Archive for the ‘ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்’ Category

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-4-சமர்ப்பண பத்ததி -பணயப் பத்ததி -பெருமாள் ஸ்ரீ பாரத ஆழ்வான் இடம் பணயமாக விட்டு அருளியது -ஸ்லோகங்கள் -101-120-

March 6, 2016

பஜாம: பாதுகே யாப்யாம் பரதஸ்ய அக்ரஜஸ் ததா
ப்ராய: ப்ரதி ப்ரயாணாய ப்ராஸ்தாநிகம் அகல்பயத்—-101-

பாதுகே -இரட்டை -இணை
பஜாம: -வணங்குகிறோம்
யாப்யாம் பரதஸ்ய அக்ரஜஸ்
ததா-அப்போது
ப்ராய: -perhaps அநேகமாக
ப்ரதி ப்ரயாணாய –அன்றே திரும்புவதாக
யாப்யாம் ப்ராஸ்தாநிகம் அகல்பயத்—-அதே பாதுகைகளை பிரஸ்தநிகமாக தந்து அருளினான்
அழிலும் தொழுலிம் உருக்காட்டான் -பிரதிநிதியாக ஸத் ஆச்சார்யாரை அனுப்பு அருளுவான் -இத்தையே இது காட்டும்
பாதுகா தேவியே ஆச்சார்யர்
சம்பந்தம் பெற்றதும் பெருமாளே தானே பரதனை அனுக்ரஹிக்க பின்பு வந்தானே –

ததா -பிராரத்த பொழுது -லோக ரக்ஷணம் தனது என்று -ததா -என்பதற்கே இந்த பந்ததி ஸ்லோகங்கள் எல்லாம்
ப்ராய: ப்ரதி ப்ரயாணாய ப்ராஸ்தாநிகம் அகல்பயத்—திரும்பி வரும் வரை விஸ்வஸித்து அனைவரும் இருக்க
பர ஸ்தானம் போகிறோம் -பெருமாள் பட்டாபிஷேகம் பண்ண இங்கே பரஸ்தானம் –
சமர்ப்பணம் ஆகிக் கொண்டு -அலங்காரம் -திருமலையில் பரிபாஷை –
திரு ஆபரணங்கள் அவனை அடைந்து பெருமை -பரதனுக்கு கொடுக்கிறார் இங்கு-
பாதுகையே பெருமாள் -தன்னை விட ஸ்ரேஷ்டமாக பெருமாள் எண்ணிக் கொள்கிறார் –
மகுட ஸ்தானத்தில் இந்த பாதுகை -ஸீரோ பூஷணம் இது -சமர்ப்பணம்

பரதனின் தமையனான இராமன், தான் அயோத்திக்கு மீண்டும் வருவதற்கான ஏற்பாடுகளை,
பரதனுக்குத் தனது பாதுகையை அளித்ததன் மூலம் செய்தான்.
அப்படிப்பட்ட பாதுகைக்கு எங்கள் த்யானம் உரித்தாக வேண்டும்.

ஒருவன் ஊருக்குக் கிளம்பும் போது, அன்று ஏதோ ஒரு காரணத்தினால் புறப்படாமல் இருந்து விடக்கூடும்.
மீண்டும் ஊருக்குச் செல்ல வேறு நல்ல நாள் கிட்டாமல் போகக்கூடும்.
ஆகவே அவன் செய்வது – தன்னுடைய முக்கியமான பொருள்களை, தான் முன்பே குறித்திருந்த நாளில்,
வேறு இடத்தில் வைத்து விட்டு வந்து விடுவான்.
பின்னர் வேறு ஒரு நாளில், நாள்-கிழமை ஆராயாமல் புறப்பட்டு விடுவான்.
இவ் விதம் இராமன் தனக்கு முன்பாக பாதுகையை அயோத்திக்கு மீண்டும் அனுப்பினான் என்றார்.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் தாம் வரும் வரை உன்னை அன்றோ பரஸ்தானமாக அருளினார்
உன்னை நாம் பூஜிக்கிறோம் –
ஜீவாத்மாக்களுக்கு எம்பெருமான் திருவடி அடையும் வரை இவ்வுலகில் தனது பிரதிநிதியாக
ஆசார்யரை நியமித்து அருளுகிறான் –

ஆழ்வார் பரம்
ஸாஸ்த்ரம் எனது நம்மைத்திருத்த
ஸூத்த ஸீமா
திருவாய் மொழி நெஞ்சில் நிறைய
தானே பிராட்டிமார் நித்யர் திவ்ய தேசங்கள் உடன் வந்து பேரேன் என்று குடி புகுவான் –

———————————————————-

ராஜ்யம் விஹாய ரகுவம்ச மஹீ பதீநாம்
பௌராந் ச பாதரஸிகாந் ப்ருதிவீம் ச ரக்தாம்
த்வாம் ஏவ ஹந்த சரணாவநி ஸம்ப்ரயாஸ்யந்
ஆலம்பத ப்ரதமம் உத்தர கோஸலேந்த்ர:—102-

ராஜ்யம் விஹாய ரகுவம்ச மஹீ பதீநாம்-ரகுகுல அரசர் ராஜ்ய பட்டம் விட்டு விட்டு
பௌராந் ச பாத ரஸிகாந்-விஹாய- -திருவடிகளை விரும்பும் அயோத்யா மக்களையும் விட்டு விட்டு
ப்ருதிவீம் ச ரக்தாம்- விஹாய-அன்பு மிக்க நில மங்கையையும் விட்டு விட்டு
ஹந்த -wow -ஆஹா -வியப்பு
த்வாம் ஏவ –உன்னை மட்டுமே
சரணாவநி ஸம்ப்ரயாஸ்யந்-திருவடிகளை அளித்தது
ஆலம்பத ப்ரதமம் -முதலில் அணிந்து கொண்டு
உத்தர கோஸலேந்த்ர:—வடக்கு கோசல -தேசம் -வளம் மிக்கு இருந்தாலும் உன்னையே மிக்க செல்வமாக கருதி –

ராஜ்யம் விஹாய ரகுவம்ச மஹீ பதீநாம் தனது ராஜ்ஜியம் விட்டார் –
எப்படிப் பட்ட ராஜ்ஜியம் —ரகு வம்ச மஹீ பதி நாம் -அதற்கு இட்டு பிறந்த –
கைங்கர்ய சாம்ராஜ்யம் விட்டு நாம் உண்டியே உடையே போகிறோமே
பௌராந் ச பாதரஸிகாந் ப்ருதிவீம் ச ரக்தாம்
ராமோ ராமோ பிரஜா நாம் -சொல்கிறவர்களையும் விட்டு -திருவடியே பரம உபாதேயம் என்று இருக்கும் அயோத்யா மக்களையும் விட்டு
கல்லை ரிஷி பத்னியாக்கி -கரிக் கட்டையை ராஜ குமாரன் ஆக்கும் -பிராட்டிமார் -கூசிப் பிடிக்கும் திருவடி
ப்ருதிவீம் -அசேதனங்களும் பிரிவால் வாடுமே -மேலே மேலே உத்க்ருஷ்டமானவற்றை அருளிச் செய்கிறார்

அநுராகம் பொழியும் பிருத்வீயும் விட்டு –
இவர்களைத் தேற்றி -ஜல் ஜல் சப்தம் உடன் -பெருமாளை கூட்டிக் கொண்டு வருவேன் என்கிறாள் ஸ்ரீ பாதுகா தேவி –
த்வாம் ஏவ ஹந்த சரணாவநி சம்ப்ரயாஸ் யன் -ஆலம்பத ப்ரதமம் உத்தர கோச லேந்திர
ஹேம பாதுகை -மர உரி சாத்தி கொண்டாலும் இத்தை விடாமல் –

சரணம் என்று அடைபவர்களைக் காக்கும் திருவடிகளைக் காப்பவளே!
வடக்கில் உள்ள கோசலை நாட்டின் சக்ரவர்த்தியான இராமன் செய்து என்ன?
ரகுவம்சம் என்ற பட்டம், தனது திருவடிகளின் மீது மிகவும் அன்பு வைத்த ஜனங்கள், தனது நாடு ஆகியவற்றைத் துறந்து
காட்டிற்குச் சென்றான். ஆயினும் அவன் உன்னை விடாமல் அணிந்து கொண்டு போனான்.
அவனுக்கு உன் மீது அத்தனை ப்ரியம் போலும்.

இராமன் காட்டிற்குச் செல்லும் போது தன்னுடன் தனது படைகள் இல்லை, தனது நாட்டு மக்கள் இல்லை,
பரிவாரங்கள் ஏதும் இல்லை என்று உணர்ந்தான்.
ஆயினும், இவற்றைக் காட்டிலும் மேலான பாதுகைகள் உண்டே என்று எண்ணியபடி, பாதுகையுடன் சென்றான்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது எல்லாவற்றையும் துறந்து புறப்பட்டார் –
உன்னை மட்டும் சாற்றிக் கொண்டு அல்லவா புறப்பட்டார் –
பெருமாள் தன் பக்தர்களை விட மாட்டார் –
ஆசார்யனை அடையாதவர்களை தன்னிடம் அடையவும் விட மாட்டார் -என்றவாறு –

ஆழ்வார் பரம்
கலியுகம் -அர்ச்சா நிரந்தரமாக இருந்து திருத்துவதற்காக -ஆழ்வார் போல்
மற்ற யுகம் விபவமாக
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அன்று பேர மாட்டாமல்
அனைத்தையும் -ஸ்ரீ வைகுண்டம் விரக்த்தாயா –
முதல் துணையாக நம்மாழ்வார் -சடாரி ரூபமாக –
பாதுகையாக முதல் துணையாக
உயர்ந்த ஸ்ரீ வைகுண்ட நாதன் அர்ச்சாவதாரமாக வரும் பொழுது ஆழ்வார் உடன் சேர்ந்தே எழுந்து அருளி
நம்மாழ்வார் சந்நிதி எல்லா பெருமாள் கோயில் களிலும் உண்டே
சடாரியாகவாவது உண்டே
ஆழ்வார் சந்நிதி இல்லா கோயிலிகளுக்கு மஹான்கள் எழுந்து அருள மாட்டார்கள் –

——————————————————

ப்ராப்தே ப்ரயாண ஸமயே மணி பாத ரக்ஷே
பௌரான் அவேக்ஷ்ய பவதீ கருண ப்ரலாபாந்
மஞ்ஜு ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ—-103-

தற் குறிப்பு ஏற்று அணி
பாதுகை ஒலி நாதம் கேட்டு -திருவடிகளை பிடித்து யாசிக்கும் ஒலியோ
ப்ராப்தே ப்ரயாண ஸமயே மணி பாத ரக்ஷே–ரத்தினங்கள் -புறப்படும் நேரம் வந்த பொழுது
பௌரான் அவேக்ஷ்ய பவதீ கருண ப்ரலாபாந்-அயோத்யா மக்கள் கலங்கி அலுத்து உயிர் பிரிவைதை பார்க்க நீ பார்த்து –
மஞ்ஜு ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம்-திரும்ப வைக்கவே
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ-திருவடிகளை பிடித்து -கெஞ்சி பிரார்த்தித்து -யாசிப்பது போல் –
திரு அருளை கெஞ்சி பிரார்தித்தகு நமக்கு அருளும்

மஞ்ஜூ ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம் -சமாதானம் சொல்கிறாள் -ஆசுவாசம் படுத்துகிறாள்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ-காலைப் பிடித்து பிரார்த்தனை பண்ணுவேன் என்கிறாள் ஸ்ரீ பாதுகா தேவி

உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப் பெற்ற பாதுகையே!
இராமன் காட்டிற்குக் கிளம்பிய போது அயோத்தி மக்கள் அனைவரும் மிகவும் வருத்தம் கொண்டு புலம்பியபடி நின்றனர்.
அந்த நேரத்தில் உன்னில் பதிக்கப்பட்ட கற்கள் ஓசை எழுப்பின. அந்த ஓசை எவ்விதம் இருந்தது என்றால் –
நீ இராமனின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு,
“இந்த மக்களைக் காக்கும் பொருட்டு என்னை மீண்டும் அயோத்திக்கு அனுப்ப வேண்டும்”, என்று கேட்பது போன்று இருந்தது.

தன்னைக் கெஞ்சும் மக்களைக் கண்டு இராமன் நெகிழாமல், தனது உறுதி குலையாமல் நின்றான்.
ஆனால், பாதுகையோ மக்களின் நிலை கண்டு துடித்துப் போனது. இராமனின் திருவடிகளைப் பிடித்தபடி,
“என்னைப் பரதனுடன் மீண்டும் இவர்களுக்காக அனுப்புவாயா?”, என்று கேட்பது போன்று, அதனுள் இருந்த இரத்தினக் கற்கள் ஒலித்தன.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளிய பொழுது உன் குமிழியில் உள்ள ரத்னங்கள் சப்தித்தது –
அது அயோத்யா நகரத்து ஜனங்களுக்காக நீ வருந்தி பெருமாள் இடம்
என்னை யாவது இங்கே விட்டு செல்லுங்கள் என்று முறையிட்டது போலே இருந்தது –

ஆழ்வார் பரம்
நிரங்குச ஸ்வ தந்த்ரன்
இனிமையான பண் தரும் பாசுரங்களால் மகிழ்வித்து
புருஷகாரம்

——————————————————–

மத்வா த்ருணாய பரத: மணி பாத ரக்ஷே
ராமேண தாம் விரஹிதாம் ரகு ராஜ தாநீம்
த்வாம் ஏவ ஸப்ரணயம் உஜ்ஜயிநீம் அவந்தீம்
மேநே மஹோதய மயீம் மதுராம் அயோத்யாம்—-104-

ஸப்த மோக்ஷ -ஐந்து திரு நாமங்கள் கொண்ட ஸ்லோகம்
ராமன் இல்லாத அயோத்யா -புல்லுக்கு சமம்
இதராயா த்ருணாய –
மத்வா த்ருணாய -துரும்புக்கு சமம் என்று எண்ணித் தள்ளி விட்டு
பரத: மணி பாத ரக்ஷே
ராமேண தாம் விரஹிதாம் -பெருமாள் இல்லா அந்த
ரகு ராஜ தாநீம்-அயோத்தா -ராமன் இல்லாமல் -ரகுராஜ தானி -புல்லுக்கு சமம்
த்வாம் ஏவ ஸப்ரணயம் -உன்னையே அன்புடன் ப்ரீதி உடன்
உஜ்ஜயிநீம் -மிக உயர்ந்த வெற்றி –
அவந்தீம்–காப்பவள்
மேநே மஹோதய மயீம் -செல்வம் மிக்கு
மதுராம் –இனிமை –
அயோத்யாம்—வெல்ல முடியாத
ஐந்தும் பாதுகா தேவியே –

த்வாம் ஏவ ஸப்ரணயம் உஜ்ஜயிநீம் அவந்தீம்—இத்தை விட உத்கர்ஷம் இல்லை –
அவந்தீம் -தேசம் -ரக்ஷணம் சாமர்த்தியம்
மேநே மஹோதய மயீம் மதுராம் அயோத்யாம்–ராம ராஜ்யத்துக்கும் மேலான ராஜ்ய பரிபாலனம் –
மதுராம் -இனிமை சப்தம் ஸ்வ பாவம் –
அயோத்யாம்-அபரிஜாதாம் –
பரதன் உள்ள இடம் எல்லாம் கொண்டு ஸ்ரீ பாதுகா தேவி ஐந்தையும் கொடுத்தாள்-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
இராமனைப் பிரிந்த பரதன் அயோத்தியை துச்சமாகவே எண்ணினான்.
ஆனால் இராமனின் பாதுகையான உன்னை – உஜ்ஜயிநி, அவந்தி, மதுரா, அயோத்தி என்று
மிகவும் உயர்த்தியான புண்ணிய இடங்களாகவே அறிந்து கொண்டான்.

இராமன் இல்லாத அயோத்தியை பரதன் ஒரு துரும்பாகவே எண்ணினான்.
ஆனால், பாதுகையை மிகவும் உயர்ந்த, மோக்ஷம் அளிக்க வல்ல ஸ்தலங்களாகவே எண்ணினான்.

ஸ்ரீ ரத்ன பாதுகையே ஸ்ரீ பரதாழ்வான் பெருமாள் பிரிவால் மாசுற்ற ராஜ பட்டத்தை வேண்டாம் என்று உதறி விட்டு
உன்னையே பரம புருஷார்த்தமாக மதித்து மேலான அன்புடனே உன்னை எல்லாமாக அடைந்தான் –
அனைத்தையும் புல்லாக தள்ளி ஆசார்யன் இடத்திலே பக்தி செலுத்தி வாழ்வதே உஜ்ஜீவன உபாயம் என்றதாயிற்று –

ஆழ்வார் பரம்
உஜ்ஜயினி -உயர்ந்த வெற்றியாக -பெற்று தருபவர்
அவந்தி -காப்பவர் -பயன் அன்றாகிலும் பங்கமு அல்லர் ஆகிலும்
பெரும் செல்வம் இவரே மாதா பிதா –
மதுரா -செவிக்கு இனிய செஞ்சொல்
அயோத்யா -வெல்ல முடியாத பராங்குசன்
நம்மாழ்வார் திருமேனிக்குள்ளும் அனைத்து எம்பருமான்கள் திவ்ய தேசங்கள்
திருமாலிருஞ்சோலை -என் தலையே –எனது உயிரே
மனமே வாக்கும் கருமம் ஒரு மா நொடியும் பிரியான் ஊழி முதல்வன் ஒருவனே
இருப்பிடம் வைகுந்தம் இத்யாதி -ஆச்சார்யர் திரு மேனி த்யானம் பரம உத்தேச்யம் –

———————————————————————

ராமாத்மந: ப்ரதி பதம் மணி பாத ரக்ஷே
விஸ்வம் பரஸ்ய வஹநேந பரீக்ஷிதாம் த்வாம்
விஸ்வஸ்ய தேவி வஹநே விநிவேசயிஷ்யந்
விஸ்ரப்த ஏவ பரதோ பவதீம் யயாசே—-105-

ராமாத்மந: ப்ரதி பதம் மணி பாத ரக்ஷே-ஒவ்வொரு அடியையும்
விஸ்வம் பரஸ்ய -உலகத்தைத் தாங்கும்
வஹநேந பரீக்ஷிதாம் த்வாம்-தங்குவதால் மனசால் ஆராய்ந்து
விஸ்வஸ்ய தேவி வஹநே விநிவேசயிஷ்யந் விஸ்ரப்த ஏவ பரதோ பவதீம் யயாசே-
ஒளியுடன் விளங்கும் உன்னை உலக நிர்வாகம் தாங்க யாசித்துப் பெற்றான்

உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
இந்த உலகத்தை இராமனாகிய பெரிய பெருமாள் தூக்கி ஆதரித்தபடி உள்ளான்.
பாதுகையாகிய நீ அவன் நடக்கும் போது அவனைத் தூக்கியபடியே செல்கிறாய்.
ஆக நீ மறைமுகமாக உலகையும் தூக்குகிறாய் அல்லவா?
இத்தனை உயர்த்தி உன்னிடம் உள்ளதால் பரதன் உன் மீது நம்பிக்கை கொண்டு உன்னை வேண்டி நின்றான் போலும்.

சக்ரவர்த்தியாகப் போகிற ஒருவனுக்கு, அதற்கான தகுதி இருக்க வேண்டும் அல்லவா?
இந்த உலகையே தாங்கும் இராமனை, பாதுகை தாங்குவதால், பாதுகையின் மீது பரதனுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டானது.
அதனால் இராமனிடம் பாதுகையை வேண்டிப் பெற்றான்.

ஸ்ரீ மணி பாதுகையே இவ்வுலகம் அனைத்தையும் தாங்குகின்ற எம்பெருமானையே தரிக்கும் சாமர்த்தியம்
உள்ள படியால் தான் உன்னை உலகாளும் பதத்திற்காக முழு நம்பிக்கையுடன் ஸ்ரீ பரதாழ்வான் யாசித்தான் –

ஆழ்வார் பரம்
நாத முனிகள் பாவம் ராகம் தாளம்
தாளம் வழங்கி தமிழ் மறை பெற்றார்
யான் பெரியன் நீ பெரியை என்பதை யார் அறிவார்
அருள் பெற்ற நாதமுனி
யாசித்து 12000 கண்ணி நுண் சிறுத்தாம்பு-மூலம் பெற்று நம்மை உஜ்ஜீ வித்தார் –

————————————————————–

பக்த்யா பரம் பவது தத் பரதஸ்ய ஸாதோ:
த்வத் ப்ரார்த்தநம் ரகு பதௌ மணி பாத ரக்ஷே
கேந அசயேந ஸ முநி: பரமார்த்த தர்மீ (தர்சீ)
பத்ராய தேவி ஜகதாம் பவதீம் அவாதீத்—-106-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பவளே! இராமனிடம் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்த பரதன்,
அந்தக் காரணத்தால் மட்டுமே உன்னை ஆராதித்தான் என்று கூற இயலாது.
உண்மையை நன்கு அறிந்த வசிஷ்ட மகரிஷி , நீ உலக நன்மைகளை அளிப்பவள் என்று கூறினார் அல்லவோ?
வெறும் பக்தி காரணமாக பரதன் உன்னை ஆராத்தித்தான் என்றால், வசிஷ்டர் புகழ்ந்தது என்ன காரணத்தினால்?

நம்மிடம் ப்ரியமானவர்களின் பொருள்களை நாம் பாதுகாத்துப் போற்றுவது இயல்பே ஆகும்.
இதன் மூலம், வெறும் பக்தி, ப்ரியம் காரணமாக மட்டுமே பரதன் பாதுகையைப் போற்றினான் என்று கூற இயலாது.
ஏன் என்றால் – வசிஷ்டர் பாதுகையைப் போற்றினார் என்பதை நாம் காணலாம்.
உண்மையான பெருமை பாதுகைக்கு உள்ளதால் அல்லவோ அவர் போற்றியிருக்கக் கூடும்?

ஸ்ரீ பாதுகையே -தன்னுடைய பக்தியினால் ஸ்ரீ பரதாழ்வான் உன்னை பிரார்த்தித்தாரோ என்று
சங்கை கொள்வதால் உனக்கு குறை வர நியாயம் இல்லை -ஏன் எனில் உண்மையை உள்ளபடி
கூறும் சக்தி படைத்த வசிஷ்ட மகர்ஷி யல்லவா உலகத்தை காப்பாற்றும் சக்தி உனக்கு இருப்பதாக கூறினார் –

————————————————————-

ராமே வனம் வ்ரஜேதி பங்க்திரதே ப்ரஸுப்தே
ராஜ்யாபவதா சகிதே பரதே ததாநீம்
ஆஸ்வாஸயேத் க இவ கோஸல வாஸிநஸ் தாந்
ஸீதேவ சேத் த்வம் அபி ஸாஹஸ விருத்தி: ஆஸி:—107-

இராமன் கானகம் சென்று விட்டான்; தசரதர் இதன் காரணமாக இறந்து விட்டார்.
இப்படிப்பட்ட நேரத்தில் பரதன் நாட்டை ஆளும் பட்டத்தை ஏற்றான் என்று பலர் ஏசக் கூடும்.
அந்த நேரத்தில் சீதை போன்று நீயும் இராமனுடன் காட்டில் வசித்தால், கோசல நாட்டில் உள்ள மக்களுக்கு
யார் ஆதரவு கூற இயலும்? இதனால் நீ மட்டும் வந்தாய் போலும்.

இராமனின் பிரிவுத் துன்பம் காரணமாக தசரதன் மறைந்தார்.
அந்த நேரத்தில் பரதன் பட்டாபிஷேகம் செய்துகொண்டால், பலரும் அவனை ஏசக் கூடும்.
அந்தப் பழியானது பாதுகையால் மட்டுமே நீங்கும். மேலும் இராமனுடன் சீதையும் சென்று விட்டாள்.
இந்த நேரத்தில் அயோத்தியின் மக்களுக்கு ஆறுதல் யார் உள்ளனர்? இதனை உணர்ந்த பாதுகை மீண்டும் திரும்பியது போலும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்டகாரணயம் செல்ல –
சக்ரவர்த்தியும் வான் ஏறிச் செல்ல –
ஸ்ரீ பாரதாழ்வானும் பட்டாபிஷேகம் மறுக்க
சீதா பிராட்டியைப் போலே பெருமாளை பிரிந்து வர மறுத்து இருந்தால்
கோசல தேச மக்களை யார் சமாதானம் பண்ணுவர்-

—————————————————————————–

பாதாவநி ப்ரபவத: ஜகதாம் த்ரயாணம்
ராமாதபி த்வமதிகா நியதம் ப்ரபாவாத்
நோ சேத் கதந்நு பரதஸ்ய தம் ஏவ லிப்ஸோ:
பரத்யாயநம் பரிபணம் பவதீ பவித்ரீ—-108-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
மூன்று உலகங்களுக்கும் தலைவனாக உள்ள இராமனைக் காட்டிலும் உன்னுடைய மேன்மைகள் நிச்சயம்
அதிகமாகவே இருக்க வேண்டும் எப்படி?
இவ்விதம் இல்லை என்றால் இராமனையே அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பரதன்,
இராமனுக்குப் பதிலாக உன்னை ஏற்றுக் கொள்ளும்படியாக, அவனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி யிருக்கக் கூடிய
அடகுப் பொருளாக நீ எப்படி ஆக முடியும்?

அடகு வைக்கப்படும் பொருளானது, அதன் மீது வழங்கப்படும் கடன் தொகையைக் காட்டிலும் அதிக மதிப்பு
உள்ளதாக இருந்தால் மட்டுமே கடன் வழங்குவார்கள் அன்றோ?
ஆக இராமனை வேண்டி நின்ற பரதனுக்கு, பாதுகை கிட்டியவுடன் அவன் த்ருப்தி அடைந்தான் என்றால்,
இராமனைக் காட்டிலும் பாதுகைக்கு மதிப்பு உள்ளது என்று தானே ஆகிறது?
இவ் விதம் இல்லை என்றால், இராமனுக்குப் பதிலாகப் பாதுகையை அடகுப் பொருள் போன்று பரதன் எப்படி ஏற்பான்?

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் உன்னை அடகு வைத்து தன்னை மீட்டுக் கொண்டார் –
உன் மதிப்பு பெருமாளை விடவும் மூ உலகங்களிலும் உயர்ந்ததாக இருந்ததால் தானே
உன்னை அடகுப் பொருளாக ஏற்றுக் கொண்டார்

——————————————————-

மந்யே நியுஜ்ய பவதீம் மணி பாத ரஷே
பார்ஷ்ணி க்ரஹஸ்ய பரதஸ்ய நிவாரணார்த்தம்
ரத்னாகரம் ஸபதி கோஷ்பதயந் விஜிக்யே
ராம: க்ஷணேந ரஜநீசர ராஜதாநீம்—-109-

உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
இராமன் கடலைக் கலக்கியபடி சென்று அரக்கர்கள் வாழ்ந்து வந்த இலங்கைக்குச் செல்வதற்காக எழுந்தான்.
அப்போது பரதன் இராமனின் கால்களைப் பற்றியபடி இருந்தான்.
அவனைத் திசை திருப்புவதற்காக உன்னை அளித்தான் போலும்.

அழும் குழந்தையைச் சமாதானம் செய்து, அதன் கவனத்தைத் திசை திருப்ப எண்ணும் தாயானவள்,
அதன் கைகளில் விளையாட்டுப் பொருள்களைக் கொடுப்பது வழக்கம் அல்லவா?
இது போன்று இங்கு இராமனின் செய்கை இருந்ததாகக் கூறுகிறார்.
பரதன் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் தனது அவதார நோக்கம் நிறைவேறாது என்று இராமன் எண்ணி, இவ்விதமாகச் செய்தான்.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் சமுத்ரத்தை பசுவின் குளம்படி யாகப் பண்ணி
அசுரர் ராஜ்யத்தை நொடியில் ஜெயித்து தனது திருவடியை பிடித்துக் கொண்டு
மீளாத ஸ்ரீ பரதாழ்வானுக்கு உன்னைத் தந்து அருளிய பின்னரே தனது திருவவதார கார்யத்தை முடிக்க முடிந்தது –

—————————————————————–

பாதாவநி ப்ரபுதராந் அபராத வர்க்காந்
ஸோடும் க்ஷமா த்வம் அஸி மூர்த்திமதீ க்ஷமைவ
யத் த்வாம் விஹாய நிஹதா: பரிபந்தி நஸ்தே
தேவேந தாசரதி நா தச கண்ட முக்யா—110-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பவளே!
அனைத்துக் குற்றங்களையும் பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு சரீரம் பெற்றவளாக, பொறுமையே வடிவமாக நீ உள்ளாய்.
ஆகையால் தான் இராமன் உன்னைப் பரதனிடம் அளித்து விட்டு, இராவணன் போன்றவர்களை அழித்தான் போலும்.

பாதுகைக்குப் பொறுமை அதிகம் என்பதால், எப்படிப்பட்ட குற்றத்தையும் மன்னித்து விடுவாள் என்று
இராமன் அறிந்திருந்தான் ஆகையால், தன்னுடன் அவள் இருந்தால் இராவணன் போன்றோரையும்
மன்னித்து விடுவாள் என்பதால், பரதனுடன் அனுப்பி விட்டான்.
அதன் பின்னரே அவனால் இராவணனை அழிக்க இயன்றது என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே அனைத்து குற்றங்களையும் பொறுக்கும் பொறுமையின் வடிவம் நீ –
ஆகையால் தான் உன்னை ஸ்ரீ பரதாழ்வான் இடம் கொடுத்து விட்டு குற்றம் நிறைந்த
இராவணன் முதலான அரக்கக் கூட்டத்தை பெருமாள் நிரசிக்க முடிந்தது –

——————————————————————–

வாக்யே கரீயஸி பிதுர் விஹிதே அபி அத்ருப்த்யா
மாதுர் மனோரதம் அசேஷம் அவந்த்யயிஷ்யந்
மந்யே ததா ரகுபதி: பரதஸ்ய தேநே
மாதஸ் த்வயைவ மணி மௌளி நிவேச லக்ஷ்மீம்—-111-

தாயான பாதுகையே! இராமன் தனது தந்தையான தசரதனின் சத்யத்திற்கு இணங்கக் கானகம் சென்றான்.
இப்படியாகத் தனது தந்தையின் கட்டளையை நிறைவேற்றிய பின்னரும், இராமனுக்குத் த்ருப்தி உண்டாகவில்லை.
தனது தாயான கைகேயியின் ஆசைக்கு ஏற்ப பரதனுக்கு முடிசூட்ட எண்ணினான்.
அதனால் அல்லவோ இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட உன்னைப் பரதன் தலைகளில் சூட்டி அழகு பார்த்தான்?

தசரதனின் சொல்லில் ஒன்றைக் காப்பாற்றியாகி விட்டது. அடுத்த வாக்கான பரத பட்டாபிஷேகம் நிகழ்த்தவேண்டுமே!
ஆகையால் மிகவும் தந்திரமாக இராமன் செய்தது என்ன? பரதனின் தலையில், பாதுகைகளை ஏற்றி, பட்டாபிஷேகம் செய்தான்

ஸ்ரீ பாதுகையே தாய் தந்தை சொற்படி ஸ்ரீ தண்டகாரண்யம் சென்றும்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு பட்டம் சிறப்பாக பூர்த்தி செய்து தாயின் மநோ ரதம்
முழுவதையும் நிறைவேற்றி வைக்கவுமே பெருமாள் ரத்னங்கள் இழைத்த உன்னை
ஸ்ரீ பரதாழ்வான் சிரசில் கிரீடம் போலே வைத்து அருளினார் –

————————————————————————-

பாதாம் புஜாத் விகளிதாம் பரமஸ்ய பும்ஸ:
த்வாம் அதரேண விநிவேஸ்ய ஜடா கலாபே
அங்கீசகார பரதோ மணி பாத ரக்ஷே
கங்காதீரூட சிரஸ: கரிசஸ்ய காந்திம்—112-

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மிகவும் உயர்ந்த புருஷனாகிய இராமனிடமிருந்து
உன்னைப் பரதன் பெற்றபோது, தாமரை மலர்கள் போன்ற திருவடிகளில் இருந்த உன்னை, மிகவும் அன்புடன் தனது தலையில் ஏற்றான்.
அப்போது அவன், கங்கையைத் தனது சடையில் வைத்துள்ள காரணத்தால் மேலும் அழகு பெற்ற சிவன் போன்று அழகு பெற்றான்.

எம்பெருமானின் திருவடிகளில் இருந்து கங்கை வெளிப்பட்டது. அந்தக் கங்கையைத் தனது தலையில் சூடியதால் சிவன் அழகு பெற்றார்.
இங்கு இராமனின் திருவடிகளில் இருந்து பாதுகை பரதனால் பெறப்பட்டது. அதனைத் தலையில் ஏற்றதால் பரதன் அழகு பெற்றான்.
ஆக எம்பெருமானின் திருவடித் தொடர்பு பெற்றவையுடன் நமக்குத் தொடர்பு உண்டானால், நமது வாழ்வும் மணம் வீசும் என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் திருவடியில் இருந்து நழுவிய உன்னைத் தனது சிரசில் பரிவுடன் தரித்த
ஸ்ரீ பரதாழ்வான் கங்கையைத் தன் சடை முடியில் தரித்த பரம சிவனுடைய தேஜசை அடைந்தார் –

————————————————————————

அவிகலம் அதிகர்த்தும் ரக்ஷமே ஸப்த லோக்யா:
ரகுபதி சரணேந ந்யஸ்த திவ்ய அநுபாவாம்
பஜத பரதஸ் த்வாம் அஞ்ஜஸா பாத ரக்ஷே
மணி மகுட நிவேச த்யாக தந்யேந மூர்ந்தா—-113-

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பவளே! ஏழு உலகங்களையும் எந்தவிதமான குறையும் இன்றிக் காப்பாற்றும்
தகுதியை அடைய பரதன் எண்ணினான். ஆகவே இராமனின் திருவடிகளின் தொடர்பு என்ற பெருமை உடைய
உன்னைத் தனது தலையில் ஏற்றான்.
அவன் தலையில் க்ரீடம் வைக்காமல், நேரடியாகவே உன்னை ஏற்றதனால் பரிசுத்தி அடைந்தான்.

அனைத்தையும் காத்து நிற்கும் இராமனின் திருவடித் தொடர்பு கிட்டப் பெற்ற பாதுகையானது, ஏழு உலகங்களையும் ஆளும்
வல்லமையை ஒருவனுக்கு அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
இதனை அறிந்த காரணத்தினாலேயே பரதன் பாதுகையிடம் தஞ்சம் புகுந்தான்.

ஸ்ரீ பாதுகையே ஏழு உலகங்களையும் காப்பாற்றும் சக்தி பூரணமாக ஏற்பட
பெருமாள் தன் திருவடிகளில் சாற்றிக் கொண்டு தந்த உன்னை அரச பட்டத்திற்கு உரிய சாதாரண
கிரீடத்தைத் துறந்ததால் பாக்கியம் செய்த தனது தலையில் ஸ்ரீ பரதாழ்வான் வகித்தான் –

———————————————————–

இயம் அவிகல யோக க்ஷேம ஸித்யை ப்ரஜாநாம்
அலம் இதி பரதேந ப்ரார்த்திதாம் ஆதரேண
ரகுபதி: அதிரோஹந் அப்யஷிஞ்சத் ஸ்வயம் த்வாம்
சரணநக மணீநாம் சந்த்ரிகா நிர்ஜஜரேண—-114-

பாதுகையே! பரதன் இராமனிடம், “உனது பாதுகைகள் மக்களிடம் இல்லாதவற்றை அளிப்பதும் (யோக),
இருப்பதைக் காப்பதற்கும் (க்ஷேம) ஏற்றதாகும். ஆகவே அவற்றை என்னிடம் அளிக்கவேண்டும்”, என்று யாசித்தான்.
உடனே இராமன் செய்தது என்ன? உன் மீது ஏறி நின்று, தனது நகங்கள் என்னும் இரத்தினக் கற்கள் ஒளி கொண்டு
உனக்குப் பட்டாபிஷேகம் செய்தான் அல்லவா?

ஒருவருக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பாக அபிஷேகம் செய்தல் வேண்டும். இங்கு பாதுகைக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு
முன்பாக, அதன் மீது தனது திருவடிகளை வைத்து, தனது திருநகத்தின் ஒளி கொண்டு அபிஷேகம் செய்தான்.

ஸ்ரீ பரதாழ்வான் உடைய விண்ணப்பத்திற்கு இணங்க பெருமாள் ஸ்ரீ பாதுகையே
உன் மீது ஏறி ரஷணம் பண்ணக் கூடிய சக்தி உனக்கு உண்டு என்று சாதித்தார் –
அப்போது தம்முடைய திரு நக தேஜஸ் என்கிற ஒளியில் தாமே
ஒருமுறை உனக்கு திரு அபிஷேகம் செய்து வைத்தார் பெருமாள் –
பிறகே ஸ்ரீ பரதாழ்வான் நந்தி கிராமத்தில் உனக்கு திரு அபிஷேகம் செய்து வைத்தார்
சகல லோகங்களின் யோக ஷேமங்கள் குறைவின்றி நிறைவேற நீயே போதும் என்று
ஸ்ரீ பரதாழ்வான் உன்னை பிரார்த்திக்க இது நடந்ததே –

——————————————————————————–

ப்ரணயிநி பத பத்மே காடம் ஆஸ்லிஷ்யதி த்வாம்
விதிஸுத கதிதம் தத் வைபவம் தே விதந்த:
அநுதிநம் ருஷயஸ் த்வாம் அர்ச்சயந்தி அக்ந்ய காரே
ரகுபதி பத ரக்ஷே ராமகிரி ஆஸ்ரமஸ்தா:—-115-

ரகு குலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ பரதனுடன் செல்லப்போகிறாய் என்று
அறிந்த முனிவர்கள் செய்தது என்ன? ப்ரம்மனின் புத்திரரான வசிஷ்டர் மூலம் உனது பெருமைகளை அறிந்தவர்களுக்கும்,
சித்திர கூட ஆஸ்ரமத்தில் உள்ளவர்களும் ஆகிய முனிவர்கள் தங்கள் தங்கள் இடத்திற்கு உன்னை எழுந்தருளச் செய்து,
அக்னி ஹோத்ரம் போன்றவை நடைபெறும்படியாக, யாக சாலைகளில் வைத்து வழிப்பட்டனர்.
மேலும் பிறந்த வீடு செல்லும் மனைவியைக் கணவன் கட்டி அணைத்து விடை கொடுப்பது போன்று,
இராமனின் திருவடிகள் உன்னைக் கட்டி அணைத்தன.

இந்தச் ச்லோகத்திற்கு வேறு விதமாகவும் பொருள் உரைக்கலாம். இராமனின் திருவடிகள் – கணவனானவன் மனைவியை
அணைத்துக் கொள்வது போன்று, பாதுகையிடம் மிகவும் ப்ரியமாக இருந்தன. இதனைக் கண்ட முனிவர்கள்,
“இந்தப் பாதுகையை நாம் வழிபட்டால், நம்மீது இராமனின் திருவடிகள் மிகவும் ப்ரியமாக இருக்கும்.
இதன் மூலம் இராமனும் நம்மீது அளவற்ற பாசம் கொள்வான்”, என்று எண்ணினர்.
இதனால் பாதுகையை மிகவும் போற்றிக் கொண்டாடினார்கள்.

ஸ்ரீ பாதுகையே தன்னை விட்டுப் பிரியும் பத்னியை ஆரத் தழுவும் கணவனைப் போல்
பெருமாள் திருவடிகள் உன்னைக் கெட்டியாகப் பிடித்தன –
ப்ரஹ்ம புத்ரரான ஸ்ரீ வசிஷ்ட மஹர்ஷி உன் பெருமைகளை எடுத்துக் கூறியதையும் கேட்டு
சித்ர கூடத்தில் இருந்து மகரிஷிகள் ஆஸ்ரமத்தில் -அக்னி ஹோத்ர சாலையில் -தினமும் உன்னை பூஜித்தனர் –

——————————————————————————-

நியதம் அதிருரோஹ த்வாம் அநாதேய சக்திம்
நிஜசரண ஸரோஜ சக்திம் ஆதாது காம:
ஸ கதம் இதரதா த்வாம் ந்யஸ்ய ராம: விஜஹ்ரே
த்ருஷத் உபசித பூமௌ தண்டகாரண்ய பாகே—116–

ஸ்ரீ பாதுகையே பொறுமையின் பிறப்பிடமான உன் மீது ஏறி பெருமாளும் தானும் எதையும் தாங்க வல்ல
உனது குணத்தை சம்பாதித்துக் கொண்டார் -இல்லாவிடில் மிருதுவான பாதங்களைக் கொண்டு
கற்கள் முட்கள் நிறைந்த ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எவ்வாறு சஞ்சரிப்பார்

பாதுகையே! இராமன் உன்னைப் பரதனிடம் அளிப்பதற்கு முன்பு உன் மீது எழுந்தருளி நின்றான். ஏன் தெரியுமா?
உன்னிடம் இயற்கையாகவே உள்ள சக்தியைத் தனது தாமரை போன்ற திருவடிகளுக்கு ஏற்றுவதற்காகவே ஆகும்.
இவ்விதம் அவன் செய்யவில்லை என்றால் உன்னைப் பரதனிடம் அளித்த பின்னர், கற்கள் போன்று கடுமையான
பாதைகள் நிறைந்து தண்டகாரண்யத்தில் அவன் எவ்விதம் நடந்திருக்க முடியும்? அவன் திருவடிகள் எவ்விதம் தாங்கியிருக்கும்?

பாதுகையிடம் இயல்பாகவே சக்தி உள்ளதால் தான் இராமனால் கானகத்தில் எளிதாக நடக்க முடிந்தது.
பாதுகையைப் பரதனிடம் அளிக்க வேண்டிய சூழ்நிலையில், தனது திருவடிகளுக்குப் பாதுகையிடமிருந்து
சக்தியைப் பெற இராமன் எண்ணினான். அதனால் தான், அதன் மீது சற்று நேரம் எழுந்தருளிவிட்டு, பின்னர் பரதனிடம் அளித்தான்.

———————————————————————–

ரகுபதி பதபத்மாத் ரத்ன பீடே நிவேஷ்டும்
பரத சிரஸி லக்நாம் ப்ரேக்ஷ்ய பாதாவநி த்வாம்
பரிணத் அபுருஷார்த்த: பௌரவர்க்க: ஸ்வயம் தே
விதிம் அபஜத ஸர்வ: வந்தி வைதாளிகாநாம்—-117–

பாதுகையே! இராமனின் தாமரை போன்ற திருவடிகளில் இருந்து, உயர்ந்த இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட
ஸிம்ஹாசனத்தில் அமர்வதற்கு நீ புறப்பட்டாய். பரதன் உன்னைத் தனது தலையில் ஏற்றுச் சென்றான்.
அப்போது அனைத்து மக்களும் தங்களுக்கான நான்கு புருஷார்த்தங்களும் (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ – அறம், பொருள், இன்பம், வீடு)
தங்கள் கைகளில் கிட்டிவிட்டதாகவே எண்ணினர். உன்னைப் புகழ்ந்து துதித்தபடி நின்றனர்.

பெருமாளோ அல்லது அரசனோ ஓர் ஆசனத்திலிருந்து மற்றோர் ஆசனத்திற்குச் செல்லும்போது, கட்டியம் கூறுவது வழக்கமாகும்.
இங்கு பாதுகை முதலில் இராமனின் திருவடிகளில் இருந்து, பரதனின் தலையில் எழுந்தருளினாள்.
பின்னர், அயோத்தியில் ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருள வந்தபோது, அந்த நாட்டு மக்கள் கட்டியம் கூறியபடி நின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உனக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக ஸ்ரீ பரதாழ்வான் உன்னைத் தனது தலையிலே ஏற்ற பொழுது
கோசல நாட்டு மக்கள் சதுர் வித புருஷார்த்தங்களும் கைக்கு வந்தது போலே உன்னை ஸ்துதித்தார்கள் –

———————————————————————–

அநந்ய ராஜந்ய நிதேசநிஷ்ட்டாம்
சகார ப்ருத்வீம் சதுரர்ண வாந்தாம்
ப்ராதுர் யியாஸோ: பரதஸ் ததா த்வாம்
மூர்த்நா வஹந் மூர்த்தி மதீம் இவ ஆஜ்ஞாம்—-118-

பாதுகையே! இராமன் கானகம் சென்ற பின்னர், அவனது உத்தரவு என்பதே ஒரு வடிவம் எடுத்தது போன்று நீ இருந்தாய்.
உன்னைத் தனது தலையில் ஏற்றிக் கொண்ட பரதன் செய்தது என்ன? நான்கு கடல்களையும் எல்லையாகக் கொண்ட
தனது நாட்டை வேறு யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லாமல், உன்னால் வழி நடத்தப்பட்டு, ஆட்சி செய்தான்.

பாதுகையின் துணையுடன் பரதன் எந்தவிதமான இடையூறுகளும் இன்று, யாருக்கும் அச்சம் கொள்ளாமல்,
நீதி தவறாத “இராம ராஜ்ஜியம்” அமைத்தான் என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளும் பொழுது அவரது ஆஜ்ஞையின் ஸ்வரூபமாக
உன்னை மதித்து கடல் சூழ்ந்த உலகை ஸ்ரீ பரதாழ்வான் வேறு யாருக்கும் ஆட்படாமல் உன்னைக் கொண்டு ஆண்டார் –
நல்ல ஆசார்யருக்கு உட்பட்டவனுக்கு இந்த உலகமே ஸ்வ அதீனமாகுமே –

—————————————————————————–

யத் ப்ராத்ரே பரதாய ரங்க பதிநா ராமத்வம் ஆதஸ்துஷா
நித்ய உபாஸ்ய நிஜ அங்கிரி நிஷ்க்ரயதயா நிச்சித்ய விஸ்ராணிதம்
யோக க்ஷேம வஹம் ஸமஸ்த ஜகதாம் யத் கீயதே யோகிபி:
பாத த்ராணம் இதம் மிதம்பச கதாம் அஹ்நாய மே நிநுதாம்—-119-

ஸ்ரீ ரங்கநாதனே இராமனாக அவதரித்து, தனது திருவடிகளுக்குப் பதிலாக, அதனைவிட உயர்ந்த தனது பாதுகைகளை,
தனது தம்பியான பரதனிடம் அளித்தான். அந்தப் பாதுகைகளை எப்போதும் உபாஸிக்கும்படி அளித்தான்.
இந்தப் பாதுகைகள் உள்ளதைக் காப்பாற்றும், இல்லாதவற்றை அளிக்கவும் செய்யும் என்று பெரியோர்களால் கூறப்படுகின்றன.
அப்படிப்பட்ட இந்தப் பாதுகைகள் எனது அற்பத்தன்மையை நீக்க வேண்டும்.

நமது அற்பமான தன்மைகள் என்ன என்பது நாமே அறியமாட்டோம்.
அவற்றைப் பாதுகைகள் அறிந்து, அவற்றை நீக்கியும் விடுகிறாள் என்றார்.

பெருமாள் -தானே ஸ்ரீ ரங்க நாதன் -அனைத்து உலகங்களுக்கும் அனைத்து ஷேமங்களையும் அளிப்பார் என்று
வசிஷ்டாதிகள் நன்றாக அடையாளம் காணப் பட்ட ஸ்ரீ பாதுகைகளைத் ஸ்ரீ பரதாழ்வானுக்கு தந்து அருளினார் –
அவற்றின் பிரபாவத்தை முழுமையாக விவரித்து சொல்ல சொல் வன்மை அடியேன் இடம் இல்லை
இந்த குறையை நீயே போக்கி அருள வேணும் –

—————————————————————–

பரதஸ் ஏவ மாம் அபி பிரசமித விஸ்வாபவா துர் ஜாதா
சேஷேவ சிரஸி நித்யம் விஹரது ரகுவீர பாதுகே பவதீ –120-

வீரனாகிய இராமனின் பாதுகையே! ”இராமனைக் கானகம் அனுப்பிய கைகேயின் மகன்” என்ற அபவாதங்கள்
பரதன் மீது விழாமல் அவன் காப்பாற்றப்பட்டான் – எப்படி? உன்னைத் தனது தலையில் ஏற்ற காரணத்தினால் ஆகும்.
இது போன்று எனது தலையிலும் நீ எப்போதும் தங்கி நின்று, எனது அபவாதங்களையும் போக்க வேண்டும்.

விளக்கம் – எப்படிப்பட்ட த்ருஷ்டிகள், பழிகள் ஆகியவற்றை நீக்கக்கூடிய வல்லமை பாதுகையிடம் உண்டு என்றார்.

ஸ்ரீ பாதுகையே உன்னை ஆஸ்ரயித்து ஸ்ரீ பரதாழ்வான் எல்லா லோக அபவாதங்களில் நின்றும் தப்பி நற்பெயர் பெற்றான் –
அது போலே என் தலையிலும் திருப் பரிவட்டம் போல் இருந்து என் அபவாதங்களைப் போக்கி அருள வேண்டும் –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-3-பிரபாவ பத்ததி -பெருமைப் பத்ததி -பாதுகையின் பெருமை -ஸ்லோகங்கள் -31-100-

March 6, 2016

வந்தே தத் ரங்கநாதஸ்ய மாந்யம் பாதுகயோ: யுகம்
உந்நதாநாம் அவநதி: நதாநாம் யத்ர ச உந்நதி:—31-

வந்தே -வணங்குகிறேன்
தத் ரங்கநாதஸ்ய மாந்யம் -கொண்டாடத்தக்க
பாதுகயோ: யுகம்-இணைத் திருவடிகள்
உந்நதாநாம் -வணங்காமல் தலை உயர்த்தி உள்ளார்
அவநதி: -தாழ்ச்சியே ஏற்படும்
நதாநாம் யத்ர ச உந்நதி:-தலை சாய்த்து வணங்குவார்களுக்கு வாழ்க்கையில் உயர்ச்சி ஏற்படும்
நத -வார்த்தை -நான்கு இடங்களில் பயன்படுத்தி -அழகிய ஸ்லோகம் –
கிரீடம் மகிழ்ந்து -பெருமிதம் -அடைய -14 வர்ஷம் suspend -ஆனதே
குகன் -சுக்ரீவன் -விபீஷணன் -வணங்கி அரசு பட்டம் அடைந்தார்கள்–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளை வணங்காமல் உள்ளவர்களுக்குத் தாழ்வான நிலை ஏற்பட்டு விடுகிறது.
ஆனால் அந்தப் பாதுகைகளைப் போற்றி, வணங்குபவர்களுக்கு மிகவும் உயர்ந்த நிலை ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட அந்த இரண்டு பாதுகைகளையும் நான் வணங்குகிறேன்.

பாதுகைகளை அணிவதில் திருவரங்கனுக்கு மகிழ்வே ஆகும். எப்படி என்றால் இதனை தன்னுடைய திருவடிகளில்
சேர்த்துக் கொள்ள குனிந்து பார்க்கிறான். தொடர்ந்து பாதுகைகளை அணிந்து கொள்கிறான்.
அதன் பின்னர் முன்னை விடச் சற்று அதிகமாக உயர்ந்து நிற்கிறான். ஆக, பாதுகையால் உயர்த்தி உள்ளது அல்லவா?
ஆகவே திருவரங்கனையே உயர்த்தும் மேன்மையும் பாதுகைக்கு உண்டு எனலாம்.

ஸ்ரீ ரங்க நாதனின் ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன் –
வணங்குபவர்களுக்கு உஜ்ஜீவனமும்
வணங்காதவர்களுக்கு தாழ்வும் உண்டாக்குமே –

பெருமாளைச் சேர்ந்த வஸ்த்துக்கள் அனேகம் இருக்க, பாதுகை யென்பது ஸ்தோத்ரம் பண்ணத் தக்க
பெருமை யுள்ளதா வென்றால்
இந்தப் ப்ரபாவ பத்ததியில் எழுபது ஸ்லோகத்தினால் பாதுகையின் பெருமையை அருளிச் செய்கிறார்.

எந்தப் பாதுகையை வணங்காதவர்களுக்குத் தாழ்ந்த தன்மை யுண்டாகிறதோ,
எந்த பாதுகையை வணங்கினவர்களுக்கு உயர்த்தி யுண்டாகிறதோ
எல்லாராலும் கொண்டாடப்பட்ட அந்த ஸ்ரீரங்கநாதனுடைய இரண்டு பாதுகைகளை வணங்குகின்றேன்.

இணை அடிகளாகவே -நம்மாழ்வார்
ஞானத்தில் தம் பேச்சு -பிரேமத்தில் பெண் பேச்சு -தானே அடையும் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லையே –
ஆழ்வாரை வணங்கினவர்கள் மோக்ஷத்தை யடைவார்கள்,
ஆழ்வாரை வணங்காதவர்களுக்கு ஸம்ஸாரம் போகாது.
மதுரகவி ஆழ்வார் -விருது ஊதி–வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார் – நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
ராமானுஜர் -பூ மன்னு மார்பன் –மாறன் அடி பணிந்தால் உய்யலாம் –
சங்கத்தமிழ் புலவர் -கண்ணன் கழல் –ஒரு பாசுரம் தாங்கி -300 புலவர்களை கீழே தள்ளி தாழ்ந்து போனார்கள் –

——————————————————-

நிச் சேஷம் அம்பர தலம் யதி பத்ரிகா ஸ்யாத்
ஸப்த அர்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ
வக்தா ஸஹஸ்ர வதந: புருஷ ஸ்வயம் சேத்
லிக்யதே ரங்க பதி பாதுகயோ: ப்ரபாவ:—-32-

நிச் சேஷம் -மொத்தமாக -மிச்சம் இல்லாமல்
அம்பர தலம் -ஆகாயமே
யதி பத்ரிகா ஸ்யாத்–ஒரு வேளை காகிதமாக ஆனால்
ஸப்த அர்ணவீ -ஏழு சமுத்ரங்களும்
யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ-ஒரு வேளை ஓன்று கூடி மையாக ஆனால் -தேசிகர் காலத்திலேயே மை இருந்துள்ளதே
வக்தா -சொல்பவர்
ஸஹஸ்ர வதந: புருஷ ஸ்வயம் சேத்-ஸஹஸ்ர சீர்ஷ புருஷனான ரெங்கநாதனே தானே சொல்லி -dictate -செய்தால் –
தோள்கள் ஆயிரத்தாய் –தாள்கள் ஆயிரத்தாய் -ஸர்வஞ்ஞன் -ஸர்வசக்தன் -என்றவாறு -பெரியவாய கண்கள் –
ஸ்வயம் சேத்-தனது பாதுகை பெருமையை தானே சொல்ல மாட்டானே -ஒரு கால் சொன்னால்
லிக்யதே ரங்க பதி பாதுகயோ: ப்ரபாவ:–ஸ்ரீ பாதுகா தேவியின் பெருமையை கொஞ்சமாவது எழுதலாம் –
அடியேன் எவ்வாறு பெருமையைச் சொல்ல முடியும் -நைச்ய அனுசந்தானம் –

ஆழ்வார் பெருமையும் அப்படியே –
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு – உண்டோ சடகோபருக்கு ஒப்பு ஒருவர் –
உண்டோ திருவாய் மொழிக்கு ஒப்பு -தென் குருகைக்கு ஒப்பு உண்டோ –
உண்ணும் சோறு -இத்யாதி எல்லாம் கண்ணன் –

பாதுகையின் பெருமைகளை எழுத இயலும் – எப்படி? ஆகாயம் முழுவதுமாகச் சேர்ந்து பெரியதொரு காகிதமாக இருந்தல் வேண்டும்.
ஏழு கடலும் இணைந்து, எழுதும் மையாக மாற வேண்டும். எழுதுபவனாக ஆயிரம் தலைகளுடன் கூடிய பரமபுருஷனாகிய
ஸ்ரீரங்கநாதனே இருக்க வேண்டும். இப்படி என்றால் – பாதுகையின் பெருமைகளை ஏதோ ஒரு சிறிய அளவு எழுதி முடிக்க இயலும்.

இங்கு ஸ்வயம் என்ற பதம் காண்க. இதன் பொருள் “தானாகவே” என்பதாகும். ஒரு செயலை மற்றவர்கள் கூறிச் செய்வதை விட
நாமாகவே செய்தால் ஈடுபாடு அதிகம் அல்லவா? அது போன்று இங்கு திருவரங்கன் தானாகவே ஈடுபாட்டுடன்
முயன்றால் மட்டுமே பாதுகைகளின் முழுப் பெருமைகளும் அவனுக்கும் பிடிபடும் என்றார்.
மேலும் லிக்யேத என்ற பதம் “எழுதப்படலாம்” என்று ஐயத்துடன் கூறுவதைக் காண்க.

ஆகாயமே காகிதமாகவும் –
ஏழு சமுத்ரங்களும் சேர்ந்து மையாகவும் –
ஆயிரம் திரு அபிஷேகம் உள்ள எம்பெருமானே அருளிச் செய்பவராக இருந்தாலும்
அளவிட இயலாத பிரபாவம் அன்றோ ஸ்ரீ பாதுகையே உமது பிரபாவம் –

பாதுகையின் பெருமைக்கு அளவில்லை யென்பதை ஒருவிதமாய் அருளிச் செய்கிறார்.
பாதுகையின் பெருமையை எழுதுவதானால் ஆகாசமெல்லாம் காகிதமாக ஆக வேண்டும்.
எல்லா ஸமுத்ரங்களும் மசியாக வேண்டும்.
“ஸஹஸ்ரசீர்ஷா:” என்று ஸ்ரீபுருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட பெருமாள் சொல்ல வேண்டும்.
அவர்தான் எழுதவேண்டும்.
இப்படியிருந்தால் பாதுகையின் மஹிமையை ஏதோ கொஞ்சம் எழுதலாம்.

அன்றியில் “वक्ता स्वयँ चेत्” தனது பாதுகையின் பெருமையைப் பற்றி தானே சொல்லுவது வழக்கமில்லாம லிருந்தாலும்
தானே சொல்லுகிறவனாயிருந்தால் எல்லா ஜனங்களும் சேர்ந்து பாதுகையின் ப்ரபாவம் எழுத முடியலாம்.

———————————————————————

வேத உப ப்ருஹ்மண குதூஹலிநா நிபத்தம்
விஸ்வம் பரா ஸ்ருதி பவேந மஹர்ஷிணா யத்
வ்யாஸேந யத் ச மது ஸூதந பாத ரக்ஷே
த்வே சக்ஷுஷீ த்வதுநுபாவம் அவேக்ஷிதும் ந:—-33-

வேத உப ப்ருஹ்மண -வேதப்பொருளை விளக்க வந்த -திவ்ய சஷூஸ்ஸான -இதிஹாஸங்கள் –
குதூஹலிநா நிபத்தம்
விஸ்வம் பரா ஸ்ருதி -பூமி தேவி புற்று காது -வால்மீகி
பவேந மஹர்ஷிணா யத்
வேதம் ராமன் வேதப்பொருள் ஸ்ரீ ராமாயணம்
வ்யாஸேந யத் ச -ஸ்ரீ வேத வியாசர் -மஹா பாரதம் -பஞ்சம வேதம் –
இந்த இரண்டும்
மது ஸூதந பாத ரக்ஷே-
த்வே சக்ஷுஷீ -இரண்டு திவ்ய கண்கள்
த்வதுநுபாவம் அவேக்ஷிதும் ந:உன்னுடைய பெருமையை அறிவதற்கு –
பரதன் பெருமை –
உத்தவர் -கண்ணன் பாதுகை வாங்கி பத்ரி நாத் ஆதரித்த விருத்தாந்தம் –
பக்தர் பெருமைகளை ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ மஹா பாரதமும் சொல்லுமே

நம்மாழ்வார் -திருவடியாகவே இருந்து -பெருமையைச் சொல்ல முடியாதே-
நிழலும் அடி தாறும் ஆனோம் -என்று தாமே சொல்லிக் கொள்ளும்படி –

மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! வேதங்களின் உண்மையான பொருளை
உணர்ந்து கொள்வதில் சிரமம் அதிகம் ஆகும். அப்படிப்பட்ட வேதத்தின் பொருளை உலகிற்கு உணர்த்த
எண்ணிய வ்யாஸ பகவான் மஹாபாரதத்தையும், வால்மீகி மஹரிஷி இராமாயணத்தையும் அருளிச் செய்தனர்.
இவை இரண்டும் பாதுகையாகிய உனது பெருமைகளை நாங்கள் காண்பதற்கு ஏற்ற இரு கண்கள் போன்று உள்ளன.

இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டிலும் பாதுகையின் பெருமை எவ்விதம் கூறப்பட்டது?
இராமாயணத்தில் இராமனின் பாதுகைகளைப் பரதன் தனது தலையில் தாங்கி அயோத்தி வந்தான்.
மஹாபாரதத்தில் க்ருஷ்ணனின் பாதுகைகளை உத்தவர் தனது தலையில் ஏற்று பத்ரிகாச்ரமம் வந்தார்.

ஸ்ரீ பாதுகையே -வேதங்களின் யாதாம்ய தாத்பர்யம் அருளிச் செய்யவே
ஸ்ரீ வால்மீகி மகரிஷி ஸ்ரீ மத் இராமாயணத்தையும்
ஸ்ரீ வேத வியாசர் ஸ்ரீ மகா பாரதத்தையும் அருளிச் செய்தனர் –
இவ்விரு இதிகாசங்களிலும் பாதுகையின் பெருமையே பேசப்பட்டு இருக்கிறது –
ஆகையால் உனது பிரபாவம் காண முற்படும் எங்களுக்கு இவை இரண்டு கண்களாக அமைகின்றன –

வேதத்தினுடைய உண்மையான அர்த்தத்தை எல்லோரும் தெரிந்து கொள்வது மிகக் கஷ்டம்.
ஆகையால் நன்றாய்த் தெரியப் படுத்துவதற்காக
ஸ்ரீவால்மீகி மஹரிஷி ஸ்ரீமத் ராமாயணத்தையும்
ஸ்ரீவேதவியாஸ பகவான் ஸ்ரீமஹா பாரத்தையும் செய்தருளினார்கள்.
அந்த இரண்டும் பாதுகையின் பெருமையைப் பார்ப்பதற்கு எங்களுக்கு இரு கண்களாக இருக்கின்றன.
அதாவது,
அந்த இரண்டு க்ரந்தங்களிலும் பாதுகையின் பெருமையைப் பற்றி அதிகமாய்ச் சொல்லியிருக்கிறது.
அவ் விரண்டு க்ரந்தத்திலும் பெருமாள் திருவடியில் பக்தரானவர்களுடைய பெருமையைச் சொல்லி யிருக்கிறது.

——————————————————————

இதிஹாச ஸ்ரேஷ்டம்
சிறை இருந்தவள் ஏற்றம் சொல்வதாலேயே
மஹா பாரதம் தூது போனவன் ஏற்றம் சொல்லும் –

ப்ரத்யக்ஷயந்தி பரி ஸூத்ததிய : யதாவத்
ராமாயணே ரகு புரந்தர பாதர க்ஷே
சஸ்வத் ப்ரபஞ்சிதம் இதம் பரயைவ வ்ருத்த்யா
ஸம்க்ஷேப விஸ்தர தஸாஸு தவ அநுபாவம்—-34–

ப்ரத்யக்ஷயந்தி -நேராகவே பார்ப்பது போல் –
பரி ஸூத்ததிய : -தூய்மையான அறிவு -ஆச்சார்ய உபதேசம் -அனுக்ரஹம் -ஆசார அனுஷ்டானம் -மூன்றாலும் பெற்ற
யதாவத்-உள்ளபடி
ராமாயணே ரகு புரந்தர பாதர க்ஷே-ரகு குல திலகம் -ஸ்ரீ ராமாயணத்தில்- உன்னுடைய எல்லாம்
சஸ்வத் – அடிக்கடி பல இடங்களில்
ப்ரபஞ்சிதம் இதம் பரயைவ வ்ருத்த்யா-குறிப்பாகவும்
ஸம்க்ஷேப விஸ்தர தஸாஸு தவ அநுபாவம்-சுருக்கமாகவும் விரிவாகவும் -100 ஸ்லோகங்கள் ஸம் ஷேப ராமாயணம் -உண்டே
யோக க்ஷேமம் -இரண்டும் -ஸ்ரீ பாதுகையே அளிக்கும் என்று பரதாழ்வானே சொல்கிறான்
புத்திக்கு அப்பால் பட்ட ஒன்றுக்கு வேதமே பிரமாணம் -கண்ணால் பார்த்து அறிவது போல் நம்ப வேண்டும் –
பாதுகா ப்ரபாவமும் புத்திக்கு அப்பால் பட்டது
ஸ்ரீ ராமாயணம் பிரமாணம் -ப்ரத்யக்ஷயந்தி-direct perception

ஆழ்வார் பெருமை -சதாச்சார்யர் -பிரபன்ன குல கூடஸ்தர் -ஸ்ரீ ராமாயணம் இத்தையே சொல்லும் –
திருவடி -ஆச்சார்யர் -அசோகவனம் உடல் -ஒன்பது வாசல் -இலங்கை சிறை -பத்து இந்திரியங்கள் -பத்து தலைகள் –
சத்வ குணம் விபீஷணன் ரஜோ குணம் ராவணன் தமோ குணம் கும்பகர்ணன் –

ஸ்ரீராமனின் பாதுகையே!
ஸ்ரீமத் இராமாயணத்தில் பல இடங்களில் உனது பெருமைகள் சுருக்கமாகவும் விரிவாகவும் கூறப்பட்டுள்ளன.
தெளிந்த அறிவை உடையவர்கள் இவற்றை உணர்கின்றனர். அவர்கள் உனது பெருமையை இவற்றின் மூலம்
கண்ணால் காண்பது போன்று தெளிவாக அறிகின்றனர்.

பதினான்கு ஆண்டுகள் ஸ்ரீராமனின் சிம்ஹாஸனத்தில் வீற்றிருந்து, அவனுக்கும் மேலாக இந்த உலகத்தைப்
பாதுகைகள் ஆண்டன என்பதை அந்தக் காலகட்டத்தில் இருந்தவர்கள் கண்டனர் என்றார்.
அதனையே இராமாயணம் கூறுகிறது என்றார்.

ஸ்ரீ ராமபிரானுடைய ஸ்ரீ பாதுகையே தெளிந்த புத்தியுள்ள மகாநீயர்கள்
ஸ்ரீ மத் ராமாயணத்தில் சுருக்கமாகவும் விஸ்தாரமாகவும் கூறப் பட்டுள்ள
மேலும் குறிப்பாக உணர்த்தப் பட்டுள்ள உனது பிரபாவத்தை உள்ளபடி அறிகிறார்கள் –

ஸ்ரீமத் ராமாயண மஹாபாரதங்களில் பாதுகையின் அல்லது பெருமாள் பக்தர்களின் பெருமையைப் பற்றி
எங்கே சொல்லி இருக்கிறதென்றால்
ஸ்ரீமத் ராமாயண பாரதங்களில் இவர்களின் பெருமை சொல்லியிருக்கிற தென்பதை தெளிந்த புத்தி யுள்ளவர்கள்
கண்ணால் பார்ப்பது போல் காண்கிறார்கள்.
ஸ்ரீமத் ராமாயண கதை முழுவதையும் நூறு ஸ்லோகமுள்ள ஸங்க்ஷேப ராமாயணத்தில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறது.
அவ் விடத்திலும் பாதுகையின் பெருமையைப் பற்றி சொல்லியிருக்கிறது.
மேலும் விஸ்தாரமாயும் சொல்லியிருக்கிறது.
அப்படிப்பட்ட உனது பெருமையை கலக்கமில்லாத அறிவு உடையோர்கள் காண்கிறார்கள்.

“परिशुद्धधिय:”என்பதற்கு கருத்து-
உலகில் பெரும்பாலும் எல்லோருடைய புத்தியும் கலங்கியே யிருக்கிறது.
அது தெளிவதற்கு மூன்று காரணமுண்டென்று ஸ்ரீதேசிகன் அருளிச் செய்திருக்கிறார். அதாவது,
“திருமுகப் பாசுரமும், ஸதாசாரியாநுக்ரஹமும் ஸத் ஸம்ப்ரதாயமும்” என்று,

ஸ்ரீமத் ராமாயணத்தில், ‘பொய் சொல்லக்கூடாது, விரோதிகளிடத்திலும் தயையுடனிருக்கவேண்டும்,
எப்படிப்பட்ட கஷ்டம் நேர்ந்தாலும் பொறுமை வேண்டும், கர்வம் கூடாது ஒழிவு வேண்டும்,
தாய் தகப்பன் சொன்ன வார்த்தையைக் கேட்க வேண்டும், ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் போது
இக்கார்யம் இப்படித் தான் முடியுமென்று தவறாத தெளிந்த யோஜனை வேண்டும்” இவை முதலான
அனேக சங்கதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஸ்ரீமத் ராமாயணத்தை நெட்டுருவாகச் சொல்லுகிறவர்களும் இந்த ஸங்கதிகள் தன்னுடைய
அனுஷ்டானத்துக்கு வந்ததா? வரவில்லையா? என்பதை கொஞ்சமேனும் நினைக்கிறார்களில்லை.
ஆத்மாவைப் பற்றிச் சொல்லுகிற எல்லாப் புஸ்தகங்களிலும் தன்னுடைய தாழ்மையை நினைக்க வேண்டுமென்றே எழுதியிருக்கிறது.
வித்வான்களெல்லாரும் இதைப் பற்றியே உபந்நியாஸஞ் செய்கிறார்கள். முன்னிருந்த பெரியோர்கள் தன்னைக் கீழ்ப்பட்டவனென்று
சொல்லியிருப்பதெல்லாம் நமக்காகத்தானென்றும் சொல்லுவார்கள்.
ஆகிலும் ஒருவருக்கும் தனது தாழ்மை தெரிகிறதில்லை.
தனது தாழ்மை தோன்றினால் பிறர் வைதால் கோபம் வாராதென்று தேசிகன் அருளிச் செய்திருக்கிறார்.
அவ்வடையாள முள்ளவன் இவ்வுலகில் ஒருவனாகிலும் கிடைப்பது மிக அரிது.
ஆகையால் முன் சொன்ன மூன்று காரணங்களால் தெளிந்த புத்தி யுள்ளவர்களுக்கு எல்லா நல்ல புஸ்தகங்களிலும்
நல்ல அபிப்ராயம் தோன்றும். அதனால் நல்ல ஸௌக்யத்தையடைவார்கள்.

——————————————————————–

அல்ப ஸ்ருதைரபி ஜநை: அநுமீயஸே த்வம்
ரங்கேச பாது நியதம் நிகம் உபகீதா
ஸாரம் ததர்த்தம் உபப்ருஹ்மயிதும் ப்ரணீதம்
ராமாயணம் தவ மஹிம்நி யத: ப்ரமாணம்—-35-

அல்ப ஸ்ருதைரபி ஜநை: -சிறிய அளவு வேதம் கற்றவர்களும் கூட
அநுமீயஸே த்வம்-ஊகம் செய்து புரிந்து கொள்கிறார்கள்
ரங்கேச பாது நியதம் நிகம் உபகீதா-வேதங்களால் போற்றப்படுகிறாய் என்று –
ஸாரம் ததர்த்தம் -அந்த வேத சாரப்பொருளை
உபப்ருஹ்மயிதும் ப்ரணீதம்-விளக்கவே வந்த ஸ்ரீ ராமாயணம்
ராமாயணம் தவ மஹிம்நி யத: ப்ரமாணம்-நன்றான பிரமாணமாக விளக்குவதாலேயே –
திருவடிகளை சொன்ன இடங்கள் எல்லாம் ஸ்ரீ பாதுகை உடன் சேர்ந்த திருவடிகளையையே சொன்னது போலவே ஆகுமே
மூவடிகளால் அளந்தான் -ஸஹஸ்ர பாத் -ஸஹஸ்ர சீர்ஷா -பூமி திருவடி -தண்ணீர் அடிவயிறு -ஆகாசம் -இடை –
கண்கள் சூர்யன் -தியானத்துக்கு சொல்லும் ஸ்லோகம் உண்டே –
ஸத் காரிய வாதம் -காரணத்திலுள்ள குணங்கள் காரியங்களில் இருக்குமே -வேதமே ஸ்ரீ ராமாயணம் –
கவி தார்க்கிக்க ஸிம்ஹம்–வேதார்த்தமும் தர்க்கமும் -இணைத்து அருளிச் செய்கிறார்
வேதமும் நம்மாழ்வார் பெருமை சொல்லும் –
ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மத் பாகவதம் உப லக்ஷணம் -நம்மாழ்வார் ஆவிர்பாவம் சொல்லுமே –
தாமிர பரணி க்ருதமாலா பயஸ்வினி காவேரி –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் சிறிய அளவே வேதத்தைப் பற்றி அறிந்தவர்கள் கூட,
“பாதுகையைப் பற்றி வேதத்திலே கூறப்பட்டுள்ளது”, என்று கூறுகின்றனர். இது எப்படி சாத்தியம்?
வேதங்களின் முழு அர்த்தங்களை வெளிப்படுத்தும் விதமாக உள்ள இராமாயணத்தில்
உனது பெருமைகள் பல இடங்களில் கூறியுள்ளதால் ஆகும்.

வேதங்களை ஓரளவு அறிந்தவர்கள் என்ன நினைக்கின்றனர் என்றால்,
“பாதுகையைப் பற்றி வால்மீகி முனிவர் இராமாயணத்தில் மிகவும் பரக்கப் பேசியுள்ளார்.
வால்மீகியைப் போன்றவர்கள் எந்த ஒரு கருத்தைக் கூறுவதாக இருந்தாலும்,
அந்தக் கருத்து வேதத்தில் கூறப்பட்டிருந்தால் மட்டுமே கூறுவார்கள்.
ஆக, பாதுகையைப் பற்றி இவர் கூறுவதன் மூலம், இதனைப் பற்றி வேதங்களின் நிச்சயமாகக் கூறப்பட்டிருக்கும்”, என்பதாகும்.

ஸ்ரீ ரெங்க நாதனுடைய பாதுகையே -கொஞ்சம் அத்யயனம் செய்தவர்களால் கூட
வேதங்களால் ஸ்துதிக்கப் பட்டவளாக அறியப் படுகிறாய் –
வேத சாரம் ஆகிய ஸ்ரீ மத் ராமாயணம் உன் பெருமையைக் கூறுவதால்
சாமானியரும் வேதத்தால் புகழப் பட்ட உன் பிரபாவத்தை உணரப் பெறுகிறார்கள் –

இந்தப் பாதுகையைப் பற்றி வேதத்தில் சொல்லியிருக்கிறதாவென்றால், வேதங்களெல்லாமறிந்தவர்கள்
“இந்த இடத்தில் பாதுகையின் பெருமையைப் பற்றி சொல்லியிருக்கிறது” என்று தெரிந்து கொள்கிறார்கள்.
சிறிது வேத பாகத்தைத் தெரிந்தவர்கள் கூட”பாதுகையின் மஹிமை வேதத்தில் சொல்லியிருக்கிறது” என்று ஊகித்துக் கொள்கிறார்கள்.
எப்படியென்றால்,
கொஞ்சம் வேதாத்யயனம் பண்ணினவர்களும் அவசியமாய் அறிய வேண்டியதான உயர்ந்த வேதார்த்தங்களை
ஸ்ரீ வால்மீகி மஹருஷியானவர் ஸ்ரீமத் ராமாயணத்தில் சொல்லி யிருக்கிறார்.
அதில் பாதுகையின் பெருமையப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
வேதத்தில் பாதுகா ப்ரபாவமில்லாத போனால் ஸ்ரீ மத் ராமாயணத்தில் அதைப்பற்றிச் சொல்லுவாரா?
மூலத்தில் இல்லாத ஸங்கதிகளை வியாக்யானத்தில் சொல்லுவார்களா என்கிற யுக்தியினால் ஊஹிக்கிறார்கள்.

————————————————————————

திஷ்டந்து ஸ்ருத: ததோபி மஹிதம் ஜாகர்த்தி தத் பாதுகே
தத் தாத்ருக் ப்ரதநாய தாவக குண க்ரமாய ராமாயணம்
யஸ்ய ஆஸீத் அரவிந்த ஸம்பவ வதூ மஞ்ஜீர சிஞ்ஜாரவ
ஸ்பர்த்தா துர்த்தர பாத பத்த பணிதி: வல்மீக ஜந்மா கவி:—-36-

திஷ்டந்து ஸ்ருத: -கீதமாகவோ -அவசரமாகவோ -பார்த்து பாடாமல் -காதில் கேட்டதே -எழுதாக் கிளவி
ததோபி மஹிதம் -அத்தை விட மஹிமை -ஸ்ரீ ராமாயணம்
ஜாகர்த்தி -விழிப்புடன் -கவளமாக –
தத் பாதுகே
தத் தாத்ருக் ப்ரதநாய தாவக குண க்ரமாய ராமாயணம்-உன்னுடைய குணக்கூட்டங்களை நன்றாக தெரிவிப்பதில் பிரதானமாக உள்ளது –
யஸ்ய ஆஸீத் அரவிந்த ஸம்பவ வதூ -தாமரையில் தோன்றிய நான்முகன் பத்னி சரஸ்வதி தாண்டவம் ஆடி –
பாதம் நடனம் எடுத்து வைக்க பாதங்கள் உருவாகும் பிரவாகமாக -கவி நயம் –
மஞ்ஜீர சிஞ்ஜாரவ ஸ்பர்த்தா துர்த்தர பாத பத்த பணிதி: -சிலம்பின் த்வனிக்கு போட்டி போட்டுக் கொண்டு நான்கு பாத ஸ்லோகங்கள்
பால 1-2–என்னுடைய அருளால் உமது நாவில் -நான்முகன் -அனுஷ்டுப் -32 எழுத்துக்கள் -நான்கு பாதங்கள் -இனிய ஓசை –
வல்மீக ஜந்மா கவி

நம்மாழ்வார் -வேதங்களை விட கொண்டாடப்படும் திருவாய் மொழி -குணக்கூட்டங்களை தெளிவாக
ஸேவ்யத்வாத் -இத்யாதி -பத்து பத்தாக -வணங்கத்தக்கவன் -போக்யத்வம் அடுத்து -ஸூப தநு -திருமேனி அழகு -நிரதிசய சுவையன் –
அவனே அவனை அடைய உபாயம் ஐந்தாம் பத்து
சரணாகதியை அதுக்கு வழி ஆறாம் பத்து -அநிஷ்டம் போக்கி அருளுவான் -பக்தர் இட்ட வழக்கு –
உற்ற நண்பன் -சர்வவித பந்து -வழி காட்டியாகவும் மட்டும் இல்லாமல் அவனே வழித் துணையாகவும் இருப்பான்
திருவாய் மொழியும் வேதம் விளக்க -ராமனின் பாதை ஸ்ரீ ராமாயணம் -த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி -ராமன் இடம் சேர்க்கும் இதுவே –
என் நா முதல் வந்து -வாய் முதல் அப்பன் -பாடுவித்தான் –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்கள் உன்னைப் பற்றி உயர்வாகக் கூறுவது இருக்கட்டும் –
ஆயினும் அந்த வேதங்களைக் காட்டிலும் அனைவராலும் கொண்டாடப்படும் இராமாயணம் உனது
குணங்களையும் மேன்மையையும் வெளிப்படுத்தியபடி உள்ளது.
இந்த உலகில் உள்ள புற்றில் இருந்து வெளி வந்த வால்மீகி மஹரிஷி, இத்தகைய இராமாயணத்தை எவ்விதம் இயற்றினார்?
தாமரை மலரில் அமர்ந்துள்ள ப்ரம்மனின் தேவியான ஸரஸ்வதியின் கால் சிலம்புகளின் ஒலி மூலம் ஏற்பட்ட ஒசைகளே
இவரது வாயில் இருந்து, இராமாயணச் சொற்களாகப் புறப்பட்டன அல்லவா?

இராமனைக் குறித்த த்யானத்தில் அமர்ந்த வால்மீகி, அந்தத் த்யானத்தில் மூழ்கி புற்றாகவே இருந்தார்.
பின்னர் த்யானம் முடிந்து எழுந்து, தான் பெற்ற இராம அனுபவத்தை உலகிற்கு உணர்த்தினார்.

அந்த வேளையில் ப்ரம்மனின் அனுக்ரஹம் பெற்றவராதலால், ஸரஸ்வதியின் க்ருபைக்குப் பாத்திரமானர்.
இராமாயணத்தின் ஒவ்வொரு நிகழ்விற்குத் தகுந்தபடி அவள் ஆடிக் காண்பிக்க,
அவளது க்ருபையால் இவரது வாயிலிருந்து சொற்கள் ப்ரவாஹமாக வந்தன.

ஸ்ரீ பாதுகையே -உனது பிரபாவம் கூறும் ஸ்ரீ மத் ராமாயணம் வேதங்களைக் காட்டிலும் உயர்ந்ததாகிறது
ஸ்ரீ வால்மிகி மகரிஷிக்கு ப்ரஹ்மாவின் அனுக்ரஹத்தால் நடந்தது நடந்தபடி தவறாமல் தோன்றியது
சரஸ்வதி தேவியின் நடக்கையில் உண்டாகும் சிலம்பின் சப்தமே வால்மிகியின் வார்த்தைகள் ஆயின
அப்படிப்பட்டவர் அன்றோ அதை இயற்றி உள்ளார் –
ஆகையால் ஸ்ரீ மத் ராமாயணம் ஒவ்வொரு அஷரமும் சத்தியமான உண்மை அன்றோ –

ஏ பாதுகையே உன் மஹிமை விஷயத்தில் வேதங்களிருக்கட்டும். வேதத்தைக் காட்டிலும் மிகவுமுயர்ந்தது ஸ்ரீமத்ராமாயணம்.
அதில் உன்னுடைய குணங்களைப் பற்றி எல்லையில்லாமல் சொல்லி யிருக்கிறது.
வேதம் தப்பான அர்த்தம் சொல்வதில்லை என்பதால் அதற்கு உயர்த்தி ஏற்பட்டிருக்கிறது.
ஸ்ரீமத் ராமாயணம் ஒருவர் பண்ணினதில்லை, ஸரஸ்வதி ஸந்தோஷமாய் நடந்து போகும் ஸமயத்தில் அவள் காலில்
அணிந்து கொள்ளப்பட்ட சிலம்பினின்றுமுண்டான சப்தமே. அதாவது,
வால்மீகிக்கு தாயார் பெருமாளுடைய அனுக்ரஹத்தினால் நடந்த சங்கதிகள் தவறுதலின்றி தோன்றி,
சிறிதும் தப்பில்லாமல் அவரால் எழுதப்பட்டது ஸ்ரீமத்ராமாயணம்.

—————————————————————————

பக்தி ப்ரஹ்வ புரப்ர பஞ்ஜந ஜடாவாடீ ஸநீட ஸ்புரத்
சூடாரக்வத வாஸநா பரிமள ஸ்த்யாநே ஸ்தும: பாதுகே
ரங்க க்ஷோணி ப்ருத் அங்கிரி பத்ம யுகளீ பூர்ண ப்ரபத்தே: பலம்
நிஸ் சிந்வந்தி விபச்சித: சமதநா: நித்யம் யதுத் தம்ஸநம்—-37-

பக்தி ப்ரஹ்வ -பக்தியால் வணங்கப்படும்
புரப்ர பஞ்ஜந -திரிபுரம் எரித்த சிவனுடைய
ஜடாவாடீ -நளிர் மதி சடை யன்
ஸநீட ஸ்புரத்-அருகில் ஒளி வீசும்
சூடாரக்வத -கொன்றை மலரின்
வாஸநா பரிமள -வாசனை வசிக்கும்
ஸ்த்யாநே ஸ்தும: பாதுகே
ரங்க க்ஷோணி ப்ருத் அங்கிரி பத்ம யுகளீ -அடி இணைகள் தலையில் தாங்குவதையே
பூர்ண ப்ரபத்தே: பலம்-பூர்ண சரணாகதியின் பலம்
நிஸ் சிந்வந்தி -நிச்சயமாக
விபச்சித: சமதநா: -மனம் அடக்கமே செல்வமாகக் கொண்ட ஞானிகள்
நித்யம் யதுத் தம்ஸநம்–இதுவே உத்தமமான -சிரஸி க்ருதம் -பரம புருஷார்த்தம் -கோலமாம் -சென்னிக்கு –
சென்னியின் மேல் பொறித்தாய் -நம் தலை மிசையே –ராமானுஜன் அடி இணையே –

சிவ பெருமான் உப லக்ஷணம் -பூ ஸூரர்கள் -ஆழ்வார் -திருவடிநிலைகள் சாதிக்கவே பிரார்த்தித்து –
ராமானுஜன் சாதிக்க -மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே –
இதுவே பரம புருஷார்த்தம் –

திரிபுராஸுரன் என்ற அரக்கனை அழித்த சிவன், தனது சிரஸில் எப்போதும் உன்னைத் (பாதுகை) தரித்தவனாகவே உள்ளான்.
உன் மீது உள்ள பக்தியால் இவ்வாறு வணங்கியபடி உள்ளான். இதனால் அவன் ஜடாமுடியில் சூடியுள்ள
கொன்றை மலர்களின் வாசம், பாதுகையில் எப்போதும் வீசியபடி உள்ளது. இதனால் மகிழ்ந்த பாதுகை, பருமனாக உள்ளது.
இப்படிப்பட்ட பாதுகையை நாம் வணங்குகிறோம். இந்த்ரியங்களை அடக்கத் தெரிந்தவர்களான வித்வான்கள் செய்வது என்ன?
பாதுகையைத் தங்கள் சிரஸில் தாங்கியபடி உள்ளனர். அவர்கள், “ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் அடைக்கலம்”, என்று
தங்கள் மனம் மற்றும் வாக்கினால் கூறுவதற்கு ஏற்ற பயன் இதுவே என்று எண்ணுகின்றனர்.

இராமாயணத்தில் பாதுகையின் பெருமையைப் பற்றிக் கூறியவர், இங்கு அதனைத் தங்கள் தலைகளில் ஏற்பது பற்றிக் கூறுகிறார்.
நம்பெருமாளின் அடியார்கள் எப்போதும் தங்கள் தலையில் அவனது பாதுகையை ஏற்பதையே விரும்புவர் என்றார்.

எம்பெருமான் உடைய பரம பக்தரான திரிபுர சம்ஹாரம் செய்த பரமசிவன் வணங்குவதால் பாதுகையின் மேல்
அவன் சிரசில் விளங்கும் கொன்றை மலரின் வாசனை வீசுகிறது
இந்த்ரியங்களை வென்ற பெரியோரும் எம்பெருமான் பாதுகைகளை தம் சிரசில் தரிப்பதனாலேயே
ஸ்ரீ ரங்கத்தில் உறையும் எம்பெருமானின் சரணார விந்தங்களை சேவிப்பதின் பலனைப் பெறுகின்றார்கள் –

பெருமாள் பாதுகைகளை சிவன் எப்பொழுதும் தன் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் சிவன் தலையிலுள்ள கொன்றைப் பூவின் வாஸனையுடனிருக்கிறது பாதுகை.
பெரியோர்கள், ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் சரணாகதி செய்வது எப்போதும் பாதுகையை சிரஸில்
வைத்துக் கொள்வதற்காகத் தான் என்று சொல்லுகிறார்கள்.
அப்படிப்பட்ட பெருமை பொருந்திய பாதுகைகளை ஸ்தோத்திரம் பண்ணுகிறோம்.

—————————————————————————————

பெருமாள் இடம் பக்தி இல்லாதவர்களும் ஸ்ரீ பாதுகா தேவியை வணங்குவதை இதில் –

மாத: பாதுகே தவ குணாந் க: ஸ்தோதும் அஸ்தோகதீ:
கோடீரேஷு யதர்பண ப்ரணயிநாம் ஸேவாக்ஷணே ஸ்வர்க்கிணாம்
அந்யோந்யம் க்ஷிபதாம் அஹம் ப்ரதமிகா ஸம்மர்த்த கோலாஹலம்
விஷ்வக்ஸேந விஹார வேத்ர லதிகா கம்ப: சிராத் லும்பதி— 38–

மாத: -அன்னையே
பாதுகே தவ குணாந் -உன்னுடைய குணங்களை
க: ஸ்தோதும் அஸ்தோகதீ:-ஸ்துதிக்க பேர் அறிவு உள்ளவர் யார்
கோடீரேஷு யதர்பண ப்ரணயிநாம் -க்ரீடங்களிலே சூடிக்கொள்ளும் ஆசையால்
ஸேவாக்ஷணே -சேவிக்கும் பொழுது
ஸ்வர்க்கிணாம்-தேவர்களுக்கு
அந்யோந்யம் க்ஷிபதாம் -ஒருவருக்கு ஒருவர் தள்ளிக் கொண்டு -பாகவத சம்பந்தம் பெற அறியாதவர்கள்
அஹம் ப்ரதமிகா ஸம்மர்த்த கோலாஹலம்-நெருக்கி பெரிய ஒலி உண்டாக
விஷ்வக்ஸேந விஹார வேத்ர லதிகா கம்ப: — பிரம்பு கொண்டு -விளையாட்டு -லத்தி இதில் இருந்து வந்தது –
கம்ப -அசைக்க
சிராத் -நீண்ட நேரம் கழித்தே
லும்பதி–அடங்குகிறது –

ஆழ்வார் பெருமையை அறிவார் யார்
ராமானுஜன் தலையில் தாங்கிக் கொள்ள நித்ய ஸூரிகள்
விதி வகை புகுந்தனர் -நல் வேதியர்கள் -வைகுந்தது அமரரும் முனிவரும் -நம் பாக்யத்தால் ஆழ்வார் வந்தார் கொண்டாடும் படி –
பதியினில் -தங்கள் ஸ்தானங்களுக்கு கூட்டிச் சென்று பாங்கினில் பாதங்கள் கழுவினர் –
நிதியும் -பெருமாள் திருப் பாதுகையே -நற் சுண்ணமும்
நிறை குடம் -பூர்ண கும்பம் -விளக்கமும் -மதி முக மடந்தையர்
அங்கும் பிரம்பு வேண்டுமே –

மாதவனாகிய க்ருஷ்ணனின் பாதுகையே! அனைவருக்கும் தாய் போன்றவளே ! உனது குணங்கள் முழுவதையும் நன்கு உணர்ந்து,
உன்னைத் துதிபாடும் அறிவு கொண்டவர்கள் யார் உள்ளனர்? உனது நாயகனான நம்பெருமாளைத் தேவர்கள் வணங்க வருகின்றனர்.
அப்போது உன்னைத் தங்கள் தலையில் ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள், “நான் முந்தி, நீ முந்தி” , என்று போட்டி போடுகின்றனர்.
இதனால் அங்கு பெரும் சப்தம் ஏற்படுகிறது. விஷ்வக்சேனர் தனது கையில் விளையாட்டிற்காக வைத்துள்ள பிரம்பைக் காண்பித்து,
சிரமப்பட்டு இவர்கள் எழுப்பும் சப்தத்தை அடக்குகிறார். இப்படிப்பட்ட தேவர்களாலும் உன்னைத் துதிக்க இயலாது.

நம்பெருமாளின் திருமுன்பாகப் பலரும் சடாரியைப் பெற்றுக் கொள்வதற்காக முண்டியபடி வருவார்கள்.
அப்போது அங்கு பெரும் கூட்ட நெரிசல் உண்டாகிறது. இவ்விதம் நாம்தான் வருகிறோம் என்பது இல்லை,
தேவர்களும் நிற்கின்றனர். இந்நிலையில் அங்கு வரும் விஷ்வக்சேனர் தேவர்களிடம்,
“நம்பெருமாள் இந்த மனிதர்கள் மீது உள்ள வாத்ஸல்யத்தினால் இங்கு வந்தவன் ஆவான்.
ஆகவே அவனது சடாரியைப் பெறுவதற்கு அவர்களுக்கே முதலிடம்”, என்று வரிசைப்படுத்தியபடி உள்ளார்.

லோக மாதாவே -மாதவனின் ஸ்ரீ பாதுகையே -உனது திருக் கல்யாண குணங்களை அறிந்து ஸ்துதிக்கக் கூடிய
குறைவற்ற ஞானவான் யார் தான் உளர் –
தேவர்களும் கூட நான் முன்னே நீ முன்னே எனப் போட்டியிட்டுக் கொண்டு கோலாகலத்துடன் வருகின்றனர் –
ஸ்ரீ விஷ்வக் சேனர் தன கைப் பிரம்பை அசைத்து காலம் தாழ்த்தாதே அந்த கோலாகலத்தை கட்டுப் படுத்துகிறார் –
உனது பிரபாவத்தை மந்த மதியான அடியேனால் எப்படிக் கூற முடியும் என்றவாறு –

லோக மாதாவான பாதுகையே! தேவதைகள் பெருமாளை ஸேவிக்க வருகிற பொழுது,
தங்கள் தலையில் பாதுகையை ஸாதித்துக் கொள்வதற்காக ஒருவருக் கொருவர் மேல் விழுந்து எனக்குத் தான் முன்பு
என்று நெருக்கிக் கொண்டு பெரிய சப்தம் போடுகிறார்கள்.
விஷ்வக்ஸேநர், தன் கையில் விளையாட்டுக்காக வைத்துக் கொண்டிருக்கிற பிரம்பால் அடித்த அந்த சப்தத்தை
வெகு சிரமப்பட்டு அடக்குகிறாரோ அப்படிப்பட்ட உனது பெருமையை யறிந்து சொல்வதற்கு எவருக்குத் தான் புத்தியிருக்கிறது.
ப்ரும்ம ருத்ராதி தேவதைகளும் சபலத்துக் குட்பட்டிருக்கிறார்களே யொழிய ஆசை யில்லாதவர்கள் ஒருவருமில்லை.
அந்த தேவதைகள் நம்மாழ்வார் மாதிரி நமக்கு வரவில்லையே யென்று வியஸனப்படுகிறார்கள்

——————————————————————————

திருவடிகளை சரண் அடைந்து ஸ்ரீ பாதுகா தேவி கைங்கர்யம்
நாம் இவளை சரண் அடைந்து உய்வோம்

யோஷித்பூத த்ருஷந்தி அபோட சகட ஸ்தேமாநி வைமாநிக
ஸ்ரோதஸ்விநீ உபலம்பநாநி பஸித் உதஞ்சத் பரீக்ஷிந்தி ச
தூத்யாதிஷ் வபி துர்வசாநி பதயோ: க்ருத்யாநி மத்வேவ யத்
தத் தே தத் ப்ரணயம் தத் ஏவ சரண த்ராணம் வ்ருணே ரங்கிண:–39-

யோஷித்பூத த்ருஷந்தி -கல்லைப் பெண்ணாக்கி
அபோட சகட -சகடன்களை
ஸ்தேமாநி -கட்டுக்கோப்பு
வைமாநிக ஸ்ரோதஸ்விநீ -தேவ கங்கை
உபலம்பநாநி -உருவாக்கி
பஸித் உதஞ்சத் பரீக்ஷிந்தி ச-பரீக்ஷித் அரசனை சாம்பலில் இருந்து உருவாக்கி
தூத்யாதிஷ் வபி -தூது போனமை
துர்வசாநி பதயோ: -க்ருத்யாநிசொல்லி முடிக்க முடியாத பெருமை எளிமை
மத்வேவ யத் தத் தே தத் ப்ரணயம் -குணங்களாலே ஆசை கொண்டு சரண் அடைந்து
தத் ஏவ சரண த்ராணம் வ்ருணே ரங்கிண-நாம் வரிப்போம்
ஆச்சார்யர்கள் பெருமாளைப் பற்ற நாம் அவர்களைப் பற்ற வேண்டுமே -என்பதைக் காட்டி அருளுகிறார் –

ஆழ்வார் -திருவடி லீலைகளையே வாய் வெறுவி
தூது சென்ற நம்பியைப் பாடி -பெருமையிலும் எளிமையிலும் ஈடுபட்டு
அடிக்கீழ் புகுந்து -நிழலும் அடிதாறும் ஆனார்
நாம் ஆழ்வார் திருவடி -அடியாரைப் பற்றி உஜ்ஜீவிக்கலாமே
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே

நம்பெருமாளின் திருவடிகள் எப்படிப்பட்டவை – கல்லாகக் கிடந்த அகலிகையைப் பெண்ணாக மாற்றியவை;
பலம் வாய்ந்த சகடாசுரனை உதைத்து அழித்தவை; த்ரிவிக்ரம அவதாரத்தில் வானம் வரை அளந்து, கங்கையை உண்டாக்கியவை;
சாம்பலில் இருந்து பரீக்ஷத் அரசனை உண்டாக்கியவை; பாண்டவர்களுக்காகத் தூது சென்றவை ஆகும்.
இப்படிப்பட்ட பல குணங்களை வெளிப்படுத்திய திருவடிகளுடன் எப்போதும் பாதுகைகள் சினேகத்துடன் பிரியாமல் உள்ளன.
இப்படியாக நம்பொருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எனக்கு மேன்மை ஏற்பட அருள்வாயாக.

ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு திருக்கல்யாண குணம் வெளிப்படுவதைக் காணலாம்.
இதில் பாண்டவர்களுக்காகத் தூது சென்ற ஸௌலப்யம் மிகவும் போற்றத்தக்கது.
அது போன்று அந்தத் திருவடிகளைத் தன்னிடம் அழைத்து வந்து, தனக்கு மேன்மை அளிக்க வேண்டும் என்றார்.

பெருமான் திருவடி பிரபாவம் அளவிடற்பாலது-
கல்லைப் பெண்ணாக்கிற்று –
சகடாசூரனுடைய பலத்தை அழித்தது-
பாவனமாகிய கங்கையை தாங்கி உலகுக்கு தந்தது-
சாம்பலை பரீஷித்தாக்கித் தந்தது-
தரும புத்ரர்க்காக தூது சென்றது
ஸ்ரீ பாதுகையே நீ திருவடியை கணமும் பிரியாது ஸ்நேஹத்துடன் உள்ளாய் -அந்த ஸ்ரீ பாதுகையை சரண் அடைகிறேன் –

உலகத்தில் ஒரு மனிதனுக்கு “கால்” என்ற அவயவமானது மிகத் தாழ்ந்தது என்று சொல்லுகிறார்கள்.
அந்தக் காலில் இந்தப் பாதுகை யிருக்கிறது. இதற்கு இவ்வளவு பெருமை யுண்டென்று சொல்லலாமா வென்றால், சொல்லுகிறார்.
பெருமாளின் திருமேனிக்குள் திருவடி மிகவும் உயர்ந்தது. ஆகையால் தான் பாதுகை அத்தோடு ஸ்நேஹம் பண்ணினது.
எப்படியென்றால்,
பெருமாள் திருவடி ஒரு கல்லை அகலியை என்ற பெண்ணாகச் செய்தது,
சகடாஸுரனைக்கொன்றது.
திரிவிக்ரமாவதாரத்தில் கங்கையை யுண்டாக்கிற்று.
சாம்பலில் பரீஷித்து என்று மஹாராஜாவை உண்டாக்கினது.
இதெல்லாம் பரத்வத்தை(உயர்ந்த தன்மையை) தெரிவிக்கிறது.
தர்மபுத்ரருக்கு தூது சென்றது. இது ஸெளலப்ய கார்யம்.
ஆகையால் திருவடிக்கு பெரிய மேன்மை யிருக்கிறதென்று எண்ணினது போல் ஸர்வ காலமும் அத் திருவடியை விட்டுப் பிரியாமல்
ஸ்நேஹத்துடன் இருக்கும் அப்பாதுகைகளை சரணமடைகின்றேன்.
இப்போதும் பெரியோர்கள் திருவடியில் தீர்த்தத்தைச் சேர்த்து எல்லோரும் சாப்பிடுவார்கள்.
பெருமாள் திருவடிக்கு இப்படிப்பட்ட பெருமையிருப்பதால் தான் ஆழ்வார் எப்போதும் திருவடியைப் பற்றியே பேசுகிறார்.

———————————————————————————————–

வந்தே தத் மதுகைடப ஆரிபதயோ: மித்ரம் பதத்ரத்வயம்
யத்தத் பக்தி பராநதேந சிரஸா யத்ர க்வசித் பிப்ரதி
த்வித்ர ப்ரஹ்ம விநாடிகா அவதி பத வ்யத்யாஸ சங்காபர
த்ராஸ உத்கம்பதசா விஸம்ஸ்துல த்ருதி: த்ரைவிஷ்டபானாம் கண:—-40-

வந்தே -வணங்குகிறேன்
தத் மதுகைடப ஆரி பதயோ: -நாராயணன் திருவடிகளுக்கு
மித்ரம் பத த்ர த்வயம்-நண்பனாக ஸ்ரீ பாதுகா இணையை
யத்தத் பக்தி பராநதேந சிரஸா யத்ர க்வசித் பிப்ரதி-யாரோ ஒருவன் பக்தியால் வணங்கி தலையால் சுமக்கும் பொழுது
த்வி த்ர ப்ரஹ்ம விநாடிகா அவதி -2-அல்லது 3- வினாடி தானே தேவர்கள் பதவி –
பத வ்யத்யாஸ சங்காபர-மாறி விடுமோ என்கிற சங்கையால்
த்ராஸ உத்கம்பதசா -நடுங்கும் பொழுது
விஸம்ஸ்துல த்ருதி: த்ரைவிஷ்டபானாம் கண-ஸகல புருஷார்த்த பல பிரதம்

ஆழ்வார் -திருவடிகளும் அனைத்தையுமே அளிக்குமே –

மது, கைடபன் என்னும் அசுரர்களுக்குச் சத்ருவாக உள்ள நம்பெருமாளின் திருவடிகளுக்குப் பாதுகைகள்
மிகவும் பொருத்தமான ஸ்நேகத்துடன் உள்ளன. இப்படியாக அந்தத் திருவடிகளை அவை காப்பாற்றுகின்றன.
அந்தப் பாதுகைகளை நான் வணங்குகிறேன். இவற்றின் மற்றொரு பெருமை என்னவெனில் –
ஒருவன் மிகுந்த பக்தியுடன் அந்தப் பாதுகைகளைத் தனது தலையில் ஏற்கும்போது,
ப்ரம்மனின் இரண்டு மூன்று விநாடிகள் மட்டுமே பதவியில் உள்ள தேவதைகள், தங்கள் பதவிக்கு இவனால்
(பாதுகையைத் தலையில் ஏற்பவன்) ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி நடுங்குகின்றனர்.

நமது ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள் ஆகும். தேவர்களின் ஆயிரம் சதுர்யுகங்கள் ப்ரம்மனின் ஒரு பகல் ஆகும்.
ஒரு பகலில் 14 மன்வந்தரங்கள் ஏற்படும். ஒவ்வொரு மன்வந்தரமும் ப்ரம்மனின் இரண்டு மூன்று நாழிகைகளுக்கு மட்டுமே சமமாகும்.
இந்த ஒவ்வொரு மன்வந்தரத்திலும் தேவர்களின் பதவிகள் மாற்றம் அடையும். இவ்வாறு அற்பகாலமே உள்ள தங்கள் பதவிக்கு,
பாதுகையைத் தலையில் ஏற்பவன் மூலம் ஆபத்து வருமோ என்று தேவர்கள் நடுங்குவார்கள்.

பக்தியுடன் ஸ்ரீ பாதுகையை சிரசில் தரித்துக் கொள்பவனுக்கு அனைத்தையும் அளிக்குமே –
மது கைடபர்களின் பகைவரான பகவானின் திருவடிகளின் உறுதுணையாக உள்ள ஸ்ரீ பாதுகையே உன்னை சேவிக்கிறேன் –

ஆசார்ய கடாஷ பலத்தாலே சகல புருஷார்த்தங்களும் சித்திக்கும் என்றவாறு –

—————————————————————————–

பத்மா காந்த பதான் தரங்க விபவோத்ரிக்தம் பதத்ரம் பஜே
யத் பக்த்யா நமதாம் த்ரிவிஷ்டபசதாம் சூடாபதேஷ் வர்ப்பிதம்
நித்யாபீ தன கேந்து தீதிதி ஸூ தா சந்தோஹா முச்சைர்வம்
த்யந்தர் நூநம மாந்த மந்தி கலசசேஷா படச்சத்மநா –41-

பத்மா காந்த -ஸ்ரீ தேவி காந்தன்
பத அந்தரங்க விபவ உத்ரிக்தம் -நெருக்கமான -பெருமை பெற்ற
பதத்ரம் பஜே -பாதுகா தேவியை வணங்ஜூகிறேன்
யத் பக்த்யா நமதாம் த்ரிவிஷ்டபசதாம் சூடாபதேஷ் அர்ப்பிதம் -பக்தி மிக்க தேவர்களின் தலையில் பெற்றுக் கொண்டு –
தங்கள் பதவி போகாமல் இருக்க -சடாரி சாதிக்கும் பொழுது
நித்யா ஆபீத – எப்பொழுதும் பருகும்
நக இந்து தீதிதி ஸூதா சந்தோஹாம் -சந்திரன் ஒளி அமுது கூட்டம்
உச்சைர் வமதி -வெளியே கக்கி -vaamit -வமதி
யந்தர் நூநம் -உள்ளே தாங்க முடியாமல்
மாந்தம -நிச்சயம்
அந்திக -அருகில்
லச சேஷா பட ச்சத்மநா -சேஷன் என்பதுக்கு அடையாளமான வஸ்திரம் -பரிவட்டம் உருவானது -தற் குறிப்பு ஏற்று அணி

பிராட்டி காந்த திருவடிகளுக்கு அந்தரங்கர் -நம்மாழ்வார்
அடி விடாமல் -அடி தொழுது எழு -திண் கழல் சேரே -தாள் காலம் பெற சிந்தித்து இருமின் -அடிக்கீழ் புகுந்து –
சுவையன் திருவின் மணாளன் -பிராட்டி சேர்த்தே அனுபவிப்பார்
நித்ய ஸூரிகள் -தங்கள் சென்னிக்கு சூடி
அமுதே பொழியும் நிலவின் ஒளி போல் -பருகிக்கொண்டே -ப்ரீதி தூண்ட திருவாய் மொழி –
சொல் மாலைகள் -தொண்டர்க்கு அமுது உண்ண -பக்தாம்ருதம்
பொழிந்து -நம் தலையை- அறிவை -சேஷா படம் -நிர்மலமான ஞானம் -குறிக்கும் -தலை முழுவதும் அறிவு –

ஸ்ரீ சடாரி சாதிக்கும் பொழுது கோயில்களில் வெண்மையான பரிவட்டத்தை சாதிக்கிறார்கள் –
(சேஷா பதம் -பரிவட்டத்துக்கு பெயர் )
அதைப் பார்க்கும் பொழுது எம்பெருமான் திருவடி அமுதத்தை சதா பருகும் ஸ்ரீ பாதுகை உள்ளடங்காத அமுதத்தை
சேதனர்களுக்காக கக்கியதோ என வியப்பாக இருக்கிறது –
அப்படிப்பட்ட ஸ்ரீ பாதுகையே உன்னை வணங்குகின்றேன் –

கோயில்களில் தலை வணங்கிய தேவதைகளின் தலையில் பாதுகையை ஸாதிக்கும் பொழுது
வெளுப்பான பரியட்டத்தை ஸமர்ப்பித்து, அதற்கு மேலே பாதுகையை ஸாதிக்கிறார்கள்.
அந்த பரியட்டத்தைப் பார்க்கும் பொழுது, இந்த பாதுகை, பெருமாளின் திருவடி நக காந்திகளாகிற அமிர்தத்தை
எல்லையில்லாமல் புஜித்து அது உள்ளடங்காமல் கக்கினது போல தோன்றுகிறது.
அப்படிப்பட்ட பெருமாளுடைய திருவடிக்கு மிகவும் இஷ்டமான பாதுகைகளை வணங்குகின்றேன்.

—————————————————————

தத் விஷ்ணோ பரமம் பத த்ரய யுகளம் த்ரய்யந்த பர்யந்தகம்
சிந்தா தீத விபூதிகம் விதரது ஸ்ரேயாம்சி பூயாம்சி ந
யத் விக்ராந்தித சாசமுத்தித பத பரஸ்யந்தி பாதஸ்வி நீ
சக்யே நேவ சதா நதஸ்ய தநுதே மௌலௌ ஸ்திதம் ஸூ லின –42-

தத் விஷ்ணோ பரமம் பத த்ரய யுகளம் -இணை அடி -பாதுகா தேவி
த்ரய்யந்த பர்யந்தகம்-உபநிஷத் -வேதாந்தம் -இருப்பிடம்
சிந்தா தீத விபூதிகம் -நெஞ்சுக்கு அப்பால் -கடந்த -ஐஸ்வர்யம் கொண்டவள் -திருவடியையே கொண்டவள் அன்றோ –
விதரது ஸ்ரேயாம்சி பூயாம்சி -உயர்ந்த செல்வத்தை அருளட்டும்
யத் விக்ராந்தி தச -உலகு அளந்த சமயத்தில்
சமுத்தித பத -நன்கு தூக்கிய திருவடியில் இருந்து
பரஸ்யந்தி பாதஸ்விநீ -கங்கா தேவியுடன்
சக்யே நேவ -நட்பு கொண்டவள் போல் –
சதா நதஸ்ய -எப்பொழுதும் வணங்கக்கூடிய
தநுதே மௌலௌ ஸ்திதம் ஸூலின -சூலாயுதம் தாங்கும் சிவனின்–
சதுர் முகன் கையில் சங்கரன் தலையில் -அமர்ந்து -அங்கும் விடாமல் –

திருவடி இணைகளே ஆழ்வார் -வேதாந்தம் கடலையே -மந்திரத்தால் கடைந்து -நாக்கையே -பக்தாம்ருதம்
ஞானம் பக்தி இவையே செல்வம் -தெளிவு மிக்க -மயர்வற -நமக்கும் அருளட்டும் –
திருவடி பிரியாமல் -கங்கைக்கு ஸாம்யம் -பாவானத்வம் -சடாரிக்கும் -கங்கைக்கும் –

உபநிஷத்துடைய அருகில் இருப்பதும் நினைக்க முடியாத ஐஸ்வர்யம் உடையதும் ஸ்ரேஷ்டமுமான
ஸ்ரீ பாதுகை நமக்கு அதிகமான ஷேமங்களைத் தர வேண்டும் –
எம்பெருமான் த்ரிவிக்ரம திருவவதாரம் செய்து நெடிது உயர்ந்த பொழுது கங்கை அவனது திருவடி சம்பந்தம் பெற்றது
கங்கையுடன் கூடவே வசிக்கும் ச்நேஹத்தாலே ஸ்ரீ பாதுகையும் எப்பொழுதும் எம்பெருமானை வணங்கும் பரம சிவனின் சிரசில் விளங்குகிறது
அந்த ஸ்ரீ பாதுகை நமக்கு எல்லா நலன்களையும் அளிக்கும் –

பாதுகைகளைப் பற்றி உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன. பாதுகையின் பெருமை, மனதில் அளவிட முடியாது.
அப்படிப்பட்ட பாதுகை நமக்கு எல்லை யில்லாத க்ஷேமங்களைக் கொடுக்க வேண்டும்.
திரு விக்ரமாவதாரம் செய்த பெருமாளின் திருவடியின்றும் உண்டான கங்கையுடன் கூட வஸிப்பதால் உண்டான
விசுவாஸத்தாலே போல அக்கங்கையுடனேயே எப்பொழுதும் சிவன் சிரஸில் இருக்கிறது.

————————————————————————-

அம்புன் யம்புனி தேரனன்ய கதிபி மீனை கியத் கம்யதே
க்லேச நாபி கியத் வ்யலங்கி ரப சோத்துங்கை ப்லவங்கேச்வரை
விஜ்ஞாதா கியதீ புன ஷிதிப்ருதா மந்தேன கம்பீரதா
கிம் தை கேசவ பாதுகா குண மஹாம் போதே தடஸ்தா வயம் –43-

அம்புன் யம்புனி தேர அனன்ய கதிபி மீனை கியத் கம்யதே -அநந்ய கதியாக உள்ள மீன்கள் கூட கடலின் ஒரு பகுதியிலே இருப்பவை
க்லேச நாபி கியத் வ்யலங்கி -சிரமப்பட்டு தாண்ட முயன்றாலும்
ரபச உத்துங்கை -மிக்க வேகம் –
ப்லவங்கேச்வரை–வானரர்கள் கூட முழுவதும் தாண்ட முடிய வில்லையே
விஜ்ஞாதா கியதீ -எவ்வளவு தான் அறிய முடிந்தது
புன ஷிதிப்ருதா மந்தேன கம்பீரதா -கடலின் ஆழம் -மந்த்ர மலையால்
அகலம் -மீன் -நீளம் -வானரங்கள் -ஆழம் -மூன்றையும் சொன்னவாறு -உப்புக்கடலுக்கே இப்படி
கிம் தை கேசவ பாதுகா குண மஹாம் போதே -குணக்கடல் -பெரிய அம்போதம் -மஹா சமுத்திரம் –
தடஸ்தா வயம்-கரையிலே நாங்கள் நிற்கிறோம் வேடிக்கை பார்த்து -எட்டிப்பார்த்து எழுதுவதே இவை -என்றவாறு
நைச்சிய அனுசந்தானம் –

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகத்தில் -ஸ்ரீ ராமானுஜர் -அகில புவன -சேமுஷி பக்தி ரூப -மறை முகமாக
லீலை -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -அசுரர்களை -ஐவருக்கு திறம் காட்டி –
இவையே அகில புவனமாக கொண்டவர் ஆழ்வார் -எல்லாம் கண்ணன் -உண்ணும் சோறு -தாரக போஷக போக்யங்கள்
செயல் நன்றாக திருத்திப் பணி கொண்டவர் -ஆகவே சடாரி ரூபம்
திருவாய் மொழி தலை -நிகமன பாசுரங்கள் தோறும் -குருகூர் சடகோபன் சொல் -விதீப்தே
ப்ரஹ்மணீ -பெரியவர்
ஸ்ரீ நிவாஸே -கைங்கர்ய செல்வம் நிறைந்தவர்
அந்த ஆழ்வார் இடம் மயர்வற மதி நலம் அருள பிரார்திக்கிறார் –
கடல் கரையில் இருந்து -மறை முகமாக -பெருமாளை ஸ் ஸ்துதிப்பது போல் –
அதே போல் பாதுகை ஸ்துதிப்பது போல் ஸ்ரீ பாதுகா தேவியே உம்மை அடியேன் ஸ்துதிக்கிறேன் –

கடலில் வசிக்கும் மீன்களும் –
கடலைக் கடந்த வானரர்களும்-
கடலைக் கடைந்த மந்திர கிரியும்
கடலின் ஆழத்தை ஓரளவே கண்டனர்
கடலை விட மகிமை உடைத்தான ஸ்ரீ பாதுகையைப் பாட முன் வந்த நான்
அக் கடலின் கரையிலேயே இருக்கிறேன் –

மீன்கள் ஜலத்திலேயே ஸஞ்சரிக்கின்றன், அப்படியிருந்தும் சமுத்திரத்திலே கொஞ்ச தூரம் தான் போய்க் கொண்டிருக்கின்றன.
மிக வேக சாலிகளான ஹனுமார், முதலிய வானரர்களும் கொஞ்ச தூரம் தான் தாண்டினார்கள்,
மந்தர பர்வதம் சமுத்திரத்தின் ஆழத்தை கொஞ்சம் தான் கண்டது.
இந்த அல்ப ஸமுத்திரத்திலேயே முழுமையும் போகவும்- தாண்டவும், ஆழத்தை அறியவும் முடியவில்லை என்று நினைத்து,
பாதுகைகளின் குணங்களாகிற பெருங்கடலில் இக் கரையிலேயே இருந்து விட்டேன்.
जानाति मन्थाचल: என்று ஒரு கவி சொன்னான். அதுவும் தப்பு என்று அபிப்ராயம்.
तटस्था: என்பதனால் நான் மத்தியஸ்தமாகச் சொல்லுகிறேனென்று அருளிச் செய்கிறார்.

ஆழ்வாருடைய ப்ரபாவத்திற்கு எல்லையில்லை என்பது இதற்கு உட்கருத்து.

————————————————————-

பத கமல ரஜாபிர் வாசிதே ரங்க பர்த்து
பரிசித நிகமாந்தே பாதுகே தார யந்த
அவிதித பரிபாகம் சந்த்ரமுத்தம் ஸயந்தே
பரிணத புவனம் தத் பத்ம மத்யாசதே வா –44-

ரங்க பர்த்து-திருவரங்கனின்
பத கமல ரஜாபிர் வாசிதே -திருவடித்தாமரை -தூளியின் வாசனையால் வாசமூட்டப் பெற்று
பரிசித நிகமாந்தே -வேதாந்தங்களால் புகழப்பட்ட
பாதுகே தார யந்த- ஸ்ரீ பாதுகா தேவியை தரிப்பவர்கள்
அவிதித பரிபாகம் -வளர்த்தல் தேய்தல் இல்லாத
சந்த்ரமுத்தம் ஸயந்தே -சந்திரனை ஆபரணமாகக் கொள்வர்
சந்த்ர சேகரன் போல் ஆவார் –
பரிணத புவனம் தத் பத்ம மத்யாசதே வா-உலகைப் படைக்கும் திரு நாபி தாமரையில் அமர்வார்கள் -ப்ரம்ம பதவி
மோக்ஷமே கிட்டும் என்பதால் இவை அநாயாசேன கிட்டும்

வாஸம் கமழும் -வேத மணம் கமழும் -திருவாய் மொழி
திருவடி மணமும் உண்டே –
திருவாய் மொழியை மனசில் கொண்டவர்கள்
அறியாமலேயே தூய்மை பெறுவார்கள்
ஆச்சார்யர் அனுக்ரஹம் -ஹ்ருத கலுஷம் -திருடி செல்வார்கள் -நாமே அறியாமல் -சபரி மோக்ஷம் -த்ருஷ்டாந்தம்
ஸ்ரீ முஸ்ஹஞம் -முஷணம் பண்ணும் -நமது கலுஷன்கள் அனைத்தும் திருடப்படும்
தூய ஞானம் -பெறுவோம் –

வேத ப்ரதிபாத்யனான எம்பெருமான் திருவடித் துகள்களின் மணம் உள்ள ஸ்ரீ பாதுகையை
சிரசில் வகிப்பவனுக்கு ப்ரஹ்மாதி உயர்ந்த பட்டங்கள் வருகின்றன –

ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளின் தூளிகளால் வாஸனை யுள்ளதும்
வேதாந்த ப்ரதிபாத்யங்களுமான பாதுகைகளைத் தலையில் வைத்துக்
கொள்கிறவர்களுக்கு ப்ரம்மப் பட்டமாவது சிவன் பட்டமாவது வருகிறது

——————————————————————

சக்ருதபி கில மூர்த்நா சாரங்கிண பாதுகே த்வாம்
மநுஜ மனுவஹந்தம் தேக பந்த வ்யபாயே
உபசரதி யதார்ஹம் தேவ வர்க்கஸ் தவ தீய
ஸ்து நியமித்த ப்ருத்யோ ஜோஷ மாஸ்தே க்ருதாந்த–45-

சக்ருதபி கில மூர்த்நா சாரங்கிண பாதுகே உத்வகம் மநுஜ -ஒரே தடவை ஸ்ரீ சாரங்கபாணி சடாரி தரித்தாலும்
மனுவஹந்தம் தேக பந்த வ்யபாயே -தேகம் பந்தம் விடும் சமயத்தில்
உபசரதி யதார்ஹம் தேவ வர்க்கஸ் தவ தீய ஸ்து -அமானவனும் -நித்யர்களே ஸ்ரீ வைகுண்டம் கூட்டிச் செல்வர்
நியமித்த ப்ருத்யோ -தமர்களை அடக்கி
ஜோஷம் ஆஸ்தே மௌனமாக இருந்து
க்ருதாந்த-அந்த யமனும்
சடகோபர் அந்தாதி – ஒரு தடவை -மாறன் என்றேன் -இனி நாள் குறித்து -கூற்றினுக்கு வேலை இல்லையே -இத்தையே உள் கொண்டு –

ஸ்ரீ பாதுகையை ஒரு முறையேனும் தரிப்பவன் அந்திம காலத்தில் நித்ய ஸூரிகளால் அழைத்து செல்லப் படுகிறான் –
நமன் தமர்கள் அவனை நெருங்குவது இல்லை –

பெருமாளுடைய பாதுகையை ஒரு தரமாவது தலையில் வஹித்துக் கொண்டவர்களை இறந்து போகும் போது,
உனது பரிஸாரகர்களான நித்ய ஸூரிகள் பரம பதத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறார்கள்.
யமனும் அவன் வேலைக் காரர்களும் நடுங்கிக் கொண்டு ஸமீபத்திலேயே வருகிறதில்லை யென்று சாஸ்த்திரங்களில் சொல்லி யிருக்கிறது.

—————————————————————–

பத சரசி மேதத் பாதுகே ரங்க பர்த்து
பிரதிநிதி பதவீம் தே காஹதே ஸ்சேன பூம்நா
ததிதம பரதா சேத் திஷ்ட தாஸ் தஸ்ய நித்யம்
கதமிவ விதி தார்த்தா த்வாம் பஜந்தே மஹாந்த –46-

பத சரசி மே ஏதத் பாதுகே ரங்க பர்த்து பிரதிநிதி பதவீம் தே -திருவடி கூட உனக்கு பிரதிநிதி தான்
காஹதே -அடைந்தது
ஸ்சேன பூம்நா -பெருமையால் பெற்றது
ததிதம் -இந்த விஷயம்
அபரதா சேத் -வேறே விதமாக இருந்தால்
தஸ்ய-திஷ்ட தாஸ் -திருவடியை அநாதரித்து
த்வாம் -உன்னையே
நித்யம் -எப்பொழுதும்
கதமிவ -எப்படி
விதி தார்த்தா பஜந்தே மஹாந்த-ஞானிகளும் மகான்களும் வணங்குகிறார்கள்

நம்மாழ்வார் பிரதானம் -மாறனில் மிக்கும் ஓர் தேவும் உளதோ -மால் தனில் –
தேவு மற்று அறியேன் –

ஸ்ரீ பாதுகையே நீயே பகவானுடைய திருவடிகளின் பிரதிநிதி
கோயில்களுக்கு செல்லும் பெரியோர் பெருமாள் திருவடிகளுக்கு பதிலாக உன்னையே தம் தலையில் தரித்து கொள்கிறார்கள்
ஆசார்யார்களே தம் கருணையால் பெருமாள் இடம் நம்மை சேர்ப்பிக்கிறார்கள் என்றவாறு –

ஏ பாதுகையே
எல்லாமறிந்த பெரியவர்கள் கூட கோயிலுக்குப் போனால் உன்னையே தான் தலையில் வைத்துக் கொள்கிறார்கள்.
திருவடியை என் தலையில் வைத்துக் கொள்கிறதில்லை என்றால், நீ தான் முதலாவது,
திருவடிகள் உனக்குப் பதிலாக இருந்து இரண்டாவதாகவே ஆகின்றன.
பெருமாளைக் காட்டிலும் ஆசார்யர்கள் தான் உயர்ந்தவர்கள் என்பது உட்கருத்து.

————————————————————-

ஸ்ருதி ஸ்ரசி நிகூடம் கர்மணாம் சோதிதாநாம்
த்வதவதிவி நிவேசம் நாதி கந்தும் ஷமாணாம்
பரி ஹசதி முராரே பாதுகே பாலிசா நாம்
பஸூ வத பரி சேஷான் பண்டிதோ நாம யஜ்ஞான் –47-

ஸ்ருதி ஸ்ரசி நிகூடம் கர்மணாம் -உபநிஷத்தில் ரஹஸ்யம்
சோதிதாநாம்-சொல்லப்பட்டு உள்ளது
த்வத வதிவி நிவேசம் -உனது வரையில் சமர்ப்பிக்க வேணும் -சர்வம் ஸ்ரீ கிருஷ்ண பாதுகா அர்ப்பணம்
நாதி கந்தும் ஷமாணாம் -அறியாமல்
பரி ஹசதி -பரிகாசம் பண்ணுவார்கள்
முராரே பாதுகே பாலிசா நாம்
பஸூ வத பரி சேஷான் -மிருக வதை சாம்யம் -கோ பசு -சமஸ்க்ருதம் -பசு -என்றால் மிருகம்
பண்டிதோ -பண்டிதர்கள் –
நாம யஜ்ஞான்-பெயர் அளவில் வேள்வியாக செய்தால்

யாகம் -திருவாராதானமே பெரிய யாகம் –
ஆழ்வார் பர்யந்தம் செய்ய வேண்டும் –
அறியாமல் -ஆழ்வார் பாசுரங்கள் சேவிக்காமல் -வேத மந்த்ரங்கள் மட்டும் சொல்வாரே பண்டிதர்கள் பரிகசிப்பார்கள் –
தானும் யானும் -கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் கன்னலும் -அத்தா -ஆச்சார்யனாகவும் -உருகி அழைத்தார் –
நித்ய கிரந்தம் -செவிக்கு இனிய செஞ்சொல் -கேட்டார் ஆரார் வானவர் –

ஸ்ரீ பாதுகையே உபநிஷத்துக்களில் நாம் செய்யும் யாகம் முதலிய நல்ல கர்ம பலன்களை உனக்கே அர்ப்பணம்
செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது –
அப்படி அல்லாது கர்மங்கள் செய்தால் பண்டிதர்கள் பரிஹசிப்பார்கள்-

உலகில் எந்தக் கர்மங்களைப் பண்ணினாலும் कृष्णार्पणम् என்று சொல்கிறார்கள்.
நாம் செய்யும் நல்ல கர்மங்களை யெல்லாம் பெருமாளிடத்தில் கொடுத்து விடவேண்டுமென்று அதற்கு அர்த்தம்.
அவசியம் செய்ய வேண்டுமென்று சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட ஸகல கர்மங்களையும் பாதுகைகளிடத்தில்
ஸமர்ப்பிக்க வேண்டுமென்று உபநிஷத்துக்களில் ரஹஸ்யமாய்ச் சொல்லி யிருக்கிறது.
இவ் விஷயம் தெரியாமல் யாராவதொருவன் யாகம் பண்ணினானே யானால் தெரிந்தவன் இது யாகமென்று பெயரே
யொழிய வேறொரு ப்ரயோஜனமுமில்லை,
பசு வதம் மாத்ரம் தான் மீந்தது என்று பரிஹஸிக்கிறான்.
நாம் செய்யும் எல்லாக் கர்மங்களையும் ஆசார்யர்களிடத்தில் ஸமர்ப்பிக்க வேண்டுமென்பது உட்கருத்து,

—————————————–

ஜநயிது மலமர்க்யம் தைத்யஜித் பாத ரஷே
நமதி மஹதி தேவே நாக சிந்தோர் விசீர்ணா
முஹூரஹி பதி சூடா மௌலி ரத்நாபி காதாத்
பரிணதலகிமான பாதாசா மூர்மயச்தே –48–

தைத்யஜித் பாத ரஷே -அசுரர்களை வென்ற -ஸ்ரீ ரெங்க பாதுகையே
நமதி மஹதி தேவே -மஹாதேவன் வணங்கும் பொழுது
நாக சிந்தோர் -தேவ கங்கை
விசீர்ணா -சிதறி கீழே விழ
முஹூரஹி பதி சூடா மௌலி ரத்நாபி காதாத் -மீண்டும் -வாசுகி பாம்பின் தலையில் ரத்னங்களில் மோதி
பரிணத லகிமான -சிறு சிறு துளியாக பரிணாமம்
பாதாசாம் ஊர்மயச்தே -தண்ணீர் அலைகள் -மாறி
ஜநயிது மலமர்க்யம் -உனக்கு அர்க்யம் -போல் ஆகுமே –
தற் குறிப்பு ஏற்று அணி –

ஸ்ரீ பாதுகையே சிவன் உன்னை வணங்கும் பொழுது அவன் சிரசில் இருக்கும் கங்கை நீரின் அலைகள் அவன் முடியில்
இருக்கும் நாகத்தின் ரத்னத்தில் மோதுண்டு உனக்கு அர்க்ய தீர்த்தம் சமர்ப்பிக்க ஏற்றனவாகின்றன –

ஏ பாதுகையே! உன்னைச் சிவன் தலை வணங்கி ஸேவிக்கிறார்.
அவருடைய தலையில் கங்கையும் பாம்பும் இருக்கிறது.
அப் பாம்பின் தலையிலிருக்கும் ரத்தினத்தில் கங்கையின் ஜலம் மோதுகிறது.
அதனால் துளித் துளியாய் விழுகின்ற கங்கா ஜலத்தைப் போல் உன்னை யாரதிப்பதற்கு ஸமர்ப்பிக்கின்ற
அர்க்கிய தீர்த்தங்களோ வென்று தோன்றும் படியாயிருக்கிறது

———————————————————-

பத சரசி ஜயோஸ்த்வம் பாதுகே ரங்க பர்த்து
மனசி முநி ஜநாநாம் மௌலி தேசே ஸ்ருதீ நாம்
வசசி ஸ ஸூ கவீ நாம் வர்த்தசே நித்ய மேகா
ததிதம வகதம் தே சாஸ்வதம் வைஸ்வ ரூப்யம்–49-

பத சரசி ஜயோஸ்த்வம் -திருவடித் தாமரைகளில் உலக்ல்காய்
பாதுகே ரங்க பர்த்து –
மனசி முநி ஜநாநாம் -முனிவர்களின் மனங்களிலும் -நாத யமுனா யதி மணவாள மா முனிகள்
மௌலி தேசே ஸ்ருதீ நாம் -வேதாந்தங்களிலும் உள்ளாய் -திருவாய் மொழி நிகமன பாசுரங்களில் அனைத்திலும் ஆழ்வார்
வசசி ஸ ஸூ கவீ நாம் -நல்ல கவிகளின் வாக்கிலே -மதுரகவி கவிதார்க்கிக ஸிம்ஹம் –
வர்த்தசே நித்ய மேகா -நித்தியமாக வாஸம் -இருந்தாலும் ஏகா -ஒருத்தியே
ததிதம் அவகதம் தே சாஸ்வதம் வைஸ்வ ரூப்யம்-உன்னுடைய எப்பொழுதும் உள்ள விஸ்வ ரூபம் இவற்றால் அறிகிறோம் –

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானை போலவே நீயும் ஒரே காலத்தில் பல இடங்களிலும் இருக்கிறாய்
பெருமாள் திருவடியிலும்
ரிஷிகள் உடைய மனதிலும்
வேதாந்தங்களிலும்
கவிகளுடைய வாக்கிலும் வசிக்கிறாய்
இதுவே நீ எங்கும் பரந்தமையைக் காட்டுகிறது –

ஏ பாதுகையே நீ ஒன்றாயிருந்தும் அனேக இடங்களில் எப்பொழுதுமிருக்கிறாய்.
அதனால் கிருஷ்ணனைப் போல் உனக்கும் அனேக சரீரமிருக்கிறதென்று எல்லாரும் அறிகிறார்கள்.
அதாவது, பெருமாள் திருவடியிலேயும்
ருஷிகளின் மனதிலேயும்,
வேதாந்தகளிலும்,
கவிகளுடைய வாக்கிலேயுமிருக்கிறாய்.
பெருமாள் உன்னைத் திருவடிகளில் ஸாற்றிக் கொண்டிருக்கிறார்.
உபநிஷத் உன்னைப் பற்றிச் சொல்கிறது.
முனிவர்கள் உன்னைத் தியானிக்கிறார்கள்.
கவிகள் உன்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்

————————————————————————————

பரிசர விநதாநாம் மூர்த்னி துர் வர்ண பண்க்திம்
பரிணம யசி சௌரே பாதுகே த்வம் ஸூ வர்ணம்
குஹக ஜன விதூரே சத் பதே லப்த வ்ருத்தே
க்வநு கலு விதி தஸ்தே கோப்ய சௌ தாதுவாத –50-

சௌரே பாதுகே
பரிசர விநதாநாம் -உன்னை வணங்குபவர்
மூர்த்னி துர் வர்ண பண்க்திம் -தலையில் உள்ள கெட்ட எழுத்துக்களின் வரிசைகள்
பரிணம யசி த்வம் -நீ மாற்றுகிறாய்
ஸூ வர்ணம் -நல்ல தலை எழுத்தாக -விதியை மிதி அடியால் வெல்லலாம் –
வர்ணம் -எழுத்து –
துர் வர்ணம் -வெள்ளை சமஸ்க்ருதம் -தங்கமாக மாற்று கிறாய் –
குஹக ஜன விதூரே -தீயவர்களை விட தூரமாக
சத் பதே லப்த வ்ருத்தே -நல்ல வழியில் போகும் நீ
க்வநு கலு விதி தஸ்தே கோப்ய சௌ தாதுவாத-இது-தாது வாதம் – எப்படி தெரிய வந்தது –

வெள்ளி -பகவத் பக்தி
தங்கம் -பாகவத பக்தர் -அடியார்க்கு அடியார் –
ஆக்கி அருளும் ஆழ்வார் –

ஸ்ரீ பாதுகையே உன்னை வந்து சேவிக்கும் பக்தர்கள் பிரம்மா விதித்த எழுத்துக்களை நல்லதாய் மாற்றி விடுகிறாய்
வெள்ளியைத் தங்கம் ஆக்கும் ரசவாதம் துஷ்டர் அறிந்த கலை
நல்ல வழி செல்லும் உனக்கு இந்தக் கலை எவ்விதம் வந்தது என்ன ஆச்சர்யம் –

ஏ பாதுகையே உன்னுடைய ஸமீபத்தில் வந்து ஸேவித்தவர்களுடைய தலையிலே
ப்ரம்மா கெட்ட எழுத்து எழுதியிருந்தாலும் அதையும் நீ நல்லதாய் மாற்றி விடுகிறாய்.
அதாவது கெட்டவனாயிருந்தாலும் உன்னை வந்து ஸேவித்தால் அவன் நல்லவனாகி விடுகிறான்.
“दुर्वणम्” என்று வெள்ளிக்கும், “सुवर्णम्”என்று தங்கத்திற்கும் பெயர்.
வெள்ளியைத் தங்கம் பண்ணுகிறாய் என்று ஒரு அர்த்தம் ஏற்படுகிறது.
வெள்ளியைத் தங்கம் பண்ணுவதற்கு ரஸவாதமென்று பெயர்.
அது துஷ்டர்களுடைய வேலை.
நல்ல வழியிலிருந்து ஜீவிக்கிற உனக்கு இந்த விஷயம்
எங்கிருந்து வந்தது என்று வேடிக்கையாய் அருளிச் செய்தார்.

———————————————————————————

பலி மதன விஹாராத் வர்த்தமா நஸ்ய விஷ்ணோ
அகிலமதி பதத்பிர் விக்ரமை ரப்மேய
அவதி மநதி கச்சன் பாப ராசிர் மதீய
சமஜனி பத ரஷே சாவதிஸ் த்வன் மஹிம்நா -51-

பலி மதன விஹாராத் –கர்வம் அடக்க செய்த லீலையால்
வர்த்தமா நஸ்ய விஷ்ணோ -வளர்ந்த திரிவிக்ரமன்
அகிலமதி பதத்பிர் விக்ரமை ரப்மேய -உலகையே கடந்து -தாண்டி -திருவடியால் கூட அளக்க முடியாத
அவதிம் அநதி கச்சன் பாப ராசிர் மதீய -என்னுடைய பாபக்கூட்டங்கள்
சமஜனி பத ரஷே சாவதிஸ் த்வன் மஹிம்நா-உன்னுடைய மஹிமையாலே -அழிக்கப் பட்டனவே –
உலகம் -திருவடி -பாபக்கூட்டங்கள் -ஸ்ரீ பாதுகா -சடாரி -பெருமை
வல் வினை பாற்றி அருளும் பெரியவர் அன்றோ -சூழ்ந்து –அதனில் பெரிய ஆழ்வார் அவா

ஸ்ரீ பாதுகையே மகா பலியை ஆட் கொள்ள உலகளந்த பெருமாள் திருவடிக்கு இந்த உலகம் போத வில்லை –
அந்த திருவடியால் என் பாபங்களை அளக்க முற்பட்டால் அந்தத் திருவடியே போத வில்லை
அப்படி எல்லை யற்ற என் பாபம் உனது மகிமையால் அழிந்து விட்டது –

——————————————————————————————–

தட புவி யமுநா யாஸ் தாஸ் துஷீ யன் நிவேசாத்
வஹதி நிகம சாகா வைபவம் நீப சாகா
பத கமலமிதம் தத் பாதுகே ரங்க பர்த்து
த்வயி பஜதி விபூதிம் பசய சாகாநுசாகாம்–52-

தட புவி யமுநா யாஸ் -யமுனைக்கரையில்
தாஸ் துஷீ யன் நிவேசாத் வஹதி நிகம சாகா வைபவம் நீப சாகா -கதம்ப மரக்கிளை திருவடி ஸ்பர்சத்தாலே பூத்து
வேதக்கிளை போல் வைபவம் பெற்றதே –
பத கமலமிதம் தத் பாதுகே ரங்க பர்த்து -அந்தத்திருவடியே
த்வயி பஜதி விபூதிம் பசய சாகாநுசாகாம்–உன்னுடைய தொடர்பாலேயே -நன்கு செழித்து -அடையும் படி ஆக்கினாயே -ஸம்ருத்தி –
பஸ்ய -நீயே பார்க்கலாமே -ப்ரத்யக்ஷம் அன்றோ –
திருவடி -மரம் -ஸ்ரீ பாதுகா தேவி வேர் என்றவாறு –

திவ்ய தேசங்கள் -ஆழ்வார் பாசுரங்கள் பெற்றே தானே ஆகும் –
மங்களா சாஸனமே ஆக்கி அருளும் –

ஸ்ரீ பாதுகையே –
யமுனைக் கரையிலே கண்ணனின் திருவடி பட்டதால் அங்குள்ள புன்னை மரங்களின் கிளைகள்
சாகா வைபவம் நீப சாகா-வேத சாகைகள் போல் பரந்து -வேத சாகைகளைப் போல் பெருமை பெற்றன –
அவனுடைய திருவடி உன்னை அடைந்து விசேஷ பெருமை பெற்றது –

ஏ பாதுகையே! க்ருஷ்ணாவதாரத்தில் யமுனைக் கரையிலிருக்கும் மரங்களின் கிளைகள்
கண்ணனுடைய திருவடியின் ஸம்பந்தத்தினால் வேதம் போலாகி விட்டன.
அப்படிப்பட்ட திருவடி கூட உன்னிடத்திலிருப்பதால் விசேஷமான பெருமையை யடைகிறது.

ஆழ்வார் பாடிய ஸ்தலத்தை திவ்ய தேசம் என்று சொல்கிறார்கள் என்பது உட்கருத்து

—————————————————————————————————–

சிரசி விநிஹிதாயாம் பக்தி நமரே பவத்யாம்
சபதி தனு ப்ருதஸ்தா முனனதிம் ப்ராப் நுவந்தி
மதுரிபு பத ரஷி யத்வ சே நைவ தேஷாம்
அனிதர ஸூலபம் தத் தாம ஹஸ்தாப சேயம் -53-

சிரசி விநிஹிதாயாம்-தலையில் வைக்கும்படும் பொழுது
பக்தி நமரே பவத்யாம் -பக்தியால் வணங்குவார்களுக்கு -நெற்
சபதி தனு ப்ருதஸ்தா -எல்லா ஜீவ ராசிகளும்
முனனதிம் ப்ராப் நுவந்தி – அந்த மிக உயர்ந்த நிலையை உடனே அடைந்து விடுகிறார்கள்
மதுரிபு பத ரஷி =மது அசுரனுக்கு =எதிரியான அவனது பாதுகை
யத்வ சே நைவ தேஷாம் -அந்த உயர்ந்த நிலையால் அவர்களுக்கு
அனிதர ஸூலபம் -மற்றவர்களுக்கு அரிதான
தத் தாம ஹஸ்தாப சேயம் -அந்த பரஞ்சோதி-ஹஸ்த -கைக்கு எட்டும் தூரத்துக்கு வந்து விடுகிறான்

நம்மாழ்வார் -மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –தாமம் இருப்பிடம் –
அங்கு ஈர் அரசு இல்லையே -ஆழ்வார் ஆணையும் பொலிந்து நின்ற ஆணையும் இங்கே உண்டே –
ஏக போக சாம்ராஜ்யம் அதுவே –

ஸ்ரீ பாதுகையே
உன்னைத் தனது சிரசில் தரித்துக் கொள்ளும் பக்தர்கள் குனிந்து குள்ளமாகத் தோன்றினாலும்
எட்ட ஒண்ணாத பரம பதனையும் எட்டிப் பிடிக்கும் சாமர்த்திய சாலிகள் ஆகிறார்கள்
ஆசார்யர்களை பக்தியுடன் வணங்கினால் எம்பெருமான் நம் வசப்படுவானே –

ஏ பாதுகையே
ப்ராணிகள் உன்னிடத்தில் பக்தியால் குனிந்த தங்கள் தலைகளில் உன்னை வைத்துக் கொண்டால்,
உன்னிடத்தில் பக்தி யில்லாதாவர்களால் அடைய முடியாதபடி மிகவும் உயர்ந்த தேசத்திலே இருக்கிற
பெருமாளைக் கையாலே எட்டும்படியான உயரத்தை(மேன்மையை) அடைகிறார்கள்.

ஆசார்யர்களை பக்தியுடன் வணங்கினால் பெருமாளைக் கையால் பிடிக்கலாம் என்பது உட்கருத்து

———————————————————

சக்ருதபி புவனே அஸ்மின் சார்ங்கிண பாதுகே த்வாம்
உபநிஷத நுகல்பை ருத்த மாங்கைர் ததா நா
நரகமிவ மகாந்தோ நாக முல்லங்க யந்த
பரிஷதி நிவி சந்தே ப்ராக்தனா நாம் குரூணாம்–54-

சக்ருதபி -ஒரு தடவையாவது
புவனே அஸ்மின் -இந்த உலகில்
சார்ங்கிண பாதுகே த்வாம் -உன்னை
உபநிஷத நுகல்பைர் -வேத சிரஸ் -பாதுகையைத் தங்குவது போல்
உத்த மாங்கைர் ததா நா -தலையில் தாங்குபவர்கள்
நரகமிவ -நரகம் போலவே
மகாந்தா -மஹான்கள்
நாகம் -ஸ்வர்க்கத்தையும் -சிற்றின்பம் தானே
உல்லங்க யந்த -தாண்டி விடுகிறார்கள்
ப்ராக்தனா நாம் குரூணாம்-முன்னே உள்ள பூர்வாச்சார்யார்கள் –
பரிஷதி நிவி சந்தே–அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -நுழைகிறார்கள்
ஆச்சார்யர் திருவடிகளையே சேர்க்கிறார்கள் –

ஆழ்வார் -சடகோபர் அந்தாதி -28-இந்த அர்த்தம் -வேதத்துக்கு சமமாகிறார்கள்
அவர் திருவடிகள் எனது சென்னிக்கு அணி -எம பட்டார்கள் அணுகார்கள் –
ஆரணம் படி ஆகிறார்கள் –

ஸ்ரீ பாதுகையே உன்னை ஒரு தரமாவது தலையில் வைத்துக் கொள்கிறவர்கள் –
ஸ்வர்க்கத்தையும் நரகமாக மதித்து விலக்கி விட்டு
முன்பு இருந்த ஆச்சார்யர்களின் கோஷ்டியில் பிரவேசித்து விடுகிறார்கள் –

ஏ பாதுகையே! உன்னை ஒரு தரமாவது பக்தியோடே தலையிலெடுத்து வைத்துக் கொள்கிறவர்கள்
மிகப் பெரியவர்களாகி, ஸ்வர்க்கத்தை நரகமாக எண்ணி,
முன்னிருந்த ஆச்சார்யர்களுடைய கோஷ்டியில் சேர்ந்து விடுகிறார்கள்.
மோக்ஷத்தை அடைகிறார்களென்றபடி

———————————————————————-

சமதம குணதாந்தோ தந்த வைதேசிகா நாம்
சரணம சரணா நாம் மாத்ருசாம் மாதவச்ய
பத கமலமிதம் தே பாதுகே ரஷ்ய மாசீத்
அனுதய நிதநா நாமா கமாநாம் நிதானம் –55-

சமதம -மனாஸ் புலன் அடக்கம்
குண -கருணை
தாந்த -பக்தி
உதந்த -இவை விஷயங்களில்
வைதேசிகா நாம் -வெளி நாட்டவர் போல்
அசரணா நாம் மாத்ருசாம் -புகல் அற்ற நமக்கு எல்லாம்
சரணம் -ஒரே புகல் இடம்
மாதவஸ்ய -திருமகள் கேள்வனுடைய
பத கமலமிதம் -திருவடித் தாமரையே
அனுதய நிதநம் -தோற்றம் அழிவு இல்லாத
ஆகமாநாம் நிதானம்-வேதங்களின் புதையல்
தே பாதுகே ரஷ்ய மாசீத் -உன்னால் ரக்ஷிக்கப் படும் படி உள்ளதே –

நமக்கு ஒரே புகல் அவன் திருவடிகளே –
பரிந்து பல்லாண்டு பாடும் ஆழ்வார் -போல்வார் -பொங்கும் பரிவால் –

இந்த்ரியங்களுக்கு வசப்பட்டு மனதை அடக்க முடியாமல் குணங்கள் ஏதும் இல்லாத எங்களுக்குக் காப்பாக இருப்பது –
உத்பத்தி நாசம் இவை இல்லாத வேதங்களுக்கு புதையல் போன்ற பெருமாளுடைய திருவடி
அது உன்னால் காப்பாற்றத் தகுந்ததாக ஆயிற்று –

பாதுகையே! கண் முதலான இந்த்ரியங்களைத் தன்வயப்படுத்தி அடக்குதல்; மனதைக் கட்டுப்படுத்தல்;
தயை போன்ற குணங்கள் கொண்டிருத்தல்; பக்தியுடன் இருத்தல் – இது போன்ற உயர்ந்த தன்மைகளுக்கு
மாறுபட்டவர்களாக நாங்கள் உள்ளோம்.
எங்களை இவ்வாறு உள்ள நிலையில் இருந்தும் காப்பாற்றுவது எது?
தோற்றம் மற்றும் அழிவு போன்றவை இல்லாமல், என்றும் உள்ள வேதங்களுக்கும் புதையல் போன்று உள்ள
நம்பெருமாளின் திருவடிகளே எங்களைக் காக்கின்றன.
அப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளையே நீ காப்பாற்றுகிறாய்.

ஏ பாதுகையே!
கண் முதலிய வெளி இந்த்ரியங்களையும், மனஸ்ஸையும் கெட்ட வழிகளில் செல்லாமல் எங்களால் அடக்க முடியவில்லை.
எங்களுக்கு தயை, பக்தி இவைகளில்லை. இன்னும் வேறு நல்ல குணங்களுமில்லை.
அந்த ப்ரஸ்தாபமிருக்குமூரில் கூட நாங்களில்லை.
வேதங்களாலே சொல்லப்பட்ட பெருமாளுடைய திருவடி எங்களைக் காப்பாற்றுகிறது.

அந்தத் திருவடியை நீ காப்பாற்றுகிறாய்.
அதாவது, அர்ச்சா ரூபமாய் பெருமாள் இல்லாது போனால்
ஜனங்களுக்குக் கொஞ்சம் கூட ஸௌக்யமுண்டாகாது.
ஆழ்வார் ஆச்சார்யர்களுக்காகத் தான் பெருமாள் கோவிலில் எழுந்தருளி யிருக்கிறார்.
அந்தப் பெருமாள் உயிருள்ளவராக ஆயிரத்தில் ஒருவர் நினைப்பது கூடக் கஷ்டம். லக்ஷத்திலொருவரென்றும் சொல்லலாம்.
நல்ல சர்க்கரைப் பொங்கல் பண்ணினால் வேறொருவருக்காகப் பண்ணுகிறான்.
“பெருமாள் அமுது செய்யப் பண்ணுகிறேன்” என்று சொல்லுகிறான்.
பெருமாள் அமுது செய்தாரா? இல்லையா? என்ற கவலை பெரும்பாலுமில்லை.
அர்ச்சகர்கள், பரிஸாரகர்கள், தர்ம கர்த்தாக்கள், வந்தவர்கள், இவர்களில் ஒருவராவது பெருமாளுடைய ஸுகத்தை நினைக்கவில்லை.
யாரோ ஒரு மஹான் ” இப்படி எல்லாரும் உம்முடைய ஸுகத்தை நினைக்கவில்லையே” என்று வருத்தப்படுகிறார்.
அவருக்காகத்தான் பெருமாள் அங்கு எழுந்தருளியிருக்கிறார்.

——————————————————————————————-

பரி சிதபத பத்மாம் பாதுகே ரங்கிணஸ் த்வாம்
த்ரி புவன மஹநீயாம் சாத்திரம் தார யந்த
நிஜ சிரசி நிலீனம் தேவி மந்தார மால்யம்
நிகம பரிமளைஸ்தே வாசயந்தீவ தேவா -56-

பரி சிதபத பத்மாம் -திருவடிகளுக்கு அருகில் உள்ள
பாதுகே ரங்கிணஸ் த்வாம் -உன்னை
த்ரி புவன மஹநீயாம் -மூ உலகோராலும் கொண்டாடப்பட்டு
சாத்திரம் தார யந்த -ஆதரவுடன் தலையில் தாங்கி
நிஜ சிரசி நிலீனம் -தங்கள் தலையில் இருக்கும்
தேவி
மந்தார மால்யம் -மந்தார மாலைகள்
நிகம பரிமளைஸ்தே வாசயந்தீவ தேவா-வேத வாசனையால் -உன்னை ஸ்துதிப்பதால் -வாஸனை பெறுகின்றன –

நிலத் தேவர்கள் ;பூ ஸூரர்கள் -வேதம் கற்றவர்கள் -ஆழ்வார் திருவடிகளை தாங்கி –பாசுர வாசனையால் தெளிவு –
தெளியாத மறை நிலங்கள் -அருளிச் செயல் -நிற்கப் பாடி நெஞ்சில் நிறுத்தி அருளுகிறார் –

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடியில் இருப்பதாலும்
வேதங்கள் உன்னைப் புகழ்வதாலும்
தேவர்கள் உன்னைத் தங்கள் சிரசில் தரித்து
உன்னுடைய வாசனையால் தலையில் சூடியுள்ள மந்தார மாலைகளை மணம் மிகுந்தவையாகச் செய்கிறார்கள் –

—————————————————————————————-

கனக சரித நூபே கல்ப வ்ருஷஸ்ய பூஷ்ணோ
பதகி சலைய லக்னா பாதுகே மஞ்ஜரீ த்வம்
பரிணதி மதுராணாம் யா பலா நாம் சவித்ரீ
வஹசி நிகம ப்ருந்தை சம்பதம் ஷட் பதா நாம் –57-

அரங்கன் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
தளிர் -கொழுந்து -திருவடி இணைகள்
பூங்கொத்து -பாதுகா தேவி
பூ -காய் -கனி-தர்மம் அர்த்தம் -காமம் -வீடு –
வேதம் -திருவாய் மொழி வண்டுகள் –

கனக சரித -பொன்னி -காவேரி
நூபே கல்ப வ்ருஷஸ்ய பூஷ்ணோ-கரையில் வளர்ந்துள்ள கற்பக மரமே பெரிய பெருமாள்
பத கி சலைய லக்னா பாதுகே மஞ்ஜரீ த்வம் -திருவடி தளிர் உடன் சம்பந்தித்த பூ கொத்து நீயே
பரிணதி மதுராணாம் யா பலா நாம் -அறம் பொருள் இன்பம் வீடு -இனிமை –
உத்க்ருஷ்டம்-கைங்கர்ய ஸ்ரீ -கண்ணனுக்கே ஆமது காமம்
சவித்ரீ-உண்டு பண்ணுகிறாய்
வஹசி நிகம ப்ருந்தை சம்பதம் ஷட்பதா நாம்-வேதக்கூட்டங்கள் -ஆறு கால் வண்டுகளாக -ஸ்துதித்து -ரீங்காரம் –

ஆழ்வார் பரமாகவும்-இதே அர்த்தங்கள் -இனிய செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸ்ரீ பாதுகையே காவிரிக் கரையில் கல்ப தருவாக ஸ்ரீ ரங்க நாதன் எழுந்து அருளி இருக்கிறார் –
பெருமாளுடைய மிருதுவான திருவடித் தளிர்களில் பூத்த புஷ்பமாகவும் நீ விளங்குகிறாய் –
இந்த புஷ்பத்தில் சதுர் வித புருஷார்த்தங்களும் பழமாக பழுக்கின்றன –
வேதங்கள் பூவில் சாரம் அறிந்த வண்டுகளாக உன் மகிமையை ஓதுகின்றன –

ஏ பாதுகையே! காவேரியினுடையே திட்டிலே பெருமாள் எழுந்தருளியிருக்கிறார்.
வேண்டிற்றெல்லாம் தரும் அந்தப் பெருமாளைப் பார்த்தால் கற்பக வ்ருக்ஷம் போலிருக்கிறது.
அவருடைய அதி மிருதுவான திருவடியைப் பார்த்தால் தளிர் போலிருக்கிறது.
அத் திருவடியில் ஸம்பந்தித்த உன்னைப் பார்த்தால் தளிரினுடைய ஸமீபத்திலிருக்கிற பூங்கொத்து போல் இருக்கிறது.
இந்தப் பூவில், தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்கிற நான்கு பழங்கள் பழுக்கின்றன.
அப் பழம் கெடுதியைக் கொடுக்காது. நன்மையையே தரும்.

உன்னைச் சொல்லுகிற வேதங்களைப் பார்த்தால், பூவின் ஸாரத்தை யறிந்த வண்டுகள் போலிருக்கின்றன

—————————————————————-

பரி கலயசி சேன்மாம் பத்ம வாசா நிஷேவ்யே
பத கமல யுகே த்வம் பாதுகே ரங்க பர்த்து
அவிதித நிகமா நாம் நூநமஸ் மாத்ருசா நாம்
அகடிதகட நீ தே சக்திரா விஷ்க்ருதா ஸ்யாத் –58-

பரி கலயசி சேன்-சேர்க்கிறாய் என்றால்
மாம் -நீசனான அடியேனையும்
பத்ம வாசா நிஷேவ்யே -தாமரையாள் திருக்கையால் வருடும்
பத கமல யுகே -இரட்டைத் திருவடித் தாமரைகளை
த்வம் பாதுகே ரங்க பர்த்து
அவிதித நிகமாநாம் நூந ம் அஸ் மாத்ருசா நாம் -வேதங்களே அறியாத என் போல்வாரும் நிச்சயமாக புரிந்து கொள்ளும் படி
அகடிதகட நீ தே சக்திர் -சேராதவற்றை சேர்க்கும் சக்திகள்
ஆவிஷ்க்ருதா ஸ்யாத்-நன்கு வெளிப்படும்

விருத்த விபூதி யுக்தன் -திரு விண்ணகர் சேந்த பிரான் -ஒப்பிலி அப்பன் -ஆழ்வாருக்கு காட்டிய கல்யாண குணம் –
கண்ணனின் அருளே கண்டு கொண்மின்
ப்ரணய ரோஷத்தால் தள்ளி போ என்ற தம்மையும் சேர்த்துக் கொண்டானே
பொன் அப்பன் –தன் ஓப்பன் இல் அப்பன் -மற்ற ஓர் களை கண் இலம்
சம்பத் தாரித்ர பாவாத் -அஸூ க ஸூ க பாவாத் -கபட ருஜித பாவாத் -சாயா அசாயா பாவாத் –

ஸ்ரீ பாதுகையே மகா லஷ்மியால் மட்டுமே சேவிக்கத் தக்க எம்பெருமான் திருவடிகளில்
என்னைப் போன்ற நீசர்களையும் சேர்த்து வைத்தால்
உன்னுடைய அகடிதகடநா சாமர்த்தியம் பிரகாசமாகுமே –

————————————————————-

ஸ்ருதி சத சிரஸ் சூடாபீடே நிபீடயிதும் ஷமே
துரித சரிதா மோகா நேதா ந மோகவி சர்ப்பிண
க்ரம பரிணமத்வேத ஸ்ரேணீ ஸிகா மணி கட்ட நா
மஸ்ருணி ததலே ரங்க ஷோணீ ப்ருதோ மணி பாதுகே –59-

ஸ்ருதி சத சிரஸ் சூடாபீடே -உபநிஷத்துக்களுக்கு ஸிகா அலங்காரம் சூடா ஆபீடே
நிபீடயிதும் ஷமே துரித சரிதாம் அமோகா நேதாநம் வி சர்ப்பிண -தடங்கல் இல்லா பரவும்
நம் போல்வார் பாப வெள்ளம் போக்கடிக்கும்
க்ரம பரிணமத்வேத ஸ்ரேணீ ஸிகா மணி கட்ட நா -வரிசைப்படி -காலக்ரமங்கள் -நான்முகன் கூட்டங்கள் வணங்கி –
வரிசையாக தீண்டி -கிரீட மணிகள் பட்டு
மஸ்ருணி ததலே -வளவளப்பாக ஆகி
ரங்க ஷோணீ ப்ருதோ மணி பாதுகே -ரெங்க ராஜனுடைய மணி பாதுகையே

திருவாய் மொழி போன்ற பா மாலை அவனுக்கு ஆபரணம் –
இதுவே -மலை போல் உயர்ந்த ஆழ்வாரை ஆச்ரயிக்க பாப வெள்ளம் வழிந்து போகுமே
கருணையால் திரு உள்ளம் இளகிய ஆழ்வார் -அருள் கண்டீர் உலகினில் மிக்கதே –

வேதங்களுக்கு அலங்காரமாய் பெருமாள் திருவடிகள் இருக்க
அவற்றுக்கு அலங்காரமாய் இருக்கும் ஸ்ரீ பாதுகையே –
ப்ரஹ்மாதிகள் அடிக்கடி சேவித்து ரத்னங்கள் ஸ்பர்சத்தாலே வழ வழப்பாக இருக்கின்றன –
தடங்கலின்றி பரவும் என் பாப வெள்ளங்களை போக்கடிக்கும் சக்தி பெற்றவையாய் இருக்கின்றன –

——————————————————————

ஜகஜ் ஜனன ரஷண ஷபண சங்கிநோ ரங்கிண
பவித்ர தம மாத்ரியே பகவத பதத்ர த்வயம்
சிவத்வ கரண ஷம த்ரிதி வசிந்து சம்பந்தி நம்
ப்ரதாவ்ய சரணம் நிஜம் ப்ரணி ததாதி யத்ர பிரபு –60-

ஜகஜ் ஜனன ரஷண ஷபண -உலகம் எல்லாம் -தாம் உளவாக்கலும் நிலை பெருத்தலும் நீங்கலும் –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
சங்கிநோ ரங்கிண-ஈடுபட்ட அரங்கனின்
பவித்ர தம -பவித்ரம் தரம் -தமம்
ஆத்ரியே -ஆதரித்து வணங்குவோம்
பகவத
பதத்ர த்வயம் -திருவடி ரசிக்கும் பாதுகா தேவி
சிவத்வ கரண ஷம -மங்களம் உண்டாக்கும் ஆற்றல் கொண்ட
த்ரிதிவ சிந்து -தேவ நதி கங்கை
சம்பந்தி நம் -உண்டாக்கிய
நிஜம் சரணம் -தன்னுடைய திருவடிகளை
பிரபு
யத்ர- ப்ரதாவ்ய ப்ரணி ததாதி —எந்த பாதுகை -கால் அலம்பி பாதுகை அணி வதுக்கு தன் குறிப்பு அணியாக

ஆழ்வார் -திருவடி -சடாரி -வணங்குகிறேன் –
ஞானம் தன் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு -இணையாக -கொள்ளலாமே –
அவனுக்கும் தோஷம் சொல்ல இடம் -அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் -தான் அது தந்து –
யார் எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் –

முத் தொழில்களையும் செய்து அருளும் பரமன் உலகு அளந்த போது பிரம்மா கங்கையால் திருவடிகளை அலம்பினார் –
அதை ஸ்ரீ பாத தீர்த்தமாக பரம சிவன் சிரசில் தாங்கினார் –
இப்படி பரிசுத்தமான கங்கையைத் தந்த திருவடியை பாதுகையின் மீது வைப்பதற்கு முன்பு
அலம்பி சுத்தம் செய்து கொண்டு அல்லவா வைக்கிறார் –
ஆகவே பரிசுத்தமான திருவடியை விட ஸ்ரீ பாதுகையே நீ மிக்க பரிசுத்தமானவள் என்று நமக்கு புலன் ஆகின்றதே –

—————————————————————————————

யத் அத்வரபுஜாம் சிர: பதயுகம் ச ரங்கேசிது:
த்ருடம் கடயிதும் க்ஷமம் பவதி சேஷ சேஷித்வத:
சிரஸ்த்ரம் இதம் அஸ்து மே துரிதஸிந்து முஷ்டிந்தயம்
கதத்வ விஹதி க்ஷமம் கிம் அபி தத் பதத்ரத்வயம்—-61-

யத் அத்வர புஜாம் சிர: -எந்த பாதுகை -வேள்வியில் கொடுக்கும் ஹவிஸ் உண்ணும் தேவர்களுடைய தலையையும்
பத யுகம் ச ரங்கேசிது:-அரங்கனுடைய திருவடித் தாமரைகளையும்
த்ருடம் கடயிதும் க்ஷமம் பவதி :–நன்றாக -திடமாக சேர்த்து வைக்க ஏற்றவளாக -வல்லமை -ஆற்றல் பெற்றவளாக
சேஷ சேஷித்வத-ஸ்வாமி -சொத்து -தலைவன் -தொண்டன் -பர கத அதிசய -மேன்மைக்காகவே –
நம்மால் அவனுக்கு பெருமை அல்ல -கடமை சத்தை பெறவே -மலரும் மணமும் போல் -தனியாக ஸ்திதி இல்லையே –
to add glory -பாதுகைக்கு மேல் திருவடிகள் கீழே தேவர்கள் தலை -இத்தையே நன்றாக காட்டும் –
சிரஸ்த்ரம் இதம் அஸ்து மே – அந்த தலைப்பாகையாக எனக்கு ஆகட்டும்
துரித ஸிந்து -பாபக்கடலை
முஷ்டிந்தயம்-கையளவாக்கி -போக்கி
கதத்வ விஹதி க்ஷமம் -தீய பாதைகளை போக்க வல்லவள்
கிம் அபி -மேலும் பல பல பெருமைகள்
தத் பதத்ர த்வயம்-பாதுகை இணைகளுக்கு உண்டே –

ஆழ்வார் –சரணாகதி வேள்வி -ப்ரபன்னர் தலைகளையும் அரங்கனின் திருவடிகளையும் இணைத்து
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்று உணர்த்தி –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –
பண்டை வல்வினை பற்றி அருளுவார் –
காரி சுதன் கழல் சூடிய முடி -தலைப்பாகை ஆழ்வார் திருவடிகளே ராமானுஜருக்கு –

இந்த இரண்டு பாதுகைகளும் தேவர்களுடைய தலைகள் மற்றும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் ஆகியவற்றுக்குப் பெருமை சேர்க்கிறது;
பெருமை அடைகிறது – அதாவது தேவர்களின் தலைக்குப் பெருமை சேர்க்கிறது,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிச் சேர்க்கையால் தான் பெருமை அடைகிறது.
மேலும் பாவங்கள் அனைத்தையும் தனது ஒரே பிடிக்குள் அடக்கி விடுகிறது. இதனால் தீய வழிகளில் செல்வது தடுக்கப்படுகிறது.
இப்படியாக இன்ன பெருமைகள் என்று கூற இயலாத பல பெருமைகள் கொண்டதாக உள்ளது.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளையே பாதுகாக்கும் பெருமை உள்ள பாதுகைகள் எப்போதும் எனது தலையில் இருக்க வேண்டும்.

இங்கு உள்ள சேஷம், சேஷி என்பதற்கு “அடிமை, எஜமானன்” என்னும் பொருள் அல்லாமல்,
“பெருமைப்படுத்துகிற பொருள், பெருமை படுத்தப்பட்ட பொருள்” என்றும் கூறுவார்கள்.
பாதுகைகளைத் தங்கள் தலைகளில் வைத்துக் கொண்டதால் மிகுந்த பெருமை கிட்டுவதால்,
பாதுகையானது பெருமைப்படுத்தும் பொருள் எனலாம்.
திருவடிகளுக்கே பாதுகைகள் பாதுகாப்பாக உள்ளதால், பெருமைபடுத்தப்பட்ட பொருள் என்றும் கூறலாம்.

ஸ்ரீ பாதுகை தன்னை வணங்கும் தேவர் உள்ளிட்ட யாவரையும் செய்த பாவங்களைப் போக்கி
இனி செய்ய விடாமலும் செய்கிறது
அப்படிப்பட்ட பாதுகை எப்போதும் என் தலையில் இருக்க வேண்டும் –
சேஷ பூதர்களான நம் சிரசையும் சேஷியான பகவானுடைய திருவடிகளையும் ஒருங்கே இணைக்க வல்லது ஸ்ரீ பாதுகையே –
நம்மை பெருமாள் இடம் சேர்க்கும் ஆச்சார்யர் நினைவு நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் –

—————————————————————–

ஸமுத்கக்ஷிபதி சேதஸி ஸ்திர நிவேசிதா தாவகீ
முகுந்த மணிபாதுகே முஹு: உபாஸநா வாஸநா
உதர்க்க பரிகர்க்கசாந் உபரிபர்வணா கர்விதாந்
அநர்த்த சத கர்ப்பிதாந் அமரசம்பளீ விப்ரமாந்—62-

ஸமுத்கக்ஷிபதி -துர்குணம் நன்றாக போக்கடிக்கும்
சேதஸி ஸ்திர நிவேசிதா -மனசிலே நிலையாக நிறுத்தப்பட்ட
தாவகீ-உன்னைக் குறித்து
முகுந்த மணிபாதுகே -முக்தி அளிக்கும் நாராயணனின் பாதுகா தேவி
முஹு: உபாஸநா வாஸநா-மீண்டும் மீண்டும் செய்யும் த்யான வாசனையால்
உதர்க்க பரிகர்க்கசாந் -பொறுக்க முடியாத துன்பம் தரக் கூடியதும்
உபரிபர்வணா கர்விதாந்-மிகவும் தாழ்ந்ததாக
அநர்த்த சத கர்ப்பிதாந் -நூற்றுக்கணக்கான உபத்திரவங்களை உள்ளடிக்கிய
அமரசம்பளீ விப்ரமாந்-தேவர் லோக அப்சரஸ்ஸுக்கள் விளையாட்டுக்கள்
இதுக்கு மூன்று அடைமொழிகள்
இவற்றைப் போக்கி -வழு விலா அடிமை செய்ய அருளுகிறாள்

ஆழ்வார் திருமேனி த்யானம் -இவற்றை நமக்கு அருளும் –
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே
பிறர் நன் பொருள் தன்னை நம்பி -நம்பினேன் மடவாரையும் முன் எல்லாம் -இதுக்காக களவு காணப் போனேன் –
வைத்த மா நிதியைக் கண்டு அகப்பட்டேன் -செம் பொன் மாடத் திருக் குருகூர் –
ஆழ்வார் திருமேனியில் அகப்பட்டேன் -தொண்டனாய் சதிர்த்தேன் –

முகுந்தனாகிய க்ருஷ்ணனின் மணிகள் பதிக்கப்பெற்ற பாதுகையே! மனதில் எப்போது நிலையாக நீ இருக்கும்படியாக
த்யானிக்கவேண்டும். இதன் பலன் என்ன? பொறுக்க முடியாத துன்பம் ஏற்படுத்தக் கூடியதும், தாழ்மையாகக் கருதப்படுவதும்,
பல உபத்திரவங்களை உடையதும் ஆகிய தேவலோகப் பெண்களுடன் விளையாடுதல் போன்றவை கூட
வெறுக்கும் பக்குவம் உண்டாகிவிடும் . உன்னைப் பற்றிய த்யானம், அவற்றை மறக்கும்படிச் செய்து விடுகிறது.

பாதுகைகளைத் தொடர்ந்து த்யானிக்கும்போது, மனதி கெட்ட எண்ணங்கள் உதிப்பதில்லை.
கெட்ட எண்ணங்கள் ஏற்படாமல் உள்ளபோது, தீயசகவாசம் உண்டாவதில்லை.
தீய நட்பு ஏற்படாதபோது, பகவத் சிந்தனை அதிகரிக்கிறது.

முகுந்தனுடைய பாதுகையே
உன்னை த்யாநிப்பதால் ஸ்வர்க்க போகங்களின் அல்ப அஸ்திரத் தன்மை புரிந்து அவைகளை மனம் வெறுக்கும்
போக்யம் என்று தோற்றும் விஷாயந்தரங்கள் துன்பங்கள் உடன் கூடியவை எனபது விளங்கும் –

—————————————————————————

விகாஹந்தே ரங்கக்ஷிதிபதி பதத்ராயிணி ஸக்ருத்
வஹந்த: த்வாம் அந்தர் விநிஹத குசேல வ்யதிகரா:
மது உத்தாம் ஸ்தம் பேரம் கரட நிர்யத் மதுஜரீ
பரீவாஹ ப்ரேங்கத் ப்ரமர முகாராம் அங்கண புவம்—-63-

விகாஹந்தே -நுழைகிறார்கள்
ரங்கக்ஷிதிபதி -ரெங்க ராஜா
பதத்ராயிணி -திருவடிகளை ரக்ஷிக்கும் பாதுகை
ஸக்ருத்-ஒரு முறை
வஹந்த: த்வாம் -தலை மேல் தரித்து
அந்தர் விநிஹத -மனசில் நினைத்து
குசேல வ்யதிகரா:-குசேலர் போன்றோர்களை
எங்கே நுழைகிறார்கள் என்றால்
மது உத்தாம் -மதம் பொழியும்
ஸ்தம் பேரம் -யானையின்
கரட நிர்யத் -கன்னத்தில் வழியும்
மதுஜரீ-மத நீர்
பரீவாஹ -வெள்ளம்
ப்ரேங்கத் -சுற்றி இருக்கும்
ப்ரமர -வண்டுகள்
முகாராம் -ரீங்காரம் கேட்க்கும்
அங்கண புவம்-வீற்று முற்றத்துக்கு நுழைவார்கள் -அங்கணம் முற்றம் –
நன்றாக யானையையும் காக்கும்படி செல்வந்தர்கள் ஆவார்கள் –

ஆழ்வார் பாசுரங்களை மனசில் கொண்டு
திருவடிகளை தியானித்து
பெருமாளே யானை
அவன் மனசால் அவனை அடைந்து
பக்தி கயிறு கொடுப்பான் கட்டுண்ணப் பண்ணுவான்
பெண் யானை -பிராட்டி
பாகன் மூலம் -ஆச்சார்யர் மூலம்
அடியார் இட்ட வழக்கு
அலம் புரிந்த நெடும் கை தும்பிக்கை
வாரணம் நின்று பைய –நடந்தான் -தளர் நடை
அப்பொழுது அப்பொழுது ஆராவமுதம்
செங்கமலம் -யானை -மன்னார் குடி பிரசித்தம்
சிதறும் உணவு பலரும் உண்ணலாம் -பிரசாதம்
பாகனுக்கு ஜீவனம் -உபன்யாஸர் நாஸ்திகர் வரை அவனால் பிழைப்பு -அவன் பெயரால் சம்பாத்தியம் –
ஆழ்வார் -த்யானம் -இந்த யானை நம் முற்றத்தில் இருக்குமே –

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! குசேலரை மனதில் நினைத்தபடி உன்னைத் தங்கள்
தலையில் வைத்துக்கொண்டால் போதுமானது. அவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பும்போது அங்கு கொழுப்பினால்
பருத்த யானைகள் கட்டப்பட்டுள்ளதையும், அவற்றின் மத ஜலங்களில் வண்டுகள் ரீங்காரம் செய்தபடி உள்ளதைக் காண்பார்கள்
(யானை வீட்டில் உள்ளது என்றால் ஐஸ்வர்யம் நிறைந்துள்ளது என்று பொருள்).

உன்னைத் தலைகளில் ஏற்பவர்கள் பெறுவது என்ன? க்ருஷ்ணனிடம் தான் ஏதேனும் பெற்றோமா இல்லையா என்று
அறியாமல் குசேலர் இருந்தார். இப்படியாகத் தாங்கள் பெற்றது என்ன என்று அறியாதபடி அவர்களுக்கு
அதிக ஐஸ்வர்யம் அளித்து விடுகிறாய். அவர்கள் வீடு திரும்பும் போது மதயானைகள் கட்டப்பட்டுள்ளதைக் காண்கின்றனர்
(ஐஸ்வர்யம் வந்தது என்று பொருள்).

குசேலரைப் போன்றவர் உன்னைத் தன் சிரசில் தரிப்பதால்
தங்கள் தாழ்வரையில் யானை கட்டிக் காக்கும் சம்பத்து உடையவர்கள் ஆகிறார்கள் –

—————————————————————-

அதிதைவதம் ஆபதத்ஸு கல்பேஷு அதிகாரம் பஜதாம் பிதா மஹாநாம்
அபிரக்ஷது ரங்க பர்த்து: ஏஷா கருணா காசந பாதுகாமயீ—-64-

அதி தைவதம் ஆபதத்ஸு கல்பேஷு -இனி வரும் கல்பங்களில் -தெய்வமாக ஆராதிக்கப் படுபவள்
அதிகாரம் பஜதாம் பிதா மஹாநாம்-பதவிக்கு வரும் நான்முகன் போல்வார்
இப்போது ஆராதிப்பவர் பின்பு நான்முகன் பதவி அடைவார்கள் என்றபடி
அபிரக்ஷது -நம்மை காக்கட்டும்
ரங்க பர்த்து: ஏஷா கருணா காசந பாதுகாமயீ–கருணையே வடிவம் கொண்டது போல் அன்றோ ஸ்ரீ பாதுகா தேவி –

பெருமாளின் கருணை வடிவமே ஆழ்வார் –
வாமனன் அந்தணர் -ராமன் -ஷத்ரியன் -கண்ணன் -வைசியன் -ஆழ்வார் -நான்காம் வர்ணம்

இனி வரப்போகும் கல்பங்கள் அனைத்திலும் ப்ரம்ம பட்டத்தை அடையப்போகும் அனைவராலும் ஆராதிக்கத் தகுந்தது;
ஸ்ரீரங்கநாதனின் எல்லை காண இயலாத கருணை என்பதே உருவமாக உள்ளது – இப்படிப்பட்டது எது என்றால்,
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே ஆகும். அந்தப் பாதுகைகள் நம்மைக் காக்கட்டும்.

ப்ரம்ம பட்டம் என்பது பாதுகைகளைத் தங்கள் தலையில் ஏற்றவர்களுக்கு மிகவும் எளிதாக, தானாகவே கிட்டக் கூடியது ஆகும்.
இங்கு நம்பெருமாளின் கருணை என்பதே பாதுகை என்னும் வடிவு எடுத்ததோ என்று வியந்து கூறுகிறார்.

கல்பாந்தரங்களில் ப்ரஹ்மப் பட்டம் பெறுபவர்களாலும் சேவிக்கப் படும் எல்லை யற்ற
கருணையின் வடிவாகிய ஸ்ரீ பாதுகை எம்மை காப்பாற்ற வேண்டும் –

—————————————————————————-

த்ருவம் இந்த்ரிய நாக ஸ்ருங்கலா வா நிரய த்வார நிவாரண அர்க்களா வா
அநபாய பத ஆதிரோஹிணீ வா மம ரங்கேச விஹார பாதுகே த்வாம்—-65-

மாமா த்ருவம் இந்த்ரிய நாக ஸ்ருங்கலா வா -புலனாகிய யானைகளின் சங்கிலியா
நிரய த்வார நிவாரண அர்க்களா வா-நன்றாக வாசல் அடைக்கும் தாழ்பாளோ
அநபாய பத ஆதிரோஹிணீ வா -ஸ்ரீ வைகுண்டம் -அழிவில்லாத பரமபதம் -படிக்கட்டா -ஏணியா
மம ரங்கேச விஹார பாதுகே த்வாம்-எனது அரங்கனின் விளையாட்டுக்கு உபகரணமாகவா

ஸ்ரீரங்கநாதனின் லீலைகள் அனைத்திலும் பங்கு பெறும் பாதுகையே! எனது இந்த்ரியங்கள் யானை போன்ற வலுவுடன்
என்னை இழுக்கும் போது, அவற்றை அடக்கும் சங்கிலி போன்று நீ உள்ளாய். நான் நரகத்தின் வாசல் நோக்கிச் செல்லாத வண்ணம்,
அந்த நரகத்தின் வாசல் கதவின் தாழ்ப்பாளாக நீ உள்ளாய். மேலும், அழிவே இல்லாத ஸ்ரீவைகுண்டத்திற்கு
நான் சுலபமாக ஏறிச் செல்ல உதவும் ஏணியாகவும் நீ உள்ளாய்.

நரகம் செல்வதற்கு, பாவங்கள் பல செய்வதே காரணமாக விடுகிறது. இந்தப் பாவங்களுக்கான காரணம்
இந்த்ரியங்களை அதன் போக்கில் திரிய விடுவதே ஆகும். ஆக, முதலில் பாதுகைகள் நம்முடைய இந்த்ரியங்களை அடக்குகின்றன.
இதன் மூலம் பாவம் செய்வது தடுக்கப்படுகிறது. இதனையும் மீறி ஏதோ சில காரணங்களால் நரகம் செய்ய நேரிட்டாலும்,
பாதுகைகள் நரகத்தின் வாயிலில் நின்று, நம்மைத் தடுத்து விடுகின்றன.
இப்படியாக நாம் ஸ்ரீவைகுண்டம் செல்ல எளிய ஏணியாக பாதுகைகள் உள்ளன.

ஸ்ரீ பாதுகையே -கட்டுப்படாத என் இந்த்ரியங்களைக் கட்டும் சங்கிலியாக இருக்கிறாய் –
நரக வாசல் படிக்குத் தாழ்ப்பாளாக இருந்து கொண்டு அங்கு போக விடாமல் என்னைக் காக்கின்றாய் –
அதே சமயம் மோஷத்திற்கு ஏணியாய் இருந்து என்னை ஏற்றி விடுகிறாய்

ஆழ்வார் கடாஷம் பெற்றவர்க்கு பரமபதம் சித்தம் என்றதாயிற்று –

———————————————————————–

சரணாகத ஸார்த்த வாஹ சீலாம் ச்ருதி ஸீமந்த பத ப்ரஸாதந அர்ஹம்
அதிரங்கம் உபாஸ்மஹே முராரே: மஹநீயாம் தபநீய பாதுகே த்வாம்—-66-

சரணாகத -மஹா விசுவாசம் கொண்ட
ஸார்த்த -கூட்டங்கள்
வாஹ சீலாம் -வகித்து முன் நடத்தி செல்லும் தன்மை கொண்டவள்
ச்ருதி ஸீமந்த பத ப்ரஸாதந அர்ஹம்–எழுதாக் கிளவி -வேதம் -வகுடு பகுதி தான் ஸீமந்த பதம் –
உபநிஷத் -வேதாந்தம் -அலங்காரமாக இருக்கத் தகுதி படைத்தவள்
அதிரங்கம் உபாஸ்மஹே முராரே: மஹநீயாம் தபநீய பாதுகே த்வாம் –தங்க மயமான பாதுகையே-
உன்னை நேராக – ஸ்ரீ ரெங்க விமானத்தில் த்யானிக்கிறோம்

முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! வேதங்களுக்கு அலங்காரமாக உள்ள வேதாந்தங்களால்
பூஜிக்கத் தகுந்தபடி நீ உள்ளாய். நீ செய்வது என்ன? உன்னை அண்டும் அனைவரையும், பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்று,
அவர்களுக்குச் சரணாகதி ஏற்படும்படிச் செய்கிறாய். இப்படிப்பட்ட உன்னை ஸ்ரீரங்க விமானத்தில் நாங்கள் காண்கிறோம்.

தன்னிடம் வந்தவர்களை அன்புடன் பெரியபெருமாளிடம் அழைத்துச் சென்று, அவனுடைய ஸம்பந்தம் என்றும்
இருக்கும்படிச் செய்துவிடுகிறாள். ஆக, பாதுகை எப்போதும் பெரியபெருமாளின் ஸன்னதியிலேயே உள்ளாள்.

முரனை நிரசித்து அருளிய பெருமானின் பொன் மயமான ஸ்ரீ பாதுகையே –
எம்பெருமான் திருவடிகளை அடைவதையே பரம புருஷார்த்தமாக என்னும் மஹநீயர்களை
மோஷத்திற்கு அழைத்துப் போகும் குணத்தையே ஸ்வ பாவமாக உடையவளும்
ஸ்ருதி வேத மாதாவின் கிருஹத்துக்கு அலங்காரமாய் இருப்பவளும் ஆகிய உன்னை
ஸ்ரீ ரங்க விமானத்தில் த்யானம் செய்கிறோம் –

ஆழ்வார் வைபவம் சொல்லும்
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -நம்மை வழி நடத்தி செல்பவர்
என் நான் செய்கேன் –நீ தானே ஸ்வாமி
யாரே களை கண் -உனக்கே உரிய -அநந்யார்ஹ சேஷத்வம் -பார்த்தா பார்யை -ஸ்ரீ கௌஸ்துப மணி ஸ்தானீயம்
என்னை என் செய்கின்றாய் -உன் திரு உள்ளம் என் நினைந்து இருந்தாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
மற்றவர் கொடுத்தால் காலனைக் கொண்டு மோதிரம் செய்து அணிந்து கொள்வது போல் –
வாழும் சோம்பராக இருக்க வேண்டுமே –
அருளிச் செயல்களுக்கு வகுடு பகுதி -கண்ணி நுண் சிறுத்தாம்பு -நடுவில் -நமஸ் –
வாய்த்த திரு மந்திரத்தின் மத்யமாம் பதம் போல் –
அதுக்கு ஆழ்வாரே அலங்காரமாக இருக்கிறார் –
பாசுரம் தோறும் ஆழ்வார் பிரபாவம் தானே
ஸ்ரீ ரெங்கத்தில் ஸ்ரீ பாதுகா தேவியாகவே சேவிக்கிறோமே

————————————————————————

இஹ யே பவதீம் பஜந்தி பக்த்யா க்ருதிந: கேசவ பாதுகே நியுக்தா:
கத்யாம்ப திரோஹிதம் த்ருதீயம் நயநம் த்ரீணி முகாநி வா கிம் ஏஷாம்—-67–

இஹ யே பவதீம் பஜந்தி -இங்கே உன்னை வணங்குகிறார்கள்
பக்த்யா நியுக்தா:-பக்தியால் தூண்டப்பட்ட
க்ருதிந: -பக்திமான்கள்
கேசவ பாதுகே -கிலேசங்கள் போக்கும் கேஸா பாசம்
கத்யாம்ப -அம்பா தாயே சொல்லு
கிம் ஏஷாம்–அவர்களுடைய
த்ருதீயம் நயநம் -மூன்று கண்களும்
த்ரீணி முகாநி வா -மூன்று முகங்களும்
திரோஹிதம் -மறைந்தவாறு உள்ளன

விடுகதை போல் கவி நயம் மிக்கு அருளிச் செய்த ஸ்லோகம் –
வணங்கிய அளவிலே -இவ்வாறு அருளுவாள்

அழகான சுருண்ட தலைமுடி உடைய க்ருஷ்ணனின் பாதுகையே! இந்த உலகில் மிகுந்த புண்ணியம் செய்தவர்கள்,
உன்னைப் பக்தியுடன் வணங்கியபடி உள்ளனர்.
இவர்களுடைய மூன்றாவது கண், மற்ற மூன்று முகங்கள் மறைந்து உள்ளதோ?

பாதுகையை ஆராதிப்பவர்களுக்கு சிவன் என்ற பதவி, ப்ரம்மன் என்ற பதவி தேடி வரும்.
மூன்று கண்கள் என்பது சிவனையும், நான்கு முகங்கள் என்பது ப்ரம்மனையும் குறிக்கும்.
மூன்றாவது கண் என்றும், வெளியில் தெரிவது தவிர மூன்று தலைகள் என்பதும் இப்பதவிகளைக் குறிக்கும்.
அந்தப் பதவிகளை அடைய எந்த அளவு உயர்ந்திருக்க வேண்டுமோ, அதே அளவு உயர்ந்தால் மட்டுமே
பாதுகை மீது பக்தி உண்டாகும் என்று கருத்து.

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஸ்வாமியான எம்பெருமானின் ஸ்ரீ பாதுகையே –
அன்னையே
பக்தி ஸ்ரத்தையுடன் உன்னை தியானம் செய்யும் பாக்ய சாலிகள்
பிரமன் ருத்ரன் இவர்களுக்கு சமமாக இங்கேயே விளங்குகிறார்கள் –
சமமான பட்டத்தை இங்கேயே பெறுகிறார்கள் –

ஆழ்வார் பரமாக
வைஷ்ணவானாம் ஷாம்பு -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரேஷ்டர்
நான்முகன் -மகனைப் போல் கொள்வார் –

————————————————————————–

மதுவைரி பரிக்ரஹேஷு நித்யம்
க்ஷமயா த்வம் மணி பாதுகே ஸமேதா
தத் அபி க்ஷமஸே ந கிம் பரேஷாம்
த்ரிதஸாதீஸ்வர சேகரே நிவேசம்—-68-

மதுவைரி பரிக்ரஹேஷு -நாராயணன் சொத்துக்களுக்கும்
நித்யம்-எப்பொழுதும்
க்ஷமயா த்வம் மணி பாதுகே ஸமேதா–பூமியுடனும் சேர்ந்து பொறுமையுடன் விளங்கி உள்ள நீயே
தத் அபி -அப்படி இருந்தாலும்
க்ஷமஸே ந -ஒன்றை மட்டும் பொறுக்காமல்
கிம் பரேஷாம்-வேறே ஒரு உடமைகளை தவிர்த்து
த்ரிதஸாதீஸ்வர சேகரே நிவேசம்-தேவர்கள் தலையில் அமர த்வரை -துடிப்புடன் இருக்கிறாயே

பொறுமை –பூமா தேவி உடன் தொடர்பு பாதுகா தேவிக்கு மட்டும் தானே —
ஒரு விஷயம் மட்டும் பொறுக்க மாட்டாள் மற்ற ஆபரணம் நம்-தேவர் தலையில் தங்க பொறுக்காமல் -தானே தங்கும்படி இருப்பவள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு தானே வேண்டும்
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்

மது என்ற அசுரனை அழித்த பெரிய பெருமாளின் பாதுகையே! அப்படிப்பட்ட பெரியபெருமாள் உபயோகப்படுத்தும்
அனைத்து விதமான பொருள்களிலும் நீயே மிகவும் பொறுமை உடையவளாக உள்ளாய். இவ்வாறு இருந்தாலும்,
தேவர்கள் தங்கள் தலையில் உன்னைத் தவிர வேறு எதனை ஏற்றுக் கொண்டாலும் நீ ஏன் பொறுத்துக் கொள்ள மறுக்கிறாய்?

பாதுகையைத் தங்கள் தலைகளில் ஏற்றுக் கொண்ட தேவர்கள், தங்கள் தலையில் க்ரீடம், வெண்குடை
போன்றவற்றை ஏற்க மாட்டனர். இதன் காரணம், பாதுகை அந்தச் செயலைப் பொறுக்காது என்பதால் ஆகும்.

ஸ்ரீ மணி பாதுகையே –
எம்பெருமானுக்கு உபயோகப்படும் பொருட்களுக்குள் நீயே பொறுமை மிக்கவள் –
தேவ ஸ்ரேஷ்டர்களும் உன்னை மட்டுமே சிரசில் வகிக்கிறார்கள்
மற்ற வஸ்துவைத் தரித்தால் உனக்குப் பொறுப்பதில்லை –

ஆழ்வார்
அடியார்களுக்குள் பொறுமை மிக்கு
துடிப்பு -இனி இனி -இருபதின் கால்
கூவிக் கொள்ளும் காலம் குருகாதோ
32 வருஷங்கள் -பொதுவாக சொல்வார்
35 பிரபன்ன அம்ருதம் சொல்லும்
அடியார் தலைகளில் -சடாரி ரூபத்தில் இவர் தானே அணி கலனாக அருள்கிறார் –

———————————————————————–

த்விதயம் ப்ரதியந்தி ரங்கபர்த்து: கதிசித் காஞ்சந பாதுகே சரண்யம்
அபயாந்விதம் அக்ரிமம் கரம் வா பவதீ சேகரிதம் பதாம்புஜம் வா—69-

த்விதயம் சரண்யம் ப்ரதியந்தி -இரண்டு விஷயங்களை அபாயமாக எண்ணுகிறார்கள்
ரங்கபர்த்து: கதிசித்
காஞ்சந பாதுகே -பொன் மயமான ஸ்ரீ பாதுகா தேவி
அபயாந்விதம் அக்ரிமம் கரம் வா -அபய ஹஸ்தம் ஓன்று புகலிடம்
பவதீ சேகரிதம் பதாம்புஜம் வா-உனக்கு தலை அணிகலன் -திருவடித் தாமரைகள்
உதறி விட வாய்ப்பு -கை க்கு உண்டே
திண் கழல் -பிராட்டியும் அவனும் கைவிட்டாலும்
அடி உதவுவது போல் அன்னான் தம்பி உதவார்

தங்கத்தால் இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகில் உள்ள புண்ணியம் நிறைந்தவர்கள் செய்வது என்ன?
அபய முத்திரை காணபிக்கும் நம்பெருமாளின் திருக்கரம், உன்னால் அலங்காரம் செய்யப்பட்ட அவனது தாமரை போன்ற திருவடிகள் –
இந்த இரண்டையும் எப்போதும் வணங்கியபடி உள்ளனர். இதனால் தங்கள் கவலைகளை மறந்து அவர்கள் உள்ளனர்.

நம்பெருமாளின் வலது திருக்கரமானது “அஞ்சேல்” என்று அபய ஹஸ்தத்துடன் உள்ளது.
அவனது திருவடிகளோ, அதனை அடைந்தவர்களை நழுவ விடாமல் உள்ளது.
இந்த இரண்டையும் பற்றுபவர்கள், எதனைக் குறித்தும் கவலை கொள்வதில்லை.

பொன் மயமான ஸ்ரீ பாதுகையே மகான்கள் உன்னால் வகிக்கப்படும் பெருமாள் திருவடி –
அபய முத்திரை காட்டும் திருக்கை
இவை இரண்டில் ஒன்றே நல்ல கதி அடைய நிச்சய உபாயம் எனக் கவலை யற்று இருக்கிறார்கள் –

அபயஹஸ்தம் கையில் கொண்ட நம்பெருமாளை
நம்மாழ்வாரும்
நமக்குத் தஞ்சம்
தீர்ந்த அடியாரை அவன் கைக் கொள்ளுவான்
கஷ்டப்பட்டால் மோக்ஷம்
இஷ்டப்பட்டால் மோக்ஷம் ஆழ்வார் -ஆசை ஒன்றே வேண்டும் –
பயன் பாங்கு இல்லாரையும் -அதிகாரம் இல்லாதவருக்கு இவரே

——————————————————-

பரதாஸ்வஸநேஷு பாத சப்தம் வஸுதா ஸ்ரோத்ர ஸமுத்பவ: முநீந்த்ர:
படதி த்வயி பாதுகே ததஸ் த்வம் நியதம் ராம பதாத் அபிந்ந பூமா—-70-

பரதாஸ்வஸநேஷு பாத சப்தம் -அயோத்யா மக்களை ஆசுவாசப்படுத்த பாதுகை சப்தம் இல்லாமல் பாத சப்தமே பிரயோகித்து
தனக்கும் மேலாக -கோவிந்தராஜன் வியாக்யானம்
ஆர்ய பாத அபேத பாவனை
திருவடி முடி சூட்டு படலம் -திருவடி நிலை முடி சூட்டு படலம் பேர் இல்லையே
வஸுதா ஸ்ரோத்ர ஸமுத்பவ: முநீந்த்ர:–பூமிதேவி காது-புற்று -வால்மீகம் -தோன்றிய முனி
படதி த்வயி பாதுகே -அருளிச் செய்தபடி
வால்மீகி –115-16-ஆர்ய பாதவ் -நடந்தவற்றை சொல்பவர் -கவி நயத்துக்காக இல்லை -பரதன் சொன்ன வார்த்தை
ஆப்யாஂ ராஜ்யே ஸ்திதோ தர்மஃ பாதுகாப்யாஂ குரோர்மம৷৷2.115.16৷৷

க்ஷிப்ரம் at once, சத்ரம் royal parasol, தாரயத you may hold,
இமௌ these, ஆர்யபாதௌ as exalted feet of my brother, மதௌ accepted,
மம குரோஃ my esteemed brother’s, ஆப்யாஂ பாதுகாப்யாம் with these sandals,
ராஜ்யே in the kingdom, தர்மஃ righteousness, ஸ்திதஃ is established.
உவமைக்கு கம்பன்
திருவடியே -ஆச்சார்யராக இன்றும் திரு ஆராதனம் செய்கிறோம் –
பாதுகை வேறே இல்லை -திருவடி வேறே இல்லை-அவர் இல்லாமல் திருவடி இல்லையே –
ததஸ் த்வம் -நீ நியதம் ராம பதாத் அபிந்ந பூமா-எப்பொழுதும் வேறு பட்டவள் அல்லள்

பாதுகையே! புற்றில் இருந்து தோன்றிய வால்மீகி மஹரிஷி, இராமாயணத்தில் பரதன் மக்களைச் சமாதானப்படுத்தக்
கூறிய சொற்களில், உன்னைப் பற்றிக் கூறும்போது திருவடி என்ற பதத்தையே பயன்படுத்துகிறார்.
இதன் மூலம் உனக்கும் இராமனின் திருவடிகளுக்கும் உள்ள பெருமைகளில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்று புரிகிறது.

பரதன் மக்களிடம், “இந்தப் பாதுகைகளை இராமனின் திருவடிகளாகவே எண்ணவேண்டும்”, என்றான்.
இதன் மூலம் பாதுகைக்கு இராமனின் திருவடிகளுக்குச் சமமான பெருமை உள்ளது என்று அறியலாம்.

ஸ்ரீ பாதுகையே
ஸ்ரீ பரத ஆழ்வான் எம்பெருமான் திருவடிக்குப் பதிலாக உன்னை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்து
திருவடிக்கும் உனக்கும் பெருமையில் பேதம் இல்லை என்பதைக் காண்பித்தார் –
அதனால் பெருமாள் திருவடியின் பெருமைக்கு உன் பெருமை குறைந்தது அன்று –

ஆழ்வார்
பெருமாள் பற்றிய பதங்கள் ஆழ்வாரையே குறிக்கும்
மதுரகவி நிலை —
திண்ணன் வீடு –2-2-3–மாறனில் மிக்கு ஓர் தேவும் உளதோ –
மால் தனில் -ஆழ்வார் திரு உள்ளம் –
சேமம் குருகையோ –தோள் இரண்டா நான்கா –சொல்லும்படி பெருமை உமண்டே
திருக்குறுங்குடி தாமே அன்றோ

———————————————————————————-

மகுடேஷு நிவிச்ய திக்பதீநாம் பதம் ஏவ ப்ரதிபத்ய தைத்ய ஹந்து:
பரி ரக்ஷஸி பாதுகே பதம் த்வம் க்வநு பித்யேத கரீயஸாம் ப்ரபாவ:—-71-

மகுடேஷு நிவிச்ய திக்பதீநாம் -திகபாலர்-தேவர்களுக்கு உப லக்ஷணம் -கிரீடத்தை மேல் அமர்ந்து
பதம் ஏவ ப்ரதிபத்ய தைத்ய ஹந்து:-தனியார் அசுரர் அழிக்கும் அவன் திருவடியில் நிலை பெற்று பாதம் காத்து
பரி ரக்ஷஸி பாதுகே பதம் த்வம் -நன்கு காக்கிறாய்
பதவியைக்காக்கும் பாதுகை பாதத்தையும் காக்கும் -மேலே இருந்தாலும் கீழே இருந்தாலும் தனது நிலை மாறாமல்
க்வநு பித்யேத கரீயஸாம் ப்ரபாவ:-பெரியோர் இயல்பு எப்படி மாறும் -என்று காட்டி அருள்கிறாய் –

பாதுகையே! இந்திரன் முதலான எட்டுத் திக்கிலும் உள்ள பாலர்களின் தலையில் இருந்தபடி அவர்களின்
பதவிகளை நீயே காப்பாற்றுகிறாய். அசுரர்களை வதம் செய்யும் பெரியபெருமாளின் திருவடிகளில் நீ அமர்ந்து கொண்டு,
அந்தத் திருவடிகளின் பெருமைகளையும் நீயே காப்பாற்றுகிறாய்.
உன் போன்ற பெரியோர்கள், அனைவரிடத்திலும் ஒன்று போன்று அல்லவா இருப்பார்கள்?

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பதிலிருந்து, பாதுகைகளைத் தலைகளில் ஏற்கும் தேவர்களின் பதவியைக் காப்பது வரை,
பாதுகையானது ஒரே போன்று செயல்படுகிறாள்.
பெரியவர்கள் எப்போதும் அனைவரிடத்திலும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழகுவது புதுமையா என்ன?

ஸ்ரீ பாதுகையே -இந்திராதி தேவர்கள் உடைய பட்டத்தைக் காப்பாற்றுவதுடன் எம்பெருமான் திருவடியையும் காப்பாற்றி
அவனுடைய பரம் பொருள் என்ற பட்டத்தையும் அல்லவா காப்பாற்றுகிறாய் –
பெரியவர்கள் எங்கும் ஒரே மாதிரியாகத் தானே இருப்பார்கள்-

ஆழ்வார்
சடாரி ரூபமாக நம்மை சேஷ பூதர் பட்டம் காத்து
பாதுகையாக இருந்து சேஷித்வம் காட்டி
இரண்டு இடங்களிலும் பதம் ரக்ஷணம் இங்கும் –

————————————————————–

ஜகதாம் அபி ரக்ஷேண த்ரயாணாம் அதிகாரம் மணி பாதுகே வஹந்த்யோ:
யுவயோ: பரி கர்ம கோடி லக்நம் சரண த்வந்தம் அவைமி ரங்கபர்த்து:—-72–

ஜகதாம் அபி ரக்ஷேண த்ரயாணாம் -மேல் பூமி கீழ் இப்படி மூன்றும் -14 லோகங்களையும் நன்றாக ரக்ஷணம்
அதிகாரம் -உரிமையும் ஆற்றலும் கொண்ட
மணி பாதுகே -ரத்தினங்கள் இழைக்கப்பட்ட பாதுகா தேவி
வஹந்த்யோ:-வஹித்து
ராஜாவுக்கு கிரீடம் இருக்க வேண்டுமே
திரு மார்பில் -பிராட்டி திருவடி ரேகை பதித்ததால் தானே நாராயணான் ஆவார் -பட்டர்
யுவயோ: -இரட்டை பாதுகைக்கு மேல் இரட்டை கிரீடம்
பரி கர்ம கோடி லக்நம் சரண த்வந்தம் ரங்கபர்த்து—தாமரை இணை அடிகள் தானே கிரீடமான ஆபரண கோடியில் சேர்ந்து இருப்பதாகவே
அவைமி–நான் எண்ணுகிறேன்

உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! மூன்று உலகங்களையும் காப்பாற்றுபவள்
என்ற பெருமை உடையவளாக நீ உள்ளாய்.
நீ நம்பெருமாளின் இரண்டு திருவடிகளையும் ஆபரணம் போன்று உனது தலையில் சூட்டியுள்ளாய் போலும்.

இங்கு யுவயோ: என்று பன்மையில் கூறுவது காண்க. இதன் காரணம் இரண்டு பாதுகைகளையும் கூறுகிறார்.
ஒரு நாட்டு அரசனுக்கு அவனது மணி மகுடம் பாரமாக இருக்குமா?
அது போன்று, மூன்று உலகங்களுக்கும் அரசி போன்று உள்ள பாதுகைக்கு, பெரிய பெருமாளின் திருவடிகள் பாரம் அல்லவே.

ஸ்ரீ மணி பாதுகையே மூன்று உலகங்களையும் காப்பாற்றும் உனக்கு பெருமாள் திருவடிகள்
ஆபரணங்களாக அமைந்தன என்று நினைக்கிறேன் –

ஆழ்வார்
மூன்று வித ஜீவாத்மாக்களுக்கும் இவரே தலைவர்
நித்யர் முக்தர் பத்தர்
வையம் மன்னுயிராக உலகம்–என்கிறபடி உலகம் என்றாலே உலகில் உள்ளோரையே குறிக்கும்
விஷ்வக் சேனர் அம்சமே ஆழ்வார் -நித்யர்களுக்கு தலைவர் ‘
குலபதி -இவரே
யுவாயோ இரண்டு தன்மை தானாகவும் பிராட்டி திசையிலும்
திருவடிகள் சென்னியில் -அடிச்சியாம் தலையில் -உண்டே

———————————————————–

பதரக்ஷிணி வத்ஸலா நிகாமம்
ரகுவீரஸ்ய பத அம்புஜாதபி த்வம்
யத் அஸௌ பரதஸ் த்வயா அம்சவத்வாந்
ந புநஸ் தாத்ருஸம் நாந்வபூத் வியோகம்—-73-

பதரக்ஷிணி -திருவடியை ரக்ஷிக்கும்
வத்ஸலா -வாத்சல்யம் மிக்கு -நாம் கன்று -கறவா மட நாகு தன கன்று உள்ளினால் போல் மறவாடகு உன்னை அழைக்கின்றேன் கலியன்
தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் நினைக்கச் செய்தாயே
நிகாமம்=மிகவும் வாத்சல்யம்
ரகுவீரஸ்ய பத அம்புஜாதபி த்வம்–பெருமாள் திருவடித் தாமரைகளை விடவும் -நீயே கொண்டு உள்ளாய்
யத் -அதனாலேயே
அஸௌ பரதஸ் த்வயா அம்சவத்வாந்-உன்னாலே பேர் பெற்றவனாக பரதாழ்வான்
ந புநஸ் தாத்ருஸம் நாந்வபூத் வியோகம்–முன்பு போல் வியசனப்படாமல் இருக்க முடிந்ததே
குழந்தை -பார்க்கும் பொருள்களுக்கு ஆசைப்படும்
தாயார் இல்லா விட்டால் அம்மா வேண்டும் அழும்
இதே நிலையில் பரதாழ்வான் இருந்தான்
தாயே கிடைத்தது போல் அன்றோ பாதுகா தேவி மகிழ்ந்தான் -ஆகவே இந்த ஸ்லோகம்

பெரிய பொருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தாமரை போன்று உள்ள இராமனின் மென்மையான
திருவடிகளைவிட உனக்கு மக்கள் மீது ப்ரியம் அதிகம் போலும். அதனால்தான் பரதன் உன்னை ஏற்று வந்த பின்னர்,
இராமனைப் பிரிந்த துன்பத்திலும், நீ அருகில் உள்ளதால், அந்தத் துன்பத்தை மறந்தான் போலும்.

திருவடிகளைக் காட்டிலும் வாத்ஸல்யம் அதிகமாக உள்ளது பாதுகையிடமே என்றார்.
பரதன் இராமனை எத்தனையோ கெஞ்சிய போதிலும், இராமனும் அவனது திருவடிகளும் இரக்கம் கொள்ள வில்லை.
ஆனால், பரதன் அழைத்தவுடன் பாதுகைகள் அல்லவோ ஓடி வந்தன?
அயோத்தி மக்கள் மீதும், பரதன் மீதும் பாதுகைக்கு இருந்த வாத்ஸல்யம் காரணமாக அல்லவா பாதுகைகள் அயோத்தி திரும்பின?
பாதுகைகளுக்குத் திருவடிகள் மீது பற்று அதிகமே; இருப்பினும் நாட்டு மக்கள் மீது பாதுகைகளுக்கு மேலும் பற்று அதிகம் எனலாம்.

ஸ்ரீ பாதுகையே -தாயைப் பிரிந்த குழந்தை போலே ஆராத் துயரம் அடைந்த ஸ்ரீ பரத ஆழ்வானை-
ஜனங்கள் இடத்தில் எம்பெருமான் திருவடிகளை விட நீ கொண்ட ப்ரீதியால் சந்தோஷப் படுத்தி விட்டாய்
பெருமாள் விட ஆச்சார்யர்களுக்கு ஆஸ்ரிதர்கள் இடம் ப்ரீதி அதிகம் என்றவாறு
பெருமாள் திருவடிகளை விரும்பி அவை கிடைக்காமல் பிரிந்து வருந்தின ஸ்ரீ பரத ஆழ்வானை அன்பு கொண்ட நீ உடன் இருந்து
அந்த பிரிவு தெரியாமல் காப்பாற்றி அருளினாய் -திருவடிகளை விட நீயே வாத்சல்யம் மிக்கவள் –

ஆழ்வார்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
ஆச்சார்யர் அருள்
பெருமாள் திருவடிகளை விட
மதுரகவி -பகவத் விரகம் தீர்ந்து -வடக்கே யாத்திரை -தென் திசை தேஜஸ் பார்த்து
ஆழ்வார் சேவிக்கப் பெற்றதும் முந்திய விரகம் தீர்ந்தாரே
பரதாழ்வானைப் போலவும்
தங்கம் கிட்டியதும் வெள்ளியைத் தேடுவார் உண்டோ

—————————————————————————–

அபிகம்ய முகுந்த பாதுகே த்வாம் அபநீத ஆதபவாரணை: சிரோபி:
ஹரிதாம் பதய: துராபம் அந்யை: அநக சாயம் அவாப்நுவந்தி போகம்—-74-

அபிகம்ய முகுந்த பாதுகே த்வாம் -உன்னை அடைந்து
அபநீத ஆதப வாரணை: -வெண் கொற்றக் குடைகளை விட்டு விட்டு -அபிமான பங்கமாய் வந்து –
சிரோபி:- தங்கள் தலைகளை உன்னிடம் சமர்ப்பித்து
ஹரிதாம் பதய: -திக்குகளுக்கு -பதிகள் -அஷ்ட திக் பாலகர்கள்
துராபம் -எளிதில் அடைய முடியாத
அந்யை: அநக சாயம் -தூய ஒளி மிக்க
அவாப்நுவந்தி போகம்-மோக்ஷம் அடைகிறார்கள்
பிரபாவம் சொல்லுவதில் நோக்கு இந்த பந்ததியில் –

முகுந்தனாகிய க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னைத் தனது திருவடிகளில் அணிந்தபடி திருவரங்கன் சஞ்சாரம் செய்யும் போது,
அவன் பின்னே, தங்களது வெண் கொற்றக் குடைகள் வேண்டாம் என்று ஒதுக்கிய இந்த்ரன் முதலானவர்கள் வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்குக் கிட்டுவது என்ன? மற்றவர்களால் எளிதில் அடைய இயலாததும், தோஷங்கள் ஏதும் இல்லாததும்,
ஒளியை உடையதும் ஆகிய உனது நிழலை அடைந்து, சுகம் பெறுகின்றனர்.

நம்பெருமாள் திருவீதி சஞ்சாரம் செய்யும்போது, அவன் பின்னே வெயில், மழை என்று குடைகள் பிடித்தபடி செல்வது,
க்ரீடம் முதலானவை அணிந்து செல்வது ஆகியவை கூடாது.
அவ்விதம் சென்றால் மட்டுமே பாதுகைகளின் நிழலில் நம்மால் ஒதுங்க இயலும்.

ஸ்ரீ பாதுகையே இந்திராதி தேவர்களும் பெருமாளுடன் கூட எழுந்து அருளும் போது உன் நிழலையே அனுபவித்து
குடையின் நிழலை ஆஸ்ரயிப்பது இல்லை –
ஆச்சார்யனின் திருவடி நிழலே நமக்கு ரஷை என்றவாறு –

ஆழ்வார்
வணங்குபவர் அஹங்காரங்களை விட்டு
மற்றவர்களால் அடைய முடியாத -இங்கு -பெருமாளை அடைந்தாலும் பெற முடியாத
பாகவத சேஷ பூதர் ஆவோம்
வியன் மூ விலகும் பெறினும் போய் -இஹ லோக ஐஸ்வர்யம்
தானே தானே ஆனாலும் -கைவல்ய நிஷ்டை
புயல் மேக வண்ணன் -திருவடிக்கீழ் கைங்கர்யம் –
சயமே அடிமை தலை நிற்பார் திருவடிக்கீழ்
சாயம் -ஜெயம் –
ஸ்வயமே -இயற்கையான
இம்மையே பயனே இன்பம் நான் பெற்றது-இங்கேயே பெற்றேன் —
உறுமோ பாவியேனுக்கு -கிடைக்குமோ
பாகவத கைங்கர்யம் ஒப்பிட இத்தைச் சொன்னதே மிக பாபம் –
வசிஷ்டர் சண்டாளரை விட உயர்ந்தவர் என்றால் போல் அன்றோ இது –

————————————————————————–

அபஹாய ஸிதாஸிதாந் உபாயாந்
அரவிந்த ஈக்ஷண பாதுகே மஹாந்த:
த்வத் அநந்யதயா பஜந்தி வ்ருத்திம்
த்வத் அஸாதாரண போக ஸாபிலாஷா:—-75-

அபஹாய ஸிதாஸிதாந் உபாயாந்-சந்தேகத்துக்கு இடம் -கர்மா யோகாதிகளை விட்டு விட்டு
அரவிந்த ஈக்ஷண பாதுகே -தாமரைக்கண்ணன் பாதுகா தேவியே
மஹாந்த:மஹான்கள்
த்வத் அநந்ய தயா பஜந்தி வ்ருத்திம்-உன்னைத்தவிர வேறே கதி இல்லை என்ற நிலையை அடைந்து
சரணாகதி செய்து என்றவாறு –
த்வத் அஸாதாரண போக ஸாபிலாஷா-உனக்கு மட்டுமே உரிய போகம் -திருவடியை விட்டுப் அறியாத –
அதே நிலையை விரும்பி –
உன் அடிக்கீழ் அமர்ந்து -உடனாய் மன்னி –

தாமரை போன்று அழகாகவும் சிவந்தும் உள்ள கண்களைக் கொண்ட பெரியபெருமாளின் பாதுகையே!
கர்மயோகம் போன்ற உபாயங்கள், மோக்ஷம் முதலான பலன்களை அளிக்கவல்லதா என்ற ஐயம் உள்ளது.
இதனால் பெரியவர்கள் இவற்றைக் கைவிடுகின்றனர். உனக்கு மட்டுமே அடிமையாக உள்ள சுகம் அனுபவித்து,
உனது கைங்கர்யத்தில் மட்டுமே ஆசை கொண்டு, வேறு யாரையும் நினைக்காமல் உள்ள வைராக்யம் பெறுகின்றனர்.

எம்பெருமானை அடைய ஆசார்யனே வழி என்பதை இங்கே கூறுகிறார். பாதுகைகள் ஆசார்யனையே குறிக்கும் என்பதால்,
பாதுகையை அண்டி, அதற்குக் கைங்கர்யம் செய்யும்போது, மோக்ஷ உபாயம் தானே ஸித்திக்கிறது என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே -பெரியோர்கள் கர்மாதி உபாயாந்தரங்களில் தமக்குள்ள பலமின்மை காரணமாக
உன்னுடன் ஒன்றியே பகவத் பாத சம்ச்லேஷ போகத்தை விரும்பி நினைக்கிறார்கள் –

ஆழ்வார் பரமாக
மதுரகவி –
நாதமுனிகள்
ராமானுஜர்
ஆச்சார்ய அபிமானம் உத்தாராகம்
ப்ரபத்தியையும் விட்டுவிட்டு
திருவடிக்கீழ் குற்றேவல் விரும்பி
மாறன் அடி பணிந்து உய்ந்து -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே

————————————————————————

ப்ரணமந்தி ந வா விதே: விபாகாத் ய இமே ரங்க நரேந்த்ர பாதுகே த்வாம்
உபஜாதம் அநுத்தமாங்கம் ஏஷாம் உபயேஷாம் அபி சித்ரம் உத்தமாங்கம்—-76-

ப்ரணமந்தி -வணங்கினாலும்
ந வா -வணங்கா விட்டாலும்
விதே: விபாகாத் ய இமே -விதி -கர்ம மாறுதலாலே
ரங்க நரேந்த்ர பாதுகே த்வாம்–உன்னை
உபஜாதம் -அடைவது
அநுத்தமாங்கம் –இதை விட மிக உயர்ந்தது இல்லாதது என்றும் தாழ்ந்தது என்றும் இதுக்கே இரண்டு அர்த்தங்கள்
வார்த்தை விளையாட்டு
ஏஷாம் -இந்த
உபயேஷாம் அபி -இரண்டு கோஷ்ட்டிகளுக்கும் கூட
சித்ரம் -ஆச்சார்யம்
உத்தமாங்கம்-தலைகளும்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தங்கள் கர்மபலன் காரணமாக உன்னைப் பலர் வணங்குகின்றனர்,
பலர் வணங்காமல் உள்ளனர். வணங்கியவர்களின் தலைகள் உயர்ந்தும், வணங்காதவர்களின் தாழ்ந்தும் போகின்றன.
இது என்ன ஒரு வியப்பான செயல்!

இங்கு அநுத்தமாங்கம் என்பது இரு பொருள்படும் – உயர்ந்த உடல் உறுப்பு, தாழ்ந்த உடல் உறுப்பு – என்பதாகும்.
இதன் கருத்து என்ன? தலையானது உடலிலேயே மிகவும் உயர்ந்த உறுப்பாகும்.
ஆனால், அது தன்னைத் தாழ்த்திக் கொள்ளவில்லை என்றால், தாழ்ந்த மற்ற உறுப்புக்களைவிட தாழ்ந்துவிடும்.

எம்பெருமானின் திருவடி நிலைகளை (சடாரி) ஏற்கும்போது தலை சற்றே சாய்ந்தாலும், அது தற்காலிகமானதே;
சடாரி பெற்ற பின்னர் மற்றவர்களைவிட உயர்ந்த நிலை உண்டாகிவிடும்.
ஆனால், அப்போது தலை வணங்கவில்லை என்றால், அதன் பின்னர் குனிந்த தலை நிமிர இயலாமல் போகும்.

ஸ்ரீ பாதுகையே -உன்னை வணங்கியவர் உன்னை வணங்காதவர் இருவருடைய தலையும் அநுத்த மாங்கம் ஆகிறது –
இது விந்தை அன்றோ -வணங்கியவர் தலை அநுத்த மான்கள் -தன்னை விட மேலான அங்கம் வேறு இல்லாத படி உயர்ந்து உள்ளதால்
வணங்காதவர் தலை உத்த மாங்கம் ஆவது இல்லை -தாழ்ந்ததாகிறது என்றபடி –
இரண்டும் அநுத்த மாங்கம் ஆவது விந்தை யன்றோ –

ஆசார்யரை ஆஸ்ரயித்தவன் உயர்ந்த பதத்தை அடைகிறான் என்றபடி –
ஆழ்வார் பாரமாகவும் இந்த அர்த்தமே கொள்ளலாம்

—————————————————————————

தவ கேசவ பாதுகே ப்ரபாவ: மம துஷ்கர்ம ச நநு அநந்தஸாரே
நியமேந ததாபி பச்சிமஸ்ய ப்ரதமேந ஏவ பராபவம் ப்ரதீம:—77-

தவ கேசவ பாதுகே ப்ரபாவ: -உன்னுடைய பெருமை யும்
மம துஷ்கர்ம ச -என்னுடைய பாபமும்
நநு அநந்த ஸாரே-நிச்சயமாக எல்லை அற்றவையே
நியமேந ததாபி -அப்படி இருந்தாலும் நிச்சயமாக
பச்சிமஸ்ய -இரண்டாவது சொன்ன என்னுடைய பாபங்களுக்கு
ப்ரதமேந ஏவ பராபவம் ப்ரதீம-முதல் சொன்ன உனது பெருமையால் அவமானம் ஏற் படுகிறதே

அழகான கேசம் கொண்ட க்ருஷ்ணனின் பாதுகையே! உனது பெருமைகள் மற்றும் நான் செய்யும் பாவங்கள்
ஆகிய இரண்டிற்கும் எல்லை காண இயலாது. ஆயினும் முதலாவதாகக் கூறப்பட்ட உனது பெருமைகளின் மூலம்,
இரண்டாவதாகக் கூறப்பட்ட எனது பாவங்களுக்கு தோல்வி நிச்சயம் என்று கருதுகிறேன்.

பாதுகையால் முதலில் பாவங்கள் கழிந்து விடுகின்றன. அதன் பின்னர் மோக்ஷம் உறுதியாகிறது.
பாதுகைகள் ஆசார்யனாகவே கருதப்படுவதால், ஆசார்யனால் நமது பாவங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு,
அவராலேயே மோக்ஷ மார்க்கம் ஸித்திக்கிறது என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே உன் பெருமைக்கும் என் பாவத்துக்கும் எல்லை இல்லை –
ஆனாலும் உன் பெருமையால் என் பாவங்கள் நிச்சயமாய் அழிந்து விடுகின்றன –

ஆழ்வார் பெருமையால்
கண்டு -பாபங்களையே கண்டு
கொண்டு -ஏற்றுக் கொண்டு
பண்டை வல் வினை பாற்றி அருளினான் -மொத்த பாபங்களையும் போக்கி அருளினான்
பகவத் சேஷ பூதராகவே இருந்த அந்தப்பாபமே போக்கி -உரு மாறு அடையும்படி பாற்றி அருளினாரே
எண் திசையும் அறிய இயம்புவேன் -என்ன புகழ் ஆழ்வாருக்கு என்றால்
எனக்கு அனுக்ரஹம் பண்ணி இந்த பாபம் போக்கினதே அரிய செயல் –

——————————————————-

அஸ்த்ர பூஷணதயா ஏவ கேவலம் விஸ்வம் ஏதத் அகிலம் பிபர்த்தி ய:
அகிலம் ஏந மணி பாதுகே த்வயா ஸ: அபி சேகரதயா ஏவ தார்யதே-78-

அஸ்த்ர பூஷணதயா ஏவ -ஆயுதங்களாகவும் ஆபரணங்களாகவும்
கேவலம் -தனியாக ஒருவனாக
விஸ்வம் ஏதத் அகிலம் பிபர்த்தி ய:-ஸமஸ்த சேதன அசேதனங்களை
புருடன் மணி வரமாக -பொன்றா மூல பிரகிருதி மறு வாய்
மான் தண்டாகா -மஹான்
தெருள் நாந்தகம் -அஞ்ஞானம் உறை -சார்ங்கம் தாமஸ அஹங்காரம் பாஞ்ச ஜன்யம் சாத்விக அஹங்காரம் –
இந்திரியங்கள் சரங்கள் -பஞ்ச பூதங்கள் பஞ்ச தன்மாத்திரைகள் வனமாலை –
அகிலம் ஏந -ஸ்ரமமே இல்லாமல்
மணி பாதுகே த்வயா ஸ: அபி -அவனும் கூட
சேகரதயா ஏவ தார்யதே-உனது தலைக்கு ஆபரணமாக தாங்கப்படுகிறான்
உனது பிரபாவம் என்ன என்று சொல்வேன் –

உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பெற்ற பாதுகையே! பெரியபெருமாள் செய்வது என்ன?
இந்த உலகங்கள் முழுமையையும் தனது ஆயுதம் போன்றும், ஆபரணம் போன்றும் எந்தவிதமான சிரமமும் இன்றி தரிக்கின்றான்.
அப்படிப்பட்ட பெரியபெருமாளை நீயும் அதே போன்று, உனது தலையில் எந்தவிதமான சிரமமும் இன்றி,
மலர் போன்று வைத்துக் கொள்கிறாய்.

அனைத்து உலகங்களையும் பெரிய பெருமாள் சிரமம் இன்றித் தாங்குகிறான். அப்படிப்பட்ட அவனை,
நீ எந்த சிரமும் இன்றித் தாங்குகிறாய். இதன் மூலம் பாதுகைகள், உலகையும் சேர்த்துத் தாங்குகின்றன என்று கருத்து.
பெரிய பெருமாளை அண்டி இந்த உலகம் இருப்பது போன்று, அவன் பாதுகைகளை அண்டி இருக்கிறான் என்றும் கூறலாம்

எம்பெருமான் உலகங்கள் அனைத்தையும் அஸ்த்ரமாகவும் ஆபரணமாகவும் வகிக்கிறார்
ஸ்ரீ பாதுகையே அப்படிப்பட்ட பெருமாளை ஒரு சிரோ பூஷணத்தைப் போலே நீ அநாயாசமாகத் தாங்குகிறாய் –

ஆழ்வார்
பெரியவர்
புவியும் இரு விசும்பும் உன்னகத்தே
நீ என் செவியின் உள் புகுந்து

——————————————————

ராம பாத ஸஹ தர்ம சாரிணீம் பாதுகே நிகில பாத கச்சிதம்
த்வாம் அசேஷ ஜகதாம் ஈஸ்வரீம் பாவயாமி பரதாதி தேவதாம்—79-

ராம பாத ஸஹ தர்ம சாரிணீம் -ஸ்ரீ பெரிய பிராட்டியார் போல் ஸ்ரீ பாதுகா தேவியும் –
சரணாகத ரக்ஷணம் தர்மம் அனுஷ்ட்டிக்கும் படி தூண்டி
ஸ்ரீ பரத்தாழ்வான் -பிராது சிஷ்யன் தாசன் -சரணாகதன் -பலம் தப்பாதே
தேவர் கார்யப்பட்டால் தான் திரும்ப முடியாதே -ஸ்ரீ பாதுகா தேவி தான் இந்த தர்ம சங்கடம் –
உயர்ந்த ஒன்றைக் கொடுத்து அருளி -பணையம் வைப்பது போல் -அன்றோ -ஸஹ தர்ம சாரிணீ
பாதுகே நிகில பாதகச் சிதம்-மொத்தமான பாபங்களை சிதம் பண்ணி
த்வாம் அசேஷ ஜகதாம் ஈஸ்வரீம் -எல்லா உலகங்களுக்கும் ஈஸ்வரீ
பாவயாமி பரதாதி தேவதாம்–பரத -அதி தேவதாம் -ஆராத்ய தெய்வமாக திகழ்கிறாய் -மனஸால் தியானிப்போம் –

பாதுகையே! நீ பரதன் ஆராதனை செய்வதற்கு ஏற்ற இராமனின் பாதுகையாக உள்ளாய்.
உன்னை இராமன் எப்போதும் தனது திருவடிகளில் வைத்துள்ளான். அனைத்து பாவங்களையும் நீ
(இராமனின் தொடர்பு உள்ளதால்) போக்குகிறாய்.
இப்படியாக நீ இந்த உலகத்தின் எஜமானியான மஹாலக்ஷ்மி போன்று உள்ளாய்.

எம்பெருமான் எடுக்கும் திரு அவதாரங்களிலே அவனுடன் பெரிய பிராட்டியும் அவதரிப்பது வழக்கம் ஆகும்.
அவ்விதமாக அவள் தோன்றும் போது, இந்த உலகில் உள்ளவர்களின் பாவங்களை விலக்குவதும் வழக்கம் ஆகும்.
இதனையே பாதுகையும் செய்வதால், பாதுகைக்கு பெரிய பிராட்டியாரை உவமையாகக் கூறுகிறார்.

இங்கு ஒரு கேள்வி எழலாம் – பாதுகையை மஹா லக்ஷ்மியுடன் உவமித்துக் கூறியது சரியா? இது சரியே,
பாதுகையின் செயலானது பெரிய பிராட்டியின் செயலைக் காட்டிலும் உயர்ந்தே இருந்தது. எப்படி என்றால் –
அவனை விட்டுப் பிரியாதவர்கள் பெரிய பிராட்டியும் பாதுகையும் ஆவர். ஆனால், நாட்டு மக்களின் நலன் கருதியும்,
பரதன் மீது கொண்ட வாத்ஸல்யம் காரணமாக, இராமனைப் பிரிந்து பாதுகையன்றோ பரதனுடன் வந்தாள்?

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடிக்கு இணைந்து வாழும் தர்ம பத்நியாகவும் –
பாபங்களை முற்றும் போக்கித் தன்னை அணிபவர்களை எல்லாம்
உய்யச் செய்யும் ஸ்ரீ மகா லஷ்மீ போன்று உலகத்துக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
பரதனுக்குப் பர தேவதையுமான உன்னைத் த்யாநிக்கிறேன் –

ஆழ்வார்
கூடவே இருந்து சடாரியாக சரணாகதி ரக்ஷணம் பண்ண உதவி –
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தி
பண்டை வல் வினை பாற்றி அருளி உரு மாய்ந்து போம்படி
ஸமஸ்த லோக ஈஸ்வரீ
பரதனுக்கு -பாவம் ராகம் தாளம் -நாதமுனிக்கு ஆராத்ய தெய்வம் -ஆழ்வாரே அன்றோ –
ஆழ்வார் அருள் பெற்ற நாதமுனி அன்றோ –

—————————————————————–

சூடா கபால வ்யதிஷங்க தோஷம்
விமோச யிஷ்யந்நிவ விஷ்ணு பத்யா:
க்ருத ஆதர: கேசவ பாத ரக்ஷே பிபர்த்தி
பாலேந்து விபூஷணஸ் த்வாம்—80-

சூடா கபால வ்யதிஷங்க தோஷம்-மண்டை ஓட்டின் தொடர்பால் தோஷம் –
விமோச யிஷ்யந்நிவ விஷ்ணு பத்யா:—கங்கைக்கு போக்கும் திரு உள்ளம் பற்றி
க்ருத ஆதர: கேசவ பாத ரக்ஷே -உனது ஸம்பந்தத்தாலேயே
பாலேந்து விபூஷணஸ் த்வாம் பிபர்த்தி–சந்த்ர சேகரனுக்கு -உன்னைத் தாங்கி -தூய்மை கங்கைக்கும் சிவனுக்கும்-

அழகான கேசம் கொண்ட க்ருஷ்ணனின் திருவடிகளைக் காக்கின்ற பாதுகையே!
அழகான சந்திரனைத் தலையில் ஆபரணம் போன்று சூடியுள்ள சிவனின் தலையில்,
ப்ரம்மனின் அசுத்தமான மண்டை ஓடும் உள்ளது. இதனால் சிவனின் தலையில் உள்ள கங்கையும் அசுத்தமாகிறது.
இந்த அசுத்தத்தை நீக்கவே சிவன் உன்னைத் தனது தலையில் வைத்துக் கொண்டு மகிழ்வு கொள்கிறார் போலும்.

சிவன் தனது தலையில் பாதுகையை ஏற்றது எதற்காக? தான் ப்ரம்மனின் தலையைத் துண்டித்த பாவமானது,
பாதுகையைத் தரித்தால் நீங்கும் என்பதாலா? அல்ல. பின்னர் எதற்கு?
ப்ரம்மனின் மண்டை ஓடு சிவனின் தலைக்கு வந்து சேர்ந்தவுடன், அங்கிருந்த கங்கையானது தனது மனதில்,
“நாம் த்ரிவிக்ரமனின் திருவடி ஸம்பந்தம் பெற்றோம்.
அதனால் நம்மிடம் வருபவர்களின் பாவங்களை நீக்கலாம் என்று எண்ணியிருந்தோம்.
ஆனால், இவ்விதம் புதிய அசுத்தம் வந்துவிட்டதே”, என்று வருத்தம் கொண்டாளாம்.
இந்த வருத்தத்தை உணர்ந்த பாதுகையானது, அந்த வருத்தம் நீங்கும் விதமாக சிவனின் தலையில் அமர்ந்தாள் என்று கருத்து.

சிரசில் உள்ள கங்கையின் புனிதத் தன்மை ஜடா முடியுடன் கூடிய மண்டை ஓட்டுடன் சேர்ந்ததால் கெட்டு விடக் கூடாதே
என்று தானே பரமசிவன் உன்னைத் தன் தலையில் தரித்துக் கொள்கிறார் –

ஆழ்வார் பரம்
கபாலம் -தலைக்கனம் -அஹங்காரம் தோஷம் -பெருமாளுக்கு சேஷத்வ ஞானம் விஷ்ணு பதம் -தோஷம்
ஆழ்வார் அருளால் விமோசனம் -அடியேன் சேஷத்வ ஞானம் புரியும்படி அருளி –
சந்த்ர சேகரன் -பிறை சந்திரன் -தர்ம பூத ஞான விகாசம் உண்டாகி -நமக்கு

—————————————————————-

த்வயைவ நித்யம் மணி பாத ரக்ஷே
ராஜந்வதீ ஸ்ருஷ்டி: இயம் ப்ரஜாநாம்
ஸ்த்ரீ ராஜ்ய தோஷ ப்ரசமாய நூநம்
நிர்த்திஸ்யஸே நாத விசேஷணேந—-81-

த்வயைவ நித்யம் மணி பாத ரக்ஷே-உன்னாலே தானே எப்பொழுதும்
ராஜந்வதீ ஸ்ருஷ்டி: இயம் ப்ரஜாநாம்-நல்ல ராஜாவாக இந்த உலகம் -பிரபஞ்சம் முழுவதும் -கொண்டதாக ஆனது
ஸ்த்ரீ ராஜ்ய தோஷ ப்ரசமாய நூநம்-பெண் ஆள்வதை –
அநாயகம் பஹு நாயகம் சிஸூ நாயகம் -ஸ்த்ரீ நாயகம் -இவற்றை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்
நிர்த்திஸ்யஸே நாத விசேஷணேந-நாதனை கிட்டே அவனுடைய பாதுகையாக சொல்லப் படுகிறாய்

பொருள் – உயர்ந்த கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகமானது உன் மூலம் நல்ல
ஓர் ஆட்சியாளனைக் கொண்டுள்ளது. ஆனால் நீ இவ்வாறு இருந்தால் பெண் அரசாளும் ஸ்த்ரீ ராஜ்யம்
என்று குற்றம் சொல்லக்கூடும். அதனால்தான் உன்னைப் பெரியபெருமாள் திருநாமத்துடன் இணைத்துக் கூறுகிறார்கள் போலும்.

பொதுவாக இந்த உலகில் ஒரு பெண்ணைக் குறிப்பிடும்போது, “இன்னாரின் பத்தினி”, என்று கூறுவதே வழக்கமாகும்.
இதே போன்று இங்கு பாதுகையானது, “ரங்கநாத பாதுகை” என்று பெரியபெருமாளை முன்னிட்டுக் கூறப்படுவதை உணர்த்துகிறார்

ஸ்ரீ பாதுகையே இந்த உலகம் உன்னால் தான் சிறந்த அரசு உடையதாய் இருக்கிறது
ஒரு பெண் அரசியா என்கிற தோஷம் உண்டாக்கப் படாமல் இருக்கவே
பெருமாள் உடன் சேர்த்து -ஸ்ரீ ரங்க நாத பாதுகை என்று உன்னைக் குறிக்கிறார்கள் –

ஆழ்வார் வைபவம்
நல்ல ராஜாவாக -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -பெரியவர் இவரே -நீ பெரியவர் யார் அறிவார் –
மனைவி ஸ்தானம் -மணி வல்லி பேச்சு வந்தேறி அல்லவே
ஆச்சார்யர் -பெருமாளாக ஆசைப்பட மாட்டார்
அவன் கீதாச்சார்யன் ஆசைப்பட்டு குரு பரம்பரையில் இடம் பிடிக்க ஆசைப் பட்டான் அன்றோ

———————————————————–

பிபர்ஷி நித்யம் மணி பாதுகே த்வம்
விஸ்வம்பரம் தாம நிஜேந பூம்நா
தவ அனுபாவ: சுளகீக்ருத: அயம்
பக்தைஸ் அஜஸ்வரம் பவதீம் ததாநை:—82-

பிபர்ஷி நித்யம் மணி பாதுகே த்வம் விஸ்வம்பரம் தாம நிஜேந பூம்நா-உலகைத்தாங்கும் ஒளி மிக்க -பரஞ்சோதி
அவனையும் கூட -தன்னுடைய பெருமையாலேயே தாங்குகிறாய் அன்றோ
தவ அனுபாவ: சுளகீக்ருத: அயம் பக்தைஸ் அஜஸ்வரம் பவதீம் ததாநை:–உன்னுடைய பெருமை -உள்ளங்கைக்குள் அடக்கி –
எப்போதும் உன்னைத் தாங்கும் அடியார்களால் –
அடியார்கள் ஸ்ரீ பாதுகா தேவியை விட பெரியவர்
இதில் மட்டும் ப்ரபாவ பத்ததியில்
மாறாய தானவனை வள்ளுகிரால் கோளரி–வேறாக ஏத்தி இருப்பாரே வெல்லுமே
வெல்லும் மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் -போல் இந்த ஸ்லோகம் –

உயர்ந்த இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகம் முழுவதையும் தாங்கி நிற்கின்ற
பெரிய பெருமாளையே நீ தாங்குகிறாய். இப்படிப்பட்ட உனது உயர்ந்த பெருமை என்பது, உன்னைத் தங்கள்
தலைகளில் ஏற்றுக் கொள்ளும் பக்தர்களின் பெருமைக்கு முன்பாக, உள்ளங்கையில் அடக்கப்படும் அளவாகி விடுகிறது.

பாதுகைகள் நம்பெருமாளைத் தாங்கி நிற்பது கடினமே, அதனால் அவளுக்குப் பெருமை அதிகம் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆனால்,பாதுகைகளையும் தங்கள் தலைகளில் ஏற்பவர்கள், பாதுகைகள் மீது உள்ள நம்பெருமாளையும் சேர்த்துச்
சுமந்து நிற்கின்றனர் என்றல்லவா ஆகிறது? அப்படிப்பட்டவர்களின் பெருமையானது பாதுகைகளின் பெருமையைக்
காட்டிலும் உயர்ந்தது என்று கூறவேண்டும் அல்லவா?

ஸ்ரீ பாதுகையே எல்லா உலகத்தையும் தாங்கும் பரமனை நீ தாங்குகிறாய் -ஆகவே உன்னை எப்பவும் தனது சிரசில் தரிக்கும்
பக்தனின் பெருமை உனது பெருமையைக் காட்டிலும் உயர்ந்ததாகிறது –

ஆழ்வார்
பெரிய திருவந்தாதி –
அவரைத் தாங்கி நாம் பெரியவர்
மதுரகவி -மற்ற அவரைச் சிரித்து இருக்கும் பெரியவர் அன்றோ –

———————————————————————

பரஸ்ய பும்ஸ: பத ஸந்நிகர்ஷே
துல்ய அதிகாராம் மணி பாதுகே த்வாம்
உத்தம்ஸயந்தி ஸ்வயம் உத்தமாங்கை:
சேஷாஸமம் சேஷ கருத்ம தாத்யா:—-83-

பரஸ்ய பும்ஸ: பத ஸந்நிகர்ஷே–உயர்ந்த பரம புருஷன் -பெருமாள் -பெரிய ஆள் -திருவடி வாரத்தில்
துல்ய அதிகாராம் மணி பாதுகே த்வாம்–கைங்கர்யம் செய்வதில் -சமமான தகுதி படைத்த -ஸ்ரீ பாதுகா தேவியே
ஆனாலும் கூட
உத்தம்ஸயந்தி ஸ்வயம் உத்தமாங்கை:–தங்கள் தலையிலே உன்னைத் தாங்கி
சேஷாஸமம் சேஷ கருத்ம தாத்யா-பரிவட்டம் போல் -சேஷனும் கருத்மான் போல்வாரும்-

உயர்ந்த இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! பரம்பொருளான பகவானின் திருவடிகளின் கீழே
நீயும் ஆதிசேஷன், கருடன் முதலானோர்களும் ஒரே போன்றுதான் கைங்கர்யம் செய்து வருகின்றீர்கள்.
ஆயினும் ஆதிசேஷன், கருடன் போன்றவர்கள் உன்னைப் பரிவட்டம் போன்று தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றனர்.
இது உனக்குப் பெருமை அல்லவா?

பாதுகையானது நித்யஸூரிகளை ஒத்த கைங்கர்யமே எம்பெருமானுக்குச் செய்தாலும்,
அவர்களை விட இவளுக்கு ஏற்றம் உண்டு என்றார்.
இதனை, அவர்கள் தங்கள் தலையில் பாதுகையை ஏற்பதன் மூலமும் அறியலாம்.

ஸ்ரீ பாதுகையே ஆதி சேஷன் கருடன் விஸ்வக்சேனர் முதலிய நித்ய ஸூரிகளும் பரம புருஷனான எம்பெருமானின்
திருப் பதத்துக்கு இணையான உன்னை திருப் பரிவட்டம் போலே தங்கள் தலையிலே தூக்கி வைத்துக் கொள்கிறார்கள் –

ஆழ்வார்
மற்ற ஆழ்வார்களும் கைங்கர்யம்
ஆழ்வாரைத் தாங்கி -அருளப்பாடு
சேஷன் -காரி சுதன் கழல் சூடிய முடி ராமானுஜர்
கருத்மான் -பெரியாழ்வாரும்

—————————————————————————–

முகுந்த பாதாம் புஜதாரிணி த்வாம்
மோஹாத் அநுத்தம் ஸயதாம் ஜநாநாம்
மூர்த்நி ஸ்திதா துர் லிபயோ பவந்தி
ப்ரசஸ்த வர்ண அவளய: ததீயா:—-84-

முகுந்த பாதாம் புஜதாரிணி த்வாம்-உம்மை
மோஹாத் அநுத்தம் ஸயதாம் ஜநாநாம்-அறியாமையால் -தலைக்கு மேல் வைக்காமல் அவமதிப்பவர்களுக்கு
மூர்த்நி ஸ்திதா துர் லிபயோ பவந்தி-தலையில் இருக்கும் கெட்ட -எழுத்துக்கள் -ஆகும்
ப்ரசஸ்த வர்ண அவளய: ததீயா- சிறந்த முன் இருந்த தலை எழுத்து இப்படியாக மாறுமே

கீழே -51- கேட்ட தலை எழுத்தை நல்லதாக மாற்றுவதைச் சொல்லி
இங்கு வ்யதிரேகத்தால் அருளிச் செய்கிறார் –

க்ருஷ்ணனின் தாமரை போன்ற மென்மையாக உள்ள திருவடிகளைத் தாங்கும் பாதுகையே!
உன்னைத் தங்கள் தலையில் ஏற்பதால் நிகழும் நன்மை என்ன என்று தெரியாமல் சிலர்
தங்கள் தலையில் உன்னை ஏற்காமல், புறக்கணித்து விடுகின்றனர்.
அப்படிப் பட்டவர்களின் தலையில் உள்ள நல்ல எழுத்துக்கள் அனைத்தும் கெட்ட எழுத்துக்களாக மாறிவிடுகிறன.

அனைவரின் தலைகளில் நல்ல எழுத்துக்களும் உண்டு, தீய எழுத்துக்களும் உண்டு. நம்பெருமாள் செய்வது என்ன?
பாதுகையைத் தலையில் ஏற்காதவர்களின் நல்ல எழுத்தை மட்டும் தீய எழுத்தாக மாற்றி விடுகிறான்,
தீய எழுத்தை அப்படியே விட்டுவிடுகிறான்.

ஸ்ரீ பாதுகையே அறியாமையால் உன்னைத் தன சிரசில் வகிக்காதனுடைய தலையில்
நல்ல எழுத்து இருந்தாலும் அது கெட்ட எழுத்தாக மாறி விடுகிறது –

ஆழ்வார் பரமாகவும்
அபசாரம் படக் கூடாதே
ஆழ்வார்களும் அருளிச் செயல்களையும் –தாழ்வாக நினைப்பவர்கள் நரகில் விழுவார்கள் -மா முனிகள்

———————————————————————

பூமி: ஸ்ருதீநாம் புவநஸ்ய தாத்ரீ
குணை: அநந்தா விபுலா விபூத்யா
ஸ்திரா ஸ்வயம் பாலயிதும் க்ஷமா ந:
ஸர்வம் ஸஹா சௌரி பதாவநி த்வம்—85-

பூமி: ஸ்ருதீநாம் -வேதங்களுக்கு இருப்பிடம்
புவநஸ்ய தாத்ரீ-உலகம் காத்து
குணை: அநந்தா -எல்லை அற்ற குணங்கள்
விபுலா விபூத்யா-ஐஸ்வர்யங்களால் மிக்கு இருக்கிறாள்
ஸ்திரா ஸ்வயம் -நல்ல விஷயங்களில் உறுதி
பாலயிதும் க்ஷமா ந:-நம்மை ரஷிக்கத் தக்க
ஸர்வம் ஸஹா சௌரி பதாவநி த்வம்–குற்றங்களை பொறுத்து
இருப்படி ஏழு தன்மைகள் கொண்டு திகழ்கிறாய்

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ அனைத்து வேதங்களுக்கும் இருப்பிடம் ஆவாய்;
உலகம் முழுவதையும் ஆதரித்துக் காப்பாற்றுகிறாய்;தயை முதலிய பலவிதமான எல்லையற்ற குணங்களுக்கு இருப்பிடமாக உள்ளாய்;
ஐஸ்வர்யம் நிரம்பப் பெற்றவளாக உள்ளாய்; உனது இயல்பாகவே நன்மையான விஷயங்களில் உறுதியாக உள்ளாய்;
எங்களைக் காப்பாற்றுவதிலும், எங்கள் குற்றங்களைப் பொறுப்பதிலும் ஏற்றவளாக உள்ளாய்.

இந்த ஸ்லோகத்தில் கவிச்சிம்மத்தின் சொற்திறனை சற்று ஆராயலாம்.
இந்த ஸ்லோகத்தில் உள்ள பூமி, தாத்ரீ, அநந்தா, விபுலா, ஸ்திரா, க்ஷமா மற்றும் ஸர்வம்ஸஹா என்னும் பதங்கள் காண்க.
இவை அனைத்தும் பூமியின் வெவ்வேறு பெயர்கள் ஆகும். இதனை மிகவும் லாவகமாகக் கையாண்டதைக் காண்க.

ஸ்ரீ பாதுகையே நீ வேதங்களின் இருப்பிடம் -உலகனைத்தையும் காப்பாற்றுபவள் –
தயை முதலிய கல்யாண குணங்களால் எல்லை அற்றவள் -ஐஸ்வர்யம் மிக்கவள் –
சரணாகத ரஷணத்தில் உறுதி பூண்டவள் -எல்லா குற்றங்களையும் பொறுத்துக் கொள்கிறாய் –

திருவாய் மொழிக்கு இருப்பிடம்
பரமன் அடி சேர்த்து
ஞானம் பக்தி வைராக்ய குணக்கடல்
இரண்டு விபூதியும் இவர் வசம்
பகவத் விஷயத்தில் ஸ்திரம்
நம்மைக்காக்க தக்கவர்
குற்றங்களைப் பற்றி அருள்பவர்

———————————————

ஸ்தைர்யம் குல க்ஷோணி ப்ருதாம் விதத்ஸே
சேஷாதயஸ் த்வாம் சிரஸா வஹந்தி
பதப்ரஸூதா பரமஸ்ய பும்ஸ:
ப்ருத்வீ மஹிம்நா மணி பாதுகே த்வம்—-86-

ஸ்லேஷம் சிலேடை

கடிகாரம் பெருமாள் -சிலேடை காளமேகப் பெருமாள்
இதில் பூமி தேவி ஸ்ரீ பாதுகா தேவி
ஸ்தைர்யம் குல க்ஷோணி ப்ருதாம் விதத்ஸே–நல்ல குலத்தில் பிறந்த அரசர்களுக்கு மன உறுதி கொடுத்து
பரத்தாழ்வானுக்கு
சேஷாதயஸ் த்வாம் சிரஸா வஹந்தி–ஆதி சேஷன் போல்வார் உன்னை தலையால் வஹித்து
பதப்ரஸூதா பரமஸ்ய பும்ஸ:-பெருமாள் திருவடியால் ஏவப்பட்டு
ப்ருத்வீ மஹிம்நா மணி பாதுகே த்வம்–இப்படி மஹிமையாலே நீ தான் பூமி

உறுதி -குல மலைகளுக்கு பூமி -நிலையான தன்மை -இவ்வமன்னர்களுக்கு
ஆதி சேஷன் பூமியைத் தாங்கி
பூமி திருவடியில் இருந்து உருவானவள் அன்றோ ப்ரஸூதி –

உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! உயர்ந்த குலத்தில் பிறந்த அரசர்கள் தங்கள் பதவியில்
நிலையாக உள்ளதற்கு நீயே காரணமாக உள்ளாய். உன்னைத் தங்கள் தலையில் ஆதிசேஷன் போன்றவர்கள் ஏற்கின்றனர்.
நீ பரமபுருஷனாகிய நம்பெருமாளின் திருவடிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளாய். இப்படிப்பட்ட பல பெருமைகள் மூலம் பருத்துள்ளாய் போலும்.

கடந்த ஸ்லோகம் போன்றே இங்கும் பாதுகைக்கு பூமியின் தன்மைகளை ஸ்வாமி தேசிகன் ஏற்றிக் கூறுவதைச் சற்று காணலாம்.
பூமி குல பர்வதங்களை அசையாமல் வைத்துள்ளது; ஆதிசேஷனால் தாங்கப்படுவது; எம்பெருமானின் திருவடிகளிலிருந்து வெளிப்பட்டது
(புருஷ ஸூக்தம் காண்க) – இதே தன்மைகளைப் பாதுகைக்கும் கூறியது காண்க.

ஸ்ரீ பாதுகையே நற்குலத்தில் பிறந்த அரசர்களுக்கும் குல பர்வதங்களுக்கும் நிலையான பதவியைத் தந்து அருளுகிறாய்-
உலகத்தைத் தாங்கும் ஆதி சேஷன் முதலானோர் உன்னைத் தம் சிரசில் தாங்குகிறார்கள் –
பெருமாள் உன்னை திருவடிகளில் சாத்திக் கொண்டு இருக்கிறார் -உனது ப்ரபாவத்துக்கு எல்லை இல்லையே –

ஆழ்வார்
மஹா விஸ்வாசம் –
ஆதி சேஷன் அம்சம் மாறன் அடி பணிந்து
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
திரு நாரணன் தாள்
துயர் அறு சுடர் அடி பற்றி
பிருத்வி பெருமை என்றும் அர்த்தம் -மகிமையால் திகழும் ஆழ்வார் –

——————————————————-

தைத்யாதிபாநாம் பலிநாம் க்ரீடா:
நிக்ஷேபணம் தே யதி நாப்யனந்தந்
ரங்கேச பாதாவநி ரங்கதாம்ந:
ஸோபாநதாம் ப்ராப்ய வஹந்தி அமீ த்வாம்—-87-

தைத்யாதிபாநாம் -அசுரர் தலைவர்கள்
பலிநாம் க்ரீடா:–கிரீடங்கள்
நிக்ஷேபணம் தே -உன்னை சுமப்பதை
யதி நாப்யனந்தந்-ஒரு வேலை மகிழ்ந்து ஏற்க வில்லை என்னும் பக்ஷத்தில்
ரங்கேச பாதாவநி
ரங்கதாம்ந:–பிராணவாகாரம் உட்பட்ட தாமம்
ஸோபாநதாம் ப்ராப்ய வஹந்தி அமீ த்வாம்-படிக்கட்டாக இருக்கும் தன்மையை அடைந்து –
அமீ த்வாம்–அத்தனையும் உன்னை
அசேதனங்களும் வணங்க ஆசை கொண்டு இருக்க நீங்கள் வணங்காமல் இருக்கலாமோ -நமக்கு உபதேசம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! பலம் மிகுந்தவர்களான அசுரர்கள் உன்னைத் தங்கள்
தலையில் வைத்துக் கொள்வதை மகிழ்வுடன் ஏற்கவில்லை என்றால் நடப்பது என்ன?
அவர்களுடைய க்ரீடங்கள் ஸ்ரீரங்க விமானத்திற்கு படிகளாக அமைந்து விடுகின்றன.

உன்னைத் தங்கள் தலைகளின் ஏற்காமல், கர்வம் கொண்ட அசுரர்கள் இருக்கக்கூடும். அவர்களை நம்பெருமாள் செய்வது என்ன?
மிகுந்த வலிமை கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களது க்ரீடங்களை அவன் பறித்து விடுகிறான்.
அந்தக் க்ரீடங்களில் உள்ள இரத்தினக் கற்களைத் தனது ஸன்னதியில் உள்ள படிகளில் பதித்து விடுகிறான்.
பின்னர், அவற்றின் மீது உன்னை சாற்றிக் கொண்டு கம்பீரமாக நடந்து செல்கிறான்.

ஸ்ரீ பாதுகையே -உன்னைத் தலையிலே சாதித்துக் கொள்ளாத அசூரர்களின் க்ரீடங்களைப் பகவான்
ஸ்ரீ ரங்க விமானத்தின் படிகளாக ஆக்குகிறார் -அவை படியாக இருந்து பிறகு உன்னைத் தாங்குகின்றன —

ஆழ்வார் பரம்
மனிதர்களுக்குள் அசுர தன்மை -ஆணவம் மிக்கவர்
ஆழ்வாரை வணங்காமல் -எந்த குளம் -எந்த மொழி என்று பார்த்து பழிக்கும் அவர்கள்
ஆத்ம கிரீடம் -நல்ல குணங்கள் -அவர்களை விட்டு விலகி விடும் என்றவாறு –

————————————————

சேஷ: கருத்மாந் மணி பாத பீடீ
த்வம் சேதி பாதாவநி விஸ்வமாந்யா:
துல்யாதிகாரா யதி கிந்து ஸந்த:
த்வாம் ஏவ நித்யம் சிரஸா வஹந்தி—88-

சேஷ: -ஆதி சேஷன்
கருத்மாந் -திருவடி
மணி பாத பீடீ-ரத்தினங்கள் அணிந்த ஆசன பத்மம்
த்வம் சேதி -நீ யம்
பாதாவநி – திருவடியை ரக்ஷித்து
விஸ்வமாந்யா:-நால்வரும் உலகம் கொண்டாடும்
துல்யாதிகாரா -சமமான அதிகாரம்
யதி –
சென்றால் குடையாம்
பர தத்வ நிர்ணய கருட சேவை -தொண்ட மண்டலம்
கஜேந்த்ர மோக்ஷம் சேவை -தோளில் -சோழ தேசங்களில்
தண் தாமரை சுமக்கும் தாமரை ஆஸன பத்மம் -தோற்று தாங்கி
கிந்து ஸந்த:-கிம் நு -ஏன் தான் பெரியவர்கள்
த்வாம் ஏவ நித்யம் சிரஸா வஹந்தி-உன்னை மட்டுமே எப்போதும் தலையால் சுமக்கிறார்கள் –
சடாரி தாங்கி-கொள்கிறார்களே
கேள்வி இதில் பதில் அடுத்த ஸ்லோகம் –

பெரிய பெருமாள் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே! அனைவராலும் போற்றப்படும் கருடன், ஆதிசேஷன்,
நம்பெருமாள் அவனது ஸிம்ஹாஸனத்தின் மீது அமரும் போது அவன் திருவடிகள் வைக்கின்ற கற்கள் இழைக்கப்பட்ட மேடை,
பாதுகையான நீ – ஆகிய அனைவருக்கும் பெரிய பெருமாளின் திருவடிகள் மீது சமமான உரிமை உள்ளது.
இருப்பினும் பெரியவர்கள் ஏன் உன்னை மட்டும் தங்கள் தலையில் ஏற்கிறார்கள்? உனக்கு உள்ள உயர்வால் அல்லவா?

ஆதி சேஷன் மீது தனது திருவடிகளை எப்போதும் வைத் தபடி உள்ளான்;
கருடனின் திருக் கரங்களின் தன்னுடைய திருவடிகளை வைத்தபடி உள்ளான்;
கற்கள் பதிக்கப்பட்ட மேடையில் தனது திருவடிகளை வைத்துள்ளான்.
இந்த இடங்களில் திருவடிகள் உள்ளதைக் காட்டிலும் பாதுகையின் மீது திருவடிகள் உள்ள போது,
மேலும் அழகும் மேன்மையும் பெறுகின்றன. ஆகவே பாதுகைக்கு சிறப்பு அதிகம் என்றார்.

ஸ்ரீ பாதுகையே உனக்கும் ஆதி சேஷனுக்கும் பெரிய திருவடிக்கும் திருப் பாதாசனத்துக்கும்
திருவடிகளைத் தாங்கும் அதிகாரம் சமமாக இருக்க
பெரியோர்கள் உன்னை மட்டுமே தங்கள் தலையிலே தாங்குகிறார்கள் –

ஆழ்வார் பரம்
கைங்கர்ய பரர்கள் பலர் நித்ய ஸூரிகள் இருக்க
திருவடி நிலை பாதுகை ஆழ்வார் ஒருவரே
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் இவரே
பிரபத்தி முன்பே பலர் சொல்லி இருந்தாலும்
நசிகேஷத் யமன் உபதேசம் போல் பலவும் உண்டே

—————————————————————-

பரஸ்ய பும்ஸ: பரமம் பதம் தத்
பிபர்ஷி நித்யம் மணி பாதுகே த்வம்
அந்யாத்ருசாம் வ்யோமஸதாம் பதாநி
த்வயி ஆயதந்தே யதிதம் ந சித்ரம்–89-

பதம் பதவியையும் திருவடியையும் காட்டுமே
பரஸ்ய பும்ஸ: -பெரிய ஆள் -பெருமாள்
பரமம் பதம் மிக உயர்ந்த திருவடியை
தத்- -அந்த -மிக உயர்ந்த திருவடியை
அன்று இவ்வுலகம் அளந்த =திருப்பாவை உயர்ந்த ஒன்றையும் தாழ்ந்த ஒன்றையும் காட்டும் சுற்றுக்கள் போல் இங்கும் அந்த
ஏதத் இந்த மட்டம் என்று சொல்லாமல் தத் ப்ரஸித்தமான
பிபர்ஷி நித்யம் -எப்போதும் தாங்கிக் கொண்டுள்ளாயே
மணி பாதுகே த்வம்
நித்யம் தாங்கும் என்பது தான் மேனிக்கு கேள்விகளுக்கு பதில்
நின்றால் மரவடியாம் ஆதி சேஷனுக்கு
கருட சேவை போது தான் திருவடிக்கு
நித்ய சம்பந்தம் ஸ்ரீ பாதுகா தேவிக்குத் தானே
வந்து என் உச்சி உளானே –
கங்கையில் புனிதமாய் காவேரி போல் -நித்ய திருவடி ஸ்பர்சம் உண்டே
நாராயணன் பதவியே உனது வசமகா இருக்க
அந்யாத்ருசாம் வ்யோமஸதாம் பதாநி-மற்றைய வானில் வாழும் தேவர்களின் பதவிகள்
த்வயி ஆயதந்தே -உனது வசத்தில் இருப்பதில்
யதிதம் ந சித்ரம்-இதிலே வியப்பே இல்லையே

உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! மிகவும் உயர்ந்ததும், புகழை உடையதும் ஆகிய
பரமபுருஷனின் திருவடிகளை எப்போதும் நீ கொண்டுள்ளாய். அப்படி உள்ள பகவானுக்கு அடங்கிய அனைத்து
தேவர்களின் ஸ்தானங்களும் உன்னை அண்டியே உள்ளதில் வியப்பு என்ன உள்ளது?

நம்பெருமாளின் திருவடிகளே பாதுகையைச் சார்ந்து உள்ள போது, நம்பெருமாளின் திருவடிகளைச் சார்ந்துள்ள
தேவர்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?

ஸ்ரீ பாதுகையே பெருமாளுடைய பதமே உனது அதீனமாய் இருக்க
மற்ற தேவதைகளுடைய பதமானது உனக்கு அதீனமாய் இருப்பதில் என்ன ஆச்சர்யம் –

ஆழ்வார் பரம்
நித்ய சம்பந்தம் ஆழ்வாருக்கே
அத்யந்த பாரதந்தர்யம் -அசித்வத் –
ப்ரபந்ந லக்ஷணம் அனுஷ்டித்துக் காட்டி அருளியவர்
நிழலும் அடி தாறும் ஆனோம் -பெரிய திருவந்தாதி
நிழல் சில சமயம் பிரியும்
பாதுகை -பாதுகா ரேகை யானால் பிரிய வேண்டாமே –
ஆழ்வார் திருவடிகளை நாம் சூடிக் கொண்டு -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே அன்றோ

—————————————————–

பாதௌ முராரே: சரணம் ப்ரஜாநாம்
தயோ: தத் ஏவ அஸி பதாவநி த்வம்
சரண்யதாயா: த்வம் அநந்ய ரக்ஷா
ஸம்த்ருஸ்யஸே விஸ்ரம் பூமி: ஏகா—-90-

பாதௌ முராரே: -பெருமாள் திருவடிகளே
சரணம் ப்ரஜாநாம்–மக்களுக்கு எல்லாம் புகல் இடம்
தயோ: -அந்த இணைத்தாமரை அடிகளுக்கு
தத் ஏவ அஸி பதாவநி த்வம்-நீயே புகலிடமாக உள்ளாய்
த்வம் ஏகா-ஒப் பற்ற அத்விதீயம்
அநந்ய ரக்ஷா– வேறே புகலிடம் தேவை இல்லாமல்
சரண்யதாயா-அடைக்கலம் தந்து காக்கும் தன்மைக்கு
விஸ்ரம் பூமி: ஸம்த்ருஸ்யஸே -நிலை பெரும் இடமாக இளைப்பாறும் இடமாக நீயே உள்ளாய்

முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே!
இந்த உலகம் முழுவதையும் காப்பாற்றும் திறன் உள்ளது பெரிய பெருமாளின் திருவடிகளே ஆகும்.
அப்படிப்பட்ட உயர்ந்த திருவடிகளையே காப்பாற்றுபவளாக நீ உள்ளாய்.
உன்னைக் காப்பாற்ற வேறு யாரும் அவசியம் இல்லை.
ஆகவே “காப்பாற்றுதல்” என்ற செயல் உன்னிடம் தங்கி விட்டது போலும்.

நம் போன்றவர்களுக்கு ரக்ஷையாக உள்ளது நம்பெருமாளின் திருவடிகளே ஆகும். ஆனால் அந்தத் திருவடிகளையே
பாதுகா தேவி காக்கிறாள் என்றால், அவளைக் காப்பதற்கு யாரும் அவசியம் இல்லை என்றாகிறது அல்லவா?
ஆக, பாதுகாப்பு என்பது பாதுகையிடம் அடிமையாக உள்ளது எனலாம்

ஸ்ரீ பாதுகையே உலகம் எல்லாம் ரஷிக்கும் எம்பெருமான் திருவடிகளை நீ ரஷிக்கிறாய்-
உனக்கு ரஷகன் யாரும் இல்லை -ஆதலால் காப்பாற்றும் விஷயத்தில் நீ எல்லை நிலமாக விளங்குகிறாய் –

ஆழ்வார் பரம்
பெருமாள் திருவடிக்கு ஆழ்வார் திரு உள்ளம்
சிவந்து இருக்க காரணம்
ரக்தம் -அன்பு சிகப்பு

——————————————————————–

அந்யேஷு பத்மா கமலாசந அத்யை:
ரங்கேஷு ரங்காதிபதே: ஸ்ரிதேஷு
பதாவநி த்வாம் அதிகம்ய ஜாதம்
பதம் முராரே: அதி தைவதம் ந:—-91-

ரங்காதிபதே அந்யேஷு அங்கேஷு– உனது மற்ற அங்கங்களில்
பத்மா கமலாசந அத்யை:: ஸ்ரிதேஷு-பிராட்டி திரு மார்பும் – நான் முகன் திரு நாபி அடைய —
பதாவநி த்வாம் அதிகம்ய ஜாதம்- பதம் முராரே: -உன்னை திருவடி வந்து அடைந்து
அதி -தைவதம் ந:=பூஜிக்கத் தக்க ஆராத்ய தெய்வம் ஆனாய்
ராஜா பரிவாரங்கள் உடன் சென்று அடைய அந்த இடம் நோக்கி நாமும் போவோமே –

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே!
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தவிர்த்து அவனது மற்ற உறுப்புக்களில் மஹாலக்ஷ்மி, ப்ரம்மன் போன்றோர் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் அடைந்து, வணங்கும் அவனது திருவடிகளோ உன்னை அடைந்தது.
இதனால் நீ எங்களுக்கு ஆராதிக்க ஏற்றவளாக உள்ளாய்.

பெரிய பெருமாளின் பல்வேறு அவயவங்களில் (உடல் உறுப்புகள்) மஹாலக்ஷ்மி, ப்ரம்மன், ருத்ரன் என்று பலரும் உள்ளனர்.
ஆயினும் அவர்களை அண்டிய அந்த அவயவங்களுக்கு எந்தப் பெருமையும் உண்டாக வில்லை.
ஆனால் அவன் திருவடியானது பாதுகையை அண்டியது.
அதன் விளைவு – மற்ற அவயவங்களைவிட மிகவும் உயர்வு பெற்றது.
ஆக, பாதுகையை அண்டியவர்கள் தாமாகவே உயர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் உடைய ஏனைய அங்கங்கள் மகா லஷ்மி ப்ரஹ்மா முதலானவர்களால்
அடையைப் பட்ட பொழுது திருவடியானது உன்னை மட்டுமே அடைந்து எங்களால் ஆராதிக்கத் தகுந்ததாயிற்று –

ஆழ்வார் பரம்
ரிஷிகள் வேதங்கள் கிரீடம் -பரத்வம் ஸ்வாமித்வம் பட்டு
சஹஸ்ர சீர்ஷா புருஷா சஹஸ்ராக்ஷயா சஹஸ்ர பாத் -திரு முடி திருக் கண் திருவடி
கேஸாதி பாதாந்த வர்ணனை
அடியவர் அடிக்கீழ் அமர்ந்து போபுகுந்து அடி விடாமல் அருளிக்ஸ்த் செய்து
அடி தொழுது எழு மனனே -உபக்ரமித்து
உங்களை திருவடி தேடி வந்ததே
திருக்கமல பாதம் வந்து
அதி தெய்வதம் ஆனீரே

———————————————————————–

க்ஷணம் ஸரோஜ ஈக்ஷண பாதுகே ய:
க்ருதாதர: கிம் குருதே பவத்யா:
அகிஞ்சநஸ்யாபி பவந்தி சீக்ரம்
ப்ரூ கிங்கராஸ் தஸ்ய புரந்தராத்யா—-92-

க்ஷணம் ஸரோஜ ஈக்ஷண பாதுகே ய:-தாமரை கண்ணன் உடைய பாதுகையே கொஞ்ச காலம்
க்ருதாதர: கிம் குருதே பவத்யா:-மகிழ்வுடன் கைங்கர்யம் யார் ஒருவன் உனக்கு செய்கிறானோ
அகிஞ்சநஸ்யாபி சீக்ரம்-அவன் அகிஞ்சனங்க இருந்தாலும் விரைவாக
ப்ரூ கிங்கராஸ் தஸ்ய புரந்தராத்யா- பவந்தி–அவனுக்கு புருவம் நெறிப்பு பார்த்து
கைங்கர்யம் செய்கிறார்களாய் இந்த்ராதிகள் கூட ஆகிறார்களே

ஸ்ரீ பாதுகையே ஒருவன் மிகுந்த அன்புடன் உனக்குக் கண நேரம் கைங்கர்யம் செய்தானேயானால் கூட –
அவன் அகிஞ்சனன் ஆனாலும் இந்த்ரன் உள்ளிட்ட தேவர்கள் அவன் குறிப்பு அறிந்து
ஏவல் செய்யும் படியான உயர் பதவியைப் பெற்று விடுகிறான் –

தாமரை போன்று அழகாக மலர்ந்த திருக்கண்களை உடைய பெரியபெருமாளின் பாதுகையே!
யார் ஒருவன் மிகவும் மகிழ்வுடன் உனக்கு சிறிது நேரம் கைங்கர்யம் செய்தானோ
அவன் ஒன்றுமே அறியாத மனிதனாக இருந்தாலும் –
அவனது புருவ அசைவைக் கண்டு
அவனுக்கு அடிமைத் தொழில் செய்பவர்களாக இந்திரன் முதலானோர் ஆகின்றனர்.

யார் ஒருவன் மிகவும் மகிழ்ந்து பாதுகைக்குக் கைங்கர்யம் செய்கிறானோ, அவனுக்கு
இந்த்ரன் உட்பட தேவர்கள் அனைவரும் பணி புரிகின்றனர்.
அவனது புருவம் அசைவதைக் கண்டு, குறிப்பறிந்து நடக்கின்றனர்.

ஆழ்வார் பரம்
சிறுது காலம் ப்ரீதியுடன் பக்தியுடன் கைங்கர்யம் செய்ய
ஞானம் ஏதும் இல்லாமல் இருந்தாலும்
விரைவிலே தொண்டர்களாக நம்முடைய இந்திரியங்கள் ஆகுமே

————————————————————————-

வஹந்தி யே மாதவ பாதுகே த்வாம்
ஊஹ்யந்த ஏதே திவி நிர் விகாதா:
ஹம்ஸேந நித்யம் சரத ப்ர பாஸா
கைலாஸ கௌரேண ககுத்மதா வா—-93-

வஹந்தி யே மாதவ பாதுகே த்வாம்–ஸ்ரீ யபதி ஸ்ரீ பாதுகையே -யார் உன்னைத் தாங்குகிறவர்கள்
ஊஹ்யந்த ஏதே -அவர்கள் தாங்கப்படுகிறார்கள்
திவி நிர் விகாதா:–வானத்திலே தடங்கல் இல்லாமல்
ஹம்ஸேந நித்யம் சரத ப்ர பாஸா-அன்னப்பறவை -சரத் காலம் -மேக ஒளி –
இலையுதிர் கால மேகம் வெளுத்து இருக்குமே -அதே போல் -ப்ரஹ்ம பதவி அடைவார்கள்
கைலாஸ கௌரேண ககுத்மதா வா—காளை -ரிஷப வாகனத்தால் சுமக்கப் பட்டு -சிவ பதவியும் அடைவார்கள் ;

ஸ்ரீ பாதுகையே உன்னை பக்தியோடு தலையில் சாதித்துக் கொள்பவர்களுக்கு
பிரம்மா பட்டமாவது சிவன் பட்டமாவது எளிதிலே கிட்டுகிறதே –

மாதவனின் பாதுகையே! உன்னை யார் தங்கள் தலையில் மிகுந்த பக்தியுடன் ஏற்றுக் கொள்கிறார்களோ
அவர்கள் எந்த விதமான தடையும் அடைவதில்லை.
ஆகாயத்தில் உள்ள சரத் கால மேகம் போன்ற நிறம் உடைய ஹம்ஸம் அல்லது கைலாயம் போன்ற
வெண்மையான நிறம் கொண்ட ரிஷபம் மீது ஏறியபடி செல்கின்றனர்.

பாதுகைக்குத் தங்கள் தலையை யார் ஒருவன் வாஹனமாக அளிக்கிறானோ, அவனது நிலை கூறப்படுகிறது.
ஹம்ஸம் என்பது ப்ரம்மனின் வாஹனம் ஆகும். ரிஷபம் என்பது ருத்ரனின் வாஹனம் ஆகும்.
ஆக, பாதுகையைத் தலையில் ஏற்றவன் ப்ரம்ம பதவியோ, ருத்ரப் பதவியோ அடைந்துவிடுகிறான் என்று கருத்து.
ஹம்ஸம் ஆகாயத்தில் உள்ளதால் ஆகாயத்தையும்,
ரிஷபம் கைலாயத்தில் உள்ளதால் கைலாயத்தையும் ஸ்வாமி தேசிகன் கூறுகிறார்.

ஆழ்வார் பரம்
அன்னப்பறவை போல் பரம ஹம்சர்களால் போற்றப்பட்டு
சாத்விகர்களும் அடியார்கள் ஆவார்களே

—————————————————————

ருத்ரம்: ச்ரித: தேவ கண: ஸருத்ர:
பத்மாஸநம் ஸ: அபி ச பத்ம நாபம்
ஸ த்வாம் அநந்த: ந புந: த்வம் அந்யம்
க ஏஷ பாதாவநி தே ப்ரபாவ:—-94-

ருத்ரம்: ச்ரித: தேவ கண: -தேவக் கூட்டங்கள் ருத்ரனை ஆஸ்ரயித்து ரக்ஷணம் வேண்ட
ஸ ருத்ர:பத்மாஸநம் -அவன் ப்ரஹ்மாவை ஆஸ்ரயித்து ரக்ஷணம் வேண்ட
ஸ: அபி ச பத்ம நாபம்-அவன் கூட உந்தித்தாமாரை உடைய நாராயணனை ஆஸ்ரயித்து ரக்ஷணம் வேண்ட
ஸ த்வாம் அநந்த: -அவனும் உன்னை இருப்பிடமாகக் கொண்டுள்ளான் —
ந புந: த்வம் அந்யம்-நீயோ வேறே ஒருவரையும் ஆஸ்ரயித்து இல்லையே
க ஏஷ பாதாவநி தே ப்ரபாவ:–உன்னுடைய பிரபாவம் என்ன என்று அடியேன் சொல்லுவேன்

ஸ்ரீ பாதுகையே எல்லா தேவர்களும் ரஷணத்திற்காக எம்பெருமானை அடையும் பொழுது
அந்த வியாபாரத்தைச் செய்ய எம்பெருமான் உன்னை தன் திருவடிகளில் சாற்றிக் கொண்டு எழுந்து அருளுகிறார் –
ரஷணம் என்னும் வியாபாரமே உன் அதீனமாக இருக்கிறது –
உனது பிரபாவத்தை எப்படி வர்ணிப்பது –

பாதுகையே! தேவர்களின் கூட்டம் தங்களின் பாதுகாப்புக்காக சிவனை அடைந்தது.
சிவன் ப்ரம்மனை அடைந்தார்,
ப்ரம்மன் தாமரை மலரைத் திருநாபியில் வைத்த பெரிய பெருமாளை அடைந்தார்.
அனைத்து இடத்திலும் எப்போதும் உள்ள பெரியபெருமாள் உன்னை அடைந்தான்.
நீ உனது பாதுகாப்புக்காக யாரையும் அடையவில்லை.
இப்படிப்பட்டது அல்லவா உனது பெருமை?

தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் சிவன். சிவனைக் காட்டிலும் உயர்ந்தவன் ப்ரம்மன்.
ப்ரம்மனைக் காட்டிலும் மேன்மை பெற்றவன் பெரிய பெருமாள்.
அந்தப் பெரியபெருமாள் அண்டுவது பாதுகை என்பதால், பாதுகைக்கு மேன்மை மிகவும் அதிகம் என்றார்.

ஆழ்வார் பரம்
நாராயணனும் ஆழ்வாராய்த் தேடி
திருப்புளிய மரம் இருந்து மங்களா ஸாஸனம்
பாட்டு வாங்கிப் போக –திட்டு வாங்கிப் போக
கடியன் -கொடியன் –அருளாத நீர் -கேட்டு உகப்பானே –
ஒன்பது நவ திருப்பதி பெருமாளும் இவர் இடம் வந்து மங்களா ஸாஸனம் பெற்று மகிழ்வார்கள்

———————————————————

கடைசியில் ஆறு ஸ்லோகங்களால்

1-பிரபத்தி சாரமே -ஸ்ரீ பாதுகா தேவியே –
2-இம்மைச் செல்வமும் -நீயே
3-மோக்ஷம் செல்வமும் அருளி —
4-ஞானிகள் பாதுஆ தேசியுடன் கூடி
5-பிரபன்னர்களான நாமோ இவளை மட்டுமே தியானித்து
6-மோக்ஷம் வழி காட்டி
நிகமிக்கிறார்

——

நாயினேன் செய் குறை -செய்த செய்து கொண்டு இருக்கிற செய்யப் போக்லற -குறைகளை மன்னித்து
போய பிழையும் புகு தருவான் நின்றனவும் போக்கும் ஸ்ரீ பாதுகா தேவி பிரபாவம் இதில்

பரஸ்ய தாம்ந: ப்ரதிபாதந அர்ஹாம்
வதந்தி வித்யாம் மணி பாதுகே த்வாம்
யதஸ் தவ ஏவ அதிகமே ப்ரஜா நாம்
தூரீ பவதி உத்தர பூர்வம் அம்ஹ:—-95-

பரஸ்ய தாம்ந: -பரஞ்சோதி நீ பரமாய் –
ப்ரதிபாதந அர்ஹாம்-பெறுவதற்குத் தக்க -பெற்றுத்தக்க
வதந்தி வித்யாம் மணி பாதுகே த்வாம்–ப்ரஹ்ம வித்யையே -ந்யாஸ வித்யையும் நீயே -என்று பெரியோர்கள் சொல்கிறார்களே
யதஸ் -ஏன் என்றால்
தவ ஏவ அதிகமே -உன்னை மட்டுமே அடைவதால்
ப்ரஜா நாம்-மக்களுக்கு
தூரீ பவதி -தூரமாக போகின்றனவே -வானோ மறி கடலோ இத்யாதி –
உத்தர பூர்வம் அம்ஹ:–போய பிழையும் புகு தருவான் நின்றனவும் போகுமே

ஸ்ரீ பாதுகையே ஞானம் பக்தி பிரபத்தி யோகங்கள் பகவானைக் காட்டும்
அவற்றை விட மிக எளிதான பரா வித்யையாக உன்னைக் கூறுகிறார்கள் –
உன்னை அடைந்தவனுடைய பூர்வ உத்தர பாவங்களும் விலகி விடுகின்றன அன்றோ –
ஆசார்யனை அடைந்த சேதனனுக்கு எம்பெருமான் பாப சம்பந்தம் இல்லாமல் செய்கிறார் –

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
பெரியவர்கள் உன்னையே மிகவும் உயர்ந்த தேஜஸ் என்னும் பெரிய பெருமாள் அனைவருக்கும் அளிக்கத் தகுதியான
ஞானம் என்று (பக்தி , ப்ரபத்தி) கூறுகின்றனர்.
உன் மூலமாக பத்தி-ப்ரபத்திக்கு முன்பு செய்த பாவங்களும்,
பின்னே செய்ய உள்ள பாவங்களும் விலகி ஓடுகின்றன.

ஒருவன் பக்தி அல்லது ப்ரபத்தி செய்யும் போது அவனது பாவங்கள் அனைத்தையும்
பெரிய பெருமாள் நீக்கி விடுவதாக சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
ஆனால், பக்தி-ப்ரபத்தி போன்ற உபாயங்கள் அவசியமில்லை;
பாதுகையைத் தலையில் ஏற்பதால் ஒருவன் பாவங்கள் அழிந்து விடுகின்றன என்றார்.

ஆழ்வார் பரம்
பிரபன்ன ஜன கூடஸ்தர்
திருவாய் மொழி சேவிக்க நிஷ்டை கைக்கூடுமே
த்வயார்த்தம்
தீர்க்க சரணாகதி
ஸ்ரீ மன் -முதல் பத்து –
நாராயண -இரண்டாம் பத்து –
சரணவ்–திருவடி
சரணம் -நான்காம் பத்து -திரு நாரணன் தாள் காலம் பெற
ப்ரபத்யே -நோற்ற நான்கும் -ஐந்தாம் பத்தில்
ஸ்ரீ மதே –அகலகில்லேன் -ஆறாம் பத்து
நாராயணன் -இனியவன் ஏழாம் பத்து -ஸ்வாமித்வம் -எட்டாம் பத்து
ஆய -ஒன்பதால்
நம -பத்தாம் பத்து -பிறந்தார் உயர்ந்தே

————————————————————–

திருவடி செல்வம் நிறைந்த ஸ்ரீ பாதுகா தேவி
ஐஸ்வர்யார்த்திக்கும் பலம் கொடுப்பவள்

தந்யா முகுந்தஸ்ய பத அநுஷங்காத்
தநீயதா யேந ஸமர்ச்சிதா த்வம்
வாஸஸ் ததீயோ மணி பாத ரஷே
லக்ஷ்ம்யா அளகாமபி அதரீ கரோதி—-96–

மணி பாத ரஷே
முகுந்தன்-மோக்ஷ பிரதன்
முகுந்தச்ய பத அனுஷங்காத் – முகுந்தனது திருவடி சம்பந்தத்தால்
தன்யா -செல்வம் பெற்ற உன்னை
தநீயதா யேன -பணத்தில் ஆசைப் படுபவர்களால்
சமர்ச்சிதா த்வம் -நீ பூஜிக்கப் பட்டாயோ
வாஸஸ் ததீயோ -இருக்கும் இடம்
லஷ்ம்யா அளகாம் யபி யதரீ கரோதி-அவளது பிரசாதத்தால் குபேரன் பட்டணம் விட
கைங்கர்யம் செல்வம் பெற ஸ்ரீ பாதுகா தேவியையே ஆஸ்ரயிக்க வேண்டும்

ஸ்ரீ பாதுகையே பெருமாளுடைய திருவடியை அடைந்து அந்த சம்பந்தத்தாலே
உயர்ந்து இருக்கும் உன்னை ஆராதிப்பவன்
அனைத்து செல்வங்களையும் பெற்று
குபேரனுடைய பட்டணத்தையும் அல்பமாகச் செய்பவன் ஆகிறான் –

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
நீ பெரிய பெருமாளின் தொடர்பு கொண்ட காரணத்தினால் அனைத்துச் செல்வங்களும் பெற்றுள்ளாய்.
இப்படிப்பட்ட உன்னை ஆராதிக்கும் ஒருவனின் வீடானது, அனைத்து செல்வங்களையும் பெற்று,
குபேரனின் பட்டணத்தையும் விட மேம்பட்டு உள்ளது.

யார் எதனை வேண்டுகிறார்களோ அதனைப் பாதுகைகள் அளித்து விடுவதாகக் கூறுகிறார்.
செல்வத்தை விரும்புபவர்களுக்கு, போதுமான செல்வம் அளிக்கிறது.
இதனால் அவர்களின் வீடுகள் குபேர புரியையே தாழச் செய்யும் அளவிற்கு செல்வத்தால் உயர்கின்றன.

ஆழ்வார் பரம்
செல்வம் தேடி போனாலும் அருளுவார்
மோக்ஷமே அருளுபவருக்கு லௌகிக செல்வம் அருளுவதற்குக் குறை இல்லை
படிப்படியாக கொடுத்து மேலே உயர்த்துவார் –

—————————————————————–

காமம் -பதம் பல இடங்களில் பிரயோகம்
காமம் இல்லாதவர்களை சத்ய காமராக ஆக்கி அருளும்
சாந்தோக்ய உபநிஷத் அர்த்தம் இதில் அருளுகிறார்

பதேந விஷ்ணோ கிமுத இதரேஷாம்
விஸ்ருஜ்ய ஸங்கம் ஸமுபாஸ்தே த்வாம்
கரோஷி தாந் கிம் த்வம் அபேத காமாந்
காலேந பாதாவநி ஸத்ய காமாந்—97-

பதேந விஷ்ணோ கிமுத இதரேஷாம் விஸ்ருஜ்ய ஸங்கம் ஸமுபாஸ்தே த்வாம்-மற்ற விஷய சங்கம் ஆசை விட்டு விட்டு
உன்னையே வணங்குய்பவ்சர்களை
கரோஷி தாந் கிம் த்வம் அபேத காமாந் காலேந பாதாவநி ஸத்ய காமாந்—ஆசையே இல்லாதவர்களை
சிறிது காலத்திலேயே நிலை யான காமம் கொண்டவர்களாக ஆக்கி அருளுகிறாயே
இது என்ன வியப்பு
உப லக்ஷணத்தால் அஷ்ட குண சாம்யம் அருளுகிறாய் என்றபடி

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
ஒரு சிலர் பெரிய பெருமாளின் திருவடிகளை அண்டிய பின்னர்,
மற்ற பலன்களை (பெரியபெருமாள் கூட வேண்டாம் என்று எண்ணி) கை விட்டு, உன்னை மட்டுமே ஆராதிக்கக் கூடும்.
இப்படியாக அனைத்து ஆசைகளையும் துறப்பவர்களுக்கு என்றும் நிலை பெற்றிருக்கும்படியாக உள்ள
பொருள்களை (பரம பதத்தில்) அனுபவிக்கும்படியாக நீ ஏன் செய்கிறாய்?

பரமபதத்தை அடைந்தவர்களுக்கு அபஹதபாப்மா (பாவம் இல்லை), விஜர: (கிழட்டுத்தன்மை இல்லை),
விம்ருத்யு: (மரணம் இல்லை), விசோகே: (சோகம் இல்லை), விஜிதத்ஸ: (பசி, தாகம் இல்லை),
அபிபாஸ: (அனுபவிக்கும் பொருள் அழிவதில்லை),
ஸத்யகாம: (வேண்டுவது நிறைவேறுகிறது) மற்றும் ஸத்யஸங்கல்ப: – என்ற எட்டு தன்மைகளும் வந்து சேர்கின்றன.
ஆசைகளை ஒழித்து இங்கு வந்தவர்கள் ஸத்யகாமந் எனப் பெயர் பெறுவது வேடிக்கையாக உள்ளது.
இப்படி நீ ஏன் செய்கிறாய்?

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானையும் கூட மறந்து கூட உன்னை த்யானம் செய்பவனை
காலப் போக்கில் எம்பெருமானே உகந்து அளிக்கும் மோஷம் பெறச் செய்து
எம்பெருமானைப் போலவே சத்ய காமனாய் ஆக்கி அருளுகிறாய் –
ஆசையைத் துறந்தவனுக்கு நிலையான ஆசையைத் தருகிறாய் என்று சாதுர்யமாக சாதிக்கிறார் –

ஆழ்வார் பரம்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே

——————————————————————————————

ஞானிகள் நிலை இதில்
அடுத்து அஞ்ஞானிகளான நம்போல்வார் ப்ரபன்னர் நிலை

அப்யாஸ யோகேந நிக்ருஹ்யமாணை:
அந்தர் முகை: ஆத்மவித: மநோபி:
மாதஸ் த்வயா குப்த பதம் ப்ரபாவாத்
அந்வேஷ யந்தி ஆகமிகம் நிதாநம்—-98-

அப்யாச யோகேன -நித்யம் அப்யாச தியானத்தால்
நிக்ருஹ்யமாணை -அடக்கப்பட்ட
அந்தர் முகை ராத்மவிதோ மநோபி -ஜீவ பரமாத்மா ஸ்வரூபம் அறிந்து
மாதஸ்-தாயே
த்வயா -ப்ரபாவாத்–உன்னாலே -உனது ப்ரபாவத்தாலே
குப்த பதம் – காக்கப்பட்டுள்ள
அன்வேஷ யந்த்ய ஆகமிகம் நிதானம்-உபநிஷத்தில் புதையல் -போன்ற உன்னை

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
ஆத்மாவைக் குறித்த ஞானம் உள்ளவர்கள், அன்றாடம் செய்யப்பட்ட த்யானம் மூலம் நன்கு வசப்படுத்தப்பட்ட
மனம் கொண்டு ஜீவ-பரமாத்மாவையே த்யானித்தபடி உள்ளனர்.
இதன் மூலம் – உனது சக்தியால் மட்டுமே காப்பாற்றப்படும் திருவடிகளைக் கொண்டவனும்,
வேதங்களில் கூறப்பட்டுள்ள புதையல் போன்றும் உள்ள பெரிய பெருமாளைத் த்யானிக்கின்றனர்.

ஆத்மாவின் ஸ்வரூபம் பற்றி நன்கு உணர்ந்தவர்கள் பாதுகையைத் தங்கள் சிந்தையில் வைத்து
எப்போதும் த்யானித்தபடி உள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் சிந்தனையில்,
அந்தப் பாதுகையால் காப்பாற்றப்படும் திருவடிகளைக் கொண்ட பெரிய பெருமாள் தானாகவே வந்து நிற்கிறான்.
அவனைத் த்யானம் செய்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே ஜீவாத்மா ஸ்வரூபம் தெரிந்தவர்கள் வேறு விஷயங்களில் மனதை செலுத்த விடாமல் அடக்கி
உன்னைத் த்யானிக்கிறார்கள்- –
உன்னைத் தன் திருவடிகளில் தரிக்கும் பெருமாளை த்யானம் செய்கிறார்கள் –
ஸ்வரூப ஞானம் உள்ளவர்கள் ஆத்மா உஜ்ஜீவனம் அடைய
ஆசார்யனையும் பெருமாளையும் த்யானம் செய்கிறார்கள் -என்றபடி –

விவேகம் என்னும் அங்குசம் கொண்டு -சஞ்சலமான -மனசான யானை அடக்கி —
கீழேயும் மனஸ் அடக்கம் பற்றியே –
அப்யாசம் வைராக்யம் கொண்டே அடக்க முடியும் –
மால் பால் மனம் வைத்து மங்கையர் தோள் கை விடவே அப்யாஸம் –
பரம புருஷார்த்தம் அறிந்து -ஈடுபட்டு -ஸ்ரத்தை -பக்தி -திடமாக –
மநோ வாக் காயம் முக்கரணங்களால் -ப்ரேமத்துடன் ஆஸ்ரயித்து –
உபநிஷத் மூலம் இவற்றை அறிந்து -ஆச்சார்ய உபதேசம் அடியாக அறிந்து –
வைராக்யம் விளைய சுக துக்கங்களால் மாறு படாமல் –
அப்யாசம் வைராக்யம் இரண்டும் ஒன்றுக்கு ஓன்று உபயோகம் ஆகும்
பரமாத்மனே யோ ரக்த –
உபநிஷத்தில் தேடி எடுக்க வேண்டிய தத்துவத்தை -வைத்த மா நிதியை -பாதுகை நேராகக் காட்டி அருளி
நிதியையே ரக்ஷிக்கும் பாதுகையின் பிரபாவம் வாக்குக்கு அப்பால் பட்டது அன்றோ –

ஆழ்வார் பரம்
மங்களா சாசனம் பெருமாளுக்கு ரக்ஷை
அப்படிப்பது காக்கப்படும் பாதுகை ஆழ்வாருக்கு நீயே செல்வம்
ஞானிகளுக்கும் திருவடிகளைக் காட்டி அருளும் ஆழ்வார் என்றபடி –

——————————————————————————-

பாதுகை உடன் சேர்ந்த பெருமாள் வணங்குபவர் சிலர்
பெருமாள் உடன் கூடிய பாதுகா தேவி வணங்குவர் சிலர்
நாமோ உம்மை மட்டுமே வணங்குகிறோம் –

மூர்த்நா ததாநாம் மணி பாதுகே த்வாம்
உத்தம் ஸிதம் வா புருஷம் பவத்யா
வதந்தி கேசித் வயமாமநாம:
த்வாம் ஏவ ஸாஷாத் அதி தைவதம் ந:—-99-

மூர்த்நா ததாநாம் மணி பாதுகே த்வாம்—பெருமாளை நீயே தலையால் சுமந்து
உத்தம் ஸிதம் வா புருஷம் பவத்யா-வேறே சிலர் உனது தலை மேல் உள்ள பெருமாளை வணங்கி
வதந்தி கேசித் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் திருப்பாதம் பணிந்து
வயமாமநாம: த்வாம் ஏவ ஸாஷாத் அதி தைவதம் ந-நாங்களோ சொல்வோம் -உன்னை மட்டுமே அதி தாய்வமாகக் கொண்டு உள்ளோம் –
இரு கரையர் ஆகாமல் -மதுரகவி வடுக நம்பி -காற்றும் தொல் வழியே நல்ல வழி என்று கொண்டுள்ளோம் –

ஸ்ரீ பாதுகையே சிலர் பெருமாளையாவது உன்னையாவது த்யானிப்பது அவசியம் என்று கூறுகிறார்கள்
நாங்களோ உன்னை மட்டுமே த்யானிப்பது போதும் என திடமாக நம்புகிறோம்
ஆசார்ய பலம் இருந்தால் தானே பகவத் கிருபையும் கிட்டுமே –

உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
ஒரு சிலர் பெரிய பெருமாளைச் சுமந்து கொண்டுள்ள உன்னை ஆராதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
வேறு சிலர் உன்னை அணிந்துள்ள பெரிய பெருமாளை ஆராதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
ஆனால் நாங்கள் உன்னையே அனைத்துப் பலன்களும் அளிக்க வல்லவளாக ஏற்கிறோம்.

பாதுகை என்பது ஆசார்யனுக்குச் சமானம் என்பது பொதுவான கருத்து.
இங்கு ஆசார்யனுக்கு முக்யத்வமா அல்லது பெரிய பெருமாளுக்கு முக்யத்வமா என்னும் சந்தேகம் எழுகிறது.
இதற்குத் தெளிவான விடையை மதுரகவியாழ்வார் – தேவு மற்று அறியேன் – என்று முன்பே கூறியுள்ளார்.
இதனை அடியொட்டி ஸ்வாமி தேசிகனும் தான் பாதுகையையே ஏற்பதாகக் கூறுகிறார்.

ஆழ்வார் பரம்
ஆழ்வாரால் பாடப்பட்ட பெருமாள்
பெருமாள் காட்டிய ஆழ்வார்
தேவு மற்று அறியோம்

—————————————————

அனுஷ்டுப் ஸ்லோகம் தொடக்கி
ஆர்யா ஸ்லோகம் முடிப்பார் பத்ததி தோறும்

நம் தலை பெருமாள் திருவடி சேர்வதே மோக்ஷம்
நம் தலையும் பெருமாள் திருவடிகளையும் இணைப்பவள் ஸ்ரீ பாதுகா தேவி தானே

மூர்த்நா ஸதாம் அதஸ்தாத்
உபரி ச விஷ்ணோ: பதேந ஸங்கடிதாம்
அதவீயஸீம் விமுக்தே:
பதவீம் அவயந்தி பாதுகே பவதீம்—-100-

மூர்த்நா ஸதாம் -நல்லோர் தலை
அதஸ்தாத்-கீழே
உபரி ச விஷ்ணோ: பதேந -மேலே உள்ள பெருமாள் திருவடிகளை
ஸங்கடிதாம்–சேர்த்து அருளி
அதவீயஸீம் விமுக்தே:பதவீம் அவயந்தி பாதுகே பவதீம்-மோக்ஷம் அடைய கிட்டிய வழி –
மார்க்கமாக பெரியோர்கள் உன்னையே சொல்கிறார்கள்

பாதுகையே! நீ உனது கீழ்ப்பகுதியில் பெரியவர்களின் தலைகளுடன் சேர்க்கப்படுகிறாய்.
மேற்புறம் நம்பெருமாளின் திருவடிகளுடன் சேர்க்கப்படுகிறாய்.
இப்படிப்பட்ட உன்னை மோக்ஷத்திற்கு உண்டாகிய மிகவும் எளிய வழியாகவே கொள்கிறார்கள்.

நல்லவர்களின் தலைக்கும் நம்பெருமாளின் திருவடிகளுக்கும் பாதுகையானது பாலமாக உள்ளது.
உடலை விட்டு ஜீவன் பிரியும்போது, தலை மூலமாக வெளியேறும் ஜீவன்,
அர்ச்சிராதி மார்க்கமாக மோக்ஷம் அடைகிறது என்பது பொதுவான கருத்து.
இங்கு மோக்ஷம் என்பதைத் திருவடிகள் எனக் கூறுகிறார்.
ஆக, ஜீவன் தலை வழியாகப் பிரிந்து, மோக்ஷமாகிய நம்பெருமாளின் திருவடிகளை அடைவதற்குப் பாலமாக
பாதுகை உள்ளது என்று மறைமுகமாகக் கூறியதாகவும் கொள்ளலாம்.

ஸ்ரீ பாதுகையே கீழே சேதனனின் தலையுடனும் மேலே பெருமாள் திருவடிகளுடனும் சேர்ந்துள்ள உன்னை
மோஷத்தின் வெகு சுலபமான வழியாக பெரியோர்கள் அறிகிறார்கள் –
சதாசார்யனை அடைந்தவன் மோஷத்தைப் பெறுகிறான் -என்றபடி –

ஆழ்வார் பரம்
உச்சி உளானே
நாம் ஆழ்வாரை தலை மேல் வைத்து கொண்டாட மோக்ஷ மார்க்கம்
ஆழ்வார் பிரபன்ன ஜன கூடஸ்தர்
குரு பரம்பரா த்வாரா ரஹஸ்ய த்ரயம் அனுசந்திக்க வேண்டுமே
நேராக போகாமல் -ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் என்பதைக் காட்டி பிரபாப பந்ததியை நிகமிக்கிறார் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-2- சமாக்யா பத்ததி —திரு நாம பத்ததி –ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சடகோபம் -ஸ்லோகங்கள் -21-30-/

March 4, 2016

பெயர் புகழ் கொண்டாடப்படுத்தல் மூன்றும் சமாக்யம்-name -fame -ஒற்றுமைகளைச் சொல்லி
சடாரி -பெயர் வரக் காரணம்
திருவடியில் இருந்து தோன்றும் குலம் –
வேதம் எளிதாக நான்காம் பாசுரம்
அமுதம் போல் நாதம் ஐந்தாம் -பாசுரங்கள்
அடியார்க்கு அடிமை 6-7-பாசுரங்கள்
லோக -ப்ரபந்ந ஜட கூடஸ்தர் -8-பாசுரம்
அகஸ்தியருக்கே பெருமை -9-பாசுரம் –
1000 பாசுரங்கள் -ஸ்லோகங்கள்

————-

வந்தே விஷ்ணு பதா சக்தம் தம் ருஷிம் தாம் ச பாதுகாம்
யதார்த்தா சடஜித் சம்ஜ்ஞா மச் சித்த விஜயாத் யயோ –21-

யயோ-எந்த இருவருக்கும்
யதார்த்தா சடஜித் சம்ஜ்ஞா-பொருத்தமாக இருக்கிறதோ
மச் சித்த விஜயாத்-சட வாயுவை விட அடியேனுடைய சித்தம் -மாமஸூ துஷ்ட தமம் -இருவரும் வென்றார்கள்

ஸ்ரீ பாஞ்ச ராத்ர சம்ஹிதையில் சடன் என்ற அசுரனை ஜெயித்த படியால் சடகோபம் என்ற திருநாமம் வந்ததாக கூறப் பட்டு உள்ளது –
துஷ்டர்களை ஸ்வா தினம் பண்ணிக் கொண்டவன் என்கிற அர்த்தத்தில் கெட்ட வழியில் செல்லும்
நம்மை வென்று சன் மார்க்கத்தில் கூட்டிச் செல்வதால் சடகோபம் என்கிற பெயர் –
அவரவர் பக்தர்களை அவரவர் பாதுகையாகச் சொல்வது வழக்கு –
அதனாலேயே ஸ்ரீ பாதுகையை சடகோபம் -சடாரி -என்கின்றனர் –

பாதுகைக்கு“சடாரி” என்று திரு நாமம் வந்ததற்கு காரணம் ஸாதிக்கிறார்.
சடஜித் என்றால் துஷ்டனை ஸ்வாதீனம் பண்ணிக் கொண்டவனென்று அர்த்தம்.
மிகவும் துஷ்டனான என்னை பாதுகையும் ஆழ்வாரும் கெட்ட வழிகளில் செல்லாமல் நல்ல வழிகளில்
செல்லும்படி செய்த படியால் அவ் விருவருக்கும் அப் பெயர் வந்தது.
நம்மாழ்வாருக்கு சடகோபனென்று திருநாமம். அந்தத் திருநாமம் பாதுகைக்கு எப்படி வந்ததென்பதற்கு காரணம் ஸாதித்தார்.
சடனென்ற அஸுரனைப் பாதுகை ஜயித்த படியால் பாதுகைக்கு “சடகோப”னென்ற திருநாமம் வந்தது.
இவ் விஷயம் ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில் சொல்லப் பட்டிருக்கிறதென்று சொல்லுகிறார்கள்.

யார் எனக்கு நின் பாதமே தந்து ஒழிந்தாய் –
விட்டுப் பிரியாமல் நிலை நின்று -மனம் வென்று -இரண்டு ஒற்றுமைகள் இதில்

—————————————————————————–

த்ரமிட உபநிஷன் நிவேச ஸூந்யான்
அபி லஷ்மீ ரமணாய ரோச யிஷ்யன்
த்ருவ மாவிசதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப ஸ்வயமேவ மாநநீய –22-

லஷ்மீ ரமணாய-சுவையன் திருவின் மணாளன்
ரோச யிஷ்யன் -இஷ்டமானவர்களாக ஆக்குவதற்காக
நிவேச ஸூந்யான் அபி -ஞானம் இல்லாதவர்களும் கூட
மாநநீய -கொண்டாடத் தக்கவர்
ஸ்வயம் த்ருவம் ஆவிசதிஸ்ம-தானே ஆவிர்பவித்தார் -இது திண்ணம்

அனைவரும் எம்பெருமானை அடைந்து எட்ட ஒண்ணா சுகம் பெற திருவாய்மொழி அருளினார் –
அத்தை கற்க திறன் அற்றவர்களும் கூட எம்பெருமான் திருவடி அடைய வேண்டும் என்கிற எண்ணத்துடனே
அவரே தானே ஸ்ரீ பாதுகையே திருவவதரித்து அருளினார் எனபது நிச்சயம் –

எல்லோரும் பெருமாளை யடைய வேண்டுமென்று
எண்ணங்கொண்டு நம்மாழ்வார் திருவாய்மொழி செய்தருளினார்.
அந்தத் திருவாய் மொழியையும் சிலர் நெட்டுரு பண்ணுகிறதில்லை.
அவர்களும் பெருமாளை யடைவதற்காக ஆழ்வார் பாதுகையாக அவதரித்தார்.

அதாவது
எல்லோரும் பெருமாளை யடைவதற்காக
ஸந்நிதிகளில் பாதுகையை எல்லோருக்கும் ஸாதிக்கிறார்கள்.-
அதனால் பாதுகைக்கு சடகோபனென்று பெயர்
அருளுக்கு இலக்கு ஆக்குவதில் ஒற்றுமை இதில் –

———————————————————————

நியதம் மணி பாதுகே ததான
ச முநிஸ்தே சடகோப இத்யபிக்யாம்
த்வது வாஸ்ரித பாத ஜாத வம்ச
பிரதிபத்த்யை பரமாததான ரூபம் –23-

நியதம் மணி பாதுகே -நிச்சயம்
ததான ச முநிஸ்தே சடகோப இத்யபிக்யாம் -அந்த முனிவரான நம்மாழ்வார் –
சடகோபன் என்கிற உன்னுடைய பெயரைத் தாங்குகிறார் –
இதி -ப -இதி -உயிர் மெய் எழுத்து யி இல்லை -எறும்பு போகும் வழியில் இடை வெளி விட்டுப்படிக்க வேண்டும்
பாதுகா தேவிக்கு முதலிலே சடாரி
த்வது வாஸ்ரித பாத ஜாத வம்ச -உன் மீது நிலை பெற்ற பாதுகைகளில் இருந்து உண்டான
அந்தணர் முகம் -வேளாளர் திருவடி -க்ஷத்ரியர் தோள் -வைஸ்யர் -தொடை -வேண்டிய ஆற்றல் அருளவே இப்படி
வேத அத்யயனம் அந்தணருக்கு -வணிகருக்கு மடி நிறைய செல்வம் -வேளாளர் காலால் உழைத்து -இத்யாதி
பிரதிபத்த்யை பரம் ஆததான ரூபம்—ரூபம் ஆததான -அந்தக் குலத்தை கௌரவிக்கவே இந்தக்குலத்தில் ஆவிர்பவித்தார்

ஒ ரத்ன பாதுகையே -அந்த நம்மாழ்வார் உன் பெயரை சடகோபம் என்பதைத் தனக்கு வைத்துக் கொண்டார்
நீ ஆஸ்ரயித்து இருக்கும் பெருமாள் திருவடியில் இருந்தே –பத்ப்யாம் ஸூத்ர– என்கிற ஸ்ருதியின் படியே உண்டான
ஸூத்ர குலத்தைத் தானும் மற்றவர்களும் கௌரவிப்பதைக் காட்டவே ஆழ்வார்
அந்தக் குலத்தில் ரூபம் எடுத்துக் கொண்டார் எனபது நிச்சயம்

ஏ பாதுகையே! நம்மாழ்வார் உன்னிடத்தில் பக்தியினால் உனது “சடகோபன்”என்ற பெயரை வஹித்து,
சூத்ர வம்சத்தைக் கொண்டாடுவதற்காகவே அந்த வம்சத்தில் அவதரித்தார்.

திருவடி சம்பந்த ஒற்றுமை இதில்

——————————————————————-

முநிநா மணி பாதுகே த்வயா ச
ப்ரதிதாப்யாம் சடகோப சம்ஜ்ஞயைவ
த்விதயம் சகல உபஜீவ்ய மாஸீத்
ப்ரதமேன ஸ்ருதி ரன்ய தஸ் ததர்த்த –24-

முநிநா மணி பாதுகே த்வயா ச -ஸ்ரீ பாதுகா தேவி உம்மால்
ப்ரதிதாப்யாம் சடகோப சம்ஜ்ஞயைவ -புகழ் பெற்ற ஆழ்வாராலும்
த்விதயம் சகல உபஜீவ்ய மாஸீத் -அனைவரும் உப ஜீவிக்கும் படி ஆனார்கள்
ப்ரதமேன ஸ்ருதி ரன்ய தஸ் ததர்த்த -முதலில் சொன்ன ஆழ்வாரால் வேதமும் –
மற்ற ஒன்றான ஸ்ரீ பாதுகையால் -தத் அர்த்தம் வேதப் பொருளான அவனும் அனைவருக்கும் கிட்டும்படி ஆனார்கள்
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை -ஸஞ்சாரம் பண்ண வைத்து -நம்மிடமே கூட்டி
டிவி மொபைல் அனைத்திலும் அனுப்பியும் -வாழ்விக்கிறாள் –

ஸ்ரீ பாதுகையே ஒரு நீசனும் கூடப் பெருமாளை சேவிக்கும் படியாக வீதியிலே
அவனை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வருகிறாய்
வேதம் தமிழ் செய்த மாறன் -வேதத்தின் உட்பொருளான -பரம் பொருளை –
யாவரும் உணரும்படியாக -செய்து அருளினார்
ஆகவே தான் நீங்கள் இருவரும் ஸ்ரீ சடகோபன் என்ற பெயரைப் பெற்றீர்கள் –

ஏ பாதுகையே நீயும் நம்மாழ்வாரும் ஒரு விதமான காரியஞ்செய்தீர்கள் .
அதனால் உங்களிருவர்களுக்கும் “சடகோபன்” என்று ஒரே பெயர்.
நம்மாழ்வார் வேதத்தைத் தமிழாகச் செய்து எல்லோரும் சொல்லும்படியாகப் பண்ணினார்.
நீ வேதத்தினுடைய அர்த்தமான பெருமாளைச் சண்டாளன் கூட ஸேவிக்கும் படியாக
வீதியிலே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்தாய்.

—————————————————————–

ஆகர்ணய கர்ணாம்ருத மாத்ம வந்த
கதா சஹ்ரம் சடகோப ஸூரே
மஞ்ஜூ ப்ரணாதாம் மணி பாதுகே த்வாம்
ததேக நாமா நம நுஸ்மரந்தி–25-

ஆகர்ணய கர்ணாம்ருத மாத்ம வந்த கதா சஹ்ரம் சடகோப ஸூரே -திவ்ய ஸூரி -பக்தாம்ருதம் —
அடியார்க்கு -செவிக்கு இனிய செஞ்சொல் –ஆயிரம் -போல் உனது நாதமும்
மஞ்ஜூ ப்ரணாதாம் -இனிய நல்ல ஒலி
மணி பாதுகே த்வாம் -இரத்தின பாதுகா தேவியே உன்னை
ததேக நாமா நம நுஸ்மரந்தி-அதே ஆழ்வார் பெயரையே சொல்லி உன்னையும் அழைக்கிறார்கள் –

நம்மாழ்வார் உடைய ஆயிரம் பாக்கள் மிக இனிமையாக இருப்பது போலே
உன் சப்தமும் இனிமையாக இருப்பதாலேயே
நம்மாழ்வார் உடைய பெயராலேயே உன்னையும் நினைவில் வைத்து விட்டார்கள் –

பெரியோர்களுக்கு நம்மாழ்வாருடைய பாசுரம் மிக இன்பமாயிருக்கிறது.
அதே மாதிரியாகவே உன்னுடைய சப்தமிருக்கிறது.
உலகத்தில் ஒருவர் மாதிரி ஒருவர் பேசினால்
அவர் வரும் பொழுது அவரே வந்துவிட்டார் என்று சொல்வது வழக்கம்.
அதனால் நம்மாழ்வாருடைய பெயரை உனக்கு வைத்துவிட்டார்கள்.

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆத்மஸ்வரூபம் என்ன என்பதை உணர்ந்தவர்களுக்கு
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மிகவும் இன்பமாக உள்ளது.
இது போன்று அவர்களுக்கு நம்பெருமாள் நடக்கும் போது எழும் உனது ஓசையும் இனிமையாக உள்ளது.
ஆகவே ஒரே போன்ற சப்தம் உடைய உனக்கு நம்மாழ்வாரின் பெயரையே வைத்தனர்.

இந்த உலகில் ஒருவரைப் போன்று மற்றொருவருக்குக் குரல் இருந்தால்,
ஒருவர் பேசும்போது மற்றவர் வந்துவிட்டார் என நினைப்பார்கள்.
அது போன்று நீ வரும்போது எழும் நாதம் கேட்ட பலரும், நம்மாழ்வார் வந்துவிட்டதாகவே எண்ணினர்.
எனவே உன்னையும் அவராகவே பெயரிட்டு அழைத்தனர்.

இவ்விதமாக நீயும் நம்மாழ்வாரும் ஒன்றே என நினைப்பவர்கள் செய்வது என்ன?
நம்பெருமாள் ஸஞ்சாரம் செய்யும்போது எழும்பும் உனது ஒலியைக் கேட்டால்,
திருவாய்மொழியின் ஓசையைக் கேட்டது போன்றே எண்ணுகின்றனர்.
திருவாய்மொழியின் ஓசையைக் கேட்கும்போது, உனது நாதத்தையே அதில் கேட்கின்றனர்.

அமுதம் போன்ற நாதமும் திருவாய் மொழி அமுதம் ஒற்றுமை இதில்

————————————————————————-

ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம்
சேஷத்வ காஷ்டாம பஜன் முராரே
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ
லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி –26-

ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம் சேஷத்வ காஷ்டாம் அபஜன் முராரே –எந்த ஆழ்வார் -முரனை வதைத்த
அவனது சேஷத்வ எல்லை நிலத்தில் அடைந்தாரோ
அடியார் அடியார் தம் அடியார் –பயிலும் சுடர் ஒளி –
ப்ருத்ய ப்ருத்ய -முகுந்த மாலையிலும் உண்டே -இப்படி எட்டாவது படியில் இருக்கும் ஆழ்வாரை
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி-அந்த நம்மாழ்வார் பெயரைத் தாங்கி –
தொண்டர் தலைவன் பெயரைத் தங்குவது போல் –
உன்னாலே -இவரை வென்று -சடகோப தாசன் -என்று ஒன்பதாவது படிக்குச் சென்றாயே –

அடியார் அடியார் –அடியேன் என்று ஆழ்வார் சாதித்தார் –
அவர் திருநாமம் வகித்துக் கொண்டு
அவரைக் காட்டிலும் ஜெயித்து நீ மேலும் ஒருபடி சென்று விட்டாய் –
நம்மாழ்வார் திருநாமம் வைத்துக் கொண்டு அவருக்கும் தாசன் என்று காட்டி அருளினாய் என்றபடி –

ஏ பாதுகையே ! நம்மாழ்வார் பெருமாளுடைய பக்தர்கள் வரிசையில் நான் எட்டாவதாயிருக்கிறேன் என்று ஸாதித்தார்.
அவ் விஷயத்தில் அவரை ஜயிப்பதற்காகவே அவர் பெயரை நீ வஹித்துக் கொண்டு ஒன்பதாவதாய் ஆகிவிட்டாய்.
ஒருவரின் பெயரை ஒருவர் வைத்துக் கொள்வது அவருக்குத் தாஸன் என்பதைக் காண்பிக்கும் என்பது சாஸ்த்திர ஸித்தம்.

சேஷத்வ காஷ்டையில் மூழ்கிய ஒற்றுமை இதில்

——————————————————————————

சய்யாத்மநா மதுரி போரசி சேஷ பூதா
பாதாஸ் ரயேண ச புன த்வி குணீ க்ருதம் தத்
பூயோ அபி பாகவத சேஷ தயா ததேவ
வயங்க்தும் பதாவநி சடாரி பதம் பிபர்ஷி –27-

சய்யாத்மநா மதுரி போர் அசி சேஷ பூதா -மதுவை வென்ற அவனுக்கு சேஷ பூதா ஸ்தானம் முதலில் அடைந்து -ஆதி சேஷனாகி
பாதாஸ்ரயேண ச புன த்வி குணீ க்ருதம் தத் -மீண்டும் -திருப்பாதங்களை அடைந்து -இரண்டு -இரட்டிப்பாகி –
ஆதி சேஷன் ஓன்று தானே –
திருவடிக்கீழ் குற்றேவல் திரு மேனிக்கு விட இரட்டிப்பாகும்
இரட்டை பாதுகை –
ஆனாலும் முழுமை ஆவதற்காகவே ததீய சேஷத்வம்
பூயோ அபி பாகவத சேஷ தயா ததேவ -மேலும் மீண்டும் பூர்த்தி ஆவதற்காகவே
வயங்க்தும் பதாவநி சடாரி பதம் பிபர்ஷி -நம்மாழ்வார் திரு நாமத்தைத் தாங்கிக் கொண்டாய் –
அதன் மூலம் அடிமைத்தனத்தின் எல்லை நிலம் அடைந்தாய் –

ஸ்ரீ பாதுகையே -முதலில் படுக்கையாக இருந்து எளிமையாக கைங்கர்யம் செய்யும் பாவத்துடன்
பாதுகையாய் திருவடியைப் பற்றினாய் –
அதனால் சேஷத்வம் இரட்டிப்பாய் ஆனதே –
மேலும் பாகவதர்களுக்கும் ஆட்செய்யக் கருதி நம்மாழ்வார் திருநாமம் வைத்துக் கொண்டாய் –

ஏ பாதுகையே நீ பெருமாளுக்குப் படுக்கையாயிருந்து தாஸனானாய்.
இன்னும் தணிந்து கைங்கர்யம் செய்ய வேண்டுமென்று பாதுகையனாய்.
இதுவும் போராது பாகவதர்களுக்கு தணிந்திருக்க வேண்டுமென்று எண்ணியே
ஆழ்வாருடைய பெயரை வைத்துக் கொண்டாய்.

அடியார்க்கு அடிமை -இரண்டு திருவாய் மொழிகள் உண்டே -கீழே பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்கு அடிமை -ததீய சேஷத்வம் -உறுமோ பாவியேனுக்கு -ஆகவே இரண்டு ஸ்லோகங்கள் இதிலும் –

———————————————————————

பத்யேன தேவி சடகோப முநிஸ் தவாஸீத்
தஸ்யாபி நாம வஹநான் மணி பாதுகே த்வம்
சேஷீ பபூவ யுவயோர் அபி சேஷ சாயீ
சேஷம் த்வ சேஷம் அபி சேஷ பதே ஸ்திதம் வ –28-

பரஸ்பர அடிமை -இருவரும் –
பெருமாள் -பாதுகை -நம்மாழ்வார் -மூவரையும் சேஷிகளாகக் கொண்டோமே
பத்யேன தேவி சடகோப முநிஸ் தவாஸீத்-பத்யம் -கவிகளாலே -உன்னுடைய தொண்டரானார்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -முதலிலே தொண்டர் ஆனார்
தஸ்யாபி நாம வஹநான் மணி பாதுகே த்வம் -நீ அவர் பெயரை சூட்டிக் கொண்டு அவருக்கு அடியார் ஆனாயே
பரஸ்பர நீச பாவம்
சேஷீ பபூவ யுவயோர் அபி சேஷ சாயீ -தலைவனான அவன் உங்கள் -இருவருக்கும்-
பெரிய பெருமாள் அணுக்கத் தொண்டர்களாக்கிக் கொண்டு மகிழ்ந்து
சேஷம் த்வ சேஷம் அபி சேஷ பதே ஸ்திதம் வ -மூவரைத் தவிர அசேஷமான ஸமஸ்த வஸ்துக்களும் –
அங்கு ஏதும் சோராமல் ஆள்கின்ற எம்பெருமான் -மூவரும் -ஆனீர்களே

ஸ்ரீ பாதுகையே உன்னைப் பற்றி அருளிச் செய்து உனக்கு சேஷி ஆனார் நம்மாழ்வார் –
அவர் உடைய திருநாமம் வகித்து நீ அவருக்கு சேஷம் ஆனாய் –
உங்கள் இருவருக்கும் ஸ்வாமி எம்பெருமான் –
நீங்கள் மூவரும் மற்ற எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமிகள் ஆகிறீர்கள் –
சர்வ சேஷியான எம்பெருமானை சேஷ பூதர்கள் ஸ்ரீ பாதுகை மற்றும் நம்மாழ்வார் பலம் கொண்டு தானே அடைகிறார்கள் –

உன்னைப்பற்றி நம்மாழ்வார் பாடினார்.
அதனால் அவர் உனக்குக் கீழ்ப் பட்டிருந்தவராக ஆனார்,
நீ அவர் பெயரை வஹித்துக் கொண்டதினால் அவருக்குக் கீழ் படிந்தாய்.
உங்களிருவருக்கும் பெருமாள் எஜமானர்.
நீங்கள் மூன்று பெயரும் (பெருமாள், நம்மாழ்வார், பாதுகை) மற்ற வுலகங்களுக்கெல்லாம் யஜமானர்களாக ஆகின்றீர்கள்.
பெருமாள் எல்லோருக்கும் யஜமானர்.
பெருமாளைச் சேர்ந்தவர்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் தாழ்வுமுயர்த்தியுமுண்டு.

———————————————————————-

விந்த்யச்தம் பாத விஹதக தேர் விஷ்வகா சாந்த சிந்தோ
கும்பீ ஸூ நோர ஸூரக பளக்ராசின ச்வைர பாஷா
நித்யம் ஜாதா சடரி புத நோர் நிஷ்பதன்நீ முகாத் தே
ப்ராசீ நா நாம் ஸ்ருதி பரிஷதாம் பாதுகே பூர்வ கண்யா –29-

விந்த்ய ஸ்தம்பத் -விந்திய மலையை
அவிஹத கதேர் -தாண்டி வரும் வலிமை
விஷ்வக் ஆகாசந்த சிந்தோ -கடல் நீரை ஆசமனம் செய்து
கும்பீ ஸூ நோர -கூட முனிவர் அகஸ்தியர்
அஸூர கபள க்ராசின -வாதாபி உண்டு அழித்து
ஸ்வைர பாஷா -பிடித்த தமிழ் -வண் தமிழ் மா முனி -ராமர் காலத்திலேயே உண்டே
நித்யம் ஜாதா சடரி புத நோர் நிஷ்பதன்நீ முகாத் தே -உன்னுடைய அவதாரமான நம்மாழ்வார் திரு வாக்கில்
வெளிவந்து நித்யத் தன்மை பெற்றது -அனைவரும் அறியும்படி
ப்ராசீ நா நாம் ஸ்ருதி பரிஷதாம் பாதுகே பூர்வ கண்யா -அநாதி யான ஸ்ருதி வேதக் கூட்டங்களுக்கும் முன்னே செல்லும் பெருமையும் பெற்றதே –

தடையாக இருந்த விந்தய மலையை அடக்கி கடலை ஆசமனம் செய்து வாதாபி என்ற அசுரனை
புஜித்து ஜீரணித்து அதிசயங்கள் புரிந்த அகஸ்த்ய மகர்ஷி தமிழ் மொழியைக் கொண்டாடி வளர்த்தார்
நம்மாழ்வாராக திருவவதரித்த உன் வாக்கினால் தமிழ் வேதம் இயற்றப் பட்டு தமிழ் மொழி விசேஷ கௌரவம் பெற்றதே –
ஆகவே வடமொழி வேதங்களுக்கும் முன் செல்லும் பேறு பெற்றதே தமிழ் வேதம் -இது தான் முக்கியம்

பாதுகையே! தமிழ் பாஷையானது நித்யமாய் இருக்கிறது. அகஸ்தியரென்ற் மஹரிஷிக்கு மிகவும் இஷ்டமானது.
அப்படியிருந்தும் அப்பாஷைக்கு விசேஷ கவுரமில்லாமலிருந்தது. நீ ஆழ்வாராக அவதரித்து உன்னுடைய முகத்திலிருந்து
திருவாய்மொழியாக வெளிப்பட்டபடியால் வேதத்துக்கு மேலே கெளரவமேற்பட்டது.
அகஸ்தியர் விந்தியமென்ற மலையை அடக்கினார். ஸமுத்திரத்தை ஆசமனம் செய்தார்.
வாதாபி என்ற அஸுரனைப் புஜித்து ஜரிக்கப் பண்ணினவர். இன்னும் அனேகம் ஆச்சரியமான காரியத்தைச் செய்தார்.

பாதுகை ஆழ்வாருக்கு அனுக்ரஹம்
ஆழ்வார் அகஸ்தியர் மொழிக்கு அனுக்ரஹம்
இவ்வாறு ஒற்றுமை இதில்

—————————————————————-

சடகோப இதி சமாக்யா தவ ரங்க துரீண பாதுகே யுக்தா
ஸூதே சஹஸ்ர மேவம் ஸூக்தீ ஸ்வயமேவ யந் மயா பவதீ -30-

சடகோப இதி சமாக்யா-பெயரும் -புகழும் -அறியப்படும் தன்மைகள்
தவ ரங்க துரீண பாதுகே யுக்தா -உனக்கும் பொருந்தும்
ஸூதே சஹஸ்ர மேவம் ஸூக்தீ –ஆயிரம் திருவாய் மொழி ஆழ்வார் அருளிச் செய்தது போல்
ஸ்வயமேவ யந் மயா பவதீ-நீயும் என்னைக்கொண்டு என் மூலம் உருவாக்கி -இவ்வாறு ஒற்றுமை இதில் –

ஸ்ரீ பாதுகை -சடகோபன் என்கிற திரு நாமம் உனக்குச் சாலப் பொருந்தும்
நம்மாழ்வார் எம்பெருமானை ஆயிரம் பாசுரங்களால் ஸ்துதித்து தமிழ் வேதம் அருளிச் செய்தார் –
இந்த காரணத்தாலே தானோ நீயும் என்னைக் கொண்டு ஆயிரம் ஸ்லோகங்கள் செய்து அருள்கின்றாய் –

ஏ பாதுகையே! நம்மாழ்வார் பெருமாளைப் பற்றி ஆயிரம் பாசுரம் பாடினார்.
நீ என்னைக் கொண்டு ஆயிரம் ஸ்லோகங்கள் பண்ணுகிறாய்.
ஆகையால் அந்தப் பெயர் உனக்குத் தகும்.
இந்தப் பெயர் வருவதற்குத் தான் லக்ஷம் ஸ்லோகம் பண்ணும் படி நியமிக்கவில்லை.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் –ஸ்லோகங்கள் 1-20-

March 4, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————————————

பாதுகா பாதுகா பாதுகா’ என்று சொல்லிப் பாருங்கள், பாதுகாப்பா என்று வரும்.
ஆம்! இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்துவோம், அவை நம்மை நிச்சயம் காப்பாற்றும்

———–

1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் –ஸ்லோகங்கள் 1-20-
2-சமாக்யா பத்ததி —திரு நாம பத்ததி –ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சடகோபம் -ஸ்லோகங்கள் -21-30-
3-பிரபாவ பத்ததி -பெருமைப் பத்ததி -பாதுகையின் பெருமை -ஸ்லோகங்கள் -31-100-
4-சமர்ப்பண பத்ததி -பணயப் பத்ததி -பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் பணயமாக விட்டு அருளியது -ஸ்லோகங்கள் -101-120-
5-பிரதி பிரஸ்தான பத்ததி -பதில் பயணப் பத்ததி -பெருமாளை விட்டு ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பரத ஆழ்வான் உடன் சென்றது -ஸ்லோகங்கள் -121-140-
6-அதிகார பரிக்ரஹ பத்ததி -உரிமைக் கோட் பத்ததி-ராஜ்ய அதிகாரம் -ஸ்லோகங்கள் -141-180-
7-அபிஷேக பத்ததி -முடி சூட்டுப் படலம் -ஸ்லோகங்கள் -181-210-
8-நிர்யாதநா பத்ததி -மீட்சிப் பத்ததி -ஸ்லோகங்கள் -211-240-
9-வைதாளிக பத்ததி -வந்திவை தாளிக பத்ததி -அரசர்கள் புகழ்வது -ஸ்லோகங்கள் -241-250-
10-ஸ்ருங்கார பத்ததி -பெருமாள் உடன் ஸ்ரீ பாதுகை சேர்ந்து மகிழ்வது -ஸ்லோகங்கள் -251-260-
11-சஞ்சார பத்ததி -ஸ்லோகங்கள் -261-320-
12-புஷ்ப பத்ததி -ஸ்லோகங்கள் -321-350-பூக்களால் அர்ச்சனை –
13-பராக பத்ததி -ஸ்ரீ பாதுகா தூள் படலம் -ஸ்லோகங்கள் -351-380-
14-நாத பத்ததி -இனிய நாத பத்ததி -ஸ்லோகங்கள் -381-480-
15-ரத்ன சாமான்ய பத்ததி -மணிப் போது படலம் -ஸ்லோகங்கள் -481-520-birds eye view
16-பஹூ ரத்ன பத்ததி -ஸ்லோகங்கள் -531-580-
17-பத்மராக பத்ததி -செம்மணிப் படலம் -ஸ்லோகங்கள் -581-610-
18-முக்தா பத்ததி -முத்துப் படலம் -ஸ்லோகங்கள் -611-660-
19-மரகத பத்ததி -ஸ்லோகங்கள் -661-680-
20-இந்திர நீல பத்ததி -நீல மணி படலம் -ஸ்லோகங்கள் -681-710-
21-பிம்ப பிரதிபிம்ப பத்ததி -ஸ்லோகங்கள் -711-730-
22-காஞ்சனா பத்ததி -பொற் படலம் -ஸ்லோகங்கள் -731-750-
23-சேஷ பத்ததி -சேஷ பூதமாய் -ஆதி சேஷ அவதாரமாய் -ஸ்லோகங்கள் -751-760-
24-த்வந்த்வ பத்ததி -இரட்டைப் படலம் -ஸ்லோகங்கள் -761-780-
25-சந்நிவேச பத்ததி -ஸ்லோகங்கள் -781-800-
26-யந்த்ரிகா பத்ததி -குமிழ்கள் அமைப்பும் அனுபவம்- குடை போன்றவை -மேலும் பல -படலம் -ஸ்லோகங்கள் -801-810-
27-ரேகா பத்ததி -வேரிப்படலம் -ஸ்லோகங்கள் -811-820-
28-ஸூபாஷித பத்ததி -நன் மொழிப் படலம் -ஸ்லோகங்கள் -821-830-
29-பிரகீர்ண பத்ததி -கலம்பக படலம் -ஸ்லோகங்கள் -831-910-
30-சித்ர பத்ததி -ஸ்லோகங்கள் -911-950-
31-நிர்வேத பத்ததி -உருக்கப் படலம் -வைராக்கியம் வெறுப்பு ஆற்றாமை வெளிப்படுத்தும் உருக்கப் படலம் -ஸ்லோகங்கள் -951-970-நைச்ய அனுசந்தானம் –
32-பல பத்ததி– பேற்றுப் படலம் -ஸ்லோகங்கள் -971-1008-

——–

அஷ்டாக்ஷரம் +த்வயம் -32
சரம ஸ்லோகம் -32
காயத்ரி -24-+அஷ்டாக்ஷரம் சேர்த்து -32
ப்ரஹ்ம வித்யை -32-

———-

நிழலும் அடி தாறும் ஆனோம் -பெரிய திருவந்தாதி -31-
ஓரே யாமத்தில் அருளிச் செய்யப்பட பிரபந்தம் –
ஒவ் ஒரு பத்ததியும் -அனுஷ்டுப் தொடங்கும் ஆர்யா சந்தஸ்ஸூ முடியும்

ப்ரஹ்ம வித்யை 32-ந்யாஸ வித்யை சரணாகதி பற்றியே அனைத்தும்

பொலிக பொலிக சந்த ஜெயந்தி தொடங்கி ஜெயந்தி என்றே நிகமிக்கிறார்

———————————————————–

1–ப்ரஸ்தாவ பத்ததி —விஷயம் அறிமுகம் –ஸ்லோகங்கள் 1-20–

சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீச சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-

தலைக்கு மேல் பாதுகை வைத்த அடியார்களின் திருவடி ரேணவ-மண் துகள்கள் -இதுவே இதன் கவி நயம்
புவந த்ராண-புவனங்களை காக்க வல்லது –
அடியார்க்கு அடியார் –அடியோங்களே -சரம -நிஷ்டை –

ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகைகளை ஸ்ரத்தை யுடன் சிரஸ்ஸில் தரித்துக் கொள்ளும் பெரியோர்கள் உடைய
திருவடித் தூள்கள் உலகம் அனைத்தையும் உஜ்ஜீவிக்கச் செய்கின்றன –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழும் பரமை காந்திகள் உலகையே உஜ்ஜீவிக்கச் செய்யும் சக்தி பெற்றவர்கள் ஆகிறார்கள் –

ஸ்ரீரங்கநாதன் பாதுகைகளை பரம ஸந்தோஷத்துடன் சிரஸில் வைத்துக் கொள்ளுகிற பெரியோர்களுடைய
திருவடி தூள்கள் எல்லா லோகத்தையும் காப்பாற்றுகிறது.
அப் பேர்ப்பட்ட பெரியோர்கள் மிகவும் உயர்ந்தவர்களாயிருக்கிறார்கள்.

(உட்கருத்து) நம்மாழ்வாரைக் கொண்டாடுகிறவர்கள் தாங்களும் நல்ல கதி யடைந்து
எல்லாருக்கும் ஸகல புருஷார்த்தங்களையும் கொடுப்பார்கள் என்பது.

காரி ஸூதன் கழல் சூடிய முடியும் ககன சிகை முடியும் கொண்ட ஜெகதாசார்யர் –
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ராமானுஜர் அடியார்களே உலகைக் காத்து அருளுகிறார் –
மதுரகவி ஆழ்வார் நாதமுனிகள் -ராமானுஜர் போல்வார் அடியார்களே உலகைக் காத்து அருளுகிறார் –
பொலிக பொலிக பொலிக என்று பாகவத மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –

அந்தாதி முதல் ஸ்லோகமும் -கடைசி ஸ்லோகமும்
சத்துக்களின் பன்மையே – சந்த -சார அசார விவேகிகள் –

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜயதி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயாத நாஸ் த்ரிவேதீம் அவந்த்ய யந்தோ ஜயந்தி புவி சந்த –1008–

ஸ்ரீ யதி ராஜர் என்கிற ஸ்ரீ ராமானுஜர் உடைய திவ்ய ஸூக்திகள் -ஸ்ரீ பாஷ்யம் முதலானவை -சிறப்பாக விளங்குகின்றன –
மோஷ தாதா வாகிற ஸ்ரீ ரங்க நாதனுடைய திருப் பாதுகையினை இவ்வுலகில் விளங்குகிறது –
ஸ்ரீ பாஷ்யகார ஸ்ரீ ஸூக்திகளையும் ஸ்ரீ பாதுகா மூர்த்தியான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளையும் மட்டுமே தம் தனம் என்று கொண்டு இருக்கும்
சாதுக்கள் த்ரயீ என்ற வேதத்தை வீணாக்காமல் அதை முழு பிரமாணம் ஆக்குகிறவர்கள் -அவர்கள் இப்புவியில் சிறந்து விளங்குகிறார்கள் –

உபய வேதாந்தம் -நமக்கே அசாதாரணம் அன்றோ –

——————————————–

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோதாஹரணாய பக்தி பாஜாம்
யத் உபஞ்ஞம் அசேஷத: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவ பாதுகா ப்ரபாவ:–2-

பரதாய பரம் நமோ அஸ்து -அந்த பரதாழ்வான் பொருட்டு நமஸ்காரங்கள் –
ஜடா பரதர் துஷ்யந்த மகனும் பரதன் -நாட்டிய சாஸ்திரம் அருளிய பரதன் -போன்ற பலர் உண்டே
தஸ்மை பிரதமோதாஹரணாய பக்தி பாஜாம் -பக்தர்களுக்கு முதல் உதாரணம் -மற்றவர்களை வியாவர்த்தித்து –
ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ -கோடி ராமரும் அண்ணல் உனக்கு ஒப்போ கௌசல்யை –
யத் உபஞ்ஞம் அசேஷத ப்ருதிவ்யாம் பிரதிதோ ராகவ பாதுகா பிரபாவ-பாதுகையின் பெருமையை உலகோர் அறியும்படி

ஸ்ரீ ராமனுடைய ஸ்ரீ பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தி உள்ளதை உலகுக்கு எடுத்துக் காட்டிய
பரம பாகவதனாகிய பரதனை சேவிக்கின்றேன்

பரதன் -என்றது ஸ்ரீ நாத முனிகளையும் குறிக்கும் -பாவ ராக தாள கொண்டு அருளிச் செயலை அளித்தார் அன்றோ –
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் ஸ்ரீ நாத முனி-
பாதுகையான நம்மாழ்வார் பெருமை உலோகர் இவரால் தானே பரவப் பெற்றது
ஸ்ரீ நம்மாழ்வாரையும் திருவாய் மொழியும் தானே உலகை உஜ்ஜீவிக்கும் பரம சக்திகள்

ஸ்ரீபரதாழ்வானால் தான் ஸ்ரீராமானுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிற தென்பது எல்லா வுலகத்திற்கும் தெரிந்தது.
ஆகையால் ஸ்ரீபரதாழ்வாரைத் தான் ஸேவிக்கிறேன்.

ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் இருபத்தைந்தாவது ஸ்லோகத்தில்
“பரத” என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது.
அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால் தான் உலகத்திற்கு தெரிந்தது
“பரத” என்பதால் தெரியப்படுத்தபட்டதில் பாவ, ராக, தாள் என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும்
மஹா பண்டிதராகிய நாதமுனிகளை ஸேவிக்கிறேன்

—————————————————————

வர்ணஸ்தோமை: வகுள ஸுமந: வாஸநாம் உத்வஹந்தீம்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிம் அபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம்
பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்கபர்த்து:
த்வந் நாமாநம் முநிம் இஹ பஜே த்வாம் அஹம் ஸ்தோதுகாம:—3-

வர்ணாஸ் தோமைர் -எழுத்துக்கு கூட்டங்கள்
வகுள ஸூமநோ வாசநா முத்வ ஹந்தீம் -மகிழம் பூ வாசனையை -தாங்கிக் கொண்டு உள்ளது -திருவாய் மொழியிலும் இருக்குமே
ஆம் நாயா நாம் ப்ரக்ருதிம் அ பராம் -வேதங்களின் மற்ற ஒரு வடிவமே திருவாய் மொழி
சம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம் -கண்டு பிடித்துக் கொடுத்து அருளியவர் -த்ருஷ்ட்டி பார்த்து –
நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளைப் போல் இவரையும் ரிஷி முனி கவி என்னும் –ஆச்சார்ய ஹ்ருதயம் -47-
பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்க பர்த்து -ஸ்ரீ ரெங்க நாதனின் திருவடிகளில் நித்யம் வைக்கப்பட்ட
புத்தி உடைய நம்மாழ்வார்-நேரே கூப்பிட்டு அருளிச் செய்கிறார் –
த்வன் நாமா நம் முநி மிஹ பஜே த்வாமஹம் ஸ்தோதுகாம-உம்முடைய பெயரே -சடாரி -சடகோபன் -முனிவர் –
தமிழ் வேதம் வழங்கி மனன சீலர் -16 வருஷம் இடைவிடாமல் தியானித்து
இஹ இப்பொழுது -நான் ஸ்துதி தொடங்கும் முன் உம்மை வணங்கி தொடங்குகிறேன் –

வேதம் தமிழ் செய்த மாறன் -ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மொழி அருளிச் செய்து
எக்காலமும் ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடிகளையே நினைத்து கொண்டு இருந்தவர் ஆகிறார்
ஸ்ரீ பாதுகை – ஸ்ரீ சடாரி- நம்மாழ்வார் என்று அருளிச் செய்கிறார் –

திருவாய்மொழி என்பது தமிழ் வேதம்.எப்பொழுதும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியையே நினைத்துக் கொண்டிருந்த
நம்மாழ்வார் அந்த வேதத்தைக் கண்டு பிடித்தார்.
ஸ்ரீரங்கநாதன் பாதுகையென்று சொல்லப்பப்டுகிற அவரை
இந்த ஸ்தோத்ரம் விக்னமில்லாமல் முடிவதற்காக முதலில் த்யானிக்கிறேன்.

—————————————————————–

திவ்ய ஸ்தாநாத் த்வம் இவ ஜகதீம் பாதுகே காஹமாநா
பாத ந்யாஸம் ப்ரதமம் மநகா பாரதீ யத்ர சக்ரே
யோக க்ஷேமம் ஸகல ஜகதாம் த்வயி அதீநம் ஸ ஜாநந்
வாசம் திவ்யாம் திசது வஸுதாஸ்ரோத்ர ஜன்மா முநிர் மே—4-

திவ்ய ஸ்தாநாத் த்வமிவ ஜகதீம் பாதுகே காஹ மாநா -சத்ய லோகத்தில் இருந்து வந்து அடைந்தாயே -விட்டுப் பிரியாமல் பாதுகா தேவி
பாத ந்யாசம் ப்ரதம மநகா பாரதீ யத்ர சக்ரே -முதல் காலடி வைத்து -தூய்மையான சரஸ்வதி தேவி -எங்கே வைத்தாள் என்றால்
வால்மீகி பகவான் நாக்கில் தானே -ஆதி கவி ஆனார் –
யோக ஷேமம் சகல ஜகதாம் த்வய் யதீநம் ச ஜாநன் -உலகோரின் யோகமும் சேமமும் உனது அதீனம்
இல்லாதது கிட்டவும் கிட்டியது நிலைக்கவும் -பாதுகா தேவியே -வால்மீகி ஸ்லோகம் உண்டே
வாசம் திவ்யம் திசது வஸூதா ஸ்ரோத்ர ஜன்மா முநிர் மே –பூமி தேவியின் காதாக புற்று -ant hill -அதில் இருந்து தோன்றியதால் -வால்மீகி
அடியேனுக்கு திவ்யமான வார்த்தைகளைக் கொடுத்து அருளட்டும் -அத்தைக்கு கொண்டு ஸ்தோத்ரம் பண்ணுவேன்
நம்மாழ்வார் பற்றி எழுத -பாதுகையே ஆழ்வார் –

இராமாயணத்திற்கு முன்பு வேதங்கள், புராணங்கள் என்று பல இருந்தபோதிலும், ஸம்ஸார விஷயங்கள் அடக்கிய
உயர்ந்த நூல்கள் ஏதும் இருந்தது கிடையாது. ஆக முதலில் தோன்றிய இனிமையான காவியம் இராமாயணமே ஆகும்.
இதே போன்று முதல் அர்ச்சாவதாரமாக இந்த மண்ணில் இறங்கியவன் பெரியபெருமாள் என்றும், நம்பெருமாள் என்றும்,
அழகிய மணவாளன் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கநாதன் என ஒப்பு நோக்குகிறார்.
சரஸ்வதிக்கும் பாதுகைக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
சரஸ்வதி முதன் முதலாக பாரத கண்டத்தில் தோன்றியதால் பாரதி எனப்பட்டாள்;
பாதுகை முதலில் பரதனால் ஆராதிக்கப்பட்டதால் பாரதி எனப்படுகிறது. முதலில் பாதுகை இங்கு வந்திருக்கவேண்டும் .
அதனை ஒரு கணமும் பிரியாதவனான நம்பெருமாள், பாதுகைகளைத் தொடர்ந்தபடி இங்கு வந்தான் என்று கருத்து.

ஒ பாதுகையே -நீ தானே ஸ்ரீ ரங்க நாதனை ஸ்ரீ ரங்க விமானத்துடன் இஷ்வாகு குலத்துக்கு பிரசாதமாக
அயோத்யைக்கு எழுந்து அருளப் பண்ணினாய் –
ஸ்ரீ சரஸ்வதி தேவியும் ஸ்ரீ வால்மீகி மகரிஷிக்கு வாக்காய் இருந்து உன்னைப் பற்றி காவ்யம் இயற்றினாள்
அந்த வால்மீகி மஹரிஷி எனக்கு நல் வார்த்தையைக் கொடுக்க வேண்டும் -ஸ்லோகம் -900-மேலே காண்க –

மாதர் மஞ்ஜூஸ்வ ந பரிணத ப்ரார்த்தனா வாக்ய பூர்வம்
நிஷிப்தாயாம் த்வயி சரணயோ பாதுகே ரங்க பர்த்து
த்வயாயத்தம் கிமபி குசலம் ஜா ந தீநாம் ப்ரஜா நாம்
பர்யாப்தம் தந்னகலுந பவத்யாத்மா நிஷேப க்ருத்யம் –900-

————————————————————

நீசே அபி ஹந்த மம மூர்த்தநி நிர்விசேஷம்
துங்கே அபி யத் நிவிசதே நிகம உத்தமாங்கே
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி: ப்ரதம உபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதி பாதுகயோர் யுகம் தத்—5-

நீசே அபி ஹந்த -தாழ்ந்தவனாக இருந்தாலும்
மம மூர்த்தநி நிர்விசேஷம்-ஏற்றத் தாழ்வு பாராமல் அடியேனுடைய சென்னியிலும் அமர்ந்து –
சடாரி தலையில் வைத்தாலும் அலம்ப வேண்டா பாவனத்வம் உண்டே
துங்கே அபி யன் நிவிசதே நிகம உத்தமாங்கே -வேதாங்கம் -உபநிஷத் -மலைக்கும் மடுவுக்கும் போல் அன்றோ –
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி ப்ரதம உபகீதம் -வால்மீகி தொடக்கமான ரிஷிகளால் ஸ்துதிக்கப் பட்ட
ஸ்தோஷ்யாமி ரங்க பதி பாதுக யோர் யுகம் தத் -அந்த பாதுகை இணை -ஸ்துதிக்கப் புகுந்தேனே –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எப்படிப்பட்டவை என்றால் –
மிகவும் உயர்ந்த பொருளான வேதங்களின் தலைகளிலும் உள்ளன;
மிகவும் தாழ்ந்தவனான என் போன்றோர் தலைகளிலும் உள்ளன. இது வியப்பல்லவா?
வால்மீகி போன்ற உயர்ந்தவர்களால் துதிக்கப்பட்ட அந்தப் பாதுகைகளை நானும் ஸ்தோத்திரம் செய்யப் போகிறேன்.

இங்கு வேதத்தின் தலை என்பது உபநிஷத்துக்கள் ஆகும். அவை பாதுகைகளைக் கூறுகின்றன என்று கருத்து.
மேலும் வால்மீகி போன்றவர்கள், இராமனின் பாதுகையைத் தங்கள் மனக்கண்களால் மட்டுமே கண்டனர்.
ஆனால் இங்கு இவரோ அன்றாடம் திருவரங்கனின் பாதுகையை மெய்யான கண்களால் காண்பதால்,
வால்மீகி போன்றவர்களை விடத் தான் தாழ்ந்தவன் ஆனாலும், துதி செய்ய ஏற்றவன் என்றார்.

வேதங்களின் சிரஸ் பாகத்தில் அமரும் பாதுகைகள், தாழ்ந்தவர்களான நம் போன்றோர் தலைகளிலும் சடாரியாக அமர்வது,
இத்தனை தாழ்ந்து வருவது அவற்றின் ஸௌலப்யத்தைக் குறிக்கும். வால்மீகியை ஏன் கூற வேண்டும்?
இவருக்கு பாதுகையைப் பற்றிய ஸ்லோகம் எழுத வழிகாட்டியாக, பாதுகைகளைப் பற்றி முன்பே கூறியவரான வால்மீகியைக் கூறினார்.

சடாரி வடிவில் நம்மாழ்வார் -தமிழ் வேதாந்தம் -நிகமன பாசுரங்கள் தோறும் –
குருகூர் சடகோபன் -தலையில் அமர்ந்து இருந்தாலும் -நம் தலையிலும் –
மதுரகவி ப்ரக்ருதிகள் ஸ்துதிக்கப் பட்ட ஆழ்வாரை அடியேனும் ஸ்துதிக்கப் புகுகிறேனே

ஸ்ரீ பாதுகை வேதாந்தம் -நீசனான -என் தலை மேலும் -உயர்ந்தவர் தாழ்ந்தவர் வாசி இல்லாமல் ஸ்ரீ சடாரி அருளுமே –
நீசன் உடைய ஸ்தோத்ரமும் -வால்மிகி போன்றார்களால் அருளப் பெற்ற ஸ்ரீ ராமாயணம் போலே
ஸ்ரீ ரங்க நாதனுக்கு சந்தோஷம் கொடுக்குமே –

ஸ்ரீ வால்மீகி பகவானும் ஸ்ரீ பாதுகா ப்ரபாபமே அருளிச் செய்துள்ளார்
நீசனும் அருளிச் செய்வதா –

——————————————————————

தத் தே முகுந்த மணி பாதுகயோ: நிவேசாத்
வல்மீக ஸம்பவகிரா ஸமதாம் மம உக்தி:
கங்கா ப்ரவாஹ பதி தஸ்ய கியாநிவ ஸ்யாத்
ரத்யோத கஸ்ய யமுநா ஸலிலாத் விசேஷ:—6-

தத்தே –என்னுடைய பாடல் அடைந்தது
முகுந்த மணி பாதுக யோர் நிவேசாத் -நிலை பெற்றதால்
வல்மீக சம்பவகிரா சமதாம் மமோக்தி -அடியேன் வாக்கும் வால்மீகி பேசியதுடன் சாம்யம் –
விஷய வை லக்ஷண்யம் -இருவரும் பேசியதால்
கங்கா ப்ரவாஹ பதி தஸ்ய கியா நிவ ஸ்யாத்-கங்கை வெள்ளத்தில் போய் இணையும் நதிகளுக்குள் என்ன வேறுபாடு
ரத்யோத கஸ்ய யமுநா சலிலாத் விசேஷ -வீதியில் ஜலம் -தூய யமுனா நீரும் கலந்தாலும் -என்ன வேறுபாடு உண்டு –
சேர்ந்த பின்பு அனைத்தும் கங்கா நீர் என்ற பெருமை கொள்ளுமே
பாதுகா பிரபாவம் என்ற கங்கையின் மஹாத்ம்யம் –
அவர் ராம பிரான் பாதுகை
இங்கு அரங்கன் பாதுகை -நம்மாழ்வார் -பெருமை –
பெருமாள் பாதுகை -பெரிய பெருமாள் பாதுகை –

என்னுடைய இந்த ஸ்லோகங்களை (சொற்களை) நான், உயர்ந்த இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட
முகுந்தனான க்ருஷ்ணனின் பாதுகைகள் மீது வைக்கிறேன் . இதனால் நிகழ்வது என்ன?
இந்தச் ஸ்லோகங்கள், வால்மீகியின் இராமாயணத்திற்கு நிகராக மாறிவிடுகின்றன.
மழைபெய்து வீதியில் ஓடும் நீர் மற்றும் யமுனை நதியின் நீர் ஆகிய இரண்டும் கங்கை நதியில் விழும்போது
இரண்டிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை அல்லவா?

இங்கு ஒரு கேள்வி எழக்கூடும் . ஸ்லோகம் ஐந்தில், தன்னைத் தாழ்ந்தவன் என்று கூறுகிறார்.
தாழ்ந்தவனின் சொற்களில் பலன் ஏதும் எற்படுமா என்பதே அந்தக் கேள்வியாகும். இதற்கு விடை தருகிறார் .
தான் தாழ்ந்தவனாக இருந்தாலும் தனது சொற்கள் ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் பற்றி உள்ளதால்,
தாமாகவே பலன் பெற்றுவிடும் என்று கூறுகிறார்.
இங்கு தெருவில் ஓடும் நீர் என்பதை இவரது சொற்களாகவும், யமுனையின் புனிதமான நீர் வால்மீகியின் சொற்களாகவும்,
கங்கை நீர் என்பது இரண்டையும் புனிதமாக்கும் பாதுகைகள் என்றும் கொள்ளலாம்.
மேலும் இதனை பாராயணம் செய்தால் இராமாயணம் போன்று பலன் அளிக்கும் என்றும் கருதலாம்.

மழை நீரும் யமுனா நீரும் கங்கையிலே கலந்து புனிதம் ஆகின்றன –
அடியேன் உக்திகளும் முகுந்தன் ஸ்ரீ பாதுகைகளைப் பற்றியதாகையாலே
ஸ்ரீ ராமாயணம் போலே பெருமை பெற்றதாகும்
ஸ்ரீ ராமாயணம் போலவே இந்த பாதுகா சஹஸ்ரத்தையும் பாராயணம் செய்து
வேண்டும் வரம் பெறலாம் –

கங்கையிலே மழைபெய்து வீதி ஜலமும் விழுகிறது, யமுனா ஜலமும் விழுகிறது.
இரண்டையும் ஒரே மாதிரியாகவே கங்கா ஜலமெண்று கொண்டாடுகின்றார்கள்.
அதே மாதிரி நான் தாழ்ந்தவனாயிருந்தாலும், என் வார்த்தையானது பாதுகா ஸ்தோத்ரமாயிருப்பதால்
வால்மீகி செய்த ஸ்ரீமத் ராமாயணத்தைப் போல பெருமை யடையும்.
அதாவது,எல்லாரும் த்ருஷ்டாதிருஷ்ட
ஸகல புருஷார்த்தத்துக்காக ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாராயணம் பண்ணுகிறார்கள்.
அதுபோல இந்த க்ரந்தமும் பாராயணம் பண்ணினால் சகலமான நல்ல பலன்களையும் கொடுக்கும்.

இந்த உதாரணம் பல இடங்களில் தேசிகன் காட்டி அருளுகிறார் –
ஸூ பாஷித நீதியிலும் -அச்யுத சதகம் போன்றவற்றிலும் உண்டே
ஸ்ரீ பாதுகா தேவியின் கிருபையாலேயே நீசனான அடியேன் ஸ்துதியும் வால்மீகி ஸ்துதி போலே பெருமை பெருமே –

பல பந்ததியில் இத்தை கீழ் ஸ்லோகத்தால் வெளியிட்டு அருளுகிறார் –
துருவன் போல் -தனக்கும் ஏற்பட்டதே –
அப்புள்ளார் கிளியைப் போல் தம்மை ஆக்கி வைத்து அருளினார் என்பர் பல இடங்களில்

ப்ருதுக வதந சங்கஸ்பர்ச நீதா கதாசித்
சிரஸி விநிஹிதாயா ஸ்வேத பூம்நா தவைவ
ஸ்துதிரிய முபஜாதா மன்முகே நேத்ய தீயு
பரிசரண பராச்தே பாதுகேஸ் பாஸ்த தோஷா –1006–

ப்ருதுக=பாலகனுடைய (துருவனுடைய) – வதந=முகத்திலே –
சங்கஸ்ப்ர்ஸ நீத்யா=ஸ்ரீபகவானுடைய பாஞ்சஜன்யம் என்னும் சங்கத்தின் ஸ்பர்ஸத்தினால் ஏற்பட்டதை (ஏற்பட்ட மாறுதலைப்) போன்று –
கதாசித்=ஒரு சமயத்தில் (ஸ்ரீரங்கநாதன் இந்த ப்ரபந்த்த்தை பண்ணும்படி அனுமதி கொடுக்கும் சமயத்தில்) –
சிரஸி=என்னுடைய சிரஸ்ஸில் – விநிஹிதாயா=(அர்ச்சகரால்)நன்றாக சாதிக்கப்பெற்ற – தவ=உன்னுடைய –
ஸ்வேன=ஸ்வாபிகமான – பூம்நா ஏவ=மஹிமையினாலே – மந்முகே=என்முகமாக (அதாவது என்னை ஒரு கருவியாக்க் கொண்டு) –
ஈயம் ஸ்துதி= இப்படி உயர்ந்த்தான ஸ்தோத்திரமானது – உபஜாதா = உண்டானது ––
அபாஸ்த தோஷா:=த்வேஷங்கள் அற்றவர்களான – பரிசரணபரா=உன்னுடைய கைங்கர்யங்களில் ஈடுபாடுள்ள பெரியோர்கள் –
இதி அதீயு:= எண்ணக்கடவர்கள் (அதாவது வேத்த்தினை அத்ய்யனம் செய்வது போல்
சிரத்தையுடன் இதை நித்யமாக பாராயணம் செய்யக்கடவர்கள்.

ஹே! பாதுகே! இந்த ஸஹஸ்ரத்தை நான் பண்ணுவதற்கு முன் நியமனம் கேட்பதற்காக உன் ஸந்நிதியில் நின்றபோது,
துருவனை பாஞ்சஜன்யத்தினால் பகவான் வருடியதை போன்று, அர்ச்சகாள் மூலமாய், என் தலையில் நீ சாதிக்கப்பெற்று
வெகுநேரம் எழுந்தருளி அனுமதியளித்தாய்! உன் மூலமாக உன்னை ஸ்தோத்திரம் பண்ணும்படியான
ஞானத்தினையும் வாக்கினையும் அளித்தாய்!. உன்னுடைய ப்ரபாவத்தினாலேயே உன்னை ஸ்தோத்திரம்
பண்ணும்படியான ஞானம் எனக்கு ஏற்பட்டது!. உன்னுடைய அனுக்ரஹ ரூபமாக தானாக வெளிப்பட்டது!.
பெரியோர்கள் இந்த உண்மையை உள்ளபடி அறிந்து, வேத்த்திற்கு சமமாக பாவித்து சிரத்தா பக்தியுடன்
தங்களுடைய நித்ய பாராயணத்திற்கும் வைத்துக் கொண்டு விடுவார்கள்.
இந்த ப்ரபந்தம் உன்னால் ஏற்பட்டது. எல்லோராலும் கொண்டாடத்தக்கது.

ஸ்ரீ பாதுகையே உன் தொண்டர்கள் ராக த்வேஷாதிகள் அற்றவர் -நான் சொல்லும் இவ்விளக்கத்தை அவர்கள் ஒப்புவர் –
சிறு பையனான துருவன் கன்னத்தில் பெருமாள் திருச் சங்கு ஆழ்வானைக் கொண்டு தொட்டார் என்ற வியாஜ்யம் போருமாயிற்று
அவன் ஸ்தோத்ரம் ஒன்றை ஆக்கி அருள -அது போல் ஸ்ரீ பாதுகை என் தலை மீது வைக்கப் பட்டதே
அந்த உன் சுய மகிமையால் அன்றோ இந்த உன் ஸ்தோத்ரம் உருவாயிற்று –

———————————————————————

விஜ்ஞாபயாமி கிம் அபி ப்ரதிபந்ந பீதி:
ப்ராகேவ ரங்கபதி விப்ரமபாதுகே த்வாம்
வ்யங்க்தும் க்ஷமாஸ் ஸதஸதீ விகத அப்யஸூயா:
ஸந்த: ஸ்ப்ருசந்து ஸதயை: ஹ்ருதயை: ஸ்துதிம் தே—7-

விஜ்ஞாபயாமி -விண்ணப்பிக்கிறேன்
கிமபி -ஓன்று மட்டும்
பிரதிபன்ன பீதி -அடைந்த பயத்தை சொல்லப் போகிறேன்
ப்ராகேவ -முன்னமேயே
ரங்க பதி விப்ரம பாதுகே த்வாம் -அரங்கனின் லீலை களுக்காகவே இருக்கும் உன்னிடம்
வ்யங்க்தும் ஷமாஸ் சதசதீ -நல்லது கேட்டது பிரிந்து அறிய வல்லவர்கள் -பகுத்து அறிவு -விவேக ஞானம் -உள்ளவர்கள் –
விகதாப்யஸூ யா -பொறாமை இல்லாத அஸூயை இல்லாதவர்கள்
சந்த -பெரியோர்கள்
ஸ்ப்ருசந்து சதயை ஹ்ருதயை ஸ்துதிம் தே –மானஸ ஸ்பர்சம் -உன்னைப் பற்றிய இந்த ஸ்து தியை
கேட்டு மகிழ்ந்து அங்கீ கரித்து அருள வேண்டும் –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத் துதிக்க நான் இந்த ஸ்லோகங்களை எழுதத் தொடங்கும் முன்னர்
(நான் இதனை எழுதத் தகுதி உள்ளவனா என்னும்) ஒரு விதமான பயம் ஏற்படுகிறது.
இதனை நான் இங்கு ஒரு விண்ணப்பமாகச் செய்கிறேன் . அது என்னவெனில் –
இந்த உலகில் உள்ள நல்லவை, தீயவை ஆகியவற்றை அறியும் திறன் உடைய பெரியோர்கள், மிகுந்த தயை செய்து,
நான் இயற்றிய இந்த ஸ்லோகங்களை, பொறாமை நீங்கிய கருணை கொண்ட மனதுடன் கேட்க வேண்டும்.

இங்கு பொறாமை அற்ற பெரியவர்கள் என்றார். ஏன்? பொறாமை அற்றவர்கள், குறைகளை நம்மிடம் மட்டுமே கூறுவார்கள்.
ஆனால் பொறாமை உள்ளவர்கள் அந்தக் குறைகளை ஊர் முழுவதும் கூறி, நம்மை அவமானப்படுத்த எண்ணுவார்கள்.
எனவே தனது ஸ்லோகத்தில் குறை இருப்பின் தன் மீது பொறாமை அற்ற பெரியோர்கள்
தன்னிடம் மட்டுமே தெரிவித்தல் நலம் என்பதால் இவ்விதம் கூறினார்.

மேலும், இந்த ஸ்லோகத்தில் குறை உள்ளது என்று பொறாமை காரணமாகக் கூறிவிட்டால்,
பாதுகையைப் பற்றிய ஸ்லோகத்தை அபசாரம் செய்தது போன்றதாகி விடும்.
அதனால் அவர்களுக்கு ஏற்படும் அபசாரத்திற்குத் தான் காரணமாகி விடக்கூடாது என்று அஞ்சுகிறார்.

ஸ்ரீ பாதுகையே -உன்னை ஸ்துதிக்க புகும் முன்பே எனக்கு பயம் உண்டாகிறதே
நல்லது தீயது பிரித்து அறியும் சக்தி படைத்த பொறாமை அற்ற பெரியோர் என்னிடத்தில் தயை பண்ணி
இத்தை கேட்டருள வேண்டும் –

ஏ பாதுகையே! முன்னதாகவே விஜ்ஞாபனம் பண்ணுகிறேன். பயமாயிருக்கிறது.
இது நல்லது இது பொல்லாதது என்று கண்டு பிடிக்கும் படியான ஸாமர்த்திய முள்ளவர்களும்
பொறாமை யில்லாதவர்களுமான பெரியோர்கள் என்னிடத்தில் தயை பண்ணி
நான் செய்கிற உன்னுடைய ஸ்தோத்ரத்தை கேட்க வேண்டும்.

நம்மாழ்வார் பரமாகவும்
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் -ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையாய் சடகோபன் என் நம்பியே -போல் இங்கும் –

———————————————————-

அஸ்ரத்ததான நமபி நந்வதுநா ஸ்வகீயே
ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணி பாதுகே த்வம்
தேவ: ப்ரமாணம் இஹ ரங்கபதி: ததாத்வே
தஸ்ய ஏவ தேவி பத பங்கஜயோ: யதா த்வம்–8-

நியோ ஜயசி மாம்-நீயே என்னைத் தெரிந்து எடுத்து ஈடுபடுத்துகிறாய்
ததாத்வே -இப்படியாலே
தேவ ரெங்க பதி -லீலையாக அரங்கத்தில் -இதுவும் ஒரு லீலை
தேவி பத பங்கஜ யோர் யதா த்வம்-அவனுக்குத் தக்க தேவி உம் பெருமைகளை -அவனே அறிவிக்க வேணும் –

எனக்கு அஸ்ரத்தையே-நீயே நியமித்து ஸ்துதிக்க வைக்கிறாய் –
உன்னைத் தன் திருவடிகளில் சாற்றிக் கொண்டு இருக்கும் ஸ்ரீ ரங்க நாதன் தான்
இந்த உண்மையினையும் உன் தன்மைகளையும் உணரத் தகுந்தவர் –
அவர் தான் எனக்கு அதைப் பற்றிச் சொல்ல வேண்டும் –

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நான் எந்தவிதமான ஸ்ரத்தையும் இல்லாதவன் ஆவேன் .
ஆயினும் உன்னைக் குறித்து ஸ்லோகங்கள் இயற்றும்படி நீ என்னைப் பணிக்கிறாய்.
ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளுக்கு நீ எவ்விதம் உள்ளாய் என்று நான் அறியவில்லை.
அதனை ஸ்ரீரங்கநாதனே எனக்குக் கூறுவானாக!

ஒரு பொருளின் தன்மை என்ன, உயர்வு என்ன என்பதை அந்தப் பொருளின் உரிமையாளர் கூறினால் அல்லவா மற்றவர்களுக்குப் புரியும்?
இது போன்று, இங்கு பாதுகையின் தன்மை என்ன என்பதை, அதனை அன்றாடம் தனது திருவடிகளில்
அணிந்துள்ள ஸ்ரீரங்கநாதனே கூறவேண்டும் என்று வேண்டுகிறார்.

ஏ பாதுகையே உன்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டுமென்று எனக்கு ஆவலில்லை.
நீ வலுவிலே பண்ணச் சொல்லுகிறாய்.
நீ பெருமாள் திருவடிக்கு எவ்விதமாயிருக்கிறாயோ அதை அந்த ரங்கநாதன் எனக்குச் சொல்ல வேண்டும்.
பாதுகையினுடைய குணம், போட்டுக் கொண்டவர்கள் சொன்னால் தானே பிறருக்குத் தெரியும்.
பிராட்டி பெருமாள் ஸ்ரீபாஷ்யகாரர் முதலானவர்களை ஸ்தோத்ரம் பண்ணினேன்.
அந்த மாதிரி ஆழ்வார் ஸ்தோத்ரம் என்று ஒன்றும் நான் பண்ணவில்லை.
எனக்கும் இன்னும் எல்லோருக்கும் க்ஷேமத்திற்காக ஆழ்வார் பெருமாள் விஷயத்தில் இருக்கிற இருப்பை
எனக்கு எவ்விதமாகச் சொல்லத் தெரியும். ஸ்ரீரங்கநாதன் தான் தோன்றப் பண்ண வேண்டும்.

நம்மாழ்வார் பரமாயும்
நித்ய ஸூரிகள் -கருட -ஸூ தரிசன -தாயார் -பெருமாளைப் பற்றி நிறைய -பல எழுதினாலும் –
உம்மை ஸ்துதிக்க தகுதி இல்லாமல் ஒதுங்கினேன்
ஆனால் -நீரே என்னை ஏவிப் பணி கொள்கிறீர்
அரங்கன் உணர்த்தி கவி பாடுவிக்க வேண்டும்
வள வேழ் உலகின் வானோர் இறை –அறு வினையேன் -கள்வா என்பன் –அபசாரமாகுமே விலகிப் போக –
வாஸூ தேவ சர்வம் ஸூ துர்லப
தளர்வுற்று நீங்க நினை மாறனை -மால் நீள் இலங்கு சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பரிந்து –
சேர்த்துக் கொண்டு பாடுவித்து அருளினால் போல் – செய்து அருள வேண்டும் என்றபடி –

——————————————————

யதாதாரம் விஸ்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திசஸி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹர துர்போத மஹிமா
கவீநாம் க்ஷுத்ராணாம் த்வம் அஸி மணி பாது ஸ்துதிபதம்—9-

யத் ஆதாரம் விச்வம் -யாரை உலகம் ஆதாரமாகக் கொண்டதோ -நாரங்களுக்கு ஆதாரம் தானே நாராயணன்
கதிரபி ச யஸ் தஸ்ய பரமா -உலகுக்கு பரம கதி -சரணாக -உயர்ந்த புகலிடமாக -அவனே உள்ளான்
தம் அபி ஏகா தத்சே -அவனையும் கூட தாங்கி
திசசி ச கதிம் தஸ்ய ருசிராம் -அழகான இடமாகவும் நீயே இருக்கிறாயே –
கதம் சா -எப்படி
கம்சாரேர் -கம்சனை வதைத்த ஸ்ரீ கிருஷ்ணனாக
த்ருஹிணஹ ரதுர் போத -பிரம்மா சிவாதிகளும் அறிய முடியாத
மஹிமா -பெருமைகளைக் கொண்ட உம்மை
கவீ நாம் ஷூத் ராணாம் -என்னைப் போன்ற தாழ்ந்த கவிகளின்
த்வமஸி மணி பாது ஸ்துதிபதம்-ஸ்துதிக்கு விஷயம் ஆக முடியும்

சமஸ்த ஜீவ ராசிகளையும் அவன் தாங்க -அவனை நீ தாங்கி எழுந்து அருளப் பண்ணுகிறாயே
உனது சக்தியை பிரமனோ சிவனோ கூட கரை காண முடியாதே
ஆழ்வார் -பரமாச்சார்யார் கிருபையாலே -ஆத்மா மே மதம் -என்பானே –
நம் போல்வார் இடம் சடாரி மூலம் எம்பெருமான் வந்து சேர்ந்து அருளுகிறான் –
அப்படி இருக்க என்னைப் போன்ற அல்ப கவிகள் உன்னை எவ்வாறு ஸ்துதிப்பது-

பாதுகையே எல்லா லோகத்தையும் பெருமாள் தூக்குகிறார். அவரை நீயொருவளாயே தூக்குகின்றாய்.
எல்லா ஜீவர்களும் பெருமாளைத் தான் போய் சேர வேண்டும்.
அந்தப் பெருமாள் ஓரு இடத்துக்குப் போக வேண்டுமானால் உன்னைச் சாற்றிக் கொண்டு தான் போக வேண்டியிருக்கிறது.
ப்ரமன், சிவன் முதலானவர்களாலுங்கூட உன்னுடைய பெருமையை யறிய முடியாது.
அப்படியிருக்க, என்னைப் போன்ற அற்பக் கவிகள் உன்னை எவ்விதமாய் ஸ்தோத்ரம் பண்ண முடியும்.

கம்ஸனின் சத்ருவாகிய க்ருஷ்ணனின் அழகான திருவடிகளில் உயர்ந்த கற்களுடன் உள்ள பாதுகையே!
இந்த உலகம் முழுவதையும் தாங்குபவனாக நம்பெருமாள் உள்ளான். அனைத்தும் வந்து சேரும் இடமாகவும் அவனே உள்ளான்.
அப்படிப்பட்ட நம்பெருமாளையே நீ ஒருவளாகத் தாங்குகிறாயே! மேலும் அவனுக்கு ஏற்ற அழகான நடையையும் நீயே அளிக்கிறாய்.
உனது பெருமைகளை ப்ரம்மன்,சிவன் போன்றவர்களால் கூட அறிய இயலாது.
அப்படி உள்ளபோது, அற்ப கவியான என் போன்றவர்கள் துதிக்கும் விஷயமாக நீ எப்படி உள்ளாய்?

இங்கு தாங்கி நிற்பது என்பதன் மூலம் உயர்த்தியைக் கூறுகிறார். தன்னை அண்டியவர்களை, நிலையாக
அதே இடத்தில் உயர்த்தி நிறுத்தும் வல்லமை கொண்டது பாதுகையாகும் என்று கருத்து.

ஆழ்வார் பரத்தில்
தூங்குகிற வஸ்து ஆத்மா. தூக்கப்படுகிறது சரீரம். ஸகல லோகத்துக்கும் பெருமாள் ஆத்மா.
அந்தப் பெருமாள் ஞானியான ஆழ்வார் ஆத்மா. ஆழ்வார் அநுக்ரஹத்தினால் தான் ஒருவனிடத்தில் பெருமாள் வருகிறார்.
ப்ரம்மா, சிவன் முதலானவர்கள் ஐச்வர்யத்தை ஆசைப்படுகிறார்கள்.
ஆழ்வாருக்குப் பெருமாளைத் தவிர வேறொரு பதார்த்தமும் வேண்டாம்.
அந்த ஆழ்வாரை மூடனான நான் எப்படி ஸ்தோத்ரம் செய்வேன். பெருமாள் சொல்லிக் கொடுத்தால் கூட என்னால் முடியாது..

புவியும் இரு விசும்பும் நின் அகத்தே –என் செவியின் வழி புகுந்து -அவி இன்றி நான் பெரியன்
பெருமாள் நம்மாழ்வார் இடம் பாட்டு வாங்கிப் போனார்கள் -இவரே பரம கதி –
உங்கள் மஹிமையை அடியேன் எவ்வாறு ஸ்துதிப்பேன்
கவி -ரிஷிகளிலும் உயர்ந்தவர் -உண்ணும் சோறு -பரம அணு பர்வத வாசி அன்றோ –
அதுவும் அவனது இன்னருளே -மதி நலம் அருளப்பெற்றவர் –

—————————————————————————-

ஸ்ருத ப்ரஜ்ஞா ஸம்பந் மஹித மஹிமாந: கதிகதி
ஸ்துவந்தி த்வாம் ஸந்த: ச்ருதி குஹர கண்டூ ஹர கிர:
அஹம் து அல்ப: தத்வத் யதிஹ பஹு ஜல்பாமி ததபி
த்வதா யத்தம் ரங்க க்ஷிதி ரமண பாதாவநி! விது:—10-

ஸ்ருத ப்ரஜ்ஞா-மிக்க வேதியர்

ஸ்ருத -ஸாஸ்த்ர ஞானம்
ப்ரஜ்ஞா -பெருமாள் அருளாலே ஸூயம் புத்தி
சம்பன் மகித மகிமான -இரண்டையும் செல்வமாகக் கொண்ட
கதி கதி -பல பெரியோர்கள்
ஸ்து வந்தி த்வாம் -உன்னை ஸ்துதிக்கிறார்கள்
சந்த -பெரியோர்கள்
சுருதி குஹர -காது துவாரம்
கண்டூ -அரிப்பு
ஹர கிர -போக்க வல்ல -செவிக்கு இனிய செஞ்சொல்லால்
அஹம் த்வல்பஸ் -சிற்று அறிவு அல்ப ஞானம் கொண்ட
தத்வத் யதிஹ பஹூ ஜல்பாமி ததபி -பிதற்றுகிறேன் -அது கூட
த்வதா யத்தம் ரங்க ஷிதி ரமண பாதா வநி விது -ஸ்ரீ ரெங்க ஷேத்ரத்தில் விளையாடும் பாதுகையைக் காக்கும்
உனது அருளாலே தான் இந்த பிதற்றலும் –
இளைய புன் கவிதை யேலும் எம்பிராற்கு இனியவாறே –

சாஸ்திர ஞானமும் கூரிய அறிவும் செவிக்கு இனிதான வாழ் சக்தியும் உள்ள பெரியோர்கள் உன்னை ஸ்துதிக்க
ஒன்றும் அறியாது அடியேன் பிதற்றுவதும்-(ஜல்பாமி-) உனது அதீனமாக இருப்பதால் பெரியோர் இதை நிச்சயம் ஏற்பர் –

ஏ பாதுகையே! சாஸ்திரங்களை யறிந்து இயற்கையாகவே புத்திசாலிகளாயும் கேட்கிறவர்களுக்கு ,
இகவும் இன்பமாகப் பேசக் கூடியவர்களாயுமிருக்கிற எவ்வளவோ பெரியோர்கள் உன்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்.
ஒன்றும் தெரியாத நான் அவர்களைப் போலவே தாறுமாறாகவே பிதற்றுகிறேன்.
அப்படி பிதற்றுகிறதும் உன் அதீனம் தானென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பாதுகாத்து வரும் பாதுகையே!
சாஸ்திர ஞானம் மூலமும், தங்களுக்கே உரிய ஞானம் மூலமும் பல பெரியவர்கள் உன்னை எவ்வளவோ ஸ்துதி செய்துள்ளனர்.
அவர்கள் ஸ்துதியானது காதுகளின் துளைகளுக்கு இன்பம் அளிக்கவல்லதாக உள்ளன.
ஆனால் இது போன்ற ஞானம் ஏதும் இல்லாத நான், உன்னைக் குறித்துப் பிதற்றுகின்றேன்.
இதனையும் உனது செயல் என்றே பெரியவர்கள் கூறுகின்றனர்.

பெரியவர்கள் இவ்வாறு புகழ்ந்து கவிதைகள் இயற்றுவது பகவானின் செயல் என்று அவர்கள் கொள்கிறார்கள்.
ஆனால் அவை அனைத்தும் உனது (பாதுகை) செயல் என்று அவர்கள் அறியவில்லை.
ஆயினும் நான் அறிவேன். எனது சொற்கள் முழுவதும் உனது செயலே ஆகும்.
எனது தலையில் நீ நின்று இவ்வாறு செய்கிறாய் அல்லவா?
ஆயினும் அவர்களைக் காட்டிலும் எனக்கு நீ அதிகமாகவே அருளினாய் என்றே கூற வேண்டும்.
இல்லையெனில் நன்கு கற்ற அவர்கள் ஸ்துதிக்கு முன்பாக எனது ஸ்துதிகள் எவ்வாறு நிற்க இயல்கிறது?

ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -நித்யர்களும் மதுரகவி ப்ரப்ருதிகளும்
அடியேனும் பிதற்றவதும் உம் அனுக்ரஹத்தாலேயே
அதுவும் அவனது இன்னருள் ஆழ்வார் அவன் அருளே ஹேது என்றால் போல்
அடியேனும் உமது இன்னருளாலே பிதற்றுகிறேன் –

——————————————————————–

யத் ஏஷ: ஸ்தௌமி த்வாம் த்ரியுக சரண த்ராயிணி தத:
மஹிம்ந: கா ஹாநிஸ் தவ மம து ஸம்பந் நிரவதி:
ஸூநா லீடா காமம் பவது ஸுர ஸிந்துர் பகவதீ
தத் ஏஷ: கிம் பூதா ஸது ஸபதி ஸந்தாப ரஹித:–11–

த்ரியுக சரண த்ராயினி -மூன்று ஜோடி -ஆறு குணங்கள் -ஞானாதி -திருவடிகளைக் காப்பவளே
யதேஷ ஸ்தௌமி த்வாம் – இப்படி உள்ள உன்னை ஸ்துதித்தால்
ததோ -அதனாலே
மஹிம்ந கா ஹாநிஸ் -உன்னுடைய மஹிமைக்கு என்ன குறை உண்டாகும்
தவ மம து சம்பந் நிரவதி -எனக்கு சம்பத்து கிட்டுமே
காமம் பவது ஸூநா லீடா –வேண்டியபடி நாயால் நக்கப்பட்ட
ஸூர சிந்துர் பகவதீ -கங்கா நீருக்கு
ததேஷா கிம் பூதா -என்ன குறை உண்டாகும்
ஸது ஸபதி சந்தாப ரஹித-ஆனால் அந்த நாயுக்கு உடல் தாபமும் தீர்ந்து ஆத்மாவும் உஜ்ஜீவிக்குமே –

திருமங்கை ஆழ்வார் -நாயேன் வந்து அடைந்தேன் –அடி நாயேன் நினைந்திட்டேனே –

ஞானம், பலம், சக்தி, தேஜஸ், ஐச்வர்யம், வீர்யம் என்ற ஆறு குணங்களுடன் கூடிய நம்பெருமாளின்
திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! அற்பனான நான் உன்னைத் துதித்து ஸ்தோத்திரம் இயற்றினால்
உனது மேன்மைக்கு குறைவு ஏதும் உண்டாகப் போவதில்லை.
ஆனால் அதன் மூலம் எனக்கு எல்லையற்ற நன்மைகள் உண்டாகின்றன.
நாய் ஒன்று கங்கை நீரைக் குடித்தால் கங்கைக்கு குறைவு ஏதும் ஏற்படாது; மாறாக நாய்க்கு நன்மை ஏற்படுகிறது அல்லவா?

உயர்ந்தவர்களைத் தாழ்ந்தவர்கள் புகழ்ந்தால் உயர்ந்தவர்களுக்கு என்ன குறை உண்டாகப் போகிறது?
ஆனால் இவ்விதம் தாழ்ந்தவர்கள் அவர்களைப் புகழும்போது, இந்த உலகமானது உயர்ந்தவர்களைக் கண்டு,
“தாழ்ந்தவர்களுடன் இவன் தொடர்பு வைத்துள்ளானே? இவனும் அப்ப்டியெனில் அவர்கள் போன்றுதானோ?”,
என்று எண்ண வாய்ப்புண்டு அல்லவோ? இதற்கு விடை அளிக்கிறார் –
பாதுகை விஷயத்தில் இது பொருந்தாது, காரணம் பாதுகைகள் எந்தவிதமான தாழ்வும் அற்றவனும்,
ஆறு உயர்ந்த குணங்களின் இருப்பிடமாக உள்ளவனும் ஆகிய நம்பெருமாளின் திருவடித் தொடர்பு பெற்றவை என்பதால் ஆகும்.
ஆகவே, தாழ்வாக உள்ள, தான் புகழ்ந்ததால் இந்த உலகம் பாதுகையைப் பற்றித் தவறாகக் கூறாது என்கிறார்.
இங்கு கங்கையின் உதாரணம் பொருத்தமே – காரணம், த்ரிவிக்ரமனாக வாமனன் உயர்ந்தபோது,
அவனது திருவடிகளின் தொடர்பு, பாதுகைகளைப் போன்று கங்கைக்கும் கிட்டியது அல்லவா?

கங்கை நீரை நாய் பருகுவதால் கங்கைக்கு எந்தக் குறையும் வாராது -நாயோ தாஹம் தீரப் பெறுகிறது –
அதே போலே
நீசன் ஸ்துதிப்பதால் உனது மகிமைக்கு எந்த குறைவும் வாராது -எனக்கு சத்தை வருமே

ஏ பாதுகையே நாய் கங்கையில் தண்ணீர் குடித்தால் அதற்கு இக பர ஸெளக்யமுண்டாகிறது.
கங்கைக்கு கொஞ்சமேனும் குறைவில்லை.
அது போல நான் உன்னை ஸ்தோத்ரம் பண்ணினால்
உனக்கு ஒன்றும் குறைவில்லை. எனக்கு ஸகல ஸெளக்யங்களும் வருகிறது.

நம்மாழ்வார் -திருவடியைக் காப்பவர் –
த்ரியுக–மூன்று மூன்று மூன்று-27 குணங்கள் -காட்டிக் கொடுக்கப் பெற்றவர் –
1-திருவரங்கம் ஸுஹார்த்தம்
2-திருமலை -வாத்சல்யம்
3-திரு ஆழ்வார் திரு நகரி -பரத்வம்
4-திருக்குறுங்குடி தென் திருப் பேரை -சவுந்தர்யம் அழகு லாவண்யம் சமுதாய -அவயவ சோபைகள்
5-திரு வான மா மலை -ஒவ்தார்யம்
6-திருக் குடந்தை -மாதுர்யம்
7-திரு வல்ல வாழ் -காருண்யம்
8-திரு வண் வண்டூர் -ஸ்தைர்யம்
9-திரு விண்ணகர் -அகடி கடநா சாமர்த்தியம்
10-திருத் தொலை வில்லி மங்கலம்-பாந்தவ்யம்
11-திருக் கோளூர் -ஆபத் சகத்வம்
12-திரு வாறன் விளை -ஆனந்த விருத்தி -bliss
13-திருக் குளந்தை -அத்யாச்சர்யத்வம்
14-திரு வண் பரிசாரம் -ஸுகுமார்யம்
15-திருச் செங்குன்றூர் திருச்சிற்றாறு -ஸுர்யம்
16-திருக் கடித்தானம் -க்ருதஜ்ஜதா
17-திருக் குட்ட நாட்டுத் திருப்புலியூர் -நாயக லக்ஷணம்
18-திருப் புளிங்குடி -திரு வர குண மங்கை திரு வைகுண்டம் -போக பாக த்வரை
19-திருக் காட்கரை -சீலம்
20-திரு மூழிக் களம் -மார்த்வம்
21-திரு நாவாய் -ஆந்ரு சம்சயம்
22-திருக் கண்ண புரம் -சரண்ய முகுந்தத்வம்
23-திரு மோகூர் -மார்க்க பந்துத்வம்
24-திரு வனந்த புரம் -சாம்யம்
25-திரு வட்டாறு -ஆஸ்ரித பாரதந்தர்யம்
26-திரு மாலிருஞ்சோலை -த்யாஜ்ய தேக வ்யாமோஹம்
27-திருப் பேர் -ஸ்வாமித்வம்

நீசனான அடியேன் -உம்மை ஸ்துதித்தால் -உங்கள் மகிமைக்கு இழுக்கு வாராது
அடியேன் ஸ்வரூபம் பெறுவேன்

——————————————————————

மித ப்ரேக்ஷா லாபக்ஷண பரிணமத் பஞ்சஷபதா
மத் உக்திஸ் த்வயி ஏஷா மஹித கவி ஸம்ரம்ப விஷயே
ந கஸ்ய இயம் ஹாஸ்யா ஹரி சரணதாத்ரி க்ஷிதிதலே
முஹுர் வாத்யா தூதே முக பவந விஷ்பூர் ஜிதமிவ—12-

மித ப்ரேஷா -மிக்க குறைந்த அறிவில்
லாப ஷண பரிணமத் பஞ்சஷபதா -அப்பப்ப தோன்றும் -ஐந்து ஆறு வார்த்தைகள் கொண்டு ஸ்தோத்ரம் பண்ண
மதுக்திஸ் த்வய்யேஷா -இப்படிப்பட்ட என்னுடைய கவிதைகள் இவ்வளவு தான் -வித்யா -விநயம் கொண்டு பேசுகிறார்
மகித கவி சம்ரம்ப விஷயே -உன்னைப் பற்றி கொண்டாடப்படும் கவிகள் ஆர்வத்துடன் -இலக்காக உள்ளாய்
ந கச்யேயம் ஹாஸ்யா -யாருக்கும் இது சிரிப்புக்கு உரிய விஷயம் அல்லவா
ஹரி சரண தாத்ரி
ஷிதிதலே -இந்த பூமியிலே
முஹூர் வாத்யா தூதே -அடிக்கடி பெரும் புயல் காற்றினால் கொஞ்சமே அசைக்கப் பட்ட மரம்
முக பவன விஷ் பூர்ஜித மிவ-வாய்க் காற்றால் ஊதி சாய்க்கப் பார்ப்பது போல் –

பெரும் காற்றுக்கும் சலியாத நீண்ட பருத்த மரத்தை தன் வாயால் ஊதிட ஒருவன் முயலுவது போலே
பெரும் கவிகளின் வாக்குக்கு விஷயமான அளவிட முடியாத உன் மகிமையை
ஒரு சில வரிகளில் கூறி விட முற்படும் என்னை மற்றவர் எள்ளி நகையாடுவர் –

ஒரு மரம் மிகவும் பெரியாதாயிருக்கிறது. அது எவ்வளவு பெருங் காற்றடித்தாலும் கொஞ்சம் தான் சலிக்கிறது.
அதை ஒருவன் வாயால் ஊதினான் ஆனால், அதைப் பார்த்த யாவரும் சிரிப்பார்கள்.
அது மாதிரி எவ்வளவோ பெரிய கவிகளால் ஸ்தோத்ரம் பண்ணக் கூடிய உன்னைப் பற்றி எனக்கு ஒரு சமயத்தில்
சில ஸங்கதிகள் தோன்றுகின்றன். அதைக் கொண்டு உன்னை ஸ்தோத்ரம் பண்ணினேனே யானால்,
அதைக் கண்ட எல்லோரும் சிரிப்பார்கள்.

ஸ்ரீ ஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! அவனுடைய திருவடிகளைப் பாதுகாப்பவளே!
உன்னுடைய தன்மைகளைப் பற்றி, பல உயர்ந்த கவிகள், உயர்த்தியாக ஸ்தோத்ரம் செய்யப்படுபவளாக நீ உள்ளாய்.
இப்படி இருக்கையில் என்னைப் போன்றவர்களின் ஸ்தோத்ரங்கள் அற்பமானவையே –
காரணம் எனக்கு ஒரு நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பதங்கள் மட்டுமே தோன்றுகின்றன.
இப்படி இருந்தாலும் நான் துதி செய்ய முயற்சிப்பது எப்படி உள்ளது என்றால் –
பெரிய மரம் ஒன்றை வாய் மூலம் ஊதி அசைய வைப்பவனின் முயற்சி போன்றதாகும்.
வாய் மூலம் ஊதி மரத்தை அசைய வைப்பவனின் முயற்சி கண்டு உலகம் பரிகாசம் செய்வது போன்று,
எனது கவிதையையும் கண்டு உலகம் பரிகாசம் செய்யாதோ?

ஒரு பெரிய மரமானது பலத்த காற்று வந்தால் கூட சிறிதே அசையும் தன்மை உடையது.
அதனை ஒருவன் தனது வாயால் ஊதி அசைக்க முயன்றால் உலகம் அவனைக் கண்டு சிரிக்கும் அல்லவோ?
இந்த முயற்சி போன்றே தன்னுடையதும் உள்ளது என்றார். இங்கு மேலும் ஒரு கருத்து உள்ளது.
மரம் என்பதை ஸ்ரீரங்கநாதன் என்றும், காற்று என்பதை வேதங்கள் என்றும் கொள்ளலாம் .
உயர்ந்த வேதங்கள் கூட அவனை நெருங்கி உணர இயலாமல் உள்ளபோது, அற்பமான தன்னால் இயலுமோ என்றார்.

நம்மாழ்வார் –
மந்த புத்தியால் ஐந்து ஆறு வார்த்தைகள்
கொண்டாடப் பட்ட -மதித கவிகள் -மதுர கவி ப்ரக்ருதிகள் -சடகோபர் அந்தாதி
வள்ளுவரும் -அரங்கேற்றம் செய்ய – இடைக்காதர்
குறு முனிவன் நல் தமிழும் என் குறளும் நங்கை திரு முனி யவன் வாய் மொழியின் சேய் –
அகஸ்தியர் தமிழும் எனது குறளும்
சங்கப் புலவர்கள் -ஈ ஆடுவதோ இத்யாதி –சேமம் குருகையோ இத்யாதி –

————————————————————————————

நிஸ் ஸந்தேஹ நிஜ அபகர்ஷ விஷய உத்கர்ஷ: அபி ஹர்ஷ உதய
ப்ரத்யூட க்ரம பக்தி வைபவ பவத் வையாத்ய வாசாலித:
ரங்காதீச பதத்ர வர்ணந: க்ருத ஆரம்பை: நிகும்பை: கிராம்
நர்மாஸ் வாதிஷு வேங்கடேஸ்வர கவி: நாஸீரம் ஆஸீததி—-13-

நிஸ் சந்தேக -சந்தேகமே வேண்டாம்
நிஜாபகர்ஷ விஷயோத்கர்ஷோ அபி -அடியேனின் தாழ்விலும் உம்முடைய உயர்விலும்
ஹர்ஷோதய -மகிழ்ந்து -உகப்பு தூண்ட
ப்ரத்யூட க்ரம -எல்லை கடந்த
பக்தி வைபவ பவத் -பக்தியின் பெருமையாலுண்டான
வையாத்ய வாசாலித-இஷ்டப்படி பேசும் படி ஆனேனே
பித்தர் பேசவும் பேதையர் பேசவும் பத்தர் பேசவும் பன்னப் பெறுவதோ -கம்பர்
ரங்காதீச பதத்ர -பாதுகையை
வர்ணந க்ருதாரம்பைர் -வர்ணிப்பதில் ஈடுபட்ட
நிகும்பைர் கிராம் -கோர்வையாக பேசி
நர்மாஸ் வாதிஷூ -தாறு மாறாகப் பேசி பிதற்றும் மக்களுக்குள்
வேங்கடேஸ்வர கவிர் நாசீரமா சீததி-முதல்வன் ஆனேனே –
பக்தி உந்த வந்த எண்ணங்களின் வெளிப்பாடே கவி

ஸ்ரீ பாதுகைகள் மிக உயர்ந்தவை -அடியேன் மிகத் தாழ்ந்தவன் என்பதை சங்கை அற அறிவேன் –
ஆனால் ஸ்ரீ பாதுகைகளின் மேல் உண்டான பக்தியினால் தைர்யம் அடைந்து ஸ்துதிக்க துணிந்தேன் –
அப்படி விளையாட்டாக செய்ய முற்பட்டவர்களில் இந்த வேங்கடேஸ்வர கவி முன்னிலையில் நிற்கின்றான் –

எனது தாழ்மை என்பதையும், நான் ஸ்தோத்ரம் செய்ய முற்படும் பாதுகைகளின் உயர்த்தி என்பதையும் பற்றிச்
சந்தேகம் இன்றி நான் உணர்வேன். ஆயினும் எனது எல்லையற்ற மகிழ்வும், பாதுகைகள் மீது கொண்டுள்ள
எல்லையற்ற பக்தியும் காரணமாக எனக்கு மிகவும் துணிச்சல் வந்தது என்றே கூற வேண்டும்.
இதன் காரணமாகவே நான் ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் விஷயமாகத் தாறுமாறான சொற்களைக் கொண்டு இவற்றைக் கூறுகிறேன்.
இதன் மூலம் தாறுமாறாகக் கவிதை இயற்றக்கூடியவர்களில், வேங்கடேசன் என்கிற நான், முதல் இடத்தைப் பிடிக்கிறேன்.

ஏ பாதுகையே! நான் மிகவும் தாழ்ந்தவன் என்றும்,பாதுகைகள் அதிக உயர்ந்தவைகள் என்றும் தீர்மானமாய் தெரிந்திருக்கிறது.
ஆனாலும் பாதுகைகளிடத்தில் மிகவும் அதிகமான பக்தி யுண்டாக
அதனால் தலை தெரியாத ஸந்தோஷமுண்டாகி
ஒரு தைரியமுண்டாகி யிருக்கிறது.
அதனால் தாறு மாறாய் பிதற்றிக் கொண்டு
விளையாடுகிறவர்களுக்குள்ளே முதலாக இருக்கிறேன்.

நம்மாழ்வார் -பரமாகவும் -இவ்வாறே -ஆர்வத்துடன் ஸ்துதி –

——————————————————————–

ரங்கக்ஷ்மாபதி ரத்ந பாது பவதீம் துஷ்டூஷத: மே ஜவாத்
ஜ்ரும்பந்தாம் பவதீய சிஞ்ஜித ஸுதா ஸந்தோஹ ஸந்தேஹதா:
ஸ்லாகா கூர்ணித சந்த்ர சேகர ஜடா ஜங்கால கங்கா பய:
த்ராஸா தேச விஸ்ருங்கல ப்ரஸரண உத்ஸிக்தா: ஸ்வயம் ஸூக்தய—-14-

ரங்க ஷ்மா பதி ரத்ன பாது பவதீம் -மணி பாதுகா தேவியே
துஷ்டூஷதோ மே ஜவாத் -ஸ்துதிக்க விரும்பும் அடியேனுக்கு அருள் புரிவாய்
ஜ்ரும்பந்தாம் -வார்த்தைகள் வளரும் படி
பவதீய சிஞ்ஜித ஸூதா -சிலம்பு ஒலி -மணி த்வனி அமுதம் போல்
சந்தோஹ சந்தேஹதா -கவியின் வார்த்தைகளா -ஒலியின் அமுதமா என்று சங்கை பிறக்கும் படி
ஸ்லாகா கூர்ணித சந்திர சேகர ஜடா-சிவன் தலை அசைத்து கொண்டாடும் படி-சந்திரனை இறக்கி இத்தை வைத்துக் கொண்டு
ஜங்கால கங்கா பய த்ராசா தேச -கங்கைக்கும் பயம் வரும் படியான கவிதை வெள்ளம் பிரவாகம்
விஸ்ருங்கல -இடை விடாமல்
ப்ரசரணோத் -எங்கும் பரவியதாக
சிக்தா ஸ்வயம் ஸூக்தய-கம்பீரமாக தானாகவே வளர்ந்து- வரும் படி அருள வேண்டும் –

ரத்ன கசிதமான ஸ்ரீ ரங்க நாத பாதுகையே -உன்னைத் ஸ்துதிக்க முற்படும் எனக்கு அமுதம் போன்ற சப்தமோ
என வியக்கும் படியானதும் பரம சிவன் உடைய சிரஸ்ஸில் இருந்து தடையின்றி ப்ரவஹிக்கும் கங்கையினுடைய
வேகம் கொண்டதுமான வாக் சக்தி தானாகவே விருத்தியாக வேண்டும் –

ஏ பாதுகையே உன்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்।
உன்னுடைய அமுதம் போல் இனிமையான சப்தமோ வென்று ஸந்தேஹத்தைக் கொடுப்பதாயும்,
பெருமாளிடத்தில் மிகவும் பக்தரான ஸர்வஜ்ஞனான சிவன் கொண்டாடும் படியுமிருக்கிற
உன்னைப் பற்றின வார்த்தைகள் எனக்கு அதிகமாய் மேன்மேலுமுண்டாக வேண்டும்

உயர்ந்த கற்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
உன்னைத் துதித்து கவி பாட வேண்டும என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது.
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மிக உயர்ந்த பக்தனான சிவபெருமான் தனது தலையை அசைக்கும் போது
அவனது சடை முடியில் மிகவும் வேகமாக ஓடிவரும் கங்கை நதியின் ஓசையானது,
உன்னுடைய அமிர்தம் போன்ற இனிய நாதத்தைப் போன்று உள்ளது.
அந்த கங்கை நதியானது, தான் ஓடிவரும் பாதையில் தனக்கு ஏதேனும் தடை வருமோ என்று அச்சம் கொள்ளாமல்
கர்வத்துடன் ஓடிவருகிறது. அப்படி ஓடி வரும் கங்கை நீரின் வேகம் போன்று உன்னைப் பற்றிய சொற்கள் எனக்கு வர வேண்டும்.

வைஷ்ணவாநாம் யதா சம்பு: ஸ்ரோதாயாம் ஜாந்ஹவி யதா – சிவனை விட உயர்ந்த வைஷ்ணவர் வேறு யாரும் இல்லை.
அப்படிப்பட்ட சிவனால் போற்றப்படும் பெருமாளின் பாதுகை என்றார்.
கங்கையின் வேகம் சிவனின் தலை அசைப்பால் மேலும் அதிகமாகிறது என்றார்.

தன்னிடமிருந்து வெளிவரும் பாதுகைகள் பற்றிய கவிதைகள் கண்டு, அந்தச் சொற்கள் தடை ஏதும் இல்லாத
தன்னையே தடுத்துவிடுமோ என கங்கை அஞ்சும் படியாக, கர்வத்துடன் சொற்கள் வெளி வர வேண்டும் என்றார் –
இப்படியாகவும் கருத்து உரைக்கலாம்.

நம்மாழ்வார் -உம்மை ஸ்துதிக்க விரும்பும் அடியேனுக்கு -அமுத மயமான திருவாய் மொழி பாசுரங்கள் போல்
இனிமையாக -பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுதான சொல் மாலைகள் போல் இருக்கும் படி அருள வேண்டும் –
சங்கத்தமிழ் புலவர்கள் சோம சுந்தர பாண்டியன்-சொக்க நாதர் முதல் புலவர் –
தாமர பரணி – நதிக்கரையில் பிரவாஹித்த திருவாய் மொழி போல் இருக்க அருள வேண்டும்
உமது திருவாய் மொழியோ -உம்மைப் பற்றிய ஸ்துதியோ என்று சங்கை வரும் படி –

———————————————————————————

ஹிமவந் நளஸேது மத்ய பாஜாம்
பரத அப்யர்ச்சித பாதுகா அவதம்ஸ:
அத போதந தர்மத: கவீநாம்
அகிலேஷு அஸ்மி மநோ ரதேஷு அபாஹ்ய:—15-

ஹிம வத் நள சேது -இமயம் முதல் சேது வரை
மத்ய பாஜாம் -நடுவில் உள்ள கவிகளுக்குள்
பரதாப் யர்ச்சித்த பாதுகாவ தம்ஸ-தலைக்கு அலங்காரமாக தரிக்கப் பட்டுள்ளேன்
அத போதன தர்மத கவீ நாம் -இவர்கள் தங்கள் தப பலத்தால் பெற்று
அகிலேஷ் வஸ்மி மநோ ரதேஷ் வபாஹ்ய-மநோ ரதம் -கற்பனைக்கு மேல் பண்ணப் போகிறேன்

ஸ்ரீ பரதாழ்வானால் ஆராதிக்கப் பெற்ற பாதுகையைத் தலையிலே தரித்துக் கொண்ட மாத்திரத்தில்
இமயம் முதல் சேது வரையில் எழுந்து அருளி இருக்கும் கவிகள் எல்லோரையும் காட்டிலும் எளிதில்
உயர்வாகக் கவிகள் செய்வேன் –
ஆசார்ய அனுக்ரஹம் இருப்பின் எக் கார்யத்தையும் சாதிக்கலாமே –

ஏ பாதுகையே உன்னைத் தலையில் வைத்துக் கொண்ட மாத்திரத்தில் ஹிமவத் பர்வதம் முதல்
ஸேது வரையிலுள்ள கவிகளெல்லாரைக் காட்டிலும் மேலாய் கவனம் பண்ணுவேன்.
அதாவது ஆசார்யானுக்ரஹத்தினால் எந்தக் கார்யத்தையும் ஸாதிப்பேன்.

பரதனால் ஆராதிக்கப்பட்ட ராமனின் பாதுகையை எனது தலைக்கு அலங்காரமாகக் கொண்டேன்.
உடனே ஏற்பட்டது என்ன? இமயம் தொடங்கி வானர வீரனான நளன் கட்டிய ஸேது வரை உள்ள
அனைத்து கவிஞர்களையும் விட நான் உயர்ந்த மேன்மை பெற்று விடுவேன்.

எனது விருப்பம் நிறைவேற நான் பாதுகையை எனது தலையில் ஏற்றேன். இதனால் உண்டாவது –
மற்ற கவிஞர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற எனது கவிதைகளை பின்பற்றுவர் என்று கருத்து.
அனைவருக்கும் தேவையான விவரங்கள் இந்த ஸ்லோகங்களில் கிட்டும் என்றார்.

நம்மாழ்வார்
பாவம் ராகம் தாளம் -நாத முனிகள் -பூஜிக்கப் பட்ட –
நம்மாழ்வார் திருவடிகளைத் தலையில் தரிக்கப்பட்ட பெருமையால் –
ஸமஸ்த மநோ ரதங்களும் அடைந்தவனாக ஆனேன் –
ஆச்சார்ய அனுக்ரஹம் பெற்று தருவது நிச்சயம் அன்றோ
தாள்கள் தலை மேல் வைத்த –பேர் உதவிக் கைம்மாறா –தோள்கள் ஆயிரத்தாய் -ஆழ்வார்
அவனை ஸஹஸ்ர பிரகாரமாக அனுபவித்து பாடினது போல் –
இவரும் இங்கு அருளிச் செய்கிறார் –

——————————————————————————

அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே:
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம்
கத பீதி: அபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந விநோதயாமி நாதம்–16-

அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே -தொடக்கம் இல்லாத வேதத்தினுடைய -ரிஷிகள் மந்த்ர த்ருஷ்டா தானே மந்த்ர கர்த்தாக்கள் இல்லையே –
சப்த ராசே -வார்த்தைக்கு கூட்டங்களாலும் கூட
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம் -சொல்லி முடிக்க முடியாத -ஸ்ரீ ரெங்க நாத பாதுகா தேவியே -உன்னை –
கதபீதி ரபிஷ்டுவன் விமோஹாத் –பயமே இல்லாமல் -அறியாமையால் -ஸ்துதிக்கிறேன்
பரிஹாசேன விநோதயாமி நாதம்-ஸ்ரீ ரெங்க நாதனுக்கு ஏளன விஷயமாகும் -சேஷிக்கு மகிழ்வு கொடுக்கவே ஸ்துதி –

ஸ்ரீ பாதுகையே -அநாதி காலமாய் விளங்கும் வேதமும் எல்லை காண இயலாத உன்னை
அறியாத தன்மையால் நிர் பயமாக ஸ்துதிக்க ஆரம்பிக்கிறேன் –
எம்பெருமானைச் சிரிக்கச் செய்து இதன் மூலம் மகிழ்விக்கச் செய்கிறேன் –

ஏ பாதுகையே வேதங்களாலும் சொல்லி முடியாத உன்னை ஒன்றும் தெரியாத் தன்மையினால்
பயமில்லாமல் ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பிக்கிறேன்.
பெருமாளை சிரிக்கச் செய்து ஸந்தோஷப்படுத்துகிறேன்.

இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே போல்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எப்போது உண்டானவை என்று கூற இயலாதபடி எக்காலத்திலும் இருந்து வரும் வேதங்கள் கூட
உன்னை முழுவதுமாகக் கூறி முடிக்க இயலாது. இப்படிப்பட்ட உன்னை, எனது அறியாமை காரணமாக,
பயம் சிறிதும் இன்றி ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கிவிட்டேன்.
இதன் மூலம் ஸ்ரீரங்கநாதன் மனம் மகிழ்ந்து புன்முறுவல் செய்கிறான் (நான் அவனை மகிழ்விக்கிறேன்).

நம்பெருமாளின் வீரங்களைக் குறித்து புகழ்வது போன்று, அவனது ஹாஸ்யரஸம் வெளிப்படுத்த எண்ணுவதும்
அவனுக்குச் செய்யும் கைங்கர்யமே ஆகும். இதனால் நிகழ்வது – இந்த முழு ஸ்லோகத்தைக் கண்ட ஸ்ரீரங்கநாதன்
மற்றவர்களைப் பார்த்து, “இது போல் உங்களால் இயற்ற இயலுமா?”, என்று பரிகாசம் செய்து சிரிக்கப் போகிறான் என்பதாகும்.

வேதங்களாலும் நம்மாழ்வார் பெருமையை சொல்லி முடிக்க முடியாதே –
வேதம் அவனைத் தேடி பின்னே செல்லுமே புறப்பாடுகளில் -அவனையே சொல்லி முடிக்காதே
தத் உதித நாம -உத் -திருவாய் மொழிக்கு உள்ளே அடக்கி -உயர்வற –பிறந்தார் உயர்ந்தே –
எனவே அருளிச் செயல்களின் பின்னே இவனும் செல்வான் புறப்பாடுகளில் –
ஆழ்வீர் -உம்மை அன்றோ ஸ்துதிக்க -அறியாமையால்
நம்மாழ்வாரை ஸ்துத்தித்தால் -அவன் மகிழ்வான்
நம் ஆழ்வாரைப் பாடினாயோ -சடகோபர் அந்தாதி –

————————————————————————

வ்ருத்திபி: பஹுவிதாபி: ஆஸ்ரிதா
வேங்கடேஸ்வர கவே: ஸரஸ்வதீ
அத்ய ரங்க பதி ரத்ந பாதுகே
நர்த்த கீவ பவதீம் நிஷேவதாம்—17-

வ்ருத்திபிர் -கவி அணிகள் -அலங்கார சாஸ்திரம் –
பஹூ விதாபி ராஸ்ரிதா-பலவகையான வற்றைக் கொண்டதாக வேணும்
வேங்கடேஸ்வர கவே சரஸ்வதீ -அடியேனுடைய வாக்கு
அத்ய -இன்று இப்பொழுது
ரங்க பதி ரத்ன பாதுகே -ரத்தினங்கள் இழைக்கப்பட்ட்ட ஸ்ரீ பாதுகா தேவி
நர்த்தகீவ -நாட்டியம் போல் -தாண்டவம் ஆடி -செய்து அருள வேணும் –
பவதீம் நிஷேவதாம்-உன்ன ஸ்துதிக்க வேணும் –

ஸ்ரீ பாதுகையே -இந்த வேங்கடேஸ்வர கவியின் வாக்கு கூத்தாடும் நர்த்தகியைப் போலே
வெளிப்படையாகவும் மறைமுகமாகவும்
உன் தன்மைகளை பல வித செயல்களால் எடுத்துக் கூறி கூத்தாடி உன்னை மகிழ்விக்க வேண்டும் –

ஏ பாதுகையே ! என்னுடைய வாக்கு கூத்தாடுகிறவள் போல
சில சங்கதிகளை நேரில் சொல்லியும்
சில சங்கதிகளை ஜாடையாய்ச் சொல்லியும் உன்னிடத்தில் கூத்தாட வேண்டும்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்டவளாக அலங்கரிக்கும் பாதுகையே!
நாட்டியம் ஆடுபவள் எவ்வாறு பலவித பாவங்களை வெளிப்படுத்துவாளோ,
அது போன்று வேங்கடேசன் என்ற கவி மூலம் வெளிப்படும்,
உன்னைப் பற்றிய பலவிதமான புகழாரங்கள் அடங்கிய சொற்கள், உன்னை வணங்கிச் சேவிக்கவேண்டும்.

பொதுவாக நாட்டியம் ஆடும்போது, மஹாராணியை அழைத்து அமர வைப்பார்கள்.
அந்த மஹாராணி முன்பாக நாட்டிய நிகழ்ச்சி நடைபெற, அதனைக் கண்டு மஹாராணி மனம் மகிழ்ந்து இரசிப்பாள்.
இங்கு பாதுகையை மஹாராணியாக அமரவைக்கிறார்.
அந்தப் பாதுகை முன்பாக நாட்டியம் ஆடுபவள் போன்று தன்னை எண்ணிக் கொள்கிறார்.
நடனம் ஆடுபவள் பல அபிநயங்களைப் பிடிப்பது போன்று, இவர் பாதுகையைப் பற்றிய பல விவரங்களை வெளிப்படுத்துகிறார்.
அந்தச் சொற்கள் அனைத்தும் பாதுகையை வணங்கி நிற்கவேண்டும் என்று கூறுகிறார்.
இவ்விதம் பாதுகை தன்னுடைய சொற்களைக் கேட்டு மகிழ்ந்து அமர்வதாகக் கூறுகிறார்.

பலவித கோணங்களில் ஆழ்வாரை ஸ்துதிக்க வேண்டும் –
நீர் கண்ணனை க்ருஷ்ண த்ருஷ்ணா தத்துவமாக -உண்ணும் சோறு பருகும் நீர் ன்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனாக –
பலவிதமாக அனுபவித்தது போல் –
1-கண்ணன் -கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் —
2-உண்ட கண் நிர்வாகன்- -கண் -இடம் -எங்கும் உளன் கண்ணன் –
3-கண் -எளிமை -கண்ணன் விண்ணோர் இறை –
4-கார் முகுல் போல் கண்ணன் –
5-ஆனந்தம் -எல்லையில் மாயன் கண்ணன் –
6-கடல் மலி மாயப்பெருமான் கண்ணன்
7-கமலக் கண்ணன் -என் கண்ணுள் உள்ளான் –
8-அணி கொள் செந்தாமரைக்கண்ணன் -ஒன்பது விதமாக
அரையர் சேவை போல் அடியேன் நாவே -அரையராகி உம்மை ஸ்துதிக்க வேண்டும் –

கண்ணன் -பெயர் விளக்கம்
1- கண்ணன் கண்ணாக இருப்பவன்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
வீதிக்கு வாய்ச் செல்கின்றான் மேல் விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்களூடே வாவுமான் தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்ததோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயருக்குத் தானே உறுப் பொருள் உணர்த்தி விட்டான் -கம்பர்
கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம் எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றி யம்பும் –
காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே –

2- கண்ணன் -நிர்வாஹகன்
கணவன் போல் -கண் அ வ் அன்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லை யோர் கண்ணே
த்ருஷ்டி -நிர்வாஹகன் -களைகண் -என்று நிர்வாஹகரைச் சொல்லுவார்கள்
மணியை வானவர் கண்ணினை -பரமபத வாசிகளுக்கு நிர்வாஹகனை
எண்ணிலா யரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்-கண் அலால் ஓர் கண் இலேன் –திரு மழிசைப்பிரான்
தேவரீரை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை யுடையேன் அல்லேன்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்க்கு எல்லாம் –அனைவருக்கும் நிர்வாஹகன் –

3-கண்ணன் -எங்கும் நிறைந்தவன்
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து –சிங்கப்பிரான்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞான சோதிக் கண்ணன்

4- கண்ணன் -கண் அழகன்
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன்
தடம் தாமரை மலர்ந்தால் ஓக்கும் கண் பெரும் கண்ணன்
தகும் கோலத் தாமரைக் கண்ணன்
செந் கோலக் கண்ணன்
செய்ய கண்ணன்
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –த்ருஷ்டி பூதனான கண்ணனே –

5-கண்ணன் -கண் நோட்டம் உடையவன் -கடாக்ஷம் –
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண
கார்த்தன் கமலக்கண் –விசேஷ கடாக்ஷம்
எங்கும் பக்கம் நோக்கு அறியான் என் தாமரைக் கண்ணன்

6-கண்ணன் -கையாளன் எளியவன் -ஸூ லபன்
உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே -உன்னை எனக்குக் கையாளாகத் தரும் உதாரனே
காண்பார் யார் எம்மீசன் என் கண்ணனை
கரிய மேனியன் கண்ணன் விண்ணோர் இறை
மெலியும் நோய் தீர்க்கும் எம் கண்ணன்
கற்கும் கல்வி எல்லாம் கரும்கடல் வண்ணன் என் கண்ணபிரான்
ஆச்ரித பரதந்த்ரன்-பவ்யன் -ஆவதற்க்கே திரு அவதாரம்

7-கண்ணன் -கரிய மேனியன்
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
காரார் கரு முகில் போல் என் அம்மான் கண்ணன்
காரமார் மேனி நம் கண்ணன்
கார்மலி மேனி நிறைத்து என் கண்ணபிரான்
காரார்ந்த திரு மேனி கண்ணன்
கார்த்திரள் மா முகில் போல் கண்ணன்

8- கண்ணன் -களிக்கச் செய்பவன்
அல்லலில் இன்பம் –எல்லையில் மாயனைக் கண்ணனை -ஆனந்தாவஹன்

9- கண்ணன் -ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன்
மாயன் என்ற சொல்லுடன் வரும் இடங்களில் இப்படியே வியாக்யானம்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன்
கண்ணனை மாயன் தன்னை
கடல் மலி மாயப்பெருமான் கண்ணன்

10-கண்ணன் -அறிவு அளிப்பவன்
மெய்ஞ்ஞானக் கண் அருள் செய் கண்ணன் -கம்பர்

இவ்வாறு
கண்ணாய் இருப்பவன்
நிர்வாஹகன்
எங்கும் நிறைந்தவன்
கண் அழகம்
விசேஷ கிருபா கடாக்ஷம் அளிப்பவன்
கையாளன்
கரிய மேனியன்
களிக்கச் செய்பவன்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் உடையவன்
ஞான பிரதனான கண்ணன்
இவன் மந்த ஸ்மித்துடன் விசேஷ கிருபா கடாக்ஷமே
தாபத்த்ரயங்களையும் போக்கி அருளும்
இவனையே சிந்தையிலே வைத்து ஆனந்திப்போம்

——————————————————————————

அபார கருணாம்புதே: தவ கலு ப்ரஸாதாத் அஹம்
விதாதும் அபி சக்நுயாம் சத ஸஹஸ்ரிகாம் ஸம்ஹிதாம்
ததாபி ஹரி பாதுகே தவ குண ஔக லேச ஸ்திதே:
உதாஹ்ருதி: இயம் பவேத் இதி மிதாபி யுக்தா ஸ்துதி:—-18-

அ பார கருணாம்புதே -எல்லை இல்லாத கருணைக் கடல்
தவ கலு பிரசாதாத் அஹம் -உம்முடைய திரு அருளாலே
விதாதும் சக்நுயாம் -எழுதக்கூடிய ஆற்றல்
சதா சஹஸ்ரிகாம் சம்ஹிதாம் அபி -நூறு மடங்கு ஆயிரம் -லக்ஷம் ஸ்லோகங்களால் கூட
ததாபி -அப்படி இருந்தாலும் கூட
ஹரி பாதுகே தவ குணவ் -உம்முடைய குணக்கூட்டங்களில்
கலேசஸ்திதே உதாஹ்ருதிரியம் பவேத் -அற்பமான சிறிய பகுதியையே காட்ட முடியும்
இதி மிதாபி யுக்தா ஸ்துதி-ஆகையால் தான் தேவரீர் ஆயிரம் ஸ்லோகங்களாக ஸ்துதிக்க நியமித்து அருளுகிறீர் –

ஸ்ரீ பாதுகையே -எல்லையற்ற கருணைக் கடலான உன் அனுக்ரஹத்தால் நூறாயிரம் ஸ்லோகங்கள் கூட கவனம் செய்ய இயலும்
அப்படியும் எல்லை காண இயலாத உன் குணங்களை வருணிக்க மாதிரிக்கு ஒரு ஆயிரம் மட்டுமே இருக்கட்டும் -இதுவே ஸ்துதியாகும் –

ஏ பாதுகையே! ஒரு ஸ்வாமி முகமாய் ஆயிரம் ஸ்லோகம் பண்ணும்படி நியமித்தாய்.
கருணைக் கடலான உன்னுடைய தயையினாலே லக்ஷம் ஸ்லோகமும் பண்ணலாம்.
லக்ஷம் பண்ணினாலும் உன்னுடைய குணங்கள் சொல்லிற்றாகுமா?
ஆகையினால் கொஞ்சமாகாத் தான் இருக்கட்டுமே என்று நியமித்தாய் போலும்.

ஸ்ரீஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! நீ எல்லையற்ற கருணைக் கடலாக உள்ளாய்.
இதன் மூலம் உன் மீது பல லட்சம் ஸ்லோகங்கள் என்னால் இயற்ற முடியும்.
ஆயினும் இத்தனை லட்சம் ஸ்லோகங்களும் உன்னைப் பற்றி முழுமையாகக் கூற இயலாமல் இருக்கும்.
எனவே உதாரணமாக இங்கு சில ஆயிரம் மட்டுமே போதுமானது என்று முடிவு செய்தாய் போலும்.

பாதுகை ஸ்வாமியிடம், “எத்தனை ச்லோகங்கள் என் மீது இயற்றுவதாக நீ சபதம் மேற்கொண்டாய்?”, என்றாள்.
அதற்கு ஸ்வாமி, “1000 ச்லோகங்கள்”, என்றார்.
உடனே பாதுகை சற்று பரிகாசமாக, “உம்மால் அவ்வளவுதான் இயலுமோ?”, என்று கேட்டாள்.
அதற்கு ஸ்வாமி, “நம்பெருமாளின் பாதுகையே! உன்னைப் பற்றி உனது அருள் காரணமாக, அடியேனால்
ஒரு லக்ஷம் ச்லோகங்கள் கூட இயற்ற இயலும். நீ அனுமதி அளித்தால் செய்கிறேன்”, என்றார்.
இதனைக் கேட்ட பாதுகை, “என்னைப் பற்றி நீ உதாரணமாக உள்ள சிலவற்றை மட்டும் எழுதினால் போதுமானது”, என்றாள்.

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -ஆழ்வார் கருணை -உமது அருளால் –
திரு விருத்தம் -நூறே திருவாய் மொழி ஆயிரமாக விளக்க உரை -நூறு ஆயிரம் சத சஹஸ்ரம் ஸம்ஹிதை
உமது அனுக்ரஹத்தால் நூறு மடங்கு ஆயிரம் பாட வல்லவனாக இருந்தாலும்
அளவுக்கு உட்பட்டு இருப்பதே யுக்தம் பொருத்தம் ஆகும் என்றபடி -1102-உட்பட்டு 1000 பாடும்படி அருளுகிறீர்
ஸ்ரீ கோதா ஸ்துதியும் –29- பாடி ஆண்டாளுக்குள் அடங்கி இருப்பதைக் காட்டி அருளினார் அன்றோ

—————————————————————————–

அநுக்ருத நிஜநாதாம் ஸூக்திம் ஆபாதயந்தீ
மநஸி வசஸி ச த்வம் ஸாவதாநா மம ஸ்யா:
நிசமயதி யதா அஸௌ நித்ரயா தூரமுக்த:
பரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்கநாத:—-19-

அனுக்ருத நிஜ நாதாம் -அநு காரம் போல் உன்னுடைய த்வனியை –
ஸூக்திமாபாத யந்தி -ஸ்லோகங்களை நல்ல யுக்திகளை நீயே உருவாக்கித் தந்து அருள வேணும்
பகலிலே உன்னுடைய நாதம் போல் இரவில் இந்த ஸ்துதிகள் அமைய வேண்டும்
மனஸி வசசி ச த்வம் -மனசிலும் வாக்கிலும் நீயே
சாவதாநா மம ஸ்யா -கவனத்துடன் நீயே வந்து அமர வேண்டும் -சா அவதானம்
நிசமயதி யதா சௌ -எப்படி இருந்தால் இந்த அரங்கன் கேட்ப்பானோ
நித்ரயா தூரமுக்த -தூக்கத்தை விட்டு -ஆதிசேஷன் படுக்கையை விட்டு இந்த ஸ்லோகம் கேட்க வேணும்
பரிஷதி சஹ லஷ்ம்யா -தனிக்கேள்வியாக இல்லாமல் -சபையில் -ஆஸ்தானத்தில் -பெரிய பிராட்டியார் உடன் கூடி இருந்து மகிழும்படி
பாதுகே ரங்க நாத -நீயே அருள வேண்டும் –

ஸ்ரீ பாதுகையே இரவு வேளையில் இந்த கிரந்தத்தை பண்ணும்படி நியமித்தாய்
ஆழ்வாருடைய திவ்ய ஸூக்தி போலே இனிமையான வார்த்தைகள் வாக்கில் வர வேண்டும் –
அந்த ஸ்வாரஸ்யத்தால் தாயாரும் பெருமாளும் நித்திரை மறந்து இதை ரசிக்க வேண்டும்
என்னும்படி வாக்கிலும் நீ எழுந்து அருளி இருக்க வேண்டும் –

ஏ பாதுகையே இராத்ரியில் இந்த க்ரந்தத்தைப் பண்ணும்படி நியமித்தாய்.
உன்னுடைய சப்தம் போல (ஆழ்வாருடைய ஸூக்தி போல) பெருமாளுக்கு மிகவும் இன்பமான வார்த்தைகள்
தாமதமில்லாமல் மனதில் தோன்றி அதி வேகமாய் வாக்கில் வரும்படியாக நீ தயை செய்ய வேண்டும்.
இதின் ஸ்வாராஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய் ஸபையிலே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது மனதிலும் வாக்கிலும் சொற்கள் எப்படி வரவேண்டும் என்றால் –
உனது ஒலியானது, தான் (நம்பெருமாள்) நடக்கும் போது எத்தனை இனிமையாக உள்ளது என்று
ஸ்ரீரங்கநாதன் நினைத்துக் கொள்வானோ அதுபோல் இருக்கவேண்டும்.
இவ்விதம் உனது நாதத்தை என் மூலம் நீ வெளிப்படுத்தவேண்டும். இதன் சுவாரஸ்யத்தில் அவன் மயங்கி,
ஸ்ரீரங்கநாச்சியாருடன் விழித்திருந்து நான் கூறும் இவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பான்.
ஆகவே எனது வாக்குகள் அவனுக்கு இன்பமாக இருத்தல் வேண்டும்.

ஸ்வாமி தேசிகர் பாதுகையிடம், “இந்தச் ச்லோகங்களை நீ மட்டும், இங்கு உள்ளவர்கள் மட்டும் கேட்டால் போதாது.
நம்பெருமாள் அவனுடைய நாயகியான ஸ்ரீரங்கநாச்சியாருடன் எழுந்தருளியிருந்து கேட்டு மகிழ வேண்டும்”, என்றார்.
உடனே பாதுகை, “அதற்கு என்னிடமிருந்து நீவிர் என்ன எதிர்பார்க்கிறீர்?”, என்றாள். ஸ்வாமி உடனே வெகு சாமர்த்தியமாக,
“நீ நடக்கும்போது உனது இனிமையான சப்தத்தில் நம்பெருமாள் மயங்கி விடுகிறான் அல்லவா?
அந்த நாதத்தை எனது சொற்களுக்கு அளிப்பாயாக. அதன் மூலம் உறங்கச் சென்ற நம்பெருமாள்,
“நம்முடைய பாதுகையின் நாதம் போன்று உள்ளதே”, என்று விரைவாக இங்கு வருவான்.
இங்கு வந்தவன் ஸ்ரீரங்கநாச்சியாருடன் அமர்ந்து என்னுடைய ச்லோகங்களைக் கேட்டு ரசிப்பான்.
எனது சொற்கள் இரசிக்கும்படி இல்லையென்றால் அவன் மீண்டும் உறங்கச் சென்றுவிடுவான் அல்லவோ?”, என்றார்.

பாவின் இன்னிசை பாடித் தெரியும்படி
தேவனை விட்டு -குருகூர் நம்பி விட்டு -திருவாய் மொழியையும் விட்டு -பாவின் இன்னிசையே தெய்வம் –
அதே போல் இங்கும் நாதத்தைப் பற்றி அருளிச் செய்கிறார் –
ஆம் முதல்வன் இவன் என்று -தற்றேற்றி -என் நா முதல் வந்து புகுந்து -நல் இனி கவி –வாய் முதல் அப்பன் -போல்
இராப்பத்து திருவாய் மொழி திருச்செவி சாய்த்து அருளுவது போல் ரசித்து கேட்க வேணும் –

—————————————————————————-

த்வயி விஹிதா ஸ்துதிரேஷா
பத ரக்ஷிணி பவதி ரங்க நாத பதே
ததுபரி க்ருதா ஸபர்யா
நமதாம் இவ நாகிநாம் சிரஸி—20-

த்வயி விஹிதா ஸ்துதி ரேஷா -உன்னை ஸ்துத்தித்து
பத ரஷிணி -திருப்பாதத்தை ரக்ஷிக்கும் திருப்பாதுகா தேவியே
பவதி ரங்க நாத பதே -திரு பாதத்துக்கும் சேர்ந்து ஆகுமே
ததுபரி க்ருதா சபர்யா -தத் உவரி -திருவடிக்கு மேலே -வைக்கப்பட்ட மாலையானது
நமதாமிவ நாகிநாம் சிரஸி–திருவடிகளை வணங்கும் தேவர்களின் தலைக்கு மேல் இருப்பது போல் இருக்குமே –
தீர்த்தன் இத்யாதி -பார்த்தன் தெளிந்து ஒழிந்தது போல் –
உலகு அளந்தவன் திருப்பாதத்தில் சேர்த்த அதே மாலையையே சிவனது திருமுடியில் கண்டு தெளிந்தானே –

ஸ்ரீ பாதுகையே முன் ஒரு சமயம் அர்ஜுனன் –
உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சிவன் முடி மேல் கண்டது போலே
உன்னை ஸ்துதித்ததும் உடனுக்கு உடன் பெருமாள் திருவடியையும் ஸ்துதித்ததாகிறது-
திருவடியை ஸ்துதித்தால் ஒரு ஆயிரம் மட்டும் ஆகும் –
உன்னை ஸ்துதித்த ஆயிரம் ஸ்லோகங்கள் இரண்டாயிரமாக பரிணமிக்கும் –

ஏ பாதுகையே ! முன் ஒரு சமயத்தில் அர்ஜூனன் ஸ்ரீக்ருஷ்ணன் திருவடியில் சிவனுக்குப் பண்ண வேண்டிய பூஜையைச் செய்தானாம்.
அது மறுநாள் தன்னுடைய பூஜைப் பெட்டியிலிருக்கிற சிவன் தலையிலிருந்ததாம்.
அதைப் பார்த்து அதிகமாய் ஆச்சர்யப்பட்டானாம்.
பெருமாள் திருவடியிலே பூஜை செய்தபடியால் திருவடிக்கும் ஆயிற்று, சிவன் முடிக்கும் ஆயிற்று.
அந்த மாதிரி உன்னை நான் ஸ்தோத்ரம் பண்ணினால், உனக்கும் ஆகிறது–திருவடிக்கும் ஆகிறது.
ஆசார்யர்களை ஸ்துதித்தால் பெருமாளுடைய திருவுள்ளமுகக்கும்.
திருவடியைப் பற்றி ஸ்தோத்ரம் பண்ணுகிறவருக்கு ஒரு ஆயிரம் தானாகும்.
எனக்கோ இரண்டாயிரமாகிறது.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! பெருமாளின் திருவடிகளில் செய்யப்படும் பூஜையானது
தேவதைகளின் தலையில் சென்று சேர்ந்துவிடுகிறது. இதே போன்று நான் உன்னைத் துதித்து இயற்றும்
இந்தச் ஸ்லோகங்கள் அனைத்தும் பகவானின் திருவடிக்கும் சென்று சேர்கிறது.

பகவானின் திருவடிகளை அண்டுவதை விடுத்து சிலர் மற்ற தேவதைகளை நாடுவது உண்டு.
இதுபோல் அல்லவா இவர் செயல் உள்ளது – பகவானின் திருவடி மீது ஸ்துதி பாடாமல் பாதுகையின் மீது இயற்றுகிறாரே?
இதற்கு விடை தருகிறார் – பாதுகை மீது இயற்றிய ஸ்துதி,அவன் பாதங்களைச் சென்று அடையும் என்கிறார்.
எப்படி என்பதற்கு உதாரணம் கூறுகிறார்.
ஒரு முறை சிவனுக்காக இயற்ற வேண்டிய பூஜையை க்ருஷ்ணனின் திருவடிகளில் அர்ஜுனன் செய்தான்.
அப்போது அந்த மலர்கள் சிவனின் தலை முடியைச் சென்று அடைந்தன.
இதுபோன்று பாதுகைக்குச் செய்யும் ஸ்துதிகள் திருவடிகளுக்கும் பொருந்தும்.

ஆழ்வாரே -உம்மைப்பற்றிய ஸ்துதியானது
அரங்கன் திருவடிக்கு சேருமே
நிழலும் அடி தாறும் ஆனோம்
உபரி -மேலே -உயர்ந்த -தன்னைக்குறித்த வழி பாட்டிலும் பெரியதாகவே கொள்ளும் அவன் அன்றோ
உங்களை வணங்குபவர்களை -த்ரி தந்தாகிலும் தேவ பிரான் கரிய திருக்கோலம் காணும் படி அருளுவான் அன்றோ –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா பிரபாவம்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 11, 2013

பிரமேயம் பிரமாணம் ஐந்து நிலை-இரண்டுக்கும்-
பர வாசு தேவ பார் கடல் அந்தர்யாமி விபவம் அர்ச்சை–ஐந்து ரூபம் –
உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உடன் இருந்து அறுதி என்று வெள்கி–ஊற்று வாயிலே சேவை –
அந்தர்யாமி-சீரார் வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம்–கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலை–
வேதம்/பாஞ்ச ராத்ர ஆகமம்–பாற் கடல் /மனு ஸ்மிர்த்தி அந்தர்யாமி/இதிகாச புராணம்/
அர்ச்சை சொல்ல அருளி செயல்–வேதம் தமிழ் செய்த மாறன் -மாறன் அடி பணிந்து உய்ந்தவன்

பாதுகா வைபவம் முதலில் சூர்பணகை தாரை மண்டோதரி /வாலி வத சமாதானம் ஐந்தும் பார்ப்போம் —
சத்ருகளும் புகழ்வார்கள் பெருமாளை-
கற்பார் ராம், பிரானை அல்லால் மற்றும் கற்பரோ—மற்றும் என்று கிருஷ்ணா த்ருஷ்ண தத்வம் –
சத்ருகளும் கொண்டாடும் ராமன் ! கண்ணனுக்கு பிறந்தவர் ஆண்டாளும் மனதுக்கு இனியானை-
வேதம் அனைத்துக்கும் வித்து -மாதவன் மது சூதனன் கை பிடிக்க கனா கண்டவள் —
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் ஏலா பொய்கள் உரைப்பான் –
ஒருத்தி தன்னை கடை கணித்து….அவளுக்கும் மெய்யன் இல்லை–
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடருத்து  —

முதல் பட்டாபிஷேகம் பாதுகை/சுக்ரீவன்விபீஷணன் அப்புறம் ஸ்ரீ ராமனுக்கு பட்டாபிஷேகம்
பொன் அடி வைத்த நேரம் –செம் பொன் கழல் அடி செல்வா பல தேவா —
ஐப்பசியில் ஓணம் பொய்கை ஆழ்வார்–திரு அடியை முதலில் வைத்து ஸ்ரீ ராமாயணம் —
தமேவ வித்வான்-அறிந்தவன் மோஷம் அடைகிறான் –அறிகையால் தான் மோட்ஷம்-

பிரமாணம் மூன்று வகை பிரத்யட்ஷம் அனுமானம் சப்தம்
நேராக பார்த்து சாஷுசா கேட்டு ஸ்ரவண தொட்டு பார்த்து மிருதுவாக ஸ்பர்சன பிரமாணம்  
ருசித்தோ மோந்தோ –பகவானை இத்தால் அறிய முடியாது
அனுமானம் மலை மேல் புகை பார்த்து அக்நி இருக்க வேண்டும் -இரண்டையும் வேறு எங்கோ சேர்த்து பார்த்தால்–
மாலை பார்த்து மாலாகாரர் -மோதிரம்- பொற் கொல்லர் பானை குயவன்
காரியம் பார்த்து காரணம் உலகம் இருப்பதால் ஈஸ்வரனை அனு மானிகலாம் –சேர்த்து பார்த்தால் தானே முடியும்–
நெசவாளி ஞானம் சக்தி பரிமதம்–இவ் வளவுக்கு இவ் வளவு ஞானம் -அபரிமித ஞானம் சக்தி உள்ளவன்-
சர்வக்ஜன் சர்வ சக்தன் அவன்–
சப்தம் வேதம் ஒன்றே பிரமாணம் சாஸ்திர யோநித்வாத் –வைதிகர்-அனைவரும் வேதம் கொண்டு–
புத்தர் சமணர் போல்வார் வேதம் புறம்பான —அடிப்படை குதர்க்கம் விதண்ட வாதம் 
சடகோபர் பாதுகை -வேதம் காட்டி கொடுத்தார் வேத வேத்யமான் ராமனை காட்டும் பாதுகை–
எழுத ஆகாசமே காகிதம் /ஏழு கடலும் மை போல் /ஆயிரம் வாய் கொண்ட ஆதி சேஷன் சொல்ல –
ஒரு வேளை முடிந்தால் பாதுகை வைபவம் எழுதுவேன் —
பட்டர்  அரங்கனை பாட முடியாது சொல்ல ஆயிரம் நாக்கு வேணும்–மணி பாதுகை நம் ஆழ்வார் வைபவம் சொல்லி முடியாது–
அடியார்களை அவன் உடன் சேர்க்க -நெல் தாமிர பரணி இரண்டு பக்கமும் பார்த்து ஒரு பக்கம் வாழ்ந்து ஒரு பக்கம் தாழ்ந்து
விரஜை இரண்டு பக்கம் சம்சாரிகள் அனைவரையும் முக்தர் ஆக்க –பக்தி பிறந்தது திராவிட தேசம் வளர்ந்தது கர்நாடக தேசம் —

கூஜந்தம்  ராம ராமேதி ..வால்மீகி -கோகிலம்-
வேத அர்த்தம் புரிந்து கொள்ளவே இதிகாசம் புராணங்கள்
சாத்விக புராணங்கள் ஆறு /ராஜச புராணம் ஆறு/தாமச புராணம் ஆறு
சிறை இருந்தவள் ஏற்றம் ஸ்ரீ ராமாயணம் /தூது போனவன் ஏற்றம் மகா பாரதம்
எழ ஆள் காலும் பழிப்பிலோம்–உன்னை விட்டு பிரியாத கைங்கர்யம்–வேத வியாசர் இது இருந்தும்
நாராயண கதை என்று ஆரம்பித்து -பாரதம் பஞ்சமோ வேதம்-பூசல் பட்டோலை–நாக்கை சுத்தி பண்ண ஸ்ரீமத் பாகவதம் அருளி–
ஸ்ரீ ராமாயணம் இந்த குற்றம் இன்றி ஸ்ரீ ராம விருத்தாந்தம் -வேதம் ஸ்ரீமன் நாராயணனை மட்டும் சொல்லும்  –ஸ்ரீராமன் அவதரித்ததும்
வேதமே ஸ்ரீ ராமாயணம் –திரு அடி ராவணனுக்கு உபதேசம்-பிரம்மா ஸ்வயம் பூ சதுரனானவா –
ருத்ரனோ இந்தரனோ வந்தும் பிரயோஜனம் இல்லை ஸ்ரீ ராமன் -துயுரஷதி -தேசிகன்-சிஷிக்க வரும் பொழுது யார் வந்தாலும் –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை-ஆளுதல் எனபது -துடித்து கொண்டே இருக்குமாம்-வேண்டாம் என்று தடுப்பதை கருணா காகுஸ்தன் —
கோவிந்த ராஜ்யம் வியாக்யானம் உண்டு–ஸ்ரீமத் ராமாயணம் —
தர்ம வீர்ய ஞானத்தால் நடப்பதை நடந்ததை நடக்க போவதை எழுதுகிறார் வால்மீகி-
பிரம்மா சிவன் இந்த்ரன் க்ரமம்–சொன்னது வேத வாக்கியம் போல்–ச பிரம்மா ச சிவா ச இந்திர  போல்

எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் அருளி கொடுத்தார் ஆழ்வார்
திருத்த முடியாது என்று விடாமல்-நம்மை தூக்கி உஜ்ஜீவிக்க -பாதுகை அவதாரம் எடுத்தார் –
சம்பந்தம் கொடுக்க -நித்யம் கோவிலில் தீண்டி உய்ய -தானே வைகுந்தம் தரும்-
குல பதி-பிர பன்ன குலம் –மணி பாதுகை-சடாரி–
எஸ் சப்த பர்வ அடியார் அடியார் -ஏழு தடவை -சொல்லி சேஷத்வம்–மனசில் உருவாகும்
அடிமை தனம் லோகத்தில் துக்க ரூபம் ஆக அன்றோ காண்கிறது –
காளி தாசன் -அனாமிகா பேர் அற்ற விரல்-இவர் போல் வேற புலவர் இல்லை
தாஸ்யம் பண்ணி விட்டு தான் ராஜ்ய சபை வருவான்-விரும்பிய இடத்தில் அடிமை திறம் இனிக்கும்—
வடிவிணை இல்லா மகளிர்  –நடுவாக வீற்று இருக்கும் நாராயணன் -கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் -மிதித்து மடியில் அமர-
கோசி அஹம் ப்ரஹ்மாசி–அஹம் அன்னம் அன்னாதாக பரத அக்ரூரர் ஹனுமான் ஆலிங்கனம் செய்த திரு மார்புடன்
திரு வீற்று இருக்கும் திரு மார்புடன் அணைத்து கொள்கிறான் அடிமை புரிந்து கொண்டால் —
சப்த பர்வ ஏழு உடன் நிறுத்தி-சந்தசில் இடம் இல்லை–சந்தமில் உள்ளத்தில் இடம் இருந்தாலும்

நமோஸ்துதே பரதன் -பிரதம உதாரணம்-முதலில் அவரை வணங்கி–ராஜன் எழுந்து இரு-துடித்து போனான்-
அருள் தருவான் ..அடியார்க்கு அடியான் சொன்னதும் ஓடி வருவான்-வந்தாய் போல் வாராதே வாராதே போல் வருவான்-
அவனுக்கு அடிமை என்றால்-ஜடை முடி தரித்து போனான் பரதன் மான் தோலும் மர அடியும்..–அனைவரையும் கூட்டி போனான்
ஆவும் அழுத -இவர்கள் அனைவரும் அழும் பொழுது வர மாட்டேன் சொல்ல மாட்டானே –பிரார்த்திக்க –
நாய் குகன் ஏசாரோ–கங்கை இரு கரை உடையான் கணக்கிறந்த நாவாயான் குனிந்த தலை நிமிர வில்லை சுமந்த்ரன் –
உங்கள் நாதர்க்கு உயிர் துணைவன்-வார்த்தை கேட்டதும் நிமிர்ந்தான் தலை-ஓர் ஆயிரம் ராமர் நின் கேள் ஆள்வரோ தெரியல்–
நம்பியும் நாயகனை ஒக்கின்றான் –ராமனுக்கு பின் பிறந்தார் தவறு இளைப்பார் என்று இருந்தேனே —
லஷ்மணன் பெருமை குகன் பரதனுக்கு சொல்கிறான்-நலன் உடை  ஒருவனை நணுகினோம் நாமே —
ஸ்ரீ ராமனை பார்த்து வந்தான் பரதன் – -இலக்குவ ஒரு ஏழும் ஏழும் நீ கலக்குவ –பதிதம் பூமி-
விழுந்தான் பரதன்-பாதுகை ஒலிக்க போர் கோலம் சொன்னாயே நீர் பெரும் கோலத்தை பார்–

பாகவத அபசாரம் பொறுக்க மாட்டான்-துவந்த பந்தத்தி-பாதுகை இரண்டாக இருக்க-
விட்டு பிரியாமல் அ கார உ கார பிரியாமல் இருப்பது போல் பிராட்டி மிதுனம் /ஹிதம் பிரியம் சொல்ல –
பாதுகை நல்லதை பிரியமாக சொல்லும்–தீயது நீக்கி-பிரணவச்ய கலை போல் /அனுகம்பா ஷமை-இரண்டும் காட்ட –
வருந்தி பொறுத்து கேட்ட வேலை செய்ய சக்தி கொண்டு- –//தேவர் அசுரர் சண்டை போட்டு-இருவருக்கும் பொம்மை போ //சரணம் –
ஸ்ரீ தேவி பூ தேவி இரண்டு பேரும் வேண்டுமே /நடந்து வரும் பொழுது -நான் தான் ரஷிக்க வேண்டும் போட்டி போட்டு கொண்டு வர //
ராமன் திரு மேனிக்கு கஷ்டம் இன்றி-பல அதி ப்லா மந்த்ரம் விஸ்வாமித்ரர் சொல்லி கொடுத்தார் அது போல் /
சாயம் பிராத சந்தா போல் இரண்டும்/மாரி மாரி இரண்டும் முன் வரும்/சங்கு சக்கரம் ஒலி கேட்டு-போல்வன சங்கங்கள் –
சக்கரம் கண்ணால்-திவ்ய மணி பாதுகை ரத்னம் மின்னி ஒலியும் கொடுத்து /
பாபம் போக்கும் /பக்தி பன்ன கர்ம ஞான யோகம் போல் இரண்டும்/திரு அடி ஆயிரம் இருந்தால் ஆயிரம்-
உபாய உபேய ஐக்கியம் இரண்டும்..யோக ஷேமம்-கிடைக்காதது கிட்டி அது தங்கி–இரண்டும்/
புண்ய பாப இரட்டை கர்ம ஒழித்து சாம்ய பத்தி பெற —

ஆண் சிங்கம் யானை-பெண் சிங்கம் பாதுகை- பரதன் சிங்க குட்டி-பாதுகை தான் பரதனை கூட்டி வந்தது -ராமன் சண்டை போட போக
மர அடியை தம்பிக்கு வான் பணையம் -அடகு வைக்கும் பொருள் மதிப்பு அதிகம்–
விட்டு பிரியாமல் இருந்ததால் மோஷ பிராப்தி நிச்சயம் அதனால் பாதுகா பட்டாபிஷேகம்–
ஜடா சீர -சடை முடி மான் தோல் கொண்டு நகரம் வெளியில் உன்னை எதிர் பார்த்து இருப்பேன்-
திரு அடி தான் பரி பாலனம் ராஜ்ஜியம் பண்ணும்..பாதுகை திரு மஞ்சனம் தீர்த்தம் சமுத்ரம் சேர
ராமனால் வயற்ற அடிக்க முடிய வில்லையாம்-விட்டு பிரியாமல் இருந்த பாதுகை விட்டு பிரிந்தது -ராமனுக்கு பரிஷை குண கடல்-
தன் வார்த்தை விட பக்தன் பெரியது என்றால் இருந்து இருக்குமாம்-இந்த ராமன் உடன் சக வாசம் வேண்டாம் என்று பிரிந்ததாம்–
ஒரு மடங்கு ஒன்பது மடங்கு இராமானுசன் ஆக்கி கொடுத்தான்
ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யம் அண்ணல் ராமானுசன் தோன்றிய அப் பொழுதே நாரணர்க்கு ஆள் ஆயினரே –
ஜகம் பகவானை தூக்க அவனையும் சேர்த்து தூக்கி பாதுகை அதனால் தான் ராஜ்ஜியம் புவியும் இரு விசும்பும் நின் அகத்தே —
யான் பெரியன் நீ பெரியன் என்பதை யார் அறிவர்–பெரிய திரு அந்தாதி–
சட கோப வாக் வட தல/தேவகி சடேர /கமல ஸ்தன /வேதாந்த சிரஸ் /ரெங்க கிருகம் –பாதுகை சம்பந்தம் ஆழ்வார் சம்பந்தம்

பிரார்த்தனா மதி சரணா கதி ரஷிக்க வேண்டிய கடைமையும் ரஷிக்க பட்ட சந்தோஷமும் உனது தான்
நலம் இந்த நாடு அந்தமில் பேர் இன்பத்தில் அடியாரோடு இருக்க -பிரபல தர விரோதி -மற்றை நம் கமங்கள் மாற்று
சரணா கதி சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம்-தேவர்கள் விஷ்ணு இடம் முதலில் –தசரதன் பரசுராமன் இடம்/லஷ்மணன் பெருமாள் இடம்/
பரதன் பெருமாள் இடம்/விபீஷணன் பெருமாள் இடம்/பெருமாள் சமுத்திர ராஜன் இடம்/
திரு அடியிலே சரணம்–எளிதான அவயவம் லோக விக்ராந்த சரணவ் சரணந்தே —
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து /அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே /நாகனை மிசை நம்பிரான் சரணே சரண்/
பால் கடலில் பைய துயின்ற பரமன் அடி/பொன் தாமரை அடி போற்றி- அனுக்ரகம் பிரவகிக்கும் திரு அடி
குழந்தை மாதா முலை யில் வாய் வைப்பது போல் -ஈன்ற தாய் அகற்றிடினும் -அவளையே நினைந்து இருக்கும் குழவி போல் ..–
ஞானத்தால் குழந்தை தான் ரஷிக்கும் கடமை தான் ஏற்று கொள்கிறான் –
ஸ்தனன்ஜய பிரஜையை மாதா ஆட்டு வாணியன் இடம் கொடுத்தது போல்
மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் –சம்சாரம் வைத்து துக்கம் கொடுப்பதும்
பின் அந்தமில் பேர் இன்பம் கொடுக்க தானே -சம்சார விஷ பாம்பு-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போலே அனந்தாழ்வான் போல்-
கடி பட்ட பாம்பு கடித்த பாம்பு-என்றார் –சிந்து பூ மகிழும் திரு வேம்கடம்–போட்டியில் யார் வென்றால் என்ன
விரஜை நீராடி அங்கு கைங்கர்யம் இல்லை என்றால் கோனேரி தீர்த்தம் ஆடி இங்கே கைங்கர்யம்
வைத்யோ நாராயணோ ஹரி மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் மருந்து தான் திருஅடி-

ரெங்க நாத மணி பாதுகை–
சூர்பணகை ஸ்தோத்ரம்-நாக்கு தானாக பேச -தருனவ் ரூபா சம்பன்னவ் -இரட்டை வசனம் –
காளை பருவம் உருவ அழகு  சொல்லி அடுத்து சுகுமாரவ் மார்தவம் -மகா பலவ -புண்டரீகாஷா விசாலாஷவ் —
சீர கிருஷ்ணா மான் தோல் மர உரி கச்சிதம் ஆறு விசெஷனம்
தனி ஸ்லோஹம் வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை இதற்க்கு அருளி இருக்கிறார்..-
அரிய வியாகிகைகள் செய்து அருளி இருக்கிறார் விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார்-கேட்டு அதன் படி இருப்பார்-
அனுஷ்டானம் முக்கியம் -ஆர்வம் உண்டாக்க இது -உசந்த கடையில் கூட்டம் குறைவு வஸ்து உசந்தது கூட்டு விற்க வேண்டாம்-
18 வியாக்யானம் வாலிப பருவம்-முதலில் -அழகை பார்த்து மயங்கி/வஞ்சம் தீர்க்க நினைவு கொண்டு-எளியவர் என்று சொல்ல /
சுலபம் இல்லை 14000 பேரும் போக வேண்டும் பெரியவன்/
ஆக சௌந்தர்யம் பரத்வம் சௌலப்யம்-பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செம் கண் அச்சுதா –
அழகன் அமரர் ஏறே -பரத்வம் –ஆயர் தம் கொழுந்தே -சௌலப்யம்–
கண்டேன் சீதையை-கண்டனன் கற்ப்புக்கு அணியை இற பிறப்பு எனபது ஒன்றும் இரும் பொறை கற்பு என்று மூன்றும் சேர்ந்தது சீதை பிராட்டி —
த்ரயம் முக்கியம் நம் சம்ப்ரதாயம்-மண்டப த்ரயம் போல்-ரகஸ்ய த்ரயம் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Paaduhaa Prabhavam-Shri. Vellukidi Swami.

November 13, 2008

..Sonnal viritham ethu aahilum sollveyn-kenn mino-kaathu koduthaal pothum..desihar niraiya ezluthi vaithu erukiraar namakku.divya desangallaiyum, piramaannangallaiyum radshithaarkall..28 stotra grandangall..yaadavaa  saritham silarai rahasyangall rahasya traya saaram..dadva villakkam..gjaya saastra villakkam..darga reethiyaha pesuvathu gjaya saastram..yellamsaatrathai ottiyey..para mada bandam..sada thooshannam 66 thaan erukku..ellam piraayathil arullinaar..vayasu aanathum bakthiyil yeedu pattu..channda maarutham-cholla simha puram thittaacharyar arulli erukiraar..pra chaaram romba panna villai..

..28 stotra grantham paaduhaa sahasram -nam aazlvaar .sambandam pera..poo mannu maathu porunthiya maarban..maarban puhazl malintha paa paa mannu maaran-kulabathi..thiru vadikallil adikeezl amarnthu puhannum. thiru vadiyai koondu vanthu kaattuvathu paaduhai..32 pandathi..

…prasdaaba panthathi.. mudalil valimihiyum, barada naiyum konndaadu hiraar.onbathu madangaaha pani koduthaan..nam aazlvaar thiru adi vitti piriyaamal erukkannum..periyorkall sri renga sarannam kaappathu..mudal aasai paaduhaikku ..sekaraha rennu-thoosi. adi podi.pada pankaja renu-aranga thiru muttra seru.kulesekar..ethu thaan thilaham..

..baradanukku namaskaaram.rama bakthiyil mudalil..thambi aana padiyaal ellai-baradan yentra peyar pettrathaal.. thabi yellaam eppadi yentru ninaitha sygreevanidan baradanukku oppaana thambi ellai..pithaa vukku puthran naan nanban nee thaanninaika koodaathu yentru erunthaan sugreevan..vali-sugreevan sandai -baradan perumai theriya sandai yenkiraar..paaduhai greedam nandhi graamam.. nam aazlvaarukku naada munikall. ba ra da baavam raagam thaallam erunthavar araiyar ..

naada muniyai aduthu konndaaduhiraar..ezluthukkal koottam. varannakoottam pola ,, monthu paarthaal vahulla maalai mannam veesuhirathu..vedam thamizl seytha maaran.sadagoba muni-muhil vannan adiyai amarnthu vudaamal erunthavar..

..4th ..sarasvathi vaalmihi naavil kalaivaithau raamaayannam arulliyathu pola..adiyeyn naakku moolam erangannum yenkiraa..loha semam-yoga shemam-yentraal.. kidaikaathathu kidathithathu yogamkidaithathu thanguvathu shemam–kannan anubavam..paaduhai atheenathaal thaan nadakkum..konndu vanthu nammai sethu vidum.. poha mudiyaamal eruthi vaikkum nam edamey-antha vaalmihi anugrahikannum..vasudaa-poomi puttru-kaathu pola..kaathil erunthu boomi anugrahathaal piranthar aanndaal anugrahathaal athai pettrom..

..5th ..rengapathi paathihai-raman kathai paadum edam thorum hanumaan eruppathu pola-ethu paada pattathu yentru-vaalmihiyum naanum paadinaalum-sadaari anaivarukkum pothu-anaivarum ontru sadaari munnam..samoham sarva boodeshu-paahu paadu ellai..vedangallum sollum nyhamam..yenn thalaiyilum paathuhai-agni-poornnaahuthi-anaivaraiyum punitham aakku vathu pola..

..6th..gangai-ethu koodi senthaalum -prayaag -sarayu kanndahi, yamunai, sarsvathi-klantha pinbum gangai thaan kazlivu neerum kalanthaalum gangai.. vaalmihi naan pesuvathum orey maathiri..paadi naanum vaalmihiyum samam -per gangai -radshodaham-veethi jalam..

.7th..paada aarambitha thum payam vanthathu-peethi ..nee thaan pokkannum. yeypaavam paramey yentru aazlvaarum arulliyathu pola..bagavanukku niharanapaadi mudithavar yentru mudithaar.. neeyey paadi yen peyarai pottukko yenkiraar..mahaangall anugrahikkattum..brahma, naradar vaalmihiyai anugrahithathu pola -samudrathukkull koollaan kallukkum yeri malaikkum vythyaasam ellai..sathukkall anugraham

..8th..perumaallai mootti mootti yenghum konndu ezlunthu arullu hireer..sirathai ellaatha varai vukku vippathu pola..sparisam vunakku thaan theriyum.. nadathi velaiyum vaanghi kollhireer..

..9th..kamsan ethiri kannan kathi-visvathukkum kathi avanukku kathi neer..thanithu thaanghu hireer..aasaiyudan ezlunthi erukiraar..manni paaduhai

..10th..renganatha thiru vadikallai paath kaakkum-saastra gjanam-svas gjanam-vidvaankall palar vummai paadi erukiraarkall thina vadanga –naanumm paadi-albamaha vullaruhireyn-jalba-ethuvumvun atheenam thaan..devareerarey anugrahikkannum..yellaam paathihai..paathuhai anugraham pettru avanai adainthu mukthi peruhirom..