Archive for the ‘ராமானுஜ நூற்றந்தாதி’ Category

ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி -21-40-பாசுரங்கள்–ஸ்ரீ உ -வே -திரு நகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் இயற்றி அருளிய திவ்ய பிரபந்தம் –

July 29, 2015

விடிந்தது ஞாலம் விளிந்தது வெங்கலி மேவலருட்
படிந்தது பாயிருள் பண்டிதர் ஞானத் துறை படிய
நடந்தது நல்லாறு எதிபதி நாயிறு காய் கதிரே
படர்ந்தது போன்று படிமிசை யாண்டான் பரந்ததுமே –21

பாயிருள்-பரந்த இருள்
நல்லாறு-சத் சம்ப்ரதாயம்
எதிபதி நாயிறு காய் கதிரே -எம்பெருமானார் ஆகிய சூரியனது காய்கின்ற கிரணம்
படர்ந்தது -பரவினது
பரந்ததும் -பிரசித்தி யடைந்ததும் –

———————————————————————————————-

பரந்த நன் ஞான முதலியாண்டான் சிரி பாடியத்தைத்
தருந்தவன் ஏவலின் சிந்தையின் ஆவலின் தானடந்து
திருந்திட மேவலர் ஐந்திடம் நாரணர் சீர் அனைத்தும்
பொருந்திட நாட்டினன் பூங்கழல் போக்கும் பொருந்தவமே–22-

சிரி பாடியத்தைத் தருந்தவன் -ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச் செய்த முனிவராகிய எம்பெருமானார்
ஏவலின் சிந்தையின் -திரு உள்ளம் போலே
மேவலர் -மற்றை மதத்தவர்
ஐந்திடம் -தழைக்காடு, தொண்டனூர் ,கதுகலம் ,விஜயாபுரம் , பேலூர் -என்னும் ஐந்து இடங்களில்
நாரணர் -முறையே -கீர்த்தி நாராயணன் ,ஸ்ரீ மண் நாராயணன் ,வீர நாராயணன் ,விஜய நாராயணன் ,கேசவ நாராயணன் -என்னும் ஐந்து நாராயணர்களை
சீர் அனைத்தும் பொருந்திட நாட்டினன் -சிறப்புக்கள் எல்லாம் நிரந்தரமாய் நடக்கும் படி பிரதிஷ்டை செய்தவர் -வினையால் அணையும் பெயர்
பொருந்தவமே–பொருந்தும் அவன் -எனப் பிரிக்க –

சிரி பாடியத்தைத் தரும் தவன் -ஏதலின் ஆவலின் சிந்தையின் தானடந்து
மேவலர் திருந்திட நாரணர்ஐந்திடம் சீர் அனைத்தும்
பொருந்திட நாட்டினன்
பரந்த நன் ஞான முதலியாண்டான்
பூங்கழல் பொருந்து அவம் போக்கும் -என்க —

எம்பெருமானார் நியமனத்தால் எழுந்து அருளி ஐந்து இடங்களில் அங்கு உள்ளாரைத் திருத்தி
முதலி யாண்டான் பஞ்ச நாராயண பிரதிஷ்டை செய்து அருளினார் -எனபது வரலாறு –

—————————————————————————————————–

அவமே பிறப்பைக் கழிக்கும் அளியத்த மாநிடங்காள்
நவமேய் வியப்புப் பொறி பல கண்டும் நவையில் நைந்தீர்
பவமே கடத்தும் பெருங்கலன் ஆண்டான் பரிந்து அருளின்
திவமே எடுத்துச் செலும் பொறி சீரெதி சேகரனே –23-

நவமேய் வியப்புப் பொறி -புதுமை பொருந்திய வியக்கத் தக்க யந்திரங்கள்
நவையில் நைந்தீர் -குற்றம் மெலிந்தீர்
பவம் -சம்சாரம்
பெருங்கலன் -பெரிய கப்பல்
ஆண்டான் பரிந்து அருளின்
திவம் -பரமபதம்
எடுத்துச் செலும் பொறி -ஆகாய விமானம் –

மாநிடங்காள் கண்டும் நவையின் நைந்தீர் ஆண்டான் பரிந்து அருளின் சீர் எதிசெகரன் பெரும் கலனும் பொறியும் ஆவான் -எனக் கூட்டுக –
பெரும் கலன் என்பதற்கு ஏற்ப -பவம் எனபது சம்சார சமுத்ரம் எனக் கொள்க -இஃது ஏகதேச உருவகம்
கடத்தும் என்றமையின் அநிஷ்ட நிவ்ருத்தியும்
எடுத்துச் செலும் பொறி -என்றமையின் இஷ்ட பிராப்தியும் சொல்லப் பட்டன –
இப்பெரும் கலனும் பொறியும் கொண்டு நவை நீங்குமின் -எனபது குறிப்பு எச்சம் –

——————————————————————————————————

கரம் காலில் சாடிக் கடியவும் ஆண்டான் கருணை நின்பால்
வரும் காறும் வாடிப் பசியினுன் வாசலில் மாழ்கி நிற்கும்
அரும் காதல் நம்பி வழுதி வள நாட்டு அடியரைப் போல்
மருங்கு ஆதரத்தொடு அழைத்து நாயேற்கும் வழங்கு அருளே –24–

கரம் காலில் சாடிக் கடியவும் -கையினாலும் காலினாலும் கோபிக்கவும்
வரும் காறும் -வருகிற வரையிலும்
வாடிப் பசியினுன் வாசலில் -பசியின் வாடி உன் வாசலில் -என மாற்றுக
மாழ்கி நிற்கும் -வருந்தி இருக்கும்
அரும் காதல் -பக்தி யுடன்
நம்பி வழுதி வள நாட்டு அடியரைப் போல் -நம்பி திரு வழுதி வளநாடு தாசர்
மருங்கு -பக்கத்தில்
வழங்கு -கொடுக்க -வேண்டற்பொருள் வியங்கோள்

நம்பி திரு வழுதி வளநாடு தாசரை முதலி யாண்டான் கோபித்துக் கையாலும் காலாலும் துகைத்து இழுத்தவாறே
அவர் திண்ணையில் பட்டினியாய் ஒரு நாள் முற்றும் வேறே எங்கும் போகாதே கிடந்தார் –
ஆண்டான் மறு நாள் பட்டினியாய் வாசலில் கிடப்பதை அறிந்து அழைத்து -நீ போகாதே கிடந்தது -என் என்று கேட்ப
அதற்கு அவர் ஒரு நாள் பிடி சோறு இட்டவன் எல்லாப் படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறதில்லை நாய்
-நான் எங்கே போவது -என்றார் எனபது ஐதிஹ்யம் –

———————————————————————————————-

அருளாரும் ஆசான் அளித்திடும் ஆணைக்கு அநு குணமாத்
தெருளாரும் சீடன் செயலின் தருமக் கிழத்தி நேர்வான்
உருவாவன் உள்ளமது எண்ணிய வண்ணம் ஒழுகுதலால்
அரு அறமாம் நினைப்பாய் என ஆண்டான் அருளினனே –25-

அருளாரும் ஆசான் அளித்திடும் ஆணைக்கு -அருள் நிறைந்த ஆசாரியன் உத்தரவுக்கு
அநு குணமாத்-தக்கவாறு
தெருளாரும் சீடன் செயலின் தருமக் கிழத்தி நேர்வான் -தெளிவு நிறைந்த சீடன் தருமா பத்தினிக்கு சமமாவான்
உருவாவன் -சரீரமாவான் –
உள்ளமது எண்ணிய வண்ணம் ஒழுகுதலால் அரு அறமாம் -நினைத்த படி -நினைவு ரூபமாய் இருந்து உருவற்ற ஸூஷ்ம தர்மமும் ஆவான்
நினைப்பாய் என ஆண்டான் அருளினனே -இப்படி அருளிச் செய்தார் –

சீடன் ஆசான் அளித்திடும் ஆணைக்கு அநு குணமாகச் செயலின் தருமக் கிழத்தி நேர்வான்
சீடன் ஆசான் உள்ளமது எண்ணிய வண்ணம் ஒழுகுதலால் உரு ஆவான் –
சீடன் நினைப்பாய் அரு அறம் ஆம் என ஆண்டான் அருளினான் –

——————————————————————————————-

அருளி ராமானுசன் ஆசான் அடியார் இளம் பெருமாள்
மருளி ராமானசன் ஆண்டான் மருவு நன் கூற மன்னன்
மருவி ராமானுசன் கைச் சுகம் கண்டவன் மைந்தன் இங்கே
ஒருவிரா மாண்பில் நஞ்சீயரும் வாய் மொழி ஒதினரே –26-

ஆண்டான் -கருணை நிறைந்த எம்பெருமானார் உமக்கு ஆசார்யர்
இளைய பெருமாள் என்பவர் உம்முடைய சீடர்
மதி மயங்காத மனம் படைத்த கூரத் தாழ்வான் பழகும் நண்பர்
எம்பெருமானார் தம் கையில் வைத்துக் கொண்டாடின படியால் அவர் கைச் சுகம் கண்டவன் மைந்தன் –
நீங்காத மதிப்புடைய நஞ்சீயரும் இங்கே திருவாய்மொழி ஓதினர் –
அடியார் -சீடர்
மருள் இரா -மயக்கம் இல்லாத
மா நசன் -மனம் உடையவன்
மருவு நன் -பழகுபவன்
மருவு -பொருந்துகிற
ஒருவு இரா -நீங்குதல் இல்லாத -ஒருவு -தொழில் பெயர் -இரா ஈறு கெட்ட எதிர்மறைப் பெயர் எச்சம்

முதலியாண்டான் திருக் குமாரர் கந்தாடை யாண்டான் -அவரைக் குழந்தைப் பருவத்தில் எம்பெருமானார்
கட்டில் அடங்காத பிரேமத்துடன் கையிலே எடுத்துக் கொண்டாடி அருளினார் எனபது வரலாறு –
நஞ்சீயர் திருவாய் மொழி யோதியது ஆண்டான் இடம் எனபது ஐதிஹ்யம் -கந்தாடை யாண்டான் இடம் என அரும் பதங்கள் கூறுகின்றன –

—————————————————————————————–

ஒதினார்க்கு ஆண்டான் ஒருமுறை யுன்பால் உணர்கிலராய்
ஓதினர் மீளவும் மந்திரம் எம்பார் உனை யடைந்தே
ஏதம் என்பாலது நீ பொறுக்கு என்ன இருவரும் கை
ஈதலின் ஏறல் எளிது எனல் ஆர்க்கும் எளிதலதே –27-

ஒரு முறை உன்பால் ஒதினருக்கு -என இயையும்
ஆர்க்கும் -சிறப்பு உம்மை
எளிது அலது -சுலபம் ஆனதன்று
முன்னரே ஆண்டான் இடம் மந்திர உபதேசம் பெற்று இருந்த ஒருவர்க்கு அதனை அறியாது மீண்டும் மந்திர உபதேசம் செய்து விட்டார் எம்பார் –
பின்னர் விஷயம் அறிந்து ஆண்டான் இடம் எழுந்து அருளி அடியேனது குற்றத்தை மன்னித்து அருளால் வேண்டும் என வேண்டினார்
அதற்கு ஆண்டான் -கிணற்றில் விழுந்த ஒருவனை இருவர் கை கொடுத்து எடுத்தால் ஏறுமவனுக்கும் எடுப்பவருக்கும் சுலபமாய் இருக்குமே
நீர் மந்திர உபதேசம் செய்ததில் என்ன தவறு இருக்கிறது -என்று அமைதியாகப் பதில் அளித்தார் எனபது ஐதிஹ்யம் –

————————————————————————————————————-

அலர் நங்கை தங்கும் அரங்கனைப் பல்லிளித்து அண்டி நின்று
பலனங்கை யாண்டான் படைத்தது என் கூரப் பதியொடு எனும்
வலனங்கை முத்தண்டு ஒளிர் வடிவேயுள் வடுக நம்பி
கலன் எங்கன் ஆண்டான் கழித்தன கொண்டு களித்தனனே –28-

அலர் நங்கை தங்கும் அரங்கனைப் பல்லிளித்து அண்டி நின்று பலனங்கை யாண்டான் படைத்தது என் கூரப் பதியொடு –
ஆண்டான் கூரப் பதியொடு -திருமகள் தங்கு அரங்கனை அண்டி நின்று-பல்லிளித்து அம் கை பலன் படைத்தது என் -என இயையும்
எனும் -என்று கூறும் -இதனை வடுக நம்பியோடு சேர்க்க –
வலனங்கை -வலத்திருக்கை –
முத்தண்டு ஒளிர் வடிவேயுள் வடுக நம்பி -த்ரி தண்டம் பிரகாசிக்கிற எம்பெருமானார் திவ்ய மங்கள விக்ராஹத்தையே நினைக்கின்ற வடுக நம்பி -வினைத் தொகை –
கலன்-பாண்டங்கள் –
எங்கன் ஆண்டான் கழித்தன -முதலி யாண்டான் உபயோகித்து விடப்பட்டன -பலவின் பால் பெயர் –
எனும் வடுக நம்பி ஆண்டான் கழித்தன கலன் எங்கன் கொண்டு களித்தனன் என்று கூட்டி முடிப்பது கொண்டு களித்தனனே –

மோஷத்திற்கு உட்பட எம்பெருமானாரே உடையவர் ஆதலின் அவர் தாராதது இல்லை –
ஆழ்வானும் ஆண்டானும் அரங்கனை யண்டிப் பல்லிளித்துப் கெஞ்சிப் பெற்ற பயன் யாது –என்று வடுக நம்பி பரிஹசித்தாராம்
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்தியும்
அதன் வியாக்யானமும் இங்கு அனுசந்திக்கத் தக்கன –
வடிவே -ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது -முக்கோல் ஏந்திய உடையவர் வடிவை யன்றிச் செங்கோல்
உடைய வடிவை -திருவரங்கச் செல்வனை -மனத்தில் கொள்ளார் -என்றபடி
தேக பந்துக்கள் சிலர் சின்னாள் தம் திரு மாளிகையில் இருந்து பின்னர் ஊர் சென்றனராக வடுக நம்பி தம் திரு மாளிகையைத்
தூய்மைப் படுத்தி ஆண்டான் ஆண்டு களித்த பழைய பாண்டங்களைக் கொணர்ந்து உபயோகித்துக் குறை தீர்ந்து மகிழ்ந்தார் -என்ப
-விலஷணமான ஆசார்ய சம்பந்தம் வாய்ந்தவர் ஆண்டு கழித்தன பழையன வேனும் தூயனவே எனபது வடுக நம்பி திரு உள்ளம் –
ஏதோ ஒருகால் அரங்கன் முன் பல்லிளித்தாலும் எம்பெருமானார் உறவே ஆண்டான் இடம் உறைந்து உள்ளது என்பதை உணர்க —

——————————————————————————————-

களி வண்டு அறைகின்ற தண் துழாய்க் கண்ணி யரங்கன் என்னும்
தெளி தண்டுறை நின்று தீர்த்தமது ஆடத் துயம் எனும் பேர்
ஒளி கொண்டுரை நின்ற மந்திரமுட் செல்படி எனத் தண்
ணளி மண்டுறைகின்ற ஆண்டான் அகமதில் கொண்டனனே –29-

அறைகின்ற -சப்திக்கின்ற
ஒளி -ஞானம் –
உரைநின்ற -கீர்த்தி நிலை பெற்ற
தண்ணளி -கிருபை
மண்டுறைகின்ற -மண்டு உறைகின்ற -என்க-மண்டு -மண்டுதளாக -நிறைந்து -என்றபடி –
அகமதில் -திரு உள்ளத்தில்

களிக்கும் வண்டுகள் முரலும் திருத் துழாய் மாலையை யணிந்த
திருவரங்கம் எனப்படும் தெளிந்த குளிர்ந்த துறையில் இருந்து நீராடுவதற்கு
த்வயம் என்னும் பெரிய ஞானப் பிரகாசத்துடன் கீர்த்தி பெற்ற மந்த்ரத்தை அத்துறையுள் இறங்குவதற்கு உரிய படி என்று
தண்ணளி நிறைந்து உறைகின்ற முதலியாண்டான் திரு உள்ளத்தில் கொண்டார் என்றவாறு –
மந்திர ரத்னம் எனப்படும் த்வயத்தைக் கொண்டு திரு வரங்க நாதரை அனுபவிப்பார் -என்றபடி –
பிரமாணத்தில் சிறந்தது த்வயம் –ப்ரமேயத்தில் சிறந்தது அர்ச்சை எனபது கருத்து –

———————————————————————————————————–

கொண்டலை யாண்ட விராமானுசன் அருள் கூர்ந்து ஒகுகால்
பண்டலை யாண்ட பழ மறையாம் எழுத்தின் பொருளை –
மண்டலை யான்டாற்க்கு அருளிட மைந்தன் மருவியதை –
மண்டலை யாண்டு அறிந்து அன்னது -வாங்கினர் பட்டருமே -30-

கொண்டலை யாண்ட -மேகத்தை ஒத்த -விராமானுசன் அருள் கூர்ந்து ஒகுகால்
பண்டலை யாண்ட பழ மறையாம் -பண்ணைத் தன்னிடம் உபயோகிக்கும் பழைய வேதம்
பழ மறையாம் எழுத்தின் பொருளை -பண்டைய வேதமாக விரியும் எழுத்து -பிரணவம் -ஓங்கார பிரபவா வேதா -என்றது காண்க –
மண்டலை யான்டாற்க்கு -பூமியில் தலைவரான முதலி யான்டானுக்கு
அருளிட மைந்தன் மருவியதை -கந்தாடை யாண்டான் -அதை மருவி
மண்டலை -நன்றாய் அனுபவித்தலை -தொழில் பெயர் –
யாண்டு -அங்கு
அறிந்து அன்னது -அப்படிப்பட்ட எழுத்தின் பொருளை –
வாங்கினர் பட்டருமே –

இராமானுசன் அருள் கூர்ந்து எழுத்தின் பொருளை ஆண்டாற்கு அளிப்ப –
மைந்தன் அதை மருவி மண்டலை அறிந்து பட்டரும் ஆண்டு அன்னது வாங்கினர் -எனபது –
எம்பெருமானார் ஒருகால் உகந்து அருள் கூர்ந்து பிரணவ அர்த்தத்தை ஆண்டானுக்கு அளிக்க
அதனை அவர் மைந்தன் பெற்று அனுபவிப்பதை அறிந்து
அவ்வரும் பொருளை அவர் இடம் இருந்து பட்டர் பெற்றார் எனபது ஐதிஹ்யம் –

—————————————————————————————————–

பட்டரைப் பூத்திடும் நம் பெருமாளின் பதமலரே
மட்டறு மா மகிழ் வேய்ந்திட வாய்ந்த வழி வடிவம்
நெட்டுறு நற்பேறு உடையவர் நீங்கின் உசாத் துணையாம்
விட்டில ஐம்படை என்று எமதாண்டான் விளம்பினனே –31-

பட்டரைப் பூத்திடும் -அரை பட்டு பூத்திடும் -என மாற்றுக -திருவரையிலே புஷ்பித்தது போலே பட்டு நம்பெருமாளுக்குப் பொருந்தி அழகு தருதல் காண்க
மட்டறு -அளவு இல்லாத
-ஏய்ந்திட -பொருந்த
வழி -உபாயம்
நெட்டுறு நற்பேறு -நீண்ட பெரிய நல்ல பலன் –
நீங்கின் உசாத் துணையாம் -பிரிந்து இருந்தால் பேசிப் பழகும் துணையாம்
விட்டில ஐம்படை -நீங்காதனவாகிய ஐம்படை -ஐம்படை உசாத் துணையாம் -என இயைக்க –

ஒரு கால் நம்பெருமாள் ஆயிரக்கால் மண்டபத்தில் கோடை கொண்டாடி உலாவி அருளும் போது வினவிய ஆழ்வானை நோக்கி
அனுபவ ஆனந்தத்தின் பெருக்காய் அமைந்த உபாயமாக நம் பெருமாள் திருவடி மலர்களையும் –
உபேயமாகத் திரு மேனியையும்
எம்பெருமானார் இல்லாத காலத்து உசாத் துணையாக நம்பெருமாள் ஏந்திய ஐம்படை களையும் கொண்டு இருப்பேன் –
என்று முதலியாண்டான் அருளிச் செய்ததாகக் கூறப்படுகிறது –

—————————————————————————————————————–

விளம்பிடும் ஐந்து நிலையினும் பண்பின் மிகுதியினால்
உளம்படு மன்பர்கள் உன்னும் வண்ணம் உருக் கொளலால்
வளம்படு வானம் வருதிரை வாரிதி மன்னு நிலை
இளம்படி யர்ச்சைக்கு அமிசம் என்று ஆண்டான் இயம்பினனே –32-

விளம்பிடும் ஐந்து நிலையினும் பண்பின் மிகுதியினால் -சாஸ்த்ரங்களில் சொல்லப்படும் பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம்
என்று ஐந்து நிலைகளிலும் -குண உத்கர்ஷம் -இருட்டறையிலே விளக்குப் போலே வாத்சல்யாதி குணங்கள் அர்ச்சையிலேயே மிக்கு விளங்குகின்றன –
உளம்படு மன்பர்கள் -மனத்தில் உண்டான பக்தியை உடையவர்கள்
உன்னும் அவ வண்ணம் -நினைத்த படியே
உருக் கொளலால் -வடிவம் எடுத்துக் கொள்ளுதலால்
வளம்படு வானம் -செழிப்பு உடைய பரம பதம்
வருதிரை வாரிதி -அலை வீசும் ஷீராப்தி
மன்னு நிலை
இளம்படி யர்ச்சைக்கு -இன்று எழுந்து அருளப் பணிய இளைய -புதிய -திவ்ய மங்கள விக்ரஹத்தை உடைய அர்ச்சை நிலை க்கு –அமிசம் என்று ஆண்டான் இயம்பினனே –

எம்பெருமான் பக்தர்களுக்காக ஐந்து நிலைகள் கொள்கிறான் -அவற்றுள் எல்லாக் குணங்களும் புஷ்கலங்களாய் இருப்பதாலும்
பக்தர்கள் விரும்பிய படி எல்லாம் வடிவும் எடுப்பதாலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று அல்லாமல் எல்லாரும் கண்டு களிக்கும் அர்ச்சையே முக்கியமானது –
பரதவ வ்யூஹாதிகளை இன்று எழுந்து அருளப் பண்ணிய அர்ச்சையின் ஒரு பகுதியாகவே கொள்ளல் வேண்டும் -என்றபடி –
இங்கு -அங்குத்தைக்கு -பரமபத நாதனுக்கு உகந்து அருளின இடத்தை -அர்ச்சாவதாரத்தை -விபூதியாக சேஷமாக நினையாதே
இங்குத்தைக்கு -அர்ச்சாவதாரத்துக்கு அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்-என்று பணிக்கும் ஆண்டான் -ஈட்டு ஸ்ரீ ஸூ கதிகள் காணத் தக்கது –

———————————————————————————————–

இயம்பரும் அன்பினர் ஆண்டான் எதிரும எம்பார் இவர்கள்
பயம் பெறப் பல்கும் திரு நாட குழுவினுள் பட்டு நின்று இந்
நயம் பெரு நாளுள் புகுதலில் தப்பினர் நம்பெருமாள்
சயம் பெறுக என்று வழுத்தித் தழுவினர் தண்டன் இட்டே –33-

இயம்பரும் அன்பினர் –இயம்பரும் -சொல்ல முடியாத -இயம்ப அரும் அன்பராகிய
ஆண்டான் எதிரும எம்பார் இவர்கள் -எதிரும் -சந்திக்கும்
பயம் பெறப் பல்கும் -அச்சம் அடையும்படி பெருகும்

ஆண்டானும் எம்பாரும் ஆகிய இவர்கள் –
பயம் பெறப் பல்கும் திரு நாட குழுவினுள் பட்டு நின்று இந்
நயம் பெரு நாளுள் புகுதலில் -நாளில் உள்புகுதலின் -தப்பினர் நம்பெருமாள்
சயம் பெறுக என்று வழுத்தித் தழுவினர் தண்டன் இட்டே –என்று கூட்டி முடிக்க –

நம்பெருமாள் உத்சவம் கொண்டாடி அருளி தீர்த்தவாரியாகி உள்ளே எழுந்து அருளின வன்று மாலை ஆண்டானும் எம்பாரும் சந்தித்து
அஹங்கார மமகார தூஷிதராய் இருப்பார் பத்துக் கோடிப் பேர் நடுவே அதி ஸூ குமாரமான திரு மேனியைக் கொண்டு பத்து நாள்
எழுந்து அருளி நம் பெருமான் -அபாயம் இன்றி ஆஸ்தானத்துக்கு எழுந்து அருளித் தப்பின படி கண்டீரே -என்று
ஒருவரை ஒருவர் தண்டன் இட்டு தழுவிக் கொண்டதாக ஐதிஹ்யம் –

—————————————————————————————

தண் திருக்கில் மனத்து ஆச்சானோடு மன்னி தண் திருப்பேர்
வண்டு இருக்கும் திருக் கோயிலில் மண்டலின் கண் துயிலைக்
கொண்டு இருக்கும் குணக் கொண்டலை யண்டி நீ கண்டிலை கைக்
கொண்டிருக்கும் அந் நடை கொண்டிலை யாண்டான் குண திசைக்கே –34-

தண் திருக்கில் மனத்து -குளிர்ந்த குற்றம் அற்ற மனமுடைய -தண் மனம் -திருக்கு இல் மனம் -என்று இயையும்
ஆச்சானோடு மன்னி தண் திருப்பேர் -ஆச்சானுடன் பொருந்தி குளிர்ந்த திருப்பேர் என்னும் திருப்பதியின் கண் உள்ள
வண்டு இருக்கும் திருக் கோயிலில் -பூக்கள் மாறாது இருத்தலின் என்றும் வண்டுகள் வாஸம் செய்யும் சந்நிதி அழகிலேயே
மண்டலின் -நன்கு அனுபவிப்பதனால்
கண் துயிலைக் கொண்டு இருக்கும் குணக் கொண்டலை -கண் துயிலைக் கொண்டு இருக்கும் நற்குணம் வாய்ந்த மேகம் போன்ற
எம்பெருமானை -வண்டு இருக்கும் திருக் கோயில் ஆதலின் அப் பூம் சோலையில் கொண்டல் வந்து படிந்தது -என்க
யண்டி -நெருங்கி
நீ கண்டிலை -உல் புகுந்து சேவித்திலை-
கைக் கொண்டிருக்கும் -ஏற்றுக் கொண்டு இருக்கும் -கை -தமிழ் உபசர்க்கம் –
அந் நடை கொண்டிலை யாண்டான் குண திசைக்கே –நடை -யாத்ரை -குண திசை -கீழ் திசை –
குண திசைக்குக் கைக் கொண்டு இருக்கும் நடை கொண்டிலை -என இயையும் –

ஆச்சானும் ஆண்டானும் ஸ்ரீ ரங்கத்தில் இருந்து கீழ் திசை நோக்கி எழுந்து அருளும் போது திருப் பேரைக் கண்டு உட்புக்குத் திருவடி
தொழவும் மாட்டாதே -அதனை விட்டு மேலும் கிழக்கே போகவும் மாட்டாதே திகைத்து நின்றனர் -என்பது ஐதிஹ்யம் –
பூவியல் பொழிலும் கோயிலும் கண்டு ஆவி உள்குளிர அப்படியே எதுவும் செய்ய மாட்டாது நின்றனர் -எனபது கருத்து –

—————————————————————————————–

மற்றது என் பேச மதிக்கும் தவமுனி மன்னிரவில்
உற்றதும் பள்ளி யொருமுறை ஒண் தமிழ்ப் பாவுரைப்ப
நற்றவன் ஆண்டான் உருகினன் நைதலின் நான் மறையே
சொற்ற விப்பா வெனத் தோன்றிடும் என்றவன் சொல்லிடினே –36-

தவமுனி மன்னிரவில் உற்றதும் பள்ளி -எம்பெருமானார் பள்ளி உற்றதும் -படுக்கை அடைந்ததும் –
நற்றவன் ஆண்டான் -நல்ல பாக்யசாலி
உருகினன் -முற்று எச்சம் –
சொற்ற -சொன்ன
அவன் -அந்த எம்பெருமானார் –
மதிக்கும் தவ முனிவன் இரவில் பள்ளி உற்றதும் ஒண் தமிழ்ப் பா உரைப்ப –
அதனைக் கேட்டு -நல் தவன் ஆண்டான் உருகினன் நைதலின்
சொற்ற இப்பா நான் மறையே வெனத் தோன்றிடும் என்றவன் சொல்லிடின் மற்றது என் பேச -எனக் கூட்டுவது

எம்பெருமானார் இரவில் திவ்ய ப்ரபந்தம் அனுசந்திப்பது வழக்கம் -ஒரு நாள் பள்ளிக் கட்டிலில் ஒரு பாட்டை அனுசந்திப்பதைக் கேட்டு
முதலியாண்டான் பரவசராய் ஈடுபட்டு உருகினார் -அதனைக் கண்ட எம்பெருமானார் -வேதம் வால்மிகி வாயிலாக ஸ்ரீ ராமாயனமாய் வந்தது போலே
ஆழ்வார் வாயிலாகத் திருவாய் மொழியாய் அது வந்து திருவவதரித்தது -அதனால் அன்றோ இவர் பரவசரானார் -என்று அருளிச் செய்தார் எனபது வரலாறு –
திருவாய் மொழியை வேதம் எனத் தீர்மானிப்பதற்கு எம்பெருமானாரே இவர் பரவசமானதைக் காரணமாகக் காட்டுவாராயின்
நம் போன்றவர் இவர் பெருமை பற்றிப் பேச என்ன இருக்கிறது என்க –

——————————————————————————–

சொல்லரும் பாவலர் நங்கை துணைவன் துணை யடிமேல்
பல்லரும் பாவலர் நா வீறுடைய பராங்குசன் தன்
நல்லரும் பாவலரும் கொள் கருத்தை நனியினிப்பச்
சொல்லரும் பாவலன் தொல் புகழ் ஆண்டான் துணை நமக்கே –37-

சொல்லரும் பாவலர் நங்கை துணைவன் வருணிக்க முடியாத -பாவு அலர் நங்கை -பரந்த மலரிலே வசிக்கும் திருமகள் –
துணை யடிமேல் –கேள்வனுடைய இரண்டு திருவடிகள் விஷயமாக
பல்லரும் -பல் அரும் பா -பழ அருமையான பாடல்கள்
பாவலர் நா வீறுடைய பராங்குசன் தன்-அலர் -விரியும் -நா வீறு -வாக்கு வன்மை
நல்லரும் பாவலரும் -நல்ல அருமையான பாக்களில் வல்ல புலவர்களும் -இனி -நல்லவர்களும் என்னவுமாம் –
கொள்-ஏற்கும் –
சொல்லரும் பாவலன் -சொல் அரும்பு ஆவலன் -சொல்லுவதில் அரும்புகின்ற ஆவலை உடையவன் -சொல்லுகிற அரிய பாவலன் -என்னவுமாம்

சொல்லரும் -என்று வருணிக்க இயலாமையை அலர் நங்கை துனைவனுக்குச் சேர்க்க –
திருமாலவன் கவி -யாதலின் -நங்கை துணைவன் -எனப்பட்டது –
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன ஆயிரம் -ஆதலின் -அடிமேல் –பா -எனப் பட்டது
பராங்குசன் தன் கருத்தை என இயையும் -அக்கருத்து நல்லரும் பாவலரும் கொள்வது -என்க

பராங்குசன் கருத்தைச் சொல்வதில் ஆவல் பூண்டு பேர் படைத்த முதலி யாண்டானே திரு வாய் மொழியின்
கருத்தை அரிய நமக்குத் துணையாவார் எனபது கருத்து –
ஆண்டான் இனிப்பச் சொல்லும் கருத்துக்களை அடுத்த இரண்டு பாடல்களில் காண்க –

————————————————————————————————–

நமக்கருள் கூர் குருகூர்ச் சடகோபர் நமன் தமரால்
தமக்கலைப் பூணுணும் அவ்வல்லல் கண்ணன் தவிர்த்தனனா
அமைக்கும் அவ்வல்லல் அவன் கரம் விட்டதாகக் கொண்டடியார்
தமக்கும் தகும் என ஆண்டான் அமைவுரை சாற்றினனே –38-

நமன் தமரால் -யம தூதரால்
அலைப் பூணுணும் அவ்வல்லல் -அலைப் பூண் உணும் அவ்வல்லல் -அலைப்புண்டுபடும் அந்தத் துன்பம்
தவிர்த்தனனா -போக்கினனாக
அமைக்கும் அவ்வல்லல் -அருளிச் செய்து வைத்த அந்தத் துன்பம்
அவன் -அந்தக் கண்ணன்
கரம் விட்டதாகக் கொண்டடியார் தமக்கும் -கை விட்டதாகக் கொண்டு பாவித்து பாகவதர்களுக்கும் பொருந்தும் –

நமன் தமரால் நேரும் அல்லல் பாகவதர்களுக்கு இல்லை என நூல்கள் சொல்லும் -அங்கன் இருக்க -நம்மாழ்வார் அவ்வல்லலைத் தமக்குக் கண்ணன்
தவிர்த்ததாகக் கூறுவது எங்கனம் பொருந்தும் -என்ற கேள்விக்கு ஆண்டான் இருத்த விடை இப்பாடளில்கூரப் படுகின்றது

பகவத் சம்பந்தம் உடையாருக்கு அவ்வல்லல் இல்லை எனபது உண்மையே -ஆனால் கண்ணனைப் பிரிந்து வருந்தும் நம்மாழ்வார் ஆற்றாமை
மீதூர்ந்து ஸ்வ தந்த்ரனான சர்வேஸ்வரன் தம்மைக் கை விட்டதாகவே நினைத்து விட்டார் –
விடவே பகவத் சம்பந்தம் நீன்கினமையினால் நமன் தமரால் நேரும் அல்லலும் வந்தது தான் என்று அவர் பாவித்தார் –
கண்ணன் வந்து கலக்கவே -வந்ததாகப் பாவித்த அவ்வல்லலைக் கண்ணன் அகற்றி விட்டதாகக் கூறுவது பொருந்தும் எனபது ஆண்டான் அருளிய விடை –
இங்கு -தலைப் பெய்காலம் -என்ற திருவாய் மொழிப் பாசுரமும் -பகவத் அலாபமேயான பின்பு யம வச்யதையும் வந்ததே யன்றோ -என்று
அந்த யம வச்யதை போம்படியாக -என்று ஆண்டான் நிர்வஹிக்கும் படி -என்ற ஈடு வியாக்யானமும் அறிதற்கு உரியன –

————————————————————————————————————————

சாற்றிடும் ஒத்தல் எம் பெம்மான் தனக்குளம் ஒத்திருத்தல்
மாற்றொரு பற்றறும் தன்மை கண் வானத்து வைத்தல் அன்பர்
ஆற்றலை மாற்றல் அழகினில் உற்றார் அழிப்பெனவும்
மாற்றுரை யாண்டான் மகிழ வழங்கி யருளினனே –39-

சாற்றிடும் -சொல்லப்படும் -எம் பெம்மான் தனக்கு -எனபது முன்னும் பின்னும் கூட்டக் கடவது –
எம் பெம்மான் தனக்கு ஒத்தல் -எம் பெம்மான் தனக்கு உளம் ஒத்திருத்தல் -என்றதாயிற்று
எம் பெம்மானோடு ஒத்தே -திருவாய் மொழி -8-8-6-என்னும் இடத்து ஒத்தலாவது உளம் ஒத்து இருத்தல் எனவும்
கண் வானத்து வைத்தல் -மற்று ஒரு பற்று அறும் தன்மை -அதாவது ஆகாசத்தை நோக்கி அழுவன் -திருவாய் மொழி -5-8-4- என்னும் இடத்து –
ஆகாசத்தை நோக்குதலாவது -வேறு பற்று அற்ற தன்மையை நினைத்தால் -நிராலம்ப நதையைப் பார்த்தல் -எனவும்
உற்றார் அழிப்பு -அழகினில் அன்பர் ஆற்றலை மாற்றல் -அதாவது -உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் -திருவாய் மொழி -5-6-7-என்னும்
இடத்து உற்றார்களை சௌந்தர்யாதிகளால் அழித்தல்-வழி இழந்து ஈடு படச் செய்தல் -எனவும்
மாற்றுரை ஆண்டான் மகிழுமாறு அருளினார் -எனபது –
ஆண்டான் அருளும் மாற்றுரையின் விளக்கத்தை வல்லார் வாய்க் கேட்டு மன மகிழ்க -இங்கு விரிப்பில் பெருகும் –

———————————————————————————————–

அருந்தவன் ஆண்டான் புதுவை மன் சொல்லை அறைந்து குரு
தரும் தவறில் நலத்தார்க்கு விண் என்னலும் தானியல்பாய்
வரும் தவலில் லருள் வாயும் குருவே மதுர கவி
இருந்த வழி என ஆழ்வான் இயம்பி அருளினனே –40-

புதுவை மன் சொல்லை அறைந்து குரு-பெரியாழ்வார் -குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கு அநு கூலராய் -என்னும் திரு வாக்கை -பிரமாணமாகச் சொல்லி
தரும் தவறில் நலத்தார்க்கு -குற்றம் இல்லாத நன்மையாளரான சிஷ்யர்களுக்கு
குரு தவறு இல் நலத்தார்க்கு விண் தரும் -என இயைக்க –
தரும் -செய்யும் என் வினை முற்று -விண் -மோஷம் -என்னலும் -என்று சொன்ன அளவிலே
தானியல்பாய் வரும் -தானே இயற்கையாக உண்டான -நிர்ஹேதுகமான -என்றபடி –
தவலில் -தவழ இல் -கேடு இல்லாத எஞ்ஞான்றும் உள்ள
அருள் வாயும் குருவே -க்ருபா மாத்திர பிரசன்னா ஆசார்யனே
மதுர கவி
இருந்த -முடிவு கட்டிக் கைக் கொண்டு இருந்த
வழி -முக்தி சாதனம் –
என ஆழ்வான் இயம்பி அருளினனே —

புதுவை மன் சொல்லை அறைந்து குரு தவறு இல் நலத்தார்க்கு விண் தரும் என்னலும் ஆழ்வான் தான்
இயல்பாய் வரும் தவல் இல் அருள் வாயும் இல் நலத்தார்க்கு விண் தரும் என்னலும்
ஆழ்வான் தான் இயல்பாய் வரும் தவல் இல் அருள் வாயும் குருவே மதுரகவி இருந்த வழி என இயம்பி யருளினன் -என்று கூட்டி முடிக்க –

பெரியாழ்வார் ஸ்ரீ ஸூ க்திப்படி குருக்கள் அநு கூலராய் நடப்பவர்க்கே முக்தி அருளுவர் என்ற ஆண்டானைப் பார்த்து
மதுரகவி காட்டும் தொல் வழியில் செல்லும் நமக்கு நிர்ஹேதுக கிருபை உடைய ஆசார்யனே முக்தி சாதனம் என்று ஆழ்வான் அருளிச் செய்தார் என்ப –

அனுவர்த்தன பிரசன்ன ஆசார்யனாலே மோஷம் எனபது ஆண்டான் திரு உள்ளம் –
க்ருபா மாத்திர பிரசன்ன ஆசார்யனாலே மோஷம் எனபது ஆழ்வான் திரு உள்ளம் –
அதனை ஏற்று அருளினார் ஆண்டான் -அதுவே அடுத்த பாசுரத்தில் பேசப் படுகிறது –

————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதலியாண்டான் அந்தாதி -1-20-பாசுரங்கள்–ஸ்ரீ உ -வே -திரு நகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் இயற்றி அருளிய திவ்ய பிரபந்தம் –

July 29, 2015

பூவில் தொடக்கி -மங்களம் என்பதால் -காப்பு செய்யுள் –
வண்டு -ஷட்பத நிஷ்டர்கள் -ஆச்சார்யர்கள் -தேக குணங்களும் ஆதரிக்கத் தக்கன ஆதலால் -ரமிய பொறி வண்டு -என்கிறார்

பூதூர முந்துறப் போந்திழி யாண்டான் புகழ் களிறும்
பூதூர வந்தமிழ் அந்தாதிப் பாவினில் போற்றிடற்குப்
பூதா ரமியப் பொறி வண்டு பாடிப் புகழ் செய் பெரும்
பூதூரன் புண்ணியன் பூம் கழல் சென்னிப் புணர்த்துவனே-

பூதூர முந்துறப் போந்திழி யாண்டான் –
பூ-பூமி தூரம் முந்துற -வெகு தூரம் முன்னேறும்படி போந்து -வந்து -இழி -திருவவதரித்து அருளிய -ஆண்டான் -முதளியாண்டனுடைய
புகழ் களிறும் -புகழ்கள் -சீர்மைகளை –
இறும் பூதூர -ஆச்சர்யம் உண்டாம்படி
வந்தமிழ் அந்தாதிப் பாவினில் போற்றிடற்குப்
பூதா ரமியப் பொறி வண்டு பாடிப் புகழ் செய் –
பூ -புஷ்பங்களில் -தூ -சிறகுகளை யுடைய ரம்யா -அழகான -பொறி -புள்ளிகளையுடைய வண்டு -வண்டுகள் பாடிப் புகழ் செய் -இசை பாடிப் பரவும்
பெரும் பூதூரன் புண்ணியன் -ஸ்ரீ பெரும் பூதூரில் திரு வவதரித்தவரும் -உபாய ஸ்வரூபமான எம்பெருமானாரின்
பூம் கழல் சென்னிப் புணர்த்துவனே-
அழகிய திருவடிகளை எனது தலையில் சேர்விப்பன்-

———————————————————————-

திருமகள் கேள்வன் திருவடி நிலையாகிய ஸ்ரீ சடகோபரின்
ஸ்ரீ பாதத்திற்கு ரஷையாய் அமைந்த ஸ்ரீ ராமானுஜரின்
ஸ்ரீ பாதுகையாகிய முதலி யாண்டானது திருவடியை முதலில் சூடுவோம்
எனக் குரு பரம்பரை ஒருவாறு அனுசந்திக்கப் பட்டுள்ளமை -காண்க –பாதுகா பரம்பரை கூறப்பட்டமையும் கவனிக்க –

அழகு அறிந்தவராய் வல்வினை கெட அம்புயத்தாள்
கொழுநன் அடிநிலை யாம் சடகோபர் குளிர் நளினக்
கழலின் அரணாம் இராமானுசர் திருக் கால் நிலையாய்த்
தொழு நல குலன் அம் முதலியாண்டான் அடி சூடுவமே -1-

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறுமானோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடம் கடலை மேயார் தமக்கு –பெரிய திருவந்தாதி-31-பாசுரத்தின் உட்கருத்தைக் கொண்டு முதல் இரண்டு அடிகள்

அழகு -உபாயம் -கர்மத்தினால் அன்றி சர்வேஸ்வரனால் பாபத்தைப் போக்குகை இங்கே அழகு என்னப்பட்டது
வல்வினை கெட அழகு அறிந்தவராய் -எனவே இப்பொருள் தோன்றுவதை உணர்க –
வல்வினை கெட அழகும் அறிந்தவராய் -என மாற்றுக
அறிந்தவராய் -என்னும் எச்சம் -அடிநிலை யாம் -என்னும் இடத்தில் உள்ள ஆம் -என்னும் வினை கொண்டு முடிந்தது -ஆம்-ஆகும்
அம்புயத்தாள் கொழுநன் -திருமகள் கேள்வன் –
அடிநிலை -பாதுகை
கழலின் அரணாம்-ஸ்ரீ பாத ரஷையாம்
தொழு நல் குலன் -தொலைத் தகுந்த நல்ல திரு வம்சத்திலே திருவவதரித்தவர் –
சூடுதல் -தலைக்கு அணியாகக் கொள்ளுதல் –
சூடுதல் கூறவே அடி எனபது மலர் ஆயிற்று –
முதலியாண்டான் திருவடி நம் சென்னிக்கு மலர்ந்த பூ -என்க-

திருமகள் கேள்வனது ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ சடகோபன்
ஸ்ரீ சடகோபர் ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ ராமானுஜன் –
ஸ்ரீ ராமானுஜன் ஸ்ரீ பாதுகை -ஸ்ரீ முதலியாண்டான் –ஸ்ரீ வைஷ்ண சம்ப்ரதாய ஸ்ரீ பாதுகா பரம்பரை –

————————————————————————————————–

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் அயோத்தியர் கோன் புதல்வன்
காட்டில் இளையவன் புரி பணி இன்பம் கருதலால்
மீட்டும் இடைக்குடிக்குப் பின்னவனாயினும் வெல்கிலனாய்
வீட்டுக் குரியன் முதலியாண்டான் என மீண்டனனே–2-

வீட்டுக் குரியன் -பரம புத்தத்துக்கு உரிமை பூண்டவன்
புதல்வன் கருதலால் மீட்டும்– இடைக்குடிக்குப் பின்னவனாயினும் வெல்கிலனாய் முதலியாண்டான் என மீண்டனனே–என்று கூட்டிப் பொருள்
வெல்கிலனாய்-கார்யத்தில் வெற்றி பெறாதவனாய் –

—————————————————————————————————

மீண்டவன் முத்தண்டு அதிபதி தாளிணை மேவி நின்று
வேண்டிய நற்பணி பண்ணி விளங்கினன் வெங்கலியில்
ஆண்டதன் பாதுகம் என்னவும் அன்னவன் வென்று அரங்கம்
மீண்டு அருளும் தனை மேலுற வைணவம் ஆண்டனனே –3-

மீண்டவன் முத்தண்டு அதிபதி தாளிணை மேவி நின்று -அங்கனம் மீண்ட ஸ்ரீ முதலி யாண்டான் எம்பெருமானார்
வேண்டிய-விரும்பிய -நிறைய என்னவுமாம்
வெங்கலியில்-நற்பணி பண்ணி விளங்கினன்
ஆண்டதன் பாதுகம் என்னவும் -ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் கொடுக்கப் பட்ட தனது பிரதிநிதியாக ஆண்ட பாதுகை என்று சொல்லும்படியாகவும்
பிற்பட்டுப் பணி புரிதலோடு ஸ்ரீ பாதுகையே ஆளவும் மீண்டனன் -என்றும் சொல்லும் படியாக என்றதாயிற்று
அ ன்னவன் வென்று அரங்கம் -அந்த எம்பெருமானார் திக் விஜயம் செய்து ஸ்ரீ ரெங்கத்துக்கு
மீண்டு அருளும் தனை மேலுற வைணவம் ஆண்டனனே –
மீண்டும் எழுந்து அருளுகிற வரையிலும் ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யம் ஆண்டனன் –
இளையனாய் இலக்குவன் போலே பணி புரிய விரும்பி மீண்டு பலராமனுக்குத் தம்பியாயினும் பணி இன்பம் கண்டிடாத ஸ்ரீ ராமன்
கொடிய கலி காலத்திலே முதலி யாண்டானாய் எம்பெருமானாருக்கு நற்பணி புரிந்து அடிமை இன்பம் கண்டு விளங்கினான் -முதல்
இரண்டு அடிகளில் கூறப்பட்ட பொருள்
மேலும் தான் இல்லாத காலத்தில் அழகுற அரசாண்ட தனது ஸ்ரீ பாதுகை போலவும் ஆக ஆசைப் பட்டனனாம் ஸ்ரீ ராம பிரான்
அக்குரையையும் எம்பெருமானார் ஸ்ரீ ரெங்கத்தை விட்டுத் திக் விஜயத்திற்கு எழுந்து அருளி இருக்கும் போது அவருக்குப் பதிலாக
முதலி யாண்டானாய் ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யத்தை நன்கு நிர்வஹித்துத் தீர்த்துக் கொண்டான் -எனபது
பின்னிரண்டு அடிகளில் கூறப்பட்ட பொருள் –

—————————————————————–

ஆண்டவன் பாதுகம் ஆழ் கடல் வையம் திருத்தொணாது
மீண்டிடும் மாறன் அடி நிலை மேதினி யொண் பொருளே
காண்டலை வேண்டும் கவினுறு கோலேதி காவலன் தாள்
பூண்டிடும் அந்த முதலி யாண்டான் தனிப் போற்றுவமே –4-

ஆண்டவன் பாதுகம் ஆழ் கடல் வையம் திருத்தொணாது மீண்டிடும்
ஸ்ரீ சடகொபனே ஆண்டவன் பாதுகம் -அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -என்று திருத்த ஒண்ணாது மீண்டமை காண்க –
மாறன் அடி நிலை -ஸ்ரீ ராமானுஜர்
மேதினி -பூமி -ஆகு பெயராய் பூமியில் உள்ளோரைக் கூறும்
யொண் பொருளே -அவ் வொண் பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன் -என்றபடி ஸ்ரீ ராமானுஜர் உலகத்தார் மஹார்த்தத்தைத் தெரிந்து கொள்வதை விரும்புதல் காண்க
கவினுறு கோலேதி காவலன் தாள் -கவின் உரு கோல் எதி காவலன் -அழகிய முக்கோல் ஏந்தும் எதிராஜர்
பூண்டிடும் அந்த முதலி யாண்டான் தனிப் போற்றுவமே அப்படிப்பட்ட -அதாவது -எதி காவலன் திருவடிகளை அணியாகக் கொண்ட –
இனி -திருவடிகட்கு அணியாய் -அழகு செய்கிற என்றலுமாம் -மற்றும் சொல்ல முடியாத பெருமை உடைய என்னளுமாம் —

எம்பெருமானார் ஸ்ரீ பாதுகை உலகைத் திருத்த முடியாததாயிற்று –
ஆழ்வார் பாதுகையோ உலகினர்க்குப் பொருள் தெரிவிப்பதிலேயே இருப்பதாயிற்று
எம்பெருமானார் ஸ்ரீ பாதுகையோ முதலியாகும்படி ஆண்டு வருகிறது –
ஆதலின் ஒப்பற்ற அப்பாதுகையாகிய முதலி யாண்டானைப் போற்றல் வேண்டும் -என்றபடி –

—————————————————————————————-

போற்றுவம் வம்மின் முதலி யாண்டானைப் புவியில் உள்ளீர்
நாற்றிசையும் புகழ் நண்ணும் இராமானுசன் அடிக் கீழ்
ஏற்றுயர் வாழ்வு மற்று எங்கணும் தாழ்வு தவிர்ந்த வற்காம்
பேற்றினை எய்தலின் பாதுக மா நிலை பெற்றதற்கே –5-

போற்றுவம் வம்மின் முதலி யாண்டானைப் புவியில் உள்ளீர்
நாற்றிசையும் புகழ் நண்ணும் இராமானுசன் அடிக் கீழ்
ஏற்றுயர் வாழ்வு-உயர் வாழ்வு ஏற்று -என மாறுக
மற்று எங்கணும் -வேறு எந்த இடத்திலும்
தாழ்வு தவிர்ந்த வற்காம் பேற்றினை -தாழ்வு தவிர்ந்து அவர்க்கு ஆம் பேற்றினை -அந்த ஸ்ரீ ராமானுகற்கு உபயோகப்படும் பயனை
பெற்றுதற்குப் போற்றுவம் -என இயைக்க –
புவியில் உள்ளீர்-மற்று எங்கணும்-தாழ்வு தவிர்ந்து
நண்ணும் இராமானுசன் அடிக் கீழ் -உயர் வாழ்வு ஏற்று
அவர்க்கு ஆம் பேற்றினை
எய்தலின் பாதுக மா நிலை பெற்றதற்கே
முதலி யாண்டானைப் போற்றுவம் வம்மின்-என்று கூட்டிப் பொருள் கொள்க –
தாளிணைக் கீழ் அன்றி மற்று எங்கும் பாதுகைக்குத் தாழ்வு தானே –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்ற ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாக்கை நினைக்க –

————————————————————————

பெற்றவன் சீரெதி நாயகன் பேரருள் நூல்கள் எலாம்
கற்றவன் காமுறு நல் ஒழுக்கத்தினன் கைப்ப்படுமோர்
நற்றவன் நானிலத்தீர் எம தாண்டானளிரடியே
உற்றவம் நீங்குமின் உங்கட்கு இல்லை மற்றுறு துணையே –6-

நற்றவன் -நல்ல தவத்தை உடையவன் -தவம் -சரணா கதி
நளிர் அடி -குளிர்ந்த திருவடி
உற்று -ஆஸ்ரயித்து
அவம் -வீணாதல்
அவம் நீங்கல் -பயன் பெறல் –

———————————————————————————————————-

உறு துணை யாண்டான் ஒருவன் செய் தீங்கின் உடையவர் காண்
நெறி படர் காலத் தடியிணை நீழலின் நீங்கலர் ஊண்
பெறுகிலர் வாடப் பெரிது நீ கொங்கிற் பிராட்டியகத்து
அறு சுவை யுண்டி அடி நிலை யாகி அளித்தனையே –7

ஒருவன் -சோழ அரசன் -பெயர் சொல்லவும் நாக்கூசசதலின் ஒருவன் என்றது
வாய் விட்டுச் சொல்ல ஒண்ணாத் தீங்கு ஆதலின் அடை கெடாது தீங்கு எனப்பட்டது –
நீங்கலர் -வினையால் அணையும் பெயர் -ஊண் பெறுகிலர் -முற்று எச்சம் -பெரிதும் வாட என மாறுக –

சோழ அரசனால் துன்புறுத்தப் பட்ட ஸ்ரீ ராமானுஜர் பரிவாரத்தோடு காட்டின் வழியே நடந்து கஷ்டப்பட்டு கொங்கில் பிராட்டி
திரு மாளிகையை நடந்தார் –அப்பொழுது பசியால் வாடிய அடியார்கள் கொங்கில் பிராட்டி காட்டிய ஸ்ரீ ராமானுஜர் பாதுகையால்
ஐயம் தீர்ந்து அந் நல்லாள் இல்லத்தில் அமுது செய்து பசியாறினர் எனபது வரலாறு –
உடையவர் அடி நிழலை விட்டு நீங்காதவர்கள் பசியால் வாட -அவ்வடியைத் தாங்கும் பாதுகை அன்னார் பசி வாட்டத்தைப் போக்கி
உறு துணையாவது என்க-பாதுகைக்கும் முதளியாண்டானுக்கும் அபேதம் கருதி இது கூறியது என்று உணர்க –

——————————————————————————————————

அளித்தனை யாண்டான் எதிபதி யாணையின் அன்று ஒரு கால்
துளித்தனை யன்பும் செலுத்தலர் தூய நெறிப் படரார்
களித்தனை வோரும் நலநெறி காணக் கழல் இணைகள்
குளித்தனை சாளக் கிராமப் படித்துறை கூடி நின்றே –8

கழல் இணைகள் குளித்தல் -திருவடிகளை நனைத்தல் –
குளித்தனை -குளித்தவனாய் -முற்று எச்சம் –அளித்தனை என்பதோடு முடிந்தது –
ஆண்டான் எதிபதி ஆணையில் அன்று ஒரு கால் சாளக் கிராமப் படித்துறை கூடி -சேர்ந்து -நின்று துளித்தனை –
யன்பும் செலுத்தலர் தூய நெறிப் படரார் கள்
அத்தனை வோரும் நலநெறி காணக் கழல் இணைகள்
குளித்தனை -அளித்தனை -என்று கூட்டி முடிக்க

உடையவர் மேலை நாடு எழுந்து அருளும் வழியில் சாளக் கிராமத்தில் உள்ளார் திருந்துமாறு அவர்கள் தீர்த்தம் கொள்ளும் துறையில்
எம்பெருமானார் நியமனத்தால் ஆண்டான் திருவடி விளக்கினாராக -அனைவரும் திருவடிகளை ஆச்ரயித்து உய்ந்தனர் எனபது வரலாறு –

———————————————————————————————

கூடலர் வெல்லும் குறை கழல் மன்னவர் முன்னருளை
நாடுநர் சென்னி நயந்தவர் தாள் நிலை தாங்குதல் போல்
ஏடுறு கீர்த்தி இராமானுசன் முன்னடி நிலையாம்
பீடுறு செம்மல் முதலியாண்டான் தனைப் பேணுவமே -9-

கூடலர் -பகைவர் –
நாடுநர் -எதிர்பார்ப்பவர்கள் -ந-பெயரிடை நிலை
ஏடு உறு கீர்த்தி -நூல்களில் குறிப்பிடத் தக்க புகழ்
அருளை நாடுநர் மன்னவர் முன் அவர் தாள் நிலை நயந்து சென்னி -தலையில் -தாங்குதல் போலே நாமும் இராமானுசன் முன்
அடி நிலையாம் பீடுறு செம்மல் முதலியாண்டான் தனைப் பெனுவம் என்று கூட்டுக –

மன்னவர் அருளை வேண்டுபவர் அவர் எதிரே பாதுகையைத் தாங்குவது போலே யதிராஜர் அருளை நாடும் நாமும்
அவர் எதிரே பாதுகையான முதலி யாண்டானைப் பேணல் வேண்டும் -என்க –
இதனால் ஆசார்யன் முன்னிலையில் சிஷ்யராகிய ஆண்டானைப் புகழ்தல் தக்கதே எனச் சமர்த்தித்த வாறாம்-

—————————————————————————————————————————–

பேணலம் மாற்புணர் வின்பும் பிரிவித் துயருமலால்
காணலர் கண்ணனின் காதலர் காயக் கலப்பினரைப்
பேணலர் ஆண்டான் துறவியர் பெம்மான் பெரும் பரிவன்
பேணலம் நின் வயிற் காண்பதி யாதெனப் பேசெனெக்கே–10-

பேண நலம் மால் புணர்வு இன்பம் -பேணத் தக்க நன்மையை உடைய எம்பெருமானோடு கலந்த ஆனந்தமும் –
பேணலம்-பேண நலம் -பேணும் அன்பு
காயக் கலப்பினர் -தேக பந்துக்கள்
துறவியர் பெம்மான் -எம்பெருமானார்
பெரும் பரிவன் -பரம பக்தர் –

ஆண்டான் கண்ணனின் காதலர் -பக்தர் -மாலுடன் புணர்வு இன்பமும் பிரிவுத் துயருமலால் வேறு இன்ப துன்பங்களைக் காண மாட்டார்கள் –
தேக பந்துக்களைப் பேணவும் மாட்டார்கள் -ஆயின் பெரும் பக்தரான எம்பெருமானாரோ தேக பந்துவான உம்மைப் பேணும் படியான
நலமும் கொண்டார் -அங்கனம் நும் வின் கண்ட அவரது நலத்தை யாது -எப்படிப் பட்டது -என்று அடியேனுக்கு அருளிச் செய்ய வேணும் -என்றபடி
எம்பெருமானார் தம்பால் புரியும் பரிவு ஆண்டானாலும் பேச இயலாதது எனபது கருத்து –
இனி பேணலம் என்பதற்குப் பேணத் தக்க நலம் -நன்மை -பக்தி -எனப் பொருள் கொண்டு ஆண்டானிடம் உள்ள நலம்
எம்பெருமானாரும் பேணும்படி அமைந்து இருத்தலின் அதனை ஆண்டானாலும் எடுத்து இயம்ப ஒண்ணாது என்னலுமாம்-
பக்தி இல்லாத ஏனைய சம்சாரிகளின் உறவு போல் அன்றி நலத்தால் மிக்க ஆண்டானோடு உண்டான உடல் உறவு விடல் அரிதாயிற்று என்று உணர்க
பாகவதர்கள் விஷயத்திலே ஏற்படும் கூடல் இன்பமும் பிரிவுத் துன்பமும் கண்ணன் இன்ப துன்பங்களை விட
வேறல்ல வாதலின் ஆண்டானை விடுதல் துன்பம் தருதலால் விடுகிலாது அவரை எம்பெருமானார் பேணினார் என்க –

————————————————————————————————

பேசினன் கண்ணன் பிறருறு மின்பமுபேரிடரும்
வீசில மற்றவர்க்கு அவ்வித மின்பிடர் மேவிடினும்
மாசிலன் யோகியர் மன்னன் என்றான் ஆண்டான் மனமருவும்
நேசன் என் நீங்கலன் நின்தனை நீத்தவர் நாயகனே –11

கண்ணன் கீதையில் பிறர் உறும் இன்பமும் பேரிடரும் மற்றவர்க்கு -வேருபட்டவர்க்கு -அதாவது சம்பந்தம் இல்லாதவர்க்கு -வீசில –
அவ்விதம் யோகியர் மன்னன் இன்பு இடர் மேவிடினும் மாசிலன் என்று பேசினன் –
ஆயின் நீத்தவர் நாயகன் மனமருவும் நேசனாய் நின்தனை என் நீங்கலன் -என்று கூட்டுவது
வீசில -பரவவில்லை -நீத்தவர் -துறந்தார் -நீத்தவர் நாயகன் -எம்பெருமானார்
இறை நிலை உணர்ந்த பரம பக்தரான எம்பெருமானாரும் பேணும் படியான பெருமை பேசப்பட்டது கீழே –
இங்கே தம் நிலை -ஸ்வ ஸ்வரூபம் உணர்ந்து எதிலும் தமக்குத் தொடர்பின்மை கண்டு முற்றும் துறந்த முனிவரான
எம்பெருமானாரும் தொடர்பு அறுத்து நீங்க முடியாத பெருமை கூறப்படுகிறது –
கண்ணன் பேசினது இது -ஆத்மௌபம் யேந சர்வத்ர சமம் பச்யதி யோ அர்ஜூன
ஸூகம்வா யதிவா துக்கம் ச யோகீ பரமோ மத -என்று
தனக்கு நேரும் மாகப் பேறு இழவுகளால் வரும் இன்ப துன்பங்களைப் பிறருக்கு நேர்ந்தவை போலே என்னுமவனே
பரம யோகி என்று இதற்கு எம்பெருமானார் பாஷ்யம் இட்டு அருளினார்
ஒருவனுக்கு நேரும் இன்ப துன்பங்கள் பிறரைப் பாதிப்பது இல்லை -ஏன்-அவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை –
அவ்விதமே தன்னை உணர்ந்த சிறந்த யோகி தனக்கு நேரும் ஸூ க துக்கங்களால் பாதிக்கப் படுவது இல்லை -ஏன் –
அறிவு வடிவனான அவனுக்கு இடையே கன்மத்தால் வந்த ஸூ க துக்கங்களில் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை அவன் உணருகிறான்
ஆகவே தொடர்பு இன்மை கொண்டு நிலை குலையாதவன் பரம யோகி என விளக்கம் காண்க –
ஆண்டான் அத்தகைய பரம யோகியான நீத்தவர் நாயகனே உம்மிடம் மனமருவும் நேசனாய் உம்மை ஏன் துறக்க வில்லை -என்றபடி –
வெறும் உடல் உறவு மாத்ரமன்றி பகவானோடு வேறுபடாத பாகவதர் ஆதலின் ஆத்ம சம்பந்தமும் கலந்து இருத்தலின்
ஆண்டான் உறவு எம்பெருமானார்க்கு விடற்கு அரியதாயிற்று-என்று அறிக –
ஆண்டான் எம்பெருமானாருக்கு சஹோதரி புதல்வர் -சந்யசிக்கும் போது ஆண்டானைத் தவிரத் தாம் சந்யசித்தத்தாகக் எம்பெருமானாரே
அருளிச் செய்வர் -மனமருவு நேசத்துக்கு அடி -பகவத் பாகவத கைங்கர்யத்துக்கு உறு துணை யாதல் -அது அடுத்த பாட்டினால் விளங்கும் –

——————————————————————————————————————————

நாயக நாண் மலர் நங்கை தமர் பணி நண்ணிடவும்
ஆயகன் ஞானம் அருமறை காணவும் அந் தமிழில்
வாயாக வுள்ளுறை உட்கொளவும் மீதி மன்னனுக்குத்
தீயகல் கேள்வி முதலி யாண்டான் உறு சீர் துணையே –12

ஆய் அகல் ஞானம் -ஆராயும் விசாலமான ஞானம்
அருமறை காணல்-உப நிஷாத்தின் உட்பொருளைத் தெரிதல் –
அகம் -தமிழுக்குத் தனிச் சிறப்பாய் அமைதலின் அந் தமிழில் வாய் அகம் -எனப்பட்டது -வாய்த்து இருக்கிற அகம் -என்க -வினைத்தொகை –
தீ அகல் கேள்வி -தீமை நீங்கிய கேள்வி யறிவு –

பகவத் பாகவத கைங்கர்யத்துக்கும் -அதனைப் பயனாகக் கொண்ட உபய வேதாந்த நிர்வாஹத்துக்கும்
எம்பெருமானாருக்கு முதலி யாண்டான் உறு துணை -என்றதாயிற்று –

——————————————————————————————————————

துணை என்று உறவினர் சொத்துப் பறித்திடச் சூழ்ந்து நிற்பர்
அணை என்று அணுகுவர் அல்லல் படுத்திட ஆயிழையார்
துணை என்று எதிபதி கோல் போற்றுறவாத் தர முடையோன்
புணை என்று அடைதிர் முதலியாண்டானைப் புகும் இன்பமே –13

முதல் துணை சஹாயத்தையும் -இரண்டாம் துணை நண்பனையும் குறித்தன -கோல் போல் துணை என்று எதிபதி
துரவாத் தரமுடையோன் ஆகிய முதலி யாண்டான் என்க –
துறவிகட்கு கோல் சகாவாகக் கூறப்படுதல் காண்க –
த்ரி தண்டத்தை விடில் அன்றோ நம் முதலி யாண்டானை விடுவது -என்று எம்பெருமானார் அருளிச் செய்தமை பிரசித்தம் –
புணை -தெப்பமாய் -பற்றுக் கோடு இங்கே குறிக்கப் படுகிறது –

————————————————————————————————————————-

இன்பங்கண் நேரினும் இன்னல்கள் ஏறினும் இந்நிலத்தீர்
என் பங்கம் எந்தை இராமானுசன் அடியேய் நிலையாம்
அன்பங்கண் ஆர்ந்த முதலி யாண்டான் என் முடி யமர
மன் பங்கயத்தாள் வழங்கு நற் பங்கயத்தாள் உடனே –14

ஏறினும் -அதிகமானாலும்
என் பங்கம் -என்ன குறை
அம கண் அன்பு ஆர்ந்த என இயையும்
அம கண் -அழகிய கண் -ஆர்ந்த -நிறைந்த
மன் -மால்
பங்கயம் தாள் -தாமரை போன்ற திருவடிகளை -பங்கயத் தாளுடன் -ஸ்ரீ லஷ்மீ தேவியுடன் –
வழங்கும் -கொடுக்கும் —செய்யும் என் -வினை முற்று –
இராமானுசன் அடியேய் நிலையாம் முதலி யாண்டான் என் முடி அமர மன் பங்கயத்தாள் உடன் பங்கயத்தாள் வழங்கும் –
இந் நிலத்தீர் இனி இன்பங்கள் நேரினும் இன்னல்கள் ஏறினும் பங்கம் என் -என்று கூட்டுக
பெற வேண்டியதைப் பெறுதலால் இடையே வரும் இன்ப துன்பங்களுக்கு இடைய வேண்டா -எனபது கருத்து –

——————————————————————————————————–

உடன் உறைந்து எம்பெருமானார் கரமதிலுள் அடங்கித்
திடமுடை வைணவம் வாய்ந்து பவித்திரம் சேர்ந்து எதிக்கும்
விடலரும் தன்மையின் மால் என நூல்கள் விளம்புதலின்
படர் புகழ் ஆண்டான் த்ரிதண்டு எனச் சொற் படைத்தனனே –15

மால் என -விஷ்ணு என்று –சொல் -பேர்
எம்பெருமானாருக்கு ஆண்டான் த்ரி தண்டமாகவும் ஆழ்வான் பவித்ரமாகவும் கொள்ளப் படுவர் –
அதில் ஆண்டான் த்ரி தண்டமாகக் கொள்ளப் படுவதன் கண் உள்ள பொருத்தம் காட்டப் படுகிறது இப்பாட்டில் –
த்ரி தண்டம் எதிராசர் கூடவே இருப்பது -ஆண்டானும் எதிராசருடன் உறைபவர் –
த்ரி தண்டம் கைக்குள் அடங்குவது -ஆண்டான் எம்பெருமானார் கைக்குள் -வசத்தில் -இருப்பவர் –
த்ரி தண்டம் திடமான வைணவம் -மூங்கில் மூங்கில் சம்பந்தம் வாய்ந்தது –ஆண்டான் -திடமான வைணவம் ஸ்ரீ வைஷ்ணவத் தன்மை வாய்ந்தவர் –
த்ரி தண்டம் -ஜல -பவித்ரத்தோடு சேர்ந்தது -ஆண்டான் பவித்ரம் -பரி சுத்தம் சேர்ந்தவர் –
த்ரி தண்டம் எதிக்கு விட முடியாதது -ஆண்டான் எதியாகிய எம்பெருமானாருக்கு விட முடியாதவர்-
த்ரிதண்டம் விஷ்ணு ஸ்வரூபம் -விஷ்ணு ரூபம் த்ரி தண்டாக்க்யம் சர்வதா தாரயேத் எதி -என்ற பிரமாணம் காண்க –
முதலியாண்டான் ஸ்ரீ ராமனுடைய திரு வவதாரம் ஆதலின் விஷ்ணு ஸ்வரூபர்-
இனி -அஹமேவ த்விஜஸ்ரேஷ்ட நித்யம் பிரசன்ன விக்ரஹ-பகவத் பக்த ரூபேண லோகான் ரஷாமி சர்வதா -என்றபடி
பக்தராகிய ஆண்டான் விஷ்ணு ஸ்வரூபம் என்னலுமாம் –

———————————————————————————————-

படைத்தவன் வேள்வி வரும் பரன் பண்ணில் பரவசனாய்க்
கொடுத்தவர் கோயில் விரைந்து உழி கூரத் தவருடன் நீர்
கிடைத்தவர் ஆயினீர் ஆண்டான் கிளர் நீர் அரங்கற்கு மண்
ணிடைத் தவராசன் எனின் மனத்து ஏறுவீர் மூவிருமே –16-

படைத்தவன் -பிரமன் -வேள்வி வரும் பரமன் -தேவப் பெருமாள் –
பிரமன் செய்த வேள்வியில் தேவப் பெருமாள் தோன்றியதாகக் காஞ்சி ஸ்தல புராணம் கூறும்
பண்ணில் -திருவரங்கப் பெருமாள் அரையர் பாடின இசையில்
பரவசனாய்க் கொடுத்தவர் -ஈடுபட்டு மெய் மறந்த படையால் கொடுக்கப் பட்ட எம்பெருமானார்
கோயில் விரைந்து உழி -ஸ்ரீ ரங்கத்திற்கு விரைவாக எழுந்து அருளும் போது
கூரத் தவருடன் நீர் கிடைத்தவர் ஆயினீர் -ஆண்டான் கிளர் நீர் அரங்கற்கு -ஸ்ரீ கூரத் தாழ்வான் உடன் அரங்கற்குக் கிடைத்தவர் ஆயினீர் என இயையும்
மண்ணிடைத் தவராசன் எனின் -உலகத்தில் எதிராசன் என்றால் எம்பெருமானார் ஆழ்வான் ஆண்டான் என்ற மூன்று பெரும் நினைப்பில் வருதல்
மனத்து ஏறுவீர் மூவிருமே –

திருவரங்கத்திற்கு எதிராசரை அழைத்து வரும்படி அனுப்பப் பட்ட திருவரங்கப் பெருமாள் அரையர் பாடிய பண்ணில்
பரவசராய்த் தேவப் பெருமாள் எதிராசரை அரையரிடம் கொடுத்து அனுப்பினார்
தமது மடத்துக்கு கூடப் போகாதே சந்நிதியிலே இருந்தே கோயில் நோக்கி உடனே விரைந்தார் எதிராசர்
-அவரை ஆழ்வானும் ஆண்டானும் பின் தொடர்ந்தனர்
எதிராசர் ஒருவரை வேண்டினான் அரங்கன் -அதருஷ்ட சாலியான அவனுக்கு மூவர் கிடைத்தனர் -அது சரி தான்
தாண்டும் பவித்ரமும் சேராமலா எதிராசர் தோன்றுவார் -ஆண்டானும் ஆழ்வானும் இல்லாமலா எம்பெருமானார் தோன்றுவார்
-ஆக பெயர் அளவிலே மூவரே தவிர மூவரும் சேர்ந்து ஒருவரே என்றதாயிற்று –

———————————————————————————————————-

மூவா முதல்வன் முது நீர் அரங்கன் கொளுமமுதை
ஆய்வான் அமர்ந்தருள் ஆண்டான் அரும்பால் அளித்த பின்னீ
ஆர்வாய்க் கனிந்த நாவற்பழம் தந்தது அறிந்து முக்கோல்
கோவா குலமாய் மருந்து கொடுத்ததும் கூறு எளிதே –17-

மூவா முதல்வன் -முதுமை யுராத காரண பூதன் – கொளும்-கொள்ளும் –
அமுதை ஆய்வான் -அமுது செய்வதைக் கவனிப்பதற்காக
நாவற்பழம் தந்தது -நாவற்பழத்தை அமுது செய்யப் பண்ணியது -உம்மை தொக்கது
முக்கோல் கோ -முனி -எம்பெருமானார்
ஆகுலம் -கலக்கம் -எளிதே -எளிதன்று என்றபடி
கூறு -அருளிச் செய்க –
கூற எளிதே -என்பதன் தொகுத்தல் விகாரமாகக் கொண்டு கூறுதற்கு எளிதன்று என்றபடி யாகவுமாம்-ஏ-எதிர்மறை குறிப்பது –
கோயிலில் பெருமாள் அமுது செய்வதைக் கவனிக்கும் படி எம்பெருமானார் முதலி யாண்டானை நியமித்து அருளினார் –
ஒரு கால் பெருமாளுக்குப் பாலமுது சமர்ப்பித்த பிறகு நல்லன நாவற்பழங்களை யமுது செய்வித்தார் ஆண்டான் –
அதை யறிந்து எம்பெருமானார் பெருமாளுக்கு என்ன வாகுமோ என்று கலங்கி மருந்து அமுது செய்வித்து அருளினார் எனபது வரலாறு –
பாலமுது செய்த பிறகும் நல்ல பழங்களை கண்ட முதலி யாண்டான் அவற்றை யமுது செய்வித்தார் –
அதற்குக் காரணம் ஆர்வம் உடைமையே -அது நல்லனகள் காணில் கண்ணனுக்கு என்று ஈரியாய்-இருக்கச் செய்கிறது
எம்பெருமானாரது பரிவோ கலங்கி மூவா முதல்வனுக்கும் என்ன நேருமோ என்று மருந்து கொடுத்துப் பரிஹரிக்கும் படி செய்கிறது
இத்தகைய மனோ பாவத்தைப் பற்றி என் போன்றவர் என்ன கூற இருக்கிறது –

——————————————————————————————————

எளிவரும் கண்ணன் இயம்பிய வார்த்தை யரும் பொருளை
அளிமுரலார் திருக் கோட்டியூர் நின்றறு திங்களின் பின்
தெளிவுறலால் திருக் கோட்டிய நம்பி திருப்பியதும்
களிவர ஆண்டான் உனக்கு எதி காவலன் காட்டினனே -18-

எளிவரும் கண்ணன் -எளிமை யுடைய கண்ணன்
இயம்பிய வார்த்தை -சரம ஸ்லோகம்
யரும் பொருளை
அளிமுரலார் -வண்டுகளின் ஒலி நிறைந்த
திருக் கோட்டியூர் நின்று -திருக் கோட்டியூரில் இருந்து
இதனைத் திருப்பியதும் -என்பதோடு இயைக்க
திருப்பியதும் -திருப்பி அனுப்பியதும்
தெளிவுறலால் -கலக்கம் தீர்ந்து தெளிந்தமையால்
திருக்கு -குற்றம்
களிவர -ஆனந்தம் உண்டாக
வார்த்தை யரும் பொருளை எதி காவலன் உனக்குக் காட்டினனே -என்க –

ஆண்டான் அறு திங்களின் பின்-தெளிவுறலால்-
திருக்கு ஒட்டிய –அளிமுரலார் கோட்டியூர் நம்பி
திருக் கோட்டியூர் நின்று திருப்பியதும்
எதி காவலன் களிவர உனக்கு எளிவரும் கண்ணன் இயம்பிய வார்த்தை யரும் பொருளை காட்டினனே -என்று கூட்டி முடிக்க –

முதலி யாண்டான் சரம ஸ்லோக அர்த்தம் பெறுவதற்காக ஆறு மாதங்கள் காத்துக் கிடந்தது தெளிவுற்று திருக் கோட்டியூர் நம்பியால்
ஸ்வரூப சிஷை செய்யப் பெற்று -மீண்டு வந்து எம்பெருமானார் இடம் அதனைப்பெற்றார் எனபது வரலாறு –

———————————————————————————————–

காட்டி யரங்கன் கழல் இணை காணக் களித்தடிமை
பூட்டும் புனிதன் இராமானுசனத் துழாய் முகத்தின்
வாட்டம் தணிய வழங்கலும் சீதன மாதென நீ
வீட்டுப் பணிகளும் ஆண்டான் விரும்பினை வெள்கிலையே-19-

கழல் இணை காணக் காட்டி என இயைக்க –
சீதன மாது -ஸ்திரீ தனமாகக் கொடுக்கப் பட்ட பணியாட்டி
வீட்டுப் பணிகளும் -வீட்டு வேலைகளும்
விரும்பல் -செய்ய ஆசைப் படுதல்
வெள்கிலை -கூச்ச முற்றிலை-

பெரிய நம்பி திருமகள் அத்துழாய் எம்பெருமானார் இடம் -ஆற்றுக்குப் போகத் துணை வேண்டுமானால் உன் சீதன
வெள்ளாட்டியை அழைத்துச் செல் -என்று மாமியார் கடிந்து கூறியதாக வருத்தத்துடன் கூற –
அவர் ஆண்டானைச் சீதன வெள்ளாட்டியாகக் கொடுத்து அனுப்பினார் –
ஆண்டான் சிறிதும் கூசாது ஆற்றுக்குத் துணையாகச் சென்று வீட்டு வேலைகளும் செய்ய முற்பட்டார் எனபது வரலாறு –

———————————————————————————————————

வெள்ளுரை வீணர்க்கு மேன்மேல் விளம்புவர் மேவலர் மெய்
உள்ளலர் கூசலர் ஊமைக் குளறுவா யொத்து நின்றே
ஒள்ளறி வோங்கிய ஆண்டான் உறவும் ஒளிந்தனர் வாய்
விள்கிலர் கூகை போல் அஞ்சி நடுங்கி விடிந்த பின்னே –20-

வெள்ளுரை -அர்த்தம் அற்ற பேச்சு
வீணர்க்கு மேன்மேல் விளம்புவர்
மேவலர் -புற மதத்தவர்
மெய் உள்ளலர் -சத்தியத்தை நினையாதவர்களாய்-முற்று எச்சம்
கூசலர் -கூசாதவராய் -முற்று எச்சம்
உளறுவாய்-வாயினர்க்காகி வந்தது
விள்கிலர்-திறவாதவராய்-முற்று எச்சம்
கூகை -கோட்டான் –

மேவலர் மெய் உள்ளலர் ஊமைக்கு உளறுவாய் ஒத்து நின்று வீணர்க்கு வெள்ளுரை மேன்மேல் விளம்புவர்
ஒள்ளறி வோங்கிய ஆண்டான் உறவும் -அவர்கள் விடிந்த பின் கூகை போல் அஞ்சி நடுங்கி வாய் விள்கிலர் ஒளிந்தனர் -என்று கூட்டுவது –

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார் திருநகரி நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முதலியாண்டான் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பூ மன்னு மாது மார்பன் போன்ற அருளிச் செயல் ஸ்ரீ ஸூ க்திகள்–

July 28, 2015

ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ ஸூக்திகள் –

1-வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
2–குலாவித் திகழும் திரு மார்பு இருந்தவா காணீரே
3-என் தம்பிரானார் எழில் திரு மார்வர்க்கு
4-எழிலார் திரு மார்பிற்கு
5-செய்யவள் நின்னகலம் சேமம் எனக் கருதி
5-என் முகில் வண்ணன் திரு மார்வன்
6-திரு மலிந்து திகழு மார்வு
7-திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
8-தூ மலராள் மணவாளா
9-திருவுடைப்பிள்ளை
10-இங்கே போதராயே கோயில் பிள்ளாய் தெண்டிரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
11-தாமரையாள்
12-பேடை மயில் சாயல் பின்னை மணாளா
13-என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா
14-இரு நிலம் புக்கு இடந்து வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தான்
15-திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள்
16-மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
17-சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலையிவை பத்தும்
18-திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே
19-திருவாளன் திருப்பதி மேல் திருவரங்கத் தமிழ் மாலை
20-திருவாளன் இனிதாகத் திருக் கண் வளர்கின்ற திருவரங்கமே
21-அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து

————————————–

ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ ஸூக்திகள் –

1-மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
2-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
3-வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
4-கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
5-மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே –
6-மன்னு பெறும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
7-பூ புனை கண்ணிப் புனிதனோடு
8-திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு –

———————————

ஸ்ரீ குலசேகர பெருமாள் ஸ்ரீ ஸூக்திகள் –

1-திருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை –
2-மா மலர் மங்கை தோளிணை தோய்ந்ததுவும்
3-நறும் துழாய் மாலை யுற்றாரைப் பெறும் திருமார்வனை மலர்க் கண்ணனை
4-அல்லி மலர் மங்கை நாதன் அரங்கன்
5-அந்தாமரைப் பேதை மா மணவாளன்
6-அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்
7-மைதிலி தன் மணவாளா
8-தம்பிக்கு அரசும் ஈந்து திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்

——————————————–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் ஸ்ரீ ஸூக்திகள் –

1-பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
2-பின்னை கேள்வ மன்னு சீர் பொன்னிறத்த வண்ணனாய் புண்டரீகன் இல்லையே
3-ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்
4-மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய் பின்னும் ஆயர் பின்னை தோள் மனம் புணர்ந்த தன்றியும்
5-அற்புதன் அனந்தசயனம் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
6-போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும் போது தங்கு நான் முகன் மகன் அவன் மகன் சொல்லில் மாது தங்கு கூறன்
7-செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே
8-திருக்கலந்து சேறு மார்ப தேவ தேவனே
9-பண்ணை வென்ற வின்சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண

———————————-

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் –

1-திரு மறு மார்ப நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து

—————————-

ஸ்ரீ மதுரகவி யாழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் –

1-தேவபிரானுடை கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்

—————————————-

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் –

1-திரு ஆர மார்வதன்றோ அடியேனை ஆட்கொண்டதே –

————————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் –

1-அலர்மகள் அவளோடும் அமர்ந்த நல் இமயத்து
2-தேனுடைக் கமலத்து திருவினுக்கு அரசே
3-அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்
4-மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
5-பந்திருக்கும் மெல்விரலாள் பாவை பனி மலராள் வந்திருக்கும் மார்வன்
6-இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன் தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை
7-அன்றாயர் குலக் கொடியோடு அணி மா மலர் மங்கையோடு அன்பளவி
8-நில மகள் தோள் தோய்ந்தானை -ஈரிரண்டு மால் வரைத் தோள் அம்மான் தன்னை
9-பார் வண்ண மட மங்கை பனி நன் மலர்க் கிழத்தி நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்தவனூர்–கடல் மல்லைத் தல சயனம்
10-ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான்
11-திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்தவளும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
12-உருகும் நின் திரு உரு நினைந்து
13-மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையான்
14-தூ வடிவின் பார்மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்ற
15-செய்யவள் உறை தரு திரு மார்பன்
16-திரு மார்பனைப் சிந்தையுள் வைத்தும் என்பீர்
17-திருமால் திருமங்கையோடாடு தில்லைத் திருச் சித்ர கூடம்
18-பூ மங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ
19-தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
20-மா நில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண் பூ மகள் நாயகன் என்றும்
21-ஏழு உலகும் தொழுது ஏத்த ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே
22-கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணை கிற்பீர்
23-மாதவன் தன் துணையா நடந்தாள்–புனலாலி புகுவார் கொலோ
24-அலர்மகட்க்கும் அரற்கும் கூறாகக் கொடுத்து அருளும் திரு உடம்பன்
25-திருமடந்தை மண் மடந்தை இருப்பதாலும் திகழ
26-பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால்
27-மலர்மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
28-நில மடந்தை தன்னை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான்
29-மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
30-பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
31-அல்லி மாரதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை
32-சொல்லாய் திரு மார்பா
33-மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியலை திரு மார்வில் மன்னத்தான் வைத்துகந்தான்
34-அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யாக்லத்து அமர்ந்து
35-திருவாழ் மார்வன் தன்னை
36-திரு மா மகள் மருவும் சிறு புலியூர்ச் சல சயனத்து அருமா கடலமுதே
37-வடித் தடம் கண் மலரவளோ வரையகத்துள் இருப்பாள்
38-வாராளும் இளம் கொங்கை நெடும் பனைத் தோள் மடப்பாவை சீராளும் வரை மார்பன் திருக் கண்ணபுரத் துறையும் பேராளான்
39-மார்வில் திருவன்
40-மடமகள் குயமிடை தடவரை அகலமதுடையவர்
41-சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பிள்ளை
42-முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃது கண்டும் அற்றாள்

————————————————————————————————————

ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் –

1-மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா புணர்த்த திருவாகித் தன் மார்வில் தான் சேர் புணர்ப்பன்
2-மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே
3-மடந்தையை வண் கமலத் திரு மாதினை தடம் கொள் தார் வைத்தவர்
4-ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமகளும் கூறாளும் தனியுடம்பன்
5-மணிமாமை குறைவில்லா மலர் மாதுருறை மார்பன்
6-மறுத் திரு மார்வனவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
7-திருவுருவு கிடந்தவாறும்
8-என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று மந்திரத்து ஓன்று உணர்த்தி யுரையீர்
9-அலர் மேல் மங்கை யுறை மார்பா
10-என் திரு மார்பன் தன்னை
11-என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும்
12-வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்
13-மையார் கரும் கண்ணி கமலா மலர் மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
14-அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
15-திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
16-மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூம் குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய் –

———————————————————————————————————————–

இயற்பா ஸ்ரீ ஸூ க்திகள்

1-கார் வண்ணத்து ஐய மலர்மகள் நின் ஆகத்தாள்
2-திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்
3-மணந்தாய் மலர்மகள் தோள் மாலே –
4-முன் காட்டும் திருமாலை நங்கள் திரு
5-மா மலராள் செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள்
6-நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே அங்கண் ஞாலத்து அமுது –
7-செங்கண் நெடுமால் திரு மார்பா
8-திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன்
9-பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே –
10-ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திரு வல்லிக் கேணியான்
11-பூ மகளும் பான் மணிப்பூண் ஆரம் திகழும் திரு மார்பன்
12-மாதுகந்த மார்வு
13-பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி மலிந்து திருவிருந்த மார்வன் –
14-சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் -காரார்ந்த வானமரும்
15-மின்னிமைக்கும் வண் தாமரை நெடுங்கன் தேனமரும் பூ மேல் திரு
16-திருவில்லாத் தேவரைத் தேறேல் மின் தேவு
17-திருவிருந்த மார்பன் சிரீதரன்
18-நெடுமாலை என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு
19-பூவினும் மேவிய தேவி மணாளனை
20-பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த அம்மா நின் பாதாத்தருகு

21-அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணி யாகம் மன்னும்
பங்கய மா மலரிப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப்பூ மன்னவே –

22-மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சந்குடனே காண எண்ணி மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன்
பேர் ஓத வுய்யுமே இன்னுயிர்

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

-ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி உபன்யாச -சாரம் ..

June 2, 2015

10

பாரோர் புகழ -புகழ்ச்சி கூடாதே
கர்ம யோகம் செய்ய செய்ய பாரோர் வாழ அதனால் ஏற்பட்ட புகழ்ச்சி
அந்தணர் -ராஜா -கற்புடைய மாந்தர் மூன்று மழை -மாதம் மும்மாரி
வேதம் ஓதியும் ஓதுவாருக்கு கைங்கர்யம்செயதும்
ஓங்கி  உலகு அளந்த -வெளியில்
-கொள்ள குறைவற்று இலங்கி கொளுத்து விட்டு ஓங்கிய வள்ளல் தனம்
அங்கு கபடம் வஞ்சனையால் ஓங்கி -அதனால் வெளி தான் அங்கு
இவரோ கொழுந்து விட்டுஓங்கிய வள்ளல் தனம் –
அங்கு தான் கொள்ள ஓங்கினான்  வாமனன்
இங்கு கொடுக்க –பொன் உலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ
உபய விபூதி கொடுக்கும் வள்ளல் தன்மை
வல் வினையர் மனத்தில்புகுந்தார் ராமானுஜர்
நீராடுதல் -அவனே தடாகம் -திருவடியில் சரணாகதி –
மும்மாரி -தத்வ ஹித புருஷார்த்தம் -விஷய ஞானம் -எம்பெருமானார் புகழ் அறிந்த அடியார் வழங்குவது இவை
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
புலன் புரந்து பொன் விளைந்த களத்தூர் நெல் -மணிகள் -பொன் ச்ப்ருஹநீயமாக
கயல் உகள ஸ்திரீ கயல் கண்ணி காரிகையே சரணா கத  கண்டு களித்து
கண் -ஞானம் –
குவளைப்பூ -சாமான்ய புஷ்பம் -சிஷ்யர் பொறி வண்டு -அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆசார்யர்கள் -நம் இடம் உஜ்ஜீவிக்க திருத்தி –
தேங்காதே புக்கு இருந்து -அபேஷிக்கிற அளவும்  வழங்கி சொரிய –சீர்த்த முலை பற்றி வாங்கி
கிரந்தசதுஷ்ட்யம் முலை
11
சகடம்-சரீரம்
சேஷ பூதன் வாமன அவதாரம் காட்டி
பவனம்ராமன் -இலங்கை பிரம புரம் சரீரம் -அவன் கோயிலை நம்மதாக கொள்கிறோம்
அடுத்து சகடாசுரன் -சரீரம் போக்கி -திருவடி பற்றி மோட்ஷம் -எப்படி –
கன்று –கீழே இருக்க -இது கொண்டு -விளாம் பழம் உயரம் -இரண்டையும் அழித்து -கழல் போற்றி –
இரண்டு வஸ்து -அவன் தூர பிராட்டி கிட்டே -கன்று கிட்டே இருப்பது போலே
குன்று புண்ய பாவம் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -இதை கொண்டே காத்து
வென்று பகை கெடுக்கும் -அவனே நீக்கி –
ஆச்சார்யா பாரமாகவும் அர்த்தம் –
 20
பூ நிலைய ஐன்துமாய் சப்தத்தால் மங்களம் பூமி
பூ மன்னு
சப்தம் பொருள் இரண்டாலும் மங்களம்
பூ பூமி என்றும் கொண்டு -சிருஷ்டி பிராட்டி திரு முகம் கொண்டு
வணங்க வைத்து மோட்ஷம் கூட்டி போக -அங்கெ மன்னுகிறாள் –
மரு பிருகிறுதி அதிஷ்டான தேவதை – ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ நிவாசம்
பத்ம கோசம் இதய தாமரை –
மார்பன் சுபாஸ்ரம திரு மேனி –திவ்ய மங்கள விக்ரகம்
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் போல் பூ -மார்வன் –
 21
22
பல்கலையோர் -சாஸ்திர கலைகள் அறிந்த ஆண்டான் ஆழ்வான் போல் வர மட்டும் இன்றி
அனைவரும் மன்னி
சக்ருதேப்வ பிரபன்னாய இன்னார் இல்லை ராமன்
ராமானுஜர்

சர்வ பூதானாம் -அனைத்தும் போக்கி -என்றும் –அனைவர் இடமும் காத்து

நெஞ்சை கூப்பிட்டதும் -அவர் இடமே ஈடு பட்டு –
பாக்யம்பெற்றோம் என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
பூ மண்ணு -பொதுவாக பர ரூபம் சொல்லி -தன்னை அடைய தானே வலி -அங்கே பரம பதம் –
கள்ளார் -பச்சை மா மலை -அனைத்தும் தாமரை -அங்கு பரம் ஜோதிஸ் -இங்கு பொழில் போல் திரு மேனி –
அரங்கத்துக்கும் -அரங்கனுக்கும் அடை மொழி
குறையால் பிரான் -பாடாத -செவி அல்ல -நா அல்லா -உள்ளமாய் கொள்ளோமே அருளிய –
23
பிரியாது ஆள் செய்ய பிறப்பு அறுத்து -திரு வாட்டாறு -அரி ஆழி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
நாதனை நரசிங்கனை -பெரிய ஆழ்வார்
24
25
பயிரின் களை போல் அசுரர்களை களைந்தான் –
சேராதவரை –சேராமல்
நயவேன் பிறர் பொருளை -முதல் திருவந்தாதி -நள்ளேன் கீழாரோடு –
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் –திரு மாலை அல்லால் -நான்கும் -சொல்லி -வருமாறு நம் மேல் வினை
duty பிரஸ்ட் ot  பின்பு -வர்ணாஸ்ரமம் தர்மம் முக்கியம் –
வேதப் பொருள் நம் ஆழ்வார் சொல்லி
கலியன் -குறையல் பிரான் -குறை அல்லாதவர் -தீயவர் சேர்க்கை இன்றி
இவர் அவதாரத்தால் ஊர் பெயரும் குறையலூர் பிரான் உபகாரகன்
-நான் கண்டு கொண்டேன் -சொல்லிலும் நல்லாம் துஞ்சும் பொது நினைமின்
அங்கு மாறன் முன்பு சொல்லி -புகழ் மலிந்த -உலகு இயல்புக்கு மாறி –
இராமானுசன் தவிர –
ஓன்று -நெஞ்சு -ஓன்று அறியேன் -எனக்கு உற்ற பேர் இயல்பே -நாமம் சொல்லிய பலன் உடனே கிட்டியது
நம் கடைமைகளே பகவத் ஆராதனம் உள் கருத்து –

26

மனம் ஏவ பந்த மோஷ ஹேது
நெஞ்சை கொண்டாடுகிறார் மூன்றாம் பாசுரத்தில் –
பெரிய திருவந்தாதியில் மனசை உரு துணையாக ஆழ்வார் கொண்டாரே
முதல் ஞானம்
அடுத்து அனுஷ்டானம் கடைசி நிலை பேசி
இதில் உபகாரம் செய்பவரை ச்மரித்து -கிருதக்ஜன்
27
ஆதி வண்  சடகோப -திரு அவதாரம் -திரு வரசு திரு நாராயண புரம்
ஊழி முதல்வன் –நான் முகனை நாராயணன் படைத்தான்
தொகுத்த வரத்தனாய் -தோலாதான் மார்பம் -வகித்த வளை-மாலோலன் –
உயர்த்தி -சிருஷ்டி செய்தவன் நரசிங்கன் -உள் வாங்கி பிரளயத்தில் –
அரு நான்கும் ஆனான் -தேவ மனுஷ்ய -அறிய முடியாமல் உள் இருக்கிறாய் –
செல்லப்பிள்ளையும்  திரு நஷத்ரம் அன்று இங்கு எழுந்து அருளுகிறார்
28
கிடாம்பி ஆச்சான் -மடப்பள்ளி வந்த மணம் -திரு நஷத்ரம் தேசிகன் சன்னதி
செல்லப்பிள்ளை இங்கே எழுந்து அருளி
முன்ப்ற்ற நெஞ்சே முயற்சிசுமந்து எழுந்து -சகாவாக கொண்டார் முன்னம்
வேதாந்தம் -அதில்
அனுஷ்டானம் இரண்டாம்பாட்டில் -நெஞ்சை கொண்டாடி மூன்றாம் பாசுரத்தில் புகழ்ந்து

29

ஆழ்வார் உத்சவம் முதல் மூன்று நாள்கள் அஹோபிலம் ஜீயர்
ஐந்தாம் பாசுரம்-
நான்காவது பாசுரம் -அடியார் இடம் சேர்ந்த நன்மை பேசினார் -கூரத் ஆழ்வான் –
கானம் சேர்ந்து உண்போம்
நாகம் திருப்பி -வைகுண்டம் –
திருவடி நிழல் முன்னாடி பார்த்து சாயை போல் பின்னாடி பார்த்து பெரும் பதம் எய்துவோம்
இயல்பு இது என்றே ஸ்வாபம்-பக்தியே ஸ்வாபம் கொண்டாடுவார்கள் –
இயல் கட்டளை கலித் துறை
அடுத்து பக்தி இல்லாவிடிலும் -அவர் கீர்த்தி –
முயல்வது -யதா சக்தி
உபநிஷத்தும் சொல்லி பின் வாங்கினது போலே
முயல்கின்றணன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே மதி இன்மையால்

30

33

பேர் இருள்
 இருள் -தேக ஆத்மா -சாருவாக மதம் ஓன்று தான் -ஆத்மா ஒத்துக்காத மதம்
கண்டதே காட்சி கொண்டதே கோலம்

34

35

பாண் பெருமாள் பத்தும் பழ மறையின் பொருள்- என்று பரவுகின்றோம் தேசிகன்
16 பாதங்கள் ஸ்ரீ பாஷ்யம்
10 தத்வ ஞானம் மோஷ உபயதுக்கு -அகில புவன அ காரத்தில்
மேல் உபாசனம் -பிரம ப்ராப்தி -ஹிதம் புருஷார்த்தம் –
பலம் சொல்லும் பலாதிகாரத்திலும் உக்தம் உண்டு –
உபாசனம் சொல்லும் பொழுதும் -உக்தம் -உ காரத்தில் ஆரம்பித்து -நடு எழுத்தாக –
சர்வ சமஞ்சயயம்-ம காரத்தில் முடித்து

36-

இடம் கொண்ட கீர்த்தி -ஷேத்ரத்துக்கும் ஆழ்வாருக்கும் சேரும்
உலகும் வலிது –
வேத செழும் பொருள் நான்முகன் -கொண்டே ஸ்ரீ பாஷ்யம்

முன்பு அகரம் உகந்த மந்தி -அகில புவன

அகில புவன -ஜன்ம ச்தேம பங்காதி லாலே -மங்கள ச்லோககங்கள்
விநித விகித பூதவ் விராத ரஷைதாக தீஷே –
மூன்றாம் அடி -அந்தாதி -சுருதி சிரஸ் இதீஷே பிரமனே  ஸ்ரீநிவாசே -பிரகாசிக்கும் ஜோதி
மேலிட்டு -பிரகர்ஷம் -ஈடுபாடு -பிரகாசிக்கும் -பக்தி மேல் இட்டு இருக்கும்
பக்தி ரூபா -பவது மம சரசி ஷேமுஷு பக்தி ரூப
நாரணனை நன் முகனைப் படைத்தான்
யான் முகமாய் சங்கரனை தான் படைத்தான் -யானே என் தனதே இருந்தேன்
யானும் நீயே என் உடைமையும் நீயே
தன்னையே நாடித் தொளுவருக்கு தன்னையே ஒக்க அருள் தருவான் –
மந்திர ராஜ பத ஸ்தோத்ரம் நரசிம்கன் தொழுது முக்கண்ணன்
பிரதோஷ கால பூஜை
யான் முகமாய்  அந்தாதி -என் மூலமாக வெளி இட்ட –
வேதாந்தத்தில் ஆதி -ஆதி அம் சோதி உரு -அவன் தானே –

மேலிட்டு அறிவித்தேன் ஆல பொருளை –

ஆழ பொருளை –
பாராசர்யா -வாக்கு அமிர்தம் -உபநிஷத் ஆகிய பாற் கடல் -மத்யத்தில் இருந்து ஏகப் பட்டது -ஆழ பொருள்
அறிவித்தேன் -சொல்லுதல்-ஹிதம் -அநிஷ்டம் போக்கி இஷ்டம் வர -சம்சாரம் அநிஷ்டம் -கைங்கர்யம் -இஷ்டம்
ஆத்ம சஞ்சீவன மருந்து -சம்சார அக்நி-சிந்தாமல்-அபாத்ரம் -பூர்வாசார்யார் சுரஷதாம் -சிந்தாமல் காத்து
பகு மதி -தூரஸ்த்திதாம் -ரகஸ்யம் –
கொள்மின் நீர் -நீர் கொள்மின் -ஒவ்ஷதம் ஜன்மதி தோயம் -நீர் -பிதந்து-பருகு வீர் -சுமனசா –

தேர்ந்து –

போதாயன விருத்தி கிரந்தம் -திராவிட உபநிஷத் சுருக்கம்
சூத்திர ஷராங்களுக்கு  வியாக்யானம் செய்கிறேன் தேர்ந்து –
இணை அடி கொண்டு -ஸ்ரீ பாஷ்யம் சாதித்தார்

37

பொய்கை -அனுஷ்டானம்
பூ – சத்தாயம் –
சேஷத்வ ஞானம் அடுத்து
பாகவத சேஷத்வம் -சாரம் பாண் பெருமாள்
அவன் ஒருவன் தான் ஏக தத்வம் -ஜகத் காரண பூதன் -திரு மழிசை
அதுக்கு காலையில் திரு நாம சங்கீர்த்தனம் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
பள்ளி உணர்த்தி அடியார்க்கு ஆள் படுத்தி
அளியன் நம் பையல் –
செய்யும் -தானே தோட்டங்கள் வைத்து -தானே பறித்து -பசுமை – -துளவ மாலை
பேராத சீர் -வீடில் சீர் அரங்கனுக்கும் ஐயனுக்கும் சொல்லலாம்

38

தோள் இணை மேலும் -நன் மார்பின் மேலும் தாழ் இணை மேலும்
தோள் மாலை யாயினும் தளம் ஆயினும் வேர் ஆயினும் கொம்பு ஆயினும் மண் ஆயினும் கொண்டு வீசுமினோ
மண்-கர்ம யோக நிஷ்டர்
வேர் -ஞான யோக நிஷ்டர்
கொம்பு -பக்தி யோக நிஷ்டர்

தளம் -பிரபத்தி

தொல் அருள் -சரணா கதி –
எங்கள் மேல் விழியாவோ -பலருக்கும் ஒருவரே பிரபத்தி செய்யலாம்
செய்யும் பசு துளவ மாலை -திருவடியில் சமர்ப்பிக்க –
எம்பெருமானார் –
மிக்க சீர் தொண்டர் அடி இட்ட பூம் துவள வாசனை -ஆழ்வார் –
ராமானுச -காதல் செய்யும் திடம் கொண்ட –
வண்டு கொண்டு ஊதுமாகில் –
தொண்டர் –
பண்டை நாள் ..நின் திரு அருளும் கொண்டு -குடி குடி ஆள் செய்யும் தொண்டர் -மிதுன கடாஷத்தால் தொண்டு
சீர் தொண்டர்
குடிக்கு கிடந்தது ஆக்கம் செய்து — நின் தீர்த்த அடிமை குற்றேவல் -பரம எகாந்திகள்
அடியயோர்க்கு அருளி -தீர்த்த அடிமை அடுத்த பாசுரம் -கல்யாண குணங்கள் நிறைய பெற்ற தொண்டர்
மிக்க சீர் தொண்டர் -தொண்டர் அடி பொடி –
தொல் அடிமை -இடம் கொள் -தொடர்ந்து குற்றேவல் செய்து –

39-

முதல் பதிகம் அவா பாரிப்பு -என் கண் இணைகள் என்று கொலோ காணும் நாளே
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே -கண்ணாரா கண்டு உகக்கும் காதல் தன்னால்
அடுத்து பாகவத கலவி எப்போ கிட்டும் அவா பாரிப்பு அடியார்கள் தங்கள் குழாம் கண்டு யானும் இசைந்து –
தொண்டர் அடி பொடி ஆட நாம் பெறில் -கங்கை நீர் ஆட வேண்டாமே -பெரும் சேறு என் சென்னிக்கு அணிவனே
எல்லையில் அடிமை திறத்தினில் மேவும் நாள்
மூன்றம் பதிகம் கிடைத்த படியை அனுபவம்சொன்னார் -பித்தனே -யானும் ஒரு பேயனே –
நான்காவது -இரண்டாவது பாகவத சேர்க்கை கிடைத்தது பற்றி பேசி -குருகு மீன் -ஏதேனும் ஆவேனே –
ஐந்தாவது -தனக்கு உண்டான சம்சார பயமும் -அவனையே உபாயம் -புகல்-
ஆசார்யர் பெற ஆறு வேண்டுமே ஆச்சார்யா ப்ராப்தி
ஈஸ்வர சொவ்கார்த்தம் –
யதிர்ச்சா சூக்ருதம்
ஜாயமான கடாஷம்
அத்வேஷம்
ஆபி முக்கியம்
சாத்விக சம்பாஷணம்
குருகு வெண்மை சாத்விக -தன்மை சின்ன மீன் கொள்ளாமல் -சலனம் இன்று
உறு மீன் வரும் அளவும் -அல்ப பலன் இன்று பேரின்பம் ஒன்றே வைஷ்ணவன் –
ஆசையோ பெரிது அலைகடல் வண்ணர் மேல் –
கோனேரி வந்து கைங்கர்ய பரர் மூலம்  இந்த தன்மை அவர்கள் பார்த்து வரும் –
போப் வட்டில் -விஷ்ணு கடாஷம்
அடுத்து அத்வேஷம் இன்றி ஸ்தாவரம் -செண்பகப்பூ
தம்பகம் –
ஆறு போலே பாயும் -பாகவதர்கள் -உபயோக்கிக்க
மேல் இருந்து கீழே வந்து
பிரவ்ருத்தி தர்மம் காட்டும் -கருத்து உடையேன் ஆவேனே
சரீர தர்மம் சாஸ்திர விதி என்று அவன் ப்ரீதிக்கு
நெறி -திருவடி சேர்க்கும் –
படி -ஆசார்யர் திருவடி பட -பவள வாய் காண்பேனே அடுத்து
ஏதேனும் -பாகவதர் உகந்த கைங்கர்யம்

40

கண்ணி நுண் சிறு தாம்பு
பத்தும்
அடியார் சங்கரகம்
ஒவ்வொரு பத்தும் அடியார் பக்கலில் சொல்லி –
ஆழ்வார் -தாயின் இன்பம் –
1இன்பத்தில் ..2 இறைஞ்சுதலில்3 இசையும் பேற்றில்4 -ராகம் மாற்றப்பட்டு -பறவை கூம்பில் –
5தன் பற்றில்- வெம் கதிரோன் தன் பக்கல்
6வினை விலக்கில் -அகிஞ்சனன் ஆக இருந்து அவனையே பார்த்து –

7அநந்ய கதித்வம் சக ஒக்கத்தில் -ஆறுகள் கடலிலே சங்கமம் –

8தத்துவத்தை உணர்த்துவதில் -நின்னையே தான் வேண்டி -நிற்பன் அடியேனே
மற்று யாரும் பற்றிலேன் என்று –
தன்மை ஆக்கில் தொல் வழியே –

41-

ரகஸ்ய மாத்ரிகை -கிரந்தம் – செம் பொன் கழல் இணையை செய்யாள் அமரும் திருவரங்கர்
அன்பவர்க்கு அடியவராய் அடி சூடிய நாம் உரைத்தோம் -அடியவர் குலசேகர ஆழ்வார் –
இன்ப தொகையை அனைய – -மூன்றின் எழுத்தின் அடைவே -ஐம்பத்து ஒரு பொருள் ஆர் உயிர் க்கு  ஆக்கும் அமுது –
ஆஸ்ரித -முதல் ஐந்து திரு மொழி – ஆஸ்ரிதர் அச்சம் தீர்த்த -மேல் அவதார லீலைகள் அப்புறம் -காட்டாறு வெள்ளம் போலே இவை –
தேங்கினமடு போலே அர்ச்சாவதாரம்முதல் ஐந்தும் -பின்னானார் வணங்கும் ஜோதி –
முதல் முப்பது வாக்யங்கள் திரு அஷ்டாத்ரம் –
40 வரை த்வயம்
41 51 —11 வாக்யங்கள் சரம ஸ்லோகம்
சில்லறை ரகசியம்
ரகஸ்ய   த்ரய சாரம் –
கொல்லி காவலன் கலை பதித்த –

42

51 பாசுரங்கள் திவ்ய தேச பதிகங்கள் 5 -30 பாசுரம் திருவரங்கம் திரு மந்த்ரம்
11 பாசுரங்கள் திருவேம்கடம் 11 த்வயமும் சரம ஸ்லோக அர்த்தம் தரு துயரம்தடாயேல் அனுசந்தானம் செய்யலாமே
திரு மந்த்ரத்தில் -முதல் பதத்தில் ஞானம் தோன்றி முளைத்து -இரண்டாம் பதத்தில் வளர்ந்து
மூன்றாம் பதத்தில் பல பர்யந்தம் -அதுக்கு வழி காட்டும் த்வயம்
கோனேரி வாழும் குருகு வைஷ்ணவ லஷணம் கொக்கு போல்
மீன் -நித்ய யோகம் மத் போலே
இப்படி 51 அர்த்தங்கள் அருளி
நாராயண அர்த்தம் சௌசீல்யம் சௌசீல்யம் பொன் வட்டில்  ஏந்தி புகப் பெறுவேன் ஆவேனே
சரணவ் -திருவடி-திரு மேனி செண்பகமாய் -தம்பகமாய்
தபஸ் உடையவன் -சரணாக கொள்ளும் -கம்பத்துக்கு தெண்டம் போலே விழ –
பிரபத்யே -அடிக் கீழ் அமர்ந்து புகுந்து மகா விசுவாசம்-அத்யவசயாம்-அரும் தவத்தவன் ஆவேனே
கானாறாய் பாயும் கருத்துடை-பலன் கருதாமல் கருமம் செய்வதை காட்டும் –
நெறியாய் கிடக்கும் பாதை உபாயம்-திரு வேம்கடம்-வெறியார் தண்  சோலை -ஸ்ரீ உடனே இருக்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் -மா சுச -சொல்லிய வாயை -சோதி வாய் திறந்து அருளிய சரம ஸ்லோகம்
நிரதிசய போக்யத்வம் -வகுத்த சேஷி
பொன் மலையில் ஏதேனும் -தன் இஷ்டம் கலக்காமல் களை அற்ற படி அவன் சங்கல்பம் அடியாக –
வித்துவக்கோடு பதிகம் -பரித்யஜ்ய -கை முதல் இன்றி -விட்டு விட்டு -ஆகிஞ்சன்யம் முன்னிட்டு
அருள் நினைந்தே –
மாம் -பத அர்த்தம்- மலர் மகள் விரும்பும் -நமரும் பெறல் அடிகள் -கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல் –
ஏகம்-ஒருவனை–தாமரையாள் கேள்வன் ஒருவனை நோக்கும் -கார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போல் –
பற்றிலார் பற்ற நிற்கும் படியை எம்பெருமான் இருக்கிறான்
சரணம் -வகுத்த சேஷி-மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் –
செங்கமலம் வெங்கதிரோனுக்கு அல்லால்-அலராது-அஹம் சப்தார்தம்
த்வா -உன்னை-கைக் கொண்ட பின் யாரால் குறை-மா முகிலே பார்த்து இருக்கும் –
சர்வ பாபேப்யோ -நானே நானா வித நரகம் புகும் பாவன் செய்தேன்-
ஆறுகள் மேடு பள்ளம் போய் கடலை கலப்பது போல் –
மோஷ இஷ்யாமி–நின்னையே தான் வேண்டி -தன் பால் மனம் வைக்க திருத்தி –
மாசுச -வாக்கியம்-செய்த வேள்வியர் –
வித்துவக் கோட்டு அம்மா நீ வேண்டாதே யாகிலும் –

43-

மகா வீர காவ்யம் கொல்லி காவலன் கலை பதித்த தேசிகன்-
ரகஸ்ய சாரம் 51பாசுரங்கள் கொண்டு அனுபவித்தார் –
கொல்லி காவலன் கலை சொல் -பதிக்கும்-பாடும் பெரியவர் பாதங்களை –
அனுபவ பரிவாக ரூபமான உக்தி மா முனிகள் உரை -ரத்னங்கள் பதித்து போல் நிறைத்து வைத்த
சாஸ்திர ரூபமாய் இருந்து உள்ள கவி –
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன் -இரண்டுக்கும் கர்த்தா –இவர் சோராத காதல்
நீ என்னை இன்றி இல்லை நான் உன்னை அன்று இல்லை -அங்கு
நவ வித பக்தியும் காட்டி -காப்பிட்ட பதிகத்தில்
சீத பரதன் சபரி -அங்கும் நவ வித பக்தி
ச்ரவணம்-சுளிப்பாள் -மீண்டும் மீண்டும் இதே நவ வித பக்தி காட்டி இருக்கிறார் –
பிறந்தமை விரித்து உரைத்த –முதலில்
விருப்பால் உரைத்த -கீர்த்தனம் -அவள் சொன்ன படியே
மாணிக்கம் -ஆய்ச்சி தாலாட்டிய -விதைத்ததை நினைத்து ஸ்மரணம் இது
சந்தரனை அழைத்து ஒப்பன சொல்லி -மேன்மை சொல்லி -இகழேல்-பத சேவனம் சொன்னபடி
செங்கீரை -அர்ச்சனம் -ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுக -சம்போதித்து பாடுகிறார் –
சப்பாணி -வேட்கையால் சொன்ன -சப்பாணி ஈரைந்து -அவன் தட்ட நாம் அஞ்சலி –
தளர் நடை நடவோனா தாயார்  மகிழ –பிரதி கூலர் தளர -தாஸ்யம்
அச்சோ பருவம்-அணைத்து கொண்டு -குகன் -மாருதி சுக்ரீவன்-விபீஷணன் பரிஷ்வங்கம்- தோழமை  –
சக்யம்
புறம் புல்குதல் அடுத்து -கொஞ்சம் வாசி- முதுகில் தூக்கி -நாம் முன் அவன் பின் –
ஆத்மா சமர்ப்பணம் -பண்ணியவரை -கௌஸ்துபம் ஸ்தானம் -ஒன்பதாவது பக்தி –
அச்சோ அணைக்கும் பொழுதும் மார்பு படியுமே –
ரத்னம் -கட்ட வேண்டுமே
மேலும் ஒன்பது வித பக்தி சுளிப்பால் நிறைய சோராத வரும் மேலும் –
தொல்லை மாலை- நெய்க்குடம் – மெய்க்கொண்டு வந்து புகுந்து -வேதப்பிரானார் கிடந்தார் –
அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்ந்தாலும் -தன்னை வணங்க இசைவித்து –
தென் புலத்து -தூதுவரோடு ஒழித்தார்
பண்டு அன்றுபட்டினம் காப்பே –

–44

சோராத பெறும் சுழிப்பு- சுந்தத் தோழனுடைய சுழலில் நின்று உய்துன்களோ ஆண்டாள்

நல்லை நெஞ்சே -மாதர் -ஆயிரம் தோளன் -ஆஸ்ரிதர் அனுக்ரகம்
நான்கு புருஷார்த்தம் நான்கு தோள்கள் -பல்லாயிர கணக்கில் பலர் பல அபெஷிக்க அசந்கேய தோள்கள்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்-பிராட்டி அணைக்க -மாலோலன் நித்யமாக இங்கே ஆலிங்கனம்
சத்ரு ஹந்தாராம் மக ரிஷி சுகம் கொடுத்த பர்த்தாரம் பரிசஷ்யதே சீதை பெருமாளை அணைக்க –
அவன் கோயில் நம் சரீரம் உணராமல் இருக்கிறோம் -தொல்லை மால்- 5 2 பெரியாழ்வார் நெய் குடத்தை பற்றி
பண்டு அன்று பட்டணம் காப்பே –

வேதப்பிரானார் கிடந்தார் –

உறகல் உறகல் பாகவதர் விக்ஜாபனம்

தொல்லை மாலை ஒன்றும் பாராதவனை

45

ஒன்றும் எதிர்பாராமல் கூரை சோறு இவை கேட்க்காமல்

இந்திரனோடு பிரமன் பதிகம்-நவ ரசம் சொல்லி காப்பிட்டார் -அந்தியம் போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய்

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர்

சேவடி செவ்வி திருகாப்பு

46
ஸ்ருங்கார –ஷாந்தி ரசம் கூடி ஒன்பதும் சேர்ந்த காப்பு இடுவது –
அந்தி /அந்தி இரண்டுமே -வீரம் அடுத்து -குழந்தை கொஞ்சி -இவர்கள் பய சங்கை நால் சந்தியில் நிற்காதே –
வீரம் பிரதானம்–அற்புதம் ஆஸ்ர்யம் -ஹாஸ்யம்-பயம் அஞ்சுவன் -கள்ள சகடம் உதைத்த பிள்ளை அரசே –
திரு காப்பு சாத்த ஷாந்தி ரசம்-ஒன்பதையும் -ரஷை தான் திருக்காப்பு -பூரணமான ரஷை –
சேஷிக்கு அதிசயம் விளைத்தல் -சைதன்ய விசேஷம் –
பான்மையன் -பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் -ஒன்பதையும் இட்டு ரஷை –
ஒன்றும் பாராதவனை அவாப்த சமஸ்த காமன் -ஒன்றும் பாராது -அவனை பிரித்து இரண்டு அர்த்தம்
ஆக்ஜா கைங்கர்யம் முக்கியம் கிரிசைகள் -பான்மையன் ச்வாபம் -நித்ய நைமித்திய கர்மங்கள் விடாமல் –
பரகத அதிசய -ஆதாநேசய-உபாதயத்வ யஸ்ய ஸ்வரூபம் – பர சேஷி -வர்ணாஸ்ரம தர்மங்கள் உடன் கூடிய
-உபாசனம் வேண்டும் -இங்கு தான் சாரா மனிசரை சாரா மனிசரை சேரேன்
பிறங்கிய சீர் சேர்ந்தவரை சேருவேன்
இரண்டு negativu சொல்லி -மற்று ஓர் தெய்வம் இருப்பார் உடன் ஒற்றிலேன் போலே –
47
வணங்கும் துறைகள் பல பல வாக்கி -மதி விகர்ப்பால் பிணங்கும் சமயம் பல பல -திரு விருத்தம்
முறையால் வணங்கின நான் மறையாளர்கள் இருந்தனர் தில்லையில் -முன்பு சபா பதி
48
தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து -வைஷ்ணவர்கள் கூட –
சூத்திர காரரே பாஹ்ய குத்ருஷ்டிகள் -அப்பொழுதே உண்டே இவர்கள்
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் மாட மயிலை -அனைவரும் ஸ்திரீகள் பர்ரதந்திரமே ஸ்வாபம்
பண்டு அரங்கனருக்கு  துழாய் மாலை முடி சூடி கொடுத்த மாதே -ஆண்டாள் -தேசிகன் –
49
தொல் அருள் குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது

பாரார்த்த்யம் அறிய பண்ணி –

யானே என் தனதே போய் யானும் நீ என் உடை,மையும் நீ உணர்ந்து
அன்று நான் பிறந்திலன் பிறந்த பின் மறந்திலேன்
கொள்ளாமல் போகாது -அத்யாபயந்தி
கூடல் பதிகம் -பெரி ஆழ்வார் சம்பந்தம் சொல்ல வில்லை
கண்ணன்  என்னும் கரும் தெய்வம்-அவனுக்கே அற்று -இம்மை பிறவி செய்யாதே –
ஆச்சர்ய நிஷ்டை -அருளிய தொல் அருள் -இதையே மனனம் செய்த மா முனி
50
துலா மாசம் பேய் ஆழ்வார் நிறுத்து வைத்தது போல் -தேசிகன் –
சக்கரத்தான் தாள் நமக்கு சார்வு –
51
வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா -தன்மை
கண்ண மங்கை -சொல்லி
சாரம் பூர்வம் -பிரணவம் சாரத்வம் போலே சமஸ்தானம் கொண்ட பாஞ்ச சன்யம்

சப்தத்தாலும் -உருவத்தாலும் சாரம் போலே –

சொல் ஆழி வெண் சங்கே -ஆண்டாளும்
மணியை வானவர் கண்ணனை –
கண்ணா -தலைவன் நிர்வாகன் -அறிவு புகட்டி –
ஞானம் ஸ்வரூபம் ரூபம் குணா விபவம் விபூதி காட்டி -ஞானம் புகட்டி ரஷகன் சேஷி ஆத்மா சரீரம் பாவம்
உபாயம் உபேயம் -அனைத்தையும் காட்டி -உன் தனக்கும் குரிப்பாகில் கற்கலாம் –
கற்கலாம் திரு செவி சாத்தலாம் -கலை பரவும் தனி யானை
துருவனுக்கும் சங்கு தீண்டி நல் ஞானம் அளித்தது
பீதக வாடை பிரானார் பிரதம குரு -குறிப்பாகில் திரு உள்ளம் –ஆகில் –

யானைக்கும் அவனுக்கும் சாம்யம் –

பெரும் புறக் கடலை -விசாலம்-கடலும் புறமும் விசாலம்-
அடல் ஏற்றினை -செருக்கு உடைய -நிரந்குச ஸ்வா தன்ரியம் கொண்டவன்
பெண்ணை யானை -மிதுனம் –
எண்ணில்-அசந்கேயமான -முனிவர்க்கு அருள் தரும்
பத்தர் ஆவி-பக்தர்க்கு ஆவி-பக்தர் இவனுக்கு ஆவி – ஞானி ஆத்மைவ மேமதம் –மம ஆத்மா -பிரிய மனம் இன்றி
நித்திலத் தொத்து முத்து குவியல்-நிரதிசய கொள்ளக் குறை இலன் வேண்டிற்று எல்லாம் அளிக்கும் மணி வண்ணன் –

52

அரும்பு யுவா குமார -அலரை -த்யானம் செய்பவர்களுக்கு –
அமுதம் பொதியும் சுவை கரும்பினை-கனியை -உபாயம் உபேயம்-கரும்பும் கனியும் –
பெரியது சத் இருப்பது பிரமம் -க்ருபா சமுத்ரம் -விசிஷ்ட அத்வைதம்-கடல்-பெரும் புறம் வைத்து
சித் அசித் விசிஷ்ட -நிர் குணம் இல்லை –
திருக் கண்ண மங்கை -ஒரே திவ்ய தேசம் மிதுன பெயர் விளை நிலம் –

53

நீலன்-கலி கருமை நீலன் தனக்கு –
நான்கு விதம் -காக்கும் கண்ணன் உடையவன் காப்பான்
முனிய வேண்டாமே உடம்பு பகுதியில் வாசி பார்க்க வில்லையே நாம் –
மிதுனம் இருப்பதால் -நிச்சயம் காப்பான் –
அடைதல் -ஞானம் கத்யர்த்தா புத்யர்த்தா
எய்தற்கு அரிய மறைகளை –
54
பொலிந்து நின்ற பிரான்-ஸ்திர பிரதிஷ்டன் சர்வச்மாத்பரன் -சலிக்காமல் உபகாரம் செய்யும் பிரான் –
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கு –
பெரியவர் -மதுர கவி–ஸ்ரீ ஆண்டாள் -பூதம் எதீந்த்ரர் பாஷ்ய காரர் – மிஸ்ரான்-மதுர கவி -அவயவங்கள்
55
உறு பெரு -செல்வம் -தந்தை தாய் அனைத்துக்கும் அந்வயம் –
மாதா பிதா -நம் ஆழ்வார் விஷயம் ஆள வந்தார்
அபிம்தன தன்ஜயம் – அப்பு இந்தனம் -தனம்-சரீரம் -பயன் அற்றது -வரதராஜ -தேசிகன்-இது உறு பெரும் செல்வம்
தனஞ்சய நிவர்தனம்-கோவர்த்தனம் -உபாதனம் அபாதனம் –
வரவாறு ஒன்றும் -வாழ்வு இனிதாய் -உரு மாறி தானே இருந்தான் -ஆயன்-
அளவிறந்த அந்தாதி ஆயிரம்-கல்யாண குணங்கள் -அளவு இன்றி

56

த்வத் ப்ராப்ய த்வமேவ -சாதனம் அவனை அடைய அவனே வழி -இதை சொல்லவே அருளி செயல்-
சம்சார நிவர்தக திரு மந்த்ரம் உபதேசித்த ஆசார்யர் மூலம் –
யானே என் தனதே இருந்த நிலை மாறி
யானும் நீ என் உடைமையும் நீ –
சீர் தொடை ஆயிரம் -மாறன் சீர் என்றும் திரு வாய் மொழியும் சீரும்
பர பக்தி பர ஞானம் பரம பக்தி -ஆழ்வாருக்கு
வகுளாபிராமம் ராமானுசன் -அவருக்கு அனுஜன் –
ஓடித் திரியும் யோகிகள் முதல் ஆழ்வார் -இடை கலி இருந்த இடத்தில் சேவை
திர்ஹன் இருப்பிடம் அழைக்கப்பட்டு -அடுத்து சேவை சாதிக்க
ஆழ்வார் சொன்ன படி இருந்ததை காட்டி -அர்ச்சாவதார சமாதி கடந்து
அதிலே இருந்து அழகை காட்டி ஆள கொண்ட தொண்டர் அடி பொடி ஆழ்வார்
கர்ம ஆராதனம் பொய்கை நீர் வேண்டுமே பொய்கை ஆழ்வார் முதலில் சொல்லி -தேவ அர்ப்பணம் வந்தோம் –
அடுத்து -இதயத்து இருள் கெட இறை -உடையவன் காட்டி -அடுத்து சொல்லி -நாராயணன் -பர்யந்தம்
அடுத்து மா மலராள் தன்னோடு மாயன்-திருமால் காண்பித்த –
சாஸ்திரம் தான் -அனுபவித்து அருளி செயல்-
சீரிய நான் மறை செம்பொருளை செம் தமிழால்  அளித்த பாண் பெருமாள்-
இடம் கொண்ட கீர்த்தி -உலகு வைத்து எடுத்த பக்கம்-புலவர் புகழ் கோலால் அளக்க -கற்று தெளிந்து
இனி அறிந்தேன் -காரணம் நீ கற்றவை நீ-தேறின பொருள் பரமத நிரசன பூர்வகமாக அருளியவர் –
சரீரம் ஆத்மா உடன் அவனை அணைந்து இருக்க வேண்டுமே அவன் என்று அறிந்த பின் –
தோளில் மாலை சரீர பிரத்யுக்தம் செம் தமிழ் மாலை ஆத்மா -விட்டு பிரியாமல் –
உற்றமும் உன் அடியார்க்கு அடிமை கொல்லி காவலன் -ஆழ்வாருக்கு   விசெஷணம் இங்கே சொல்ல வில்லை –
உயிர் கொல்லி அஹங்காரதிகள் கொன்று பாகவத நிஷ்டை அருளியவர் -அவர்களுக்கு வாரம் கொடுத்த
கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என் ஆவதே –
கர்ம நிஷ்டையுடன் பல்லாண்டு காப்பு -இடுவது -பெரி ஆழ்வார் நிஷ்டை சொல்லி
ஆண்டாள்-
விசிஷ்ட அத்வைதம் காட்டிய கண்ண மங்கை நின்றான் நீலன் –
மிக்க வேதத்தின் உல் பொருள் நிறுத்தினான்
‘திருவாய் மொழியே தாரக போஷாக போக்யங்கள் –
57
ஆரப் பொழில் சந்தன மரங்கள் சூழ்ந்த -கோதா ஸ்துதி ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன வல்லி
கோல் தேடி ஓடும் – -ஹரி சந்தன மரம் சுத்தி உள்ள கொடி –
மாக வைகுந்தம் ஏகம் என்னுமே  ஆகம் சேர் -நர சிங்கமதம் ஆகி –
அவனை காண ஏகம் என்னும் -இரும் தமிழ் நூல் புலவன் –
ஒன்பது நரசிம்கர் மட்டுமே சிந்தனை பண்ணி –
இரும் தமிழ் சாரம் -நவ வித புக்தி -கற்றவர் – ஈரத் தமிழ் இசை உணர்ந்தோர் க்கு இனியவர் –
58
கல்பக கொடியாக ஆக்கக் கூடியவர் நம்மையும்
பிராட்டி அவனுக்கு போல் ஆரப் பொழில்
செய்த வேள்வியர் வையத்து  தேவராக -வாழ்வாராக ஆக்கி வைத்து –
திருவாய் மொழி இசை உணர்ந்த பெரியவர் சீரை பயின்று உய்யும்  சீலம் கொள் நாத முனி
நெஞ்சால் வாரிப் பருகும் இங்கு
திரு மழிசை -ஆழ்வார் இணை அடி -ஸ்ரீ பாஷ்யம் அருளி
பாண் பெருமாள் -சென்னிக்கு -பிரணவ -அகில புவன –உக்தம்-சமஞ்சசம் –
59
ஸ்தோத்ர ரத்னம் 65 ஸ்லோகம் – 8-  திரு மந்த்ரம்
25 த்வயம் 32 சரம ஸ்லோகம் அதனால்-
சதுச்லோகி -பிரம மீமாம்சம் 4 அத்யாயம் பிரமத்வமும் பிராட்டி மூலம் தான்
காரணத்வம்-விரோதி புற மத கண்டனம் -உபாயம் உபேயம்-
பிரேம பிரகர்ஷம் இயற்க்கை நாத முனிகளுக்கு -அதை பார்த்து அருள் பண்ணு ஆள வந்தார் –
60
நன் நெறியை அவர்க்கு  உரைத்த உய்யக்கொண்டார் -தேசிகன்
தூய நெறி -பிரபத்தி
யோக சாஸ்திரம் குருகை காவல் அப்பன் -பக்தி சாஸ்திரம் -அது நெறி இது தூய நெறி
தை புஷ்யம் வர நாள் குறித்து –
தூயோமாய் வந்து தூ மலர் தூவி தொழுது –தூய நெறி
உள்ளம் உடல்  தூய்மை இரண்டும்
வாயினால் பாடி சரீர சுத்தி
மனோ வாக் காயம் மூன்றும் சுத்தம்
உள்ள தூய்மை முக்கியம்-
மனத்திலோர் தூய்மை இல்லை-
ஆழியை அரங்க மாலை -அழுக்கு உடம்பு எச்சில் வாயால்-தூய்மை இல் தொண்டனேன் –
மனசால் அடிமை -தொண்டன் -சொல்லினேன் தொல்லை நாமம் –
மகா விசுவாசம் பூர்வகமாக வேண்டுமே –
யஸ்ய பிரசாதய கலையா – வரதனை சரண் அடைந்து -ஆள வந்தார்  எம்பெருமானாரை கடாஷிக்க வந்த பொழுது
சரம ஸ்லோகம் காட்டிய அந்த யமுனை துறைவன்
அருளிய தூய நெறியை இந்த யமுனை துறைவன் ஆள வந்தார்
எம்பெருமானாருக்கு காட்ட –
61
92-29
பாவினால்  இன் சொல் பன் மலர் கொண்டு -த்வயம் -அஷ்டாஷரம் வேத சாம்யம் –
த்வயம் அனைவருக்கும் அதிகாரம்
93-35
100-
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ .திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —

இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

March 26, 2014

ஸ்ரீ ய பதியால் மதி நலம் அருளப் பெற்ற நம் ஆழ்வார்
அவாவில் அந்தாதி -திருவாய்மொழி
அவா தூண்ட
ஆசார்யர் பாவம் ஆழ்வார் அவா
உபாத்யாயர் போலே
மைத்ரேயர் போலே

ஈன்ற முதல் தாய் சடகோபன்
வளர்த்த இதத் தாயா இராமானுசன்
பூதம் -எம்பெருமானாரையும் சேர்த்து அனுபவம்
திருவாய்மொழி வளர்த்த -வியாக்யானம் அருளச் செய்து
பிள்ளான்
வசந்த உத்சவம் திருவாய்மொழி சேவித்து பின்பு ராமானுச நூற்றந்தாதி
இளைய பெருமாள்
இளைய ஆழ்வார்
பராங்குச பாத பத்மம்
கண்ணி நுண் சிறுத் தாம்பு உத்சவம்
இராமானுச நூற்றந்தாதி தனியாக உத்சவம் திருமலையிலே
மூலம் பூராடம் ஆரம்பித்து குரு பரம்பரை -பஞ்ச சம்ஸ்காரம் சேனை முதலியார்

அகாரம் ஆழ்வார்
உகாரம் ராமானுஜர்
மகாரம் மணவாள மா முனிகள்
திருமந்தரம் தாத்பர்யம் இராமனுச நூற்றந்தாதி
ஆழ்வார் திவ்ய பிரபந்த சாராம்சம்
உபதேச பரம்பரை
பரம ரகசியம்
சரம பர்வ நிஷ்டை
எம்பெருமானார் கிருபையாலே அமுதனார் ஆழ்வான் திருவடிகளில் ஆச்ரயித்து
தர்சனம் எதா தர்சனம் பண்ணி
பிள்ளை அமுதனார்
தாம் அனுபவித்த அளவு அன்றிக்கே
பரம கிருபையால் நம் போல்வாருக்கும் அருளி
ஆழ்வார் திருவடிகளில் மதுரகவி
தாம் அனுசந்தானம்
பர உபதேசம் போலே
தம்முடைய நிஷ்டையும் அருளி
பத்து பாட்டு அன்றிக்கே

108 பாசுரங்களால்
சாவித்திரி போலே
பாட்டு தோறும் திருநாமம் வைத்து அருளி
ராமானுஜ திவாகரர்
வகுள பூஷன பாஸ்கரர் போலே
பிரபன்ன சாவித்திரி முதலிகள்
தம் திரு உள்ளத்தை குறித்து சொல்லுவோம் அவன் நாமங்களே
தாமரைப் பூவை இருப்பிடம் மாது
மாது பொருந்திய மார்பன்
சக்கரவர்த்தி திருமகனை பெற்றதும் திரு மிதிலை நினையாதாப் போலே
இறையும் அகலகில்லேன் நித்ய வாசம்
அவர் திருவடிகளிலே -மாறன் அடி பணிந்த -ராமானுசன் திரு நாமங்களை சொல்ல வேண்டும்
பல்கலையோர் தாம் மன்ன -எல்லா கலைகளையும் கற்றவர்கள்

கூரத் ஆழ்வான் தொடங்கி பலரும்
யாதாம்ய வேதனத்தாலே
திருவடி சேர்ந்த பின்பு அறிந்து கொண்டார்கள்
நாம் மன்னி வாழ
நெஞ்சே திரு நாமங்களை பேசுவோம்
அமுத கவி
மதுர கவி
ஆழ்வாரை பாடுவோர் அமுதம் மதுரம்
எல்லாம் அமிர்தம்-
பெரிய பிராட்டியார்
எம்பெருமான்
திருவாய்மொழி
நம் ஆழ்வார்
எம்பெருமானார்
பஞ்சாம்ருதம்
விண்ணோர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண் அமுது பிராட்டி
எப்பொழுதும் –அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுது அமுதை எடுத்தவன் அமுதம்
பா -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
ஆழ்வார் -மாறன் -அண்ணிக்கும் அமுதூரும்
மாறன் அடி பணிந்து உய்யும்
எனக்கு ஆரமுதே
இப்படி எல்லாரும் அமுதம்
பஞ்சாம்ருதம் அருளிய அமுதனார்

தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு சார்வு
ஸ்பஷ்டமாக அருளி பேய் ஆழ்வார் தமிழ் தலைவன்
பங்கய மா மலர் பாவையைப் போற்றுதும்

எம்பெருமானார் திருவடி பற்ற வழி
பங்கய மா மலர் பாவையைப் பற்றுதும்
சார்வு இது தானே
பிராப்யம் யாவதாத்மபாவி கை புகுர
பிராப்ய ருசி அபேஷிதம்
பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிக்கிறார் அமுதனார்
இராமானுசன் அடிப் பூ மன்னவே பாவையைப் போற்றுதும்
பக்தி தழைக்க
மயிர் கழுவி பூ சூடுவாரை போலே
தலை மிசை மன்ன
தர்சநீயமான கோயில் அம் கயல் வாழ்
திருமகள் சேர் மார்பன்
பூ மன்னு மாது பொருந்திய
நெஞ்சே உபக்ரமித்து தலைக் கட்டுகிறார்
ஸ்வரூப அனுரூபமான சம்பத்
பாகவத சேஷத்வம்
எல்லாவற்றுக்கும் அடி பெரிய பிராட்டியார்
பிராப்யம் ஆச்சார்யர் சரணாரவிந்தம்

முனி வேழம்
இது கொண்டு சூத்திர வாக்கியம் பொருந்த விடுவர்
வேதம் தமிழ் செய்த மாறன்
ப்ரஹ்ம சூத்திர வியாக்யானம் ஸ்ரீ பாஷ்யம்
தண்டம் திருவாய்மொழி
வளர்த்த இதத் தாய்
இயலாக சாதித்து
வியாக்யானங்கள் வளர்த்து
இதுவே கால ஷேபம்

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-முன்னுரை —

November 3, 2012

ஸ்ரீ .

ஸ்ரீமதே ராமானுஜாய நம.
அப்பன் திருவடிகளே சரணம் .

மீனே ஹஸ்தஸ முத்பூதம் ஸ்ரீ ரெங்காம்ருத மாச்ரயே

கவிம் பிரபன்ன காயத்ரியா கூரேச பத சம்ஸ்ரிதம் –

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது —

மானிடராய் பிறந்தாலும் -அலர்மேல் மங்கை உறை மார்பனாகிய -எல்லா வுலகும் படைத்து அளித்துக் காக்கும்  -ஸ்ரீ மன் நாராயணன் இடம் பக்தி பூணுதல் அதனினும் அரிது –

-அப்படியே வண் புகழ் நாரணன் திண் புகழ் பாடிவழிபட்டாலும் அவனிடம் அல்பமும் அஸ்திரமுமான ஐஹிக  பலன்களை அபெஷிக்கிறார்களே  தவிரஅழிவில்லாத பேரின்பம் தரும் மோஷத்தை அபேஷித்தல் அதனினும் அரிது –

அப்படியே மோஷத்தைஅபேஷித்தாலும் -கர்ம ஞான பக்தி -பிரபக்திகளை அவனை அடைவதற்கு உபாயமாக கொள்ளுகிறார்களேதவிர அவனையே உபாயமாக கொள்ளுதல் அதனினும் அரிது –

ஸ்வ யத்னம் தவிர்ந்து பகவத் பார தந்த்ர்யம்பிறப்பதே அரிது என்றால் -பாகவத பாரதந்த்ர்யம் பிறத்தல் அரிதினும் அரிது –

இத்தகைய சிறந்தபுருஷார்த்தத்தை அறுதி இட்டு உறுதியாக விளக்குவது -எம்பெருமானார் தரிசனம் -ஆகும் –

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்பதை அறுதி இட்டு அருளுகிறார் அமுதனார்

அமுதம் அமரகட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால் -அமுதிலும் ஆற்ற இனியன் –
அவன் அடி இணைகளை  உள் கலந்தார்க்கு ஓர் அமுது  –
அத் தூய அமுதைப் பருகிப் பருகிப் மாயப் பிறவி மயர்வு அறுத்தவர் மகிழ் மாறன் .
அவர் தொண்டர்க்கு அமுது உண்ணச்  சொல்  மாலைகள் சொன்னார் –
அத் தொண்டர் யார் ?-மந்திர ரத்ன அனுசந்தான சந்தத ஸ்புரிதாதரம்  -மந்திர ரத்னமாகிய த்வயத்தை விடாது
அனுசந்திப்பதால் எப்பொழுதும் அசையும் திரு வுதடுகளைப் பெற்றவர் -என்று அழகிய மணவாள மா முனிகளால்
பரிவுடன் போற்றப் படுவர் ஸ்வாமி எம்பெருமானார் –அவரே அன்று பாரத போர் முடிய பரி நெடும் தேர் விடும் கோனை
முழுது உணர்ந்த அடியார்க்கு அமுதம் –
அவ் அமுதம் திருவரங்கத்து அமுதனார்க்கு ஆரா வமுது –
அந்த அமுதம் அருளிய பிரபன்ன காயத்ரியை ஒழிவில் காலம் எல்லாம் அனுசந்த்த்திதவர் ஆழ்வார் திருநகரி
ஸ்ரீ உ வே வித்வான் திரு மலை நல்லான் சக்ரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் சுவாமி –
அமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதியாம் அமுதை  இ ராமானுஜர் அடியார்களாகிய நம் அனைவரையும் நிரதிசய ஆனந்த கடலில் அழுத்த –அமுத விருந்து -என்ற திவ்ய நூலை அருளி உபகரித்த மகா வள்ளல் ஆவார் –
ஆரா அமுதனை அருந்திய ஆழ்வார் -அருளிய அமுதை அருந்திய இராமானுசனை அருந்தி —அமுதனார் வெளி இட்டு
அருளிய இராமானுச நூற்றந்தாதியாம் அமுதை —இ ராமானுஜர் அடியார்களாகிய நம் அனைவரும் அருந்தி
நிரதிசய ஆனந்த கடலில் –அமுத விருந்து -மூலம் -குள்ள குளிர நீராட போதுவீர் போதுமினோ –

திரு மகள் கேள்வனான சர்வேஸ்வரனுடைய ஸௌ ஹார்த்தம் மூலமாகவே ஆச்சார்ய சம்பந்தம்சேதனன் ஒருவனுக்கு உய்வதற்கு வாய்ப்பாக சொல்லப்படுகிறது –

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாக இருக்கும்-

ஆச்சார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும்-

-பகவல்லாபம் ஆசார்யனாலே -ஆச்சார்ய லாபம் பகவானாலே—

உபகார்ய வஸ்து கௌ ரவத்தாலே ஆசார்யனைக் காட்டில் மிகவும் உபகாரகன் ஈஸ்வரன் .–

ஸ்வ   அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்டால் ஆச்சார்ய அபிமானம்  ஒழிய கதி இல்லை ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி -பிரபத்தியில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம்—இது பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதமாக்கும் பின்பு புஷ்பிதமாக்கும் -அநந்தரம் பல பர்யந்தமாக்கும்–

ஆச்சார்ய அபிமான நிஷ்டர்கள் அறிய வேண்டியவை அனைத்தும் விரிவாக விளக்கிக் காட்டும்–பிரபந்தம் இராமானுச நூற்றந்தாதி

பேறொன்று –மற்ற சரண் அன்றி -45 – எம்பெருமானாரை பற்றுகையே பிரபத்தி -அவர் திரு வடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம் -என்றும் –

-கையில் கனி -104 – எம்பெருமானார் திரு மேனி அழகை அனுபவிப்பதே அடைய வேண்டிய பெரும் பேறு -பரம ப்ராப்யம் -என்றும்-

-செழும் திரைப் பாற்கடல் -105 -இராமானுசனை தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடமே   போய் சேர வேண்டிய பரம பதம் என்றும்-

–இன்புற்ற சீலத்து – 107-உன் தொண்டர்கட்கே என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்து என்று அவர்  அடியார்க்கு அடிமை செய்தாலே பரம புருஷார்த்தம் என்றும்

எம்பெருமானார் முன்பே அருளிச் செய்து அவர் ஏற்று அருளுகையாலே இதனையே முக்கிய  பிரமாணமாக கொண்டனர் நம் பூர்வர்கள் .

நம் மணவாள மா முனிகளும் ஆர்த்தி பிரபந்தத்தில் -49 –

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்

எந்தாதை யான  எதிராசனை நன்னும் என்றுமவன்

அந்தாதி தன்னை அனுசந்தியுமவன் தொண்டருடன்

சிந்தா குலம் கெடச் சேர்ந்திடும் முத்தி பின் சித்திக்குமே– –

மனக்கலக்கம் கெட்டு சம்சாரம் நீங்கி முக்தி அடைய இராமானுச நூற்றந்தாதியை-அனுசந்திக்க

இராமானுச அடியார்கள் நமக்கு எல்லாம் அறிவுறுத்தி அருளுகிறார்-

எந்தாதை கூரேசர் இணை யடியோன் வாழியே

எழில் மூங்கில் குடி விளங்க இங்கு வந்தான் வாழியே

நந்தாமல் எதிராசர் நலம் புகழ்வோன் வாழியே

நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே

பைந்தாம அரங்கர் பதம் பற்றினான் வாழியே

பங்குனியில் அத்த நாள் பாருத்தித்தோன் வாழியே

அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே

அணி அரங்கத்தமுதனார் அடி இணைகள் வாழியே –

பூர்வாசார்யர்கள் அனைவரும் ஒருமிக்க தம் சிஷ்யர்களுக்கு -எம்பெருமானார்–திருவடிகளே தஞ்சம் என்று பற்றும் கோள் -என்று உபதேசித்த தஞ்சமான அர்த்தத்தை  யதார்த்தமாகவே தஞ்சமாக கொண்ட ஆச்சார்ய புருஷர் -ஆழ்வார் திரு நகரிஸ்ரீ உ வே வித்வான் திருமலை நல்லான் சக்கரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமி –  அமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதியாம் அமுதை அடியார்களாகிய நமக்கு விருந்திட்டு அக மகிழச்  செய்ய –அமுத விருந்து –என்ற திவ்ய நூல்திரு வல்லிக் கேணி ஸ்ரீ பார்த்த சாரதி திருவடிவாரத்தில் வெளி இடப்பட்டது —

நம் மணவாள மானிகள் அருளிச் செய்த வியாக்யானமும் பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானமும்  சேர்த்து இந்த அமுத விருந்துடன் -அடியார்கள் ஆனந்தமாக அனுபவிக்க -அடியேன்   ஆசார்யர் கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமி திருவடி கைங்கர்யமாக சமர்ப்பிப்பதில்  பெரு ஆனந்தம் அடைகிறேன் -இத்துடன் ஸ்ரீ  உ வே -வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்  விரிவாக அருளிச் செய்த கால ஷேப உரையின் கேள்வி ஞானம்மூலம்  அல்ப ஞானம் கொண்டு அடியேன் ஜல்பித்ததும் சேர்த்து இத்துடன் சமர்ப்பிக்கிறேன் –

இவை அனைத்தும் அடியேன் -blog -https://thiruvonum.wordpress.com
கடந்த வருஷம் ஐப்பசி திருவாதிரை அன்று வெளி இட்டு அடியேன் ஆசார்யர் நியமனம் நிறைவேற்ற பெற்றேன்
-எடுத்து  அளிப்பதிலும் அடியேனின் அல்ப ஞானத்தால் குற்றங்கள் மலிந்து இருந்தாலும்  அடியார்கள் அடியேனை ஷமித்து குற்றங்களை தெரிவிக்கும் படி விண்ணப்பித்து கொள்கிறேன்  –

ஸ்ரீ ராமனின் கைங்கர்யத்தில் இழிந்த அணில்களின் உடம்பில் பட்ட மண் துகள் போலே   அடியேனும் நம் இராமானுசன் கைங்கர்யத்தில் இழிய ஆசை கொண்டு இதை சமர்ப்பிக்கிறேன் –

அடியேன் ஆசார்யர் கிருபைவிசேஷத்தாலும்

அடியேனுடைய தாய் மாமா ஸ்ரீ உ வே ராம கிருஷ்ணா ஐயங்கார் கடாஷத்தாலும்

மாமாவும் அத்திம்பேருமான ஸ்ரீ உ வே k .s . நரசிம்ஹ ஸ்வாமிகள் ஆசீர்வாதத்தாலும்

இந்த முயற்சியில் இறங்கி-ஐப்பசி திருவாதிரை யான இன்று  சமர்ப்பிக்க பெரும் பாக்கியம் அடைகிறேன்  –

அடியேன் ராமானுஜ தாசன் கஸ்துரி திருவேங்கடத்தான் –

அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–108-அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்-இத்யாதி -..

November 3, 2012
பெரிய ஜீயர் அருளிய உரை
நூற்று எட்டாம் பாட்டு -அவதாரிகை
நிகமத்தில்
இப்ப்ரபந்த ஆரம்பத்திலே
-இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம்
தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் –
அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே  தமக்கு அபேஷிதமாகையாலே –
தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி-100 –
என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான
பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் .
அங்கயல் பாய் வயல்   தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-
வியாக்யானம் –
நெஞ்சே -பக்தி தத்வமானது (ப்ராப்ய ருசியை பக்தி என்கிறார் -கைங்கர்ய  உபயோகி என்றபடி -போஜனத்துக்கு ஷூத்து போலே ) நிரவசேஷமாக -(மிச்சம் இல்லாமல் முழுவதுமாக )-நம் அளவிலே குடி கொண்டது என்னும்படி
சம்ருத்தமாய் விஸ்ருதையான கீர்த்தியை உடையரான எம்பெருமானார் உடைய
திருவடிகள் ஆகிற செவ்விப் பூ -(ப்ராப்ய ருசி என்னும் செடி தழைக்க -ராமானுசன் அடி பூ முளைக்க-அத்தை சென்னியில் சூடுவோம் -என்றபடி )
மயிர் கழுவிப் பூ சூட விருப்பாரைப் போலே எப்போதோ என்று
ஆசைப் பட்டு இருக்கிற நம் தலை மேலே நித்ய வாசம் பண்ணும்படியாக –
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1- -என்கிறபடியே
ஜல சம்ருதியாலே அழகிய தர்சநீயமான கோயல்கள் உகளா நின்றுள்ள -வயல்களை உடைத்தாய் –
தர்சநீயமான கோயிலையே தமக்கு நிரூபகமாக உடையரான பெரிய பெருமாளுடைய
அழகிய திரு மார்விலே -இறையும் அகலகில்லேன் -திரு வாய் மொழி -6 10-10 – என்று நித்ய வாசம்
பண்ணா நிற்பாளாய்–ஸ்லாக்கியமான தாமரைப் பூவை பிறப்பிடமாக வுடையாளாய் –
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை வுடையாளான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை ஆஸ்ரயிப்போம் ..
போற்றுதல் -வணங்குதல் புகழ் தலுமாம்
அடியில் பூ மன்னு மாது – 1-என்றார் –இங்கே பங்கய மா மலர் பாவை -108- என்றார்
அங்கே பொருந்திய – – என்றார் –இங்கு –அணி யாகமன்னும் — – என்றார்

அங்கு –இராமானுசன் உன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ –1- – என்றார்–இங்கு –தலை மிசையே இராமானுசனடிப் பூ மன்ன – 108- என்றார் ./அங்கு நெஞ்சே – 1- என்று திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் -இங்கு —நெஞ்சே – 108- என்று திரு உள்ளத்தோடு கூட அனுசந்தித்து தலைக் கட்டினார் .

இத்தால்
1-ப்ராப்ய ருசி வ்ருத்தியும்–
ப்ராப்ய சித்தியும் ஆகிற  –ஸ்வரூப அநு ரூப சம்பத் சித்திக்கடி –
சகல ஆத்மாக்களுக்கும் -தத் தத் அதிகார அநு குணமாக அபேஷித்த சம்பத்விசேஷங்களை-ஸ்வ கடாஷ விசேஷங்களாலே உண்டாக்கி யருளும் –பெரிய பிராட்டியார் என்றும் –
2-ப்ராப்யம் தான் ஆசார்ய சரணாரவிந்தம் -என்றும் –
3-அத்ரபரத்ர சாபி நித்யம் -ஸ்தோத்ர ரத்னம் – 2- என்கிறபடியே
யாவதாத்மம் விச்லேஷம் அற்று இருக்கை என்றும் –
4-இதுக்கு அதிகாரிகளும் இந்த ப்ராப்யத்தில் சஹ்ருதயமான ப்ராவண்யம் உடையவர்கள் என்றும் சொல்லிற்றாயிற்று  –
பங்கய மா மலர் பாவையை போற்றி -அனைத்தும் பெறலாமே –
மண்டல அந்தாதி -திருவில் ஆரம்பித்து திருவில் முடித்து
வீட்டுடைத்த தலைவி தானே ப்ராப்யம் அருளுவாள்-ஆச்சார்ய கைங்கர்யம் -யவாதாத்மபாவி
பிராட்டிக்கு விசேஷணம் தென்னரங்கன் -பிராட்டி இருப்பிடம் என்றே தென்னரங்கன் –
பிரபை-ஸூ ரியன்–ஆகம் மன்னும் -மாது பொருந்திய மார்பன் –
பாவையைப் போற்றுதும் -திவ்ய தம்பதியைப் போற்றுதும் -சூழ்ந்து இருந்து ஏத்துவோம் பல்லாண்டு
சரண்ராவிதம் நாம் மன்னி வாழ –இதுவே கர்தவ்யம் -சதாசார்ய பிரசாதத்தால் -திவ்ய தேச கைங்கர்யம் –
நிர்ஹேதுகமாக பரம கிருபையால் பரகத சுவீகார பாத்திரமான பின்பு மங்களா சாசன பரராக இருந்தோம் என்று திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து இத்தால்
நாமும் இப்பிரபந்தம் சொல்லி இப் பேறு பெறுவோம் என்று அருளிச் செய்கிறார் -/பதஞ்சலி யோகம் பலன் உத்சவங்கள் மூலம் நாம் பெரும் படி பண்ணி அருளிய ஸ்வாமி கீர்த்தி எண் திசையும் பரவி உள்ளதே /திருவடி பூ சென்னியில் மன்ன வேண்டி யன்றோ -பூ மன்னு மாது மார்பிலே பொருந்தி இறையும் அகலகில்லேன் என்று நித்ய வாசம் செய்து அருளுகிறாள் /
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
 -ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ர முநயே  விததே நம யச்மர்திஸ்  சர்வ ஸித்தீ நாமந்தராய நிவர்ரணே –
அவதாரிகை -நிகமத்தில் -கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக
அபிமானித்து தம்முடைய திரு உள்ளத்திலே எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற
படியையும் -அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ
வ்ர்த்திகளும் பண்ணிக் கொண்டு போரும்படி என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய
அபிமத்தை அருளிச் செய்து -இப்பாட்டிலே -எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை
நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து ஸ்தாவர
பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே –அந்த பரிக்ரஹா அதிசயத்தை கொண்டு திவ்ய தம்பதிகளான- ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை    மங்களா சாசனம் பண்ணுவோம் என்று பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே குடி கொண்டது என்னும்படி அத்ய அபி வர்த்தமான தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

 

இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –
எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு -அது தலைக்
கட்டினவாறே அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே
இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் –அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக்
கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே -இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி
அனுபவித்து தலை கட்டுகிறார்
1-பத்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து நெஞ்சே –பக்தி சப்த வாச்யம் எல்லாம்
ஏக ரூபமாய் கொண்டு உன்னளவிலே சேர்ந்து குடி கொண்டு இருந்தது என்னும் படி சம்ர்த்தமாய்
இருக்கிற நெஞ்சே –போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -உனதடிப் போதில் ஒண் சீராம்-தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் –என்று இவர் தாமே தம்முடைய திரு உள்ளம்

பக்த பரிதம் என்னும் இடத்தை கீழே அருளிச் செய்தார் இறே -அன்றிக்கே -2–பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து -என்கிற இத்தை எம்பருமானார் திருவடிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்– –பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து -சஹ்யத்தில் ஜலம் எல்லாம் கீழே குதித்து ஒரு மடுவாகத் தங்கினால் போலே -என்னுடைய பக்தி ரசம் எல்லாம் பரம பக்தி ரூபமாய்க் கொண்டு பரி பக்குவமாய் படிந்து –எம்பெருமானார் திருவடிகளிலே தங்கிற்று -என்னும் படி தழைத்து இருக்கிற -(பக்தி தங்கினது நெஞ்சிலும் எம்பெருமானார் இடமும் என்று இரண்டு நிர்வாகம் -ஸ்வாமி தானே அமுதனார் திரு உள்ளத்திலே ஸ்ரீ வைகுண்டம் திருவேங்கடம் திருமால் இரும் சோலை அவை தன்னோடும் அன்றோ நித்ய வாசம் செய்து அருளுகிறார் )

பொங்கிய கீர்த்திஏய்ந்த பெரும் கீர்த்தி -என்கிறபடியே பரம பதத்தின் அளவும் வளர்ந்து கொண்டு ஓங்கி இருக்கிற
கீர்த்தியை உடையரான -இராமானுசன் -எம்பெருமானாருடைய –
உபக்ரமத்திலே -கலை இலங்கு மொழியாளர் –பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் -என்கிறார் ஆகையாலே -இங்கு பொங்கிய கீர்த்தி
இராமானுசன் -என்கிறார் –அடிப்பூ–கீழ் சொன்ன தழைப்பதோடு  கூடி இருக்கிற  எம்பெருமானாருடைய-திருவடித் தாமரைகள் –அடியிலே சரணாரவிந்தம் -என்கிறார் ஆகையாலே -இங்கே அடிப்பூ என்கிறார் -(திருவடியில் உபக்ரமித்து உப சம்ஹாரம் )
யாவதாத்மபாவி  ஸூபிரதிஷ்டமாய் இருக்கையாலே —மன்னவே –அம் கயல் பாய் வயல் தென்னரங்கன் -அணி யாகம் மன்னும் -செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் -என்கிறபடியே உபய காவேரி களினுடையவும்
ஜல சம்ர்த்தியாலே வளர்ந்த மத்ச்யங்கள் உகளா நின்றுள்ள -கேதாரங்களாலே சூழப்பட்டு -அத்யந்த
தர்சநீயமான -அரங்கத்துக்கு நிர்வாஹனாய் -அத்தையே நிரூபகமாக உடையரான -பெரிய பெருமாளையும் –

அவர் தம்முடைய அழகிய திரு மார்பிலே அலங்கார பூதையாய் -இறையும் அகலகில்லேன் -என்றும் அப்ரமேயம் ஹிதத் தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிரபையும் ப்ரபாவனையும் போலே –அப்ர்தக் சித்தையாய்-ஸ்வரூப நிரூபகையாய் -கொண்டு நித்ய வாசம் பண்ணுமவளாய்  –உபக்ரமத்திலே –பொருந்திய மார்பன் -என்றார் ஆகையாலே –இங்கே மன்னும் -என்கிறார் –

அம் -அழகு கயல்-மத்ஸ்யம் -பாய்தல்-சலித்தல் வயல்-கழனி அணி -அலங்காரம் –ஆகம்-மார்பு
மன்னுதல் -பொருந்துதல் –பங்கய மா மலர் பாவையை -தாமரை மலரிலே பெரிய பிராட்டியார் அவதரிக்கையாலே
அத்தை கடாஷித்து அதற்கு ஒரு மகத்வத்தை சொல்லுகிறார் – அப்படிப்பட்ட தாமரைப்பூவை பிறப்பிடமாகவும்
நிரூபகமாவும் உடையவளாய் -பால்ய யவன மத்யச்தையான ஸ்ரீ ரெங்க நாயகியாரையும் -அலர்மேல் மங்கை
என்னக் கடவது இறே –பாவை -ஸ்திரீ -அடியிலே பூ மன்னு மாது என்றார் ஆகையாலே இங்கு
பங்கய மாமலர் பாவையை -என்கிறார் –போற்றுதும் -இப்படி இருந்துள்ள திவ்ய தம்பதிகளை –
மங்களா சாசனம் பண்ணுவோம் –போற்றுதல்-புகழ்தல் -ஆசார்யன் சிஷ்யனை திருத்துவது –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்கிறபடியே -பகவத் விஷயத்திலே யாவதாத்மா பாவியாக-மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு போருகை -இறே –உகந்து அருளின நிலங்களிலே-ஆதர அதிசயமும் -மங்களா சாசனமும் சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக்-கொண்டு போரக் கடவன் -என்று ஸ்ரீ வசன பூஷணத்திலே பிள்ளையும் அருளிச் செய்தார் இறே –
ஆக இத்தாலே –எம்பெருமானார் தம்முடைய நிர்ஹ துக  பரம கிருபையாலே பரகத ஸ்வீகார பாத்ரனான-பின்பு -அதற்கு பலமாக  -இப்படி மங்களா சாசன பரராய் இருந்தோம் என்று -தாம் பெற்ற பேற்றை-தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து -இப்பிரபந்தத்தை தலை கட்டி அருளினார் ஆய்த்து –
————————————————————————–

அமுது விருந்து –

அவதாரிகை

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது -இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்றுதாம் அருளிச் செய்த பேறு–தமக்கு ஆத்மா உள்ள அளவும் கைப்படவும் -அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் -விரும்பி-அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக  –ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் -அதனுக்கு ஏற்ப -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி உயரினம் அனைத்துக்கும் சார்வாகிச் செல்வம் அளிப்பவளான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார் .

பத உரை –
நெஞ்சே -மனமே
பக்தி யெல்லாம் –-பக்தி யானது முழுதும்
தங்கியது என்ன -நம்மிடமே குடி கொண்டு விட்டது என்று சொல்லும்படி
தழைத்து -செழித்து
பொங்கிய -விரிவடைந்த
கீர்த்தி -புகழ் வாய்ந்த
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
அடிப்பூ-திருவடிகளாகிற மலர்
நம் தலை மிசை –நம்முடைய தலையின் மீது
மன்ன-பொருந்தி எப்பொழுதும் இருக்கும் படியாக
அம் கயல் -அழகிய மீன்கள்
பாய் -பாய்கிற
வயல் -வயல்களை உடைய
தென் அரங்கன் -அழகிய திரு வரங்கத்தின் கண் உள்ள பெரிய பெருமாள் உடைய
அணி ஆகம் -அழகிய திரு மார்பிலே
மன்னும் -எப்பொழுதும் பொருந்தி இருப்பவளும் –
பங்கயம் -தாமரை என்னும்
மா மலர் -சீரிய பூவிலே பிறப்பினை உடையவளுமான
பாவையை -பெண் மணியான ஸ்ரீ ரங்க நாச்சியாரை
போற்றுதும் -ஆஸ்ரயிப்போம்
வியாக்யானம் –
அம் கயல் –போற்றுதும் –
நெஞ்சே பக்தி யெல்லாம் தங்கியது –என்னத் தழைத்து -நம் தலை மிசை -அடிப் பூ மன்ன பாவையைப் போற்றுதும் -என்று கூட்டிப் பொருள் கொள்க –
திருவரங்கத்தில் நீர் வளம் மிக்கு இருத்தலின் வயல்களிலும் நீர் வற்றாமையினால்
அழகிய மீன்கள் -ஓங்கு பெரும் சென்னலூடு கயல் உகள -திருப்பாவை – 3- என்றபடி
உகளா நிற்கின்றன .செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -என்றார் நம் ஆழ்வாரும் .
தென்னரங்கன் அணி ஆகத்தில் இறையும் அகலகில்லாது மகிழ்ந்து மன்னி உறைகிறாள் –பாவை
வயல்களிலே நீரை விட்டு அகலகில்லாது களித்து உகளா நிற்கின்றன -கயல்கள் –
ஜலான் மத்ஸ்யா விவோத்திரு தெவ்-என்று மீனின் இயல்பு கொண்ட வளாகப் பிராட்டியும்
கூறப்படுவது காண்க .
நீர் உளது எனின் உளது மீன்
மார்பு உளது எனின் உளள் மா மலர்ப் பாவை
நாரத்தை நீரை பற்றி உள்ளன கயல்கள்

நாராயணனைப் பற்றி உளள் பங்கயப் பாவை . அணி யாகம் மன்னும் -என்கையாலே பகவானை-ஸ்ரயதே –ஆஸ்ரயிக்கிறாள் என்னும் பொருளும்-போற்றுதும் -என்கையாலே சேதனர்கள் ஆகிற நம்மாலே ஆஸ்ரயிக்கப் படுகிறாள்-என்னும் பொருளும் ஸ்ரீ சப்தத்துக்கு காட்டப் பட்டன -இதனால் சேதனர்கள் உடைய விருப்பத்தை

இறைவனைக் கொண்டு நிறைவேற்றித் தரும் தன்மை –புருஷகாரமாய் இருக்கும் தன்மை-பிராட்டி இடம் உள்ளமை உணர்த்தப் படுகிறது ..
தாமரையைப் பிறப்பிடமாக உடையவள் அதனை விட்டு மார்பிலே மன்னி விட்டாள் –
இதனை விட்டு இனி அகலாள்
அதற்கு ஹேது மார்பின் அழகுடைமை
இது தோற்ற அணி ஆகம் -என்றார் .

பாவை பதுமை போல கணவனுக்கு பர தந்திரையாய் இருத்தல் பற்றி -பெண்களுக்கு உவமை  ஆகு பெயர் –

தென்னரங்கனை போற்றிடில் ஸ்வ தந்த்ரன் ஆதலின் -ஒரு கால் நம்மை உதறித் தள்ளவும் கூடும் –
பாவையைப் போற்றிடிலோ -உதறித் தள்ள வழி இல்லை
பகவானுக்கு பர தந்த்ரையாய் -அவனுக்கு குறை நேராதவாறு நடந்து கொள்வாள்
ஆதலின் –போற்றுதல் பயன் பெற்றே தீரும் -என்பது கருத்து .
பக்தி யெல்லாம் தங்கியது என்னத் தழைத்து –
இங்கே பக்தி என்பது பேற்றினைப் பெறற்கு சாதனமாகக் கைக் கொள்ளும் சாதனா பக்தி யன்று -.
போஜனத்திற்கு பசி போலே பேற்றினைத் துய்த்துதற்கு -தேவைப் படுகின்ற வேட்கை யாகும் –
இது ப்ராப்ய ருசி -எனப்படும்
அந்த ப்ராப்ய ருசி எந்த விதம் யெல்லாம் வர வேண்டுமோ -எவ்வளவு வர வேண்டுமோ –
அவ்விதம் அவ்வளவு -முழுவதும் நிறைவேற வேண்டும் .
பிராப்ய ருசி முழுதும் நம்மிடம் குடி புகுந்து விட்டது -என்று சொல்லலாம்படி
தழைத்து இருக்க வேண்டும் -என்று அமுதனார் ஆசைப் படுகிறார்
இவர்க்கு பிராப்யம்   -எம்பெருமானார் அடிப்பூ மன்னுதல் –
அதனுக்கு ஏற்ப பூரணமாக ப்ராப்ய ருசியை வேண்டுகிறார் .
தழைத்து மன்ன -என இயைக்க –
பசித்து உண்ண -என்பது போன்றது இது –
நெஞ்சே -பேற்றினைப் பெற அவாவுகின்ற நெஞ்சே
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்
ஒண் சீராம் தெளிதேன் உண்டு அமர்ந்திட வேண்டி -100 – என்று இப் பேற்றின்
சுவையைத் துய்ப்பதற்கு -தம் நெஞ்சு முற்பட்டதை முன்னரே கூறினார் அன்றோ –
நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார் .
நம் தலை மிசை –அடிப்பூ மன்ன
நம் தலை மிசை -தலை குளித்து பூசூட விரும்புவர் போன்று
சரணாரவிந்தம் எப்போதோ என்று ஆசைப் பட்டுக் கொண்டு  இருக்கிற

நம் தலையிலே -என்றபடி ..பொங்கிய கீர்த்தி -பரந்த புகழ் –திக்குற்ற கீர்த்தி –என்றார் முன்னம் –

அடிப்பூ நம் தலைமிசை மன்ன –மன்னும் பாவையைப் போற்றுதும் -என்கிறார் –
தான் அணி யாகத்தில் மன்னி இருப்பது போலே நம் தலை மிசை அடிப்பூ மன்னி இருக்கும்படி
செய்வதற்காக பாவையை ஆஸ்ரயிப்போம் என்கிறார் .
போற்றுதல்-ஆஸ்ரயித்தல்-புகழுதலும் ஆம் –
உயரினங்கள் அனைத்துக்கும் தம் தம் தகுதிக்கு ஏற்ப -கோரும் அவ்வச் செல்வங்களை –
தன கருணோக்தங்களால்   உண்டாக்கி -அளிக்க வல்லவளான பிராட்டியே
சரம பர்வ நிஷ்டர் –
தம்தகுதிக்கு ஏற்ப கோரும்
ப்ராப்ய ருசி எனப்படும் -பக்தியின் வளப்பமும்
ப்ராப்யமான -அடிப்பூவுமாகிற செல்வங்களை
தந்து அருளால் வேண்டும் என்பதையும் –
சரம பர்வ நிஷ்டருக்கு ப்ராப்யம் ஆசார்ய சரணாரவிந்தம் என்பதையும் –
அது –அதர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் –ஸ்தோத்ர ரத்னம் -3 –
இங்கும் பரம பதத்திலும் எவருடைய திருவடிகள் என்றும் எனது சரணாம் -என்றபடி
பிரிவின்றி நிரந்தரமாய் உள்ளதொன்று என்பதையும்
இத்தகைய பேற்றினில் மிக்க ஈடுபாடு உடையோர் ஆசார்ய நிஷ்டைக்கு அதிகாரிகள்
என்பதையும் இங்கே அமுதனார் காட்டி அருளினார் ஆயிற்று –

முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-

பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே போருந்தினவல் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள்  வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .
இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி
மங்கள வாழ்க்கை பெற்று -நிரந்தரமாக வீற்று இருப்பதற்கு -மங்கள வடிவினளான
மலர் மகளை போற்றிடுவோம் என்பது

இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்

-குருகூரன் மாறன் அடி பணிந்துய்ந்த குருவரன் தான்-தரு கூரன் பார்ந்த திருமலை நல்லவன் தந்தனனால்-குருகூரர் நாதன் சரண் சேரமுதன் குலவு தமிழ்-முருகூரந்தாதி யமிழ்தினை இப்பார் முழுதுக்குமே – –

குருவரன் -சிறந்த ஆசாரினாகிய எம்பெருமானார் –
கூரன்பு -மிக்க அன்பு
ஆர்தல் -நிறைதல்
திருமலை நல்லவன் -திரு மலை நல்லான்
குருகூர் நாதன்-குருவான கூரத் ஆழ்வான்
அமுதன் -திருவரங்கத் தமுதனார்
குலவுதல்-கொண்டாடுதல் -பழகுதலுமாம்
முருகு -மணம் -தேனுமாம் –
நல்லவன் அமிழ்தினை இப்பார் முழுதுக்கும் தந்தனன் -என்று கூட்டி முடிக்க –
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

பிர பந்தம் ஆரம்பத்திலே -ராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -என்ற பிராப்யம் தமக்கு-யாவ தாத்மபாவி ஆம்படி கை புகுருகையும்-அந்த பிராப்ய ருசி ரூப பக்தி புஷ்கல்யமுமே தமக்கு அபேஷிதம் ஆகையாலே

தத் உபய சித்த அர்த்தமாக ஸ்ரீயாகையாலே தேன் அமரும் பூ மேல் திரு -நமக்கு என்றும் சார்வு -என்கிற படியே-சர்வ ஆத்மாகளுக்கும் என்றும் ஒக்க சார்வாய் சம்பத் பிரதையான பெரிய பிராட்டியாரை ஆச்ரயிப்போம் என்கிறார்

சாஸ்திரம் கொடுத்து அவதரித்து ஆழ்வார்களை கொடுத்து ஆச்சர்யர்களை அவதரிப்பித்து-நம்மை சேர்த்து கொள்ள அவன் படும் பாடு/குரு பரம்பரை-/சித்தி த்ரயம் ஸ்தோத்ர ரத்னம் சதுச்லோகி-ஆளவந்தார் அருளி/ஸ்ரீ வைஷ்ணவம் கோவில்- பொய்கை ஆழ்வார் ஆரம்பித்து

-பஞ்ச ஆச்சார்யர்கள் மூலம்-இளையாழ்வார் லஷ்மண முனி உடையவர் எம்பெருமானார்-கோவில் அண்ணன் ஸ்ரீ பாஷ்யகாரர் -கரிய மாணிக்கம் சந்நிதியில்- ஆ முதல்வன் கடாஷம் –எம்பெருமானார் தரிசனம்-நம் பெருமாள் பேர் இட்டுநாடி வைத்தார்  -அவர் வளர்த்த அந்த செயல் அறிக்கைக்காக/ஈன்ற தாய்/அவன் பிறந்தும் செய்து முடிக்காததை பலன் சேர செய்தாரே/

உப்பு நீரை மேகம்-ச்வாதந்த்ரம்-ஆழ்வார் -மேகம் பருகி -நாத முனிகள் மலை/அருவிகள் உய்ய கொண்டார் மணக்கால் நம்பி/ ஆளவந்தார் ஐந்து வாய்க்கால்/ஸ்வாமி ஏரி-74 மதகுகள்-மூலம் நம்மை அடைய/1017 செய்ய திரு ஆதிரை சித்திரை/பங்குனி உத்தரம்

-சீத ராம திரு கல்யாணம்- பெரிய பிராட்டியார் மாதர் மைதிலி-ஏக சிம்காசன சேர்த்தி-கத்ய த்ரயம்-அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்-பர பக்தி பர ஞான பரம பக்தி -மாம் குருஷ்வ-அச்துதே-சாமை பொறுத்தோம்-சம்பந்தம் உள்ளோர் அனைவருக்கும் மோட்ஷம்-உண்மைதானா உறுதி-ராமனுக்கு இரண்டாவது வார்த்தை இல்லை

/இந்த அரங்கத்து இனிது இரு நீ என்று -துவயம் அர்த்தம் அனுசந்தித்து கொண்டு/சிந்தை செய்யில்- நல் தாதை -பிள்ளை என்று சம்பந்தம் ஒத்து கொண்டால் கிட்டும்/சம்பந்த ஞானமே வேண்டும்/ஓர் ஆண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் /சீர் உடை பள்ளி கூடம்-வரை அறை உள் படுத்த வெளி வேஷம்/த்வாரகா  ஈசன்-முத்தரை சாதிக்க பட்டவர்களை உள்ளே விட சொல்லி போனானே-ஆகமத்திலே உண்டு/ வளை   ஆதி விபூஷணம் போல–பர சம்பந்த வேதனம் சக்கராதி  வேதனம்/பஞ்ச சமாச்ரண்யம் /தாஸ்ய நாமம் -ஆச்சர்ய பரம்பரை -பாஞ்சராத்ர ஆகமம்-ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்து-கால சக்கரத்தாய்-ராமானுஜ திவாகரன்-விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி-ஸ்வாமி கை  நீட்டி காட்டும் இடமே- திருபுரா தேவி-காளி சான் மூலை காட்டினாலும் விழுவோம்/

திவ்ய தேச கைங்கர்யம்/ நவ ரத்னம் போல கிரந்தங்கள் /சிஷ்யர்களுக்கு வூட்டி பல முகம்/கலியும் கெடும் போல சூசிதம் –கண்டோம் கண்டோம் கண்டோம்-ஆழ்வார் 5105 வருஷம் முன்பு அருளினாரே–பவிஷ்யதாசார்யர்-ராமானுஜ சதுர் வேத மங்கலம் -சேர்த்தி திரு மஞ்சனம் ஆழ்வார் உடன்/108 தடவை திருநாமம் சொல்லி பக்தி வளர்ந்து சம்பந்தம் பெற

/பூ மன்னு மாது பொருந்திய மார்பன்-கண் முன்னே லஷ்மி வல்லபன் உத்தரம்-அதனால் பிராட்டி சம்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார்-பூ மன்னிய மார்பன் -மார்பன் புகழ் மலிந்த பா/-மாறன் அடி பணிந்து உய்ய்ந்தவன் /நாம் மன்னி வாழ சொல்லுவோம் அவன் நாமங்களே /

முதல் 7 பாசுரங்கள் அவதாரிகை-14 பாசுரங்கள் (-8–21-வரை)- ஆழ்வார் சம்பந்தம்-பொய்கை ஆழ்வார் தொடக்கி-விளக்கை திரு உள்ளத்தே இருத்தும்/–ஆளவந்தார் வரை-இணை அடியாம் ஸ்வாமி என்று அருளி-ஏகலைவன் போல

 25 காரேய்  கருணை சீரே //திரு வாய்மொழி க்காக  4 பாசுரங்கள் வேழம்/வலி மிக்க சீயம் ராமானுசன்-கலியன்/ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோவில்/தமிழ் பற்று/ அடையார் கமலத்து பஞ்ச ஆயுத அம்சம்/பாவனம்-32/42/52 பாசுரங்களால்/தந்த அரங்கனும் தந்திலன் தான் அது தந்து-வள்ளல் தனம்/போக்கியம் -பொன் வண்டு தேன் உண்டு அமர்ந்து/காமமே -கண்ணனுக்கு புருஷார்த்தம்-/பர மத கண்டனம் பல பாசுரங்கள்/திருவிலே  தொடங்கி  திருவிலே முடிக்கிறார்/திரு கண்டேன்- தேன் அமரும் பூ மேல் திரு -நமக்கு என்றும் சார்வு – திரு பேய் ஆழ்வார் போல

/ஸ்ரீ ரெங்க ராஜ மகிஷி-தத் இங்கித பராந்கீதம்/காந்தச்தே புருஷோத்தம /ஸ்ரீ ஒற்றை எழுத்தே பாட முடியாதே/கடாஷத்தாலே பர பிரமத்தையே ஆக்க வல்லவள்/பிறந்தகம் விட்டு புகுந்தகம்  மன்னி  ரட்ஷிக்க ஸ்ரீ ரெங்க நாச்சியாராக– அஞ்சலி ஒன்றாலே-எல்லாம் கொடுத்து பின்பும் கொடுக்க ஒன்றும் இல்லை என்றி வெட்க்கி தலை குனிந்து-/இராமனுசன் அடி பூ மன்னவே-இராமனுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ-ஆத்ம உள்ள அளவும்-நித்யமாக–பிராப்ய ருசி ரூப பக்தி-கைங்கர்யம் பண்ண இன்பம் வர-இந்த இரண்டும் நிரம்ப–நமக்கு சார்வு-புகல்  இடம்- அவள் தானே

வரத வல்லபை -பெரும் தேவி தாயார்–அலர்மேல் மங்கை-ஸ்ரீ ரெங்க  நாச்சியார் -கண் கண்ட  நாச்சியார்-நெஞ்சே- ஆரம்பித்தார்-முடிக்கிறார்– கொண்டாடுகிறார்-பற்று அற்ற நெஞ்சு ஆத்மாவை உயர்த்தும் -பக்தி –சாதனா பக்தி  இல்லை -இல்லை-பிராப்ய ருசி-போஜனத்துக்கு பசி போல-எல்லாம் வந்து குடி கொண்டதாம்-தழைத்து– செடி தழைத்தால்- மன்ன -பூ-செடி தான் பக்தி- பூ முளைக்கும்-அதை தலையில் சூடி கொள்ளலாம் /பொங்கிய கீர்த்தி-விஸ்ருதையான கீர்த்தி-உடையவர்-யோக சூத்திரம்-உத்சவம் அமைத்து நமக்கு காட்டி கொடுத்த கீர்த்தி– எண் திசையும் பரவி உள்ளது/மயிர்  கழுவி பூச்சூட இருப்பாரை போல/பூவிலே மன்னு  மாது- மன்னி கிடப்பி இருகிறவளை பற்றி/ஜல ச்ம்ர்தியால் அழகிய காவேரியால் சூழ பட்ட அரங்கத்தில்- அவன் உடைய  /அணி ஆகத்தில் மன்னி இருகிறவள்

/மரு மகனை பார்க்கும்  ஆசை /கலகத்தில்-பார்த்ததும்- பிரியும் கலக்கம்/விஷ்ணு பாதம் பட்ட ஒன்றே கொண்ட கங்கை பார்த்து சிரிக்கிறாளாம்   -வீதி கழுவி-புறப்பாடுக்கு /புனிதம் ஆகி /மணல் மேட்டில் உயர்த்தி காட்டுகிறாள்-வைபவம்/தரிசநீயமான அரங்கம் – தென் அரங்கம்– அரங்கம் வைத்தே அவனுக்கு ஏற்றம்

ஸ்ரீயபதி-அவளாலே அவனுக்கு ஏற்றம்-/ஓங்கு பெரும் செந்நெல் வூடு கயல் உகள-யானை போல மீன்- பெருத்து கொழுத்து–செங்கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய்-நீரை நம்பிய மீன்-நாரத்தை பற்றியது வாழ அயனத்தை பற்றியவள் வாடுகிறாளே-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்//தாராய -வண்டு உழுது வைக்கிறதாம்-அகல் அகம்–இறையும் அகலகில்லேன்-வாமனன் இரக்கும் பொழுதும் இறங்கவில்லை/அமுதினில் வந்த பெண் அமுதத்தை கொண்டு உகந்த -நமக்காக ஏறி அமர்ந்தாள்/பாவை-அவனுக்கு வச படுத்து-உவமை ஆகு பெயர்

– இவள் குணத்துக்கு -உவமை-பர தந்த்ரையை பற்றினால் உதர மாட்டாள்/ஸ்வ  தந்த்ரனை பற்றினால் உதறுவான்/ஸ்ரியதே– அணி ஆகம் மன்னும்/ போற்றுதும்-ஸ்ராயதே /பூ மன்னு பங்கய மா மலர் பாவை பொருந்திய அணி ஆகம்/தலை மிசையே அவர் பற்றினார் இதில் நாம் மன்னி வாழ ஆரம்பித்தார்/நெஞ்சே- கூப்பிட்டார் நெஞ்சு உடனே சொல்லி  தலை கட்டுகிறார் -இத்தால் பிராப்ய சித்தியும்-அடி பூ மன்ன – –பிராப்ய ருசியும் -பக்தி-  இரண்டையும் கேட்கிறார்//கடாஷங்களாலே விரும்பியது எல்லாம் கொடுப்பாள்/-சரம பர்வம்-ஆச்சர்ய சாரணர விந்தம் -அவள் இடம் கேட்கிறார்

/இதுவும் உபாயமாகவே இல்லை-வடுக நம்பி பால் காய்ச்சும் பொழுது அரங்கனை -உங்கள் பெருமாளை நீங்கள் சேவித்து கொள்ளுங்கள்-எம் பெருமானுக்கு கைங்கர்யமே எனக்கு முக்கியம்  என்றது போல/அங்கும் சென்று ஆச்சர்ய கைங்கர்யமே தோள் மாறாமல்/பிரிவே அற்று இருக்கையே பிரார்த்திக்கிறார்/ஆச்சர்ய திருவடிகளே பிராப்யம் /திருவடிகளாகிற செவ்வி பூவை தலையிலே -கலம்பகன் மாலை போல அலங்கரித்து-ஸ்தாவர பிரதிஷ்ட்டையாக- இளையவர்க்கு அளித்த மௌலி எனக்கும் அருள் -விபீஷணன் பிரார்த்தித்து போல/-திவ்ய தம்பதிகளுக்கு இத்துடன் மங்களாசாசனம் பண்ணுகிறார்/பக்தி பிராப்ய ருசி யால் பண்ணிய தம் நெஞ்சு-கூடி கொண்டே போகும் பக்தி

/உசா துணை மனம் –பலித்த அம்சத்தை -சொல்வது போல நெஞ்சுக்கு உரைக்கிறார்-பக்தி சப்தம் எல்லாம் ஏக ரூபமாய் கொண்டு நெஞ்சு அளவில் குடி கொண்டு இருந்தது-/நெஞ்சு வண்டு -தேனை பருகி  அமர்ந்திட சென்று இருந்து

/பக்தி தங்குவது அடி பூ இடம்-மடுவாக மலை நீர் தங்குவது போல-பரம பக்தி ரூபமாய் பரி பக்குவமாய்/பர பக்தி பூ பர ஞானம் காய் பரம பக்தி -கனி//பொங்கிய கீர்த்தி-பரம பதம் அளவும் போன கீர்த்தி/வூமை திரு பாற்கடல்  அளவும் உள்ள பெருமையை வந்து சொன்னானே-பல்கலையோர் தாம் மன்ன வந்த ராமானுசன்- தொடங்கினார்-பொங்கிய கீர்த்தி இதில்

-அடி பூ-தழைத்து பூ பூத்தது/ சரணாரவிந்தம்-ஆரம்பித்து அடி பூவில்/உபய காவேரி இருப்பதால் அழகிய கயல் மீன்/வேழ போதகமே தாலேலோ- தேவகி-தானை போல இருக்கிறான்-அன்று குட்டி /அது போல மீன்கள்/

அலங்கார பூதையாய் இருக்கிறாள்/பிரபை -பாஸ்கரேண போல பிரியாதவள்/சொரூப நிரூபகை /பொருந்திய மார்பன்/மன்னு -இங்கு /பங்கய மா மலர்-பிறப்பிடம் என்பதால் கொண்டாடுகிறார்/ பாவை-பால்ய யௌவனம் சாந்தி-/பூ மன்னு மாது-பங்கய  மா மலர் பாவை/போற்றுதல்-மங்களா சாசனம்–சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு-

திவ்ய தேசங்களில் ஆதரவும் பிராவண்யமும் சதா ஆச்சர்யர் பிரசாதத்தால் கிட்டி வர்த்திக்க கடவன்/ நிர்ஹே துகமாக பரகத ச்வீகாரம்-வந்து அருளி நெஞ்சில் இடம் கொண்டதுக்கு இதுவே பலன்/சரணார விந்தம் நாம் மன்னி வாழ -அடி பூ மன்ன -பலன் பாவையை போற்றுவதே என்கிறார்–

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–107-இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும் -இத்யாதி ..

November 3, 2012
பெரிய ஜீயர் அருளிய உரை
நூற்று ஏழாம் பாட்டு -அவதாரிகை
இப்படி தம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற
எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து –
தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று
தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –
இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107- –
வியாக்யானம் –
எத்தனையேனும் தண்ணியனான என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து –
அது தன்னைப் பெறாப் பேறாக நினைத்து –
ஆநந்த நிர்பரராய் -எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை உடையவரே –
இப்படி இருக்கிற தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது-ஒரு கார்யம் உண்டு –
அது ஏது என்னில் –
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –என்னுமா போலே -திரு வாய் மொழி -2 9-3 – –
தோற்புரையே போமதன்றியிலே  அஸ்த்திகதமாய் இன்று நலிய கடவ
வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும் -ஜநிப்பது மரிப்பதாய் –
அசந்க்யேய துக்கங்களை அனுபவித்துமுடியிலும்
சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும்
அவர்களுக்கே மாறுபாடுருவின ச்நேஹத்தை உடையேனாய்  இருக்கும்படியாக செய்து
என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் -என்று கருத்து .
இன்பு -சுகம்
சீலமாவது -பெரியவன் தண்ணியன் உடன் புரையறக் கலக்கும் ஸ்வபாவம்
என்பு -எலும்பு
துன்பு -துக்கம் –
தொண்டர்கட்கே –ஏவகாரம் -உமக்கும் ஆழ்வாருக்கும் அவனுக்கும் இன்றி -அடியார் அடியார் -அவர்க்கே அல்லால் -அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்ப்பாடு
என்னைப் பண்ணி -அங்கு ஆள்படுத்தே –கிரய விக்ர அர்ஹமாகும் படி –
இப்பொழுது தான் விண்ணப்பம் செய்ய -முன்பு சொன்னது எல்லாம் இதற்கு தயார் பண்ணி -கீதாச்சார்யன் -அர்ஜுனனை தயார் பண்ணி அருளிச் செய்தால் போலே –குஹ்ய தமம் -பக்தி பண்ணி சொல்ல -மன்மனா பாவ இத்யாதி –
ஸ்ரீ பெரும் பூதூர் மட்டும் இல்லை -எம்பார் முதலியாண்டான் கூரத் ஆழ்வான் திருப் கட்சி நம்பி திருவவதார ஸ்தலங்களுக்கு போக வேண்டுமே/ -2-பாசுரத்தில் உபக்ரமித்து மிக்க சீலம் அல்லால்  இதிலும் -இன்புற்ற சீலத்து இஇராமாநுச என்று உப சம்ஹரிக்கிறர் /ஆக்கி ஆள்படுத்தி- மனசில் உணரவைத்து கைங்கர்யமும் கொள்ள வேணுமே /அடியேன் செய்ய விண்ணப்பம் ஆழ்வார் தொடங்கும் பொழுதே பிரார்த்தித்து -இங்கு அமுதனார் விண்ணப்பம் செய்த உடனே தலைக் கட்டி அருளுகிறார் ஸ்வாமி /-23-பாசுரம் -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -பிரார்த்தனை –அச்சமயத்தில் சொல்லும் அசடு இல்லையே -29-பாசுரத்தில் உற்றோமே ஆவோம் -உனக்கே ஆட் செய்வோம் –கைங்கர்ய பிரார்த்தனை -சரணாகதிக்கு அப்புறம் தானே -இங்கு சொல்லுவது ஓன்று உண்டு சொல்லி அடுத்த வரியில் -என்ன என்கிறார் -இன்புற்ற சீலவான் ஸ்வாமி என்பதால் /தொண்டர்களுக்கே -ஏக -சப்தம் தானும் பிறருமான  / தானும்  இவனுமான நிலையையும் கழுத்து வெளி உள் இரண்டையும் கழித்து என்றபடி -உபாய பரமாக இல்லை ப்ராப்ய பரமாக -/
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட
நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து – இதிலே
அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு –
அசங்க்யேயமான துக்கங்களை அனுபவித்து உரு மாய்ந்து முடியிலும் –சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்—
தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய் -அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்
கொண்டு அடிமைப் படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார் –
வியாக்யானம்இன்புற்ற சீலத்து இராமானுசா -திரு வேம்கட முடையானுக்கும் திரு குறும்குடி நம்பிக்கும்
திரு இலச்சினையும் -ஸ்ரீ பாஷ்யதையும் பிரசாதித்த ஆசார்யராகவும் -செல்லப் பிள்ளைக்கு பிதாவாயுமாய் இருக்கிற
தேவரீருடைய மதிக்கையும் -அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய தண்மையையும் பாராதே -என்னை
தேவரீருக்கு அவ்வருவாக எண்ணி -என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து –அது தன்னையே பெறாப்  பேறாக நினைத்து –
ஆனந்த நிர்பரராய் எழுந்து அருளி இருக்கிற சௌசீல் யத்தை உடைய எம்பெருமானாரே -இன்பு -ஸூ கம்
சீலமாவது பெரியவன் தண்ணியரோடு  புரை யறப்  பரிமாறும் ஸ்வாபம் -இப்போதாக காணும் இவருடைய-சீலம் அமுதனாருக்கு வெளியாகத் தொடங்கிற்று
சொல்லுவது ஓன்று உண்டு -சர்வஞ்ஞாரான தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
நத்வே வாஹம் -என்று தொடங்கி- கர்ம ஞான பக்திகளை பரக்க உபதேசித்து கொண்டு போந்து –சர்வ குஹ்ய தமம்-பூய ஸ்ருணுமே பரமம் வச -என்று  உபதேசிக்கும் போது கீதச்சர்யன் அருளிச் செய்தால் போலே இவரும் –
இராமானுசா  இது என் விண்ணப்பமே -என்கிறபடியே இவ்வளவும் தம்முடைய அபிநிவேசம் எல்லாம் விண்ணப்பம் செய்து
இப்பாட்டிலே தம்முடைய அபேஷிதத்தை நிஷ்கரிஷித்து அருளிச் செய்கிறார் -அங்கு சேஷி உடைய உக்தி –இங்கு சேஷ பூதனுடைய அபேஷிதம் -ஒரு பிரயோஜனம் உண்டு என்றீர் அது என் என்ன –என்புற்ற நோயுடல் தோறும்-பிறந்து இறந்து எண்ணரிய துன்புற்று -நோய் -வியாதி -அதாகிறது -ஆத்யாத்மிகாதி துக்கங்கள் -அந்த நோயானது
அந்தர்பஹிந்திரிய வியாபார ரூப ஸ்வ க்ரத கர்ம பலம் ஆகையாலே தோற்புரையே போம்  அது அன்றிக்கே –
அஸ்திகதமாய் கொண்டு இருக்கையாலும் ஆத்மா நாசகம் ஆகையாலும் –என்புற்ற –என்று விசேஷிக்கிறார் –
என்பு -எலும்பு –உறுகை  -அத்தைப் பற்றி நிற்கை -உடல் தோறும் -அப்படி அஸ்திகதங்களாய்  கொண்டு நலியக்-கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரம் தோறும் -துர்வார துரித மூலம் துஸ்தர துக்காநாம் பந்த நீ ரந்தரம்வபு -என்னக் கடவது இறே –
-அன்றிக்கே – நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை –என்கிறபடியே அந்த வியாதி
தானே உருக் கொண்டு இருக்கிற -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சரீரங்கள் என்று என்னுதல்-
ஜன்ம பரம்பரைகள் தோறும் -என்றபடி-பிறந்து இறந்து என்ற இது மற்ற அவஸ்த தாந்தரங்களுக்கும் உப லஷணம் –

இறப்பு -நாசம் –பிறந்து இறந்து எண்ணற்ற துன்புற்று வீயினும் -அவ்வவ ஜன்மங்களிலே ஜநிப்பது-மரிப்பது தொடக்கமான அவஸ்தா சப்தகத்திலும் விரலை மடக்கி ஓன்று இரண்டு என்று எண்ணப் புக்கால்-அது கால தத்வம் உள்ள அளவும் எண்ணினாலும் எண்ணித் தலைக் கட்ட அரிதான துக்கங்களை ஒன்றும்-பிறிகதிர் படாதபடி அனுபவித்து முடியிலும் –போற்றலும் சீலத்து இராமானுச –என்கிறபடியே தேவரீர் உடைய-சீல குணத்தை அளவிட்டு சொல்லினும் -இஸ் சரீர அனுபந்தியான துக்கத்தை அளவிட்டு சொல்ல ஒண்ணாது என்கிறார் காணும் –துன்பு –துக்கம் –என்றும் -எல்லா காலத்திலும் –எவ்விடத்தும்எல்லா இடத்திலும் -உன் தொண்டர் கட்கே -பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இராதே மோஷ-பிரதான தீஷிதராய் அன்றோ -இவ்வளவாக திருத்தி என்னுடைய ஹிருதயத்திலே புகுந்து நித்ய வாசம் பண்ணா நிற்கிற தேவரீருக்கு அனந்யார்ஹா சேஷமாய் இருக்கும் அவர்களுக்கே –அவதாரணத்தாலே –அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகிறார் -உனக்கே நாம் ஆட்  செய்வோம் –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே —  ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் – என்றும்

தமேவசாத்யம் புருஷம் பிரபத்யே -என்றும் பிரதம பர்வத்தில் சொல்லுகிறபடியே –
குருரேவ பரம்  பிரம்ம -என்றும் -உபாய உபேயே பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்றும்
தேவு மற்று அறியேன் -என்றும் தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாக மன்னுமது –
என்றும் சரம பர்வத்தில் சொல்லுகிறபடியே சொல்லுவித்தார் -இறே –அன்புற்று இருக்கும் படி -நிரவதிக-பிரேம யுக்தனாய் இருக்கும்படி –அன்பு -ச்நேஹம் –என்னை ஆக்கி -தேவரீருக்கு கிருபா விஷய பூதன்  ஆகும் படி
 என்னைப் பண்ணிஅங்கு ஆள்படுத்தே –பவதீயர் திருவடிகளில் விஷயமான எல்லா அடிமைகளிலும் அன்வயித்து-க்ர்த்தார்த்தனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் நீங்காது  ஏத்த
அருள் செய் எனக்கே என்று இப்படியே ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய்
இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் -எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம்
இருக்க வேண்டும் என்று -அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம்     ஈடுபட்டமை தோற்ற –
அவரை விளித்து –
தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான்
ஆட்படும்படி யாக அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை
விண்ணப்பம் செய்கிறார் .
பத உரை –
இன்புற்ற -தண்ணிய என் இதயத்தில் இடம் பெற்று ஆனந்தம் அடைந்த
சீலத்து -பழகும் இயல்பு வாயந்துள்ள
இராமானுச -எம்பெருமானாரே
சொல்லுவது -தேவரீரிடம் விண்ணப்பம் செய்வது
ஓன்று உண்டு -ஒரு விஷயமிருக்கிறது
அது யாது எனில் –
என்பு உற்ற நோய் -எலும்பைப் பற்றி நின்று வருத்தும் நோய்கள் உடையதான
உடல் தோறும் -ஒவ்வொருசரீரத்திலும்
பிறந்திறந்து -பிறப்பதும் சாவதுமாய்
எண் அறிய -எண் இல்லாத
துன்பு உற்று –துன்பம் அடைந்து
வீயினும் -ஒழிந்தாலும்
என்றும் -எக் காலத்திலும்
எவ்விடத்தும் -எல்லா இடத்திலும்
உன் தொண்டர்கட்கே -தேவரீருடைய அடியார்களுக்கே
அன்புற்று இருக்கும்படி -அன்பு உடையேனாய் இருக்கும்படியாக
ஆக்கி -செய்து
என்னை-அடியேனை
அங்கு -அவ்வடியார்கள் திறத்திலே
ஆட்படுத்து -அடிமையாம்படி பண்ணி யருள வேணும்
வியாக்யானம் –

இன்புற்ற சீலத்து இராமானுச

மிகத் தண்ணியனான எனது இதயத்துள்ளே  இருப்பதை பெறாப் பேறாக கருதி  இன்பத்துடன்
எழுந்து அருளி வுள்ளமையால் -என்னிடம் உள்ள வ்யாமோஹம் வெளிப்படுகிறது
.இந்த வ்யாமோஹம் எவ்வளவு குற்றங்கள் நிறைந்து இருந்தாலும்  -அவற்றை நற்றமாக தோற்றும்படி
செய்து விடுகிறது .சர்வேஸ்வரன் சேதனர்கள் இடம்   உள்ள வ்யாமோஹத்தாலே அவர்களோடு மிகப்
புல்லிய இதயத்திலே குற்றம் தோற்றாமல் அது நற்றமாக தோன்ற எழுந்து அருளி இருப்பது போன்றது இதுவும் -என்க-
அனைவருக்கும் ஈசானன் மத்தியில் இதயத்தில் கட்டை விரல் அளவினனாய் எழுந்து அருளி உள்ளான் .
ஈச்வரனே இருப்பதால் அருவருப்பதில்லை -என்னும் உபநிஷத்தும்
தத பூத பவ்ய ஈச்வரத்வாதேவ  வாத்சல்யாதிசயாத் தேக கதாநபி தோஷான் போக்யதயா பச்யதீத்யர்த்த  -என்று
ஆகையினாலே முற்காலத்தவருக்கும் பிற்காலத்தவருக்கும் ஈச்வரனே இருப்பதனாலேயே வாத்சல்யம் மிக்கதனால்
தேஹத்தில் உள்ள தோஷங்களையும் போக்யமாகப் பார்க்கிறான் -என்று பொருள்
ஸ்ரீ வேதாந்த தேசிகனும் –
ஔதன்வதே   மதி சத்மனி பாசாமானே ச்லாக்க்யே ச திவ்ய சதனே தமஸ  பரஸ்தாத்
அந்த களேபரமிதம் சூஷிரம் சூசூஷ்மம் கரீச கதமா தர்ண ஸ்பதம் தே -வரதராஜ பஞ்சாசத் – 21-
திருப்பாற்கடலின் கண் உள்ள பெரிய இல்லம் இலங்கிக் கொண்டு இருக்கும் போது –
பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் கொண்டாடத் தக்க அப்ராக்ருதமான திரு மாளிகையும்
துலங்கிக் கொண்டு இருக்கும் போது -சரீரத்துக்கு உள்ளே மிகவும் நுண்ணிய இந்தப்
பொந்து-அத்திகிரிப் பெருமாளே -எப்படி நீ ஆதரிக்கும் இடம் ஆயிற்று –
என்று அருளிய ஸ்லோகமும் நினைவிற்கு வருகின்றன –
இறைவனும் தம் இதயத்தில் இடம் தேடி வரும்படியான ஏற்றம் வாய்ந்த எம்பெருமானார் –தமது மென்மையை-மேன்மையை – நோக்காது -மிகத் தாழ்ந்தவனான எனது இதயத்து உள்ளே –
பதிந்து உரையும்படியாக -என்னோடு பழகினால் -அந்த சீல குணத்தை என் என்பது -என்று
வ்யாமோஹம் -அதானாலாய வாத்சல்யம் சீலம் -என்னும் குணங்களில் ஈடுபட்டு
இன்புற்ற சீலத்து இராமானுச –என்று விளிக்கிறார் .
தாம் சீரிய புருஷார்த்தத்தை பெற விண்ணப்பிக்கப் போவது வீணாகாது -பயனுறும் -என்னும்
தமது துணிபு தோன்ற இங்கனம் விளிக்கின்றார் -என்று அறிக -சீலமாவது-பெரியவன் சிறியவனோடு
வேற்றுமை தோன்றாமல் பழகுதல் –மிக்க சீலமல்லால் உள்ளாதென்நெஞ்சு– 2- என்று முதலில்

சீல குணத்தில் ஈடுபட்டவர் முடிவிலும் ஈடுபடுகிறார் .

என்றும் எவ்விடத்தும் —அங்கு ஆட்படுத்து –
தாம் அறுதி இட்டு இருக்கிற புருஷார்த்தத்தை திரு உள்ளத்திலே இறுதியாகப் படும்படி செய்து
கார்யத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக நயந்து -சொல்லுவது ஓன்று உண்டு -என்கிறார் .
இரந்து உரைப்பது உண்டு -திரு சந்த விருத்தம் – 101- என்று எம்பெருமானிடம் திரு மழிசைப்  பிரான்-விண்ணப்பித்தது போலே விண்ணப்பிக்கிறார் ..
எத்தனை கஷ்டம் நேர்ந்தாலும் சித்தம் சிதறாது தேவரீர் தொண்டர்கள் இடம் அன்பு மாறாமல்
அவர்களுக்கே அடிமை செய்யும்படியான நிலைமையை அடியேனுக்கு அளித்து அருள வேணும் –
என்று புருஷார்த்தத்தை வடி கட்டி அபேஷிக்கிறார் .
என்புற்று நோய் உடல் தோறும்
தோல் அளவோடு நில்லாது எலும்பைப் பற்றி நின்று வாட்டும் தாபம் -ஷயம் முதலிய
வியாதிகளுக்கு இடமான ஒவ்வொரு சரீரத்திலும் -என்றபடி –
நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -பெரிய திரு மொழி – 9-7 7- – என்றார் திரு மங்கை மன்னனும் .
நோய்களினால் நலிவு விரும் உடல் வாய்ந்த பிறப்புக்கள் தோறும் -என்றது ஆயிற்று –
தேவரீர் தொண்டர்கட்கே அன்புற்று ஆட்படுத்தப் பெறுவேன் ஆயின்
நோய்களினால் நலிவுறும் பல பிறப்புக்கள் நேரினும் நல்லதே -என்று கருத்து
பிறந்து இறந்து எண்ணரிய -துன்புற்று வீயினும்
பிறப்பு இறப்புகளை சொன்னது ஏனைய
இருத்தல் -மாறுபடுதல்-வளர்த்தல் தேய்தல் என்னும் விகாரங்களுக்கும் உப லஷணம்.
ஆக பொருள்களுக்கு உள்ள ஆறு விகாரங்களும் கூறப் பட்டன .ஆகின்றன .
இனி அவஸ்தாசப்தகம் எனப்படும்
கர்ப்பம் ஜன்மம்  .பால்யம் யவ்வனம் வார்த்தகம் மரணம் நரகம் என்னும் இவைகளைக்
கூறப்பட்டனவாகக் கொள்ளலுமாம் .
இந்த விகாரங்களுக்கு உள்ளாவதோடு எண்ணற்கு அரிய துன்பங்களால் தாக்கப்பட்டு படு-நாசத்துக்கு உள்ளாக்கும் நிலை ஏற்படினும் ஏற்படுக –தேவரீர் தொண்டர்கட்கே அன்பனாய்-அடிமை யாக்கப் பெறின் அவைகளும் ஏற்கத் தக்கனவே -என்கிறார் .

இறத்தல் சரீரத்திற்கு நேருவது

வீதல் ஆத்மாவுக்கு நேரிடும் உழலுதலாகிற படு நாசத்தை கூறுகிறது -என்று வேற்றுமை அறிக
-.நான் பிறப்பு இறப்பு வேண்டாம் .துன்புற்று வீதல் ஆகாது என்று தேவரீர் இடம் விண்ணப்பிக்கிறேன் அல்லேன் -எத்தகைய நிலை ஏற்படினும் தேவரீர் தொண்டர்கட்கே அடிமை செய்யும் படி அருள் புரிய- வேணும் -என்று விண்ணப்பிக்கிறேன் என்றார் ஆயிற்று –
பிராணன் பிரியும் போது கபம் தொண்டையை அடைக்கும் காலத்தும் –நின் கழல் எய்யா தேத்த அருள்-செய் எனக்கே  -திருவாய் மொழி -2 9-3 – என்று நம் ஆழ்வார் பிரார்தித்ததை இங்கு நினைவு கூர்க–
எம்பெருமானார் தொண்டர்கட்கே ஆட்பட்டோருக்கு – உடல் தோறும் பிறந்து இறந்து
துன்புற்று வீதல் நேரவே மாட்டா -நேரினும் ஆட்படும் இன்பத்தை நோக்க அவைகள் இருந்த இடம் தெரியாமல்
மறைந்து ஒழியும் என்க –
என்றும் எவ்விடத்தும் –
இந்த காலம் இந்த இடம் என்கிற வரையறை இன்றி  ஆட்படுத்தப்பட வேணும் -என்க
உன் தொண்டர்கட்கே
இன்னார் இணையார் என்று இல்லை –
தேவரீர் தொண்டர்களாய் இருத்தலே வேண்டுவது
தேவரீருக்கு பிரியும் தொண்டினையே குறிக் கோளாக கொண்டவர்களுக்கே என்னை

ஆட்படுத்த வேணும் . அன்புற்று இருக்கும் படி –அங்கனம் ஆட்படுதல் நிலை நின்று முதிர்ந்த அன்பினால் ஆயதாய் இருத்தல் வேண்டும் .

என்னை யாக்கி அங்கு ஆட்படுத்து –
அன்புடையவனாய் இருக்கும்படியும் செய்ய வேணும் –
ஆட்செய்யும்படியாகவும் பண்ண வேணும்
இரண்டும் வேண்டிப் பெற வேண்டிய புருஷார்த்தங்கள் ஆகும் எனக்கு -என்பது கருத்து -அன்பின் பயனாய் அடிமை தானே அமையாதோ-எனின் –
இவன் அடிமைசெய்திடுக -என்று தேவரீர் இரங்கி தந்ததாய் இருத்தல் வேண்டும் என்கிறார் –உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் -திரு பள்ளி எழுச்சி – 10- என்னும் தொண்டர் அடிப் பொடியார்
திருவாக்கினை இங்கு நினைவு கூர்க –
தொண்டர்கட்கே –ஆட்படுத்து
உனக்கே  நாமாட் செய்வோம் –திருப்பாவை – 29- என்று ஆண்டாளும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் மொழி -2 -9 -4 – என்று நம் ஆழ்வாரும்
போலப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷித்துத் –தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்கிறார்
முன்னைய பாசுரங்களில் முன்னிலையாகப் பேசி வந்த நம் ஆழ்வார்
புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது மட்டும் எம்பெருமான் திரு முகத்தை நோக்கி
முன்னிலையில் கூறாது –தனக்கேயாக -என்றது –
முகத்தை நோக்கில் புருஷார்த்தத்தில் கொண்ட துணிவு அவ் அழகினால் குலைவுறும்
என்று கவிழ்ந்து இருந்தமையினால் என்று ரசமாக பணிப்பர் ஆச்சார்யர்கள் –
ஆண்டாள் அங்கன் அன்றிப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது அதனில் ஊன்றி
நிற்பவள் ஆதலின் -புருஷார்த்தத்தில் தான் கொண்ட துணிவு குலைவுறுமோ என்னும்
அச்சம் ஏற்பட வழி இல்லாமையால் -கோவிந்தன் முகத்தை நோக்கி –
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று நிஷ்கர்ஷம் செய்து அருளினாள் –
அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி -உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .
தொண்டர்கட்கே அன்பும் -ஆட்படுதலும் உபயோகப் படுவனவாய் அமைய வேண்டும் .
தொண்டர்கட்கும் பிறர்க்குமாக ஒண்ணாது
தொண்டர் கட்கே யாக வேணும்
தொண்டர்கட்கும் எனக்குமாக ஒண்ணாது
தொண்டர்கட்கே யாக வேணும் என்பது அமுதனார் செய்யும் புருஷார்த்த நிஷ்கர்ஷமாகும் .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது

ஷட் பாவ விகாரம்/அஸ்தி பிறக்கிறது மாறுதல் வளர்ந்து தேய்ந்து  முடிதல்/சம்சார சேற்றில் அழுந்தி சுக துக்கம் ஆத்மா அனுபவிக்கிறது/அநிஷ்டம் இஷ்டம் மாறும் எடுத்து கொண்ட சரீரம் படி/ஏழு  அவஸ்தை –கற்ப ஜன்ம பால்யம் யௌவனம்…மூப்பு மரண நரகம்-ஏழு எருதுகள் கொம்பு தான் இரட்டை கர்ம ஒவ் ஒன்றிலும்-முறித்தால்- நப் பின்னை திரு கல்யாணம் போல ஜீவாத்மாவை கொள்கிறான் /

/தலை குப்புற சம்சாரத்தில் விழுகிறான்ஞானம் தொலைத்து சடம் வாயு மூடி கொண்டு/கரு விருத்த குழி நீத்த பின்- ஒரு குழி விட்டு வேறு குழி விழுகிறோம்/அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் கேட்டதற்கு-திரு பாண் ஆழ்வாருக்கு அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன்-ஒருவர் தானே ஆழ்வார்கள்/அது போல ஸ்வாமி அடியார்கள் இடம் ஆட படுத்த வேண்டுகிறார்-பிரகலாதனும் வரம் கேட்காத வரம் கொள்வான் அன்று-குற்றேவல் கொள்ள வேண்டும்/என்பிலாத இழி பிறவி எய்தினாலும் நின் கண் அன்பு மாறாமல் வேண்டும் என்றான்/

எறும்பி  அப்பா  வரவர முனி சம்பந்திகளின் சம்பந்தம் வேண்டும் என்றார்
/ஆழ்வாரும் அடியார் அடியார்-ஏழு தடவை பின் அடியவன்
கள்ளார்  -குறையால் பிரான் அடி கீழ் இரண்டாம் பாசுரம்/
 இன்புற்ற சீலத்து இராமனுசன்//மிக்க சீலம் அல்லால் அங்கும் சொல்லி
/ஆண்டாளும்   பரமன் அடி பாடி ஆரம்பித்து அடியே போற்றி முடித்தாள்-அடி விடாத சப்ராதயம்
/ஆக்கு அங்கு ஆட படுத்து /கைங்கர்யமும் பண்ண வை என்கிறார் இரண்டும்–மனசாலும் கா யிக   வியாபாரமும் /
எம்பெருமானார் உடைய திரு முகத்தை பார்த்து விண்ணப்பம் செய்கிறார் /அடியேன் செய்யும் விண்ணப்பமே
-ஆரம்பத்தில் ஆழ்வார் சொல்ல இறுதியில் முகில் வண்ணன் அடி சேர்த்து கொண்டான் எல்லா பிர பந்தங்களும் பெற்று கொண்டு
/ இங்கு ஸ்வாமி இடம் சொன்னதும் முடித்து கொடுத்தார்
/சீலம் ராமனுக்கு பட்டர்-இன்புற்ற சீலம்- ஆனந்தத்துடன்
/வண்ணானுக்கும் தெருப்பு தைப்பவனுக்கும்  விற்பவள்  ஊமை- பிரசித்தம்
அமுதனார் தன உள்ளம் வந்ததையே சீலம் என்கிறார் /
இதயத்தின் உள்ளே வந்தது/ இன்பம்- புகுந்து ஆனந்தம் அடைந்தார் .இது கிடைக்க பெற்றதே என்று மகிழ்ந்தாராம்
 /வேங்கடம் வந்து அவன் மகிழ்ந்தது போல /பெறா பேறாக நினைந்து கொண்டாராம் -ஆனந்த நிர்பரராய் இருக்கிற ஸ்வாமி /
தோஷ போக்யத்வம் -வாமனன் சீலன் இராமனுசன் /சீலம் இருப்பதால் தான்-இன்புற்ற சீலத்து ராமாநுச  சொல்லுவது ஓன்று உண்டு/
 அம்பரமே தண்ணீரே சோறே  சொல்லி  ஆண்டாள் கண்ணனை கேட்டாளே
/சொல்வது ஓன்று உண்டு சொல்லி உடனே சொன்னார்/ ஆண்டாள்-யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்
 -அசமயத்தில் சொல்லும் அசடு அல்லள்-பரதன் போல சிஷ்யன் தாசன் ஏதாவது வைத்து கொள் திரும்பி வா என்றான்
/கைங்கர்ய பிரார்த்தனை சரணா கதி பண்ணிய பின்பு தானே கறவைகள்   பாசுரத்தில்
/ எல்லீரும் மோட்ஷம் பெற்றால் வீடில் இடம் இல்லை பல நீ காட்டி படுப்பான்
பிரதம பர்வத்தில் அவனை பரி பக்குவமாக ஆக்கி பின்பு தான் காரியம்
/இரந்து உரைப்பது ஓன்று உண்டு/ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –திரு வாய் மொழி-2-9-3 என்னுமா போல
 ,கபம் அடைத்தாலும் -வாதம் பித்தம் கபம் மூன்றும் சேர்ந்து -என்புற்ற  நோய்-உடல் -வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும்
– தேவ திர்யக்  ஜங்கம யோனிகள் தோறும் -ஜனிப்பதும் மரிப்பதுமாய் ,அசந்கேயமாய் துக்கங்களை அனுபவித்து முடியிலும்
,சர்வ காலத்திலும் சர்வ தேசத்திலும்,,தேவரீருக்கு அனந்யார்கராய் இருக்கும் அவர்களுக்கே
/ஏ காரம்-/மாம் ஏக -தானும் பிறரும் ஆன நிலையை குலைத்தான்-
சர்வ தரமான்-அவனே உபாயம்- /தானும் இவனும் ஆன நிலையை குலைத்தான் இங்கு
-இங்கு ஒருவனையே–செய்தது நான் என்று ச்வீகாரத்தில் உபாய புத்தி கூடாது-அது அஹங்கார ஜனகமாய் இருக்குமே
 நான் பற்று வித்து கொண்டேன்-என்கிறான்/
உள்ளுக்குள் இருக்கும் விரோதி இதில் தவிர்கிறான்
/தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே /இங்கு பிராப்யத்துக்கு -உனக்கே ஆட் செய்ய /அன்பன் -அனைவருக்கும் அவன்/ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்பன் ஆழ்வார்/மதுரகவி ஆழ்வார் ஆழ்வாருக்கு-/கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ என்கிறோம்

/அன்பு உற்று -அவ்விவசார பக்தி -அடிமை ஆகும்பண்ணும்படி ஞானம் கொடுத்து -இன்பு-சுகம் /அநந்த கிலேச பாஜனம்-சரீரம்-நித்ய பிரளம்-நாம் மரிப்பது-/நைமித்திக  பிரளயம்-மூன்று லோகம் முடிவதால்/பிராக்ருத பிரளயம்/அதியந்திக்க பிரளயம்-நாம் முக்தர் ஆவது//கிரய விக்ரயம் –அசித் போல பாரதந்த்ர்யம்-அடிமை கொள்வது/எம் தம்மை விற்கவும் பெறுவார்களே- கேசவன் வாங்கலையோ/கண்ணன் வாங்கலையோ//செல்ல பிள்ளைக்கு பிதா-அப்பனுக்கு சங்கு  ஆழி அளித்து -சங்கு அடையாளம் திருந்த கண்டேன்-ஆழ்வார்

/திரு குருங்குடி நம்பிக்கி ஸ்ரீ பாஷ்யம் அளித்தும்-வட்ட பாறை-வடுகா-வைஷ்ணவ நம்பி-கர்ப கிரகத்தில் ஆசனம் இன்றும்-ஸ்ரீ பாஷ்யத்தின் செழுமிய பொருளை அருளினார்-பக்தியாலே மோஷம் ஜகத் காரணன் -விரோதம் தவிர்த்து /உபாசனமமே உபாயம்,கைங்கர்யமே பிராப்யம்/சமுத்திர ராஜன் இடம் விழுந்து பலிக்க வில்லை /மர்மம் தெரிவித்தார் தத்வ தரிசினி வசனம்/ஆற்ற படைத்தான் மகனே-செல்ல பிள்ளை-வள்ளல் பெரும் பசுக்கள்-ராமனின் சர வர்ஷம் போல-பெரிய திருமலை நம்பி -திருவேங்கடத்தான்-நடாதூர் அம்மாள்- தேவ பிரான் /என்றும் கொள்ளலாம்/கோவில் பிள்ளாய் இங்கே போதராய்/தாழ்ச்சியை மதியாது -உள்ளத்தை வேண்டி-என்னை  அவ் அருவாக எண்ணி-இன்புற்ற சீலம்-இவர் உடைய சீலம் அமுதனாருக்கு வெளிட்டு பிரகாசித்தது/சர்வ குஹ்ய தமம் கீதாசார்யன்  இறுதியில் அருளியது போல-இப் பொழுது செய்த விண்ணப்பம்-அமுதனார் இங்கு அருளுகிறார்-

பக்தி ஆசை பிரேமம் எல்லாம் இது வரை சொல்லி-பிரார்த்திக்கிறார்  சேஷ பூதனின் அபேஷிதம்/அங்கு உபதேசம் விதி இங்கு விண்ணப்பம்  பிரார்த்தனை/நானே நாநாவித நரகம் புகும் பாபம் பண்ணி ஆத்ம நாசம் உண்டாகி– கர்ம பலன் அனுபவிக்க-நோய் எல்லாம் புகுவதோர் ஆக்கை பெற்று/பல் பல் யோனிகள்-ஜன்ம பரம்பரை/மரம் சுவர் மதிள்–  மருமைக்கே வெறுமை பூண்டு-அறம் சுவராகிய அரங்கனுக்கு ஆட் செய்யாது இருக்கிறீர்களே

/கற்ப ஜன்ம –ஏழுக்கும் உபலஷணம்/ஆத்மா வீயினும்–தாழ்ந்து போகும் சரீரம் தான் அழியும் ஆத்மாவுக்கு  -சொரூப நாசம்/பிறி  கதிர் படாத படி அனுபவித்தாலும்-/சீலத்து ராமானுச-போற்ற அரும்-என்றும் -எவ் விடத்தும்-உன் தொண்டர்கட்க்கே-உன்-பந்த மோஷங்கள் இரண்டுக்கும் ஹேது அவன்-உமக்கே அற்று தீர்ந்து -அயோக/அந்ய யோக/விவசேதம் ராமன் வில்லாளியே ராமனே வில்லாளி போல

/உனக்கே நாம் ஆட் செய்வோம்-ஆண்டாள் நேராகா சொல்ல /தனக்கே யாக எனை கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை நான் கொள்ளும் சிறப்பே-நேராக சொல்லவில்லை-பயம்-கைங்கர்யம் பண்ண முடியாது அழகில் தோற்று-உன் தொண்டர்கட்க்கே அன்புற்று இருக்கும் படி/யார் எனக்கு நின் பாதமேசரணாக  தந்து ஒழிந்தாய்-ஆழ்வார்/தமேவ சரணம் விரஜெது-பிரதம பர்வத்தில்–தேவு மற்று அறியேன்/ சரணாகதி அருளியவன் தாளே அரணாக மன்னும் அது/பிரேம யுக்தனாய் -அன்பு-ஆக்கி ஆட் படுத்து என்று பிரார்த்திக்கிறார்–

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–106-இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை -இத்யாதி

November 3, 2012
பெரிய ஜீயர் அருளிய உரை
நூற்றாறாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி இவர் தமக்கு -தம் பக்கல்  உண்டான அதி மாத்திர ப்ராவண்யத்தை   கண்டு -எம்பெருமானார் -இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள –
அத்தைக் கண்டு உகந்து அருளிச் செய்கிறார் .
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய  னிராமானுசன்     மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என் தனி  தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –
வியாக்யானம்-
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் – ஆச்சர்ய பூதனான சர்வேச்வரனுக்கு வச்தவ்ய தேசம்
ஸ்ரீ வைகுண்டமும் -வடக்குத் திரு மலையும் -திரு மால் இரும் சோலை என்று பிரசித்தமான -திருமலை யாகிற -(என்னும் -திருநாமத்துக்கே -திரு மால் இரும் சோலை மலை என்னே என்னே என் மனம் புகுந்தான் -அதனால் தான் இதற்கு மட்டும் என்னும் -வைகுண்டம் வேங்கடம் -இரண்டுக்கும் சொல்லாமல் -)
ஸ்த்தலமுமாக-வைகுந்தம் கோயில் கொண்ட -திருவாய் மொழி – 8-6 5- வேங்கடம் கோயில் கொண்டு -திருவாய்
மொழி – 2-1 7- அழகர் தம் கோயில் -திருவாய்மொழி – -2 9-3 – என்று சொல்லா நிற்பவர்கள்-(நித்யர் / மண்ணோர் திர்யக் -அவனுக்கு என்று இருப்பவர்களுக்கு / விமுகனுக்கும்-மலையத்வஜனை சேர்த்துக் கொண்டாயே  -இப்படி மூன்றும் )
பகவத் தத்வத்தை சாஷாத்கரித்து இருக்கிற    விலஷணரானவர்கள் —
அப்படிபட்டு இருந்துள்ள சர்வேஸ்வரன் –அழகிய பாற்கடலோடும் -பெரிய திருமொழி 5-2 10– என்கிறபடியே
அந்த ஸ்த்தலங்கள் தன்னோடே  கூட வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்த்தலம்
என்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே –
பெரிய கோயில் நம்பி -திருவரங்கத்து அமுதனார் -/ 74 சிம்ஹாசனபதிகள் பொக்கிஷம் -இந்த பிரபன்ன காயத்ரி உடன் –
சப்தாவரண-புறப்பாடு -ஏழாவது பிரகாரம் சித்திரை விதி -இன்றும் நம் பெருமாள் -இத்தை கேட்டு அருளுகிறார் –
கோஷ்ட்டியில் உடையவரை மடத்தில் விடச் சொல்லி -ஆனந்தமாக கேட்டார் அன்றே
அமுதனார் திரு உள்ளத்தில்– தானான– தமர் உகந்த– தான் உகந்த–எல்லா திருமேனிகளையும் சேவிக்கலாம்
மாயன் ராமானுசன் -சேஷி சேஷ ராமானுசன்-இருவரும் மாயன்-
என்பர் –ஆழ்வார்-நல்லோர் -ஆச்சார்யர்கள் நான் -கேள்வி பட்டேன் -அடியேன் அறிந்தது இப்பொழுது என் நெஞ்சத்துள்
இன்று -நாம் ஆச்சார்ய சம்பந்தம் பெற்ற அன்று -நாமும் இத்தை அனுபவிக்கலாம் -ரஷா பாரம் இரங்கி -திவ்ய தேச எம்பெருமான் எம்பெருமானார் உடன் மகிழ்ந்து உள்ளே இருப்பார்களே -என் இதயம் -என் தன் இதயம் -தாழ்ந்த நீசன் –
கண்ணுக்கு இனியன கண்டோம் -கலியும் கெடும் -ஆழ்வார் அன்றே எம்பெருமானார் திரு உள்ளத்திலே ஸ்ரீ வைகுண்டம் இத்யாதி கண்டார் என்றுமாம்
சர்வ மங்கள விக்ரஹயா ஸமஸ்த பரிவாரங்கள் உடன் -நித்யம் சொல்லுவோமே –
ஞானி து ஆத்மைவ மே மதம் -நித்ய யுக்தா -ஆதி சேஷனே ராமானுஜர் -படுக்கையில் சயனம் -சாக்ஷி நேரே உண்டே -சிந்தாமணி -மாணிக்கம் உமிழ்ந்து கண் கொத்தி பாம்பு -பார்த்துக் கொண்டே பரிவாலே –
புறப்பாடு நடந்து ஆஸ்தானம் போகும் வரை அத்யாபகர்கள் பரிந்து —
அடியார் திரு உள்ளமே ஸூ ரக்ஷணமான வாஸஸ் ஸ்தானம் –
என் தன் இதயத்து உள்ளே – தம்முடைய திரு உள்ளம் போல் பக்தி ரச சந்துஷிதமாய் -நிச்ச்சலமாய் – விஷய விரக்தமாய் -இருக்கை அன்றிக்கே -சுஷ்கமாய் -சஞ்சலமாய் -விஷய சங்கியான உள்ளம் -திரு முடி சேவை -ஆழ்வார் திருநகரி -பொலிந்து நின்ற பிரான் -அவை தன்னோடும் வந்து இருப்பிடம் காட்டி அருளி – மற்று எங்கும் திரு வடி தொழுதல் சேவை/சேஷி மாயன் -விபு வானவன் ஏகதேசம் இருப்பதே /–சேஷ மாயன் – பரனும் பரிவிலானாம் படி அன்றோ எல்லா உலகோரையும் விண் மீது அளிப்பான் வீடு திருத்த விண்ணின் தலை  நின்றும் மண்ணின் தலை மிசை உதித்தார் /திருப்பேர் நகர் ஸ்வாமித்வம் காட்டி -திருமால் இன்சொல்லை -இன்று வந்து ஆழ்வார் திரு உள்ளம் / அயோத்தியை சித்ர கூடம் -ஜடாயு சிறகின் கீழே இருக்க பெருமாள் ஆசை /இப்படி மூன்று மூன்றாக நிறைய பார்க்கலாமே / ஸ்ரீ வைகுண்டம் -திருப்பாற்கடல் -வடமதுரை -சத்ய லோகம்-ஸ்ரீ அயோத்தியை  -ஸ்ரீ ரெங்கம் / போலே –நின்றும் இருந்தும் கிடந்தும் -/நெஞ்சமே நீண் நகர் -இடம் இருக்கவே அவை தன்னோடும் வந்து அமுதனார் இதயத்துக்குள் ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தாரே /ஆதிசேஷன் / இளைய பெருமாள் / பலராமன் -/ கைங்கர்யம் எல்லா அவஸ்தைகளிலும் -சேஷ சேஷ பாவம் மாறாமல் -யசோதை தாயாக இருந்தாலும் சேஷி தானே –
ஸ்ரீ வைகுண்டம் -ஆதி சேஷன் தானே கைங்கர்யம் -சென்றால் குடையாம் படி / திருவேங்கடம் -சேஷாத்ரி -/அஹோபிலம் -நடு பகுதி ஸ்ரீ கூர்மம் ஸ்ரீ சிம்காசலம் முடிந்து / பிரியாமல் இருந்து கைங்கர்யம் /ஸ்ரீ வைகுண்டம் கைங்கர்யம் ஆசைப்பட்ட ஆழ்வார் -/ கீழ் உரைத்த பேறு கிடைக்க -எம்மா வீட்டில் பேறு-திருமால் இரும்சோலை ஆஸ்ரயிக்கிறார் -முன்னோர் நிர்வாகம் -/எம்பெருமானார் -இருள் தரும் மா ஞாலம் தடங்கல் இல்லாமல் அனுபவிக்க ஸ்ரீ வைகுண்டம் -நித்யர்களும் அந்த கண்ணும் காதையும்  வைத்து அனுபவிக்க முடியாமல் அழுதுண்டு இருக்க -இருக்கும் இடத்திலே -ஞாலத்தூடே நடத்து உளக்கி பார்த்து இந்த ஏகாந்த ஸ்தலம் -காட்டி அருள – / அதற்காக சென்றார் -காலக்  கழிவு செய்யேல் என்றாரே -/-உகந்து அருளினை நிலம் -ப்ராப்யம் -ஆச்சார்யர் திருவடி பரம ப்ராப்யம் /
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்கள் -அவர் தம்முடைய குண அனுபவ ஜனித
ஹர்ஷ பிரகர்ஷத்தாலே  களித்து சசம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணும் இடம் தமக்கு வாசஸ்தானம் என்று கீழ்ப்பாட்டில் அருளிச் செய்து -இப்பாட்டிலே -வேத -தத் உப ப்ரஹ்மணாதிகளாலே பரிசீலனத்தை பண்ணி இருக்குமவர்கள்
சர்வேஸ்வரனுக்கு உகந்து அருளின நிலங்களாக சொல்லுகிற -ஸ்ரீ வைகுண்டம் வட திருமலை    தென் திருமலை
தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட எம்பெருமானாருடைய திரு உள்ளத்திலே அவன் மிக விரும்பி
வர்த்திக்குமா போலே –இப்போது -அந்த திவ்ய தேசங்களோடும் – அந்த திவ்ய தேசங்களுக்கு நிர்வாஹனான
சர்வேச்வரனுடனும் கூட வந்து எம்பெருமானார் தாமும் நிரதிசய சுகமாக எழுது அருளி இருக்கிற ஸ்தலம்
தம்முடைய திரு உள்ளம் என்று அனுசந்தித்து பிரீதர் ஆகிறார் –
வியாக்யானம்-வைகுந்தம் -அவ்யாஹதளம் கல்பம் வஸ்து லஷ்மி தரம் விது -என்கிறபடியே –1-சமஸ்த சங்கல்ப்பங்களும்
மாறாதே செல்லுக்கைக்கு உடலான தேசமாய் –நலமந்த மில்லதோர் நாடு -என்று ஸ்லாக்கிக்கப் படுமதான
ஸ்ரீ வைகுண்டமும் -அன்றிக்கே–2- –தர்ம பூத ஞானத்துக்கு திரோதானம் இல்லாத  தேசம் என்னுதல் –
வேங்கடம்கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பு -என்றும்
பரன் சென்று சேர்  திரு வேங்கட மா மலை -என்றும் சொல்லுகிறபடியே -இரண்டு பிரஜையை பெற்ற
மாதாவானவள் இருவருக்கும் முலை கொடுக்க பாங்காக நடுவே கிடைக்குமா போலே –நித்ய சூரிகளுக்கும்

நித்ய சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கைக்காக -அவன் நின்று அருளின திரு மலையும் மாலிரும் சோலை என்னும் பொருப்பிடம்புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் -என்றும் –வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -என்றும் -கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க-வளர் ஒளி மால் சோலை மலை –என்றும் சொல்லுகிறபடியே –திருமால் இரும் சோலை என்னும்-பேரை உடைத்தாய் -ஆழ்வார் பிரார்த்தித்து  அருளின படியே உகந்து வர்திக்கைக்கு ஏகாந்த ஸ்தலம்-என்று அவன் விருப்பத்தோடு வர்த்திக்கிற தென் திருமலை ஆகிய ஸ்தலமும் -பொருப்பு -பர்வதம்

இருப்பிடம் -ஆவாஸ ஸ்தானம் –மாயனுக்கு -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா -என்றும்
நமே விதுஸ் ஸூ ர கணா-என்றும் -பிரபவன்ன மகர்ஷய  -என்றும் -யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் –
என்றும் சொல்லுகிற படியே அசிந்த்ய ஸ்வபாவனாய்-ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
தான் ஒரு உருவாய் தனி வித்தாய் -என்றும் -சொல்லுகிறபடியே சர்வ காரண பூதனாய் -ஸ்வரூப ரூப
குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனுக்குநல்லோர் -மகாத்மா ந சதுமாம் பார்த்த
தைவீம் ப்ரகர்தி மாஸ்திதா -பஜன்த்ய நன்ய மனசொஜ்ஞாத்வா பூதாதி மவ்யயம் -என்கிறபடியே பரா வரதத்வயா
தாத்ம்ய விதக்ரே ஸ்ரரான மக ரிஷிகள் -என்பர் -சொல்லுவார்கள் -வைகுண்டேது  பார் லோகே  ஸ்ரீ யா சார்த்தம்
ஜகத்பதி –ஆச்தே விஷ்ணுர சிந்த்யா த்மா பக்தைர்    பாகவதஸ் சஹா -இத்யாதியாலே பிரதிபாதிப்பர் -என்றபடி
அன்றிக்கே –நல்லோர் -மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்வார்கள் என்றுமாம் –

அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் –திரு மால் வைகுந்தம் -என்றும் –தெண்ணல் அருவி  மணி பொன் முத்து அலைக்கும் திரு வேம்கடத்தான் -என்றும் –வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்  வளர் இளம் பொழில் சூழ் மால் இரும் சோலை -என்றும் –விண் தோய் சிகரத் திருவேங்கடம் -என்றும் –சீராரும் மால் இரும் சோலை –என்றும் –வேங்கடத்து மாயோன் -என்றும் –விரை திரை நீர் வேங்கடம் –என்றும் –மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தான் -என்றும் –வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் -என்றும் இத்யாதிகளாலே அருளிச் செய்வார்கள் -என்றபடி –

அவை தன்னொடும் -அந்த வைகுண்டம் வேங்கடம் மால் இரும் சோலை தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட-வந்து -பர கத சுவீகாரம் —அழகிய பாற்கடலோடும் –என்கிறபடியே- அந்த திவ்ய தேசங்களில் -1–அவரைப் பெறுகைக்கும்-2-ஜகத் ரஷணம் பண்ணுகைக்கும் -உறுப்பாகையாலே அந்த கிருதக்ஜ்ஜையாலும் –3-தனக்கு பிராப்யரான-இவர் தம்முடைய ப்ரீதி விஷயங்கள் ஆகையாலும்   -அவற்றை பிரிய மாட்டாதே -அந்த திவ்ய தேசங்களோடு கூடே தானே  வந்து –மாயன் -சுவையன் என்னும்படி நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுக்கு –1- ஜ்ஞாநீத்வாத் மைவமே மதம் -என்று
அவன் தானே சொல்லும்படி –தாரகராய் இருக்குமவர் -அன்றிக்கே –2-என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கிறபடி
சர்வேஸ்வரன் தானே வந்து உபகரித்து -படாதன பட்டு -உபதேசித்தாலும் திருந்தாத ப்ராக்ருத ஜனங்களை எல்லாம்-அநாயாசேன  திருத்திப் பணி கொண்ட ஆச்சர்ய பூதர் -என்னுதல் -இராமானுசன் –இப்படிப் பட்ட எம்பெருமானாருடைய –மனத்து -திரு உள்ளத்திலே வாசஸ்தானமாக எழுந்து அருளி இருந்தார் -என்றபடி –இன்றுஅடியேனை
அந்தரங்கராக கைக் கொண்ட இப்போது –என் தன் இதயத்து உள்ளேதம்முடைய திரு உள்ளம் போல் -1-பக்தி ரச சந்துஷிதமாய் -2–நிச்ச்சலமாய் -3- விஷய விரக்தமாய் -இருக்கை  அன்றிக்கே –1-சுஷ்கமாய் –2-சஞ்சலமாய் –3-விஷய சங்கியான –என்னுடைய ஹ்ருதயத்திலே –தனக்கு இன்புறவே -அந்த எம்பெருமானார் தமக்கு -யமைவைஷ வர்நுந்தேதேலப்ய –   என்னும்படி நிரவதிக பிரீதி யோடு-எழுந்து அருளி இருக்கும் இடம்காமினி உடம்பில் அழுக்கை காமுகன் உகக்குமா போலே என் -பக்கல்-வ்யாமோஹத்தாலே என் ஹ்ர்தயத்தை விட்டு மற்று ஒன்றை விரும்பார் என்றபடி –உச்சி உள்ளே நிற்கும் -என்னும் படி சர்வேஸ்வரன் ஆழ்வார் திரு முடிக்கு அவ்வருகு போக்கு இல்லை என்று அங்கே தானே-நின்றால் போலே எம்பெருமானாரும் இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகே போக்கு ஓன்று இல்லை என்று திரு உள்ளமாய் -அங்கே தான் ஸ்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருந்தார் காணும் –
————————————————————————–

அமுது விருந்து –

அவதாரிகை –

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட எம்பெருமானார் –
அமுதனாருடைய திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி –
அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார் .
பத உரை –
நல்லோர் -நல்லவர்
மாயவனுக்கு -ஆச்சர்யப் படும் தன்மை வாய்ந்தவனான சர்வேச்வரனுக்கு
இருப்பிடம்-குடி இருக்கும் இடம்
வைகுந்தம் -ஸ்ரீ வைகுண்டமும்
வேங்கடம் -திரு வேங்கடமும்
மால் இரும் சோலை -திரு மால் இரும் சோலை
யென்னும் -என்று உலகினரால் வழங்கப்படும்
பொருப்பு இடம் -திருமலையாகிற இடமும்
என்பர் -என்று சொல்வார்கள்
மாயன் -அந்த ஆச்சர்யப் படத்தக்க சர்வேஸ்வரன்
அவை தன்னொடும் -அந்த இடங்களோடு கூட
வந்து -எழுந்து அருளி
இருப்பிடம் -குடி கொண்ட இடம்
இராமானுசன் மனத்து -எம்பெருமானார் திரு உள்ளத்திலே
அவன் -அந்த எம்பெருமானார்
இன்று -இப்பொழுது
வந்து -எழுந்து அருளி
தனக்கு இன்புற -தமக்கு இன்பம் உண்டாக
இருப்பிடம் -வசிக்கும் இடம்
என் தன் இதயத்து உள்ளே -என்னுடைய இதயத்துக்கு உள்ளேயாம் .
வியாக்யானம் –
இருப்பிடம் –என்பர் நல்லோர் –
எம்பெருமான் சாந்நித்யம் கொண்டு அருளும் மூன்று திவ்ய ஸ்தலங்கள்  இங்கே பேசப்படுகின்றன .-
முதலாவதாகப் பேசப்படுவது ஸ்ரீ வைகுண்டம் .இது பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் உள்ளது .
முக்தி பெற்றோர் போய்ச் சேரும் இடமானது .-வைகுண்டம் என்பதுவடமொழி பெயர் –
விகுண்டருடைய இடம் வைகுண்டம் -விகுண்டர் -மழுங்காத ஞானம் உடையவர்களான நித்ய சூரிகள் –
இவர்களுடைய இடம் ஆதலின் வைகுண்டம் -என்ப-
அடியார் நிலாகின்ற வைகுந்தம் -திரு விருத்தம் -என்பர் நம் ஆழ்வார் .
வைகுண்ட நாடு அவர்கள் உடையதாய் இருத்தல் பற்றியே நித்ய சூரிகள்
விண்ணாட்டவர்-எனப்படுகின்றனர் மாயன் இந்த வைகுந்தத்திலே நித்ய சூரிகள் கண் வட்டத்திலே
இருந்து தன்னை மேவினவர்களுக்கு வீவில் இன்பம் தந்து கொண்டு இருக்கிறான் -இரண்டாவதாக பேசப்படுவது வேங்கடம்
நித்ய சூரிகளிடையே விளங்கா நிற்கும் மாயன் -சம்சாரிகளையும் விடமாட்டாத
வாத்சல்யத்தாலே -அங்கு நின்று வந்து இறங்கிய இடம் வேங்கடம் .
விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் -என்றார் பாண் பெருமாள் .
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும்  ஒக்க அருள் புரியும் நோக்கத்துடன் இரண்டு
குழந்தைகளுக்கு இடையே கிடந்தது பாலூட்டும் தாய் போலே -தரையிலும் இறங்காமல் -விண்ணகத்திலும் தங்காமல் -இடையே வேங்கடம் எனப்படும் வடமா மலையின் உச்சியாய்
விளங்குகிறான் அம்மாயன் –வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர் க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர்
 வெற்பனே -திருவாய் மொழி -1 8- 3- என்றும் இருவருக்கும் பொதுவாக கூறப்பட்டமை நோக்குக –
வைகுந்தத்தின் நின்றும் திரு வேங்கடத்துக்கு வந்து தன்னை அடைந்தார் திறத்து தன் வாத்சல்யத்தை
காட்டி -கொண்டு இருக்கும் –அம் மாயன் -உகப்பின் மிகுதியால் சரண் அடையாதவர் இடத்தும்
வ்யாமோஹம் வாய்ந்தவனாய்வலுவிலே பிடித்து இழுத்து ஆட் கொள்ள வேண்டும் யென்னும் கருத்துடன் –
திரு மால் இரும் சோலையில் கோயில் கொண்டான் -மலயத்வஜ பாண்டியன் கங்கை நீராடப் போகும் போது –
தானே அவனை வலுவில் இழுத்து -நூபுர கங்கையிலே நீராட செய்து -தன்பால் ஈடுபடும்படி செய்ததாக
சொல்லப் படுவதில் இருந்து இவ் உண்மையை  உணரலாம் ..
தென்னன் திரு மால் இரும் சோலை  -திருவாய் மொழி – 10-7 3- -என்று நம் ஆழ்வாரும்
தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -பெரியாழ்வார் திருமொழி – 4-2 7- என்று
பெரியாழ்வாரும் இந்த பாண்டியனைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்கள் -கூரத் ஆழ்வான் –  இந்த
பாண்டியன் விருத்தாந்தத்தை சிறிது விளக்கமாக அருளிச் செய்கிறார்
இதமிமே ஸ்ருணுமோ மலயத்த்வஜம் ந்ருபமிஹா ச்வயமேவஹி சுந்தர சரண சாத்க்ருதவாநிதி
தத்வயம் வனகிரீச்வர ஜாதமநோரதா -சுந்தர பாஹூஸ்தவம் -125 -எனபது அவர் திரு வாக்கு
திரு மால் இரும்சோலைக்கு ஈஸ்வரனாகிய அழகரே – மலயத்த்வஜா பாண்டியனை  தானாகவே இங்கே
திருவடிக்கு ஆளாக்கி கொண்ட விருத்தாந்தத்தை நாங்களும் கேள்விப் படுகிறோம் -ஆகையினால் எங்கள்
விருப்பம் அந்த முறையில் நிறை வேறப் பெற்றவர்களாக ஆகி விட்டோம் –
இந்த பாண்டியன் வரலாற்றினாலே உயிர் இனங்களை உறு துயரினின்றும் தானாகவே காப்பதற்கு
என்றே எம்பெருமான் மிக்க அன்புடன் இங்கே எழுந்து அருளி இருக்கிறான் எனபது புலனாகும் .
இங்கு –மன்பதை மறுக்கத் துன்பம் களைவோன் அன்புதுமேயே யிரும் குன்றத்து இருந்தான்  -பரிபாடல் -15 51- 52- –
யென்னும் பரிபாடலும் –மால் இரும் சோலை தன்னைக் கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை -யென்னும்
பெரியாழ்வார் திருமொழி யும் -4 2-11 –காணத் தக்கன –
திரு மால் இரும் சோலை யென்னும் பெயர் அழகார்ந்ததும் -சோலைகள் நிறைந்துதுமான
மாலின் -அடியாரிடம் வ்யாமோஹம் கொண்டவனின் -பெருமை வாய்ந்த மலை யென்னும் பொருள் கொண்டது .
திரு மால் இரும் சோலை மலை யென்னும் இப் பெயரே தனி இனிமை வாய்ந்தது –
அதன் மகிமை நாடு எங்கும் பரவியது -விரும்பும் பயனைத் தர வல்லது –
இதனைச் சொல்வது விரும்பிய பயனுக்கு விதைப்பதாகும் -விளைவை -பயனை -உடனே எதிர்பார்க்கலாம்
என்கிறது பரி பாடல் –
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவில்
சோலை யொடு தொடர்  மொழி மாலிரும் குன்றம்
தாம் வீழ் காமம்  வித்தி விளைக்கும்
நாமத் தன்மை நன் கனம்படி எழ
யாமத் தன்மையில் வையிரும் குன்றத்து – 15- 22-26 –
அழகு பொருந்திய திரு யென்னும் சொல்லோடும்
சோலை யென்னும் சொல்லோடும்
மால் இரும் குன்றம் யென்னும் சொல் தொடர்ந்த மொழி யாகிய திரு மால் இரும் சோலை மலை யென்னும்
நாமத்தினது பெரும் தன்மை நன்றாக பூமியின் கண் பரக்க – மகளிரும்மைந்தரும்  தாம்
வீழ் காமத்தைவித்தி விளைக்கும் யாமத்தியல்பை உடைய இவ்வையிரும் குன்றத்து எனக் கூட்டுக –
எனபது பரிமேல் அழகர் உரையாகும் .
பயன் கருதாது இப்பெயரை நம் ஆழ்வார் கூறினமையில் வீடு பேறு பெற்றனர் -என்பர் .’
பெயருக்கு உள்ள இத்தகைய பிரசித்தி தோற்ற –மால் இரும் சோலை -யென்னும் பொருப்பு
என்று அருளிச் செய்தார் –பொருப்பிடம் -பொருப்பாகிற இடம்- இரு பெயரொட்டுப் பண்புத் தொகை –
வைகுந்தம் வேங்கடம் பொருப்பிடம் யென்னும் இவற்றில் உம்மைகள் தொக்கன
மாயனுக்கு -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி -அனைத்திலும் வியக்கத்தக்கவனான சர்வேஸ்வரனுக்கு
மாயனுக்கு வைகுந்தமும் -வேங்கடமும்-பொருப்பிடமும்  இருப்பிடம் -என இயைக்க –
என்பர் நல்லோர் –
இம் மூன்று திவ்ய தேசமும் மாயன் கோயில் கொண்டுள்ள இடமாக சொல்லா நிற்பார் -நல்லவர்கள் என்றபடி ..
நல்லவர்கள் சர்வேஸ்வரனை சாஷாத்காரம் செய்ய வல்ல ஆழ்வார்கள் –
வைகுந்தம் கோயில் கொண்ட -திருவாய் மொழி – -8 6-5 – –
வேங்கடம் கோயில் கொண்டு – பெரிய திரு மொழி – 2-1 7- –
அழகர் தம் கோயில் -திருவாய் மொழி – 2-10 2- – என்று ஆழ்வார்கள் கோயிலாக இம் மூன்றினையும்
குறிப்பிட்டு உள்ளமை காண்க –
இம் மூன்று இடங்களையும் ஒக்க எடுத்தது மாயனுக்கும் அடியார்களுக்கும் இன்பம் பயப்பதாய்
ப்ராப்யம் -பேறாகப் பெறத் தக்கது -பிராப்யமாய் ஆம் இடமாய் இருத்தல் பற்றி -என்க-
வைகுண்டத்தில் போலே வேங்கடத்தில் நித்ய சூரிகள் அடிமையினை ஏற்பதோடு அமையாமல் –
நீணிலத்தில் உள்ளார் அடிமையினையும் ஏற்று முக்த அநுபூதியை மாயன் வழங்கிக் கொண்டு இருப்பதால் –
அதுவும் பிராப்ய பூமி ஆயிற்று என்க -அடிமையில் விடாய் கொண்டவர்கள் மலையேறி வருந்தாது
 நினைத்த போதே அடிமை செய்யலாம்படி –அம்மாயன் வந்து மலை அடிவாரத்தில் அடிமையினை
எதிர்பார்த்து இருக்கும் இடம் திரு மால் இரும் சோலை மலை ..நம் ஆழ்வார் தாம் வடிகட்டின அடிமையை
உடனே பெற்றாக வேண்டும் படியான விடாய் கொண்டு –காலக் கழிவு செய்யேல் –என்று ஆத்திரப்
படுவது கண்டு -சரீரம் நீங்கும் வரை அடிமை செய்ய காத்து இருக்க இவரால் இயலாது என்று
சரீரத்தோடேயே- நினைத்த கணத்திலேயே அடிமை கொள்ள இந்த இடம் சால ஏகாந்த ஸ்த்தலமாய்
இருந்தது என்று -திரு மால் இரும் சோலை மலையிலே எழுந்து அருளின நிலையைக் காட்டி
பகவான் அவரை அனுபவிப்பித்து இனியர் ஆக்கினான் -என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் .

கிளர் ஒளி ஈட்டு அவதாரிகை -காண்க .

அவை தன்னொடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து
அர்ச்சிராதி வழியே வந்து உடலம் நீங்கினவர்க்கு அடிமை செய்ய பாங்கான இடம் என்று வைகுந்தத்தையும் –
போவான் வழி கொண்டு – -சிகரம் -வந்தடைந்த நீணிலத்தில் உள்ளார்கட்கும்
அடிமைத் தொழில் பூண்பதற்கு பாங்கான இடம் என்று திரு வேங்கடத்தையும்
போவான் வழிக்  கொள்வதற்கும் -சிகரத்தில் ஏறுவதற்கும் -திறன் அற்றார்க்கும் விடாய்த்த உடனே
உடலோடு அடிமை செய்வதற்கு பாங்கான இடம் என்று திரு மால் இரும் சோலை மலையையும்
தனக்கு கோயில்களாக கொண்டது போலே –
மாயன் –எம்பெருமானார் இதயத்தையும் தனக்கு கோயிலாக கொண்டான்
இவ்விடம் ஒரே காலத்தில் பல்லாயிரம் பேர்கள் ஆட்பட்டு அடிமை புரிவதற்கு -பாங்காக அமையும்
எனபது மாயனது அவா -ஆயின் ஏனைய இடங்கள் போன்றது அன்று எம்பெருமானார் உடைய இதயம்
வேங்கடத்தை இடமாக கொண்ட போது -த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் -சீரிய வைகுண்டத்தை விட்டு –
என்றபடி .வைகுண்டத்தை துறந்தான் –இங்கனமே திரு மால் இரும் சோலை யை இடமாக கொள்ளும் போது
ஏனைய இரண்டினையும் விட வேண்டியதாயிற்று .இம் மூன்று இடங்களிலுமே இருப்பவன்
மாயன் ஒருவனே -ஆயின் இடங்கள்  வெவ்வேறு பட்டன .அவ்வவ இடங்களிலே வாசம் பண்ணினதன் பயன்
இவர் இதயத்தில் வாசம் பண்ண வேண்டியதாயிற்று ..அங்கனம் வாசம் பண்ண வரும் போது –
தான் கோயில் கொண்டு இருந்த மூன்று இடங்களையும் கூடவே கொணர்ந்து இங்கே குடி புகுந்தானாம் அம் மாயன் –
ஏனைய இடங்கள் அவன் இருப்பதற்கே போதுமானவை –
மற்ற இடங்களைக் கொணர்ந்தால் இடம் போதாது –
எம்பெருமானாரிதயமோ இன்னும் எத்தனை இடங்களோடு வந்தாலும் இடம் கொடுக்கும் .அவ்வளவு விசாலமானது -இது போன்ற இதயம் இருப்பிடம் என்னாது -இதயத்து இருப்பிடம் -என்ற அழகு பாரீர் –
வைகுந்தம் முதலியன இருப்பிடமாயின
எம்பெருமானார் இதயத்தில் ஒரு பகுதி அவற்றோடு மாயன் இருப்பதற்கு இடம் ஆயிற்று -என்றபடி –
மேலும் பூதத் ஆழ்வார் தமது உள்ளத்தை -திரு மால் இரும் சோலை மலை -திரு வேங்கடம்
இவற்றைப் போலே கோயில் கொள்ளக் கருதியதை அறிந்து பகவானே  நீ என் உள்ளத்தில் குடிபுக
பாலாலயமாகக் கொண்ட திருப்பாற்கடலை கை விட்டு விடாதே என்று
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மைபோல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று – -54 –  யென்னும்
பாசுரத்தில் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப பெரியாழ்வார் திரு உள்ளத்திலே
அழகிய பாற்கடலோடும் -5 -2 10- -புகுந்து பள்ளி கொண்டது போலவும்
கோயில்கொண்டான்  திருக் கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் –
திரு வாய் மொழி -8 6-5 – – என்றபடி நம் ஆழ்வார் திரு உள்ளத்தில் திருக் கடித்தானத்தோடு கோயில்
கொண்டது போலவும் –எம்பெருமானார் திரு உள்ளத்திலும் அந்த வைகுந்தம் முதலிய வற்றோடு
எழுந்து அருளி இடம் கொண்டான் -என்க .
பொருந்தாதவற்றையும் பொருந்த விட வல்ல மாயன் ஆதலின் -அளவிடற்கரிய
த்ரிபாத் விபூதியான வைகுந்தத்தையும் இதயத்துக்கு உள்ளே அடக்க வல்லனாயினான் -என்னலுமாம்
இன்று அவன் வந்து இருப்பிடம் –தனக்கின்புற –
இன்று -ஈடுபாடு உடையவனாக்கி -என்னை ஆட் கொண்ட இன்று –
அவன் வைகுந்தம் முதலிய வற்றோடு மாயனை இதயத்திலே ஓர் இடத்திலே ஒதுக்கி வைத்து கொண்டு
 இருக்கிற எம்பெருமானார்  .
அத்தகைய எம்பெருமானார் தாம் இன்புறும்படி -தாமே வந்து -என் தன் இதயத்துக்கு உள்ளே இடம் கொண்டார்
என்கிறார் –இத்தகைய இதயம் படைத்த பீடு -தோன்ற -என் தன் -இதயம் -என்கிறார் -மாயன் இருப்பிடம் எம்பெருமானார் இதயத்திலே
அந்த எம்பெருமானார் இருப்பிடம் என்னுடைய இதயத்துக்கு உள்ளே -என்றது கவனிக்கத் தக்கது –
இதனால் எம்பெருமானாரிதயத்திலும் அமுதனார் இதயம் இடம் உடைத்தாய் உள்ளமை

புலன் ஆகின்றது அன்றோ

 கீழ் இரண்டு பாட்டுக்களாலே எம்பெருமானார் திரு மேனி குணங்களின் அனுபவம் இன்றேல்
ப்ராப்யமான வைகுந்தம் சேரினும் கால் பாவி நிற்க மாட்டேன் என்றும் –
எம்பெருமானாரைத் தொழும் பெரியவர் களிக் கூத்தாடும் இடமே தனக்கு பிராப்யமான இடம்
என்றும் சர்வேஸ்வரனோடு ஒட்டு அறுத்து பேசினவர் –
இங்கே பிராப்யமான இடத்தோடு மாயனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு எம்பெருமானார்-தன் இதயத்துக்கு உள்ளே எழுந்து அருளி இருப்பதாக அருளிச் செய்து இருப்பது கவனத்திற்கு உரியது .ஆசார்ய சம்பந்த்தினுடைய மகிமை –
 இவர் கால் பாவ மாட்டேன் என்று ஒதுக்கின இடமும் –
ஆசார்யனோடும்
அவன் உகந்த ஈச்வரனோடும்
தானாகவே  இவரை நாடி வருகிறது –
ஆசார்யன் உகந்த இடமும் -அவன் உகந்த எம்பெருமானும் ஆசார்யன் முக மலர்ச்சிக்காக
நெஞ்சார ஆதரிக்கத் தக்க எய்தி விடுவதை இது புலப் படுத்து கிறது .
இதனால் ஆசார்யனைப் பற்றுகை -பகவானை பற்றுவதினின்றும் வேறு பட்டது அன்று –
பேற்றினை எளிதில் தர வல்லது எனபது தெளிவாகின்றது –
இங்கே -ஈஸ்வரனை பற்றுகை கையைப் பிடித்து கார்யம்கொள்ளுமோபாதி
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி –-47 –  யென்னும்
ஸ்ரீ வசன பூஷணமும் அதன் வியாக்யானமும்  சேவிக்கத் தக்கன ..
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

இப்படி இவர் தமக்கு தம் பக்கல் உண்டான அதிமாத்ர ப்ராவண்யத்தை கண்டு ,-எம்பெருமானார் இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி அருள ,அத்தை கண்டு உகந்து அருளி செய்கிறார்-ஸ்வரூப ரூப குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனான சர்வேச்வரனுக்கு வஸ்தவ்ய தேசம்-ஸ்ரீ வைகுண்டமும் ,வடக்கு திருமலையும் திரு மால் இரும் சோலை என்று பிரசித்தமான திரு மலை ஆகிற ஸ்தலமுமாக—வைகுந்தம் கோவில் கொண்ட -திரு வாய் மொழி 8-6-5/-வேங்கடம் கோவில் கொண்டு -பெரிய திரு மொழி 2-1-7–அழகர் தம் கோவில் திரு வாய் மொழி 2-9-3/என்று சொல்லா நிற்பவர்கள் பகவத் தத்தவத்தை சாஷாத் கரித்து இருக்கிற விலஷணர் ஆனவர்கள்..அப் படி பட்டு இருந்துள்ள சர்வேஸ்வரன் அழகிய பாற்கடலும் பெரிய திருமொழி 5-2-10 என்கிற படியே-அந்த ஸ்தலங்கள் தன்னோடு கூட வந்து எழுந்து  அருளி இருக்கிற ஸ்தலம் என் உடைய ஹ்ருதயத்துக்குள்ளே

மாறன் அடி பணிந்து உய்ந்தவன்ஸ்ரீ ராமானுசம் வாங்கி கொண்டீர்களா- ஆழ்வார் திரு நகரில்-மற்ற இடங்களில் மதுர கவி ஆழ்வார் //முதலி ஆண்டான் ஸ்வாமி திருவடிகள்-திரு மலையில் மட்டும் அனந்தாழ்வான்/திரு நகரி- கலியன்- திருமேனி-குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பு உடையவனை-அங்கும் சேவித்து கொள்ளலாம்/அபிமான பங்கமாய்-ஆண்டாள் / அபிமான துங்கன்-பெரிய ஆழ்வார்-/பெரியவர் திருவடியில் ஒதுங்கினவர் ஸ்வாமி என்றே அருளி இருக்கிறார் அமுதனார்

/அஷ்டாதச ரகசியம்  விளைந்த இடம் காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் அரங்கேற்றம்/ஸ்வாமி நுழைந்ததும்- பல ராமானுசன் நுழைந்ததும் அன்று -எழல் உற்று மீண்டு இருந்து -போல எழுந்தார்கள்-அதனால் இந்த கடைசி  மூன்றும் சாத்து முறை பாசுரங்கள் ஆயின-/ஆடி பாடி ராமானுசா என்று இரைஞ்சும் இடமே-வகுத்த இடம்/ பாட்டு கேட்க்கும் இடமும் கூப்பிடு இடமும்  குதித்த இடமும்  ஊட்டும் இடமும்-வளைத்த இடங்களும் எல்லாம் வகுத்த இடமே-ஆச்சர்ய  அபிமானமே உத்தாரகம்/ உன்னை ஒழிய மற்று அறியாத வடுக நம்பி நிலை தா -மா முனிகள்

/நெஞ்சை கொண்டாடுகிறார் இதில்/அமுதனார் திரு உள்ளத்தில்– தானான– தமர் உகந்த– தான் உகந்த–எல்லா திருமேனிகளையும் சேவிக்கலாம்//மூவர் வர-ஸ்வாமி திரு உள்ளத்தில் மூவர் இருக்க/மாயன்-ஸ்ரீ வைகுண்டம்- திருவேங்கடம்- திரு மால் இரும்சோலை-மூன்றும்/அவை தன்னோடும் மாயன் ராமானுசன் –சேஷி சேஷ ராமானுசன்-இருவரும் மாயன்-

நீக்கமற  நிறைந்தவன்- வியாபகன் பொற்குன்றத்தில் சேவை-மாயன்/ஸ்வாமி-அவனால் திருத்த படாத மக்களை திருத்தினார்/திரு மழிசை சொல்லி பை நாக பாம்பு அணையை சுருட்டி கொண்டான்/ இங்கு ஸ்வாமி சொல்லாலாமலே -திவ்ய தேசங்களை எல்லாம் எடுத்து கொண்டு-அவை தன்னோடும்-மனத்து வந்தார்கள்

/திரு பேர் நகரான்-ஸ்வாமித்வம் காட்டிய இடம்-திருமால் இரும் சோலை- ஆழ்வார் மனம் -பேரென் என்று /அயோத்தியை சித்ர கூடம் ஜடாயு சிறகு அடியில் வாழ ஆசை பட்டான் ராமன்/

/சத்ய லோகம் அயோதியை ஸ்ரீ ரெங்கம் /மதுரை கோகுலம் த்வாரகை/அது போல இங்கும் அமுதனார்- ஸ்வாமி திரு உள்ளம் புகுந்தது இதற்க்கு தான்/வாராயோ என்று அவை தன்னோடும் –இன்று-/நெஞ்சமே நீள் நகராக -/ஸ்ரீவைகுண்ட விரக்தாய-கல்யாண குணங்கள்-பகல் விளக்கு பட்டு இருக்கும்-ஷமை தப்பே பண்ணாதவர் இடம் காட்ட முடியாது தயா/அமிர்தம் உண்டு களித்து இருக்கிறார்கள்/ இளம் கோவில் கைவிடேல் என்று பிராத்திக்க வேண்டும்படியாய் இருக்குமே-உச்சி உள்ளே இருத்தும்-பெரியோரை உள்ளத்தில்  வைப்பதே தீ மனம் கெடுக்க வழி-/ஆனந்தம் பிரதம ரூபம்- அனந்தன்/ அடுத்து லஷ்மணன்/ பல ராமன்- கைங்கர்யம் இருவரும்- சேஷ சேஷி பாவம் மாறாது/கலி யுகத்தில் அவர்களே   ஸ்வாமி/ஸ்ரீ வைகுண்டம்-சென்றால் குடையாம்-தானே எல்லா கைங்கர்யம்/

வேங்கடம் சேஷாத்ரி மலையே /அஹோபிலம் நடு-ஸ்ரீ  ஷீராப்தி  பைம் தலைய அனந்தன் ஆடும் இடம்-ஆதிசேஷ மலை திரு மால் இரும் சோலை என்பர்/மாயன்- ஸ்வரூப ரூப குண விபூதிகளால் ஆச்சர்ய பூதன் சர்வேஸ்வரன்/–ஜகத் வியாபார வர்ஜம்- நிறைய சிரமம் திரு மந்த்ரத்தில் பிறந்து துவயத்தில் வளர்ந்து -இருப்பதே உத்தேசம்

/வேர்த்த  பொழுது குளித்து பசித்த பொழுது சாப்பிட்டு  -பட்டர்  திருவடிகளில் இருந்தால் மோட்ஷம் கிட்டாதோ-அனந்தாழ்வான்-நஞ்சீயர்/திருநாமத்துக்கு தனி வைபவம்/திரு மால் இரும் சோலை என்ன நெஞ்சில் புகுந்தான்- ஆழ்வார்

திரு வேங்கடம் இல்லாத சீர்/மால் வாழும் குன்றம்-பரிபாடல் உண்டு/விகுண்டர்- குண்ட-தடை/தடை இல்லாத ஞானம் நலம் இல்லாத நாடு என்பதால்-ஸ்ரீ வைகுண்டம் இருந்து திரு மலை வழியாக  /வடக்கு வாசல் வழியாக புகுந்து ஸ்ரீ ரெங்கத்தில் சயனித்தான்/சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்ப மாட்டேன் என்று சயனித்து கொண்டு இருக்கிறான்

தென்னல் உயர் பொற்பும் வட வேங்கடமும்/விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்/மால் இரும் சோலைஎன்பர்  /நல்லோர்-ஆழ்வார்கள்/அனந்யார்க்க சரணர்களுக்கு-நித்யர் மட்டும் கைங்கர்யம்/காடும் வானரமும்-அனைவரும் கைங்கர்யம்-சௌலப்யம்-பொது அறிந்து வானரங்கள்  பூம் சுனை புக்கு-முதலை இங்கு -புல் பூண்டு கூட அடிமை செய்ய தான் இங்கு-சுமந்து -விஷ்வக் சேனரும்   குரங்கும் //மலையத்வஜ பாண்டியன் விமுகன்- கூப்பிட்டு சேவை சாதித்தார் -வனகிரீச்வரன்-குழல் அழகர் கொப்பூழில் எழில் அழகர் –என் அரங்கத்து இன் அமுதர் /

2-10கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோவில்/ஸ்ரீ வைகுண்டம் ஆசை பட்டார் ஆழ்வார் /கீழ் உரைத்த பேறு- தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -2-9 கேட்டார்-கைங்கர்யம் பண்ண /பிராப்யம் நிஷ்கரித்தார்/அழ ஆரம்பித்தார்

-1௦௦௦ பாசுரம் பாட வேண்டுமே இருக்கிற இடத்தில் ஞாலதூடே பார்த்துதிரு மால் இரும் சோலை வர சொன்னார் கைங்கர்யம் பண்ண இருள் தரும் மா ஞாலம் –ஆழ்வார் சொல்ல- அங்கு நித்யர் அங்கும் அனுபவிக்க முடியவில்லை என்று தான் /பிராப்யத்தை/கால கழிவு செய்யேல் என்றார்- கொடுத்தார் ஆழ்வாருக்கு/அழகிய பாற் கடலோடு ..-பரவி கின்றான் விஷ்ணு சித்தன்/பரம பிராப்யம் ஸ்வாமி திரு உள்ளம்/ உகந்து அருளிய திவ்ய தேசங்கள் -எல்லாம் பிராப்யம்-பிரயோஜனம் ஸ்வாமி திரு உள்ளம் அடைய /தபஸ் பண்ணுகிறானாம் எல்லா இடங்களிலும் ஸ்வாமி உள்ளம் போக/அறியாதன அறிவித்த அத்தா-க்ருத்க்ஜன் -அதனால் தான் அவை தன்னோடும் வந்து இருந்தானாம் திரு கடித்தானமும் என் உடை சிந்தையும்- ஆழ்வார் சாத்தியம்-சாதனம்-க்ருதஞ்ஞா  கந்தம்/இன்று-அவர் வந்து தமக்கு இன்புற -இன்பமாக உகந்துஅருள அமுதனார் இதயத்துக்குள்ளே

/நீதி வானவர் சேஷத்வம் தெரிந்தவர்கள் வாழும் ஸ்ரீ வைகுண்டம்-நலம் அந்தம் இல்லாத நாடு/நித்ய சங்கல்பம் நடக்கும் இடம்/தர்ம பூத ஞானம் மாயையால்-பிரக்ருதியால்-மறைக்காத இடம்/மித்யை பொய் இல்லை/தெளி விசும்பு திரு நாடு/பரம் சென்று சேர் திருவேங்கடம்/கண்ணாவான் -ரஷகன்-விண் ணோர்க்கும்    மண்ணோர்க்கும்-வராக ஷேத்ரம் தான் அது–சென்று சேர்-இருவருக்கும் பால் கொடுக்க நித்ய சூரிகளுக்கும் நித்ய சம்சாரிகளுக்கும்/ மால் இரும் சோலை என்னும் பொருப்பிடம்-திரு நாம வைபவம்  தோன்ற-

நன்மை என்று பெயர் இடலாம் படி -மடி மாங்காய் இட்டு-ஓன்று பத்தாக்கி நடாத்தி கொண்டு போகும்-/புயல் மழை /திரு மால் இரும் சோலை -தொடர் மொழி-இரும் குன்றம் நாமதன்மை -பரி பாடல்-சிலம்பாறு அணிந்த- நூபுர கங்கை-புயல் மழை வண்ணர் புகுந்து உறை கோவில்-பயன் அல்ல செய்து பயன் அல்ல நெஞ்சே-பரத்வம் விபவம் சேவிக்காதே

-மேகம்-போய் வர்ஷிக்கும்/ நின்றே கொட்டும் மேகம் அழகர்/மயல் மிகும் -அவனுக்கும் நமக்கும் பைத்தியம் பிடிக்கும்-த்யாஜ்ய தேக வியாமோகம்-கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம் கெடும் என்றார்-வான் ஏற வழி தந்த  வாட்டாற்றான் –

நெஞ்சே நரகத்தை நகு/வஞ்ச கள்வன் மா மாயன் நெஞ்சையும் உள் கலந்து தானே ஆய நின்றான் அழகர்/திரு மேனி –உன் மாமாயை மங்க ஒட்டு-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்கும் சரீரம்/பாம்போடு ஒரு கூரையில் வர்தித்தது போல இருக்கிறோம்/மயல் மிகு பொழில்  சூழ் மால் இரும் சோலை/பின்னை கொல் நிலா மா மகள் கொல் திரு  மகள் கொல் பிறந்திட்டாள்// வேர் மண் பற்று கழியாது  போல ஞானியை திரு மேனியோடு ஆதரிக்கும்/கீழ் உரைத்த பேறு கிடைக்க -/மாயன்- பொருந்தாததை பொருந்த வைத்தவன்-எவர்க்கும் சிந்தைக்கு  கோசரம் அல்லன்–அவன் இங்கே வர்த்திகிரானே/சுத்தமான பக்தியாலே கிட்ட முடியும்/ஜகத் காரணம் சங்கல்ப்பதாலே பண்ணும் மாயன்/தான் ஓர் உருவே தனி வித்தாய்/நல்லோர் சொல்வார்கள்-

ஆதி ஆனந்தம் அற்புதமாய -பர அவர விவேகம் தெரிந்தவர்கள்/வைகுண்டே பரே லோக -ஜகத் பதி- பாகவத சக- லிங்க புராண ஸ்லோகம்/நடுவாக வீற்று இருக்கும் நாயகன் /நல்லோர்- தத்வ ஞானிகள் / ஆழ்வார்கள்/சீராரும் மால் இரும் சோலை என்னும்/அயர்வறும் அமரர்கள் அதிபதி/திரு மால் இரும் சோலை திரு பாற்கடலே என்றும்-தென் நல்  அருவி மணி ஒண் முத்து அலைக்கும் என்றும்/விண்  தோய் சிகரத்து திரு வேங்கடம்/வேங்கடத்து மாயன் என்னும்/வெற்பு என்னும் இரும் சோலை வேங்கடம்//அவை தன்னோடும் -ஸ்வாமி நெஞ்சம் நீள் நகரமாக இருந்ததால்/எதிராஜரே எம்பெருமானார் சத்யம் கூரத் ஆழ்வான்/அருளாள பெருமாள் எம்பெருமானார் தம் மடத்தை இடித்தார்/வந்து- திரு கமல பாதம் வந்து/ வந்து அருளி என் நெஞ்சம் இடம் கொண்டான்- பரகத ச்வீகாரம்/பெருகைக்கும்  ஜகத் ரஷகத்துக்கும் திவ்ய தேசம்

/வைகுண்டம் வேங்கடம் ஸ்வாமிக்கும் ப்ரீதி விஷயம் தானே/சேஷ மாயன் சுவையன் திருவின் மணாளன்-ரசிக தன்மை கத்துண்டு/தாரகன்- ஸ்வாமி ஞானி ஆத்மை மே  மதம்/என்னது உன்னதாவி  உன்னது என்னதாவி /மாயனான கண்ணனை தாங்கும் மாயன் ஸ்வாமி/மண் மிசையோனிகள்- நண்ணரும் ஞானம் தலை கொண்டு நாரணர்க்கு ஆள் ஆக்கின மாயம்/அண்ணல் இராமானுசன் தோன்றிய அப் பொழுதே -ஆனதே- மாயம்/அனாயாசனே திருத்தினாரே/இன்று அந்தரங்கராக கை கொண்டு-..இனி தம் உள்ளத்துக்கும் ஸ்வாமி உள்ளத்துக்கும் வாசி-பக்தி ரசம் நிரம்பி நிஸ் சலமாய் ஸ்வாமி திரு உள்ளம் விஷயம் ஒன்றிலும் தீண்டாமல்/

உலர்ந்து நில்லவா நில்லாத நெஞ்சு விஷய சஞ்சீவ- தனக்கு இன்புறவே வந்தார்-இதற்க்கு என்றே காத்து இருந்தார்-நிரவதிக ப்ரீதி உடன் வந்தாராம்/அவராக ஆசை பட்டு -தன் ஆனந்தத்துக்கு-நான் பிரார்த்திக்காமல்காமுகன் காதலி உடம்பின் அழுக்கை விரும்புமா போல -/பாசி தூரத்து கிடந்த பாற் மகள்க்கு –மான மிலா பன்றியாம்-உபமானம் அபிமானம் இரண்டும் இல்லாத/பகவான் விட ஸ்வாமி ஏற்றம்/ ஸ்வாமி மனசுக்கு வந்தது விட-அமுதனாருள்ளதுக்கு வந்தது உசந்தது-எங்கும் பக்க நோக்கு அறியாமல் /பொலிந்த நின்ற பிரான் ஆழ்வாரை நாவில் உளானே உச்சி உள்ளே வந்தாரே-திரு முடி சேவை இன்றும் உண்டு /போக இடம் இல்லை என்று ஸ்தாவர பிரதிஷ்ட்டையாக இருந்தார்-அது போலே எம்பெருமானாரும்  இனி பேரென் என்று  அமுதனாரின் நெஞ்சுக்குள் இருந்தார்–

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–105-செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ் -இத்யாதி ..

November 3, 2012
பெரிய ஜீயர் அருளிய உரை
நூற்றஞ்சாம் பாட்டு -அவதாரிகை
எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு
வஸ்தவ்யதேசம்  அதுவே என்று அங்கே போக ஆசைப்படா நிற்க –
நீர் பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர் –
உமக்கு வஸ்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பது எது -என்ன
அருளிச் செய்கிறார் –
செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 – –
வியாக்யானம் –
அழகிய திரைகளை வுடைத்தான திருப்பாற் கடலிலே –
கடலோதம் காலலைப்ப கண் வளரும் -திருவந்தாதி – 16- என்கிறபடியே
துடைகுத்த உறங்குவாரைப் போலே -அத்திரைகளானவை திருவடிகளை அநு கூலமாக அசைக்க
கண் வளரா நிற்பானாய் – உறங்குவான் போல் -திருவாய்மொழி -5 4- 11- – யோகு செய்கிற
ஆச்சர்யத்தை உடையவனான சர்வேஸ்வரனுடைய குணத்தில் ஈடுபட்டு –ஜிதந்தே -என்று
திருவடிகளின் கீழே விழுந்திருந்த ஸ்வபாவத்துக்கு ஒருகாலும் சலனம் அற்று இருக்கிற
கலக்கமில்லா நல் தவ முனிவரும் -திருவாய் மொழி -8-3 10–   இது ஒரு ஞான வைபவமே
என்று இத்தையே ( இவரை -சொல்லாமல் இத்தை -ஞானத்தை -மேவுவது ஞானம் ஞானி அல்லன்– ) பல காலும் ஸ்லாகித்துக் கொண்டு போருகையாலே -அவர்கள் நெஞ்சிலே
மேவப்பட்ட விலஷணமான ஜ்ஞானத்தை உடையவராய் -பரம வைதிகரானவர்கள்
ப்ராணாமாத்ய அநு வர்த்தங்களைக் பண்ணா நின்றுள்ள திருவடிகளை வுடையரான
எம்பெருமானாரை
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா -பார மோஷ -என்கிறபடியே சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள
வைபவத்தை உடையவர்கள் -(தூங்கும் கண்ணன் -கண் துயில் மாயன் -கண் வளரும் கமலக்  கண்ணன் -பற்றாமல் உண்டோ கண்கள் துஞ்சுதலே –இவரை பற்ற அன்றோ அடுப்பது-)-அவ் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே
கிளர்ந்து கடல் இரைத்தால் போலே  இரைத்துக் கொண்டு சசம்பிரம வியாபாரங்களை பண்ணும் இடம்
அவர்கள் அடியானான எனக்கு வஸ்த்வ்ய தேசம்
செழுமை -அழகு பெருமையுமாம்
பாற்கடல் பள்ளி  கொள் மாயன் -என்றும் பாடம் சொல்லுவர்–
தன் இருப்பிடம் அமுதனார் சொல்லிக் கொள்ள -போட்டி போட்டு திவ்ய தேச பெருமாள்கள் அடுத்த பாசுரம் –
நீள் ஓதம் வந்து அலைக்கும் -அவன் திருவடி தீண்ட -கண் துயில் மாயன் -உறங்குவான் போல் யோகம் செய்து -அனைத்தையும் செய்து அருளி –
பாவோ நான்யத்ர கச்சதி –நெஞ்சில் -மேவு நல் ஞானி ராமானுஜன் -திருவடி விழுந்த பலன் ராமானுஜரை நெஞ்சிலே பிரதிஷ்டை செய்து அருளுவான் -பிரதம பர்வம் பற்றினால் சரம பர்வத்தில் மூட்டும்-மேவு நல் ஞானம் -ஆராய்ந்து விரும்பிய ஞானம் -படைத்த ஞானி எம்பெருமானார் -அது என்ன ஞானம் -சரம பர்வ நிஷ்டை -மஹா பாரத ஸாரஸ்வத் -ரிஷிகளும் பரிஹிரத்து -வியாசர் அருளி பீஷ்மர் தொகுத்து -கீதை அர்த்தம் ஏகார்த்தம் இதில் –சரம ஸ்லோகம் -பற்ற சொல்லி -பக்தியால் கீர்த்தி பண்ணுவதே மேலே சகஸ்ர நாமம் திரு நாம சங்கீர்த்தனம் –போன்ற ஏற்றம் பட்டர் காட்டி -செழும் பொருள் இதுவே -துஷ்யந்த ச ரமந்தச சததம் கீர்த்தி யஞ்ச – இதுவே செழும் பொருள் -பிரியா ஞானி அத்யந்த பிரியத்தமம் —
நல் ஞானி -ஆச்சார்ய அபிமான பெருமை உணர்ந்தவர் –நல் வேதியர் -வேதத்தின் யதார்த்த ஞானம் அறிந்து பாகவத சேஷத்வம் போக்யதை அறிந்தவர் -அடியோரோடு இருந்தமை –ஆழ்வார் ஆசைப்பட்டார்
தொழும் பெரியோர் -எழுந்து இரைத்து ஆடும் இடமே அடியேனுக்கு இருப்பிடம் —
ராமானுஜனை தொழுதே பெரியோர் ஆனவர்கள் -இரண்டாவது கோஷ்ட்டி -அதனால் பிரித்து அருளுகிறார்
நல் வேதியர் -வேறே -இவர்கள் வேறே -நல் வேதியர் தொழுவார்கள் -தொழுவதனால் பெரியோர் ஆனவர்கள் திருப்பாதம் –
ஆழ்வார் பாசுரம் பிரமாணம் -வேதம் பிரமாணம் -வேதம் தமிழ் செய்த மாறன் –
நல் வேதியர் -தொழாமல் இருக்கலாம் / தொழும் பெரியோர் நல் வேதியராக இருக்காமல் இருக்கலாம்
கடல் ஆர்பரித்தால் போலே எதிராஜா ராமானுஜர் -மால்; கொள் சிந்தையராய் –ஈட்டம்
செழும் –திரைக்கு கடலுக்கும் மாயனுக்கும் -விசேஷணம் -ஏஷ நாராயண ஸ்ரீ மான்
தன்னை உற்றாரை ஆட் செய்ய அன்றோ அவர் அருள் புரிந்தது –
அடியார் எழுந்து இரைத்து ஆடும் இடமே ராமானுஜர் இருப்பிடம் -புலவர் நெருக்கு உகந்த பெருமான் போலே தானே ஸ்வாமியும் –
பாட்டு கேட்கும் இடம் –கூப் பாடு கேட்கும் இடம் வளைத்த இடம் குதித்த இடம் எல்லாம் வகுத்த இடமே-இது அன்றோ எழில் ஆலி என்றான்/பரகால  நாயகி இருக்கும் இடமே –திருவடி தாமரையே என்று காட்டினானாம் -/இங்கு அமுதனார்  ஸ்வாமி யை தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடமே அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார்/ஞானிகள் -பக்தி நிஷ்டர்கள்  / ஆச்சார்ய அபிமானம் அறிந்து அனுஷ்டானத்தில் இருந்தவர் -இப்படி மூன்று நிலை /ஆச்சார்யரைப் பெற்றதே பகவத் அனுக்ரகம் -ஆச்சார்யர் திரு உள்ளம் உகக்குமே -பகவத் வைபவம் சொல்லியே பாசுரம் தோறும் எம்பெருமானார் வைபவம் பேசுவார் பாட்டு  தோறும் /
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -கீழே -எம்பெருமானார் தமக்கு பண்ணி அருளின உபகாரத்தை அனுசந்தித்து
மகா உதாரரான எம்பெருமானாரே -என்று அவரை சம்போதித்து-தேவரீர் சுலபனான கிருஷ்ணனை
கரதலாமலகமாக பண்ணிக் கொடுத்தாலும் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரம பதத்தையே கொடுத்தாலும் –
அவனுக்கு கிரீடாகந்துக ஸ்தாநீயமான இந்த லீலா விபூதியைக் கொடுத்தாலும் -தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரக
அனுபவம் ஒழிய அவற்றில் ஒன்றும் எனக்கு வேண்டுவது இல்லை -ஆகையால் இவ் அனுபவம் எனக்கு எப்போதும்
நடக்கும்படி கிருபை பண்ணில் தரிப்பன் –  இல்லை யாகில் ஜலாதுத்தர்த்த மத்ஸ்யம் போலே தரிக்க மாட்டேன் என்ன –
அத்தைக் கேட்டவர்கள் -ஜநி ம்ருதி துரித நிதவ் மே  ஜகதி ஜிஹா சாந்த்ரஜாம் பிதா பவத -பவ நு ச நபசி பரஸ்மின் நிரவதிக
அநந்த நிர்ப்பரே  லிப்ச – என்கிறபடியே லோகத்தார் எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் என்றும் -பரம பதம்
உபாதேயம் என்றும் -அறுதி இட்டு அங்கே  போக ஆசைப்படா நிற்க -நீர் இவ்விரண்டையும் சஹ படித்து சொன்னீர் –
இனி உமக்கு வஸ்தவ்ய தேசமாக அறுதி இட்டு இருப்பது என் என்று கேட்க -திருப்பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரனுடைய குணங்களில் ஈடுபட்டு -கலக்கமில்லா நல் தவ முனிவராலே
விரும்பப்பட்ட விலஷண ஞானத்தை உடையரான -பரம வைதிகராலே –  தொழுது முப்போதும் -என்கிறபடியே-(உபாயமாக பற்றி -நாடு நிலை -மேலே ப்ராப்ய பூதராக)
அநவரதம் சேவிக்கப் படா நின்றுள்ள திருவடிகளை உடைய எம்பெருமானாரை -தேவும் மற்று அறியேன் –
என்று சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருக்குமவர்கள் எழுந்து  அருளி இருக்குமிடம் அவர்கள் (ஆழ்வான் போல்வார் அன்றோ ப்ராப்யமாக சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருப்பவர்கள் ) அடியேனான-எனக்கு வஸ்தவ்ய தேசம் என்று கீழே தாம் சொன்ன ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் -(மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் என்றாரே -அத்தை பெற இது அன்றோ வஸ்வ்யம்)-

வியாக்யானம் –செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன் -செழும் என்றது -திரைக்கு விசேஷணம் ஆகவுமாம்-கடலுக்கு-விசேஷணம் ஆகவுமாம் —திரைக்கு விசேஷணம் ஆனபோது –செழுமை –அழகியதாய் -பால் கிளருமா போலே-ஒன்றுக்கு ஒன்றாக திரண்டு வருகிற இவற்றினுடைய சமுதாய சோபையை சொன்னபடி –   கடலுக்கு-விசேஷணம் ஆன போது-செழுமை -பெருமையாய் -நளி நீர் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும்-சமனிலாத பல பரப்பி -என்கிறபடி -சர்வேஸ்வரனுக்கு இடங்கை வலங்கை கொண்டு கண் வளருகைக்கு-ஈடான பரப்பை உடைய கடல் என்றபடி -அன்றிக்கே –செழுமை மாயவனுக்கு விசேஷணம் ஆகவுமாம் –

இப்படிப் பட்ட திரு பாற் கடலிலே –கடலோதம் கால் அழைப்ப கண் வளரும் –என்கிறபடி துடைகுத்த
உறங்குவாரைப் போலே -திரைகளானவை திருவடிகளை அனுகூலமாக அலைக்க – ஊஞ்சலிலே
கண் வளருமவனைப் போலே -கண் வளரா நிற்பானாய் –உறங்குவான் போலே யோகு செய்கிற -ஆச்சர்யத்தை
உடையனான சர்வேஸ்வரன் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன -என்றும் -வெள்ளத்தரவில்
துயில் அமர்ந்த வித்தினை -என்றும் சொல்லுகிறபடி அநந்த அவதார கந்தமாய்க் கொண்டு  திருப்பாற்
கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் -என்றபடி -செழும் திரை பாற்கடல் பள்ளி கொள் மாயன் –
என்றும் பாடம் சொல்லுவார்கள் -திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் -பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து –
என்கிறபடியே அப்படிப் பட்ட சர்வேஸ்வரனுடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே
ஈடுபட்டு -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றபடி -அவனுடைய திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும்
போலே பிரியாதே விழுந்து இருக்குமவர்களான – கலக்கமிலா நல் தவ முனிவராலே —நெஞ்சில் மேவும்
நல் ஞானி –இது ஒரு ஞான வைபவமே என்று இத்தையே பலகாலும் அவர்கள் ஸ்லாகித்துக் கொண்டு –
போருகையாலே அவர்கள் நெஞ்சிலே வைக்கப்பட்ட ஞான வைலஷன்யத்தை உடையவராய் –

மேவுதல் -விரும்புதல் –

நல் வேதியர் -பரம வைதிகர் ஆனவர்கள் –தொழும் திருப் பாதன் -லஷ்மணாய முநயே தஸ்மை நமஸ் குர்மஹே-
என்றும் –தஸ்மை ராமானுஜார்யாய நம  பரம யோகினே -என்றும் –  பிரமாணம் லஷ்மண முநி ப்ரதி க்ர்ஹ்ணா து மாமாம் –
என்றும் -ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்றும் சொல்லுகிறபடியே பிரணமாத்ய அனுவர்த்தனந்களை
பண்ணா நின்றுள்ள திருவடிகளை உடையனான –இராமானுசனை -எம்பெருமானாரை -தொழும் பெரியோர் –
நித்யாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்றும் -புணர்த்தகையனராய் –  என்றும் -கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும் –
சொல்லுகிறபடியே சர்வ காலமும் சேவித்துக் கொண்டு இரா நின்றுள்ள பெருமையை உடையவர்கள் –
எழுந் திரைத்தாடுமிடம்  -அவ்  அனுபவ ஜநிதமான ஹர்ஷம் உந் மஸ்தகமாய்    -அத்தாலே
உடம்பு இருந்த இடத்தில் இராதே கிளர்ந்து கடல் இரைத்தால் போல் இரைத்துக் கொண்டு –
சசம்ப்ரம வியாபாரங்களை பண்ணுமிடம்-அடியேனுக்கு இருப்பிடமேதன்னை உற்றாட் செய்யும் தன்மையினோர்-மன்னு தாமரைத் தாள் தன்னை உற்றாட்  செய்ய என்னை உற்றான் -என்கிறபடியே அவர்களுக்கு-சரமாவதி தாசனான அடியேனுக்கு வஸ்தவ்ய தேசம் -சிரீதரன் தொல் புகழ் பாடி கும்பிடு-நட்டமிட்டாடி கோகுகட்டுண்டு உழலுகிற -பிரதம பர்வ நிஷ்டரைப் போலே -இச் சரம பர்வதத்திலும்
எழுந்து இரைத்து ஆடுமவர்கள் இருக்குமிடம் அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார் –
யா வைகுண்ட கதா ஸூ தாரச புஜாம் ரோசேத நோ சேதசே-என்றும் -வாஸ ஸ்தானம்  ததிஹ க்ர்தி-நா பாதி வைகுண்ட கல்பம் –என்றும் –வஸ்தவ்யம் ஆசார்ய சந்நிதியும் -என்னக் கடவது இறே-
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -பரம பத்திலே
போய் இருக்க ஆசைப்படா நிற்பர் -நீரோ -சம்சாரத்தையும் பரம பதத்தையும்
ஓன்று போலேபேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –
அது தன்னை அருளிச் செய்கிறார் –
பத உரை –
செழும் திரைப் பாற்கடல் -அழகிய அலைகளை உடைய திருப்பாற் கடலிலே
கண்துயில் மாயன் -உறங்குகிறவன் போல் உள்ள ஆச்ச்சரியப் படத்தக்க சர்வேஸ்வரனுடைய
திருவடிக் கீழ் -திருவடிகளின் கீழே
விழுந்து இருப்பார் -மாயன் குணத்திற்கு தோற்று விழுந்து -அந்நிலை யினிலே நிலை நிற்பவர்களான முனிவர்களுடைய
நெஞ்சில் -உள்ளத்தில்
மேவும் -பொருந்தி உள்ள
நல் ஞானி -நல்ல ஞானத்தை உடையவரும்
நல் வேதியர்கள் -சீரிய வைதிகர்கள்
தொழும் திருப்பாதன் -தொழுகின்ற திருவடிகளை உடைய வருமாகிய
இராமானுசனை -எம்பெருமானாரை
தொழும் பெரியோர் -தொழுது கொண்டு இருக்கும் பெரியவர்கள்
யெழுந்து -களிப்பின் மிகுதியால் கிளம்பி
இரைத்து-ஆரவாரம் செய்து
ஆடும் இடம் -கூத்தாடுகின்ற இடம்
அடியேனுக்கு -அன்னார் அடியானான எனக்கு
இருப்பிடம் -குடி இருக்கும் இடமாகும் .
வியாக்யானம் –
செழும் திரை — மேவு நன் ஞானி
தனக்கு எம்பெருமானார் உபதேசித்த நன் ஞானம் –பாற்கடல் கண் துயிலும் மாயன் குணங்களிலே  ஈடுபட்டு –
அதன் கண்ணே நிலை நிற்கும் -ரசிகர்களான சனகாதி முனிவர்களாலும் -எம்பெருமானாருக்கு வாய்த்த
இந்த சாஸ்திர தாத்பர்ய ஞானத்தின் சீர்மை இருந்தபடி என் -என்று
நெஞ்சார எப்பொழுதும் கொண்டாடும்படி உள்ளதாம் -அத்தகைய ஞானம் வாய்ந்தவர்
எம்பெருமானார் -என்கிறார் .
எம்பெருமான் கண் துயிலும் திருப்பாற் கடலிலே அலைகள் செழுமை வாய்ந்து உள்ளன -செழுமை -அழகு -பெருமையுமாம் –
கோலக் கருமேனி செங்கண் மால்  திரு மேனியைத் தீண்டப் பெற்ற
பெரும் களிப்பினால் -கைகளைத் தூக்கி ஆரவாரத்துடன் ஆடுவது போன்று உள்ளது அந்தக் கடல் .
அங்கே போய் மாயனை வழி படுகின்றனர் பிரம்ம பாவனையில் நிற்பவர்களான சனகாதி முனிவர்கள் –
தன்னிடம் வந்து பள்ளி கொண்ட பரமனை கடல் தன் அலைகள் ஆகிற கைகளாலே
திருவடிகளை அலைத்து -ஊஞ்சலில் ஆட்டி உறங்கும்படி -செய்வதனால்
எம்பெருமான் கண் துயில்வதாக தோற்றுகிறது -பக்தர்களுக்கு –
கடலோதம் தம் கால் அலைப்ப கண் வளரும் -முதல் திருவந்தாதி – 13-  என்றார் பொய்கை ஆழ்வாரும் .
உண்மையில் உறங்குகிறானா அவன் –
அவனுறங்கி விட்டால் உலகின் கதி என்னாவது -மாயன் அல்லனோ –
பொய் உறக்கம் கொள்கிறான் -உறங்குவான் போல் உலகு உய்யும் வழியை யோசனை செய்கிறான் –
உறங்குவான் போல் யோகு செய்வதாக கூறுகிறார் திருவாய் மொழியில் நம் ஆழ்வார் –
நித்ராசி ஜாகர்யயா -விழிப்புடன் உறங்குகின்றாய் -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் -என்று பட்டர் அருளிச் செய்த படி –
உலகினை காக்கும் விஷயத்தில் விழிப்புடன் உறங்குகின்ற ஆச்சர்யத்தில் ஈடுபட்டு –
ஜிதந்தே புண்டரீகாஷா -தாமரைக் கண்ணனே உன் அழகுக்கு தோற்றோம் -என்றபடி
குணத்திற்கு தோற்று திருவடிகளிலே விழுகிறார்கள் அந்த சனகாதி முனிவர்கள் –
இது ஒரு நாள் நிகழும் நிகழ்ச்சி யன்று –
பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை -நான்முகன் திருவந்தாதி – 89-
என்றபடி நாள் தோறும் நடை பெரும் நிகழ்ச்சியாகும் -ஆகவே வரும் போதெல்லாம்
வியக்கத்தக்க குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் விழுவதும் அவர்கட்கு மாறாத இயல்பாகி விட்டது –
இது தோற்ற -மாயன் திருவடிக் கீழ் விழுந்திருப்பார் -என்று அருளிச் செய்தார் –
மாயன்-ஆச்சர்யப் படத் தக்கவன்
பாற்கடல் பள்ளிகொள் மாயன் -என்றும் ஒரு பாடம் உண்டு
இங்கனம் மாயன் குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் வீழ்தலின் இருப்பு உடையார் உள்ள -சனகாதி முனிவர்கள் -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நம் ஆழ்வாரால் –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -திருவாய் மொழி – 8 3-10 – என்று போற்றப்படும்
ஏற்றமுடைய தங்களது நெஞ்சிலே எம்பெருமானாருடைய நல் ஞானம்
மேவுதற்கும் இடம் ஏற்பட்டு விடுகிறதாம் -பல காலும் அவர்கள் எம்பெருமானார் உடைய நல் ஞானத்தை
கொண்டாடிப் பேசுகையாலே –அவர்கள் நெஞ்சிலே அந்த ஞானம் இடம் கொண்டமை தெரிகிறது .
நூல்களிலே சனகாதி முனிவர்  பேச்சுக்களாய் வரும் இடங்களிலே சரம பர்வ விஷயமாக
எம்பெருமானார் அளித்த  ஞானமே பலகாலும் கொண்டாடப் பட்டுள்ளமையைக் கண்டு
அமுதனார் இங்கனம் கூறுகிறார் -என்க –
மேவு நல் ஞானி எம்பெருமானது குணத்தை ரசித்து அனுபவிக்கும் நெஞ்சிலும் இந்த நல் ஞானம்
ரசிக்க தக்கதாய் இருத்தலின் பலகால் கொண்டாடும்படி இடம் பெறுகிறது .
மேவுவது விசேஷணமான ஞானம்
அதனை உடையவன் ஞானி அல்லன் .

நல் வேதியர்கள் தொழும் திருப்பாதன்-வேதியர்களான சனகாதி முனிவர்கள்  நெஞ்சில் எம்பெருமானாருடைய ஞானம் மாத்ரம்  மேவுகிறது —நல் வேதியர்களோ அந்த ஞானத்தை தங்கள் அனுஷ்டானத்தில் கொண்டு எம்பெருமானார் பாதங்களை-தொழுகின்றனர் -நல் வேதியர் -வேதத்தின் தாத்பர்யப் பொருளை உணர்ந்து -சரம பர்வத்தில் நிலை நிற்பவர்கள் .

மாயன் திருவடிக் கீழ் விழுமவர் வேதியர்
எம்பெருமானாரை தொழுமவர் நல் வேதியர் என்றது ஆயிற்று –
மாயன் திருவடிக் கீழ் வேதியர் விழுந்து இருப்பார் .
விழும் திருவடிகளை உடைய மாயனோ கண் துயில்பவன் .
எம்பெருமானார்பாதத்தை தொழுது பணி  புரிபவராய் இருப்பர் நல் வேதியர் .
தொழப்படும் எம்பெருமானாரோ -காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் – 98-
என்றபடி கண் துயிலாதவர் .
இராமானுசனை தொழும் பெரியார் –இருப்பிடம்
எப்பொழுதும் இமையோர்கள் குழாம் -நித்யாஞ்சலி ப்டாஹ்ருஷ்டா -எப்பொழுதும் கை
கூப்பினவர்களாய் களிப்புடையவர்களாக -என்றபடி தொழுவது -சூழ்வது-பிரதஷிணம் செய்வது –
முதலிய செய்து -பரம பத நாதனை வழி படுவது போலே –எம்பெருமானாரை தொழுவது -சூழ்வது –
முதலியன செய்து எப்பொழுதும் அனுபவித்து கொண்டே இருக்கும் பெருமை வாய்ந்த பெரியோர்கள் –
அவ் அனுபவத்தால் உண்டான களிப்பு -உள்  அடங்காது  -இருந்த படியே இருக்க ஒண்ணாது
கிளர்ந்து எழுந்து ஆரவாரங்களைப் பண்ணிக் கொண்டு -பிரதம பர்வத்தில் -கும்பிடு நட்ட மிட்டாடி –
திருவாய் மொழி – 3-5 3- என்றபடி –கூத்தாடுகின்ற இடம் -அவர்களது அந்நிலைக்கு அடிமை பட்டு விட்டவனாகிய-எனக்கு வாழும் இடம் ஆகும் -என்கிறார் .
அடியார்கள் குழாம் களுடன் அனுபவித்தற்கு வைகுந்தத்தில் வாழ -ஏனையோர் விரும்புவது போலே –தொழும் பெரியோருடன் எம்பெருமானாரை அனுபவிப்பதற்கு அவர் எழுந்து அருளி உள்ள இடமே-எனக்கு பேறான மோஷ பூமி -என்றது ஆயிற்று 
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு-வஸ்தவ்ய  தேசம் அதுவே என்று அங்கே  போக ஆசை படா நிற்க ,நீர் பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர்–உமக்கு வஸ்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பது எது என்ன அருளி செய்கிறார் இதை-இச்சுவை தவிர அச்சுவை வேண்டேன் என்றார் தொண்டர் அடி  பொடி ஆழ்வார்/

-பிறவி வேண்டேன் -உபய விபூதியும் வேண்டேன்/அரங்கமே வஸ்தவ்ய தேசம்  என்றார்//ஈடும் ..ஆடும்.பாடும் என் நா அவன் -ஆழ்வார்/ஸ்வாமி வைபவம்-நல் வேதியர்கள் தொழும் திரு பாதம் படைத்தவர்/உறங்குவான் போல் யோகு செயும் -மாயன்- ஆஸ்ரித சேஷ்டிதன்-திருவடி கீழ் விழுந்து இருப்பார்- சனக – சனத்குமாரர் போன்ற முனிவர்கள்

-மேவும்-விரும்பும்-ஞானி ஸ்வாமி/பிள்ளை ஊமை செவிடன்- திரு பாற்கடல் போய் வந்து பேசிய வார்த்தை-கேட்டு இருக்கிறோம்/பிரத்யட்ஷ பிரமாணம் இது  மேவு நல் /ஞானம் என்று கொண்டு-அந்த ஞானம் படைத்த ஞானி ஸ்வாமி நமக்கு உபதேசித்தார்/சரம பர்வ நிஷ்ட்டையே //மகா பாரத சாரத்வாத்/ரிஷி அனைவராலும் பாட பட்டது /வியாசரால் தொகுக்க பட்டது-பீஷ்மரால் உரைக்க பட்டது –கீதையின் அர்த்தம் ஒத்து போகும் -உபாதேய தமம் சகஸ்ரநாமம் /திரண்ட பொருள்-துஷ்யந்தச ரமச்யச்த ஆடி பாடி இதுவே எனக்கு ப்ரீதி என்கிறான்-சததம் கீர்த்தனம் என்றான் அந்த ஞானி எனக்கு வேண்டியவன்- அவனுக்கு புத்தி யோகம் கொடுக்கிறேன் – என்னை அடைகிறான்/அது போல இங்கும் செழும் பொருள்/பாத்ம புராணம்-பாகவத பிரபாவம்-பக்தி அழ நாரதர் தேட-சனக சனத்குமாரர் சொல்லியது-மகத்த பாத ரஜஸ் தலையால் தரிப்பதே பேறு என்றார்களே-இதுவே திரண்ட பொருள் கபிலரும் தேவ பூதைக்கு அருளியது-

சாது சங்கமமும் பாத ராஜசே பாபம் போக்கும் என்றார்/அஜா மலன்-யமனும் இதை சொல்வான் அவதூத சன்யாசியும்  இதையே சொல்வார்/எழுதி வைத்தார்கள் /அனுஷ்டித்து உள்ளம் கை நெல்லி  கனி போல ஸ்வாமி கொடுத்தார்/பிரகாச படுத்திய பெருமை ஸ்வாமிக்கே//வேதியர்கள் சன சனத்குமாரர்.

/நல் வேதியர் ஞானம் கனிந்து  பக்தி மார்க்கத்தில் வந்த நல் வேதியர்கள்-கூரநாத  குருகேசர் பிள்ளான் எம்பார் ஆண்டான் கிடாம்பி  ஆச்சான் வகுட நம்பி போல்வார்-அங்கு உற்றேன் அல்லேன் இங்கு உற்றேன் அல்லேன்-ஆழ்வார்/ தவிக்கிறார்/அமுதனார் கதறவில்லை இதே இருப்பிடம் என்கிறார்/எது இருப்பிடம் என்று தைரியமாக அருளுகிறார் இதில்.//பகவத் வைபவம் சொல்லி -ஸ்வாமி திரு உள்ளம் மகிழ-அழகிய திரைகளை உடைத்தான திரு பாற்கடலிலே –கடலோதம் கால் அலைப்ப கண் வளரும்-என்கிற படியே-துடைகுத்த உறங்குவாரை போல அத் திரைகள் ஆனவை திருவடிகளை அனுகூலமாக அசைக்க கண் வளரா நிற்பானாய்-உறங்குவான் போல் -திரு வாய் மொழி 5-4-11-யோகு செய்கிற ஆச்சர்யத்தை உடையவன் ஆன சர்வேஸ்வரன் உடைய குணத்தில் ஈடு பட்டு-பைய துயின்ற பரமன்-தூங்கும் பொழுதும் பரமன் இவன்

–ஜிதந்தே- -ரிஷிகேச- இந்தரியங்களை ஜெயிக்க பண்ணுபவர்- என்று திருவடிகளில் கீழே விழுந்து இருந்த-வசத்தில் இன்றி விழுந்து -விழுந்து இருப்பார்- என்றுமே-வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்-நித்ய படி-ச்வபாவத்துக்கு  ஒரு காலும்  சலனம் அற்று இருக்கிற கலக்கம் இல்லா நல் தவ முனிவரும்-இது ஒரு ஞான வைபவமே -திரு வாய் மொழி 8-3-10-/இத்தையே பலகாலும் ஸ்லாகித்து கொண்டு போருகையாலே-இத்தையே-ஞானம்-என்று-அவர்கள் நெஞ்சில் மேவப் பட்ட விலஷணமான ஞானத்தை உடையராய் பரம வைதிகரான அவர்கள்-பிரணமாத்ய அனுவர்தன்களை – நின்று உள்ள திருவடிகளை  உடைய எம்பெருமானாரை-நித்ய அஞ்சலி புடாஹ்ருஷ்டா -என்கிற படியே —சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள வைபவத்தை உடையவர்கள்

அவ்  அனுபவ ஜனிதஹர்ஷ பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே கிளர்ந்து கடல் இறைத்தால் போல இரைத்து கொண்டு-நீள் ஓதம் வந்து அலைக்க-மன்னாதன் திருவடிகளை திரு வல்லி கேணி /மேவுவது ஞானம் ஞானி அல்ல/உண்டோ  கண்கள் துஞ்சுதல் -அநிமிஷரையும் உறகல் உறகல் என்பார் பெரிய ஆழ்வார்/–கண் துயில்  மாயன் / கண் வளரும்  கடல் வண்ணன் கமல கண்ணன்/விழித்து இருக்கும் ஸ்வாமி யை பற்ற வேண்டுமே /தொழும்- நமஸ்காரம் போன்ற வற்றை பண்ணி கொண்டு இருக்கும் பெரியோர்-அனுபவித்து ஆடி பாடி சம்ப்ரம வியாபாரங்களை பண்ணி கொண்டு அவர்கள் அடியவன் ஆன எனக்கு-வச்த்தவ்ய தேசம் /செழுமை-அழகு-பெருமை  / அலைக்கு கடலுக்கு மாயனுக்கு கொண்டு/பாற்கடல் பள்ளி கொள் மாயன் -பாட பேதம் /ஆழ்வான் ஆண்டான் போல்வார் இறைந்து ஆடும் இடமே வச்தவ்யம்/செழும்-அழகு பெருமை ஆச்சர்யம் / தரிக்காமல் இருக்க -ஜலான் துக்ருதம் மீன் போல துடிப்பேன்-

/மெய்யில் பிறங்கிய சீரை அனுபவிக்க-இடம்-ஒழுவில்  காலம் எல்லாம் பிரார்த்தித்த ஆழ்வாருக்கு திரு மலை காட்டினது போல-நலம் அந்தம் இல் நாடு போக ஆசை  பட்டார்-வானவரும் அங்கு முழுவதும் அனுபவிக்க முடியாமல் இங்கு வருவார் என்று காட்டி கொடுத்தார்-அங்கு எங்கு எங்கு கலங்கினார் ஆழ்வார்/இங்கு -,அமுதனாருக்கு கலக்கம் இல்லை/ ஞானம் மட்டும் இருந்த சன சனத் குமராதிகள் /சேவித்து கொண்டு இருப்பவர்கள் -உபாயமாக/அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் ஆழ்வான் ஆண்டான் போல்வார் ஆக மூவரையும் சொன்னார் இதில்//செழுமை அலைக்கு அழகாய்// கடலுக்கு பெருமையாய் நளி நீர் கடல் படைத்து — தான் ஓர் பெரு நீர் தன் உள்ளே தோற்றி –நாராயண -நார-நீர் -இருப்பிடம்-பராசரர்-மனத்துள்ளான் மா கடல் நீர் உளான்  மலராள் தனத்து உள்ளான் -புண்டரீகர் இக் கடலை இறைத்தாரே திரு கடல் மல்லையில்—தாளும் தோளும்முடியும்  சமன் இலாது  பல பரப்பி-கடல் படைத்தான்/செழுமை-மாயனுக்கு -ஆஸ்ரித சேஷ்டிதமே//கும்ப கர்ணன் -தொடை தட்டுவது போல உறங்குவாய்/தொடை குத்துவாரை போல-திரைகள் ஊஞ்சலில் கண் வளருகிறான் உறங்குவான் போல் யோகு செய்கிறான்-மாயன்-வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து- மூலம் திரு பாற்கடல் நாதன்.அவதாரங்களுக்கு காரண -கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன்-சேரா சேர்க்கை மாயன்/பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து-சதா நிஷ்ட்டை/ அடி கீழ் அமர்ந்து புகுந்து -நிழலும் அடிதாரும் போல -பிரியாத –கலக்கம் இல்லாத சனத் சனத்குமாரர்கள்/பர பரன் என்றே தெரிந்து எளியவன் என்று தெரியாமல்/சரம பர்வ ஆசார்ய நிஷ்ட்டை –ஞானம் -வேதியர் தொழும்-தஸ்மை -பரம யோகினே -பிரணாமி லஷ்மண முனி /தொழும் பெரியோர் /கைகள் கூப்பி சொல்லி/பறவைகளை/புணர்த்த கையினராய்  அடியேனுக்கு போற்றுமினே-/நித்ய அஞ்சலி /எழுந்து இரைத்து ஆடும் இடம்/ உன்மத்தகமாய்-மேல் மேலும் எழுந்து /திருவடிகள் பட்ட  இடம்/சரமாவதி தாசனாக /கும்பிடு நட்டம் ஆடி -ரசம் உண்டு-இவர்கள் இருக்கும் இடமே ஸ்ரீ வைகுண்டம்/

பாட்டு கேட்கும் இடம் –கூப் பாடு கேட்கும் இடம் வளைத்த இடம் குதித்த இடம் எல்லாம் வகுத்த இடமே-இது அன்றோ எழில் ஆலி என்றான்/பரகால  நாயகி இருக்கும் இடமே –திருவடி தாமரையே என்று காட்டினானாம் -/இங்கு அமுதனார்  ஸ்வாமி யை தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடமே அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்     திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-