Archive for the ‘ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்’ Category

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-24-த்வந்த்வ பத்ததி -இரட்டைப் படலம் -ஸ்லோகங்கள் -761-780-

March 19, 2016

இரண்டாகப் பாதுகைகள் உள்ளதை வர்ணிக்கிறார். ப்ரணவ மந்திரத்தின் அம்சமாகவே இவை உள்ளன என்கிறார்.

———

ப்ரபத்யே பாதுகாரூபம் ப்ரணவஸ்ய கலா த்வயம்
ஓதம் மிதம் இதம் யஸ்மிந் அநந்தஸ்யாபி தத்பதம்—-761-

ப்ரணவத்தின் ரூபமாகவே உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகை இணையை நான் சரணம் அடைகிறேன்.
இந்த இணையில் அற்பமான ஜீவனும், எல்லையற்ற ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபமும் கோர்க்கப்பட்டுள்ளது.

ஜீவன் என்பவன் அனைத்தையும் காக்கும் ஸர்வேச்வரனைச் சேர்ந்தவன் என்று ப்ரணவம் கூறுகிறது.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தாங்கும் பாதுகைகள் ஜீவர்களின் தலையில் வந்து அமர்ந்து,
இவர்கள் ஸ்ரீரங்கநாதனைச் சார்ந்தவர்கள் என்று உணர்த்துவதாகக் கூறுகிறார்.
ஆக இரண்டும் (ப்ரணவம், பாதுகைகள்) ஒரே தன்மை கொண்டவை என்கிறார்.

பிரணவம் ஸ்ரீ பாதுகா ரூபமாக ஓர் இணையாக -ஒரு த்வயமாக உள்ளது -அந்த இணையில் மகாரார்த்தமான ஜீவாத்மாவும்
அகாரார்த்தமான அனந்தனான பகவானும் சேர்ந்து உள்ளன
மிகக் குறைந்த அளவுள்ள ஜீவாத்மா -பரிமாணம் அளவிட்டுச் சொல்ல ஒண்ணாத பகவான் -இவை இரண்டும் கோக்கப் பட்டுள்ளன
பகவான் ஸ்வரூபமும் திருவடியும் கூடச் சேர்ந்து உள்ளன –
எப்படி அகார மகாரங்கள் பிரணவத்தில் சேர்ந்து உள்ளனவோ அத்தகைய ஸ்ரீ பாதுகையை சேவிக்கிறேன் –

—————————————————————————————–

மணி பாதுகயோர் யுகம் முராரே:
மம நித்யம் விததாது மங்களாநி
அதி க்ருத்ய சராசரஸ்ய ரக்ஷாம்
அநுகம்பா க்ஷமயோர்: இவ அவதார:—-762-

அசைபவை, அசையாமல் உள்ளவை போன்ற இரு தன்மைகள் கொண்ட இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு,
ஸ்ரீரங்கநாதனுக்குத் தயை மற்றும் பொறுமை ஆகிய குணங்கள் உண்டு.
இந்தக் குணங்களின் உருவம் போன்றே உள்ள ஸ்ரீரங்கநாதனின் இரண்டு இரத்தினமயமான பாதுகைகள்,
என் விஷயத்தில் எப்போதும் நன்மைகளைச் செய்யவேண்டும் (ஒரு பாதுகை தயை, ஒரு பாதுகை மன்னிக்கும் தன்மை அளிக்கின்றன).

ஜங்கம -ஸ்தாவரங்களாலான இவ்வுலகத்தின் ரஷண கார்யதிற்காகவே அவதரித்தவை இரண்டு ஸ்ரீ பாதுகைகளும்
அவையே தயை ஷமை ஆகிய கல்யாண குணங்களின் மறு உருவங்கள்
இந்த இரண்டு ரத்ன பாதுகைகளும் எனக்கு சுபங்களை எப்போதும் செய்து அருளுக –

——————————————————————-

சரணௌ மணி பாதுகே முராரே:
ப்ரணதாந் பால யிதும் ப்ரபத்யமாநம்
விபதாம் இவ தைவ மாநுஷீணாம்
ப்ரதிகாரம் யுவயோர் த்வயம் ப்ரதீம:—-763-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளே! இந்த உலகில் உள்ளவர்களுக்கு மனிதர்களாலும் தேவர்களாலும் வருகின்ற
ஆபத்தை நீக்குவதற்காகவே நீங்கள் உள்ளீர்கள் (இரண்டு பாதுகைகள்).
இப்படியாக உள்ள நீங்கள், உங்களை வந்து வணங்குபவர்களைக் காப்பாற்றுவதற்காகவே,
நீங்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்ததாக நாங்கள் எண்ணுகிறோம்.

ஸ்ரீ மணி பாதுகையே நீவீர் இருவரும் பகவானுடைய திருவடிகளை அணைந்து இருப்பது -வணங்கினவர்களைக் காப்பதற்காக –
ஓன்று ஆதி தெய்விக-தேவர்கள் இடம் இருந்து வரும் விபத்துக்களுக்கும்
இன்னொன்று ஆத்யாத்மிக -மனிதர்கள் இடத்தில் இருந்து வரும் விபத்துக்களுக்கும் ஏற்ற பரிஹாரம் என்று சொல்லலாம் போலும் –

—————————————————————————-

முரபித் மணி பாதுகே பவத்யோ:
விஹிதோ நூநம் அஸௌ மிதோ விபாக:
பஜதாம் அபரஸ்பர ப்ரியாணாம்
அவிரோதாய ஸுர அஸுரேஸ்வராணாம்—764-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! உங்களுக்குள் பரஸ்பரம் உள்ள இந்த இரண்டு என்னும் தன்மையானது,
உங்களை வந்து வணங்குகின்ற, ஒருவருக்கொருவர் நட்பு இல்லாமல் உள்ள,
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கலகம் ஏற்படாமல் இருப்பதற்காக உள்ளது போலும்.

பெருமாளின் ஸ்ரீ இரட்டை பாதுகைகளே -நீங்கள் இப்படி இரண்டாய்ப் பிரிந்து நிலை நிற்பது -வந்து சேவிக்கும்
தேவர் அசுரர் என்ற இரண்டு கட்சிகளுக்கும் -எவை எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டு இருக்குமோ
அந்த இரண்டிற்கும் கலஹம் ஏதும் வராமல் இருக்கவோ என்று தோன்றும் –

————————————————————————————-

அஹிதோந் மதநாய ஸம்ஸ்ரிதாநாம்
அலம் ஆலோக வசேந ஸப்ததோ வா
கரயோஸ்ஸ ரதாங்க பாஞ்ச ஜந்யௌ
மதுஹந்துஸ் பதயோஸ்ஸ பாதுகே யே—-765–

ஸ்ரீரங்கநாதனின் திருக்கரங்களில் உள்ள சங்கும் சக்கரமும், தங்கள் நாதம் மூலமும் ஒளி மூலமும்
அடியார்களின் விரோதிகளையும், அவர்களின் திட்டங்களையும் நாசம் செய்கின்றன.
இவை போன்றே, அவனது திருவடிகளில் உள்ள பாதுகைகள் துயரங்களை நீக்கப் போதுமானவையாக உள்ளன.

ஆஸ்ரிதருக்கு வரும் கஷ்டங்களைப் போக்க ஒளி ஒலி மூலம் திருக்கைகளில்
திரு சங்காழ்வான் திருச் சக்கரத்தாழ்வான் இரண்டும் முறையே உதவும்
அதே போலதே திருவடிகளில் உள்ள ஸ்ரீ பாதுகைகள் கூட -அவை இரண்டுக்குமே -பிரகாசம் -இனிய நாதம் இரண்டும் உண்டே –

————————————————————————-

அவதீரித ஸாது பத்ததீநாம்
அலஸாநாம் மதுவைரி பாதுகே த்வே
இதரேதர ஸாஹசர்ய மித்தம்
ப்ரதிபந்நே இவ தைவ பௌருஷே ந:—766–

முன்னோர்கள் கூறிய ஸத் மார்க்கத்தைக் கைவிட்டவர்களும், சோம்பேறிகளாகவும் உள்ள எங்களைப் போன்றவர்களுக்கு,
மது என்ற அசுரனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் இரண்டு பாதுகைகளும் செய்வது என்னவென்றால் –
ஒன்றுக்கொன்று துணையாக நிற்பதான தெய்வத்தின் செயல்கள், மனிதர்களின் செயல்கள் போன்று
இந்தப் பாதுகைகள் நின்று, எங்களுக்கு உதவுகின்றன.

ஸ்ரீ பாதுகைகளே நாங்கள் சாதுக்களின் வழியை விட்டு ஒழிந்தவர்கள்-சோம்பேறிகளும் கூட –
எங்களுக்கு நீவீர் இரண்டு இணைந்து உதவுவது தெய்வ சக்தி புருஷ முயற்சி இரண்டும் வேண்டும்
என்று எடுத்துக் காட்டி அருளுவது போல் உள்ளது –

—————————————————————————-

பார்ஸ்வயோஸ் ஸரஸிஜா வஸுந்தரே
பாதயோஸ் ஸ மணி பாதுகே யுவாம்
ஸந்நிகர்ஷத நசேத் மது த்விஷஸ்
கிம் கரிஷ்யதி க்ருத ஆகஸாம் கண:—767–

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகைகளே! மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனுக்கு இரு பக்கங்களிலும்
மஹாலக்ஷ்மியும், பூமிப்பிராட்டியாரும் உள்ளனர். இப்படியாக அந்தப் பிராட்டிமார்களாக நீங்கள் (பாதுகைகள்)
ஸ்ரீரங்கநாதன் அருகே இல்லாமல் போனால், பாவம் செய்பவர்களின் கூட்டம் என்ன செய்யும்?

ஸ்ரீ மணி பாதுகைகளே பெருமாளுடைய இரண்டு பக்கங்களிலும் முறையே மகா லஷ்மியும் -கருணை காட்டுமின் -என்பவளும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியும் -பொறுத்துக் கொள்க என்பவளும் -திருவடிகளில் இருவரும் இல்லாமல் போய் இருந்தால்
பாபிகளுடைய கூட்டங்களுக்குக் கதி விமோசனம் ஏது-

—————————————————————————-

பாதுகே பவ பய ப்ரதீ பயோ:
பாவயாமி யுவயோஸ் ஸமாகமம்
ஸக்தயோர் தநுஜவைரிணர் பதே
வித்யயோர் இவ பராவராத் மநோ:–768–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள நீங்கள்,
ஸம்ஸார பயத்திற்குச் சத்ருவாக உள்ளீர்கள். இப்படியாக உள்ள உங்கள் இருவரது சேர்க்கையைக் காணும் போது,
பரை மற்றும் அபரை என்ற வித்யைகளின் சேர்க்கை என்றே நான் எண்ணுகிறேன்.

பலவிதமான சாஸ்திரங்களைக் கற்று, அவனை அடைவதற்கான செயல்களில் ஈடுபட உதவுவதற்கு அபரவித்யை என்று பெயர்.
எம்பெருமானைப் பற்ற உதவும் அவனது உபாஸனம் என்பதற்குப் பரவித்யை என்று பெயர்.

ஸ்ரீ பாதுகைகளே சம்சார பயத்தைப் போக்க வல்லவர் நீவிர் -நீங்கள் இருவரும் பெருமாளுடைய திருவடிகளைச் சேர்ந்து இருப்பது
அபரவித்யை -ரிக் வேதாதிகளை இருந்து ஆசார்ய முகமாக ஏற்பட்ட ப்ரஹ்ம ஞானம் -பரவித்யை-அந்த ஞானம் கொண்டு
பகவத் உபாசனம் பண்ணிப் பக்தி யோகம் மூலம் பெருமாளை அடையும் முயற்சி -என்ற இரண்டின் இணையோ என்று சொல்லத் தோன்றும் –

————————————————————–

ரங்க ஸீமநி ரதாங்க லக்ஷ்மண:
சிந்தயாமி தபநீய பாதுகே
சாப தோஷ சமநாய தத் பதே
சக்ரவாக மிதுநம் க்ருதாஸ்பதம்—769-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் சக்கரத்தை அடையாளமாகக் கொண்டுள்ள
ஸ்ரீரங்கநாதனின் தங்கமயமான பாதுகைகளான உங்களைக் காணும்போது –
சாபத்தின் பரிஹாரமாக அவனுடைய கோயிலில் வாஸம் செய்யும் சக்ரவாகப் பக்ஷிகளின் ஜோடி என்றே நான் எண்ணுகிறேன்.

இராமன் சீதையைப் பிரிந்து துன்பம் காரணமாகக் குயிலைத் தாய் வளர்க்காது, சக்ரவாகப் பறவைகள் இரவில் சேரக் கூடாது
போன்ற சாபங்களை இட்டான். இதனை இங்கு கூறுகிறார். எந்தவிதமான சாபமும் ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்து,
ஸ்ரீரங்கநாதனை அண்டியபடி நின்றால் நீங்கும் என்பது உட்கருத்து.

ஸ்ரீ ரங்க நாதனின் பொற் பாதுகைகளே -உங்களைப் பார்க்கும் போது இரவில் பிரிந்தே இருக்க வேண்டும் என்று சபிக்கப் பட்ட
சக்ரவாகப் பறவை தம்பதி அந்த சாபத்தைப் போக்கிக் கொள்ள வென்றே சக்ர பாணியாய் -அதையே அடையாளமாகக் கொண்டுள்ள –
நிற்கும் பெருமாளுடைய திருவடிகளைச் சரணமாக அடைந்துள்ள பஷிகள் என்று தோற்றம் ஏற்படுகிறது –

—————————————————————-

மாநயாமி ஜகதஸ் தமோ பஹே
மாதவஸ்ய மணி பாதுகே யுவாம்
தக்ஷிணோத்தர கதிக்ரம் உசிதே
பத்ததீ இவ மயூக மாலிந:—770-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகில் உள்ள அஞ்ஞானம் என்னும் இருளை நீக்குபவர்களாக உள்ள
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! தக்ஷிணாயம், உத்தராயணம் என்னும் சூரியனின் தெற்கு வடக்கு மார்க்கங்கள் போன்றே
உங்களை நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகைகளே உலகின் இருளைப் போக்க சூர்யன் கதி தஷிணாயணம் உத்தராயணம் என்றும் இரண்டை ஏற்றது –
அதே போலே மக்கள் துயரைப் போக்கப் பெருமாளின் சஞ்சாரம் வலது புறம் இடது புறம் என்ற ரீதியில் நடப்பது உதவுகிறது –
அதற்கு உதவும் உங்கள் இருவரையும் ஸூர்ய கதி போலே எண்ணுகிறேன் –

———————————————————-

ரங்கநாத பதயோ: அலங்க்ரியா
ராஜதே கநக பாதுகா த்வயீ
தத் விபூதி யுகளீவ தாத்ருசீ
ச்சந்ததஸ் ஸம விபாகம் ஆஸ்ரிதா—-771–

ஸ்ரீரங்கநாதனின் அழகான திருவடிகளுக்கு அலங்காரமாக விளங்குகின்ற தங்கமயமான பாதுகைகள் இரண்டும் –
அவனுடைய விருப்பத்தினால் ஒரே போன்ற பிரிவை அடைந்துள்ள அவனது லீலாவிபூதி, நித்யவிபூதி போன்று உள்ளன.

ஸ்ரீ ரங்க நாதன் திருவடிகளுக்கு அலங்காரமான இந்தப் பாதுகைகள் இரண்டும் பெருமாளுடைய
ஐஸ்வர்யமான போக -நித்ய விபூதி என்று லீலா விபூதி என்ற இரண்டும் போலே –
ஆனால் த்ரிபாத் -முக்கால் -கால் -என்று அவற்றின் பரிணாமம் இருப்பது போல் அன்றி
அவை இரண்டும் தம்மிஷ்டப்படி சம மானாகவே அமைந்து உள்ளன –
உபய விபூதியில் உள்ளோர் இவ்விரண்டையும் சமமாகவே ஆஸ்ரயிக்கலாம் படி யுள்ளது என்றவாறு –

———————————————————————–

ஸாக்ஷாத் பதம் மதுபிதஸ் ப்ரதிபாத யந்த்தௌ
மாந உபபத்தி நியதே மணி பாதுகே த்வே
அந்யோந்ய ஸங்கதி வஸா த் உபபந்ந ஆசர்யாம்
ஆஜ்ஞாம் ஸ்ருதி ஸ்ம்ருதி மயீம் அவதாரயாமி—772–

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகள் இரண்டும் அவனது திருவடிகளை நாம் காணும்படிச் செய்கின்றன.
அவனுடைய ஸ்வரூபத்தை நமக்கு உள்ளது உள்ளபடி அறிவிக்கின்றன. வேதங்கள் என்னும் ப்ரமாணங்களாலும், தர்க்கங்களாலும்
நிச்சயிக்கப்பட்ட பெருமை கொண்டவையாக உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து அழகான நடையை கொண்டதாக உள்ளன.
இப்படிப்பட்ட பாதுகைகள் ஸ்ருதிகள், ஸ்ம்ருதிகள் என்பதான ஸ்ரீரங்கநாதனின் கட்டளைகள் என்றே நான் எண்ணுகிறேன்.

பகவானுடைய ஸ்ரீ பாதுகைகள் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதாய் ஒன்றான பகவத் ஆஜ்ஞை என்றே சொல்ல வேண்டும் –
ஸ்ருதி ஸ்ம்ருதி இரண்டும் நமக்கு பகவானுடைய ஸ்வரூபத்தை நேராகச் செவ்வனே அறிவிப்பவை –
அவை பிரமாணம் என்று நிச்சயிப்பது அதற்கான பிரமாணத்தாலும் உரிய தர்க்கத்தாலும் தான்
அந்த இரண்டையும் கொண்டு தான் நமக்கு உரிய தம அனுஷ்டானக் கடமைகள் என்ன வென்று அறிகிறோம் –
அதே போலே இரண்டு ஸ்ரீ பாதுகைகளும் பகவான் திருவடியை -பகவானுடைய ஸ்தானத்தைக் கூட நமக்குக் காட்டி அருளும் ப்ரத்யஷமாக –
அவற்றின் பெருமையைப் பற்றி பிரமாணங்கள் தர்க்கம் என்ற இரண்டையும் கொண்டு அறிகின்றோம்
பகவானின் சஞ்சாரம் அவை இரண்டும் இணைந்து செயல் பட்டே நடக்கிறது –

——————————————————————–

விஸ்வ உபகாரம் அதிக்ருத்ய விஹார காலேஷு
அந்யோந்யதஸ் ப்ரதமம் ஏவ பரிஸ் புரந்த்யோ:
த்ருஷ்டாந்த யந்தி யுவயோர் மணி பாதரக்ஷே
திவ்யம் ததேவ மிதுநம் திவிஷந் நிஷேவ்யம்–773-

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகைகளே! இந்த உலகங்களுக்குச் செய்யவேண்டிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு,
ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின் போது ”நான் முந்தி, நீ முந்தி” என்று போட்டி போட்டுக்கொண்டு நீங்கள் முன்னே வருகிறீர்கள்.
இதனால், நான்முகன் தொடக்கமான அனைத்து தேவர்களாலும் ஆராதிக்கப்படுகின்ற திருவரங்கத்தின்
திவ்யதம்பதிகளாகவே உங்களைப் பலரும் கூறுகின்றனர் போலும்.

இந்த உலகத்தைக் காப்பாற்றுவதில் எப்போதும் ஸ்ரீரங்கநாதனுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் போட்டி உள்ளது.
யார் முதலில் சென்று காப்பாற்றுவது என்பதே ஆகும்.
இது போன்றே, ஸ்ரீரங்கநாதனின் இடது பாதுகையும் வலது பாதுகையும் போட்டி போடுகின்றன என்கிறார்.

ஸ்ரீ மணி பாதுகைகளே அகில உலகின் நன்மைக்காக வென்றே நீங்கள் சஞ்சாரம் மேற் கொள்வது –
அப்போது ஓன்று முன்னே உடனே இன்னொன்று முன்னே என்று போட்டி போலே எடுத்து வைக்கப் படுகிறீர்கள் –
உங்களுக்கு உவமை -சர்வ தேவர்களாலும் வணங்கப்படும் பெருமாள் பிராட்டி யாகிய திவ்ய தம்பதிகள் தாம்
இருவருமே நான் முன்னே நான் முன்னே என்று ரஷணத்துக்கு போட்டி போட்டிக் கொண்டு இருப்பார்கள் –
திரு அவதாரங்களிலும் அப்படியே –

—————————————————————————

த்வாவேவ யத்ர சரணௌ பரமஸ்ய பும்ஸ:
தத்ர த்விதா ஸ்திதவதீ மணி பாதுகே த்வம்
யத்ரைவ தர்ஸயதி தேவி ஸஹஸ்ர பாத்த்வம்
தத்ர அபி நூநம் அஸி தர்ஸித தாவதாத்மா—774-

இரத்தினங்களால் இழைக்கப்பட்ட பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனாக நிற்கும் பரமபுருஷனுக்கு இரண்டு திருவடிகள் உள்ளபோது,
நீ இரண்டாக உள்ளாய். ஆனால் வேதங்களில் கூறியபடி, ஆயிரம் திருவடிகளைக் கொண்டவனாக ஸ்ரீரங்கநாதன் நிற்கையில்,
நீ அத்தனை பாதுகைகளாகத் தோன்றுகிறாய் என்பது நிச்சயம்.

ஸ்ரீ மணி பாதுகா தேவியே -பரம புருஷன் இரண்டே திருவடிகள் உடன் இருக்கும் போது இரண்டு ஸ்ரீ பாதுகைகளாக இருக்குப்பீர்
அவன் ஆயிரம் திருவடிகள் உடன் கூடிய தோற்றம் எடுத்துக் கொள்கையில் அத்தனை உருவங்கள் எடுத்துக் கொள்கிறீர் –

———————————————————————–

பர்யாயதோ கதி வசாத் மணி பாத ரக்ஷே
பூர்வா பரத்வ நியமம் வ்யதி வர்த்த யந்த்யௌ
மந்யே யுவாம் மஹதி விஷ்ணு பதே ஸ்புரந்த்யௌ
ஸந்த்யே ஸமஸ்த ஜகதாம் அபி வந்த நீயௌ—775–

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகைகளே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும்போது நீங்கள் இருவரும் மாறிமாறி வருவதால்,
”இது முன்னே, இது பின்னே” என்று என்ற கட்டுப்பாடு தாண்டியபடி உள்ளீர்கள்.
ஸ்ரீரங்கநாதனின் உயர்ந்த, பரந்த ஆகாசம் போன்ற திருவடிகளில் நீங்கள் உள்ளீர்கள். இப்படியாக உள்ள உங்களைக் காணும் போது,
அனைத்து உலகங்களும் உபாஸிக்கத் தகுந்த ப்ராதஸ் ஸந்த்யை மற்றும் ஸாயம் ஸந்த்யை என்று நான் எண்ணுகிறேன் (காலை நேரம், மாலை நேரம்).

ஸ்ரீ மணி பாதுகைகளே அகில உலகும் உபாசித்தாக வேண்டிய -காலை மாலை சந்த்யைகள் போல் விளங்கு கின்றீர்களே –
சஞ்சார காலத்தில் எவர் முன்பு திருவடி வைத்தார் என்று சொல்ல முடியாத படியாய் இருக்கும்
அந்த சந்த்யைகள் ஆகாசத்தில் வெளியாகின்றன -நீங்கள் ஸ்ரீ விஷ்ணு பதத்தில் உள்ளவர்கள் –
நீங்களும் அகில உலகமும் உபாசிக்க உரியவர்கள் –

——————————————————————————-

அஸ்ராந்த ஸஞ்சரணயோ: நிஜ ஸம்ப்ர யோகாத்
அம்லாநதாம் சரண பங்கஜயோர் நிசந்த்யௌ
மாந்யே யுவாம் ரகு பதேர் மணி பாத ரக்ஷே
வித்யே பலாம் அதி பலாம் ச விசிந்துயாமி—776–

இராமனுடைய இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகளே! இடைவிடாமல் நடக்கின்ற இராமனின் திருவடித் தாமரைகள்
வாடிவிடாமல் இருக்கக்கூடிய தன்மையை நீங்களே அளிக்கிறீர்கள். இதனால் நீங்கள் வணங்கத்தக்கவர்களாக உள்ளீர்கள்.
இதனைக் காணும்போது, விஸ்வாமித்திரர் இராமனுக்கு உபதேசித்த பலை மற்றும் அதிபலை என்னும் மந்த்ரங்களாகவே
நீங்கள் உள்ளீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனின் ஸ்ரீ பாதுகைகளே ஓயாமல் நடந்து அருளும் பகவத் திரு பாதங்களுக்கு வாடுதல் இல்லாத தன்மையைத்
தர வல்லவையாய் உபாஸ்யரான உங்கள் இருவரையும் ராஜ குமாரர்களுக்கு களைப்பு ஏற்படாமல் இருக்க வழங்கப்பட
பலை-அதி பலை -என்ற இரண்டு மந்த்ரங்களாகச் சொல்லலாம் போலும் –

———————————————————————————–

அந்தர் மோஹாத் அவிதிதவதாம் ஆத்ம தத்வம் யதாவத்
பத்யாம் இத்தம் பரிசிதவதாம் பாதுகே பாபலோக்யாம்
நித்யம் பக்தேர் அநு குணதயா நாத பாதம் பஜந்த்யௌ
நிஷ்டே ஸாக்ஷாத் ஸ்வயம் இஹ யுவாம் ஜ்ஞாந கர்மாத்மிகேந:—-777–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! மனதிற்கு எற்ற நன்மைகளை அறியக்கூடிய தெளிவு இல்லாத காரணத்தினால்,
ஜீவாத்மா-பரமாத்மாக்கள் பற்றிய உண்மையை, உள்ளது உள்ளபடி அறியக்கூடிய அறிவு அற்றவர்களாக நாங்கள் உள்ளோம்.
மேலும் நரகங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய வழிகளைப் பழகிக் கொண்டவர்களாகவே நாங்கள் உள்ளோம்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்த நீங்கள், எங்களுக்கு எப்படி உள்ளீர்கள் என்றால் –
எங்களுக்கு இந்த உலகில் பக்தியோகம் கிட்டவேண்டும் என்பதற்காக ஞானயோகம் மற்றும் கர்மயோகம் என்பவையாகவே
நீங்கள் வடிவு கொண்டதாக உள்ளீர்கள்.

ஸ்ரீ பாதுகைகளே -நாங்கள் ஆத்மஜ்ஞானம் பரமாத்மா ஜ்ஞானம் இல்லாமல் இருளில் உள்ளோம் -அறியாமையால் தத்தளித்து
நரகத்திற்குப் போகும் வழியிலேயே போய்ப் போய்ப் பழகி விட்டோம் -அப்படிப்பட்ட எங்களுக்கு சர்வகாலமும் பக்திக்கு ஏற்ற படியாகப்
பெருமாள் திருவடியைச் சேர உதவுபவை நீவிர் தாம் -இவ்வுலகில் நீவிர் தாம் எங்களுக்கு சாஷாத் ஜ்ஞான கர்ம நிஷ்டைகள் –

——————————————————————

ந்யஸ்தம் விஷ்ணோர் பதம் இஹ மஹத் ஸ்வேந பூம்நா வஹந்த்யோ:
ஆம்நாயாக்யாம் அவிஹத கதிம் வர்த்த யந்த்யோர் நிஜ ஆஜ்ஞாம்
ஆஸந்நாநாம் ப்ரணய பதவீம் ஆத்மநா பூர யந்த்யோ:
த்ரை ராஜ்யஸ்ரீ: பவதி ஜகதாம் ஜக ராஜ்யே பவத்யோ:—-778–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! உங்கள் மீது வைக்கப்பட்ட மிகவும் உயர்ந்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தாங்கி நிற்கிறீர்கள்.
இதனால் மிகுந்த பெருமையுடன் உள்ளீர்கள். வேதங்கள் என்னும் உங்கள் கட்டளைகளைத் தடைபடாத செல்வாக்கு கொண்டதாக
இந்த உலகில் நிலை நாட்டுபவர்களாக உள்ளீர்கள். உங்கள் அருகில் வந்தவர்கள் விரும்பும் பொருள்களை,
அவர்கள் கேட்காமலேயே, நீங்களாகவே நிரப்புகிறீர்கள்.
இப்படியாக நீங்கள் இந்த உலகிற்கு ஒரே சக்ரவர்த்தியாக உள்ள போதிலும், தோற்றம் காரணமாக இரண்டு சக்ரவர்த்திகளாக உள்ளீர்கள்.

ஸ்ரீ பாதுகைகளே உங்கள் மீது வைக்கப் பட்ட ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடியைத் தாங்கியது –
பெருமாளுடைய ஆஜ்ஞை யாகிற வேத மார்க்கத்தைத் தடையின்றி நடத்துவது
அண்டினவர்களின் ஆசையை நிறைவேற்றி வைப்பது -இது எல்லாம் நீங்கள் அன்று போல் இன்றும் ஒரே விதமாக
நடத்திக் கொடுக்கிறபடியால் உலகத்தை ஆள்பவர் இருவர் என்ற தோற்றம் இருந்தாலும் ஓர் அரசேயாக நடத்துகிறீர்கள் –

—————————————————-

அப்ராப்தாநாம் உபஜநயத: ஸம்பதாம் ப்ராப்திம் ஏவம்
ஸம்ப்ரப்தாநாம் ஸ்வயம் இஹ புந: பாலநார்த்தம் யதேதே
ஸாக்ஷாத் ரங்கக்ஷிதிபதி பதம் பாதுகே ஸாதயந்த்யௌ
யோக க்ஷேமௌ ஸுசரிதவசாத் மூர்த்தி மந்தௌ யுவாம் ந:—-779-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! எங்களால் இதுவரை பெறப்படாமல் இருந்துள்ள ஐஸ்வர்யத்தை
நாங்கள் அடையும்படிச் செய்கிறீர்கள் (இது யோகம் எனப்படும்).
இதுவரை நாங்கள் அடைந்துள்ளதைக் காப்பாற்றுதலுக்கு நீங்களாகவே பெரும் முயற்சி எடுத்துக் கொள்கிறீர்கள் (இது க்ஷேமம் என்பதாகும்).
உங்களுக்கு என்று வைத்துக் கொள்ளாமல், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எங்களுக்கே அளிக்கின்ற உங்களைக் காணும்போது,
எங்கள் புண்ணியம் காரணமாக நாங்கள் பெற்ற யோகமும், க்ஷேமமும் வடிவெடுத்தது போன்றே உள்ளது.

ஸ்ரீ பாதுகையே நீவிர் இதுவரையில் பெறப்படாத செல்வங்களை இப்படி நாங்கள் காணும்படி பெற்றுத் தருகிறீர்கள் –
பெறப் பட்ட வற்றின் சேமிப்பிற்கும் தாமே ப்ரத்யயனம் செய்கிறீர்கள் –
சாஷாத் ஸ்ரீ ரங்க நாதன் ஸ்தானத்தை எங்களுக்கு சாதித்துக் கொடுத்து அருளுகிரீர்கள்
ஆகவே நீங்களே எங்கள் புன்யத்தின் விளைவாக உருவெடுத்த யோக ஷேமங்கள்-

———————————————————————–

பத்த ஹரி பாத யுகளம் தபநீய பாதுகே யுவயோ:
மோசயதி ஸம்ஸ்ரிதாநாம் புண்யாபுண்யமய ஸ்ருங்கலா யுகளம்—-780–

தங்கமயமான பாதுகைகளே! உங்களது இந்த இணை என்பது இரண்டாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை ஒன்றாகக் கட்டுகிறது.
இந்த இணையே, உங்களை அண்டியவர்களின் புண்ணியம் மற்றும் பாவம் என்னும் சங்கிலிகளின் பிணைப்பை விடுவிக்கின்றன.

ஸ்ரீ தங்கப் பாதுகைகளே நீங்கள் ஒரு இரட்டையாக வகவானுடைய திருவடி இணையைக் காட்டிச் சேர்ந்து இருக்கின்றீர்
ஆனால் உம் இணை ஆஸ்ரித ஜனங்களின் புண்ய பாபம் ஆகிற சங்கிலியின் இரட்டையைக் கழற்றிப் போடுகிறதே –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-23- சேஷ பத்ததி -சேஷபூதமாய் -ஆதி சேஷ அவதாரமாய் -ஸ்லோகங்கள் -751-760-

March 19, 2016

ஸ்ருஷ்டாம் பூமௌ அநந்தேந நித்யம் சேஷ ஸமாதிநா
அஹம் ஸம்பாவயாமி த்வாம் ஆத்மாநம் இவ பாதுகே—751–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்தப் பூமியில் எப்போதும் கைங்கர்யம் செய்தபடி இருக்கவேண்டும் என்று
ஆதிசேஷன் உன்னை இங்கு ஏற்படுத்தினான்.
இப்படியாகத் தன்னைப் போன்றே உன்னை இங்கு உண்டாக்கினான் என்றே எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே உன்னை உலகில் நித்தியமான சேஷத் தன்மை எங்கனம் இருக்க வேண்டும் என்று காட்டி அருளவே
ஒரு ஆத்மாவாக ஆதி சேஷன்-சிருஷ்டித்து இருக்கிறான் பகவான் -என்று கருதிகிறேன் –

————————————————————————-

பத்மா போகாத் பாதுகே ரங்க பர்த்து:
பாத ஸ்பர்சாத போகம் அந்யம் ப்ரபித்ஸோ:
சேஷஸ்ய ஏகாம் பூமிகாம் அப்ரவீத் த்வாம்
ஆசார்யாணாம் அக்ரணீ: யாமுநேய:—752–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தொட்டபடி உள்ளதால் ஸ்ரீரங்கநாச்சியார் அடையும்
இன்பத்தைக் காட்டிலும், உயர்ந்த இன்பமாகிய ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளால் மிதிபடும் இன்பத்தை அடையவேண்டும்
என்று ஆதிசேஷன் எண்ணினான் போலும்.
இதனால்தான், ஆசார்யர்களில் உயர்ந்தவரான ஆளவந்தார், உன்னை ஆதிசேஷனின் அவதாரமாகக் கூறினார்.

ஸ்ரீ பாதுகையே ஆதி சேஷன் பெருமாள் திருவடியைத் தொட்டுக் கொண்டு இருக்கும் பாக்கியம் ஏற்படவும் –
ஆனால் அது மஹா லஷ்மீ பெரும் பாக்யத்தில் இருந்து வேறுபட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் விரும்பி
எடுத்த ஓர் உருவம் என்று ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -40 அருளிச் செய்கிறார் –

——————————————————————————–

சேஷத்வம் அம்ப யதி ஸம்ஸ்ரயதி ப்ரகாமம்
த்வத் பூமிகாம் ஸமதிகம்ய புஜங்கராஜ:
த்வாம் ஏவ பக்தி விநதை: வஹதாம் சிரோபி:
காஷ்டாம் கதம் ததிஹ கேசவ பாத ரக்ஷே—-753–

அழகான கேசங்களைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! தாயே!
நாகங்களின் அரசனான ஆதிசேஷன் உனது உருவம் எடுத்து ஸ்ரீரங்கநாதனைத் தாங்கி நிற்கும்போது,
அவனது அடிமைத்தனம் மேலும் அதிகமாகிறது. அப்படிப்பட்ட உன்னைத் தங்கள் தலையில் ஏற்பவர்களின் அடிமைத்தனம்,
இந்த உலகில் மேலும் உயர்வைப் பெறுகிறது.

படுக்கையாக உள்ளதைக் காட்டிலும் பாதுகையாக உள்ளபோது ஆதிசேஷனின் அடிமைத்தனம் அதிகமாகிறது.
அப்படிப்பட்ட பாதுகையைத் தலையில் ஏற்பது, ஆதிசேஷனின் அடிமைத்தனத்தைக் காட்டிலும் உயர்ந்த செயல் அல்லவோ?

ஸ்ரீ பாதுகை தேவியே -சர்ப்ப ராஜன் -ஆதி சேஷன் -சகல வித கைங்கர்யங்கள் செய்தாலும் உனது உருவத்தை எய்தும் போது தான்
அதிகமாக சேஷத்வத்தை அடைகின்றான் -ஆகில் அப்படிப்பட்ட உன்னையே பக்தியோடு வளைந்த தலைகளில் ஏந்து கின்றவர்களுக்கு
இவ்வுலகில் சேஷத்வத்தின் கடை எல்லை நிலம் என்ற நிலை கிடைத்து விடுகிறதே -நீ தந்து அருளும் பெரும் பாக்யம் இது –

——————————————————————————–

மாபூத் இயம் மயி நிஷண்ண பதஸ்ய நித்யம்
விஸ்வம் பரஸ்ய வஹநாத் வ்யதிதா இதி மத்த்வா
தத்ஸே பல அப்யதிகயா மணி பாதுகே த்வம்
சேஷாத்மநா வஸுமதீம் நிஜயைவ மூர்த்த்யா—-754-

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! “என் மீது தனது திருவடிகளை வைத்தபடி ஸஞ்சரிக்கும்
ஸ்ரீரங்கநாதனை இந்தப் பூமியானது எப்போதும் தாங்குவதால் வருந்துகிறதோ?”, என்று நீ எண்ணுகிறாய் போலும்.
அதனால், அதிக பலம் நிறைந்ததான ஆதிசேஷன் என்னும் உருவம் எடுத்து, இந்தப் பூமியைத் தாங்குகிறாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே நீ பெருமாளை தாங்குகிறாய் -பூமி உன்னைத் தாங்குகிறது -இந்தப்பூமி இப்படி உலகம் முழுவதையும்
தாங்குபவனை எப்பொழுதும் தாங்குவதனால் வருத்தமுற வேண்டாம் என்று கருதி
நீ ஆதி சேஷன் ரூபம் எடுத்தவளாய் உன் தன இன்னொரு உருவத்தால் பூமியைத் தாங்குகிறாய் –

——————————————————————-

தத்தாத்ருசா நிஜ பலேந நிரூட கீர்த்தி:
சேஷஸ் தவ ஏவ பரிணாம விசேஷ ஏஷ:
ராமேண ஸத்ய வசஸா யத் அநந்ய வாஹ்யாம்
வோடும் புரா வஸுமதீம் பவதீ நியுக்தா—-755-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தன்னுடைய அளவு கடந்த பலம் என்னும் காரணத்தினால் நிலையான புகழ்பெற்ற ஆதிசேஷன்,
உனது அவதாரமே என்பதற்கு ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரம் எது? எப்போதும் உண்மையை மட்டுமே கூறுகின்ற இராமனால்,
யாராலும் தாங்க இயலாத பூமியைத் தாங்கும்படி, நீ அல்லவோ கட்டளை இடப்பட்டாய்?

ஸ்ரீ பாதுகையே பூமியைத் தாங்கும் அந்த பலம் மிக்க ஆதி சேஷன் அந்த கைங்கர்யத்தில் பெரும் புகழை ஈட்டியவன் –
உனது மற்றொரு உருவம் எனபது திண்ணம் –
சத்யா வாக்யனான சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளும் பொழுது
பூமியின் நிர்ஹாகச் சுமையை ஏற்று நடத்தும்படி உன்னை அன்றோ நியமித்து அருளினான் –

——————————————————————————-

சேஷத்வ ஸீம நியதாம் மணி பாத ரக்ஷே
த்வாம் ஆகமா: குலவதூம் இவ பால புத்ரா:
த்வத் ரூபபேத சயிதஸ்ய பரஸ்ய பும்ஸ:
பாத உபதாந சயிநாம் உபதாநயந்தி—756-

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! அடிமைத்தனத்தின் எல்லையாக நீ உள்ளாய்;
உன்னுடைய உருவமான ஆதிசேஷன் மீது சயனித்துள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளையே தலையணை என்று எண்ணி,
அங்கேயே நீ சயனித்துள்ளாய். இப்படியாகக் கணவனின் கால்களில் சயனித்துள்ள பதிவ்ரதை போன்ற
உன்னைத் தங்கள் தாயாகக் கொண்டு, உன்னைத் தங்கள் தலையணை ஆக்கி,
வேதங்கள் என்ற குழந்தைகள் நிம்மதியாக சயனித்துள்ளன.

ஸ்ரீ மணி பாதுகையே -பெருமாள் உன் மற்றொரு உருவமான ஆதி சேஷன் மேல் சயனித்து இருக்கிறார்
நீ திருவடிகள் இல்லாமல் -திருவடிகளைத் தலையணையாக வைத்துக் கொண்டு உள்ளாய்
வேதங்கள் உன் குழந்தைகள் போலே உன்னை அடுத்துப் படுத்து இருக்கின்றன
நீ பதிவ்ரதை -கைங்கர்யம் இல்லாத அந்தப் பொழுதிலும் திருவடிகளை விடுவது இல்லை –

————————————————————–

பரத சிரஸி லக்நாம் பாதுகே தூரதஸ் த்வாம்
ஸ்வதநுமபி வவந்தே லக்ஷ்மண: சேஷபூத:
கிம் இதம் இஹ விசித்ரம் நித்ய யுக்த: ஸிஷேவே
தசரத தநயஸ்ஸந் ரங்கநாத: ஸ்வமேவ—-757–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷனாகிய லக்ஷ்மணன் தனது உருவமான உன்னை,
பரதனின் தலையில் நீ வீற்றிருந்தபோது, உன்னைத் தூரத்தில் நின்றபடி வணங்கினான்.
இப்படியாகத் தனது உருவமாகவே உள்ள ஒருவரை மற்றவர் வணங்குவது இந்த உலகில் வியப்பான செயல் அல்ல,
எப்படி? தசரதனின் புத்திரனாக அவதரித்த ஸ்ரீரங்கநாதன் தன்னைத்தானே ஆராதித்தபடி இருந்தான் அல்லவோ?
(திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதன் இராமனால் ஆராதிக்கப்பட்டவன் ஆவான்.
இராமனாக வந்ததும் ஸ்ரீரங்கநாதனே என்பதால், இப்படிக் கூறுகிறார்).

ஸ்ரீ பாதுகையே நந்திக்ராமத்தில் நீ ஸ்ரீ பரதாழ்வான் தலையில் இருக்கிறாய் –
மீண்டு வந்த இளைய பெருமாள் -சேஷ பூதன் -தூரத்தில் இருந்தே உன்னை வணங்கினான் –
அவன் அப்படி பிரமாணம் செய்தது தனது இன்னொரு சரீரமான உன்னையே -இது இவ்வுலகில் ஆச்சர்யம் இல்லை –
சக்ரவர்த்தி திருமகன் ஸ்ரீ ரங்க நாதனை – தன்னையே -இடையறாது பக்தியுடன் ஆராத்தித்து அருளினார் அன்றோ –

—————————————————————

பூயோ பூய: ஸ்திமித சலிதே யஸ்ய ஸங்கல்ப ஸிந்தௌ
ப்ரஹ்ம ஈசாந ப்ரப்ருதய இமே புத்புதத்வம் பஜந்தி
தஸ்யா நாதே: யுக பரிணதௌ யோக நித்ரா அநுரூபம்
க்ரீடா தல்ப்பம் கிமபி தநுதே பாதுகே பூமிகா அந்யா—758–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸங்கல்பம் என்பது ஸமுத்திரம் போன்று அசையாமலும், அசைந்தபடியும் உள்ளது.
இந்த ஸமுத்திரத்தில் நான்முகன், சிவன் போன்றோர் நீர்க்குமிழிகள் போன்றுள்ள தன்மையை அடைகின்றனர்.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனுக்கு, ப்ரளய காலத்தில் அவன் யோகநித்திரை கொண்டதற்கு ஏற்ற ஆலிலையாக நீ
மற்றோர் உருவம் எடுக்கிறாய். இந்தத் தன்மை இனிமையான படுக்கையை ஏற்படுத்துகிறது.

ஸ்ரீ பாதுகையே பகவத் சங்கல்பம் ஒரு கடல் போலவாம் -அது ஒரு கணம் சலிக்கும் -ஒரு கணம் அசையாமல் நின்று விடும் –
அதில் ஏற்படும் குமிழிகள் போல் பிரம்மா சிவன் போன்றோர் பிறந்து வாழ்வார் -பெருமாள் அநாதி –
அவருக்குப் பிரளய காலத்தில் யோக நித்ரைக்குத் தகுந்ததான உல்லாசமான படுக்கையை
உன் மற்றொரு உருவம் -ஆதி சேஷன் ஆலிலையாக ஏற்கிறது –

——————————————————————————–

அஹீநாத்மா ரங்கக்ஷிதி ரமண பாதாவநி ஸதா
ஸதாம் இத்தம் த்ராணாத் ப்ரதித நிஜ ஸத்த்ரத்வ விபவா
அவித்யா யாமிந்யா: ஸ்ப்ருசஸி புந: ஏகாஹ பதவீம்
க்ரதூநாம் ஆராத்யா க்ரதுரபி ச ஸர்வஸ்த்வம் அஸி ந:—759–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அஹீநம் என்னும் யாக ஸ்வரூபமாக (ஆதிசேஷன் ரூபமாக) நீ உள்ளாய்.
எப்போதும் நாங்கள் காணும்படியாக ஸத்துக்களைக் காப்பதால், மிகவும் ப்ரஸித்தமான ஸத்ரம் என்ற யாகமாக உள்ளாய்.
அஞ்ஞானம் என்ற இரவுப்பொழுது விடிவதற்கு ஏற்ற பகல் என்பதான ஏகாஹம் எனப்படும் யாகமாக உள்ளாய்.
இப்படியாகப் பல யாகங்களுக்கு உரிய தேவதையாகவும், அனைத்துமாகவும் நீயே உள்ளாய்.

ஸ்ரீ ரங்க நாதனின் ஸ்ரீ பாதுகையே நீ ஆதி சேஷன் உருவாக இருக்கிறாய் -அஹீனம் என்கிற சோம யாகமாக இருக்கிறாய் –
சத்துக்களை ரஷிப்பவளாய் இருக்கிறாய் -பிரசித்தமான சத்ரம் எனும் பெரும் சோம யாகமாகிறாய்
அஜ்ஞ்ஞானம் -என்கிற இரவுக்கு அச்தனம் இல்லாத ஒரே பகலாய் இருக்கிறாய் -நீ அந்த யாகங்களுக்கு
உத்தேச்ய தேவதையும் யாகங்களுமாகவும் உள்ளாய் -நீயே அனைத்தும் –

—————————————————————–

பஹுமுகபோக ஸமேதை: நிர்முக்ததயா விஸூத்திம் ஆபந்நை:
சேஷாத்மிகா பதாவநி நிஷேவ்யஸே சேஷ பூதைஸ் த்வம்—-760–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷனின் அவதாரமான நீ, பலவிதமான இன்பங்களுடன் கூடியவர்களும்,
அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபட்டதனால் தோஷம் இல்லாத தன்மையை அடைந்தவர்களும் ஆகிய
ஸ்ரீரங்கநாதனின் தொண்டர்களால் எப்போதும் வணங்கப்படுகிறாய்.

இங்கு பஹுமுக என்பதைப் பல முகங்கள் என்றும், நிர்முக்ததயா என்பதை தோல் உரித்த காரணத்தினால் என்றும்,
விஸூத்திம் என்பதைப் பளபளப்பு என்றும், சேஷ என்பதை நாகங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
இப்படிக் கொண்டால், பலவிதமான நாகங்களால் ஆதிசேஷனாக உள்ள நீ வணங்கப்படுகிறாய் எனலாம்.

ஸ்ரீ பாதுகையே சேஷ பூதையாய் ஆதி சேஷ ஸ்வரூபியாய் இருக்கிறாய் -பலவகை போகங்களை உனக்கு சமர்ப்பிக்கிறார்கள் –
முக்தி பெற்று அதனால் பரிசுத்தி அடைகின்றனர் -பலமுகமான சேஷ பூத கைங்கர்யம் செய்கிற சேஷ பூதர்கள்
உன்னைப் போலவே நீ தோல் உரித்ததனால் பெரும் பளபளப்பை பெறுகிறார்கள் -அந்த சேஷர்கள்-
சேஷ பூதர்களான பெரியோர்களால் நீ சேவிக்கப் படுகிறாய் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-22-காஞ்சனா பத்ததி -பொற் படலம் -ஸ்லோகங்கள் -731-750-

March 18, 2016

கல்யாணா ப்ரக்ருதிம் வந்தே பஜந்தீம் காஞ்சந ஸ்ரியம்
பத அர்ஹாம் பாதுகாம் சௌரே: பத ஏவ நிவேசிதாம்—-731-

அனைத்து உலங்களுக்கும் ஏற்ற நன்மையை அளிக்கவல்ல ஸ்வபாவம் கொண்டவளும், தனிப்பட்ட மேன்மையை அடைந்தவளும்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ளதற்குத் தகுதி கொண்டவளும், எப்போதும் ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளில் வைக்கப்பட்டுள்ளவளும் ஆகிய பாதுகையை நான் வணங்குகிறேன்.

தங்க மயமானதும் தனிப்பட்ட சிறப்பைப் பெற்றதுமான ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன் –
அது திருவடிக்கு மிகப் பொருத்தமாய் அமைந்து திருவடியிலேயே பொருந்தி உள்ளது –
அது மங்கள ஸ்வரூபம் ஆனது -ஒப்பற்ற லஷ்மி அவள் -அந்த பெரிய பிராட்டியாரோடும் பெருமாளோடும் சமஸ்தானம் பெற்று விடுகிறது
ஸ்ரீ லஷ்மியும் ஸ்ரீ பாதுகையும் பெருமாளுடைய சரீரத்தில் இடம் பெற்றுள்ளனர் -அந்த ஸ்ரீ பாதுகைக்கு நமஸ்காரம் –

————————————————————————————–

மதுஜித் தநு காந்தி தஸ்கராணாம்
ஜலதாநாம் அபயம் விதாது காமா
சபலேவ ததங்கிரிம் ஆஸ்ரயந்தீ
பவதி காஞ்சந பாதுகே விபாதி—-732–

தங்கமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் அழகான திருமேனி நிறத்தை அபஹரித்த மேகங்கள் பயந்து நின்றன.
அவன் திருவடிகளில் வந்து அவை பணிகின்றன. அவற்றின் பயங்களை நீக்க எண்ணிய நீ,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்த மின்னல் போன்று காணப்படுகிறாய்.

ஸ்ரீ தங்கப் பாதுகையே நீ பகவானுடைய திரு மேனி ஒளியையும் நீல வர்ணத்தையும் திருடிய மேகங்கள்
பயந்து தூது அனுப்பின மின்னல் போல் நீ அவன் திருவடிகளிலே விளங்குகிறாய் –

—————————————————————————————–

நிக க்ஷீக்ருத ரம்ய க்ருஷ்ண ரத்நா
பவதீ காஞ்சந ஸம்பதம் வ்யநக்தி
பரிபுஷ்யதி பாதுகே யதீக்ஷா
ஸஹஸா ந: ஸம லோஷ்ட காஞ்சந த்வம்—-733-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் என்னும் அழகான நீல நிற உரைகல்லை வைத்துக் கொண்டு,
உன்னை இழைத்துக் காண்பித்து நிற்கிறாய்.
இதனால் எங்களுக்கு இந்தப் பூமியில் உள்ள தங்கம் அனைத்தும் ஓட்டாஞ்சில்லுக்குச் சமமாகவே தோன்றுகின்றன
(பாதுகையின் தங்கம் மட்டுமே தங்கம், மற்றவை தங்கம் அல்ல எனத் தோன்றுகிறது. அதாவது பாதுகையே உயர்ந்தது,
மற்ற அனைத்தும் ஒரே போன்று தாழ்ந்ததே எனறு கருத்து).

ஸ்ரீ பாதுகையே நீ பொன்னால் ஆனவள் -நீல நிறத்ததான உறைகல் பெருமாள் -நன்றாகத் தேய்த்து
உயர்ந்த மாற்று என்று நிர்ணயிக்கப் பட்டு இருக்கிறாய்
உன்னில் கறுப்பு ரத்னம் உள்ளது -ஸ்ரீ கிருஷ்ண ரத்னமும் உன்னில் தான் நிலை கொண்டு உள்ளது
உன்னை சேவித்தால் உடனே உலகில் உள்ள மற்ற பொன் எல்லாம் மண் கட்டிக்கு சமானம் என்ற நிதர்சனக் கருத்து வளர்கிறது –

—————————————————————————————————-

ஸுரபி: நிகமைஸ் ஸமக்ர காமா
கநக உத்கர்ஷவதீ பதாவநி த்வம்
திசஸி ப்ரதிபந்ந மாதவஸ்ரீ
அநிசோந்நித்ரம் அசோக வைபவம் ந:—734–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வேதங்களின் வாசனை நிரம்பியவளாக,
உயர்ந்த குணங்கள் நிறைந்தவளாக, தங்கத்தின் மேன்மையைக் கொண்டவளாக,
ஸ்ரீரங்கநாதனின் ஸம்பத்தைப் பெற்றவளாக நீ உள்ளாய். இதனால் நீ எப்போதும் மலர்ந்தபடி,
துக்கம் என்பதே இல்லாத தன்மையை எங்களுக்கு அளிக்கிறாய்.

இங்கு வேதங்களின் வாசனை என்பதை வஸந்தகாலம் என்றும்,
ஸ்ரீரங்கநாதனின் ஸம்பத்து என்பதை வைகாசி மாதம் என்றும் பொருள் கொள்வர்.
இப்படிக் கொள்ளும் போது, துக்கம் இல்லாத தன்மை என்பதை அசோக (அசோக = அ + சோக = சோகம் இல்லாத)
மரங்களின் செழிப்பு என்று பொருள் கொள்வர்.

ஸ்ரீ பாதுகையே நீ வேத மணம் கமழ்பவள் -சர்வ அபீஷ்டங்களையும் அளிப்பவள் -தங்கத்தின் சிறப்பை உடையவள்
திருமால் என்னும் பெரும் செல்வத்தைப் பெற்றவள் -நீ எங்களுக்கு எப்போதும் குறையாத்தான துக்க மின்மையைத் தந்து இருக்கிறாய்
ஸூரபி கனக மாதவ அசோகா -சிலேடைச் சிறப்பு ஸ்ரீ ஸூக்திகள்
நீ வசந்த காலம் .காமங்களை வளர்க்கிறாய் சம்பகம் அசோகா மரம் முதலியவை செழித்து உள்ளன
வைகாசி மாத சிறப்பையும் வழங்குகிறாய் என்ற பொருள்கள் த்வனிக்கும்

——————————————————————————–

ஸதி வர்ண குணோ ஸுவர்ண ஜாதே:
ஜகதி க்யாதம் அஸௌரபாத் அவர்ணம்
ஸ்ருதி ஸௌரப சாலிநா ஸ்வஹேம்நா
பவதீ சௌரி பதாவநி வ்யுதாஸ்த்த்தத்–735–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தங்கத்திற்கு உயர்ந்த பளபளப்பு என்னும் தன்மை உள்ள போதிலும்,
அதற்கு வாசனை இல்லை என்ற குறைபாடு உலகில் உண்டு.
இந்தக் குறையை வேதங்களின் வாசனையுடன் கூடிய உனது தங்கம் கொண்டு நீ போக்கினாய் போலும்.

ஸ்ரீ பகவானின் ஸ்ரீ பாதுகையே பொன் என்ற ஜாதிக்கு நிறச் சிறப்பு மாற்றுச் சிறப்பு உண்டு -வாசனைச் சிறப்பு கிடையாது என்பர்
இதனாலே தான் பொன் மலர் நாற்றம் உடைத்து -என்று விசேஷித்துப் புகழ்வர்-இப்படி ஒரு அபவாதம் –
மணம் இன்மை பெருமை இன்மை இருக்கிறதே அத்தை நீக்க வென்றே போலும் நீ வேத மணம் கமழ விளங்குகிறாய்
தங்கத்துக்கு அபவாதமும் போயிற்று –

அஸெரபாத்: வாசனையில்லாததாலே
அவர்ணம்: அபவாதம்
தங்கம் மிக மிக உயர்ந்த வஸ்து. பளபளப்போடு சதா மிளிரக்கூடியது. ஆயினும் அதற்கு ஏதேனும் நல்ல மணமுண்டோ?
ஒரு வாசனையுமில்லாதது. இது ஒரு குறைதானே! ஆனால் இந்த குறையை பாதுகையிலுள்ள தங்கம் போக்கடித்தது.
ஏனெனில் அது வேத வாசனையோடு கூடியது!.
இந்த உலகில் எத்தனையோ மதங்களிருக்கின்றது. ஆனால் வைணவம் அளவுக்கு சரியான ஆதாரங்களும், யுக்திகளும்,
உலகத்தின் அனுபவங்களுக்கு ஒத்திருக்கையும் பெரும்பாலுமில்லை.
ஆழ்வாராதிகளாலே, ஆச்சார்யர்களாலே நடத்தப்பட்ட நம்முடைய வைணவத்திற்கு எல்லாம் ஒத்திருக்கின்றது.
ஆழ்வார்களின் பிரபந்தங்கள் எல்லா வேதங்களுடைய சாரம்! எல்லா வேதங்களுடைய அர்த்தம்!.

——————————————————————

ப்ரதிபந்ந மயூர கண்ட தாம்நா
பரி ஸூத்தேந பதாவநி ஸ்வகேந
கமலா ஸ்தந பூஷணோசிதம் தத்
பவதீ ரத்நம் அலங்கரோதி ஹேம்நா—-736–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய தங்கம் என்பது மயில் கழுத்தின் நிறம்
கொண்ட தூய்மையான தங்கமாக உள்ளது. இப்படிப்பட்ட தங்கத்தைக் கொண்டு நீ செய்வது என்ன?
ஸ்ரீரங்கநாச்சியாரின் ஸ்தனங்களுக்கு ஆபரணமாக உள்ள இரத்தினக் கல்லை (இந்த இரத்தினக்கல் = ஸ்ரீரங்கநாதன்)
உன்னில் பதித்துக்கொண்டு, அந்த இரத்தினத்தை (ஸ்ரீரங்கநாதனை) மேலும் அழகுபடுத்துகிறாய்.

இரத்தினக் கல்லானது தங்கத்தில் பதிக்கப்பட்டால் மேலும் அழகாகக் காணப்படும்.
இங்கு ஸ்ரீரங்கநாதனை இரத்தினக்கல்லாகக் கூறுகிறார்.
அவன் தங்கமயமான பாதுகையில் மேலும் அழகாக உள்ளான் என்கிறார்.

ஸ்ரீ பாதுகையே மயில் கழுத்தின் மின்னொளி கொண்ட சுத்தமான பொன் நீ –ஸ்ரீ பகவானோ லஷ்மியின் திரு மார்பை
அலங்கரிக்க வேண்டிய உயர்வு கொண்ட ரத்னம் -ஆகவே நீ அந்த ரத்னம் ஆகிற ஸ்ரீ பெருமாளை அலங்கரிப்பது பொருத்தம் –

மயூரகண்ட: மயில் கழுத்து
தாம்நா: பளபளப்பை உடைத்தாயிருக்கின்ற.
பாதுகையில் மயில்கழுத்தினைப் போன்று பளபளக்கும் இந்திரநீலகற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதனைப்பார்க்கும் போது குற்றமில்லாத தங்கத்தினால் மஹாலக்ஷ்மீயின் கழுத்தினை அலங்கரிக்கக் கூடிய அவளுக்கு
மகிழ்ச்சித் தரக்கூடிய பெருமாளாகின்ற ரத்னங்களை இழைத்து அலங்கரிப்பது போலுள்ளதாம்.

——————————————————————-

காந்த்யா பரம் புருஷம் ஆப்ரணகாத் ஸுவர்ணம்
கர்த்தும் க்ஷமா த்வம் அஸி காஞ்சந பாத ரக்ஷே
அந்யாத்ருசீம் திசஸி யா விநதஸ்ய தூராத்
ஆரக்வதஸ்பக ஸம்பதம் இந்து மௌளே–737–

தங்கமயமான பாதுகையே! உன்னுடைய எல்லையற்ற ஒளி மூலமாக ஸ்ரீரங்கநாதனை, அவனது திருவடி நகம் முதல் தலை வரை
தங்கமயமாக மின்னும்படிச் செய்யும் சக்தியைப் பெற்றுள்ளாய்.
சிவன் உன்னைத் தள்ளி நின்று வணங்கும்போது, அவனது தலையில் உள்ள சந்திரன் மீது உன் தங்கத்தின் ஒளி விழுகிறது.
இதனால் அந்தச் சந்த்ரன் கொன்றை மலர்க்கொத்து போன்று காணப்படுகிறான்.

ஸ்ரீ தங்கப் பாதுகையே உனது பொன்னொளி பெருமாளை நகம் முதல் முழுத் திருமேனியையுமே நல்ல பொன்னாக ஆக்க வல்லது –
இதில் ஆச்சர்யம் இல்லை -ஏன் எனில் தூரத்தில் வணங்கும் சந்திர மௌளியான சிவனுடைய தலையில் உள்ள சந்த்ரனையே
பொன்னிறமான கொன்றைப் பூங்கொத்து போலாக்குகிறாயே-

———————————————————————–

சந்த்ராக்ருதி: கதம் அகல்பயதாஸ் ததாநீம்
வைமாநிக ப்ரணயிநீ நயந அம்புஜாநாம்
விக்ராந்தி கால விததேந நிஜேந தாம்நா
பாலாதபம் பலிவிமர்த்தந பாதுகே த்வம்—738–

மஹாபலியை அடக்கிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தங்கமயமான (சந்திரன்) உருவம் கொண்ட நீ,
ஸ்ரீரங்கநாதன் உலகம் அளந்தபோது, உலகம் முழுவதும் உனது ஒளியானது பரவும்படிச் செய்தாய்.
அப்போது தேவலோகப் பெண்களின் முகங்கள் என்னும் தாமரைகள் மலரும்படியான இளம் வெய்யிலை எப்படி உண்டாக்கினாய்?
(சந்த்ர ஒளி தாமரையை மூடி விடும். ஆனால் இங்கு முகத் தாமரைகள், சந்த்ர ஒளி கண்டதும் எப்படி மலந்தன?
அதில் சூரிய ஒளி எப்படிக் கலந்தது? என்கிறார்).

பலியை அடக்கிய ஸ்ரீ பெருமாளின் ஸ்ரீ பாதுகையே அன்று திருப் பாதத்துடன் உலகம் முழுதும் ஏறி உன் காந்தியினால்
தேவ ஸ்திரீகளுக்கு முக மலர்ச்சி தந்தது -எங்கனமோ -நீ பொன் அதாவது சந்த்ராக்ருதி -அதாவது சந்திரனுடைய வடிவு கொண்டவள் –
அது சூர்யனுடைய இளம் வெயிலைத் தந்து அந்த மாதர் முகங்கள் ஆகிற தாமரைகளை மலர்விப்பது எப்படி சாத்யம் –

————————————————————————

லேபே ததாப்ரக்ருதி நூநம் இயம் பவத்யா:
காந்த்யா கவேரதநயா கநகாபகாத்வம்
யாவந் முகுந்த பத ஹேம பதாவநி த்வம்
புண்யம் விபூஷி தவதீ புளிநம் ததீயம்—-739-

ஸ்ரீரங்கநாதனின் தங்கமயமான பாதுகையே! நீ எப்போது காவேரியின் தூய்மையான மணற் குன்றான திருவரங்கத்தை
அலங்கரித்தாயோ அது முதல், காவேரியானது உன்னுடைய தொடர்பு பெற்று,
தங்கமயமான ஆறாக உள்ள தன்மையை அடைந்தது என்பது நிச்சயம்.

ஸ்ரீ பெருமாளின் ஸ்ரீ தங்கப் பாதுகையே ஸ்ரீ பெருமாள் திருக் காவேரிக் கரையில் எழுந்து அருளி நீ அந்தப் புனித மணலை
அலங்கரித்தது என்றைக்கோ அன்று முதல் தான் காவேரிக்குப் பொன்னி அல்லது கநகாபகா என்ற பெயர் ஏற்பட்டது எனபது நிச்சயம் –

கவேரதநயா: கவேரன் என்கின்ற ராஜாவின் குமாரத்தியான காவிரியே!
கநகாபகாத்வம்: தங்க ஆறாக பளபளக்கின்றாய்!

ஹே பாதுகே! உன்னுடைய தங்க காந்தி, கவேரன் என்கின்ற ராஜாவின் மகளான காவிரி ஆற்றின் மேல்
பட்டவுடன் அது தங்க ஆறாக, அதாவது, பொன்னியாக மாறியது.

இங்கு ‘பொன்னிசூழ் திருவரங்கத்தினை’ – நாம் காவிரிக்கு ஒப்பாக எடுத்துக்கொள்வோம்.
நம்மாழ்வாரும், திருவாய்மொழியும் – ‘பாதுகை மற்றும் பாதுகையின் காந்தி’.

பெருமாள் என்றால் பெரும் (பெரிய) ஆள் (புருஷன்). அவனைத் தவிர மற்றவர்களெல்லாம் பெண் தான்.
இந்த பெருமாள் பெரிய பெருமாளானது, பெருமாளான சாக்ஷாத் ஸ்ரீராமபிரானே ஆராதித்த படியினால்,
பெருமாளே இந்த பெருமாளை ஆராதித்த படியினால் பெரிய பெருமாள். நம் எல்லாரையும் கரை சேர்க்க திருவரங்கத்தில்
காவிரிக் கரையில் காத்திருக்கின்ற படியினால், நம்பெருமாள். அப்படியிருந்தாலும் ஸ்ரீநம்மாழ்வாரால் பாடப்பட்ட படியால்தான்,
நம்மாழ்வாரே பாதுகையாய் அமர்ந்தபடியால் தான் இவருக்கு இவ்வளவு பெருமையும்!

———————————————————————-

சித்ரம் ஸரோஜ நிலயா ஸஹிதஸ்ய சௌரே:
வாஸோ சிதாநி சரணாவநி ஸம்விதித்ஸோ:
ஸத்யோ விகாஸம் உபயாந்தி ஸமாதி பாஜாம்
சந்த்ராதபேந தவ மாநஸ பங்கஜாதி—-740-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியவனாகிய ஸ்ரீரங்கநாதன்
வசிப்பதற்கு ஏற்ற இடமாக முனிவர்களின் மனம் என்னும் தாமரைகளை நீ அமைக்க விரும்புகிறாய்.
இதனால் உனது தங்கமயமான ஒளியை, நிலவின் ஒளி போன்று வீசுகிறாய்.
இதனால் அவர்களின் மனம் என்னும் தாமரைகள் உடனேயே மலர்ந்து விடுகின்றன.
என்ன வியப்பு! (இங்கு வியப்பு என்றால் – சந்த்ரனின் ஒளியால் தாமரை மலர்தல் ஆகும்).

ஸ்ரீ பாதுகையே பெருமாள் பிராட்டியுடன் கூட யோகிகளின் மனத்தில் எழுந்து அருளப் போகிறார் –
நீ பெருமாள் வாசத்திற்கு ஏற்றவையாக இருக்க வேண்டும் என்று உன்னுடைய நிலாவினால் -உன் தங்க ஒளியால் –
அவர்கள் மனத் தாமரைகளை மலர்விக்கிறாய்-இது ஓர் ஆச்சர்யம் –

———————————————————–

த்வயி ஏவ பாதம் அதிரோப்ய நவம் ப்ரவாஹம்
நாதே பதாவநி நிசாமயிதும் ப்ரவ்ருத்தே
ஆத்மீய காஞ்சநருசா பவதீ விதத்தே
ஹேமாரவிந்த பரிதாம் இவ ஹேம ஸிந்தும்—-741–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியில் வருகின்ற புது வெள்ளத்தைக் காண்பதற்கு (ஆடி 18)
உன் மீது தனது திருவடிகளை வைத்தபடி ஸ்ரீரங்கநாதன் காவேரியின் கரைக்கு எழுந்தருளுகிறான்.
அப்போது உனது தங்கமயமான ஒளி மூலமாக நீ காவேரியை கடாக்ஷிக்கிறாய்.
இதனால் காவேரி எங்கும் பொற்றாமரைகள் நிரம்பியது போன்று செய்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் உன் மேல் திருவடியை வைத்துக் காவேரி புது வெள்ளத்தை -பதினெட்டாம் பெருக்கை
கடாஷிக்க எழுந்து அருளுகிறார் -அப்போது உன் பொன்னிற ஒளி அந்த பொன்னி யாற்றில் பொற்றாமரைகள்
நிறைந்து நிற்பதான காட்சியை உண்டாக்குகிறது –

——————————————————————–

விஹரதி புளிநேஷு த்வத் ஸகே ரங்கநாதே
கநக ஸரித் இயம் தே பாதுகே ஹேம தாம்நா
வஹதி ஸலில கேளி ஸ்ரஸ்த சோள அவரோத
ஸ்தந கலச ஹரித்ரா பங்க பிங்காம் அவஸ்தாம்—742–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடன் எப்போதும் சேர்த்தே காணப்படும் ஸ்ரீரங்கநாதன்,
காவேரியின் மணல்களில் ஸஞ்சாரம் செய்யும்போது, உனது தங்கமயமான ஒளியில் காவேரி ஜலக்ரீடை செய்கிறாள்.
அப்போது அந்த நிலையைக் காணும்போது – சோழ நாட்டுப் பெண்களுடைய ஸ்தனங்களில் பூசப்பட்ட
மஞ்சள் குழம்பானது கரைந்து, எங்கும் படர்ந்த நிலையைக் காவேரி கொண்டது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன் துணையோடு ஸ்ரீ ரங்க நாதன் திருக் காவேரியின் மணல் திட்டுகளில் சஞ்சரிக்கிறார் –
உன் பொன்னிறம் காவேரி நீரில் கரைந்து ஒரு பிரமையை உண்டாக்கும் -அந்த நிறம் சோழ அரசனின் அந்தப்புரத்து மாதர்
ஜல க்ரீடையின் போது கரைந்த மார்பு மஞ்சள் குழம்போ என்று எண்ண வைக்கும் –

————————————————————

ஸுரபி நிகமகந்தா ஸௌம்ய பத்மா கரஸ்தா
கநக கமலநீவ ப்ரேக்ஷ்யஸே பாதுகே த்வம்
ப்ரமர இவ ஸதா த்வாம் ப்ராப்த நாநா விஹார
சதமகமணி நீல: ஸேவதே சார்ங்க தந்வா—743–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் அழகிய திருக்கைகள் போன்று காணப்படும்
சந்தர புஷ்கரணியில் (தாமரைக்குளத்தில்) உள்ள பொன் தாமரைக் கொடி போன்று நீ உள்ளாய்.
உன் மீது எப்போதும் வேதங்களின் வாசனை வீசியபடி உள்ளது.
அனைத்து இடங்களிலும் ஸஞ்சாரம் செய்கின்ற ஸ்ரீரங்கநாதன், இந்த்ர நீலம் போன்று கறுத்த திருமேனி உடையவனாக,
ஒரு வண்டு போன்று, தாமரையாக உள்ள உன்னை அடைகிறான்.

ஸ்ரீ பாதுகையே நீ வேத மணம் கமழும் தாமரைக் கொடி அல்லவோ –
பொன் தாமரைக் கொடி-மஹா லஷ்மியின் திருக் கரத்தில் உள்ளது போலே
சந்திர புஷ்கரணியில் அலர்ந்த பூவுடைய கொடி என்றும் சொல்லலாம் –
பெருமாள் பலவித சஞ்சாரங்கள் செய்து உன்னையே சுற்றுகிறார் -அவரும் இந்திர நீலம் போல் கறுத்தவர் –
கரு வண்டு தாமரையைச் சுற்றிச் சுற்றி வருமே –

————————————————————————

கநகருசிர வர்ணாம் பாதுகே ஸஹ்ய ஸிந்து:
ஸ்ரியம் இவ மஹநீயாம் ஸிந்து ராஜஸ்ய பத்நீ
ஸ்வயம் இஹ ஸவிதஸ்தா ஸௌம்ய ஜாமாத்ரு யுக்தாம்
உபசிரதி ரஸேந த்வாம் அபத்யாபிமாநாத்—-744-

ஸ்ரீரங்கநாதானின் பாதுகையே! தங்கம் போன்று அழகான தன்மைகள் கொண்டு,
ஸ்ரீரங்கநாதன் என்னும் மாப்பிள்ளையுடன் கூடியவளாக நீ உள்ளாய்.
இப்படிப்பட்ட உன்னை, ஸ்ரீரங்கநாச்சியார் போன்றே, தன்னுடைய பெண்ணாகவே காவேரி எண்ணுகிறாள்.
ஸமுத்ர ராஜனின் பத்னியாகிய காவேரி, ஸ்ரீரங்கத்தில் இருந்தபடி உன்னைத் தனது பெண்ணாகக் கருதி உபசரிக்கிறாள்.

ஸ்ரீ பாதுகையே கடல் அரசன் மனைவி காவேரி எனபது மரபு -இந்த ஸ்ரீரங்கத்தில் தன் பெண்ணும் அவளுடைய
தங்க நிறமுடைய அழகிய மணவாளனும் தன்னருகில் வந்த பொழுது உன்னைத் தன் பெண் போலக் கருதி
மிக்க ஆதரத்தோடு உபசரிக்கிறாள் போலும் -நீயும் அவள் பெண் லஷ்மி போல் இருக்கிறாயே -அதனால் –

————————————————————————————————-

அநுகலம் உபஜீவ்யா த்ருச்யஸே நிர்ஜராணாம்
த்ரிபுர மதந மௌளௌ சேகரத்வம் ததாஸி
ப்ரதிபதம் அதிகம்ய ப்ராப்த ஸ்ருங்காஸி சௌரே:
தத்பி சரணரக்ஷே பூர்ண சந்த்ராக்ருதிஸ் த்வம்–745–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஒவ்வொரு நொடியும், தேவர்களுக்கு ஆகாரமாக உட்கொள்ளத் தக்கவளாக நீ காணப்படுகிறாய்.
சிவனின் தலையில் பூர்ணமான அலங்காரமாக உள்ள தன்மையை அடைகிறாய்.
ஸ்ரீரங்கநாதனின் ஒவ்வொரு அடிவைப்பையும் நீ அடைந்து, சீரிய முனைகளைப் பெற்றுள்ளாய்.
இப்படி உள்ள போதிலும் நீ பூர்ண சந்த்ரனாக, தங்க மயமாக உள்ளாய்.

சந்த்ரனின் கலையில் அமிர்தம் உள்ளதால் அதனைத் தேவர்கள் பருகிறார்கள்; இதனால் சந்த்ரன் பூர்ணமாக இருக்க முடியாது.
சிவனின் தலையில் உள்ள சந்த்ரன் பூர்ணசந்த்ரன் அல்ல. ஒவ்வொரு நொடியும் சந்த்ரன் தேய்வதால், பூர்ணமாக இருக்க முடியாது.
ஆனால் பாதுகைகள் சந்த்ரன் போன்றே உள்ளபோதும், பூர்ணமாக உள்ளாள் என்கிறார்.

ஸ்ரீ பாதுகையே உனக்கும் சந்த்ரனுக்கும் உள்ள பொருத்தம் என்னே –
நீ ஒவ்வொரு ஷணமும் ரஷணத்திற்காக தேவர்களால் ஆஸ்ரயிக்கப் படுகிறாய் –
சிவன் தன் தலையில் பூஷணம் போல் ஏற்றுக் கொள்கிறான் –
பகவான் வைக்கும் ஒவ்வொரு திருவடி வைப்பினாலும் மேன்மை பெறுகிறாய் –
சந்த்ரனோ ஒவ்வொரு கலையாகத் தேவர்களுக்கு உணவாகிறான் .
அவன் சிவன் தலைக்கு பூஷணம் -பிரதமை திதியில் முனைப் பாகம் தோன்றக் காண்கிறான்
ஆயினும் நீ முழுச் சந்திரன் உருவாக அன்றோ இருக்கிறாய் -நீ தங்க மயமாய் இருக்கிறாய் –
பூர்ண சந்தரன் -முழுத் தங்கம் என்ற பொருளும் உண்டே –

———————————————————————————————

கநகமபி த்ருணாம் யே மந்வதே வீத ராகா:
த்ருணம் அபி கநகம் தே ஜாநதே த்வத் ப்ரகாசை:
மதுரிபு பதரக்ஷே யத் த்வத் அர்த்தோபநீதாந்
பரிணமயஸி ஹைமாந் தேவி தூர்வாங்குராதீந்—-746–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகை தேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே!
ஒரு சிலர், ஸ்ரீரங்கநாதன் மீது கொண்ட ஆசை காரணமாக, மற்ற ஆசைகளைத் துறந்து,
தங்கத்தைக் கூட அற்பமான புல்லாக எண்ணுவார்கள்.
ஆனால் அவர்கள் புல்லைக்கூட தங்கமாக எண்ணும்படிச் செய்கிறாய். எப்படி?
அவர்களால் உனக்குச் சமர்ப்பணம் செய்யப்படும் அருகம்புல் போன்றவற்றை,
உனது ஒளியால் தங்கமயமாக மாற்றி விடுகிறாய் அல்லவோ?

ஸ்ரீ பெருமாள் உடைய ஸ்ரீ பாதுகையே எந்த பற்று அற்றவர்கள் வேறு எதிலும் பற்று இல்லாதவர் –
பொன்னைக் கூடப் புல்லென மதிப்பரோ
அவர்கள் உன் ஒளிகளால் நீ அளித்த அறிவினால் புல்லையும் பொன்னாகக் கருதுவர் போலும் –
உன் பொன்னொளி உனக்கு அர்ச்சனையில் சமர்ப்பிக்கப் படும் அறுகம் புல்லைத் தங்கமாக வன்றோ ஒளிரச் செய்கிறது –

—————————————————————————————

விஸூத்திம் அதிகச்சதி ஜ்வலந ஸங்கமாத் காஞ்சநம்
விதந்தி ச ஜகந்தி தத் ந கலு தத் விபர்யஸ்யதி
கதம் கநக பாதுகே கமல லோசநே ஸாக்ஷிணி
த்வயைவ பரி ஸூத்ததா ஹுதபுஜ: அபி ஜாகட்யதே—747–

தங்கமயமான பாதுகையே! தங்கம் என்பது அக்னியில் இடப்படும்போது மிகுந்த தூய்மையை அடைகிறது.
இதனை உலகில் உள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள். இந்த விதி மாறுபடாமல் உள்ளது.
ஆனால் அழகான கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதன் பார்த்துக் கொண்டு நிற்கையில்,
ஆராதனத்தின் முடிவில், உன்னை அக்னியின் தலையில் வைக்கும்போது, அந்த அக்னி தூய்மைப் பெறுவது எப்படி?
(அக்னியால் தங்கம் தூய்மை அடையாமல், தங்கமயமான பாதுகையால் அக்னி தூய்மை அடைவதைக் கண்டு வியக்கிறார்).

ஸ்ரீ தங்கப் பாதுகையே -பொன் புடமிடப் பட்டுத் தூய்மை எய்துவது அக்னி மூலம் -இதை எல்லா உலகும் அறிந்து உள்ளது –
இது மாறாததன்றோ-ஆயினும் கூட பெருமாள் சாஷி போலே பார்த்துக் கொண்டு இருக்கும் போதே பொற் பாதுகையான உன்னால்
அக்னி தேவன் தன் தலை மேல் உன்னைக் கொள்வதன் மூலம் –பரிசுத்தி எய்துகிறானே அது எங்கனம் கூடும் –

——————————————————————————–

தார ஆஸங்க ப்ரதித விபவாம் சாருஜாம் பூநதாபாம்
த்வாம் ஆரூட: த்ரிதச மஹிதம் பாதுகே ரங்கநாத:
ஸஞ்சாரிண்யாம் ஸுரசிகரிண: தஸ்துஷா மேகலாயாம்
தத்தே மத்தத் விரத பதிநா ஸாம்ய கக்ஷ்யாம் ஸமீக்ஷ்யாம்—748–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முத்துக்களின் தொடர்பால் ஏற்பட்ட மிகுந்த பெருமை, அழகான தங்கமயமான
ப்ரகாசம் போன்ற தன்மைகள் கொண்ட நீ, தேவர்களால் கொண்டாடப்பட்டபடி உள்ளாய்.
இப்படிப்பட்ட உன் மீது நின்றபடி ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும் போது,
தங்க மயமான மேரு மலையின் தாழ்வாரையில் நிற்கின்ற மதம் பிடித்த யானையின் உயர்ந்த தன்மையை அவன் அடைகிறான்
(இங்கு பாதுகை = மேருமலை, ஸ்ரீரங்கநாதன் = மேருமலையில் நிற்கும் யானை).

ஸ்ரீ பாதுகையே முத்துக்களோடு இணைந்த நீ பொன்னொளி வீச தேவர்கள் எல்லாம் புகழ விளங்குகிறாய் –
உன் மீது ஏறி நிற்கையில் பெருமாள் சஞ்சரிக்கையில் ஏதோ சஞ்சரிக்கின்ற மேரு மலைத் தாழ் வரையில் நஷத்ரங்கள் மின்ன
ஒரு மத்த கஜம் பைய ஊர்வது போல் அன்றோ தோற்றம் ஏற்படுகிறது -தாரா நஷத்ரம் –தார -முத்து –

————————————————————————————————-

கநக ருசிரா காவ்ய அக்யாதா சநைஸ் சரண உசிதா
ஸ்ரித குரு புத பாஸ்வத் ரூபா த்விஜாதிப ஸேவிதா
விஹித விபவா நித்யம் விஷ்ணோ: பதே மணிபாதுகே
த்வம் அஸி மஹதீ விஸ்வேஷாம் ந: ஸூபா க்ரஹமண்டலீ—-749–

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே!
தங்கமயமான காரணத்தால் சிவந்தும் (செவ்வாய் = அங்காரகன் போன்று),
இராமாயணம் போன்ற காவியங்களால் (சுக்கிரன்) கூறப்பட்டும்,
மெதுவான ஸஞ்சாரத்திற்கு (சனி) ஏற்றபடியும்,
ஆசார்யன் மற்றும் வித்வான்களால் (குரு, புதன்) அடையப்பட்டபடியும்,
பளபளப்பான திருமேனி கொண்டும் (சூரியன்),
அந்தணர்களால் போற்றப்பட்டும் (சந்த்ரன்),
ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் (ஆகாசம்) நீ எப்போதும் மேன்மையை ஏற்படுத்தியபடி உள்ளாய்.
இப்படியாக உள்ள நீ எங்களுக்கு எப்போதும் நன்மை அளிக்கவல்ல நவக்ரஹங்களின் கூட்டமாகவே உள்ளாய்
(இதனால் பாதுகையே நவக்ரஹம் என்பதும், அந்தக் கூட்டம் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் எப்போதும் உள்ளன என்றும் கருத்து).

ஸ்ரீ மணி பாதுகையே அழகிய பொன்னிறம் -ஸ்ரீ ராமாயாணாதி காவிங்களில் புகழப் பெற்று உள்ளாய்-
மெதுவாக சஞ்சரிக்கிறாய் -ஆசார்யர்கள் வித்வான்கள் ஆஸ்ரயிக்கின்றனர்-
உன் ஒளி சூர்யனை நிகர்க்கும் -அந்தணப் பெரியோர் ஆராதிகின்றனர் -எப்போதும் பகவான் திருவடியில் நின்று விளங்குகிறாய் –
பொன் போன்ற சிவந்த அங்காரகன் ஆகிற செவ்வாய் -காவ்யன் எனப்படும் சுக்ரன் -சனைஸ்சரன் என்கிற சனி -குரு மற்றும் புதன்
சூர்யன் சந்தரன் இவர்கள் எல்லாம் சஞ்சரிப்பது விஷ்ணு பதம் என்கிற ஆகாச மண்டலத்தில் -இவர்கள் சிலர் சில பொழுது அஸூபராய் இருக்க நேரும்
நீ ஒரு ஸூபமான கிரஹங்களின் தொகுப்பாக விளங்குகிறாய் -நீ எப்போதுமே ஸூபமே தான் விளைவிப்பாய் –

ஹே! பாதுகே! உன்னிடத்தில் மஹா காவ்யங்களான இராமயணம், பாரதம் முதலான காவ்யங்கள் உன்னைப் போற்றுகின்றது!.
பெருமாள் மகிழ்வோடு சஞ்சரிப்பதற்கு நீ உதவியாய் உள்ளாய்! சூரியனைக்கு மேல் தேஜஸ்ஸோடு யிருக்கின்றாய்!
உண்மையான ஆச்சார்யர்கள், வித்வான்கள் பலரும் உன்னை ஸ்தோத்திரம் பண்ணுகின்றார்கள்!
உன்னாலே பெருமாளுடைய திருவடிக்கு விசேஷ ஏற்றம் உண்டாகின்றது!. நீ எல்லாவித உபத்ரவங்களையும்,
நவக்ரஹங்களினால் ஏற்படும் தோஷங்களையும், போக்கி எல்லா சௌக்யங்களையும் அருளுகின்றாய்!

—————————————————————————————————

ப்ரஜ்வலித பஞ்ச ஹேதி: ஹிரண்மயீம் த்வாம் ஹிரண்ய விலயார்ஹ:
ஆவஹது ஜாத வேதா: ஸ்ரியம் இவ ந: பாதுகே நித்யம்—750–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களை ஏற்தியபடி,
ஹிரண்யன் போன்றவர்களை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
இப்படிப்பட்ட அவன், தங்கமயமான உன்னை, அவனுக்குச் செய்யும் கைங்கர்யச் செல்வமாக உள்ள உன்னை,
எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டும்.

அக்னியிடத்தில் செல்வம் வேண்டவும் -எனபது சாஸ்திரம் -பெருமாள் இடத்தில் ஸ்ரீ பாதுகையை எங்களுக்கு அருள்க என்று
வேண்டுவதே இசைந்த பொருத்தம் -ஸ்ரீ பாதுகையே அக்னி ஐந்து ஜ்வாலைகளை யுடையது
பொன்னை உருக்கும் -அந்த அக்னி தங்கமயமான உன்னை செல்வத்தைப் போலே -நீயே பெரும் செல்வம் –
எங்களுக்கு எப்போதும் தந்து அருள வேணும் – ஜாத வேதன் என்பவன் அக்னி மட்டும் அல்ல -பெருமாளும் கூட
அவர் திவ்ய பஞ்ச ஹேதிகளை – திவ்ய பஞ்சாயுதங்களை வைத்து இருப்பவர் –
பொன் பெயரோன் எனப்பட்ட ஹிரண்யனை அழித்தார்
அவர் பொன் மயமான உன்னை-காஞ்சன திருப் பாதுகையை செல்வம் என்று பெரும் ஸ்ரீ என்று எங்களுக்கு
எப்பொழுதுமே தந்து அருள வேணும் –

எப்போதும் அக்னி போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தங்கமயமான பாதுகையே! தங்கமாயிருக்கின்ற உன்னை
எங்களுக்கு எப்போதும் கொடுக்க வேணும்!
சாஸ்திரங்கள் அக்னியை த்யானித்தால் ஸம்பத் உண்டாகும் என்கிறது.
உன்னைத் தியானிக்கும் எங்களுக்கு நல்லதொரு ஆச்சார்யனை அருளுவாயாக!

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-21-பிம்ப பிரதிபிம்ப பத்ததி -ஸ்லோகங்கள் -711-730–

March 18, 2016

கடந்த ஆறு பத்ததிகளில் பாதுகையில் உள்ள இரத்தினங்களைப் பற்றி விரிவாகக் கூறினார்.
இனி அந்த இரத்தினக்கற்களில் காணப்படும் பிரதிபிம்பங்கள் (images) பற்றிக் கூற உள்ளார்.

சௌரே: ஸூந்தாந்த நாரீணாம் விஹார மணி தர்ப்பணம்
ப்ரஸத்தே: இவ ஸம்ஸ்தாநம் பத த்ராணம் உபாஸ்மஹே—-711-

ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளிட்ட ஸ்ரீரங்கநாதனின் பிராட்டிகள் விளையாட உதவுகின்ற இரத்தினக் கண்ணாடி போன்றும்,
தெளிவு என்பதே வடிவம் எடுத்தது போன்றும் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நாம் உபாஸிக்கிறோம்.

பகவானுடைய திவ்ய நாயிகைகள் தாம் வேடிக்கையாக முகம் பார்க்கக் கண்ணாடியாக உதவி செய்வதும்
அருள் ஆகிற தெளிவிற்கே ஒரு உருவம் வாய்த்தது போலத் தோன்றுவதான ஸ்ரீ பாதுகையை உபாசிக்கிறோம் –

————————————————————————–

கமலாபதி பாதுகே கதாசித்
விஹசேந்த்ரஸ் த்வயி பிம்பிதோ விபாதி
ஸவிலாஸ கதே அபி ரங்க பர்த்து:
நிஜம் ஆத்மாநம் இவ உபதாது காம:—712–

ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஒரு ஸமயம் கருடன் உனது இரத்தினக்கற்களின் முன்பாக நின்று,
அதில் பிரதிபிம்பமாகத் தான் தெரிய வேண்டும் என்று எண்ணினான். இதன் காரணம் –
ஸ்ரீரங்கநாதனின் ஒய்யார நடையில் கூட தனது சரீரம் அவனுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எண்ணினான் போலும்.

தரையில் ஸஞ்சாரம் செய்யும்போது பாதுகைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, கருடனுக்குக் கிடையாது.
அப்படிப்பட்ட காலங்களில் தானும் பயன்பட வேண்டும் என்ற எண்ணிய கருடன், தனது உருவம் பாதுகையில் உள்ள
இரத்தினங்களில் பிரதிபிம்பமாக விழவேண்டும் என்று எண்ணினான்.

ஸ்ரீ பாதுகையே பெரிய திருவடி எப்பொழுதோ தான் பெருமாள் தம் மேல் ஏறி சஞ்சரிக்கையில் உன்னில் தன் நிழல் -பிரதிபிம்பம் விழக் காண்பான் –
அதனால் போலும் பெருமாளின் உல்லாச நடைகளின் போதும் உன்னருகில் நின்றும் உன்னில் பிம்பம் நிழலாக விழுந்து
அங்கனம் தன்னை வாகனமாக சமர்ப்பிக்க கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறான் போலும் –

கமலாபதி – மஹாலக்ஷ்மிக்கு பர்த்தா! – விஹகேந்திரன்: கருடன் – பிம்பதி: பிரதிபலிக்கின்றார்.

பாதுகையினைப் பெருமாள் தம் திருவடியில் சாற்றிக்கொண்டு சஞ்சாரத்திற்கு எழுந்தருளுகின்றார்.
கருடனுக்கு உடனே ஏக்கம் தன் பேரில் பெருமாள் எழுந்தருளவில்லையே என்று! உடனே அது
என்ன செய்கின்றது? தன் மீது ஏறி சஞ்சரிக்கவேண்டும் என்ற ஆசையினால் பாதுகையினுள்ளே
உட்புகுந்தது போலிருக்கின்றதாம்! இதனால் பாதுகையில் கருடனும் பிரதிபலிக்கின்றது என்கிறார் ஸ்வாமி தேசிகர்!

——————————————————————————–

மணி பங்க்திஷு தே திசாம் அதீசா:
ப்ரதி பிம்பாதி நிஜாநி வீக்ஷமாணா:
அபியந்தி முகுந்த பாதுகே த்வாம்
அதிகாராந்தர ஸ்ருஷ்டி சங்கயேவ—713–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களில் அஷ்டதிக் பாலகர்கள் தங்கள் பிரதிபிம்பத்தைக் காண்கின்றனர்.
இதனைக் கண்டவுடன் அவர்கள் தங்கள் மனதில், ”ஸ்ரீரங்கநாதன் நம்மைப் போன்று மற்றோர்
அஷ்டதிக் பாலகர்களைப் படைத்துவிட்டானோ”, என்று சந்தேகம் கொண்டபடி உன்னிடம் வருகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய பலவித ரத்ன வரிசைகளில் தங்கள் பிம்பம் விழுவதைக் காணும் இந்த்ரன் முதலான திக்பாலர்கள்
இப்படிப் புதிய திக் பாலர்கள் தாம் நியமிக்கப்பட்டு விட்டார்களோ என்று அஞ்சி உன்னை ஆஸ்ரயிக்கின்றனர் –

—————————————————————————

மணி மௌளி சதேந பிம்பதேந
ப்ரணதாநாம் பரித: ஸுர அஸுராணாம்
முரபித் மணி பாதுகே மஹிம்நா
யுகபத் தேஷு ஸமர்ப்பிதேவ பாஸி—714–

முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே!
உன்னை வணங்கும் தேவர்கள் நான்கு புறங்களிலும் நின்று, தங்கள் க்ரீடங்களைத் தாழ்த்தி வணங்குகின்றனர்.
அப்போது அவர்களின் க்ரீடங்கள் உன்னில் உள்ள இரத்தினங்களில் பிரதிபலிக்கின்றன. இதனைக் காணும்போது,
உன்னுடைய எல்லையற்ற சக்தி காரணமாக, ஒரே நேரத்தில் அந்த க்ரீடங்கள் அனைத்திலும் வைக்கப்பட்டவள் போன்று விளங்குகிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே தேவர் அ சூரர் எல்லோருமாகச் சுற்றி நாற்புறங்களிலும் நின்று வணங்கும் போது அத்தனை பேர் முடிகள்
அவர்கள் க்ரீடங்களில் ஸ்ரீ பாதுகையின் பிரதிபிம்பம் விழுந்து ஒரே சமயத்தில் அவ்வளவு க்ரீடங்களின் மேலும்
ஸ்ரீ பாதுகை சேவை சாதிப்பது ஸ்ரீ பாதுகையின் மகிமையால் போலும் என்று நினைக்க வைக்கிறது –

——————————————————————————

உபநீதம் உபாயநம் ஸுரேந்த்ரை:
ப்ரதி பிம்பச்சலத: த்வயி ப்ரவிஷ்டம்
ஸ்வயம் ஏவ கில ப்ரஸாத பூம்நா
ப்ரதி க்ருஹ்ணாஸி முகுந்த பாதுகே த்வம்—-715-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்த்ரன் உள்ளிட்ட தேவர்கள் மூலமாக உனக்குக் கொண்டு வரப்பட்ட உபஹாரங்கள்
(பழம் முதலானவை), உன்னுடைய இரத்தினக்கற்களில் பிரதிபலிக்கின்றன.
இதனைக் காணும்போது, உன்னுடைய கருணை காரணமாக அவர்களிடமிருந்து அந்தப் பொருள்களை
நீ நேரடியாகவே பெற்றுக் கொள்வது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே தேவர் தலைவர்கள் உபஹாரங்கள் உடன் வந்து பணிந்து நிற்கவும் அந்த உபஹாரங்கள் உன் மீது பிரதிபிம்பமாக விழுவதாகிற
வியாஜத்தினால் நீயே உன் கிருபையின் பெருமையால் அவற்றை ஏற்றுக் கொள்கிறாய் என்று ஒரு கல்பனைச் சித்திரம் தோற்றும் –

—————————————————————

ரங்கேஸ் வரஸ்ய நவ பல்லவ லோபநீயௌ
பாதௌ கதம் நு கடிநா ஸ்வயம் உத்வஹேயம்
இதி ஆகலய்ய நியதம் மணி பாதுகே த்வம்
பத்மாஸ்தரம் வஹஸி தத் ப்ரதி பிம்ப லக்ஷாத்—716–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ”புதிய தளிர் போன்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மென்மையாக உள்ளன.
இவற்றை எனது கடினமான பரப்பு மீது (இரத்தினக்கற்கள் உள்ளதால் பாதுகையின் மேல்பரப்பு சற்றே கடினமாக உள்ளது)
எப்படி வைத்துக் கொள்வேன்?”, என்று நீ யோசிக்கிறாய். இதனால்தான் அந்தந்த திருவடிகளின் பிரதிபிம்பம்
என்ற தாமரை மலர் போன்றுள்ள விரிப்பை, உன் மீது விரித்துக் கொண்டு , அதன் மீது ஸ்ரீரங்கநாதனை வைத்துக்கொள்கிறாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் திருவடித் தாமரைகளை உன் மீது வைக்க இருக்கும் நிலையில் உன் மீது அது பிரதி பிம்பமாக விழுந்து
நீ ஏதோ உன் மீது ஒரு தாமரை மலரைப் பரப்பி வைத்தால் போல் உள்ளது -ஆம் அது செய்து இருக்கிறாய்
நமது கடினமான ரத்னக் கற்கள் பரப்பின் மீது பெருமாளின் அதி ஸூ குமாரமான திருவடிகளை எப்படி வைக்க இசைய முடியும்
என்ற கவலை ஆதரம் இவற்றினால் என்று ஆராய்ந்து போலும் –

——————————————————————————

பாதார்ப்பணத் ப்ரதம: ஹரி தஸ்ம ரம்யே
மத்யே தவ ப்ரதிபலந் மணி பாத ரக்ஷே
மந்யே நிதர்சயதி ரங்கபதிர் யுகாந்தே
ந்யக்ரோத பத்ர சயிதம் நிஜமேவ ரூபம்—717–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸஞ்சாரம் செய்வதற்காக உன் மீது திருவடியை வைத்து ஸ்ரீரங்கநாதன்
எழுவதற்கு முன்பாக, உன்னில் இருக்கும் பச்சை நிற இரத்தினங்களில் பிரதிபலிக்கிறான்.
இதனைக் காணும்போது, ப்ரளய காலத்தில் ஆலிலை மீது சயனித்துள்ள தனது உருவம் இப்படித்தான்
இருக்கும் என்று எங்களுக்கு அவன் காண்பிப்பதாக நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் திருவடிகளை உன் மீது வைப்பதற்காகச் சற்று குனிகிற சமயம் உனது மரகதக் கற்கள்
ஆகிற கண்ணாடி அதன் நடுவில் அவர் பிரதிபிம்பம் முழுவதுமாக விழுகிறது -அப்போது நான் கற்பனை செய்வது இங்கன் ஆகும்
பெருமாள் ஒரு காலத்தில் ஆலிலையில் சயனித்து இருந்த காட்சியை அவருக்கே நீ இப்போது எடுத்துக் காட்டுகிறாய் –

———————————————————————————————————

யாத்ரா அவஸாநம் அதிகச்சதி ரங்கநாதே
விஸ்ராணய ஸி அநுபதம் மணி பாதுகே த்வம்
ப்ராய: ப்ரயாண ஸமயே ப்ரதி பிம்பிதாநாம்
தீர்த்தாவகாஹம் அபரம் த்ரிதசேஸ்வராணாம்—718–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய உத்ஸவங்களின் இறுதி நாளில், தேவர்கள் தங்கள் உலகிற்கு
மீண்டும் புறப்படத் தொடங்குகின்றனர். அப்படி அவர்கள் புறப்படும்போது, அவர்களின் பிரதிபிம்பம் உன்னில் தெரிகிறது.
இதனைக் காணும்போது, அவர்கள் மற்றோரு முறை நீராடிச் செல்வதை நீ உண்டாக்கிக் கொடுப்பதாகத் தோன்றுகிறது.

ஸ்ரீ மணி பாதுகையே ஒவ்வோர் உத்சவத்தின் நிறைவிலும் உன்னிடம் விடை பெற்றுப் போகும் சமயத்தில் தேவர்கள் தலைவர்கள் பணிய
அவர்கள் பிம்பம் உன்னில் பிரதிபலிக்கிறது -பாவநமான உன்னில் புகுந்து புறப்பட இது நடப்பது போலும்
இது ஒரு அவப்ருத ஸ்நானம் போன்ற நீராட்டம் -முன்பு ஸ்நானம் செய்திருந்தாலும் உத்சவ பூர்த்தியில் இது உசிதம்-
நீ இப்படிச் செய்விக்கிறாய் போலும் –

————————————————————————————–

உச்சாவசேஷு தவ ரத்ந கணேஷு மாத:
வேதா: ப்ரயாண ஸமயே ப்ரதி பிம்பித அங்க:
ஆசங்கதே மது பிதோ மணி பாதுகே த்வாம்
ஆகாமி கல்ப்ப கமலாஸந பங்க்தி கர்ப்பாம்—719-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! நான்முகனின் சரீரமானது, அவன் தனது உலகிற்குப் புறப்படும் நேரத்தில்,
எல்லையற்ற இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட உன்னில், பலவாகப் பிரதிபலிக்கிறது. இதனைக் கண்ட நான்முகன்,
இனி வரப்போகும் கல்பங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நான்முகன்களின் வரிசையை நீ உனக்குள் கொண்டுள்ளாயோ
என்று எண்ணுகிறான் (ஒவ்வொரு கல்பத்திலும் ஒரு நான்முகன் ஏற்படுவான்).

ஸ்ரீ மணி பாதுகை தாயே உன் மீதுள்ள பல விதமான மணி கணங்களில் தன் பிரதிபிம்பத்தைக் கண்ட பிரம்மா
அவர்கள் எதிர் வரும் கல்பங்களுக்கான பிரம்மாக்கள் தாமோ என்று ஐயம் உறுகிறான் –

——————————————————————–

ஆலோல ரஸ்மி நியதாம் மணி பாதுகே த்வாம்
ஆருஹ்ய ஸஞ்சரதி ரங்க பதௌ ஸலீலம்
அந்த: புரேஷு யுகபத் ஸுத்ருசோ பஜந்தே
டோளாதி ரோஹண ரஸம் த்வயி பிம்பி தாங்க்ய—720–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி என்னும் கயிறுகளால்
கட்டப்பட்ட ஊஞ்சல் போன்ற உன் மீது, ஸ்ரீரங்கநாதன் அந்தப்புரங்களில் ஸஞ்சரிக்கிறான்.
அப்போது உன்னிடம் பிரதிபலிக்கப்பட்ட பிராட்டிமார்களின் உருவங்களைக் காணும்போது,
ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரும் ஊஞ்சல் ஆடும் இன்பத்தை அடைவதாகத் தோன்றுகிறது.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் அந்தப்புரம் போகவும் உன் கிரணங்கள் ஊஞ்சலை யாட்ட உதவும் கயிறுகளாகவும்
நீயே உன் பலவித மணிகளே ஊஞ்சலாகவும் இருக்கும் -அந்தப்புரத்து மாதர் அருகில் வரவும் தம் பிரதிபிம்பத்தைக் காணவும்
தாம் ஏதோ ஊஞ்சல் ஆடுவதாகவும் திருப்தி பெறக் கூடும் -ஊஞ்சலை யாட்டுபவன் ரங்க ரசிகன் தான் –

————————————————————————-

காலேஷு ராகவ பதாவநி பக்திநம்ர:
கார்யாணி தேவி பரத: விநிவேதயம்ஸ்தே
த்வத் ரத்ந பிம்பி ததயா அபி முஹு: ஸ்வகீயாம்
ராஜாஸந ஸ்த்திதிம் அவேக்ஷ்ய ப்ருசம் லலஜ்ஜே—721-

இராமனின் பாதுகையே! உனக்கு அந்தந்த காலங்களில் பக்தியினால் வணங்கியபடி,
செய்ய வேண்டியவற்றைச் செய்தபடி பரதன் உள்ளான். உன்னிடம் அடுத்த வேலை என்ன என்று
விண்ணப்பம் செய்வதற்காக உன் முன்பு பரதன் நிற்கும் போது, உனது இரத்தினக்கற்களில்
தனது உருவத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறான். அதில் தான் ஸிம்ஹாஸனத்தில் உள்ளதை பிரதிபிம்பமாகக் காண்கிறான்.
இதனைக் கண்டு மிகவும் வெட்கம் அடைந்தான்.

ஸ்ரீ மணி பாதுகையே நீ சிம்ஹாசனத்தில் வீற்று இருக்க ஸ்ரீ பரதாழ்வான் அவ்வப்போது பக்தியோடு
வினயத்தோடு வணங்கி உன்னிடம் விண்ணப்பிக்கிறான் –
அப்போது அவன் பிரதிபிம்பம் உன்னில் விழவும் தானே சிம்ஹாசனத்தில் அமர்ந்து இருப்பதான எண்ணம் தோன்றவும்
தான் மிகவும் வெறுத்து இருந்த இந்த நிலை ஏற்பட்டுப் போயிற்றே என்று வெட்கம் உறுகிறான் –

———————————————————————————————————

ப்ரத்யாகதே விஜயிநி ப்ரதமே ரகூணாம்
விந்யஸ்யதி த்வயி பதம் மணி பாத ரக்ஷே
ரத்நௌக பிம்பித நிசாசர வாநராம் த்வாம்
பூர்வக்ஷணஸ்த்த்தம் இவ புஷ்கரம் அந்வபஸ்யந்—-722–

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! அரக்கர்களை வென்று திரும்பிய ரகுகுலத்தின் சிகரமான இராமன்,
உன் மீது தனது திருவடிகளை மீண்டும் வைத்தான்.
அப்போது அங்கு சுற்றி நின்ற ராக்ஷஸர்கள், வானரர்கள் என்ற பலரும் உனது இரத்தினக்கற்களில் பிரதிபலித்தனர்.
இதனைக் காணும்போது, இராமன் உன்னைச் சாற்றிக் கொள்வதற்கு முன்பு இருந்த புஷ்பக விமானம் போன்று காணப்பட்டாய்
(இலங்கையில் இருந்து இராமனுடன் புஷ்பக விமானத்தில் ராக்ஷஸர்கள், வானரர்கள் போன்ற பலரும் வந்தனர். இதனைக் கூறுகிறார்).

ஸ்ரீ மணி பாதுகையே தன் வனவாசம் முடிந்து வெற்றியுடன் திரும்பும் ஸ்ரீ ரகு ஸ்ரேஷ்டன் உன் மேல் திருவடிகளை வைக்கிறான்
உனது மணிகளில் சுற்றி நின்ற சகல ராஷசர்களும் வானரர்களும் பிம்பமாக விழுகிறார்கள்
ஜனங்கள் புஷ்பக விமானத்தில் இருந்த காட்சியை உன்னில் காணலாயிற்று -நீயே புஷ்பக விமானம் போலே –

—————————————————————-

வையாகுலீம் சமயிதும் ஜகதோ வஹந்த்யா
ரக்ஷாதுராம் ரகுதுரந்தர பாத ரக்ஷே
ப்ராஜ்யம் யச: ப்ரசுர சாமர பிம்பலக்ஷாத்
ப்ராயஸ் த்வயா கபளிதம் ப்ரதி பூபதீ நாம்—723–

ரகு குலத்தினரால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் கானகம் சென்று பின்னர்
இந்த உலகைக் காப்பாற்றும் திறன் உள்ளவர்கள் இல்லாத காரணத்தினால் பெருங்குழப்பம் உண்டானது.
அப்போது உலகைத் தாங்கும் பொறுப்பை நீ ஏற்றாய். அப்போது உன்னில் உள்ள இரத்தினக்கற்களில்,
உனக்கு வீசப்பட்ட சாமரங்களின் பிரதிபிம்பங்கள், பலவாகக் காட்சி அளித்தன.
இதனைக் காணும்போது பல எதிரி அரசர்களின் புகழை நீ விழுங்கியது போன்று இருந்தது.

ஸ்ரீ ராகவ பாத ரஷையே -உலகுக்கு அரக்கர்கள் இடம் இருந்து ஏற்பட்ட துக்கத்தைப் போக்க சுமையை நீ ஏற்றுக் கொண்டாய்-
உனக்கு சாமரங்கள் வீசுகின்றனர் -அதன் நிழல் உன் மணிகளின் மீது விழவும் நீ ஏதோ வெண்மையான ஒன்றை
எதிரி அரசர்களின் புகழை- கபளீகரம் செய்தால் போல் தோற்றுமாம்-புகழுக்கு நிறம் வெண்மை எனபது கவி மரபு –

——————————————————————————-

ப்ரதிதிசம் உபயாதே தேவி யாத்ரா உத்ஸவார்த்தம்
த்வயி விஹரண காலே பிம்பிதே ஜீவலோகே
வஹஸி மணி கணைஸ் த்வம் பாதுகே ரங்க பர்த்து:
கபளித ஸகலார்த்தம் காஞ்சித் அந்யாம் அவஸ்தாம்—724–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைதேவியே! ஸ்ரீரங்கநாதன் திருவீதிகளில் ஸஞ்சாரம் செல்வதற்காகப் புறப்பட்டவுடன்,
அவனை வணங்க அனைத்து திசைகளில் இருந்தும் பல உயிர்களும் வந்து நிற்கின்றன.
அவற்றின் உருவங்கள், உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக்கற்களில் ப்ரதிபலிக்கின்றன. இதனைக் காணும்போது,
ஸ்ரீரங்கநாதன் அனைத்தையும் விழுங்கிய நிலையில் உள்ள தன்மையை நீ காண்பிக்கிறாய் (ப்ரளயகால நிலை) போலும்.

ஸ்ரீ பாதுகா தேவியே பெருமாள் புறப்பாடாகி அங்கங்கே பல திசைகளில் நின்றும் குழுமி இருந்த பக்தர்கள் உனிடத்தில் பிரதிபலிப்புப் பெறுவது
நீ என்னவோ அகில பிரபஞ்சகத்தையும் உண்டு வயிற்றில் வைத்துக் காட்டுவது போல்
பெருமாள் பிரளய காலத்தில் உண்டு ஆலிலை மீது கிடந்ததை நினை ஊட்டும் –

————————————————————————————

பகவதி கருடஸ் தே வாஹநஸ்தா: ஸுரேந்த்ர:
த்வயி விநிஹிதபதே பூமிமேவ ஆஸ்ரயந்தி
தத் அபி சரணரக்ஷே ரத்ந ஜாலே த்வதீயே
ப்ரதி பலித நிஜங்கா: துல்ய வாஹா பவந்தி—-725-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் கருட வாகனத்தில் வீற்றுள்ளபோது,
மற்ற தேவர்கள் தங்கள் தங்கள் வாகனங்களில் அமர்ந்தபடி உள்ளனர். ஸ்ரீரங்கநாதன் உன் மீது திருவடிகள் வைத்து நின்றவுடன்,
அவர்கள் பூமியை அடைந்துவிடுகின்றனர் (வாகனங்களில் இருந்து இறங்கி விடுகின்றனர்).
ஆனால் உனது இரத்தினக்கற்களில் அவர்களின் ப்ரதிபிம்பம் காணப்படுவதால், ஒரே போன்று வாகனம் உள்ளதாகத் தோன்றுகிறது.

ஸ்ரீ பாதுகையே பகவான் பெரிய திருவடி மீது எழுந்து அருளி இருந்து சஞ்சரிக்கும் வேளையில்
மற்ற தேவர்கள் தலைவர்கள் தத்தம் வாகனங்களில் மீது வீற்று இருப்பர்-
ஆனால் பகவான் இறங்கி உன் மீது நிற்கையில் அவர்கள் பூமியின் மீது நின்றாலும் உன் மீது ஏற்படும் பிரதிபலிப்பு
அவர்களும் பகவானுக்கு சமானமாக ஸ்ரீ பாதுகையில் இருப்பது போல் தோற்றும் –

————————————————————————–

ஸ்வச்ச ஆகாரம் ஸுர யுவதய: ஸ்வ ப்ரதிஸ்சந்த லக்ஷ்யாத்
காஹந்தே த்வாம் ப்ரணதி ஸமயே பாதுகே ஸாபிமாநா:
ஸ்த்ரீ ரத்நாநாம் பரிபவ விதௌ ஸ்ருஷ்டி மாத்ரேண தக்ஷாம்
நீசை: கர்த்தும் நரஸகமுநே: ஊர்வசீம் ஊரு ஜாதாம்—726–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நரன் என்னும் முனிவரின் தோழரான நாராயண முனிவரின் தொடையில் இருந்து
தோன்றியவள் என்ற உற்பத்திக் காரணத்தினால் ஊர்வசி என்பவள், மற்ற பெண்களை அவமானப்படுத்தியபடி நின்றாள்.
அவளது கர்வத்திற்குத் தாழ்மை ஏற்படுத்தும் பொருட்டு தேவலோகப் பெண்கள் உன்னை வணங்கி நின்றனர்.
அப்போது, தெளிந்த உருவம் கொண்ட உனக்குள் தங்களின் பிரதிபிம்பம் உண்டாகிறது என்ற பெருமையுடன் உன்னுள் புகுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே தேவ ஸ்திரீகளில் ஊர்வசி கர்வம் மிக்கவள் -ஸ்ரீ நாராயண முனிவரின் தொடையில் இருந்து உண்டானவள்
என்று சொல்லி மற்ற ஸ்திரீ ரத்னன்களைப் பரிபவப் படுத்துவாள் -அந்த தேவ ஸ்திரீகள் உன்னை வணங்கவும்
உன்னில் பிரதிபலிப்பு ஏற்படவும் வாய்ப்புக் கிடைத்தது -இது உன் ஸ்வ இச்சமான பரப்பினால் –
இப்பொழுது அவர்கள் ஊர்வசியை ஹேளனம் செய்ய முடிகிறது -நீ ஒரு தடவை தொடையில் இருந்து பிறந்தாய்
நாங்கள் பெருமாள் ஸ்ரீ பாதுகையில் புகுந்து புறப்படுகிறோம் -நினைத்த போது எல்லாம் -என்று –

————————————————————————————-

ஸ்வேச்சாகேளி ப்ரிய ஸஹசரீம் ஸ்வச்ச ரந்த அபிராமாம்
ஸ்தாநே ஸ்தாநே நிஹித சரணோ நிர்விசந் ரங்கநாத:
ஸஞ்சாராந்தே ஸஹ கமலயா சேஷசய்யாதிரூடஸ்
த்யக்த்வாபி த்வாம் த்யஜதி ந புந: ஸ்வ ப்ரதிச்சந்த லக்ஷயாத்—727–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுக்கு மிகவும் அன்பான தோழியாகவும், தோஷங்கள் இல்லாத இரத்தினங்களால்
அழகு சேர்க்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய். இப்படிப்பட்ட உன்னைச் சாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கநாதன்,
பல இடங்களில் ஸஞ்சாரம் செய்கின்றான். உன் மீது தனது திருவடிகளை வைத்தவனாக, தனது விருப்பப்படி லீலைகள் செய்கின்றான்.
முடிவில் உன்னை விட்டு, ஸ்ரீரங்கநாச்சியாருடன் தனது ஆதிசேஷன் என்ற படுக்கையில் ஏறிய போதிலும்,
உன்னில் காணப்படும் தனது பிரதிபிம்பம் காரணமாக, உன்னை விட்டுப் பிரியாதவனாகவே ஆகிறான்.

ஸ்ரீ பாதுகையே உன் மீது பல இடங்களிலும் நடக்கிறார் -எல்லா இடங்களிலும் நீ அவருக்கு விட ஒண்ணாத தோழி –
பிரியமானவள் -நிர்மலமான ரத்ன பூஷிதை கூட -சஞ்சார முடிவில் உன்னை விட்டு மஹா லஷ்மியோடு கூட
திரு அநந்த ஆழ்வான் மீது ஏறும் போது மட்டும் என்ன உன்னை விட முடிகிறதா -அவர் தான் உன்னில் பிரதிபிம்பமாக இருக்கிறாரே –

———————————————————————

த்வாம் ஏவ ஏகாம் அதிகதவத: கேளி ஸஞ்சார காலே
பார்ஸ்வே ஸ்த்தித்வா விநிஹித த்ருசோ: பாதுகே அநந்ய லக்ஷ்யம்
த்வத் ரத்நேஷு ப்ரதி பலிதயோ: நித்ய லக்ஷ்ய ப்ரஸாதா
பத்மா பூம்யோ திசதி பவதீ பாதஸேவாம் முராரே:—-728–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தனது உல்லாஸமான ஸஞ்சார காலங்களில் மிகவும் தெளிவாக உள்ள
உன்னை மட்டுமே பற்றியவனாக ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்கிறான்.
அப்படி அவன் ஸஞ்சரம் செய்கையில் அவன் அருகில் அமர்ந்தபடி, உன் மீது மட்டுமே தங்கள் கண்களை வைத்து,
வேறு எதனையும் பாராமல், அவனது உபயநாச்சிமார்கள் வீற்றுள்ளனர்.
அப்போது அவர்களின் பிரதிபிம்பங்கள் உனது இரத்தினக்கற்களில் தெரிகிறது.
இதன் மூலம், நீ ஸ்ரீரங்கநாதனுக்குச் செய்யும் திருவடி கைங்கர்யத்தை அவர்களுக்கும் அளிக்கிறாய் போலும்
(அதாவது, அவர்களும் அந்தப் பாதுகையில் பிரதிபலிப்பதால், அவர்களும்
ஸ்ரீரங்கநாதனுக்குப் பாதுகைகள் போன்றே நின்று கைங்கர்யம் செய்கின்றனர்).

ஸ்ரீ பாதுகையே நீ அருள் மிக்கவள் -தெளிவும் உடையவள் நீ -பிராட்டிகளுக்கு அருளும் திறன் என்னே -பெருமாள் சஞ்சார காலத்தில்
உன்னையே பற்றுகிறார் -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமி தேவி பக்கங்களில் இருக்கிறார்கள் அத்தனையே –
சயன காலத்தில் திருவடிகளைப் பிடித்து விடும் திருப்பாத சேவை தற்போது தங்களுக்குக் கிடைக்காமல் போயிற்றே –
ஸ்ரீ பாதுகையின் பாக்கியம் என்னே என்ற நினைவில் உன்னிலேயே கண்ணாய் இருக்கிற இரு தேவியாரும் பிரதிபிம்மமாக விழுகிறார்கள்
இப்பொழுது அவர்கள் கோரிய ஸ்ரீ பாத சேவை கிடைத்த தாயிற்றே –

——————————————————————————-

ஏகாம் ஏக: கில நிரவிசத் பாதுகே த்வாரகாயாம்
க்ரீடா யோகீ க்ருத பஹுதநு: ஷோடச ஸ்த்ரீ ஸஹஸ்ரே
ஸூத்தே தேவி த்வத் உபநிஹிதே பிம்பித: ரத்ந ஜாலே:
புங்க்தே நித்யம் ஸ கலு பவதீம் பூமிகாம் ஸஹஸ்ரே—729–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! துவாரகையின் பதியான க்ருஷ்ணன், இந்த உலகில் பல லீலைகள் செய்தவனாக,
யோகியாக, பல சரீரங்களை எடுத்தவனாக, பதினாறாயிரம் பெண்களை, ஒருத்தியை ஒருவனாக நின்று அனுபவித்தான்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் இங்கு உன் மீது இழைக்கப்பட்ட பலவிதமான இரத்தினங்களில்,
பல பிரதிபிம்பங்களாக நின்று, தனது பல்லாயிரம் உருவங்கள் மூலம்,
உன்னை அனைத்துக் காலங்களிலும் அனுபவித்து மகிழ்கிறான் போலும்.

ஸ்ரீ பாதுகா தேவியே விளையாட்டில் முனைப்புள்ள ஸ்ரீ கிருஷ்ணன் திருத் துவாரகையில் பதினாறாயிரம் ஸ்திரீகளை மகிழ்வித்தான் –
ஒவ்வொருவரோடும் ஒருருவில் விளையாடி பல சரீரங்கள் எடுத்துக் கொண்டான் -இப்பொழுதும் உன்னில் உள்ள பல பல ரத்னங்களிலும்
பிரதிபலிக்கப்பட்டு பல்லாயிரம் உருவங்கள் பெற்று உன்னை மட்டுமே சதா காலமும் அனுபவிக்கிறான் –

———————————————————————

ஹரி பத நகேஷு பவதீ ப்ரதிபலதி தவ ஏதத் அபி ரத்நேஷு
உசிதா மித: பதாவநி பிம்ப ப்ரதி பிம்பிதா யுவயோ:—730-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களை நீ பிரதிபலிக்கிறாய்.
அவனது திருவடியானது உன்னுடைய இரத்தினங்களில் பிரதிபலிக்கிறது.
இப்படியாக நீங்கள் இருவரும் (திருவடி, பாதுகை) பிம்பமும், பிரதிபிம்பமாக உள்ள நிலையானது வெகு பொருத்தமாகவே உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பகவான் திருவடி திரு நகங்களில் நீ பிரதிபலிப்பதும் அந்தத் திருவடிகளே உன் ரத்னங்களில் பிரதிபலிப்பதும்
ரொம்பப் பொருத்தமாக அமைகின்றன –திருவடி திருப் பாதுகை என்ற நீங்கள் இருவரும் பிம்ப பிரதிபிம்பமாய் அமைந்துள்ளது நன்று –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-20-இந்திர நீல பத்ததி -நீல மணி படலம் -ஸ்லோகங்கள் -681-710-

March 18, 2016

இங்கு நீலக்கற்களைப் பற்றி மட்டுமே கூறுகிறார்.

———

ஹரிணா ஹரி நீலைச்ச ப்ரதி யத்நவதீம் ஸதா
அயத்ந லப்ய நிர்வாணாம் ஆஸ்ரயே மணி பாதுகாம்—681-

ஸ்ரீரங்கநாதனாலும், இந்த்ரநீலக்கற்களாலும் அலங்கரிக்கப்பட்டபடி பாதுகைகள் உள்ளன.
அந்தப் பாதுகைகளை அண்டினால் எந்தவிதமான சிரமமும் இன்றி மோக்ஷம் கிட்டுகிறது.
இப்படிப்பட்ட ரத்னமயமான பாதுகையை நான் அடைகிறேன்.

ஸ்ரீ பாதுகைக்கு அலங்காரம் ஒப்பனை கிடைப்பது -பகவானாலும் இந்திர நீல மணிகளாலும் தான் -இதையே ஹரியாலும் ஹரி நீல ரத்னங்களாலும் -என்றது –
இந்த அலங்காரமும் நித்யம் -முயற்சியும் நித்யம் -ஸ்ரீ பாதுகை வெறுமனே ஒதுங்கி இராமல் சஞ்சாரத்தில் ஈடுபடுகிறதே –
அதே சமயம் உண்மையில் முயற்சி செய்வது திருவடிகள் தாமே -ஆகவே முயற்சி இல்லாமலே -முயன்று கிடைக்கப் பெறும் பலனைப் பெற்றுத் தரும் –
அந்த ஸ்ரீ பாதுகையை சரணாக அடைகிறேன் –

—————————————————————————–

ஹரி ரத்ந மரீசயஸ் தவ ஏதே
நவ நீலீ ரஸ நிர் விசேஷ வர்ணா
ஸ்ருதி மூர்த்தநி சௌரி பாத ரக்ஷே
பலித அநுத்பவ பேஷஜம் பவந்தி—-682-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனது இந்திர நீலக்கற்களின் ஒளியானது, அவிரிச்சாயம் போன்று,
அந்தச் சாயத்திற்கும் ஒளிக்கும் வேறுபாடு இல்லாமல் உள்ளது. இந்த ஒளி என்னும் சாயம் மூலமாக,
ஸ்ருதிகளின் தலைகள் நரைத்துப் போகாமல், மருந்து பூசப் பெற்றதாக ஆகின்றன.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய இந்திர நீல மணிகளின் ஒளி புதியதோர் நீலச் சாயமாகச் செயல்படும் –
ஸ்ருதிகளின் சிரஸ்ஸில் நரை உண்டாகாமல் இருக்கும் படி ஒரு மருந்தாக ஆகிறது
இதனாலேயே மிகப் பழையதான வேதங்கள் -வேத மாதர் -நரை கிழட்டுத் தனம் ஏற்படாமல் நித்ய யுவதிகளாக இருக்கை சாத்யம் ஆகிறது –

———————————————————————————-

அளகைரிவ பிம்பிதை: ஸ்ருதீநாம்
ஹரிநீலை: ஸ்ருஜஸி த்வம் உந்மயூகை:
கமலாதயி தஸ்ய பாத ரக்ஷே
கருணா உதந்வதி சைவல ப்ரரோஹாந்—683-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியைக் காணும்போது, வேதப் பெண்களின் அழகான
தலைமுடிகள் உன் மீது படர்ந்துள்ளது போன்று தோற்றம் அளிக்கிறது. இவை மூலம், ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான
ஸ்ரீரங்கநாதனின் கருணை என்னும் ஸமுத்திரத்தில் உள்ள பாசிமுளைகளை நீ உண்டாக்குகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே வேத மாதர் குனிந்து உனக்கு நமஸ்காரம் செய்யும் போது அவர்கள் முன் கூந்தல் உன்னில் பிரதிபலிக்க
அது தான் நீல மணிகளின் சோபையாகத் தோற்றுமோ என்று ஐயம் ஏற்படும் -கருணைக் கடலான பெருமாள் ஒரு கலக்கமும் இல்லாது இருக்கிறாரே –
அக்கடலை சுத்தம் செய்து வைப்பது ஒரு பாசி அன்றோ -அதன் முளைகள் தாமோ இந்திர நீல மணிக் கதிர்கள் என்று பிரமிக்க வைக்கும் –

——————————————————————————–

அநகை: ஹரி நீல பத்த்தீநாம்
ப்ரதமாநைர் மணிபா துகே மயூகை:
அதரீ குருக்ஷே ரதாங்க பாணே:
அமிதாம் ஊர்த்த்வம் அவஸ்தி தஸ்ய காந்திம்—-684–

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது அழகாக
எங்கும் பரவியபடி உள்ளது. இந்த ஒளி மூலம் உன் மீது எழுந்தருளியுள்ள, சக்கரம் ஏந்திய
ஸ்ரீரங்கநாதனின் அளவற்ற ஒளியை, சற்றே தாழ்ந்து காணும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே நீல மணிகளின் உஜ்ஜ்வலத் தன்மை அழகியதாகவும் -நன்றாகப் பரவியதாகவும் இருந்து
உன் மீது இருக்கும் சக்ர பாணியான பெருமாளின் அளவற்ற காந்தியைக் கூடத் தாழச் செய்து தோற்கடிக்கிறது –

—————————————————————————————

சரணாவநி பாதி ஸஹ்ய கந்யா
ஹரி நீல த்யுதிபிஸ் தவ அநுவித்தா
வஸுதேவ ஸுதஸ்ய ரங்க வ்ருத்தே:
யமுநேவ ஸ்வயம் ஆகதா ஸமீபம்—685–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள் ஒளியுடன் தொடர்பு கொண்ட காவேரி நதியானது,
வஸுதேவரின் பிள்ளையான கண்ணனின் அருகாமையைத் தேடி வந்த யமுனை போன்று, கறுத்து காணப்படுகிறது.

ஸ்ரீ பாதுகையே உனது இந்திர நீலக் கற்கள் தனம் காந்தியால் காவேரியையே கருக்க வைத்து விட்டன –
ஸ்ரீ ரகத்தில் இருக்கும் அந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்காக வேண்டி யமுனையே வந்து விட்டது என்று நினைக்க வைக்கிறது –

———————————————————————–

அவதீரித தேவதாந்த ராணாம்
அநகைஸ் த்வம் மணி பாதுகே மயூகை:
ஹரி நீல ஸமுத்பவை: விதத்ஸே
ஹரி ஸாரூப்யம் அயத்நதோ ஜநாநாம்—686-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனைத் தவிர மற்ற தேவதைகளை அண்டாமல் உள்ள மக்களுக்கு,
உனது இந்த்ரநீலக் கற்கள் செய்வது என்ன வென்றால் – ஸ்ரீரங்கநாதனின் கறுத்த நிறத்தை ஒத்த நிறமாக
அவர்களை உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளி மாற்றுகிறது.

ஸ்ரீ மணி பாதுகையே பாரமாய் காந்திக்களுக்கே உரியதாகிய சாரூப்யம் அனாயாசமாக எல்லா ஜனங்களுக்கும் அளித்து அருளுகிறாய்-
உன் இந்திர நீல மணிகளில் இருந்து வெளிப்படும் காந்தி அந்த ஜனங்களை நீல நிறத்தவராகப் பெருமாளை ஒக்க ஆக்குகிறதே –

——————————————————————–

நேத்ரேஷு பும்ஸாம் தவ பாத ரக்ஷே
நீலாஸ்ம பாஸா நிஹித அஞ்ஜநேஷு
ஸ்ரியா ஸமம் ஸம்ஸ்ரித ரங்ககோச:
நிதி: ஸ்வயம் வ்யக்திம் உபைதி நித்யம்—687-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது
புதையலைக் காண உதவும் மை போன்று உள்ளது. இப்படிப்பட்ட உயர்ந்த மை தடவப்பட்ட கண்களைக் கொண்ட மனிதர்களுக்கு,
ஸ்ரீரங்கநாச்சியாருடன் சேர்ந்துள்ள ஸ்ரீரங்கவிமானம் என்னும் பெட்டியில் காணப்படும்
ஸ்ரீரங்கநாதன் என்னும் புதையல், தானாகவே எப்போதும் புலப்பட்டபடி உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உனது நீல ரத்னங்கள் பார்க்கிற ஜனங்களுடைய கண்களுக்கு ஒரு மை போலாகுமோ -ஏன் என்றால்
ஸ்ரீ ரங்க ஷேத்ரத்தில் மஹா லஷ்மியோடு கூடிய இந்த மஹா நிதி எப்போதும் தானாகவே வ்யக்தமாகிறதே –

————————————————————————–

அபங்குராம் அச்யுத பாத ரக்ஷே
மாந்யாம் மஹாநீல ருசிம் த்வதீயாம்
நிஸ்ரேய ஸத்வார கவாடிகாயா:
சங்கே ஸமுத்பாடந குஞ்சிகாம் ந:—-688-

அடியார்களை நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே உன்னுடைய
இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது அழியாமல், ஒடியாமல், போற்றத்தக்கதாக உள்ளது. இந்த ஒளியானது தலையில் விழும்போது,
அங்குள்ள ப்ரஹ்மதந்த்ரம் என்னும் த்வாரம் வழியாக மேல்நோக்கிக் கிளம்பும் ஆத்மாவானது மோக்ஷத்தை அடையும்போது,
அந்த பரமபதத்தின் கோட்டை வாசல் கதவைத் திறக்கும் சாவி போன்று உள்ளது.

ஸ்ரீ அச்யுத பாதுகையே -உன் நீலக் கற்களின் காந்தி தடைப் படாதது –
அது மோஷ வாசல் கதவுக்கு ஒரு திறவு கோலாக நினைக்கிறேன் –

—————————————————————————

ஜீவயதி அம்ருத வர்ஷிணீ ப்ரஜா:
தாவகீ தநுஜவைரி பாதுகே
கோர ஸம்ஸரண கர்ம நாசிநீ
காளிகேவ ஹரி நீல பத்ததி—689-

அசுரர்களின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் வரிசையானது,
மேகங்களின் வரிசை போன்று உள்ளது. இது மோக்ஷம் என்னும் அமிர்த மழையைப் பொழிவதாகவும்,
கடுமையான ஸம்ஸாரம் என்னும் கோடை காலத்தைப் போக்கச் செய்வதாகவும் உள்ளது.
இப்படியாக இந்தக் கற்கள் மக்களைப் பிழைக்க வைக்கிறது.

ஸ்ரீ பாதுகையே உனது இந்திர நீல மணிகளின் ஒளிக் கதிர் வரிசை மேக வரிசை போல மேகம் எப்படிக் கடுமையான
கோடையைப் போக்குமா அது போலே இது மோஷம் ஆகிற அம்ருதத்தை வர்ஷித்து சம்சாரம் ஆகிற கோடையைப் போக்கும் –

—————————————————————————————————

சதம கோபல பங்க மநோ ஹரா
விஹரஸே முரமர்த்தந பாதுகே
மணி கிரீட கணேஷு திவௌகஸாம்
மது கரீவ மநோ ரம பங்க்திஷு—690-

முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் முன்பாக தேவர்களின் க்ரீடங்கள் அழகாக,
வரிசையாகக் காணப்படுகின்றன. அந்தக் க்ரீடங்களில் உள்ள இரத்தினக்கற்களை மலர்கள் என்று எண்ணி
மொய்க்கும் வண்டுகளாக, உனது இந்த்ரநீலக் கற்களின் வரிசைகள் உள்ளன.
இப்படியாக பெண் வண்டு போன்று நீ விளையாடுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் தம் கிரீடம் குனியப் பணிந்து நிற்கின்றனர் -உன் இந்திர நீலக் கற்கள் உன்னை மிக அழகியதாய்ச் செய்யும்
நீ கிரீடங்கள் கூட்டத்தில் ஒவ்வொன்றாக சஞ்சரிக்கும் போது ஒரு பெண் வண்டு தனக்குப் பிரியமான பூ வகைகளில் தங்கி ரசிப்பது போல் இருக்கும் –

———————————————————————-

அந்விச்சதாம் கிமபி தத்வம் அநந்ய த்ருஸ்யம்
ஸம்யக் ப்ரகாச ஜநநீ த்ருத க்ருஷ்ண ரூபா
பாதாவநி ஸ்புரஸி வாஸவ ரத்ந ரம்யா
மத்யே ஸமாதி நயநஸ்ய கநீநிகேவ–691–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்திரநீலக் கற்கள் மூலம் நீ இன்பமாகவும், மற்றவர்களுக்கு நல்ல அறிவை அளிப்பவளாகவும்,
ஸ்ரீரங்கநாதனின் திருமேனி நிறத்தை அடைந்தவளாகவும் உள்ளாய். ஸ்ரீரங்கநாதனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும்,
மற்ற பலன்களையும் எண்ணிப் பார்க்காதவர்களால் காணக் கூடியவனாக உள்ள உயர்ந்தவனான
ஸ்ரீரங்கநாதனை – த்யானம் செய்பவர்களின் த்யானம் என்ற கண்ணின் நடுவில் உள்ள கருப்பு விழி போல் நீ நின்று, காண்பிக்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமானின் திரு மேனியைத் தாங்குகிறாய் -கறுப்பாகவும் உள்ளாய் -இந்த நிறம் இந்திர நீலக் கற்களாலே வரும் –
மற்றவர்க்குக் காண ஒண்ணாத மெய்ப்பொருள் யாது ஓன்று உண்டோ அதை யோகியர் காண்பது உனது உதவியால் –
அவர்கள் யோகக் கண்ணின் கரு விழி நீ தான் என்ன வேணும் –
நீ காட்டித் தந்த பின் உன் மேல் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனை யோகியர் காண முடியும் –

—————————————————————–

மாத: ஸலீலம் அதிகம்ய விஹார வேலாம்
காந்திம் ஸமுத்வஹஸி காஞ்சந பாதுகே த்வம்
லக்ஷ்மீ கடாக்ஷ ருசிரை: ஹரி நீல ரத்நை:
லாவண்ய ஸிந்து ப்ருஷ தைரிவ ரங்கதாம்ந:—-692–

தங்கமயமான பாதுகையே! தாயே! நீ உல்லாஸமாக ஸ்ரீரங்கநாதனுடன் ஸஞ்சாரம் செய்கின்ற காலத்தைப் பார்த்தால்,
ஸமுத்திரத்தின் கரையை அடைந்தது போன்று உள்ளது. உன்னுடன் இருக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் அழகு என்பதாகவே
அந்த ஸமுத்திரம் உள்ளது. அங்கு வீசி எறிகின்ற அலைகள் போன்று ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் உள்ளது.
உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள், அந்த ஸமுத்திரத்தின் அலைகள் போன்று உள்ளன. இப்படியாக நீ ஓர் ஒப்பற்ற அழகைப் பெறுகிறாய்.

ஸ்ரீ பாதுகைத் தாயே -பெருமாள் உல்லாசமாக உன் மீது ஏறி சஞ்சரிக்கிறார் -பெருமாளின் அழகாகிற கடல் -அதில் நீர்த் திவலைகள் –
இவை பிராட்டி கடாஷம் போல் அழகியவை -குளிர்த்தி யுடையவை –
இந்தத் திவலைகள் உன் மீது தெறித்து தான் இப்போது இந்திர நீலக் கல்லின் காந்தி உண்டாகிறதோ –

————————————————————————————

க்லுப்த அவகுண்டந விதி: மணி பாத ரக்ஷே
நீலாம்சுகைஸ் வலபிதஸ்ம ஸமுத்பவைஸ் தே
ஸங்கஸ்சதே முநி ஜநஸ்ய மதிஸ் ஸமாதௌ
ராத்ரௌ ஸமஸ்த ஜகதாம் ரமணேந லக்ஷ்ம்யா:—-693-

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனைத் த்யானித்தபடி உள்ள முனிவர்களின் புத்தியானது
ஒரு பெண் போன்று உள்ளதாக வைப்போம். அவர்கள் த்யானிக்கும் நேரம் என்பது இரவு நேரம் போன்று உள்ளது.
அந்த நேரத்தில், அந்தப் பெண், உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளி என்னும் கருப்புத் துணியால்
தன்னை மூடிக்கொண்டு, ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனை அடைகிறாள்.

ஸ்ரீ மணி பாதுகையே சமஸ்த ஜகத்துக்கும் இரவு வேளை-அது யோகியின் சமாதிக்கு உகந்ததாம் –
ஆகவே யோகிகளின் புத்தி என்கிற அபி சாரிகை வகையிலான மாது முக்காடிட்டு
முழுதும் மூடிக் கொண்டு யாரும் அறியாதபடி போகிறாள் -லஷ்மீ பதியோடு சேர்வதற்கு –
அவளுக்கு இப்படி ரஹச்யமாக போக உதவுவது உன் இந்திர நீலக் கற்களில் இருந்து வரும் ஒரு நீலப் போர்வையே –

—————————————————————

த்ரஷ்டும் கதாசந பதாவநி நைவ ஜந்து:
சக்நோதி சாஸ்வத நிதிம் நிஹிதம் குஹாயாம்
க்ருஷ்ண அநுரூப ஹரி நீல விசேஷ த்ருஸ்யா
ஸித்தாஞ்ஜநம் த்வம் அஸி யஸ்ய ந தேவி த்ருஷ்டே:–694–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகை தேவியே! ஸ்ரீரங்கநாதனுடன் இருப்பதற்குத் தகுதி கொண்டதான இந்த்ரநீலக் கற்களுடன்
கூடியவளாக நீ மிகவும் அழகாகக் காணப்படுகிறாய். மறைந்துள்ள புதையல்களைப் பார்ப்பதற்குக் கண்களில்
தடவிக் கொள்ளும் மை போன்ற நீ, யார் ஒருவனுடைய கண்களில் பூசப்படாமல் உள்ளாயோ – அப்படிப்பட்ட மனிதர்களால்,
தங்கள் இதயம் என்ற குகைக்குள் அந்தர்யாமியாகப் புதையல் போன்றுள்ள ஸ்ரீரங்கநாதனை எப்போதும் காண இயலாது என்பது நிச்சயம்;
அந்த நிதியைக் காண்பதற்கான சக்தி உள்ளவனாக அவன் ஆகவே மாட்டான்.

ஸ்ரீ பாதுகா தேவியே -நீ ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு ஏற்ற இந்திர நீலக் கற்களால் விசேஷ அழகுடன் இருக்கிறாய் –
கறுப்பாகவும் தகுதியாகவும் உள்ள உயர்ந்த இந்திர நீலம் போல் இருக்கிறாய் –
எவன் ஒருவன் உன் உதவி பெற வில்லையோ -நீ தானே மறைந்தவற்றை காண வல்ல கண் மையாக உதவி அருளுகிறாய்
அவன் தன் இதயக் குகையில் மறைந்து நிற்கும் அழியாப் பெரு நிதியை காண்பது எங்கே –

———————————————————————————–

ப்ரத்யேமி ரங்க ந்ருபதே: மணி பாதுகே த்வாம்
க்ருஷ்ண அந்தரங்க ருசிபி: ஹரி நீல ரத்நை:
விஸ்வ அபராத ஸஹநாய பதம் ததீயம்
விஸ்வ அம்பராம் பகவதீம் ஸமயே பஜந்தீம்—-695-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருமேனி நிறத்திற்கு
ஒத்தபடியான இந்த்ரநீலக் கற்கள் கொண்டு நீ காணப்படுகிறாய். ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்தவர்கள்
செய்த குற்றங்கள் அனைத்தையும் நீ பொறுத்துக் கொள்கிறாய். இப்படியாக நீ நிறத்தில் மட்டுமே அல்லாமல்,
குணத்திலும் ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளை அடைத்து நிற்கின்ற பூமிப்பிராட்டியே என்று நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ மணி பாதுகையே -இந்திர நீலக் கற்களால் நீயும் அவனைப் போலே கறுப்பாக உள்ளாய் –
தன்னால் தாங்கப்படும் அத்தனை ஜீவ ராசிகள் உடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுத்து அருள வேண்டும் என்ற கோரிக்கை யுடன்
பெருமாள் திருவடியை ஆச்ரயித்து இருக்கும் உன்னை ஸ்ரீ பூமிப் பிராட்டி என்றே நான் சொல்லுவேன்
வேதமும் பூமியின் நிறம் கருப்பு என்று சொல்லுமே –

——————————————————————-

மத்வா மஷீம் பரிமிதாம் பவதீ ததந்யாம்
வைகுண்ட பாத ரஸிகே மணி பாதுகே ஸ்வாந்
அங்க்தே ஸ்வயம் கிரண லேபிபி: இந்த்ரநீலை:
ஆசாதடேஷு லளிதாந் அபதாந வர்ணாந்—696-

ஸ்ரீவைகுண்டநாதனான பெரியபெருமாளின் திருவடிகளுடைய சுவையை அறிந்த பாதுகையே!
இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டவளே! உன்னுடைய மேன்மைகளை எழுதுவதற்கு இந்த்ரநீலக் கற்களின் ஒளி தவிர,
மற்ற ஒளிகளாக உள்ள மை போதாது என்று எண்ணினாய் போலும். அதனால்தான் அனைத்துத் திசைகள் என்னும் காகிதங்களில்,
இன்பமாக உள்ள உன் சரிதங்களை, உன்னில் பதிக்கப்பட்ட இந்த்ரநீலக் கற்களின் ஒளி என்னும் மை கொண்டு, நீயாகவே எழுதுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே -பகவான் உடைய திருவடிகளை செவ்வி குறையாமல் ரஷிக்க முற்படுகிற நீ -இந்திர நீலங்கள் இன்றி
மஞ்சள் போன்ற ஏதோ ஒரு மையானால் அதை எல்லாம் தவிர்த்து -அது அல்பமாகும் என்று தள்ளிவிட்டு –
திக்குகள் அடங்கலும் இந்திர நீல ஒளியைக் கொண்டு அழகாகப் பூசி வைத்து இருக்கிறீர்கள்
அழகான புகழ்ச் சொற்களை தாமே செய்து இருக்கிறீர்கள் —
ஆழ்வார் பெருமாள் திருவடிகளைப் பற்றிச் சொன்னவை எல்லாம் அவர் ஸ்வரூபமான ஸ்ரீ பாதுகைகளை
ஏறிட்டுச் சொல்வதே பொருந்தும் என்றவாறு –

————————————————————————————

வலமதந மணீநாம் தாமபிஸ் தாவகாநாம்
மதுரிபு பத ரக்ஷே வாஸரை: அவ்யபேதா
அபிஸரண பராணாம் வல்லவீநாம் ததாஸீத்
சமித குரு பயார்த்தி: சர்வரீ காசித் அந்யா—-697-

மது என்னும் அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! க்ருஷ்ணனாகிய ஸ்ரீரங்கநாதனிடம் போகத் துடித்த
கோபிகைகள், அச்சப்பட்டு, மிகுந்த சிரமத்துடன் வீட்டிலேயே சிலர் அடங்கினர். அப்படிப்பட்ட அச்சத்தை நீங்குவதற்காக,
பகலிலேயே உண்டான இரவுப் பொழுதை உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது உண்டாக்கியது
(கண்ணனுடன் இருந்த அந்த இரவு கூட முடிந்து விடும், ஆனால் ஸ்ரீரங்கநாதனின் பாதுகை உண்டாக்கிய
இந்த இரவு முடியாது, ஆகவே எப்போதும் ஸ்ரீரங்கநாதனுடன் இருக்கலாம் என்று கருத்து).

ஸ்ரீ பாதுகையே -நீ உன் இந்திர நீலக் கற்களின் ஒளியைக் கொண்டு பகலை இரவாக்கினாய் -எதற்காக
யாரும் அறியாமல் ஸ்ரீ கண்ணன் இடம் போகத் துடித்த கோபி போக இருள் வேண்டி இருந்தது –
செயற்கையான இரவு -அஞ்சாமல் ஸ்ரீ கிருஷ்ணன் உடன் கலக்க முடிந்ததே –

————————————————————————————

சதமக மணி பங்கை: உந்மயூகைர் திசந்தீ
சரணம் உபகதாநாம் ரங்க நாதேந ஸாம்யம்
ப்ரதயஸி ஜகதி த்வம் பாதுகே ஹைதுகாநாம்
உபநிஷத் உபகீதாம் தத்க்ரது ந்யாய வார்த்தாம்—-698-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பெரியகோயிலுக்கு வந்து உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் சரணாகதி செய்தவர்கள்,
உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளி காரணமாக, ஸ்ரீரங்கநாதனின் திருமேனியை ஒத்த நிறத்தை அடையும்படி நீ செய்கிறாய்.
இப்படியாக ஹேதுவாதம் செய்பவர்களுக்கு, உபநிஷத் கூறும் தத்க்ரது ந்யாயத்தை நீ உணர்த்தியபடி உள்ளாய்.

எம்பெருமானை நாம் எவ்விதம் உபாஸனை செய்கிறோமோ, அவ்விதமாகவே நாம் அடைவோம் என்பது உபநிஷத் கருத்து.
இதற்கு தத்க்ரது ந்யாயம் என்று பெயர். இதனை ஒப்புக் கொள்ளாதவர்கள் ஹேதுவாதிகள் ஆவர்.

ஸ்ரீ பாதுகையே உன் இருப்பிடம் வந்தவர்களுக்கு -உன்னுடன் சரண் அடைந்தவர்களுக்கு -நீ உன் இந்திர நீலக் கற்களின் காந்தியைக் கொண்டு
பெருமாள் உடன் சாம்யம் தரும் நீல நிறத்தை அளித்து அருள்கிறாய்
உலகில் கேள்வி கேட்டுக் காரணம் வினவத் துளைப்பவர்களுக்கும் இங்கனம்- தத்க்ரது நியாயத்தைப் பிரகாசப் படுத்துகிறாய்
ஜீவன் எப்படி பர ப்ரஹ்மத்தை உபாசிக்கிறானோ அப்படியே ஆகிறான் என்கிற நியாயம் –

‘சரணம் உபகதாநாம்’ உன்னையே சரணம் என்றடைந்தவர்களுக்கு
‘ரங்கநாதேந சாம்யம்” ஸ்ரீரங்கநாதன் போல் ஆவதை ‘திசந்தீ’ கொடுக்கின்றாய்!

பாதுகையில் இந்திரநீலகற்கள் இழைக்கப்பெற்றுள்ளன. இதனுடைய வர்ணம் பெருமாளுடைய
திருமேனி காந்தி போலுள்ளது. இந்த காந்தி ஸேவிக்க
வருகின்றவர்களையும், பெரியபெருமாளைப் போல் கருப்பாக்கி விடுகின்றது.

உபநிஷத்துக்களில் ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்பட்டுள்ளது.
ஒருவன் தான் தனக்கு ஒரு ஸங்கதி வரவேண்டும் – இடைவிடாது அதைப்பற்றியே நினைத்தால்,
முயற்சித்தால், அது அவனுக்கு வந்துவிடுமென்று சொல்கின்றது.

ஆழ்வார்களின் பாசுரங்களிலுள்ள கருத்துக்களையறிந்து அதன்படி பக்தியுடன் இருந்தால், பக்தி பண்ணினால்,
பிறப்பு இறப்பில்லாத உலகமாகிய, பரந்தாமனின் உலகினை அந்த ஜீவன் அலங்கரிக்கும்!

‘ஸம்ஸர்கஜா தோஷகுணா பவந்தி’ என்று ஒரு ஸம்ஸ்கிருத பழமொழி!

அதாவது நம் சேர்க்கை எப்படியிருக்கின்றதோ அது போன்று குணமும் அமையும் என்று பொருள்.
நல்லவரோடு சேரின் நல்ல குணம். கெட்டவரோடு சேர்ந்தால் கெட்ட குணம். நல்ல ஆச்சார்யனிடத்து பக்தியோடு
அவர் சொல்படி பணிவோமாயின், நாம் பெருமாளின் கிருபைக்கு எளிதில் பாத்திரமாகின்றோம்.
நல்ல ஆச்சார்யர்களின் சொல்படி கேட்கின்றார் பெருமாள்.

———————————————————–

பரிசரதி விதௌ த்வாம் பாதுகே ரங்க பர்த்து:
பத ஸரஸிஜ ப்ருங்கை: பாஸுரை: இந்த்ர நீலை:
ப்ரகடித யமுநா ஔகா பக்தி நம்ரஸ்ய சம்போ:
பரிணமயஸி சூடா விஷ்ணு பத்யா: ப்ரயாகம்—-699-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை நான்முகன் வந்து வணங்கி நிற்கும்போது சிவனும் அப்படியே செய்கிறார்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் மொய்க்கின்ற வண்டுகள் போன்று உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள் உள்ளன.
இவை யமுனையின் ப்ரவாஹம் போன்று கறுத்து காணப்படுகின்றன. உன்னை வணங்கும் சிவனின் தலையில்
இந்த யமுனை நதியும் பாய்ந்து, அங்குள்ள கங்கைக்கு யமுனையின் சேர்க்கையை நீ உண்டாக்குகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திரிகிரமனாக உலகு அளந்த போது ப்ரஹ்மா உனக்குத் திருவாராதனம் செய்தான்
அவன் சேர்த்த தீர்த்தத்தை பக்தியோடு ஏற்று சிவன் கங்கையை உலகுக்கு தந்தான்
உன் நீலக் கற்கள் பெருமாள் திருவடிகளைச் சுற்றும் கரு வண்டுகளோ என்று தோற்றம் அளிக்கும்
இந்த நீலக் கற்கள் யமுனையைப் பிறப்பித்தன -கங்கா யமுனை சேர்க்கையினால் பிரயாகையையும் உண்டாக்கினாய்

————————————————————————-

பதகி ஸலய ஸங்காத் பாதுகே பத்ரள ஸ்ரீ :
நக மணிபி: உதாரை நித்ய நிஷ்பந்ந புஷ்பா
சதமக மணி நீலா சௌரி லாவண்ய ஸிந்தோ:
நிபிடதம தமாலா காபி வேலாவநீ த்வம்—700-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் சிறிய திருவடிகள் சிவந்த துளிர்கள் போன்று, இலைகள் நிரம்பியதாகத் தோன்றுகிறது;
பெருமை மிகுந்த வைரங்கள் போன்று காணப்படும் அவன் திருவடி நகங்கள் – மலர்கள் எப்போதும் உள்ளதாகத் தோன்றுகிறது;
உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள் கருமையாக உள்ளன. இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் அழகு என்ற
ஸமுத்திரத்தின் கரையில் காணப்படும் காடு போன்று நீ உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே உன்னை பகவான் ஆகிற லாவண்யக் கடலின் கரையில் உள்ள ஒரு பச்சிலை மரம் நிறைந்த காடாகச் சொல்ல வேணும் –
திருவடிகளாம் தளிர்களால் நல்ல இலைச் செல்வம் பெற்றது -ஒளி வெள்ளம்
பெருக்கும் திரு நகங்கள் ஆகிற மணிகள் பூக்கள் ஆகும் -எப்போதும் புஷ்பித்து இருப்பவை
இந்திர நீலங்களின் கருப்பு காட்டில் அடர்த்தியைச் சொல்லும் –

—————————————————————

த்வயி விநிஹிதம் ஏதத் கேபி பஸ்யந்தி மந்தா:
சதமக மணி ஜாலம் சார்ங்கிண: பாத ரக்ஷே
வயம் இதம் இஹ வித்ம: ப்ராணிநாம் பாவுகாநாம்
ஹ்ருதய க்ருஹ குஹாப்ய: பீதம் அந்தம் தமிஸ்ரம்–701–

சார்ங்கம் என்னும் வில் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை நன்றாக உணராதவர்கள், உன்னிடம் காணப்படும்
கற்களை வெறும் இந்த்ரநீலக் கற்கள் என்றே காண்கின்றனர். ஆனால் நாங்கள் இவற்றை எப்படிப் பார்க்கிறோம் என்றால் –
உன்னை உபாஸிப்பவர்களின் மனம் என்னும் குகையில் காணப்படும் அறியாமை என்னும் இருளை நீ
குடித்த காரணத்தால் உண்டான இருள் (கருமை) என்று எண்ணுகிறோம்.

ஸ்ரீ பாதுகையே உன் மேல் விளங்கும் நீல ஒளிக்குக் காரணம் உன்னில் இழைக்கப் பெற்றுள்ள இந்திர நீலக் கற்கள் தாம் என்பர்
சிற்றறிவாளர்-அப்படி அன்று –அது உன்னை உபாசிக்கும் ஜனங்களுடைய ஹ்ருதயம் ஆகிற இல்லத்தின் குகையில் சூழ்ந்து இருந்த
அக இருளை நீ குடித்து விட்டு இருக்கிறாயே அதனால் ஏற்பட்டது என்று நாம் சொல்வோம் –

——————————————————————

க்லுப்த ச்யாமா மணிபி: அஸிதை: க்ருஷ்ண பக்ஷேண ஜுஷ்டா
ஸ்ரேய: பும்ஸாம் ஜநயஸி கதிம் தக்ஷிணாம் உத்வஹந்தீ
தேந ஆஸ்மாகம் ப்ரதயஸி பரம் பாதுகே தத்வ வித்பி:
மௌளௌ த்ருஷ்டாம் நிகம வசஸாம் முக்தி கால அவ்யவஸ்தாம்—702-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது இந்த்ரநீலக் கற்களால் நீ கருத்த நிறம் கொண்டு, இரவுப்பொழுது போன்று உள்ளாய்.
க்ருஷ்ணனுக்கு வேண்டியவர்களால் வணங்கப்படுகிறாய் (க்ருஷ்ணபக்ஷத்தால் அடையப் பெற்றாய்).
சிறந்த நடையைக் கொண்டுள்ளாய் (தக்ஷிணாயனம்).
இப்படியாக உன்னைப் பற்றிய உண்மை அறிந்த அனைவருக்கும் மோக்ஷம் உண்டாக்குகிறாய்.
இதனால் உபநிஷத் கூறுவது போன்று முக்தி அடைவதற்கு பகல் நேரம், சுக்லபக்ஷம், உத்தராயணம் என்பது
அவசியம் என்னும் விதிமுறைகள், உன்னை அடைந்தவர்களுக்கு இல்லை என்று எங்களுக்கு உணர்த்துகிறாய்.

ஸ்ரீ பாதுகையே நீல மணிகளால் நீல ஒளியைப் பெற்றும் பக்தர்களால் ஆஸ்ரயிக்கப் பெற்றும் சிறந்த நடை யுடையவளாய் விளங்கும் நீ –
இரவை உண்டாக்கி ஸ்ரீ கிருஷ்ண பஷத்தினால் அடையைப் பெற்று தஷிணாயனத்தை அடைந்த நீ -மனிதர்க்கு முக்தி அளிப்பவள் எனபது
தத்வம் உணர்ந்த பெரியோர்கள் கூறுவது -உபநிஷத் நியமித்த முக்தி சாதனமான பகல் -ஸூ க்ல பஷம் -உத்தராயணம் -என்ற இவை
இந்த வகை வரையறை கிடையாது என்று எங்களுக்கு விளக்கப் பட்டது -நீ சொல்வது மூலம் இது தெரிகிறதே –

மணிபி:’ இந்திரநீலக்கல்லுகளாலே – ‘அஸிதை:’ கருப்பாயிருக்கின்ற – ‘க்ருஷ்ணபக்ஷேஷூ:’ கிருஷ்ணபட்சத்தாலே –
‘ஜூஷ்டா:’ ஸேவிக்கப்பட்டவள்‘முக்தி காலாவ்யவஸ்தாம்” : – மோக்ஷத்திற்காக கட்டுபாடில்லாமை.

பாதுகையில் பதிக்கப்பட்டுள்ள இந்திரநீலக்கல்லினால் கருப்பாயிருக்கின்றாய். இது கிருஷ்ணபட்சத்தினைப் போலுள்ளது.
தக்ஷிணாயணம் போலுள்ளது. ஆயினும் மோக்ஷம் வேண்டி உன்னிடத்தில் கைங்கர்யம் செய்பவர்கள் அவர்கள்
எந்த காலத்தில் இறந்தாலும் மோக்ஷம் உண்டு என்பதனைத் உணர்த்துகின்றாய்!.

உபநிஷத்துக்கள், ‘ஒருவன் பக்தி, பிரபத்தி போன்றவற்றைக் கடைப்பிடிப்பானாயின் அவன் ராத்ரியில் இறந்தாலும்,
தக்ஷிணாயணம் ஆகிய காலங்களில் இறந்தாலும் மோக்ஷம் உண்டு. இதனைக் கடைப்பிடிக்காது மற்ற
உபாயங்களை கடைப்பிடிப்பவர்கள் இந்த காலங்களில் இறந்தால் நல்லகதி கிடையாது” என்கிறது.

இந்திரநீலக்கல் ராத்ரி போன்று இருண்டிருந்தாலும், கிருஷ்ணபட்சம், தக்ஷிணாயணம் போன்றிருந்தாலும்
தன்னை அண்டியவர்களுக்கு மோக்ஷம் அளிக்கக்கூடியது.

ஆழ்வாரின் பாசுரங்களை பக்தியோடு அனுசந்திப்பவர் எந்த காலத்தில் இறந்தாலும் மோக்ஷம் கண்டிப்பாக உண்டு.
அவர்களுக்கு இந்த மோக்ஷமானது சொந்த வீடு போன்றது.

ஆழ்வார்களின் அவதாரத்தினாலேயும், அவர்கள் பாசுரங்களினாலும்தான், சாந்தி, பக்தி, விரக்தி, தயை, பொறுமை,
நல்ல புத்தி போன்ற நல்லகுணங்கள் இவ்வுலகில் விளங்குகின்றது.

பாதுகையில் பதிக்கப்பெற்றுள்ள இந்திரநீலக்கல்லின் காந்தி இருட்டு போலிருக்கின்றது.
இந்த இருட்டு அதனை ஸேவிக்கின்றவர்களின் அஞ்ஞானமாகின்ற இருட்டைப் போக்குகின்றது.

காலில் தைத்த முள்ளை, முள்ளால் எடுப்பது போன்று, பெருமாளை அடையமுடியவில்லையே என்று ஏக்கத்துடன்
ஆழ்வார்கள் பாடிய, இந்திரநீலக்கற்கள் போன்று, பாசுரங்கள், அதனைக் கற்போரின், பொருள் உணர்ந்தோரின்
அஞ்ஞானம் என்கிற மற்றொரு இருட்டினைப் போக்குகின்றது.

—————————————————————————–

ஸத்பிர் ஜுஷ்டா ஸமுதித விது: ஜைத்ர யாத்ரா விநாதேஷு
ஆதந்வாநா ரஜநிம் அநகாம் இந்த்ர நீல அம்ஸூ ஜாலை:
சித்ரம் க்யாதா குமுத வநத: பாதுகே புஷ்யஸி த்வம்
வ்யாகோசத்வம் விபுதவநிதா வக்த்ர பக்கேரு ஹாணாம்—703-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸாதுக்கள் என்னும் நக்ஷத்திரங்களால் அடையப்படுகிறாய்;
வெற்றியை மட்டும் உண்டாக்கவல்ல உல்லாஸ ஸஞ்சாரம் செய்கின்ற ஸ்ரீரங்கநாதன் என்ற சந்த்ரனைக் கொண்டுள்ளாய்;
இந்த்ரநீலக் கற்களின் குவியல் மூலமாக தோஷம் இல்லாத இரவுப்பொழுதை உண்டாக்குகிறாய்;
இரவில் மலர்கின்ற ஆம்பல் மலர்களுக்கு நீ தேவதையாக உள்ளாய். இப்படியாக உள்ள நீ தேவலோகப் பெண்களின்
முகங்கள் என்னும் தாமரை மலரையும் மலரச் செய்கிறாய். என்ன வியப்பான செயல் இது?

ஸ்ரீ பாதுகையே உனது உல்லாச சஞ்சாரம் -பகவான் ஆகிற சந்தரன் உதயம் -சாதுக்கள் நஷத்ரங்கள் குழுமி இருப்பது –
இந்த யாத்ரை நிச்சயம் விஜய யாத்ரை தான் -ஏன் சந்தரன் -நஷத்ரங்கள் விளங்குவதால் –
நீலக் கற்கள் நல்ல இருட்டை உண்டாக்கி யுள்ளன -அல்லிகள் காடாக மலர்ந்து உள்ளன -தேவ மாதரின் முகத்தாமரை மலர்ந்து உள்ளது –
இரவில் தாமரை -என்ன ஆச்சர்யம் -எல்லாம் நன்று உன் விஜயம் பூவுலகத்திற்கும் சந்தோஷம் விளைவிப்பதாயிற்றே –

—————————————————————————————–

நித்யம் லக்ஷ்மீ நயநருசிரை: சோபிதா சக்ர நீலை:
ஸாளக்ராம க்ஷிதிரவ ஸூபை: சார்ங்கிண: தர்சயந்தீ
ஸாகேதாதே: ஸமதிக குணாம் ஸம்பதம் தர்ச யந்தீ
முக்தி க்ஷேத்ரம் முநிபி: அகிலை: கீயஸே பாதுகே த்வம்—704-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள், ஸ்ரீரங்கநாச்சியாரின் அழகான திருக்கண்கள் போன்று காணப்படுகின்றன.
அவை மூலம் நீ, ஸ்ரீரங்கநாதனின் ஒரு வித மூர்த்தியான ஸாளக்ராம உருவங்களைக் காண்பிக்கிறாய்
(இந்த்ரநீலக் கற்கள் ஸாளக்ராமங்களைப் போன்று உள்ளன என்கிறார்). இதனால் நீ ஸாளக்ராம க்ஷேத்ரம் போன்று விளங்குகிறாய்.
மோக்ஷம் அளிக்கவல்ல அந்த க்ஷேத்ரத்தைக் காட்டிலும் நீ அதிகமான சிறப்புடையவளாக உள்ளாய்.
இதனால் அனைத்து முனிவர்களாலும் முக்திக்ஷேத்ரம் என்றே பாடப்படுகிறாய்.

நமது இல்லத்தில் பன்னிரண்டு ஸாளக்ராம மூர்த்திகள் இருந்தாலே அது ஸாளக்ராம க்ஷேத்ரம் எனப்படும்.
ஆனால் பாதுகையில் பல இந்த்ரநீலக் கற்கள் ஸாளக்ராமங்களாகவே உள்ளதால்,
பாதுகை உள்ள இடம் முக்திக்ஷேத்ரம் என்றே கொண்டாடப்படலாம்.

ஸ்ரீ பாதுகையே நீ சாளக்ராம ஷேத்ரம் -அது பெருமாள் மூர்த்திகளால் நிறைந்து நிற்பது -மங்கள கரமானது –
அயோத்யை முதலிய முக்தி தரும் நகர் ஏழையும்விட மிக்க மேன்மை பெற்றது -உனக்கும் அதை ஒத்த பெருமை உண்டே
-உன் இந்திர நீல மணிகள் பிராட்டியின் திருக் கண்கள் போல் உள்ளன –
சகல முனிவர்களும்-நீ சிறப்பானதொரு முக்தி ஷேத்ரம் என்று – உன்னைப் போற்றுவராயினர் –

———————————————————

பாத ந்யாஸ ப்ரிய ஸஹ சரீம் பாதுகே வாஸ கேஹாத்
த்வாம் ஆருஹ்ய த்ரி சதுர பதம் நிர்கதே ரங்கநாதே
அந்தஸ் ஸ்நிக்தை: அஸுர மஹிளா வேணி விக்ஷேப மித்ரை:
ஸ்யாமஸ் சாயம் பவதி பவநம் சக்ர நீல அம்சுபி: தே—705–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் தனது திருவடிகளை எடுத்து வைக்கின்ற செயலுக்கு நீ ப்ரியமான தோழியாக உள்ளாய்.
தனது சயன அறையில் இருந்து எழுகின்ற ஸ்ரீரங்கநாதன், உன் மீது தனது திருவடிகளை வைத்து, மூன்று நான்கு அடிகள் நடக்கிறான்.
அப்போது, அழகான தேவலோகப் பெண்களின் அவிழ்ந்த, அலை போன்றுள்ள கூந்தல் போன்று காணப்படும்
உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது, திருவரங்கம் பெரியகோயில் முழுவதும் பரவி, எங்கும் நீல நிறமான ஒளி உள்ளதாகச் செய்கிறது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் அடிவைக்க உதவும் பிரிய தோழி நீ -சயன அறையில் நின்று புறப்பட்டு இரண்டு மூன்று அடிகள் வைத்து
எழுந்து அருளின போது-அங்கு எல்லாம் ஒரே நீல ஒளி வெள்ளம் –
மணம் கமிழ் கூந்தல் -அஸூர மாதருடையது -அவிழ்ந்து அலைகின்றதோ என்று எண்ண வைக்கும் –

————————————————————————

யா தே பரிஹ்யாங்கணம் அபியத: பாதுகே ரங்க பர்த்து:
ஸஞ்சாரேஷி ஸ்புரதி விததி: சக்ரநீல ப்ரபாயா:
விஷ்வக்ஸேந ப்ரப்ருதிபி: அஸௌ க்ருஹ்தே வேத்ர ஹஸ்தை:
ப்ரூவிக்ஷேபஸ் தவ திவிஷதாம் நூநம் ஆஹ்வாந ஹேது:—706–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலங்களில் உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது
எங்கும் பரவி நிற்கிறது. இதனைப் பார்த்தால் எப்படி உள்ளது என்றால் – கையில் பிரம்பு வைத்துக் கொண்டுள்ள
விஷ்வக்ஸேநர் போன்றவர்களால் ஸ்ரீரங்கநாதனை வந்து வணங்கும்படியாக,
தேவர்களை அழைப்பதற்குக் காரணமாக உள்ள புருவ அசைவு போன்று உள்ளது.

இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது பாதுகையின் புருவ நெறிப்பு போன்று உள்ளது. இந்தச் செயல் மூலம் பாதுகை,
விஷ்வக்சேநர் போன்றவர்களுக்குக் கட்டளை இடுகிறாள். உடனே விஷ்வக்சேநர் போன்றவர்கள்,
”நம்பெருமாள் புறப்பாடு ஆகிவிட்டது”, என்று அறிந்து, தேவர்களை அழைக்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே -சஞ்சாரத்திற்காகப் பெருமாள் சயன அறையை விட்டு வெளி வருகையில் ஒரு நீல ஒளி அங்கு நிறைந்து நிற்குமே
அது உன் இந்திர நீலக் கற்களில் இருந்து வந்ததாயினும் அது உன் புருவ நெறிப்பு என்று ஸ்ரீ பிரம்பு பிடித்த
விஸ்வக்சேனர் முதலியோர் தேவர்களை அழைக்க அது ஆணை என்று கொள்வர் என்று தோன்றுகிறது –

———————————————————————–

அக்ஷ்ணோ: அஞ்ஜந கல்பநா யவநிகா லாஸ்ய ப்ரஸூடே: கதே:
சித் கங்கா யமுநா முகுந்த ஜலதே வேலா தமாலாடவீ
காந்தா குந்தள ஸந்ததி: ஸ்ருதி வதூ கஸ்தூரி காலங்க்ரியா
நித்யம் ரத்ந பாதாவநி ஸ்ப்புரதி தே நீலாமணி ஸ்ரேணிகா—-707–

இரத்தினமயமான பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது ஆறுவிதமான செயல்களைச் செய்கிறது.
அவையாவன – ஸ்ரீரங்கநாதனை அண்டி நிற்பவர்களின் கண்களுக்கு மை தடவுகிறது;
ஸ்ரீரங்கநாதனின் ஒய்யார நடை என்பதற்கு முன்பாக (புறப்பாட்டுத் திரை) இடப்படும் திரையாக உள்ளது;
அறிவு என்ற கங்கைக்கு யமுனை போன்று உள்ளது; ஸ்ரீரங்கநாதனின் அழகு என்ற ஸமுத்திரத்தின் கரையில் உள்ள பாசி போன்று உள்ளது;
ஸ்ரீரங்கநாச்சியார் முதலான பிராட்டிகளின் முன்நெற்றி முடி போன்று உள்ளது;
ஸ்ருதிகள் என்னும் பெண்கள் இட்டுக் கொள்ளும் கஸ்தூரி திலகம் போன்று உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே உன்னுடைய நீலக் கல் வரிசை என்னே -அதை எண்ண வென்று வர்ணிப்பது –
சேவிக்க வரும் பக்தர்களின் கண்கள் இட்டப் பெற்ற மையோ -பகவானுடைய உல்லாச திருநடைக்கு
நாட்டியத் திரை அரங்கில் தொங்கும் திரையோ -பக்தர் மனத்தில் சுரக்கும் அறிவாகிற கங்கைக்கு யமுனையோ
பகவான் ஆகிற கடல் புறத்தின் கரையில் வளர்ந்த பச்சிலைக் காடோ அல்லது
பிராட்டிகளுடைய முன் நெற்றி முகட்டில் படியும் மயிர்க் கற்றையா -வேதப் பெண்டிரின் கஸ்தூரி அலங்காரமோ எது –

———————————————————————————-

நிரந்தர புரந்தரோ பல புவம் த்யுதிம் தாவகீம்
அவைமி மணி பாதுகே ஸரணி ஸங்கிநீம் ரங்கிண:
ததீய நவ யௌவந த்விரதமல்ல கண்டஸ்த்தலீ
களந் மதஜளஞ்ஜளா பஹுள கஜ்ஜள ஸ்யாமிகாம்—708–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மிகவும் நெருக்கமாக பதிக்கப்பட்ட உனது இந்த்ரநீலக் கற்களின்
ஒளியானது ஸ்ரீரங்கநாதன் செல்லும் வழி எங்கும் பரவுகிறது. இதனைக் காணும்போது எப்படி உள்ளது என்றால் –
ஸ்ரீரங்கநாதனின் இளமை என்னும் பெரியயானையின் கன்னங்களில் பெருகி நிற்கின்ற மதநீரானது,
அங்கு உறைந்து கெட்டியாகக் காணப்படும் மை போன்று உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே நெருங்கி இழைந்து உள்ள நீலக் கற்களின் நெடு வீச்சு நீ பரப்புகிறாயே–அதை இப்படி வர்ணிக்கலாம் போலும்
பெருமாளின் புதிய யௌவனம் ஆகிற பெரு யானையின் கன்னங்களில் பெருகிய மத ஜலத்தில் திடமாக உறைந்த கசடு என்கிற மையோ –

———————————————————————————–

ப்ரதீமஸ் த்வாம் பாதாவநி பகவதோ ரங்க வஸதே:
கநீபூதாம் இத்தம் பத கமல மாத்த்வீ பரிணதீம்
ஸ்புரந்த: பர்யந்தே மதகரிம நிஸ்பந்த மதுப
ப்ரஸக்திம் யத்ரைதே விதததி மஹா நீல மணய:—709–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்க விமானத்தில் சயனித்துள்ள ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளில்
பெருகும் தேன் கெட்டியாக நிற்பது போன்றே உனது உருவம் உள்ளது என்று எண்ணுகிறோம்.
இப்படிப்பட்ட உன்னிடம் காணப்படும் பல இந்திரநீலக் கற்கள், இந்தத் தேனின் சுவைக்காக வந்து மொய்த்தபடி,
அசையாமல் உள்ள வண்டுகள் போன்றே காணப்படுகின்றன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடித் தாமரைகளில் இருந்து பெருகும் தேனே உறைந்து உரு பரிணமித்தது தான் நீயோ என்று தோன்றும் –
அந்தத் தேனை பக்கத்தில் நின்று சுவைத்த வண்டுகள் தாம் இந்த நீலக் கற்களோ -அப்படித் தான் இருக்க வேண்டும் –

————————————————————————————-

நமதாம் நிஜ இந்த்ரநீல ப்ரபவேந முகுந்த பாதுகே பவதீ
தமஸா நிரஸ்யதி தம: கண்டகம் இவ கண்ட கேநேவ—710–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பது போன்று, கருமையாகக் காணப்படும்
உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளி மூலமாகவே நீ உன்னை வணங்குகின்றவர்களின் அறியாமை என்னும் இருளை நீக்குகிறாய்.

ஸ்ரீ முகுந்த ஸ்ரீ பாதுகையே முல்லை முள்ளினால் தான் எடுக்க வேண்டும் அல்லவா -அதே போல வணங்கும் எங்கள் அகத்து இருளை
உன் இந்திர நீலக் கற்களின் ஒளி கொண்டு தான் -இருள் போன்ற கறுப்பானதாயிற்றே-நீக்க வேண்டும் அம்மா –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-19-மரகத பத்ததி -ஸ்லோகங்கள் -661-680-

March 17, 2016

இங்கு பச்சைக் கற்களான மரதகக் கற்களைப் பற்றி மட்டுமே கூறுகிறார். மரகதம் என்றும் கூறுவது உண்டு.

வந்தே காருத்மதீம் வ்ருத்யா
மணி ஸ்தோமைச்ச பாதுகாம்
யயா நித்யம் துளஸ்யேவ
ஹரி தத்வம் ப்ரகாஸ்யதே—-661-

ஸ்ரீரங்கநாதனை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எழுந்தருளச் செய்தல் என்னும் தொழில் ரீதியாகவும்,
இரத்தினங்களின் ஒற்றுமை காரணமாகவும், கருடனின் தொடர்பு கொண்ட பாதுகையை நான் வணங்குகிறேன்.
துளசியானது எப்படி தன்னால் அர்ச்சிக்கப்படும் ஸ்ரீரங்கநாதனின் நிறமானது, தன் போன்று பச்சை நிறம் என்று
உணர்த்துகிறதோ, அது போன்றே பாதுகையின் மரதகங்களும் பச்சையை உணர்த்துகின்றன.

ஸ்ரீ பாதுகையும் ஸ்ரீ பெரிய திருவடியும் தொழில் ரீதியில் ஒத்தவர்கள் –
ஸ்ரீ பாதுகை காருத்மத ரத்னமான மரகதத்தால் இழைக்கப் பட்டுள்ளவள்-
ஸ்ரீ பாதுகையும் ஸ்ரீ பெரிய திருவடியும் ஸ்ரீ துளசி தேவியும் ஸ்ரீ ஹரி தத்வத்தைப் பிரகாசிப்பார்கள்
ஸ்ரீ துளசி தேவியும் ஹரித தவத்தை -பச்சை நிறத்தை உடைத்தாய் இருப்பாள் –
இங்கனம் மூவரும் மரகத மயம்-அந்த மரகதமணி ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன் –

————————————————————————

ஸவிலாஸ கதேஷு ரங்க பர்த்து:
த்வத் அதீநேஷு பஹிஷ் க்ருதோ கருத்மாந்
அதி கச்சதி நிர் வ்ருதிம் கதம்சித்
நிஜ ரத்நைஸ் த்வயி பாதுகே நிவிஷ்டை:—-662–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னால் ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரம் நடைபெறுகிறது.
இதனால் கருடன் அந்த நேரங்களில் விலக்கப்பட்டவன் ஆகிறான். ஆனால் உன்னில் பதிக்கப்பட்ட
தனது மரதக இரத்தினங்கள் கண்டு சற்றே நிம்மதி அடைகிறான்.

ஸ்ரீ பாதுகையே உன்னைத் தரித்துக் கொண்டு பெருமாள் சஞ்சரிக்கையில் தனக்கு கடமை ஏதும் இல்லை என்ற நிலையிலும்
பெரிய திருவடி -என் ரத்னங்கள் மரகதம் -தான் ஸ்ரீ பாதுகையிடத்தும் பதிந்து இருப்பது -என்று சமாதானம் செய்து கொள்கிறானாம் –

————————————————————–

ஸமயே மணி பாதுகே முராரே:
முஹு ரத்ந: புர முக்த சேடி காஸ்தே
ஹரிதாந் ஹரி தஸ்மநாம் மயூகாந்
துளஸீ பல்லவ சங்கயா க்ஷிபந்தி—-663-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் அந்தப்புரத்தில் பணி புரியும் பெண்கள்,
அதிகாலை நேரத்தில் உன் மீது பதிக்கப்பட்டுள்ள மரதகக் கற்களை, முந்தைய நாள் உன் மீது இறைக்கப்பட்ட
துளசிக் கொழுந்துகள் என்று எண்ணி, அவற்றைத் தள்ளியபடி இருக்கின்றனர்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் அந்தப்புரத்திற்குப் போகும் போது உபசரிக்கும் வேலைக் காரிகள் உன் மரகதக் கற்களின்
ஒளி படர்வதைத் துளசி இதழ்கள் -முன்பு அர்ச்சனை செய்யப் பட்ட போதோ
மாலையில் நின்றோ கீழே விழுந்தவையோ என்று எண்ணி கௌரவத்துடன் தள்ள முயல்கின்றனர் –

——————————————————————-

ஹரிதஸ் ஸஹஸா ஹரிந் மணீநாம்
ப்ரபயா ரங்க நரேந்த்ர பாத ரக்ஷே
துளஸீ தள ஸம்பதம் ததாதி
த்வயி பக்தை: நிஹித: ப்ரஸூந ராசி:—664-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது ஸ்ரீரங்கநாதனின் அடியார்கள் மலர்களைத் தூவியபடி உள்ளனர்.
இந்த மலர்களின் மீது உனது மரதகக்கற்களின் ஒளியானது விழுகிறது. உடனே அந்த மலர்கள் அனைத்தும் பச்சை நிறமாக மாறி,
துளஸியின் மேன்மையை அடைகின்றன. இதனைக் காணும்போது, அங்கு துளசி அர்ச்சனை போன்றே உள்ளது.

ஸ்ரீ ரங்க ராஜ பாதுகையே -பக்தர் உன் மீது புஷ்பங்களைச் சேர்க்கிறார்கள் -அவை உன் மரகதக் கல் ஒளியினால் பச்சை நிறம்
எய்துவிடும் போலும் -அத்தனையும் துளசீ தளம் போல் தோற்றும் –

————————————————————————

ப்ரஸாத யந்தீ மணி பாதுகே த்வம்
விக்ஷேப யோகேந விஹார வேளாம்
ஹரிந் மநோஜ்ஞா ஹரி காந்தி ஸிந்தோ:
ஸந்த்ருஸ்யஸே சைவல மஞ்ஜரீவ—-665–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்கின்ற காலத்தில்,
அவனது திருவடிகளை உன் மீது வைக்கும் போது, உனது பச்சை நிறக் கற்கள் மூலமாக,
அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குபவளாக நீ உள்ளாய். அவன் அழகின் ஸமுத்திரமாகவே உள்ளான்.
அந்த ஸமுத்திரத்தில் காணப்படும் பாசிக்கொத்து போன்று நீ உள்ளாய்.

ஸ்ரீ மணி பாதுகையே பகவானுடைய லீலா சஞ்சாரத்தை நீ ஸூகமாக்குகிறாய்-
அவர் நடந்து வருகையில் அது ஒரு அழகுக் கடல் -அந்தக் கடலுக்கு வேலாம் பாசி போல் விளங்குவது மரகத மணித் திரள் –

—————————————————————————-

பத்த்நாஸி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
ஹரிந் மணீநாம் ப்ரபயா ஸ்புரந்த்யா
ஸுடாபதேஷு ஸ்ருதி ஸுந்தரீணாம்
மாங்கள்ய தூர்வாங்குர மால்ய பங்க்திம்—-666–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வேதங்களாகிய பெண்கள், ஸ்ரீரங்கநாதன் முன்பே
விண்ணப்பம் செய்தபடி நிற்கின்றனர். உன்னுடைய மரதகக்கற்களின் ஒளி மூலமாக, மங்களகரமான
இளம் அருகம்புல் கொண்டு தொடுக்கப்பட்டது போன்ற தோற்றம் அளிக்கும் ஒளி மாலையை, அந்தப் பெண்களின் தலையில் நீ சூட்டுகிறாய்.

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகையே உன்னுடைய மரகதக் கற்களின் ஒளி வீச்சு ஒரு பசுமையான மாலையாக ஓர் அருகம் புல் மாலை போலே
மங்கள அர்த்தமாக இடம் பெற்ற ஹாரம் போலே வந்து வணங்கி நிற்கும் வேத மாதர்களின் சிரஸ்ஸில் காட்சி அளிக்கும் –

——————————————————————————-

அச்சேத்ய ரஸ்மி நியதை: கடிதா ஹரித்பி:
ஸத்வர்த்மநா கதிமதீ மணி பாத ரக்ஷே
ஸந்த்ருஸ்யஸே ஸவித்ரு மண்டல மத்ய பாஜ:
ரங்கேஸ் வரஸ்ய ரத ஸம்பதிவ அபரா த்வம்—-667–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது பச்சைக் கற்களானவை குதிரைகள் போன்றும்,
அவற்றின் ஒளியானது எப்போதும் அறுந்து போகாத கடிவாளக் கயிறுகள் போன்றும் உள்ளன.
இப்படியாக, நல்ல வழியாகச் ஸஞ்சாரம் செய்கின்ற நீ, ஸூர்ய மண்டலத்தின் நடுவில் காணப்படும் ஸ்ரீரங்கநாதனுக்கு,
அங்குள்ள ஸூரியனின் தேரைக் காட்டிலும் உயர்ந்த தேர்ச் செல்வமாக உள்ளாய்.

ஸ்ரீ மணி பாதுகையே அகலாத கிரணன்களோடு கூடிய மரகதங்கள் உன்னுடன் பிணைக்கப் பட்டுள்ளன –
நீ நல்ல சன் மார்க்கத்தில் செல்கிறாய் -பெருமாளுடன் –
அறாத கயிறுகள் கொண்டு கட்டப்பட்ட குதிரைகளால் இழுக்கப்படும் நஷத்ர மார்க்கத்தில் சஞ்சரிக்கும் தேர் -ஸூர்ய மண்டலத்தில் நகர்வது
ஸ்ரீ பாதுகையிலும் ஸ்ரீ ரங்க நாதன் -தேஜ பரம் தத் சது விதுர்வரேண்யம் –ஸ்ரீ ரங்க நாதம் சமுபாசிஷீய -எண்ணப் பட்டபடி
ஸூர்ய மண்டலத் தேரிலும் பெருமாள் ஸ்ரீ ரங்க நாதனே –

————————————————————————

ஸ்யாமாயமாந நிகமாந்த வந உபகண்ட்டா:
ஸ்தாநே பதாவநி ஹரிந் மணயஸ் த்வதீயா:
பர்யந்த சாத்வலவதீம் ப்ரதயந்தி நித்யம்
நாராயணஸ்ய ருசிராம் நக ரஸ்மி கங்காம்—-668-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உபநிஷத்துக்கள் என்னும் சோலைகள் கறுத்து நின்று ஸ்ரீரங்கநாதனைச் சூழ்ந்தபடி உள்ளன.
அவற்றை, உனது பச்சைக்கற்கள் மேலும் பச்சையாக மாற்றுகின்றன. ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களைக் காணும்போது,
அவற்றின் வெண்மையான ஒளியானது கங்கை போன்று உள்ளன. உனது மரதகக் கற்களின் ஒளி மூலம்,
அந்தக் கங்கையின் ஓரங்களில் பச்சைப்புல் தரை உள்ளது போன்று நீ அமைக்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி திரு நகங்களின் சோபை நீண்டு வெண்மையாக கங்கை போல் இருக்கிறது
ஸ்ரீ பாதுகையோ பச்சைக் கற்கள் நிரம்பி இருந்து ஒரு பசும் புல் தரையாகக் காண்கிறது
அருகில் வேதாந்தங்கள் ஆகிற அரண்யம் -இந்தக் கல்லின் தேஜஸ்ஸால் பசுமை பெறுகிறது
ஸ்ரீ பாதுகை கங்கைக்கு அழகு தரும் -வேதாந்தங்களுக்கு செழிப்புத் தரும் –

—————————————————————————

உத்திஸ்ய காமபி கதிம் மணி பாத ரக்ஷே
ரங்கேஸ் வரஸ்ய சரணே விநிவேசிதாத்மா
பாயோ ஹரிந் மணிருசா த்ருட பக்தி பந்தா
ப்ராதுஷ்கரோதி பவதீ துளஸீ வநாநி—669-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னை ஸ்ரீரங்கநாதன் சாற்றிக் கொண்டு ஸஞ்சாரம் செய்கின்ற இடம்
எங்கும் பச்சையாகத் தோற்றம் அளிக்கிறது. இதனைக் காணும்போது எப்படி உள்ளது என்றால் –
மிகவும் உயர்ந்த கதியான மோக்ஷத்தை எண்ணி ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் ஒரு ஜீவன் சரணாகதி செய்கிறான்;
அதன் பின்னர் அவன் கைங்கர்யமாகத் துளஸித் தோட்டங்களை அமைக்கிறான்.
இதனைப் போன்ற துளசித் தோட்டங்களை நீ அமைப்பது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் சந்ஜாரதிர்காக உன்னைப் பூணுவார் -நீ ஏதோ ஒரு நற்கதி யாகிற புருஷார்த்திற்காக
உன்னையே பெருமாள் திருவடியில் சமர்ப்பித்துக் கொண்டு விட்டாய் -உனது கற்கள் காட்டப்படும் அமைப்பு ஒரு திட்டமாக அமைந்துள்ளது –
உன் பக்தியும் திடமானது -அத்துடன் நீ உன் மரகதங்களின் பசுமை ஒளி வீசிய இடங்களில் திருத் துளசிப் பாத்தியை வளர்த்து இருக்கிறாய் போலும் –

—————————————————————————–

சேவார்த்தம் ஆகதவதாம் த்ரிதஸேஸ் வராணாம்
சூடா மணி பிரகாச லிஷூ மௌளி ஷூ த்வம்
சம்வர்த்த யஸ்ய ஸூரமர்த்தந பாத ரஷே
ஸ்வேநாஸ்ம கர்ப்ப மகாசா ஸூக பங்க்தி சோபாம்–670-

ஸ்ரீ பாதுகையே தேவர் தலைவர்கள் வந்து வணங்கி நிற்கிறார்கள் -அவர்கள் தலைக்க்ரீடம் ரத்னக் கற்கள் வைத்துக் கட்டியது –
அவைகள் நெற்பயிர் போல் தோன்றும் -ஆகவே பச்சைக் கிளிகள் உட்கார்ந்து இருக்கும் சோபையை நீ வளர்க்கிறாய் உன் மரகதக் கற்களின் கதிர் வீச்சால் –

————————————————————————–

தர பரிணத தூர்வா வல்லரீ நிர் விசேஷை:
மரதக சகலாநாம் மாம்ஸளை: அம்ஸூஜாலை:
பசுபதி வித்ருதா த்வம் தஸ்ய பாணௌ நிஷண்ணம்
மதுரிபு பத ரக்ஷே வஞ்சயஸி ஏண சாபம்—671–

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை சிவன் தனது தலையில் தரித்துக் கொள்கிறான்.
அப்போது உனது மரதகக் கற்களின் ஒளியானது சற்றே தடித்தும், முதிர்ந்தும் உள்ள அருகம்புல் கொடி போன்று தோன்றுகின்றன.
அந்த ஒளியின் மூலமாக நீ, சிவனின் கையில் உள்ள மான் குட்டியை ஏமாற்றுகிறாயோ?

ஸ்ரீ பாதுகையே நீ சிவனால் தரிக்கப் பட்டு இருந்த சமயம் உன் மரகதக் கல் துண்டுகள் வெளியிடும் ஒளியால்
அவற்றைச் சிறிது முதிர்ந்த அருகம் புல் என நினைக்கத் தூண்டுகிறது -சிவன் கையில் இருக்கும் மான் குட்டி மேயக் கருதுகிறது –

————————————————————

ஹரி சரண ஸரோஜ ந்யாஸ யோக்யம் பவத்யா:
ப்ரகுணம் அபி லஷந்த்யோ வர்ண லாபம் துளஸ்ய:
ப்ரதி திநம் உபஹாரை: பாதுகே தாவகாநாம்
மரதக சகலாநாம் ஆஸ்ரயந்தே மயூகாந்—672–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் வைக்கத் தகுந்ததாக உள்ள, உயர்ந்த உன்னுடைய
பச்சை நிறத்தை அடைவதற்குத் துளசி மிகவும் ஆசைப்பட்டவளாக உள்ளாள்.
இதனால், தனது தளங்கள் பலவற்றையும் உனக்கு அன்றாடம் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறாள்.
இதன் மூலம், உனது மரதகக் கற்களின் பச்சை ஒளியைத் தனது தலையில் அடைந்து, என்றும் பசுமையாக நிற்கிறாள்.

ஸ்ரீ பாதுகையே அர்ச்சனையில் திருவடியில் சேர்க்கப் பெற்ற துளசிகள் தினம் தோறும் மரகதத் துணுக்குகளின் ஒளிகளைப் பெறுவது உண்டு –
ஆயினும் திருத் துளசிகள் கேட்பது -ஸ்ரீ பாதுகையின் நிறப் பேற்றை -ஸ்ரீ பாதுகையின் ஜாதிச் சிறப்பை –
அதனால் அன்றோ தானும் பச்சையாய் இருந்தும் தனக்குப் பகவத் பாதத்தைத் தாங்கும் படியான வாய்ப்பு ஏற்பட வில்லை –

—————————————————————

ஹரிதமணி மயூகை: அஞ்சித அத்யாத்ம கந்தை:
திசஸி சரண ரக்ஷே ஜாத கௌதூஹலா த்வம்
தநுஜ மதந லீலா தாரி காணாம் உதாராம்
தமந கதல பங்க்திம் தேவி மௌளௌ ஸ்ருதீநாம்—-673–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தொடர்பு உள்ளதால் எப்போதும் மகிழ்வாக உள்ள உனது
மரதகக்கற்களின் ஒளியானது, உபநிஷத்துக்களின் நறுமணத்தை எப்போதும் தங்களிடம் கொண்டுள்ளன.
ஸ்ரீரங்நாதனுக்கு விளையாட்டுப் பாவைகள் போன்றுள்ள வேதங்களின் தலையில், அந்த மரதகக் கற்களின் ஒளி மூலமாக,
மருக்கொழுந்து மாலையைச் சூட்டி, உபநிஷத்துக்களின் வாசனை எங்கும் வீசும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே வேதங்கள் பெருமாளுக்கு விளையாட்டுப் பாவைகள் -நீ உன் மரகதக் கற்களின் ஒளியால் இவற்றை கௌரவிக்கிறாய்-
பச்சைக் கதிர்கள் மருக் கொழுந்து மாலைகளைச் சாத்துகின்றன -இதில் நீ உத்சாஹம் மிகுந்து காணப்படுகிறாய் –
இதற்கு ஏற்றவாறு அந்த கிரணங்கள் கூட வேத நறு மணம் வீசுகின்றன –

———————————————————————–

அதிகத பஹுசாகை: அஸ்ம கர்ப்ப ப்ரஸூதை:
மதுரிபு பத ரக்ஷே மேசகை: அம்ஸூ ஜாலை:
அநிதர சரணாநாம் நூநம் ஆரண்ய காநாம்
கிமபி ஜநயஸி த்வம் கீச காரண்ய துர்க்கம்– –674-

மது என்ற அசுரனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
பல கிளைகளை கொண்டவையாகவும், பச்சை நிறம் கொண்டவையாகவும் உனது மரதகக்கற்களில் இருந்து வெளிவரும்
ஒளியானது உள்ளது. இந்த ஒளி மூலமாக, வேறு கதியில்லாமல் நிற்கும் உபநிஷத்துக்கள் என்னும் வனவாசிகள்
வசிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான மூங்கில் காடு ஒன்றை நீ அமைக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உன் மரகதக் கற்கள் வெளியிடும் ஒளிக் கூட்டம் -பச்சையாய்ப் பல கிளைகள் உள்ளதாய்
ஒரு மூங்கில் காடாலான அரணை அமைக்கும் –
இது போன்ற அரணில் வேறு கதி அற்ற அரண்ய வாசிகளும் ஆரண்யகம் எனப்படும் வேதாந்தங்களும் பத்திரமாக இருக்க முடியும் –

————————————————————————————————

ப்ரசுர நிகம சாகாம் பாதுகே ரங்கிணஸ் த்வாம்
சரணநக மயூகை: சாரு புஷ்ப அநுபந்தாம்
மரதக தள ரம்யாம் மந்மஹே ஸஞ்சரந்தீம்
கநக ஸரித அநூபே காஞ்சித் உத்யாந லக்ஷ்மீம்—-675-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீ பல வேதங்களையும் கிளைகளாகக் கொண்டுள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்கள்
என்னும் ஒளியால் அந்தக் கிளைகளில் மலர்கள் குவிந்துள்ளன
(அதாவது, திருவடி நகங்களின் ஒளியானது மலர்கள் போன்று உள்ளன என்று கருத்து).
உனது மரதகக் கற்களின் ஒளியானது, அந்தக் கிளைகளில் உள்ள இலைகள் போன்று உள்ளன.
இப்படியாகக் காவேரியினுடைய கரையின் அருகில் ஸஞ்சாரம் செய்யும் நீ, உத்யான லக்ஷ்மி போன்று உள்ளாய் என்றே எண்ணுகிறோம்.

ஸ்ரீ பாதுகையே உன்னை உத்யான லஷ்மி யாக சேவிக்கிறோம்-வேத சாகைகள் என்னும் கிளைகள் படர்ந்துள்ளன –
பெருமாள் திருவடி திரு நக ஒளிக் கதிர்கள் புஷ்பங்கள் போல் உள்ளன –
உன் மரகதக் கல் துண்டுகள் பச்சிலைத் தளிர்கள் போலாம் -பொன்னி ஆற்றின் கரையில் நீ உலவுவது உத்யானத்தை நினையூட்டும் –

———————————————————————————-

நக கிரண நிகாயை: நித்யம் ஆவி: ம்ருணாளே
மஹித ரஸ விசேஷே மேசகை: அம்ஸூபிஸ் தே
பரிகலயஸி ரம்யாம் பாதுகே ரங்க பர்த்து:
பத கமல லமீபே பத்மநீ பத்ர பங்க்திம்—-676–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின் நகங்கள் தாமரைத் தண்டு போன்று உள்ளன.
ஸ்ரீரங்கநாதனை அனுபவிப்பவர்கள், அந்தத் தண்டுகள் உள்ள நீர் போன்று உள்ளனர்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள், தாமரை மலர்கள் போன்று உள்ளன.
அந்தத் தாமரைக் கொடிகளின் இலைகளாக உனது மரதகக் கற்களின் ஒளியானது உள்ளது.

ஸ்ரீ பாதுகையே இன்னொரு காட்சி காணலாகிறது–பெருமாள் திருவடியை எடுத்து வைத்துக் கொண்ட போது திரு நக கிரண சமூஹம்
தாமரைத் தண்டு போலாம் -கொண்டாடப் பெறும் அம்ருத ரசம் கொண்ட திருவடிகளே தாமரை மலர்கள் –
சமீபத்தில் பச்சைக் கற்கள் ஒளி தாமரை இலைகளை வரிசையாகக் காட்டும் –

———————————————————————–

அநிமிஷ யுவதீநாம் ஆர்த்த நாதோப சாந்த்யை:
த்வயி விநிஹித பாதே லீலயா ரங்க நாதே
தததி சரண ரக்ஷே தைத்ய ஸௌதாநி நூநம்
மரதக ருசிபிஸ் தே மங்க்ஷு தூர்வாங்கு ராணி—677-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தேவலோகப் பெண்களுடைய அழுகைக் குரலைக் கேட்ட
ஸ்ரீரங்கநாதன் அவற்றை நீக்க எண்ணி, உல்லாஸமாக உன் மீது தனது திருவடிகளை வைக்கிறான்.
உடனேயே அசுரர்களின் மாட மாளிகைகளில் உனது மரதகக்கற்களின் ஒளியானது பரவி,
எங்கும் புல் முளைத்த நிலை உண்டாவது நிச்சயம் என்று உணர்த்துகிறது.

ஸ்ரீ பாதுகையே தேவ ஸ்திரீகள் வந்து முறையிடவும் அவர்களுக்கு ரஷணம் தர -அவர்கள் ஓலத்தை நிறுத்த
பெருமாள் சங்கல்பித்து உன் மீது திருவடி வைக்க அந்த பொழுது அசுரர் மாளிகை உப்பரிகைகளில் எல்லாம் புல்
முளைத்ததாயிற்று -உனது மரகத மணிகளின் பேர் ஒளியாலே -அவர்கள் அழிந்தனர் –

—————————————————————————————-

விபுல தம மஹோபி: வீத தோஷ அநுஷங்கம்
விலஸத் உபரி நைல்யம் தேவி விஷ்ணோ: பதம் தத்
ப்ருது மரதக த்ருஸ்யாம் ப்ராப்ய பாதாவநி த்வாம்
ப்ரகடயதி ஸமந்தாத் ஸம்ப்ரயோகம் ஹரித்பி:—678–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் அவனை அடைந்தவர்களுடைய பாவங்கள்
அனைத்தையும் நீக்கியபடி உள்ளன. இவை இரவு நேர ஆகாயம் போன்று கறுத்த நிறம் (கருநீலம்) கொண்டதாக உள்ளன.
அந்தத் திருவடிகள் உன்னை அடைந்த காரணத்தால், உனது அழகான பெரிய மரகதக்கற்களின் ஒளியை
அனைத்துப் பக்கங்களிலும் பெறுகின்றன. இதனால் தங்கள் கறுமை நீங்கப்பெற்று,
பகல் பொழுதின் ஆகாயம் போன்று எங்கும் ப்ரகாசித்தபடி உள்ளன.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடியும் ஆகாசமும் -ஒரு படைத்து -இரண்டும் விஷ்ணு பதம் ஆயிற்றே –
மிக அதிகமான காந்தி யுடையதாய் அதனால் தானே தன் ஆஸ்ரிதர்கள் உடைய பாபத் தொடர்பை அறுப்பதாய் -திருமேனி நிறத்தாலே –
மேல்புறம் நீலம் உண்டாக்கி உள்ளது -அத்திருவடி -ஆகசமோ பகல்களில் வெகு விசாலமாய் இருக்கும்
ஆனால் இரவின் தொடர்பு ஏற்பட்டதில் குறுகியும் மேலே கறுத்தும் இருண்டும் இருக்கும் –

—————————————————————————-

பத்மா பூம்யோ: ப்ரணய ஸரணி: யத்ர பர்யாய ஹீநா
யத் ஸம்ஸர்காத் அநக சரிதா: பாதுகே காம சாரா:
தார ஸக்தம் தமிஹ தருணம் ப்ரீணயந்தே ஜரத்ய:
நித்ய ஸ்யாமா: தவ மரதகை: நூநம் ஆம்நாய வாச:—679–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரும், பூமிப்பிராட்டியும் ஸ்ரீரங்கநாதனிடம் எல்லை கடந்த ப்ரீதியுடன்
எப்போதும் உள்ளனர். இவர்கள் போன்று இல்லாமல், தங்கள் விருப்பப்படி போபிகைகள் இவனுடன் இருந்தால் கூட,
சிறிதும் தோஷம் அற்றவர்களாக இருந்தனர். ப்ரணவத்தில் எப்போதும் நிலைக்கின்ற இளமையான ஸ்ரீரங்கநாதனை,
நீண்ட காலமாக வேதங்கள் என்னும் கிழவிகள் போற்றியபடி உள்ளனர். அவர்கள் மீது உனது மரகதக்கற்களின்
ஒளியானது வீசியபடி நின்று, அவர்களைச் சிறுபெண்களாக மாற்றி, சந்தோஷம் அடையச் செய்கின்றன என்பது உறுதி.

ஸ்ரீ பாதுகையே எந்த ஒரு புருஷன் இடத்தில் பிராட்டிகளின் காதல் போக்கு தனக்கு உவமை இல்லாததும் தங்கு தடை அல்லது
வரையறை ஏதும் இல்லாததோ -எவனுடைய சேர்த்தி இஷ்டப்படி அதிக்ரமச் செயல்களைச் செய்தவருக்கும் அவர்களைக் குற்றம் அற்றவராக்கி
முக்தர்களாகக் காம சாரர்கள் ஆக்குமோ -பத்நியுடன் போகங்களில் ஈடுபாடு கொண்ட பிரணவத்தில் பொருந்தி உள்ள
அந்த நித்ய யுவாவான பரம புருஷனை மூத்த கிழங்களான-அநாதி யான வேத வாக்குகள் புகழும் –
அவ்வேத வாக்குகள் உன் மரகதங்களால் நித்யப் பச்சை நிறம் உடையவாய் நித்ய யுவதிகளாய் ஆகி அவனை ரமிக்கச் செய்யும் களிப்பிக்கும் –

————————————————————-

ஸ்தல கமலநீவ காசித்
சரணாவநி பாஸி கமல வாஸிந்யா:
யத் மரதக தள மந்யே
ய: கச்சிதஸௌ ஸமீக்ஷ்யதே சௌரி:-680–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாமரையில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஏற்ற ஒரு நிலத் தாமரை வனமாக நீ உள்ளாய்.
அந்தத் தாமரை வனத்தின் இலைகளாக உனது மரதகக் கற்களின் பச்சை ஒளி உள்ளது.
அந்த இலைகளின் நடுவே ஸ்ரீரங்கநாதன் ஒரு இலை போன்று காணப்படுகிறான்.

ஸ்ரீ பாதுகையே மஹா லஷ்மி தாமரை மலரையே விரும்பி அதிலேயே இருப்பாள் –
நீ அவளுக்கு ஒரு நிலத் தாமரைக் காடு போல் ஆகிறாய் -எங்கனே எனில் உன் மரகதம் ஒவ்வொன்றும் ஒரு தாமரையிலை போலே
ஒரு கொடி மேல் நோக்கி உள்ளதே -அதுவே மரகத மணி வர்ணனான எம்பெருமான் –
பிராட்டிக்கும் இடம் வரும் ஒரு தாமரைப் பூ மலர்ந்து உள்ளதில் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-18-முக்தா பத்ததி -முத்துப் படலம் -ஸ்லோகங்கள் -611-660–

March 17, 2016

இங்கு உள்ள முக்தா என்ற பதம் முத்துக்களைக் குறிக்கும்.
அதாவது, பாதுகையில் உள்ள முத்துக்கள் பற்றிக் கூற உள்ளார்.
அல்லது, முக்தா என்றால் முக்தி பெற்ற ஆத்மாக்கள் என்றும் கொள்ளலாம்.
இவர்கள் நித்யமாக நின்று ஸ்ரீரங்கநாதனுக்குக் கைங்கர்யம் செய்வதைக் கூறுவதாகவும் கொள்ளலாம்.

—————–

பத்தாநாம் யத்ர நித்யாநாம்
முக்தாநாம் ஈஸ்வரஸ்ய ச
ப்ரத்யக்ஷம் சேஷ சேஷித்வம்
ஸா மே ஸித்த்யது பாதுகா—-611–

எந்த ஒரு பாதுகையில் இழைக்கப்பட்டுள்ள அழிவற்ற முத்துக்களின் சேஷத்வமும் (அடிமைத்தன்மையும்),
எந்த ஒரு பாதுகையின் மீது எப்போதும் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாதனுக்கு சேஷித்வமும் (எஜமானத்தன்மை)
வெளிப்படுகிறதோ, அந்தப் பாதுகை எனக்குக் கைக் கூட வேண்டும்.

பத்தர் நித்யர் முக்தர் என்ற மூன்று வகை ஜீவர்களுக்கும் எம்பெருமானுக்கும் சேஷ செஷித்வ சம்பந்தம் இருக்கிறது
என்பதை எந்த ஸ்ரீ பாதுகை தன்னிடத்தில் பத்தமான -இழைக்கப் பட்டுள்ள நித்தியமான அழிவில்லாத முத்துக்களுக்கும்
இவை ஸ்ரீ பாதுகையில் இருப்பதால் ஸ்ரீ பாதுகை சேஷ பூதமானதால் -பகவானுக்கும் சேஷ சேஷித்வ பாவத்தைப்
ப்ரத்யஷமாகத் தெரிவிகின்றதோ -அந்த ஸ்ரீ பாதுகை எனக்கு பிராப்யம் ஆகட்டும் –

———————————————————————————

தவ ரங்க துரீண பாத ரக்ஷே
விமலா மௌத்திக பத்ததிர் விபாதி
ஸுஹ்ருதி த்வயி ஸாதித அபவர்க்கை:
ஸமயே ஸங்க்ரமி தேவ ஸாது க்ருத்யா:—-612–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தூய்மையாக உள்ள உனது முத்துக்களின் வரிசை
வெண்மையாகக் காணப்படுகிறது. இதனைக் காணும்போது, மோக்ஷம் பெற்றவர்கள்,
மோக்ஷம் செல்லும் நேரத்தில் மிகவும் அன்புடன் உன்னிடம் அளித்துவிட்டுச் சென்று அவர்களது புண்ணியங்கள் போன்று உள்ளன.

மோக்ஷம் செல்பவர்கள் தங்கள் பாவ புண்ணியங்களைக் கைவிட்ட பின்னரே மோக்ஷம் செல்கிறார்கள்.
சாட்யாயநசாகையில் – தஸ்ய புத்ரா தாயம் உபாஸந்தி ஸுஹ்ருத ஸாதுக்ருத்யாம் த்விஷந்த: பாபக்ருத்யாம் –
மோக்ஷம் செல்லும் உபாஸகனின் புத்திரர்கள் அவனது செல்வத்தையும், நண்பர்கள் புண்ணியத்தையும்,
பகைவர்கள் பாவத்தையும் அடைகின்றனர் – என்று கூறியது.
இங்கு மோக்ஷம் செல்பவர்களின் நண்பனாக பாதுகை உள்ளதால், அவர்களின் புண்ணியங்கள் பாதுகையிடம் சேர்ந்து விடுகின்றன.
புண்ணியத்தின் நிறம் வெண்மை என்பதால், அவை முத்துக்கள் போன்று உள்ளன என்றார்.

ஸ்ரீ பாதுகையே உனது நிர்மலமாய் உள்ள முத்துக்கள் வரிசை மோஷம் பெற்றவர்களால் அந்த உரிய சமயத்தில்
தம் புண்ய கிருத்யங்கள் ஸூஹ்ருத்தான உன்னிடத்தில் -ஸூஹ்ருத சாதுக்ருத்யம் த்விஷந்த பாபக்ருத்யாம் -என்று
உபநிஷத் ஓதியபடி சேர்க்கப்பட அந்த புண்யங்கள் தாமே இப்படிக் காண்கிறது –

———————————————————————————

சரணாகத ஸஸ்ய மாலிநீ இயம்
தவ முக்தாமணி ரச்மி நிர்ஜ்ஜரௌகை:
நநு ரங்கதுரீண பாதரக்ஷே
ஜகதீ நித்யம் அதைவ மாத்ருகா அபூத்—-613-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இந்த உலகம், ஸ்ரீரங்கநாதனே கதி என்றபடி
உள்ள ப்ரபன்னர்களைப் பயிர்களாகக் கொண்டுள்ளது. உனது முத்துக்களின் ஒளியானது,
மலை அருவிகளின் ப்ரவாஹங்களுடன் ஓடி வந்து இந்தப் பயிர்களில் பாய்கிறது.
ஆக இந்தப் பூமி மழையை எதிர்பாராமல் உள்ளதாயிற்று.

ஸ்ரீ பாதுகையே உனது முத்து மணி வரிசைகளில் இருந்து கிரணங்கள் நீர் வீழ்ச்சி போல் விழ அந்தப் பெருக்கு பிரபன்னர்கள்
ஆகிற பயிர்களுக்கு கிடைக்க அதிலிருந்து இந்த பூமி மழைக்கு வானத்தைப் பாராத பூமியாகி விட்டது –
பிரபன்னர்கள் தைவத்தின் கருணை மழைக்காக வானத்தைப் பார்த்து ஏங்க வேண்டியது இல்லை -என்றவாறு –

————————————————————————-

அதி விஷ்ணு பதம் பரிஸ் புரந்தீ
தவ முக்தா மணி நிர்மல ப்ரகாசா
பரிபுஷ்யஸி மங்களாநி பும்ஸாம்
ப்ரதிபத் சந்த்ர கலா இவ பாதுகே த்வம்—-614–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள நீ, உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்களின்
ஒளியினால் வெண்மையாகக் காட்சி அளிக்கிறாய். இப்படியாக உள்ள நீ, ப்ரதமையில் உதிக்கும் சந்திரன் போன்று,
அனைத்து உயிர்களுக்கும் நன்மை அளித்தபடி இருக்கிறாய்
(ப்ரதமை என்பது பௌர்ணமிக்கு மறுநாள் ஆகும். அந்த நாளில் சந்த்ரன் பிறையாக இருக்கும்.
சந்த்ரனின் பிறையைக் கண்டால் நன்மை உண்டாகும்).

ஸ்ரீ பாதுகையே –நீ பெருமாள் திருவடியில் விளங்குகிறாய் -நிர்மலமான புது முத்துக்களால் நிர்மலப் பிரகாசத்துடன் விளங்குகிறாய் –
அதி விஷ்ணு பதம் -ஆகாசத்தில் தெரியும் புதிய முத்துப் போலே தெளிவாகப் பிரகாசிக்கும் பிரதமைச் சந்திரன் –
ஒரு கலை மட்டும் உடைய சந்தரன் போல் ஜனங்களுக்கு சுபம் வழங்குகிறாய்-நீ தான் சந்திரனின் முதல் கலை போலும் –

———————————————————————————–

நிஹிதா நவ மௌத்தி காவளிஸ் த்வாம்
அபித: காஞ்சந பாதுகே முராரே
நக சந்த்ர மஸாம் பத ஆஸ்ரிதாநாம்
ப்ரதிமா சந்த்ர பரம் பரேவ பாதி—-615-

தங்கமயமான பாதுகையே! உன்னுடைய அனைத்துப் பக்கங்களிலும் வெண்மையான முத்துக்கள் வரிசையாக இழைக்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையைக் காணும்போது, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்ற ஆகாயத்தை அடைந்துள்ள
அவனது திருவடி நகங்கள் என்னும் சந்திரன்களின் ப்ரதிபிம்பம் போன்று உள்ளது.

ஸ்ரீ தங்கப் பாதுகையே உனது நாற்புறத்திலும் இழைத்து இருக்கிற புதிய முத்துக்கள் வரிசை பெருமாள் திருவடி
திரு நகங்களுக்கு அவையே சந்திரர்கள் போல் இருப்பதால் எதிர் சந்திர பிம்பங்களாகக் காட்சி அளிக்கும்-

———————————————————————

ஸமதாம் உபைதி வபுஷாபி ஸதா
பவதீய மௌத்திக மஹஸ் சுரிதா
ஹரி பாதுகே ஹரி பதஸ் உத்பவயா
கநகா பகா ஸுர புரா பகயா—616-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய வெண்முத்துக்களுடன் எப்போதும் காவேரி கலந்துள்ளது.
இதனால் வெண்மையாகக் காணப்படும் காவேரி, ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் இருந்து வெளிப்பட்ட கங்கையை,
தனது நிறத்திலும் ஒத்துள்ளது.

ஸ்ரீ பகவத் பாதுகையே -காவேரி பெருமாள் திருவடியில் இருந்து உண்டான கங்கையோடு புனிதத் தன்மையில் சமம் –
எப்போதுமே இப்போது உன் முத்துக்களின் அழகிய ஒளி கலந்து காவேரி நீர் ஒரு வெண்மையைப் பெறுவதால்
காவேரிக்கு கங்கையோடு ரூபத்திலும் ஒற்றுமை ஏற்படலாயிற்று –

————————————————————————–

தவ ரங்க சந்த்ர தப நீய பாதுகே
விமலா ஸமுத் வஹதி மௌக்தி காவளி:
சரணார விந்த நக சந்த்ர மண்டல
ப்ரணய உபயாத நவ தாரக ருசிம்—-617-

ஸ்ரீரங்க விமானத்தில் சந்திரன் போன்று விளங்கும் ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்கள்
சந்திரன் போன்று உள்ளன. அந்த சந்த்ர மண்டலத்தின் மீது மிகவும் ப்ரியத்துடன் வந்து நிற்கும் புதிய நக்ஷத்ரங்கள்
போன்று வெண்மையான உனது முத்துக்களின் வரிசை காணப்பட்டது.

ஸ்ரீ ரங்க நாதனின் தங்கப் பாதுகையே நிர்மலமான முத்து வரிசை உன்னிடத்தில் விளங்குவது
பெருமாள் திருவடித் தாமரை திரு நகங்கள் ஆகிற சந்த்ரங்கள் பல உள்ள ஒரு சந்திர மண்டலம் –
உன் முத்து வரிசை இந்த சந்த்ரன்களுடன் ஆசையுடன் நெருங்கி வந்து தாம் நஷத்ரங்கள் ஆகின்றன –

——————————————————————-

சந்த்ர ஸுட மகுடேந லாளிதா
சாரு மௌக்திக மயூக பாண்டரா
ரங்க நாத பத பத்ம ஸங்கிநீ
லக்ஷ்யஸே ஸுரதுநீவ பாதுகே—-618-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீ சிவனால் பூஜிக்கப்படுகிறாய். உனது முத்துக்களின் வெண்மையான ஒளி காரணமாக,
நீயும் வெண்மையாகத் தோற்றம் அளிக்கிறாய். ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளை எப்போதும்
உன்னிடம் வைத்துள்ளாய். ஆக, உன்னைப் பார்த்தால் கங்கை போன்றே உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே உன்னிடத்தில் அழகிய முத்துக்கள் வரிசை தன் சோபையில் வெளுத்த கங்கை போல் இருக்கிறது –
சிவன் முடி தாழ்த்தி பூஜித்து இந்த சோபை அவன் தலையோடு சேர்ந்தது –
பெருமாள் திருவடித் தாமரையின் சம்பந்தமும் உடையதாய் இருக்கிறது –
ஆகவே நீ கங்கை போல் ஆகிறாய் –

————————————————————

யே பஜந்தி பவதீம் தவைவ தே
மௌக்திக த்யுதி விகல்ப கங்கயா
வர்த்த யந்தி மது வைரி பாதுகே
மௌளி சந்த்ர சகலஸ்ய சந்த்ரிகாம்—-619-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! யார் உன்னை எப்போதும் ஆராதித்தபடி உள்ளனரோ,
அவர்கள் தங்கள் தலைகளில் உன்னுடைய முத்துக்களின் வெண்மையை, கங்கையைத் தலையில் ஏந்தியது போன்று நிற்கிறார்கள்.
இப்படியாக அவர்கள் தலையில் கங்கையும், போலியாக ஒரு சந்த்ரனும் உள்ளதாகத் தோன்றுகிறது
(அதாவது அவர்கள் சிவன் பட்டம் பெறுகின்றனர்).

ஸ்ரீ மது ஸூதன ஸ்ரீ பாதுகையே எவர் உன்னை சேவிக்கிறார்களோ அவர்கள் ருத்ரத்வம் பெறுகிறார்கள் –
எப்படி உன்னுடையதேயான முத்துக்களின் வரிசை கங்கையாக அவர்கள் தலையில் பெருகி நிற்குமே –
அதனால் ருத்ர ஸ்தானம் பெற்று மறுபடி வணங்குவார்களே-அப்போது
முத்து ஒளி அவர்கள் தலையில் உள்ள சந்திர கலையில் சோபையை அதிகப்படுத்தும் –

———————————————————————————–

முக்தா மயூகைர் நியுதம் த்வதீயை:
ஆபூரயிஷ்யந் அவதம்ஸ சந்த்ரம்
பிபர்தி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
தேவோ மஹாந் தர்சித ஸந்நதிஸ் த்வாம்—-620-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தன்னுடைய தலையில் சந்த்ரனை ஆபரணமாக அணித்த சிவன்,
அந்தச் சந்த்ரனின் வெண்மையை முழுமையாக்கும் பொருட்டு, உன்னை வணங்கியபடி உள்ளான்.
உனது முத்துக்களின் வெண்மையான ஒளி மூலம், சிவனின் தலையில் உள்ள அந்தச் சந்திரன் முழுமை அடைகிறது.

ஸ்ரீ பாதுகையே மஹா தேவனான சிவன் உன்னுடைய முத்து ஒளிகளால் தன் தலைச் சந்தரனைப் பூர்ணம் ஆக்கிக்
கொள்வதற்காகவே உன்னை வணங்கி உன்னைத் தலையில் தரிக்கிறானோ -இருக்கும் -நிச்சயம் –

———————————————————————————–

பரிஷ்க்ருதா மௌக்திக ரஸ்மி ஜாலை
பதஸ்ய கோப்த்ரீ பவதீ முராரே:
பவதீ அநேகோர்மி ஸமாகுலாநாம்
பும்ஸாம் தமஸ் ஸாகர போத பாத்ரீ—-621-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றியபடி உள்ள நீ, உனது முத்துக்களின்
ஒளி என்னும் கயிறு மூலம் கட்டப்பட்டவள் போன்று உள்ளாய். எல்லையற்ற துன்ப அலைகளால் வருந்தும் பக்தர்களுக்கு,
அந்த ஸம்ஸாரக்கடலில் இருந்து கரையேற உதவும் கப்பல் போன்று நீ உள்ளாய்.

இங்கு “எல்லையற்ற துன்ப அலைகள்” என்பது பசி, தாகம், துக்கம், அறியாமை, வயோதிகம், மரணம் என்ற ஆறும் ஆகும்.

ஸ்ரீ பாதுகையே நீ இந்த இருள் தருமா ஞாலம் ஆகிற கடலைக் கடக்க உதவும் தோணி யாகிறாய் –
மனிதர் ஷடூர்மி என்கிற பசி தாகம் போன்ற பீடைகளால் தவிக்கிறார்கள் -அவைகளே இக்கடலின் அலைகள் –
நீயோ பெருமாள் திருவடியை ரஷிப்பவள்-முத்து ஒளிக் கதிர்கள் கயிறுகள் ஆகி இத் தோணியை நன்கு கட்டி வைத்துச்
செப்பனிட்டு வைத்து இருக்கின்றன -ஸ்ரீ பாதுகை யாகிற தோணி கொண்டு தான் பரம புருஷார்தம் பெற முடியும் என்றவாறு –

———————————————————————–

ரங்கேச பாத ப்ரதிபந்ந போகாம்
ரத்நாநு வித்தைர் மஹிதாம் சிரோபி:
முக்தா அவதாநாம் மணி பாதுகே த்வாம்
மூர்த்திம் புஜங்காதிபதே ப்ரதீம:—-622-

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியின் மென்மையை நீ அனுபவித்தபடி சுகமாக உள்ளாய்.
இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட க்ரீடங்களை உடைய தேவர்களால் எப்போதும் கொண்டாடப்பட்டபடி உள்ளாய்.
உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்களின் ஒளி காரணமாக வெண்மையாகவும் உள்ளாய்.
இப்படியாக உன்னைக் காணும் போது, நாகங்கள் அனைத்திற்கும் அரசனாகிய ஆதிசேஷனின் திருமேனி என்றே எண்ணுகிறோம்.

ஸ்ரீ மணி பாதுகையே -உன்னை திரு அநந்த ஆழ்வான் என்றே கருதலாகும் -உனக்கு ஸ்ரீ ரங்கேச திருப் பாதத்துடன்
கிடைத்த ஆனந்தானுபவம் உண்டு -அவன் பூஜ்யரான ஸ்ரீ ரங்கேச ருடைய ச்லேஷானுபவம் பெற்றவன் -அவருடன் சேரும்
உடலை உடையவன் -இருவருக்கும் மேல் பாகத்தில் ரத்னங்கள் பூஷணம் பெருமை தருவது –
நீ முத்துக்களால் வெளுத்து இருக்கிறாய் -அவன் முத்துப் போல் வெளுத்தவன் –

———————————————————————

முகுந்த பாதாவநி மௌக்திகை: தே
ஜ்யோத்ஸ் நாமயம் விஸ்வம் இதம் திவாபி
வைமாநிகாநாம் ந பஜந்தி யேந
வ்யகோசதாம் அஞ்ஜலி பத்ம கோசா:—-623–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்களின் ஒளி காரணமாக, இந்த உலகத்தின் பகல் நேரத்திலும்
சந்த்ரன் உள்ளது போன்றே தோற்றம் உள்ளது. இதனை எப்படி உணர முடிகிறது என்றால் –
தேவர்களின் கைகுவித்தல் என்ற தாமரை மொட்டுக்கள், மலராமலேயே உள்ளதன் மூலம் அறியலாம்
(அதாவது, தேவர்கள் பாதுகையை நோக்கிக் குவித்த கையை எடுப்பதே இல்லை, எப்போதும் அஞ்ஜலி முத்திரையில் உள்ளனர்).

ஸ்ரீ முகுந்த ஸ்ரீ பாதுகையே உனது முத்துக்கள் நிலாப் போலே பிரகாசித்துப் பகலை இரவாக்கி விடுகின்றன –
அதனால் தேவர்கள் தம் அஞ்சலியாகக் குவித்து வைத்து இருந்த தாமரை மொட்டுக்கள் மலர்ந்து பிரிவது இல்லை
அவர்கள் அஞ்சலியை நிறுத்திக் கைகளைப் பிரிப்பது இல்லை என்றவாறு –

———————————————————————–

ஸமாஸ்ரிதாநாம் அநகாம் விஸூத்திம்
த்ராஸ வ்யபாயம் ச விதந்வதீ த்வம்
ஸாயுஜ்யம் ஆபாதயஸி ஸ்வகீயை:
முக்தாபலைர் மாதவ பாதுகே ந:—-624–

ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்த ஸ்ரீ ரங்கநாதனின் பாதுகையே! உன்னையே அண்டியபடி நிற்கின்ற எங்களுக்கு,
பாவங்களின் தொடர்பு இல்லாத தன்மையையும் (வெண்மை), பயம் இல்லாத தன்மையையும் நீ ஏற்படுத்துகிறாய்.
இதன் மூலம் உன்னுடைய முத்துக்கள் போன்றே எங்களையும் நீ மாற்றி, இன்பமாக இருக்கும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ மாதவ ஸ்ரீ பாதுகையே உன்னை ஆஸ்ரயித்தவர்களான எங்களுக்கும் முத்துக்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை –
சமத்துவத்தை உண்டாக்குகிறாய் -நாங்கள் முக்தாபலம் பெறுகிறோம் -அனுபவம் -கைங்கர்யம் -இவை பல ரூபம்
உபாயம் ஒன்றும் இல்லை என்று கருதுபவர் ஆகிறோம் -குற்றம் அற்ற பரிசுத்தி -அச்சம் இல்லாமை -தராசம் என்ற
ரத்ன தோஷம் இல்லாமை -எங்களுக்கும் முத்துக்களுக்கும் இடையே இவ்வாறான சாயுஜ்யம் –

——————————————————————-

அவைமி பாதாவநி மௌக்திகாநாம்
கீர்ணாம் உதக்ரை: கிரண ப்ரரோஹை:
யாத்ரா உத்ஸவார்த்தம் விஹிதாம் முராரே:
அபங்குராம் அங்குர பாலிகாம் த்வாம்—-625–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளியானது மேல் முகமாய் எழுந்து நிற்கிறது.
இதனைக் காணும்
போது, ஸ்ரீரங்கநாதனின் உற்சவ காலங்களில் உண்டாக்கப்படும் உறுதியான நவதானிய முளைகள் கொண்ட பாலிகைகள் போன்று நீ உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே உனது முத்துக்கள் தம் ஒளி முனைகள் எழுந்தனவாகக் காட்சி யளிப்பதைப் பார்த்தால்
இது பகவான் யாத்ர உத்ஸவதிற்காக பிரமோத்ஸவாதிகள் -போன்றவற்றுக்காக விசித்ரமான அங்குரார்ப்பணமான
நவதான்ய பாலிகை வளர்ப்பு -அதுவும் நித்யமானதொன்று -என்று எண்ணுகிறேன் –

——————————————————————————-

சிவத்வ ஹேதும் ஸகலஸ்ய ஜந்தோ:
ஸ்ரோதோ விசேஷை: ஸுபகாம் அஸங்க்யை:
முக்தா மயூகை: ஸுர ஸிந்தும் அந்யாம்
புஷ்ணாஸி ரங்கேஸ்வர பாதுகே த்வாம்—-626–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளி மூலமாக அனைத்து உயிர்களுக்கும் தூய்மையை அளிக்கிறாய்,
மங்களங்களை அளிக்கிறாய் (இதனையே, சிவனாய் இருக்கும் தன்மையை அடைவிப்பாய் என்று கூறுவர்).
ஆக எண்ணற்ற அலைகள் வீசுகின்ற புதியதான ஒரு கங்கையை நீ திருவரங்கத்திலே உண்டாக்குகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் திருவடியில் இருந்து பெருகிய அந்தக் கங்கை ருத்ரன் ஒருவனையே சிவன் ஆக்கியது –
உன் முத்து ஒளிகள் ஆகிற பன்முக ப்ரவாஹம் கொண்ட இந்த கங்கை சர்வ ஜந்துக்கல்க்கும் சிவத்வம்
பாவனத்வம் -மங்களத் தன்மை அளிக்கும் -அப்படி ஒரு மஹா கங்கையை வளர்க்கிறாய் –

———————————————————————–

ரங்கே சயாநஸ்ய பதாவநி த்வாம்
லாவண்ய ஸிந்தோ: ஸவிதே நிஷண்ணாம்
பரிஸ்புரத் மௌக்திக ஜால த்ருஸ்யாம்
ப்ரஸூதி பிந்நாம் ப்ரதியந்தி ஸூக்திம்—-627–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் சயனித்துள்ள பெரியபெருமாள் அழகான கடல் போன்றுள்ளான்.
அந்தக் கடலின் அருகில் காணப்படும் முத்துக்களின் கூட்டங்களால் நீ ப்ரகாசிக்கிறாய்.
இப்படியாக உள்ள உன்னைக் காணும்போது, ப்ரசவம் காரணமாகப் பிளந்த முத்துச்சிப்பி போன்று உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்கத்தில் சயனித்து இருக்கும் அழகுக் கடலின் அருகே நீ ஒரு முத்துச் சிப்பி பிளந்து முத்துக்களை
வெளியிட்ட நிலையில் தோற்றம் அளிக்கிறாய்-நீ லாவண்ய சிந்துவின் கரையில் –
சாதாரண முத்துச் சிப்பிகள் லவன சமுத்ரக் கரையில் -என்றவாறு –

—————————————————————-

அவைமி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
முக்தா பலாநி த்வயி நிஸ்துலாநி
தேநைவ கல்பாந்தர தாரகாணாம்
உப்தாநி பீஜாநி ஜகத் விதாத்ரா—-628–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட வெண்மையான வட்டமான
முத்துக்கள் காண்பதற்கு எப்படி உள்ளன என்றால் – அடுத்து வர உள்ள கல்பங்களில் தோன்றவுள்ள
நக்ஷத்ரங்களுக்கு, ஸ்ரீரங்கநாதனால் விதைக்கப்பட்ட விதைகள் என்றே தோன்றுகின்றன.

ஸ்ரீ பாதுகையே உன்னிடத்தில் உள்ள உருண்டையான முத்துக்கள் ஜகத் ஸ்ரஷ்டாவான அந்த ஸ்ரீ ரங்க நாதன் வரும்
கல்பங்களில் நஷத்ரங்களாக இருக்கப் போகிறதற்கு இப்போது விதைத்த விதைகள் என்று எனக்குத் தோன்றும் –

————————————————————————–

விக்ரம்ய மாணம் அபவத் க்ஷணம் அந்தரிக்ஷம்
மாயா விநா பகவதா மணி பாத ரக்ஷே
வ்யோமாபகா விபுல புத்புத தர்ஸ நீயை:
முக்தாபலைஸ் தவ சுபை: புநருக்ததாரம்—-629–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! வியக்கத்தக்க செயல்கள் செய்யும் ஸ்ரீரங்கநாதனால் முன்பு
இந்த உலகம் அளக்கப்பட்டபோது, அவன் தனது திருவடியை மேல் நோக்கி உயர்த்தினான்.
அப்போது உனது முத்துக்கள் ஆகாயத்தில் காணப்படும் கங்கையின் நீர்க்குமிழிகள் போன்று ப்ரகாசித்தன.
அந்த ஒரு நேரத்தில், விண்ணில் இருந்த நக்ஷத்ரங்கள், உன்னுடைய முத்துக்களுடன் சேர்ந்து கொண்டு,
இருமடங்காக உள்ள நக்ஷத்ரக் கூட்டம் போன்று தோன்றின.

ஸ்ரீ மணி பாதுகையே வஞ்சகனாக வேஷம் தரித்து வந்த ஸ்ரீ வாமனாவதாரப் பெருமாளால் உலகம் அளக்கப் பட்டது –
ஓரடி வானுக்கு போயிற்று ஒரு ஷணம் தான் -அந்த ஒரு ஷணத்தில் அப்போது உன்னில் இருந்த முத்துக்கள்
ஆகாச கங்கையின் பெரிய நீர்க் குமிழிகள் போல அழகாக நஷத்ரங்கள் போலக் காட்சி அளித்தன –
நஷத்ரங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாயிற்று -ஷண காலம் -உடன் திருப்பாதம் பிரம்ம லோகம் சென்றது –

—————————————————————————

லக்ஷ்மீ விஹார ரஸிகேந பதாவநி த்வம்
ரக்ஷா விதௌ பகவதா ஜகதோ நியுக்தா
ஸத்த்வம் ததர்ஹம் இவ தர்ஸ யஸி ப்ரபூதம்
முக்தா மயூக நிகரேண விஸ்ருத்வரேண—-630–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தான் ஸ்ரீரங்கநாச்சியாருடன் விளையாடும் பொருட்டு, ஸ்ரீரங்கநாதன்
இந்த உலகைக் காப்பாற்றும் பொறுப்பை உன்னிடம் அளித்து, உன்னை நியமித்தான்.
அந்தச் செயலுக்கு ஏற்ற தகுதியான அதிகமான ஸத்வ குணம் உனக்கு உள்ளது என்பதை,
எங்கும் பரவி நிற்கும் உனது முத்துக்களின் ஒளி மூலமாக உணர்த்துகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் அப்படி ஒன்றும் வஞ்சகர் அல்லர் -நீயே சத்வ குணம் உடையவள் –
முத்துக்களின் ஒளி ப்ரவாஹம் அதை எடுத்துக் காட்டுமாம் -பெருமாள் பிராட்டி யுடன் லீலை செய்வதில் ருசி காட்டி
உலக ரஷணத்தை உன்னிடம் ஒப்புவித்துள்ளார்
ஆகவே நீ அவரை லஷ்மீ விஹாரத்துக்கு அனுமதித்து தடை வாராமைக்காக உக்தி வகுத்து
சத்வ குணம் மலியச் செய்கிறாய் போலும் –

————————————————————————————

பாத அர்ப்பணேந பவதீம் ப்ரதிபத்யமாநே
ஸ்ரீரங்க சந்த்ரமஸி ஸம்ப்ருத மௌக்திக ஸ்ரீ:
அங்கீ கரோஷி சரணாவநி காந்திம் அக்ர்யாம்
உத்பித்யமாந குமுதேவ குமத்வதீ த்வம்—-631–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கத்தின் சந்த்ரனாகிய ஸ்ரீரங்கராஜன், தனது திருவடிகளில் உன்னைச்
சேர்த்துக் கொள்ளும் போது, அவனது திருவடிகளின் ஒளியானது சந்த்ரனின் ஒளி போன்று உன் மீது விழுகிறது.
அப்போது உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்கள் அனைத்தும், ஆம்பல் மலர் போன்று மலர்கின்றன.
இதனைக் காணும்போது நீ ஆம்பல் தடாகம் போன்ற அழகை அடைகிறாய்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க சந்தரன் உன்னில் திருவடிகளை நுழைத்துச் சேர்வதில் மகிழ்பவன் –
சந்திர கிரணங்களும் வெளியிடப் பெறும்-அப்படி உன்னைக் கொள்ளும் போது முத்துக்கள் சோபை பெரிதாகிறது –
சந்திர கிரணங்களால் மலர்விக்கப் பட்ட ஆம்பல் மலர்களுடைய ஓர் ஆம்பலோடை போல் ஆகிறாய் நீ –

————————————————————————–

த்ரயந்த ஹர்ம்யதல வர்ண ஸுதாயிதேந
ஜ்யோத்ஸ்நா விகல்பித ருசா மணி பாதுகே த்வம்
முக்தாமயீ முரபித் அங்க்ரி ஸரோஜ பாஜாம்
வர்ணேந தே சமயஸீவ ஸதாம் அவர்ணம்—-632-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது முத்துக்களின் ஒளி காரணமாக வேதாந்தங்கள் என்னும்
உப்பரிகைகளுக்கு வெள்ளை அடிக்கும் சுண்ணாம்பு போன்று உள்ளாய். உன்னை வணங்குபவர்கள் மீது
இந்த நிறமானது, நிலவின் ஒளி போல் பரவுகிறது. இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் பணிகின்றவர்களுடைய
தோஷங்களை நீ விலக்குகிறாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே நிறைய முத்துக்களை யுடையவளாய் விளங்குகிறாய் -உனது வர்ணம்
நிலவுதானோ என்று எண்ண வைக்கும் -நீ பெருமாள் திருவடிகளை ஆஸ்ரயிப்பவரின் அழுக்கை அவர்க்கு
ஏதாவது அபவாதம் இருக்குமாயின் அதை நீக்கி விடுகிறாய் -இந்த வெளுப்பு சோபையாலே உன் சுத்த வெண்மை
வேதாந்தங்கள் ஆகிற உப்பரிகைக்கு வெள்ளை அடிக்க உதவுமே —

—————————————————————————————

வைகுண்ட பாத நக வாஸநயேவ நித்யம்
பாதாவநி ப்ரஸுவதே தவ மௌக்திகாநி
அச்சிந்ந தாபசமநாய ஸமாஸ்ரிதாநாம்
ஆலோக மண்டல மிஷாத் அம்ருத ப்ரவாஹம்—633–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் இருந்து கங்கை உண்டானது.
அந்தத் திருவடிகளின் நகங்களுடன் உனக்கும் உன்னில் காணப்படும் முத்துக்களுக்கும் பழக்கம் உண்டானது.
இதனால் நீ செய்வது என்ன – ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைபவர்களுடைய, யாராலும் விலக்க இயலாமல்
உள்ள வேதனைகளை தீர்ப்பதற்காக, உனது முத்துக்களின் ஒளியை அமிர்த வெள்ளம் போன்று எங்கும் பரவச் செய்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே உனது முத்துக்கள் சரணம் அடைந்தவர்களின் அநாதி காலமாக இருந்து வரும் தாபத்ரயத்தைப் போக்கும் –
இது பெருமாள் திருவடி திரு நகங்களின் வாசனைத் தாக்கத்தால் போலும் -திரு நகங்களில் இருந்து அமிருதம் பெருகுமாம் –
முத்துக்களுக்கு ஒரு நித்யமான ஒளி வட்டம் இருப்பதாகச் சொல்வது வெறும் பேச்சுப் போலும் –
உண்மையில் அமிருத பிரவாஹமே தருகிறாயே –

——————————————————————————————

ராமாநுவ்ருத்தி ஜடிலே பரதஸ்ய மௌளௌ
ரங்காதிராஜ பதபங்கஜ ரக்ஷிணி த்வம்
ஏகாதி பத்ரித ஜகத் த்ரிதயா த்விதீயம்
முக்தாம்ஸூபி: க்ருதவநீ நவம் ஆதபத்ரம்

ஸ்ரீரங்கராஜனின் தாமரை போன்ற திருவடிகளைக் காப்பவளே! மூன்று உலகங்கள் முழுவதும் ஒரே குடையின் கீழ் இருந்தன.
இராமனைப் போன்றே ஜடை தரித்த பரதனின் தலையில், உனது முத்துக்களின் ஒளி மூலமாக,
புதிதான இரண்டாவதாக ஒரு குடையை நீ அமைத்தாய்.

உலகம் முழுவதும் பரதனால் “பாதுகையின் ஸாம்ராஜ்யம்” என்ற குடையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதனைக் கண்டு பாதுகைக்குப் பொறுக்கவில்லை. தன்னைக் காட்டிலும் பரதனுக்கு அதிகமான பெருமை
உண்டாக வேண்டும் என்று எண்ணி, தனது முத்துக்களின் ஒளி மூலமாகவே பரதனுக்கு வெண் கொற்றக் குடையை அமைத்தாள்.

ஸ்ரீ பாதுகையே நீ மூன்று உலகங்களையும் ஒரே குடைக் கீழ்க் கொண்டு வந்த சக்ரவர்த்தினி -இன்னொரு குடை கிடையாது
ஆனாலும் ஸ்ரீ ராமன் வழியைப் பின் பற்றி ஜடை தரித்த ஸ்ரீ பரத ஆழ்வான் தலையில் நீ அமர்ந்த போது முத்து ஒளிகளால்
ஒரு குடையை ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு உண்டாக்கித் தந்தாய் -இது இரண்டாவது -த்விதீயம் -இது ஒப்பற்றது கூட -அத்விதீயம் –

ஆதபத்ரம்: குடை – த்விதீயம்: இரண்டாவது. எது இரண்டாவது குடை..? முக்தாம்சுபி: முத்துக்களுடைய காந்தி!

ராமன் காட்டுக்கு எழுந்தருளியதால் வருந்திய பரதன், ராமனிடமிருந்து பாதுகையைப் பெற்று தம்முடைய
சிரஸ்ஸில் எழுந்தருளப் பண்ணுகின்றார். ஸ்ரீராமன் பட்டாபிஷேகத்திற்காக உண்டான குடை பாதுகைக்குப் பிடிக்கப்பட்டு
பாதுகை அயோத்தி நோக்கி புறப்பாடு கண்டருளுகின்றது. அப்போது, பாதுகையில் இழைக்கப்பட்டுள்ள
முத்துக்களின் காந்தி பரவி, இரண்டாவதாக ஒரு குடையும் பிடிக்கப்படுவது போல் தோன்றுகின்றது.

ஆழ்வார்களின் பாசுரங்களினால் உலகத்தவர் தரும் மரியாதை, கௌரவம் ஒரு குடை இது பட்டாபிஷேகக் குடை.

ஆழ்வார்களின் பாசுரங்களினால் அறிந்த ஞானம், ஒரு குடை இது முத்துக்களின் காந்தி. இதுவே நிரந்தரம்!.

இந்த பாதுகையிலிருந்து வெளிப்படுகின்ற காந்தி, எல்லையில்லாத அழுக்குக் கொண்டு அலையும் நம் மனதை
சுத்தம் செய்து ஸ்படிகத்தால் செய்த உப்பரிகையைப் போல பண்ணுகின்றன. எதனால் இது இப்படி சுத்தம் செய்கின்றது.
பெருமாளுக்கு நம் மனதில் இருக்க வேணுமென்று மிகுந்த ஆவல். ஆழ்வார்களின் பாசுரங்களின் பிரபாவங்களை
நல்ல ஆச்சார்யன் அனுக்ரஹத்தினால் அறிந்தால் நம் மனம் தெளியும். ஸ்படிக உப்பரிகையாகி விடும்!
அப்புறம் என்ன! சதா ஆனந்தம்தான்!

——————————————————————————

பாதாவநி ஸ்புடமயூக மது ப்ரவாஹா
முக்தா பரிஸ் புரதி மௌக்திக பத்ததிஸ் தே
ரூடஸ்ய ரங்கபதி பாத ஸரோஜ மத்யே
ரேகாத்மந: ஸுரதரோ: இவ புஷ்ப பங்க்தி:—-635–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடியின் நடுவில் உள்ள மெல்லிய கோடு (ரேகை)
கற்பக மரம் போன்று உள்ளது. தாமரைமலர் போன்ற சிவந்த அந்தத் திருவடியில் காணப்படும்
கற்பக மரத்தின் மலர்கள் போன்று, உனது முத்துக்கள் உள்ளன. இவற்றிலிருந்து பெருகும்
ஒளி வெள்ளமானது மிகவும் அழகாகவும், தேன் போன்று இனிமையாகவும் உள்ளன.

ஸ்ரீ பாதுகையே -உன் அழகிய முத்து வரிசை ஸ்பஷ்டமான ஒளி மண்டலத்தைக் கொண்டு உள்ளது –
அது ஒளித்தேன் பெருக்குவதாம் -அது ஒரு புஷ்ப வரிசை போலத் தோன்றும் .
பெருமாள் திருவடித் தாமரையின் நடுவில் ரேகை யுருவில் கல்பக விருஷம் உண்டே -அதன் பூக்களோ இவை –

—————————————————————–

ஆம்ரேடிதை: பத நக இந்து ருசா மநோஜ்ஞை:
முக்தாம் ஸூபிர் முரபிதோ மணி பாதுகே த்வம்
ஸாபாவிகீம் ஸகல ஜந்துஷு ஸார்வபௌமீம்
ப்ராய: ப்ரஸத்திம் அமலாம் ப்ரகடீ கரோஷி—-636–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளியானது, ஸ்ரீரங்கநாதனின் திருவடி
நகங்களுடைய ஒளியால், மேலும் அழகாகவும் ஒளியுள்ளதாகவும் ஆக்கப்படுகின்றன.
இதனைக் காணும்போது அனைத்து உயிர்களிடத்திலும் இயல்பாகவே ஸ்ரீரங்கநாதன் கொண்டுள்ள,
எந்தவிதமான களங்கமும் இல்லாத உயர்ந்த அநுக்ரஹத்தை வெளிப்படுத்துவது போன்று உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாளின் திருவடி திரு நகங்களின் சந்திர ஒளி முத்துக்களின் அழகிய ஒளியை அதிகப் படுத்துகிறது –
இது பகவானுக்கு இயற்கையாகவே சர்வ பிராணிகள் இடத்தும் ஏற்படுகிற எதையும் வழங்கக் கூடிய
அனுக்ரஹத் தன்மையை வெளிப்படுத்துகிறது போலும் –

—————————————————————

நிஸ்ஸீம பங்க மலிநம் ஹ்ருதயம் மதீயம்
நாதஸ்ய ரங்க வஸதே: அதிரோடும் இச்சோ:
மாத: தவ ஏவ ஸஹஸா மணி பாத ரக்ஷே
முக்தாம்ஸவ: ஸ்படிகஸௌத துலாம் நயந்தி—-637-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தாயே! என்னுடைய மனதில் எல்லையற்ற காலமாக அழுக்கு படிந்தபடி உள்ளது.
இப்படிப்பட்ட சேற்றில் இறங்க ஸ்ரீரங்கநாதன் எண்ணுகிறான். இதனைக் கண்டவுடன் உனது முத்துக்களின் ஒளி
எனது மனதில் புகுந்து, அங்கு ஸ்படிகத்தால் செய்த உப்பரிகையுடன் கூடிய மாளிகையை ஏற்படுத்தி விடுகின்றது.

ஸ்ரீ மணி பாதுகை தாயே -எல்லை யற்ற அழுக்குப் படிந்த என் மனத்தில் ஏற விரும்பிய ஸ்ரீ ரங்க நாதன் புறப்படவும்
அவனுக்கு ஏற்ற படி உன் முத்து ஒளி தான் என் இந்த இதயத்தை ஸ்படிகங்களால் ஆன உப்பரிகை யாக்கி உதவுகின்றன –

——————————————————————————-

ஸ்யாமா தநுர் பகவத: ப்ரதிபந்ந தாரா
த்வம் சந்த்ரிகா விமல மௌக்திக தர்ஸ நீயா
ஸ்தாநே தத் ஏதத் உபயம் மணி பாத ரக்ஷே
போதம் க்ஷணாந் நயதி புத்தி குமுத்வதீம் ந:—638–

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உனது முத்துக்களின் ஒளியுடன் காணும்போது,
ஸ்ரீரங்கநாதனின் திருமேனியானது, இரவு போன்று உள்ளது. உன்னுடைய வெண்மையான முத்துக்களின் ஒளியால்
நீ அந்த இரவில் உதிக்கும் சந்த்ரன் போன்று உள்ளாய். இப்படியாக இரவுப்பொழுதும், சந்த்ரனுமாக என்றும் உள்ள நீங்கள் இருவரும்,
எங்கள் புத்தி என்னும் ஆம்பல் ஓடையை மலரச் செய்யவேண்டும் (ஆம்பல் மலரானது இரவில் மலரும்.
இதனைப் போன்று நம் மனம் மலரவேண்டும் என்றார்).

ஸ்ரீ மணி பாதுகையே -இங்கனம் பெருமாள் எழுந்து அருளியவுடன் அந்த திவ்ய மங்கள விக்ரஹத்தின்
சுற்று வட்டம் இருட்டாகவும் -நஷத்ரங்கள் உடையதாகவும் இருக்கும் -தன்னை அடைந்தவர்களைக் கடைத் தேற்றுவதாகவும் உள்ளது
அந்த ராத்ரிக்கு உன் நிர்மலமான முத்துக்கள் அழகிய நிலவொளி தரும்
ஆகவே பெருமாள் திரு மேனியும் நீயுமாகச் சேர்ந்து எங்கள் புத்தியாகிற ஆம்பலோடையை உடனே மலரச் செய்கிறீர்கள் எனபது பொருந்தும்
ஆம்பல் மலர -இரவும் வேண்டும் -நிலவும் வேண்டுமே –

———————————————————————

உத்காட பங்சமநை: மணி பாத ரக்ஷே
முக்தா அம்சுபி: முரபித: நக ரச்மிபிந்நை:
சூடாபதேஷு நிஹிதா த்ரிதச ஈஸ்வரணாம்
தீர்த்த உதகை: ஸ்நபயஸீவ பதார்த்திநஸ் தாந்—639–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தேவர்களின் தலைகளில் வைக்கப்பட்ட நீ உனது முத்துக்களின் ஒளியால்
செய்வது என்ன – அதிகமாகக் கெட்டியாகி, சேறு போன்றுள்ள பாவங்களை, ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களின்
ஒளியுடன் சேர்ந்தபடி நின்று, உனது முத்துக்களின் ஒளி மூலம் விலக்குகிறாய். இப்படியாக அந்த முத்துக்களின் ஒளி
என்னும் புண்ணிய நீர் கொண்டு, உயர்ந்த பதவிகளை வேண்டி நிற்கும் தேவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே -பிரம்மாதி தேவர்கள் தலைகளில் நீ வைக்கப் படுகிறாய் -அவர்களுக்கு அவரவர் ஸ்தானங்களில்
ஸ்திரமாக பட்டாபிஷேகம் செய்விக்கிறாய் நீ -பெருமாளுடைய திரு நக காந்தி மிகுந்த சேற்றை -பாபத்தை -நீக்க வல்ல முத்து ஒளி –
இரண்டும் புண்ய தீர்த்தங்கள் ஆகின்றன -அபிஷேகம் நடக்கிறது –

————————————————————————–

ரங்கேஸ பாத நக சந்த்ர ஸுதா அநுலேபம்
ஸம்ப்ராப்ய ஸித்த குளிகா இவ தாவகீநா:
ஸம்ஸார ஸம்ஜ்வர ஜுஷாம் மணி பாத ரஷே
ஸம்ஜீவநாய ஜகதாம் ப்ரபவந்தி முக்தா:—-640–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய முத்துக்கள் அனைத்தும் ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களில்
இருந்து வெளிவரும் ஒளி என்னும் அமிர்தப் பூச்சை அடைகின்றன. இதனால் அவற்றின் ஒளியானது,
சித்தர்கள் செய்கின்ற மாத்திரைகள் போன்று மாறுகின்றன. இந்த முத்துக்களின் ஒளியானது, கடுமையான ஸம்ஸார நோயை நீக்கி,
அனைத்து உலகங்களையும் பிழைக்கவல்ல சக்தி பெறுகின்றன.

ஸ்ரீ மணி பாதுகையே உனது முத்துக்கள் பெருமாள் திருவடி திரு நகங்கள் ஆகிற சந்தரன் இடம் இருந்து பெருகும்
அமிருதப் பூச்சைப் பெற்று சித்த குளிகைகள் போலே சம்சாரம் ஆகிற ஜ்வரத்தில் தவிக்கும் உலகினர்க்குப் பிழைப்பு ஏற்படுத்தும் –

—————————————————————————–

பாவோத்தரை ரதிகதா ப்ரத ப்ரதாநை:
ப்ரத்யுப்த மௌக்திக மிஷேண விகீர்ண புஷ்பா
ரங்கேஸ் வரஸ்ய நியதம் த்வயி லாஸ்யபாஜ:
ரங்கஸ்தலீவ லளிதா மணி பாதுகே த்வம்—-641–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மிகுந்த பக்தி கொண்ட பரதன் முதலானவர்களால்
(இதனை – மிகுந்த அபிநய திறன் கொண்ட நாட்டியக்காரர்கள் என்று கூறினார்) அடையப்பட்டது;
முத்துக்கள் என்னும் மலர்களால் வாரி இறைக்கப்பட்டது – இப்படிப்பட்ட நாடக மேடை போன்று உள்ள
உன் மீது நடனம் செய்வதற்குத் தயாராக உள்ள ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற அழகான மேடையாக நீ உள்ளாய்.

ஸ்ரீ மணி பாதுகையே -பக்தி பாவம் நிறைந்த ஸ்ரீ பரதாழ்வான் முதலானோரால் அடையப் பெற்றாய் –
உன் மீது முத்துக்கள் இழைத்து இருப்பதாகத் தோற்றும் -அது உண்மையிலே புஷ்பங்களே இறைக்கப் பட்டு இருப்பதைக் கட்டுவதாம்
நீ சிறந்த ரங்க ஸ்தலம் ஆகிறாய் -ஸ்ரீ பரத முனி போன்ற நாட்ய நிபுணர்களால் அடையப் பெற்ற இடம்
நாட்யமாடும் வல்லோன் ஆகிய ஸ்ரீ ரங்க நாதன் ஆடுவதற்கு உகந்த நாட்ய அரங்கம் ஆகிறாய் நீ –

——————————————————————-

மந்யே முகுந்த சரணாவநி மௌளி தேசே
விந்யஸ்ய தேவி பவதீம் விநதஸ்ய சம்போ:
ஆபாத யந்தி க்ருதா: ப்ரதி பந்நதாரம்
ஸூடா துஷாரகிரணம் தவ மௌத்தி கௌகை:—-642–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னை வணங்கி நிற்கும் சிவனுடைய தலையில்
உன்னை அர்ச்சகர்கள் வைக்கின்றனர். சிவனுடைய தலையில் உள்ள சந்திரனுடன் சேர்ந்து, உன்னில் பதிக்கப்பட்ட
முத்துக்களும் அவன் தலையில் அப்போது காணப்படுகின்றன.
இதனால் அவன் தலையில் சந்த்ரனுடன் விண்மீன்களும் சேரும்படிச் செய்கின்றனர் என்று எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே உனது ஆராதகர் உன்னைச் சிவன் தலையில் வைப்பார் -அவன் வணங்கி ஏற்பன்-
அப்போது சிவன் முடியில் உள்ள சந்திரன் உன் முத்துக்களின் கூட்டத்தால் ஸூழப்பட்டு
ஆகாச சந்திரனுக்குச் சுற்றி நஷத்ரங்கள் இருப்பது போன்ற நிலைமை ஏற்படும் –
அதற்காகவே இது செய்கிறார்கள் என்று எண்ணுகிறேன் –

———————————————————————————

பத்மாபதேர் விஹரத: ப்ரியம் ஆசரந்தீ
முக்தா மயூக நிவஹை: புரதோ விகீர்ணை:
கந்தாநி காஞ்சந பதாவநி பத்மநீநாம்
மந்யே விநிக்ஷிபஸி மந்திர தீர்க்கிகாஸு—-643—

தங்கத்தால் செய்யப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகன் ஸஞ்சாரம் செய்யும் காலங்களில்
அவன் முன்பாக உனது முத்துக்களின் ஒளி பாய்ந்து செல்கிறது. அவற்றின் மூலம் அவன் நடக்கும் இடம் எங்கும்,
தாமரைக் கொடிகளின் கிழங்குகளை நீ புதைத்து வைக்கிறாய் போலும்.
இதன் மூலம் அவனுக்கு நீ மகிழ்வையும் ப்ரியத்தையும் ஏற்படுத்துகிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் லீலையாக சஞ்சரிக்கும் போது அவனுக்குப் பிரியமாக நீ செய்வது ஓன்று உண்டு –
முத்துக்களின் ஒளிக் கதிர்க் கூட்டத்தை வழியில் நடவாபிகளில் விழச் செய்கிறாய்
அது நீ ஏதோ தாமரைக் கொடிகளின் கிழங்குகளை விதைப்பது போல் தோன்றும் –

—————————————————————————————

ஆசாஸ்ய நூநம் அநகாம் மணி பாத ரக்ஷே
சந்த்ரஸ்ய வாரிதி ஸுதா ஸஹ ஜஸ்ய வ்ருத்திம்
தாத்ரீம் முகுந்த பதயோ: அநபாயிநீம் த்வாம்
ஜ்யோத்ஸ்நா ஸமாஸ்ரயதி மௌக்திக பங்க்தி லக்ஷ்யாத்—-644-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது முத்துக்களின் வரிசையானது வெண்மையான நிலவு போன்று உள்ளது.
இந்த நிலவு செய்வது என்ன என்றால் – ஸ்ரீரங்கநாச்சியாரின் உடன் பிறந்தவனான சந்த்ரன் தேய்ந்து கொண்டே செல்லாதபடி,
அவனுக்கு எப்போதும் பூர்ணத்வம் இருக்க வேண்டும் என்று எண்ணியது;
இதனால் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளுக்குச் செவிலித்தாய் போன்று இருக்கும் உன்னை அடைகின்றது போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே உனது முத்துக்களின் வரிசை சந்த்ரனே -கடலில் தோன்றியது பிராட்டியின் சகோதரன் அன்றோ –
தனக்கு ஷயம் இல்லாமல் வேண்டி உன்னை ஆஸ்ரயிக்கிறான் போலும்
நீ பெருமாள் திருவடிகளுக்கு தாரண போஷணாதிகள் தருபவள் அன்றோ
மேலும் நீ பெருமாள் திருவடிகளை விட்டுப் பிரியாது இருப்பது -தகுந்த உபாயமும் புருஷகாரமும் ஆகும் –

———————————————————————-

யே நாம கேபி பவதீம் விநய அவநம்ரை:
உத்தம் ஸயந்தி க்ருதிந: க்ஷணம் உத்தமாங்கை:
உச்சந்தி ரங்க ந்ருபதே: மணி பாத ரக்ஷே
த்வத் மௌக்தி மௌக நியதாம் இஹ தே விஸூத்திம்—-645–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே!
புண்ணியம் செய்தவர்கள் உனக்கு வணக்கம் செலுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் தலை வணங்கி,
உன்னை ஒரு நொடி தங்கள் தலையில் ஏற்றாலே போதுமானது. அவர்கள் இந்த உலகத்தின் வாழும் போது,
உனது முத்துக்களின் ஒளி போன்ற தோஷம் அற்ற வெண்மையான தன்மையை அடைகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே எவர்கள் சிலர் வினயத்துடன் வணங்கி உன்னைத் தம் தலையில் ஒரு நொடிக்கேனும் ஏந்தி அதைப் பூஷணமாகக்
கொள்கிறார்களோ அவர்கள் பாக்யசாலிகள் -இந்தப் பிறவியிலேயே உன் முத்துக்களின் வெண்மையை சக்தியை அடைகின்றனர் –

——————————————————————————

அநுதிநம் லளிதாநாம் அங்குளீ பல்லவநாம்
ஜநித முகுள சோபை: தேவி முக்தாபலைஸ் த்வம்
ப்ரகடயஸி ஜநாநாம் பாதுகே ரங்க பர்த்து:
பத ஸரஸிஜ ரேகா பாஞ்ச ஜந்ய ப்ரஸூதிம்—-646–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகை தேவியே! அன்றாடம் புதுப்பொலிவுடனும் அழகுடனும் காணப்படும் ஸ்ரீரங்கநாதனின்
திருவடி விரல்கள் என்னும் தளிர்களுக்கு மொட்டுக்கள் போன்று உனது முத்துக்கள் மேலும் அழகு சேர்க்கின்றன.
தாமரை மலர் போன்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் காணப்படும் ரேகை உருவில் உள்ள பாஞ்சஜந்யம்
என்ற சங்கிலிருந்து இந்த முத்துக்கள் வெளிவந்தன என்று நீ அறிவிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே தினம் தோறும் அழகு கூடும் திரு விரல் துளிர்கள் தாம் மொட்டுக்களைத் தந்தனவோ என்று
முத்துக்களை சொல்ல எண்ணுவோம் -அந்த முத்துக்கள் பெருமாள் திருவடியின் ரேகை ரூபமாய் இருக்கும்
திரு பாஞ்ச ஜன்யம் ஆகிற திருச் சங்கில் இருந்து உண்டாயினவோ
அப்படித் தான் நீ நிரூபிக்கிறாய் போலும் –

—————————————————————–

பலி விமதன வேளா வ்யாபிநஸ் தஸ்ய விஷ்ணோ:
பத ஸரஸிஜ மாத்வீ பாவநீ தேவி நூநம்
ஜநந ஸமய லக்நாம் ஜாஹ்நவீ தாவகாநாம்
வஹதி சரண ரக்ஷே வாஸநாம் மௌக்தி காநம்—-647–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! மஹாபலியை அடக்கிய காலத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற ஸ்ரீரங்கநாதனின்
திருவடித் தாமரைகளில் தேன் போன்று, அனைத்துவிதமான பாவங்களையும் போக்கவல்ல கங்கை உண்டானது.
அப்போது உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்கள் அதனுடன் ஒட்டிக்கொண்டன.
அப்போது இந்த முத்துக்களின் வாசனையை அந்தக் கங்கை பெற்றது என்பது உறுதி.

ஸ்ரீ பாதுகையே -பலிச் சக்கரவர்த்தியை அடக்க வென்று வளர்ந்த பெருமாளுடைய திருவடித் தாமரையின்
தேன் பெருக்கு என்று கருதப் பட வேண்டிய கங்கை -உன் முத்துக்களின் தன்மையை -வெண்மையை –
தான் பிறந்த போதில் இருந்து வைத்துக் கொண்டு இருக்கிறது -இது நிச்சயம் –

—————————————————————————-

மதுரிபு பத மித்ரை: வைரம் இந்தோஸ் ஸரோஜை:
சமயிது இவ தாராஸ் ஸேவ மாநாஸ் சிரம் த்வாம்
ப்ரசுர கிரண பூரா: பாதுகே ஸம்ஸ்ரிதாநாம்
கலிகலுஷம் அசேஷம் க்ஷாள யந்தீவ முக்தா:—-648–

ஸ்ரீரங்கநதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியின் தோழர்களாக உள்ள தாமரை மலர்களுடன்,
சந்த்ரனுக்கு நீண்டகாலமாக இருந்து வரும் பகையை நீக்க எண்ணி, உன்னை வேண்டி நிற்கும் நக்ஷத்ரங்கள்
போன்று உன் முத்துக்கள் உள்ளன. இந்த முத்துக்கள், அதிகமான ஒளியுடன், மிகுந்த வெள்ளத்துடன்
பாயும் நிதி போன்று நின்று, உன்னை அடைந்தவர்களின் கலிகால பாவங்களைச் சிறிதும் மீதம் இல்லாமல் கழுவுகின்றன.

ஸ்ரீ பாதுகையே முத்துக்கள் நஷத்ரங்கள் என்றே தோன்றும் –அதாவது பெருமாளின் திருவடிகள் உடன் நட்பு பூண்டது தாமரை –
அந்த தாமரை உடன் சந்த்ரனுக்கு எப்போதும் விரோதமாம் -அதை தீர்க்க வென்றும் சந்த்ரனுடைய ஷயத்தை நீக்க வேணும் என்றும்
அவன் பத்னிகள் -நஷத்ரங்கள் முத்துக்களாக வந்து இங்கு உன்னிடம் அமர்ந்து அன்டினவர்கள் உடைய கலி தோஷத்தை
கழுவி உதவத் தன் பெரும் ஒளி வெள்ளத்தைப் பெருக்குகின்றன போலும் –

—————————————————————————————

முகளித பரிதாபாம் ப்ராணி நாம் மௌக்திகை: ஸ்வை:
அம்ருதம் இவ துஹாநாம் ஆத்ரியே பாதுகே த்வாம்
விஷதர பண பங்க்தி: யத் ப்ரபாவேந மந்யே
லளித நடந யோக்யம் ரங்கம் ஆஸீத் முராரே:—649–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளி மூலமாக நீ அனைத்து உயிர்களின் துன்பங்களை நீக்கி,
அவர்களுக்கு இன்பம் அளிக்கவல்ல அமிர்தமாக உள்ளாய். இப்படிப்பட்ட அமிர்தமாக உள்ள உன்னைக் கொண்டாடுகிறேன்.
இப்படிப்பட்ட உனது அமிர்த சக்தியால்தான் கண்ணனுக்கு விஷம் நிறைந்த காளியனின் படம் எடுத்த தலைகள்,
நடனம் ஆடத் தகுந்த அரங்கம் போன்று ஆனது போலும்
(இதனையே சற்று மாற்றி – உனது அமிர்த வெள்ளம் காரணமாகவே ஸ்ரீரங்கநாதன் எந்த விதமான பாதிப்பும் இன்றி
ஆதிசேஷன் மீது சயனித்துள்ளான் போலும் – என்று ரஸமாகவும் பொருள் உரைக்கலாம்).

ஸ்ரீ பாதுகையே தன்னிடத்தில் உள்ள முத்துக்களால் ஜீவர்கள் உடைய தாபங்களைப் போக்க வல்ல
அமிருதத்தை சுரப்பது போல் உள்ள உன்னைக் கொண்டாடுகிறேன் -உன்னுடைய இந்த அமிருதம் சுரக்கும் தன்மையால் அன்றோ
ஸ்ரீ கிருஷ்ணன் காளியன் பட வரிசையின் மீது நடனம் ஆடலாயிற்று -அவனுக்கு அது நாட்ய மேடை யாயிற்றே –

—————————————————————————-

ஸக்ருதபி விநதாநாம் த்ராஸம் உந்மூல யந்தீம்
த்ரிபுவந மஹநீயாம் த்வாம் உபாஸ்ரித்ய நூநம்
ந ஜஹதி நிஹ காந்திம் பாதுகே ரங்க பர்த்து:
சரண நக மணீநாம் ஸந்நிதௌ மௌக்திகாநி—-650–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை யாரேனும் ஒருமுறை வணங்கி நின்றால், அவர்களின் பயத்தை நீக்குபவளாக உள்ளாய்.
மூன்று உலகங்களாலும் கொண்டாடத்தக்கவளாக நீ உள்ளாய். உன்னை அண்டி நின்ற காரணத்தினால் மட்டுமே உனது முத்துக்கள்,
ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின் நகங்கள் என்னும் இரத்தினக் கற்கள் தங்கள் அருகில் உள்ள போதிலும்,
தங்கள் (முத்துக்கள்) ஒளியை இழக்காமல் உள்ளன என்பது நிச்சயம்.

ஸ்ரீ பாதுகையே உன்னை ஒரு தடவை வணங்கியவர்களுக்கும் பயத்தை அடியோடு போக்குபவள் நீ –
மூன்று உலகங்களும் உன்னைக் கொண்டாடுமே -அத்தனை பெருமையை உடைய முத்துக்கள் உன்னை ஆஸ்ரயித்து உள்ளதால்
பெருமாள் திருவடி திரு நகங்கள் ஆகிற ரத்னங்களின் முன்னிலையில் கூடத் தன் ஒளியை இழப்பது இல்லை -இது நிச்சயம் –

—————————————————————————-

புவநம் இதம் அசேஷம் பிப்ரதோ ரங்க பர்த்து:
பத கமலம் இதம் தே பாதுகே தாரயந்த்யா:
சிரவி ஹரண கேதாத் ஸம்ப்ருதாநாம் பஜந்தி
ஸ்ரமஜல கணிகாநாம் ஸம்பதம் மௌக்திகாநி—651-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உலகங்களையும் ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள் தாங்கி நிற்கின்றன.
அப்படிப்பட்ட அவனது திருவடிகளையும் நீ தாங்கி நிற்கின்றாய். ஆக, மூன்று உலகங்களுடன் சேர்த்து
ஸ்ரீரங்கநாதனையும் தாங்கி நிற்பதால் உனக்குக் களைப்பு காரணமாக வியர்வைத் துளிகள் தோன்றுகின்றன.
இவையே உனது முத்துக்கள் போன்று அழகாகத் தோன்றுகின்றன போலும்.

ஸ்ரீ பாதுகையே அகில உலகையும் தாங்குபவன் ரங்க பர்த்தா-அவன் திருவடித் தாமரையை நீ
வெகுகாலமாகத் தாங்குவதோடு சிரகாலம் சஞ்சரித்தும் இருப்பதால் போலும்
உன் மீது வியர்வைத் துளிகள் தென்படுகின்றன -அவை தாமே முத்துக்களாக அழகாகக் காண்கின்றன –

—————————————————————————-

ப்ரகடித யசஸாம் தே பாதுகே ரங்கபர்த்து:
த்விகுணித நக சந்த்ர ஜ்யோதிஷாம் மௌக்திகாநாம்
கரணவிலய வேளா காதரஸ்ய அஸ்ய ஜந்தோ:
சமயதி பரிதாபம் சாஸ்வதீ சந்த்ரிகேயம்—-652-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களானவை உனது புகழ் காரணமாக, மேலும் புகழ் பெற்று விளங்குகின்றன.
இவை ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரையில் உள்ள நகங்கள் என்னும் சந்த்ரன்களின் ஒளியை மேலும் அதிகப்படுத்தியபடியே உள்ளன.
இந்த நிலவானது (முத்துக்களின் ஒளி), எப்போதும் நிலையாக நின்று, மரண காலத்தில் என்ன நேருமோ என்று
அச்சத்துடன் உள்ள அனைவரது பயத்தையும் வேதனைகளையும் நீக்கியபடி உள்ளது.

ஸ்ரீ பாதுகையே -இந்த முத்துக்கள் திருவடி திரு நகங்கள் ஆகிற ரத்னங்களின் ஒளியை இரண்டு மடங்காக்கி அதனாலே
பெரும் புகளை ஈட்டித் தருபவை -இப்படி ஒரு சாஸ்வதமான நிலவொளி எனக்கு-இந்த ஜந்துவிற்கு -அந்திம தசையில்
உடல் ஒடுங்கும் நிலையில் என்ன நேரமோ என்று பேர் அச்சத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கிற எனக்கு –
எல்லாவிதமான தாபத்தையும் போக்கி அருளும் –

————————————————————————–

திவ்யம் தாம் ஸ்திரம் அபியதாம் தேவி முக்தா மணீநாம்
மத்யே கச்சித் பவதி மதுஜித் பாதுகே தாவகாநாம்
ந்யஸ்தோ நித்யம் நிஜகுண கண வியக்தி ஹேதோர் பவத்யாம்
ஆத்ம ஜ்யோதிஸ் சமித தமஸாம் யோகிநாம் அந்தராத்மா—-653-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தங்களுக்கு இயற்கையாகவே உள்ள வெண்மை
முதலான குணங்களானவை, அறியாமை என்பது நீங்கி வெளிப்படும் பொருட்டு,
உன்னிடத்தில் தங்களை ஒரு சிலர் சமர்ப்பணம் செய்கின்றனர். இவர்கள் ஜீவனின் ஸ்வரூபம், தங்களின் அந்தர்யாமியான
பரமாத்மாவின் ஸ்வரூபம் ஆகியவற்றை அறிந்து கொள்கின்றனர். இந்த ஞானத்தால் அவர்களின் தமோ குணம் என்ற இருள் நீங்குகிறது.
இதனால் மிகவும் உயர்ந்ததும், நித்யமான ஒளி கொண்டதும் ஆகிய உனது முத்துக்களின் நடுவே,
அவர்களின் ஆத்மாவுக்கு ஒன்றாக நிற்கும்படியான நிலையை அடைகின்றனர்.

ஸ்ரீ பாதுகா தேவதியே முத்துக்கள் உன்னிடத்தில் நிரந்தரமாக இழைக்கப் பட்டு இருக்கை தம் வெண்மை குளிர்ச்சி போன்ற
குண கணங்கள் பிரகாசிப்பதற்காம்-அவை தம் ஒளியால் இருளை நீக்க வல்லன
அப்படிப்பட்ட முத்துக்கள் இடையே ஒன்றாக இருப்பது -ஆஹா — நீ அந்தராத்மாவாக இருக்க முனிகள் தங்கள் ஆத்மசமர்ப்பணம் செய்து
அபஹத பாப்மத்வாதி குணங்கள் பிரகாசிக்க தமோ குணம் நீக்கப் பட்டு விளங்குமே – அப்ராக்ருதமான திவ்ய ஒளியை பெற்று
சாம்யாபத்தி பெரும் பேற்றை உன்னை ஆஸ்ரயித்தவர்கள் பெறுகிறார்கள் –

———————————————————————————-

ஸூத்தே நித்யம் ஸ்திர பரிணதாம் தேவி விஷ்ணோ: பதே த்வாம்
ஆஸ்தாநீம் தாம் அமித விபவாம் பாதுகே தர்க்கயாமி
ஆலோகை: ஸ்வை: புவநம் அகிலம் தீபவத் வ்யாப்ய காமம்
முக்தா: ஸூத்திம் யத் உபஸநாத் பிப்ரதி த்ராஸ ஹீநா:—-654-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்போதும் தூய்மையாகவும் ஸ்திரமாகவும் உள்ளன.
அந்தத் திருவடிகளில் நீ எப்போதும் நிலையாக, எல்லையற்ற பெருமையுடன் விளங்குகிறாய்.
இப்படியாக உள்ள உன்னை, வேதங்கள் ஆனந்த மயம் என்ற கூறுகின்ற மணி மண்டபமாகவே எண்ணுகிறேன்.
இப்படிப்பட்ட உன்னை அடைந்ததால், குற்றம் ஏதும் இல்லாத முத்துக்கள், தங்கள் ஒளி மூலமாக அனைத்து உலகங்களும்
ஒளிரும் விதமாக எரிகின்ற விளக்குகள் போன்று, தோஷங்கள் அற்ற தன்மையை அடைகின்றன.

ஸ்ரீ பாதுகையே நித்தியமான பெருமாள் திருவடியில் ஸ்திரமாக இருக்கின்றாய் -அளவற்ற பெருமை உடையவள் –
நீ சுத்த சத்வமயமான பரமபதத்தில் சத்திரம் ஆனதும் ஐஸ்வர்யம் முஇக்கதும் ஆனந்தமயம் என்று ஓதப்படும் மணி மண்டபம் நீயே
உனது ஒளி பாபம் போக்கும் -உன்னை அடைந்த முக்தர்கள் தங்கள் ஞான தீபத்தால் உலகை நிர்மலம் ஆக்குவர் –

———————————————————————–

ப்ராப்தா சௌரே: சரண கமலம் பாதுகே பக்தி பாஜாம்
ப்ரத்யா தேஷ்டும் கிம் அபி வ்ருஜிநம் ப்ராபிதா மௌளிபாகம்-(தந்தி ராஜச்ய தத்சே-பாட பேதம் )
தேவந த்வம் தசச தத்ருசா தந்தி ராஜ்யஸ்ய தத்ஸே
மூர்த்நி ந்யஸ்தா முகபடருசிம் மௌக்திகாநாம் ப்ரபாபி:—-655-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் வந்து வணங்கும் அடியார்களின்
ஸம்ஸார ரூபமான பாவங்களை நீக்கும் விதமாக உன்னை அவர்கள் தலைகளில் வைக்கின்றனர்.
இப்படிப்பட்ட உன்னை ஆயிரம் கண்கள் கொண்ட இந்தரன் தனது யானையான ஐராவதத்தின் தலையில் வைக்கிறான்.
அப்போது உனது முத்துக்களின் ஒளி மூலமாக யானையின் முகத்தில் தொங்கவிடப்படும் பட்டு வஸ்திரம் போன்று நீ விளங்குகிறாய்.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாளுடைய திருவடித் தாமரையை அடைந்தவள் -பக்தர்களுக்கு போக்க முடியாத பாபங்களை
போக்கி அருள நீ அவர்களுடைய தலைக்கு ஏற்றப் படுவாய் -அப்போதும் தேவேந்த்ரனுடைய உயர்ந்த ஐராவத யானையின்
மஸ்தகத்தில் வைக்கப்பட்டு உன் முத்து ஒளியால் யானைக்கு முகப்பட வஸ்த்ரமும் வழங்கி அருள்வாய் –

——————————————————————————

தவ ஹரி பாதுகே ப்ருதுள மௌக்திக ரத்ந புவ:
ப்ரசலத் அமர்த்ய ஸிந்து லஹரீ ஸஹ தர்ம சரா:
பதம் ஜராமரம் விதத்தே கதம் அம்ப ஸதாம்
ப்ரணத ஸுரேந்த்ர மௌளி பலிதங்கரணா: கிரணா:—-656–

ஸ்ரீஹரியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! உன்னுடைய முத்துக்களின் ஒளியானது,
அலைகள் வீசும் கங்கையின் அலைகள் போன்று காணப்படுகிறது. இந்த வெண்மையான ஒளியானது,
தேவர்களின் தலைகளில் விழுந்து, அவர்களின் தலைகள் நரைத்தது போன்றே உள்ளன.
இப்படி இருந்தும் அவர்கள், வயோதிகம் மற்றும் மரணம் அடையாமல் எப்படி உன்னால் செய்யப்படுகின்றனர்?

ஸ்ரீ பாதுகையே உனது முத்துக்களில் நின்று வெளிப்படும் ஒளிக் கதிர் கங்கா நதியின் அலை போல வெளுத்த நிறமாய்
தேவர் தலைவர்களின் தலை முடியை நரைக்கச் செய்யும் -பின் அது எப்படி சத்துக்கள் தன்மையை
மூப்பும் மரணமும் அற்றதாகச் செய்யவும் வல்லாய் –

———————————————————————————–

கபர்த்தே கஸ்யாபி க்ஷிதிதர பத த்ராயிணி ததா
முஹுர் கங்காம் அந்யாம் க்ஷரதி தவ முக்தா மணி மஹ:
முதாரம்ப : கும்ப ஸ்தலம் அநுகலம் ஸிஞ்சதி யதா
நிராலம்போ லம்போதர களப சுண்டால சுளக:—-657-

பூமியைத் தூக்குகின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பற்றும் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளியானது,
சிவன் உன்னைத் தனது தலையில் வைத்துக் கொள்ளும் போது, அங்கு மற்றொரு கங்கையைப் போலியாக
உருவாக்கியது போன்று உள்ளது. இந்த ஒளியால் ஆகிய கங்கையை, உண்மையான கங்கை என்று எண்ணி,
பிள்ளையார் தனது துதிக்கையை நீட்டி எடுக்க முயற்சி செய்கிறார்.
அங்கு எடுப்பதற்கு ஏதும் இல்லாமல் வீணான முயற்சியுடன் தனது தலையை அடிக்கடி நனைத்துக் கொள்கிறார்.

ஸ்ரீ பகவானுடைய ஸ்ரீ பாதுகையே நீ சிவன் முடி மேல் ஏறிய போது உன் முத்துக்களின் ஒளி இன்னொரு கங்கை
வெள்ளத்தை ஏற்படுத்தியது -அதைக் கண்ட கஜ முகன் தனது சிறு துதிக்கைச் சுளகத்தால்
அந்த கங்கை நீரை எடுத்துத் தன் தலை மீது கொட்டிக் கொள்ள வியர்த்தமாக முயல்கிறான் –

——————————————————————

முகுந்த பத ரக்ஷிணி ப்ரகுண தீப்தயஸ் தாவகா
க்ஷரந்தி அம்ருத் நிர்ஜ்ஜரம் கமபி மௌக்திக க்ரந்தய:
மநாகபி மநீஷிணோ யத் அநுஷங்கிண: தத் க்ஷணாத்
ஜரா மரண தந்துரம் ஜஹதி ஹந்த தாப த்ரயம்—-658–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மிகுந்த ஒளி கொண்ட உனது முத்துக்களின் வரிசைகள்
அமிர்த வெள்ளத்தை உண்டாக்குகின்றன. அதில் யாரேனும் ஒரு நொடி நீராடினாலே போதுமானது –
அவர்கள் கிழத்தன்மை, மரணம் ஆகியவற்றையும், மூன்று விதமான துன்பங்களையும்
அதே நொடியில் கைவிட்டு விடுகின்றனரே! என்ன வியப்பான செயல் இது?

ஸ்ரீ பாதுகாதேவியே உன்னில் உள்ள மிகுந்த பிரகாசமான முத்து வரிசைகள் ஓர் அமிருத வெள்ளத்தைப் பொழியும்
அதன் சம்பந்தத்தை சிறிது பெற்றவரும் கூட பெற்ற அந்த ஷணத்திலேயே-மூப்பு மரணம் தாப த்ரயங்கள் கழிந்து இன்புறுவர் –

——————————————————————–

தேவ: ஸ்ரீபத லாக்ஷயா திலகிதஸ் திஷ்ட்டதி உபர்யேவ தே
கௌரீ பாத ஸரோஜ யாவக தநீ மூலே ஸமாலக்ஷ்யதே
இத்தம் ஜல்பதி துர்மதாந் முரபித: ஸூத்தாந்த சேடீஜநே
ப்ராப்யஸ் த்வம் மணி பாதுகே ப்ரஹஸிதா முக்தா மயூக ச்சலாத்—-659–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடிகளில் உள்ள செம்பஞ்சுக் குழம்பு மூலம்
அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதன், உன் மீது எப்போதும் காணப்படுகிறான். பார்வதியின் தாமரை மலர் போன்ற
திருவடிகளின் செம்பஞ்சுக் குழம்பைத் தனது செல்வமாகக் கொண்ட சிவன், உனது கீழே எப்போதும் உள்ளான்
(அதாவது தனது தலையில் எப்போதும் தாங்கியபடி உள்ளான்). இப்படியாக ஸ்ரீரங்கநாச்சியாரின் பணிப்பெண்கள்,
கர்வம் காரணமாகக் கூறும் சொற்களைக் கேட்டு நீ சிரிக்கிறாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாளுடைய அந்தப்புரத்து பணிப்பெண்கள் இப்படி பேசிக் கொள்கிறார்கள் –
ஒருத்தி மஹா லஷ்மியின் பாதச்சாயம் அடையாளம் எனக் கொண்ட ஒரு தேவன் இவள் மேல் இருக்கிறான்
இன்னொருத்தி பார்வதியின் பாதாரவிந்தத்தின் செம்பஞ்சுக் குழம்பைத் தனம் எனக் கொண்ட சிவன் இவள் கால் அடியில் –
இதைக் கேட்டு நீ சிரிப்பாய் போலும் -முத்தொளி அதைக் காட்டும் –

————————————————————————

ரங்கேஸ சரண ரக்ஷா
ஸா மே விததாது சாஸ்வதீம் ஸூத்திம்
யத் மௌக்திக ப்ரபாபி:
ஸ்வேத த்வீபம் இவ ஸஹ்யஜா த்வீபம்—-660-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ எனக்கு அழிவற்ற வெண்மையை
(பாவங்கள் அற்ற தன்மை, ஞானம்) உண்டாக்க வேண்டும். உன்னுடைய முத்துக்களின் அந்த ஒளியால் அல்லவோ
ஸ்ரீரங்கம் என்னும் காவேரியால் சூழப்பட்ட தீவானது, ச்வேத த்வீபம் போன்று வெண்மையாக உள்ளது?

ஸ்ரீ பாதுகையே உனது முத்தொளி வெள்ளம் ஸ்ரீ ரங்கத்தை ஸ்வேதத்வீபம் போல் ஆக்குகிறதே –
நீயே எனக்கு ஸ்திரமான ஸூத்தியைத் தந்து அருள வேணும் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-17-பத்மராக பத்ததி -செம்மணிப் படலம் -ஸ்லோகங்கள் -581-610-

March 16, 2016

கடந்த பத்ததியில் பல இரத்தினங்களின் சேர்க்கையை வர்ணித்தார்.
இந்த பத்ததி தொடங்கி அடுத்து உள்ள நான்கு பத்ததிகளில்,
நான்கு இரத்தினங்களின் வர்ணனையை தனித்தனியே அருளிச்செய்கிறார்.
முதலில் பத்மராகம் பற்றிக் கூறுகிறார்.
இங்கு பத்மராகம் என்பது இரத்தினங்களையும், ஸ்லேடையாக பிராட்டியையும் குறிப்பதாக உள்ளது.
ஆனால் பிராட்டி அவனது திருமார்பில் இருக்க வேண்டுமே என்ற சந்தேகம் தோன்ற,
இந்தப் பிராட்டி அவன் திருவடிகளில் இருக்கும் மற்றோரு பிராட்டி என்கிறார்.

———–

ப்ரபத்யே ரங்கநாதஸ்ய பாதுகாம் பத்ம ராகிணீம்
பதைக நியதாம் தஸ்ய பத்ம வாஸாம் இவ அபராம்—-581-

பத்ம ராகக் கற்கள் கொண்டவளும், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை விட்டு எப்போதும் அகலாமல் உள்ள
மற்றோரு மஹாலக்ஷ்மி போன்றவளும் ஆகிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகைப் பிராட்டியைச் சரணம் அடைகிறேன்.

நான் ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகையை சரணம் அடைகிறேன் -ஸ்ரீ பாதுகை மற்று ஒரு மஹா லஷ்மீ யாயிற்றே –
இருவரும் பத்ம ராகிணி–மஹா லஷ்மி தாமரையில் தங்க ராகம் கொள்பவள் –
ஸ்ரீ பாதுகையில் பத்மராக -சிவப்புக் கற்கள் விளங்குகின்றன –
மேலும் ஸ்ரீ பாதுகை ஸ்ரீ ரங்க நாத பாதங்களிலேயே நியதமாய் இருப்பது போலே
மஹா லஷ்மி பெருமாள் உடைய எல்லா பதவிகளிலும் -உபய விபூதி நிர்வாஹகம் சேஷித்வம் முதலியவை
தான் ஒருத்தியாய் –அவரோடு நியதமாக இணைந்தவள் –

—————————————————————–

அதி வாங் மநஸாம் விசிந்த்ய சௌரே:
பத ரக்ஷே பத பத்ம ஸௌகுமார்யம்
பரிஷ்யஸி பத்மராக பாஸா
பதவீம் ஆஹித பல்லவாம் இவ த்வாம்—-582-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் மென்மை என்பது சொற்களாலும்,
மனதாலும் நினைக்க இயலாதபடி உள்ளன.
இப்படிப்பட்ட மென்மையான திருவடிகள் ஸஞ்சாரம் செய்யும்போது நீ செய்வது என்ன?
உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளி மூலமாக, ஸ்ரீரங்கநாதன் செல்கின்ற வழி முழுவதும்
தளிர்களால் ஆகிய விரிப்பை உண்டாக்குகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாளின் திருவடியின் மென்மை சௌகுமார்யம் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத ஓன்று –
இதைக் கருதி நீ பெருமாள் சஞ்சரிக்கும் பாதையில் தளிர்களைப் பரப்புவதற்காக
பத்ம ராகக் கற்களின் ஒளிக் கதிர்களை வீசிப் பரப்புகிறாய் போலும் –

——————————————————————-

பத பல்லவ ஸங்கிபி: ப்ரதீப்தை:
அதி கோல்லாஸிபி: அம்ப பத்மராகை:
அநலே சயநம் க்வசிந் முராரே:
அவி ஸம்வாத யஸீவ பாதுகே த்வம்—-583-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் துளிர்கள் போன்று மென்மையாகவும், சிவந்தும் உள்ளன.
அதில் நீ சேர்ந்து காணப்படுகிறாய். உன்னில் பதிக்கப்பட்ட பத்மராகக் கற்கள் காரணமாக,
அவனது திருவடிகள் மேலும் சிவந்த நெருப்பு போன்று காணப்படுகின்றன.
இதனை காணும்போது, பாஞ்சராத்ர ஆகமத்தில் எம்பெருமான் நெருப்பால் ஆன படுக்கையில் சயனித்துள்ளான்
என்பதைக் காண்பிப்பதாக உள்ளது.

ஸ்ரீ பாதுகைத் தாயே –உன் பத்ம ராகக் கற்கள் தாமே அதிகமாக பிரகாசிக்கின்றன –
பெருமாள் திருவடித் துளிர் கூடச் சேர்ந்து இன்னும் அதிகமாக ஜ்வலிக்கும் –
அப்போது பெருமாள் நிலையை நோக்கினால் பகவான் ஒரு காலத்தில் அக்னியில் சயனித்துக் கொண்டு இருந்தது –
ருத்ரனைப் படைத்தது –பாஞ்சராத்ர சாஸ்த்ரம் படி -விவாத விஷயம் இல்லை என்று நீ தெளிவிக்கிறாப் போல் உள்ளது –

———————————————————————–

விவ்ருணோதி ரங்க பதி ரத்ந பாதுகே
த்வயி பத்ம ராக மணி பத்ததி: ஸூபா
நிபிட ஊரு ஸங்கடந பீடந க்ஷரத்
மதுகைடப க்ஷதஜ பங்க வாஸநம்—-584-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மது மற்றும் கைடபன் ஆகிய இரண்டு அசுரர்களைச் சேர்த்து வைத்து, தனது உறுதியான
தொடைகளில் நெருக்கி, ஸ்ரீரங்கநாதன் வதம் செய்தான்.
அப்போது பெருகிய ரத்தச் சேற்றினை உனது பத்மராகக் கற்கள் காண்பிப்பது போன்று உள்ளன.

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகையே உன் பத்ம ராகக் கற்களின் வரிசை மிகவும் சோபனம் -எல்லோருக்கும் மங்களம் அளிக்கும்
ஒரு காலத்தில் ஹயக்ரீவ திருவவதாரம் எடுத்து மதுகைடபரைத் தன் தொடைகளுக்கு இடையில் நெறித்துக் கொன்ற போது
பெருகிய ரத்தத்தின் சிவப்பு இது எனத் தோற்றும் –

——————————————————————————

ப்ரதியந்தி ரங்கபதி பாதுகே ஜநா:
தவ பத்மராக மணி ரஸ்மி ஸந்ததிம்
அபிஜக்முஷாம் த்வத் அநுபாவ கண்டிதாத்
ஆக ஸஞ்சயத் விகளிதாம் அஸ்ருக்ச்சடாம்—-585-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை அடைந்தவர்களின் பாவக் கூட்டங்களை, உனது பெருமை மற்றும்
மேன்மையால் வெட்டுகிறாய். அந்த கூட்டத்தின் இரத்தப்பெருக்கு போன்று உன்னில் பதிக்கப்பட்ட
பத்மராகக் கற்களின் ஒளியானது உள்ளது.

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகையே -உன் பத்ம ராகக் கற்களின் ஒளிக் கதிர்ப் பரப்பு மிக மகிமை வாய்ந்தது
ஜனங்கள் அதை நோக்கி ஆஸ்ரிதர் உடைய பாபக் கூட்டங்கள் -அவற்றின் அபிமான தேவதைகள் கொல்லப்பட்டு
அதில் இருந்து பெருகின ரத்த வெள்ளமோ என்று ஐயுறுவர்-

————————————————————————-

பஸ்யந்தி ரங்கேஸ்வர பாதுகே த்வாம்
பௌராங்கநா: ஸ்பர்சித ராக பந்தாம்
ஸ்ருங்கார யோநே: ஜ்வலநஸ்ய தீப்தை:
அங்கார ஜாலைரிவ பத்மராகை:—-586-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கத்துப் பெண்கள் உன்னில் பதிக்கப்பட்ட பத்மராகக் கற்கள் ஏற்படுத்தும்
சிவந்த ஒளியைக் காண்கின்றனர். உடனே அவர்கள் தங்கள் மனதில்,
“நம்மை வாட்டும் மன்மதனுடைய அக்னியின் தணல்கள் இவையோ?”, என்று எண்ணுகின்றனர்.

ஸ்ரீ ரங்க நாத பாதுகையே நகரத்து ஸ்திரீகள் உன்னை சேவித்துக் காதல் உறுகின்றனர் –
பத்ம ராகங்கள் கொடுக்கும் ரத்தச் சிவப்பு மன்மதன் ஆகிற அக்னியின் தணல் குவியலில் இருந்து
வருவது என்று அவர்கள் கருதுவர் –

————————————————————-

அவைமி தோஷா பகமஸ்ய ஹேதும்
தம: அபஹாம் ஸம்ப்ருத பத்ம ராகாம்
அசேஷ வந்த்யாம் மணி பாதுகே த்வாம்
ரங்கேஸ ஸூர்யோதய பூர்வ ஸந்த்யாம்—-587–

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அனைத்து விதமான பாவங்கள் என்னும்
இரவுப் பொழுது போக்குவதாகவும், அந்தப் பாவங்களுக்குக் காரணமான தமோ குணம் என்னும் இருள் நீங்குவதாகவும்,
பத்மராகக் கற்கள் என்னும் தாமரை மலர்வதாகவும், ஸ்ரீரங்கநாதன் என்னும் சூரியன் உதிப்பதாகவும் நான் காண்கிறேன்.
இவற்றுக்குக் காரணமாக உள்ள உன்னை, நான் காலை வேளையாகவே எண்ணுகிறேன்.

ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் ஆகிற ஸூர்யன் உதயம் ஆவதற்கு முன் தோற்றம் அளிக்கும் காலை சந்தி -நீ
பாபம் நீங்குகிறது -இருள் போகிறது -பத்ம ராகங்கள் தாமரை மலர்கின்றதைக் காட்டுகிறது
எல்லோரும் சேவிக்கிறார்கள் -உன்னைப் பூர்வ சந்த்யை யாகச் சொல்வதற்கு இவை காரணங்கள் –

——————————————————————–

அவாப்ய பாதாவநி ரங்க பர்த்து:
பாதாம் புஜே பல்லவ ஸம்ஸ்தராபம்
த்வத் பத்ம ராக த்யுதயோ பஜந்தே
காலா நலத்வம் கலு ஷாம்புதே: ந:—588–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் மென்மையான தளிர்கள் போன்று காணப்படுகின்றன.
ஆனால் அவையே எங்களது பாவம் என்ற பெரும் ஸமுத்திரத்தை வற்றச் செய்கின்ற ப்ரளய காலத்து அக்னி போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன் பத்மராக ஒளிக் கதிர்கள் பெருமாள் திருவடியில் துளிர்ப் பரப்பு தந்தது எனபது உண்மை –
ஆனால் அதுவே எங்கள் பாப சமுத்ரத்தை வற்றச் செய்யக் கூடிய காலாக்னி என்று சொல்லத் தக்கது –

—————————————————————————–

நிஸர்க ஸித்தம் மணி பாத ரக்ஷே
தேவஸ்ய ரங்காவஸத ப்ரியஸ்ய
பாலார்க்க வர்ணா: பத பத்ம ராகம்
த்வத் பத்ம ராகா: புநருக்த யந்தி—-589–

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய பத்மராகக் கற்களின் ஒளியானது
இளம் சூரியனின் நிறம் போன்று சிவந்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் மிகவும் சந்தோஷத்துடன் வாசம் செய்யும்
நம்பெருமாளின் திருவடித்தாமரைகளின் அழகை இந்தச் சூரிய ஒளி மேலும் அதிகப்படுத்துகிறது.

ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ ரங்க ஷேத்திர வாஸ பிரியனான பகவான் திருவடிகளே இயற்கையாகத் தாமரைகள் –
அவற்றிக்கே ஒரு பத்ம ராகம் -தாமரை நிறம் உண்டு –
நீ தரித்து இருக்கும் பால ஸூர்யனை ஒத்த பத்ம ராகக் கற்கள் அவன் பாத பத்ம ராகத்தை அதிகப் படுத்துகின்றன –

———————————————————————-

பதேந விச்வம் மணி பாத ரக்ஷே
பத்ந்யா ஸமம் பாலயதோ முராரே:
யச: பயோதௌ பரிகல்பயந்தி
ப்ரவாள சோபாம் தவ பத்மராகா:—590–

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! தனது திருவடிகள் மற்றும் ஸ்ரீரங்கநாச்சியார் ஆகிய துணையுடன்,
ஸ்ரீரங்கநாதன் இந்த உலகத்தைக் காப்பாற்றுகிறான். அவனது கீர்த்தியானது பெரும் ஸமுத்திரம் போன்று உள்ளது.
உனது பத்மராகக் கற்கள், இந்த ஸமுத்திரத்தை மேலும் அழகுபடுத்தும் பவழங்கள் போன்று உள்ளன.

ஸ்ரீ மணி பாதுகையே -பிராட்டி உடன் இணைந்து இந்த உலகின் எல்லாவற்றையும் அதற்கு ஏற்றவாறு ஊக்கத்துடன் ரஷித்து வருகிற
பெருமாளுடைய கீர்த்தி யாகிற சமுத்ரம் இருக்கிறதே -அதில் உனது செம்மணிகள் பவழங்களின் அழகை உண்டாக்கும் –

—————————————————————-

அர்ச்சிஷ்மதீ காஞ்சந பாத ரக்ஷே
ப்ரஸ்தௌதி தே பாடல ரத்ந பங்க்தி:
ரேகா ரதாங்கஸ்ய மஹ: ப்ரபஞ்சம்
ரங்கேச பாதாம்புஜ மத்ய பாஜ:—-591–

ஸ்ரீரங்கநாதனின் பொன்மயமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய தாமரை மலர் போன்ற அழகிய திருவடியின் நடுவில்,
ரேகை வடிவத்தில் சக்கரம் உள்ளது. உன்னுடைய பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது,
அந்தச் சக்கரத்தின் ஒளியைப் போன்று காணப்படுகிறது.

ஸ்ரீ பாதுகையே உன் பத்ம ராகங்களின் தேஜஸ் பெருமாள் திருவடியின் அடிப்பாகத்தில் நடுவில் ரேகையாக
இடம் பெற்றுள்ள சக்ரத்திற்குக் கூட ஒளி தந்து விடுகிறதே –

——————————————————-

த்வயைவ பாதாவநி சோண ரத்நை:
பாலாதபம் தூநம் உதீர யந்த்யா
பத்மாபதே: பாத தல ப்ரரூடம்
ரேகாம் புஜம் நித்யம் அபூத் அநித்ரம்—592–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பத்மராகக்கற்களின் சிவந்த ஒளியானது இளம் வெய்யில் போன்று காணப்படுகிறது.
இந்த வெய்யிலின் காரணமாகவே, ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில்,
ரேகை வடிவில் உள்ள தாமரையானது, எப்போது மூடாமல், மலர்ந்தே காணப்படுகிறது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உள்ளங்காலில் திகழ்கிற ரேகை யுருவிலான பத்மம் -தாமரை -எப்போதும்
குவியாமல் மலர்ந்தே இருப்பது -உன் செம்மணிகளின் மிதமான வெயிலால் போலும் –

————————————————————–

நித்யம் நிஜா லோக பதம் கதாநாம்
ஸ்ரேயோ திசந்தீம் ஸ்ரித பத்ம ராகாம்
மஹீ யஸிம் மாதவ பாத ரக்ஷே
மந்யா மஹே மங்கள தேவதாம் த்வாம்—-593-

ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்த பெரிய பெருமாளின் பாதுகையே! உன்னுடைய ப்ரகாசம் என்னும் வழியில் செல்பவர்களுக்கு
நீ மிகுந்த நன்மையை அளித்தபடி உள்ளாய். பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியால் நீ
தாமரை மலரில் விருப்பம் உடையவளாகத் தோன்றுகிறாய். மிகவும் மேன்மையுடன் விளங்குகிறாய்.
இப்படியாக உள்ள உன்னை அனைத்து விதமான மங்களங்களுக்கும் தேவதையான மஹாலக்ஷ்மி என்றே எண்ணுகிறோம்
(திருவடியில் உள்ளதால் பாதுகையும் மஹாலக்ஷ்மியும் ஒன்றே எனக் கூறுகிறார்).

ஸ்ரீ மாதவ பாதுகையே உன்னை மங்கள தேவதை என்ற அடை மொழி பெற்ற மஹா லஷ்மி யாகவே கருதுகிறோம்
ஏன் என்றால் அவள் பத்மத்தில் வசிக்க ராகம் உடையவள் என்றால் நீ பத்ம ராகக் கற்களை வைத்து இருக்கிறாய் –
நீ உன் ஒளி வட்டத்தில் வந்தவருக்கும் அவள் கடாஷதிற்கு இலக்கானவருக்கும் நித்யம் ஸ்ரேயசை -பரமபதத்தை -அளித்து அருளுகிறீர்கள்
அவளும் மிகப் பெரியவள் -நீயும் பத கமலத்தை விட மகிமை பெற்று உள்ளாய் –

————————————————————-

தேவஸ்ய ரங்க ரஸிகஸ்ய விஹார ஹேதோ:
ஆத்மாநம் அங்க்ரி கமலே விநி வேத்ய பூர்வம்
ப்ராயோ நிவேதயஸி சோண மணி ப்ரகாசை:
ப்ரத்யூஷ பதம் கலிகாம் பத ரக்ஷிணி த்வம்—-594-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கத்தின் மீது மிகவும் ஆசை கொண்டவனான
ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின் பொருட்டு, அவனது திருவடித் தாமரைகளில், நீ உன்னை முதலில் சமர்ப்பணம் செய்து கொள்கிறாய்.
அதன் பின்னர் உனது சிவந்த பத்மராக்க் கற்களின் ஒளி மூலம், காலை நேரத்து தாமரை மலர்களைச் சமர்ப்பிக்கிறாய் போலும்.

இங்கு கூத்தாடும் ஒரு பெண், சபையில் உள்ள தலைவனை வணங்கி, அவனுக்கு மலர்களை வாரி இறைத்தல் என்பது கூறப்படுகிறது.

ஸ்ரீ பாதுகையே நாட்ய சாலையில் ப்ரீதி உள்ள நடன் ஒருவனை ஆட்டத்திற்காக வரும் போது வணங்கி வரவேற்பது போலே
ஸ்ரீ ரங்க ஷேத்திர ரசிகனான பெருமாள் சஞ்சாரத்திற்குப் புறப்படும் போது அவன் திருவடிகளில் தன்னை சமர்ப்பித்து
உன் பத்ம ராக மணிகள் உடைய ஒளிகளால் காலையில் இன்னும் மலராத தாமரை மொக்கை உபசாரமாக சமர்ப்பிக்கிறாய் போலும் –

——————————————————————————-

ப்ரத்யங்க யஸ்ய ஹவிஷ: ப்ரணவேன தேவி
ப்ரக்ஷே பணாய பரமார்த்த விதாம் முநீநாம்
ப்ராஜ்யாம் முகுந்த சரணாவநி பத்ம ராகை:
பர்யாய பாவக சிகாம் பவதீம் ப்ரதீம:—-595-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! பத்மராகங்களுடன் கூடிய நீ, ஒரு விதமான அக்னியின் ஜ்வாலை போன்றே உள்ளாய்.
இந்த அக்னியில், ப்ரணவத்தை உச்சரித்தபடி, முனிவர்கள் தங்கள் ஆத்ம ஸ்வரூபம் என்ற அவிர்பாகத்தை அளிக்கின்றனர்.

ஸ்ரீ முகுந்த பாதுகையே தத்வ ஜ்ஞானம் பரமார்த்தம் எது என்ற ஜ்ஞானம் பெற்ற முனிவர் பத்ம ராகங்களோடு கூடிய உன்னை
உத்தேசித்து பிரணவ மந்திர உச்சாரணத்துடன் ஆத்மா சமர்ப்பணம் செய்கையில் ஹவிஸ்சை ஆத்மாவை ஹோமம்
செய்யும் போது பெரியதாயும் நெய் சேர்க்கப் பட்டதாயும் உள்ள ஓர் அக்னி வகையாக உன்னை நினைக்கிறோம் –

——————————————————————————

ஸம்பத்யதே தவ பாதாவநி பத்ம ராகை:
ப்ரஸ்தாந மாங்களிக ஹோம ஹுதாஸ நஸ் ரீ:
க்ஷிரா ஹுதி: பவதி யத்ர விகல்ப கங்கா
ரங்கேஸ் வரஸ்ய ருசிரா நகரஸ்மி தாரா—-596-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் உற்சவ காலங்களில் யாக சாலையில் இயற்றப்படும்
ஹோமத்தில் உள்ள மங்களகரமான அக்னியோ என்னும்படி உனது பத்மராகக் கற்கள் தோன்றுகிறன.
அப்போது அங்கு எழுந்தருளும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடி நகங்கள், கங்கை போன்று வெண்மையாகக் காணப்படுகின்றன.
இந்த வெண்மையைக் காணும் போது, அந்த ஹோமத்தில் இடப்படும் பால் போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் புறப்பாடு கண்டு அருள -மாங்களிக ஹோமம் நடக்கிறது போலும்
நீ உன் பத்ம ராகங்கள் உடன் அக்னி போல் ஜ்வலிக்கிறாய்- அதில் பெருமாள் திருவடி திரு நகங்களின் காந்தி வரிசை
ஒரு வெண்ணிறமான ஆஹூதி போல் தோன்றும் –
அது இன்னொரு கங்கையோ பெருமாள் திருவடியில் இருந்து பெருகி பால் ஆ ஹூதி போல் ஆகிறதே –

———————————————————————————–

ஆமுஞ்சதாம் அருண யாவக பங்க லக்ஷ்மீம்
சோணாஸ் மநாம் தவ பதாவநி சாந்தி யோகாத்
பத்மா ஸஹாய பத பத்ம நகா: ஸ்ரயந்தே
ஸந்த்யா அநுரஞ்ஜித ஸுதாகர பிம்ப சோபாம்—-597-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளின் நகங்கள் அனைத்தும்,
செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்டது போன்ற அழகை, உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளி மூலம் அடைகின்றன.
அவற்றைக் காணும்போது ஸந்த்யா கால நேரத்தில் சிவந்துள்ள வானத்தில் காணப்படும் சந்த்ரன் போன்று உள்ளன.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் திரும்ப அவர் திருவடி திரு நகங்கள் செம்பஞ்சு குழம்பின் சிவந்த சோபையையுடைய
பத்ம ராகங்கள் நீ தரிப்பவை -திரு நக காந்திக்கு சந்த்யா காலத்தில் சிவந்த பூர்ண சந்திர பிம்ப அழகைத் தரும் –

———————————————————————————

ஸ்தாநே தவ அச்யுத பதாவநி பத்ம ராகா:
தேஜோ மயா: ப்ரசம யந்தி தமோ மதீயம்
சித்ரம் தத் ஏதத் இஹ யத் ஜநயந்தி நித்யம்
ராகாத் மகேந மஹஸா ரஜஸோ நிவ்ருத்திம்—-598–

அடியார்களை நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் பிரகாசமாக உள்ள உனது பத்மராகக் கற்களின் ஒளி மூலமாக,
எனது தமோ குணம் என்ற இருள் அகன்றுவிடுகிறது. இது பொருத்தமான நிகழ்வே ஆகும்.
ஆனால் விஷயப் பற்றுதல்கள் என்னும் சிவந்த நிறம் கொண்ட ரஜோ குணத்தை,
உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியே நீக்குகின்றனவே! இது மிகவும் வியப்பே ஆகும்.

பத்ம ராகத்தின் ஒளியால் இருண்ட தாமஸ குணம் நீங்குவதாகக் கூறுகிறார். இது நியாயமே ஆகும்.
பாதுகையின் பத்மராகக் கற்களின் வெளிச்சம் ராகமாக, அதாவது சிவப்பாக உள்ளது.
இது சிவந்த நிறம் கொண்ட ரஜோ குணத்தை நீங்குகிறதே என்று வியக்கிறார்.

ஸ்ரீ பாதுகையே உன் பத்ம ராகங்கள் ஒளி தருபவை –என் தமோ குணம் அதனால் நீங்குகிறது என்பது பொருத்தும்
ஏன் எனில் தமஸ் என்றால் இருட்டு -ஆனால் என் விஷயப் பற்றான ராகம் என்கிற ரஜோ குணத்தை
அந்த பத்ம ராகம் நீக்குகிறதே அது தான் எப்படிக் கூடும் -இது விசித்ரம் தான் –

———————————————————————————-

பத்மா கர அந்தர விகாஸிநி ரங்க பர்த்து:
பீத்வா பதாவநி மதூநி பதார விந்தே
சோணோ பல த்யுதி மயீம் ஸுபக ப்ரசாராம்
மந்யே பிபர்ஷி மஹதீம் மதராக சோபாம்—599–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் திருக்கரங்கள், தாமரைத் தடாகம் போன்று உள்ளன.
அங்கு ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள் மலர்ந்து காணப்படுகின்றன.
அந்தத் தாமரையில் பெருகி நிற்கும் தேனைப் பருகிய நீ, மிகவும் வேகமும் அழகும் கூடிய நடையைக் கொண்டவளாகிறாய்.
கள் குடித்தவன் முகம் முழுவதும் சிவந்து காணப்படுவது போன்று, உனது பத்மராகக் கற்கள் சிவந்து காணப்பட்டு,
உனது அழகை மேலும் கூட்டுகிறது என்று நான் எண்ணுகிறேன்.

இங்கு நம்பெருமாளின் திருவடித் தாமரைகளில் பெருகும் மதுவைப் பாதுகை குடித்து, அதனால் கள் குடித்தவன் போன்று
வேகமாக நடப்பதாகக் கூறுகிறார். மதுவைப் பருகியவன் சிவந்த நிறம் கொண்டு இருப்பது போன்று,
பாதுகையும் பத்மராகக் கற்களின் ஒளியால் சிவந்துள்ளாள் என்றார்.

ஸ்ரீ பாதுகையே பிராட்டியின் கைகளின் நடுவாகிற தடாகத்தில் உண்டானது -பெருமாள் திருவடித் தாமரை –
அது பெருக்கும் தேனைக் குடித்ததனால் -கள் குடித்த தனால் போல் -ஒரு மதம் ஏற்பட்டு அழகிய நடை
பத்ம ராகத்தில் விளையும் சிவப்பு இரண்டும் பொலிய நீ விளங்குகிறாய் என்பேன் –

——————————————————————————

பாதாவநி ப்ரஸ்ருமரஸ்ய கலேர் யுகஸ்ய
ப்ராயேண ஸம்ப்ரதி நிவாரயிதும் ப்ரவேசம்
ஸ்ரீரங்க ஸீம்நி தவ சோண மணி ப்ரஸுத:
ப்ராகாரம் அக்நி மயம் ஆரபதே ப்ரகாச:—-600-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்தப் பூமி எங்கும் கலிபுருஷன் பரவியபடி வருகிறான். ஆனால்,
அவன் ஸ்ரீரங்கத்தின் எல்லைக்குள் புகாதபடி உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது,
நெருப்பால் ஆகிய ஒரு கோட்டையை உண்டாக்குகிறது போலும்.

ஸ்ரீ பாதுகையே உன் பத்ம ராக சோபை பெரிதாகப் பரவி ஸ்ரீ ரங்க ஷேத்ரத்திற்கே புதியதாக ஒரு அக்னியாலான
தடுப்புச் சுவரை -கோட்டை மதிளை-எழுப்பி இருக்கிறது என்னலாம் போலும்
இப்போது பரவி வரும் கலி யுகத் தீமை உள்ளே நுழையாத படி இது செய்து விட்டதே –

——————————————————————————–

லீலா க்ருஹ அந்தர விஹாரிணி ரங்க நாதே
லாக்ஷா ரஸை: அருண ரத்ந மயூக லக்ஷ்யை:
ப்ராயேண ரஞ்ஜயதி பாத ஸரோஜ யுக்மம்
ஸைரந்த்ரிகேவ பவதீ மணி பாத ரக்ஷே—-601-

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் இன்பமாக விளையாடி மகிழ்வதற்காக உள்ள அறையில்,
எளிதாகப் புகும் தாதிப்பெண் போன்று நீ உல்லாஸமாகச் செல்கிறாய். உன்னுடைய பத்மராகக் கற்களின் சிவந்த ஒளி மூலமாக,
அவனது இரண்டு திருவடிகளுக்கும் செம்பஞ்சுக் குழம்பைப் பூசச் செல்கிறாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் தேவிகளோடு உல்லாசமாய் இருக்கும் இல்லத்துக்குப் போகும் போது
நீ தாதிப் பெண் போலே அவன் திருவடிகளுக்கு பத்மராக கிரணங்கள் ஆகிற செம்பஞ்சுக் குழம்பினால் அலங்காரம் செய்கிறாயோ –

——————————————————————–

ரங்கே சிதுர் விஹரதோ மணி பாத ரக்ஷே
ரத்யாந்தரே ஸுமநஸ: பரிகீர்ய மாணா:
த்வத் பத்ம ராக கிரணாச் சுரணாத் பஜந்தே
ஸந்த்யாதப அந்தரித தாரக பங்க்தி லக்ஷ்மீம்—-602–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்கின்ற காலத்தில், அவன் மீது
மலர்களை வாரி இறைக்கின்றனர். அந்த மலர்கள் மீது உனது பத்மராகக் கற்களின் ஒளியானது விழுகிறது.
இதனைக் காணும்போது, மாலை நேரத்து வெய்யிலுடன் கூடிய நக்ஷத்திரங்கள் போன்று அந்த மலர்கள் காணப்படுகின்றன.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் வீதி நடுவில் உலா வரும் போது பக்தர் இறைக்கும் பூக்கள் உன் பத்ம ராகச் சிவப்பு
ஒளியில் சந்த்யா காலச் செவ்வானத்தில் மறைந்து நிற்கும் நஷத்ரங்கள் போலே ஒளிர்கின்றன –

—————————————————————–

ரங்காதி ராஜ பத ரக்ஷிணி பிப்ரதஸ் த்வாம்
கங்கா தரங்க விமலே கிரிசஸ்ய மௌளௌ
ஸம்வர்த்த யந்தி மஹஸா தவ பத்ம ராகா:
சைலாத் மஜா சரண யாவக பங்க லக்ஷ்மீம்—-603–

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னைச் சிவன் தனது தலையில் வைத்துக் கொள்கிறான்.
அப்போது, அவனது தலையில் உள்ள தூய்மையான கங்கை நீரில் உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளி பரவுகின்றது.
இதனைக் காணும் போது, ஹிமவத் என்னும் மலையின் மகளான பார்வதியின் கால்களில் பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பானது,
சிவனின் தலையில் உள்ளதைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.

ஸ்ரீ ரங்க ராஜ ஸ்ரீ பாதுகையே கங்கை நீர் அலைகளாலே தன் தலையை நிர்மலமாகச் செய்து -அதில் முன்பிருந்த பார்வதியின் பாதச்
செம்பஞ்சுக் குழம்பு ஏதும் இராதபடிச் செய்து உன்னைத் தரிக்கிறான் சிவன் -ஆயின் என்ன –
உன் பத்ம ராகங்கள் செவ்வொளியை அவன் தலையில் பரப்பி அந்த பார்வதி பாத குழம்புச் சிவப்பை வளர்க்கும் போலும் –

————————————————–

சரணம் உபகதாநாம் சர்வரீம் மோஹ ரூபாம்
சமயிதும் உதயஸ்தாந் மந்மஹே பால ஸூர்யாந்
பத ஸரஸிஜ யோகாத் ரங்க நாதஸ்ய பூய:
பரிணமத் அருணிம்ந: பாதுகே பத்மராகாந்—-604–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளின் சிவந்த நிறம் காரணமாக உனது
பத்மராகக்கற்கள் மேலும் சிவந்து காணப்படுகின்றன. இவற்றைக் காணும்போது,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிளைச் சரணம் அடைந்தவர்களின் அஜ்ஞானம் என்ற இருளைப் போக்க
வந்த இளம் சூரியன் போன்றே உள்ளது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடித் தாமரைச் சேர்க்கை உன் பத்ம ராகங்களின் செந்நிறத்தை அதிகப் படுத்த
இப்போது இவை சரணம் அடைந்தவர்களின் அஜ்ஞ்ஞானம் ஆகிற இரவைப் போக்க வல்ல
உதிக்கிற நிலையில் காணும் பால ஸூர்யர்களோ என்னத் தோன்றும் –

————————————————————————-

ஹரி பதரு சிராணாம் பாதுகே தாவகா நாம்
அருணா மணி கணா நாம் நூன மர்த்தேந்து மௌளி
பிரணதி சமய லக்நாம் வாசநா மேவ தத்தே
காலமகணிஸ காந்திஸ் பர்த்தி நீபி ஜடாபி –605-

ஸ்ரீ பாதுகையே பிறைச் சந்திரனைத் தலையில் தரித்த சிவன் உன்னைத் தாங்கி அதன் விளைவாக ஒரு சடை பெற்றான் .
அது நெற்கதிரின் காந்தியை ஒத்ததாம் -உனது பத்ம ராகக் கற்கள் தாம் –
சிவன் வணங்கி நெருங்கி இருந்த போது தம் வாசனையை தம் குணத்தை அந்தச் சடைகளுக்கு ஈந்தனவோ –

——————————————————————————-

ப்ரதி விஹரணம் ஏதே பாதுகே ரங்க பர்த்து:
பத கமல ஸகந்தா: பத்மராகாஸ் த்வதீயா:
தருண தபந மைத்ரீம் உத்வ ஹத்பிர் மயூகை:
ஸ்தல கமல விபூதிம் ஸ்தாப யந்தி அவ்ய வஸ்தாம்—-606-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளின் சிவந்த ஒளியானது,
பால சூரியன் போன்று உள்ளது. உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது, ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும்போது,
அனைத்து இடங்களிலும் அந்தச் சிவந்த ஒளியைத் தாமரை போன்று தரையில் பதித்தபடியே சென்று விடுகிறது.
ஆக, திருவடியின் ஒளி என்னும் சூரிய ஒளி மூலம், வழி எங்கும் தாமரை மலர்ந்தது போன்று உள்து.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடித் தாமரை போல் உள்ளது பத்ம ராகம் -பெருமாள் சஞ்சார காலத்தில்
பால ஸூர்யன் போன்ற இந்த பத்ம ராக ஒளி நகர்ந்து கொண்டே போகும்
இடவரையறை இல்லாமல் -பார்த்தால் அவ்வளவும் நிலத் தாமரை போல் இருக்கும் –

——————————————————————-

அயம் அநிதர போகாந் ரஞ்ஜயந் வீத ராகாந்
அருண மணி கணாநாம் தாவகாநாம் ப்ரகாச:
மதுரிபு பத ரக்ஷே மங்க்ஷு ஜாஜ்வல்யமாந:
சல பயதி ஜநாநாம் சாஸ்வதம் பாபராசிம்—-607–

மது என்னும் அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேறு எதன் மீதும் ஆசை கொள்ளாமல்,
உன் மீதும் ஸ்ரீரங்கநாதன் மீதும் மட்டுமே ஆசை கொண்டவர்களை உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது,
மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியபடி உள்ளது. இதே ஒளியானது, பாவம் செய்பவர்களின் பாவக்குவியலை
விளக்கைத் தேடிவரும் விட்டில்பூச்சி போன்று எரிப்பதாகவும் உள்ளது.

ஸ்ரீ பாதுகையே -மற்று எல்லாப் போகங்களிலும் ராகத்தை ஒழிந்த வர்களுக்கு கூட ஆசை உண்டாகிறது –
உன் பத்ம ராக சோபையில் -உன்னுடைய இந்த பத்ம ராக ஒளி சுடர் விட்டு எரிகிறதே –
அந்தச் சுடர் அன்பர்கள் உடைய நீடித்து வந்துள்ள பாபக் குவியலையும் எரித்து ஒழிக்கும் –

—————————————————————————–

ப்ரசுர நிகம் கந்தா: பாதுகே ரங்க பர்த்து:
பத கமல ஸம்ருத்திம் ப்ரத்யஹம் பாவ யந்த:
தததி சகல யந்தோ காடமந்தஸ் தமிஸ்ரம்
ஸமுசிதம் அருணத்வம் தாவகா: பத்மராகா:—608–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது வேத வாசனையுடன் உள்ளது;
ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை அன்றாடம் மலரும்படிச் செய்கின்றது;
அறியாமை என்ற இருளை நீக்குவதாக உள்ளது. இப்படியாக உனது பத்மராகக் கற்கள், சூரியனின் தன்மையை கொண்டபடி உள்ளன.

ஸ்ரீ பாதுகையே உனது பத்ம ராகங்கள் ஸூ ர்யனை ஒத்தவை -இரண்டுக்கும் வேத நறு மணம் ஒரு சிறப்பு –
ஸூ ர்யன் தாமரை மலரை மலர வைத்துச் செவ்வி தருவான்
பத்ம ராக சோபையோ பெருமாள் திருவடித் தாமரைக்கு பிறப்பை தரும்
புற இருளை நீக்கும் ஸூ ர்யன் போல் அன்றி பத்ம ராகச் சுடர் கனமான உள்ளிருட்டை விரட்டும்
அருணத்வம் -சிவப்பு நிறம் பொதுவானது –

—————————————————————

லாக்ஷா லக்ஷ்மீம் அதரரூசகே ரங்கிண: பாத ரக்ஷே
வக்த்ர அம்போஜ மத பரிணதிம் பத்ம ராக த்யுதிஸ்தே
கர்ண உபாந்தே கிஸலய ருசிம் தேவி ஸேவா நதாநாம்
ஸீமந்தே ச த்ரிதச ஸுத்ருசாம் ஸௌதி ஸிந்தூர சோபாம்—-609-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! உன்னைத் தேவலோகப் பெண்கள் வந்து வணங்குகின்றனர்.
அப்போது உனது பத்மராகக்கற்களின் சிவந்த ஒளியானது – அவர்கள் உதடுகளில் செம்பஞ்சுக் குழம்பு தடவிய அழகையும்,
தாமரை போன்ற முகங்களின் கள் குடித்தது போன்ற சிவந்த தன்மையையும்,
காதின் அருகில் தளிர்களின் சிவப்பையும், தலை வகுட்டில் குங்குமத்தையும் சேர்த்து விடுகிறது.

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகா தேவியே தேவ ஸ்திரீகள் வந்து வணங்குகிறார்கள் .அப்போது உன் பத்ம ராகங்களின் ஒளி
அவர்கள் கீழ் உதட்டில் செம்பஞ்சுக் குழம்பிப் பூசி அவர்கள் முகத்தில் ஒரு மதத்தையும் பிரதிபலித்து
காது அருகில் செவிப்பூ போன்ற தளிரின் அழகையும்
உச்சி வகிட்டில் சிந்தூரத்தின் அழகையும் உண்டாக்கி விடுகிறாய் -தேவ ஸ்திரீகள் புது அழகு பெறுகின்றனர் –

————————————————————————————

அருணமயஸ் தவ ஏதே
ஹரி பத ராகேண லப்த மஹிமாந:
கமயந்தி சரண ரக்ஷே
த்யு மணி கணம் ஜ்யோதி ரிங்கணதாம்—-610-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பத்மராகக்கற்கள், ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளின்
சிவந்த ஒளியைப் பெறுகின்றன. இதனால் அவை, மற்ற சூரியன்கள் அனைத்தையும், ஒளி குறைந்த,
மின்மினிப்பூச்சிகள் போன்று மாற்றி விடுகின்றன.

ஸ்ரீ பாதுகையே பத்ம ராகங்களின் சிறப்புச் சிவப்பு சோபை பெருமாள் திருவடியின் சிவப்பச் சிறப்பையும் பெற்று –
எத்தைனையோ பிரகாசமாய் இருக்கிறது -அது ஸூர்யக் கூட்டங்களைக் கூட ஒன்றும் இல்லாததாய்ச் செய்து
வெறும் மின் மினிப் பூச்சிகள் ஆக்கிவிடும் –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-16- பஹூ ரத்ன பத்ததி -ஸ்லோகங்கள் -531-580–

March 15, 2016

பஹு ரத்ந பத்ததி
கடந்த பத்ததியில் நம்பெருமாளின் திருவடிகளில் உள்ள பாதுகையில் பதிக்கப்பட்ட இரத்தினக் கற்களைத்
தூரத்தில் நின்று பார்க்கும் போது, அவை ஒளிர்கின்றன என்றார். நம்பெருமாளுக்குச் சற்று அருகில் சென்றால்,
அந்த இரத்தினங்கள் வெண்மை, சிகப்பு, பச்சை மற்றும் நீல வர்ணங்களாகத் தோன்றும்.
இவை இந்த பத்ததி தொடங்கி ஒவ்வொரு வர்ணத்திற்கும் ஒவ்வொரு பத்ததியாகக் கூறுகிறார்.
முதலில் நான்கு வர்ணங்களின் சேர்க்கையை இந்த பத்ததியில் கூறிவிட்டு, அடுத்து நான்கு பத்ததியில் தனித்தனியாகக் கூறுகிறார்.

——–

முக பாஹூரு பாதேப்யோ
வர்ணாந் ஸ்ருஷ்டவத: ப்ரபோ:
ப்ரபத்யே பாதுகாம் ரத்நை:
வ்யக்த வர்ண வ்யவஸ்திதிம்—531-

தன்னுடைய திருமுகம், புஜங்கள், தொடைகள், திருவடிகள் ஆகியவற்றில் இருந்து நான்கு வர்ணங்களைப்
(அந்தணன் முதலானவை) படைத்த ஸ்ரீரங்கநாதனின் – பலவிதமான இரத்தினக்கற்களால் வர்ணங்கள் (நிறங்கள்)
என்பது இன்னவை என்று விளக்கியபடி உள்ள பாதுகையை நான் சரணம் அடைகிறேன்.

பகவான் திரு முகம் திருக்கை திருத் தொடை திருப்பாதம் என்ற அங்கங்களில் இருந்து முறையே நான்கு வர்ணங்களை
உண்டாக்கியது போல் தன் ரத்னங்களில் இருந்து பல வர்ணங்களை வெளிப்படுத்துமதான திருப் பாதுகையை சரணம் அடைகிறேன் –

————————————————————-

மணிபி: ஸித ரக்த பீத க்ருஷ்ணை:
பவதீ காஞ்சந பாதுகே விசித்ரா
யுகபேத விகல்பிதம் முராரே:
யுகபத் தர்சயதீவ வர்ண பேதம்—-532–

தங்கமயமான பாதுகையே! வெண்மை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு ஆகிய பலவிதமான இரத்தினக் கற்களின் நிறம் மூலமாக,
ஸ்ரீரங்கநாதன் பல்வேறு யுகங்களில் நிற்கும் நிற வேற்றுமையை ஒரே நேரத்தில் நீ காண்பிக்கிறாய் போலும்.

எம்பெருமான் க்ருதயுகத்தில் வெண்மையாகவும், த்ரேதாயுகத்தில் சிவப்பாகவும், த்வாபரயுகத்தில் மஞ்சளாகவும்,
கலியுகத்தில் கறுப்பாகவும் உள்ளதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவை அனைத்தையும் ஒன்றாகப் பாதுகை காண்பிக்கிறது.

ஸ்ரீ தங்கப் பாதுகையே நீ ரத்னங்களால் வெளுப்பு மஞ்சள் சிவப்பு கறுப்பு என்று பல வர்ணங்களைக் காட்டுகிறாய் –
பெருமாள் ஒவ்வொரு யுகத்தில் ஒரு வர்ணம் உடையவனாகி இருப்பான் என்று இருக்க நீ அவற்றை ஒன்றாகக் காட்டுகிறாய் போலும் –

———————————————————

நவரத்ந விசித்ரிதா முராரே:
பதயோஸ் த்வம் மணி பாதுகே விபாஸி
நவ கண்டவதீ வஸுந்தரேவ
ப்ரணயாத் ஜந்ம புவம் ஸமாஸ்ரயந்தீ—533-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட ஒன்பது விதமான இரத்தினக் கற்கள்,
பலவிதமான வர்ணங்களுடன் கூடியதாக ஒளிர்ந்தபடி நீ உள்ளாய்.
இப்படியாக நீ, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்னும் பிறப்பிடத்தை அடைத்துள்ள, ஒன்பது கண்டங்களுடன் கூடிய பூமி போன்று உள்ளாய்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் இருந்து பூமி வெளிப்பட்டது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்தப் பூமியில் பாரத, கிம்புருஷ, ஹரிவர்ஷ, இளாவ்ருத, பத்ராச்வ, கேதுமால, ரம்ய, ஹிரண்மய மற்றும் குரு
என்னும் ஒன்பது கண்டங்கள் உள்ளன.
இது போன்று பாதுகையில் முத்து, சிவப்பு, பச்சை, நீலம், வைடூரியம், கோமேதகம், வைரம், பவழம் மற்றும் தங்கம்
ஆகிய ஒன்பது விதமான நிறங்கள் உள்ளன. இதனால் ஒற்றுமை கூறுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே -ஒன்பது வகையான ரத்னங்கள் கொண்டுள்ள நீ ஒன்பது கண்டங்களைக் கொண்ட
பரதகண்டம் கிம் புருஷம் போன்ற ஒன்பது கண்டங்கள் கொண்ட -பூமி போல்
பெருமாள் திருவடிகளில் ப்ரீதி யுடையவளாய் இருக்கிறாய் -பூமிக்கும் தன் தாயான திருவடி இடத்தில் ப்ரீதி இருக்குமே –
பத்ப்யாம் பூமி –புருஷ ஸூக்தம்-

———————————————————

ஸஹஸா விநிவேத்ய ஸாபராதாந்
த்வத் ஆதீந ஸ்வபதே முகுந்த பாதே
அருணோபல ஸக்த மௌக்திக ஸ்ரீ:
ஸ்மயமாநேவ விபாஸி பாதுகே த்வம்—-534-

ஸ்ரீரங்ககநாதனின் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட சிவப்புக் கற்களின் மீது முத்துக்களின் வெண்மையாக
ஒளியானது பரவியபடி உள்ளது. இது எப்படி உள்ளது என்றால் – உனக்கு வசப்பட்டு உன் விருப்பத்தின்படி நடக்கின்ற
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில், குற்றங்கள் பல செய்தவர்களை வெகுவேகமாகக் கொண்டு சேர்த்து,
மகிழ்ந்து புன்னகை வீசுவது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன் மேல் சிவப்புக் கல்லின் மேல் முத்துப் பதித்து இருப்பது -சிவப்பு உதடுகளையும் சிறிது தெரியும் முத்துப் பற்களையும்
அதாவது புன்சிரிப்பையும் காட்டும் -அவராதிகள் சரணம் அடைகிற பொது திருவடி மறுத்தலுமானால் நீ உடனே ரஷணம் செய்யும் படி வேண்டுதலும் –
இதனால் திருவடியே தன் ரஷணத்தை உனக்கு ஆதீனம் ஆகும் என்று நினைத்தாலும் உனக்கு இந்த முக மலர்ச்சியை விளைவிக்கும் போலும் –

—————————————————————————

பஹு ரத்ந ஸமுத்பவம் மயூகம்
தவ மந்யே மணி பாதுகே முராரே:
சரண உபகதம் மயூர பிஞ்சம்
மகுட ஆரோஹண ஸாஹஸம் ப்ரமார்ஷ்டும்—535–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! பலவிதமான இரத்தினக்கற்களின் ஒளியால், பல வர்ணங்களில் நீ காணப்படுகிறாய்.
உன்னைக் காணும்போது- முன்பு கண்ணனின் தலையில் அமர்ந்த மயில் பீலியானது, அந்தச் செயலுக்காக மன்னிப்புக் கேட்டு,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் விழுந்து கிடப்பது போன்று உள்ளது (பாதுகையை மயில் பீலியாகக் கூறுகிறார்).

ஸ்ரீ மணி பாதுகையே உன் பலவித ரத்னங்களில் இருந்து வெளியாகும் ஒளி வட்டம் மயில் தோகை போல் உள்ளதே –
ஸ்ரீ கிருஷ்ணன் உடைய திருமுடி மேல் சாஹசமாக ஏறி அமர்ந்ததற்குப் பரிகாரமாக திருவடிக் கீழ் வந்து சேர்ந்ததோ
ஆம் அப்படித் தான் தோன்றுகிறது –

———————————————————

ப்ரபயா ஹரி நீல மௌக்திகாநாம்
விகஸந்த்யா திசஸீவ பாதுகே த்வம்
மதுபித் சரணாரவிந்த லக்ஷ்ம்யா:
ஸ்ரஜம் இந்தீவர புண்டரீக பத்தாம்—-536-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மஹாலக்ஷ்மி போன்று உள்ளன. உன்னில் பரவுகின்ற
இந்திரநீலக் கற்கள், முத்துக்கள் ஆகியவற்றின் ஒளி மூலமாக, இந்த மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கருநெய்தல்
மற்றும் செந்தாமரை ஆகிய மலர்கள் கொண்டு நீ மாலை தொடுக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே நீலக் கற்களும் முத்துக்களும் ஒரு அபூர்வ காந்தி தருகின்றன –
இது பகவானுடைய திருவடித் தாமரையின் லஷ்மிக்கு நீ சமர்ப்பித்திட்ட
கரு நெய்தல் வெண் தாமரை மலர்களைக் கொண்டு கோத்த மாலை போலும் –

————————————————————–

தவ மாதவ பாதுகே மணீநாம்
ப்ரபயா தேவி ஸித ஆஸித ஆருணாநாம்
வஹதே கிரிசஸ்ய மௌளி கங்கா
குமுத இந்தீவர பத்ம காநநாநி—-537-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
உன்னுடைய வெண்மை, கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய இரத்தினக்கற்களின் ஒளி காரணமாக,
சிவனின் தலையில் உள்ள கங்கையானது ஆம்பல், கருநெய்தல் மற்றும் செந்தாமரை போன்ற மலர்கள்
நிறைந்த காடுகளை அடைகிறது போலும் (பாதுகையை சிவன் தனது தலையில் ஏற்பதால்,
அந்த நிறங்கள் சிவனின் தலையில் மலர்கள் போன்று காணப்படுகின்றன என்றார்).

ஸ்ரீ பாதுகையே உன் சிவப்பு வெளுப்பு மற்றும் கறுப்பு ரத்ன ஒளிகள் சிவனுடைய தலையில் விழுந்து பெருகும் கங்கையை
அல்லி-கரு நெய்தல் -தாமரைப் பூ -இவற்றின் காடுகளை உடையதாகச் செய்யும் போலும் –

——————————————————

ப்ருதக் விதாநாம் த்யுதிபி: மணீநாம்
த்வாம் பாதுகே லோஹித சுக்ல க்ருஷ்ணாம்
விஹரஹேதோ: இஹ ரங்க பர்த்து:
பாத அநுஷக்தாம் ப்ரக்ருதிம் ப்ரதீம:—538–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பலவிதமான இரத்தினக்கற்களின் ஒளி காரணமாக சிவப்பு, வெண்மை, கறுப்பு
ஆகிய நிறங்களை நீ வெளிப்படுத்துகிறாய். இப்படியாக உன்னைக் காணும்போது,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை வந்தடைந்த ப்ரக்ருதி போன்று உள்ளாய்.

உலகில் உள்ள பலவிதமான பொருள்களுக்கும் மூல காரணமாக உள்ள ஜடப்பொருளை மூலப்ரக்ருதி என்றும்,
ப்ரக்ருதி என்றும் கூறுவர். இதற்கு ரஜஸ், தமஸ் மற்றும் ஸத்வம் ஆகிய குணங்கள் உண்டு.
ஸத்வம் வெண்மையாகவும், தமஸ் கறுப்பாகவும், ரஜஸ் சிவப்பாகவும் கூறப்படும்.
ஆக இந்த மூன்றும், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள பாதுகையில் இருந்து வெளிபடும் நிறங்களால் உண்டாவதாகக் கூறுகிறா

ஸ்ரீ பாதுகையே பலவித ரத்னங்களின் ஒளிகள் உன் மீது சிவப்பு வெளுப்பு கறுப்பு என்ற வர்ணங்களைச் சிதற வைக்க அது
ஸ்ரீ ரங்க நாதன் தன் லீலைக்காக அமைத்துக் கொண்ட மூல பிரகிருதியோ என்று என்ன வைக்கிறது –
பிரகிருதி -லோஹித ஸூ க்ல கிருஷ்ணா -உபநிஷத் -ரஜஸ் சத்வம் தமஸ் முக்குணங்களை குறிக்கும் –

—————————————————————-

தமால நீல த்யுதிம் இந்த்ர நீலை:
முக்த அநுவித்தாம் மணி பாதுகே த்வாம்
அவைமி ரங்கேஸ்வர காந்தி ஸிந்தோ:
வேலாம் அவிஸ்ராந்த கதா கதார்ஹம்—-539-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இரத்தினக் கற்களின் நீல நிறமான ஒளி காரணமாக,
தமால மரம் போன்று உள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் திருமேனியில் இருந்து வெளிவரும் ஒளியாகிய
கடல் அலைகளை வரவேற்கின்ற கரை போன்று நீ உள்ளாய்.
அந்தக் கரையில் காணப்படும் முத்துச் சிப்பிகள் போன்று உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்கள் உள்ளன.

கடலின் கரையில் அடர்ந்த பச்சை நிறத்தில் இலைகள் கொண்ட தமால மரங்கள் உள்ளதால், அங்கு நீலநிறமாகக் காணப்படும்.
அந்தக் கரையில், அலைகளால் இழுத்து வரப்பட்ட முத்துச்சிப்பிகள் மற்றும் முத்துக்கள் காணப்படும்.
இந்தக் கடலில் இடைவிடாமல் வீசும் அலையாக, ஸ்ரீரங்கநாதனின் திருமேனியில் இருந்து வெளிவரும் ஒளியைக் கூறுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே இந்த நீலக் கற்களால் முத்துப் பதித்த உன் தோற்றம் தமால விருஷங்கள் நிறைந்த
சமுத்ரக் கரை போலத் தோற்றம் அளிக்கும்
எத்தகைய சமுத்ரம் என்றால் பகவானுடைய காந்தி சமுத்ரம் –பகவான் சஞ்சரிக்கத் தக்க கடற்கரை –

——————————————————————–

அவைமி ரங்கேஸ்வர பாதுகாப்யாம்
அகால கால்யம் விபவம் விதாதும்
வஜ்ரேந்த்ர நீல வ்யபதேச த்ருஸ்யம்
பந்தீ க்ருதம் நூநம் அஹஸ்த்ரியாமம்—540-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் வஜ்ஜிரக்கல் என்றும், இந்திர நீலக்கல் என்றும் இருவிதமான இரத்தினங்கள் உள்ளன.
இவை பகல் போன்றும், இரவு போன்றும் தோன்றுகின்றன. இதனைக் காணும்போது, மோக்ஷம் என்னும் தடை இல்லாத ஐஸ்வர்யத்தை,
எங்களைப் போன்றவர்களுக்கு இரவுபகல் பாராமல் அளிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டு,
இவை உன்னில் சிறை வைக்கப்பட்டதாகவே நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ ரங்க நாத பாதுகைகள் தன்னை அன்டினவர்க்கு கால வரை யறைகளால் கட்டுப் படாத ஐஸ்வர்யம் கிடைக்கும் என்று காட்டுவதற்காகப் போலும்
வஜ்ரக்கல்-வைரம் -நீலக் கல் -என்ற பெயருடன் பகலையும் இரவையும் தன் சிறையில் வைத்துக் கொண்டு விட்டன போலும் –

——————————————————————

பதஸ்ய கோப்த்ரீ பவதீ முராரே:
மணி ஸ்ப்ருஸா மௌக்திக ரத்ந பாஸா
அந்தர் த்ருஸம் ஸாஞ்சநயா முநீநாம்
அநக்தி கர்ப்பூர சலாகயேவ—-541-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் நீ, உன்னுடைய இந்திரநீலக் கல்லைத்
தொடுகின்ற முத்தின் ஒளி என்னும் மையுடன் சேர்ந்த குச்சி கொண்டு, முனிவர்களின் ஞானக் கண்களுக்கு மை தீட்டுகிறாய் போலும்.

முத்தின் வெண்மையான ஒளியானது நீலக்கற்களின் மீது விழுகிறது. அப்போது அதனைக் காண்பதற்கு,
நுனியில் மை தடவப்பட்ட குச்சி போன்று தோற்றம் அளிக்கிறது. இந்த மையை முனிவர்களின் ஞானக்கண்களில் தீட்டி,
அவர்கள் ஸ்ரீரங்கநாதனைக் காண உதவுவதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே உன்னில் நீல ரத்னத்தைத் தொடும் முத்துக்களின் ஒளிக் கதிர் ஒரு பச்சைக் கர்ப்பூரக் குச்சியும்
அதன் நுனியில் தோய்ந்த அஞ்சன மையையும் நினைவுறுத்துகிறது –
நீ யோகிகள் உடைய உள் கண்ணுக்குப் பெருமாள் தெரிய வேணும் என்று இது செய்கிறாயோ
பகவான் உடைய திருவடியைக் காக்கும் நீ செய்யும் உபகாரம் இது –

———————————————————

முக்தா மயூக ப்ரகரை: ஸுபத்ரா
க்ருஷ்ணா மஹோந்த்ரோபல ரஸ்மி ஜாலை:
மாந்யா முராரேர் மணி பாதுகே த்வம்
விஹார யுக்தா விஜயம் வ்ருணோஷி—542–

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளியால் வெண்மையாக உள்ள நீ,
கண்ணனின் தங்கையான சுபத்ரை போன்று உள்ளாய். இந்த்ரநீலக் கற்களின் ஒளியால் கருமையான திரௌபதி போன்று உள்ளாய்.
இப்படியாக நீ முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனுக்கு ப்ரியமானவளாக உள்ளாய்.
எங்கு சென்றாலும் வெற்றியுடன் உள்ள நீ, அர்ஜுனனைத் திருமணம் செய்து கொண்டாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே உன் முத்து ஒளி வரிசை உன்னை ஸூபத்ரை யாக்குகிறது -அழகியதாக்குகிறது –
இந்திர நீலக் கற்களோ உன்னை கிருஷ்ணை -த்ரௌபதி -யாக்கும் -கறுப்பு நிறம் உள்ளதாக்கும்
பகவானுக்கு மதிக்கத் தக்கவள் ஆகிய நீ லீலையோடு -சஞ்சாரத்தோடு அர்ஜுனனை பகவானுக்கு விஜயத்தை விரும்பி ஏற்கிறாய்-

——————————————————————

விசித்ர வர்ணாம் மணி பாதுகே த்வாம்
சந்தோ மயீம் ஸாம நிபத்த கீதிம்
முநீந்த்ர ஜுஷ்டாம் த்வி பதாம் முராரே:
ப்ரத்யாயிகாம் காஞ்சி த்ருஸம் ப்ரதீம:—-543–

இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது இரத்தினங்களின் பலவிதமான நிறங்களைக் காணும் போது
அக்ஷரங்கள் (எழுத்துக்கள்) போன்று உள்ளன. இவை மூலம் நீ வேதமயமாகவே உள்ளாய்.
உன்னைக் கண்டவுடன் மக்கள் அனைவரும், ”எங்கள் குற்றங்களைப் பொறுப்பாய்”, என்று பாடுகின்றனர்.
இப்படியாக நீ முனிவர்களால் வணங்கப்பட்டும், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்து, அவனை உணர்த்துபவளாகவும் உள்ளாய்.
இப்படியாக உள்ள உன்னை ரிக் மந்த்ரம் என்றே கொள்கிறோம்.

ஸ்ரீ மணி பாதுகையே நீ பகவானைக் கொணர்ந்து நிறுத்துகிறாய் -பகவானை உணர்த்த வல்லது அந்த பிரசித்தமான ரிக்
நீயும் அந்த ரிக்கும் ஒரே ரீதியில் உள்ளதைப் பார் -பலவித வர்ணங்கள் பலவித அஷரங்கள்-
யதேச்சையான சஞ்சாரம் -சந்தஸ் என்கிற அமைப்பு உடையது-எங்களைக் கருணையோடு சமித்து அருள வேணும்
என்ற சாந்தப்படும் வசனத்தைக் கேட்கிறாய் –
ஜனங்களால் சாம என்கிற வேத அமைப்பில் பாடப் பெறுகிறது -முனீந்த்ரரால் சேவிக்கப் படுகிறாய்
ரிக் அவர்களால் காணப் பெற்றது -உன்னை ஒரு ரிக்காகவே எண்ணுகிறோம் –

——————————————————–

ப்ரஸேதுஷீ கோத்ரபித: ப்ரணாமை:
புஷ்ணாஸி ரங்கேஸ்வர பாதுகே த்வம்
மணி ப்ரபா ஸம்வலந உபதேசாத்
ப்ராயஸ் ததர்ஹாணி சராஸநாநி—-544-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மலைகளைப் பிளந்தவனான இந்திரன் உன்னை வணங்குகிறான்.
இந்த நமஸ்காரம் கண்டு நீ மகிழ்ந்து, உன்னுடைய பலவிதமான இரத்தினங்களுடைய ஒளியின் சேர்க்கை மூலம்
இந்த்ரனுக்கு ஏற்ற வில்லை உண்டாக்குகிறாய் போலும்.

ஸ்ரீ ரங்க நாத பாதுகையே பலவித ரத்ன ஒளிகளைக் கலந்து இருப்பதாக ஒரு வியாஜம் தான் –
உண்மையில் கோத்ரத்தை அழிப்பவனுக்குக் கூட மலைகளைப் பிளந்த இந்திரனுக்கு -அவன் பிரமாணங்களால்
பிரசன்னையாகி தக்க இந்திர தனுஸ் களை உண்டாக்கித் தந்து போஷிக்கிறாய் போலும் –

—————————————————————-

சோணாஸ் மநாம் தவ ஹரிந்மணி ரஸ்மி பிந்நம்
பாலாதபம் பலிவிமர்தந பாத ரக்ஷே
ஸ்யாமீக்ருதம் ஸூக சகுந்த கண ப்ரவேசாத்
சங்கே ஸதாம் கிமபி சாலி வநம் விபக்வம்—-545–

மஹாபலியை அடக்கிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய சிவப்புக் கற்களின் ஒளியில், பச்சைக் கற்களின்
ஒளியானது கலந்து நிற்கிறது. இதனைக் காணும்போது, இளம் வெயில் சூழ்ந்துள்ள சிறந்த நெற் பயிர்கள் கொண்ட
வயல் ஒன்று பச்சைக்கிளிகள் புகுந்ததால் எங்கும், மேலும் பசுமையாகக் காட்சி அளிப்பதாக உள்ளது.

ஸ்ரீ பெருமாளின் பாதுகையே உன் பச்சைக் கற்கள் -அவற்றின் ஒளிக் கதிர்களுடன் கூடும் சிவப்புக் கற்கள் –
இவை இளம் வெயில் போன்ற ஒளிக் குணம் தரும் -அதைப் பார்க்கையில் சாதுக்களின் நெல் வயல் -நன்கு பழுத்த நிலை –
அதில் கிளிப் பஷிகளின் இருக்கையால் ஒரு பசுமை உண்டாய் இருக்கிறது –
ஸ்ரீ பகவத் அனுபவ ரூபமான நெல் விளையும் வயலானதால் சுகர் இருக்க யாரும் அனுபவிக்கலாம் –

——————————————————————–

ஸம்பித்யமாந மணி வித்ரும மௌக்திக ஸ்ரீ:
ஸைரந்த்ரிகேவ பவதீ மணி பாத ரக்ஷே
ப்ரஸ்தௌதி ரங்க ந்ருபதே: சரணாரவிந்தே
கஸ்தூரிகா குஸ்ருண சந்தன பங்க சர்ச்சாம்—-546-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட கற்களில் இந்த்ரநீலம், பவளம், முத்து ஆகியவை சிறப்பாக,
ஒன்றுடன் ஒன்று கலந்தபடி ஒளி வீசுகின்றன. இதனைக் காணும்போது, ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளில்
கஸ்தூரி, குங்குமப்பூ, சந்தனம் ஆகியவை கலந்த குழம்புப் பூச்சைப் பூசுகின்ற அலங்கார பணிப்பெண் போன்று நீ உள்ளாய்.

ஸ்ரீ மணி பாதுகையே இந்திர நீலம் -பவழம்-முத்து -மூன்றின் ஒளிக் கதிர்களும் கலந்து நிற்கையில்
நீ பெருமாள் திருவடித் தாமரைக்குப் பனிப் பெண்ணாய் நின்று கஸ்தூரி குங்குமப் பூ சந்தனம் மூன்றையும் கொண்டு
ஒரு குழம்புப் பூச்சு சமர்ப்பிக்கத் தொடங்குவது போல் தோன்றும் –

————————————————————————-

ஆதந்வதீம் அஸுரமர்தந பாத ரக்ஷே
சுத்தாந்த பக்ஷ்மள த்ருசாம் மதந இந்த்ர ஜாலம்
வைஹாரிகீம் விவித ரத்ந மயூக லக்ஷ்யாத்
மந்யே ஸமுத்வஹஸி மோஹந பிஞ்சிகாம் த்வம்—-547–

அசுரர்களுக்கு விரோதியாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட பலவிதமான இரத்தினக்கற்களில் இருந்து,
பல வர்ணங்கள் கொண்ட ஒளியின் சேர்க்கை ஏற்படுகிறது. இதனைக் காணும்போது நீ மயில்தோகை ஒன்றை
வைத்திருப்பது போல் உள்ளது. இந்த மயில் தோகையானது, அந்தப்புரத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதனின் நாயகிகளுக்கு
காமத்தை ஏற்படுத்தி, இப்படியாக இந்த்ரஜாலம் செய்யும் விளையாட்டுக் கருவியாகவே உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன்னிடத்தில் உள்ள பலவித ரத்னங்களும் வெளிவிடும் பல நிற ஒளிகளும் உண்மையில்
நீ அந்தப் புரத்திலும் பிராட்டிகளைக் காமா வேசத்திற்கு உட்படுத்த வென்று லீலையாகச் செய்த
இந்திர ஜால வித்தையில் நீ பயன் படுத்தும் மோகன பிஞ்சிகையாகத் தோன்றும் –

—————————————————–

ரத்நைர் வ்யவஸ்தித ஸித அஸித சோணை வர்ணை:
ஆலோக வத்பி: அஜஹத் ஸ்ருதி ஸந்நிகர்ஷை:
த்ரஷ்டும் முகுந்த சரணௌ அநிமேஷ த்ருஸ்யௌ
ஸந்த்ருஸ்யஸே ஜநநி ஸம்ப்ருத நேத்ர பங்க்தி:—-548–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! உன்னில் உள்ள இரத்தினங்கள் வெண்மை, கறுப்பு, சிவப்பு என்று
பலவிதமான நிறங்கள் கொண்டுள்ளன; பலவிதமான ஒளியை உடையதாக உள்ளன;
வேதங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக உள்ளன (அதாவது காதுவரை நீண்டதாக உள்ளன);
இப்படியாக இவற்றைக் காணும்போது, உனது பல வரிசையில் அமந்துள்ள கண்கள் போன்று அவை உள்ளன.
இப்படியாக உள்ள கண்கள் மூலம் நீ ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை இமைக்காமல் பார்த்தபடி உள்ளாய்.

ஸ்ரீ பாதுகா தேவியே -வெளுப்பு கறுப்பு சிவப்பு என்ற பல்வேறு நிறங்கள் உடன் ரத்னன்களை வைத்து இருப்பது
இமை கொட்டாமல் பார்க்க வேண்டிய பெருமாள் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கவே தான் –
அவை உன் கண்கள் –ஒளி தரும் கற்கள் -காது வரை நீண்டு இருப்பவை –
வேத பிரதி பாத்தியமான வஸ்து உடன் சம்பந்தம் கொண்டவை –

——————————————————————————

காருத்மத அந்தரித மௌக்திக பங்க்தி லக்ஷ்யாந்
தூர்வா மதூக ரசிதம் துரிதோப சாந்த்யை
மாத: ஸ்வயம் வஹஸி முக்த்ததியாம் ப்ரஜாநாம்
மங்கள்ய மால்யம் இவ மாதவ பாதுகே த்வம்—-549–

ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்தவனான ஸ்ரீரங்கநானின் பாதுகையே! தாயே! உன்னிடத்தில் பதிக்கப்பட்ட இரத்தினங்களில்
பச்சை இரத்தினங்களும், முத்துக்களும் வரிசையாக உள்ளன. இதனைக் காணும்போது –
இந்த உலகில் உள்ளவர்களுடைய பாவம் நீங்குவதற்காக, அருகம்புல் மற்றும் இலுப்பைமலர் கொண்டு கட்டப்பட்ட மாலையை,
அவர்களுக்காக நீயே அணிந்துள்ளதாகத் தோன்றுகிறது.

ஸ்ரீ மாதவ பாதுகா தாயே உன்னில் பச்சைக் கற்களும் முத்துக்களும் மாற்றி மாற்றி அமைந்து இருப்பது
மூடர்களான உன் குழந்தைகளுக்குப் பாபம் போவதற்காக நீயே அருகம் புல் இலுப்பைப் பூ கலந்த மாலையை
மங்கள அர்த்தமாக அவர்களுக்குப் பதிலாக சாத்திக் கொண்டால் போல் தோன்றும் –

—————————————————————————–

ரங்காதிராஜ பத ரக்ஷிணி ராஜதே தே
வஜ்ர உபஸங்கடித மௌக்திக வித்ரும ஸ்ரீ:
ஸக்தா சிரம் மநஸி ஸம்யமிநாம் நிவாஸாத்
ஸூர்ய இந்து அஹ்நிமய மண்டல வாஸநேவ—-550–

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வைரத்துடன் சேர்த்துப் பதிக்கப்பட்ட முத்து, பவழம் ஆகியவற்றின் ஒளியானது –
நீண்டகாலமாக யோகிகளின் மனதில் நீ இருந்து வருவதால், அங்குள்ள சூரியன், சந்திரன், அக்னி மண்டலங்களின்
வாசனையுடன் கூடியதாக உன்னில் காணப்படுகிறது.

யோகிகள் த்யானம் செய்யும்போது சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்னி மண்டலம் என்பவற்றை த்யானித்து,
அதன் நடுவில் பாதுகையுடன் கூடிய ஸ்ரீரங்கநாதனை த்யானிப்பார்கள். ஆக அந்த மண்டலங்களின்
தன்மைகள் பாதுகையில் காணப்படுகின்றன என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே உன் வைரம் முத்து பவழம் என்ற கற்கள் அமைப்பு யோகிகளின் இதயத்தில் வெகுகாலம் ஸ்ரீ பாதுகை இருந்து
முறையே சூர்ய மண்டலம் சந்திர மண்டலம் அக்னி மண்டலம் இவற்றில் நின்ற வாசனையால்
இம் மூன்று நிறத் தோற்றங்கள் விளைந்தன என்னும் படியாய் உள்ளது –

—————————————————————–

ஆஸக்த வாஸ வசிலா சகலாஸ் த்வதீயா:
பத்மா ஸஹாய பத ரக்ஷிணி பத்ம ராகா:
ப்ரத்யக்ஷயந்தி கமபி ப்ரமர ஆபிலீநம்
பாதாரவிந்த மகரந்த ரஸ ப்ரவாஹம்—-551-

தாமரையில் அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியாரை விட்டுப் பிரியாத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே!
இந்த்ரநீலக் கற்களின் துணுக்குகள் கொண்ட சிவந்த பத்மராகக்கற்கள், ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில்
வண்டுகள் போன்று காணப்படுகின்றன. இதனைக் காணும்போது அவனது திருவடிகளில் தேன் பெருகி நிற்பதைக் உணர முடிகிறது.

ஸ்ரீ பெருமாளின் பாதுகையே -உன் இந்திர நீலக் கல் துணுக்குகளும் பத்மராக -சிவப்பு -கற்களும் தோற்றுவது எங்கன் என்றால்
திருவடித் தாமரையில் இருந்து தென் பெருகி விழுந்ததும் வண்டுகள் மொய்ப்பதாக –

—————————————————————————-

அந்த: புராணி ஸம்யேஷு அபிகந்து மேகா
ரங்கேசிது: ஜ்ஞபயஸீவ பதாவநி த்வம்
முக்தா அம்ஸூ ஜால மிளநாத் ருசிரை: ப்ரவாளை:
பிம்பாதரம் ஸ்மித விசேஷ யுதம் ப்ரியாணாம்—-552-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடன் நீ சில நேரங்களில் தனித்து இருக்கிறாய். அப்போது உன்னில் பதிக்கப்பட
முத்துக்களின் ஒளியுடன் கூடிய பவழங்கள் மிகவும் அழகாகத் தோற்றம் அளிக்கின்றன.
இவை ஸ்ரீரங்கநாச்சியாரின் புன்னகையுடன் கூடிய கோவைப்பழம் போன்ற உதடுகளை
ஸ்ரீரங்கநாதனுக்கு நினைவுபடுத்துவது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உசிதமான சந்தர்ப்பங்களில் நீயே தனியாக உன் அழகிய புன் சிரிப்புக் கொண்டு
ஸ்ரீ ரங்க நாதனுக்கு அந்தப்புரத்திற்குப் போவதை நினைவு ஊட்டுகிறாய் போலும் –
உன் முத்தும் பவழமும் பிராட்டிகளின் முத்துப்பல் திருவதரம் -திரு உதடு -இவற்றை நீ கொண்டு
அவனுக்கு ஞாபகப் படுத்துகிறாய் -என்கிறேன் –

———————————————

ரங்கேஸ்வரஸ்ய ம்ருகயோ: சரணாவ ஸக்தாம்
ரக்ஷ: கபீந்த்ர மகுடேஷு நிவேச யோக்யாம்
மந்யே பதாவநி நிபத்த விசித்ர ரத்நாம்
மாயா ம்ருகஸ்ய ரசிதாம் இவ சர்மணா த்வாம்—-553-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மாரீசனை வேட்டை ஆடிய ஸ்ரீரங்கநாதனின் திருவடியிலும் நீ உள்ளாய்;
அரக்கர்களின் தலைவன் விபீஷணன், குரங்குகளின் தலைவன் சுக்ரீவன் ஆகியவர்களின் தலைகளிலும் நீ உள்ளாய்.
பலவிதமான இரத்தினங்கள் கொண்டு இழைக்கப்பட்ட உன்னைக் காணும்போது,
மாரீசன் என்னும் மாயமானின் தோலால் செய்யப்பட்டவளோ என்று நான் நினைக்கிறேன்.

ஸ்ரீ பாதுகையே பலவித ரத்னங்கள் இழைக்கப் பெற்ற பொன்னுருக் கொண்டவள் நீ
ஸ்ரீ ரங்க நாதன் ஸ்ரீ ராமாவதாரத்தில் வேட்டை யாடிய மாரீசன் என்னும் மாயமான் தோலால் நீ ஆனதாக எனக்குத் தோன்றுகிறது
ஏன் எனில் ராஷஸ ஸ்ரேஷ்டர் வானர ஸ்ரேஷ்டர் -ஸ்ரீ விபீஷணன் ஸூக்ரீவன் போன்றோர் தலையில் வைத்து அருள வேண்டும் –

———————————————————————————————-

பத்த்நாஸி ரங்கபதி விப்ரம பாதுகே த்வம்
மாயா கிராத மகுடேஷு நவபர்ஹ மாலாம்
ஆக்ருஷ்ட வாஸவ தநுஸ் சகலைர் மணீநாம்
அந்யோத்ய ஸங்கடித கர்புரிதை: மயூகை:—-554–

ஸ்ரீரங்கத்தின் நாயகனான நம்பெருமாளின் பாதுகையே! ஒன்றுடன் ஒன்று இணைந்து பலவிதமான
வான வில்லின் துணுக்குகள் போன்று உனது இரத்தினங்களின் ஒளி உள்ளது.
இதனைக் காணும்போது, வேடன் போன்று வேஷம் பூண்ட சிவனின் தலையில் புதிய மயில் இறகு மாலையைக் கட்டுவதாக உள்ளது
(அதாவது ஸ்ரீரங்கநாதனின் திருவீதிகளில் சிவன் வந்து வணங்கும்போது, அவன் தலையில்
மயில் இறகு கட்டுவது போன்று பல வர்ணங்களுடன் இரத்தினங்களின் ஒளி படுகிறது).

ஸ்ரீ பாதுகையே -ஸ்ரீ ரங்க நாதன் சஞ்சாரம் செய்து அருளும் பொழுது உன் ரத்னங்கள் ஒன்றோடு ஓன்று நன்கு இணைந்து
பல வர்ணங்களைக் காட்டும் .அந்த அழகு வானவில்லின் வர்ணத்தை நிகர்த்தது -பல வானவில் துண்டுகள்
அந்த நிறக்கோவை சிவன் வேட உருவோடு வந்து வணங்குகையில் அவனுக்கு கிரீடத்தில் பிரதிபலிக்கவும்
இன்னொரு மயில் இறகு மாலையாய் ஆகிறது –

——————————————————–

அந்யோந்ய பந்துர ஹரிந் மணி பத்ம ராகா
ரங்கேஸ் வரஸ்ய சரணாவநி ராஜஸே த்வம்
ஆத்ம உபமாந விபவாத் சரிதார்த்தயந்தீ
சைலாத்மஜா கிரிசயோர் இவ மூர்த்திம் ஏகாம்—-555-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் இருக்கும் பச்சை மற்றும் சிவப்பு இரத்தினங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டுள்ளன.
இதனைக் காணும்போது, ஹிமவத் என்ற பர்வதத்தின் பெண்ணாகிய பார்வதியும் சிவனும் ஒன்றாக உள்ள நிலையை
நீ வெளிப்படுத்துகிறாய் என்று தோன்றுகிறது. இதன் மூலம், அந்த உருவத்திற்கு மேன்மை உண்டாக்குகிறாய் போலும்.

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகையே -மிக நெருங்கிப் பிணைந்து உள்ள பச்சைக் கற்களும் சிவப்பு கற்களும் கொண்டு இருக்கிற நீ இதை ஏற்றது
பார்வதி சிவன் இருவரும் முறையே பச்சை சிவப்பு நிறங்களாம் — ஓர் உருவமாக அர்த்த நாரீஸ்வர ரூபமாக இருப்பதை சபலம் ஆக்கவோ –
மரகத பத்மராகக் கட்டட அமைப்புக்கு உவமையாகச் சொல்லும் படியாக பெருமை பெறவே அர்த்த நாரீஸ்வர ரூபம் -என்றவாறு –

———————————————————————

தாபத்ரய ப்ரசமநாய ஸமாஸ்ரிதாநாம்
ஸந்தர்சித ஆருண ஸிதாஸிரத்ந பங்க்தி:
புஷ்ணாஸி ரங்க ந்ருபதே: மணி பாதுகே த்வம்
ப்ராயஸ் ஸரோஜ குமுத உத்பவ காநநாநி—-556-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் இருக்கின்ற இரத்தினக் கற்கள்
சிவப்பு, வெண்மை மற்றும் கருநீலம் ஆகிய வர்ணங்களின் ஒளியை வீசியபடி உள்ளன.
இதனைக் காணும்போது ஸ்ரீரங்கநாதனை அண்டியவர்களின் துன்பங்களை நீக்க
நீ தாமரை, அல்லி மற்றும் நெய்தல் மலர்கள் நிறந்த காடுகளை உண்டாக்குவது போன்று உள்ளது.

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ ரத்ன பாதுகையே உன்னிடத்தில் பிரகாசிக்கும் சிவப்பு வெளுப்பு கறுப்பு நிற ரத்ன வரிசைகள்
ஆஸ்ரிதர் தாபத்ரயம் சமானமாக வென்றோ -தாமரை அல்லி கரு நெய்தல் என்ற மலர்க்காடுகளை ஒத்து உள்ளன —

—————————————————-

தேஹத்யுதிம் ப்ரகடயந்தி மஹேந்த்ர நீலா:
சௌரே: பதாம்புஜ ருசிம் தவ பத்ம ராகா:
அந்யோந்ய லப்த பரபாகதயா து அமீஷாம்
ஆபாதி காந்தி: அபரா மணி பாத ரக்ஷே—-557–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இந்திரநீல இரத்தினங்கள் ஸ்ரீரங்கநாதனின் அழகான
திருமேனியின் ஒளியைப் போன்று உள்ளன. பத்மராகக் கற்கள் அவனது சிவந்த அழகான
திருவடித் தாமரைகளின் ஒளியை உணர்த்துவதாக உள்ளன.
இப்படியாக இந்தக் கற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து, மற்றொரு விதமான ஒளியை வீசுவதாக உள்ளன.

ஸ்ரீ மணி பாதுகையே உனது இந்திர நீலக் கற்கள் பகவான் திருமேனியையும்-பத்ம ராகக் கற்கள் திருவடித் தாமரை ஒளியையும்
வெளிப்படுத்தியது தவிர இந்த இரண்டு நிறங்களுக்கு இடையில் உள்ள பரஸ்பர பரபாகத் தன்மை
இன்னொரு புதிய காந்தியை அன்றோ வெளிப்படுத்துகிறது –

—————————————————————

ஆகீர்ண மௌக்திக ஹரிந் மணி பத்ம ராகம்
அம்போக லோசந பதாவநி பாவயே த்வம்
தத்பாத விஸ்ரம ஜுஷாம் ஸ்ருதி ஸுந்தரீணாம்
வர்ண உபதாநம் இவ மௌளி நிவேச யோக்யம்—-558-

தாமரை போன்ற அழகான கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில்
இளைப்பாறியபடி வேதங்கள் உள்ளன. இவை அழகான பெண்கள் போன்று உள்ளன்.
இவை தங்கள் தலைகளுக்கு வைத்துக் கொள்வதற்காக வர்ணம் நிறைந்த தலையணைகளை –
உனது முத்துக்கள், பச்சைக்கற்கள், சிவப்புக்கற்கள் கொண்டு நீ அமைப்பதாக நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே -ஸ்ருதிகள் பெருமாள் திருவடிப் பெருமை பேசுபவை -வேத அழகிகள் திருவடியையே சார்ந்து இளைப்பாறும்
அப்போது படுத்தால் -அவர்களின் தலைகள் -வேதாந்தங்கள் -தமக்கு உகந்த வர்ணத் தலை அணைகளாகக் கொள்பவை –
ஸ்ரீ பாதுகைகள் -முத்து மரகதம் பத்மராகம் இந்த மூன்று கற்களையும் கொண்டு அமைந்த அவற்றையே –

———————————————-

ஆஸந்ந வாஸ வசிலா ருசிரா: த்வதீயா:(வசிலாச கலாஸ் த்வதீயா:)
பத்மே க்ஷணஸ்ய பத ரக்ஷிணி பத்மராகா:
ஸம்பாவயந்தி ஸமயே க்வசித் உஷ்ண பாநோ:
ஸத்ய: ப்ரஸூத யமுநா ஸுபகாம் அவஸ்த்தாம்—-559–

தாமரை போன்ற நீண்ட கண்கள் கொண்ட பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உன்னில் பதிக்கப்பட்ட இந்த்ரநீலக் கற்களின் அருகில், சிவந்த பத்மராகக்கற்கள் உள்ளன.
இது எப்படி உள்ளது என்றால் – அப்போதுதான் பிறந்த யமுனை நதியால் அழகு பெற்ற ஸூரியனின் தோற்றத்தை மனதில் உண்டாக்குகிறது.

ஸ்ரீ பாதுகையே இந்திர நீலக் கற்களும் பத்மராகக் கற்களும் –சூரியனும் அவன் இடம் இருந்து உற்பத்தியான
யமுனையும் சேர்ந்து விளங்கும் சோபையை நினைவூட்டும் –

———————————————————–

முக்தா இந்த்ரநீல மணிபி: விஹிதே பவத்யா:
பங்க்தீ த்ருடே பரம பூருஷ பாதரக்ஷே:
மந்யே ஸமாஸ்ரித ஜநஸ்ய தவ அநுபாவாத்
உந்மோசிதே ஸுக்ருத துஷ்க்ருத ஸ்ருங்கலே த்வே—-560–

பரம புருஷனாகிய ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னை ஆராதிக்கும் அடியவர்களின்
புண்ணியம் மற்றும் பாவம் என்ற இரண்டு சங்கலிகளும் கழற்றப்படுகின்றன.
இந்தச் சங்கிலிகளே உன்னில் அமைக்கப்பட்ட முத்துக்கள் மற்றும் இந்த்ரநீலக் கற்களின் வரிசைகள் என்று நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பரம புருஷ பாதுகையே உன் மீது காணப்படும் முத்து இந்திர நீலக் கற்கள் இவை இரண்டும் இரு வரிசைகளாக அமைந்து இருப்பது
உன்னைச் சரண் அடைந்தவர்களின் புண்யம் பாபம் -என்கிற இரண்டு விலங்குச் சங்கிலிகள் தாம்
கழற்றிய பின் நீ வைத்துக் கொண்டாய் போலும் என்று நினைக்க வைக்கிறது –

————————————————————-

உத்கீர்ண காட தமஸ: ஹரி நீல பங்கா:
தாரா விசேஷ ருசிராணி ச மௌக்திகாநி
த்வத் ஸங்கமாத் ஸரஸி ஜேக்ஷண பாத ரக்ஷே
ஸம்யோ ஜயந்தி நிசயா பவ மௌளி சந்த்ரம்—-561-

சிவந்த தாமரை மலர் போன்ற கண்கள் கொண்ட நம்பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உன்னில் காணப்படும் இந்த்ரநீலக் கற்கள் பெரும் இருளுடன் கூடிய மேகங்கள் போன்று உள்ளன.
முத்துக்கள் அனைத்தும் நக்ஷத்ரங்கள் போன்று அழகாக உள்ளன. இப்படியாக இவை இரண்டும்
உன்னுடைய தொடர்பு மூலமாக சிவனின் தலையில் உள்ள சந்திரனை உன்னுடன் சேர்க்கின்றன.

ஸ்ரீ பாதுகையே -சிவனுக்கு சடாரி சாதிக்கப்படும் சமயம் உன் இந்திர நீலக் கற்கள் ஒரு கார் இருளை உண்டாக்கும் –
அப்போது உன் முத்துக்கள் நஷத்ரங்கள் போலாகும் -சிவன் முடிக்கு உன் சம்பந்தம் கிடைக்கிற அந்த கணத்தில்
சிவனின் சந்த்ரனுக்கு பகலில் கூட -இரவின் தொடர்பை இங்கனம் ஏற்படுத்துகிறாய் –

————————————————————————-

விஷ்ணோ: பதேந கடிநா மணி பாதுகே த்வம்
வ்யக்த இந்த்ர நீல ருசி: உஜ்ஜவல மௌக்திக ஸ்ரீ :
காலேஷு தீவ்யஸி மருத்பி: உதீர்ய மாணா
காதம்பிநீவ பரித: ஸ்ப்புட வாரி பிந்து:—-562-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்னும் ஆகாயத்துடன் சேர்ந்தவளாகவும்;
இந்த்ரநீலக் கற்களின் ஒளி பெற்று, அவற்றால் நீல நிறமாக உள்ளவளாகவும்,
முத்துக்களின் வெண்மையான ஒளி மூலம் மழைத்துளி என்னும் அழகு சேர்க்கப்பட்டவளாகவும்;
அந்தந்த காலங்களில் தேவர்கள் என்னும் காற்று மூலம் துதிக்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய்.
இப்படியாக நான்கு நிலைகளிலும் காணப்படும் நீர் கொண்ட மேகங்களின் வரிசை போன்று நீ உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே நீ விஷ்ணு பதத்தைத் தாங்குகிறாய் -நீலக் கற்கள் முத்துக்கள் இவற்றின் ஒளி விளங்கத் தேவர்கள்
சிரஸ்ஸில் வைத்துப் போகிறாய் -அப்போது நாற்புறத்திலும் உள்ள முத்துக்கள் நீர்த் திவலை போல் காட்சி அளிக்க
மேகம் மெதுவாக ஆகாசத்தில் -ஸ்ரீ விஷ்ணு பதத்தில் -அசைவது போலத் தோன்றும் –
மேகம் மருத்தாலே -கற்றாலே நகர்த்தப் படுவது போலே நீயும் மருத் கணங்கள் தேவர்கள் தலை மீது சஞ்சரிக்கிறாய் –

———————————————————————————–

பாஸா ஸ்வயா பகவதோ மணி பாத ரக்ஷே
முத்தாந்விநா மரத கோபல பத்ததிஸ் தே
நித்யாவகாஹந ஸஹம் ஸகலஸ்ய ஜந்தோ:
கங்காந்விதம் ஜநயதீவ ஸமுத்ரம் அந்யம்—-563–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! முத்துக்களுடன் சேர்ந்த உன் பச்சைக்கற்களின் வரிசையில் தோன்றும்
ஒளி எப்படி உள்ளது என்றால் – அனைத்து மக்களும் அன்றாடம் வணங்கி நீராடத் தகுந்ததாக உள்ள
கங்கையுடன் கூடிய ஸமுத்திரத்தை ஏற்படுத்துவது போன்று உள்ளது.

பச்சைக்கற்களின் ஒளியானது ஸமுத்திரத்தின் மேற்பரப்பு போன்று உள்ளது. முத்துக்களின் ஒளியானது கங்கைநதி
அந்த ஸமுத்திரத்தில் கலப்பது போன்று உள்ளது. இந்த ஸமுத்திரம் ஏன் உருவாக்கப்பட்டது என்றால்,
மற்ற ஸமுத்திரங்களில் குறிப்பிட்ட காலங்களில் நீராடக்கூடாது என்ற விதி உள்ளது.
இந்த விதி இல்லாமல் எப்போதும் நீராடலாம்படி இந்த ஸமுத்திரம் உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே பச்சைக் கற்களின் சோபை சமுத்ரம் போலே காட்சி தர முத்துக்கள் வரிசை
வெண்மையான கங்கையின் ப்ரவாஹத்தை நினைவு படுத்தும் -இந்த சமுத்ரம் நித்யம் சேவிக்கப்படலாம்-
பிராக்ருத சமுத்ரம் பர்வங்களில் மட்டுமே ஸ்நானத்திற்கு உரியது –

———————————————————————————

ஸூர்ய ஆத்மஜா ஹரி சிலாமணி பங்க்தி லக்ஷ்யாத்
த்வாம் நித்யம் ஆஸ்ரிதவதீ மணி பாத ரக்ஷே
அதௌ ஜநார்தந பதே க்ஷண மாத்ர லக்நாம்
ஆஸந்த மௌக்திக ருசா ஹஸதீவ கங்காம்—564–

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! உன் இந்த்ரநீலக் கற்களின் வரிசையைக் காணும் போது,
உன்னை எப்போதும் யமுனை அண்டியே உள்ளாள் என்பது போன்று இருக்கிறது.
இந்த யமுனை, தொடக்கத்தில் மட்டும் ஒரு சில நொடிகளே எம்பெருமானின் திருவடித் தொடர்பு கொண்டுள்ள
கங்கையைப் பார்த்து சிரிப்பது போன்று, உன்னுடைய முத்துக்களின் ஒளி உள்ளது.

த்ரிவிக்ரமனாக ஸ்ரீரங்கநாதன் நின்ற சிறிது காலம் மட்டுமே அவனுடைய திருவடித் தொடர்பு கங்கைக்கு உள்ளது.
ஆனால் யமுனைக்கு எப்போதுமே கண்ணனின் தொடர்பு உள்ளது.
ஆகவே, யமுனை கங்கையைப் பார்த்து ஏளனம் செய்வதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே -நீலக் கற்கள் கறுத்த யமுனை போல் காட்சி அளிக்கும் –
முத்துக்கள் யமுனையின் முத்துப் பல் சிரிப்போ என்று தோன்றும்
யமுனை தனக்கு நித்தியமான பெருமாள் திருவடி சம்பந்தம் ஏற்பட்டு இருப்பதனால் -ஒரு சந்தர்ப்ப ஷணத்தில் மட்டுமே
அத்தகைய சம்பந்தம் பெற்ற கங்கையைக் குறித்து யமுனைக்கு இந்த ஏளன பாவம் உண்டாகுமே –

————————————————————————

பர்யந்த ஸங்கடித பாஸுர பத்ம ராகா:
பத்ம உதர ப்ரமர காந்திமுஷஸ் த்வதீயா:
த்வத் ஸம்ஸ்ரயேண சரணாவநி சக்ரநீலா:
பீதாம்பரேண புருஷேண துலாம் லபந்தே—-565-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைச் சுற்றிலும் சிவந்து ப்ரகாசிக்கின்ற பத்மராகக் கற்கள் இழைக்கப்பட்டுள்ளன.
இதன் நடுவில், தாமரை மலரின் நடுவில் உள்ள வண்டுகளின் அழகு போன்ற இந்த்ரநீலக் கற்கள் உள்ளன.
இதனைக் காணும்போது, பீதாம்பரம் உடுத்தியபடி நிற்கும் ஸ்ரீரங்கநாதனின் தோற்றம் போன்ற ஒற்றுமை உள்ளது.

இங்கு பத்மராகம் = தாமரை, நீலக்கற்கள் = வண்டு; பத்மராகம் = பீதாம்பரம், நீலக்கற்கள் = ஸ்ரீரங்கநாதன்.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய இந்திர நீலக் கற்கள் சுற்றி உள்ள பத்ம ராகக் கற்களுடன் தாமரை நடுவில்
வண்டுகள் இருப்பது போன்ற தோற்றம் தரும் -அதிலும் உன்னை அடைந்த பாக்யத்தால் இவை
பீதாம்பரம் போர்த்திய நீல வண்ணனான எம்பெருமானுடன் கூட ஒப்புவமையைக் கூடப் பெறுகின்றன –

—————————————————————-

சங்கே பதாவநி ஸதா பரிசிந்வதீ த்வம்
ரங்கேசிதுஸ் சரண பங்கஜ ஸௌகுமார்யம்
அக்ரே மஹோபி: அருணோபல மௌக்திகாநாம்
ப்ராஜ்யாம் விநிக்ஷிபஸி பல்லவ புஷ்ப பங்க்திம்—-566-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ எப்போதும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடைய
மென்மையை அனுபவித்தபடி உள்ளாய். இதனால் உன்னுடைய பத்மராகம், முத்து ஆகிய கற்களின் ஒளியால்
அதிகமான துளிர்கள் மற்றும் மலர்கள் கொண்ட விரிப்பை ஏற்படுத்திகிறாய் போலும்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எத்தனை மென்மையானது என்று பாதுகைக்கு மட்டுமே தெரியும்.
ஆகவே அவன் ஸஞ்சாரம் செய்யும்போது, அந்தத் திருவடிகள் நோகக்கூடாது என்று தனது ஒளி மூலம் மலர்படுக்கை அமைக்கிறாள்.
பத்மராகக்கற்களின் ஒளியானது, மிகவும் துளிர்களான சிவந்த இலைகள் போன்றும்,
முத்துக்களின் ஒளி அவற்றின் வெண்மையான மலர்கள் போன்றும் உள்ளன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க ராஜனின் திருவடித் தாமரை எவ்வளவு ஸூகுமாரமானது –
இதைக் கருதி அதற்கீடாக தளிர்களையும் மலர்களையும் பரப்பி உன் மீது திருவடிகளைத் தாங்குவது உன் திறமை என்னே
செம்மணிகளும் முத்துக்களுமே மலர்களும் தளிர்களும் –

————————————————————————

நிர்கச்சதா சரண ரக்ஷிணி நீயமாநா
ரங்கேஸ்வரேண பவதீ ரண தீக்ஷிதேந
ஸூதே ஸுராரி ஸுபடீ நயந அம்புஜாநாம்
ஜ்யௌத்ஸ்நீம் நிசாம் இவ ஸித ஆஸித ரத்ந பாஸா—-567–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! யுத்தம் செய்யும் உறுதியுடன் ஸ்ரீரங்கநாதன்
புறப்படும்போது நீயும் அவனுடன் செல்கிறாய். உன்னுடைய வெளுப்பு, கருப்பு ஆகிய இரத்தினங்களின் ஒளி மூலமாக,
அசுரர்களுடைய மனைவி மார்களின் தாமரை போன்ற கண்களுக்கு நிலவுடன் சூழ்ந்த இரவுப் பொழுதை உண்டாக்குகிறாய்.

தங்கள் கணவன்மார்களுடன் யுத்தம் செய்ய வந்துள்ள ரத்ன பாதுகையில் நிற்கும் ஸ்ரீரங்கநாதனை அசுரர்களின்
மனைவிமார்கள் பார்க்கின்றனர். தங்கள் மனதில், ”என்ன நடக்குமோ”, என்று அச்சம் கொண்டு கண்களை மூடிக்கொள்கின்றனர்.
இரவு மற்றும் சந்திரனைக் கண்டவுடன் தாமரைகள் மூடிக்கொள்ளும் அல்லவா?
இதனை இங்கு தாமரை போன்ற கண்கள் மூடுகின்றன என்கிறார்.

ஸ்ரீ பாதுகையே போருக்கு என்று புறப்பட்ட பெருமாள் உன்னைத் தரித்துப் போகிறார் –
உன் வெளுப்பு மற்றும் கறுப்புக் கற்களின் பேரொளி ஒரு நிலாவுள்ள இருண்ட ராத்ரியைத் தோற்றுவிக்கும் போலும் –
அஸூர பத்னிகள் கண்கள் ஆகிற தாமரை மலர்கள் இயல்பாக மூடிக் கொள்ளும் அஸூரர்களுக்கு விளையும் கேடுகளைக் கான இயலாமல் –
அந்த நிலையை நீ உண்டு பண்ணுகிறாய் –

——————————————————–

மரதக ஹரித அங்கீ மேதுரா பத்ம ராகை:
அபிநவ ஜலபிந்து வ்யக்த முக்தா பலச்ரீ:
கலயஸி பத ரக்ஷே க்ருஷ்ண மேக ப்ரசாராத்
கநக ஸரித அநூபே சாத்வலம் ஸேந்த்ர கோபம்—-568–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மரகத இரத்தினங்களால் பச்சையான திருமேனி கொண்டவளாகவும்,
பத்மராகக் கற்களால் பருத்தவளாகவும், புதிதாகத் தோன்றும் நீர்த்துளிகள் போன்ற ப்ரகாசத்துடன் கூடிய முத்துகளின்
அழகை உடையவளாகவும் நீ இருக்கிறாய். இப்படியாக உன்னைப் பார்த்தால் எப்படி உள்ளது என்றால் –
நம்பெருமான் என்னும் மேகத்தினுடைய ஸஞ்சாரத்தின்போது, காவேரியின் சதுப்பு நிலத்தில், இந்த்ரகோபம்
என்னும் பூச்சிகள் நிறைந்த புல் தரையை உண்டாக்கியது போன்று உள்ளாய்.

மழைக்கால மேகம் கூடும்போது, உலகில் பசுமையான புல் அதிகமாகத் தோன்றி, அவற்றில் சிவந்த நிறம் கொண்ட
இந்த்ரகோபம் என்னும் பூச்சிகள் அமர்ந்திருக்கும். பாதுகையில் உள்ள மரகதங்கள் புல் போன்றும்,
பத்மராகங்கள் இந்திரகோபம் என்றும் வர்ணிக்கப்பட்டன. இவற்றைக் கூட்டும் மழைக்கால மேகமாக நம்பெருமாள் கூறப்பட்டான்.

ஸ்ரீ பாதுகையே -பச்சையான மரகதக் கற்கள் இடையில் சிவப்புப் பத்ம ராகங்கள் முத்துக்கள் சேர்ந்து நீர்த் திவலைகள் போல் தோன்றும் –
மேலே நீருண்ட மேகமான பகவான் -இது எனக்குத் தோற்றம் அளிப்பது எங்கனம் என்றால்
காவிரிக் கரைச் சதுப்பு நிலங்களில் பச்சைப் புல் தரையில் மலை காலத்தில் பட்டுப் பூச்சிகள் நிரம்பி இருப்பத் போல் –

————————————————————————–

விரசித ஸுர ஸிந்தோ: விஷ்ணு பாதார விந்தாத்
ஸமதிகம் அநுபாவம் பாதுகே தர்ஸ யந்தீ
வலபிதுபல முக்தா பத்மராக ப்ரகாசை:
பரிணமயஸி நூநம் ப்ராப்த சோணம் ப்ரயாகம்—-569-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள், முத்துக்கள், பத்மராகம் ஆகியவையின் ஒளி மூலமாக
கருப்பான யமுனை, வெண்மையான கங்கை மற்றும் சிவந்த சோணம் என்னும் நதிகளை நீ உண்டாக்குகிறாய்.
ஆகவே கங்கை என்னும் ஒரே ஒரு நதியை மட்டுமே உண்டாக்கிய ஸ்ரீரங்கநாதனின் திருவடியைக் காட்டிலும்,
மூன்று நதிகளை உண்டாக்கியதால் அதிகமான பெருமை உனக்கு உண்டு எனக் காண்பிக்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி கங்கையை மட்டும் தானே பிறப்பித்தது -நீயோ இந்திர நீலம் முத்து பத்மராகம் என்ற ரத்னங்களால்
முறையே சோணம் கங்கை யமுனை என்ற நதிகளை உண்டு பண்ணுகிறாய் -உன் மகிமை கூடியது தான் –
சோணம் -நீலம் /கங்கை -வெளுப்பு /யமுனை -கரும் சிவப்பு —

——————————————————————————

விவித மணி மயூகை: வ்யக்த பக்ஷாம் விசித்ரை:
ஜலநிதி துஹிது: த்வாம் வேத்மி லீலா சகோரீம்
அநிசம் அவிகலாநாம் பாதுகே ரங்க பர்த்து:
சரண நக மணீநாம் சந்த்ரிகாம் ஆபிபந்தீம்—-570–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடைய நகக்கண்கள் எப்போதும் தேயாத நிலவு போன்று,
பூர்ணமான முத்துக்களாக உள்ளன. உன்னில் உள்ள பலவிதமான இரத்தினங்களின் ஒளிகளானவை
உனக்கு இருபுறத்திலும் சிறகுகள் போன்று உள்ளன. ஆக மேலே கூறப்பட்ட நிலவைப் பருகுகின்றதும்,
ஸ்ரீரங்கநாச்சியாரின் விளையாட்டுப் பொருளாக உள்ளதும் ஆகிய சகோர பக்ஷியாகவே நீ உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ மகா லஷ்மிக்குச் செல்வமான சகோரப் பறவை என்று சொல்லுமா போல் தோற்றம் காண்கிறேன் –
பலவிதமான ரத்னங்களின் கிரணங்களாலே பிரகாசிக்கும் இறக்கைகள் தெரிகின்றன –
பெருமாள் திருவடி திரு நகங்களின் பிரபை ஒரு நிரந்தரமான முழு நிலவைப் போல் இருக்கிறது –
அந்த நிலவை உண்ணலாம் என்று இருக்கிறது பறவை –

————————————————————————–

சரண கமல ஸேவா ஸங்கிநாம் ரங்க பர்த்து:
விநயகரிம பாஜாம் வர்ஜிதை: ஆத பத்ரை:
புநரபி பதரக்ஷே புஷ்யஸி த்வம் ஸுராணாம்
பஹுவித மணி காந்த்யா பர்ஹி பிஞ்சாத பத்ரம்—-571-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மீது மிகுந்த
ஆடை உள்ளவர்களாக இருக்கும் தேவர்கள், தங்கள் வணக்கம் காரணமாகத் தங்கள் பதவிகளை உணர்த்துவதாக உள்ள
குடைகளைத் தள்ளி வைத்து விட்டு, உன் முன்பாக நிற்கின்றனர். உன்னுடைய இரத்தினக்கற்களின் பலவிதமான ஒளியால்
அவர்களுக்கு மயில் தோகை போன்ற வர்ணங்களுடன் கூடிய குடையை மீண்டும் நீ அமைக்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி சேவையில் மிகுந்த ஊக்கம் உடையவர்களான தேவர்கள் தம் குடைகளை விலக்கி விட்டு சேவிக்கிறார்கள் –
அவர் விநயம் என்னே -ஆயினும் அவர்கள் விஷயத்தில் நீ பலவித ரத்னங்களின் ஒளிக் கதிர்கள் உண்டாக்கும்
மயில் தோகைக் குடையை உண்டு பண்ணித் தருகிறாயே -என்ன ஆச்சர்யம் –

—————————————————————————-

மரதக ருசி பத்ரா மௌக்திக ஸ்மேர புஷ்பா
ஸ்புட கிஸலய சோபா பாஸுரை: பத்ம ராகை:
பலம் அகிலம் உதாரா ரங்கநாதஸ்ய பாதே
கலயஸி பவதீ ந: கல்ப வல்லீவ காசித்—-572-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மரகதங்களின் பச்சை நிற ஒளியானது இலைகள் போன்றும்,
முத்துக்கள் அனைத்தும் துளிர்கள் போன்றும் உள்ளன. இப்படியாக உள்ள நீ எப்படி இருக்கிறாய் என்றால் –
ஸ்ரீரங்கநாதன் என்னும் கற்பக மரத்தின் திருவடிகளில் சுற்றிக் கொண்டிருக்கும் கற்பகக்கொடி போன்று உள்ளாய்.
இதனால் தான் எங்களுக்கு அனைத்துவிதமான பலன்களையும் நீ அளிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே -நீ ஒரு கற்பகக் கொடி–கேட்டதை எல்லாம் தருகிறாய் -பெருமாள் திருவடிக்கு கீழ் உள்ள
கற்பகக் கொடியான உனக்கு பச்சைக் கற்களின் காந்தி இலைகள் ஆகவும் முத்துக்கள் பூக்களாகவும்
பிரகாசிக்கும் பத்ம ராகங்களே தளிர்களாகவும் தோற்றும் -நீ அவ்வளவு கொடையாளி யாயிற்றே –

————————————————————

பஹு மணி ருசிர அங்கீம் ரங்க நாதஸ்ய பாதாத்
நிஜ சிரஸி கிரீசோ நிக்ஷிபந் பாதுகே த்வாம்
ஸ்மரதி லளிதம் அந்த: லாளநீயம் பாவாந்யா:
தரள கந கலாபம் ஷண்முகஸ்ய ஔபவாஹ்யம்—-573–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பல நிறங்களுடன் கூடிய அழகான உருவத்துடன் உள்ள உன்னை,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் இருந்து எடுத்து, சிவன் தனது தலையில் வைத்துக் கொள்கிறான்.
அப்போது – பார்வதியால் கொண்டாடப்படுவனும், அசைகின்றதும், அடர்த்தியானதும் ஆகிய தோகையைக் கொண்ட
மயிலை வாகனமாக உடையவனும் ஆகிய தனது புத்திரனாகிய முருகனின் நினைவு சிவனுக்கு உண்டாகிறது.

பாதுகையின் பலவிதமான நிறங்கள் மயில் தோகை போன்று உள்ளது. இதனைக் கண்டதும் சிவனுக்குத்
தனது புத்திரனின் வாகனமாக மயில் உள்ளதால், அந்தப் புத்திரனின் ஞாபகம் உண்டாகிறது.

ஸ்ரீ பாதுகையே பல ரத்னங்களால் அழகிய தோற்றம் பெற்ற உன்னை ஸ்ரீ ரங்க நாதன் திருவடிக் கீழ் இருந்து எடுத்துத்
தன் தலையில் எழுந்து அருளப் பண்ணிக் கொண்ட சிவனுக்கு அப்போது பார்வதியின் அந்தப் புரத்தில்
சீராட்டப் படத்தக்க ஷண்முக மயில் தோகையும் மயிலும் தான் ஞாபகத்திற்கு வருமாம் –

———————————————————————-

விவித மணி ஸமுத்தை: வ்யக்தம் ஆபாத யந்தீம்
திவஸ ரஜநி ஸந்த்யா யௌகபத்யம் மயூகை:
உபநிஷத் உபகீதாம் பாதுகே ரங்கிணஸ் த்வாம்
அகடித கட நார்ஹம் சக்திம் ஆலோசயாம:—-574–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் இருக்கின்ற பலவிதமான இரத்தினக்கற்களின் ஒளி காரணமாக,
பகல்-இரவு-ஸந்த்யாகாலம் ஆகிய மூன்று காலங்களும் ஒரே நேரத்தில் தோன்றுவது போன்று தோற்றம் அளிக்கிறது.
இப்படிப்பட்ட நிலையைக் காணும்போது – மற்ற யாராலும் செய்ய இயலாதவற்றையும் செய்யும் திறன்,
மற்றவர்களால் சேர்க்க இயலாதவற்றைச் சேர்க்கும் திறன் ஆகியவை ஸ்ரீரங்கநாதனுக்கு மட்டுமே உள்ளது
என்று உபநிஷத்துக்கள் கூறுவதற்கு ஏற்ப உள்ள ஸ்ரீரங்கநாதனின் சக்தியே இதற்குக் காரணம் என்றாகிறது.

ஸ்ரீ பாதுகையே உன் பலவகை ரத்னங்களும் விசித்ரமான கிரணங்கள் மூலம் பகல் இரவு சந்த்யா காலம் எல்லாம் ஒருங்கே
சேர்ந்து இருப்பது போன்ற பிரமிப்பை நிச்சயமாக உண்டாக்கும் -அதில் வேதாந்தங்களில் ஓதப்படும் அகடிதகடநா
திறன் -ஊஹிக்க கூடுமாகிறது -பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -உபநிஷத் –

———————————————————————

ஸகலம் இதம் அவந்த்யே சாஸநே ஸதாபயந்தீ
முரமதந பதஸ்தா மௌக்திகாதி ப்ரகாரா
ப்ரகடயஸி விஸூத்த ஸ்யாம ரக்தாநி ரூபாந்
பல பரிணதி பேதாந் ப்ராணிநாம் பாதுகே த்வம்—-575–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்த உலகங்கள் அனைத்தையும், தவறாமல் இருக்கின்றதான ஸ்ரீரங்கநாதனின்
கட்டளைக்கு ஏற்ப நீ நிலை நிறுத்துகிறாய்; அவனுடைய திருவடிகளில் எப்போதும் அமர்ந்துள்ளாய்;
முத்து முதலான பலவிதமான இரத்தினங்களுடன் காணப்படுகிறாய்; வெண்மை, கருப்பு, சிவப்பு ஆகிய
பல வர்ணங்களை வெளிப்படுத்தும் நீ, மனிதர்களின் அந்தந்த நிறமுள்ள பலன்களை அளிக்கிறாய் போலும்.

பொதுவாக புண்ய பலன்கள் வெண்மை என்றும், பாவ பலன்கள் கருப்பு என்றும்,
மத்யம பலன்கள் சிவப்பு என்றும் கூறுவது வழக்கம் ஆகும்.

ஸ்ரீ பாதுகையே –நீ பெருமாளின் திருவடியில் -பெருமாள் ஸ்தானத்தில் இருந்து கொண்டு அவரது
அமோகமான ஆணையை நிலை நிறுத்துகிறாய் -உன்னிடம் இருந்து முத்து முதலிய பல ரத்னங்களில் இருந்து
இடையறாது வெளிவரும் பல நிறக் கதிர்கள் மனிதர்களுக்குத் தர்ம தேவதை இடம் இருந்து -தாம் செய்த கர்மாக்களின்
இயல்பினால் கிடைக்கக் கூடிய வெளுப்பு -சாத்விக –கறுப்பு –தாமஸ–சிவப்பு –ராஜஸ-என்ற பலன்களாக வெளிப்படுத்துகிறாய் போலும் –

—————————————————————————————

ப்ரதிசதி முதம் அக்ஷ்ணோ: பாதுகே தேஹ பாஜாம்
சதமக மணி பங்க்தி: சார்ங்கிண: துல்ய வர்ணா
பரிஸர நிஹிதைஸ் தே பத்ம ராக ப்ரதீபை:
கநதர பரிணத்தா கஜ்ஜல ஸ்யாமிகேவ—-576–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருமேனி நிறத்திற்குச் சமமான நிறம் கொண்ட இந்த்ரநீலக் கற்களின்
அருகே சிவந்த பத்மராகக் கற்களும் உள்ளன. இவற்றைக் காணும்போது தீபங்கள் போன்று உள்ளன.
ஆனால் அவற்றின் இடையே உள்ள நீலக்கற்கள் சற்றே கருமையை ஏற்படுத்துவதால்,
அந்த தீபங்களின் ஒளி மக்களின் கண்களை உறுத்தாமல் ஆனந்தம் அளிக்கிறது.

ஸ்ரீ பாதுகையே இந்திர நீலக் கற்கள் பகவானின் கரு மாணிக்க நிறத்தை ஒத்ததாக அருகில் உள்ள சிவப்புக் கற்கள் தீபங்களாக
ஓர் திடக் கரிய மைந்நிறம் உண்டாக அது குளிர்ந்து இருந்தது -பார்ப்பவருக்கு நேத்ர ஆனந்தம் தருவதாக உள்ளது –

———————————————————————————-

கலயாபி ஹாநி ரஹிதேஷு ஸதா
தவ மௌக்தீ கேஷு பரித: ப்ரத்தே
உபரஜ்ய மாந ஹரிணாங்க துலா
ஹரி பாதுகே ஹரி சில மஹஸா—-577–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்கள் எப்போதும் சந்திரன் போன்று தேயாமல் உள்ளன.
ஆனாலும் அனைத்துப் பக்கங்களிலும் அவை இந்திரநீலக் கற்களால் சூழப்பட்டதால்,
க்ரஹண காலத்துச் சந்த்ரர்கள் போன்று உள்ளன (அதாவது நீலக்கற்களால் முத்துக்கள் சற்றே இருண்டு உள்ளன என்றார்).

ஸ்ரீ பாதுகையே உன் முத்துக்கள் கலை குறையாத சந்தரன் போல் காணப்படும் –
ஆனால் சுற்றிலும் நீலக் கற்கள் வெளிவிடும் காந்தியால் மங்கி ராஹூ க்ரஹணத்தால் ஒளி மங்கிய சந்தரன் போலாகும் –

———————————————————————————

மரதக பத்ரளா ருசிர வித்ரும பல்லவிதா
ப்ருதுதர மௌக்திக ஸ்தபகிதா நிகமைஸ் ஸுரபி:
உபவந தேவ தேவ சரணாவநி ரங்கபதே :
அபிலஷதோ விஹாரம் அபிகம்ய பதம் ஸ்ப்ருசஸி—-578–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மரகதக்கற்களின் ஒளியானது இலைகள் போன்றும், அழகான பவழங்களின் ஒளியானது
தளிர்கள் போன்றும், முத்துக்களின் ஒளியானது வெண்மையான மலர்கள் போன்றும் உள்ளன.
இப்படியாக நீ உத்யான தேவதை (உலகில் உள்ள பூமி, காடு, மலை போன்றவற்றின் அபிமான தேவதை) போன்று உள்ளாய்.
வேதங்களும் உன்னிடம் விரும்பி வந்து வசிப்பதால், அவற்றின் நறுமணமும் நீ கொண்டுள்ளாய்.
உல்லாஸமாகச் ஸஞ்சாரம் செய்ய விரும்பும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை நீ தொடுகிறாய்.

ஸ்ரீ பாதுகையே -நீ ஸ்ரீ ரங்க நாதன் சஞ்சாரத்திற்கு எழுந்து அருளும் சமயத்தில் அருகில் சித்தமாக இருப்பது –
உத்யான தேவதையே போல பெருமாளை உத்யான வனத்திற்கு உல்லாச சஞ்சாரத்திற்கு வேண்டுமா போலே தோற்றும்
உனது பச்சைக் கற்கள் இலையாய் -அழகிய பவளங்கள் தளிர்களாய்-பெரும் முத்துக்கள் பூம் கொத்துக்களால்
உன் வேதத் தன்மையால் வேத மணமும் கமழுமாகவே இந்த நிர்வாஹம் பொருந்தும் –

————————————————————————-

ஸதா உத்துங்கே ரங்க க்ஷிதி ரமண பாத ப்ரணயிநி
த்வத் ஆலோகே தத்தந் மணி கிரண ஸம்பேத கலுஷே
ப்ரதி ஸரோதோ வ்ருத்த்யா ப்ரதித ருசி பேதம் ந ஸஹதே
நவாம்பஸ் ஸ்வாஸ் சந்த்யம் நமதமர கோடீர மகர:—579–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் மாறாத ஆசையுள்ள பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை வந்து வணங்கும் தேவர்களின்
க்ரீடங்களில் அழகான மீன் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த மீன்களின் நிலை என்ன என்றால் –
உன்னில் பதிக்கப்பட்ட அந்தந்த இரத்தினக் கற்களின் உயர்ந்த ஒளியானது ஒன்றுடன் ஒன்று சேர்ந்து,
கலங்கிய ஒளி வெள்ளமாக நிற்கின்றன; இவற்றின் எதிரே மீன்களின் ஒளியானது சற்று தணிந்தே உள்ளது.
இதனை காணும்போது மீன்கள் பாதுகையில் இருந்து எழும் ஒளி வெள்ளத்தை எதிர்த்துச் செல்லத்
தடுமாறியபடி மெதுவாகச் செல்வதாகத் தோன்றுகிறது.

ஸ்ரீ ரங்க நாதன் திருவடியில் விடாத பற்றுள்ள ஸ்ரீ பாதுகையே உன் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்து பல ரத்னங்களின்
ஒளிக் கதிர்கள் ஒன்றாய்க் கலந்து ஒரு கலங்கின ஒளி வெள்ளம் ஏற்படுமாம் -வந்து வணங்கி நிற்கும் தேவர்கள்
க்ரீடங்களில் உள்ள மீன் பிரதிமைகள் அப்போது அந்த ஒளி வள்ளத்தில் தடைபடாத புது நதி வெள்ளத்தில் போலே
எதிர் நீச்சல் போட முடியாமல் பொறுத்து நிற்கின்றன போலும் –

—————————————————————————————

ஜநயஸி பதாவநி த்வம்
முக்தா சோண மணி சக்ர நீலருசா
நகருசி ஸந்ததி ருசிராம்
நந்தக நிஸ்த்ரிம்ச ஸம்பதம் சௌரே:—580-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது முத்துக்களின் ஒளி, பத்மராகக் கற்களின் ஒளி மற்றும் இந்த்ரநீலக் கற்களின் ஒளி
ஆகியவை ஸ்ரீரங்கநாதனின் திருவடியின் நகங்களில் புதிய ஒளியை ஏற்படுத்துகின்றன.
இதனைக் காணும்போது நீ அவனுடைய நந்தகம் என்னும் கத்தியின் தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஸ்ரீ பாதுகையே உன்னில் உள்ள முத்துக்கள் சிவந்த பத்மராகங்கள் இந்திர நீலக் கற்கள் மூன்றும் முறையே தம் தம் ஒளியினால்
கத்தியின் கூர் பாகம் -பெருமாள் திருக்கை -திரு நக காந்தி -மற்றும் கத்தியின் மொத்த வடிவம் -இவற்றை உவமிப்பதாம்
நீ இங்கனம் நந்தகம் என்று ஞான தேவதையாகச் சொல்லப் பெரும் திருக் கத்தியைப் பிரகாசப் படுத்துகிறாய் –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-15-ரத்ன சாமான்ய பத்ததி -மணிப் போது படலம் -ஸ்லோகங்கள் -481-520–

March 14, 2016

உத் அர்ச்சிஷ: தே ரங்கேந்த்ர பாதாவநி பஹிர் மணீந்
அந்தர்மணி ரவம் ஸ்ருத்வா மந்யே ரோமாஞ்சித ஆக்ருதீந்—-481-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன் மீது இழைக்கப்பட்டுள்ள இரத்தினங்களின் ஒளியானது,
ஒளிக்கம்பிகள் போன்று காணப்படுகின்றன. இதனைக் காணும்போது உன் உள்ளே இருக்கின்ற இரத்தினங்களின்
நாதத்தைக் கேட்டு இவை மயிர்க்கூச்சல் எடுத்தது போன்று தோன்றுகிறது.

ஸ்ரீ பாதுகையே உன் மேல் இழைத்து இருக்கும் இரத்தினங்களின் காந்தி உள்ளே இருக்கும் ரத்னங்களின்
சப்தத்தால் ஏற்பட்ட மயிர்க் கூச்சல் போல் இருக்கிறது –
ஸ்ரீ பாதுகை -ஆழ்வார் -சப்தம் -அவர் ஸ்ரீ ஸூ க்திகள் -காந்தி -அவற்றின் தாத்பர்யம் -என்றவாறு –

————————————————————–

விதேஹி சௌரே: மணி பாதுகே த்வம்
விபத்யமாநே மயி ரஸ்மி ஜாலை:
ஆஸீததாம் அந்தக கிங்கராணாம்
வித்ராஸநாத் வேத்ரலதா விசேஷாந்—-482-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது அந்திம காலத்தில், எனது அருகில் யம தூதர்கள் வந்து என்னை அச்சுறுத்தக்கூடும்.
அப்போது அவர்களை அச்சம் செய்யும் வகையில் விரட்டக்கூடிய பிரம்புகளாக உன்னில் இருந்து ஒளிக்கற்களை உண்டாக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே அந்திம காலத்தில் யம தூதர்கள் என்னை அணுகா வண்ணம் ணீ எழுந்து அருள வேண்டும் –
உன் மீது உள்ள இரத்தினங்களின் காந்தியைப் பிரம்புகள் என நினைத்து அவர்கள் ஓடும் வண்ணம் செய்து அருள வேண்டும்-

———————————————————————

முகுந்த பாதாவநி மத்ய நாட்யா
மூர்த்தந்யயா நிஷ் பததோ முமுக்ஷோ:
ஆ ப்ரஹ்ம லோகத் அவலம்ப நார்த்தம்
ரத்நாநி தே ரஸ்மிகணம் ஸ்ருஜந்தி—-483-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தலையின் நடுவில் உள்ள நாடியின் மூலம் வெளிக்கிளம்பி, பரமபதம் செல்கின்ற
முமுக்ஷுவிற்கு உனது ஒளிக்கற்றைகள் அனைத்தும் கயிறுகள் போன்று பிடித்துக் கொண்டு செல்வதற்காக உண்டாகின்றன.

ஸ்ரீ பாதுகையே நடுநாடி எனும் ப்ரஹ்ம ரந்திர நாடி வழியாக கிளம்பி மோஷத்தைப் பெற விரும்பும் ஆத்மாவுக்கு
உன்னுடைய ரத்னங்கள் ப்ரஹ்ம லோகம் வரை பிடித்துச் செல்வதற்கு ஏற்ற ரஸ்மி -கயிறு -களின் கற்றையை ஸ்ருஷ்டிக்கின்றன —

———————————————————————–

அஸூர்ய பேத்யாம் ரஜநீம் ப்ரஜாநாம்
ஆலோக மாத்ரேண நிவார யந்தீ
அமோக வ்ருத்திர் மணி பாத ரக்ஷே
முரத்விஷோ மூர்த்திமதீ தயா த்வம்—-484-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மக்களின் ஸம்ஸார பந்தம் என்னும் இரவுப்பொழுதை நீக்க ஸூரியனால் இயலாது.
இந்த இருளை உன்னுடைய ஒளி மூலம் மிகவும் எளிதாக நீ விலக்குகிறாய். ஆக, தடை இன்றி ஸஞ்சாரம் செய்கின்ற
ஸ்ரீரங்கநாதனின் கருணை என்பது வடிவம் எடுத்ததோ என்று எண்ணும்படியாகவே நீ உள்ளாய்.

இங்கு பாதுகையை ஸ்ரீரங்கநாதனின் தயாதேவி என்று உருவகம் செய்கிறார். ஸ்ரீநிவாஸனின் தயாதேவியைக்
குறித்து தயாசதகம் அருளிச்செய்த ஸ்வாமி தேசிகன், ஸ்ரீரங்கநாதனின் தயாதேவியைக் குறித்து
பாதுகாஸஹஸ்ரம் அருளியதாகக் கொள்ளலாம்.

ஸ்ரீ பாதுகையே சூரியனாலும் போக்க முடியாத அஜ்ஞ்ஞானம் என்கிற இருட்டை உன் காந்தி போக்கடிக்கிறது –
உன் கடாஷ விசேஷத்தை நோக்கும் போது நீ எம்பெருமானின் கருணையின் அவதாரம் என்றே தோன்றுகிறது –

—————————————————————-

ரங்கேஸ பாதாவநி தாவகாநாம்
ரத்ந உபலாநாம் த்யுதய: ஸ்புரந்தி
ஸ்ரேய: பலாநாம் ஸ்ருதி வல்லரீணாம்
உபக்நசாகா இவ நிர்வ்யபாயா:—-485-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மக்களுக்கு வேண்டிய புருஷார்த்தம் என்னும் பழங்களை
அளிக்கின்ற கொடிகளாக வேதங்கள் உள்ளன. அந்த வேதங்கள் படர்வதற்கு ஏற்ற கொழுகொம்புகளாக
உனது இரத்தினக் கற்களின் ஒளிக்கீற்றுகள் உள்ளன.

ஸ்ரீ பாதுகையே உன்னுடைய காந்தியானது வேதங்கள் ஆகிற கொடிகள் வளர உதவும் கொள் கொம்பு போல் இருக்கிறது –

————————————————————-

கஸ்யாபி பும்ஸ: கநகாபகாயா:
புண்யே ஸலீலம் புளிநே சயாளோ:
ஸமீப வ்ருத்திர் மணி பாதுகே த்வம்
ஸம்வாஹயந்தீவ பதம் கரை: ஸ்வை:—486-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தூய்மையான மணல் மேட்டைக் கொண்டுள்ள காவிரியின் கரையில்
மிகவும் உல்லாஸமாக, தனித்து விளங்கும் அழகிய மணவாளன் சயனித்துள்ளான்.
அவனது திருவடிகளை உனது ஒளி என்னும் திருக்கரங்களால் பிடித்து விட்டபடி நீ அவன் அருகில் உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க விமானத்தில் பள்ளி கொண்டு அருளும் பெரிய பெருமாளுக்கு அவர் திருவடியில் இருக்கும்
உன்னிடம் இருந்து உண்டாகும் காந்தி உன் கிரணங்களால் அவர் திருவடிகளைப் பிடித்து விடுவது போல் இருக்கிறது –

————————————————————————-

தித்ருக்ஷ மாணஸ்ய பரம் நிதாநம்
ஸ்நேஹாந் விதே யோக தசா விசேஷே
ஸம்வித் ப்ரதீபம் மணி பாத ரக்ஷே
ஸந்துக்ஷயந்தீவ மரீசயஸ் தே—-487-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மிகவும் உயர்ந்த செல்வமாகிய ஸ்ரீரங்கநாதனைக் காண வேண்டும்
என்று விரும்பும் யோகி ஒருவன், தனது பக்தியை நெய்யாக்கி, யோகம் என்னும் திரியை இட்டு, ஞானம் என்னும்
விளக்கை ஏற்ற முயல்கின்றான். உன்னுடைய ஒளியானது, அந்த விளக்கு நன்றாக எரியும்படித் தூண்டிவிடுகிறது.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானை த்யானித்து அவரைப் பார்க்க நினைப்பவர்க்கு ஞானம் ஆகிற விளக்கின் ஒளியை
உன் இரத்தின காந்திகள் தூண்டி விடுவன போல் இருக்கின்றன –

————————————————————

ஸமாதி பாஜாம் தநுதே தவ்தீயா
ரங்கேஸ பாதாவநி ரத்ந பங்க்தி:
ஸ்தானம் ப்ரயாதும் தமஸ: பரம் தத்
ப்ரதீப க்ருத்யாம் ப்ரபயா மஹத்யா—-488-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ப்ரக்ருதி மண்டலம் என்னும் இருளுக்கு அப்பால் உள்ள
பரமபதம் செல்வதற்கு யோகிகள் முனைகின்றனர். அப்படி அவர்கள் செல்வதற்கு உதவும் தீவட்டிகளின் செயலை
உனது இரத்தினக் கற்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் செய்கின்றன.

ஸ்ரீ பாதுகையே -த்யானம் பண்ணிப் பரம பதத்தை அடைய வேண்டும் என்று இருப்பவர்களுக்கு
உன் உயர்ந்ததான ரத்ன காந்தி தீவட்டி போல் இருந்து பிரக்ருதியின் இருளைப் போக்கி அருளுகிறது –

————————————————————————-

பத்நாஸி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
மந்யே யதார்ஹம் மணி ரஸ்மி ஜாலை:
ஸேவாநதாநாம் த்ரிதசேஸ்வராணாம்
சேஷாபடீம் சேகர ஸந்நி க்ருஷ்டாம்—-489-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் தங்கள் தலை சாய்ந்து,
அதனைத் தொடுவதற்காக வணங்கியபடி தேவர்கள் நிற்கின்றனர். இவர்களது தலையில் உனது இரத்தினக்கற்களின்
ஒளிக்கீற்றுகள் மூலமாக பரிவட்டத்தை நீ கட்டுகிறாய் என எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே உன்னை சேவிக்க வரும் தேவர்களுக்கு நீ உன் ரத்ன காந்தியால் பரி வட்டம் கட்டுவது போல் இருக்கிறது –
திருவாய்மொழியின் ஆழ்ந்த பொருள்களை அவரவர் தம்தம் ஸூஹ்ருதத்தின் அளவுப்படி உணர்கின்றனர் என்றவாறு –

—————————————————————————

பஜந்தி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
ப்ரகல்பயந்த: விவிதாந் புமர்த்தாந்
உத் அர்ச்சிஷஸ் சிந்தயதாம் ஜநாநாம்
சிந்தாமணி த்வம் மணயஸ் த்வதீயா:—-490-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனையே எப்போதும் த்யானித்தபடி உள்ளவர்களுக்கு,
அவர்களுக்கு ஏற்ற புருஷார்த்தங்களை அளிக்கவல்லதாக உனது இரத்தினங்கள் உள்ளன.
இதனால் இவை சிந்தாமணியின் தன்மையை அடைகின்றன.
(சிந்தாமணி என்பது ஸ்வர்க்கத்தில் உள்ள பொருளாகும். இது கேட்பதையும் நினைப்தையும் அளிக்கவல்லதாகும்)

ஸ்ரீ பாதுகையே உன் மீது பதிக்கப் பட்டுள்ள ரத்தினங்கள் சிந்தா மணியைப் போல் தியானம் பண்ணுமவர்
கேட்டதைக் கொடுக்கின்றன -திருவாய்மொழி யாதாம்ய அர்த்தங்களை உணர்ந்தவர்கட்கு சகல புருஷார்த்தங்களும் கிட்டும் –

—————————————————————-

நாதஸ்ய தத்தே நதராஜ கந்யா
பாதும் ஸூபாந் பாத நக இந்து ரஸ்மீந்
மணி ப்ரபாபி: ப்ரதிபந்ந பக்ஷாம்
லீலாச கோரீம் இவ பாதுகே த்வாம்—-491-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின் நகக் கண்கள் சந்த்ரன் போன்று
குளிர்ந்த வெண்மையான ஒளியை வீசுகின்றன.
நதிகளின் தலைவனாகிய ஸமுத்திரராஜனின் புத்ரியான ஸ்ரீரங்கநாச்சியார்,
சிறந்த இரத்தினங்களின் ஒளியை வீசுகின்ற உன்னை,
தான் விளையாட வைத்துள்ள சகோரபக்ஷி போன்று அவனது திருவடிகளில் அணிவிக்கிறாள்.

சகோர பக்ஷி என்பது சந்திரனின் குளிர்ந்த ஒளியை மட்டுமே உண்ணும் தன்மை கொண்டதாகும்.
இங்கு பாதுகையை இந்தப் பறவைக்கு உருவகம் செய்கின்றார்.
இந்தப் பாதுகை என்ற பறவையை, ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்கள் என்னும் சந்த்ரனில் இருந்து வெளிவரும்
ஒளியைப் பருகும் பொருட்டு, ஸ்ரீரங்கநாச்சியார் அணிவிக்கிறாள் என்றார்.

ஸ்ரீ பாதுகையே மகா லஷ்மி உன்னைப் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிக்கிறாள் –
உன் மீதுள்ள இரத்தினங்களின் காந்தி இருபுறமும் பரவி இறக்கை போல் இருக்கிறது –
எம்பெருமான் திருவடியாகிய சந்த்ரனுடைய அம்ருத மயமான கிரணங்களைப் பானம் செய்ய அடைந்த
சகோர பஷி போலே நீ விளங்குகிறாய் –

——————————————————————————

ஜநஸ்ய ரங்கேஸ்வர பாதுகே த்வம்
ஜாத அநுகம்பா ஜநயஸி அயத்நாத்
ஆக்ருஷ்ய தூராத் மணி ரஸ்மி ஜாலை:
அநந்ய லக்ஷ்யாணி விலோசநாநி—492-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை தரிசிக்க வரும் அடியார்களின் கண்களை,
உன்னுடைய கருணையை வெளிப்படுத்தும் இரத்தினக்கற்களின் ஒளி மூலமாக, மிகவும் எளிதாக,
தூரத்தில் இருந்தே கவர்ந்து இழுக்கிறாய். இதனால் அவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருமேனி உட்பட
வேறு எதனையும் காணாமல், உன்னை மட்டும் காணும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே மக்கள் இடத்தில் கருணை கொண்டு நீ உன் இரத்தின காந்தியால் வெகு தூரத்தில் இருந்தே அவர்களை ஆகர்ஷித்து
உன்னையும் பெருமாளையுமே பார்க்கும் படியாகச் செய்து விடுகிறாய் -ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளே ரத்தினங்கள் –

—————————————————————————

ரங்கேஸ பாதாவநி தாவகீநை:
ஸ்ப்ருஷ்டா: கதசித் மணி ரஸ்மி பாசை:
காலஸ்ய கோரம் ந பஜந்தி பூய:
காராக்ருஹ அந்தேஷு கச அபிகாதம்—-493-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளிக்கீற்றுகள் என்னும்
கயிறுகளால் ஒரு முறை தீண்டப் பெற்றவர்கள், யமனின் சிறைச்சாலையில்
பயங்கரம் சூழ்ந்த சாட்டை அடிகளை எப்போதும் பெறுவதில்லை.

ஸ்ரீ ரங்க நாதனின் ஸ்ரீ பாதுகையே -உன்னுடைய இரத்தின காந்தி ஒருமுறையாவது ஒருவர் மேல் பட்டால் அவர் நரகமாம்
சிறையினுள் யமனுடைய சாட்டை யடியைப் பெறுவதில்லை –

திருவாய்மொழி தாத்பர்யம் ஒரு முறை உணர்ந்தவர் தியானத்தாலோ சரணா கத்தியாலோ ஸ்ரீ பரம பதம் அடைவர் –

—————————————————————–

ரத்நாநி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
த்வத் ஆஸ்ரிதாநி அப்ரதிகை: மயூகை:
ஆஸேது ஷீணாம் ஸ்ருதி ஸூந்தரீணாம்
விதந்வதே வர்ண நிசோள லக்ஷ்மீம்—-494–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதனின் அருகில் எப்போதும் வேதங்கள் என்னும் பெண்கள் சூழ்ந்து நின்றபடி உள்ளனர்.
அவர்களது பல நிறங்களுடன் கூடிய ரவிக்கைகள் போன்ற அழகை, தடை இல்லாத
உனது இரத்தினக் கற்களின் ஒளிக் கீற்றுகள் உண்டக்குகின்றன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ருதிகள் -ஆகிற பெண்கள் உன்னை அடைந்து வணங்குகின்றனர் –
உன் பல வண்ணம் உள்ள இரத்தினங்கள் அவர்களுக்குப் பல வண்ணங்களில் ரவிக்கை அணிவிப்பது போல் இருக்கின்றது –

திருவாய் மொழியால் வேதங்களும் பெருமை பெற்றன என்றவாறு –

———————————————————————–

நித்ரா ரஸ ப்ரணயிநோ மணி பாத ரக்ஷே
ரங்கேஸ்வரஸ்ய ஸ்விதம் ப்ரதிபத்யமாநா
சய்யா பணீந்த்ரம் அபிதோ பவதீ விதத்தே
ரத்ந அம்ஸூபிர் யவநிகாம் தர்ஸநீயாம்—-495–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் சயனிக்கும் நேரம் வருகிறது. அப்போது நீ செய்வது என்ன?
அவனது அருகில் சென்று, அவனது படுக்கையாக உள்ள ஆதிசேஷனுக்கு நான்கு பக்கங்களிலும்,
உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி மூலமாக, ஒளி வீசும் திரையைக் கட்டுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே எம்பெருமான் பள்ளி கொண்டு அருளும் காலத்தில் உன் ரத்தின காந்திகள் நான்கு புறமும் பரவி
திரையிட்டது போலே இருக்கின்றன -ஆழ்வார் திவ்ய ஸூக்தியால் எம்பெருமானும் ஆனந்தம் அனுபவிக்கிறார் –

—————————————————————-

ஸத்ய: த்வத் உத்க்ரஹதசா நமித ஆக்ருதீநாம்
ஸ்ரஸ்த அம்ஸூகம் நிஜருசா மணி பாதுகே த்வம்
பத்மா ஸஹாய பரிவார விலாஸி நீநாம்
பட்டாம் ஸூகை: இவ பயோதரம் ஆவ்ருணோஷி—-496-

இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அதிகாலைப் பொழுதில் ஸ்ரீரங்கநாதன் திருக்கண் விழித்தவுடன்,
உன்னை ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான அவனது திருவீதிகளில் சேர்ப்பதற்காக,
உன்னை எடுப்பதற்கு அங்குள்ள பணிப்பெண்கள் வேகமாகக் குனிகின்றனர்.
அப்போது அவர்களின் மேல் ஆடைகள் விலக, அவர்களின் ஸ்தனங்களை மறைக்கும் பட்டுத்துணி போன்று,
உனது ஒளியை அவர்கள் மீது வீசுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே -உன்னை எழுந்து அருளப் பண்ணுவதற்காக கைங்கர்ய பற்கள் குனிகிறார்கள்
அப்பொழுது அவர்கள் மேல் வஸ்த்ரம் நகர்வதால் உன் ரத்தின காந்தி அவர்கள் மேல் போர்த்தி மானத்தைக் காக்கின்றது –
சேதனர்கள் மனம் கலங்கினாலும் ஆழ்வார் திவ்ய ஸூ க்திகள் தெளிவடையச் செய்யும் என்றவாறு –

——————————————————————————-

தேவஸ்ய ரங்க வஸதே: புரத: ப்ரவிருத்தை:
உத்தூத விஸ்வ திமிராம் மணி ரஸ்மி ஜாலை:
மந்யே மதீய ஹ்ருதய ஆயதந ப்ரவேச
மங்கள்ய தீப கணிகாம் மணி பாதுகே த்வாம்—497-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் முன்பாக எழுத்தருளியுள்ள நீ,
எங்கும் பரவுகின்ற உனது இரத்தினக் கற்களின் ஒளி மூலமாக, சுற்றியுள்ள அனைத்து இருளையும் நீக்குகிறாய்.
எனது மனம் என்னும் வீட்டில் ப்ரவேசம் செய்யும் ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்றும் சிறு விளக்காகவே நான் உன்னை எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே உலகம் எங்கும் பரவியுள்ள இருட்டைப் போக்கக் கூடியது உன் ரத்தின காந்தி –
அப்படிப்பட்ட உன்னை என் மனம் ஆகிற சிறிய வீட்டில் ஸ்ரீ ரங்க நாதன் பிரவேசிப்பதற்கு முன்னதாக
ஏற்றி வைக்கப்பட்ட மங்கள விளக்காக நினைக்கிறேன் –

——————————————————

ஆகீர்ண ரத்ந நிகராம் மணி பாதுகே த்வாம்
ரங்கேஸ் வரஸ்ய லலிதாம் விபணிம் ப்ரதீம:
யத் ஸம்ஸ்ரயேண பவதி ஸ்திர பக்தி மூல்யம்
கைவல்யம் அத்ர ஜகதாம் க்ரய விக்ர யார்ஹம்—-498-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இரத்தினக் குவியலைப் பரப்பி வைத்துள்ள உன்னை
ஸ்ரீரங்கநாதனின் அழகான கடைத்தெரு என்றே எண்ணுகிறோம்.
இந்தக் கடைத்தெருவை அடைவதன் மூலமாக, நழுவாத பக்தி என்னும் விலையைக் கொடுத்து,
மோக்ஷம் என்பதை வாங்க இந்த உலகினரால் இயல்கிறது. இப்படியாக கொடுத்து – வாங்கும் இடமாக நீ உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே இரத்தினங்களின் கூட்டத்தை உடையவளான உன்னை ஸ்ரீ ரங்க நாதன்
ஏற்படுத்திய கடைத் தெருவாக நினைக்கிறேன் –
எம்பெருமானைப் பல ஜன்மங்கள் தியானித்து அடையத் தகுந்த மோஷத்தை ஜனங்கள் இங்கு சுலபமாக வாங்கி விடுகிறார்கள் –

———————————————————————————

வ்யங்க்தும் க்ஷமம் பகவத: ஜகத் ஈஸ்வரத்வம்
வஜ்ராங்குச த்வஜ ஸரோருஹ சக்ர சிஹ்நம்
ஆஸ்லிஷ்ய நிர்ப்ரருசிம் மணி பாதுகே த்வாம்
ஆஸீத் அநாபரண ஸுந்தரம் அங்க்ரி பத்மம்—-499-

இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அனைத்து உலகங்களுக்கும் ஈச்வரனாக உள்ளவன்
ஸ்ரீரங்கநாதனே ஆவான் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்தும் விதமாக, அவனது திருவடிகளில்
வஜ்ராயுதம், அங்குசம், கொடி, தாமரை சக்ரம் போன்ற அடையாளங்கள் காணப்படுகின்றன.
இப்படிப்பட்ட அவனது இணைந்த திருவடிகள் உன்னை அணைத்துக் கொண்டு,
உன்னில் இருந்து வெளிவரும் ஒளி மூலம், வேறு எந்த ஆபரணமும் அணியாமலேயே மிகுந்த அழகாக உள்ளன.

ஸ்ரீ பாதுகையே -எம்பெருமான் உடைய திருவடிகள் ஒரு சக்ரவர்த்திக்கு உரிய ரேகைகளைத் தாங்கியவை –
இருப்பினும் அவை மற்ற எந்த ஆபரணத்தையும் நாடாது -உன்னை மட்டும் அடைந்து அழகாக விளங்குகின்றன –

————————————————————

ரத்ந ப்ரபா படல சக்ர மநோஹரா த்வம்
பத்ம ஆருணம் பதம் இதம் த்வயி ரங்க பர்த்து:
மந்யே தத் ஏதத் உபயம் மணி பாத ரக்ஷே
சக்ராப்ஜ மண்டலம் அகிஞ்சந ரக்ஷணார்ஹம்—500-

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! இரத்தினக்கற்களில் இருந்து வெளிவரும்
ஒளி என்னும் வட்டம் மூலம் நீ மிகவும் அழகாக உள்ளாய்.
ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற சிவந்த அழகான திருவடிகள் எப்போதும் உன் மீது உள்ளன.
இதனைக் காணும் போது வேறு கதியில்லாதவர்களுக்குச் சாஸ்திரங்கள் கூறும் சக்ராப்ஜ மண்டலம் என்றே நான் எண்ணுகிறேன்.

கதியில்லாதவர்களுக்கு உபாயமாக சாஸ்திரத்தில் சக்ராப்ஜ மண்டலம் என்பது கூறப்பட்டுள்ளது.
வட்டம் ஒன்றை வரைந்து, அந்தச் சக்ர வடிவத்தில் கோடுகள் கிழித்து, அதன் நடுவில் தாமரை மலர்களை எழுதி,
அதனைப் பூஜிக்க வேண்டும் என்பர். இதனை இங்கு உருவகம் செய்கிறார்.

ஸ்ரீ பாதுகையே உன் ரத்தினங்கள் உடைய காந்தி ஒரு வட்டம் -சக்ரம் -போலவும் அதன் நடுவில்
எம்பெருமானுடைய திருவடிகள் செந்தாமரை புஷ்பம் போலவும் இருக்கின்றது –
இந்த சந்நிவேசம் தத் காலத்தில் பக்தி பண்ணத் தகாதவர்களுடைய காப்பாற்றுதலுக்குத் தகுந்த சக்ராப்ஜ மண்டலமாக அமைகின்றது

—————————————————————-

த்ராஸாத் ஸ்வயம் ப்ரணமதாம் தநுஜேஸ்வராணாம்
ஸங்க்யேஸ் அவலூந சிரஸம் அபி மௌளி ரத்நை:
ஆயோஜயதி அநுகலம் மணிபாதுகே த்வாம்
ஸைரந்த்ரிகேவ முரவைரி க்ருபாண தாரா—-501-

உயர்ந்த மணிகள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் நந்தகம் என்னும் வாளுக்குப் பயந்து பல அசுர அரசர்கள்
தாங்களாகவே பணிந்து நிற்பர். ஒரு சிலர் தங்களாகவே பணியாமல், யுத்த பூமியில் தலை அறுக்கப்பட்டுப் பணிவர்.
இவர்கள் இருவருடைய க்ரீடங்களில் உள்ள இரத்தினக்கற்கள் உனக்கு அலங்காரமாக வைக்கப்படும்.
இந்தச் செயலைச் செய்யும் பணிப்பெண் போன்று ஸ்ரீரங்கநாதனின் வாள் உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே எம்பெருமானுடைய கத்தியின் கூர் உனக்கு ரத்னங்களை சமர்ப்பித்து அலங்கரிக்கும் பணிப்பெண் ஆகிறது –
பயத்தால் பணிந்து சரண் புகுந்த அசூர ராஜர் கிரீட ரத்னங்களையும் பணியாது போர் புரியும் அவரைத் தலை அறுத்து
அவருடையவற்றையும் இந்தக் கூர் முனை தானே கொணர்கிறது –

——————————————————–

ஆஸ்கந்தநாநி விபுதேந்த்ர சிகாமணீநாம்
த்வாம் ஆஸ்ரிதாநி அஸுர ஸூதந பாத ரக்ஷே
ரத்நாநி தே ஸ்துதி ஸுவர்ண பரீக்ஷணார்த்தே
நூநம் பஜந்தி நிகஷோ பலதாம் கவீநாம்—-502-

அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை வந்து வணங்கும் தேவர்களின் க்ரீடங்களில்
உள்ள இரத்தினக்கற்களை, உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக்கற்கள் கவர்ந்து இழுக்கின்றன
(அல்லது அந்த இரத்தினங்களைப் பாதுகையில் உள்ள இரத்தினங்கள் மிதிக்கின்றன என்றும் கொள்ளலாம்).
இந்த இரத்தினங்கள் மேலும் செய்வது என்னவென்றால் – உன்னைப் பற்றிய துதிகள் இயற்றும் கவிஞர்களின்
அக்ஷரங்கள் (சொற்கள்) என்னும் தங்கத்தைச் சோதிக்கும் உரைகல்லாகவும் உள்ளன என்பது நிச்சயம்.

அசூர சத்ருவின் ஸ்ரீ பாதுகையே -உன்னுடைய ரத்னக் கற்கள் தேவர் தலைவர்கள் முடி மணிகளை மிதிக்கும் -ஏன் எனில்
உன்னை அலங்கரிக்கும் ரத்னங்கள் தாம் உயர்ந்தவை -அவை உன் ச்துதிகளில் உள்ள நல்ல அஷரங்களை-தங்கத்தின் மாற்றி –
பரீஷை செய்வதில் உரைகள் ஆகின்றன -ஸ்ரீ பாதுகையில் உள்ள ரத்னங்களைப் பற்றிய ஸ்தோத்ரமே உயர்ந்தது என்னும் போலும் –

————————————————————–

பாதாவநி ப்ரணயிநாம் ப்ரதிபாதித அர்த்தாம்
க்ரீடா ஸரோஜம் இவ சௌரி பாதம் வஹந்தீம்
ப்ரத்யுப்த ரத்ந நிகர ப்ரதிபந்ந சோபாம்
பஸ்யாமி ரோஹணகிரே: அதி தேவதாம் த்வம்—-503-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை அண்டி நிற்பவர்களுக்கு ஏற்றத்தை நீ அளிக்கிறாய்.
அவனுடைய தாமரை போன்ற அழகான திருவடிகளை, தாமரை மலர் போன்று உனது விளையாட்டின் பொருட்டு வைத்துள்ளாய்.
எண்ணற்ற இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட அழகுடன் விளங்குகின்றாய்.
இப்படியாக உன்னைக் காணும்போது இரத்தின மலைக்கு அதிபதி தேவதை என்றே எண்ணுகிறேன்.

இரத்தின மலைக்கு ரோஹணம் என்று பெயர் உண்டு. வெள்ளி மலையானது கைலாயம் என்னும்,
தங்க மலை மேரு என்று பெயர் பெற்றது போன்றதாகும். இந்த இரத்தின மலையின் தேவதை என்று பாதுகையைக் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ பாதுகையே உன் அன்பர்களுக்கு வேண்டியதை எல்லாம் வழங்குவாய் -நீ பெருமாள் திருவடி தாமரையை சுமப்பது
திருக் கையில் லீலா சரோஜம் போலே தோன்றுகிறது
ரத்னங்கள் சம்ருத்தியால் உன்னிடம் இழைக்கப்பட்டு உள்ளன
அதனால் சிறந்த சோபை -இத்தன்மைகள் எல்லாம் கொண்ட ணீ மேருவின் அதிஷ்டான தேவதையோ என்று தோன்றும் –

—————————————————–

யாமேவ ரத்ந கிரணைர் மணி பத ரக்ஷே
சூடாபதே தநு ப்ருதாம் பவதீ விதத்தே
சக்ராதி தைவத சிகாமணி ரஜ்ய மாநை:
தாமேவ தே ப்ரகட யந்தி பதைர் அபிக்யாம்—-504-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நீ மனிதர்களின் தலையில் சிறந்த அழகை ஏற்படுத்துகிறாய்.
அந்த மனிதர்களை வணங்கும் இந்திரன் முதலான தேவர்களின் க்ரீடங்களில் உள்ள இரத்தினங்கள்,
அந்த அழகைத் தாங்கள் பெற்று, அவற்றை வெளிப்படுத்துகின்றனர்.
(ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை ஆராதிப்பவர்களை தேவர்களும் வந்து வணங்குகின்றனர் என்று கருத்து).

ஸ்ரீ மணி பாதுகையே எந்த மனிதர்கள் உடைய தலைகளில் நீ அமர்ந்து
உன் ரத்னங்களால் ஒரு சோபை உண்டாக்குகிறாயோ
அதே சோபை அந்த மனிதர்கள் உடைய பாதங்களுக்கும் ஏற்படுகிறது
தேவர்கள் தம் ரத்ன கிரீடங்கள் உடன் அவர்களுடைய பாதங்களில் வணங்குவதால் –
அந்த மனிதர்கள் உடைய-பாதங்களும் ஒளி விடுகின்றனவே –
சந்த தேவா -நித்ய ஸாம்யம் அன்றோ –

கிருஷ்ண கர்ணாம்ருதம் -ருக்மிணி பிராட்டி கிருஷ்ணன் -கோவர்த்தந தாரி -உன்னைக் கொண்டாடி –
நீ ஏழு நாள்கள் தூக்கியத்துக்கு
உன்னை சதா எனது மார்பில் தரிக்கும் என்னைப் பாடிக் கொண்டாட வேண்டாமோ
நான் பெரியவன் -நீ பெரியாய் என்பதை யார் அறிவர் -நம்மாழ்வார் –
உன்னையே தரிக்கும் பாதுகையைத் தரிக்கும் அடியார்கள் சிரஸ்ஸூ -அவர்கள் அன்றோ பெரியவர்கள் –

———————————————————–

ரத்ந அங்குரை: அவிரளா மணி பாத ரக்ஷே
பாகோந்முகை: பரிகதா புருஷார்த்த ஸஸ்யை:
தேவேந ரங்க பதிநா ஜகதா விபூத்யை
கேதாரி கேவ க்ருபயா பரி கல்பிதா த்வம்—-505-

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இரத்தினங்கள் என்னும் முளைகள் நிறைந்துள்ளதும், நான்கு விதமான புருஷாத்தங்கள்
என்னும் பயிர்களால் சூழப்பட்டுள்ளதும் ஆகிய நிலையில் நீ உள்ளாய். இப்படியாக உன்னைக் காணும் போது,
ஸ்ரீரங்கநாதன் என்ற அரசன், தன் நாட்டின் மக்கள் வாழ்விற்காகக் கருணையுடன் பயிரிட்ட வயல் போன்று காணப்படுகிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே நீ ஒரு கழனி போலவும் நெருக்கமாய் இட்டுள்ள ரத்னங்கள் பயிர் முளை போலவும்
ரத்னக் கதிர் முற்றிய தான்யக் கதிர் போலவும் தோன்றும் –சர்வலோக அரசன் ஸ்ரீ ரங்க நாதன் –
கருணையுடன் அகில உலகங்களும் ஜீவிக்க வேண்டும் என்பதற்காகவே தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற சகல
புருஷார்த்தங்களையும் விளைவிக்க வல்ல இந்த வயலைப் பயிர் செய்து உபகரித்து இருக்கிறான் போலும் –

——————————————————————

நிர்தூத மோஹதிமிரா: தவ ரத்ந தீபை:
நிர்விச்ய மாந விபவம் நத ராஜ புத்ர்யா
ப்ரத்யக் ஷயந்தி நிகமாந்த நிகூடம் அர்த்தம்
பாதாவநி த்வயி நிவேசித பவபந்தா:—-506

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது அன்பு வைத்தவர்கள், உன்னில் காணப்படும் இரத்தினக் கற்களின்
ஒளி மூலம் தங்களது அறியாமை என்னும் இருள் நீங்கப் பெறுகின்றனர். இதனால் அவர்களுக்கு மேலும் கிட்டுவது
என்னவென்றால் – திருப்பாற்கடலின் பெண்ணாகிய ஸ்ரீரங்கநாச்சியாரால் அனுபவிக்கப்படும் பெருமைகள் கொண்டவனும்,
வேதாந்தங்களில் மறைபொருளாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதனைக் காண்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே உன்னிடத்தில் பக்தி பண்ணுமவர்க்கு நன்மை எத்தனை பாராய் -உன்னுடைய ரத்னங்கள் விளக்குகளாய் நின்று
அவர்கள் உடைய அஜ்ஞ்ஞான இருட்டைப் போக்கி விடும் -அவர்கள் இப்போது பெரிய பிராட்டி அனுபவிக்கும் பெருமைகளை உடையவனை
வேதாந்தங்களில் மறைந்து இருக்கும் பரம் பொருளைத் தம் இதயத்தால் காண்பர் –

————————————————————–

ரத்நோபல ப்ரகர ஸம்பவ ஏஷ தூராத்
ரங்காதி ராஜ சரணாவநி தாவகீந:
ஆர்த்ர அபராத பரிகிந்ந தியாம் ப்ரஜாநாம்
ஆஸ்வாஸ நார்த்த இவ பாதி கரப்ரஸார:—-507-

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! அன்றாடம் புதிதாகக் குற்றம் செய்து விட்டு, அதற்காக வருந்தி,
ஸ்ரீரங்கநாதனின் அருகில் வந்து வணங்கித் தயங்கியபடி சிலர் நிற்கிறார்கள். அவர்களைத் தேற்றி,
அவர்களை அருகில் அழைப்பதற்காக நீட்டும் கரங்கள் போன்று உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி உள்ளது.

ஸ்ரீ பாதுகையே -வெகு தூரத்திலேயே நின்று கொண்டு புதிது புதிதாக அபராதம் செய்து கொண்டு அதனால் கூசி இருப்பவரைக் கூட
உன் ரத்னங்களின் ஒளி வீச்சு எட்டி யடைந்து அவரைக் கை நீட்டி அழைத்து ஆறுதல் சொல்லுவது போல் தோன்றுகிறது –

———————————————————–

வ்யாமுஹ்யத: விஷயி பாலம்ருகாந் மதீயாந்
ஸம்ஸார கர்ம ஜநிதாஸு மரீசி காஸு
பாதாவநி ப்ரகுண ரத்ந மரீசி ஜாலை:
ஆக்ருஷ்ய விஸ்ரம்ய கேசவ காந்தி ஸிந்தௌ—508-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸம்ஸாரம் என்பது கோடை காலமாகத் தோன்றுகிறது; இதில் உலக விஷயங்கள்
என்பவை கானல் நீராக உள்ளன. இந்தக் கானல் நீரை உண்மை என்று மயங்கிக் கிடக்கும் புலன்கள் என்ற மான் குட்டிகளை,
உனது இரத்தினக்கற்களின் ஒளி என்னும் கயிறு கொண்டு நீ கட்ட வேண்டும். அதன் பின்னர், அந்தப் புலன்களை இழுத்துச் சென்று,
ஸ்ரீரங்கநாதனின் திருமேனி அழகு என்னும் கடலில் இளைப்பாறும்படிச் செய்ய வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே சம்சாரம் ஒரு கடும் கோடை – வியர்த்து வெந்து தண்ணீர் தேடுபவர் கண்டு நிற்பது கானல் நீர் இடத்தில்
அவ்வளவு மோஹ மயக்குகள் எல்லாம் இந்த்ரியங்கள் ஆகிற மான்களால் அவை தறி கெட்டுப் பல திசைகளிலும் பறந்து ஓடுமே -என் செய்ய
உன்னுடைய ரத்ன கிரணங்கள் ஒரு வலை போல் விரிந்து வளைத்து இழுத்துப் பிடித்துப்
பகவானுடைய தேஜோ நதியில் அமிழ்த்து என்னைக் களைப்பு தீரச் செய் –

————————————————————–

அந்தர் நிதாய முநிபி: பரிரக்ஷ்ய மாணாம்
ஆத்மீய ரஸ்மி குணிதாம் மணி பாத ரக்ஷே
ரங்கேஸ பாத கமல ப்ரதிபந்ந முத்ராம்
நீவீம் அவைமி பவதீம் நிகமாந்த வாசாம்—-509-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை முனிவர்கள் தங்கள் மனதிலேயே எப்போதும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
உன்னுடைய இரத்தினங்களில் இருந்து வெளிவரும் ஒளிக்கீற்றுகள், உன்னை அவ்விதம் கட்டி வைக்கும் கயிறுகள் போன்று உள்ளன.
அந்தக் கயிற்றில் வைக்கப்படும் முத்திரை போன்று ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் உள்ளன.
இப்படியாக உள்ள உன்னைக் கண்டால் வேதாந்தங்கள் என்னும் இரத்தினக்குவியல் நிறைந்த மூட்டை என்றே தோன்றுகிறது.

ஸ்ரீ மணி பாதுகையே முனிவர்கள் ஆதரத்துடன் முடித்து வைத்துக் காக்கும் ஒரு பண மூட்டையாக உன்னைச் சொல்லலாம் போலும் –
ரத்னக் கற்கள் வெளியிடும் ஒளிக் கதிர்கள் தாம் கட்டும் கயிறுகள்
பெருமாள் அடிக்கமலம் தான் மேலிடப் பெற்ற முத்ரை போலும்-
இந்தப் பண முடிப்பு வேதாந்த வாக்குகளை யன்றோ உள்ளடக்கி யுள்ளது —

————————————————————————————

ராமஸ்ய ரங்க வஸதேஸ் சரண அநுஷங்காத்
காஷ்டாம் கதாம் புவந பாவநதாம் ததாநா
பாதாவநி ப்ரஸூர ரத்ந சிலா நிபத்தா
ஸம்ஸார ஸந்தரண ஸேதுர் அஸி ப்ரஜாநாம்—-510-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கவிமானத்தைத் தனது இருப்பிடமாக உடைய இராமனின் திருவடித் தொடர்பு
என்னும் உயர்த்தியை நீ அடைந்துள்ளாய். இதற்கு மேல் வேறு எந்தவிதமான உயர்வும் இல்லை என்று நிலையை அடைந்து,
மிகவும் தூய்மையான நிலையை அடைந்துள்ளாய். பலவிதமான இரத்தினக்கற்களால் நீ கட்டப்பட்டுள்ளாய்.
இப்படியாக உள்ள நீ ஸம்ஸாரத்தில் உள்ள மக்கள் தங்கள் துன்பங்களைக் கடக்க உதவும் அணையாக உள்ளாய்.

இங்கு பாதுகையை சேதுவாகக் கூறுகிறார். சேது அணை அயோத்திவாஸியான இராமனின் திருவடித் தொடர்பு உள்ளதாகும்,
பாதுகை ஸ்ரீரங்கவாஸியான இராமனின் திருவடித் தொடர்பு கொண்டது; அது கற்களால் கட்டப்பட்டது,
பாதுகை இரத்தினக்கற்களால் கட்டப்பட்டது; சேதுபாலம் கடலைக் கடக்க உதவியது, பாதுகை ஸம்ஸாரக் கடலை கடக்க உதவுகிறது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி சம்பந்தம் உனக்கு உயர்வற உயர்வு ஒன்றைத் தருகிறது –
பரம பாவனையான உனக்கு ரத்னக் கற்களால் அலங்கரணம் பொருத்தமே –
நீ ஜனங்களுக்கு சம்சாரத்தைக் கடக்கும் படிப் பாலமாக இருந்து உதவுகிறாய் அல்லவா –

————————————————————-

திவிஷந் மகுடேஷு ஸஞ்சரந்த்யா:
ப்ரசுரஸ் தே மணி பாதுகே ப்ரகாச:
திவி ரங்கபதே: மஹோத்ஸவார்த்தம்
விததா வந்தந மாலி கேவ பாதி—-511-

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் திருவீதி வலம் வரும்போது, அவனை அனைத்து தேவர்களும்
வானத்தில் நின்றபடி வணங்குகின்றனர். அப்போது உன்னுடைய ஒளியானது அவர்களின் க்ரீடங்களில் இருந்து வெளிப்படுகின்றது.
இதனை காணும்போது, வானத்தில் அரங்கனுக்குக் கட்டப்பட்ட தோரணம் போன்று உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே -நீ வந்து வணங்குகின்ற தேவர்களின் க்ரீடங்களின் மீது வைக்கப்பட்டு அப்படியொரு சஞ்சாரம் நடக்கையில்
உன்னுடைய ரத்னங்கள் வெளிப்படுத்தும் ஒளி மிக்க பல நிறக் கதிர்கள் ஸ்ரீ ரங்க நாதனுடைய உத்சவத்திற்காக
ஆகாசத்தில் கட்டப்பட்டு நிற்கும் வர்ணத் தோரணங்கள் போலக் காட்சி அளிக்கின்றன —

——————————————————————–

ப்ரபவந்தி தவீயஸாம் ஸ்வபாவாத்
தவ ரத்நாநி முகுந்த பாத ரக்ஷே
அயஸாமிவ ஹந்த லோஹ காந்தா:
கடிநாநாம் மநஸாம் விகர்ஷணாய—512–

ஸ்ரீரங்க நாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ஒரு சிலர் ஸ்ரீரங்கநாதன் வீதியில் வலம் வரும்போது,
வீட்டை விட்டு வராமல் இருப்பார்கள். அவர்களது இரும்பு போன்ற மனங்களை, தூரத்தில் இருந்தே இழுக்க வல்ல
காந்தம் போன்று உன்னுடைய இரத்தினக் கற்கள் சாமர்த்தியம் கொண்டவையாக உள்ளவனவே!

ஸ்ரீ பாதுகையே உன் ரத்னங்கள் தூரத்தில் இருப்பவர்கள் உடைய கடின நெஞ்சுக்களையும் ஆகர்ஷித்து விடும் –
காந்தம் இரும்பை இழுத்துக் கொள்வது போல தன் இயல்பாகவே இது –

————————————————————

பரிபஸ்யதி தேவி ரங்கநாதே
ரஹஸி த்வம் ஸவிதே நிவிஸ்ய லக்ஷ்ம்யா:
பரிபுஷ்யஸி ரத்நதாமபி: ஸ்வை:
அநஸூயேவ மநோஜ்ஞம் அங்கராகம்—513–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதன் இரவில் ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஏகாந்தமாக எழுந்தருளி உள்ளான்.
அப்போது உன்னுடைய அழகான இரத்தினக்கற்களின் ஒளி கொண்டு, ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியில்
அழகான பூச்சைப் பூசுகிறாய்.
இதனைக் காணும்போது, இராமன் பார்த்திருக்க சீதைக்கு அநஸூயை சந்தனம் பூசியது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகா தேவியே –ஏகாந்தமாக இருக்கையில் உன் ரத்னங்களின் கிரணங்கள் பெரிய பிராட்டிக்கு ஒரு சந்தனப் பூச்சு
வழங்கு கின்றனவோ -இது பெருமாள் ஸ்ரீ ரங்க நாதன் பார்த்துக் கொண்டு இருக்கையில் நடப்பது –
அத்ரியின் பத்னி அனஸூயை சீதைக்கு அணிகலன் பூட்டி பூச்சு சாத்தினதைப் போலே இதுவும் –

———————————————————————

தவ ரத்ந கர அர்ப்பிதம் நவீநம்
பரிக்ருஹ்ய ஸ்திரம் அம் ஸூகம் மநோஜ்ஞம்
ஜரதம் ஸூகவத் ஸுகேந தோஹம்
க்ருதிந: கேசவ பாதுகே த்யஜந்தி—-514-

ஸ்ரீரங்க நாதனின் பாதுகையே! புண்ணிய ஆத்மாக்கள் உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி என்னும்
கைகளால் நீ கொடுத்துள்ள புதியதும் நிலையாக உள்ளதும் ஆகிய அழகான திவ்ய சரீரத்தை (உயிர் பிரியும்போது)
எடுத்துக் கொள்கின்றனர். இவர்கள், தங்களது மனித உடலைக் கிழிந்த துணி போன்று கவலைப்படாமல் விடுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே நீ உன் கரங்களால் -உன் ரத்னங்களின் ஒளிக் கதிர்களால் -கைங்கர்யம் செய்யும் புண்யாத்மாக்களின் மீது
ஒரு புது வஸ்திரத்தைப் போர்த்தவும் அதன் காரணமாக அவர்கள் தம் சரீரத்தை ஒரு கிழிந்த வஸ்த்ரத்தைக் கழற்றுவது போல்
அநாயாசாமாக விடக் கூடியவர்கள் ஆகிறார்கள் –

———————————————————————-

அபிதோ மணி பாதுகே நிபத்தை:
க்ருத ஸம்ஸ்கார விசேஷம் ஆத்மரத்நை:
குருதே பவதீ பதம் முராரே:
கடிநே அஸ்மிந் ஹ்ருதி மே நிவேச யோக்யம்–515–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய நான்கு பக்கங்களிலும் கடினமான இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மீது ஸ்ரீரங்கநாதனின் திருவடியை வைத்துப் பழக்கப்படுத்துகிறாய். ஏன் என்றால் –
அப்போதுதான் அவன் எனது கடினமான மனதில் தனது திருவடியை வைக்க இயலும்.
இப்படியாகவே நீ அவன் திருவடிகளை பழக்கப்படுத்துகிறாய்

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாள் உடைய திருவடி உன் மீது பலவித ரத்னங்கள் இழைக்கப் பட்டு இருக்கும் இடத்தில்
வைத்துச் சொர சொரப்பான தன்மையைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்று அதனால் கடினமான
என் இதயத்திலும் அடி வைக்கப் பழக்கப் பட்டதாக ஆகும் -இது நீ செய்யும் உதவி –

———————————————————————————

நிஜ ரத்ந கர அஞ்சலைர் மதீயாந்
அபராதாந் அவதூய தத்த ஸாம்யா
ரமயா ஸஹிதஸ்ய ரங்க பர்த்து:
பதயோ: அர்ப்ய பாதுகே ஸ்வயம் மாம்—-516-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி என்னும் கைகள் கொண்டு எனது குற்றங்களை நீக்கி,
என்னை உன் போன்று ஆக்கவேண்டும். அதன் பின்னர் ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடியுள்ளவனான
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் என்னை நீயே சமர்ப்பிக்கவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே உன் ரத்னங்களின் கிரணங்கள் உன் கைகள் போலாம் -அவற்றின் நுனியால் என் அபராதங்களைத் துடைத்து
அவனுக்கும் உனக்கும் சமமானவனாக என்னை யாக்கி அருளி
திவ்ய தம்பதியின் சந்நிதியில் -மிதுனத்தில் -என்னை நீயே தானாகவே சமர்ப்பித்து விடுவாயாக –

————————————————————————-

ரஸ்மி ஜால பரிவேஷ பந்துரா
ரங்க பூமதி ரத்ந பாதுகே
விஸ்வ லோசந விஹங்க ஹாரிணீ
வாகுரேவ விததா விராஜஸே—517–

ஸ்ரீரங்கராஜனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களில் இருந்து வரும் ஒளி
என்னும் கயிறுகளால் நீ இருக்கமாகக் கட்டப்பட்டு உள்ளாய். இப்படியாக இன்பமாக உள்ள நீ,
இந்த உலகத்தினரின் கண்கள் என்னும் பறவைகளைப் பிடிக்க உதவும் பொறி போன்று உள்ளாய்.

பறவைகளைப் பிடிக்க ஒரு கூண்டைத் தயாரித்து, அதனை நன்றாகக் கட்டி வைத்திருப்பார்கள்.
இங்கு பாதுகையை அந்தக் கூண்டு என்றார். நமது கண்களைப் பறவைகள் எனவும்,
இரத்தினங்களில் இருந்து வெளிவரும் ஒளிகள் கயிறுகள் என்றும் கூறுகிறார்.

ஸ்ரீ மணி பாதுகையே உன் ரத்னங்கள் வெளியிடும் ஒளி வட்டங்கள் உன்னைச் சுற்றி அழகான கயிறு வலைகள் போல் காட்சி அளிக்கும் .-
நீ மக்களின் கண்கள் ஆகிற பஷிகளை பிடிக்க வென்று வைக்கப்பட்ட பொறி போலவும்
அக்கயிறு வலைகளை உன்னை இடத்தில் பொருத்தி வைக்கக் கட்டப் பட்டவை போலும் தோன்றும் –

————————————————————————

மானஸ அம்புஜ விகாஸ ஹேதுபி:
ஸேவிதா மணி கணை: ப்ரபாகரை:
பாதுகே வஹஸி ஸத்பிர் ஆஸ்ரிதாம்
தேவி விஷ்ணு பத ஸம்பதம் நவாம்—-518-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனை அடைந்தவர்களின் மனம் என்னும் தாமரை மலர்வதற்குக் காரணமாக
உன்னுடைய இரத்தினக் கற்கள் ஸூரியன்கள் போன்று உள்ளன. இத்தகைய ஸூரியனை வணங்கியபடி உள்ள
அந்த அடியார்கள் அனைவரும், நக்ஷத்ரங்கள் போன்று ஒளியுடன் உள்ளனர்.
இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் ஆகாயம் போன்ற திருவடிகளின் அழகை நீ அடைகிறாய்.

ஸ்ரீ மணி பாதுகா தேவியே -உன் ரத்னங்களின் பெருத்த ஒளி வெளியீடு உன்னில் அவ்வளவு ஸூ ர்யர்கள் இருப்பது போல் காட்டும் .
இந்த ஸூர்யர்கள் பக்தர் மனச் ஆகிற தாமரைகளை மலரச் செய்பவை -பெரியோர்கள் உன்னை ஆஸ்ரயிக்கின்றனர்-
ஆகவே நீயும் ஆகாசத்தின் சோபா சம்பத்தைப் பெற்று விளங்குகிறாய் –
ஆனால் இந்த ஆகாசம் ஒரு புதிய வகை போலும் -பல ஸூ ர்யர்கள் பல நஷத்ரங்கள் ஒரே சமயம் சேர்ந்து இருக்கக் காணலாம் –
விஷ்ணுபதம் -பெருமாள் /திருவடி –ஆகாசம் /சத் -பெரியோர் நஷத்ரம் –

——————————————————————————–

அதிசயித பணீஸ் வரஸ்ய சௌரே:
ஸ்வயம் அதிரூடே பதோபதாந பார்ஸ்வா
மணி வலய ஜுஷா கரேண மந்தம்
ஸ்ப்ருசஸி பதாவநி பாதயோர் யுகம் தத்—-519–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷன் மீது சயனித்துள்ள பெரிய பெருமாளின் திருவடிகளை நீ அடைந்து,
அந்தத் திருவடிகளின் அருகிலே அமர்கிறாய். உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளி என்ற வளையல்களை
அணிந்த திருக்கரங்களால், அவனது திருவடிகள் இரண்டையும் மெதுவாக வருடுகிறாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஆதிசேஷப் படுக்கையில் கண் வளர்ந்து அருளுகிறார் –
நீ அவர் திருவடித் திண்டுக்கு அருகில் உள்ளாய்-பிராட்டி வளையல் அணிந்த கைகளால் பெருமாள் திருவடிகளைப்
பிடித்து விடும் போது நீயும் உன் ரத்னங்கள் சிதற விடும் கிரணங்களால் ஆன வளையங்கள் பெற்ற
உன் கைகளால் மெல்லத் தொடுகிறாய் போலும் –

—————————————————————————-

பவத் யந்தே த்வம் ப்ரண தஸ்ய ஜந்தோ:
ததோகோ: அக்ரஜ் வலநம் த்வத் ப்ரகாசை:
யதோ நாட்யா மத்யமயா விநிர்யந்
கதிம் விந்தேத் சேசவ பாத ரக்ஷே—-520-

அழகான கேசங்களைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உன்னை ஆராதித்தபடி உள்ள மனிதனின் இதயம் என்ற பகுதியானது, அந்திம நேரத்தில் உன்னுடைய
இரத்தினங்களின் ஒளி மூலமாக மிகவும் பிரகாசமாக உள்ளது.
இந்த வெளிச்சம் காரணமாக, அதன் நடுவில் உள்ள நாடி மூலம் வெளியே கிளம்பும் ஜீவன்,
அர்ச்சிராதி மார்க்கத்தை அடைகிறான்.

இதயத்தில் இருந்து பல நாடிகள் தலைக்குச் செல்கின்றன. அவற்றில் ஒன்று மட்டும் உச்சந்தலைக்குச் செல்கிறது.
இதற்கு ஸுஷும்நா நாடி என்று பெயர். இந்த நாடி வழியே வெளிக்கிளம்பும் ஜீவன் மட்டுமே அர்ச்சிராதி மார்க்கமாக,
ஸ்ரீவைகுண்டம் அடைகிறான். பல நாடிகள் இதயத்தில் உள்ளதால், வெளிக்கிளம்பும் ஜீவனுக்கு
இந்த குறிப்பிட்ட நாடி எது என்று அறிவதற்கு, பாதுகையின் இரத்தினக்கற்கள் ஒளியிட்டுக் காண்பிக்கின்றன என்றார்.

ஸ்ரீ பாதுகையே உன்னை வணங்கினவன் ஒருவனுடைய அந்திம கால நிலையில் ஜீவன் ஹ்ருதயத்தில் இருந்து புறப்பட்டு
ஸூஷூம் நா நாடியில் புக ஒளி தந்து வழி காட்டுகிறது உன் ரத்னங்களின் ஒளி –
அப்படித்தான் ஜீவன் அர்ச்சிராதி மார்க்கத்தை அடைகிறான் –

——————————————————————-

அசிதில பரிணத்தா ரஸ்மி ஜாலை: மணீநாம்
துரதிகம் தமம் ந: பாரம் ஆரோபயந்தீ
கமல நயநம் ஆத்யம் கர்ணதாரம் ததாநா
பவஸி பவ பயோத: பாதுகே போத பாத்ரீ—-521–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளிக்கீற்றுகள் என்னும் கயிறு மூலம் நீ
கெ ட்டியாகக் கட்டப்பட்டிருக்கிறாய். ஸம்ஸாரம் என்ற கடலில் அக்கரையாகவும், அடைவதற்குக் கடினமாக உள்ளதும்
ஆகிய ஸ்ரீவைகுண்டத்திற்கு எங்களை நீ இட்டுச் செல்கிறாய். அனைத்திற்கும் முன்பாக உள்ள,
தாமரை போன்ற கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதனை கப்பலின் மாலுமியாகக் கொண்டுள்ளாய்.
இப்படியாக உள்ள நீ ஸம்ஸாரம் என்ற கடலைக் கடக்க உதவும் கப்பல் போன்று உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே எங்களை சம்சார சாகரத்தை தாண்ட வைக்கும் மரக்கலம் நீ —
மரக்கலத்தைக் கட்டி வைத்து இருக்க உதவும் கயிறுகள்
உன் ரத்னங்கள் வெளியிடும் கிரணங்களின் கற்றைகள் –
இந்த கடினமான கரை சேர்த்தல் ஆகிற படகு யாத்ரைக்கு உதவுபவன்
ஆதி நேதா -சிறந்த கப்பல் தலைவன் -செந்தாமரைக் கண்ணன் –

—————————————————————————-

மணிகண கிரணை: தே கல்ப்பிதே குல்மபேதே
ம்ருகயு: இவ குரங்கீம் த்வாம் புரஸ்க்ருத்ய பவ்யாம்
ஊரதி சரண ரக்ஷே பக்தி பாச அவருத்தம்
ஹ்ருதய ஹரிணயூதம் ப்ராணிநாம் ரங்கநாத:—-522–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்டுள்ள இரத்தினக்கற்களின் ஒளியானது
ஒரு புதர் போன்று உள்ளது. அந்தப் புதரில் அமர்ந்துள்ள வேடன் போன்று ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
அவன் செய்வது என்ன? பெண் மான் போன்ற அழகான உன்னை முன்னே நிறுத்துகிறான்.
இதன் மூலம், பக்தி என்னும் கயிறு கொண்டு கட்டப்பட்ட மக்களின், இதயங்கள் என்னும் மான்களை பிடித்துக்கொண்டு போகிறான்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் என்ன செய்கிறார் -அவர் ஒரு வேடன் -உன் ரத்னக் குழுவின் கதிர்க் கூட்டம் ஒரு புதர் –
அதில் நீ யாகிற அழகிய பெண் மான் -உன்னைக் கொண்டு பக்த ஹ்ருதயங்கள் ஆகிற அநேக மான்களை வசீகரித்து
பக்திக் கயிற்றால் அவற்றைக் கட்டிப் பிடித்து இழுத்துப் போகிறார் –

—————————————————————————

பரிசித பதமூலா பாதுகே ரங்கிணஸ் த்வம்
ப்ரபவதி புஜ மத்யே கௌஸ்துப: அயம் ததாபி
பவதி ப்ருசம் அதஸ்தாத் தேஜஸா பவ்ய பூமநா
சலபித துரிதாநாம் தாவகாநாம் மணீநாம்—-523-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே ! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் கீழே நீ எப்போதும் உள்ளாய்.
ஆனால் கௌஸ்துப மணியோ அவனது திருமார்பில் உயர்ந்த இடத்தில் உள்ளது.
ஆயினும், கௌஸ்துப மணி என்பது அழகான ஒளி பரப்புவதை மட்டுமே செய்கிறது.
உனது கற்களில் இருந்து வெளிப்படும் ஒளியானது, அனைவரின் பாவங்களையும் போக்குவதாக உள்ளது.
ஆகவே உயர்ந்த இடத்தில் உள்ளபோதிலும் கௌஸ்துப மணியானது, உன்னுடைய இரத்தினக்கற்களைக் காட்டிலும் தாழ்வான தாகவே உள்ளது.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் உடைய திருவடியின் கீழே எப்போதும் இருப்பவள் –
கௌஸ்துபமணியோ அவர் திரு மார்பில் உயரத்தில் -ஆயின் என்ன –
தனது ரத்னங்களின் தேஜஸ்ஸினால் ஆஸ்ரிதர் பாபங்களை விட்டில் பூச்சிகளை விளக்கு பொசுக்குவது போல்
ஷணத்தில் எரித்து ஒழிக்க வல்ல நீ உன் ரத்னங்கள் எங்கே
கௌஸ்துப மணி எங்கே -அது தாழ்ந்ததாகி விடுகிறது –

———————————————————————————

கல்பஸ்ரேணீ திந பரிணதௌ ஜந்து ஜாலே ப்ரஸுப்தே
விஷ்வக் வ்யாப்தே ஜகதி தமஸா பாதுகே தாத்ருசேந
ஸ்த்யாந ஆலோகைஸ் தவ மணி கணை: வாஸ கேஹ ப்ரதீபா
ஸம்பத்யந்தே ஸஹ கமலயா ஜாகரூகஸ்ய யூந:—-524–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பல கல்ப காலங்களின் வரிசையான ஒரு பகல் பொழுதின் முடிவில் ஜீவராசிகள்
அனைத்தும் துன்பம் அடைந்தபோது, இந்த உலகம் முழுவதும் இருளால் எங்கும் சூழப்பட்டு காணப்படும்.
அப்போது உணர்வற்றுக் கிடக்கும் ஜீவராசிகளின் அருகில், அவற்றின் தாய் தகப்பன் போன்று
ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஸ்ரீரங்கநாதன் விழித்தபடி இருப்பான். இப்படியாக அவர்கள் உள்ள இடத்தில் ஒளி வீசும் விளக்குகளாக,
உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக் கற்கள் ஒளிர்ந்தபடி இருக்கின்றன.

ஸ்ரீ பாதுகையே -பிரம்மாவின் பகல் முடிகிறது -பிரளய ராத்திரி -ஒரே இருள் மயம்-ஜீவ ராசிகள் ப்ரஜ்ஞை யற்று ஜடமாய்க் கிடக்கும்
மகா லஷ்மியும் பெருமாளும் மட்டுமே இருக்கும் சமயம் -அவர்கள் யுவர் -நித்ய யுவர் –
அவர்கள் இன்புற உன் ரத்னங்கள் நெருக்கமான ஒளிக்கதிர் வீசி விளக்குப் போலே உதவுகிறாய் –

——————————————————————————-

ஸ்ரீரங்க இந்தோ: சரண கமல த்வந்த்வ ஸேவா வலேபாத்
ஆரூடாயாம் த்வயி மக புஜாம் ஆநதாந் மௌளி பாகாந்
தேஷாம் சூடாமணிபி: அநகை: தாவகாநாம் மணீநாம்
கேசாகேசி ப்ரபவதி மித: த்ராஸ லேச உஜ்ஜிதாநாம்—-525-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளின் தொடர்பு காரணமாகக் கர்வம் கொள்ளும் நீ,
அவனது திருவடிகளை வணங்கும் தேவர்களின் தலைகளில் அச்சம் கொள்ளாமல் ஏறுகிறாய்.
அப்போது சற்றும் தோஷம் இல்லாத உன்னுடைய இரத்தினக்கற்களுக்கும், தேவர்களின் தோஷம் இல்லாத க்ரீடங்களில் உள்ள
இரத்தினக் கற்களுக்கும் தலைமுடியைப் பிடித்த சண்டை ஏற்படுகிறது.
(இரத்தினங்களில் புள்ளிகள் இருந்தால் அந்த தோஷத்திற்கு த்ராஸம் என்று பெயர்.
அந்த தோஷம் இங்கு பாதுகையில் உள்ள இரத்தினங்களுக்கு இல்லை என்கிறார்).

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடித் தாமரை தொண்டு செய்கிற கர்வம் போலும்
நீ தேவர் கிரீடங்கள் உன் முன் தாழ்ந்து நிற்கையில் அவை மீது ஏறுகிறாய்
உன் ரத்னங்கள் பயமற்றவை -ரத்னக் கற்களுக்கு இருக்கக் கூடிய தோஷம் இல்லாதவை –
அவை க்ரீடக் கற்களுடன் குடுமி பிடிச் சண்டை போடும் போலும் –

————————————————————

த்வத் ரத்ன உபல ரஸ்மி பஞ்ஜர தநுத்ராணம் ஸ்திரம் பிப்ரத:
மாதர் மாதவ பாதுகே ந து புநர் ஹஸ்தை: ஸ்ப்ருசந்தி ஆகுலை:
தூர உத்ஸிக்த தூராட்ய ஜிஹ்மக பில த்வா: பால கோபாநல
ஜ்வாலா மித்ர கடோர வேத்ரலதிகா தத்த அர்த்த சந்த்ரம் வபுஸ்–526-

ஸ்ரீரங்கநாச்சியாரைத் திருமார்பில் கொண்ட பெரியபெருமாளின் பாதுகையே! தாயே! உன்னுடைய இரத்தினக்கற்களின்
ஒளி என்னும் உறுதியான கலசத்தை ஒரு சிலர் தரித்து நிற்கக்கூடும். இப்படிப்பட்டவர்கள் –
கர்வம் போன்ற தாழ்வான குணங்கள் கொண்டுள்ள பணக்காரர்கள் என்னும் பாம்புகள் வசிக்கின்ற, மாளிகைகள் எனப்படும்
பொந்தின் அருகில் சென்று, அந்தப் பொந்தின் வாயில் காப்போனின் கோபம் என்னும் தீயைக் கக்குகின்ற பிரம்பினால்,
சந்த்ரகலை போன்ற கழுத்தில் கை வைத்துத் தள்ளப் படுகின்ற உடலைத் தொடமாட்டனர்.

ஸ்ரீ பாதுகையே -தாயே -உன் ரத்னங்களின் கிரணக் கூடு ஒரு ஸ்திரமான கவசம் ஆகும் -அதைத் தரிப்பவருக்கு அச்சம் இல்லை –
அவர்கள் பணம் கேட்கப் பரபரக்கும் கைகளோடு கொடிய பாம்பு எனத் தக்க தனிகன் இடம் போய் நின்று
கோபக் கனலுடன் காவலன் உடைய கொடும்பிரம்பினால் கழுத்தைப் பிடித்துத் தள்ளப் படுவதை
அதனால் தன் உடம்பில் படிந்த தட்ட வேண்டி இருப்பதை எய்துவது இல்லை –

————————————————————————–

ஸம்வர்த்த உதித ஸூர்ய கோடி ஸத்ருசீம் ரங்கேஸ பாதாவநி
ப்ரஸ்தௌஷி ப்ரதியத்ந ரத்ந நிகர ஜ்யோதிஸ் சடாம் உத்படாம்
தந் மந்யே ததநந்ய ஸூரி பரிஷந் மத்யே நிவேசாய ந:
தாத்ருக் வாஸரஸே அபி பேத்தும் அசிராத் அஸ்மாகம் அந்தம் தம:—-527–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ப்ரளய காலத்தில் உதிக்கின்ற கோடி ஸூரியன்களைக் காட்டிலும்,
உனக்கு அலங்கரமாக உள்ள இரத்தினக்கற்களின் ஒளியானது அதிகமாகவே உள்ளது.
இப்படியாக உனது ஒளியை எங்கும் பரவச் செய்கிறாய். இதற்குக் காரணம் என்னவென்றால் – மனிதர்களாகிய எங்களுக்கு,
இந்த உலக வாழ்க்கையில் மட்டுமே அதிகமான மகிழ்ச்சி உள்ளது. ஆனாலும் உன்னைத் தவிர வேறு
எதனையும் கருத்தில் கொள்ளாத ஆதிசேஷன், கருடன் போன்ற நித்யசூரிகளின் நடுவில் எங்களையும்
நிலை நிறுத்த நீ முடிவு செய்தாய் போலும். இதற்கு இருக்கவேண்டிய தகுதிகளை உண்டாக்கும் பொருட்டு,
எங்களுக்குள் இருக்கும் அறியாமை என்னும் இருளை நீக்குவதற்காகவே நீ இப்படி ஒளிர்கிறாய் என்று எண்ணுகிறேன்.

ஸ்ரீ ரெங்க நாத ஸ்ரீ பாதுகையே உன் அலங்கார ரத்னங்களின் பேரொளி பிரளய காலத்து இருளில் கோடி ஸூர்யர்கள் உதித்தால் போல் உள்ளது –
இந்த ஒளி வீச்சு எங்கள் உள் இருளைப் போக்கவோ -ஆம் -இந்த பிரகிருதி மண்டலத்திலேயே இருக்க ஆசை கொண்டு இருப்பவர் நாங்கள்
அப்படி இருந்தும் பெருமாளைத் தவிர வேறு எதையும் லஷ்யம் செய்யாத பரமை காந்திகள் -நித்ய ஸூரிகள் -ஆழ்வார்கள் -கோஷ்டியில்
எங்களை வைக்க வேண்டும் என்று உடனே எங்கள் உள் இருள் போக வேண்டும் என்று நீ இப்படி ஒளி வீசுகிறாய் என்று தோன்றுகிறது –

——————————————————————————-

ஸலீலம் விந்யஸ்ய த்வயி சரண ரக்ஷே நிஜ பதம்
யத்ருச்சா நிஷ் க்ராந்தே விஹரதி ஹரௌ ரங்க ரஸிகே
திசா ஸௌதாந் அஷ்டௌ ஜநயஸி ததா நிர்ப்பர மிளந்
மணிச் சாயா மாயா கந கடித கேது வ்யதிகராந்—-528-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! ஸ்ரீரங்கத்தில் எப்போதும் வசிப்பதை இன்பமாக எண்ணும் ஸ்ரீரங்கநாதன்,
உன் மீது தனது திருவடிகளை வைத்தபடி ஸஞ்சாரம் செய்வதை உல்லாசமாகவே செய்கிறான்.
சில நேரங்களில் திடீரென்று உன்னைச் சாற்றிக்கொண்டு நம்பெருமாள் வெளியில் வரும்போது, உன்னுடைய
இரத்தினக் கற்களின் ஒளியானது எட்டுத் திசைகளிலும் உள்ள மாட மாளிகைகளில் பரவி நிற்கிறது.
இப்படி நெருக்கமாக உள்ள அந்த ஒளி வெள்ளத்தைக் காணும்போது, நம்பெருமாள் எழுந்தருளும் நேரத்தில்
கட்டப்படும் கொடிகள் போன்று தோன்றுகிறது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் எப்போது உல்லாச சஞ்சாரத்திற்காக உன் மீது திருவடியை வைத்தாலும்
உடனே நீ உன் ஒளிக் கற்றைகளை நெருக்கமாக வெளியிட வானம் எட்டுத் திசைகள் எங்கணுமே
மாட மாளிகையாக கொடி கட்டி வரவேற்பு ஏற்பாடு செய்தால் போலாகிறது –

———————————————————

மஹார்க்கை: ஆஸ்லிஷ்டாம் மணி பிரவதூத த்யுமணிபி:
கதம் சித் க்ஷேத்ரஜ்ஞை: அதிகதபதாம் அம்ப! பவதீம்
முகுந்தேந த்ராதும் பத கமல மூலே விநிஹிதாம்
நிராபாதாம் மந்யே நிதிம் அநக வாசாம் நிரவதிம்—-529-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! மிகவும் விலை உயர்ந்ததாகவும், சூரியனையும் தாழச்செய்கின்ற ஒளியுடன் கூடிய
இரத்தினக் கற்களைக் கொண்டதாகவும், பெருமை அறிந்தவர்களால் மிகவும் கடினத்துடன் கண்டு பிடிக்கப்பட்டதாகவும்,
இதனைப் பாதுகாப்பதற்காகவே ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளில் வைக்கப்பட்டதாகவும் உள்ள நிதி போன்று நீ உள்ளாய்.
மற்றவர்களால் எளிதில் கவர இயலாத நிதியாக உள்ள உன்னை, வேதவாக்குகள் என்கிற நிதியாகவே எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகைத் தாயே சூர்யனையும் தோற்கடிக்கும் பிரகாசம் உயர்ந்த விலை மதிப்பு -இத்தகைய ரத்னங்கள் உன்னிடத்தில் உள்ளன –
இடம் தெரிந்தவரே பிரயாசப் பட்டுக் கண்டு உணரக் கூடும்
பெருமாள் தன் திருவடியின் கீழ் வைத்துக் காப்பது – யாரும் அபஹரிக்க முடியாதது –
அப்படிப்பட்ட உன்னை வேத நிதியாக எண்ணுகிறேன் –

—————————————————————-

தாபத்ரயம் நிருந்தே
பசதி கஷாயாந் விசோஷயதி பங்கம்
தேஜஸ் த்ரிதயம் இதம் தே
சங்கே ரங்கேந்த்ர பாதுகே தேஜ:–530–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய மூன்றும் சேர்ந்தது போன்று உனது ஒளி உள்ளது.
இந்த ஒளியானது – மக்களின் மூன்று விதமான துன்பங்களையும் நீக்குகிறது; மனதின் அறியாமையை எரித்து விடுகிறது;
பாவங்களை உலர வைக்கிறது. இப்படியாகவே உனது ஒளி உள்ளதாக நான் எண்ணுகிறேன்.

மூன்று விதமான துன்பங்கள் என்பது ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம் மற்றும் ஆதிபௌதிகம் என்பதகும்.
இதில் ஆத்யாத்மிகம் என்பது உடலில் உண்டாகும் நோய் போன்றவை;
ஆதிதைவிகம் என்பது மழை, காற்று போன்ற இயற்கை அழிவுகள்;
ஆதிபௌதிகம் என்பது மற்றவர்களால் ஏற்படும் துன்பங்கள் ஆகும்.
பாதுகையின் ஒளியானது இவற்றை நீக்குவதால் சந்திரன்;
அறியாமையை எரிப்பதால் அக்னி;
பாவங்களை உலர்த்துவதால் ஸூரியன் என்று கொள்ள வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே உனது ஒளி சந்தரன் அக்னி சூர்யன் என்ற மூன்று ஒளிப் பொருள்களையும் ஒத்து வெளிவருவதாம்
தாபத்ரயத்தைப் போக்கும் குளிர்ந்த சந்தரன்
கஷாயங்களைக் காச்சுவது -மன அழுக்குகளை எரிப்பது -அக்னி -சேற்றை உலர்த்வது ஸூர்யன்
ஆகவே இம் மூன்று தன்மைகளும் உன் ஒளியில் உள்ளன –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .