Archive for the ‘ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்’ Category

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ர ரஸங்கள் –

April 14, 2021

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————————————

1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் –ஸ்லோகங்கள் 1-20-
2-சமாக்யா பத்ததி —திரு நாம பத்ததி –ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சடகோபம் -ஸ்லோகங்கள் -21-30-
3-பிரபாவ பத்ததி -பெருமைப் பத்ததி -பாதுகையின் பெருமை -ஸ்லோகங்கள் -31-100-
4-சமர்ப்பண பத்ததி -பணயப் பத்ததி -பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் பணயமாக விட்டு அருளியது -ஸ்லோகங்கள் -101-120-
5-பிரதி பிரஸ்தான பத்ததி -பதில் பயணப் பத்ததி -பெருமாளை விட்டு ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பரத ஆழ்வான் உடன் சென்றது -ஸ்லோகங்கள் -121-140-
6-அதிகார பரிக்ரஹ பத்ததி -உரிமைக் கோட் பத்ததி-ராஜ்ய அதிகாரம் -ஸ்லோகங்கள் -141-180-
7-அபிஷேக பத்ததி -முடி சூட்டுப் படலம் -ஸ்லோகங்கள் -181-210-
8-நிர்யாதநா பத்ததி -மீட்சிப் பத்ததி -ஸ்லோகங்கள் -211-240-
9-வைதாளிக பத்ததி -வந்திவை தாளிக பத்ததி -அரசர்கள் புகழ்வது -ஸ்லோகங்கள் -241-250-
10-ஸ்ருங்கார பத்ததி -பெருமாள் உடன் ஸ்ரீ பாதுகை சேர்ந்து மகிழ்வது -ஸ்லோகங்கள் -251-260-
11-சஞ்சார பத்ததி -ஸ்லோகங்கள் -261-320-
12-புஷ்ப பத்ததி -ஸ்லோகங்கள் -321-350-பூக்களால் அர்ச்சனை –
13-பராக பத்ததி -ஸ்ரீ பாதுகா தூள் படலம் -ஸ்லோகங்கள் -351-380-
14-நாத பத்ததி -இனிய நாத பத்ததி -ஸ்லோகங்கள் -381-480-
15-ரத்ன சாமான்ய பத்ததி -மணிப் போது படலம் -ஸ்லோகங்கள் -481-520-birds eye view
16-பஹூ ரத்ன பத்ததி -ஸ்லோகங்கள் -531-580-
17-பத்மராக பத்ததி -செம்மணிப் படலம் -ஸ்லோகங்கள் -581-610-
18-முக்தா பத்ததி -முத்துப் படலம் -ஸ்லோகங்கள் -611-660-
19-மரகத பத்ததி -ஸ்லோகங்கள் -661-680-
20-இந்திர நீல பத்ததி -நீல மணி படலம் -ஸ்லோகங்கள் -681-710-
21-பிம்ப பிரதிபிம்ப பத்ததி -ஸ்லோகங்கள் -711-730-
22-காஞ்சனா பத்ததி -பொற் படலம் -ஸ்லோகங்கள் -731-750-
23-சேஷ பத்ததி -சேஷ பூதமாய் -ஆதி சேஷ அவதாரமாய் -ஸ்லோகங்கள் -751-760-
24-த்வந்த்வ பத்ததி -இரட்டைப் படலம் -ஸ்லோகங்கள் -761-780-
25-சந்நிவேச பத்ததி -ஸ்லோகங்கள் -781-800-
26-யந்த்ரிகா பத்ததி -குமிழ்கள் அமைப்பும் அனுபவம்- குடை போன்றவை -மேலும் பல -படலம் -ஸ்லோகங்கள் -801-810-
27-ரேகா பத்ததி -வேரிப்படலம் -ஸ்லோகங்கள் -811-820-
28-ஸூபாஷித பத்ததி -நன் மொழிப் படலம் -ஸ்லோகங்கள் -821-830-
29-பிரகீர்ண பத்ததி -கலம்பக படலம் -ஸ்லோகங்கள் -831-910-
30-சித்ர பத்ததி -ஸ்லோகங்கள் -911-950-
31-நிர்வேத பத்ததி -உருக்கப் படலம் -வைராக்கியம் வெறுப்பு ஆற்றாமை வெளிப்படுத்தும் உருக்கப் படலம் -ஸ்லோகங்கள் -951-970-நைச்ய அனுசந்தானம் –
32-பல பத்ததி– பேற்றுப் படலம் -ஸ்லோகங்கள் -971-1008-

——–

அஷ்டாக்ஷரம் +த்வயம் -32
சரம ஸ்லோகம் -32
காயத்ரி -24-+அஷ்டாக்ஷரம் சேர்த்து -32
ப்ரஹ்ம வித்யை -32-

———-

சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீச சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-

தலைக்கு மேல் பாதுகை வைத்த அடியார்களின் திருவடி ரேணவ-மண் துகள்கள் -இதுவே இதன் கவி நயம்
புவந த்ராண-புவனங்களை காக்க வல்லது –
அடியார்க்கு அடியார் –அடியோங்களே -சரம -நிஷ்டை –

ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகைகளை ஸ்ரத்தை யுடன் சிரஸ்ஸில் தரித்துக் கொள்ளும் பெரியோர்கள் உடைய
திருவடித் தூள்கள் உலகம் அனைத்தையும் உஜ்ஜீவிக்கச் செய்கின்றன –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழும் பரமை காந்திகள் உலகையே உஜ்ஜீவிக்கச் செய்யும் சக்தி பெற்றவர்கள் ஆகிறார்கள் –

————-

நீசே அபி ஹந்த மம மூர்த்தநி நிர்விசேஷம்
துங்கே அபி யத் நிவிசதே நிகம உத்தமாங்கே
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி: ப்ரதம உபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதி பாதுகயோர் யுகம் தத்—5—

நீசே அபி ஹந்த -தாழ்ந்தவனாக இருந்தாலும்
மம மூர்த்தநி நிர்விசேஷம்-ஏற்றத் தாழ்வு பாராமல் அடியேனுடைய சென்னியிலும் அமர்ந்து –
சடாரி தலையில் வைத்தாலும் அலம்ப வேண்டா பாவனத்வம் உண்டே
துங்கே அபி யன் நிவிசதே நிகம உத்தமாங்கே -வேதாங்கம் -உபநிஷத் -மலைக்கும் மடுவுக்கும் போல் அன்றோ –
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி ப்ரதம உபகீதம் -வால்மீகி தொடக்கமான ரிஷிகளால் ஸ்துதிக்கப் பட்ட
ஸ்தோஷ்யாமி ரங்க பதி பாதுக யோர் யுகம் தத் -அந்த பாதுகை இணை -ஸ்துதிக்கப் புகுந்தேனே –

———–

அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே:
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம்
கத பீதி: அபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந விநோதயாமி நாதம்–16—

அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே -தொடக்கம் இல்லாத வேதத்தினுடைய -ரிஷிகள் மந்த்ர த்ருஷ்டா தானே மந்த்ர கர்த்தாக்கள் இல்லையே –
சப்த ராசே -வார்த்தைக்கு கூட்டங்களாலும் கூட
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம் -சொல்லி முடிக்க முடியாத -ஸ்ரீ ரெங்க நாத பாதுகா தேவியே -உன்னை –
கதபீதி ரபிஷ்டுவன் விமோஹாத் –பயமே இல்லாமல் -அறியாமையால் -ஸ்துதிக்கிறேன்
பரிஹாசேன விநோதயாமி நாதம்-ஸ்ரீ ரெங்க நாதனுக்கு ஏளன விஷயமாகும் -சேஷிக்கு மகிழ்வு கொடுக்கவே ஸ்துதி –

————

ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம்
சேஷத்வ காஷ்டாம பஜன் முராரே
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ
லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி –26-

ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம் சேஷத்வ காஷ்டாம் அபஜன் முராரே –எந்த ஆழ்வார் -முரனை வதைத்த
அவனது சேஷத்வ எல்லை நிலத்தில் அடைந்தாரோ
அடியார் அடியார் தம் அடியார் –பயிலும் சுடர் ஒளி –
ப்ருத்ய ப்ருத்ய -முகுந்த மாலையிலும் உண்டே -இப்படி எட்டாவது படியில் இருக்கும் ஆழ்வாரை
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி-அந்த நம்மாழ்வார் பெயரைத் தாங்கி –
தொண்டர் தலைவன் பெயரைத் தங்குவது போல் –
உன்னாலே -இவரை வென்று -சடகோப தாசன் -என்று ஒன்பதாவது படிக்குச் சென்றாயே –

———–

நிச் சேஷம் அம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத்
ஸப்த அர்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ
வக்தா ஸஹஸ்ர வதந: புருஷ ஸ்வயம் சேத்
லிக்யதே ரங்க பதி பாதுகயோ: ப்ரபாவ:—-32-

பாதுகையின் பெருமைகளை எழுத இயலும் – எப்படி? ஆகாயம் முழுவதுமாகச் சேர்ந்து பெரியதொரு காகிதமாக இருந்தல் வேண்டும்.
ஏழு கடலும் இணைந்து, எழுதும் மையாக மாற வேண்டும். எழுதுபவனாக ஆயிரம் தலைகளுடன் கூடிய பரமபுருஷனாகிய
ஸ்ரீரங்கநாதனே இருக்க வேண்டும். இப்படி என்றால் – பாதுகையின் பெருமைகளை ஏதோ ஒரு சிறிய அளவு எழுதி முடிக்க இயலும்.

————-

யோஷித்பூத த்ருஷந்தி அபோட சகட ஸ்தேமாநி வைமாநிக
ஸ்ரோதஸ்விநீ உபலம்பநாநி பஸித் உதஞ்சத் பரீக்ஷிந்தி ச
தூத்யாதிஷ் வபி துர்வசாநி பதயோ: க்ருத்யாநி மத்வேவ யத்
தத் தே தத் ப்ரணயம் தத் ஏவ சரண த்ராணம் வ்ருணே ரங்கிண:–39-

நம்பெருமாளின் திருவடிகள் எப்படிப்பட்டவை – கல்லாகக் கிடந்த அகலிகையைப் பெண்ணாக மாற்றியவை;
பலம் வாய்ந்த சகடாசுரனை உதைத்து அழித்தவை; த்ரிவிக்ரம அவதாரத்தில் வானம் வரை அளந்து, கங்கையை உண்டாக்கியவை;
சாம்பலில் இருந்து பரீக்ஷத் அரசனை உண்டாக்கியவை; பாண்டவர்களுக்காகத் தூது சென்றவை ஆகும்.
இப்படிப்பட்ட பல குணங்களை வெளிப்படுத்திய திருவடிகளுடன் எப்போதும் பாதுகைகள் சினேகத்துடன் பிரியாமல் உள்ளன.
இப்படியாக நம்பொருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எனக்கு மேன்மை ஏற்பட அருள்வாயாக.

—————-

பத சரசி ஜயோஸ்த்வம் பாதுகே ரங்க பர்த்து
மனசி முநி ஜநாநாம் மௌலி தேசே ஸ்ருதீ நாம்
வசசி ஸ ஸூ கவீ நாம் வர்த்தசே நித்ய மேகா
ததிதம வகதம் தே சாஸ்வதம் வைஸ்வ ரூப்யம்–49-

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானை போலவே நீயும் ஒரே காலத்தில் பல இடங்களிலும் இருக்கிறாய்
பெருமாள் திருவடியிலும்
ரிஷிகள் உடைய மனதிலும்
வேதாந்தங்களிலும்
கவிகளுடைய வாக்கிலும் வசிக்கிறாய்
இதுவே நீ எங்கும் பரந்தமையைக் காட்டுகிறது –

———–

கனக சரித நூபே கல்ப வ்ருஷஸ்ய பூஷ்ணோ
பதகி சலைய லக்னா பாதுகே மஞ்ஜரீ த்வம்
பரிணதி மதுராணாம் யா பலா நாம் சாவித்ரீ
வஹசி நிகம ப்ருந்தை சம்பதம் ஷட்பதா நாம் –57-

ஸ்ரீ பாதுகையே காவிரிக் கரையில் கல்ப தருவாக ஸ்ரீ ரங்க நாதன் எழுந்து அருளி இருக்கிறார் –
பெருமாளுடைய மிருதுவான திருவடித் தளிர்களில் பூத்த புஷ்பமாகவும் நீ விளங்குகிறாய் –
இந்த புஷ்பத்தில் சதுர்வித புருஷார்த்தங்களும் பழமாக பழுக்கின்றன –
வேதங்கள் பூவில் சாரம் அறிந்த வண்டுகளாக உன் மகிமையை ஓதுகின்றன –

———

பரதாஸ்வஸநேஷு பாத சப்தம் வஸுதா ஸ்ரோத்ர ஸமுத்பவ: முநீந்த்ர:
படதி த்வயி பாதுகே ததஸ் த்வம் நியதம் ராம பதாத் அபிந்ந பூமா—-70-

பாதுகையே! புற்றில் இருந்து தோன்றிய வால்மீகி மஹரிஷி, இராமாயணத்தில் பரதன் மக்களைச் சமாதானப்படுத்தக்
கூறிய சொற்களில், உன்னைப் பற்றிக் கூறும்போது திருவடி என்ற பதத்தையே பயன்படுத்துகிறார்.
இதன் மூலம் உனக்கும் இராமனின் திருவடிகளுக்கும் உள்ள பெருமைகளில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்று புரிகிறது.

————-

அஸ்த்ர பூஷணதயா ஏவ கேவலம் விஸ்வம் ஏதத் அகிலம் பிபர்த்தி ய:
அகிலம் ஏந மணி பாதுகே த்வயா ஸ: அபி சேகரதயா ஏவ தார்யதே–78–

உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பெற்ற பாதுகையே! பெரியபெருமாள் செய்வது என்ன?
இந்த உலகங்கள் முழுமையையும் தனது ஆயுதம் போன்றும், ஆபரணம் போன்றும் எந்தவிதமான சிரமமும் இன்றி தரிக்கின்றான்.
அப்படிப்பட்ட பெரியபெருமாளை நீயும் அதே போன்று, உனது தலையில் எந்தவிதமான சிரமமும் இன்றி,
மலர் போன்று வைத்துக் கொள்கிறாய்.

————-

பரஸ்ய பும்ஸ: பத ஸந்நிகர்ஷே
துல்ய அதிகாராம் மணி பாதுகே த்வாம்
உத்தம்ஸயந்தி ஸ்வயம் உத்தமாங்கை:
சேஷாஸமம் சேஷ கருத்ம தாத்யா:—-83-

உயர்ந்த இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! பரம்பொருளான பகவானின் திருவடிகளின் கீழே
நீயும் ஆதிசேஷன், கருடன் முதலானோர்களும் ஒரே போன்றுதான் கைங்கர்யம் செய்து வருகின்றீர்கள்.
ஆயினும் ஆதிசேஷன், கருடன் போன்றவர்கள் உன்னைப் பரிவட்டம் போன்று தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றனர்.
இது உனக்குப் பெருமை அல்லவா?

———–

மூர்த்நா ததாநாம் மணி பாதுகே த்வாம்
உத்தம் ஸிதம் வா புருஷம் பவத்யா
வதந்தி கேசித் வயமாமநாம:
த்வாம் ஏவ ஸாஷாத் அதி தைவதம் ந:—-99-

ஸ்ரீ பாதுகையே சிலர் பெருமாளையாவது உன்னையாவது த்யானிப்பது அவசியம் என்று கூறுகிறார்கள்
நாங்களோ உன்னை மட்டுமே த்யானிப்பது போதும் என திடமாக நம்புகிறோம்
ஆசார்ய பலம் இருந்தால் தானே பகவத் கிருபையும் கிட்டுமே –

————

ப்ராப்தே ப்ரயாண ஸமயே மணி பாத ரக்ஷே
பௌரான் அவேக்ஷ்ய பவதீ கருண ப்ரலாபாந்
மஞ்ஜு ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ—-103-

மஞ்ஜூ ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம் -சமாதானம் சொல்கிறாள் -ஆசுவாசம் படுத்துகிறாள்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ-காலைப் பிடித்து பிரார்த்தனை பண்ணுவேன் என்கிறாள் ஸ்ரீ பாதுகா தேவி

—————

பாதாவநி ப்ரபுதராந் அபராத வர்க்காந்
ஸோடும் க்ஷமா த்வம் அஸி மூர்த்திமதீ க்ஷமைவ
யத் த்வாம் விஹாய நிஹதா: பரிபந்தி நஸ்தே
தேவேந தாசரதி நா தச கண்ட முக்யா—110-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பவளே!
அனைத்துக் குற்றங்களையும் பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு சரீரம் பெற்றவளாக, பொறுமையே வடிவமாக நீ உள்ளாய்.
ஆகையால் தான் இராமன் உன்னைப் பரதனிடம் அளித்து விட்டு, இராவணன் போன்றவர்களை அழித்தான் போலும்.

————-

நியதம் அதிருரோஹ த்வாம் அநாதேய சக்திம்
நிஜசரண ஸரோஜ சக்திம் ஆதாது காம:
ஸ கதம் இதரதா த்வாம் ந்யஸ்ய ராம: விஜஹ்ரே
த்ருஷத் உபசித பூமௌ தண்டகாரண்ய பாகே—116–

ஸ்ரீ பாதுகையே பொறுமையின் பிறப்பிடமான உன் மீது ஏறி பெருமாளும் தானும் எதையும் தாங்க வல்ல
உனது குணத்தை சம்பாதித்துக் கொண்டார் -இல்லாவிடில் மிருதுவான பாதங்களைக் கொண்டு
கற்கள் முட்கள் நிறைந்த ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எவ்வாறு சஞ்சரிப்பார்

————–

பரதஸ் ஏவ மாம் அபி பிரசமித விஸ்வாபவா துர் ஜாதா
சேஷேவ சிரஸி நித்யம் விஹரது ரகுவீர பாதுகே பவதீ –120-

வீரனாகிய இராமனின் பாதுகையே! ”இராமனைக் கானகம் அனுப்பிய கைகேயின் மகன்” என்ற அபவாதங்கள்
பரதன் மீது விழாமல் அவன் காப்பாற்றப்பட்டான் – எப்படி? உன்னைத் தனது தலையில் ஏற்ற காரணத்தினால் ஆகும்.
இது போன்று எனது தலையிலும் நீ எப்போதும் தங்கி நின்று, எனது அபவாதங்களையும் போக்க வேண்டும்.

———–

ப்ரசஸ்தே ராம பாதாப்யாம் பாதுகே பர்யுபாஸ்மஹே
ஆந்ரு சம்ஸ்யம் யயோர் ஆஸீத் ஆஸ்ரிதேஷு அநவக்ரஹம்—-121-

இராமனின் திருவடிகளை விட மிகவும் உயர்ந்த அவனுடைய பாதுகையை நாங்கள் த்யானம் செய்கிறோம் –
காரணம், அயோத்தி நாட்டின் மீது இராமனுக்கு இல்லாத தயை பாதுகைக்கு இருந்த காரணத்தால் அல்லவா பாதுகை மீண்டும் வந்தாள்?

————

ஆஸா: ப்ரஸாதயிதும் அம்ப ததா பவத்யாம்
தைவாத் அகாண்ட சரதீவ ஸமுத்திதாயாம்
ஸ்தோகாவசேஷ ஸலிலாஸ் ஸஹஸா பபூவு:
ஸாகேத யௌவத விலோசந வாரிவாஹா:—-130-

தாயே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ அயோத்திக்கு மீண்டும் வந்தாய்.
மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வல்ல சரத் காலம் போன்று நீ வந்தாய்.
உன்னைக் கண்டவுடன் அயோத்தி நகரத்தில் இருந்த பெண்களின் கண்கள் என்ற மேகங்கள், தங்கள் மழை நீரை நிறுத்தின.

——————–

ஸமுபஸ்திதே ப்ரதோஷே
ஸஹஸா விநிவ்ருத்ய சித்ரகூட வநாத்
அபஜத புநஸ் ஜந பதம்
வத்ஸம் தேநு: இவ பாதுகே பவதீ—-140-

பாதுகையே! மேய்வதற்காகச் செல்லும் பசுவானது அஸ்தமன நேரத்தில் கன்றுக் குட்டியிடம் வந்து விடுகிறது.
அது போன்று நாட்டிற்கும் பரதனுக்கும் கவலை ஏற்பட்ட போது,
நீ சித்திர கூடத்தில் இருந்து மிகவும் விரைவாக கோசலத்திற்குத் திரும்பினாய் போலும்.

————

வர்ஷாணி தாநி வ்ருஷளோ ந தபாம்ஸி தேபே
பாலோ ந கச்சித் அபி ம்ருத்யுவசம் ஜகாம
ராஜ்யே தவ அம்ப ரகு புங்கவ பாத ரக்ஷே
ந ஏவ அபரம் ப்ரதி விதேயம் அபூத் ப்ரஸக்தம்—-153-

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாப்பவளே! நீ அயோத்தியை ஆண்ட போது –
மற்ற வர்ணத்தினர்கள் யாரும் தவம் இயற்றவில்லை (அந்தணன் தவிர); எந்தக் குழந்தையும் இறந்து போகவில்லை;
ப்ராயச்சித்தம் தேடும் அளவிற்கு எந்தவிதமான குற்றமும் நிகழவில்லை.

————–

அநந்ய பக்திர் மணி பாதுகே த்வாம்
அபி அர்ச்சயந் தாசரதிர் த்வீதீய:
விகல்ப்யமாந: ப்ரதமேந கீர்த்யா
வந்த்ய: ஸ்வயம் வ்யோமஸதாம் பபூவ—166-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! எந்த ஒரு பயனும் எதிர்பார்க்காமல், உன்னிடம் மட்டுமே பக்தி கொண்டு,
பரதன் உன்னை மட்டுமே வணங்கி நின்றான். இதனால் தசரதனின் இரண்டாவது புத்திரனான அவனை,
முதல் பிள்ளையான இராமானுக்குச் சமமாகவே அனைவரும் கருதினர்.
இப்படியாகப் பரதன் தேவர்களுக்குச் சமமானவனாகவே வணங்கப்பட்டான்.

————–

மஹீஷிதாம் ராகவ பாத ரக்ஷே
பத்ராஸ நஸ்த்தாம் பவதீம் ஸ்ப்ருசந்த:
பூர்வம் ததாத்வே நியதே அபி பூய:
கல்யாணதாம் ஆநசிரே கிரீடா:—-171-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது,
உன்னை அரசர்களின் தலையில் உள்ள கிரீடங்கள் (அவர்கள் உன்னை வணங்கும்போது) தொட்டன.
அவை முன்பே தங்கமாக உள்ளபோதிலும், உன்னைத் தொட்ட பின்னர் மட்டுமே உயர்ந்த பலனைப் பெற்றன.

————-

ப்ராப்த உதயா ததாநீம்
கிம் அபி தம: தத் நிராகரோத் பவ்தீ
தநுரிவ மனுகுல ஜநுஷாம்
ப்ரஸவித்ரீ ரத்ந பாதுகே ஸவிது:—180-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் கானகம் புகுந்த போது நீ அரச பதவி ஏற்கும்
உதயம் என்பதை அடைந்தாய். ஆக மநுகுலத்தின் அரசர்களுக்கு ஆதாரமாக உள்ள ஸூரியன் போன்று நீ ஆனாய்.
இதன் மூலம் எங்கும் உள்ள இருளை நீக்கினாய்.

————–

ப்ராது: நியோகே அபி அநிவர்த்தமாநம்
ராஜ்ய அபிஷேகம் ச பரித்ய ஜந்தம்
ராமாநுஜௌ தௌ நநு பார தந்த்ர்யாத்
உபௌ உபாப்யாம் பவதீ ஜிகாய—-184-

பாதுகையே! இராமனின் ஆணைகளை அவனது தம்பிகளான இலட்சுமணனும், பரதனும் மீறாதவர்களே ஆவார்கள்.
ஆயினும் இராமனின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் இருவரும் பட்டாபிஷேகம் ஏற்கவில்லை.
ஆனால், நீ ஏற்றுக் கொண்டாய். இதன் மூலம் அவர்கள் இருவரையும் நீ வென்றாய்.

————-

மநு வம்ஸ புரோஹிதேந மந்த்ரை: அபிமந்தரய த்வயி பாதுகே ப்ரயுக்தம்
அபிஷேக ஜலம் க்ஷணேந ராஜ்ஞாம் சமயாமாஸ ஸமுத்திதாந் ப்ரதாபாந்—-200-

பாதுகையே! மனுவம்சத்தின் குலகுருவான வசிஷ்டர் உன் மீது மந்திரங்கள் கொண்டு ஜபிக்கப்பட்ட புண்ணிய நீரை,
பட்டாபிஷேகத்தின்போது சேர்த்தார். இந்த நீர் செய்தது என்ன?
விரோதிகளான அனைவருடைய வீரம் என்ற தீயை அணைத்துவிட்டது.

————–

அபிஷேசயது ஸ ராம: பதேந வா ஸ்ப்ருசது பாதுகே பவதீம்
அவிசேஷித மஹிமா த்வம் கிம் வா விசேஷ: க்ஷமா ஸமேதாநாம்—210-

பாதுகையே! இராமன் உனக்கு உயர்ந்த அரச பதவி என்ற பட்டாபிஷேகம் அளித்தாலும், தனது திருவடிகளில் உன்னை வைத்தாலும் –
உனது பொறுமை காரணமாக, நீ குறைவற்ற பெருமை மாறாமலேயே உள்ளாய்.
பூமியின் பொறுமையை ஒத்தபடி உள்ளவர்களுக்கு இது போன்று ஏற்றத் தாழ்வுகளில் பேதம் என்ன உள்ளது?

———–

உபாஸ்ய வர்ஷாணி சதுர் தச த்வாம்
உத்தாரிகாம் உத்தர கோஸலஸ்தா:
ஸநந்த நாத்யைரபி துர் விகாஹம்
ஸந்தாநிகம் லோகம் அவாபுர அக்ர்யம்—-212–

பாதுகையே! வடக்கு கோஸலை நாட்டில் உள்ள மக்கள் உன்னை பதினான்கு வருடங்கள் வணங்கி வந்தனர்.
இதனால் அவர்களுக்குக் கிட்டியது என்ன?
ஸநந்தனர் போன்ற உயர்ந்தவர்களாலும் அடைய இயலாத ஸாந்தாநிக லோகத்தை அவர்கள் எளிதாக அடைந்தனர்.

—————-

பாதாவநி த்வத் அபிஷேசந மங்களார்த்தம்
பேரீசதம் ப்ருசம் அதாட்யத யத் ப்ரதீதை:
ஆகர்ண்ய தஸ்ய ஸஹஸா துமுலம் நிநாதம்
லங்கா கவாட நயநாநி நிமீலிதாநி—-220-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உன்னுடைய பட்டாபிஷேகம் என்னும் மங்கள கரமான நிகழ்வின் போது, நூற்றுக் கணக்கானவர்கள் பெரிதாக வாத்தியம் ஒலித்தனர்.
இந்த ஓசை இலங்கை வரை கேட்டது. இதனைக் கேட்ட இலங்கையின் கதவுகள் மூடப்பட்டன.

———————–

நிஸ்தீர்ண துங்க ஜலதே: அநகஸ்ய தேவி
த்வத் ஸம்ப்ரயுக்த ரகுநாத பதாந்வயேந
ஸத்ய ஸநந்தன முகை: அபி துர் நிரீக்ஷா
ஸாம்ராஜ்ய ஸம்பத் அபரா பரதஸ்ய ஜஜ்ஞே—-237–

பாதுகாதேவியே! உன்னுடன் தொடர்பு கொண்டதால் உயர்ந்த இராமனின் திருவடிகள் மூலமாகப் பரதன்
தனது துக்கம் என்ற பெரிய கடலை எளிதாகக் கடந்தான். இதன் மூலம் தூய்மை அடைந்த பரதன்,
ஸநந்தர் போன்றவர்கள் கூடக் காண இயலாத தேஜஸ் அடைந்தான்.
இதனால் பக்தர்களுக்குச் சக்ரவர்த்தி போன்றவன் என்ற பட்டம் பெற்றான்.

———–

இதி நிகமவந்தி வசஸா ஸமயே ஸமயே க்ருஹீத ஸங்கேத:
அபி ஸரதி ரங்கநாத: ப்ரதிபத போகாய பாதுகே பவதீம்—-250-

நம்பெருமாளின் பாதுகையே! இப்படியாக அந்தந்த காலத்தில் இவற்றைச் செய்யவேண்டும் என்று
வேதங்களாகிய வந்திகள் (துதி செய்பவர்கள் எனலாம்) மூலம் ஸ்ரீரங்கநாதன் உணர்கிறான்.
அந்தந்த காலத்தில் சுகங்களை அனுபவிக்கும் பொருட்டு உன்னை அடைகிறான்.

————

சரண கமல ஸங்காத் ரங்க நாதஸ்ய நித்யம்
நிகம பரிமளம் த்வம் பாதுகே நிர்வமந்தீ
நியதம் அதிசயாநா வர்த்தஸே ஸாவரோதம்
ஹ்ருதயம் அதி வஸந்தீம் மாலிகாம் வைஜயந்தீம்—258-

அழகிய மணவாளனின் பாதுகையே! பெரிய பெருமாளின் திருமார்பில் உள்ள மஹாலக்ஷ்மியுடன் தொடர்பு கொண்டுள்ளதால்,
அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்கிற மாலைக்கு நறுமணம் அதிகமே ஆகும்.
ஆயினும் அவனது திருவடிகளின் தொடர்பு உனக்கு மட்டுமே அல்லவா உள்ளது?
இதன் மூலம் நீ எப்போதும் வேதங்களின் நறுமணத்தை பரப்பியபடி உள்ளாய்.
ஆக ஸ்ரீரங்கநாச்சியாரின் தொடர்பு பெற்ற அந்த மாலையை விட, அவனது திருவடிகளின் தொடர்பு பெற்ற நீ உயர்ந்தே உள்ளாய்.

———

ஸ்ப்ருசத: சிரஸா பதேந ச த்வாம்
கதிம் உத்திஸ்ய முகுந்த பாதுகே த்வௌ
அவரோஹதி பஸ்சிம: பதாத் ஸ்வாத்
அத்ரோஹத்யநக: ததேவ பூர்வ:—-267-

க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னை இருவர் தொடுகின்றனர். ஒருவர் உன்னைத் தனது கால்கள் கொண்டு தொடுகிறார்,
மற்றோருவர் உன்னைத் தனது தலையால் தாங்குகிறார். தலையால் தொட்டவர் மேலே (பரமபதம்) ஏறியபடி உள்ளார்.
காலால் தொட்டவர் (நம்பெருமாள் ஆசனத்தில் இருந்து இறங்க எண்ணி, பாதுகை மீது திருவடி வைக்கிறான்) கீழே இறங்குகிறார்.

————–

த்வயா அநுபத்தாம் மணி பாத ரக்ஷே
லீலா கதிம் ரங்க சயஸ்ய பும்ஸ:
நிஸா மயந்த: ந புநர்பஜந்தே
ஸம்ஸார காந்தார கதாகதாநி—-275-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் சயனித்துள்ள பரம புருஷனாகிய பெரிய பெருமாள்,
உன்னைச் சாற்றிக் கொண்டு சஞ்சாரம் செய்கிறான். இதனைக் காண்பவர்கள், இந்த உலகில் பிறப்பது-இறப்பது
என்று சுழற்சியை இனி மேற்கொள்வதில்லை.

———–

பதஸ் ப்ருசா ரங்க பதிர் பவத்யா
விசக்ரமே விஸ்வம் இதம் க்ஷணேந
ததஸ்ய மந்யே மணி பாத ரக்ஷே
த்வயைவ விக்யாதம் உருக்ரமத்வம்—-281-

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடியில் இருந்ததால் தான் அவர் நொடிப் பொழுதில் உலகை அளந்தார் –
அதனாலேயே -உருக்ரமன் -த்ரிவிக்ரமன் -என்ற பெயரையும் பெற்றார் –

——————

ஸம்பத்யதே ஸமுசிதம் க்ரமம் ஆஸ்ரயந்த்யா
ஸத்வர்த்மநா பகவதோ: அபி கதிர் பவத்யா
ஈஷ்டே பதாவநி புந: க இவேத ரேஷாம்
வ்யாவர்த்த நஸ்ய விஷமாத் அபத ப்ரசாராத்—290-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் நல்ல வழியில் சென்று
சஞ்சாரம் செய்வது என்பது, உனது அடிவைப்பு மூலமே உண்டாகிறது.
இப்படி உள்ளபோது, மற்றவர்களைத் தீய வழிகளில் நடக்காமல் திசை திருப்பும் திறன் வேறு யாரிடம் உள்ளது?

————-

நித்யம் ய ஏவ ஜகதோ மணி பாத ரக்ஷே
ஸத்தாஸ்திதி ப்ரயதநேஷு பரம் நிதாநம்
யோ அபி ஸ்வதந்த்ர சரிதஸ் தவத் அதீந வ்ருத்தி:
கா வா கதா ததிதரேஷு மிதம்பசேஷு—-299-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகைப் படைப்பது, இந்த உலகில் உள்ள
அனைத்தைக் காட்டிலும் உயர்ந்திருப்பது ஆகிய தன்மைகளை உடைய ஸ்ரீரங்கநாதனே உன் வசப்பட்டுள்ளான்.
இப்படி உள்ளபோது இந்த உலகில் உள்ள மற்ற அற்பர்கள் உனக்கு அடிமை என்று கூறவும் வேண்டுமா?

—————

கமபி கநக ஸிந்தோ: ஸைகதே ஸஞ்சரந்தம்
கலச ஜலதி கந்யா மேதிநீ தத்த ஹஸ்தம்
அநிசம் அநுபவேயம் பாதுகே த்வயி அதீநம்
ஸுசரித பரிபாகம் ஸூரிபி: ஸேவநீயம்—-309-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியின் மணல்திட்டில் ஸ்ரீரங்கநாதன் சஞ்சரிக்கிறான்.
அவன் ஸ்ரீதேவியாலும் பூதேவியாலும் சூழப்பட்டு உள்ளான். சிறந்த புண்ணியங்களின் பயனாக உள்ளான்.
நித்யஸுரிகளால் என்றும் போற்றப்பட்டபடி உள்ளான். உன்னிடம் எப்போதும் வசப்பட்டு உள்ளான்.
இப்படிப்பட்ட இந்த ஸ்ரீரங்கநாதனை நான் எப்போதும் வணங்கியபடி இருப்பேனாக.

—————

ஸம்பவது பாதரக்ஷே ஸத்ய ஸுபர்ண: ஆதி: ஔபவாஹ்ய கண:
யத்ராஸு ரங்கபர்த்து: ப்ரதம பரிஸ்பந்த காரணம் பவதீ–320–

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரம் செல்வதற்கு அவனுக்கு வாகனங்களாக ஸத்யன், கருடன் என்று பலரும் இருக்கக்கூடும்.
ஆனால் இவர்களுக்கு முன்பாக அவன் முதல் அடி எடுத்து வைப்பதற்கு நீ அல்லவோ காரணமாக உள்ளாய்?

———–

அஸ்ப்ருஷ்ட தோஷ பரிமர்ஸம் அலங்க்யம் அந்யை:
ஹஸ்தாபசேயம் அகிலம் புருஷார்த்த வர்கம்
சித்ரம் ஜநார்த்தந பதாவநி ஸாதகாநாம்
த்வயி அர்ப்பிதா: ஸுமநஸ: ஸஹஸா பலந்தி—-331-

ஜனார்த்தனனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடம் மலர்களைச் சமர்ப்பணம் செய்பவர்களுக்குக் கிட்டுவது என்ன?
எந்தவிதமான தோஷங்களும் இல்லாததும், மற்றவர்களுக்கு எட்டாததும், இவர்களுக்குக் கையினால் பறிக்கக்கூடியதும்
ஆகிய உயர்ந்த புருஷார்த்தங்கள் மிகவும் எளிதாகக் கிட்டுகின்றன.

———–

ஸூடாரக்வத ரஜஸா ஸூர்ண ஸ்நபனம் விதாய தே பூர்வம்
ரங்கேஸ பாதுகே த்வம் அபிஷிஞ்சதி மௌளி கங்கயா சம்பு:—350-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சிவன் தனது தலையில் உள்ள கொன்னை மலர்கள் கொண்டு உனக்கு சூர்ணாபிஷேகம் செய்கிறார்.
அதன் பின்னர் தனது தலையில் உள்ள கங்கையைக் கொண்டு உனக்கு திருமஞ்சனம் செய்து வைக்கிறார்.

————–

க்ருதிந: சிரஸா ஸமுத் வஹந்த:
கதிசித் கேசவ பாதுகே ரஜஸ்தே
ரஜஸஸ் தமஸோ அபி தூரபூதம்
பரிபஸ்யந்தி விசுத்தமேவ ஸத்வம்—-356-

அழகான கேசத்தைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய துகள்களைத் தங்கள் தலைகளில்
கொள்கின்ற புண்ணியம் செய்தவர்களின் நிலை என்ன? அப்படிப்பட்டவர்கள் ரஜோகுணம், தமோகுணம் ஆகிய
இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஸத்வகுணம் நிறைந்த பரம பதத்தைக் காண்கின்றனர்.

————

கங்காபகா தட லதாக்ருஹம் ஆஸ்ரயந்த்யா:
பாதாவநி ப்ரசலிதம் பதவீ ரஜஸ்தே
ப்ராயணே பாவநதமம் ப்ரணதஸ்ய சம்போ:
உத்தூளநம் கிம் அபி நூதநம் ஆதநோதி—-368-

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் உன்னைச் சாற்றிக் கொண்டு கங்கைக் கரையில் எழுந்து அருளிய போது உண்டான
தூசியைச் சிவன் தலை வணங்கி தோஷ நிவாரண அர்த்தமாக புதியதாகத் தன் உடலில் பூசிக் கொள்கிறார் –

—————–

பஞ்சாயுதீ பூஷண மேவ சௌரே
யதஸ் தவைதே மணி பாதரஷே
விதந்வதே வ்யாப்ததிச பராகா
சாந்தோதயான் சத்ருசமூ பராகான் –374-

ஸ்ரீ பாதுகையே சத்ருக்களைக் கொல்வதற்காகப் பெருமாள் எழுந்து அருளுகிறார்
உன்னுடைய தூளியைக் கண்ட மாத்ரத்திலேயே சத்ருக்கள் ஓடோடிப் போகிறார்கள்
பெருமாளுடைய பஞ்சாயுதங்களும் அலங்காரத்திற்காக மட்டுமே ஆகின்றன –

————-

மதுரம் மணி பாதுகே ப்ரவ்ருத்தே
பவதீ ரங்க ந்ருபதே விஹார காலே
அபயார்த்த்நயா ஸமப்யு பேதாந்
அவி ஸம்வாதயதீவ மஞ்ஜு நாதை:–390-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலத்தில் பலரும் அவன் அருகில் வந்து,
தங்களுக்கு அபயம் அளிக்க வேண்டி நிற்கின்றனர். அப்போது நீ செய்வது என்ன?
உன்னுடைய இனிமையான நாதம் மூலம், “அபயம் அளிக்கப்பட்டது”, என்று கூறுகிறாய் அல்லவோ?

——————-

நித்யம் பதாம் புருஹயோ: இஹ கோபிகாம் த்வாம்
கோபீ ஜந ப்ரியதமோ மணி பாத ரக்ஷே
ஸம்பந்ந கோஷ விபவாம் கதிபி: நிஜாபி:
ப்ரீத்யேவ ந த்யஜதி ரங்க ஸமாஸ்ரிதோபி—-420-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! கோபிகைகளுக்கு மிகவும் ப்ரியமானவனாகிய நம்பெருமாள்,
தனது ஸஞ்சாரங்கள் முடிந்து ஸ்ரீரங்க விமானத்தை அடைந்த பின்னரும் உன்னை விடுவதில்லை.
மிகவும் இனிமையான நாதம் கொண்ட உன்னை அவன் கோபிகை என்றே கருதியுள்ளான் போலும்.

————-

க்ஷிபதி மணி பாத ரக்ஷே நாதைர் நூதம் ஸமாஸ்ரித த்ராணே
ரங்கேஸ்வரஸ்ய பவதீ ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷண விளம்பம்—-480-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தனது அடியார்கள் தன்னிடம், ” என்னைக் காக்கவேண்டும்”, என்று
விண்ணப்பம் செய்யவேண்டும் என்று ஸ்ரீரங்கநாதன் எதிர்பார்க்கிறான்.
இத்தகைய அவனது எண்ணத்தை உனது நாதங்களால் நீக்கி, அவன் காப்பாற்றும் காலதாமதத்தைக் குறைத்து விடுகிறாய்.

———–

ரங்கேஸ பாதாவநி தாவகாநாம்
ரத்ந உபலாநாம் த்யுதய: ஸ்புரந்தி
ஸ்ரேய: பலாநாம் ஸ்ருதி வல்லரீணாம்
உபக்நசாகா இவ நிர்வ்யபாயா:—-485-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மக்களுக்கு வேண்டிய புருஷார்த்தம் என்னும் பழங்களை
அளிக்கின்ற கொடிகளாக வேதங்கள் உள்ளன. அந்த வேதங்கள் படர்வதற்கு ஏற்ற கொழுகொம்புகளாக
உனது இரத்தினக் கற்களின் ஒளிக்கீற்றுகள் உள்ளன.

———–

ப்ரபவந்தி தவீயஸாம் ஸ்வபாவாத்
தவ ரத்நாநி முகுந்த பாத ரக்ஷே
அயஸாமிவ ஹந்த லோஹ காந்தா:
கடிநாநாம் மநஸாம் விகர்ஷணாய—512–

ஸ்ரீரங்க நாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ஒரு சிலர் ஸ்ரீரங்கநாதன் வீதியில் வலம் வரும்போது,
வீட்டை விட்டு வராமல் இருப்பார்கள். அவர்களது இரும்பு போன்ற மனங்களை, தூரத்தில் இருந்தே இழுக்க வல்ல
காந்தம் போன்று உன்னுடைய இரத்தினக் கற்கள் சாமர்த்தியம் கொண்டவையாக உள்ளவனவே!

————

ரங்காதிராஜ பத ரக்ஷிணி ராஜதே தே
வஜ்ர உபஸங்கடித மௌக்திக வித்ரும ஸ்ரீ:
ஸக்தா சிரம் மநஸி ஸம்யமிநாம் நிவாஸாத்
ஸூர்ய இந்து அஹ்நிமய மண்டல வாஸநேவ—-550–

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வைரத்துடன் சேர்த்துப் பதிக்கப்பட்ட முத்து, பவழம் ஆகியவற்றின் ஒளியானது –
நீண்டகாலமாக யோகிகளின் மனதில் நீ இருந்து வருவதால், அங்குள்ள சூரியன், சந்திரன், அக்னி மண்டலங்களின்
வாசனையுடன் கூடியதாக உன்னில் காணப்படுகிறது.

———–

ஜநயஸி பதாவநி த்வம்
முக்தா சோண மணி சக்ர நீலருசா
நகருசி ஸந்ததி ருசிராம்
நந்தக நிஸ்த்ரிம்ச ஸம்பதம் சௌரே:—580-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது முத்துக்களின் ஒளி, பத்மராகக் கற்களின் ஒளி மற்றும் இந்த்ரநீலக் கற்களின் ஒளி
ஆகியவை ஸ்ரீரங்கநாதனின் திருவடியின் நகங்களில் புதிய ஒளியை ஏற்படுத்துகின்றன.
இதனைக் காணும்போது நீ அவனுடைய நந்தகம் என்னும் கத்தியின் தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

————

அர்ச்சிஷ்மதீ காஞ்சந பாத ரக்ஷே
ப்ரஸ்தௌதி தே பாடல ரத்ந பங்க்தி:
ரேகா ரதாங்கஸ்ய மஹ: ப்ரபஞ்சம்
ரங்கேச பாதாம்புஜ மத்ய பாஜ:—-591–

ஸ்ரீரங்கநாதனின் பொன்மயமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய தாமரை மலர் போன்ற அழகிய திருவடியின் நடுவில்,
ரேகை வடிவத்தில் சக்கரம் உள்ளது. உன்னுடைய பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது,
அந்தச் சக்கரத்தின் ஒளியைப் போன்று காணப்படுகிறது.

———–

அருணமயஸ் தவ ஏதே
ஹரி பத ராகேண லப்த மஹிமாந:
கமயந்தி சரண ரக்ஷே
த்யு மணி கணம் ஜ்யோதி ரிங்கணதாம்—-610-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பத்மராகக்கற்கள், ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளின்
சிவந்த ஒளியைப் பெறுகின்றன. இதனால் அவை, மற்ற சூரியன்கள் அனைத்தையும், ஒளி குறைந்த,
மின்மினிப்பூச்சிகள் போன்று மாற்றி விடுகின்றன.

————-

ரங்கேஸ சரண ரக்ஷா
ஸா மே விததாது சாஸ்வதீம் ஸூத்திம்
யத் மௌக்திக ப்ரபாபி:
ஸ்வேத த்வீபம் இவ ஸஹ்யஜா த்வீபம்—-660-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ எனக்கு அழிவற்ற வெண்மையை
(பாவங்கள் அற்ற தன்மை, ஞானம்) உண்டாக்க வேண்டும். உன்னுடைய முத்துக்களின் அந்த ஒளியால் அல்லவோ
ஸ்ரீரங்கம் என்னும் காவேரியால் சூழப்பட்ட தீவானது, ச்வேத த்வீபம் போன்று வெண்மையாக உள்ளது?

——————-

ஸ்தல கமலநீவ காசித்
சரணாவநி பாஸி கமல வாஸிந்யா:
யத் மரதக தள மந்யே
ய: கச்சிதஸௌ ஸமீக்ஷ்யதே சௌரி:-680–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாமரையில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஏற்ற ஒரு நிலத் தாமரை வனமாக நீ உள்ளாய்.
அந்தத் தாமரை வனத்தின் இலைகளாக உனது மரதகக் கற்களின் பச்சை ஒளி உள்ளது.
அந்த இலைகளின் நடுவே ஸ்ரீரங்கநாதன் ஒரு இலை போன்று காணப்படுகிறான்.

——————

நமதாம் நிஜ இந்த்ரநீல ப்ரபவேந முகுந்த பாதுகே பவதீ
தமஸா நிரஸ்யதி தம: கண்டகம் இவ கண்ட கேநேவ—710–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பது போன்று, கருமையாகக் காணப்படும்
உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளி மூலமாகவே நீ உன்னை வணங்குகின்றவர்களின் அறியாமை என்னும் இருளை நீக்குகிறாய்.

———–

ப்ரஜ்வலித பஞ்ச ஹேதி: ஹிரண்மயீம் த்வாம் ஹிரண்ய விலயார்ஹ:
ஆவஹது ஜாத வேதா: ஸ்ரியம் இவ ந: பாதுகே நித்யம்—750–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களை ஏற்தியபடி,
ஹிரண்யன் போன்றவர்களை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
இப்படிப்பட்ட அவன், தங்கமயமான உன்னை, அவனுக்குச் செய்யும் கைங்கர்யச் செல்வமாக உள்ள உன்னை,
எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டும்.

——————

பஹுமுகபோக ஸமேதை: நிர்முக்ததயா விஸூத்திம் ஆபந்நை:
சேஷாத்மிகா பதாவநி நிஷேவ்யஸே சேஷ பூதைஸ் த்வம்—-760–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷனின் அவதாரமான நீ, பலவிதமான இன்பங்களுடன் கூடியவர்களும்,
அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபட்டதனால் தோஷம் இல்லாத தன்மையை அடைந்தவர்களும் ஆகிய
ஸ்ரீரங்கநாதனின் தொண்டர்களால் எப்போதும் வணங்கப்படுகிறாய்.

————-

பாதுகே பவ பய ப்ரதீ பயோ:
பாவயாமி யுவயோஸ் ஸமாகமம்
ஸக்தயோர் தநுஜவைரிணர் பதே
வித்யயோர் இவ பராவராத் மநோ:–768–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள நீங்கள்,
ஸம்ஸார பயத்திற்குச் சத்ருவாக உள்ளீர்கள். இப்படியாக உள்ள உங்கள் இருவரது சேர்க்கையைக் காணும் போது,
பரை மற்றும் அபரை என்ற வித்யைகளின் சேர்க்கை என்றே நான் எண்ணுகிறேன்.

————

பத்த ஹரி பாத யுகளம் தபநீய பாதுகே யுவயோ:
மோசயதி ஸம்ஸ்ரிதாநாம் புண்யாபுண்யமய ஸ்ருங்கலா யுகளம்—-780–

தங்கமயமான பாதுகைகளே! உங்களது இந்த இணை என்பது இரண்டாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை ஒன்றாகக் கட்டுகிறது.
இந்த இணையே, உங்களை அண்டியவர்களின் புண்ணியம் மற்றும் பாவம் என்னும் சங்கிலிகளின் பிணைப்பை விடுவிக்கின்றன.

——–

அப்ரபூதமபவத் ஜகத்ரயம்
யஸ்ய மாதும் உத்தி தஸ்ய பாதுகே
அப்ரமேயம் அமி தஸ்ய தத்பதம்
நித்யமேவ நநு சம்மிதம் த்வயா –795-

ஸ்ரீ பாதுகையே -திரு உலகு அளந்த சமயம் மூன்று உலகும் அவன் திருவடிக்கு போதாமல் போயிற்று –
அளவிட முடியாதவனான அவனுடைய அளவிட ஒண்ணாத மஹிமை கொண்ட அந்த திருவடியும் கூட உன்னாலே
நித்தியமே அளவிடப் பட்டு நிகிறதே -உன் பெருமைக்கு மற்றவை ஏதும் இணையாகாது –

———–

ப்ரதமா கலேவ பவதீ சரணாவநி பாதி ரங்க சந்த்ரமஸ:
ஸ்ருங்க உந்நதிரிவ யத்ர ஸ்ரியம் விபாவயதி யந்த்ரிகா யோக:—-810-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைக் காணும்போது ஸ்ரீரங்கத்தின் சந்த்ரனாகிய ஸ்ரீரங்கராஜனின்
முதல் கலை போன்று உள்ளாய். இப்படியாக உள்ள அந்தக் கலையின் நுனி போன்ற அழகை உனது குமிழ் ஏற்படுத்துகிறது.

———-

ரேகா அபதேசதஸ் த்வம்
ப்ரசமயிதும் ப்ரளய விப்லவ ஆசங்காம்
வஹஸி மதுஜித் பதாவநி
மந்யே நிகமஸ்ய மாத்ருகா லேக்யம்—-820-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ப்ரளய காலத்தில் வேதங்கள் அழித்துவிடுமோ
என்ற சந்தேகம் சிலருக்கு உண்டாகலாம். இதனால் அந்த சந்தேகத்தை நீக்கும் விதமாக உன்னில் காணப்படும்
கோடுகள் என்பதன் மூலம், வேதங்களின் ப்ரதியை நீ வைத்துக் கொண்டுள்ளாய் என்பதை உணர்த்துகிறாய் போலும்.

———

அதரீக்ருத: அபி மஹதா
தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு:
அலபத ஸமயே ராமாத்
பாத க்ராந்தாபி பாதுகே ராஜ்யம்—830-

மேலும் மேலும் உயர எண்ணுபவன், உயர்ந்த ஒருவனால் தாழ்வாக நடத்தப்பட்டாலும், அவனையே அண்டி வணங்கி நிற்க வேண்டும்.
பாதுகையானது இராமனின் திருவடிகளால் மிதிக்கப்பட்டாலும், ஒரு காலகட்டத்தில் இந்த இராமனின் ராஜ்யத்தையே அடைந்தாள்

————–

ஸ்பீதம் பதாவநி தவ ஸ்நபந ஆர்த்ர மூர்த்தே:
ஆஸாகரம் ததம் அபூத் மணிரஸ்மி ஜாலம்
லீலோசிதம் ரகு ஸுதஸ்ய சரவ்யம் ஆஸந்
யாதூநி யஸ்ய வலயேந விவேஷ்டிதாநி—-842–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருமஞ்சனம் மூலம் நனைந்துள்ள உனது இரத்தினக்கற்களின் ஒளியானது ஸமுத்திரம்
வரை பரவி நின்றது. அந்த ஒளியானது ஒரு வலை போன்று காணப்பட்டது.
அந்த வலையில் சூழப்பட்ட அரக்கர்கள் அனைவரும் இராமனின் பாணங்களுக்கு விளையாட்டு போன்று இலக்கானார்கள்.

—————-

ரங்காதி ராஜ பத பங்கஜம் ஆஸ்ரயந்தீ
ஹைமீ ஸ்வயம் பரிகதா ஹரி நீல ரத்நை:
ஸம்பாவ்யஸே ஸுக்ருதிபி: மணி பாதுகே தவம்
ஸாமாந்ய மூர்த்தி: இவ ஸிந்து ஸுதா தரண்யோ:—853–

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பற்றியவளாகவும்,
தங்கமயமாக இந்த்ரநீலக் கற்களால் இழைக்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய்.
ஆக நீ திருப்பாற்கடலில் அவதரித்த மஹாலக்ஷ்மி என்றும், பூமிபிராட்டி என்றும் புண்ணியவான்களால் எண்ணப்படுகிறாய்
(தங்க நிறம் = மஹாலக்ஷ்மி, இந்த்ரநீலம் = பூதேவி).

———

ரகுபதி ஸங்காத் ராஜ்ய கேதம் த்யஜந்தீ
புநரபி பவதீ ஸ்வாந் தர்ஸ யந்தீ விஹாராந்
அபிஸமதித வ்ருத்திம் ஹர்ஷ கோலாஹலாநாம்
ஜநபத ஜநிதாநாம் ஜ்யாயஸா சிஞ்ஜிதேந—-883-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமனின் திருவடிகளில் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சேர்ந்ததால்,
அதுவரை ராஜ்ய பாரம் காரணமாக உண்டான துயரங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் நீ விட்டாய்.
மீண்டும் உனது உல்லாஸமான ஸஞ்சாரங்களைக் காட்டியபடி, இனிமையான நாதத்தால்,
அயோத்தியில் உண்டான இனிமையான சந்தோஷக் கூச்சல்களை மேலும் வளர்த்தாய்.

———–

ரம்ய ஆலோகா லளித கமநா பத்மராக அதரோஷ்டீ
மத்யே க்ஷாமா மணி வலயிநீ மௌக்திக வ்யக்த ஹாஸா
ஸ்யாமா நித்யம் ஹரி தமணிபி: சார்ங்கிண: பாத ரக்ஷே
மந்யே தாது: பவஸி மஹிளா நிர்மிதௌ மாத்ருகா த்வம்—-898–

சார்ங்கம் என்ற வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் அழகிய தோற்றத்தைக் கொண்டவளாக,
மெதுவான அழகிய நடையைக் கொண்டவளாக, பத்மராகக் கற்களின் சிவந்த தன்மையால் அழகான உதடுகள் கொண்டவளாக,
நடுப்பாகத்தில் (இடை) சிறுத்தவளாக, இரத்தினக்கற்களின் கூட்டம் என்ற வளையல்கள் அணிந்தவளாக,
முத்துக்கள் போன்ற அழகான சிரிப்பைக் கொண்டவளாக, பச்சைக்கல் மூலம் என்றும் யுவதியாகத் தோற்றம் அளிப்பவளாக நீ உள்ளாய்.
இப்படியாக நான்முகன் உத்தமப் பெண்களைப் படைக்க உதவுகின்ற மாதிரி உருவமாக (model) நீ உள்ளாய் என்று எண்ணுகிறேன்.

இந்த சுலோகத்தினை அதியற்புதமாய் ஒரு சிலேடை நடையில் அமைத்துள்ளார்.
இதிலுள்ள “நித்ய“ என்னும் ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு மீதமுள்ள பதங்களோடு சேர்த்து
விசேஷமான அர்த்தங்களைக் காண்போம்!
நித்யம் ரம்யாலோகா – எப்பொழுதும் தெளிவும், ஆனந்தமும் கொண்ட ஆத்மாவிலிருந்து உண்டான
வெளிப்படையான தேஜஸ்ஸை உடைத்தாயிருக்கை.
நித்யம் லலிதகமனா – ஜனங்களுக்கு நடையில் பல கோணல், விகாரங்கள் இருப்பது போல் அவர்கள் கடைபிடிக்கும்
அனுஷ்டானத்திலும் பல தோஷங்கள் உண்டு. அம்மாதிரியெல்லாம் இல்லாமல் சாஸ்திர ரீதியாய், ஸத் ஸம்ப்ரதாயமான
ஆசார அனுஷ்டானங்களை விதிப்படிக்கும், பெரியவர்களது உபதேச க்ரமபடிக்கும், சிரத்தை, பக்தி, விசுவாசத்தோடு ,
ஆடம்பரம், அஹங்காரம், பிரதிபலன்கள் ஏதும் எதிர்பார்க்காமல், எப்போதும் ஒரே மாதிரியாய் அனுஷ்டிப்பது.
நித்யம் பத்மராகாத்ரோஷ்டி தன்னுடைய நற்குணங்களாலும், நல்வாக்கினாலும், தம்முடைய வாக்கு,
கேட்பவர்களிடத்து ஆனந்தமான மெய்யுணர்வு ஏற்படும்படி இருக்கை.
நித்யம் மத்யே க்ஷாமா இத்தனை பெருமைகளும், யோக்யதைகளும் இருந்தும் கூட பவ்யமாகயிருத்தல்.
நித்யம் மணிவலயிநி – வேதம் கூறும் சாஸ்திரங்களையும், அது குறித்த பூர்வாச்சார்யர்களுடைய விளக்கங்களையும்,
வியாக்யானங்களையும் எப்போதும் ஆபரணம் போன்று நினைவில் கொண்டிருக்கை
நித்யம் மெளக்திகவ்யக்தஹாஸா – எப்போதும் தன்னுடைய சௌஹார்த்ததாலும் (எல்லாரையும் அன்போடு அணைத்துச் செல்லும் குணம்)
மலர்ச்சியோடு கூடிய தோற்றத்தினாலும் எப்போதும் இவர் நம்மோடுயிருந்து அருள வேண்டும் என்றிருக்கை.
நித்யம் ஸ்யாமா ஹிதமணிபி – நல்ல இறையனுபவத்தாலே காமக்ரோதாதிகள் அறவேயொழிந்து, புத்தி தெளிவடைந்து,
அதனால் சரீரம் நல்ல தேஜஸ்ஸையடைந்திருக்கை.
நித்யம் சார்ங்கிண: பாதரக்ஷே – பெருமாளுக்கு எந்தவிதமான அபராதங்களும் ஜனங்கள் செய்யமால்,
அபஹாரம் வராதபடிக்கு நித்ய ரக்ஷகர்களாய் இருக்கை. இதற்கு ஜனங்களுக்குப் பெருமாளைக் குறித்த
தெளிவான அறிவு வேண்டும். அதனை பல ப்ரமாணங்கள் மூலம் புகட்டும் தெளிவு வேண்டும்.

இவைகள் தாம் ஸதாச்சார்யனுடைய லக்ஷணங்கள். அவர்களால் சிக்ஷையடைந்து தேறிய நல்ல சீடர்களின் லக்ஷணமும் ஆகும்.

—————–

காலே தல்பப புஜங்கமஸ்ய பஜத: காஷ்டாம் கதாம் சேஷதாம்
மூர்த்திம் காமபி வேத்மி ரங்க ந்ருபதே: சித்ராம் பத த்ரத்வயீம்
ஸேவா நம்ர ஸுராஸுரேந்த்ர மகுடீ சேஷாபடீ ஸங்கமே
முக்தா சந்த்ரிகயேவ யா ப்ரதயதே நிர்மோக யோகம் புந:—-907–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! வியப்பை அளிக்கவல்ல ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளான உங்களை
அவனது ஸஞ்சார காலத்தில் அடிமைத்தனத்தின் எல்லைக்கே செல்வதால்,
அவனுடைய படுக்கையான ஆதிசேஷனின் உருவமே என்று எண்ணுகிறேன்.
ஸ்ரீரங்கநாதனை வணங்கி நிற்பவர்களான தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைகளில் உங்களை வைக்கும்போது
உங்கள் முத்துக்களின் ஒளியானது பரிவட்டம் போன்று காணப்படுகிறது. மேலும் அவர்களின் தலையில் உள்ள பரிவட்ட
வஸ்த்ரத்துடன் இந்த ஒளியும் இணையும்போது, உரித்த நாகத்தின் தோல் போன்று காணப்பட்டு, ஆதிசேஷனை நினைவுபடுத்துகிறது.

ஆதிசேஷனுடைய இன்னொரு உருவம்தான் பாதுகை.
இவ்விதம் கூறுவதற்கு இரண்டு காரணங்களை இந்த ஸ்லோகத்தில் கூறுகின்றார்.
1-ஆதிசேஷனை வெள்ளிமலை போல் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது. நல்முத்துக்கள் பதிக்கப்பெற்ற பாதுகையிலிருந்து
வெளிப்படும் காந்தியானது வெள்ளிமலையை போன்று காட்சியருளுகின்றது.
2-தம் பக்தர்களை கௌரவிக்கும் போது, அவர்களது சிரஸ்ஸில் வெள்ளைத் திருப்பரிட்டத்தினைச் சுற்றி கட்டி
அதன் மேல் பாதுகையை சாதிக்கும் போது, வெள்ளைத் திருப்பரிவட்டம், உரித்து விட்ட பாம்பு சட்டைப் போன்றும்,
பாதுகை ஆதிசேஷனின் சிரஸ் போன்றும் காட்சியருளுகின்றது.
(“சேஷப்படி“ என்பது திருப்பரிவட்டத்திற்கான சமஸ்கிருதப் பெயர்.
இந்த சுலோகத்தின் மூலம் இது அந்த காலத்தில் வெளுப்பு வர்ணத்திலிருந்த்து அறியப்படுகின்றது.)
சேஷத்வ காஷ்டை மிகுந்தவர்கள் ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்கள். இவர்கள் ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகளின் அவதாரமேயாவர்.
(ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொரூபத்தில் கூட சட்டை உரித்த பாம்பினைப் போன்று பால் போன்ற நிறத்தில்தான் இருப்பாராம்.)
சுத்த சத்துவ குணத்தோடேயே அவதரித்தவர்கள். இவர்களை, இவர்களின் ஸ்ரீசூக்திகளைப் போற்ற போற்ற
நமக்கு சத்துவ குணம் மேலிடும், தோலுரித்த பாம்பின் பிரகாசம் போன்று.

————-

பாபாத பாபாத பாபாஸ் பாத பாத தபா தபா
தபாதபா பாதபாத பாத பாத தபாதபா –933– (சித்ர பத்ததி )

பாபம் அற்றது -அகார வாச்யனான ஸ்ரீ விஷ்ணுவின் ஸ்ரீ பாதத்திற்கு ஒளி கொடுப்பது -ஜீவர்களுக்கும் ஒளி வழங்குவது –
தன்னை பகவான் இடம் சமர்ப்பிக்குமவர் விஷயத்தில் ரஷை தரும் திருமஞ்சன தீர்த்தம் உடையது
சர்வ லோக ரஷகமாய் இருப்பதும் சர்வ பாபா நாசகமாய் இருப்பதுமான பெருமாள் திருவடிகளுக்கும் கூட ரஷணம் தருவது ஸ்ரீ பாதுகையே –
அது என்னை சர்வ பாபங்களில் இருந்து காத்து அருளிற்று –

ஒரே வார்த்தையை 16 முறை-இது அ ஆ என்கிற உயிர் எழுத்துக்களை கொண்டது , இரண்டு மெய் எழுத்துக்களையும் கொண்டது .

பாதபா , பாபா , அத , அபா , பாதபா , பாத , பா , பாத , பாபாத் , அபாபாத் , ஆ , பாபா , த , பாபா , ஆத , பா , பாத , பா

என்று பிரித்து படிக்கப் பட வேண்டும் , அதன் பொருள் என்னவெனில் ,
மரம் போன்ற தாவரங்களையும் , பிராணிகளையும் , அடைந்திருக்கும் பாபத்தை உணடழிக்கக் கூடிய
அபிஷேக நீரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதும் , முறையே நியமிக்கப் பட்டு , பதவிகளில் இருக்கும் தேவர்களை
காக்கின்ற ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை காத்திடுவதுமான பாதுகை ,
பெற்றோர்களை நன்கு பார்த்துக் கொள்வோர் விஷயத்திலும் , நன்கு காப்பாற்றாதவர்கள் விஷயத்திலும் முறையே
பாப புண்ணியத்தை நோக்குவதும் , ஸ்ரீ விஷ்ணுவை அனுபவிக்கின்றவற்கு சரணாகதிக்கு வழி வகுப்பதும் ,
நிந்திக்கும் விரோதிகளை அழிக்கக் கூடிய பெருமாளின் ஒளிகளை காப்பதும் பாதுகையே –என்று பாடுகிறார்-

———–

சரம் அசரம் ச நியந்துஸ் சரணௌ
அந்தம் பரேதரா சௌரே:
சரம் புருஷார்த்த சித்ரௌ சரணாவநி
திசஸி சத்வரேஷு ஸதாம்—950-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அடியார்களைக் காப்பாற்றும் அதே சிந்தனை கொண்டவளாக உள்ளாய்.
அசைகின்றதும், அசையாமல் உள்ளதும் ஆகிய அனைத்தையும் நியமிக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள்,
உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பற்றிய ஞானத்தை உண்டாக்கி, காக்கவல்லவையாக உள்ளன.
இப்படிபட்ட அவனது திருவடிகளை (இதன் மூலமாக ஸ்ரீரங்கநாதனை) ஸாதுக்களின் வீட்டிற்கே அழைத்து வந்து,
அவர்களின் பூஜை அறையில் நிலையாக நிறுத்தி விடுகிறாய்.
ஆக நீ ஸ்ரீரங்கநாதனை வெகு சுலபமாக அவர்களது இல்லங்களுக்கு அழைத்து வருகிறாய்.

———-

அபி ஜந்மநி பாதுகே பரஸ்மிந்
அநகை: கர்மபி: ஈத்ருசோ பவேயம்
ய இமே விநயேந ரங்க பர்த்து:
ஸமயே த்வாம் பதயோஸ் ஸமர்ப் பயந்தி—-952-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அந்தந்த காலங்களில் ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகர்கள் உன்னை அவனது திருவடிகளில்
மிகவும் அன்புடன் ஸமர்ப்பணம் செய்கிறார்கள். எனது அடுத்த பிறவியில் இவர்கள் போன்று
ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகராகப் பிறந்து உனக்கு கைங்கர்யம் செய்வேனோ?

————

காலே ஜந்தூந் கலுஷ கரணே க்ஷிப்ரம் ஆகார யந்த்யா:
கோரம் நாஹம் யம ப்ரிஷதோ கோஷமா கர்ண யேயம்
ஸ்ரீமத் ரங்கேச்வர சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநாம் ஸபதி ஸ்ருணுயாம் பாதுகா ஸேவக இதி —969-

கலுஷ=கலங்கியிருக்கின்ற – கரணே=இந்திரியங்களுடைய – காலே=செத்துப் போகிற காலத்திலே –
ஜந்துாந்=ஜந்துக்களை (ஜீவன்களை) – க்ஷிப்ரம்=சீக்கிரமாக – ஆகாரயந்த்யா:=அழைக்கிறதாயிருக்கின்ற –
யமபரிஷத:=யமக் கூட்டத்தினுடைய – கோரம்=பயத்தையுண்டுப் பண்ணுவதான – கோஷம்= இரைச்சலை –
அஹம்=நான் – நாகர்ணயேயம்=கேட்கமாலிருக்க வேண்டும். – ஸ்ரீமத்=மஹாலக்ஷ்மியோடு கூடிய –
ரங்கேஸ்வர=ஸ்ரீரங்கநாதனுடைய – சரணயோ:=திருவடிகளுக்கு – அந்தரங்கை:=அந்தரங்கமாய் –
ப்ரயுக்தம்= சொல்லப்படுகின்ற – பாதுகாஸேவகேதி= பாதுகா ஸேவகரே என்று – ஸேவா=ஸேவைக்காக –
ஆஹ்வானம்=பகவத் ஸந்நிதிக்குள் அருளப்பாடிட்டு (என்னை)அழைப்பதை – ஸபதி=சீக்கிரமாக –
அஹம்=நான் – ச்ருணுயாம்=கேட்கவேண்டும்.

———–

ஜ்ஞாந க்ரியா பஜந ஸீம விதூர வ்ருத்தே:
வைதேசி கஸ்ய தத் அவாப்தி க்ருதாம் குணாநாம்
மௌளௌ மமாஸி மது ஸூதந பாதுகே த்வம்
கங்கேவ ஹந்த பதித விதிதைவ பங்கோ:—983-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஞானயோகம், கர்மயோகம் மற்றும் பக்தியோகம்
ஆகியவற்றின் எல்லைகளுக்கு வெகுதூரத்தில் நான் உள்ளேன். அவற்றைப் பெறுவதற்குரிய குணங்களுக்கும் அப்பால் நான் உள்ளேன்.
இப்படிப்பட்ட என் தலை மீது, முடவன் ஒருவன் கங்கையில் விழுந்தது போன்று, நீயாகவே வந்து அமர்ந்தாய். என்ன வியப்பு!

———

இதி ரங்க துரீண பாதுகே த்வம்
ஸ்துதி லக்ஷ்யேண ஸஹஸ்ரசோ விம்ருஷ்டா
ஸபலம் மம ஜந்ம தாவத் ஏதத்
யதி ஹாசாஸ்யம் அத: பரம் கிம் ஏதத்—-1001–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! இப்படியாக உன்னைத் துதிப்பது என்ற ஸ்தோத்ரம் ஒன்றைச் சாக்காக
வைத்துக் கொண்டு, என்னால் ஆயிரக்கணக்கில் நீ சிந்திக்கப்பட்டாய்.
இதன் மூலமாக எனது பிறவியானது மிகுந்த ப்ரயோஜனம் மிக்கதாகி விட்டது.
இதற்கு மேல் இந்த உலகத்தில் நான் பெற வேண்டியதும், ப்ரார்த்தனை செய்ய வேண்டியதும் வேறு என்ன உள்ளது?

——–

ஜயதி யதிராஜ ஸூக்தி:
ஜயதி முகுந்தச்ய பாதுகா யுகளீ
ததுபயதநா: த்ரிவேதீம்
அவந்தயயந்த: ஜயந்தி புவி ஸந்த:—-1008–

யதிகளின் தலைவர் என்று போற்றப்படும் எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன.
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன.
இந்த இரண்டையும் ஒருவர் தனது செல்வமாகக் கொண்டாலே போதுமானது –
அப்படிப்பட்டவர்கள் மூன்று வேதங்களையும் ஸபலமாக்கியபடி வாழ்ந்து மேன்மை அடைகின்றனர்.

ஸ்ரீ யதி ராஜர் என்கிற ஸ்ரீ ராமானுஜர் உடைய திவ்ய ஸூக்திகள் -ஸ்ரீ பாஷ்யம் முதலானவை -சிறப்பாக விளங்குகின்றன –
மோஷ தாதா வாகிற ஸ்ரீ ரங்க நாதனுடைய திருப் பாதுகையினை இவ்வுலகில் விளங்குகிறது –
ஸ்ரீ பாஷ்யகார ஸ்ரீ ஸூக்திகளையும் ஸ்ரீ பாதுகா மூர்த்தியான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளையும் மட்டுமே தம் தனம்
என்று கொண்டு இருக்கும் சாதுக்கள் த்ரயீ என்ற வேதத்தை வீணாக்காமல் அதை முழு பிரமாணம் ஆக்குகிறவர்கள் –
அவர்கள் இப்புவியில் சிறந்து விளங்குகிறார்கள் –

முதல் ஸ்லோகம் “ஸந்த” என்ற தொடங்கியது.
இந்த ஸ்லோகத்தின் முதல் பதமும் “ஸந்த” என்று முடிவதைக் காண்க.
இந்த ஸ்லோகம் கூறி முடித்தவுடன், மீண்டும் முதல் ஸ்லோகத்தைக் கூறுவது மரபாகும்.

சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீஸ சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-

——————————————————————————–

அயோத்யா காண்டத்தில் நூற்றிப் பன்னிரண்டாவது ஸர்க்கம் உருக்கமான ஒரு காட்சியை நம் முன் காட்டுகிறது.

அதிரோஹார்ய பாதாப்யாம் பாதுகே ஹேமபூஷிதே I
ஏதே ஹி சர்வலோகஸ்ய யோகக்ஷேமம் விதாஸ்யத: II-(நூற்றிப்பன்னிரண்டாவது ஸர்க்கம், 21வது ஸ்லோகம்)

ஆர்ய – ஸ்வாமியே!
ஹேமபூஷிதே – பொன்னால் அலங்கரிக்கப்பெற்ற
பாதுகே – பாதுகைகளில்
பாதாப்யாம் – திருவடிகளால்
அதிரோஹ – ஏறி அருள்வீராக!
ஹி ஏதே – ஏனெனில் இவைகள்
சர்வலோகஸ்ய – எல்லா உலகத்தின்
யோகக்ஷேமம் – யோகக்ஷேமத்தை விதாஸ்யத: – வகிக்கப் போகின்றன

பாதுகா பாதுகா பாதுகா’ என்று சொல்லிப் பாருங்கள், பாதுகாப்பா என்று வரும்.
ஆம்! இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்துவோம், அவை நம்மை நிச்சயம் காப்பாற்றும்.”

ஸ்தோத்ர காவ்யம் -இது –
திரி ஸானு -கெட்டதையே பேசுபவர் -விஸ்வவஸூ -நல்லதையே பேசுபவர்
புஷபவத் -புஷபவந்தவ் -இரட்டைக்கு -பூ விழுந்த கண் பார்வை தெரியாத என்பான் திரிசாஸூநு
ஸூர்ய சந்த்ரர்களையும் சேர்த்து குறிக்கும் ஒரே வார்த்தை -புஷபவந்தவ்-திங்களும் ஆதித்யனும் போல்
வேங்கடாத்ரி கவி -இப்படி பாடி -இழந்த கண்ணை மீட்க லஷ்மீ சஹஸ்ரம் பாடி கண் பார்வை பெற்றார் –
23-ஸ்லோகம் -பாதுகா சஹஸ்ர மஹிமை சொல்கிறார்
பாதுகையையே பாடி உள்ளார் -தாயே உன்னை பாட முடியாதா –
சாஷாத் ஹயக்ரீவர் தேசிகன் -கவி ஸிம்ஹம் -தார்க்கிக ஸிம்ஹம் –
அவரை ஓப்பிடும் பொழுது ஊமையைப் போன்ற நான் பாடுவதே விஸ் மயம்

———————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-

January 20, 2019

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்

32 பத்ததி -அடிகள் கொண்டவை
ரகஸ்ய கிரந்தங்கள் 32 சாதித்து
அதிகாரங்கள் 32 ரகஸ்ய த்ரயம்
அஷ்டாஷரம் காயத்ரி -32
மோஷ சாதனா வித்யைகள் -32

கீதை -18 ப்ரஹ்ம சூத்ரம் -4-திருவாய் மொழி -10 பத்துக்கள்
32 தத்வங்கள் -பூதங்கள் தன் மாத்ரைகள் இந்த்ரியங்கள் அஹங்காரம் மமகாரம் மூன்று பிரகிருதி காலம் நித்ய விபூதி
தர்ம பூத ஞானம் ஜீவம் தாயார் பெருமாள் -32

ஸ்ரீ ராமாயணம் திருவாய்மொழி ஈரண்டுக்கும் ஒப்பு இது
ஸ்ரீ சடாரி-சட வாயு சம்சாரம் கொடுக்கும் -ஹுங்காரம் பண்ணி -விரட்டி அருளியது போலே இந்த பாதுகா சஹஸ்ரம்
சர்வ லோகஸ்ய யோக ஷேமம்-ஸ்ரீ பரத ஆழ்வான் பிரார்த்தித்து – அலப்தஸ்ய லாபம் யோகம் -தக்கபடி பாதுகாப்பது ஷேமம்
அனுஷ்டப் –சந்தஸ் –
முதல் ஸ்லோகம் பாதுகையை விளித்து சொல்லாமல்
பிரஸ்தா பந்தத்தி
அடுத்தவை விளித்து சொல்கிறார்
சடாரி
பெருமையை உணர்த்தி
பரதன் –பாவம் ராகம் தாளம் பரத -நாத முனிகள் -நம்மாழ்வார் பிரபாவம் அருள -பாதுகை பெருமாள் பிரபாவம் அருளியது போலே
அயோத்யை
நந்தி கிராமம் பட்டாபிஷேகம்
ஷட் ஆசனங்கள் ஆராதனம் கட்டியம் சொல்லி -10
11- உத்சவங்கள் வர்ணனை
12- புஷ்பம்
13 –சஞ்சார பந்தத்தி
14-சலங்கை ரத்னங்கள் சப்தம் பற்றி
500 ஸ்லோகங்கள் இப்படி

15 ஸ்வரூபம்
16-17-18-19-20-முத்து மரகதம் போன்றவவை பற்றி
21-பிரதிபிம்பம்
22-தங்கம் பதித்து அத்தை பற்றி
23 ஆதிசேஷன்
24 இரண்டு பாதுகை
25 அமைப்பு
26-குமிழ்
27-திருவடி தழும்பால் ரேகைகள்
28-ஸிம்ஹ அவலோகனம் -திரும்பி பார்த்து
29-பலவகை பந்தம்
30 நிர்வேதம் -ஹிதம் உண்டாக
31- உபாயம்
32- புருஷார்த்தம் -பலன்கள் சொல்லி தலைக் கட்டுகிறார்
1000 ஸ்லோகங்கள்
ஒரே இரவில் சாதித்து –

ஸ்ம்ருதி -முந்திய கால நினைவு
மதி -நிகழ் கால அறிவு
புத்தி -வரும் காலம் அறிவு
பிரஜ்ஞ்ஞா -மூன்றும்
பிரதிபை
காவ்யம் அழகு -கவி ரேவ பிரஜாபதி ப்ரஹ்மா போலே
சொல் பொருள் அழகு -ரசங்கள் நிறைந்து –
சந்தஸ் -ஆரம்பித்து –இறுதி ஸ்லோகம் ஜயதி எதிராஜ –சந்தஸ் முடித்து -புஷ்ப மாலை -ரத்னஹாரம்
உயர்வற -பிறந்தார் உயர்ந்தே -முடித்தால் போலே

சத்தை உடையவர் -சந்தஸ் -ப்ரஹ்மம் அஸ்தி-என்று எண்ணுபவன் தானே சத் –
எல்லாம் என்று அறிந்தால் எம்பெருமான் -ப்ரஹ்ம சாஷாத்காரம் ஏற்படும்
வஸ்து நிர்த்தேசம் ரூபமாக ஆரம்பம்
ஸ்ரீ அரங்கன் பாதுகை கிரீடமாக தாங்கும் -சேகரம் -கிரீடம் ஸ்ரீ சடாரி பெறுபவர்கள் சாந்த-அவர்களை பிரணாமம் செய்கிறேன் -என்கிறார் –
மத் பக்த அடியார் அடியார் -போலே
ஸ்ரீ ரெங்க ப்ருத்தி-ஸ்ரீ பூமி ரெங்க நீளா ப்ருத்தி-ஸ்ரீ பூமி பிராட்டி ஈசன் -மூவருடன் -ப்ருத்தீச பெரிய பெருமாள் என்பதால் -சங்க -அடியார்கள் –
திருவடித் துகள் ஆட கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்
அருள் -ஸ்ரீ பாதுகை -அடிக்கும் மேல் அருள் என்பதால் -கருணை ரூபமே ஸ்ரீ பாதுகை
இவள் அடி அடையாதால் போல் இவள் பேசுகிறாள் –திருவடி நிலையான ஸ்ரீ பாதுகை அடைந்தாள் என்பர் -துயர் அறு சுடரடி –
அடி சுடராகக் காட்டுவது ஸ்ரீ பாதுகையாலே தான் -அடி சுடர் என்பதால் ஸ்ரீ பாதுகை உடன் கூடிய திருவடி
ஸ்ரீ பாதுகா தலையில் தாங்கும் அடியவர்கள் பாதுகா துகள்களுக்கு ஜெயந்தி -ஜெயந்தே புண்டரீகாஷா -பல்லாண்டு —
சாந்த -நம் ஆழ்வாரையே சொல்வதாகவுமாம்

அடுத்து ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நமஸ்காரம் -பாரம் நாம -உயர்ந்த நமஸ்காரம் -மனம் மொழி காயம் -மூன்றாலும்
ராகவனே ரெங்கன் -பாசுகா பிரபாவம் -திருவடிகள் இணை –
சர்வ லோகஸ்ய யோக ஷேமத்துக்கு -முனி வேஷத்துடன் பெருமாள் போலே ஸ்ரீ பரத ஆழ்வான் –சிரசில் தாங்கி சந்த சப்தத்துக்கு முதல் ஆள்
ஸ்ரீ பரத ஆழ்வான் தானே -தஸ்மை -அந்த பரதன் -துஷ்யந்தன் பிள்ளை பரதன் இல்லை ஜடபரதன் இல்லை – –
உத்ப்தவர் ஸ்ரீ கிருஷ்ணன் பாதுகை -கொண்டு பத்ரியில் தபஸ்
வசிஷ்டர் -முதலில் சொல்லி -யோக ஷேமத்துக்காக-சொன்னாரே -பாதுகையை முன்னோர் எழுந்து அருளிய சிம்ஹாசனம் எழுந்து அருள
பண்ணலாமோ சங்கை பெருமாளுக்கு வர -வசிஷ்டர் சொல்ல செய்து கொடுத்து அருளினார் -ஸ்ரீ பாதுகா ஆராதனம் முதலில் பரதன்
திருவடி போகாத இடத்துக்கும் ஸ்ரீ பாதுகை வந்ததே அயோத்யைக்கு –
திரு விக்ரமன் ஒரு பாதுகை சம்பந்தமே பூமி பெற்றது –

நம் ஆழ்வார் தானே சரவலாக யோக ஷேமத்துக்கு காரணம்
பாவத்தையும் ராகத்தையும் தாளத்தையும் -பாதுகை -பரவும் படி செய்த ஸ்ரீ நாதமுனிகளை சொல்லும் -இத்தால்
அயோத்தி எம் அரசே –அரங்கத்தம்மா –காகுத்தா கண்ணனே என்னும் –திருவரங்கத்தாய்-என்னும் -சொல்லக் கடவது இறே
ஸ்ரீ ரெங்கன் திருவடி காதல் மூலம் வேதங்களை தமிழ் மறை ஆக்கி சடகோபன் –உன்னை ஸ்துதிகிறேன் ஆசார்யர் அனுக்ரஹம் மூலம் –
ஆசார்ய ரூபமாகவே உள்ளாய்- வகுள மாலை வாசனையும் இதில் உண்டே –
எழுத்துக்கள் கூட்டம் -அபர சம்ஹிதை -நவ ரத்ன வர்ண சமுதாயமும் உண்டே -ஸ்ரீ ராமாயணம் விட ஏற்றம் உண்டே
வால்மிகி உபகாரகர் அவரையும் ஸ்தோத்ரம் பண்ணுகிறார் இத்தால் -திவ்ய ஸ்தானம் -சத்ய லோகத்தில் இருந்து ஜகத் வந்தார்
ஸ்ரீ ரெங்கன் –அர்ச்சா மூர்த்தி உடன் ஸ்ரீ பாதுகை -கூட வர -சரஸ்வதி -பாரதம் வந்ததால் பாரதி ஆனது -பாதுகைக்கும் பாரதி என்ற பெயர்
பாதும் காதயாதி -பாதத்தை பேசி -பாதம் -சப்த ராசிகள் -புகழை பேசி –
அனகா-வேதம் கட்டளை இடும் -குற்றம் இல்லாத ஸ்ரீ ராமாயணம் -கதை போலே சொல்லி நம்மை திருத்தும் –

நித்ய சேவை ஸ்ரீ பாதுகை அதனால் குற்றம் இல்லாத சடாரி –ககுஸ்த சக்ரவர்த்தி மூலம் இங்கே வந்து –
முதல் அர்ச்சை ரெங்கன் தானே என் சிரசில் பட்டு குற்றம் அற்றவன் ஆக்கி அருளுவாய் –
பக்தர்கள் இடம் சென்று அனுக்ரஹிக்கிராய் -ராம சம்பந்தம் சரித்ரம் பேசுவதால் ஸ்ரீ ராமாயணம் தானே ஸ்ரீ பாதுகா சஹஸ்ரமும் -என்கிறார் –
இயற்ற வாக் -வசுதா ஸ்தோத்ரம் பூமிக்கு காத்து புற்று வால்மீகி -சர்ப்பம் பழக்கம் உண்டே -நானும் சர்ப்பத்தின் சிஷ்யன்
அப்புள்ளார் -சேஷ கல்பாது -சேஷன் போன்றவர் -ஆயிரம் வாயால் உபதேசித்தார் -சர்ப்பத்தின் பிள்ளை -அனந்த ஸூரி பிள்ளை தானே இவர்
ஸ்தோத்ரம் பண்ணினால் பாதுகைக்கு தோஷம் இல்லை என்கிறார் அடுத்ததில்
தனக்கு தோஷம் இல்லை என்கிறார் அடுத்ததில் –
ரெங்கன் நியமித்தான் -பாகவதர்களும் நியமித்தார்கள் –
வேத சிரஸ் அமர்ந்த பாதுகை என் தலை மேலும் இருந்ததே –
வால்மீகி மானசீகமாக தான் பாதுகையை பார்க்க நானோ ரெங்கன் சடாரியை நித்யம் இரண்டு கண்களால் காண்கிறேனே-
வால்மீகி அருளால் பாடுவேன்

அடுத்த ஸ்லோகம் வரை பாதுகை அழைத்து பேசாமல் ஆத்மகதமாக பேசுகிறார்
பாதுகை பற்றி பேசுவதால் கங்கா தீர்த்தம் போலே ரஷகம் இது -அநிஷ்டம் போக்கி இஷ்டம் கொடுக்கும் மழை நீர் தெரு நீர் கங்கையில்
சேர அவர்ஜநீயம் போலே என் உக்தியும் பாதுகையில் சேர -குற்றம் வாராதே –
அசூயை இல்லாமல் பாராயணம் செய்தால் பலம் உண்டே -கருணை யுடன் சாத்விகர் கொண்டாடட்டும்
ஸ்லோகம் -8–அனுஜ்ஞ்ஞ்யா கைங்கர்யம் -ரெங்கன் சாஷியாக -ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பிக்கிறார்
திருவடி பற்றி பேசாமல் ஸ்ரீ பாதுகையை பற்றி ஸ்துதிப்பேன் -பூர்த்தி பண்ண நீ என்னை அனுக்ரஹிக்க வேண்டும் —
கம்சாரி -கம்சன் சத்ரு -மணி பாதுகை –உலகைத் தாங்கும் அவனை நீ தாங்கி உயரத்தையும் கொடுத்து -உத்தம கதியும் கொடுத்து -அழகிய நடை –
சாஸ்திர ஞானம் கொண்ட மேதைகள் வால்மீகி போன்றவர் -மகித மகிமானம் -ஸ்துவந்தி -உன்னுடைய அனுக்ரஹத்தால் —
கர்ணாம்ருதமாய் இருக்கும் -காதின் தினவை போக்கும்
அஹம் து அல்ப-மந்த புத்தி -தத் வித்யா அதி ஜல்பாமி பிதற்றுகிறேன் -அதுவும் உனது அனுக்ரஹத்தால் ரசிக்கும் படி உள்ளதே
11 ஸ்லோகம் -மூன்று இரட்டைகள் -ஞானாதி -அனந்த கல்யாண குணங்கள் -திருவடியை பாதுகாக்கும் நீ -அல்பனான நான் ஸ்துதிக்க
நீயோ நித்ய நிர்மலம் -அழுக்கு ஆகாசத்தை அழுக்கு ஆக்க முடியாதே -சுரஸ் சிந்து தேவ கங்கை -பகவதி பூஜிக்கத் தக்கது
நாய் குடிக்க -கங்கைக்கு தோஷம் வராது நாய்க்கு விடாய் போகும் பாவங்கள் போகுமே –
அல்பன் -துஷ்ட புத்தி -ச்நேஹம் இல்லாமல் -புகழை-அமிர்தம் நக்கி -நினைந்து பயம் இல்லாமல் வெட்கமும் இல்லாமல் -உள்ளேன் –
இந்த கங்கை நாய் -உதாரணம் சொல்லி ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ ஸ்தவம்

பரிகாசம் செய்யும் படி இருந்தாலும் -தோப்பு மா மரம் பலன்கள் விழ -பொறுக்குமா போலே –
சோம்பேறி ஊதி பழம் விழும் என்று பார்ப்பது போலே உள்ளேன் –
பரேஷா -ஈஷா கடாஷம் பரேஷா அருள் கடாஷம் -யாமத்துக்கு உள்லேமுடிப்பேன் பரிகாசம் செய்ய முடியாதே -என்றுமாம்
பக்தி முற்றி வரம்பில்லாமல் பேசுவேன் -உண்மை நிலையை அறிவிக்கிறார் -விதூஷகன் போலே வும் கம்பீரமாகவும் இருக்கும் –
சொற்கள் கூட்டம் -32 பந்தத்தி பாடி முடிப்பேன் – -வேங்கடேச கவி -மார்பு தட்டி நம்பிக்கை வெளியிடுகிறார்
ரத்ன பாதுகையே -பதங்கள் வந்து சேரும்படி –ஸ்ரீ ரெங்கன் நடை சப்தம் போலே -சந்திர சேகரன் -தலையில் கங்கை
சிவன் தலை ஆட்ட -கங்கையும் ஆட -அருவி கொட்டுவது போலே -இருக்க வேண்டும் -வைஷ்ணவர்களில் சிறந்த சிவன் –
ஸ்ரீ சடாரி தாங்கிக் கொண்டதால் சக்தன் ஆனேன் -பரதன் ஆராதித்த பாதுகை அன்றோ
வேதம் மீண்டதே -அம்மாவை பிள்ளை பாடுவது போலே பாடுகிறேன் -பரிகாசம் எம்பெருமான் பண்ணினாலும் அதுவே சந்தோஷம்-
பல்வகை அர்த்தங்களைக் காட்டும் எனது சொற்கள் -நேராகவும் லஷணையாகவும் தொனியாகவும் –
ஸ்ரீ ரெங்கபதி ரத்ன பாதுகை -நீ -கேட்டு மகிழ வேண்டும் –ஸ்ரீ ரெங்கனும் மகிழ்வான் -அத்தைக் கண்டு நானும் மகிழ்வேன் –
அவார கருணா -தவ -சதா சகஸ்ரம் பாடுவேன் -வேதம் போலேவே இருக்கும் -1000 பாடினாலும் 100.000 பாடினாலும்
உன் பெருமையைச் சொல்லி முடிக்க முடியாதே –

———————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-32-பல பத்ததி– பேற்றுப் படலம் -ஸ்லோகங்கள் -971-1008-

March 22, 2016

உபாக்யாதாம் ததாத்வேந வஸிஷ்டாத்யை: மஹர்ஷிபி:
உபாய பலயோ: காஷ்டாம் உபாஸே ராம பாதுகாம்—-971-

வஸிஷ்டர் போன்ற மஹரிஷிகளால் உபாயத்தின் எல்லையாக உள்ளது என்று கூறப்பட்டதாக
ஸ்ரீராமனின் பாதுகையை நான் உபாஸனை செய்கிறேன்.

ஸ்ரீ பாதுகையே -உபாயம் -பலம் -இரண்டுமாம் என்றும் –
பார்க்கப் போனால் உபாயம் பலம் இரண்டுக்கும் கடைசி எல்லை நிலம் என்றும்
வசிஷ்டர் வால்மீகி போன்றோரால் நிஷ் கர்ஷம் செய்யப்பட்டுள்ளது –
அத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ ராம திருப் பாதுகையை உபாசிக்கிறேன் –
ஸ்ரீ பாதுகையே பல எல்லை நிலம் –

——————————————————————————-

நிவிசேய நிரந்தரம் ப்ரதீத:
த்ரிதசாநாம் விபவம் த்ருணாய மத்வா
ஸவிதே தவ தேவி ரங்க பர்த்து:
பத லீலா கமலம் ஸமுத்வ ஹந்த்யா:—972-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! தேவர்களின் ஐச்வர்யங்கள் அனைத்தையும் அற்பமாக உள்ள
பொருள்களுக்குச் சமமாக எண்ணி, அவற்றைத் தள்ளி ஸ்ரீரங்கநாதனின் திருவடி என்னும்
விளையாட்டுத் தாமரை மலரை தாங்கியபடி உள்ள உன் அருகில் நான் நின்று கொண்டு,
உன் மீது மிகவும் ப்ரீதியுடன் வாழக்கடவேன்.

ஸ்ரீ பாதுகா தேவியே எனக்கு தேவர்களுடைய ஐஸ்வர்யம் வெறும் புல் போலே தான் -நான் மதிப்பது
ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடி ஆகிற விநோத விளையாட்டுத் தாமரைப் பூவை நன்கு ஏந்தி இருக்கிற
உன்னருகில் இருந்து கைங்கர்யம் செய்து ஸ்ரீ பாதுகா சேவகன் என்ற பிரசித்துக்கு ஈடாக செயல் பட வேண்டும் –

——————————————————————————-

கிம் அஹம் மணி பாதுகே த்வயா மே
ஸுலபே ரங்கநிதௌ ஸ்ரியா ஸநாதே
கரணாநி புந: கதர்த்த யேயம்
க்ருபண த்வார துராஸிகாதி துக்கை:—-973–

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியார் என்னும் நிதியுடன் கூடியதாக,
மிகவும் உயர்ந்த நிதியாக ஸ்ரீரங்கநாதன் எனக்கு உள்ளான்.
அவன் உன் மூலம் மிகவும் சுலபமாகக் கிடைக்கக் கூடியவனாகவும் இருக்கிறான்.
இப்படி உள்ளபோது, அற்பமானவர்கள் வீட்டு வாசலில் காத்து நிற்பது போன்ற துன்பங்கள் மூலம்
எனது இந்த்ரியங்களை நான் வருத்துவேனோ?

ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ பெரிய பிராட்டி யோடு கூடிய ஸ்ரீ ரங்க நாதனே ஸ்ரீ ரங்க நிதியாம்-
அது எளிதில் எனக்கு கிடக்கலாயிற்று -உன் மூலம் அதன் பின் மறுபடியும் முன் ஜன்மங்கள் போல்
லோபிகள் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டுக் காத்துத் துன்பப்பட்டுக் கரணங்களை
தாழ்ந்த திசைகளில் செலுத்திக் கெடுவேனோ –

——————————————————————–

ஸ்க்ருதபி அநுபூய ரங்க பர்த்து:
த்வது பஸ்லேஷ மநோ ஹரம் பதாப்ஜம்
அபுநர்ப் பவ கௌதுகம் ததைவ
ப்ரசமம் கச்சதி பாதுகே முநீநாம்—974-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னையே எப்போதும் ஆராதனை செய்தபடியும், த்யானித்தபடியும் உள்ளவர்களுக்கு,
உன்னுடன் சேர்ந்து நிற்பதான ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள், மேலும் அழகாகத் தோன்றுகின்றன.
அந்த நேரத்தில் அவ்விதம் சேவிப்பவர்கள் முனிவர்களாகவே இருந்தாலும், ”மறுபிறவி எடுக்கக்கூடாது”, என்று
எண்ணம் அப்போதே அடங்கிவிடுகிறது
(மீண்டும் பிறவி எடுத்து, பாதுகையுடன் கூடிய ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைச் ஸேவித்தபடி
இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுகிறது).

ஸ்ரீ பாதுகையே அழகான ஸ்ரீ ரங்க நாதனின் திருவடித் தாமரையை உன்னுடன் சேர்த்தியாக ஒரு தரம் சேவித்து அனுபவித்தால் போதும் –
முனிவர்கள் கூட மீண்டும் மீண்டும் சேவிக்கும் அனுபவம் பெற வென்று மறு பிறப்பில்லாமை என்ற
தமது பழைய மநோ ரதத்தை அழித்துக் கொண்டு மறு படி மனிதப் பிறவி வேண்டும் என்று கேட்பர் –

————————————————————————-

அபரஸ்பர பாதிநாம் அமீஷாம்
அநிதம் பூர்வ நிரூட ஸந்ததீநாம்
பரத வ்யஸநாத் அநூந ஸீம்நாம்
துரிதாநாம் மம நிஷ்க்ருதி: த்வம் ஆஸீ:—975-

ஸ்ரீ பாதுகையே எவ்வளவு துயரங்கள் ஓயாமல் வருகின்றன -அநாதியாக தொடர்ந்து வேரூன்றி வருகின்றன –
என் துயரங்கள் ஸ்ரீ பரதாழ்வான் உடைய வற்றை விடக் குறந்தவை இல்லை -அவற்றுக்கு நீயே ப்ராயச் சித்தமானாய் –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வளர்ந்தபடி உள்ளது;
”இது முதல்” என்று கூற இயலாமல், எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ளது; உறுதியாகவும் உள்ளது;
பரதனுக்கு உண்டான துன்பத்தைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது –
இப்படியாக உள்ள எனது பாவங்களுக்கு ஏற்ற ப்ராயச்சித்தமாக நீயே ஆகிறாய்.

அபரஸ்பர=எப்பொழுதும் – பாதிநாம்=மேன்மேலும் வ்ருத்தியடைகின்றதும் –
அநிதம்பூர்வம்=இதுதான் முதல் என்றில்லாமல் அநாதியானதும் – நிரூட=த்ருடமானதும் –
ஸந்த்தீநாம்=வரிசைகளை யுடைத்தாயிருக்கிறதும் – பரத:=ஸ்ரீபரதாழ்வானுடைய –
வ்யஸநம்=துக்கத்தைக் காட்டிலும் – அநூந: அதிகமான – ஸீம்நாம்=எல்லையை உடைத்தாயிருக்கிறதுமான –
மம=என்னுடைய – துரிதநாம்=பாபங்களுக்கு – நிஷ்க்ருதி=இல்லாமல் – த்வம்=நீ – ஆஸீ:=ஆக்குகின்றாய்.

ஹே! பாதுகே! பரதாழ்வான் இராமனைப் பிரிந்து எவ்வளவு வருந்தி துடித்திருப்பான்?
இந்த துக்கம் அவனுடைய பாபத்தினால் அன்றோ ஏற்பட்டிருக்க வேண்டும்.
அத்தகைய பரதனைக் காட்டிலும் மிகக் கடுமையான பாபி நான்!
ஆனாலும் பரதனது பாபங்கள் அனைத்தும் அவன் உன்னை யடைந்ததும், ஒரு நொடியில் நசித்து போயிற்று.!
அது போன்று நானும் உன்னை யடைந்து உன் பரிபூர்ண கடாக்ஷத்தினை பெற்றபின்பு அநாதியான என்னுடைய
மாளாத வல் வினைகள் அப்போதே யன்றே நசித்துப் போயிருக்கக் கூடும்..!
மோக்ஷத்தினை அடையப் பெற்றவனாக(முக்ததுல்யனாக) அன்றோ நான் உன்னை இப்போது அனுபவிக்கின்றேன்!

பாதுகைகளையோ, ஆழ்வார் ஆச்சார்யர்களின் திவ்ய ஸூக்திகளை யாரொருவர் த்யானம், ஆராதனம்
முதலானவைகளைச் செய்து ஆராதிக்கின்றார்களோ அவர்களது மனதில் பாப எண்ணங்களேத் தோன்றாது எப்படி
பகவானோ அப்படியேதான் ஆழ்வார் ஆச்சார்யர்களும்!. மனமது, மமதையற்று தீதற்றுயிருப்பின்,
அந்த பாகவதனின் உள்ளம் ஒரு கோவிலாகும். இறை கூத்தாடும் கூடமாகும். மோக்ஷம் கை கூடும்.!

———————————————————-

த்வத் உபாஸந ஸம்ப்ரதாய வித்பி:
ஸமயே ஸாத்வத ஸேவிதே நியுக்தா:
பரத வ்ரதிநோ பாவாம் புராசிம்
கதிசித் காஞ்சந பாதுகே தரந்தி—976–

தங்கமயமான பாதுகையே! பாஞ்சராத்ர ஆகமத்தைப் பின்பற்றுபவர்கள் மூலம் கைக்கொள்ளப்பட்ட முறையில்,
உன்னை எப்படி ஆராதனை செய்வது என்று நன்று அறிந்தவர்கள் மூலம், ஒரு சிலர் உன்னை ஆராதிக்க நியமிக்கப்பட்டனர்.
இப்படியாக பரதன் போன்று விரதம் மேற்கொண்ட சிலர், தாண்ட இயலாத ஸம்ஸாரம் என்ற கடலைக் கடக்கின்றனர்.

ஸ்ரீ பொற் பாதுகையே ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திர கிரமத்திலே திருவாராதனம் செய்யும் சம்ப்ரதாயத்தை அறிந்தவர்களால்
கைங்கர்யத்தில் நியமிக்கப்பட்டு ஸ்ரீ பரதாழ்வான் வழியில் விரத நியமத்துடன் இருந்து
உனக்கு சேவை செய்த சிலர் சம்சாரக் கடலை நீந்துகின்றனர்

——————————————————————–

அலம் அச்யுத பாதுகே யதாவத்
பவதீ யச்ச பதம் த்வத் ஏகதார்யம்
இதரேதர பூஷிதம் தத் ஏதத்
த்விதயம் ஸம்வநநாய சேதஸோ ந:—977-

அடியார்களை நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீயும், உன்னால் மட்டுமே தரிக்கப்படுவதாக உள்ள
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் – ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் அலங்காரமாகவே உள்ளீர்கள்.
இப்படியாக உள்ள நீங்கள் எங்கள் மனதை முழுவதுமாகக் கவர்வதற்குப் போதுமானதாக உள்ளீர்கள்.

ஸ்ரீ அச்யுத திருப் பாதுகையே -நீயும் திருவடித் தாமரையும் அபூர்வமான சேர்த்தி -நீ மாத்திரமே திருவடியைத் தரிக்கக் கூடும்
நீங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அலங்காரமாய் விளங்குவது என் மனசை வசப்படுத்துவதற்குச் செவ்வனே அமைந்து இருப்பது –
வேறு பல திரு ஆபரணங்கள் திரு அவயவங்கள் இருக்கலாம் -ஒன்றுக்கு ஓன்று பூஷணமாகவும் இருக்கலாம் –
ஆனால் எந்த ஆபரணமும் உரிய அவயவத்தைத் தாங்குவது என்று கிடையாதே –

——————————————————————

அநந்ய ஸாமாந்யதயா முராரே:
அங்கேஷு அவாப்தேஷு கிரீட முக்யை:
பாதாவநி த்வம் நிஜம் ஏவ பாகம்
ஸர்வாத்ம ஸாதாரணதாம் அநைஷீ:—978–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் க்ரீடம் முதலானவற்றால் அலங்கரிக்கப்பட்ட
அவனது அவயவங்கள், அந்தந்த ஆபரணங்களுக்காக மட்டுமே இருக்கின்றன.
அந்த அவயவங்கள் மற்றவர்களுக்குப் பொதுவாக இருப்பதில்லை.
ஆனால் உனக்கு மட்டுமே சொந்தமான திருவடிகளை “அனைத்து ஆத்மாக்களுக்கும் பொது”, என்று நீயே ஆக்கியுள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே மற்ற திருவாபரணங்கள் கிரீடம் முதலியவை அந்தந்த அவயவத்தை தம் தமக்கே முற்றூட்டாக வைக்கப்பட்டவை
என்ற ஈதியில் கொள்கின்றன -நீ உனக்கு உரிய திருவடி என்னும் திரு அவயவத்தை சகல ஆத்மாக்களுக்கும் பொது
ஆஸ்ரயணீயம் என்று அமைத்து இருக்கிறாயே -உனது பெரும் தன்மை அசாதாராணம் ஆனது தான் –

——————————————————————————–

ஸமாஸ்ரிதாநாம் மணி பாதுகே த்வாம்
விபஸ்சிதாம் விஷ்ணு பதே அப்ய நாஸ்தா
கதம் புநஸ்தே க்ருதிநோ பஜேரந்
வாஸாதரம் வாஸவ ராஜதாந்யாம்—-979-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னையே அடைந்தவர்களுக்கு ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மீதும்,
ஸ்ரீவைகுண்டத்தின் மீதும் கூட ஆசை இருப்பதில்லை.
இப்படி உள்ள போது அவர்கள் இந்த்ரனின் பட்டணமான அமராவதி நகரத்தில் வசிக்கவேண்டும் என்ற ஆசையை எப்படி அடைவார்கள்?

ஸ்ரீ மணி பாதுகையே உன்னை ஆஸ்ரயித்தவர் பகவான் திருவடியிலோ ஸ்ரீ வைகுண்டத்திலேயோ மனம் வையார்
அவர்களுக்கு உன்னிடம் மட்டுமே ஆசை -அத்தகைய பெரியோர் இந்த்ராதி பதவிகளில் எங்கனம் ஆசை கொள்வர்-

———————————————————-

விம்ருஸ்ய ரங்கேஸ்வர பாத ரக்ஷே
வார க்ரமம் நூநம் அவாரணீயம்
பத்மாக்ரஹேபி ஸ்ப்ருசதீ ப்ரதீதா
ஸ்தூலேந ருபேண வஸுந்தரா த்வாம்—-980-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் பாதுகையான உன்னை
ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவி என்று ஒருநாள் ஒருவர் முறை என, அவன் திருவடிகளில் ஸமர்ப்பிக்கின்றனர்.
ஆனால் உன்னிடம் உள்ள ஆசை காரணமாக பூதேவி உன்னை எப்போதும் தொட்டபடி இருக்கவேண்டும் என்ற எண்ணினாள்.
இதனால்தான் மற்றவர்களின் முறை நாள்களிலும் கூட, தான் பூமி என்ற ஸ்தூல வடிவமாக நின்று,
உன்னைத் தொட்டு மகிழ்ந்தபடி உள்ளாள் போலும்.

ஸ்ரீ ரங்க நாத பாதுகையே ஏற்பாடு உண்டாம் -ஸ்ரீ பாதுகையை பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது ஸ்ரீ தேவி –
அடுத்த தடவை ஸ்ரீ பூமி தேவி -அப்புறம் ஸ்ரீ நீளா பிராட்டி -அவரவர் தம் முறை வரும் பொது அத்தைச் செய்வார்கள்
இதைத் தடுக்கவோ மாற்றவோ முடியாது என்று -ஸ்ரீ லஷ்மி தேவி முறையிலும் ஸ்தூல உருவில் -தரை என்ற உருவில்-
ஸ்ரீ பூமா தேவி உன்னைத் தொட்டு மகிழ்கிறாள் போலும் –

——————————————————————-

அபி ரக்ஷஸி த்வம் அநபாயநிதிம்
மணி பாதுகே மதுபிதஸ் சரணம்
அத ஏவ தேவி தத் அநந்ய தநா:
சிரஸா வஹந்தி பவதீம் க்ருதிந:—-981–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்ற மிகவும் உயர்ந்த
அழிவற்ற செல்வத்தை நீ எப்போதும் காத்தபடி உள்ளாய். இதனால்தான், அந்தத் திருவடிகளைத் தவிர
தங்களுக்கு வேறு எதுவும் உயர்ந்தது அல்ல என்று எண்ணுபவர்கள், உன்னைத் தங்கள் தலையில் தாங்குகிறார்கள்.

ஸ்ரீ மணி பாதுகா தேவியே அடியார்களுக்கு பெரும் தநம் பகவானுடைய திருவடியே -அது அழிவு படாத பெரும் புதையல் –
அந்தப் புதையலை நீ காத்து வருகிறாய் -அதனால் உன்னிடம் கௌரவம் அதிகமாகி திருவடி தவிர வேறு தனம் ஏதும் கொள்ளாத
புண்ய ஆத்மாக்கள் உன்னைத் தம் தலையிலே தரித்து பூரிக்கின்றனர் –
ஸ்ரீ பாதுகை தன் உச்சியில் வைத்துக் கொண்டாடுவது போலேவே பாகவதரும் திருவடியைப் பூஜிப்பர் –
அப்போது பாகவதர் ஸ்ரீ பாதுகை சம தசை ஏற்படுகிறதே
பின்பு ஸ்ரீ பாதுகையைத் தலை மேல் கொள்வாரோ என்ற ஐயம் கொள்ள வேண்டியது இல்லை
ப்ரஹ்ம சாம்யா பத்தி போகம் பெற்ற போதிலும் சேஷ பூதராகவே இருப்பார் –
அதே போலே ஸ்ரீ பாதுகையுடன் சமான தசையிலும் ஸ்ரீ பாதுகா சேஷத்வம் சித்திக்கும் -இதுவே சம்ப்ரதாய சாரம் –

—————————————————————————————————-

பதயுகம் இவ பாதுகே முராரே
பவதி விபூதிர் அகண்டகா த்வயைவ
கதம் இவ ஹ்ருதயாநி பாவுகாநாம்
த்வத் அநுபவாத் உபஜாத கண்டகாநி—-982-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் இரண்டும் உன்னால்
எப்படி முள் குத்தாமல் காப்பாற்றப்படுகிறதோ அது போன்று, இந்த உலகமும் உன்னால் சத்ருக்கள் இல்லாமல் ஆக்கப்படுகின்றது.
இப்படி உள்ள போது, உன்னைத் த்யானம் செய்பவர்களின் இதயங்களில் மட்டும், உனது அனுபவம் காரணமாக கண்டகம்
(கண்டகம் என்றால் முள் என்று பொருள். ஆனால் இங்கு மயிர்க்கூச்சல் என்று சிலேடையாக வந்தது) உள்ளதாக இருக்கின்றது?

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடிக்கு -அவர் ஐஸ்வர்யம் ஆன இந்த உலகிற்கு -இரண்டுக்கும் கண்டகங்களை நீக்குகிறாய் -ஆனால் ஒரு ஆச்சர்யம் –
பெரியோர்களான ரசிகர்கள் தம் உள்ளங்களில் உன்னை அனுபவித்ததன் விளைவு தம் திரு மேனியின் கண்டக உற்பத்தி என்று காண்கிறார்களே
ஸ்ரீ பாதுகைக்கு கண்டகம் -முள் கல் முதலானவை -உலகிற்குக் கண்டகம் அசுரர் துர்ஜனம் போக்கிரி
ரசிகருக்கு கண்டகம் உடல் முழுவதும் மயிர்க் கூச்சு எறிப்பு –

———————————————————————————

ஜ்ஞாந க்ரியா பஜந ஸீம விதூர வ்ருத்தே:
வைதேசி கஸ்ய தத் அவாப்தி க்ருதாம் குணாநாம்
மௌளௌ மமாஸி மது ஸூதந பாதுகே த்வம்
கங்கேவ ஹந்த பதித விதிதைவ பங்கோ:—983-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஞானயோகம், கர்மயோகம் மற்றும் பக்தியோகம்
ஆகியவற்றின் எல்லைகளுக்கு வெகுதூரத்தில் நான் உள்ளேன். அவற்றைப் பெறுவதற்குரிய குணங்களுக்கும் அப்பால் நான் உள்ளேன்.
இப்படிப்பட்ட என் தலை மீது, முடவன் ஒருவன் கங்கையில் விழுந்தது போன்று, நீயாகவே வந்து அமர்ந்தாய். என்ன வியப்பு!

ஸ்ரீ பெருமாளின் திருப்பாதுகையே நான் ஜ்ஞான கர்ம பக்தி யோகங்களின் தொடக்கமான முதல் எல்லைக்கே வெகு தூரத்தில் இருக்கிறவன் –
அவற்றைச் செய்ய அத்யாவச்யமான ஜ்ஞானம் சமம் தமம் போன்ற குணங்களுக்கு அந்த நாட்டிலேயே இராமல் வேறு ஒரு நாட்டில் இருப்பவன்
என் தலையின் மீது நீ அமர இசைந்தது எங்கனம் -முடவன் தலையில் தன்னிச்சையாக கங்கை தைவ வசமாக விழுந்தால் போலே இருக்கிறதே –

—————————————————————————————

ரங்கேஸ் வரஸ்ய யதிதம் மணி பாத ரக்ஷே
பாதாரவிந்த யுகளம் பவதீ ஸமேதம்
பும்ஸாம் உபோஷித விலோசந பாரணார்ஹம்
க்ஷீரம் தத் ஏதத் இஹ சர்க்கரயா ஸமேதம்—984-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடன் எப்போதும் சேர்ந்தே உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள்,
தீயவை மட்டுமே அதிகமாக உள்ள இந்த உலகத்தில், நன்மை பயக்கும் மேன்மை கொண்டவையாக உள்ளன.
இவற்றையும், உன்னையும் எண்ணியபடி ஒரு சிலர் உபவாஸம் (உண்ணாநோன்பு) இருக்கக்கூடும்.
அவர்களுக்கு நீங்கள் இருவரும் கண்களால் பருகப்படுகின்ற சர்க்கரை இட்ட பால் போன்று உள்ளீர்கள்.

ஸ்ரீ மணி பாதுகையே -உன்னோடு சேர்ந்து இந்த திருவடித் தாமரை இணை -அசாதாராண சேர்த்தியாய் இருக்கிறதே –
இது போக்கியம் மிக்கது -இது போன்ற அழகு இனிமை சேவிக்கக் கிடைக்காமல் மனிதர் கண்கள் உபவாசம் இருந்தன போலும்
இந்த சேர்த்தியை சேவித்தது பாரணைக்கு ஒப்பாம் -சர்க்கரை சேர்த்த பால் போல போக்யமானதே –

———————————————————————————-

காமாதி தோஷ ரஹிதம் த்வத் அநந்ய காமா:
கர்ம த்ரயோதச விதம் பரிசீல யந்த:
பாதாவநி த்வத் அநுஷங்க விசேஷ த்ருச்யம்
ஏகாந்திந: பரிசரந்தி பதம் முராரே:—-985-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! உன்னைத் தவிர வேறு எதனையும் தங்கள் பயனாகக் கொள்ளாமல் உள்ள,
உன்னை மட்டுமே நம்பியுள்ள உத்தமர்கள் செய்வது என்ன? பலனில் விருப்பம் கொள்வது முதலான தோஷங்கள் இல்லாத
பதின்மூன்று விதமான கர்மங்களை இயற்றிபடி, உன்னுடைய சேர்க்கை மூலம் மிகவும் அழகு பெற்ற
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை உபாஸித்தபடி உள்ளனர்.

பதின்மூன்று கர்மங்கள் = எம்பெருமான், அந்தணன், குரு, ஞானிகள் ஆகியவர்களை ஆராதிப்பது,
சுத்தம், நேர்மை, அஹிம்ஸை, ப்ரம்மசர்யம் என்று உடலால் செய்யப்படும் ஐந்து கர்மங்கள்;
நல்ல சொற்கள் கூறுதல், ஸத்யம் பேசுதல், வேதம் ஓதுதல் என்று வாயால் செய்யப்படும் மூன்று கர்மங்கள்;
மகிழ்வுடன் இருத்தல், பரம்பொருளை எப்போதும் த்யானித்தல், மனம் அடக்குதல், உலக விஷயங்களை எண்ணாமல் இருத்தல்,
அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் என்பதான மனதால் செய்யப்படும் ஐந்து கர்மங்கள்.

ஸ்ரீ பாதுகையே உன்னிடமே அநந்ய பிரயோஜனராய் -உன்னையே தைவமாக கொண்ட பரமை காந்திகள்
தங்கள் அனுஷ்டானத்தில் பலன் இச்சை மமதை தான் கர்த்தா என்கிற அஹங்காரம் போன்ற தோஷங்கள் இல்லாதபடி
காயிக வாசிக மானச கர்மாக்கள் பாவ சுத்தியுடன் செய்து
உன் சேர்க்கையுடன் சிறப்பாக துலங்கிய திருவடி இணையை அண்டிக் கைங்கர்யம் செய்கின்றனர்
ஐந்து வித காயிக கர்மாக்கள் -தேவ குரு பண்டித போஜனம் சுசித்தன்மை நேர்மை அஹிம்சை பிரம்மச்சர்யம்
மூன்று வித வாசிக கர்மாக்கள் -நற்சொல் வாய்மை வேதம் ஓதுவது
ஐந்து வகை மானசிக கர்மாக்கள் -சந்தோஷம் பிரஹ்ம சிந்தனம் மனதை அடக்குவது
பிறர் இடம் சாந்தனாய் இருப்பது அனைவரும் வாழ நினைப்பது

———————————————————————-

மௌளௌ ஸ்திதா மகபுஜாம் அதவா ஸ்ருதீநாம்
தத் ரங்கராஜ சரணாவநி வைபவம் தே
அஸ்மாத்ருசாமபி யதி ப்ரதிதம் ததஸ் ஸ்யாத்
ஸௌலப்யம் அம்ப ததிதம் தவ ஸார்வ பௌமம்—-986-

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! தாயே! நீ வேதங்களின் தலைகளில் உள்ளாய் அல்லது வேதங்களின்
தலைப்பகுதியான உபநிஷத்துக்களில் உள்ளாய்; இது உனது பூர்ணமான மேன்மையாக உள்ளது.
ஆனால் இப்படிப்பட்ட நீ எங்களைப் போன்ற தாழ்ந்தவர்களின் தலைப்பகுதிகளில் நின்றால் அல்லவோ,
அனைத்து சாஸ்திரங்களும் கூறப்படுகின்ற உனது ஸௌலப்யம் (எளிமை) அனைவராலும் அறியப்பட்டதாகும்?

ஸ்ரீ ரங்க நாத திருப் பாதுகையே நீ யாக ஹவிஸ் உண்ணும் தேவர்கள் தலையில் -வேதாந்தங்களின் திருமுடியில் –
வேதாந்த அர்த்தமாக -இருக்கிறாய்
அவ்வளவு பெருமை இருந்தும் எங்களைப் போன்ற நீசர்கள் தலைக்கும் வருகிறாயே -உனது சௌலப்யம் பிரசித்தம் அன்றோ –

——————————————————————————————

ஸ்வப்நேபி சேத் த்வம் அஸி மூர்த்தநி ஸந்நிவிஷ்டா
நம்ரஸ்ய மே நரக மர்தந பாத ரக்ஷே
ஸ்தாநே தத் ஏதத் இஹ தேவி யதஸ் ஸமாதௌ
ஸந்தோ விதுஸ்தமபி தாத்ருச புத்தி கம்யம்—-987–

நரகாசுரனை வதம் செய்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது ப்ரேமை கொண்டு உன்னை எப்போதும்
வணங்கியபடி உள்ள எனது கனவில் நீ தோன்றி, எனது தலையில் அமரவேண்டும். அப்படி நீ அமர்ந்தாலும்,
அந்தச் செயல் பலனை அளிக்கவல்லதே ஆகும். காரணம் – யோகநிலையில் உள்ள முனிவர்கள்
ஸ்ரீரங்கநாதனை இப்படியாக மானஸீக நிலையில் கண்டு அல்லவோ நன்மை அடைகிறார்கள்?

ஸ்ரீ பகவானின் திருப் பாதுகா தேவியே என் ஸ்வப்னத்தில் கூட வணங்கி இருந்த என் தலையிலே அமர்ந்து அருளினாயே
அது மிகவும் பொருத்தம் -யோக நிலையில் பகவான சாஷாத் கரிப்பது ஸ்வப்ன புத்தியில் காண்பது போலே என்பர்
யோக சாத்தியமானது எனக்குக் கிடைத்து விட்டதன்றோ
ருக்மாபம் ஸ்வப்னதீ கம்யம் வித்யாத்து புருஷம் பரம் -மனு ஸ்ம்ருதி -122-122 –
எல்லா இந்திரியங்களும் செயல் அற்று இருக்க மனம் ஒன்றே விளித்து நிற்பது ஸ்வப்னம் யோகம் இரண்டுக்கும் பொது தர்மம்
இந்த ஸ்லோக அனுபவம் ஸ்வாமி இந்த திருக் காவ்யம் அருளிச் செய்ய தொடங்கிய போது ஏற்பட்ட நிகழ்ச்சி என்பர் –

—————————————————————————–

பத்தாஞ்சலி: பரிசரந் நியமேந ரங்கே
விஸ்ராணித அச்யுத நிதிம் மணி பாதுகே த்வாம்
கஸ்யாபி கூணித த்ருசோ தநிந: புரஸ்தாத்
உத்தா நயேய ந கதாபி கரம் விகோசம்—988–

இரத்தினக்கற்கள் இழைக்கப்ப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் என்னும் நழுவாத பெரும் நிதியை அளிப்பவளாக நீ உள்ளாய்.
இப்படிப்பட்ட உன்னை நான் எப்போதும் பற்றியவனாக, உனக்குக் கைங்கர்யம் செய்பவனாக இருப்பேனாக.
இதனால் பயத்தை ஏற்படுத்துகின்ற கோபமான பார்வை பார்க்கின்ற எந்த ஒரு செல்வந்தன் முன்பும் நான் எனது விரித்த கையை ஏந்த மாட்டேன்.

ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ ரங்க ஷேத்ரத்தில் நீ அச்யுதன் என்னும் பெரும் நிதியைத் தருகிறாய் –
அதனை ஒட்டி கிரமமாக எப்போதும் கை கூப்பி வணங்கி வருகிறவன் நான்
அப்படிப்பட்ட நான் பாதி மூடிய கண்களுடன் கையை விரித்துக் கொண்டு -சங்கோசப் பட்டாவது ஒருவன் முன்பும் நிற்கக் கடவேன் அல்லேன்

————————————————————–

த்வயி அர்ப்பிதேந சரணேந ஸத்த்வபாஜ:
பாதாவநி ப்ரதித ஸாத்விக பாவத்ருச்யா:
ரங்கே சவத் விதத்தே முஹுரங்க ஹாராந்
ரங்கே மஹீயஸி நடா இவ பாவு காஸ்தே—-989–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது வைக்கப்பட்ட திருவடிகள் கொண்ட ஸ்ரீரங்கநாதன் தனது அவயவங்கள் அசைத்து
பலவிதமான நடைகள் செய்து ஸஞ்சாரம் செய்கிறான்.
இது போன்று ஒரு சிலர் உன்னிடம் தங்கள் அனுஷ்டானத்தை அர்ப்பணம் செய்கிறார்கள்.
இதனால் அவர்கள் நல்வழி பெற்று, ஆனந்தம் அடைந்து, கண்ணீர் பெருகி, மேன்மையும் அடைகின்றனர்.
இப்படியாக உனது மேன்மையை அடைந்த அப்பெரியோர்கள், ஸ்ரீரங்கநாதன் போன்று மிகவும் பெரியதான
ஸ்ரீரங்கம் என்ற அரங்கில் ஆட்டக்காரர்கள் போன்று, தங்களையும் மறந்து, அவயவங்களை அசைத்து ஆடுகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே நடனன் ஒருவனுடைய நாடைத்தை ரசிக்கிறவர் அவன் போலே உணர்ச்சி வசப்பட்டு அவனோடு சாம்யம் அடைவது உலகியல் –
ஸ்ரீ ரங்க நாத திருப் பாதுகையை அனுபவித்து கைங்கர்ய ரசம் அறிந்த பெரியோரும் இத்தகைய பகவத் சாம்யத்தை எய்துகின்றனர்
கஹ கதி சிம்ஹ கதி போன்றவற்றை காட்டி அருளுகிறார் உன்னிடம் திருவடியை வைத்து -காண்டற்கு இனிய நாட்யம் இவை
அதை ரசிப்பவர் ஆனந்த பாஷ்யம் மயிர்க் கூச்செறிப்பு அடைந்து -சாத்விக தன்மையால் –
உன் சேவையில் ஈடுபட்டு புளகாங்கிதம் அடைகிற ரசிக மகான்கள்
பெருமாளுடன் சாம்யம் தோன்றும்படி ஸ்ரீ ரங்கம் ஆகிய அரங்கில் அங்கங்களை ஆட்டி ஒப்புமை காட்டுகின்றனர்

———————————————————————————————————

யேந ஸ்திதா சிரஸி மே விதிநாதுநா த்வம்
தேநைவ தேவி நியதம் மம ஸாம்பராயே
ல‌க்ஷீகரிஷ்யஸி பதாவநி ரங்கநாதம்
லக்ஷ்மீ பதாம்புருஹ யாவக பங்க லக்ஷ்யம்—-990-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! நீ இப்போது எனது எந்தப் புண்ணியத்தின் பலனாக என் தலையில் உள்ளயோ,
“இனி இங்கிருந்து செல்லமாட்டேன்”, என்று உறுதியுடன் நிற்கிறாயோ – அதே காரனத்தினால், எனது அந்திம காலத்தில்,
ஸ்ரீரங்கநாச்சியாரின் தாமரை மலர் போன்ற திருவடிகளில் பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளம் பொருந்திய
ஸ்ரீரங்கநாதனை, எனது பார்வைக்கு இலக்காகக் காண்பிப்பாயாக.

ஸ்ரீ பாதுகா தாயே இப்பொழுது நீ என் தலையில் இருப்பது பெரும் புண்ணியத்தினால் -அப்படி யாகில் அதே
புண்ணியத்தினால் என் அந்திம காலத்தில் ஸ்ரீ ரங்க நாதனை –பிராட்டியின் செம்பஞ்சுக் குழம்பு பட்ட திரு மார்புடன் –
எழுந்து அருளப் பண்ணி என் கண்களுக்கு பிரத்யஷமாக சேவை தருவாய் எனபது நிச்சயம் –

—————————————————————————–

ஹரி சரண ஸரோஜ பக்தி பாஜாம் ஜநாநாம்
அநு கரண விசேஷை: ஆத்மநைவ உபஹாஸ்யம்
பரிணமய தயார்த்ரா பாதுகே தாத்ருசம் மாம்
பரத பரிஷத் அந்தர் வர்த்திபி: ப்ரேக்ஷணீயம்—991-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாமரை மலர் போன்ற திருவடிகள் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில்
மிகுந்த பக்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர். நான் அவர்கள் போன்று பக்தி உள்ளவனாக நடித்தபடி உள்ளேன்.
இதனால் என்னை நானே பரிஹாஸம் செய்து கொள்ளும்படி உள்ளேன்.
இப்படிப்பட்ட என் மீது நீ இளகிய மனதுடன் அருள் சுரக்கவேண்டும். இதனால் நான் அவர்கள் போன்று பக்தி கொண்டவனாகவும்,
பரதனின் கோஷ்டியைச் சேர்ந்த “பாதுகா சேவகர்கள்” மூலம் கடாக்ஷிக்கப்பட்டவனாகவும் ஆகும்படி நீ செய்யவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடித் தாமரைகளின் பக்தர்கள் உளரே அவர்களைப் பார்த்து ஏதோ வஞ்சகமாகப் பல சொல்லி
நைச்யமும் அனுசந்தித்திப் போகிறேன் -நீ கிருபையால் என்னை உண்மையிலேயே அவர்கள் போலாக்கி -அனுஷ்டானம் -பக்தி –
தாழ்ந்தோன் என்று அடக்கப் பேச்சு முதலியவற்றில் என்னை ஸ்ரீ பரதாழ்வான் போன்றவர்களால் கடாஷிக்கப் பட தகுந்தவனாக்கி அருள வேணும் –

——————————————————————————–

துரிதம் அபநயந்தீ தூரத: பாதுகே த்வம்
தநுஜ மதந லீலா தேவதாம் ஆநயந்தீ
அநிதர சரணாநாம் அக்ரிமஸ்ய அஸ்ய ஜந்தோ:
அவஸ கரண வ்ருத்தே: அக்ரதஸ் ஸந்நிதேயா:—-992–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனையும் உன்னையும் தவிர வேறு எந்தவிதமான கதியும் இல்லாதவர்களில்
முதன்மையானவனாக நான் உள்ளேன்; எனது இந்த்ரியங்கள் எதுவும் என் வசம் இல்லை (அந்திம காலத்தில் உள்ள நிலை);
இப்படியாக உள்ள பிராணி போன்ற எனது பாவங்கள் அனைத்தையும் நீ வெகு தூரம் விரட்டுவாயாக.
அத்துடன் நில்லாமல், அசுரர்களை வதம் செய்வதைத் தனது லீலையாகக் கொண்ட ஸ்ரீரங்கநாதனை என்னிடம் எழுந்தருளப் பண்ணுவாயாக.

ஸ்ரீ பாதுகையே நீ என் பாபத்தை ஒதுக்கி வெகு தூரத்துக்கு அனுப்ப வேணும் -அசூரமர்த்தனத்தை ஒரு லீலை போல் செய்ய வல்ல
பகவானை எழுந்து அருளப் பண்ணி வர வேண்டும் -அகதிகளுக்குள் முதலாம் எண் நான் –
எண் ஐம் பொறிகளும் எனக்கு சுவாதீனம் இல்லாமல் என்னை அலைக்கழிக்கின்றன –
இப்படி ஸ்ரமப்படும் இந்த ஜந்து முன்னிலையில்-அந்திம தசையில் – பெருமாள் சேவை கிடைக்கச் செய்து அருள்வாய் –

—————————————————————————

ஸரம நிகமகீதே ஸப்த தந்தௌ ஸமாப்தே
நிஜ ஸதந ஸமீபே ப்ராபயிஷ்யந் விஹாரம்
ஜ்வல நமிக பவத்யோ: ஸம்யக் ஆரோபயேந மாம்
ப்ரதம வரண வஸ்ய: பாதுகே ரங்க நாத:—-993-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! “எனக்கு நீயே கதி”, என்று ஒருமுறை கூறினாலே அந்தச் சரணாகதிக்கு வசப்பட்டு
ஸ்ரீரங்கநாதன் நிற்கிறான். உபநிஷத்துக்களில் கூறப்பட்ட வேள்வி முடிந்தவுடன், அந்த அரணிக்கட்டைகள்
அனைத்தையும் ஏற்றிக்கொண்டு வீட்டின் அருகில் உள்ள அக்னி ஸ்தானத்திற்குக் கொண்டு வருவார்கள்.
இது போன்று எனது ஜீவன் என்ற யாகம் முடியும்போது என்னைத் தனது மாளிகையின் அருகில் கொண்டு செல்லும் பொருட்டு
ஸ்ரீரங்கநாதன் செய்வது என்னவென்றால் – என்னை அக்னியைப் போன்று உங்கள் இருவர் மீதும் ஏற்றிக் கொள்ளப்போகிறான்.

யாகத்திற்கு வேண்டிய அக்னியை அரணிக் கட்டைகளைக் கடைந்து உண்டாக்கி யாக சாலையில் வேள்வி செய்து பின் அக்னி ஸ்தானத்தில் –
அரணிக் கட்டையில் வைத்து இருப்பர்-பெருமாள் அத்வர்யு – ஜீவன் அக்னி -பெருமாள் செய்யும் யாகம் ஜீவனைப் பிரபத்தியில் மூட்டுவித்து கைங்கர்யம் கொள்வது –
பிரபதிக்கு பின்பான உத்தர் காலம் ஒரு தீர்க்க யாகம் – நாம் மரணம் என்று நினைப்பது யாக பூர்த்தியில் நடக்கும் அவப்ருத ஸ்நானம்
உபநிஷத் சொல்கிறது -இந்த அக்னியை ஜீவனை இப்போது அக்னி ஸ்தானத்தில் வைக்க வேணும் -அதைச் செய்க என்கிறார் இந்த ஸ்லோகத்தில்
ஸ்ரீ பாதுகைகளே -நீ என்னை ரஷிக்க வேணும் என்று நான் முதன் முதலிலே ப்ரார்த்த போதே ஸ்ரீ ரங்க நாதன் என் வசமானார்
என் மரணம் சம்பவிக்கும் சமயம் உபநிஷத் சொல்வது போல் அத்வர்யுவான அவர் என் ஜீவனாகிற அக்னியைத் தன் ஸ்தானத்திற்கு -அது தான் அக்னி ஸ்தானம் –
எடுத்துப் போக என்னை உங்கள் இருவர் மீதும் வைத்து -நீவிர் அரணிக் கட்டைகள் போலே -ஏற்றிக் கொண்டு போக வேணும் -என்று ஆசைப்படுகிறேன் –

—————————————————————————-

புந: உதர நிவாஸ ஸ் சேதநம் ஸஹ்ய ஸிந்தோ:
புளிநம் அதிவஸேயம் புண்யம் ஆப்ரஹ்மலாபாத்
பரிணமதி சரீரே பாதுகே யத்ர பும்ஸாம்
த்வம் அஸி நிகமகீதா சாஸ் வதம் மௌளி ரத்நம்—-994-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனக்கு பரப்ரஹ்ம ப்ராப்தி கிட்டும் வரையில், மறு பிறவியை அழிக்கவல்லதான,
தூய்மையான காவேரியின் திட்டான, ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்து வருவேனாக.
இந்த மணலில் ஒருவனது சரீரம் சாயும்போது, அவர்களது தலையில் விளங்கும் ஆபரணம் போன்று,
வேதங்களால் துதிக்கப்படும் நீ அமர்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே அழகான காவிரி மணலில் நான் வாசம் செய்வேனாக -பரப்ரஹ்ம ப்ராப்தி கிடைக்கும் வரை இங்கனம்
ஏன் என்றால் இந்த மணலில் சரீரம் விலகும் போது வேத பிரசித்தி யுடைய நீ நிரந்தரம்
தலைக்கு அணியாக இருப்பாய் அல்லவா -இது என் மறு பிறவியை அழிக்குமே-

———————————————————————————————

பஹுவித புருஷார்த்த க்ராம ஸீமாந்தரேகாம்
ஹரி சரண ஸரோஜ ந்யாஸ தந்யாம் அநந்ய:
பரத ஸமய ஸித்தாம் பாதுகே பாவயம் ஸ்த்வாம்
சதம் இஹ சரதஸ் தே ஸ்ராவயேயம் ஸம்ருத்திம்—-995-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்துவிதமான புருஷார்த்தங்களைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவளாகவும்,
அந்தப் புருஷார்த்தங்களின் எல்லையாகவும் நீ உள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற மென்மையான
திருவடி வைப்பின் மூலம் மேன்மையுடன் உள்ளாய். ஸ்ரீரங்கநாதனைக் காட்டிலும் மேன்மையானவள் என்று
பரத ஸித்தாந்தம் மூலம் உணர்த்தப்பட்டாய். இப்படிபட்ட உன்னைத் தவிர வேறு எதனையும் நான் அண்டாமல்,
இந்த ஸ்ரீரங்கத்தில் நூறு வருடம் வாழ்ந்து, உன்னைப் புகழ்ந்தபடி இருப்பேனாக.

ஸ்ரீ பாதுகையே நீயே புருஷார்த்தங்களின் எல்லைக் கோடாக இருக்கிறாய் -ஸ்ரீ பகவான் உடைய திருப்பாதம் எப்போதும் படுவதாலே இச்சிறப்பு
ஸ்ரீ பரதாழ்வான் அனுஷ்டானத்தால் உன் மகிமை தெளிவாக தெரிய நான் உன்னையே த்யானித்துக் கொண்டு
வெகுகாலம் உன் புகழைப் பாடிக் கொண்டே இந்த ஸ்ரீ ரங்கத்திலே வாழுமாறு அருள வேண்டும் –

——————————————————————

திலக யஸி சிரோ மே சௌரி பாதாவநி த்வம்
பஜஸி மநஸி நித்யம் பூமிகாம் பாவ நாக்யாம்
வசஸி ச விபவை: ஸ்வை: வ்யக்திம் இத்தம் ப்ரயாதா
தத் இஹ பரிணதம் மே தாத்ருசம் பாகதேயம்—-996-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது தலையை நீ எப்போதும் அலங்கரித்தபடி உள்ளாய். எனது மனதில் எப்போதும்
நினைவு ரூபமான உருவத்தில் நீ அமர்ந்துள்ளாய். என்னுடைய வாக்கிலும் உன்னுடைய தோற்றம் வெளிப்படும்படியாகவே உள்ளாய்.
இப்படிப்பட்ட பரிபூர்ணமான புண்ணியம் எனக்குக் கிட்டியது.

ஸ்ரீ பகவான் உடைய திருப் பாதுகையே நீ என் தலையில் அமர்கிறாய் -அதை ஒரு அலங்காரமாகக் கருதுவேன் –
மனத்தில் எப்போதும் த்யானம் செய்து கொண்டு இருப்பதனால் மானச சாஷாத்காரத்தில் உன்னை எப்போதும் சேவித்துக் கொண்டு இருக்கிறேன்
வாக்கில் இந்த ஸ்துதி ரூபமாக ஒரு உருவை ஏற்று விட்டாய் –
ஆகவே உன்னுடன் ஆழ்ந்த தொடர்பு -காயிக மானச வாசிகமான மூன்றிலும் ஏற்பட்டுப் பெரும் புண்யம் ஆயிற்று –

———————————————————————

அஜநிஷி சிரமா தௌ ஹந்த தே ஹேந்த்ரியாதி
ததநு தத்தி கஸ் சந் ஈச்வரோஹம் பபூவ
அத பகவத ஏவா பூவம் அர்த்தாதி தா நீம்
தவ புனரஹமாசம் பாதுகே தன்ய ஜன்மா –

அஜநிஷி சிரம் ஆதௌ ஹந்த தேஹ இந்த்ரியாதி:
ததநு தததிகஸ் ஸந் ஈஸ்வரஸ் அஹம் பபூவ
அத பகவத ஏவாபூவம் அர்த்தாத் இதாநீம்
தவ புநர் அஹம் ஆஸம் பாதுகே தந்ய ஜந்மா—997-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எல்லையற்ற காலமாக நான் எனது உடல் மற்றும் இந்த்ரியங்கள் ஆகியவற்றையே
எனது ஸ்வரூபமாக எண்ணி இருந்தேன். அதன் பின்னர், கர்ம காண்டங்களைச் சற்றே அறிந்த பின்னர்,
உடல் போன்றவற்றைக் காட்டிலும் நான் மாறுபட்டவன் என்று உணர்ந்தும், ஈச்வரன் நானே என்று எண்ணியபடி இருந்தேன்.
அதன் பின்னர் ஸ்ரீரங்கநாதன் என்னிடம் எதனையும் எதிர்பார்க்காமல் என்னைக் கடாக்ஷித்தபோது,
அவனுக்கே உடமையாக நின்றேன். ஆனால் இப்போது பாகவத அடிமைத்தனத்தின் எல்லையை அடைந்து,
உனக்கே அடிமையாக நின்று, சிறந்த பிறவிப்பயனை அடைந்தேன்.

ஸ்ரீ பாதுகையே நான் முதலில் வெகுகாலம் ஆத்மாவை இல்லை என்று கருதி உடலே நான் என்று நினைத்து இருந்து கெட்டேன்
அதன் பின்பு உடலில் இருந்து வேற்பட்ட ஆத்மா இருக்கிறது என்று உணர்ந்தும் ஒரு சுதந்திர புருஷனாக என்னை
நினைத்துக் கொண்டு ஈஸ்வரனை இல்லை யாக்கினேன்
அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியால் பகவான் உடையதாகவே என் ஆத்மாவை உணர்ந்து அது முதல் சிறந்த பயன் பெற்ற
ஜன்மா எனக்குக் கிடைத்தது -நான் உன்னுடையவன் ஆகி விட்டேன் –

——————————————————————-

த்வயி ஆயத்தௌ பகவதி சிலாபஸ்மநோ: ப்ராணதாநாத்
அஸ்த்ரீபாலம் ப்ரதித விபவௌ பாத பத்மௌ முராரே:
தாமேவ அஹம் சிரஸி நிஹிதாம் அத்ய பஸ்யாமி தைவாத்
ஆத்மாதாரம் ஜநநி பவதீம் ஆத்மலாப ப்ரஸூதிம்—-998-

அனைத்து திருக்கல்யாண குணங்களும் நிறைந்த பாதுகையே! இந்த உலகின் தாயே! அகலிகை என்ற கல்லுக்கும்,
சாம்பலாகக் கிடந்த பரீக்ஷத் என்ற சிசுவுக்கும் உயிர் அளித்த காரணத்தினால் பெண் – குழந்தை வரையில் ப்ரஸித்தம் பெற்றதாக
உள்ள ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகள், உனக்கு வசப்பட்டவையாகவே உள்ளன.
அனைத்து உலகங்களுக்கு ஆத்மாவாக உள்ள ஸ்ரீரங்கநாதனுக்கு நீயே ஆதாரபூதையாக உள்ளாய்.
உன்னைத் தாங்குபவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால், ஸ்ரீரங்கநாதனைக் காட்டிலும் மேம்பட்டவளாக விளங்குகிறாய்.
இவ்விதம் உள்ள நீ, எங்கள் ஸ்வரூபத்தை நாங்கள் அறிவதற்குக் காரணமாக உள்ளாய்.
எனது புண்ணியம் காரணமாக இப்படி நீ எனது தலையில் உள்ளதைக் காண்கிறேன்.

ஸ்ரீ பாதுகைத் தெய்வமே தாயே கல்லுக்கும் கரிக் கட்டைக்கும் உயிர் கொடுத்த தெய்வமே –
உன் பெருமை பாலர் பெண்டிர் வரை மக்கள் அனைவர் இடத்திலும் பிரசித்தம் –
பகவான் திருவடிகள் அன்றோ இதை சாதித்தது என்றால் அதனால் என்ன -திருவடிகள் ஸ்ரீ பாதுகைக்கு ஆதீனம் என்றே சொல்ல வேண்டும்
உனக்கு ஆதாரம் நீயே தான் -வேறு ஆதாரம் தேடுவதில்லை -ஆனால் திருவடிகளுக்கு நீ யல்லவோ ஆதாரம் ஆகிறாய் -மேலும் நீ அன்றோ
நாங்கள் எம் ஸ்வரூபத்தை உணரக் காரணம் -அத்தகைய நீ இப்பொழுது சிரஸ்ஸில் வைக்கப் பட்டு இருக்கிறது –
நீ எனக்குத் திருவருள் செய்வதற்கு அடையாளம் –

———————————————————————————–

கதம் காரம் லக்ஷ்மீ கரகமல யோக்யம் நிஜபதம்
நிதத்யாத் ரங்கேஸ: குலிசகடிநே அஸ்மிந் மநஸி ந:
ந சேதேவம் மத்யே விசதி தயயா தேவி பவதீ
நிஜாக்ராந்தி க்ஷுண்ண ஸ்மரசரசிகா கண்டக ததி:—999–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! எங்களது மனம் என்பது மன்மதனின் ஆக்கிரமிப்பு காரணமாக அவன் பாணங்கள் நிறைந்ததாக,
கூர்மையான முள் வரிசைகள் கொண்டதாக உள்ளது. உன்னுடைய தயை காரணமாக எனது மனம் மற்றும்
ஸ்ரீரங்கநாதன் திருவடிகள் ஆகிய இரண்டிற்கும் இடையில் புகுந்து கொள்கிறாய். இப்படி நீ செய்யவில்லை என்றால் –
ஸ்ரீரங்கநாச்சியாரின் தாமரை போன்ற திருக்கரங்களால் மட்டும் வருடக்கூடிய மென்மையான தனது திருவடிகளை
ஸ்ரீரங்கநாதன், வஜ்ராயுதம் போன்ற கடினமான எங்கள் மனதில் எப்படி வைப்பான்?

ஸ்ரீ பாதுகா தேவியே எங்கள் ஹ்ருதயம் மன்மத பாணங்களுக்கு விஷயம் ஆகின்றன -அதை தைத்து முட்களாகக் கிடக்கும் –
நீ உன் ஆக்கிரமிப்பால் இவற்றை எல்லாம் பொடி செய்து ஹ்ருதய பிரதேசத்தைப் பெருமாள் காலடி வைக்கத் தகுதி யுள்ளதாக ஆக்கி இருக்கிறாய்
அப்படிச் செய்யாது இருந்தால் இந்த ஹ்ருதயம் கடினமாய் இருக்குமே -பரம ஸூ குமாரமான பிராட்டியின் தாமரைக் கைகளுக்குத் தக்க
மென்மை கொண்ட திருவடியைப் பெருமாள் எப்படி இந்த எம் மனத்தில் வைக்கத் தகும் –

——————————————————————————————

க்ரீடா லௌல்யம் கிமபி ஸம்யே பாதுகா வர்ஜயந்தீ
நிர்வேசம் ஸ்வம் திசஸி பவதீ நாதயோ: ஸ்ரீதரண்யோ:
மாமபி ஏவம் ஜநய மதுஜித் பாதயோ: அந்தரங்கம்
ரங்கம் யாஸௌ ஜநயஸி குணை: பாரதீ ந்ருத்தரங்கம்—1000–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னையே தங்கள் எஜமானியாக எண்ணி, தங்களது ஐச்வர்யம் அனைத்தும்
உன்னுடைய வசப்பட்டவை என்று எண்ணியபடி இருக்கின்ற ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர்களுக்கு நீ செய்வது என்னவென்றால் –
அவர்கள் விரும்பும் காலத்தில், உன்னால் மட்டுமே ஏகபோகமாக அனுபவிக்கப்படும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின்
அனுபவம் என்ற சுகத்தை, உனது ஸஞ்சாரத்தை சற்றே நிறுத்திவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறாய்.
இது போன்று என்னையும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கு ஏற்ற அடிமையாக நீ செய்தருள வேண்டும்.
உனது எந்தக் குணம் மூலம் நீ ஸ்ரீரங்கத்தை ஸரஸ்வதியின் நாட்டிய மேடையாக மாற்றுகிறாயோ,
அந்தக் குணம் மூலம் எனக்கு அருள வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே -உனக்குக் கைங்கர்ய அனுபவம் கிடைத்தால் -அதாவது -சஞ்சாரம் நடந்தால் பிராட்டிகளுக்கு அந்தரங்க பரிசயத்தால்
அனுபவம் ஏற்பட வாய்ப்பு இராமல் போய் விடும்-
அதற்காக நீ சஞ்சார ஆசையை விட்டு உன்னையே தலைவியாக உடைய ஸ்ரீ பூமி பிராட்டிகளுக்கு விட்டுக் கொடுக்கிறாய் –
நானும் உனக்கு சேஷ பூதன் -பகவான் திருவடிகளுக்கு அந்தரங்க சேவகனாக நான் இருக்கும் படி செய்து அருள் செய்வது நிச்சயம் -ஏன்-
உன் கல்யாண குண பிரபாவம் அப்படி எனக்கு அனுக்ரஹித்து இந்த காவ்யம் நிறைவுறுமாறு அருளி இதைக் கேட்டு ஆனந்திக்க
சரஸ்வதி வந்து அனபவப் போக்கு வீடாக ஆடிக் களிக்கிறாளே -இத ரங்கம் அவளுக்கும் நாட்ய அரங்கம் ஆயிற்று அல்லவா –

————————————————————————————————–

இதி ரங்க துரீண பாதுகே த்வம்
ஸ்துதி லக்ஷ்யேண ஸஹஸ்ரசோ விம்ருஷ்டா
ஸபலம் மம ஜந்ம தாவத் ஏதத்
யதி ஹாசாஸ்யம் அத: பரம் கிம் ஏதத்—-1001–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! இப்படியாக உன்னைத் துதிப்பது என்ற ஸ்தோத்ரம் ஒன்றைச் சாக்காக
வைத்துக் கொண்டு, என்னால் ஆயிரக்கணக்கில் நீ சிந்திக்கப்பட்டாய்.
இதன் மூலமாக எனது பிறவியானது மிகுந்த ப்ரயோஜனம் மிக்கதாகி விட்டது.
இதற்கு மேல் இந்த உலகத்தில் நான் பெற வேண்டியதும், ப்ரார்த்தனை செய்ய வேண்டியதும் வேறு என்ன உள்ளது?

ஸ்ரீ ரங்க நாத பாதுகையே இந்த ஸ்தோத்ரம் என்கிற வாசத்தில் உன்னை பல ஆயிரம் தரம் சிந்தித்து இருக்கிறேனே
அதிலே கூட என் பிறப்பு கடைத்தேறி விட்டதாகக் கருதுவேன் –
இதற்கு மேலும் இங்கு நான் பெற வேண்டியது என்ன தான் இருக்கக் கூடும் –

———————————————————————————-

மாத: ஸ்வரூபம் இவ ரங்க பதேர் நிவிஷ்டம்
வாசாம் ஆஸீமநி பதாவநி வைபவம் தே
மோஹாத் அபிஷ்டுதவத: மம மந்த புத்தே:
பாலஸ்ய ஸாஹஸம் இதம் தயா ஸஹேதா:—-1002–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைத்தாயே! ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபத்தைக் காட்டிலும்,
வாக்கின் மூலம் எட்டாத பெருமை கொண்டவளாக நீ உள்ளாய்.
இப்படிப்பட்ட உனது மேன்மைகளை, தாழ்வான அறிவு கொண்ட சிறுவனாகிய நான்,
எனது அறியாமை காரணமாகத் ஸ்துதிக்க முற்பட்டேன்.
உனது மேன்மையை ஆயிரம் ஸ்லோகத்தின் மூலம் அளவிட்டுக் கூற முயன்ற எனது அறியாமையைப் பொறுத்துக் கொண்டு,
எனது ஸாஹஸத்தை உனது தயை மூலம் மன்னிப்பாயாக.

ஸ்ரீ பாதுகை தாயே பெருமாளின் ஸ்வ ரூபத்தை அளவிட்டுச் சொல்ல ஒண்ணாது –
வாக்குக்கு எட்டாதது -என்று சொல்லுமா போலே தான் உன் பெருமையும் –
அப்படி இருந்தும் துணிந்து இந்தக் காரியத்தில் இறங்கியது இந்த சிறு பிள்ளையின் அறியாமையால் தான்
அடியேனுடைய இந்த சஹாசச் செயலைக் கருணை கூர்ந்து பொறுத்து அருள்வாயாக –

———————————————————————-

யே நாம பக்தி நியதா: கவயோ மதந்யே
மாத: ஸ்துவந்தி மது ஸூதந பாதுகே த்வம்
லப்ஸ்யே குணாம்ச விநிவேசித மாநஸாநாம்
தேஷாம் அஹம் ஸபஹுமாந விலோகிதாநி—-1003-

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! என் தாயே! அம்மா! என்னைக் காட்டிலும் உன்னிடம் பக்தி அதிகமாக உள்ள
கவிஞர்கள் உன்னை ஸ்துதிக்கக்கூடும்.
அவர்கள் உனது வாத்ஸல்யம் போன்ற குணங்களில் தங்கள் மனதை நிலை நிறுத்திப் புகழ்வார்கள்.
அவர்களின் கடாக்ஷம் நிறைந்த பார்வையை நான் அடையப் போகிறேன்.

ஸ்ரீ பெருமாளின் திருப் பாதுகையே -பக்தியினால் உந்தப்பட்ட வேறு சிலரும் இத்தகைய உன் ஸ்துதியில் இழிவரோ
அவர்கள் ஸ்ரமம் உணர்ந்ததனால் குணங்களில் மட்டும் மனம் செலுத்தி புகழ் வார்த்தைகளையே சொல்லுவார்கள் –
இந்த திவ்ய பாதுகா சாஸ்திரம் பற்றி –

———————————————————————–

ஸங்கர்ஷயந்தி ஹ்ருதயாநி அஸதாம் குணாம்சே
ஸந்தஸ்து ஸந்தமபி ந ப்ரதயந்தி தோஷம்
தத் ரங்கநாத சரணாவநி தே ஸ்துதீநாம்
ஏகா பரம் ஸதஸதோ: இஹ ஸாக்ஷிணீ த்வம்—-1004-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! கவிகள் அல்லாதவர்களில் அஸத்துக்கள் எனப்படும் மனிதர்களின் இதயங்கள்,
நல்ல விஷயங்களில் உள்ள நன்மைகளிலும் குற்றமே காண முற்பட்டு, இதனால் பொறாமையும் கொள்ளும்.
ஸத்துக்கள் என்பவர்கள் குற்றம் இருந்தாலும் அவற்றை வெளியிட மாட்டார்கள்.
ஆகவே இந்த நூலில் உள்ள குணங்களுக்கும், தோஷங்களுக்கும் நீயே மத்யஸ்தமாக நின்று ஆராய வேண்டும்.

ஸ்ரீ ரங்க நாத திருப் பாதுகையே தீயோர் இந்த ஸ்தோத்ரத்தின் குணங்கள் பற்றிப் பொறாமைப் படுவார்கள்
நல்லவர்களோ வென்னில் தோஷம் பற்றிப் பேசவே மாட்டார்கள் -அது அவர்கள் இயல்பு
ஆக இந்த ஸ்துதியில் குணம் இருக்கிறதோ தோஷம் தான் உள்ளதோ அதற்கு நீ ஒருத்தி தான் சாஷி –

————————————————————————–

இத்தம் த்வம் ஏவ நிஜகேளி வசாத் அகார்ஷீ:
இக்ஷ்வாகு நாத பத பங்கஜயோ: அநந்யா
ஸ்வீயம் பதாவநி மயா ஸுமஹத் சரித்ரம்
ஸீதேவ தேவி ஸஹஜேந கவீஸ்வரேண—-1005–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! இக்ஷ்வாகு குலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைத் தவிர
வேறு எதனையும் நாடாத சீதை, தனது உடன் பிறந்தவரான வால்மீகி முனிவரைக் கொண்டு,
தனது மேன்மைகள் வெளிப்படும் இராமாயணத்தைச் செய்வித்தாள்.
நீயும் அவள் போலே, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பிரியாதவளாக உள்ளாய்.
ஆக நீயும் அவள் போன்று என்னைக் கொண்டு, உன்னுடைய மிகப் பெரிய சரிதத்தை ஏற்படுத்திக் கொண்டாய்.

ஸ்ரீ பாதுகா தேவியே இஷ்வாகு வம்சத்தரசனான ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனின் திருவடித் தாமரைகளை அன்றி வேறே எதையும்
முக்கியமாகக் கொள்ளாத நீயே என்னைக் கொண்டு தன்னுடைய மிகப் பெரியதான இந்த காவ்யத்தைச் செய்வித்துக் கொண்டாய்-
ஸ்ரீ சீதா பிராட்டி கவி ஸ்ரேஷ்டரான வால்மீகியைக் கொண்டு ஸ்ரீ ராமாயணத்தைச் செய்வித்தது போலே -எல்லாம் விளையாட்டாகவே –

———————————————————————————

ப்ருதுக வதந சங்கஸ்பர்ச நீத்யா கதாசித்
சிரஸி விநிஹிதாயா: ஸ்வேந பூம்நா தவைவ
ஸ்துதி: இயம் உபஜாதா மந்முகேந இதி அதீயு:
பரிசரண பராஸ்தே பாதுகே அபாஸ்த தோஷா:—-1006–

ப்ருதுக=பாலகனுடைய (துருவனுடைய) – வதந=முகத்திலே –
சங்கஸ்ப்ர்ஸ நீத்யா=ஸ்ரீபகவானுடைய பாஞ்சஜன்யம் என்னும் சங்கத்தின் ஸ்பர்ஸத்தினால் ஏற்பட்டதை (ஏற்பட்ட மாறுதலைப்) போன்று –
கதாசித்=ஒரு சமயத்தில் (ஸ்ரீரங்கநாதன் இந்த ப்ரபந்த்த்தை பண்ணும்படி அனுமதி கொடுக்கும் சமயத்தில்) –
சிரஸி=என்னுடைய சிரஸ்ஸில் – விநிஹிதாயா=(அர்ச்சகரால்)நன்றாக சாதிக்கப்பெற்ற – தவ=உன்னுடைய –
ஸ்வேன=ஸ்வாபிகமான – பூம்நா ஏவ=மஹிமையினாலே – மந்முகே=என்முகமாக (அதாவது என்னை ஒரு கருவியாக்க் கொண்டு) –
ஈயம் ஸ்துதி= இப்படி உயர்ந்த்தான ஸ்தோத்திரமானது – உபஜாதா = உண்டானது ––
அபாஸ்த தோஷா:=த்வேஷங்கள் அற்றவர்களான – பரிசரணபரா=உன்னுடைய கைங்கர்யங்களில் ஈடுபாடுள்ள பெரியோர்கள் –
இதி அதீயு:= எண்ணக்கடவர்கள் (அதாவது வேத்த்தினை அத்ய்யனம் செய்வது போல் சிரத்தையுடன் இதை நித்யமாக பாராயணம் செய்யக்கடவர்கள்.

ஹே! பாதுகே! இந்த ஸஹஸ்ரத்தை நான் பண்ணுவதற்கு முன் நியமனம் கேட்பதற்காக உன் ஸந்நிதியில் நின்ற போது,
துருவனை பாஞ்ச ஜன்யத்தினால் பகவான் வருடியதை போன்று, அர்ச்சகாள் மூலமாய், என் தலையில் நீ சாதிக்கப் பெற்று
வெகு நேரம் எழுந்தருளி அனுமதி யளித்தாய்! உன் மூலமாக உன்னை ஸ்தோத்திரம் பண்ணும்படியான
ஞானத்தினையும் வாக்கினையும் அளித்தாய்!. உன்னுடைய ப்ரபாவத்தினாலேயே உன்னை ஸ்தோத்திரம்
பண்ணும்படியான ஞானம் எனக்கு ஏற்பட்டது!. உன்னுடைய அனுக்ரஹரூபமாக தானாக வெளிப்பட்டது!.
பெரியோர்கள் இந்த உண்மையை உள்ளபடி அறிந்து, வேத்த்திற்கு சமமாக பாவித்து சிரத்தா பக்தியுடன்
தங்களுடைய நித்யபாராயணத்திற்கும் வைத்துக் கொண்டு விடுவார்கள்.
இந்த ப்ரபந்தம் உன்னால் ஏற்பட்டது. எல்லோராலும் கொண்டாடத்தக்கது.

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது கைங்கர்யத்தில் மட்டுமே ஈடுபட்டு நிற்கும் உத்தமர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா –
துருவன் முகத்தில் எம்பெருமானின் பாஞ்சஜன்யம் என்ற சங்கின் தொடர்பு ஏற்பட்டவுடன், ஞானம் உண்டானது போன்று,
எனது தலையில் வைக்கப்பட்ட உனது மேன்மையால் இந்த ஸ்தோத்ரம் என் மூலமாக உண்டாயிற்று என எண்ணுவார்கள்.

எம்பெருமானைக் குறித்து துருவன் கடுமையான தவம் செய்தான். அப்போது அவன் முன்பாக எம்பெருமான் வந்து நின்றான்.
ஆனால் குழந்தையான துருவனுக்கு எம்பெருமானை எப்படித் துதிப்பது என்று தெரியவில்லை.
அப்போது எம்பெருமான் தனது சங்கின் மூலம் துருவனின் கன்னத்தைத் தொட, அவனுக்கு ஞானம் உண்டானது.
இது போன்று ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகையின் ஸ்பர்சம் தன் மீது பட்டதால், இந்தத் துதி ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே உன் தொண்டர்கள் ராக த்வேஷாதிகள் அற்றவர் -நான் சொல்லும் இவ்விளக்கத்தை அவர்கள் ஒப்புவர் –
சிறு பையனான துருவன் கன்னத்தில் பெருமாள் திருச் சங்கு ஆழ்வானைக் கொண்டு தொட்டார் என்ற வியாஜ்யம் போருமாயிற்று
அவன் ஸ்தோத்ரம் ஒன்றை ஆக்கி அருள -அது போல் ஸ்ரீ பாதுகை என் தலை மீது வைக்கப் பட்டதே
அந்த உன் சுய மகிமையால் அன்றோ இந்த உன் ஸ்தோத்ரம் உருவாயிற்று –

————————————————————————-

யதி ஸ்பீதா பக்தி: ப்ரணயமுக வாணீ பரிபணம்
பதத்ராண ஸ்தோத்ரம் ஹ்ருதி பிப்ருத ரங்கக்ஷிதி ப்ருத:
நிருந்மாதோ யத்வா நிரவதி ஸுதா நிர்ஜ்ஜரமுசோ
வசோபங்கீ: ஏதா கதம் அநுருந்தே ஸஹ்ருதய:—-1007–

ஸ்பீதா=பூர்ணமான – பக்தி:=(பாதுகையினடத்தில்) பக்தியானது – யதி=உங்களுக்கு இருக்குமே யானால் –
ப்ரணயமுக=நம்பிக்கையைக் கொடுக்கிறதாக இருக்கும் – வாணீ=வேதத்தை –
பரிபணம்=வேதம் என்ன சொல்லுகின்றதோ அதனையே பிரதிபலிக்கும் –
பதத்ராண ஸ்தோத்ரம்= இந்த பாதுகா ஸ்தோத்திரத்தை – ஹ்ருதி=ஹ்ருதயத்திலே – பிப்ருத=தரியுங்கோள்
(நன்கு உரு ஏற்றி மனதில் நிலைத்திருக்கும்படி செய்யுங்கள்) –
யத்வா=இல்லாவிட்டால் (ஒருக்கால் அப்படியெல்லாம் உங்களுக்கு பக்தியில்லாவிட்டாலும்) –
நிருந்மாதோ=சாமான்யமான பக்தியுடைய – ஸஹ்ருதய:=நல்லமனதோடுள்ள ஒருவன் –
நிரவதி=முடிவில்லாததான – ஸுதா=அம்ருதத்தினை ஒக்கும் – நிர்ஜ்ஜர=வெள்ளத்தினை – முச:=கொட்டுகிறதான –
ஏதா= இந்த – வசோ பங்கீ= வார்த்தைகளுடைய இன்பமான பதங்களின் சேர்க்கையை –
கதம்=எப்படி – நாநுருந்தே=அனுபவிக்காமலிருப்பான்..?

”ஹே! ஜனங்களே! நீங்கள் உய்வடைய எளிமையான பரம ஹிதமான ஒரு வழியைக் கூறுகின்றேன்! கேளுங்கள்!

இந்த பாதுகா ஸ்தோத்திரமானது மகத்தானது..! நமக்கு ஸகலவிதமான நன்மைகளும் அளிக்க்க்கூடியது
வேதமும் – வேதம் காட்டும் வழியும்தான்! நீங்கள் நாஸ்திகர்களாய் இல்லாத பட்சத்தில்
இந்த வேதத்தினைக் கண்டிப்பாய் நம்ப வேண்டும்.!
அந்த வேதம் நாம் உய்வடைய பாதுகைகள் தான் என்று ஸூஷூமமாய் அறுதியிடுகின்றது!.

அந்த வேத்த்தினுடைய உருவம் தான், ப்ரதிபாத்யமான வஸ்துவான பாதுகையினை ஸ்துதிக்கும்
இந்த பாதுகா ஸஹஸ்ரத்தினை தினசரி பாராயணம் செய்யுங்கள். இதுதான் பரம ஹிதத்தினைத் தரக் கூடியது!.
இதுவே பரம பலம் – இதுவே பரம க்ஷேமம் – ஒருக்கால் உங்களுக்கு அப்படிப்பட்ட அனுபவிக்க்க்கூடிய பக்தி யில்லை யென்றாலும்,
இதிலுள்ள வார்த்தைகளின் கோர்வை – காதிற்கும் வாக்கிற்கும் இனிமையான ஸப்த ரசங்களின் தன்மையினை அனுபவித்து உருப் போடுங்கள் –

அறிந்தோ அல்லது அறியாமலோ எப்படி நெருப்பைத் தொட்டால் அதனுடைய ஸ்வபாவமானது நம்மை சுடுகின்றதோ
அதைப் போன்று நாம் பக்தி மேலிட்டோ அல்லது இதிலுள்ள இனிமையான ரஸ ஞானத்தினால் ஈர்க்கப்பட்டோ
இதனை அப்யாஸிக்கத் தொடங்குவீர்களாயின், பாதுகையின் ஸ்வபாவமான மஹிமையினால், கருணையினால்
ஸகல க்ஷேமங்களையும் பெற்று இவ்வுலகிலும், பரம ஸ்ரேயஸ்ஸான மோக்ஷத்தினையும் பெற்று உய்வீர்கள்.
இது ஸர்வோப ஜீவ்யமான அம்ருதம். ஏதோ ஒரு விதத்தில் இதனை அனுஸந்தித்தாலும் போதும் –
பரம க்ஷேமத்தினை யடைவது உறுதி!.” என்று நாம் உய்வதற்காக நம்மை
பிரார்த்திக்கின்றார் இந்த பரமதயாளு – ஸ்வாமி தேசிகர்.

மக்களே உங்களுக்கு பக்தி மிக்கதாக இருந்தால் இந்த ஸ்ரீ ரங்கநாத திருப் பாதுகா ஸ்தோத்ரத்தை
உள்ளத்தில் தரிக்கப் பாடம் செய்ம்மின்
அது ரசம் மிக்க வாணிக்கு மூல தனம் என்னலாம் -ரசிகர்களாய் இருப்பவர் -பைத்தியம் மட்டும் பிடிக்காதவராய் இருந்தால்
எல்லை இல்லாத அம்ருத வெள்ளத்தைப் பெருக்கும் இந்த காவ்யச் சொல் தொடர்களை எப்படி ஆதரிக்காமல் இருக்கக் கூடும் –

மக்களே! உங்களுக்கு ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் மீது பக்தி ஏற்பட்டால், வேதங்கள் மூலம் அறித்தக்கதான
பாதுகையை வெளிப்படுத்தும்படியாக உள்ள இந்த ஸ்ரீரங்கநாத பாதுகா ஸஹஸ்ர ஸ்தோத்ரத்தை,
உங்கள் மனதில் எப்போதும் நிலையாக வைத்து இருப்பீர்களாக.
அப்படிப்பட்ட பக்தி உங்களிடம் இல்லை என்றாலும், புத்தி தடுமாற்றம் அடையாத ஒருவன்,
நல்ல விஷயத்தை அறியவல்ல ஒருவன், அளவற்ற சொல் அமிர்தம் அருவி போன்று கொட்டுகின்ற
இந்த ஸ்தோத்ரத்தை எப்படி ஆதரிக்காமல் இருப்பான்?

———————————————————————————-

ஜயதி யதிராஜ ஸூக்தி:
ஜயதி முகுந்தச்ய பாதுகா யுகளீ
ததுபயதநா: த்ரிவேதீம்
அவந்தயயந்த: ஜயந்தி புவி ஸந்த:—-1008–

யதிகளின் தலைவர் என்று போற்றப்படும் எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன.
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன.
இந்த இரண்டையும் ஒருவர் தனது செல்வமாகக் கொண்டாலே போதுமானது –
அப்படிப்பட்டவர்கள் மூன்று வேதங்களையும் ஸபலமாக்கியபடி வாழ்ந்து மேன்மை அடைகின்றனர்.

ஸ்ரீ யதி ராஜர் என்கிற ஸ்ரீ ராமானுஜர் உடைய திவ்ய ஸூக்திகள் -ஸ்ரீ பாஷ்யம் முதலானவை -சிறப்பாக விளங்குகின்றன –
மோஷ தாதா வாகிற ஸ்ரீ ரங்க நாதனுடைய திருப் பாதுகையினை இவ்வுலகில் விளங்குகிறது –
ஸ்ரீ பாஷ்யகார ஸ்ரீ ஸூக்திகளையும் ஸ்ரீ பாதுகா மூர்த்தியான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளையும் மட்டுமே தம் தனம்
என்று கொண்டு இருக்கும் சாதுக்கள் த்ரயீ என்ற வேதத்தை வீணாக்காமல் அதை முழு பிரமாணம் ஆக்குகிறவர்கள் –
அவர்கள் இப்புவியில் சிறந்து விளங்குகிறார்கள் –

முதல் ஸ்லோகம் “ஸந்த” என்ற தொடங்கியது.
இந்த ஸ்லோகத்தின் முதல் பதமும் “ஸந்த” என்று முடிவதைக் காண்க.
இந்த ஸ்லோகம் கூறி முடித்தவுடன், மீண்டும் முதல் ஸ்லோகத்தைக் கூறுவது மரபாகும்.

சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீஸ சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-31-நிர்வேத பத்ததி -உருக்கப் படலம் -வைராக்கியம் வெறுப்பு ஆற்றாமை வெளிப்படுத்தும் உருக்கப் படலம் -ஸ்லோகங்கள் -951-970-

March 22, 2016

ப்ரபத்யே பாதுகாம் தேவீம் பர வித்யாம் இவ ஸ்வயம்
யாம் அர்ப்பயதி தீநாநாம் தய மாநோ ஜகத் குரு:—-951-

அனைத்து உலகிற்கும் முதல் ஆசார்யனாக உள்ள ஸ்ரீரங்கநாதன் மிகவும் கருணையுடன், துன்பம் உற்றவர்கள் உய்யும்
விதமாகச் செய்வது என்னவென்றால் – மோக்ஷ ஸாதனமான பக்தி மற்றும் ப்ரபத்தி என்னும் ஞானம் போன்ற
தனது பாதுகைகளைத் தானாகவே அளிக்கிறான். அந்தப் பாதுகைகளை நான் சரணம் அடைகிறேன்.

ஜகத்துக்கு முதல் குருவான ஸ்ரீ யபத்தி தன் கருணையினால் வருத்தமுற்று இருக்கும் கதி அற்றவருக்கும் உரிய
பர வித்யை என்ற மோஷ சாதனமாகிற வித்தையாக
எந்த ஒரு ஸ்ரீ பாதுகையைத் தானே வழங்கி அருளி இருக்கிறானோ அந்த ஸ்ரீ பாதுகா தேவியை உபாயமாகப் பற்றுகிறேன் –

ப்ரபத்யே=உபாயமாக நம்புகிறேன் (நான் அனுபவித்து கொண்டிருக்கும் ஸம்ஸாரதுக்கம் நீங்குவதற்கான) —
பரவித்யா=மோக்ஷத்திற்கு உதவக்கூடிய அறிவு (பக்தி, ப்ரபத்தி) – ஸ்வயம்=தாமாகவே முன்வந்து —
யாம் அர்ப்பயதி=யாதொரு பாதுகையின் மூலமாய் கொடுக்கின்றாரோ –
தீநாநாம்=ஸம்ஸாரத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் – தயமாநோ=தயவுள்ளவராய்

பகவான் ஸம்ஸரத்தில் உழன்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்ற ஜீவாத்மாக்கள் கடைத்தேற, மோக்ஷம் பெறுவதற்காக
உண்டான அறிவை அதாவது பக்தி மற்றும் சரணாகதி என்கிற ஞானத்தினை வேதங்கள் மூலமாய் ஏற்படுத்தி வைத்துள்ளார்.
இந்த அறிவிற்கு “பரவித்யை“ என்று பெயர். ஆச்சார்யன் மூலமாய் இந்த பரவித்யையை ஆஸ்ரிதர்கள் அடைவது போன்று,
ஆழ்வார் ஆச்சார்யனின் மற்றொரு ரூபமான பாதுகையும் மோக்ஷஸாதனமே!.
ஸ்ரீசடாரியான பாதுகையை நாம் சாதிக்கப்பெறுவதும் மோக்ஷஸாதனமே!
இத்தகைய மஹிமைகள் பொருந்திய எங்களைக் காப்பாற்றுவதற்காக அவதரித்த பாதுகா தேவீ!
என்னை இன்னுமும் ஸம்ஸாரத்தில் தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றாயே? நான் என்ன செய்வேன்,.!
இது உன்னுடைய குணத்திற்கு அழகாகுமா..? ஆகையால் உன்னை சரணமாக அடைகின்றேன்..!
என்னுடைய ஸம்ஸாரபந்த்த்தினை அடியோடு போக்கி சாஸ்வதமான பரமபுருஷார்த்தத்தினை எனக்கு நீ அருள வேண்டும் ..!

——————————————————————————————–

அபி ஜந்மநி பாதுகே பரஸ்மிந்
அநகை: கர்மபி: ஈத்ருசோ பவேயம்
ய இமே விநயேந ரங்க பர்த்து:
ஸமயே த்வாம் பதயோஸ் ஸமர்ப் பயந்தி—-952-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அந்தந்த காலங்களில் ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகர்கள் உன்னை அவனது திருவடிகளில்
மிகவும் அன்புடன் ஸமர்ப்பணம் செய்கிறார்கள். எனது அடுத்த பிறவியில் இவர்கள் போன்று
ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகராகப் பிறந்து உனக்கு கைங்கர்யம் செய்வேனோ?

ஸ்ரீ பாதுகையே அந்தந்த உரிய சந்தர்ப்பங்களில் பெருமாள் ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடிகளில் மிகுந்த வினயத்தோடு
உன்னை சமர்ப்பிக்கும் பாக்கியம் பெற்ற கைங்கர்ய பரர் உண்டே -அவர்களில் ஒருவனாக அடுத்த ஜன்மத்தில் நான் ஆக வேண்டும்
குற்றம் அற்ற கர்மங்களால் அன்றோ அது நடக்கும் -அப்படி ஆகும் படி நீயே அருள வேண்டும் –

ரங்கபர்த்து:=ஸ்ரீரங்கநாதனுடைய – பதயோ:=திருவடிகளிலே – விநயேந=மிகுந்த பணிவோடு –
ஸமயே=அந்தந்த உசிதமான சமயங்களில் (அதாவது நித்யபடி ஆராதனத்தில் ஆறு காலங்களிலும் மற்றும்
சஞ்சாரங்களின் போது அந்தந்த மண்டபங்களிலும்) — ய=யாதொரு – இமே= அர்ச்சகர்கள் –
கர்மபி:= காரியங்களாலே — ஸமர்ப்பயந்தி = ஸமர்ப்பிக்கின்றார்களோ – இத்ருசோ = இவர்களைப் போன்றவனாக –
பரஸ்மிந் ஜந்மநி=அடுத்த ஜன்மத்தில் – அபி பவேயம்= ஆவேனா..?

“ஹே! பாதுகே! நீ எனக்கு மோக்ஷம் கொடுத்தால் கொடு அல்லது கொடுக்காவிட்டால் எனக்கு அடுத்த ஜன்மத்திலாவது
ஸ்ரீரங்கநாதனுக்கு கைங்கர்யம் செய்யும் அர்ச்சகராய் பிறக்கச் செய்! இந்த அர்ச்சகர்களைப் போல மிகுந்த ப்ரீதியுடனும்
பவ்யத்துடனும் உன்னை ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் தடங்கலில்லாமல் அந்தந்த உசித காலங்களில் ஸமர்ப்பிக்கிறது
முதலிய கைங்கர்யங்கள் கிடைக்குமாயின் அதுவே எனக்கு மோக்ஷம்!. அதற்கும் கூட நான் கொடுத்து வைக்கவில்லையே!
எனக்கு அந்த பாக்யம் இந்த ஜன்மத்தில் இல்லாது போயிற்றே! எங்கிருந்தாலும் உனக்கு இடைவிடாது
கைங்கர்யம் பண்ணுவதுதானே மோக்ஷம்! அதற்காகத்தானே அங்கு (பரமபதம்) போகிறது –
அது இங்கேயே (ஸ்ரீரங்கத்தில்) கிடைத்து விட்டால் எவ்வளவு பாக்யசாலியாவேன் நான்!“

ஸ்ரீரங்கம் கோவிலின் பூஜை முறைகள் ஓளபகாயநர். சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் என்ற
ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரியில் பகவானால் உபதேசிக்கப்பட்டமையால் இது ‘ராத்ரி ஆகமம்“ –
இது ஐந்து(பஞ்ச) ரிஷிகளுக்கு ஐந்து நாட்கள் உபதேசிக்கப்பட்டமையால் “பாஞ்சராத்ர ஆகமம்” என்று திருப்பெயர்.
ஸ்ரீபாஞ்சராத்ர தியான ஸ்லோகம் நிர்த்தாரணமாய் முதலிலேயே சொல்லிவிடுகின்றது.. ”….
ஓளபகாயந சாண்டில்ய பாரத்வாஜஸ்ச கௌசிக: மௌஜ்யாயநஸ் ச பஞ்சைதே பாஞ்சராத்ர ப்ரவர்த்தகா: ..’’
இவர்கள்தான் இந்த பாஞ்சராத்ர ஆகமத்தின் ப்ரவர்த்தகர்கள் அதாவது இந்த பூஜை முறைக்கு அதிகாரமானவர்கள் என்று.
இதன்படியேதான் இன்று வரை இந்த ஐந்து கோத்ரங்களில் வந்த வழிமுறையினர்தான் பூஜைகளைச் செய்து வருகின்றனர்.
இதைத் தவிர ஸ்ரீரங்கம் கோவிலில் கடைப்பிடிக்கப்படுவது “ஸ்ரீசுக்ல யஜூர்” வேதமாகும்.
அர்ச்சகர்கள் அனைவருமே சுக்ல யஜூர் வேதிகள் – இதில் காண்வ சாகை பிரிவினர்.
ஒருவன் ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராய் ஆவதற்கு முதலில் இந்த தகுதியோடு பிறக்க வேண்டும்.
இதற்கு பின் நிறைய கற்க வேண்டியதுள்ளது.

—————————————————————————-

பரிவர்த்தயிதா பிதா மஹாதீந்
த்வம் இவ அநந்தம் அஸௌ வஹதி அநேஹா
அதுநாபி ந ஸௌரி பாதுகே த்வாம்
அநக ஆலம்பநம் நாப்யுபைதி சித்தம்—-953-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது பாட்டன், அவனுக்குப் பாட்டன் என்று தொடங்கி நான்முகன் வரையுள்ள
பல உயிர்களும் மாற்றி மாற்றி ஸம்ஹாரம் செய்யப்பட்டும், ஸ்ருஷ்டி செய்யப்பட்டும் செய்வதான காலச்சுழற்சி என்பது,
நீ ஸ்ரீரங்கநாதனை தாங்கியபடி உள்ளது போன்று, எல்லையற்ற காலமாக இயங்கி வருகிறது.
ஆயினும் எனது மனமானது, த்யானிக்கத் தகுந்த மிகவும் உயர்ந்த வஸ்துவாக உள்ள உன்னைக் கைக்கொள்ளாமல் இருக்கிறதே!

ஸ்ரீ பெருமாளின் ஸ்ரீ பாதுகையே அநாதியாக எத்தனை காலம் போயிற்று -எத்தனை ப்ரம்மாதிகள் மாறி மாறி வந்து போயாயிற்று –
நீ எப்படி அநாதி காலமாய் முடிவின்றியும் பெருமாளை வஹித்து வருகிறாயே -அப்படியே இந்தக் காலமும் கூட ப்ரவஹித்துப் போகிறதே
நானோ இன்னும் உன்னைத் துணையாக பிடிப்பாக உயர்ந்த ஸூபாஸ்ரயமாக பிடித்துக் கொள்ள வில்லையே -அந்தோ –

————————————————————

கமலாத்த் யுஷிதே நிதௌ நிரீஹே
ஸுலபே திஷ்டதி ரங்க கோச மத்யே
த்வயி தத் ப்ரதி லம்பநே ஸ்திதாயாம்
பரம் அந்விச்சதி பாதுகே மந: மே—-954-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்ககநாச்சியாரால் எப்போதும் வாஸம் செய்யப்படுவதாகவும், உலக விஷயங்கள்
மீது உள்ள ஆசைகளை நீக்குவதாகவும், மிகவும் எளிதாக அடையக்கூடியதாகவும் உள்ள ஸ்ரீரங்கநாதன் என்ற மிகப் பெரிய புதையல்,
ஸ்ரீரங்கவிமானம் என்ற இடத்தில் உள்ளது. அந்தப் புதையலை அடைய உதவும் மந்திரவாதி போன்று நீ உள்ளாய்.
இப்படி நீங்கள் இருவரும் உள்ளபோது, உங்களை நாடாமல் எனது மனம் வேறு எதனையோ தேடுகிறதே!

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் ஆகிற பெரும் நிதி -தாமரைச் செல்வியான ஸ்ரீ யுடன் சேர்ந்து இருக்கிறது -ஆசை அற்றது
அவாப்த சமஸ்த காமன் -அந்த ஸ்ரீ ரங்க விமானத்தின் கீழே மறைவாகப் போல எக்காலத்துக்கும் நான்
ஆச்ரயித்துப் பயன் பெற வென்றே நிலையாக நிற்கிறது -அதை நான் அடைய நீயும் உதவ இருக்கிறாய் –
இருந்த போதும் என் மனஸ் அதற்கு வேறான எதிரியான திருவில்லா மற்றதோர் ஒன்றைத் தேடி அலைகின்றதே -அந்தோ –

——————————————————————–

யத்யபி அஹம் தரளதீ: தவ ந ஸ்மரேயம்
ந ஸ்மர்த்தும் அர்ஹதி கதம் பவதீ ஸ்வயம் மே
வத்ஸே விஹார குதுகம் கலயதி அவஸ்தா
கா நாம கேசவ பதாவநி வத்ஸல்யா–955–

அழகான தலைமுடி கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உலக விஷயங்களில் மேயும் கன்று போன்ற புத்தியுடையவன் என்பதால்,
பசுவாகிய உன்னை நான் எண்ணாமல் இருக்கக்கூடும். தனது கன்று வெகுதூரம் சென்று விளையாட எண்ணும்போது,
பசுவின் நிலை எப்படி இருக்கும்? அந்தப் பசு எவ்விதம் தனது கன்றைத் தேடிச் செல்லுமோ
அது போன்று, நீயாகவே என்னை எண்ணி வரவேண்டும்.

ஸ்ரீ பெருமாளின் பாதுகையே -அப்படி நான் சஞ்சல சித்தனாய் உன் நினைவின்றி இருந்து இருப்பேனாகிலும் நீ எப்படி
என்னை நினைக்காது உதாசீனம் செய்யலாகும் -கன்று விளையாட்டுக்காக வெகுதூரம் அகன்று போனாலும்கூட ஈன்ற தாய்
வத்சலையாக என்ன செய்யும்-அது போலே நீயும் செய்திருக்க வேண்டாவோ –

தரளதீ:=சபலபுத்தியுடையவனான – அஹம்=நான் – தவ=உன்னை – நஸ்மேரயம் யத்யபி=நினைக்காமலிருக்கலாம் –
பவதீ=நீயாவது – ஸ்வயம்=தானாகவே – மே=என்னை — நஸ்மர்த்தும்=நினைக்காமலிருப்பதற்கு – கதம்=எப்படி –
அர்ஹதி=தகுந்தவளாகிறாய்? – வத்ஸே=கன்றானது – விஹார=விளையாட்டிலே – குதுகம்=ஆர்வமாய் –
கலயதி=(துள்ளி குதித்து) விளையாடும் போது – வத்ஸலாயா:=கன்றினிடத்தில் ஆசையுள்ள தாய்பசு —
நாம=எப்படியெல்லாம் – அவஸ்தா=அவதிப்படுகின்றது.

புதிதாக ஒரு பசு கன்றினை ஈன்றுகின்றது. அந்த கன்றனாது துள்ளி குதித்து தாய்பசுவினை விட்டு சில அடிகள்
நகர்ந்தால் கூட தாய்பசுவானது படாதபாடு பட்டுவிடும்!. உறுமும்..! கன்றைத் தொடர்ந்து ஓடும்..!
கன்றுக்கு என்ன ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தினால் கன்றுக்கு அருகே வருபவர்களை முட்டப் போகும்..!
ஒரு மிருகத்திற்கு இவ்வளவு வாத்ஸல்யம் இருக்கின்றதே! எல்லையில்லாத ஞானம், தயை, வாத்ஸல்யம் முதலிய
குணங்களையுடைய ஹே! பாதுகையே! நீ என்னிடத்தில் எப்படியிருக்க வேண்டும்..?

என்னுடைய ஜன்மாந்திரத் தொடர்பினால் வந்த பாபவாஸனையினால், இந்த உலகப்பற்று நீங்காமல்,
ஆசையுடையவனாய், பற்றுடையவனாய்,ஸம்ஸார கடலில் போக்யதாபுத்தியினால் உழன்று, உன்னை விட்டு விலகி
நான் ஓடினால் கூட, நீ அந்த தாய்பசுவினைப் போன்று என்னை துடர்ந்து வந்து , உன் கடாக்ஷத்தினால் என் பாபங்களைப் போக்கி,
வைராக்கியமான மனதையளித்து, என் மனதை உன்னிடத்திலேயே நிலைக்கொள்ளுமாறு வைத்திருக்க வேண்டாமா..?
இவ்விதம் செய்யாமல் என்னை ஒதுக்கி வைப்பது உனக்கு அழகா..? இது தகுமா..?

இந்த ஸம்ஸாரருசி என்பது வெறும் ஞானத்தினால் போகாது. பகவத் அனுக்கிரஹம் ஒன்றினால் மட்டுமே நீங்கும்.
இந்த பகவத் அனுக்ரஹத்தினை ஆச்சார்யன் சம்பந்தமானது மிகவும் எளிதாக ஆக்கும்.
ஆச்சார்யனது வாத்ஸல்யம் இருந்தால் பகவத் அனுக்ரஹம் பரிபூர்ணம்.

—————————————————————————

மாதர் முகுந்த கருணாம் அபி நிஹ்நுவாநாத்
கிம் வா பரம் கிமபி கிஷ்பிஷதோ மதீயாத்
காடம் க்ருஹீத சரணா கமநாபதேசாத்
தத் ப்ரேரண ப்ரணயிநீ தவ சேத் ந லீலா—956-

தாயே! ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே (கடந்த ச்லோகத்தில் “நீயாகவே தேடி வர வேண்டும்”, என்று கூறியவுடன்
பாதுகைகள், ”நான் உன்னைத் தேடி வரவில்லை என்றால் உனது பாவமே அதற்குக் காரணம்”, என்றாள்.
உடனே ஸ்வாமி அவளிடம், “உனது லீலைகள் என் பாவங்களை விட வலிமையானது அல்லவோ?”, என்கிறார்)
ஸஞ்சாரம் என்பதைக் காரணமாகக் கொண்டு ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை நீ கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாய்.
இப்படியாக அவனைப் புறப்படத் தூண்டியபடி உள்ளாய். இத்தனை உயர்ந்தவையாக உனது லீலை இல்லை என்றால் –
ஸ்ரீரங்கநாதன் தானாகவே என் மீது செலுத்துகின்ற கருணையை மறுக்கின்ற அளவிற்கு உள்ள
எனது பாவங்களை விட உயர்ந்த வஸ்து வேறு என்ன உள்ளது? (உனது கருணை மட்டுமே எனது பாவங்கள் நீக்கவல்லது)

ஸ்ரீ பாதுகா தாயே -என் பாபங்கள் வலியவை என்பாயோ -சஞ்சாரம் என்ற சாக்கில் பெருமாள் திருவடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு
அவனை என் விஷயத்தில் ஏவி உதவக் கூடிய உன் லீலை ஓன்று இல்லை என்றால் என் நிலை என்ன ஆகும் –
என் பாபங்கள் வலிதானாலும் உன் கருணையை இன்னும் நம்பி இருக்கிறேன் என்றதாயிற்று –

——————————————————————————

க்ஷீபா அஸி காஞ்சந பாதாவநி கைடபாரே
பாதாரவிந்த மகரந்த நிஷேவணேந
தேவி த்வதந்திக ஜுஷ: கதம் அந்யதா மே
தீநாக்ஷராணி ந ஸ்ருணோஷி தயாதிகா த்வம்—957-

தங்கமயமான பாதுகையே! கைடபன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்ற தாமரையில் உள்ள
தேனைப் பருகி மயக்கம் கொண்டு நீ உள்ளாய். இவ்விதம் நீ மயக்கம் கொள்ளாமல் தெளிந்த நிலையில் இருந்தாய் என்றால் –
கருணை நிரம்பிய நீ, எனது வருத்தம் நிறைந்த சொற்களைக் கேட்காமலா இருந்திருப்பாய்
(நீ கேட்காத காரணத்தால் அரங்கனின் திருவடி அழகில் மயங்கி உள்ளாய் என்று கருத்து).

ஸ்ரீ தங்கப் பாதுகை தேவியே பெருமாளின் திருவடித் தாமரைத் தேனை நிறையக் குடித்து மயங்கிக் கிடக்கிறாய் போலும் –
உன் அருகில் இருந்து கொண்டு புலம்பும் என் எளிய சொற்களை கருணை நிறைந்த நீ
எங்கனம் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்கக் கூடும் –

——————————————————-

மாதஸ் த்வத் அர்ப்பித பரஸ்ய முகுந்த பாதே
பத்ரே தராணி யதி நாம பவந்தி பூய:
கீர்த்தி: ப்ரபந்ந பரிரக்ஷண தீக்ஷிதாயா:
கிம் ந த்ரபேத தவ காஞ்சந பாத ரக்ஷே—-958–

என் தாய் போன்ற தங்கமயமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உன்னால் ஸமர்ப்பிக்கப்பட்ட,
மோக்ஷத்தின் உபாயமான பக்தி என்பதைச் சரியாகச் செய்யவேண்டிய பொறுப்பைச் சுமர்த்தப்பட்டவனாகிய எனக்கு –
அதன் பின்னரும் நன்மை அல்லாத தீமைகளே தொடர்ந்து வருகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
அப்படி என்றால், சரணம் அடைந்தவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற விரதம் கொண்டுள்ள
உனது கீர்த்தியானது வெட்கம் கொள்ளாதோ? (அதற்குக் பயந்தாவது நீ காப்பாற்றவேண்டாமோ)

ஸ்ரீ தங்கப் பாதுகைத் தாயே முகுந்தன் திருவடிகளில் என் பரம் உன்னால் சமர்ப்பிக்கப் பெற்றதாயிற்றே –
அப்படி இருக்க -எனக்கு அமங்கலம் நிகழ்ந்திடுமே யாகில் அனைவரையும் ரஷிக்க வ்ரதம் பூண்டு இருக்கும்
உன் கீர்த்திக்கு அன்றோ பழுதாகும் -அதற்கு வெட்கம் ஏற்படாதோ –

———————————————————————-

தௌவாரிக த்விரஸந ப்ரபலாந்தராயை:
தூயே பதாவநி துராட்ய பில ப்ரவேசை:
தத் ரங்கதாம நிரபாய தந உத்தராயாம்
த்வய்யேவ விஸ்ரமய மங்க்ஷு மநோரதம் மே—959-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பாம்பின் புத்துக்கள் போன்று இந்த உலகில் உள்ள தீமை நிறைந்த செல்வந்தர்களின் வீடுகள் உள்ளன.
அந்த வீடுகளின் வாயிலில் உள்ள வாயிற்காப்போன் பாம்பு போன்றே உள்ளான்.
இப்படிப்பட்ட இடையூறுகளால் நான் பலமுறை துயரப்படுகிறேன். ஸ்ரீரங்கநாதன் என்ற அழிவற்ற பெரும் செல்வத்தை
நீ எப்போதும் தாங்கியபடி உள்ளாய். இப்படிப்பட்ட உன்னிடம் நிலையாக இருக்கும்படி எனது ஆசை என்ற தேரைச் செலுத்தி வருவாயாக.

ஸ்ரீ பாதுகையே -என் வருத்தம் இது தான் -வாழ்க்கை நடத்தப் பணம் வேண்டுமே என்று துஷ்டப் பிரபுக்கள் இடங்கள் ஆகிய பாம்பு புற்றுக்களுக்குள்
நுழைய முற்பட்டு வாயில் காப்போன்கள் ஆகிய பாம்புகளால் எனக்கு ஏற்படக் கூடிய நிலையை நினைந்து வருந்துகிறேன்
ஸ்ரீ ரங்க நாடகனே அழிவில்லாத பெரும் தனம் -அது உயர்வு மிக்க உன்னிடத்தில் நிலையாக உள்ளது
என் மநோ ரதம் உன்னிடத்திலேயே இளைப்பாறும் படி சீக்ரமாகவே அருளுவாயாக –

————————————————————————————–

வ்யாமுஹ்யதாம் த்ரிவித தாபமயே நிதாகே
மாயா விசேஷ ஜநிதாஸு மரீசிகாஸு
ஸம்ஸ்ப்ருஷ்ட சௌரி சரணா சரணாவநி த்வம்
ஸ்தேயா ஸ்வயம் பவஸி நஸ் சரமே புமர்த்தே—960–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம் மற்றும் ஆதிதைவிகம்
என்ற மூன்று விதமான வேதனைகள் நிறைந்த கோடைகாலம் போன்று இந்த ஸம்ஸாரம் உள்ளது,
இந்தக் கோடையில், ப்ரக்ருதியின் மூன்று குணங்களானவை கானல்நீரைப் போன்று தோன்றி, எங்களை மயக்கியபடி உள்ளன.
இந்த நேரத்தில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் வருடியபடி உள்ள நீயே,
உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷ விஷயத்தில் எங்களிடம்,
”இந்தத் திருவடிகளைப் பாருங்கள் – இதுதான் உயர்ந்த மோக்ஷம். இது நிச்சயம் கிட்டும்”, என்று கூறுகிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே சம்சாரம் ஒரு கடும் கோடை -தாபத்ரயம் வருத்தும் -மூல பிரக்ருதியின் விளைவு களான குண வகைகளால்
ஏற்படும் சப்தாதி விஷயங்களில் ஈடுபட்டு அலைகிற மனம் பின் அவை கானல் நீர் என்று உணர்ந்து துயர் உறும்
நீ பெருமாள் திருவடியை நன்றாகத் தொட்டுக் கொண்டு இது தான் உத்தம புருஷார்த்தம் என்று காட்டித் தந்து –
சந்தேஹங்களை விலக்கி அது நமக்கு கிடைக்கும் என்று காட்டி அருளுகிறாய் –

——————————————————————————————

அச்சேத்யயா விஷய வாகுரயா நிபத்தாந்
தீநாந் ஜநார்த்தந பதாவநி ஸத்பதஸ்த்தா
ப்ராய: க்ரமேண பவதீ பரிக்ருஹ்ய மௌளௌ
காலேந மோசயதி ந: க்ருபயா ஸநாதா—-961-

ஜனங்களால் எப்போதும் வேண்டப்படும் ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
அறுத்துக் கொண்டு வெளியே வர இயலாதபடி இருக்கின்ற உலக விஷயங்கள் என்னும் வலையில் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம்.
அப்போது உனது கருணை காரணமாக நீ ஆகாய மார்க்கமாக வருகிறாய்.
சரியான கால கட்டத்தில் மேலே நின்றபடி எங்கள் தலையைப் பிடித்து, அந்த வலையில் இருந்து இழுத்து, எங்களை விடுவிக்கிறாய்.

ஸ்ரீ பெருமாளின் பாதுகையே -சப்தாதி விஷயங்கள் -வலிமையான வலை -அதில் சிக்கித் தவிக்கிற எம்மை கருணை உடன்
நீ ஒவ்வொருவர் தலையிலும் அமர்ந்து வரிசையாக வலையில் இருந்து விடுவிக்கிறாய்
நாங்கள் தீனர் -நீ பரமபதத்தில் இருந்து எமக்காக இறங்கி வந்து எம்மை விடுவித்து உய்விக்கிறாய்-

———————————————————————————-

ஸம்வாஹிகா சரணயோர் மணி பாத ரக்ஷே
தேவஸ்ய ரங்கவஸதேர் தயிதா நநு த்வம்
கஸ்த்வாம் நிவாரயிதும் அர்ஹதி யோ ஜயந்தீம்
மாதஸ் ஸ்வயம் குணகணேஷு மம அபராதாந்—-962-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! ஸ்ரீரங்கவிமானத்தைத் தனது ஆஸ்தானமாகக் கொண்ட
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் தாங்கியபடி உள்ள ப்ரியமானவள் நீ அல்லவோ?
எனது குற்றங்களுக்காக ஸ்ரீரங்கநாதன் என்னைத் தண்டிக்க முற்பட்டாலும்,
எனது குற்றங்களைச் சட்டென்று குணங்களாக நீ மாற்றிக் காட்டி,
அவனது தண்டிக்கும் செயலைத் தடுக்கிறாய். இப்படிப்பட்ட உன்னை வேறு யார் தடுக்கக்கூடும்?

ஸ்ரீ மணி பாதுகை தாயே -நீ எம்பெருமான் திருவடிகளைப் பிடித்து விடும் பிரிய நாயகி யாயிற்றே –
நீசனான என் குற்றங்களைப் பெருமாள் பொறுத்து அருள்வது
அவர் ஷமை கருணை வாத்சல்யம் போன்ற குணங்களை பிரகாசப்படுத்துமே
நீ அத்தைச் செய்ய தூண்டுவதை யாரால் தடுக்க துணிவார் -எனக்காகச் செய்து அருளுவீர் அம்மா –

————————————————————————————–

கிம் வா பவிஷ்யதி பரம் கலுஷ ஏக வ்ருத்தே:
ஏதாவதா அப்யநு பஜாதம் அநேஹஸா மே
ஏகம் ததஸ்தி யதி பஸ்யஸி பாதுகே தே
பத்மா ஸஹாய பத பங்கஜ போக ஸாம்யம்—-963-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இது நாள் வரை நான் பாவங்கள் செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டபடி உள்ளேன்.
இவற்றின் பலனாகிய துன்பமோ இன்பமோ இனிப் புதிதாக எதுதான் எனக்கு ஏற்படப் போகிறது?
ஆனால் நீ என்னை உற்று நோக்கினால் போதுமானது. அதன் மூலம், இதுவரை எனக்குக் கிட்டாமல் உள்ள ஒன்று கிட்டிவிடும்.
அது என்னவென்றால் – ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை
உனக்கு சமமாக நின்று நானும் அனுபவிக்கும் நிலையே ஆகும்.

ஸ்ரீ பாதுகையே -உன் கடாஷத்தினால் சாம்யாபத்தி அடையும் படி அருள வேண்டும் –
இது நாள் வரை பல காலமாக நாநாவித பாபங்களை செய்து போந்தேன்-கடாஷித்து அருளுவாய் –

——————————————————————-

விவித விஷய சிந்தா சந்ததா பிச்சரம்
ஜனித கலுஷமித்தம் தேவி துர்வாச நாபி
பத சரசிஜ யோஸ்த்வம் பாதுகே ரங்க பர்த்து
பரிமள பரிவாஹை பாவனைர் வாச யேதா –964–

விவித விஷய சிந்தா ஸந்ததாபி: சிரம் மாம்
ஜநித கலுஷம் இத்தம் தேவி துவாஸநாபி:
பத ஸரஸிஜயோ: த்வம் பாதுகே ரங்க பர்த்து:
பரிமள பரிவாஹை: பாவநைர் வாஸயேதா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! உலக விஷயங்கள் என்னும் பலவிதமான சிந்தனைகளின் வாஸனைகள் காரணமாக
நான் பாவங்கள் என்னும் அழுக்கு சூழ நிற்கிறேன். இந்த நாற்றம் தீரும்படியாக,
ஸ்ரீரங்கநாதனின் திருவடித்தாமரையின் வாசனை வெள்ளம் மூலம் என்னை நறுமணம் வீசும்படிச் செய்வாயாக.

ஸ்ரீ பாதுகா தேவியே உலகில் பலவித விஷயங்களில் சிந்தையைத் தொடர்ச்சியாகப் பரவ விட்டேன் –
அதனால் ஏற்பட்ட துர்வாசனை என்னைச் சிக்கென பிடித்து பாபியாக்கி விட்டதே –
நீ அந்த துர் வாசனையைப் போக்கி ஸ்ரீ ரங்க நாதனின் திருவடித் தாமரைகள் தரும் பரிசுத்தி தரத் தக்க
பரிமள வெள்ளங்களால் என்னை மணக்கச் செய்து அருள்வாயாக –

——————————————————————–

சரணம் அதிகத: த்வாம் சார்ங்கிண: பாத ரக்ஷே
ஸக்ருதபி விநியுக்தம் த்வத் ஸபர்யாதிகாரே
புநரபி சதமேநம் ஹஸ்தம் உத்தாநயேயம்
தநமத முதிதாநாம் மாநவாநாம் ஸமாஜே—-965-

சார்ங்கம் என்னும் வில்லைக் கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
உன்னையே சரணம் என்று புகுந்த நான், ஒருமுறையாவது உன்னை ஆராதிக்கப் பயன்படுத்தப்பட்ட
எனது கையை, செல்வம் அதிகமாக உள்ள காரணத்தினால் கர்வத்துடன் ஆனந்தமாக உள்ள
மனிதர்களின் முன்பாக எவ்விதம் நீட்டி நிற்பேன்?

ஸ்ரீ பெருமாளின் திருப்பாதுகையே நான் உன்னைச் சரண் அடைந்தவன் –
இந்தக் கையால் ஒரு தரமாவது உனக்கு கைங்கர்யம் செய்து இருப்பேன்
இதை மறுபடி ஒரு மனிதன் முன் நீட்டி உதவி கேட்பேனோ -நிச்சயம் மாட்டேன் –

—————————————————————————————–

யதி கிமபி ஸமீஹே கர்ம கர்த்தும் யதாவத்
ப்ரதிபதம் உபஜாதை: ப்ரத்யவேயாம் நிமித்தை:
அவதிரஸி யதி த்வம் தத்ர நைமித்திகாநாம்
சரணம் இஹ கிம் மே சௌரி பாதாவநி ஸ்யா:—966-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சாஸ்த்ரங்கள் விதிக்கின்ற கர்மங்களை நான் அனுஷ்டிக்க முயற்சி செய்யும் போது
பலவிதமான தவறுகள் அடிக்கடி ஏற்பட, இதனால் குற்றம் நிறைந்தவன் ஆகிறேன்.
இப்படிப்பட்ட தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக நீயே உள்ளாய்.
இப்படி நீ உள்ளபோது, கர்மங்களை நான் கடைப்பிடிக்காமல் உள்ள நேரத்திலேயே நீ ஏன் என்னைக் காப்பாற்றக் கூடாது?

ஸ்ரீ பாதுகா தேவியே சாஸ்த்ரத்தில் சொல்லும் கர்மாக்கள் செய்ய முயலுகையில் மந்திர தந்திர ஆசராதிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டே
அப்படி குற்றவாளன் ஆகி அதற்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டியன் ஆகிறேன்
அதிலும் தவறு என்றால் -இப்படி நீள வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் முடியும் இடம் நீயே ஆகிறாய் –
அதை விட கர்மாநுஷ்டானம் செய்யத் தொடங்காத நிலையிலேயே நீ என் எனக்கு சரணம் ஆகலாகாது
அது தானே தரம் -செய்து அருள்வாய் –ஸ்ரீ கிருஷ்ண பாதுகாப்யாம் நம -பிராயச்சித்த ஸ்மரணம் செய்வது உண்டே –

—————————————————————————————————–

அந்தர்லீநை: அகபரிகரை ஆவிலா சித்த விருத்தி:
சப்தாதீநாம் பரவசதயா துர்ஜயாநி இந்த்ரியானி
விஷ்ணோ: பாத ப்ரணயிநி சிராத் அஸ்ய மே துக்க ஸிந்தோ:
பாரம் ப்ராப்யம் பவதி பரயா வித்யயா வா த்வயா வா—-967-

எங்கும் நிறைந்தவனான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மீது மிகவும் ஆசை கொண்ட பாதுகையே!
எனது மனதிற்குள் நிறைந்துள்ள பாவங்களின் காரணமாக மனம் மிகவும் கலங்கியே நிற்கிறது.
இந்த்ரியங்கள் அனைத்தும் சப்தம் போன்ற அவற்றின் விஷயங்களுக்கு வசப்பட்டு நிற்பதால், வெல்ல இயலாதபடி உள்ளன.
இத்தகைய எனது துக்கம் நீங்குவது என்பது
பக்தியின் மூலமா (ஸ்ரீரங்கநாதனிடம் எல்லையற்ற ப்ரியம்),
ப்ரபத்தி மூலமா (ஸ்ரீரங்கநாதனிடம் அசைக்க இயலாத நம்பிக்கை)
அல்லது உன்னைச் சரணம் அடைவதன் மூலமா?

என் உள்ள அழுந்தி இருக்கும் பாப வாசனை மநோ விருத்தியைக் கலக்கி விடுகிறது –
இந்த்ரியங்கள் யாவம் சப்தாதி விஷயங்கள் வசப்பட்டுக் கிடக்கின்றன -வெல்ல ஒண்ணாதவை-
ஸ்ரீ பாதுகையே பெருமாளின் திருவடியின் பற்று மிக்க காதலியே இந்தக் கடலை நீந்த
பரவித்யை என்று சொல்லப்படும் பக்தியாலேயா அல்லது உன்னாலாலா –
உன்னிடத்தில் சரணாகதி யாலேயே தானே -என்றவாறு

—————————————————————

கோமாயூநாம் மலய பவநே தஸ்கராணாம் ஹிமாம்சௌ
துர் வ்ருத்தாநாம் ஸுசரி தமயே ஸத்பதே த்வத் ஸநாதே
தத்வஜ்ஞாநே தரள மநஸாம் சார்ங்கிண: பாத ரக்ஷே
நித்யோத் வேகோ பவதி நியதே: ஈத்ருசீ துர்விநீதி:—968–

சார்ங்கம் என்ற வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
குள்ள நரிகளுக்கு தென்றல் காற்றும், திருடர்களுக்குக் குளிர்ந்த கிரணங்கள் கொண்ட பௌர்ணமி நிலவும் பிடிக்காமல் உள்ளது.
தீய நடத்தை உள்ளவர்களுக்கு உன்னையே தெய்வமாக எண்ணியபடி பின்பற்றக் கூடிய தர்ம மார்க்கம் என்பது பிடிக்காமல் உள்ளது.
தடுமாறும் மனதைக் கொண்டவர்களுக்கு, உண்மையான ஞானம் அறிவதில் வெறுப்பு உள்ளது.
இப்படியாக அல்லவோ தெய்வத்தின் போக்கு உள்ளது?

பேற்றுக்கு த்வரிக்கை ஏன்- என்று ஸ்ரீ பாதுகா தேவி அருளிச் செய்ய இந்த ஸ்லோஹம்
ஸ்ரீ பெருமாளின் திருப் பாதுகையே குள்ள நரிகள் தென்றலை ரசிக்க மாட்டார் –
திருடர்கள் குளிர்ந்த நிலக் காலத்தை வெறுப்பர் –
உன்னை தெய்வம்,ஆகி கொண்டாடி தர்மம் மிகு சன்மார்க்கத்தில் துர்ஜனர் ஈடுபடார் –
சஞ்சல புத்தி உள்ளவர் தத்வ ஜ்ஞான லாபத்தில் ஸ்ரத்தை கொள்ள மாட்டார் -வெறுப்பர் –அஞ்சுவர்
இது எல்லாம் விதியின் கொடுமை -இனி என்னை இங்கே வையாதே –

——————————————————————————————-

காலே ஜந்தூந் கலுஷ கரணே க்ஷிப்ரம் ஆகார யந்த்யா:
கோரம் நாஹம் யம ப்ரிஷதோ கோஷமா கர்ண யேயம்
ஸ்ரீமத் ரங்கேச்வர சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநாம் ஸபதி ஸ்ருணுயாம் பாதுகா ஸேவக இதி —969-

கலுஷ=கலங்கியிருக்கின்ற – கரணே=இந்திரியங்களுடைய – காலே=செத்துப் போகிற காலத்திலே –
ஜந்துாந்=ஜந்துக்களை (ஜீவன்களை) – க்ஷிப்ரம்=சீக்கிரமாக – ஆகாரயந்த்யா:=அழைக்கிறதாயிருக்கின்ற –
யமபரிஷத:=யமக் கூட்டத்தினுடைய – கோரம்=பயத்தையுண்டுப் பண்ணுவதான – கோஷம்= இரைச்சலை –
அஹம்=நான் – நாகர்ணயேயம்=கேட்கமாலிருக்க வேண்டும். – ஸ்ரீமத்=மஹாலக்ஷ்மியோடு கூடிய –
ரங்கேஸ்வர=ஸ்ரீரங்கநாதனுடைய – சரணயோ:=திருவடிகளுக்கு – அந்தரங்கை:=அந்தரங்கமாய் –
ப்ரயுக்தம்= சொல்லப்படுகின்ற – பாதுகாஸேவகேதி= பாதுகா ஸேவகரே என்று – ஸேவா=ஸேவைக்காக –
ஆஹ்வானம்=பகவத் ஸந்நிதிக்குள் அருளப்பாடிட்டு (என்னை)அழைப்பதை – ஸபதி=சீக்கிரமாக –
அஹம்=நான் – ச்ருணுயாம்=கேட்கவேண்டும்.

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது புலன்கள் ஒடுங்கி நிற்கின்ற அந்திம காலத்தில்,
”உடனடியாக வா”, என்று மனிதர்களை விரட்டுகின்ற யமகிங்கரர்களின் பயங்கரமான ஓசையை நான் கேட்காமல் இருக்கவேண்டும்.
ஸ்ரீரங்கநாச்சியாருடன் சேர்ந்துள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்பவர்களால்,
”அந்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகா ஸேவகனை அழைத்து வா”, என்ற அருளப்பாட்டை வெகு விரைவாக நான் கேட்க வேண்டும்.

ஸ்வாமி தேசிகனுக்கு உபயவேதாந்தாசார்யர், கவிதார்க்கிக ஸிம்ஹம், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் போன்ற
பல விருதுகள் திருவரங்கத் திவ்யதம்பதிகளால் அளிக்கப்பட்டது.
ஆனால் தனது அந்திம காலத்தில் அந்தப் பெயர்கள் கூறி அழைப்பதை ஸ்வாமி பெரிதாக எண்ணவில்லை.
மாறாக “பாதுகா ஸேவகன்” என்ற பெயரையே விரும்புகிறார்.

ஸ்ரீ பாதுகையே அந்திம காலத்தில் இந்த்ரியங்கள் யாவும் கலங்கி ஓய்ந்து விடும் –
யமபடர் பெரிய இரைச்சல் என் காதில் கேட்காமல் இருக்க அருள வேண்டும்
ஸ்ரீ ரங்க நாதனுடைய அந்தரங்க கைங்கர்ய பரர் என்னை சேவைக்காக கூப்பிட –
ஸ்ரீ பாதுகா சேவகரே வாரும் -என்று கூவுவது சீக்ரமாக நான் கேட்கும் படி அருள வேணும் –

ஹே பாதுகே! உன்னுடைய அனுக்ரஹத்தினால் எனக்கு இந்த சரீர சம்பந்தமானது சீக்கிரத்தில் நீங்கப் போகின்றது..!
அந்த சமயத்தில் எனக்கு நீ செய்ய வேண்டிய ஒரு காரியத்தினை நான் இப்போதே வேண்டிக் கொள்கின்றேன்..!
என்னுடைய இந்திரியங்கள் யாவும் செயலிழந்து போனாலும் போகலாம்.!
இறக்கும் தருவாயில் பகவானுடைய நாமத்தினைச் சொல்வதற்கோ நினைப்பதற்கோ முடியாமல் போனலும் போகலாம்..!
அந்த சமயத்தில் யமதூதர்கள் வந்து “பாபி! சீக்கிரம் கிளம்பு..” என்று பயங்கரமாக அதட்டி ஆர்ப்பரிக்கும் படியாக இருக்கக் கூடாது.
நான் வாங்கிய விருதுகள் எதுவும் என் மரணத்தின் போது உதவாது. நீ இப்போதே, நான் உன்னை ஸேவிக்க வரும் போது
“ஸ்ரீமத் ரங்கநாத பாதுகா ஸேவகருக்கு அருளப்பாடு” என்று அரங்கனின் மூலஸ்தானத்தில் கைங்கர்யம் செய்பவர்களால்
அருளப்பாடிட்டு அழைக்கும்படிச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அழைக்கப் பெறுவேனாயின் உலகத்தாரிடையே இந்த பெயர் பிரபலமாகும்.
என் உயிரானது பிரிய தவிக்கும் போது என் பக்கத்திலுள்ள ஜனங்கள் “ஸ்ரீமத்ரங்கநாத பாதுகா ஸேவகரின் உயிரானது
தவித்துக் கொண்டிருக்கின்றது.” என்று எனக்கு வழங்கப்பட்ட இந்த பெயரையும் சேர்த்துச் சொல்லுவார்கள்.
இதனைக் கேட்கும் யம தூதர்கள், “நல்லவர்களோ கெட்டவர்களோ பகவானை ஆஸ்ரயித்தவர்களின் (ஸ்ரீவைஷ்ணவர்களின்)
ஸமீபத்தில் கூட போகதீர்கள். அது மிகவும் அபாயமானது” என்ற எமதர்மராஜாவின் ஆக்ஞைப்படி விலகி ஓடிவிடுவார்கள்.
யமவாதனை என்னை வாட்டமலிருக்க இதுவே உபாயம்.!ஆகையினால் நீ அப்படிச் செய்ய வேணும்..!

————————————————————————————-

பாஷாண கல்பம் அந்தே பரிசித கௌதம பரிக்ரஹ ந்யாயாத்
பதிபத பரிசரணார்ஹம் பரிணமய முகுந்த பத ரக்ஷிணி மாம்—-970–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது அந்திம காலத்தில் கல்லைப் போன்று நான் எந்தவிதமான நினைவும் இன்றிக் கிடப்பேன்.
அந்த நிலையில் நான் உனக்கு முன்பே பழக்கமான கௌதம முனிவரின் பத்னியாகிய அகலிகை போன்று கிடப்பேன்.
அவளை நீ எப்படிப் பிழைக்க வைத்து, அவளது கணவனின் பணிவிடையில் ஈடுபடுத்தினாயோ,
அது போன்று என்னையும் எனது பதியான ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்யும்படிச் செய்வாயாக.

ஸ்ரீ முகுந்த திருப் பாதுகையே அந்திம சமயத்தில் கல் போலக் கிடக்கிற என்னை நீ எப்படி அனுக்ரஹிக்க வேண்டும் என்று சொல்கிறேன்
நாம் நன்கு அறிந்த ஸ்ரீ கௌதம பத்னியான அஹல்யையின் கதையில் போலே பெருமாள் திருவடி பட்டு –
என் பதியான எம்பெருமானுடைய கைங்கர்யத்துக்குத் தக்கபடி அமைய நீ அருள வேணும் –

நிர்வேத பத்ததி ஸம்பூர்ணம்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-30-சித்ர பத்ததி -ஸ்லோகங்கள் -911-950-

March 22, 2016

இது சித்ர கவி -பதம் எழுத்து ஒலி -இவையே முக்கியம் -பொருள் அவ்வளவு முக்கியம் அன்று –
திரு எழு கூற்று இருக்கை போல் -40-ஸ்லோகங்கள் வார்த்தையால் படம் வரைந்து –

இந்தப் பத்ததியில் உள்ள ச்லோகங்களில் பலவிதமான சித்ரங்கள்,
பலவிதமான வியக்கவைக்கும் வாக்ய அமைப்புகள்,
முன்பின் சேர்க்கவல்ல வரிகள் போன்றவை உள்ளன.

———-

ப்ரதிஷ்டாம் ஸர்வ சித்ராணாம் ப்ரபத்யே மணி பாதுகாம்
விசித்ர ஜகத் ஆதார: விஷ்ணுர் யத்ர ப்ரதிஷ்டித:—911-

பலவிதமான வியக்கவைக்கும் விஷயங்கள் கொண்ட இரத்தினமயமான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் சரணம் அடைகிறேன்.
இந்தப் பாதுகையில் அல்லவோ பலவிதமான வியக்கவைக்கும் தன்மைகள் கொண்டவனும்,
உலகங்களுக்கு ஆதாரமாக உள்ளவனும் ஆகிய ஸ்ரீரங்கநாதன் நிலையாக நிற்கிறான்?

பிரதிஷ்டாம் -இருப்பிடம்
சர்வ சித்ராணாம் -அதிசயம் இங்கு -விசித்திரம் வித விதமான ஓவியம்
ப்ரபத்யே மணி பாதுகாம் -அதிசயங்களுக்கு இதுவே இருப்பிடம் -இந்த சித்ர பத்ததிக்கும் இதுவே -அதை சரண் அடைகிறேன்
விசித்ர ஜகதாதாரோ -அதிசயத்துக்கு அதிசயம் உண்டாக்கும் அவனை த் தாங்கி
வியப்பில்லாத வியப்பு
விஷ்ணுர்யத்ர ப்ரதிஷ்டித -அவனைத்தாங்கும் -திருப்பாதுகை

விசித்ரமான பல உலகங்களுக்கும் ஆதாரமாய் நிலை பெற்று விளங்கும் பகவான் எந்த ஸ்ரீ பாதுகையில் இருக்கிறாரோ
ஆச்சர்ய விஷயங்கள் பலவற்றுக்கும் இருப்பிடமான அந்த ஸ்ரீ மணி பாதுகையை சரணம் அடைகிறேன் –

நம்மாழ்வார் பரமாக –
பல அதிசயம் தன் இடம் கொண்டவர்
திருக்குறுங்குடி நம்பியே
சடஜித் -சட வாயுவை வென்றி
மாறன் -உலகுக்கு மாறி
32-வருஷங்கள் உண்ணும் நீர் இத்யாதி
ஆழ்வாரை சரண் அடைகிறார்
நாராயணன் யார் இடம் நிலை பெற்று
புவியும் இரு விசும்பும் நின் அகத்தே –யான் பெரியன்
நீ பெரியன் என்பதை யார் அறிவார் –

ப்ர வி -எதுகை மோனை -நிரம்பி –

——————————————————————

ஸ்ருணு தே பாதுகே சித்ரம் சித்ராபிர் மணிபிர் விபோ
யுக க்ரம புவோ வர்ணாந் யுகபத் வஹஸே ஸ்வயம்—-912-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை பற்றிய வியக்கவைக்கும் செய்தியைக் கேட்பாயாக!
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வர்ணம் எடுத்துக்கொள்ளும் ஸ்ரீரங்கநாதனின் நிறங்களை
நீ பலவிதமான இரத்தினங்கள் மூலம், ஒரே யுகத்தில் வெளிப்ப்படுத்துகிறாய்.

எம்பெருமான் க்ருத யுகத்தில் வெண்மை, த்ரேதா யுகத்தில் சிகப்பு, துவாபர யுகத்தில் பொன்னிறம்,
கலியுகத்தில் கருப்பு என்று காணப்படுகிறான். பாதுகையில் உள்ள இரத்தினக்கற்களில் இந்த நிறங்களைக் காணலாம்.

ஸ்ருணு பாதுகே -காது கொடுத்து கேள்
தே சித்ரம் -உன்னைப்பற்றி -உன் அதிசயம் -இந்த சித்ரா பத்ததியை
யுகக் கிரம புவோ வர்ணான்-யுகங்கள் தோறும் வேறே வேறே வர்ணம் -வெளுப்பு -சிகப்பு -மஞ்சள் -கலியுகத்தில் இயற்க்கை கறுப்பு
சித்ராபிர் மணிபிர் விபோ -நீயும் வித விதமான மணிகளால் ரத்னங்களால் –
யுகபத் வஹசே ஸ்வயம்–ஒரே நேரத்தில் மொத்தமாக
இப்படி பாதுகையின் ஏற்றம்

நம்மாழ்வார் –
யுகத்துக்கு ஏற்ற மார்க்கம் அவன் காட்ட
சரணாகதி -எல்லா யுகங்களுக்கு பொருந்துமே –

சித்ரம் -அதிசயம் -சித்ராபி -நாநா விதம்
யுக -க்ரமம் =யுகபத் -மொத்தமாக
அப ஸப்த ஆபாசம்
கத்தும் குயில் ஓசை -கூவும் இல்லாமல் -கத்தினாலும் இனிமையாய் இருக்கும்
பஸ்ய -இல்லாமல் கேள் இங்கு
நித்யம்-பாதுகை -கண்ணாலே அனைத்தும் -கண்டு கேட்டு தொட்டு -செய்யலாமே

ஸ்ரீ பாதுகையே உன் விஷய ஒரு சித்திரத்தை ஆச்சர்யத்தை கேள் -பகவான் யுகம் தோறும் பால் பொன் பாசி கறுப்பு
வர்ணங்கள் கொள்வது பிரசித்தம் -நீயோ நான்கையும் ஒரே சேரக் கொண்டு இருக்கிறாயே –

யுக் க்ரம = இரட்டிப்பதை உடைத்தாயிருந்து அந்த்ந்த பத்ர விசித்ரங்களுக்கு வேண்டிய படி வரிசையாகவும்,
புவ = உண்டாயிருக்கின்ற – வர்ணாத் = அக்ஷரங்களை – யுகபத் = ஒரே காலத்தில் –
ஸ்வயம் = தானே – வஹஸே = வஹிக்கின்றாய்

ஹே! பாதுகே! பகவான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறமுள்ளவராய் இருந்தார்.
(க்ருத யுகத்தில் – வெளுப்பு, த்ரோதாயுகத்தில் – சிகப்பு, துவாபரயுகத்தில் – பொன் நிறம், கலியுகத்தில் – கருப்பு )
ஆனால் நீயோ பகவானின் அனைத்து வர்ணங்களையும் , உன் மீது பதிக்கப்பெற்றிருக்கும் ரத்னங்களின்
காந்தியினால் ஒரே சமயத்தில் வெளிப்படுத்துகின்றாய் !

உன்னைப் பற்றி ஸ்தோத்திரம் பண்ண வேண்டும் என்று ஆரம்பித்தேன்..!

உன்னுடைய பரம அனுக்கிரஹத்தினால் மட்டுமே அக்‌ஷரங்களும், பதங்களும், ஆச்சர்யமான பல சந்தர்ப்பங்களையும் ,
அர்த்தங்களையும் கொடுக்கும்படி தானாகவே அமைகின்றன..! உன்னுடைய அனுக்ரஹமில்லாமல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது…!

———————————————————————

சித்ரம் -விசித்திரம் -விசேஷ சரித்திரம்
கோ முத்ரிகா பங்கம் -பந்தம் –
பசு ஓன்று மூத்திரத்தை வெளி ஏற்றியபடி நடந்து சென்றால் உருவாகும் அமைப்பு

ஸுரா ஸுரா ஆர்சிதா தந்யா துங்க மங்கள பாலிகா
சராசர அச்ரிதா மாந்யா ரங்க புங்கவ பாதுகா—-913-

தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்படுபவள்; அனைத்து ஸம்பத்துகளும் நிறைந்தவள்;
மிகவும் சிறந்த சுபங்கள் அனைத்தையும் காப்பவள்; நடப்பன, நிற்பன என்ற பலவற்றாலும் அடையத்தக்கவள் –
இப்படிப்பட்டவளான ஸ்ரீரங்கநாதனின் பாதுகை அனைவராலும் கொண்டாத்தக்கவள் ஆவாள்.

ஸூ ரா ஸூ ரா ர்ச்சி தா த ன்யா துங் க மங் க ள பா லி கா
ச ரா ச ரா ஸ்ரீ தா மா ன்யா ரங் க புங் க வ பா து கா

ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகையே -கைங்கர்ய சம்பத் நிறைந்து உள்ளாய் -சகல தேவர்களாலும் அசுரர்களாலும் ஆராதிக்கப் பெறுவது –
நம்முடைய ரஷணங்களை அருளுவது -சராசாரங்கள் அனைத்தும் உன்னையே ஆஸ்ரயித்து நிற்கும் நிலை –
இத்தகைய ஸ்ரீ பாதுகை எல்லாராலும் போற்றத் தக்கதாகுமே –

ஸூரா ஸூரார்ச்சிதா -தேவர் அசுரர்களால் அர்ச்சிக்கப்படும்
தன்யா -செல்வம் நிறைந்த
துங்க மங்கள பாலிகா -உயர்ந்த மங்களங்களைப் பாதுகாத்து
சரா சராச்ரிதா -அசைவது அசையாதன அனைத்துக்கும் ஆதாரம்
மான்யா -போற்றத்தக்க
ரங்க புங்கவ பாதுகா -ஸ்ரீ ரெங்க நாதன் பாதுகை

நின்னோடும் ஓக்க தொழுமின் –
பொன்னுலகு ஆளீரோ புவனம் முழுதும் ஆளீரோ –
கடல் ஞாலம் செய்தே னும் யானே என்னும்
உடல் உயிர் உறவு அடிப்படை யில்
மதி நலம் -செல்வம்
பக்தி அருளும்
போற்றத்தக்க ஆழ்வார்

ஒரு அடியில் -16 எழுத்துக்கள் -மெய் எழுத்து இல்லாமல்
2-4-6-8-10-12-14-16-ஒரே எழுத்து இரண்டிலும் -இப்படி சித்திரம் –

————————————————————————-

பத்மேவ மங்கள ஸரித் பாரம் ஸம்ஸார ஸந்ததே:
துரித க்ஷேபிகா பூயாத் பாதுகா ரங்க பூபதே:—914–

சுபங்கள் என்பது ஆறு போன்று ஓடி வருவதாவும், ஸம்ஸாரத்தின் எல்லை போன்று உள்ளதாகவும்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகை உள்ளாள். அவை ஸ்ரீரங்கநாச்சியார் போன்று நம்முடைய பாவங்களை நீக்கவேண்டும்.

இங்கு உள்ளது பூதசதுர்த்தம் என்னும் சித்ர சப்தம் ஆகும். ”பாதுகா ரங்க பூபதே:” என்பதில் உள்ள
ஒவ்வொரு எழுத்தும் மற்ற பதங்களில் இருந்து அமைக்கப்பட்டவை ஆகும்.

பத்மேவ -பத்மா இவ -ஸ்ரீ மஹா லஷ்மியைப் போலவே
மங்கள சரித்-மங்களங்களை ஆறு போல் பெருகி வரச் செய்வதாலும் -சரித் -ஆறு
பாரம் சம்சார சந்ததே -பிறவிக் கடலின் எல்லையை அடைவிப்பதாலும்
துரித ஷேபிகா பூயாத்-வேரி மாறாத பூ மேல் இருப்பாள் -வினை தீர்ப்பதாலும்
பாதுகா ரங்க பூபதே-

ஸ்ரீ பாதுகை பிராட்டி போன்றதே –
சுப ஆற்று வெள்ளத்தை தொடர்ந்து பெருகச் செய்வதாலும் –
சம்சார சூழலை முடித்து வைத்து அருளுவதாலும் –
நம் வினைகளைப் போக்கி நமக்கு சாதகமாக பரம புருஷார்த்தம் அளிக்கட்டும் –

கூட சதுர்த்தம் -மறைந்து உள்ள நான்காவது பாதம்
ப (7)த்மேவ ம ங்க (5)ள சரித்
பா (1)ரம் சம்சா ர(4) சந்த தே(8)
து (2)ரித ஷேபி கா(3) பூ (6)யாத்
பாதுகா ரங்க பூபதே-இப்படி மறைந்து உள்ளதே

நம்மாழ்வார் -பாசுரங்கள் பக்தி பெருக்கு -என்றும் அனுபவிக்கலாம் –

——————————————————————————

அநந்ய சரண: ஸீதந் அநந்த க்லேச ஸாகரே
சரணம் சரண த்ராணம் ரங்க நாதஸ்ய ஸம்ஸ்ரயே—915

வேறு எந்தவிதமான கதியும் இல்லாமல் ஸம்ஸாரம் என்ற துன்பக் கடலில் மூழ்கியபடி உள்ள நான்,
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையைச் சரணம் என்று அடைகிறேன்.

இங்கு உள்ளது நிரோஷ்ட்யம் என்ற சப்தசித்ரமாகும். உ, ப, ம, ஒ போன்ற எழுத்துக்கள் உதடுகளால்
உச்சரிக்கப்பட வேண்டியவை. இவற்றுக்கு ஓஷ்ட்யம் என்று பெயர். இவை இல்லாமல் இந்த ஸலோகம் அமைந்துள்ளது.

அநந்ய கதி யுடையவனாய் -சம்சாரக் கடலில் அழுந்தி வருந்துகின்றேன் –
எனக்கே ஸ்ரீ ரெங்க நாத ஸ்ரீ பாதுகையை சரணமாக அடைகிறேன் –

அநந்த = அளவில்லாத – க்லேச = கஷ்டங்களை (ஸம்ஸாரத்தில் உழல்வதால்) – ஸாகரே = சமுத்திரத்தில் –
ஸீதந் = சங்கடப்பட்டுக்கொண்டு – அநந்ய சரண: = (உன்னைத் தவிர) வேறு ஒரு ரக்ஷகர் இல்லாத நான் –
ரங்கநாதஸ்ய= ஸ்ரீரங்கநாதனுடைய – சரணத்ராணம்=திருவடியைக் காப்பாற்றுகின்ற பாதுகையையே –
சரணம் = உபாயமாக – ஸம்ஸ்ரயே = அடைகின்றேன் (வரிக்கின்றேன்)

இந்த பாடலின் முதல் வரியை ஒரு முறை மீண்டும் படியுங்களேன்! உங்கள் உதடுகள் இரண்டும் ஒட்டுகின்றதா..?
ஒட்ட வில்லைதானே..? இப்போது இதன் அர்த்த்தைக் கவனியுங்கள்!
பாதுகையின் சம்பந்தம் பெறாமல், அளவில்லாத கஷ்டங்கள் நிறைந்த இந்த துக்கமயமான ஸம்ஸாரக் கடலில் உழன்று,
உன்னைத் தவிர வேறு ஒரு உபாயமும் இல்லாத நான்…
பாதுகையினிடத்து சம்பந்தம் பெறுவது இருக்கட்டும்.., இந்த வரிகளின் மூலமாய் ஜீவன்கள் வெளிப்படுத்தும் வேதனை,
தம்மோடு மிக நெருக்கமாயிருக்கும் இன்னொரு உதட்டினோடு கூட சேர முடியவில்லை பாருங்கள்..!

அடுத்த வரியைக் கவனியுங்கள்..!
ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளைக் காப்பாற்றுகின்ற பாதுகையினையையே இந்த கஷ்ட கடலில் இருந்து
காப்பாற்றக் கூடிய உபாயமாக வரிக்கின்றேன்!
பாதுகையினையே உபாயமாகப் பற்றுகின்றது இந்து ஜீவன்.
உடனடியாக சேராத உதடுகள் ஒன்று சேருகின்றது!

இந்த ஸ்லோகம் அமைந்த இந்த பத்ததிக்கு ‘சித்ர பத்ததி’ என்று பெயர்.
இந்த பத்த்தி முழுதும் ஸ்வாமி தேசிகர் கவிநயத்தோடும், பொருள் நயத்தோடும்,
அதியற்புதமாய் கிறங்க வைக்கின்றார் ஸ்வாமி தேசிகர்.

நிரோஷ்ட்யம் உதடுகள் சேராமல் சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது –

அநந்ய சரணஸ் சீதன் அநந்த க்லேச சாகரே
சரணம் சரணத்ராணம் ரங்க நாதச்ய சம்ஸ்ரையே

அநந்ய சரணஸ் சீதன் அநந்த க்லேச சாகரே
சரண(ம்) ஞ் சரணத்ராண (ம்) ங் ரங்க நாதச்ய ச(ம்) ங்ஸ்ரையே

அநந்ய சரணஸ் -வேறே புகல் அற்ற
சீதன் -மூழ்கி
அநந்த க்லேச சாகரே -எல்லை இல்லா துன்ப பிறவிக்கடல்
சரணம் சரணத்ராணம் -பாதுகா -பாதுகையை காப்பாற்றும் -அதுவே நமக்கு சரணம்
ரங்க நாதச்ய சம்ஸ்ரையே -ஸ்ரீ பாதுகா தேவியை சரணம் அடைவோம்
திருவடி நிலையே திருவடி
பாதுகா பட்டாபிஷேகம் -திருவடி நிலை முடி சூட்டு படலம் இல்லை -திருவடி முடி சூட்டு படலம்
திருவடி கைவிடாமல் திண் கழலாக இருக்கும்
அன்னான் தம்பி தாவாவிடிலும் அடி உதவுமே
தீர்த்த அடியவரை அவன் திருத்திப் பணி கொள்வான்
ஆழ்வார் பயன் அன்றாகிலும் பங்கு அல்லர் ஆகிலும் திருத்திப் பணி கொள்வான்

யோசிப்பதற்கே பல மணித்துளிகள் ஆகும் இந்த பாதுகா ஸஹஸ்ரத்தினை எப்படி ஒரேயொரு இரவில்
அதுவும் கடைசி ஒரு ஜாமத்தில் இவரால் கவிமழைப் பொழிய முடிந்ததோ…?
நினைக்க நினைக்க திகைப்புதான் மிஞ்சும்! இது அவரே நினைத்தாலும் முடியாது என்பதுதான் உண்மை!

பாதுகா தேவிதான் அவரது நாவில் நின்று அந்த ஒரு ஜாமம் முழுதும் நர்த்தனமாடியிருக்கின்றாள்.. !

——————————————————————-

ப்ரதிபாயா: பரம் தத்வம் பிப்ரதீ பத்ம லோசநம்
பஸ்சிமாயாம் அவஸ்தாயாம் பாதுகே முஹ்யதோ மம—916-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்திற்கும் மேலான பொருளை, தாமரை போன்ற கண்கள் கொண்ட
ஸ்ரீரங்கநாதனை நீ எழுந்தருளப் பண்ணிக்கொண்டு, மரணகாலத்தில் மயக்கம் அடைகின்ற
என் முன்பாக, ப்ரத்யக்ஷமாக நிறுத்த வேண்டும்.

இந்த ஸ்லோகத்தில் க்ரியா குப்தம் என்ற சித்ர சப்தம் உள்ளது. இங்கு ப்ரதிபா என்ற முதல் பதம் காண்க.
இது பெயர்ச்சொல் ஆகும். இதன் பொருள் – புதிய விஷயங்களை உடனடியாக உணரும் புத்திகூர்மை என்பதாகும்.
இதுவே முதல் பதமாக உள்ளது. இதனைக் கண்டவுடன் இந்த ஸ்லோகத்தில் வினைச்சொல் இல்லையே என்ற வியப்பு தோன்றும்.
ஆனால் இதுவே வினைச் சொல்லாகவும் கையாளப்பட்டுள்ளது. இதற்கு “நேரடியாக வருவாய்” என்ற பொருள் உள்ளது.

பாதுகே
பரம் தத்வம் பிப்ரதீ -பரம தத்துவத்தையே தாங்குகிறாயே -யாரை விட வேறே ஓன்று பாரமாக இல்லையோ
பத்ம லோசனம் -தாமரைக் கண்ணன் -இதுவே ஸ்வரூப நிரூபக தர்மம் -அசாதாரண அடையாளம் –
ராம கமலா பத்ரக -அம்புஜ லேசணா -தாமரையாள் பார்த்து பார்த்து செந்தாமரைக் கண்ணன் ஆகிறான் –
பஸ்சிமாயாம் அவஸ்தாயாம் -அந்திம அவஸ்தையில் காலத்திலே
முஹ்யதோ மம- -மனஸூ மோஹம் அடைந்து இருக்கும் நிலையிலே
ப்ரதிபாயா -அப்போது நீ என் முன்னே தோன்றி அருள வேண்டும் –

ஸ்ரீ பாதுகையே என் அந்திம காலத்தில் செந்தாமாரைக் கண்ணனை என் முன் கொண்டு வந்து
அருளி எனக்கு சேவை தந்து அருள்வாயாக –

நம்மாழ்வார்–பர தத்வத்தை உயர்வற உயர் நலம் -உயர்ந்து கொண்டே இருக்குமே –தாங்குகிறார் –
முழுதுண்ட பராபரன் -மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவன்
தாமரைக்கண் என்றே தளரும் -தாமரைக்கண்ணன் விண்ணோர் பரவும் பரமன்
நம்மாழ்வாரை மனஸில் கொண்டால் தானே அவனும் வருவான் –
மிக்க வேதியர் –நிற்கப் பாடி எ ன் நெஞ்சுள் நிறுத்தினான்

கிரியா வஞ்சன ப்ரஹேலிகா ப்ரதிபாயா
கிரியா -வினைச்சொல்
வஞ்சன -மறைத்தல்
ப்ரஹேலிகா -ஏமாற்றுதல்
ப்ரதிபாயா -ஒளியினுடைய / தோன்றுவாயாக -ஆறாம் வேற்றுமை போலும் வினைச்சொல்லாயும் இருக்கும் –
வினைச் சொல்லை மறைத்து ஸ்லோகம்

——————————————————————

யாம: ஸ்ரயதி யாம் தத்தே யைந யாத்யாய யாச்ச யா
யாஸ்ய மாநாய யை வாந்யா ஸாமாம் அவது பாதுகா—917-

எவளை ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சார காலத்தில் அடைகிறானோ;
எவள் ஸ்ரீரங்கநாதனைத் தாங்குகிறாளோ;
எவள் ஸ்ரீரங்கநாதனால் ஸஞ்சாரம் செய்கிறாளோ;
எவள் ஸ்ரீரங்கநாதனுக்காகவே உள்ளாளோ;
எவள் ஸ்ரீரங்கநாதனிடமிருந்து தோன்றியவளோ;
எவள் ஸ்ரீரங்கநாதனுக்கு பூஜையின் போது ஸமர்ப்பிக்கப் படுகிறாளோ;
எவள் ஸ்ரீரங்கநாதனிடத்தில் பெறத்தக்கவளோ –
அந்தப் பாதுகை என்னைக் காக்க வேண்டும்.

”அ” என்னும் பதம் எம்பெருமானைக் கூறுவதாகும். இந்தப் பதத்தின் ஏழு வேற்றுமைகளையும்
இந்த ஸ்லோகத்தின் காணலாம் (ஸ்ரீரங்கநாதனால், ஸ்ரீரங்கநாதனுக்காக, ஸ்ரீரங்கநாதனின் போன்ற ப்ரயோகங்கள்).

எந்த ஸ்ரீ பாதுகையை -அகார வாச்யனான ஸ்ரீ விஷ்ணு அடைகிறாரோ -அவரை தாங்குகிறதோ -அவரால் சஞ்சரிக்கிறதோ –
அவர் பொருட்டே இருக்கிறதோ -அவர் இடத்திலே இருந்து தோன்றி அவருக்கே அதீனமாக இருக்கிறதோ –
அவருக்கு கௌரவம் தருகிறதோ
அவர் இடமே பெறத் தக்கதோ அந்த ஸ்ரீ பாதுகை என்னைக் காத்து அருள வேணும் –

எட்டாம் வேற்றுமை விளி -தவிர்த்த ஏழும் உள்ள ஸ்லோகம்

யாம் அ ஸ்ரயதி –அ -அரங்கன் பயணிக்கும் போது யாரை அடைகிறோனோ -எழுவாய்
ய அம் தத்தே –அம் -அரங்கனை யார் தாங்குகிறாளோ -ஐ -இரண்டாம் வேற்றுமை
ஏன யாதி -ஏன -அரங்கனால் யார் சஞ்சரிக்கிறாளோ –மூன்றாம் வேற்றுமை
ஆய யா -அரங்கனுக்காக யார் உள்ளாளோ –நான்காம் வேற்றுமை -ஆய
ஆத் ச யா-அரங்கனிடம் இருந்து யார் தோன்றினாளோ -ஐந்தாம் வேற்றுமை
யா அஸ்ய மானாய -அரங்கனது ஆராதனத்தில் சமர்ப்பிக்கப் படுபவள் -ஆறாம் வேற்றுமை
யா ஏ வான்யா -அரங்கன் இடத்தில் பெறத் தக்கவள்-ஏழாம் வேற்றுமை

நம்மாழ்வார் பரம்
யாம் அ ஸ்ரயதி -அரங்கன் தேடி வந்து பாசுரம் பெற்றான்
யா அம் தத்தே -அரங்கனை உள்ளத்தில் தாங்குகிறார்
யா ஏன யாதி -அரங்கனால் சஞ்சரிக்கிறார் -அவன் அருளால் பாடுகிறார்
ஆய யா -அரங்கனுக்காகவே -முகில் வண்ணன் அடியை அடைந்து உய்ந்தவன்
ஆத் ச யா -அரங்கன் இடம் இருந்து யார் தோன்றினாரோ
யா அஸ்ய மானாய -அரங்கன் ஆராதனத்தில் சமர்ப்பிக்கப் படுபவள் -பாதுகையாகவே –
யா ஏ வான்யா -அரங்கன் இடத்தில் பெறத் தக்கவள் -திருவாய் மொழியின் ஞானத்தை

விவஷித அநேக நாம வசனம்
ப்ரகேடிகா -மறைத்து
யாம -ஜாம அர்த்தம் கிட்டும்
மறைத்தும் -ஏழு பொருள்கள்
யாம -ஜாம அர்த்தம் கிட்டும்

யாம (யாம் +அ )ஸ்ரயதி யாம் (யா +அம் )தத்தே யைன (யா +ஏன )யாத்யாய (யாதி +ஆய )யாச்ச (யா +ஆத் +ச )யா
யாச்ய (யா + அஸ்ய )மாநாயா யை (ய +ஏ ) வான்யா சா மாம் அவது பாதுகா

———————————————————————————-

சர்யா ந: சௌரிபாது த்வம் ப்ராயச் சித்தேஷு அநுத்தமா
நிவேஸ் யஸே தத: ஸத்பி: ப்ராயஸ் சித்தேஷு அநுத்தமா—918-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எங்களது பாவங்கள் தொலைவதற்காக நாங்கள் செய்யக்கூடிய பிராயச்சித்தங்களில்
மிகவும் உயர்ந்த பிராயச்சித்த கர்மமாக நீயே உள்ளாய்.
இதனால்தான் அறிஞர்கள் உன்னைத் தங்கள் மனதில் எப்போதும் வைத்துக் கொள்ளும்படியாக நீ உள்ளாய்.

ஸ்ரீ பகவானின் ஸ்ரீ பாதுகையே அகார வாச்யனான ஸ்ரீ விஷ்ணுவைப் பிரேரிப்பதில் சிறந்தவள் –
புருஷகார பூதையாகி அருளுகிறாள்
நமக்கு வினைகள் கழிய மேம்பட்டது ஒன்றில்லாத -மிகச் சிறந்த பிராயச்சித்தமாக -கிரியையாக நீயே இருக்கிறாய் –
சாதுக்கள் எப்போதும் -அறாத ஸ்ரீ யை உடைய உன்னையே சித்தத்தில் வைத்து இருப்பார்கள் –

சர்யா ந சௌரிபாது த்வம் ப்ராயஸ் சித்தேஷ்வ நுத்தமா(ப்ராயசித்தேஷு +அநுத்த மா)
நிவேஸ் யசே தத சத்பி ப்ராயஸ் சித்தேஷ்வ நுத்தமா (ப்ராயஸ் சித்தேஷு +அநுத்த மா)

சௌரிபாது த்வம் -பெருமாளாது பாதுகை
நக -எங்களுக்கு
ப்ராயசித்தேஷு -ப்ராயச்சித்தங்களான செயல்களில்
சர்ய அநுத்தமா -ஒப்பற்ற செயல்
சரணாகதி தானே பாதுகையைப் பற்றுவது -திருப்பாதுகையே திருப்பாதம் –
நிவேஸ் யசே தத சத்பி ப்ராயஸ்- சித்தேஷ் –அதனால் சத்துக்களால் வைக்கப்படுகிறாய் போலும்
அநுத்த மா- தள்ளப்படாத ஸ்ரீயால்

நம்மாழ்வாரை நினைக்கவே பாபங்கள் எல்லாமே போகுமே
புண்ய நதி நீராடினால் தான் போகும்
கோயிலில் அர்ச்சனை பண்ணி அனுக்ரஹம் பெற்று போக்குகிறோம்
ஒரு முறை பாகவத தர்சனத்தாலே போக்கும்
சத்துக்கள் நம்மாழ்வாரை தள்ளப்படாமல்-ஸ்ரீ உடன் -திருவாய் மொழிக்கு உள்ளே –
மஹா லஷ்மி உடன் குடி உள்ளான் -சார தமம் -அமைதியின் அந்தப்புரம் -மன அமைதி ஏற்படும் –
பிறவிக்கடல் சம்சார பிறவி வெட்டும் –அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –
பராக் இல்லாமல் ப்ரத்யக்ஷமாக ப்ரத்யக்காக காட்டி -ஒவ் ஒரு எழுத்திலும் ரமா உடன் வாசம் கொண்டுள்ளான் –
பிரதி நியதா ரமா ஸந்நிதானம்

பாத ஆவ்ருத்தி யமகம் –
இரண்டாம் நான்காம் பாதம் அப்படியே திரும்பி இருக்குமே –
எழுத்து கூட மாறாமல் -அர்த்தம் மாறி உள்ளதே –

—————————————————————

ராமபாத கதாபாஸா ஸா பாதா கத பாமரா
காத் உபாநஞ்ச காஸஹ்யா ஹி ஆஸ காஞ்சந பாதுகா—919-

இராமனின் திருவடிகளில் இருப்பவளும், தனது ஒளி மூலம் விளங்கி நிற்பவளும்,
சத்ருக்கள் ஒழியப்பெற்ற தேவர்களை உடையவளும் ஆகிய தங்கமயமான பாதுகை நான்முகனிடமிருந்து அயோத்திக்கு வந்தாள்.
ஸூரியனாலும் தாங்க இயலாத ஒளியுடன் கூடியதாக உள்ளாள்.

இங்கு ப்ரதிலோம யமகம் கையாளப்பட்டுள்ளது. அதாவது முதல் பாதத்தைத் திருப்பிப் படித்தால் இரண்டாம் பாதம் ஆகிறது.
இது போன்றே இரண்டாம் பாதத்தைத் திருப்பினால் முதல் பாதம் ஆகிறது.
உதாரணமாக, “ஸா பாதா கத பாமரா” என்பதைத் திருப்பிப் படித்தால், “ராமபாத கதாபாஸா” என்றாகும்.
இதுவே முதல் பாதமாக உள்ளதைக் காண்க.

ராமபாத கதா-ராமன் பாதங்களை அடைந்தவள்
பாசா கா அசஹ்யா-ஒளியால் சூரியனையும் தகிக்கும்
அகதப அமரா -எதிர் அற்றவர் களாக தேவர்களை ஆக்கி
காத் உபாநம் ச சா பாதா ஆச ஹி -ப்ரம்மாவின் ஸத்ய லோகத்தில் இருந்து வந்தவளாக அறியப்படுபவள்
காஞ்சன பாதுகா -ரெங்க நாதனின் பொன்னடிகள்

ராமபாத கதா-தயாராதற்கு மகன் அன்று மாற்று இல்லை தஞ்சம் -கற்பார் ராமனைத் தவிர
பாசா கா அசஹ்யா-ஒளியால் சூரியனையும் விஞ்சி -மதுரகவி ஒளி தேடி வந்தார் -வகுள பூஷண பாஸ்கரர்
அகதப அமரா -முக்தர்கள் ஆக்கி -கதாபம் வியாதி போக்கி
காத் உபாநம் ச சா பாதா ஆச ஹி -தான் அவதரித்து நம்மை திருத்தி பணி கொள்ள
காஞ்சன பாதுகா -ரெங்க நாதனின் பொன்னடிகள் தானே நம்மாழ்வார்

பாத பிரதி லோபம்
முதல் பாதம் மாற்றி இரண்டாம் பாதம்
மூன்றாம் பாதம் மாற்றி நான்காம் பாதம் –
முதல் பாதம்–ரா ம பா த க தா பா சா
இரண்டாம் பாதம் -சா பா தா க த பா ம ரா
மூன்றாம் பாதம்-கா து பா ந ஞ்ச கா சஹ்யா
நான்காம் பாதம்-ஹ்யா ச கா ஞ்ச ன பா து கா

ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திருவடியை அடைந்த ஸ்ரீ பாதுகை ஒளியினாலே தேவர்கள் ரஷிக்கப் படுகிறார்கள்
அந்த தங்கப் பாதுகை பிரம்மாவால் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப் பட்டது -உபா -ருத்ரனைக் காப்பது
சூர்யனுக்கும் சஹிக்க முடியாத பிரபை கொண்டது
அனஞ்சக-ஆராதிக்காதவர்களால் போருக்க முடியாத தேஜஸ் ஸூ யுடையது
சுகம் அருளி ஸ்ரீ அயோத்யா ராஜ்ய லஷ்மீயைக் காப்பதாக இருந்தது –

(இந்த ஸ்லோகத்தின் முதல் இரண்டு வாக்யங்களை தலைகீழாய் வாசியுங்கள்.
இதற்கடுத்த இரண்டு வாக்யங்கள் வருகின்றதா..!? –
சரி..! இப்போது ஒவ்வொரு வரியினையும் தலைகீழாய் வாசியுங்கள்!
தலைகீழாய் வாசித்தாலும் ஒரே மாதிரியானச் சொற்றொடர் வருகின்றது பாருங்கள்..!
இந்தவிதமாக அமையும் இத்தன்மைக்கு “பாத ப்ரதிலோம யமகம்” என்று பெயர்..!)

ராமபாதகதா=ஸ்ரீராமனுடைய திருவடிகளை அடைந்த –
அகதபாமரா அகதபா வியாதியைக் காப்பாற்றிக் கொள்ளுகிறவர்களாக இல்லாமலிருக்கின்ற
(கதம் என்றால் ரோகம், பா(ஹி) என்றால் காப்பாற்றுதல் “அ“ என்றால் இல்லை என்று பொருள்)
அமரா=தேவர்களை உடைத்தாயிருப்பதும் – கதபா=வியாதியைக்(துக்கத்தினை) காப்பாற்றுபவர்கள் (சத்ருக்கள்) –
அஸஹ்யா=தாங்கக்கூடாத்துமான (தன்னுடைய தேஜ்ஸ்ஸினால் சூரியனைக்கூட கொளுத்த கூடியதுமான –
ஸா=அந்த (சௌலப்யம், தயை, தேஜஸ் முதலியதால் பிரஸித்தமான) – காஞ்சனபாதுகா=தங்கமயமான பாதுகையானது –
காது=பிரம்மாவிடத்திலிருந்து – உபாநஸ்ச = ஸமீபத்தில் (ஸ்ரீரங்கவிமானத்தோடு பூமிக்கு வந்தது).

ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகையானது ஸ்ரீரங்கநாதனுடனேயே அவதரித்தது.
பிரும்மலோகத்திலிருந்து ஸ்ரீரங்கவிமானத்தோடு ரங்கநாதனை விட்டு பிரியாமல் இப்பூவுலகிற்கு வந்தது.
தேவர்களுக்கு ஏற்படும் ஆத்மவியாதியையும், அவர்களுடைய சத்ருக்களிடமிருந்து அவர்களை ரக்ஷிக்கின்றது.
சூரியனின் தேஜ்ஸ்ஸை விட பலமடங்கு தேஜஸ்ஸினால் சூரியனின் தேஜஸ்ஸினையே மழுங்க அடிக்கக்கூடியது.
ஜீவராசிகளை அது ரக்ஷிக்க எண்ணியது. ஸ்ரீரங்கநாதன் இராமனாக அவதரித்தப் போது

“ராகவோத்பவத் சீதா ருக்மணி கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷாநபாயினீ !!”
என்றபடி எப்படி தாயார் இராமனாய் அவதாரம் எடுத்தபோது சீதையாகவும், கிருஷ்ணவதாரத்தில் ருக்மணியாகவும் அவதரித்தாளோ
அது போன்று பாதுகையும் ஸ்ரீராமபாதுகையாய் ஸ்ரீராமனோடு கூடவே தம்முடைய இயல்பான
சௌலப்யம், பக்த ரக்ஷணம், வாத்ஸல்யம் முதலான குணங்களோடே ஜீவராசிகளைத் தேடி தாம் வந்தது.
அதனால்தான் ஸ்ரீராமனுடைய பிரதிநிதியாக இந்த இராஜ்யத்தினை விசேஷமாக ஆளக்கூடிய சக்தி அதற்கு இருந்தது.

ஸ்ரீநம்மாழ்வார் துடக்கமாகவுள்ள நம்முடைய குரு பரம்பரையானது பெருமாளிடத்திலிருந்தே தொடங்குகின்றது.
ஆஸ்ரிதர்களுடைய ஆத்மவியாதியைத் தெளிய வைத்து பகவானின் திருவடிகளில் அவர்களை கொண்டு சேர்த்து ரக்ஷிப்பவர்கள்.
அவர்கள் எந்த காலத்திலும் எப்படிப்பட்ட பண்டிதர்களாலும் அவமதிக்க முடியாதவர்கள். நித்யசூரிகள்…!
பகவானின் விபவ அவதாரமாகட்டும், அர்ச்சாவதாரமாகட்டும், இந்த லோகரக்ஷணத்திற்காக,
பெருமாளுக்கு உதவியாய் இந்த பூமியில் வந்து அவதரிக்கின்றார்கள்.

——————————————————————–

பாடாகாளீ ஜ்ஜாட துச்சே காதாபாநாய புல்லகே
ஸமாதௌ சடஜித் ஸூடாம் வ்ருணோஷி ஹரி பாதுகே—-920-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வலிமையான பாவங்களின் வரிசை என்னும் புதர்கள் அற்றதாகவும்,
மலர்ந்த மனதை உடையதான யோகப்யாஸத்தில் திருவாய்மொழி தோன்றும் பொருட்டு, நீ நம்மாழ்வரின் தலையைப் பற்றுகிறாய் போலும்.

இங்கு அபுநருக்தவ்யஞ்ஜனம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. வ்யஞ்ஜனம் என்றால் மெய் எழுத்துக்கள் ஆகும்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மெய்எழுத்துக்கள் மீண்டும் பயன்படுத்தப்படவில்லை.

ஸ்ரீ பாதுகையே -பாப புதர்க் காடுகள் -நீங்கிய சுத்த மனசை உடைய ஆழ்வார் செய்யும் யோகத்தில் திருவாய்மொழி பாசுரங்கள்
திருவவதரிக்கவே ஆழ்வார் திருமுடிமேல் நீ அமர்கிறாய் -அத்தகைய சுத்தமான மலர்ந்த ஹ்ருதயம் உடைய நாத முனிகளின் யோகத்தில்
ஆழ்வார் தோன்றி அருளிச் செயல்களை அருளி பின்புள்ளோர் அனைவருக்கும் கொடுக்கவே எல்லார் முடிகளிலும் நீ சேர்ந்து அருளுகிறாய் –

பாடா=அழிக்கமுடியாத – காதா=பிரபந்தங்கள் – –
ஸமாதௌ=மனதிலுள் பகவானைப் பற்றிய விடாத
தியானம் – சடஜிச்சூடாம்=ஸ்ரீநம்மாழ்வாருடைய சிரஸ்ஸை – வ்ருணோஷி=அடைகின்றாய்.

பாடா-திடமான
அகாளீ ஜ்ஜாட துச்சே -அழிக்க முடியாத பாப கூட்டங்கள் இல்லாத -தூய்மையான
காதாபாநாய புல்ல கே -மலர்ந்த திரு உள்ளம் -ஆழ்வாரது –
சமாதௌ -சாஷாத்காரம் -சமாதி நிலையிலே -16 வருஷம் யோக நிலையில்
காதா ஆபாநாய-பாசுரங்கள் உண்டாக்க
சடஜிச் சூடாம் வ்ருணோஷி -தலையை அலங்கரித்தாய்
ஹரி பாதுகே -அபகரிக்கும் ஹரி திருவடி

என்னுடை சூழல் உளானே -அருகல்-ஒழிவிலன் என்னுடன் -கண்ணன் ஓக்கலையானே —
நெஞ்சிலுளான் -தோளிணையானே -நாவில் உளானே -கமலக் கண்ணன் கண்ணுள் உளானே –
நெற்றி உளானே -உச்சி உளானே -நீள்கழல் சென்னி பெறுமே -பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார்

நாத முனிகள் தூய்மையான திரு உள்ளம் -திருவாய் மொழி தோன்ற வேண்டும் -என்பதற்காக சமாதி நிலை அடைந்து யோகத்தால் –
பராங்குச தாசர் சொல்ல 12000 தடவை சொல்லி -எண்ணவே வேண்டாமே –
தானே முடிந்த பின் கிட்டும் என்ற மஹா விச்வாஸம் -என்றும் கொள்ளலாம்

அபுநர் யுக்த வியஞ்சனம் -32 அச்சு எழுத்துக்கள் அனுஷ்டுப் சந்தஸ்ஸூ –

(இந்த ஸ்லோகத்தில் ஒரு முறை வந்த அக்ஷரமானது மீண்டும் வராது. இதனைத் தமிழில் எழுதியதினால்
ஒரு அக்ஷரம் திரும்ப வருகின்றது. ஆனால் ஸம்ஸ்கிருதத்தில் வராது.)

ஸமாதி நிலை என்று தியானத்தில் ஒரு உன்னதமான நிலையுண்டு. பகவான் ஒருவனை மட்டும் மனதில் நினைத்து
இடைவிடாது தியானிக்கும் மஹனீயர்கள் இந்த நிலையினையடைவர்.

நம்மாழ்வாரை அனுக்ரஹிக்கும் பொருட்டு ஆஸ்ரிதர்களின் ஸகல பாபங்களையும் போக்கக்கூடிய ஹரி பாதுகையே!
“ செழும் பறவை தானேரித் திரிவான் தன் தாளினையென் தலை மேலவே” என்கின்ற ஆழ்வாருடைய ஸூக்தியின்படி
அவரது சிரஸ்ஸின் மேல் ஸாந்தித்யம் கொள்கின்றாய்!

ஆழ்வார் திருநகரியில் நடக்கும் ஆழ்வார் மோக்ஷத்தில் இதர திவ்ய தேசங்களில் நடைபெறும் மோக்ஷ உற்சவத்தினைக் காட்டிலும்
ஒரு விசேஷ ஏற்றம் உண்டு. இதர திவ்யதேசங்களில் ஆழ்வாரே வந்து பெருமாளின் திருவடிகளில் தம் சிரம் தீண்டி
மோக்ஷ உற்சவம் நடைபெறும். ஆனால் ஆழ்வார் திருநகரியில் மட்டும் பெருமாள் தாம் ஆழ்வார் எழுந்தருளியிருக்கும் இடம்
கைத் தலமாய் வந்தடைந்து தம் திருவடிகளால் நம்மாழ்வாரின் திருமுடி தீண்டி மோக்ஷம் அருளுவார்.
அந்தளவிற்கு பெருமாளுக்கு ஆழ்வாரின் ஸம்பந்தம், நெருக்கம் தேவையாயுள்ளது.

————————————————————————-

முரச பங்கம் -முரச பங்கம் -முரசை கட்ட மேலும் கீழும் கயிறு -diamond -வடிவில் வருவது போல் –

ஸா பூபா ராமபாரஸ்தா விபூபாஸ்தி ஸபாரதா
தாரபா ஸக்ருபா துஷ்டி பூரபா ராமபாதுகா—921-

இந்தப் பூமியைக் காத்தபடி உள்ளாள்; துக்கக்கடலின் கரையாக உள்ள இராமனிடம் உள்ளாள்;
ஸ்ரீரங்கநாதனின் உபாஸனத்தின் எல்லையாக உள்ளாள்; ப்ரணவத்தில் பொருளான ஸ்ரீரங்கநாதனை ஸஞ்சார காலத்தில்
காப்பாற்றும் தயை கொண்டவள் – இப்படிப்பட்ட இராமனின் பாதுகை நம்மை அனைத்துக் குற்றங்களில் இருந்தும் காப்பாற்றுகிறாள்.

இங்கு முரஜபந்தம் என்பது பயன்பத்தப்பட்டுள்ளது. முரஜம் என்றால் உடுக்கு முதலான வாத்யங்களைப் போன்றதாகும்.
அதனுடைய மூலைக்கு மூலை கட்டப்படும் கயிறுகள் போன்ற அமைப்பை இங்கு காணலாம்.

பூ பா -அந்த பாதுகா தேவி பூமியைப் பாத்து காக்க வல்லவள் –ராம ராஜ்யத்தை விட சிறந்த ராஜ்யம்
ராம பாரஸ் தா -ராம பிரான் என்னும் பாரத்தில் நிலை பெற்றவள் -அக்கரை shore -சம்சாரத்துக்கு மறு கரை
விபூ -எங்கும் பரந்து –
உபாஸ்தி -உபாசனம்
ச பாராதா -நிறைவு முழுமை தருபவள் பாதுகா தேவி
புருஷார்த்த காஷ்டை-அடியார்கள் -ததீய பர்யந்தம் -முழுமை ஆகும் -இதுவே தத்வம்-
தார -ப்ரணவத்தால் காட்டப்படும் -அகார வாஸ்யம்
பா -பாது காப்பவள் –
ச க்ருபா -மிகுந்த கருணை – நேரில் வந்து ரக்ஷணம் -அவனையும் விஞ்சி -ப்ரத்யக்ஷ தெய்வம்
துஷ்டி பூர பா -தோஷ வெள்ளங்களை உறிஞ்சி -அகஸ்தியர் கடல் நீரை ஆசமனம் -உறிஞ்சி –
அசுரர்களைக் காட்டி தேவர்கள் வெல்லும் படி
ராம பாதுகா –

உபாசனத்தின் சரம அவஸ்தையே ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ பாதுகையை ஆராதத்த பின்பே பகவத் ஆராதனம் பூர்த்தியாகும் –
பிரணவத்தில் அகாரவாச்யனான பெருமானை சஞ்சரிக்கையில் ஸ்ரீ பாதுகையே ரஷிக்கிறது
தயைகுணம் பூர்த்தியாக உள்ளதால் நம் வினை வெள்ளத்தை வற்றடித்து நம்மையும் ரஷித்து அருளுகிறது
போக்யம் மிகுந்த பிராப்யமாகவும் உள்ளதே –

இந்தப் பூமியைக் காத்தபடி உள்ளாள்; துக்கக்கடலின் கரையாக உள்ள இராமனிடம் உள்ளாள்;
ஸ்ரீரங்கநாதனின் உபாஸனத்தின் எல்லையாக உள்ளாள்;
ப்ரணவத்தில் பொருளான ஸ்ரீரங்கநாதனை ஸஞ்சார காலத்தில் காப்பாற்றும் தயை கொண்டவள் –
இப்படிப்பட்ட இராமனின் பாதுகை நம்மை அனைத்துக் குற்றங்களில் இருந்தும் காப்பாற்றுகிறாள்.

இங்கு முரஜபந்தம் என்பது பயன்பத்தப்பட்டுள்ளது. முரஜம் என்றால் உடுக்கு முதலான வாத்யங்களைப் போன்றதாகும்.
அதனுடைய மூலைக்கு மூலை கட்டப்படும் கயிறுகள் போன்ற அமைப்பை இங்கு காணலாம்.

சா பூபா -உலக்கைக் காக்கும் நம்மாழ்வார் -மழுங்காத ஞானமே படையாக -சங்கல்ப லேசத்தால் செய்பவன் -அடியார்களுக்காக அவதாரம் –
சோம்பாதே என்நின்ற யோனியுமாய் பிறந்தாலும் திருந்தாத நம் போல்வாரை -ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போல் ஆக்க -ஸஸ்த்ர பாணி இல்லாமல் -ஸாஸ்த்ர பாணியாக –
ராம பாரஸ்தா -பெருமாள் திருவடிகளில் நிலை பெற்று
விபூ பாஸ்தி சபா ராதா -திருவாராதனம் முழுமை பெறவே அருளிச் செயல்கள் –செவிக்கு இனிய செஞ்சொல் கொண்டு ஸ்துதிக்க —
ஆழ்வார் அடியார் பர்யந்தம் பக்தி சென்றால் தான் முழுமை ஆகும்
தாரபா -குணங்கள் விபூதி இல்லை என்பாரை மிடறு பிடிப்பாரைப் போல் முதலிலே அருளி ரக்ஷித்தார் —உயர்வற உயர் நலம் உடையவன் –
அடி -திருமேனி உண்டு
ச க்ருபா -மதி நலம் அருளிய-காருணிகன் அவன் இவரோ -அருள் கண்டீர் இவ் வுலகினில் மிக்கதே
துஷ்டி பூரபா -பண்டை வல்வினை பாற்றி அருளினான்
ராம பாதுகா

முரஜ பந்தம் -உடுக்கையில் கயிறு கட்டுவது போல் –

முதல் இரண்டாம் பாத இரண்டாம் எழுத்து பூ -ஏழாம் எழுத்து ர
மூன்றாம் நான்காம் பாத இரண்டாம் எழுத்து ர ஏழாம் எழுத்து ர
ஸா பூ பா ராம பா ர ஸ்தா
வி பூ பா ஸ்தி ச பா ர தா
தா ர பா ச க்ரு பா து ஷ்டி
பூ ர பா ராம பா து கா

இரண்டாம் பாதம் -முதல் நான்கு எழுத்துக்கள் cross படித்து square அமைத்து -அதே வரும்

இரண்டாம் பாத பின் பாதி (ச பா ர தா )மூன்றாம் பாத முன் பாதி (தா ர பா ச) mirror image

வலது பக்கம் மேலே inverted traiangle –
பா ர
ஸ பா ர தா
இடது பக்கம் கீழே
தா ர பா ஸா
ர பா

நான்காம் பாதம் -பூ ர பா ராம பா து கா–நான்கையும் diagonalil படித்தால் அப்படியே வரும்
central symatry யும் உண்டு

—————————————————————————

அ நதி ரிக்த பத பதார்த்த அநு லோம ப்ரதி லோம யமகம்
மாறாத -வார்த்தை -பொருள் -நேராகப் படித்தாலும் -தலை கீழ் சொன்னாலும் –
வார்த்தை தோறும்
பாதம் தோறும்
ஸ்லோகம் முழுவதும் இப்படி உண்டே

காரிகா ந ந யாத்ராயா யா கேயாஸ் யஸ்ய பாதுபா
பாதபா ஹ ஹ ஸித்தாஸி யஜ்ஞாய மம ஸஞ்ஜஸா—-922-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்திற்குக் காரணமாக நீ உள்ளாய்; புகழத்தக்கவளாக உள்ளாய்;
ஸூரியன் போன்ற ப்ரகாசம் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளைக் காப்பாற்றும் பாதுகைகளாக உள்ளாய்.
இப்படிப்பட்ட நீ, நான் செய்யும் ஆராதனையை ஏற்பதற்காக, நீயாகவே என் இருப்பிடம் வந்துள்ளாயே! என்ன ஆச்சர்யம்!

இந்த ஸ்லோகத்தில் அவிசிஷ்ட ப்ரதிலோம பாடம் என்ற அமைப்பில் உள்ளது. இதன் கருத்து –
இந்த ஸ்லோகத்தைத் திருப்பிப் படித்தாலும், இதே பொருளையே அளிக்க வல்லதாகும். இது கீழே உள்ளது:

ஸாஞ்ஜஸா மம யஜ்ஞாய ஸித்தாஸி ஹ ஹ பாதபா
பாநுபா கேயாஸ்யஸ்ய யா யாத்ராயா ந ந காரிகா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்திற்குக் காரணமாக நீ உள்ளாய்;
புகழத்தக்கவளாக உள்ளாய்; சூரியன் போன்ற ப்ரகாசம் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளைக்
காப்பாற்றும் பாதுகைகளாக உள்ளாய். இப்படிப்பட்ட நீ, நான் செய்யும் ஆராதனையை ஏற்பதற்காக,
நீயாகவே என் இருப்பிடம் வந்துள்ளாயே! என்ன ஆச்சர்யம்!

இந்த ஸ்லோகத்தில் அவிசிஷ்ட ப்ரதிலோம பாடம் என்ற அமைப்பில் உள்ளது.
இதன் கருத்து – இந்த ஸ்லோகத்தைத் திருப்பிப் படித்தாலும், இதே பொருளையே அளிக்க வல்லதாகும். இது கீழே உள்ளது:

ஸாஞ்ஜஸா மம யஜ்ஞாய ஸித்தாஸி ஹ ஹ பாதபா
பாநுபா கேயாஸ்யஸ்ய யா யாத்ராயா ந ந காரிகா

யாத்ரா யா –அடியாரைக் காத்து அருள பெருமாளது பயணத்துக்கு
காரிகா ந ந -நடத்தாதவளாக நீ இல்லை -நடத்துபவள்
யா கேயா அஸ் யஸ்ய -ஸ்துதிக்காத தக்கவள்
பாநு பா -ஸூர்யனை விஞ்சிய தேஜஸ்ஸூ
பாதபா ஹ ஹ சித்தாசி -சித்தமாக அனுக்ரஹம் -என்ன வியப்பு
யஜ்ஞாய மம சாஞ்ஜசா-இப்படிப்பட்ட பாதுகா தேவி -என்னுடைய திரு ஆராதனத்துக்கு சித்தமாக என்னைத் தேடி காத்து உள்ளாய்

பகவான் திருவடிகள் சூர்யனை ஒத்த ஒலி உடையவனாய் நம் அஜ்ஞ்ஞானம் போக்கி அருளும் –
அவை சஞ்சரிக்க நீ அன்றோ உதவ வேண்டும் –
நீ அன்றி பகவான் எங்கனே சஞ்சரிப்பது -அஹோ பாக்கியம் -அப்படிப்பட்ட நீ வெகு வேகமாக நான் செய்யும்
ஆராதனத்தை ஏற்க சித்தமாக வந்து அருளுகிறாயே என்ன ஆச்சர்யம் –

காரிகா ந ந யாத்ரா யா -ஆத்ம யாத்திரைக்கு நல்ல வழி காட்டும் நம்மாழ்வார் –வேதம் பாற்கடல் -நாவே மத்து பக்தாம்ருதம் —
அர்ச்சிராதி காந்தியையும் காட்டி அருளி
யா கேயாஸ் -பாடித் திரியும் படி ஸ்துதிக்காத தக்கவர்
யஸ்ய பாநுபா -வகுள பூஷண பாஸ்கரர்
பாதபா ஹ ஹ சித்தாசி யஜ்ஞாய மம சாஞ்ஜசா-சடாரி ரூபம் -நமது திரு ஆராதனத்துக்கு முற்கோலி

——————————————————–

சர பந்தம் -அம்பு போல் -ராகவன் இடம் லாகவமாய் ஒட்டி இருக்குமே

ஸராகவா ஸ்ருதௌ த்ருஷ்டா பாதுகா ஸந்ரு பாஸநா
ஸ வாகவா கதௌ ஸ்லிஷ்டா ஸ்வாதுர்மே ஸதுபாஸநா—-923–

வேதங்களால் போற்றப்படுபவள், இராமனுடன் எப்போதும் சேர்ந்தே உள்ளவள், அயோத்தியின் ஸிம்ஹாஸனத்தை அடைந்தவள்,
ஸ்ரீராமனின் ஸஞ்சார காலங்களில் எளிதாகச் சிரமம் இன்றிச் செல்லக்கூடியவள், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உள்ளவள்,
ஸாதுக்களால் உபாஸனை செய்யப்படுபவள் – இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எனக்கு இனிமையாக உள்ளாள்.

ஸ ராகவா -ராமனை விட்டுப் பிரியாமல்
ஸ்ருதௌ த்ருஷ்டா -வேதத்தால் பார்க்கப்படுபவள்
பாதுகா
ச ந்ருப ஆசநா -ராஜாவுக்கு உரிய ஸிம்ஹாஸனம் உடன் கூடியே இருப்பவள் -காட்டுக்குப் போனாலும் இருந்தாள்
ச லாகவா -எளிதாக ஸ்ரமம் இல்லாமல் எழுந்து அருளப் பண்ணி
கதௌ ஸ்லிஷ்டா -இணைந்து பிரியாமல் சஞ்சரிக்க
ஸ்வாதுர்மே – அடியேன் பக்திக்கு இலக்கு ஆகி -இனியவளாக உள்ளவள்
சதுபாசநா -சத்துக்களால் உபாஸிக்கப் படுகிறாள்

ஸ்ரீ பாதுகை ஸ்ருதியில் விளங்குவது -பெருமாளை பிரியாமல் எல்லா நிலைகளிலும் உள்ளது –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளிய பொழுது சிம்ஹாசனம் அடைந்தது –
சஞ்சார காலத்தில் பெருமாள் திருவடியுடன் ஒன்றாய் ஒட்டி இருந்து லாகவமாக செயல் படுவது -நமக்கு மிக இனியதாக இருக்கும் –

ஸ ராகவா
ஸ்ருதௌ த்ருஷ்டா -திருவாய் மொழி நிகமன பாசுரத்தில் நம்மாழ்வார் -குருகூர் சடகோபன் சொல் -கை கூப்புகிறோமே
பாதுகா சந்ருபாசநா -பிரபன்ன ஜன கூடஸ்தர் -அங்கி ஆழ்வார்களுக்கு –பூதம் சரஸ்ஸ -ஸ்லோகம் -அங்க க்ரமம்
பூதம் தலை -இரண்டு கண்கள் -முகம் பட்ட நாதன் -கழுத்து பக்தி சாரார் -கரங்கள் -திரு மார்பு பக்த அங்கரி –
ச லாகவா -வேதம் தமிழ் செய்த மாறன்
கதௌ ஸ்லிஷ்டா -உத்சவர் உடன் சடாரி
ஸ்வாதுர்மே சதுபாசநா -மதுரகவி ப்ரக்ருதிகள் உபாஸ்ட்னம் -தித்திப்பவர் -பக்தாம்ருதம்-

ஸ ராகவா ஸ்ருதௌ த்ருஷ்டா பாதுகா சந்ரு பாசநா
ச லாகவா கதௌ ஸ்லிஷ்டா ஸ்வாதுர்மே சது பாசநா
சர பந்தம் -முதல் இரண்டு வரிகள் -அம்பின் வடிவில் -இரட்டை குச்சிகள் முனை கூர்மையாக

——————————————————————————-

கருட கதி சக்ர பந்தம் –

காவ்யாய ஆஸ்தித மாவர்க்க வ்யாஜ யாதக மார்க்கா
காமதா ஜகத: ஸ்தித்யை ரங்க புங்கவ பாதுகா—-924-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் தங்கள் ஸஞ்சாரத்தின்போது, செல்லும் இடங்களில், ஸ்ரீரங்கநாச்சியாரை அங்கு
வரவழைப்பதற்குக் காரணமாகி விடுகிறாள் (அங்கு லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகிறது).
அனைத்து விருப்பங்களையும் அளிக்கவல்லவளாக உள்ளாள். இந்த உலகின் ரக்ஷணத்தின் பொருட்டு,
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள், இராமாயணம் முதலான காவியங்கள் தோன்றக் காரணமாக இருந்தாள்.

காவ்யா யாஸ்தித -காவ்யங்களுக்கு விஷயமாக ஆனாள்
மார்கக –மா ஆவர்க்க -மஹா லஷ்மியை கூட்டிவர
வ்யாஜ யாதக மார்க்ககா -லகுவாக சஞ்சாரம்
காமதா -அபேக்ஷித்ங்களை -தர்மங்களுக்கு விருத்தம் இல்லாத ஸம்ஸத்தையும்
ஜகத ஸ்தித்யை ரங்க புங்கவ பாதுகா – உலகை ரஷிக்கவே
ஸ்ரீ ராமாயணம் -பாதுகா சஹஸ்ரம் போன்ற காவ்யம்
நாம் உஜ்ஜீவிக்கவே ஸ்ரீ காவியங்களில் அமர்ந்து உள்ளாள் –

ஸ்ரீ பாதுகை மிக்க சோபையுடன் சஞ்சாரம் பண்ணும் -ராஜ்ய லஷ்மி வேண்டாம் என்று சித்ர கூடம் வந்த ஸ்ரீ பரதாழ்வான்
திரும்புகையில் அவன் பின் தொடர்ந்து சென்ற வழியை யுடையது
வேண்டிய இஷ்டங்களை தருவது -உலக ஷேமதிற்காக ஸ்ரீ ராமாயணாதி காவ்யங்கள் பிறக்க காரணமாயிற்று –

நம்மாழ்வார் -கண்ணி நுண் சிறுதாம்பினில் அமர்ந்து அருளி -சடகோபர் அந்தாதி விஷயமும் ஆகி –
திருவாய் மொழி அனுசந்திக்கவே ஸ்ரீ லஷ்மி கடாக்ஷம்
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே -பூ மன்னு மாது -மா ஆவர்க்க
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
செய்ய தமிழ் மாலைகள் தாம் தெளிய ஓதி -தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –

கருட கதி சக்ர பந்தம்

கருடன் ஏறி இறங்குவது போல் முதல் பாதம்
பக்க வாட்டில் சஞ்சாரம் இரண்டாம் பாதம்
வட்டம் இடுவது போல் மூன்றாம் நான்காம் பாதங்கள்
கா ஆரம்பம் கா வில் முடிந்து

—————————————————————–

வீ ஸ்ருங்காசட சக்ர பந்தம் -இரண்டு வளையல்கள் -நடுவில் சக்ரம்

ஸுர கார்யகரீ தேவீ ரங்க துர்யஸ்ய பாதுகா
காமதா கலிதா தேஸா ஸரந்தீ ஸாது வர்த்மஸு—-925-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் தேவர்களின் செயல்களைச் செய்து தருகிறாள்.
தேவர்களின் தன்மைகளைக் கொண்டவளாக உள்ளாள். வேண்டியவற்றை அளிக்கிறாள்.
இந்த உலகிற்கு எது நன்மை அளிக்குமோ, அவற்றைச் செய்யும்படி ஆணை இடுகிறாள். நல்ல வழிகளில் ஸஞ்சாரம் செய்கிறாள்.

ஸூர கார்யகரீ -தேவர்களுக்கு நல்ல கார்யம் -அடியார்களுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -பூ ஸூரர்களுக்கு
தேவி ரங்க துர்யச்ய பாதுகா –திவ் -இவளது நாட்டிய அரங்கம் -இருவரும் சேந்து லீலைகள் செய்து அருளும் மேடை
காமதா -தர்மங்கள் படி ஸமஸ்த அபேக்ஷிதங்களையும் அருளி
கலிதா தேஸா =ஆதேசம் கட்டளை -சாசனம் -வழங்கி வழி காட்டி
ஸரந்தீ சாது வர்த்மஸூ -உயர்ந்த பாதையில் ஸஞ்சரிக்கிறாள் –

ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகையே அநிஷ்ட நிவாரணத்துக்கும் இஷ்ட பிராப்திக்கும் காரணம் –
உலகுக்கு ஹிதமான கட்டளைகளை வெளியிடுகிறது -நல்ல மார்க்கங்களில் சஞ்சரிக்கிறது –
தெய்வத் தன்மை உடையது -எல்லாத் தன்மைகளிலும் ஸ்ருதியை போன்றது –

பொலிக பொலிக பொலிக -அடியார்களுக்கு மங்களா சாசனம் –
பராங்குச நாயகி -பின்னை கொல்
ஆதேசம் -சாஸ்திரம் -திருவாய் மொழி வழங்கி
சரணாகதி மார்க்கம் -நோற்ற நாலிலும் -காட்டி அருளி -கண்ணன் அல்லாலில்லை அன்று சரண்

ஸூர கார்யகரீ தேவி ரங்க துர்யச்ய -வெளிச்சக்கரம்
பாது
கா
காமதா கலிதா தேஸா ஸரந்தீ சாது வர்த்மஸூ-உள் சக்கர எழுத்துக்கள் –

————————————————————

பரத ஆராதிதாம் தாரம் வந்தே ராகவ பாதுகாம்
பவ தாப ஆதி தாந்தாநாம் வந்த்யாம் ராஜீவ மேதுராம்—-926-

பரதனால் ஆராதனை செய்யப்பட்டவளும், மிகவும் உயர்ந்தவளும், ஸம்ஸாரம் என்னும் துன்பங்களை மூலம்
மனவருத்தம் கொண்டு வருந்துபவர்களின் துன்பம் நீங்க வணங்கத்தக்கவளும், தேவர்களால் அர்ச்சிக்கப்பட்ட
தாமரை மலர்களால் சூழப்பட்டவளும் ஆகிய இராமனின் பாதுகையை நான் வணங்குகிறேன்.

பரதாராதிதாம் -பாரதனால் ஆராதிக்கப்பட்ட
தாராம் -உத்க்ருஷ்ட -ஒன்றைப் பத்தாக்கி அருளி
வந்தே ராகவ பாதுகாம்
பவ தாபாதி தாந்தாநாம் -தாப த்ரயங்கள் -ஆதி மனத் துக்கங்களால் துன்பம் படுபவர்களுக்கு
வியாதி உடம்புக்கு ஆதி மனதுக்கு -ஆதி போனால் வியாதி போகுமே
வந்த்யாம் -வணங்கத் தக்கவள்
ராஜீவ மேதுராம் -தாமரையால் சூழப் பட்டு -குளிர்ந்து -உள்ளாள்

ஸ்ரீ பரதாழ்வானால் ஆராதிக்கப் பெற்றது -மிக உத்க்ருஷ்டமானது -சம்சார தாபத்தால் வாடினவர்களுக்கு சேவிக்கத் தக்கது
அர்ச்சனை செய்த தாமரைப் பூக்களால் சூழப் பெற்றது -இத்தகைய ஸ்ரீ ராம பாதுகையை வணங்குகிறேன் –

பாவம் ராகம் தாளம் -நாத முனிகள் தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
இவரால் வணங்கப்பட்ட நம்மாழ்வார் –
தாராம் -உயர்ந்த -கண் மணிக்கும் -ஆழ்வார் கண்ணாவான் -கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்
பிறவிப் பிணி -போக்கும் பாசுரங்கள் -பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடு பறித்து -சடகோபர் –90-
மைனஸூ முழுவதும் தாமரை செந்தாமரைக் கண்ணா -தாமரை அடி -செய்ய தாமரைக் கண்ணா –
தாமரை பாதம் காய் கண்கள் -தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண்கள்
அவயவங்கள் நிறைந்த திரு உள்ளம் –

முதல் இரண்டு பாதங்கள் –ப ர தா ரா தி தாம் தா ராம் வந்தே ராகவ பாதுகாம்
அடுத்த இரண்டு பாதங்கள் -ப வ தா பா தி தாந்தாநாம் வந்த்யாம் ராஜீவ மேதுராம்
ஒற்றைப்படை எழுத்துக்கள் ஒன்றாகவே இருக்குமே இரண்டு வரிகளிலும் –

வி சதுஷ்க சக்ர பந்தம் -எட்டுக் கோணங்கள் கொண்டும் அனுபவிக்கலாம் –

————————————————————————————

காத் உபாஸ்ய ஸதா லோகா கால உதாஹ்ருத தாமகா
காமதா அத்வரிரம் ஸாகா அகாஸா ரங்கேஸ பாதுகா—927-

தண்ணீர் தவிர வேறு எதனையும் உட்கொள்ளாத முனிவர்களால் உபாஸிக்கப்படும் ப்ரகாசம் கொண்டவள்;
பூஜை காலங்களில் மாலைகள் ஸமர்ப்பிக்கப்பட்டவளாக உள்ளவள்;
எங்கும் ஸஞ்சாரம் செய்தபடி உள்ளதில் மகிழ்வு கொண்டவள்; இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள்,
அவனைப் போன்றே நடையைக் கொண்டுள்ளாள் (வேண்டியதை அளிக்கிறாள்).

காது பாச்யஸ -காத் உபாஸ்ய -க அத் -தண்ணீரை மட்டும் உண்ணும் ரிஷிகளால் வணங்கப்படுபவள்
தாலோகா -தத் ஆலோகா -உயர்ந்த ஒளி மிக்கவளாக தியானித்து அறியாமை வென்று
காலோதாஹ்ருத-கால உதாஹ்ருத -திரு ஆராதனா காலத்தில் களைந்து
தாமகா -தாம ஆகா -மாலை பிரசாதம் பெற்று
காமதாஸ் -தர்மம் விரோதம் இல்லாத அபேக்ஷிதங்கள்
அத்வ -வழிகளில் -கஜேந்திரன் -0தரவுவதி பிரகலாதன் இத்யாதி ரக்ஷணம் வந்த மார்க்கங்களில்
ரிரம் சாகா -சஞ்சரிப்பவள்
அ காசா -அவனைப் போலவே தன்மைகள் –
ரங்கேஸ பாதுகா

ஸ்ரீ பாதுகை ஜலபானம் மாத்ரம் செய்து கொண்டு பகவத் த்யானம் செய்யும் மகரிஷிகளால் உபாசிக்கப்படும் –
ஒளி மயமாய் இருப்பது -பூஜா காலத்தில் மாலைகள் சமர்ப்பிக்கப் பெற்று அழகுடன் விளங்குவது –
தனது இஷ்ட மார்க்கத்தில் விநோதமாக சஞ்சரிக்க விருப்பமுடைய பெருமாள் நடந்துஅருள உதவுகிறது –
நமக்கு வேண்டியது எல்லாம் அளிக்கிறது –

நம்மாழ்வார் -ரிஷிகளால் வணங்கப்பட்டு -ஒன்றினில் ஒன்றி நின்று -தியானித்து –
பர்வத பரம அணு -சம்சாரிகள் -ரிஷிகள் -ஆழ்வார் -மயர்வற மதி நலம் அருள்பெற்றவர்
ஆலோகா -வாக்குல பூஷண பாஸ்கரர் -மதுரகவிக்கு வழி காட்டிய தேஜஸ்
தாமம் -வைட்டமின் மகிழ் மாலை மார்பினன்
சூழ் விசும்பு -அர்ச்சிராதி மார்க்கம் காட்டி அருளி -சாந்தோக்யம் -நமக்கும் விருப்பம் காட்டி
அவனைப் போலவே -நடை -அநு காரம் -கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் –

அஷ்ட தள பத்ம பந்தம் –
எழுத்துக்களை -கா -நடுவில் -வைத்து –

சதுர் அர சக்ர பந்தம்
17 எழுத்துக்களையே –32- அனுஷ்டுப்பாக அமைத்து

——————————————————-

பாபா கூபார பாளீபா த்ரிபாதீ பாத பாதபா
க்ருபாரூபா ஜபாலாபா ஸ்வாபா மா அபாத் ந்ருபாதிபா—-928-

பாவங்கள் என்பவை வரிசையான ஸமுத்திரங்களாக நின்றாலும் அவற்றைப் பருக வல்லவள்; தயை வடிவமாக உள்ளவள்;
அஷ்டாக்ஷரம் போன்ற மந்த்ரங்களின் ஜபம் போல் தூய்மை ஏற்படுத்தவல்லவள்; எளிதாக அடையக் கூடியவள்;
அரசர்களுக்கு சக்ரவர்த்தினியாக நிற்பவள் –
நித்யவிபூதியில் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையானவள் என்னை அவன் பக்கம் சேர்த்துக் காப்பாற்றினாள்.

பாபா அகூபார பாளீ-பாபக்கடலின் கூட்டங்கள் -எவ்வளவு என்று எண்ணவும் முடியாத
பா -குடிப்பவள் -முடித்து புனிதமாக்கி
த்ரிபாதீ பாத பாதபா-ஸ்ரீ வைகுண்டத்தில் -எழுந்து அருளிய திருப்பாதத்தை ரஷிக்கும் பாதுகா
க்ருபாரூபா -கருணையே வடிவமான
ஜப ஆலாபா -பேச்சிலே ஆலாபித்தாலே ஜபம் போல் எண்ணி
ஸ்வாபா -எளிமையாக அடையும் படி
மா -என்னை -பாபமே செய்து பாபியான என்னை
அபாத் ந்ருபாதிபா-அரசர்களுக்கு அரசியான அவள் ரஷித்து அருளி

நம்மாழ்வார் -பண்டை வல் வினை பற்றி அருளினார்
ஸ்ரீ வைகுண்டத்திலும் இவரே சடாரி
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
சடகோபன் மாறன் -பராங்குசன் குருகைப் பிரான் -உதய பாஸ்கரர் -மெய் ஞானக் கடல் –
பய ரோக பண்டிதன் -தெய்வ -ஞானக்கவி குழந்தை முனி -பிரபன்ன ஜன கூடஸ்தர்
32-திருநாமங்கள் உண்டே
சலவைத் தொழிலாளன் -ராமானுஜர் ஐதிக்யம் -பசங்களின் பெயரைக் கூப்பிட்டு -இழந்தேனே என்று கண்ணீர் விட்டாரே –
இதுவே ஜபம் -ஆலாபநம்
நமக்காகவே சடாரி -ஸுலப்யம் -தீண்டி தீண்டி அனுக்ரஹம்
நம்மையும் ரக்ஷித்து -அதிகாரம் இல்லாதாருக்காக அன்றோ நீ இரங்க வேண்டுவது -மா முனிகள்
மனிதர்களுக்கு அதிபா வழி காட்டும் ஆழ்வார்களும் தா,லைவர் -அங்கி அங்க பாவம் உண்டே –

ஷோடஸ தள பந்தம்
இரட்டைப்படை எழுத்து ஒரே எழுத்து பா –நான்கு பாதங்களிலும் இப்படியே -16 முறை வந்த எழுத்து இதுவே –
இத்தை தாமரை நடுப்பகுதி -கர்ணிகையில் வைத்து மற்றவற்றை 16 தளங்களில் எழுதிப் படிக்கலாம்
பா பா கூ பா ர பா ளீ பா த்ரி பா தீ பா த பா த பா
க்ரு பா ரூ பா ஜ பா லா பா ஸ்வா பா மா பான் ந்ரு பா தி பா

ஸ்ரீ பரமபத நாதனுடைய ஸ்ரீ பாதுகை நமது பாபங்களின் கடல் பலவற்றையும் முடிக்கும் பரமதயா மூர்த்தி –
அதன் புகழ் சங்கீர்த்தனம் மந்திர ஜபங்கள் -திரு அஷ்டாஷர ராஜபாதிகள் போலே பரிசுத்தம் பண்ண வல்லது –
நாம் ஸூலபமாக அடைந்து ஸூலபமாக ஆராதிக்கலாம் -அரசர்களுக்கு மேலான அரசியாக திரு பட்டாபிஷேகம் செய்யப்பட
அது என்னை ஆஸ்ரயண மூலம் காத்து அருளியது –

—————————————————————

ஸ்திராகஸாம் ஸதா ஆராத்யா விஹத ஆகதத அமதா
ஸத் பாதுகே ஸராஸா மா ரங்க ராஜ பதம் நய—-929-

ஸ்திர- அழிக்க முடியாத
ஆகஸாம் -பாபம் செய்தவர்களுக்கும் -அகம் -குற்றம்
ஸதா ஆராத்யா -எப்பொழுதும் ஆராதிக்கப் படுபவள்
விஹத அக -துக்கத்தையும் போக்கி
ததா அமதா-கர்மாக்களை -அதனால் வரும் பிறவிகளையும் -மூன்றையும் போக்கி
ஸத் -மாறாத -ஸத்யம் -அவனையே ஸத் -என்று -உலகம் அஸத் -மாறிக்கொண்டே இருக்குமே
பாதுகே -ஸ்ரீ பாதுகா தேவியும் சத்தாகவே இருக்குமே –
ஸ ராஸா -இனிமையான ஒலியை கொண்டு
மா-அடியேனை
ரங்க ராஜ பதம் நய -திருவடிகளில் சேர்த்து அருளுகிறாய்

நம்மாழ்வாரும் அதிகாரம் இல்லாமல் -புன்மையாக கருதினாலும்
ஸத் -சத்துக்கள் சான்றோர் -உயர்ந்த பாதுகை
செவிக்கு இனிய செஞ்சொல் -சொல்லவும் கேட்கவும் இனிமை

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் வலிமையான பாவங்கள் செய்த ஸம்ஸாரிகளால் எப்போதும் ஆராதிக்கத்தக்கவள்;
போக்கப்பட்ட துன்பங்கள், விருப்பம் அல்லாதவற்றை அனுபவிக்காத நிலை ஆகியவற்றைக் கொண்டவள்
(உன்னை அடைந்தவர்களுக்கு இவற்றை அளிப்பவள்); இனிமையான நாதம் கொண்டவள் –
இப்படிப்பட்ட பாதுகையான நீ, என்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிடம் அழைத்துச் செல்வாயாக.

ஸ்திதா ஸமய ராஜத்பா கதரா மாதகே கவி
துரம்ஹஸாம் ஸந்நதாதா ஸாத்யா அதாப கரா ஆஸரா—-930-

ஸ்திதா ஸமய ராஜத்பா -சமய -முன்னோர் சம்ப்ரதாயம் -அனுஷ்டிப்பதாலே ஒளி பெற்றவர்களைக் காப்பவள் –
பகவத் ப்ரீதிக்காக செயல் பட வேண்டுமே –
ஆகத ரா மாதகே கவி-ரா -தங்கம் -ஸ்வர்ண பாதுகை -ரத்தினங்கள் ஒளி வீச நடுவில் இவள் -மகிழ்ச்சி உட்டும் ரத்ன கிரணங்கள்
துரம்ஹஸாம் ஸந்நதா தா – பாபம் செய்தவர்களின் துர்தசையை அழிப்பவன்
ஸாத்ய அதாப கரா -துன்பம் இல்லாத தன்மையை உண்டாக்குபவள் -ரத்ன கிரணங்களால் –
ஆஸரா-எங்கும் ஸஞ்சரிப்பவள் –

சமயாச்சாரம் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –
தங்கம் போல் விளங்கி -மற்ற ஆழ்வார்கள் ரத்தினங்கள் -அங்கி அங்க பாவம் –
தாப த்ரயங்களைப் போக்கி -திருவாய் மொழி -சாந்தி ஸூ தாந்த -அமைதியின் அந்தப்புரம் -தேசிகன்
ஆசார -சஞ்சரிப்பவர் -திருவாய் மொழி வாயிலாக எங்கும் -சஞ்சரிக்கிறார் -அங்கும் சாம கானம் போல் திருவாய் மொழி உண்டே –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்கள் கூறும் தர்ம மார்க்கத்தில் நிலையாக நிற்பவர்களைக் காப்பாற்றுபவளும்,
தங்க மயமாக அடியார்களுக்குச் கைங்கர்ய செல்வத்தை அளிப்பவளும், வணங்குபவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவல்ல
ஒளி மண்டலத்தில் உள்ளவளாகவும் (அல்லது தனது ஒளி மூலம் அவர்கள் துன்பத்தை நீக்கி மகிழ்வை அளிப்பவள்),
மிகுந்த பாவம் செய்தவர்களின் பலனாக உள்ள கெட்ட காலங்களை விலக்குபவளாகவும்,
தாபம் இல்லாத தன்மையை அளிப்பவளாகவும், எங்கும் ஸஞ்சாரம் செய்து காப்பாற்றுபவளாகவும் உள்ள நீ,
என்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் சேர்க்க வேண்டும்.

சத் சப்த வாச்யனான ஸ்ரீ பகவானின் ஸ்ரீ பாதுகையே -கொடு வல்வினையர் கூட உன்னை எப்போதும் ஆராதித்து நன்மை பெறலாம் –
அநிஷ்டங்கள் அனைத்தையும் போக்கடித்து விடுகிறாய் -இனிய நாதத்துடன் சஞ்சரிக்கிறாய்
சதாசாரம் தர்ம நெறி இவற்றில் நிலை நிற்பவரைக் காத்து அருள்கிறாய்-
ஆனந்தம் தரும் ஒளி மண்டலத்தில் விளங்கி சேவிப்பவருக்கு சம்பத்தை அருளும் ஸ்ரீ மிக்கதாய் இருக்கிறாய்
பகவத் சஞ்சாரத்தில் நீ தானே தாபஹரமாக இருக்கச் செய்கிறாய்
நீ என்னை ஸ்ரீ ரங்க நாதன் திருவடிக்கு அழைத்துச் சென்று அருள வேண்டும் –

சதுரங்க குதிரை பந்தம் –32 கட்டங்கள் கொண்ட -chess horse-
சதுரங்கக் கட்டத்தில் முதல் ஸ்லோகத்தை நான்கு வரிசைகளில் எழுத்துக்களை எழுதி
குதிரை நகர்வது போல் படித்தால் அடுத்த ஸ்லோகம் வரும்

——————————————————————————–

லோக தாரா காம சாரா கவிராஜ துராவசா
தாரா கதே பாத ரா ஆம ராஜதே ராம பாதுகா–931-

தன்னை அண்டி நிற்பவர்களை எப்போதும் காப்பாற்றுபவளாகவும், தனது விருப்பப்படி எங்கும் ஸஞ்சாரம் செய்தபடி இருப்பவளும்
(அல்லது, காமசாரா = ஆகாம சாரா என்று பிரித்து, அனைவரும் விரும்பக்கூடிய ஸஞ்சாரம் உடையவள் எனலாம்),
வால்மீகி போன்ற உயர்ந்த கவிகளால் கூட தனது பெருமையை முழுவதும் உணர இயலாமல் உள்ளவளும்,
ஸஞ்சாரத்தில் தேர்ச்சி பெற்றவளும், மிகுந்த ஒளியுடன் கூடியவளும் – என்று பல தன்மைகளுடன் ஸ்ரீராம பாதுகை உள்ளது.

லோக தாரா -உலக மக்களைக் காத்து
காம சாரா -விரும்ம்பியபடி அப்படி சஞ்சாரம்
கவிராஜ துராவசா-கவி சக்கரவர்த்திகள் -வால்மீகி போன்றார் முழுவதும் பாட முடியாத பெருமை கொண்டவள்
தாரா கதே -அடியார் ரக்ஷண பாதையில் சென்று
பாத ரா -ஞான ஒளி கொடுத்து
ஆம – இப்படியாக விளங்குகிறாள்
ராஜதே ராம பாதுகா

உலகம் காக்கவே நம்மாழ்வார் திரு அவதாரம்
தெளியாத மறை நிலங்கள் தெளியும் படி
ஸேனாபதி ஆழ்வான் -எங்கும் சஞ்சரிப்பவர்
கம்பரும் முழுவதும் பாட முடியாதே என்றாரே
சரணாகதி உயர்ந்த மார்க்கத்தில் பயணித்து
திருவடியை நம்மிடம் சேர்த்து
இவ்வாறு ஒளி வீசிக்கொண்டு திகழ்கிறார் –

ஸ்ரீ ராம பாதுகை உலகத்தைக் கடைத்தேற வல்லது -அதன் சஞ்சாரம் யாரும் விரும்பிய வண்ணம் இருக்கும் –
வால்மீகி போன்ற மா பெரும் புலவரும் அதன் பெருமையைச் சொல்ல வல்லார் அல்லர் –
சஞ்சாரத்தில் நல்ல த்வனி கொண்டது -ஒளி தருவதும் கூட -பெருமாள் திருவடியைக் கொண்டு தருவது கூட -ஸ்ரீ பாதுகையே –

அர்த்த பிரமக பந்தம்
நான்கு பாதங்களையும் எழுதி
நேராக படித்தாலும்
மேலும் கீழும் படித்தாலும் அதே வரும் படி

மேல் நான்கும்
மாற்றி நான்கும் எழுதி -இப்படி எட்டு வரிசையாக எழுதி
அதே பாதங்கள் வரும் படி அமைந்து உள்ளதே –
மேலும் கீழும் படித்தாலும் இதே ஸ்லோகம் வரும் –

————————————————————————————–

ஜய ஆம பா அபாமயா அஜாய மஹே துதுஹே மயா
மஹேச க ஆகாச ஹேம பாதுகா அமமக அத் உபா—-932-

ஜய ஆம பா -புலன்களை வெல்ல நினைப்பவர்கள் ஜய -அதில் வெற்றி காணாதவர்களை காப்பவள்
அபாமயா -உடல் மன நோய் போக்கி
அஜாய மஹே -பெருமாள் கொண்டாடும் உத்சவங்களில்
துதுஹே மயா-என்னால் கறக்கப் படுகிறாள் -அருள் பாலை சுரந்து அருள்கிறாள்
மஹ ஈச க -பெரிய செல்வந்தனான இந்திரனின்
ஆகாச -துன்பம் போக்கும் பெருமாள் -வாமனனாக –
ஹேம பாதுகா -ஸ்வர்ண பொன்னடி ரஷிக்கும் பாதுகை
அ மமக அத் உ பா-அபிமானம் இல்லாத கோஷ்ட்டியில் -நிலை பெற்ற சிவனின் -ப்ரஹ்மஹத்தி தோஷத்தில் இருந்து ரக்ஷித்து அருளுகிறாள் –

இந்த்ரியத்தை வெல்வது போன்ற வெற்றி இல்லாதவர்களைக் காப்பாற்றுபவளாகவும், அமயம் எனப்படும் உடல் மற்றும் சரீரம்
கலந்த வ்யாதி நீங்கும்படிச் செய்பவளும், மமகாரம் (எனது என்ற எண்ணம்) இல்லாத முனிவர்களிடம் எப்போதும் செல்பவளும்,
சிவனைக் காப்பாற்றுபவளும், உலகின் ஈச்வரர்களாக உள்ள இந்திரன் போன்றவர்களின் தலையில் அமர்பவளும் ஆகிய
தங்கமயமான பாதுகைகள் – ஸ்ரீரங்கநாதனின் உத்ஸவ காலங்களில் என்னால், எனது விருப்பங்களைத் அளிக்கும்படியாகக்
(காமதேனு பசு போன்று) கறக்கப்பட்டது.

இந்த்ரிய ஜெயத்தில் பக்குவம் அடையாத தீனர்களையும் ரஷிப்பது ஸ்ரீ பாதுகையே -ஸரீர மநோ வியாதிகளை ஒழித்து விடும்
அனைத்தும் பகவத் அதீனம் என்று உணர்ந்து மமகாரம் அற்று இருப்பவர்களுக்கு அனைத்து ரஷணங்களையும் அளிக்கிறது –
ருத்ர பிரம்மஹத்தி சாபம் போக்கி அருளியது -ப்ரம்மாதிகள் சிரசால் வணங்குகிறார்கள் -அவர்களின் துன்பங்களை போக்கி அருளும்
அந்தத் தங்கப் பாதுகை பெருமாளை அடைந்து இருப்பது -நம்மால் சேவிக்கப்படவும் கோரும் இஷ்டங்களைப் பெறவுமே –

இது அர்த்த ப்ரமுக பந்தம்

புன்மையாக -பாங்கு அல்லார்களையும் காப்பவர் ஆழ்வார்
தீர்ந்த அடியவர் தம்மை அவன் திருத்திப் பணி கொள்வான் அவன்
உத்சவம் இவருக்காகவே
அருள் சுரந்து
தங்கப் பாதுகை

ஸர்வதோ பத்ரம்
எல்லா திசையிலும் எல்லாக் கோணங்களிலும் -வரும் ஸ்லோகம் –

நேராகவும் தலை கீழாகவும் எழுதி
மேல் இருந்து கீழே இடது வலது பக்கம் படித்தாலும்
கீழ் இருந்து மேலே படித்தாலும்
இடது வலது பக்கம் படித்தாலும்
ப்ரதக்ஷிணமாக மேலும் கீழும் -பண்ணினாலும்
vertical-horizontal-aprathashinamaakavum –
16 கோணங்களில் படித்தாலும் அதே ஸ்லோகம்

———————————————————————————————-

பாபாத பாபாத பாபாஸ் பாத பாத தபா தபா
தபாதபா பாதபாத பாத பாத தபாதபா –933–

படித்தல் – இந்த ச்லோகத்தைப் பின்வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்:

பாபாத் அபாபாத் அபாபா அ பாத பாத த பாத பா
த பாத பாப அத பாத பாதபா தத பாத் அபா

1-அபாபா-வேதம் போல் சடாரியில் பாபங்கள் ஒட்டாவே -நம்மைத் தீண்டினாலும் அலம்ப மாட்டார்களே –
2-அ பாத பாதத பாதபா -அகார வாஸ்யன் -அவனது திருவடிகளுக்கு ரத்ன கிரணங்கள் மூலம் ஒளி வீசி -நம்மையும் ஒளியாலே -பாதுகாக்கிறாள்
3-தத -பாத் அபா -சமர்ப்பிக்கும் அனைவருக்கும் -அபிஷேக தீர்த்தத்தால் தூய்மைப்படுத்தி ரக்ஷிக்கிறாள்
4-தபாத பாப அத பாத பாதபா-அடைக்கலம் -தந்து -பாபங்களை போக்கும் திருவடிகள் –
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்களே -அந்த திருவடிகளுக்கு ரக்ஷை
5-பாபாத் –
6-அபாபாத்- எல்லா பாபங்களில் இருந்து நம்மை ரக்ஷிப்பவள்

அறியாமை லேசமும் இல்லாத மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்
பெருமாள் திருவடிகளுக்கு ஒளி-பாசுரங்களால் சேர்த்து -காட்டி அருளினார்
அப்பு -தீர்த்தம் -பாசுரங்கள் தீர்த்தம் -தீர்த்தங்கள் ஆயிரம் -தீர்த்தனுக்கு அற்றுத் தீர்ந்த –தத பாத் அபா
அடைக்கலம் தரும் திருவடிகளுக்கு பாதுகை இவரே –
பண்டை வல்வினை பாற்றி அருளினான்

அடியார்களின் பாவங்களை நீக்குபவளாகவும்; ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கு வேண்டிய ஒளியை அளிக்கின்ற
ஒளியைத் தன்னிடம் கொண்ட வளாகவும்; தன்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் ஸமர்ப்பிக்கின்றவர்கள் விஷயத்தில்
காப்பாற்றும் அபிஷேக நீரை உடையவளாகவும், எப்போதும் காப்பாற்றுதலைச் செய்பளாகவும், பாவங்களை நீக்குவதற்காக
இருக்கின்ற திருவடிகளைக் காப்பாற்றுபவளும் ஆகிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் என்னைப் பாவங்களில் இருந்து காப்பாற்றினாள்.

இந்த ஸ்லோகத்தில் த, ப என்ற இரண்டு மெய் எழுத்துக்களும்; அ, ஆ என்ற இரண்டு உயிர் எழுத்துக்களும் மட்டுமே உள்ளன.
இதில் கடந்த ஸ்லோகம் போன்றே ஸர்வதோபத்ரம் உள்ளது.

பாபம் அற்றது -அகார வாச்யனான ஸ்ரீ விஷ்ணுவின் ஸ்ரீ பாதத்திற்கு ஒளி கொடுப்பது -ஜீவர்களுக்கும் ஒளி வழங்குவது –
தன்னை பகவான் இடம் சமர்ப்பிக்குமவர் விஷயத்தில் ரஷை தரும் திருமஞ்சன தீர்த்தம் உடையது
சர்வ லோக ரஷகமாய் இருப்பதும் சர்வ பாபா நாசகமாய் இருப்பதுமான பெருமாள் திருவடிகளுக்கும் கூட ரஷணம் தருவது ஸ்ரீ பாதுகையே –
அது என்னை சர்வ பாபங்களில் இருந்து காத்து அருளிற்று –

ஒரே வார்த்தையை 16 முறை-இது அ ஆ என்கிற உயிர் எழுத்துக்களை கொண்டது , இரண்டு மெய் எழுத்துக்களையும் கொண்டது .

பாதபா , பாபா , அத , அபா , பாதபா , பாத , பா , பாத , பாபாத் , அபாபாத் , ஆ , பாபா , த , பாபா , ஆத , பா , பாத , பா

ஸர்வதோ பத்ரம்
நான்கு வரிகள் நேராகவும் -அடுத்து மாற்றி நான்கு வரிகள்
நேராக –16 கோணங்களில் படித்தாலும் அதே ஸ்லோகம் வரும் –

சதுர் தள பத்ம பத்மம்
பா நான்கு -த நடுவில் வைத்து இந்த ஸ்லோகம்

என்று பிரித்து படிக்கப் பட வேண்டும் , அதன் பொருள் என்னவெனில் ,
மரம் போன்ற தாவரங்களையும் , பிராணிகளையும் , அடைந்திருக்கும் பாபத்தை உணடழிக்கக் கூடிய
அபிஷேக நீரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதும் , முறையே நியமிக்கப் பட்டு , பதவிகளில் இருக்கும் தேவர்களை
காக்கின்ற ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை காத்திடுவதுமான பாதுகை ,
பெற்றோர்களை நன்கு பார்த்துக் கொள்வோர் விஷயத்திலும் , நன்கு காப்பாற்றாதவர்கள் விஷயத்திலும் முறையே
பாப புண்ணியத்தை நோக்குவதும் , ஸ்ரீ விஷ்ணுவை அனுபவிக்கின்றவற்கு சரணாகதிக்கு வழி வகுப்பதும் ,
நிந்திக்கும் விரோதிகளை அழிக்கக் கூடிய பெருமாளின் ஒளிகளை காப்பதும் பாதுகையே –என்று பாடுகிறார்

——————————————————————————–

கோப உத்தீபக பாபே அபி க்ருபா பாக உபபாதிகா
பூத பாதோதக அபாத உத்தீபிகா கா அபி பாதுகா–934-

கோப உத்தீபக பாபே அபி -கோபத்தை கொழுந்து விட்டு வளரும் படி பாப்பம் செய்தவர்களுக்கும் கூட
க்ருபா பாக உப பாதிகா-கிருபையை பெற்றுக் கொடுத்து -உப -அருகில் -அவர்களுக்கும் கருணைக்கு பாத்ரமாக்கி –
பூத பாத உதக அ பாத – உத் தீபிகா -தூய்மை தரும் ஸ்ரீ பாத தீர்த்தம் -கங்கை நீர் -அகார வாஸ்யனான –
திருவடிகளுக்கு பிரகாசம் கொடுக்கும் பாதுகா தேவி வைபவம்
கா அபி பாதுகா-இன்னது இவ்வளவு என்று சொல்ல முடியாத பெருமை -உண்டே –

ஆழ்வார் -பயன் நன்றாகிலும் பங்கு அல்லார் ஆகிலும் –திருத்தி கொள்பவர் தானே
திருவடிக்கு ஒளி தருபவர் -அனைவரையும் சரணாகதகர் ஆக்கி -துயர் அறு சுடர் அடி –
தலை சேர்த்து ஒல்லை -திரு நாரணன் தாள் -காட்டி -அருளி –
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

ஸ்ரீரங்கநாதனின் கோபத்தைக் தூண்டிவிடும் அளவிற்குப் பாவம் செய்கிறவன் விஷயத்திலும் ஸ்ரீரங்கநாதனின்
கருணை வெளிப்படும்படியாகச் செய்பவள், தூய்மையை அளிக்கின்ற கங்கையைத் திருவடிகளில் கொண்ட
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கு ஒளியை அளிப்பவள் –
இப்படிப்பட்ட பாதுகையானவள், இப்படிப்பட்டவள் என்று தெளிவாகக் கூற இயலாத மேன்மை கொண்டவளாவாள்.

ஸ்ரீ பகவானுக்கு கோபம் ஜ்வலிக்கும் படித் தூண்டி விடக் கூடிய மஹா பாபிகளாய் இருப்பார் இடத்திலும்
ஸ்ரீ பகவானுடைய தயையின் கனிவைப் பெற்றுத் தருவது ஸ்ரீ பாதுகை -பரிசுத்தியைத் தரவல்ல திருவடி
தீர்த்தமான கங்கையை உடைய பெருமாள் அகார வாச்யன்
அவருடைய திருவடிக்கு ஒளி அழிப்பது ஸ்ரீ பாதுகை -அதன் சிறப்பை என்ன வென்று சொல்வது –

த்ரை அக்ஷரம் பந்தம்
ப து கா –ப த கா -மூன்றையும் கொண்டே அமைத்த ஸ்லோகம் இது –

———————————————————————–

ததாதத்தாதி தத்தேதா தாததீதேதி தாதிதுத்
தத்தத்ததத்தா ததிததா ததேதாதேத தாதுதா –935-

படித்தல் – இந்த ஸ்லோகத்தைக் கிழே உள்ளபடி பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்:

தத அதத்தா அதி தத்தா இதா தாததி இத ஈதிதா அதிதுத்
தத்தத் தத்தா ததி ததா ததா இ தாத இத தாதுதா

ஏக அக்ஷர பந்தம் –
த ஒரே எழுத்துக்கு கொண்டே அமைந்த ஸ்லோகம்

தத அதத்தா அதி தத்தா இதா -விரிவாய்க்கா -பயணிக்கும் தன்மை கொண்டவள் –
பரம் பொருளின் தன்மை விஞ்சி இருப்பவள் -கருணையால் விஞ்சி -மேலும் -அவனையும் தாங்கி
தாததி இத ஈதிதா அதிதுத்—தாத -தந்தை போல் இருந்து நன்மை செய்பவள் -இத -அடையக் கூடிய துக்கங்கள் –
உலகில் வந்தாலே துக்க மையமே -போக்கி அருளுபவள் –
நிரதிசய அந்தமில் பேர் இன்பம் தருபவள்
தத்தத் தத்தா ததி ததா -அந்த அந்த பொருள்களின் தன்மை களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து
ஆததா இ தாத இத தாதுதா-வீணா கானம் போல் த்வநி கொண்டவள் -இ -மன்மதன் –
அவனுக்கு தந்தை -அவனால் அடையப்பட்டவள் -தாதுதா -பாதுகை –
தா எழுத்து கொண்டே அமைந்த ஸ்லோகத்தை இத்தால் குறித்து அருளுகிறார் –

ஆழ்வார் விரிவாக சஞ்சாரம் -பாசுரங்கள் மூலம் –
யான் பெரியன் -நீ பெரியை என்பதை யார் அறிவார்
தந்தை போல் அறிவூட்டும்
ஸ்ரீ வைகுண்ட மார்க்கம் காட்டி
காண்கின்ற நிலங்கள் எல்லாம் யானே என்னும் —
செவிக்கு இனிய செஞ்சொல்
இவரைத்தேடி பெருமாள் வந்து பாசுரம் பெற்றுக் கொள்வார்களே
பாட்டு வாங்கி -திட்டு வாங்கி -இனி இனி கதறி -இதுவே பாக்யம் என்று வந்து
இவரே பாதுகா –

இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு எங்கும் ஸஞ்சாரம் செய்தபடி இருப்பவள்;
”தத்” என்று போற்றப்படும் ப்ரஹ்மத்தின் தன்மையால் அடையப்படுபவள்;
ஸம்ஸாரிகள் அடைகின்ற பலவிதமான துயரங்களை அடியுடன் நீக்குபவள்;
உலகில் உள்ள அந்தந்த வஸ்துக்களின் தன்மைகளையும், அந்தந்த வஸ்துக்களையும் தனக்கு வசப்படுத்தியவள்;
வீணை முதலான வாத்யங்கள் கொண்ட மன்மதனின் தந்தையான எம்பெருமானால் அடையப்பட்டது –
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை நமக்குத் தந்தையாக உள்ளது.

ஸ்ரீ பாதுகையின் சஞ்சாரம் அதி விஸ்த்ராமானது -அனுபவ இனிமை -ப்ராப்யமாய் இருக்கும் தன்மை -இவற்றில் எல்லாம்
தத் என்னப் பெரும் பகவானையும் மிஞ்சிய பெருமையை யுடையது –
அதிக மழை வரட்சி பூச்சி எலி போன்றவற்றால் பரவும் கொடிய நோய்கள் அந்நிய ஆக்கிரமிப்பு -போன்றவற்றை கடிந்து ஒழித்து விடும் –
அனைத்தும் அவன் அதீனம் -அவன் ஐஸ்வர்யம் மிகுந்து பரந்து உள்ளது -ஆஸ்ரிதர்களுக்கு சாம்யம் அளிக்கும்
வீணாதி வாத்திய ஒலிகள் ஆனந்தம் பொழியும்
ஸ்ரீ பாதுகை காமனின் தந்தையான பெருமாளைச் சேர்ந்து இருக்கும் -அது நமக்குத் தந்தை போலவாம் –
கடைசிச் சொல் தாதுதா ஸ்ரீ பாதுகையையே குறிக்கும் –

————————————————————————–

யாயாயாயாயாயாயாயாயா
யாயாயாயாயாயாயாயாயா
யாயாயாயாயாயாயாயாயா
யா யா யா யா யா யா யா யா யா –936–

படித்தல் – இந்த ஸ்லோகத்தைக் கீழே உள்ளபடி பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்:

யாயா யா ஆய ஆயாய அயாய அயாய அயாய அயாய அயாய
யாயாய ஆயாயாய ஆயாயா யா யா யா யா யா யா யா யா

ஒரே அக்ஷரம் -ஸ்வரம் மாறி கீழ்
இது ஒரே அக்ஷரம் ஒரே ஸ்வரம்

ஆயாய -லாபத்துக்காகவே -பெருமாளுக்கும் நமக்கும்
அயாய -மங்களம் கொடுக்கிறாள்
அயாய -ஞானம் கொடுக்கிறாள்
அயாய -ஸூ பம் கொடுக்கிறாள்
அயாய-வரம் கொடுக்கிறாள்

நம்மை சேர்ப்பித்து -சேதன லாபம் அவனுக்கு ஆழ்வார் -பக்தி ஞானம் வரம் புருஷார்த்தங்கள் அருளி –
பிறவித்துயர் போக்கி -அவர் பெருமாளை அடைந்து நம்மை நோக்கி வர வைத்து –
சேஷபூதராக இருந்து நம்மையும் தம்மைப்போலவே ஆக்கி அருளி –

எவள் ஸ்ரீரங்கநாதனைச் சேர்ந்தவர்களின் லாபத்தின் பொருட்டு பாடுபடுகிறாளோ, எவள் அவனை அடைந்தவர்களின்
சுபத்தின் பொருட்டு உள்ளாளோ, எவள் ஞானத்திற்காக உள்ளாளோ (ஞானத்தை அளிக்கிறாளோ),
எவள் நல்ல விஷயங்கள் மீது விருப்பங்கள் அதிகரிக்கத் தூண்டும்படியாக உள்ளாளோ, எவள் அடியார்களின் விரோதிகளை
அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதனை அடைந்துள்ளாளோ, எவள் ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின் பொருட்டு அவனை அடந்துள்ளாளோ,
எவள் ஸ்ரீரங்கநாதனை நம்மிடம் அழைத்து வருவதற்காக உள்ளாளோ, எவள் முக்தர்கள் எங்கும் ஸஞ்சாரம் செய்யும்படி செய்கிறாளோ –
நல்ல கதியை அடைய உதவும் இப்படிப்பட்ட பாதுகையானவள், ஸ்ரீரங்கநாதனுக்கு எப்போதும் அடிமை செய்தபடி உள்ளாள்.

இந்த ஸ்லோகத்தில் பலவிதமான அமைப்புகள் உள்ளன.–மஹா யமகம் – இவையாவன –
ஏகஸ்வரிசித்ரம் (ஒரே ஸ்வரம்), ஏகவர்ணசித்ரம் (ஒரே எழுத்து), த்விஸ்தாநகம் ஸ்தாநீசித்ரம், கோமுசித்ரிகா,
ஸர்வதோபத்ரம், கங்கணபந்தம், முரஜபந்தம், பத்மபந்தம், ச்லோகாநுலோம ப்ரதிலோம கதிசித்ரம், அர்த்தயமகம்,
பாதசதுராவ்ருத்தி யமகம், பாதார்த்த அஷ்டாவ்ருத்தி யமகம், ஏகாக்ஷர சித்ரசதா வ்ருத்தியகம் – ஆகும்.

எந்த ஸ்ரீ பாதுகை சின்ஹாசனத்தில் இருந்து வரி வசூலித்ததோ –
எது ஆஸ்ரிதருடைய சுபத்திற்கு ஆனதோ –
எது பகவத் விஷய காமம் உண்டாக்குகிறதோ –
எது தன்னையே உபாச்ய தேவதையாக கொண்டாடும்படி செய்கிறதோ –
எது ஆஸ்ரித விரோதிகளையும் பாபங்களையும் போக்க வல்லதோ –
எது பெருமாளை அடைந்து அவர் சஞ்சாரத்துக்கு ஆகிறதோ
எது பெருமாளை நம்மிடம் அழைத்து வர ஆகிறதோ
எது ஆஸ்ரிதர் பரம புருஷார்த்தத்தை எய்துவதற்கு சாதனமோ அது பகவானுக்காகவே உள்ளது –

—————————————————————————–

ரகுபதி சரணாவநீ ததா விரசித ஸஞ்சரணா வநீபதே
க்ருத பரிசரணா வநீபகை: நிகமமுகைச்ச ரணாவநீ கதா—937–

ரகுபதி சரணாவநீ ததா விரசித
ஸஞ்சரணா வநீபதே-காட்டுப்பாதையில் கூடப் போனாள் -அன்புடன் -பரிவுடன்
க்ருத பரிசரணா
வநீபகை: -ரிஷிகள்
நிகமமுகைச்ச -வேதம் ஓதிக்கொண்டு -ஸூஸ்ருஷை செய்யப்பட்டாள்
கௌதம முனிவரும் இவளையே வணங்கி -சிஷ்ட பரிபாலனம் செய்து அருளி
godணாவநீ கதா-போர்க்களம் -தாடகை வதம் -அநிஷ்ட நிவாரணம் -துஷ்ட நிரஸனம்

ஆழ்வார் -உயர்ந்த மார்க்கமான சரணாகதி மார்க்கம் உடன் சஞ்சரித்து -ஸஞ்சரணா வநீபதே-ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் –
ரிஷிகளும் வணங்கி -விசுவாமித்திரர் -மழையே இல்லாத பொழுது -12 வருஷங்கள் -நாய் மாமிசம் -விற்பவன் கொடுக்காமல் -தனக்கு பாபம் வருமே -இந்த்ரனை கூப்பிட்டு மழை வரச்செய்தானே
32 வருஷம் ஒன்றுமே உண்ணாமல் இருப்பதை கேட்டு அகஸ்தியர் இடம் கேடடாராம்
உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று கேட்டு வணங்கினாராம்
போர்க்களம் -வேத வாதப்போர் -உளன் எனில் உளன் -உளன் அலன் எனில் உளன் –
god is no where -god is now here-

விச்வாமித்திரரின் யாகம் காக்கும் பொருட்டு கானக மார்க்கத்தில் சென்றவளும், மாரீசன் முதலான அசுரர்களை
அழிப்பதற்காகப் போர்க்களம் சென்றவளும் ஆகிய ரகுகுல நாயகனான இராமனின் பாதுகை –
விரோதிகளை அழித்துக் காப்பாற்ற வேண்டும் என்று வந்த விச்வாமித்திரர் போன்ற யாசகர்களாலும்,
வேதங்களில் சிறந்த மஹரிஷிகளாலும் செய்யப்படும் கைங்கர்யத்தைக் கொண்டதாக உள்ளாள்.

இதில் பாத சதுஷ்டய பாக ஆ வ்ருத்தி யமகம் உள்ளது.
முதல் பாதம் மற்றும் மூன்றாம் பாதங்கள் 11 அக்ஷரங்களும்,
இரண்டு மற்றும் நான்காம் பாதங்கள் 12 அக்ஷரங்களும் கொண்டதாக உள்ளது.

ச ரணாவநீ-நான்கு பாதங்களிலும்
முதலில் பாதுகை
அடுத்து சஞ்சாரணம் செய்து
அடுத்து உபசரிக்கப் பட்டவள்
அடுத்து ரணாவநீ சென்றவள்

விஸ்வாமித்ரர் வேண்டின அந்தச் சமயத்தில் ஸ்ரீ ராகவ ஸ்ரீ பாதுகை காட்டு வழியில் சஞ்சாரம் செய்தது –
ஸூபாஹூ மாரீசர்களுடன் போரிட முனைந்தது -யாக ரஷணம் செய்து பலன் யாசிப்பவர்களாலும்
வேதம் வல்லவர்களாலும் கைங்கர்யம் செய்யப் பெற்று விளங்குகிறது –

————————————————————————

தத்த கேளிம் ஜகத் கல்பநா நாடிகா
ரங்கிணா ரங்கிணா ரங்கிணா ரங்கிணா
தாத்ருசே காதி புத்ர அத்த்வரே த்வாம் விநா
அபாத் உ கா பாதுகா பாது காபாதுகா—-938-

ஜகத் கல்பநா நாடிகா-உலகை படைத்தல் என்னும் கூத்து
ரங்கிணா -உடையவன் -அரங்கன் -லோகவைத்து லீலா கைவல்யம் -அலகிலா விளையாட்டு உடையவன்
அரங்கிணா -தனக்கு மேல் கூத்தாடி இல்லாதவன் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
ரங்கிணா -மிகப்பெரிய கூத்தாடி
ரங்கிணா-ஸ்ரீ ரெங்கம் கோயில் கொண்டவன் இவனே
தத்த கேளிம் -அவனாலே விளையாட்டு வழங்கப் பெற்ற ஸ்ரீ பாதுகை -சஞ்சாரமே இவளுக்கு விளையாட்டு

க ஆ பாதுகா -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -ஆகாசம் போல் எல்லை இல்லா ஆனந்தம் -மகிழ்ச்சியை ஸம்பாதித்துத் தருகிறாள்
பாது -ஸ்ரீ பாதுகா தேவி
தாத்ருசே காதி புத்ர =விசுவாமித்திரர்
அத்த்வரே -யாகம்
அபாத் -காப்பாற்றினாய்
த்வாம் விநா-உன்னைத் தவிர
கா உ பாதுகா -வேறே யாரால் முடியும் – உ காரம் உன்னால் மட்டுமே முடியும்

பெருமாள் மூலம் பாசுரம் பாடும் விளையாட்டு -அவலீலையாக பாடும் படி
மயர்வற மதி நலம் அருளப் பெற்று -அதுவும் அவனது இன்னருள்
நமது ஆத்ம யாகம் -காப்பாற்றி -காமம் கோபம் அரக்கர்களைப் போக்கி அருளி
இவரால் மட்டுமே முடியும் –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்த உலகத்தை ஸ்ருஷ்டி செய்தல் என்னும் நாடகத்தை நடத்துபவனாகவும்,
இதற்குத் தனக்கு வேறு யாரும் கற்றுக் கொடுக்கும் நாடகக்காரன் இல்லாதபடி தானே கை தேர்ந்த நாடகக் காரனாகவும்,
ஸ்ரீரங்கநாதன் உள்ளான். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனால் உனக்கு உல்லாஸமான ஸஞ்சாரம் அளிக்கப்பட்டது.
உன்னைத் தவிர எந்தப் பாதுகை – காதி என்னும் அரசனின் புத்ரனாகிய விச்வாமித்ரரின் யாகத்தைக் காப்பாற்றி,
அவருக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் இன்பம் அளித்துக் காப்பாற்றியது?

ஸ்ரீ பாதுகையே ஜகத் சிருஷ்டி ஒரு நாடகம் -அதைச் செய்ய மேடை ஏறிய பெருமாள் சாதாரணக் கூத்தாடி அல்லன் –
அவனை வேலை வாங்கும் மேம்பட்டவன் ஒருவனும் இல்லை –
அவனே ஸ்ரீ ரங்க ஷேத்திர நாயகன் -நீ அவனுக்கு சஞ்சார விளையாட்டு அளித்தாய் அவன் யுத்த ரங்கம் புகுந்த போது –
அவன் நடையை உனக்கு அளித்தான் -உன்னைத் தவிர எந்தப் பாதுகை தான் ராஷசர்களால் கெடுக்கப் பட விருந்த
விச்வாமித்ர யாகத்தை காக்க வல்லதாய் இருந்து ஸூ கம் சாதித்துக் கொடுக்கக் கூடியது –

பாத பாக சதுர் ஆவ்ருத்தி
ஒரு பகுதியே நான்கு தரம் வரும்
ரங்கிணா
பாதுகா
நான்கிலும் நான்கு அர்த்தங்கள் பார்த்தோம் –

———————————————————————————

பாதபா பாதபா பாதபா பாதபா
பாதபா பாதபா பாதபா பாதபா
பாதபா பாதபா பாதபா பாதபா
பாதபா பாதபா பாதபா பாதபா –939-

படித்தல் – இந்த ஸ்லோகத்தைக் கீழே உள்ளபடி பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்:

பாதப அபாதப ஆபாத பாப அத் அபா
பாதபா பாத பா அ பாதபா அபாதபா
பாத பாபாத் அ பாபாத் அ பாபாத் அபாபாத்
அபாபா த பாபா ஆத பா பாத பா

கால்கள் என்னும் வேர் மூலம் நீரைப் பருகும் தாவரங்கள், அவ்விதம் கால்களால் பருகாமல் உள்ள
மற்ற உயிரினங்கள் போன்றவற்றைச் சூழ்ந்துள்ள பாவங்களை நீக்கவல்ல அபிஷேக நீரை உடையவள்;
ஸ்ரீரங்கநாதனின் உடைமையானவற்றில் நான்கில் ஒரு பங்கான இந்த லீலாவிபூதியைக் காப்பாற்றுபவள்;
மேலே உள்ள பங்கு தவிர மீதம் உள்ள முக்கால் பங்கான நித்யவிபூதியைக் காப்பாற்றுபவள்;
ரக்ஷிக்கப்பட வேண்டிய தாய் தந்தையர்களைக் காப்பாற்றுபவர்கள், அவ்விதம் காப்பாற்றாதவர்கள் விஷயத்தில்
நன்மையை அளிப்பதும், நல்லதை நீக்குவதுமாக உள்ளவள்;
ஸ்ரீரங்கநாதனின் திருக்கல்யாண குணங்களை எப்போதும் பருகும் ஸாதுக்களை,
அவர்களின் புலன் வசப்படுத்தும் குணங்கள் போன்றவையே தூய்மைப்படுத்துகின்றன,
அந்தக் குணங்களை வளரச்செய்கிறாள்; ஸ்ரீரங்கநாதனின் அடியார்களுடைய விரோதிகளை உலர்ந்து போகும்படிச்
செய்கின்ற கிரணங்களை கொண்டுள்ளாள்; உயர்ந்த பதவிகளில் உள்ள இந்த்ரன் போன்றவர்களைக் காப்பாற்றும்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளையும் காப்பாற்றுபவளாக பாதுகை உள்ளாள்.

பாதப அபாதப ஆபாத பாப அத் அபா
பாதபா பாத பா அ பாதபா அபாதபா
பாத பாபாத் அ பாபாத் தபா அபாபாத்
அபாபா த பாபா அத பா பாத பா

பாத ப அ பாத ப -பதவி பெற அதிகாரம் கொண்டவர்களை காப்பாற்றும் அகார வாச்யன் -பாதுகை
பாத பா -வேர்கள் பாதங்களால் தண்ணீரை பருகி
அ பாத பா -இப்படி இல்லாத அனைவர்களும்
ஆபாத -அடைந்த
பாப அத் அபா -பாபங்களை திரு மஞ்சன தீர்த்தத்தால் போக்கி அருளி
பாத பா -கால் பகுதியை காத்து -லீலா விபூதி -த்ரி பாத் விபூதி -என்று சொல்லுவோமே
அ பாதபா -கால் பகுதியாக இல்லாத நித்ய விபூதியையும் காக்கிறாள்
பாத பாபாத்-பெற்றோர்களை காப்பவர்களுக்கு
அ பாபாத் -நன்மை அருளி
அபாத அபாபாத் –பெற்றோர்களைக் காக்காதவர்களுக்கு தீமை
அ பாபா த பாபா -அகார வாஸ்யனான -அவனுக்கு அடியார்களுக்கு தூய்மை குணங்கள் வளர
ஆத பா -எதிரிகளை உலர்த்தும்
பாத பா-கிரணங்கள் கொண்டவள்

ஆழ்வார் -தீர்த்தம் -பாசுரம் -கொண்டே புனிதம் ஆக்கி -உடைந்து நோய்களை போக்குவிக்குமே –
பொன்னுலகு ஆளீரோ -உபய விபூதியும் இவரது உடைமையே
பெற்றோர் -ஞான பிறப்பு -ஆச்சார்யர்களையே -குறிக்கும் இங்கு -குரு பரம்பரை -ஸ்துதிப்பாரை காத்து அருளி
தூய ஞானம் பக்தி வளர்த்து -அறியாமை உலர்த்தி ஞான ஒளி கிரணங்கள் கொண்டவர் –

ஷோடச வ்ருத்தி யமகம் –ஒரே வார்த்தை -16 தடவை

48 அக்ஷரங்கள் -பாத இரண்டு எழுத்துக்கள் மட்டுமே கொண்டு

அநு லோம ப்ரதி லோம யமகம் -ஸ்லோக அர்த்த -பாத -பாதியையும் கால் பங்கையும் நேராகவும் மாற்றிப் படித்தாலும்

அஷ்ட தள பத்ம பந்தம்
சதுர் தள பத்ம பந்தம்
ஷோடச தள பத்ம பந்தம்

பகவான் திருவடியை ரஷிக்கும் ஸ்ரீ பாதுகை -மேலும் பலவும் செய்யும்
அதன் திருமஞ்சன தீர்த்தம் பாபங்களை போக்கி விடுகிறது -உபய விபூதியையும் காக்கின்றது –
கர்மாநுஷ்டானம் தவராதவர்களை காத்து நல்லது செய்கிறது -மற்றவர்க்கு நல்லது செய்யாது –
பெருமாளின் திருக் கல்யாண குணங்களை எப்பொழுதும் அனுபவித்து இருப்பாருக்கு சமதமாதி குணங்களை அபிவருத்தி செய்து விடுகிறது –
அதன் கிரணன்களே ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்கிறது -இந்த்ராதி தேவர்களையும் ரஷிக்கிறது
இத்தைனையும் ஸ்ரீ பாதுகை செய்து அருளும் பணி –

————————————————————————–

ஸாகேத த்ராண வேளா ஜநித தத நிஜ ப்ராங்கண ஸ்ரீப்ரபாஸா
ஸாபா ப்ரச்ரீ: அடவ்யாம் இயம அமம யமி வ்யாபத் உச்சேதி லாஸா
ஸாலாதிச்சேத திக்ம ஆஹவ ருருரு வஹ ஹ்ரீ கரஸ்ய ஆம ராஸ அஸா
ஸா ராமஸ்ய அங்க்ரிம் அப்யாஜதி ந ந நதி ஜ ஸ்தூலம் உத்ராதகே ஸா–940–

ஸாகேத த்ராண வேளா -அயோத்தியை காக்க வேண்டிய வேளையிலே –
ஜநித தத நிஜ -அமைக்கப்பட்ட விரிந்த ராஜ சபையில்
ப்ராங்கண -ஆஸ் தான மண்டபத்தில்
ஸ்ரீப்ரபாஸா-நன்கு ஒளி வீசி
இயம்
ஸாபா ப்ரச்ரீ: -புகழ் கீர்த்தி உடன் -குறைகளே இல்லாமல் -வேதங்களால் ஸ்துதிக்கப் பட்டு
அடவ்யாம் -காட்டில்
அமம யமி -மமகாராம் இல்லா ரிஷிகள்
வ்யாபத் -பெரிய ஆபத்துக்களை
உச்சேதி லாஸா-அவலீலையாகப் போக்கி அருளி
ஆம ராஸ அஸா-அரைகுறை அறிவால் -நப்பாசையால் தப்பாக சொன்னாலும் –அத்தையும் போக்கி
ஸாலாதிச் -ஸாரம் -சாலம் -பலம் முதலானவைகளை
சேத -முறியடித்து
திக்ம ஆஹவ -உக்ரமான போரில்
ரு -ஒலியால்
ருரு வஹ ஹ்ரீ கரஸ்ய – மாலை ஏந்திய சிவனுக்கு வெட்கம் அடையும் படி
சிவ தநுஸ்ஸூ -விஷ்ணு தனுஸ்ஸூ –ஹூங்காரத்தாலே முறிந்ததே –
ஸா ராமஸ்ய -ராமனுடைய
நதி ஜ ஸ்தூலம்-திருவடிகளை வணங்குவதால் மகிழ்ந்து பூரித்து
அங்க்ரிம் -திருவடிகளை
உத்ராதகே-காப்பதன் பொருட்டு
அப்யாஜதி ந ந -இவளே வழி நடத்தி செல்கிறாள் -இரண்டு ந காரம் உறுதியாக திடமாக
ஸா–அவளே ஸ்ரீ பாதுகா தேவி

ஆழ்வார் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -ஸிம்ஹாஸனம் இதுவே
உலக -சம்சார காட்டில் -அகங்கார மமகாரங்களைப் போக்கி
திருவடிகளை பாசுரங்கள் மூலம் நம்மிடம் அழைத்து சேர்த்து அருளி
திருவடி விடாத பாசுரங்கள் மூலம்

அயோத்தியைக் காப்பாற்றி அரசாண்ட காலத்தில் அமைக்கப்பட்ட ராஜசபையின் ஆஸ்தான மண்டபத்தில்
தனது ஞானம், ஐச்வர்யம் முதலானவற்றுடன் கூடிய ஒளியை உடையவள்; இதனால் மேலும் அழகும் மேன்மையும் அடைந்தவள்;
மேன்மேலும் வளர்ந்த ராஜ்யசெல்வம் கொண்டதாக விளங்கியவள்; ஸம்ஸாரம் என்ற காட்டில்
மமகாரம், பொருள் ஆசை, பற்றுதல்கள் போன்றவை இல்லாமல் வாழ்கின்ற உயர்ந்தவர்களுக்கு,
சத்ருக்கள் மூலம் உண்டாகவல்ல ஆபத்துக்களை அடியுடன் வெட்டிச் சாய்ப்பதைத் தனது விளையாட்டாகவே கொண்டவள்;
அதிக ஞானம் பெறாதவர்களாக இருந்தாலும் ஸ்ரீரங்கநாதனையும், பாதுகையையும் போற்றி நிற்பவர்களின்
தவறான சொல் அமைப்புக்களை நீக்கி, அவர்களுக்கு ஞானமும் உயர்ந்த சொற்களையும் கொடுத்தபடி உள்ளவள் –
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை மேலும் செய்வது என்ன? ஸாரம் என்ற பலம் போன்றவற்றை முறியடிப்பதில்
மிகவும் உக்ரமான யுத்தம் நடக்கும்போது, மானைக் கையில் ஏந்திய சிவனுக்கு
தனது “ஹும்” என்ற ஓசையால் மட்டுமே பயந்து வெட்கம் ஏற்படும்படிச் செய்த இராமனுடைய திருவடிகளை வழி நடத்துகிறாள்.
இந்தத் திருவடிகள், ரக்ஷிக்கத் தகுந்தவர்கள் செய்கின்ற வணக்கம் காரணமாக மிகவும் மகிழ்வுடன் உள்ளன அல்லவோ?

திரு அயோத்யா நகரை ஸ்ரீ பாதுகை ஆண்டு அதனைக் காக்கும் காலத்தில் தன் ஆஸ்தான மண்டபம் செல்வ ஒளி பரந்து நிரம்பி இருந்தது
ஜ்ஞானச் செல்வம் நிறைந்த சதச் அது -புகழாகிற காந்தி நிரம்பி இருந்தது –
தண்ட காரன்யத்தில் முனிவர்களுக்கும் -சம்சார காட்டில் நமக்கும் -வரும் ஆபத்துக்களை அடியோடி வெட்டிப் போடுவதை
விளையாட்டாகச் செய்ய வல்லது ஆஸ்ரிதற்கு நல்ல மதி அளிக்க வல்லது
ஸ்ரீ பாதுகை புருஷகாரம் செய்கிறது –

தேசிகர் திரு நாமம் உள்ள ஸ்லோகம்
கவி நாமாங்கித அஷ்ட தள பத்மம்

இந்த ஸ்லோகத்தில் கிரந்தத்தையே இந் நூலையையே ஸ்ரீ பாதுகைக்கு சமர்ப்பிக்கிறார் ஸ்வாமி-
அஷ்டதள பத்மத்தில் வேங்கடபதி கமலம் -என்று திருமலை எம்பெருமான் திருவடித் தாமரை என்றும் அமைத்துத்
தன் திரு நாமத்தையும் சொல்லி இருக்கிறார் –

—————————————————————————————————-

ரம்யே வேஸ்மநி பாப ராக்ஷஸ பிதா ஸ்வாஸக்ததீ நாயிகா
நந்தும் கர்ம ஜ துர்மத அலஸ தீயாம் ஸா ஹந்த நாதீக்ருதா
ஸத்வாட ப்ரமிகாஸு தாபஸ தபோ விஸ்ரம்ப பூ யந்த்ரிகா
காசித் ஸ்வைர கமேந கேளி ஸமயே காமவ்ரதா பாதுகா—-941-

கேளி ஸமயே -விளையாட்டு -சஞ்சார -சமயத்தில்
ஸ்வைர கமேந -இஷ்டடப்படி சஞ்சரிக்கும் தன்மையால்
காம வ்ரதா -பிடித்த விரதம் -ஆஸ்ரித ரக்ஷணம்
பாப ராக்ஷஸ பிதா ஸ்வாஸக்ததீ நாயிகா-பாபங்கள் செய்த அரக்கர்களை அழிப்பதில் ஊக்கம் கொண்ட
திரு உள்ளம் கொண்ட ராமபிரானை வழி நடத்திச் சென்று
ஸத்வாட ப்ரமிகாஸு தாபஸ தபோ விஸ்ரம்ப பூ யந்த்ரிகா-சத்துக்களின் ஆஸ்ரமங்களைச் சுற்று சுற்றி வந்து –
ரிஷிகளுக்கு தபஸ்ஸில் ஒருமுகப்பட்ட மனசை கொடுத்து -பூமியில் பட்ட அடிச் சுவடால் –அடிச் சுவட்டைப் பார்த்தால் அசுரர்கள் தீண்டார்களே
சா -அவள்
காசித் -இப்படிப்பட்ட
பாதுகா -ஸ்ரீ பாதுகா தேவி
கர்ம ஜ துர்மத அலஸ தீயாம் -முன் வினைகளால் பிறந்த கெட்ட மதிகளால் சோம்பேறிகளாக இருக்கும் நாமும்
நந்தும் –வணங்க வசதியாக
ரம்யே வேஸ்மநி-அழகான ஸ்ரீ ரெங்க விமானத்தின் கீழே
நாதீக்ருதா-யஜமானியாக இருந்து
ஹந்த -இவள் இட்ட வழக்காக அரங்கன் உள்ளான் -என்ன ஆச்சர்யம் –

ஆழ்வார் -விஷ்வக்சேனர் -அவதாரம் -எங்கும் சஞ்சாரம் -சடாரி எங்குமே உண்டே –
பாபங்களே -நமது எதிரிகள் -போக்கி அருளும் -ஆழ்வார்
தபஸ் நிஷ்டை -சரணாகதியே அதிரிக்த தபஸ்ஸூ -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –
ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை -மஹா விச்வாஸம் வேண்டுமே -அத்தை திருவடி மூலம் அளித்து
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –
நாமும் வாங்கவே -அரங்கனுக்கு நாதனாக-இவர் இட்ட வழக்காகவே -தத்தே ரங்கி நிஜம் அபி பதம் தேசிக -ஆதேச காந்தி -தேசிகன் –
முடிச்சோதி –அடிச்சோதி -கடிச்சோதி -கேசாதி பாதம்
அழகர் ஆழ்வார் அருளிச்செயலை பெற்றுக் கொள்ள தலை குனிந்து -காட்டி அருள -பாதம் முதலில் –
ஹந்த -ஆழ்வார் இட்ட வழக்காக அரங்கன் உள்ளான் -என்ன ஆச்சர்யம் –

பாவங்கள் நிறைந்த அசுரர்களை அழிப்பதில் மிகுந்த ஆவல் கொண்ட புத்தியுள்ள இராமனை அழைத்துச் செல்கிறாள்;
தனது விருப்பத்தின்படி ஸஞ்சாரம் செய்வதால், விளையாடும் காலங்களில் தன்னையும் ஸ்ரீரங்கநாதனையும்
அண்டி நிற்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதை ஒரு விரதமாகவே கொண்டுள்ளாள்.
ஸாதுக்களான முனிவர்கள் உள்ள இடங்களில் ஸஞ்சாரம் செய்யும்போது, அந்த முனிவர்களுக்கு தங்கள் தவங்கள் மீது
உள்ள நம்பிக்கையை வளர்த்து, தங்கள் தவம் வீணாகாது என்ற உறுதியை அளிப்பதான
அடிவைப்பைக் (தனது ரேகையை அந்த பூமியில் பதித்து) கொண்டதாக உள்ளாள்.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை – பாவங்கள் காரணமாக உண்டான கர்வம் முதலியவற்றால் ஏற்பட்ட
சோம்பல் காரணமாகச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் உள்ளவர்கள் வணங்குவதற்காக,
மிகவும் அழகான ஸ்ரீரங்கவிமானத்தில் எஜமானியாக அமர்ந்துள்ளாளே! என்ன வியப்பு!

தன் லீலா காலத்திலே இஷ்டப்படி எங்கும் சஞ்சரிப்பது ஸ்ரீ பாதுகை -சேவிப்பவர்களின் இஷ்ட பிராப்தியை அளிக்கும் –
இதற்கு திட விரதம் கொண்டு இருக்கும்
சத்ரு நிரசனத்துக்கு பகவானை வழி நடத்தும் -முனிவர்கள் தங்கள் தபசுக்கு இடையூறு வாராது என்று உன் சஞ்சாரத்தால் திண்ணமாக நம்புவார்கள் –
கர்ம யோகாதிகளில் இழியாதவர்களுக்கும் சேவித்து உய்ய ஸ்ரீ ரங்க விமானம் ஆகிற அழகிய ஸ்தலத்தில் தைவமாக சேவை சாதிக்கின்றதே –

மஹா சக்ர பந்தம் –
பாதங்களில் நடு எழுத்து ச
19 எழுத்துக்கள் ஒரு பாதத்திலும்
ஆறு குத்துக் கால்களின் உள்ளிருந்து 7ஆம் மற்றும் 4 ஆம் வீதிகளில்
மண்டல வீதி –
வேங்கட நாதிய பாதுகா ஸஹஸ்ரம் என்று
கவி காவ்யப் பெயர்கள் கிடைக்குமாறு அமைந்து இருப்பது சிறப்பு –

———————————————————————————-

ஸ்ரீ ஸம்வேதந கர்ம க்ருத் வஸு தவ ஸ்யாம் ருத்த தைர்ய ஸ்புட:
ஸ்ரீபாதாவநி விஸ்த்ருதா அஸி ஸுகிநீ த்வம் கேய யாதாயநா
வேதாந்த அநுபவ அதிபாதி ஸுதநு: ஸாந்த்ர இட்ய பாவ ப்ரதே
அங்கஸ்தா அச்யுத திவ்ய தாஸ்ய ஸுமதி: ப்ராணஸ்த ஸீதா தன—-942–

ஸ்ரீ ஸம்வேதந கர்ம க்ருத் வஸு -வேதங்கள் சொல்லும் நல்ல செயல்களை செய்பவரின் செல்வமாக இருப்பவள் -0திருவடி மூலமே உலகு அளந்து –
ஸாந்த்ர இட்ய பாவ ப்ர-அதிகமாக வணங்கும் தன்மையை ப்ரஸித்தமாகக் கொண்டவள்
ப்ராணஸ்த ஸீதா தன-உயிர் மூச்சாகா -சீதா தேவிக்கு செல்வமாக இருப்பவள் –
ஸ்ரீபாதாவநி -பாதங்களை ரக்ஷித்து
த்வம் கேய யாதாயநா-போற்றத்தக்க சஞ்சார மார்க்கம் கொண்டவள்
வேதாந்த அநுபவ அதிபாதி ஸுதநு: -உபநிஷத் பொருளை அனுபவிப்பதில் விட அழகிய திரு மேனி -வேதத்தின் சுவையான அவனை விட -ஸ்ரேஷிடம்
தே(அ)ங்கஸ்தா -கல்ப –அங்குசம் –இத்யாதி அடையாளங்கள் -பதியப்பட்ட -திருவடி பட்டதாலேயே –
அச்யுத திவ்ய தாஸ்ய ஸுமதி: -உயர்ந்த கைங்கர்யம் செய்ய நல்ல மதி கொண்டவள்
ஸுகிநீ -அதனாலே ஆனந்தம்
விஸ்த்ருதா அஸி -கணக்கில்லா வடிவம் கொண்டவள் —
ருத்த தைர்ய ஸ்புட:–இதனாலேயே -கலக்கம் தீர்ந்து பெரிய விச்வாஸம் -தெளிவு பெற்றேன் அடியேன் —
தவ-பாதுகையே உனக்குத் தொண்டனாக
ஸ்யாம் -ஆவதற்கு நீயே அருள் புரிய வேண்டும் –

மாதா பிதா -சர்வம் -ஆழ்வார் -தானே
உறு பெரு -செல்வமும் மாறன் ஆரணமே –ஆரமுது
மனையும் பெரும் செல்வமும் மற்றை வாழ்வும் சடகோபன் -கம்பர்
பிராட்டி அபிமானம் பெற்ற -மதி நலம் –
சாந்தோக்யம் உபநிஷத் பாடும்-அயனம் மார்க்கம் சஞ்சரித்து -அர்ச்சிராதி வழி -நமக்கும் காட்டி அருளி –
சூழ் விசும்பு -பதிகம் –
மாறனில் மிக்கதோர் தேவும் உளதோ –
திருவடி சிஹ்னம் நெற்றில் நின்ற பாதம் -ஓக்கலையில் -சென்னியில் –
திருவடிக்கீழ்க் குற்றேவல்–
விஸ்தாரம் -தாய் தோழி மகள் தானான -நான்கு முகங்கள் -ஆழ்வாருக்கும் உண்டே –
தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெறுகிறோம் –

அதிகமாக வணங்கப்படும் தகுதியைக் கொண்டதால் மேன்மையும், இராமனின் உயிர் நிலையாக உள்ள
சீதையின் செல்வமாகவும் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே,
வேதங்களின் எல்லையாக உள்ள உபநிஷத்துகளின் மூலம் மட்டுமே அறிய வல்லதான ஸ்ரீரங்கநாதனின் அனுபவத்தைக் காட்டிலும்,
மேலான இன்பம் அளிக்கவல்ல திவ்யமான திருமேனி கொண்டவள்;
அடியார்களை எப்போதும் நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் கைங்கர்யங்களில் தனது புத்தியை எப்போதும் வைத்துள்ளவள்;
இதனால் அவனுடைய சாமரங்கள் முதலான பொருட்களில் முதன்மையாக உள்ளவள்;
அழகான ஸஞ்சாரங்கள் கொண்டவள்; எல்லையற்ற ஆனந்தம் கொண்டவள்;
ஸ்ரீரங்கநாதனின் பல திரு அவதாரங்களுக்கு ஏற்றபடி பல ரூபங்களைக் கொண்டவள்.
இப்படியாகப் பல மேன்மைகள் பொருந்தியவளாக நீ உள்ளாய்.
ஸாதுக்களின் செல்வம் என்று போற்றப்படும் வேதங்கள் கூறிய உயர்ந்த கர்மங்களை இயற்றுபவர்களின்
பெரும் செல்வமாக நீ உள்ளாய். இதனால் மிகவும் தெளிந்து நம்பிக்கை பெற்ற நான், உனக்கே அடிமையாக வேண்டும்.

ஸ்துதி செய்யத் தக்க விஷயத்தில் பெரும் புகளை நிரம்பப் பெற்றதும் -சீதா பிராட்டிக்கு பிராணன் போலே
அறிய செல்வமுமான ஸ்ரீ பாதுகையே உன் ஸ்வரூபம் வேதாந்தங்கள் செய்யும் உன் அனுபவ எல்லையை மீறி நிற்பது .
பரிச்சதங்களில் ஒன்றாய் அச்யுத திவ்ய கைங்கர்யத்திலேயே நன்னோக்கு உடையதாய் பாடிப் புகழைத் தக்க சஞ்சாரங்கள்
உடையதாயும் இருக்கிறாய் -அதனாலேயே பேரானந்தம் பூரிப்பு தெரிகிறது
மோஷ சாம்ராஜ்யம் அடைவிப்பதான உத்தம கர்மாவைச் செய்து கொண்டு மேன்மேலும் பிரகாசிப்பவனாய்
நான் உன் சொத்தாக உன் தாசனாக ஆகக் கடவேன்

இது சதுரங்கஷ்டார சக்ர பந்தம்
சதுரங்கம் -நான்கு அடை மொழிகள்
அரம் spokes
அஷ்ட -அரங்கள் கொண்டது
ஸூ -பொதுவான எழுத்து எல்லா பாதங்களிலும்

8 குத்துக் கால்கள் -உட்புறம் இருந்து 9 ஆம் சக்ரம் மற்றும் 7 ஆம் சகரத்தில்
அஷரங்களைக் கூட்டிக் கிடைக்கும் அனுஷ்டுப் ஸ்லோகம் –

ஸ்ரீ ஸ்ரீ வேங்கட நாதேந
வேதாந்தாசார்ய தாவதா
கவி வாதி ம்ருகேந்த்ரேண
க்ருதா பாதா வநீ நுதி –

ஸ்ரீ ஸ்ரீ வேங்கட நாதேந -ஸ்ரீ வேங்கட நாதருக்கு நான்கு அடை மொழிகள்
வேதாந்தாசார்ய தாவதா -வேதாந்தாச்சார்யார் என்ற விருது
கவி வாதி ம்ருகேந்த்ரேண -கவிகளுக்கும் வாதம் பண்ணுவார்களுக்கும் ஸிம்ஹம் போல் -கவி தார்க்கிக ஸிம்ஹம் –
க்ருதா பாதா வநீ நுதி -இயற்றப்பெற்ற ஸ்ரீ பாதுகா ஸ்தோத்ரம்

——————————————————————–

இதில் இருந்து இரட்டை ஸ்லோகங்கள் ஒரே சித்திரமாக அமைத்துள்ளார்

கநக பீட நிவிஷ்ட தநுஸ் ததா
ஸுமதி தாயி நிஜ அநுபாவ ஸ்ம்ருதா
விதிசிவ ப்ரமுகை: அபிவந்திதா
விஜயதே ரகு புங்கவ பாதுகா—-943-த்ருத நிலம்பிதம் சந்தஸ்

கநக பீட நிவிஷ்ட தநுஸ் ததா-தங்க சிம்ஹாசனத்தில் எழுந்து அருளி -அந்த சமயத்தில்
ஸுமதி தாயி -நல்ல புத்தி அளித்து
நிஜ அநுபாவ ஸ்ம்ருதா-தர்சனத்தாலும் ஞானத்தாலும்
விதிசிவ ப்ரமுகை: அபிவந்திதா-விதி -நான்முகன் -சிவன் போல்வார்
விஜயதே ரகு புங்கவ பாதுகா-வெற்றியுடன் திகழ்கிறாள்

ஆழ்வார் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -ஆழ்வார்களுக்கு அங்கி
மதி நலம் -ஸூ மதி-அருளிய நாராயணன் அனுபவம் ஒன்றிலேயே எண்ணம்
பிரணமந்தி தேவதா
சடாரி யாகவும் திகழ்கிறார்

கோஸல நாட்டை அரசாண்ட காலத்தில் தங்க மயமான ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்தவள்;
நல்ல புத்தியை அளிக்க வல்ல தனது தரிசனம் மற்றும் நினைவைக் கொண்டவள்
(தன்னைத் த்யானிப்பவர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்து அவர்களுக்கு நல்ல புத்தி அளிப்பவள்);
நான்முகன், சிவன் போன்றவர்களால் எப்போதும் வணங்கப்படுபவள் –
இப்படிப் பட்டவளான ரகு குலத்தின் நாயகன் இராமனின் பாதுகை எப்போதும் வெற்றியுடன் உள்ளாள்.

கோசல ராஜ்ய ஆட்சி செய்த காலத்தில் தங்க சிம்ஹாசனத்தில் அமர்ந்து விளங்கினது
தன்னை த்யானத்தில் போர அனுபவிப்பதும்
சாமான்யமாக ஸ்ரவணம் செய்வதும் கூட புத்தி விகாசம் செய்விக்கும்
பிரம்மா சிவன் முதலானவர்களால் வணங்கப் பெற்று விளங்குகிறது -அதற்கு வெற்றி உண்டாகுக –

—————————————————————————

தீந கோபீ ஜநி க்லிஷ்ட பீ நுத் ஸதா
ராமபாதாவநி ஸ்வாநுபவ ஸ்திதா
ஏதிமே அவஸ்யம் உத்தார பாவஸ்ரிதா
தேஜஸா தேந குஷ்டிம் கதா பாலிகா—-944-ஸ்ரக்விணீ சந்தஸ்

தீந கோபீ ஜநி க்லிஷ்ட பீ நுத் ஸதா-அறிவு ஒன்றும் ஆய்க்குலம் -விரஹ ம் போக்கி அருளி இல்லாத–பாதுகை சுவடு பார்த்து தரித்தார்கள்
கல் மழை தரித்த கோவிந்தனையும் தாங்கி –
ராமபாதாவநி -ஸ்ரீ பாதுகா தேவி
ஸ்வாநுபவ ஸ்திதா-உன்னுடைய மஹிமையை தானே நிலை பெற்று -வேறே ஒன்றை எதிர் பார்க்காமல்
உத்தார பாவஸ்ரிதா-உஜ்ஜீவனத்துக்கு =தன்மை -கொண்டவள்
தேஜஸா தேந -ஒளியால்
குஷ்டிம் கதா பாலிகா ஏதிமே அவஸ்யம் –கோஷம் இடும்படியாக =அடியேனை ரக்ஷிப்பதில் நிச்சயம்

சம்சாரம் போக்கி அருளும் ஆழ்வார்
ஸூவ அனுபவம் –16 வருஷம்
உய்விக்க -அடியாரை-திருத்திப் பணி கொள்ளவே
ஒளி தேஜஸ் பார்த்தே மதுரகவி ஆழ்வார் -வகுளா பூஷண பாஸ்கரர் –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! கண்ணனைத் தவிர வேறு எதனையும் நினைக்காமல் இருந்த கோபிகைகளின்
மறு பிறவியையும், கம்ஸன் மூலம் ஏற்பட்ட பயம் போன்ற துன்பங்களையும், இந்திரன் போன்றவர்களின் மூலம்
ஏற்பட்ட அச்சத்தையும் நீ போக்கினாய்; எந்த உனது தேஜஸ் மூலம் இந்த உலகை நியமித்தபடியும், ரக்ஷித்தபடியும் உள்ளாயோ,
அந்த மேன்மை மூலம் நீ என்னைக் கண்டிப்பாகக் காப்பாற்றி, உனது கைங்கர்யத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

ஸ்ரீ ராம பாதுகையே அகிஞ்சனரான கோபிகளுக்கு மறு பிறவி வருத்தம் பீடை விரஹ தாபம் அனைத்தையும் நீக்கினாய்
ஸ்திரமாக பிரதிஷ்டை செய்து இருப்பதால் எதையும் அபேஷிப்பது இல்லை
சம்சார உத்தாரணம் செய்து அருளும் தேஜஸ் உடன் பிரசித்தி பெற்று இருக்கிறாய் –
இத்தனை பெருமை உள்ள நீ எனக்கு ரஷணம் செய்து அருள வேண்டும் –

கோ மூத்ரிகா பந்தம் -இரண்டு ஸ்லோகங்களையும் சேர்த்து
முதல் பாதங்கள் சேர்த்து
இரட்டை இடம் எழுத்துக்கள் ஒன்றாக அமைத்து இருக்குமே
த்ருத நிலம்பிதம் சந்தஸ் அது -இது ஸ்ரக்விணீ சந்தஸ்
வேறாக இருந்தாலும் இப்படி அமைத்த விசித்திரம்

—————————————————————–

தாம நிராக்ருத தாமஸ லோகா
தாத்ருமுகைர் விநிதா நிஜதாஸை:
பாபம் அசேஷம் அபாகுருஷே மே
பாது விபூஷித ராகவ பாதா—945-கோதகம் சந்தஸ்

தாம நிராக்ருத தாமஸ லோகா-ஒளியால் -தமோ குண அசுரர்களை நிரஸனம்
தாத்ருமுகைர் நிஜதாஸை:-விநிதா-ப்ரம்மா முதலானவர்களால் வணங்கப்படும்
பாபம் அசேஷம் அபாகுருஷே மே-என்னுடைய அசேஷ பாபங்களையும் போக்கி அருளி
பாது விபூஷித ராகவ பாதா-பாதுகையே -நீ திருவடிகளை அலங்கரிக்கிறாய்

ஆழ்வார் -பாசுர ஞான ஒளியால் அஞ்ஞானம் போக்கி
தேவாதிகள் வணங்கி
பண்டை வல்வினை பற்றி அருளி
சடாரி -திருவடிகளுக்கு அலங்காரம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது தேஜஸ் மூலமாக அசுரர்களின் ஸ்வபாவம் நிறைந்ததான தமோ குணத்தை
நீங்கப் பெற்றவர்களை உடையவளாக உள்ளாய். உனது அடிமைகளாக உள்ள நான்முகன் போன்றவர்களால்
எப்போதும் வணங்கப்பட்டவளாக உள்ளாய். உன்னால் அலங்கரிக்கப்பட்ட இராமனின் திருவடிகளுடன் எப்போதும் உள்ளாய்.
என்னுடைய அனைத்துப் பாவங்களையும் போக்கி வருகிறாய்.

ஸ்ரீ பாதுகையே உன் தேஜஸ் சே தாமஸ குணத்தவரான அசூரர்களை முழுவதுமாக ஒழித்து விடக் கூடியது –
பிரம்மாதி தேவர்கள் உன்னை வணங்குகிறார்கள்
நீ பெருமாள் திருவடிகளை அலங்கரிக்கிறாய்-என் அனைத்து பாபங்களையும் போக்கி அருளுகிறாய்

———————————————————————-

க்ருபா அநக த்ராத ஸுபூ: அதுஷ்டா
மேத்யா ருசா பாரிஷதா ஆம பூபா
பாதாவநி ஸ்த்யாந ஸுகை: ந த்ருப்தா
காந்த்யா ஸமேதா அதிக்ருதா அநிரோதா—-946-

க்ருபா அநக த்ராத ஸுபூ: அதுஷ்டா-கருணை யாலேயே தூய்மையாக்கி உலகைக் காத்து -தோஷமே இல்லாமல் இருந்து
மேத்யா ருசா பாரிஷதா ஆம பூபா-தூய்மையால் ஒளி அடியார்கள் கூட்டம் திகழ்ந்து -உலகை காக்க எழுந்து அருளி
பாதாவநி
ஸ்த்யாந ஸுகை: ந த்ருப்தா-திருவடி ஸ்பர்சத்தாலேயே மகிழ்ந்து
காந்த்யா ஸமேதா அதிக்ருதா அநிரோதா–அடியார் ரக்ஷணம் விரும்பி -அதிகாரம் கொண்டவள் -தடைகளே இல்லாமல் –

ஆழ்வார் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
சட வாயு -போக்கி -பாஸ்கரர் -ஆழ்வார் ஆச்சார்யர் கோஷ்டிகளில்
நிழலும் அடி தாறும் ஆனார்
ஆராவமுதே -திருப்தியே இல்லாமல்
யாருக்கு ஆராவமுது சொல்லாமல்
இன்னார் இனையார் வாசி இல்லாமல் -தனக்கும்
உத்சவர் பின் அழகை முன் அழகை -கருடனாக -உபய நாச்சியாராக -மூலவராக -எட்டிப் பார்த்தும்
கிடந்தவாறு எழுந்தும் பார்த்து அனுபவிக்கிறார் -உத்தான சயனம் –
முக்தி அளிக்கும் அதிகாரம் கொண்டவர் –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது கருணை காரணமாக, எந்தவிதமான துயரமும் இந்த பூமிக்கு உண்டாகாதபடி
இந்தப் பூமியை ஆண்டாய்; தோஷங்கள் ஏதும் இல்லாமல் உள்ளாய்; உனது ஒளியால் தூய்மையாக உள்ளாய்;
ஸாதுக்களின் கோஷ்டியில் எப்போதும் உள்ளாய் (அல்லது ஸபையோர்களாக ஐச்வர்யம் நிறைந்த அரசர்களை உடையவள்);
ஸ்ரீரங்கநாதனின் திருவடி அநுபவம் மூலம் எழுகின்ற இன்பத்தினால் மனநிறைவு அடையாமல்,
மேலும் அவன் திருவடிகளை சுவைக்க விருப்புகிறாய்; அவ்விதம் அவனது திருவடிகளை அனுபவிப்பதால்
முழு அதிகாரம் பெற்று, தடை இல்லாமல் உள்ளாய். இப்படிப்பட்ட நீ வரவேண்டும்.

ஸ்ரீ பாதுகையே உன் கிருபையினால் புண்ய பூமியான உன் நாடு முழுதிலும் துக்கமே இல்லாத படி காப்பாற்றுகிறாய்
ஒளி மிக்கவள் பரிசுத்தமானவள் -அரசர்கள் நிரம்பிய சாம்ராஜ்யம் உன்னுடையது
நித்ய அனுபவம் செய்கிறாய் -ஆஸ்ரிதர்களுக்கும் அத்தையே அளிக்கிறாய்-

கோ முத்ரிகா பந்தம் இதுவும்
முதல் ஸ்லோகம் முதல் பாதி நேராகவும்
அடுத்தது reverese
இதே போல் அடுத்த பாதி
ஒற்றைப்படை எழுத்து ஒன்றாக இருக்கும் இதில் –

——————————————————————————-

ஸாரஸ ஸௌக்ய ஸமேதா
க்யாதா பதபா புவி ஸ்வாஜ்ஞா
ஸாஹஸ கார்யவந ஆசா
தீரா வஸுதா நவ ந்யாஸா—947-

ஸாரஸ ஸௌக்ய ஸமேதா-தாமரைப்பூவை சமர்ப்பித்ததாலும் -திருப்திகா ஏற்றுக் கொண்டு -ஆராதனைக்கு எளியவன்
க்யாதா பதபா புவி ஸ்வாஜ்ஞா-உலகில் புகழ் கியாதி மிக்கு -திருவடியை ரக்ஷிக்கும் –
ஸ்வ ஆஜ்ஜை -நல்ல கட்டளை அருளி நல்ல வழியில் வாழ அருள் செய்கிறாள்
ஸாஹஸ காரி -ஸாஹஸம் செய்ய துணிந்த பரதாழ்வான் -ராஜ்யமும் அடியேனும் பெருமாள் சொத்து -பிரார்த்தித்து -தர்ம சம்வாதம் செய்து –
இங்கேயே உண்ணா விரதம் -ஸாஹஸம் செய்யத் துணிந்தான் –
யவந ஆசா-தண்ணீரை தொட்டு பெருமாளைத் தொட்டு சபதம் -இனி மேல் செய்ய மாட்டேன் -சொன்ன செய்த –
யவனம் -காக்க -ஆசை கொண்டு -நீயே கூட வந்து
தீரா -காப்பதில் உறுதி கொண்டவள்
வஸுதா–செல்வம் அருள்பவள்
நவ ந்யாஸா-புதியது -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்

ஆழ்வார் -யான் ஓர் குறை இல்லை -திருவடி தாமரைகளைப் பெற்று
உலகில் ஸ்ரீ பாதுகை -சடாரி என்றே -புகழ் பெற்றவர்
நல்ல கட்டளைகள் -பாசுரம் வழியாக -வீடு முன் முற்றவும் இத்யாதி -மூலம் –
ஸாஹஸம் செய்தாவது அவனை அடைய நினைப்போபவர்களை ரக்ஷிப்பவர்
ஞானம் பக்தி செல்வம் அருளி –
ஆரார் வானவர் செவிக்கு இனிய செஞ்சொல் மூலம் –

அர்ச்சனை செய்யப்பட்ட தாமரை மலர் மூலம் ஸௌக்யத்தை அடைந்தவளும், நன்மையே அளிக்க வல்ல ஆணைகளை இடுபவளும்,
இராமனை எப்படியாவது மீண்டும் அழைக்கவேண்டும் என்ற ஸாஹஸம் செய்த பரதனைக் காப்பதில் விருப்பம் கொண்டவளும்,
அடியார்களுக்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும் காப்பாற்றியே தீருவது என்ற உறுதி உள்ளவளும்,
அடியார்கள் வேண்டிய ஸம்பத்தை அளிப்பவளும், புதிது புதிதான இரத்தினக்கற்கள் உடையவளும் ஆகிய
ஸ்ரீரங்கநாதனின் பாதுகை – இந்த உலகில் உள்ள அடியார்களால் மிகவும் சுலபமாக அடையத்தக்கவள் என்னும் பெருமை கொண்டவள் ஆவாள்.

இந்த ஸ்லோகத்தை அப்படியே தலைகீழாகப் படித்தால்
அடுத்த ஸ்லோகம் தோன்றுவதைக் காண்க.
பின்ன வ்ருத்த அனு லோம பிரதி லோம யமகம் –

ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பாரதாழ்வானை காப்பதில் ஊற்றம் கொண்டது -ஆஸ்ரயித்தவரை எப்படியும் காக்க வேண்டும் என்று
துணிந்து ஐஸ்வர்யம் அழிப்பது -என்றும் புதியதாய் இருக்கும் -மநோ ஹராமான சந்நிவேசங்களை யுடையது –
அர்ச்சித்த பூக்கள் சேர்ந்து சுகம் பெற்றது -பிரசித்தமான செங்கோல் யுடையது –

————————————————————–

ஸா அந்யா அவநதா ஸுவரா
அதீசாநா வர்ய க ஸஹஸா
ஜ்ஞா ஸ்வா விபு பாதபதா
க்யாதா மே ஸக்யஸௌ ஸரஸா—-948-

ஸா அந்யா -நன்றாக பக்தி செய்ய தக்கவள்
அவநதாக
பாத்து காப்பு வழங்கி
ஸுவரா-விரும்பி வரிக்கப் படுபவள்
அதீசாநா -எஜமானி
வர்ய க -உயர்ந்த ஆனந்தம் தருபவள்
ஸஹஸா-விரைவாக அனுக்ரஹம் செய்பவள்
ஜ்ஞா -ஞானம்
ஸ்வா -தன்னுடைய அகார -தன்னிடம் பெருமாளைக் கொண்டு
விபு பாதபதா-எங்கும் பரவிய -நாராயணனுக்கு பாத ரக்ஷை
க்யாதா -பெருமை பெற்றவள்
மே ஸக்யஸௌ ஸரஸாதோழியாகவும் இருப்பவள்
ஸரஸா-தண்ணீர் போல் நீர்மையுடன் கலந்து பரிமாறுபவள் –

ஆழ்வார் -பக்தி செய்யத்தக்கவர்
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஆழ்வார் ஆச்சார்யர் இரண்டு கோஷ்ட்டியிலும்
உயர்ந்த ஆனந்த மயமாக -சீக்கிரம் அனுக்ரஹம் -செய்து –
பராங்குசன் -பரனை வசப்படுத்து
சடாரி -க்யாதி பிரசித்தம்
ஆத்ம பந்து ஸஹி யாக இருந்து
சுவையான ரசம் மிக்க திருவாய் மொழி வழங்கி –

அனைவராலும் பூஜிக்கத்தக்கவள், அனைவரையும் காப்பாற்றுபவள், “என்னைக் காப்பாற்று” என்று உரிமையுடன்
நாம் கேட்கக்கூடிய தோழி போன்று உள்ளவள், அனைத்து உலகின் எஜமானியாக உள்ளவள்,
உயர்ந்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்று சுகம் கொண்டவள், அனைத்தையும் அறிந்தவள்,
ஸ்ரீரங்கநாதனைத் தன்வசப் படுத்தியவள், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை காப்பாற்றும் பெருமை கொண்டவள் –
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எனது தோழியாக உள்ளாள்.

முந்திய ஸ்லோகத்தை கடையில் இருந்து திருப்பி எழுதிப் பெரும் ஸ்லோகம் இது –
பின்ன வ்ருத்த அனு லோம பிரதி லோம யமகம் –

இந்த ஸ்ரீ பாதுகை பஜனம் பண்ண உரியது -ரஷணம் செய்வது -சீக்ரமாகவும் ஸூகமாகவும் வரித்து கார்யம் கொள்ளத் தக்கது –
நியமிக்கும் மஹா ராணி -சிறந்த ஸூகம் உடையது -சர்வஜ்ஞத்வம் உடையது -பகவானையும் தனது அதீனமாக உடையது
பகவான் உடைய திருவடிகளைக் காப்பதால் பிரசித்தி அடைந்தது -இந்த ஸ்ரீ பாதுகையே எனக்கு அன்பார்ந்த சகி –

——————————————————————–

தாரஸ் பாரதர ஸ்வர ரஸ பர ரா
ஸா பதாவநீ ஸாரா
தீர ஸ்வைர சர ஸ்திர ரகுபுரவாஸ
ரதி ராம ஸவா—-949-

தாரஸ் -உயர்ந்த
பார தர -அடிக்கடி ஏற்படும்
ஸ்வர ரஸ பர ரா-இனிய த்வநியால் பெரிய மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறாள்
ஸா பதாவநீ -அந்த ஸ்ரீ பாதுகா தேவி
ஸாரா-சஞ்சாரம் சீலம் கொண்டவள் -கூடவே பெருமாளை கூட்டி வருகிறாள்
தீர -தடைகளைப் போக்கி
ஸ்வைர சர -இஷ்டப்படி சஞ்சாரம்
ஸ்திர -மித்ரா பாவேன -உறுதி கொண்டு
ரகு புரவாஸ-அயோத்யை வாஸம் -ஊற்றம் கொண்ட
ரதி ராம ஸவா-பெருமாளை தனது வசத்தில் கொண்டவள்

உயர்ந்த -இனிய இசை மிக்க -பண் மிக்கு -திருவாய் மொழி –
செவிக்கு இனிய செஞ்சொல் -பாவின் இனி இசை பாடித் திரிவனே
வேத சாரம் -வழங்கி –
ராமனை தனது வசத்தில் -பராங்குசன் -இட்ட வழக்காக –

தான் தொடங்கிய செயலில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல், எடுத்த செயலை நிறைவேற்றுபவள்;
தனது விருப்பத்தின்படி ஸஞ்சாரம் செய்பவனும், மாறாத குணங்கள் கொண்டவனும்,
ரகுவம்ஸத்தினரின் ராஜ்யமான அயோத்தியில் உள்ளவர்களிடம் ஆசையுடன் உள்ளவனும் ஆகிய
இராமனைத் தான் ஏவும்படியாக வசப்படுத்தியவள்;
தனது இனிமையான நாதங்கள் மூலம் உரத்த தொனியில் ஆனந்த அளிக்கவல்லவள் –
இப்படியாக ஸௌலப்யம் போன்றவை வெளிப்படும்படியாக உள்ளாள்.

இந்த ஸ்லோகம் எட்டு தளங்கள் கொண்ட பத்ம பந்தம் என்பதாகும்.
இதில் ஸ்ரீரங்கநாதனின் திருவடி அமைப்பு உள்ளதைக் கணலாம்.
இந்த யந்திரத்தையும் ஸ்லோகத்தையும் அன்றாடம் அனுஷ்டித்து வந்தால்,
எந்த விதமான தடைகளும் நீங்கிவிடும் என்பது பலரின் கருத்தாகும்.

கீழே -947-தாமரை சமர்ப்பித்தால் மகிழ்வாள் என்றாரே
அத்தை இவரே சமர்ப்பிக்கிறார்

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் வீரர் -தன் இஷ்டப்படி நடக்க வல்லவர் -ஸ்வ தந்த்ரர் -திரு அயோத்யா வாசத்தில் உள்ள
பெரும் மகிழ்ச்சியையும் உடையவர் -அவரால் நடத்தப்பட்டு சஞ்சரிக்கின்ற ஸ்ரீ பாதுகை உச்சச்வரத்தில் மிகப் பரந்த நாதங்களை
எழுப்பி அனைவருக்கும் ஆனந்தம் விளைவிப்பதாக இருக்கிறது –

இது அபூர்வமான சித்ர பந்தம் -எட்டு தாமரை தளங்களான யந்திரத்தில் ஸ்ரீ பாதுகை சேவை தரும் –
ஸ்ரீ தேசிகர் ஸ்ரீ பாதுகா ஸ்துதிக்காக கண்டு பிடித்து அமைத்து அருளியது –

———————————————————

சரம் அசரம் ச நியந்துஸ் சரணௌ
அந்தம் பரேதரா சௌரே:
சரம் புருஷார்த்த சித்ரௌ சரணாவநி
திசஸி சத்வரேஷு ஸதாம்—950-

சரணாவநி-ஸ்ரீ பாதுகா தேவியே
அநிதம் பர இதரா -மற்றவை முக்கியம் இல்லாமல் கொண்டு -ஒன்றையே முக்யமாகக் கொண்டு
சௌரே:சரம் அசரம் ச நியந்துஸ் –அசையும் -அசையாத பொருள்களை நியமிக்கும் ஈசன் -ஸ்ரீ ரெங்க நாதனின்
சரணௌ-திருவடிகளை –
சரம் புருஷார்த்த சித்ரௌ –காக்கும் திருவடிகளை -மோக்ஷத்திலே சித்தம் வைத்த
திசஸி சத்வரேஷு ஸதாம்-நல்லவர்களுடைய வீடுகளில் சேர்க்கிறாய்
இதுவே பலம் -திருவடி பதித்து அருளுகிறாள் நமது க்ரஹங்களில்

ஆழ்வாருக்கும் இதே பொருந்தும் –
பாசுரங்கள் வாயிலாக எம்பெருமான் திருவடிகள் கிட்டும்

சரம் -மீண்டும் மீண்டும் வந்து -பாதங்கள் தோறும் -வெவ்வேறு அர்த்தங்களில் வந்துள்ள பணத்தை –

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அடியார்களைக் காப்பாற்றும் அதே சிந்தனை கொண்டவளாக உள்ளாய்.
அசைகின்றதும், அசையாமல் உள்ளதும் ஆகிய அனைத்தையும் நியமிக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள்,
உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பற்றிய ஞானத்தை உண்டாக்கி, காக்க வல்லவையாக உள்ளன.
இப்படிபட்ட அவனது திருவடிகளை (இதன் மூலமாக ஸ்ரீரங்கநாதனை) ஸாதுக்களின் வீட்டிற்கே அழைத்து வந்து,
அவர்களின் பூஜை அறையில் நிலையாக நிறுத்தி விடுகிறாய்.
ஆக நீ ஸ்ரீரங்கநாதனை வெகு சுலபமாக அவர்களது இல்லங்களுக்கு அழைத்து வருகிறாய்.

ஸ்ரீ பாதுகையே வேறு கருத்து ஓன்று இல்லாமல் ஸ்தாவர ஜங்கமங்களை நியமிக்கிற இறைவனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய
புருஷோத்தமான மோஷ விஷயமான ஜ்ஞானத்தை காக்கின்றவை பெருமாளின் திருவடிகள் தாம்
அந்தத் திருவடிகளை நீ சாதுக்கள் உடைய இல்லங்களில் உள் அங்கணங்களுக்கே கொண்டு வந்து சேர்க்கிறாயே
எத்தினை பெரிய உபகாரம் செய்து அருளுகிராய் –
சித் -த்ரௌ -சித்தை காக்கிறவை -என்றவாறு –

சரணாவநி=பகவானுடைய திவ்ய சரணங்களைக் காப்பாற்றும் பாதுகையே!-
அனிதம்பரேதரா=இந்த காரியத்தினை முக்கிய கவனத்துடன் கவனித்துக் கொண்டு –
சரம்=ஜங்கம வஸ்துக்களையும் – அசரம்=ஸ்தாவர வஸ்துக்களையும் – நியந்து:=ஏவுகிறவராகயிருக்கின்ற –
சௌரே=ஸ்ரீரங்கநாதனுடைய — சரம=கடைசியான – புருஷார்த்தம்=புருஷார்த்தத்தினுடைய –
சித்=ஞானத்தை – ரௌ=காப்பாற்றுகிறவராகயிருக்கின்ற – சரணௌ=திருவடிகளை – ஸதாம்=முமுக்ஷக்களுடைய –
ஸத்வரேஷு=வீட்டினுள் (பூஜாபிரதேசங்களில்) — திசஸி=அழைத்துச் செல்கிறாய்.

பரம ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களது கிரஹங்களில் பகவானையும் பாதுகையையும் அர்ச்சாரூபமாக ஆராதனம் செய்வார்கள்.
மிகவும் அகிஞ்சனரான அந்த ஸ்ரீவைஷ்ணவரின் பூஜா அறைகளில் அவர்களால் ஆராதிக்கும்படி அரங்கனை பரம சுலபமாக
எழுந்தருளப்பண்ணிக் கொண்டு வந்து விடுகின்றாய்! உனக்கும் உன்னோடு எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கும் அவர்கள்
செய்யும் சிரத்தையான ஆராதனங்களினால், அவர்களுக்கு தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களுள்
முதல் மூன்றில் புத்தி செலவிடாமல் பண்ணி, கடைசி புருஷார்த்தமாகின்ற மோக்ஷ விஷயத்தில் ஞானத்தையும்,
விருப்பத்தையும் கொடுத்து அவர்களை இப்பிறவியிலிருந்து காப்பாற்றி விடுகின்றாய்!
உன் அனுக்ரஹத்தினால்தான் பகவானது ஸம்பந்தமும், மோக்ஷ உபாயமும் ஆஸ்ரிதர்களுக்கு சாத்தியமாகின்றது.
உன்னுடைய இந்த தயா குணமானது ஆச்சர்யகரமானது!.

ஸ்ரீரங்கநாதன், எப்படிப்பட்ட பாபிகளையும் காப்பாற்றி கரை சேர்ப்பதிலேயே ஊக்கமுடைய பாதுகையை,
இந்தவொரு விஷயத்தில் தன்னை எதிர்பார்க்காத படிக்கு, பாதுகைக்கு ஸர்வ சுதந்திரமும் அளித்து, அந்த பாதுகைகளே தானே
ரக்ஷிக்கும்படியான எஜமானியாக செய்து, இந்த ஒரு விஷயத்தில் பாதுகையின் இஷ்டத்தையெல்லாம் அங்கீகரித்துக் கொண்டு,
அதற்கு ஆதரவாகவே எழுந்தருளியுள்ளார்.

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-29-பிரகீர்ண பத்ததி -கலம்பக படலம் -ஸ்லோகங்கள் -831-910-

March 21, 2016

இதுவரை கூறப்பட்ட பத்ததிகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட விஷயங்கள் தொகுத்துக் கூறப்பட்டன.
இந்தப் பத்ததியில் பல விஷயங்கள் குறித்துக் கூறப்பட உள்ளன.
பொருள்களைக் கலந்து வைப்பதற்கு ப்ரகீர்ணம் என்று பெயர்.

————–

விதௌ ப்ரவ்ருத்தே யத் த்ரவ்யம் குண ஸம்ஸ்கார நாமபி:
ஸ்ரேயஸ் ஸாதநம் ஆம்நாதம் தத் பதத்ரம் ததாஸ்து மே—-831-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் தொடர்பு, அடியார்களுக்குத் தூய்மையை ஏற்படுத்துவது போன்ற குணங்களுடன் கூடியவள்;
தங்கக் கவசம், இரத்தினக் கற்கள் ஆகிய மேன்மைகளுடன் கூடியவள்; பாதுகை, சடகோபன் என்று பல திருநாமங்களுடன் கூடியவள்;
ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின் போது காணப்படும் உயர்ந்த வஸ்து என்று கூறப்படுபவள் –
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை எனக்கு உயர்ந்த புருஷார்த்தத்தை அளிக்கட்டும்.

எந்த உயர்ந்த வஸ்துவான ஸ்ரீ பாதுகை -குணம் -திருவடி உடனும் -தேவர்கள் க்ரீடங்களின் உடனும் கொண்ட தொடர்பு –
அடியார்களுக்கு அருளுவது -போன்ற குணங்கள்
சம்ஸ்காரம் -தங்கத்தாலாய் இருப்பது -மணிகள் இழைக்கப் பட்டு இருப்பது –
திருச் சங்கு திருச் சக்ராதி ரேகைகளைக் கொண்டு இருப்பது போன்ற சீர் பாடுகள்-
பெயர் -திருப்பாதுகை -ஸ்ரீ சடகோபம் ஆதி சேஷன் போன்றவை
எல்லாம் கொண்டதாய் -பகவான் சஞ்சரிக்க உதவும் கருவியாய் மிக உயர்ந்த சாதனமாக ஓதப்பட்டு உள்ளதோ
அந்த ஸ்ரீ பாதுகை எனக்கு அதே போலே ஸ்ரேயஸ் தந்து அருளட்டும் –

வேதம் விதித்த கர்மா நடப்பதற்கு எந்த த்ரவ்யம் குணம் -எம்மரத்தினால் ஆனது போன்றவை –
சம்ஸ்காரம் -எட்டுப் பட்டையாகச் செய்தல் -நடுதல் போன்றவை
பெயர் யூபம் போன்ற தன்மைகளைக் கொண்டு நமக்கு நல்லதாக நல்லதைக் செய்வதாக வேதத்தில் ஒத்தப் பட்டு உள்ளதோ
அந்த த்ரவ்யத்தை போன்ற ஸ்ரீ பாதுகை எனக்கு ஸ்ரேயஸ் ஸூ க்குக் காரணமாக அமையட்டும் –

பெருமாள் ஒரு ஜீவனுக்கு நல்ல சக்தி கொடுக்க ஆரம்பித்து விட அவருடைய தயாதி குணங்கள் ஜீவனுக்கு ஏற்படும் பஞ்ச சம்ஸ்காரம்
ஜீவன் பெரும் தாஸ்ய நாமம் இவைகளை உண்டு பண்ணி நல்ல ஆசார்யர்கள் மோஷ சாதனம் செய்து அளிக்கிறார்கள் என்றவாறு –

——————————————————————————-

மதுர ஸ்மித ரம்ய மௌக்திகஸ்ரீ:
விசஸி வ்யஞ்ஜித மஞ்ஜுள ப்ரணாதா
ஸஹ ரங்க ந்ருபேண வாஸ கேஹம்
தநு மத்யா மணி பாதுகே த்வமேகா—-832–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இனிமையான சிரிப்பு போன்ற அழகான முத்துக்களின் ஒளியை உடையவளாகவும்,
இனிமையான நாதங்களை ஏற்படுத்துபவளாகவும், சிறிய நடுப்பகுதியைக் (இடுப்பு போன்று) கொண்டவளாகவும் உள்ள நீ,
ஸ்ரீரங்கராஜனுடன் தனியாக அவனுடைய அந்தப்புறத்திற்குச் செல்கிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே நீ ஒருத்தி அந்த ஸ்ரீ ரங்க ராஜனோடு கூடப் பள்ளி அறையில் புகுகிறாய்
அதை சேவிக்கிறேன் -எப்படி என்றால்
புன்சிரிப்பில் முத்துப்பல் இலகும் -உன் மேல் முத்துக்களின் காந்தி நடை போடும் போது
இனிய நாதம் சிறுத்த நடை எல்லாம் நாயகிக்கும் ஒக்கும் -நீ அவர் நாயகி அவருடன் பள்ளி அறை புகுவது ஒக்கும் –

———————————————————————–

ஸூப ஸப்த விசேஷ ஸம்ஸ்ரிதாபி:
பவதீ சௌரி பதாவநி க்ரியாபி:
அநுதிஷ்டதி நூநம் ஆஸ்ரிதாநாம்
அகில உபத்ரவ சாந்திகம் நவீநம்—-833-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின் போது சுபமான இனிய நாதங்களை மந்த்ரங்கள் போன்று ஒலிக்கிறாய்.
இப்படிப்பட்ட ஸஞ்சாரம் என்பதன் மூலம் நீ, உன்னை அடைந்தவர்களுக்குப் புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய உபத்ரவங்களை
நீக்கும் செயல்களைச் செய்கிறாய் என்பது நிச்சயம்.

ஸ்ரீ பெருமாளின் ஸ்ரீ பாதுகையே நீ சுபமான நாதத்தை எழுப்புகிறாய் -அது சக்தி வாய்ந்த மந்த்ரம் வேதம் போலே –
சஞ்சரிக்கிறாய் -வேத விஹித கர்மாக்காளைச் செய்கிறாய் -ஆஸ்ரிதர்கள் உடைய உபத்ரவம் அனைத்தையும் சமனம்
செய்து அருளும் ஒரு சாந்தி கர்மாவை நீ அனுஷ்டிக்கிறாய் போலும் –
நால்வர் வேத சாரமான அருளிச் செயலை அளித்து சரணா கதி என்னும் சரம உபாயத்தையும் காட்டி அருளி நம்மை உஜ்ஜீவிக்கிரார் என்றபடி —

—————————————————————-

மணிபிர் மது வைரி பாத ரக்ஷே
பவதீ விக்ரமணே ப்ரவர்த்தமாநா
யுகபத் பவதாம் யுகாந்த காலே
திவி லக்ஷ்மீம் விததே திவாகராணாம்—-834-

மது என்ற அசுரனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் த்ரிவிக்ரமனாக நின்று
இந்த உலகங்களை அளக்கும்போது, நீயும் பெரிதாக வளர்ந்தாய். அப்போது உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினங்களால்
ப்ரளயகாலத்தில் ஒரே நேரத்தில் ஏற்படுகிற பல சூரியன்களின் தோற்றத்தை உண்டாக்கினாய்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திரிவிக்ரமனாக திரு உலகு அளந்து அருளின பொது திருவடிக்கு ஏற்றால் போலே வளர்ந்து அருளிய நீ
உன்னிடத்தில் இருக்கும் பல பல ரத்னங்களில் இருந்தும் வந்த அதிக ஜ்வலிப்பாள் பல பல சூரியர்கள் பிரகாசிப்பது போல் எடுத்துக் காட்டினாய் –
பிரளய காலத்தில் தான் இப்படி எல்லை இல்லாத சூர்யர்கள் தோன்றுவாராம் -அது அழிவிற்கு
இப்போது நீ வெளிப்படுத்தும் காட்சியோ அழகும் சோபையும் மங்களமும் உள்ளடக்கியது –ஆழ்வார்களின் அருளிச் செயல்களும் அப்படியே –

————————————————————–

மஞ்ஜுஸ்வநாம் மணி மயூக கலாபநீம் த்வாம்
த்ருஷ்ட்வா கபர்த ஸவிதே விநிவேஸ்யமாநாம்
கூடீபவந்தி கருடத்வஜ பாத ரக்ஷே
பூத்கார வந்தி புர வைரி விபூஷணாநி—-835-

கருடனைக் கொடியாக உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! த்ரிபுரன் என்ற அசுரனுக்கு விரோதியான சிவனின்
தலைக்கு அருகில் நீ செல்கிறாய். அப்போது உன்னில் பதிக்கப்பட்ட பலவிதமான இரத்தினங்களின் ஒளியானது,
மயில்தோகை போன்று உள்ளதைக் கண்டு, சிவனின் தலையில் உள்ள பாம்புகள் சீறிப்பாய்ந்து ஒளிந்து கொள்கின்றன (
இங்கு பாம்புகளுக்குப் பகையான கருடனைக் கூறும் நயம் காண்க).

ஸ்ரீ பெருமாளின் திருப் பாதுகையே திரிபுர சத்ருவான சிவன் சர்ப்பங்களை பூஷணங்களாகக் கொண்டு இருப்பவன்
நீ அவன் தலையில்வைக்கப் படுகிறாய் -நீ மதுரமான சப்தம் உண்டாக்குகிறாய் -உன் ரத்னங்களின் பலதரப்பட்ட ஒளிக் கதிர்கள்
சிவன் சடைக் காட்டின் அருகில் வெளிப்பட -அது ஏதோ தோகை விரித்த மயில் என்ற தோற்றம் ஏற்படுகிறது -அதைக் காணும்
பாம்புகள் சீறிக் கொண்டுபெரு மூச்சு விட்டுக் கொண்டு இங்கும் அங்கும் ஓடி ஒளிகின்றன –
பல வர்ணங்கள் பல ரசங்கள் பல அர்த்தங்கள் கொண்ட திருவாய்மொழி அர்த்த விசேஷத்தால் தோகை போல் விரியும்
அதைக் காணும் சம்சார விஷ சர்ப்பங்கள் அஞ்சியோடும் என்பதில் ஐயம் இல்லையே –

——————————————————————-

மத்யே பரிஸ்புரித நிர்மல சந்த்ர தாரா
ப்ராந்தேஷு ரத்ந நிகரேண விசித்ர வர்ணா
புஷ்ணாஸி ரங்க ந்ருபதே: மணி பாதுகே த்வம்
சக்ஷுர் வஸீகரண யந்த்ர விசேஷ சங்காம்—-836-

ஸ்ரீரங்கநாஜனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய நடுப்பகுதியில் ப்ரகாசமானதும்,
தோஷங்கள் அற்றதும் ஆகிய முத்துக்கள், தங்கம் போன்றவை உள்ளன. இதனைச் சுற்றி ஓரங்களில் பலவிதமான
இரத்தினங்கள் மூலமாக வெண்மை, சிவப்பு போன்ற பலவிதமான நிறங்கள் எழுத்து போன்று உள்ளன.
இப்படியாக உன்னைக் காணும்போது, காண்பவர் கண்களை வசப்படுத்தும் யந்த்ரமாக நீ உள்ளாயோ என்று ஐயத்தை உண்டாக்குகிறது.

ஸ்ரீ ரங்கராஜனின் ஸ்ரீ பாதுகையே உன் நடுவில் மாற்றுக் குறையாத சுத்த ஸூ வர்ணம் –முத்துக்கள் ரத்னங்களின் கூட்டம் –
பலவித நிறங்கள் உடன் தோற்றம் அளிக்கும் நீ -அப்ரகம் என்ற தகட்டில் சந்திர மண்டலம் போல் வட்டக் கோடிட்டு நடுவில் பிரணவம் எழுதப்பட்டு
சுற்றிலும் அநேகம் மந்திர அஷரங்கள் எழுதப் பெற்று இருக்கும் ஒரு யந்த்ரம் பார்க்கிறவர் கண்ணை மயக்கி விடும் இப்படி எனக்கு ஒரு சங்கை உண்டாகும் –
இத்தகைய யந்த்ரம் கண்டவரை ஸ்வாதீனப் படுத்தும் என்று தந்திர சாஸ்திரம் -ஆழ்வார் ஆசார்யர்களை சேவிப்பதே ஒரு வசீகரண யந்த்ரம் –

——————————————————————————————–

பாதேந ரங்க ந்ருபதே: பரிபுஜ்யமாநா
முக்தா பல ப்ரகடித ஸ்ரம வாரிபிந்து:
உத்கண்டகா மணி மயூக சதை: உதக்ரை:
ஸீத்காரிணீவ சரணாவநி சிஞ்ஜிதைஸ் த்வம்–837-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளால் அனுபவிக்கப்பட்டபடி நீ உள்ளாய்.
இதனால் உண்டாகும் வியர்வைத் துளிகளே முத்துக்கள் போன்று உள்ளன. மேலும் உனது இரத்தினக்கற்களின் ஒளியானது
மயிர்க் கூச்சல் போண்று உள்ளது. உன்னுடைய நாதங்கள் மூலம் ஒருவனுடன் சேர்ந்த பெண் போன்று சப்தம்
(இந்த ஓசைக்கு ஸீத்காரம் என்று பெயர்) கொண்டவளாக உள்ளாய்.

ஸ்ரீ பாதுகா தேவியே பெருமாள் திருவடி உன் நாயகன் -நீ அவருடன் சம்ஸ்லேஷிக்கிராய்-அப்போது விளையும் வியர்வை முத்துக்கள்
தாம் உன் மீது முத்துக்களாகத் தோற்றும் –உனக்கு ஏற்படும் மயிற்க் கூச்சு நூற்றுக் கணக்கான ஒளிக் கதிர்களாக ரத்னங்களில் இருந்து
செங்குத்தாகக் கம்பி போல் தோற்றும் நீ கலவியில் எழுப்பும் உஸ் உஸ் போக ஒலி தானே உன் நாதம் –

ஸ்ரீ பராங்குச நாயகி ஸ்ரீ பரகால நாயகி போலே ஸ்ரீ பாதுகா நாயகியும் பரமபக்தி விளைவித்த
சம்ஸ்லேஷம் நமக்காக இப்படி எடுத்துக் காட்டப் பெறுகிறது

—————————————————————————

தூர ப்ரஸாரித கரா நிநதை: மணீநாம்
ஆயாதி தைத்ய ரிபு: இதி அஸக்ருத் ப்ருவாணா
தைத்யேஸ் வராந் அபிமுகாந் ஜநித அநுகம்பா
மந்யே நிவாரயஸி மாதவ பாதுகே த்வம்—-838–

ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்த பெரியபெருமாளின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை எதிர்த்து வருகின்ற அசுரர்களின்
தலைவர்களை மிகுந்த கருணையுடன் நீ காண்கிறாய். உனது இரத்தினக்கற்களின் ஒளியைக் கைகள் போன்று நீட்டியும்,
உனது இரத்தினக்கற்களின் நாதம் மூலம் ஸ்ரீரங்கநாதன் வருவதை உணர்த்தியும் அவர்களைத் தடுக்கிறாய் போலும்.

ஸ்ரீ பகவானின் பாதுகையே உன் ரத்னங்களின் ஒளிக் கதிர்கள் கைகள் போலே வெகு தூரம் எட்டி நீட்டும் –
உன் ரத்ன ஒலிகள் மூலம் தயை யுடைய நீ எதிரில் வரும் அசூரர்களுக்கு ஏதோ சொல்லுகின்றாய் –
அது உங்களை நிரசிக்க பெருமாள் எழுந்து அருளுகிறார் ஓடிப் போங்கள் என்று அறிவிப்பதாகத் தோற்றும்
இவ்வொலி கேட்டதுமே அவர்கள் பயந்து அடங்கி ஒடுங்கி ஓடி விடுவர்
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் புற சமய வாதிகளை நிரசித்து ஒழிக்கும்-

———————————————————————————

அச்சேத்ய ரஸ்மி நியத க்ரம ரத்ந துர்யா
நிஷ்கம் பகூபர நிபம் தததீ ப்ரதீகம்
க்ரீடாக தேஷு மதுஜித் பத பத்ம லக்ஷ்ம்யா:
கர்ணீரதஸ் த்வம் அஸி காஞ்சந பாத ரக்ஷே—-839–

தங்க மயமான பாதுகையே! சற்றும் குறையாத ஒளி வீசுகின்ற, வரிசையாகப் பதிக்கப்பட்டுள்ள இரத்தினக் கற்களின் ஒளியானது
அறுகாத கடிவாளங்கள் போன்று உள்ளன. இந்தக் கயிறுகளால் கட்டப்பட்ட ஒழுங்கான நடையுடன் கூடிய குதிரைகளாக
அந்த இரத்தினக் கற்களே உள்ளன. இந்தக் குதிரைகள் கட்டப்பட்ட தேரின் முன்பாகமாக உனது குமிழ்கள் உள்ளன.
இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலங்களில் அவனது திருவடியில் உள்ள மஹாலக்ஷ்மிக்கு ஏற்ற சிறு தேராக நீ உள்ளாய்.

ஸ்ரீ பொற் பாதுகையே பெருமாள் திருவடித் தாமரையின் அழகு சபையை ஒரு பிராட்டியாகவே ஸ்ரீ மஹா லஷ்மியாகவே உருவகப்படுத்தலாம் –
அந்த பிராட்டிக்கு நீ ஒரு விளையாட்டுத் தேர் போலே உஊர்ந்து செல்ல வல்லாய் -உன் கிரணங்கள் குறைவற்றவை –
தவறாது வரிசையாய் வந்து கொண்டு இருப்பவை -ஒழுங்காக ரத்ன அமைப்பு உள்ளவள்- நீ நிலையான ஏர்க்கால் போன்ற குமிழை யுடையவள் –
அடக்க முடியாத கடிவாளங்களால் அளவுக்கு அடங்கிய அடி வைப்பு உடைய குதிரைகளை யுதைத்தான தேர் –
ஆசார்யர்கள் ஆகிற தேரில் ஏறிப் பெருமாள் உலகைத் திருத்துகிறார் –

—————————————————————————–

மஞ்ஜுஸ்வநா மரத கோபல மேசக அங்கீ
சோணாஸ்ம துண்ட ருசிரா மணி பாதுகே த்வம்
பத்மா விஹார ரஸிகஸ்ய பரஸ்ய யூந:
பர்யாயதாம் பஜஸி பஞ்ஜர சாரிகாணாம்—-840-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மரகதக்கற்களால் பச்சை நிறம் கொண்டவையாக,
பத்மராகக் கற்களால் சிவந்த மூக்கை உடையவையாக, உனது நாதங்கள் மூலம் இனிய மழலைப் பேச்சு எழுப்பியபடி உள்ள
கிளிகளின் தோற்றத்தை நீ அடைகிறாய். இப்படியாக ஸ்ரீரங்கநாச்சியாருடன் விளையாடி மகிழ்வதில்
விருப்பம் கொண்ட உயர்ந்த புருஷனான ஸ்ரீரங்கநாதனின் அருகில் உள்ள கிளிகளின் ஒற்றுமையை நீ அடைகிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே உன் நாதம் இனியது -பச்சைக் கற்கள் ஒரு ஒட்டு மொத்தமான கரும்பச்சை மேனியை எடுத்துக் காட்டும் –
சிவப்புக் கல் பகுதி மூக்குப் போல் உள்ளது
இப்படி கூட்டில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் சாரிகை -கிளி நாகணை வாய்ப் பறவை போன்ற உருவம் உடையவளாய் இருக்கிறாய்
பெரிய பிராட்டியுடன் லீலையில் ஈடுபட்டு இருக்கும் ரசிகனான நித்ய யுவா பரம புருஷனுடைய செல்லக்கிளி போல் தோன்றுகிறாய் –

————————————————————————

ஸோணோ பலைஸ் சரண ரக்ஷிணி ஸம்ஸ்ரிதேஷு
ஸ்சாயாத்மநா மரதகேஷு தவ அவகாட:
அந்வேதி சௌரி: அபித: பல பங்க்தி ஸோபிநி
ஆத்மாந மேவ சயிதம் வடபத்ர மத்யே—841–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை காப்பாற்றும் பாதுகையே! பத்மராகக்கற்களால் சூழப்பெற்ற உனது பச்சைக் கற்களின்
பிரதிபிம்பமாக ஸ்ரீரங்கநாதன் புலப்படுகிறான். அப்போது அவன் அனைத்தும் பக்கங்களிலும் பவழ வரிசைகளால் சூழப்பட்டு
ஆலிலையின் நடுவே சயனித்திருந்த திருக் கோலத்தை ஒத்த, தன்னையே நிகர்த்தபடி உள்ளான்.

ஸ்ரீ பாதுகையே சுற்றிச் சிவப்புக் கற்கள் -உள்ளே பச்சைக் கற்கள் -பெருமாளின் பிரதிபிம்பம் விழுகிறது -அப்போது நேர்படும் காட்சி
பகவான் ஆலிலையில் சுற்றி ஆலம் பழங்கள் இருக்க சயனித்துள்ள தன் உருவத்தைக் காட்டுவது போலுள்ளது –

———————————————————————-

ஸ்பீதம் பதாவநி தவ ஸ்நபந ஆர்த்ர மூர்த்தே:
ஆஸாகரம் ததம் அபூத் மணிரஸ்மி ஜாலம்
லீலோசிதம் ரகு ஸுதஸ்ய சரவ்யம் ஆஸந்
யாதூநி யஸ்ய வலயேந விவேஷ்டிதாநி—-842–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருமஞ்சனம் மூலம் நனைந்துள்ள உனது இரத்தினக்கற்களின் ஒளியானது ஸமுத்திரம்
வரை பரவி நின்றது. அந்த ஒளியானது ஒரு வலை போன்று காணப்பட்டது.
அந்த வலையில் சூழப்பட்ட அரக்கர்கள் அனைவரும் இராமனின் பாணங்களுக்கு விளையாட்டு போன்று இலக்கானார்கள்.

ஸ்ரீ பாதுகையே உனக்கு அபிஷேகம் செய்யப்படவும் நனைந்த உன் திருமேனி அதிகமான கிரணங்களை ரத்னங்களில் இருந்து வெளிவிட
இக்கிரணங்கள் சமுத்திர எல்லை வர வட்டமாக ஒரு வலை விரித்தால் போல் ஆயிற்று –
அதற்குள் சிக்கி ராஷசர்கள் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனின் அம்பு விடுதல் என்கிற ஒரு விளையாட்டுக் காரியத்தில் இலக்காகி வீழ்ந்தனர் –

——————————————————————————-

ரத்ந அம்ஸூபிஸ் தவ ததா மணி பாத ரக்ஷே
ஸம்ரஜ்யமாந வபுஷாம் ரஜநீ முகேஷு
ஆகஸ்மி காகதம் அதர்சி மஹௌஷதித்வம்
ஸாகேத பத்தந ஸமீபருஹாம் த்ருமாணாம்—-843-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நீ அயோத்தியின் சக்ரவர்த்தினியாகப் பட்டம் ஏற்று, அந்த நாட்டைக் காப்பாற்றிய காலத்தில்,
உன்னுடைய இரத்தினக் கற்களின் ஒளி காரணமாக பளபளப்பான உருவம் பெற்றதாக அயோத்திக்கு அருகில் இருந்த மரங்கள் காணப்பட்டன.
இதனைக் காணும் போது, இரவுப்பொழுதில் ஜ்வலிக்கின்ற ஹௌஷதி என்ற தன்மை அவற்றுக்குத் திடீரென ஏற்பட்டதாகத் தோன்றின.

ஸ்ரீ மணி பாதுகையே நீ அரசாளும் போது உன் ரத்ன காந்திக் கதிர்கள் சென்று திரு அயோத்யா நகருக்கு அருகில் உள்ள
மரங்களைத் தாக்கி அவை இரவில் ஒளிரச் செய்தன –
அந்த மரங்கள் எல்லாம் திடீர் என்று மஹௌஷதிகள்-அல்லது -எரி வல்லிக் கொடிகள் -என்று பிரசித்தி அடைந்தன -எல்லோரும் வியக்கும் படி –
ஸ்ரீ பாதுகையின் ஒளி போல் ஆழ்வார்களின் அனுக்ரஹ பலமும் எவனையும் பிரகாசிக்கச் செய்யும் –

————————————————————————

ராமே வநம் தசரதே ச திவம் ப்ரயாதே
நிர்தூத விஸ்வ திமிரா ஸஹஸா பபூவ
பூயிஷ்ட ரத்ந கிரணா பவதி ரகூணாம்
பூய: ப்ரதாப தபந உதய பூர்வ ஸந்த்யா—-844-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமன் கானகத்திற்கும், தசரதன் விண்ணிற்கும் சென்றபோது, இந்த உலகம் முழுவதும் இருண்டது.
அப்போது உனது இரத்தினக் கற்களின் ஒளி மூலமாக, நீ மறுபடியும் ரகு வம்சத்து அரசர்களின் பராக்கிரமமாகிற
ஸூரியன் உதிப்பதற்கு ஏற்ற காலை வேளையாக நின்றாய்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் ஸ்ரீ தண்ட காரண்யம் போகவும் தசரத சக்கரவர்த்தி ஸ்வர்க்கம் போகவும் நாடி இருளில் மூழ்கியது –
அதைப் போக்கியது உன் ரத்ன ஒளி -அது பரவும் நேரம் இருள் நீங்கிக் காலை போல் ஆயிற்றே –
ஆம் -ரகுகுல மன்னர்களின் பராக்கிரமம் உதயம் ஆகிற காலம் -காலை சந்த்யை-
இருள் போக்க திருவவதரித்தது ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் –

—————————————————————————-

ப்ரீதேந தேவி விபுநா ப்ரதிபாத நீயாம்
பாதாவநி ப்ரதிபத உதித மஞ்ஜுநாதாம்
வித்யாம் விதுர் பகவத: ப்ரதிபாத நார்ஹாம்
பாராயணாகம பயோநிதி பாரகாஸ்த்வாம்—-845-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனால் மிகவும் மகிழ்வுடன் அடியார்களுக்கு அருளத் தக்கவளாகவும்,
ஒவ்வொரு அடிவைப்பிலும் இனிமையான வேத நாதத்துடன் கூடியவளாகவும்,
ஸ்ரீரங்கநாதனை எங்களுக்கு அளிக்க வல்லவளாகவும் நீ உள்ளாய்.
இப்படிப்பட்ட உன்னை வேத ஸமுத்திரங்களின் கரை கண்டவர்கள், வேதமாகவே அறிகின்றனர்.

ஸ்ரீ பாதுகையே வேத சமுத்திரத்தின் கரையைக் கண்டவர்கள் உன்னை வித்யை என்று அறிகிறார்கள் –
இந்த வித்யை ப்ரீதனான -நமது நடத்தையினால் திருப்தி யுற்ற பகவானால் நமக்கு உய்யும் வகையாக அருளப் பெற்றது –
இந்த வித்யையின் ஒலி ஒவ்வொரு திருவடி வாய்ப்பிலும் மதுரமாக ஒழிக்கப் படுகிறது –
பகவானை அடைய இது தக்க உபாயம் -அப்படிப்பட்ட வித்யை நீ –
இந்த வித்யை பகவத் ப்ராப்தியைத் தரும் -திருப் பாதுகையில் பகவான் எழுந்து அருள்கிறாரே –

————————————————————————–

முக்தாம்ஸூ கேஸரவதீ ஸ்திர வஜ்ர தம்ஷ்ட்ரா
ப்ரஹ்லாத ஸம்பத் அநுரூப ஹிரண்ய பேதா
மூர்த்தி: ஸ் ரியோ பவஸி மாதவ பதரக்ஷே
நாதஸ்ய நூநம் உசிதா நரஸிம்ஹ மூர்த்தே:—-846–

ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளியானது
சிங்கத்தின் பிடரிமுடி போன்று உள்ளது. உன்னில் பதிக்கப்பட்ட உறுதியான வைரங்கள், கோரைப் பற்கள் போன்று உள்ளன.
உன்னில் உள்ள தங்கமயமான தன்மையானது, ப்ரஹ்லாதனின் பக்தி என்னும் செல்வமாக உள்ளது.
இப்படியாக நரஸிம்ஹனாக நின்ற ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற பிராட்டி போன்று உனது திருமேனியைக் கொண்டவளாக உள்ளாய் போலும்
(பாதுகையைப் பெண்சிங்கம் என்கிறார்).

ஸ்ரீ பாதுகையே நீ ஸ்ரீ நரசிம்ஹ திரு அவதாரத்துக்கு தக்கதான பிராட்டி உருவம் ஆகிறாய் போலும் -முத்துக்களின் ஒளிக் கம்பிகள் ஆகிற
பிடரி மயிர் உடையதாயும் -கெட்டியான வைரக் கற்கள் ஆகிற கோரைப் பல்லுடையதாயும் அடியார்களின் ஆனந்த சம்ருத்திற்கு
ப்ரஹ்லாதனுடைய பக்தியாகிற ஐஸ்வர் யத்துக்கு மிகவும் ஒத்ததான உயர்ந்த தங்கத்தை யுடையதாய்
ஹிரண்யகசிபு வதத்தைச் செய்ததாய் அந்த ஸ்ரீ நரசிம்ஹ உருவம் உண்டாயிற்று –

————————————————————————————-

ஸம்பாவயந்தி கவயஸ் சதுர ப்ரசாராம்
மஞ்ஜுஸ்வநாம் மஹித மௌக்திக பத்ரளா அங்கீம்
ஸ்வாதீந ஸர்வபுவநாம் மணி பாதுகே த்வாம்
ரங்காதிராஜ பத பங்கஜ ராஜ ஹம்ஸீம்—-847–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நீ சீரிய நடையைக் கொண்டவளாகவும், இனிய நாதம் கொண்டவளாகவும்,
உயர்ந்த முத்துக்களால் வெண்மையான சிறகுகள் உடையவள் போன்றும், அனைத்து நீர் மற்றும் உலகங்களை
வசப்படுத்தியவளாகவும் உள்ளாய். இப்படியாக உள்ள உன்னைக் காணும் நீரில் வாழ்கின்ற பறவைகள் அனைத்தும் உன்னை,
ஸ்ரீரங்கநாஜனின் திருவடித் தாமரையில் எப்போதும் விளையாடுகின்ற பெண் ராஜஹம்ஸம் என்றே எண்ணுகின்றன.

ஸ்ரீ மணி பாதுகையே கவிகள் உன்னைக் கொண்டாடுவர் -உன் சீரிய நடை -இனிய நாதம் -முத்துக்களின் இருக்கை- அழகிய வெண் சிறகுகள்
சர்வ உலகங்களையும் உனக்கு அதீனமாக வைத்து இருக்கும் திறன் இவை எல்லாம் கொண்டு நீ ஒரு ராஜ ஹம்சம் என்று கண்டு புகழ்வர்-
நீ பொருத்தமாக ஸ்ரீ ரங்க ராஜனுடைய திருவடித் தாமரைகள் ஆகிற இருப்பை உடையாய் நீ ஒரு அன்னப் பட்சி தான்
நீரில் வாழும் பட்சிகள் -கவிகள் -மேற்படி தன்மைகளை யுடைய உன்னை உலகில் உள்ள அனைத்து ஜலங்களையும் அதீனம் ஆக்கி
வைத்து இருக்கும் ராஜ சிம்ஹமாக ஏற்றிப் போற்றி வரும்
புவனம் -உலகம் -ஜலம் -கவி புலவர் -நீர்ப்பட்சி ஹம்சம் ஆசார்யனுக்கு நல்ல குறிப்பு -ஸ்ரீ பாதுகையே நமக்கு பிரதம ஆசார்யர் -நம்மாழ்வார் –

——————————————————————————————-

முக்தாமயூக ருசிராம் மணி பாத ரக்ஷே
மஞ்ஜுஸ்வநாம் மணிபி: ஆஹித வர்ண வர்க்காம்
மந்யே முகுந்த பத பத்ம மது வ்ரதீநாம்
அந்யாம் அக்ருத்ரிமகிராம் அதி தேவதாம் த்வாம்—-848–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்களின் ஒளியால் மிகவும் அழகாக உள்ளாய்;
இனிமையான நாதங்கள் கொண்டவளாக உள்ளாய்; இரத்தினங்களால் உண்டாக்கப்படும் கருப்பு, சிகப்பு முதலான
பல நிறங்களைக் கொண்டவளாக உள்ளாய். இப்படியாக உள்ள உன்னைக் காணும்போது –
ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளை எப்போதும் மொய்த்தபடி உள்ள பெண் வண்டுகள் போன்றதும்,
யாராலும் செய்யப்படாததாக உள்ளதும் ஆகிய ஸ்ருதிகளின் அதிஷ்டான தேவதை என்று எண்ணுகிறேன்.

ஸ்ரீ மணி பாதுகையே -முத்துக்களின் ஒளி அழகிய இனிய நாதம் ரத்னங்களால் உண்டாக்கப்பட்ட பல வர்ணங்கள்
இவை உன் சிறப்புக்கள் -உன் மீது பகவானின் திருவடித் தாமரைகள் அவற்றின் மீது சுழலும் பெண் வண்டுகள் ரீங்காரம் இடும் –
அவை ஸ்ருதிகள் என்னலாம் -ஸ்ருதிகளும் முக்தாம யூக ருசிரமானவை
முக்த -அமயூக -ருசிரம் -ஒளி அற்றமை நீங்கியவை -அதாவது ஒளி மிக்கவை -அழகியவை கூட
பல வர்ணங்கள் அஷர சமூஹங்கள் சேர்ந்து வேதமாகிறது
வேதங்களுக்கு அதிஷ்டான தேவதை நீ -இன்னோர் அதிஷ்டான தேவதை
ஓன்று சரஸ்வதி யாயிற்று -அவள் வெளுப்பு -இனிய நாதம் போன்ற தன்மைகளுக்கு உரியவள் –

———————————————————————————

ஆஸாத்ய கேகய ஸுதா வரதாநமூலம்
காலம் ப்ரதோஷம் அநிரீக்ஷ்ய ரமா ஸஹாயம்
மஞ்ஜு ப்ரணாத ரஹிதா மணி பாத ரக்ஷே
மௌநவ்ரதம் கிமபி நூநம் அவர்த்தயஸ் த்வம்—-849–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! கைகேயிக்கு வரம் அளித்த காரணத்தினால் சீதையின் துணைவனான
இராமனைக் காண இயலாமல் நீ இருந்தாய். அந்த நேரத்தில் உனது இனிமையான நாதங்களை எழுப்பாமல்,
மௌனமாக அமர்ந்துவிட்டாய். இப்படியாக எம்பெருமானை வணங்கக்கூடாது என்ற விதி கொண்ட
ப்ரதோஷ காலத்தின் மௌன விரதம் பூண்டாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே கைகேயிக்கு தசரத சக்கரவர்த்தி கொடுத்த வரம் காரணமாக பெருமாளையும் பிராட்டியையும் பிரிந்து இருக்க நேரிட்டது
அதை நீ தோஷம் மிக்க காலமாகக் கருத்தினாய் -மஹா ப்ரதோஷ காலம் -த்ரயோதசி -அஸ்தமன காலம் -மௌனம் விதிக்கப் பட்டுள்ளது
பகவானைப் பிரிய நேரிட்டதால் தோஷம் ஆயிற்றே நீ அழகிய ஒலி தவிர்த்தாய் -மௌனத்தை ஏற்றாய் –
ஆழ்வாரின் இனிய அருளிச் செயல் அனுசந்தானம் பெருமாளுக்கு முன்பு தான் –
பெருமாள் அருகில் இல்லாத போது ஸ்ரீ பாதுகை -நம்மாழ்வார் மௌனம் ஆயிற்றே –

————————————————————————

வைடூர்ய ரம்ய ஸலிலா மஹிதா மருத்பி:
சாயாவதீ மரத கோபல ரஸ்மி ஜாலை:
அச்ராந்த மோஹ பதவீ பதி கஸ்ய ஜந்தோ:
விஸ்ராந்தி பூமி இவ சௌரி பாதாவநி த்வம்—-850-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது வைடூர்யக் கற்கள் தெளிவான நீரோடை போன்று உள்ளன;
தேவர்கள் உன்னைக் கொண்டாடுவது என்னும் செயல் குளிர்ந்த காற்று போன்று உள்ளது;
பச்சை நிற இரத்தினக்கற்களின் ஒளியானது அழகான மரநிழல் போன்று உள்ளது.
இப்படியாக உள்ள நீ – சற்றும் இளைப்பாறாமல், உலக விஷயங்களில் மயங்குவது என்ற வழியில் நடக்கின்ற
மனிதர்களின் சிரமத்தை நீக்கும் இடமாக உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே உனது வைடூர்ய கற்கள் தெளிந்த நீர் நிலை போல் தோற்றும் -காற்று வீசி குளுமை தரும்
மரகதக் கற்களின் பசுமை ஒளி சோபையைத் தரும் –
நிழலைத் தரும் -அத்தகைய சூழலில் நீ ஓயாமல் மோஹம் அஜ்ஞானம் மூர்ச்சை இவற்றை விளைவிக்கும்
சம்சார அலைச்சலில் களைத்த நமக்கு இளைப்பாறும் பூமியாகிறாய்
மருத் -காற்று -தேவர் -தேவர்களால் பூஜிக்கப் படுகிறாய்
சாயா அழகு நிழல் -சிலேடை

———————————————————————————

ஆத்யோ ரகுக்ஷிதி புஜாம் அபிஷேக தீப்தை:
ஆப்யாயிதஸ் தவ பதாவநி ரஸ்மி ஜாலை:
மந்தீசகார தபநோ வ்யபநீத பீதி:
மந்தோதரீ வதந சந்த்ர மஸோ மயூகாந்—-851-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனக்குச் செய்யப்பட்ட பட்டாபிஷேகத்தால் உனது இரத்தினக்கற்களின் ஒளியானது வெகுவாக வீசியது.
அந்த ஒளியால் ரகுகுலத்தின் முதல்வனாகிய சூரியன் மேலும் வலுவடைந்தான்.
இதனால் அவன் (இராவணனிடம் கொண்டிருந்த பயம் நீங்கி) இராவணனின் பத்னியாகிய
மண்டோதரியின் முகம் என்ற சந்த்ரனின் ஒளி மங்கும்படிச் செய்தான்.

ஸூர்யன் தன ஒளியால் சந்தரன் ஒளியைக் குறைப்பது உலகு அறிந்தது -பகலில் சந்தரன் காணப்படும் நிலை அதைத் தெரியப்படுத்தும்
அது போலே மண்டோதரியின் முக சந்த்ரனை ஒளி இழக்கச் செய்ய ஸூர்யனுக்கு தைர்யம் இல்லை -அந்த நிலையில்
ஸ்ரீ பாதுகையே ரகு வம்சத்துக்கு கூடஸ்தன் ஸூரியன் -எப்போது உனக்கு திரு பட்டாபிஷேகம் ஆயிற்றோ அப்போது தான்
அவனுக்கு புஷ்டி கிடைத்தது -எதில் இருந்து என்றால் -திரு அபிஷேகத்தினால் பிரகாசம் பெற்ற உன் கிரணங்களால் –
உடனே அவன் அச்சம் நீங்கி மண்டோதரியின் முக சந்திர ஒளியைக் குறைத்திட்டான் –
உனது திருப் பட்டாபிஷேகம் வரப் போகும் ராவணன் அழிவுக்கு ஸூசகம் ஆயிற்று என்றபடி –

—————————————————————————-

மாந்யா ஸமஸ்த ஜகதாம் மணி பங்க லீலா
பாதே நிஸர்க கடிதா மணி பாதுகே த்வம்
அந்தஸ் புரேஷு லளிதாநி கதாகதாநி
ஸ்சாயேவ ரங்கந்ருபதே: அநுவர்த்தஸே த்வம்

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! அனைத்து உலகங்களாலும் கொண்டாடத்தக்கவளாக உள்ள நீ,
உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளியால் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் நிழல் போன்று சேர்ந்துள்ளாய்.
இப்படியாக நீ ஸ்ரீரங்கநாதனுடன் அவனது அந்தப்புரங்களுக்கு வருவதும் போவதுமாக, அவன் நிழலாக நின்று அனுஸரிக்கிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே அகில உலகங்களுக்கும் பூஜ்யையான நீ இந்திர நீலக் கற்களால் கறுத்துப் பெருமாள் திருவடியில்
இயற்கையாகவே விடாது சேர்ந்து பெருமாள் அந்தப்புரத்திற்கு போய் வரும் போதும் நிழல் போலே உடன் செல்கிறாய் –
நீ பெருமாளுக்கே நிழல் -பெருமாளுக்கு பிரதிநிதி -பெருமாள் இடம் இருந்து நிழல் போலப் பிரியாது இருக்கிறாய்
அவனுடைய இனிய நடக்கைகளுக்கு உடன் இருக்கும் சாஷி –

————————————————————————————

ரங்காதி ராஜ பத பங்கஜம் ஆஸ்ரயந்தீ
ஹைமீ ஸ்வயம் பரிகதா ஹரி நீல ரத்நை:
ஸம்பாவ்யஸே ஸுக்ருதிபி: மணி பாதுகே தவம்
ஸாமாந்ய மூர்த்தி: இவ ஸிந்து ஸுதா தரண்யோ:—853–

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பற்றியவளாகவும்,
தங்கமயமாக இந்த்ரநீலக் கற்களால் இழைக்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய்.
ஆக நீ திருப்பாற்கடலில் அவதரித்த மஹாலக்ஷ்மி என்றும், பூமிபிராட்டி என்றும் புண்ணியவான்களால் எண்ணப்படுகிறாய்
(தங்க நிறம் = மஹாலக்ஷ்மி, இந்த்ரநீலம் = பூதேவி).

ஸ்ரீ மணி பாதுகையே நீ ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடியைப் பற்றி இருக்கிறாய் -ஸ்வயமாகவே தங்க வடிவமாய்
இந்திர நீலக் கற்களின் சோபையும் சேர மஹா லஷ்மி பூமி தேவி இருவரும் உன்னில் இருப்பதாகத் தோற்றும் –
ஆக பாக்யவான்கள் நல்ல ஸ்ரீ ஸூக்திகளைச் செய்பவர்கள் -உன்னை பெரிய பிராட்டி பூமிப்பிராட்டி
இருவருடையவும் போது வடிவாகக் காண்கின்றனர் –

————————————————————————————-

அப்யர்ச்சிதா ஸுமநஸாம் நிவஹை: அஜஸ்ரம்
முக்தா அருணோபல நக அங்குளி பல்லவஸ்ரீ:
ஸ்ரேயஸ்கரீம் முரபித: சரண த்வயி இவ
கந்திம் ஸமாஸ்ரயஸி காஞ்சந பாதுகே த்வம்—-854-

தங்கமயமான பாதுகையே! நீ எப்போதும் தேவர்களால் மலர்கள் தூவி பூஜிக்கப்பட்டபடி உள்ளாய்.
உனது முத்துக்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்கள் போன்று உள்ளன.
உனது சிகப்புக்கற்கள் அவனது தளிர் போன்ற திருவடி விரல்கள் போன்று உள்ளன.
இப்படியாக நீ ஸ்ரீரங்கநாதனின் இணைந்த திருவடிகளின் ஐச்வர்யத்தைப் பெற்றவளாக, அதன் மேன்மையைப் பெற்றவளாக உள்ளாய்.

ஸ்ரீ பொற் பாதுகையே தேவதைகள் அர்ச்சிக்கின்றனர் -புஷ்பங்களால் அர்ச்சிக்கப் படுகிறாய் -எப்போதும் இது நடக்கிறது –
ஆம் நீ பெருமாள் திருவடிதான் என்று சொல்லலாம் போலும் -உனது முத்துக்கள் திருவிரல் திரு நகங்களாக –
உனது சிவப்புக் கற்கள் திரு தளிர் விரல்களாக -இப்படித் தோற்றம் அளிக்க நீ மோஷம் உள்பட எல்லா புருஷார்த்தங்களையும் அளிப்பவளாக
அதற்கு உரிய காந்தியை பெருமாள் திருவடிக்கு இருப்பது போல் அதே காந்தியைப் பெற்று இருக்கிறாய் -ஸ்ரீ பாதுகை திருவடிக்கு சமானம் என்றபடி –

—————————————————————————————–

நிர்ம்ருஷ்ட காத்ரருசிரா மணி பாதுகே த்வம்
ஸ்நாதா அநுலேப ஸுரபி: நவமால்ய சித்ரா
ப்ராப்தே விஹார ஸமயே பஜஸே முராரே:
பாதாரவிந்த பரி போகம் அநந்ய லப்யம்—-855-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நன்றாக நீராட்டப்பட்டு துடைத்துவிடப்பட்டு, மிகவும் அழகான திருமேனியுடன்
காணப்படுபவளாக உள்ளாய். சந்தனப் பூச்சுடன் வாசனை நிறைந்தவனாகவும், புதிய மாலைகள் சூட்டப்பட்டவளாகவும் உள்ளாய்.
ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார நேரத்தில், மற்ற யாராலும் பெற இயலாத ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளுடன்
ஏற்படும் சேர்க்கை என்ற உயர்ந்த இன்பத்தைப் பெறுகிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே நீ துடைக்கப் பெற்று அழகிய நிர்மலமான தோற்றம் பெற்று திரு மஞ்சனமாகி சந்தனம் பூசப் பெற்று
வாசனை மிக்கவளாய் புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப் பெற்றும் நிற்கிற நீ –
பெருமாள் சஞ்சாரம் செய்யவோ அல்லது விளையாடவோ கருதும் போது
உசிதமான சமயத்தில் பெருமாள் திருவடிகளுடன் சேர்ந்து கலவி யுண்கிறாய்-நீ உன் நாயகனான திருவடியுடன் கலப்பது
என்பது உனக்கே உரிய போகம் ஆயிற்றே -மற்றவை ஆபரணங்கள் பெற முடியாத தாயிற்றே –

————————————————————————-

நாதே பதாவநி ததா தவ ஸந்நிவேசே
நிர்வேசந க்ரமம் அஸஹ்யம் அபாசிகீர்ஷு:
யைரேவ லோசந சதை: அபிவீக்ஷதே த்வாம்
தைரேவ பந்நகபதி: ஸ்ருதிமாந் பபூவ—-856–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய இனிமையான நாதம், மிகவும் அழகான திருமேனி
ஆகிய இரண்டையும் ஒன்றுக்குப்பின் மற்றொன்றை அனுபவிப்பது என்ற வரிசை காலதாமதத்தை ஆதிசேஷனால்
பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஆகையால் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க என்ணிய பாம்புகளின்
அரசனான ஆதிசேஷன் செய்தது என்னவென்றால் –
நூற்றுக்கணக்கான எந்தக் கண்களால் உன்னைக் கண்டு அனுபவிக்கிறானோ அந்தக் கண்களே காதுகளாகவும்
இருக்கும்படியாக நின்றான் போலும் (பாம்புகளுக்குச் செவி இல்லை).

ஸ்ரீ பாதுகையே நீ ஆதி சேஷன் திருவவதாரம் -அந்த ஆதி சேஷன் உன்னை அனுபவிக்கும் பாங்கை என் என்று சொல்ல –
உன் நாதத்தைக் கேட்டு அனுபவிக்கவும் உன் திருமணி அமைப்பைக் கண்டு அனுபவிக்கவும் ஆறாத காதல் அவனுக்கு
ஆனால் ஒன்றுக்கு பின் மற்றது என்று கால தாமசம் பொறுக்க ஒண்ணான் -உன்னருளால் அவனுக்கு
அந்த நூற்றுக் கணக்கான கண்களே காதுகளுமாகி உன்னை உற்று நோக்கி சேவிக்கையிலேயே உன் நாதத்தையும் கேட்டு அனுபவிக்க சக்தனானான் –
பாம்புகளுக்கு கண்ணே செவிப்புலன் எனபது மரபு -சஷூஸ் ஸ்ரவஸ் என்று பெயர்

ஸ்ரீ பாதுகையே நம்மாழ்வார் -அவரை சேவிக்கவும் அவர் செவிக்கினிய செஞ்சொல் நாதத்தைக் கேட்கவும் நித்ய ஸூரிகள் கூடப் பாரிப்பார்

—————————————————————————–

பாதாவநி ஸ்புட மயூக ஸஹஸ்ர த்ருஸ் யா
விஷ்ணோ: பதேந பவதீ விஹிதப்ரசாரா
த்வத் பக்தி யந்த்ரித ஜந ப்ரதமஸ்ய சம்போ:
வைகர்தநீம் அநுகரோதி விஹார மூர்த்திம்—857–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னிடத்தில் வெளிப்படும் ஆயிரக்கணக்கான கிரணங்களின் ஒளியால்,
பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளால் எங்கும் ஸஞ்சாரம் செய்கிறாய்.
உன்னிடம் உள்ள பக்தியால் பலர் ஆனந்தம் அடைந்து உன்னிடம் கட்டப்பட்டபடி உள்ளனர்.
அவர்களுள் முதன்மையாக உள்ள சிவனின் சூரியன் எனப்படும் சரீரத்தை நீ எடுத்து உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே உன்பால் பக்தி மிகுதியால் வசப்பட்ட பக்தர்களுக்குள் முதல்வனாகிய சிவனுக்கு நீ எப்படி அருள் புரிந்து இருக்கிறாய் –
அவனுக்கு உள்ளே அஷ்ட மூர்த்தியில் ஒன்றான சூர்யனோடு ஒப்புமை காட்டுகிறாய்
உனக்கும் அவனுக்கும் ஆயிரம் கிரணங்கள் -நீ விஷ்ணு பதத்தில் இருக்கிறாய் –
அவன் விஷ்ணு பதமாகிய ஆகாசத்தில் சஞ்சரிக்கிறான் ஆக நீ சூர்யன் போலே சிவனுக்கு அருள்வது இங்கனம் –

———————————————————————————-

ராஜ்யே வநே அபி ரகுவீர பத உசிதாயா:
ஸம்ஸ்ம்ருத்ய கௌதமவதூ பரிரக்ஷணம் தே
மந்யே ஸமாஹித தியோ மணி பாதுகே த்வாம்
மூர்த்நா பஜந்தி அநுதிநம் முனி தர்ம தாரா:—858–

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! அயோத்தியிலும், கானகத்திலும் இராமனின் திருவடிக்கும்
பட்டத்திற்கும் ஏற்றவளாக நீ உள்ளாய். உன்னால் செய்யப்பட்ட அகலிகை ரக்ஷணம்
(கௌதம முனிவரின் பத்தினியாகிய அகலிகையைக் காப்பாற்றியது) என்பதை முனிவர்களின் பத்தினிகள்
எப்போதும் நினைத்தபடி உள்ளனர்.
இதனால் தங்கள் மனதில் வேறு எதனையும் எண்ணாமல், உன்னை அன்றாடம் தங்கள் தலையில் ஏற்று வணங்கிறார்கள்.

ஸ்ரீ மணி பாதுகையே ராஜ்யத்திலும் வானத்திலும் உனது சாதனை -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய பதத்திற்கு -ஸ்தானத்திற்கு –
திருவடிக்கு ஏற்றதான செயலாகும் -ராஜ்ய ரஷணம் செய்தாய் -வனத்திலோ என்றால்
கௌதம முனிவரின் தர்ம பத்னியான அஹல்யையைக் காத்தாய்
இதை எல்லாம் நினைத்து நினைத்து உன்னிடமே தம் உள்ளத்தைச் செலுத்திய ரிஷி பத்னிகள் தினம் தோறும்
உன்னைத் தம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் –

———————————————————————————

த்வாம் ஆஸ்ரிதோ மணிமயூக ஸஹஸ்ர த்ருஸ்யாம்
த்வத் சிஞ்ஜிதேந ஸஹ ரங்கபதி: ஸமுத்யந்
ஆசங்க்யதே ஸுமதிபி: மணி பாத ரக்ஷே
வித்யாஸக: ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ—-859-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆயிரக்கணக்கான கிரணங்களுடன் விளங்கும் உன்னை ஸ்ரீரங்கநாதன்
தனது ஸஞ்சார காலத்தில் அடைகிறான். உன்னுடைய இனிமையான நாதங்களுடன் அவன் புறப்படுகிறான்.
இப்படியாக உள்ள ஸ்ரீரங்கநாதன், புத்திமான்களால் மூன்று வேதங்களுடன் கூடிய
ஸூரிய மண்டலத்தின் நடுவில் உள்ள சூரியனாகவே எண்ணப்படுகிறான்.

ஸ்ரீ மணி பாதுகையே உன் ரத்ன கிரணங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன -ஸ்ரீ ரங்க நாதன் உன்னைத் தரித்து
உன்னை அடைந்து உன் நாதத்துடன் புறப்படுகிறான் -பெருமாளை சேவிப்பவர்களான புத்திமான்கள் இவன் தான்
வித்யைகளுடன் கூடி சூர்ய மண்டலத்தில் நடுவில் இருப்பவன் என்று முடிவு செய்கின்றனர் –

—————————————————————–

ரத்நாஸ்ரிதை: ஹரிபதம் மணி பாதுகே த்வம்
ஸ்ப்ருஷ்ட்வா கரை: ஸ்ருதி ரஸாயந மஞ்ஜுநாதா
தத்வம் தத் ஏதத் இதி போதயஸீவ ஸம்யக்
வேதாந் ப்ரதாரிதவதோ விவிதாந் குத்ருஷ்டீந்—-860-

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இரத்தினக் கற்களைச் சார்ந்துள்ள ஒளி என்னும் கைகள் கொண்டு
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தொட்டு வணங்குகிறாய். செவிகளுக்கு இன்பம் உண்டாக்கும் விதமாக நாதங்கள் கொண்டுள்ளாய்.
வேதங்களைத் தவறாகக் கூறும் பலவிதமான வாதங்களை வைக்கின்ற வாதிகளைக் கண்டித்து,
”வேதங்கள் கூறும் உண்மையான பொருள் இவனே”, என்று ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தொட்டு உணர்த்துகிறாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே -நீ செவிக்கு இனிதாய் ஸ்ருதிகளில் இருந்து பெறப்படும் சாரமானதும் ரசம் மிக்கதுமான ஒன்றை
உனது உனது இனிய ஒலியில் சொல்லுகிறாய் போலும் –
அதுவும் ரத்னங்கள் அணிந்த உன் கைகளாலே ரத்னங்கள் வெளியிடும் கிரணங்கள் மூலம் ஸ்ரீ ரங்க நாதன்
திருவடியைத் தொட்டுக் கொண்டு -சத்ய பிரமாணம் -அறிவிக்கிறாய்-

தத்வம் ததேதத் -என்று அதாவது உபய விபூதி விசிஷ்டமானதும் பிரமாண சித்தமானதுமாய் -இப்படி திரு அவதரித்து உள்ள
அர்ச்சா மூர்த்தி சர்வ சரீரியான பர தத்வம் என்று -இது குத்ருஷ்டிகளைத் திருத்தவே –
ஸ்ரீ பாஷ்யகாரராக ஆதி சேஷன் திரு அவதாரம் செய்து அருளி தத்வ விளக்கம் அருளி சித்தாந்தம் நிர்ணயித்து அருளினார் –

—————————————————————————

ஆனந்தஸூ: ப்ரணயிநாம் அநக ப்ரஸாதா
ரங்காதிராஜ பத ரக்ஷிணி ரத்ந பாஸா
ந்யஸ்தே முஹு: நிஜபரே ஸ்திரதாம் பஜந்த்யா:
வர்ணாம் ஸூகம் விதர ஸீவ வஸுந்தராயா:—861-

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னை அடைந்தவர்களுக்கு மிகுந்த ஆனந்தம் அளிக்கிறாய்.
எந்தவிதமான காரணமும் இன்றி இயல்பாகவே அனைவருக்கும் அருளுகிறாய்.
இந்தப் பூமியின் பாரம் உன்னிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, உறுதியுடன் நின்ற பூமிக்கு உனது இரத்தினக்கற்களின்
ஒளி மூலமாக (த்ரௌபதிக்கு வஸ்த்ரம் அளித்தது போன்று), பல நிறங்கள் கொண்ட வஸ்த்ரங்களை அளிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே -பக்தர்களுக்கும் பலன் கொடுப்பவர்க்கும் ஆனந்தம் தருபவளாய் இயல்பாவே அருள் புரிகின்றவள் நீ –
பூமிப் பிராட்டி குத்ருஷ்டிகளின் பாரம் தாங்காமல் உன்னிடம் பர சமர்ப்பணம் செய்தாள் போலும் -அதில் பூமி உறுதியாய் இருப்பாள்
நீ உன் பரத்தைப் பூமியில் வைக்கும் போது அதையும் பூமி ஏற்கிறாள் –
பூமிப் பிராட்டிக்கு முன் த்ரௌபதிக்குப் போலே உன் ரத்ன ஒளிகளால் வர்ண வர்ணப் புடவைகளை மேன்மேலும் தருகிறாய் போலும் –

————————————————————————————

த்வம் சித்ரபாநு அஸி ரத்ந விசேஷ யோகாத்
பூம்நா நிஜேந பரி புஷ்யஸி பாவகத்வம்
ஸ்வேநைவ சௌரி சரணாவநி சந்த்ர ரூபா
தேஜஸ் த்ரயீவ மிளிதாஸி தமஸ் அபஹா ந:—-862-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பலவிதமான இரத்தினக்கற்கள் உன்னில் பதிக்கப்பட்டுள்ளதால் நீ வியப்பான
பல வர்ணங்களுடன் கூடிய ஒளியைக் கொண்டு ஸூரியன் போன்று உள்ளாய். உன்னுடைய இயற்கையான தன்மை மூலம்
மற்றவர்களைத் தூய்மைப்படுத்துவதால், அக்னி போன்று உள்ளாய். தங்கமயமான சந்த்ரனாகவும் உள்ளாய்.
இப்படியாக நீ எங்களுடைய துன்பம் என்ற இருளை நீக்கவல்ல மூன்று ஒளியாக உள்ளாய்.

ஸ்ரீ பெருமாளின் பாதுகையே நீ உன்னில் மூன்று ஒலிகளை ஒன்றாகக் கொண்டு இருக்கிறாய் என்று தோன்றுகிறது –
பல்வகை ரத்னங்களில் இருந்து பல வர்ணக் கதிர்களைத் தந்து ஸூர்யனாகவும்
தன் இயற்கைப் பெருமையால் சுத்தி தரக் கூடிய தன்மையால் அக்னியாகவும்
சந்திர ரூபியாய் -தங்கத்தாலானவளாய்-நின்று சந்த்ரனாகவும் விளங்குகிறாய் –
சித்ரபானு -ஸூர்யன் -பலநிறக் கதிரோன்-பாவகன் -அக்னி -பாவனைப் படுத்துபவன் -சந்திர ரூபா -சந்திரன் உரு -தங்கம் –

——————————————————–

ப்ரௌட ப்ரவாள ருசிரா புவந ஏக வந்த்யா
ரங்காதிராஜ சரணாவநி ரம்ய சந்த்ரா
ஸம்பிந்ந மௌக்திக ருசி: ஸததம் ப்ரஜாநாம்
தாபாத்யயம் திசஸி தாரகிதேவ ஸந்த்யா—863-

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய பவழங்கள் மூலம் இளம் துளிர் போன்ற
அழகாகச் சிவந்து காணப்படுகிறாய். அனைத்து உலகங்களாலும் வணங்கப்பட்டபடி உள்ளாய்.
அழகான தங்கத்தைக் (சந்த்ரனை) கொண்டுள்ளாய். உயர்ந்த முத்துக்களின் ஒளியுடன் கூடியுள்ளாய்.
இப்படியாக உள்ள நீ நக்ஷத்ரங்களைக் கொண்டதான ஸந்த்யா காலம் போன்று மக்களுக்கு எப்போதும்
ஸம்ஸாரத்தில் உள்ள துன்பங்கள் நீக்கி, சாந்தியை அளிக்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே முதிர்ந்த பவழங்களால் நீ அழகாய் இருக்கிறாய் -அழகிய தங்கத்தை உடையாய் -முத்துக்களின் ஒளி கூட சேர்ந்து உள்ளதே –
எல்லோருக்கும் வணங்கத் தக்கவள்- நீ இப்படி எல்லாம் இருப்பது சாயம் சந்தியை நினைவூட்டுகிறது –
தளிர் போல் அழகிய சந்திரனை உடைய சந்த்யா வேளை -நஷத்ரங்கள் ஒளிர்வது -சிவந்த வானம் -சந்த்யா -உபாசனம் செய்கிற வேளை
அந்த மாலை வேளை போலே தாப சாந்தி அளிக்கிறாய் –

———————————————————————–

ரங்கேஸ் வரஸ்ய புரதோ மணி பாதுகே த்வம்
ரத்நாம் ஸூபிர் விகிரஸி ஸ்புட பக்தி பந்தா
பாதௌ விஹாரயிதும் அத்புத ஸௌகுமார்யௌ
ப்ராய: ஸரோஜ குமுத உத்பல பத்ர பங்க்திம்—-864-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அனைவரும் அறிந்த கெட்டியான இரத்தினங்களைக் (உறுதியான பக்தியை)
கொண்டவளாக உள்ளாய். மென்மையான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை உல்லாஸமாக ஸஞ்சாரம் செய்விக்க நீ எண்ணினாய்.
இதனால் நீ செய்வது என்ன? உனது பலவிதமான இரத்தினக் கற்களின் ஒளி மூலம் தாமரை மலர், அல்லி மலர், நெய்தல் மலர்
போன்றவற்றினுடைய இதழ்களின் வரிசையைப் பரப்பி வைக்கிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே -ஸ்ரீ ரங்கநாதனின் திருவடிகள் அத்யுத்புதமான மென்மை யுடையவை -ஆகவே நீ நன்றாக விளங்கும்
பிரேம பாவம் உடையவளாய் -பல ரத்ன வரிசைகள் சிறப்பாக காட்டப் பட்டுள்ள அமைப்பு உடையவளாய்
பெருமாளை உல்லாச சஞ்சாரம் செய்ய எழுந்து அருளப் பண்ணுகிறாய் -அப்போது உன் பரிவில் ஒரு நடை பாவாடை பரப்புகிறாய் போலும்
உன் ரத்னங்களின் ஒளிக் கதிர்கள் தாமரைகள் அல்லிப் பூக்கள் கரு நெய்தல் இவற்றின் இதழ்களை வரிசையாகப் பரப்பினால் போல் இருக்கிறது –

————————————————————————————-

ஆஸந்ந வ்ருத்தி: அவரோத க்ருஹேஷு சௌரே:
ஆபாதயஸி அநுபதம் வர வர்ணி நீநாம்
ஆலக்ந ரத்ந கிரணா மணி பாதுகே த்வம்
மஞ்ஜுஸ்வநா மதந பாண நிகர்ஷ சங்காம்—-865–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் அந்தப்புரங்களில் நீ உள்ள போது,
உனது இரத்தினக் கற்களின் ஒளியை எங்கும் பரவச் செய்கிறாய். உனது இனிமையான நாதம் எங்கும் ஒலித்தபடி உள்ளது.
இதனைக் காணும் போது – ஸ்ரீரங்கநாதனின் ஒவ்வொரு அடிவைப்பிலும், அவனது தேவிமார்கள் மன்மதனின் அம்புகள்
தங்கள் மீது எய்யப்படுவதற்காகத் தீட்டப்படுகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுவதாகத் தோன்றுகிறது.

ஸ்ரீ மணி பாதுகையே பெருமாளை ஏகாந்த அந்தப்புரத்திற்கு எழுந்து அருளப் பண்ணுகிறாய் –
அப்போது ரத்னங்களில் இருந்து கிரணங்கள் எங்கும் பரவும் –
உன் நடையில் இனிய நாதமும் உண்டாகும் -இது அடிக்கடி நடப்பதால் உன்னில் மன்மத பானங்கள் அடிக்கடி
தீட்டப் படுவதால் ஒளியும் ஒலியும் உண்டாகின்றனவோ –
இது உன்னவரின் காதல் மகளிரை மயக்கவோ என்று எண்ணத் தோன்றும் –
அவன் முன்பு எஞ்சிய உலகம் முற்றும் ஸ்திரீ பிராயமே -ஸ்ரீ பாதுகை -நம்மாழ்வார் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் பகவத் ப்ரேமம் -தெய்வக் காதல் பொங்கச் செய்யுமே –

—————————————————————————————

பர்யாப்த மௌக்திக நகா ஸ்புட பத்ம ராகா
ரேகா விசேஷ ருசிரா லளித ப்ரசாரா
ரங்காதி ராஜ பதயோர் மணி பாதுகே த்வம்
ஸாயுஜ்யம் ஆஸ்ரிதவதீவ ஸமஸ்த வந்த்யா—-866–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய முத்துக்களானவை அழகான நகங்கள் போன்று உள்ளன.
உனது பத்மராகக் கற்களானவை தாமரை மலர் போன்று சிவந்து காணப்படுகின்றன.
மிகவும் அழகான ரேகைகள் கொண்டவளாக உள்ளாய். மிகவும் அழகான நடையைக் கொண்டவளாகவும் உள்ளாய்.
இப்படியாக நீ ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் மிகுந்த ஒற்றுமையை அடைந்துள்ளாய்.

ஸ்ரீ மணி பாதுகையே உன் முத்துக்கள் திருவடிகளின் திரு நகத்தை நிகர்க்கும் –
பத்ம ராகக் கற்கள் சிவப்பினால் தாமரை போல் இருந்து
திருவடித் தாமரையை நினை ஊட்டும் ரேகைகளும் நடையும் அங்கனமே -எல்லோருக்கும் பூஜ்யமான இருப்பு
இப்படி நீ பெருமாள் திருவடிகளின் சாயுஜ்யத்தை அடைந்து இருக்கிறாய் –

————————————————————————–

ப்ராப்த அபிஷேகா மணி பாதுகே த்வம்
ப்ரதீப்த ரத்நா ரகுராஜ தாந்யா:
ப்ரதக்ஷிண ப்ரக்ரமணாத் அகார்ஷீ:
ப்ராகாரம் அக்நேயம் இவ ப்ரபாபி:—867–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! பட்டாபிஷேகம் செய்யப்பட்டதால் மிகவும் ப்ரகாசமாக உனது
இரத்தினக் கற்கள் உள்ளன. இத்துடன் கூடியபடி நீ அயோத்தி மாநகர வீதிகளில் வலம் வருகிறாய்.
அப்போது உனது இரத்தினக் கற்களின் ஒளி மூலமாகவே அக்னியால் செய்யப்பட்ட மதிள் சுவரை அமைத்தாய் போலும்.

ஸ்ரீ மணி பாதுகையே உனக்கு திரு அபிஷேகம் ஆயிற்று -நீ வீதி வலம் வருகிறாய் –
உன் பத்மராகக் கற்கள் ஒளிப் பிழம்பை வெளியிடுகின்றன
திரு அயோத்யா நகரத்துக்கே ஒளி மயமான அக்னி மயமான கோட்டை மதிள்களை உண்டாக்கி விட்டாய் போலும் –

—————————————————————-

ரத்ந ஆஸநே ராகவ பாத ரக்ஷே
ப்ரதீப்யமாநா: தவ பத்ம ராகா:
ப்ராயோ நரேந்த்ராந் பரதஸ்ய ஜேது:
ப்ரதாப வஹ்நே: அபவந் ப்ரரோஹா:—868-

ஸ்ரீராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னுடைய ஸிம்ஹாஸனத்தில் உனது பத்மராகக் கற்கள்
மிகவும் ப்ரகாசத்துடன் காணப்படுகின்றன. இவற்றைக் காணும்போது, எதிரிகளை வெல்பவனாகிய
பரதனின் வீரம் என்ற நெருப்புக்கு முளைகளாகத் தோன்றுகின்றன.

ஸ்ரீ ராகவ பாதுகையே நீ கல்லில் இழைத்த சிம்மாசனத்தில் வீற்று இருக்கிறாய் –
உன் பத்மராகக் கற்கள் மிக மிக பிரகாசமாகத் தோற்றும் –
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பாதுகா அனுக்ரஹத்தால் அரசர்களை வென்றானே அப்போது வெளிப்படும்
ஸ்ரீ பரதாழ்வான் உடைய பிரதாபாக்னியின் கொழுந்துகளோ என்று தோன்றும் –

——————————————————————-

ஸூப ப்ரணாதா பவதீ ஸ்ருதீநாம்
கண்டேஷு வைகுண்ட பதிம் வராணாம்
பத்நாஸி நூநம் மணி பாத ரக்ஷே
மங்கள்ய ஸூத்ரம் மணி ரஸ்மி ஜாலை:—-869–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் என்னும் கணவனை அடைகின்ற வேதங்களின் கழுத்தில்,
உனது இரத்தினக் கற்களின் ஒளி மூலமாக நீ திருமாங்கல்யத்தை அணிவிக்கிறாய் போலும்.
இந்த நேரத்தில் உனது இனிமையான நாதங்கள் மங்கள வாத்தியங்களாக உள்ளன.

ஸ்ரீ மணி பாதுகையே உன் நாதம் மிக மங்கள மானது -அதைக் கொண்டு நீ மணி
ஒளித் திரள்களாலான திரு மாங்கல்ய சரடைக் கட்டுகிறாய் –
ஸ்ரீ வைகுந்த நாதனைப் பதியாக வரித்துள்ள ஸ்ருதி மாதருக்கு இது நிச்சயம் —
ஸ்ரீ பாதுகை உபாத்யாயினி போல -நாத்தனராய் இருக்கலாம் –
அவள் சொல்லும் ஆசீர்வாத வசனம் தான் ஸூப பிரணாதம்-அதாவது மந்திர உச்சாரணம் –
வேத பிரதிபாத்யன் பெருமாள் -வேத மாதருக்கு அவனே கணவன் -என்றவாறு -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் காட்டிய வழி-

————————————————————-

விசித்ர வர்ணா ஸ்ருதி ரம்ய சப்தா
நிஷேவ்யஸே நாக ஸதாம் சிரோபி:
மதுத் விஷஸ் த்வம் மணி பாத ரக்ஷே
ஸ்ரேயஸ்கரீ காஸந பத்ரிகேவ—-870–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது பலவிதமான கற்களின் ஒளியானது, பல எழுத்துக்கள் போன்று உள்ளன.
உனது செவிக்கினிய நாதங்கள் அழகான சொற்கள் போன்று உள்ளது.
இப்படியாக உள்ள நீ, அனைவருக்கும் நன்மை அளிப்பவளாக, தேவர்களின் தலைகளில்
ஸ்ரீரங்கநாதனின் கட்டளைச் சீட்டுகள் போன்று உள்ளாய்.

ஸ்ரீ மணி பாதுகையே நீ பல்வகைப்பட்ட சிறந்த வர்ணங்கள் -எழுத்துக்கள் -உடையவள் -உன் ஒலி செவிக்கு இனிது
செவிக்கு இனிய சொற்களை உடையவள் -நீ நன்மைகளைச் செய்வதும் சொல்ல வேணும் –
இப்படி இருத்தலால் தானே தேவர்கள் உன்னைத் தலையில் ஏற்றுக் கொள்கிறார்கள் பகவானுடைய சாசன பத்ரம் என்பதாக ஏற்றுக் கொள்வர் –
இனிய சொற்களான அருளிச் செயல் மூலம் ஆழ்வார் நமக்குக் கட்டளை இடுகிறார் -தேவதைகளுக்கும் உரியது -நமக்கு அதுவே உத்தம சாசனம் –

————————————————————————————

ஸ்திரா ஸ்வபாவாந் மணி பாதுகே த்வம்
ஸர்வம் ஸஹா ஸ்வாது பலப்ரஸூதி:
ப்ருத்வீவ பத்ப்யாம் பரமஸ்ய பும்ஸ:
ஸம்ஸ்ருஜ்யஸே தேவி விபஜ்யஸே ச—-871-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது ஸ்வபாவத்தினால் நீ ஸ்திரமாகவும்,
அனைத்தையும் பொறுத்துக் கொள்பவளாகவும், அனைத்து பலன்களையும் உண்டாக்குபவளாகவும் உள்ளாய்.
இப்படியாக நீ பூமாதேவி போன்று உள்ளாய்.
மேலும் பூமியானது எவ்விதம் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் இருந்து பிரிக்கப்பட்டும் (ஸ்ருஷ்டி காலம்),
சேர்க்கப்பட்டும் (ப்ரளயகாலம்) செய்யப்படுகிறதோ, அது போன்றே நீயும்
அவன் திருவடிகளுடன் சேர்ந்தும் (ஸஞ்சார காலம்), பிரிந்தும் (ஸஞ்சாரம் அல்லாத காலம்) உள்ளாய்.

ஸ்ரீ மணி பாதுகை தேவியே -நீ இயல்பாகவே ஸ்திரம் ஆனவள்–ஆஸ்ரிதர் குற்றங்களைப் பொறுத்துக் கொள்பவள் -பாரத்தைப் பொறுத்துக் கொள்பவள் –
போக்யமான பயிர் போன்ற பலங்களை வழங்குபவள் -இப்படி பூமி தேவி போலப் பெருமாள் திருவடிகளோடு சேர்க்கப் படுகிறாய் -பிரிக்கவும் படுகிறாய் –
பெருமாள் திருவடிகளோடு கலவி பிரிவு ஏற்படுவது மாற்றி மாற்றி நிகழும் -இது பூமிக்கும் ஸ்ரீ பாதுகைக்கும் பொதுவாக ஒரே ரீதியில் நடப்பதாகும் –
சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் ஆழ்வாருக்கும் நடக்குமே

——————————————————————————

பஸ்யந்தி ரங்கேஸ்வர பாத ரக்ஷே
பூஜாஸு தே ஸம்ஹித புஷ்ப ஜாலம்
ம்ருகீத்ருசோ வாஸவ ரத்ந ரேகாம்
ஸசித்ர புங்காம் இவ மன்மத ஜ்யாம்—872-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!ஸ்ரீரங்கநாதனுக்கு அர்ச்சனை செய்யப்படும் நேரத்தில்
இடப்பட்ட மலர்களுடன் உனது இந்த்ரநீலக் கற்கள் சேர்ந்து ஒளிர்கின்றன.
அவற்றை மான் போன்ற விழி கொண்ட பெண்கள் காணும்போது, அம்புகளுடன் கூடியதான
மன்மதனின் வில்லில் கட்டப்பட்ட நாண் கயிறு என்றே எண்ணுகிறார்கள்.

ஸ்ரீ பாதுகையே பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்பட போது புஷ்ப ஜாலங்கள் கிடக்கின்றன –
உன்னுடைய இந்திர நீலக் கற்களின் வரிசையை மன்மதன் பாணத்தை நாண் ஏற்றி அடித்த
புஷ்பங்கள் தாம் இவை என்று மான் விழி மாதர் பார்த்து நிற்கிறார்கள் –

——————————————————————————

கரை: உதக்ரை: ஸ்புரதாம் மணீநாம்
மஞ்ஜுஸ்வநா மாதவ பாதுகே த்வம்
அநூபதேசே கநகாபகாயா:
கலே: ப்ரவேசம் ப்ரதிஷேதஸீவ—-873-

ஸ்ரீரங்கநாச்சியரைத் தரித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியின் தீவு போன்று உள்ள ஸ்ரீரங்கத்தில்,
கலிகாலத்தின் ப்ரவேசத்தை நீ தடுக்கிறாய். எப்படி என்றால் – உனது இரத்தினக்கற்களின் ஒளி என்ற கைகள் கொண்டும்,
உனது நாதங்கள் மூலம், “உள்ளே வராதே”, என்று அதட்டியும் தடுக்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே உன் இனிய ஒலியும் ஒளிர்கின்ற ரத்னங்களுடைய நீண்ட கிரணங்களும் என்ன தெரிவிக்கின்றன தெரியுமா –
கலியின் விஷமம் பொன்னியின் கரையில் உள்ள ஸ்ரீ ரங்க பிரதேசத்தில் நுழைய முடியாது விட மாட்டோம் -என்று -ஒளிக் கதிர்களே கைகள் –
ஆழ்வார் -கலியும் கெடும் கண்டு கொண்மின் -சாசனம் ஸ்ரீ பாதுகை மூலம் பிரகடனப் படுத்தல் ஆகிறது –

——————————————————————–

ஆக்ராந்த வேதிர் பவதீ ததாநீம்
அதர்சி முக்தாந்வித சோண ரத்நா
கரக்ரஹார்த்தம் பரதேந பூம்யா:
லாஜோத் கரைர் வஹ்நிசிகேவ கீர்ணா—-874-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய ஸிம்ஹாஸனமானது யாகம் செய்யவல்ல வேதி போன்று உள்ளது.
அதன் மீது உள்ள அக்னி போன்று உனது பத்மராகக்கற்கள் உள்ளன.
அந்த அக்னியில் இடப்பட்ட பொரி போன்று உனது முத்துக்கள் உள்ளன. இப்படியாக இராமன் கானகம் சென்ற போது,
பரதன் பூமி என்ற பெண்ணை மணம் முடித்து, அங்கு பொரிகள் தூவப்பட்ட அக்னி உள்ளதாகக் காண்பிக்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே நீ ஆசனத்தின் மீது அமர்ந்துள்ள நிலை சிவப்புக் கற்கள் அக்னி போல் ஒளிரவும் சுற்றி உள்ள முத்துக்கள் லாஜ ஹோமத்தில்
அக்னியில் சேர்க்கப் பெற்ற அரிசிப் பொறிகளோ என்று தோற்றும் -லாஹ ஹோம பரசக்தி -ஸ்ரீ பரதாழ்வான்
பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருள பூமியைப் பாணி க்ரஹணம் செய்து கொண்டான் அல்லவா அதனால் தான் –

————————————————————-

பத்ரளா மணி கணைர் ஹிரண்மயீ
பாஸி ரங்கபதி ரத்ந பாதுகே
கேளி மண்டப கதாகத உசிதா
பூமிகேவ கருடேந கல்பிதா—-875-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினமயமான பாதுகையே! உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளியானது சிறகுகள் போன்று உள்ளது.
நீ தங்கமயமாக உள்ளாய். இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் விளையாட்டு மண்டபத்திற்கு எளிதாகச் சென்று வரும்படியாக
கருடனே ஏற்படுத்திய ரூபம் போன்று விளங்குகிறாய்.

ஸ்ரீ பாதுகையே நீ தங்கமயம் -பெரிய திருவடி போலே -உனது ரத்னங்கள் வெளியிடும் ஒளிக் கற்றைகள் இருபுறமும் இறக்கைகள் போல் பரவும்
பெருமாள் உலாவுகின்ற காலத்தில் மண்டபம் மண்டபமாக வேகமாகப் போய் வர இன்னும் சௌ கர்யமாய் இருக்க வென்று பாதுகா வேஷத்தை
பெரிய திருவடி தானே ஏற்றுக் கொண்டு இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது -பெரிய திருவடி வேதாத்மா –
அவர் மீது அமர்ந்து இருப்பதும் தமிழ் வேதம் அருளிய நம்மாழ்வார் மீது அமர்ந்து சஞ்சரிப்பதும் ஒரே தத்வமே –

————————————————————————–

உந்நதம் பலி விரோதிந: ததா
பாதுகே பத சரோஜம் ஆஸ்ரிதா
மௌக்திக ஸ்தபக மத்ய ஸம்மிதம்
வ்யோம ஷட் பததுலம் அலம்பய:—-876–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மஹாபலியை அடக்கியபோது ஸ்ரீரங்கநாதன் தனது தாமரை மலர் போன்ற
திருவடியை மேல் நோக்கு உயர்த்தினான். அப்போது உன்னுடைய முத்துக்கள் அனைத்தாலும் மேல்புறத்தில்
மலர்கொத்துக்கள் போன்ற தோற்றம் உண்டாக்கினாய்.
ஆங்காங்கு காணப்பட்ட ஆகாயம், அந்த மலர்க்கொத்தில் அமர்ந்த வண்டு போன்று இருந்தது.

ஸ்ரீ பாதுகையே பலியை அடக்கப் பெருமாள் திரிவிக்ரமாவதாரம் எடுத்த வேளை ஓங்கி திரு உலகு கடந்த உன்னதமான திருமேனி
திருவடித் தாமரை எவ்வளவு பெரியது -அதில் ஸ்ரீ பாதுகையும் அங்கனமே -உனது முத்துக் கொத்துக்கள் பெரிய பிரம்மாண்டமான
பூம் கொத்துக்கள் ஆயின -இந்த ஆகாசம் கரு நீல வண்டுகள் போல் பூம் கொத்துக்களுக்கு இடையில் நின்றன –

—————————————————————————-

கோமள அங்குளி நிவேச யந்த்ரிகா
ந்யஸ்த மௌக்திக மயூக தந்துரா
மங்களாநி வமஸீவ தேஹிநாம்
ரங்கராஜ மணிபாதுகே ஸ்வயம்—-877–

ஸ்ரீரங்கராஜனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் மென்மையான அழகான
திருவடி விரல்கள் பிடித்துக் கொள்வதற்கு ஏற்றபடி உனது குமிழ்களின் மீது முத்துக்கள் இழைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் ஒளி மூலமாக நீ உலகில் உள்ளவர்களுக்கு ஏற்ற நன்மையைக் கக்குகிறாய்.

ஸ்ரீ மணி பாதுகையே உனது குமிழ் பெருமாளுடைய அழகானதும் கோமளமானதுமான விரல்களுக்கு இடையில்
பிடிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது -அதன் மேல் பதித்துள்ள முத்துக்கள் ஒளி வெள்ளத்தை வெளியிடும் -அது தானாக
உன்னிடம் இருந்து மக்களுக்குக் கொட்டப்படும் கொடிகளோ சத்வ குணத்தால் மக்கள் பெரும் ஷேமங்களோ என்று சொல்லத் தோன்றும் –
வெண்மை சத்வ குணத்தைக் காட்டும் -சாத்விகருக்கு ஸ்ரீ பாதுகை ஷேமத்தைப் பொழிகிறாள்-என்றவாறு –

—————————————————————

பங்கஜா ஸஹ சரஸ்ய ரங்கிண:
பாதுகே நிஜபதாத் அநந்தரம்
ந்யஸ்தஸ் த்வயி ஜகந்தி ஜாயதே
நாக போக சயநம் நிரங்குஸம்—-878-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தனது ஸஞ்சார காலம் முடிந்தவுடன் ஸ்ரீரங்கநாதன் தன்னுடைய திருவடிகளால் காக்கப்பட்டு
வந்த உலகங்களை உன்னிடம் வைக்கிறான். இதனால்தான், ஸ்ரீரங்கநாச்சியாருடன் கூடிய ஸ்ரீரங்கநாதனால்
ஆதிசேஷன் மீது சயனித்தபடி உறங்குவதற்கு எந்தத் தடையும் இல்லாமல் உள்ளது
(அனைத்தையும் நீ பார்த்துக் கொள்கிறாய் என்பதால் கவலை இன்றி அரங்கன் உறங்குகிறான் என்று கருத்து).

ஸ்ரீ பாதுகையே நீ அருளுவது பெருமாள் திருவடிகளில் இருக்கும் போது மட்டும் அல்ல -பெருமாள் உலக ரஷணத்தையே உன் மீது வைத்து விடுகிறாரே –
பெருமாள் பிராட்டியுடன் ஆதிசேஷன் மீது கண் வளர்ந்து அருளும் போது அது தடை இல்லாமல் இடையில் தொந்தரவு இல்லாமல் இருக்க
உலகை ரஷிக்கும் பொறுப்பை நீ ஏற்றுக் கொள்கிறாயே –

—————————————————————-

ஸாதயந்தி மதுவைரி பாதுகே
ஸாதவ: ஸ்திரம் உபாயம் அந்திமம்
த்வத் ப்ரவ்ருத்தி விநிவர்த்தந உசித
ஸ்வப்ரவ்ருதி விநிவர்த்தந அந்விதம்—-879-

மது என்ற அசுரனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பெரியவர்கள் செய்வது என்னவென்றால் –
நீ அவர்களைக் காப்பாற்றவிடாமல் தடுக்கின்ற செயலான “தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முயலுதல்”
என்பதைச் செய்யாமல் இருந்து விடுகின்றனர் (ஆகவே அவர்களைக் காக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கின்றனர்).
மேலும் அழிவற்ற பலத்தை (மோக்ஷம்) அளிக்கவல்ல, இறுதியான, சரணாகதி வடிவமான மோக்ஷ உபாயத்தையும் கடைபிடிக்கின்றனர்.

ஸ்ரீ பாதுகையே -சத்துக்கள் சரமஆபாயமான பிரபத்தியைக் கைக் கொள்கிறார்கள் -உனது பிரவ்ருத்தி தான் ஸ்திரமானது பழுதற்றது –
ஆகிஞ்சன்யாதி யோக்யதைகளை விண்ணப்பித்து விஹித வர்ணாஸ்ரம கர்மானுஷ்டானங்களை விடாமல்
உன்னையே சரண் அடைந்து உன் பிரவ்ருத்தியின்னாலே உஜ்ஜீவிக்கிறார்கள்-

———————————————————————–

நந்தஸூநு பதபத்மம் இந்திரா
பாணி பல்லவ நிபீட நாஸஹம்
பாதுகே தவ பலேந பர்யூபூத்
ஊஷ்மளாம் உரக மௌளி சர்க்கராம்—-880-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! கண்ணனின் திருவடிகள் மஹாலக்ஷ்மியின் திருக்கரங்களால் வருடப்படுவதைக்கூட
பொறுக்க இயலாதபடி மென்மையானவை ஆகும். ஆனால் அந்தத் திருவடிகள் உன்னுடைய பலம் காரணமாகவே,
சுடும்படியாக இருந்த காளியனின் தலைகள் என்ற கடினமான இடத்தில் மிதித்தபடி ஆடி,
அந்தத் தலைகளைத் தலைகுனியும்படிச் செய்தன.

ஸ்ரீ பாதுகையே -நீ ரஷிப்பது ஜீவர்களை மட்டும் அல்ல -பிராட்டியின் துளிர் போன்ற மென்மையான திருக்கைகளால் பிடித்தாலும் கூட
கன்றும் படி ஸூ குமாரமான திருவடி ஸ்ரீ கிருஷ்ணன் உடையது
அவன் காளியன் படங்களில் ஆடுகையில் சூட்டையும் கரடு முரடான தன்மையையும் ஸ்ரீ கிருஷ்ணன் உடைய ஸ்ரீ பாதாராவிந்தம் பொறாதே
நீ அன்றோ அவன் திருவடிகளையும் ரஷித்தது-
சம்சார விஷ சர்ப்பத்தின் மீது பத்திரமாக நடமாடித் தப்பிக்க ஆழ்வார் ஆச்சார்யர் பலம் உபதேசம் அனுஷ்டானம் இவையே உதவும் என்றபடி –

———————————————————————————-

மணி நிகர ஸமுக்தை: ஸர்வ வர்ணா மயூகை:
ப்ரகடித ஸூபநாதா பாதுகே ரங்க பர்த்து:
நிகில நிகம ஸூதே: ப்ரஹ்மண: தத் ஸநாதாம்
அவகமயஸி ஹ்ருத்யாம் அர்த்த மாத்ராம் சதுர்த்தீம்–881–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இரத்தினக் கற்களின் குவியல் மூலமாக ஏற்பட்ட ஒளியாலும் ஒலியாலும்,
நீ பலவிதமான வர்ணங்கள் கொண்டவளாகவும், இனிமையான நாதம் உடையவளாகவும் இருக்கிறாய்.
அனைத்து வேதங்களுக்கும் காரணமாக உள்ள வேதமாகவே இருக்கிற ப்ரணவத்தின்,
ஸ்ரீரங்கநாதனுடன் கூடிய ஹ்ருதயத்தில் இருக்கிற நான்காவதான அரை மாத்ரையாக நீ உள்ளாய்.

ப்ரணவத்தில் உள்ள மூன்று எழுத்துக்கள் அ, உ, ம என்பதாகும். இவை தவிர நான்காவதாக அரை மாத்திரை
என்ற ஒன்று ப்ரணவத்தில் உள்ளது. இது போன்று பாதுகை உள்ளதாகக் கூறுகிறார்.
அரை மாத்திரையாகவே இருந்தாலும் அனைத்து எழுத்துக்களையும் உள்ளடக்கியது என்பதைப் பலவிதமான வர்ணங்கள்
கொண்டவள் என்று கூறுகிறார். அந்த அரை மாத்திரையே மிகவும் இனிமையாக உள்ளது என்பதை இவளது நாதம் என்றார்.

ஸ்ரீ பாதுகையே உன் ரத்னக் கூட்டத்தில் இருந்து வரும் கிரணங்கள் எல்லா வர்ணங்களும் உடையவை –
உன் நாதம் மிக இனியதாக உள்ளது -அந்த நாதம் சகல வேதங்களுக்கும் காரணமான பிரணவ மந்த்ரத்தின் இனியதான
நான்காவது மாத்ரையை அதன் பொருளான ஸ்ரீ ரங்க நாதனோடு நிற்பதாய் நினைவூட்டுகின்றது –
பரவாஸூ தேவன் சகல வர்ணங்கள் உடையவன் -ஸ்ரீ ரங்க விமானம் பிரணவாகாரம் -இங்கே ஸூ சிக்கப்படுகிறது –

—————————————————————————

ஸ்ருதி விஷய குணா த்வம் பாதுகே தைத்ய ஹந்து:
ஸதத கதி மநோஜ்ஞா ஸ்வேந தாம்நா ஜ்வலந்தி
ஜதித புவந வ்ருத்தி: த்ருச்யஸே ஸ்தைர்ய யுக்தா
வித்ருத நிகல பூதா வைஜயந்தீவ மாலா—882-

அசுரர்களை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது நாதம் எப்போதும் காதுகளுக்கு விஷயமாக உள்ளது (ஓசை = ஆகாயம்);
எப்போதும் செய்யும் ஸஞ்சாரம் காரணமாக அழகாக உள்ளாய் (எப்போதும் ஸஞ்சாரம் செய்வது காற்று = வாயு);
உன்னுடைய தேஜஸ் கரணமாக எப்போதும் ப்ரகாசமாக உள்ளாய் (அக்னி); உலகங்களை எப்போது வளரச் செய்கிறாய் (வளர்ப்பது = தண்ணீர்);
என்றும் ஸ்திரமாக உள்ளாய் (ஸ்திரம் = பூமி). இப்படியாக உள்ள நீ, பஞ்சபூதங்களைத் தன்னுள் தரித்துள்ள
வைஜயந்தீ என்னும் ஸ்ரீரங்கநாதனின் மாலை போன்றே உள்ளாய்.

ஸ்ரீ பெருமாளின் பாதுகையே நீ ஸ்ரீ வைஜயந்தி மாலையை ஒத்தவள் -பஞ்ச பூதங்களைத் தரிக்கும் வைஜயந்தி திருமாலை
அவற்றுக்கு அபிமான தேவதை -எங்கனே என்னில்
வேதத்திற்கு விஷயமானவள் -அது காதலுக்கு விஷயமான சப்த குணம் உடையது -ஆகாசத்தின் அபிமான தேவதை
நீ எப்போதும் சஞ்சரிக்கிறாய் -வாயுவும் எப்படி
நீ தேஜஸ் உடன் பிரகாசிக்கிராய் அக்னியும் அப்படியே
நீ ஸ்திரமாக -பூமியும் ஸ்திரமாக இருப்பது
ஸ்ரீ பாதுகையும் பூதங்களை தரிப்பதால் இந்த ஒத்த தன்மை நிறைவாகிறது –

—————————————————————-

ரகுபதி ஸங்காத் ராஜ்ய கேதம் த்யஜந்தீ
புநரபி பவதீ ஸ்வாந் தர்ஸ யந்தீ விஹாராந்
அபிஸமதித வ்ருத்திம் ஹர்ஷ கோலாஹலாநாம்
ஜநபத ஜநிதாநாம் ஜ்யாயஸா சிஞ்ஜிதேந—-883-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமனின் திருவடிகளில் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சேர்ந்ததால்,
அதுவரை ராஜ்ய பாரம் காரணமாக உண்டான துயரங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் நீ விட்டாய்.
மீண்டும் உனது உல்லாஸமான ஸஞ்சாரங்களைக் காட்டியபடி, இனிமையான நாதத்தால்,
அயோத்தியில் உண்டான இனிமையான சந்தோஷக் கூச்சல்களை மேலும் வளர்த்தாய்.

ஸ்ரீ பாதுகையே ராஜ்ஜியம் ஆண்டதில் உனக்கு வருத்தம் -ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் மீண்டு வந்து அருளியதில் உனக்கு மகிழ்ச்சி
நீ மீண்டும் உல்லாஸ நடைகளை நடத்திக் காட்டி எழுப்பிய உத்தம நாதம் நாட்டில் உண்டான கோலா ஹலங்களின் பெரும் பெருக்கத்தையும் விஞ்சி விட்டதே
சம்ஸ்லேஷம் பெற்று ஆழ்வார் உகந்து அருளுவதும் விஸ்லேஷத்தால் கதறி அருளுவதும் அருளிச் செயல்களிலே உண்டே –

—————————————————————–

ஹரி சரணம் உபக்நம் பாதுகே ஸம்ஸ்ரிதாயாம்
அதிகத பஹுசாகா வைபவம் தர்ஸயந்த்யாம்
அபஜத விதி ஹஸ்த ந்யஸ்த தர்மத்ரவாயாம்
த்வயி முகுள ஸம்ருத்திம் மௌக்திக ஸ்ரீஸ்ததாநீம்—-884-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் த்ரிவிக்ரமனாக நின்றபோது அவனது திருவடியை நீ படர்கின்ற கொழுகொம்பாகப் பற்றினாய்.
அந்தக் கொடியானது வேத சாகைகள் என்னும் பலவிதமான கிளைகளை அடைந்து பெருமை பெற்றது.
அந்தக் கொடிக்கு நான்முகன் தனது கைகளால் தர்மம் என்ற நீரை விட்டான்.
அந்த நீர் காரணமாக, அந்தக் கொடியில் தோன்றிய மொட்டுகள் போன்று உனது முத்துக்கள் காணப்படுகின்றன.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திரு உலகை அளந்த போது நீ ஒரு கொடியாய் -பெருமாளின் மேல் தூக்கிய திருவடியைக்
கொழு கொம்பாக அதை நீ பற்றி இருப்பதாய் -பிரம்மன் வார்த்த தீர்த்தம் தர்ம தீர்த்தமாய் முத்துக்களின்
சிறப்பு மொக்குகளின் வனப்பை யுடையதாய் -தோன்றுகிறதே-

—————————————————————————

கநக ருசிர காந்தி: கல்பித அசோக பாரா
க்ருத பத கமல ஸ்ரீ: க்ரீடதா மாதவேந
திசி திசி ஸுமநோபி: தர்சநீய அநுபாவா
ஸுரபி ஸமய லக்ஷ்மீம் பாதுகே புஷ்யஸி த்வம்— 885-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய தங்கம் காரணமாக சண்பக மரம் போன்று அழகாக உள்ளாய்.
உன்னை அடைந்தவர்களின் துன்பங்களை நீக்குவதால், அசோக மரம் போன்று உள்ளாய் (அசோக = அ + சோக = சோகம் அற்ற).
இனிமையுடன் விளையாடியபடி ஸ்ரீரங்கநாதனால் தனது திருவடிகளில் வைக்கப்பட்டுள்ளாய்
(மாதவ என்ற பதம் ஸ்ரீரங்கநாதனையும், வைகாஸி மாதத்தையும் குறிக்கும்; திருவடிகள் என்பது தாமரையைக் குறிக்கும்).
அனைத்துத் திசைகளிலும் உள்ள தேவர்கள் உன்னை வணங்கும்படியாகப் பெருமை கொண்டாய் (தேவர்கள் = பலவிதமான மலர்கள்).
இப்படியாக நீ வஸந்த காலத்தின் எழிலை அடைந்தாய்.

ஸ்ரீ பாதுகையே நீ தங்க மயமாய் அழகிய ஒளி மிக்க தோற்றம் உடையாய் -ஜனங்களின் துக்கச் சுமையைப் போக்கி அருளுகிறாய்-
லீலா சஞ்சாரம் செய்யும் பெருமாள் தன் திருவடித் தாமரையை வைத்து உன் சோபையைக் காட்டி அருளுகிறார்
திக்குகள் தோறும் தேவர்களும் ஞானிகளும் சேவிக்க நீ வசந்த கால சோபையை காட்டி வசந்த லஷ்மியாக விளங்குகிறாய் –
சம்பக விருஷம் அசோகா மரம் வைகாசி மாதம் தாமரை கொழித்தல் எல்லா மலர்களும் சிறப்புத் தருதல்
இவை எல்லாம் இந்த வசந்த லஷ்மிக்கு விசேஷங்கள் –

———————————————————————————————

ப்ரணிஹித பதபத்மா பாதுகே ரங்க பர்த்து:
ஸூபதர கதி ஹேது: சாரு முக்தா ப்ரவாளா
ஸ்திர பரிணத ராகாம் ஸூத்த போத அநுபத்தாம்
ஸ்வஜநயஸி முநீநாம் த்வந்மயீம் சித்த வ்ருத்திம்—-886-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது ஸ்ரீரங்கநாதனின் தாமரை மலர் போன்ற திருவடிகள் எப்போதும் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கநாதனின் உல்லாஸமான ஸஞ்சாரத்திற்குக் காரணமாக (ஜீவன்கள் மோக்ஷத்தை அடையும் கதிக்கு காரணமாக) நீ உள்ளாய்.
அழகான முத்துக்கள், பவழங்கள் கொண்டுள்ளாய் (முக்தி பெற்ற ஜீவன்களைக் கொண்டுள்ளாய்).
உறுதியான சிவந்த நிறம் கொண்டுள்ளாய் (உறுதியான பகவான் விஷயத்தில் மட்டுமே ஆசை).
தூய்மையான ஞானம் கொண்டு, உன்னை மட்டுமே பற்றி நிற்கின்ற பரதன் முதலானவர்களின் பக்திபோன்ற ஞானத்தை உன் வசப்படுத்தியுள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே யோகிகளின் உன்மயமான மநோ கதியை பக்தி பிரபத்தி மயமான நிலையாக உனக்கு ஒப்பாகச் செய்து உதவுகிறாய்
உன் உறவினராக்கிக் கொள்கிறாய் அந்த யோகிகள் த்யானம் எப்படியோ அப்படியே நீ –
உன் மீது பெருமாள் திருவடித்தாமரை -அவர்கள் த்யாநிப்பது அதே திருவடித் தாமரை -நீ சுபமாக சஞ்சாரம் நடக்கப் பெருமாளுக்கு உதவுகிறாய் –
முனிவர்கள் த்யானம் சுபதரமான நற்கதிக்கு வழி கோலும் -நீ அழகிய முத்துக்களையும் பவழங்களையும் கொண்டுள்ளாய் –
யோகிகள் தான விஷயமான பெருமாள் திரு முகத்தில் புன்சிரிப்பு முத்துப் பற்களும் திருப்பவழங்களும் தெரிகின்றன –
இது யோகியின் தான நிலையில் சுத்த பொத்தாம் -ஸ்திரமான ராகம் -சிவப்பு -இவை உண்டாகச் செய்து உனக்கு ஈடாக்கும்
ஆக உன்னையே நினைத்து இருக்கும் மநோ வருத்தி அவர்கள் மநோ வ்ருத்தியை உன் போலாக்கிக் கொண்டு உனக்கு உறவினராக்கிக் கொள்கிறாய் –

————————————————————————————

விரசித நவ பாகா ரத்ந பேதைர் விசித்ரை:
விவித விததரேகா வ்யக்தி ஸீமாவிபாகா
ஹரி சரண ஸரோஜம் ப்ரேப்ஸதாம் அர்ச்சநீயம்
ப்ரதயஸி நவநாபம் மண்டலம் பாதுகே த்வம்—-887-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பலவிதமான இரத்தினக்கற்களால் ஒன்பது பாகங்கள் உள்ளவளாக நீ ஆக்கப்பட்டாய்.
உனது பலவிதமான ரேகைகள் காரணமாக அந்த ஒன்பது பாகங்களும் ஒன்பது எல்லைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை அடைய விரும்புபவர்களால் வணங்கத்தக்கதான ஒன்பது நாபி கொண்டதால்,
நவநாபம் என்ற பெயர் கொண்ட மண்டலத்தை நீ ப்ரகாசப்படுத்துகிறாய்.

முக்தியை அடைய விரும்புபவர்கள் நவநாபம் என்ற மண்டலத்தை ஆராதிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அந்த மண்டலத்தில் ஒன்பது சக்கரங்கள் காணப்படும். இதனைப் பாதுகைக்கு ஒப்பாகக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே முத்து மாணிக்கம் வைடூர்யம் கோமேதகம் வைரம் பவளம் பத்மராகம் மரகதம் மற்றும் நீலம் என்ற
நவ ரத்னங்களால் பல பகுதிகளாகக் கட்டுப்பட்டு விளங்குகிறாய்
இந்த பாரத வர்ஷம் நாபி அரச மகள்கள் ஒன்பது பேரால் ஆளப்பட்ட போது நவ நாபம் என்ற பெயர் பெற்று கர்ம பூமியாகப் பிரசித்தி பெற்றது
தேவர்களும் தர்மம் செய்ய இங்கே வரும்படி உள்ளது -இயற்கையாகவும் செயற்கையாகவும் தெளிவான கோடுகள் மூலம் ஒன்பது பாகங்களாக
எல்லை வரை யாருக்கப் பட்டது
ஸ்ரீ ஹரி பாதாரவிந்தத்தைப் பெற விரும்புவர் உன்னை ஆஸ்ரயிப்பது போல் இந்த நவபாக பூ மண்டலத்திலும் வாழ்ந்து
கர்ம பலனால் பெறலாம் என்று பறை சாற்றி அருளுகிறாய் போலும்
ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திர ரீதியில் நவ நாப மண்டலத்தில் ஒன்பது சக்கரங்கள் அமைந்து உள்ளத்தில் திருவாராதானம் செய்து
ஸ்ரீ ஹரி பாதாரவிந்தம் அடையலாம் -நீ உன்னைப் போலதுவும் என்று சொல்லுகிறாய் போலும் –

————————————————————

பரிணத குண ஜாலா பங்கிதிபி: மௌக்திகாநாம்
பஹுவிதமணி ரஸ்மி க்ரந்தி பந்தாபிராமா
ரகுபதி பத ரக்ஷே ராஜவாஹ்யஸ்ய கும்பே
கலிதருசி: அபுஸ் த்வம் காபி நக்ஷத்ர மாலா—-888–

ரகுவம்சத்தின் அதிபதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் வரிசையானது சரடுகள் போன்றும்,
அந்த முத்துக்களின் இடையே போடப்பட்ட முடிச்சுகள் போன்று உனது இரத்தினக்கற்களும் உள்ளன.
இவை உனது இரத்தினக்கற்களில் இருந்து வெளிப்படும் ஒளி என்னும் கயிறு கொண்டு கட்டப்பட்டுள்ளன.
இப்படியாக ரகுவம்சத்தின் அரசர்களுடைய சத்ருஞ்ஜயம் என்ற பட்டத்து யானையின் தலையில் ப்ரகாசமுடன் உள்ள
(இருபத்தேமு முத்துக்களால் கோர்க்கப்பட்ட) நக்ஷத்ர மாலையாக உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே நீ பட்டத்து யானையான சத்ருஞ்ஜயனின் மச்தகத்தின் மீது எழுந்து அருளி வரும் போது
முத்துக்களின் வரிசைகளே சரடுகளாகவும் பலவித ரத்ன கிரணங்கள் கயிறுகள் போலச் சரடுகளை இணைந்து
வலை போலக் கட்டுவனவாகியும் யானையின் முகத்தில் பிரகாசிக்கும் நஷத்ர மாலையாக ஆயின –

———————————————————————-

சரித நிகில வ்ருத்தி: சாருபத்மாஸ நஸ்தா
குண நிபிடித முக்தா பங்க்தி பத்தாக்ஷமலா
ஸலிதம் அதிவஸந்தீ பாதுகே ரங்க பர்த்து:
சரண கமலமந்தர் பிம்பிதம் த்யாயஸீவ—-889-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸஞ்சாரம் என்னும் அன்றாட கர்மங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு,
தாமரை மலர் போன்ற ஆஸனத்தில் (பாதபீடம்) நீ பத்மாஸன நிலையில் அமர்ந்து கொள்கிறாய்.
உயர்ந்த குணங்கள் என்னும் நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களின் வரிசையாலாகிய ஜபமாலையை அணிந்து கொள்கிறாய்.
ஸ்ரீரங்கநாதனுக்கு மிகவும் அருகில் அமர்ந்து கொண்டு, உன்னுள்ளே பிரதிபலிக்கும் அவனது திருவடித் தாமரைகளைத் த்யானித்தபடி உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே -சஞ்சாரங்களை எல்லாம் முடித்துவிட்டு பத்ம பீடத்தில் எழுந்து அருளி குணம் நிரம்பிய நூலில்
நெருக்கமாகத் தொடுக்கப் பெற்றுள்ள முத்துக்கள் வரிசையாகத் தாவடமாகக் கழுத்தில் போட்டுக் கொண்டது போல் இருந்து கொண்டு
ஸ்ரீ ரங்க நாதனுக்கு அருகிலேயே ஆசனம் இட்டபடி உன்னில் பிரதிபலிக்கிற பெருமாள் திருவடித் தாமரையை த்யாநிக்கிறாய் போலும் –
இது பஞ்சகால பிரக்ரியையில் சொல்லப்பட்ட முதல் நான்கையும் -அபிலமா நாதி ஸ்வாதாயம் முடிய செவ்வனே செய்து
யோகத்தில் உட்காரும் சதாசார நிஷ்டனுடைய நிலைக்கும்
யம நியமாதி அஷ்டாங்க பிரக்ரியைகளை அப்யசித்து முடித்து யோகத்தில் இழியும் உபாசகன் நிலைக்கும் பொருந்தும்
அஷமாலை கழுத்தில் -பத்மாசனத்தில் அவர்கள் ஹிருதயத்தில் ஸ்ரீ ரங்க நாதன் பிரதிபிம்பம் தோன்றும்
த்யானம் செய்யப் பாங்காக அவர்கள் விஷயத்தில் -குண நிபிடித்த முக்தா பங்கக்தி -எனபது உள்ளே நெருக்கமாக அடக்கப்பட்ட
பிராணவாயு விடுவதாகிற பிராணாயாமம் ஸூ சிப்பிக்கப் படுகிறது –

——————————————————————–

அநுபதி பரிரக்ஷந் ஏக புத்ர அபிமாநாத்
புவநம் இதம் அசேஷம் பாதுகே ரங்கநாத:
நிஹ பத நிஹிதாயாம் தேவி திஷ்டந் வ்ரஜந் வா
த்வயி நிஹித பரோ அபூத் கிம் புநஸ் ஸ்வாபம் ருச்சந்—-890-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஒரு புத்திரன் மட்டுமே இருந்தால் அவனிடம் பெற்றவர்களுக்கு எத்தனை ப்ரியம் இருக்குமோ
அது போன்று அனைத்து லோகங்களையும் ப்ரியமாகக் காப்பாற்றியபடி ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
அவன் நிற்கும்போதும், நடக்கும்போதும் தனது ராஜ்ய பாரத்தைத் திருவடியில் உள்ள உன் மீது வைக்கிறான்.
அவன் உறங்கும்போதும் இப்படி செய்வதைக் கூறவும் வேண்டுமோ?

ஸ்ரீ பாதுகா தேவியே இந்த உலகம் முழுவதையும் ரசித்து அருளும் ஸ்ரீ ரங்க நாதன் -ஒரு பலனையும் கருதாமல் -ஒரே குமாரன் உள்ள
தாய் தந்தையர் புத்திரன் மேல் வைக்கும் அபிமானம் போலே உலக மக்கள் ஒவ்வொருவர் இடமும் தனித்தனியே வைத்து அருளுகிறாரே
அதற்காகவே உன் மேல் ரஷணச் சுமையை வைத்து இருக்கிறார் -விழித்து இருக்கும் போதும் நிற்கும் போதும் நடக்கும் போதும்
இப்படியே யானால் பெருமாள் கண் வளரும் பொழுது கேட்க வேணுமோ
நீ திருவடியையும் ஸ்ரீ ரங்க நாதனையும் தாங்குவது உலக ரஷண சுமையையும் சேர்த்து தானே -நீ பத ரஷணத்தை
-திருவடியைக் காக்கும் சுமையை -ஏற்றுக் கொண்டுள்ளதால் தானே நடக்க முடிகிறது
உன்னை நம்பி ஜகத் ரஷணத்திற்கு ஸ்தானம் கொடுத்து அருளி உள்ளார் –
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பரிஷிக்கப் பெற்று குரு ஸ்தானத்தில் அமர்த்தப் பெற்று உள்ளார்கள் –

———————————————————————————————

த்வரிதம் உபகதாநாம் ஸ்ரீமதோ ரங்க பர்த்து:
த்வத் உபஹித பதஸ்ய ஸ்வைர யாத்ரோத்ஸவேஷு
முகயதி திகந்தாந் முஹ்யதாம் த்வத் ப்ரசஸ்தௌ
விஹித குஸும வ்ருஷ்டி: வ்யாவகோஷீ ஸுராணாம்—-891-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட திருவடிகளுடன் புறப்படுகின்ற ஸ்ரீரங்கநாச்சியாருடன்
கூடியவனான ஸ்ரீரங்கநாதன் தனது விருப்பப்படி, எந்தவிதமான தடையும் இன்றி வெகுவேகமாக ஸஞ்சாரம் செய்கிறான்.
அப்போது உன்னைத் துதிக்கவேண்டும் என்ற மயக்கத்தில் நின்ற தேவர்கள், உன் மீது மலர்கள் தூவி,
ஒருவரை ஒருவர் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர். இந்த ஒலியானது அனைத்துத் திசைகளையும் எதிரொலிக்கச் செய்கிறது.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் உன்னிடத்தில் திருவடிகளையும் ரஷண அதிகாராத்தையும் வைத்து இஷ்டம் போல் சஞ்சரிக்கிறான்
அந்த ஸ்ரீ யபதி ஸ்ரீ ரங்க நாதனை சேவிக்க தேவர்கள் விரைகின்றனர் -அவர்கள் உன்னை ஸ்துதிக்க இழிகின்றனர்
பெரும் மோஹம்-தமக்குள்ளே பெரும் ஆரவாரம் -பூ மாரி பொழிகின்றனர் –
பலத்த இரைச்சல் எல்லாம் உன் புகழ் திசைகளின் எல்லை எங்கும் எட்டுமே –

—————————————————————–

மநஸி நியம யுக்தே வர்த்தமாநா முநீநாம்
ப்ரதிபதம் உபயாந்தீ பாவநீய க்ரமத்வம்
ஸ்ருதிரிவ நிஜ சப்தை: பாதுகே ரங்கபர்த்து:
பதம் அநிதர கம்யம் வ்யங்க்தும் அர்ஹா த்வமேவ—892–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தெய்வபக்தி, ஆசார்யபக்தி, ஸத்யம், காமக்ரோதம் இல்லாமை, பொறாமை இல்லாமை
போன்ற பலவிதமான தன்மைகளுடன் உள்ள முனிவர்களின் மனதில் நீ உள்ளாய்.
உன்னுடைய ஒவ்வொரு அடியிலும் (பதத்திலும்) கவனிக்கத்தக்க நடையைக் (பொருளை) கொண்டுள்ளாய்.
இப்படியாக நீ ச்ருதி போன்று இனிமையான சொற்களை உனது நாதங்களால் வெளிப்படுத்துகிறாய்.
வேறு எதனாலும் விளக்க இயலாத திருவரங்கனின் திருவடிகளை நீயே விளக்கும் தகுதி பெற்றவளாக உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே பக்தி ப்ரம்மசர்யம் அனுஷ்டானம் எனபது போன்ற நியமங்களுடன் முனிவர்கள் மனச்சால் உன்னை சாஷாத் கரிக்கவும்
நீ அங்கு இருந்து கொண்டு ஒவ்வொரு திருவடி வாய்ப்பாகக் கவனித்து வைக்கப்பட்டு நடக்கிறாய்
வேத பதங்கள் முன் பின்னாக வைத்து க்ரமம் என்று படிக்கப் படுபவன் உண்டே அது போலவே இதுவும்
நீயும் ஸ்ருதி போலவே –மற்று ஒன்றால் அறிய முடியாத ஸ்ரீ ரங்க நாத ஸ்வரூபத்தை சுருதி ஸ்ரீ ஸூக்திகளால் விளக்கிக் காட்ட வல்லதே
அதே போலே மற்று ஒன்றினால் அடைய முடியாத ஸ்ரீ ரங்க நாத திருப் பாத கமலத்தை நீயே உன் திருவடி வைப்பினால்
நாதங்களால் தெளிவாக இதோ என்று பிரத்யஷமாக எடுத்துக் காட்ட வல்லாய் –

—————————————————————————-

அவிகல நிஜ சந்த்ராலோக ஸந்தர்சநீயா
ப்ரதிகலம் உபபோக்யா பாதுகே ரங்க பர்த்து:
முகுளயிதும் அசேஷம் மௌக்திக ஜ்யோத்ஸ்நயா ந:
ப்ரபவஸி திமிரௌகம் பெர்ணமாஸீ நிசேவ—-893–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தோஷங்கள் இல்லாத தூய்மையான தங்கத்தால் இழைக்கப்பட்டு
(பூர்ணமான சந்த்ரனின் ஒளியால்) நீ மிகவும் அழகாக உள்ளாய். ஒவ்வொரு நொடியிலும் (சந்த்ரனின் கலையிலும்)
நீ அனுபவிக்கத்தக்கவளாக உள்ளாய். உனது முத்துக்களின் ஒளி என்ற நிலவு மூலமாக
நீ பௌர்ணமி ராத்திரி போன்று நின்று, எங்கள் அறியாமை என்ற இருளை ஒழிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்றுள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே நீ மாசில்லாத தங்கத் திருமேனி அழகை உடைத்தாய் ஒவ்வொரு ஷணமும் விடாது அனுபவிக்கத் தக்கவலாய் இருக்கிறாய்
பூர்ண சந்தரன் போலே -முத்து ஒளி தரும் நிலவு பூர்ண சந்திர பிரகாசத்தையே தருகிறது -எங்கள் அஜ்ஞ்ஞானம் போக்கி அருளுகிறது –

————————————————————————

ஹம்ஸ ஸ்ரேணீ பரிசித கதி: ஹாரிணீ கல்மஷாணாம்
மௌளௌ சம்போ: ஸ்திதிம் அதிகதா முக்த சந்த்ர அநுபத்தா
ராஜ்ஞாம் ஏகா ரகுகுல புவாம் ஸம்யக் உத்தாரிகா த்வம்
காலே தஸ்மிந் க்ஷிதிம் அதிகதா பாதுகே ஜாஹ்நவீவ—894-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அன்னப் பறவைகள் போன்ற ஸாதுக்களால் வணங்கப்பட்ட ஸஞ்சாரம் கொண்டுள்ளாய்.
அனைத்து விதமான பாவங்களையும் நீக்குகிறாய். சிவனுடைய தலையில் அமர்கின்ற இருப்பை அடைந்தாய்.
அழகான தங்கத்துடன் கூடியவளாக உள்ளாய். ரகுகுலத்தின் அரசர்கள் அனைவரையும், வேறு எந்தத் துணையும்
இல்லாமல் கரை ஏற்றி, உயர்ந்த கதி அளித்தாய். இப்படியாக நீ கங்கையைப் போன்று இந்தப் பூமியை அடைந்தாய்

கங்கையில் அன்னங்கள் உலவும்; ஸஞ்சாரம் என்பது கங்கையில் ப்ரவாஹம்; சிவனின் தலையில் கங்கையும் உள்ளது;
பாவங்கள் நீக்குதல் கங்கைக்கும் இயல்பு.

ஸ்ரீ பாதுகையே நீ கங்கையை ஒக்கிறாய்-உன் சஞ்சாரம் பரமஹம்சர்களால் சேவிக்கப்படுகிறது-
கங்கா பிரவாஹமோ ஹம்ஸ பஷிகளுக்கு விஹார ஸ்தலம்
கல்மஷங்களை-பாபங்களை இருவருமே நீக்கி அருளுகிறீர்கள்-
இருவருமே சிவன் தலையில் இருப்புப் பெற்றவர்கள் -அங்கு கூடவே இளம் பிறை உள்ளது -கங்கைக்குப் பொருந்தும் –
நீ சுத்தப் பொன்னுருவாய் உள்ளாய்-
இருவரும் அசஹாயமாக அரசர்களை -கங்கை -சகர புத்ரர்களை -நீ ஸ்ரீ பரதாழ்வான் போன்ற ரகுகுல அரசர்களை
-கை தூக்கி கரை ஏற்றி அருளுகிறீர்கள்
கங்கை பகீரத பிரயத்தனத்தால் பூமிக்கு வந்தது என்றால் நீயோ ஸ்ரீ பரதாழ்வான் முயற்சியால் நாட்டுக்கு வந்து அருளினாய் –

—————————————————————————————————

ஸ்வச்ச ஆகாராம் ச்ருதி ஸுரபிதாம் ஸ்வாது பாவ பந்நாம்
மார்க்கே மார்க்கே மஹித விபவாம் பாதுகே தீர்த்த பேதை:
சீத ஸ்பர்சாம் ஸ்ரம விநயிநீம் காஹதே மந்த மந்தம்
க்ரீடாலோல: கமல நிலயா தத்த ஹஸ்தோ யுவா த்வாம்—-895–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் தெளிந்த ரூபம் கொண்டுள்ளாய். வேதங்கள் மூலம் வாஸனை அளிக்கப்படுகிறாய்.
சிறந்த சுவையுடன் உள்ளாய். நீ ஸஞ்சாரம் செல்கின்ற வழி எங்கும் பல ஆசார்யர்களால் கொண்டாடப்படுகிறாய்.
குளிர்ந்த தன்மையுடன் உள்ளாய். உன்னை அடைந்தவர்களின் துன்பங்களையும் களைப்பையும் நீக்குகிறாய்.
இப்படியாக காவேரி போன்று பல தன்மைகளில் ஒத்திருக்கும் உன்னுடன் விளையாடி மகிழ ஸ்ரீரங்கநாதன் ப்ரீதியுடன் உள்ளான்.
அவன் ஸ்ரீரங்கநாச்சியாரால் திருக்கரங்கள் மெதுவாகப் பிடித்து விடப்பட்டு, உன்மீது மெதுவாக இறங்குகிறான்
(காவேரியில் ஜலக்ரீடை செய்ய இறங்குகிறான். காவேரி போன்றே தன்மைகள் கொண்ட பாதுகையையும் தரித்துக் கொள்கிறான்).

ஸ்ரீ பாதுகையே உன்னில் தன் திருவடிகளை வைப்பது எம்பெருமானுக்கு மிக போக்யமான ஜலக்ரீடை செய்வதற்கு ஒப்பான ஆனந்தகரமான செயலாகும்
நீ தெளிவான மாசற்ற பளபளப்பான திருமேனி யுடையாய் –உன்னில் ஸ்ருதியின் பரிமளம் கமழ்கிறது -மதுரமானவள் இனியவள் -போக்யம் மிக்கவள்
உனது சஞ்சாரத்தால் வழியில் எங்கும் தீர்த்தர் புன்யர் -பாவனர்களாலே வழிபடப் பெற்றவள் –
குளிர்ச்சியுடன் இருந்து பெருமாள் திருவடிக்கு ஸூ கம் தருபவள் -உன்னைத் தரித்தாலே பெருமாளுக்கு சரமம் தீர்ந்து விடும்
பிராட்டி கைலாகு கொடுக்க ஜலக்ரீடை -காவேரி போன்ற மகா நதிகளில் -மடுவொன்றில் இழியும் பொழுது போலே
அனுபவ லயிப்பினால் காலம் தாழ்த்திக் கொண்டே உன்னை தரிக்கிறான் -நித்ய யுவா தம்பதிகள் –
ஸ்ரீ பாதுகாநிவேசம் சதாசார்யர் கடாஷம் பெறுவதை நிரூப்பிக்கும் -தீர்த்தர் ஆழ்வார் ஸ்ரீ பாஷ்யகாரர் குரு பரம்பரையை நினைவூட்டும்

—————————————————————————————

அப்யஸ் யந்த்யோ: க்ரமம் அநுபமம் ரங்க பர்த்து: விஹாரேண
ஸ்தாநே ஸ்தாநே ஸ்வர பரிணதிம் லம்பித: தத்த தர்ஹாம்
பர்யாயேண ப்ரஹித பதயோ: பாதுகே ஸ்ருத்யுதார:
சிஞ்ஜாநாத: ஸ்புரதி யுவயோ: ஸ்ருங்கலா பந்தரம்ய:—896–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைளே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலத்தில் ஒப்பில்லாத அடிவைப்பை மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள்.
ஒன்று மாற்றி ஒன்றாக, ஒருவர் மாற்றி ஒருவராக அவனது திருவடிகளைச் செலுத்தியபடி உள்ளீர்கள்.
ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த இடத்திற்கு ஏற்ப ஸ்வரத்தின் மாறுபாட்டை உங்கள் நாதங்களில் காண முடிகிறது.
இப்படியாக செவிக்கினிய உங்கள் நாதம், சங்கிலிப் பிணைப்பு போன்று அழகாக உள்ளது.

இங்கு க்ரமபாடம் கூறப்படுகிறது. முதல் இரண்டு பதங்களையும் முதலில் படிக்கவேண்டும்.
அடுத்து இரண்டாவது, மூன்றாவது பதங்கள்; மூன்றாவது, நான்காவது பதங்கள் என்று படிப்பது க்ரமபாடம் ஆகும்.
அதாவது “அப்யஸ்ஸந்த்யோ: க்ரமம்”, “க்ரமம் அநுபமம்”, “அநுபமம் ரங்கபர்த்து:”, ”ரங்கபர்த்து: விஹாரே” என்று படிப்பதாகும்.
இத்தகைய சங்கிலி போன்ற பாராயணம் போன்று ஸ்ரீரங்கநாதனின் நடையழகு உள்ளது என்கிறார்.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதன் உன்னைத் தரித்துக் கொண்டு சஞ்சரிக்கையில் ஒப்பற்ற வேதக்ரம பாடத்தை நிகர்த்து உன் திரு அடி வாய்ப்பும்
ஓன்று மாற்றி ஓன்று நிகழ்கிறது -அந்தந்த இடத்தில் க்ரம பாடத்தில் உதாத்தம் அநுதாத்தம் என்ற ஸ்வர பேதமும்
உனக்கு திருவடி ஓசையில் மேடு பள்ளம் என்பதற்கு ஏற்ப மாறுதலும் ஏற்படும் –
உனது கேட்க இனிய நாதம் சங்கிலி போலே தொடர்ந்து கேட்கும் -வேத ஒலி போலவே –

———————————————————————————————

ஆஸந்நாம் திவஸம் அபுந: நக்தம் ஆபாதயந்தீ
ஸ்பீதா லோகா மணி பிரபித: ப்ராணிநாம் அஸ்த தோஷா
ப்ரஹ்வை: ஜுஷ்டா விபுத நிவஹை: பாதுகே ரங்க பர்த்து:
பாத அம்போஜே திசதி பவதீ பூர்வ ஸந்த்யேவ காந்திம்—897–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை நெருங்கி வந்தவர்களுக்கு மறுபடியும் அறியாமை என்னும் இரவு வராமல்,
பகலை உண்டாக்கியபடி உள்ளாய். உனது இரத்தினக்கற்களின் ஒளி மூலம் அனைத்து திசைகளிலும்
ப்ரகாசம் ஏற்படுத்துபவளாக உள்ளாய். மக்களின் தோஷங்கள், பாவங்கள் என்னும் இரவை நீங்குபவளாக உள்ளாய்.
தேவர்களின் கூட்டத்தால் வணங்கப்பட்டவளாக உள்ளாய். இப்படியாக உதய கால வேளை போன்றுள்ள நீ,
ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் தாமரை மலரின் மலர்த்தியை ஏற்படுத்துகிறாய்.

ஸ்ரீ பாதுகையே நீ காலை சந்த்யை போல் பொலிவுடன் விளங்குகிறாய் –
உன்னை அன்டினவருக்கு பகலை உண்டாக்கி மீண்டும் இருள் வராதபடி அனுக்ரஹம் செய்து அருளுகிறாய் –
உன் ரத்னங்கள் எல்லா பக்கத்திலும் ஒளியைப் பரப்புகின்றன –
உன்னை தேவர் கூட்டங்கள் வணங்கும் –காலை சந்தா உபாசனம் செய்கிறார்கள் -அந்தண ஸ்ரேஷ்டர்கள்
சந்த்யை தாமரையை மலர்விக்கும் -நீயோ ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடித்தாமரை பூவில் சோபையை உண்டாக்குகிறாய் –

————————————————————————–

ரம்ய ஆலோகா லளித கமநா பத்மராக அதரோஷ்டீ
மத்யே க்ஷாமா மணி வலயிநீ மௌக்திக வ்யக்த ஹாஸா
ஸ்யாமா நித்யம் ஹரி தமணிபி: சார்ங்கிண: பாத ரக்ஷே
மந்யே தாது: பவஸி மஹிளா நிர்மிதௌ மாத்ருகா த்வம்—-898–

சார்ங்கம் என்ற வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் அழகிய தோற்றத்தைக் கொண்டவளாக,
மெதுவான அழகிய நடையைக் கொண்டவளாக, பத்மராகக் கற்களின் சிவந்த தன்மையால் அழகான உதடுகள் கொண்டவளாக,
நடுப்பாகத்தில் (இடை) சிறுத்தவளாக, இரத்தினக்கற்களின் கூட்டம் என்ற வளையல்கள் அணிந்தவளாக,
முத்துக்கள் போன்ற அழகான சிரிப்பைக் கொண்டவளாக, பச்சைக்கல் மூலம் என்றும் யுவதியாகத் தோற்றம் அளிப்பவளாக நீ உள்ளாய்.
இப்படியாக நான்முகன் உத்தமப் பெண்களைப் படைக்க உதவுகின்ற மாதிரி உருவமாக (model) நீ உள்ளாய் என்று எண்ணுகிறேன்.

ஸ்ரீ பகவானின் பாதுகையே ப்ர்ஷ்மா சிருஷ்டி செய்யும் போது உத்தம மாது ஒருத்தியை படைக்க முன் மாதிரி பிரதி நீயே
அழகிய பார்வை -பிரகாசம் /சிறந்த நடை -சஞ்சாரம் -மெல்லிடையாள் -நடுப்பகுதியில் அகலம் குறைந்து –
பத்ம ராகக் கற்கள் போன்ற திரு உதடுகள் -ரத்னங்களான திருக்கை வளையல்கள் -நித்ய யுவதி –
மரகத கற்களால் கருநிறத் தோற்றம் -இந்த குண ஒன்றுமை -காரணம் –

ரம்யா : அழகான – லோகா : பிராகாரம் உடையவள் (பார்வையை உடையவள்) – லளித : மெதுவாய் அழகான –
கமநா : நடையையுடையவள் – மாத்ருகா : பார்த்துக் கொண்டு அதே மாதிரி பண்ணுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு உருவமாய்

ஹே! சார்ங்கம் எனும் ஆயுதமுடைய பெருமாளின் பாதுகையே!
உன்னிடமிருந்து வெளிப்படும் காந்தியானது யுவதிகளின் கண் பார்வையின் சோபைப் போலுள்ளது.
உன்னுடைய நடையழகு லளிதமாயுள்ளது. உன்பேரில் பதிக்கப் பெற்றுள்ள பத்மராக கற்கள் அந்த சுந்தரியின்
சிவந்த கீழ் மேல் உதடுகள் போலுள்ளது. உன்னுடைய சிறுத்த மத்ய பாகம் குறுகிய இடையை ஒத்துள்ளது.
உன் மேல் இழைக்கப்பட்ட ரத்ன கூட்டங்கள் வளையல் போலுள்ளது. உன்னிடத்துள்ள முத்துக்களின் காந்தி
அழகியதான பல்வரிசைக் கொண்டு புன்சிரிப்பை நினைவுறுத்துகின்றது. உன்னுடைய மரகத கற்களின் காந்தி
பசுமையானதும், சௌகுமார்யம் முதலான குணங்களால் சோபிக்கும் யுவதி போன்று, பிரும்மா உயர்ந்த
ஸ்தீரிகளை ஸ்ருஷ்டிப்பதற்காக அடையாளமாக பெருமாள் ஸ்ருஷ்டித்த ஒரு பெண் பிரதிமையென்று நினைக்கின்றேன்.

இந்த சுலோகத்தினை அதியற்புதமாய் ஒரு சிலேடை நடையில் அமைத்துள்ளார்.
இதிலுள்ள “நித்ய“ என்னும் ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு மீதமுள்ள பதங்களோடு சேர்த்து
விசேஷமான அர்த்தங்களைக் காண்போம்!
நித்யம் ரம்யாலோகா – எப்பொழுதும் தெளிவும், ஆனந்தமும் கொண்ட ஆத்மாவிலிருந்து உண்டான
வெளிப்படையான தேஜஸ்ஸை உடைத்தாயிருக்கை.
நித்யம் லலிதகமனா – ஜனங்களுக்கு நடையில் பல கோணல், விகாரங்கள் இருப்பது போல் அவர்கள் கடைபிடிக்கும்
அனுஷ்டானத்திலும் பல தோஷங்கள் உண்டு. அம்மாதிரியெல்லாம் இல்லாமல் சாஸ்திர ரீதியாய், ஸத் ஸம்ப்ரதாயமான
ஆசார அனுஷ்டானங்களை விதிப்படிக்கும், பெரியவர்களது உபதேச க்ரமபடிக்கும், சிரத்தை, பக்தி, விசுவாசத்தோடு ,
ஆடம்பரம், அஹங்காரம், பிரதிபலன்கள் ஏதும் எதிர்பார்க்காமல், எப்போதும் ஒரே மாதிரியாய் அனுஷ்டிப்பது.
நித்யம் பத்மராகாத்ரோஷ்டி தன்னுடைய நற்குணங்களாலும், நல்வாக்கினாலும், தம்முடைய வாக்கு,
கேட்பவர்களிடத்து ஆனந்தமான மெய்யுணர்வு ஏற்படும்படி இருக்கை.
நித்யம் மத்யே க்ஷாமா இத்தனை பெருமைகளும், யோக்யதைகளும் இருந்தும் கூட பவ்யமாகயிருத்தல்.
நித்யம் மணிவலயிநி – வேதம் கூறும் சாஸ்திரங்களையும், அது குறித்த பூர்வாச்சார்யர்களுடைய விளக்கங்களையும்,
வியாக்யானங்களையும் எப்போதும் ஆபரணம் போன்று நினைவில் கொண்டிருக்கை
நித்யம் மெளக்திகவ்யக்தஹாஸா – எப்போதும் தன்னுடைய சௌஹார்த்ததாலும் (எல்லாரையும் அன்போடு அணைத்துச் செல்லும் குணம்)
மலர்ச்சியோடு கூடிய தோற்றத்தினாலும் எப்போதும் இவர் நம்மோடுயிருந்து அருள வேண்டும் என்றிருக்கை.
நித்யம் ஸ்யாமா ஹிதமணிபி – நல்ல இறையனுபவத்தாலே காமக்ரோதாதிகள் அறவேயொழிந்து, புத்தி தெளிவடைந்து,
அதனால் சரீரம் நல்ல தேஜஸ்ஸையடைந்திருக்கை.
நித்யம் சார்ங்கிண: பாதரக்ஷே – பெருமாளுக்கு எந்தவிதமான அபராதங்களும் ஜனங்கள் செய்யமால்,
அபஹாரம் வராதபடிக்கு நித்ய ரக்ஷகர்களாய் இருக்கை. இதற்கு ஜனங்களுக்குப் பெருமாளைக் குறித்த
தெளிவான அறிவு வேண்டும். அதனை பல ப்ரமாணங்கள் மூலம் புகட்டும் தெளிவு வேண்டும்.
இவைகள் தாம் ஸதாச்சார்யனுடைய லக்ஷணங்கள். அவர்களால் சிக்ஷையடைந்து தேறிய நல்ல சீடர்களின் லக்ஷணமும் ஆகும்.

—————————————————————————

ஸ்தித்வா பூர்வம் க்வசந பவதீ பத்ர பீடஸ்ய மத்யே
ரத்ந உதஞ்சத் கிரண நிகரா ரங்கிண: பாத ரக்ஷே
வ்யாகீர்ணாநாம் ந்ருபதி விரஹாத் தேவி வர்ணாஸ்ரமாணாம்
நூநம் ஸீமா விபஜந ஸஹம் நிர்மமே ஸூத்ர பாதம்—899–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமன் கானகம் சென்றபோது, அரசன் இல்லாத காரணத்தினால்
அயோத்தியில் வர்ணங்களும், ஆச்ரமங்களும் (வர்ணம் = அந்தணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன்;
ஆச்ரமம் = ப்ரஹ்மசர்யம், க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம், ஸந்யாஸம்) எந்தவிதமான பிரிவும் இல்லாமல் ஒன்றுடன் ஒன்று கலந்து நின்றன.
அப்போது உனது இரத்தினக் கற்களின் மூலமாக எழுகின்ற ஒளியானது, நூல் போல் நின்று,
அந்த வர்ணாஸ்ரமங்களைச் சரியான எல்லையுடன் பிரித்து வைத்தன. இதனை நீ செய்தாய் போலும்.

ஸ்ரீ ரங்க நாத பாதுகையே கோசல நாட்டில் ராஜா ஒருவரும் இல்லாத ஒரு கால கட்டித்தில் வர்ணக் கலப்பு
ஆஸ்ரம கலப்பு ஏற்பட்ட போது நீ சிம்ஹாசனம் ஏறி உன் ரத்ன கிரணக் கூட்டத்தால்
நூல் இழை பிடித்தால் போல் நியமங்களை எல்லை வகுத்து நிர்ணயம் செய்து அருளினாய் –

——————————————————————–

மாதர் மஞ்ஜுஸ்வந பரிணத ப்ரார்த்தநா வாக்ய பூர்வம்
நிக்ஷிப்தாயாம் த்வயி சரணயோ: பாதுகே ரங்க பர்த்து:
த்வயி ஆயாத்தம் கிமபி குசலம் ஜாநதீநாம் ப்ரஜாநாம்
பர்யாப்தம் தத் ந கலு ந பவத்யாத்ம நிக்ஷேப க்ருத்யம்—-900-

இந்த உலகைக் காப்பாற்றும் தாய் போன்ற பாதுகையே! உன்னை ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் ஸமர்ப்பிக்கின்றனர்.
அப்போது நீ, ”என்னை இனி நீ காக்க வேண்டும், வேறு கதி இல்லை”, என்று உனது இனிய நாதங்கள் மூலம்
ஸ்ரீரங்கநாதனிடம் ப்ரபத்தியைச் செய்கிறாய். இந்தச் செயல் மூலம் தங்களது அனைத்து நன்மைகளும்
இனி பாதுகை மூலவே கிட்டிவிடும் என்று அறிகின்ற மக்களுக்கு, நீ செய்த பரஸமர்ப்பணமே போதுமானதாக ஆகிறது
(தனியாக நாம் அனுஷ்டிக்க வேண்டியதில்லை என்று எண்ணுகின்றனர். அதாவது, நமக்காக பாதுகையே ப்ரபத்தி செய்துவிடுகிறாள்).

ஸ்ரீ பாதுகா தேவியே -ஆராதரர் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிக்கும் போது இனிய நாதம் வெளிப்படுகிறது –
நான் சமர்ப்பிக்கப்படுகிறேன் – என்னை ரஷிப்பது உனது பரம் -அதன் பயனாக வரும் பலமும் உனக்கே –
அநந்யகதிகள் -ஆகிஞ்சன்யம் உடையோம் -பிரார்த்தனை அனுஷ்டானம் –
யோக ஷேமம் சகல ஜகதாம் த்வய்யதீனம் ஸ ஜாநன்-
ஆசார்யர்கள் -ஸ்ரீ பாதுகா ச்தாதனம் -நமக்காக பிரபத்தி செய்து அருளுகிறார்கள்
ஸ்ரீ பாதுகா சஞ்சாரம் இத்தை நமக்கு அறிவித்து உணர வைத்து அருளுகிறது என்றவாறு –

கிமபிகுசலம் : எல்லா நன்மைகளும் இந்த ஸம்ஸாரபந்தம் விடுபட்டு பெருமாளையடைவது –
நபவத்யாத்ம : அவர்களுடைய ஆத்ம நிக்ஷேபணத்திற்கு போதுமானதாக ஆகிறது.
நாம் பாதுகையையே சரணமடைந்து விட்டால் நாம் பாதுகையினோடு சேர்ந்தவராகி விடுவோம்.
நாம் பாதுகையின் வஸ்துவாகி விடுவோம்.
நம்முடைய பாதுகையின் சம்பந்த்த்தினால் தானும் தன்னைச் சேர்ந்த்தான நம்மையும் ஸமர்ப்பணத்தில்
உள்ளடக்கியதாகவன்றோ பாதுகை விளங்கும்!.
இந்த எளிய ஸமர்ப்பணம் போதுமே! வேறொரு பிரயத்தனம் அவசியமா என்ன..?

——————————————————————

நித்யம் ரங்க க்ஷிதிபதி பத ந்யாஸ தந்ய ஆத்மந: தே
சிஞ்ஜாநாதம் ஸ்ரவண மதுரம் பாதுகே தீர்க்கயந்த:
காலே தஸ்மிந் கரணவிகம க்லேச ஜாதம் விஹந்யு:
ஸந்தாபம் நஸ்தருண துளஸீ கந்திநோ கந்த வாஹா:—901-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இன்மையான நாதம் என்பது ஸ்ரீரங்கநாதனின் ஒவ்வொரு அடிவைப்பிலும்,
மேலே ஓங்கிய சிறப்பை அடைகிறது. இந்த நாதத்தை வெகுதூரம்வரை கொண்டு செல்லும் காற்றானது,
தன்னுடன் ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் உள்ள துளஸியின் நறுமணத்தையும் சேர்த்து கொண்டு செல்கிறது.
இப்படிப்பட்ட காற்றானது மரணத்தின் பிடியில் நிற்பவர்களின், இந்த்ரிய அழிதலால் உண்டான வேதனைகளை மாற்றி,
அவர்களின் துன்பங்களை நீக்க வேண்டும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடி வைப்பை எப்போதும் பெற்று இருக்கிறாய் -உன் திவ்ய நாதம் அத்திசையில் இருந்து வீசும் காற்றால்
வீச்சு நீட்டிப்பப் பெற்று வரும் பெருமாள் சாத்திக் கொண்டு அருளும் செலும் துளசியின் திரு மணமும் இக்காற்றால் கொண்டு வரப்படும் –
அந்திம தசையில் என் அவயவங்கள் படும் வேதனை தீரும்படி இந்த நல்ல த்வனி துளசி பரிமளம் குளிர்காற்று
எல்லாம் என் மீது வீசித் தாபத்தைப் போக்கி அருள வேணும் –

நித்யம் = எப்போதும் – ரங்க்க்ஷிதிபதி = ஸ்ரீரங்க பூமிக்கு எஜமான் ஆகிய – ச்ரவண = கேட்பதற்கு –
மதுரம் = மதுரமாயுள்ள – சிஞ்ஜாநாதம் = சலங்கைக்களுக்குள் உள்ள இரத்னங்களால் உண்டாகும் சப்தம்
துளஸீகந்தினோ = துளசியின் மணம் – கந்தவாஹா = காற்றில் (பரவச்செய்து) க்லேச = கஷ்டத்தினாலே –
ஜாதம் = உண்டாயிருக்கின்ற – ஸந்தாபம் = மரணவேதனையை – விஹண்யு: = போக்கடிக்க வேணும்.

ஸதா ஸ்ரீரங்கபதியின் திருவடிகளைத் தாங்கக்கூடிய பாதுகையே! மரணம் என்னை நெருங்கும் போது என்னுடைய
ஐந்து இந்திரியங்களும் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டு வரும். அப்போது நான் பொறுக்கமுடியாத வேதனைக்கு உள்ளாவேன்.
அந்த தருணத்தில் உன்னைத் தழுவி வரும் காற்றில் உன்னுடைய குளுமையையும், உன்னிடத்துள்ள துளஸியின் பரிமணத்தையும்,
இனிமையான உன் பாதுகையிலுள்ள ரத்னங்களிலிருந்து வெளிப்படும் மதுரஓசையும் கலந்து என் சுவாசத்தில் துளஸியின் பரிமணமும்,
காதில் மதுரமான ஓசையும், தேஹமெங்கும் உன்னுடைய குளுமையையும் பரவச் செய்ய வேணும்.

மரண வேதனையில் தவிக்கும் என் இந்திரியங்களுக்கு ஆறுதலை அளித்து அவ்வேதனையை நீ
எங்கள் விஷயத்தில் பரம கிருபைப் பண்ணிப் போக்க வேண்டும்“ என்று பிரார்த்திக்கின்றார்.

அந்திம தசை நெருங்கி அந்தமில் பெருநாடு புகுவதற்கு ஆச்சார்ய கடாக்ஷம் அவசியம் தேவை என்கிறார்.

——————————————————————

ஸம்ஸாரத்வ ஸ்ரம ப்ரிணதம் ஸம்ஸ்ரிதாநாம் ஜநாநாம்
தாபம் ஸத்ய: சமயிதுமலம் சார்ங்கிண: பாதுகே த்வம்
சந்த்ராபீடே ப்ரணமதி நவாம் சந்த்ரிகாம் ஆபிபத்பி:
தாரா நிர்யத் ஸலில கணிகா சீகரைஸ் சந்த்ர காந்தை:—-902-

சார்ங்கம் என்ற வில்லைக் கொண்ட பெரியபெருமாளின் பாதுகையே! சந்த்ரனைத் தலையில் கொண்ட சிவன்
உன்னை வணங்கும்போது, அந்த நிலவின் ஒளி ழுழுவதையும் உன்னில் பதிக்கப்பட்ட சந்த்ரகாந்தம் என்ற கற்கள் குடித்துவிடுகின்றன.
(சந்த்ரகாந்தம் என்ற இரத்தினக்கற்கள் மீது நிலவின் ஒளிபட்டவுடன், அவற்றிடம் இருந்து நீர் வெளிப்படும் என்பர்).
இதனால் அந்தக் கற்கள் தங்களிடம் இருந்து தாரைதாரையாக நீர்த்துளிகளைப் பெருக்கியபடி உள்ளன.
இந்த நீரானது ஸம்ஸாரம் என்ற வழியில் உள்ள பாலைவனத்தில் ஏற்படும் சிரமம் நீங்கும்படியாக தாகத்தை
(வேதனையை) அடக்கி விடுகிறது. இப்படியாகத் துன்பம் போக்குபவளாக உள்ளாய்.

ஸ்ரீ சாரங்க பாணியின் ஸ்ரீ பாதுகையே சந்த்ரனை திரு ஆபரணமாக உடைய சிவன் உன்னை ஆழ்ந்த பக்தியுடன் வணங்கும் நிலை –
புதிய நிலாவைப் பானம் பண்ணுகின்றவையாய் தாரையாய்ப் பெருகின நீர்த் திவலைகளால் அழகான தோற்றம் கொண்ட
உன் சந்த்ரகாந்த கற்கள் பேருதவி செய்கின்றனவாம்
அவற்றால் ஆஸ்ரித சம்சார சக்கர சுழல் தரும் சரமம் தாபம் அடங்கும் படி செய்து அருளுகிறாய்
சந்த்ரக் காந்தக் கல் நிலவொளி பட்டவுடன் நீர் சொரியும் –

————————————————————————

வஜ்ர உபேதாம் வலபிதுபல ஸ்யாமளாம் மஞ்ஜு கோஷாம்
முக்தாஸாராம் மதுர சபலாம் வீக்ஷ்ய விஷ்ணோ: பதம் த்வாம்
ஹர்ஷ உத்கர்ஷாத் உபரி சலயந் பாதுகே சந்த்ர காந்தம்
தத்தே நித்யம் த்ருத கநருசி: தாண்டவம் நீலகண்ட:—903–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது வைரக்கற்கள் இடி போன்று உள்ளன; இந்த்ரநீலக்கற்கள் எங்கும் கறுத்து காணப்படுகின்றன;
இனிமையான நாதம் என்பது மெல்லிய சப்தத்துடன் உள்ளது; முத்துக்களால் சிறப்புற்று உள்ளாய்
(இந்த முத்துகள் மழைத்துளி போன்று உள்ளன); அழகான உனது அசைவுகள் மின்னல் போன்று காண்படுகின்றன.
இப்படியாக நீ மழைக்காலம் போன்றே ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் காணப்படுகிறாய்.
இதனைக் கண்டு வணங்கும் சிவன் (மயில்), தனது பிறைச்சந்த்ரனை (தோகையை) எப்போதும் மெதுவாக ஆட்டியபடி,
எப்போதும் ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறார் (மயில் ஆடுகிறது).
அதாவது, மழைமேகம் கண்ட மயில் ஆடுகிறது என்பதையும் ஸ்லேடையாகக் கூறுகிறார்.

ஸ்ரீ பாதுகையே சிவன் தாண்டவம் உன்னைப் பார்த்து ஆடுகிறான் -மயில் ஆடுவதை ஒக்கும் -இருவரும் கழுத்தில் நீல நிறம் உடையவர்
நீ வயிரக் கற்கள் கொண்டும் இந்திர நீலக் கற்களால் கறுத்தும் இனிய நாதம் கொண்டும் முத்துக்களால் சிறப்புற்றும் அழகாக அசைந்து வருகிறாய்
நீ பகவானின் திருவடிகளில் உள்ளாய் -உன்னைப் பார்த்து பார்த்துக் களிப்புற்ற சிவன் தலையில் உள்ள இளம் பிறை நுனியை அசைத்து அசைத்து ஆடுகிறான்
மேகமோ இடியைக் கொண்டுள்ளது -இந்திர நீலக் கற்கள் போலே கறுத்தது-மயிலுக்கு இனிய கர்ஜனை பண்ணுவது –
மழை தாரையைப் பொழிவது-அழகிய மின்னல்களை உட்கொண்டது
அது விஷ்ணுபதம் -ஆகாசத்தில் தோன்ற மயில் களிப்பை வெளியிடும் முகமாக அசைந்து அசைந்து தாண்டவம் ஆடுமே –

———————————————————————————————-

ஸ்ரீரங்க இந்தோ: சரண கமலம் தாத்ருசம் தாரயந்தீ
காலே காலே ஸஹ கமலயா க்லுப்த யாத்ரோத்ஸவஸ்ரீ:
கத்வா கத்வா ஸ்வயம் அநுக்ருஹ த்வாரம் உந்நித்ர நாதா
பௌராந் நித்யம் கிமபி குசலம் பாதுகே ப்ருச்சஸீவ—904-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உலகங்களும் சரணம் அடைவதற்கு ஏற்றதான ஸ்ரீரங்கநாதனின்
தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தாங்கி நிற்கிறாய். அந்தந்த காலங்களில் ஸ்ரீரங்கநாதன் தனது பிராட்டியுடன்
கூடியவனாக திருவரங்கத்தின் திருவீதிகளில் வலம் வருதல் என்ற சிறப்பை நீ உண்டாக்குகிறாய்.
ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் நீ உனது நாதங்களை எழுப்பியபடி உள்ளாய்.
இதனைக் காணும்போது, அன்றாடம் திருவரங்கத்து மக்களிடம் சென்று, அவர்கள் நலம் விசாரிப்பது போன்று தோன்றுகிறது.

ஸ்ரீ பாதுகையே நீ சர்வ லோகமும் சரணம் அடைந்து உய்ய அருளும் திருப்பாதார விந்தத்தை ஏற்றி வருகிறாய் –
உத்சவம் தோறும் பெருமாள் அருகில் பிராட்டி -உடன் நீ எழுந்து அருளி வந்து ஒவ்வொரு வீட்டிலும் நாதம் எழுப்புகிறாய்
அந்த ஷேத்திர ஜனங்களின் குசலம் பரிவுடன் விசாரிப்பது போலே உள்ளதே –

ஸ்ரீரங்கேந்தோ:=ஸ்ரீரங்கநாதனுடைய சந்திரன் போன்று
குளிர்ச்சியுடைய சரணகமலம்=தாமரைப்போன்ற திருவடிகளை –
தாத்ருசம்=அப்படிப்பட்ட (வாக்குக்கு எட்டாத பெருமையோடு கூடியஇ நீ ஒருத்தி மட்டுமே வஹிக்க்க் கூடியதான) –
தாரயந்தீ=தாங்குபவளாகிய நீ — காலே காலே=அந்தந்த உசிதமான காலங்களில் –
ஸஹகமலயா=மஹாலக்ஷ்மியோடு கூட – க்லுப்த=ஏற்படுத்தப்பட்ட –
யாத்ரோத்ஸவஸ்ரீ: = சஞ்சாரங்களோடு கூடிய உத்ஸாவாதிகள் –
கத்வா கத்வா= (தாமே வலுவில்) போய் போய் – கிமபிகுசலம்=எல்லாவித க்ஷேமங்களையும் – ப்ருச்சஸீவ=கேட்கின்றாய்.

ஹே பாதுகே! ஸ்ரீரங்கநாதனின் திவ்ய திருவடிகள் உலகத்திலுள்ள அனைவருக்கும் அமிர்தம் பிரவாஹித்து
பொழிவதற்கு ஒப்பான சந்தோஷத்தினை உண்டுபண்ணும் குளிர்ச்சியையுடையது.
அத்தகைய திவ்யமான ஒப்பில்லாத திருவடிகளை உன் ஒருத்தியால் மட்டுமே தாங்கமுடியும்!
உன்னை தம் திருவடிகளில் சாற்றிக் கொண்டு தாயாரோடு உற்சவாதிகாலங்களில் பெருமாள்,
வெளியூர்களுக்கும், லீலார்த்தமாகவும் எழுந்தருளுகின்றார். இவ்விதம் எழுந்தருளி திரும்ப ஆஸ்தானம் திரும்பும் போது
ஆங்காங்கு வீடுகள் தோறும் நின்று எழுந்தருளுகின்றார். அப்போது பாதுகைகளாகிய உன்னிடமிருந்து வெளிப்படும்
சப்தமானது ஒவ்வொரு குடும்பத்தினின் க்ஷேம லாபங்களை அவரவர்களுக்குத் தகுந்தபடி ப்ரியமான வார்த்தைகளால்
அக்கறையோடு விசாரிப்பது போன்று உள்ளது. இராஜாக்கள் காட்டுக்குச் சென்று வேட்டையாடி திரும்பும் போதும்,
யுத்தம் சென்று திரும்பும் போது தங்களுடைய ஜனங்களின் சௌகர்யங்களை விசாரிப்பது வழக்கம்.
இது போன்று இருக்கின்றது இந்த பாதுகையின் செயல்கள்.

ஸ்வாமி தேசிகரின் இந்த பாசுரத்தினை வேறுவிதமாகவும் அர்த்த விசேஷம் கொள்ளலாம்.

ஸ்ரீரங்கேந்தோ: இதில் “இந்து“ என்ற சப்தம் பகவான் அமிருதம் போன்ற தயையை ஸர்வர்க்கும் வர்ஷிக்கின்றார்.
ஸம்ஸார தாபத்தினை நீக்கி குளிர்ச்சியையும் ஆனந்த்த்தினையும் உண்டு பண்ணுகின்றான். இது அவனது பரம காருணிகத்வம்.
தாத்ருசம் – பெருமாள் மற்றும் பாதுகையினுடைய சொரூபம், குணவிசேஷங்கள் வாக்குக்கு எட்டாத்த்து.
இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. இது பெருமாளுடைய பிரபாவம் மற்றும் பரத்வம்.
ஸஹகமலயாக்லுப்த யாத்ரோத்ஸவஸ்ரீ – கோபிப்பது மற்றும் தண்டிப்பது என்பதே அறியாதவர்களாகிய பாதுகையும்,
மஹாலக்ஷ்மியும் எப்போது பெருமாள் கூடவேயிருந்து, ஆஸ்ரிதர்களை எப்படியேனும் ரக்ஷணம் செய்கின்றார்கள்.
இது இவ்விரு தாயார்களின் பரம கருணை.
கத்வா கத்வா – ஆஸ்ரிதர்கள் தம்மை தேடி வரும் வரை காத்திருக்காமல் தானே ஒவ்வொருவரையும்
பரம ப்ரீதியினாலும், கவலையினாலும், வாஞ்சையோடு வலுவில் அவர்களைத் தேடிப் போதல் – இது வாத்ஸல்யம்
அனுக்ரஹத்வாரம் — பக்தன் தம்மைத் தேடி பாதிதூரமாவது வரட்டுமே என்று எண்ணாது அவர்களின் வீடு வரையில்
தானே போய் அவர்களை அனுக்ரஹித்தல் – இது சௌலப்யம்
ஸ்வயம் – இந்த விசாரித்தல் மற்றும் அனுக்ரஹித்தல் ஆகியவற்றை இன்னொருவரை அனுப்பி செய்வதில்லை.
தாமே நேரில் செய்கின்றார் – இது சௌசீல்யம்.
உந்நித்ரநாதா – எல்லாரிடத்தும் பொதுவான ஒரே மாதிரியான அணுகுமுறையின்றி, தனிதனியாக அவரவர்களுக்கேற்றாற் போன்று,
அவரவரின் தேவையறிந்து விசாரித்தல். – இது சாதுர்யம்.
பெளராந் – ஒதுங்கி வசிக்கும் ஞானமிக்க ஜனங்களைக் காட்டிலும், தம்மை யண்டி நிற்கும் சாதாரண
ஜனங்களிடத்து விசேஷ கவனிப்புடன் இருத்தல் – இது எளிமை.
நித்யம் – இன்று கவனித்து விட்டு நாளை அலட்சியமாகயில்லாமல் என்றும் ஒரே மாதிரியான அன்புடன் ரக்ஷித்தல் – இது ஆதராதிசயம்
கிமபிகுசலம் – ஆஸ்ரிதர்களுடைய எல்லா யோக க்ஷேமங்களைப் பற்றிய சூக்ஷூம ஞானமும், அவர்களது எல்லா விஷயங்களிலுமுள்ள கவனிப்பு –
இது பரிபூர்ண கடாக்ஷம்.
பாதுகையும், ரங்கனும் பாமரனுக்கும் தோழன்.

———————————————————————

சதுர விஹாரிணீம் ருசிர பக் ஷருசிம் பவதீம்
மநஸிஜ ஸாயகாஸந குணோசித மஞ்ஜுரவாம்
அநுபதம் ஆத்ரியேமஹி மஹேந்த்ர சிலா மஹிதாம்
ஹரி சரணாரவிந்த மகரந்த மது வ்ரதிகாம்—905–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! மிகவும் நேர்த்தியான ஸஞ்சாரம் கொண்டவளாக உள்ளாய்;
உனது அழகான பக்கங்கள், ஒளி வீசும் இறகுகள் போன்றே உள்ளன; மன்மத வில்லின் நாண் எப்படி ஒலிக்குமோ
அது போன்று உனது நாதம் இனிமையாக உள்ளது; இந்த்ரநீலக்கற்கள் மூலம் மிகவும் பெருமை பெற்று, கறுத்தும் உள்ளாய்.
இப்படியாக ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளில் உள்ள மதுவை எப்போதும் பருகியபடி உள்ள
பெண் வண்டு போன்ற உன்னை, நாங்கள் ஒவ்வொரு நொடியிலும் வணங்குவோம்.

ஸ்ரீ பாதுகையே பகவானின் திருவடித்தாமரை சிந்தும் தேனை உண்ணும் பெண் வண்டு நீ-பெருமாள் திருவடி சஞ்சரிப்பதில் நிபுணை
உன் பக்கங்கள் அழகு மிக்கவை மன்மத பானம் நாண் ஏற்றியதும் எழுப்பும் இனிய நாதம்
நீ வெளியிடும் நாதம் லௌகிக காமத்தை அகற்றி பகவத் காமம்விளைவிக்கும்
நீலக் கற்களும் கொண்டுள்ளாய் -வண்டு சுற்றி சுற்றி வருகிறது -அழகிய சிறகுகள் நாதம் கொண்டவை நிறமும் கறுப்பு
பொன் வண்டு போன்ற உன்னை எப்போதும் போற்றுவோமாக –

————————————————————

கநகருசா ஜடாம் உரக மௌளி மணீந் மணிபி:
த்ரிதிவ தரங்கிணீம் தரள மௌக்திக தீதிதிபி:
குடிலதயா க்வசித் சசிகலாம் அதரீ குருஷே
முரரிபு பாதுகே புரபித: சிரஸா வித்ருதா—906-

முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சிவனின் தலையால் நீ ஏற்கப்பட்டபடி நிற்கிறாய்.
அந்த நேரத்தில் – உனது தங்கத்தின் ஒளி மூலம் அவனது சடையின் ஒளி, உனது இரத்தினக்கற்களின் ஒளி மூலம்
அவன் தலையில் உள்ள நாகத்தின் தலைமணிகளின் ஒளி, நீரோட்டம் கொண்ட உனது முத்துக்களின் தன்மையால்
கங்கையின் மேன்மை, உனது இடை வளைவு மூலம் அவனது தலையில் உள்ள சந்த்ரகலையின்
அழகு ஆகியவற்றைத் தாழ்ந்து போகும்படிச் செய்கிறாய்.

ஸ்ரீ பெருமாளின் பாதுகையே நீ சிவன் முடி மேல் வைக்கப் படுகிறாய் -உன் தங்க ஒளி அவன் ஜடையை உன் ரத்னங்கள்
அவன் சர்ப்ப ரத்னங்களை நீரோட்டம் உள்ள உன் முத்துக்களின் சோபை அவன் கங்கையை உன்னிடத்தில் பின்பகுதியின்
வளைவு அவன் வளைந்த சந்திர கலையை வெல்வதாக உள்ளன –

——————————————————

காலே தல்பப புஜங்கமஸ்ய பஜத: காஷ்டாம் கதாம் சேஷதாம்
மூர்த்திம் காமபி வேத்மி ரங்க ந்ருபதே: சித்ராம் பத த்ரத்வயீம்
ஸேவா நம்ர ஸுராஸுரேந்த்ர மகுடீ சேஷாபடீ ஸங்கமே
முக்தா சந்த்ரிகயேவ யா ப்ரதயதே நிர்மோக யோகம் புந:—-907–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! வியப்பை அளிக்கவல்ல ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளான உங்களை
அவனது ஸஞ்சார காலத்தில் அடிமைத்தனத்தின் எல்லைக்கே செல்வதால்,
அவனுடைய படுக்கையான ஆதிசேஷனின் உருவமே என்று எண்ணுகிறேன்.
ஸ்ரீரங்கநாதனை வணங்கி நிற்பவர்களான தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைகளில் உங்களை வைக்கும்போது
உங்கள் முத்துக்களின் ஒளியானது பரிவட்டம் போன்று காணப்படுகிறது. மேலும் அவர்களின் தலையில் உள்ள பரிவட்ட
வஸ்த்ரத்துடன் இந்த ஒளியும் இணையும்போது, உரித்த நாகத்தின் தோல் போன்று காணப்பட்டு, ஆதிசேஷனை நினைவுபடுத்துகிறது.

ஸ்ரீ ரங்க ராஜனின் ஆச்சர்யமான ஸ்ரீ பாதுகையே சஞ்சார காலத்திலேயே இடைவிடாது உடனே மன்னி வழுவிலா அடிமை செய்வதன் மூலம்
சேஷத்வ எல்லையை எய்திய ஸ்ரீ பாதுகை -சயன காலத்தில் படுக்கையை இருக்கும் ஆதி சேஷனின் ஈடிலா இன்னொரு வடிவமாக கொள்வேன்
இதில் ஒரு ஸ்வாரஸ்யம் – சேவிப்பவர்களுக்கு பரிவட்டம் கட்டி ஸ்ரீ பாதுகையை வைப்பார் கைங்கர்ய பரர்-
அது சேஷன் உரித்ததோ -ஸ்ரீ பாதுகையின் முத்துக்களின் ஒளிக்கற்றை தான் அங்கு வஸ்திரம் போல் தோன்றுமோ –

ரங்கந்ருபதே:=ஸ்ரீரங்கநாதனுடைய – சித்ராம்=ஆச்சர்யமான – பதத்ரத்வயீம்=இரண்டு பாதுகைகளை –
காலே=சஞ்சார காலத்தில் – காஷ்டாம்=மிகவும் உயர்த்தியான(கடைசி எல்லை) – கதாம்=அடைந்திருக்கின்ற –
சேஷதாம்=தாஸனது வேலையை இந்தவிடத்தில் திருவடியை வஹிக்கிறதான கைங்கர்யத்தினை –
பஜத:=அடைந்தவராயிருக்கின்ற – தல்ப புஜங்கமஸ்ய=எப்போதும் பெருமாளுக்கு படுக்கையாயிருக்கின்ற ஆதிசேஷனுடைய. –
காமபி=விலக்ஷணமான அதாவது ஒரு ஆச்சரியமான – மூர்த்திம்=திருமேனி விசேஷமாக – வேத்மி=அறிகின்றேன்.

நம்பெருமாளின் ஆச்சர்யகரமான பாதுகையினை சேவிக்கும் போது எப்போதும் பெருமாளுக்கு படுக்கையாக இருப்பதுடன்,
பெரிய பெருமாளுடன் ஸர்வதேச (எல்லாவிடங்களிலும்), ஸர்வகால(எல்லா காலங்களிலும்),
ஸர்வாவஸ்தோசித (எல்லாவித அவஸ்தைகளிலும்) ஸமஸ்தவித (எல்லாவிதமான கைங்கர்யங்களையும்) ,
ஒரு வேலைக்காரனுக்குடைய சேஷத்வ கோஷ்டையுடன், அதனாலேயே சேஷன் என்று திருநாமத்தினையும் பெற்ற,
ஆதிசேஷனுடைய இன்னொரு உருவம்தான் பாதுகை.
இவ்விதம் கூறுவதற்கு இரண்டு காரணங்களை இந்த ஸ்லோகத்தில் கூறுகின்றார்.
1-ஆதிசேஷனை வெள்ளிமலை போல் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது. நல்முத்துக்கள் பதிக்கப்பெற்ற பாதுகையிலிருந்து
வெளிப்படும் காந்தியானது வெள்ளிமலையை போன்று காட்சியருளுகின்றது.
2-தம் பக்தர்களை கௌரவிக்கும் போது, அவர்களது சிரஸ்ஸில் வெள்ளைத் திருப்பரிட்டத்தினைச் சுற்றி கட்டி
அதன் மேல் பாதுகையை சாதிக்கும் போது, வெள்ளைத் திருப்பரிவட்டம், உரித்து விட்ட பாம்பு சட்டைப் போன்றும்,
பாதுகை ஆதிசேஷனின் சிரஸ் போன்றும் காட்சியருளுகின்றது.
(“சேஷப்படி“ என்பது திருப்பரிவட்டத்திற்கான சமஸ்கிருதப் பெயர்.
இந்த சுலோகத்தின் மூலம் இது அந்த காலத்தில் வெளுப்பு வர்ணத்திலிருந்த்து அறியப்படுகின்றது.)
சேஷத்வ காஷ்டை மிகுந்தவர்கள் ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்கள். இவர்கள் ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகளின் அவதாரமேயாவர்.
(ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொரூபத்தில் கூட சட்டை உரித்த பாம்பினைப் போன்று பால் போன்ற நிறத்தில்தான் இருப்பாராம்.)
சுத்த சத்துவ குணத்தோடேயே அவதரித்தவர்கள். இவர்களை, இவர்களின் ஸ்ரீசூக்திகளைப் போற்ற போற்ற
நமக்கு சத்துவ குணம் மேலிடும், தோலுரித்த பாம்பின் பிரகாசம் போன்று.

——————————————————————————————–

சந்த்ராபீட சிகண்ட சந்த்ர சிகர ஸ்யோத்த் ஸுதா நிர்ஜ்ஜர
ஸ்தோக ஆச்லிஷ்ட ஸுரேந்த்ர சேகர ரஜ: ஸ்த்யாநாம் ஸ்தும: பாதுகாம்
ப்ரஹ்மஸ் தம்ப விபக்த ஸீம விவித க்ஷேத்ரஜ்ஞ ஸர்க்க ஸ்திதி
த்வம்ஸ அநுக்ரஹ நிக்ரஹ ப்ரணியிநீ யா ஸா க்ரியா ரங்கிண:–908–

சிவனின் தலையில் ஆபரணம் போன்றுள்ள சந்த்ரனின் மேல் பாகத்தில் இருந்து பெருகும் அமிர்த அருவியின் துளிகளுடன்,
தேவர்களின் தலையில் உள்ள மலர்களின் துகள்களும் சேர்ந்து நிரம்பிய ஸ்ரீரங்கநதனின் பாதுகைகளை நாங்கள் வணங்குகிறோம்.
இந்த உலகில் நான்முகன் தொடங்கி, புல்பூண்டுவரை காணப்படும் பலவகையான ஏற்றத்தாழ்வுகள் கொண்ட
உயிர்களின் ஸ்ருஷ்டி, இருப்பு (ஸ்திதி) மற்றும் ஸம்ஹாரம்; இவைகளுக்குக் கிட்டும் கடாக்ஷம் மற்றும் தண்டனைகள்
ஆகியவற்றை ஸ்ரீரங்கநாதனின் லீலைகளாக மிகவும் பிரியத்துடன் பாதுகைகள் அல்லவோ செய்கிறாள்?

சிவன் தலைக்கு அணிகலன் சந்தரன் -அவன் உச்ச்சியில் இருந்து அம்ருத அருவி சொரிகிறது –
அதுவும் தேவர் தலைகள் முடிப் பூக்களின் மகரந்த துளிகளும் சேர்ந்து ஸ்ரீ பாதுகையை மகிழ்விக்கின்றன –
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க நாதனின் திவ்ய லீலை -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் அனுக்ரஹ நிக்ரஹ கார்யங்களுக்கு ஸ்ரீ பாதுகையே காரணம்
அந்த நெருங்கிய பூரணப் பொலிவுடைய ஸ்ரீ பாதுகையைப் போற்றித் துதிக்கின்றோம் –

———————————————————————————————

லக்ஷ்மீ நூபுர சிஞ்ஜிதேந குணிதம் நாதம் தவ ஆகர்ணயந்
ஆஜிக்ரந் நிகமாந்த கந்த துளஸீ தாம உத்திதம் ஸௌரபம்
காலே குத்ரசித் அகதம் கருணயா ஸார்த்தம் த்வயா சாக்ரத:
பஸ்யேயம் மணிபாதுகே பரதரம் பத்மேக்ஷணாம் தைவதம்—909-

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! என்னுடைய அந்திம காலத்தில் –
ஸ்ரீரங்கநாச்சியாரின் தண்டையின் ஓசையால் மேலும் அதிகரிக்கப்பட்ட உனது நாதம் கேட்க வேண்டும்;
வேதவாஸனை வீசுகின்ற துளஸி மாலையை அதன் நறுமணத்துடன் முகரவேண்டும்;
என் மீது மிகுந்த கருணையுடன், உன்னுடன் சேர்ந்தபடி அனைத்த்திற்கும் மேலானவனாகிய,
தாமரை போன்ற கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதன் அங்கு வந்து நிற்க, அவனை நான் பார்க்கக் கடவேனாக.

ஸ்ரீ மணி பாதுகையே என் அந்திம ஷணத்தில் ஸ்ரீ ரங்க நாதன் பிராட்டி யோடு எழுந்து அருளப் பண்ணி நான் சேவிக்கும் படி செய்து அருள வேணும்
பிராட்டியும் சிலம்பு ஒலியும் உனது இனிய நாதமும் காதில் விழ வேதாந்த பரிமளம் கூடிய திருத் துழாய் நறுமணம் வீசி என் நாசி அனுபவிக்க
பரம புருஷன் என் கண்களுக்கு விருந்தாக கிடைக்க வேணும் -இது பிராட்டி புருஷகாரத்தால் ஆச்சார்யா கிருபை அடியாக நடக்க வேணும் –
எனவே தான் ஸ்ரீ பாதுகையிடம் இத்தகைய பிரார்த்தனை –

————————————————————————————————

வஹதி க்ஷிதிவ்ய வஹிதாம் ஸோபி த்வாம் கதிஷு பாதுகே ரங்கீ
கமடபதி புஜக பரிப்ருட கரிவர குலசிகரி பூமிகா பேதை:—910–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னால் தாங்கப்படுபவனாகவே இந்த உலகத்தினரால் ஸ்ரீரங்கநாதன் அறியப்படுகிறான்.
அப்படிப்பட்ட அவன் தனது ஸஞ்சார காலங்களில் ஆமை, திக்யானைகள், பர்வதங்கள் போன்ற
பலவிதமான வடிவங்கள் கொண்டவனாய் உன்னைத் தாங்கி நிற்கிறான்.

ஸ்ரீ பாதுகையே நீ ஸ்ரீ ரங்க நாதனை சஞ்சார காலங்களில் வஹிக்கிறாய்-பெருமாள் தானும் கூட உன்னை
தான் தாங்க வேண்டும் என்று திரு உள்ளம் கொண்டான் போலும்
அதற்காக நேராக இல்லாமல் பூமியை இடையில் இட்டு அதற்கு கீழே ஆதார கூர்மம் என்ன -ஆதி சேஷன் என்ன-
திக் கஜங்கள் என்ன குல பர்வதங்கள் என்ன எல்லாம் விஷ்ணு மயமாயிற்றே -இவ்விதமான வெவ்வேறு உருவங்கள் கொண்டு
உன்னைச் சுமக்கிறான் -நானும் உன்னைத் தரிக்க வேண்டும் -அருள்வாய் –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-28- ஸூபாஷித பத்ததி -நன் மொழிப் படலம் -ஸ்லோகங்கள் -821-830-

March 19, 2016

கலாஸு காஷ்டாம் அதிஷ்டந் பூம்நே ஸம்பந்தி நாமபி
பாதுகா ரங்க துர்யஸ்ய பரத ஆராத்யதாம் கதா—-821-

கலைகளில் தேர்ச்சி பெற்று அதன் உச்சத்தை அடைந்தவன், தன்னைச் சேர்ந்தவர்களுக்கு பெருமை உண்டாக்குபவனாக ஆகிறான்.
நாடகங்களை நிகழ்த்துவதில் வல்லவனாகிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகை,
பரத சாஸ்த்ர நிபுணர்களால் (பரதனால் என்று சிலேடை) கொண்டாடப்படுகிறது.

கலைகள் எதிலும் நிறைந்த பயிற்சி பெற்றவன் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கௌரவம் ஏற்படக் காரணம் ஆகிறான் –
பதினாறு கலை பூரணமான சந்தரன் சமுத்ரத்தைப் பொங்கச் செய்கிறான் -குமுத மலரை மலரச் செய்கிறான் –
பிருஹதாரண்யகத்தில் -ஜீவாத்மா ஸ்வரூபம் என்ற ஒரு கலை பணம் என்ற பதினைந்து கலைகள் கொண்டு
சுற்றத்தாரின் செல்வத்துக்குக் காரணம் ஆகிறான் என்கிறது
ஸ்ரீ அரங்க மேடையில் சேர்ந்தவன் ஸ்ரீ அரங்க நாதன் -அவனது திருவடி நிலை
பரதக் கலை நிபுணர்களால் கொண்டாடப் படுவதைப் பாரீர்
ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பரதாழ்வானால் ஆராதிக்கப் படும் தகுதியைப் பெற்றது –

—————————————————————————

ஸந்தஸ் ஸ்வதேச பரதேஸ விபாக ஸூந்யம்
ஹந்த ஸ்வ வ்ருத்திம் அநகாம் ந பரித்யஜந்தி
ராஜ்யே வநே ச ரகு புங்கவ பாத ரக்ஷே
நைஜம் ஜஹௌ ந கலு கண்டக சோதநம் தத்—-822–

சிறிதும் குற்றங்கள் இல்லாத தங்கள் கர்மங்களைப் பெரியவர்கள் தங்கள் ஊராக இருந்தாலும்,
வெளியூராக இருந்தாலும் கைவிடுவதில்லை. இது போன்று இராமனின் பாதுகையானது ராஜ்யத்திலும் கானகத்திலும்
கண்டக சோதனம் என்பதைச் செய்தபடி இருந்தாள்.

கண்டக சோதனம் என்றால் முள் இல்லாமல் செய்வது ஆகும். கானகத்தில் முள் என்பது, ராஜ்யத்தில் சத்ருக்கள் என்று கருத்து.

சாதுக்கள் தம் குற்றம் அற்ற அனுஷ்டானத்தை விடவே மாட்டார்கள் -தன் ஊரிலாய் ஆகட்டும் -வெளியூரில் ஆகட்டும்
இப்படித் தான் அவர்கள் ஸ்வ பாவம் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனின் ஸ்ரீ பாதுகை ராஜ்யத்திலோ வனத்திலோ தன் தர்மத்தை முள் எடுப்பதான கடைமையை விட வில்லை –
ராஜ்யத்தில் பகைவர் புகாதபடிக் காத்து ஆண்டது -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் பெருமாள் திருவடியில் முள் குத்தாமல் ரஷித்தது-

————————————————————————————

ப்ரஹ்மாஸ்த்ரதாம் அதி ஜகாம த்ருணம் ப்ரயுக்தம்
புண்யம் சரவ்யம் அபவத் பயஸாம் நிதிர்வா
ப்ருத்வீம் சசாஸ பரிமுக்த பதம் பதத்ரம்
கிம் வா ந கிம் பவத் கேளி விதௌ விபூநாம்—-823–

ஸ்ரீராமனின் திருக்கரம் கொண்டு எறிந்த புல்லானது ப்ரஹ்மாஸ்திரம் ஆனது. அவனுடைய பாணத்திற்குப்
பரசுராமனின் புண்ணியமும், ஸமுத்திரமும் (இரண்டுமே குறிபார்ப்பதற்கு இயலாதவை) இலக்காக நின்றன.
அவனுடைய பாதுகைகள் திருவடிகளைக் காப்பதை விட்டு, இந்த உலகம் முழுவதையும் காப்பாற்றினாள்.
வல்லவர்களின் விளையாட்டில் எந்தப் பொருள் தான் எந்தப் பொருளாக மாறாது?

வல்லவனாகில் அவன் விளையாட்டில் கூட எதையும் செய்து முடிப்பான் -புல் ஒருவன் திருக்கையில் பிரம்மாஸ்திரம் ஆனதே –
ஸ்ரீ பரசுராமன் தவத்தால் சேகரித்த புண்யமும் -கண்ணுக்குப் புலனாகாத வஸ்துவாய் இருந்தாலும் கூட அதுவும் பெரிய சமுத்ரமும்
அவன் அம்புக்கு இலக்காயினவே –
ஸ்ரீ பாதுகை திருப் பாதத்தைக் காப்பது -திருவடியின் கீழ் இருக்கும் அது அந்த ஸ்தானத்தை விட்டு விட்டு நாட்டை ஆண்டது –
ஆகவே வல்லவன் ஒருவன் கையில் விளையாட்டுப் போலே ஏது தான் ஏதுவாகத்தான் ஆகாது -எல்லாம் அவன் இட்டபடி நடக்கும் –

—————————————————————————————-

அந்யேஷு ஸத்ஸ்வபி நநேந்த்ர ஸுதேஷு தைவாத்
ப்ரஷ்ட: பதாத் அதிகரோதி பதம் பதார்ஹ:
ப்ராயோ நிதர்சயதி தத் ப்ரதமோ ரகூணாம்
தத் பாதயோ: ப்ரதிநிதீ மணி பாதுகே வா—-824–

தெய்வத்தின் ஸங்கல்பம் காரணமாக, அரச பட்டத்திற்குத் தகுதி படைத்த ஒருவன் அதனை நழுவ விட்டாலும்,
சிறிது காலம் கழித்து அடைந்துவிடுகிறான். இதனை ரகுவம்சத்தின் சிறந்தவனான இராமன் காண்பிக்கிறான்.
அவனுடைய திருவடிகளின் ப்ரதிநிதிகளான இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகள் உணர்த்துகிறாள்.

ஒருவனுக்கு ஒரு பதவி கிட்ட வேண்டும் என்றால், அந்தப் பதவியானது ஒருமுறை இல்லாவிட்டாலும் மற்றோரு முறை
அவனைத் தேடி வந்துவிடும். இராமன் அரச பதவி ஏற்பது தடைபட்டாலும், அவன் தம்பிகள் உள்ள போதிலும்
அவனது பாதுகைகள் அல்லவோ அரச பதவியைப் பிடித்தாள்?

ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனும் ஸ்ரீ பாதுகையும் உலக நியதி ஒன்றை நிரூபிகின்றன –
தைவ சங்கல்பத்தால் ஒரு பதவி ஸ்தானத்தில் இருந்து நழுவின ஒருவன் அவன் அந்தப் பதத்திற்கே அர்ஹனாக இருக்கும் போது
அப்பதவியை எப்படியும் பெறுவான் -வேறு அரச குமாரர்கள் இருந்தாலும் மூத்தவனை அது தப்பாது
இதை ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் விஷயத்தில் பார்க்கிறோம் -அவருடைய ஸ்ரீ ரத்ன பாதுகைகள் விஷயத்திலும் காணலாம் –
அவை திருப் பதத்திற்கு திருவடிக்குத் தகுந்தவை -அதை இழந்தன -ஆனால் பதம் -பதவி -ராஜ்ய சிம்ஹாசனம் பெற்றன –

———————————————————————————–

சரணம் அநக வ்ருத்தே: கஸ்யசித் ப்ராப்ய நித்யம்
ஸகல புவந குப்த்யை ஸத்பதே வர்த்ததே ய:
நரபதி பஹுமாநம் பாதுகேவ அதிகச்சந்
ஸ பவதி ஸமயேஷு ப்ரேக்ஷி தஜ்ஞைர் உபாஸ்ய:—825-

குற்றம் இல்லாத, அவைவராலும் கொண்டாடப்படும்படியாக நடவடிக்கைகள் கொண்டவராக உள்ள ஒருவரின்
திருவடிகளை அடைந்து, எப்போதும் உலகின் நன்மையைக் குறித்தும், உலகைக் காப்பாற்றுவது குறித்தும்
சிந்தனை செய்தபடி ஒருவன் இருக்கக்கூடும். அவன் பாதுகைகள் போன்று அரசர்களுக்கு செய்யப்படும் மரியாதைகளையும்,
அரசர்களால் செய்யப்படும் மரியாதைகளையும் அடைந்து, அந்தந்த காலகட்டங்களில் புத்திமான்களால் உபாஸிக்கப்படுவான்
(இராமனின் திருவடிகளை அடைந்து நின்ற பாதுகைகளுக்கு இந்த மரியாதை கிட்டியது).

எவன் ஒருவன் குற்றம் அற்ற நடத்தை யுடைய நல்லவர் ஒருவரின் திருவடி பிடித்து அவர் அனுஷ்டானத்தைப் பின் பற்றி இருக்கிறானோ
அதுவும் உலக நன்மைக்காக அவர் இட்ட வழியில் நடக்கிறானோ -அவன் ஸ்ரீ பாதுகையைப் போலே அரசற்கு உரிய பஹூ மானத்தைப் பெறுவான் –
மேலும் அரசர்கள் இடம் இருந்தும் மரியாதை பெறுவான் -அதற்கும் மேலாக அவன் குறிப்பு அறிந்து அவனை உபசரிக்க
சித்தராய் இருக்கும் பல இங்கிதஜ்ஞர்களால் சேவிக்கத் தகுந்தவனாக இருப்பான் –

—————————————————————————————

ராமே ராஜ்யம் பிது: அபிமதம் ஸம்மதம் ச ப்ரஜாநாம்
மாதா வவ்ரே ததிஹ பரதே ஸத்ய வாதீ ததௌ ச
சிந்தாதீதஸ் ஸமஜநி ததா பாதுகார்க்ய அபிஷேக:
துர்விஜ்ஞாந ஸ்வ ஹ்ருதயம் அஹோ தைவம் அத்ர ப்ரமாணம்—826–

இராமனிடம் ராஜ்யம் இருப்பது என்பது தசரதரின் விருப்பமாகவும், ஜனங்களின் விருப்பமாகவும் இருந்தது.
அப்போது அந்த ராஜ்யத்தை மாதாவான கைகேயி பரதனிடம் இருக்கவேண்டும் என்று கேட்டாள்.
ஸத்யத்தின் வழிமாறாத தசரதனும் அவ்விதமே செய்தார்.
ஆனால் அந்த நேரத்தில் யாராலும் எண்ணிக்கூட பார்க்க இயலாதபடி உயர்ந்த பாதுகா பட்டாபிஷேகம் நடந்தது.
இந்த உலகில் அறிய இயலாத கருத்தைக் கொண்ட தெய்வமே செல்வாக்கு உடையதாகிறது.

நாம் ஏது நினைத்தாலும் நடக்கும் எனபது நிச்சயம் இல்லை தைவம் என்ன சங்கல்பித்து இருக்கிறதோ அது தானே நடக்கும் –
உதாரணம் காணீர் –
சக்கரவர்த்தி திருமகன் அரசாள வேண்டும் என்று தசரத சக்கரவர்த்தி நினைத்தார் -மக்களும் அதையே வேண்டினர் –
ஆனால் மாதா கைகேயி குறுக்கிட்டு ராஜ்யம் தன் மகனுக்கு வண்டும் என்று வலியுறுத்தினாள்-
அப்போது யாரும் கற்பனை செய்யாத ஸ்ரீ பாதுகா பட்டாபிஷேகம் நடந்தேறியதே –

————————————————————————-

நாதிக்ராமேச் சரணவஹநாத் பாதுகா பாத பீடம்
யத்வா ஆஸந்நம் பரம் இஹ ஸதா பாதி ராஜ அஸநஸ்ய
பூர்வத்ரைவ ப்ரணி ஹிதம் அபூத் ஹந்த ராமேண ராஜ்யம்
சங்கே பர்த்து: பஹு மதி பதம் விக்ரமே ஸாஹசர்யம்—-827–

இராமனின் திருவடிகளை எப்போதும் தாங்கி நிற்கும் காரணத்தினால் திருவடியை வைக்கின்ற பீடத்தைக் காட்டிலும்
பாதுகைக்கு உயர்வு இல்லை என்றாகிறது
(காரணம் ஸிம்ஹாஸனத்தை விட்டுப் பாதுகைகள் ஸஞ்சார காலத்தில் புறப்பட்டாலும், திருவடியை வைக்கின்ற ஆஸனம் அங்கேயே உள்ளது).
அது போன்று பாதுகை, ஆஸனபீடம் ஆகிய இரண்டிற்குள் ஸிம்ஹாஸனத்திற்கு மிகவும் நெருக்கமாக ஆஸன பீடமே உள்ளது.
இப்படி உள்ள போதிலும் இராமனால் பாதுகையிடமே ராஜ்யம் ஒப்படைக்கப்பட்டது. இது ஏன்? ஆஹா!
விரோதிகளை அழிக்கின்ற காலத்தில் இராமனுடன் அவனை விடாமல் பாதுகை ஸஞ்சாரம் செய்து,
அவனுக்கு உதவி செய்ததால், பாதுகைக்குக் கிட்டிய வெகுமதியே இதன் காரணம் என்று எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகை பெருமாள் திருவடியைச் சுமக்கிறது என்பதால் சிம்ஹாசனத்தில் வீற்று இருக்கும் போது திருவடியை வைக்கும் இடமான
ஸ்ரீ பாத பீடத்தின் பெருமையை விஞ்ச முடியாதே -இந்த ஸ்ரீ பாத பீடம் சிம்ஹாசனத்தின் அருகிலே இருக்குமே
ஆனாலும் ஸ்ரீ சக்கரவர்த்தியின் ராஜ்யம் ஆளும் கௌரவம் ஸ்ரீ பாதுகைக்கே அளிக்கப் பட்டது -ஏன் எனில்
தனது ஸ்வாமியின் விக்ரமத்தில் -பராக்ரமத்தில் -சஞ்சாரத்தில் துணையாய் இருந்தது ஸ்ரீ பாதுகையே -அதவே காரணம் –

——————————————————————————

ப்ரதிபத சபலாபி பாதுகா
ரகுபதிநா ஸ்வபதே நிவேசிதா
ஸமஜநி நிப்ருத: ஸ்திதிஸ் ததா
பவதி குண: ஸ்ரியம் அப்யுபேயுஷாம்—828-

அடிக்கடி ஸஞ்சாரம் செய்வதால் அசைந்தபடி பாதுகைகள் இருந்தாலும், இராமனால் தனது ஸிம்ஹாஸனத்தில்
அமர வைக்கப்பட்டவுடன், அசையாமல் ஸ்திரமாக இருந்தாள். செல்வம் அடைந்தவர்களுக்கு குணம் வந்து விடுகிறது.

ஸ்ரீ பாதுகை சஞ்சலமானது -அடிக்கடி அசைந்து சஞ்சரிக்கும் இயல்புள்ளது -ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனால் தனக்கு பிரதிநிதியாக
சிம்ஹாசனத்தில் அமர்த்தப்பட்ட ஸ்ரீ பாதுகை அந்த ஷணமே ஸ்திரமான நிலையை எய்தியது –
இது செல்வம் சேர்ந்தால் குணம் உண்டாகும் என்ற நீதிக்கு எடுத்துக் காட்டாகும் –

—————————————————————————

கதிஹேது: அபூத் க்வசித் பதே
ஸ்திதி ஹேதுர் மணி பாதுகா க்வசித்
ந ஹி வஸ்துஷு சக்தி நிச்சயோ
நியதி: கேவலம் ஈஸ்வர இச்சயா—-829–

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையானது ஓர் இடத்தில் (திருவடியில்) ஸஞ்சாரத்திற்கே காரணமாக உள்ளாள்.
அதே பாதுகை வேறோர் இடத்தில் (ஸிம்ஹாஸனம்) ராஜ்யத்தை அமர்ந்து காப்பாற்றுவதற்கான காரணமாக உள்ளாள்.
ஆக பொருள்களில் இந்தப் பொருள், இந்தச் செயலை மட்டுமே செய்யும் என்ற நியதி இல்லை.
ஈஸ்வரனின் இச்சையினால் மட்டுமே இவ்விதம் நடக்கிறது.

ஸ்ரீ மணி பாதுகையானது ஒரு பதத்திலே -பெருமாள் திருவடியிலே -சஞ்ஜாரத்திற்கு உதவுகிறது
இன்னொரு பதத்திலோ என்றால் -ஸ்தானத்தில் சிம்ஹாசனத்தில் ஒரே இடத்தில் நிலைத்து இருப்பதாக உள்ளது
ஆகவே ஒரு வஸ்துவிற்கு இன்ன சக்தி தான் என்று நிஷ்கரிப்பது முடியாது -ஈஸ்வரனின் சங்கல்ப்பப்படியே நடக்கும் –

———————————————————————————-

அதரீக்ருத: அபி மஹதா
தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு:
அலபத ஸமயே ராமாத்
பாத க்ராந்தாபி பாதுகே ராஜ்யம்—830-

மேலும் மேலும் உயர எண்ணுபவன், உயர்ந்த ஒருவனால் தாழ்வாக நடத்தப்பட்டாலும், அவனையே அண்டி வணங்கி நிற்க வேண்டும்.
பாதுகையானது இராமனின் திருவடிகளால் மிதிக்கப்பட்டாலும், ஒரு காலகட்டத்தில் இந்த இராமனின் ராஜ்யத்தையே அடைந்தாள்

எவன் ஒருவன் மேன்மேலும் விருத்தி அடைய வேண்டும் என்று விரும்புகிறானோ அவன் மஹா புருஷன் ஒருவனால்
கீழ்ப் படுத்தப் பட்ட போதிலும் அந்த மஹானையே ஆஸ்ரயித்து சேவை செய்வது நன்று –
ஸ்ரீ பாதுகை திருவடியால் மிதி யுண்டும் பொறுத்து அவனுக்கே சேவை செய்ததால் கால க்ரமத்தில்
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இடம் இருந்து ராஜ்யத்தை பெற்றதே –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-27-ரேகா பத்ததி -வேரிப்படலம் -ஸ்லோகங்கள் -811-820–

March 19, 2016

பாதுகைகளில் காணப்படும் பல கோடுகளை இங்கே கூறுகிறார்–

———–

ஸூசயந்தீம் ஸ்வரேகாபி: அநாலோக்ய ஸரஸ்வதீம்
அலேகநீய ஸௌந்தர்யம் ஆஸ்ரயே சௌரிபாதுகாம்—-811-

எழுதத் தகாத சொற்களைத் தெரியப் படுத்துவதாகவும், எழுதி முடிக்க இயலாத அழகைக் கொண்டதாகவும் உள்ள
கோடுகளைத் தன்னிடம் கொண்டதான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் அடைகிறேன்.

வேதங்களை எழுதி வாசிக்கக் கூடாது என்பார்கள். அப்படிப்பட்ட வேதங்களே இந்தப் பாதுகையில்
கோடுகளின் வடிவில் உள்ளன என்றார்.

ஸ்ரீ பாதுகையில் உள்ள ரேகைகள் எழுதா மறை என்று சொல்லப்படும் எழுதப்படாத எழுத்து இல்லாத வேதத்தைக் குறிப்பதாகச் சொல்லலாம் –
அந்த ரேகைகளின் அழகை எழுத்தில் வடிக்க ஒண்ணாதே -அத்தகைய ஸ்ரீ பாதுகையைச் சரணம் அடைகிறேன் –

————————————————————

மணி மௌளி நிகர்ஷணாத் ஸுரணாம்
வஹஸே காஞ்சந பாதுகே விசித்ரம்
கமலாபதி பாத பத்ம யோகாத்
அபரம் லக்ஷணம் ஆதி ராஜ்ய ஸாரம்—-812–

தங்கமயமான பாதுகையே! தேவர்களுடைய கிரீடங்கள் உன்னை வணங்குவதற்காக அவர்கள் தலையைக் குனியும்போது,
ஒன்றுடன் ஒன்று உராய்கின்றன. அப்போது அந்தக் கிரீடங்களில் உள்ள இரத்தினங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால்,
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் உன் மீது ஏற்படுத்துகின்ற கோடுகளைக் காட்டிலும் வேறுவிதமான கோடுகள் உன்னில் ஏற்படுகின்றன.
இந்தப் புதிய கோடுகள் மூலம் அனைத்து உலகிற்கும் நீயே ராணியாக உள்ளாய் என்னும் அடையாளத்தை அடைகிறாய்.

ஸ்ரீ பாதுகையே உன் தங்கத் திரு உடம்பில் வந்து வணங்கும் தேவர்களுடைய ரத்ன கிரீடங்கள் உறாய்வதால் ரேகைகள் ஏற்படுகின்றன –
இவை உனக்குப் பெருமாள் திருவடியின் தொடர்பினால் -திருவடி வைப்பினால் -ஏற்பட்ட ரேகைகள் இருக்கின்றனவே
அவை எடுத்துச் சொல்லும் சர்வ லோக சக்ரவர்த்தினி என்ற உன் பெருமையைக் காட்டிலும் விலஷணமான விசேஷமான
அடையாளமாய் இருந்து உன் பெருமையைப் பறை சாற்றுபவை –

————————————————————————-

அபிதோ மணி பாதுகே ஸ்புரந்த்யா:
தவ ரேகாவிததே ததா விதாயா:
முரவைரி பதாரவிந்த ரூடை:
அநுகல்பாயிதம் ஆதி ராஜ்ய சிஹ்நை:—-813–

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தாமரை மலர் போன்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில்,
”இவனே அனைத்து உலகங்களுக்கும் அதிபதி”, என்பதை உணர்த்தும் கோடுகள் உள்ளன.
உன் மீது தேவர்களின் க்ரீடங்கள் ஏற்படுத்திய கோடுகளைக் காணும்போது, அவனது ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில்
உள்ள கோடுகள் இரண்டாம்படியாகவே உள்ளன
(பாதுகையில் உள்ள கோடுகள் மூலமாகவே ஸ்ரீரங்கநாதனுக்கு அதிகாரம் கிடைக்கிறது,
அவனது திருவடிகளில் உள்ள கோடுகளால் அல்ல என்றார்).

ஸ்ரீ மணி பாதுகையே -கீழே சொல்லப்பட்ட விதமான ரேகைகளின் வரிசைகள் உன் மீது எல்லாப் புறங்களிலும் விளங்குகின்றன –
ஒரு ஒப்பீடு செய்தால் பெருமாளுடைய திருவடித் தாமரைகளோ தம் அடிப்பாகத்தில் மட்டுமே திடமான வஜ்ராங்குசாதி ரேகைகளைக் கொண்டு இருந்து
அவன் ஆதிராஜன் -உபய விபூதி நாதன் -என்று பறை சாற்ற வல்லவை –
ஆக திருப் பாதுகைக்குத் தெளிவாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ள ஆதி ராஜ்ய சின்னங்கள் திருவடியினுடையவற்றை
இரண்டாம் பஷமாக ஆக்கி விட்டன என்னலாம் –
திருப் பாதுகைக்கு மேம்பட்ட பெருமை எனபது பாகவத ஆச்சார்யர்களுக்கு கூடிய பெருமை என்று சொல்வதாகும் –

———————————————————-

ரேகயா விநமதாம் திவௌகஸாம்
மௌளி ரத்ந மகரீ முக உத்தயா
பாதுகே வஹஸி நூநம் அத்புதம்
சௌரி பாத பரி போக லக்ஷணம்—814–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை வணங்கி நிற்கும் தேவர்களின் க்ரீடங்களில் காணப்படும் இரத்தினங்களால்
செய்யப்பட்ட மீனின் முகத்தினால் உன் மீது கோடுகள் ஏற்படுகின்றன.
இதனைக் காணும் போது நீ ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுடன் சேர்ந்து அனுபவித்த
இன்பத்தின் போது அந்த அடையாளத்தை ஏற்றாய் போலும்.

தேவர்களின் தலையில் உள்ள க்ரீடங்களின் மீன் வடிவ நகைகள் உண்டு. அவை பாதுகைகள் மீது மீன் வடிவத்தில் அச்சு உண்டாக்குகின்றன.
ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் மகர உருவம் உண்டு. அந்தத் திருவடியை நாயகன் என்றும், பாதுகையை நாயகி என்றும் கொண்டால்,
இவர்கள் சேர்ந்துள்ள போது திருவடியின் அரவணைப்பு காரணமாக அந்த மகர வடிவம் பாதுகையில் வந்ததோ என்கிறார்.
உண்மையில் அவை தேவர்களின் க்ரீடங்களால் வந்தவை ஆகும்.

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் மிகப் பணிவுடன் உன்னை வணங்கும் போது அவர்கள் க்ரீடங்களில் உள்ள ரத்னங்களாலான
மீனுருவங்கள் உன் மீது அழுந்தி மகர ரேகைகள் படிகின்றன -இருப்பினும் எனக்கு வேறு ஓன்று தோன்றுகிறது
பெருமாள் திருவடிகளில் மகர ரேகைகள் உண்டே -அந்தத் திருவடியான நாதனுடன் நீ அனுபவித்த கலவியின் விளைவாக
இந்த மகர ரேகைகள் உன் மீது படிந்து இருக்கக் கூடுமே என்று –
பாகவதர்கள் தேவர்களுடைய வணக்கத்துக்கு உரியவர் —
அப்படி இருப்பது பாகவதர்களுக்கு பெருமாள் உடன் விடாது நடக்கும் சம்ச்லேஷம் தானே –

———————————————————————–

த்ரிதச மகுட ரத்ந உல்லேக ரேகா: உபதேசாத்
பரிமணயஸி பும்ஸாம் பாதுகே மூர்த்நி லக்நா
நரகமதந ஸேவா ஸம்பதம் ஸாதயித்ரீ
நியதி விலகிதாநாம் நிஷ் க்ருதிம் துர்லிபீநாம்—-815–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நரகன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனுக்குக் கைங்கர்யம் செய்தல் என்பதையே
செல்வமாக உண்டாக்கும் விதமாக, அனைத்து உயிர்களின் தலைகளில் நீ அமர்கிறாய்.
இதன் மூலம் நீ செய்வது என்னவென்றால் – தேவர்களின் க்ரீடங்களில் உள்ள இரத்தினங்கள் மூலம் உன்னில்
உண்டாக்கிய கோடுகள் கொண்டு, மக்களுடைய விதியின் மூலம் அவர்கள் தலையில் எழுதப்பட்ட
கெட்ட எழுத்துக்களை அழித்தல் என்பதைச் செய்கிறாய் (இதனால் கைங்கர்யச் செல்வம் ஏற்படுகிறது).

ஸ்ரீ பாதுகையே மனிதர்களின் தலையில் நீ வைக்கப்படுகிராய் -அப்போது என்ன நடக்கிறது -உன் மீதான ரகைகள்
தேவர்கள் க்ரீடங்களின் உரசலால் விளைந்தவை என்று முன்பே அறிந்தவை -அவை கொண்டு அந்த மனிதர்களின்
தலையில் கோடுகள் என்று சொல்லப் படுவதாகிற பிரம்மன் லிபியை மாற்றி நல்ல விதியாக எழுதி விடுகிறாய் போலும்
அந்த மனிதர்கள் பகவானைச் சேர்ந்து கைங்கர்யம் செய்வதாகிற பரம புருஷார்த்தத்தை அவர்களுக்கு சாதித்துக் கொடுத்து அருளுகிறாயே
பாகவதரை ஆச்சார்யரை ஆஸ்ரயித்து பரம புருஷார்த்தம் பெறுவது எளிதாகிறதே என்றவாறு –

————————————————————————————–

பதகமல தல அந்த: ஸம்ஸ்ரிதாநி ஆத பத்ர
த்வஜ ஸரஸிஜ முக்யாநி ஐஸ்வரீ லக்ஷணாநி
அவகமயஸி சௌரே: பாதுகே மாத்ருசாநாம்
உபரி பரிணதை: ஸ்வை: தேவி ரேகா விசேஷை:—-816-

பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில், “இவனே ஸர்வேச்வரன்”, என்பதை உணர்த்தும் விதமாக
குடை, தாமரை, கொடி போன்ற அடையாளங்கள் உள்ளன. இவற்றை அறியாத என்னைப் போன்றவர்களுக்காக
இவற்றை உனது கோடுகளாகக் கொண்டு அறிவிக்கிறாய் போலும்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடிகளில் உள்ளங்காலில் திருக்குடை திருக்கொடி திரு தாமரைப் பூ முதலிய ரேகைகள் இருப்பதாகவும்
அவை பெருமாளுடைய சர்வேச்வரத் தன்மைக்கு லஷணங்கள் என்றும் சொல்கிறோம்
ஆனால் அப்படி ரேகைகள் இருப்பது எங்களுக்குத் தெரிய வாய்ப்பு எப்படி ஏற்படும் -உன்னை சேவித்து தான் –
ஆகவே பெருமாளுடைய பெருமையை எங்களுக்கு அறிவித்து அருளுவது நீயே தான் –

———————————————————————————

ஸ்நாதா பதாவநி சிரம் பரி புஜ்ய முக்தா
பாதேந ரங்க ந்ருபதே: ஸூப லக்ஷணேந
ரேகாந்தரை: நவநவை: உபசோபஸே த்வம்
ஸம்ஸ்கார சந்தந விலேபந பங்க லக்நை:—817–

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! சுபமான பல அடையாளங்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளில் இருந்து, ஸஞ்சாரம் முடிந்தவுடன் உன்னைக் கழற்றி, உன்னை நீராட்டுகின்றனர்.
உனக்குக் குளிர்ச்சியும் வாசனையும் உண்டாகும் விதமாக சந்தனம் பூசுகின்றபோது,
அந்த சந்தன ரேகைகள் புதிதாக வேறு கோடுகள் உருவாக்கியபடி நீ உள்ளாய்.

ஸ்ரீ பாதுகையே திரு மஞ்சனம் ஆகிறது -பெருமாளுக்கும் திருப் பாதுகைக்கும் -பிறகு ஹிதமாகவும் அலங்காரமாகவும் சந்தனம் சாத்துகிறார்கள் –
அதன் பின்பு பெருமாளுக்கு பாதுகையாக சாத்துகிறார்கள் -அதன் பின்பு திருப் பாதுகையை சேவித்தால் பெருமாளுடைய
சந்தனப் பூச்சுகளில் இருந்து வேறு புதிய ரேகைகளும் தென்படும்
இப்போது நீ இன்னும் அதிக சோபையுடன் விளங்குகிறாய் –
இந்தப் புதிய சோபை பெருமாள் உடன் ஏற்பட்ட கல்வியால் வந்தது தெரிகிறது –
அந்தாமத்து அன்பு -8-9-10–ஆழ்வார் இடம் திருத் துளசி மணந்தால் போலே –

——————————————————————————————

பக்த்யா முஹு: ப்ரணமதாம் த்ரிதசேஸ் வராணாம்
கோடீர கோடி கஷணாத் உபஜாய மாநை:
ஆபாதி சௌரி சரணாத் அதிகாநுபாவா
ரேகாசதைஸ் தவ பதாவநி காபி ரேகா—818–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பக்தி காரணமாக தேவர்கள் உன்னை அடிக்கடி வணங்குகின்றனர்.
இதனால், அந்த க்ரீட முனைகளால் உன் மீது நூற்றுக்கணக்கான கோடுகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காட்டிலும் அதிகமான கோடுகள்
உனக்கு உள்ளது என்னும் உனது பெருமை விளங்குகிறது.

ஸ்ரீ பாதுகையே தேவர்கள் பக்தி மேலீட்டால் அடிக்கடி சேவிக்கின்றனர் -அதனால் க்ரீடங்களின் முனைகள் உறாய்ந்து உன் மீது
நூற்றுக் கணக்கான அதிகப்படி ரேகைகளை உண்டாக்குகின்றன -ஆகவே உனக்குப் பெருமை இன்னும் அதிகம் என்னலாம் –

———————————————————————-

பாதாவநி ப்ரதிபதம் பரமஸ்ய பும்ஸ:
பாதாரவிந்த பரி போக விசேஷ யோக்யா
ஸ்வாபாவிகாந் ஸுபக பக்தி விசேஷ த்ருஸ்யாந்
ரேகாத் மகாந் வஹஸி பத்ர லதா விசேஷாத்—-819–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை மலர் போன் திருவடிகளின் அனுபவத்திற்கு ஏற்றவளாக நீ உள்ளாய்.
இதனால் இயற்கையாகவே உன் மீது அமைந்துள்ள ரேகை உருவத்தில் இலை, கொடி போன்றவற்றை நீ தரிக்கிறாய் போலும்.

நாயகன் நாயகியுடன் இன்பமாக இருக்கும்போது நாயகியின் கன்னம், தோள் போன்றவற்றில் மீன், இலை போன்ற
வடிவங்களை நாயகன் வரைவது இயல்பாகும். இதற்கு மகரிகாபத்திரம் என்று பெயர்.
நாயகனான திருவடியுடன் இணைந்து நிற்கும் காலத்தில், இதே உருவங்கள் பாதுகையில் உள்ளன என்கிறார்.

ஸ்ரீ பாதுகையே நீ பரம புருஷனுடன் அடிக்கடி சிறந்த போகங்களை அனுபவிக்கிறாய் -அதற்குத் தகுந்தால் போலே
ஸ்வ பாவமாகவே உன் மீது இருக்கும் ரேகைகள் மூலம் அழகிய பாகுபாட்டின் சிறப்புத் தெரியும் படி -இலை கொடி போன்ற உருவங்களை
காதலி போகத்திற்குப் போகும் முன்பு செயற்கையாக வரைந்து கொள்வது போலே உன் மீது கொண்டு இருக்கிறாய்
ஸூ பக பக்தி விசேஷத்ருச்யான் -இன்பம் விளைவிக்கும் பரம பக்தியினால் பார்க்க அழகியதான என்றும் கொள்ளலாம்
பக்தியும் பக்தி சின்னங்களும் கொண்ட ஆழ்வார் ஆச்கார்யர்கள் பெருமாள் உடன் கலவிக்கு உரியர் ஆகிறார்கள் என்றவாறு –

———————————————————————–

ரேகா அபதேசதஸ் த்வம்
ப்ரசமயிதும் ப்ரளய விப்லவ ஆசங்காம்
வஹஸி மதுஜித் பதாவநி
மந்யே நிகமஸ்ய மாத்ருகா லேக்யம்—-820-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ப்ரளய காலத்தில் வேதங்கள் அழித்துவிடுமோ
என்ற சந்தேகம் சிலருக்கு உண்டாகலாம். இதனால் அந்த சந்தேகத்தை நீக்கும் விதமாக உன்னில் காணப்படும்
கோடுகள் என்பதன் மூலம், வேதங்களின் ப்ரதியை நீ வைத்துக் கொண்டுள்ளாய் என்பதை உணர்த்துகிறாய் போலும்.

பெருமாளுடைய ஸ்ரீ பாதுகையே பிரளயம் வந்தால் எல்லாம் அழிந்து போய் விடுகிறதே
வேதமும் அப்படி யாகி விடுமோ என்றதோர் பயத்தை நீக்குகிறாய் –
உன் மீது ரேகைகள் என்ற பெயரில் வேதங்களின் மூலத்தை அஷர ராசியை ஒரு சந்கேதத்தில் வைத்துப் பாது காக்குகிறாய் என்று எண்ணுகிறேன் –
திருப் பாதுகை உபாசனம் வேதங்கள் அனைத்தையும் விளங்க வைக்கும் -வேதம் எழுதாக் கிளவி எனபது நாம் எழுதிக் கற்பதை
விலக்குவதே யன்றி பெருமாளே சங்கேதமாக ரேகையாக எழுதிக் காப்பதை விலக்க மாட்டாது –
தமிழ் வேதத்துக்கும் இது பொருந்தும் -திருப் பாதுகையே நம்மாழ்வார் ஆயிற்றே –

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-26-யந்த்ரிகா பத்ததி -குமிழ்கள் அமைப்பும் அனுபவமும் –குடை போன்றவை -மேலும் பல -படலம் -ஸ்லோகங்கள் -801-810-

March 19, 2016

இந்தப் பத்ததி முழுவதும் பாதுகைகளில் காணப்படும் குமிழை வர்ணிக்கிறார்.

———

உதக்ர யந்த்ரிகாம் வந்தே பாதுகாம் யந்நிவேசநாத்
உபயர்பி பதம் விஷ்ணோ: ப்ரத்யாதிஷ்ட ப்ரஸாதநம்—-801-

மேலே நீட்டியபடி உள்ள குமிழைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் வணங்குகிறேன்.
இப்படியாகக் குழிழைத் தனது மேற்பக்கத்தில் வைத்துள்ளதால் ஸ்ரீரங்கநாதன் திருவடிகள்,
”மேற்பக்கத்தில் தங்களுக்கு ஆபரணம் வேறு வேண்டாம்”, என்று தள்ளியபடி உள்ளன.

மேல் முகமாக நுனியைக் கொண்டுள்ள குமிழ் கொண்ட ஸ்ரீ பாதுகையை வணங்குகிறேன் –
பெருமாள் திருவடியை ஸ்ரீ பாதுகையில் வைக்கிறார் -குமிழ் மேலே இருக்கிறது -ஸ்ரீ பாதத்திற்கு மேலே ஆபரணமாக –
எப்படி ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பாதத்திற்குக் கீழ்ப்புறம் அலங்காரமாக இருக்கிறதோ அதே போலே –
ஆகவே திருவடிக்கு மேலே வேறு ஒரு திரு ஆபரணம் வேண்டுவது இல்லை –

———————————————————–

ப்ரஸபம் ப்ரதிருத்ய கண்ட காதீந்
பவதீ சௌரி பதாம் புஜாத் அதஸ்தாத்
சரணாவநி தாரயதி அமுஷ்மிந்
உசிதச் சாயம் உபர்யபி ப்ரதீகம்—-802-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளின் கீழ்பக்கத்தில் முள் போன்றவை
ஏறாமல் வலிவுடன் நீ தடுத்துவிடுகிறாய். அந்தத் திருவடிகளின் மேற்புறத்தில் தகுதியான
அழகிய நிழலை உண்டாக்குகின்ற குமிழ் என்ற அவயவத்தைத் தாங்கி நிற்கிறாய்.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடிக்குக் கீழ்ப் புறம் இருந்து கொண்டு பாதையில் கிடக்கும் முள் முதலியவற்றைப் பலாத்காரத்துடன்
வலிந்து நசுக்கிப் பெருமாளுக்கு உதவுகிறாய் -மேல் பாகத்திலேயோ குமிழ் என்கிற நிழல் தரும் குமிழைக் கொண்டு
அழகே தருகிறாய் -சாயா -நிழல் -அழகு -இரண்டு பொருள்கள் –

——————————————————————–

முரபிந் மணி பதுகே த்வதீயாம்
அநகாம் அங்குளி யந்த்ரிகாம் அவைமி
ஸ்வயம் உந்நமிதாம் ப்ரதேசிநீம் தே
பரமம் தைவதம் ஏகம் இதி ருசந்தீம்—803–

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி விரல்களுக்கு இன்பமான
பிடிப்பாக உள்ள குமிழானது தானாகவே மேல்புறமாக நீண்டும், ”அனைத்திற்கும் மேற்பட்ட தெய்வம் ஸ்ரீரங்கநாதனே”,
என்று உறுதிபடக் கூறும் ஆள்காட்டி விரல் போன்றும் உள்ளதாக நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பகவானின் பாதுகையே உன் அழகிய குமிழ் பெருமாள் திருவடி விரல்களுக்கு இடையில் அவற்றின் பிடிப்புக்காக இருப்பதை அறிவேன் –
ஆயினும் அது அறுதியிட்டு அழுத்தமாகச் சொல்ல அடையாளமாகக் காடும் ஆள்காட்டி விரலாகத் தோன்றுகிறது –
பல தெய்வங்கள் அவை சமம் என்று எல்லாம் கலக்குகிறவர்களுக்கு மறுப்பாக -எல்லாத் தெய்வங்களுக்கும் மேற்பட்ட பர தெய்வம்
நாராயணன் ஒருவனே என்று பகவத் ஸ்துதியாக அறுதியிடுகிறதோ-குற்றம் அற்ற குமிழ் -அப்படித்தான் எண்ணுகிறேன் –

————————————————————————-

ஸவததே மணி பாதுகே த்வதீயா
பத சாசா யுக யந்த்ரிகா விசித்ரா
பரமம் புருஷம் ப்ரகாச யந்தீ
ப்ரணவஸ் யேவ பரா அர்த்த மாத்ரா—-804-

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினகற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆச்சர்யம் ஏற்படுத்துவதாக உள்ளதும்,
உன் மீது உள்ளதும் ஆகிய இந்தத் திருவடிகளில் இரண்டு விரல்களுக்கும் பிடிப்பாக உள்ள குமிழ் எப்படி உள்ளது என்றால் –
உயர்ந்தவனான ஸ்ரீரங்கநாதனைக் காண்பிக்கின்ற ப்ரணவ மந்த்ரத்தின் இறுதியில் உள்ள ”ம” என்ற எழுத்து போன்று
(ம என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்) இன்பமாக உள்ளது.

ஸ்ரீ மணி பாதுகையே விரல்களுக்கு இடையில் இருக்கும் இந்த ஆச்சர்யமான பிடிப்பு பிரணவ உச்சாரணத்தின் போது
அந்த நாதத்தின் மேல் கேட்கும் பிரசித்தமான அர்த்த மாத்ரை என்னலாம் -பிரணவம் -அகார உகார மகார அஷாரங்களின்
சேர்க்கையாகப் பெருமாளைச் சொல்லும் -பரம புருஷ வாசகம் -இப்படி உன் குமிழைப் பெருமாளின் நிர்தேசகமான
பிரணவ நாத அர்த்த மாத்ரையாகச் சொல்லுவது எனக்கு மிகவும் ரசமாய் இருக்கிறது –

———————————————————————————-

அநுயாத மநோ ரதா முராரே:
பவதீ கேளிரத ஸ்ரியம் ததாதி
சரணாவநி யந்த்ரிகா தவைஷா
தநுதே கூபர ஸம்பதம் புரஸ்தாத்—-805-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை அடைந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற எண்ணியவளாக,
நீ நினைத்தபோது ஸ்ரீரங்கநாதனை அவர்களிடம் அழைத்துப் போகின்ற தேர் போன்று உள்ளாய்.
உனது குமிழ் என்பது அந்தத் தேரின் முன்னே காணப்படும் ஏர்க்கால் போன்ற தோற்றம் அளிக்கிறது.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாளின் மநோ ரதத்தை அனுசரித்து அதே வேகத்தில் நடக்கும் ஒரு விளையாட்டு ரதம் போலே ஸோபிக்கிறாய்
உன்னுடைய குமிழ் தேருக்கு முன்னாள் ஏர்க்கால் கட்டி அதை நிறுத்தி வைக்கும் முளை போல் தோற்றும் –

———————————————————————–

சங்கே பவத்யாஸ் ஸுபகம் ப்ரதீகம்
ரங்கேச பாதாங்குளி ஸங்க்ரஹார்த்தம்
த்ராணாய பாதாவநி விஷ்டபாநாம்
ஆஜ்ஞாகரீம் அங்குளி முத்ரிகாம் தே—-806-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி விரல்களுக்கு ஏற்ற பிடிப்பாக உனது குமிழ் உள்ளது.
இந்தக் குமிழை – அனைத்து உலகங்களையும் காப்பாற்றும் பொருட்டு, உலகினருக்கு இடையூறு செய்பவர்களைக் கண்டு,
”இப்படிச் செய்யாதீர்கள்”, என்று கட்டளை செய்கின்ற உனது ஆள்காட்டி விரலின் முத்திரை என்றே நான் எண்ணுகிறேன்.

ஸ்ரீ பாதுகையே திருவடி திருவிரல்கள் பிடிப்புக்கு உதவும் -குமிழ் உலக ரஷணத்தைக் கருதி உபத்ரவம் செய்யும் துஷ்டர்களை நோக்கி
இப்படித் தப்பு செய்யாதீர்கள் -செய்தால் விட மாட்டேன் -தண்டிப்பேன் -என்று பயமுறுத்தி உத்தரவு பிறப்பிக்கும்
நிலையில் உள்ள ஆள்காட்டி விரல் தான் என்று பூஜிக்கிறேன் –

——————————————————————

அலங்க்ருதம் கர்ணிகயா உபரிஷ்டாத்
உதக்ர நாளம் தவ யந்த்ரிகாம்சம்
பத்மாபதே: பாத ஸரோஜ லக்ஷ்ம்யா:
ப்ரத்யேமி பாதாவநி கேளி பத்மம்—807–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது குமிழின் மேற்புறம் தாமரை மலர்களின் நடுப்பாகத்தில் உள்ள கர்ணிகை
என்னும் பாகத்தினால் அலங்கரிக்கப்பட்டது போன்று உள்ளது. இப்படியாக உள்ள இந்தக் குமிழைக் காணும்போது –
ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கராஜனின் திருவடிகள் என்னும் தாமரை மலரில் காணப்படும் மஹாலக்ஷ்மி,
தனது விளையாட்டிற்காகக் கையில் வைத்துள்ள தாமரைமலர் என்றே எண்ணுகிறேன்
(திருவடியில் உள்ள மஹாலக்ஷ்மிக்காக உள்ள தாமரை மலர் என்று குமிழ்களை வர்ணிக்கிறார்)

ஸ்ரீ பாதுகையே உனது பகுதியான குமிழ் மேலே தாமரைக் காய் போன்று நுனி யுறுப்பும் மேல் நோக்கிப் போகும் காம்பும் கொண்டது –
இது எனக்கு எப்படித் தோற்றுகிறது என்றால் பெருமாள் திருவடித் தாமரையில் லஷ்மி இருக்கிறாள்
அவள் திருக்கையில் வைத்து இருக்கும் விளையாட்டுத் தாமரைப் பூ தான் இது-என்று –

————————————————————————-

உபரி விநிஹிதஸ்ய கேசவ அங்க்ரே:
உபரி பதாவநி யந்த்ரிகாத்மிகா த்வம்
இதி தவ மஹிமா லகூ கரோதி
ப்ரணத ஸுரேஸ்வர சேகராதி ரோஹம்—808–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் மீது நீ குமிழ் ரூபமாக நிற்கிறாய்.
இதனால் உன்னை வணங்கி நிற்கின்ற தேவர்களின் க்ரீடங்களில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் ஏறுகின்றன
என்ற பெருமையை, உனது பெருமை சிறிதாக்குகிறது.

எது ஒன்றின் மீது வைக்கப்படுகிறதோ, அந்தப் பொருளே உயர்ந்தது, கீழே உள்ள பொருள் சற்றே தாழ்ந்தது என்பது
பொதுவான உண்மை. தேவர்களின் க்ரீடங்களில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் வைக்கப்படுவதால், அவை உயர்ந்தவையே.
ஆனாலும், அந்தத் திருவடிகள் மீது குமிழ் உள்ளதால், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் சற்றே தாழ்ந்தன.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாளின் திருவடிக்கு கீழ் இருந்து கொண்டு உன் உறுப்பான குமிழ் திருவடிக்கு மேலும் போவதை சேவிக்கும்
நான் சொல்கிறேன் இப்படி உன் பெருமை இருக்க நீ தேவர் ஸ்ரேஷ்டர்களின் தலை மீது ஏறுகிறாய் எனபது ரொம்ப அல்ப விஷயமாகும் –

——————————————————————–

நித்யம் பதாவநி நிபத்த கிரீட சோபம்
பத்மாலயா பரிசிதம் பதம் உத்வ ஹந்த்யா:
அங்கீ கரோதி ருசிம் அங்குளி யந்த்ரிகா தே
ஸாம்ராஜ்ய ஸம்பத அநுரூபம் இவ ஆத பத்ரம்—-809-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்போதும் ஸ்ரீரங்கநாச்சியாரால் பிடிக்கப்பட்டபடி உள்ளது.
இந்தத் திருவடிகள் உனக்குக் கிரீடம் போன்று உள்ளது. இப்படிப்பட்ட திருவடிகளைத் தாங்கும் உனது குமிழ் என்பது,
நீயே சக்ரவர்த்தினி என்பதை அறிவிக்கும் குடை போன்ற அழகான தோற்றத்தை அடைகிறது.

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடியாகிற கிரீடம் ஏற்று இருக்கிறாய் -அது எப்படிப்பட்டது –
மஹா லஷ்மியின் பிடித்தல் பெற்றதாய் நீ ஏக சக்ராதிபதியாக மஹா ராணியாக இருக்க
உன் குமிழ் அப்பதவிக்கு ஏற்ப ஒரு திருக் குடை போல் தோற்றம் அளிக்கிறது –

——————————————————————

ப்ரதமா கலேவ பவதீ சரணாவநி பாதி ரங்க சந்த்ரமஸ:
ஸ்ருங்க உந்நதிரிவ யத்ர ஸ்ரியம் விபாவயதி யந்த்ரிகா யோக:—-810-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைக் காணும்போது ஸ்ரீரங்கத்தின் சந்த்ரனாகிய ஸ்ரீரங்கராஜனின்
முதல் கலை போன்று உள்ளாய். இப்படியாக உள்ள அந்தக் கலையின் நுனி போன்ற அழகை உனது குமிழ் ஏற்படுத்துகிறது.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்க சந்த்ரனுடைய முதல் கலை போலே நீ விளங்குகிறாய் -உன் உருவம் அங்கனம் முதல் கலையை ஒத்தது
அதில் குமிழ் பிறையின் ஒரு நுனி உயர்ந்து இருப்பதான அழகை -அது குறிப்பிடும் சம்பந்தத்தைக் காட்டுகிறது –
பிறை நுனி ஒரு பக்கத்தில் உயர்ந்து இருந்தால் -மூன்றாம் பிறை போலே -அது நல்ல தானிய வளம் கொடுக்குமாம் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-25-சந்நிவேச பத்ததி -ஸ்லோகங்கள் -781-800-

March 19, 2016

அணோர் அணீய ஸீம் விஷ்ணோ மஹதோபி மஹீயஸீம்
ப்ரபத்யே பாதுகாம் நித்யம் தத்பதே நைவ சம்மிதாம் –781-

பெருமாள் அணுவைப் போல் சிறிய உருவம் எடுத்து இருக்கும் போதும் மிகப்பெரிய உருவம் எடுத்த போதும்
அதற்க்கு ஏற்ற திருவடி யுடையவராய் இருப்பதால் அந்தத் திருவடியுடன் -அந்தத் திருவடிக்கே ஏற்றதாயும்
பரமாத்ம ஸ்வரூபத்துக்கு ஏற்றதாகவும் இருக்கின்ற ஸ்ரீ பாதுகையை எப்போதுமே சரணமாகப் பற்றுகின்றேன்

——————————————————————————-

ப்ரதிதிஷ்டதி பாத சம்மிதாயாம் த்வயி நித்யம் மணி பாதுகே முகுந்த
இதரே து பரிச்ச தாஸ்த ஏதே விபவ வ்யஞ்ஜன ஹேதவோ பவந்தி –782-

ஸ்ரீ மணி பாதுகையே பகவானுடைய திருவடிக்கு சமானமான உன்னிடத்திலேயே எப்போதும் நிலைத்து நிற்கிறார் அவர் –
அவருடைய மற்ற திவ்ய அணி கலன்கள் திருக்குடை திருச் சாமரம் போன்றவை இது போல் அன்று
அவை அவருடைய ஐஸ்வர்யப் பெருமைக்கு அடையாளங்களாம் -அவர் பெருமையை வெளிப்படுத்த வென்று ஏற்ப பட்டனவாம் –

—————————————————————————

தவ ரங்க நரேந்திர பாத ரஷே
ப்ரக்ருதிஸ் சந்நபி பக்தி பாரதந்த்ர்யாத்
பவதீம் வஹதீவ பன்ன கேந்திர
ப்ரதித ஸ்வஸ்திக லஷணை சிரோபி –783-

ஸ்ரீ பாதுகையே ஆதிசேஷன் உனக்கு மூல உரு தான் -ஆயினும் உன்னிடத்தில் உள்ள பக்தியின் பேரளவினால் போலும்
உன் வடிவவமான துத்தியை -ஸ்வஸ்திகம் – -அது போன்ற ரேகையை -உன் வடிவைத் தன் ஆயிரம் படங்களிலும் தரிக்கிறான்
இணத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் -என்ற ஸ்ரீ குலசேகரப் பெருமாள் உடைய ஸ்ரீ ஸூக்திகள் உன்னைப் பற்றியே –

——————————————————————–

பரஸ்ய பும்ஸ பத சந்நிவேசான்
பிரயுஜ்ஞதே பாவித பஞ்சராத்ரா
அகப்ரதீபான் அபதிஸ்ய புண்ட்ரான்
அங்கேஷூ ரங்கேஸய பாதுகே த்வாம் –784–

ஸ்ரீ பாதுகையே பாஞ்ச ராத்ர -வைகானச -ஆகம சாஸ்திரங்கள் படி பெருமாளை ஆராதிப்பவர் பகவான் திருவடி வடிவில்
ஸ்ரீ ஹரி பாதாக்ருதியில் -திருமண்களைத் தம் நெற்றி மார்பி வயிறு புஜம் கழுத்து என்று உடலின் பாகங்களில் தரிப்பது
பாபங்களைப் போக்குபவை என்று இது செய்வது -திருவடிகளின் உருவம் எனபது வெறும் வியாஜமே –
உண்மையில் நீ தான் அப்படித் தரிக்கப் பெறுவது -உன் உருவமாய் இருப்பதே பாபம் போக்க வல்லவை யாகும் –

——————————————————————————-

விம்ருஷ்ய ரங்கேந்திர பதிம் வராயா
ஸ்ருதே ஸ்திதாம் மூர்த்தநி பாதுகே த்வாம்
பத்நந்தி வ்ருத்தா சமயே வதூநாம்
தவன் முத்ரிதாநி ஆபரணாநி மௌமௌ –785–

ஸ்ரீ பாதுகையே விஷயம் அறிந்த பெரியோர்கள் விவாஹ சமயத்தில் மணப்பெண் தலையில் நுகத் தடியுடன் திரு மாங்கல்யத்தை வைப்பது ஏன்
திரு மாங்கல்யத்தில் திருமான் ரூபமாக நீ இருக்கிறாய் என்பதை ஆராய்ந்து அப்படி வைக்கிறார்கள் -ஏன்
ஸ்ரீ ரங்க நாதப் பெருமானைத் தனது பதியாகக் கொள்ளும் ஸ்ருதி மாதர்கள் தம் சிரஸ்ஸில் திருப் பாதுகையைத் தாங்குகிறார்களே-
ஸ்ருதி போற்றுவது எல்லாம் பெருமாளை -அவர் ஸ்ரீ பாதுகையுடன் ஸ்ருதிகள் தலையில் நிற்பதால் தானே –

————————————————————————–

வஹந்தி ரங்கேஸ்வர பாத ரஷே
தீர்க்காயுஷாம் தர்சித பக்தி பந்தா
ஆசாதி பாநாம் அவரோத நார்ய
த்வன் முத்ரிகாம் மங்கள ஹேம ஸூத்ரை–786-

ஸ்ரீ பாதுகையே திக் பாலர்கள் தீர்க்காயுஸ்ஸூ உள்ளவர் -எங்கனம் -அவர்கள் மகிஷிகள் அதிக பக்தியுடன் பொன் சரட்டில்
கட்டிய திரு மாங்கல்ய தாரணம் செய்வது உன்னுடைய வடிவத்தைக் கொண்டே -அவர்கள் தீர்க்க ஸூமங்கலிகளாய் இருப்பது இதனாலே –

————————————————————————————————-

வ்யூஹ க்ரமேண பிரதி தாரமக்ரே
சந்தர் சயந்தீ மணி பாதுகே த்வாம்
பாதும் த்ரிலோகீம் பதபத்ம பாஜம்
சௌ தார்ச நீம் சக்தி மவைமி சௌரே –787-

ஸ்ரீ மணி பாதுகையே ஸ்ரீ வாஸூ தேவாதி வியூஹங்களாகத் தன்னை விஸ்தரிக்கிற பகவானை நீ எதிரில் காட்டுகிறாய் –
அவன் பிரசித்தமான திரு வரங்கன் -நீ மூன்று உலகங்களையும் காப்பவள் –
பிரசித்தமான திரு வரங்கனுடைய ஸூதர்சன மூர்த்தியின் அஷம்-திருவச்சு -வியூஹ வாஸூ தேவ மூர்த்தி –
அதுவும் தன் யந்த்ரத்தில் ஸ்ரீ பாதுகையைக் கொண்டது -ஆக ஸ்ரீ பாதுகை சௌதர்சன சக்தியைப் பெற்றது
அந்த சக்தி மூன்று உலகங்களையும் ரஷிக்க ஸ்ரீ பாதுகையை அடைந்து உள்ளது -ஸ்ரீ பாதுகையிலும் திருச் சக்கர ரேகை யுண்டே –

——————————————————————–

பத்தாசிகா கநக பங்கஜ கர்ணிகாயாம்
மத்யே க்ருசா முரரிபோ மணி பாதுகே த்வம்
சந்த்ருச்யசே சரசிஜாச நயா க்ருஹீதம்
ரூபாந்த்ரம் கிமபி ரங்க விஹார யோக்யம் –788-

ஸ்ரீ மணி பாதுகையே நீ தங்கத் தாமரை ஒன்றில் அதன் நடுப்பாகமான காயில் வீற்று இருக்கிறாய் –
ஸ்ரீ சடாரியின் மேல் அதன் தோற்றம் பங்கஜ கர்ணிகை போலே இருக்குமே –
இடையில் சிறுத்து உள்ளாய் -ஸ்ரீ ரங்கத்தில் நடமாடுகிறாய்-
நீ ஸ்ரீ ரங்கத்தில் நாடக மேடையில் இப்படி ஆட மகா லஷ்மியின் மற்றொரு உருவமோ –
பிராட்டியும் தாமரையில் இருந்து -இடை சிறுத்து- நடம் ஆடுபவள் அன்றோ –

———————————————————————————————

மாநோசிதஸ்ய மததீன ஜநஸ்ய நித்யம்
மாபூத் அத க்ருபண தேதி விசிந்த்த யந்த்யா
பந்தி க்ருதம் த்ருவ மவைமி வலக்நதேசே
கார்ஸயம் த்வயா கமல லோசந பாத ரஷே –789–

ஸ்ரீ பாதுகையே நீ இடை சிறுத்துத் தோன்றுவதன் காரணம் எனக்கு இப்படிப் படுகிறது –
என்னை ஆஸ்ரியப்பவர் மிகவும் பூஜ்யர் -அவர் பணம் புகழ் படிப்பு பக்தி இப்படி ஏதோ ஒன்றிலோ
எல்லா வற்றிலோ இளைத்துச் சிறுத்து ஐயோ என்று மற்றவர் இரங்கும்படிஇருக்கலாகாது -அவர் இளைப்பை எல்லாம்
நான் எடுத்துக் கொண்டு என்னிடம் இப்படிச் சிறை வைத்து விட்டேன் என்று சொல்வது போலே –

——————————————————————————

மன்யே க்ருசாம் உபயத ப்ரதிபன்ன வ்ருத்திம்
மன்யே சமீஷ்ய பவதீம் மணி பாத ரஷே
நித்யம் முகுந்த பத சங்கம விப்ர யோகௌ
நிஸ் சிந்வதே க்ருததிய ஸூக துக்க காஷ்டாம் –790–

ஸ்ரீ மணி பாதுகையே நீ நடுவில் சிறுத்தும் இரு புறங்களிலும் பருத்தும் இருப்பது பற்றிக் கற்று அறிந்தவர் சொல்வது இது தான்
எப்போதும் பெருமாளுடைய திருவடித் தொடர்பு இழந்து இருப்பத் சிறுமை தரும்
முன் திருப்பாதமும் திருக் குதிக்காலும் அழுந்தி அவ்விடங்களில் பருமன் அகலம் ஏற்பட்டதாம்
ஏன் என்றால் -ஸூகம் -மேற்படி சம்பந்தம் -துக்கம் சம்பந்தம் இழப்பது -என்று வரை அறுத்து இருக்கிறார்களே –
தத் சம்ஸ்லேஷ வியோகைக ஸூக துக்க –ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -29-

———————————————————————————

ரங்கேஸிதுஸ் சரண பங்கஜ யோர் பசந்தீ
ரஷா ப்ரசாதன விகல்ப சஹாம் அவஸ்தாம்
மான்யாக்ருதிர் நிவேசசே மணி பாத ரஷே
மத்யே பரிச்சத விபூஷண வர்கயோஸ் த்வம் –791-

ஸ்ரீ மணி பாதுகையே போற்றத் தகும் ஸ்வரூபம் உடைய உன்னை இரண்டு விதமாகவும் சொல்லலாம்
பெருமாள் திருவடிகளைக் காப்பவை -அதாவது பரிச்சதங்கள் வகை திருக்குடை திருச் சாமரம் போல்வன
அதே சமயம் திருவடிக்கு அலங்காரமாக உள்ளவை -திருக்கை வளை திருக் கிரீடம் போல பூஷணம் என்று –

————————————————————————

அங்காந்தரேஷூ நிஹி தான்ய கிலானி காமம்
பர்யாய கல்பந சஹாநி விபூஷணாநி
நித்யம் முகுந்த பத பத்ம தலாநுரூபம்
னைபத்யமம்ப பவதீ நயனா பிராமம் –792–

ஸ்ரீ அம்மா மற்ற திரு அவயவங்களில் சாத்தப் பட்டுள்ள திரு ஆபரணம் ஒன்றை எடுத்து இன்னொன்றைச் சாத்தினால் ஏற்கும் –
அவ்வாபரணங்கள் அவற்றைப் பரஸ்பரம் மாற்றுவதை சஹிக்கும் -பகவானின் திருவடித் தாமரைகளில் பூண்ட திரு ஆபரணம் நீ
நியதம் மாற்ற முடியாது -இது கண்டவர் கண்ணுக்கு இனியது –

——————————————————————————————

யே நாம பக்தி நியதைஸ் தவ சந்நிவேசம்
நிர்விச்ய நேத்ர யுகளைர் ந பஜந்தி த்ருப்திம்
கால க்ரமேண கமலேஷண பாத ரஷே
ப்ராயேண தே பரிணமந்தி சஹச்ர நேத்ரா –793–

ஸ்ரீ பாதுகையே நீ திருவடிகளில் அமைந்து இருக்கிற சந்நிவேசத்தை எவர்கள் பக்தியோடு பொருந்திய கண் இணைகளால்
சேவித்து அனுபவித்துத் திருப்தி அடையாமல் போய் காணக் கண் ஆயிரம் வேணுமே என்று பாரிக்கின்றனரோ
அவர்கள் கால க்ரமத்தில் ஆயிரம் கண் பெறுவார்
இந்த்ரப் பதவி உப லஷணம் மட்டுமே -பிரம்மாதி பதவிகளும் அனைத்து அபிலாஷையும் பெறுவார் –

————————————————————————–

பதம ப்ரமாணமிதி வாதி நாம் மதம்
மது ஜித்பதே மஹதி மாசமா பூதிதி
வயுத பாதி தஸ்ய சரணாவநி த்வயா
நிகமாத்ம நஸ்தவ சமப்ரமாணதா –794-

ஸ்ரீ பாதுகையே -வெறும் ஒற்றைச் சொல் -மாடு எனபது போல பொருள் அற்றது -பிரமாணம் ஆகாது
மாடு மேய்க்கிறது என்றால் தான் கருத்து ஏற்பட்டு பிரமாணம் ஆகும் என்பர் தார்க்கிகர்
பதம் அப்ரமாணம் என்று அவர்கள் சொவதை மறுத்து பகவத் பதம் பிரமாணம் என்று சொல்ல எண்ணி நீ அளவாய் யுடையாய்
திருப் பாதங்களுக்கு ஏற்ற அளவு ஸ்ரீ பாதுகை -நீயும் திருப்பாதமும் சமப்ரமாணர் -இன்னொரு பொருளில் கூட
நீ நன்றாக செல்பவள் -ஆதலால் நிகமம் -அதாவது நீயே வேத ரூபம் -வேதத்திற்குப் போல் உனக்கும் பிரமாண்யம்
அந்தப் பிரமாணத்தை திருப் பாதத்துக்கு வழங்கி நீவிர் இருவரும் சம பிரமாணராய் இருக்கிறீர்கள் –

——————————————————————————

அப்ரபூதமபவத் ஜகத்ரயம்
யஸ்ய மாதும் உத்தி தஸ்ய பாதுகே
அப்ரமேயம் அமி தஸ்ய தத்பதம்
நித்யமேவ நநு சம்மிதம் த்வயா –795-

ஸ்ரீ பாதுகையே -திரு உலகு அளந்த சமயம் மூன்று உலகும் அவன் திருவடிக்கு போதாமல் போயிற்று –
அளவிட முடியாதவனான அவனுடைய அளவிட ஒண்ணாத மஹிமை கொண்ட அந்த திருவடியும் கூட உன்னாலே
நித்தியமே அளவிடப் பட்டு நிகிறதே -உன் பெருமைக்கு மற்றவை ஏதும் இணையாகாது –

———————————————————————————-

ஆலவாலமிவ பாதி பாதுகே பாத பஸ்ய பவதீ மதுத்விஷ
யத் சமீப வின தஸ்ய ஸூ லிந சாரி ணீ பவதி மௌளி நிம் நகா –796-

ஸ்ரீ பாதுகையே நீபாத்தி -பகவான் அதில் முளைத்து ஓங்கி இருக்கும் மரம் -பக்கத்தில் வணங்கி நிற்கும் சிவனுடைய
தலையில் உள்ள கங்கை நீர் கால் வாயாகப் பாய்ந்து பாத்திக்குள் ஜல நிறைவு ஏற்படும் –

————————————————————–

மோதமாந முநி ப்ருந்த ஷட்பதா பாதி மகதி மகரந்த வர்ஷிணீ
கா அபி ரங்க ந்ருப்தே பதாம் புஜே கர்ணிகா கநக பாது காமயீ –797-

பொற் பாதுகையான ஒரு தாமரைக் காய் -பூவின் நடு சமயத்தில் உள்ளது -மோஷம் என்கிற தேனை அருந்த வென்று
களிப்புடன் முனிவர் கூட்டங்கள் என்னத் தக்க வண்டுகள் சுற்றிச் சுற்றி வட்டம் இடுகின்றன
ஸ்ரீ ரங்க நாதனுடைய திருவடித் தாமரையில் இந்த கர்ணிகை அல்லது காய் விளங்குகிறது –

————————————————————–

யுகபத நு விதாசயன் யௌவனம் துல்யராகம்
யதுபதிரதி சக்ரே யாவதோ ரூப பேதான்
ததிதமதி விகல்பம் பிப்ரதீ சந்நிவேசம்
தவ கலு பத ரஷே தாவதீ மூர்த்திராசீத் -798-

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ கிருஷ்ணன் தனக்கு ஈடாகக் காதல் கொண்ட கோப ஸ்திரீகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு
அவவவருக்கு வேண்டியபடி எத்தனை ரூபம் எடுத்தாரோ
பதினாறாயிரம் கோபிகளாம்-அவ்வளவு பெருமாள் எடுத்த போது நீயும் மேலும் அதிகமாக இரண்டு மடங்காக ரூபம் எடுத்தாயே –

———————————————————————-

தத்தத் வ்ருத்தே நு குணதயா வாமநீம் வ்யாபிநீம் வா
ப்ராப்தே ரங்க ப்ரதிதவிபவே பூமிகாம் ஸூ த்ரதாரே
மன்யே விச்வஸ்திதிமய மஹாநாடி காம் நேத்து காமா
நா ந சம்ஸ்தா பவதி பவதீ பாதுகே நர்த்த கீவ –799-

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ ரங்கம் ஒரு அரங்க மேடை -பெயர் பெற்ற ஸூத்ரதாரன் -கதா நாயகன் -வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு
ஏற்றபடி -சிறியதாகவோ பெரியதாகவோ வேஷம் போட்டுக் கொள்ள நேரும் –
அப்போது எல்லாம் நீயும் ஆட்டக்காரி போல் தகுந்த வேஷத்தைக் கூடவே ஏற்று
உலக ரஷை என்னும் பெரும் நாடைத்தை நாடகத்தை ஆடிக் காட்டுகிறாய் –

————————————————————————

மாநே பரம் சமா நே ப்ரத்ய ஷேணாகமே நாபி
ஹரி சரணஸ்ய தவாபி து வைஷம்யம் ரஷ்ய ரஷகத்வாப்யாம் –800-

ஸ்ரீ பாதுகையே பகவான் திருவடிக்கும் உனக்கும் எவ்வளவு ஒற்றுமை -பிரத்யஷப் பார்வையில் சமானர்கள்-
ஆகமங்களும் சமம் என்று சொல்வதால் சமானர்கள் -ஆகவே அளவு கணக்கும் ஞானமும் மிகவும் சரிசமம் –
ஆனால் காக்கப் படுபவர் காப்பவர் என்ற நோக்கில் பார்த்தால் நிறைய வேறுபாடு உண்டு –
திருவடி காக்கப்படும் வஸ்து நீ ரஷிக்கும் திறம் பெற்றவள் –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .