடைமொழி ஸ்ரீ ஆழ்வாரைக் குறிக்கிறது.

ஸ்ரீ எம்பெருமானுடனான விளையாட்டை ஸ்ரீ ஆழ்வாரே பாடுகிறார்
”என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ” என்றும்,
“விளையாடப் போதுமின் என்னப் போந்தமை” என்றும்.

இந்தச் சொற்களின் தேர்வு இன்னொரு விளக்கத்துக்கும் ஹேதுவாகிறது –
புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா அகிலம் யஸ்ய. புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலையே இவ்வண்ட சிருஷ்டியின் ப்ரதான காரணம்,
அதாவது ஸ்ரீ எம்பெருமான். இவன் யாருக்கு இப்படி எல்லாமாய் இருக்கிறான் எனில், ஸ்ரீ ஆழ்வாருக்கே.
ஏன் எனில் அவர் ஒருவரே “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றார்.
நமக்கு உயிர் பிழைக்கச் சில, வளர்ச்சி பெறச்சில, இன்பம் அனுபவிக்கச் சில எனப் பொருள்கள் தேவை.
ஆனால் ஸ்ரீ ஆழ்வாருக்கு ஸ்ரீ கிருஷ்ணனே இம் மூன்றுமாய் உள்ளான்.

விநத-விவித-பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே

இவ்வெல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமானே. ஆயினும் பக்தன் நோக்கில் ஸ்ரீ எம்பெருமான் பூரணமாகத் தேவைப்படுவதில்லை.
ஸ்தனன்ஜயப் ப்ரஜைக்கு அதன் பசி தீரப் பால் கிடைப்பதால் அதன் நோக்கு தாயின் ஸ்தனத்திற்போலே
ஸ்ரீ எம்பெருமானை வணங்கும் அடியானுக்கு அவன் திருவடியிலேயே கைங்கர்யம் பற்றி நோக்கு.

ஸ்ரீ எம்பெருமானின் திருவடி நிலைகளே ஸந்நிதிகளில் ஸ்ரீ சடாரி அல்லது ஸ்ரீ சடகோபம் என ஆழ்வார் பேராலேயே வழங்கப் பெறுகிறது.
ஆகவே ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ எம்பெருமான் திருவடிக்கும் வேறுபாடில்லை.
ரக்ஷை வேண்டும் அடியாருக்குத் திருவடிகளாகிய ஸ்ரீ ஆழ்வாரே கிடைக்கிறார்.

ச்ருதி சிரஸ்ஸாவது வேதாந்தம். ச்ருதி சிரஸி விதீப்தே எனில் வேதாந்தத்தில் நன்கு உணர்ந்தவர்,
வேதாந்தம் ஸ்ரீ எம்பெருமானை அறியவே என்று உணர்ந்தவர் ஸ்ரீ ஆழ்வார். ஆகவே இச்சொற்றோடரும் அவர்க்கு இசையும்.

வேதமே ஆழ்வாரை, “தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ரவாக்ம்ஸஸ் ஸமிந்ததே” விப்ரா எனும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும்.
“ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஸ்ம்ருதா” என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உழலமாட்டார்.
“பண ஸ்துதௌ” என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக்குணங்களைப் பாடுபவர் என்றதால்
அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடிய ஆழ்வாரையே குறிக்கும்.
“தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்”.
“ ஜாக்ர வாக்ம் ஸ” என்பது எப்போதும் விழிப்புணர்ச்சியோடிருப்பது. எம்பெருமானையன்றி வேறொன்றும் பாராது,
அவனையன்றி மற்றொன்று உணராது நினையாது அவனையே அனுபவித்திருக்குமவரான
ஆழ்வாரே இச்சொற்றொடருக்கு இலக்கும் இலக்கியமும். தானே ஸத்தையாயும் எப்பொருளாயும் இருந்து ஒளிரும்
எம்பெருமான் விஷயமாகவன்றோ ஆழ்வார்
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று பாடினார்?
இவ்வேத வாக்யத்துள்ள “வி” என்பதை ஸ்ரீபாஷ்யச்லோக இறுதிச்சொல்லான ஸமிந்ததேவிலுள்ள “ஸம்” காட்டுகிறது.

ப்ரஹ்மணி

எல்லாவிதத்திலும் பெரியது எனக்காட்டும் “ப்ரு” எனும் சொல்லின் அடியாக வந்த சொல் ப்ரஹ்மம்.
பரப்ரஹ்மமே அவரிடம் கட்டுண்டுள்ளதென்பதே ஆழ்வாரின் பெருமை.
பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் இதனை,
“யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார்” என்று காட்டுகிறார். ஆகவே ப்ரஹ்மம் என்பதன் சரியான பரியாயம் பெரியன்.

ஸ்ரீநிவாஸே

இதெல்லாம் சரி….ஆனால், ஸ்ரீநிவாசே என்பதை ஆழ்வார் பரமாக நிர்வஹிக்க முடியாது,
ஏனெனில் ஆழ்வார்க்கு ச்ரிய:பதித்வம் இல்லையே எனலாம்.

ச்ரிய:பதித்வம் எம்பெருமானின் ஏகதேசமான உரிமைதான், எனினும் ஆழ்வார் ஸ்ரீ நிவாசனே
மேலும் சம்பிரதாயத்தில் ஸ்ரீநிவாசர்கள் பலர் உளர்.

லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன – லக்ஷ்மணன் லக்ஷ்மியை உடையவன்,

ஸ து நாக வர ஸ்ரீமான் – கஜேந்த்ரனும்ஸ்ரீமான்,

அந்தரிக்ஷ கத ஸ்ரீமான் – விபீஷணன் நடு வானில் நின்றவன் ஸ்ரீமான் ஆனான்.

இவ்வொவ்வோரிடத்திலும் ஸ்ரீ அல்லது லக்ஷ்மி என்பது வெவ்வேறு பொருள் தருவதாகும்.
லக்ஷ்மணனுக்கு ஸ்ரீ கைங்கர்யம்,
கஜேந்திரனுக்கு ஸ்ரீ அவன் கைம்மலரை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க விரும்பிய மனத்தூய்மை,
விபீஷணனுக்கு ஸ்ரீ அவன் மனதில் துயரம் இருப்பினும் எல்லா செல்வமும் விட்டுப் பெருமாளை சரண் புக்கது.

ஆழ்வார் விஷயமாகவோ எனில் வ்யாக்யாதாக்கள் அவரிடம் ஸ்ரீ இருப்பது போக அவரே ஸ்ரீ, பிராட்டி என்றார்கள்.
ஆழ்வார் முன் சொன்ன பிரபன்னாதிகாரிகளின் ஒவ்வொரு குணமும் நிரம்பப் பெற்றதால் ஸ்ரீநிவாசர்,
தாமே பிராட்டி போலானதாலும் ஸ்ரீநிவாசர் என்று எண்ணத்தகும்.

இவ்வாறாக, எம்பெருமானார் எம்பெருமானை அனுபவிக்கு முகமாக இச்லோகத்தால் ஆழ்வாரை அனுபவித்தார் என்பது தெளிவு.
ஆழ்வார் ப்ரபாவம் ஸ்ரீ பாஷ்யம் முதலில் தொடங்கி, இறுதி வரை, ஆம் கடைசி ஸூத்ர பாஷ்யம் வரை செல்கிறது.

ஸ்ரீ பாஷ்யம் விவரிக்கும் கடைசி ஸூத்ரம் “அநாவ்ருத்தி அநாவ்ருத்திஸ் சப்தாத்” என்பது.
இதில் அநாவ்ருத்தி சொல்லின் பொருளாவது, விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இம்மாயாவுலகுக்கு வருவதில்லை என்பது.

திரும்ப வராததற்குக் காரணம், சப்தாத், அதாவது இவ்வாறு வேதம் சொல்வதால்.
வேதம், “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிறது:விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இவ்வுலகுக்கு வருவதில்லை.

பரம சேதனன் சேதனனைக் காதலோடு ஆரத்தழுவும் நிலை.
ஜீவனின் நிலையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் வெறும் ஆதாரமாய் இருக்கும் நிலையன்றி,
பரம சேதனன் சேதனனை அடையப் பல வடிவுகளும் முயற்சிகளும் ஏற்கிறான்.
அவன் ஆரா அன்புள்ள காதலன், ஒருபோதும் கைவிடாத காதல் கொண்டவன்.
“ஸ ச மம ப்ரிய:” என்று சொல்பவன். ஜீவன் என் அன்புக்குரியவன் எனும் இதைப் பொருளில்லாமல் சொல்வானா?

ஆழ்வார் அநுபவத்தை முன்னாகக் கொண்டு ஸ்வாமி,
“ந ச பரமபுருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்தயிஷ்யதி”.

நழுவாத ஸங்கல்பங்கொண்ட பரமபுருஷன் தனக்கு மிகப்ரியமான மயர்வறப்பெற்ற சேதனனை மிக்க பரிச்ரமத்துடன்
அடைந்தபின் விடுவானா? கிருஷ்ணனை வெண்ணெய் திரும்பத் தா எனில் தருவானோ?

சேதனனை அடைந்து அநுபவிப்பதில் எம்பெருமானுக்குள்ள ஆசையை ஆழ்வார்,
“என்னை முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்” என்கிறார், அவன் என்னை முழுதுமாக அநுபவித்தான்.
இந்தக் காதலை வார்த்தைகளால் விளக்கமுடியாது, உணரவே முடியும்.
இவ்வாறான திருத்தவொண்ணாத காதல் நோயாளன் பெற்ற சேதனனைத் திரும்பவிடுவனோ!

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தை ஒரு பேருரையாய் நிகமிக்கிறார் –
”வாசுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:” எனும் கண்ணன் எம்பெருமானின் தன்னை விட்டு விலகும்
சேதனனைப் பற்றிய நிர்வேத ப்ரகடணத்தை உதாஹரிக்கிறார்.
ஸ்ரீ எம்பெருமான் உத்தராயணத்தில் கிளம்பிச் சென்றபின் ஸ்ரீ ஆழ்வார் தக்ஷிணாயனத்தில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” எனக்
கண்ணனே எனக்கு எல்லாமும் எனச் சொல்லிப் போந்தார்.
ஸ்ரீ கண்ணனின் திருப்பவளம் உதிர்த்த சொற்களே ஸ்ரீ ஆழ்வார் பாசுரமாக வந்தன.

———————————————————————-

ஸ்ரீ கோயில் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஆச்சார்யர் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்யம் —மஹத்தீர்க்காதிகரணம் :: 2-2-2–ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

சூத். 2-2-10 :: மஹத்தீர்க்கவத் வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம் ::

ஐஹிக, ஆமுஷ்கிக பலன்களை அடைய வேண்டுமானால் யாரை நாம் தியானிக்க வேண்டும் ?
கஸ்ச தியேய : ? என்பது ஸகஸ்ரமான காலத்திலிருந்தே கேட்கப்படும் கேள்வி.
காரணம் து தியேய : என்பது உபநிஷத்தின் பாடம். காரணம்தான் எது ? என்றால்
யாதோவா இமாநி பூதாநி ஜாயந்தே—-தத் பிரஹ்மேதி — தன்னை ஒழிய எல்லா பொருளுக்கும் காரணமானது எதுவோ
தனக்கொரு காரணம் இல்லாதது எதுவோ அது தான் பர பிரஹ்மம். அந்த பர பிரஹ்மத்தைத்தான் நாம் சிந்தை பண்ண வேண்டும் .

இந்த பர பிரஹ்மத்துக்கு காரணத்வம் இல்லை என்று சொல்லி வந்தனர் பலர்.
எங்கெல்லாம் காரணத்வ வாக்கியம் உள்ளதோ அவையெல்லாம் பர பிரஹ்ம பரமாகா இல்லை.
அவை சேதனாசேதன பரமாகத்தான் உள்ளன என்று சாங்கியன் என்ன, இந்த நையாயிகன் என்ன இவர்கள் பிரதிக்ஷேபணம் பண்ணவே
அவர்கள் எல்லாருக்கும் இந்திந்த ஸ்ருதி வாக்கியங்களை நீங்கள் கூறுகிற அர்த்தம் பொருந்தாது . இதுதான் அர்த்தம்.
பர பிரஹ்மத்தைத்தான் அவை சொல்லுகின்றன. காரணம் என்று எவை எவைகளை ஸ்ருதி வாக்கியம் சொல்லுகின்றனவோ
அவை அனைத்தும் பர பிரஹ்மத்தான் காட்டுகின்றன என்பதாக
அயோக விவச்சேத, அந்யயோக விவச்சேதத்தாலே அந்த பர பிரஹ்மத்துக்கு காரணத்வத்தை சமன்வயப் படுத்தினார்
ஸமன்வயாத்யத்திலே.

அதைத் தொடர்ந்து வந்த அவிரோதாதியத்திலே முதல் பாதமான ஸ்மிருதி பாதத்தில்
பரிகரிக்கப்பட்ட ஸ்ம்ருதி விபிரதிபதிக்கு யுக்த்யாபாசம் இருக்கு.
அதாவது இன்னும் உண்டான வேறு சில ஸ்ருதி வாக்கியங்களை கொண்டு பார்த்தால் பிரஹ்ம காரண வாதம் எடுபடாது
என்கிற விஷயம் பிரஸ்துதமாக – இத்தனை தூரம் இதரர்கள் வாள் கொண்டு வீச, கேடயம் கொண்டு தடுத்த வியாசர்,
இப்போது கிருஸ்ந பிரசக்தி அதிகாரணத்தோடே இந்த இரண்டாவது தர்க்க பாதத்தோடே நேரே சங்கதி உண்டு.
இதில் பரபக்ஷ பிரதிக்ஷேபத்துக்கே இறங்குகிறார் சூத்ரகாரர்.

ஸ்வ பக்ஷ தோஷாஸ்ச என்று ஸ்ம்ருதி பாதத்தில் கோடிட்டு காட்டினத்தை தர்க்க பாதத்தில் கம்பீரமாக
பர தர்ம வாதிகளை ஒவ்வொருவராக வாத விவாதத்துக்கு அறைகூவி அழைத்து அவள் பக்ஷத்தை எல்லாம் நிரஸனம் பண்ணுகிறார்.
அந்த வகையில் மஹாதீர்க்கதிகரணத்தில் கணாத பக்ஷமான பரமாணுகாரணவாதமும் அஸமஞ்ஜசஹ என்று காட்டப் படுகிறது.
இதுதான் கீழுள்ள விஷயங்களுக்கும் இதற்குமான சங்கதி.

பரமாணுவாதிகள் சொல்வதாவது –
பரமாணுகளின் உள்ளே இடமே கிடையாது. நிரம்சமானது. நிரவயவம் (Dimentionless) –
அகல, நீள , உயர, கன பரிமாணங்கள் அதற்கு கிடையாது. காரணம் அத்யந்த ஸூக்ஷ்மமானது .
ஜகத்து பரமாணு சமூகத்தால் ஆனது அதாவது பரமாணுக்களே ஜகத்துக்கு உபாதான காரணம் என்கிறான்.
காபில அநுயாயிகளான சாங்கியன் ஆநுமானிக பிரதானத்தை உபாதானமாக சொன்னது போலே,
இவர்களும் ஆநுமானிக பரமாணுவை ஜகத் உபாதான காரணம் என்கின்றனர்.
விப்ரதிஷேதாச்ச அசமஞ்சஸம் என்று கீழ் அதிகாரணத்தில் சொன்ன பொருந்தாமையை
இந்த அதிகரண பிரதி ஸூத்ரத்திலும் அன்வயித்துக் கொள்ள வேண்டும்.

மஹத்தீர்க்கவத் வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம் —
பரிமண்டலம் = பரமாணு
ஹ்ரஸ்வம் = த்வயணுகம்
மஹத்தீர்க்கம் = த்ரியணுகம்
இது எதுவும் கூட காரணமாகாது.

வா ஸப்தே ச அர்த்தே = அதுவா, இதுவா என்றல்லாமல், அதுவும் கூட என்கிற சமுச்சயார்த்ததில் வந்துள்ளது.
பரமாணு 2 சேர்ந்தால் த்வியணுகம் . 3 த்வியணுகம் சேர்ந்தால் அது த்ரியணுகம் .அப்பேர்பட்டது 4 சேர்ந்தால் சதுரணுகம் ஆகிறது.
இப்படி ஸூக்ஷ்ம அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஸ்தூல ஜகத்தாகிறது என்பது அவர்களுடைய மதம்.

ஷட் பார்ஸ்வ ஸம்யோகம் :
ஷட்பார்ஸ்வ முடைய செங்கல் ஒவ்வொன்றாக சேர்த்து சுவர் எழும்புவதுபோல ஷட்பார்ஸ்வ முடைய பரமாணு முறையே
த்வியணுகம் , த்ரியணுகம் என்று உண்டாவது. அணுக்கள் நிரவயமானதால், அணுவுக்குள் அணு பிரவேசித்தல் முடியாது,
செங்கலுக்குள் செங்கல் போகாதாப்போலே பரமாணுகளின் உள்ளே இடமே கிடையாது.
அப்படி போக முடிந்தால், பஹுத்வம் (அ) ஸ்தூலத்வம் சித்திக்காது,
ஸாம்சமான அணுவுக்குள் ஸாம்சமான அணு , அதனுள் இன்னொன்று என்று அநவஸ்தா தோஷம் வந்து சேரும்.
அத்யந்த அணுப் பிரமாணம்.
அல்ப பரிமாணம்
மத்யம பரிமாணம்
மஹத் பரிமாணம்
பரம பரிமாணம்
விபு
என்று அடுத்தடுத்து அணு மஹத்தாக விகரிக்கிறது என்கிறான்.
இதில் நிரவயவத்தை ஒத்துக் கொண்டால் தருமமே சித்திப்பதில்லை.
ஸாவயவத்தை ஒத்துக் கொண்டால் தர்மியே சித்திப்பதில்லை. அதாவது
வேஷ்டிக்கு அவயவம் ஓத பிரோத்தங்கள் (உண்டை, பாவு) என்கிற நூல் ஒன்றோடு ஒன்று சேரும்போது வஸ்திரம் ஆகிறது.
இப்படி இரண்டு அவயவங்கள் ஒன்று சேரும் போது அவற்றைக் காட்டிலும் பெரிதான அவையவம் உண்டாகிறது.
இது போல இரண்டு பரமாணுக்கள் ஒன்று சேரும் போது அதைக் காட்டிலும் பெரியதான த்வியணுகம் உண்டாக்கவேண்டும்.
ஆனால் அணுக்கள் நிரவயமாக சொல்லப் படுவதால், அவைகளைக் காட்டிலும் பெரிய பரிமாணம் உள்ள பொருளே (தருமமே) உண்டாக வழி இல்லை.

இந்த தோஷத்தை கழிக்க, அணுக்கள் ஸாவயவம் என்றால், அனவஸ்தா தோஷம் சித்திக்கும்.
ஸாவயவம் என்றால் அவை மேலும் பல அவயவங்களாக பிரிக்கக் கூடும் என்பதால் முடிவில் ,
பிரிக்க முடியாத மூல காரணம் ஒன்று (தர்மியே) இல்லையாகிவிடும். .
இதுபோலவே இவர்களுடைய மற்ற கொள்கைகளும் பொருந்தாதவையே – என்பதை ”வா” சப்தத்தால் குறிப்பிடப் படுகிற ”ச”காரம் காட்டும்.

—————–

சூத். 2-2-11 :: உபயதா அபி ந கர்ம : அத : ததபாவ :

பரமாணுக்கள் சேர்ந்து த்வ்யணுகம், த்ரஸரேணு என அடுத்தடுத்து உண்டாக மூல காரணம் பரமாணுவில் ஏற்படும் முதற்கிரியை என்றும்,
புண்ய பாபங்களால் உண்டாகும் அதிருஷ்டம் பக்குவமாகிற போது அதுவே முதற் கிரியைக்குக் காரணமாகிறது என்கின்றனர்.
காரணங்கள் இரண்டு.
1. அசாதாரண காரணம் = அவியஹிதமான இவைகள் இருந்தால் அல்லது காரியம் நடவாதான நாம் சொல்லும்
உபாதான, நிமித்த காரணங்கள் எல்லாம் அஸாதாரண காரணம் என்றும்
2. சாதாரண காரணம் = மற்ற கால தேசாதிகள் சாமான்ய காரணம் போல, பகவானும் ஸாதாரண காரணம் என்கின்றனர்.
அங்கனாகில் பரமாணுவில் ஏற்படும் இந்த முதற்கிரியைக்குக் காரணமான அதிருஷ்டம்
பரமாணுவில் உள்ளதா? (அ) ஜீவனிடம் உள்ளதா? என்ற கேள்வி பிறக்கிறது.

முதல் யோஜனையாக ஜீவன் செய்த புண்ய பாப க்ரியைகளால் உண்டாகும் அதிருஷ்டம் பரமாணுவில் இருக்க வழியில்லை.
அதை ஏற்றாலும், எப்போதுமே கிரியை ஏற்பட்டு, ஸ்ருஷ்டி நித்யமாகப் போகும்.
இரண்டாவது யோஜனையாக, அந்த அதிருஷ்டம் ஜீவனிடத்தில் தான் இருக்கிறது என்று கொள்வோமானால் ,
பரமாணுவில் கிரியை ஏற்படுவது சாத்தியமில்லை.
இரண்டுக்குமான ஸம்யோகத்தால் பரமாணுவில் கிரியை ஏற்படலாகுவது என்றாலும் , கர்ம பிரவாஹம் நித்தியமாய்,
சிருஷ்டியும் எப்போதும் நடந்து கொண்டே இருக்க, விஸர்க்காதிகள் அஸம்பவம்.

உபயதா அபி – இந்த அத்ருஷ்டம் அணுவிலோ, ஜீவனிடமோ இரண்டில் எத்தனிடத்தில் இருந்தாலும்
ந கர்ம – சொல்லப்பட்ட முதற்கிரியை ஏற்படமுடியாது.
அத – ஆதலால்
ததபாவ — பரமாணுக்கள் சேர்ந்து த்வ்யணுகம், த்ரஸரேணு இத்தியாதி ஏற்படுகின்றன என்பது பொருந்தாது.

மேலும் புண்ய, பாபங்கள்தான் ஒரு மொத்தமாக பலன் கொடுப்பதில்லை. அவை
சஞ்சித கர்மா ஜன்மாந்தரத்திலும்
ஆரப்த்த கர்மா கிடைத்த இந்த ஜன்மத்திலுமாக பலன் அளிப்பவை என்கிற விபாகமும்
ஆத்மாக்கள் அநேகம். அவர்கள் பல காலங்களில் பலவிதமாக செய்யும் கர்மங்கள் ஒரே காலத்தில் பக்குவம் ஆனால் அன்றோ ,
ஸ்ருஷ்டி ஒருமுகமாக நடக்க வல்லது? அதுதான் ஈஸ்வர சங்கல்பத்தாலே அணுக்களில் கிரியை ஏற்படுவதாகக் கொண்டல்லது
அவை தமக்குத் தாமே செயலாற்று மிடத்து பொருந்தாது.
இன்னும் பிரம்மாவுக்கு எத்தனைக் காலம் ஸ்ருஷ்டியோ, அத்தனைக் காலம் பிரளயம் என்பதான பரார்த்த விவஸ்தை;
ஏக கால ஸ்ருஷ்டி இயலாதபோது, ஸம்ஹரமும் ஒருகாலத்தில் ஏற்படுவது என்பதும் முடியாது.

ஆக, யுக்தா யுக்திகளைக் கொண்டு ஈஸ்வரன் அதிஷ்டியாத பரமாணுக்கள் ஜகத்காரணம் என்று சொல்வது அஸமஞ்சஸம்.

—————————-

சூத். 2-2-12 :: ஸமவாயாப் யுபகமாச்ச ஸாம்யாதநவஸ்திதே —

முதல் யுக்ம 2 சூத்ரத்தில் காரணப் பொருள் ஸாவயவமா ? நிரவயவமா? என்பதற்கு உதாரணம்
ஷட் பார்ஸ்வமுடைய செங்கல்லும் (Building blocks) , ஒன்றுக்குள் ஒன்று போடக்கூடிய ஸசகமும் (Tumbler) காட்டப்பட்டன.
ஸாவயவம் என்ற போது அநவஸ்தா தோஷமும், நிரவயவம் என்றபோது காரியம் உண்டாக்காத படிக்கு,
ஸ்தூலத்வ அஸித்தியும் தோஷமாக பொருந்தாமையை சொல்ல,
ராஜாவானவன் செயல் பட, மந்திரி மண்டலம் துணை புரிவது போலே இந்த பரமாணுக்கள் செயல்பட,
அத்ருஷ்டமானது மந்திரி மண்டலி போல ஆத்ய-ஸ்பந்தனம் – ஈஸ்வர ஸ்தானத்தில் இருந்து செயல் புரிகின்றன.
சங்கியான் பிரஹ்மத்தை இல்லை என்றே சொன்னான். இந்த நையாயிகன் ஈஸ்வரனை ஆமோதித்து அது ஆநுமானிக சித்தம் என்றான்.

பாக அறையில் அக்கினியை புகை ஸாகச்சர்யத்தோடு பார்த்திருந்தால் தானே , ஸந்திக்த சாக்ஷிவாந் பக்ஷத்திலே
புகையைப் பார்த்து நெருப்பு உள்ளது என்று ஊகிக்க, முடியும்.
அந்த ஆநுமானிக ஈஸ்வரனும், ஜீவாத்ம கோஷ்டியிலே விலக்ஷணனான ஒருவன் சித்தப்பனே ஒழிய, ஸ்ருதியிலே சொல்லப் பட்ட,
போக்தா, போக்கியம் பிரேரிதாரம் ச மாத்வா
ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் பிரஹ்ம :
என்கிற மூன்றாவது தத்துவமான ஈஸ்வரன் சித்திப்பதில்லை.
அந்த ஸ்ருதிதானே
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் – என்றதில்
காம்யந்த காமா : இதி கல்யாண குணா –என்பதான அத்தனையும் சித்திக்காதே.

ஸ்ருதியை அனுசரித்துப் போகிற எங்களுக்கு ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்தித்வம் இவையெல்லாம் ஈஸ்வரன் விஷயத்தில் சித்திக்குமே ஒழிய ,
உங்களுடைய ஆநுமானிக ஈஸ்வரனக்கு சொல்லப் போகாது. அதுவும் அன்றி இவைகளை எல்லாம் நீங்கள் ஸ்ம்ருதி பாதத்தில்
ஒன்றொன்றும் கிடையாது, கிடையாது என்று மறுத்து இருக்கிறீர்கள் அல்லவா?.
அப்படி இருக்க இந்த அத்ருஷ்டத்தை ஜீவகதம் என்றும் சொல்ல வருவதில்லை. அசேதனமான பரமாணு கதம் என்றும் சொல்ல வருவதில்லை.
உன்னுடைய ஈஸ்வரன் ஆநுமானிக ஈஸ்வரனாக இருக்கிற படியால் அவன் விஷயத்திலும் அதிருஷ்டம் பொருந்துவ தில்லை.
ஸ்ருதேர் து ஸர்வ மூலத்வாத்
ஸர்வ தர்மோ உபபத்தி
என்று இருக்கிற எங்களுடைய ஈஸ்வரனுக்கே அது சாத்தியம்.
இனி அடுத்துள்ள, இரண்டாவது யுக்மமான 2 சூத்திரங்களையும் பார்ப்போம்.

———————————-

திரவ்ய குண கர்ம சாமான்ய விசேஷ ஸமவாய அபாவாத் ஸப்த பதார்த்த :
பதம் + அர்த்தம் = பதார்த்தம்.
அர்த்தம் என்பது இங்கு பதத்தால் குறிக்கப்படுகிற கடபடாதி பொருளைச் சொல்லும்.

பூதலே கட : – பூமி மேல் பானை உள்ளது. இது ஸம்யோகம் . பானை பூமியை விட்டு அகற்றப்பட்டால் அது வியோகம்.
இது பிரதக் சித்தம், வியோக, நாசமடையக்கூடிய சம்பந்தம். . அப்பிரதக் சித்தம் என்றால் விடமுடியாத சம்பந்தம்.
வேட்டியில் வெண்மை உள்ளது. கரையில் செந்நிறம் உள்ளது. இது இரண்டுக்கும் சம்பந்தம் எப்படி என்றால்
ஸமவாயி சம்பந்தம் என்கிறான் நையாயிகன். எத்தனை திரவ்யங்களில் இந்த சம்பந்தம் உள்ளது என்பதற்கு

அவயவ – அவயவிக்குமான சம்பந்தம் – கட – கபாலம் . பானைக்கு வயிறு பாகமும், கழுத்து பாகமும் போல.
குண – கர்மம் சம்பந்தம் – திருமண வெண்ணிறம். ஸ்ரீசூர்ணம் சிகப்பு நிறம். சக்கரை இனிப்பு.
இவைகளில் உள்ள நிறத்தையோ, சுவையையோ த்ரவ்யத்திலிருந்து பிரித்துக் காட்ட முடியோ. முடியாது.
அப்படி இவைகளுக்கான அபிரதக் சம்பந்தம் ஸமவாயி சம்பந்தம் என்கின்றனர்.
திரவ்யத்துக்கு குணம் போல கர்மத்துக்கு சலநாத்திகள் உ.ம். வெள்ளை குதிரை ஓடுவதை பார்க்கலாமே ஒழிய ,
வேகத்தை தனித்துப் பார்க்க முடியோ முடியாது.
ஜாதி – கடத்தில் உள்ள கடத்வம் போல , மனித ஜாதியில் மனுஷ்யத்வம் , அதேபோல தேவத்வம், மிருகத்வம் , அஸ்வத்வம்
இத்யாதி வியக்கத்திகளில் உள்ள தர்மம்.
They are separate but not separable . சம்பந்த பின்னத்வே ஸதி விசிஷ்ட புத்தி நியாமகத்வம். இது தான் சமவாயி காரணம்.
இத்தை ஒரு திரவியமாக இவர்கள் ஒத்துக் கொள்கிறபடியால், அது எங்கு இருக்கிறது என்றால்,
அதற்கு ஒரு சமவாயி காரணம் என்று இப்படி அநவஸ்தா ஆஸ்பதமாக இருக்கிறது என்பதே இதற்குண்டான தோஷம்.

இந்த சமவாயி சம்பந்தத்தை ஆகாச முஷ்டிகம் ( இரண்டு மல்லர்கள் குத்திக் கொண்டு சண்டையிடுவது பலசாலி யார் என்று சொல்ல.
அதுவே ஆகாசத்தை நோக்கி குத்துவதால் என்ன வரும்?) போலேயோ இந்த சமவாயி தத்வ நிராகாரணம்? என்றால்
ஸ விசேஷ பிரஹ்மவாதியான வியாசர் நியாய-வைசேஷிக சமவாயி பக்ஷத்தை கண்டனம் செய்கிறபடியால்,
சூத்ரகாரரைப் பின்பற்றி சுவாமி ஸ்ரீபாஷ்ய கிரந்தத்த்தில் அதை கண் டிக்கிறார்–
இது வேதார்த்த சங்கிரகம் போலே ஸ்வதந்திர பிரபந்தம் அன்று. அனுயாயி கிரந்தமானபடியாலே.

சாங்கியன் பரமாத்மாவையே ஒத்துக் கொள்ள வில்லை.
சேஸ்வர சாங்கியனும், யோககாரும் சாக்ஷி மாத்ர ஈஸ்வரனை ஒத்துக்க கொண்டனர்.
வைசேஷிக நையாயகர்கள் ஆநுமானிக ஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலும் , கேவல நிமித்த காரணமாக மட்டுமே.
உபாதான காரணம் இந்த பராமாணு திரவியம் என்பதாக.
அந்தப் பிரவிஸ்ய நியமன சீலம், இச்சா பூர்வக ஸ்ருஷ்டி எல்லாம் வேதத்தில் சொன்னபடிக்கு இவர்கள் ஈஸ்வரன் விஷயத்தில்
ஒத்துக் கொள்வதில்லை. கால, தேச, அத்ருஷ்டத்தின் ஸ்தானத்தில் ஈஸ்வரனைக் கொள்கிறார்கள் தவிர,
ஸர்வஜ்ஞத்வம் , ஸர்வசக்தித்வம், ஸத்யகாம்தவம் இவைகளை ஒப்புக் கொள்ளவில்லை.

ஸமவாயாப் யுபகமாச்ச – சமவாயம் என்கிற சம்பந்தத்தை ஒத்துக் கொண்டாலும்
ஸாம்யாத் – பிரதத் சித்த சம்பந்த ஆதார-ஆதேய பாவத்தாலே சையோகம் உண்டாவது போல
அப்பிரதத் சம்பந்தத்தாலே சொல்லப்படுகிற இரண்டு பதார்த்தங்களுக்கான சம்பந்தமே சமவாயம் –
இத்தை அதற்கான பொருளோடு சம்பந்தப்படுத்தி பொருத்திக் காட்ட வேறொன்றை ஒப்புக்கொள்ள வேண்டி வருவதால்
அநவஸ்திதே – இதை ஒரு திரவியமாகவே இவர்கள் ஒத்துக் கொள்கிறபடியால்,
அது எங்கு இருக்கிறது என்றால், அதற்கு ஒரு சமவாயி காரணம் என்று இப்படி
அநவஸ்தா ஆஸ்பதமாக இருக்கிறது என்பதே இதற்குண்டான அஸமஞ்சஸம்,
ஜாதி முதலானவை திரவ்யத்தோடே ஸ்வரூபம் என்று ஒத்துக் கொண்டு விட்டால் ஸமவாய சம்பந்தத்தை கற்பிக்க வேண்டிய தேவையே இல்லை.
ஆகையால் சமவாயத்தை கற்பிப்பதால் ஒரு சார்த்தகமும் இல்லை.
தானாக ஆகிற காரியத்துக்கு – மத்யே கிம் தேந ? – இடைத் தரகர் ஏதுக்கு என்ற கணக்காம் இது.

———————-

சூத். 2-2-13 :: நித்யமேவ ச பாவாத் ::

நையாயிகன் சமவாயம் ஒரே பொருள். நித்தியமானது என்றான்.
பிராபகர மீமாம்ஸகன் சமவாயம் அநேகமாக உள்ளது. அநித்யமான சமவாயமும் உண்டு என்பதாகச் சொன்னான்.
சமவாயத்தை நித்தியமாக ஒத்துக் கொண்டிருக்கிற வைசேஷிக பக்ஷம் கண்டிக்கப் படுகிறது இந்த சூத்ரத்தால்.
சம்பந்தமும், அதை உடைய பொருள்களும் நித்யம் என்றால் , சம்பந்தி பதார்த்தங்களும் நித்யமாக வேண்டி வரும்.
சம்பந்தம் நித்யமானால் — கட்டமும் நித்யமாகும். அதற்கு சம்பந்தப்பட்ட ரூபமும் நித்யமாகப் போகும்.
ஜகத் சிருஷ்டியும் நித்தியமாய், பிரளயமே ஏற்படாது. உண்மை என்னவென்றால் ,எந்தெந்த பொருள்கள்
ஆகாரத்தோடும் ரூபத்தோடும் இருக்கின்றனவோ அவை அநித்தியம். கட , படாதிகள் போல. கடம் உடைந்து போகலாம்.
படம் ஜீர்ணமாக்கிப் போகலாம். அவை நித்யமில்லை. அபாவம் என்கிறதை தனி ஒரு பதார்த்தமாக நாம் ஒத்துக் கொள்வதில்லை.
பூதலே கடம் நாஸ்தி என்றால் அது பாவாந்தரத்தில் உள்ளது என்றுதான் பொருளே ஒழிய வஸ்து அபாவத்தை சொல்லாது,
தத்துவங்கள் அனைத்தும் சத்யமான படியாலே.

தத்வம் ஜிக்ஞாஸ மாநானாம் ஹேதுவை ஸர்வதோ முகை :
தத்வம் ஏகோ மஹாயோகி ஹரிர் நாராயண ப்ரபு :/பர :

ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்யச புநப்புந :
இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி :

ஸத்யம் ஸத்யம் புந ஸத்யம் உதிருத்ய புஜமுச்யதே
வேதாஸ் சாஸ்திரம் பரம் நாஸ்தி நத்தைவாதம் கேசவாத் பரம் — வியாசர்.

இந்த 3 வியாச ஸ்லோகங்களைக் கொண்டு அவர் ஸவிசேஷ பிரஹ்ம வாதி என்பதும்,
அந்த பர பிரஹ்மம் நாராயணனே என்பதும் விளங்கும்.
———————————————————————————————————
வஸ்து – பிரமாணம் (3) – பிரத்யக்ஷம் + அனுமானம் + சப்தம்.
பிரமேயம் (7)
|
அதிரவியம் – ஸத்வம் + ஸப்த + ஸம்யோகம்
| ரஜஸ் ஸ்பர்ச சக்தி
| தமஸ் ரூப
| ரஸ
| கந்தம்
திரவ்யம்
|
அஜடம் + ஜடம் – பிரகிருதி (24) + காலம் (3)
|
பிரத்யக் + பராக் – பரத பாஸமானம் (தன்னைத்தான் அறியாது
| பிறரால் அறியாத தக்கது)
| நித்ய விபூதி + தர்ம பூத ஞானம்
| தர்மி பூத ஞானம்
|
ஜீவன் + ஈஸ்வரன் – ஸ்வயம் + ஸ்வஸ்மை பாஸமானம்
| பர (நித்ய விபூதி)
| வியூக(4)(கார்ய வைகுண்டம்)
| க்ஷீராப்தி
| பிரத்யும்ன (பிரம்மா)
| அநிருத்த (விஷ்ணு)
| ஸங்கர்ஷணர் (சிவன்)
| விபவ – ஆவேசம் + அம்சம் + பூர்ணாவதாரம் | அந்தர்யாமி (தகராகாசம்)
| அர்சை (106 பூலோக திவ்ய தசங்கள்)
| ஆழ்-ஆசா-அபிமான-அந்திம
| ஸ்தலங்கள்)
|
நித்யன்
முக்தன்
பத்தன்
|
புபுக்ஷு – அர்த்தகாம பரன் + தர்ம பரன்
| |
| தேவதாந்த்ர பரன் + பகவத் பரன்
முமுக்ஷு
|
பரம மோக்ஷர்த்தி + கைவல்யார்த்தி
|
பிரபன்னன் + பக்தன்
|
பரமை காந்தி + ஏகாந்தி
|
ஆர்த்தன் + திருப்தன்

————————————————————————————————————

இதத்தனையும் பகவானுக்கு சரீரமாக உள்ளன.
தர்ம பூத ஜ்ஞானம் , ஸத்வம், ரஜஸ், இவைகள் திரவ்ய த்வாரா பகவானுக்கு சரீரமாக உள்ளன,
தனித்து அவனுக்கு சரீரம் என்று சொல்லப் பட வில்லை.
ஈஸ்வரன் சரீரீ ஆகும்போது கூட தானும் தர்மபூத ஜ்ஞானத்தோடே சரீரீ ஆகிறான் என்பதும் சித்தாந்தம்.

இந்த சரீராத்மா ஸம்பந்தத்தை சமவாயி சம்பந்தத்தால் சாதிக்க முடியாது.
துவைதிகள், ஏகாயனர்கள், சைவர்கள், நியாய வைசேஷிகர்கள் அனைவரும் இந்த சரீர-ஆத்ம பாவத்தை
அடியோடு ஒத்துக் கொள்வ தில்லை.

சமவாயி என்பது அஸமஞ்சஸமாக இருக்கிறது என்று கீழ் சூத்ரங்களால் காட்டப்பது.
அது நித்யம் என்று சொன்னபடியாலே – ஜகத்து, அத்தோடு கூடி இருக்கிற சம்பந்தி பதார்த்தங்களும் நித்தியமாக வேண்டி வரும்.
இது பிரத்யக்ஷ விரோதம் மட்டுமல்லாது ஸம்ஹாரம் என்பதே ஏற்பட்டாது. எனவே பரமாணு ஜகத் காரணமாக மாட்டாது.
இத்தால், பிரஹ்ம காரண வாதமே ஸ்ருதிக்கு தாத்பர்யம் என்பது நிரூபிக்கப் பட்டது.

ஜ்ஞானம் ஸ்வரூப அநுபவகதமானால் ஆனந்தமாகும்.

————————————

சூத். 2-2-14 :: ரூபாதி மத்வாச்ச விபர்யயோ தர்ஸநாத் —

பிரஹ்ம வித்தை 32ம் அதிகருத்தாதிகாரம். எப்படி ஆற்றங்கரைப் புல் பசுமாட்டுக்கும் , காட்டிலுள்ள கோரைப்புல் யானைக்கும்
உணவாகுமோ அதுபோல விசேஷாதிகாரிகளுக்கு மட்டுமே அவை ஆனாலும் ,
அதற்குள் அந்தரகதமாக இருக்கிற ஜ்ஞாஸ வித்தை (அ ) பிரபத்தி மார்கம் ஸர்வாதிகாரம்.
பிராஹ்மனேப்யோ ததி நீயதாம் தக்ரம் கௌண்டின்யாய – என்ற நியாயத்தாலே
பிரஹ்ம வித்தைக்குள் அடக்கம் மானாலும் ஸத்-சூத்திராதிகாரிகளுக்கும் இந்த நியாஸ வித்தையில் அதிகாரம்
என்பது ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞை . .

ரசநானுப்பபத்தி அதிகரணத்தில் பிரதான காரண வாதியான சாங்கியனை நிராஸனம் பண்ணி அடுத்து
இன்னமொரு பிரதான காரணவாதியான பாசுபதனை எடுக்காமல் இடையில் பரமாணு காரணவாதியான
நையாயிக வைசேஷிகரை நிரசிக்க தொடங்கியது , பாசுபதனுடைய பாஹ்யத்வ ஆதிக்கத்தாலே.
பாசுபதன் சிவ பாரமயத்தை சொல்வதோடு அதற்கு வேதப் பிரமாணத்தையும், வர்ணாஸ்ரம தர்ம சாஸ்திரமான
மந்வாதி ஸ்மிருதிகளையும் நிராகாரணம் பண்ணி, சைவ ஆகமங்களையே அவலம்பித்த நிக்ருஷ்டதை யாலே
அவர்களை விசேஷித்து கண்டிக்க வேண்டி தனித்து சூத்ரமிட்டார் சூத்ரகாரர்.
இது எதைப்போலே என்றால், ஸர்வ தர்ம ஸங்கிரகத்தில் சங்கரர், அடுத்து வரும் பௌத்த பக்ஷ நிரஸன கிரமத்தில்
வியாச சூத்திரங்களை பின்னிருந்தது முன் அவலிம்பித்தாப்போலே இது என்று சொல்லலாம்பட்டி உள்ளது.
பௌத்தர்கள் 4 வகை. -வைபாஷிக + சௌத்திராந்திகன் -யோகாசாரன் -சூன்யவாதியான மாத்யமிகன்
இவர்கள் மதத்தை வியாசர் 3 கோஷ்டியையையும் 3 அதிகரணம் கொண்டு நிரசிக்கிறார்.
ஆனால் சங்கரரோ தம்முடைய ஸர்வதர்ம ஸங்கிரகத்தில் முதலில் மாத்யமிகன் அடுத்து யோகாசாரன், வைபாஷிக , சௌத்திராந்திகன் என்று
இவர்கள் பரஸ்பரம் கண்டனம் பண்ணிக் கொள்வதாக அதிகரண பரிக்ரம பங்கமாக பேசியபடி போலே என்று கொள்ள அமையும்.

நடுவில் சமவாய தத்வ நிரசனம் பிரஸ்துதமானதுக்கு காரணம் என் வந்தது ? என்றால்
நாம் சொல்லுகிற தத்வங்களான ராமானுஜ சித்தாந்தமென்ன? வியாச சித்தாந்தமென்ன? அதற்கடிப்படையான தத்துவங்கள் என்ன?
அதன்படி தத்வ விபாகம் பண்ணிப் போனால் பகவானை அடையலாம் அன்றி வேறு எந்த விதித்தாலும் பிரஹ்மத்தை கிட்ட முடியாது .
குறிப்பாக ஜகத் காரணத்வத்தை சொல்ல வந்தபோது நையாயிகன் கால தேச ஈஸ்வரன் அதிருஷ்டம் இவை
சாதாரண காரணம் என்றும் , அசாதாரண காரணம் (அ ) உபாதான காரணம் பரமாணு என்றும் சொன்னான்.
பகவானை நிமித்த காரணம் என்று மட்டும் கொண்டு அந்த ஈஸ்வரனை அனுமானத்தாலே சித்திக்கிறேன் என்று சொல்லி
ஸமவாயி , அஸமவாயி காரணங்களை பற்றிப் பேசினான்.

நம்முடைய சித்தாந்தம் எப்படி இருக்கிறது ? என்றால்
தத்வம் ஜிஞாஸ மாநானாம் ஹேதுவை ஸர்வதோ முகை :
தத்வம் ஏகோ மஹாயோகி ஹரிர் நாராயண ப்ரபு :
என்று தத்வம் ஒன்றே தான். அது ஸூக்ஷ்ம சித்தசித் விசிஷ்டமானபோது காரணமாயும்,
ஸ்தூல சித்தசித் விசிஷ்டமானபோது காரியமாயும் வியாபரிக்கிறது . இது அவஸ்தாந்தர பேதமே ஒழிய திரவியம் ஒன்றே தான்.
அவன்தான் காரியமாகிறான். அதனால் உபாதானகாரணமும் அவனே என்ற இதைக் கொண்டு அவனுக்கு அபேதத்தையே சொல்லலாம்.

நையாயிகன் அவயவத்தைக் காட்டிலும் அவயவி அதிருக்தம் – வேறு பட்டது. காரியம் வேறு. காரணம் வேறுதான் என்றான்.
சாங்கியன் காரியத்தில் காரணம் அடங்கி உள்ளது. அவஸ்தா பேதமும் அதனுள்ளேயே அடக்கம் என்று சொல்லி வைத்தான்.
இவை எல்லாம் ஆரம்பணாஅதிகாரணத்தில் விளக்கப்பட்டன.
அவ்விடத்தில் நம் முடைய சித்தாந்தம் என்ன காட்டப் பட்டது என்றால்
திரவியத்தைப் பற்றி சொல்லும்போது, எது உபாதான காரணமாக இருக்கிறதோ – அதாவது எது அவஸ்தாஸ்ரயமாக இருக்கிறதோ –
அதுவே திரவியம் என்றதாயித்து. அவஸ்தா பேதமாவது அப்பிரதத் சித்தமானது ஒரு நிலையில் இருந்தது இன்னொரு நிலைக்கு
மாறுவது காதாசித்கமாய் , ஸ்வரூபம் தான் நித்தியமாய் பிரஹ்மத்துக்கு
1. அபின்ன நிமித்தோபாதான காரணத்வம் இரண்டும்
2. ”பதிம் விஸ்வஸ்ய மீஸ்வரகும் ” என்று அத்தனைக்கும் உள்ளே பிரவிஸ்ய நியமன சீலனாய் வர்த்திக்கிற சரீராத்மா பாவம்
இவை அனைத்தும் சித்திக்க இந்த ஸமவாயி பதார்த்தத்தை கண்டிக்க வேண்டிய அவசியம் வந்தது.

சாவயவ, நிரவயவ தோஷம் வேதோக்த பகவத் தத்துவத்துக்கு ஏன் பொருந்தாது என்பதை
கிருஸ்ந பிரஸக்தி அதிகாரணத்தில் ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத் என்ற சூத்திரத்தின் மூலம் விளக்கிய தோடு
வேதம் வல்லாரைக்கு கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து – என்று வேதம் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறதோ
ஸர்வஜ்ஞ
ஸர்வ சக்தி
கல்யாண குணாகர
ஸத்ய காம
ஸத்யசங்கல்பத்வாதி
அஷ்ட குணங்களோடு கூடிய பர பிரஹ்மத்தை வேதாந்தம் காட்டிய வழியில் ஈஸ்வரனை அறியலாமே ஒழிய –
வேதாந்தத்தில் சொல்லப்பட்டதான இத்தனை விதமான கல்யாண குணங்களை வேத விருத்தமும், இல்லாததுமான
ஸமவாயி , அஸமவாயி , அபாவ பதார்த்தங்களைக் கொண்டு அனுமானிக்க ஈஸ்வரனிடத்திலோ சாக்ஷி மாத்ர ஈஸ்வரனிடத்திலோ
பொருத்துவதற்கில்லை.
அதனல் இடையில் வந்த ஸமவாயி நிராகரணம் தான் கீழ் சூத்ரத்துக்கும், இதுக்கும் அடுத்த சூத்ரத்துக்குமான சம்பந்தம்.

ரூபாதி மத்வாச்ச விபர்யயோ தர்ஸநாத் ::
பகவானுக்கு காரியமாக உள்ள இந்த பிருத்வி, அப்பு தேஜஸ் ஆகிற அசேதனம் என்ன, சேதனம் இவை
ததேவ சௌம்ய! இதம் அக்ர ஆஸீத் – என்பதில் இதம் ஸப்த வாச்சயமாய் இப்போது நாம ரூபத்தோடு விளங்கா நிற்க,
பிரளயாவஸ்தையில், அவை ஆவியாஹ்ருதங்களாய் ஸூக்ஷ்ம நாம ரூபங்களோடு அந்த மூலப் பிரக்ருதியில் இருக்க வேண்டும்.
காரணம் இல்லாதது உண்டாக்க முடியாதாகையாலே.

படத்திலே தந்து அவியாஹ்ருதமாய் இருக்கிறது. அந்த படத்தின் வர்ணம் தந்துவின் ரூபத்தின் பேரில் அமைகிறது.
சிகப்பு வர்ண தந்துவால் சிகப்பு வர்ண படம் கிட்டுகிறது. அதுபோல ரக்த, பீத,, விசித்திர வர்ண படங்கள் உண்டாகின்றன .
ஆக பட ரூபத்துக்கு தந்து ரூபம் காரணம். படத்துக்கு தந்து ஸமவாய காரணம்.
இப்படி, காரணத்தில் உள்ள ரூபாதி குணங்கள், காரியத்தில் பரிணமிக்கின்றன என்பதாகச் சொன்னான்.

——————–

சூத். 2-2-15 :: உபயதா ச தோஷாத் ::

அப்படியானால், ஜகத்துக்கு ரூபம் உண்டு. பரமாணுவுக்கு ரூபம் கிடையாது என்று சொல்ல,
ஜகத்துக்கு ரூபம் எப்படி வந்தது ? என்பது கேள்வி.
பரமாணுவுக்கு ரூபம் உண்டு என்று சொல்லுவையேல், ரூபாவத்தானது எல்லாம் அநித்யமாமே.
அப்போது பரமாணு அநித்தியம் என்றல்லவோ தேறும்? அன்றி ரூபம் உண்டு என்றால் சூக்ஷ்மத்வம் தொலையும்.
ரஸ, கந்தங்கள் உண்டு என்றால் நிரவயவத்வம் தொலைந்து கடபடாதிகள் போலேயாகும்.
இல்லை ரூபம் கிடையாது என்றால், காரியத்துக்கும் ரூபா சூன்யத்வம் சித்திக்க வேண்டும்.
அது பிரத்யக்ஷத்துக்கு விரோதம். எப்படிக்கு கொண்டாலும் இந்த அசமவாய சம்பந்தம் அஸமஞ்ஜஸம் .

————-

சூத். 2-2-16 :: அபரிக்ரஹாத் ச அத்யந்தம் அநபேக்ஷஆ ::

ஸாங்கிய கபில மத ஸத்காரியவாதம் என்ன, தத்வ விபாகம் என்ன இப்படி சில அம்சங்கள் நமக்கு ஒத்துப் போகின்றன.
ஆனால் இந்த தார்கிக, நையாயிகள் பக்ஷம் ஒரு அம்சத்திலேயும் ஒத்துப் போவதில்லை.
ஆகவே இந்த காணாத , கௌதம பக்ஷம் வைதிகர்களுக்கு அத்யந்த அநபேக்ஷைவ :மோக்ஷஅர்த்த பிரவர்தனமாக உள்ள
இந்த சாரீரக சாஸ்திரம் இதில் முற்கூறியபடி இம்மதம் முழுவதும் பொருந்தாமை கொண்டு அநாதரணீயம்.

சூத்திரத்தில் உள்ள ”ச”காரம் முன் சூத்திரங்களில் சொன்ன பொருந்தாமை களை கூட்டிக் கொள்கிறது.

ஸர்வம் ஸ்வலக்ஷணம் ஸலக்ஷணம்.
ஸர்வம் துக்கம், துக்கம்.
ஸர்வம் சூன்யம், சூன்யம்
என்று ஸ்வரூபமே தொலைவதாக சொல்கிற பௌத்தன் பூர்ண வைநாசிகன் என்றால்
இந்த தார்கிகன் அர்த வைநாசிகன் என்று சிஷ்ட கோஷ்டியில் பிரசித்தம்.
தார்கிகன் சொல்வது என்ன வென்றால் இந்த சரீரம் க்ஷணிகம் என்பதாக. இது நாம் உண்ணுகிற ஆகாரம், பருகிற தீர்த்தம்,
ஒளஷதம் தன்மூலம் உபசய, அபசயங்கள் பிரதிக்ஷணம் உண்டாகிற காரணத்தால், காரியமாய் இருக்கிற இந்த சரீரமும் க்ஷணிகம் என்கிறான்.
உதாரணத்துக்கு மேகம் உண்டாவதும், மழை பொழிவதும், கணுக் கணு நீரால் உண்டாகும் சமுத்திரம் போலேயும்;
கடி எந்திரம் கொண்டு சால் சாலாக நீர் கிணற்றில் இருந்து இறைப்பது போலேயும் ஸர்வம் க்ஷணிகம் என்கிறான்.
எனவே இவர்கள் தள்ளத்தக்கவர்களே.

ஆனால் இவர்களுடைய தர்க்க சாஸ்திரத்தால், அரண்மனைக்கு புறத்தே மதிலை சுற்றியுள்ள அகழி போல
பௌத்தாதிகளை தூரத்தே வைக்குமளவாகக் கிஞ்சித்து ரக்ஷணை உண்டு அவ்வளவே.
வேதாந்த சாத்திரமும் கூட நம்முடைய ராணுவப் படை போல பர பக்ஷ நிரசனத்துக்கே ஆக வேண்டும்.
அந்தப்புர ஸ்தானத்தில், நம் ஆழ்வார், ஆசாரியர்களுடைய ஸ்ரீ ஸூக்திகள் என்ன, அதில் சொல்லப்பட்ட நாயகா- நாயகி பாவம் என்ன,
அதனால் கிட்டுகிற பரபக்தி, பரஜ்ஞான மென்ன அதன் மூலமாக ஆண்டு அனுபவிக்கிற
பகவத் ஸ்வரூப, ரூப, குண அனுபவம் என்ன இவைகளையே தேக யாத்திரைக்கு உபஜீவனமாக கொள்ள அமையும்.

—————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —அத்யாயம் 2- தர்க்க பாதம் – 2 அதிகரணம் -1 ரசநாநுபபத்தி அதிகாரணம் –ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

ஸ்ரீபாஷ்யத்தில் அறுதியிடப் படலாவதுதான விஷயம் என் என்னில்
சித்தசித் தத்வேபி ஸத்யம் தத் சேஷி ஸ்ரீமந் நாராயண பிரக்யாபவந் இவ இத்தம்
தத்துவங்கள் மூன்று. சித்தும் அசித்தும் ஈஸ்வர தத்வத்தைப் போலவே ஸத்யம் .நித்யம்.
ஆகிலும் அவை ஸ்வதந்ர தத்வமன்று.சேஷியான ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப்பட்டவை என்பதாகும்.

கணாத பரிபாடிப் கபில கல்பனா நாடகைஹி
குமாரில குபாஷிதைஹி குருநிபந்தன கிரந்திபிஹி
ததாகத கதாஸதைஹி ததௌத்வாரி ஜல்பைரபிஹி
பிரசாரித மிதம் ஜகத்து பிரகுணிதம் யதீந்த்ரோத்திபிஹி

நியாய வைசேஷிகன்
கபில சாங்கிய யோகிகள் என்ன
பிராபாகர மீமாம்ஸகன் குமாரில பட்டன் ஜைமினி என்ன
ஜைன, பௌத்தர்கள் என்ன,
சாங்கியனை ஒட்டி வந்த அத்வைதிகள் என்ன,
நையாயிகனை ஒட்டி வந்த துவைதிகள் என்ன
இத்தனைவகையான மதங்களால் உலகத்தில் எல்லோருக்கும் உண்மை எது என்று தெரியாமல் மதி கலங்கிப் போயிருக்க
அவர்களை எல்லாம் தன் பக்தி பிரபாவத்தாலே கட்டிப் போட்டு கலி கோலாகலத்தை நிவர்த்திப்பித்தார்
பகவத் ராமானுஜர் என்பது இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம்.

அத்யாயம் 2 தர்க்க பாதம் – 2 அதிகரணம் -1

ரசநாநுபபத்தி அதிகரணம்

இவ்வதிகாரணத்தில் ஸாங்கியர்களின் சித்தாந்தம் நிரசிக்கப்டுகிறது. கீழே
ஈக்ஷதேர் ந அஸப்தம் போன்று சூத்திரங்களில் பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்று சொல்ல வந்த இடத்தில்
ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர யஸீத்
என்பதில் உள்ள ஸத் ஸப்த வாச்யன் – நாம் சொல்லுகிற பரபிரஹ்மம் கிடையாது தான் சொல்லுகிற பிரதானமே என்று அவன் சொல்லி வர,
தது ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயே ஏவ – என்று ஈக்ஷணத்தை இட்டுத்தான் ஸ்ருஷ்டி என்பதால்
அசேதனமான பிரக்ருதிக்கு ஈக்ஷணமான சங்கல்ப சக்தி கிடையாதாகையால் அது ஜகத் காரணமாக முடியாது என்று அவர்கள் வாதம் தள்ளப்பட்டது.
அதே விஷயத்தையே இங்கு அவர்களுடைய மத ஸ்வரூபத்தை பூர்ணமாகக் காட்டி, ஒவ்வொன்றுக்கும் நீங்கள் சொல்வது சரியில்லை
என்பதாக பிரதிகிரியை வெளியிடுகிறார் பாஷ்யகாரர்.

இனி சாங்கிய சம்பிரதாயம் விளக்கப் படுகிறது.
மூல பிரகிருதி – பரம காரணம் . இதற்கு ஒரு காரணம் கிடையாது. அவிகிருதி. அதாவது எதனுடைய விகாரமும் இது இல்லை என்பது பொருள்.
நித்தியமானது. த்ரிகுணாத்மந : 3 குணங்களாகவே ஆனது. அதாவது முக்குணங்களும் திரவ்யம் என்கின்றனர்.ஈச்வராதிஷ்டானம் அற்றது.
அதீந்திரியமானது.புலன்களுக்கு அகப்படாதது. அப்படியானால் எதைக் கொண்டு தெரிந்து கொள்வது என்றால் காரியாத் காரணம்
அநுமீயதே. சைதன்யமற்றது.. ஸதத விகிரியாய் , போகாபவர்கங்களை அளிக்கவல்லது.
பிரகிருதி புருஷனை விட்டு விலகுகையே மோக்ஷம் எனப்படுவது.

பிரக்ருதி -விக்ருதி – காரியம். மஹான் அஹங்காரம் 5 தன்மாத்ராங்கள் (தது மாத்ரம் =essence) ஆகிய 7ம் .
சில தத்துவங்களுக்கு விகாரமாய், சில தத்துவங்களுக்கு காரணமாய் இருப்பதால் இவை பிரக்ருதி -விக்ருதி எனப்படுகின்றன.
அஹங்காரம் சாத்விகாஹங்காரம், ராஜசகாககாரம், தாமஸாஹங்காரம் என்று 3 வகைப்படும்.
இவைகளிலிருந்து பொங்கைம்புலனும், பொறி ஐந்தும் , பூத தத்துவங்களுமான 15ம், மனசுமாக சேர்ந்து 16 ம் மற்ற
தத்துவங்களின் விகாரமாய் தாம் ஒரு தத்வத்துக்கும் காரணமாய் இராமையால் கேவல விகாரங்கள் என்றும், விக்ருதிகள் என்றும் கூறப்படுகின்றன.
ஆக மொத்தம் 24 தத்வங்கள்.
இவ்வளவுதானா? இன்னும் உண்டா என்றால்
இதற்குமேல் உண்டாகிற கட, படாதிகள் பதார்த்தங்கள் .

(நம்முடைய ஸம்பிரதாயத்திலும் மூலப்பிரக்ருதி நித்யமானது தான். ஆனால் த்ரிகுணாத்மவதி. 3 குணங்களோடு கூடியது.
ஈஸ்வராதிஷ்டிதமாய், பிரஹ்மத்துக்கு சரீரமாக விகாரத்தை அடைகிறது. பிரகிருதி என்கிற திரவ்யத்துக்கு
சத்வ, ரஜஸ், தமஸ் குணமாக இருக்கின்றன, திரவ்யம் 1 யாய் குணங்கள் 3ம் உடையது..
பதிம் விசஸ்வஸ்ய ஆத்மநிகும் ஸ்வயம் – என்று தனக்கொரு காரணமில்லாத ஸகலேதர ஸர்வ காரணன் பரமாத்மா என்கிற
ஸ்தானத்தில் அவன் மூல பிரக்ருதியைச் சொல்கிறான் )

25வது தத்வம் புருஷன்.- இவன் ந பிரக்ருதி ந விக்ருதிம். புருஷன் நிஷ்க்ரியன். கேவல க்ஞான ஸ்வரூபன்.
புருஷனுக்கு க்ஞாத்ருத்வ, போக்த்ருத்வ, கர்த்ருத்வங்கள் பிரகிருதி அத்யாஸத்தாலே. நிர்தர்மஹ = ஞான ஸ்வரூபன் மட்டுமே
ஞான குணகன் அன்று . அதாவது தர்ம பூத ஞானத்தை இவர்கள் ஒத்துக் கொள்வதில்லை.
சைதன்ய மாத்ரம் ஆத்மா என்பது இவர்கள் கொள்கை. ஸர்வ கத : என்று ஆத்மாவை விபுவாக சொல்கிறார்கள்.
பிரதி சரீரம் பின்னத்வ என்று அநேகாத்மாவாதிகாளே இவர்களும். .

அஹங்காரத்துக்கு 3 அர்த்தங்கள் உண்டு. யதார்த்த ஞானத்துக்கும் அஹங்காரம் என்று பெயர்.
1. அஹமர்த்தத்துக்கு வாசிகமான ஞானானந்த ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளது உள்ளபடி அறிகை அஹங்காரம் – இந்த ஞானம் உபாதேயம்.
2. (பாவார்த்தே) அநஹம் அஹம் இத்யேத் அஹங்கார — அஹம் அல்லாதத்தை அஹம் என்று பிரமிக்கை –
அஹமல்லாத சரீரத்தை அஹம் புத்தி பண்ணுகை – இது தியாஜ்யம்.
3. (கரணார்த்தே) எத்தாலே இந்த அஹம் புத்தி உண்டாகிறதோ அந்த பிரக்ருதி மஹதஹங்கார தத்வத்துக்கும்
அஹங்காரம் என்று பெயர் – இதுவும் தியாஜ்யம்.

இந்த அஹங்காரமான ஜீவனுக்கு – பிரபா பிரபாவான் போலே – நித்தியமான தர்ம பூத க்ஞானம் அதனுடைய தர்மம்.
அந்த அவினா பாவ தர்மத்தை சாங்கியனோ, அத்வைதியோ ஒத்துக் கொள்வதில்லை. அதனை ப்ரக்ருதிக்கான தர்மம் என்கிறார்கள். அங்கனாகில்
ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் எப்படி உண்டாகிறது என்றால்
1. சித் ஸாநித்யத்தாலே – ஜபா குஸும சாமீப்யம் போலே – என்றும்
2. சித் அவித்யா ஸம்பர்க்கத்தாலே – அயப் பிண்டத்துக்கு அக்நி சம்பந்தத்தாலே ஒளஷ்ணயத்வம் வருவது போலே – என்றும்
3. சித் சாயாப்பத்தியாலே – பிம்ப பிரதிபிம்ப பாவத்தாலே – என்றும் –மூன்று விதமாக சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட அஜ்ஞானதால் துக்க, மோக , போகம் பிராப்தமாகிறது–தத்வ ஜ்ஞானாது அபவர்க -ஸம்பிரப்தம் என்பது அவர்கள் சித்தாந்தம்.
ஜீவாத்மா நிர்தர்மகன் என்ற ஜ்ஞானம் வந்தால் அதுவே மோக்ஷ ஹேது–.
இதற்கு பிரத்யக்ஷம்,, அனுமானம் , ஸப்த ரூபமான வேதங்களையும் பிரமாணமாக இட்டு தன்னுடைய சித்தாந்தமே சரியான மார்க்கம் என்கிறார்கள்.

வைசேஷிகர்களும் ஆங்கிலனைப் போல ஜீவாத்மா ஸர்வ கத : என்று விபுவாய்ச் சொல்லுகின்றனர்.
ஜீவஸ்து பிரதி சரீரம் பின்னம் என்றும் சொல்கின்றனர். புருஷ பஹுத்வம் சித்தம் என்றால் விபு பதார்த்தங்கள் ஏகத்தில் இருப்பது எப்படி சாத்தியம்?
அது கூடுமா என்றால்
ஆத்மா பின்ன : ஸ்வதஸுகி என்பது நம்முடைய பக்ஷமும் கூட. ஆனால் ஆத்மா அணு ஸ்வரூபி. பரமாத்மா விபு என்பது நம்முடை கொள்கை.

புருஷ பஹுத்வம் எத்தாலே சித்தமாகிறது என்றால் ஜன, மரண, கரணாது. ஒருத்தன் பிறந்தால் எல்லோரும் பிறப்பதில்லை.
ஆயுர் போகங்கள் எல்லாம் வேறு வேறுதான். மரணம் எல்லோருக்கும் ஒரே சமயத்தில் சம்பவிப்பதில்லை.
இந்திரியங்கள், மனசு எல்லாம் ஒருவிதமாக இல்லாமல், அவனவனுக்கே கர்மானுகுணமாக பகவான் அன்றோ நியமிக்கிறான்.
அயுக பிரவிருத்தேஸ் ச , ஒவ்வொருவருடைய பிரவிருத்தியும், நிவ்ருத்தியும் ஒன்றாய் இருப்பதில்லை. ஒரே காலத்திலயுமாய் இருபத்தில்லை.
இத்தாலே ஆத்மா அநேகமென்பது நமக்கும் சம்மதம்.
காற்றுக்கு ரூபம் இல்லை. ஸ்பர்சம் உண்டு. அத்தகைய பொருள் களுக்கு விபுத்வம் சொல்ல முடியாது.
எதற்கு ஸ்பர்சமும் இல்லையோ அதற்கு காதம் ( தடுப்பு, அடைப்பு) ஏற்படாது. அப்பிரதிகாதாம் உண்டு என்பது

கால, தேச, ஆகாசம், ஆத்மா இவை நாலும் விபு பதார்த்தங்கள்.
ஆத்மா துவித : ஜீவாத்மா பரமாத்மா இதி சேத் என்று தர்க்க ஸங்க்ரகத்தில் சொல்லப்பட்டது.
நம்முடைய சித்தாந்தப் படி பரமாத்மா விபு. ஆத்மா அணு ஆகும். அதனுடைய தர்ம பூத ஞானம் பத்த தசையில் சங்குசிதமாக இருக்கும்.
மோக்ஷ தசையில், பகவத் அனுகிரஹத்தாலே தர்மபூத க்ஞானம்தான் விபுவாகிறது என்பது நம்முடைய சித்தாந்தம்.

நையாயிகன் சொல்வதாவது – அனுமானிக பிரஹ்மம் ஸகர்த்ருகம்
உதயனாச்சார் நியாய குஸுமாஞ்சாலி, ஆத்ம தத்வ விவேகம் என்று 2 கிரந்தங்களை பண்ணி அதிலே
ஆத்மாவை சித்தி பணி, ஈஸ்வரனையும் சித்தி பண்ணி அந்த பௌத்தர்களையும் , ஜைனர்களையும் வீழ்த்தின படியாலே
அவர்கள் சொன்ன அனுமானிக்க ஈஸ்வரன் பிரசாதித்த வேதம் பரதப்-பிரமாணம் ஆனபடிக்கு , ஸ்வதப்பிராமாண்யத்தை ஒப்பினார்கள் இல்லை.

சாங்கியனோ என்னில், பிரகிருதி புருஷன் என்ற இரண்டு தத்துவங்களை மட்டும் சொல்லி தங்களதேயான கபில ஆகமத்தையே
பிரமாணமாகச் சொன்னார்கள். அதில் சொல்லப்பட்ட படியே வேதத்திலும் உள்ளது என்பதை காட்டுவே வேதத்தை அவர்கள் ஏற்கின்றனர்.

கர்ம காண்டம் தேவதா காண்டம் , சாரீரக மீமாம்ஸா காண்டம் என்று மூன்றுமாக சேர்ந்து மீமாம்ஸா ஏக சாஸ்திரம்.
அதில் அத்தியாயங்கள் 12+4+4 = 20ம் அடங்கும். பூர்வ மீமாம்சை 12 அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் சொல்லப்படுகிற விஷயம்
தர்ம தீ – இந்த ஞானமான புத்தி எப்படி உண்டாகிறது என்பதை
1. மான 2. பேத 3. அங்க 4. பிரயுக்தி 5. கிரம 6. கர்த்ருபிஹி 7.கியாதி 8. தேச 9. விசேஷ 10. ஊக 11. பாத 12 தந்த்ர .பிரசக்திபிஹி –
என்று 12 அத்யாயத்தில் 12 விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
அதில் முதல் அத்தியாயத்தில் பிரமாணம் என்பதை பற்றி சொல்லி இருக்கிறார் ஜைமினி மஹரிஷி.
அதையே 1. தந்த்ர வார்த்திகா 2. ஸ்லோக வார்த்திகா 3. ஸூக்டிகா என்று மூன்ரூ கிரந்தமாக பண்ணினார் குமாரில பட்டர்.
அவைகளை சற்று பாரிஷ்காரம் செய்து பிரபாகர் குருமத்தத்திலும் – நித்ய நிரவாத்யமான அநாதி அவிச்சின்னமான வேதம் தான் பிரமாணம்.
என்று அவர்களால் ஸ்தாபித்தமான படியாலே , இந்த காபில ஆகம அபிராமாண்யத்தை இவ்விடத்தில் சொல்லிற்றார் இல்லை.

இவை எல்லாம் மஹா பூர்வ பக்ஷத்தில் தள்ளுபடியானவையே. ஏற்கனவே தள்ளப்பட்ட சாங்கிய மதத்தை
மறுபடி இங்கு தள்ள வேண்டிய அவசியம் என்ன? எனில் அங்கு வேதாந்த வாக்கியங்கள் சாங்கிய மத்தத்தைச் சொல்லவில்லை
என்று காட்டுவதில் நோக்காய் இருந்தது ; இங்கு அந்த மதம் தோஷமுடையது என சொல்வத்திலே நோக்காக உள்ளது.
இந்த ரசநாநுபபத்ய அதிகரணத்தில் மேலும் விவிரிக்கிறார் சூத்ரகாரர்.

————–

சூத். 2-2-1 :: ரச நாநுபபத்தேஸ்ச ந அனுமாநம் ப்ரவ்ருத்தேஸ்ச ::

பிரத்யக்ஷ பிரமாணத்தைப் பற்றி விவாத விஷயம் ஏதுமில்லை.
காபில ஆகம பிராமாண்யமும் பூர்வ மீமாசகர்களால் தள்ளுண்ணப்பட்டது. இனி, விடுபட்டது ஆநுமானிக பிரமாணம் ஒன்றே.

சாங்கியன் அநுமானத்தால் ஈஸ்வரனை சித்தி பண்ணு, அந்த அநுமான யுக்தியை நிரஸ்தம் பண்ணினால்,
அவன் மதம் பூர்ணமாக கண்டிதமானபடியே அன்றோ?

நையாயிகனுடைய பரமாணு வாதத்தை நிராஸன மாக்கினான் சாங்கியன் .
எத்தனை காரியம் இருந்தாலும் , காரணம் ஒன்று தான் இருக்க வேண்டும்.
கரோதி இதி காரணம்.
கிரியதே இதி காரியம்..
தான் சொல்லுகிற பிரதானம் தான் காரணம். நையாயிகன் சொல்லுகிற பரமாணு காரணம் ஆகாது என்பது அவர்கள் வாதம்.
பலவற்றை காரணமாக சொல்லப் போனால், அநவஸ்தா தோஷம் வரும்.
தன்னுடைய பிரதான காரண வாதத்தில்
1. காரண அவஸ்தா வியவஸ்தவ்யம் . ஷட்பி பார்ஸ்வை ( six dimensional) பரமாணு வாதத்தில் அது அவியவஸ்தவ்யம்
2. பிரதானம் ஏக திரவ்யம் . அவர்களின் பரமாணுக்கள் பல பலவாக வேண்டியுள்ளன.
3. காரிய காரண ஸாரூபியம் . காரியம் சுக, துக்க, மோஹாத்மகம். காரணம் அவைகளுக்கு ஹேதுர்பூதமான
ஸத்வ ரஜஸ் தமஸோடு கூடி இருக்க ஸாலக்ஷிண்யத்தோடு அமைகிறது.
யதா ஊர்ணநாபி – பிரதானம் விபாக – அவிபாக தன்மையோடு ஸ்ருஷ்டி லயங்களைக் சமன்வயித்துக் காட்டுகிறது.

குலாலன் பரிமிதமான கட, சராவங்களைத்தான் பண்ணமுடியும். நெய்பவனும் பரிமிதமான வஸ்திரங்களைத்தான் தயாரிக்க முடியும்.
அவர்களுடய சக்தி அளவுபட்டபடியாலே. பிரதான சக்தி அபரிமிதமானது. எனவே ஜகத் ஸ்ருஷ்டி சார்த்தகம்.
காரண காரிய அவிபாகஸ்ய வைஸ்வ ரூபஸ்ய. எனவே அவ்வியக்தம், பிரதானம், மூல பிரகிருதி என்று சொல்லப்படுகிற
ஒன்றே அனைத்துக்கும் மூல காரணமாக உள்ளது. மண்ணால் ஆக்கப் பட்ட பொருளுக்கு மண் தான் காரணமாக முடியும் . பொன் காரணமாக முடியாது.
அதுபோல பொன்னால் ஆன பொருளுக்கு பொன்னே தான் காரணமாக முடியும்.
அவ்வாறே சுக, துக்க, மோஹாத்மக ஜகத்துக்கு த்ரிகுணாத்மக பிரதானம்தான் காரணம் என்பதால்
குண ஸாம்யம் சித்தம் என்பதாக பூர்வ பக்ஷம் இதுவரை சொல்லப்பட்டது.

ஞானாந் மோக்ஷரேவ ஜாயதே ராஜ ஸிம்ஹா ! நத்வத் அக்ஞானாது. – என்பது பீஷ்மர் தர்மபுத்ரருக்கு உபதேசித்தது.
பூர்வ மீமாம்ஸகன் மட்டும் கர்மா, கர்மா என்று சொல்ல , மற்ற எல்லா சம்பிரதாயத்தவருக்கும் ஸம்மதம் ஞானாந் மோக்ஷம் என்பதே.
அவைதிகனும் சொல்லுவது இதையே.
ஆனால் அந்த ஞானம் எப்படி இருக்கிறது. முத்தி ஸ்வரூபம் எப்படி இருக்கிறது என்பதிலேதான் விசம்வாதம்.

அவித்யா விமுக்திரேவ மோக்ஷ : என்ற அந்த லகு சித்தாந்தம், லகு பூர்வ பக்ஷத்தில் என்ன நடந்தது?
அது கேவலம் வாக்கியாத் வாக்கியார்த்த க்ஞானமாக இருந்தால் போதாது. அது பக்தி ரூபாபன்ன ஞானமாக –
ஞானம் கலந்த நலமாகவேணும் என்பது ஆழ்வார், நாதமுனிகள் சம்பிரதாயம்.
நாதாய முநயே ஆகாத பகவத் பக்தி ஸிந்தவே –
என்று இவர்கள் விஷயமாகச் சொன்ன பக்தி யோகம் – சாதன பக்தி யோகமா? என்னில் கிடையாது.
பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு 3வது ஷாட்கத்தில் சொன்ன பக்தி யோகம் என்ன;
உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டதான 32 பிரஹ்ம வித்தைகளில் சொன்ன சாதன பக்தி என்ன ;
பாகவதத்தில் 11வது ஸ்கந்தத்தில் நாரதருக்கு, உத்தவருக்கு கண்ணன் சொன்ன சாதன பக்தி என்ன;
அனந்தபத்மநாபன் விஷயமாக ஸ்வாதித் திருநாள் பண்ணின 1000 ஸ்லோகம் கொண்ட பக்தி மஞ்சரியில் சொல்லப்பட்ட சாதன பக்தி என்ன
இதெல்லாம் கிலஷ்டமான பக்தி சாதனம். ஆழ்வாரும் நாதமுனிகளும் அவதரித்து அகிலஷ்டமான இந்த பிரபத்தியாகிற
ஸாத்ய பக்தியை தந்திரா விட்டால் நாம் வைஷ்ணவர் களாக இருந்திருப்போமே அல்லாது ஸ்ரீவைஷ்ணவர்களாக ஆகி இருக்க மாட்டோம்.
ஸ்வதர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர:
நாரயண: பரம்ப்ரஹ்ம கீதா ஸாஸ்த்ரே ஸமீரத: (கீதார்த்த ஸங்க்ரஹம்-1)
என்ற ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீஸூக்தி இங்கு ஸ்மாரகம்.

அந்த உபபத்தேஸ்ச என்கிற சூத்தரத்தில் சூசகமாக நாயமாத்மா பிரவசநேந லப்ய : என்ற விஷய வாக்கியத்தை இட்டு
அநன்யோபாய ஸ்ரவணாத் என்றிருக்கிற பக்வதநுக்ரஹத்தாலே லப்தமாகிற சாத்ய பக்தி தான் ராமானுஜீயம்.
நம்முடைய ஸம்பிரதாயத்தில் வேதாந்தச்சாரியாரின் பாட்டனாரான உய்யக்கொண்டார் ஒருவர்தான் ஸாதன பக்தியில் நின்றவர்.
அவர் இராமாநுஜரிடம் எத்தனைதான் பிரபத்தியைப் பற்றி உபதேசம் பெற்றாலும், தனக்கு அதில் மனம் போகவில்லை என்று சொல்ல,
அதற்கு உடையவர் நீவீர் வித்வாம்ஸ ராகையால் இதற்கு இசைந்தீர். கர்ம வசத்தால் பாக்யஹீனராய் இழந்தீர் என்று
சொன்னதாக ஐதிஹ்யம் ஒன்று காட்டப்படுகிறது.

ஸாதனா பக்தி ஸ்தானத்தில் பகவானை வைத்து, பிரபத்தி பலமாக – உபாய புத்தி விலக்காக –
அந்த சாதன பக்தியாகிற யாக யஜ்ஞாதிகளை பண்ணலாவது – கர்மம் கைங்கர்யத்தில் புகும் – என்பதாலே.

பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரஸீத (ஸ்தோத்ர ரத்னம்-65) வசனத்தின் படி, அதற்கு ஆச்சாரிய சம்பந்தம் அவஸ்யாபேக்ஷிதம்.
ஆச்சார்ய சம்பந்தம் அல்லாதபோது தாமரையை அலர்த்தக்கடவ சூரியன் தீர்த்தத்தை விட்டு அகன்றபோது உலர்த்துமா போலே –
விண்ணாடு தர வேண்டி இரான் அவன்.

சேதன பிராஜ்ஞா அநதிஷ்டிதமாக பிரக்ருதி தானே ஸ்ருஷ்டிக்கிறது. இதற்கு பர பிரஹ்மம் வேண்டியதில்லை என்பது சாங்கிய பக்ஷம்.
பிராஜ்ஞனான பகவததிஷ்டானத்தை நையாயிக்கனும் ஒத்துக் கொள்வதில்லை. உபாதான காரணமாக பிரக்ருதியைத்தான் சொல்லுகிறான் அவன்.
சரீராத்மா பாவத்தை இசைவதில்லை இருவரும்.

கொத்தனார் வீடு கட்டும்போது ஒவ்வொரு செங்கலாக , ஒன்றன் மேல் ஒன்றாய் , நீளத்தோடு நீளமும், அகலத்தோடு அகலமும்
சேரும்படியாக கட்டிப்போகிறான். இந்த ஷட் பரிமாண பாவம் இந்த சுவற்றுக்குப் போலே , செங்கல் எத்தாலே ஆனது என்றால்,
அதற்குள்ள பாகத்தாலே, அது எத்தாலே ஆனது? என்றால் அது அதற்குள்ள பாகத்தாலே என்று
அணுபரியந்தம் இந்த ஷடம்சம் சொல்லப்படுகிறது. அது அநவாஸ்தா தோஷத்தோடே முடிகிறபடியால் விலக்கு.

ஆன படியாலே , பிரதானம் தான் ஜகத்காரணம் . அது -விபுவாயிருக்கிறபடியாலே ;-நாநாவிதமாய் இருக்கிறபடியாலே;
மூன்று விதமான திரவ்யத்தோடே ஆனபடியாலே; த்ரிகுணாத்மிகா என்று குணத்தை இட்டுச் சொன்னாலும், அது குணமில்லை திரவ்யம்தான்.
நாம் சொல்வது பிரகிருதி த்ரிகுணவதி – மூன்று குணங்களோடு கூடிய ஒரு திரவியம் என்பதாக.
இதுவரை பூர்வ பக்ஷம் விவரிக்கப்பட்டது. இனி சித்தாந்தம் :

ரசநாநுபபத்தேஸ்ச ந அநுமானம் ப்ரவ்ருத்தேஸ்ச –
அனுமானத்தாலே சித்தி பண்ண பிரக்ருதிக்கு சிருஷ்டி பொருந்தாது. உண்டாக்கும் ஸாமர்த்தியமும் கிடையாது.
தேர் சமைக்க வேண்டிய மரம், உபகரணம் எல்லாம் இருந்தாலும், சக்தி, சாமர்த்திய, இச்சா, சங்கல்ப பிரக்ஞனான தச்சன் ஒருவன்
இல்லாமல் ரத்தம் எப்படி சித்திக்கும்? பகவான் ஸர்வஜ்ஞ, ஸர்வசக்தி , ஸத்திய சங்கல்பனாகையாலே ,
சககாரி வஸ்து இல்லாமலே ஸ்ருஷ்டிக்க தடை இல்லை. அசேதனமான பிரகிருதி காரியமாக , ஒரு சேதனன் வேண்டாவோ? –
என்று சூத். 2-1-24 ல் உபஸம்ஹார தர்சநாத் அதிகரணத்தில் அவன் சொன்ன ஆக்ஷேபங்களை அவனுக்கே திருகு பணமாயிற்று.

ரதத்துக்கு தாரு போல பவனத்துக்கு செங்கல், குண்டலத்துக்கு ஸ்வர்ணம் – உபாதானம் இருந்தாலும் அவை எல்லாம் அசேதனமாய் ,
அதனைக் காரியம் கொள்ள,எதை, எப்படி, எதுவாக செய்ய வேண்டிய ஞானமுள்ள சேதனன் கை வைத்தால் அல்லது காரியம் ஈடேறாது.
ஆக,பிராஜ்ஞ அநதிஷ்டதமானது தன்னாலே தான் உண்டாக்க கடவதில்லை.
ஸத்வ, ரஜஸ், தமஸுகள் குணமாக இருந்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எங்களுடைய சித்தாந்தத்தில் அவை திரவ்யமானபடியாலே
கழிப்பதற்கு இல்லை என்று சாங்கியன் சொல்ல,

அதற்கு பிரதிகோடியாக பகவத் ராமானுஜர் கூறுவதாவது :
தத்வாதிகள் திரவ்யத்தினுடைய குணமாகத்தான் வேணுமே ஒழிய, சாஷாத் திரவ்யமாக முடியாது.
உதாரணத்திற்கு, செம்மண், கறுமண், சுத்தமான மண் என்று ஸத்வ, ரஜஸ் , தமஸ் மண்ணுக்கு குணமாக முடியுமே தவிர,
மண்ணாகவே அவை ஆகமுடியாது.
அப்படியே நீ பரமாணு காரண வாதத்தை நிராஸனம் பண்ணும்போது சொன்ன அநவாஸ்தா தோஷம் உங்களுக்கும் உண்டு.
காரண வஸ்து ஏகமூலமாக இருக்க வேண்டும் என்று சொன்னபடிக்கு அல்லாமல் . பிரதானம் மூன்று பொருளின் கலவையான படியாலே.
ஏகத்வம் போய் அனேகதவம்தான் சித்திக்கிறது..

பிரதானம் அபரிமிதம் என்றாய்.. அவ்வழியாலும் உன்னுடைய சித்தாந்தம் நிற்காது.
காரணம் – அபரிமிதமான ஒன்றைக் கொண்டு காரியம் கொள்ள முடியாது. மூன்று தத்துவமும் சமமாக இருந்த ஒன்றில்,
வைஷம்யம் ஏன் எப்படி உண்டாயித்து? என்பது கூறப்பட்ட வில்லை. எனவே காரியாரம்பம் அசம்பவம்.
காரியம் ஆரம்பமாக வேண்டுமென்றால், அது பரிமிதமாகத் தான் இருக்க வேண்டும்.

பர்வதோ வஹ்நிமான் என்றதில், பக்ஷம் பர்வதம் போலே, ரத, பவன, குண்டலம் போலேயாய் பிரதானமும் பக்ஷீயமாகத்தான் உள்ளது.

யாரை நாம் மனனம் பண்ண வேண்டும் ? என்றால்
ஆத்மா வா அரே திரஷ்டவ்ய :ஸ்ரோதவ்ய : மந்தவ்ய : நிதித்யாஸிதவ்ய : என்று ஸ்ரவண மனன நிதித்யாஸிதவ்யங்களாலே
அந்த பகவானைத்தான் ஸாஷாத்காரம் பண்ண வேண்டியது.

கஸ்ச த்யேய : காரணம் து த்யேய — என்று அந்த பரப்ரஹ்மம் தான் தியேய வஸ்து என்பதற்கு
யாதோ இமாநி பூதாநி ஜாயந்தே –என்பதான காரண வாக்ய ஸப்தத்துக்கு வியுத்பத்தியைச் சொல்லி லக்ஷணத்தையும் காட்டி
இந்த சரீரக மீமாம்ஸா சாஸ்திரம் பிரவர்த்தமான மாயித்து.

நமக்கு இங்கு மனன விஷயமாக இருப்பது ஆச்சார்ய குரு பரம்பரையே. அத்தாலே பகவானை ஸ்ரவண, மனன, நிதித்தியாசனத்துக்கு
விஷயமாக சொன்னதை விட்டுவிட வேண்டியதோ என்னில் , இல்லை.

குரூர் உபேத்ய ஸ்ரோத்ரியம் ஸமித் பாணி :,என்று குருவை மனனம் பண்ணி ஸாஷாத் கரிக்காமல், அந்த பகவத் ஸாஷாத் காரம் கிட்டாது.
வக்தவ்யம் , ஜப்தவ்யம் குருபரம்பரையும், துவயமும் என்று ஸ்வாமி பிள்ளைலோகாச்சார்யார், ஸ்ரீவசனபூஷண ஸாஸ்த்ரத்தில்
காட்டியபடி அதனையே மனனம் பண்ணக் கடவது.

வேத சாஸ்திரத்துக்கு கண்டகர்களான
பௌத்தன் – க்ஷணிக விஜ்ஞானமே ஆத்மா , சூன்யமே ஆத்மா என்றும்;
ஜைனன் – ஆத்மாவை ஒத்துக் கொண்டு , வேதத்தைத் தள்ளியும்;
மாயாவதி – ஆத்மாவும் பரபிரஹ்மமும் ஒன்றே என்றும்
வேதத்துக்கு கண்டகமான பொருள்களை சொல்லி குதஸ்தது ? குதஸ்தது ? என்று வந்த பாஹ்ய குத்ருஷ்டிகளுடன்
வாதமிட்டு நேர் பண்ணின நேதாரம் பகவத் பக்தாரம் யாமுநேயம் மனமாமஹே – என்பது பட்டர் திருவாக்கு.

சடகோப முனி
நாதமுனி
யாமுனமுனி
இராமாநுச முனி மற்றும்
மணவாள முனி
என்ற பஞ்சமுனி சம்பிரதாயம் நம்முடையது.
முதல் முன்னம் ஸ்வாசார்யரைக் கொண்டு , எம்பெருமானார் உள்ளிட்ட குரு பரம்பரையை அனவ்ரதம் மனனம் பண்ண வேண்டியது.

மயிஸர்வம் ஜகத் என்று பகவத் சரீரமாய், சேஷபூதனாய் இருக்கிற நாம், அது பாகவத , ஆசார்ய பரியந்தம் ஆக்கி ,
அதற்கு கிஞ்சித்தும் ஸ்காலித்யம் இல்லாதபடிக்கு தினமும் அவர்களை நினைவில் கொண்டு பகவத் தியானம் செய்ய வேண்டும்.

—————

சூத். 2-2-2 :: பய : அம்புவத் சேத் தத்ராபி ::

கீழே, காரண வஸ்து ஏக மூலம் காரிய வியவஸ்திதமாக இருக்க வேண்டும் என்று குணாத்மக மான
ஸத்வ, ரஜஸ், தமஸையே திரவ்யமாகக் கொண்ட ஏக வஸ்துவாகிற பிரக்ருதியையே காரணம் என்று நீங்கள் சொன்னது பொருந்தாது –
காரண பகுத்வா அநவாஸ்தா ததவஸ்தேவ என்று சித்தாந்திகள் சொல்ல;

விஷம அவஸ்தை ஸ்ருஷ்டி என்பதாலே காரியம் ஆரம்பமாக பரிமிதாவஸ்தை அவசியம்.
அதற்கு ஸர்வஜ்ஞ; ஸர்வ சக்தி ; ஸகல குணாத்மகத்தை ஒத்துக் கொண்டு இருக்கிற
ஸகலேதர விலக்ஷண பர பிரஹ்மத்துக்கு இது கூடுமே ஒழிய , நீங்கள் சொல்லுகிற சலனமில்லாத சமான தோலனத்தில் உள்ள
அபரிமித மூல ப்பிரக்ருதிக்கு காரியாரம்பம் அசம்பவம்.

புருஷனை அதர்மகனாகவும், பிரக்ருதியை அசேதனமாகவும் சொல்லுவதால் இது பொருந்தாது என்பதை கீழ் ஸூத்ரத்தில் பார்த்தோம்.
அதற்கு சாங்கியன் பயஸு = பாலைப் போலே ; அம்பு = தீர்த்தத்தைப் போலே என்று அநுமானித்துக் காட்ட , அதாவது
பய : அம்புவத் சேத் தத்ராபி அநுபபத்தேஹே –
சத்வம் ரஜஸ் தமஸ் மூன்றும் மூன்று காரணம் என்று சொன்னால் அநவஸ்தை வந்து விடுகிறது.
இல்லை மூன்றும் சேர்ந்து ஒரு காரணம் தான். காரியாவஸ்தையில் அது வேறு வேறாக பரிணமிக்கிறது. என்றால்
காரியமாகிய ஜகத்துக்கு ஸாலக்ஷிண்யம் போய்விடுகிறது–
ஒரே காரணமான பிரதானத்திடமிருந்து விவிதமான ஜகத்து எப்படி வந்தது? என்பது கேள்வி.

காரணம் மூன்று என்றால் – 3 திரவ்யத்தால் ஆன பிரதானம் ஒன்றே என்கிற வாதம் போய்விடும்.
இல்லை மூன்றும் சேர்ந்த ஒரே காரணத்தால் வந்தது ஜகத்து என்றால், காரண காரியம் ஒன்றாக இருக்க வேண்டுமே,
நானாத்வம் ஏன் வந்து ? என்ற கேள்வி வரும்.

அம்புவது – எப்படி பாகீரதி, அலக்நந்தா, விஷ்ணு தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தம் சேர்ந்து கங்கையாகி ,
பிறகு அது கிளைகளாக பிரிந்து நாட்டுக்கும், நகரத்துக்கும் பாய்கிறதோ அதுபோல
முக்குணங்கள் பிரதானம் என்கிற ஒரு தத்வமாய், பிறகு, காரியாவஸ்தையில் நானாத்வம் சித்திக்கிறது. அல்லது
ஆகாசத்தில் இருந்து விழும் மழை ஜலமானது ஏக ரஸத்தோடே இருந்தாலும், அதை உண்ட மா, வாழை, பலாச் செடிகள்
வேறு வேறு ரசத்தோடு ஆன காய் கனிகளை ஈவதும் ஸ்வதஹா நடப்பதுதான். இதற்கு யாரும் எதுவும் செய்ய வேண்டியது உண்டோ?
அதேபோல பிரதானம் கூட ஸதத பரிணாமியாய் பரமாத்ம அதிஷ்டானம் இல்லாமலே ஆஸ்ரய விவிதத்வாது நாநாத்தவம் சித்திக்கிறது என்றும்

பயஸ்வது – வேதாந்திகளே , நீங்கள் சூத். 2-1-24 – உபஸம்ஹாரதர்ஸநாத் நேதி சேத் ந, க்ஷீரவத்தி அதிகரணத்தில் சொன்னபடிக்கு
பால் உறை விடாமல் தயிராவதுபோல் , அசேதனமான மூலப் பிரகிருதி தன்னாலேயே பரிணமிக்கிறது என்றும் சொல்லுவீர்களானால்

தத்ராபி அநுபபத்தேஹே – க்ஷீரவத்தி என்பதில் சொல்லப்பட்ட விஷயம் சஹகாரி காரணம் வேண்டியது இல்லை ,
ஸத்ய ஸங்கல்பத்தாலேயே அந்த பிரஹ்மத்துக்கு காரியம் கொள்ள அமையும் என்பது போக்கி,
பிராஜ்ஞா அநதிஷ்டதமாக ஸ்ருஷ்டி நடக்கிறது என்று ஒப்புக் கொண்டதாக நினைப்பிடுகை அபத்தம் .

பால் தயிராம் போதும், மழைநீர் இளநீர் ஆம்போதும் அவை பரம சேதனனால் அதிஷ்டிக்கப்பட்டே பரிணாமம் அடைகின்றன.
இப்படி பால், மழைநீர் இரண்டும் அவ்வனுமானத்தில், பக்ஷமாக இருக்கும் போது, அதையே திருஷ்டாந்தம் ஆக்கி
அனுமானத்தை உடைப்பது முறையல்லவே.
யோ அப்ஸு திஷ்டந் (ப்ரஹதாரண்யகம்) : என்கிற ஸ்ருதியை அடி யொற்றி பகவததிஷ்டித பிரகிருதி பரிணமிக்கிறது என்றே
அவ்விடத்தில் நாம் சொன்னதாகக் கொள்ள வேண்டும். அத்தை அனுமான திருஷ்டி கொண்டு தகர்க்கப் போகாது என்பது சித்தாந்தம்.
பரந்த தண்பரவையுள் நீர்தொறும் பரந்துளன் – என்கிற நம்மாழ்வார் திருவாக்கும் இதற்கு உபயுக்தம்.

தற்கால மின்சார உபகாரங்கள் போல ஜகத்து என்று வைத்துக் கொண்டு, அவைகளை நடத்த மின்சாரம் போல புருஷன் என்று கொண்டாலும்,
அவைகள் வேலைக்கு ஆகும்படியாய் தட்டிவிட்டு, நிறுத்த (On / Off செய்ய) சேதன அதிஷ்டிதம் அவசியம் போலே –
ஸர்க பிரதி ஸர்கம் (ஸ்ருஷ்டி-பிரளயம்) விவஸ்திதமாக பகவத் சங்கல்ப ரூப பிரஜ்ஞாதிஷ்டித பிரக்ருதிகல்லது பொருந்தாது என்ன

நீங்கள் பிரதானத்தின் பேரில் சொல்லுகிற விஷம ஸ்ருஷ்டி தோஷங்களுக்கு ஸத்வ ரஜஸ் தமஸ் காரணம் என்று சொல்ல வழியுண்ண்டு.
அதே விஷம ஸ்ருஷ்டி காரணமாக, பலமடங்கு வைஷம்ய நைர்க்ருண்யாதி தோஷங்கள்
பிரஹ்மததுக்கு தான் அதிகம் , நாநாவாப்த அவாப்தவ்யம் என்று அவாப்த ஸமஸ்த காமனான படிக்கு.என்ன இதி அவாச்யம்.

பரிபூர்ணனான போதும் ஸ்ருஷ்டி லீலார்த்தே ஸம்பவம் என்பது முன்னமே கடப்பட்ட ஒன்று.
சரீர பிரதத்வத்துக்கு மட்டுமே பிரஹ்மம் காரணம் . மழை நீர் ஏக ரசத்தோடே இருக்க, மா பலா வாழை விவித ரசத்தோடே அமைவது
அதனதன் பிஜா சக்தி யாலேயாய் , ஜீவனுடைய புண்யபுண்ய பலத்துக்குச் சேர நடக்கிற சுக துக்கானுபவம்
அவரவர் கர்மமானுகுணமாக வந்தது அன்றி பிரஹ்மம் காரணம் அல்லவே.
ஆகையால் சாங்கியன் சொல்லுகிற தோஷங்கள் வைதிகமதத்துக்கு கிடையாது என்பதே சமாதானம்.

நாம் சொல்லுகிற புண்யாபுண்யங்கள், அசேதன வஸ்துவாகையாலே, அதுவும் பிரகிருதி காரியம் என்று தங்களுக்கு
சாதகமா உள்ளதே ? என்று சாங்கியன் மேலும் ஆக்ஷேபிக்க அடுத்த சூத்ரம் அத்தை நிவர்த்திப்பிக்கிறது.

————————-

சூத். 2-2-3 –வ்யதிரேகா அனவஸ்தி , தேஸ்சா அனபேக்ஷத்வாத் ::

அநபேக்ஷத்வாத் – ஒரு ஸர்வ சேதனனால் அதிஷ்டிக்கப் படுமதை ஏற்க வில்லையானால்
வ்யதிரேகா – ஸ்ருஷ்டியிலும் வேறுபட்டதான பிரளயத்தில்
அநவஸ்திதே : ச – நில்லாமல் ஸ்ருஷ்டியே நடவா நிற்கும்.
ஆக ஸ்வதந்த்ர பிரகிருதி ஜகத் காரணமாக முடியாது.

அதாவது –
பிராஞனாக , ஸத்ய ஸங்கல்பனாய் இருக்கிறவன் தான் ஆதி ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான். அதில் வைஷமயத்துக்குக் காரணம்
அவ்வோ ஜீவாத்மாக்களுடைய புண்ய, பாப ரூபமான கர்மா காரணம் என்று சித்தாந்தி சொன்ன விடத்து தனக்கேற இடம் கிடைத்தாப் போல் ;
புண்ய பாப – சுக, துக்க ஜகத்து உண்டு. ஜீவாத்மா உண்டு . இத்தனையே போதும் சம்சாரம் நடக்க. பரமாத்மா ஏதுக்கு? என்று வினவ
புண்ய பாப கர்ம பிரவாகத்தையும் ஜீவனையும் ஸம்பந்தப் படுத்த வேண்டி வருவதே காரணம் என்ன
அதற்கு சாங்கியன் – ஜீவாத்மா ஜ்ஞான ஸ்வரூபன். அவனுடைய தர்மம் ஜ்ஞாத்ருத்வ, கர்த்ருத்வ, போக்த்ருத்வம் என்று
நீங்கள் சொல்வதைக் கொண்டு அவன் தன்னாலே சம்பந்தத்தைப் பண்ணிக் கொண்டு போகிறான். ஈஸ்வரன் வேண்டுமோ ?
க்ருதம் ஈஸ்வரேண அதிஷ்டாதா ? – அதாவது கர்மங்களுக்கு ஏற்ப பயன் அளிக்கப் படுகிறது என்றால் பரமாத்மா எதற்கு?
ஜீவாத்மா ஸ்வாதந்த்ரியத்தால் என்ன பயன்? இந்த தோஷங்கள் வாராமைக்கு வேண்டுமானால்,
ஸேஸ்வர சாங்கியன் போல நீங்களும் பரமாத்மாவை சாக்ஷி மாத்ரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதாக
குதர்க்கமாக பேசினான் நிரீஸ்வர சாங்கியன் .

இது எப்படி இருக்கிறது என்றால்
போஜ ராஜன் பாக சாலையில் உமி நீக்கிய அரிசியும், முழு பயறும் சேர்த்து பொங்கல் செய்வது வழக்கமாய் இருக்க,
ஒருநாள் , அரிசியும் பயத்தம் பருப்பும் சேர்த்து பொங்கல் சமைத்திருந்தார்கள். ராஜா இது என்ன வழக்கம் போல் இல்லாமல்
இன்று தொட்டு நீக்கிய பயத்தம் பருப்பு சேர்த்து இருக்கிறீர்கள் என்ன காளிதாசன் அதற்கு அரிசிக்கு உமி நீக்கினார்ப்போல் ,
பயறுக்கும் தொட்டு விலக்கினார்கள் போலும் என்பதை
அந்த வல்லப ஸம்யோகே ஜாதா விகத கஞ்சுகா என்று பாட்டு படித்தான். இதன் பொருள்
நாட்டியக்காரி தான் நடனம் மேடையில் ஆட, அதை அந்தகன் ஒருவன் அமரிக்கையாய் அமர்ந்து வீக்ஷணம் பண்ணுமா போலே
என்று சூசகமாக கூறினான்.
அந்த நாட்டியக்காரி போலேயோ ஜீவாத்மா? அந்தகன் போலே சாக்ஷி மாத்ரமோ பரமாத்மா? அல்ல கண்டீர்.

இந்த பார பக்ஷ சிருஷ்டியுமே – அங்கா – அங்கி பாவத்தாலே
தேவ ஜாதி ஸத்வ உத்கடத்தாலேயாய் ராஜஸ, தாமஸம் உதாசீனமாய் – சுகித்தும் ;
மனுஷ்ய ஜாதி ரஜஸ் உத்கடத்தாலேயாய் ஸத்வ, தாமஸம் உதாசீனமாய் – துக்கித்தும் ;
திர்யக் ஸ்தாவர ஜாதி தமஸ் உத்கடத்தாலேயாய் ஸத்வ , ரஜஸ் உதாசீனமாய் – மோஹித்தும் கிடக்கும்படியான ஸ்ருஷ்டி சம்பவிக்கிறது.

எது போலே என்றால், பஞ்சிகரண த்ரிவிருத்கரணம் போலே இதுவும் எனக் கொள்வது.
எப்படி பூ தத்துவத்தில் 1/2 சதம் பிரகிருதி தத்வம் அங்கியாய்; மற்ற தேஜஸ், அப்பு, வாயுர் ஆகாசம் 1/8 + 1/8 + 1/8 + 1/8 சதம்
அங்கமாய் கலந்து உண்டாகிறதோ – அதேபோல இந்த ஸத்வம் , ரஜஸ். தமஸ் மூன்றில் ஒன்று அங்கியாய் மற்ற இரண்டும் அங்கமாய்
இருந்து விபுதா ஸ்ருஷ்டி உண்டாகிறது
அப்படி உண்டான அவ்வோ ஜீவாத்மாவினுடைய பாப புண்ய தாரத்ம்யத்தைக் வைத்து ,
பகவந் நிக்ரகஹ-அனுக்ரகஹ ரூபமாக வருவதே யாகும் . இப்படி ஒரு பரம சேதனானவன் க்ஷேத்ரஜ்ஞனுடைய
கர்ம ஸாபேஷை கொண்டு சம்பந்தத்தை செய்ய வேண்டி இருக்க அது தன்னாலே நடக்கும் என்று எப்படிச் சொல்வது என்ன ,
ஒளஷத சேவையை உதாரணம் காட்டி கால தேசத்தை அனுசரித்து நடக்கும் என்கிறான்.

தேஸகால வியவஸ்தத்வாத் :
வியாதிக்கு மருந்து கொடுக்கும் போது தேச கால நியமம் உண்டு. ஏதோ ஒரு மருந்து, ஏதோ ஒரு காலத்தில் கொடுப்பது என்பது இல்லை.
தேச காலம் மருத்துக்கு எப்படி வியவஸ்திதமாக உள்ளதோ, அதுபோல பிரக்ருதி இந்த புண்ய பாபாபத்தை ஸம்ஸ்கிரதமாக்க பலனை அளிக்கும்.
முக்கிய பிராணன் பஞ்ச விருத்தி பிராணனாக வர்த்திக்கும் போது கபவாத பித்தம் ஏற்ற தாழ்வுக்குச் சேர
ஒளஷத சேவை கால பிரமாணத்தை இட்டு 3 நாள் 3 வேளை அல்லது 5 நாள் 5 வேளை என்பதான நியமங்கள்
ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. இது கால வியவஸ்தா.
தேச வியவஸ்தா என்பது சீதள தேசம், உஷ்ண தேசம் என்பதிலான பத்தியா, அபத்யா விவஸ்தை யாகும்–
ஒளஷதத்துக்கு அனுபானமாக தேனில் குழைத்துச் சாப்பிடவும். க்ஷீர சேவை பண்ணவும். வெந்நீர் எடுத்துக் கொள்ளவும் போன்ற
அனுபான நியமங்களும் உண்பதற்கு முன், உண்பதற்கு பின் , வெறும் வயிற்றில் என்பதான நியமங்களும் ஒளஷத சேவைக்கு உண்டு.
இப்படி புண்ய பாபா சம்பந்தம் புருஷனுக்கு பிரக்ருதி தன்னாலே நடத்தும் என்று சாங்கியன் சொல்ல ,

அதற்கு சித்தாந்தி
உனக்கு புண்ய பாப ஸ்வரூபமே இன்னதென்று தெரியவில்லை. அது ஸாஸ்த்ரைக அதிகம்யம் –
அபௌருஷேயமான சாஸ்திரத்தை இட்டே அறியவேண்டுமவை.. மற்றவை எல்லாம் கிருதகிருத்யம்.
வேதம் பூர்வ காண்டத்தில் சொல்லப்பட்ட பகவன் முகோல்லாஸகர ஆராத்ய ரூபமான கர்மங்கள் தான் புண்யம்.
தத் வியதிரிக்த, தந் நிக்ரஹ பாகியான நிஷித்த காரியம் பாபம் . அவை கர்மத்திலோ, பிரக்ருதியிலோ கிடையாது.
ஸர்வஜ்ஞனான ஸர்வேச்வரனுடைய நினைவில் இருக்குமவை.. இதை எல்லாம் கொண்டு பலாபலன்களை அளிப்பவன் பரமாத்மாவே .
இதை நாமாக சொல்லவில்லை. திரமிடாசார்யர் சொன்னதும்; ஸ்ருதியையை அனுவர்த்தித்து பகவானும் சொன்னவையே.
அதைவிடுத்து பலபிரதத்வம் நேரே கர்மத்திடமோ, அபூர்வத்திடமோ உள்ளது என்பது அதிவாதமாகும்.

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தெய்வம் கேஸவாத் பரம்.
தேஹேந்த்ரியமும் சாஸ்திர பிரதானமும் பண்ணி பிரதம பிரவிருத்தியில் அனுமதி பிரதானம் பண்ணி, அநுமந்தாவாக இருந்து ,
தங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புண்ய பாப கர்மங்களை சேதனர்கள் இயற்ற – பலமத் உபபத்தேஹே என்றபடி – தர்மார்த்த மோக்ஷ வர்ததே.
ஆக அவன்தான் புண்யபாப ஸ்வரூபத்தை நிர்த்தாரணம் பண்ணி பலபிரதாவாகவும் இருக்கிறான்.
ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொருவிதமாக, பாபம் செய்தால் தண்டிப்பதும், உதாசீனப் படுத்துவதுமான அவனை
தயை இல்லாதவன் என்று காட்டாதோ என்றால்

தகாதவர்கள் குறித்துக் காட்டும் தயை குணமாகாது. மாறாக , விரோதிகளை நிரசிப்பது குற்றமும் ஆகாது.
இதற்கு பர ஹிம்சை அஸஹிஷ்ணுத்வம் காரணம். பசு பாலகன் கோல் வைத்து ஆக்களை ரக்ஷ்ணம் பண்ணுவதுபோல்,
பர துக்க துக்கித்வனாய், கிஞ்சித் அத்துவேஷ ஆபிமுக்யம் பிறந்து தனக்கேற இடம் கிடைத்தவாறே,
யாதிருச்சிக, ஆனுஷாங்கிக பிராசங்கிக ஸுக்ருதங்களை ஒன்று பத்தாகிப் போந்து
தேஷாம் ஏவாநுகம்பார்த்தம் அஹம் அஜ்ஞாநஜம் தம:
நாஸயாமி ஆத்ம பாவஸ்தோ ஜ்ஞான தீபேந பாஸ்வதா – கீதை 10-11.
என்று சேதன உஜ்ஜீவனார்த்தமாக ஸதா உத்தியோகிப்பவனை நிர்க்ருணன் , பக்ஷபாதி என்று சொல்வது பொருந்தாதது மட்டும் அல்லாமல்,
ஈஸ்வர அநதிஷ்டித பிரதானம் ஜகத் காரணம் என்பதும் நிராஸ்யம்.

—————————

தத்வம் ஏகோ மஹாயோகி விபும் ஹரி நாராயண பிரபு :
சதுர்முக பிரம்மா ரஜோகுண பிரசுரனாய், ருத்ரன் தமோ குண பிரசுரனாய், ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே
ஸத்வமே தலை எடுத்தவனாய் இருக்கிற தத்வம்.

சூத். 2-2-4 :: அந்யத்ர அபாவாத் ச ந த்ருணாதிவத் ::

த்ருணாதிவத் ச – பசுவானது புல்லைத் தின்று பால் சுரப்பது போல , புருஷனுடைய ஸாநித்யம் இருந்தால் போதும்
பிரகிருதி தன்னாலேயே எல்லாம் பண்ணிக் கொண்டு போகும் என்று சொல்வது
ந – சேராது.
அந்யத்ர அபாவாத் – காளை மாடும் அதே புல்லை உண்டாலும் பால் கறப்பதில்லை.
காரணம் இங்கு சேதநாதிஷ்டானம் இல்லையாய்க் கொண்டு.

அதாவது
பசுமாட்டுக்கு சைத்தன்யம் இருந்தாலும் அது இந்த நிர்தர்ம, சின்மாத்ரா புருஷனைப் போல சாக்ஷி அளவே.
பசுமாட்டின் வயிற்றில் சென்று புல்லானது தன்னாலேயே பாலாய் பரிணமிக்கிறது. அதுபோல பிரக்ருதியும் தன்னாலே ஜகத்தாக பரிணமிக்கும் .

ந -நஹி தது உபபத்யதே . நீங்கள் சொல்வது பொருந்தாது.
காரணம் ஸர்வத்ர ந சித்யதே. காளைமாடு எருதுகள் விஷயத்தில் இப்படி நடப்பதில்லை யாதலால்.
சேதன சாந்நித்யம் மாத்திரம் இருந்தால் போதும் என்றால் காளை மாடும் பால் கொடுக்க வேண்டுமே? அப்படி நடப்பதில்லை.
அந்யத்ர ஆபாவாத் -அல்லது புல்லு, புண்ணாக்கு, கழுநீர் தண்ணி இவை பசுவின் வயிற்றில் தன்னால்
பாலாக பரிணமிக்கின்றன என்றால், அவை மூன்றும் கலந்து ஓரிடத்தில் வைத்தாலும் பாலாக வேண்டும். அப்படியும் நடப்பதில்லை.
ஆகையால் பசு சாப்பிட்டால் தான் பாலாகும் என்பது பகவத் சங்கல்ப ஸ்ருஷ்டி முகத்தாலேயாதல் காண் என்பது சித்தாந்தம்.

———————

சூத். 2-2-5 :: புருஷாஸ்மவதி இதி சேத் தாதாபி ::

புருஷாஸ்மவதி இதி சேத் –
இன்னும் சில உதாரணம் கொண்டு கீழே சொன்ன விஷயத்தையே வேறுவிதமாக வலியுறுத்தப் பார்க்கிறான்.
எப்படி அந்தையான பெண்ணின் தோளில் முடவனான புருஷன் இருந்து செலுத்துவனோ அது போலே
புருஷ சன்னிதானம் அசேதனம் பிரவர்த்ததே என்கிறான்.
இன்னும் அயக்காந்தம் போலே என்று காந்தமணியின் சந்நிதியில் இரும்பு ஆகர்ஷணம் ஆவது போல் புருஷனின் சந்நிதியில் பிரகிருதி செல்படலாம்.

ததா அபி – இப் பூர்வ பக்ஷமும் தவறு.
புருஷ சந்நிதியை ஒப்புக் கொண்டாலும், குருடனுக்கு நொண்டி காட்டும் வழியைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவு இருக்க வேண்டும்.
குருடன் ஸ்தானத்தில் இருக்கும் பிரக்ருதியோ அசேதனம். புருஷனும் நிர்தர்மகன் என்றபோது நொண்டியைப் போல் நியமிக்கக் கூடுமோ ?
அயப்பிண்ட உதாஹரணத்திலும் சமீபத்தில் வந்தால் தான் ஆகர்ஷ்ணமாகும்.
கர்த்ருத்வமில்லாத புருஷனுக்கு சமீபத்தில் வருத்தலாகிற கிரியைகள் சொல்வது முடியாதே? என்ன

அதற்கு அவர்கள் காந்தகல் போல் அருகில் வருதல் என்பது இல்லை ,
காரணம் புருஷன் எப்போதுமே பிரகிருதியின் அருகிலேயே இருக்கிறான் ;
பிரகிருதி விபு என்றும், புருஷன் ஸர்வகதன் என்று சொன்னதாலே. அதுவே காரணமாக பரிமாற்றம் நிகழ
ஸ்ருஷ்டி -பிரளயம் நித்தியமாய் முடியும் .

———————

சூத். 2-2-6 ::அங்கித்தவ அநுபபத்தேஸ் ச —

கீழே சொன்ன அங்கா – அங்கி பாவத்தை ஏற்காததால்
அதாவது முக்குணங்களில் ஒன்றின் மிகுதியால் வரும் அங்கி பாவம் ஸ்வதந்திர பிரக்ருதிக்கு பொருந்தாதாகையால்,
ஸர்க – பிரதி ஸர்கங்கள் ஏற்பட்ட வழியில்லை.
முக்குணங்கள் ஸம தோலனத்தில் இருந்தால் பிரளயம். அப்படி ஸமநிலையில் இருக்கும் முக்குணங்களில்
ஒன்று கூடுதலாகி அங்கியாய் மற்ற இரண்டும் குறைந்து அங்கமாக பிரஸக்தி – யாதொரு காரணமும் ஒப்புக் கொள்ளப்படாத போது,
ஸ்ருஷ்டி அசம்பவம்.
இப் புடைகளால், பிராஜ்ஞா அநதஷிடித ப்ரக்ருதி , ஜகத் காரணமாவே மாட்டாது.

———————-

சூத். 2-2-7 :: அந்யதா அநுமிதௌ ச ஜ்ஞான ஸக்தி வியோகாத் ::

அந்யதா அநுமிதௌ ச – கீழே சொன்ன தோஷாஸ்பதமான பிரதானத்தை விலக்கி, வேறுவிதமாக அனுமானம் செய்தாலும்
ஜ்ஞான ஸக்தி வியோகாத் – அறிவுடையதான சக்தி இல்லையாகில், அந்த பிரதானமும் ஜகத் காரணமாக முடியாது.

—————-

சூத். 2-2-8 :: அப்யுபகமே அபி அர்த்தா பாவாத் ::

போகட்டும். இப்படிப்பட்ட தோஷங்கள் எல்லாம் விட்டு அனுமானத்தாலே வேறு ஒரு பிரதானத்தை சித்தி பண்ணுகிறேன் என்றாலும்,
அந்த பிரதானத்தாலே ஒரு புருஷார்த்தமும் கிடையாது. புருஷனுக்கு பந்த மோக்ஷங்களை உண்டாக வல்லது அல்லவே இந்த பிரதானம்
காரணம் நீங்கள் சொல்லுகிற சைதன்ய மாத்ர புருஷன் நிஷ்கிரியன். நிர்விகாரன். நிர்மலன். இத்யாதி பிரகாரங்களாலே
முக்த ஸ்வரூபனான படியாலே, போக மோக்ஷங்கள் இரண்டுமே புருஷனுக்கு ஒட்டாது.
இப்படி பயன் அற்ற பிரதானத்தை அனுமானத்தால் சாதிக்க தக்கது அன்று.

—————–

சூத். 2-2-9 :: விப்பிரதிஷேதாச்ச அஸமஞ்ஜஸம் ::

சாங்கியர் முன்னுக்குப் பின் முரணாக பேசுகையால் அவர்கள் மதத்தில் பொருந்தம்மையே மிஞ்சுகிறது.
இதை மேலும் விளக்கமாக பார்ப்போம்.
1. பந்த மோக்ஷ காரக பிரகிருதி – புருஷன் நித்ய யோகத்தால், ஒன்று ஸ்ருஷ்டியே நடக்க வேண்டும்
அல்லது மோக்ஷமே நடக்க வேண்டும்,
வத்ச விவிருத்த நிமித்தம் க்ஷீரஸ்ய யதா பிரவ்ருத்தம் அஜ்ஞஸ்ய
புருஷ விமோக்த நிமித்தம் ததா பிரவ்ருத்தி பிரதானஸ்ய
தன்னுடைய கன்றுக் குட்டியை நினைத்த போதே பசுவுக்கு பால் தன்னாலேயே சரக்குமா போலே
இந்த ஜீவாத்மாவுடைய பந்தத்தையும், மோக்ஷத்தையும் பிரதானம் கொடுக்கிறது.
கர்த்ருத்வம் , திருஷ்டுத்வம், சாக்ஷித்வம் எல்லாம் சைதன்யம் என்கிற தர்மத்தை –
தர்ம பூத ஜ்ஞானத்தை – ஒத்துக் கொண்டால் மட்டுமே பொருத்தும். கேவல ஜ்ஞான ஸ்வரூபன் என்றால் அவனுக்கு
கிரியை, பார்த்தல் , சாக்ஷியாகல் எதுவும் முடியாது. அந்த பிரக்ருதியினுடைய தரிசனமே ஆவதில்லை.
அல்லது பிரதானம் தானே பண்ணிக் கொண்டு போகிறது என்றால் அதற்கு சைதன்யமே கிடையாது என்பதால் இதுவும் பொருந்தாது.

பந்தனம் சேதனனுக்கு உண்டானால் தான் அல்லவோ கைவல்ய மோக்ஷத்துக்கு இடமுண்டு?
மற்று என்ன புருஷார்த்தம் விளையும் அது போக மோக்ஷ சூன்யமாக இருந்த போது?.

கிராமத்தில் பொழுது புலர்ந்தால், கிருஷிகன் உழுதல் தொழிலை செய்யப் புறப்படுகிறான்.
அங்கு உள்ள சந்நியாசியோ ஏதாவது செயலில் ஈடுபடுகிறோனோ? கேவல ஜ்ஞான தியானாதிகளில் மட்டும் இருப்பான் அல்லவா?
அதுபோல கர்த்ருத்வம் பிரக்ருதிக்குத்தான். புருஷன் உதாசீனனாகத்தான் இருக்கிறான் என்று சொன்னால்
அகர்மஸ்ய கைவல்யஸ்ய ஸ்வரூபம் ந ஸம்பவந்தி .
ஜபா-குஸும ஸாமீப்யத்தாலே , குஸுமம் தான் ஸ்படிகத்தை சிகப்பாக காட்டுகிறேன் என்கிற ஜ்ஞானமோ,
ஸ்படிகம் தான் சிகப்பாக காண்கிறேன் என்கிற ஜ்ஞானமோ – அஸத் – அஸத் கல்பமான இரண்டுக்கும் இருப்பதில்லை,
ஜ்ஞாத்ருவம் உடைய இன்னொரு சேதனனுக் கன்றோ அது தோற்றுகிறது?
அத்யாசமோ, பிரமையா அது புத்தி விகாரமானபடியாலே – நிர்விசேஷ புருஷனுக்கு அவை ஒத்து வராது.

இல்லை – பத்யதே முச்யதே நானாஸ்ச பிரகிருதி : என்று பிரகிருத்திக்கே பத்த-மோக்ஷத்தைச் சொல்லுவையோ ?
போக-மோக்ஷ சூன்யத்வம் பிரக்ருதிஸ்ச .என்பதாக அது சேதன தர்மமே யன்றோ?

அத்யாஸோ நாம –
ஒன்றின் தருமம் இன்னொன்றில் ஏறிக் காண்பதாகும். சேதனன் தன்னிடம் இல்லாத ஒரு தர்மத்தை
மற்ற ஒன்றினிடமிருந்து ஆரோபித்தலாகிற அன்ய தர்ம அநுசந்தானம் – அத்யாஸம். அது சேதனுக்கேயான தன்மை. விகாரமும்கூட.
புருஷன் நிர்விசேஷம். நிர்தர்மகன் என்று சொன்னதால், அத்யாஸம் அவனுக்கு ஏற்பட இடமில்லை.
சந்நிதியாலே அது ஏற்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் அது நித்தியமாய்,
பத்யதே – முச்யதே என்கிற உபகாரம் பிரதானம் பண்ணிற்று என்று எப்படி சொல்லக் கூடும்?

ஒரு தடாகம். அதில் நித்யம் ஒரு யுவதி தீர்த்தமாடிப் போக, ஒரு புருஷன் மறைவில் இருந்து அவளை பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
ஒருநாள் இந்த விஷயம் அவளுக்கு தெரிந்துபோக, அவள் லஜ்ஜித்து, அந்த தடாகத்துக்கு வருவதை நிறுத்தி விடுகிறாள்.
அல்லது புருஷனுக்கு சபலம் தீர்ந்துவிட்டாலும் அவ்விருவருக்குமான திருஷ்டாமயத்வாத் சம்பந்தம் விடுபட்டுப் போகிறது.
நாடக மேடையில் நர்த்தகி நாட்டியம் பார்க்க வந்தவன் ஆட்டம் முடிந்து பிரிந்து செல்லலாம்.
அல்லது இவன் எத்தனை நேரம்தான் பார்ப்பது என்று விலக்கிப் போகலாம்.
அதுபோல பிரகிருதி-புருஷ விவேக தத்வ ஜ்ஞானம் வந்தது என்றால் அதுவே மோக்ஷம் என்று
இப்படி வேறு வேறு விதமாக கூறுவீர்களானாலும்

நித்ய முக்தனாய், நிர்விகாரனாய் இருக்கிற புருஷன் பார்க்கிறான் என்பது சேராது.
காரணம் புருஷனுக்கு சைதன்யம் இருந்தாலும், சைதன்ய காரியம் எதுவும் கிடையாது என்பதை
அந்த புருஷ தர்மமாக சொல்லியிருக்கிறபடியாலே. அத்யாஸம் ஏற்படுகிறது என்பதும் கிடையாது.

இல்லை ஸாந்நித்யத்தையே தர்சனம் என்று கொள்ள வேண்டும் என்கிறாயா?
தத்வ ஜ்ஞானம் இல்லாது பார்த்தபோது பத்தம் உண்டாயிற்று – தத்வ ஜ்ஞானம் உண்டான பின்பு
பார்த்த போது மோக்ஷம் உண்டாயித்து என்கிறாயா? எப்படிப் பார்த்தாலும் பந்தமே மோக்ஷமாய் -மோக்ஷமே பந்தமாய் முடியும்.
அல்லது பிரகிருதி தன்னைத் தான் பார்க்கிறது என்பதும் முடியாது, அது அசேதனமாக இருக்கிறபடியால்.

இல்லை. அயதார்த்த தர்சனம் பந்த ஹேது. யதார்த்த தர்சனம் மோக்ஷ ஹேது என்பாயே ஆனால்
நீதான் பார்க்கிறது என்பதையே ஒத்துக் கொள்ள வில்லையே. பிரகிருதி பார்க்க முடியாது.
புருஷன் நிர்தர்மகன் ஆனபடியால் பார்க்கப் போகாது – உபய பிரசங்காது அஸம்பவமே அன்றோ?

எதுவும் வேண்டாம். பிரகிருதி ஸ்வரூபம் பந்தாத்மகம் . புருஷ ஸ்வரூபம் மோக்ஷத்வம். என்பதாலேயே சித்தம் என்றால்
பந்தமோ மோக்ஷமோ நித்தியமாய் ஸர்க்க-பிரளயம் அஸம்பவம்.
இப்படி பல விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் சாங்கிய சித்தாந்தம் அஸமஞ்ஜசம் .

இது இவர்களுக்கு மட்டும் அல்ல. யாரெல்லாம் இந்த சேதநாசேதனங்கள் எல்லாம் சரீர ஸ்தானத்தில் இருக்கிறது.
இந்த விசேஷாணாம்சமான சரீரத்தில்தான் அவனுடைய சங்கல்பத்தாலே விகாரம் ஏற்படுகிறது ,
விசேஷ்யமான பகவான் நிர் விகாரம்தான் என்பதை ஒழிய வேறு எவ்வகையிலும் சித்தாந்த ஸ்தாபனம் பண்ண முற்பட்டாலும் ,
அவர்களுக்கும் ஆஸாமஞ்ஜசம்தான் தட்டும் .

சாங்கியன் பிரக்ருதி – ஜீவாத்ம சம்பந்தத்தை அத்யாசத்தால் சொன்னான்.
அத்வைதி பரமாத்மாவுக்கே பிரக்ருதி அவித்தை என்றான். அந்த பிரக்ருதியும் பொய்யானது என்றும், பந்தமும் அபாரமார்த்திகம் என்றான்.
ஜ்ஞான ஸ்வரூபமான பிரஹ்மம் அவித்தையான அஜ்ஞானத்துக்கு சாட்சியாக உள்ளது என்பது –
பரிபூர்ண ஜ்ஞானத்தின் பக்கல் அஜ்ஞானம் வருவது என்பது ஒவ்வாது. பிரஹ்ம ஸ்வரூபமே நசிந்து போகும்.
இவையெல்லாம் மஹா பூர்வபக்ஷ-மஹா சித்தாந்தத்தில் அஸமஞ்சஸம் என்று காட்டப்பட்டவையே.

சாங்கியனும், நையாயிக்கனும் ஜீவன்து பிரதி சரீரம் பின்னம் என்று ஜீவ-நாநாத்மத்தை ஒத்துக் கொண்டார்கள்.
பிரஹ்மாஜ்ஞான வாதி அதற்கும் கேடாக ஜீவ – நாநாத்மத்வத்தை ஒத்துக் கொள்ளாதது போக ஏக-சரீர வாதமும் பண்ணி
மஹத்தான தோஷத்தை சூழ்துக் கொண்டார்கள். பிராதிபாசிக சத்யம் , வியாவஹாரிக சத்யம், பாரமார்த்திக சத்யம் என்று
மூன்றைச் சொல்லி மற்றதெல்லாம் அபாரமார்த்திகம் என்று எப்படிப் பேசினாலும்
நிர்விசேஷ பிரஹ்மத்துக்கு சாக்ஷித்வம் கீழே சொன்னது போல் பொருந்தாது.

புருஷன் நிர்விகாரம். நிர்விசேஷம் என்றான் சங்கியான்.
அதையே பரபிரஹ்மத்துக்கு ஆக்கி. சங்கரர். பிரக்ருதியை அவித்தை என்று சொல்லி, உபாதி பொய் -மாயா என்றும் சொன்னார்.
பாஸ்கரனோ உபாதி ஸத்யம் என்று சொல்லி – ஜீவோ நாவைவ பர : – பிரஹ்மமே உபாதியால் ஜீவனாகிறது என்றான்.
இப்படி தத்வத்ரயத்தை மறைத்து இரண்டு தத்வம் அல்லது ஒரே தத்வம் என்று சொல்வதெல்லாம் குத்சித த்ருஷ்டியாகும்.

சாங்க்கியன் தத்துவங்களை பிரகிருதி , புருஷன் என்று 25 ஆக பிரித்தான் .
வியாசரும் ஆழ்வாரும் அத்தை பிராஜ்ஞா அதிஷ்டிதமாக்கி 26 என்றனர்.
கால தத்வமாகவும் சேர அவை 27 ம் ஆகக்கடவது.

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழின்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டும்
மண்ணும் நீரும்எரியும் நல்வாயுவுமமாய்
விண்ணுமாய் விரியம் எம்பிரானையே –நம்மாழ்வார்.

ஷட்விம்சாலம்பிதாம்ஸம் தத்வம் :
உண்மைப் பொருள் ஓர் இருபத்தி நாலொடு
நண்ணரு ஞானத் துயர் ஆவி — யூண்காலம்
ஆய இவை சேர்ந் திருபத்தி ஆறும் நம்
மாயனார் தாம் மேய வீடு.

——- ——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —2-1-9 : க்ருஸ்ந ப்ரஸக்தி அதிகரணம் –ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

அதி. 2-1-9 : க்ருஸ்ந ப்ரஸக்தி அதிகரணம்

சூத். 2-1-26 :: க்ருஸ்ந ப்ரஸக்தி : நிரவயவத்வ ஸப்தகோப : வா ::

கீழே க்ஷீர, ஜலாதி திராஷ்டாந்தங்கள் சொல்லப் போக , அவைகள் ஸாம்ச , ஸாவயவத்தோடு கூடியவைகள் ஆயிற்றே ?
திராஷ்டாந்திகமான பிரஹ்மமும் ஸாம்ச , ஸாவயவத்தோடு கூடியதோ? நிரம்ச , நிரவயவமோ ? என்பது கேள்வி.

சாது ஜனங்களை நலியும் காஞ்சனை சாதிப்பதற்கு
ஆதியும் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் – நம்மாழ்வார்.

அங்கு வைத்து இங்குப் பிறந்த – என்றதால் அவதார காலத்தில் அவன் இங்கு இருக்க, அங்கு பரமபத்தில் இருப்பு போலியோ?
ஸாம்சமான ஸாவயவ பிரஹ்மம் இரண்டு இடத்திலும் இருப்பது சாத்தியம் இல்லையே .
கறந்த பால் குவளையில் போட்டு நிறைத்த பின்பு குடத்தில் இல்லையாமாப் போலே ? – என்பதான உதங்க பிரஸ்னம் இங்கு.

ஸாவயத்தை ஒத்துக்க கொண்டால் க்ருஸ்ந பிரஸ்னம் வரும். அதாவது
இந்த பிரஹ்மம் முழுமையாக காரிய பொருளாக ஆயிற்று என்பதாய்
அதனுடைய சித் அம்சம் சேதனர்களாகவும் , அசித் அம்சம் ஜகத்தாகவும் மாறியது –
அங்கு வைத்து என்பது போலியாய், காரணப் பொருள் இல்லையாய், காரிய பொருட்கள் வந்தது –
எப்படி குடத்தில் இருந்த பால் குவளைகளில் நிரப்பப் பட்டு இல்லை ஆகிறதோ , அதுபோல் என்று கொள்ள வேண்டி வரும்.
நிரவயவத்வம் பிரஹ்ம ஸ்வரூபம் என்றால், திருஷ்டாந்தமும், திராஷ்டந்திக்கமும் ஒத்துப் போகிறது இல்லை என்பது மட்டும் அல்ல
பகு பவன சங்கல்பமும் ஒத்துப் போவதில்லை.
என்ன தான் சரீராத்ம பாவத்தை இட்டுச் சொன்னாலும், சரீரம் ஆத்மாவுக்கு அம்சம் என்பதிலேதான் முடியும்.
அத்தாலும் க்ருஸ்ந பிரஸ்னம் (தீர்ந்து போகும் நிலை) அநிவாரியம் என்பதாக நையாயிகனுடைய பூர்வ பக்ஷம்-

ப்ரஹ்மானந்தவல்லீ
ஸச்ச தயச்சாபவத் |
நிருக்தம் சாநிருக்தம் ச | நிலயநம் சாநிலயநம் ச |
விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் ச | ஸத்யம் சாஅநுருதம் ச ஸத்யமபவத் |
யதிதம் கிஞ்ச | ததசத்யமித்யாசக்ஷதே |
ததப்யேஷ ஸ்லோகோபவதி

ஸுத்த துவைதிகளான நையாயிகன் , வைசேஷிகன், மத்வ சம்பிரயதாயத்தவர்களான இவர்கள்
சரீராத்மா பாவத்தை ஒரு போதும் ஒத்துக் கொள்வதில்லை. சரீர தர்மம் வேறு. ஆத்ம தர்மம் வேறு
ஸூக்ஷ்ம சித்தசித் காரண பிரஹ்மமானாலும், ஸ்தூல சித்தசித் கரிய பிரஹ்மமானாலும்,
அம்சா-அம்சி; அவயவ-அவயவி ஒட்டு ஒழியாது. அதனால் இது
ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர ஆஸீத் அதுவிதீயம் பிரஹ்ம என்கிற நிரவயவி வாக்கியத்துக்கு விரோதிப்பதாய்
ஸாஅம்சமே சித்திக்கும். க்ருஸ்ந பிரஸக்தி வந்தே தீரும்.

அல்லது பிரஹ்மம் நிரவயவி என்று சொல்லுவதானால் –
ஸககாரி காரண வர்ஜிதமான பஹுஸ்யாம் பிரஜாயா யேதி என்கிற பஹுபவந சங்கல்பம் நோபபத்யதே – சேரவே சேராது.
ஆக பிரஹ்மம் ஜகத் காரணமாகாது. பிரஹ்ம க்ஞான ஆரம்பணம் அர்த்த மற்றது.
பிரஹ்மம் நிமித்த காரணம் மட்டுமே. பரமாணு உபாதான காரணம், கால, தேசம் சககாரி காரணம் என்கிற
எங்கள் சித்தாந்தம் தான் சாதுவானது. ஸமஞ்சஸமானது அத்தை ஏற்று நடங்ககோள் என்று
சொல்லும்படியான பூர்வ பக்ஷ சூத்ரம் இது.

ஜகத் அஸ்தமிதம் பூதம் என்பதான பரிஸ்திதி – கேசி என்கிற குதிரை வாயில் கண்ணன் தன் தோள் வரை கையைவிட ,
இனி என்ன அவனையும் உள்ளே இழுத்து விடுவானோ? என்கிற பர்யந்தமான பரிஸ்திதி.
அதிலிருந்து மீண்டு எப்படி கண்ணனெம்பெருமான் கோபர்களை ரக்ஷித்தானோ, அதுபோல இந்த வேதாந்த விசாரம்
அடியோடு விலக்கத்தக்கது என்கிற நிலைக்குத் தள்ளுகிற இந்த வைசேஷிக ஆக்ரஹத்துக்கு,
ஸ்வாமி எம்பெருமானார் என்ன பிரத்யஸ்திரம் கொண்டு அவர்களை நிரசிக்கிறார் என்பதை இனி பார்ப்போமாக.

வேதம் – 4.
அங்கம் – 6.
உபாங்கம் – 4
ஆக வித்யா ஸ்தானங்கள் 14.
இத்தோடு
ஆயுர்வேதம்
தனுர்வேதம்
காந்தர்வ வேதம்
அர்த்த சாஸ்திரம்
சேர்த்து வித்யா ஸ்தானங்கள் 18 என்றும் சொல்வர்.
மீமாம்ஸா சாஸ்திரம் 3 காண்டமாக
ஜைமினியுடைய கர்ம காண்டம் 12 அத்யாயம்
காஸக்ருஸ்னருடைய தேவதா காண்டம் 4 அத்யாயம்
பாதராயணருடைய சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயம் என
மீமாம்ஸா சாஸ்திரம் முழுவதும் அககண்டமாய் சூத்ரே மணிகணா இவ என்கிறபடியே ஒரே சாஸ்திரம் என்பதே நம் முடைய சம்பிரதாயம்.

அதில் , பிரஹ்ம மீமாம்ஸா சித்த துவிகம், ஸாத்ய துவிகம் இத்தால் பிரமேயமான பகவத் ஸ்வரூபம்,
பிரஹ்ம பிரதிபாத்யமான குண விக்ரக விபூதியாதிகள்,
அவனை அடைய ஆறு, தடை, பலன் இத்யாதிகளை 4 அத்யாயங்களால் காட்டுமுகமாக
அவனுக்கு ஆராத்யமான யஞ்ஞ யாகாதிகளை பூர்வ மீமாம்ஸையிலும்;
அங்காண்யங்காணி தேவதா: என்றவகையில் முப்பத்து முக்கோடி தேவதைகள் விஷயமான
தேவதா காண்டமும் சேர மூன்றும், மூன்று ஸாகளைகளை உடைய ஒரு விருக்ஷம் போலே – ஸா த்ரிதா பவதி.

அதில் முதல் அத்யாயத்தில்
பிரஹ்மம் ஜிக்ஞாசம்தான் என்றும், பிரஹ்ம காரணத்வம் சொல்லப்பட்டது.
அடுத்து முதல் சூத்ரத்தால் சித்த வஸ்துவான பிரஹ்மத்தை சொல்லி,
அதற்கு ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, மோக்ஷ பிரத்வாதி லக்ஷணத்தை 2வது சூத்திரத்தாலும் சொல்ல
இது பிரமாணாந்தர கோசரமே, சாஸ்திரம் ஏதுக்கு? அனுமானத்தாலே கொள்ளலாமே என்ன
ஸ்ருதி சிரஸி விதீப்யே என்கிறபடி
ஸ்ருத்யைக அநதிகம்யன் என்பதாக – சாஸ்திர யோனித்வாத் என்கிற 3வது சூத்ரத்தால் காட்டப்பட்டது.
அவனைக் கொண்டு இன்னொன்றை அடைகை அன்றிக்கே , ஸ்வயம் பிரயோஜனமாக இருக்கிறான் பகவான் என்பதை
தத் து ஸமன்வயாத் என்பதான 4வது சூத்ரத்தால் காட்டி, இந்த 4 அதிகரணத்தால் , சொல்லப்பட்ட விஷயங்களே
மீதமுள்ள மூன்று அத்யாயத்தில் விவரிக்கப்படுகின்றன.

இப்படி முதல் அத்தியாயத்தில், அயோக விவச்சேதம், அந்யயோக விவச்சேதம் இவைகளைக் கொண்டு
பிரதானம் போன்ற வேறு வேறு வஸ்துக்கள் ஏன் காரணமாக் கூடாது என்பன போன்ற ஸ்ருதி விபிரதிபத்திகளை பரிகரித்து
சித்தசித் விசிஷ்ட பிரஹ்மமே த்ரிவித காரணம் அதிலும் விசேஷித்து ஜகத் உபாதான அந்த பிரஹ்மமே காரணம் என்று காட்டப்பட்டது.

பிரகிருதம் அவிரோதாதியாயம் ஸ்ருதி பாதத்தில் வாதீய விப்ரதிபத்திகளைப் பரிகரிக்கிறது.
இங்கு போலே முதல் அத்தியாயத்திலும் வாதங்கள் உண்டு. அங்கு போலவே இங்கும் ஸ்ருதி வாக்கியங்கள் உண்டு.
அங்கு பரிகரித்தது ஸ்ருதி விப்ரதிபத்தியை . இங்கு வாத பிரதிபத்தியைப் பரிகரிக்கிறது. .

வேதார்த்தம் அருதியிடுவது ஸ்மிருதி இதிஹாச புராணங்களாலே – என்பதாலே தத்வ பிரதானமான
கபில ஸ்ம்ருதியாலே வைத்துக் கொண்டே வேத வாக்கியங்களை அர்த்தம் சொல்ல வேண்டும்.
அதை விடுத்து வேத வாக்கியங்கள் மட்டுமே கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை சரியில்லை.
எனவே எம்மையும் வாத பிரதிவாத்ததில் சேர்க்க வேண்டும் என்று நையாயிகர் வேண்ட,
பிரஹ்ம காரண வாதத்தை விடுத்து வேத விருத்தமான பிரதான காரண வாதத்த்தையே அவலம்பித்த காபில ஸ்ம்ருதி ,
அன்ய ஸ்மிருதி அநவகாச தோஷ பிரசங்க : என்பதால், உமக்கு பிரவேசமில்லை என மறுத்தார்கள்.

வேத: என்கிற சொல் புல்லிங்கம். ஸ்மிருதி என்பது ஸ்த்ரீ லிங்கம்.
தக்ஷ ஸ்மிருதி , மநு ஸ்மிருதி, ஆரீத ஸ்மிருதி, சௌநக ஸ்மிருதி இத்யாதிகள் பிரஹ்ம காரண வாதத்தை ஒப்புக் கொள்வதால்,
இப்படிப்பட்ட அன்யோன்ய தாம்பத்யமுடைய ஸ்மிருதிகளே போதும் என்ன ,
மநு ஸ்மிருதி ஆச்சார பிரதானமாய், வர்ணாஸ்ரம தர்மத்தை சொல்வதால், அது பூர்வ மீமாசைக்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கால்.
உத்தர மீமாம்சா ஞான காண்டத்துக்கு விஷயமாக எங்களுடைய யோக விஷயமான காபில ஸ்மிருதியே சரி என்று மேலும் வாதிட
அதுவும் ரஜ தமோபூதனான பிரம்மா வாய் வழி வந்த படியால் அதுவும் தியாஜ்யம் என முதல் 2 அதிகரணத்தால் சொல்லப்பட்டது.

இந்த 3 வது அதிகரணத்தால் ஸாலக்ஷண்ய ஹேதுமத்வம் பிரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் இல்லையாய்க் கொண்டு –
ஜகத்து சுக துக்க மோக அனுபவத்தோடு இருக்க, சுத்த முக்த ஞானந்த ஸ்வரூபமாக பிரஹ்மம் இருக்க
இரண்டுக்கும் ஸாலக்ஷ்ண்ய அபாவத்தால், முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட பிரஹ்ம ஜகத் காரணத்வம் சேராது
காரணம் காரிய காரண சாலாக்ஷிண்யம் இன்மையையால் என்று பிரதிபக்ஷி காட்ட ,
கோமய விருச்சிக உதாரணத்தை இட்டு ஸர்வ பிரகாரத்தாலும் ஸாலக்ஷண்ய நிர்பந்தம் வேண்டியதில்லை என்று சொல்லி
பிரசங்காது சரீராத்மா பாவத்தையும் விலக்ஷ்ணத்வாதிகரணத்தில் நிரூபித்தார் ஸ்வாமி எம்பெருமானார்.
இப்படி பிரதானம் ஜகத் காரணம் அல்ல, பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்பதை சொல்லி
ஏதேன யோக ப்ரத்யுக்த :
ஏதேன சிஷ்டா அபரிக்கிரஹா :
ஏதேன ஸர்வ வியாக்யாதா வியாக்யாத – என்று 3 இடங்களில் ஏதேன ஏதேன என்று எந்த வகையில்
வேதங்களில் ஏற்கப்படாத சாங்கியர்களுடைய ஜகத் காரண வாதங்கள் தள்ளப் பட்டனவோ -அதே வகையில் வேத விருத்தமான
கணாபருடைய வைசேஷிக பக்ஷம்
தார்கிகர்களான கௌதம பக்ஷம்
க்ஷபணர்களான ஜைன பக்ஷம்
பௌத்தர்களான பிக்ஷு பக்ஷம்
ஆகியோர்களுடைய வாதங்களும் தள்ளப் பட்டன.

சரீராத்மத்தைப் பிடித்துக் கொண்டு சேதானாசேதன தத்துவாராவருகிற சுக துக்கங்கள் சரீரியான பிரஹ்மத்துக்கும் வருமே என்ன,
அதற்கு சரீரம் காரணம் ஆகாது. கர்மம் தான் காரணம் அகர்ம வஸ்யனான பிரஹ்மத்துக்கு
ஸ்வேச்சா கிருஹீத அபிமத உரு தேஹ: என்பதாலே சுக துக்கங்கள் தட்டுவதில்லை.
நிக்ரானுக்கிரக சம்பந்தமே உள்ளது என்பதாக
போக்த்ராபத்தே: அதிகாரணத்தில் நிவர்த்தி பண்ணித்து.

இப்படி சாங்கியன் தலை மடிய,
வைசேஷிகன் காரணத்தைக் காட்டிலும் காரியம் வேறுதான் என்பதை நாம் காட்டுவோம் என்று
ததனன்யத்வம் ஆரம்பணாதிகரணத்துக்கு விஷயம்.
பர்த்ரு பிரபஞ்சருடைய ஸ்வரூப பரிணாம வாதம்
சங்கரருடைய மாயா வாதம்
பாஸ்கரருடைய உபாதி வாதம்
பாமதிக்காரர் , யாதவ பிரகாசர் இவர்களுடைய ஜீவாத்வைத வாதம்
இவைகளைத் தள்ளி காரணாது காரியம் அந்யதேவ என்று புறப்பட்டான்.

நம்முடைய பக்ஷத்தில் காரண காரியம் ஒன்றே என்ற போது, ஜீவனும்-பிரஹ்மமும் ஒன்றே என்று தேறாதோ?
ஜீவனுக்கான துக்க மோகங்கள் பிரஹ்மத்துக்கும் ஆகாதோ?
யாராவது கூரை தலைமேல் விழும்படியாக அல்லது தனக்குத்தான் நெருப்பு பாக சாலையில் வைப்பானா
அதுவுமன்றி தான் அடித்து செல்லும்படியான பிரவாகத்தை சூழ்த்துக் கொள்வானோ? என்பதாக வாதிக்க
சரீராத்ம பாவத்தால் ஒன்று என்கிறதே ஒழிய ஸ்வரூபத்தால் திரவ்யமே ஒன்று என்பதில்லை
பிரஹ்மம் வேறு தான். ஜீவன் வேறு தான்.
ஜீவன் அவித்யா கர்ம பந்தித்தன்தான். பகவத் பிரசாதத்தாலேயே அவித்யை விலக்கப்பெற்று அவனுக்கு மோக்ஷம்.
தர்சனம் பேத ஏவச.
பிரஹ்மம் தனக்குத் தானே அதிக்ருதம் பண்ணிக்கொள்கிற பிரசங்கமே இல்லை என்று
அதிகம் து பேத நிர்தேசாத் என்ற சூத்ரதால் விளக்கப் பட்டது.

முதல் தனி வித்தேயோ – என்கிற ஆழ்வார் ஸ்ரீஸூக்தி படிக்கு பிரஹ்மம் த்ரிவித காரணமாயும் இருக்கிறது என்பதை நிராகரித்து,
லோகத்தில் குயவனோ, நெய்பவனோ தண்ட, சக்கரம் , உண்டை, பாவு ஸககாரம் இல்லாமல் கேவலம் சங்கல்பத்தாலே
கட, படாதிகளை நிர்மாணிக்கப் போகாது என்பதால், பிரஹ்மம் உபாதான மில்லாமல் சங்கல்பத்தாலேயே ஜகத் வியாபாரம் செய்யப் போகாது
ஏகமேவ அதுவிதீயம் என்று சககாரி உபகரண அபாவம் சொல்லப்பட்டதாலே
பிரஹ்மம் ஜகத்துக்கு காரணமாக இருக்க முடியாது பூர்வ பக்ஷ ஆக்ஷேபம் பண்ணினான் வைசேஷிகன்.

இரவில் வைத்த பால் தன்னாலேயே காலையில் தயிராக மாறிப் போலே,
பனிப்பாறை தன்னாலேயே நீர்ப்பண்டமாவது போலே, பிரஹ்மம் உபகரணம் இல்லாமல் சங்கல்பத்தாலேயே
ஸ்ருஷ்டியைக் செய்கிறது என்பதாக உபஸம்ஹார தர்சநாத் என்ற சூத்திரத்தில் சித்தாந்தமாக காட்டினார் எம்பெருமானார்.

———–

சூத் . 2-1-26 :: க்ருத்ஸ்ந பிரசக்தி :நிரவயவத்வ சப்தகோப: வா ::

க்ஷீரவத்தி என்று ஸாவயவ திருஷ்டாந்தத்தை சொன்னபடியால்,
பிரஹ்மம் ஸாவயவமா ? நிரவயவமா ? ஸாம்சமா? நிரம்சமா? என்கிற கேள்வி எழ அத்தை பரிகரிக்கிறது
க்ருத்ஸ்ந பிரஸக்தி அதிகாரணத்தில்.
ஸாவயவம் என்றால் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி பாசுரத்தில் சொன்னபடி பகவான் பரமபதத்தின்றும்
நப்பின்னையைப் புணர கீழ் இறங்கிய காலத்தில் மேல வைகுந்தத்தில் இல்லை என்பதும்;
நிரவயவம் என்றால் ஸ்ருஷ்டிக்குப் பின் அவன் இல்லை – காரிய வஸ்து உண்டான பின் காரண வஸ்து இல்லை என்பதான நிலை வருமே
அத்தால் பிரஹ்ம காரணவாத்ததை விட்டு ஜகத் உபாதான காரணம் பரமாணு என்கிற எங்களுடைய ஸம்பிரதாயத்துக்கு
வாருங்கோள் என்பதாக உத்கட ஸ்திதிக்கு தள்ளிவிட்டான் வேதாந்திகளான நம்மை.
அதற்கு வியாசர் காட்டும் பிரத்யுத்தரம்

—————-

சூத். 2-1-27 ::ஸ்ருதேஸ்து ஸப்த மூலத்வாத் —

பிரஹ்மம் நிரவயவம்தான்–பூர்வ பக்ஷ தோஷங்கள் பிரஹ்மத்துக்கு தட்டுவதில்லை, ஸ்ருதியாலே.
பிரஹ்மம் அவயவமற்றது; விசித்திர சக்தி கொண்டது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதால், அதனை மறுப்பதற்கில்லை.
பர பிரஹ்மத்தையே ஒத்துக்கொள்ளாத சாங்கியர்களுக்கோ, அனுமானிக்க பிரஹ்மவாதிகளான உங்களுக்கோ
அது ஒப்புக்கொள்ளும்படி இல்லாமல் போகலாம். பரம வைதிகர்களான எங்களுக்கு வேதமே பிரமாணம்.
வேதத்தில் பிரஹ்மம் நிரவயவம் என்பதும், அந்த பிரஹ்மமே ஜகத் காரணம் என்றும் சொல்லப்பட்டுள்ளதாலே
விரோதிப்பதில்லை என்பது சித்தாந்தம்.
வேதம் நித்ய, நிர்துஷ்ட, ஸம்சய , விபரியாதி தோஷங்கள் இல்லையாய்க் கொண்டு, யதா வியவஸ்திதம் கொள்ள வேண்டியது.
ஸ்ருத்யைவ ஸமதிகம்யமான பிரஹ்மத்திடத்தில் தோஷங்களுக்கு பிரசக்தியே இல்லை. என்றாலும்
இனி வேத பிராமாண்யத்தைக் கொண்டே பிரமாணங்களை காட்டுகிறோம் என்று பலவான ஸ்ருதி வாக்கியங்களை உதாகரிகலாவது. .

திருப்பாற்கடலில் சயனித்திருக்கிற எம் பெருமான் நீலமேனி தான் நீல கடல் போலே காட்சி அளித்தாலும்,
கரையில் நின்றவன் கண்ணுக்கு, எப்படி ரத்நாகரமான கடலில் உள்ள முத்தும் மணியும் புலப்படுவதில்லையோ அது போல
அவனுடைய குணங்களாகிற ரத்னங்கள் பூர்வாச்சார்ய ஸ்ரீஸூக்திகள் கொண்டல்லது புலப்படுவதில்லை.

இந்த க்ருத்ஸன பிரஸக்தி அதிகாரணத்தில்
பிரதான காரண வாதியான சங்கியன் தான் முக்கிய பூர்வ பக்ஷி.
அவனோடு சேர்ந்து பரமாணு காரண வாதியான வைசேஷிகனும் உள்ளான்.

சாங்கியனுக்கும், நமக்கும் உள்ள வித்யாசம் தான் என்ன?
த்ரிகுணாத்மிகா மூல ப்ரக்ருதி ஜகத் காரணம் என்பது அவர்கள் பக்ஷம்.
நாமும்தான் –மாயாம் து பிரகிருதம் வித்தி, மாயினந்து மஹேஸ்வரம் – என்று த்ரிகுணவதியான பிரக்ருதியைக் கொண்டே
பகவான் ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான் என்கிறோம்.
த்ரிகுணவதி என்றால் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களை உடையது என்று பொருள்.
த்ரிகுணாதமிகா என்றால் , குணா -குணி அபேதத்தை சொல்லும்
அஸ்மாந் மாயி ஸ்ருஜதே என்று .ஈஸ்வர அதிஷ்டான மூலப் பிரக்ருதியைச் சொல்லுகிறோம்.
அவர்கள் த்ரிகுண ஸ்வரூபமாகவே இருக்கிற பிரக்ருதி,, ஈஸ்வரன் அதிஷ்டிக்காமலே ஸ்ருஷ்டிக்கிறது என்கிறார்கள்.

இப்போது இங்கு உள்ள விவாதம் பிரஹ்மம் ஸாவயவமா? நிரவயவமா? ஸாம்சமா ? நிரம்ஸமா ? என்பது.
ஸாவயவம் என்றால் நிஷ்களங்கம், நிரஞ்சனம், பரமம் என்கிற நிரவயவ, நிராகாரதத்வம் பிரஹ்மம் என்பதற்கு விரோதிக்கிறது.
ஸாவயவம் என்றால் விபுத்வத்துக்கும் விரோதிக்கிறது என்ன
ஆநுமானிக பிரஹ்மம் போலேயாவோ – என்ற வகையில் .
ஸ்ருத்யைக அநதிகம்யன் ஈஸ்வரன், ஸகலேதர விசஜாதியன்.ஸர்வசக்தன் என்பதற்கு பல ஸ்ருதி வாக்கியங்களை

சூத். 2-1-28 :: ஆத்மநி ச ஏவம் விசித்ராஸ்ச ஹி —

என்கிற சூத்திரத்தாலே காட்டுகிறார். –அக்நிக்கு உஷ்ணம், நீருக்கு குளிர்த்தி என்று ஒவ்வொரு பொருளிலும்
அதற்கே உரிய சக்தி இருப்பதற்கான காரணம் தர்க்க வாத விவாதங்களுக்கு அப்பாற்பட்டது.
அந்த பொருளைக் குறித்து உரைக்கவல்ல வேதமே இதற்கு பிரமாணம்.
ஜீவாத்மாவிடமும் இதுபோன்றே அசேதனத்தில் இல்லாத விசித்திர சக்தி உள்ளது.
சித்தசித் விலக்ஷண ஈஸ்வரனிடத்திலும் மற்றோன்றில் இல்லாத ஸ்ருஷ்டி முதலான சக்திகள் உள்ளன – என்பதை
ஸ்ரீ விஷ்ணுபுராண ஸ்லோகம் 1-3-2,3 களில் பராசரர் மைத்ரேயருக்கு பிரச்னோத்தரமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

முகம் தாமரையைப் போல. நிலாவைப் போல என்றால் திருஷ்டாந்தத்தில் எவ்வளவு அம்சம் திராஷ்டாந்திக்கத்திலே பொருந்துமோ
அவ்வளவே கொள்ள அமையும். பிராகிருத விஷயத்தில் இப்படியாக, பிரஹ்மத்தின் விஷயத்தில், சாதாரணமாக நாம் காணும்
பொருள்களை வைத்து இதில் சொல்லப்படும் –
இவ்விடத்தில் க்ஷீரவது என்பதிலான – ஆக்ஷேபங்கள் பிரஹ்மத்தின் விஷயத்தில் பொருந்தாது என்பது கருத்து.

சூத். 2-1-29 :: ஸ்வபக்ஷ தோஷாத் ச —

ஜகத் காரணியான மூலப் பிரக்ருதி நிரவயவம் என்கிற சாங்கியர்களான தங்கள் பக்ஷத்துக்குத் தான் இந்த தோஷங்கள் உள்ளன
என்று அவர்களுக்கே திருகு பாணம் ஆக்கி இட்டார் இந்த சூத்ரத்தாலே வியாசர் .
அவர்கள் சித்தாந்தம் – ஸத்வ, ரஜஸ் , தமஸ் சம நிலையில் இருந்தால் பிரளயம் என்றும்,
சமநிலை மாறி ஏற்றக்குறைவால் சிருஷ்டி நடக்கிறது என்றும் சொல்லப் படுகிறது.
முக்குணங்களும் ஒன்றோடு ஒன்று கலக்கும் போது , ஸ்ருஷ்டி தாரதம்யத்தாலே, ஒன்று தீர்ந்து, மற்றது மிக்கும்படியான நிலை ஏற்படலாம் –
எப்படி குமார சம்பவத்தில் பார்வதி தேவியை உத்பன்னம் பண்ணுகிற சமயத்தில்,
லாவண்ய, யௌவன, ஸ்ருங்காராதிகள் கால், ஜாநுவளவாக தீர்ந்து போக மற்ற அவயவங்களை படைக்க,
இன்னும் எங்கே அவை என்று தேடப் புறப்பட்டாப்போலே ஸாவயவ தோஷம் சாங்கிய பக்ஷத்திலே அநிவாரியமாகவன்றோ உள்ளது.

ஒன்றொன்றே – ஸத்வம் தனியாக காரியம் ஆகிறது.
ரஜஸ் தனியாக காரியம் ஆகிறது. தமஸ் தனியாக – காரியம் ஆகிறது என்னு சொல்வதானால்,
த்ரிகுணாத்மகம் சம்சாரம் என்பதை விரோதிக்கிறது–
அதாவது ஸத்வ, ரஜஸ் , தமஸ் குணாத்மகமான பிரதானம் விபு – நிரவயவம் என்றால்
ஸ்ருஷ்டி – ஸ்தூல வஸ்து பிராரம்பமாக பிரசித்தி இல்லை.
சாவயவம் என்றால் பிரகிருதி காரியமான 24 தத்துவங்களுக்கு மேற்பட , காரியமாகாத மூலப் பிரகிருதி என்று தனித்து இருக்க
தத்துவங்கள் எண்ணிக்கையில் 25 (அ ) 27 என்கிற குழப்பம் வரும்.
இங்கு இன்னுமொரு கேள்வி.
ஸத்வ, ரஜஸ் , தமஸ் சமூகம் பிரதானம் என்பதா? ஸத்வ, ரஜஸ் , தமஸ் சேர்ந்தத்தாலே பிரதானம் உண்டாயித்தா?
இரண்டாவது கருத்தால், பிரதான காரணவாதம் நிற்காது. காரணம் அதற்கும் காரணம் முக்குணம்.
முதல் கருத்தான முக்குண சமூகம் பிரதானம் என்றால் தேச அபரிச்சேத வஸ்துவால் ஸ்தூல காரிய பொருளை உருவாக்க இயலாது.
.
இதே காரணத்தால், பரமாணுவத்திகள் விஷயத்திலும் நிரவயவ நிரம்ஸ பரமாணுக்கள் ஸ்தூலமான
காரிய வஸ்துவை உண்டாக்கும் திறன் அற்றது என்றும் தேறுகிறது.

நாம் சொல்லுகிற பிரஹ்ம காரிய வாதத்தில், பிரஹ்மத்துக்கு தோஷம் இல்லை
சாஸ்திர பிரமாணத்தை வைத்துக் கொண்டு கூறுவதால். – என்பது சித்தாந்தம்.

————

சூத் . 2-1-30 :: ஸர்வோ பேதாச தத் தர்சநாத் —

கீழே சொன்ன ஸகல வஸ்து விஜாதீயம் பிரஹ்ம ஸர்வ சக்திமத்வம்
இரண்டுக்கும் பிரமாணங்களை எடுத்துக் காட்டுகிறார் இத்தால்.
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே ஸ்வாபாவிகீ க்ஞான பல க்ரியா ச – ச்வே .உபநிஷத்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோக : விஜிகத்ஸ : அபிபாஸ : – சாந்தோ. உபநிஷத்
இந்த 6 குணங்கள் ஜீவாத்மாவுக்கும் முக்த தசையில் சொல்லப் பட்டாலும், பிரஹ்மத்துக்கு அவை எப்போதுமே மழுங்காத ஒன்று.
ஸத்ய காம: ஸத்ய ஸங்கல்ப – – சாந்தோ. உபநிஷத்
மநோமய ப்ராண சரீரோ பாரூப—
ஸர்வமிதம் அப்யாத்த : அவாகீ அநாதர : – சாந்தோ. உபநிஷத்
இப்புடைகளால், பிரஹ்மம் அனைத்து வஸ்த்துக்களையும் விட வேறானதும் ,
தன்னைப் போல மற்ற எதற்கும் இல்லாததான உயர் பண்புகளைக் கொண்டது ஆகும் என்று சுருதிகள் பேசுகின்றனவே.

இதற்கு மேலும், ஒரு ஆக்ஷேபம் எழுபப்படுகிறது.. அது என்னவென்றால்

——————-

சூத். 2-1-31 :: விகரணத்வாத் ந இதி சேத் தத் உக்தம் —

கீழ் 24 வது சூத்ரத்தில் .- உபஸம்ஹார தர்சாநாத் – என்கிற அதிகரணத்தில் பிரஹ்மத்துக்கு ஸத்ய சங்கல்பத்துவம் இல்லை
அதாவது ஞான, சக்திகள் இருக்கலாம், சங்கல்பத்தாலேயே பண்ணுகிற ஜகத்வியாபாரம் கிடையாது என்பதை அங்கு பரிகரித்தார்.
இங்கு சிருஷ்டியை செய்ய அவசியமான
ந தஸ்ய கார்யம் கரணம் தத் வித்யதே – என்று உபநிஷத் சொல்லி இருக்கிறபடியால்
தேக இந்திரிய கரண்ங்கள் பிரஹ்மத்துக்கு கிடையாதே. அப்படிப்பட்ட பிரஹ்மம் நிமித்த காரணம் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்
என்கிற பூர்பக்ஷ ஆக்ஷேபத்துக்கு , பதில் முன்பே – கீழ் 24வது சூத்திரத்திலேயே உரைக்கப்பட்டது என்கிறார்.

கீழேயே பதில் சொல்லப்பட்டது என்றால். புநருக்தி தோஷம் வாராதோ ? என்னில்
அங்கு கழிக்கப்பட்ட அம்சம் சத்ய சங்கல்பத்தைப் பற்றி.
இங்கு கழிக்கிற அம்சம் விக்கிரக விஷயமான ஆக்ஷேபம். ஆகவே இதில் புநருத்தி தோஷம் ஏதுமில்லை.

கர்ம வஸ்யர்களான நமக்குப் போல் பாஞ்ச பௌதிகமான சரீரம் பகவானுக்கு இல்லையே ஒழிய,
பஞ்ச உபநிஷத் மயமான அபிராக்ருத திவ்விய மங்கள விக்ரகம் உண்டு என்பதே வைதிக சித்தாந்தம்.
இத்தால் நிர்விகார ஸ்ருதிக்கும் , காரண ஸ்ருதிக்கும் பரஸ்பரம் விரோதம் வரக் கூடாதாகில்–
அதற்கு சரீராத்மா பாவத்தை சொல்லுகிற விசிஷ்டாத்வைத சித்தாந்தமே ஏற்புடைத்தாகும்.

விசிஷ்ட பிரஹ்மமே ஸ்ருஷ்டி செய்ய முடியும் என்பதை உணர்ந்து,
பிரஹ்மாக்ஞான வாதியான சங்கரர் பிரஹ்மத்தை மாயா விசிஷ்ட பிரஹ்மம் என்றார்.
அடுத்து வந்த பாஸ்கரர் அந்த பிரஹ்மத்தை உபாதி விசிஷ்ட பிரஹ்மம் என்கிறார்.
உபாதியாவது தேகேந்திரிய மனப்ராண சம்பந்தம் என்றே கொள்ளத்தக்கது.
இதில் நாம் சொல்லக் கூடியதும் என்னவென்றால் பிரக்ருதியாகிற உபாதி பிரளயத்தில் ஸூக்ஷ்ம சிதசித்தாக பிரஹ்மத்தோடு
ஒட்டிக் கிடக்க, சிருஷ்டியில் அவை காரண சரீரமான திரிமூர்த்தி சரீரம், அதன் பிறகு ஆகாசம் இவை அனைத்தும்
கர்ம நிபந்தனமாக படைக்கப்படுகிற காரணத்தால், பிரஹ்மத்துக்கான சரீரம் அபிராக்ருதம். கர்மம் காரணம் அன்று.
பிரஹ்மத்துக்கு கரணங்கள் இல்லை என்றாலும், அவனுடைய ஸர்வ சக்திமத்வதுக்குச் சேர
ஸ்ருஷ்டியை செய்து போர இயலும் என்பதே சித்தாந்தம்.

இந்த க்ருஸ்த்ந பிரஸக்தி அதிகாரணத்தில் சொல்லப்பட்ட விஷயம் என்ன வென்றால்
பிரஹ்மம் நிரவயவம், நிரம்சம் என்பதே.
ஸாம்ச மாகாத போது ஜகத் ஸ்ருஷ்டி ஆகாதே என்றால், பிரஹ்மத்துக்கு விசித்திரமான சக்தி உண்டு.
அது கொண்டு படைக்கிறது என்று பார்த்தோம்.

ஸ்வாமி ஆளவந்தார் கஸ்ஸ்ரீ : ஸ்ரிய 😕 பரம ஸத்வ ஸமாச்ரயே க 😕 என்கிற ஸ்தோத்தர ரத்னம் 12 ஸ்லோகத்தில்
கஸ்யாயுதாயுத ஸதைக கலாம்ச காம்ஸே –விஸ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்? –என்பதாக பிரஹ்மம் ஸாம்சம் என்றே பேசுகிறார்.

ஆரம்பணாதிகரணத்தில் என்ன சொல்லிற்று ?
ததனனயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய : என்பதாய் காரணப் பொருளான பிரஹ்மத்துக்கும் காரியப் பொருளான ஜகத்துக்கும்
வேற்றுமை இல்லை என்பதால், பிரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் பட்டது.

இதர வ்யபதேசாதிகரணத்தில் ,
காரிய காரணங்கள் ஒன்றே என்று சொன்னபடியால், ஜீவனும் பிராமமும் ஒன்றே என்று ஆகிவிடும்
அப்போது ஜீவனுக்குண்டான தோஷங்கள் எல்லாம் பர பிரஹ்மத்துக்கும் உண்டாகும். பிரஹ்மம் தனக்குத் தான் அஹிதத்தை
உண்டு பண்ணிக் கொண்டதாகும் என்பதாக. அதை நிராகரிக்க
அதிகம் து பேத நிர்தேஸாத் – ஜீவனும் பிரஹ்மமும் வேறு வேறுதான் என்றதாயிற்று.

தற்போது க்ருத்ஸந பிரஸ்நத்தில் என்ன வந்தது?
பிரஹ்மம் ஸாம்சமா? நிரம்ஸமா ? என்பதற்கு நிரம்சம்தான் என்று காட்டப்பட்டது.

இவைகளில், இதுவா – அதுவா ? எது ? என்று கேட்டால்
பிரஹ்மம் விசிஷ்ட வஸ்து ஏகம் தான்.
பிரஹ்மத்துடைய ஸ்வரூபம் விபுதான். நிரவயவம் தான்.
ஆனாலும், அந்த பிரஹ்மம் நிர்விசேஷம் கிடையாது. ஸவிசேஷம்தான்.
அவனுடைய திவ்யாத்மா ஸ்வரூபத்திலும் பிராட்டிக்கு சாந்நித்யம் உண்டு.
அவள் பிரக்ருதிக்கு அபிமாநினி தேவதை என்பதால் சேதநாசேதனங்கள் விசிஷ்ட பிரஹ்ம ஏகதேசமாகக் கடவது.
ஞானா ஆநந்தங்கள் ஸ்வரூப ஏகதேசம் என்றால் சேதனாசேதனங்கள் திவ்யமங்கள விக்ரக ஏகதேசம்.

ஆக சித்தசித் விசிஷ்டம் ஹி பிரஹ்மண ஸ்வரூபம் . எதுபோல என்றால்
ஜாதி-வியக்தி களுக்குண்டான அபிரதத் சித்த சம்பந்தம் போலே.
நீல விசிஷ்ட-உத்பலத்திலான அபிரதத் சித்த ரூபாதிகளைப் போலே.
சரீர – சரீரி சம்பந்தம் போல பேதம் முக்கியமாக இருக்க, அப்பிரதத்வமாவது
நிரவயவத்வம் பாதியாத விசித்திர சக்தி யோகத்தோடே கூடிய பிரஹ்மத்துக்கு இவை அம்சமாகக் கடவது என்று கொள்க.

திலேவ தைலம் ததி மேய ஸர்பி : – வித்தினுள் எண்ணை போல் , பாலினுள் நெய்யேபோல் ஈஸா வாஸ்யம் ஜகத்து .

————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —2-1-8 : உபாஸம்ஹரண தர்சன அதிகரணம் –ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

2-1-8 : உபாஸம்ஹரண தர்சன அதிகரணம் –

சூத்ரம் 2-1-24 : உபஸம்ஹார தர்சநாத் ந
இதி சேத் , ந க்ஷீரவத் ஹி —

ஸது ஏவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் – என்கிற உபநிஷத் வாக்கியம் கொண்டு
சககாரி காரண ஸாமக்ரி – உபஸம்ஹார தர்சனம் – இருந்ததாக தெரியவில்லை–
ஆனால் லோகத்தில், சஹகாரி நிரபேக்ஷயா வஸ்து நிர்மாணம் செய்யப் போகாதால், பிரஹ்மமும் சககாரி காரணம் இன்றி
ஸ்ருஷ்டிக்க முடியாததால், பிரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்பதாக பூர்வ பக்ஷம் –

முதல் தனி வித்தேயோ? முழு முதல் ஆதிக் கெல்லாம் என்று ஆழ்வார் வாக்கு.
முதல் – நிமித்த காரணம்.
தனி – சககாரி காரணம்.
வித்து – உபாதான காரணம் என்பதாக நம்பிள்ளை ஈடு.

ஜ்ஞானம், சக்தி இச்சை இருந்தாலும் நமக்கு ஒரு காரியத்தை செய்ய , குயவனுக்கு தண்ட சக்ரம் போலே ,
நெசவாளிக்கு பாவும் உண்டையும் போலே சஹகாரி காரண அபேக்ஷை உண்டு.
ஆனால் பகவான் சத்ய சங்கல்பம் ஆகையால், அவன் சங்கல்ப மாத்திரத்திலே ஜகத் ஸ்ருஷ்டி வியாபாரத்தை செய்யக் கடவன்.
அவனுக்கு அகில ஹேய பிரத்யநீக தானத்வம் போலே
ஸர்வ கர்த்ருத்வம், ஸர்வவித காரணத்வம் ஆகிய உபய லிங்க விசிஷ்டன் ஆவான்.
ஸஹகாரி உபஸம்ஹார லக்ஷணம் மேல் சொன்ன உபநிஷத் வாக்கியத்தில் இல்லை யாகையால்,
ஜகத்துக்கு பிரஹ்ம காரணம் மறுக்கப் படுகிறது முற்பாதி சூத்திரத்தில்.

இதி சேத் ந, க்ஷீரவத் ஹி –

யஸ் ஸ்ருதேர் உத்தரம் பாகம் – பூர்வ மீமாம்சைக்கு மேற்பட்டதான என்கிற பொருளில் கொள்ளாமல்,
உது + தர = அதைக் காட்டிலும் சிறந்ததான பகுதி – தெளியாத மறை நிலம் என்று ஸம்சய விபர்யயங்கள் கலசின
வேதாந்த வாக்கியங்கள் போல் அல்லாமல் – அர்த்தங்கள் நேரே புலப்படும் படியாக
தெளியச் சொன்ன பெருமை ஆழ்வார் பாடின திராவிட சம்ஹத்தைக்கு உண்டு. அப்படி என்ன ஆழ்வார் தம்முடைய
திருவாய்மொழி கிரந்தத்தில் சொல்லி இருக்கிறார் என்றால்
1. உபகிரமோ உபஸம்ஹாரௌ – முதலிலும் முடிவிலும் சொல்லப்பட்ட விஷயம்
2. அப்யாஸ – அடுத்தடுத்து சொல்லப்பட்ட விஷயம்
3. அபூர்வதா பலம் – வேறு எந்த கிரந்தங்களிலும் சொல்லப் படாததான பலம் விஷயம்
4. அர்த்தவாதோஸ் ச ஹேது தாத்பர்ய நிர்ணயம் – இன்னார் இப்படிச் செய்ய இன்ன பலத்தைப் பெற்றார் என்கிற
கதா புரஸ்சரமாய் சொல்லப்பட்ட விஷயம் அது அந்த கிரந்த தாத்பர்யம் ஆகும்.
அந்த வகையில் ஆழ்வார் பாடிய திருவாய்மொழிக்கு தாத்பர்யம் என்ன என்றால்

வேதாந்தம் கஸ்ச தியேய: – இன்ன பலம் வேண்டும் என்றால் இன்னாரை தியானம் பண்ண வேண்டும் –
நமக்கு இந்த சம்சாரமாகிற அளறு நீங்கி துக்கம் கழிந்து நிரதிசய ஆனந்தமாகிற மஹதானந்தத்தைப்
பெற என்ன செய்ய வேண்டும் என்றால்
காரணம்து தியேய : – கார்யமான எல்லா வஸ்துக்களையும் விட்டு, மூல காரணமான வஸ்து எதுவோ
அதையே தியானம் பண்ண வேண்டும்.

வேதாந்தத்தில் அபர பிரஹ்ம வித்தை பலவும் உள்ளன.
நாமாதி பிராண பர்யந்தம் எதை வேண்டுமானாலும் உபாசனம் பண்ணலாம். அவைகளுக்கு பலம் வேறு வேறாய்,
உயர்ந்ததான மோக்ஷ பலத்துக்கு
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே என்று யாரிடத்தில் இருந்து இந்த ஜகத்து உண்டாகி, ரக்ஷிக்கப் பட்டு
லயத்தை அடைகிறதோ அந்த பர பிரஹ்மத்தைத் தான் தியானம் பண்ணக் கடவது.
என்பதாக முதல் அத்யாயம் முதல் நான்கு சூத்ரங்களால் காட்டப் பட்டன.

அந்த காரணம் எத்தனை விதமாக உள்ளன என்றால்
உபாதான காரணம்
நிமித்த காரணம்
ஸககாரி காரணம்
என்பதாக த்ரிவித காரணமாகவும் அந்த பிரஹ்மமே இருக்கின்றது என்று சொல்ல

இந்த இந்த ஸ்ருதி வாக்கியங்கள் – பிரக்ருதியாய் இருக்கலாமே; ஜீவாத்மாவாக இருக்கலாமே அல்லது
ஒரு விசேஷமான வியக்தி ஜீவாத்மாவாக இருக்கலாமே – அதற்கு பரப்ரஹ்மமே என்று எப்படி அர்த்தம் சொல்வது?
என்று விப்ரதிபத்தி பண்ண – முதல் அத்யாயத்தில் மற்ற பாதங்களில்
பிரஹ்மமே காரணம்
பிரஹ்மம் ஒன்றே காரணம்
பிரஹ்மத்தைத் தவிர்ந்த மற்ற எதுவும் காரணம் ஆக முடியாது என்பதாக பிரஹ்மத்துக்கு மட்டுமே
ஜகத் காரணத்வம் பொருந்தும் என்பதாக சமன்வயப் படுத்தி காட்டினார் வியாசர்.

2வது அத்யாயமான அவிரோதாத்யாயத்தில்
பிரஹ்ம ஜகத் காரணத்வத்துக்கு எத்தனை விதமான விரோதம் வந்தாலும் அதை அழித்து கழித்துக் காட்டுகிறார் இதில்.
ஸ்மிருதி பாதம், தர்க பாதம் இவை இரண்டும் சேர ஒரு பேடிகா விபாகம்.
3-4வது பாதங்களான, வியத்பிராண பாதங்கள் இரண்டும் சேர்த்து, ஒரு பேடிகா விபாகம்.
முதல் ஸ்மிருதி பாதத்தில் 10 அதிகரணங்கள் .
அதில் இப்போது 8வது அதிகரணமாகிற உபஸம்ஹாரா தர்சநாதிகாரணம்

————–

சூத்ரம் : 2-1-24 :: உபஸம்ஹார தர்ஸநாத் ந இதி சேத் ந க்ஷீரவத்திஹி ::

ரிஷிம் ஜூஷாமஹே என்கிற ஸ்லோகத்தில் சொன்னபடி பகவான்தான் முதல் காரணம்.
அவனே ஸர்வ காரணம். நிஷ்காரணமும் அவனே.
ஸ்வேதர ஸமஸ்த, பிராட்டி உட்பட பிபீலிகா பர்யந்தம், அசேதனமுட்பட்ட அனைத்துக்கும் அவன் ஒருத்தனே தான் காரணம்.
அவனின் வேறுபட்ட காரணம் எதுவும் கிடையாது. என்? அவனும் காரணம். இன்னொன்றும் காரணம் என்னலாகாதோ?
கிடையவே கிடையாது. என்? இவன் ஒருவிதமான காரணம். மற்றது மற்ற விதமான காரணமாகக் கூடாதோ?
பானைக்கு உபாதான காரணம் களிமண். நிமித்த காரணம் குயவன்.
அதுபோல் ஜகத்துக்கு ஸர்வ சக்தி, ஸர்வஜ்ஞனான பகவான் நிமித்த காரணம்
பிரகிருதி உபாதானகாரணம் என்று ஆக்கக் கூடாது? என்றால் இல்லவே இல்லை.

உபஸம்ஹாரம் என்றால்
எல்லாவற்றையும் தன் அருகில் சேர்த்துக் கொள்ளுதல் .
குயவனுக்கு தண்ட சக்ரம் போலே, பிரஹ்மத்துக்கு சககாரி தானே என்பது எங்கனே ? என்னில்
கேவல பிரஹ்மம் ஜகத் காரணம் ஆக முடியாது. ஏதோ ஒரு பொருளோடு சேர்ந்து இருந்தால் தான் ஜகத் காரணமாக்க முடியும்.
அத்தை மாயா விசிஷ்ட பிரஹ்மம் என்றார் சங்கரர். அந்த மாயைதான் அவித்தை என்றார் அவர்.
பர்த்திரு பிரபஞ்சரின் ஸ்வரூப பரிணாம வாதத்தை தள்ளி
அந்த உபாதி சத்யம் . அந்த சத்ய உபாதி விசிஷ்ட பிரஹ்மம் ஜகத் காரணம் என்றான் பாஸ்கரன்.
அவன் சொன்னதில் உள்ள ஸ்ருதி விபிரதிபத்தி கொண்டு, நாம் சொல்வது
தேதனாசேதன விசிஷ்ட பிரஹ்மம் ஜகத் காரணம் என்பதாக உபஸம்ஹாரம் பண்ணினோம்.
ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் காரண அவஸ்தை என்றும் ,
ஸ்தூல சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் காரிய அவஸ்தை என்றும் அறுதியிடலாவது.
உபாதான நிமித்த காரணத்தை சரீராத்மா பாவத்தை – கடக ஸ்ருதிகள் துணை கொண்டு – நிர்வகித்தாலும்,
சககாரி காரணமும் அவனே என்பது எப்படி சாத்தியம் ?

உலகத்தில் தண்ட சக்கரம் இல்லாமல் குயவன் பானை செய்வதோ
நெசவாளி பாவும், உண்டையும் இல்லாமல் துணி நெய்வதோ இல்லை. அங்கனாகில்,
பிரஹ்மத்துக்கு ஜ்ஞான சக்திகளால் நிமித்த காரணத்வமும், சரீராத்மா பாவத்தால் உபாதான காரணத்வமும் சித்தித்தாலும்,
ஏகோஹவை நாராயண ஆஸீத் – என்று வேத வாக்கியம் இருக்கிறபடியால்,
சககாரி இல்லாமல் ஜகத் ஸ்ருஷ்டி முடியாது என்பதாக லௌகீகத்தைக் காட்டி
பிரஹ்மம் ஜகத் காரணம் ஆக முடியாது என்பதாக முதல் அத்தியாயத்தில் சொன்ன
பிரஹ்ம காரண வாதத்தை ஸாங்க்யனும் மறுக்கிறான்.
வைசேஷிகனும் மறுக்கிறான்.
நையாயிகனும் மறுக்கிறான்.

ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர ஆஸீத், ஏகமேவ அதுவிதீயம் பிரஹ்ம – என்ற இதில் 2வது வஸ்துவே இல்லை என்றாகில் ,
உபஸம்ஹார வஸ்து எதுவாக சககாரி காரணம் பிரஹ்மமே என்று சொல்வது என்பது ஆக்ஷேபம்.

தானோர் முதலாய் தனி வித்தாய் தன்னில் மூவர் முதலாய (வளவேழ் உலகு பதிகம்) என்ற விடத்து
தானோர் வித்து
முதல் வித்து
தனி வித்து என்று
தருவித்துக் கொண்டு பார்த்தால்
வித்து = பீஜம் = ஹேது = த்ரிவித காரணமும் பகவானே என்கிறார்.
திருவாய்மொழி பிரபந்தம் முடிக்கும் போதும் – உபகிரம உபசம்ஹார விதிப்படி – முனியே நான்முகனே பதிகத்தில்
முதல் தனி வித்தேயோ முழுமூஉலகாதிக் கெல்லாம் என்று த்ரிவித பிரஹ்ம ஜகத் காரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார்.

இதி சேத் ந, க்ஷீரவத் ஹி –
லௌகீகத்தை வைத்து கேள்வி கேட்டவனுக்கு லௌகீகத்வத்தை வைத்தே பதில் சொல்கிறார் வியாசர்.
ய ஏவ லௌகிகா : த ஏவ வைதிகா : என்பதாக
பிரத்யக்ஷத்துக்கு விரோதமாக சாஸ்திரம் இருக்க முடியாது. அப்படி இருந்தால் சாஸ்திரத்தைக் கொண்டு
பரிஹரிக்க வேண்டியது என்பதாக சித்தாந்தம்.

அத்வைதிகளுக்கு இது பாதிக்காது. பல-துர்பல நியாயத்தைப் பார்த்து, சத்தியமான ஜகத்தையும், மாயை என்று தள்ளி விடுவர்.
பேதத்தை சொல்லும் பிரயக்ஷத்தை உதறி, அபேதத்தை சொல்லும் சாஸ்திரம் தான் பிரதானம் என்பர் .

சககாரி நிரபேக்ஷமாக லோகத்தில் காரணம் காரியத்தை உண்டாக்கும் , எப்படி பால் தயராக பரிணமிக்குமோ
அதுபோல என்கிறார் வியாசர்.
பிரஹ்மமும் சங்கல்பத்தாலேயே ஜகத் வியாபாரம் செய்வனாகில், சஹகாரி அபேக்ஷை அவனுக்கு இல்லை .
பால் உறையவிட தயிர் வேண்டியுள்ளதே என்றால், அது சுவைக்காகவே ஒழிய,
பால் தயிராக தோய ஆதஞ்சன (உறை) அபேக்ஷை இல்லை.
தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதும் சககாரி நிரபேக்ஷமாகவன்றோ என்று வேறு ஒரு உதாரணத்தையும் காட்டி
ஆஷேபத்தை பரிகரிக்கிறார் ஸ்வாமி ராமானுஜர்.

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் — அம்புவியோர்
இந்த தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்த செயலறிக்கைக் கா. — உபதேச.38–என்பதாக பொய்யிலாத மணவாள மாமுனி திருவாக்கு :

நாட்டி வைத்தார் – கரிஷ்யே என்கிற அர்த்தத்தில் தானே பிரவர்தித்தார் என்கிற யோசனையோடு
நாட்டு வித்தார் – நிஜந்தத்தில் காரயிஷ்யே என்கிற அர்த்தத்தில்
தர்சனக்காரர்களைக் கொண்டு செய்வித்தார் என்றும் கொள்ளவுமாம்.
அந்த செயல் என்று சொன்னது எம்பெருமானாருடைய எந்த செயல் பற்றி என்றால்
அதற்கு வேதாந்தவாசியாருடைய எதிராஜ ஸப்ததி ஸ்லோகத்தையே பார்க்க வேண்டும்.

மத்வ பரம்பரையில் வந்த வித்யாரண்யர் என்பவர் ஸ்வாமி தேசிகருடைய சமகாலத்தவர் ஆவார்.
அவர் ஸர்வ தரிசன ஸங்கிரஹம் என்கிற ஒரு கிரந்தத்தை செய்ததாக பார்க்கிறோம்.
அதில் வைதிக தர்சனத்தில் அக்ரகண்யமாக இருக்கிற விசிஷ்டாத்வைத தரிசனத்துக்கு எந்த ஸ்தானத்தை அளித்தார் என்றால்,
சாருவாக, பௌத்த, ஜைன மத வரிசையில் இத்தை சேர்த்துக் கொள்ளுங்கோள் என்பதாக காட்டியுள்ளார் .
இது குண மாத்சர்யத்தால் – எம்பெருமானாருடைய குணங்களைக் கொண்டு பொறாமையால் –
சொன்ன வார்த்தை என்றே எண்ண வேண்டும்.

பிரஹ்ம சூத்திரத்துக்கு ஏற்பட்ட பாஷ்யங்களில்
அத்யாச பாஷ்யம்
ஸம்பாவத பாஷ்யம்
பிரவாட பாஷ்யம்
என்று வகையறுத்து சொல்லுவர்.

அந்த விதத்தில், சங்கரருக்கு முற்பட இருந்த ஜரதத்வைதியான பர்த்ருபிரபஞ்சருடைய ஸ்வரூப பரிணாம வாத மதத்தை
சங்கரரே கண்டனம் செய்து வீழ்த்தி – யோகாசார மதத்தை இரவல் வாங்கியவராய் –
நூதன ஜகன் மித்யா வாதத்தை செய்து – இதுதான் வைதிக மதம் என்று பேசினார்.

அந்த அத்யாச பாஷ்யத்தில், இந்த உலகமெல்லாம் அத்தியாசத்தால் தான் உண்டாயிற்று .
அஹம் பிரஹ்மாஸ்மி என்கிற அபேத ஞானம் போய், பேத ஞானம் உண்டாயிற்று.
ஒன்றினுடைய தர்மம் மற்றோன்றில் தோன்றுவதாக சொல்லுவதுதான் அத்தியாசம் என்பது. இந்த அத்தியாசத்தால்தான்
உலகங்கள் எல்லாம் தோற்றுகின்றன என்பதே வேதாந்தத்தின் அர்த்தம் என்பதாக காட்டுகிறோம் என்று
பிரதிஞ்ஞை செய்து தன்னதேயான பாஷ்யத்தைத் தொடங்குகிறார் அவர்.

பிராசீனமான பர்த்ருபிரபஞ்சருடைய சிஷ்ய பரம்பரையில் வந்த பாஸ்கரர் என்பவர் அந்த ஜரதத்வைதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி –
ஏக தத்வ வாதமான சங்கர மதத்தை கண்டிக்கப் போந்தார். அப்படி செய்யப் புகுகையில், ஸ்வாபிப்ராயமாக செய்த
சங்கர பாஷ்ய போக்கை நிவர்த்திப்பிக்க வேண்டி தான் பாஷ்யம் செய்வதாக கூறிக் கொள்கிறார் இவரும்.

பரம் பிரஹ்மாஜ்ஞம் பிரம பரிஹதம் ஸம்சரதி தது – என்பது சங்கர மதம்.
அவித்யை ஆகிற உபாதியால் ஒன்றை பலதாக பிரமிக்கிறது பிரஹ்மம் என்பதான இதில் –
அவர் சொன்னது போல் உபாதி மாயை அன்று . அந்த உபாதி சத்யம் என்று பேசினார் பாஸ்கரர்.

எம்பெருமானார் என்ன செய்தார். இவர்களை எல்லாம் பராமர்ஷித்தாராய், நெல் செய்ய புல் தேயுமாபோலே ,
ஸ்வசித்தாந்தத்தை சொல்லப் போக பரசித்தாந்தம் தன்னடைவே இற்றுப் போகும் என்பதாக ,
டங்க, திரமிட குஹதேவ சித்தாந்தங்களைப் பிராகாசிப்பித்தார் என்பதே இவர் செய்த -”அந்த செயல்” ஆகும்.

கற்றினம் மேக்கப் பெற்றான்
காட்டுவாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பாவிகள் உங்களுக்கு ஏச்சுக்கொலோ ?–என்று ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்தது போல

எம்பெருமானார் தரிசனத்தை பிரச்சன்ன ஜைன நூதன யுக்தி என்பதாக பழிப்பாருக்கு, அத்தால் என்ன?
இதில் உள்ள குணங்களை பாருங்கோள்.
சங்கர,பாஸ்கர பாஷ்யங்களால் டங்க, திரமிட , குஹதேவ நிஜமத (நிஜமதி ) திரஸ்காரம்தான் ஆகி இருந்தது.
சாரதா சோக விநாசகாய நம: என்கிற நாமாவளிக்குச் சேர, இராமானுஜருடைய ஸ்ரீபாஷ்யம் தானே அவர்களுடைய
நிராதங்க பெருமூச்சுக்கு வழிகோலிற்று என்பதாக ஸ்வாமி தேசிகன் யதிராஜ சப்ததியில் சாதிக்கிறார்.

அப்படிப்பட்ட எம்பெருமானார் என்ன சொல்லிக் கொண்டு தன் பாஷ்யத்தை ஆரம்பித்தார் ?
பகவத் போதாயன விருத்தி கிரந்த – தன் மாதாநுசாரேண வியாக்யாஸந்தி என்றல்லவோ பேசினார்.
நிஜத்தில் இவர் டங்க , திரமிட , குஹாதேவ பரம்பரா அநுசித ஸூத்ர வியாக்யானம் பண்ணினாதாக சொல்லிக் கொண்டாலும்
அது பரபக்ஷ நோக்கிலேயாய், உண்மையில்
எப்படி கோதை நாச்சியார் நாராயணனே நமக்கே பறை என்று உபக்கிரமித்து,
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா என்று – நாட்டாருக்காக பறை என்று மறைத்துச் சொல்லி,
ஸ்வாபிப்ராயமாக கைங்கர்ய பிரார்த்தனையை அறுதி இட்டாளோ
அதுபோல கோதாகராஜரான ஸ்வாமியும் , ஸ கோஷ்டி நோக்கில் திருவாயமொழி ஆயிரமும், உபபிரம்மணங்களான 4 ஆயிரமும் சேர
பராங்குச, பரகால தர்சனத்தைக் கொண்டு ஸூத்ர வியாக்கியானம் நிஜத்தில் செய்தருளினார் என்பது தான்
மாமுனிகள் சாதித்த ”அந்த செயல் ” ஆகும்.
யோத்திராக்ஷிம் திராவிடீம் பிரஹ்ம ஸம்ஹிதாம் – என்கிற ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட
பிரஹ்ம ஸம்ஹிதைக்கு 7 ரிஷிகள்போலே திராவிட ஸம்ஹிதைக்கும் 7 பேர் சொல்லலாம் படியான தர்சனம் இராமானுஜ தர்சனம்.

த்ரிகாண்ட அமரத்தின் படி 7 வகைப் பட்ட ரிஷிகளாவர் :
மஹரிஷி – வியாசர்
பரம ரிஷி – வேதாப்யாஸா :
தேவ ரிஷி – கணாதயர்
பிரஹ்ம ரிஷி – விசிஷ்டாத்யா
ஸுஸுருதாப்ய – ஸுதர்சய :
ராஜரிஷிய : – ருசுப்பன்னாதய :
காண்ட ரிஷிப்ய : – ஜைமினி

ரிஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண திருஷ்ணா தத்வம் இவோதிதம் – இந்த வரிசையில்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக் கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
திருமாலை ஆண்டான்
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் –ஆகிய எழுவரைச் சொல்லலாம்.

உபஸம்ஹார தர்சநாத் என்று மற்றவர்கள் பிரஹ்ம சககாரி காரணத்தை திரஸ்கரித்து இருக்க,
ஆழ்வார் முதல் தனி வித்தோயோ என்று த்ரிவித காரணத்தை , பகவத் நிர்ஹேதுக கிருபையால் சாக்ஷத்கரித்துச் சொன்னதை
அடியொற்றி க்ஷீரவத் ஹி , ஜலதயா : என்கிற லௌகிக உதாரணத்துக்கு லௌகிக சமாதானம் அருளிச் செய்தார் கீழ்.
அடுத்து வைதிக சமாதானமாக, வேத வாக்கியத்தை இட்டுச் சொன்ன சூத்ரம்

—————

சூத். 2-1-25 :: தேவாதிவத் அபி லோகே ::

முப்பத்து முக்கோடி தேவர்கள் . அவர்களுக்கு என்று லோகங்கள். பரிவாரங்கள். கணாதிபர்கள்.
சங்கல்ப மாத்திரத்திலேயே ஸ்ருஷ்டியாதிகளைச் செய்கிற சக்தி சாமர்த்தியம் அவர்களுக்கு உண்டு என்பதாக
வேத பூர்வ காண்டத்தில் சொல்லபப் பட்டிருக்கிறதே.
வேத பிராமாண்யத்தை ஒத்துக் கொண்டிருக்கிற வைசேஷிக, சாங்கியர்களான உங்களுக்கு இது தெரியாதோ ?
தேவர்களுக்கே இப்படிப் பட்ட சக்தி சொல்லப் பட்டு இருக்கையில் ,
புருஷோத்தமனான பிரஹ்மத்துக்கு ஸஹகாரி விவர்ஜித்த சிருஷ்டியை செய்ய என்ன தடை?
இத்தால் பர பிரஹ்மத்துக்கு சத்ய காமத்வத்தோடு சத்ய சங்கல்பத்துவமும் உண்டு என்பது சொல்லவும் வேண்டுமோ?
சத்ய காமத்துவமாவது உபய விபூதி நாதத்வம் என்பதாக சாதிக்கிறார் எம்பெருமானார்.
இதற்கு பிரதீகம் – வளவேழ் உலகு முதலாய வானோர் இறை என்கிற ஆழ்வார் ஸ்ரீஸூக்தி.

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —2-1-7- -இதர வியபதேச அதிகரணம் –ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

சித்தத்துவிகம் –
முதல் 2 அத்யாயம் – பிரஹ்மமாகிற விஷயத்தை எடுத்து உரைப்பதால் இதை விஷயத்துவிகம் என்றும் சொல்லுவார்.
சமன்வயாத்யாயம் + அவிரோதாத்யாயம்

சாத்யத்துவிகம் –
பின் 2 அத்யாயம் – தத் விஷய ஞான ரூபமான சம்பந்தத்தால் அவனை அடைய வழியையையும்,
அடைந்த பின்பு பெறுகிற பேற்றையும் சொல்லுகிற விஷயீ துவிகம் என்பர் இதனை.
உபாஸனாத்தியாயம் + பலாத்யாயம் .

சாஸ்த்ர சங்கதி
காண்ட சங்கதி
பேடிகா சங்கதி
அத்யாய சங்கதி
பாத சங்கதி
அதிகரண சங்கதி
சூத்ர சங்கதி

சமன்வயாத்யாயத்தில் பிரஹ்மமே ஜகத் காரணம்தான் என்று
அயோக விவச்சேதம் , அந்யயோக விவச்சேதம் இரண்டாலும் காடாப்பட்டது.
உபநிஷத் வாக்கியங்கள் எல்லாம் பிரஹ்ம காரணத்தை மட்டும் சொல்வதில்லை.
எத்தனையோ காரணத்வ வாக்கியங்கள் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்ட பொருள்கள் ஜகத் காரணம் என்கின்றன.
என்றாலும், அப்பின்ன நிமித்தோபாதான காரணம் பிரஹ்மம் மட்டுமே என்று
காரணத்வத்தை பிரஹ்மத்தோடு பொருத்தி சமன்வயப் படுத்தி காட்டினார் முதல் அத்தியாயத்தில்.

இரண்டாவது அத்யாயமான அவிரோதாத்யாயத்தில் ஸ்தூணான் நிகனன் நியாயத்தாலே பிரதிபக்ஷ வாதங்களை
கேடயம் கொண்டு மறுத்தும், வாதி ஸ்வபக்ஷ தோஷங்களை தர்க பாதத்தில் கத்தி கொண்டு நிரசித்தும்
ஸ்வ பக்ஷத்தை ஸ்தாபிக்கிறார் பாஷ்யகாரர்.

2-1-7- : இதர வியபதேச அதிகரணம் :

ஆரம்பணாதிகாரணத்துக்கு விலக்ஷணத்வாதிகரணத்தோடே சங்கதி.
அங்கு காரண-காரியத்துக்கு ஸாலக்ஷிண்யம் இருக்க வேண்டுமே என்கிற ஆக்ஷேப பரிகாரம் பண்ணப் பட்டது.
நித்ய சுத்த முக்த தத்துவமான பிரஹ்மத்துக்கும், ஸதத பரிணாம, துக்க மயமான ஜகத்துக்குமான விலக்ஷிணதவம் கொண்டு
பிரஹ்ம காரண வாதத்தை மறுத்து பிரதானம்-புருஷன் என்கிற 2 தத்துவங்களை ஒத்துக்கொண்டு
பிரஹ்மத்தை அடியோடு மறுக்கிறான் சாங்கியன் —
அதற்கு வைலக்ஷிண்யம் வஸ்து பேதத்தாலன்று அவஸ்தா பேதத்தைக் கொண்டு என்பதாகாச் சொல்லி ,
ஸாலக்ஷிண்ய நியமம் பிரஹ்ம காரண வாதத்துக்கு வேண்டியது இல்லை என்பதாக அங்கு சொல்லப் பட்டது.
நையாயிக, வைசேஷிகர்கள், ஸ்ருதி சித்தமான பிரஹ்மத்தை ஏற்காது, அனுமான சித்த பிரஹ்மத்தை
கேவலம் நிமித்த காரணமாக ஒத்துக் கொள்கிறார்கள்.
வைதிகர்களில் துவைதிகளும் பிரஹ்ம உபாதான காரணத்தை மறுக்கின்றனர்.

————-

சூத்ரம் 2-1-21 : இதர விபத்தேஸாத் ஹிதாகாரணாதி தோஷ ப்ரஸக்தி :

இது பூர்வ பக்ஷ சூத்ரம். இந்த அதிகரணத்தில் மற்ற இரண்டும் சிந்தாந்த சூத்திரங்கள்.

முதல் சூத்ரத்தால், காரணமான பிரஹ்மத்துக்கும், காரியமான ஜகத்துக்கும் ததனந்யத்வம் சொல்லும் பக்ஷத்தில்
அபரிஹார்யமான தோஷம் தட்டும் என்கிறான் வைசேஷிகன்.
தத்வமஸி
அயமாத்மா பிரஹ்ம
அஹம் பிரஹ்மாஸ்மி
என்கிற அபேத ஸ்ருதிகளைக் கொண்டு ததனந்யத்வம் சரீராத்மா பாவத்தை வைத்து நாம் சொல்ல,
ஸ்வரூப ஐக்கியத்தை வைத்து அத்வைதிகள் சொல்கிறார்கள் என்கிற வித்யாசத்தைத் தவிர,
இரண்டு பேரும் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஜீவாத்மாவும் ஒன்றே என்று சொல்லப் போனால்
இரண்டு பக்கத்தாலும் கழுத்துக்கு சுருக்கு போட்டதாகிற தோஷம் வரும் என்கிறான்.
அநேந ஜீவேன ஆத்மநா அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி – என்று பிரஹ்மமே ஜீவ பாவத்தை அடைந்து ஜகத் வியாபாரத்தை
செய்கிறது என்று சொல்லப் போனால் பிரஹ்மத்துக்கு அஹித ப்ரஸக்தி தோஷம் தான் மிஞ்சும் எனது பூர்வ பக்ஷம்-

ஸர்வஜ்ஞ , ஸர்வ சக்தித்வம் உடைய பிரஹ்மம் பேத பாவ ஜகத்தை ஸ்ருஷ்டிக்காது, நித்ய விபூதி போல ஏன் ஸ்ருஷ்டிக்கவில்லை?
கர்மானுகுணமாக பேதாஸ்பதமான ஜகத் உண்டாயித்து என்றால்,
ஜீவனும் பிரஹ்மமும் வேறு வேறு என்கிற – காரியம் வேறு காரணம் வேறு என்கிற
எங்கள் பக்ஷத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதாக பூர்வ பக்ஷம்-

———–

சூத்ரம் 2-1-22 : அதிகம் து பேத நிர்தேசாத்.::

காரிய-காரணம் இரண்டும் ஒன்று என்று சொன்ன மாத்திரத்தாலே, பிரஹ்மமும்-ஜீவனும் ஒன்று என்பது நம்முடைய வாதம் இல்லை.
வியாசர்-ஆழ்வார்-இராமானுஜர் மதத்தவர் தத்வ த்ரய வாதிகளே ஒழிய ஏக தத்வ வாதிகள் அன்று –
ஜீவனோ தாபத்ர்யங்களால் பீடித்தன் பிரஹ்மம் அகர்ம வஸ்யன் என்கிற பல ஸ்ருதி வாக்கியங்களால்
பர ப்ரஹ்மமானது ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டது வேறு பட்டது என்பதே நம்முடைய மதம்.
எங்கெல்லாம் ஸது ஆத்மா பிரஹ்ம என்று சாமான்யாதிகரணத்தாலே சொல்லிற்றோ, சாக பசு நியாயத்தாலே
அங்கெல்லாம் தேவதா விசேஷமான நாராயண சப்தமே விவீக்ஷிதம்.
ஏத ஸர்வ பூத அந்தராத்மா திவ்யோ ஏகோ நாராயண: என்ற இடம் காண்க.

எப்படி அசேதனத்துக்கும் பரமாத்மாவுக்கும் ஐக்கியத்தை சொல்ல முடியாதோ, அதே போல
ஜீவாத்மாவுக்கும்-பரமாத்மாவுக்கும் ஐக்யத்தைச் சொல்லப் போகாது.
அசேதனத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் எந்த ஞானம் வியாவர்த்தமோ,அதே ஞானம் ஆத்ம- பரமாத்த்மாவுக்குமே (
மின்மினிப்பூச்சி) கத்யோதாக கல்ப-பரம்ஜியோதிஸ் வியாவர்த்தி என்னக் கடவது.
இரண்டு பேருக்கும் சாமானாதிகரண்யம் சொல்வது சரீராத்ம பாவத்தால் ஏற்கும் ஒழிய, ஸ்வரூப ஐக்கியத்தால் சொல்லப் போகாது.
அதனால் ஜீவாத்மாவுக்கும்-பரமாத்மாவுக்கு காரண-காரிய பாவம் பொய்ப்பதில்லை.

ராம: கமல பத்ராக்ஷ : ரூப சௌபாக்கிய தாயின்ய : ஸர்வ சத்வ மனோஹர :
இங்கு சொல்லப்பட்ட நான்கு சப்தங்களும் முதல் வேற்றுமை, – பிரதமா விபத்தி ஏக வசனம்.
ராமன் எவனோ அவனே கமல பத்ராக்ஷன்.-அவனே ரூப சௌபாக்ய தாயினன்.-அவனே ஸர்வ சத்வ மனோஹரன்.
நாலும் நாலு வியக்திகளை சொல்வதில்லை. நானா குணங்களைக் கொண்ட ஒரு வியக்தியைத்தான் சொல்வது சாமானாதிகரண்யம்.

தத்வமஸி ஸ்வேதகேதோ – என்ற வாக்கியத்தில் தது , துவம் அஸி இரண்டும் பிரதமா விபத்தி ஏக வசனம்.
அயம் ஆத்மா பிரஹ்ம – இதுவும் பிரதமா விபத்தி .
அஹம் பிரஹ்மாஸ்மி – இதுவும் பிரதம புருஷன்,
மத்யம புருஷன், உத்தம புருஷன் என்று அனைத்தும் சாமான விபத்தியிலேயே அமைந்துள்ள காரணத்தால் ,
ஜீவ-பர தத்வம் இரண்டும் ஒன்று என்று சொல்லுகிற வாதம் சரீராத்மா ஸ்வபாவ ஸ்வரூபத்தாலே ஸமஞ்சஸம்.
இந்த விஷயம் முன்னமே வாக்யான்வய அதிகரணத்தில் சொல்லப் பட்டது தான்.
காஸகிருஸ்னர் , ஒளடூலோமி–ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்டம் காரண பிரஹ்மம் என்றும்
ஸ்தூல சிதசித் விசிஷ்டம் காரிய பிரஹ்மம் என்றும்-சரீராத்ம பாவத்தாலே ததனந்யத்வம் சொல்லலாவது.
இதை வைத்துக் கொண்டு பிரஹ்மத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் ஏகீ பாவமோ, அஹித தோஷமோ சொல்லப் போகாது .

ஸது ஏவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத் என்கிற ஸ்ருஷ்டிக்கு பூர்வா அவஸ்த்தையிலும் கூட –
விசேஷ்ய-விசேஷணங்கள் வேறு வேறேயாய் – ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்டம்தான் பிரஹ்மம் .

ஜீவோ பிரஹ்மைவ ந பர : என்று ஜகன் மித்யா வாதத்தை சொல்கிற சங்கரர் பிரஹ்ம வியதிருக்த ஸகல பதார்த்தங்களும்
மித்யை என்பதாகக் கொண்டு ததனந்யாத்வம் சாதிக்கிறார் அவர்.
இப்படி மாயா கல்பிதமான பிறகுதான் – சுத்திகையில் ராஜத புத்தி பண்ணுவது போல – பிரஹ்மம் தன்னிடத்தில் பேதத்தைப் பார்க்கிறது
என்று சொல்கிற அவர்கள் விஷயத்தில்
அதிகம் து பேத நிர்தேசாத் – என்கிற இந்த சூத்திரம் பொருந்தாது.
வியாசர் எந்த இடத்தில் இதுபோல உதாரணங்களைக் காட்டவில்லை என்பதே இதற்கு காரணம்.

————-

சூத்ரம் : 2-1-23 அஸ்மதாதிவத் ச தத் அநுபபத்தி :

பர்த்ரு பிரபஞ்சன் – பரிணாம வாதம்
சங்கரர் – பிரஹ்மாஜ்ஞான வாதம்
பாஸ்கரர் – ஒளபாதிக்க பேத வாதம்
பாமதிகாரர் – ஜீவாஜ்ஞான வாதம்
என்று இப்படி வேறு வேறு பிரகாரத்தாலே–ஜீவோ ந பிரஹ்ம பர : என்பதையே விசிஷ்டாத்வைதியான நீரும் –
தர்சனம் பேத ஏவச என்று ஜீவ-பர பேதம் சரீராத்மா பாவத்தால் வேறு பட சொன்னாலும், காரிய-காரண ஐக்கியம் சொல்லுகிறபடியால், –
பிரஹ்மமே காரியாவஸ்தையில் ஜீவ பாவத்தை அடைகிறது என்கிற அத்வைத பக்ஷத்துக்கே நீங்களும் வருகிறீர்கள்
என்பதாக வைசேஷிகன் வைத்துக் கொண்டு
துக்க மோஹாத்மாக ஜகத் ஸ்ருஷ்டியால், பிரஹ்மம் தனக்குத் தானே சுருக்கிட்டுக் கொள்வது போல் அஹிதத்தை உண்டாக்கினது என்கிறான்.
அதனால் பிரஹ்மம் கேவலம் நிமித்த காரணம். உபாதான காரணம் ஆகாது என்கிற எங்கள் பக்ஷத்தில்
சேர்ந்து கொள்வீர்களாக என்பதாக அனுராதனம் பண்ணினான்.

சாங்கியன் பிரகிருதி உபாதான காரணம் என்றான்.
வைசேஷிகன் பரமாணு ஜகத் காரணம் என்றும் , ஈஸ்வரன் கேவலம் நிமித்த காரணம். அந்த ஈஸ்வரனும் ஆநுமானிக சித்தம்.
ஸ்ருதி சித்தம் அன்று என்பதாக. சொல்லாமல் பிரஹ்மம் ஜகத்துக்கு அப்பின்ன நிமித்தோபாதான காரணம் என்று சொன்னால்
கீழே சொன்ன அஹிதாதி தோஷம் வரும் என்பது பூர்வ பக்ஷ ஆக்ஷேபமாய் .
அதற்கு பல பேத ஸ்ருதி வாக்கியங்களை எடுத்துக் காட்டி, சாமான்யாதி சப்தங்கள் விசேஷ சப்தத்தில் பர்யவசிக்கும் என்பதாக
சாக-பசும் நியாயத்தாலே வைசேஷிக பக்ஷத்தை நிரசித்தார்.

சேதநாசேதனாதமாகமான பிரபஞ்சமே பிரஹ்மம் – ஸ்தூல சேதநாசேதன விசிஷ்ட பிரஹ்மம் ஜகத் என்பதான காரணத்தால்,
ஜீவனும் பிரஹ்மமும் ஒன்றேயோ அல்லவோ என்கிற ஆக்ஷேபத்தை வைசேஷிகன் எழுப்ப கிடையாது என்பதாகச் சொல்லி,
வைசேஷிகனுடைய இந்த ஆரோபணம் அவர்கள் பக்ஷத்துக்கும் ஒவ்வாது என்பதாக
அஸ்மாதாபி அநுபபத்தேஹே என்கிறார் சூத்ரகாரர்.
ஜீவா-பர சாம்யம் சொல்ல வந்ததான ஆரோபம், அசித்தை வைத்தும் காட்டலாமே – பரமாத்மாவுக்கும் அசேதனத்துக்கு சாம்யம்
என்பதான அநுப பத்தி அஸ்மதாதபி அநிவார்ய : என்பதாக வைசேஷிக இதர வ்யபதேச வாதத்தைத் தள்ளி ,
ஸ்தூல-ஸூக்ஷ்மா அவஸ்தைகளில் விசேஷணங்களுக்கான பேதம், விசேஷயத்தில் கிடையாது என்பதால்
தத்துவங்கள் வேறு தான், ஆனாலும் காரண-காரியம் ஒன்றுதான் என்பதை அறுதியிட்டார்.

விலக்ஷணத்வாதிகரணத்தில் சொன்னதைத்தானே இங்கும் சொல்கிறார், என்பதால் புனருக்தி தோஷம் வாராதோ என்னில் ,
விலக்ஷணத்வாதிகரணத்தில் அசித்துக்கும் பிரஹ்மத்துக்கும் ஸாலாக்ஷிண்ய தோஷ பரிகாரம் பண்ண,
இந்த இதர வியாபதேச அதிகரணத்தில் சித்துக்கும் பிரஹ்மத்துக்குமான அஹித தோஷ பரிகாரம் செய்யலாயிற்று.

———-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —ஆரம்பணா அதிகரணம்-2-1-6—ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

July 15, 2020

ஸ்ரீ பாஷ்யம் —ஆரம்பணா அதிகரண பிரவேசம்

சங்கதி – விலக்ஷணத்வாதிகாணத்தோடே. –
அஸ்ய (ஜகத்) விலக்ஷணத்வாத் (பிரஹ்ம காரிய பாவம்) ந -அங்கு சொல்லப் பட்டது பிரஹ்மமும் ஜகத்தும் விலக்ஷணத்தையோடே கூடினது.
ஆகிலும் பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்பது வேதாந்த பக்ஷம்.
ஜ்ஞான ஆனந்த மயமான பிரஹ்மம் அஜ்ஞான, துக்க பூயிஷ்டமான ஜகத்துக்கு காரண-காரியம் என்பது
பிரஹ்மத்திடத்தில் இல்லாத ஒன்றிலிருந்து ஜகத்தில் இருக்கிற அஜ்ஞான, துக்க மிஸ்ரமான ஜகத் பிறந்தது என்பது
அஸத் கல்ப வாதத்தோடே சேரும் – என்பது சாங்கிய பூர்வ பக்ஷம்-

காரணமும் காரியமும் ஸாலக்ஷிண்யத்தோடே கூடித் தான் இருக்க வேண்டும் என்கிற நியமமில்லை .
சாணத்தில் இருந்து தேள் தான் என்றில்லை, கிருமி, கீடங்கள் உண்டாவதும் ,
ஊர்ணநாபி கட்டுகிற சிலந்தி வலையும், முட்டையில் இருந்து புழு, புழு கூடுகட்டி பட்டாம் பூச்சி ஆவது போலே,
வித்யாசமானத்திலிருந்து வித்தியாசமானவை ஜனிக்கலாமே.
அப்பனைப் போலே பிள்ளை என்றாலும், சில அம்சங்கள் தாத்தா, முத்தாத்தா (அ) பாட்டியிடத்து இருந்தும் வந்து
சேருமாப்போலே ஸர்வதா ஸாம்யம் நிர்பந்தமில்லை.
ஆகவே அஸத் வாத இதை சேத் – வேதாந்த வாதம் அஸத் வாதிகள் வாதம்போலே என்று ஆரோபித்தால்,
அப்படிக் கிடையாது என்பதாக சாக்கியர்கள் ஆஷேபத்துக்கு பரிகாரம்.

இப்போது வைசேஷிகனான – தார்கிகள் விவாதத்தில் நுழைய , அதற்கு முகாந்திரம்
சாங்கியன் சொல்வது ஜகத்துக்கும், மூல பிரக்ருதிக்குமே ஸாலக்ஷிண்யம் இருப்பதால், பிரஹ்ம காரிய வாதத்தை மறுக்கிறான்.
வைசேஷிகன் பிரஹ்ம காரிய வாதத்தை நிராகரிப்பது
காரணப் பொருளான பிரஹ்மமும் வேறு. காரிய பொருளான ஜகத்தும் வேறு வேறாக காரியமும், காரணமும் பின்னமாக காண்கையாலே .
சாங்கியன் பிரஹ்ம தத்துவத்தையே ஒத்துக்கொள்ள வில்லை.
நையாயிகன் ஆநுமானிக பிரஹ்மத்தை ஒத்துக் கொண்டாலும், பிரஹ்மத்துக்கு நிமித்த காரணம் மட்டும் உண்டு,
உபாதான காரணத்வம் கிடையாது என்கிறான்.
இவர்கள் பக்ஷத்தில் ஜகத்துக்கு காரணம் எதுவென்றால்,
சாங்கியன் பிரதானம் காரணம் என்றான்.
வைசேஷிகன் பரமாணு காரணம் என்றான்.

ஆக, நையாயிகன் சொல்ல வந்தது என்னவென்றால்,
காரியத்துக்குள்ளே காரணம் அடங்கி இருக்கிறது என்கிற வைதிக பக்ஷத்தை மறுத்து,
காரியமும், காரணமும் வேறு வேறு என்று மறுக்கப் புகுந்தான் மற்ற இருவருடைய வாதத்துக்குள்.
திரவ்யாந்தரம் ஜகத் காரணம் என்கிற இவர்களுடைய வாதமானது
பிரஜ்ஞா திருஷ்டாந்த அனுபரோதாஸ் ச என்கிற அதிகரணத்திலேயே மறுக்கப் பட்டாலும், மீண்டும் இங்கு அதுவே கண்டிக்கப்படுகிறது.
அங்கு வந்த விஷயம், ஸேஸ்வர சாங்கியனான யோகன்,
பிரஹ்மத்துக்கு நிமித்த காரணம் உண்டு, உபாதான காரணத்வம் கிடையாது என்று மறுதலித்ததால்.
பிரக்ருதிஸ் ச ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞானம் கதா – என்கிற ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் என்கிற
பிரதிக்ஞை சேர பொருள் கொள்ள வேண்டும் . அனுபரோதமாக சொன்னால் என்னா என்றால், ஜகத்துக்கு, நிமித்த காரணத்தோடு,
உபாதான காரணமும் பிரஹ்மம் தான் என்பது தேறும். இதற்கு விரோதமாக சொல்லக் கூடாது என்பது அவ்விடத்தில் விஷயம்.

குண கிரியாவகம் திரவியம். குணத்துக்கும், கிரியைக்கும் ஆஸ்ரயமாக இருப்பது திரவியம் என்பதாக.
இதன் அடிப்படியில், தர்ம பூத ஜ்ஞானம் நம்முடைய சம்பிரதாயத்தில், குண கோடியிலும் சேரும், திரவ்ய கோடியிலும் சேரும்.
வெண்மை நிறமானது, வேஷ்டியில், (அயுத) பிரிக்க முடியாத சம்பந்தத்தோடே இருக்குமோ அது சமவாயி காரண சம்பந்தம்.
சமவாயி காரணம், அபாவம் இந்த இரண்டும் நம்முடைய சம்பிரதாயத்தில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.
பாவத்தை குமாரில பட்டரும், பாஸ்கர அனுயாயிகளும் வேறு வேறு விதமாக சொல்கிறார்கள்.
அனால், நம்முடைய சித்தாந்தத்தில்,
பாஸ்கர பக்ஷமான அபாவம் என்பது பாவாந்தர ரூபமாக இருக்கிறது – என்பதே ஏற்றுக் கொல்லப் படுகிறது.
திருவாராதனத்துக்கு வெள்ளிக்கு குடம் கொண்டு வா என்றால், சென்றவன் திரும்பி வந்து,
வெள்ளிக் குடம் இல்லை – மண் குடம் தான் இருக்கிறது என்றால். வெள்ளிக் குடத்தின் அபாவம் அந்த மண் குடத்தின்
பாவாந்தர ரூபமாக இருப்பதாகக் கொள்ள வேண்டும் .
தார்க்கீகன் சொல்லுகிற சமவாயி, அபாவம் எல்லாம் அநுபலப்தி என்கிறதோடே சேர்த்து விடலாம் என்பது நம்முடைய பக்ஷம்.

10 விதமான கரிய-காரண பேதத்தை சொல்கிறார்கள் தார்க்கிகர்கள்.
1. புத்தி போதாத் = மிருக் பிண்டம் என்றால் நம் புத்திக்கு வருவது களிமண் கட்டி.
கடம் என்றால் புத்திக்கு வருவது கடத்தினுடைய ஆகாரம். இந்த இரண்டுக்குமான காரிய-காரண ஜ்ஞானம் வேறு வேறு.
2. சப்த பேதாத் = கடம் என்கிற சப்தமே வேறு. மிருக் பிண்டம் என்கிற சப்தமே வேறு.
3. க்ரிய பேதாத் = உபயோகமும் வேறு வேறு. குடத்தைக் கொண்டு நீர் எடுக்கலாம். களிமண் கட்டியைக் கொண்டு நீர் எடுக்கவோ ? முடியாதே.
4. கால பேதாத் = பூணுல் விவிரணம் . காரணம் இருக்கிற காலமே வேறு. காரியம் ஆகும் வேளையே வேறு.
முன் பின்னாகத் தான் நடக்க வேணும் என்பதால், கால பேதம். ஸ்தோத்திரத்துக்கு (நூல் கயிறுக்கு) பிரம்ம முடிச்சு போட்டு,
மந்திரங்களால் பிரதிஷ்டாபனம் பின்னால் அன்றோ அது பூணூல் ஆகும். அதற்கு கால அளவு தேவையாகும் பக்ஷ்த்தில்,
5. ஆகார போதாத் = நூல் என்றும், பூணூல் என்றும் பேதம் பார்க்கிறோமே. ஆக, பூணூல் என்பதே வேறு. அது செய்கிற நூல் உண்டையே வேறு என்கிற பேதம்.
6. பரிணாம பேதாத் = ஆகார பேதம், பரிணாம பேதம் இரண்டுக்கும் பெருத்த வித்யாசம் கிடையாது.
7. பாவா-அபாவ பேதம் = 7 விதமான அபாவும் சொல்கிறான் ஜைனன்..
8. சங்கியா பேதம் = களிமண் கட்டி ஏக ரூபமாய், அதில் செய்யப்படும் பானை, மடக்கு, விளக்கு என்பவை அநேகமாய் இருக்கிற சங்கியா பேதம்.
9. காரக வியாபாரம் = பானையை செய்ய ஒரு குயவன் மண்ணை ஆறு, ஏரியில் இருந்து கொணர்வது, தகைப்பது,
சக்ர தண்டங்களைக் கொண்டு பானையாக பண்ணும் படியான காரக வியாபாரம் இல்லாமல் , காரியம் வாராது.
காரியமும் காரணமும் ஒன்று என்றால் காரிய வியாபாரத்தின் அவசியம் இருக்காதே.
பிரத்யக்ஷத்தில் அப்படி எதுவும் உண்டாக/படைக்கப் படுவதில்லையே. ஆகவே காரியம் வேறு. காரணம் வேறு.
தில இது தைலம். எண்ணைப் பசை இருப்பதிலிருந்து எடுப்பது தைலம் என்று ஆகி விட்டது.
மணலை சுக்கில இட்டு ஆட்டினாள் தளம் வருமோ? வராது. எனவே காரக வியாபாரம் காரியம் காரணத்தில் இருந்தால் தான்
அதை இதுவாக மாற்ற முடியும். தவிர, பிரஹ்மம் தன்னுடைய சங்கல்பத்தாலேயே ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறதே ஒழிய,
அதற்கென்று குயவனைப் போல மண், சக்ரம், தண்டம் இவைகளைப் போல ஒரு காரிய வியாபாரம் செய்து படைப்பதில்லை.
பிராட்டியை ஈக்ஷணா சக்த்தியைக் கொண்டு, தது ஐக்ஷத என்கிற மட்டிலே படைக்கிறது. தனது நினைவு கொண்டே படைக்கிற
இவனுக்கு செய்ய வேண்டிய காரக வியாபாரம் எதுவும் இல்லை – என்பது ஆக்ஷேப சமாதானம். அங்கனாகில் ஜகத்தில் வஸ்த்துக்கள்
மறைந்து தோன்றுவதால், ஸ்ருஷ்டி இன்றளவும் நடந்து கொண்டே இருக்க வேண்டும்,
எப்படி தைலம் வேண்டுமானால் செக்கு ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டுமோ அதுபோலே என்று பிரதியுத்தரம்.
10. நித்யாநித்யா அனுப்பபத்தி பேதம் = எல்லா வஸ்துவும் ஆத்தால் எப்போதும் உண்டு என்கிறது ஏற்படும். இது நித்யம்,
இது அநித்தியம் என்கிறதுக்கு இடமில்லாமல் போகும்.
என்று 10 விதமாக பிரஹ்மத்துக்கு கார்ய – காரண அந்யத்வம் பேசுகிறான் – அநந்யதவத்தை மறுக்கிறான், வைசேஷிகன்.
இதற்கு சாங்கியன் பதில் சொல்லும் முன், சங்கர அத்வைதி தன் வாதத்தை முன் இடுகிறான்.

காணாத-வைசேஷிகர் : காரணம் வேறு காரியம் வேறு ஜகத்துக்கு பிரஹ்மம் காரணம் அன்று என்றார்.
காபில-சங்கியன் : பிரஹ்மம் கிடையாது. ஆனால் காரண-காரியம் 2ம் ஓன்றே என்கிறார்.
குமாரில பட்டர் – ஜகத்து பிரவாகதோ அநாதி.
பௌத்தன் – காரணமே கிடையாது. இலாததில் இருந்து இல்லாதவை உண்டாகின்றன. என்றான்.
சங்கரர் – காரணம் ஒன்றுதான் சத்தியம். காரியம் எல்லாம் மித்யை .

பௌத்தர்கள் அஸத் காரிய வாதிகள். காரணத்தையே அஸது என்கிறார்கள். இல்லாத காரணத்தில் இருந்து காரியம் உண்டாவதால்,
காரியமும் அஸத்தேதான். அஸத்தினின்றும் காரியம் என்கிற 5 ஆம் வேற்றுமை இட்டுச் சொல்கிறான்.
இது வைதிக சித்தாந்தத்துக்கு முரணானது.

பிரஹ்ம விது ஆப்னோதி பரம்
சத்யம்.ஜ்ஞானம்.அனந்தம் பிரஹ்ம .
ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ர ஆஸீத்.
ஆகாசாத் வாயு, வாயுர் அக்நி :
அக்நிர் ஆப: ஆபப்ருதிவி
ஸோ தா பிரஜாயா ஏவ
என்று பிரஹ்மமானது சங்கல்பித்து, தன்னுடைய சரீரத்தோடே சூக்ஷ்ம அவஸ்தையில் இருந்த சேதனா சேதநங்களை விடுவித்து
தா விசித்ரா தேவதா அநேந ஜீவேன ஆத்மநா அனுப்பிரவிஸ்ய என்று
தேஜோத்பன்னமான மூன்று தேவதைகளை சிருஷ்டித்து அதற்குள் பிரவேசித்து தானே பரிணமிப்பதாகிற ஸத்துத்தான் காரணம்.
அந்த ஸத்துத்தான் பர பிரஹ்மம். அத்தால் ஸத்தான காரியம் உண்டாயிற்று என்பது தான் ஸத்காரிய வாதம்.

இப்போது வைசேஷிகன், நையாயிகன் இவர்கள் என்ன சொல்கிறாகள் என்றால்,
அஸத : காரியம் என்கிற 6 வது வேற்றுமையை இட்டு, இல்லாத காரியத்தின் உற்பத்தி என்பதாக.
சாங்கியன் சொல்வது காரியம் ஸது ஏவ – என்பதாக 5 காரணங்களை இட்டுச் சொல்கிறான்.
புதிதாக காரியம் உண்டாவது இல்லை. இருப்பது தான் உண்டாகிறது.
எத்தாலே என்றால்
1. அஸது அகரணாது = இல்லாததை யாரும் உண்டாக்க முடியாதாகையாலே.
லவணத்துக்கு கந்தமோ, காகத்துக்கு தந்தமோ உண்டாக்க முடியுமோ? கூர்மத்துக்கு ரோமத்தை உண்டாக்க முடியுமோ? முடியாது.
அஸது அஸதே தான். ஸது ஏவ காரியமாக பரிணமிக்கிறது என்பது சாங்கிய காரிகை.

2. உபாதான கிரஹணாது = தைலம் வேண்டும் என்றால், அதற்கு இடு பொருளான = உபாதானமான எள்ளை செக்கிலிட்டு ஆட்ட வேண்டும்.
மணலைக் கொண்டு தைலம் எடுக்க முடியுமோ? முடியாதே.
மிருக் இதிலிருந்து குடத்தை பண்ணலாம் பருத்தியில் இருந்து ஆகாதே. பருத்தியில் இருந்து ஆடை நெய்யலாம்.
வளையல், காது தோடு ஆகாதே. ஆடக பொன்னிலிருந்து வளையல், காது தோடு செய்ய முடியும், மண்குடம் ஆகாதே.
அதுபோல, காரியம் காரணத்தில் உண்டு என்பதால், எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் உண்டாக்க முடியுமோ என்று கேட்க வேண்டாம்.
வைதிகனுக்கும் இது சம்மதமே . ஆனால் சில வித்யாசம் உண்டு வைதிக பக்ஷத்தில்.

3. ஸர்வஸ்ய ஸர்வ காரிய அபாவாது = காரணத்திலே காரியம் இருக்குமானால், மரத்தில் பழம் காய்ப்பதுபோல ,
காரக வியாபாரமே வேண்டாம். ரிஷிகள் நினைத்ததை மனசால் செய்து சாதிப்பது போலவும்,
பகவான் தன் நினைவால் சிருஷ்டியை செய்வது போலவும் காரணத்தைக் கொண்டே காரியம் கொள்ளலாமே என்று நையாயிகன் கேட்க
அப்படி ஆகாது.
மண் கட்டியானது தீர்த்தம் கொண்டு வர கார்யோபயோகி ஆக வேண்டும் என்றால், அது வாயும் வயிறுமான குடமாக வேண்டும்.
காரணத்தில் காரியம் இருந்தால் அன்றோ, காரக வியாபாரத்தால், மண்ணிலிருந்து குடம் வெளிப்பட முடியும்?
என்பதாக சாங்கியன் எதிர் வாதம் செய்தான்.
அதற்கு நையாயிகன் சொல்வது –
மண்ணில் இருந்து குடம் வந்தாலும் , ஆகாரத்தாலும், உபயோகத்தாலும் குடம் வித்தியாசமானது.
எனவே காரியம் புதுசானபடியாலே காரியம் வேறு. காரணம் வேறுதான் என்றான்.
அதற்கு சாங்கியன் சொல்வது – மண்ணில் குடம் இல்லை. ஒத்துக் கொள்வோம்.
தந்துவில் குடம் இல்லை. இன்னொன்றில் குடம் இல்லை . மூன்றிலும் இல்லை,
இல்லை, இல்லை என்று சித்திப்பதால் காரக வியாபாரத்தால் மண்ணில் இருந்து குடம் செய்வது போலே
தந்துவிலிருந்தோ இனொன்றிலிருந்தோ குடத்தை பண்ண முடியுமோ? முடியாது.
ஆக , அததன் காரணத்திலில்லாத ஒன்றை, மறொன்றின் காரியமாக்க முடியாதே என்பதாக சாங்கியன் பதில்.

4. ஸர்வஸ்ய ஸர்வதா சம்பவாது = எல்லாமும் எப்போதும் நடந்து கொண்டு இருக்க வேண்டும் என்கிறது ஏற்படுகிறதே ?
என்ன இருப்பது தான் அபிவியக்தியாகிறது = உண்டாகிறது என்றான் சாங்கியன். இத்தைச் சொன்ன உடனே வைசேஷிகன்

5. அநவஸ்தா = என்கிற தோஷ ஆரோபணம் பண்ணிக் காட்டினான், காரியத்துக்கும் காரணத்துக்கும் நடுவில் அபிவியக்தி
என்கிற ஒன்று உண்டாக வேண்டும் என்றால், ஒரு அபிவியக்திக்கு இன்னொரு அபிவியக்தி,
அதற்கு இன்னொன்று என்கிற அநவாஸ்தா = தொடர்கதையாகிற தோஷம் வரும் என்றான். இருக்கட்டும்.
இருட்டறையில் பல பொருள் கிடக்க, எதோ ஒன்றை எடுக்க நினைத்தவன் தீபம் கொண்டு அறைக்குள் சென்றவனுக்கு,
அந்த தீபம் நினைத்த பொருளை மட்டும் அல்லாது, அனைத்துப் பொருளையும் வெளிச்சம் போட்டு காட்டுமா போலே
மண் கட்டியில் பானை, மடக்கு, விளக்கு யானை என்கிற பலவும் இருக்கிற போது, பானை செய்ய யானை வரலாமே,
மடக்கு செய்ய விளக்கு வரலாமே? என்றான் வைசேஷிகன்.
ஆகவே காரியமும் காரணமும் வேறு தான். சாங்கியன் சொல்கிற சத்காரிய வாதம் சித்திக்காது என்ன – இந்த வாதம் சரியில்லை.
வைசேஷிகனான நீ சொல்கிறது போல் மண்ணில் பானை இல்லை. தந்துவில் வேஷ்டி இல்லை.
ஆடகப் பொன்னில் ஆபரணம் இல்லை. என்று சொன்னாயே, உன் பிரகாரம் இல்லாத்தில் இருந்து இருப்பதை உண்டாக்கும் போதும்
இந்த மாதிரியான – பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆகிற – தோஷம் வரலாமே என்றான் சாங்கியன்.

இப்படி, சாங்கியனும் , வைசேஷிகனும் காரியம் ஸது, காரியம் அஸது , காரணத்தில் காரியம் இருக்கு, காரணத்தில் காரியம் இல்லை
என்று சொல்லாநிற்க , சுற்றுகிற ராட்டினத்தில், குதித்து உள் புகுமா போலே ,
நிர்விசேஷ சின்மாத்ர பிரஹ்ம ஏக தத்வ – பிரஹ்ம அஜ்ஞான வாதியான – சாங்கரத்வைதிகளும் வாதத்தில் இணைந்தனர்.

ஸ்ருஷ்டிக் கிரமத்தில், பிரஹ்ம காரிய-காரண வாத சதுஷ்டயம் :
1. வைசேஷிகருடைய ஆரம்ப வாதம் – அஸத் காரிய வாதம்.
பாய் முடைபவன், இல்லாத ஒன்றான பாய் நெய்வதற்கு கோரைப் புல்லைக் கொன்டு ஆரம்பிக்கிறான்.
பிரவர்த்திக்கிறான் என்பதால் இது ஆரம்ப வாதம். அஸத் காரண வாதம்.

2. சாங்கிய / விசிஷ்டாத்வைதிகளுடைய பரிணாம வாதம்.
ஆகாஸாத் வாயு: வாயுர் அக்நி , அக்நிர் ஆப:, ஆப பிருதிவி என்பதாக சித்தசித் விசிஷ்ட பிரஹ்மம் ,
தாட பத்ரம் போலே ஸூக்ஷ்மாவஸ்தையை விட்டு ஸ்தூல அவஸ்தயை பரிகிரஹிப்பது என்பதே பரிணாம வாதம்.
தாட பத்ரமாவது காது ஓலைத் தோடு . விரித்தால் ஓலை. சுருட்டினால் காதணி தோடு.
சென்றால் குடையும், இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம், நீள்கடலுள் — என்றும்
புணையும் அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையும் திருமாற் கரவு. –என்பதாக சேஷன் பலவடிவு கொண்டு கைங்கர்யம் செய்வது போலே ,
பிரஹ்ம விசிஷ்ட ஸூக்ஷ்ம (மூல) பிரகிருதி ஸ்தூல ஜகத்தான பலவாக பரிணமிக்கிறது .
இந்த அவஸ்தா பேதம் ஆதங்குகம். அவ்வப்போது வரக்கூடிய தர்மமே ஒழிய சங்கியான் சொல்வது போல ஸர்வதா ஸ்திதமான ஒன்று அல்ல.
இன்னும் சாங்கியர்களுக்கும் நமக்குமான வித்யாசம் என்ன வென்றால்,
அவர்கள் பரிணாம காரிணி பிரஹ்மம் என்பதும், ஸ்தூல ஸூக்ஷ்ம அவஸ்தைகளையும் ஒப்புக் கொள்வதில்லை.
காரியம் காரணத்தில் முழுவதுமாக அடங்கி உள்ளது என்பதான நிஷ்ப்புற ஸதத பரிணாம வாதம் அவர்களது.
இதுதான் ஸத் காரிய வாதம்.

3. ஸங்காத வாதம் :
கோபுர, கலச, மண்டப, பிராகாராதிகள் கோயில் எனுமா போலே அவயவங்கள் சேர்ந்த அவயவி என்கிற
ஸங்காத வாதம் பௌத்தனுடையது. அவர்களில் ஜகத் அசத்திய வாதி யோகாசாரன் .
அறப்பு அறுத்த நெல் தூற்றி தாற்றி மரக்கால்,கலம், சாக்கு, குதிர் என சங்கிரஹித்து கூடிடுமா போலே
பரமாணு சங்காதத்தாலே ஜகத் சித்திக்கிறது என்பது பௌத்தர்களுக் குள்ளேயே ஜகத் சத்யவாதியான வைபாஷிக பக்ஷம்.

4. விவர்த்த வாதம் :
கடலில் அலைகள் கரையைத் தொட்டு திரும்புவது போல – சுவற்றில் அடித்த பந்து திரும்புமா போலே
இது நான்கு வகைப் படும்.
அ) ஜகத் மித்யா விவர்த்த வாதம்
க்ஷணிக விஜ்ஞான ஆத்மா சத்யம். அத்தியாசத்தாலே ஆன ஜகத்து மித்யை . ஜகத்து எத்தாலே உண்டாயித்து என்றால்
விஜ்ஞானத்தாலே உண்டாயித்து. இது யோகாசார பக்ஷம்.
ஆ) சூன்ய விவர்த்த வாதம் :
க்ஷணிக விஜ்ஞானமான ஆத்மாவும் கிடையாது. சூன்யமே தான் பிரமமான ஜகத்துக்கு காரணம் என்பது மாத்யமிக பக்ஷம்.
இவை இரண்டும் பௌத்த மதத்துக்கு சேர்ந்தவை.
இ) சப்த விவர்த்த வாதம் :
வையாகரணர்களில் ஏகதேசியான பர்த்ருஹரி சொன்ன அபிரஹ்மாத்மகமான சப்த ஸ்போடத்தால் (Big Bang Theory )
பிரபஞ்சம் உண்டாயித்து என்கிறதான Modern Scientists சொல்கிற வாதம்.
ஈ) பிரஹ்ம விவர்த்த வாதம் :
இது சங்கர அத்வைதம். நிரதிஷ்டான விவர்த்தம் இல்லை. ஸாதிஷ்டான பிரஹ்ம விவர்த்தம் என்பதாக .

ஸர்வம் சூன்யம் என்கிற
கடலளவாகிற எட்டினுள்ளும் கலியிருள் சூழ்ந்த காலத்து மிடைதரு ஜ்ஞானம் என்னும்
பிரஹ்ம சத்ய வாதமாகிற விளக்கை சங்கரர் ஏற்ற
பிற்பாடு வந்த இராமானுஜர் ஜகத் சத்தியத்தை பிரதிஷ்டாபித்து
லக்ஷ்மி விலக்ஷண நாராயணனே வேதாந்த விழுப் பொருள் என்பதாக வைதிகமத விசிஷ்டாத்வைத
தர்சன புனுர்த்தாரணம் பண்ணினார் என்கிற இந்த பெருமை முறையே இவ்விருவரையுமே சாரும்.

கடல் அளவாம் திக்கெட்டும் காண்ட வனம் போல்
மிடைந்தெங்கும் முண்டர் சமணர்— கிடந்தியங்க
அஃதழித்து இந்ர பிரஸ்த நாடுசமை
தஃதொப்ப வாழும் மறை.

கௌரவர்கள் அஸ்தினாபுரத்தை தங்கைகளுக்கு வைத்துக் கொண்டு , நெருஞ்சி முள் காடான காண்டவ வானத்தை
பாண்டவர்களுக்கு அவர்களுக்கு உரிய பங்காகக் கொடுக்க, கிருஷ்ண சகாயத்தில் அதனை எரித்து ,
மயனைக் கொண்டு இந்திரபிரஸ்தத்தை ஸ்தாபித்தாப் போலே ஆயித்து இவர்கள் இருவருடைய சாகஸம் என்னத்தகும்.

அந்த வகையில் சாங்கிய-வைசேஷிகர்கள் வாதத்தில் இடை மறித்து இருவரையும் கண்டிக்கும் முகமாக
சங்கராத்வைதிகள் தங்கள் பக்ஷத்தை பிரஸ்துதமாக்கினார் .

வாத விவாத சரணி 5 அங்கங்களோடே கூடியது.
1. பிரதிஜ்ஞா – பர்வதோ வந்நி மான்
2. ஹேது – தூமாது
சந்திக்க சாத்யவாந் பக்ஷ :
3. உதாரணம் – யாத பாக சாலய : யத்ர யத்ர தூம: தத்ர வந்நி மான் ; யதா ஜலாச்ரய :
யத்ர யத்ர வந்நி அபாவ : தத்ர தூம அபாவ : யோயோ தூமாவாந் தத்ர வந்நி :
4. உபநயம் – வியாப்தி – வியாபக பாவம் இருப்பதாலே
5. நிகமனம் – ஆனபடியாலே , பர்வதோ வந்நி மாந்
நவீன மீமாம்சகன் உதாரண உபநயனம் இருந்தால் போதுமானது என்ன,
பிராசீன மீமாம்சகன் 10 அம்சங்களை நியாய சாஸ்திரம் சொல்லுகிறான்.
1. சங்கதி
2. விஷயம்
3. சம்சயம்
4. சம்சய காரணம்
5. சம்சய பிரகாரம்
6. சம்சய விசாரம்
7. சம்சய பரிகாரம் , காரிய-காரண ஹேதுமத் பாவத்தைக் கொண்டு சம்சய பரிகாரம்.
8. நியாயம்
9. நிர்ணயம்
10.பலம்.

சங்கராதிகளுடைய பிரஸ்தாபம் இங்கு வரக் காரணம் சம்சய பிரகாரத்தை சொல்லுமிடத்தால் அன்றி
பூர்வாக்ரஹம் (முன்விரோதம்) என்பது அல்ல.
சாங்கியன் காரணத்தில் காரியம் உண்டு என்று சொல்ல, வைசேஷிகன் அதை மறுத்து காரிய காரண அனுப பன்னத்தை சொல்ல ,
சம்சயம் சத்காரிய வாதமா அஸத் காரிய வாதமா , என்கிற விசாரத்தில் காரிய-காரண பாவத்தில் எத்தனை விதம் உள்ளது
என்கிற சம்சய பிரகாரத்தை விவரிக்க வந்த இடத்தில் காரிய-காரண பாவத்தை அபலாபம் செய்கிறவர்களை பற்றியும் சொல்ல வேண்டி,
சாங்கராத்வைதம் பிரசுத்துத மாயிற்று எனலாம்.

காரிய-காரண பாவத்தை அபலாபம் செய்பவர்கள் மூன்று பேர்.
1. ஆகஸ்மிக வாதம் – பௌத்தர்களின் மாத்யமிகன் தவிர்ந்த மற்ற மூன்று பிரிவினரும் இந்த வாதத்தையே முன் வைக்கின்றனர்.
மாத்யமிகனும் சில சமயங்களில் இந்த வழியே செல்கிறான் என்றால் தவறாகாது.
காரியம் ஸர்வம் ஆகஸ்மிகம் ஏவ – (coincidental) ஒரு காரியத்துக்கு பல காரணங்கள் இருக்கிற படியாலே ,
இந்த காரியத்துக்கு இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது.,

2. ஸ்வபாவ வாதம் – இது சாருவாக பக்ஷம். பௌத்தனைப் போல இவர்கள் பிரத்யக்ஷத்தை அபலாபம் பண்ணுபவர்கள் இல்லை.
இயற்கையையும் , ப்ரத்யக்ஷத்தையும் ஒத்துக் கொள்பவர்கள். இயற்கையில் நடப்பவைகளுக்கு காரிய-காரண பாவம் எதுவும் கிடையாது.
நெருஞ்சிக்கும், தர்பத்துக்கும் முள்ளை வைத்தது யாருமில்லை. அதனதன் ஸ்வபாவத்தால் உண்டானது போலே ஆகஸ்மிகம் .

3. சூன்ய வாதம் – ஆகாசமிகமும் இல்லை. .ஸர்வம் சூன்யம் என்பது மாத்யமிக பக்ஷம்.
இவனை நிஸ் ஸ்வபாவதா வாதி. அநிர்வசனீயத்வ வாதி என்றும் சொல்லுவர்.
கீழே சொன்ன 4 விதமான விவர்த்த வாதிகளும் அநிர்வசனீயத்துவ வாதிகளே எனலாம்.

ஸத் காரிய வாதியான சாங்கியன் என்ன,
அஸத் காரிய வாதியான வைசேஷிகன் என்ன இவர்கள் இடையில் நடக்கிற வாதத்தில்,
இந்த அநிர்வசன ஏகதத்வ நிர்விசேஷ சிந்மாத்ர பிரஹ்ம வாதியான சங்கராதிகளும் தங்கள் பக்ஷத்தை ஸ்தாபிக்கப் புகுகின்றனர்.

——————–

சூத்ரம் 2-1-15 : ததனனயத்வம் ஆரம்பண ஸப்தாதிப்ய :

சூத்திரத்தில் உள்ள ததனனயத்வம் , என்கிற சொல்லுக்கு
பரமார்த்ததயா வஸ்து ந அஸ்தி – பாரமார்த்தமா அபாவம் எனக் கொள்ள வேண்டும்.
வியாவகாரிகமாகவோ, பிராதிபாச மாகவோ இல்லை என்பது அல்ல. வஸ்துதா இல்லை.
பிரஹ்மத்தை தவிர்ந்த இரண்டாவது பொருள் இருந்தால் அல்லவோ அந்ய : – வேறுபட்டது – என்றோ அநந்ய : – வேறுபடாதது – என்று சொல்ல .
பிரத்யக்ஷ கத வஸ்து, பசு புத்ர பத்னியாதிகளை நாம் அனைவரும் தின நித்யம் கண்டு கேட்டு உற்று மோந்து அனுபவித்துக் கொண்டிருக்க,
அவைகளை இல்லை என்று சொல்வதும் தான் எப்படி என்ன,
அது லௌகிக வியாவகாரிகம். எப்படி காரண திரவ்யமான மண் ஒன்று மட்டும் சத்தியம்,
அதற்கு வந்தேறியான கட சாராவாதிகள் அநித்யமோ அது போல,
நிர்விசேஷ சின்மாத்ர பிரஹ்மம் ஒன்று தான் சத்தியம். மஹதகங்காராதி கிருஸ்ன ஜகத்து மித்யை .
பிரஹ்ம சத்யம். ஜகந் மித்யா இதி வேதாந்த டின்டிம : ஜீவோ பிரஹ்மைவ ந பர: என்பது இவர்கள் பக்ஷம்.
எப்படிச் சொல்கிறார் என்றால், அகங்காராதி வியவகார ஆலம்பனம் ஜகது என்பதாக.

இந்த அஹங்காராதி ஆலம்பன ஸப்தத்துக்கு எத்தனை விதமான பொருள்,
இதில் சங்கராதிகள் எந்த பொருளில் சொல்லுகிறார்கள்,
சித்தாந்திகளான விசிஷ்டாத்வைதிகள் எந்த கொண்டார்கள் என்பது இங்கு நோக்கத் தக்கது.
எது சதர்த்தம் . எது அபார்த்தம். எந்த இடத்தில் எந்த அர்த்தத்தைக் கொள்ள வேண்டும் என்பதை முதலில்
நிச்சயம் செய்து கொண்டு மேலே சொல்லுவோமாக.

ஆத்மா அஹமர்த்தமா? அஹமர்த்தம் கிடையாதா? என்பதிலே தான் சர்ச்சை முதல் முன்னம்.
நிர்விசேஷ சின் மாத்ரம் பிரஹ்மத்துக்கு சஜாதீய , விஜாதீய, ஸ்வகத பேதம் எதுவும் கிடையாது என்பதாக சங்கராதிகள்.
போக்தா போக்யம் பிரேரித்தம் ச மத்வா த்ரிவிதம் தத்வம்
போக்தா – அனுபவிப்பவன் சேதனன்.
போக்கியம் – அனுபவிக்கப் படுமவை அசேதனம்.
பிரேரித்தம் – பரமாத்மா பரம சேதனன்.
என்கிற இவற்றுள் பரமாத்மாவுக்கு சஜாதீய வஸ்துவான ஜீவாத்மா கிடையாது என்பது சஜாதீய ராஹித்வம்.
பரமாத்மாவுக்கு விஜாதீய ஜட வஸ்துவான இந்த ஜகத்து கிடையாது என்பது விஜாதீய ராஹித்வம்.
இத்தால் சேதனா சேதனங்கள் இல்லை என்றாகி விட்டது. போகட்டும்,
அந்த பரமாத்மாவுக்கு வைகுந்தம் பரமபதம், திவ்ய மஹிஷிகள், அனந்த கருட விஷ்வத்க்ஷேனாதி பரிவாரங்கள் உண்டோ?
என்றால் குண, விக்ரஹ, விபூதி, ஐஸ்வர்யங்கள் எதுவும் கிடையாது என்பது ஸ்வகத ராஹித்யம் .
த்ரிவித ராஹித்யமும் சொல்லியாயிற்று.

என்னதான் இருந்தது என்றால். ஜ்ஞானம் ஒன்றே இருந்தது. போகட்டும்
அந்த ஜ்ஞானம்தான் பாலக : பலம் காததி – என்பது போல ஸகர்மத்தோடே இருக்குமா? அகர்மகமா? என்றால் அதுவும் கிடையாது.
அஹம் இதம் கடம் ஜ்ஞாநாமி , நான் இதை அறிகிறேன் இத்யாதி சப்தங்களால் அறியப்படுகிற
ஸகர்மக ரூபமான தர்மபூத ஜ்ஞான ராஹித்யமும் சொல்லுகிறது.
அதாவது அஹம் என்கிற ஜ்ஞானம் கிடையாது . அது கேவல ஜ்ஞானமா இருக்கிறது .
அஹங்கார வியவகார ஆலம்பனமாக இருக்கிறது. பரம் பிரஹ்மைவாஜ்ஞம் பிரம பரிஹதம் ஸம்ஸாரத்தி ஸது என்பதே அத்வைதம்.
அந்த பிரஹ்மத்துக்கு ஸ்வரூப கதமான ஜ்ஞானம், கேவல ஸத்தா மாத்ரமான ஜ்ஞானம் பிரக்ருதி மஹதாதி அகங்கார
வரிசையில் 3வதாக உள்ள அஹங்காரத்தில் பிரதிபலித்து இந்த ஜகத்து உண்டாகிறது என்கின்றனர்.

நையாயிக, தார்க்கிகள் போலே விசிஷ்டாத்வைதிகளும் இதனை கண்டிக்கிறார்கள்.
அஹமர்த்த மேவ ஆத்மா என்பது நம்மவர்கள் சித்தாந்தம் .
முதலாளி, தொழிலாளி, தொழிலில் இருவருக்குமான சம்பந்தம் என்று தனித் தனி சப்தங்களால் வியவகரிப்பது வாடிக்கை.
ஆனால் சம்ஸ்கிருத பாஷையில், இந்த பாவே லுடு , கர்த்தரி லுடு , கர்மணி லுடு மூன்றும்
ஒரு சப்தத்தாலேயே வழங்குகிற இடங்கள் உண்டு.
ஆதேச : என்பது கட்டளையை சொல்லுகிறது. ஆதித்ய : அநேந ஆதேச : என்று கட்டளையை இடுமவரையும் குறிப்பதாக
பிரயோகங்கள் ஸத் வித்யா பிரகாரணத்தில் உள்ளன.

அதுபோல இந்த அஹங்கார ஸப்தத்துக்கும் 3 விதமான பிரயோகங்களைப் பார்க்கலாம்.
முதலில், அஹம் கரோதி இதி அஹங்கார : என்கிற வழக்கில் ,
அந்த ஆத்ம தத்துவத்தை குறிக்கிற யதார்த்த ஜ்ஞானத்திற்கு அஹங்கார : என்று பெயர்.
ஆத்மாவிடத்தில் இது ஆத்மா என்கிற ஸ்வரூப ஜ்ஞானம் உபாதேயம் .
ஆத்மா அல்லாத அநாத்ம வஸ்துவில் ஆத்ம ஜ்ஞானம் ஆத்மபகாரமா கருதப்படுகிறது.
கிம் தேந ந கிருதம் பாபம் சோரேண ஆத்மபகாரிணா — சாகுந்தலம் என்கிற இடம் காண்க.
ஆத்மா அல்லாத இந்த சரீரத்தில் ஆத்ம புத்தி சம்ஸார ஹேது .

அயதார்த்த ஜ்ஞானத்துக்கும் அஹங்கார : என்றுதான் பெயர். இது இரண்டாவது வியுத்பத்தி .
அநஹம் அஹம் கரோதி இதி அஹங்கார : – இல்லாத ஒன்றை இருப்பதாக பண்ணுகிற அபூத தத் பாவம்.
இவை இரண்டும் பாவார்த்தே லுடு பிரத்யயம். இந்த அயயதார்த்த ஜ்ஞானம் தியாஜ்யம்.
இதனை ஸத்குரு உபதேசத்தாலும் , பாகவத சகவாசத்தாலும் அவ்வியாஸத்தாலும் போக்கிக் கொள்ளலாம்.

அடுத்து மூன்றாவதாக டுக்ருங் கரணே என்கிற கணக்கில், இப்படியான அயதார்த்த ஜ்ஞானம்
எத்தாலே உண்டாயித்தோ அதையும் இந்த அஹங்கார சப்தத்தை இட்டுச் சொல்லாம் என்பதான விஷயம்.
இந்த 3 வது அஹங்கார காரணி எது என்றால் அதுதான் பிரக்ருதி.
பொய் நின்ற ஜ்ஞானம், பொல்லா ஒழுங்கும், அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனியாமுறாமை – என்கிற நம்மாழ்வார்
திருவிருத்த பாசுரம் இங்கு நோக்கத்தக்கது.
பகவத் ஸ்வரூப திரோதந கரீம் ஸ்வ விஷயாஸ்ச போக்கிய புத்தேர் ஜனனீம் – என்பதாக ஸ்வாமி எம்பெருமானார்
கத்யத்தில் தெரிவித்தாற்போல் அயயதார்த்த புத்தியை உண்டு பண்ணுகிற பிரக்ருதிக்கும் அஹங்கார : என்று பெயர்.
இந்த அயயதார்த்த ஜ்ஞானத்தை பகவத் கிருபையைக் கொண்டுதான் போக்கிக்கொள்ள வேண்டும்.

பகவத் பிரசாதத்தாலேயே மோக்ஷ லாபம் என்கிறத்தை –
மாமேவ யே பிரபத்யந்தே மாயாம் எதாம் தரந்தி தே – என்கிற கீதா ஸ்லோகம் காட்டுகிறது..
ஆசாரிய புருஷகார மென்ன, பிராட்டி புருஷகார மென்ன, அவைகளைக் கொண்டு பகவதனுக்ரஹத்தாலே
இந்த பிரகிருதி சம்பந்தம் போய், அயதார்த்த ஜ்ஞானம் போய் , யதார்த்த ஜ்ஞானம் உண்டாகி
அந்த யதார்த்த ஜ்ஞான மனந்தரத்தான மோக்ஷத்தில்
அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னாதோ அஹமன்னாதா அஹமன்னநாத -என்று நடக்கிற அனுபவ வியாப்தியை,
அதிலும் அஹம் என்கிற ஜ்ஞானம் அந்த ஜ்ஞான ஸ்வரூபத்தில் கிடையாது என்பதாக மறுக்கிறார்கள் இந்த அத்வைதிகள்.
ஜகத்து இந்த அஹங்கார தத்துவத்தால்தான் பிரதிபலிதமாகிறது . இது ஆரூடமானது. வந்தேறி. ஸ்வாபாவிகம் கிடையாது .
ஆகையாலே அஹங்கார ஆலம்பனாதிகளாலே கிருஸ்ன பிரபஞ்சம் மித்யா. காரியம் எல்லாம் மித்யை ஆனபடியாலே ,
இரண்டாவது என்பதே கிடையாது. ஆகையால் ததனன்யத்வம் என்பதே கிடையாது என்கிறான்.

பிரஹ்ம சூத்திரம் 4 அத்யாயம், 16 பாதங்களும் 16 விதமான பகவத் குண விசேஷணங்களை நிரூபிக்கின்றன.
1. ஸ்ரஷ்டா – அகில புவந ஸ்தேம ஸ்தேம பங்காதி லீலே என்கிற பிரஹ்ம காரியம் ஜகத்து என்பதாக.
2. தேஹி – நிர்விசேஷ சின்மாத்ரம் பிரஹ்மம் என்பதற்கு எதிர் தட்டாக , சேதனா சேதன விக்ரக விசிஷ்ட பிரஹ்மம் என்பதாக.
அசேதனங்களுக்கு ஸ்வரூப விகாரமும், சேதனமான ஜீவாத்மாக்கு ஜ்ஞான சங்குசித விகாசமாகிற ஸ்வபாவ விகாரம் மட்டுமே ஆகக் கடவது.
3. ஸ்வ நிஷ்ட:
4. நிருப உபமான:
5. அபார்த்த அதிகம்ய : –
ஆரம்பணாதிகாரண சங்கதி விலக்ஷணத்வாதி கரணத்தோடே .
ஸ்மிருதி பாதமான இதில் அபவாத நிரஸனம் பலம்.
வைலக்ஷண்யோஹோ காரிய ஹேதுஹு
முதல் அத்தியாயத்தில் சொன்ன பர பிரஹ்மம் தான் ஜகத் காரணம் என்று சொன்னது தவறு,
ஸாலக்ஷிண்யம் இல்லாமையாலே என்பது சாங்கியனுடைய வாதம்.
பிரபஞ்சவகமானது சுக துக்காதி மோஹாத்மகமாக இருக்கிறது. அந்த பிரஹ்மம் நிர்துஷ்ட நிர்தோஷனாக இருக்கிறான்.
இங்கு வைலக்ஷிண்யம் வந்தது. அத்தாலே எங்கள் பக்ஷமான அஸத் காரிய வாதத்துக்கு அல்லவோ வந்தீர்கள்.
உங்கள் சத்காரிய வாதம் என்னவாயிற்று விசிஷ்டாத்வாதிகளே ? என்பதாக வைசேஷிகன் அபவாதம் சொல்ல,
தன் நிமித்தமாக இந்த ஆரம்பணா திகரணம் பிரஸ்துதமாயிற்று .

ஸ்ருஷ்டி விஷயமான காரிய-காரண பாவத்தில் பல வாதங்கள் உள்ளன.
அதில் வைசேஷிக பக்ஷமான ஆரம்ப வாதம் காரியமே வேறு. காரணமே வேறு என்பதாக.
ஆனால், பத்ர தாடங்கவது நீண்டு சுருள்கிறது போல காரணமாக இருக்கிற அவஸ்தை ஒருநிலை.
காரியமாக பரிணமித்து இன்னொரு நிலையாகிற அவஸ்தா பேதமே ஒழிய வஸ்து பேதம் அன்று .
சென்னால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்கிற கணக்கிலே திருமாற்கு அரவு என்பது ஒரே திரவ்யமாய்,
கைங்கரியார்த்தமாய் அவஸ்தை வேறுவேறாக சமைத்துக் கொள்கிறபடி. இது ராமாநுஜ பக்ஷம்.

சாங்கியன் காரியம் எப்போதும் அவஸ்தாந்தரத் தோடே கூடி இருப்பது என்கிறான்.
வைசேஷிகன் வஸ்துவே வேறு என்றான். உண்மையில் ஒன்றின் காரியம், இன்னொன்றின் காரணம் என்பதே சரி.
காரிய-காரண பாவத்தை அபலாபம் பண்ணுகிறவர்கள் 3 பேர்.
ஆகஸ்மிக வாதம் (Coincidence) பௌத்தர்களின் ஒருவனான மாத்யமிகனுடையது.
ஸ்வபாவ வாதம் (Scientist-பிரத்யக்ஷ வாதி) சாருவாகனுடையது.
தர்பை புல்லில் கண்டக ஸ்ருஷ்டி ஸ்வபாவமே தவிர, ஒரு வியக்தியால் உருவாக்கப் பட்டதல்ல என்பதாக.
அடுத்து அநிர்வசனீய வாதம் சங்கராத்வைதி களுடையது . வசநீயம் பிரஹ்மம் ஒன்றுதான். மற்றதெல்லாம் நிர்வசனீயம்.
ஸது பிரஹ்மம் ஒன்றேதான். ஸசஸ்ருங்கம் போல அஸது. ஆனால் இந்த பிரபஞ்சம் இருக்கிறதே அது இருப்பதைப் போல தோன்றுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல. எனவே அது ஸதஸது ஆகும். ரஜ்ஜு-ஸர்ப – பழுதைப் பார்த்து பாம்பு என்று பிரமிப்பது போல
இல்லாத ஒன்றை இருப்பதாக தோற்றுவதால் அநிர்வசனீயம் . ஆக காரிய காரண பாவம் கிடையாது என்கிற விவர்த்த வாதம் இவர்களுடையது.

ந அந்யது – நாம் சொல்லுகிற அந்யது – இதுவும், இதுவும் ஒன்றே – பிரஹ்மமும் ஜகத்தும் ஸத்யம் .
அந்த பிரஹ்மமே ஜகத்துக்கு உபாதான காரணமாக இருப்பதால் ஸவிசேஷ பிரஹ்மம் ஒன்றே என்பதாக.
நைதத்வ ஸமாஸம் –
ந தேவாம்ஸோ தாதாத் அன்னம்
ந ருத்ர: கண பாடக :
ந ரிஷி குருதே காவ்யம்
ந விஷ்ணு பிருத்வி பதிஹி
ந ருத்ர: = அருத்ர :
ந ரிஷி : = அந்ருஷி
மனுஷ்யாத் அனன்ய : பிராம்மண : – மநுஷ்யர்கள் பலர் நடுவில் இவர் பிராமணர் என்றால், மனுஷ்யர் அல்லவோ என்று கேட்பாருண்டோ?
விருட்சாத் அனன்ய : பலாச : – விருட்சங்கள் நடுவில் இது புரச மரம் என்றால், மரம் இல்லையா என்பது போலே தத்புருஷ ஸமாஸத்தால் சொல்லாது
பஹுவ்ரீகி ஸமாஸத்தால் இரண்டாவது வஸ்துவே இல்லை என்பதாக பொருள் கொள்கிறார்கள்.
ஸத் வித்யா பிரகரணத்தில் காட்டிய உதாரணங்கள் வேறு.
சங்கரர் காட்டுகிற ரஜ்ஜு, சுத்திகே இவை வேறு , என்பதாக வைசேஷிகன் ஆக்ஷேபிக்க,
அதிஷ்டானம் தான் சத்யம், மற்றவை பிரமம் போனவாறே அசத்யமாகிறபடியான உக்தி இரண்டுக்கும் ஒன்றே தான்
என்பதாக ஆக்ஷேப பரிகாரம் சொல்லினர் அத்வைதிகள்.
அநுவர்த்தமான ம்ருது ம்ருது ம்ருது என்பது ஒன்றே சத்தியம்.
சர்ப்பம், பூதளம், அம்புதாரா என்பதான வியாவர்த்தமானம் அனைத்தும் அசத்தியம். சுத்திகா,
மருத்திகா போலே ரஜ்ஜு மேலே ஆன ஜ்ஞானம் பொய்யான ஜ்ஞானம். விதமானது துவைத்த வாக்யங்களைப் பேசுவானேன் என்னில்?
பொய்யானதுக்கு உதாரணம் காட்டவேண்டி சொன்னவை விடுமாறு பணிக்கவே என்பதாக சங்கர பக்ஷம்.

——–

தர்க்க பாதம் –
பகவத் ராமானுஜருக்கு முன்பு வந்த பாஹ்ய மாதங்கள் என்ன, வேதாந்திகள் என்ன பலரும் பலவிதமாக
லோகத்தை – லோக: = லோக இதி லோக: கண்ணால் பார்க்க கூடியதாக உள்ளபடியால் லோகம். லோகம் என்பது இடவாகு பெயராய்,
லோகத்திலுள்ள மநுஷ்யர்களை – புத்தி பேதலிக்கும்படியாக தங்கள் தங்கள் மதங்களை பிரச்சாரம் செய்து போந்தனர்.
கணாத வைசேஷிகர்கள் – காரியம் வேறு காரணம் வேறு என்று சொல்லி, பிரஹ்மம் என்கிற ஒன்று கிடையவே கிடையாது என்றான்.
சாங்கிய பிரவர்த்தகரான கபிலர் – என் மனதுக்கு தோன்றுவதை சொல்லுகிறேன். வேதாந்தமும் இதைத் தான் தெரிவிக்கிறது.
பரப் பிரம்மம் கிடையாது. ஆனாலும் காரிய காரணம் இரண்டும் ஒன்றே என்கிறார்.
குமாரில பட்டர் – இந்த ஜகத்துக்கு ஸ்ருஷ்டி, பிரளயம் என்பதே கிடையாது. பிரவாகதா இது அநாதி என்றான்.
பௌத்தன் – அசத்து தான் காரணம். இல்லாத பொருளாலேயே இல்லாத பொருள் உண்டாகிறது.
கஸ்சத் தேய: காரணம் து தியேய : என்று ஏன் அலையை வேண்டும் ? என்றான் அவன்.
சங்கராதிகள் – காரணம் ஒன்று தான் சத்யம். அத்தால் உண்டாகிற காரியம் எல்லாம் மித்யை .
இத்தனை அல்லலெல்லாம் பண்ணி, பிரஹ்ம காரணத்தையே மறுப்பவர்களை வேலி இட்டு அடக்கி வைத்தார் இராமானுஜர் என்றபடி.

இந்த ஸ்ரீபாஷ்யத்தில் பிரஹ்மண : பிரஹ்மண: என்று வரும் போதெல்லாம் அது
பஞ்சமி விபக்தியா ஷஷ்டி விபக்தியா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும். அதாவது
பரபிரஹ்மத்தினின்றும் – என்பது 5 வது வேற்றுமை
பரபிரஹ்மத்தினுடைய – என்பது 6 வது வேற்றுமை.
ஸத் காரிய, அஸத் காரிய வாதத்தில் இது முக்கியமாக நோக்க வேண்டி உளது.
பௌத்தர்கள் எல்லாரும் அஸத் காரிய வாதிகள். அஸதஹ காரியம் என்று 5 வது வேற்றுமையில் சொல்லுகிறான்.
இல்லாத அஸத்திலிருந்து இல்லாத காரியம் உண்டாகிறது . ஆகவே காரியமும் அஸது -தான் என்பதாக.
இது வைதிக சித்தாந்தத்துக்கு நேர் முறணானது .
ஆத்மந : ஆகாஸாத் ஸம்பூத:
ஆகாஸாத் வாயு
வாயுர் அக்நி :
அக்நிர் ஆப :
ஆபஃ பிருத்வி என்ற கணக்கில்
ஸோ தா ஏதாம் பிரஜாயே ஏவ – என்பதாக பிரஹ்மம் தானே பஹுவாகக் கடவேன் என்று தன் சரீரத்தில் ஏகதேசமான
ஸூக்ஷ்மாவஸ்தையில் உள்ள சேதனா சேதனங்களை ஒட்டு விடுவித்து
அநேந ஆத்மநா அநுபிரவிஸ்ய என்று தேஜோ ரூபமான 3 தேவதைகளை ஸ்ருஷ்டி பண்ணி தானே பரிணமித்தது .

ஸது ஏவ சௌம்ய! இதம் அக்ர ஆஸீத் என்றதாலே அதுதான் பர பிரஹ்மம். அந்த ஸத்தான காரணத்திலிருந்து
ஸத்தான காரியம் உண்டாவதைச் சொல்வதே ஸத் காரிய வாதம்.
பௌத்தன் காரணம் அஸது என்கிறான். வைதிகர்கள் காரணம் ஸது என்கிறார்கள்.
காரணம் அஸது என்பதால் காரியமும் அஸது என்பது அவர்களுடையது. காரியம், காரணம் இரண்டும் ஸது என்பதே வைதிகர்கள் வாதம்.
கணாத வைசேஷிக சாங்கியர்கள் 6 வது வேற்றுமையில் கார்யஸ்ய அஸதஹ – இல்லாத காரியம் உண்டாவதாக சொல்கின்றனர் .
சாங்கியன் சொல்வது இருக்கிற காரியம் தான் உண்டாகிறது என்பதாக. இதுவும் 5 ஆம் வேற்றுமை ஆகும்.

காரியம் ஸதேவ என்பதற்கு சாங்கியன் 5 காரணங்களை இட்டுச் சொல்கிறான்.
அஸது அகரணாது – காகத்துக்கு தந்தத்தையும், கூர்மத்துக்கு ரோமத்தையும் உண்டாக்க முடியுமோ?
அஸது – அஸதே தான். ஸது ஏவ ஸத்தான காரியமாக பரிணமிக்கிறது என்றான்.
இந்த பரிணாம வாதத்தில் வைதிகனுக்கும் அபேக்ஷை உண்டு.
ஆனாலும், வைதிக பக்ஷத்தில் சிறிது வைலக்ஷிண்யம் உண்டு என்பதைக் குறிக்கவும்.
உபாதான கிரஹணாது – தைலத்துக்கு எள்ளும், பிரசாதத்துக்கு அரிசியும் போலே காரிய உபயுக்தமான
உபாதானத்தை அன்றோ தேடித் போகிறோம்.
எண்ணை வேண்டி மணலை செக்கில் இடுவாருண்டோ?
ஸர்வஸ்ய ஸர்வ சம்பவ அபாவாது – வைசேஷிகனே காரணத்தில் காரியம் இல்லை என்கிறாய்.
மிருக் பிண்டத்தில் கட்டம் இல்லை.-தந்துவில் கடம் இல்லை. -விரீஹியில் கடம் இல்லை.
இல்லாததான கடத்தை தந்துவில் இருந்தோ, விரீஹியிலிருந்தோ உண்டாக்க முடியுமா? முடியாதே.

சக்தயஸ்ய சக்த காரணாது – இருப்பதிலிருந்துதான் உண்டாக்க வல்லது – என்பதாக ஸாங்க்யன் கூற,
காரிய வியாபாரம் – இல்லாமலே காரணத்திலிருந்து காரியத்தை , ரிஷிகள் மனசாலும், பகவான் சங்கல்பத்தாலும் ஸ்ருஷ்டித்தாப் போலே,
ஜனங்களும் , மரத்தில் பழம் விளையுமாபோலே அகர்மகமாக காரியப்பயனை பெறலாமே என்றான் வைசேஷிகன்.
அதற்கு சாங்கியன்
அப்படியல்ல. காரணம் காரிய உபயோகியாக வேண்டி –மண்ணை நீர் சேந்து குடமாக்க வேண்டி இந்த காரக வியாபாரமே ஒழிய,
காரியம் இல்லாத காரணத்திலிருந்து காரக வியாபாரத்தால் என்ன பயனும் இல என்பதாக சாங்கியன் சொல்ல .
அப்படியானால் ஸர்வஸ்ய ஸர்வதா ஸம்பவாது என்கிற தோஷத்தால், உண்டாயித்து-நஷ்டமாயித்து என்கிற வெவஸ்தை இல்லாமல்
போய்விடும் என்பதாக மறுமாற்றம் செய்தான் வைசேஷிகன்.
இதற்கு உத்தரமாக, அபிவியக்தி உத்பன்னம் என்பதான இருக்கிற காரியம் காரணத்திலிருந்து அபிவியக்தியாகிறது – தோற்றமளிக்கிறது
என்று சொல்ல, இதுவும் சரியல்ல, அநவஸ்தா தோஷம் தட்டுவதாலே .
அநவஸ்தா தோஷமாவது ஒரு அபிவியக்கத்திக்கு, இனொரு அபிவியக்தி, அதற்கு மற்றோன்று என்பதான முடிவற்ற தன்மை.

விவரண காரார் Vs வாசஸ்பதி மிஸ்ரர்/பாமதி காரர்.
ஜீவ – அஜ்ஞாத வாதம் Vs பிரஹ்ம – அஜ்ஞாத வாதம்.
யாதவ பிரகாச, பாஸ்கர, சங்கராத்வைதம்.
சாங்கியன் Vs சங்கரர்
சாங்கியன் பேசுவது பிரக்ருதி – புருஷன் என்கிற 2 தத்வத்தைப் பற்றி. பரமாத்ம தத்வத்தைப் பற்றி பேச்சு இல்லை.
ஸ்படிகத்திலே ஜபா குஸும ரக்த வர்ணம் அத்தியாசத்தாலே தோன்றுவது போல, பந்த – மோக்ஷங்கள் புருஷனுக்கு.
உண்மையில் அவன் நபத்யதே – நமுச்யதே நாதி
ஸம்சரதே என்பதான நிர்லிப்த்தன் தான்–புருஷனுக்கு பந்த மோக்ஷங்கள் பிரகிருதி சம்பந்தத்தால் என்பதாக சாங்கிய காரிகை.
இதை ஒரு ரூபகத்தால் – உதாரணம் கொண்டு விளக்கப் படுகிறது.
பிரக்ருதி என்பதான பெண் ஒருத்தி சுனையாடுகிற போது, அதனை வேற்றுப் புருஷன் ஒருவன் அவள் அறியாதபடிக்கு
மறைவில் இருந்து பார்ப்பது போல சம்சாரத்தில் அனுபவங்களை பண்ணி இருக்க, ஒருநாள் அல்லது ஒருநாள் அந்த ஸ்த்ரீக்கு
இது தெரியும்போது அவள் அங்கு ஸ்நானம் பண்ணுவதையே விலக்கி விடுவாள்.
அதுபோல இந்த புருஷனுக்கு பிரக்ருதி -ஆத்ம விவேகம் – தான் வேறு, பிரக்ருதி வேறு – தன் குணங்கள் வேறு, பிரகிருதியின் குணங்கள் வேறு
என்கிற ஜ்ஞான பிறந்தவாறே இந்த சம்சார பந்தம் விலகி விடும்.

இதே கருத்தையே சங்கரருடைய ஆசாரியரான கௌட பாதர் தன்னுடைய காரிகையில் சொல்லுகிறார்.
இவர் சொல்லுவது மூன்று நிலைகளை பற்றி. அவையாவன
பாரமார்த்திக நிலை
பிராதிபாஸிக நிலை
வியாவகாரிக நிலை.
பாரமார்த்திக நிலையில் பரமாத்மா தத்வம் ஒன்றுதான் உள்ளது. அதுக்கு ஜகத் காரணத்வம் என்பதான குணங்கள் எதுவும் கிடையாது.
நிர்குணன். பந்த-மோக்ஷங்கள் பாரமார்த்திக நிலையில் இருப்பதில்லை என்பதாக.
ஆக இந்த பிரஹ்ம ஜ்ஞானத்தைக் கொண்டு அனுஷ்டானங்களை பண்ணி முமுக்ஷுவாகுதல் என்பதெல்லாம் கிடையாது.
பரமார்த்ததகா பொய் – நவை முக்த : பத்த : இத்யேஷா பரமார்த்தகஹா – என்கிறார்.

ஸ்ருஷ்டி திருஷ்டி வாதம் Vs திருஷ்டி ஸ்ருஷ்டி வாதம் : என்பதாக அடிப்படையில் 2 வாதங்கள்.
மாயயை தான் உபாதானம். பிரஹ்மம் உபாதானம் என்று சொல்வதெல்லாம் மாயா விசிஷ்டாத்வாது பிரஹ்ம உபாதானம் உச்யதே.
இந்த மாயயைக்கு உபாதானமான ஜகத்தை பார்ப்பவன் யார் என்றால் அந்த அவித்யையால் ஜீவ பாவம் அடைந்த ஜீவன் தான் பார்க்கிறான் என்பது –
ஜீவ: பஸ்யதீதி ஸ்ருஷ்டி திருஷ்டி வாத : – ஸ்ருஷ்டி ஆன பிற்பாடு இந்த ஜகத்துடைய தர்சனம் உண்டாயித்து இந்த ஜீவனுக்கு என்பதாக.
இதுவே ஜீவாஜ்ஞான வாதமாகும். முத்து சிப்பியை வெள்ளி என்று நினைப்பதுபோல மித்யா ஜ்ஞானம் உண்டாயித்து என்பதாக .
இவர்கள் ஜகத்தை இருப்பதாக ஒத்துக் கொள்கிறார்களோ ? என்னில் கிடையாது.
ந ஸ்வார்த்ததா பர்யாயி – ந பிரயோஜனா பாவாது . தாத்பர்யத்தில் பதார்த்தம் கிடையாது என்பதாக.

பிரஹ்மாஜ்ஞானத்துக்கு மூலமாக இருக்கிற திருஷ்டி ஸ்ருஷ்டி வாதம் என்ன என்றால் அத்யாசம் தான் ஸ்ருஷ்டி-
பிரஹ்மத்துக்கு அஜ்ஞானம் மூடுவதால் ரஜ்ஜுவில் ஸர்பத்தைப் பார்ப்பது போல இந்த ஜகத்து ஒரு தோற்றமே என்பதாக-
ஸ்ருஷ்டி பூர்வகா திருஷ்டிஹி ஸ்ருஷ்டி திருஷ்டி : – தர்சனமேவ ஸ்ருஷ்டிஹி என்கிறது இத்தாலே.
வஸ்து ஸத் பாவ : ஜ்ஞாநார்த்தகஹா – வஸ்து இருக்கிறது என்பது அதனுடைய ஜ்ஞானம் ஏற்பட்ட பின்பல்லவோ ?
ஜ்ஞாத்ரு – ஜ்ஞேய பாவம் அத்யஸ்த : ஜ்ஞானம் ஒன்றுதான் ஸத்யம் . மற்றவை எல்லாம் தோற்றம் என்கிற
பிரஹ்மாஜ்ஞானம்தான் முக்கிய வேதாந்த பக்ஷம் என்பது இவர்கள் கருத்து.
மற்றபடியான வேத வாக்கியங்கள் எல்லாம் பாலோபசந்தானம் போலே —
குழந்தைக்கு கசப்பு மருந்தை இனிப்பு தடவி கொடுப்பது போலே என்கிறார்கள்.
உண்மை என்ன வென்றால் பதார்த்தமே கிடையாது என்பது. நித்ய சுத்த புத்த தத்துவமான பரமாத்மா ஒரு ஜ்ஞானத்தால்
அவித்யயை சூழ்துக் கொண்டு இனொரு ஜ்ஞானத்தால் அத்தை விடுவித்துக் கொள்கிறது .
அதுவே அதனுடைய சைதன்ய பிரயோஜனம் என்று கொள்க. இவர்களுக்கு மோக்ஷமாவது பிரகிருதி சம்பந்த நிவிர்த்தி.
அதற்கு மேற்பட்ட பரமபத சாயுஜ்யமோ, பரம பதத்தில் நிரதிசிய பகவதனுபவமோ , படியாய்க் கிடந்து பவளவாய் காண்பதாகிற
ஸ்வரூபானுரூப அனுபவங்களோ கிடையாது. கேவல ஆத்மானுபவமாகிற கைவல்யானுபவம் – ஜீவன்முக்தி –
சம்சார மண்டலத்திலேயே நிவிருத்த ஆத்மாவாகப் போருகை பிராப்பியம்.

நையாயிக்கணும் ஏகவிம்சதி (21) துக்க துவம்சமே மோக்ஷம் என்றான். இந்த நையாயிகன் மேலும் ஜகத்தையும்,
அனுமானிக்க பிரஹ்மத்தையும் ஒத்துக்க கொண்டாலும் இரண்டும் ”அன்யது ஏவ” என்று முடிக்கிற படியால்
இவர்களும் நமக்கு பூர்வ பக்ஷம் ஆகிறார்கள்.
தத அநன்யத்வம் என்கிற சூத்ரத்தால் வியாசரும் இதை மறுக்கிறார்.

இன்னும் ஏகாத்ம வாதம் – பரமாத்மா ஒருவன் தான் ஸத்யம் . மற்ற அனைத்தும் மித்யா. இவர்கள் பிரஹ்ம விவர்த்த வாதிகள்.
அப்படியானால் நடைபெறுகிற அனுபவம் எல்லாம் பொய்யோ?
பிரத்யக்ஷத்துக்கும் – சாஸ்திரத்துக்கும் விரோதம் வந்தால் பிரத்யக்ஷம் அல்லவா பிரமாணம்? . இல்லை.இல்லை. சாஸ்திரம் தான் பிரமாணம்.
பிரத்யக்ஷத்தில் ஏற்படுகிற அனுபவம் இத்தனையும் அவித்யையால் உண்டாயித்து என்பது தான் சாரம்.
அப்படியானால், அவித்யை என்றால் என்ன? என்றால் வித்யா இதறது. வித்யைக் காட்டிலும் வேறுபட்டது.
இந்த மாயயை இப்படி என்று சொல்லக் கூடியது இல்லை.
ஸத்யம் தான் என்று பாஸ்கரர் சொல்லி வந்தார்.
அஸது என்று பாமனிகாரர் சொல்லி வந்தார். ஸத்தா? அஸத்தா? என்று சொல்ல முடியாது.
சதத அநிர்வசனீயம் மாயா என்கிற குழப்பம் எல்லாம் உண்டு.
இதில் மாயா- அவித்யா விபாக த்விபக்ஷ வாதம் பிற்பகுதியில் எடுத்துக் காட்டப் படுவதை பிறகு பார்ப்போம்.

இப்படி இராமானுஜருக்கு முன்னான சங்கரருக்கும் முற்பட்ட பர்த்ரு பிரபஞ்சர் என்ன, கௌட பாதர், சங்கர-பாஸ்கர-யாதவ பிரகாசர் என்ன
அனைத்து மதங்களையும் அலசி ஆராய்ந்து, போதாயன விருத்திக் கிரந்தத்தை வாசித்து பிறகே தம்முடைய
விசிஷ்டாத்வைத பரமான ஸ்ரீபாஷ்யத்தை அவதரிப்பித்தார் எம்பெருமானார் என்பதைச் சொல்லப் போனால்
எப்படி விஜய ராகவனாக புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்புகிற ராமன், சீதைக்கு இதோ பார்
இங்குதான் நீ உன் ஆபரணங்களை கழட்டி பொகட்டாய் , இங்குதான் நீ ராவணனால் அபகரிக்கப் பட்டய் ,
இது நான் மாய மாரீசனை அடித்து வீழ்த்தின இடம் என்பதாக காட்டிக் காட்டி நாடு திரும்பினானோ,
அதுபோல இது பாமினி பக்ஷம், இது விவிரணகாரர் பக்ஷம், இது சங்கர பகஷம் என்பதாக கட்டிக் காட்டி
முடிவாக ஸ்வபக்ஷத்தை தம்முடைய கிரந்தத்தில் நிலை நாட்டுகிறார் பாஷ்யகாரர்.

ஏக ஜீவ வாதம் Vs அநேக ஜீவ வாதம் –
பாமதிகாரரான வாசஸ்பதி மிஸ்ரர் தன்னுடைய பிரஹ்மாஜ்ஞான – அநேக ஜீவ – பிம்ப-பிரதிபிம்ப – அவச்சேத வாதத்தை
சொல்லுகிற போக்கில், விவிரண காரரான மற்ற அத்வைதிகளுடைய ஜீவாஜ்ஞான – ஏக ஜீவ – வாதத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்.
அவருடைய ஸ்வ பக்ஷமாவது : பட்டை தீட்டிய மணியில் முகம் சிறுத்து, பருத்து, நெடிது காண்பது உபாதையால் வருவது.
நீல கண்ணாடியில் பார்க்கும் போது பிம்பம் நீலமாகவும், மஞ்சள் கண்ணாடியில் பார்க்கும் போது
பிம்பம் மஞ்சளாகவும் காண்பது பிம்பத்தின் குறை அல்ல. சாயம் பூசிய கண்ணாடி – உபாதி காரணம்.
இப்படியே உபாதிக்கு ஆட்பட்ட ஜீவர்கள் சுக-துக்கங்களை அனுபவிக்கிறார்கள். அந்த உபாதியும் மித்யை என்பதாக.

விவிரண காரர் – இப்படியாக பிரஹ்மத்துக் அவித்யையினால் ஜீவ பாவம் வருகிறது என்றால்
நித்ய சுத்த புத்த பிரஹ்மத்துக்கு அவித்தை வாராது. ஒருவேளை ஜீவனுக்கு அவித்தை வந்தது என்றால்,
முதலில் ஜீவன் வந்திருக்க வேண்டும். அதற்கு பிரஹ்மத்துக்கு அவித்தை உண்டாக வேண்டும்.
இப்படி இதரே இதர ஆச்ரய தோஷம் வருகிறதே என்ன அப்படி இல்லை .
ஜீவர்கள் அநாதி, பீஜ-விருக்ஷ நியாயத்தாலே. எப்படி விதை முதலில் வந்ததா? செடி முதலில் வந்ததா? என்று
சொல்ல முடியாதாப் போலே அநாதி என்று பதில் சொன்னார் பாமதிக்காரர்.
பிரஹ்மமே ஜீவ பாவத்தை அடைந்திருப்பதால் ஜீவனுக்கும் பர பிரஹ்மத்தைப் போல அசுத்தி என்பதே கிடையாது.
இப்படி ஜீவனிடத்தில் தோற்றுகிற நானாத்வம் , சுக தூக்காதி அசுத்தி எல்லாம் அவித்தையாகிற உபாதியாலேயாய்,
பிரவாகதயா அநாதி என்கிற காரணத்தால் அந்த அவித்யைக்கு கூட எந்த தோஷமும் தட்டாது.

ஜீவ பாவம் கல்பிதம் அன்று. அகல்பிதம் என்றால், பிரஹ்மத்துக்கே அவித்யா பாவம் சொன்னாப் போலே ஆயித்து.
ஆக மொத்தம் , பாமதிகாரரே நீங்களும் எங்ககள் பக்ஷத்துக்கே அல்லவோ வருகிறீர்.
ஜீவனும், பிரஹ்மமும் ஒன்றே, ஜகத்து மித்யை என்று ஆன பின்பு அவித்யைக்கே அவித்யை வந்தாப்போல –
புடவைக்கே புடவை காட்டினாப் போலே ஆகிறது. ஒரு வியக்தி புடவை கட்டினாப்போல் தெரியவில்லை.
இத்தால் ஆத்மாஸ்ரய தோஷம் வருகிறது என்பதாக விவரணக்காரர் சொல்ல ,
அதற்கு பாமதிகாரர் கிடையாது , பந்தமும் அபாரமார்த்திகமே என்கிறார்.
அப்படியாகில் இவர்கள் பாஸ்கர பக்ஷமான பேதாபேத கோஷ்டியிலும் இல்லை.
அவித்யையும், பிரஹ்மமும் தவிர்ந்த இன்னொன்று கிடையாது என்கிற பிரஹ்மாஜ்ஞான அத்வைத கோஷ்டியிலும் இல்லை
என்பதாகச் சொல்லி, விவரணகாரர் பாமதிகாரருடைய ஜீவாத்வைத வாத அனுப்பபத்திகளை எடுத்துக் கூறுகிறார்.

எப்படி பஞ்சரத்தில் வைத்த கோழி குஞ்சுகளை பூனை இடறி ஒன்றை பிடிக்கப்போய், மற்ற கோழிக் குஞ்சுகள் எல்லாவற்றிற்கும்
விடுதலை கிடைக்குமோ, அதுபோல அவித்தை ஒன்றேயாய், ஒரு ஆத்மாவுக்கு அவித்தை கழிந்தவாறே ஏனைய ஜீவர்களுக்கும்
மோக்ஷம் சித்திக்க ஸர்வ முக்தி பிரசங்கம் வருமே? –ஜீவ பேதத்தை ஆஸ்ரயித்த அவித்தையும் பஹு விதமாக –
தனித்தனியே ஒவ்வொரு ஜீவனையும் பீடிக்குமா? ஏற்றாலும் பொருந்தாது. காரணம் ஜீவ பேதம் ஸ்வாபாவிகமா ? கால்பிகமா ? என்கிற
கேள்வி வருகிறது. பிரஹ்மத்தைக் காட்டிலும் ஜீவன் வேறு அல்ல என்கிற பக்ஷத்தில், ஜீவ பேதம் ஸ்வாபாவிக மாக முடியாது.
கல்பிதமானால் ஜீவாஜ்ஞானமா? பிரஹ்மாஜ்ஞானமா? என்று விளக்கவேண்டி வரும். பிரஹ்மத்துக்கு அஜ்ஞானம் என்றால்
எங்கள் பக்ஷத்துக்கு வந்ததாகிறது. இல்லை ஜீவர்களுக்கே அஜ்ஞம் என்றால், இதரா இதர தோஷம் போனபாடில்லை,
என்பதாக உதங்கர் கிருணனை மடிப்பிடித்து துரியோதனாதிகளையும் நல்ல புத்தி கொடுத்து திருத்தி, பாரத போர் வராமல் தடுத்திருக்கலாமே?
ஏன் ஆப்படிச் செய்யாது போனாய்? என்று கேட்க, இதோ சந்தியாவந்தனத்துக்கு நாழியாயிற்று முடிக்கப் போம் என்று சொல்லி
கை நழுவிக் கொண்டு விலகிப் போனாப்போலே, பாமதிக்கார பக்ஷம் நிரஸமாயித்து .

ஏகாத்ம சரீர வாதம்

அத்வைதிகளுக்கு எப்படி அஹங்கார சப்த வியத்பத்திகள் 3ல் –
அஹமர்த்த ஆத்மா அஹங்கார :
அயதார்த்த ஜ்ஞானம் அஹங்காரம்
அயதார்த்த ஜ்ஞான ஜனகமான பிரக்ருதி அஹங்காரம்
என்பதில் எதை எடுப்பது என்பதில் குழப்பம் இருந்ததோ , அதுபோல இவ்விடத்தில்
மாயா, அவித்யா நிஷ்பன்னங்களில், ஸ்வாபாவிக அர்த்த விந்யாசத்திலும் இவர்களுக்கு குழப்பம் உண்டு.

மாயா என்பதற்கு அவர்கள் சொல்லுகிற அர்த்தம் மித்யா = பொய் என்பதாக. உண்மையாக மாயா என்பது பிரக்ருதியைச் சொல்லும்.
மாயாந்து பிரக்ருதிம் வித்தி, மாயினந்து மஹேஸ்வரம்.
மாயா என்பது பகவத் யோகமாயை என்பதாய் எம்பெருமானுக்கு சரீர ஸ்தானத்தில் இருக்கிற மூல பிரக்ருதியை குறிப்பதாகும். அதுபோல
வித்யா என்பது ஜ்ஞானம். அவித்யா என்பது ஜ்ஞானே இதரது என்பதாக பிரசங்கானுகுணமாக அர்த்தத்தைக் கொள்ளவேண்டும்.
அவித்யா = ஜ்ஞானே இதரது கர்மா என்பதாக. அதை விட்டு பரம் பிரஹ்மைவ அஜ்ஞம் என்பதாக
சூழ்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழ் என்பதான பிரக்ருதி தத்வத்துக்கு அந்தராத்மாவான பிரஹ்மத்தை
அஜ்ஞானம் சூழ்தது என்கிற வாதம் சரிப்படாது என்கிறார் இவ்விடத்தில். வேதமே அவனை

நிஷ்களம் நிரஞ்சனம் சாந்தம் என்றும்
சத்யம் ஜ்ஞானம் அனந்தம் பிரஹ்ம
ரிதஹும் சத்யம் பரப்ரஹ்ம புருஷம் கிருஷ்ண பிங்களம் –என்பதாக வன்றோ வியவகரிக்கிறது.
இப்படியான பகவத் ஸ்வரூபத்துக்கு அஜ்ஞம் என்கிற மாயா வாதிகளான உங்களிடத்தில் தான் அஜ்ஞம் சூழ்ந்திருக்கிறது என்பதாக — வேதாந்தச்சார்யர் .
பகவானுக்கு உபய லிங்கங்கள் அகில ஹேய பிரத்யநீக கல்யாணைக தானத்வம் போலே
ஜீவாத்மாவுக்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வங்கள் தடஸ்தமாய், சேஷத்வ, பார்த்தந்திரியங்கள் அகஇதழ் போலே .
பிரக்ருதிக்கு லக்ஷணம் பகவத் ஸ்வரூப திரோதான கரீம், ஸ்வ விஷயே போக்ய புத்தேர் ஜனனீம் என்பதாக.
கரணம் = இந்திரியம்.
காரியம் (களேபரம்) = தேகம்.
பரபிரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனான படியாலே, அவனுக்கு காரண களேபரங்களைக் கொண்டு சாதிக்க வேண்டியது எதுவும் இல்லை.
எதுவேண்டுமானாலும் ஸ்வ சங்கல்பத்தாலேயே செய்யக் கூடியவன்.
அவனுக்கு சரீரத்தினுடைய அபேக்ஷையோ இந்திரியங்களுடைய அபேக்ஷையோ கிடையாது. எனவே அவனுக்கு சரீரம் கிடையாது என்பது அல்ல.
அஸ்மதாதிகளைப் போல கர்மவஸ்யமான சரீரம் கிடையாது. இச்சா கிருஹீத அபிமத உரு தேஹ : என்பதாக ஸ்வேச்சையா பரிகிரகிக்கிற
திவ்ய மங்கள விக்ரஹம் உண்டு என்பதே . இச்சையால் சாதிக்கிறான் என்றால் இச்சைக்கு அவன் ஆதீனமோ என்றால் ? அல்ல
இச்சை என்பது அவனுடைய ஆதீனத்தில் நின்று காரியம் பார்ப்பது என்றே கொள்ள வேண்டும்.
அவனுடைய ஜ்ஞான இச்சா காரியங்கள் பெரிய பிராட்டியார் சாநித்யத்தாலே என்பது நம்முடைய சம்பிரதாயம்.

ஜ்ஞான அபாவம் அஜ்ஞானம் . ஆனால் அத்வைதிகள் அஜ்ஞானத்தை பாவ ரூபமான அஜ்ஞானம் என்கின்றனர்.
கணித சாஸ்திரத்தில் negative intiger ஐ -i (minus i ) என்பதாக சொல்கிறார்களோ அதைப்போல எனக் கொள்ளக் கடவதோ ? என்னில்
திதி, அதிதி என்பது திதிக்காட்டிலும் வேறுபட்டவள் என்கிறத்தாலே அது பாவ ரூபமே. அபாவ ரூபம் அன்று.
இருவரும் கர்த்தம பிரஜாபதிக்கு பத்நி =மார்களே அன்றோ?
ஸுர: அஸுர: என்பதில் அஸுர: என்பது ந-ஸுர : என்றே பொருள் படுமே அல்லாது அபாவத்தைச் சொல்லாது.
அது போல , அவித்யா என்பது வித்யா அந்யது கர்மா என்று கொள்ள வேண்டும். பொய் என்றோ, மாயை என்றோ கொள்ளக் கூடாது.
மா + யா
மா – மாந்தி யஸ்யாம் என்று பிரளயகாலத்தில் – தம பரே தேவ ஏகீ பவதி – என்பதாக யாரிடத்தில் போய் லீன மாகிறதோ
யா – யாந்தி யஸ்யா : என்று யா = பிராபணே , யாரிடத்தில் இருந்து ஸ்ருஷ்டியில் உண்டாகிறதோ என்கிற பொருளில் பிரக்ருதியைச் சொல்லும்.
மாயா என்பதற்கு அநிருதம் என்பதாக பொருள் கிடைக்காது என்பதாக வியுத்பத்திகளைக் காட்டி நிரூப்பித்துள்ளார்கள் நம்முடைய பூர்வாசார்யர்கள்.

இப்படி பிரஹ்ம வியதிரிக்த வஸ்து எதுவுமில்லை என்று சொல்லி பரபிரஹ்மமே ஜீவ பாவத்தை அடைகிறது என்றான போது
பந்த மோக்ஷ வெவஸ்தை கிடையாதே என்கிற குழப்பம் வர , அதை தவிர்த்துக் கொள்ள ஜீவாஜ்ஞான மாகிற பாமதிகாரர் பக்ஷம் வந்தது.
அதை விவரணகாரரான பிரஹ்மாஜ்ஞாந வாதி மறுத்து கண்டனம் பண்ணுமத்தை பார்ப்போம்.
பிரஹ்மத்துக்கு அவித்யையாலே ஜீவபாவம் ஏற்பட்டது என்றும்,
ஜீவனுக்கு அவித்யையாலே நாநாதவம் உண்டாயிற்று என்றும் சொல்லுமிடத்து ஜீவன் முதலிலா, அவித்யை முதலிலா என்கிற
இதரேதர தோஷம் வருமே என்ன, ஜீவன் பீஜாங்குர -விருக்ஷ நியாயத்தாலே அநாதி. விதை முதலா? மரம் முதலா? என்று யார் சொல்ல முடியும்.
விதை முளைத்து செடி-மரம்-பூ-காய்-பழம் என்று மீண்டும் விதை வந்தாலும், போட்ட விதை திரும்புவதில்லை. புதிய விதை தானே உண்டாகிறது?
அதாவது ஒரு விதை நசிந்து இன்னொரு விதை வருவது என்பது ஜீவன் நீர் குமிழ்போல் தோன்றி மறைவதாக ஏற்படுகிறது.
இந்த விளக்கமும் சரிப்போகாது. ஜீவா அநித்யத்வம் சித்தித்தால் , அந்த ஜீவன்களுடைய பாப புண்ய கணக்கு என்னவாகும்?
ஆகவே இந்த பீஜாங்குர நியாயம் செல்லாது.

ஜீவனுக்கு அஜ்ஞானம் சொல்ல வந்தது பந்த-மோக்ஷ வெவஸ்தை சரிக் கட்டத் தானே.
இந்த அவித்யையானது தத்வமஸி வாக்யார்த்த ஜ்ஞானத்தாலே அயமாத்மா என்கிற ஜ்ஞானம் உண்டாகி
அஹம் பிரஹ்மாஸ்மி என்கிற முக்த நிலையை அடையும்போது , அவித்யையோடு இந்த ஜீவாத்மாவும் நாசமடைகிறதா? இல்லையா?
நாசமடையும் போது மோக்ஷ அனுபவத்தை யார் பண்ணுவர்? நாசமடையவில்லை என்றால் அது மோக்ஷமாகாதே?
என்பதான தோஷங்கள் ஏற்படுவதால் ஜீவாஜ்ஞான வாதம் எடுபடாது.

பர்த்ரு பிரபஞ்சர் சிஷ்ய பரம்பரையில் வந்த பிரம்ம தத்தர் என்கிற ஒரு அத்வைதி மட்டும்
ஜீவ-ஸ்வரூப-விச்சேத = ஜீவோத்பத்தி-விநாச வாதத்தை பண்ணுகிறார் என்று தெரிகிறது.
ஆனால் இது மற்ற எந்த சம்பிரதாயத்தவர்களுக்கும் உடன்பாடு இல்லை.
பிம்ப ஸ்தானத்தில் பிரஹ்மம். பிரதிபிம்பம் ஜீவன். கண்ணாடி உபாதி . ஜீவ பாவம் கழிவது உபாதி கழியும்போது –
கண்ணாடி உடைந்தால் பிரதிபிம்பம் இருக்குமா? இருக்காதா? என்பது கேள்வி. பிரதிபிம்பம் இருக்கும் என்றால் ஜீவனுக்கு மோக்ஷம் சித்திக்காது.
பிம்பம் போய்விடும் என்றால் ஜீவ-பங்குர ஏவ .
கண்ணாடியில் முகம் பார்க்கும்போது , அதை உணர்வது அசேதனமான முகமும் அன்று, பிரதிபிம்பமும் அன்று. ஆத்மா ஒன்றே.
மேலும் ரூபம் இல்லாத காற்றின் பிரதிபிம்பம் கண்ணாடியில் தெரியுமா? அல்லது ஆத்மாவையோ, பரமாத்மாவையோ கண்ணாடி பிரதிபலிக்குமோ?
இல்லையாகில் பிரஹ்மத்துக்கு அவித்யை என்று வருமானால், பானுமதிக்காரரே நீரும் பிரஹ்மாஜ்ஞான வாதத்துக்கே வந்ததாகும்.
பிரஹ்மம் ஜீவனை பார்த்ததா? இல்லையா ? என்ற கேள்விக்கு இல்லை என்றால் ததைக்ஷத பிரஜாயே ஏவ என்பதான வாக்கியங்கள் பொய்ததாகும்.
ஜீவ பாவத்தை ப்ரஹ்மம் பார்த்தது என்றால், நிர்குண, நிராகார சுத்த பிரஹ்மத்துக்கு அது ஆகாது. அவித்யையோடு கூடிய பிரஹ்மமே பார்க்க முடியும்.
பிம்ப-பிரதிபிம்ப வாதத்தை விவரணகாரரும் சொல்கிறார். இவர் காட்டுகிற உதாரணம் –
சந்திர-பிரதிபிம்ப வாதம். எப்படி ஒரு சந்திரன் ஏரி, குளம், குட்டை என்று பலவற்றில் பிரதிபலிக்கிறதோ,
அதுபோல ஒரே பிரஹ்மம் பலவாகிற ஜீவ பாவத்தை அடைகிறது என்கிறார்.

விஹங்கமாங்க காமிநே
புஜங்கமாங்க சாயிநே
துரங்கமாங்க பேதிநே
நமோ ராதாங்க தாரிணே.

இதுவரை பிரஹ்ம சத்யம் ஜகன் மித்யா என்று சொல்லுகிற வாதித்தேலே, அந்தந்த அதிகாரி பேதத்தாலே வாத பேதம் இருக்கின்றன.
அதில் விவரணகாரருடைய பிரஹ்மாஜ்ஞான வாதமும், வாசஸ்பதி மிஸ்ரருடைய அநேக ஜீவாஜ்ஞான வாதமும் பார்த்தோம்.
அதற்கு முன்பாக ஸ்வரூப பரிணாமத்தையே சொல்கிற ஜலதத்வைதியான பர்த்ரு பிரபஞ்சர் ஏகதேசியாவார்.
இவைகளுக்கு புறம்பான மாயா-அவித்யா விபாக வாதமாவது :
அவித்தைக்கு ஆச்ரயமான ஜீவ பாவத்தை ஜீவன் பார்த்து பண்ணிற்றா ? பிரஹ்மம் பார்த்து பண்ணிற்றா ?
இல்லை அவித்தை பார்க்கிறதா? என்பது தான் வாதம். பிரஹ்மம் தான் பார்த்து என்றால் அது தான் பிரஹ்மாஜ்ஞான வாதம்.
இந்த மூன்றில் அவித்யை அசேதனம். அது தன்னைத் தானோ மற்றவற்றையோ பார்க்க இயலாது.
அடுத்து ஜீவன் பார்த்தது என்றும் சொல்ல வராது. காரணம் முத்து சிப்பியில் வெள்ளியை பார்ப்பது போல் மாயைக்கு ஆட்பட்டு
தான் பிரஹ்மம் இல்லை அவித்தைக்கு ஆஸ்ரயமான பின்பு தானே ஜீவ பாவம் ஏற்படுகிறது என்று நீ சொல்கிறாய்.
இப்படி பிரஹ்மம் தான் பார்த்தது என்றால் அது பிரஹ்மாஜ்ஞான வாதமே ஆயிற்று அன்றோ? என்ற விவரணகாரர்,
இப்படி எங்கள் பக்ஷத்துக்கு வாராமல் அஜ்ஞத்துக்கு ஆச்ரயமான பிரஹ்மம் தான்
ஸ்வகத , விகத , நாநா பேதங்களை பார்த்தது என்பது உண்டா? இல்லையா? என்பதை முதலில் கூறு என்பதாக பாமதிக்காரரை கேட்க,
பிரஹ்மம் பார்க்கவில்லை என்றால் தது ஐக்ஷத நாம ரூபே வியாகரவாணி என்பதான வாக்கியங்கள் எல்லாம் பொய்யாகுமே?

நம்முடைய சம்பிரதாயத்தில் , பிரஹ்மம் ச விசேஷமானபடியாலே , பிரஹ்மமானாலும், ஜீவனானாலும்
தர்ம பூத ஜ்ஞானத்தைக் கொண்டு பார்க்கிறது என்பது ஸதர்த்தம் . ஆனால் இவர்களுடைய மதத்தில் பிரஹ்மம் நிர் விசேஷமானபடியாலே,
அது அவித்தைக்கு / மாயைக்கு ஆட்டப்பட்டுத்தான் தன்னையோ, மாற்றதையோ, நாநா ரூபத்தையோ பார்க்க முடியும்.
பாஸ்கரர் பிரஹ்மம் உபாதி விசிஷ்டம் என்றார்.
இவர்கள் மாயா/அவித்யா விசிஷ்ட பிரஹ்மம்தான் ஜகதுபாதனம் என்றனர்.
சக்தி விசிஷ்ட பிரஹ்மம் என்கிறார் யாதவ பிரகாசர்.
ஸ்வரூப பரிணாமம் என்கிறார் பர்த்திரு பிரபஞ்சர்.

ஸது ஏவ சௌம்ய! இதம் அக்ர ஆஸீதத் – என்பதாக பிரஹ்மம் ஒன்று தானே முதலில் இருந்தது.
அது தன்னைக் காட்டிலும் ஸஜாதீயமான ஜீவனை பார்க்க வேண்டுமானால் அவித்யை அதற்கு ஏற்பட வேண்டும்.
ஆக, அவித்யை இல்லாமல் அதற்கு பார்வையே உண்டாகாது. இது பிரஹ்மாஜ்ஞான வாதம்.
நவிரோதோ நச உத்பத்திர் ந பத்தோ நச சாதக :
ந முமுக்ஷுர் நவை முக்த : இத்யேவை பரமார்த்தக : – என்பது கௌட காரிகை.
ஸ்ருஷ்டி, ஸம்ஸாரம் இத்தனையும் பிராதிபாஸிக , வியாவகாரிக சப்தமே ஒழிய பாரமார்த்திகமாக எதுவும் கிடையாது .
இந்த உலகமே ஆகவில்லை என்பது வரைக்குமாக இந்த மித்யா வாதத்தை எடுத்துக் கொண்டு போகிறார் கௌடபாதர்.

ஏகாத்ம ஏக சரீர வாதம் :
ஒரு பிரஹ்மம். ஒரே சரீரம்தான். இந்த ஜகத்து, ஸ்ருஷ்டி எல்லாம் ஸ்வப்பன நாடகம் போலே பிரஹ்மம் பார்க்கிறது என்பதாக .
அநேக சரீர வாதமாவது பிம்ப-பிரதிபிம்ப வாதம். இத்தைதான் வாசஸ்பதி மிஸ்ரர் விஷயமாக பார்த்தோம்.
இப்படி அநேக வாதங்கள் அத்வைதிகள் மத்தியில் உண்டு.

பர்த்ரு பிரபஞ்சருடைய மாயா-அவித்யா விபாக வாதம்.
பிரஹ்மைவ ஸ்வ அவித்யையா ஸம்ஸரத்தி ஸ்வ வித்தையா விமுச்யதே .
ஸம்ஸாரம் எப்படி உண்டாகிறது? எப்படி பத்தனாகிறது? என்றால் பிரஹ்மமே தன்னுடைய அவித்யையால் பத்தனாகிறது.
தன்னுடைய ஜ்ஞானத்தால் மோக்ஷத்தை அடைகிறது என்பதாக. அந்த அவித்தைக்கும் விஷயம் பிரஹ்மமே தான் என்கிற
பிரஹ்மாஜ்ஞான தோஷத்தை களைய அவித்தை ஜீவாஸ்ரயம். மாயா பிராஹ்மணாஸ்பதம் என்பதாக வேறுபடுத்தி காட்டினார்.
லோகத்தில் மாயா ஜாலம் பண்ணுகிறவன் தன்னைத் தானே பிராந்தனாக பண்ணிக்க கொள்வானோ?
பிரேக்ஷகர்கள் தானே மோகித்தார்கள் ஆகிறார்கள். அதனால், வேதாந்தங்களில் சொன்ன நிர்துஷ்ட, நிர்தோஷ பிரஹ்மத்தை
சாதிக்க இந்த வாதம் உதவாதே என்ன; அவித்யை ஜீவாத்மா பக்கலேயாக அதை பார்க்கிற பிரஹ்மத்துக்கும்
தன் வசத்தில் வைத்துள்ள மாயையால் அதன் பாதை உண்டாகும்.
எப்படி என்றால் அங்குல்யாவஷ்டப்யா துவி சந்திர தரிசனம் போலே என்கின்றனர்.
ஒரு விரலால் கண்ணை குறுக்கிப் பார்க்க, ஒரு சந்திரன், இரண்டாக காண்பது போல நிரதுஷ்ட பிரஹ்மத்துக்கு பேத தர்சனம் என்பதாக.
ஏக சந்திர ஜ்ஞானம் இருந்தாலும், துவி சந்திர தர்சனம் என்பது தோஷம்தானே.
அத்தால் இவர்கள் சொல்கிற அவித்யைக்கும், மாயைக்கும் வித்யாசம் கிடையாது.
கட்ட-சுத்தியாம் பிரபாதாம் நியாயத்தாலே பிரஹ்மத்துக்கு தோஷம் சொன்னாப் போலதான் ஆகிறது.

கட்ட – சுத்தி நியாயம் :
வாணிஜ்யன் ஒருவன் பொருள்களை ஓரிடத்தில் சேகரித்து, மற்ற இடங்களுக்கு கட்டைமாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று
வியாபாரம் செய்கிறான். வழியில் சுங்கச் சாவடியில் திறை செலுத்த வேண்டி வரும் என்று, குறுக்கு வழியில் மாட்டை ஓட்ட,
இரவு வந்தவாறே தூங்கி விடுகிறான். ஆனால் அந்த மாடுகள், பழக்க தோஷத்தால் சுங்கச் சாவடி இடத்துக்கே போய்ச் சேர ,
கண்விழித்த வணிகன் தண்டம் கட்டின கதையாயிற்று – என்பதாக மாயா-அவித்யா வாதம் வியர்த்தமனானது என்கிறார் விவரணகாரர்.
ஸர்வார்த்த முனிக்கு கடகாத்வைதி சொன்னதாகவும் கொள்வது.
துவி சந்திர தர்சனம் அபுருஷார்த்தம் என்றால் நாநாத்வ தோஷம் போகாது. புருஷார்த்தமே என்றால் ஸ்ருஷ்டி நிரந்தரமாய், முக்தி இருக்காது.
அபேத ஸ்ருதிகளும் நஷ்டமாகும். பெத்த ஸ்ருதிகள் அபாரமார்த்திகத்தைக் காட்டவே வந்தன.
அபேதமே பாரமார்த்திகம் என்பது இத்தாலேயே விளங்கும் என்ன;
பிரஹ்மத்துக்கு சாக்ஷாத்தாக மாயா தர்சனம் உண்டானால் அல்லது துவைத ஜ்ஞானம் பிறக்காது .
அத்தாலேயே பிரஹ்மாஜ்ஞான வாதம் உண்டாயித்து என்பர். எனவே
பரிணாம வாதிகளும் (பர்த்ரு பிரபஞ்சர்)
அநேக ஜீவ வாதிகள் (வாசஸ்பதி மிஸ்ரர்)
அவச்சேத வாதிகள் எல்லோரும் இத்தால்
பிரஹ்மைவ அநாதி அவித்யா ஸபளம் ஸ்வகத நாநாத்வம் பஸ்யதி இதி அதுவீயத்வம் பிரஹ்மணோ அப்யுபேத்திஹி – என்று
கொள்ளக்கடவர் என்கிறார் சங்கர்ராத்வைதியான விவரணகாரர்.
ஏக சரீர-ஏக ஜீவ பாவத்தாலே பிரஹ்மத்துக்கே தான் ஜ்ஞாதா திரஷ்டா என்று பார்த்து அநேக ஜீவ பாவம் ஏற்படுகிறது.
அந்த ஜீவ பாவ உணர்த்தி எப்போது போகிறதோ, அப்போது முக்தி என்பதாக உபாஸம்ஹரம் பண்ணி , அடுத்து
துவைதியான வைசேஷிகன் என்ன
தார்க்கிக , நையாயிகன் என்ன
விசிஷ்டாத்வைதி என்ன

தர்சனம் பேத ஏவச என்கிற பக்ஷத்தை எடுத்துக் கொண்டு
நம்முடைய தர்சனம் ஸ விசேஷ பிரஹ்ம வாதம். நாம் பேதத்தைத் தான் சொல்லுகிறோம்.
ஐக்கியத்தை நாம் எப்படிச் சொல்லுகிறோம்? விசிஷ்ட பிரஹ்மத்திடத்தில் தான் – விசேஷ்யத்தில்தான் – ஐக்யத்ததை சொல்லுகிறோம்.
விசேஷணங்களில் பேதத்தைத்தான் சொல்ல வேண்டியது.
ஆத்மா பின்ன: ஆத்மஸ்த்து பிரதி சரீரம் பின்ன: என்று கொண்டாலும் ஸுஜ்ஞானத்தால் ஒவ்வொருவராக மோக்ஷம் போனால்,
ஒருநாள் அல்லது ஒருநாள் முமுக்ஷுகளே இல்லையாக, பந்த-மோக்ஷ வெவஸ்தை அற்றுப்போகுமல்லவா? என்று ஆக்ஷேபிக்க – அல்ல.
அனந்தாவை ஆத்மா என்பதால், ஸம்சாரம் களை எடுக்கப் போகாது.

பரமபதம் எவ்வளவு பெரியது என்றால் ஸ்ரீரங்கநாயகித் தாயே! உன்னுடைய கிருபை எப்படி நிரவத்யமோ அதுபோல பரமபதம்.
திருக்கோவலூர் இடைகழி போலாவோ அது அன்று – தும் கிருபாவது நிரவத்திகமதா விஸ்ரம அவகாசம் என்கிறார், ஸ்ரீ பராசர பட்டர்.
அனந்தத்வ நாம கிம்? என்று பிரதிஷேதிக்க , அஸங்கேயத்வம் – தனித்தனியாகவும் எண்ண முடியாது.
ஜாத்யேக வசனமாக சொன்னாலும் கணக்கிட முடியாது என்பதாம். ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுக்கும் எண்ணப் போகாதோ?
அப்படியானால் அவனுடைய ஸர்வஜ்ஞத்வத்துக்கு சுதி வருமே என்ன- அப்படி இல்லை.
அதை எண்ணி முடிக்க முடிவில்லாத படியாலே அஸங்கேயம் என்பதே உத்தரம்.
எது எது எல்லாம் பின்னமோ, அதுவெல்லாம் சங்கியா தத்வமே .
ஏக சரீர – ஏக ஜீவ வாதத்தை ஒத்துக்கொண்டால் அல்லது அஸங்கேயத்வம் ஜீவியாது.
மேலும் ஸத்யம் ஜ்ஞாம் அனந்தம் பிரஹ்ம என்கிற ஸ்ருதிக்கும் பின்னத்வம் சேராது என்பதாக.

கால-தேச-வஸ்து பரிச்சேதம் ஜீவாத்மாவுக்கு இருந்ததாக, உத்பத்தி-விநாசாதிகள் விசிஷ்ட பிரஹ்மாத்வைதத்துக்கும் விரோதிக்குமே என்ன –
இந்த வேறு வாறு வாதத்தினுள்ளும் பொதுவான அம்சம் ஒன்று உண்டு.
அதுதான் தது அந்யது பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறாக காண்கிற ஜகத்து மித்யை – என்பது.
இத்தனை வாதங்களையும் பிடி-திமிங்கிலம் போலே விழுங்கிவிட்டு,
விவரணகாரர் தன்னுடைய பிரஹ்மாஜ்ஞான வாதம்தான் சிறந்தது என்பதாக
நித்ய முக்த ஸ்வபிரகாச ஸ்வபாவமாக இருக்கிற தத்வமான பிரஹ்மம் அநாதியான
அநிர்வசனமான அவித்யா வஸாது ஜகதாகாரமாக விவர்த்ததே. சேதநாசேதனங்களான இந்த பிரபஞ்சமாக தோற்றமளிக்கிறது.
விவர்த்ததே = பொய்யாக தோற்றுகிறது. முத்து சிப்பியை வெள்ளி என்று நினைப்பிடுவதை போல தோற்றமளிக்கிறது.
பரிணமிப்பது இல்லை. பரமார்த்தாது பிரஹ்ம வியாதிரிக்த அபாவது . பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பொருள்கள் எதுவும் கிடையாது.
ஆன படியாலே ததனன்யத்வம் ஜகத : பரமார்த்ததா அபாவ : என்று இப்படிச் சொல்லி தலைக்கட்டுகிறார்.

இதற்கு மேற்பட வைசேஷிகன் தன்வாததால் இந்த சங்கராத்வைதத்தை நிரசனம் பண்ணி ,
காரியம் வேறு. காரணம் வேறு. காரியம் தான் ஸத்யம் என்று சொல்ல,
அதனை ராமானுஜர் இல்லை செய்து, காரியம், காரணம் இரண்டுமே சத்யம் என்பதாக நிரூபணம் செய்கிறார் இனி.

கத்யர்த்தம் புத்யர்த்தம் – ஒருவர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கமனம் பண்ணுகிறார் என்றால்
தன்னுடைய சரீரத்தாலே தான் என்பது இல்லை. மனதளவிலும் செல்ல முடியும்.
தத்வம் ஏகோ மஹா யோகி ஹரிர் நாராயண பிரபு :
தத்வம் என்றால் என்ன ?
தஸ்ய பாவ : தத்வம். அதனுடைய உண்மையான இருப்பு. பூ = ஸத்தாயாம்
ஸ்வபாவதா அறிகை = உள்ளதை உள்ளபடி அறிகை. ஸ்வரூபதயா அறிகை.
ஸ்வம் ரூப இதிதீதி ஸ்வரூபம். ஸ்வஸ்ய ரூபம் ஸ்வரூபம்.
தன்னைக் காட்டுகையில் தன்னைக் காட்டிலும் மற்றவர்களை பிரித்தும் காட்ட வேண்டும்.
தன்னையே மட்டும் காட்ட வேண்டும். இதுதான் ஸ்வஸ்ய ரூபம் ஸ்வரூபம்.
தத்வம் எது?
ஹரிர் நாராயண பிரபு :
ஆபிரளயாந்தரம் மட்டுமல்ல, அதன் பின்பும் இருப்பதுதான் தத்வம்.
சேதனா சேதனங்கள் யாரிடத்தில் இருக்குமோ
சேதனா சேதனங்களை யார் இருப்பிடமாக கொண்டுள்ளானோ
அவனையே நாராயண சப்தம் பிரஹ்மமாக சொல்கிறது.
ஸூக்ஷ்ம சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் காரணம் வேறயோ ?
ஸ்தூல சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் காரியம் வேறயோ?–என்பது ஆரம்பணாதிகாரணத்தில் நடக்கிற சர்ச்சை .

திரவ்யாந்தர வாதியான வைசேஷிகன் காரணம் வேறு. காரியம் வேறு என்றான்.
சாங்கியன் காரணத்தில் காரியம் அடங்கியே இருக்கிறது. காரியமும் காரணமும் ஒன்றுதான் என்கிறான்.
காரியாவஸ்தையோடே கூட்டியே இருக்கிறது என்பதாக.
நமக்கும் அது சம்மதம்தான். காரியாவஸ்தை கூட்டியே இருந்தாலும் அது அபிருதத் சித்த ஆதுங்குக தர்மம் என்பதே நம்முடைய கொள்கை.
திரவியம் என்றால் என்ன? அது உபாதானமாகத்தான் இருக்கும். உபாதானம் அவஸ்தாச்ரயமாக இருக்கும்.
அவஸ்தாஸ்ரயம் என்றால் என்ன? திரவியம் ஒருபடிப்பட்டிருக்க, அவஸ்தா பேத்தத்தோடே ஆகுமது. அவஸ்தை நிரந்தரம் அல்ல.
மாறுபாட்டை அடைந்து கொண்டே போனாலும் (ஆதங்குகம் ), வஸ்துவை விட்டு பிரியாதது (அபிருதத் சித்தம்).
எந்த காரியத்துக்கு எது உபாதானம் என்பது விவஸ்திதம்.
எள்ளைக் கொண்டு எண்ணை எடுக்கலாம் அன்றி, மணலைக் கொண்டு ஆகாதே.
திருக்கண்ணமுது செய்ய செந்நெல்லரிசி சிறுபருப்பு நறுநெய் அக்காரம் பால் என்று எதை பயன்படுத்துகிறோமோ
அது உப ஆதீயதே இதி உபாதான :
திருக்கண்ணமுது செய்ய அரிசியை உலையில் இட்டால், அரிசி சாதமாகிறது, சாதம் அமுதாகிறது, அமுது அன்னமாகிறது.
அன்னம் போஜ்யமாகிறாது இத்யாதி போல.

தத்துவங்கள் மூன்று. அவைகளிடைப்பட்ட பேதங்கள் மூன்று.
சித்து தன்தனக்குள்ளே பேதம்.
அசித்து தன்தனக்குள்ளே பேதம்.
ஈஸ்வரன் ஒன்றேயாய், தன்தனக்குள்ளே பேதம் வர வழியில்லை.

சித்துக்கும் ஈஸ்வரனுக்குமான பேதம்.
அசித்துக்கும் ஈஸ்வரனுக்குமான பேதம்.
சித்துக்கும் அச்சித்துக்குமான பேதம்.
இவைகளைச் சொல்லும் பேதாபேத ஸ்ருதிகள் சரீராத்மா பாவத்தால் கடக ஸ்ருதியைக் கொண்டு ஒருங்கவிட அமையும்.
ஜ்ஞாத்ரு, ஞேய, ஜ்ஞானம் என்கிற த்ரிபுடிக்கும் கொத்தை வாராது.

ஸத்யம் ஜ்ஞானம், அனந்தம் பிரஹ்ம என்கிற அபரிச்சேத நித்ய வஸ்து ஒன்றே ஸது.
ததஅரிக்த கடபடாதி அனைத்துமே சுத்திகையில் ரஜத புத்தி உண்டாகி கழிக்கிறாப்போலே ஸதஸத் அநிர்வசனீயம்.
அதனால் காரணம் சத்யம். காரியமெல்லாம் அசத்தியம் என்று அவர்கள் சொல்வதால் அநித்தியம் சித்திக்கும் ஒழிய மித்யை ஆகாது.
கிளிஞ்சலை வெள்ளி என நினைத்து எடுத்து பார்க்கையில் அது வெள்ளி அல்ல கிளிஞ்சல் என்று உணரும்போது ,
இது வெள்ளி ஆகா விட்டாலும், வெள்ளி என்கிற வஸ்துவே பிரபஞ்சத்தில் இல்லை என்று சொல்லுவதற்கு இல்லை.
எனவே சுத்திகையைப் பார்த்து வெள்ளி என்று அறிவு தோன்றி மறைவதால் அநித்யத்வம் சாதிக்கப் பட்டதே ஒழிய,
மித்யாத்வம் சாதிக்கப்பட்ட வில்லை அன்றோ? பூதளே கடம் நாஸ்தி என்றால், அந்யத்ர கடம் அஸ்தி என்று சொல்ல வாய்பு உண்டல்லவா?
காரணம் சத்யமானபடியாலே, காரியமும் சத்யம்தான், ஆனால் ஆகார பரிவர்ததனத்தால் பிரஹ்மணோ அந்நியது ஏவ என்றான் வைசேஷிகன்.

இப்போது பகவத் ராமானுஜர் தமது பக்ஷ்த்தை எடுத்து வைக்கிறார்.
சித்தசித் விசிஷ்ட ஸூக்ஷ்ம காரண பிரஹ்மத்தைக் காட்டிலும்
சித்தசித் விசிஷ்ட ஸ்தூல காரிய பிரஹ்மம் அநந்ய :–இரண்டும் வேறு பட்டதல்ல . எப்படி என்றால்
எதா சௌம்ய! ஏகேந மிருக் பிண்டேந ஸர்வம் மிருண்மயம் ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞானம் ஸ்யாத்.
ஒரு காரணப்பொருளை அறிந்தால் எல்லா காரியப் பொருளையும் அறிந்ததாகும்.
நாம, ரூப பேதமுண்டானாலும், அத்தனையும் மண்ணால்தானே பண்ணப்பட்டதாகையாலே,
காரியத்தைக் காட்டிலும் காரணம் வேறு பட்டது அல்ல என்பதையே –தத அநநயத்வம் என்கிறது.
மிருத்திகையும், கடமும் ஒன்றே என்றால், கடோ நஷ்ட : என்கிற உற்பத்தி,விநாச விவகாரம் எல்லாம் எதற்கு ?
பானை உண்டாயித்து. பானை உடைந்தது என்று ஏன் சொல்லவேண்டும் ? இரண்டும் வேறு வேறு ஆனபடியலே தானே? என்று வைசேஷிகன் ஆக்ஷேபிக்க
கடே பூதள அபாவ : . மண் பானை ஆகிறது. பானை உடைந்தால் கபாலமாகிறது. கபாலம் உடைந்தால் சில்லாகிறது.
சில்லு பொடிந்தால் சூர்ணமாகி மறுபடியும் மண்ணாகிறது. இப்படியான அவஸ்தாந்தரம்தான் உற்பத்தி விநாசமாகும்.
அப்படியாகில், வஸ்து பரிணாமத்தால் பிரஹ்மத்துக்கு விகாரம் சொல்லப்பட்டதாகதோ எண்ணில்? இல்லை.
சித்தசித் வஸ்த்துக்கள், பிரஹ்மத்துக்கு பிரகாரதாய விசிஷ்டமாகையாலே , விசேஷணங்களின் விகாரம் விசேஷ்யத்தில் பர்யவசிக்காது ,
எப்படி சரீரகத தோஷம் ஆத்மாவுக்கு இல்லையோ அதுபோல என்று கொள்ள வேண்டும்.
விகாரம்தான் அசித்திலே ஸ்வரூபதாஹ விகாரமும், சித்திலே ஜ்ஞான சங்கோச, விகாசமும் ஸ்வபாவ விகாரமாய் இரண்டுக்கும்
அந்தராத்மாவான பிரஹ்மத்தின்பக்கல் அவை தட்டாது.

அவஸ்தா பேதம் தான் அபிருதத் சித்த ஆதந்துக தர்மம் .
திரவியம் எது? எது உபாதானமோ அதுவே திரவ்யம்.
திரவ்யம் என்றால் என்ன? அவஸ்தா ஆஸ்ரயமானது எதுவோ அதுதான் .
அவஸ்தாவும்தான் ஆதந்துகமான அபிருதத் சித்த தர்மத்தோடு கூடியது.
ஏகத்வமாவது ஸ்ருஷ்டிக்கு முன் இருக்கிற காரண அவஸ்தை – ம்ருக் பிண்டாவஸ்தை.
நாநாத்தவமாவது ஸ்ருஷ்டிக்குப் பின் பார்க்கப்படுகிற காரிய அவஸ்தை. கடபடாதி பஹுபவன ஸ்ருஷ்டங்கள் போல.
ஆகவே பிரஹ்மமும் அதற்கு விசேஷணமான ஜகத்தும் ந அந்யது என்பது தேறிற்று.

காரண பிரஹ்மத்தை – ஸேயம் தேவதா ஐகஷத என்கிற – தத் சப்தத்தை சொன்னபோதும் ,
தமஸ் பிரக்ருதி லீயதே என்று தமஸ் சப்த வாசியான பிரக்ருதியோடே நாம ரூப விபாகமற கலந்து பிரஹ்மத்திடத்தில் ஏகதேசமாக ஒட்டிக் கிடப்பதால்
பிரகிருதி விசிஷ்ட பிரஹ்மத்தையே தத் சப்தம் சொல்கிறது.
ஐக்ஷத என்று திருஷ்டி ரூபமாக பிராட்டி இருந்து ஸ்ருஷ்டி நடக்கிற படியால்,
அவளுக்கு நேரே தனித்த காரணத்வம் இல்லையானாலும், அவனுடைய விக்ரஹத்தோடே வியாப்தமாய் என்றும் பிரியாதவளாய் இருக்கிற காரணத்தால் ,
அவனுடைய திருஷ்டி தர்மமாக இருந்து ஜகத் வியாபாரம் நடக்கிறது என்று கொள்க.
தர்மிக்கு காரணத்வம் சொல்லலாமே ஒழிய பிரஹத்துக்கு விதேயமான தர்மத்துக்கு காரணத்வம் சொல்லப் போகாது அல்லவா?
நாம ரூபா அபாவது ஏகமேவ ஏதது . அநேந நாம ரூபே வியாகரவாணி என்று சங்கல்ப மாத்ரேண
நாம ரூப நாநா ரூப பாஹுபவன ஸ்ருஷ்டி.

ஸ்வரூபத்தாலே விகாரம் என்றான் ஜலதத்வைதி .
மற்றதெல்லாம் மித்யை யானபடியாலே , பிரஹ்மம் ஒன்றே என்றான் அத்வைதி.
இதெல்லாம் தப்பான வார்த்தை.
திருவாய் மொழி 5ஆம் பத்து கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
என்கிற பதிகத்தில் அத்வைதி புகுர வாய்ப்புண்டோ எனில்?
பிரஹ்லாதாழ்வானுடைய வார்த்தையான ”மயி ஸர்வம் மத்த ஸர்வம் அஹம் ஸர்வம் ஸநாதனே” என்பதைக் கொண்டு பரிகரிக்க வேண்டும்.
மயி , ஸநாதனே – இரண்டும் 7ஆம் வேற்றுமையில் உள்ள சப்தங்கள்.
ஸப்தமியில் 2 வகை. ஒன்று அதிகரண ஸப்தமி . இன்னொன்று பாவ லக்ஷணே ஸப்தமி .
ராமே ஸகல கல்யாண குண: வர்த்தந்தே என்பது அதிகரண ஸப்தமி – ராமனிடத்திலே என்பதாகிற 7ஆம் வேற்றுமை உருபு
நாராயணேதி ஸதி – நாராயணனாக இருக்கிற தன்மைக்குச் சேர – இது பாவ லக்ஷணே ஸப்தமி .
மயி ஸநாதனே ஸதி ஸர்வம் என்று அடைவு.
மயி – எனக்குள்ளே – அதிகரண ஸப்தமி .
ஸநாதனே ஸதி – அந்த பரப் பிரஹ்மம் எனக்குள் இருக்குங்கால் – பாவ லக்ஷணே ஸப்தமி
எனக்குள்ளே அந்தராத்மாவாக இருக்கிற காரணத்தால் – பிரகார , பிரகாரி நியமத்தாலே சரீராத்மா விசிஷ்ட பாவம் கொண்டு
”மயி ஸர்வம் மத்த ஸர்வம் அஹம் ஸர்வம் ஸநாதனே” என்பதாக சொல்லிற்று.
அத்வைதிகள் மயி என்பதையும், ஸநாதனே என்பதையும் விசேஷணமாகச் சொல்லி, இரண்டையும்
அதிகரண ஸப்தமி பொருளில் ஏகீ பாவத்தை சொல்கின்றனர்.

இப்படி சரீராத்மா பாவத்தால் தான் காரண-காரியம் ந அந்யது என்று சொல்லலாமே ஒழிய
ஸ்வரூப ஐக்கியத்தால் சொல்லப் போனால், பேத ஸ்ருதிகள் என்னாகும்?
ஸேயம் தேவதா ஐக்ஷத – என்று தேவதா விசேஷத்தை சொல்லி, ஐக்ஷத என்று சங்கல்ப ரூபமான
பஹு பவன ஸ்ருஷ்டியை பிரகாரணமாக சொல்லிற்று.

நிர்குண, நிராகார. கேவல சின்மாத்ரா பிரஹ்ம வாதமே செய்து நாங்கள் தான் முக்கிய வேதாந்திகள் என்று கொக்கரித்துக் கொண்ட
அவர் காலத்தில் -வேதங்களின் உண்மையான பொருள் பரபிரஹ்மம் ஸ்ரீமந் நாராயணன் தான்.
அவனுக்கு குண விக்ரஹ விபூதித் துவயங்கள் உண்டு என்பதைச் சொல்வதிலே தான் நோக்கு
என்பதாக பகவத் ராமானுஜர் நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
ஆத்மா என்றால் இன்னதுக்கு ஆத்மா என்று சொல்ல வேண்டாவோ?-அனுயோகி பிரதியோகி இல்லாத ராஜ்யம் ராஜ்யமா?
கைகேயி பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும் என்று கேட்டபோது தசரதன் தந்தேன் என்று சொல்லி
சுமந்திரா! நம்முடைய எல்லா சேனைகளும், நகரவாசிகளும் எல்லோருமாக ராமன் இருக்கிற காட்டுக்கே செல்லலாம்
பரதனும் இவளும் இந்த வெறிச்சோடிய அயோத்தியை ஆளட்டும் என்று சொல்ல அப்படி இல்லை,
பிரஜைகள் சமிர்த்தி இல்லாத ராஜ்யம் , ராஜ்யமா? ராமன் மட்டும் தான் காட்டுக்குப் போகவேண்டும் என்பதே என்னுடைய வரம் என்றாளாம்.
அதுபோல ஆத்மா என்றால், யாருக்கு ஆத்மா என்கிற கேள்வி வரும் அல்லவா?
பகவான் மட்டும் தான் நித்யம். குண, விக்ரக, வீபூதி எல்லாம் வந்தேறி என்று சொல்லி விட்டால்,
பிரஜைகள் இல்லாத ராஜா போல் அல்லவா அவன் ஆகி விடுவான்?

பிரஹ்மமே கிடையாது என்று சங்கியனானவன் சொல்லிவிட்டான், ஸாலக்ஷிண்யம் இல்லாயாய்க் கொண்டு.
அத்துவைதிகள் எல்லோரும் வேதம் அபௌருஷேயம் என்பதை ஒத்துக்கொண்டாலும், ஜகத்து மித்யை ஆனபடியால்,
பிரஹ்ம அதிரிக்த அந்யது ந என்கிற அர்த்தத்தில் ததந்யது என்று சொல்லி விட்டனர்.

கப்யாசம் புண்டரீகம் அக்ஷிணீ
ஆபிரணாகாத ஸ்வர்ணயேவ ஹிரண்ய கேச : ஹிரண்ய ஸ்மஸ்ருஹு என்கிற திவ்விய மங்கள விக்ரஹமுண்டு;
தத் விஷ்ணோர் பரமம்பதம் என்கிற ஸ்தானம் உண்டு;
ஸதா பஸ்யந்தி ஸூரய: ஹாவு ஹாவு ஹாவு என்று நித்யானுபவம் செய்கிற பரிவாரங்கள் உண்டு;
லோகவஸ்து லீலா கைவல்யம் என்று லீலா விபூதியும்
குன்றிலிட்ட விளக்கு போலே அவன் குணங்கள் பிரகாசிக்கும்படியான இருள்தருமா ஜ்ஞாலத்து பத்த ஜீவர்கள் உண்டு
என்பதெல்லாம் ஆழ்வாருக்கு எம்பெருமான் காட்டியருள,
அந்த ஆழ்வாருடைய பாசுரங்களில் அவகாகித்து இருந்த படியாலே ராமானுஜரும் இத்தனையும் வேதாந்தத்தில் உண்டு என்று பேசி
முண்டிகளையும், ஏக தண்டிகளையும் நிரசித்தார் என்பதே ஸ்ரீபாஷ்ய கிரந்தத்திலிருந்து நாம் அறிவது.

வைசேஷிகன் பிரஹ்மத்தை ஒத்துக்க கொண்டு, அனுமான கம்யம் ஈஸ்வரன் என்று வேத பிராமாண்யத்தைச் சொல்லி
அதை பௌருஷேயம் என்றும், பகவான் நிமித்த காரணம் மட்டும் என்று சொல்லி பிரஹ்மமே ஜகத்தாக பரிணமிக்கிறது என்றும்,
காரணமும் காரியமும் வேறான படியாலே , காரணாத் அந்யதேவ என்று சொல்லிப் போனான்.
ம்ருக் பிண்டம் என்று சொன்னால் நம்முடைய புத்திக்கு தெரிகிற வஸ்து வேறு. கடம் என்றால் நம் புத்திக்கு தெரிகிற வஸ்து வேறு.
இரண்டையும் வேறு வேறு சம்பதம் கொண்டுதான் சொல்கிறோம். எனவே திராவியாந்தரம் காரணம் = காரணம் அந்யதேவ என்றான்.
நாம் சொல்லுவதாவது, ம்ருக் பிண்டம், கடம் என்று சொல்லும்போது புத்தியில் ஒளிர்கின்றது
வஸ்து பேதம் அல்ல அவஸ்தா பேதம் தான் . உருண்டையாய் இருந்தது வாயும் வயிறுமாயித்து.
இப்படி ஆகாரத்தில் உண்டான பேதம் அவஸ்தா பேதமே, உபாதானம் ஒன்றேயாய் திரவ்யாந்தரம் ஆகாது என்பதாக
புத்தி, ஸப்தாந்தரங்களுக்கு அவஸ்தாந்தரமே காரணம், திரவ்யாந்தரம் அல்ல என்பதாக.

இப்படியான
1-2-15 : தத் அநந்யத்வம் ஆரம்பண ஸப்தேப்ய : – சூத்ர விவரண வாத பிரதி வாதத்தில் பலாபலம் சமமாக
அடுத்து சூத்ரமிடுகிறார் வியாசர் பிரபலஸ்ச துர்பலேன பாதா என்று வைசேஷிகனை மீதூறும் படியாக
1-2-16 : பாவே ச உபலப்தே :
பாவே உபலப்பதே : காரணம் காரியத்தில் தென்படுவதாலே
ச – தத் அநந்யத்வம் என்பதாக கீழே பார்த்தை தருவித்து சேர்த்து படிக்க வேண்டும்.
அடுத்து
1-2-17 : ஸத்த்வாத் ச அபரஸ்ய
இதம் குண்டலம் ஸ்வர்ணம் – என்பதாக ஒரு பொருளை பார்க்கும்போது அதன் உபாதானம் எது என்கிற பிரத்யபிஜ்ஞை உண்டாகின்றபடியால்
அபரஸ்ய – காரிய காரணங்களில் , காரியத்துக்கு அந்யமான காரணம்
ஸத்த்வாத் ச – இரண்டும் ஒன்றே. எதைக் கொண்டு என்றால்,
அபரஸ்ய காரணஸ்ய காரியே ஸத்வாச்ச – காரியப் பொருளில் காரணமானது இருக்கிற படியாலே,
காரியமானது காரணத்தைக் காட்டிலும் வேறு பட்டது அல்ல.
லோக வேதயோர் ஹி – திருஷ்டத்துக்கும் வேதத்தில் சொல்லப் படுமவைக்கும் விரோதம் கிடையாது.
தது துவமஸி என்கிற வேதாந்த வாக்கியத்துக்கு காட்டப்படுகிற ம்ருக் பிண்ட உதாரணம் லௌகீக உதாரணம்தானே.
ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞான பிரதிஜ்ஞைக்குச் சேர லோகத்து திருஷ்டாந்தங்களை கோர்த்து சொல்வதால்,
வேத வாக்கியங்கள் லோக விவகாரத்தோடே பொருந்துமையே அன்றி விரோதம் எதுவும் கிடையாது என்பதாக சொல்ல ,
தது அயுக்தம் – யுக்திக்கு பொருந்தாது என்று வைசேஷிகன் ஆக்ஷேபித்தான்.

சூத்திரம் 2-1-18 : அஸத் வ்யபதேஸாத் ந இதி சேத் ந தர்மாந்தரேண வாக்யா சேஷாத் யுக்தே: சப்தாந்தராச்ச
அஸத் வ்யபதேஸாத் – நாங்கள் சொல்லுகிற அஸத் காரிய வாதத்துக்குச் சேரத்தான் வேதம் பேசுகிறதே ஒழிய,
இவர்கள் சொல்லுகிற ஸத் காரியத்தை வேதம் சொல்லவில்லை என்று ஆக்ஷேபித்தான் இடையில்.
பௌத்தன் என்ன சொன்னான், இல்லாத காரணமான அஸதிலிருந்து உண்டான ஜகத்து மித்யை என்றான்.
விவர்த்த வாதியான அத்வைதியும் ஜகன் மித்யை என்றனர். வைசேஷிகன் ஜகத்து சத்யம் என்கிற ஸத் காரிய வாதிதான்.
ஆனாலும் காரியாது காரணம் அந்யது ஏவ என்று பேசுமவன்.

1 அத்யாயம். 4ஆம் பாதம். காரணத்தவாதிகரணத்தில் என்ன நடந்தது? அங்கு சாங்கியன் பூர்வ பக்ஷம்
பாம்பணையார்க்கு தன் பாம்பின் நாவு போல் வேதம் ஒருபடி பேசுவதில்லை. அஸத் வா இதம் அக்ர ஆஸீத் என்கிறது .
ஸது ஏவ சௌம்ய! இதம் அக்ர அஸீத் என்றும் வியாஹ்ருத, ஆவியாஹ்ருதங்களாக சொல்லுகிறது .
இந்த லக்ஷணங்கள் சாங்கிய தத்துவமான பிரக்ருதிக்குத்தான் பொருந்தும், பிரஹ்மத்துக்குப் பொருந்தாது , காரணம் –
பிரஹ்மம் என்றும் ஒருபடியாக ஸத்தாகவே இருப்பது.
மூலப்பிரக்ருதி தான் நாம, ரூபங்களை ஏற்று ஸத்தாகவும், காரண அவஸ்தையில் அஸத்தாகவும் இருப்பது என்று சொல்லி
பிரஹ்ம காரணத்தை மறுத்தான் அவன்.

அந்த அஸத் காரணத்தைப் பற்றிக் கொண்டு, வைசேஷிகன் இங்கு
அஸத்வா இதம் அக்ர அஸீத் என்கிற காரணத்தில் ஸத்தான காரியம் எப்படி இருக்கப் போகும் ? என்பது அவனுடைய ஆக்ஷேபம் –
இதி சேத்
தந் ந – அங்கனில்லை .
தர்மாந்தரேண உச்யதே – 80-90 பிராயமான கிழவருக்கு குட்டி என்கிற பெயர் வழக்காய் இருக்க, அவருடைய பௌத்திர, தௌஹித்ரன்
இவர்களோடு விளையாடும் போது , குட்டி என்று அழைத்தால் ,
அது அந்த மூத்தவரைச் சொல்லுமா, உண்மையிலேயே குட்டியான குழந்தையைச் சொல்லுமா?
அதுபோல ஸஹஸ்ர நாமங்களில் ஒரு பெயர் ஆயித்து ”அஸது” என்கிற திருநாமம் கூட பகவானுக்கு.
அத்தால் அஸத்வா இதம் அக்ர ஆஸீத் என்றாலும் , ஸது என்கிற பிரஹ்ம வாச்யமாகத்தான் கொள்ள வேண்டும் .
பிரக்ருதியை அல்ல. மேலும் அஸது என்றது முயல் கொம்பு போலே , கானல் நீரைப் போலே (அபாவ) துச்ச பதார்த்தமாகாது.
தர்மாந்தரேண நாம, ரூப விபாகமற்ற ஸூக்ஷ்மா அவஸ்தையோடு கூடியதான பிரஹ்மத்தையே சொல்லும் – தர்மாந்தரம் அஸது என்பதாக.

உளனென இலனென இவைகுண முடைமையில்
உளன் இருதகைமையினோடு ஒழிவிலன் பரந்தே — திருவாயமொழி 1-1-9. என்று ஆழ்வாரும் காட்டியபடி
உளன் = ஸது
அலன் = அஸது
என்கிற இரண்டுமே அந்த பிரஹ்மத்தையே சொல்லும்.
அஸது தர்மாந்தரம் – என்று எதைக் கொண்டு சொல்கிறீர் என்றால் , அது விஷயமாக 3 காரணங்களை எடுத்துக் காட்டுகிறார் சூத்திரத்தின் பிற்பகுதியில்.

வாக்ய சேஷாத் – அஸது என்று வருகிற பிரகரணத்தை முன்னும், பின்னும் சேர்த்து பார்க்கும்போது விளங்குமது.
அஸது என்றுபெயருடைய பிரஹ்மம் தன்னுடைய மனத்தால் பஹுஸ்யாம் என்று நினைகை ஒரு தர்மம்.
தது ஐக்ஷத என்கிற பார்வை ஒரு தர்மம். இந்த இரண்டில் நினைகை தர்மாந்தரம் தானே.
யுக்தே : அஸது , ஸத் சப்த்த வாச்யனான பிரஹ்மத்துக்கான தர்மாந்தரம்.
பூணூல் கேட்டு சென்றபோது, பூணூல் இல்லை என்றால், அது முறுக்கின நூலாக உள்ளது,
பிரஹ்ம முடிச்சு போட்டு பூணூல் என்று சொல்லும்படியாக காரியம் முழுமை அடையாத பூர்வாவஸ்தையில் உள்ளது என்று பொருள்.
கடம் அஸ்தி. கடம் நாஸ்தி என்றால் தயார் நிலையில் இல்லை. அவஸ்தாந்தரத்தில் உள்ளது என்றுதானே பொருள் .
அதுபோல யுக்திதான் இங்கும். ஸது ஏவ இதம் அக்ர ஆஸீத் என்றால் – நாமரூபத்தோடே கூடிய ஜகத் விசிஷ்டமாக ஆனது.
அஸது என்றால் – நாம ரூப விபாகமற ஏகீ பாவத்தில் இருந்தது என்கிற தர்மாந்தர ஸ்திதி பேதத்தைச் சொல்லும்.
அவ்வோர் காலத்தும் காரணாது அநன்யதேவ காரியம். ஆகையால் பிரஹ்மமே ஜகத் காரணம் .
ஸப்தாந்தராச் ச – கடாவஸ்தை ஸது, கபாலாவஸ்தை கடாவஸ்தைக்கு அஸத் அம்சம், என்பதாக
ஒன்றை ஸது என்றும், இனொன்றை அஸது என்றும் சொல்லுகை தர்மாந்தரம் என்று கொள்க.

இனி பேதோ நாம துர் நிரூப்யம்
ஆத்மா துவித : ஜீவாத்மா பரமாத்மா சேதி
ஜீவஸ்து பிரதி சரீரம் பின்ன:
இதுதான் துவைதிகளுடைய, நையாயிக, வைசேஷிக பக்ஷம்.
தத்வம் பேத ஏவச – என்பதாக விசிஷ்டாத்வைதிகளும் இதைத்தான் சொல்லுகிறோம்.
இப்படிச் சொல்வதால் என்ன பாதை வருகிறது என்றால்
சத்யம், ஜ்ஞானம், அனந்தம் பிரஹ்ம – என்பதான வாக்கியத்தில் அனந்த சப்தம்
துவைதிகளான உங்களுக்கு பொருந்த விடப் போகாது என்பதாக மாயா வாதி கூறி ஆக்ஷேபித்தான்.

அனந்த சப்தம் த்ரிவித ராஹித்யத்திச் சொல்லுகிறது. அதாவது கால, தேச, வஸ்து பரிச்சேதம் இல்லாததான தன்மை.
அது சித்திக்க எந்த வஸ்து பரபிரஹ்மமோ அது ஸர்வ வஸ்து தாதாத்மயத்தை அடைந்திருக்க வேண்டும்.
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம என்பதாக
ஸர்வ வஸ்து பிரமத்துக்கும் ஆஸ்பதமான ஏக வஸ்துவாக இருக்க வேண்டும்.
ஸ்வேதர ஸகல வஸ்துவுக்கும் சத்யத்வம் இல்லாதிருக்க வேண்டும்.
ஸ்வேதர ஸகல வஸ்துவுக்கும் நித்யத்வம் இல்லாதிருக்க வேண்டும்.
இப்படியான வஸ்து பரிச்சேதம் அத்வைதத்தில்தான் இருக்கிறது.
நீங்கள் சொல்லும் பேத வாதத்தால் அனந்தியத்துக்கு தக்கை உண்டாகி, த்ரிவித பரிச்சேதமும் ஜீவியாது.
இத்தால் சத்யம், ஞானம், அனந்தம் பிரஹ்ம என்கிற ஸ்ருதிக்கு சுதி உண்டாகும் என்பதான பிரபல ஆக்ஷேபம் வர

வைசேஷிகன் மாயாவாதிகளைப் பார்த்து உன்னுடைய சித்தாந்தத்திலும் துவைதம்தானே சொல்கிறாய் –
பிரஹ்மமும் , அவித்தையும் ஒன்றேவா? இரண்டா? சொல்லு. வேறு என்றால் துவைதம் தான் சித்திக்கிறது.
இல்லை இரண்டும் ஒன்றே என்றால், அஜ்ஞானமே பிரஹ்மம் என்பதாக வல்லவோ முடியும் என்று பிரத்யஸ்திரம் விடுத்தான்.
மாயாவதி சொல்லுகிற வஸ்து பரிச்சேதத்துக்கான விவிரணம் சரியில்லை என்று கூறி,
இயத்தா ராஹித்யம் – இப்படி அளவு பட்டிருப்பது என்பதாக சொல்ல முடியாத அளவைதான் வஸ்து பரிச்சேத ராஹித்யம் என்று கொண்டார்.

நம்முடைய சித்தாந்தத்தில்
ஸர்வம் கல்வித்தம் பிரஹ்ம தத் ஜலான் என்ற வாக்கியத்தில் , வாக்கிய சேஷமான
தத் ஜலான் – தத்ஜத்வாது, தல்லத்வாது, ததந்தத்வாது –
யாதோ இமாநி பூதாநீ ஜாயந்தே என்று பிரஹ்மத்தின்றும் உண்டாகி, பிரஹ்மத்தினின்றும் ஸ்திதி அடைந்து,
அந்த பிரஹ்மத்தையே சேருதலாகிற ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய காலங்கள் மூன்றிலும் பிரஹ்மத்தையே ஆத்மாவாக கொண்டு இருக்கிற படியாலே –
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம என்பதாக கடக்க சுருதி உதவியோடே சரீர-ஆத்ம பாவத்தை இட்டுச் சொல்லுகிறோம்.

இப்போது நம்மைப் பார்த்து இந்த வைசேஷிகன்
நீங்கள் எங்களைப்போல்
ஜகத்து சத்யம்,
த்ரிவித தத்வத்துக்கும் இடையிலான பஞ்சவித பேதம் ஸ்வாபாவிகம் என்றும் சொல்லி
எங்களுடைய ஸ்வதந்திர பேதத்தை ஒதுக்கி
அதையே பரதந்திர பேதம் என்பதாக சொல்லுகிற உங்கள் பக்ஷத்தில் தோஷம் உண்டு என்று நம்பக்கம் திரும்பி
அபேத வாதிகளான அத்வைதிகள் சொல்லுகிற
தத்வமஸி ஸ்வேதகேதோ
அஹம் பிரஹ்மாஸ்மி
ஆகிய வாக்கியங்களை நீங்கள் மறுக்கவில்லையே என்? சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் ஐக்கியம் சொல்ல முடியாதே.
சரீரம் அசேதனம். ஜ்ஞானமற்றது. அழியக் கூடியது. ஆத்மா சேதனன். ஜ்ஞான ஸ்வரூபன். ஜ்ஞான குணகன். நித்தியமானது.
இப்படி எதிர்த்தட்டான இரண்டுக்கும் ஐக்கியம் எப்படிச் சொல்ல போயிற்று?
அநந்திவத்தை சரிக்கட்ட சரீராத்மா பாவத்தை சொன்னாலும், காரண-காரிய ஐக்கியம் சொல்லப் போகாது என்ன ,
அத்தாலே எம்பெருமானாருக்கு பிரவேசாவகாசம் கிட்டிற்று.

நித்யோ நித்யாநாம் சேதந சேதநாநாம்
ஏகோ பஹுநாம் யோ விததாதி காமாந் – என்கிற பேத ஸ்ருதி வாக்கியத்தில்
ஏக: சேதந : நித்ய: – யார் என்றால், அவன்தான் பரமாத்மா. அவன்
பஹுநாம் சேதநாநாம் நித்யாநாம் – பஹு விதமாக இருக்கிற நித்தியமான இந்த ஜீவாத்மாக்களுக்கு
யோ விததாதி காமாந் – இஷ்டார்த்தங்களை அளிக்கிறான் என்பதாக சொல்லி இருக்க
அபேத ஸ்ருதிகள் எல்லாவற்றையும் கெளணம் என்று கைவிடுங்கள் என்பதாக வைசேஷிகன் சொல்ல,
பேதாபேத சுருதிகள் இரண்டுமே உபாதேயம்,
அதை கடக ஸ்ருதி உதவி கொண்டு சரீராத்ம நிர்வாகத்தை இட்டு சமன்வய படுத்துவதுதான் விசிஷ்டாத்வைத பக்ஷம்.

அந்தப்பிரவிஸ்ய சாஸ்தா ஜனாநாம்
யஸ்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் ஸ்ரூயதே பிவா
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வியாப்பிய நாராயண ஸ்திதா :
பரபிரஹ்மம் அத்தனைப் பொருளுக்கும் பிரகாரமாக உள்ளது. ஆத்மாவாக உள்ளது. என்பதை இந்த ஸ்ருதி வாக்கியங்கள் தெரிவிப்பதைக் கொண்டு
இதம் கட: பிரஹ்ம
இதம் பட: பிரஹ்ம
தேவதத்தோ பிரஹ்ம
இத்தால் ஆநதித்வம் சித்திச்சாலும் காரண-காரிய ஐக்கியமான அநநன்யத்வம் சித்திக்காது என்பதாக வைசேஷிகனுடைய ஆக்ரம்.

சூத்ரம் 2-1-19 : படவச்ச – லௌகிக திருஷ்டாந்தம்.
சூத்ரம் 2-1-20 : யதா ச பிராணாதி : – வைதிக திருஷ்டாந்தம்
இரண்டும் கொண்டு இப்போது வைசேஷிகனுடைய ஆக்ஷேபத்துக்கு உத்தரமாக –
லோக வேதேப்யாம் என்று முன்பு சொன்னதை திருடிகரிக்கிறார் எம்பெருமானார்.

தேச பேதம், கால பேதம், சங்கியா பேதம் என்று 10 விதமான காரணங்களால் காரியம் காரணத்தைக் காட்டிலும் வேறாக இருக்கிறது
என்று சாங்கிய-வைசேஷிக ஸம்வாதத்தில் காட்டின படிக்கு
மண் வேறு அதிலிருந்து உண்டான காரியப்பொருள்கள் வேறு மட்டும் அல்ல பலவாகவும் இருக்கின்றன. என்கிற
வைசேஷிகனுடைய உதாரணத்தையே எடுத்து
படவச்ச – காரணம் பலவாக இருந்து காரியம் ஒன்றே ஆவது –
தரியில் பல நூல்களை பாவில் இட்டு, உண்டையை இழுத்து மடக்கி செருகி ஒரு வஸ்திரம் நெய்யப்படுமோ
அது போல பிரஹ்மமும் பலவான பிரக்ருதி தத்வத்துள் புகுந்து சரீரமும் ஜகத்தும் ஆகிறது.
யதா ச பிராணாதி : பிராண வாயு ஹ்ருதயத்தில் இருந்தால் பிராணன் என்று அழைக்கப்படும்.
நாபியில் சமானம் என்றும் ; உபஸ்தம்- ஆசன துவாரத்தில் இருந்தால் அபானம் என்றும்; கண்டத்தில் இருந்தால் உபானம்;
உடல் மயிர் கால்களில் இருந்தால் வியானம் என்றும் ஒரே மனசின் கிரியா விசேஷங்கள்.
ஒரே வாயு சரீரத்தில் வெவ்வேறு இடங்களில் வேறு வேறு பெயர்களால் அழைக்கப் படுவதுபோல
பிரஹ்மம் ஸ்திர-சரஸ்ய ; ஸ்தாவர – ஜங்கமமாய் , அவன் ஒருத்தனே தான் காரணம்,
மற்றெல்லா பொருட்களும் அவனுடைய காரியமாய் ஜகத்து அவனைக் காட்டிலும் வேறுபட்டது அல்ல என்கிற அநன்யத்வம் சித்தம்.

அதிகரண சாராவளியில் வேதாந்த தேசிகர் சொல்வதாவது :
ஜகத் ஸ்ருஷ்டி வாதத்தில் பல படியான வாதங்கள் உள்ளன. அவை
பிரஹ்மம் ஜகத் காரணம் என்பதை ஒத்துக் கொள்பவர்;
பிரஹ்மம் ஜகத் காரணம் என்பதை ஒத்துக் கொள்ளாதவர் –என்று இருவகைப்பட்டு அதில்
1. பிரஹ்ம நிராகாரணம் பண்ணுகிற சாங்கியன்;
2. கேவல நிமித்த காரணம் பிரஹ்மம் என்று சொல்கிற வைசேஷிகன்;
பிரஹ்ம வியதிரிக்த்த ஜகத் மித்யை என்கிற அத்வைதிகளில்
3. விவர்த்த வாதியான சங்கர்;
4. பிரஹ்மத்திடத்திலேயே சேதனா சேதன ஈஸ்வராம்சங்கள் உண்டு என்கிற யாதவ பிரகாசன்;
5. பிரஹ்மத்துக்கான பிரமத்துக்கு உபாதி காரணம் என்று சொல்கிற பாஸ்கரர்;
6. இவ்விருவருடைய சக்தி பரிணாம வாதம்;
7. சாங்கியனுடைய அபிவியக்த வாதம் – ஒரு பெண்ணோ, பையனோ பால்ய பருவத்தில் இருக்கும் போது
பிரஜோத்பத்தி தசை மறைந்து கிடந்து, ஒரு கால விசேஷத்தில் வெளிப்படுமா போலான அம்சம் அபிவியக்தம்.
8. சாங்கியனுடைய உல்லாச வாதம் – ஒரு மலரானது அரும்பாகி, மொட்டாகி, அலர்ந்து பிறகு மலர்வது போல ஜகத் ஸ்வதாக உருவாகுவது.
9. சாங்கியனுடைய விஸ்ருஷ்டி வாதம் – குதிர் நெல் துவாரத்தின் வழி வெளிப்படுமா போலே தமக்குத்தாமே வெளிப்படுவது.
முத்துச் சிப்பியிலிருந்து முத்து வெளிப்படுமாப்போலே பிரக்ருதியே தன்னை வெளிப்படுத்துவது .
10. ஸரதத்வைத்தியான பர்த்ரு பிரபஞ்சருடைய ஸ்வரூப பரிணாம வாதம்
11. ஆகாஸாத் வாயு, வாயுர் அக்நி : அக்நிர் ஆப: ஆபஃ பிருத்வி என்கிற ஸக்ரம-அக்கிரமங்கள் எதுவும் கிடையாது என்கிற அநீயதா வாதம்

இப்படி வேதத்துக்கு அபார்த்தம் சொல்பவர்களை ஸ்வாமி எம்பெருமானார்,
மஹாபலியை திருவிக்ரமன் பாதாளத்தில் அழுத்தி தேவர்களுக்கு மூன்று லோகங்களையும் மீட்டாப்போலே ,
வைதிகர்கள் என்று சொல்லிக்கொண்டு வேதத்துக்கு அபார்த்தங்களை கற்பிப்பவர் அபவாதங்களை
தலை எடுக்க ஒட்டாமல் அழுத்தி உபசமனம் பண்ணி
ஸூக்ஷ்ம சேதனா சேதந விசிஷ்ட பிரஹ்மமே அவஸ்தாந்தரத்தை அடைகிறது
காரணமாகிய பொருள்தானே அபின்ன நிமித்த உபாதான காரணமாய் இருந்து
திரவியம்-;உபாதானம்-அவஸ்தாந்தரம்-ஆதுங்கமான அபிருதத் சித்த தர்மம் பிரதிதிஷ்டிதமாய் ,
ஸ்தூல சித்தசித் விசிஷ்ட காரிய ஜகத்தாக அந்த பிரஹ்மமே பரிணமிக்கிறபடியால் இது இரண்டுக்கும் அநந்யத்துவம் உண்டு
என்பதாக அதிகரணத்தை தலைக் கட்டுகிறார்.

வரம் ஈத்த ஈசன் தலையே பதம்பார்க்கக் கோரும் அசுரன் அவன்போல் — கூறும்
மறை நான்கும் ஓதி அவைத் தந்த அம்மால் இறையே இலை செய்வார் யாதோ?

இதனை ஸ்ருதப் பிரகாசிகாச்சார்யார்
அஹம் இதி பிரஹ்ம பிரதமோ அத்யாச : அஹங்கார: தேஷாம் அத்யாச கிரந்த : என்கிறார்.

————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யகாரர் பாஹ்ய குத்ருஷ்டிகள் பக்ஷம் நிரசனம்-

July 15, 2020

ஸ்ரீ பாஷ்ய காரர்
பாஹ்ய மதம் 11ம், குதிருஷ்டி மதம் 6 மாக , 17 மதங்களும் தத்வ ஹித புருஷார்த்தங்களை
விவிதமாக விப்பிரதிபத்தி பண்ணினபடியை —

லோகாயதிகன் :
ஆத்மா – தேகமே
பரமாத்மா – இல்லை
கர்மம் – இல்லை.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருக்கிற நாஸ்திகர்கள் இவர்கள்.
ஸ்வர்கம் – உலக இன்பம்.
நரகம் – சத்ரு சைன்யம் , பசி, பிணி, வியாதி —
இதற்கு மேற்பட அவ்வருகில்லை .
தத்வம் – ஒன்றே. தேக அதிரிக்த எதுவும் இல்லை.
ஜகத் – பரமாணு சங்காதம்
சம்ஸாரம் – பூத சதுஷ்டய கூட்டரவு
சாதனம் – பூத சதுஷ்டய பிரிவு
முக்தி – சைதன்ய நாசம்.

வெற்றிலை+பாக்கு+சுண்ணாம்பு சேர
பச்சை+பழுப்பு+வெளுப்பு நிறம் சேர
உதட்டில் சிகப்பு நிறம் உண்டாவதுபோல
பூத சதுஷ்டய கூட்டரவில் சைதந்யம் உண்டாகும்.
மரணத்தில் அந்த சைதன்யம் நசிகை மோக்ஷம்.

ஞானான் மோக்ஷம் என்று சாஸ்திரம் செல்லுகையில், ஞானம் நசிகை மோக்ஷம் என்பது இவர்கள் கொள்கை.

————-

ஜைனன் :
ஸப்த பங்கி வாதிகள் –
1. ஸ்யாத் அஸ்தி – உள்ளதாக இருக்கலாம்
2. ஸ்யான் நாஸ்தி – இல்லாததாக இருக்கலாம் .
3. ஸ்யாத் அஸ்திச நாஸ்திச – உளதாகவும் இல்லாததாகவும் இருக்கலாம்.
4. ஸ்யாத் அ வக்தவ்யம்ச – சொல்லும் வகை இல்லது இருக்கலாம்.
5. 1 &4 – ஸ்யாத் அஸ்திச அ வக்தவ்யம்ச
6. 2 & 4 – ஸ்யான் நாஸ்திச அவக்தவ்யம்ச
7. 3 & 4 – ஸ்யாத் அஸ்திச நாஸ்திச அ வக்தவ்யம்ச
இவை
சத்யாஸத்யம் = அஸ்தி x நாஸ்தி x 7
நித்யாநித்யம் = அழிவது x அழியாதது x 7
பின்னாபின்னம் = ஒன்று x பல x 7
என்பதாக 21 விதமான வாதம் உண்டு .

ஆத்மா – தேக வியதிரிக்த ஆத்மா உண்டு. ஆனைக்கு ஆனை அளவும், பூனைக்கு பூனை அளவுமாக தேக பரிமாணமாய், விபுவாய் இருக்கும்
பரமாத்மா – இல்லை.
கர்மம் – உண்டு.
தத்வம் – ஆறு. அவை தர்மம், அதர்மம், ஜீவன், புத்காலம், ஆகாசம், காலம்.
ஜகத் – சத்யாசத்தியமாய், நித்யாநித்யமாய், பின்னாபின்னமாய் ஒருபடி படலாகா ஒன்று.
சம்ஸாரம் – தேகம் கர்மாதீனம். அநாதி.
சாதனம் – (மயிற்பீலியும் கையுமாய்) அஹிம்சை , அமணத்வம் (திகம்பரர் = திக்கே ஆடை) , (வாய்க்கு துணியைக் கட்டி) மௌனியாகை ,
மழித்த தலை, பாணிபத்ர போஜனம், இந்திரிய நிக்ரகம் இத்யாதி நியமமங்கள்.
முக்தி – சம்ஸார நிவிர்த்தி + ஊர்த்வ கதியை பிராபிக்கை.

நிரசனம் :
வஸ்துக்களில் இரண்டு விருத்த தர்மங்கள் ஒரே காலத்தில் இருக்க வழியில்லை. எனவே அது சம்பவம் என்று சொல்லுகிற ஜைன மதம் தள்ளுபடி.
தவிற யானைக்கு யானை அளவு ஆத்மா என்றால் , அடுத்த பிறவியில் பூனையாகவோ, நாயாகவோ பிறக்க நேரிட்டால்,
அந்த ஆத்மா எடுத்துக்க கொண்ட சரீரத்துக்குள் அடங்காமையாகிற – அகார்ஷியமாகிற – தோஷம் வரும்.
இல்லை சரீரம் அளவுக்கு கூடுதல், குறைதல் என்கிற விகாரத்தை ஆத்மாவுக்கு ஒத்துக்க கொள்ள வேண்டும்.

ஆத்மா விகாரமற்றதாய், ஸூக்ஷ்ம ரூபியாய், தர்ம பூத ஞானம் கொண்டே அதிஷ்டானம் பண்ணி இருக்கிற சரீரம் முழுதும் வியாபிப்பவன் என்று சாஸ்திரம் சொல்லுகிறபடியால், அது கொண்டும் ஜைனமதம் தள்ளாத தக்கது.

———————-

பெளத்தன் :
சூன்யத்தாலே சூன்யத்தை பிராபிக்கை சூன்யமான மோக்ஷம். – பொதுக் கொள்கை.
(பிரமேயம்) ஜகத்து – வாயு பரமாணு (ஸ்பர்சம்) + அக்நி பரமாணு (ரூபம்) +அப்பு பரமாணு
(ரஸம் ) + பிருதிவி (கந்தம்) என்கிற பூத சதுஷ்டயங்களின் கூட்டரவு. பிரத்யக்ஷ சித்தம்.
(பிரமாணம்) ஞானம் – க்ஷணிகம் (Flux) – மாறிக் கொண்டே இருப்பது.
(பிரமாதா) ஆத்மா – பிராமண பின்னமான ஆத்மா இல்லை. அதாவது. ஞானமே ஆத்மா. அவன் ஞான குணகன் அன்று.

வைபாஷிகன் –
ஆத்மா – லோக விவகார ரூப ஞானமே ஆத்மா. அதுவும், பிரவாகதயா க்ஷணிகம்.
பரமாத்மா – இல்லை.
கர்மம் – இல்லை.
தத்வம் – 35 . ஆனால் அவைகள் ஞானம் ; ஞேயம் என்ற இரண்டுக்குள் அடக்கலாம்.
ஜகத் – பரமாணு சங்காதம். க்ஷணிகம். பிரயக்ஷ சித்தம்.
சம்ஸாரம் – ஜகத் ஸ்திரம் என்கிற நினைவு.
சாதனம் – ஜகத் க்ஷணிகம் என்கிற அறிவு.
முக்தி – சூன்யம்.

நிரஸனம் :
உபய ஹேது கேது.
1. கூட்டரவு ஏற்பட்ட பரமாணுக்கள் இடையில்
நெருக்கம்
ஈர்ப்பு
கலப்பு
என்பவை அடுத்தடுத்து நிகழ வேண்டும். அதற்கு அவைகளின் ஸ்திர தன்மை அவசியம். ஒரு க்ஷணத்தில் இருந்து
அடுத்த க்ஷணத்தில் அழியாக் கூடிய வஸ்துக்கள் மத்தியில், கூட்டரவு ஏற்பட்ட வழியில்லை.
2. இல்லாதது ஜகத்
ஜல பரமாணுக்கள் ஒன்றொன்றாகக் கூடி ஜல தத்வம்.
வாயு பரமாணுக்கள் ஒன்றொன்றாகக் கூடி வாயு தத்வம்
நிலத்துக்கான பரமாணு ஒன்றொன்றாக் கூடி பிருதிவி தத்வம்
நீருக்கான பரமாணுக்கள் ஒன்றொன்றாகக் கூடி அப்புவும்
இப்படி உருவான பூத சதுஷ்டயங்கள், உருவான அடுத்த க்ஷணம் நிலைக்காவிடில் கூட்டரவு சாத்தியமில்லை.
இரண்டிலும் அஸ்திரமே பேசப்படுவதால் உபய ஹேது கேது பிரத்யக்ஷ சித்த ஜகத்தோடு ஒவ்வாது.

ஸௌத்ராந்திகன் – சித்தாந்தம் அதுவே.
ஜகத்து – பிரத்யக்ஷ சித்தம் என்றால் சூன்யத்தை ஸ்தாபிக்க முடியாது. எனவே ஜகத் ஆனுமானிக சித்தம் என்றான். அது ஒன்றே வேறுபாடு.
ஞானம் – க்ஷணிகம்.
ஆத்மா – ஞான அதிரிக்த ஆத்மா இல்லை. அறிவும் (கட த்வ ஞானம்) அறியப்படும் பொருளும் (கடமும்),
இரண்டும் ஒன்றாகவே கிரகிக்கப் படுவதால் , ஞானம் உண்டு , ஞேயம் இல்லை என்றான்.
கருப்பான, வாயும் வயிறுமான குடத்தை பார்த்த கூடலே , கடமும் – கடத்வ ஞானமும் இரண்டும் ஒன்றாக புத்தியுள்
கிரகிக்கப் படுவதால் ஞானம் ஒன்றே போதும். ஞேயமான ஜகத் பிரமம் அதாவது பொய் என்றான் .

நிரஸனம் :
3. உருவானது அழியுமானால், ஜகத் துவம்சம் – சூன்யம்தான் சித்திக்கும் . அது அனுமான சித்த மாகாது என்கிற ஆக்ஷேபம் எழ
வஸ்து அழிந்தாலும் அதன் ஆகாரம் புத்திஸ்த்த மானபோது அனுமான சாத்தியம் என்கிற சமாதானம் கூறப்பட்டது. அது நிற்க.
4. க்ஷணிக வாதத்தால் முயற்சியும் – பல வியாப்தியும் ஒரு வியக்தியில் இல்லாது, உதாசீனர்கள் பலத்தை அனுபவிப்பதாக முடியும். இது கூடாதே .

யோகாசாரன் – இவர்களுக்கும் ஸித்தாந்தம் அதுவே.
க்ஞாத்ரு , ஞேயங்கள் – பிரமம். பிரமாதா (ஆத்மா), பிரமேயம் (ஜகத்து) இரண்டும் – பொய். ஞானமே உண்டு. அதுவும் க்ஷணிகம்.

ஆத்மா – ஞானம்

பரமாத்மா – இல்லை.
கர்மம் – இல்லை.
தத்வம் – ஞானம் ஒன்றே. க்ஷணிகம்.
ஜகத் – பிரமம்.
சம்ஸாரம் – ஜகத் பிரத்யக்ஷம் (அ ) அனுமான சித்தம் என்றிருக்கை.
சாதனம் – க்ஷணிக ஞானம்.
முக்தி – சூன்யம்.

மாத்யமிகன் – பக்ஷமும் அதுவே.
பிரமாணம், பிரமேயம், பிரமாதா மூன்றை – உண்டு என்று அறிக்கை பிரமம் – மூன்றும் பொய் என்கிறான்.
மோக்ஷம் – ஞானத்தால் பரமபதத்தைப் பிராபிக்கை மோக்ஷம் என்கிற வைதிக மதத்துக்கு எதிராக சூன்யத்தாலே சூன்யம்
என்று அறிகை மோக்ஷம் என்பதான ஸர்வ சூன்ய வாதம் இவனுடையது.

நிரஸனம் :
அபாவோ: ந, உபலத்தே:
ந பாவ: அநுபலப்பதே:
அறிபவன், அறியப்படும் பொருள் இரண்டையும் பற்றாமல் அறிவு ஏற்படாது. எனவே ஜகத், ஞானம் இரண்டுமே உண்டு.

அனுப்பபத்தேஸ் ச
அஸ்தி சப்தத்தாலோ
நாஸ்தி சப்தத்தாலோ
சூன்யத்தை ஸ்தாபிக்க முடியாது.

ஆக்ஷேபம் :
கடம் நாஸ்தி என்றால் அதன் பொருள் என்ன?
கடம் இங்கு இல்லை (அ )
கடம் இப்போது இல்லை (அ )
குட வடிவில் வஸ்து இல்லை என்றுதான் தேறும்
குடம் என்கிற வஸ்துவே இல்லை என்று பொருள் படாது,
இங்கு இல்லையேனும் வேறு இடத்தில் உண்டு.
இப்போது இல்லையேனும் முன்பு இருந்திருக்க வழி யுண்டு.
குடமாக இலையெனும், சில்லாக, மடக்காக இருக்க வகை யுண்டு.
ந+அஸ்தி யில் அஸ்தி தொக்கி உள்ளதால்.

சமாதானம் :
மண்ணில் இருந்து குடம் உருவாகும் போது
மண் என்கிற ஸ்திதி போய் குடம் என்கிற ஸ்திதி கிட்டுகிறது.
மண்ணின் அபாவம் குடத்தின் உற்பத்திக்கு காரணமாகிறது.
எனவே அபாவம் = சூன்யம் குடத்திற்கு காரணமாகிறதே? என்றான்.

நிரஸனம்:
மண்ணின் அபாவம் குடம்
நூலின் அபாவம் வேட்டி
கட்டிப் பொன்னின் அபாவம் பணிப் பொன்.

அபாவம்தான் வஸ்துவின் காரணம் என்றால்
ஒன்றின் அபாவம் இன்னொன்றின் காரியமா கலாமே?
மண்ணில் இருந்து வேட்டியோ , நகையோ (அ )
நூலில் இருந்து குடமோ , நகையோ (அ )
கட்டிப் பொன்னிலிருந்து வேட்டியோ , மண் குடமோ வருமோ? இல்லையே .

ஆக, பாவமான மண்ணில் இருந்துதான் பாவமான குடம் பிறக்கிறதே ஒழிய , அபாவத்தில் இருந்து அன்று.
மண் , குடம் இரண்டுக்கும் வஸ்து பேதம் இல்லை. ஸ்திதி பேதமே உள்ளது. உள்ளத்தில் இருந்து உள்ளது பிறக்கும் ஒழிய ,
இல்லத்தில் இருந்து உள்ளது பிறக்காது. இதுவே ஸத் காரண வாதம்.

அடுத்து, சூன்யத்தை சாதிக்க பிரமாணம் வேண்டுமே ?
ஸதான பிரமாணத்தால் சூன்யத்தை ஸ்தாபித்தால், ஸர்வ சூன்ய வாதம் நிற்காது.
மாறாக பொய்யைக் – அ-ஸத்தானதைக் – கொண்டு சூன்யம்தான் உண்மை என்று சாதிக்கவும் முடியாது, எப்படிப் பார்த்தாலும் சூன்ய வாதம் பழுதே.

ஆத்மா – இல்லை
பரமாத்மா – இல்லை
கர்மம் – இல்லை
தத்வம் – இல்லை
ஜகத் – பிரமம்
சம்ஸாரம் – தத்துவங்கள் உண்டு என்கிற பிரமம்
சாதனம் – சூன்ய புத்தி
முக்தி – சூன்யம்

நையாயிக (தார்கிக) பக்ஷம் – பிரவர்த்தகர் – அக்ஷபாதர்.
வைசேஷிக பக்ஷம் – பிரவர்தகர் – கணாதர் .
ஈஸ்வரன்.- ஆனுமானிக நிமித்த காரணம்
ஜகத்துக்கு – உபாதான காரணம் – பரமாணுக்கள் சமவாயி காரணம். வேட்டிக்கு, நூல் உண்டையும் பாவும் பின்னிப் பிணைகை காரணம் அது போலே
குணம் – குணி
அவயவம் – அவயவி
கிரியா – கிரியாவான்
இரண்டின் சம்பந்தம், இரண்டில் ஒன்று நசியும் வரை நீடிப்பது போலே .
அசமவாயி காரணம் – வேட்டியின் வண்ணத்துக்கு நூலின் வண்ணம் காரணமாவதில்லை.
சம்ஸாரம் – அநாதி.
மோக்ஷம் – சுக, துக்க, ஞானம் நாசிகை – பாஷாண கல்பம் – கல்லு போலே , கட்டை போலே ஆகை.
உபாயம் – பகவத் உபாசனம்

நிரஸனம் :
வேட்டி நெய்யும் போது நூலின் 4 பக்கங்களில் , இரண்டு பக்கங்கள் இதர இழையோடு சம்பந்தப் பட்டு, மற்ற இருபக்கங்கள்
ஆடை உடுத்தலாம்படி , அவயவங்களோடு கூடி இருக்கப் பார்த்திருக்கிறோம். ஆனால், பரமாணுக்கள் அவையவம் அற்றவை.
அவைகள் சேருவது எங்கனே?

பரமாணு, துவயணுகம் , த்ரியணுகம் என்று சேருவதற்கு காரணம் யார்?
அதற்கு அதிருஷ்டம் காரணம் என்றால் அது வஸ்துவில் உள்ளதா? ஆத்மாவில் உள்ளதா?
வஸ்துவில் உள்ளது என்றால் , அவைகளுடைய சேர்கையால் ஸ்ருஷ்டி அநாதிகாலமாய் நடக்க வேணும். புதிதாக ஏற்பட்ட வேண்டிய ஒன்று இல்லை.
அதிருஷ்டம் ஆத்மாவில் உள்ளது என்றால், அது எப்படி பரமாணுவை இணைக்கப் போகும்? – என்று இப்படி பலபல ஒவ்வாமை வந்து சேரும்.

ஆத்மா – உண்டு.
பரமாத்மா – அனுமானிக நிமித்த காரணம் ஈஸ்வரன்.
கர்மம் – உண்டு
தத்வம் – 16
ஜகத் – பரமாணு சேர்கை
சம்ஸாரம் – அநாதி
சாதனம் – பகவத் உபாசனம்
முக்தி – சுக, துக்கம் போய் , ஞானமும் நசிகை பாஷாண கல்பம்

————

பாசுபதர் :
காளா முகர்கள்
பாசுபதர்கள்
சைவர்கள்
காபாலிக்கர்கள் (கபாலத்தை மாலையாக அணிந்திருப்பவர்கள்)
என்று நான்கு பிரிவு.
ஜகத்துக்கு – பரமாணுக்கள் உபாதான காரணம். சைவ ஆகம ஸித்த ஈஸ்வரன் நிமித்த காரணம்.
சம்ஸாரம் – அநாதி.
மோக்ஷம் – ஆகம விதிப்படி => .
6 முத்திரைகளை அணிதல் அதாவது கழுத்து, கை, காது சிகை ஆகிய இடங்களில் ருத்ராக்ஷ மாலையைத் தரித்தல்,
பஸ்ம தாரணம் , (சைவாகமத்தில் பிராம்மணனுக்கே மோக்ஷம் என்று இருக்கிற படியால்) யக்ஞோபவீதம் தரிப்பது இவை
6ம் – ஷட் முத்ரிகா எனப்படும். இப்படி இருப்பவர்கள் பிராம்மண்யத்தை அடைந்து விடுகிறார்கள். இவர்கள் சன்யாசிகளாகவும் ஆகி விடுகிறார்கள்.

பெண் குறியிலே
காடி சால் மூலையில் (கள் பானை = ஸுரா கும்பத்தில் ) ஸ்தாபிக்கப் பட்டு இருக்கிற லிங்கத்தை
பஸ்ம தாரணர்களாக
பகாசனத்தில் அமர்ந்து
பிரணவத்தை தியானிப்பவர்களே
ஆகம விதிப்படி கர்மங்களை நன்றாக அனுஷ்டித்தவர்கள் ஆகிறார்கள். அவர்களே பசுபதி ஸாரூப்யம் பெற்று மோக்ஷத்தை அடைகின்றனர்.

நிரஸனம் :
பரமபதமாகிற வைகுந்தத்தை அடைந்து, நாராயண ஸாரூப்யம் பெறுதல் மோக்ஷம்
என்று சாஸ்திரம் – ஸுபாலோபநிஷத், நாராயணா அநுவாகம் , புருஷ ஸூக்தம் இவைகளில் சொல்லி இருக்க –
பசுபதி ஸாரூப்யம் பெறுதல் மோக்ஷம் என்கை வேதத்தோடு அசமஞ்சஸம் .
சிவ: சம்பு: , ருத்ர: , ஹிரண்யகர்ப: என்கிற திருநாமங்கள், விசேஷித்து நாராயணனையே குறிக்கும் என்பதும் வைதிகர்கள் சம்மதம்.
ஸ்ருஷ்டிக்கு ஸத் காரணமா அஸத் காரணமா என்கிற விசாரம் வந்தபோது , உபநிஷத்
ஸது ஏவ இதம் அக்ர ஆஷீத் – உள்ளது காரணம் என்றது.
அது ஆத்மாவா? அநாத்மாவா? அறிவுள்ளதா, அறிவற்றதா என்று கேட்க
ஆத்மாவா இதம் ஏகமேவ அக்ர ஆஷீத் – அறிவுள்ளது காரணம் என்றது.
அது பிரஹத்தா? அணுவா? என்ன
பிரஹ்ம வா இதம் ஏக அக்ர ஆஸீத் – பிரஹ்மமே ஜகத் காரணம் என்றது.
அந்த பிரஹ்மம் யார் என்பதை ஒருபடிச் சொல்லாமல்
இந்திரன் என்றும்
சிவன் என்றும்
ஹிரண்யகர்பன் என்றும்
நாராயணன் என்றும்
நாலு விதமாக பேசிற்று.

நால்வரில் ஒருத்தர் தான் பிரஹ்மம் என்பது சரி. மற்றய திருநாமங்களை அந்த பிரஹ்மத்தோடு ஸமன்வயப் படுத்த
ஸாமான்யாதிகரண்யம் செய்ய வேண்டும். பொதுச்சொல் சிறப்புச் சொல்லில் பர்யவாசித்துதானிப்படுத்டுமாகில் அது சாமான்யாதிகரணம்.
மாணவர்கள் குழுமத்தில், ஒரு மாணாக்கணை தனித்து அழைக்க வேண்டுமாகில், மாணவன் என்ற சொல்லோடு, அந்த மாணாக்கனுக்கான
சிறப்பு அம்சத்தை, எடுத்துக் காட்டாக மற்றவர்கள் கையில் இல்லாது, அவன் மட்டும் குடை பிடித்து இருந்தால், அந்த குடை பிடித்த
மாணாக்கனைத் தருவியியுங்கோள் என்று சொல்லலாம். குடை பிடித்த என்ற சொல் மாணாக்கன் என்பதை விசேஷித்து, மற்றயோர்களைக் கழிக்கிறது.

அந்த கணக்கில், ஸது , ஆத்மா , பிரஹ்மம் என்பன பொதுச் சொல்லாய் நாராயணனைக் குறிக்கும்.
அதேபோல பிரம்மா, சிவன், இந்திரன் என்ற சொற்களும் பொதுச் சொல்லாய் நாராயணனையே குறிக்கும்.
நாராயண பரத்வத்தை ஆதரியாதவர்கள் இதே போல நாராயணி பொதுசொல்லாக்கி சிவன், இந்திரன், பிரமன் இவர்களை குறிக்கும்
என்று வாதிட இயலாது. காரணம் :
யோகி அர்த்தம் – பாத சேர்க்கை யால் கிடைக்கும் பொருள்.
ரூடி அர்த்தம் – பொது வழக்கில் உள்ள அர்த்தம்.

பங்கஜம் = பங்க + ஜ = சேற்றில் பிறந்தது என்று பொருள் படும். காளானும் சேற்றில் பிறக்கிறது.
ஆனால் பங்கஜம் என்பது தாமரையைக் குறிப்பதாக பிரசித்தம்.
பங்கஜம் என்ற சொல் தாமரையைக் குறிப்பதாக கொள்வது ரூட்டியர்த்தம் . ரூடியர்த்ததில் சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமே உண்டு.
பத சேர்க்கையைக் கொண்டு பொருள் கொள்வது யோகிகம். இதில் ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கலாம்.

த்விஜ என்பதற்கு – ; யோகிக் அர்த்தம் => பிராம்மணன், பல், பறவை etc ரூடியர்த்தம் – பிராம்மணன் என்பது.
அது போல
பிரஹ்மம் என்பதற்கு ரூடியர்த்தம் – நாராயணன் என்பது.
யோகிகம் -சிவன் ; மங்கலகாரகன் , சம்பு – சுகம் பவதீதி சம்பு , ஸ்தாணு – பிரதிஷ்டிதமாய் இருப்பவர்,
ருத்ரன் – ரோதயதீதி ருத்ர: ஆழப்பண்ணுமவன். அடியார்களை குண சேஷ்டிதங்களால் தழுதழுக்கச் செய்ப்பவன் என்ற இத்தனையும்
நாராயணன் விஷயத்தில் யோகிக்க முறையில் பொருத்தி அர்த்தம் பண்ணலாம்.
அதுவே நாராயண சப்தத்தை மற்றவர்கள் பெயரில் ஏற்றமுடியாது. காரணம் சமஸ்கிருத வியாகரணம் இடம் கொடுக்காது.

பூர்வ பதாது ஸம்ஞாயாம் : அக: – பாணினி சூத்திரத்தின் படி
நார + அயந – நாராயண என்று மாறும். அது விசேஷித்து ஒருத்தரையே குறிக்கும்.
எப்படி சூர்ப்ப + நக என்பது சூர்ப்பணகை என்றாகி ராவண தங்கையை மட்டுமே குறிக்குமோ அதுபோல.
இந்த சூத்திரத்தின் படி நாராயண பதம் சிவன், சம்பு, ருத்ரன் இவர்களைச் சொல்லாது.
ண-த்வம் பரம் பாததே என்று அப்பய்ய தீக்ஷிதர் வியசனம் .

அதிஷ்டான மனுப்பபத்தேஸ்ச — அதிஷ்டானம் பொருந்தாமையாலும் பாசுபத்தர்கள் மதம் நிரசனா யோக்கியம் .
ஸ்ருஷ்டி கர்த்தா சிவன் என்றால், நிமித்த காரணமான அவன் சரீரத்தோடே அதிஷ்டானம் பண்ணுகிறாரா? சரீரம் இல்லாமலா? என்ற
கேள்விக்கு பதில் எப்படிச் சொன்னாலும் அது ஒவ்வாது. சைவர்கள் சம்பிரதாயத்தின் படி சிவன் – அ-சரீரி.
ஸ்ருஷ்டிக்கோ சரீர அதிஷ்டானம் தேவை. சரீரத்தோடே என்றால், அதிஷ்டானம் நித்தியமாய், ஸ்ருஷ்டியும் இன்றளவும் நடந்து கொண்டே போரும்.
அவனை அதிஷ்டானம் செய்யத் தக்க படைப்பாளி ஒருவன் வேண்டும். அவரைப் படைத்தவர் யார்? , இன்னும் அவரைப் படைத்தவர் யார்
என்று கேள்விக் கணைகள் பிரவாகமாக நீளும். எனவே அதிஷ்டானம் எக்காரணம் கொண்டும் இந்த சம்பிரதாயத்தின் படி பொருந்தாது.

ஆகையால், பாசுபதம் வேத சமஞ்சஸம் அல்ல.

——————-

சாங்கிய மத பிரவர்த்தகர் – கபிலாசாரியர். யோக மதம் – பிரவர்த்தகர் – பதஞ்சலி (எ ) ஹிரண்ய கற்பர்.
இருவர் மதத்திலும் பல ஒற்றுமை இருந்ததாலும் , ஈஸ்வர விஷயத்தில் ஒத்துப் போவதில்லை.
சாங்கிய மதம் ஸேஸ்வர சாங்கியம் என்றும் நிரீஸ்வர சாங்கியம் என்றும் இரண்டு பிரிவு.
பிரம்மாவினால் கொடுக்கப் பட்ட யோகி மதம் ஈஸ்வரனை ஒப்புக் கொண்டாலும், அவன் சிருஷ்டிக்கு உபாதான காரணம் என்று
ஒப்புக் கொள்ளாமல், நிமித்த காரணம் அளவாக சேஸ்வர சாங்கியனோடு ஒத்துப்போவர் .

தத்வங்கள் -அசேதனம் 24 + சேதன தத்வம் ஜீவாத்மா 1 = ஆக மொத்தம் 25.
ஆத்மா – உண்டு. அபிரஹ்மாத்மகம் ஆத்மா என்பது யோகி மதம்.- ஆத்மாவுக்கு அந்தராத்மா ஈஸ்வரன் என்பது இல்லை .
வைதிக மதத்தின் படி அபிரஹ்மாத்மாக வாஸ்த்துவே கிடையாது.
ந இஹ நானா அஸ்தி – இங்கே பல என்று கிடையாது. ஒன்றே உள்ளது என்று உபநிஷத் ஓதுகிறது .
இதற்குப்பொருள் = . பிரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத இரண்டாவது கிடையாது . இவ்வாறு பாற்காதவன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான்.
ஸர்வத்ர பிரமாத்மஹமாக இருக்கிற ஒன்றே உண்டு என்று பாற்பவன் ஞானி என்பது இதன் பொருள்.
ஈஸ்வரன் – நிரீஸ்வர சாங்கியத்தில் சாங்கியத்தில் இல்லை.. ஸேஸ்வர சாங்கியன் மற்றும் யோகி மதத்தில் உண்டு.
ஆனாலும், ஈஸ்வரன் ஜகத்துக்கு உபாதான காரணம் என்பதில்லை. நிமித்த காரணம் மட்டுமே.
ஜகத் – ஜகத் உபாதான காரணம் பிரதான் என்கிற மூலப் பிரகிருதி. ஈஸ்வரன் இல்லாமலே, பிரகிருதி ஸ்வதந்திரமாக
தானே படைக்கும் என்கிற இவர்கள் பிரகிருதி காரண வாதிகள்.
நமக்கும் ஒருவகையில் ஜகத்துக்கு மூலப்பிரகிருதி தான் காரணம். ஆனால், பகவத் சரீரமான பிரகிருதி
ஈஸ்வர அதிஷ்டித பிரதானம் ஜகத் காரணம் என்பது வைதிக மதம்

பிரகிருதி – கர்த்ருத்வம் உடையது. ஞானம் அற்றது.
புருஷன் (ஆத்மா) – ஞாத்ருத்வம் உடையவன். பிரகிருதி கருவியாக செயல் படுமவன்.
இவைகளுக்குண்டான நெருக்கம் – அத்தியாஸம் .
இந்த அநாதி ஸம்பந்தத்தின் விளைவு சம்ஸாரம் – ஸ்படிக + ஜபாகுஸுமம் போலே –
நிறமற்ற ஸ்படிகத்தில் செம்பருத்தி நிறம் ஏறிடப் படுவது போலே, பிரகிருதியின் தன்மை ஆத்மாவிலும்,
புருஷனின் தன்மை பிரகிருதியிலும் இருப்பதாக அறிவது சம்ஸாரம்.
மோக்ஷம் – ஆத்மா பேரிலான பிரகிருதி அத்யாஸம் நீங்குகை.
மோக்ஷ உபாயம் – பிரகிருதி, புருஷ விவேக ஞானம் . அதனதன் தன்மையை மறாடி நினைக்காமல், பிரித்து அறிதல்.

நிரஸனம் :
ரசனாத் அநுப பத்தேஸ்ச :
பிரதானம் , பகவதிஷ்டானம் இல்லாமல், தானே ஜகத்தை படைக்கிறது என்பது பொருந்தாது. காரணம்
குயவன் என்கிற ஜீவாத்மா அதிஷ்டிக்காமல் மண் குடமாகாது.
நெசவாளி இல்லாமல், நூல் ஆடையாகாது.
பொற்கொல்லன் இல்லாமல் பொன் ஆபரணமாகாது.. அதனால்
பரமாத்ம அதிஷ்டானம் இல்லாமல் பிரதானம் படைக்கும் என்பது பொருந்தாது.
ந, அனுமானம்ஸ்ச
படைக்கப் பட்ட பொருள் அறிவுள்ள வஸ்து (ஆத்ம) அதிஷ்டானம் இல்லாமல் பிரவர்த்திக்கவும் மாட்டாதே.
பால் தயிராவதும், தண்ணீர் இளநீர் ஆவதும் , அறிவுள்ள வஸ்துவின் அதிஷ்டானம் இல்லையாய்த்தானே ஏற்படுகிறது என்றால், அப்படி இல்லை.
இரும்பு கதவாக கொல்லன் வேண்டுவது போல , பால் தயிராகவும், தண்ணீர் இளநீர் ஆகவும் ஒரு ஆத்ம வாஸ்துவின் அதிஷ்டானம்
உண்டு என்பதை அனுமானத்தால் உணரலாம்;
எல்லா பாலும், எல்லா தண்ணீரும், தயிராகவோ, இளநீராகவோ ஆகாத காரணத்தால்.
மாடு புல்லைத் தின்ன பாலாகிறதே , அதுபோல என்று பூ.ப.சொல்ல, அதுவும் தவறு.
காளை மாடு புல்லைத் தின்றால் பால் கிடைப்பதில்லையே, அதற்கு அதிஷ்டிக்கப் படாமை காரணம் ஆகிறது.
எனவே புல் பாலாவதற்கு அறிவுள்ள பசு காரணம் .
மேலும் ஈஸ்வர அதிஷ்டானம் இல்லாமல், ஸ்வதந்த்ரமாக பிரதானம் தானே ஜகத்துக்கு காரணமானால், ஜகத்துக்கு பிரளயம் என்பதே ஏற்படாது.
காரணம் பிரதானம் அசித்து.
ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளயம் மாறி மாறி ஏற்படுவதிலிருந்தே அது ஈஸ்வர சங்கல்பத்தாலே நடப்பதாகத் தேறுகிறது.

—————-

குதிருட்டிகள் :

பாட்ட பிரபாகரன் -மீமாம்சகர்கள்.

ஆத்மா – உண்டு. ஆத்மா நித்யம். அநேகம். விபு.
ஸம்ஸார – ஹேது அநாதி கர்மம்.
ஈஸ்வரன் – இல்லை .
ஜகத் – பிரவாஹ ரூபேண நித்யம். ஜகத்து இப்படி, இப்படி என்று சொல்லுகிறோமே ஒழிய, அது இல்லாத போது
இப்படி இருக்கும் என்று யாரும் சொல்வதில். எனவே ஜகத் நித்யம். எனவே ஸ்ருதி கர்த்தா என்கிற ஈஸ்வர ஸத்பாவத்துக்கு இடம் இல்லை.
கர்மம் – உண்டு . ஈஸ்வர ஸத்பாவம் இல்லாததால் , கர்மங்களுக்கு பயனளிப்பது , வேதோக்த கர்மங்களை அனுஷ்டிப்பதால்
பிறக்கும் அபூர்வம் என்பதால். அது இரண்டு விதம்.
நித்யாபூர்வம்- பாலாபிஸந்தி ரஹித கார்மோபாசன மடியாக உண்டாவது.
அநித்யாபூர்வம் – பல உத்திஸ்ய கார்மோபாசன மடியாக உண்டாவது.
மோக்ஷம் – ஆத்ம பிராப்தி.
ஹேது – யக்ஞாதி கர்மங்களால் பிறந்த நித்ய அபூர்வம்.

மாயாவதி :
பிரஹ்ம சத்யம். ஜகந் மித்யா . ஜீவோந் ந பர:
சங்கரர் – பரம் பிரஹ்மைவ அக்ஞம் (அவித்யா சபளித பிரஹ்மம்) ; பிரம பரிகதம் (ஜகத், ஆத்மா பல என்று பேதலிக்கிறது) ;
ஸம்ஸரதி (அதுவே சம்ஸாரத்துக்கு காரணம்). – (வேதார்த்த சங்கிரகம்.)
பிரஹ்மம் – அநிர்வசனீயம் . ஞானமே ஆத்மா. ஞான குணகன் அன்று.
நிர்விசேஷம் – விசேஷங்கள் வியாவர்த்தகமாய் பிரஹ்மம் வேறுபாடு அற்றது .
ஸ்வ ஜாதீய பேதம் – ஆலமரம், புளிய மரத்துக்கான வேறுபாடு..
விஜாதீய பேதம் – மரமும் , மலையுக்குமான வேறுபாடு..
ஸ்வகத பேதம் – ஒரே மரத்தில், பூ, இலை, கிளை என்கிற வேறுபாடு.
அதுபோல
ஆத்மா – பரமாத்மா இரண்டும் ஒரே ஜாதி, ஞானத்தைப் பார்க்க – ஸஜாதீய பேதம்..
பரமாத்மா, அசித்து இரண்டும் வேறு ஜாதி அஜடம், ஜடம் என்று பார்க்கும் போது – விஜாதீய பேதம்.
பரமாத்மாவினுடைய திவ்யாத்மா ஸ்வரூபம், திய்வ மங்கள விக்ரகம், திருக் கல்யாண குணங்கள் இவை அனைத்தும் – ஸ்வகத பேதம்.
இப்படியான மூன்று வித வேறு பாடும் அற்றது பிஹ்மம் என்பது சங்கரர் பக்ஷம். காரணம்
பிரஹ்மத்தைத் தவிர்ந்த வேறு ஒரு ஆத்மா கிடையாது. எனவே ஸஜாதீய பேதம் இல்லை.
பிரஹ்மம் ஒன்றே உண்டு. அசித்து கிடையாது. எனவே விஜாதீய பேதம் இல்லை.
பிரஹ்மத்துக்கு சரீரமோ, குணங்களோ கிடையாது. ஆகவே ஸ்வகத பேதமும் கிடையாது.

இப்படிச் சொன்னால், முயல் கொம்பு போலே , பிரஹ்ம துச்சம் – இல்லாத ஒன்று ஆகிவிடாதோ?
என்ன – பதில் :
சின்மாத்ரம் – ஸ்வயம் பிரகாச சைதன்யம் மாத்ரம் பிரஹ்மம். தர்மா-தர்மி விபாகம் இல்லை.
அவித்யை – மாயா சபளித பிரஹ்மம் – ஜகத் உண்டு என்றும், ஆத்மாக்கள் பல என்றும் பிரமிக்கிறது.
நிலவு – அதன் ஒளி – குளம், கண்ணடி, பளபளக்கும் கத்தி இவைகளில் பட்டு பலவாக தோற்றுவது போல ஏற்படுவது பேத ஞானம்.
ஜகத்து பொய்யானது ஆகையால், அவித்யை ஸ்தானத்தில் இருக்கிற குளம், கண்ணாடி, கத்தி இவையோடு அந்த அவித்யையும் பொய் என்பது சங்கரர் வாதம்.
அக்ஞானத்தை போக்க வேண்டிய பிரஹ்மத்துக்கே அவித்தை என்றால், போக்குமவர் யார் என்று கேட்டால்
இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று பிரமிப்பது, போலே பொய்யான ஜகத்தை உண்மை என்றும்,
ஒன்றேயான ஆத்மாவை பலவென்றும் விபிரதிபத்தி பண்ணுகை அக்ஞானம். அவித்தை.
இருட்டு – உபாதி.
அஹம் பிரஹ்மாஸ்மி;
ஐததாத்மியம் இதம் ஸர்வம் ; தத் ஸத்யம் ; ஸ ஆத்மா!
தத்வமஸி ஸ்வேதகேதோ!
ஸது ஏவ ஸௌம்ய! இதம் அக்ர ஆஸீத் ; ஏக மேவ அதுவிதீயம்
இத்யாதி வாக்கியார்த்த ஜன்ய ஐக்கிய ஞானத்தாலே , அவித்யை யாகிற இருட்டு போய், பாம்பல்ல பழுது என்கிற தெளிவு பிறத்தல் போல்,
பிரஹ்ம சத்யம். ஜகந் மித்யா . ஜீவோந் ந பர: என்று ஏற்படுகிற ஞான தசையே மோக்ஷம். இதுவே ஜீவன் முக்தி.

கோயில் அர்ச்சகர், கோயில் கதவை பூட்டி, சாவியை தோளில் சாத்தி புஜிக்கச் சென்று பூஜித்த பின்பு சாவியை எங்கு வைத்தோம்
என்று தேடப் புகுந்தால், அப்போது வேறொருவர் அவர் தோளிலேயே இருப்பதாக உணர்த்தினால், சாவிக் கொத்து அங்கு புதிதாக வந்ததோ? இல்லையே.
எனவே தியான, ஆசன, உபாஸனாத்தி கர்மாக்களோ, பக்தி ரூபாபன்ன ஞானமும் ஏதுக்கு?
வாக்கியஜன்ய வாக்கியார்த்த ஞானமே போதுமானது.
நாயம் ஸர்ப்ப இதி ஞான மாத்ர நிவர்த்த இதி தமேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்யப் பந்தா அயனாய வித்யதே –
என்பவை காண்க.என்பது இவருடைய மதம். .
தத்வம் – ஆத்மா ஒன்றே. அதுவே நிர்விசேஷ பிரஹ்மம் .
ஈஸ்வரன் – உண்டு. அதுவே பிரஹ்மம். சகுண பிரஹ்மம் அல்ல. நிர்குணம்.
ஜகத்து – மித்யா- கானல் நீர் போல பொய் தோற்றமானது. இந்த ஜகத்துக்கு பரமாணு காரணமில்லை.
பிரதானம் காரண மில்லை. ஆத்மா காரண மில்லை. பிரஹ்மத்துடைய அவித்தையே காரணம்.
கர்மங்கள் – உண்டு.
சம்ஸாரம் – பிரஹ்மத்தினுடைய அக்ஞானத்தால் ஏற்படுகிற பேத ஞானம் .
மோக்ஷம் – பிரஹ்ம ஐக்கியம்
சாதனம் – தத்துவார்த்த வாக்யார்த்த ஞானம்.ஒன்றே போதுமானது.

நிரஸனம் :

தத்வமஸி ஸ்வேதகேதோ!
என்பதற்கு சங்கரர் காட்டியது :

தது – அந்த பிரஹ்மமே
துவம் – நீ
அஸி – ஆகிறாய்.
என்பதான ஸ்வரூப ஐக்கிய அத்வைதம்

ஆனால்
மட்குடம் என்று ஜகல் லக்ஷணையாகச் சொன்னாலும், அது மண் + ஆன + குடம் என்பதாக விசிஷ்டத்தையைத் தருவித்துக் கொள்ள வேண்டும்.
மிருக் பிண்ட மாக இருந்த மண் வாயும் வயிறுமான விசேஷணங்களோடு கூடிய பானை ஆயிற்று என்பதே ஸதர்த்தம் .
தத்வமஸி வார்த்தைக்கு முன்னால் சொல்லப்பட்ட
ஐததாத்மியம் இதம் ஸர்வம் ; தத் ஸத்யம் ; ஸ ஆத்மா!
என்பதிலுள்ள காரண-கார்ய, சரீர-ஆத்ம பாவத்தை தத்வமஸி வார்த்தையோடு சேர்த்துப் படிக்க மறந்தார் சங்கரர்..

விட்டிலக்கணை – விசேஷங்களை விட்டுச் சொல்வது ஜகல் லக்ஷனை என்றும் அழைக்கப் படும்.
விடா இலக்கணை – அடைமொழிகளை சேர்த்துச் சொல்வது.
விட்டுவிடா இலக்கணை – சிலவற்றைச் சொல்லி, மற்றவைகளை விரிவுக்கு அஞ்சி விடுகை.- என்கிற மூன்றில்
விட்டிலக்கணை விதியை அனுசரித்து , விடுபட்ட
ஐததாத்மியம் இதம் ஸர்வம் ; தத் ஸத்யம் ; ஸ ஆத்மா! என்பதிலான
காரண-கார்ய, சரீர-ஆத்ம விசேஷணங்களைத் தருவித்துக் கொண்டால்

தது – அந்த (காரண) பிரஹ்மம்
துவம் -(அந்தராத்மாவாகக் கொண்ட ) நீ
அஸி – ஆகிறாய்
என்கிற விளக்கம் விசிஷ்டாத்வைத பரமான வைதிக மதம்.

சங்கரர் மாயா என்பதற்கு பொய் என்று பொருள் கூறினார்.
மாயாந்து பிரகிருதிம் வித்தியாத் மாயியந்து மஹேஸ்வரம் என்பதற்கு ஏற்ப, மாயா என்றால் ஆச்சர்யம் என்பது பகவத் ராமானுஜர் விளக்கம்.
பகவத் திரோதான கரீம் என்று உள்ளிருக்கிற பரமாத்மா ஸ்வரூபத்தை பிராகிருதமான சரீரம் மறைப்பதால் அதுவே ஆச்சர்யம்.
ஸோஹம் – ஸஹ : ஹம்

சங்கர மதத்தில் உபாதி பொய். பொய்யான உபாதி உண்மையான பிரஹ்மத்தை மறைக்கமுடியுமா ?
அப்படியே மறைத்தாலும், பொய்யான ஒன்றை போக்குவது என்பது எங்கனே?
உபாதி போகவில்லை யானால் சம்ஸாரம் விலகாதே?. சம்ஸாரம் விலகாத போது அபேத க்ஞானமும் ஏற்பட
வழியில்லையாய் மோக்ஷமும் சித்திக்காது – என்கிற பெரிய வியசனம் வரும் .
இதிலிருந்து வெளிவர,

பாஸ்கரர் :
தத் ப்ரோபாத் தியாலீடம் விவசம் -> பிரஹ்மம் உபாதிக்கு உட்பட்டு கர்மவஸ்யராய் ஜீவ பாவம் அநுபவதி .
அவித்தை சத்யம் என்று ஒத்துக் கொண்டு, அபேத ஞான உபாஸனத்தாலே அந்த அவித்தை விலக ஐக்கியம் பிறக்கும். அதுவே மோக்ஷம் என்றான் .
ஆக, இவர் மதத்தில் உண்மையான அவித்யையால், ஆத்மாக்கள் பல என்கிற அபேதம் தோற்றுகிறது .
உபாதிகளான புத்தி, இந்திரியம், சரீரம். இதில் பிரஹ்மம் பட்டு பலவாகப் பிரமிக்கிறது,
எப்படி ஒரே நிலவு, தண்ணீர், கண்ணாடி, கத்திகளில் பட்டு பல பிம்பங்கள் தோற்றுகின்றனவோ அதுபோல என்றான்.
உபாதி நசிவதும் அபேத ஞான உபாசனத்தாலே.
சரீரம் – கடம்
ஈஸ்வரன் – கடாகாசம்.
கடம் – உபாதி தொலைந்தால்
பிரஹ்மம் – மஹாகாசத்தோடு ஏகீ பாவம்.

தத்வம் – பிரஹ்மம், உபாதி என்று இரண்டைச் சொன்னாலும், ஏகீ பாவத்தில் ஒன்று தான்.
ஆத்மா – உண்டு. பிரஹ்மதுக்கு ஜீவா பாவம்
ஈஸ்வரன் – சகுண ஈஸ்வரன்.
ஜகத் – சத்யம். பிரஹ்ம கர்ம உபாதி தசையில்.
கர்மம் -உண்டு
சம்ஸாரம் – உபாதி தசையில் சுக துக்கானுபவம்
மோக்ஷம் – ஐக்கியம்.
உபாயம் – வர்ணாஸ்ரம தர்மங்களை அனுஷ்டித்து அபேத ஞான வாச்சயமான உபாசனம். சங்கர பக்ஷத்தில் உபாதி பொய் என்பதால்
பிரம பர்கர ஞானம் மட்டும் போதும் உபாதி கழிய. பாஸ்கரீயத்தில் உபாதி சத்யமாதலால், ஞானத்தோடு உபாசனமும் சொல்லப்பட்டது.

யாதவபிரகாசர் :
அஸுபஸ்ச ஆஸ்பதம் – ஜீவன், அசித்து இரண்டுக்கும் பிரஹ்மம் ஆஸ்பதமாக இருக்கிறது – என்பது இவருடைய பக்ஷம்.
இவருடைய மதத்தில் , பிரஹ்மமே சிதசித் ஈஸ்வரர் என பரிணமிக்கிறது. பிரஹ்மமும், சிதசித் ஈஸ்வரர்களும் ஒன்றுதான்,
ஆனால் இரண்டும் வேறு என்பதான பிரமம் பிரம்மத்துக்கு இருப்பது விலகி இரண்டும் ஒன்றே என்று உணரும்போது மோக்ஷம் என்கிறார்.

வித்யாம் ச அவித்யாம் ச யத்யத் வேத உபயகும் ஸக
அவித்தையா மிருத்யும் தீர்த்வா வித்யயா அமிருதம் அஸ்நுதே

வித்யா – ஞானம் .
அவித்யா – ஞான பின்னம் – கர்மம்.

அநிஷ்டம் – சம்ஸாரம் . அதன் நிவிருத்தி கர்ம யோகத்தாலே.
மோக்ஷம் – பிரஹ்ம ஏகீ பாவம் – அது ஞான யோகத்தாலே .
சங்கரர் சொன்ன ஞானமும் ; பாஸ்கரன் சொன்ன உபாசனம் இரண்டும் சேர
கர்ம- ஞான சமுச்சயத்தாலே – உபாய-உபேய துவயத்தாலே – மோக்ஷம் என்றார் இவர்..

வைதிக மதத்திலும் கர்ம-ஞானங்கள் மோக்ஷ ஸாதனம். ஆனால் ஒரு வேறுபாடு. கர்ம ஞானங்கள் பக்திக்கு அங்கமாகக் கொண்டு
பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே மோக்ஷம் என்பது ராமானுஜ பக்ஷம்.

சம்ஸாரம் – ஸ்வஸ்மாத் அபின்னமான சிதசித் ஈஸ்வரர்களை வேறுபட்டதாக பிரமிக்கை

பேதாபேத வாதம் :
அசித்துக்கும் பிரஹ்மத்துக்கும் பேதம் , அபேதம் இரண்டும் ஸ்வாபாவிகம் .
சித்திக்கும், பிரஹ்மத்துக்கும் அபேதம் ஸ்வாபாவிகம். பேதம் ஒளபாதிகம் – இது பாஸ்கர பக்ஷம்.

அசித்துக்கும் , பிரஹ்மத்துக்கும் பேதாபேதம் ஸ்வாப்பாவிகம் போலே ,
சித்துக்கும் , பிரஹ்மத்துக்கும் பேதாபேதம் ஸ்வாபாவிகம் – இது யாதவபிரகாச பக்ஷம்.

தத்வம் – சிதசித் ஈஸ்வரன் என்ற மூன்றைச் சொன்னாலும் , ஏகீ பாவத்தில் ஒன்று தான்.
ஆத்மா – உண்டு. பிரஹ்மமே விகாரமடைந்து ஆத்மாவாக பிரமிக்கிறது.
ஈஸ்வரன் – உண்டு. அதுவும் ஸகுண ஈஸ்வரன்.
ஜகத் – ஸத்யம் . உபாதியும் உண்மை.
கர்மங்கள் – உண்டு.- சுக துக்கானுபவம் .
சம்ஸாரம் – பேத ஞானம் சம்ஸாரம்
மோக்ஷம் – ஐக்கியம்.
சாதனம் – கர்ம க்ஞான ஸமுச்சயம் .

ஏகாயனர் :
ஏகம் பிராப்பியம் .

ஹரிப் பரதர :
ஸத்யம் ஜகத்
தத்துவதோ கிண்ணா: ஜீவ கணா :
ஹரேர் அநுசரா :
நீசோச்ச பாவம் கதா:
முக்திஹி நைதி சஸுகாதி அநகா :
பக்திஸ்ச தத் ஸாதனம் .

ஈஸ்வர ஸத்பாவம் ஆத்மாவுக்கு சொல்லப் படவில்லை. அதாவது, ஆத்மா ஸ்வதந்திரன் .
ஆத்ம-பரமாத்மா சம்பந்தம் சரீராத்மகமானது என்பதை ஏற்கவில்லை.
ஸர்வதா ஸ்வதந்திரன் ஆத்மா – துவைதம்.
ஸ்வரூபேண ஒன்று – அத்வைதம்.
தத்துவங்கள் வேறானாலும், சாமான்யாதிகரண்ய சரீராத்மா நிபத்தனமாக ஒன்று என்னல் – விசிஷ்டாத்துவைதம்.

ஸ்ரீமந் நாராயணனாகிய மிதுனத்தை அயனமாக உடைய நமக்கு எதிர் தட்டாக
நாராயணனை மட்டும் அயனமாக உடைய மாத்வர்கள் ஏகாயனர்கள்.
இருவருக்குமான சேர்த்தியிலே கைங்கர்யம் – சேஷ விருத்தி நம்முடையது.
நாராயணன் ஒருவனுக்காய் சேஷ விருத்தி அவர்களுடையது.

அபூர்ண (கதித ) ஸக்தி விசிஷ்ட பிரஹ்மம் அவர்களுடையது. பிராட்டி விசிஷ்ட பிரஹ்மம் என்பதால்
பூர்ண ஸக்தி விசிஷ்டன் ஸ்ரீமன் நாராயணனாகிற பிரஹ்மம் என்பது நம்முடைய பக்ஷம்.

தத்வம் – சிதசித் ஈஸ்வரன் என்கிற 3.
ஆத்மா – ஸர்வதா ஸ்வதந்திரன் . ஆனாலும், எப்போதும் ஹரியை அனுசரித்தே செல்பவன்.
ஈஸ்வரன் – லக்ஷ்மி சக்தி தவிர்ந்த சீமித சக்தியுக்தன்.
ஜகத் – உண்டு. அது பிரஹ்ம காரியம்.
கர்மங்கள் – உண்டு.
சம்ஸாரம் -கர்மங்களே காரணம்.
மோக்ஷம் – வைகுந்தப் பிராப்தி.
உபாயம் – பக்தி உபாசனம்.

இப்படியாக, பாஹ்ய குத்திருட்டி மாதங்கள் 17ம் பரிதியாஜ்யம்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்யம்–ஸ்ம்ருதி அதிகரணம்-2-1-1–(இரண்டு ஸூத்ரங்கள்)–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்–-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள்
முதல் அதிகரணம் -ஸ்ம்ருதி அதிகரணம் – -இரண்டு ஸூத்ரங்கள்
இரண்டாவது- யோக ப்ரத் யுக்தி அதிகரணம்-ஒரே ஸூத்ரம்
மூன்றாவது-விலக்ஷணத்வ அதிகரணம்-9-ஸூத்ரங்கள்–

முதல் அத்யாயம் –முதல் பாதம் -11- / இரண்டாம் -6- / மூன்றாம் -10-/ -நான்காம் பாதம் -8- ஆக -35-அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம்- முதல் பாதம் -10-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -7-/ நான்காம் -8- /-ஆக-33-அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம்- முதல் பாதம் -6-/ இரண்டாம் -8-/ மூன்றாம் -26-/ நான்காம் -15- /-ஆக-55-அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் -முதல் பாதம் -11-/ இரண்டாம் –11-/ மூன்றாம் -5-/ நான்காம் –6–ஆக-33-அதிகரணங்கள்
-மொத்தம் -156-அஷோர்மி-அதிகாரண சாராவளீ ஸ்லோகம் –

இரண்டாம் அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள் -இரண்டும் எட்டும் –
முதல் இரண்டில் ஸ்ம்ருதி விசாரம் -மேல் எட்டில் யுக்தி விசாரம் -ஸ்ம்ருதி உபக்ரமம் என்பதால் ஸ்ம்ருதி பாதமானது
ஜகத் உபாதானத்வமும்-ஜகத் நிமித்தத்வமும் பலித்தன
1-/-2-/-3-/6 -/-7-/-9-அதிகரணங்கள் உபாதாளத்வ ஸ்தாபனம்
8–/-10-நிமித்தத்வ ஸ்தாபனம்
4-சிஷ்ட பரிக்ரஹ /-5-போக்த்ராபாத்த்யதிகரணங்கள் உபய ஸ்தாபனம்

அதவா –
முதல் ஆறில் உபாதானத்வத்தில் விரோதி பரிக்ரஹம் என்றும்
மேல் நான்கில் நிமித்தத்வத்தில் விரோதி பரிஹாரம் என்றும் கொள்ளலாம்

——————-

பூர்வத்விகம்–விஷய த்விகம் –சித்த த்விகம் –/ உத்தர த்விகம் –விஷயி த்விகம் -ஸாத்ய த்விகம்
சமன்வய அத்யாயம் / அவிரோத அத்யாயம் /சாதன அத்யாயம் /பல அத்யாயம் –

————

பிரதம அத்யாயம் ஜகத் ஏக காரணம் பர ப்ரஹ்மம்
ப்ரத்யக்ஷ அசேதனம் -பின்ன -சேதனம் -மோக்ஷ அவஸ்தை வரும் வரை சரீரத்துடன் கூடியே ஜீவாத்மா –
அதுக்கு முன் அவஸ்தை ஸூஷ்மம்–மூன்றாம் அத்யாயம் சொல்லும்
காரண சரீரம் அதிலும் ஸூஷ்மம் உண்டு என்பர்
மோக்ஷம் அடைந்தபின்பும் -சரீர விசிஷ்டம் -கைங்கர்யத்துக்கு
அவிஸ்தார ஸூ கம்பீர ஸ்ரீ ஸூக்திகள்-விசேஷணங்களை மீண்டும் மீண்டும் அருளிச் செய்து
அபரிமித குண சாகரம் -வேதாந்த சித்தம் –

சமன்வயம் பண்ணின பின்பு விரோதங்கள் இல்லை என்று காட்ட வேண்டுமே
ஸ்ம்ருதி பாதம்
தர்க்க பாதம்
வியல் பாதம்
பிராண -பாதம்

சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் —
vedic-classic-literature-
வேதம் -சம்ஹிதா பாகம் -ஆரண்யம் பாகம் –
வேதம் ரிஷிகளுக்கு அந்தரங்க கோசாரம் -மந்த்ர த்ரஷ்டா ரிஷி தர்சநாத் –
ஸ்ம்ருதி –ஸ்மர்தியே–நினைத்து -வேத யுக்தமாக -நினைவு படுத்தும் -வேதார்த்தம் விஸ்தாரணம் –
ஆர்ஷ சாஹித்யம் ரிஷிகள் புத்தி பூர்வகமாக எழுதினார்கள்
சுருதி ஸ்ம்ருதி விரோதம் வந்தால் சுருதி தான் பிரதானமாக கொள்ள வேண்டும்
கபில ஸ்ம்ருதி பிரக்ருதியே ஜகத் காரணம்

———–

2-1-1. ஸ்ம்ருதி அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
சூத்ரம் : ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்க : இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்காத்.– || 2.1.1 ||

கீழ் முதல் அத்யாயத்தில் வேதாந்த பிரதிபாதிதமான
ஜகத் காரண வஸ்து
சேதன அசேதன விலஷணமான பர ப்ரஹ்மம் என்று அறுதி இடப்பட்டது
ஜகத் காரணத்வம் நன்கு திருடி கரிக்கப் படுகிறது
கம்பம் நட்டு ஆட்டிப் பார்ப்பது போலே
முதல் பாதத்தில் சாங்க்யர் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன
முன் அத்யாயத்தில் நிரீச்வர சாங்க்யர்களும் சேஸ்வர சாங்க்யர்களும் நிரசிக்கப் பட்டனர்
அதில் நிரீச்வர சாங்க்யன்-கபில ஸ்ம்ருதி விரோதத்தைக் காட்டி
ப்ரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்று வாதிப்பது ஓன்று உண்டு
அத்தை நிராகரிக்க இந்த அதிகரணம் –

சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத்-
சேதன அசேதன விலஷணமான ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று கொண்டால்
பிரதானம் காரணம் என்று சொல்கிற கபில ஸ்ம்ருதி அப்ரதானமாய் விடுமே என்னில்

ந-அப்படி சொல்லக் கூடாது
அந்ய ஸ்ம்ருத்ய நவகாச தோஷ பிரசங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தை சொல்லுகிற
மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடும் ஆதலால் -எனபது சூத்ரத்தின் பொருள்
பரசராதி மகரிஷிகள் ஸ்ம்ருதிகள் எல்லாம் அப்ரமாணமாய் விடுவது விட
கபிலர் ஒருவர் ஸ்ம்ருதி ஒன்றை அப்படி ஆக்குவதே யுக்தம் –

இங்கே பூர்வ பஷம் –
சதேவ சோமய இதமக்ர ஆஸீத் -ஸ்வ தந்திர பிரதான காரணத்வத்தில் தாத்பர்யமா
ப்ரஹ்ம காரணத்வத்தில் தாத்பர்யமா
கபில காண்டம் ஞான மார்கத்தில் தத்தவங்களை விசதீகரிக்க தோன்றது

மனு பரசாராதி உக்திகளுக்கு பிரதானம் -இவை பலிஷ்டம் ஆகையாலே –
ப்ருஹஸ்பதியையும் ஸ்ருதிகள் கொண்டாடி இருக்கையாலே
அவர் இயற்றிய லோகாயுதத்தை கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பார் உண்டோ-இல்லையே

யாகம் -அத்தி மரம் நேராக தொட்டுக் கொண்டு உத்காய -சாம கானம் பண்ண வேண்டும் -சுருதி
ஸ்ம்ருதி -அத்தி மரம் துணியால் மூடி -என்கிறது -கீழே ஸ்பர்சம் நேராக தொடச் சொல்லி -விரோதம் வந்தால் சுருதி வாக்யமே பிரதானம்
ஆனால் இங்கு விரோதம் ஸ்பஷ்டமாக இல்லாமல் -வேதாந்த அர்த்தம் அறிந்து கொள்வது துர்லபம்
கபிலர் பரம ரிஷி -ஸ்ம்ருதிக்கு விரோதம் வந்தால் -எல்லா நியமங்களுக்கு அபவாதம் -exception-கொண்டு
ஸ்ம்ருதி தள்ள வேண்டும் என்ற நியமத்துக்கும் சில இடங்களில் தள்ள வேண்டும்
ஸ்ம்ருதிக்கு பிரதானம் இங்கு கொள்ள வேண்டும்
ஆஷேபம் -சமாதானம் இரண்டுமே ஸூத்ரத்தில்

வேதமும் கபிலர் பரம ஆப்தர் -மோக்ஷம் மோக்ஷ சாதனம் -பரம ப்ரதிபாதனம்
மனு -ஸ்ம்ருதி பலவும் சொல்லும் கபில ஸ்ம்ருதி முழுவதுமே பரம ப்ரதிபாதனம் என்பதால் இதுக்கு மிக பிரதான்யம் உண்டே
மூன்று பாகங்கள்
1–ஸ்மரித்யநவகாஷ தோஷ ப்ரஸங்க
2–இதி சேத் ந
3–அந்ய ஸ்மரித்யநவகாஷ தோஷ ப்ரஸங்காத்

மனு ஸ்ம்ருதிக்கு பெரிய ஸ்தானம் -வேதமே மனு ஸ்ம்ருதி பேஷஜம் என்றும் கபிலரையும் புகழ்ந்து சொல்லும்
வேதத்தால் -அறியலாம் -வேதத்தால் இல்லை பக்தியால் அறியலாம் கீதை -பக்திக்கு பிரதானம் சொல்லும் பிரகரணம்
வேதம் மோக்ஷம் சாதனம் -கங்கா நதி நீராட போகும் பொழுது போகும் சாதனத்தில் ஆழ்ந்து
சாத்யத்தில் நோக்கு இல்லாமல் இருக்கக் கூடாதே
ஸாத்யத்திலே புத்தி செலுத்தி சாதனா புத்தி தவிர வேணுமே -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ஸூக்தி உண்டே –
சுருதிகள் ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ விஷ்ணுவாலேயே உண்டு பண்ணப்பட்டு ஸ்ரீ விஷ்ணுவிலே -அவனும் ஜகத் ரூபம்
ஆபஸ்தம்பர் ஸூத்திரமும் -இத்தை ஸ்பஷ்டமாக சொல்லும்
கபில ஸ்ம்ருதி -கொண்டு இவை அனைத்துக்கும் அநவகாசம் உண்டாகுமே –

முதல் அத்யாயத்தால் நிகில ஜகதேக காரணம் பரம்பிரஹ்ம வேத வேதாந்த வேத்ய சித்தம் என்பது.
அதாவது எல்லா உபநிஷத் வாக்கியங்களும் அந்த பரமாத்மாதான் ஜகத் காரணம் என்று ஐக்கிய கண்டத்தோடு சொல்வதாக நிரூபிக்கப்பட்டது.
இரண்டாவது அத்யாயம் அவிரோத அத்யாயம் –
சம்பவனீய ஸமர்த்த பிரகார தூர்தர்சன பிரஸ்தாவம். இதுவே இரண்டு அத்யாயத்துக்கான சங்கதி.
முதல் இரண்டு அத்யாயமும் சித்தமான பரமாத்மாவைப் பற்றிச் சொல்வதால், இதற்கு சித்த துவிகம் என்றும்
அதற்கு மேற்பட்ட செய்ய வேண்டிய சாதனம் – தியானம் , உபாசனம், வேதனம் எப்படிச் செய்ய வேண்டும்
என்று சொல்கிற அத்யாயம் 3 ஆவது அத்யாயம் – ஸாதனாத்யாயம் .
அதனால் அடையக் கூடிய பலத்தைப்பற்றிக் கூறும் அத்யாயம் 4 வது அத்யாயம் – பலாத்யாயம் ஆகிய
இவை இரண்டு அத்தியாயமும் ஸாத்யத்துவிகம் எனப்படும். பலம் எனப்படுவது இங்கு மோக்ஷ ரூபம் பலமாம்.

வேத வேதாந்த சித்தமான பிரஹ்மம் ஜகத் காரணம் என்று அறியுமிடத்து, அந்த பிரஹ்மம் எப்படிப் பட்டது என்றக்கால்,
பிரத்யக்ஷ, அநுமான சப்த பிரமாணங்களால் சுலபமாக தெரிந்து கொள்கிற விஷயங்களான அசேதன வஸ்துக்கள்.
அவை நம் கண் கை காது நாக்கு மூக்கு ஆகிய ஐம்புலன்களால் கண்டு, தொட்டு, கேட்டு, சுவைத்து முகர்ந்து உணரக்கூடியவைகளாய் ,
ஸ்தூல சரீராவிசிஷ்ட ஜீவாத்மாவுக்கும், அதற்கு அந்தரகதமான ஸூக்ஷ்ம காரணா சரீரத்தோடான வியுக்த (முக்த) ஆத்மாவுக்கும்
விலக்ஷணமானது பிரஹ்மம். நிகில நிரஸ்த அபுருஷார்த்த கந்தம். அனந்த ஞானானந்தைக தானத்வம், அபரிமித உதார குண சாகரம்,
நிகில ஜகதேக காரணம். ஸர்வாந்தராத்ம பூதம் . இப்படிப்பட்ட பிரஹ்மம் வேதாந்த வேத்ய சித்தம் என்பதே.

2வது அத்தியாயத்தில் 4 பாதங்கள்.
1. ஸ்ம்ருதி பாதம்.
2. தர்க்க பாதம்.
3, வியத் பாதம்.
4. பிராண பாதம்.

ஸம்ஹிதா, பிராம்மண, அரண்யக, உபநிஷத் ரூபமான வேதம் அபௌருஷேயம்.
ரிஷி திருஷ்டம். மந்திர தர்சனாத் திரஷ்டாக்களால் (Discover) வெளியிடப் பட்டவை.
ஸ்மிருதிகள் ஹார்ஷம். ஸ்மிர்யதே இதி ஸ்மிருதி : (Rememberance).
இதிஹாச, புராணங்களும் – ரிஷி பிரணீதம் – வேத அனுப்பந்திகள்.

ஸ்மிருதி இதிஹாச புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரம்மயேத் – என்று வேதத்துக்கு அங்கங்கள் ஸ்மிருதியும், இதிஹாச புராணங்களும்.
வேதத்துக்கு விருத்தமான ஸ்மிருதி பாகங்கள், நமக்கு அனபேக்ஷம்.
அப்படியான விரோதம் இருப்பதாக சங்கை பண்ணி , அது இல்லை என்று சொல்ல வந்த அத்தியாயம் இந்த அவிரோதாத்யாயம். அதாவது
சாங்கிய மதத்தை அனுசரித்த காபில ஸ்மிருதியில் பிரக்ருதிதான் ஜகத் காரணம் என்று பேசப்படுகிறதே.
ஸர்வம் வாக்கியம் சாவதானம், அசதி வாக்யதே –
Each sentence is an assertive sentence. If assertiveness is further added like –
ப்ரகிருதிஹி ஜகத் காரணம் – it becomes doubly assertive. அ .து.
பிரக்ருதிரேவ ஜகத் காரணம் என்பதன் மூலம், பரமாத்மா ஜகத் காரணம் அன்று என்பதாக தேறும்.

கீழே பரமாத்மா ஏவ ஜகத் காரணம். ப்ரகிருதியோ, ஜீவாத்மாவோ இல்லை என்பதாக நிர்ணயித்து இருக்க,
காபில ஸ்ம்ருதி ப்ரக்ருதிதான் ஜகத் காரணம் என்பதால் , ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் விரோதம் வருகிறதே ?
அப்படி விரோதித்தால், அந்த ஸ்மிருதிக்கு பிராமண்யம் கிடையாது . அந்த அம்சத்தைக் கைவிட வேண்டும் என்பதும் –
எங்கனே? என்றால்

ஒளதம்பரீம் ஸ்ப்ருஷ்ட்வா உத்காயேத் – யஜ்ன பிரகிரியையில் சில இடத்தில் ஒளதம்பரீம் – அத்தி மரத்தை (உதும்பரம்)
தொட்டுக் கொண்டு சாம காயனம் பண்ண வேண்டியது – என்று வேதத்தில் சொல்லி இருக்க அதை விளக்க வந்த
ஸ்மிருதி வாக்கியம் ஒளதம்பரீம் ஸர்வா வேஷ்டயித்வா – அதை முழுவதுமாக சுற்றி மூடி இடவேண்டும் – என்கிறதே.
விரோதஸ்ய அனபேக்ஷம் ஸியாத் – ஸ்மிருதி சொன்னதை விட்டு, வேதம் சொன்னதை செய்வது – என்கிற
மீமாம்ஸா நியாயப்படி பார்க்கில், ஸ்ருதி வாக்கியமே பலீயம். இதில் சங்கை ஏதுக்கு ?
இப்படி அல்பமாக தள்ளக்கூடிய விஷயம் அன்று, கபில முனியினுடைய சாங்கிய மதம்.
காரணம். அவர் சாட்சாத் பகவத் அவதார ரூபமான ரிஷியானபடியாலே ,
ஸ்ருதியைக் காட்டிலும் ஸ்மிருதிக்கே பிராதான்யம் சொல்லலாம்படி அன்றோ உள்ளது?

ஸர்வே நியமாஹா ஸ அபவாதா : – Every Rule has an exception and that Exemption proves the Rule – என்பது.

ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்க : – இது ஆக்ஷேபம். பரமாத்மா ஜகத் காரணம் என்கிற ஸ்ருதி வாக்கியத்துக்கு,
சாங்கிய ஸ்ம்ருதி விரோதிக்கிறதே என்றால்
இதி சேத் ந – நிராகாரணம் – அப்படி சங்கிப்பது தவறு.
அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரஸங்காத் – இது சித்தாந்தம் / சமாதானம் –

கர்ம காண்டம் எதுவும் தள்ளுபடி இல்லாமல், பூர்ணமாக ஒப்புக்கொள்வதோடு, அந்த கபிலமுனிவரை
வேத, இதிஹாச, புராணங்கள் அனைத்தும் கொண்டாடுவதையும் நோக்குங்கால் ,
ஆப்த தமரான அவருடைய வார்த்தைகளை அன்னாரிப்பது எப்படி? மோக்ஷம், மோக்ஷ சாதனம் இரண்டையும் காட்டிக்கொடுக்கிற
கபில ஸ்மிருதியை ஒதுக்கி விட்டால் அல்ப ஸ்ருதர்களாக நாம் ஆகமாட்டோமா?
எனவே, வேத விருத்தமான விஷயங்களைக் கொண்டிருந்தாலும் , அபவாத திருஷ்டியில் (exception rule படி)
ஸ்ருதியைக் காட்டிலும் கபில ஸ்ம்ருதிக்கே பிராதான்யம் என்பது பூர்வ பக்ஷம் –

அவாந்தர பிரச்னம் :
கபில ஸ்ம்ருதியை அப்படியே ஏற்றுக் கொண்டால் , நாராயண ஜகத் காரணத்வம் சொல்லி ஸ்ருஷ்டியாதிகளைச் சொல்லுகிற
மனு ஸ்மிருதியைக் காட்டிலும், கபில ஸ்ம்ருதி பிரபலம் என்று எப்படிச் செய்வது என்கிற ஆக்ஷேபம் வருகிறதே
மனு ஸ்மிருதி தாய விபாகம் – சொத்து உரிமை இத்யாதி சாதாரண தர்மங்களை பற்றியும் சொல்லுகிறது.
காபில ஸ்மிருதியோ கேவலம் தத்வ விஷயமான கிரந்தம். எனவே தத்வ விஷயத்தைப் பார்க்கில்,
கபில ஸ்மிருதியே, மனு ஸ்மிருதியைக் காட்டிலும் ஆதரணீயம் என்பதாக பூர்வ பக்ஷிகள் தங்களுக்கு அனுகுணமாக சொல்கிற சமாதானம்.

சித்தாந்தம்.

அந்ய ஸ்மிருதி :
பகவான்தான் ஜகத் காரணம் என்று சொல்கிற ஸ்ருதிகள் –
மநு ஸ்மிருதி – ஆசீதிதம் தமோ பூதம் இத்யாரம்பா ஸ்வயம்பூ பகவான் வியக்த்தோ வியஞ்ச
கீதை – அஹம் கிருத்னஸ்ய ஜகத : பிரபவ பிரளயஸ் ததா ; அஹம் ஸர்வஸ்ய பிரபவ: மத்தஸ் சர்வம் பிரவர்த்ததே
பாரதம் – நாராயணோ ஜகன் மூர்த்தி: அநத்தாத்ம ஸநாதன : தஸ்மாத் அவியக்தம் உத்பன்னம்
த்ரிகுணம் திவஜஸத்தமா அவியக்தம் புருஷே ப்ரஹ்மந் நிஷ்கிரியே பிரலீயதே
விஷ்ணு புராணம் – விஷ்ணோசகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம் ஸ்திதி ஸம்யமக கர்தாஸௌ ஜகதோஸ்ய ஜகத் யஸ :
ஆபஸ்தம்பர் – பூப் பிராணின ஸர்வ ஏவமுவாஹ யஸ்ய நஹந்மானஸ்ய விகல்மஷஸ்ய . . . .
தஸ்மாத் காயா பிரவந்தி ஸர்வே ஸமூலம் ஸாஸ்வதிகஸ்ய அநித்ய :
இப்படியுள்ள ஸத் கார்ய வாக்கியங்களுக்கு, காபில ஸ்மிருதியை ஏற்றுக்கொண்டால், அநவகாசமாகிற மஹா தோஷம் ஏற்பட்டு,
மந்வாதி ஸ்மிருதிகள் அபிராமணமாய் போய்விடும். ஆகவே காபில ஸ்மிருதியையே உபேக்ஷிகக் கடவது .

வேதாந்த வாக்கியங்கள் எப்படிப்பட்டவை என்றால், பிரத்யக்ஷ , அநுமான , சாப்த போதங்களால் அறியமுடியாத
விஷயத்தைப் பற்றி தெரிவிப்பதாக அமைந்தவை யாகும்.
அல்ப ஸ்ருதர்களான நமக்கு அத்தோடு, வேதாந்த வாக்கியங்களை விளக்கக் கூடிய உப ப்ரஹ்மணங்களும் அவசியமாகின்றன.
உப ப்ரஹ்மணங்களாவன ரிஷிகளுக்கு சமாதி நிலையில் உணர்ந்து வெளியிடப் பட்டவையேயாகும்.
வேதார்த்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் –
சமாதி (அ ) துரீய தசை தான் – ந ஜாக்ருத, நைவ ஸுஷுப்தி மூர்ச்சா, ந ஜீவிதம் நோ மரணம் விசித்திரம் – என்பதாக
விசித்திரமான தசை -சமாதி—ஜாக்ருத ஸ்வப்ன ஸூஷூப்தி -மூர்ச்சா -இந்திரியங்கள் மனஸ் எல்லாம் அடங்கி-
சங்கராச்சாரியார் சொன்ன படிக்கு அது ஒரு எண்ண அலைகள் (யோஜனை) அற்ற விழித்த நிலை.
ஞானம் , ஞேயம் , ஞாதா என்கிற திரிபுடி லய -beyond imagination- பகுத்தறிய முடியாத அஹமர்த்த லய ஸ்திதியே – சமாதி ஸ்திதி.

யத் மனசா தியாயதி தத் வாசா வததி – என்பதற்கு இணங்க, பேச்சும், எழுத்தும், செயலும் முதலில் புத்தி பிரேரிதமாகக் கடவது.
அப்படியல்லாமல் வேதம் அபௌருஷேயம் என்றால், திரஷ்டாவான ரிஷியின் புத்திக்கதீதமாக கேட்டு உணரப்பட்டு, வெளியிடப்பட்டதாகும் –
Revealed to and by them. பகவானுடைய அருளாலே ரிஷிகளின் புத்திக்கு கோசரமானதே ஸ்ருதி எனப்படும்.

ஸ்ருதி – ஸ்ருத்யுக்தார்த்த : ஸ்மர்யதே இதி ஸ்மிருதி.
சுருதி எனப்பட்ட வேதத்தால் என்ன சொல்லப் பட்டதோ அதை ஸ்மர்யதே இதி ஸ்மிருதி :
வேதத்தில் சொல்லப் பட்டவைகளை நினைவில் கொண்டு, அதை விளக்க வந்ததே ஸ்மிருதிகள் எனப்படும்.
நூற்றுக்கணக்கான ஸ்ம்ருதிகள் பராசர மனு இத்யாதி –ராஜ தர்மம் ஆஸ்ரம தர்மம் பல விஷயங்கள் உண்டே –

இதிஹாசம் – இதீக ஹாஸா – இப்படி நடந்தது என்று பேசுமவை.
வேத பிராச்சேதஸாத் ஆஸீத் சாஷாத் ராமாயணமாத்மநா –என்றும்
பாராத பஞ்சமோ வேத: என்றும் -கிருஷ்ணஸ்ய கதா மஹா பாரதம்-
பிரமேயாவதாரம்போலே ஆயித்து பிராமண அவதாரமும்.
ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசராத்மஜம் என்று பகவான் தன் பராவர ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு
மனுஷ்யனாகவே அவதரித்தபடி.
கிருஷ்ணாவதாரமோ என்னில் மனுஷ்யனைப் போலே அவதரித்தபடி.
வேதங்களில் த்ரிவிக்ரம அவதாரமே பிரதானம் -வாமன அவதாரம் ஸ்பஷ்டமாக இல்லை –

புராணங்கள் – புராபி நவம் .
உப ஸர்கஸ்ச பிரதி ஸர்கஸ்ச வம்ஸோ மன்வந்திராணி ச வம்சாநுசரிதம் பூராநோ பஞ்ச லக்ஷணம்.
இவை அனைத்தும் ஹார்ஷ சாகித்யம். ரிஷிகளாலே பண்ணப்பட்டவை.
ஸ்ரீ விஷ்ணு புராணம் -organic-paint-போன்ற பலவும் உண்டே-

இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப ப்ரஹ்மயேத் என்று மகரிஷிகளின் புத்தி கொண்டு ரசனை செய்யப்படவை.
வேதம் அபௌருஷேயம். புத்தி ரசனைக்கு உட்படாதவை.
வால்மீகி பிரணீதம் ராமாயணம் என்று சொல்வதுண்டு.
ஆனால் காயத்ரி மந்திர திரஷ்டா விச்வாமித்திர ரிஷி என்று வழக்கு உண்டே தவிர
காயத்ரி மந்திர கர்தா விஸ்வாமித்ர : என்று சொல்வதில்லை.
ஸ்ருதி பிரதிபன்னார்த்த விசதீகரணம் உபப்ரஹ்மணம் என்று வேதங்களில் சொல்லப்பட்ட அர்த்தங்களை
விளக்கவோ, விவரிக்கவோ வந்தவை ஸ்ம்ருதி, இதிஹாச புராணங்கள் .
காபில ஸ்மிருதி வேத விருத்தமான அர்த்தங்களை சொல்வதால், அதைக் கொண்டு வேதார்த்த விசதீகரணம் செய்யப் போகாது.
உபேக்ஷணீயம்–உதாசீனம் -பிரமாணமாகக் கொள்ளக் கூடாது –

கபிலரும் ரிஷி தானே என்றால். அவர் ஆப்தர் – ஆப்த தரர் எனலாம் அவ்வளவே. அவருடை வார்த்தை
சம்பூர்ணமாக அனுப்பாதேயம் என்று சொல்லப் போகாது.
அனுக்தம் , அவிருத்தம் அந்யதோ கிராஹ்யம் என்கிற விதிக்குச் சேர எவை எவை நம்முடைய சித்தாந்தங்களுக்கு
ஒத்துப் போகுமே அந்த அளவே ஏற்புடைத்து. ஆனால் மந்வாதி ஸ்மிருதிகள் ஆப்த தமம் என்பதால் அவை பூர்ணமாகவே உபாதேயம்.

ஆப்த : என்றால் எதார்த்த வாதி மட்டுமில்லை. யதா திருஷ்டார்த்த வாதியும் கூட.
சத்தியம் பேசுவது மட்டுமல்ல. பிரியமானதை மட்டும் சொல்லாது, அப்பிரியமானாலும் உள்ளதை உள்ளபடி சொல்லுகை.
யதார்த்த வக்தா. யதாதிருஷ்டார்த்த வக்தா. யதார்த்த தர்சித்தவே சதி யதார்த்தவக்துத்வம் ஆப்த தமத்வம்.

தர்மஜ்ஞ சமயம் பிரமாணம் வேதாஸ் ச என்பதில், முதலில் தர்மஜ்ஞ சமயம் ஏவ பிரமாணம்.
தர்மஜ்ஞ : பராங்குச பரகால யதி வராப்ய : – பகவத் ஸாஷாத்காரம் பண்ணினவர்கள் வாழ்வும் வாக்கும் நமக்கு முதலில் பிரமாணம்.
தத்வ தர்சிகளாய், அவர்கள் தரிசித்த தத்துவத்தை யதா பிராகாரம் அப்படியே பேசுமவர்கள் ஆப்த தமர்கள்.
அது நம் ஆழ்வார் ஆச்சாரியர்கள் அல்லால் வேறு எவர்?

——————–

ஸூத்ரம் : இதரேஷாம் ச அநுபலப்தே : 2-1-2

மந்வாதி ரிஷிகள் – யத் வை மநு அவததி தத் பேஷஜம் என்கிற கணக்கிலே –
மனு, பராசர, வியாச மகரிஷிகள், தங்கள் யோக பலத்தால், பராவர தத்வங்களை உள்ளது உள்ளபடியே அறிந்து பேசிய
தங்களுடைய சாஸ்திரங்களில், -ஸூ யோக மகிமையால் ஜீவ பர யாதாம்யா ஞானம் அடைந்தவர்கள் -இதரேஷாம்-
ச காரம் து சப்தார்த்தம் -நிகில ஜகத் பேஷஜம் -இவை நமக்கு -மனு நாராயணன் அவதாரம்- –
சாங்கிய பக்ஷமான பிரகிருதி ஜகத் காரணம் என்பதைத் தள்ளி,
பிரஹ்மம் ஜகத் காரணம் என்று காட்டியுள்ள படியால், பிரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம் என்கிற அவர்கள் பக்ஷத்தை
மட்டுமே கைக் கொள்வது அவசியமாகிறது.

மனுஷ்யாணாம் சகஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே
யாததாமபி சித்தானாம் கசச்சின் மாம் வேத்தி தத்வத: (கீதை)
ஆயிரக் கணக்கான மநுஷ்யர்களில் யாரோ ஒருவர் என்னை அடைய முயல்கையில், அவர்களில்
யாரோ ஒருவர்தான் வெற்றி காண்கிறார்கள்.-மநுஷ்யர்கள் தான் மூன்று வகை.
என்னை அடைய வேண்டும் என்கிற விருப்பம் காட்டாதவர்கள் பலர். அவர்களில்
என்னை அடைய வேண்டும் என்கிற விருப்பம் உள்ள சிலர். அப்படி விரும்பி
சித்தி பெற்ற சிலருள், என்னை உள்ளபடி அறிந்தவர்கள் ஒரொருவரே. – என்பதாக.

இதிலிருந்து சித்தி பெற்றவர்களுள்ளும் தத்வதஹா அறிந்தவர்கள் என்றும் ,
மேம் போக்காக அறிந்தவர்கள் என்றும் தாரதம்யம் உண்டு என்று
ஸ்ரீ ராமானுஜர் மட்டும் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் இந்த வாசியைக் காட்டி அருளுகிறார் – –
முதல் ஆழ்வார்களுக்கு மூவருக்கு மட்டுமே ஒரே மாதிரி ஒரே சமயத்தில் யோக அனுபவம் -சாஷாத்காரம் –
அவர்கள் பாசுரங்கள் கொண்டு இத்தை அறிகிறோம் –

இது போலே -கபிலரும் ஞானி தான். இருந்தாலும், மநு , பராசர, வியாசாதிகள் உபாதேய தமர்கள் என்பது கொண்டு,
சாங்கிய சாஸ்திரம் உபேக்ஷணீயம்.
ஒருவேளை கபில முனியை விரோதிக்கக் கூடாது என்பதாக நினைத்து , மந்வாதி வாக்கியங்களை உபேக்ஷித்தால்,
விருஸ்சிக பயா பலாயமானஸ்ய வியாக்ர முகே பதநம் – தேள் கடிக்கு பயந்து புலியின் வாயில் விழுந்தபடி –
சிறிய தோஷத்தை பரிகரிக்கப் போய் பெரியதான தோஷத்தை சூழ்த்து கொள்வதிலே முடியும்.
சாங்கிய பக்ஷத்தை இத்தனை கடாகண்டிதமாக மறுப்பதற்கு காரணம் –

கிலேச அதிக தரம் தேஷாம் அவியக்தா ஸக்த சேதஸாம்
அவ்யக்தாஹி கதிர் துக்கம் தேஹவத் பிரவாப்யதே (கீதை 12-5)

அவ்யக்த மார்க்கமான ஞான மார்கம் துஷ்கரமானது. வேதாந்த யோக மார்கமாகிற பக்தி மார்கமே ஸுகரமானது.
இதை வலியுறுத்துகின்ற இந்த கீதா ஸ்லோகத்தின் அடிப்படையில் , பிரகிருதியிலும் பகவத் தத்துவத்தை பார்க்கிற சுத்த ஜீவாத்மாவுக்கு ,
பிரக்ருதி – புருஷ த்விதத்வ சாங்கியம் ஏற்புடைத்தாயினும், அல்ப ஸ்ருதர்களான நம் போல்வாருக்கு அது க்லேசாவகம்.
இதையே ஸ்வாமி தேசிகனும்
பக்திரேவ முக்தேர் உபாய : ஸ்ருதி ஸத விஹித: ஸா கதி: ப்ரீதிரூபா – அதனால் நமக்கெல்லாம் பகவத் பக்தி மார்க்கமே உபாயம்.
இதுவே பிரஹ்ம சூத்திரம் முழுவதுக்குமான ஸ்வாபதேசார்த்தமும் கூட.
ஞானம் முற்றி அனைத்திலும் ப்ரஹ்மம் பார்க்கும் த்ருஷ்டியில் -யோக மார்க்கம் ஆகிய பக்தி மார்க்கம் தள்ள வேண்டியது இல்லை என்றாலும்
மிகவும் துர்லபம் -ஆகவே உதாசீனமாக கொண்டு -நம் போல்வார்க்கு பக்தி ஒன்றே -என்று காட்டும் இந்த ஸ்லோகம்
ஸ்ரீ உ .வே .கொத்த மங்கலம் வரதாச்சார்யர் ஸ்வாமி ஆச்சார்யர் கிருபையால் இந்த விளக்கங்கள் –

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-