Archive for the ‘ஸ்தவம்’ Category

ஸ்ரீ குணரத்ன கோஸம்–

September 17, 2021

இந்தச் ச்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியான
ஸ்ரீரங்கநாச்சியார் விஷயமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ச்லோகமாகும்.

தனியன்

ஸ்ரீ பராசர பட்டார்ய : ஸ்ரீரங்கேச புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மே அஸ்து பூயஸே

ஸ்ரீரங்கநாதனுக்கு முன்பாக வேத விண்ணப்பங்கள் செய்தல் போன்ற புரோஹிதங்களைச் செய்பவரும்,
கூரத்தாழ்வானின் திருக்குமாரரும் ஆகியவர் ஸ்ரீ பராசரபட்டர் ஆவார்.
ஸ்ரீரங்கநாயகி என்னும் உயர்ந்த செல்வத்தினை உடைய அந்தப் பராசரபட்டரின் திருவடிகளை அடைந்து
நான் அதிகமான நம்மைகளை பெறுவேனாக!

ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–ஸ்லோகம் – 1

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.
அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.
(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.
பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால்
பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).
இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!
(இங்கு கூறப்படும் உட்பொருள் – பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும்,
மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).

————-

கடந்த ச்லோகத்தில் அவன் படைப்பதை இவள் ஏற்பதாகக் கூறுகிறார்.
இங்கு, ஏற்பது மாத்திரம் அல்ல, படைப்பிற்கான காரணமும் இவளே என்றார்.

உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்
ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம:–2-

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக்கண்களைத் திறந்து பார்க்கிறாள்.
அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன
(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன).
இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல.
இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்
(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.
இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.
பெரியபெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .
மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

இங்கு பல்லவித என்னும் பதம் உலகமானது துளிர்கிறது என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.
பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போன்று எனக் கருத்து.
இவள் தனது திருக் கண்களைத் திறந்து பார்ப்பதை, பெரிய பெருமாள் கவனித்தவுடன் இந்த உலகைப் படைக்கிறான்.
இவள் தனது கண்களை மூடிக்கொண்டால், இந்த உலகத்தைப் ப்ரளயத்தில் ஆழ்த்தி விடுகிறான்.

பரம்பொருளே உலகின் காரணம் என்று வேதங்களும் வேதாந்தங்களும் முழங்க,
இவர் பெரியபிராட்டியைக் காரணமாகக் கூறுவது எப்படி?
அவனே அதற்குக் காரணம் என்பது உண்மை, ஆனால் இவளது துணையின்றி அது இயலாது.
இந்த உலகம் என்னும் இல்லறம் நடக்க, மனைவியாகிய இவள் துணை மிகவும் அவசியமானது என்று கருத்து.

இவளே பெரியபெருமாளை நமக்குக் காண்பித்துத் தருகிறாள். அவனிடம் செல்ல இவளது சிபாரிசு (புருஷகாரம்) தேவை.
ஆனால், இவளை அடைவதற்கு எந்த ஒரு சிபாரிசும் தேவை இல்லை. தானே தனக்குச் சிபாரிசாக உள்ளாள்.

—————

தன் மீது ஸ்ரீரங்கநாச்சியார் அவளது கடாக்ஷத்தைச் செலுத்தவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–3–

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்பவல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

இங்கு ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீஸக என்று கூறியது காண்க – ஸ்ரீயின் நாதன் என்னும்படி,
அவள் இல்லாமல் இவனை அடையாளம் காண இயலாது என்பதைக் காட்டுகிறார்.
அவள் இல்லாமல் இவனது திருக்கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்துவிடும்.

——————

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தின் பெருமையைக் கூறுகிறார்.

யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக்கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

ஒவ்வொரு உயிரைப் படைத்த பின்னர் ஸ்ரீரங்கநாதன் இவளது திருமுகத்தைப் பார்க்கிறான் –
இந்தப் பார்வையின் பொருள், “இந்த உயிரை எவ்விதம் படைக்கவேண்டும் என்று எனக்குக் குழப்பமாக உள்ளது,
நீயே தெளிவுபடுத்துவாயாக”, என்பதாகும்.
இதனைப் புரிந்துகொள்ளும் இவள் தனது புருவத்தின் நெறிப்பு மூலம்,
“இந்த உயிரை புகழ் பெறும் வகையில் படை, இந்த உயிரை ஞானம் உள்ளதாகப் படை,
இந்த உயிரை தாழ்ந்ததாகப் படை” என்று உணர்த்துகிறாள். இவனும் அப்படியே செய்துவிடுகிறான்.
இவளிடம், “ஏன் இவ்விதம் படைக்கச் சொல்லுகிறாய்?”, என்று அவன் கேட்பது கூட இல்லை –
காரணம் அவளுக்கு அவன் அத்தனை ப்ரியமானவனாக வசப்பட்டு நிற்கிறான்.
வேதம் இல்லாமல் ப்ரம்மனால் படைக்க இயலாதது போல,
இவளது புருவ நெறிப்பு இல்லாமல் ஸ்ரீரங்கநாதனும் ஏதும் செய்வதில்லை.

இங்கு முராரி என்று நம்பெருமாளைக் கூறியது காண்க.
படைத்தல் குறித்துக் கூறும்போது ஏன் “அழித்தவன்” என்னும் திருநாமம் கொண்டு
(முரன் என்ற அசுரனை அழித்தவன்) கூறவேண்டும்?
அழிக்கும் வல்லமை இருந்தாலும், படைக்கும்போது மிகவும் எளியவனாக இவள் வசப்பட்டு நிற்பதை உணர்த்துகிறார்.

——————

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச
அபி ஏவம் தவ தேவி வாங்மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம்
காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-

அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,
அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத்தன்மை உடையது என்று உணர்ந்து,
அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது?
பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர்,
உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர்.
ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம்மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர்.
இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன.
இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான்,
முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.

வேதங்கள் ஸ்ரீரங்கநாதனின் பெருமையைக் கூறிவிடலாம் என்று முயன்றாவது பார்த்தன.
ஆனால் இவளது பெருமைகளை நம்மால் நிச்சயம் கூற இயலாது என்று முயற்சி செய்யவும் அஞ்சின.
இங்கு “இவளது பெருமைகளைக் கூறும் திறன் யாருக்கு உள்ளது”, என்று கூறாமல்,
“இவளது பெருமைகளைக் கூற யாருக்கு விருப்பம் உள்ளது”, என்று ஏன் கூறவேண்டும்?
ஒரு செயலைச் செய்ய இயலாது என்று பலரும் ஒதுங்கியிருக்க,
ஒருவன் மட்டும் தன்னால் முடியும் என்று வருகிறான் என வைத்துக் கொள்வோம்.
அவன் தோற்றால் மிகுந்த அவமானம் அல்லவா? அது போன்று வேதங்களே ஒதுங்கிக் கொண்ட நிலையில்,
இவளைப் பற்றி நான் கூறுகிறேன் என்று வந்துவிட்டு, பின்னர் அனைவரும் பரிகசிக்கும் நிலையை
யாராவது விரும்புவார்களா? இதனால்தான் “விருப்பம்” என்றார்.

இவ்விதம் கூறிவிட்டு நன்கு படித்த இவரே (பட்டர்), இவளைப் புகழ்ந்து பாட முயல்வது எப்படி என்று ஒரு சிலர் கேட்கலாம்.
இதற்கான விடையை இவர் கூறும்போது – இவளது கருணையால் தனது சொற்களுக்கு நன்மை ஏற்பட்டுவிடும்,
அதனால் தனது கவிதைகளும் ஏற்கப்பட்டுவிடும் – என்று கூறினார். இவருக்கு இந்த நம்பிக்கை எப்படி வந்தது?
இவர் ச்லோகம் இயற்றத் தொடங்கியதைக் கண்ட ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை
இந்தக் குழந்தை செய்கிறது. நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.

———————

ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரந் ப்ரதாம்.–6–

ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே!
இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் –
எந்த ஒரு பொருள் துதிக்கத் தக்கதாக உள்ளதோ, ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக
யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் –
அவனையே பெரிதும் மதிப்பார்கள் . இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் ,
உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும் முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் –
நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் .
ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய். இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான –
குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது,
எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு
என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?

ஒரு பொருளைக் குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.
பலரும் அந்தப் பொருளைப் பற்றிக் கூற முயன்று, தோற்றுவிடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
இந்நிலையில், அந்தப் பொருளைப் பற்றி ஒருவன் துதிக்க, இதனைக் கேட்ட அந்தப் பொருள் தனக்கு உள்ள
தன்மைகளை தானாகவே அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியெனில், அந்த ஒருவன் பலராலும் புகழப்பட வேண்டியவன் அன்றோ?

அப்படிப்பட்டவன் யார் என்றால் – தானே (பட்டர்) என்கிறார்.
இதனைக் கேட்ட சிலர், “உம்முடைய சொற்களோ மிகவும் தாழ்ந்தவை.
உனது வாயிலிருந்து சிறந்த சொற்கள் வெளிப்படவும் வாய்ப்பில்லை.
இப்படி உள்ளபோது நீவிர் எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்?”, என்றனர்.

இதற்குப் பட்டர் வெகு சாமர்த்தியமாக விடையளித்தார் – எனது சொற்கள் தாழ்ந்தவையே.
அந்தச் சொற்கள் மூலமே ஸ்ரீரங்கநாச்சியாரின் பலவிதமான குணங்கள் தாமாகவே வெளிப்படுகின்றன:

1. அந்தத் தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா?
இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.

2. “இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்துவிட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது,
என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள்.
இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.

3. அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.

4. இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.

ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை.
எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.

———————

ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7-

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்தச் ச்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக்கூடும்.
ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை.
அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.
இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள்பார்வை பொழிந்து நிற்கும்.
இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,
இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.
இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டால் அல்லவோ தாய்க்கு மகிழ்வு ஏற்படும்?
ஆகவே தனது சொற்கள் பிழையாகவே இருந்தாலும் அதனால் நன்மையே, நான் அதனைத் திருத்தப் போவதில்லை என்கிறார் –
காரணம், அப்போதுதான் ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார்.

ஆனாலும் தன்னுடைய சொல்லானது நல்ல சொல் என்கிறார். இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு,
இப்போது நல்ல சொல் என்பது எப்படி? இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல்வாக்கு ஆனது.

அடுத்து – மதுரை: கடாக்ஷை: – என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது.
இதனைக் கூறுவதற்கு முன்னால், இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க.
இவ்விதம் கூறக் காரணம் – அரங்கனின் பார்வையானது சரிசமமானதாகும் –
தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது.
ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார்.
இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழியவல்லது.

————————-

அநாக்ராத அவத்யம் பஹு குண பரீணாஹி மநஸ:
துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம் இவ அதாபி கஹநம்
பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ச்ரவணயோ:
த்வம் ஏவ ஸ்ரீ: மஹ்யம் பஹு முகய வாணீ விலஸிதம்.–8–

மஹாலக்ஷ்மி! ஸ்ரீரங்கநாயகி! எனக்கு உன்னைக் குறித்துத் துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை,
பல வழிகளில் நீ அளிக்கவேண்டும். அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான துதிகள் எப்படி இருக்கவேண்டும் என்றால் –
குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது;
பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்படவேண்டும்;
அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்;
இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்தத் துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.

சொற்குற்றம், பொருள் குற்றம், வாக்கியக் குற்றம் இருக்கக் கூடாது என்றார்.
இங்கு கேட்பவர்களின் காதுகள் இமைக்காமல் திறந்தபடி கேட்க வேண்டும் என்று ரஸமாக கூறுவது காண்க.
ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார்.
ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் – பாரதீ பகவதீ து யதீயதாஸி – என்றார்.

—————————-

ச்ரிய: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ச்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ச்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ச்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுக சதம்–9-

உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல,
உனது மனதிற்கும் பிடித்த பல திருக்கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
அவளது திருக் கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப் போகிறேன்.
இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும் . நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று,
அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும்.
இவற்றைக் கேட்பதன் மூலம் உனது அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும்.
இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.

இங்கு பட்டர் பெரியபெருமாள் முன்பாக நின்றார். அவரிடம் பெரியபெருமாள்,
“நீவிர் நமது பிராட்டியைக் குறித்து துதி இயற்றி வருகிறீராமே! அவற்றில் அவளது திருக்கல்யாண குணங்கள்
வெளிப்படும்படி புகழ்ந்துள்ளீர் அல்லவா?”, என்றான்.
பட்டர், “ஆம்! உம்மை விட அவள் பல குணங்களில் உயர்ந்தவள் என்றே புகழ்ந்துள்ளோம்”, என்றார்.
இதனைக் கேட்ட அழகியமணவாளன் கடகடவென்று சிரித்தான்.
தன்னுடைய நாயகியைக் குறித்து பட்டர் கூறப்போவதைக் கேட்க தன்னை மறந்து நின்றான்.
இதனைக் கண்ணுற்ற பட்டர் – ச்ருணு – கேட்பாயாக – என்ற பதம் பயன்படுத்தியது காண்க.
பட்டர் கூறக்கூற அரங்கனின் திருக்கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன,
அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன. அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன.

இங்கு – ஹ்ருத்யாம் – என்ற பதம் காண்க.
இதன் மூலம் பெரியபெருமாளின் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரைப் பட்டர் கூறுவதாகவும் கொள்ளலாம்.

எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்து உள்ளபோது, பிராட்டியைப் புகழ்வது சரியா என்று சிலர் கேட்கலாம்.
இதற்கான சமாதானம் – பட்டராக இவற்றைக் கூறவில்லை, பெரியபெருமாள் கேட்டதனால்தான் கூறினார்.

—————–

தேவி ச்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி–10-

தாயே! ஸ்ரீரங்கநாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

இந்தச் ச்லோகத்தின் மூலம் ஸ்ரீ குண ரத்ன கோசம் என்ற தலைப்பு வெளிப்பட்டத்தைக் காண்க.
வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார்.
ஆக மேலோட்டமாகப் பார்த்தால் வேதங்கள் பெரியபெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும்,
ஆழ்பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம்.

இவளது குணங்களை – ஒக – என்றார். இதன் பொருள் – கூட்டம் கூட்டமாக – என்பதாகும்.
அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப்போவதில்லை.
ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு? தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு?
அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.

———————-

ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விச்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈசம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்–11-

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பலவிதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.
அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம்பொருளைக் காண்பிக்கவில்லை என்றனர்
(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்);
இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை);
நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்);
சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம்பொருள் உள்ள போதிலும்
அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்);
மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவமதம்) –
இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

இங்கு பல மதங்களின் வாதங்களைத் தள்ளுகிறார். இவர்களில் சிலர் வேதமே இல்லை என்பவர்கள் ஆவர்.
மேலும் சிலர் வேதங்கள் உள்ளதை ஒப்புக் கொண்டாலும், அவை பரம்பொருளைக் கூறவில்லை என்றனர்.
மேலும் சிலர் வேதங்களை ஒப்புக் கொண்டு, அவை பரம்பொருளையே குறிக்கின்றன என்று ஒப்புக் கொண்டாலும்,
அந்த பரம்பொருளுக்குக் குணங்கள் இல்லை என்றனர்.
இப்படிப்பட்டவர்கள் ஸ்ரீரங்கநாச்சியாரின் பார்வைக்கு இலக்காகாதவர்கள் என்றார்.

இவளது பார்வை ஒரு நொடிப் பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து.
ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம்பொருளான பெரியபெருமாளை அறிய இயலும்.

———————

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ச்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12–

பகவானுடைய திருக்கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!
உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி?
புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும்.
இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

இங்கு கண் மை கொண்டு புதையலைத் தேடுவது போன்று, பக்தி என்பது கொண்டு ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி
வேதாந்தங்கள் என்ன கூறுகின்றன என அறியமுடியும். அந்த ஞானம் கொண்டு அவளை அறியலாம். அதன் பின்னர்?
புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து
புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம். இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர்,
அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.

————————–

அஸ்ய ஈசாநா ஜகத: இதி அதீமஹே யாம் ஸம்ருத்திம்
ஸ்ரீ: ஸ்ரீஸூக்தம் பஹு முகயதே தாம் ச சாகாநுசாகம்
ஈஷ்டே கச்சித் ஜகத இதி ய: பௌருஷே ஸூக்த உக்த:
தம் ச த்வத்கம் பதிம் அதிஜகௌ உத்தர: ச அநுவாக:–13-

ஹே ஸ்ரீரங்கநாயகி! மஹாலக்ஷ்மீ! இந்த உலகத்தின் ஈச்வரி, நாயகி என்று உன்னை வேதங்கள் சில இடங்களில் ஓதியுள்ளன.
இப்படிப்பட்ட பெரும் செல்வமான உன்னை, ஸ்ரீஸூக்தம் என்ற உயர்ந்த க்ரந்தம் தனது ஒவ்வொரு மந்திரத்திலும் பலவாகப் புகழ்ந்து கூறுகிறது.
புருஷஸூக்தத்தில் இந்த உலகம் முழுமைக்கும் நாயகன் என்றும், புருஷன் என்றும் ஸ்ரீரங்கநாதன் வர்ணிக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நம்பெருமாளை அநுவாகமும் விவரித்துக் கூறுகின்றது. அந்தக் க்ரந்தங்கள் அவனை உனது கணவனாக அல்லவா ஓதின?

புருஷஸூக்தம் தனது நாயகனைக் கூறுவதாகவும், ஸ்ரீஸூக்தம் தன்னையே கூறுவதாகவும் மஹாலக்ஷ்மி,
பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மி தந்த்ரத்தில் கூறினாள். அந்த வரிகள்:

1. தத்ர பும்லக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
புருஷர்களின் லக்ஷணம் கூறப்பட்டதால் அதனைத் தான் (திருவரங்கன்) கைக்கொண்டான்.

2. தத்ர ஸ்த்ரீலக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
பெண்களின் பெருமைகள் பேசப்பட்டதால் அதனை நான் (ஸ்ரீரங்கநாச்சியார்) கைக்கொண்டேன்.

——————————-

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத்ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.–14-

நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட –
புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.

இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்?
இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க.

—————————————-

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ:–15–

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக,
அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம்.
அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் –
இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது?
எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?

இங்கு ஸ்ரீரங்கநாதனை ஏன் கூறினார்? அனைத்தையும் படைப்பது அவனே என்பதால் ஆகும்.
அவ்விதம் அவன் படைத்தாலும், இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே அவை துளிர்க்கும் என்பதை முன்னரே கூறினார்.

ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் –
அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.

—————–

ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–16-

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மணிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு ,
முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான்.
அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது.
அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக
அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும்,
அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே!
ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

இவளது திருக்கண்கள் மூடுவதாலும், திறப்பதாலுமே அனைத்து உயிர்களின் ஏற்றத்தாழ்வுகள் என்றார்.
இங்கு வாமன அவதார கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம் காண்போம்.

வாமனனாக ஸ்ரீமந்நாராயணன் மஹாபலியிடம் யாசகம் பெற வந்தான். இவன் எதனைக் கேட்டாலும் அதனை அளிப்பதற்கு
மஹாபலி தயாராகவே இருப்பதாக உறுதி அளித்தான். இதனைக் கண்ட வாமனனுக்கு வியப்பு அதிகமானது.
இவனிடம் இத்தனை ஐச்வர்யம் எவ்விதம் வந்தது என்று யோசித்தான்.

பின்னர் தன்னுடைய திருமேனியைப் பார்த்தான். ப்ரம்மச்சாரி என்பதால், தனது திருமார்பை அவன் மூடவில்லை.
அதனால் அங்கு வாஸம் செய்யும் பெரியபிராட்டி மஹாபலியைப் பார்த்தபடி உள்ளதை அறிந்தான்.
அந்தப் பார்வையாலேயே அவனுக்கு அத்தனை ஐச்வர்யம் என்று அறிந்தான்.
தனது அங்கவஸ்த்ரத்தினால் திருமார்பை மூடிக் கொள்ள, அதனால் பெரியபிராட்டியின் நேர்பார்வை தடைபட்டது.
இதன் விளைவாக வாமனன் கேட்ட மூன்றாவது அடியை மஹாபலியால் அளிக்க இயவில்லை.

ஆக இவளது திருப்பார்வைக்கு இத்தனை சக்தி உண்டு என்று கருத்து.

———————–

ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:–17-

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடிபோன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார்.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

———————–

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்–18-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்யத்ரயம் வெளிப்பட்டது?

——————

காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:–19-

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன்,
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ?
அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து
ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான்.
மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன.
இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் –
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற – என்று அருளிச் செய்தார்.
இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்து விடக் கூடாது என்று
நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.

தன் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் மீது மலர்க்குவியல்கள் உள்ளதை அழகியமணவாளன் கண்டான்.
அப்போது அவன் திருவுள்ளத்தில், “இந்தக் குவியல் போன்று அல்லவா ஜீவன்கள் அங்கு குவியலாகக் கிடக்கின்றன”, என்று எண்ணினான்.
இந்த மலர்கள் பயன்படுவது போன்று, அந்தக் குவியலும் பயன்பட வேண்டும் என்று எண்ணியவனாக ஸ்ருஷ்டியைத் தொடங்கினான்.

———————

சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார்.
முதலில் நாம் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான்.
இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும்.
அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான்.
இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான்.
மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான்.

தூர்த்தர் என்னும் பதம் காண்க. இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின்
பின்னே செல்பவன் என்பதாகும்.
இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.

—————————

யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:–21–

தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது;
அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு,
உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்;
அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது –
இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்தச் ச்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார்.
இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

———————-

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசாரகர்மணி ஸதா பச்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேச்வர தேவி கேவலக்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம்
உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே
இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

இங்கு அனைத்தும் ஸ்ரீரங்கநாச்சியாருக்காவே உள்ளது என்று கூறுகிறார்.
நாம் அனைவரும் ஸர்வேச்வரனான நம்பெருமாளுக்கு அடிமை என்று பல சாஸ்த்ரங்களும் கூறும் போது,
இவ்விதம் பட்டர் உரைப்பது எப்படிப் பொருந்தும்?

இதற்கு நாம் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த முமுக்ஷுப்படியின் 44 – ஆவது சூர்ணையின் மூலம் விடை பெறலாம்.
அவர் அந்தச் ஸூர்ணையில் அருளிச் செய்யும் கருத்து –
ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது,
அந்த ஓலையில் அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.

——————————–

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேச்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:–23–

ஸ்ரீரங்கநாதனுடைய பெரிய கோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி!
நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும்
பெயர் கொண்ட நகரத்தை உங்கள் தலை நகரமாகக் கொண்டுள்ளீர்கள்.
(அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்).
அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.

—————-

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–24–

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில்,
உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று
கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தபோதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில்,
சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன.
இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும்
உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.

——————–

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–25-

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது;
அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்?
இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய்.
நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.

ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.

—————————

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–26

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?

இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்.
இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.

————-

தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத பரீசார வ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:–27–

அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்ய ஸூரிகள் –
உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்; மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்;
தங்கள் கோலங்களாலும் செயல்களாலும் உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்;
அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் –
இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.

கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்ய ஸூரிகளும் கர்ம வசப்படாமல் இருத்தல்.

———————-

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி–28-

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை
உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது?
இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய்.
வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும்,
திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

இங்கு மிகவும் உயர்ந்த தத்துவமாகிய, “பிராட்டியைக் கொண்டே அவனை அறியவேண்டும்”, என்பதைக் கூறுகிறார்.
அவனது ஸ்வரூபம் இவ்விதம் என்று இவளே உணர்த்துகிறாள்.
இவள் இல்லாமல் அவனை நிரூபிக்க முடியாது. இதனை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான்
ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் –
பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.
இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.

—————–

தவ ஸ்பர்சாத் ஈசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந் த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே–29-

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு
“ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி?
உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா? அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது.
ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை –
ஏனெனில் நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்?
ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

நம்பெருமாளுக்கு மங்களம் என்பது ஸ்ரீரங்கநாச்சியார் உடன் இருப்பதால் மட்டுமே உண்டாகும்.
ஆனால் ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் , இயற்கையிலேயே மங்களகரமாக உள்ளாள்.

இவள் அருகில் உள்ளதாலேயே பெரியபெருமாளை ஸ்ரீரங்கநாதன் என்று கூறுகிறோம்.
இவள் அவன் அருகில் இல்லை என்றால், அவனை “ரங்கநாதன்” என்று மட்டுமே கூறுவோம்.
ஆக இவளால் தான் அவனது திருநாமத்திற்கும் ஏற்றம் என்று கருத்து.

———————-

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.–30–

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.
அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள்
உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும்.
ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன.
இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.
ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

நம்பெருமாளின் க்ரீடத்தில் “இவனே ப்ரஹ்மம்” என்று அறிவிக்கும் விதமாக வைரம் ஒன்று ஜொலிக்கிறது.
இவ்விதம் “இவனே ப்ரஹ்மம்” என்று அனைவரும் முழங்க, இவன் ப்ரஹ்மமாக இருப்பதற்கு அவளே காரணம்

—————————

ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–31–

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.
இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.

——————————

ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:–32–

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்

2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன்

3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது

4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்

5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்

6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்

7.ப்ரணத வரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்

8.ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்

9.க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்

எளியவர்களுக்கு எளியவளாக, அடியார்களை மகிழவைக்க, அவர்கள் கட்டிய ஊஞ்சலில்
ஸ்ரீரங்கநாச்சியார் ஆடி மகிழும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே–33–

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.
“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

பட்டர் இந்த ச்லோகத்தை அருளிச் செய்தவுடன், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஒரு சந்தேகம் உண்டாகிவிட்டது.
அவள் தனது மனதில், “எல்லோரும் நம்பெருமாள் அத்தனை அழகு என்கிறார்களே.
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே.
இங்கு நம் பட்டர் அவனது அழகுக்கு ஏற்ற அழகு என்று என்னைக் கூறுகிறாரே.
இது உண்மைதானோ?”, என்று எண்ணினாள்.
அதனால்தான் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாளோ?

——————-

இதுவரை நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் பொதுவாக உள்ள குணங்களைக் கூறி வந்தார்.
இந்தச் ச்லோகத்தில் அவர்கள் இருவருக்கும் உள்ள குண வேறுபாடுகளைக் கூறுகிறார்.

யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34-

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல்,
அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் –
இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்,
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

நம்பெருமாள்
1. யாருக்கும் வசப்படாமல் இருத்தல் (அபரவசதா)
2. அடியார்களில் விரோதிகளை அழித்தேனும் காப்பது என்னும் உறுதி

ஸ்ரீரங்கநாச்சியார்
1. நம்பெருமாளுக்கு வசப்படுதல்
2. விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)

ஒரு சில குணங்களில் மாறுபாடாக உள்ள திவ்ய தம்பதிகள்.
ஆனால் அடியார்களைப் பொறுத்த வரையில் ஒத்த குணங்கள் கொண்டவர்கள்

————————–

கந கநக யுவதசாம் அபி முக்ததசாம்
யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–35-

தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது
பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது;
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது.
உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது;
உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான்.
உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும் ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன.
அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியானது பொன் போன்ற ஒளி உடையது என்பதை ஸ்ரீஸூக்தம் –
ஹிரண்ய வர்ணாம் – என்று போற்றியது காண்க.

பட்டர் கூறுவது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஊஞ்சலில் ஒய்யாரமாக,
புன்முறுவல் பூத்தபடி அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா: மந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபு: ந அர்ஹதி–36-

ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் –
சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்; சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்;
கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்; அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான்.
இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன.
இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா?
அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?

ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனிக்கு பல தன்மைகள் கொடுத்த பின்னர், அந்தப் பொருள்கள் தங்கள் சாறை இழந்தன.
ஆயினும் பல கவிஞர்கள், அவற்றை உயர்வாகவே போற்றுவதை முரண்பாடு என்றார்.

இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால் தான்
அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும்.
இவ்விதம் பொருள் கொண்டால் – இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா?
இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் –
சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார்.
ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள்,
தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்க வல்லது அல்ல – என்பதாகும்.

தெய்வீகமான திருமேனியுடன் கூடிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ப்ரணமத் அநுவிதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–37–

ஸ்ரீரங்கநாயகீ! உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று
நீயும் பதில் வணக்கம் செய்கிறாய். இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி பட்டவுடன்
எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர் மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————

ஏகம் ந்யஞ்ச்ய நதிக்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–38-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக்கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள், கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?
திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–39-

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————-

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–40-

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக
இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து
எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————

ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:–41–

தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் –
ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது;
அப்படி, அவனை ழூழ்கடித்துவிட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்கவல்லது;
கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது;
வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது;
இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்;
தடுமாறியபடிப் பெருகுவதாகும் – தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன்.
என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழ வேண்டும், இன்னார் மீது விழக் கூடாது”,
என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது.
அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது.
தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை;
அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.

கடாக்ஷம் பொங்கும் கனிவான பார்வையுடன் ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

பாதாருந்து தமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம்லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்த க்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா–42-

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள்,
உனது திருவடிகளை உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய்.
உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி,
அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது.
நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது
(தாமரை மலரின் பாரம் தாங்காமல்).
உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால்,
“ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”,
என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி
என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக் கூடும் அல்லவோ?

நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்?
அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான்.
அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?

இவளது திருமேனியின் மென்மையைக் கண்ட இவளது தோழிகள், “இத்தனை மென்மையா?” என்று கண் வைத்தாலும்,
அந்தக் கண்த்ருஷ்டி விழக்கூடாது என த்ருஷ்டி பொட்டுடன் காட்சியளிக்கும் ஸ்ரீரங்கநாச்சியார்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே —

————————————–

ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தநயுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:–43–

ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன.
இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் உனது திருக்கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு,
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை ஆகியவற்றைக் காணும் போது
நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது.
இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய்.
ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை
உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)?
இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக,
உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும்.
இப்படியாக குமரிப்பருவமும், யௌவநப்பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு,
மிகுந்த நறுமணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.

இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குரு பரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார்.
அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.

பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தனியே உபதேசிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————

ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேச்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்–44-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் –
உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்;
இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்;
உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது;
உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது;
உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள் அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன –
ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய்.
இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது.
ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின்
திருமார்பிற்கு, மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?

இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன?
ச்லோகம் 42ல், மலரின் மகரந்தப்பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார்.
அதே ச்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல்,
திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார். இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு,
இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் – என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.

இந்த மாலை பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————-

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்–45–

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய்.
இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ,
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய்.
இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.

புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
இங்கு இவளுடைய அழகை நம்பெருமாள் முற்றிலுமாக அனுபவிப்பதாகக் கூறுவது காண்க.

தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

இந்தச் ச்லோகத்தில் பட்டர் ஸ்ரீரங்கநாச்சியாரை நம்பெருமாள் அனுபவிப்பதற்கு ஏற்ற மலர் மாலையாகக் கூறினார்.
இதனைக் கேட்ட நம்பெருமாள், “இதோ சென்று பார்த்து விடுவோம்”, என்று புறப்பட்டுவிட்ட
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே போலும் –

————————-

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா–46–

ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில்
பல ஆபரணங்கள் – தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி,
நவரத்ன மணிகளால் ஆன மாலைகள், அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன.
அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும்,
கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.

இந்த ச்லோகத்தில், ஸ்ரீரங்கநாச்சியாரின் பல ஆபரணங்களைக் கூறுகிறார்.
இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க.
இதனை இராமாயணத்தில் இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் –
அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.

பட்டர் கூறியது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஸ்ரீரங்கநாச்சியார்.
திருச்செவியில் உள்ள தோடு, “இவளே நம்பெருமாளின் நாயகி”, என்று பறைசாற்றும்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

——————

ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்–47-

ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன்
சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை,
ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை)
ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும்.
ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது
என்று கருதினான் போலும். அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.

இங்கு அனுபவிக்கிறான் என்று ஏன் கூறினார்? தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று
ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட அன்பில் மனம் உருகி நின்றாள்.
அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.

சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள்சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————-

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி–48-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

ஸீதை இல்லை யென்றால் இராமாவதாரம் சுவைக்காது.
ருக்மிணி இல்லை யென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது.
வாமனனாக வந்த போதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான்.
வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.
ராமக்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல,
அர்ச்சாவதாரத்திலும் பெரியபிராட்டியைத் தரித்தே உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது
எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின.
இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.
இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும்
கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த போது, அதிலிருந்து வெளி வந்த அமிர்தத்தைத்
தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார்.
ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான்.
இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர்.
ஆனால் முழுச்செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான்.
அப்போது “உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய வெண்முத்து சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே
அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது
பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்;
ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு,
தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல்,
அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———-

மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–51-

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம்.
எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை,
“உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம்.
அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம்.
இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள்
ஸ்ரீரங்கநாயகியான உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார்.
அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார்.
இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.

——————

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு,
ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம்,
“என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) –
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் – என்பது காண்க.
இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரிய பிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.

அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால்,
அவனே வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்கமாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.

அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்?
அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள்.
இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.

பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————–

நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விச்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்–53–

தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது. இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில்
நீ இராமனின் துணைவியாக திருஅவதாரம் செய்தாய். எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய்.
ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா?
மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப்பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய்.
உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது.
இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது.
போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும்
உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.

இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,
”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று
உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.

தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார்.
இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.

அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசரபட்டர் இல்லை.
ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும்.
அதனால்தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிறா
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————————–

அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தசமுகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:–54–

தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும்,
உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்?
உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான்.
உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான்.
அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான்.
ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான்.
பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.

இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான்.
திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான்.
இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?

பட்டர் இந்தச் ச்லோகத்தை அருளிச் செய்தவுடன் அவரிடம் ஸ்ரீரங்கநாச்சியார்,
“குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை.
ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும். உங்களுக்காக அவன் என்ன செய்தான்?
நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி? இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள்.

உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான்.
ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்

——————————

தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே–55–

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும்,
அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்? அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.

அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது,
பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்த
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———————–

ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே–56–

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .

ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்கநாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும்.
ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.

பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம்,
“ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே!
ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே!
இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி,
தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————-

ஔதார்ய காருணிகதா ஆச்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–57-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்)
ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்த போதும்
அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.

அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி,
முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில் இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும்.
பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?

வானரர்களுக்கும் அன்பு பொழிந்த சீதை. இவ்விதம் விலங்கு இனத்திற்கும் கருணை செய்து பழகியதால் தான்,
இன்று நம் போன்று பாவம் செய்தவர்கள் ஸ்ரீரங்கநாச்சியார் முன்பாக நின்றாலும் அவளுக்குக் கோபம் வருவதில்லை போலும்

————————–

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும்
தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்?
அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் –
இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா?
நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.

பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலை தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————————

ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி–59-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய
வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.

இந்தச் ச்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று
பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க.
மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார்.
மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.

பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம்,
“இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள்.
இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபயஹஸ்தத்தைக் காண்பிக்கிறான்.
இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை,
தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்தும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே .

——————-

இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–60-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும்,
உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்
(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.

இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும்.
இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.

ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும்
என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————

ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்ய ரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–61-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும்.
உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன்
நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.

இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்யதம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்;
அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார்.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று
வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.

சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளா சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

—————–

ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீகுணரத்னகோசம் ஸம்பூர்ணம்

ஸ்ரீரங்கநாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
உலகம் உய்ய வந்த எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே தஞ்சம்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீபராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தவம் —

February 26, 2021

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகங்கள்.
அனைத்து உலகுக்கும் தாயாரான ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரங்கநாயகி தாயாரின்
பெருமைகளை சொல்லும் 11 ஸ்லோகங்கள்.

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே |
யதுக்தய ஸ்த்ரயீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் ||–தனியன் (ஸ்ரீ பராசர பட்டர் அருளியது)

“ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டியருளிய ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.”

——–

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் 1 ️
“ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜகதாம் ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:
ஸ்வர்க்கம் துர்கதிம் அபவர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வன் ஹரி:” |
“யஸ்யா வீக்ஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே சகிலம்
கிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா ஸ்யாதை கரஸ் யாத்தயா” ||

பகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும்போது,
பிராட்டியின் அழகான முக குறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளை செய்கிறான்.
இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகல கில்லேன் இறையும் என்ற ‘ஸ்ரிய பதி’ பகவானுடன்
எப்போதும் சேர்ந்தே இருக்கிற விஷ்ணு பத்னியாகிய பிராட்டியே! மிகுந்த பக்தியும்,ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!

———–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 2

ஹே ஸ்ரீர் தேவி சமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதுமீஹா மஹே
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தீயம் |
பக்திம் பந்தய நந்தயாஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம்
லக்ஷ்யம் லக்ஷ்மி கடாக்ஷ வீசிவிஸ்ருதே: தே ஸ்யாம சாமீ வயம் ||

“ஹே ஸ்ரீரங்கநாயகி தாயாரே! அனைத்து உலகுக்கும் தாயானவளே! உனது பெருமைகளை புகழ்ந்து பாடுவதற்கு
வாக்கு, அன்பு கலந்த ஞானம் அருள வேணும். என்னுடைய பக்தியானது பரம பக்தியாக வளர அருள வேணும்.
உன் திருவடி தாமரையில் சரணடைந்து உனக்கு கைங்கர்யம் செய்பவனாக ஏற்றுக்கொண்டால்
நான் மிகுந்த ஆனந்தம் கொள்வேன்! உன்னுடைய கருணை மிக்க பார்வையை எங்கள் மேல் கடாக்ஷித்து அருள வேணும்”
என்று கூரத்தாழ்வான் பிரார்த்திக்கிறார்.

————-

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் – 3

ஸ்தோத்ரம் நாம கிமா மநந்தி கவயோ யத் யந்யதீயான் குணாந்
அந்யத்ர த்வஸதோ சதிரோப்ய பணிதி: ஸா தர்ஹி வந்த்யா த்வயி |
ஸம்யக் ஸத்ய குணாபி வர்ணாநம் அதோ ப்ரூயு: கதம் தாத்ருசீ
வாக் வாசஸ்பதி நாபி சக்ய ரசநா த்வத் ஸத் குணார்ணோநிதௌ ||

“இருக்கிறதை இருக்கு என்று பாடுவது ஒரு வகை ஸ்தோத்ரம்..இல்லாததை இருக்கு எனபது ஏற்றி சொல்வது அடுத்த வகை.
தேவி! உன் இடத்தில் எல்லாம் உள்ளன. பல நிதி முத்துக்கள் கடலில் உள்ளது போல உயர்ந்த கல்யாண குணங்கள்
இருக்கும் போது எனது சின்ன வாக்கால் எப்படி பாட முடியும்? ஹயக்ரீவர் ஆக இருந்தாலும் முடியாது. ” என்கிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

பராசர பட்டர் ஆயிரம் நாக்கு கேட்டு பின்பு பாட சக்தி இல்லை என்றார்.
முடியாது என்று சொல்ல ஆயிரம் நாக்கு வேணும் என்பது போல. பெரிய பிராட்டியாரின் கல்யாண குணங்களை
பாடிக்கொண்டே இருக்கலாம், இதற்கு எல்லையே இல்லை.

————–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 4 –

யே வாசாம் மநஸாம் ச துர் க்ரஹதயா க்யாதா குணாஸ் தாவகா :
தாநேவ ப்ரதி ஸாம்பு ஜிஹ்வ முதிதா ஹை மாமிகா பாரதீ |
ஹாஸ்யம் தத்துந மன்மஹே ந ஹி சகோர் யேகா கிலம் சந்ரித்காம்
நாலம் பாதுமிதி ப்ரக்ருஹ்ய ரசநாம் ஆஸீத ஸத்யாம் த்ருஷி ||

“ஹே மஹாலக்ஷ்மி! உன்னுடைய கல்யாண குணங்களை என்னுடைய நாக்காலோ அல்லது மனதாலோ பாடி முடிக்க முடியாது!
பாடிக்கொண்டே இருக்கலாம், பாடுவதில் வாக்கு ஓடுகிறது. தண்ணீர் உடன் கூடிய ரசத்துடன் கூடிய நாக்கு துடிக்கிறது.

‘சகோரி’ என்னும் பறவை சந்திர கலை உருகுமா என்று கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கும்.
சந்திரனின் குளிர் கதிர்களை உணவு என்று எண்ணி குடிக்கும்,
தன்னால் முடியாது என்று தெரிந்தும் தன்னை முழுவதுமாக இதில் ஈடுபடுத்திக் கொள்கிறது.
இதேபோல், நானும் என் முயற்சியை விடாது, உன்னுடைய கல்யாண குணங்கள் அனைத்தையும் பாடி
போற்றிக்கொண்டே இருப்பேன்” என்று இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

———–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 5 –

க்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி நிஸ் ஸ்நேஹோப்ய நீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹன்நஹம் ந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |
துஷ்யேத் ஸாதுந தாவதா ந ஹிஸுனா லீடாபி பாகீரதீ
துஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத் யார்திஸ்து ஶாம்யேச்சுந: ||

“ஹே மஹாலக்ஷ்மி! உன்னை போற்றிப் பாடுவதற்கு எனக்கு அறிவு இல்லை, அனுஷ்டானமும் இல்லை.
இந்த வரம்புகள் இருந்த போதிலும், என் வாக்கினால் உன்னை பாடிப் போற்றுவதால்
உன்னுடைய புனிதத்துவம் குறைந்து விடுவதில்லை யன்றோ.

நாய் தாகத்தால் கங்கையில் தண்ணீர் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..
அது போலவே நான் உன்னை பாட முற்படுவது. ராவணனையும் திருத்த முயன்ற தேவியே!
அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா? லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே
அவர்களை ரக்ஷித்த பெருமையுடையவள் நீ அன்றோ! ” என்று இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடுகிறார்.

————-

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 6 –

முதல் ஐந்து ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரேஸர், தாம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை புகழ்ந்து பாடுவதற்கு
தகுதி யற்ற தன்மையை சொல்லுகிறார்.
ஆறாவது ஸ்லோகத்திலிருந்துதான் ‘ஸ்தோத்ர ஆரம்பம்’.

ஐஸ்வர்யம் மஹதேவவா அல்பமதவா த்ருஶ்யேத பும்ஸாம் ஹி யத்
தல்லக்ஷ்ம்யா: ஸமுதீக்ஷணாத் தவ யதஸ் ஸார்வத்ரிகம் வர்ததே |
தேநைதேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோபி நாராயண:
தந்யம் மந்யத ஈக்ஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மாந மாத்மேஶ்வர: ||

ஹே ரங்கநாயகி! செல்வம் இரண்டு வகையானது என்று கூறப்படுகிறது. ஒன்று, பூமியில் அனுபவிப்பது.
மற்றொன்று ஸ்ரீ வைகுந்தத்தில் முக்தியடைந்தவர்கள் மற்றும் நித்திய சூரிகள் ஆகியோர் அனுபவிப்பது.
இந்த இரு வகையான செல்வங்களும் அவர்கள் மீது விழுந்த உம்முடைய கடாக்ஷத்தின் விளைவாக அன்றோ கிடைக்கப் பெற்றன!

‘பெரியதோ, சிறியதோ, லக்ஷ்மி கடாக்ஷத்தால் கிடைக்கப் பெற்றது’ என்கிற கூற்று கேட்டு எனக்கு ஆச்சர்யம் இல்லை.
ஆத்மேச்வரனாக, அதாவது தனக்கு ஈச்வரன் அற்றவனான, அந்த ஜகந் நாதன் உம்முடைய கடாக்ஷம் கிட்டி
தன்யனாக எண்ணுகிறான்” என இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

வாமன அவதாரத்தில் எம்பெருமான், பக்த ப்ரகலாதனின் பேரன் மகாபலியிடம் மூன்றடி மண் தானமாக கேட்கும்போது
தன்னுடைய மார்பை வஸ்திரத்தால் மூடிக்கொண்டு தானம் வாங்கினானாம்.
‘சிறிது நேரமும் விட்டுப் பிரியேன்’ என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவன் அன்றோ!
பிராட்டி கடாக்ஷம் பட்டால் மகாபலியிடம் சொத்தை வாங்க முடியாது.

‘திருவுக்கும் திரு வாகிய செல்வா’ என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பாடுகிறார். (பெரிய திருமொழி ஏழாம் பத்து)
அதாவது ‘ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கும் லக்ஷ்மீகரனான செல்வனே!’ என்று.
எம்பெருமான் ஸ்ரீக்கும் ஸ்ரீயாயிருப்பனென்றால் என்ன கருத்தென்னில்;
ஸ்ரீ என்றாலும் திரு என்றாலும் ‘அதிசயத்தை விளைவிப்பவள்’ என்று பொருள் கொள்ளத்தக்கது;
எல்லார்க்கும் அதிசயத்தை விளைப்பவளான அவள் தனக்கும் அதிசயத்தை விளைப்பவன் எம்பெருமான் என்றவாறு.
பிராட்டிக்கு எம்பெருமானுடைய ஸம்பந்தத்தினால் அதிசயம்; எம்பெருமானுக்குப் பிராட்டியின் ஸம்பந்தத்தினால் அதிசயம்.

—————–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 7-

ஐஸ்வர்யம் யத ஶேஷ பும்ஸி யதிதம் ஸௌந்தர்ய லாவண்ய யோ:
ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல் லோகே ஸதித் யுச்யதே |
தத் ஸர்வம் த்வததீந மேவ யதத: ஸ்ரீரித்ய பேதேந வா
யத்வா ஸ்ரீமதி தீத்ருஶேந வசஸா தேவி ப்ரதாமஷ்நுதே ||

“ஸ்ரீ ரங்கநாச்சியாரே! இவ்வுலகில் செல்வம், அழகு, நற்குணம் போன்ற ஐஸ்வர்யங்கள் உன்னுடைய ஸம்பந்தத்தில்,
உனக்கு அடங்கியதாக உள்ளது. அவை அனைத்தும் “ஸ்ரீ” என்ற உன்னை விட வேறானது இல்லை –
என்பதன் மூலமாகவோ அல்லது ‘ஸ்ரீயை உடையது’ என்ற சொல் மூலமாகவோ அல்லவா பெருமை அடைகிறது!?”
என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

இங்கு ஸ்ரீ கூரேசர் இரண்டு வகையான ‘ஸ்ரீ’ சப்தத்தை குறிப்பிடுகிறார்.
“திருப்பதி”, “திருமங்கை”, “திரு விளக்கு” – இவை ஒருவகை.
“ஸ்ரீமத் பாகவதம்”, “ஸ்ரீமத் ராமாயணம்” – இவை இரண்டாவது வகை.

திருப்பதி மலையில் ஏறாமலே ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார்,
திரு மேனி ஒளியை வீசி சேர்த்து ‘திரு’ மலை என்று சொல்ல வைத்தாள்

————

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 8 –

தேவி தவந் மஹிமாதிர்ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோ: ஸர்வஜ்ஞதா ஹீயதே |
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞதாம் அநு குணாம் ஸர்வஜ்ஞதாயா விது:
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித் யுச்யதே ||

“ஹே ஸ்ரீரங்க நாச்சியாரே! உம்முடைய மேன்மையின் எல்லையானது ஸ்ரீ ரங்கநாதனாலும் அறியப்படுவதில்லை.
உன்னாலும் உன்னுடைய மேன்மை என்பது எத்தன்மையது என்று அறியப்படுவதில்லை.
இப்படி இருந்தாலும் நீங்கள் இருவரும் அனைத்தையும் அறியும் தன்மையில் எந்தவிதமான குறையும் இல்லாமல் உள்ளீர்கள்.
இதன் காரணம் – எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து, அதனை அறிந்து
கொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாக சான்றோர்கள் அறிகிறார்கள்.
‘ஆகாயத் தாமரை’, ‘முயல்கொம்பு’ ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் ‘பைத்தியக்காரன்’ என்றே
உலகத்தினரால் கூறப்படுகிறான்” என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்!

———————-

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 9 –

லோகே வநஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம்
யஸ்யா: ப்ரஸாத பரிணாமம் உதாஹரந்தி
ஸா பாரதீ பகவதீ து யதீய தாஸி
தாம் தேவ தேவ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:

“இந்த உலகில் ஒருவன் ‘மரம்’ போன்ற ஜடப்பொருளாகப் பிறப்பதும் தேவகுருவான ‘ப்ருஹஸ்பதி’
போன்ற அறிவாளியாகப் பிறப்பதும் ஆகிய ஏற்றதாழ்வுகளை ஸரஸ்வதியினுடைய கடாக்ஷத்தின் பலனாகவே கூறுகின்றனர்.
பூஜிக்கத்தகுந்த அந்த ஸரஸ்வதி எந்த ஸ்ரீரங்க நாச்சியாரின் அடியாராக இருக்கிறாளோ,
அனைத்து தேவர்களின் அதிபதியான ஸ்ரீரங்கநாதனின் அந்த ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைவோமாக”
என்று பாடுகிறார் ஸ்வாமி கூரத்தாழ்வான்

————-

ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 10 –

யஸ்யா: கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந
ஸத்ய: ஸமுல்ல சித பல்லவம் உல்ல லாஸ
விஸ்வம் விபர்யய ஸமுத்த விபர்யயம் ப்ராக்
தாம் தேவ தேவ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:

“பிரளய காலத்தில் ஸ்ரீரங்க நாச்சியாரின் கடாக்ஷம் கிட்டாத காரணத்தினால் இந்த உலகம் துவண்டு கிடந்தது.
அப்போது இவளது கடைக்கண் பார்வை என்னும் ஸங்கல்பம் காரணமாக, அந்த ஸங்கல்பம் உண்டான
க்ஷண நேரத்திலேயே பூமியானது தழைத்து விளங்கியது.
மாதவன் வங்க கடல் கடைய அமுதினில் பிறந்தவள்.
தேவர்களின் தலைவனான ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைகிறோம்”

————-

ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 11 –

யஸ்யா: கடாக்ஷ வீக்ஷா க்ஷண லக்ஷம் லக்ஷிதா: மஹேசா: ஸ்யு:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ ஸா மாம் அபி வீக்ஷதாம் லக்ஷ்மீ:

“எந்த ஒரு பிராட்டியின் கடைக் கண் பார்வைக்கு ஒரு நொடிப்பொழுது இலக்கானாலும் மிகுந்த
கைங்கர்யச் செல்வம் பெற்றவர்கள் ஆவார்களோ அப்படிப்பட்ட,
ஸ்ரீரங்கராஜனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் என்னையும் தனது கடைக் கண் கொண்டு பார்க்கவேண்டும்”
என்று மற்ற செல்வங்களை வேண்டாது கைங்கர்ய செல்வத்தையே ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் வேண்டுகிறார்.

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–ஸ்லோகங்கள்-51-105-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —-

May 15, 2020

ஸ்ரீ பராசர பட்டர் திருக் கோஷ்ட்டியூரில் இருந்து ஸ்ரீ ரெங்கம் திரும்பி வரும் போது திருக் காவேரி தொடக்கமாக
ஸ்ரீ ரெங்கத்தை வருணிக்க படி எழுந்து அருளினார்
பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள்
உத்தர சதகம் -105-ஸ்லோகங்கள்

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே-

பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய பூர்வ வாக்ய விவரணம்
உத்தர சதகம் –105-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய உத்தர வாக்ய விவரணம் –

———-

மத்யே விரிஞ்ச கிரிஸம் பிரதம அவதார
தத் சாம்யத ஸ்தகயிதும் தவ சேத் ஸ்வரூபம்
கிம் தே பரத்வ பிசுநை இஹ ரங்க தாமந்
சத்த்வ ப்ரவர்த்தந க்ரூபா பரிபாலந ஆத்யை –51-

ஹே ரங்க தாமந்
மத்யே விரிஞ்ச கிரிஸம்–பிரம ருத்ராதிகளின் நடுவே
தவ பிரதம அவதார–தேவருடைய முதன்மையான அவதாரமானது
தத் சாம்யத –அவர்களுடன் ஒற்றுமை நயம் காட்டி
ஸ்தகயிதும் தவ சேத் ஸ்வரூபம்–தேவருடைய பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்வதற்காகில்
தே பரத்வ பிசுநை –தேவருடைய பரத்வத்தை கோள் சொல்லக் கடவதான
சத்த்வ ப்ரவர்த்தந க்ரூபா பரிபாலந ஆத்யை–வேத உபதேச யோக உபதேசத்தி ரூபமான சத்வ ப்ரவர்த்தனம் என்ன
கிருபையினால் ரஷித்து அருளுவது என்ன இவை முதலிய கார்யங்களினால்
இஹ கிம் -இங்கே என்ன பயன் –
நீர்மையைக் காட்டி அருளவே இந்த அவதாரம்
பரத்வத்தை வருந்தியும் மறைக்க முடியாதே –

இப்படி அவதரிக்கும் இடத்தில் முந்துற ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் அவதரித்து அவர்களோடு சாம்யா புத்தியால்
சுருதிகள் பறை சாற்றும் பரத்வத்தை மறைப்பதற்கு என்றால்
பரத்வத்தை கோள் சொல்ல வல்ல ஸாஸ்த்ர உபதேச ரூபமாயும் யோக உபதேச ரூபமாயும் உள்ளவையும்
ப்ரஹ்மாதிகளுக்கும் சத்வ ப்ரவர்த்தனத்தாலும் பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அடியாக அவர்களுக்கு வந்த
குரு பாதக தைத்ய பீடாதி இத்யாதிகள் செய்து அருளும் ரக்ஷணாதிகளாலும் தேவருக்கு
என்ன பிரயோஜனம் உண்டு -ப்ரத்யுத்த விரோதம் அன்றோ -என்கிறார்

————–

மது கைடபச்ச இதி ரோதம் விதூய
த்ரயீ திவ்ய சஷு விதாது விதாய
ஸ்மரசி அங்க ரங்கிந் துரங்க அவதார
சமஸ்தம் ஜகத் ஜீவயிஷ்யஸி அகஸ்மாத் –52-

அங்க ரங்கிந்
துரங்க அவதார-ஹயக்ரீவ ரூபியாகி
மது கைடபச்ச இதி–மது என்றும் கைடபர் என்றும் சொல்லப்பட்ட
ரோதம் விதூய–இடையூறு தன்னை அகற்றி
விதாது–நான்முகற்கு
த்ரயீ திவ்ய சஷு விதாய–வேதங்களாகிற சிறந்த கண்ணை அளித்து
அகஸ்மாத் –நிர்ஹேதுகமாகவே
ஸ்மரசி சமஸ்தம் ஜகத் ஜீவயிஷ்யஸி–எல்லா உலகத்தையும் வாழ்வித்தீர் –

இதில் தேவர் ஸாஸ்த்ர உபதேச ரூபமான -கீழ்ச் சொன்ன சத்வ ப்ரவர்த்தனம் பண்ண –
அந்த வேத ஸாஸ்த்ர அபஹாரிகளான மது கைடபர்களை தேவர் ஒரு விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி நிரசித்து அருளி
ஹயக்ரீவராக அவதரித்து அருளி ஸ்ருஷ்டிக்கப் புகுகிற பிரம்மாவுக்கு ருக் யஜுஸ் சாம வேதமாகிய நல்ல கண்ணைத்
தந்து அருளி ஸமஸ்த ஜகத்தையும் நிர்ஹேதுக கிருபையால் உஜ்ஜீவிப்பித்து அருளி ஸ்மரிக் கிறதோ என்கிறார் –
ஸ்மரஸி -என்றதால் -நாம் நினைப்பூட்டும் படி உத்தர உத்தரம் உபகார கரணத்தால் அந்ய பரத்தையால்
பூர்வ உபகார விஸ்ம்ருதி யாகிற ஒவ்தார்யம் ஸூஸிதமாய்த்து

——————-

ரங்கதே திமிர கஸ்மர சீத ஸ்வச்ச ஹம்ஸ தநு இந்து இவ உத்யந்
வேதபாபி அநு ஜக்ரஹித அர்த்தாந் ஞான யஜ்ஞ ஸூதயா ஏவ சம்ருத்த்யந் — 53-

ரங்கதே
ஞான யஜ்ஞ ஸூதயா ஏவ –ஞான யஜ்ஜமாகிற அமுதத்தினாலேயே சம்ருத்த்யந் — பரிபூர்ணராய்
இந்து இவ–சந்திரன் போலே
திமிர கஸ்மர சீத ஸ்வச்ச ஹம்ஸ தநு –அஞ்ஞான அந்தகாரங்களை கபளீ கரிக்கின்ற குளிர்ந்த நிர்மலமான
ஹம்சத்தின் உருவத்தை உடையராய்
உத்யந்–அவதரியா நின்று கொண்டு
வேதபாபி அநு ஜக்ரஹித அர்த்தாந் –ஆர்த்தியை உடையாரை வேத ஒளிகளாலே அனுக்ரஹித்தீர்
ஆர்த்தான் -நஷ்ட ஐஸ்வர்ய காமன் -பரி கொடுத்த வேதத்தை அர்த்தித்தானே-
பன்னு கலை நால் வேதப் பொருள்களை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் தானே
அன்னமாய் அன்று அரு மறை பயந்தவன் –

சில புராணங்களிலும் வசையில் நான் மறை -என்கிற பாட்டிலும் ஹயக்ரீவ அவதாரம் பண்ணி
பிரம்மாவுக்கு வேத பிரதானம் பண்ணினதாக இருப்பதை கீழே அருளிச் செய்து
முன் இவ் வெழில் குணா என்கிற பாட்டிலும் புராணாந்தரங்களிலும் ஹம்ஸ ரூபியாய் பண்ணினத்தை இதில்
ஞான மயமானது யஜ்ஜமாகிற அம்ருதத்திலே அபி வருத்தமாய் அந்தகார நிவர்த்தகமாய் குளிர்ந்த தெளிந்த
ஹம்ஸ ரூபத்தை யுடையராய் உதித்த சந்திரன் போலே வேதமாகிய கிரணங்களால் வேத அபஹாரத்தால் ஆர்த்தனாய்
சேதன சமஷ்டி ரூபனான பிரம்மாவை அனுக்ரஹித்து அருளினார் என்கிறார் –

————-

வடதலம் அதிசய்ய ரங்க தாமந் சயித இவ அர்ணவ தர்ணக பதாப்ஜம்
அதிமுகம் உதரே ஜகந்தி மாதும் நிதித வைஷ்ணவ போக்ய லிப்சயா வா –54-

ரங்க தாமந்
சயித இவ அர்ணவ தர்ணக -சயனித்த கடல் குட்டி போலே
வடதலம் அதிசய்ய–எஞ்சாமல் வயிற்றில் அடக்கி ஆலிலையில் பள்ளி கொண்டு
பதாப்ஜம் அதிமுகம் நிதித–பேதைகே குளவி பிடித்து உண்ணும் பாதக் கமலங்கள் என்றபடி –
திருப் பவளத்தை பாதார விந்தத்திலே வைத்து அருளினீர்
இது
உதரே ஜகந்தி மாதும்–திரு வயிற்றில் உள்ள உலகங்களை அளப்பதற்காகவா
அன்றிக்கே
வைஷ்ணவ போக்ய லிப்சயா வா-தேனே மலரும் திருப்பாதம் என்றபடியே -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
போக்யமான மதுவை திருவடியில் நின்றும் பெற வேணும் என்கிற விருப்பத்தினாலா

சத்வ ப்ரவர்த்தன அநு குணமான ஸாஸ்த்ர பிரத அவதாரங்களைக் கீழே அனுபவித்து
கிருபா பரிபாலன அநு கொள்ள அவதாரங்களை அனுபவிக்க இழிந்து முதலில் ஒரு சமுத்ரசிசு-சமுத்திர குட்டி –
பள்ளி கொண்டால் போலே ஆலந்தளிரிலே பள்ளி கொண்டு தன் திருவடித் தாமரையை திரு வாயில் வைத்து அருளி
உள்ளுக் கிடைக்கும் ஜகத்தையும் அளக்கைக்கோ-
அன்றியிலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆகாரமான ஆகாரத்தாலே அத்தை லபிக்கையில் உண்டான
அபேக்ஷையாலேயோ என்கிறார் –

——————

உந் மூல்ய ஆஹர மந்த்ர அத்ரிம் அஹிநா தம் சம்பதாந அமுநா
தோர்ப்பி சஞ்சல மாலிகை ச ததி நிர்மாதம் மதாந அம்புதிம்
ஸ்ரீ ரெங்கேஸ்வர சந்த்ர கௌஸ்துப ஸூதா பூர்வம் க்ருஹாண இதி தே
குர்வாணஸ்ய பலே க்ரஹி ஹி கமலா லாபேந சர்வ ச்ரம –55-

ஸ்ரீ ரெங்கேஸ்வர
உந் மூல்ய ஆஹர மந்த்ர அத்ரிம்–மந்த்ர மலையைப் பறித்து கொணர்ந்தீர்
தம் அமுநா–அந்த மலையை பிரசித்தமான
அஹிநா சம்பதாந–வாஸூகி என்னும் பாம்பினால் கட்டினீர்
தோர்ப்பி சஞ்சல மாலிகை –திரு மாலைகள் அசையப் பெற்ற திருக் கைகளினால்
ச ததி நிர்மாதம் மதாந அம்புதிம்-அந்தக் கடலை தயிர் கடைவது போல் கடைந்தீர்
சந்த்ர கௌஸ்துப ஸூதா பூர்வம் க்ருஹாண –சந்திரன் ஸ்ரீ கௌஸ்துபம் அம்ருதம் முதலானவற்றைக் க்ரஹித்தீர்
இதி தே குர்வாணஸ்ய-இவ்வண்ணமாக கார்யம் செய்யா நின்ற -ஆயிரம் தோளால் தோளும் தோள் மாலையுமாக
அலை கடல் கடைந்த தேவருடைய
பலே க்ரஹி ஹி கமலா லாபேந சர்வ ச்ரம –ஸ்ரமம் எல்லாம்-அமுதினில் வரும் பெண் அமுதான –
கோதற்ற அமுதான பிராட்டியைப் பெற்றதனால் சபலமாயிற்றுக் காணீர்–

அநந்தரம் சமுத்திர மதன வேளையில் மந்த்ர பருவத்தை வேர் பிடுங்கலாகப் பிடுங்கிக் கொண்டு வந்து
அத்தை பந்தத்துக்கு யோக்கியமான வாஸூகியாலே சுற்றி பந்தித்து அலையா நின்றுள்ள மாலையை யுடைத்தான
திருக் கைகளால் மஹத் தத்துவமான ஷீர சமுத்திரத்தை தயிர் தாழியில் தயிரைக் கடையுமா போலே கடைந்து
சந்திரனையும் கௌஸ்துபத்தையும் அம்ருதத்தையும் பாரிஜாதத்தையும் முதலானவைகளையும் கிரஹித்து
இப்படி ப்ரயோஜனந்தர்களுக்காக வியாபாரித்து பட்ட ஸ்ரமம் எல்லாம் தீரும்படி-
அகலகில்லேன் இறையும் என்று இருக்கிற பிராட்டி ஸ்வயம் வரத்தாலும்
விண்ணவர் அமுத்தினாள் வந்த பெண்ணமுது தேவர்கள் எல்லாம் பார்த்து இருக்க தேவரீரையே ஆஸ்ரயித்த
பரத்வத்தை அறிந்து அநந்ய பிரயோஜனர் ஈடுபடுகையாலும் சபலமாய்த்து என்கிறார் –

—————

தேவீ ஹஸ்த அம்புஜேப்ய சரண கிசலயே சம்வஹத்ப்ய அபஹ்ருத்ய
ப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந
ஆஷிப்ய உரஸ் ச லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்
தேவ ஸ்ரீ ரெங்க தாம கஜபதி குஷிதே வியாகுல ஸ்தாத் புரோ ந –56-

கஜபதி குஷிதே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூவின போது
சம்வஹத்ப்ய–திருவடி வருடா நின்ற
தேவீ ஹஸ்த அம்புஜேப்ய –தேவிமாருடைய தாமரைக் கைகளில் நின்றும்
சரண கிசலயே –தளிர் போன்ற திருவடிகளை
அபஹ்ருத்ய–இழுத்துக் கொண்டும்
ப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி –ஆதி சேஷன் திரு மேனியை திடீர் என்று துறந்தும்
லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்-பெரிய பிராட்டியாருடைய செப்பன்ன மென் முலைகளில்
விளங்கா நின்ற குங்கும குழம்புகளில் நின்றும்
ஆஷிப்ய உரஸ்–திரு மார்பை மீட்டுக் கொண்டும்
ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந–துடிக்கின்ற இமைகளை உடைய திருக் கண்களை மலர மலர விழித்தவராய்
ஸ்ரீ ரெங்க தாம வியாகுல ஸ்தாத் புரோ ந–நிலை கலங்கி நின்ற ஸ்ரீ பெரிய பெருமாள்
நம் கண் முகப்பே எழுந்து அருளி நிற்க வேணும் –
பஞ்ச இந்திரியங்களின் வாயில் அகப்பட்ட நம்மை -அங்கு போன்ற நிலைமையுடன் வந்து
கண் முகப்பே தோன்றி ரஷித்து அருள வேணும் –

ஸ்ரீ கஜேந்திரன் கூக்குரல் கெட்டு நிலை குலைந்த படியை வர்ணிக்கிறார்
எம்பெருமான் திருவடிகளில் இடத் தாமரைப் பூக்களைத் தேடித் திரிந்து ஒரு தாமரை மடுவில் இழிந்து
அங்கு பலவத்தான ஒரு நீர்ப் புழுவாலே இழிப்புண்டு அத்தை ஆயிரம் வருஷம் யுத்தம் பண்ணி
ச்ராந்தியாலே ஸ்வ பிரயத்தன நிவ்ருத்தி பிறந்து கஜேந்திர ஆழ்வான் கூப்பிட்ட போது தளிர் போன்ற
திருவடிகளைப் பிடியா நின்றுள்ள பிராட்டிமார் திருக்கைகளில் நின்றும் பலாத்கரித்து இழுத்தும் –
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை அப்பொழுதே விட்டும் திருக் கண்களை மலர விழித்தும்-
பெரிய பிராட்டியார் திரு முலைத்தடத்தில் குங்குமக் குழம்பில் நின்றும் திரு மார்பைப் பேர்த்தும்-
இப்படி வ்யாகுலரான பெரிய பெருமாள் ஆ பன்னரான எங்கள் முன்னே நிரந்தரமாக இருக்கக் கடவது என்கிறார் –

————–

அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்வீக்ருத
ப்ரணீத மணிபாதுகம் கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்
அவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத
கரிப்ரவர ப்ரும்ஹிதே பகவத் த்வராய நம –57-

கரிப்ரவர ப்ரும்ஹிதே–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட அளவில் –
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -ஸ்ரீ சேனை முதலியார் கொடுத்த கைலாக்கை மதியாமலும்
அஸ்வீக்ருத ப்ரணீத மணிபாதுகம்–சஜ்ஜமாக்கப் பட்ட மணி பாதுகைகளை ஸ்வீ கரிக்காமலும்
கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்–இது என் இது என் என்று திவ்ய மஹிஷிகள் திகைக்கவும் –
அவாஹந பரிஷ் க்ரியம் –வாகன பரிஷ்காரம் ஒன்றும் செய்யாமலும்
பதக ராஜம் ஆரோஹத-ஸ்ரீ பெரிய திருவடி மேல் ஏறா நின்ற
பகவத் த்வராய நம–எம்பெருமானுடைய பதற்றத்துக்கு நமஸ்காரம்
நம்மை ரஷித்து அருளவும் இவ்வாறு த்வரித்து அருளுவான் –

நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் என்று
கஜேந்திராழ்வான் கூப்பிட்ட போது வியாகுலராய் எழுந்து அருளும் பொழுது சேனை முதலியார் கை கொடுக்க
அத்தைப் பிடித்துக் கொள்ளாமலும் அந்தப்புரத்தில் அந்தரங்கர் மணி மயமான திருவடிகளை சமர்ப்பிக்க
அத்தை அங்கீ கரியாமலும் அந்தப்புரத்தில் உள்ளார் இது என்ன வ்யாகுலதை என்று கை நெருக்கி இருந்தபடியே
வாகனத்துக்கு வேண்டிய அலங்கார சூன்யராய் இருந்துள்ள பெரிய திருவடியில் மேலே எழுந்து அருளி த்வரித்த
அந்த த்வரைக்குத் தோற்றோம் என்கிறார்

————–

யம் பஸ்யன் விஸ்வ துர்யாம் தியம் அஸக்ருத் அதோ மந்தாரம் மந்ய மாந
ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி தம் தார்ஷ்ட்யம் அத்யஷிபஸ் த்வம்
கிஞ்ச உதஞ்சந் உதஸ்தா தமத கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே
தேவ ஸ்ரீ ரெங்க பந்தோ பிரணமதி ஹி ஜனே காந்தி சீகீ தசா தே –58-

ஸ்ரீ ரெங்க பந்தோ
கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் ஓங்கும் அளவில்
யம் தார்ஷ்ட்யம்-வேகம் நிறைந்த யாது ஒரு திருவடியை
யம் பஸ்யன்–பாரா நின்றவராய் -பார்த்து –
அஸக்ருத்-ஒழிவில்லாமல்
விஸ்வ துர்யாம்–உலகங்களை எல்லாம் நிர்வகிக்கின்ற
தியம் அதோ –தனது சங்கல்ப ரூப ஞானத்தையும்
மந்தாரம் –வேகம் அற்றதாக என்னால் நின்றவராய் இருந்தும்
மந்ய மாந அபி -ஸ்ரீ பெரிய திருவடியுடைய அப்படிப்பட்ட வேகமும் போராது என்று பண்ணி
தவம் ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி–தேவரீர் அதட்டுவதும் தட்டுவதும் காலால் உதைத்துமான கார்யங்களினால்
தம் அத்யஷிபஸ் –அந்த கருடனை வெருட்டி ஒட்டினீர்
மிஞ்ச -அன்றியும்
தம் தார்ஷ்யம் -அந்த கருத்மானையும்
உதஞ்சந் சந் உதஸ்தா–உயரத் தூக்கிக் கொண்டு கிளம்பினீர்
இந்தச் செய்தியை ஆராயும் இடத்து
பிரணமதி ஜனே தி தசா –ஆச்ரித ஜன விஷயத்தில் உமது நிலைமை
காந்தி சீகீ–வெருவி பயந்து ஓடுகின்றவனுடைய நிலைமையாய் இரா நின்றது –

பெரிய திருவடி சங்கல்பத்தை விட வேகமாக சென்றாலும் பொறாமல் தூக்கி சென்றாயே –
ரக்ஷண பாரிப்பு இருந்தபடி-
பெரிய திருவடி வேகத்தை நிரூபித்து தேவர் ஸமஸ்த ஜெகன் நிர்வாஹகமான சங்கல்ப ரூப ஞானத்தையும்
மந்த கதியாக அடுத்து அடுத்து நிச்சயித்து இருக்கச் செய்தேயும் கஜேந்திர ஆழ்வானுடைய கூப்பீடு உயர்வற –
அப்படிப்பட்ட பெரிய திருவடி வேகமும் போறாதே அவரையும்ம் ஹுங்காரத்தாலும் திருக்கைகளாலும் திருவடிகளாலும்
ஆஸ்பாலனம் முதலானவற்றால் ப்ரேரிப்பித்து பின்னையும் அவரையும் இடுக்கிக் கொண்டு தேவர் எழுந்து அருளிற்று –
இப்படி ஆஸ்ரித ஜன விஷயத்தில் தேவருக்கு உண்டான அவஸ்தை பயத்ருதன்–பயத்தால் ஓடுமவன் –
படியாய் அன்றோ இருந்தது என்கிறார் –

———————-

ஸ்ரீ ரெங்கேசய சரணம் மம அஸி வாத்யா
வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந
ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந
திக் மாம் இதி அநு கஜ கர்ஷம் ஆஜ கந்த —59-

ஸ்ரீ ரெங்கேசய
அநு கஜ கர்ஷம்–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட உடனே
திக் மாம் இதி–கெட்டேன் கெட்டேன் என்று இழவுக்கு நொந்து கொண்டு
ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந-மாலை ஆபரணம் திருப் பரிவட்டம் ஆகிய இவற்றை
அடைவு கெட அணிந்து கொண்டவராய் –
வாத்யா வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந–பெரும் காற்றிலே அலைந்த ஒரு தாமரைத் தடாகத்தில்
விலாசத்தோடு கூடியவராய்
ஆஜ கந்த-எழுந்து அருளினீர்
இப்படி ஆச்ரித பக்ஷபாதியான தேவரீர்
சரணம் மம அஸி –அடியேனுக்கு புகலிடம் ஆகின்றீர்

வன் காற்று அறைய ஒருங்கே மரிந்து கிடந்தது அலர்ந்த மீன்கள் கமலத் தடம் போல்
பொலிந்தன–எம்பிரான் தடம் கண்கள் -திரு விருத்தம்

பெரும் காத்தாலே தாமரைத் தடாகம் போலே திருமாலை திரு ஆபரணம் திருப் பரியட்டங்களை
அக்ரமமாகத் தரித்து பிற்பாடானேன் என்று கர்ஹித்துக் கொண்டு எழுந்து அருளின
தேவரீர் எனக்கும் ரஷகம் ஆகிறது என்கிறார்

————

மீந தநுஸ் த்வம் நாவி நிதாய ஸ்திர சர பரிகரம் அநுமநு பகவந்
வேதசநாபி ஸ்வ யுக்தி விநோதை அகலித லய பயலவம் அமும் அவஹ –60-

பகவந்
மீந தநுஸ் த்வம் –மீன் உருக் கொண்ட தேவரீர்
நாவி அநுமநு–ஒரு கப்பலில் மனு மஹரிஷியின் அருகே -சத்யவ்ரதர் என்பவர் இவரே –
நிதாய ஸ்திர சர பரிகரம் -ஸ்தாவர ஜங்கம ஆத்மக சகல பதார்த்தங்களையும் வைத்து
வேதசநாபி ஸ்வ யுக்தி விநோதை –வேத ரூபங்களான தனது வேடிக்கை வார்த்தைகளினால்
அகலித லய பயலவம் அமும் அவஹ –பிரளய ஆபத்தை பற்றி சிந்தா லேசமும் இல்லாத
கீழ்ச் சொன்ன பரிகரத்தை வஹித்தீர்

இது முதல் ஸ்லோகம் -73-வரை தசாவதார அனுபவம் –
இதில் மீனாவதாரம் -மநு மகரிஷி -சத்யவ்ரதன்-
மீனாவதார அனுபவம் இதிலும் அடுத்ததிலும் –
ஒரு ஓடத்தில் மனுவையும் அவன் சமீபத்தில் ஸ்தாவர ஜங்கம ரூபமான பரிச்சதத்தையும் ஸ்தாபித்து
வேதங்கள் ஒத்த லீலா வசனங்களால் பிரளய பய லேசமும் இன்றிக்கே இந்த ஸ்தாவர ஜங்கமத்தை வஹித்தது என்கிறார் –
ஸ்ருஷ்ட்டி பீஜ பூத சராசர வர்க்கத்தோடே மனுவையும் ஓடத்தில் வைத்து தம்ஷ்ட்ரையாலே தரித்துக் கொண்டு
வேத உபதேசம் பண்ணி அருளினான் என்று ஸ்ரீ மத் பாகவதாதிகளில் உண்டே

————–

ஸ்ரீ நய நாப உத்பாஸூர தீர்க்க ப்ரவிபுல ஸ்ருசிர சுசி சிசிர வபு
பக்ஷநிகீர்ண உத்கீர்ண மஹாப்தி ஸ்தல ஜல விஹரண ரதகதி அசர –61-

ஸ்ரீ நய நாப உத்பாஸூர –ஸ்ரீ பிராட்டியின் திருக் கண் போலே விளங்கா நிற்பதும்
கயல் கன்னி சேலேய் கன்னி கெண்டை ஒண் கண்ணி
தீர்க்க ப்ரவிபுல –நீண்டதும் மிக விலாசமுமான
ஸ்ருசிர சுசி சிசிர வபு-மிக அழகியதும் நிர்மலமும் குளிர்ந்ததுமான திரு மேனியை உடையவரான தேவரீர்
பக்ஷநிகீர்ண உத்கீர்ண மஹாப்தி –இறகுகளினால் உள் கொள்ளப் பட்டும் வெளி இடப்பட்டதுமான பெரும் கடலை உடையவராய்
ஊழிப் பொழுது ஒரு சேலாய் ஒரு செலு உள் கரந்த ஆழிப் பெரும் புனல் –திருவரங்கத்து மாலை –
ஸ்தல ஜல விஹரண ரதகதி-அசர– -தரையிலும் நீரிலும் விளையாடும் ஆசக்த மான கமனத்தை உடையவராய் உலாவினீர்

பெரிய பிராட்டியார் திருக் கண் போல் மலர்ந்த காந்தி யுடைத்தாய் நீண்டு விசாலமாய் ஸூந்தரமாய் ஸ்வச்சமாய்
குளிர்ந்த திரு மேனியாய் யுடைய தேவாச்சிறகாலே முழுங்கப்பட்ட சமுத்திரத்தில் ஸ்தலத்திலும் கக்கப்பட்ட
சமுத்ரத்திலும் நிலத்திலும் விளையாடி லா சக்தையான கதியை யுடையவராய் சஞ்சரித்தார் என்கிறார் –

—————

சகர்த்த ஸ்ரீ ரங்கிந் நிகில ஜகத் ஆதாரகமட
பவந் தர்மாந் கூர்ம புந அம்ருத மந்தாசல தர
ஜகந்த ஸ்ரேய த்வம் மரகத சிலா பீட லலித
ஜலாத் உத்யத் லஷ்மீ பத கிசலய ந்யாஸ ஸூ லபம்—62-

ஸ்ரீ ரங்கிந்
நிகில ஜகத் ஆதாரகமட பவந் –எல்லா உலகங்களுக்கும் ஆதாரமான ஸ்ரீ கூர்ம ரூபியாய்க் கொண்டு
தர்மாந் சகர்த்த–தர்மங்களை வியாக்யானம் பண்ணினீர் –ஆதி கூர்ம ரூபி -மேலே மந்தர மலை தாங்கிய கூர்ம ரூபி –
புந-அன்றியும்
கூர்ம அம்ருத மந்தாசல தர-அம்ருதம் கடைவதற்காக மந்த்ர பர்வதத்தைத் தாங்குகிற ஆமையாகி –
ஜகந்த ஸ்ரேய த்வம் மரகத சிலா பீட லலித–மரகதக் கவ்யமான ஆசனம் போன்று அழகியவராய் –
ஜலாத் உத்யத் –கடல் நீரில் நின்றும் உதயமாகா நின்ற
லஷ்மீ பத கிசலய ந்யாஸ ஸூ லபம்–பிராட்டியினுடைய தளிர் போன்ற அழகிய திருவடிகளை
வைப்பதற்கு உறுப்பான நன்மையை அடைந்தீர் –

சகல ஜகத்துக்கும் ஆதார ரூபியான கூர்மமாய் தர்மங்களை அருளிச் செய்து பின்பு அம்ருத மதனத்தில்
மந்த்ர பருவத்தை தரித்து மரகதக் கல் மயமானதோர் சந்தானத்துடன் -சமுத்திரத்தில் அவதரித்த
பெரிய பிராட்டியாருடைய தளிர் போன்ற திருக்கைகளால் ஸ்பர்சித்த அதிசயத்தையும் அடைந்தீர்

————–

ஹ்ருதி ஸூரரிபோ தம்ஷ்ட்ரா உத்காதே ஷிபந் பிரளய அர்ணவம்
ஷிதி குச தடீம் அர்ச்சந் தைத்ய அஸ்ர குங்கும சர்ச்சயா
ஸ்புட துத சடா பிராம்யத் ப்ரஹ்ம ஸ்தவ உந் முக ப்ரும்ஹிதஸ்
சரணம் அஸி மே ரங்கிந் த்வம் மூல கோல தநுஸ் பவந் –63-

ரங்கிந்
த்வம் மூல கோல தநுஸ் பவந் –ஆதி வராஹ ரூபியான தேவரீர்
தம்ஷ்ட்ரா உத்காதே -கோரைப் பல்லினால் பிளக்கப்பட்ட
ஹ்ருதி ஸூரரிபோ –ஹிரண்யாக்ஷ அசுரன் மார்பிலே
ஷிபந் பிரளய அர்ணவம்–பிரளயக் கடலைக் கொண்டு தள்ளினவராய்
தைத்ய அஸ்ர குங்கும சர்ச்சயா–அந்த அசுரனுடைய ரத்தமாகிற குங்குமச் சாறு பூசுவதனால்
ஷிதி குச தடீம் அர்ச்சந்–பூமிப் பிராட்டியின் திரு முலைத் தடத்தினை அலங்கரித்தவராய்
ஸ்புட துத சடா –நன்றாக உதறப் பட்ட பிடரி மயிர்களினால்
பிராம்யத் ப்ரஹ்ம ஸ்தவ –சத்ய லோகம் வரை வளர்ந்ததால் -அஞ்சி மருண்ட நான்முகன் செய்த ஸ்தோத்ரங்களுக்கு
உந் முக ப்ரும்ஹிதஸ் சரணம் அஸி மே–எதிர் முகமான கர்ஜனை உடையரான தேவரீர் அடியேனுக்கு புகலிடம் ஆகிறீர்

தேவரீர் ஆதி வராஹ ரூபியாய் ஆஸ்ரிதர் பக்கல் ஆக்கிரஹ அதிசயத்தால் கோரைப்பல்லால் பிளந்து
பெரும் பள்ளமாகப் பண்ணப் பட்ட ஹிரண்யாக்ஷன் ஹிருதயத்தில் பிரளய ஆரணவ ஜலத்தைப் பாய்ச்சி
அவனுக்கு மஹா பயத்தை உண்டாக்கி அவனுடைய ரக்தமாகிற குங்குமக் குழம்பாலே வீர பத்னி யாகையாலே
பூமிப் பிராட்டியினுடைய திரு முலைத் தடத்தை அலங்கரியா நின்று கொண்டு ப்ரம்ம லோக பர்யந்தமாக வளர்ந்த
தேவருடைய பிடரி மயிருடைய வலைத்தலாலே பீதனான ப்ரம்மாவினுடைய ஸ்தோத்ரத்தில் அபிமுகமாய்
கர்ஜனத்தைப் பண்ணி இப்படி விரோதி நிராசனத்தாலும் ஆஸ்ரித ரஷணத்தாலும் விளங்கும்
ஸ்ரீ வராஹ நாயனார் வேறு புகல் அற்ற எனக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் ஒரே புகல் என்கிறார் –

——————–

ந்ருஹரி தசயோ பஸ்யன் ஓவ்பத்திகம் கடநா அத்புதம்
நரம் உத ஹரிம் த்ருஷ்ட்வா ஏகைகம் சமுத்விஜதே ஜந
இதி கில சிதாஷீர ந்யாயேந சங்கமித அங்கம்
ஸ்புட சட மஹா தம்ஷ்ட்ரம் ரங்கேந்திர சிம்மம் உபாஸ்மஹே —64-

ந்ருஹரி தசயோ –மனுஷ்யத்வ ஸிம்ஹத்வங்களினுடைய
பஸ்யன் ஜந ஓவ்பத்திகம் கடநா அத்புதம்–இயற்கையான சேர்த்தி அழகை -சேவிக்கின்ற ஜனமானது
நரம் உத ஹரிம்–மனுஷ்ய ஜாதியையோ அல்லது சிம்ம ஜாதியையோ
த்ருஷ்ட்வா ஏகைகம் சமுத்விஜதே–பிரத்யேகமாக பார்த்து வெறுப்படையும்
இதி கில –என்கிற கருத்தினால்
சிதாஷீர ந்யாயேந –சர்க்கரையும் பாலையையும் சேர்க்கின்ற கணக்கிலே
சங்கமித அங்கம்–இரண்டு திரு உருவங்களை ஒன்றாக புணர்த்துக் கொண்டவராய்
ஸ்புட சட மஹா தம்ஷ்ட்ரம் –அழகிய பிடரி மயிர்களையும் பெரிய கோரப் பற்களையும் உடையவராய்
ரங்கேந்திர சிம்மம் உபாஸ்மஹே-ஸ்ரீ சிம்ம மூர்த்தியான ஸ்ரீ ரெங்கநாதனை சிந்திக்கிறோம் –
அழகியான் தானே அரி யுருவன் தானே

இனி அழகிய சிங்கர் விஷயமாக மூன்று ஸ்லோகங்கள் –
முதலில் நரத்வ ஸிமஹத்வ அவஸ்தைகளுடைய உத்பத்தி ஸித்தமான விசித்திரமான ஸுவ்கட்யத்தை அனுபவித்து
பிரத்யேக நரனையும் சிம்மத்தையும் பார்த்து பயப்படுக என்று போலே பாழும் கண்ட சக்கரையும் கலந்தால் போல்
சேர்க்கப்பட்ட அவயவங்களை உடையவராய் ஸ்பஷ்டங்களான பிடரி மயிரையும் பெரிதான கோரப்பல்லையும் உடையரான
பெரிய பெருமாளாகிற நரசிம்மத்தை அந்த அழகுக்குத் தோற்று எப்போதும் அனுபவிக்கிறோம் என்கிறார் –

—————–

த்விஷாண த்வேஷ உத்யத் நயநவாவஹ்னி பிரசமந
பிரமத் லஷ்மீ வக்த்ர ப்ரஹித மது கண்டூஷ ஸூக்ஷமை
நக ஷூண்ண அராதிஷதஜ படலை ஆப்லுதசடா
ச்சடாஸ் கந்த ருந்தே துரிதம் இஹ பும்ஸ் பஞ்ச வதந –65-

த்விஷாண –ஆஸ்ரித விரோதியான ஹிரண்யன் இடத்தில்
த்வேஷ உத்யத் -பகையினால் உண்டாகின்ற நயநவாவஹ்னி பிரசமந-திருக் கண்களில் நெருப்பை அணைக்கும் பொருட்டு
பிரமத் லஷ்மீ வக்த்ர ப்ரஹித–பர பரப்புக் கொள்கின்ற ஸ்ரீ மஹா லஷ்மியின் திரு வாயில் இருந்து
மது கண்டூஷ ஸூக்ஷமை–உமிழப் பட்ட தாம்பூல கண்டூஷம் போன்ற
நக ஷூண்ண அராதிஷதஜ படலை–திரு நகங்களினால் பிளக்கப் பட்ட அப்பகைவனது ரத்த தாரைகளினால்
ஆப்லுதசடா ச்சடாஸ் கந்த–நனைக்கப்பட்ட பிடரி மயிர்களோடே கூடிய திருத் தோள்களை உடைய
ருந்தே துரிதம் இஹ பும்ஸ் பஞ்ச வதந–ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி யானவர் இத்திருவரங்கத்தில் நமது
பாவங்களைத் தொலைத்து அருளுகிறார் –
பூம் கோதையாள் வெருவ அன்றோ -ஸ்ரீ பிராட்டியும் சம்பிரமிக்கும் படி அன்றோ கொண்ட சீற்றம் –

ஆஸ்ரிதனான பிரகலாதன் விஷயத்தில் த்வேஷியான ஹிரண்யன் இடத்தில் த்வேஷத்தால் உண்டான
மூன்று திருக் கண் மலரினுடைய வநஹியை சமிப்பிக்கையில் பறபறக்கை யுடைத்தான பெரிய பிராட்டியாருடைய
திருப் பவளத்தால் கொப்பளித்தது என்னும் படி யாதல் -மத்யம் என்னும்படி யாதலால் கொப்பளித்தத்தினுடைய
சிவந்த நிறத்தை யுடைத்தான திரு உகிராலே பிளக்கப்பட்ட ஹிரண்யனுடைய ரக்த சமூகங்களாலே ஈரித்த பிடரிமயிர்
கற்றையை தோளில் உடைத்தான அழகிய சிங்கர் இஸ் சம்சாரத்தில் என் விரோதியான பாபத்தைத் தகையக் கடவர் என்கிறார் –

—————————

நகாக்ர க்ரஸ்தேபி த்விஷதி நிஜபக்தி த்ருஹி ருக்ஷஸ்
ப்ரகர்ஷாத் விஷ்ணுத்வ த்வி குண பரிணாஹ உத்கட தநு
விருத்தே வையக்ரீ சிகடித சமா நாதி கரணே
ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் வரத பிபராமாசித–66-

வரத
விருத்தே அபி -ஓன்று சேர மாட்டாதவைகளாய் இருந்த போதிலும்
வையக்ரீ சிகடித சமா நாதி கரணே–ஆஸ்ரித விரோதியைத் தொலைக்க வேணும் என்கிற ஊற்றத்தினால்
மிகவும் பொருந்தின சாமா நாதி காரண்யத்தை யுடைய
ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் தவம் -நரத்வ ஸிம்ஹத்வங்களை ஏற்றுக் கொள்ளா நின்ற தேவரீர்
நகாக்ர க்ரஸ்தேபி த்விஷதி நிஜபக்தி த்ருஹி–ஆஸ்ரித விரோதியான இரணியன் திரு உகிர் நுனியால் பிளக்கப் பட்ட போதிலும்
ருக்ஷஸ் ப்ரகர்ஷாத் –சீற்றத்தினுடைய மிகுதியினால்
விஷ்ணுத்வ த்வி குண பரிணாஹ உத்கட தநு–ஸ்ரீ விஷ்ணுத்வத்தைக் காட்டிலும் இரட்டித்த பெருமையை யுடையதும்
பயங்கரமான திரு மேனியை யுடையவராய்
ஜகத் பிபராமாசித–உலகத்தை நிர்வகித்தார் –
ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டுப் மந்திரத்தில் மஹா விஷ்ணு பதம் உண்டே -வியாப்தியில் காட்டிலும் இரட்டித்த பரப்பு அன்றோ –
எங்கும் உளன் -என்றவன் வார்த்தை பொய்யாக்க உண்ணாமல் வியாப்தி எங்கும் என்றவாறு –

விருத்தங்களான நரத்வ சிம்ஹங்களை ஓர் இடத்தில் பொருந்த சேர்த்து திரு உகிர் நுனியால் பிளக்கப்பட்டு
ரோஷ அதிசயத்தாலே வியாபகத்வ ரூபமான விஷ்ணுத்வத்தில் இரட்டித்த வைஸால்யம் உண்டாகும் படி வளர்ந்த
ருதி மேனி உடையராய்க் கொண்டு ஜகத்தை நிரீஸ்வரம் ஆகாமலும் சாரஞ்ஞர் ஈடுபடும்படியாகவும் நிர்வகித்தது என்கிறார் –

————-

தைத்ய ஓவ்தார்ய இந்த்ர யாஸ்ஞா விஹதிம் அப நயந் வாமன அர்த்தீ த்வம் ஆஸீ
விக்ராந்தே பாத பத்மே த்ரிஜகத் அணுசமம் பாம் ஸூலீ க்ருத்ய லில்யே
நாபீ பத்மச்ச மாந ஷமம் இவ புவந க்ராமம் அந்யம் சிச்ருஷு
தஸ்தவ் ரெங்கேந்திர வ்ருத்தே தவ ஜயமுகர டிண்டிம தத்ர வேத –67-

ரெங்கேந்திர
வாமன த்வம்–ஸ்ரீ வாமன அவதாரம் எடுத்த தேவரீர்
தைத்ய ஓவ்தார்ய இந்த்ர யாஸ்ஞா விஹதிம் அப நயந் –அஸூரனான மஹா பலியின் ஓவ்கார்யம் என்ன –
இந்திரனின் யாசநத்வம் என்ன
இவ்விரண்டுக்கும் நிஷ் பலத்தைப் போக்குவதற்காக -இரண்டையும் ச பலமாக்குவதற்காக
அர்த்தீ ஆஸீ–மாவலி பக்கல் யாசகராக ஆனீர்
அதன் பிறகு
த்ரிஜகத் அணுசமம்-மூ உலகும் பரம அணு பிராயமாய்க் கொண்டு
விக்ராந்தே பாத பத்மே-தன்னை அளக்கப் புகுந்த திருவடித் தாமரைகளை
பாம் ஸூலீ க்ருத்ய லில்யே-தும்பு தூசிகள் ஓட்டப் பெற்றவைகளாக்கி லயம் அடைந்ததாயிற்று
மூ உலகங்களும் தும்பு தூசிகள் போலே ஆயின என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார் –
நாபீ பத்மச்ச –திருக் கமலமோ என்னில்
மாந ஷமம் அந்யம் புவந க்ராமம் -அளப்பதற்கு உரிய மற்ற ஒரு லோக சமூகத்தை
சிச்ருஷு இவ -சிருஷ்ட்டிக்க விரும்பியது போல்
தஸ்தவ் -இருந்தது
வ்ருத்தே தவ ஜயமுகர டிண்டிம தத்ர வேத –தேவருடைய அந்தாதிருவிக்ரம ஆபத்தானத்திலே வேதமானது
விஜய ஒலி மிக்க பெரும் பறையானது
ஸ்ரீ வாமன அவதாரத்தை நான் ஸ்துதிக்க வேண்டா -வேதமே ஸ்துதித்தது –

கோடியைக் காணி ஆக்கினால் போலே தேவரை அழிய மாறி அலம் புரிந்த நெடும் தடக்கை கொண்டு
இரப்பாளனாய் நீர் வார்த்த ஹர்ஷத்தால் ப்ரஹ்ம லோகம் அளவும் வளர்ந்த திருவடியில் ஏக தேசத்தில்
மூன்று லோகமும் பரம அணு சமமாய் அந்த திருவடியை தூளீ தூ சரிதமாக்கி லயித்து விட
திரு நாபி கமலமானது அளக்கைக்கு யோக்கியமான வேறு லோகங்களை ஸ்ருஷ்டிக்க நினைத்தால் போலே இருக்கிறது –
இப்படி திரிவிக்ரம அபதானத்தில் வேதம் ஜய ஜய என்று கோஷிக்க வாத்ய விசேஷம் என்கிறார்

——————-

பவாந் ராமோ பூத்வா பரசு பரிகர்மா ப்ருகு குலாத்
அலாவீத் பூ பாலாந் பித்ரு கணம் அதார்ப் ஸீத் தத் அஸ்ருஜா
புவோ பார ஆக்ராந்தம் லகு தலம் உபா ஸீக்ல்பத்
த்விஷாம் உக்ரம் பஸ்ய அபி அநக மம மாஜீ கணத் அகம் —68-

ஹே அநக–குற்றம் அற்ற பெருமானே
தந்தை சொல் கொண்டு தாய் வதம் செய்து இருந்தாலும் பாபா சம்பந்தம் இல்லாமை -என்றபடி –
பவாந் ராமோ பூத்வா பரசு பரிகர்மா ப்ருகு குலாத்–தேவரீர் பிருகு குலத்தில் நின்று மழுப் படை அணிந்த ராமனாகி
ஸ்ரீ பரசுராம அவதாரம் செய்து அருளி
அலாவீத் பூ பாலாந்–துஷ்ட ஷத்ரியர்களை அழித்து ஒழித்தீர்
பித்ரு கணம் அதார்ப் ஸீத் தத் அஸ்ருஜா–அவ்வரசர்களின் ரத்தத்தினால் ஸ்வ கீய பித்ரு குலத்தைத் தர்ப்பித்தீர்
புவோ பார ஆக்ராந்தம் லகு தலம் உபா ஸீக்ல்பத்-பாரம் மிகுந்த பூ தலத்தை சுமை நீக்கி லேசாகச் செய்து அருளினீர்
த்விஷாம் உக்ரம் பஸ்ய அபி -இவ்வண்ணமாக பகைவர்களுக்கு பயங்கரமாக இருந்தாலும்
மம மாஜீ கணத் அகம்–அடியேனுடைய பாபத்தைப் பொருள் படுத்த வேண்டா —

மாத்ரு வதம் பண்ணியும் அநேக ராஜாக்களைக் கொன்ற தோஷமும் ஆஸ்ரிதர் குற்றம் பார்க்கிற தோஷமும் தட்டாத தேவர்
பிருகு வம்சத்தில் வடிவாய் மழுவே படையாக என்றபடி மழுவான ஆயுதத்தால் பரிஷ்க்ருதாரான பரசுராமராய் அவதரித்து
ஆசூர ப்ரக்ருதிகளான ராஜாக்களை மூ வேழு படியாக அரசுகளை களை கட்ட என்கிறபடி நிரசித்து குருதி கொண்டு
திருக் குலத்தோர்க்கு தர்ப்பணம் செய்து பித்ரு வம்சத்தை திருப்தமாகி பூ பாரம் நிரசனம் பண்ணி இப்படி
சத்ருக்களுக்கு பயங்கரம் ஆனாலும் ஆஸ்ரிதனான என்னுடைய குற்றங்களை என்னாது இருக்க வேண்டியது என்கிறார் –

—————

மனுஜசமயம் க்ருத்வா நாத அவதேரித பத்மயா
க்வசந விபேந சா சேத் அந்தர்த்தி நர்ம விநிர்மமே
கிம் அத ஜலதிம் பத்த்வா ரக்ஷஸ் விதி ஈச வர உத்ததம்
பலிமுக குல உச்சிஷ்டம் குர்வன் ரிபும் நிரபத்ரய –69-

ஹே நாத
மனுஜசமயம் க்ருத்வா அவதேரித பத்மயா-மனுஷ்ய அவதார அனுகூலமான சங்கல்பத்தைச் செய்து
கொண்டு பிராட்டியுடன் அவதரித்தீர்
அப்போது
சா -அந்த பிராட்டி
க்வசந விபேந சா சேத் அந்தர்த்தி நர்ம விநிர்மமே–அசோக வனம் என்னும் பொழிலிலே ஒளிந்து இருப்பதான
ஒரு விளையாட்டை செய்தாள் ஆகில்
பிராட்டி வலிய அன்றோ சிறை புகுந்தாள்
கிம் அத ஜலதிம் பத்த்வா ரக்ஷஸ் விதி ஈச வர உத்ததம்-கடலிலே அணை கட்டி பிரம ருத்ராதிகள் இடம் பெற்ற
வரத்தினால் செருக்கிக் கிடந்த
பலிமுக குல உச்சிஷ்டம் குர்வன் ரிபும் நிரபத்ரய–ராக்ஷசனான சத்ருவை காக்கைகளும் கழுகுகளும் உண்ணும் படி
சாய்த்து அருலிட்டரே -‘இவ்வளவு சப்ரமம் எதற்க்காக –

சங்கல்பம் கொண்டு ராமன் சீதா அவதாரம் -அசோகவனம் சோலையில் ஒளிந்து பிராட்டி விளையாட –
அவளை அடையவே அணை கட்டினாய் –
ராவணாதிகளை காக்கைக் கூட்டம் கண்டு உமிழ்ந்த எச்சில் போன்றவனாக்கி ஒழித்தாய் -இது என்ன விளையாட்டு
மனுஷ்ய சஜாதீயனாக அவதரிக்க சங்கல்பம் செய்தேயும் அதி மானுஷ சேஷ்டிதங்களைச் செய்து
அருளினது எதுக்காக என்று அருளிச் செய்ய வேணும் என்கிறார்

———————-

யத் த்யூதே விஜயாபதாந கணந காளிங்க தந்த அங்குரை
யத் விஸ்லேஷ லவஸ் அபி காலியபுவே கோலாஹலாயா அபவத்
தூத்யேந அபி ச யஸ்ய கோபவநிதா க்ருஷ்ண ஆகசாம் வ்யஸ்மரந்
தம் த்வாம் ஷேம க்ருஷீ வலம் ஹலதரம் ரங்கேச பக்தாஸ்மஹே –70-

ஹே ரங்கேச
யத் த்யூதே –ஸ்ரீ பலராமராக-தேவரேறுடைய சூதாட்டத்தில்
விஜயாபதாந கணந -இத்தனை ஆட்டங்களில் வென்றோம் என்ற கணக்கை
காளிங்க தந்த அங்குரை-அந்த களிங்க தேச அரசனின் பற்களைக் கொண்டே எண்ணும்படி
வெற்றிக்கு அறிகுறியாக ஒவ் ஒன்றாக உதிர்க்க -இவற்றைக் கொண்டே விஜய ஆட்ட கணக்கு என்றவாறு
யத் விஸ்லேஷ லவஸ் அபி காலியபுவே கோலாஹலாயா அபவத்–தேவரீர் உடன் கூட செல்லாமல் காளிய நாகத்தின்
வாயில் விழுந்து கோலாகலம் உண்டானதே
தூத்யேந அபி ச யஸ்ய கோபவநிதா க்ருஷ்ண ஆகசாம் வ்யஸ்மரந்-தேவருடைய தூத்தினால் கோபிமார்கள்
ஸ்ரீ கிருஷ்ணனுடைய குற்றங்களை மறந்தார்களே
தம் த்வாம் ஷேம க்ருஷீ வலம் ஹலதரம் பக்தாஸ்மஹே–ஆஸ்ரித ஷேமத்துக்கு கிருஷி பண்ணுபவரும் கலப்பை
திவ்ய ஆயுதம் தரித்து இருப்பவருமான தேவரீரை அடைவோம் –
உழுவதோர் நாஞ்சில் கொண்டு பெருக முயலும் பக்தி உழவன் கிருஷி பலம் –ஆச்சார்ய ஹ்ருதயம்

யாது ஓத்தர் கலிங்க தேசாதிபதியோடே அநேகம் ஆவர்த்தி த்யூதம் ஆடி ஜெயித்த பின் ஓர் ஆவர்த்தியில் அவன் சலத்தாலே
தான் ஜெயித்ததாக சொல்ல கபோல தாடனத்தாலே அவன் தந்தங்களை உதிர்த்து உதிர்த்து தந்த சங்கையாலே
தாம் அவனை ஜெயித்ததாக கணக்கிட்டார்
யாவர் ஒருவர் விஸ்லேஷ லேசத்தில் கிருஷ்ணன் காளியன் பொய்கையில் குதிக்க அவன் இளைக்கும் படி
அவன் தலையில் நடனமாடி -களகநா சப்தம் உண்டாயத்து –
யாருடைய சாம கான வசங்களால் கோப ஸ்த்ரீகள் கிருஷ்ணன் அபராதங்களை மறந்தார்கள்
அப்படி எல்லாருடைய ஷேமத்துக்கும் கிருஷி பண்ணா நின்று கொண்டு ஒத்தக் குழையும் நாஞ்சிலும் இத்யாதிப் படியே
கலப்பையை தரியா நின்ற தேவரை ப்ரீதி ரூபா பன்ன ஞான விஷயமாக்கப் புகுகிறேன் என்கிறார் –

—————-

ஆ கண்ட வாரி பர மந்தர மேக தேசயம்
பீதாம்பரம் கமல லோசந பஞ்ச ஹேதி
ப்ரஹ்ம ஸ்தநந்தயம் அயாசத தேவகீ த்வாம்
ஸ்ரீ ரெங்க காந்த ஸூத காம்யதி கா அபர ஏவம் –71-

ஸ்ரீ ரெங்க காந்த
ஸ்ரீ தேவகி பிராட்டியானவள்
ஆ கண்ட வாரி பர மந்தர மேக தேசயம்–கழுத்து அளவும் ஜல பாரத்தை யுடையதும்
மெதுவாகச் செல்லும் காள மேகம் போன்றதாயும்
பீதாம்பரம் –திரு பீதாம்பரம் தரித்தவரும்
கமல லோசந பஞ்ச ஹேதி–தாமரைக் கண்களை யுடையதாயும் -பஞ்ச திவ்ய ஆயுதங்களை யுடையதாயும் இருக்கிற
ப்ரஹ்ம த்வாம்–பாரா ப்ரஹ்மமான தேவரீரை
ஸ்தநந்தயம் அயாசத-குழந்தையாக வேண்டினாள்
ஸூத காம்யதி கா அபர ஏவம் –வேறே ஏவல் இப்படிப்பட்ட புத்ர ஆசை- பாரிப்பை -கொள்ளுவாள் –
அதி விலக்ஷணையானவள் என்றபடி –

ஸ்ரீ கிருஷ்ண விஷயமாக இரண்டு ஸ்லோகங்கள் -இதில் கழுத்தே கட்டளையாக நீருண்ட மேக ஸ்வ பாவமாய்
பரபாகமான பீதாம்பரத்தையும் குளிர நோக்குகைக்கு தாமரை போன்ற கடாக்ஷத்தையும் அனுபவ விரோதி நிரசன
பரிகரமான பஞ்ச திவ்ய ஆழ்வார்களையும் உடைத்தாய் -ஸ்வரூப குணங்களால் நிரதிசய ப்ருஹத்தான தேவரை
ஸ்ரீ தேவகி தாயார் தனக்கு தேவகி சிறுவன் என்னும் படி புத்திரனாக இருந்தான் –
சர்வ ரக்ஷகனான பிள்ளையை பிரார்த்திப்பார் வேறு ஒருவரும் இல்லை என்கிறார் –

—————–

சைல அக்நிச்ச ஜலாம் பபூவ முநய மூடாம் பபூவு ஜடா
ப்ராஞ்ஞாமாஸூ அகா ச கோபம் அம்ருதாமாஸூ மஹா ஆஸீ விஷா
கோ வ்யாக்ரா ஸஹஜாம் பபூவு அபரே து அந்யாம் பபூவு ப்ரபோ
த்வம் தேஷு அந்ய தமாம் பபூவித பவத் வேணு க்வண உந்மாதநே –72-

ப்ரபோ
பவத் வேணு க்வண உந்மாதநே –-உம்முடைய வேணு கானத்தால் நேர்ந்த உன்மாதத்தால்
சைல அக்நிச்ச ஜலாம் -மலையும் நெருப்பும் நீர் பண்டமாயிற்று
பபூவ முநய மூடாம் பபூவு–முனிவர்கள் நெஞ்சில் ஒன்றும் தோற்ற மாட்டாமல் மூடர்கள் ஆயினர்
ஜடா ப்ராஞ்ஞாமாஸூ அகா ச கோபம் –ஜடங்களாய் இருந்த மரங்களும் இடையர்களும் சேர்ந்து மஹா ஞானிகள் ஆயின
வேணு கான ஸ்வ ரஸ்ய அனுபவ ரசிகர்கள் ஆனார்கள் –
அம்ருதாமாஸூ மஹா ஆஸீ விஷா–பெரிய பாம்புகள் அம்ருத மயங்கள் ஆனது
கோ வ்யாக்ரா ஸஹஜாம் பபூவு -சஹஜ சத்ருக்களான மாடுகளும் புலிகளும் உடன் பிற்ந்தவை ஆயின
அபரே து அந்யாம் பபூவு -மற்றும் பலவும் இப்படி வேறு பட்டவை ஆயின
பல சொல்லி என்
த்வம் தேஷு அந்ய தமாம் பபூவித–தேவரீரும் வேறுபட்ட அவற்றில் ஒருவராய் இருந்தீர் –
தன்னையும் விஹாரப் படுத்த வற்றாய் அன்றோ தேவரீருடைய வேணு கானம் –

தேவர் வேணு கானம் பண்ணி சித்த விப்ரமத்தை உண்டாக்கும் காலத்தில் கடினமான மலை த்ரவித்தது –
உஷ்ணமான அக்னி குளிர்ந்து -பகவத் விஷயத்தில் காகர சித்தரனா ரிஷிகள் அந்த வேகாக்ரத்தைத் தவிர்ந்தார்கள் –
ஞான சூன்யங்களான மரங்களும் தத் ப்ராயரான விடைகளும்-இடையரும் – பிராஜ்ஞர் என்னும்படி ஆயினர் –
த்ருஷ்ட்டி விஷங்களான சர்ப்பங்களும் அம்ருத மய சந்திரன் போலே தர்ச நீயமாக ஆயின –
பரஸ்பர கோ வ்யாக்ராதிகள் விரோதம் அற்று உடன் பிறந்தவை போலே ஆயின –
கிம் பஹுனா சொல்லிச் சொல்லாததுகளும் வேணு கான ரச கிரஹணத்துக்கு விரோதியான ஆகாரத்தை பரித்யஜித்துக்கள்
கிமுத -தேவரும் அவர்கள் ஒருவராய்த்து என்கிறார் –

—————-

கல்கி தநு தரணீம் லகயிஷ்யந் கலி கலுஷான் விலுநாசி புரம் த்வம்
ரங்க நிகேத லுநீஹி லுநீஹி இதி அகிலம் அருந்துதம் அத்ய லுநீஹி—73-

ரங்க நிகேத
கல்கி தநு தவம் -கல்கி சரிரீயான தேவரீர்
தரணீம் லகயிஷ்யந் -பூமியைப் பாரம் நீக்கி லேசாகச் செய்யப் போகிறவராய்
கலி கலுஷான் விலுநாசி–கலிகாலப் பாவிகளை அடி அறுக்கப் போகிறீர்
அங்கனம் தாமதம் செய்யாமல்
அகிலம் அருந்துதம் அத்ய -இன்றிக்கே கொடிய வர்க்கம் முழுவதையும்
லுநீஹி லுநீஹி இதி லுநீஹி–அறுத்து விட்டேன் அறுத்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டே
அறுத்து அருள வேணும்

ரெங்கா கலியின் முடியில் பூ பாரம் குறைக்க அவதரிக்கப் போகிற நீ இன்றே அவதரித்து
கொடியவர்களை அழித்து-அழித்தேன் அழித்தேன் என்று அருளிச் செய்ய வேணும்-
துஷ்ட ஜன நி வஹங்களை வஹிக்க ஷமயன்றிக்கே இருக்கிற பூமியை பாரம் இன்றிக்கே லகுவாகப் பண்ணத் திரு உள்ளமாய்
கல்கி அவதாரம் செய்து கலி தோஷ கசித்தியை பக்க வேரோடு களையப் போகிறது –
இப்போதும் அப்படி பராங்குச சம்பிரதாய விரோதிகளை -மர்ம ஸ்பர்சியான விரோதிகளை –
நிஸ் சேஷமாகச் சோதித்து அருள வேணும் என்கிறார் –

————–

ஆஸ்தாம் தே குணராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் ஜன்மனாம்
சங்க்யா பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு ரெங்கேஸ்வர
அர்ச்சயஸ் சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி
ப்ரீணீஷே ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே –74-

ஹே ரெங்கேஸ்வர
தே குணராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் –தேவரீருடைய குண சமூகங்களுக்குப் போலே
ஆத்ம குணங்களுக்கு பரிவாக ரூபமான
ஜன்மனாம் சங்க்யா ஆஸ்தாம்–அவதாரங்களும் எண்ணிக்கை யானது கிடக்கட்டும்
ஆஸ்தாம் – அநாதார யுக்தி–எண்ணிறந்த வித்துவான்கள் சேஷ்டிதங்கள் இருந்தாலும்
அர்ச்சாவதாரங்களைப் பார்த்தால் பரத்வ ஸ்தானமே
பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு -இப் பூ மண்டலத்தில் உள்ள ஆலயங்களிலும் க்ருஹங்களிலும் ஆஸ்ரயங்களிலும்
அர்ச்சயஸ் –ஆராதிக்க அரியவராயும்
சர்வ ஸஹிஷ்ணு –எதையும் சகிப்பவராயும்
அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி–அர்ச்சகர்களுக்கு பரவசப்பட்ட சகல நிலைமைகளையும் உடையராய்
ப்ரீணீஷே –உக்காந்து அருளா நின்றீர்-
ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே–அப்படிப்பட்ட தேவருடைய சீல குணத்தினால்
ச ஹ்ருதயர்–ஆழ்வாராதிகள் – மோஹிக்கிறார்கள்

குணங்களும் அவதாரங்களும் எண்ணிறந்தவையாய் இருந்தும் கோயில்கள் வீடுகள் ஆசிரமங்களில்
அர்ச்சக பராதீனமாக மகிழ்ந்து இருக்கும் ஸுவ்சீல்யம் என்னே-

பின்னானார் வணங்கும் ஜோதி -நம் போல்வாருக்கு அன்றோ ரெங்கா நீ உன்
கடாக்ஷ வீக்ஷணங்களை வழங்கி யோக நித்திரை பன்னி அருள்கிறாய்-

அர்ச்சாவதார பரமான ஸ்லோகம் -தேவருடைய ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள் போலே
அவற்றுக்கு பிரகாசகங்களான வ்யூஹ விபவ அவதாரங்களும் அசங்க்யாதங்கள் ஆகையால் பேச முடியாது–
குணங்களைப் போலவே ப்ரவாஹ ரூபமான அவதாரங்களும் எண்ணிறந்தவை அன்றோ -அது இருக்கட்டும் –
தேவர் பூமியில் உண்டான கோயில்களிலும் மாளிகைகளும் ஆஸ்ரமங்களிலும் அஞ்ஞாபிஞ்ஞ வர்ணாஸ்ரம விபாகமற
எல்லாராலும் பாஞ்சராத்ர விதிப்படி ஆராத நீயனாய் -மத்யே சம்பாவிதங்களான அபராதங்களையும் பொறுத்து
ஆசன போஜன சயனாதிகள் அவர்கள் இட்ட வழக்காய் அவர்கள் இட்டது கொண்டு திருப்தராகிறது –
அப்படிக்கொத்த அந்யாத்ருசமான தேவர் சில குணத்தால் சஹ்ருதயர் எல்லாம் ஈடுபடும்படி யாய்த்து என்கிறார் –
மத்துறு கடை வெண்ணெய் எத்திறம் என்று ஈடுபடுவபர்கள் இதில் ஈடுபடச் சொல்ல வேணுமோ -என்றபடி –

—————–

ஸ்ரீ மத் வ்யோம நஸீம வாக்மநசயோ சர்வே அவதாரா க்வசித்
காலே விஸ்வ ஜெனீனாம் ஏதத் இதி தீ ஸ்ரீ ரெங்க தாமந்யத
ஆர்த்த ஸ்வா கதிகை க்ருபா கலுஷிதை ஆலோகிதை ஆர்த்ரயந்
விஸ்வ தாரண விமர்சந ஸ்கலிதயா நித்ராஸி ஜாகர்யயா –75-

ஸ்ரீ மத் வ்யோம நஸீம வாக்மநசயோ–ஸ்ரீ பரமபதம் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது அன்றோ
சர்வே அவதாரா க்வசித் காலே–சர்வ விபவ அவதாரங்களோ ஏதோ ஒரு காலத்தில்
விஸ்வ ஜெனீனாம் ஏதத் இதி தீ ஸ்ரீ ரெங்க தாமந்யத–இந்த அர்ச்சாவதார நிலா தான் சகல ஜன ஹிதமானது-என்று
இப்படி திரு உள்ளத்தை உடையரீராய் ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலிலே
ஆர்த்த ஸ்வா கதிகை –ஆஸ்ரிதர்களை நோக்கி குசல ப்ரச்னம் பண்ணுகையும்
க்ருபா கலுஷிதை -கிருபையினால் கலங்கி சேதனர்களின் குண தோஷங்களை விசாரம் பண்ண மாட்டாதவையுமான
ஆலோகிதை–கடாக்ஷங்களால்
ஆர்த்ரயந் த்வம்–தாப த்ரயத்தால் உள்ளோரை குளிரச் செய்து அருளா நின்ற தேவரீர்
விஸ்வ தாரண விமர்சந ஸ்கலிதயா நித்ராஸி ஜாகர்யயா–ஜகத் ரக்ஷண சிந்தனையோடு கூடின ஜாகர்ண ரூபமாக
திருக் கண் வளர்ந்து அருளா நின்றீர்
அபிமத ஜன தரிசன ஆனந்த வேகத்தால் அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற அவ்யக்த
மதுர மந்த காச விலாசத்தோடு கூடின கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆர்த்தர்களை ஆதரவுடன் குளிர வைக்கும் –

இப்படி அர்ச்சாவதார சாமான்யமான ஸுவ்சீல்யத்தை பெரிய பெருமாள் இடத்தில் உப சம்ஹரியா நின்று கொண்டு தேவர்
பரமாசமானது வாக் மனஸ் அபரிச்சேத்யமாய் தேச விப்ரக்ருஷ்டமாகையாலும்
ராம கிருஷ்ணாவதாரங்கள் காதாசித்கமாகையாலும்-இது சர்வருக்கு ஹிதம் என்று திரு உள்ளம் பற்றி கோயிலிலே
சம்சார தாப ஆர்த்தராய் வந்தவரை நல்ல வரவா என்று கேட்க்கிறது போலே இருக்கிறதுகளாய்
நிர்ஹேதுக கிருபையால் குணாகுண நிரூபணம் பாராமே கடாக்ஷங்களாலே குளிரப் பண்ணி
நித்ர வ்யாஜேன-ஜாகரண ரூபமாக – எல்லாருடைய ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகிறது என்கிறார் –

—————–

சர்க்காப்யாஸ விசாலயா நிஜதியா ஜாநந் அனந்தே சயம்
பாரத்யா ஸஹ தர்ம சாரரதயா ஸ்வாதீந சங்கீர்த்தந
கல்பாந் ஏவ பஹுந் கமண்டலு கலத் கங்காப்லுத அபூஜயத்
ப்ரஹ்மா த்வாம் முக லோசந அஞ்ஜலி புடை பத்மை இவ ஆவர்ஜிதை –76-

கமண்டலு கலத் கங்காப்லுத –ப்ரஹ்மா–குண்டிகையில் நின்றும் பெருகுகிற கங்கையில் நீராடின நான்முகன்
அனந்தே சயம் த்வாம்–சேஷ சாயியான தேவரீரை
கல்பாந் ஏவ பஹுந்-அநேக கல்பங்களிலே
சர்க்காப்யாஸ விசாலயா நிஜதியா –சிருஷ்ட்டி பரிசயித்தினால் விகாசம் அடைந்த தன் உணர்வினால்
ஜாநந் –த்யானியா நின்று கொண்டு
பாரத்யா ஸஹ தர்ம சாரரதயா –தன்னுடைய சக தர்ம சாரிணியான சரஸ்வதியினால்
ஸ்வாதீந சங்கீர்த்தந–ஸ்வாதீநமான சங்கீர்த்தனத்தை யுடையனாய்
பத்மை இவ ஆவர்ஜிதை-சம்பாதிக்கப்பட்ட தாமரைப் பூக்கள் போலே இருக்கிற
அபூஜயத் முக லோசந அஞ்ஜலி புடை–முகங்களாலும் கண்களாலும் அஞ்சலி புடங்களாலும் பூஜித்தான் –

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு எம்மாடும்
எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இறைஞ்சி நின்ற –பெருமாள் திருமொழி -1-3-

இந்த ஸ்லோகம் தொடங்கி மூன்று ஸ்லோகத்தால் சத்ய லோகத்தில் இருந்து வந்தமை–
இதில் நான்முகன் கமண்டல நீரால் புருஷ ஸூக்தாதிகள் கொண்டு சரஸ்வதி தேவி உடன் ஸ்துதித்தது –
ப்ரம்மா அடுத்து அடுத்து ஸ்ருஷ்டிக்கையால் வந்த விகாசத்தை யுடைய புத்தியால் திருவானந்தாழ்வான் மேலே
சாய்ந்து அருளினை தேவரை அநேக கல்பங்களில்-தியானித்து – உபாசியா நின்று கொண்டு சக தர்ம சாரிணியான
சரஸ்வதி உடன் ஸ்வாதீநமான புருஷ ஸூக்தாதி களாலே சங்கீர்த்தனம் பண்ணி தேடி சம்பாதித்த தாமரைகளாலே
தன்னுடைய முகங்களாலும் அஞ்சலிகளாலும் கண்களாலும் ப்ரணாமித்தும் கும்பிட்டும் அனுபவித்தும்
தேவரை உகப்பித்தான் என்கிறார் –
த்யான சங்கீர்தன ப்ரனமாதிகள் என்று முக் கரணங்களாலும் ஆராதித்தமை சொல்லிற்று –

—————-

மநு குல மஹீபால வ்யாநம்ர மௌலி பரம்பரா
மணி மகரி காரோசி நீராஜித அங்க்ரி ஸரோருஹஸ்
ஸ்வயம் அத விபோ ஸ்வேந ஸ்ரீ ரெங்க தாமனி மைதிலீ
ரமண வபுஷா ஸ்வ அர்ஹாணி ஆராததானி அஸி லம்பித –77-

ஹே விபோ
மநு குல மஹீபால வ்யாநம்ர மௌலி பரம்பரா-மனு குல சக்கரவர்த்திகளினுடைய வணங்கின கிரீட பங்க்திகளில் உள்ள
மணி மகரி காரோசி நீராஜித அங்க்ரி ஸரோருஹஸ்–மகரீ ஸ்வரூபமான ரத்னங்களின் ஒளிகளினால்
ஆலத்தி வழிக்கப் பட்ட திருவடித் தாமரைகளை உடைய
த்வம் -தேவரீர்
அத -பின்னையும்
மைதிலீ ரமண வபுஷா ஸ்வேந–ஸ்ரீ ராம மூர்த்தியான தம்மாலேயே
ஸ்ரீ ரெங்க தாமனி ஸ்வ அர்ஹாணி ஆராததானி–ஸ்ரீ ரெங்க விமானத்தில் தமக்கு உரிய திரு ஆராதனங்களை
ஸ்வயம் அத அஸி லம்பித –தம்மாலேயே அடைவிக்கப் பட்டீர்-
ஸ்வயம் -ஸ்வேந –இரண்டாலும்
தாமே ஸ்ரீ ராம பிரானாக திரு அவதரித்ததும்
ஆள் இட்டு அந்தி தொழாமல் தாமே ஆராதித்த படியையும் சொல்லிற்று

மனு குல சக்கரவர்த்திகள் மீன் வடிவ க்ரீடங்களில் ரத்னங்களின் தேஜஸ்ஸூ உனது திருவடிகளுக்கு ஆலத்தி கழிக்க
பின்பு பெருமாளாலே திரு ஆராதனை -உன்னாலே உன்னை ஆராதனை –
ஸத்ய லோகத்தில் நின்றும் இஷுவாகு பிரார்த்தனையால் திரு அயோத்யைக்கு எழுந்து அருளி அங்கு தேவர்
மனு வம்சத்தில் ராஜாக்களால் ஸேவ்யமான
அபிஷேகங்களில் உள்ள மணி மயங்களான ஆபரண காந்திகளாலே ஆலத்தி வழிக்கப்பட்ட சரண யுகளராய்-
பின்பு சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து தேவரே அவதரித்து அவராலே சாஷாத்தாக கோயில் ஆழ்வாரிலே
தேவர்க்கு உசிதமான ஆராதனங்களை அர்ச்சக பராதீனை இன்றிக்கே வேண்டியன கண்டு அருளிற்று என்கிறார் –

—————

மநு அந்வ வாயே த்ருஹீனே ச தந்யே விபீஷனேந ஏவ புரஸ் க்ருதேந
குணைஸ் தரித்ராணம் இமம் ஜனம் த்வம் மத்யே சரித் நாத ஸூகா கரோஷி –78-

ஹே நாத
மநு அந்வ வாயே மனு குலமும்
த்ருஹீனே ச தந்யே –க்ருதார்த்தனான பிரமனும்
இருக்கச் செய்தே
விபீஷனேந ஏவ புரஸ் க்ருதேந–திரு உள்ளத்துக்கு இசைந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானாலேயே
மத்யே சரித்–திருக் காவேரியின் இடையே சந்நிதி பண்ணி
குணைஸ் தரித்ராணம்–ஒரு குணமும் இல்லாத
இமம் ஜனம் த்வம் ஸூகா கரோஷி–அடியேன் போல்வாரை மகிழ்விக்கின்றீர்
அந்த மஹாநுபாவன் நமக்கு ஒரு தண்ணீர் பந்தல் வைத்தான் என்று கொண்டாடுகிறார்

இப்படி ஞானாதிகாரான பிரம்மாவும் அப்படிப்பட்ட மனு வம்ச ராஜாக்களும் தேவர் ப்ரத்யாசக்தியாலே தன்யரான பின்பு-
அந்த பிரம்மாவுக்கு ப்ரபவ்த்ரனாயும் பெருமாளை சரணம் புகுந்ததும் அவராலே இஷுவாகு வம்சனாகவே அபிமானிக்கப் பட்டும்
இருக்கையாலே தேவர் புரஸ்காரம் பெற்ற ஸ்ரீ விபீஷ்ண ஆழ்வான் படியாக இரண்டு ஆற்றுக்கும் நடுவே கண் வளர்ந்து அருளி
நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-என்றபடி என் போல்வாரையும்-குணங்களால் சூன்யரான ஜகத்தையும் –
ஸ்வாமித்வ சம்பந்த்ததாலே திவ்ய மங்கள விக்ரஹ ஸுவ்ந்தர்யாதிகளை அனுபவிப்பித்து
தேவர் தன்யராக்கி அருளுகிறீர் என்கிறார் –
யோகீச்வர அக்ர கண்யரான ப்ரஹ்மாதி களாலும் சக்கரவர்த்தி திருமகனாலும் ஆராதித்தரான தேவர்க்கு
சம்சார அக்ர கண்யரான என் போல் வராலும் சேவ்யராகையும் அர்ச்ச நீயராகையும்
ஸுவ்சீல்ய அதிசய ப்ரயுக்தம் என்று கருத்து –

—————

இது முதல் நான்கு ஸ்லோகங்களால் உபநிஷத் வாக்யங்களால் ஸ்துதிக்கிறார்-

தேஜஸ் பரம் தத் ஸவிதுஸ் வரேண்யம் தாம்நா பரேண ஆ பிரணகாத் ஸூ வர்ணம்
த்வாம் புண்டரீக ஈஷணம் ஆம நந்தி ஸ்ரீ ரெங்க நாதம் தம் உபாசி ஷீய –79-

தேஜஸ் பரம் தத் ஸவிதுஸ் வரேண்யம் –தேவரீரை ஸூர்யனுடைய ப்ரஸித்தமாயும் உபாஸ்யமாயும் இருக்கும் சிறந்த தேஜஸ்ஸாக
ஆம நந்தி–காயத்ரீ பதங்கள் ஒதுகின்றன –
இன்னமும்
தாம்நா பரேண ஆ பிரணகாத் ஸூ வர்ணம்–சிறந்த தேஜஸ்ஸானால் திரு முடி தொடக்கி திரு நகம் ஈறாக ஸூ வர்ணமயராகவும்
த்வாம் புண்டரீக ஈஷணம் –செந்தாமரைக் கன்னராகவும்
ஆம நந்தி–சில சுருதிகள் ஒதுகின்றன
தம் ஸ்ரீ ரெங்க நாதம் உபாசி ஷீய–அப்படிப்பட்ட ஸ்ரீ ரெங்க நாதராகிற தேவரீரை உபாஸிக்கக் கடவேன்
இத்தால் தர்மி ஐக்கியம் உணர்த்தப்படுகிறது

ய ச ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ–கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி–உபநிஷத் சாயல்
காயத்ராதி சுருதி ப்ரதிபாத்யர் பெரிய பெருமாளாக அத்யவசித்து பெரிய பெருமாள் விஷயத்தில் அந்தவந்த சுருதி
விஹித அனுஷ்டானங்களைக் காட்டுகிற நான்கு ஸ்லோகங்களால்
நிரவதிக தேஜோ ரூபத்வ ஸவித்ரு மண்டல அந்தர் வர்த்தித்வாதிகள் தேவருக்கே சித்திக்கையாலே
காயத்ரியின் தேஜோ வாசியாய் வரேண்ய பதம் உபாஸ்ய வாசியாக காயத்ரீ பதங்கள் தேவரை சுருதி பிரசித்தமான
தேஜோ ரூபமாயும் ஸவித்ரு மண்டலா அந்தர் வர்த்தியாயும் உபாஸ்யராயும் சொல்லும்
பல சுருதி ஸ்ம்ருதி வசனங்களும் தேவரையே நிரதிசய தேஜஸ்சாலே ஆ பாத சூடம் ஸூவர்ணமய விக்ரஹராயும்
புண்டரீகாக்ஷராயும் பிரதிபாதிக்கின்றனவே
இப்படி ஆஸ்ரித ஸூலபராய் கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரை அநந்ய சாதனை யாலே
காயத்ரியில் சொல்லுகிறபடியே ப்ராப்யமாக உபாஸிக்கக் கடவேன் என்கிறார்

——————-

ஆத்மா அஸ்ய கந்து பரிதஸ்துஷஸ் ச மித்ரஸ்ய சஷுஸ் வருணஸ்ய ச அக்நே
லஷ்ம்யா ஸஹ ஓவ்பத்திக காட பந்தம் பஸ்யேம ரங்கே சரதச் சதம் த்வாம் –80-

அஸ்ய கந்து –தென்படுகின்ற ஜங்கம சமூகத்துக்கும்
பரிதஸ்துஷஸ் ச –ஸ்தாவர வாஸ்து சமூகத்துக்கும்
ஆத்மா பவஸி –உயிராய் இருக்கின்றீர்
மித்ரஸ்ய சஷுஸ் வருணஸ்ய ச அக்நே–ஸூர்யனுக்கும் வருணனுக்கு அக்னிக்கும் கண்ணாக இருக்கின்றீர்
தேவாநாம் -என்றபடி இவர்கள் உப லக்ஷணம்
லஷ்ம்யா ஸஹ ஓவ்பத்திக காட பந்தம் –பிராட்டியுடன் ஸ்வ பாவ சுத்தமான த்ருடமான சம்பந்தத்தை யுடைய
க பஸ்யேம ரங்கே சரதச் சதம் த்வாம் -தேவரீரை ஸ்ரீ ரெங்கத்திலே நூறாண்டுகள் சேவிக்கக் கடவோம்
அடியோமோடும் நின்னோடும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்கிறார்

ஸமஸ்த ஜகத்துக்கும்-விசித்திரமான ஸ்தாவரங்களுக்கும் ஜங்கமங்களுக்கும் -அந்தர்யாமியாயும்
ஸூர்யாதிகளுக்கு -ஸூர்யன் -வருணன் -அக்னி முதலானவர்களுக்கும் கண்ணாகவும் தேவர் ஆகையால்
பெரிய பிராட்டியாரோடு -த்ருட ஆலிங்கனத்துடன் -நித்ய ஸம்ஸ்லிஷ்டரான தேவரை நூறாண்டு கோயிலிலே
கண்ணாலே கண்டு அனுபவிக்கக் கடவோம் என்கிறார் –

—————

யஸ்ய அஸ்மி பத்யு ந தம் அந்தரேமி ஸ்ரீ ரெங்க துங்க ஆயதநே சயாநம்
ஸ்வ பாவ தாஸ்யேந ச ய அஹம் அஸ்மி ச சந் யஜே ஞான மயை மகை தம் –81-

யஸ்ய அஸ்மி பத்யு –யார் ஒரு ஸ்வாமிக்கு அடியேனாக இருக்கிறேனோ
ந தம் அந்தரேமி ஸ்ரீ ரெங்க துங்க ஆயதநே சயாநம்–ஸ்ரீ ரெங்கம் -சிறந்த ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற
அந்த ஸ்ரீ பெரிய பெருமாளை விட்டு நீங்குவேன் அல்லேன்
ஸ்வ பாவ தாஸ்யேந ச ய அஹம் அஸ்மி–நான் இயற்கையான அடிமையினால் யாவனாக இருக்கிறேனோ
அவனாகவே இருந்து கொண்டு
ச சந் யஜே ஞான மயை மகை தம்–அந்த ஸ்ரீ ரெங்க நாதரை ஞானம் ஆகிற யாகங்களினால் ஆராதிக்கிறேன்
அநந்யார்ஹ சேஷத்வ பாரதந்தர்ய தாஸ்ய ஸ்வரூபத்தில் வழுவாமல் இருந்து ஆராதிக்கிறேன் என்றபடி –

நான் உனக்கு பழ வடியேன்–சேஷத்வ ஞானம் கொண்டே உன்னை ஆராதிப்பேன்-
யார் ஒரே ஸ்வாமிக்கே நாம் ஸ்வம் ஆகிறோமோ அப்படிப்பட்ட பெரிய பெருமாளைத் தவிர
வேறு ஒருவரையும் பற்றுவேன் அல்லேன்
யார் ஒருவருக்கு ஸ்வா பாவிக தாஸ்யம் உடையேனோ அந்த பெரிய பெருமாளையே ஞான யஜ்ஜ்ங்களாலே
யஜித்து அதிசயத்தை விளைவிக்கிறேன் என்கிறார் –
உபாயமாகவும் உபேயமாகவும் பெரிய பெருமாளையே போற்றுகிறேன் என்றபடி –

—————-

ஆயுஸ் பிரஜாநாம் அம்ருதம் ஸூ ராணாம்
ரெங்கேஸ்வரம் த்வாம் சரணம் ப்ரபத்யே
மாம் ப்ரஹ்மணே அஸ்மை மஹஸே
ததர்த்தம் ப்ரத்யஞ்ஞம் ஏனம் யுநஜை பரஸ்மை–82-

ஆயுஸ் பிரஜாநாம்–பிரஜைகளுக்கு ரக்ஷகராயும்
அம்ருதம் ஸூ ராணாம்–தேவர்களுக்கு போக்யராயும்
ரெங்கேஸ்வரம் –ஸ்ரீ ரெங்க திவ்ய தேசத்துக்கு தலைவராயும் இருக்கிற
த்வாம் சரணம் ப்ரபத்யே–தேவரீரை சரணம் புகுகின்றேன்
மாம் ப்ரஹ்மணே–பர ப்ரஹ்ம ஸ்வரூபியாகவும்
அஸ்மை மஹஸே–தேஜஸ் ஸ்வரூபியுமாய் இருக்கிற இப்பெருமாள் பொருட்டு
ததர்த்தம் ப்ரத்யஞ்ஞம் ஏனம் யுநஜை பரஸ்மை–சேஷ பூதனான ப்ரத்யக் ஆத்மாவான அடியேனை
விநியோகிக்கக் கடவேன்-யுஞ்ஜீத–சுருதி வாக்யம் படியே –

சம்சாரிகளுக்கு ஆயுஸ்ஸூ போலவும் முக்த உபாய பூதராயும்-நிவர்த்த சம்சாரருக்கும் தத் பிராயருக்கும்
நிரதிசய போக்ய பூதராயும் ஸூலபராயும் கோயிலுக்கு நியாமகராயும் இருக்கிற தேவரை சரணம் புகுகிறேன் –
நாராயணா பர ப்ரஹ்ம நாராயண பரஞ்சோதி என்றபடியே பர ப்ரஹ்ம சப்த வாஸ்யராயும் ஜ்யோதிஸ் சப்த வாஸ்யராயும்
இருந்து கைங்கர்ய உத்தேச்யத் வராய் கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் பொருட்டு
நானான இந்த பிரத்யாகாத்மாவை கிங்கரனாய் -அவர் பிரயோஜனம் பிரயோஜனமாம் படி –
விநியோகிக்கக் கடவேன் என்கிறார்

——————

ஆர்த்திம் திதீர்ஷுரத ரங்க பதே தநயாந்
ஆத்மம் பரி விவிதிஷு நிஜ தாஸ்ய காம்யந்
ஞாநீ இதி அமூந் சம மதாஸ் சமம்
அத்யுதாராந் கீதா ஸூ தேவ பவத் ஆச்ரயண உபகாரான்–83-

ஹே ரங்க பதே
பவத் ஆச்ரயண உபகாரான்–தேவரீரையே அடி பணிவதுவையே உபகாரமாக
ஆர்த்திம் திதீர்ஷுரத –நஷ்ட ஐஸ்வர்ய காமன் என்ன
தநயாந்–அபூர்வ ஐஸ்வர்ய காமன் என்ன
ஆத்மம் பரி –கைவல்ய காமன் என்ன
விவிதிஷு -ஜிஜ்ஞாஸூ என்ன
நிஜ தாஸ்ய காம்யந் ஞாநீ–ஸ்வ ஸ்வரூபமான சேஷ விருத்தியை விரும்புகிற ஞானி என்ன
இதி அமூந் சம –என்கிற இவர்களை வாசியற
மதாஸ் சமம் அத்யுதாராந் கீதா ஸூ தேவ–ஸ்ரீ பகவத் கீதையில் மிகவும் உதாரராக திரு உள்ளம் பற்றினீர் –
அவர்கள் இவற்றுக்காகவாது தன்னிடம் வராவிடில் சர்வ பல பிரதத்வ சக்தி குமர் இருந்து போகுமே

சதுர்விதா பஜந்தே மாம் ஜனா ஸூஹ்ருதிந அர்ஜுந ஆர்த்த ஜிஜ்ஞாஸூ அர்த்தார்த்தீ ஞானீ ச பரதர்ஷப–ஸ்ரீ கீதை -7-16-
பெரிய பெருமாளுக்கு தன்னையே வேண்டி வரும் அநந்ய பக்தன் அத்யந்த அபிமதம்
ஐஸ்வர்யம் இழந்து அத்தை பெறவும் தானம் வீண்டுவானும் கைவல்யம் வேண்டுவானும் மற்ற மூவர்
இவற்றை கேட்டு வருபவரையும் உதாரர் என்னுமவர் அன்றோ

———————-

நித்யம் காம்யம் பரம் அபி கதிசித் த்வயி அத்யாத்ம ஸ்வ மதிபி அமமா
ந்யஸ்ய அசங்கா விதததி விஹிதம் ஸ்ரீ ரெங்க இந்தோ விதததி ந ச தே –84-

ஸ்ரீ ரெங்க இந்தோ
கதிசித்-சில அதிகாரிகள் –
கீழே ஸ்ரீ கீதை பிரஸ்த்துதம் -இதில் கர்ம யோக அதிகாரிகள் பற்றி –
அத்யாத்ம ஸ்வ மதிபி -ஆத்ம விஷயங்களான தம் ஞானங்களாலே
அமமா-மமகாராம் அற்றவர்களாயும்
அசங்கா-பல சங்கம் அற்றவர்களாயும்
த்வயி ந்யஸ்ய–தேவரீர் இடத்தில் கர்த்ருத்வத்தை அநு சந்தித்து
நித்யம் -நித்ய கர்மமாயும்
காம்யம்–காம்ய கர்மமாயும்
பரம் அபி –நைமித்திக கர்ம ரூபமாயும் இருக்கிற விதததி
விஹிதம் விதததி–சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கர்மாவை அனுஷ்டிக்கிறார்கள் –
ந ச தே விதததி-அவர்கள் அனுஷ்டிக்கிறார்கள் அல்லர் –
இவை பாதகம் ஆக மாட்டாதே இவ்வாறு அனுஷ்ட்டிக்கும் அதிகாரிகளுக்கு –

ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து த்ரிவித த்யாகத்துடன் கர்மம் செய்கிறார்கள்-
பகவச் சரணார்த்திகள் பகவத் ஆதீன ஸ்வ கர்த்ருத்வ அத்யாவசாயங்களாலே நித்ய நைமித்திக காம்ய கர்மங்களை
எல்லாம் ஸ்வ தந்த்ர போக்யரான தேவர் இடத்தில் சமர்ப்பித்து ஸ்வாதீந கர்த்ருத்வ புத்தி ரஹிதமாயும்
பலாபி சந்தி ரஹிதமாயும் ஸாஸ்த்ர ஆஜ்ஜை தேவர் ஆஜ்ஜை என்றே கொண்டு அனுஷ்டிக்கிறார்கள் –
அவர்கள் கர்மங்களை அனைத்தையும் விட்டவர் ஆகிறார்கள் –
அந்த அனுஷ்டாதாக்கள் அனுஷ்டிக்காதவர்களே ஆகிறார்கள் என்றபடி –

——————————

ப்ரத்யஞ்சம் ஸ்வம் பஞ்ச விம்சம் பராச
சஞ்சஷானா தத்வராஸே விவிஸ்ய
யுஞ்ஞாநாச் சர்த்தம் பராயாம் ஸ்வ புத்தவ்
ஸ்வம் வா த்வாம் வா ரங்க நாத ஆப்நு வந்தி–85-

ரங்க நாத
ப்ரத்யஞ்சம்–தனக்குத் தானே பிரகாசிப்பவனான
ஸ்வம் பஞ்ச விம்சம் –ஸ்வ ஆத்மாவை இருபத்தஞ்சாம் தத்துவமாக
சஞ்சஷானா–சொல்லா நிற்பவர்களாய்
பராச–பிறருக்கே பிரகாசிக்கின்ற
தத்வராஸே –தத்துவங்களின் கூட்டங்களில் இருந்து
விவிஸ்ய–பகுத்து அறிந்து
ருதம் பராயாம்-சம்சயம் விபர்யயம் அஞ்ஞானம் ஒன்றும் இன்றிக்கே சமாதி காலத்தில் உண்மையான உணர்ச்சியை உடைய
ஸ்வ புத்தவ் ஸ்வம் யுஞ்ஞாநாச்–தங்கள் புத்தியில் ஸ்வ ஆத்மாவை த்யானிக்கிறார்கள்
ஸ்வம் ஆப்நு வந்தி-ஸ்வ ஆத்ம அனுபவம் பண்ணப் பெறுகிறார்கள் –
த்வாம் யுஞ்ஞாநாச் த்வாம் ஆப் னுவந்தி –தேவரீரை த்யானிக்கிறவர்கள் தேவரீரையே அனுபவிக்கப் பெறுகிறார்கள் –
விவிதுஷு –ஆத்ம அனுபவம்
ஜிஜ்ஞாஸூ -பகவத் லாபார்த்தி
காம் அர்த்தத்துக்கு ஞான ஆனந்தங்கள் தடஸ்தம் என்னும் படி தாஸ்யம் அன்றோ அந்தரங்க நிரூபனம்
பரமாத்மாக ஸ்வ ஆத்ம உபாசனம் என்றும் ஸ் வ ஆத்ம சரீரிக பரமாத்மா உபாசனம்
தத்க்ரது நியாயத்தாலே–சகல கல்யாண குண விசிஷ்டா பரமாத்மா உபாசகர்கள் தாதாவித்த பகவத் அனுபவத்தை பெறுகிறார்கள் –

கேவலனுக்கும் ஞானிக்கும் ப்ரக்ருதி விவிக்த ஆத்ம ஸ்வரூப ஞானம் அவசியம் என்கைக்காக
ஸ்வஸ்மை பாவமான தன்னை பிரகிருதி இத்யாதி -24-தத்துவங்களுக்கும் மேலே -25 -வது தத்துவமாக
சொல்லிக் கொண்டு விலக்ஷணனாக அத்யவசித்து-அப்படியே உபாசிக்கிற கேவலர் அந்த ஆத்மாவை லபிக்கிறார்கள்-
இப்படி ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பிறந்து தத் அந்தர்யாமியான தேவரை உபாசிக்கும் ஞானிகள்
தேவரை லபிக்கிறார்கள் என்கிறார் –
அன்றிக்கே
ப்ரக்ருதி விலக்ஷணரான ஆத்மாவை பகவதாத்மகமாக உபாசிப்பார் பகவாதாத்மகமான ஆத்மாவை லபிக்கிறார்கள்-
ஆத்ம சரீரகமாக உபாசிப்பவர்கள் அப்படியே தேவரை லபிக்கிறார்கள் என்னவுமாம்

————-

அத ம்ருதித கஷாயா கேசித் ஆஜான தாஸ்ய
த்வரித சிதில சித்தா கீர்த்தி சிந்தா நமஸ்யா
விதததி நநு பாரம் பக்தி நிக்நா லபந்தே த்வயி கில
ததேம த்வம் தேஷு ரங்கேந்திர கிம் தத் –86-

ரங்கேந்திர
அத ம்ருதித கஷாயா -அகற்றப்பட்ட பாபத்தை உடையவராயும்
ஆஜான தாஸ்ய த்வரித–இயற்கையான தாஸ்யத்தில் பதற்றத்தை உடையவராயும்
சிதில சித்தா –உள்ளம் நைந்தவர்களாயும் இருக்கிற
ரங்கேந்திர-சில அதிகாரிகள்
கீர்த்தி சிந்தா நமஸ்யா–சங்கீர்த்தனம் -சிந்தனம் -நமஸ்காரம் ஆகிய இவற்றை
விதததி–செய்கிறார்கள்
பாரம் பக்தி நிக்நா லபந்தே–பக்தி பரவசர்களாய் பரம ப்ராப்யரான தேவரீரை அடைகிறார்கள் –
ததேம-அன்னவர்கள்
த்வயி கில-தேவரீர் இடத்தில் அன்றோ உள்ளார்கள் -இது யுக்தம் –
த்வம் -தேவரீர்
தேஷூ–அவர்கள் இடத்தில் இருக்கிறீராமே
தத் கிம் -அது என்ன –
ந னு –பிராமண பிரசித்தி –ஸ்ரீ கீதை -9-29-
பக்த ஜன அதீன பாரதந்தர்யத்தை ஏறிட்டு கொண்டு அருளுகின்றீர்

ஞானிகள் சாத்விக தியாக யுக்த கர்ம அனுஷ்டானத்தாலே பக்தி யுதப்பத்தி விரோத பாபம் நிவ்ருத்தமானவாறே
உனக்கு பழ வடியேன் -ஸ்வாபாவிக தாஸ்யத்தில் த்வரை யுண்டாய் அப்போதே பிரேமையால் சிதில அந்தக்கரணராய்
கீர்த்தனா த்யான ப்ரணாமங்களைப் பண்ணா நிற்பார் -அப்படி பக்தி பரவசராய்க் கொண்டு
பரம ப்ராப்யரான தேவரை லபிக்கிறார்கள் -அப்படிப்பட்ட ஞானிகள் தேவர் ஆதீனமான
ஸ்வரூப ஸ்திதி பிறவிருத்தி நிவ்ருத்திகளை உடையவராகை அன்றோ என்று இருக்க தேவர்
ஆஸ்ரித பாரதந்தர்யத்தை ஏறிட்டுக் கொண்டு ஸ்வ ஆதீனரான தேவர் தத் ஆதீன ஸ்வரூபாதிகளை
உடையவராகை யாகிற ஆஸ்ரித வாத்சல்ய கார்யம் அத்யாச்சர்யம் என்கிறார் –

—————

உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ
உபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்
அத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்–87-

ஸ்ரீ ரெங்கேசய
ஓவ்பநிஷதீ வாக் –உபநிஷத் த்தில் உள்ள வாக்கானது என் சொல்கிறது என்றால்
ஸ்ரீ மாந் -திரு மால்
ஸ்வம் உத்திஸ்ய-தன்னை நோக்கி
தன்னை பலபாகியாக எண்ணிய படி
சித் அசிதவ்–சேதன அசேதனங்களை
உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை இதி –ஸ்ருஷடி ஸ்திதி நியமனம் முதலிய வியாபாரங்களால்
ஸ்வீ கரிக்கிறான் என்று வததி -ஒதுகின்றன
தத் –அதனால் வாக்
உபாய உபேயத்வ தத் –உபாயத்வமும் உபேயத்வமும் தேவரீருக்கு
தத்வம் ந து குணவ்–ஸ்வரூபமாகும் -குணங்கள் அல்ல –
இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே –
சத் சம்ப்ரதாயம் நிஷ்கர்ஷம் பண்ணி அருளுகிறார்
அத -உபாயத்வமும் உபேயத்வமும் தேவரீருக்கு ஸ்வரூபங்களாக இருப்பதனால்
த்வாம் சரணம் அவ்யாஜம் அபஜம்–தேவரீரை வியாஜ்யம் ஒன்றும் இன்றியே சரணம் புகுகிறேன் –
அநந்ய சாதனர் என்று சரணம் புகுகிறார் –

அனைத்தும் உனக்காகவே உன் சொத்துக்களை அடையவே செய்கிறார் –
உபாய உபேயம் உன் ஸ்வரூபம் -சரண் அடைகிறேன்-
பக்த்யாதி ரூப சாதனாந்தரத்தில் இழியுமவருக்கு ப்ராப்ய பூதராகுகை மாத்திரம் அன்றிக்கே
அநந்ய சாதனருக்கும் பெரிய பெருமாள் உபாயம் உபேயம் இரண்டும் தாமே யாகிற படியையும்
தாம் அநந்ய சாத்யன் என்னுமத்தையும் அறிவைக்காக
சுருதி வாக்கியங்களைக் காட்டி அருளி ஸ்ரீ யபதியானவன் சேதன அசேதனங்களை சத்தா ஸ்திதி நியமன
சம்ஹார மோக்ஷ ப்ரதானாதிகளாலே சர்வ சேஷியான தன்னை உத்தேசித்து உபாதானம் பண்ணுகிறான் –
ஆகையால் உபாயத்வமும் உபேயாதவமும் ஞான ஆனந்த அமலத்வாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகம்-
ஞான சக்த்யாதிகளைப் போலே நிரூபித்த ஸ்வரூப விருத்தி குணம் அல்லவாகையாலே கோயிலிலே கண் வளர்ந்து
அருளிக் கொண்டு ஸூலபுராண தேவரை அநந்ய ப்ரயோஜனனாய்க் கொண்டு
நிர்வ்யாஜமாக சரணம் புகுந்தேன் என்கிறார் –

—————–

படு நா ஏக வராடிகா இவ க்ல்ப்தா ஸ்தலயோ கா கணி கா ஸூ வர்ண கோட்யோ
பவ மோக்ஷ ணயோ த்வயா ஏவ ஐந்து க்ரியதே ரெங்க நிதே த்வம் ஏவ பாஹி –88-

ரெங்க நிதே
படு நா -சமர்த்தனான ஒருவன்
கா கணி கா ஸூ வர்ண கோட்யோ–ஒரு பைசா வகுப்பும் ஒரு சவரன் வகுப்புமான
க்ல்ப்தா ஸ்தலயோ–இடங்களில் ஏற்படுத்தப் பட்ட
ஏக வராடிகா இவ –ஒரு பலகறை போலே
த்வயா ஏவ ஐந்து –சேதனனானவன் தேவரீராலேயே
பவ மோக்ஷ ணயோ –சம்சாரத்திலும் முக்தியிலும்
க்ரியதே -பண்ணப் படுகிறான்
த்வம் ஏவ பாஹி –ஆதலால் தேவரீர் ரஷித்து அருள வேணும் –

நிரங்குச ஸ்வதந்த்ரன் -நீயே அடியேனை ரக்ஷிப்பாய்-
எம்பெருமானுக்கு உபாயத்வம் ஸ்வரூபமாகில் சர்வ முக்தி பிரசங்கமாய் லீலா விபூதி விச்சேதம் வாராதோ என்கிற
சங்கையில் நிராங்குச ஸ்வா தந்தர்யத்தாலே வாராது என்று பரிஹாரம் என்று திரு உள்ளம் பற்றி
சமர்த்தனாய் ஸ்வ தந்திரனாய் இருக்கும் ஒரு ராஜா தன் ராஜ்யத்தில் ஒரு பலகறையை ஸ்வல்ப பரிமாணமான
ஸூவர்ண ஸ்தானத்தில் யாக்கி அத்தாலே சில நாள் கிரய விக்ரய ரூப கார்யம் செல்லா நிற்க –
பின்பு ஒரு காலத்திலேயே அத்தையே ஸூவர்ண கோடி ஸ்தானத்தில் ஆக்கிச் செலுத்துமா போலே
ஒரு சேதனனை தேவரும் ஸ்வ தந்தரராய் சில நாள் சம்ஸ்பரிப்பித்து-பின்பு ஒரு கால் கர்ம ஞான பக்தி பிரபத்தி
இத்யாதி வியாஜங்களை உண்டாக்கி முக்தனாம் படி பண்ணுகிறது
ஆகையால் அடியேனையும் தேவரீர் பிரபத்தி வியாஜ்யத்தை உண்டாக்கி தேவரீர் இடமே அன்விதனாக்கி
ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

—————-

ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ
ரெங்கேச பூர்ண வ்ருஜின சரணம் பவேதி
மௌர்க்க்யாத் ப்ரவீமி மனசா விஷய ஆகுலேந —89-

ரெங்கேச
ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன–ஞான யோகம் கர்ம யோகம் பக்தி யோகம் ஆகிய சம்பத் இல்லாதவனும்
இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ–முமுஷுத்வம் என்ன ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் இத்யாதி அதிகாரம் என்ன
சக்தி என்ன அநு தாபம் என்ன -இவற்றை அறியாதவனாயும்
பூர்ண வ்ருஜின –நிரம்பிய பாபங்களையும் யுடையனாய் இருக்கிற
அஹம்–அடியேன்
மௌர்க்க்யாத்–மூர்க்கத்தனத்தால்
மனசா விஷய ஆகுலேந-விஷயங்களில் கலங்கின நெஞ்சோடு
சரணம் பவேதி இதி ப்ரவீமி–சரணமாகு -என்கிறேன்
இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் -போதுவீர் போதுமினோ -இச்சைக்கே மேற்பட்ட
வேறே ஒன்றுமே வேண்டாமே பிரபத்திக்கு -அதுக்கும் கூட சக்தன் அல்லன்
சம தமாதிகள் அதிகாரமும் இல்லை -சகநம் -அத்யவாசாய திருடத்வமும் இல்லை –
இவை இல்லை என்னும் அனுசயம்-அனுதாபமும் இல்லை -இவை என்ன என்ற அறிவும் இல்லை

ஸ்வந்தரராகச் சொன்னீர் ஆகிலும் சாஸ்திரம் சித்திக்க வேண்டும் அன்றோ -நீரும் இதம் குரு -என்றத்தைச் செய்து –
இதம் ந குரு என்றத்தை தவிர்க்க வேணும் காணும் -அபுனா விருத்தி லக்ஷண மோக்ஷம் பெரும் போதைக்கு என்று
பெரிய பெருமாள் திரு உள்ளமாக
கர்மா யோகாதிகளில் அன்வயம் இல்லாமை அன்றிக்கே மட்டும் இல்லாமல் மேல் அன்வயம் உண்டாகைக்கு ஹேதுவான
குளித்து மூன்று அனலை ஓம்பும் இத்யாதி ப்ராஹ்மண்யாதிகள்-அனுஷ்டான ஞான சக்த்யாதிகளும் அனுதாமும் இன்றிக்கே –
இவைகள் உண்டு என்கிற வ்யுத்பத்தியும் கூட இல்லாமல் இருக்க -இப்படி விகிதங்களில் ஒன்றுமே இல்லாதது போலே
நிஷித்தங்களில் என்னிடம் இல்லாதது ஒன்றுமே இல்லை -இப்படி முமுஷுத்வாதிகளும் இன்றிக்கே இருக்க
அபாய பஹுளனாய் நெஞ்சம் ப்ரவணராய் இருக்க ஸ்வ அதிகாரம் தெரியாதே –
கடல் வண்ணா கதறுகின்றேன்-என்னுமா போலே சரணம் அஹம் -தேவரே உபாயமாக வேணும் -என்று பிரசித்தமாக
விடாதே சொல்லி இவ்வளவு அநு கூல்யம் உடையானை ரக்ஷித்திலன் என்று தேவருக்கும் அவத்யமாய்
கோயில் நித்ய சந்நிதியையும் அகிஞ்சித் கரம் ஆக்கினேன் என்கிறார்

———–

த்வயி சதி புருஷார்த்தே மத் பரே ச அஹம்
ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் சரத்ததத் ரங்க சந்த்ர
ஜனம் அகிலம் அஹம் யு வஞ்சயாமி த்வத்
ஆத்ம பிரதிம பவத் அநந்ய ஞானி வத் தேசிக சன்–90-

ரங்க சந்த்ர
புருஷார்த்தே –பரம புருஷார்த்த பூதரும்
மத் பரே ச த்வயி சதி –என் திறத்திலே ஊற்றம் உடையவருமான தேவரீர் எழுந்து அருளி இருக்க
அஹம்ஆத்ம க்ஷய கர குஹநார்த்தான் ச
ரத்ததத் –அடியேன் ஆத்ம நாசத்தை விளைகின்ற போலிப் பொருள்களை விரும்பினவனாயும்
அஹம் யு–அஹந்காரியுமாயும் இருந்து கொண்டு
த்வத் ஆத்ம பிரதிம –தேவரீருடைய ஆத்மாவைப் போன்று
பவத் அநந்ய ஞானி–தேரில் வேறுபடாத ஞானி போல்
ஜனம் அகிலம் வஞ்சயாமி வத் தேசிக சன்–குருவாக இருந்து எல்லாரையும் வஞ்சித்து வருகிறேன் –
நைச்ய அனுசந்தானத்தில் தலை நிற்கிறார் –

என்னை பெற ஆவலாக நீ உள்ளாய் -விஷயாந்தரங்களில் மண்டி உள்ளேன் -ஸ்ரீ கீதையில் நீ அருளிச் செய்தபடி
ஆத்மாவாக உள்ள ஞானி என்றும் உன்னை விட மாறுபடாத ஆசார்யன் என்றும் கூறிக் கொண்டு வஞ்சிப்பவனாக உள்ளேன்-
உம்முடைய மனஸ்ஸூக்கு விஷய ப்ராவண்யம் விலக்ஷணமான உபாய உபேய துர் லப்யத்தால் வந்தது-
அதுவும் சிஷ்டர் அறியில் அவர்கள் கர்ஹித்து அச்சத்தை விளைத்த தாதல் உபதேசத்தால் ஆதல்
நிவ்ருத்தம் ஆகிறது என்று பெரிய பெருமாள் திரு உள்ளமாய்
அதுவோ -ஆதரம் பெருக வைத்த அழகன்-என்றும் -ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் -என்றும்
எனக்கு உபாய உபேய பூதரான தேவர் கோயிலிலே நித்ய சன்னிஹிதராய் இருக்கையாக இருந்தும் அன்றோ
அநாதரித்து விழுக்காட்டில் ஆத்ம நாசமாய் முகப்பில் ஓன்று போல் இருக்கிற விஷயாந்தரங்களை விரும்பினது –
அதுவும் ப்ரசன்னமாகையாலே சரணம் அஹம் என்கிற யுக்தியைக் கொண்டு பாமரரோ பாதி சிஷ்டரும்
அஹங்காரியனான என்னை அநன்யன் என்று தேவர் ஆத்மாவோடு துல்யனாகவும் அபிமதனாக உள்ள ஞானியாகவும்
தன் உபதேசத்தால் பிறரையும் ஞானி யாக்க வல்லவனாயும் -சதாச்சார்ய அக்ரேஸராக ஸமஸ்த ஜகத்தும் -பிரமிக்கும் படி
இருப்பதே யாத்திரையாக இருக்கையாலே நான் உபதேசாதிகளுக்கும் அவிஷயம் என்கிறார்

—————————-

அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-

ரங்க ப்ரவண
சததம் தவ –எப்போதும் தேவரீருடைய
அதிக்ராமந் ஆஞ்ஞாம் விதி நிஷேதேஷு –விதி நிஷேத ரூபமான கட்டளையை மீறி நடப்பவனாயும்
வாக்தீக்ருதிபி அபி–வாக்கினாலும் நெஞ்சினாலும் செய்கையினாலும்
பக்தாய பவதே அபி–தேவர் விஷயத்திலும் தேவரீர் பக்தர்கள் விஷயத்திலும்
அபித்ருஹ்யன் -அபசார ப் படுபவனாயும்
அஜாநந் ஜாநந் வா –தெரிந்தோ தெரியாமலோ
பவத் அஸஹநீய ஆகஸீ—-தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்
ஸஹிஷ்ணு த்வாத் –தேவரீர் சர்வ ஸஹிஷ்ணுவாதலால்
தவ மா பூவம் அபர–தேவரீருக்கு அனுக்ரஹம் ஆகாது ஒழியக் கடவேன் அல்லேன்
தவ பர ஏவ பவேயம் என்றபடி

சமர்த்தனான பிஷக்கின் பக்கல் ரோகியானவன் தன் அபத்யத்தை வெளியிடுமா போலே
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் பெரிய பெருமாள் பக்கல் பிரகிருதி நிவ்ருத்த பரமாய் -தேவர் ஆஜ்ஜா ரூபமான
சுருதி ஸ்ம்ருதி இத்யாதிகளை லஜ்ஜா பயன்கள் இன்றி பரித்யஜித்து சர்வ பூத ஸூஹ்ருதான தேவர் பொருட்டும்-
மத் பக்த ஜன வாத்சல்யம் இத்யாதி அஷ்ட வித பக்தி உக்தனாய் சதா தரிசனத்துக்கு அவரிடம் போக மாட்டாதே
சதா தர்சனாதி போக்யனான பாகவதம் பொருட்டும் கரண த்ரயத்தாலும் புத்தி பூர்வகமாகவும் அபுத்தி பூர்வகமாகவும்
காதாசித்கமாகவும் இன்றிக்கே ஸம்பந்த சம்பந்திகளில் அளவும் பயம் இல்லாமல் துரோகித்து
சர்வ ஸஹிஷ்ணுத்வமான தேவருக்கும் அஸஹநீயமான அபராதத்திலும் சந்தோஷிக்கிறேன்
இப்படி அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசாரங்களைப் பண்ணிப் போருகிற நானும்
ஸஹிஷ்ணுத்வத்தாலும் நிர்தோஷ ரக்ஷணமாகில் பரமபதத்தில் இருந்து செய்யலாய் இருக்க
ச தோஷ ரக்ஷண அர்த்தமாக கோயில் ப்ராவண்யத்தாலும் தேவர்க்கு துர் பரனாக ஒண்ணாது என்கிறார் –

——————–

ப்ர குபித புஜக பணாநாம் இவ விஷயானாம் அஹம் சாயாம்
சதி தவ புஜ ஸூர விடபி பரச் சாயே ரங்க ஜீவித பஜாமி —92-

ரங்க ஜீவித
தவ புஜ ஸூர விடபி –தேவரீருடைய திருத் தோள்களாகிற கற்பக விருஷத்தினுடைய –
கற்கபக் கா என நல் பல தோள்கள் அன்றோ –
சதி பரச் சாயே–நிழல் பங்கு இருக்கும் போது
ப்ர குபித புஜக பணாநாம் இவ விஷயானாம்–சீறிய பாம்பின் படம் போன்ற துர் விஷயங்களினுடைய
அஹம் சாயாம் பஜாமி–நிழலை நான் அடைகிறேன்

புருஷார்த்தத்தையும் குஹ்யமான அர்த்தங்களையும் ச த்ருஷ்டாந்தமாக விவரிக்கக் கோலி ப்ராப்த சேஷியான தேவருடைய
கற்பகக் கா வென நல் பல தோள்கள் -என்ற படி ஆஸ்ரித ரஷ்யத்து அளவு அன்றிக்கே விஞ்சியதாய் தாப ஆர்த்தருக்கு
தாபம் தீரும்படியும் நிவ்ருத்த ஆர்த்தருக்கு நிரதந்தர அனுபாவ்யமாயும் பலவன்றியே ஏகமாய் இருக்கிற திருக் கையாகிற
கற்பக வ்ருஷத்தின் நிழலானது நாம் தேடிப் போக வேண்டாதபடி நமக்கு தாரகமாயும் -கோயில் உமக்கு தாரகம் –
நீர் கோயிலுக்கு தாரகம் -கோயிலிலே நித்ய சந்நிஹிதையாய் இருக்குமத்தையும் அநாதரித்து
மிகவும் குபிதமான சர்ப்பத்தின் படத்தின் நிழல் போல் முகவாய் மயிர் கத்தியாய் இருக்க ஆபாத ராமணீயதையாலே
ஆகர்க்கஷமாயும் உத்தர ரக்ஷணத்தில் அனர்த்த கரமாயும் ஓன்று அன்றிக்கே பலவாயும் புறம்பு போக ஒட்டாதே
பந்தகமாய் இருக்கிற விஷயாந்தரங்களுடைய நிழலை அஸேவ்யம் என்று பார்க்க ஒட்டாதே பாவத்தை உடைய
நான் நிரந்தரம் சேவிக்கிறேன் என்கிறார் –

———–

த்வத் சர்வசக்தே அதிகா அஸ்மதாதே கீடஸ்ய சக்தி பத ரெங்க பந்தோ
யத் த்வத் க்ருபாம் அபி அதி கோசகார ந்யாயாத் அசவ் நஸ்யதி ஜீவ நாசம் –93-

ரெங்க பந்தோ-பர்தோ
அஸ்மதாதே கீடஸ்ய சக்தி–என் போன்ற புழுவினுடைய சக்தியானது –
த்வத் சர்வசக்தே–சர்வ சக்தி யுக்தரான தேவரீரைக் காட்டிலும்
அதிகா யத் –விஞ்சியது என் என்றால்
அசவ் த்வத் க்ருபாம் அபி அதி -இந்த புழுவானது தேவரீருடைய திருவருளையும் மீறி
அசவ் -பரோக்ஷ நிர்த்தேசம்-வெறுத்து தம்மை அருளிச் செய்தபடி –
கோசகார ந்யாயாத் – ஒரு பூச்சியின் செயல் போலே
நஸ்யதி ஜீவ நாசம்-தன்னடையே மடிகின்றது
பத–அந்தோ
இரு கரையும் அழியப் பெருகும் உமது திருவருள் பிரவாஹத்துக்கும் தப்பி விலக்கி ஆத்ம நாசம் அடைகிறேன்

சர்வசக்தனான உனது சக்திக்கும் விஞ்சினா பாபிஷ்டன் -கோசாரம் பூச்சி தன் வாய் நூலாலால் கூட்டைக் கட்டிக் கொண்டு
வாசலையும் அடைத்து அழியுமா போலே ஜீவனும் தன்னை அழித்துக் கொள்கிறான்
நான் சர்வ சக்தன் அன்றோ -உம் விஷய ப்ராவண்யத்தைத் தவிர்க்க எனக்கு பிராப்தி தான் இல்லையோ -என்ன
நான் சக்தன் இல்லை என்றேனோ நானாகிய ஷூத்ர ஜந்துவின் சக்தி அதுக்கும் மேலானது –
எப்படி என்னில் தயை வந்த இடத்தில் அன்றோ தேவர் சக்தி -அந்த தயை ஸ்வ விஷயத்தில் வர ஒட்டாமல்
சம்சாரிகள் துக்கத்தில் ஸூகத்வ பிராந்தி பண்ணி
கோஸகாரம் என்கிற கிருமி தன் வாயில் உண்டான நூல்களால் கூண்டு கட்டி வழியும் அடைத்து நிர் கமிக்க மாட்டாதே
உள்ளே கிடந்தது நசிக்குமா போலே ஜீவித்துக் கொண்டே இது நசிக்கிறதாலே இது என்ன படு கொலை என்கிறார்

—————————

ஸ்ரீ ரெங்கேச த்வத் குணா நாம் இவ அஸ்மத் தோஷணாம் க பாரத்ருச்வா யத அஹம்
ஓகே மோகோ தன்யவத் த்வத் குணா நாம் த்ருஷ்ணா பூரம் வர்ஷதாம் நாஸ்மி பாத்ரம் –94-

ஸ்ரீ ரெங்கேச
த்வத் குணா நாம் இவ -தேவரீருடைய கல்யாண குணங்களுக்குப் போலே
அஸ்மத் தோஷணாம்–எனது குற்றங்களுக்கும்
க பாரத்ருச்வா யத–கரை கண்டவர் யாவர்
ஏன் என்றால் அஹம்
ஓகே மோகோ தன்யவத் –பெரு வெள்ளத்தில் பிசாசுகள் தாகம் தீரப் பருக மாட்டாததது போலே
த்ருஷ்ணா பூரம் வர்ஷதாம் –ஆசை தீர வர்ஷிக்கின்ற
த்வத் குணா நாம் –தேவரீருடைய திருக் குணங்களுக்கு
நாஸ்மி பாத்ரம் –பாத்திரம் ஆகிறேன் அல்லேன் அன்றோ –

கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லாதப்ப போலே என்னுடைய தோஷங்களுக்கும் எல்லை இல்லையே
வெள்ளம் எவ்வளவு இருந்தாலும் பிசாசுக்கள் மனிதர்களைக் கொன்றே தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளுமே
உனது கர்ணாம்ருத வர்ஷத்துக்கும் தப்பினேன்-
தயை மாத்ரத்தை அன்றோ நீர் அதிக்ரமித்தது-எனக்கு ஷாமா வாத்சல்யயாதி அநேக கல்யாண குணங்கள் உண்டே என்ன
தேவருடைய கல்யாண குணங்கள் அஸங்க்யேயாமாம் போலே என்னுடைய தோஷங்களும் தேவராலும்
பரிச்சேதிக்க ஓண்ணாமல் அநேகங்கள் -ஆகையால் இறே பிரவாகத்தில் ப்ரஹ்ம ரஜஸ்ஸூ தாஹசாந்தி
பண்ணிக் கொள்ள மாட்டாதாப் போலே அடியேனும் மநோரதித்தார் மநோ ராதித்த அளவும் வர்ஷிக்கிற
தேவருடைய ஷமாதி குணங்களுக்கும் விஷயம் ஆகிறேன் அல்லேன் என்கிறார்

——————

த்வத் சேத் மனுஷ்ய ஆதி ஷு ஜாயமான தத் கர்ம பாகம் க்ருபயா உபயுங்ஷே
ஸ்ரீ ரெங்க சாயிந் குசல இதராப்யாம் பூய அபி பூயே மஹி கஸ்ய ஹேதோ —95-

ஸ்ரீ ரெங்க சாயிந்
த்வத் மனுஷ்ய ஆதி ஷு ஜாயமான–தேவரீர் மனுஷ்யாதி யோனிகளில் அவதரியா நின்றவராய்
தத் கர்ம பாகம் க்ருபயா உபயுங்ஷே சேத் –அப்பிறவிக்கு உரிய கர்ம பரிபாகத்தை கிருபை அடியாக அனுபவியா நிற்க
வயம் -நாங்கள்
குசல இதராப்யாம்-இன்ப துன்பங்களினால்
பூய அபி பூயே மஹி கஸ்ய ஹேதோ–பலகாலும் எதற்க்காக நோவு படக் கடவோம்

எத்தனை காலம் கர்மத்தால் பீடிக்கப்பட்டு உழல்வோம்-
குணா நாம் த்ருஷ்ணா பூரம் வர்ஷதாம்-என்று வர்ஷித்த இடங்கள் எங்கே என்ன
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண ரூபேண அவதாரங்களிலும் ஸ்ரீ கோயில்களிலும் கோகுல கோசல சராசரசங்களையும்
ஆழ்வார்கள் முதலானவர்களையும் புண்ய பாபங்களால் அபிபவம் இன்றிக்கே த்வத் சம்ச்லேஷ விஸ்லேஷங்களிலே
ஸூக துக்கராம் படி பண்ணவில்லையோ -அப்போது நான் பாத்ரனாகத படி அன்றோ
என்னுடைய தோஷ பூயஸ்த்தை இருப்பது என்று திரு உள்ளம் பற்றி -தேவாதி ஜென்மங்களில் அவதரித்து
அந்த அந்த ஜன்மத்துக்கு அடுத்த கர்மபலத்தையும் சாதுக்கள் பக்கல் அனுக்ரஹித்தால் அனுபவித்ததாகில்
நாங்கள் புண்ய பாபங்களாலே எதனாலே பரிபவிக்கப் படுகிறோம் என்கிறார் –
பாப பிராசுரயத்தாலே அன்றோ –

—————

ஷமா சாபராதே அநு தாபிநி உபேயா கதம் சாபராதே அபி திருப்தே மயி ஸ்யாத்
ததபி அத்ர ரங்காதி நாத அநு தாபவ்ய பாயம்ஷமதே அதி வேலா ஷமா தே –96-

ரங்காதி நாத
ஷமா சாபராதே அநு தாபிநி உபேயா–பொறுமையானது அபராதியாய் இருந்தாலும் அநு தாபம்
உள்ளவன் இடத்தில் அணுக கூடியது
அப்படி இருக்க
சாபராதே அபி திருப்தே மயி–அபராதியாய் இருந்தும் கழிவிரக்கம் இன்றிக்கே கொழுத்து இருக்கின்ற என் விஷயத்தில்
அந்தப் பொறுமையானது
கதம் ஸ்யாத்–எப்படி உண்டாகும்
ததபி அதி வேலா –ஆயினும் கங்கு கரையற்றதான
ஷமா தே–தேவரீருடைய பொறுமையானது
அத்ர அநு தாபவ்ய பாயம்ஷமதே -இவ் வடியேன் திறத்தில் ஸமஸ்த அபராதங்களைப் பொறுத்து
அருளுவது பிளே அநு தாபம் இல்லாததையும் ஷமிக்கும்

இப்படி பாப ப்ரஸுர்யமும் உண்டாய் அனுதாப லேசமும் இன்றிக்கே இருக்க நாம் ஷமிக்கும் படி எங்கனே-
அனுதாபம் பிறந்த இடத்தில் க்ஷமை என்ற ஒரு வரம்பை நீர் தோன்றி அழிக்கப் பார்க்கிறீரோ என்ற திரு உள்ளமாக
அப்படி வரம்பு அழிக்காமல் ஷமிக்கும் இடத்தில் பரமபதத்தில் இருக்க அமையாது -வரம்பை அழித்து ஷமிக்காகா அன்றோ
கோயிலில் நித்ய சந்நிதிஹித்தார் உள்ளீர் -அதனால் என் அனுதாப ஸூந்யதையும் ஷமித்து அருள வேணும் என்கிறார் –
அனுதாப கேசமும் இல்லாமல் அபராதங்களே பண்ணிப் போரும் அஸ்மதாதிகள் இடத்திலும்
உனது ஷமா குணம் பலிதமாகிறதே –

————–

பலிபுஜி சிசுபாலே தாத்ருக் ஆகஸ்கரே வா
குண லவ ஸஹ வாஸாத் த்வத் ஷமா சங்கு சந்தீ
மயி குண பரமாணு உதந்த சிந்தா அநபிஜ்ஜே
விஹரது வரத அசவ் ஸர்வதா ஸார்வ பவ்மீ–97-

வரத
தாத்ருக் ஆகஸ்கரே–வாசா மகோசரமான அபராதங்களைச் செய்த
பலிபுஜி சிசுபாலே வா–காகாசூரன் இடத்திலும் சிசுபாலன் இடத்திலும்
குண லவ ஸஹ வாஸாத்–ஸ்வல்ப குணமும் கூட இருந்ததனால்
த்வத் ஷமா சங்கு சந்தீ–சங்கோசம் உடையதான இந்த தேவரீருடைய பொறுமையானது
மயி குண பரமாணு உதந்த சிந்தா அநபிஜ்ஜே–சத் குண லவலேச பிரசக்தியும் அற்ற அடியேன் திறத்தில்
விஹரது அசவ் ஸர்வதா ஸார்வ பவ்மீ–எப்போதும் செங்கோல் செலுத்திக் கொண்டு விளையாடட்டும்
தேவரீருடைய ஷமா குணம் அடியேன் திறத்திலே தானே நன்கு வீறு பெரும் –
நைச்ய அனுசந்தான காஷ்டை இருக்கும் படி –

காகாசூரன் சிசுபாலாதிகள் இடம் உள்ள லவ லேச நற்குணங்களும் இல்லாத அஸ்மதாதிகளுக்கு அன்றோ நீ-
இப்படி குணம் இல்லாமையே தேவர் உடைய நிரவாதிக மகிமையான ஷமைக்கு அங்குசித ப்ரவ்ருத்திக்கு
ஹேது என்று திரு உள்ளம் பற்றி
சிறு காக்கை முலை தீண்ட என்றும் கேழ்ப்பார் செவி சுடு கீழ்மை வசவுகளையே வையும் என்றும்
அந்தப்புர விஷயத்திலும் ஸ்வ விஷயத்திலும் வாசோ மகோசரமான அபராதங்களைப் பண்ணின
காகம் விஷயத்திலும் சிசுபால விஷயத்திலும்
பித்ராதி பரித்யாகத்தால் வேறு புகல் அற்று விழுந்தமையாலும் வசவு தோறும் ஸ்ரீ கிருஷ்ண நாம உச்சாரணம்
ஆகிற குண லேசம் உண்டாகையாலும்
அங்குசித பிரவிருத்தையான ஸ்வதஸ் அஸஹிஷ்ணுவான தேவர் க்ஷமை குண லேச விருத்தாந்த விசாரம் இன்றிக்கே
இருக்கிற அடியேன் இடத்தில் சர்வ பிரதேசத்தையும் ஆள்வதாகக் கொண்டு எப்போதும் க்ரீடிக்கக் கடவது என்கிறார் –

—————————

தயா பர வ்யசன ஹரா பவவ்யதா ஸூகாயதே மம தத் அஹம் தயாதிக
ததாபி அசவ் ஸூகயதி துக்கம் இதி அத தயஸ்த மாம் குணமய ரங்க மந்த்ர –98-

குணமய ரங்க மந்த்ர–கல்யாண குணங்களே வடிவெடுத்த ஸ்ரீ ரங்க நாதரே
தயா–தேவரீருடைய தயாவானது
பர வ்யசன ஹரா –பிறருடைய துன்பங்களைப் போக்கடிக்க வல்லது
மம -எனக்கோ என்றால்
பவவ்யதா-சம்சார துக்கமானது
ஸூகாயதே -துக்கமாக இல்லாமல் இன்பமாகவே உள்ளதே
தத் அஹம் தயாதிக–ஆகையால் அடியேன் தேவரீருடைய தயைக்கு இலக்காகக் கூடாதவனாக உள்ளேன்
ததாபி அசவ் ஸூகயதி துக்கம் இதி அத தயஸ்த மாம் -ஆயினும் இந்தப் பையல் துன்பத்தை
இன்பமாக பிரமித்து உள்ளான் என்று திரு உள்ளம் பற்றி அடியேன் மீது இரங்கி அருள வேணும்

ஸ்ரீ பெரிய பெருமாளுடைய க்ஷமை போலே தயையும் உத்வேலையாய்க் கொண்டு குண லேசம் இல்லாத விஷயத்தில்
அசங்குசித ப்ரவ்ருத்திகை என்று திரு உள்ளம் பற்றி -தயையாவது -பரனுடைய பிரதி கூல ஞான ரூப துக்கத்தைப் போக்குவது –
எனக்கு சம்சார அனுபவம் பிரதி கூல ஞானமாய் இராதே அனுகூல ஞானமாயேயாய் இரா நின்றது –
ஆகையால் அடியேன் தேவருடைய தயயையும் அதிக்ரமித்தவன்-
ஆகையால் கோயிலிலே தயா பிரசுரமாக நித்ய வாசம் பண்ணி அருளும் தேவர் இவன் ஸூகம் என்று பிரமிக்கிறான் –
துக்கம் என்றே திரு உள்ளம் பற்றி அடியேனையும் கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார்

————

கர்ப்ப ஜென்ம ஜரா ம்ருதி கிலேச கர்ம ஷட் ஊர்மக
ஸ்வா இவ தேவ வஷட் க்ருதம் த்வாம் ஸ்ரீ யஸ் அர்ஹம் அகாமயே–98-

கர்ப்ப ஜென்ம ஜரா ம்ருதி கிலேச கர்ம ஷட் ஊர்மக–கர்ப்பவாசம் முதலாக நேருகின்ற ஷட் பாவ விகாரங்கள்
ஆகிற அலைகளில் உழல்கின்ற அடியேன்
ஸ்வா இவ தேவ வஷட் க்ருதம்–தேவர்களுக்காக வகுக்கப் பட்ட ஹவிஸ்ஸை நாய் விரும்புவது போலே
த்வாம் ஸ்ரீ யஸ் அர்ஹம் அகாமயே–பிராட்டிக்கே உரியரான தேவரீரை அடியேன் விரும்பினேன் –

நாய் புரோடாசம் நக்குவது போலே பெரிய பிராட்டியாருக்கே உரியவனாக உன்னை விரும்பினேன்
பஞ்சக் கிலேசம் புண்ய பாப ரூப கர்மம் இவற்றிலே சுழன்று இருந்தும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு அர்ஹமான தேவரை –
தேவர்களுக்கு என்று மந்த்ர பூதமான -மந்திரத்தால் ஸம்ஸ்க்ருதமான -புரோடாசத்தை நாய்
ஆசைப்படுமா போலே ஆசைப்பட்டேன் -என்கிறார்

———–

அநு க்ருத்ய பூர்வ பும்ஸ ரங்க நிதே விநயடம்பத அமுஷ்மாத்
சுந இவ மாம் வரம் ருத்தே உபபோக த்வத் விதீர்ணயா –100-

ரங்க நிதே
அநு க்ருத்ய பூர்வ பும்ஸ –முன்னோர்களை அநு கரித்துச் செய்யப்படுகின்ற
விநயடம்பத அமுஷ்மாத்–இந்த கள்ளக் குழைச்சலை விட
சுந இவ மாம் –நாய் போன்ற அடியேனுக்கு
வரம் ருத்தே உபபோக த்வத் விதீர்ணயா–தேவரீராலே கொடுக்கப் பட்டு இருக்கிற சம்ருத்தியை அனுபவிப்பது நன்று
நைச்சிய அனுசந்தானமும் முன்னோர்களை அநு கரித்து செய்தவையே

என் முன்னோர் போன்றவன் என்று போலியாக உன்னுடன் குழைந்து நிற்கலாம்
அதை விட அடி நாயேன் சம்சார வாழ்க்கையே களித்து நிற்பது நல்லது அன்றோ-
உத்துங்க விஷயத்தை ஆசைப்படுகை மட்டுமே அன்றிக்கே -நீசனேன் இத்யாதி ரூபைகளான பூர்வ புருஷர்களுடைய
விநய உக்திகளை அநு கரிக்கையும் அபராதம் என்று திரு உள்ளம் பற்றி பரங்குசாதிகளான பூர்வ புருஷர்களை அநு கரித்து
ஆந்தரமான விநயம் இன்றிக்கே இருக்க சர்வஞ்ஞரான தேவரையும் பகடடும் படியாக இந்த விநய பாஷணங்கள் அடியாக
நல் கன்றுக்கு இரங்குவது போலே தோல் கன்றுக்கும் இறங்குவது போலே தேவர் தம்மையே ஓக்க அருள் செய்வர்
என்கிறபடியே தருகிற பரம சாம்யா பத்தியைப் பற்ற அத்யந்த ஹேயனான எனக்கு காம அநு குணமான
தேவர் தந்த சம்ருத்ய அனுபவமே அமைந்தது என்கிறார் –

———————

ஸக்ருத் ப்ரபந்நாய தவ அஹம் அஸ்மி
இதி ஆயாசதே ச அபயதீஷ மாணம்
த்வாம் அபி அபாஸ்ய அஹம் அஹம்பவாமி
ரங்கேச விஸ்ரம்ப விவேக ரேகாத் -101-

ரங்கேச
ஸக்ருத் ப்ரபந்நாய–ஒரு கால் சரணம் அடைந்தவன் பொருட்டும்
தவ அஹம் அஸ்மி இதி ஆயாசதே ச –அடியேன் உனக்கு உரியேனாக வேணும் -என்று கோருகிறவன் பொருட்டும்
அபயதீஷ மாணம்-அபயம் அளிப்பதில் தீக்ஷை கொண்டு இருக்கின்ற
த்வாம் அபி அபாஸ்ய –தேவரீரையும் விட்டு விட்டு
விஸ்ரம்ப விவேக ரேகாத்–நம்பிக்கையும் நல் அறிவும் இல்லாமையினால்
அஹம் அஹம்பவாமி–அடியேன் அஹம்பாவத்தை அடைந்து இருக்கிறேன் –
அபயப்ரதான தீஷிதராய் இருந்தும் விசுவாச ஞானம் இல்லாமையால் ஸ்வதந்திரம் அடித்து திரியா நின்றேன் –

ஸக்ருத் சரண் அடைந்தாரையும் ரஷிக்க விரதம் கொண்டுள்ளாய் -விசுவாச லேசமும் இல்லாமல்
தியாக உபாதேயங்களையும் அறியாமல் அஹம்பாவத்துடன் திரிகிறேன்
இப்படி அபராத பூயமே எனக்கு உண்டு என்று சொன்னீர் -இதுக்களுக்கு பயப்பட வேண்டாதபடி அன்றோ நீர் சரணம் புகுந்தது –
ஒரு கால் நான் உனக்கு அடிமை -என் காரியத்துக்கு நீயே கடவை என்று துணிந்து இருந்தவனுக்கு சகல பய அபஹாரத்தில்
தீஷிதனாய் இருக்க குறை என் என்று பெரிய பெருமாள் திரு உள்ளமாய்
அழகிது தேவர் இடத்தில் உபாயத்வ அத்யாவஸ்யமும் சேஷித்வ ஞானமும் எனக்கு உண்டாகில் –
அது இல்லாமையால் ஸ்வரூப உபாயங்களில் ஸ்வ தந்திரனாய் பயப்படுகிறேன் என்கிறார் —

—————————

தவ பர அஹம் அகாரிஷி தார்மிகை சரணம் இதி அபி வாசம் உதைரிரம்
இதி ச சாக்ஷி கயன் இதம் அத்ய மாம் குரு பரம் தவ ரங்க துரந்தர—102-

ரங்க துரந்தர
அஹம்-அடியேன்
தார்மிகை–தார்மிஷ்டர்களான ஆச்சார்யர்களினால்
இங்கு எம்பெருமானார் விவஷிதம் -நமக்காக அன்றோ பங்குனி உத்தரத்தில் சேர்த்தியில் சரணம் அடைந்து
கத்ய த்ரயம் அருளிச் செய்தார்
தவ பர அகாரிஷி –தேவரீருடைய பாரமாக செய்யப் பட்டேன்
சரணம் இதி அபி வாசம் உதைரிரம்–சரணம் என்கிற சொல்லையும் வாய் விட்டுச் சொன்னேன்
இதி இதம் -என்கிற இதனை
ச சாக்ஷி கயன் –பிரமாணமாகக் கொண்டு
அத்ய மாம் குரு பரம் தவ -இன்று அடியேனை தேவரீர் பொறுப்பாக செய்து கொண்டு அருள வேணும் –
எம்பெருமானாருடைய ப்ரபத்தியில் அடியேனும் அந்தர் பூதன் என்று திரு உள்ளம் கொண்டு
அடியேன் வாய் வார்த்தையாக சரணம் என்று சொன்னதையே பிரமாணமாக பற்றாசாகக் கொண்டு
கைக் கொண்டு அருள வேணும் –

ஆச்சார்யர்களாலே திருத்தி உனக்கு ஆளாகும்படி ஆக்கப்பட்டு சரணம் புகுந்தேன்
இத்தையே பற்றாசாக அடியேனை ரக்ஷித்துக் கைக்கொண்டு அருள வேணும் –
இப்படி எனக்கு அத்யாவசிய ஞானம் இல்லையே யாகிலும் -ஸ்வ சம்பந்த பர்யந்த உஜ்ஜீவன காமராய் தார்மிகரான-
பரம தர்மத்தில் நிஷ்டரான -பூர்வாச்சார்யர்களால் தம் பிரபத்தி பலத்தால் அகிஞ்சனனும் அநந்ய கதியுமான அடியேன்
சர்வ சரண்யரான தேவருக்கு பரணீயனாகப் பண்ணப் பட்டு அடியேனும் அவர்கள் பாசுரமான சரணம் என்றத்தை
அநு கரிக்கையாலும் இத்தைப் பிரமாணமாகக் கொண்டு தேவர் அடியேனையும் பரணீயனாக அங்கீ கரிக்க வேணும் -என்கிறார் –

————-

தயா அந்யேஷாம் துக்க அப்ர ஸஹ நம் அநந்ய அசி சகலை
தயாளு த்வம் நாத ப்ரணமத் அபராதாந் அவிதுஷ
ஷமா தே ரெங்க இந்தோ பவதி ந தராம் நாத ந தமாம்
தவ ஓவ்தார்யம் யஸ்மாத் தவ விபவம் அர்த்திஸ்வம் அமதா–103-

ரெங்க இந்தோ
தயா அந்யேஷாம் துக்க அப்ர ஸஹ நம் -தயையாவது பிறருடைய துயரத்தை ஸஹித்து இருக்க நாட்டாமை யாகும்
த்வம் அநந்ய அசி சகலை–தேவரீரோ என்னில் எல்லோரோடும் வேறுபடாதவராக இரா நின்றீர்
பிறர் என்று சொல்ல விஷயமே இல்லையே தேவர் இடத்தில் -எல்லார் இடமும் தேவரீர் அபின்னராகவே இருப்பதால்
அத தயாளு ந –ஆதலால் தயை உடையீர் அல்லர்
ப்ரணமத் அபராதாந் அவிதுஷ தே -பக்தர்களின் அபராதங்களை அறியாது இருக்கும் தேவரீருக்கு -அவிஞ்ஞாதா அன்றோ -தேவர்
ஷமா தே பவதி ந தராம்–பொறுமையானது இருக்க பராசக்தி இல்லை
யஸ்மாத் தவ விபவம் –யாதொரு காரணத்தால் தேவரீருடைய செல்வத்தை
அர்த்திஸ்வம்- அமதா-யாசகர்களான பக்தர்களின் சொத்தாக எண்ணி இருக்கின்றீரோ
அதனால்
ந பவதி தமாம் தவ ஓவ்தார்யம் –தேவரீருக்கு உதாரத்வம் இருப்பதற்கு பிரசக்தியும் இல்லை
ஆபாத ப்ரதீதியில் நிந்தை போலே தோன்றினாலும் ஸ்துதி யாகவே பர்யவசிக்கும்
எல்லாரையும் உடலாகக் கொண்டு இருப்பவன் -அடியார் குற்றங்களைக் காணாக் கண் இட்டு இருப்பவன் –
யாசகர்களையும் உதாரர்கள் என்பவன் அன்றோ

தாம் பிரார்த்தித்த ஸ்வ ரக்ஷகத்வ உபயோகிகளான தயா ஷாந்தி ஓவ்தார்யாதிகள்
பிராமண ப்ரதிபன்னமான சரீரத்தோடும் அபராத அதர்சன ஹேது ஸ்நேஹ ரூப வாத்சல்யத்தோடும் தம்முடைமை அனைத்தும்
பக்தானாம் -என்றபடி சங்கல்பத்தோடும் கூடியதாய் ஆஸ்ரித விஷயத்தில் ஸ்வ ரஸ வாஹிகள் ஆகையால்
லௌகீகருக்கு உண்டான தாயாதிகள் போல் இன்றிக்கே அதி விலக்ஷணங்கள் என்று வெளிட்டு அருள திரு உள்ளம் பற்றி
அநன்யர் ஆகையால் தயை இல்லை
குற்றங்களை அறியாமல் இருக்கிறாய் அதனால் -ஷமா-இல்லை என்னலாம்-
உனது சர்வமும் அடியார்களுக்கே என்றே இருப்பதால் உதார குணம் இல்லை என்னலாம்
தயை பிறந்த இடத்தில் ஷமையாய் அது பிறந்த இடத்தில் ஓவ்தாரமாய் –ஹேது த்ரயத்தையும் சொன்னபடி
குணம் வெளிப்பட காரணம் இல்லை என்றால் குணம் இல்லை என்னலாமே என்றவாறு
புண்யவான்களோடே பாபிஷ்டரோடு வாசியற தன்னில் ஸ்நாநம் பண்ணும் அவரை ஸ்வர்க்கம் ஏற்றி வைக்கும்
கங்கை யுடைய மஹாத்ம்யத்தை வர்ணிக்க இழிந்து நிந்திக்குமா போலே நிந்தா ஸ்துதி பண்ணுகிறார் இதில்

——————-

குண துங்க தயா ரங்க பதே ப்ருச நிம் நம் இமம் ஜனம் உந்நமய
யத் அபேஷ்யம் அபேக்ஷிது அஸ்ய ஹி தத் பரிபூர்ணம் ஈஸிதுஸ் ஈஸ்வர -104-

ரங்க பதே
ப்ருச நிம் நம் இமம் ஜனம் –மிகவும் பள்ளமான இவ்வடியேனை
தவ குண துங்க தயா உந்நமய–தேவரீருடைய திருக் குணங்களின் மீட்டினால் நிரப்பி அருள வேணும் –
அபேக்ஷிது அஸ்ய–யாசகனான இவ்வடியேனுக்கு
யத் அபேஷ்யம் –எது விருப்பமோ
ஹி தத் பரிபூர்ணம் ஈஸிதுஸ் ஈஸ்வர–அதை நிறைவேற்றுவது அன்றோ ஈஸ்வரனுக்கு ஈஸ்வரத்வம் ஆகும்

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–48 —

உனது கல்யாண குண பூர்த்தி எனது தண்மையின் தாழ்ச்சியை நிரப்பி உனது
ஸர்வேஸ்வரத்வம் நிலை பெறட்டும்-
இப்படி தாயாதி குண பூர்த்திக்கும் சர்வேஸ்வரத்துக்கும் தேவருக்கு மேல் எல்லை இல்லாதாப் போலே
குண ஹீனதைக்கும் தயநதைக்கும் எனக்கு மேல் எல்லை இல்லாமையால் இந்த விதி நிர்மிதமான
அந்வயத்தை விட்டுக் கூடாதே அடியேனை ரக்ஷித்து பரி பாலனம் பண்ணி அருள வேணும்
லோகத்தில் தயாவானான சர்வேஸ்வரனுக்கு சர்வேஸ்வரத்வமாவது தயநீயனுடைய அபேக்ஷிதம்
பூர்ணம் பண்ணி அன்றோ என்கிறார் –

—————–

த்வம் மீந பாநீய நயேந கர்ம தீ பக்தி வைராக்ய ஜூஷு பிபர்ஷி
ரங்கேச மாம் பாசி மிதம்பஸம் யத் பாநீய சாலம் மருபுஷு தத் ஸ்யாத் –105-

ஹே ரங்கேச
த்வம் மீந பாநீய நயேந –தேவரீர் மீனுக்குத் தண்ணீர் வார்ப்பது போலே
கர்ம தீ பக்தி வைராக்ய ஜூஷு பிபர்ஷி–கர்ம ஞான பக்தி பிரபத்தி யோக நிஷ்டர்களை பரிபாலிக்கின்றீர்
மாம் மிதம்பஸம் அகிஞ்சனான அடியேனை
பாசியத்-ரஷித்து அருளுவீராகில்
பாநீய சாலம் மருபுஷு தத் ஸ்யாத்-அவ்வருள் பாலை வனங்களில் தண்ணீர் பந்தல் வைத்தது போலே ஆகும் அன்றோ

உபாசகர்களை ரக்ஷிப்பது மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போன்றதாகும் –
என்னை ரக்ஷிப்பது பாலைவனத்தில் தண்ணீர் பாய்ச்சுவது போலே அன்றோ –
தாயாதி குண பூர்னரான தேவர் நித்ய சம்சாரியில் தலைவனாய் தயநீயனான என்னை நித்ய ஸூரி களோடு
ஒரு கோவையாக்கி தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே வேணும் என்று கீழே அருளிச் செய்தீர்
நாம் அது செய்யும் போது சர்வ முக்தி பிரசங்க பரிகாரமாக கர்ம ஞான பக்தி பிரபத்திகளில் ஏதேனும் ஓன்று இருக்க வேண்டும் –
அது இல்லாமல் செய்தால் குற்றம் அன்றோ என்று ஸ்ரீ பெரிய பெருமாள் திரு உள்ளமாக
ஒன்றை வ்யாஜீகரித்துச் செய்யில் குற்றம் ஒழியா நிர் வ்யாஜமாக உபகரிக்கை குற்றம் ஆகாதே -குணமேயாம் என்னும் அத்தை
தேவர் கர்ம ஞான பக்தி பிரபத்தி நிஷ்டருக்கு அருளுவது மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போலே ரக்ஷித்து அருளுகிறது –
ஸ்ரீ கோயிலிலே நித்ய சந்நிதி பண்ணுகை முதல் இல்லாத அடியேனை ரக்ஷித்து அருளுமது
ஜலம் இல்லாத பிரதேசத்தில் தண்ணீர் சாலை வைக்குமா போலே என்று அருளிச் செய்து
ஸ்ரீ த்வயார்த்தமான இப் பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–ஸ்லோகங்கள்-1-50-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —

May 13, 2020

ஸ்ரீ பராசர பட்டர் திருக் கோஷ்ட்டியூரில் இருந்து ஸ்ரீ ரெங்கம் திரும்பி வரும் போது திருக் காவேரி தொடக்கமாக
ஸ்ரீ ரெங்கத்தை வருணிக்க படி எழுந்து அருளினார்
பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள்
உத்தர சதகம் -105-ஸ்லோகங்கள்

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே-

பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய பூர்வ வாக்ய விவரணம்
உத்தர சதகம் –105-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய உத்தர வாக்ய விவரணம் –

———-

பூர்வ சதகத்தாலே -பூர்வ கண்டார்த்தத்தை -பூர்வாச்சார்ய பரம்பரா அநு சந்தான பூர்வகமாக
அனுசந்தித்து அருளினார் கீழே –
மேல் உத்தர சாதகத்தாலே உத்தர கண்டார்த்தமான ப்ராப்யத்தை அனுசந்திக்கைக்காக
அது சர்வ ஸ்மாத் பரனுக்கே உள்ளது ஓன்று ஆகையால் அத்தை பரக்க வ்யவஸ்தாபிக்கக் கோலி-

ஸ்ரீ த்வய உத்தர கண்ட -ப்ராப்யத்வம் -ஸ்ரீமந் நாராயணனே சர்வ சேஷி என்று நிரூபித்து
அது பிரமாணம் அதீனம் ஆகையால் அத்தை ஸ்ரீ பெரிய பெருமாள் நிர்ஹேதுக கிருபையால்
ஸ்வரூப நிரூபக திருக் கல்யாண குணங்களையும் நிரூபித்த ஸ்வரூப விசேஷண திருக் கல்யாண குணங்களையும்
அவதார சேஷ்டிதங்களையும் அனுபவித்து இனியராகிறார் –

பெரு விளைக்கைப் போலே பிரகாசிக்க அத்தாலே பாக்யாதிகர் சத் அசத் விபாகம் பண்ணி அனுபவிக்க –
அது இல்லாதார் விட்டில்கள் போலே விருத்த பிரதிபத்தி பண்ணி நசிக்கிறார்கள் என்கிறார் முதல் அடியில்

காருணிகனான பெரிய பெருமாள் அஞ்ஞானம் இருளை போக்கவும் த்யாஜ்ய உபாதேயங்களை விவேகிக்கவும்
சாஸ்திரமான விளைக்கை அளித்தான் -புண்யம் செய்தவர்கள் அந்த விளக்கை கொண்டு அவனை அறிந்து கொள்ள
விவேகம் அற்றவர்கள் வீட்டில் பூச்சி போலே அந்த விளக்கில் மடிகின்றனர் —
முரணாக அர்த்தம் செய்து வீண் வாதம் செய்கிறார்

ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–1-

காருணிகா ஈச-பேர் அருளாளனான எம் பெருமான் -கிருபா விஸிஷ்ட ஸ்வ தந்த்ரன் –
கிருபாவாளனாகிலும் ஸ்வ தந்த்ரன் இல்லாத அன்று நினைத்தபடி கார்யம் செய்யப் போகாது –
கேவலம் ஸ்வ தந்த்ரனாக இருந்தாலும்-சம்சார மோஷன்கள் இரண்டுக்கும் பொதுவாக இருப்பதால்
சேதன உஜ்ஜீவன அர்த்தமான கிருஷிக்கு உறுப்பாக்காதே –
ஆனபின்பு கிருபையும் ஸ்வ தந்த்ரமுமான வேஷமே கிருஷிக்கு ஹேதுவாகும் –
அன்றிக்கே
ஈசன் -என்று ஸ்வாமியைச் சொல்லி பிராப்தம் -நம்முடையவன் என்று அபிமானதுடன் கூடி
பர துக்க அஸஹிஷ்ணுத்வ கிருபையும் சேர்ந்தே கிருஷிக்கு ஹேதுவாகும் –
ஹர்த்தும் தமஸ் -அஞ்ஞானம் ஆகிற இருளை நீக்கிக் கொள்ளவும்
சத் அஸதீ விவேக்தும் ச -உள்ளது illathu என்னும்படியான நன்மை தீமை களை ஆராய்ந்து உணர்வதற்கும்
மாநம் ப்ரதீபம் இவ ததாதி-திரு விளக்கு போன்ற ஸாஸ்த்ர பிரமாணத்தை கொடுத்து அருளுகின்றார் –
மாநம் -பிரமாணம் -வேதம் என்றபடி –
மறையாய் விரிந்த விளக்கு -துளக்கமில் விளக்கு -அகாரம் வாசக வாஸ்ய சம்பந்தத்தால் எம்பெருமானைச் சொல்லும்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பகமும் சொல் பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவருக்கும்
பிறருக்கும் நீர்மையினால் அருள் செய்து அருளினான்
தேந அவ லோக்ய க்ருதிநஸ் -பாக்கியசாலிகள் அந்த திரு விளக்கைக் கொண்டு அந்த எம்பெருமானை கண்டு அறிந்து
நாத யமுனா யதிவராதிகள்
பரி புஞ்ஜதே -அனுபவிக்கப் பெறுகிறார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–கருவிலே திருவில்லாத சில அவிவிகேகிகளோ என்றால்
அந்தத் திரு விளக்கில் வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து சாகிறார்கள் –

காருணிகா-தயாளுவான
ஈச மாநம்-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஹர்த்தும் தமஸ்-அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்
சத் அஸதீ விவேக்தும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்
ப்ரதீபம் இவ ததாதி-பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் –
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே–பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து
ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி-சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில்
வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் –

—————–

வேத பாஹ்யர்–ஜைனாதிகள் குத்ருஷ்டிகள் –கபிலாதிகள்–துர்வாதங்கள் –
உன்னை அடையும் மார்க்கத்துக்கு தடைகள் என்று மனு ஸ்ம்ருதி சொல்லுமே-

யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய அர்ஹத் ஆதே வேதேஷு யா காச்ச குத்ருஷ்டய தா
ஆகஸ் க்ருதாம் ரங்க நிதே த்வத் அத்வனி அந்தம் கரண்ய ஸ்ம்ருதவான் மநு தத் –2-

ஹே ரங்க நிதே–வாரீர் திருவரங்கச் செல்வனாரே –
அர்ஹத் ஆதே வேத பாஹ்யா-ஜைனாதிகளுடைய வேதங்களுக்கு புறம்பான
யா ஸ்ம்ருதவான்– யாவை சில ஸ்ம்ருதிகள் இருக்கின்றனவே
வேதேஷு-வேதங்களுக்கு உள்ளே
யா காச்ச குத்ருஷ்டய தா ஸ்ம்ருதய-குத்ஸிதமான த்ருஷ்ட்டியை உடைய யாவை சில ஸ்ம்ருதிகள் இருக்கின்றனவோ
ஆகஸ் க்ருதாம்–பாபிகளான அந்த வேத பாஹ்யர் வேத குத்ருஷ்டிகளினுடைய
தா -அப்படிப்பட்ட ஸ்ம்ருதிகள் எல்லாம்
த்வத் அத்வனி–தன்னைப் பெறும் வழியாகிய வைதிக மார்க்கத்தில்
அந்தம் கரண்ய–மோகத்தை விளைவிப்பவனாம்
மநு தத் ஸ்ம்ருதவாந்-என்னும் விஷயத்தை மனு மஹரிஷியானவர் தம்முடைய ஸ்ம்ருதியில் சொல்லி வைத்தார் –
மனு மகரிஷி யாது ஓன்று சொன்னாரோ அதுவே பேஷஜம் -மருந்து

யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய அர்ஹத் -ஜைனாதிகளுடைய யாவை சில
ஆதே வேதேஷு -வேத விருத்தங்களான
யா காச்ச குத்ருஷ்டய தா-வேதங்களுக்கும் யாவை விபரீத போதகங்களான
ஆகஸ் க்ருதாம் ரங்க நிதே த்வத் அத்வனி–அந்த ஸ்ம்ருதிகள் அபராதிகளுக்கு தேவரீருடைய வழி
விஷயத்தில் தெரியாமையைப் பண்ண சாதனங்கள் ஆகின்றன
அந்தம் கரண்ய ஸ்ம்ருதவான் மநு தத் –-அந்த அர்த்தத்தை மனு ஸ்ம்ருதியில் காணலாம்

—————–

மேலே எட்டு ஸ்லோகங்களால் இவை அங்கயேதங்கள் என்று அருளிச் செய்கிறார்
பாஹ்யர்கள் பிரத்யக்ஷமானவற்றையே இல்லை என்பர் -தூர்வாதிகள் -வேதத்துக்கு புறம்பான கருத்தை
துர்வாதத்தால் சாதிப்பார் -வைதிகர்கள் இவர்களை புறக்கணிப்பர்-

ப்ரத்யக்ஷ ப்ரமதன பஸ்யதோ ஹரத்வாத் நிர்த்தோஷ சுருதி விமதேச்ச பாஹ்ய வர்த்ம
துஸ்தர்க்க ப்ரபவதயா ச வக்த்ரு தோஷ ஸ்ப்ருஷ்ட்யாச ப்ரஜஹதி ரங்க விந்த வ்ருத்தா –3-

ஹே ரங்க விந்த -கோயிலிலே நித்ய வாசம் செய்து அருளும் பெருமானே
வ்ருத்தா-வைதிக வ்ருத்தர்கள்
பாஹ்ய வர்த்ம-வேத பாஹ்யரின் வழியை
ப்ரஜஹதி-விட்டு ஒழிகின்றனர்
ஏன் என்றால்
ப்ரத்யக்ஷ ப்ரமதன -கண்ணால் கண்ட விஷயத்தை இல்லை செய்வதாகிற
பஸ்யதோ ஹரத்வாத் -ப்ரத்யக்ஷ ஸுவ்ர்யத்தாலும்
முன்பு எந்த வஸ்துவை நான் அனுபவித்தேனோ அதுவே இது என்கிற ப்ரத்யாபிஞ்ஞான ரூபமான ப்ரத்யக்ஷ
பிரமாணத்தை இல்லை செய்தார்கள் என்பது உணரத் தக்கது
நிர்த்தோஷ சுருதி விமதேச்ச -குற்றம் அற்ற பிரமாணங்களை மாறு பட்டு இருப்பதாலும்
துஸ்தர்க்க ப்ரபவதயா ச–குதர்க்க சித்தமாகையாலும் -தர்க்கம் -நியாயம் -நியாயங்களைக் கொண்டே அர்த்த சிஷை பண்ணுவது –
வக்த்ரு தோஷ ஸ்ப்ருஷ்ட்யாச–வக்தாக்களின் பிரமாதம் முதலிய தோஷ சம்பந்தத்தாலும்
பிரமம் -இரண்டு வகை -ஒன்றை மற்று ஒன்றாகவும் -விபரீத ஞானம் —
ஒன்றில் உள்ள குணங்களை மாறாடி நினைக்கையும் -அன்யதா ஞானம்
பிரமாதம் -பிசகிப் போகை –கவனக் குறைவு
விப்ரலிப்ஸை -பிறரை வஞ்சிப்பதே நோக்கம்
இப்படிப்பட்ட தோஷங்கள் நிரம்பி இருக்கும் பாஹ்ய நூல்கள் வைதீகர்களால் வெறுக்கப் படுமே –

ரங்க விந்த வ்ருத்தா –ஞான விருத்தங்கள்
ப்ரத்யக்ஷ ப்ரமதன பஸ்யதோ ஹரத்வாத் -வேத பாஹ்யனுடைய மார்க்கத்தை பிரத்யக்ஷ சித்தத்தை இல்லை
செய்கையாலே வந்த ப்ரத்யக்ஷ ஸுவ்ர்யத்தாலும்
நிர்த்தோஷ சுருதி விமதேச்ச பாஹ்ய வர்த்ம-துஸ்தர்க்க ப்ரபவதயா-பவ்ருஷேயத்வாதி தோஷ ரஹிதமான
சுருதி விரோதத்தாலும் குதர்க்க சித்தம் ஆகையாலும்
ச வக்த்ரு தோஷ ஸ்ப்ருஷ்ட்யாச –வக்த்தாக்களுடைய ப்ரமாதி தோஷ சம்பந்தத்தாலும்
ப்ரஜஹதி -நன்றாக த்யஜிக்கிறார்கள் –

————————-

உடல் -இது -காட்டும் படி -அவயவங்களுடன் உள்ளது –
ஜீவாத்மா -அஹம் சப்தம் -இந்த்ரியங்களால் அறிய முடியாதே
அவிவேகிகள்–சாருவாகர் போல்வார் தேகமே ஆத்மா என்பர் –
சாஸ்திரம் மூலமே உண்மையை அறியலாம்-

அவயவிதயா இதம் குர்வாணை பஹி கரணை வபு நிரவயவக அஹங்கார அர்ஹ புமாந் கரண அதிக
ஸ்புரதி ஹி ஜனா ப்ரத்யாசத்தே இமவ் ந விவிஞ்சதே தத் அதிகுருதாம் சாஸ்திரம் ரெங்கேச தே பரலோகினி -4-

ஹே ரெங்கேச
வபு -தேகமானது
அவயவிதயா -அவயவங்களுடன் கூடியதாகையாலே
இதம் குர்வாணை -இதம் என்று விஷயீ கரிக்கின்ற
பஹி கரணை –பாஹ்ய இந்த்ரியங்களால்
ஸ்புரதி–ஜீவாத்மாவுக்கு ஆதேயமாயும் பிரகாரமாயும் நியாம்யமாயும் தார்யமாய் தோற்றுகின்றது
நிரவயவக புமாந் -அவயவம் அற்ற ஜீவாத்மாவானவன்
கரண அதிக-பாஹ்ய இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாதவனாய்க் கொண்டு
அஹங்கார அர்ஹ -அஹம் என்கிற ப்ரதீதிக்கு அர்ஹனாய்
ஸ்புரதி-விளங்குகிறான்
இமவ்-இந்த தேஹத்தையும் ஆத்மாவையும்
ப்ரத்யாசத்தே -பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி இருக்கை யாகிற சேர்க்கையின் உறுதியினால்
ஜனா–அவிவிவேகிகளான ஜனங்கள்
சார்வாகன் போல்வார் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருப்பார் போல்வார் –
ந விவிஞ்சதே–பகுத்து அறிவது இல்லை –
தத் தே சாஸ்திரம்–ஆகையினால் தேவருடைய ஆஜ்ஞா ரூபமான வேத சாஸ்திரமானது –
பரலோகினி -தேகம் போலே இந்த லோகத்தோடு உரு மாய்ந்து போவது அன்றிக்கே பர லோக பிராப்தி
யோக்யனான ஜீவாத்மாவின் இடத்தில்
அதிகுருதாம் -பிரமாணம் ஆயிடுக –
ஆத்ம ஸத்பாவம் இல்லை என்றால் ஸ்வர்க்காதி லோகங்களின் பிராப்தியும் அதற்கு சாதனங்களாக சொல்லும்
சுருதி வாக்யங்களுக்கும் அர்த்தம் இல்லாமல் போகுமே -பாதித அர்த்தங்களாகவே ஒழியு மே –

அவயவிதயா இதம் குர்வாணை பஹி கரணை வபு–தேகமானது ச அவயவம் ஆகையால் இதம் என்று
விஷயீ கரியா நிற்கிற பாஹ்ய இந்த்ரியங்களாலே ஆதேயமாயும் பிரகாரமாயும் விளங்குகிறது
நிரவயவக அஹங்கார அர்ஹ புமாந் கரண அதிக ஸ்புரதி ஹி -நிரவயவனான ஆத்மாவானவன்
பாஹ்ய கரணங்களுக்கு அ விஷயனாய்க் கொண்டு அஹம் என்று வியவகார அர்ஹனாய் விளங்குகின்றான்
ஜனா ப்ரத்யாசத்தே இமவ் ந விவிஞ்சதே -தேக ஆத்மாக்களை பிண்ட அக்னிகளுக்கு உண்டான
சம்சரக்க விசேஷத்தால் அவிவிவேகிகள் வேறாக அறிகின்றிலர் –
தத் அதிகுருதாம் சாஸ்திரம் ரெங்கேச தே பரலோகினி -ஆகையால் தேவரீருடைய சுருதி
பரலோக யோக்யனான ஆத்மாவின் இடத்தில் அதிகரிக்கலாம் –

———

வேதங்கள் காதுகளுக்கு பிரத்யக்ஷம் -அர்த்தங்கள் அந்தக்கரணம் -சித்தம் புத்தி மனம் அஹங்காரம் -இவற்றுக்கு ப்ரத்யக்ஷம்
வேதங்களால் கூறப்படும் தர்மம் அதர்மம் ஈஸ்வரன் தேவதைகள் -இவை ப்ரத்யக்ஷத்தால் பாதிப்பு அடைவது இல்லை
சாருவாகனுக்கும் ஸ்ருதிகளே ப்ரத்யக்ஷ பிரமாணம் யோகத்தால் தெளிந்த புத்தி கொண்டு வேதார்த்தங்களை அறியலாம்-

ப்ரத்யஷா சுருதி அர்த்த தீ ச ந ததா தோஷா தத் அர்த்த புந
தர்ம அதர்ம பர அவா ஈஸ்வர முகா ப்ரத்யக்ஷ பாத்ய ந ச
தத் சார்வாக மதே அபி ரங்க ரமண ப்ரத்யக்ஷ வத் சா ப்ரமா
யோக உந்மிலீ ததீ தத் அர்த்தம் அதவா ப்ரத்யக்ஷம் ஈஷேத ச –5-

ப்ரத்யஷா சுருதி அர்த்த தீ ச-வேதமானது செவிக்கு ப்ரத்யக்ஷமாயும் அந்த வேதங்களின் அர்த்த ஞானமும்
அந்தக் கரணத்துக்கு ப்ரத்யக்ஷமாயும் இரா நின்றன –
கண்ணைப் போலவே காதும் இந்திரியம் அன்றோ –
ந ததா தோஷாஸ் -மனிதரால் செய்யப்படுவதால் வந்த தோஷமும் -பிரமம் விப்ரலம்பம் -பிரமாதம் –
போன்றவை -இல்லாதவை வேதங்கள்
தத் அர்த்த புந–தர்ம அதர்ம பர அவா ஈஸ்வர முகா –அந்த வேதத்தின் பொருளான -தர்மங்கள் என்ன
அதர்மங்கள் என்ன சர்வேஸ்வரேஸ்வரன் என்ன அவர ஈஸ்வரர்கள்-ப்ரஹ்மாதிகள் என்ன இவை முதனாவையும்
ப்ரத்யக்ஷ பாத்ய ந ச-ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கப் படுவது இல்லை
ஹே ரங்க ரமண
தத் சார்வாக மதே அபி -ஆகையினால் சாருவாக மதத்திலும்
ப்ரத்யக்ஷ வத் சா ப்ரமா–ப்ரத்யக்ஷ பிரமாணத்தோடே ஒப்ப பிரமாணம் ஆகும்
அதவா–அன்றிக்கே
ச -அந்த சாருவாகன்
யோக உந்மிலீ ததீ சந் -யோகத்தினால் விகசித்த புத்தி உடையவனாய்க் கொண்டு -அகக் கண் மலரப் பெற்றால்
தத் அர்த்தம்–கீழ்ச் சொன்ன அந்த வேதார்த்தங்களை
ப்ரத்யக்ஷம் ஈஷேத –ப்ரத்யக்ஷமாகவே காணக் கடவன் –

ப்ரத்யஷா சுருதி அர்த்த தீ ச ந ததா தோஷா தத் அர்த்த புந-வேதமானது ப்ரத்யக்ஷம் -அதனுடைய அர்த்த ஞானமும்
ப்ரத்யக்ஷ என்ற அநு ஷங்கம் -ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கப் படாதவை –
தர்ம அதர்ம பர அவா ஈஸ்வர முகா ப்ரத்யக்ஷ பாத்ய ந ச-அவ்வாறு வேத அர்த்தமான தர்மமும் அதர்மம் என்ன
பரமேஸ்வரன் என்ன அவர ஈஸ்வரனான ப்ரஹ்மாதிகள் என்ன இது முதலானதும் ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கப் படாதவை –
தத் சார்வாக மதே அபி ரங்க ரமண ப்ரத்யக்ஷ வத் சா ப்ரமா–ஆகையால் சாருவாக மதத்திலும் அந்த சுருதியானது
ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தோடே சத்ருசமான பிரமாணம்
யோக உந்மிலீ ததீ தத் அர்த்தம் அதவா ப்ரத்யக்ஷம் ஈஷேத ச –அன்றிக்கே ப்ரத்யக்ஷமே பிரமாணம் என்கிற நிர்பந்தத்தில்
யோக அப்யாஸத்தால் விகசித்த புத்தி யுடையவ சேதனன் வேதத்தின் அர்த்தத்தை ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பான்

——————-

சர்வ சூன்யவாதி நிரசனம் -அனைத்தும் இல்லை இப்போதும் இல்லை எப்போதும் இல்லை -என்பர்-

ந சத் அசத் உபயம் வா ந உபயஸ்மாத் பஹிர் வா
ஜகத் இதி ந கிலைகாம் கோடிம் ஆடீ கதே தத்
இதி ந்ருபதி சர்வம் சர்விகாத நிஷேதந்
வரத ஸூக தபாஸ சோரலாவம் விவால்ய–6-

ஹே வரத
ஜகத்-காண்கின்ற இந்த ஜகத்தானது
ந சத் அசத்–சத்தும் இல்லை -அசத்தும் இல்லை –
உத்பத்தி விநாசங்கள் காண்பதால் சத் இல்லை -கண்ணால் காண்பதால் முயல் கொம்பு மலடி மகன் போல அசத்தும் இல்லையே
உபயம் வா ந–இரு படிப்பட்டதும் அல்ல -ஒரே வஸ்து இரண்டு விருத்த தன்மைகளை கொள்ள முடியாதே
உபயஸ்மாத் பஹிர் வா-இரு படிப் பட்டதின் புறம்பானதும் அல்ல –
இதி ந கிலைகாம் கோடிம்–இவ்விதமாக -நான்கு கோடிகளில் ஒரு வகையான கோடியையும்-
ஆடீ கதே தத்- அந்த ஜகத்தானது அடைகின்றது இல்லை
இதி–என்று இங்கனே
ந்ருபதி யதா ததா -ஒரு அதிஷ்டானமும் இன்றிக்கே
சர்வம் சர்விகாத நிஷேதந்-சர்வம் நாஸ்தி -சர்வம் நாஸ்தி என்றே சொல்லிக் கொண்டே சர்வ சூன்ய வாதம் பண்ணுகிற
சா திஷ்டா நிஷேதம் -என்பது அது இங்கே இப்பொழுது இல்லை -கால தேசங்களை முன்னிட்டு நிஷேப்பித்து–
அப்படி இல்லாமல் இப்படி நிஷேபிப்பது சர்வ சூன்ய வாதம் –
ஸூக தபாஸ -குத்ஸிதனான புத்தன்–பரம நீசனான ஸூகதன் –
சோரலாவம் விவால்ய-திருடன் வெட்ட தக்கவைத்து போலே வெட்டத் தக்கவன் –

ந சத் அசத் உபயம் வா ந உபயஸ்மாத் பஹிர் வா ஜகத் இதி –ஜகத்தானது சத்தாகவும் அன்று -சத்தாகவும் அன்று –
உபய ஆகாரமாயும் உபய ரூபிக்கும் வேறுபட்டதும் ஆகையால்
ந கிலைகாம் கோடிம் ஆடீ கதே தத்
இதி ந்ருபதி சர்வம் சர்விகாத நிஷேதந்–அந்த ஜகத்தானது நான்கு ஆகாரங்களில் ஒன்றும் அடைகின்றது அல்ல அன்றோ –
வரத ஸூக தபாஸ சோரலாவம் விவால்ய–இப்படி அதிகரணாதி ரூபமான உபாதி இல்லாமையால் குத்ஸினனான
புத்தன் சோரனைப் போல் என்ற படி -நன்றாக சேதிக்கப்படுபவன் –

———————

அனைத்தும் சூன்யம் என்றால் இப்படி சொன்ன வார்த்தையும் சூன்யம் ஆகுமே
நாஸ்தி என்று சொல்லும் சூன்ய வாதம் பொருந்தாதே –
வேதங்களே பிரமாணம் ஆகும் என்றவாறு

ப்ரதீதி சேத் இஷ்டா ந நிகில நிஷேத யதி ந க
நிஷேத்தாதோ ந இஷ்டா நிருபதி நிஷேத சதுபதவ்
நிஷேத அந்யத் ஸித்த்யேத் வரத கட பங்கே சகலவத்
ப்ரமா ஸூந்யே பக்ஷே சுருதி அபி மதே அஸ்மின் விஜயதாம் -7-

ஹே வரத
ப்ரதீதி–சர்வம் நாஸ்தி என்னும் ப்ரதீதியானது
சேத் இஷ்டா-உண்மை என்று கொள்ளப் பட்டால்
ந நிகில நிஷேத-சர்வ வஸ்துக்களும் நாஸ்தி என்று கொள்ளப் பட மாட்டாது
யதி ந -அப்படி அந்த ஒரேதீதி உண்மை என்று கொள்ளப் படா விடில்
நிஷேத்தாதோ க -ஜகத்தை இல்லை செய்பவர் யார் -ஒருவனும் இல்லை –
அத நிருபதி நிஷேத–ஆகையால் வெறுமனே நாஸ்தி என்கிற நிஷேதமானது –
ந இஷ்டா–கொள்ளத் தக்கது அன்று –
சதுபதவ் நிஷேத–ஒரு உபாதியை முன்னிட்டு நிஷேதிக்கும் அளவில்
அந்யத் ஸித்த்யேத்–வேறு ஒரு பொருள் சித்திக்கப் படும்
எப்படிப் போலே என்றால்
கட பங்கே சகலவத்–குடம் உடைந்து போனாலும் அதன் கண்டங்கள் சித்திக்குமா போலே
அபி மதே அஸ்மிந் -இந்த புத்த மதத்திலும்
ப்ரமா ஸூந்யே பக்ஷே–சர்வ சூன்யத்வ பிரமையையும் கொள்ளாத பக்ஷத்தில்
சுருதி விஜயதாம்-வேத ப்ரமாணமே சிறப்புற்று ஓங்குக –
சர்வம் சூன்யம் என்கிற பக்ஷத்தில் இப்படி சொல்வதும் சர்வத்துக்குள்ளே அடங்கும் –
ஏதேனும் ஒன்றை உண்மை என்று கொள்ளில் சர்வம் சூன்யம் என்னக் கூடாதே
இப்படி சர்வ சூன்ய வாதம் வேர் அறுக்கப் பட்டது –

ப்ரதீதி–சர்வம் நாஸ்தீதி என்கிற ப்ரதீதி யானது
சேத் இஷ்டா ந நிகில நிஷேத யதி
ந க நிஷேத்தாதோ–அங்கீ கரிக்கப் பட்டதாகில் ஸமஸ்த வஸ்துவுக்கும் இல்லாமை சித்தியாது –
பிரத்யதி அங்கீ கரிக்கப் படா விடில் நிஷேதிப்பவர் எவர் -ஒருவரும் இல்லை என்றபடி
ந இஷ்டா நிருபதி நிஷேத சதுபதவ் நிஷேத அந்யத் ஸித்த்யேத்-ஆகையால் உபாதி ரஹிதமான நிஷேதம்
வெறும் நாஸ்தி அங்கீ கரிக்கப் படுமது அன்று –
உபாதி உடைத்தான அத்ரி நிஷேதத்தில் கடத்தவம் நாஸ்தி போலே சகலத்வமும் சித்திக்கும் –
வரத கட பங்கே சகலவத்ப்ரமா ஸூந்யே பக்ஷே சுருதி அபி மதே அஸ்மின் விஜயதாம் -புத்த சம்பந்தியான நான்கிலும்
மாத்யாத்மீக சர்வ ஸூந்ய பஷத்திலும் வேதமே உத்க்ருஷ்ட பிரமாணமாகக் கடவது –
ஞான விருத்தராலே அங்கீ க்ருதமான அர்த்தத்தில் வேதமே பிராமண தமமாகக் கடவது –

——————

யோகாசாரம் ஒன்றுமே இல்லை என்கிறான் -ஸுவ்த்ராந்திகன் அநு மான ஹேது என்பான் –
வைபாஷிகன் க்ஷணம் தோறும் அழிக்கூடியது என்பான் -மூவரையும் நிரசிக்கிறார்

யோகாசார ஜகத் அபலபதி அத்ர ஸுவ்த்ராந்திக தத்
தீ வைசித்ர்யாத் அநு மிதி பதம் வக்தி வைபாஷிகஸ்து
ப்ரத்யக்ஷம் தத் க்ஷணி கயதி தே ரெங்க நாத த்ரய அபி
ஞான ஆத்மத்வ க்ஷண பிதுரத சஷதே தாந் ஷிபாமே –8-

ஹே ரெங்க நாத
அத்ர–இந்த ஸுகத சமயத்தில்
யோகாசார–யோகாசாரன் என்கிற புத்த வகுப்பினன்
ஜகத் அபலபதி–ஜகத்தை இல்லை செய்கிறான் –
ஸுவ்த்ராந்திக–ஸுவ்ராந்திகன் என்னும் வகுப்பினன்
தத்-அந்த ஜகத்தை
தீ வைசித்ர்யாத்–பலவகைப்பட்ட ப்ரதிதிகள் உண்டாவது காரணமாக
அநு மிதி பதம் வக்தி-அநு மான கோசாரம் என்கிறான் –
வைபாஷிகஸ்து-வை பாஷிக வகுப்பினானோ என்னில்
ப்ரத்யக்ஷம் தத் க்ஷணி கயதி -ப்ரத்யக்ஷமான அந்த ஜகத்தை க்ஷணிகம் என்கிறான் –
தே த்ரய அபி-ஆக கீழே சொன்ன மூன்று வகுப்பினரும்
ஞான ஆத்மத்வ க்ஷண பிதுரத -ஞானமே ஆத்மா என்றும் க்ஷண பங்குரம் என்றும்
வேறு பட்ட ஞாதா இல்லை என்பர்
சஷதே -சொல்லுகிறார்கள்
தாந் ஷிபாமே-மேல் ஸ்லோகத்தில் அவர்களை நிரசிக்கிறோம் –

யோகாசார ஜகத் அபலபதி-யோகாசார்யன் ஜகத்தே இல்லை என்பான்
அத்ர ஸுவ்த்ராந்திக தத் தீ வைசித்ர்யாத் அநு மிதி பதம் வக்தி–ஸூவ்ராந்திகன் அநு மான க்ராஹ்யமாக
அந்த ஜகத்தைச் சொல்கிறான்
வைபாஷிகஸ்து ப்ரத்யக்ஷம் தத் க்ஷணி கயதி தே-வைபாஷிகன் ப்ரத்யக்ஷமான ஜகத்தை க்ஷணிகம் என்பான்
ரெங்க நாத த்ரய அபி ஞான ஆத்மத்வ க்ஷண பிதுரத சஷதே தாந் ஷிபாமே –மூவரையும் நிரசிக்கிறோம்

——————-

க்ஷணம் தோறும் அழியும் என்னும் வாதிகள் நிரசனம்
இதில் ஜகத்து ஷணிகம்–தத் விஷய ஞானமும் க்ஷணிகம் -அதே ஆத்மா என்கிற பக்ஷமும் நிரசனம்-
ஒரு காலத்தில் கடாதி அனுபவ ஞானம் உண்டாகில் அது அப்போதே நசிக்கையாலும்-தஜ்ஜன்ய ஸம்ஸ்காரமும்
ஷணத்வ அம்சமாகையாலும் காலாந்தரத்தில் ஹேது இல்லாமையால் ச கடம் என்கிற ஸ்மரணமும் ஏக காலத்தில்
இருக்கிறதை காலாந்தரத்தில் இருக்கிறதாக அவகாஹிக்கிற சாயம் என்கிற ப்ரத்யபிஜ்ஜையும்
உண்டாகக் கூடாமையாலே -இதுவும் நிரசனம் என்கிறார்

ஜகத் பங்குரம் பங்குரா புத்தி ஆத்மா இதி
அசத் வேத்ரு அபாவே ததா வேத்ய வித்த்யோ
க்ஷண த்வம்ஸதச் ஸ்ம்ருதி ப்ரத்யபிஞ்ஞா
தரித்திரம் ஜகத் ஸ்யாத் இதம் ரெங்க சந்த்ர –9-

ஹே ரெங்க சந்த்ர
ஜகத் பங்குரம்-ஜகத்தானது க்ஷணிகமானது
பங்குரா புத்தி ஆத்மா–க்ஷணிகமான ஞானமே ஆத்மா
இதி அசத்–என்கிற இது பிசகு
ஏன் என்றால் –
வேத்ரு அபாவே–ஞானத்தில் காட்டில் வேறுபட்ட ஞாதா இல்லையானால்
ததா–அப்படியே
வேத்ய வித்த்யோ க்ஷண த்வம்ஸதச்–அறியப் படும் பொருள்கள் என்ன -அறிவு என்ன -இவை க்ஷணிகம் என்னில்
இதம் ஜகத் -இந்த ஜகத்தானது –
ஸ்ம்ருதி ப்ரத்யபிஞ்ஞா தரித்திரம் ஸ்யாத் –ஸ்ம்ருதியும் ப்ரத்யபிஜ்ஜையும் அற்றதாகும்–

ஜகத் பங்குரம் பங்குரா புத்தி ஆத்மா இதி–பிரபஞ்சமானது க்ஷணிகம் -க்ஷணிகமான ஞானமே
ஆத்ம சப்தார்த்தம் என்று சொல்லுகை நல்லது அன்று –
யாதொரு ஹேதுவால்
அசத் வேத்ரு அபாவே ததா வேத்ய வித்த்யோ-ஞான வியாதிரிக்த ஞாதா இல்லா விட்டால்
அப்படி ஞான ஜேயங்களுக்கு
க்ஷண த்வம்ஸதச் ஸ்ம்ருதி ப்ரத்யபிஞ்ஞா தரித்திரம் ஜகத் ஸ்யாத் இதம் ரெங்க சந்த்ர –க்ஷணிகத்வம் ஆனாலும்
அதுகளாலே சூன்யமாக வேண்டி வரும்-

—————-

அஹம் இதம் அபி வேத்மி இதி ஆத்ம வித்த்யோ விபேதே
ஸ்புரதி யதி தத் ஐக்யம் பாஹ்யம் அபி ஏகம் அஸ்து
பிரமிதி அபி ம்ருஷா ஸ்யாத் மேய மித்யாத்வ வாதே
யதி ததபி சஹேரந் தீர்க்கம் அஸ்மாத் மத ஆயுஸ்–10-

அஹம் இதம் அபி வேத்மி இதி -நான் இதை அறிகிறேன் என்று
ஆத்ம வித்த்யோ –ஆத்மாவுக்கும் ஞானத்துக்கும்
விபேதே ஸ்புரதி–வேற்றுமை தோற்றா நிற்க
யதி தத் ஐக்யம் -அவற்றுக்கு ஒற்றுமை சொல்வதானால்
பாஹ்யம் அபி -அவ்விரண்டிலும் வேறு பட்டதாய் ஞான விஷயம் ஆகின்ற
கட படாதிகள் ஆகிற பஹிர் விஷயமும்
ஏகம் அஸ்து–ஞானத்தில் காட்டில் வேறு படாது இருக்கட்டும்
மேய மித்யாத்வ வாதே–ப்ரமேயம் எல்லாம் பொய் என்னும் பக்ஷத்தில்
பிரமிதி அபி –ப்ரமேயம் எல்லாம் பொய் என்கிற அந்த ப்ரதீதியும்
ம்ருஷா ஸ்யாத்–பொய்யாகும்
யதி ததபி -அத்தனையும்
சஹேரந் அபி -அங்கீ கரிப்பர்கள் ஆகில்
தீர்க்கம் அஸ்மாத் மத ஆயுஸ்–நமது மதத்தின் ஆயுஸ்ஸூ நீண்டதாகும் -ஜீவித்திடுக –
ஞானமே ஆத்மா வேறே ஞாதா இல்லை என்கிற வாதத்தை நன்கு நிராகரித்து அருளுகிறார் –
நான் இதை அறிகிறேன் -என்பதில் மூன்றுமே உண்டே -ஞானம் ஞாதா ஜேயம்-

நான் இதை அறிகிறேன் -ஆத்மா வேறே அறிவு வேறே தெளிவு -ஒன்றே என்றால் அறியப்படும் விஷயத்தை
மட்டும் எதற்கு விலக்க வேண்டும் -அனைத்தும் பொய் என்றால் அறியப்படும் வஸ்துவும் பொய் என்றதாகும்
அறியப்படும் வஸ்து உண்மை என்றால் அனைத்தும் பொய் என்றவாதம் தள்ளுபடி ஆகும் —
ஆகவே நமது மதம் தீர்க்கமான ஆயுஸ் கொண்டதாகும்-

நான் இத்தை அறிகிறேன் என்று நான் என்கிற அஹம் அர்த்தத்துக்கும் -அறிகிறேன் என்கிற அறிவுக்கும் பேதம் —
ஆதார ஆதேய பாவ பேதம் -நன்றாக பிரகாசிக்க அதுகளுக்கு அபேதம் சொன்னால்
இத்தை என்று இதம் சப்தார்த்தமான ஜேயத்தோடும் அபேதம் பிரசங்கிக்கும் –
யோகாசர மதத்தில் ஜேயம் மித்யை யாகையாலே அது வராதே என்னில் ஞானம் ஸ்வ ஜேயமாகவும்
பர ஜேயமாகவும் இருக்கையாலே அதுவும் மித்யை யாக வேண்டி வரும் –
மாத்யாத்மீக மத அவலம்பனம் பண்ணி ஞானத்துக்கும் மித்யாத்வத்தை ஸஹிக்கில்
பாதக பிராமண அபாவத்தால் நம்முடைய சித்தாந்தம் தீர்க்க ஜீவியாகக் குறையில்லை என்கிறார் –

———————–

ஏதத் ராமாஸ்திரம் தளயது கலி ப்ரஹ்ம மீமாம்சகாந் ச
ஞாப்த்தி ப்ரஹ்ம ஏதத் ஜ்வலத் அபி நிஜ அவித்யயா பம்ப்ரமீதீ
தஸ்ய ப்ராந்தீம் தாம் ஸ்லத்யதி ஜித அத்வைத வித்ய து ஜீவ
யத் யத் த்ருஸ்யம் விததம் இதி யே ஞாபயாஞ்சக்ருஸ் அஞ்ஞா –11-

ப்ரஹ்ம-பர ப்ரஹ்மமானது
ஞாப்த்தி–நிர்விசேஷ சின் மாத்ர ஸ்வரூபமானது
ஏதத் ஜ்வலத் அபி–இப்படிப்பட்ட ப்ரஹ்மமானது ஸ்வயம் பிரகாசமாய் இருந்தாலும்
நிஜ அவித்யயா–தனது அவித்யையினால்
பம்ப்ரமீதீ-பிரமிக்கின்றது
ஜீவஸ்து–ஜீவாத்மாவோ என்றால்
ஜீவ அத்வைத வித்ய து–தத் த்வமஸி இத்யாதி வாக்ய ஜனக ஞானத்தினால் அத்வைத ஞானத்தை
அப்யஸிக்கப் பெற்றவனாய்க் கொண்டு
தஸ்ய தாம் ப்ராந்தீம் ஸ்லத்யதி-அந்த பர ப்ரஹ்மத்தினுடைய அந்த பிரமத்தை நீக்குகிறான்
யத் யத் த்ருஸ்யம்–எது எது கண்ணால் காணக் கூடியதோ
தத் விததம்-அது எல்லாம் பொய்யானது
இதி யே அஞ்ஞா -என்று இவ்வண்ணமாக எந்த மூடர்கள்
ஞாபயாஞ்சக்ருஸ்-வெளியிட்டார்களோ
தாந் -அந்த
கலி-ப்ரஹ்ம- மீமாம்சகாந் ச-கலி புருஷ பிராயராய் ப்ரஹ்ம விசாரம் பண்ணப் புகுந்த-
பிரசன்ன புத்தர் எனப்படும் – சங்கராதிகளையும்
ராமாஸ்திரம் தளயது ஏதத்–ராம அஸ்திரம் போலே தப்ப ஒண்ணாத தூஷணம் ஆகிற
கீழ்ச் சொன்ன பிரசங்கமானது தண்டிக்கத் தக்கது –
எல்லாமே பொய் என்றால் சர்வம் மித்யா என்கிற இந்த ப்ரதீதியாவது உண்மையா –
ஞான மாத்திரம் ப்ரஹ்மம்-அத்வைத ஞானம் எப்போது ஞான கோசாரமானதோ அப்போது தான் பந்த மோக்ஷம் –
கண்ணில் காண்பது சர்வமும் பொய் என்கிற வாதம் நிரசனம்

நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மம் -அத்வைத வாத கண்டனம் —
ராம பானம் போன்ற இந்த ஸ்லோகங்கள் இவர்கள் வாதங்களை முடித்தே விடும்-

சத்யம் ஞானாதி வாக்யத்தாலே -ஞான மாத்ர ஸ்வரூபமான ப்ரஹ்மம் -ஸ்வ மாத்ர பிரகாசமானாலும்-
தன்னுடைய அவித்யா பலத்தால் ஞாத்ரு ஜேயங்களையும் அனுபவிக்கிறது -அவனுபவ ரூபமான பிராந்தியை –
தத்வமஸி இத்யாதி வாக்யங்களால் பிறந்த த்வைத அத்வைத வித்யா அப்யாஸத்தாலே ஜீவன் நசிப்பிக்கிறான் –
யாதொன்று த்ருஸ்யமோ அது எல்லாம் மித்யை என்று ப்ரத்யக்ஷத்தி பிராமண கதி அறியாதே
கலி காலத்துக்கு அடுத்த ப்ரஹ்ம மீமாம்சகரான பிரசன்ன புத்த சித்தாந்தத்திலும் துர்வாரம் என்கிறார் –
ராம சரம் போலே துர்வாரமான பராஜிதர் ஆக்கக் கடவது –

—————

அங்கீ க்ருத்ய து சப்த பங்கி குஸ்ருதம் ஸ்யாத் அஸ்தி நாஸ்தி ஆத்மிகாம்
விஸ்வம் த்வத் விபவம் ஜகத் ஜிநமதே நைகாந்தம் ஆசஷதே
பின்னா பின்னம் இதம் ததா ஜகதுஷே வந்த்யா மம அம்பா இதிவத்
நூத்ந ப்ரஹ்ம விதே ரஹ பரம் இதம் ரெங்கேந்திர தே சஷதாம் –12-

ஹே ரெங்கேந்திர
ஸ்யாத் அஸ்தி நாஸ்தி ஆத்மிகாம்-ஸ்யாத் அஸ்தி ஸ்யாந் நாஸ்தி -இத்யாதி ரூபமான
சப்த பங்கி குஸ்ருதம் அங்கீ க்ருத்ய -சப்த பங்கி என்னும் துர்மார்க்கத்தை அங்கீ கரித்து
ஸ்யாத் அஸ்தி -ஸ்யாந் நாஸ்தி-ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச -ஸ்யாத் வக்தவ்யம் -ஸ்யாத் அஸ்தி ச வக்தவ்யம் –
ஸ்யாந் நாஸ்தி ச வக்தவ்யம் -ஸ்யாத் அஸ்தி ஸ்யாந் நாஸ்தி ச வக்தவ்யம் –
த்வத் விபவம் -தேவருடைய விபூதியான
விஸ்வம் ஜகத்–சர்வ ஜகத்தையும்
ஜிநமதே–ஜைன மதத்திலே
நைகாந்தம் ஆசஷதே–அநேக அந்தமாக சொல்லுகின்றனர் –
தே ததா -அந்த ஜைனர்கள் அப்படியே
வந்த்யா மம அம்பா இதிவத்–என் தாய் மலடி என்பது போலே வ்யாஹதமாக
இதம் பின்னா பின்னம் ஜகதுஷே இவ் வுலகத்தை ப்ரஹ்மத்தோடே பின்னமாகவும் அ பின்னமாகவும் சொன்ன
நூத்ந ப்ரஹ்ம விதே –நூதன ப்ரஹ்ம வித்தான ம்ருஷா வாதி ஏக தேசியின் பொருட்டு
அபூர்வ ப்ரஹ்ம ஞானி என்று பரிஹஸித்த படி
ரஹஸ்யா பரம் இதம் சஷதாம்-இந்த சிறந்த பரம ரஹஸ்யார்த்தத்தை உபதேசிக்கட்டும்
நம்மிடம் சொல்வதும் நாம் மறு மாற்றம் சொல்வதும் ஊமையரோடு செவிடன் வார்த்தை யாகுமே
அவர்களே பரஸ்பரம் பேசிக் கொள்ளட்டும் என்றபடி –

ஜைன வாத நிரசனம்
சப்த பங்கி வாதம் -தங்களைப் போலே -என்னுடைய மாதா வந்த்யை என்னுமா போலே
இந்த ஜகத்து ப்ரஹ்மத்தோடு பின்னமாயும் அபின்னமாயும் இருக்கும் என்று சொல்லுகிற
நூதன ப்ரஹ்ம வித்துப் பொருட்டு இந்த வசதஸ்யமான விருத்த பாஷணத்தை சொல்லக் கடவர்கள் என்கிறார் –

——————

கண சர சரணா ஷவ் பிஷமாணவ் குதர்க்கை
சுருதி சிரசி ஸூ பிக்ஷம் த்வத் ஜகத் காரணத்வம்
அணுஷு வி பரிணாம்ய வ்யோம பூர்வம்ச கார்யம்
தவ பவத் அநபேஷம் ரெங்க பர்த்த ப்ருவாதே –13-

ஹே ரெங்க பர்த்த
கண சர சரணா ஷவ் -கணாதரும் கௌதமரும் -நையாயிகர் வைசேஷிகர் போன்ற குத்ருஷ்டிகள்
கௌதமர் நியாய சாஸ்திரத்தை இயற்றினர் -இவர் காலில் கண்ணை உடையவர் ஆகையால் சரணாஷார் எனப்படுபவர் –
அஷ பாதர் என்பதும் இவரையே –
கணாத மகரிஷி வைசேஷிக தரிசன பிரதிஷ்டாபகர் –
இருவரும் தார்க்கிகள் எனப்படுபவர்கள் –
காரண வஸ்துவின் குணமும் கார்ய வஸ்துவின் குணமும் ஒத்து இருக்க வேண்டும் –
ஒவ்வாது இருந்தால் காரணத்வம் சொல்லப் போகாது என்று குதர்க்க வாதம் பண்ணுபவர்கள் –
சுருதி சிரசி ஸூ-வேதாந்தத்தில்
ஸூ பிக்ஷம்-குறைவின்றி விளங்குவதான
த்வத் ஜகத் காரணத்வம்-தேவரீர் சகலத்துக்கும் உபாதான காரணம் என்னுமத்தை
பிஷமாணவ் குதர்க்கை–குத்ஸித தர்க்கங்களாலே -பிச்சை எடுத்து பறித்தவர்களாய்க் கொண்டு -துர்பாக்கிய சாலிகள் என்றவாறு
அணுஷு வி பரிணாம்ய –பரம அணுக்களில் மாறாடி ஏறிட்டு
ஆகாசாதிகளை ஈஸ்வர கார்யங்களாகக் கொள்ளாதே ஸ்வ தந்த்ரமாகவும் நித்யமாகவும் சொல்பவர்கள்
தவ கார்யம்–தேவரீருடைய காரியத்தை -உம்மிடத்தில் நின்றும் உண்டாவதாக வ்யோம பூர்வம்ச–ஆகாசாதிகளையும்
தவ பவத் அநபேஷம் — ப்ருவாதே –உம்முடைய அபேக்ஷை அற்றதாகச் சொல்லுகின்றனர்

கௌதமர் ஏற்படுத்திய -நையாயிகர்–நியாய மதம் இதுவே – —-
கணாதர் ஏற்படுத்திய வைசேஷிக மதம் –பரம அணுவே காரணம் போன்ற -வாதங்கள் நிரசனம்
பிஷமாணவ்–ஐஸ்வரம் விஞ்சி இருக்க பிக்ஷை எடுப்பது போலே உயர்ந்த உபநிஷத்துக்கள் முழங்கியபடி இருக்க
தவறான வாதங்கள் பின் செல்பவர் –

நையாயிக வைசேஷியர் -தேவருக்கே சகல கார்ய உபாதானதவம் சம்ருத்தமாய்–ஸூலபமாய் இருக்க
கார்ய காரண ச லக்ஷன்யா அந்யதா அநு பபாத்யாதி சுருதி விருத்தம் தர்க்கங்களாலே பிச்சை புகுவாரைப் போலே
தத் தத் பூத உபாதா நத்வங்களைத் தத் தத் பரம அணுக்களில் ஸ்வீ கரித்து
தேவரீருடைய காரியமாகச் சொல்லப்பட்ட வாகாசாதியை நித்யமாகவும் சொல்லுகிறார்கள் என்கிறார் –
உஞ்ச போஜியான காணாதரும் பாதாஷியான கௌதமரும் -இந்த மதங்களுக்கு ஹேது
தோஷமும் –சுருதி விரோதமும் -தூஷணமும் -என்கிறார் –

—————–

வேதே கர்த்ரு ஆதி அபவாத் பலவதி ஹி நயை தவத் முகை நீயமாநே
தத் மூலத்வேந மாநம் ததிதரத் அகிலம் ஜாயதே ரங்க தாமந்
தஸ்மாத் சாங்க்யம் ச யோகம் சபசுபதிமதம் குத்ரசித் பஞ்சராத்ரம்
ஸர்வத்ர ஏவ பிரமாணம் தத் இதம் அவகதம் பஞ்சமாத் ஏவ வேதாத் –14-

ஹே ரங்க தாமந்
வேதே கர்த்ரு ஆதி அபவாத் பலவதி–தனக்குக் கர்த்தா முதலானவை இல்லாமையினால் பிரபல பிரமாணமான வேதமானது
ஹி நயை தவத் முகை நீயமாநே–சதி– நியாயங்களாலே உன் பரமாகவே ஒருங்க விடப்படும் அளவில்
ததிதரத் அகிலம் -அந்த வாதம் ஒழிந்த மற்ற நூல்கள் எல்லாம்
தத் மூலத்வேந -அந்த வேதத்தையே மூலமாகக் கொண்டுள்ளவை என்னும் காரணத்தினால்
மாநம் ஜாயதே–பிரமாணம் ஆகிறது
தஸ்மாத் -ஆகையினால்
சாங்க்யம் ச யோகம் –சபசுபதிமதம் –யோக சாஸ்திரத்தோடு கூடியதும் பாசுபத மதத்தோடு கூடியதுமான சாங்க்ய ஆகமமானது
கபில மகரிஷியால் பிரவர்த்திக்கப்பட்ட சாங்க்ய தர்மமும் –
ஹிரண்யகர்ப்பரால் பிரவர்த்திக்கப் பட்ட யோகதந்த்ரமும்
பசுபதி பிரணீதரமான பாசுபத ஆகமும்
குத்ரசித் பிரமாணம்-சிறு பான்மை பிரமாணம் ஆகிறது –
பஞ்சராத்ரம் ஸர்வத்ர ஏவ பிரமாணம்–ஸ்ரீ பாஞ்ச ராத்ரமோ என்னில் முழுதும் பிரமாணம் ஆகிறது –
தத் இதம் அவகதம் பஞ்சமாத் ஏவ வேதாத்-என்னும் இவ்விஷயம் ஐந்தாம் வேதமான ஸ்ரீ மஹாபாரதம் கொண்டே அறியலாயிற்று –
மோக்ஷ தர்மத்தில் உபசரவஸூ உபாக்யானத்தில் ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ர அவதார கிரமும்-
அதில் கூறியபடியே அனுஷ்ட்டிக்க வேண்டிய ஆவஸ்யகத்வத்தையும் விவரமாக போரப் பொலிய சொல்லிற்றே-

வேதமே பரம பிரமாணம் -யோக சாஸ்திரம் பசுபதி ஆகமம் -ஓர் அளவே பிரமாணம் –
பாஞ்சராத்மம் முழு பிரமாணம்-

அபவ்ரு ஷேயம்-சர்வ பிராமண பலம் வேதம் -சாரீரிக பிரதம அத்யாய அதிகரண நியாயங்களாலே
தேவரை பிரதான ப்ரதிபாத்யரராக யுடையவராக நயப்பிக்கப் பட்டு
அப்படி ஸ்வ தந்த்ர பிரதானமான வேதம் மூலமாகவே தத் இதர ஆகமங்கள் பிரமாணமாக வேண்டிற்று –
ஆகையால் சாங்க்ய யோக பசுபதி ஆகமங்கள் அந்த வேத அவிருத்த அம்சத்தில் பிரமாணங்கள்
பாஞ்சராத்ர ஆகமத்தில் இப்படி விருத்த அம்சம் இல்லாமையால் சகலமும் பிரமாணங்கள்
இது பக்ஷ பதித்துச் சொல்லுகிறோம் அல்லோம்-மோக்ஷ தர்மம் -உபரி சரவஸூ வியாக்யானம் –
ஸ்ரீ பாஞ்ச ராத்ர உத்பத்தியும் -தத் விஹித அனுஷ்டானம் அவசியம் அநுஷ்டேயம் என்றும் விஸ்தாரமாக சொல்லுமே –

—————–

சஞ்சஷ்டே ந ஈஸ்வரம் த்வாம் புருஷ பரிஷதி ந்யஸ்ய யத்வா ஆந்ய பர்யாத்
சாங்க்ய யோகீ ச காக்வா பிரதி பலனம் இவ ஐஸ்வர்யம் ஊஸே காயசித்
பிஷவ் சைவ ஸூ ராஜம்பவம் அபிமநுதே ரங்க ராஜ அதி ராகாத்
த்வாம் த்வாம் ஏவ அப்யதா த்வம் தநு பர விபவ வ்யூஹந ஆட்யம் பவிஷ்ணும்–15-

ஹே ரங்க ராஜ
சாங்க்ய-த்வாம் புருஷ பரிஷதி–சாங்க்யனானவன் தேவரீரை ஜீவாத்மா கோஷ்டியிலே
ந்யஸ்ய-சஞ்சஷ்டே ந ஈஸ்வரம்–வைத்து ஈஸ்வரனாக சொல்லுகின்றிலன்
யத்வா -அன்றிக்கே
ஆந்ய பர்யாத்-சஞ்சஷ்டே ந -வேறே ஒரு தாத்பர்ய விசேஷத்தால் சொல்லுகின்றிலன்
அதாவது ஈஸ்வரனைப் பற்றியே விசாரம் இல்லை இவன் பக்ஷத்தில் -என்றவாறு
யோகீ ச -யோகியே என்னில் -இவனை சேஸ்வர சாங்க்யன்-என்பர்
காயசித் காக்வா -பர்யாய விசேஷத்தாலே
இவ ஐஸ்வர்யம் பிரதி பலனம் ஊஸே–ஐஸ்வர்யத்தை ப்ரதிபாலனம் போலே உபாதி அடியாக சொல்லி வைத்தான் –
ஈச்வரத்வம் யோக ஜன்யம் என்பான்
சைவ–பாசுபதம்
பிஷவ் –பிக்ஷை உண்ணியான ருத்ரன் இடத்தில்
அதி ராகாத்-பக்ஷபாத மிகுதியினால்
ஸூ ராஜம்பவம் அபிமநுதே –ஈஸ்வரத்தை அபி மானிக்கிறான்
த்வம்-ஸ்ரீ பாஞ்ச ராத்ர வக்தாவான தேவரீர்
பர விபவ வ்யூஹந ஆட்யம் பவிஷ்ணும்-பர வ்யூஹ விபவ ரூபங்களாலே சம்பன்னரானேன்
த்வாம் -தேவரீரை
த்வாம் ஏவ–தேவரீராகவே -ஸ்வரூப ரூபாதிகளில் ஒருவித மாறுபாடும் இன்றிக்கே
அப்யதா த்வம் தநு–சொல்லி வைத்தீர் அன்றோ –
அந்தர்யாமித்வம் உப லக்ஷண சித்தம் -அர்ச்சை ஸ்ரீ பெரிய பெருமாள் இடம் அருளிச் செய்வதால் அர்த்தாத சித்தம் –
நிரீஸ்வர சாணக்கியன் பிரகிருதி புருஷ இரண்டு மாத்திரம் -நொண்டியும் குருடனும் கூடி வழி நடக்குமா போலே என்பான் –
ஈஸ்வர விஷயமான சுருதிகள் வேறே தாத்பர்யம் என்பான் –

சாங்க்யர் உன்னை சேதனன்-என்பர் -பதஞ்சலி உனக்கு ஐஸ்வர்யம் இல்லை என்பர் –
சைவர்கள் ருத்ரனை ஈசன் என்பர் –
வ்யூஹ விபவங்களால் நீயே சர்வேஸ்வரன் என்று காட்டி அருளினாய்

சாங்க்ய பாசுபத ஆகமங்களில் எந்த அம்சம் சுருதி விரோதம் என்று காட்டி அருளுகிறார் –
சாணக்கியர் தேவரீரை சேதனர் கோஷ்ட்டியில் அந்தர்பவித்து ஈச்வரத்வத்தை அங்கீ கரிக்கவில்லை –
கபிலர் எங்கேயாவது சொன்னாலும் பிரகிருதி ஆத்ம விவேகத்தில் இதன் பரமாகையாலே அதில் தாத்பர்யம் இல்லை –
யோக ஸாஸ்த்ர ப்ரவர்த்தரான பதஞ்சலியும் யோக அப்யாஸத்தில் இழிகிறவனுக்கு அதிசய கதனத்தில் தாத்பர்யத்தாலே
காம விநிர்முக்த புருஷன் இடத்தில் ஐஸ்வர்யத்தை பிரதிபலனம் போலே சொல்லுகிறான்-
சைவன் அபிமானத்தாலே பிண்டியார் இத்யாதிப்படியே பிஷுவான ருத்ரன் இடத்தில் ஐஸ்வர்யத்தை அங்கீ கரிக்கிறான் –
சுருதியோ -தேவரீர் பர வ்யூஹ விபாவாதிகளாலே ஸ்வரூப ரூப குண விபூதாதிகளாலே சம்பன்னராக அருளிச் செய்தது அன்றோ

—————-

இதி மோஹந வர்த்மநா த்வயா அபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே
அதி வைதிக வர்ம வர்மிதாநாம் மனிதாஹே குத்ருஸாம் கிம் ஈச வர்த்ம–16-

ஹே ஈச
இதி -இவ்வண்ணமாக
மோஹந வர்த்மநா –பிறரை மயக்கும் வழியாலே
த்வயா -கள்ள வேடத்தைக் கொண்ட தேவரீராலேயே
அபி க்ரதிதம் –ஏற்படுத்தப் பட்டதாயினும்
பாஹ்ய மதம் -வேத பாஹ்ய மதத்தை
த்ருணாய மந்யே–த்ருணமாகவே நினைக்கிறேன்
கள்ள வேடத்தைக் கொண்டு புரம் புக்கவாறும்-என்றும்
மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பலவாகி -என்றும் உண்டே
அத-அன்றியும்
வைதிக வர்ம வர்மிதாநாம்–வைதிகர்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிற
வர்ம-சொக்காய் -வர்மித -அதனால் மறைக்கப் பட்ட என்றபடி –
மனிதாஹே குத்ருஸாம் கிம் வர்த்ம–குத்ருஷ்டிகளின் வழியை நெஞ்சிலும் நினைக்கப் போகிறேனோ –

நீயே பாக்ய குத்ருஷ்டிகளை உண்டாக்கினாயே ஆகிலும் உள்ளத்தாலும் நினையேன் –

கள்ள வேடத்தைக் கொண்டு போய் -என்றபடி -மோஹ விக்ரஹத்தை கொண்டு –
தேவரால் -நிர்ணயிக்கப் பட்ட புத்த மதத்தை த்ருணமாக எண்ணுகிறேன்
இப்படி இருக்க வைதிகத்வ வேஷ தாரிகளான குத்ருஷ்ட்டி மார்க்கத்தை எண்ணுவேனோ -என்கிறார் –
உபேக்ஷிப்பேன் என்றபடி –

————–

சம்ஸ்காரம் பிரதி சஞ்சரேஷு நிததத் சர்க்கேஷு தத் ஸ்மாரிதம்
ரூபம் நாம ச தத்தத் அர்ஹ நிவஹே வ்யாக்ருத்ய ரஙகாஸ்பத
ஸூப்த உத்புத்த விரிஞ்ச பூர்வ ஜெகதாம் அத்யாப்ய தத்தத் ஹிதம்
ஸாஸத் ந ஸ்ம்ருத கர்த்ருகாந் வஹஸி யத் வேதா பிரமாணம் தத –17-வேதங்களே பரம பிரமாணம்-

ஹே ரஙகாஸ்பத
பிரதி சஞ்சரேஷு–பிரளயங்களில் வேதங்களை -பிரதி சஞ்சரம் என்று பிரளயத்தைச் சொன்னவாறு –
சம்ஸ்காரம்–ஸம்ஸ்கார ரூபமாகவே
நிததத் –தன் பக்கலிலே வைத்துக் கொண்டவனாகி
சர்க்கேஷு –ஸ்ருஷ்ட்டி காலங்களில்
தத் ஸ்மாரிதம்–அந்த ஸம்ஸ்காரத்தினால் நினைப்பூட்டப் பட்ட
ரூபம்–அந்த அந்த வஸ்துக்களின் ரூபத்தையும்
நாம ச -பெயரையும்
தத்தத் அர்ஹ நிவஹே –அவ்வவற்றுக்கு உரிய வஸ்து சமூகத்திலே
வ்யாக்ருத்ய–ஏற்படுத்தி
ஸூப்த உத்புத்த விரிஞ்ச பூர்வ ஜெகதாம்–தூங்கி எழுந்த பிரமன் முதலான ஜன சமூகத்துக்கு
அத்யாப்ய –அத்யயனம் பண்ணி வைத்து
தத்தத் ஹிதம் ஸாஸத் சந் –அவரவர்களுடைய நன்மையை நியமிப்பவராய்க் கொண்டு
ந ஸ்ம்ருத கர்த்ருகாந் வேதாந் –கர்த்தா இன்னார் என்று தெரியப் பெறாத வேதங்களை
வேதாந் பஹு வசனம் -அநந்தா வை வேதா -அன்றோ -இந்திரன் பரத்வாஜர் சம்வாதம் -மூன்று மலைகள் -காட்டி அருளிய வ்ருத்தாந்தம் –
வஹஸி யத் வேதா பிரமாணம் தத–தேவரீர் வஹிக்கிறீர் ஆகையால் அந்த வேதங்களே ஸ்வயம் பிரமாணம் ஆகின்றன –

பிரளய காலத்தில் வேதங்களை ஸம்ஸ்கார ரூபங்களாக தேவரீர் இடத்திலே வைத்துக் கொண்டு
ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே அந்த ஸம்ஸ்காரங்களாலே ஸ்ம்ருதங்களான தேவாதி சமஸ்தானங்களையும் –
அதுகளுக்கு வாசகங்களான நாமங்களையும் -அதுகளுக்கு யோக்யங்களான மஹதாதி பிருத்வி அந்தங்களான
அசேதனங்களிலும் ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தங்களான சேதனங்களிலும் சுருதி ஸ்ம்ருதிகள் சொல்லுகிறபடியே உண்டாக்கியும்
நித்திரை பண்ணி எழுந்தால் போலே எழுந்த ப்ரஹ்மாதிகளுக்கு ஓதுவித்தும்
விதி நிஷேதாதி ரூபமான ஹிதத்தை அநு சாசனம் பண்ணியும் -செய்து அருளுவதால்
வேதங்களை ஸ்வத பிரமானங்களாகக் குறை இல்லை

—————————

சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-

ஹே ரங்க நாத
சீஷாயாம் –சீஷாய் என்கிற வேத அங்கத்தில்
வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –
பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –
சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
முதலான சப்த சந்தஸ் ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்
கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –
கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது
ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட
நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்
புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்
தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும் இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே
தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –
விசாரிக்கின்றன -என்றவாறு
பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே
நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-

ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை /வ்யாக்ரணம் -இலக்கணம் /ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம் / கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவய் போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
உன்னையே தேடியபடி இருக்கும்
வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது

—————-

ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை
ந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக
ஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை த்வத் பத ஆப்தவ்
வேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த –19-

ஹே பகவந்
ஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே
பிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –
மனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –
ச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே
உப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை
பண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன
அந்த வேதத்தில்
பூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்
அர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே
வாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது
ஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்
த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்
தெளிய விளங்க தெரிவிப்பதனால்
த்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது
வேதை ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்
வேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று
ஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டுஜ் அன்றோ –

வேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —
அதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –
கர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன வீதியில் பர்யவசிக்கும்
உத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்
தெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-
இவ்வர்த்தத்தைதேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-

——————-

க்ரியா தத் சக்தி வா கிம் அபி தத் அபூர்வம் பித்ரு ஸூர
பிரசாத வா கர்த்து பலத இதி ரங்கேச குத்ருஸ
த்வத் அர்ச்சா இஷ்டா பூர்த்தே பலம் அபி பவத் ப்ரீதிஜம் இதி
த்ரயீ வ்ருத்தா தத்தத் விதி அபி பவத் ப்ரேரணம் –20-

ஹே ரங்கேச
க்ரியா-யாகம் முதலிய கர்மமோ
அல்லது
தத் சக்தி வா -அந்த கர்மத்தின் சக்தியோ –பாட்டர் பக்ஷம்
கிம் அபி -அநிர் வசநீயமான
தத் அபூர்வம்–அந்த கர்மத்தினால் உண்டாகும் அபூர்வமோ -ப்ரபாரர் பக்ஷம்
அல்லது
பித்ரு ஸூர பிரசாத வா –பித்ருக்கள் ஸூரர்களுடைய அனுக்ரகமோ -நவீன மீமாம்சகர் பக்ஷம்
கர்த்து பலத இதி -அந்த கர்மங்களை அனுஷ்டிப்பவனுக்கு பயம் அளிப்பவனாக ஆகின்றன என்று
குத்ருஸ ஆஹு -குத்ருஷ்டிகள் சொல்லுகிறார்கள் –
த்ரயீ வ்ருத்தா-வைதிக முதுவர்களோ என்னில்
இஷ்டா பூர்த்தே–ஜப ஹோம தானாதிகளான இஷ்டங்கள் என்ன
குளம் வெட்டுகை கோயில் காட்டுகை ஆகிய பூர்த்தங்கள் என்ன இவை
த்வத் அர்ச்சா இதி -தேவரீருடைய திரு ஆராதனம்-பகவத் கைங்கர்யமே – என்றும்
பலம் அபி–இஷ்டா பூர்த்தங்களால் உண்டாகும் பலன்களும்
பவத் ப்ரீதி ஜம் இதி–தேவரீருடைய உகப்பினாலே உண்டாமவது என்றும்
தத்தத் விதி அபி–அந்த அந்த கர்மங்களின் விதியும்
பவத் ப்ரேரணம் இதி ஆஹு –தேவரீருடைய கட்டளை என்றும் சொல்கிறார்கள் –

குத்ருஷ்டிகள் –அபூர்வம் -கல்பித்து -அவர்களை நிரசனம் –ஆஞ்ஞா ரூப கர்மங்கள் —
இஷ்டா பூர்த்தம் –ஆராதன ரூபம் -அவன் உகப்புக்காகவே தான் –
பட்டன் இப்படிக் கொள்ளாதே -யாகாதிகளாவது அவற்றின் சக்தியாவது காலாந்தரத்திலே ஸ்வர்க்காதி பிரதங்கள் என்றும்
பிரபாகரன் யாகாதிகளால் பிறக்கும் அநிர்வசனீயமான அபூர்வமே பல பிரதம் என்றும்
நவீன மீமாம்சகர் தேவதைகள் பித்ருக்கள் பிரசாதம் பல பிரதம் என்றும்
இவர்கள் ஆராதன ஆராத்ய ஸ்வரூப அநபிஞ்சைதையாலே சொல்கிறார்கள்
பிராமண சரணரான ஞான விருத்தர் ஜ்யோதிஷ்டோமாதிகளும் தடாகாதி நிர்மாணமும் தேவரீருடைய ஆராதனமும் பலன்களும்
தேவரீருடைய பிரசாதாயத்தங்கள்-யஜதேதாயாதி விதிகளும் தேவரீருடைய நியமனங்கள் என்று சொல்கிறார்கள்

————–

ஆஞ்ஞா தே ச நிமித்த நித்ய விதய ஸ்வர்க்காதி காம்யத்விதி
ச அநுஞ்ஞா சடசித்த சாஸ்த்ர வசதா உபாய அபிசார சுருதி
சர்வீ யஸ்ய ஸமஸ்த சாசிது அஹோ ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ தே
ரஷா ஆகூத நிவேதிநீ சுருதி அசவ் த்வத் நித்ய சாஸ்தி தத –21-

ஹே ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ
நிமித்த நித்ய விதய-நைமித்திக நித்ய பருமங்களைப் பற்றிய விதிகள்
ஆஞ்ஞா தே –தேவரீருடைய அதிக்ரமிக்க ஒண்ணாத கட்டளையாம்
ச -அப்படிப்பட்ட பிரசித்தமான ஸ்வர்க்காதி காம்யத்விதி–ஸ்வர்க்காதி காம பலன்களைக் குறித்துப் பிறந்த விதியானது
ச அநுஞ்ஞா -அபேக்ஷை உண்டாகில் அனுஷ்ட்டிக்கலாம் என்று அனுமதி பண்ணுகிற அநுஞ்ஞா யாகும் –
அபிசார கர்மங்களும் காம்ய கர்மங்களும் இந்த வகையில் சேரும் -க்ரமேண அவர்கள் ஸாஸ்த்ர விதி
விசுவாசம் பிறந்து முன்னேற வைத்தவை இவை என்றவாறு –
அபிசார சுருதி–சத்ருக்களைக் கொள்வதற்கு சாதனமான கார்ய விசேஷத்தை விதிக்கிற வேத பாகமானது
சடசித்த சாஸ்த்ர வசதா உபாய–வஞ்ச நெஞ்சினரையும் ஆஸ்திகர்களாக்க உபாயம் ஆகும்
சர்வீ யஸ்ய ஸமஸ்த–சர்வ லோக ஹிதராயும்
ஸமஸ்த சாசிது -சர்வ நியாமகராயும் இருக்கிற
தே -தேவரீருடைய
ரஷா ஆகூத நிவேதிநீ அசவ்-சுருதி–ரக்ஷண பாரிப்பைத் தெரிவிக்கின்ற இந்த வேதமானது
த்வத் நித்ய சாஸ்தி–தேவரீருடைய சாசுவதமான கட்டளையாகும் —

வேதங்களே உனது ஆஞ்ஞா ரூபம் -உன்னுடைய ரக்ஷகத்வாதிகளை வேதங்கள் உணர்த்தும் –
விதி நித்யம் நைமித்திகம் காம்யம் மூன்று வகைகள் -நித்யம் ராஜா ஆஜ்ஜை போலே அக்ருத்யமாம் போது பிரதி பந்தமாம் –
காம்ய விதிகள் அகரனே ப்ரத்யவாயம் இன்றிக்கே -ஸாஸ்த்ர விசுவாசமூட்டி பரம்பரையா மோக்ஷ ருசி பர்யந்தம் கூட்டிச் செல்லும்
சர்வருக்கும் ஹித பரராய் ஸமஸ்த அதிகாரிகளுக்கும் ருசி அநு குணமாக தேவரீருடைய ரக்ஷண ரூபமான
தாத்பர்யத்தை தெரிவிக்கும் ஸாஸ்த்ர ப்ரவர்த்தன மூலமான நிருபாதிக்க கிருபையை அனுசந்தித்து -எத்திறம் என்கிறார்

————

அத்ர ஆஸ்தே நிதி இதி வத் புமர்த்த பூதே
சித்த அர்த்தா அபி குண ரூப வ்ருத்த வாதா
ரெங்கேச த்வயி சகலா சமன்வயந்தே ந
உபாஸா பல விதிபி விசேஷ ஏஷாம்–22-

ஹே ரெங்கேச
சகலா-சமஸ்தமான
குண ரூப வ்ருத்த வாதா–தேவரீருடைய திருக் கல்யாண குணங்கள் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய சேஷ்டிதங்கள்
ஆகிய இவற்றைச் சொல்லும் உபநிஷத் பாகங்கள்
சித்த அர்த்தா அபி -கார்ய பரங்கள் இன்றியே சித்த பரங்கள் ஆனாலும்
புமர்த்த பூதே த்வயி–புருஷார்த்த பூதராய் இருக்கிற தேவரீர் இடத்தில்
அத்ர ஆஸ்தே நிதி இதி வத்–இங்கே நிதி இருக்கிறது என்று சொல்லுகிற சித்த பர வாக்கியம் போலே
சமன்வயந்தே –நன்கு பொருந்துகின்றன
ஏஷாம்–கீழ்ச் சொன்ன குண ரூப வ்ருத்த வாதங்களுக்கு
உபாஸா பல விதிபி-உபாசனத்தையும் பலத்தையும் ப்ரதிபாதிக்கின்ற வாக்யங்களினால்
ந விசேஷ–ஒரு அதிசயமும் இல்லை –
பூர்வ மீமாம்சகர் தான் இவற்றை பிரமாணம் என்று கொள்ளாமல் கார்ய பர சுருதி வாக்யங்களே பிரமாணம் என்பர் –
இவையும் புருஷார்த்த போதகங்களாய்க் கொண்டு உபாசன விதி வாக்கியங்களைப் போலே ஸ்வத பிரமாணங்களே –
ஜிஜ்ஞாஸ அதிகரணம் சமன்வய அதிகரணம் இரண்டாலும் இவை ஸ்தாபிக்கப் படுகின்றன

உனது கல்யாண குணங்களை விவரிக்கும் வேதங்கள் -இங்கு பெரும் புதையல் உள்ளது போன்று–
சித்த வாக்யங்களாக பன்னி உரைக்கும்
இப்படி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரயோஜனங்களான விதி வாக்யங்களுக்கு கார்ய ப்ரதயா ப்ரமண்யம் உண்டானாலும்
சித்த வஸ்து போதகங்களான சித்த வாக்யங்களுக்கு -நிரதிசய புருஷார்த்த பூதரான தேவரீருடைய
ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டித வியாபாரங்கள் இவற்றை பிரதிபாதித்து சித்த பரங்களானாலும்
இங்கே நிதி உண்டு என்கிறது போலே உபாசன தத் பலவிதாய வாக்யங்களோடே துல்ய சீலங்களாய்
அதுகளுக்கு சேஷம் அன்றிக்கே பிரமாணம் ஆகிறதுகள் என்கிறார் –

————–

சித்த பர சுருதி வாக்கியங்கள் ஸ்வத பிரமாணம் என்றார் கீழ் –
அத்விதீய ஸ்ருதிக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் இதில்
ந த்விதீயமே அத்விதீயம் என்பது தத் புருஷ சமாக்கம்
ந வித்யதே த்விதீயம் யஸ்ய -யஸ்மின் -பஹு வ்ருஹீ சமாசம் –
ப்ரஹ்மத்தோடு சம்பந்தம் இல்லாத வஸ்து இல்லை என்றவாறு
வேறானது -ஒப்பானது -மாறானது -மூன்று அர்த்தங்கள் –
இரண்டாவது இல்லை என்று கொள்ள முடியாதே -அத்விதீயம் விசேஷணம்
ப்ரஹ்மமொன்றே சத்யம் மற்றவை மித்யை பொய் என்கிற வாதம் நிரசனம்

தேஹ தேஹினி காரேண விக்ருத்ய ஜாதி குணா கர்ம ச
த்ரவ்யே நிஷ்டித ரூப புத்தி வசநா தாத்ஸ்த்யாத் ததா இதம் ஜகத்
விஸ்வம் த்வயி அபி மந்யஸே ஜகதிஷே தேந அத்விதீய தத
மாயா உபாதி விகார சங்கர கதா கா நாம ரங்கேஸ்வர –23-

ஹே ரங்கேஸ்வர
தேஹ சரீரமானது
தேஹினி –ஆத்மாவின் இடத்திலும் காரேண விக்ருத்ய–தங்கள் காரண வஸ்துவின் இடத்திலும்
கார்ய ரூபமான விகாரங்களானவை
ஜாதி குணா கர்ம ச–ஜாதியும் குணமும் கர்மமும்
த்ரவ்யே -த்ரவ்யத்தின் இடத்தில் இருந்தும் தாத்ஸ்த்யாத்–ஒருபோதும் விட்டுப் பிரியாது இருக்கும்
விசேஷணம் என்கிற காரணத்தினால்
நிஷ்டித ரூப புத்தி வசநா–ரூபத்தில் அனுபவம் வியவஹாரம் என்னும் இவை நிலைத்து இருக்கப் பெற்றுள்ளன
ததா இதம் ஜகத்–அவ்விதமாகவே இந்த எல்லா உலகத்தையும்
விஸ்வம் அபி த்வயி–எல்லா உலகத்தையும் தேவரீர் இடத்தில்
அபி மந்யஸே–நிஷ்டிபுத்தி வசனமாம் படி சங்கல்பித்து உள்ளீர்
த ரூப தேந அத்விதீய ஜகதிஷே –ஆகையால் அத்விதீயாராக சொல்லப்பட்டீர்
தத-அதனால்
மாயா உபாதி விகார சங்கர கதா கா நாம –மாயை உபாதி விகாரம் என்னும் இவற்றின்
சம்பந்தப் பேச்சானது ஏது-அது பிசகு என்றபடி –
ஆகவே
தேஹத்துக்கும் தேஹிக்கும் காரியத்துக்கும் காரணத்துக்கும் ஜாதி குண கர்மங்களுக்கும் த்ரவ்யத்துக்கும்
அப்ருதக் சித்தி நிபந்தனமாக ஐக்ய நிர்தேசம் கூடுவது போலவே
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் உண்டான ஐக்கியமும் என்றவாறு –
மாயா வாத சங்கர மதமும் -உபாதி பேதம் பாஸ்கர மதமும் –
ப்ரஹ்மமே பரிணமிக்கிறது விகார வாதம் யாதவ பிரகாச மதம் -நிரசனம்–

உடல் ஆத்மா -அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -மாயா வாதங்கள் உபாதி வாதங்கள் விகார வாதங்கள் நிலை நிற்காதே
தேவதாதி சரீரம் சரீரீ இடத்திலும் -கட படாதி விகாரங்கள் காரணத்திலும் –
கோத்வாதி ஜாதியும்–ஸூக் லாதி குணங்களும் -கமனாதி கிரியையும் – த்ரவ்யத்திலும்
அப்ருதக் சித்த சம்பந்தத்தால் பர்யசிக்குமே –
அப்படியே சர்வ ஜகத்தும் அப்ருதக் சித்த விசேஷணமாய் -பிரகாரமாய் -தேவரீர் அத்வதீயமாய் இருக்க
சங்கர பக்ஷத்தில் ப்ரஹ்மத்துக்கு மாயா சம்பந்தமும்
பாஸ்கர பக்ஷத்தில் உபாதி சம்பந்தமும்
யாதவ பிரகாச பக்ஷத்தில் விகார சம்பந்தமும் சொல்வது எதற்க்காக என்கிறார் -அசங்கதை அன்றோ -என்றபடி

—————

ஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரசன நியமன வ்யாபநை ஆத்மந தே
சேஷ அசேஷ பிரபஞ்ச வபு இதி பவத தஸ்ய ச அபேதவாதா
சர்வம் கலு ஜெகதாத்ம்யம் சகலம் இதம் அஹம் தத் த்வம் அஸி ஏவம் ஆத்யா
வ்யாக்யாதா ரங்க தாம ப்ரவண விஜயபி வைதிகை ஸார்வ பவ்மை –24-

ஹே ரங்க தாம ப்ரவண
ஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி ரஷணத்தாலும் ஸ்ருஷ்டிப்பதாலும் காரியங்களில் பிரவர்த்தனம் செய்வதாலும்
க்ரசன சமயத்தில் திரு வயிற்றினுள் வைத்து ரக்ஷிப்பதாலும்
நியமன–ஓ ஒரு வஸ்துக்குள்ளும் உள்புகுந்து நியமிப்பதாலும்
வ்யாபநை –எங்கும் வியாபிப்பதாலும் ஆத்மந தே–சர்வ ஆத்மாவாய் இருக்கின்ற தேவரீருக்கு
சேஷ –சேஷப்பட்டதான
அசேஷ பிரபஞ்ச–உலகம் முழுவதும்
வபு இதி –தேவரீருக்கு சரீரமாகா நின்றது என்கிற காரணத்தினால்
பவத தஸ்ய ச –தேவரீருக்கு அவ்வுலகத்துக்கும்
அபேதவாதா-அபேதத்தை சொல்லுமவையான
சர்வம் கலு -சர்வம் கலு இதம் ப்ரஹ்ம
ஜெகதாத்ம்யம் -ஜெகதாத்ம்யம் சர்வம்
சகலம் இதம் அஹம் -சகலம் இதம் அஹம் ச வா ஸூ தேவா
தத் த்வம் அஸி-தத் த்வம் அஸி ஸ்வேத கேதோ
ஏவம் ஆத்யா-என்று இவை முதலான பிரமாணங்கள்
வ்யாக்யாதா விஜயபி வைதிகை ஸார்வ பவ்மை -ஜயசாலிகளான வைதிக தலைவர்களினால் பொருத்தம்
உடையனவாக வியாக்யானிக்கப் பட்டன –
சாமா நாதிகரண்ய நிர்த்தேசம் உப பன்னம்

ஸ்ரீ கோயிலில் ஆதாரம் -பள்ளமடையாகக் கொண்டு -பெத்த அபேத கடக சுருதிகள் எல்லாவற்றிலும் ப்ரவணராய் –
வேதார்த்த வித்துக்களான வ்யாஸ பராசராதி மகா ரிஷிகளின் திரு உள்ளக் கருத்தை பின் சென்று
நாத யாமுன ராமானுஜ ப்ரப்ருதிகள் நிர்வாகம்
ஸமஸ்த பிரபஞ்சமும் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே தேவரீருக்கே சேஷமாய்க் கொண்டு சரீரமாய் –
சரீர வாசக சப்தம் சரீரி பர்யந்த போதகம் லோக சித்தமாகையாலே -நியாந்தாவாய் வியாபித்து ஆத்மாவான
தேவரைச் சொல்லுகிற சப்தத்தோடு பிரபஞ்ச வாசி சப்தத்துக்கு சாமா நாதி கரண்ய நிர்த்தேசம்
உப பன்னம் என்று பூர்வர்கள் நிர்வகித்தார்கள் –

———————

ச ராஜகம் அ ராஜகம் புந அநேக ராஜம் ததா
யதாபிமத ராஜகம் ஜெகதீம் ஜஜல்பு ஜடா
ஜகவ் அவச சித்ர தராதரத மத்வதர்க்க
அங்கிகா சுருதி சிதசிதீ த்வயா வரத நித்ய ராஜந் வதீ –25-

ஹே வரத
ஜடா–மூடர்கள்
இதம் ஜகத் -இந்த உலகத்தை
ச ராஜகம்–அனுமானத்தால் சித்திக்கிற ஈஸ்வரனோடு கூடியதாகவும் -நையாயிக பக்ஷம் இது –
அ ராஜகம் –ஈஸ்வரன் அற்றதாகவும்–பூர்வ மீமாம்சகர்கள் பக்ஷம்
புந அநேக ராஜம்–பல ஈஸ்வரர்களை உடைத்தாயும் -முதலாம் திரு உருவம் மூன்று என்பர் –
யதாபிமத ராஜகம் –அவரவர்களுடைய அபிமானத்துக்குத் தக்கபடி கல்பிக்கப்பட்ட ஈஸ்வரனை யுடையதாகவும்
ஜஜல்பு–பிதற்றினார்கள்
அவச சித்ர தராதரத மத்வதர்க்க அங்கிகா–பர தந்த்ரர்களுக்கே உண்டாகக் கூடிய விசித்திர தன்மை என்ன –
ஏற்றத்தாழ்வு பெற்று இருக்கும் தன்மை என்ன -இவற்றைப் பற்ற அநு கூல தர்க்கத்தைத் துணை கொண்ட
வாசம் என்றது அஸ்வ தந்த்ரன் -கர்ம-பரவசம் என்றவாறு -இவர்களுக்கு தேவ மனுஷ்யாதி வைச்சித்ரம் உண்டே
தாரா தரம் என்றது ஞான சக்த்யாதிகளில் வாசி உண்டே
சுருதி சிதசிதீ –வேதமானது சேதன அசேதனங்களை
த்வயா வரத நித்ய ராஜந் வதீ ஜகவ் –தேவரீராகிற நல்ல ஈஸ்வரனை எப்போதும் உடையவைகளாக ஓதிற்று
தர்க்கத்தாலும் சுருதியாலும் சர்வேஸ்வரவம் ஸ்தாபிதம்

நையாயிகன்-ஜகாத் நிமித்த காரண மாத்ரமான ஈஸ்வரவிஷ்டம் என்றும்
பூர்வ மீமாம்சகன் நிரீஸ்வரம் என்றும்
த்ரி மூர்த்தி சாம்யவாதி ப்ரஹ்மாதி அநேக ஈஸ்வர விசிஷ்டம் என்றும்
ஹிரண்யகர்ப்ப பாசுபத அர்த்தங்களை அபிமதரான ப்ரஹ்ம ருத்ரர்களாகிற ஈஸ்வரனோடு கூடியது என்றும் சொல்லுகிறது
சுருதி ஸ்வாரஸ்ய அநபிஜ்ஜதையாலே–
ஜகத் ஸ்வதந்த்ரமாகில் தேவ மனுஷ்யாதி வைசித்ர்யமும் – ஞான சக்த்யாதி தாரதம்யமும் கூடாது என்கிற தர்க்கத்தோடு
கூடியதாய்க் கொண்டு சித் அசித் ரூபமான ஜகத் நித்யரான தேரான நல்ல ராஜாவை யுடையது என்று
ஸ்ரோதாக்களுக்கு செவிக்கு இனியதாகச் சொல்லுகிறது -என்கிறார்

—————–

ப்ரஹ்ம ஆத்யா ஸ்ருஷ்ய வர்க்கே ப்ருகுடி படதயா உத்காடிதா ந அவதார
பிரஸ்தாவே தேந ந த்வம் ந ச தவ சத்ருஸா விஸ்வம் ஏக ஆதபத்ரம்
லஷ்மீ நேத்ரா த்வயா இதி சுருதி முனி வசனை த்வத்பரை அர்ப்பயாம
ஸ்ரீ ரெங்க அம்போதி சந்த்ர உதய ஜலம் உசிதம் வாதி கௌதஸ் குதேப்ய —26-

ஹே ஸ்ரீ ரெங்க அம்போதி சந்த்ர உதய-ஸ்ரீ ரெங்கமாகிற கடலுக்கு சந்திரன் உதித்தால் போலே
ஸம்ருத்தி அளிக்கும் பெருமானே
ப்ரஹ்ம ஆத்யா –ப்ரம்மா தொடக்கமான தேவர்கள்
ஸ்ருஷ்ய வர்க்கே ப்ருகுடி படதயா –தேவருடைய புருவ நெறிப்பிக்கு கை கட்டி காத்து இருப்பவர்கள் ஆகையால்
படைக்கப்படும் வகுப்பில்
உத்காடிதா–ஸ்பஷ்டமாக கூறப் பட்டு இருக்கிறார்கள்
அவதார பிரஸ்தாவே –ராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் சொல்லும் இடத்தில்
ந உத்காடிதா-அவர்கள் கூறப்பட்டு இருக்க வில்லை
தேந ந த்வம் –ஆகையால் அவர்கள் தேவரீர் அல்லர்
ந ச தவ சத்ருஸா –தேவரீரை ஒத்தவர்களும் அல்லர்
லஷ்மீ நேத்ரா–திரு மகள் கொழுநரான த்வயா விஸ்வம் -தேவரீரால் இவ்வுலகம் எல்லாம்
ஏக ஆதபத்ரம் இதி-அத்விதீய நாதனை உடையது என்று
த்வத்பரை–தேவரீரையே விஷயமாக உடைய
சுருதி முனி வசனை –வேதங்களையும் மகரிஷி வசனங்களையும் கொண்டு
வாதி கௌதஸ் குதேப்ய–குதர்க்க வாதிகளின் பொருட்டு
அர்ப்பயா ஜலம் உசிதம்–அவர்களுக்குத் தகுந்த தர்ப்பண ஜலத்தைத் தருகிறோம் –
தூர்வாதி பிரேதங்களுக்கு ஜலாஞ்சலி விடா நின்றோம் –

உனது புருவ நெருப்புக்கு அடங்கியே ஸ்ருஷ்ஜமான ப்ரஹ்மாதிகள் -வேதங்களில் சர்வேஸ்வரன் –
ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் நீ ஒருவனே என்பதைக் கொண்டே தவறான வாதிகளுக்கு ஏற்ற
தர்ப்பண நீரை நாங்கள் விடுகிறோம்-
ப்ரஹ்மாதிகள் -ஸ்ருஜ்ய கோடியிலே-அவதாரங்கள் அல்லர்-ராம கிருஷ்ணாதி வரிசையில் சொல்லப்படுபவர் அல்லர் –
தேவருடன் ஒத்தவர் அல்லர் –
ஸ்ரீயபதியான தேவரீர் ஸர்வேஸ்வரேஸ்வரர் -ஏக சத்ரத்தைக் கொண்ட ஒரே நியாமகன் –என்று சொல்லி
ஜிதேர்களாய் பிரேத பிராயரான வாதிகளுக்கு உசிதமாக ஜல தர்ப்பணம் பண்ணுகிறோம் என்கிறார்

———–

தோஷ உபதா அவதி சம அதி சயாந சங்க்யா
நிர்லேப மங்கல குண ஓக துகா ஷட் ஏதா
ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ
த்வாம் ரங்கேச பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி –27-

ஹே ரங்கேச
தோஷ –குற்றம் என்ன
உபதா –உபாதி என்ன
அவதி -எல்லை என்ன
சம –சத்ருச வஸ்து என்ன
அதி சயாந –மேற்பட்ட வஸ்து என்ன
சங்க்யா–எண்ணிக்கை என்ன
நிர்லேப –ஆகிய இவற்றின் சம்பந்தம் இல்லாத
மங்கல குண ஓக –கல்யாண குணங்களின் சமூகத்தை
துகா ஷட் ஏதாஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ–சுரக்கின்ற இந்த ஞானம் ஐஸ்வர்யம்
சக்தி வீர்யம் பலம் தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்
த்வாம் -தேவரீரை
பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி-ரத்னத்தை ஒலிகள் பெருமைப் படுத்துவது போல் பெருமைப் படுத்துகின்றன –
கணக் கறு நலத்தனன் -உயர்வற உயர் நலம் உடையவன் – திருக் கல்யாண குணங்களை அனுபவிக்கக் கோலி
முந்துற அவற்றுக்கு ஊற்றுவாயான இந்த ஆறு குணங்களையும் அருளிச் செய்கிறார்

ஞானம்-சர்வ காலத்திலும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத்காரம்
பலம் -உபய விபூதியையும் அநாயேசேந வஹிக்க வல்ல மிடுக்கு
ஐஸ்வர்யம் -அனைத்தையும் தன் குடைக்கீழ் அடக்கி ஆள வல்ல நியந்த்ருத்வம்
வீர்யம் -ஜகத் தாரண நியமங்களிலே சாரீரக கிலேசம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை
சக்தி -எந்த பிரதிபந்தகங்களும் முட்டுக் கட்டாதபடி எடுத்த கார்யம் தலைக்கட்ட வல்ல சாமர்த்தியம்
தேஜஸ் எதிரிகள் குடல் குழம்பும்படியான மதிப்பு -பஹு பிரயத்தன சாத்யமானவற்றை சஹகாரி நிரபேஷனாக
அல்ப ப்ரயத்னத்தாலேயே தலைக் கட்டுகை-
இவன் சம்பந்தத்தால் குணங்களுக்குப் பெருமை என்றும்
குணங்களால் இவனுக்கு பெருமை என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ-

ஞானாதி ஷட் குணங்கள் அனைத்து கல்யாண குணங்களுக்கும் பீஜம் —
ரத்தினத்துக்கு தேஜஸ் போலவே கல்யாண குணங்களும் உன்னைக் காட்டித் தருமே —

ஆக இது வரை பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக -அநு குணமாக ச உப ப்ராஹ்மண சுருதி
பிரமாணங்களைக் காட்டி அருளி
ஸ்ரீ மானான ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே சித் அசித் ஆத்மகமான ஜகத்தைக் குறித்து
காரணத்வத்தையும் ஈஸ்வரத்தையும் சமர்ப்பித்து
ஸ்ரீ த்வய உத்தரகாண்ட ஸ்ரீ மத் சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்
இதில் காரணத்வ நிர்வாஹத்தை காட்டி அருள திரு உள்ளம் பற்றி நார சப்தார்த்தங்கள் ஆகையால்
நிர் துஷ்டங்களாய் -நிருபாதிகங்களாய் -நிரவதிகங்களாய் -நிஸ் சமாப்யதிகங்களாய்-நிஸ் சங்க்யங்களாய்-
மங்களமாய் இருக்கிற தாயாதி குணங்களுக்கு மூலங்களாய் பகவச் சப்தார்த்தங்களாய்-பிரசித்தங்களான
ஞானாதி ஷட் குணங்களும் ரத்னத்தைக் காந்திகள் போலே தேவரை அலங்கரிக்கிறது -என்கிறார் –

——————–

ஞான குண ஸ்வரூப நிரூபணம் இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

யுகபத் அநிசம் அக்ஷைஸ் ஸ்வைஸ் ஸ்வதஸ் வாஷ கார்யே
நியமம் அநியமம் வா ப்ராப்ய ரங்காதி ராஜ
கரதலவத் அசேஷம் பஸ்யசி ஸ்வ பிரகாசம்
தத் அவரணம் அமோகம் ஞானம் ஆம்நாசி ஷு தே –28-

ஹே ரங்காதி ராஜ
த்வம் -தேவரீர்
அக்ஷைஸ் ஸ்வைஸ் -தனது இந்த்ரியங்களாலே யாதல்
ஸ்வதஸ் வா–இந்திரியங்களின் அபேக்ஷை இன்றியே ஸ்வயமாகவே யாதல்
அஷ கார்யே–கண் முதலிய இந்திரியங்களின் தொழிலாகிய பார்வை முதலியவற்றில்
நியமம் –ஒரு வியவஸ்தையோ
அநியமம் வா –அப்படி ஒரு விவஸ்தை ஒன்றும் இல்லாமையே
ப்ராப்ய-அடைந்து
அநிசம்–எப்போதும்
அசேஷம்–உபய விபூதியில் உள் அடங்கிய அனைத்தையும்
யுகபத் -ஏக காலத்தில்
கரதலவத்–உள்ளங்கையைப் பார்ப்பது போலே
பஸ்யசி–சாஷாத் கரிக்கிறீர்
ஸ்வ பிரகாசம்–ஸ்வமேவ பிரகாசிப்பதும்
அவரணம் –ஆவரணம் அற்றதும்
அமோகம்–யதார்த்தமுமான
தத் -அந்த சாஷாத் காரத்தை
ஞானம் ஆம்நாசி ஷு தே–தேவரீருடைய ஞானமாக உபநிஷத்துக்கள் ஓதி வைத்தன –

அனைத்தையும் ஒரே நேரத்தில் நோக்கியபடி -உள்ளங்கை நெல்லிக்கனி இருப்பதைக் காண்பது போன்று
எளிதாக அறியும் சர்வஞ்ஞன் அன்றோ-
ஞானம் -என்பதை விளக்குகிறார் -சஷுராதி த்வாரத்தால் ஆதல் -தர்ம பூத ஞானத்தால் யாதல் –
இந்த்ரியங்களாளிலும் தத் அதீந்த்ரியங்களாலே தத் தத் விஷயங்களையும் அந்ய இந்திரிய விஷயங்களையும்
இப்படி சர்வத்தையும்-க்ராஹ்ய க்ராஹகீ நியமம் இல்லாமல்- ஒருக்காலே கரதலாமலகம் போலே நித்தியமாக
ஸமஸ்தமும் ஏக காலத்திலேயே தேவரீர் சாஷாத் கரிக்கும் சாஷாத்காரத்தை ஸ்வ ப்ரகாசமாயும் –
ஆவரண ரஹிதமாயும் -யதார்த்தமாயும் உள்ள ஞானம் என்று உபநிஷத்துக்கள் சொல்லுமே –

——————

நயன ஸ்ரவண த்ருஸா ஸ்ருனோஷி அத தே ரெங்க பதே மஹே சிது
கரணை அபி காம காரிண கடதே சர்வ பதீநம் ஈஷணம்–29-

ஹே ரெங்க பதே
நயன ஸ்ரவண –கண்களாகிய காதுகளை உடையவராய்
த்ருஸா ஸ்ருனோஷி –திருக் கண்களால் கேட்கின்றீர்
அத-பின்னையும்
கரணை அபி–மற்ற இந்திரியங்களைக் கொண்டும்
காம காரிண–இஷ்டப்படி செய்கின்ற
தே மஹே சிது–விலக்ஷணனான ஈஸ்வரனான தேவரீருக்கு
கடதே சர்வ பதீநம் ஈஷணம்–சர்வதோமுகமான சாஷாத்காரம் கூடா நின்றது –

கண்களால் கேட்க முடியும் காதுகளால் பார்க்கவும் -இருப்பதை புகழ்கிறார் –
தேவரீர் திருச் செவியால் பார்க்கிறது -திருக் கண்களால் கேட்க்கிறது-இப்படி கரணங்களால் யதேஷ்டமான
தேவரீருக்கு லோக விலக்ஷணமான கரண ஞான சக்த்யாதிகள் ப்ரதிபாதங்கள் ஆகையால்
போனது எல்லாம் வெளியான சாஷாத்காரம் கடிக்கக் குறை என்ன என்கிறார் –

———————-

சார்வஞ்யேந அஜ்ஞ மூலம் ஜகத் அபிததத வாரிதா சாக்ஷி மாத்ராத்
சாங்க்ய யுக்தாத் காரணம் த்வாம் பரயதி பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்
அப்ரேர்ய அந்யை ஸ்வ தந்த்ர அப்ரதிஹதி சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம்
யத்ர இச்சா லேசத த்வம் யுகபத் அகணயந் விஸ்வம் ஆவிச் சகர்த்த–30-

ஹே பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்
ஜகத்–இந்த உலகத்தை
அஜ்ஞ மூலம்–அபிததத –அசேதனத்தால் படைக்கப்பட்டதாகச் சொல்கிறவர்கள்
சார்வஞ்யேந வாரிதா –தேவரீருடைய சர்வஞ்ஞத் வத்தால் நிரசிக்கப் பட்டார்கள் –
யத்ர சதி -யாதொரு ஐஸ்வர்ய குணம் இருக்கும் அளவில்
அப்ரேர்ய அந்யை–பிறரால் ஏவப்படாதவராய்
ஸ்வ தந்த்ர-த்வம் -ஸ்வ ஆதீனரான தேவரீர்
சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம் –புண்ய பாப ரூப கர்மங்களின் விசித்திர வகையினாலே பல வகைப்பட்ட
விஸ்வம் இச்சா லேசத-சகலத்தையும் சங்கல்ப லேசத்தினாலேயே
அகணயந்-அவலீலையாய் நினைத்தவராய்
யுகபத் –ஏக காலத்திலேயே
அப்ரதிஹதி -தடையின்றி
ஆவிச் சகர்த்த-படைத்தீரோ
சா ஐஸ்வரீ –அப்படிப்பட்ட ஐஸ்வர்யம் என்னும் குணமானது
காரணம் த்வாம்–ஜகத்துக்கு உபாதான காரணமாய் இருக்கின்ற தேவரீரை
சாங்க்ய யுக்தாத்–சாங்க்யரால் சொல்லப்பட்ட
சாக்ஷி மாத்ராத்–சாக்ஷி மாத்ர புருஷனின் காட்டில்
பரயதி–வேறு படுத்து கின்றது –

சாங்க்யர் சாக்ஷி மாத்ர புருஷன் என்பர் -நீயோ சர்வஞ்ஞன் ஸத்ய ஸங்கல்பன் –சர்வ காரணன் –
இப்படி சர்வஞ்ஞரான தேவர் மூலமே ஜகத் ஸித்திக்கிறது-
சாங்க்யர் அசேதனமான பிரக்ருதியே மூலம் என்பர்
நிர்விசேஷமாகையால் அஞ்ஞான ப்ரஹ்மமே மூலம் என்பர்
இவர்கள் பக்ஷம் நிரசித்து பிரேரிரிகர் இல்லா நிரதிசய ஸ்வ தந்தரரான ப்ரதிஹத்தி இல்லாமல்
புண்ய பாப ரூப கர்மா வைச்சித்திரத்தாலே விசித்ரமமான சர்வ ஜகத்தையும் சங்கல்ப ஏக தேசத்தால் ஏக காலத்தில்
தேவரீர் ஸ்ருஷ்டித்து அருளுகிறது என்கையாய் சாக்ஷி மாத்திரம் என்கிற சாங்க்ய பக்ஷம் நிரசனம்
அபரிஹத சங்கல்பத்துவம் உமக்கே அசாதாரணம்

——————–

கார்யே அனந்தே ஸ்வ தநு முகத த்வாம் உபாதானம் ஆஹு
சா தே சக்தி ஸூ கரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய
இச்சா யாவத் விஹரதி சதா ரங்க ராஜ அந பேஷா
ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா ஊர்னநாபவ் விபாவ்யா –31-

ஹே ரங்க ராஜ
அந பேஷா–ஸ்வதஸ் ஸித்தமான
தே இச்சா–தேவரீருடைய சங்கல்பமானது
ஸூ கரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய–இது செய்யக் கூடியது இது செய்யக் கூடாதது என்கிற வரம்பை மீறி
சதா -எப்போதும்
யாவத் விஹரதி–எங்கும் முழுவதும் உலாவுகின்றது
சா தே சக்தி -அப்படிப்பட்ட சங்கல்பமே தேவரீருடைய சக்தி என்கிற குணமாகும்
இப்படிப்பட்ட சக்தி தேவரீருக்கு இருக்கின்றதால்
கார்யே அனந்தே–எல்லையில்லாத கார்ய வர்க்கங்களின்
ஸ்வ தநு முகத த்வாம்–தேவரீருடைய சரீரமாகிய சேதன அசேதன த்வாரா -தேவரீரை
உபாதானம் ஆஹு–உபாதான காரணமாக வைதிகர்கள் சொல்லுகின்றனர்
ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா–அப்படிப்பட்ட சக்தி தான் பாசுபதமத பிரகிரியையில் காட்டிலும் வ்யாவ்ருத்தி
சம்பாதகம் ஆகின்றது ஈஸாநா -பசுபதி -ஐசா நாம் -பாசுபத மத ப்ரக்ரியா என்றபடி –
ஊர்னநாபவ் விபாவ்யா-அந்த சக்தி சிலந்திப் பூச்சியின் இடடத்தில் காணத் தக்கது –
ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தெ ஸ்வ சரீரபூத விசேஷண முகத்தால் தந்துஜாதமான கார்ய ஜாதத்துக்கு
தான் உபாதானமாம் படி உண்டான ஸ்வ பாவம் –

சர்வ சக்தன் -உபாதான குணம் இருந்தும் அதிகாரம் உண்டே –
சிலந்தி இடமே காணலாம் -பாசுபத வாத நிரசனம்
ஹேத்வந்தர நிரபேஷமான சங்கல்பம் -ஸமஸ்த காரியத்திலும் சரீரத்வார உபாதானமாக சுருதிகள் சொல்லும்
சக்யம் சக்யம் வாசி இல்லாமல் கரை அழித்து செய்யும் அவதி இல்லாத சக்தி
சங்கல்பம் கொண்டே ஜகத் நிர்வாஹணம்
சிலந்தி த்ருஷ்டாந்தம்

———————

ஸ்வ மஹிம ஸ்திதி ஈச ப்ருசக்ரிய அபி
அகலித ஸ்ரம ஏவ பிபர்ஷி யத்
வபு இவ ஸ்வம் அசேஷம் இதம் பலம்
தவ பர ஆஸ்ரித காரண வாரணம் –32-பல குண அனுபவம்-

ஹே ஈச
ஸ்வ மஹிம ஸ்திதி-த்வம் -தன்னுடையதான மஹாத்ம்யத்தில் நிலை நிற்கப் பெற்று இருக்கும் தேவரீர்
ப்ருசக்ரிய அபி-அபரிமிதமான சேஷ்டிதங்களை உடையவராய் இருந்த போதிலும்
அகலித ஸ்ரம ஏவ–ஆயாசம் உண்டாகப் பெறாதவராகவே
அசேஷம் ஜகத் -சகல லோகத்தையும்
வபு இவ ஸ்வம் -பிபர்ஷி–தனது சரீரத்தைப் போலவே வஹிக்கின்றீர்
இதி யத் தத் -என்பது யாது ஓன்று உண்டு -அது –
தவ பலம் -தேவரீருடைய பலம் என்ற குணம்
இதம் -இக்குணமானது
பர ஆஸ்ரித காரண வாரணம்–அந்யாதிஷ்டமாய்க் கொண்டு காரணமாவதை வியாவர்த்திப்பிக்கிறது
வாரணம்-வியாவர்த்தகம் என்றபடி -லோக விலக்ஷணம் என்றபடி

ஸ்வ மஹாத்ம்யத்தாலே அநேக வியாபாரங்கள் பண்ணினாலும் ஸ்ரமம் உண்டாக்காதே சர்வ ஜகத்தையும்
தேவர் சரீரம் போலே பரிக்கிறது என்கிற இது அதுக்கு பலம் அந்யா திஷ்டிதமாய்க் கொண்டு
காரணமானத்தை வ்யாவர்த்திப்பிக்கிறது என்கிறார் –

—————–

ம்ருக நாபி கந்த இவ யத் சகல அர்த்தாந்
நிஜ சந்நிதே அவிக்ருத விக்ருனோஷி
பிரிய ரங்க வீர்யம் இதி தத் து வதந்தே
ச விகார காரணம் இத வினிவார்யம்–33-வீர்ய குண அனுபவம்-

ஹே பிரிய ரங்க–திரு உள்ளத்துக்கு உகப்பான ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலை உடையவரே
த்வம் -ம்ருக நாபி கந்த இவ–தேவரீர் கஸ்தூரியின் பரிமளம் போலே
ஸ்வயம் அவிக்ருத–தாம் விகாரப் படாதவராகவே
நிஜ சந்நிதே–தமது சந்நிதிதான மாத்திரத்தாலே
சகல அர்த்தாந்–சகல பதார்த்தங்களையும்
விக்ருனோஷி–விகாரப்படுத்துகின்றீர்
இதி யத் -என்பது யாது ஓன்று உண்டோ
தத் வீர்யம் இதி –அதனையே வீர்ய குணம் என்று
வதந்தே–வைதிகர்கள் சொல்லுகின்றனர்
ச விகார காரணம் இத வினிவார்யம்-இதனால் விகாரத்தை யுடைத்தாய்க் கொண்டு காரணமாகின்றவை
வியாவர்த்திக்க உரியது
விநிவாரயம் -வியவ

வீர்யமாவது கஸ்தூரிகா கந்தமானது -ஸ்வ சந்நிதி மாத்திரத்தாலே தான் அவிக்ருதமாய்க் கொண்டு
சன்னிஹிதருடைய மனஸ்ஸூக் களை விகரிக்குமா போலே
தேவரும் அப்படியே சகல பதார்த்தங்களையும் விகரிப்பிக்கிறது என்று சொல்லுவார்கள்
அத்தால் ச விகாரமான காரணம் வியாவ்ருத்தம் ஆகிறது என்கிறார்

—————-

ஸஹ காரி அபேக்ஷம் அபி ஹாதும் இஹ தத் அநபேஷ கர்த்ருதா
ரங்க தந ஜயதி தேஜ இதி ப்ரணத ஆர்த்திஜித் பிரதிபட அபி பாவுகம்–34- தேஜஸ் குண அனுபவம்

ஹே ரங்க தந
ஸஹ காரி அபேக்ஷம் அபி –சஹகாரி காரணங்களை அபேக்ஷித்து இருக்கின்ற காரணத்தையும்
ஹர்தும்–வியவச்சேதிக்கும் பொருட்டு இஹ தத் அநபேஷ கர்த்ருதா-அந்த சஹகாரி காரணத்தை எதிர்பாராத
காரணத்வம் என்பது யாது ஓன்று உண்டோ அது தான்
ஜயதி தேஜ இதி –தேஜஸ் குணம் என்று
விளங்குகின்றது
இக்குணமானது
ப்ரணத ஆர்த்திஜித்–ஆஸ்ரிதர்களின் ஆர்த்தியைப் போக்கக் கூடியதாகவும்
பிரதிபட அபி பாவுகம்-எதிரிகளை திரஸ்கரிக்கக் கூடியதாகவும் ஆவது –
சிஷ்ட ரக்ஷண துஷ்ட பரிபாலனம் செய்வது இந்த தேஜஸ் குண ஸ்வரூபம் என்ற பஷாந்தரமும் உண்டே –

தேஜஸ்ஸாவது சஹகாரி சா பேஷ காரண வியாவ்ருத்தமான சஹகாரி நிரபேஷ கர்த்ருத்வ ரூபம் என்று சொல்லப்பட்டதாய்
ஆஸ்ரிதருடைய தாபத் த்ரயத்தையும் தத் விரோதிகளையும் அபிபவியா நின்று கொண்டு
இந்த குணங்களில் உத்க்ருஷ்டம் ஆகிறது என்கிறார்

————–

மர்த்ய உத்தாயம் விரிஞ்ச அவதிகம் உபரி ச உத் ப்ரேஷ்ய மீமாம்சமாநா
ரெங்கேந்திர ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம்
ந ஸ்வ அர்த்தம் ஸ்பிரஷ்டும் ஈஷ்டே ஸ்கலதி பதி பரம் மூக லாயம் நிலில்யே
ஹந்த ஏவம் த்வத் குணா நாம் அவதி கணநயோ கா கதா சித்த வாசோ –35-

ஹே ரெங்கேந்திர
ஆனந்த வல்லீ–தைத்ரிய உபநிஷத்தில் உள்ள ஆனந்த வல்லீ என்னும் பகுதி
மர்த்ய உத்தாயம்–மனுஷ்யன் முதல் கொண்டு
விரிஞ்ச அவதிகம்–பிரமன் முடிவாக உபரி ச –மென்மேலும்
உத் ப்ரேஷ்ய –படியிட்டுச் சொல்லிக் கொண்டு போய்
தவ யவ்வன ஆனந்த பூர்வம் –தேவரீருடைய யவ்வனம் ஆனந்தம் முதலிய
குண நிவஹம் –குண சமூகத்தை
மீமாம்சமாநா சதீ -விசாரியா நின்று கொண்டு
ஸ்வ அர்த்தம் –தன்னுடைய உத்தேசத்தை
ஸ்பிரஷ்டும்–தொடுவதற்கும் -எட்டிப் பார்ப்பதற்கும்
ந ஈஷ்டே –சமர்த்தமாகிறது இல்லை
பதி பரம் ஸ்கலதி–வழியிலேயே தடுமாறி நிற்கின்றது –
மூக லாயம் நிலில்யே–ஊமை போலே வாய் மூடி நின்றது
ஏவம் சதி -இப்படி இருக்க
த்வத் குணா நாம் -தேவரீருடைய திருக் கல்யாண குணங்களின்
அவதி கணநயோ –பரிச்சேதையிலும் ஸங்க்யையிலும்
கா கதா சித்த வாசோ ஹந்த -மன மொழிகளுக்கு என்ன பிரசக்தி -அந்தோ –

ஆனந்த வல்லி சொல்லி முடிக்க முடியாமல் மூகனைப் போலே வாய் திறவாதது ஆனதே –
மனுஷ்யாதி சதுர்முக பர்யந்தத்திலே சுழன்று உழலுகிறதே
இப்படி கரை காண ஒண்ணாத
தேவரீருடைய திருக் கல்யாண குணங்களை -பரிச்சேதையிலும் ஸங்க்யையிலும் அந்யருடைய
மனோ வாக்குக்கு ப்ரஸக்தி உண்டோ -இது என்ன ஆச்சர்யம் என்கிறார்

—————-

ந்யதாயிஷத யே குணா நிதி நிதாயம் ஆரண்ய கேஷு
அமீ ம்ரதிம சாதுரீ பிரணதசாபல ஷாந்த்ய
தயா விஜய ஸுவ்ந்தரீ பரப்ருத்ய அபி ரத்ன ஓகவத்
ஜகத் வ்யவ ஹ்ருதி ஷமா வரத ரங்க ரத்ன ஆபணே–36-

ஹே வரத
ஆரண்ய கேஷு–உபநிஷத்துக்களில் -ஆரண்யத்தில் ஓதப்பட்டதால்-உபநிஷத் -காரணப்பெயர்-
ப்ருஹதாரண்யம் போல்வன –
யே குணா–யாவை சில குணங்கள்
நிதி நிதாயம்-நிதி போலே ரஹஸ்யமாக
ந்யதாயிஷத –ப்ரதிபாதிக்கப் பட்டுள்ளனவோ
அமீ–இந்த
ம்ரதிம–ஸுவ் குமார்யம் என்ன
சாதுரீ–அகடி தகடநா சக்தி என்ன பிரணதசாபல –ஆஸ்ரித ப்ராவண்யம் என்ன
ஷாந்த்ய–ஷாந்தி என்ன
இவைகளும்
தயா -தயை என்ன
விஜய–வெற்றி என்ன
ஸுவ்ந்தரீ–ஸுவ்ந்தர்யம் என்ன
பரப்ருத்ய அபி ரத்ன ஓகவத்–இவை முதலானவைகளை ரத்னக் குவியல் போலே
ரங்க ரத்ன ஆபணே-ஸ்ரீ ரெங்க கர்ப்ப க்ருஹம் ஆகிற ரத்னக் கடையிலே
ஜகத் வ்யவ ஹ்ருதி ஷமா -உலகோர்க்கு எல்லாம் வ்யவஹார யோக்யங்களாக உள்ளன –
தாங்களும் கண்டு பிறருக்கும் காட்டலாம் படியான ரத்னக் கடை ஸ்ரீ கோயில் என்றவாறு –

திருக்கல்யாண குணங்கள் உபநிஷத்தில் ரஹஸ்யமாக வைக்கப்பட்டு இருந்தாலும்
திருவரங்கம் கர்ப்ப க்ருஹ இரத்தினக் கடையில் குவியலாக –பெரிய பெருமாள் இடம் காணலாமே-
இப்படி வேதாந்தங்களிலும் பரிச்சேதிக்க அரியதாய்-அதுகளில் நிதிகள் போலே பரம ரஹஸ்யங்களான
மார்த்வாதி ஆத்ம குணங்களும் ஸுவ்ந்த்ர்யாதி திவ்ய மங்கள விக்ரஹ குணங்களும்-
ரத்ன கடையில் ரத்ன சமூகங்கள் இருக்குமா போலே – ஸ்ரீ கோயிலிலே பண்டிதரோடு பாமரரோடு வாசி இன்றி
தாங்களும் சாஷாத் கரித்து பிறருக்கும் உபதேசிக்கும்படி பிரகாசிக்கின்றன என்கிறார் –

—————–

யம் ஆஸ்ரித்ய ஏவ ஆத்மம் பரய இவ தே சத் குண கணா
ப்ரதந்தே ச அநந்த ஸ்வ வச கந சாந்தோதித தச
த்வம் ஏவ த்வாம் வேத்த ஸ்திமித விதரங்கம் வரத போ
ஸ்வ சம் வேத்ய ஸ்வாத்மத்வயச பஹுல ஆனந்த பரிதம்–37-

ஹே வரத
தே சத் குண கணா-அப்படிப்பட்ட கல்யாண குண ராசிகள்
ஆத்மம் பரய இவ–வயிறு தாரிகள் போலே -கல்யாண குணங்கள் பகவத் ஸ்வரூபத்தைப் பற்றி நின்று
சத்தை பெறுகின்றன என்பதை அருளிச் செய்தவாறு
யம் த்வாம் -யாவர் ஒரு தேவரீரை
ஆஸ்ரித்ய ஏவ-அவலம்பித்தே
ப்ரதந்தே -ப்ரஸித்தியை அடைகின்றனவோ
ச -அப்படிப்பட்ட
அநந்த-நிரவதிகமாய்
ஸ்வ வச–தனக்கே அனுபாவ்யமாய்
கந –நிரந்தரமான
சாந்தோதித தச–சாந்தோதித தசையை உடையீரான
தைத்ரீய கடக ஸ்ருதியை அருளிச் செய்த படி
த்வம் ஏவ –தேவரீரே த்வாம் வேத்த ஸ்திமித விதரங்கம் -நிச்சலமாய் அலை ஓய்ந்த கடல் போன்றும்
ஸ்வ சம் வேத்ய –தானே அனுபவிக்கக் கூடியதாய்
ஸ்வாத்மத்வயச –தன்னோடு ஒத்த அளவுடையதாய்
பஹுல ஆனந்த பரிதம்-எல்லையில்லாத ஆனந்தத்தினால் பூரணமுமான
த்வாம் வேத்த -ஸ்வ ஸ்வரூபத்தை அனுபவிக்கின்றீர்

குணங்கள் உன்னை ஆஸ்ரயத்தே நிறம் பெறுகின்றன -உனது ஸ்வரூபத்தை நீயே அனுபவித்துக் கொண்டுள்ளாய்
எம்பெருமானுக்கு நித்யோதித சாந்தோதித தசைகள் இரண்டும் உண்டே -பர வாஸூ தேவ வ்யூஹ வாஸூ தேவ –
நிரவதிக கல்யாண குண விஸிஷ்ட ஸ்வ அனுபவத்தால் வந்த ஆனந்தத்தால் நிஸ்தரங்க ஆரணவத்தோடு ஒத்து இருக்கை –
கீழ் சொன்ன ஞானாதி குணங்கள் எந்த ஸ்வரூபத்தைப் பற்றி நிறம் பெற்றனவோ
அந்த ஸ்வரூபத்தை உடைய தேவரீர் தாமே சாந்தோதித தசையைக் கொண்டு ஸ்வ அனுபவ விஷயமாய் விபுவான
ஸ்வ ஸ்வரூபத்து அளவாய் அபரிச்சின்ன ஆனந்தத்தால் நிரம்பி நிஸ் தரங்க ஆர்ணவம் போலே இருக்கிற
ஸ்வரூபத்தை அனுபவிக்கிறது என்கிறார் -இப்படி தேவரீருடைய ஆனந்த குணம் அதி விலக்ஷணம் என்று கருத்து-

——————–

ஆக்ராய ஐஸ்வர்ய கந்தம் ஈசத்ருசம் மந்யா தவேந்த்ர ஆதய
முஹ்யந்தி த்வம் அநாவில நிரவதே பூம்ந கணே ஹத்ய யத்
சித்ரீயே மஹி ந அத்ர ரங்க ரசிக த்வம் த்வத் மஹிம் ந பர
வை புல்யாத் மஹித ஸ்வ பாவ இதி வா கிம் நாம சாத்ம்யம் ந தே –38-

ஹே ரங்க ரசிக
இ ந்த்ர ஆதய–இந்திரன் முதலான தேவர்கள்
ஆக்ராய ஐஸ்வர்ய கந்தம் –ஐஸ்வர்யத்தில் லவலேசத்தை அடைந்து
ஈசத்ருசம் மந்யா –ஸர்வேஸ்வரேஸ்வரான தேவரீரோடு ஒக்கவே தங்களை நினைத்தவர்களாய்
முஹ்யந்தி –மயங்குகிறார்கள் -கர்வப்படுகிறார்கள் என்றபடி
த்வம் நிரவதே பூம்ந –தேவரீர் எல்லையற்றதான பெருமையையும்
கணே ஹத்ய அநாவில அஸி –ஒரு பொருளாக நினையாமல் -மதியாமல் -கலங்காமல் இருக்கிறீர்
நிறை குடம் தளும்பாதே –
யத் அதிர -என்கிற இவ்விஷயத்தில்
வயம் ந சித்ரீயே மஹி –நாம் ஆச்சர்யப்பட கடவோம் அல்லோம்
ஏன் என்னில்
த்வம் -தேவரீருடைய ஸ்வ ரூபமானது
த்வத் மஹிம்ந -உமது பெருமையான ஸ்வபாவத்தைக் காட்டிலும்
பர இதி வா-மேம்பட்டது என்று சொல்லலாமா
அல்லது
ஸ்வ பாவ-தேவரீருடைய ஸ்வபாவமானது
வை புல்யாத்-முன் சொன்ன ஸ்வரூப வைபவத்தில் காட்டிலும்
மஹித இதி வா-மேம்பட்டது என்று சொல்லலாமா
எப்படியும் சொல்லலாமாய் இருக்கையாலே –
தே கிம் நாம சாத்ம்யம் ந –தேவரீருக்கு ஏது தான் தாங்க ஒண்ணாது
தேவரீர் ஸ்வரூபமும் ஸ்வபாவமும் பிருஹத் என்றபடி

ஐஸ்வர்யா லேசம் பெற்ற இந்த்ராதிகள் ஈஸ்வரோஹம் என்று அஹங்கரித்து நிற்க -உனது ஸ்வரூபம் ஸ்வ பாவம் மேம்பட்டு
மனுஷ்யர்க்கு தேவர் போலே தேவாதி தேவனாய் இருந்து திருவரங்கத்தை ரசித்தபடி கண் வளர்ந்து உள்ளாயே
தேவருடைய ஈஸ்வர வாசனையை முகந்து -ஈஸ்வர லேசமுடைய இந்த்ராதிகள் தங்களை ஈஸ்வரராக அபிமானித்து
கலங்குகிறார்கள்-தேவரீர் நிரவதிக அதிசயத்தையும் அநாதரித்துக் கலங்குகிறது இல்லை -நாங்கள் ஆச்சர்யப் படுகிறோம் அல்லோம் –
தேவரும் தேவரீர் மஹாத்ம்யமும் பெருமையால் ஒன்றுக்கு ஓன்று சத்ருசமாகையாலே தேவர்க்கு
எது தகாது என்கிறார் -ஆத்ம அனுரூபம் என்றபடி –

—————————-

ஷாட் குண்யாத் வாஸூதேவ பர இதி சபவாந் முக்த போக்ய பல ஆட்யாத்
போதாத் சங்கர்ஷண த்வம் ஹரசி விதநுஷே சாஸ்திரம் ஐஸ்வர்ய வீர்யாத்
ப்ரத்யும்ன சர்க்க தர்மவ் நயசி ச பகவந் சக்தி தேஜஸ் அநிருத்த
பிப்ரண பாசி தத்வம் கமயசி ச ததா வ்யூஹ ரங்காதிராஜ–39-

ஹே பகவந் ரங்காதிராஜ
சபவாந் த்வாம் –பூஜ்யரான தேவரீர்
வ்யூஹ–வாஸூ தேவாதி வ்யூஹ ரூபேண அவதரித்து
ஷாட் குண்யாத் –ஞானாதி ஆறு குணங்களோடு கூடி
வாஸூதேவ பர இதி –பர வாஸூ தேவர் என்று வழங்கப்பட்டவராகி
முக்த போக்ய அஸி –முக்தர்களுக்கு அநு பாவ்யராகின்றீர்
பல ஆட்யாத் போதாத் -பலத்தோடு கூடின ஞானத்துடன் -ஞான பலம் இரண்டு குணங்களுடன் கூடி
சங்கர்ஷண –சங்கர்ஷண மூர்த்தியாகி -ஜீவ தத்துவத்தை அதிஷ்டித்து
த்வம் ஹரசி –சம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர்
விதநுஷே சாஸ்திரம் –சாஸ்திரத்தையும் அளிக்கின்றீர்
ஐஸ்வர்ய வீர்யாத்–ஐஸ்வர்ய வீர்யங்களோடே கூடி
ப்ரத்யும்ன –ப்ரத்யும்ன மூர்த்தியாகி -மனஸ் தத்வம் அதிஷ்டானம்
சர்க்க தர்மவ் நயசி ச –ஸ்ருஷ்டியும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர்
சக்தி தேஜஸ்–சக்தி தேஜஸ் இரண்டையும் கொண்டு
அநிருத்த-அநிருத்த மூர்த்தியாகி
பாசி-ரக்ஷணத் தொழிலை நடத்துகிறீர்
தத்வம் கமயசி ச ததா –அப்படியே தத்வ ஞான பிரதானமும் பண்ணுகிறீர்

சாந்தோதித விசிஷ்டமான பரத்வ அனுபவம் இது வரை -இனி வியூஹ அனுபவம் –
வாஸூ தேவ ரூபியாய் பரத்வத்தோடு ஒத்த -நித்ய முக்த அநுபாவ்யராய்க் கொண்டு ஷாட் குண பரிபூர்ணராய்
சங்கர்ஷணராய் ஞான பழங்களோடு கூடி ஸாஸ்த்ர பிரதான சம்ஹாரங்களைப் பண்ணி
ப்ரத்யும்னராய் ஐஸ்வர்ய வீர்யங்களோடு கூடி ஸ்ருஷ்ட்டியையும் ஸாஸ்த்ர ப்ரவர்த்தங்களையும் பண்ணி
அனிருத்ரராய் சக்தி தேஜஸ்ஸூக்களோடு கூடி ரக்ஷணத்தையும் மோக்ஷ ஹேதுவான
சத்வ ப்ரவர்த்தனத்தையும் பண்ணுகிறது என்கிறார்
பகவானுக்கு எல்லா இடத்திலும் எல்லா குணங்களும் உண்டு என்றாலும்
இவ்வாறு விவஸ்தை பண்ணுவது தத் தத் கார்ய அநு குணத்வ ஆவிஷ்காரத்தைப் பற்ற –

——————

ஜாக்ரத் ஸ்வப்ந அத்யலச துரீய பிராய த்யாத்ரு க்ரமவத் உபாஸ்ய
ஸ்வாமிந் தத் தத் ஸஹ பரிபர்ஹ சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா -40-

ஸ்வாமிந்
ஜாக்ரத்- பிராய–விழித்துக் கொண்டு இருப்பாரும்
ஸ்வப்ந -பிராய-உறங்கிக் கொண்டு இருப்பாரும்
அத்யலச துரீய பிராய -ஸூ ஷூப்தீயில் இருப்பாரும்
த்யாத்ரு க்ரமவத் உபாஸ்ய–த்யானம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே உபாஸிக்கத் தகுந்தவராய்
தத் தத் ஸஹ பரிபர்ஹ –தகுதியான பரிச்சதங்களை யுடையவராய்
சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா -நாலு வகையான வியூஹ சதுஷ்ட்யத்தை வஹிக்கின்றீர்
ஒவ் ஒரு வ்யூஹ மூர்த்தியும் உபாஸிக்கத் தக்க நான்கு வகை என்று -16-வகையாகும் –

விழிப்பு நிலைகள் புலன்கள் இயங்கும் /கனவு நிலை -புலன்கள் இயங்கா மனஸ்ஸூ விழித்து இருக்கும்
ஆழ்ந்த உறக்கம் -மனஸூம் இயங்கா மூச்சு மட்டும் -மூர்ச்சா மயக்க நிலை -பிராணனும் சீராக இல்லாமல்
நான்கு வ்யூஹங்கள் போல்
ஜாக்ரதாதி துரிய க்ரம சதுஷ்ட்ய விஸிஷ்ட தத் உபாசன அநு குணமாக தத் தத் மூர்த்தி அநு குண பரிகரமாக
விசிஷ்டராய்க் கொண்டு ப்ரத்யேகம் நான்கு வ்யூஹம் என்கிறார் –
ஜாகரணம் போலும் -ஸ்வப்நம் போலும் -அத்யாலச பத சப்தமான ஸூ ஷுப்தி போலும் –
துரீயமான மூர்ச்சை மரணங்கள் போலும் இருக்கிற ஞான தாரதம்ய அதிகார ரூபங்களான உபாசன க்ரமங்களையும்
உடையவராலே உபாஸிக்கப் படுமவராய் -அதுக்கு அநுகுண பரிகரங்களோடு கூடி
நான்கு வ்யூஹத்தையும் நான்கு விதமாக தேவரீர் வஹிக்கிறீர்

——————

அசித் அவிசேஷாந் ப்ரளயசீ மநி சம்சரத
கரண களேபரை கடயிதும் தயமாந மநா
வரத நிஜ இச்சயா ஏவ பரவாந் அகரோ ப்ரக்ருதிம்
மஹத் அபிமான பூத கரண ஆவளி கோராகினீம் –41-

ஹே வரத
ப்ரளயசீ மநி –பிரளய காலத்தில்
அசித் அவிசேஷாந்–அசேதனங்களில் காட்டில் வாசி அற்றவர்களாய்
சம்சரத–துவள்கின்ற ஜீவ ராசிகளை
கரண களேபரை –இந்த்ரியங்களோடும் சரீரங்களோடும்
கடயிதும் தயமாந மநா–சேர்க்க திரு உள்ளம் இரங்கினவனாய்
நிஜ இச்சயா ஏவ பரவாந் –ஸ்வ சங்கல்ப பராதீனனாய்
ப்ரக்ருதிம்–ப்ரக்ருதி என்ன
மஹத் –மஹான் என்ன
அபிமான–அஹங்காரம் என்ன
பூத–பஞ்ச பூதங்கள் என்ன
கரண–இந்திரியங்கள் என்ன
ஆவளி கோராகினீம் அகரோ–இவற்றின் வரிசையாகிற அரும்புகளை யுடையதாம்படி பண்ணினாய் –
இவன் காரணமாகிறது அவித்யா கர்ம பர நியோகாதிகள் அன்றிக்கே ஸ்வ இச்சையால் –தத்வத்ரயம்

பிரளயே அசித் அவிசிஷ்டான் ஐந்தூந் அவ லோக்ய ஜாத நிர்வேதா
கரண களேபர யோகம் விதரசி –தயா சதகம் -17-
நித்ய கைங்கர்ய ரசராய் வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும் அத்தை இழந்து
அசத் கல்பராய்க் கிடக்கிற சம்சாரி சேதனருடைய –இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த
பக்ஷி போல் கிடக்கிற -மா முனிகள் தத்வ த்ரய வ்யாக்யானம்-
கீழே ப்ரஸ்துதமான ஸ்ருஷ்ட்டி -க்ரமம் எங்கனே என்கிற அபேக்ஷையில் தேவர் பிரளய காலத்தில்
அசேதன துல்யராய் போக மோக்ஷ சூன்யரான சேதனரை -அஸிஷ்டர் என்று சம்சரிக்கிற சேதனரை சொன்னவாறு –
அனுசந்தித்து ஓ என்று இரங்கி-அவர்களுக்கு கரண களேபரங்கள் பிரதானம் பண்ணுகைக்கு
அநந்யாதீநராய் சங்கல்பித்து மூல பிரக்ருதியை மஹத் அஹங்கார தன்மாத்ர பஞ்ச பூத
ஏகாதச இந்த்ரியங்களாக மொட்டு விக்கிறது என்கிறார் –

———————

நிம்நோந்நதம் ச கருணம் ச ஜகத் விசித்திரம்
கர்ம வ்யபேஷ்ய ஸ்ருஜத தவ ரெங்க சேஷிந்
வைஷம்ய நிர்க்ருண தயா ந கலு ப்ரஸக்தி
தத் ப்ரஹ்ம ஸூத்ர ச சிவ ஸ்ருதய க்ருணந்தி –42-

ஹே ரெங்க சேஷிந்
விசித்திரம் கர்ம–சேதனர்களுடைய பலவகைப்பட்ட கர்மங்களை
வ்யபேஷ்ய–அநு சரித்து
நிம்நோந்நதம் ச கருணம் ச ஜகத் ஸ்ருஜத–உலகத்தை மேடு பள்ளமாகவும் இரங்கத் தகுந்ததாகவும் படைக்கின்ற
தவ வைஷம்ய நிர்க்ருண தயா–தேவரீருக்கு பக்ஷபாதமோ நிர் தயத்துவமோ என்ற இவற்றுக்கு
ந கலு ப்ரஸக்தி–அவகாசமே இல்லை
தத் ப்ரஹ்ம ஸூத்ர ச சிவ ஸ்ருதய க்ருணந்தி–என்னும் விஷயத்தை ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தை துணையாகக் கொண்ட
உபநிஷத்துக்கள் ஒதுகின்றன –
ச சிவ-என்று மந்திரிக்கு பெயர் -துணை என்று கருத்து –
கர்மம் அடியாகச் செய்கையாலும் -மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியீட்டு அஞ்சப் பண்ணும்
மாதாவைப் போலே ஹித பயனாகவே செய்வதால் இவை வராதே –

கீழே தயமாந மநா -என்றார் – தயையால் ஜகத் ஸ்ருஷ்ட்டி என்றால் –
ஜகத்தை தேவ மனுஷ்ய ஜங்கம ஸ்தாவராத்மகமாக விக்ஷமமாயும்–பக்ஷபாதத்துக்கும் -மேடு பள்ளமாகவும் —
வியாதி யுபத்ரமுமாய் -இருப்பது பர துக்க அஸஹிஷ்ணுத்வத்துக்கும் போருமோ என்ன –
சேதன கர்ம அநுகுணமாக ஸ்ருஷ்டிக்கையாலே அவை இரண்டும் வாராது என்று
சுருதிகள் சொல்லுகிறது என்கிறார் –

————-

ஸ்வ அதீந ஸஹ காரி காரண கணே கர்த்து சரீரேதவா
போக்து ஸ்வ அநு விதா அபராத விதயோ ராஞ்ஞா யதா சாஸிது
தாதுர்வா அர்த்தி ஜநே கடாக்ஷணம் இவ ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ தே
ஸ்ரஷ்டு ஸ்ருஜ்ய தசாவ்ய பேஷணம் அபி ஸ்வா தந்தர்யம் ஏவ ஆவ ஹேத் –43-

ஹே ஸ்ரீ ரெங்க சர்வஸ்வ
ஸ்ரஷ்டு தே -ஸ்ருஷ்ட்டி கர்த்தாவான தேவரீருக்கு
ஸ்ருஜ்ய தசாவ்ய பேஷணம் அபி-ஸ்ருஷ்டிக்கப்படும் ஆன்மாக்களுடைய கர்ம விபாக தசையை எதிர்பார்ப்பதும்
ஸ்வா தந்தர்யம் ஏவ ஆவ ஹேத்
-தேவரீருடைய ஸ்வா தந்தர்யத்தையே நிலை நிறுத்தும்
எப்படிப் போலே என்னில்
கர்த்து -பானை துணி முதலிய கார்யப் பொருள்களை நிரூமிப்பவனான குயவன் போன்ற மனிதர்களும்
ஸ்வ அதீந –தங்களுக்கு வசப்பட்ட
ஸஹ காரி காரண கணே–மண் தண்ணீர் சக்கரம் போன்ற உதவி காரணப் பொருள்கள் இடத்தில் உண்டான
கடாக்ஷணம் இவ –எதிர்பார்த்தால் போலவும்
போக்து–போகங்களை அனுபவிப்பவனான ஜீவனுக்கு
ஸ்வ அதீன சரீரே கடாக்ஷணம் இவ–தனக்கு அதீனமான சரீரத்தில் உண்டான எதிர்பார்த்தால் போலவும்
சாஸிது ராஞ்ஞா–நியாமகனான அரசனுக்கு
ஸ்வ அநு விதா அபராத விதயோ–தன்னை அநு சரித்து இருப்பதும் தன்னிடத்தில் குற்றம் செய்வதும் ஆகிய காரியங்களில் உண்டான
கடாக்ஷணம் யதா–எதிர்பார்த்தால் போலவும்
தாதுர்வா அர்த்தி ஜநே தே–உதாரனான பிரபுக்கு யாசகர்கள் இடத்தில் உண்டான எதிர்பார்த்தல் போலவும்
நான்கு த்ருஷ்டாந்தங்கள் –
கடாக்ஷணம் -என்பது வீக்ஷணம் -இங்கே அபேக்ஷணத்தைச் சொல்லுகிறது –

ஸ்வ தந்திரனாய் இருந்தும் -ஸஹ காரி நிபேஷனாய் இருந்தும் கர்மம் அடியாக ஸ்ருஷ்ட்டி செய்வது
தச்சன் நாற்காலி செய்ய உபகரணங்கள் கொண்டு செய்வது போலவும்
ஜீவன் தனது உடலைக் கொண்டு ஸூகம் அனுபவிப்பது போலவும்
தானம் கொடுப்பவன் தானம் பெறுவனையே ஸஹ காரியாகக் கொண்டு தானம் செய்வது போலவும்
கொள்ள வேண்டும்
இப்படி கர்ம அநு குணமாக விஷம ஸ்ருஷ்ட்டி என்று கொள்ளில் நிரபேஷ கர்த்ருத்வம் ஜீவிக்கும் படி எங்கனே என்னில்
குயவனுக்கு சக்கராதிகள் சஹகாரிகளாக போலவும் ஸ்வஸ்த சரீரனுக்கு விஷய போகத்தில் சரீர ஸ்வாஸ்ததியம் போலவும்
நியாமகனான ராஜாவுக்கு ப்ருதயாதி க்ருத அபராத சாபேஷ சிஷா விதானங்கள் போலவும்
உதாரனுக்கு அர்த்தி ஜன விஷயத்தில் பிரார்த்தனா சாபேஷமாகக் கடாஷிக்கிறது போலவும்
கர்மவிபாக சாபேஷமாக விஷம ஸ்ருஷ்டியும் ஸ்வா தந்த்ர பஞ்சகம் இன்றிக்கே
சேதன அநு குணமாகக் குறையில்லை-என்கிறார் –
கர்ம அநு குணமாக பலம் தருகிறேன் என்று தேவரே சங்கல்பித்து தத் அநு குணமாக செய்வது
ஸ்வா தந்தர்ய விரோதி அன்று அன்றோ –

——————-

பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44-

ஹே வரத
பிரளய சமய ஸூப்தம்–பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன
சித் அசித் ஆக்யம்–சேதன அசேதன ஆத்மகமான
ஸ்வம் சரீர ஏக தேசம்–தனது திருமேனியின் ஏக தேசத்தை
ஸ்வ இச்சையா –தன் சங்கல்பத்தினாலேயே
விஸ்த்ருணாந-விதித்த விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு
அநு சிகிநீ –மயில் பெடையின் எதிரே
கலாபம் சித்ரம்–நாநா விதமான தோகையை
கசிதம் இவ–ஆகாசத்தை அளாவியது போலே
சிகீ இவ விதத்ய தூந்வந்–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே
க்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு
கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே -பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –
அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

பிரளயத்தில் சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -ஆண் மயில் பல நிறங்களுடன் கூடிய அழகிய தோகையை
பெண் மயிலுக்கு விரித்துக் காட்டுவது போலே நீயும் பெரிய பிராட்டியார் இடம் காண்பித்தாய்-
சுருதிகள் படி நிமித்த காரணத்வம் மாத்திரம் அன்றிக்கே உபாதான காரணத்வமும் உண்டாகையாலே
பிரளயத்தில் நாம ரூப விபாகம் இன்றிக்கே சூன்யமாய் -நிர் வியாபாரமாய் இருக்க
தேவரீர் சரிர ஏக தேச சேதன அசேதனங்களை ஸ்வ இச்சையால்-ஜகத் ரூபேண பரிணமிப்பியா நின்று கொண்டு –
விஸ்தரிப்பியா நின்று கொண்டு மயில் தனது நா நா வர்ணமான தோகையை விரித்து தன் பேடைக்கு முன்
க்ரீடிக்குமா போலே தேவரீரும் பிராட்டி முன்பு க்ரீடிக்கிறீர் -என்கிறார் –
சித்திரம் என்பதால் தார்ஷ்டாந்தித்தில் சத்வாதி குண பேதமும் ஸூஸிதம்

————-

பூயோ பூய த்வயி ஹித பர அபி உத்பத அநாத்மநீந
ஸ்ரோத மக்நாந் அபி பத நயந் த்வம் துராசா வஸேந
ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி
தத் தத் வர்ண ஆஸ்ரம விதிவச க்லிஸ்யஸே ரங்க ராஜ –45-

ஹே ரங்க ராஜ
பூயோ பூய த்வயி–தேவரீர் மேன்மேலும்
ஹித பர அபி –சேதனர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வதிலேயே நோக்கம் யுடையவராய் இருந்தாலும்
உத்பத அநாத்மநீந ஸ்ரோத மக்நாந் அபி–கங்கு கரை இல்லாததும் ஆத்மாவுக்கு துன்பம் தருவதுமான
துஷ்கர்ம பிரவாகத்தில் மூழ்கிக் கிடப்பவர்களையும்
துராசா வச நே –ஏதோ ஒரு நப்பாசையினால்
பத நயந் –நல் வழி நடத்த விரும்பினவனாய்
ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி–தன் குழந்தை நோயாளியாய் இருக்கும் போது
அது குடிக்க வேண்டிய கஷாயத்தை தாயான தானே குடிக்குமா போலே
த்வம் தத் தத் வர்ண ஆஸ்ரம விதிவச க்லிஸ்யஸே –அந்த அந்த வர்ணாஸ்ரம ஆசாரங்களை நியமிக்கும்
சாஸ்திரத்துக்கு வசப்பட்டவராய் பல பல கார்யங்களை அனுஷ்டித்துக் கண்டு வருந்துகின்றீர்

ராமனாகவும் கிருஷ்ணனாகவும் -பிறந்து -கர்மவசப் படாமல் இருந்தும் வர்ணாஸ்ரமம் அனுஷ்ட்டித்து —
தாய்ப்பால் பருகும் குழந்தைக்கு உண்டான நோயைத் தீர்க்கும் விதமாக தாயானவள்
கசப்பான மருந்தை குடிப்பது போன்றது-
பரதுக்க அஸஹிஷ்ணுதையால் கரண களேபரங்களைக் கொடுத்து அருளியும்-
சேதனர் விஷயாந்தர ப்ரவணராய் ஸாஸ்த்ர நிஹிதங்களையே செய்து போந்து நிற்க –
அவர்கள் நல் வழி வருவார்களோ என்னும் பேராசையால் -ஸ்தநந்த்ய பிரஜை ரோக பீடிதையாக-
தான் ஒளஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே ராம கிருஷ்ண அவதாரங்களையும் பண்ணி
அதுகளில் வர்ணாஸ்ரம விதி பரதந்த்ரராய் நாட்டில் பிறந்து மனுஷர் படாதன பட்டு கிலேசிக்கிறது என்கிறார்

——————

ஸார்வ த்வத் கம் சகல சரிதம் ரெங்க தாமந் துராசா
பாசேப்ய ஸ்யாத் ந யதி ஜெகதாம் ஜாது மூர்க்க உத்தராணாம்
நிஸ்தந்த்ராலோ தவ நியமத ந ருது லிங்க பிரவாஹா
சர்க்க ஸ்தேம ப்ரப்ருதிஷு சதா ஜாகரா ஜாகடீதி–46-

ஸார்வ ரெங்க தாமந்–அனைவருக்கும் ஹித பரரான ஸ்ரீ ரெங்க நாதரே
த்வத் கம் சகல சரிதம்–தேவரீருடைய ஸ்ருஷ்ட்டி முதலான சகல காரியங்களும்
துராசா பாசேப்ய-ஸ்யாத் ந யதி–நப்பாசையின் காரணமாகவே ஆகாமல் போனால்
ஜெகதாம் மூர்க்க உத்தராணாம்–மூர்க்கர்கள் மலிந்த உலகங்களினுடைய
சர்க்க ஸ்தேம ப்ரப்ருதிஷு–ஸ்ருஷ்ட்டி ஸ்திதி முதலான காரியங்களில்
நிஸ்தந்த்ராலோ தவ –சோம்பல் இல்லாத தேவரீருடைய
நியமத ந ருது லிங்க பிரவாஹா-சதா ஜாகரா—நியாந்தமான வசந்தாதி ருத்துக்களில் புஷ்பாதி அடையாளங்களின்
பிரவாகம் போலவே பிரவாகம் உடைய தேவரீருடைய நித்ய சங்கல்பமானது
ஜாகடீதி–ஜாது-ஒரு காலும் சங்கதம் ஆகமாட்டாது
என்றேனும் நம் கிருஷி பலியாதோ என்கிற நப்பாசையினாலே தானே நித்ய சங்கல்பம் பிரவாகமாகச் செல்கிறது –

சோம்பாது ஸ்ருஷ்டித்து -என்றாவது சொத்து ஸ்வாமியை அடையும் என்னும் நப்பாசை-
அவதாரத்தில் படும் கிலேசம் இன்றிக்கே -ஸ்ருஷ்டியாதி சகல வியாபாரமும் சேதன உஜ்ஜீவன அர்த்தமாகவே –
துராசையாலே என்னுமத்தை அறிவைக்காக -தேவர் சர்வ ஸ்வாமி யாகையாலே தேவரீருடைய சர்வ வியாபாரமும்
எப்போதும் துராசையாலே அல்லாவாக்கில் நாஸ்திக பிரசுரியமான ஜகத்தினுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களில்
வசந்தாதிகள் ருதுக்களுக்கு அடுத்த புஷ்பாதி லிங்கங்கள் ப்ரவாஹ ரூபேண உண்டாவது போலே
சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த என்கிறபடி சோம்பாது நின்று நியமேன ப்ரவர்த்திகைக்கு
அடி யாது என்கிறார் –

——————–

ஸூஹ்ருத் இவ நிகல ஆத்யை உன்மதிஷ்ணும் ந்ருசம்சம்
த்வம் அபி நிரய பூர்வை தண்டயந் ரங்க நேத
ததிதரம் அபி பாதாத் த்ராயஸே போக மோக்ஷ
பிரதி அபி தவ தண்டா பூபி காதா ஸூஹ்ருத் த்வம் –47-

ஹி ரங்க நேத
ஸூஹ்ருத் இவ உன்மதிஷ்ணும்–பைத்தியம் பிடித்தவனை –
நிகல ஆத்யை-தண்டயந் -விலங்கிடுதல் முதலிய காரியங்களால் சிக்ஷிக்கிற
ஸூஹ்ருத் இவ த்வம் அபி-தோழன் போலே தேவரீரும்
ந்ருசம்சம் நிரய பூர்வை தண்டயன் –கொடிய ஜனங்களை நரகத்தில் இட்டு வருத்துதல் போன்ற வற்றால்
தண்டியா நின்று கொண்டு
ததிதரம் அபி –அவனையும் மற்ற ஐந்து ஜனத்தையும்
பாதாத் த்ராயஸே –நரக பாதையில் நின்றும் காத்து அருளுகின்றீர்
இப்படியான பின்பு
போக மோஷ-பிரதி அபி-போக மோக்ஷங்களைத் தந்து அருளுவதும்
தவ தண்டா பூபி காதா தவ ஸூஹ்ருத்வமே –தண்ட பூபா கைம்முதிக நியாயத்தாலே தேவரீருடைய ஸுவஹார்த்த கார்யமேயாகும் –
துக்க அனுபவமே ஸுவ்ஹார்த்த கார்யம் என்னும் போது -ஆபாச ஸூக அனுபவமும் போகமும் –
பரம ஸூக அனுபவமும் -மோக்ஷ அனுபவமும் ஸுவ்ஹார்த்த காரியமே என்றவாறு
மண் தின்ற பிரஜையை நாக்கில் குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போல ஹித பரனாய்ச் செய்யும் காரியமே-என்றவாறு –

தண்டா பூப நியாயம் -நரகத்தில் இடுதல் தண்டனை இல்லை-
ஸூஹ்ருத் தானவன் உன்மத்தனை விலங்கு முதலானவற்றால் நிர்பந்தித்து அவனையும் பிறரையும் ரஷிக்குமாம் போலே
தேவரீரும் பரஹிம்ஸை பண்ணித் திரியுமவனை நன்றாக சத்ருச சஸ்த்ராதிகளாலே தண்டித்து
அவனையும் ஹிம்ஸா ருசி இன்றிக்கே இருக்குமவனையும் பிறராலும் காதுகனாலும் வரும் ஹிம்சையில் நின்றும்
ரஷிக்கிறது ஸூஹ்ருத் கார்யமாகா நிற்க –
போக மோக்ஷ பிரதானமும் ஸூஹ்ருத் கார்யம் என்கை -அபூபாக சாதனமான தண்டத்தை மூஷிகை பஷித்தது என்றால்
அபூப பஷணம் போலே கைமுதிக நியாய சித்தம் என்கிறார் –

———–

த்ருதி நியமந ரஷா வீக்ஷணை சாஸ்த்ரதாந பரப்ருதிபி அசிகித்ஸ்யாந் பிராணிந ப்ரேஷ்ய பூய
ஸூர மனுஜ திரச்சாம் ஸர்வதா துல்ய தர்மா த்வம் அவதரசி தேவ அஜ அபி சந் அவ்யயாத்மா –48-

த்ருதி நியமந ரஷா வீக்ஷணை –எல்லாவற்றையும் தரிப்பது என்ன -உல் புகுந்து நியமிப்பது என்ன –
ரக்ஷிப்பது என்ன -ஆகிய இவை பற்றிய சங்கல்பங்களினாலும்
சாஸ்த்ரதாந பரப்ருதிபி–சாஸ்திரங்களை அளிப்பது முதலியவற்றாலும்
அசிகித்ஸ்யாந் பிராணிந ப்ரேஷ்ய–திருத்த முடியாத சம்சாரிகளை நோக்கி அருளி
தேவ அஜ அபி சந் அவ்யயாத்மா –பிறப்பும் இறப்பும் இல்லாத தெய்வமாய் இருக்கச் செய்தேயும்
ஸூர மனுஜ திரச்சாம்–தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகளுக்கு
ஸர்வதா–சர்வ பிரகாரத்தாலும்
துல்ய தர்மா சந்–ஒத்தவராய்க் கொண்டு
த்வம் அவதரசி பூய–மேன்மேலும் தேவரீர் விபவ அவதாரங்களைச் செய்து அருளா நின்றீர்–
ஓலைப்புறத்தில் செல்லாத நாட்டை நேரே சென்று வெற்றி கொள்ளும் அரசரைப் போல் நேரில் வந்து
திருத்திப் பணி கொள்ள நீர்மையினால் அவதரித்து அருளுகிறார் என்றவாறு –
ஸ்ரீ கீதா ஸ்லோகம் -4-6-அடிப்படியில் அருளிச் செய்த ஸ்லோகம் –

சாஸ்த்ர பிரதானம் -உள்ளே புகுந்து நியமித்து –இவற்றாலும் கார்ய கரம் இல்லாமல்
பல யோனிகளாய் அவதரித்ததும் அருளினாய்-
விபவ அவதாரங்களின் குண சேஷ்டிதங்களை பெரிய பெருமாள் இடம் அனுபவிக்கக் கருதி –
தேவர் தாரண நியமன சங்கல்பங்களாலும்-
ப்ரஹ்ம மன்வாதி முகேந சுருதி ஸ்ம்ருதி ஸாஸ்த்ர ப்ரதானாதிகளாலும்–
பராசார்ய மைத்ரேய முகேந ஆச்சார்ய சிஷ்ட நிஷ்ட ப்ரகாசாதிகளாலும் திருந்தாத சம்சாரிகளைப் பார்த்து –
கர்ம க்ருத பிறப்பும் இன்றிக்கே பிரகாசியா நிற்க ஸ்வ இச்சையால் -சங்கல்பத்தால் -தேவ மனுஷ்யாதி சஜாதீயராக –
விஷ்ணு உபேந்திர ராம கிருஷ்ண வராஹ நரசிம்ம ஹயக்ரீவ ரூபத்துடன் அவதரித்து அருளுகிறீர் -என்கிறார்

——————

அநு ஜனு அநு ரூப சேஷ்டா ந யதி சமா கமம் இந்திரா அகர்ஷியத்
அசரசம் அதவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவம் அகரிஷ்யத ரங்க ராஜ நர்ம—49-

ஹே ரங்க ராஜ
இந்திரா–அநு ஜனு–பிராட்டியானவள் தேவரீர் அவதாரம் தோறும்
அநு ரூப சேஷ்டா சதீ–தேவரீருக்கு ஒத்த உருவத்தையும் லீலைகளையும் உடையவளாய்க் கொண்டு
சமா கமம் –உடன் திரு அவதாரம்
ந யதி அகர்ஷியத்–செய்து அருளாது இருந்தாள் ஆகில்
தே நர்ம அசரசம்–தேவருடைய விலாச சேஷ்டிதையை சுவை அற்றதாகவோ
அதவா அப்ரியம்–அல்லது பிரியம் அற்றதாகவோ -வெறுக்கத் தக்கதாகவோ
த்ருவம் அகரிஷ்யத–பண்ணி இருப்பாள் -இது நிச்சயம் –

அவதாரம் தோறும் அனுரூபையாய் பிராட்டி அவதரித்து சுவையும் பிரியமும் ஆகும் படி செய்தாள்-
பெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந்த அந்த அவதார
அநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில்
அந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே-புருஷகாரம் இல்லாமல் ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப
அநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் –அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்

———-

கரீயஸ்த்வம் பரிஜா நந்தி தீரா பரம் பாவம் மனுஜத்வாதி பூஷ்ணும்
அஜா நந்த த்வ அவஜா நந்தி மூடா ஜநிக்நம் தே பகவந் ஜென்ம கர்ம –50-

ஹே பகவந்
தீரா–மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள் தாம்
கரீயஸ்த்வம்–தேவருடைய பரத்வத்தை பரிஜா நந்தி –நன்கு அறிகின்றார்கள்
எத்திறம் என்று மோகித்து கிடப்பார்கள்
மூடாஸ் து –மூர்க்கர்களான சம்சாரிகளோ என்னில்
பரம் பாவம் மனுஜத்வாதி பூஷ்ணும்–மனுஷ்ய யோனி போன்ற எந்த யோனியிலும் பிறப்பதற்கு உரிய பரத்வத்தை
அஜா நந்த –அறியப் பிராதவர்களாய்
ஜநிக்நம் -ஜென்ம நிவர்த்தகமான
அவஜா நந்தி தே ஜென்ம கர்ம–பாவிகள் உங்களுக்கு ஏச்சு கொலோ என்று அருளிச் செய்யும் படி –
தேவருடைய திவ்ய சேஷ்டிதங்களையும் திவ்ய அவதாரங்களையும் இழிவாக நினைக்கிறார்கள் –

அவதார சேஷ்டிதங்களுக்கு சுருதி ஸித்தமான பெருமையில்
மதி நலம் அருள பெற்ற நம் குல கூடஸ்தர் -அக்ரேஸர் -ஈடுபடுகிறார்கள்
ஸ்வ கர்மத்தால் சங்குசித ஞான சம்சாரிகள் பரத்வ ஸ்வரூபத்தை அறியாமல் –
சம்சார நிவர்த்தகங்களான அவதார சேஷ்டிதங்களை இதர சஜாதீயர் ஆக்குகிறார் என்கிறார்

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–ஸ்லோகங்கள்–61-127-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —

May 11, 2020

ஸ்ரீ பராசர பட்டர் திருக் கோஷ்ட்டியூரில் இருந்து ஸ்ரீ ரெங்கம் திரும்பி வரும் போது திருக் காவேரி தொடக்கமாக
ஸ்ரீ ரெங்கத்தை வருணிக்க படி எழுந்து அருளினார்
பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள்
உத்தர சதகம் -105-ஸ்லோகங்கள்

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே-

பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய பூர்வ வாக்ய விவரணம்
உத்தர சதகம் –105-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய உத்தர வாக்ய விவரணம் –

———-

கைங்கர்ய உபகரணங்களான -கொடி -கத்தி -பொன் வட்டில் -படிக்கும் இவற்றை ஏந்தி –
பரிசாரிகைகள் -கைங்கர்யம் செய்பவர்களை ஸ்துதிப்போம்

லீலா லதா க்ருபாணீ ப்ருங்கார பதத்க்ரஹ அர்ப்பித கர அக்ரா
ப்ரோத அவதம்சித குசா பதாப்ஜ சமவாஹினீ வயம் ஸ்து மஹே –61-

லீலா லதா க்ருபாணீ -விளையாட்டுக்கான கொடி என்ன கத்தி என்ன
ப்ருங்கார பதத்க்ரஹ-பொன் வட்டில் என்ன படிக்கும் என்ன
அர்ப்பித கர அக்ரா-இவற்றில் வைக்கப்பட்ட கை நுனியை யுடையவர்களும்
ப்ரோத அவதம்சித குசா-திரு ஒற்று ஆடையினால் அலங்காரம் பெற்ற கொங்கைகளை யுடையவர்களுமான
பதாப்ஜ சமவாஹினீ வயம் ஸ்து மஹே –திருவடி வருடும் ஸ்ரீ பிராட்டிமார்களை நாம் ஸ்துதிக்கிறோம் –
திருவடி வருடும் -உபகரணங்களை ஏந்தும் என்று பிரித்து இரண்டு வகையினரையும் சொன்னதாகவுமாம் –
கைங்கர்யங்களைச் செய்த சிஹ்னங்களுடன் அலங்காரமாக உள்ளவரை ஸ்துதிக்கிறோம் என்றவாறு –

————-

சாமரம் வீசும் விமலை முதலான ஒன்பது பரிசாரிகைகள்–காணும் பொழுது தாமரை மலர்கள் குவிந்தபடி
நில்லதும் நிலவுடன் கூடிய இரவுப் பொழுது போன்று உள்ளது-

முகுளித நளிநா சகவ் முதீகா இவ ஸூ நிசா விமலாதிகா நவாபி
சிரஸிக்ருத நமஸ்யத் ஏக ஹஸ்தா இதர கர உச்சல சாமரா ச்ரயேயம்-62-

சிரஸிக்ருத நமஸ்யத் ஏக ஹஸ்தா–மத்தகத்திடை கைகளைக் கூப்பி என்றபடியே – ஒரு கையால் தங்கள் தலை மேல்
கூப்பித் தொழுவார்களாய்
ஒற்றைக் கையால் நமஸ்காரம் மற்றவர்களுக்கு அபசாரம் -நியத கைங்கர்ய நிஷ்டர்களுக்கு பாதகம் அன்று
இதர கர உச்சல சாமரா ச்ரயேயம்-மற்ற ஒரு கையால் சாமரம் பரிமாறுபவர்களாய்
இப்படி இருக்கும் நிலைமையினால்
முகுளித நளிநா–தாமரை மலர்கள் மூடிக் கொள்ளப் பெற்றதும்
சகவ் முதீகா–நிலாவோடு கூடி இருக்கப் பெற்றதுமான
இவ ஸூ நிசா ஸ்திதா–அழகிய ராத்திரி போன்று இருக்கின்ற
விமலாதிகா நவாபி ஸ்ரேயயம்–விமலை முதலான ஒன்பது சாமக்ராஹிணிகளையும் ஆஸ்ரயிக்கக் கடவேன்-
ஸ்ரீ உடையவரும் நித்ய கிரந்தத்தில் விமலாயை சாமர ஹஸ்தாய நம–உத்கர்ஷிண்யை சாமர ஹஸ்தாய நம–என்று
தொடங்கி அருளிச் செய்த ஒன்பது திரு நாமங்களை என்கை –

—————–

இப்படிப்பட்ட கர்ப்ப க்ருஹத்தில் தாமரை மலர்கள் நிறைந்த தடாகம் போன்ற நம் பெருமாளையும்
ஸ்ரீ தேவி பூ தேவி மார்களையும் ஸ்துதிப்போம்
தாமரைக்குளம் பாவனம் -அன்னப்பறவைகளும் உண்டே அதே போன்ற உபய நாச்சியார்
இது தொடங்கி -14-ஸ்லோகங்களால் நம்பெருமாள் ஸ்துதி
மேலே -77-ஸ்லோகம் தொடங்கி பெரிய பெருமாள் ஸ்துதி–

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
லஷ்மீம் விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ ஸ்திதம்–மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள
உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
தயரதன் பெற்ற மரகத மணித்தடம்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே –
மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-
தாமரைப் பொய்கையில் அன்னப்பேடை விளையாடும் -அது மேலே –
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாடவல்ல அன்னப்பேடை போன்றுள்ள திரு மகளையும்
ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற
ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –
சர்வ காலமும் அனுபவிக்கும் படியாய் உள்ள அர்ச்சாவதார ஏற்றத்தால்-தேங்கின மடுக்கள் போலே – தடாகமாக உருவகம் –

——————–

தாமரைப் பொய்கை போன்ற நம்பெருமாள் -அந்த நீரைப் பருகுவோம் –
அன்னப்பறவை போன்ற ஸ்ரீ தேவி -அவளது பிரதிபிம்பம் போன்ற ஸ்ரீ தேவி இருவரையும் வணங்குவோம்-

பிப நயன புர தே ரங்க துர்ய அபி தாநம் ஸ்த்திதம் இஹ பரி புல்லத் புண்டரீகம் தடாகம்
ஸ்ரியம் அபி விஹரந்தீம் ராஜ ஹம்சீம் இவ அஸ்மிந் பிரதி பலநம் இவ அஸ்யா பஸ்ய விஸ்வம் பராம் ச –64-

ஹே நயன–வாராய் கண்ணே
இஹ-இந்த கர்ப்ப க்ருஹத்தில்
புர தே ஸ்த்திதம்–உன் எதிரிலே நிற்பதாய்
பரி புல்லத் புண்டரீகம்–மலர்ந்த தாமரைப் பூக்களை யுடையதாய்
ரங்க துர்ய அபி தாநம் தடாகம்–ஸ்ரீ ரெங்கநாதன் என்னும் திரு நாமம் யுடைய பொய்கையை
பிப -பானம் பண்ணு
அஸ்மிந் விஹரந்தீம் ராஜ ஹம்சீம் இவ–இப்பொய்கையில் விளையாடுகின்ற அன்னப் பேடை போன்றுள்ள
ஸ்ரியம் அபி–ஸ்ரீ மஹா லஷ்மியையும் பிரதி பலநம் இவ அஸ்யா ஸ்திதம் -இந்தத் திரு மகளுடைய பிரதிபிம்பம் போன்றுள்ள
கீழே சாயை என்றார் -இங்கோ பிரதி பலநம்-என்கிறார் –
பஸ்ய விஸ்வம் பராம் ச –ஸ்ரீ நில மகளையும் சேவிப்பாய்
கீழே உபயாநி என்று அருகே செல்வத்தையும் இங்கு பிப நயன புரஸ் தே -அவகாஹ நாதிகளைச் சொன்ன படி
அணி அரங்கன் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றபடி கண்களால் ஆரப் பருகுவதைச் சொன்னபடி –

உலகில் காணும் பொய்கையை தரையில் பரந்து இருக்கும் –
இங்கேயோ -ரங்க துர்ய அபி தாநம் ஸ்த்திதம் -புருஷ ரூபியாய் நின்று கொண்டு இருக்கிறது
உலகில் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்வதும் மூடுவதும் வாடுவதுமாய் இருக்கும்
இங்கேயோ -பரி புல்லத் புண்டரீகம் -மலர்ந்தே அன்றோ இருக்கிறது –

—————-

ஸுவ்சீல்யத்தால் குளிர்ந்த தடாகம் -கருணை அலைகளால் உலகை நீராட்டும் –
ஸ்ரீ ரெங்க நாச்சியாரால் நறு மணம் சேர்க்கப் பட்டது –
நிம்நம் –ஆழம் என்றபடி -அபரிச்சேத்யம்–

ஸுவ்சீல்ய சீதலம் அவேல க்ருபா தரங்க சம்ப்லாவித அகிலம் அக்ருத்ரிம பூம நிம்நம்
லஷ்ம்யா ச வாசிதம் அபூம விகஹமாநா ஸ்ரீ ரெங்கராஜ மிஷ பத்மஸர பிரசன்னம் –65-

ஸுவ்சீல்ய சீதலம் -ஸுசீல்ய குணத்தினால் குளிர்ச்சி பெற்றதும்
பரத்வமே பொலிய நின்றால் நெருப்பு போலே அணுக ஒண்ணாதே
தாபத்ரயத்தில் அழுந்திய நாம் கூசாதே வந்து படியும்படி அன்றோ இங்கு –
அவேல க்ருபா தரங்க–கறை கடந்து பெருகுகின்ற அருளாகிய அலையினாலே
சம்ப்லாவித –நீராட்டப் பட்ட
அகிலம்–ஸமஸ்த ஜனங்களையும் யுடைத்தாய் -கிருபா பிரவாஹத்தால் இன்னார் இணையான என்று தரம் பாராதே போஷிக்கும்
அக்ருத்ரிம பூம–இயற்கையான பெருமையையும் யுடையதான
நிம்நம்–அளவிடமுடியாத குண விபூதியை யுடையதாய் –ஆழ்ந்ததாய்
லஷ்ம்யா ச வாசிதம்–ஸ்ரீ பெரிய பிராட்டியால் பரிமளம் பெற்றதாய்
பிரசன்னம் –தெளிந்ததான–ஸ்ரீ பெரிய பிராட்டியின் சேர்க்கையால் அபராதிகளான ஆஸ்ரிதர் திறத்தில் கலக்கம் நீங்கி
தெளிந்து அன்றோ அழகிய மணவாளன் இருக்கிறான்
அபூம விகஹமாநா ஸ்ரீ ரெங்கராஜ மிஷ பத்மஸர –ஸ்ரீ ரெங்கநாதன் என்னும் தாமரைத் தடாகத்தில் குடைந்து ஆடுமவர்களாக ஆனோம் –

——————-

பிராட்டிமார் சேர்த்தி மூலம் கிட்டப் பெற்ற இளமை அழகு ஐஸ்வர்யம் கொண்டு
வீற்று இருந்து அருளும் நம்பெருமாளை எப்போதும் சேவிப்போம்–

ஸிம்ஹாஸநே கமலயா ஷமயா ச விஸ்வம் ஏக ஆத பத்ரயிதும் அஸ்மத் அஸூந் நிஷண்ணம்
லஷ்மீ ஸ்வயம் வர சநாதித யவ்வன ஸ்ரீ ஸுவ்ந்தர்ய சம்பத் அவலிப்தம் இவ ஆலிஹீய –66-

ஸிம்ஹாஸநே கமலயா ஷமயா ச –கோப்புடைய சீரிய திவ்ய சிம்ஹாசனத்திலே திருமகளோடும் நிலமகளோடும் –
திருமடந்தை மண் மடந்தை இரு பாழும் திகழ -என்றபடி
விஸ்வம் ஏக ஆத பத்ரயிதும் -ஸமஸ்த சராசரங்களையும் ஒற்றக் குடை யுடையதாகச் செய்வதற்கு
ஆதிராஜ்ய லக்ஷணமான ஒற்றை வெண் கொற்றக் குடை –ராஜாதி ராஜ சர்வேஸ்வரேஸ்வரன் அன்றோ
நிஷண்ணம்–எழுந்து அருளி இருக்கின்றவனும்
அஸ்மத் அஸூந் -என் உயிராய் இருப்பவனும் –
என் திரு மகள் சேர் மார்பனே என்னுடைய ஆவியே என்னும் -என்னுமா போலே
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் அழகிய மணவாளன் அன்றோ நமக்கு
லஷ்மீ ஸ்வயம் வர சநாதித –ஸ்ரீ பெரிய பிராட்டியின் ஸ்வயம்வரத்தினால் க்ருதார்த்தமாகப் பண்ணப் பட்ட
யவ்வன ஸ்ரீ –யவ்வன சோபை என்ன
ஸுவ்ந்தர்ய சம்பத்-சமுதாய அழகாகிற செல்வம் என்ன
அவலிப்தம் இவ–செருக்குக் கொண்டவன் போலே இருப்பவனான அழகிய மணவாளனை
ஆலிஹீய –போக்யமாக அனுபவிக்கக் கடவேன் –வாய் மடுத்து பருகிக் களிப்போம்
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னர் கனி அன்றோ –

—————-

திருவடிகள் தொடங்கி திருமுடி வரை -திவ்ய அவயவங்கள் இருந்து மேன்மையும் நீர்மையும் அலை மோதியபடி உள்ளன –
அவன் மேல் உள்ள காதலை வளர்க்கின்றன -கண்கள் இமைக்காமல் கண்டு ஸ்துதிப்போம்-

ஆபாத மூல மணி மௌலி ச முல்லசந்த்யா ஸ்வா தந்த்ய ஸுவ்ஹ்ருத தரங்கி தயா அங்க பங்க்யா
சக்க்யம் ஸமஸ்த ஜன சேதஸி சந்த தாநம் ஸ்ரீ ரெங்க ராஜம் அநிமேஷம் அநுஸ்ரியாஸ்ம –67-

ஆபாத மூல மணி மௌலி –திருவடி தொடங்கி திரு அபிஷேகம் ஈறாக
ச முல்லசந்த்யா -விளங்குகின்றதாய்
ஸ்வா தந்த்ய ஸுவ்ஹ்ருத தரங்கி தயா
மேன்மையும் நீர்மையும் ஒருங்கே அலை எறியப் பெற்றதான
அங்க பங்க்யா-அவயவங்களின் சந்நிவேசத்தினால்
ஒவ் ஒரு அவயவவும் ஆகர்ஷகத்வம் பொலிந்து இருக்குமே -கீழே செருக்கு கொண்டவர் என்று பின் வாங்காமல்
நெருங்க ஸுவ்ஹ்ருத் அன்றோ என்கிறார் இதில் –
சக்க்யம் ஸமஸ்த ஜன சேதஸி சந்த தாநம்–சகல ஜனங்களினுடையவும் நெஞ்சில் அன்பை விளைவிக்கின்ற
ஸ்ரீ ரெங்க ராஜம் அநிமேஷம் அநுஸ்ரியாஸ்ம –ஸ்ரீ ரெங்க நாதனை இமை கொட்டாமல் அனுபவித்து அனுவர்த்திக்கக் கடவோம் –

——————

ஸ்ரீ தேவி பூதேவி கற்பகக் கொடிகள் நம்பெருமாளை ஆலிங்கனம் -செய்தபடி உள்ளன –
பாரிஜாதமாகவே இருந்து–பலன்களை அனைத்தும் அளித்து – சம்சார தாபங்களைத் தீர்க்கும்-

ஷிதி கமல நிவாஸா கல்பவல்லி ச லீல உல்லுடந த ச திசா உத்யத் யவ்வன ஆரம்ப ஜ்ரும்ப
ஸ்ரமம் அபஹரதாம் மே ரங்க தாமா இதி தத் தத் வரமய பல நம்ர பத்ரல பாரிஜாத –68-

ஷிதி கமல நிவாஸா கல்பவல்லி–நிலா மகளும் திரு மகளுமாகிற கற்பகக் கொடிகளின்
கலச ஜலதி கந்யா வல்லரீ கல்ப ஸாகீ –ஸ்ரீ தேசிகன் –
ச லீல உல்லுடந–விலாசத்தோடு கூடின ஆலிங்கனத்தினால்
தச திசா உத்யத் –பத்துத் திசைகளிலும் விளங்குகின்ற
அவன் ஸ்வரூபம் போலே கல்யாண குணங்களும் பத்துத் திக்குகளிலும் பரவி இருக்குமே –
ஸ்ரீ பிராட்டிமாருடன் லீலா ரசம் அனுபவிக்க
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் –
விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டுமே –
இவர் தாமே ஸ்ரீ குணரத்னகோசத்தில்
அநு கலத அநு காண்ட ஆலிங்கன ஆரம்ப கம்பத் பிரதி திச புஜசாக ஸ்ரீ சகாநோக ஹர்த்தி -என்றும்
போக உபோத்காதா கேலீ சுலாகித பகவத் வைஸ்வரூப்ய அநு பாவ -என்றும்
தச சத பாணி பாத–விநிமஞ்சதி தே –என்றும் அருளிச் செய்கிறார் அன்றோ –
யவ்வன ஆரம்ப ஜ்ரும்ப–யவ்வனத் தொடக்கத்தின் வை லக்ஷண்யத்தை யுடைத்தாய்
நித்ய யுவா அன்றோ
ஸ்ரீ கூரத்தாழ்வானும் -ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் -56-
ரம்பா ஸ்தம்பா–தததி நததா யவ்வன ஆரம்ப ஜ்ரும்பா -என்று அருளிச் செய்கிறார் –
பத்ரல-இலைகள் நிரம்பியதாய்
தத் தத் வரமய பல நம்ர–அவர் அவர்கள் பெறும் வரங்கள் ஆகிற பழங்களினால் வணக்கம் உற்றதான
வ்ருக்ஷம் பழங்கள் மிக்கு கனத்தினால் தாழ வணங்கி இருக்கும் -இவனும் சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு –அன்றோ
ரங்க தாமா இதி பாரிஜாத –ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் பாரிஜாத வ்ருஷமானது
ஸ்ரீ வாஸூ தேவ தரு –
நிவாஸ வ்ருஷஸ் ஸாதூநாம் –
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஸ்ரமம் அபஹரதாம் மே –என்னுடைய விடாயை தொலைத்திடுக —
தாப ஹரத்வமான வ்ருஷ காரியத்தை அழகிய மணவாளன் நமக்கு செய்து அருளுகிறார் என்றதாயிற்று –

——————

ஸம்பாஷமாணம் இவ சர்வ வசம் வதேந மந்த ஸ்மிதேந மதுரேண ச வீக்ஷணேன
திவ்ய அஸ்த்ர புஷ்பித சதுர்புஜம் அதி உதாரம் ரங்க ஆஸ்பதம் மம சுப ஆஸ்ரயம் ஆஸ்ரயாணி –69-

சர்வ வசம் வதேந மதுரேண மந்த ஸ்மிதேந –எல்லாரையும் வசீகரிக்க வல்ல-இனிமையான புன் முறுவலாலும்
தத் புருஷ ஸமாசகத்தால் எல்லாருக்கும் எளிதான மந்தஹாசம்
பஹு வ்ருஹீ ஸமாஸகத்தால்-எல்லாரையும் வசப்படுத்திக் கொள்ளும் மந்தஹாசம்
மதுரேண ச வீக்ஷணேன-இனிமையான நோக்காலும்
ஸம்பாஷமாணம் இவ–ஸ்திதம் –பேசுகிறவர் போலே இருப்பவரும்
அபிமத ஜன தரிசன ஆனந்த வேகத்தால் அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி வருகின்ற அவ்யக்த
மதுர மந்தகாச விலாசத்தினாலும் பரம கிருபை பொழிகின்ற கடாக்ஷ வீக்ஷணத்தாலும் நிறைந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை
நோக்கும் கால் சோதி வாய் திறந்து வார்த்தை அருளிச் செய்கிறானோ என்று சங்கிக்கலாம் படி இருக்குமே
திவ்ய அஸ்த்ர புஷ்பித சதுர்புஜம்–திவ்ய ஆயுதங்களினால் பூத்து இருக்கின்ற நான்கு திருக் கைகளை யுடையவரும்
கற்பகத் தரு பணைத்து கணை தோறும் அரும்பினால் போலே ஆயிற்று வடிவும் திவ்ய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது
கீழே இலை பழ ஸம்ருத்தியை சொல்லி இதில் புஷ்ப ஸம்ருத்தியை அருளிச் செய்கிறார்
அதி உதாரம்–மிகவும் உதாரருமான
மம சுப ஆஸ்ரயம்-அடியேனுக்கு நல்ல புகலிடமாய் இருப்பவரும்
ரங்க ஆஸ்பதம் ஆஸ்ரயாணி –ஸ்ரீ அரங்க மா நகர் அமர்ந்த பெருமானை ஆஸ்ரயிக்கக் கடவேன் –
நன்மைகளையே அருளும் ஸூப ஆஸ்ரயம் அன்றோ –

————————–

ஏதே சங்க கதா ஸூ தர்சன ப்ருத ஷேமங்கரா பாஹவா
பாத த்வந்த்வம் இதம் சரண்யம் அபயம் பத்ரம் ச வ ஹே ஜனா
இதி ஊசுஷி அபயம் கரே கரதல ஸ்மரேண வக்த்ரேண
தத் வ்யாகுர்வந் இவ நிர்வஹேத் மம துரம் ஸ்ரீ ரெங்க சர்வம் ஸஹ –70-

ஹே ஜனா–ஓ ஜனங்களே
சங்க கதா ஸூ தர்சன ப்ருத-ஏதே – பாஹவா–சங்கு கதை சக்கரம் ஆகிய இவற்றை ஏந்தி இருக்கின்ற இது திருக் கைகள்
வ ஷேமங்கரா–உங்களுக்கு க்ஷேமம் அளிப்பன
பாத த்வந்த்வம் இதம் சரண்யம் அபயம் –சர்வ ஸமாச்ரயணீயமான இத்திருவடி இணைகளும் உங்களுக்கு
புகலாயும் அபயம் அளிப்பதாயும்
பத்ரம் ச வ-நன்மை தருவதாயும் இருக்கின்றன
இதி ஊசுஷி அபயம் கரே கரதல –என்று
அபய முத்திரையோடு கூடின திருக்கையானது தெரிவிக்கும் அளவில்
ஸ்மரேண வக்த்ரேண தத்–அந்த விஷயத்தை புன் முறுவல் கொண்ட திரு முக மண்டலத்தினால்
வ்யாகுர்வந் இவ ஸ்தித-வியாக்யானம் செய்பவர் போன்றுள்ள
நிர்வஹேத் மம துரம் ஸ்ரீ ரெங்க சர்வம் ஸஹ –ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அடியேனுடைய பாரங்களை தாமே நிர்வகிக்கக் கடவர் –
யோக க்ஷேமம் வஹாம் அஹம் -என்று ஸ்ரீ கீதையில் வாயோலை செய்து கொடுத்த படியே அழகிய மணவாளன்
ஸ்ரீ ரெங்க சர்வம் சக-சர்வ லோக நிர்வாகஹர் என்றபடி

———————

அங்கை அஹம் ப்ரமிதிகா ஆசரித ஆத்மதாநை ஆமோத மாந நவ யவ்வன சாவலேபை
ஸஹ பாரிஜாதம் இவ நூதன தாயமான சாகாசதம் ஹ்ருதி ததி கதமதீ மஹி ரங்க துர்யம்–71-

அங்கைர்–திவ்ய அவயவங்களினால்
அஹம் ப்ரமிதிகா ஆசரித ஆத்மதாநை–நான் முன்னே நான் முன்னே என்று முற்பட வந்து தம்மை
ஆஸ்ரிதர்களுக்கு அனுபவிக்க கொடுப்பவைகளாயும்
ஆமோத மாந நவ யவ்வன சாவலேபை–பரிமளிக்கின்ற புதிய யவ்வனத்தால் செருக்குக் கொண்டவைகளாயும்
ஸஹ பாரிஜாதம் இவை நூதன தாயமான சாகாசதம்–புதிது புதிதாகச் செழித்து வளர்கின்ற பல கிளைகளை யுடைத்தான
பாரிஜாதம் வ்ருக்ஷம் போன்றுள்ள
ஹ்ருதி ததி கதமதீ மஹி ரங்க துர்யம்–ஸ்ரீ ரெங்க நாதனை நெஞ்சிலே தாங்கக் கடவமோ -எப்படித் தாங்குவது-கஷ்டம் என்றவாறு
பெறும் காற்று மலையில் பல கனிகள் ஒருங்கே உதிர்ந்தால் எத்தை எடுத்து நுகர்வது என்று தடுமாறி நிற்குமா போலே அன்றோ –
தோள் கண்டார் தோளே கண்டார் –தாள் கண்டார் தாளே கண்டார் -என்று ஒன்றிலே தானே அழுந்தி விடலாய் இருக்கும் என்றவாறு-

————–

ஸ்ருங்கார ரஸமே வடிவு –ஸ்மிதம் கல் நெஞ்சைரையும் உருக்குமே -அர்ச்சா சமாதியை கடந்து பேசத் துடிக்கும்
திருவாயானது தாபத் த்ரயம் தீர்க்கும் நிழல் -யவ்வனம் மனசை குளிர வைக்கும்

ஆலோகா ஹ்ருதயாளவ ரசவசாத் ஈஸாநாம் ஈஷத் ஸ்மிதம்
பிரச் ச் சாயாநீ வஸாம்ஸி பத்மநிலயா சேத சரவ்யம் வபுஸ்
சஷுஷ் மந்தி கதா கதானி த இமே ஸ்ரீ ரெங்க ஸ்ருங்கார தே
பாவா யவ்வன கந்திந கிம் அபரம் சிஞ்சந்தி சேதாம்சி ந –72-

ஹே ஸ்ரீ ரெங்க ஸ்ருங்கார–ஸ்ரீ கோயிலிலே ஸ்ருங்காரமே வடிவு எடுத்து நிற்பது போன்றுள்ள பெருமானே
தே ஆலோகா ஹ்ருதயாளவ–உன்னுடைய கடாக்ஷங்கள் ஆசிரித்தார்கள் இடத்தில் அன்போடு கூடியவை –
ரசவசாத் ஈஸாநாம் ஈஷத் ஸ்மிதம்–மந்தஹாஸமானது ப்ராணயாசத்தினால் அனைவரையும் வசப்படுத்திக் கொள்ளுமது –
பிரச் ச் சாயாநீ வஸாம்ஸி -வாய் மொழிகள் தாபத்த்ரய துரர்க்கு நிழல் தருவன
பத்மநிலயா சேத சரவ்யம் வபுஸ்–திரு மேனியானது பங்கயத்தாளான பிராட்டியின் திரு உள்ளத்துக்கு இலக்காய் இருக்குமது –
சஷுஷ் மந்தி கதா கதானி–திரு வீதிப் புறப்பாடுகளில் எழுந்து அருளுவதும் மீண்டு எழுந்து அருளுவதும் கண்ணுக்கு இனிமையானவை
கிம் அபரம்-வேறே என்ன
இமே தே–ஆக இப்படிப்பட்ட
பாவா யவ்வன கந்திந–யவ்வன ஸூசங்களான விஷயங்கள்
சிஞ்சந்தி சேதாம்சி ந –அடியோங்களுடைய நெஞ்சுக்களை குளிரச் செய்கின்றன
எம்பெருமானை சேவிக்கும் பொழுது அஸ்மதாதிகள் அனுசந்திக்க வேண்டிய ஸ்லோகங்களில் முதன்மையானது இது –

———————–

ஆயத் கிரீடம் அளிக உல்லசத் ஊர்த்வ புண்ட்ரம் ஆகர்ண லோசநம் அநங்குச கர்ண பாசம்
உத் புல்ல வக்ஷஸம் உத் ஆயுத பாஹும் அர்ஹன் நீவிம் ச ரங்கபதிம் அப்ஜபதம் பஜாம–73-

ஆயத் கிரீடம்–நீண்ட திரு அபிஷேகத்தை உடையவரும்
அளிக உல்லசத் ஊர்த்வ புண்ட்ரம் –திரு நெற்றியிலே விளங்குகின்ற ஊர்த்வ புண்ட்ரத்தை உடையவரும்
ஆகர்ண லோசநம்–திருச் செவி அளவும் நீண்ட திருக் கண்களை யுடையவரும்
அநங்குச கர்ண பாசம்–தட்டுத் தடங்கல் அற்ற சிறந்த திருச் செவிகளை யுடையவரும்
திருக்கண்களுக்கு திருக் காது மடல்கள் எல்லை போலே இவற்றுக்கு இல்லையே என்பதால் -அநங்குச-விசேஷணம் –
உத் புல்ல வக்ஷஸம்–விசாலமான திரு மார்பை யுடையவரும்
உத் ஆயுத பாஹும் –திவ்யாயுதங்களைக் கொண்ட திருக்கரங்களும்
அர்ஹன் நீவிம்–ஏற்று இருக்கின்ற வஸ்திர பந்தத்தை யுடையவரும்
அப்ஜபதம் ச -தாமரை போன்ற திருவடிகளை யுடையவருமான
ரங்கபதிம் பஜாம–அழகிய மணவாளப் பெருமாளை சேவிக்கிறோம் –

முடிச்சோதியாய் உனது முகச்சோதி அலர்ந்ததுவோ -என்னும் படி கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியும்
திரு நெற்றியிலே விளங்கும் திரு ஊர்த்வ புண்ட்ரமும்
திருச்செவி மடல்கள் அளவும் நீண்டு புடை பரந்து விளங்குகின்ற திருக் கண்களும்
அந்த திருக் கண்கள் போலே ஒரு வரம்பில் நிற்க வேண்டாதபடி தடை இன்றி பரந்து விளங்கும் திருச் செவி மடல்களும்
திரு மார்பிலே கோல மா மணி ஆரமும் முத்துத் காமமும் குரு மா மணிப் பூண் குலாவித் திகழ் வதைப் பார்த்தால்
ஒரு பொழில் பூத்துக் கிடக்கிறதோ என்னலாம்படியான திரு மார்பும்
அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்று மதி மயக்க வல்ல
திவ்ய ஆயுத ஆழ்வார்களைக் கொண்ட திருக்கரங்களும்
மிகப் பொருத்தமான திரு பரிவட்டச் சாத்தும் செந்தாமரை பூ போன்ற திருவடிகளையும் –
திவ்ய அவயவாதி சோபையை அனுபவித்து அருளுகிறார்

—————————-

அப்ஜ ந்யஸ்த பதாப்ஜம் அஞ்சித கடீ ஸம்வாதி கௌசயேகம்
கிஞ்சித் தாண்டவ கந்தி சம்ஹநநகம் நிர்வ்யாஜ மந்த ஸ்மிதம்
சூடா கம்பி முக அம்புஜம் நிஜ புஜா விஸ்ராந்த திவ்ய ஆயுதம்
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சதம் ததஸ் இத பஸ்யேம லஷ்மீ சகம் –74–

அப்ஜ ந்யஸ்த பதாப்ஜம் –ஆசன பத்மத்தில் அழுத்தின திருவடித் தாமரைகளை யுடையவரும்
அஞ்சித கடீ ஸம்வாதி கௌசயேகம்–சிறந்த திருவரைக்குப் பாங்கான பட்டுத் திரு பரியட்டத்தை யுடையவரும் –
கிஞ்சித் தாண்டவ கந்தி சம்ஹநநகம் –அபிமத ஜன தரிசன ஆனந்த வேகத்தால் சிறிது நர்த்தனம் செய்வது போல்
விளங்குகின்ற திருமேனியை யுடையவரும்
நிர்வ்யாஜ மந்த ஸ்மிதம்–இயற்கையான புன் முறுவலை யுடையவரும்
சூடா கம்பி முக அம்புஜம்–திரு அபிஷேகத்தை தழுவி இருக்கின்ற திரு முக கமலத்தை யுடையவரும்
நிஜ புஜா விஸ்ராந்த திவ்ய ஆயுதம்–திருக் கைகளில் இளைப்பாறுகின்ற திவ்ய ஆயுதங்களை யுடையவருமான
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சதம் ததஸ் இத பஸ்யேம லஷ்மீ சகம் -ஸ்ரீ நம்பெருமாளை ஸ்ரீ திருவரங்கத்தில் இன்னும்
ஒரு நூற்று ஆண்டு அளவும் அங்கேயே சேவிக்கக் கடவோம் –

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் நித்ய அனுபவம் பண்ண மங்களா சாசனம் –

தத இத பஸ்யேமே–வ்ருஷே வ்ருஷே ச பச்யாமி சீர க்ருஷ்ண ஜிநாம்பரம் -மாரீசனைப் போலே
எங்கு பார்த்தாலும் இந்த திவ்ய சேவையேயாக வேணும் என்றதாயிற்று –

—————————-

அக்ரே தார்ஷ்யேண பச்சாத் அஹிபதி சயனேந ஆத்மநா பார்ஸ்வயோ
ஸ்ரீ பூமிப்யாம் அத்ருப்த்யா நயந சுளிகநை ஸேவ்ய மாந அம்ருதவ்கம்
வக்த்ரேண ஆவி ஸ்மிதேந ஸ்ப்புரத் அபயக தா சங்க சக்ரை புஜாக்ரை
விஸ்வஸ்மை திஷட்ட மாநம் சரணம் அ சரணாஸ் ரங்கராஜம் பஜாம –75-

அக்ரே தார்ஷ்யேண –திரு முன்பே பெரிய திருவடியாலும்
பச்சாத் அஹிபதி சயனேந ஆத்மநா -பின்பே சேஷசாயியான தம்மாலும்
பார்ஸ்வயோ ஸ்ரீ பூமிப்யாம்–இரண்டு அருகும் ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமி தேவிகளாலும்
அத்ருப்த்யா–பரியாப்தி இன்றிக்கே –
நயந சுளிகநை ஸேவ்ய மாந அம்ருதவ்கம்-ஸூவ்ந்தர்யமாகிற அமுத வெள்ளத்தைக் கண்ணாரப் பருகப் பெற்றவராய் –
வக்த்ரேண ஆவி ஸ்மிதேந–புன் முறுவல் தோற்றப் பெற்ற திரு முக மண்டலத்தினாலும்
ஸ்ப்புரத் அபயக தா சங்க சக்ரை புஜாக்ரை-அபய முத்திரையும் கதையும் சங்கு சக்கரமும் விளங்கப் பெற்ற புஜாக்ரமங்களிலாலும்
விஸ்வஸ்மை திஷட்ட மாநம்–எல்லாருக்கும் தம் திரு உள்ளத்தை வெளியிடுகின்றவரான
நிற்பதனாலாயே தனது திரு உள்ளக் கருத்தை சகலரும் அறியும் படி உள்ளான் –
மாஸூச-உங்களை ரக்ஷிப்பதற்கு அன்றோ உபய காவேரீ மத்யத்திலே இந்த திருக் கோலத்தோடு வந்து படு காடு கிடக்கிறேன்
சரணம் அ சரணாஸ் ரங்கராஜம் பஜாம –ஸ்ரீ நம்பெருமாளை புகலற்ற நாம் சரண் அடைகின்றோம் –

நான்கு திசைகளிலும் நால்வரும் இருந்து கொண்டு கண்ணாரப் பருகும் அமுதம் அன்றோ இவனுடைய ஸுவ்ந்தர்ய
சாகரம் ஆகிய திவ்ய அம்ருதம்

——————

ஆர்த்த அபாஸ்ரயம் அர்த்தி கல்பகம் அஸஹ்ய ஆகஸ்கர ஷமா தலம்
ஸத்ய ஸம்ஸ்ரித காமதேனும் அபியத் சர்வஸ்வம் அஸ்மத் தனம்
ஸ்ரீ ரெங்கேஸ்வரம் ஆஸ்ரயேம கமலா சஷு மஹீ ஜீவிதம்
ஸ்ரீ ரெங்கேஸ ஸூகா கரோது ஸூ சிரம் தாஸ்யம் ச தத்தாம் மயி –76-

ஆர்த்த அபாஸ்ரயம் அர்த்தி கல்பகம் -ஆர்த்திகளுக்கு புகலிடமாயும் அர்த்திகளுக்கு கல்ப வ்ருஷமாயும் –
ஐஸ்வர்யார்த்திகள் இரு வகை உண்டே -இழந்த ஐஸ்வர்யம் வேண்டுவார் -புதிதாக வேண்டுவார் –
அஸஹ்ய ஆகஸ்கர ஷமா தலம்–அஸஹ்ய அபராதிகள் விஷயத்தில் பொறுமை உள்ளவராயும்
கைவல்யார்த்திகளைச் சொன்னபடி
ஸத்ய ஸம்ஸ்ரித காமதேனும்–அன்றே வந்து அடைந்தார்க்கு காமதேனு போலே வேண்டியவற்றைக் கொடுப்பவராயும்
ஞானிகளான முமுஷுக்களுக்கு –
அபியத் சர்வஸ்வம் –ஆழ்வார்கள் போல்வாருக்கு எல்லாம் கண்ணன் என்னும் படி சர்வ ஸ்வம்மாய் இருப்பவராயும்
முத்தவும் தான் உண்டான் முத்தப் பருகினான் –
உண்ணும் சோறு -இத்யாதி –சேலேய் கண்ணியரும்–இத்யாதி -வாஸூ தேவம் சர்வம் –
அஸ்மத் தனம்-எமது செல்வமாயும்-அஸ்மத் குல தனம்
கமலா சஷு-ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு கண்ணாயும்
மஹீ ஜீவிதம் –ஸ்ரீ பூமிப் பிராட்டிமாருக்கு பிராணனனுமாயும் இருக்கிற
ஸ்ரீ ரெங்கேஸ்வரம் ஆஸ்ரயேம–ஸ்ரீ நம் பெருமாளை ஆஸ்ரயிப்போம்
ஸ்ரீ ரெங்கேஸ ஸூகா கரோது ஸூ சிரம்–அந்த ஸ்ரீ நம்பெருமாள் நெடுநாள் அளவும் ஸ்ரீ ரெங்கத்தில் அடியேனை சுகப்படுத்த வேணும் –
நித்ய கைங்கர்யம் அளித்து சுகப்படுத்த வேண்டும் என்றபடி –
தாஸ்யம் ச தத்தாம் மயி –அடியேன் இடத்தில் தாச விருத்தியையும் அருள வேணும் –
அனுபவ ஜெனித ப்ரீதிகாரித கைங்கர்ய பிரார்த்தனை

————————

கீழே -17-ஸ்லோகங்களால் ஸ்ரீ நம்பெருமாள் அனுபவம் –
இந்த ஸ்லோகம் தொடங்கி ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்துதி –இந்த ஸ்லோகம் ஸ்ரீ ஆதிசேஷன் அனுபவம்–

ஸ்வ பண விதான தீப்ர மணிமாலி ஸூதாம ருசி
ம்ரதிம ஸூ கந்தி போக ஸூக ஸாயித ரங்க தனம்
மத பர மந்த்ர உச்ச் வசித நிஸ்ச்வசித உத்தரளம்
பணி பதி டோலி கதாலிமம் ஆஸ்வசிம ப்ரணதா -77-

ஸ்வ பண விதான–தன்னுடைய படமாகிற மேல் கட்டில்
தீப்ர மணிமாலி –பிரகாசித்துக் கொண்டு இருக்கிற மணிகளின் வரிசையை யுடைத்தாயும்
ஸூதாம ருசி ம்ரதிம ஸூ கந்தி-நல்ல பூ மாலை போன்ற அழகு ஸுவ்குமார்யம் நறு மணம் ஆகிய இவற்றை யுடைத்தாய் இருக்கிற
போக ஸூக ஸாயித ரங்க தனம்–தனது மேனியில் இனிதாக திருக் கண் வளர்த்தி அருளப்பட்ட ஸ்ரீ பெரிய பெருமாளை யுடைத்தாய் –
மத பர–எம்பெருமானை விடாது வஹிப்பதனால் உண்டான மதி அதிசயித்தினால்
மந்த்ர உச்ச் வசித நிஸ்ச்வசித–மந்தமாக உண்டாகின்ற மேல் மூச்சு கீழ் மூச்சுகளாலே
உத்தரளம்-அசைந்து கொண்டு இருப்பதான
பணி பதி டோலி கதாலிமம்–திரு அனந்தாழ்வான் ஆகிற உஞ்சல் படுக்கையை
ஆஸ்வசிம ப்ரணதா -வணங்கினோமாய் தேறுதல் அடைகின்றோம்
எம்பெருமானுக்கு பரிவர் இல்லை என்ற அச்சம் தீர்ந்து மகிழலாம்
திருவனந்த ஆழ்வானைப் போலே தம்மிடமும் சர்வ வித கைங்கர்யம் கொண்டு அருள பிரார்த்தனை –

————————

வடதள தேவகீ ஜடர வேத சிரஸ் கமலா ஸ்தந
சடகோப வாக் வபுஷி ரங்க க்ருஹே சயிதம்
வரதம் உதார தீர்க்க புஜ லோசந சம்ஹநநம்
புருஷன் உபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்தி ஹரம்–78-

வடதள–ஆலிலை என்ன
தேவகீ ஜடர–தேவகி திரு வயிறு என்ன
வேத சிரஸ்–வேதாந்தங்கள் என்ன
கமலா ஸ்தந–ஸ்ரீ பெரிய பிராட்டியின் திரு முலைத் தடம் என்ன
சடகோப வாக்–ஸ்ரீ நம்மாழ்வாருடைய திரு வாய் மொழி என்ன
வபுஷி –ஆகிய இவற்றின் ஆக்ருதியைப் போன்ற ஆக்ருதியை யுடைய
ரங்க க்ருஹே சயிதம்–ஸ்ரீ ரெங்க விமானத்தில் பள்ளி கொண்டு இருப்பவரும்
வரதம்–வரங்களை அளிப்பவரும்
உதார தீர்க்க புஜ லோசந சம்ஹநநம்–உதாரங்களான திருக்கைகளையும் நீண்ட திருக்கண்களையும்
கொண்ட திருமேனியை யுடையவரும்
ப்ரணதார்த்தி ஹரம்–வணங்குவர்களுடைய ஆர்த்திகளைப் போக்குமவரான
புருஷன் உபாஸிஷீய பரமம்–ஸ்ரீ பெரிய பெருமாளை உபாஸிக்கக் கடவேன் –
கீழ் உள்ள இடங்களைப் போலே பங்காக கண் வளரும் இடம் என்றவாறு
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் –ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அணையான்
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் -போல
சில போக்யமான வாசஸ் ஸ்தானங்களை அடுக்கி அருளுகிறார்
வரதம் ப்ரணதார்த்தி ஹரம் -விசேஷணங்கள் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் இவரது ஸ்ம்ருதி சந்தானம் விளங்கும் –

——————

உததி பரம வ்யோம்நோ விஸ்ம்ருத்ய பத்ம வநாலய விநிமயமயீம் நித்ராம் ஸ்ரீ ரெங்க தாமநி தாமநி
பணி பரிப்ருட ஸ்பார ப்ரஸ்வாஸ நிஸ்ஸவசித க்ரம ஸ்கலித நயனம் தன்வந் மந்வீத ந பரம புமாந் –79-

உததி பரம வ்யோம்நோ விஸ்ம்ருத்ய –திருப் பாற் கடலையும் ஸ்ரீ வைகுந்தத்தையும் மறந்து ஒழிந்து
பத்ம வநாலய விநிமயமயீம் நித்ராம் –பிராட்டிக்கு மாற்றான யோக நித்திரையை
ஸ்ரீ பெரிய பெருமாள் சில காலம் ஸ்ரீ பெரிய பிராட்டியாருடனும் சில காலம் நித்ரா தேவியுடனும்
இதர விஷயங்களை மறக்கும் படி அன்றோ விளையாடுகிறார் –
உறங்குவான் போலே யோக நித்திரை செய்து அருளினாலும் ஒன்றும் உணராதவன் போலே அன்றோ
அபிநயம் காட்டி அருளி உறங்குவது –
ஸ்ரீ ரெங்க தாமநி தாமநி–ஸ்ரீ திருவரங்கம் என்னும் திருப்பதியில்
பணி பரிப்ருட ஸ்பார ப்ரஸ்வாஸ நிஸ்ஸவசித க்ரம–ஸ்ரீ திரு அனந்தாழ்வானுடைய அதிகமான மேல் மூச்சு கீழ் மூச்சுக்களாலே
ஸ்கலித நயனம்-கூச்சம் அடைந்த திருக் கண்களை யுடைத்தாய் இருக்கும் படி
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல விழியாவோ -என்ற பிரார்த்திக்குமவர்களை
கடாக்ஷித்துக்கொண்டே அன்றோ திருக் கண் வளர்ந்து அருளுகிறது –
தன்வந்–செய்து கொண்டு இருக்கிற -திருக் கண் வளர்ந்து அருளா நிற்கிற –
மந்வீத ந பரம புமாந் –ஸ்ரீ பெரிய பெருமாள் நம்மை திரு உள்ளம் பற்றக் கடவர் —
அடியேனைப் பற்றிய சிந்தனை அநவரதம் அநு வர்த்திக்க வேணும் என்கிறார் –
நாம் அவனை மனனம் பண்ண மாட்டோமாகிலும் அவன் நம்மை மனனம் பண்ணட்டும் என்கிறார் –
நாம் கண் விழித்து இருக்கும் போதும் அவனை ஸ்மரிக்க வல்லோம் அல்லோம் –
அவன் கண் உறங்கும் போதும் நம்மையே ஸ்மரிக்க வேணும் என்கிறார் –

—————–

அபி பணி பதி பாவாத் -45-ஸ்லோகம் -நீல நிறத்ததான ஸ்ரீ ரெங்க விமானத்தில் நீல நிறத்தரான
ஸ்ரீ பெரிய பெருமாள் விளங்கும் படிக்கு மூன்று த்ருஷ்டாந்தங்கள்
மேகத்தினால் பருகப்பட்ட கடல் போன்றும் -கடலுள் உல்ல மலை போன்றும் —
மலை புதரில் உறங்கும் யானை போன்றவன்
மேகம் -ரெங்க விமானம் -கடல் -பெரிய பெருமாள்
கடல் ரெங்க விமானம் -அதனுள் உல்ல மலை பெரிய பெருமாள்
புதர் விமானம் யானை பெரிய பெருமாள்

ஜலதிம் இவ நிபீதம் நீரதேந அத்ரிம் அப்தவ் நிஹிதம் இவ சயாநம் குஞ்ஜரம் வா த்ரு குஞ்ஜே
கமல பத கர அக்ஷம் மேசகம் தாம்நி நீலேபணிநம் அதிசயாநம் பூருஷம் வந்தி ஷீயே –80-

தாம்நி நீலே–கறுத்த ஸ்ரீ ரெங்க மந்திரத்தில்
பணிநம் அதிசயாநம் –திரு அனந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டு இருப்பவரும்
மேசகம் –கரிய திரு மேனி யுடையவரும்
கமல பத கர அக்ஷம்–தாமரை போன்ற திருவடி திருக்கை திருக்கண்கள் யுடையவரும்
ஜலதிம் இவ நிபீதம் நீரதேந ஸ்திதம் -மோகத்தினால் பருகப்பட்ட கடல் போன்று இருப்பவரும்
அத்ரிம் அப்தவ் நிஹிதம் இவ ஸ்திதம் -கடலில் வைக்கப்பட்ட மலை போன்று இருப்பவரும்
சயாநம் குஞ்ஜரம் வா த்ரு குஞ்ஜே–மலைப் புதரில் படுத்துக் கொண்டு இருக்கும் யானை போன்று இருப்பவருமான
பூருஷம் வந்தி ஷீயே –-ஸ்ரீ பெரிய பெருமாளை வணங்கக் கடவேன்

கமல பத கர அக்ஷம்
சமுத்திரத்தில் உள்ள பவளங்கள் போலே இங்கும்
மலையில் உள்ள சிவந்த கைரிகாது தாதுக்கள் போலே இங்கும்
யானையின் சிந்தூரப் பொடி அலங்காரம்-மேல் விரிப்பான -போலே இங்கும்

பணிநம் அதிசயாநம்
சமுத்திரத்தில் உள்ள முத்துத் திரள் போன்று வெண்மையான ஆதி சேஷன் போலே இங்கும்
நெடுக்கப் பாயும் அருவிகள் போலே இங்கும்
யானை தங்கும் இடமான வெண் மணிப் பாறை போலே இங்கும்

மலைக்கு ஸ்தைர்யமும் யானைக்கு சைதன்யமும் உண்டாகையாலே உத்தர உத்தர த்ருஷ்டாந்த ஆதிக்யம் உண்டே

————–

சிவந்த அவயவங்கள் -காவேரி அலைகளால் தாலாட்டு -கம்பீர ஸ்வபாவம் -கடலின் குட்டி போன்றவன்

ஸ்ரீ ரெங்கேசய இஹ சர்ம நிர்மிமீதாம்
ஆ தாம்ர அதர பாத பாணி வித்ரும ந
காவேரீ லஹரி கர உப லால்யமாந
கம்பீர அத்புத இவ தர்ணக அர்ணவஸ்ய-81-

ஆ தாம்ர அதர பாத பாணி-நன்கு சிவந்த திரு அதரம் என்ன -திருவடிகள் என்ன -திருக்கைகள் என்ன -இவையாகிற
வித்ரும காவேரீ லஹரி கர உப லால்யமாந–பவளங்களை யுடைத்தாய் திருக் காவேரியின் அலைகளாகிற கைகளால் சீராட்டப் படுகின்றதாய்
திரைக்கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் கருமணி அன்றோ –
கம்பீர அத்புத இவ தர்ணக அர்ணவஸ்ய-கம்பீரமான ஆச்சர்யமான கடல் குட்டி போன்று இருக்கும்
கீழே கடலைச் சொல்லி திருப்தி அடையாமல் கடல் பிரசவித்த கடல் குட்டி இங்கு –
ஸ்ரீ ரெங்கேசய -ந-இஹ சர்ம நிர்மிமீதாம்–ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு இங்கே ஸுவ்க்யத்தை செய்து அருள வேணும்
குழந்தை படுத்த வண்ணமே இருப்பதால் இங்கே ஸ்ரீ ரெங்கேசய –

————-

ஸ்ரீ ரெங்க நாச்சியார் என்னும் மின்னல் –இரத்தின கற்கள் தேஜஸ் -இந்த்ர வில் —
க்ருபை என்னும் நீர் நிரம்பிய மழைக்கால மேகம் என்னும் பெரிய பெருமாள் திருவரங்கம் மலை மேல் இளைப்பாறுகிறது-

சிஞ்சேத் இமம் ச ஜனம் இந்திரயா தடித்வாத்
பூஷா மணி த்யுதிபி இந்திர தனு ததாந
ஸ்ரீ ரெங்க தாமநீ தயாரச நிர்ப்பர த்வாத்
அத்ரவ் சயாளு இவ சீதள காள மேக -82-

இந்திரயா தடித்வாத்–ஸ்ரீ பிராட்டி யாகிய மின்னலை யுடைத்தாய்
பூஷா மணி த்யுதிபி -திரு ஆபரணங்களில் இழைத்த ரத்னங்களின் கிரணங்கள் ஆகிற
இந்திர தனு ததாந-இந்திரன் வில்லை வஹித்துக் கொண்டு இருப்பதாய்
தயாரச நிர்ப்பர த்வாத்–கிருபையாகிற தீர்த்தத்தின் பூர்த்தியால்
ஸ்ரீ ரெங்க தாமநீ அத்ரவ் –ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலாகிய மலையிலே
சயாளு இவ சீதள காள மேக -படுத்துக் கொண்டு இருப்பதான குளிர்ந்த காள மேகம் –
கரு முகில் போல் உள்ள ஸ்ரீ ரெங்கநாதன்
சிஞ்சேத் இமம் ச ஜனம் -அடியேனையும் அபிஷேகம் பண்ணி அருளுக –
கருணா ரசம் நிரம்பி ஸ்தாவர பிரதிஷ்டையாக ஸ்ரீ ரெங்க நாத மந்த்ரமாகிற மலையில் சயனித்து
மேட்டு நிலம் கீழ் நிலம் வாசி பாராமல் வர்ஷிக்கும் காள மேகம் அன்றோ –

—————-

ஆ மௌலி ரத்ன மகராத் புநரா ச பத்ப்யாம்
தாம க்ரம உந்நமத் உதார மநோ ஹர அங்கம்
ஸ்ரீ ரெங்க சேஷ சயனம் நயநை பிபாம
பஸ்யத் மந ப்ரவணம் ஓகம் இவ அம்ருதஸ்ய -83-

ஆ மௌலி ரத்ன மகராத்–திரு முடியில் அழுத்தின ரத்னமயமான மகரம் முதல் கொண்டு
புநரா ச பத்ப்யாம் தாம க்ரம உந்நமத் உதார மநோ ஹர அங்கம்–திருவடிவரையில் தேஜோ விசேஷத்தாலே
உயர்ந்து உதாரமாய் ரமணீயமான அவயவங்களை யுடையரான
ஸ்ரீ ரெங்க சேஷ சயனம்–ஸ்ரீ அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் ஸ்ரீ பெரிய பெருமாளை
நயநை பிபாம பஸ்யத் மந ப்ரவணம் ஓகம் இவ அம்ருதஸ்ய –சேவிப்பவர்களின் மனத்திலே தேங்கும்
அமுத வெள்ளத்தைப் போலே கண்களால் பருகுகிறோம்
அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே –

——————–

அரவிந்தம் அங்க்ரி பாணி வக்த்ரை அபிதாபி அஞ்சிதம் அங்க காந்த்யா
அதரேண ச பந்து ஜீவிதம் ஸ்ரீ நியதம் நந்தந யேந சந்த்ரம் –84-

அரவிந்தம் அங்க்ரி பாணி வக்த்ரை –தாமரை பூத்து இருக்கப் பெற்ற திருவடிகள் திருக்கைகள் திருமுகம் ஆகிய இவற்றால் –
அபிதாபி அஞ்சிதம் அங்க காந்த்யா-சிறந்த திருமேனி ஒளியால் பச்சிலை மரங்கள் பொருந்தப் பெற்றும்
அதரேண–திரு அதரத்தினால்
ச பந்து ஜீவிதம்–பந்து ஜீவித புஷ்பம் பூத்து இருக்கப் பெற்றுமாய் இரா நின்ற
ஸ்ரீ நியதம் நந்தந யேந சந்த்ரம் –ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸ்ரீ பெரிய பெருமாளை நந்தவனமாகக் கொண்டு
விஹரிப்பார் போலும்–

————–

அந்யோன்ய ரஞ்சக ருச அனுபமான சோபா திவ்ய சரக் அம்பர பரிஷ்கரண அங்கராக
சம்ஸ்பர்சத புலகிதா இவ சின்மயத்வாத் ரங்கேது காந்திம் அதிகம் உப பிரும்ஹயந்தி –85-

அந்யோன்ய ரஞ்சக ருச–ஒன்றுக்கு ஓன்று சோபையை விளைகின்ற காந்தியை யுடையவைகளாய்
பரஸ்பர சோபை அதிசய ஹேது-
அனுபமான சோபா -ஒப்பற்ற ஒளியை யுடையவைகளாய்
திவ்ய சரக்–ஸ்ரீ வைஜயந்தி மாலை என்ன
அம்பர–பீதாம்பரம் என்ன
பரிஷ்கரண –திரு ஆபரணங்கள் என்ன
அங்கராக–சாத்துப்படி என்ன இவைகள்
சின்மயத்வாத் -ஸ்வயம் சேதன ஸ்வரூபம் ஆகையால்
சம்ஸ்பர்சத புலகிதா இவ–திருமேனி சம்பந்தித்தினால் மயிர்க் கூச்சு எறியப் பெற்றவை போன்று
ரங்கேது காந்திம் அதிகம் உப பிரும்ஹயந்தி –அதிகமான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய சோபையை பின்னமும்
அதிகப் படுத்துகின்றன
இந்த திருமேனிக்கு இவை வேணும் -அவற்றுக்கும் இத்திரு மேனியே அமையும் என்றபடி –
ஸ்ரக் வஸ்திர ஆபரணைர் யுக்தம் ஸ்வ அநு ரூபைர் அநுபமை சிந் மயஸ் ஸ்வ பிரகாசஸ்
ச அன்யோன்ய ருசி ரஞ்சகை –ஸ்ரீ பவ்ஷ்கர பிரமாணத்தை ஒட்டி இந்த ஸ்லோகம்

———–

த்ருத கனக ஜகிரி பரிமிலத் உததி பிரசலித லஹரிவத் அஹமஹமிகயா
ஸ்ந பயதி ஜனம் இமம் அபஹரதி தமஸ் ப் பணி சய மரகத மணி கிரண கண –86-

பணி சய மரகத மணி கிரண கண –அரவணை மேல் பள்ளி கொள்ளும் ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற
மரகத பச்சையினுடைய காந்தி சமூகமாவது
த்ருத கனக ஜகிரி பரிமிலத் உததி -காய்ந்து உருக்கிய பொன் மலையோடு கூடா நின்ற சமுத்திரத்தில் நின்றும்
பிரசலித லஹரிவத் அஹமஹமிகயா-பரம்பின அலைகள் போன்று முற்கோலி வந்து
ஸ்ந பயதி ஜனம் இமம் அபஹரதி தமஸ்–அடியேனை ஸ்நானம் செய்விக்கின்றது -அகவிருளை அகற்றுகின்றது –
புகர் வெள்ளம் போட்டி போட்டுக் கொண்டு அடியேன் மேல் பாயப் பெற்று ஞான ஒளி பெறப் பெற்றேன் –
த்ருத கனக ஜகிரி ஸ்தானத்தில் பீதாம்பராதிகளும் –
உததி–ஸ்தானத்தில் திவ்ய மங்கள விக்ரஹமும்
லஹரி -ஸ்தானத்தில் கிரண சமூகமும்-

ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹம் கேவல சமுத்திரம் போல் அன்றிக்கே –
பொன் மலையையும் உருக்கி அந்த த்ரவத்தோடே கூடின சமுத்திரம் போலே பளபளத்து கிட்டினவர்களை
குளிரவும் பண்ணி அஞ்ஞான அந்தகாரத்தையும் போக்குமே

வள்ளலே மது சூதனா என் மரகத மழையே
விளக்கு ஒளியை மரகதத்தை
பச்சை மா மலை போல் மேனி -என்று ஆழ்வார்கள் ஆழங்கால் படுவார்கள் –

———————–

போகீந்த்ர நிஸ்வசித ஸுவ்ரப வர்த்திதம் ஸ்ரீ நித்ய அனுஷக்த பரமேஸ்வர பாவ கந்தி
ஸுவ்ரப்யம் ஆப்லுத திசா அவதி ரெங்க நேது ஆனந்த சம்பதி நிமஜ்ஜயதே மநாம் சி –87-

போகீந்த்ர நிஸ்வசித ஸுவ்ரப வர்த்திதம் -பள்ளி மெத்தையான திருவனந்த ஆழ்வானுடைய மூச்சுக் காற்றினுடைய
பரிமளத்தாலே வளர்த்தப்பட்டதாய்
ஸ்ரீ நித்ய அனுஷக்த பரமேஸ்வர பாவ கந்தி-கந்தத்வாரம் சுருதி பிரசித்தமான -பிராட்டியின் நித்ய சம்ச்லேஷத்தால்
உண்டான ஸர்வேஸ்வரத்வத்தினால் பரிமளித்துக் கொண்டு இருப்பதாய் –
பிராட்டியின் நித்ய சம்ச்லேஷம் இல்லை என்றால் பரமேஸ்வரத்வம் இல்லையே –
ஸுவ்ரப்யம் ஆப்லுத திசா அவதி ரெங்க நேது-திசைகளின் எல்லைகளை வியாபித்ததான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய பரிமளம்
ஆனந்த சம்பதி நிமஜ்ஜயதே மநாம் சி –சேவிப்பவர்களின் உள்ளத்தை ஆனந்த செல்வத்தில் மூழ்குவிக்கின்றது
சர்வ கந்த சர்வ ரசம் அன்றோ
காந்தி சமூகத்தில் மூழ்கினத்தை கீழே அருளிச் செய்து – ஆனந்த சாகரத்தில் மூழ்கின்றதை இதில் அருளிச் செய்கிறார்

—————

ரங்க பர்த்து அபி லோசநச்சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம்
புஷப ஹாஸ இதி நாம துஹா நம் ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –88-

அபி லோசநச்சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம்-தன் மேல் கண்கள் படுவதையும் ஸாஹஸ காரியங்களின்
வரிசைகளில் எழுதும்படி செய்யா நிற்பதும்
பெரிய பெருமாள் தானே நோக்கினாலும் சஹியாத மார்த்வம்
சேடி ப்ரூசா லோகீதை ரங்க ம்லாநி–ஸ்ரீ குணரத்ன கோசம்
புஷப ஹாஸ இதி நாம துஹா நம் –புஷ்ப ஹாசம்-என்னும் திரு நாமத்தை விளைவிப்பதுமான
புஷ்ப ஹாஸ பிரஜாகா –ஸ்ரீ சஹஸ்ர நாமங்களில் ஓன்று இதனாலே தான் என்றவாறு
ரங்க பர்த்து ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –-ஸ்ரீ பெரிய பெருமாளாது ஸுவ்குமார்யமானது
நம்முடைய வாக்குக்கும் சிந்தைக்கும் விஷயம் அன்று –

——————–

ஏகை கஸ்மிந் பரம் அவயவே அநந்த ஸுவ்ந்தர்ய மக்நம் சர்வம் த்ரஷ்ட்யே கதம் இதி முதா மா மதா மந்த சஷு
த்வம் ஸுவ்பிராத்ர வ்யதிகர கரம் ரங்கராஜ அங்க காநாம் தத் லாவண்யம் பரிண மயிதா விஸ்வ பாரீண வ்ருத்தி –89-

ஹே மந்த சஷு–ஓ மூடமான கண்ணே
ஏகை கஸ்மிந்பரம் அவயவே –ஒவ் ஒரு அவயவத்திலும்
அநந்த ஸுவ்ந்தர்ய மக்நம்-எல்லையற்ற அழகிலே மூழ்கி இருக்கிற நான்
சர்வம் த்ரஷ்ட்யே கதம் இதி-எல்லா அவயவங்களையும் எவ்வாறு அனுபவிக்கப் போகிறேன் என்று
முதா மா மதா -வீணாக சங்கியாதே
ரங்கராஜ அங்க காநாம் ஸுவ்பிராத்ர வ்யதிகர கரம் -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அவயவங்களுக்கு
நட்பின் தொடர்பை விளைவிக்கின்ற
தத் லாவண்யம் -அந்த சமுதாய சோபையானது -நீரோட்டமானது –
ஒவ் ஒரு அவயவமும் என்னை விட்டு போகாதே என்று கண்ணை இழுத்து வைக்க -இந்த லாவண்யம் தானே
அவர்கள் பிணக்கைத் தீர்த்து அன்பை வளர்ப்பதால் -ஸுவ்பிராத்ரம்-கலந்து பரிமாற்ற பங்கு செய்ததே -என்கிறார்
தவம் -உன்னை
பரிண மயிதா விஸ்வ பாரீண வ்ருத்தி –எல்லா அவயவங்களையும் பூர்த்தியாக அனுபவித்தத்தை நிறைவேற்றி விடும் –
லாவண்யத்தையே வழிகாட்டியாகக் கொண்டு அனுபவிக்க இழிகிறார்
தோள் கண்டார் தோளே கண்டார் –யாரே வடிவினை முடியக் கண்டார் -கம்பர்

———————

வபு மந்தாரஸ்ய பிரதம குஸூம உல்லாச சமய ஷமா லஷ்மீ ப்ருங்கி சகல கரண உந் மாதந
விகாச ஸுவ்ந்தர்ய ஸ்ரஜி ரசிகதா சீது களக யுவத்வம் ரெங்கேந்தோ ஸூரபயதி நித்யம் ஸூவ்பகதாம் –90-

வபு மந்தாரஸ்ய –திருமேனியாகிற கற்பக வ்ருஷத்துக்கு
பிரதம குஸூம உல்லாச சமய–முதல் புஷ்பம் புஷ்பிக்கும் பருவமாயும்
ஷமா லஷ்மீ ப்ருங்கி -ஸ்ரீ பூமிப் பிராட்டி என்ன ஸ்ரீ திருமகள் என்ன இவர்கள் ஆகிற பேடை வண்டுகளுக்கு
சகல கரண உந் மாதந மது -எல்லாக் கரணங்களையும் உன்மத்தம் ஆக்க வல்ல தேன் போன்றதாயும்
விகாச ஸுவ்ந்தர்ய ஸ்ரஜி–அழகிய பூ மாலையில் உண்டான விகாசம் போலவும்
ரசிகதா சீது களக -ராஸிக்யம் ஆகிய மதுவை அடக்கி வைத்துக் கொண்டு இருப்பதாய் உள்ள
ஆசமணத்துக்கு பங்காக உள்ளங்கையை அமைத்து வைத்துக் கொள்வது சுலகம்
ராசிக்யத்தை வெட்ட வெளிச்சமாக்கி பரப்பி விடாமல் சுருக்கி அடக்கமாக காட்டிக் கொள்ளும் நிலையே யவ்வன ப்ராதுர் பாவம்
யுவத்வம் ரெங்கேந்தோ ஸூரபயதி நித்யம் ஸூவ்பகதாம் –ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நித்ய யவ்வனமானது
ஸுவ்பாக்யத்தை பரிளமிக்கின்றது
இவ்விடத்தில் அவயவஸ் பூர்த்தி ஹேதுதயா புஷ்ப உத்பத்தி காலமாகவும்
அவயவஸ் ஸுவ்ந்தர்ய பூர்த்தி ஹேதுதயா அந்த புஷ்ப விகாசமாகவும்
பிராட்டிமாருக்கு அனுபாவ்யத்தையாலே அந்த விகசித்த புஷ்ப விருத்தியான மதுவாகவும்
ரஸா ஞான ஹேதுதயா அந்த மதுபான பாத்ரமாயும் யவ்வனத்தை உருவகம் –

—————-

இனி அவயவ அனுபவங்கள்

கிரீட சூட ரத்ன ராஜி ஆதிராஜ்ய ஜல்பிகா
முக இந்து காந்தி உந் முகம் தரங்கிதா இவ ரங்கிண–91-முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ

ரங்கிண –ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
கிரீட சூட ரத்ன ராஜி ஆதிராஜ்ய ஜல்பிகா–ஸர்வேஸ்வரேஸ்வரத்தை தெரிவிக்கின்ற திரு அபிஷேகம் –
திரு முகப் பட்டை ஆகிய இவற்றில் அழுத்தின ரத்ன பங்க்தி யானது
திரு அபிஷேகத்தின் அடியில் சாத்தும் முகப்பட்டைக்கு சூடாமணி என்று பெயர் –
முக இந்து காந்தி உந் முகம் தரங்கிதா இவ -யதா ததா மேல்முகமாக பரம்பின திரு முகச் சந்திரனுடைய சோதியோ

————————

சிகராத்ந உத் ப்ரதீப்தம் திசி திசி ச மாணிக்ய மகரீ லசத் ஸ்ருங்கம் ரங்க பிரபு மணி கிரீடம் மனுமஹே
சமுத்துங்க ஸ்ப்பீதம் சித் அசித் ஆதி ராஜ ஸ்ரீய ப்ரிய ஆக்ரீடம் சூடாமணிம் அபி நிதம்பம் தம் அபிதா –92-

திசி திசி ச –திசைகள் தோறும்
சிகராத்ந உத் ப்ரதீப்தம் -சூடா மணியினால் மிகவும் விளங்கா நிற்பதாய் –
மாணிக்ய மகரீ லசத் ஸ்ருங்கம்–மகர வடிவமான மாணிக்க மணியினால் விளங்கும் நுனியை யுடையதுமான
ரங்க பிரபு மணி கிரீடம்–பெரிய பெருமாளுடைய ரத்ன கிரீடத்தை
சித் அசித் ஆதி ராஜ ஸ்ரீய-சகல சேதன அசேதனங்களுக்கும் நியாமகனாய் இருக்கிற சாம்ராஜ்ய லஷ்மிக்கு
சமுத்துங்க ஸ்ப்பீதம் -உன்னதமாயும் பருத்தும் இருந்துள்ள
ப்ரிய ஆக்ரீடம் மனுமஹே-இனிய லீலா ஸைலமாக எண்ணுகிறோம் -ரத்ன ஒளி நிரம்பி இருக்கும் மலையே-
சூடாமணிம் அபி நிதம்பம் தம் அபிதா –அந்த கிரீடத்தை சுற்றிலும் இருக்கின்ற திரு முகப் பட்டையில் உள்ள
ரத்னத்தையும் அந்த கிரீடா பர்வதத்தின் சுற்றுப் பிரதேசமாக எண்ணுகிறோம்

—————

விஹரது மயூ ரங்கின சூலிகா ப்ரமரக திலக ஊர்த்வ புண்ட்ர உஜ்ஜ்வலம்
முகம் அம்ருத தடாக சந்த்ர அம்புஜ ஸ்மய ஹர கசி முக்த மந்த ஸ்மிதம் –93-

சூலிகா-திருக் குழல் காற்றை என்ன
ப்ரமரக–திரு நெற்றியில் தொங்கும் திருக் குழல் என்ன
திலக–திலக ஆபரணம் என்ன
ஊர்த்வ புண்ட்ர–திருமண் காப்பு என்ன
உஜ்ஜ்வலம்–இவற்றால் விளங்கா நிற்பதும்
அம்ருத தடாக–அம்ருதமயமான தடாகம் என்ன
சந்த்ர–சந்திரன் என்ன
அம்புஜ -தாமரைப் பூ என்ன
இவற்றினுடைய
ஸ்மய ஹர–செருக்கை போக்கடிக்கின்றதாய்
கசி முக்த மந்த ஸ்மிதம் –வெண்ணிறமான அழகியதான-ஆஹ்லாத ஜனகமான – மந்தஸ்மிதம் உடையதுமான
விஹரது மயூ ரங்கின முகம்-பெரிய பெருமாளுடைய திரு முக மண்டலம் என்னிடம் விஹாரம் செய்க –
இந்த அழகிய திரு முக மண்டலத்துக்கு என் உள்ளத்தில் இருப்பதே பரம போக்யம்

————–

முக புண்டரீகம் உபரி த்ரி தண்டகம் திலகா ச கேச ரசமா ச மௌக்திகா
இஹ ரெங்க பர்த்து அபியத் மது விரத பிரகர ஸ்ரியம் பிரமரகாணி பிப்ரதி–94-

ரெங்க பர்த்து-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
த்ரி தண்டகம்–மூன்று ரேகைகளோடே கூடின
முக புண்டரீகம் உபரி -முகாரவிந்தத்தின் பேரில்
ச மௌக்திகா திலகா -முத்துக்களோடே கூடின திவ்ய ஆபரணங்கள்
ச கேச ரசமா –தாதுக்கள் போலும்
இஹ –இத்திரு முக மண்டலத்தில்
பிரமரகாணி-தொங்குகின்ற திருக் குழல்கள்
அபியத்-முக புண்டரீகத்தை நோக்கி வருகின்ற
மது விரத பிரகர ஸ்ரியம் பிப்ரதி–வண்டினங்களுடைய சோபையை வஹிக்கின்றன-
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வந்த போல் பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப –

———————————

ஹ்ருதயம் ப்ரஸாதயதி ரங்க பதே மதுர ஊர்த்வ புண்ட்ர திலகம் லலிதம்
அலிக அர்த்த சந்த்ர தல சம்வலிதாம் அம்ருத ஸ்ருதிம் யத் யபி சங்கயதே –95-

யத் -யாதொரு ஊர்த்வ புண்ட்ரமானது
அலிக அர்த்த சந்த்ர தல -திரு நெற்றியாகிற அர்த்த சந்த்ர கண்டத்தில் நின்றும்
சம்வலிதாம் அம்ருத ஸ்ருதிம் யத் யபி சங்கயதே –பெருகின அம்ருதப் பெருக்கை சங்கைக்கு விஷயம் ஆக்குகின்றதோ
தத் -அந்த
ரங்க பதே-பெரிய பெருமாளுடைய
லலிதம்-ருஜுவாய்
மதுர ஊர்த்வ புண்ட்ர திலகம் -போக்யமாய் இருக்கிற ஊர்த்வ புண்ட்ர திலகமானது
ஹ்ருதயம் ப்ரஸாதயதி –நெஞ்சை பிரசன்னம் ஆக்குகிறது
இது பெரிய பெருமாள் திரு நெற்றிக்கு அலங்காரம் அன்று -எனது இருதயத்தை அலங்கரிக்கவே என்றவாறு
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் -கர்ணிகா தவ கரீச கிமேஷா –மாநஸஸ்ய மமவா பரிகர்ம -போலவே இங்கும் –

—————————-

சரசீருஹே சமவநாம்ய மதாத் உபரி பரி ந்ருத்யத் அளி பங்க்தி நிபே
ஸ்ப்புரத ப்ருவவ் உபரி லோசநயோ ச விலாச லாஸ்ய கதி ரங்க ப்ருத–96-

சரசீருஹே –இரண்டு தாமரைப் பூக்களை
மதாத்–செருக்கினால்
சமவநாம்ய–கீழ்ப்படுத்தி
உபரி பரி ந்ருத்யத் -மேலே நர்த்தனம் பண்ணா நின்ற
அளி பங்க்தி நிபே–வண்டுகளின் வரிசை போன்று இருப்பவைகளான
ரங்க ப்ருத–ப்ருவவ்-பெரிய பெருமாளின் திரு புருவங்கள்
உபரி லோசநயோ –திருக்கண்களின் மேலே
ச விலாச லாஸ்ய கதி ஸ்ப்புரத–விலாசத்துடன் கூடிய நடை அழகை யுடைத்தாய் இருக்கும் படி விளங்கா நின்றன –
விலாச சேஷ்டிதங்களுடன் இருப்பதால் கூத்தாடுகின்ற வேண்டுகோளை உவமையாக அருளிச் செய்கிறார் –

————————

ஸ்மரஸர நலின பிரமாத் நேத்ரயோ பரிசர நமத் இஷு சாபச்சவி
யுகம் உதயதி ரங்க பர்த்து ப்ருவோ குருகுலம் இவ சார்ங்க ந்ருத்த ஸ்ரிய –97-

ஸ்மரஸர நலின பிரமாத் –மன்மத பணமாகிய பூக்களின் பிரமத்தினாலே
நேத்ரயோ –திருக்கண்களிலே
பரிசர–அவற்றின் சமீபத்திலே
நமத் இஷு சாபச்சவி–வளைகின்ற கரும்பு வில்லினுடைய காந்தி போன்று
யுகம் ரங்க பர்த்து ப்ருவோ -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய இணைப் புருவங்கள்
குருகுலம் இவ சார்ங்க ந்ருத்த ஸ்ரிய உதயதி–சாரங்க வில்லினுடைய நர்த்தன லஷ்மிக்கு ஆச்சார்ய குலம் போன்று விளங்குகின்றன
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல் மதனன் தன்னுயிர்த் தாதை கண்ணா பிரான் புருவம் அவையே
மன்மதனனின் பஞ்ச பானங்களில் தாமரை மலரும் ஓன்று
தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவம் வட்டம் அழகிய –
சார்ங்கம் விலக்ஷனா நர்த்தனத்துக்கு அப்பியாசம் இங்கு -என்னாவது ஆச்சார்ய குலம் –

——————

க்ருபயா பரயா கரிஷ்ய மானே சகல அங்கம் கில ஸர்வத அஷி நேத்ர
ப்ரதமம் ஸ்ரவஸி சமாஸ் த்ருணாதே இதி தைர்க்யேண விதந்தி ரங்க நேது –98-

க்ருபயா பரயா–சிறந்த கிருபையினால்
சகல அங்கம்–எல்லா அவயவங்களையும்
கில ஸர்வத அஷி -சகல அம்சத்தாலும் கண்ணாக
கரிஷ்ய மானே-பண்ணப் போகிறவைகளான
ரங்க நேது –நேத்ர–பெரிய பெருமாளது திருக்கண்கள்
ப்ரதமம் ஸ்ரவஸி சமாஸ் த்ருணாதே–முந்துற முன்னம் திருச்செவிகளை அளாவுகின்றன
இதி தைர்க்யேண விதந்தி-என்று நீட்சியால் அறிகின்றனர்

கரியவாகிப் புடை பெயர்ந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூ ரிகளுக்கு முகம் கொடுக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு கண்கள் இரண்டாய்
ராம க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண் இரண்டாய்-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற பெரிய பெருமாளுக்கும் கண் இரண்டாய் இருக்கவோ –
இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக வேண்டாவோ என்று பார்த்து –

எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று இருக்கிற ராஜாக்கள் முற்படத் தங்களுக்கு ப்ரத்யாசன்னரான
வன்னியரை அழியச் செய்யுமா போலே
பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ச்வ ஸ்தங்களாய் இருக்கிறன
திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே போவதாக முற்பட அவற்றுடனே அலை எறிகிறாப் போலே
யாய்த்து திருக் கண்கள் செவிகள் அளவும் நீண்டு இருக்கிறபடி –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம்-

——————

ஸ்ரவோ நாசா ரோதாத் தத் அவதிக டோலாயிதகதே விசால ஸ்ப்பீதே ஆயத் ருசிர சிசிர ஆதாம்ர தவளே
மித பத்த ஸ்பர்த்த ஸ்ப்புரித சபர த்வந்த்வ லலிதே கிரியாஸ்தாம் ஸ்ரீ ரெங்க பிரணயி நயந அப்ஜே மயி தயாம் -99-

ஸ்ரவோ நாசா ரோதாத்-திருச்செவி திரு மூக்கு இவற்றின் தகைவினால்
தத் அவதிக டோலாயிதகதே-இவ்விரண்டு அவயவங்கள் அளவாக சுழலம் இடா நின்றவைகளாய்
விசால -விசாலங்களாய்
ஸ்ப்பீதே -பிருஹத்துக்களாய்
ஆயத் –நீண்டவைகளாய்
ருசிர–அழகியவைகளாய்
சிசிர–குளிர்ந்தவைகளாய்
ஆதாம்ர தவளே-சிறந்து சிவந்து வெளுத்தவைகளாய்
மித பத்த ஸ்பர்த்த ஸ்ப்புரித–பரஸ்பரம் சண்டை இடுகின்ற-துடிக்கின்ற
சபர த்வந்த்வ–இரண்டு கெண்டை மீன்கள் போலவும்
லலிதே கிரியாஸ்தாம் ஸ்ரீ ரெங்க பிரணயி நயந அப்ஜே மயி தயாம் -மனோ ஹரங்களான
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருக் கண்கள் அடியேன் பால் திருவருளை செய்யக் கடவன –

————

கருணா அம்ருத கூல முத்வாஹ ஏஷா ப்ரணமத் ஸ்வாகதிகீ பிரசன்ன சீதா
மயி ரங்க தந உப கர்ணிகா அஷ்ணோ சரிதோ வீக்ஷண வீசி சந்ததி ஸ்தாத் -100-

ரங்க தந–ஹே ஸ்ரீ ரெங்கத்துக்கு செல்வம் போன்றுள்ள பெரிய பெருமாளே –
கருணா அம்ருத கூல முத்வாஹ –கருணையாகிய அம்ருதம் நிரம்பியதாய்
ப்ரணமத் ஸ்வாகதிகீ–வந்து பணிகின்றவர்களை ஆதரவோடு ஏற்றுக் கொள்ளுமதாய் –
நல் வரவா -என்று குசலம் விசாரிக்கிறதாம்
பிரசன்ன சீதா-தெளிவும் குளிர்ச்சியும் மிக்கதாய்
உப கர்ணிகா-திருச்செவி அளவும் வியாபிக்குமதாய் –
மணி கர்ணிகா காட் தீர்த்தம் போலே இதுக்கும் திரு நாமம் இடுகிறார் –
ஏஷ அஷ்ணோ–ஆக இப்படி விலக்ஷணமாய் இருக்கிற திருக்கண்களாகிற நதிகளில்
மயி சரிதோ வீக்ஷண வீசி சந்ததி ஸ்தாத் -கடாக்ஷங்களான அலை வரிசை–
அமுதப் புனல் – அடியேன் மீது ஆக வேணும் –

—————–

விலசதி நாசா கல்பக வல்லி முக்தா இவ ரங்க நிலயஸ்ய
ஸ்மிதம் அபி தத் நவ குஸூமம் கபுக கபோலம் ச பல்லவ உல்லசிதம் –101-

நாசா கல்பக வல்லி முக்தா இவ ரங்க நிலயஸ்ய–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மூக்கானது
அழகிய கற்பகக் கொடி போன்று விளங்குகின்றது
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ
ஸ்மிதம் அபி தத் நவ குஸூமம் –புன்முறுவலோ என்னில் அந்தக் கற்பகக் கொடியின்-
அப்போது அலர்ந்த செவ்விப் பூ – புதிய மலர் போலவும்
கபுக கபோலம் ச பல்லவ உல்லசிதம் -மோவாயும் கபோலங்களும் தளிர் வடிப்புப் போலவும்
விலசதி–விளங்குகின்றன –
கீழே -68-ஷிதி கமல நிவாஸ -என்று கற்பக வ்ருக்ஷமாக ரூபித்து அருளி
அதில் கொடி தளிர் மலர் இருப்பதை இங்கு அருளிச் செய்கிறார் –

——————

நயன சபர வித்தவ் கர்ண பாச அவருத்தவ் ருக்ஷ இவ லுடத அர்ச்சிர் மஞ்ஜரீ உத் க்ரந்தவ்
பரிமிலத் அலக ஆலீ சைவலாம் அம்சவேலாம் அநு மணி மகர உத்கவ் ரங்க துர்ய அம்ருத அப்தே –102-

ரங்க துர்ய அம்ருத அப்தே –பெரிய பெருமாளாகிற அமுதக் கடலினிடைய
பரிமிலத் அலக ஆலீ சைவலாம் -சுற்றிலும் தொங்குகின்ற திருக் குழல்கள் ஆகிய வேலம் பாசியை யுடைத்தான
அம்சவேலாம் அநு –திருத் தோள்கள் ஆகிற கரையின் அருகில்
நயன சபர வித்தவ்–திருக் கண்களாகிய மீன்களால் அடிக்கப் பட்டவையாய்-
கர்ண பாச அவருத்தவ்–திருச் செவிகளாகிய வலைக் கயிற்றினால் பிடிக்கப் பட்டவைகளாய்
ருக்ஷ–இந்த இரண்டு கார்யங்களாலும் உண்டான கோபத்தினால்
அர்ச்சிர் மஞ்ஜரீ உத் க்ரந்தவ் இவ ஸ்திதவ்–பூக் கொத்துக்கள் போலே இருக்கிற தேஜஸ் ஸூக்களை
கக்குகின்றன போலே இருப்பவைகளாய்
மணி மகர உத்கவ் லுடத -சிறந்த மகர குண்டலங்கள் தள தள என்று விளங்குகின்றன –
தேஜோ மஞ்சரியை வெளியிடுகின்றன –
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று -என்றால் போலே இங்கும் –
மகர குண்டலங்கள் கர்ணாந்த விஸ்ராந்தங்களான திருக்கண்களின் அழகுக்கும் பிரகாசங்களாயும்
திருச் செவிகளில் பொலிந்து ஜ்வலிக்கின்றன –

————————

திருமுகமான ஏரியில் -உதடுகள் தாமரை -கண்கள் மீன் -மூக்கு பாசிக்கொடி-
கர்ணபூஷணம் மகர மீன்கள் -கேசங்கள் சோலைகள்

அதர மதுர அம்போஜம் தத் கர்ண பாச ம்ருணாளிகா வலயம் அபி மாம் ஆஸ்தாம் ரெங்கேந்து வக்த்ர சர சிரம்
நயன சபரம் நாசா சைவால வல்லரி கர்ணிகா மகரம் அலக ஸ்ரேநீ பர்யந்த நீல வந ஆவலி –103-

அதர மதுர அம்போஜம்–திருப்பவளம் ஆகிற போக்யமான தேன் நிறைந்த தாமரைப் பூவை யுடைத்தாயும் –
தத் கர்ண பாச ம்ருணாளிகா வலயம் -திருச் செவி மடல்கள் ஆகிற தாமரைக் கொடி வளையல்களை யுடைத்தாயும்
நயன சபரம் -திருக் கண்களாகிற மீன்களை யுடைத்தாயும் –
நாசா சைவால வல்லரி–திரு மூக்காகிற பாசிக் கொடியை யுடைத்தாயும்
கர்ணிகா மகரம்–கர்ண பூஷணங்கள் ஆகிற மகரங்களை யுடைத்தாயும்
அலக ஸ்ரேநீ பர்யந்த நீல வந ஆவலி –திருக் குழல் கற்றை யாகிற அருகில் இருக்கிற கறுத்த சோலைகளை யுடைத்தாயும்
தத் ரெங்கேந்து வக்த்ர சரஸ்-பரம விலக்ஷணமான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு முக மண்டலமாகிற தடாகமானது
அபி மாம் ஆஸ்தாம் சிரம்–எப்பொழுதும் -நெடு நாள் அளவும் என்னை நோக்கி அருள வேணும் –
பக்ஷபாதம் கொண்டு இருக்க வேண்டும் என்றதாயிற்று

————————

திருக்கழுத்தின் உள்ள பிராட்டி திருக்கை வளையல்களால் உண்டான ரேகைகளை அனுபவிக்கிறார்-

ரமயது ச மாம் கண்ட ஸ்ரீ ரெங்க நேது உதஞ்சித க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரலம்ப மலிம்லுச
ப்ரணய விலகத் லஷ்மீ விஸ்வம்பரா கர கந்தலீ கநக வலய கிரீடா சங்க்ராந்த ரேக இவ உல்லஸத் –104-

ஸ்ரீ ரெங்க நேது உதஞ்சித க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரலம்ப மலிம்லுச–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
செழித்து வளர்ந்து பாக்கு மரத்தினுடைய இளம் கழுத்து என்ன -சங்கு என்ன –
இவற்றின் அழகைக் கொள்ளை கொள்வதாயும்
ப்ரணய விலகத் லஷ்மீ விஸ்வம்பரா-அன்போடு ஆலிங்கனம் செய்து கொள்கிற
திருமகள் என்ன நிலமகள் என்ன இவர்களுடைய
கர கந்தலீ கநக வலய கிரீடா சங்க்ராந்த ரேக இவ உல்லஸத் –வாழைத் தண்டு போன்ற திருக் கைகளில் உள்ள
பொன் வளைகளில் நின்றும் விளையாட்டாக வந்து சேர்ந்த ரேகைகளை யுடையது போலே விளங்குகின்றதாயுமாய் இருக்கிற
ரமயது ச மாம் கண்ட -விலக்ஷணமான திருக் கழுத்து என்னை மகிழ்விக்க வேணும் —
கீழே அமுதக்கடல் பொய்கை அனுபவம் –
இதில் கடலில் தோன்றிய சங்கும் -பொய்கைக் கரையில் உள்ள பாக்கு மரத்தின் அனுபவமும் –

—————

அதிஷ்டான ஸ்தம்பவ் புவந ப்ருது யந்த்ரஸ்ய கமலா கரேனா ஆலாநே அரி கரி கடா உந்மாத முசலவ்
ப்பணீந்திர ஸ்ப்பீத ஸ்ரக் வ்யதிகரித சந் நிக்த விபபவ் புஜவ் மே பூயாஸ்தம் அபயம் அபி ரங்க பிரணயிந –105-

புவந ப்ருது யந்த்ரஸ்ய-உலகமாகிய பெரிய யந்த்ரத்துக்கு
அதிஷ்டான ஸ்தம்பவ்–ஆதாரத் தூண்களாய் இருப்பதையும்
கமலா கரேனா ஆலாநே –பிராட்டி யாகிற யானைப் பேடைக்குக் கட்டுத் தறியாய்
உள்ளவையும்
அரி கரி கடா உந்மாத முசலவ்-சத்ருக்கள் ஆகிற யானைக் கூட்டங்களை முடிப்பதில் உலக்கையாய் உள்ளவையும்
பணீந்திர–ஆதி சேஷனுடைய திருமேனி என்ன
ஸ்ப்பீத ஸ்ரக்–பருத்த புஷ்ப மாலை என்ன
இவற்றினுடைய
வ்யதிகரித -சேர்க்கையை யுடையவைகளும்
இவற்றில் புஜங்கள் எவை என்ற
சந் நிக்த விபபவ் -சந்தேகிக்கத் தக்க பெருமையை யுடையவைகளுமான
இன்னது திருக்கை -இன்னது திரு மாலை இன்னது ஆதிசேஷன் உடல் என்று நிச்சயித்து அறிய ஒண்ணாமல்
சம்சயிக்கும் படி அன்றோ இருப்பது –
திரண்டு உருண்டு நீண்டு மெத்து என்று இருக்கும் தன்மையைச் சொன்னபடி –
பாஹும் புஜக போகாபம் -ஸ்ரீ இராமாயண ஸ்லோகம்
புஜவ் மே பூயாஸ்தம் அபயம் அபி ரங்க பிரணயிந –ஸ்ரீ பெரிய பெருமாளாது புஜங்களானவை அடியேனுக்கு
அபயம் அளிக்கக் கடவன
இப்படிப்பட்ட புஜங்களை நோக்கி அன்று அஞ்சேல் என்று கை கவியாய் என்று பிரார்த்திக்கப் பிராப்தம் –

—————-

பிரதி ஜலதித வேலா ஸய்யாம் விபீஷண கௌதுகாத் புந இவ புரஸ் கர்த்தும் ஸ்ரீ ரங்கின ப்பணி புங்கவே
சமுபததத கஞ்சித் கஞ்சித் ப்ரசாரயத புஜ த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே –106-

பிரதி ஜலதித–கடலுக்கு எதிர்முகமாக
வேலா ஸய்யாம் -கடற்கரையில் பள்ளி கொண்டதை
விபீஷண கௌதுகாத் புந–ஸ்ரீ விபீஷணனுடையய குதூஹலத்தினால் மறுபடியும்
இவ புரஸ் கர்த்தும்–ஆதரித்து அங்கீ கரிப்பதற்குப் போலே
மன்னுடைய விபீடணற்காய் மதில் இலங்கை திசை நோக்கி மலர்க் கண் வைத்த என்னுடைய திருவரங்கன் -அன்றோ
பணி புங்கவே–திரு வநந்த ஆழ்வான் மீது
சமுபததத கஞ்சித் புஜ -ஒரு திருக் கையை தலையணையாக வைத்துக் கொண்டு இருப்பவரும்
கஞ்சித் ப்ரசாரயத புஜ-மற்றொரு திருக் கையை நீட்டிக் கொண்டு இருப்பவருமான
ஸ்ரீ ரங்கின த்வயம் அபி சதா தாந ஸ்ரத்தாளு தீர்க்கம் உபாசமஹே –-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நீண்டதும் –
அலம் புரிந்த நெடும் தடக்கை ஏற்றபடி எப்போதும் தானம் பண்ணுவதில் கருத்துடையதுமான
இரண்டு திருக் கைகளையும் சிந்திக்கிறோம் –

————–

குஸூம பர அலசவ் ஸ்ப் படிக வேதி சயவ் விடபவ் அமரதரோ பரம் பரிஹஸன் ப்ருது ரங்க புஜ
பஹு மணி முத்ரிகா கநக கங்கண தோர்வலயை கிசலயி தோர்த்வயம் ப்பணிநி நிர்ப்பர ஸூப்தம் –107-

பஹு மணி முத்ரிகா-அநேகங்களான ரத்ன மோதிரங்கள் என்ன
கநக கங்கண–பொன்மயமான கை வளையல்கள் என்ன
தோர்வலயை –தோள் வளைகள் என்ன
ஆகிய இவற்றால்
கிசலயி–பல்லவர்களை யுடையதாயும்
பணிநி நிர்ப்பர ஸூப்தம் திரு அனந்தாழ்வான் மேல் நிர்விசாரமாகக் கண் வளர்ந்து அருளுவதும்
காரியப்பாடு இல்லாமையால் -நிர்ப்பரராய் கண் வளர்ந்து அருளுகிறார் –
இப்படி இருப்பதனால்
குஸூம பர அலசவ்–புஷ்பங்கள் நிறைந்து இருப்பதால் தழைந்தவைகளாய்
ஸ்ப் படிக வேதி சயவ்–ஸ்படிக்கல் மயமான திண்ணையிலே படுத்து இருப்பவைகளான
விடபவ் அமரதரோ –கல்ப வ்ருக்ஷத்தின் இரண்டு கிளைகளை
பரம் பரிஹஸன் ப்ருது ரங்க புஜதோர்த்வயம் -மிகவும் பரிகசிப்பதும் பருத்ததுமான பெரிய பெருமாளுடைய இரண்டு புஜ த்வயத்தை
இம–ஆஸ்ரயிக்கிறோம் –
சதா தாந ஸ்ரத்தாளு-என்று கீழே சொன்னதுக்கு விவரணம் இதி
பல்லவர்களும் புஷபங்களும் நிறைந்த கல்ப வ்ருக்ஷம்-பாரிஜாத விட பாநபிதோ யா -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்

—————

மத் ரஷா விரத கௌதுகே ஸூ கடகே விக்ராந்தி ஐர்னே ஜபே
சார்ங்க ஜியாகின கர்க்க சிம்னி ஸூமந சரக் மோஹந மார்த்தவே
தோர்த் வந்த்வம் பஹு ச ப்ரலோப்ய கமலா லீலா உப தானம் பவத்
தத் சித்ர அலக முத்ரிதம் விஜயதே ஸ்ரீ ரெங்க சம் சங்கிந –108-

மத் ரஷா விரத கௌதுகே -என்னைக் காத்து அருளும் விரதத்துக்குக் கட்டிய கங்கண ஸூத்ரமாய் உள்ள
நம் குழந்தைகளை ரஷிக்கும் என்றதும் மகிழ்வாள் -இவரும் ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலீதர் அன்றோ
ஸூ கடகே -அழகிய வளையிலும்
விக்ராந்தி ஐர்னே ஜபே-பராக்கிரம ஸூசகமான
சார்ங்க ஜியாகின கர்க்க சிம்னி–சார்ங்க வில்லின் தழும்பினாலும் உண்டான வன்மையாலும்
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் வைதேஹி பர்த்தாராம் பரிஷஸ்வஜே
ஸூமந -சரக் மோஹந மார்த்தவே–புஷ்ப மாலையோ இது என்று மயங்குவதற்கு உறுப்பான ஸுவ்குமார்யத்தாலும்
பஹு ச ப்ரலோப்ய-பெரும்பாலும் ஆசைப்படச் செய்து
கமலா லீலா உப தானம் பவத்-ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு லீலார்த்தமான தலையணையாக ஆகின்றதும்
தத் சித்ர அலக முத்ரிதம்–அந்தப் பிராட்டியின் விசித்திரமான கூந்தல்களினால் அடையாளம் இடப்பெற்றதுமான
விஜயதே ஸ்ரீ ரெங்க சம் சங்கிந தோர்த் வந்த்வம் –ஸ்ரீ பெரிய பெருமாளாது திருக்கை இணையானது சிறந்து விளங்குகின்றது
மூன்று ஹேதுக்களால் ஸ்ரீ பெரிய பிராட்டியை உகப்பிக்கிறது
ஆ விவாஹ சமயாத் க்ருஹே வநே சைஸவே தத் அநு யவ்வனே புந ஸ்வாபஹ அநுர் அநுபாஸ்ரிதா
அந்யயா ராம பாஹுர் உபாதானம் ஏக்ஷதே–உத்தர ஸ்ரீ ராமாயணம் –

—————

பவ ஆர்த்தா நாம் வக்த்ர அம்ருத ஸரஸி மார்க்கம் திசத் இவ
ஸ்வயம் வக்த்ரேண இதம் வரதம் இதி சந்தர்சிதம் இவ
கர அம்போஜம் பங்கேருஹ வநருஷா இவ பாடலம் இவ
ச்ரயாமி ஸ்ரீ ரெங்கே சயிது உபதாநீ க்ருதம் அஹம் –109-

பவ ஆர்த்தா நாம்–சம்சாரத்தில் அடி கொதித்தவர்களுக்கு
வக்த்ர அம்ருத ஸரஸி–திரு முகமாகிற அமுதத் தடாகத்தில் -போய்ச் சேர்வதற்கு –
மார்க்கம் திசத் இவ-ஸ்திதம் -வழியை உபதேசிப்பது போன்று உள்ளதும் –
திரு முகத்தில் திருக்கை படிந்து இருக்கிற படிக்கு உத்ப்ரேஷித்து அருளுகிறார் –
நாட்டியத்தில் விரலாலும் முகத்தாலும் உள் கருத்தை காட்டுவார்கள் அன்றோ –
ஸ்வயம் வக்த்ரேண இதம் வரதம் இதி சந்தர்சிதம் இவ-இந்தத் திருக்கையானது வரங்களை எல்லாம் அளிக்க வல்லது
என்று திரு முகத்தால் தானே காட்டப்பட்டது போல் உள்ளதும்
கர அம்போஜம் பங்கேருஹ வநருஷா இவ பாடலம் இவ-தாமரைக் காட்டின் இடத்தில் சீற்றத்தினால் போலே சிவந்து இருப்பதும்-
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா அன்றோ –
ச்ரயாமி ஸ்ரீ ரெங்கே சயிது உபதாநீ க்ருதம் அஹம் –தலையணையாக செய்து கொள்ளப் பட்டதுமான
ஸ்ரீ பெரிய பெருமாளது வலது தாமரைக் கையை அடியேன் பற்றுகிறேன் —

——————

கிரீடம் ஸ்ரீ ரெங்கே சயிது உபதாநீ க்ருத புஜ விதி ஈச அதீ சத்வாத் கடதே இதி ஸம்ஸ்ருஸ்ய வததி
நிஹீநாநாம் முக்க்யம் சரணம் இதி பாஹு ததிதர ஸ்ப் புடம் ப்ருதே பாத அம்புஜ யுகளம் ஆஜானு நிஹித–110-

ஸ்ரீ ரெங்கே சயிது -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
உபதாநீ க்ருத புஜ-தலையணையாக செய்து கொள்ளப்பட்ட திருக்கையானது
கிரீடம் ஸம்ஸ்ருஸ்ய-திரு அபிஷேகத்தை தொட்டு
விதி ஈச அதீ சத்வாத் கடதே இதி வததி–ப்ரம்ம ருத்ராதிகளுக்கும் தலைவர் ஆகையால் இந்த திரு அபிஷேகம்
இவருக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது என்று சொல்லா நின்றது -வலது திருக்கை பரத்வத்தை ஸ்புடமாக்கும்
ஆஜானு நிஹித–முழந்தாள் வரையில் நீட்டி வைக்கப்பட்டுள்ள
ததிதர பாஹு -மற்ற ஒரு திருக்கையானது
பாத அம்புஜ யுகளம்-ஸம்ஸ்ருஸ்ய-திருவடியைத் தொட்டுக்க காட்டி –
நிஹீநாநாம் முக்க்யம் சரணம் இதி ஸ்ப் புடம் ப்ருதே -தாழ்ந்தவர்களுக்கு இத்திருவடிகளே முக்கியமான புகல்
என்றும் சொல்லா நின்றது போலும் -இடது திருக்கை ஸுவ்லப்யம் பறை சாற்றும்

———————

மலயஜ சசி லிப்தம் மாலதி தாம தல்பம் ஸூ மணி சர விதாநம் கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம்
தனுஜ வ்ருஷ விஷாண உல்லேக சித்ரம்ச லஷ்மீ லலித க்ருஹம் உபாஸே ரங்க சர்வம் ஸஹ உரஸ் –111-

மலயஜ சசி லிப்தம் -சந்தனத்தாலும் பச்சைக் கற்பூரத்தாலும் பூசப்பட்டதாய்
மாலதி தாம தல்பம்–முல்லை மாலையை படுக்கையாய் உடையதாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் –புனைந்த தண்ணம் துழாய் யுடை அம்மான் அன்றோ
ஸூ மணி சர விதாநம்–சிறந்த ரத்னங்களாலான சரங்களை மேல் கட்டியாக உடையதாய்
கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம்-ஸ்ரீ கௌஸ்துப மணி யாகிற மங்கள தீபத்தை யுடையதாய்
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு அன்றோ –
தனுஜ வ்ருஷ-அஸூரர்கள் ஆகிற எருதுகளினுடைய
விஷாண உல்லேக-கொம்புகளினால் உண்டான ரேகைகளை
சித்ரம்ச–சித்திரமாக யுடைத்தாய் இருக்கிற -கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் தானே அரங்கன் –
ரங்க சர்வம் ஸஹ உரஸ் ––ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மார்பை
லஷ்மீ லலித க்ருஹம் உபாஸே -ஸ்ரீ பிராட்டியின் விலாச மந்த்ரமாகவே அனுசந்திக்கிறேன்
நாரீணாம் உத்தமாயா முக்கியம் சரணம்–சரணம் சப்தம் க்ருஹத்துக்கும் வாசகம் அன்றோ –

————————

ஹார ஸ்ப் பாரித பேநம் அம்சு லஹரீ மாலா ருத்தி முக்தாபல
ஸ்ரேநீ சீகர துர்த்திநம் தத இதோ வ்யாகீர்ண ரத்ன உத்கரம்
ஆவிர் கௌஸ்துப லஷ்மி ரங்க வஸதே நிஸ்ஸீம பூம அத்புதம்
வஷஸ் மந்த்ர மத்த்ய மாந ஜலதி ஸ்லாகம் விலோகே மஹி –112-

ஹார ஸ்ப் பாரித பேநம்–முக்தாஹாரங்களை பெருத்த நுரைகளாக உடைத்தாயும் –
கடலை கடைந்தால் நுரைகள் உண்டாகும் -வெண் முத்து வடங்களே நுரைகள்
அம்சு லஹரீ மாலா ருத்தி–காந்திகளாகிற அலை வரிசைகளில் ஸம்ருத்தியை உடைத்தாயும்
முக்தாபல ஸ்ரேநீ சீகர துர்த்திநம்–முத்து வரிசைகளாகிற ஜல பிந்துக்களாலே அடர்ந்ததாயும் –
முத்துக்கள் நீர் திவலைகள்
தத இதோ-இங்கும் அங்கும்
வ்யாகீர்ண ரத்ன உத்கரம்–சிதறி இருக்கிற ரத்ன சமூகங்களை உடைத்தாயும்
ஆவிர் கௌஸ்துப லஷ்மி -ஸ்ரீ கௌஸ்துப மணியும் ஸ்ரீ திரு மா மகளும் தோன்றப் பெற்றதாயும்
கடல் கடையும் பொழுது ஆவிர்பவித்தவை இங்கும் உண்டே
நிஸ்ஸீம பூம அத்புதம்–அளவிறந்த பெருமைகளாலே ஆச்சர்யமாக இருக்கிற
வடிவினாலும் குணத்தினாலும் பெருமை
ரங்க வஸதே வஷஸ்–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு மார்பை
மந்த்ர மத்த்ய மாந ஜலதி ஸ்லாகம் விலோகே மஹி –மந்த்ர பர்வதத்தால் கடையைப் படுகின்ற கடலினோடு
ஒத்த பெருமையை யுடையதாக சேவிக்கக் கடவோம் –
மத்யமாந சலபே நிலா சிந்து -ஸ்ரீ வரதராஜ ஸ்த்வம் -திரு மார்பில் ஈடுபட்டு அருளியதை அடி ஒற்றி இங்கும்

————————-

வக்ஷஸ்த் ஸ்தவ்யாம் துளசி கமலா கௌஸ்துபை வைஜயந்தீ
சர்வ ஈசத்வம் கதயதி தராம் ரங்க தாம்ந தத் ஆஸ்தாம்
கூர்ம வ்யாக்ரீ நக பரி மிலத் பஞ்ச ஹேதீ யசோதா
நத்தா மௌக்த்ய ஆபரணம் அதிகம் ந சமாதிம் திநோதி -113-

ரங்க தாம்ந வக்ஷஸ்த் ஸ்தவ்யாம் துளசி கமலா கௌஸ்துபை வைஜயந்தீ-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
திரு மார்பிடத்திலே திருத் துழாய் ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸ்ரீ கௌஸ்துபம் –
ஆகியவற்றோடு கூடி இருக்கும் வனமாலையானது
சர்வ ஈசத்வம் கதயதி தராம் -இவர் சர்வஸ்மாத் பிறர் என்னும் இடத்தை நன்கு விளக்குகிறது
தத் ஆஸ்தாம்-அது நிற்க
யசோதா
நத்தா மௌக்த்ய ஆபரணம் -ஸ்ரீ யசோதைப் பிராட்டியினால் சாத்தப்பட்ட
கூர்ம வ்யாக்ரீ நக பரி மிலத் பஞ்ச ஹேதீ –கூர்ம நகம் புலி நகல் இவற்றோடு கூடிய
அச்சுத்தாலி ஆமைத்தாலி போன்ற பஞ்ச திரு ஆபரணங்கள் -பஞ்சாயுத ஹாரம் –
அதிகம் ந சமாதிம் திநோதி –நம்முடைய சித்த விருத்தியை மிகவும் மகிழ்விக்கின்றது –
மங்களாசாசனத்தில் ஊற்றம் பெற்ற நாம் அச்சம் கெட்டு இருக்கப் பற்றாசு பெற்றோமே –
அக்குவடமுடுத்து ஆமைத்தாலி பூண்ட அநந்த சயனன்–தளர்நடை நடவானோ -ஸ்ரீ பெரியாழ்வார் –

——————–

கியான் பர மம ஜகத் ஆண்ட மண்டலீ இதி அத்ருப்திதஸ் க்ருசிதம் இவ உதரம் விபோ
ரிரஷிஷா உசித ஜெகதீ பரம்பராம் பராம் இவ ப்ரதயதி நாபி பங்கஜம் –114-

உதரம் விபோ–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு உதரமானது
கியான் பர மம ஜகத் ஆண்ட மண்டலீ இதி அத்ருப்திதஸ்–பதினான்கு லோகங்கள் கொண்ட அண்ட சமூகம்
எனக்கு எவ்வளவு பாரம் என்கிற மனக்குறையினாலே
க்ருசிதம் இவ -இழைத்தது போலும் –
சாமுத்ரிகா லக்ஷண பிரகாரத்தின் படி திரு வயிறானது உள் அடங்கி இருக்க இவர் ஹேது கல்பிக்கிறார் –
ஏழு உலகுண்டும் ஆராது இருந்தானைக் கண்டது தென் அரங்கத்தே –
ரிரஷிஷா உசித ஜெகதீ பரம்பராம் பராம் இவ ப்ரதயதி நாபி பங்கஜம் –திரு நாபிக் கமலம் வேறான
தனது ரக்ஷண பாரிப்புக்குத் தகுதியான லோக சமூகத்தை வெளியிடுகின்றது போலும்
அவனுக்குண்டான அதிருப்தியை போக்க வல்லார் யார் -நாமே போக்குவம் என்று
திரு நாபிக் கமலம் முற்படுகின்றதாம்
மேலும் மேலும் ஸ்ருஷ்ட்டி பண்ண சஜ்ஜமமாய் இருப்பது போலே இளமையும் செவ்வியும் மாறாதே
நித்ய யவ்வனம் பூண்டு அன்றோ இருக்கிறது

——————-

த்ரிவித சித் அசித் ப்ருந்தம் துந்த அவலம்பி வலி த்ரயம் விகணயத் இவ ஐஸ்வர்யம் வ்யாக்க்யாதி ரங்க மஹே சிது
ப்ரணத வசதாம் ப்ரூதே தாமோதரத்வ கர குண தத் உபய கிண ஆக்ருஷ்டம் பட்டம் கில உதர பந்தனம் –115–

ரங்க மஹே சிது-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
துந்த அவலம்பி வலி த்ரயம்-திரு வயிற்றைப் பற்றி இருக்கிற த்ரி வலியானது
த்ரிவித சித் அசித் ப்ருந்தம் -மூ வகைப்பட்ட சேதன அசேதன சமூகத்தை
விகணயத் இவ–எண்ணா நின்றது போன்று
ஐஸ்வர்யம் -ஸமஸ்த சேதன அசேதன நியாமகத்வமாகிற ஐஸ்வர்யத்தை
வ்யாக்க்யாதி -வியாக்யானம் பண்ணுகிறது
தாமோதரத்வ கர கிண–தாமோதரன் என்னும் திரு நாமத்துக்கு அடியான தாம்புத் தழும்பானது
ப்ரணத வசதாம் ப்ரூதே–ஆஸ்ரித பராதீனன் என்பதைச் சொல்லா நின்றது –
தத் உபய குண ஆக்ருஷ்டம் பட்டம் கில உதர பந்தனம் –உதர பந்தம் என்னும் திவ்ய ஆபரணம்
மேல் சொன்ன பரத்வ ஸுவ்லபயங்கள் இரண்டுக்குமான கட்டின பட்டம் போலும் –
தத் உபய குண ஆவிஷ்டம் -பாட பேதம்
குண -கயிற்றுக்கும் சமஸ்க்ருதத்தில் -ஆக இரண்டு கயிறுகள் வேண்டிற்று இதுக்கு இழுத்துக் கட்ட – என்றவாறு
தத்ஸ ச தாமோ தரதாம் ப்ரத்யயவ் தாம பந்த நாத் இதி வா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-20–
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யத்தில் மூன்று ஹேதுக்கள் -தாமோதரத்வகா -என்பதற்கு காட்டி அருளுகிறார் –
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ

——————-

த்ரயா தேவா துல்யா த்ரிதயம் இதம் அத்வைதம் அதிகம்
த்ரிகாத் அஸ்மாத் தத்த்வம் பரம் இதி விதர்க்கான் விகடயன்
விபோ நாபீ பத்ம விதி சிவ நிதாநம் பகவத
தத் அந்யத் ப்ரூ பங்கீ பரவத் இதி சித்தாந்தயதி ந –116-

த்ரயா தேவா துல்யா –மும் மூர்த்திகளும் சம பிரதானர் என்றும்
த்ரிதயம் இதம் அத்வைதம் -இம் மூவரும் ஒருவரே என்றும்
அதிகம் த்ரிகாத் அஸ்மாத் தத்த்வம் பரம் -இம் மூர்த்தி த்ரயத்தில் காட்டிலும் மேற்பட்டதான
துரீய ப்ரஹ்மமே பரமானது என்றும்
இதி விதர்க்கான் விகடயன்-என்றும் உண்டான விப்ரதி பத்திகளைப் போக்கடிப்பதற்காக
விபோ நாபீ பத்ம விதி சிவ நிதாநம் பகவத-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு மூலக் கிழங்காய் இருக்கிற-
ஸ்ரீ பெரிய பெருமாளது திரு நாபிக் கமலமானது
தத் அந்யத்-அந்த பகவானை ஒழிந்த பொருள் எல்லாம்
ப்ரூ பங்கீ பரவத் இதி சித்தாந்தயதி ந –-அவனுடைய புருவ நெறிப்புக்கு வசப்பட்டு இருக்கின்றன
என்று நமக்கு முடிவு காட்டித் தருகின்றது –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –பெரிய திருவந்தாதி–72-

ஐக்கிய வாதம் இங்கு இல்லை -ஸாம்ய வாத நிராசனமே உள்ளது –
அத்தையும் நிரசிப்பதே ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் என்று உணர்ந்து இந்த ஸ்லோகத்தில் இரண்டுமே உள்ளது
ப்ரஹ்மாதிகளுக்கு பரத்வம் இல்லை பரவத்–பர வசப்பட்டுள்ளும் தன்மையே உள்ளது –
ஸ்ருஷ்ட்டி கர்த்தாவுக்கு பரவசப்பட்டே இருப்பார்கள் என்று ப்ரத்யக்ஷமாகவே காட்டுமே திரு நாபி கமலம் –

———————-

கர்ப்பே க்ருத்வா கோப்தும் அநந்தம் ஜகத் அந்தஸ்
மஜ்ஜத் ப்ரம்யா வாஞ்ச்சதி சாம்யம் நனு நாபி
உத்க்ஷிப்ய ஏதத் ப்ரேஷிதும் உத்யத் ப்ரமி பூயம்
நாபீ பத்ம ரம்ஹதி ரங்க ஆயதன அப்தே–117-

ரங்க ஆயதன அப்தே–கடல் போன்ற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
நாபீ–திரு நாபீயானது
அநந்தம் ஜகத்–அளவிறந்த உலகத்தை
கர்ப்பே க்ருத்வா கோப்தும் –உள்ளடக்கி ரக்ஷிப்பதற்காக
அந்தஸ் மஜ்ஜத் ப்ரம்யா சாம்யம்-உள்ளே முழுகுகின்ற சுழியோடே ஒப்பை
வாஞ்ச்சதி நனு–விரும்புகின்றது போலும் –
நாபி பத்ம-நாபிக் கமலமோ என்னில்
உத்க்ஷிப்ய ஏதத் ப்ரேஷிதும்-உள்ளடக்கிய இந்த ஜகத்தை உயரக் கிளப்பிப் பார்ப்பதற்காக
உத்யத் ப்ரமி பூயம் ரம்ஹதி –மேல் முகமாக கிளர்கின்ற சுழியாய் இருக்கும் நிலையை அடைகின்றது போலும்
திரு நாபி மண்டலாகாரமாயும்
திரு நாபிக் கமலம் மண்டலாகாரமாய் மேல் ஓங்கி இருக்கின்றது –
இரண்டுக்கும் ஹேது அருளிச் செய்கிறார் இதில்
திரு நாபி சுழித்தும் ஆழ்ந்தும் இருக்குமே-கடலுள் அழுந்தும் பொழுது சுழித்தல் உண்டாகும் –
வெளியே விடாமல் சுழி ரக்ஷிக்குமே
மைந் நின்ற கருங்கடல் -ஸ்ரீ பெரிய திருமொழி -11-6-பதிகம் உண்டு ரக்ஷித்தமை அருளிச் செய்கிறார் –

——————-

மதம் இவ மது கைடபஸ்ய ரம்பா கரப கரீந்த்ர கர ஆபி ரூப்ய தர்ப்பம்
ஸ்ப்புடம் இவ பரி பூய கர்வ குர்வோ கிம் உபமிமீ மஹி ரங்க குஞ்ஜர ஊர்வோ—118-

மதம் இவ மது கைடபஸ்ய–மது கைடபர்களின் கொழுப்பை அடக்கியது போலே
ரம்பா கரப கரீந்த்ர கர ஆபி ரூப்ய தர்ப்பம்–வாழைத் தண்டு
கரப பிரதேசம் –மணிக்கட்டு முதல் சுண்டு விரல் அளவுள்ள பிரதேசம் -யானைத் துதிக்கை ஆகிய
இவற்றின் அழகையும் செருக்கையும்
ஸ்ப்புடம் இவ பரி பூய கர்வ குர்வோ -அடக்கி அந்த மேநாணிப்பு தோற்ற பருத்து விளங்குகின்ற
கிம் உபமிமீ மஹி ரங்க குஞ்ஜர ஊர்வோ—குடை பாலானாய்-என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பெருமாள்
தொடைகட்க்கு எந்த வஸ்துக்களை உபமானமாகச் சொல்லக் கடவோம் –

———–

கடீ காந்தி ஸம்வாதி சாதுர்ய நீவி லசத் ரத்ன காஞ்சீ கலாப அநு லோபம்
மஹாப்ரம் லிஹந் மேரு மாணிக்ய சானூ இவ ஆபதி பீதாம்பரம் ரங்க பந்தோ –119-

ரங்க பந்தோ –கடீ காந்தி ஸம்வாதி -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவரையின் காந்தியோடு பொருந்தின –
சாதுர்ய நீவி லசத்–சதிரையுடைய நீவி பந்தனத்தில் விளங்கா நின்ற
நீவியாவது மேல் உத்திரீயக்கட்டு -திருவரையின் ஒளியே கிளர்ந்து இதுவாக ஜ்வலிக்கிறதாம்
ரத்ன காஞ்சீ கலாப அநு லோபம்-ரத்னமயமான மேகலா ஆபரணத்தின் சேர்க்கையை யுடைத்தான
பீதாம்பரம்-திருப் பீதகவாடையானது –
மஹாப்ரம் லிஹந் மேரு மாணிக்ய சானூ இவ -பெரிய மேகத்தை உட்க்கொண்டு இருக்கிற
மேரு மலையின் மாணிக்கத் தாழ்வரை போன்று
ஆபதி -விளங்குகின்றது –
படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம் பொன் கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –
அவன் திருமேனி காளமேகம் -மேரு கிரித் தாழ்வரை அத்தை சுற்றி விளங்கும் திரு பீதாம்பரம் –

——————-

பர்மஸ்தல அம்க பரிவேஷ இவ அம்பு ராஸே சந்த்யா அம்பு வாஹ நிகு ரம்பம் இவ அம்பரஸ்ய
சம்பா கதம்பகம் இவ அம்பு முச மந ந பீதாம்பரம் பிபதி ரங்க துரந்தரஸ்ய–120-

ரங்க துரந்தரஸ்ய–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
பீதாம்பரம்-திருப் பீதக வாடையானது
அம்பு ராஸே-சமுத்ரத்துக்கு
பர்மஸ்தல அம்க பரிவேஷ இவ–ஸ்வர்ணமயமான பூமியினுடைய காந்தியின் ஊர் கோள் போலவும்
அம்பரஸ்ய-ஆகாசத்திற்கு
சந்த்யா அம்பு வாஹ நிகு ரம்பம் இவ–சந்த்யா காலத்து மேகத்திரள் போலவும்
செக்கர் மா முகில் ஒளி அடித்தால் போலவும்
அம்பு முச-மேகத்துக்கு
சம்பா கதம்பகம் இவ-மின்னல் திரள் போலவும் இருந்து கொண்டு
மந ந பிபதி -பரபாக சோபாவஹமாய்க் கொண்டு நம்முடைய நெஞ்சைக் கவர்கின்றது –

சமுத்திரம் ஆகாசம் காளமேகம்–ஸ்ரீ பெரிய பெருமாள் என்றும்
ஸ்வர்ண ஸ்தல காந்தி அந்திமேகம் மின்னல் திரள் மூன்றும் திருப் பீதாம்பரத்துக்கும் –
பொறுக்கி உவமை சொல்ல முயல்கிறார்

—————-

வை பூஷண்யாம் காந்திஸ் ஆங்கீ நிமக்நா விஸ்வத்ரீசீ க்வாபி சோந் மாத வ்ருத்தி
ஜாநே ஜானு த்வந்த்வ வார்த்தா விவர்த்த ஜாத ஸ்ரீ மத் ரங்க துங்க ஆலயஸ்ய –121-

ஸ்ரீ மத் ரங்க துங்க ஆலயஸ்ய –ஸ்ரீ திருவரங்கமாகிய பெரிய ஸ்ரீ கோயிலை யுடையரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
வை பூஷண்யாம் காந்திஸ் –திரு ஆபரணக் காந்தியில்
நிமக்நா ஆங்கீ காந்திஸ்–மூழ்கின திரு மேனி ஒளியானது
விஸ்வத்ரீசீ-சுற்றும் வியாபித்ததாய்
க்வாபி சோந் மாத வ்ருத்தி–ஓரிடத்தில் உந்மாத வியாபாரத்தோடு கூடினதாகி
ஜாநே ஜானு த்வந்த்வ வார்த்தா விவர்த்த ஜாத-இரண்டு முழந்தாள்கள் என்கிற சப்தத்தின் பரிணாமமாக ஆயிற்றுப் போலும் –
அவயவ காந்தி வெள்ளம் ஓர் இடத்தில்

————–

ஸ்ரீ ரெங்கேசய ஜங்கே ஸ்ரீ பூமி ஆமர்ச ஹர்ஷ கண்ட கிதே
தத் கேளி நளின மாம்சல நால த்வய லலிதம் ஆசரத –122-

ஸ்ரீ பூமி ஆமர்ச ஹர்ஷ கண்ட கிதே-திரு மகளும் நில மகளும் திருவடி வருடும் போது உண்டான
ஹர்ஷத்தால் மயிர்க் கூச்சு எறியப் பெற்றுள்ள
ஸ்ரீ ரெங்கேசய ஜங்கே–ஸ்ரீ பெரிய பெருமாளது திருக் கணைக் கால்கள்
தத் கேளி நளின மாம்சல-அப்பிராட்டிமாருடைய லீலார்த்தமான இரண்டு தாமரைப் பூக்களினுடைய பெருத்த
நால த்வய லலிதம் ஆசரத –இரண்டு காம்புகளின் விலாசத்தை அடைகின்றன –
ஸ்ரீ பிராட்டிமாரின் திருக்கைகளில் அகப்பட்ட திருவடிகள் அவர்களுடைய லீலா அரவிந்தங்கள்
திருக் கணைக் கால்கள் அவற்றின் நாளங்கள் -அங்கு முள் இருக்க வேண்டுமே –
இதுவே மயிர்க் கூச்சு எறிதலால்-கண்ட கிதமாயிற்று என்றபடி –

——————–

வந்தாரு ப்ருந்தாரக மௌலி மாலா யுஞ்ஜான சேத கமலா கரேப்ய
ஸங்க்ராந்த ராகவ் இவ பாத பத்மவ் ஸ்ரீ ரெங்க பர்த்து மநவை நவை ச –123-

வந்தாரு ப்ருந்தாரக மௌலி மாலா -வணங்குகின்ற தேவர்களுடைய கிரீட சமூகம் என்ன
யுஞ்ஜான சேத–யோகிகளின் உள்ளம் என்ன
கமலா கரேப்ய–பிராட்டி திருக் கைத்தலம் என்ன
ஆகிய இவற்றின் நின்றும் வந்து படிந்த
ஸங்க்ராந்த ராகவ் இவ–சிவப்பை போன்று இருக்கிற
ராகம் -சிவப்பையும் அன்பையும் காட்டுமே –
பாத பத்மவ் ஸ்ரீ ரெங்க பர்த்து மநவை நவை ச –ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகளை
தியானிக்கவும் ஸ்துதிக்கவும் கடவேன்–

ஸ்ரீ மத் பராங்குச முனீந்திர மனோ நிவாஸாத் தஜ்ஜ அநு கார ரஸ மஜ்ஜை நமஞ்ச சாப்ய அத்யாப்யாதர
ததுத்தித ராக யோகம் ஸ்ரீ ரெங்கராஜ சரணாம்புஜம் உந்நயாம -ஸ்ரீ வரதராஜ ஸ்த்வம்

—————-

யத் பிருந்தாவன பண்டிதம் தத் ரைவ யத் தாண்டவம் சிஷிதம்
யத் லஷ்மீ கர ஸுவ்க்க்ய சாக்ஷி ஜலஜ ப்ரஸ்ப்ரத் தமானருத்தி யத்
யத் பக்தேஷு அஜல ஸ்த்தலஞ்ஜம் யத் தூத்ய பிரசங்க உத் ஸூகம்
தத் விஷ்ணோ பரமம் பதம் வஹது ந ஸ்ரீ ரெங்கினோ மங்களம் –124-

ஸ்ரீ ரெங்கினோ விஷ்ணோ யத் பதம் -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய யாதொரு திருவடியானது
பிருந்தாவன பண்டிதம்–விருந்தாவனத்தில் உலாவிற்றோ
யத் தாண்டவம்-யாதொரு திருவடியின் நர்த்தன விசேஷமானது
ததிரைவ சிஷிதம்–தயிர் கடையும் ஓசைகளினால் பயில்விக்கப் பட்டதோ
யத் லஷ்மீ கர ஸுவ்க்க்ய சாக்ஷி–யாதொரு திருவடியானது பிராட்டியின் திருக் கைகளுக்கு
உண்டாகும் ஸூகத்துக்கு சாஷியாய் இருக்கின்றதோ –
தாண்டவம் பயின்ற களைத்து தீர பிராட்டிமார் அடி வருடுகிறார்கள் –
ஜலஜ ப்ரஸ்ப்ரத் தமானருத்தி யத்–தாமரைப் பூவோடு போராடுகின்ற அழகை உடையதோ
தாமரையில் பிறந்த தேவி பிடிக்க ஸுவ்க்யம் அடைகின்ற திருவடிகள் அந்த தாமரைப் பூவை
அன்பு பாராட்டாமல் அத்தோடு சண்டை செய்து வெல்வதே –
யத் பக்தேஷு–அடியவர் பக்கல்
அஜல ஸ்த்தலஞ்ஜம்–ஏற்றத் தாழ்வு வாசி பாராதோ
யத் தூத்ய பிரசங்க உத் ஸூகம்-யாதொரு திருவடியானது தூது செல்லும் வார்த்தை அளவிலே
பேராசை கொண்டதாயுமாய் இருக்கின்றதோ
தூது செல்லும் வார்த்தை செவிப்பட்டதும் குணாலக் கூத்து ஆடுவானாம் –
வேடன் வேடுவிச்சி –பதினெட்டு நாடன் பெரும் கூட்டு நடத்தும் ஆப்தன் அன்றோ –
தத் பரமம் பதம் வஹது ந மங்களம் –அப்படிப்பட்ட திருவடியானது –
நமக்கு க்ஷேமத்தை நிர்வஹிக்கக் கடவது
யோக க்ஷேமம் வஹாம் யஹம் -வாயோலை செய்து அருளியதை
நம் பக்கல் அனுஷ்ட்டித்து அருள வேணும் என்கிறார்–

—————–

சிஞ்ஜான சுருதி சிஞ்ஜிநீ மணிரவை வஜ்ர அரவிந்த த்விஜ ஸ்சத்ரீ கல்பக சங்க சக்ர முகுரை தை தை ச ரேகா மயை
ஐஸ்வர்யேன ஜெயம் த்ரி விக்ரம முகம் குஷ்யத்பி ஆம்ரேடிதம் ஸ்ரீ ரெங்கேசய பாத பங்கஜ யுகம் வந்தாமஹே ஸூந்தரம் –125-

ஐஸ்வர்யேன சஹ ஜெயம் த்ரி விக்ரம –சர்வேஸ்வரத்தோடே கூட மூவடி இட்டு அளந்தது
முதலான விஜய சேஷ்டிதங்களை –
ஆம்ரேடிதம்-பலகாலும்
யதா ததா
குஷ்யத்பி–பிரசித்த ப் படுத்துகிற
முகம் சிஞ்ஜான சருதி சிஞ்ஜிநீ –மணிரவை–ஒலிக்கின்ற வேத ரூபாயாக திருவடிச் சதங்கை
மணிகளின் ஓசைகளாலும்
ரேகா மயை-ரேகை வடிவமான
தை தை ச -அப்படிப்பட்ட
வஜ்ர அரவிந்த த்விஜ ஸ்சத்ரீ கல்பக சங்க சக்ர முகுரை–வஜ்ரம் என்ன -தாமரை என்ன -கொடி என்ன –
குடை என்ன -கல்ப வ்ருக்ஷம் என்ன -சங்கம் என்ன -சக்கரம் என்ன -கண்ணாடி என்ன இவற்றாலும் –
ஸ்ரீ ரெங்கேசய பாத பங்கஜ யுகம் வந்தாமஹே ஸூந்தரம் –ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
திருவடித் தாமரை இணையை வணங்குகிறோம் —
கதா புன சங்க சக்ர -ஸ்ரீ ஆளவந்தார்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த இரு காலும் -ஸ்ரீ பெரியாழ்வார்

————–

புநாநி புவனாநி அஹம் பஹு முகீ சதி சர்வ அங்குலீ
ஜலஜ் ஜலித ஜாஹ்நவீ லஹரி ப்ருந்த ஸந்தேஹதா
திவா நிசி ச ரங்கின ச சரண சாரு கல்பத்ரும
பிரவால நவ மஞ்ஜரீ நக ருசீ விகாஹே மஹி –126–

அஹம்–கங்கையாகிய நான்
பஹு முகீ சதி–பலவாறாக பெருகா நின்று கொண்டு
புநாநி புவனாநி–புவனங்களைப் பரிசுத்தம் ஆக்கக் கடவேன்
இதி சர்வ அங்குலீ–என்று எல்லா திருவிரல்களில் நின்றும்
ஜலஜ் ஜலித ஜாஹ்நவீ–ஜல ஜல என்று பெருகின கங்கையினுடைய
லஹரி ப்ருந்த–அலை வரிசைகளோ இவை என்கிற
ஸந்தேஹதா-சந்தேகத்தை விளைவிப்பதான
ரங்கின சரண–ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடிகளாகிற
சாரு கல்பத்ரும–அழகிய கல்ப வ்ருக்ஷத்தின்
பிரவால-விரல்களாகிற பல்லவங்களினுடைய
நவ மஞ்ஜரீ நக ருசீ–புதிய பூங் கொத்துக்கள் போன்ற நகங்களின் காந்திகளில்
திவா நிசி ச விகாஹே மஹி –இரவும் பகலும் அனுபவிக்கக் கடவோம்
பூர்வ சதகமாகிற யஜ்ஜம் சதாப்தி யானபின்பு அவப்ருத ஸ்நாநம் பண்ணுகிறார் –
தயரதன் பெற்ற மரகத மணித் தடாகம் இருக்க வேறே ஒரு துறை போக வேண்டுமோ
ஸ்ரீ பெரிய பெருமாள் கற்பக வ்ருக்ஷம் -திருவடிகள் பல்லவம் -திரு நக காந்திகள் நவ மஞ்சரி
இந்த பிரவாஹங்களில் பகலும் இரவும் குடைந்து நீராடுவோம்

————————

ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ சீதாப்பிராட்டியும் சமர்ப்பித்த பொன்னாலான தாமரை மலர்கள் நிரம்பி உள்ள திருவடிகளை
வணங்குவதாக அருளிச் செய்து பூர்வ சதகத்தை நிகமிக்கிறார்-

ஸ்ரீ ரெங்க இந்தோ பத கிசலயே நீல மஞ்ஜீர மைத்ர்யா
வந்தே வ்ருந்த பிரணயி மதுபவ்ராத ராஜீவ ஜைத்ரே
நித்ய அப்யர்ச்சா நத விதிமுக ஸ்தோம சம் சய்யா மாநை
ஹேம அம்போஜை நிபிட நிகடே ராம சீதா உப நீதை –127-

நீல மஞ்ஜீர மைத்ர்யா-நீல ரத்னமயமான சிலம்புகள் பொருந்தி இருப்பதனால்
வந்தே வ்ருந்த பிரணயி மதுபவ்ராத ராஜீவ ஜைத்ரே-பூவடியைப் பற்றி இருக்கும் வண்டினங்களை
யுடைத்தான தாமரைப் பூவினை வென்று இருப்பனவும்
தாமரை மலர் ஸ்தானம் -திருவடிகள் -நீல நூபுர ஸ்தானத்தில் வண்டுத் திரள்கள்
தாமரைக்கு வண்டுகள் சகாயம் -திருவடிக்கு நீயே நூபுரம் சகாயம் -திருவடிக்கே வெற்றி –
நித்ய அப்யர்ச்சா -நித்யப்படி திருவாராதனத்தில்
நத -வணங்கின
விதிமுக ஸ்தோம பிரமனின் முகங்களின் கூட்டமோ என்று
சம் சய்யா மாநை–சந்தேகிக்கப் படுகின்றனவாய்
ராம சீதா உப நீதை -ஸ்ரீ ராமனாலும் ஸ்ரீ சீதாப் பிராட்டியாலும் சமர்ப்பிக்க பட்டவையான
சக பதன்யா விசாலாஷ்யா நாராயணன் உபாகமத் –
ஹேம அம்போஜை நிபிட நிகடே -பொன் தாமரைப் பூக்களினால் இடைவெளியற்ற சமீப பிரதேசத்தை
யுடையவைகளுமான
ஸ்ரீ ரெங்க இந்தோ பத கிசலயே -ஸ்ரீ பெரிய பெருமாளுடைய பல்லவம் போன்ற திருவடிகளை
வந்தே-வணங்குகிறேன் –

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எப்படிப் பட்ட மாட்சிமாசி உடைய ப்ராஹ்மா ஸ்தோத்ராதிகளைப் பண்ணும் தன்மை குறை வற்று இருக்கை-
ஸ்தோத்ராதிகளுக்கு பரிகரமான நாலு நாக்காலும்

எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
தன ஸ்ரத்தைக்குத் தக்கபடி எடுத்தேத்தி -நாலு வேதத்துக்கு சமைந்த நாலு முகமும் கொண்டு

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
பின்னும் முன்னும் மட்டங்கள் ஆகிற பர்யந்தங்கள் எங்கும்
அழகை அனுபவிப்பைக்கு பல கண் படைத்த பிரயோஜனம் பெற்றான்

தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற
ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு தொழுது ஸ்தோத்ராதிகளைப் பண்ணுவது தண்டன் இடுவதாம் படி நின்ற

செம்பொன் அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
ஸ்பர்ஹணீயமாய் இவ்வருக்கு உண்டான கார்ய வர்க்கத்துக்கு எல்லாம் காரணம் என்னும் மஹத்வம் தோற்றும் படியாய்
இருக்கிற தாமரைப் பூவை உடைய தன் திரு நாபி தோன்ற

அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன்
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய

அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அவன் திருவடிகளின் கீழே புஷ்பாத் உபகரணங்களைப் பணிமாறி

அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–
அங்கு அந்தரங்க வ்ருத்தி செய்யும் அவர்களோடு சஜாதீயனான நானும் கிட்டுவது என்றோ
அடியார்கள் குழாங்கள் –இத்யாதி —

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–ஸ்லோகங்கள்–1-60-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -தத்வார்த்த சிந்தாமணி —

May 7, 2020

ஸ்ரீ பராசர பட்டர் திருக் கோஷ்ட்டியூரில் இருந்து ஸ்ரீ ரெங்கம் திரும்பி வரும் போது திருக் காவேரி தொடக்கமாக
ஸ்ரீ ரெங்கத்தை வருணிக்க படி எழுந்து அருளினார்
பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள்
உத்தர சதகம் -105-ஸ்லோகங்கள்

ஸ்ரீ பராசர பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோஹித
ஸ்ரீ வத் சாங்க ஸூதா ஸ்ரீ மாந் ஸ்ரயசே மேஸ்து பூயஸே

ஸ்ரீ பராசர பட்டார்யா -ஸ்ரீ ஆளவந்தார் திரு உள்ளபடி ஸ்ரீ உடையவர் சாத்தி அருளிய திரு நாமம்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர் இளையவர் என்பதால் இவருக்கு பெரிய பட்டர் என்றும் திரு நாமம் உண்டே
ஸ்ரீ ரெங்கேச புரோஹித-புராணம் வாசிக்கும் கைங்கர்யம்
ஸ்ரீ வத் சாங்க ஸூதா -திரு மறு மார்பன் -அவனே -எம்பெருமான் திருக்குமாரர் என்றும் –
அந்த திரு நாமம் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வாருடைய திருக்குமாரரும் -அபிமான புத்திரர் என்று பிரசித்தம் அன்றோ
இவரது சிஷ்யர் ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் வான் இட்ட கீர்த்தி வளர் கூரத்தாழ்வான் மகிழ வந்த
தேனிட்ட தார் நம் பெருமாள் குமாரர் பட்டர் -என்று அருளிச் செய்கிறார்-
இவரே தாமே தம்மை ஸ்ரீ ரெங்கராஜ கமலா பத லாலி தத்வம் -என்று இதில் -17-ஸ்லோகத்தில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ மாந் -ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ பூர்ணருமான-அந்தரிஷகத ஸ்ரீ மான் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -சாது நாகவர ஸ்ரீ மான் போலவே –
திரிபுவன வீர தேவ ராய அரசன் இடம் நம் பெருமாளுடைய அஞ்சல் என்ற திருக் கை மறித்தாலும்
அவர் திரு வாசல் ஒழிய வேறே போக்கிடம் உண்டோ என்றவர் அன்றோ –
ஸ்ரயசே மேஸ்து பூயஸே-அடியோமுக்கு மிகுந்த ஸ்ரேயஸ்ஸை அளிக்கட்டும்

————

ஸ்ரீ பகவான் திரு உள்ளம் உகப்பாக ஸ்தோத்ரம் –கிருதயுகத்தில் தியானமும் -த்ரேதா யுகத்தில் யஜ்ஞ யாகங்கள் செய்வதும் –
த்வாபர யுகத்தில் அர்ச்சனையும் -கலி யுகத்தில் ஸ்தோத்ரமும் -என்னக் கடவது இறே
ஸ்தோத்ரம் சர்வாதிகாரம் -அதுவும் பூர்வர்கள் ஸ்ரீ ஸூக்தி யில் அமைந்த ஸ்தோத்திரங்கள் அவனுக்கு பெரு உகப்புக்கு உபாயமாகும் –
இதற்காகவே ஸ்ரீ ஆளவந்தார் முதல் நம் பூர்வர்கள் மதிலும் இனிய ஆற்ற பல ஸ்தோத்திரங்கள் அருளிச் செய்து அருளினார்கள்

வானிட்ட வளர் கீர்த்தி ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய திருக்குமாரரால் ஸ்ரீ ரெங்கநாதனின் மேல் உள்ள
பக்தி பெருக்காலேயே வெளிவந்த ஸ்லோகம் இது
சாஸ்த்ரார்த்தங்களை அவலீலையாக எடுத்து உரைக்கும் ஸ்லோகம் –
சப்த பிரகாரங்களில் ஆறாவது பிரகாரமான திரு விக்ரமன் திரு வீதி திரு மதில் ஜீரணமாகி சரிந்து விழ
அத்தைச் சீர் படுத்திக் கட்டுவிக்கத் தொடங்கிய வீர ஸூந்த்ர ப்ரஹ்ம ராயன் -ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்-
இவர் ஸ்ரீ கூரத்தாழ்வானின் சிஷ்யர் -திருமாளிகை குறுக்கிட்டு இருப்பது கண்டு முன் போலே மதிலை
ஒதுக்கிக் காட்டாமல் அத்தை இடித்து கட்டுவிக்க முயல –
இவருடைய மங்களா சாசனம் காப்பு -முன்பு நான்காம் பிரகாரம் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் காட்டும் பொழுது
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருமாலை சேர்க்கிற அடைந்தை நடந்தை பூஞ்சோலை நேர்பட ஒதுக்கி கட்டினாரே-போன்ற
உபதேசம் செய்ய அத்தை உபேக்ஷித்து திரு மதிலை கட்டுவித்தான் -மனஸ்தாபம் மேலிட
ஸ்ரீ ரெங்கத்தில் வாசம் செய்யாமல் ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூருக்கு எழுந்து அருளினார் –

இங்கு இருக்கும் பொழுதும் கரு மணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள்
என்று கொலோ களிக்கும் நாளே -என்று கொலோ உருகும் நாளே -என்று அலற்றினால் போலே-
கதாஹம் காவேரீ தட பரிஹரே ஸ்ரீ ரெங்க நகரே -போன்ற ஸ்லோகங்களைக் கொண்டு அலற்றிக் கொண்டு இருந்தார்
இங்கனம் இருக்க அந்த வீர ஸூந்தரேன் இறந்து போக -ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் அந்த செய்தியை
ஸ்ரீ கோயிலில் இருந்து ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூருக்கு எழுந்து அருளி தெரிவிக்க
அது கேட்டு மகிழாமல் -அபராத ஷாமணம் செய்து கொள்ளாமல் நல் கதி இழந்தானே என்று சிந்தித்து
ஸ்ரீ கோயிலுக்கு எழுந்து அருளும் காலத்தில் திருக் காவேரி முதலாக தம் அனுபவத்தை வெளியிடும் முறையில்
அமைந்த ஸ்லோகங்கள் இவை

ஸ்ரீ பஞ்ச ஸ்தவங்கள் வெளிவர அந்த சோழன் உபத்திரவம் போலே இந்த ஸ்தவம் வெளிவர இவனது உபத்ரவமும் இருந்ததே –
இவ்வகையில் இவர்களும் நமக்கு உபாகாரகர்களே

பூர்வ சதகம் -127-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய பூர்வ வாக்ய விவரணம்
உத்தர சதகம் –105-ஸ்லோகங்கள் -ஸ்ரீ த்வய உத்தர வாக்ய விவரணம் –

ஸ்ரீ ஆச்சார்ய பரம்பரா ஸ்துதி முன்னாக இழிந்து மங்களா சரணம் செய்து
அவை அடக்கம் கூறி -திருக் காவேரியில் நீராடியதையும் பேசி-திருச் சோலைகளின் வளப்பத்தை அனுபவித்து –
திருவரங்க மா நகரின் சிறப்பையும் பேசி நகர பரிபாலர்களை வணங்கி –
அங்குள்ள அகில சராசரங்களும் நித்ய முக்தர்களாகவே பாவித்து வணங்கி –
அங்குள்ள திருக் கோபுர பிரகாரங்களோடே கூடின ஸ்ரீ பெரிய கோயிலை வர்ணித்து -திரு மதில்களைத் தொழுது –

திருச் சந்நிதி த்வார பாலர்களை வணங்கி -ஆயிரக்கால் திரு மண்டபத்தை மங்களா சாசனம் செய்து –
திருச் சந்த்ர புஷ்காரணியில் நீராடி -ஆழ்வார்கள் பதின்மரையும் இறைஞ்சி –
ப்ரணவாகார விமானத்தைக் கை தொழுது -ஸ்ரீ மேட்டு அழகிய சிங்கரை மேவி வணங்கி
திருப் புன்னை மரத்தை தாழ்ந்து சேவித்து
ஸ்ரீ சேனை முதலியாரையும் ஸ்ரீ பெரிய திருவடியையும் பரிவாரங்களுடன் சேவித்து
ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்கள் ஸ்ரீ திருவடி ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இவர்களையும் வாழ்த்தி
திரு பிரம்பரையும் ஸ்ரீ திரு மணத் தூணையும் வழி பட்டி கர்ப்ப க்ருஹத்தையும் அனுபவித்து
ஸ்ரீ திருவடி வருடும் ஸ்ரீ பிராட்டி மார்களையும் சாமரம் பரிமாறும் மங்கைமார்களையும் ஸ்துதித்து
ஆக இவ்வளவு அனுபவங்களையும் -62-ஸ்லோகங்களால்
ஸ்ரீ த்வயத்தில் ஸ்ரீ நாராயண பதத்தில் உள்ள நாரா சப்தார்த்தங்களை அருளிச் செய்து

மேலே இவற்றுக்கு அயனமான ஸ்ரீ மந் நாராயணனுடைய திருவடிகளை சரணம் புகுகிறேன்
என்பதாக -63-ஸ்லோகம் தொடக்கமாக
ஸ்ரீ அழகிய மணவாளன் அனுபவத்தை அருளிச் செய்து பூர்வ சதகத்தை தலைக்கட்டி அருளுகிறார்

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய புருஷகாரத்வ உபேயத்வ உபயோகிகளான கல்யாண குணங்களை
ஸ்ரீ குண ரத்ன கோசத்தில் வெளியிட்டு அருளி
இதில் ஸ்ரீ நாராயணாதி சப்தார்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார்
அதில் முந்துற முன்னம் குரு பரம்பரா அனுசந்தானம் –

————-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந மிஸ்ரேப்ய நம உக்தீம் அதீ மஹே
யத் உக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம் –1-

யத் உக்தயஸ்-யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வானுடைய ஸ்ரீ ஸூக்திகளானவை
த்ரயீ கண்டே -ஸ்ரீ வேதமாதாவின் திருக்கழுத்திலே -வேதாந்தம் -என்றவாறு –
மங்கள ஸூத்ரதாம் –திரு மாங்கல்யமாகவே இருக்கும் தன்மையை
யாந்தி -அடைகின்றனவோ -சகல துர் மதங்களையும் நிரசித்து பரதவ நிர்ணயம் பண்ண வல்ல ஸ்ரீ ஸூக்திகள் இவரது –
(தேப்ய )ஸ்ரீ வத்ஸ சிஹ்ந மிஸ்ரேப்ய-அந்த பரம பூஜ்யரான ஸ்ரீ ஆழ்வான் பொருட்டு –
மிஸ்ர பூஜ்ய வாசகம் –
நம உக்தீம்-நம -என்ற சொல்லை–சேஷத்வ -பாரதந்தர்ய ஸூசக வாசகம் அன்றோ நம –
அதீ மஹே–ஒதுகின்றோம் -மாநஸகமும் காயிகமாகவும் இல்லா விடிலும் யுக்தி மாத்திரமே அமையும் –
ஸ்ரீ எம்பார் சாஷாத் ஆச்சார்யர் -ஸ்ரீ கூரத்தாழ்வானும்
எண் பெருக்கு அந்நலத்து –வண் புகழ் நாரணன் -பாசுர வியாக்யானம் திரு மந்த்ரார்த்தம் பிரசாதித்து அருளியது பிரசித்தம்
வந்தே கோவிந்த தாதவ்-என்று இருவரையும் சேர்த்து -உபய சம்பந்தத்தையும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யத்தில் அருளிச் செய்தார் –

—————–

ஸ்ரீ ராமானுஜ பதச் சாயா கோவிந்த ஆஹ்வா அநபாயிநீ
தத் ஆயத்த ஸ்வரூபா சா ஜீயாத் மத் விஸ்ரமஸ்த் தலீ-2-

ஸ்ரீ ராமானுஜ பதச் சாயா -ஸ்ரீ எம்பெருமானாருடைய திருவடி நிழலாயும்-இதுவே இவருக்கு அசாதாரணமான திரு நாமம்
கோவிந்த ஆஹ்வா ஸ்ரீ கோவிந்த பட்டர் என்னும் திரு நாமத்தை உடையவராய் இருக்கிற
அநபாயிநீ-ஸ்ரீ பெருமாளுக்கு ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே -ஒரு பொழுதும் விட்டு நீங்குதல் இல்லாத வராயும்
தத் ஆயத்த ஸ்வரூபா-அத்திருவடிகளுக்கு வசப்பட்ட ஸ்வரூபத்தை யுடையவராயும்
சா-அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பார் ஸ்வாமியே
மத் விஸ்ரமஸ்த் தலீ–தாப த்ரய தப்தமான எனக்கு இளைப்பாறும் இடம்
எம் பார்– எம்முடைய இருப்பிடம் என்றவாறு –
ஜீயாத்–பொலிக பொலிக பொலிக

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு––பெரிய திருவந்தாதி–31—பிரதம பர்வ நிஷ்டை ஆழ்வார்

——————-

ஸ்ரீ ராமானுஜ முனி ஜீயாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரத
கலி கோலாஹல கிரீடா முதாக்ரஹம் அபாஹரத்–3-

ஸ்ரீ ராமானுஜ முனி ஜீயாத் -ஸ்ரீ பகவத் குண மனன சீலரான அந்த ஸ்ரீ எம்பருமானார் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு –
யோ ஹரேர் பக்தி யந்த்ரத–யாவர் ஒரு ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ எம்பெருமான் இடத்து பக்தியாகிற யந்த்ரத்தினாலேயே
யந்த்ரத -யந்த்ரித-யந்த்ரிதாத் -பாட பேதங்கள்
கலி கோலாஹல கிரீடா முதாக்ரஹம்
கலி புருஷனுடைய கோலாஹலத்தில் விளையாட்டாகிற பாழும் பிசாசை
அபாஹரத்–துரத்தினாரோ
கலியும் கெடும் கண்டு கொண்மின்
ஸ்ரீ இராமானுசன் மறை தேர்ந்து உலகில் புரியும் நல் ஞானம் பொருந்தாதவரை போரும் கலியே
ஸ்ரீ ராமானுஜன் இத்தலத்து உதித்து ஆனது செம்மை அற நெறி பொய்மை அறு சமயம் போந்தது பொன்றி இறந்தது வெங்கலி —
கலவ் கிருதயுகம் தஸ்ய கலீஸ் தஸ்ய கருத்தே யுகே -ஹ்ருதயே யஸ்ய கோவிந்தோ யஸ்ய சேதசீ நாஸ்யுத–என்று
எவன் உடைய உள்ளத்தில் எம்பருமான் ஸூ பிரதிஷ்டமாக நித்ய வாசம் செய்து அருளுகிறானோ அவனுக்கு
கலியுகம் க்ருத யுகம் -எவன் நெஞ்சில் இல்லையோ அவனுக்கு கிருதயுகம் கலியுகம் -என்றவாறு –

————————-

விதாய வைதிகம் மார்க்கம் அகௌதஸ் க்ருத கண்டகம்
நே தாரம் பகவத் பக்தேர் யாமுநம் மநவாமஹை -4-

விதாய வைதிகம் மார்க்கம் -வைதிக நெறியை செய்து அருளி
அகௌதஸ் க்ருத கண்டகம் விதாய -தூர்வாதிகள் ஆகிற முள் அற்றதாக செய்து அருளி
சித்தி த்ரயம் -ஆகம பிராமண்யம் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் இத்யாதி திவ்ய பிரபந்தங்களைச் செய்து அருளி -என்றவாறு
குத குத அது என் இது என் என்று துர் ஆக்ஷேபங்கள் செய்து கொண்டு இருக்கும் தூர்வாதிகளே கௌதஸ்குதர்-
நே தாரம் பகவத் பக்தேர் -ஸ்ரீ பகவத் பக்தியை தழைத்து ஒங்கச் செய்து அருளிய
யாமுநம் மநவாமஹை -ஸ்ரீ ஆளவந்தாரை த்யானிக்கக் கடவோம்
வேதமார்க்க பிரதிஷ்டாபன ஆச்சார்யரான ஸ்ரீ யமுனைத் துறைவனை சிந்திக்கக் கடவோம் என்றதாயிற்று
குண அனுபவத்தால் தமக்கு பிறந்த நாநா பாவத்தால் ஸ்வ கீயரையும் கூட்டிக் கொண்டு பஹு வசனம் –

———————-

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் பக்தி அவக்ரஹே
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –5-

நவ்மி நாத முனிம் நாம ஜீமுதம் -ஸ்ரீ நாதமுனிகள் என்ற பிரசித்தமான மேகத்தை ஸ்துதிக்கிறேன்
பக்தி அவக்ரஹே-பக்தியாகிற தீர்த்தம் அருமைப்பட்டு இருந்த துர் பிஷ காலத்தில்
வைராக்ய பகவத் தத்வ ஞான பக்தி அபி வர்ஷுகம் –பகவத் வியதிரிக்த விஷயாந்தரங்களில் விரக்தியில் என்ன –
பகவத் ஞான பகுதிகள் என்ன ஆகிய இவற்றை எங்கும் வர்ஷிக்க வல்ல

———————————————

ரிஷிம் ஜூஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சஹஸ்ர சாகரம் ய அத்ராஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் –6-

ய–யார் ஒரு நம்மாழ்வார்
சஹஸ்ர சாகரம் ய த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்-ஆயிரம் பாசுரங்களுடைய தமிழாலாகிய ஸ்ரீ திருவாய் மொழி
ஆகிற உப நிஷத்தை –ஒவ் ஒரு பாசுரமும் ஒரு சாகை தானே –
அத்ராஷீத் -சாஷாத்கரித்தாரோ-ஸ்ரீ எம்பருமான் இவரைக் கொண்டு பிரவர்த்திப்பித்தான் என்றவாறு
இத்தால் ஸ்ரீ திருவாய் மொழியின் பிரவாஹதோ நித்யத்வம் காட்டப்படுகிறது
தம் -அப்படிப்பட்டவராய்
உதிதம் -உரு எடுத்து வந்த
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவ
ஸ்திதம்–ஸ்ரீ எம்பெருமான் திறத்து காதலின் உண்மை போன்றவரான
ரிஷிம் ஜூஷாமஹே –ஸ்ரீ நம்மாழ்வாரை சேவிக்கிறோம் –
இத்தால் ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ நம்மாழ்வார் இடத்திலும் ஸ்ரீ திருவாய் மொழி இடத்திலும் அமைந்துள்ள
அத்புதமான பக்தி வை லக்ஷண்யம் அழகிதாகப் புலப்படும் –

———————————-

நம ஸ்ரீ ரெங்க நாயக்யை யத் ப்ரூ விப்ரம பேதத
ஈச ஈஸிதவ்ய வைஷம்ய நிம்ந உந்நதம் இதம் ஜகத் -7-

இதம் ஜகத் -இந்த உலகமானது
யத் ப்ரூ விப்ரம பேதத-எந்த ஸ்ரீ பெரிய பிராட்டியாரின் புருவ நெரிப்பின் வாசியாலேயே
ஈச ஈஸிதவ்ய வைஷம்ய நிம்ந உந்நதம் –மேற்பட்டவர்கள் கீழ்ப்பட்டவர்கள் என்னும்படியான பேதங்களினால்
வேறுபாடு கொண்டு மேடு பள்ளமாய் இருக்கின்றதோ
தஸ்ய – ஸ்ரீ ரெங்க நாயக்யை நம-அந்த ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு வல்லபையான ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு நமஸ்காரங்கள் –
இவளது நிக்ரஹ அனுக்ரஹங்களே இவற்றுக்குக் காரணம் -என்றவாறு –

————–

ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவை உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ ஸ்தந ஆபரணம் -ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –
எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே
அநந்த போகிந –ஸ்ரீ ஆதி சேஷனுடைய
உத்ஸங்கே –திரு மடியிலே
உத்வாந்தம்-கக்கப்பட்ட
சிந்தாமணிம் இவை –சிந்தாமணி போன்றதும்
தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

ஸ்ரீ குரு பரம்பரா பிரதம குருவான -ஸ்ரீ லஷ்மீ நாதனுக்கு ஸ்தோத்ரம் –
தேஜஸாம் ராசி மூர்ஜிதாம்-குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு அன்றோ –
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா –மணியே மணி மாணிக்கமே மது ஸூதா —
ஜகாத் உபாதானமாய் இருபத்தொரு சிந்தாமணியை உமிழ்ந்து இத்தை யாரேனும் ஒருவர் இறாஞ்சிக் கொள்ளில் செய்வது என்
என்று தன் மடியில் வைத்துக் காண்டகம் இட்டுக் கொண்டு கிடக்கிறான் அன்றோ
வெறும் மணி என்னாது -சிந்தா மணி என்றது -சிந்தித்த அபீஷ்டங்களை எல்லாம் அருளும் மணி என்பதால் –

————————————-

அஸ்தி வஸ்து இதம் இத்தந்த்வ பிரசங்க்யாந பராங்முகம்
ஸ்ரீ மதி ஆயதநே லஷ்மீ பத லாஷா ஏக லக்ஷணம் –9-

இதம் இத்தந்த்வ பிரசங்க்யாந பராங்முகம்-இன்னது என்றும் இத்தகையது என்றும் அறுதி இடக் கூடாததாய்
லஷ்மீ பத லாஷா ஏக லக்ஷணம் –ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடியில் இட்ட செம்பஞ்சுச் சாறு
தன்னையே அடையாளமாக உடைத்தான
வஸ்து -பரம் பொருளானது
ஸ்ரீ மதி ஆயதநே அஸ்து –ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலிலே உள்ளது –

வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபி துரசி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி-
சர்வ ஸமாச்ரயணீயம் ஆக்கைக்காக திருவவதரித்து நித்யம் சத்தை பெற்ற வஸ்து அன்றோ –

—————

லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே –10-

லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கற்பகக் கொடியில் உள்ள
உன்னதமான திரு முலைத் தடமாகிற பூங்கொத்தில் சுழலமிடா நின்ற
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் அன்றோ
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே –ஸ்ரீ ரெங்கநாதனாகிற வண்டு அடியேனுடைய நெஞ்சு ஆகிற
தாமரைப் பூவில் உகந்து வாழ்ந்திடுக

வண்டு தாமரை மலரைக் கண்டால் உள் புகுந்து அதி மோகத்தோடே ரமியா நிற்குமே –
எனவே -ஸ்தபக சஞ்சல–என்றும் -அம்புஜே ரமதா -என்றும் சொல்லிற்று –

—————————–

ஸ்வஸ்தி ஸ்ரீஸ்தந கஸ்தூரீ மகரீ முத்ரித உரச
ஸ்ரீ ரெங்கராஜாத் சரதஸ் சதம் ஆஸாஸ் மஹேதமாம் –11-

ஸ்ரீஸ்தந கஸ்தூரீ மகரீ முத்ரித உரச–ஸ்ரீ பெரிய பிராட்டியின் திரு முலைத் தடங்களில் கஸ்தூரியினால் இயற்றப்பட்ட
மகரிகா பத்ரங்களினால் முத்திரை செய்யப்பட திரு மார்பை யுடைய
கஸ்தூரியைக் குழைத்து சுறா மீன் வடிவமாக காண்கையில் எழுதும் அலங்கார விசேஷம் அழுந்த அணைக்கும் பொழுது
திரு மார்பில் இலச்சினை படுமே -அப்படிப்பட்ட இலச்சினை யுடைய
ஸ்ரீ ரெங்கராஜாத் –ஸ்ரீ ரெங்கநாதன் இடம் இருந்து
ஸ்வஸ்தி -நன்மையை
சரதஸ் சதம் -நீடூழி காலம்
ஆஸாஸ் மஹேதமாம் –-மிகவும் விரும்புகின்றோம் –
விச்சேதம் இல்லாத மிதுன கைங்கர்ய பிரார்த்தனை

——————————————

பாது ப்ரணத ரஷாயாம் விலம்பம் அஸஹந் இவ
சதா பஞ்சாயுதீம் பிப்ரத் ச ந ஸ்ரீ ரெங்க நாயக—12-

ப்ரணத ரஷாயாம்–ஆஸ்ரிதர்களை காப்பாற்றுவதில்
விலம்பம் அஸஹந் இவ-கால தாமதத்தை ஸஹிக்க மாட்டாதவர் போல்
சதா பஞ்சாயுதீம் பிப்ரத் ச ந ஸ்ரீ ரெங்க நாயக—பாது –எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -எப்பொழுதும் ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களை —
திருவாழி -திருச்சங்கு -திருக்கதை -திருச் சார்ங்கம் -திரு உடை வாள் –ஏந்திக் கொண்டு இருக்கும் அந்த ஸ்ரீ ரெங்கநாதர் –
அகிஞ்சனரான -நம்மைக் காத்து அருளட்டும் -விரோதிகளைப் போக்கி ஆள் செய்யும் இஷ்ட பிராப்தியை அருளட்டும் –

————————–

இது முதல் ஏழு ஸ்லோகங்களால்-தமக்கு ஸ்துதிக்க அதிகாரம் இல்லை என்று சங்கித்து
அதிகாரம் உண்டு என்று தலைக் கட்டுகிறார் –

அமதம் மதம் மதம் அத மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜம் உதஜூ குஷத் த்ரயீ ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும –13-

அமதம்–பர ப்ரஹ்மம் அறியப் படாதது என்று எண்ணப் பட்டால்
மதம்-பவதி -அப்போது அது அறியப் பட்டதாகிறது –
அத -பின்னையும்
மதம் அத மதம் பவதி -பர ப்ரஹ்மம் அறியக் கூடியது என்று கருதப் பட்டால் அறியப் படாதது ஆகிறது
ஸ்துதம்-பர ப்ரஹ்மம் ஸ்துதித்து முடிக்கத் தக்கது என்று கருதப் பட்டால்
பரி நிந்திதம் பவதி -அது இகழப் பட்டதாகிறது
நிந்திதம்– உள்ளபடி ஸ்துதிக்க முடியாது என்று கருதப் பட்டால்
ஸ்துதம் பவதி -ஸ்துதிக்கப் பட்டதாகிறது
இதி த்ரயீ -என்று இவ்விதமாக விதமானது
உதஜூ குஷத்-எம்பெருமான் இடத்தில் முறையிட்டுக் கிடக்கிறது
இப்படி இருக்க
தம் ரெங்கராஜம்–அந்த ஸ்ரீ ரெங்கராஜனை
வயம்-அறிவிலிகளான நாம்-சக்தியும் பக்தியும் இல்லாத நாம்-பஹு வசனம் கவி மரபு –
ஸ்துத்ய அநதி காரம் சர்வ சாதாரணம் என்பதால் பஹு வசனம் என்றுமாம் –
கிம் இதி -என்ன வென்று
ஸ்துமஹே-ஸ்துதிக்க இழிகிறோம்
ந சக்நும –ஸ்துதிக்க வல்லோம் அல்லோம் –

யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -வேத ஸ்ருதியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் -பெரிய திருவந்தாதி -2-

ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும் பாழும்
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –திருவாய் -3-1-2-

மா சூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மா சூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மா சூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மா சூணா யுன பாத மலர்ச்சோதி மழுங்காதே -3-1-8-

ஸ்வம் சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தைர் பாந்தம் -என்று இவரே மேலே அருளிச் செய்கையாலே
த்ரயீ என்றது உபய வேத வாசகமாகக் கொள்ளக் குறை இல்லையே

—————————————

யதி மே சஹஸ்ர வதந ஆதி வைபவம் நிஜம் அர்ப்பயேத் ச கில ரெங்க சந்த்ரமா
அத சேஷவத் மம ச தத்வத் ஏவ வா ஸ்துதி சக்தி அபாவ விபவே அபி பாகிதா -14-

ச ரெங்க சந்த்ரமா-அந்த ஸ்ரீ ரெங்கநாதன்
நிஜம் –தன்னுடையதான
சஹஸ்ர வதந ஆதி வைபவம்–ஆயிரம் வாயுடைமை முதலான வைபவத்தை
மே -அடியேனுக்கு
அர்ப்பயேத் யதி -தந்து அருள்வானே யாகில்
அத சேஷவத்-அதற்குப் பிறகு ஆதி சேஷனுக்குப் போலவோ
அல்லது
தத்வத் ஏவ வா -அந்த எம்பெருமான் தனக்குப் போலவேயோ
இவனுக்கும் சஹஸ்ர சீர்ஷா சஹஸ்ர பாத் சஹஸ்ர அஷாதிகள் உண்டே -இவற்றையும் தந்து அருளுவான் ஆகில்
மம ச -அடியேனுக்கும்
ஸ்துதி சக்தி அபாவ விபவே அபி–ஸ்தோத்ரம் செய்வதில் சக்தி இல்லாமை யாகிற ஒரு பெருமையிலும்
பாகிதா –ஸ்யாத் –பங்கானது உண்டாகும் –

கீழே -ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும –13-என்றவர் இதில்
அப்படி வார்த்தை சொல்வதற்கும் அடியேனுக்கு யோக்யதை இல்லை என்கிறார் —
ப்ரஸக்தஸ்யைவ ஹி ப்ரதிஷேதஸ் -நியாயம் -வேதம் ஓத எனக்கு சக்தி இல்லை என்று சொல்வான் ஆகில்
முன்பு வேத அத்யயனம் பண்ண அதிகாரம் இருக்க வேண்டுமே
அதே போலே ஆதி சேஷனைப் போலே ஆயிரம் வாய் கொண்டும்
ஸ்ரீ ரெங்க நாதனைப் போலே சஹஸ்ர முகங்களையும் கொண்டும்
இருந்தேனாகில் ஸ்தோத்ரம் பண்ண என்னால் ஆகாது என்று சொல்ல ப்ரஸக்தி உள்ளது என்று சொன்னார் ஆயிற்று
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே
தனக்கும் தன் தன்மை அறிய அரியன் -என்றபடி சர்வஞ்ஞனுக்கும் எட்டாத ஸ்ரீ பகவத் வைபவம் அன்றோ

—————————–

ஸ்துதிக்க சக்தியும் அதிகாரமும் இல்லை என்றார் கீழ் இரண்டாலும் –
இதில் தம்மிடம் ஞான சப்த அர்த்த தோஷங்கள் இருந்தாலும் அன்பும் பரிவும் கொண்டு –
இளைய புன் கவியாய் இருந்தாலும் இனியவாறே கொள்கிறான்-

முதலில் சக்தி இல்லை என்றார்
அடுத்து சக்தி இல்லை என்பதற்குக் கூட தமக்கு அதிகாரம் இல்லை என்றார் –
ஸ்ரீ பகவத் விஷயம் அபரிச்சின்னம் ஆகையால் -சப்த தோஷத்தாலும் அதுக்கு ஹேதுவான ஞான தோஷத்தாலும்
அர்த்த தோஷத்தாலும் எனக்கு ஸ்தோத்ரத்தில் அதிகாரம் இல்லையாய் இருக்க
ஸ்ரீ பெரிய பெருமாள் நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே தம்மை ஸ்துதிப்பிவித்துக் கொண்டு
தம் ஐஸ்வர்யத்தை மறைத்து வேதத்துக்கும் சந்தேகிக்கும் படியாய் யாகிறார் என்கிறார்

ச அங்க வேத யதிவா ந கிலேதி வேத சந்தேக்தி அநர்க்க விதம் ஆத்மநீ ரங்க நாதம்
ஸ்த்தாநே தத் ஏஷ கலு தோஷ மலீம ஸாபி மத் வாக்பி ஐசம் அதி சாயநம் ஆ வ்ருணோதி –15-

வேத-விதமானது –
ச அங்க யதிவா ந வேத இத-அந்த எம்பெருமான் தானும் தனது பெருமையை அறிந்தானோ இல்லையோ என்று சொல்லி
அநர்க்க விதம் ரங்க நாதம்–சிறந்த ஞானத்தை யுடைய சர்வஞ்ஞாரான ஸ்ரீ பெரிய பெருமாளைக் குறித்தும்
சந்தேக்தி ஆத்மநீ -தனக்குள்ளே ஸந்தேஹப்படா நின்றது –
அஸ்யாத் யஷ பரம வ்யோமத்ஸோ அங்க வேதயதி வா ந வேத -என்ற சுருதி
யாவன் ஒரு எம்பெருமான் இந்தப் பிரபஞ்சத்துக்கு சர்வேஸ்வரனாய்க் கொண்டு ஸ்ரீ பரமபதத்தில் வாழ்கிறானோ
அவன் தானும் தனது பெருமையை அறிந்தானோ அல்லது அறிந்திலனோ என்று உள்ளதே
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை என்ற ஸ்ரீ அருளிச் செயல் போலவே –
ஸ்த்தாநே தத்-அப்படி சந்தேகிப்பது தகுமே-
ஏஷ-இந்த ஸ்ரீ பெரிய பெருமாள்
கலு தோஷ மலீம ஸாபி -தோஷங்களால் அழுக்கு ஏறின
மத் வாக்பி-எனது சொற்களைக் கொண்டு
ஐசம்-தனது பரந்த ஐஸ்வர்யத்துக்கு உரிய
அதி சாயநம் ஆ வ்ருணோதி –அதிசயத்தை மறைத்துக் கொள்கிறார்

—————————————-

யானை குளித்து வரும் பொழுது புழுதியை மேலே போட்டுக் கொள்ளுவது போலே
ஸ்ரீ ரெங்கன் எனது புன்சொற்களையும் போக்யமாகக் கொள்கிறான்

ஸ்வம் சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தை பாந்தம் மத் உக்தை மலிநீ கரோதி
ஸ்ரீ ரெங்க கம்ர கலபம் க ஏவ ஸ்நாத்வா அபி தூளீ ரசிகம் நிஷேத்தா –16-

ஸ்ரீ ரெங்க கம்ர–ஸ்ரீ ரெங்க திவ்யதேசத்தில் நித்ய வாசத்தில் விருப்பமுடைய ஸ்ரீ பெரிய பெருமாள்
சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூக்தை –வடமொழி தென் மொழி வேத ஸ்ரீ ஸூக்திகளாலே
பாந்தம்-விளங்கா நிற்கிற
ஸ்வம் -தம்மை
மத் உக்தை-எனது உக்திகளினால்
மலிநீ கரோதி-மலினமாக்கிக் கொள்கிறார்
என்னுடைய இளைய புன் கவிதைகளால் தன்னை மாசு ஏறும்படி செய்து கொள்கிறானே-
ஸ்நாத்வா அபி –-ஸ்நாநம் பண்ணின பின்பும்
தூளீ ரசிகம் –புழுதி அளைவதில் ஆசை கொண்ட
கலபம்–யானையை
க ஏவ நிஷேத்தா-எவன் தான் தடை செய்ய வல்லான்
பால கஜம் போலே நிரங்குச ஸ்வ தந்த்ரன்செய்வன செய்து கொள்ளட்டும் -நம்மால் விலக்கப் போகாதே —
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்றவாறு

—————————–

தமது குல பெருமையும் -திவ்ய தம்பதிகளால் -ஸ்வீ காரம் பெற்றதாலும் -இவ்வாறு ஸ்திதிக்கப் பண்ணிற்று-

கிந்து பிரபத்தி பல தாரித விஷ்ணு மாய மத் வம்சய ராஜ குல துர் லலிதம் கில ஏவம்
ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலிதத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி சாஹசே அஸ்மின் –17-

கிந்து பிரபத்தி பல–ஆனாலும் பிரபத்தியின் மிடுக்காலே
தாரித விஷ்ணு மாய-தாண்டுவிக்கப்பட்ட எம்பெருமானுடைய மாயையை யுடையவர்களான
மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –
மத் வம்சய ராஜ குல துர் லலிதம்–எனது முன்னோர்களுடைய சிறந்த குலத்தினில் பிறந்ததனால் உண்டான செருக்கு
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடத்தும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு வம்ச பிறப்பால் வந்த செருக்கு
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ எம்பெருமானார் முதலான முன்னோர்களைக் கடாக்ஷித்துத் தம்மை க்ஷமிக்கக் கூடும்
என்ற தைர்யத்தால் என்றபடி
துர் லலிதம்-துஷ்ட சேஷ்டிதம் என்றவாறு
கில ஏவம்-இப்படி ஸ்தோத்ரத்தில் கை வைக்கும்படி யாயிற்று அன்றோ –
யத்வா-அல்லது
ஸ்ரீ ரெங்க ராஜ –ஸ்ரீ ரெங்க நாதன் என்ன
கமலா -ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்ன -இவர்களுடைய
பத லாலிதத்வம்–திருவடிகளில் சீராட்டி வளர்க்கப் பெற்றமை -புத்ர ஸ்வீகாரம் செய்து கொண்டு சீராட்டி வளர்த்ததால்
எனது மழலைச் சொற்கள் இனிதாக அவர்களுக்கு இருக்குமே -இதனால் உண்டான ப்ரேம அதிசயத்தாலோ
மம -எனக்கு உண்டான
ஸ்துதி சாஹசே அஸ்மின் –-இந்த ஸ்தோத்ரம் ஆகிற துணிந்த ஸாஹஸச் செயலிலே
அபராத்யதி-குற்றவாளி யாகின்றது –

————————————-

நாதஸ்ய ச ஸ்வ மஹிம அர்ணவ பாரத்ருஸ்வ
விஞ்ஞான வாக் விலஸிதம் ஸஹதே ந வேத
ஆபேஷிகம் யதி தத் அஸ்தி மாம் அபி தேந
ஸ்ரீ ரங்கிண ஸ்துதி விதவ் அஹம் அத்யகார்ஷம் -18- ஸ்துதிக்க அதிகாரம் பெற்றேன் என்கிறார்-

வேத ச நாதஸ்ய -வேதமும் ஸ்ரீ எம்பெருமானுக்கு
ஸ்வ மஹிம அர்ணவ பாரத்ருஸ்வ
விஞ்ஞான வாக் விலஸிதம் ஸஹதே ந -தனது வைபவ கடலில் கரை கண்ட ஞானம் இருப்பதாக சொல்ல மாட்டாமல் நிற்கிறது
ஆபேஷிகம் யதி தத்-அவனை விட இவன் சக்தன் என்னும்படியான சக்தி விசேஷம் அங்கு உண்டு என்னில்
தத் அஸ்தி மாம் அபி-அது எனக்கும் உண்டு
தேந ஸ்ரீ ரங்கிண –அதனால் ஸ்ரீ பெரிய பெருமாளை
ஸ்துதி விதவ் அஹம் அத்யகார்ஷம் -ஸ்தோத்ரம் செய்வதில் அடியேன் அதிகாரி ஆனேன் –
ஸ்துதிக்க அதிகாரம் பெற்றேன் என்கிறார்-
குறை அற பரி பூர்ணமாக ஸ்துதிக்க முடியாமை வேத புருஷனோடு என்னோடு வாசியற எல்லாருக்கும் ஒக்குமே
யத்வா ஸ்ரமாவதி–இத்யாதி ஸ்லோகத்தில் ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது போலவே இங்கும் அருளிச் செய்கிறார் –
சக்தி அநு குணமாக ஸ்துதித்து சத்தை பெறலாமே -அதனால் அவனுக்கு ஒரு தோஷமும் வராதே -என்றபடி

———————————-

மழை துளிகள் கடலில் விழுந்து ஸ்வரூபம் பெறுமா போலே வேதங்கள் ஸ்துதித்து ஸ்வரூபம் பெறுமே-
அதே போலே நானும் ஸ்துதிக்கிறேன்

அந் யத்ர அதத் குண யுக்தி பகவதி ந தத் உத்கர்ஷ ஸுவ்ர்யை பரேஷாம்
ஸ்துத் யத்வாத் யாவத் அர்த்தா பணிதி அபி ததா தஸ்ய நிஸ்ஸீமகத்வாத்
ஆம்நாயாநாம் அசீம் நாம் அபி ஹரி விபவே வர்ஷ பிந்தோ இவ அப்தவ்
சம்பந்தாத் ஸ்வாத்ம லாப நது கபளநத ஸ்தோது ஏவம் ந கிம் மே –19-

அந் யத்ர -எம்பெருமான் தவிர மற்ற வியக்திகளில் ஆகும்
அதத் குண யுக்திஸ் – ஸ்துதிக்கத் தக்கவன் இடத்தில் இல்லாத குணங்களை ஏறிட்டுச் சொல்வதாகிற ஸ்தோத்ரமாவது –
பகவதி –குணக் கடலான எம்பெருமான் இடத்தில் அது அசம்பாவிதம் –
ஏன் என்றால்
ந தத் உத்கர்ஷ ஸுவ்ர்யை பரேஷாம் ஸ்துத் யத்வாத்–அந்த எம்பெருமானுடைய பெருமைகளைக் களவு செய்து
மற்றையோரை ஸ்துதிக்க வேண்டி இருக்கையாலே
யாவத் அர்த்தா பணிதி அபி -பெருமைகள் உள்ள அளவும் சொல்லி முடிக்கையாகிற ஸ்தோத்ரமும்
ததா-எம்பெருமான் இடத்தில் அசம்பாவிதம் –
ஏன் என்றால்
தஸ்ய நிஸ்ஸீமகத்வாத்-எம்பெருமான் இடத்தில் அப்பெருமை எல்லை அற்றதாகையாலே
ஆகில் வேதங்கள் பகவத் குணங்களை எங்கனம் ஸ்துதித்தது என்னில்
அசீம் நாம்-அளவிறந்த
ஆம்நாயாநாம் அபி -வேதங்களும்
அபி ஹரி விபவே வர்ஷ பிந்தோ இவ அப்தவ் சம்பந்தாத் ஸ்வாத்ம லாப–மழைத் துளி கடலில் விழுந்து அதன் சம்பந்தத்தால்
தான் சத்தை பெறுவது போலே பகவத் வைபவம் சொல்வதில் அந்வயிப்பதனால் மாத்திரம் தான் நிறம் பெறும் அத்தனை அன்றி
நது கபளநத-பகவத் வைபவத்தை விளாக்கொலை கொள்வதனால் அன்று
ஸ்தோது ஏவம் ந கிம் மே –ஸ்தோத்ரம் பண்ணப் புகுந்த எனக்கும் இப்படி சம்பந்தத்தால் ஸ்வ ஆத்ம லாபம் ஆகாதோ –
எனது ஸ்வரூப லாபத்துக்காக ஏதோ சிலவற்றை ஸ்தோத்ரம் பண்ணப் புகுகிறேன் என்றவாறு –

———————

கீழ் எல்லாம் உபோத்காதம்
வழி அடையே பேசுகிறார் -இது முதல் ஐந்து ஸ்லோகங்களால் திருக் காவேரி வர்ணனம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எங்கு நீராடினாலும் இந்த ஐந்தையும் அனுசந்திப்பது நியமம் –
ஸ்ரீ கோயிலுக்குச் செல்லும் மார்க்கமே அர்ச்சிராதி -ஸ்ரீ ரெங்க மந்திரமே ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ ரெங்க நாதனே ஸ்ரீ பர வாஸூ தேவன் என்ற
காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்த்ரம் ச வாஸூ தேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ஸ்ரீ விரஜைக்கு உள்ள அணைத்து குணங்களுக்கும் திருக் காவேரிக்கு குறைவற்று உள்ளன என்கிறார் இதில் –

லோக உஜ்ஜீவன காவேரியே விரஜா –தீர்த்த தமம்–திருவாராதன தீர்த்தமும் கொடுக்கும் -இவனே பர வாஸூதேவன்
கல்யாண சீர் வரிசைகளை அழகிய மணவாளனுக்கு கொணர்ந்து -திருக் காவேரியை ஸ்துதிக்கிறார்

காவேரீம் அவகாஹிஷீய பகவன் போக அந்தராயீ பவத்
கர்ம கிலேச பல ஆசய பிரசமந உத்வேல அமல ஸ்ரோதசம்
ஐந்தோ சம்சரத அர்ச்சிராதி சரணி வ்யாசங்க பங்காய யா
லோகே அஸ்மின் விரஜா இவ வேல்லிதஜலா ஸ்ரீ ரெங்கம் ஆலிங்கதி–20-

பகவன் போக அந்தராயீ பவத்-எம்பெருமானுடைய அனுபவத்துக்கு இடையூறாய் இருக்கின்ற
கர்ம–புண்ய பாப ரூப கர்மங்கள் என்ன
கிலேச–அவித்யாதி கஷ்டங்கள் என்ன
பல -கர்மபலன்கள் என்ன
ஆசய–வாசனை என்ன –
ஆகிய இவற்றை எல்லாம்
பிரசமந-போக்குகின்றதும்
உத்வேல-கரையை மீறி இருப்பதும்
அமல -நிர்மலமாக இருக்கும்
ஸ்ரோதசம்–பிரவாகத்தை யுடைத்தான
காவேரீம் அவகாஹிஷீய -காவேரியை குடைந்து ஆடக் கடவன் –
ஐந்தோ சம்சரத அர்ச்சிராதி சரணி வ்யாசங்க பங்காய யா-யாதொரு திருக் காவேரியானது சம்சாரியான பிராணிக்கு
அர்ச்சிராதி மார்க்கத்தில் அலைச்சல் படுவதை போக்குவிப்பதுக்காக
லோகே அஸ்மின் விரஜா இவ வேல்லிதஜலா ஸ்ரீ ரெங்கம் ஆலிங்கதி–இவ்வுலகில் அலைக்கப்பட்ட தீர்த்தத்தை யுடைய
விராஜா நதி போன்று திருவரங்கத்தை அணைத்துக் கொண்டு இரா நின்றதே

—————

கடல் நதிகளின் பதி -திருப்பாற்கடலில் வெளிப்பட்ட பிராட்டிக்கு தாய் அன்றோ இவள்
மருமகனான அழகிய மணவாளானுக்கு-சாமரங்கள் -பச்சைக்கற்பூரம் -சந்தனமரங்கள் -மாணிக்கங்கள் -முத்துக்கள் –
இவற்றை அலைகளாகிய கைகளால் ஏந்தி வர -அரங்கன் தொண்டில் ஈடுபட்ட காவேரியை
அனைவரும் நாடி வணங்கி நீராட வேண்டும்-

துக்த அப்தி ஜெநநோ ஜெநநீ அஹம் இயம் ஸ்ரீ ஏவ புத்ரீ வர
ஸ்ரீ ரெங்கேஸ்வர ஏதத் அர்ஹம் இஹ கிம் குர்யாம் இதி ஏவ ஆகுலா
சஞ்சத் சாமர சந்த்ர சந்தன மஹா மாணிக்யா முக்தா உத்கராந்
காவேரீ லஹரீ கரைஸ் விதததீ பர்யேதி சா சேவ்யதாம் —21-

துக்த அப்தி ஜெநநோ–திருப் பாற் கடலானது தந்தை
அஹம் ஜெநநீ -அக்கடலின் மனைவியாகிய நான் தாய்
இயம் ஸ்ரீ ஏவ புத்ரீ-ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகள்
வர ஸ்ரீ ரெங்கேஸ்வர–ஸ்ரீ அழகிய மணவாளன் மணவாளப் பிள்ளை
ஏதத் அர்ஹம் இஹ-இப்படி இருக்கையில் இந்த மக்களுக்கும் மணவாளப் பிள்ளைக்கும் தகுதியாக
கிம் குர்யாம்–என்ன சிறப்பு செய்யக் கடவோம்
இதி காவேரி -என்று திருக் காவேரி யானவள்
ஏவ ஆகுலா சஞ்சத்-வியாகுலப்பட்டவள் போலே விளங்கா நின்றுள்ள
சாமர–சாமரங்கள் என்ன
சந்த்ர –பச்சைக் கற்பூரங்கள் என்ன
சந்தன -சந்தன மரங்கள் என்ன
மஹா மாணிக்யா -சிறந்த ரத்தினங்கள் என்ன
முக்தா உத்கராந்-முத்துக்கள் என்ன -இவற்றின் குவியல்களை
காவேரீ லஹரீ கரைஸ் –காவேரீ அலைகளாகிற கைகளினால்
விதததீ சதீ பர்யேதி-ஏந்திக் கொண்டு பெருகுகின்றது
சா சேவ்யதாம் —அப்படிப்பட்ட திருக் காவேரீ-சேவிக்கத் தக்கது -ஜனங்களால் நீராடப்பட வேணும்
இன்னார் இனையார் என்று பாராமல் எல்லாரும் ஓக்க திருக் காவேரியைப் பற்றுங்கோள் என்று பர உபதேசம் –

தெளிவிலாக் கலங்கள் நீர் சூழ் திருவரங்கம்-கலங்கி பெருகுவதற்கு ஒரு ஹேதுவாய் உத்ப்ரேஷிக்கிறார்
தம் பெண்ணுக்கு புக்க இடமும் பிறந்த இடமும் சீரியதாக இருப்பதால் அதுக்குத் தக்கபடி
என்ன சிறப்பு செய்ய வல்லோம் என்ற கலக்கம் –
ஆளரியால் அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு
பொன்னி மலைப்பண்டம் அண்டத் திரை யுந்து -என்றும்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவேரி
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவேரி -என்றபடி

———————

தீர்த்த தமம் –நந்தவன போஷகம் –திருவீதிகளையும் நனைத்து -திரு மஞ்சனம் திரு ஆராதனம் தீர்த்தமும் கொடுத்து –
கைங்கர்யங்களில் ஈடுபட்டு உகந்து நுரைகளாகிற புன்னகை காட்டும் –
ஒரு க்ஷண ஸ்ரீ பாத சம்பந்தத்தால் பெருமை வாய்ந்தது என்று அஹங்கரித்து இருக்கும் கங்கையிலும் சீரியவள் அன்றோ காவேரி –
இப்படிப்பட்ட காவேரி நம் பாபங்களைப் போக்கட்டும்

தீர்த்தம் கந்ததி பாதி நந்தன தரூன் ரத்த்யா அங்கணாநி உஷதி
ஸ்நாநீய அர்ஹண பாநவாரி வஹதி ஸ்நாத புநீதே ஜனான்
ஸ்யாமம் வேதரஹ வ்ய நக்தி புவிநே பேநைர் ஹசந்தீ இவ தத்
கங்காம் விஷ்ணு பதீத்வ மாத்ரமுகராம் ஹேம ஆபகா ஹந்து அகம் –22-

ஹேம ஆபகா–பொன்னி என்ற திருக் காவேரி
தீர்த்தம் கந்ததி–தீர்த்தம் என்று பெயர் பெற்ற புண்ய ஜலங்களை பரிசுத்தம் ஆக்குகின்றது
துலாக் காவேரி மஹாத்ம்யத்தில் ஐப்பசி மாதத்தில் சகல புண்ய தீர்த்தங்களும் இங்கு அவகாஹித்து
பாபிஷ்ட ஜனங்கள் தீண்டியதால் உள்ள பாபங்களைப் போக்கிக் கொள்வதாக உண்டே
பாதி நந்தன தரூன் –திரு நந்தவனத்தில் உள்ள மரங்களைக் காப்பாற்றுகின்றது
ஆறாமல் சூழ்ந்த அரங்கம் -ஸ்ரீ கோயிலைச் சூழ்ந்த சோலைகளை வளர்க்கின்றது –
ரத்த்யா அங்கணாநி உஷதி-திரு வீதிகளையும் நால் சந்திகளையும் நனைக்கின்றது –
ஸ்நாநீய அர்ஹண பாநவாரி வஹதி –திருமஞ்சனத்துக்கும் திரு ஆராதனத்துக்கும் அமுது செய்வதுக்கும்
யோக்கியமான தீர்த்தத்தை வஹித்து இரா நின்றது
ஸ்நாத புநீதே ஜனான்-நீராடும் ஜனங்களை ஸூத்தி செய்கின்றது –
ஸ்யாமம் வேதரஹ–நீல நிறத்ததாய் -வேதாந்த ரஹஸ்யமான ஸ்ரீ எம்பெருமானை
வ்ய நக்தி புவிநே-தனது மணல் குன்றிலே சேவை சாதிப்பிக்கின்றது –
வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்காகிய கரு மணியை கோமளத்தை தன் நடுவு பாடே சேவை சாதிக்கின்றதே –
தத்-ஆகையால்
கங்காம் விஷ்ணு பதீத்வ மாத்ரமுகராம் -ஸ்ரீ திருவிக்ரமன் திருவடியில் நின்றும் பிறந்தோம் என்கிற மாத்திரத்தாலே
அஹங்காரம் கொண்டு கர்ஜிக்கின்ற கங்கையை
பேநைர் ஹசந்தீ இவ -நுரைகளினால் சிரிப்பது போன்று இரா நின்ற திருக் காவேரி ஆறானது
ஹந்து அகம் –நமது பாபங்களைப் போக்கடிக்கக் கடவது –

கங்கையில் புனிதமாய் காவேரி -பாசுர விவரணம்
தெண்ணீர் பொன்னி திரைக்கையால் அடி வருடி நித்ய சம்பந்தம் உண்டே

————————-

கர்ம பலனாக ஸ்தாவரங்கள் –பிராயச்சித்தம் செய்யத் தகாதவை –
அவற்றுக்கும் தாய் பாலூட்டுமா போலே நீர் மூலம் மகிழ்ச்சி யூட்டும்-
நம்பெருமாள் கருணை போலே எங்கும் சூழ்ந்து இருக்கும் -குளிர்ந்த இனிமையான
காவேரி நம்மை தூய்மைப்படுத்தட்டும் –

அ கணித குண அவத்யம் சர்வம் ஸ்திரத்ரஸம் அப்ரிதிக்ரியம்
அபி பயஸ் பூரைஸ் ஆப்யா யந்தீ அநு ஜாக்ரதீ
ப்ரவஹதி ஜகத் தாத்ரீ பூத்வா இவ ரங்கபதே தயா
சிசிர மதுர அகாதா சா ந புநாது மருத் வ்ருதா–23-

அ கணித குண அவத்யம்-குண தோஷங்களை ஆராயாத படி யதா ததா
சர்வம் ஸ்திரத்ரஸம் அப்ரிதிக்ரியம்-பிராயச்சித்த யோக்யதை கூட இல்லாத ஸ்தாவர ஜங்கமப் பொருள்களை எல்லாம்
காயிக பாப பலன்களை அனுபவிக்க கல்லாகவும் மரமாகவும் ஸ்தாவரமாகவும்
அபி பயஸ் பூரைஸ் ஆப்யா யந்தீ அநு ஜாக்ரதீ-ஜல ப்ரவாஹங்களாலே திருப்தி படுத்தா நின்று கொண்டும்
கூடவே விழித்து இரா நின்று கொண்டும்
ப்ரவஹதி ஜகத் தாத்ரீ பூத்வா இவ ரங்கபதே தயா-ஸ்ரீ அழகிய மணவாளனுடைய திரு வருள் போலே
உலகுக்கு எல்லாம் உபமாதாவாகி வெள்ளம் இடா நின்றதோ
சா -அப்படிப்பட்ட
சிசிர மதுர அகாதா ந புநாது மருத் வ்ருதா–குளிர்ந்தும் மதுரமாயும் ஆழமாயும் உள்ள திருக் காவேரியானது
நம்மைப் பரிசுத்தப் படுத்துக
மருத் வ்ருதா-காற்று அடிக்க அடிக்க காவேரி நீர் பெருக்கு அபி விருத்தி அடையும் என்பதால்
இந்த பெயர் திருக் காவேரிக்கு –

———————————-

சோலைகளில் மெதுவாக மோத–மலர்க் கொத்துக்கள் அசைந்தாட -வண்டுகள் இனிமையாக உறங்க –
மகரந்தம் பெருகும்படி செய்கிறது
கநக நாம்நீ-பொன்னி -நம் பாபங்களை கழுவட்டும்

தரள தனு தரங்கை மந்தம் ஆந்தோளியமாந
ஸ்வ தட விட பிராஜீ மஞ்ஜரீ ஸூப்த ப்ருங்கா
ஷிபது கநக நாம்நீ நிம்நகா நாளிகேர
க்ரமு கஜ மகரந்தை மாம்ச லாபா மதம்ஹ–24-

தரள தனு தரங்கை -சஞ்சலமாயும் சிறிதாயும் இருக்கிற அலைகளால்
மந்தம் ஆந்தோளியமாந-மெல்ல அலைக்கப்படா நின்ற
ஸ்வ தட விட பிராஜீ-தன் கரையில் உள்ள சோலைகளிலுடைய
மஞ்ஜரீ ஸூப்த ப்ருங்கா-பூக் கொத்துக்களில் உறங்குகின்ற வண்டுகளை யுடையதும்
நாளிகேர க்ரமு கஜ மகரந்தை -தெங்குகளில் நின்றும் பாக்குகளில் நின்றும் உண்டான மகரந்தங்களினால்
மாம்ச லாபா-நிரம்பிய நீரை யுடைத்தான
கநக நாம்நீ-பொன்னி என்கிற
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் -திருமங்கை ஆழ்வார்
ஹேமாபகா -என்றதும் இது பற்றியே –
நிம்நகா-காவேரி நதியானது
ஷிபது மத் அம்ஹ–என்னுடைய பாபத்தைத் தொலைத்திடுக –

——————————-

வாழை -மகிழ -நாவல் -பாக்கு -மரங்களின் கழுத்து அளவு -பார்க்கும் பொழுது மேகங்கள் தாக சாந்திக்காக
வந்து நிற்பது போலும் இருக்குமே மரங்கள்
சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கம் நம்மை ரக்ஷிக்கட்டும்
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத் திருவரங்கம் -என்றபடி
ஆராமம் சூழ்ந்த திருவரங்கத்தை மேல் இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

கதள வகுள ஜம்பூ பூக மாகந்த கண்ட்ட
த்வயஸ சரஸ நீராம் அந்தரா ஸஹ்ய கன்யாம்
பிரபல ஜல பிபாசா லம்பமநா அம்புத ஒக
பிரமகர தரு பிருந்தம் வந்த்யதாம் அந்த ரீபம் –25-

கதள–வாழை மரங்கள் என்ன
வகுள -மகிழ் மரங்கள் என்ன
ஜம்பூ -நாவல் மரங்கள் என்ன
பூக -பாக்கு மரங்கள் என்ன
மாகந்த–தேன் மா மரங்கள் என்ன
கண்ட்ட–த்வயஸ–கழுத்து அளவாக உள்ளதும்
சரஸ நீராம்-மாதுர்யத்தோடும் கூடினதுமான தீர்த்தத்தை யுடைத்தான
அந்தரா ஸஹ்ய கன்யாம்–திருக் காவேரியின் நடுவே
பிரபல ஜல பிபாசா-அதிகமான தாகத்தினால்
லம்பமநா அம்புத ஒக–கீழே இறங்கி இருக்கின்ற மேக சமூகத்தினுடைய
பிரமகர-பிரமத்தை உண்டு பண்ணா நின்ற
மேல் பாகம் மட்டும் கருப்பாக தோன்றுவதால் மேக சமூகத்துக்கு ஒப்பு
வந்த விடாய் கெட நீர் பருகும் மேகங்களுக்கு ஒப்பு என்றவாறு
தரு பிருந்தம் வந்த்யதாம் அந்த ரீபம் –-சோலைகளை யுடைத்தான தீவானது வணங்கப் படட்டும் –
இத்தால் ஸ்ரீ கோயிலினுடைய நிரதிசய போக்யதை சொல்லிற்று ஆயிற்று

—————-

முக்தாத்மா செல்லும் பரமபதம் போலே மணல் குன்று -முக்குணங்கள் அற்றது –
எப்போதும் கண்டு மகிழும்படி இருக்க வேண்டும் –

யத் விஷ்ணோ பதம் அதம பரோரஜஸ் அக்ர்யம்
முக்தா நாம் அநு விரஜம் விதீப்ரம் ஆஹு
தத் புண்யம் புளிநம் இதந்த்யா அந்ய மத்யே
காவேரி ஸ்ப்புரதி தத் ஈஷிஷீய நித்யம் –26-

அநு விரஜம்-விரஜா சமீபத்தில்
யத் விஷ்ணோ பதம்–யாதொரு ஸ்ரீ பரமபதத்தை
அதம பரோரஜஸ் அக்ர்யம்-தமோ ரஜோ குணங்கள் அற்றதும் ஸ்ரேஷ்டமுமான
முக்தா நாம் விதீப்ரம் ஆஹு–முக்தர்களுக்கு விளங்குவதாக வைதிகர்கள் சொல்லுகிறார்களோ
தத் புண்யம் புளிநம்-அந்த புனிதமான விரஜா நதியின் மணல் குன்றானது
இதந்த்யா அத்ய–இந்த சம்சார தசையிலும் இதம் என்று ப்ரத்யக்ஷமாகக் காட்டலாம் படி
மத்யே காவேரி ஸ்ப்புரதி–திருக் காவேரியின் நடுவே விளங்கா நின்றது
தத் ஈஷிஷீய நித்யம் –அப்படிப்பட்ட இவ்விடத்தை இடைவிடாமல் கண்டு கொண்டு இருக்கக் கடவேன்–
ஸ்ரீ கோயிலையே சதா பஸ்யந்தீ பண்ணக் கடவேன் –

————————–

சோலைகளின் வர்ணனை தொடக்கம் –

த்ரய்யந்த ப்ரஹதி மதீஷு வைஷ்ணவாநாம்
ப்ராப்யஸூ பிரசுர பவ ச்ரம அபஹாஸூ
காவேரீ பரிசரதாஸூ பாவநீஷு
ஸ்ரீ ரெங்க உபவன தடீ ஷூ வர்த்திஷீய –27-

த்ரய்யந்த ப்ரஹதி மதீஷு –உபய வேதாந்தங்கள் நிரந்தரமான அப்யாசங்களை யுடையவையாயும்
வைஷ்ணவாநாம்-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ப்ராப்யஸூ -புகலிடமாயும் –
கோயிலில் வாழும் வைஷ்ணவர்கள் -என்று இங்கு வாழ்வதே வாழ்ச்சியாகக் கொள்ளுமவர்கள் அன்றோ
பிரசுர பவ ச்ரம அபஹாஸூ–பிரபலமான சம்சார தாபங்களை ஆற்றுமவையாயும்
வெறும் நதி மதியத்தில் ஆழ்ந்தால் தேக தாபம் மட்டுமே தீரும் –
இங்கு ஆத்யாத்மீக ஆதி பவ்திக ஆதி தேவிகா ரூப தாபத் த்ரயங்களும் போகுமே –
காவேரீ பரிசரதாஸூ–திருக் காவேரியின் அழைக்காற்று முதலியவற்றால் கிஞ்சித்கரிக்கப் பெற்றவையாயும்
பாவநீஷு–பரிசுத்தங்களாயும்
ஸ்ரீ ரெங்க உபவன தடீ ஷூ வர்த்திஷீய –இருக்கிற ஸ்ரீ கோயில் புறச் சோலைகளில் வர்த்திக்கக் கடவேன் –
பிரபன்னருக்கு ஸ்ரீ பரமபதம் போலே அன்றோ இங்குறை வாசம் –

———————

பெரிய மீன்கள் துள்ள -அவை மோதி இளநீர் பொழிய அதுவே விளைநீராக வளரும்
பாக்கு பலா வாழை மரங்கள் சூழ்ந்து -கறுத்த இனிமையான சோலைகள்

ஸ்ப்புரித சபர தீர்யத் நாளிகேரீ குளுச்ச ப்ரஸ்ருமர
மது குல்யா வர்த்தித அநோக ஹாநி
ரதிம் அவிரதி ரங்க ஆராம் ரம்ய ஸ்த்தலாநி க்ரமுக
பனச மோஸா மேஸகாநி க்ரியாஸூ –28-

ஸ்ப்புரித சபர தீர்யத்–துள்ளிப் பாய்ந்த மீன்கள் பட்டு உடைந்த
நாளிகேரீ குளுச்ச–தென்னங்குலைகளில் நின்றும்
ப்ரஸ்ருமர மது குல்யா–பெருகின இளநீர் நிறைந்த வாய்க்கால்களினால்
வர்த்தித அநோக ஹாநி–போஷிக்கப் பட்ட மரங்களை யுடையனவும்
க்ரமுக-பாக்கு மரங்கள் என்ன
பனச-பலா மரங்கள் என்ன
மோஸா –வாழை மரங்கள் என்ன
ஆகிய இவற்றால்
மேஸகாநி-கறுத்து இருப்பவையுமான
ரங்க ஆராம் ரம்ய ஸ்த்தலாநி-ஸ்ரீ கோயிலைச் சூழ்ந்த ஆராமங்களின் அழகிய நிலங்கள்
க்ரியாஸூ –ரதிம் அவிரதி–இடைவீடு இன்றி மகிழ்ச்சியை செய்யக் கடவன –

————————

மூன்று ஸ்லோகங்களால் திருவரங்க வர்ணனை –
பரமபதம் அயோத்யா அபராஜிதை –போன்றதே திருவரங்கம் காவேரியின் மணல் கரையில் வந்து நின்றது –

அதி பரம பதம் புரீம் அயோத்யாம் அம்ருத வ்ருதாம் அபராஜிதாம் உசந்தி
புளிநம் உபரி ரங்கராஜ தாநீ பிசிதத்ருஸாம் அபி சா புரஸ் ஸகாஸ்தி–29-

அதி பரம பதம் –ஸ்ரீ பரம பதத்தில்
அம்ருத வ்ருதாம்-விராஜா கத்தியால் சூழப்பட்டதாய் -அல்லது நித்ய முக்த ஸமூஹங்களால் பரி வருத்தமாய்
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதேநா வ்ருதாம் புரீம் -என்று சொல்லுகிறபடி –
புரீம் அயோத்யாம் அபராஜிதாம் உசந்தி–அயோத்யா என்றும் அபராஜிதா என்றும் பெயர் யுடைத்தாய்
தேவா நாம் பூர் அயோத்யா புரீம் ஹிரண்ய மயீம் ப்ரஹ்ம விவசா அபராஜிதா -என்று சொல்லுகிறபடி –
யாதொரு பட்டணத்தை உள்ளதாக வைதிகர்கள் சொல்லுகிறார்களோ
சா -அந்த திவ்விய நகரியானது
புளிநம் உபரி ரங்கராஜ தாநீ -திருக் காவேரி சைக்கதத்திலே ஸ்ரீ ரெங்க நகரியாகி
பிசிதத்ருஸாம் அபி சா புரஸ் ஸகாஸ்தி–மாம்சக் கண்ணினர்களான நம் போல்வாருக்கும் கண் எதிரே விளங்குகின்றதே
இத்தால் திரு அயோத்யையே ஸ்ரீ கோயிலாக திருவவதரித்துள்ளது என்றதாயிற்று –

———————

உயர்ந்த மாட மாளிகைகள் -ரத்தினங்கள் பாதிக்கப்பட்ட மேல் தளங்கள் –
உபய விபூதியையும் இணைக்கும் -ஸ்ரீ ரெங்கராஜன் செங்கோல் கொண்டு ஆளும் நகரம்-

பவ பதம் அபி திவ்ய தாம கர்த்தும் தத் உபய தந்த்ரித ஹர்ம்ய மாலிகா இவ
பவந மணி தலை விஜ்ரும்ப மாணா ஜயதி தராம் இஹ ரெங்கராஜ தாநீ –30-

பவ பதம் அபி–சம்சார மண்டலத்தையும்
திவ்ய தாம கர்த்தும் இவ -நித்ய விபூதியாக பண்ணுவதற்குப் போலே
தத் உபய தந்த்ரித–அந்த உபய விபூதிகளிலும் ஒருங்கே சம்பந்திக்கப் பெற்ற
ஹர்ம்ய மாலிகா –மாட மாளிகைகளை திரளாகக் கொண்டு
பவந மணி தலை –திரு மாளிகைகளின் -ரத்தினங்கள் இழைத்த மேல் தளங்களினால்
விஜ்ரும்ப மாணா –விருத்தி அடையா நிற்கிற
ஜயதி தராம் இஹ ரெங்கராஜ தாநீ –ஸ்ரீ திருவரங்க மா நகர் இவ்விபூதியில் மிகவும் சீர்மை பெற்று விளங்கா நிற்கின்றது –

———————————–

மாளிகைகளில் மகர தோரணங்கள் –அவை கட்டப்பட்ட கொடிக்கம்பங்கள் கைகள் போலே —
ஸ்ரீ ரெங்கநாச்சியார் விளையாடி மகிழ – ஸ்ரீ ரெங்கம் என்ற பெண் சந்திரனில் உள்ள மாயமானைப் பிடிக்கும்
வலை போலே உள்ளன -நம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய படி

மணி மகரருஸீ விதத்ய பாஸாந் விஸ்ரு மரகேது
கரைஸ் ம்ருகம் ஹிமாம்சோ
ஸ்ரீ ய இவ நவ கேளயே ஜிக்ருஷு
ஸூ கயதி ரங்க புரீ சகாசதீ ந –31-

மணி மகரருஸீ விதத்ய பாஸாந்–ரத்ன மயங்களான மகர தோரணங்களின் காந்திகளை வலைக்கயிறாகப் பரப்பி
விஸ்ரு மரகேது கரைஸ்-மேலே பரவி இருக்கின்ற த்வஜங்கள் ஆகிற கைகளினால்
ம்ருகம் ஹிமாம்சோ–சந்திரனுடைய மானை
ஸ்ரீ ய இவ நவ கேளயே–ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய அபூர்வமான விளையாட்டுக்காக
ஜிக்ருஷு இவ–பிடிக்க விரும்பினது போலே
சகாசதீ–விளங்கா நின்றுள்ள
ஸூ கயதி ரங்க புரீ ந –ஸ்ரீ திருவரங்க மா நகர் சப்தாதி பிரவணரான நம்மையும் மகிழ்விக்கின்றது –

———————

குமுதாதி கண நாதர்கள்–ஆயுதங்கள் பரிவாரங்கள் -வாகனங்கள் உடன் ரக்ஷணத்தில் மும்முரமாக உள்ளனர் –

ஜனபத சரித் அந்தரீப புஷ்யத் புர பரிபாலந நித்ய ஜாக ரூகாந்
ப்ரஹரண பரிவார வாஹந ஆட்யாந் குமுத முகாந் கண நாயகாந் நமாமி –32-

ஜனபத சரித் அந்தரீப புஷ்யத்–ஜனங்களுக்கு வாசஸ் ஸ்தானமாய்க் கொண்டு காவேரீ த்வீபத்திலே வளர்கின்ற
புர பரிபாலந நித்ய ஜாக ரூகாந்–ஸ்ரீ ரெங்க நகரத்தைக் காப்பதில் இடைவிடாது நோக்கம் யுடையவர்களாயும்
ப்ரஹரண பரிவார வாஹந ஆட்யாந் –திவ்ய ஆயுதங்களோடும் திவ்ய பரிஜனங்களோடும் வாஹனங்களோடும் கூடினவர்களாயும் இருக்கிற
குமுத முகாந் கண நாயகாந் நமாமி –ஸ்ரீ குமுதன் முதலிய கண நாதர்களை வணங்குகிறேன்

குமுதன் -குமுதாஷன் -புண்டரீகன் -வாமனன் -சங்க கர்ணன் -சர்ப்ப நேத்ரன் -ஸூ முகன்- ஸூ பிரதிஷ்டன் -முதலான
கணாதிபர்களை ஆயுதங்களோடும் பரிஜனங்களோடும் வணங்கும் முகத்தால் அவர்கள் நியமனம் பெறுகிறார்

———————-

நித்யர் முக்தர் முமுஷுக்கள் அனைவரும் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம பிறவி ஏற்று இங்கே கைங்கர்யம் செய்கிறார்கள்
அவர்களுக்கு நமஸ்காரங்கள்-

அஹ்ருத சஹஜ தாஸ்யா ஸூரயா ஸ்ரஸ்த பந்தா
விமல சரம தேஹா இதி அமீ ரங்க தாம
மஹித மனுஜ திர்யக் ஸ்த்தா வரத்வா சந்த
ஸூ நியதம் இதிஹ ஸ்ம ப்ராஹு ஏப்ய நம ஸ்தாத் –33-

அஹ்ருத சஹஜ தாஸ்யா –இயற்கையான சேஷத்வம் -கைங்கர்யம் -குன்றாத
ஸூரயா-நித்ய ஸூ ரிகளும்
ஸ்ரஸ்த பந்தா-சம்சார பந்தம் கழலப் பெற்ற முக்தரும்
விமல சரம தேஹா –பாபங்கள் எல்லாம் தொலைந்து இனி மேல் அடுத்த தேஹ பரிக்ரகம் இல்லை என்று
உறுதியாக இருக்கும் முமுஷுக்களும்
இதி அமீ–ஆகிய இவர்கள்
மஹித மனுஜ திர்யக் ஸ்த்தா வரத்வா சந்த–மானிடப் பிறவியையும் பசு பக்ஷி ஜங்கமப் பிறவியையும் ஸ்தாவரப் பிறவியையும்
விரும்பியவர்களாய்க் கொண்டு
ரங்க தாம–ஸ்ரீ திருவரங்கத்தை
ஸூ நியதம் ஸ் ரயந்தே –எப்போதும் பற்றி இருக்கிறார்கள்
இதிஹ ஸ்ம ப்ராஹு –என்று பவ்ராணிகர்கள் சொல்லி வைத்தார்கள்
ஏப்ய நம ஸ்தாத் –இப்படிப்பட்ட மனுஷ்ய ஜங்கம ஸ்தாவரங்களின் பொருட்டு நமஸ்காரம் ஆகுக –
இப்படி சொன்ன அவர்களுக்கு நமஸ்காரம் என்றுமாம் –
இதிஹ–ஐதிக்யம் என்ற சொல் இதனாலே பிறந்தது –

———————————

திரு மதிள்கள் பெரிய திருவடி சிறகுகளை விரித்து ஸ்ரீ ரெங்கம் பெரிய கோயிலை மறைத்து ரக்ஷிப்பது போல் உள்ளது –
இந்த பெரிய கோயிலை நாம் பற்றுக் கொம்பாகக் கொள்வோம்–

ஸ்ரீ ரெங்க திவ்ய பவனம் புவி கோபுராணாம்
பிரகாரி தேந நிகரேண கருத்மதா இவ
பார்ஸ்வ பிரசாரித பதத்ர புடேந பக்த்யா
நாநாத நூபி உப கூடம் உபக்நயாம –34-

ஸ்ரீ ரெங்க திவ்ய பவனம் புவி
பிரகாரி தேந -இரு பக்கங்களிலும் திரு மதிள்களைக் கொண்டு இருக்கிற
கோபுராணாம் நிகரேண -கோபுரங்களின் சமூகத்தினால்
சூழப் பட்டு இருப்பதைப் பார்த்தால்
பார்ஸ்வ பிரசாரித பதத்ர புடேந–இரண்டு பக்கங்களிலும் விரிக்கப் பட்ட சிறகுகளை யுடைய
கருத்மதா–ஸ்ரீ பெரிய திருவடியினால்
பக்த்யா புவி நாநாத நூபி–பக்தியோடு பூ லோகத்தில் பல வடிவுகளைக் கொண்டு
கீழ் ஸ்லோகத்தில் அருளிச் செய்ததற்கு ஒரு உதாஹரணம் அருளிச் செய்கிறார் இதில்
ஸ்ரீ கோபுரம் -ஸ்ரீ பெரிய திருவடி என்றும் -திரு மதிள்கள் அவனது சிறகுகள் என்றும் –
ஸ்ரீ திருவரங்க செல்வனை பாலனம் செய்து அருளுகிறார்
உப கூடம் இவ ஸ்திதம்– மறைத்துக் காக்கப்பட்டுள்ள்ளது போன்று உள்ள
ஸ்ரீ ரெங்க திவ்ய பவனம் -ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலை
உபக்நயாம –பற்றுக்கோடாகக் கொள்கிறோம் –
நமக்கு ரக்ஷகமாகக் கொள்வோம் என்றபடி –

———————

ஏழு த்வீபங்கள் –ஏழு சமுத்திரங்கள் -மஹா மேரு இவற்றுடன் கூடிய ஸ்ரீ பூமிப் பிராட்டியே இங்கே தரிசிக்க வந்தாள் போலும்
பிரகாரங்களே சமுத்திரங்கள் –இணைக்கும் பகுதிகள் த்வீபங்கள் -கோபுர மண்டபங்களே மேரு –

பிராகார மத்யே அஜிர மண்டபே உக்த்யா சத்வீப ரத்நாகர ரத்ன சைலா
சர்வம் சஹா ரங்க விமாந சேவாம் ப்ராப்தா இவ தத் மந்திரம் ஆவி ரஸ்து–35-

யத்ர-யாதொரு ஸ்ரீ ரெங்க மந்திரத்தில்
பிராகார மத்யே அஜிர மண்டபே உக்த்யா –திரு மதிள்கள் -இடைகழி–திரு மண்டபங்கள் என்னும் வியாஜத்தினால்-
சத்வீப ரத்நாகர ரத்ன சைலா-சப்த த்வீபங்களோடும் -சப்த சாகரங்களோடும்-மஹா மேருவுடனும் கூடின
திரு மதிள்களை சமுத்ரமாக உருவகம் செய்து இருப்பது நாள் புறமும் சூழ்ந்து இருப்பதால் –
சர்வம் சஹா -ஸ்ரீ பூமிப் பிராட்டியானவள்
ரங்க விமாந சேவாம் ப்ராப்தா இவ–ஸ்ரீ ரெங்க விமான சேவையை அடைந்தாள் போலும்
தனது பரிவாரங்களுடன் சேவையைப் பெற்று இருக்கிறாள்
தத் மந்திரம் ஆவி ரஸ்து–அந்த ஸ்ரீ ரெங்க மந்த்ரம் கண் எதிரே காட்சி தருகின்றதே

————————-

ஜைனாதி பாஹ்யர்களுக்கு யமன் போலே ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வாதத்தால் ஜெயித்து அவர்கள் விக்ரஹங்களையும்
வைதிகமாக மாற்றவே மதில்களையும் மண்டபங்களையும் அமைத்தார்

ஜித பாஹ்ய ஜின ஆதி மணி ப்ரதிமா அபி வைதிகயந் இவ ரங்க புரே
மணி மண்டப வப்ர கணாந் விதநே பரகால கவி ப்ரணமே மஹி தாந் —36-

பரகால கவி-ஸ்ரீ திருமங்கை மன்னன் –
ஜித பாஹ்ய ஜின ஆதி மணி ப்ரதிமா அபி
-தம்மால் ஜெயிக்கப் பெற்ற வேத பாஹ்யரான ஜைனர் முதலானவர்கள் ஸ்வர்ண விக்ரஹங்களையும்
மணி ப்ரதிமா -பஹு வசனம் பலவற்றை அபகரித்து திருப்பணியில் அந்வயிப்பித்தமை தோற்றும்
மணி சப்த பிரயோகம் ஸ்வர்ணத்துக்கும் உப லக்ஷணம்
வைதிகயந் இவ–வைதிகங்களாகச் செய்பவர் போன்று
திரு ஆழி திருச்சங்கு திரு மண் காப்பு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணங்கள் -இலச்சினை -இவற்றுக்கு உண்டே
ரங்க புரே-ஸ்ரீ திரு வரங்க மா நகரில் –
மணி மண்டப வப்ர கணாந்–சிறந்த திரு மண்டபங்களையும் திரு மதிள்களையும்-
விதநே-நிர்மாணம் செய்தார்
ப்ரணமே மஹி தாந்–அந்த மண்டப பிரகாரங்களை வணங்கக் கடவோம் –
கர்த்ரு வைலக்ஷண்யமும் உண்டே இவற்றுக்கு என்றபடி –

—————————–

கோரைப் பற்களாலும் புருவ நெறிப்பாலும் அடியார் விரோதிகளை அச்சம் கொள்ளச் செய்கின்றனர்
தெற்கு வாசல் –பத்ரன் -ஸூ பத்ரன் /வடக்கு வாசல் -தாத்ரு –விதாத்ரு -/
மேற்கு வாசல் -ஜெயன் விஜயன் /கிழக்கு வாசல் -சண்டன் -ப்ரசண்டன்-/

ஸ்மேர ஆநந அஷி கமலை நமத புநா நாந்
தம்ஷ்ரா கதா ப்ருகுடிபிர் த்விஷத துநாநாத்
சண்ட ப்ரசண்ட முகத ப்ரணமாமி ரங்க
த்வார ஆவளீஷு சதஸ்ருஷு அதிகார பாஜ –37–

ஸ்மேர ஆநந அஷி கமலை -விகசித்த தாமரை போன்ற முகங்களினாலும் கண்களினாலும்
நமத புநா நாந்–ஆஸ்ரிதர்களைப் புனிதமாக்குபவர்களும்
தம்ஷ்ரா கதா ப்ருகுடிபிர் கோரைப்பற்கள் தடிகள் புருவ நெரிப்புக்கள் இவற்றால்
த்விஷத துநாநாத்–பகவத் பாகவத விரோதிகளை நடுங்கச் செய்பவர்களாயும் –
ரங்கத்வார ஆவளீஷு சதஸ்ருஷு –ஸ்ரீ கோயில் திருவாசல் நான்கிலும்
சண்ட ப்ரசண்ட முகத ப்ரணமாமி
அதிகார பாஜ –திருவாசல் காக்கும் அதிகாரம் பெற்றவர்களாக சண்டன் பிரசாந்தன் முதலிய
த்வார பாலர்களை வணங்குகிறேன்
சண்ட பிரசாண்டர்சை சொல்வதால் கீழ் வாசல் வெளியான உள்ளே புகுந்து
அடுத்த ஸ்லோகத்தில் முந்துறத் தென்படும் ஆயிரம் கால் திரு மண்டப மங்களாசாசனம் –

———————————-

பரந்த திரு மா மணி மண்டபம் -ஆயிரம் கால் மண்டபத்தை அடைவேன் –

சர்வ ஆத்ம சாதாரண நாத கோஷ்ட்டி
பூரே அபி துஷ்பூர மஹாவகாசம்
ஆஸ்த்தாநம் ஆனந்த மயம் சஹஸ்ர
ஸ்தூணாதிநா ஆம் நாதம் அவாப்நவானி –38-

சர்வ ஆத்ம சாதாரண நாத கோஷ்ட்டி பூரே அபி –ஆத்மாக்கள் அனைவருக்கும் பொதுவான ஸ்ரீ ரெங்கநாதனுடைய
கோஷ்டியாலே நிரப்பப் பார்த்தாலும்
துஷ்பூர மஹாவகாசம்-நிரப்ப முடியாத மிகுந்த அவகாசம் உடையதும்
தேவா நாம் தாநவாநாஞ்ச சாமான்யம் அதி தைவதம் -திருமால் அடியார்கள் அனைவரும் புகுந்தாலும் அவகாசம் மிக்கு இருக்குமே
இன்றும் பெரிய திரு நாள் உத்சவத்தில் எண் திசையில் இருந்தும் அடியவர் குழாங்கள் வந்து புகுந்தாலும் அவகாசம் மிக்கு
இருப்பதைக் கண் கூடாகப் பார்க்கிறோமே –
இங்கு திரு ஓலக்கத்தில் இருப்பது சர்வாதிகாரம் -அதிக்ருதாதிகாரம் இன்றிக்கே –
சஹஸ்ர ஸ்தூணாதிநா ஆம் நாதம் -சஹஸ்ரஸ் தூணே என்கிற பதத்தை ஆதியிலே யுடைய உபநிஷத் வாக்கியத்தினால்
ஓதப்பட்டதும் -அங்குள்ள திரு மா மணி மண்டபமே –
சஹஸ்ர தூணே விததே த்ருட உக்ரே யத்ர தேவா நாம் ஆதி தேவ ஆஸ்தே -உபநிஷத் வாக்கியம்-
ஆயிரம் தூண்கள் உடையதும் -விஸ்தாரமானதும் -உறுதி யுடையதும் -கண் கொண்டு பார்க்க முடியாததுமான
திரு மா மணி மண்டபத்தை தேவாதி தேவன் வீற்று இருக்கிறான் –
ஆஸ்த்தாநம் ஆனந்த மயம் அவாப்நவானி –ஆனந்தமே வடிவெடுத்ததான ஆயிரம் கால் மண்டபத்தை அடையக் கடவேன்
சின்மயம் -ஆனந்த பிரசுரமயம் -அன்றோ –

———————————-

அடுத்து இரண்டு ஸ்லோகங்களால் சந்த்ர புஷ்கரணி மங்களா சாசனம்
அடியவர் ஹ்ருதய தாமரையில் வீற்று இருந்த களைப்பு தீர பிராட்டியுடன் சந்த்ர புஷ்கரணியில் ஜலக்ரீடை –
மலர்கள் குடை போலவும் -லீலைக்கும் -அலங்காரத்துக்கும் இங்குள்ளன –
அவன் களைப்பையும் தீர்க்க வல்லதான சந்த்ர புஷ்கரணியை அடைவோம்-

விஹரதி ஹரவ் லஷ்ம்யா லீலா ஆதபத்ர பரிஷ்க்ரியா
விநிமயவிதா ஸூநா ஸூநிக்ரியா சபல உத்பலாம்
அத முனி மந பத்மேஷு அப்ஜா ஸஹாய விஹாரஜ
ஸ்ரமஹர தடீம் யாம தாம் ஜந்தவீம் அரவிந்திநீம் –39-

விஹரதி சதி ஹரவ் லஷ்ம்யா ஸஹ–ஸ்ரீ ரெங்கராஜன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருடன் ஜலக்ரீடை பண்ணும் அளவில்
லீலா ஆதபத்ர-லீலார்த்தமாக குடையாக இருப்பதனாலும்
பரிஷ்க்ரியா–கர்ண பூஷணம் முதலான அலங்காரங்களாக இருப்பதனாலும்
விநிமயவிதா-ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்வதற்கு உறுப்பாய் இருப்பதனாலும்
ஸூநா ஸூநிக்ரியா-புஷ்ப யுத்தம் பண்ண உறுப்பாய் இருப்பதனாலும்
சபல உத்பலாம்-சாபல்யம் அடைந்த நெய்தல் மலர்களை யுடைத்தாய்
அத-அன்றியும்
முனி மந பத்மேஷு –மஹா ரிஷிகளின் -ஸ்ரீ பரங்குசாதி திவ்ய ஸூரிகளின் -ஹிருதய புண்டரீகங்ககளில்-
அப்ஜா ஸஹாய விஹாரஜ–ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூடி விளையாடிதானால் உண்ட விடாயை
ஸ்ரமஹர தடீம்–தீர்க்க வல்ல கரையை யுடைத்தான
யாம தாம் ஜந்தவீம் அரவிந்திநீம் –சந்த்ர புஷ்கரணியை அடைகிறோம் –
சந்திரனின் தோஷத்தைப் போக்கி அருளினது போலே நம் தாப த்ரயங்கள் தீர பெறுவோம் –

———————————

சந்திரன் ஷயம் நீங்கப் பெற்றது போலே நாமும் தாபத்ரய வேதனையைப் போக்கி கொள்ள நீராடுவோம்-

தாப த்ரயீம் ஜந்தவ புஷ்கரண்யாம் நிமஜ்ஜ்ய நிர்வாபயிதாஸ்மி
அப்யாஸத அபாம் அகமர்ஷ்ணீனாம் சந்த்ரஸ் ஸூதா தீதிதிதாம் அவாப –40-

தாப த்ரயீம் ஜந்தவ புஷ்கரண்யாம் –தாப த்ரயத்தை சந்த்ர புஷ்கரணியில்
நிமஜ்ஜ்ய நிர்வாபயிதாஸ்மி-குடைந்து நீராடி தாபத்தைத் தணித்துக் கொள்வேன்
அப்யாஸத அபாம் அகமர்ஷ்ணீனாம்–பாப ஹரமான தீர்த்தத்தினுடைய பரிசய அதிசயத்தினாலே
சந்த்ரஸ் ஸூதா தீதிதிதாம் அவாப –-சந்திரன் அம்ருத கிரணனாகை அடைந்தானோ –

——————–

கிழக்கு கரையில் ஆழ்வார்கள் சேவை பெறுவோம்

பூர்வேண தாம் தத்வத் உதார நிம்ன பிரசன்ன சீத ஆசய மக்ந நாதா
பராங்குச ஆத்யா ப்ரதமே புமாம்ச நிஷே திவாம்ச தச மாம் தயேரந்–41-

பூர்வேண தாம்–அந்த சந்த்ர புஷ்கரணிக்கு கிழக்கே
நிஷே திவாம்ச-எழுந்து அருளி இருப்பவர்களாய்
தத்வத்-அந்த புஷ்கரணியைப் போலவே
உதார நிம்ன பிரசன்ன சீத ஆசய மக்ந நாதா–உதாரமும் கம்பீரமும் தெளிந்ததும் குளிர்ந்ததுமான ஹ்ருதயத்தில்
அமர்ந்த எம்பெருமானை யுடையவர்களாய்
ஆசயம் என்று உட் புறம்–ஆழ்வார்கள் பக்ஷத்தில் அவர்கள் ஹிருதயம் -சந்த்ர புஷ்கரணி பக்ஷத்தில் உள் நிலம்
நான்கு விசேஷணங்கள் –
அவப்ருத ஸ்நானம் கண்டு அருளுவதால் ஆசய மக்நநாதத்வம் சந்த்ர புஷ்கரணிக்கும் உண்டே
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து எண் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளன் என்றும்
திரு மா மகளைப் பெற்றும் எண் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் -என்றும்
உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்தக்கம் -என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ –
பராங்குச ஆத்யா ப்ரதமே புமாம்ச தச மாம் தயேரந்–ஸ்ரீ நம்மாழ்வார் முதலான ஆழ்வார்கள் பதின்மரும்
அடியேன் மீது கிருபை பண்ணக் கடவர்கள்
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கக் கடவர்கள் –

—————————————–

அடுத்த நான்கு ஸ்லோகங்கள் ஸ்ரீ ரெங்க விமான அனுபவம் –பகவத் சக்தி -அதன் மேல் ப்ரக்ருதி மண்டலம் —
கூர்மம் -ஆதிசேஷன் -படங்கள் மேல் பூமி -அதன் மேல் சமுத்திரம் -அதன் மேல் எட்டு தள தாமரை –
அதன் மேல் ஸ்ரீ ரெங்க விமானம் -ஸ்துதிப்போம்–

ஆதார ஸக்திம் உபரி ப்ரக்ருதிம் பரேண தாம் கூர்மம் அத்ர பணிநம் ப்ருத்வீம் ப்பணாஸூ
ப்ருத்த்யாம் பயோதிம் அதிதத் நளிநம் நிதாய ஸ்ரீ ரெங்க தாம ஸூ நிவிஷ்டம் அபிஷ்டவானி -42-

ஆதார ஸக்திம் உபரி–ஆதார சக்தியின் மீது
ப்ரக்ருதிம் நிதாய-ப்ரக்ருதி மண்டலத்தை வைத்து
பரேண தாம்-அந்த பிரகிருதியின் மீது
கூர்மம் நிதாய-கூர்மத்தை வைத்து
அத்ர பணிநம் நிதாய -அந்த கூர்மத்தின் மீது ஆதி சேஷனை வைத்து
ப்ருத்வீம் ப்பணாஸூ நிதாய -அந்த ஆதி சேஷனுடைய படங்களின் மீது பூமியை வைத்து
ப்ருத்த்யாம் பயோதிம் நிதாய-பூமியின் மீது சமுத்ரங்களை வைத்து
அதிதத் நளிநம் நிதாய-அதன் மேல் அஷ்டதள பத்மத்தை வைத்து
ஸ்ரீ ரெங்க தாம ஸூ நிவிஷ்டம் அபிஷ்டவானி -அதன் மீது ஸூ பிரதிஷ்டமாய் இருக்கும் ஸ்ரீ ரெங்க விமானத்தை ஸ்துதிக்க கடவேன் –
சகலத்தையும் தரிக்க வல்ல ஆதார சக்தி அவனுக்கு உண்டே –
ஸ்ரீ உடையவர் நித்ய கிரந்தத்தில் ஸ்ரீ பீட அர்ச்சனை -ஓம் ஆதார சக்த்யை நம– ஓம் பிரகிருதி நம -என்று தொடங்கி
அருளிச் செய்தவை அனுசந்தேயம் –

——————————–

பரேண நாகம் புரி ஹேம மய்யாம் ய ப்ரஹ்ம கோச அஸ்தி அபராஜிதா ஆக்க்ய
ஸ்ரீ ரெங்க நாம்நா தம் அபவ்ருஷேயம் விமான ராஜம் புவி பாவயானி –43-

பரேண நாகம்-ஸ்வர்க்க லோகத்துக்கு மேம்பட்டதாய் -பரேண நாகம் நிஹிதம் குஹாயம் -தைத்ரியம்
புரி ஹேம மய்யாம் ய ப்ரஹ்ம கோசஅஸ்தி அபராஜிதா ஆக்க்ய–பொன்னுலகு எனப்படும் -ஹிரண்ய மயமான பட்டணத்தில்
யாதொரு அபராஜிதா என்ற திரு நாமமுடைய ஸ்ரீ பர ப்ரஹ்ம ஸ்தானமானது இருக்கின்றதோ
புரம் ஹிரண்மயீம் ப்ரஹ்ம விவேச அபராஜிதா –தைத்ரியம்
ப்ரஹ்மண கோசோசி மேதயா அபிஹீத -சுருதி
பிரணவமே ப்ரஹ்ம கோசம் எனப்படும் -ஸ்ரீ ரெங்க விமானம் ப்ரணவாகார விமானம் தானே –
ஸ்ரீ ரெங்க நாம்நா தம் அபவ்ருஷேயம் விமான ராஜம் புவி பாவயானி –மனிதரால் செய்யப்படாத -அந்த சிறந்த விமானத்தை
இந்நிலத்திலே ஸ்ரீ ரெங்க விமானம் என்னும் திரு நாமத்தோடு திருவவதரித்ததாக பாவிக்கக் கடவேன்
திரு நாமம் மாத்ர பேதமே ஒழிய வஸ்து பேதம் இல்லை என்றவாறு

——————————

வேதங்கள் போலவே ஸ்ரீ ரெங்க விமானமும் – அபவ்ருஷேயம்–மோக்ஷ ப்ரதம்–
ஸ்ரீ ரெங்கனையே காட்டிக் கொடுக்கும் -இத்தையே புகலிடமாகக் கொள்வோம்-

அநாதி ஆம்நாதத்வாத் புருஷ ரஸநா தோஷ ரஹிதம்
ஜனே தாம்ஸ்தாந் காமாந் விததத் அபி சாயுஜ்ய ஹ்ருதயம்
அசந்தேஹ அத்யாஸம் பகவத் உப லம்ப ஸ்த்தலம் அமீ
ப்ரதீம ஸ்ரீ ரெங்கம் சுருதிசத சமாநருத்தி சரணம் –44-

அநாதி ஆம்நாதத்வாத் புருஷ ரஸநா தோஷ ரஹிதம்-ஸ்வயம் வ்யக்தமாய் ஓதப்பட்டு இருப்பதால்
மனிதர்களால் நிர்மாணம் செய்தால் வரக்கூடிய தோஷம் ஒன்றும் இல்லாததாய்
ஜனே தாம்ஸ்தாந் காமாந் விததத் அபி–ஜனங்கள் இடத்திலே பலவகைப்பட்ட ஆசைகளை உண்டு பண்ணா நின்றாலும்
அல்லது -பிரஜா காம பசு காம அன்ன காம ஸ்வர்க்க காம இத்யாதி -பலவகைப்பட்ட புருஷார்த்தங்களைக் கொடுப்பதாய் இருந்தாலும் –
வத்ஸலையான மாதா பிள்ளை பேகனியாமல் மண் தின்ன விட்டு பிரதி ஒளஷதம் இடுமா போலே
எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் இவனும் ருசிக்கு ஈடாக பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டும் அன்றோ
ஆஸ்திக்ய விவேகம் -அந்ய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்தர்ய -நிவ்ருத்தி பரதந்தர்யங்களை உண்டாக்கின வழி –
சாயுஜ்ய ஹ்ருதயம்–மோக்ஷத்திலே கருத்தை யுடையதும்
அசந்தேஹ அத்யாஸம் பகவத் உப லம்ப ஸ்த்தலம்–சம்சயம் விபர்யயம் அற்றதான-எம்பெருமான் விளங்கும் இடமாய் இருப்பதான
அத்யாசமாவது ஆரோபம் -விபர்யயம் என்று பர்யவசிக்கும்-வேதம் எம்பருமானுக்கு உறைவிடமாக இல்லாது இருந்தால்
அதில் அவன் நாம் இருப்பதாக நான் கிரஹிப்பது அத்யாசமாகும் -அப்படிக்கு இல்லை என்றபடி
அதனாலேயே
ஸ்ரீ ரெங்கம் சுருதி சத சமாநருத்தி –அநேக வேதங்களோடு ஒத்த அதிசயத்தை யுடைய ஸ்ரீ ரெங்க விமானத்தை
அமீ சரணம் ப்ரதீம–இவ்வடியோங்கள் புகலிடமாக விஸ்வசிக்கிறோம்

———————-

ஸ்ரீ ரெங்க விமானம் -ஆதிசேஷன் ஸ்வரூபம் -வெண்ணிறம் -ஆயினும் மரகத அழகிய மணவாளன்
உள்ளே இருப்பதால் கடல் நீர் முழுவதும் பருகிய கறுத்த மேகம் போன்று உள்ளது –
கண்களுக்கு குளிர்ந்து மயிர்க்கூச்சல் எடுக்க வைக்கும்-

அபி பணிபதி பாவாத் சுப்ரம் அந்த சயாளோ மரகத ஸூ குமாரை ரங்க பர்த்து மயூகை
சகல ஜலதி பாநஸ்யாம ஜீமுத ஜைத்ரம் புளக யதி விமானம் பாவநம் லோசநே ந–45-

அபி பணிபதி பாவாத் சுப்ரம் அந்த சயாளோ -ரங்க பர்த்து–இந்த விமானத்தின் ஸ்வரூபம்
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்று அனைத்து கைங்கர்யங்களையும் செய்து கொண்டு இருக்கும்
திரு அநந்த ஆழ்வானாகவே இருக்கையினாலே –
வெண்ணிறமாய் இருந்தாலும் தன்னுள்ளே சயனித்து இரா நின்ற அழகிய மணவாளனுடைய
மரகத ஸூ குமாரை மயூகை–மரகத மணியின் ஒளி போன்று அழகிய காந்திகளாலே
சகல ஜலதி பாநஸ்யாம ஜீமுத ஜைத்ரம்–கடல் நீர் முழுவதையும் குடித்து அதனால் கறுத்து இரா நின்ற மேகத்தை வென்று
வீறு பெற்று இரா நின்ற
புளக யதி விமானம் பாவநம் லோசநே ந–பரம பவித்ரமான ஸ்ரீ ரெங்க திவ்ய விமானமாவது நம்முடைய கண்களை
மயிர்க்கூச்சு எறியப் பண்ணுகின்றது
கீழே ஸ்ரீ ரெங்க விமான உபாய பாவ அனுபவம் -இதில் அதன் போக்யதா அதிசய அனுபவம்
ஆஸ்ரிதற்கு இஷ்ட பிரதமாயும் செவிப்பவருக்கு அதிசயத்தை விளைவிப்பதாயும் இருக்கிறது என்றதாயிற்று –

————————

மேட்டு அழகிய சிங்கர் -அனுபவம் இதிலும் அடுத்தும் –

வ்யாபி ரூபம் அபி கோஷ்பத யித்வா பக்த வத்ஸல தயா உஜ்ஜீத வேலம்
தத் த்விஷந்த ரூப ந் ரூ கேசரி ரூபம் கோபுர உபரி விஜ்ரும்பிதம் ஈடே –46-

வ்யாபி ரூபம் அபி–மிகப் பெரியதான வடிவையும் -மஹா விஷ்ணும் என்றும் திவிஸ் ப்ருசத் காயம்-என்றும்
சொல்லப்படும் பெரிய திவ்ய ரூபம் அன்றோ –
கோஷ்பத யித்வா–சிறியதாக்கிக் கொண்டு -கோஷ் பதம்–மாட்டின் குளம்பு – போல் ஆக்கி
கோபுர உபரி விஜ்ரும்பிதம்–கோபுரத்தின் மீது விளங்கா நின்றுள்ளதும்
பக்த வத்ஸல தயா உஜ்ஜீத வேலம்-பக்தனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கல் உள்ள வாத்சல்யத்தினால் வரம்பை மீறி
திடீர் என்று விலக்ஷணமான திவ்ய ரூபத்துடன் திரு அவதரித்ததும்
கர்ப்ப வாசம் பண்ணாமல் -எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய பொறுப்பிலனாகி தூண் புடைப்பை –
அங்கு அப்போதே அவன் வீயத் தோன்றிய
தத் -பரம விலக்ஷணமுமான
த்விஷந்த ரூப ந் ரூ கேசரி ரூபம் ஈடே –சத்ருவான ஹிரண்யனை தொலைக்க வல்ல ஸ்ரீ நரசிம்ம
திருக் கோலத்தை ஸ்துதிக்கிறேன்
ஸமஸ்த பதமாக்கி ப்ரஹ்லாதனுக்கு சத்ரு என்றுமாம்

——————————

அஹம் அலம் அவலம்ப சீததாம் இதி அஜஸ்ரம் நிவஸத் உபரிபாகே கோபுரம் ரங்க தாம்ந
க்வசந ந் ரு பரிபாடீ வாசிதம் க்வாபி ஸிம்ஹ க்ரம ஸூரபிதம் ஏகம் ஜ்யோதி அக்ரே ஸகாஸ்தி –47-

அஹம் அலம் அவலம்ப சீததாம் இதி–சம்சாரத்தில் துளங