Archive for the ‘ஸ்ரீ ஈடு’ Category

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-9–மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ–சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸூ பிராப்தி காலம் அவிபாவயதி
இந்திரேஸ் ரமேஸ்-கிருஷ்னே கவாம்
சாயம்விசமாகமம் விளம்பிநீ
ஸ்ப்ருதே சடாரி

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

பத்மாக்ஷத்வாத் ஜகத் அவதரணத்தயா பவ்யாத்யை
சார க்ராஹ்யத்வாத் வேணு நாதையைகி கிருஷி ஜனதயா
அஜாதேயே ஸ்வாங்கத்வாத் ஸ்யாமளத்வாத்
கவ்விய சோரத்வாத் வசன அவலோகநா-சரஸசேஷ்டத்வ பூம்னா

1–பத்மாக்ஷத்வாத்–அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்

2–ஜகத் அவதரணத்தயா–அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்

3–பவ்யாத்யை-கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ

4–சார க்ராஹ்யத்வாத்–தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ

5–வேணு நாதையைகி கிருஷி ஜனதயா–யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ

6–அஜாதேயே ஸ்வாங்கத்வாத்–சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்

7–ஸ்யாமளத்வாத்–காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே

8–கவ்விய சோரத்வாத்–நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்

9–வசன அவலோகநா-ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி

10-சரஸசேஷ்டத்வ பூம்னா–என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே-

——–

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

———-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

———-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3

——–

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

——–

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

———-

அவனுடை யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

———

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

———–

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-

———-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

———-

மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

———–

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -89-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-ஒரு சந்தையில் யுண்டான ஸ்ரீ ஆழ்வார் அபிசந்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
அறுக்கும் வினையில் பெரிய த்வரையோடே மநோ ரதித்தவர் த்வர அனுகுணமாக பிராப்ய பூமியிலே புக்கு
அவனை அனுபவிக்கப் பெறுவதற்கு முன்னே
தத் ப்ராப்தி ஸூசகமான அடையாளங்களைக் கண்டு
நோவு பட்டுச் செல்லுகிறபடியை பகல் எல்லாம் பசு மேய்க்கப் போன ஸ்ரீ கிருஷ்ணன்
மீண்டு வருவதற்கு முன்னே அவன் வரவுக்கு அடையாளமான
மல்லிகை கமழ் தென்றல் முதலான வஸ்துக்களைக் கண்டு ஸ்ரீ திரு ஆய்ப்பாடியில் இடைப் பெண்கள்
அந்த ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தாலே
சந்த்யா சமயத்திலே நோவு பட்டுச் செல்லுகிற துறை மேலே வைத்து அருளிச் செய்கிற
மல்லிகை கமழ் தென்றலில் அர்த்தத்தை-மல்லடிமை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

—————————————————

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால்–89-

மல்லடிமை – பூர்ண அனுபவம் –
மால் -மருட்சி அஞ்ஞானம்-
தொல் நலம் -ஸ்வாபாவக பக்தி – சஹஜ பக்தி –

————————————————

வியாக்யானம்–

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க –
மல்லடிமை -சம்ருத்தமான அடிமை –பரிபூரணமான கைங்கர்யம் –
அது செய்யும் காலம் எப்போதோ என்று ஸ்ரீ சர்வேஸ்வரனை கேட்க –
நாளேல் அறியேன் -எனக்கு உள்ளன -என்று கேட்க –

அவன் சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் –
அவன்-மாலை நண்ணியிலே-மரணமானால் -என்று நாள் அறுதி இட்டு அருளிச் செய்யும்
அத்தனையும் பற்றாத-ஸ்வா பாவிகமான பக்தியாலே —

செல்கின்ற ஆற்றாமை பேசி யலமந்த மாறன் –
தமக்கு நடந்து செல்லுகிற-தரியாமையை அருளிச் செய்து அலமாப்பை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
மல்லிகை கமழ் தென்றல் -என்றும்
புலம்புறு மணி தென்றல் -என்றும்
தாமரைக் கண்ணும் கனி வாயும் -என்றும்
வாடை தண் வாடை -என்றும்
ஆ புகு மாலை -என்றும்
அவனுடை அருள் பெரும் போது அரிதால் -என்றும்
ஆர் உயிர் அளவன்றி கூர் த வாடை -என்றும்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை -என்றும்
ஊதும் அத்தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
மாலையும் வந்தது மாயன் வாரான் -என்றும்
இவை அடியாக-பாதக பதார்த்தங்களாய் உள்ள எல்லா வற்றாலும் நொந்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ ஸூக்ரீவ தர்சன அநந்தரம்- ஸ்ரீ மாருதி தர்சநாத் பூர்வம்
மத்யே ராவண ப்ரேரிரதான-ராஷசீ வசம் ஆபந்னையாய்-ஜீவிதத்தில் நசை ஆற்றாப் போலே
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்கிறார்-
அதாவது –
புகலிடம் அறிகிலம் தமியமாலோ -என்றும்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ -என்றும்
ஆவியின் பரமல்ல வகைகளாலோ -என்றும்
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
எவம் இனிப் புகுமிடம் எவம் செய்கேனோ -என்றும்
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னை மீர்காள் ஆர் உயிர் அளவன்றிக் கூர் தண் வாடை -என்றும் –
ஆய்ச்சியற்கே ஊதும் அத தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
யாதும் ஒன்றும் அறிகிலம் வம்ம -என்றும்
என் சொல்லி உய்கேன் இங்கு அவனை விட்டு -என்றும் –
அவனை விட்டு உயிர் ஆற்ற கில்லா -என்றும்
இப்படி ஆற்றாமையை அருளிச் செய்து-முன்னாடி தோற்றாமல் அலமந்து நிலம் துழாவின ஸ்ரீ ஆழ்வார் -என்கை-

இப்படியான
மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன மால் –
அதாவது-அவனி யுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்மின் தொண்டீர் –என்று உபக்ரமித்த ஸ்ரீ ஆழ்வார் அருள் –
அஞ்ஞானத்துக்கு பிரதிபடமாக என்னுடைய அஞ்ஞானம் நிவ்ருத்தமாகும் –
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்னக் கடவது இறே –
ஆ புகு மாலைக்கு அவனுடை அருள் பெறும் போது அரிதாயிற்று –
இங்கு-என் தன மால் மாறன் அருள் மாற்றாகப் போகும் -என்று நிச்சிதம் ஆயிற்று –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-8–அறுக்கும் வினையாயின–சாரங்கள்—

June 2, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பவ்மம் தேவி சுஷாக காமபி தேச விசேஷ யாராத்
யாவது யாயாம் கதம் இதி அவதி
தூத வாக்யாத் தாவத் விளம்பம் அஸஹன்ன
முனி ஈசே ஜிஹமிஷத்

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

வல்லி மத்யத்வ யோகாதி அபி அபி ச ஸ்ரீ வாசோ வாஸ்ய பாவாத்
பூமியாத் ஐஸ்வர்யா யோகாத் அவதரண தசா
ஸூ பத்ரு சந்தான த்ருத த்வாத சு போத பரதம்
துரித ஹரணம் சமா சன்ன பாவாத் லஷ்மயா ஸ்ரீ ஈசன் நாதன் –

1–வல்லி மத்யத்வ யோகாதி அபி -2 பாசுரம் –கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்-

2–அபி ச ஸ்ரீ வாசோ வாஸ்ய பாவாத் -3 பாசுரம் -எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்-

3–பூமியாத் ஐஸ்வர்யா யோகாத்–நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா-

4–அவதரண தசா ஸூ பத்ரு சந்தான த்ருத த்வாத–மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன்–

5–சு போத பரதம்–வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே

6–துரித ஹரணம் -1 பாசுரம் –வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே-

6–சமா சன்ன பாவாத்–வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே

7-8-9-10–லஷ்மயா ஸ்ரீ ஈசன் நாதன் –கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே–என்றும்
அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-என்றும்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்-என்றும்
அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்

———

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

————

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–

——–

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

———-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

——–

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

——-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

——–

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

——–

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

——–

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-

——–

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

———-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -88-பாசுரம்–

அவதாரிகை –

இதில் தூதர் வரும் அளவும் பற்றாமல் ஸ்ரீ திரு நாவாயில் போய்ப் புக வேணும் என்று
மநோ ரதிக்கிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இப்படி விட்ட தூதர் அத்தலைப் பட்டு அவனுக்கு ஸ்வ தசையை அறிவித்து மீண்டு வருவதற்கு முன்னே
பிராப்ய த்வர அதிசயத்தாலே அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ திரு நாவாயிலே போய்ப் புக்கு
அவ்வோலகத்திலே அங்கு உள்ளவர்களோடு கூட சபத்நீகனான அவனைக் கண்டு அனுபவித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –என்று மநோ ரதிக்கிற
அறுக்கும் வினையில் -அர்த்தத்தை
அறுக்கும் இடர் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்—88-

————————————————–

வியாக்யானம்–

அறுக்கும் இடர் என்று –
நம்முடைய துக்கத்தை போக்கி அருளும் என்று -வினை காரணம் -இடர் கார்யம் –

பால் அங்கு விட்ட தூதர் –
ஸ்ரீ திரு மூழிக் களத்து யுறைவார் விஷயமாக அவ் விடத்திலே விட்ட தூதர் –

மறித்து வரப் பற்றா மனத்தால் —
திரும்பி மீண்டு வந்து மறுமாற்றம் சொல்ல பற்றாத திரு உள்ளத்தாலே –

அறப் பதறிச் –
மிகவும் த்வரித்து –
இதம் ப்ரூயாச்ச மே நாதம் ஸூரம் ராமம் புன புன -என்று
ஸ்ரீ திருவடியைத் தூது போக விட்ட-அநந்தரம்-ஸ்ரீ பிராட்டி பதறினால் போலே –

செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் –
அழகிய ஸ்ரீ திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே -என்றும் –
திரு நாவாய் அடியேன் அணுகப் பெறுநாள் யவை கொலோ -என்றும்-
திரு நாரணன் சேர் திரு நாவாய் யவையுட் புகலாவதோர் நாள் அறியேனே -என்றும் –
திரு நாவாய் வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா –நாளேல் அறியேன்-என்றும்-
விண்ணாளன் விரும்பி யுறையும் திரு நாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொள் கண்கள் -என்றும்-
நாவாய் யுறைகின்ற என் நாரணன் நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே -என்றும்-
தென் திரு நாவாய் என் தேவே அருளாது ஒழிவாய் -என்றும்-
திரு நாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி யந்தோ -என்றும்-
திரு நாவாய் யுறைகின்ற எம்மா மணி வண்ணா அந்தோ அணுகப் பெறு நாள் -என்றும்-
இப்படி த்வர அதிசயத்தை பிரகாசிப்பித்தார் என்கை-

அது எத்தாலே என்னில் –
மையலினால் செய்வது அறியாமல் –
சௌந்தர்யத்தாலே அறிவு கலங்கி அத்தாலே பிராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே
விட்ட தூதர் வருவதற்கு முன்பே த்வரித்தார் –

இவர் பிரேம ஸ்வபாவம் இருந்த படி-என் -என்று-வித்தராய் – அருளிச் செய்கிறார் —

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-7–எம் கானல் அகம் கழிவாய்–சாரங்கள்—

June 1, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸ்ரீயம் வியோகி ஜனம் ஹந்த்ரு நிஜ ஆபீ ரூப்யம்
விஸ்ம்ருத்ய ஸம்ஸ்ருதியா ஜனகி
அர்ச்சா ஹரே கொசன தத் பிரதி போதனாயா
தூதி சக்கர விகதான்

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ரம்யத்வாத் ஸ்ரீ துளஸ்யா ஆஸ்ரித ஜன சரித்ரத்த வேன
பத்மாஷரா தாயா ஸ்வாமித்வத்த சத் பரஞ்சோதி கர்த்தநதகா
ஸ்ரீ தரத்வ அதி கீர்த்தயா அசதி புஷப சியாமளா
ரத சரண முககா ஸுரே ஸ்ரீ மான் சடாரி கடக முக

1–ரம்யத்வாத் -ஸ்ரீ துளஸ்யா–கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்

2–ஆஸ்ரித ஜன சரித்ரத்த வேன–நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்

3-பத்மாஷரா தாயா–செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே

4-ஸ்வாமித்வத்த–திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்

5-சத் பரஞ்சோதி கர்த்தநதகா–திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத் தெளிவிசும்பு திரு நாடாத்
தீ வினையேன் மனத்து உறையும் துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே

6–ஸ்ரீ தரத்வ–மூழிக் களத்து உறையும் மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு

7–அதி கீர்த்தயா–படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண் சுடர் பவள வாயனைக் கண்டு

8-அசதி புஷப சியாமளா–திரு மூழிக் களத்து உறையும் புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே

9-10–ரத சரண முககா–பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்

ஸுரே ஸ்ரீ மான் சடாரி கடக முக

————–

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

——–

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

———-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

——–

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

———-

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

——-

தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-

———–

சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

———–

எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

——-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-

——–

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

————-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -87-பாசுரம்–

அவதாரிகை –

இதில் வடிவு அழகு பற்றாசாக தூது விட்டு அருளின திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானமாக மாத்ரமாக சென்ற இடத்தில் பாக்ய வைகல்யத்தாலே
குண அனுபவத்தால் வந்த ப்ரீதி கீழ்ப்பட்டு
அப்ரீதி அம்சமே தலை எடுத்து அவனுடைய சௌந்தர்யத்தாலே அபஹ்ருத சித்தராய்
அவ் வழகைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்று கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிற
எங்கானலில் அர்த்தத்தை-அருளிச் செய்கிறார் எம் காதலுக்கு அடி-இத்யாதியாலே -என்கை –

———————————————–

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–87-

——————————————–

வியாக்யானம்–

எம் காதலுக்கு அடி –
என்னுடைய பிரேமத்துக்கு ஹேது –

மால் ஏய்ந்த வடிவு அழகு என்று –
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப அனுபந்தியாய் அனுரூபமான விக்ரஹ சௌந்தர்யம்-என்று –

அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் –
அத்தசையில் அவன் சௌந்தர்யமே பற்றாசாக -ஆலம்பனமாக – அவ்விடத்தில்
அவன் விஷயமாக ஸ்ரீ திரு மூழிக் களத்து உறையும் அவன் விஷயமாக

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன்-
யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்னும்படி சர்வ திக்குகளிலும் உண்டான பஷி சமூஹத்தை
தம்முடைய பிராண ரஷக அர்த்தமாக தூத பரேஷணம் பண்ணும் ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
செங்கால மட நாராய் -என்று தொடங்கி –
என் குடக் கூத்தர்க்கு என் தூதாய் -என்றும் அமர் காதல் குருகினங்காள் -என்று தொடங்கி
தமரோடு அங்கு உறைவாருக்கு தக்கிலமே கேளீரே -என்றும் –
தக்கிலமே கேளீர்கள் -என்று தொடங்கி-கொக்கினங்காள் குருகினங்காள் செக்கமலத் தலர் போலும்
கண் கை கால் செங்கனிவாய்-அக்கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கு -என்றும் –
திருமேனி யடிகளுக்கு என்று தொடங்கி -மாதரைத் தன மார்பகத்தே வைத்தார்க்கு -என்றும்
திரு மூழிக் களத்து உறையும் பங்கயச் சுடர் பவள வாயனைக் கண்டு -என்றும்
புனம் கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கு -என்றும் –
பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -என்றும்
என் அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கு -என்றும்
இப்படி
பூம் துழாய் முடியார்க்கு-என்னும் அளவும்
வடிவு அழகு பற்றாசாக பல பஷிகளைத் தூது விட்டார் -என்கை-

நம் பிழையும்-சிறந்த செல்வமும்-படைத்த பரப்பும்-தமரோட்டை வாசமும்
மறப்ப்பித்த
ஷமா-தீஷா-ஸாரஸ்ய சௌந்தர்யங்களை-யுணர்த்தும்
வ்யூஹ-விபவ-பரத்வத்வய-அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் -என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

அபராத சஹத்வாச்ச விபோஸ் சம்பந்த வைபவாத் ஐகரச்யாச்ச சௌந்தர்யாத் கடக அனயாதசே முனி -என்று
இறே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்தது

மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்-
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் ஆனவை தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு
பிரதிபந்தங்களை தானே சேதித்துப் போகடும் –
துடர் அறு சுடர் அடி -போலே –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-6–உருகுமால் நெஞ்சம்–சாரங்கள்—

June 1, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சுவஸ்தி யாத்மா ஸ்வயம் அர்த்தயித்வா
ஸ்வம் ப்ராப்யா ஹர்ஷ விவஸ்த்யா
ஹரி அதஸ்தாத் எச் சீலம் அன்வயம் ததேவ தேவாதி
அநு ஸ்ம்ருதியா திருத்த மனகா வியாஸனே ஷஷ்ட்யயே

ஹரி அதஸ்தாத் -தாழ விட்டுக் கொண்டு

—————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

கம்ச ஜேதா-சடஜித் ஆச்சர்ய ஏகான் அகில பதிதயா
அந்தராத்மத்வ பூம்னா சக்தத்த்வ பூம்னா ஜலதய தனுதயா
பவ்யதா ஆகர்ஷத்வாத் உதார தேகியே-பாவ ப்ருதாம்
ரக்ஷசனாம் தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –

கம்ச ஜேதா-சடஜித் -கம்சனை வென்றவரை சடத்தை வென்றவர் –
1-ஆச்சர்ய ஏகான்—திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே

2-அகில பதிதயா—நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்

3-அந்தராத்மத்வ பூம்னா–நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்

4-சக்தத்த்வ பூம்னா–அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்

5-ஜலதய தனுதயா–திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்

6-பவ்யதா ஆகர்ஷத்வாத்–எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது

7/8/9/-உதார தேகியே-பாவ ப்ருதாம் ரக்ஷசனாம் –ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–என்றும்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்குஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–என்றும்
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர் கார் எழில் மேகம்-என்றும்

தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே

————

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

——

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

——–

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

——–

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

———-

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-

———-

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

———-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

———

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

——–

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

———-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

————

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

—–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -86-பாசுரம்–

அவதாரிகை –

இதில் ஸ்ரீ ஆழ்வார் உடைய அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தான வித்தராம் ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே
இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க
அத்தாலே
பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை
உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-

என்னால் -என் நா என்றுமாம்

———————————————-

வியாக்யானம்–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி –
ஹ்ருதயா ந்யாமமன் தேவ ஜனச்ய குணவத்தயா-என்னும்படி உன்னுடைய தாழ்ந்த செயல்களை அனுசந்தித்து
என்னுடைய மனசானது த்ரவ்ய த்ரவ்யம் போல் உருகா நின்றது –

பெருகு மால் வேட்கை எனப் பேசி –
அதுக்கு மேலே-அபி நிவேசமும் மிக்குவாரா நின்றது என்று அருளிச் செய்து —

மருவுகின்ற இன்னாப்புடன் –
கீழே-ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு அந்த அனுவ்ருதமான வெறுப்போடு-

அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் –
அவனுடைய-இருத்தும் வியந்திலே-அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை-திரு உள்ளத்திலே பொருந்த அருளிச் செய்த-

அதாவது –
உருகுமால் நெஞ்சம் -உயிர் பாட்டாய்
அத்தைப் பின் சென்று
நினை தொறும்-என்று தொடங்கி – நினைகிலேன் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே -என்றும்
நீர்மையால் கார் முகில் வண்ணன் தன் கலவம் அறிகிலேன் -என்றும்
அறிகிலேன் –சிறிய என் ஆர் உயிர் உண்ட திருவருளே -என்றும்
திருவருள் செய்பவன் போலே –கரு வளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே -என்றும்
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும் –என் கண்ணன் என்றவன் காட்கரை யேத்துமே -என்றும்
என் ஆர் உயிர் கோள் உண்டே –காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் -என்றும்
கோள் உண்டான் அன்றி ஆளன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே -என்றும்
தெய்வ வாரிக்கு இங்கு எனது உயிர் பட்டது அங்கு ஆர் உயிர் பட்டது -என்றும்
வாரிக் கொண்டு பருகினான் -கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே -என்றும்
இப்படி
அவன் தாழ நின்று பரிமாறின சீலாதி குணங்களிலே சிதில அந்த கரணராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி -என்கை –

இப்படி ஈடுபாட்டை யுடையராய் அருளிச் செய்த இச் சொல்லை –
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு –
என்னுடைய நா வானது-எவ்விடத்து-சொல்லாது இருப்பது –

எல்லா விடத்திலும்-நாவினால் நவிற்று –ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்னுதல் –

அன்றியே
என் நா சொல்லாது இருப்பது எங்கு -என்று பாடமாய் –
இதில்-ரசஞ்ஞனான என்னாலே-சொல்லப் படாது இருப்பது எத்தசையிலே எங்கனே-என்றது ஆகவுமாம் –
எல்லா தசையிலும் அனுசந்தியாது இருக்க ஒண்ணாது-என்றபடி –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-5–இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு–சாரங்கள்—

June 1, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

துக்கேன துஸ்ஸஹ தமம் ஆஸன்ன ஹானி கதயா
ஆலோக நஞ்ச -தத் அசாஸுஷம் இதை யதார்த்தம்
தத் சரண ஹிந்து பதார்த்த ஜாதம்
ஆஸன்ன ஹானி கதயா அவசித்தா ஸூ கத்யா-

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

பிராணத்வாத் அத்புதத்வாதி ஸூ விதித்வேன
பவ்யத்ய யோகாத் லஷ்மீ வஷஸ்த்தஸ்ய யோகாத் ரகு குல ஜனநாத்
நீல ரத்நாபி மூர்த்தியாத் கிருஷ்ணத்வாத் பரம பதி தயா
ச ஈஸ்வரீம் ஸம்ஸராயத்தயாம் குண சுமாராகம் சர்வ தர்சி –

1–பிராணத்வாத்–என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ

2-அத்புதத்வாதி–வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே

3–ஸூ விதித்வேன-தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே

4-பவ்யத்ய யோகாத்–வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே

5–லஷ்மீ வஷஸ்த்தஸ்ய யோகாத்–இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–

6–ரகு குல ஜனநாத்–என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசுஞ்சாம நிறத்தன்

7-நீல ரத்நாபி மூர்த்தியாத்–வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன்

8—கிருஷ்ணத்வாத்–கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்

9–பரம பதி தயா–தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்

10-ச ஈஸ்வரீம் ஸம்ஸராயத்தயாம்–எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்

குண சுமாராகம்
சர்வ தர்சி –

——

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு
இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ–9-5-1-

———–

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ
அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும்
கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன்
அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர்
அவன் கையதே–9-5-2-

———

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-

——–

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4

———

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

———-

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

———-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

————

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-

———

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-

———-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-

———

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -85-பாசுரம்–

அவதாரிகை –

இதில் -ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்ட ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்ப் பிறந்த அனுபவம் மானஸ அனுபவம் ஆகையாலே-அவனை பாஹ்ய கரணங்களாலே அனுபவிக்க வேணும்
என்று ஆசைப் பட்டு-அப்போதே அது கிடையாமையாலே சிதில சித்தராய்
அவன் குண சேஷ்டிதாதிகளுக்கு ஸ்மாரகமான லௌகிக பதார்த்தங்களைக் கண்டு அவ்வழியாலே
ஸ்மார்யமாணமான அவன் குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமல் இப்படி ஸ்மாரக பதார்த்தத்தாலே தாம் ஈடுபட்டுச்-செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற -இன்னுயிர் சேவலில் அர்த்தத்தை
இன்னுயிர் மால் இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் -பின்னையவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85

——————————————————-

வியாக்யானம்–

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று –
கீழில் திருவாய் மொழியில் ஸ்ரீ நரசிங்கமதாய உருவே -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்றும்
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து -என்றும் அருளிச் செய்தவை –
மானஸ சாஷாத்காரம் மாத்ரமாய்-ப்ரத்யஷ சாஷாத்காரம் அல்லாமையாலே
இத்தசையில் எனக்குத் தாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சாஷாத் கரித்தது மானஸ ஞான விஷயம் என்று –

கண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் –
சஷூர் விஷயமாக அவனை தர்சிக்க எண்ணி அது லபியாமையாலே பும்ஸ்த்வம் குலைந்து
ஸ்த்ரீத்வ பத்தியைப் பஜித்து-

பின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் –
இப்படி-ஸ்த்ரீத்வ பத்தியை பஜித்த-அநந்தரம்-அவனை பிரணய கதகத ஸ்வரத்தாலும்
ரூபவத்தையாலும்-ஸ்மரிப்பிக்கும் அவற்றாலே-விகூ ஜக்பிர்வி ஹங்க மை -என்னும்படியான
பஷி சமூஹங்களாலும்-மேக சமூஹங்களாலும்-

தான் தளர்ந்த –
தான்யே வார மணீ யாநி -என்னும்படி-அசஹ்யமாய்-மிகவும் பாரவச்யத்தை அடைந்த –
அதாவது –
இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடை காள்-என்றும்
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் -என்றும்
எவம் சொல்லிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே -என்றும் –
மேற் கிளைக் கொள்ளேல் மின் நீரும் சேவலும் கோழி காள்-ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே -என்றும்
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்-நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ -என்றும்
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன்குரல்-நீ மிழற்றேல்-நின் பசும் சாம நிறத்தனன் கூட்டுண்டு நீங்கினான் -என்றும்
கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாங்காள்-காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலன் -என்றும்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பண்புடை வண்டோடு தும்பிகாள் பண மிழற்றேன்மின்-புண்புரை வேல்கொடு குத்தல் ஒக்கும் நும் இன் குரல் -என்றும்
நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி -என்றும்
இப்படி
ரூப தர்சனத்தாலும்-நாம சங்கீர்த்தனத்தாலும்-பிரணய கூஜிதத்தாலும் மிகவும் தளர்ந்து
ஜீவநா த்ருஷ்டத்திலும் நசை அற்ற படி -என்கை –
இப்படி மிகவும் பாரவச்யத்தை அடைந்த –

மாறன் அருள் –
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -என்னும்படியான ஸ்ரீ ஆழ்வார் கிருபையை –

உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்-
அனுசந்திக்கும் அவர்களுக்கு-மனஸ்ஸூ- நீராய் உருகும் —
இது ஒரு கிருபாதிக்யம் இருந்தபடியே என்று-ஹிருதயம் த்ரவ்ய பூதமாகும்

மாறன் உரை உன்னும் அவர்க்கு -என்ற பாடம் ஆன போது
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுசந்திக்கப் புக்கால்-இதுவும் ஒரு ஸ்ரீ ஸூக்தியே என்று
மனஸ்ஸூ த்ரவ்ய பூதமாம் –
இவை ஒன்பதனோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே -என்றத்தை பின் சென்ற படி என்றாகவுமாம் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-4–மையார் கருங்கண்ணி–சாரங்கள்-

June 1, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தஸ்ய க்ருபா கடாக்ஷம் ஈசன் அத்ராக்ஷம்
சீலாதி கஸ் ஸ்ரீ யம் உரஸ்தல ததானோபி
அதி மாத்ர சிதில லப்பியா தஸ்ய
கிருபா கடாக்ஷம் ப்ரஜஹர்ஷ

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

லஷ்மீ வக்ஷஸ்தல பாவாத் ஸ்வ ஜன சுலபதா பர்வத உத்தாரானோ
துர்யாஞ்ஞாம் அகில பதிதயா நாகி நாம் வ்ருத்த பாவாத்
சுவேஷம் ஹ்ருத் வாசிதவ்யா ஸூ ஜன வசதியா
தத்ரஜா அதி பூம்னா ஸூ ஸ்வஸ் ஸ்வாமித் வாதி பந்த்வாத்–

1–லஷ்மீ வக்ஷஸ்தல பாவாத்–மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே

2-ஸ்வ ஜன சுலபதா–விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே

3-பர்வத உத்தாரானோ –மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்

4-துர்யாஞ்ஞாம்–வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே

5–அகில பதிதயா–அரியாய அம்மானை அமரர் பிரானைப் பெரியானைப் பிரமனை முன் படைத்தானை

6–நாகி நாம் வ்ருத்த பாவாத்–தேவர்கட்கு எல்லாம் விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து ஒருத்தா

7–சுவேஷம் ஹ்ருத் வாசிதவ்யா–என்னுள்ளத்து அகம்பால் அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா

8–ஸூ ஜன வசதியா–எல்லாப் பொருட்கும் அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனை

9–தத்ரஜா அதி பூம்னா–அண்டத்து அமரர் பெருமான்

10-ஸூ ஸ்வஸ் ஸ்வாமித் வாதி பந்த்வாத்–அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே-

——-

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

———–

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-

———

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-

——–

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

———-

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

———-

கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-

———

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-

———-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

——–

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

———

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

——–

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -84-பாசுரம்–

அவதாரிகை –

இதில் -விலஷண விக்ரஹ உக்தனானவனை காண-ஆசைப்பட்டு கூப்பிடுகிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ் – சீலாதிகனாய் -அதுக்கு ஊற்றுவாயான ஸ்ரீ பிராட்டியோடு நித்ய சம்யுக்தனாய் –
இரண்டு இடத்திலும் அழகு பெற தரித்த ஸ்ரீ ஆழ்வார்களை யுடையனான-ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று
தாமும் தம்முடைய கரண க்ராமங்களுமாக விடாய்த்துக் கூப்பிட தூணிலே தோற்றி சிறுக்கனுக்கு உதவினாப் போலே
மானசமாகத் தோற்றி தன் குணங்களை அனுபவிப்பிக்க
அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற -மையார் கரும் கண்ணியில் அர்த்தத்தை
மையார்கண் மா மார்பில் மன்னும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்–84-

———————————————-

வியாக்யானம்–

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை –
அஸி தேஷணையான லஷ்மி-வஷஸ் ஸ்தலத்திலே நித்ய வாசம் பண்ணும்படியாக
அத்தாலே ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-

கையாழி சங்குடனே காண வெண்ணி –
அச் சேர்த்தியை காத்தூட்ட வல்ல ஸ்ரீ ஆழ்வார்கள் உடன் அனுபவிக்க எண்ணி –
இத்தால் – மையார் கரும் கண்ணி -என்று தொடங்கி-உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -என்று
முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –
வைதேஹீம் லஷ்மணம் ராமம் நேத்ரைர நிமிஷை ரிவ-என்றும்
அவஷ்டப்ய சதிஷ்டந்தம் ததர்சத நுரூர்ஜிதம் -என்னும் படி-ஆயிற்றே அபேஷிததது

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் –
யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு அப்படியே கண்டு ஹ்ருஷ்டரான –
அதாவது
கண்ணே உன்னைக் காணக் கருதி -என்று தொடங்கி -நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பன் -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்று தொடங்கி-நரசிங்கமகதாய உருவே -என்றும் –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு -என்று தொடங்கி -அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -என்றும்
உலகம் அளந்த அடியானை யடைந்தேன் அடியேன் உய்ந்த வாறே -என்றும்-
இவற்றாலே அவற்றை வெளி இட்டார் -என்கை-

மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர் –
இப்படி பகவத் விஷய பக்தியை உடைய ஸ்ரீ ஆழ்வார் திருநாமத்தை அனுசந்திக்கவே
உஜ்ஜீவிக்கும் -விலஷணமான ஆத்ம வஸ்து –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-3–ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்–சாரங்கள்-

June 1, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

நாராயணே-அனுபவ பூவ நிஜ சீலவத்தாம்
நிரவத்யம் ஆவிஷ்க்ருதாம் மை நாராயணே சதி
ஸூ பரார்த்த சிந்த்தா தவ நார்ஹா
இது பஹுமான பாஜா விபு நா நார்ஹா தவ

நான் நாராயணனாக இருக்கும் போது கவலை பட வேண்டாமே –
உபாயம் உபேயம் வத்சலன் வியாபகம் ஸ்வாமி
ரஷா பரம் உமக்கு பொருந்தாதே –
நாம் இரந்து கொடுப்போம் மணக்கால் நம்பி போலே –

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ந ஏக சீல ரத்நாகரம் அச்வ ந ஏக ஸ்ரீ நாம வாத்வாத் –
ஏக -ந ஏக -அப்ரதிமஸ்ய ஸ்வ பாவம் ஜகத் உதய ஸூ ஸம்ஸ்தானத்தியை
ஹரித்வாத் தானாத் மோக்ஷஸ்ய ஹேய பிரதிபட கடக ஸ்ரேணி சம்பாதிமத்வத்
பிரகலாத ஆஹ்லாதகத்வாத் விருக்ஷ கிரி கடகே சன்னிஹிதத்வாத் சர்வா தேகே ஸ்வ அங்கதானாத் –

1–ந ஏக–ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்

2-சீல ரத்நாகரம் -ரத்னங்களுக்கு இருப்பிடம் -கடல் –அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே-சமுத்திரைவ காம்பீர்யம் -சீலம் ஒன்றே இருக்கும் –

3–ந ஏக ஸ்ரீ நாம வாத்வாத் –ஏக -ந ஏக -அப்ரதிமஸ்ய ஸ்வ பாவம் -அ சித்தும் சித்தும் -உண்டு –
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சொல்லும் திரு நாமங்கள் –

4–ஜகத் உதய ஸூ ஸம்ஸ்தானத்தியை ஹரித்வாத்–அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -பாபங்கள் ஹரிப்பவன் மருந்து–என்றும்
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்-என்றும்

5–தானாத் மோக்ஷஸ்ய–கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே

6-ஹேய பிரதிபட -நிகர் அற்றவன் -அடையாளங்கள் இரண்டிலும் –புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனமேதும் இலானை அடைவதுமே-

7-கடக ஸ்ரேணி சம்பாதிமத்வத்–கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் உடைவதும் அவற்கே யொருங்காகவே

8-பிரகலாத ஆஹ்லாதகத்வாத் -குளிர்ச்சி கொடுத்த பலன் –ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான்-அநிஷ்ட நிவாரணம் பாசுரத்தில் –

9-10-விருக்ஷ கிரி கடகே சன்னிஹிதத்வாத் —நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து சென்று தேவர்கள் கை தொழுவார்களே–என்றும் –
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே-என்றும் –
பாம்பணை பள்ளி -வேங்கடம் ஆதி சேஷன் சேர்த்து

சர்வா தேகே ஸ்வ அங்கதானாத் –தாள தாமரையான் உனதுந்தியான் வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்–

——–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

——-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

———-

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

———–

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

———-

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-

———-

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6-

———–

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-

——-

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-

——–

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-

——–

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-

——

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11

——

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -83-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-சீல குணத்திலே ஆழம் கால் பட்டு ஸ்ரீ ஆழ்வார் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உம்முடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேணுமோ –நாமே பிரார்த்திதுச் செய்ய வேண்டும்படி அன்றோ
நமக்கு யுண்டான ஸ்ரீ நாராயணத்வ பிரயுக்தமான ரக்த ஸ்பர்சம் –
ஆன பின்பு நாமே உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்யக் கடவோம் -என்று
அவன் அருளிச் செய்ய
தனது பெருமை பாராதே-எனது சிறுமை பாராதே-இப்படி அருளிச் செய்வதே
இது ஒரு சீலம் இருக்கும் படியே -என்று அவனுடைய சீல குணத்திலே வித்தராகிற
ஓர் ஆயிரத்தில் அர்த்தத்தை-ஓரா நீர் வேண்டினவை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

—————————————————

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை–83-

—————————————————-

வியாக்யானம்–

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன் –
ஓரா -ஓர்ந்து-அது வேணும் இது வேணும் என்று ஆராய்ந்து – நீர் அர்த்தித அவை உள்ளதெல்லாம் என்னுதல்
அன்றிக்கே
நீர் அர்த்திதவற்றை எல்லாம்-இன்னது உபகரிக்க வேணும்-இன்னது உபகரிக்க வேணும் என்று நாம் நிரூபித்து -என்னுதல்
இப்படி பந்து க்ருத்யமாய் உள்ளவற்றை எல்லாம்-நாமே அர்த்திகளாய் செய்கிறோம் –

அதுக்கு உடலாக –
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக் காட்ட-
ஸ்ரீ ராமோ நாராயண ஸ்ரீ மான் -என்னும்படி சர்வ வித பந்துத்வமும் நடத்தும் படி
நான் ஸ்ரீ நாராயண சப்த வாச்யன் அன்றோ -என்று
அத்தாலே பெரிதான தன் சர்வ வித பந்துத்வத்தைக் காட்ட -அத்தை –
ஓர் ஆயிரம் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையன்
ஸ்ரீ நாராயணன் நாங்கள் பிரான் அவனே –என்று அனுசந்தித்து –

அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் –
அதாவது –
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்றும்
அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -என்றும்
விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே -என்றும்
இனமேதுமிலானை அடைவதுமே-என்றும்
என் மனம் உடைவதும் அவர்க்கே ஒருங்காகவே -என்றும்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்றும்
நின்ற வேங்கடம் நீண் நிலத்து உள்ளது -என்றும்
தொழுது எழுதும் என்னுமிது மிகை -என்றும்
தாள தாமரையான் -என்று தொடங்கி-நாளும் என் புகழ் கோ சீலமே -என்றும்
சீலம் எல்லை இலான் -என்றும்
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் அருள் உண்டு – கிருபை –

அந்த கிருபை –
மாட்டி விடும் நம் மனத்து மை –
நம்முடைய அஞ்ஞானத்தை நிச்சேஷமாகப் போக்கும் –

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று பிற்காலிக்கிற கலக்கத்தை
சீல குண பிரகாசத்வத்தாலே சேஷியாதபடி நசிப்பிக்கும் –
சாமான்யமான அஞ்ஞானம் ஆகவுமாம்-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-2–பண்டை நாளாலே நின் திரு வருளும்—சாரங்கள்-

June 1, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பந்துத்வ ஸ்வம் அனுகம்பிதம் வந்தும் ஆதவ்
ஆஸன்ன தாமினி புஜகாதி பத்வ சயானாம்
ஸூ அபேக்ஷிதம் முனி அயாச்சத தம் த்வதீய
தஸ்ய ஏக ரூபா சயனேபி துக்கிதோ பூத் –

பந்துத்வ ஸ்வம் அனுகம்பிதம் வந்தும் ஆதவ்-பண்டை யுறவான பரனை
ஆஸன்ன தாமினி புஜகாதி பத்வ சயானாம் -புளிங்குடிக்கே கண்டு
ஸூ அபேக்ஷிதம் முனி அயாச்சத -எல்லா வுறவின் காரியமும் பிரார்த்தித்து -ஆய -அர்த்தம் -கைங்கர்யம் –

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

லஷ்மீ சம்பந்த பூம்னா மித தரணி தயா பத்ம நேத்ரத்வ யோகாத்
ஸ்திதியா ஸ்வைகி சரித்தரைத்தி ஸூ ஹ்ருத் அபஹரணாத்
ஸ்ரீ கஜேந்த்ர அவதாச்சிய தாரக்ஷ்யாம்சவ் அதிருஹ்ய அரி கண நிரஸனாத்
தேவ துஷ் பிரபாவாத் துஷ் கர்ம உன்மூலநத்வாத் ஸூ சிர ஹ்ருதத்தாயா மாதவா சேதியைதி –

1–லஷ்மீ சம்பந்த பூம்னா–பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு

2–மித தரணி தயா–நீ யொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்

3–பத்ம நேத்ரத்வ யோகாத்–தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்

4-ஸ்திதியா ஸ்வைகி சரித்தரைத்தி ஸூ ஹ்ருத் -அபஹரணாத்-நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப் பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–

5–ஸ்ரீ கஜேந்த்ர அவதாச்சிய–கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே

6-தாரக்ஷ்யாம்சவ் அதிருஹ்ய அரி கண நிரஸனாத்–காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற காய்சின வேந்தே கதிர் முடியானே

7-தேவ துஷ் பிரபாவாத்- துஷ் கர்ம உன்மூலநத்வாத்-எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்

8-9-10–ஸூ சிர ஹ்ருதத்தாயா மாதவா சேதியைதி –எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப–என்றும்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–என்றும்

——-

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

————

குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

———

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

——–

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

——–

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

———-

காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-

——–

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

———

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

——-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

————

கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

——

கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -82-பாசுரம்–

அவதாரிகை –

இதில் –
பந்து க்ருத்யம் எல்லாம் செய்ய வேணும் -என்று பேசின ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து-
அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
இப்படி நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வவித பந்து க்ருத்யமும் செய்ய வேணும்-என்று
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே போய்ப் புக்கு-அங்கே ஸ்ரீ பிராட்டியாரோடு கூட-
பள்ளி கொண்டு அருளுகிற-ஸ்ரீ காய்ச்சின வேந்தைக் குறித்து –
திருப் பவளத்தைத் திறந்து ஒரு இன் சொல்லுச் சொல்ல வேணும் –
மா ஸூ ச -உபாயத்துக்கு சோகப்படாதே– க்ரியதாம் மாம் வத -கைங்கர்யம் –
திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி அருள வேணும்-
திருவடிகளைத் தலைக்கு அலங்காரமாக வைத்து அருள வேணும் –
ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ தேவருமாக திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்க வேணும்-
கண் முகப்பே நாங்கள் சசம்ப்ர்ம ந்ருத்தம் பண்ணும்படி உலாவி அருள வேணும்-என்றால் போலே
ஒரு கோடி வெள்ளங்களை-அவர் சந்நிதியிலே-அசல் அறியாதபடி- பிரார்த்திக்கிற பண்டை நாளில் -அர்த்தத்தை
பண்டை யுறவான இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————–

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—82-

தண்டற -தடை இல்லாமல் –

——————————————————–

வியாக்யானம்–

பண்டை யுறவான பரனைப் –
உலகுக்கு ஓர் முந்தை தாய் தந்தையே முழு வேழு உலகுண்டாய் -என்றும்
தாய் இருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -என்னும்படியும்
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் -என்று
அநாதி சித்தமான சம்பந்தத்தை யுடைய-சர்வ ஸ்மாத் பரனை –
அன்றிக்கே –
கண்கள் சிவந்து -தொடங்கி -நடந்து வருகிற- ஸ்ரீ திரு மந்திர பிரதிபாத்யமான நவவித சம்பந்த யுக்தனான-
சர்வ ஸ்மாத் பரனை -என்றாகவுமாம்-

புளிங்குடிக்கே கண்டு –
ஸ்ரீ திருப் புளிங்குடி கிடந்தானே -என்னும் படி-ஸ்ரீ திருப் புளிங்குடியிலே கண்டு
என் மனக்கே -என்னுமா போலே ஸ்ரீ புளிங்குடிக்கே -என்று இருக்கிறது –

எனக்கு எல்லா வுறவின் காரியமும் –
குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்றும்
வழி வருகின்ற அடியர் -என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர் -என்றும்-சொல்லும்படியான எனக்கு
ப்ராதுஸ் சிஷ்யச்ய தாஸ்ய-என்னும்படி -சர்வவித பந்துத்வ காரியமும்-
விகல்பமாக -ஏதாவது ஒரு வழியில் -பரதன் பிரார்த்தனை -எல்லா உறவின் காரியமும் வேணும் -என்கிறார் ஸ்ரீ ஆழ்வார்
தாயே தந்தை என்றும் தாரமே மக்கள் என்றும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –1-9–

தண்டற நீ செய்தருள் என்றே யிரந்த –
தண்டு -விளம்பம்-விளம்பம் இன்றிக்கே -என்னுதல்
பரப்ரேரிதனாய் அன்றிக்கே -என்னுதல் –
இவற்றில் ஒன்றிலும்-இடை விடாமல்-தடை அற தேவர் நடத்தி அருள வேணும் என்று அர்த்தித்து -என்னுதல் –

அதாவது –
சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம்கொள் மூ வுலகும் தொழ இருந்து அருளாய் -என்றும்
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -என்றும்
நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் -என்றும்
காய்சினப் பறவை ஊர்ந்து -காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டு-ஏந்தி எம் இடர் கடிவானே -என்றும்
இம் மட வுலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -என்றும்
இருந்திடாய் வீற்று இருந்து கொண்டே -என்றும்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்
மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க-நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -என்றும்
இப்படி
ஆத்ம தர்சன-பரமாத்மா -தர்சனம் –பல அனுபவ-பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்ட படி -என்கை-
இப்படி செய்து அருள வேணும் -என்று அர்த்தித்த-

சீர் மாறன் தாளிணையே –
கைங்கர்ய சம்பத்தை -யுடையவர்-என்னுதல்
பக்த்யாதி குணங்களை யுடையவர்-என்னுதல் –
ஏவம் விதராண ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –

உய்துனை என்று உள்ளமே ஓர்-
நாசத்தை விளைக்கும் துணை போல்-அன்றிக்கே-உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று
மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–9-1—கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார்–சாரங்கள்-

June 1, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சடாரி நவமே சதகே பரோபதேசம் ஆத்யே சதகே
தத் சேஷத்வ அனுபவ சம்மதி சம்மதேந நிச்சித்ய
தம் ஈசன் சர்வவித பந்து தயா நிச்சித்ய
தம் ஈசன் ஆபத்சகம் பிரணமத இதி பரோபதேசம் –

நிச்சயம் பண்ணி -பற்றுமின் -அனைவர் இடம் கொள்ளும் பிரியத்துடன் இவனை -பற்றுமின்
மாதா பிதா -சர்வம் –குலபதே-

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஆபத் பந்துத்வ கீர்த்தியாகபீந்த்ரே திருட மதி ஜனநாத்
தைத்யா நாஸாத் பூமவ் ஜாதத்வாத்
பந்தோ கிருஷ்ணஸ்ய பாதாஸ்ரயா நம் இதை விணோ நோஸஹாயம்
ரஷா சாமர்த்தியம்

1–ஆபத் பந்துத்வ கீர்த்தியா-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை

2-கபீந்த்ரே திருட மதி ஜனநாத் –எம் கார் முகிலை புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே

3-10-தைத்யா நாஸாத் பூமவ் ஜாதத்வாத் -உத்தர மதுரா புரிம் —
வடமதுரைப் பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–என்றும்
வடமதுரைப் பிறந்தார்க்கு எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–என்றும் –
வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–என்றும்
வடமதுரைப் பிறந்த தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–என்றும்

அஷ்டாக்ஷர – பந்தோ கிருஷ்ணஸ்ய பாதாஸ்ரயா நம் இதை விணோ நோஸஹாயம்
ரஷா சாமர்த்தியம் -மற்றவர்க்கு இல்லை -கண்ணன் அல்லால் இல்லை –

கண்ணனே சரண் -முதல் ஆழ்வார் –
கண்ணன் அல்லால் இல்லை -திரு மழிசை ஆழ்வார்
நம் கண்ணன் கண் அல்லது மற்று ஓர் கண் இல்லையே -நம் ஆழ்வார் சேர்த்து அருளிச் செய்கிறார்

——

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

———

துணையும் சார்வும் ஆகுவார் போல்
சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல்
அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த
எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் பொருளே-9-1-2-

——-

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்
போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில்
என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் அரணே-9-1-3-

——–

அரணம் ஆவர் அற்ற காலைக்கு
என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர்
இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

———-

சதிரமென்று தம்மைத் தாமே
சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே
வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

———

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ
உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர்
தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால்
மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

——

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம்
மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன்
வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல்
வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

——

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ
மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும்
புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில்
யாதுமில்லை மிக்கதே–9-1-8-

——-

யாதும் இல்லை மிக்கதனில்
என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து
கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட
வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்
இல்லை கண்டீர் சரணே–9-1-9-

——

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல்
அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும்
அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

——–

ஆதும் இல்லை மற்று அவனில்
என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச்
சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை
ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை
ஆளுடையார்கள் பண்டே-9-1-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -81-பாசுரம்–

அவதாரிகை –

இதில் -சோபாதிக பந்துக்களை விட்டு நிருபாதிக பந்துவை பற்றச் சொல்லுகிற ஸ்ரீ ஆழ்வார்
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
தன்னைப் பற்றினாரை தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனே
பிராப்யமும்-பிராபகமும் சர்வ வித பந்துவும் – அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் – ஆன பின்பு –
அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு
பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி
நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை
கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-

————————————————–

வியாக்யானம்–

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார்-
கையில் தனத்தை அழிய மாறிக் கொண்ட ஸ்திரீகள் கொண்ட -என்று
அதில் ஔபாதிகதவம் தோற்றுகிறது-
தான் என்று கொண்ட பெண்டீரில் ப்ராதான்யம் தோற்றுகிறது –
இப்படி களத்திர புத்ராதி யாகச் சொல்லப் படுகிற பந்து வர்க்கம் எல்லாம் –
கூடும் உற்றார் -என்ற பாடமான போது
ஆகந்துகமாக வந்து கூடினவர்கள் -என்றாகிறது –

கன்மத்தால் அண்டினவர் என்றே யவரை விட்டு –
கர்ம ஔபாதிகமாக அடைந்தவர்கள் என்றே-ஔபாதிக பந்து வர்க்கங்களை விட்டு –
கொண்ட பெண்டீர் மக்கள் உற்றார் -என்று தொடங்கி அருளிச் செய்ததை
அனுவதித்து அருளிச் செய்தபடி –

தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை தனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும்
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –

ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –
எத்தனை அறிவில்லாதவர்கள் விஷயத்திலும்
ஹிதத்தை தம்முடைய தீர்க்க தர்சிக்கும்-யசஸை உடையரான ஸ்ரீ ஆழ்வார்-முற் காலத்திலே-
இப்படி ஆத்மஹித தர்சியான இவரும் ஒருவரே -என்றபடி –

ஆர்க்கும் ஹிதம் பார்க்கை யாவது –
கொண்ட பெண்டீர் -என்று தொடங்கி-தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணை -என்றும்
துணையும் சார்வும் ஆகுவார் போல் -என்று தொடங்கி -புணை ஓன்று உய்யப் போகல அல்லால் இல்லை கண்டீர் பொருள் -என்றும்
பொருள் கை யுண்டாய் -என்று தொடங்கி -அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே -என்றும்
அரணாம் அவர் -என்று தொடங்கி -சரண் என்று உய்யப் போகில அல்லால் இல்லை கண்டீர் சதிரே -என்றும்
சதிரம் -என்று தொடங்கி -எதிர் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே -என்றும்
இல்லை கண்டீர் இன்பம் -என்று தொடங்கி -சொல்லி உய்யப் போகில அல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே -என்றும்
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் -என்று தொடங்கி வடமதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே -என்றும்
வாழ்தல் கண்டீர் குணம் இது -என்று தொடங்கி வீழ் துணையாப் போமிதினில் யாதும் இல்லை மிக்கதே -என்றும்
யாதும் இல்லை மிக்கு இதினில்-என்று தொடங்கி -தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே -என்றும்
கண்ணன் அல்லால் -என்று தொடங்கி -அவன் அன்றி மற்று இல்லை -என்றும்
இப்படி பஹூ முகமாக
சர்வர்க்கும்-சர்வ ஹிதங்களையும் உபதேசித்து அருளிற்று -என்கை-

இம் மட வுலகர் கண்டதோடு பட்ட-அபாந்தவ-அரஷக-அபோக்ய-அஸூக அநுபாய பிரதி சம்பந்தியைக் காட்டி -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்/ ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–8-10—நெடுமாற்கு அடிமை செய்வன்–சாரங்கள்-

June 1, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

திகிறதா ஆத்ம ரூசி தாம்
சேஷதாம் அபி ததீய ததீய ஸீமா
ஆவிஷ கர்த்த பக்த பக்த ப்ரீதி
அந்நிய பூமர்த்தம் –

திகிறதா ஆத்மரூசி தாம் சேஷதாம் அபி -அநந்யார்ஹ சேஷத்வம் -நேர் பட்டது
ததீய ததீய ஸீமா, பர்யவசிக்கும் தாம் புருஷார்த்த சீமான்
ஆவிஷகர்த்த பக்த பக்த ப்ரீதி அந்நிய பூமர்த்தம் –வேறே புருஷார்த்தம் தள்ளி –

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்வ கீயேஷு வ்யாமுக்த பாவாத் அமல தன வாமனத்வேஷத
ஆபத் பந்து த்வாத் ஆச்சர்ய பாவாத் அஹித நிரஸனாத்
லோக ஸ்ருஷ்டியாதி சக்த்தியே ஆதவ் ஸயினித்வ யோகாத்
ஸ்ரீத துரித ஹ்ருதே அதஸீ புஷப காந்தியா ஆக்ருஷடேயே ஸ்வ தாஸ்யா —101–

1–ஸ்வ கீயேஷு வ்யாமுக்த பாவாத்–நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்

2–அமல தன–புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது

3-வாமனத்வேஷத–எம் செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார் சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே

4-ஆபத் பந்து த்வாத்–இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்

5–ஆச்சர்ய பாவாத்–இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று மொழி பட்டு ஓடும் கவி அமுதம்

6—அஹித நிரஸனாத்–நிகரச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்

7–லோக ஸ்ருஷ்டியாதி சக்த்தியே–முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மாத் தெய்வத் தளிர் அடி

8–ஆதவ் ஸயினித்வ யோகாத்–நளிர் நீர்க் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான்

9-ஆஸ்ரித துரித ஹ்ருதே–தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி

10-அதஸீ புஷப காந்தியா ஆக்ருஷடேயே ஸ்வ தாஸ்யா —பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே

——

சித்தம் ஸூரி த்ரிக்க்ஷூ த்ர்ஷி விஷயமாவைத் நிஸ் ஸ்ப்ருஹ ஏவ லப்யம்
ஸ்வாநாம் விஸ்லேஷ போக்யம் ஸ்ரீத விஹித சமக்ரத்வ பூதிம் சடாரி
ஸ்வ அபேஷாஸ் அவ்யபேஷம் ஸ்வ விதரண பரம் ஹ்ருத்கதம் ஸ்பஷ்டயந்தம்
தாஸ்யம் ஸ்வ தாஸ்ய நிஷ்டாம் ததவதிம் அபி சாப்யஸ்தமே ஸ்வ இஷ்டா வசம் – –102-

தரிசன சாஷாத்காரம் -ஸ்வப்னம் போலே
பக்த ஸுலபன்
பக்தர்களை உடையவர் ஆக்கி மகிழ்பவன்
வியாஜ்ய மாத்திரம் தன்னையே தந்து அருளுபவர்

——

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்—ஸ்ரீ தேசிகன்-

த்ருக்க்ஷாயாம் த்ரஸ்ய பிரபுரகநீ நிஸ் சங்க சுலப
ஸ்வ விஸ்லேஷ காந்தா ஸ்ரீத விகித புஷ்கல்ய விபவா
அபேஷாஸ் சாபேஷா ஸ்வ விதரனாஸ் சஜ்ஜோ ஹ்ருதி ரத
ஸ்வ தாஸ்யம் தன் நிஷ்டாம் தத்வதிமபிஹ பிரகதயன் –18-

பக்தி சித்த அனுசாரி – தன்னையே வழங்கும் வள்ளல்

——————————————

நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-

——–

வியன் மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

———

உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே-8-10-3-

———

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-

———

வழி பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-

———-

நுகர்ச்சி உறுமோ மூ வுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே–8-10-6-

———-

தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

——-

நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8-

———–

தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை
கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

——–

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள்
பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்
நல்ல கோட்பாடே-8-10-10-

——–

நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -80-பாசுரம்–

அவதாரிகை –

இதில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும்
என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
கீழே-ஆத்மாவுக்குச் சொன்ன ஸ்ரீ பகவத் அனந்யார்ஹ சேஷத்வம் தான் நிலை நிற்பது
ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆனால் என்னும் இடத்தை அனுசந்தித்து
அவனுடைய சௌந்தர்ய சீலாதி குண சேஷ்டிதங்களிலே தோற்று அடிமை புக்கு இருக்கும்
ஸ்ரீ பாகவதர்களுக்கு சேஷமாய் இருக்கும் இருப்பே எனக்கு புருஷார்த்தம் –
ஐஸ்வர்ய-கைவல்ய-ஸ்ரீ பகவல் லாபங்கள் ஆகிற புருஷார்த்தங்கள்
நான் பற்றின ஸ்ரீ பாகவத சேஷத்வம் ஆகிற பரம புருஷார்த்ததுக்கு
தனித் தனியாகவும் திரளாகவும் ஒப்பாக மாட்டாது –
ஆன பின்பு எனக்கும் என்னுடையார்க்கும் இப் புருஷார்த்தம்
கால தத்வம் உள்ளதனையும் நித்ய சித்தமாகச் செல்ல வேணும் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிரார்த்தித்துத் தலைக் கட்டுகிற நெடுமாற்கு அடிமையில் அர்த்தத்தை
நெடுமால் அழகு தனில் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

————————————

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை யுடைய பத்தர் அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு –80-

———————————–

வியாக்யானம்–

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு படுமா நிலை யுடைய பத்தர் –
அதாவது –
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத் தாள் -என்றும்
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ -என்றும்
தனி மா புகழே எஞ்ஞான்றும் –என்று தொடங்கி –
தனிமாத் தெய்வத் தளிர் அடிக் கீழ் புகுதல் அன்றி
அவன் அடியார் நனிமா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கு -என்றும்
கோளுமுடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே நாளும் வாய்க்க நங்கட்கு -என்றும்
தமர்கள் கூட்ட வல் வினையே -என்று தொடங்கி-
கோதில் அடியார் தமர்கள் தமர்கள் தமர்கள் தமர்களாம்-சதிரே வாய்க்க தமியேற்கு -என்றும்
நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே
குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடு வாய்க்க தமியேற்கே -என்றும்
இப்படி உத்துங்கத்வமான வடிவு அழகிலும்
தனி மா புகழே -என்கிற தீர்க்க சௌஹார்த்த குணத்திலும் ஈடுபட்டு இருக்கும் –

பத்தர் அடிமை தனில் எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் –
பக்தர்கள் திறத்தில் அடிமை யாம் அளவு அன்றிக்கே
அவ்வடிமையில்-சீமா பூமிதாம்படி அனுசந்தித்தார் ஸ்ரீ ஆழ்வார் –

அது கொல்லை நிலமான நிலை கொண்டு –
அந்த பாகவத சேஷத்வம்-சீமாதிலங்கியான உத்தம புருஷார்த்தம் என்கிற-நிஷ்டையைக் கொண்டு
எல்லை நிலம் தானாக எண்ணினான்
சத்ருனோ நித்ய சத்ருகன -என்கிறபடியே
வியன் மூ வுலகு பெறினும் -என்கிற ஐஸ்வர்யம்-ஆத்ம பிராப்தி அளவாய் இருக்கும் –
தானே தானே யானாலும் -என்கிற ஆத்மா பிராப்தி-
செந்தாமரைக் கண் திருக் குறளன் அறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் -என்கிற
பகவத் பிராப்தி -அளவாய் இருக்கும் –
இந்த பகவத் பிராப்தி பாகவத பிராப்தி சாபேஷமாய் இருக்கும்-
இந்த புருஷார்த்ததுக்கு மேல் எல்லை இல்லை -ஆகை இறே முழுதும் உறுமோ -என்றது –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்