Archive for the ‘ராமானுஜ நூற்றந்தாதி’ Category

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் -பூ மன்னு மாது பொருந்திய மார்பன்–

January 23, 2020

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும் ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் -பூ மன்னு மாது பொருந்திய மார்பன்–

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பூவிலே பிராட்டி மன்னி கிடக்க
அவள் மன்னியது மார்பில்
மார்பன் புகழ் மலிந்த பா
பா மன்னு மாறன்
மாறன் திருவடியில் மன்னி ராமனுஜன்
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன்
இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ
வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
தொழுது எழு மனனேபோல -நெஞ்சே சொல்லுவோம் நாமங்களே

பேறு ஓன்று மற்றும் இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி -என்று மேலே – -45 இவர் தாமே-
அருளிச் செய்து இருப்பது கவனித்தற்கு உரியது –
ஆக ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமங்களை சொல்வது-சாதனமாக மாட்டாது –
போக ரூபமானது என்பது உணரத் தக்கது –

ஸ்ரீ இராமானுச நாமம் ஒன்றுமே பாட்டுத் தோறும் சொல்லப் பட்டு இருப்பினும் -நாமங்கள்
என்று பன்மையில் கூறியது நிர் வசன பேதத்தாலே -ஒரு நாமம் பலவாய் தோற்றுதல் பற்றி என்க –
ஸ்ரீ ராமானுஜருக்கு -11 திருநாமங்கள் –
ஸ்ரீ திருமலை நம்பி சாத்திய திருநாமம் 1-இளைய ஆழ்வார் முதலில்
ஸ்ரீ பெரும் புதூர் ஆதி கேசவ பெருமாள் சாத்திய திரு நாமம் -2–பூத புரீசர்
ஸ்ரீ நம் பெருமாள் சாத்திய திரு நாமம்-3–உடையவர்
ஸ்ரீ தேவ பெருமாள் சாத்திய திரு நாமம்-4–எதி ராஜர்
ஸ்ரீ திருவேங்கடம் உடையான்–சாத்திய திரு நாமம்-5-தேசிகேந்த்ரன்
ஸ்ரீ சாரதா தேவி சாத்திய திரு நாமம்-6- ஸ்ரீ பாஷ்ய காரர்
ஐந்து ஆச்சார்யர்கள் சாத்திய திரு நாமங்கள் ஐந்து
ஸ்ரீ பெரிய நம்பி சாத்திய திரு நாமம் -7-ராமானுஜர்–தாஸ நாமம்
ஸ்ரீ திரு கோஷ்ட்டி நம்பி சாத்திய திரு நாமம்-8- எம்பெருமானார்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி சாத்திய திரு நாமம்-9–கோவில் அண்ணன்
திரு மாலை ஆண்டான் சாத்திய திரு நாமம்-10- சட கோபன் பொன் அடி
ஸ்ரீ ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் சாத்திய திரு நாமம் -11–லஷ்மண முனி
ஆக 11 திரு நாமங்கள் –12-யதீந்த்ரர் மற்றும் பல .இருந்தும்
ஸ்ரீ ராமானுச திரு நாம சங்கீர்த்தனமே அமையும்.

ஓர் ஆயிரமாய் உலகு அளிக்கும் பேர் -என்றது காண்க –
எம்பெருமான் திரு நாமங்களில் -நாராயணன் என்னும் திரு நாமம் போன்றது
எம்பெருமானார் திரு நாமங்களிலோ -ராமானுஜன் -என்னும் திரு நாமம் -என்க —

இனி நாமங்கள் என்பது இப் ப்ரபந்தத்தில் உள்ள பாசுரங்களை கூறலுமாம் –
நாமங்கள் குணங்களையும் செயல்களையும் கூறுவது போலே -பாசுரங்கள்
அவைகளை கூறுதலின் பாசுரங்கள் நாமங்கள் எனப்பட்டன -என்க —

நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11–
திருவாய் மொழி ஆயிரம் பாசுரங்களையும் -நாமங்கள் ஆயிரம் – என்றார் நம் ஆழ்வார் –
அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதாதிகளுக்கு பிரதிபாதகமான ஆயிரத்திலும் –என்பது
அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூக்தி

———-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன்-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-

பனி மலராள் வந்து இருக்கும் மார்பன் -என்றார் திரு மங்கை ஆழ்வார்

பொலிந்து இருண்ட கார் வானிலே மின்னே போல்-மார்பில் திரு இருந்தது பொருந்தி உள்ளது

பாசுர படி சேர்த்தி திரு நாமங்கள்
எழில் திரு மார்பர்
எழிலார் திரு மார்பர்
செய் அவள் நின் அகலம்
திரு வுடையாள் மணவாள
சீதை மணாளா
அரவிந்த பாவையும் தானும்
மாதவன்
தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்த
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன்
அல்லி மலர் திரு மங்கை கேள்வ திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன்
மங்கை மன்னி வாழு மார்பா
திரு கலந்து சேரு மார்பா
வல்லி நாண் மலர் கிழத்தி நாத அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளான்
மலி மாட மங்கை தன் கொழுநன்
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கை யோடு அன்பு அளாவி
பார் வண்ண மட மங்கை பனி நன் மா மலர் கிழத்தி நீர் வண்ணன்மார்வத்தில்
இருவர் அடி வருடும் தன்மையான்
ஆயர் பூம் கொடிக்கு இன விடை பொருதவன்

பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா மென் தோள் ஆய்சிக்கு அன்பனாய்
வில் ஏர் நுதல் வேல் நெடும் கண்ணியும் நீயும்
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து
திரு வாழ் மார்பன்
திரு வுக்கும் திரு ஆகிய செல்வா
பந்தார் மெல்விரல் நல்வளை தோளி பாவை பூ மகள் தனோடும் வுடனே வந்தாய்
செம் கமல் திரு மகளும் புவியும் செம் பொன் திருஅடி இன் இணை வருட
புவி மடந்தைதனை இடந்து புல்கி எயிற்று இடை வைத்து அருளிய எம் ஈசன்
திரு மாமகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து அருமா கடலமுது
வாசவார் குழலாள் மலை மங்கை தன் பங்கன் திரு மங்கை மணாளன்
வடி தடம் கண் மலர் அவள் வரை ஆகத்துள் இருப்பள்
மடப் பாவை சீர் ஆளும் வரை மார்பன்
மார்வில் திருவன்
மடமகள் குயமிடை தடவரை அகலம் அது வுடையவர்
புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய நிலமகள் என இன மகளிர்கள் இவரோடும்
வல மனு படை வுடை மணி வண்ணர் மகள் செவ்வி தோய வல்லான்
திரு மா மகளுக்கு இனியான்
குல மா மகளுக்கு இனியான்
நில மா மகளுக்கு இனியான்
நானில நங்கை மணாளா
மண் மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன்
திரு மறு மார்பன்
திரு மா மகள் தன் கணவன்
குநிலல வரையன் மடப் பாவை இடப் பால் கொண்டான்
பாவை மாயன் மொய் அகலத்து வுள் இருப்பாள் அன்று ஆயர் குல மகளுக்கு அரையன்
மலர் மகள் நின் ஆகத்தாள்
தாமரையாள் கேள்வன்
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்
ஒரு வல்லி தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
பவள வாய் பூ மகளும் பன்மணி பூணாரம் திகழும் திரு மார்பன்
பூ மங்கை கேள்வன்
மின்னே போல் தோன்றி மலிந்து திரு இருந்த மார்வன்
பொன் பாவை கேள்வா திருவோடு மருவிய இயற்கை
பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அம்கையின் முப்பொழுதும் வருட
அரி துயில் அமர்ந்தனன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மான் ஏய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா
திரு மகளார் தனிக் கேள்வன்
மலராள் மணவாளன்
தன்வுள் கரக்கும் வுமிழும் தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால்.
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
கமல திரு மாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர்
மைய கண்ணாள் மலர் மேல் வுறைவாள் வுறை மார்பினன்
மணி மாமை குறைவிலா மலர் மாதர் வுறை மார்வன்
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடங்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன்
திரு மா மகள் கேள்வா
அலர் மேல் மங்கை வுறை மார்பா
என் திரு மகள் சேர் மார்வன்
திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வன்
உரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பன்
என் திரு மார்பன்
என் மலை மகள் கூறன் அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்
திரு அமர் மார்வன்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல் அடியை
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திரு மால்
கொடியேர் இடை கோகனகதவள் கேள்வன்
வடிவேல் தடம் கண் மடப் பின்னை மணாளன்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடங்தைக்கும்
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வன்
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
வாள் கெண்டை ஒன் கண் மடப்பின்னை தன் கேள்வன்
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
மா மலராள் நாயகன்-
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு இருந்தவா காணீரே
எம் தம்பிரானார் எழில் திருமார்வற்கு

வடிவாய் நின் வல் மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
அல்லி அம் பூ மலர் கோதாய்
மை தகுமா மலர் குழலாய்
அரவிந்த பாவை
நாயகப் பெண் பிள்ளாய்
நந்த கோபாலன் மரு மகள்
நப்பினை
கந்தம் கமழும் குழலி
பந்து ஆர் விரலி
திருவே

தோடு வுலா மலர் மங்கை அல்லி மா மலர் மங்கை
பாசி தூர்த்த பார் மகள் அல்லி மலர் திரு மங்கை
செவ் வரி நல் நெடும் கண் சீதை
ஆயர் மங்கை
மன்னு மா மலர் கிழத்தி
வைய மங்கை
ஆயர் பின்னை
ஆயர் தம் கொழுந்து
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
அன்று ஆயர் குலக் கொடி
அணி மா மலர் மங்கை
பார் வண்ண மட மங்கை
பனி நல் மலர் கிழத்தி
செழும் கடல் அமுதினில் பிறந்த அவள்
மின் நின் நுண் இடை மடக் கொடி
திரு மால் திரு மங்கை
பூ மங்கை
புல மங்கை
புகழ் மங்கை
தெய்வ திரு மா மலர் மங்கை
திரு மடந்தை
மண் மடந்தை
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலி
வார் ஆறும் இளம் கொங்கை மைதிலி
பூ வார் திரு மா மகள்
மாழை மான் மட நோக்கி
போதார் தாமரை யாள்
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகள்
செம் கமல திரு மகள்
பார் வண்ண மட மங்கை
பனி மலர் மேல் பாவை
திரு மகள் மண் மகள் ஆய் மகள்
செய்ய நெடு மலராள்
கமல திரு மாது
கோவை வாயாள்
பூவின் மிசை மங்கை
கூந்தல் மலர் மங்கை
குல ஆயர் கொழுந்து
வடிவு இணை இல்லா மலர் மகள்
கோல மலர்ப் பாவை
பூ மன்னு மாது
வெறி தரு பூ மகள்
கமலத்து அலர் மகள் கேள்வன்
மா மலராள்-

மார்பன் புகழ் மலிந்த பா-
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை-
படர் பொருள் முழுவதும் ஆய் அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரன் –
நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று-
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
உலகமுண்ட பெருவாயா வுலப்பில் கீர்த்தி யம்மானே –என்றும்
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ-
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண்ணுர்வில்-
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் -என்றும்
செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால் தோள் எந்தாய் எனது உயிரே -என்றும்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -என்றும்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ-
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -என்று தலைக் கட்டுகையாலே
உயர்வற -என்று தொடங்கி-உயர்ந்தே -என்னும் அளவும் –
ஆதி மத்திய அவசானங்களிலே-ஒருபடிப்பட்ட கல்யாண குணங்களால் ஏற்பட்ட-பா

உயர் நலம் உடையவன் என்று குண அனுபவத்திலே இழிந்து-ஈறில வண் புகழ் -என்று முதலிலும்
உலப்பில் கீர்த்தி -என்று இடையிலும் -சுடர் ஞான இன்பம் -என்று முடிவிலும்-
திருவாய் மொழியில் புகழ் -குணம் மலிந்து இருத்தல் காண்க –

புகழ் -மலிந்த –
நலம் உடையவன் என்று ஆரம்பித்து 1000 கல்யாண குணங்கள் காட்டி யது ஒரே பா- திரு வாய் மொழி-தானே-
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் -தாமே ஸ்லாக்கிக்கும்படியான
திருவாய் மொழியிலே
அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன்-
குழல் மலிய சொன்ன ஓர் ஆயிரம் இறே –

பா மன்னு மாறனடி
வழி பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பனையும் அவனைப் பிரதிபாதிப்பதாகத்-திருவாய் மொழியையும் –
உணர்ந்த மெய்ஞ்ஞானியர்

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை
மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார்
பக்தம் -உணவு

நம் ஆழ்வார் உள்ள இடமே போம் வழியாய் யமைந்தது –
எம்பெருமான் உள்ள இடம்-கல்லும் முள்ளுமான வழி என்னும் கருத்து பட
வைணவன் ஒருவன் சொல்வதாக-திரு விருத்தத்தில் புனத்தயலே வழி போகும் அருவினையேன் -என்னும் இடத்து
ஆழ்வார் உய்த்து உணர வைத்த பொருளை எம்பெருமானார் கைக் கொண்டு உய்வு பெற்றார் என்க –

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாட மெரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23–

புனம் போலே தம் மனமும் இவர்கள் ரஷிக்க வேண்டியதை நாயகன் சொல்கிறான் –
தம் முகத்தை அவர்கள் பார்க்கும் பொருட்டு இவர்கள் இருக்கும் இடத்தின் சமீபத்தில் தடுமாறித் திரிந்தமை தோற்ற –
புனத் தயலே வழி போகும் அரு வினையேன்-என்கிறான்
பாகவதர் ஆழ்வார் பக்கல் தமது நெஞ்சு துவக்குண்ட படியைச் சொல்லுதல் உள்ளுறை பொருள்
விண்ணுளாரிலும் சீரியர் -உபாயாந்தரராய் வேறு வழியில் செல்வாரையும் திருத்த வல்லவர் அன்றோ நீர்
தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,-நித்ய ஸூரிகள் திரள் போலே அன்றோ ஆழ்வார்

சரணாரவிந்தம் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும் –
உன் பாத நிழல் அல்லால் மற்று ஓர் உயிர்ப் பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் பெரியாழ்வார் திருமொழி –-5-3-4
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப்பொலிந்த சேவை என் சென்னியின் மேல் பொறித்தாய் -பெரியாழ்வார் திருமொழி –-5-4-7
தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன் நாச்சியார் திருமொழி–1-9-
கழலிணை பணிந்து அங்கோர் கரி அலற -நாச்சியார் திருமொழி-1-10

மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே-பெருமாள் திருமொழி —-2-4-
வட வேங்கடத்தான் தன் பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி -4-11-
தரு துயரம் தடையேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1-
எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்-5-5-
அடி சூடும் அரசை அல்லால் அரசாக வெண்னேன் மற்றரசு தானே -10-7-

அறிந்து அறிந்து வாமனன் அடியினை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் செறிந்திடும் –திருச் சந்த விருத்தம் –-74-
வேங்கடம் அடைந்த மாலை பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ -81-
புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே -90-
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119-

கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமின் நீரே -திருமாலை —-9
பாரில் நின் பாத மூலம் பற்றினேன் பரம மூர்த்தி -29-

கடி மலர்க்கமலங்கள் மலர்ந்தன விவையோ -திருப்பள்ளி எழுச்சி -11

நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என்
கண்ணினுள்ளன வொக்கின்றதே -அமலனாதி பிரான் ––1

மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -கண்ணி நுண் சிறு தாம்பு –2

கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் –திரு நெடுந்தாண்டகம்-18

செங்கண் மால் நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று-முதல் திருவந்தாதி – -21

சொல்லுவோம் அவன் நாமங்களே
தேவு மற்று அறியேன் -என்று அநந்ய பரராய் கொண்டு அவருடைய திரு நாமங்களைச் சொல்லுவோம்

மனு முதல் கூறுவதும் -தீதில் சரணாகதி தந்த தன் இறைவன் தாளே
அரணாகும் என்னும் அது -என்று-அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார்

பூ மகள் கோன் தென்னரங்கன் பூம் கழற்கு பாதுகமாய்-தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்தாட்கு ஏய்ந்து
இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை வாய்ந்து எனது-நெஞ்சமே வாழ் -என்று இறே ஜீயரும் அருளிச் செய்தது –

வேதம் ஒரு நான்கின் உள் பொதிந்த மெய் பொருள்-தீதில் சரணாகதி தந்த இறைவன் தாள்–மா முனியும் ஆர்த்தி பிர பந்தம்-

பூ மகள் கோன் தென் அரங்கன் பாதுகமாய்-தாம் மகிழும் செல்வ சடகோபர் ஏய்ந்து– வாய்ந்து என் நெஞ்சமே வாழ–சொல்வது போல..

நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே –
இராமானுச நூற்று அந்தாதியை அனுசந்திக்க இசைந்த நெஞ்சைக் கூட்டிக் கொண்ட படி –

சொல்லுவோம் அவன் நாமங்களே
துணை தேட்டத்தில்-
எம்பெருமானாரின் கல்யாண குண சாகரத்தில் இழிய துணை வேண்டுமே -நீர் ஆட போதுவீர் போதுமினோ
-செஞ்சொல் கவிகாள் உயிர் கத்து ஆட செய்மின் -ஆழ்வார் எச்சரிக்கிறார்

——————

இந்த பாசுரத்தில் -பூமன்னு மாது பொருந்திய மார்பன் -என்பதனால்–அலர்மேல் மங்கை உறை மார்பா -என்பதும் –
புகழ்-என்பதனால்-நிகரில் புகழாய் -என்று தொடக்கி கூறப்படும் குணங்களும் தோற்றுகையாலே –
திருவாய் மொழி திருவேம்கடம் உடையானை பற்றியது என்பது அமுதனார் திரு உள்ளம் என்று தோற்றுகிறது –
த்வய விவரணம் திருவாய் மொழி என்று கூறும் ஆசார்யர்களுக்கும் இதுவே திரு உள்ளமாய் இருக்கலாம்-

முதல் மூன்று பத்துக்கள் த்வய மந்த்ரத்தின் பிற் பகுதியை விவரிகின்றன -என்றும்
அடுத்த மூன்று பத்துக்கள் அம்மந்த்ரத்தின் மூர் பகுதியை விவரிக்கின்றன என்றும்
மேல் உள்ள மூன்று பத்துக்கள் முறையே-உபாயத்துக்கு உறுப்பான குணத்தையும் –நசை அற்றமையையும்
எம்பெருமானோடு நமக்கு இயல்பாக உண்டான தொடர்பையும் -சொல்லுகின்றன என்றும்
இறுதிப் பத்து வீடு பெற்றமையைக் கூறுகிறது என்றும் விளக்குகின்றனர் ஆசார்யர்கள் –

மந்த்ரத்தில் பிற் பகுதியில் ஸ்ரீ மானான நாராயணனுக்கு எல்லா அடிமையும் செய்ய வேணும் என்கிறது –
அதனையே திரு வேம்கடத்தில் திரு வேம்கடம் உடையானுக்கு -வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் –என்கிறார் நம் ஆழ்வார்
மந்த்ரத்தின் முற் பகுதி ஸ்ரீ மானான நாராயண னுடைய திருவடிகளை தஞ்சமாக பற்றுகிறேன் -என்கிறது –
அதனையே -அலர்மேல் மங்கை உறை மார்பா உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்கிறார் நம் ஆழ்வார் –
இதனால் மந்த்ரத்தில் ஸ்ரீ மன் நாராயணன் என்பது அர்ச்சாவதார எம்பெருனாகிய திரு வேம்கடம் உடையானையே-என்பது
நம் ஆழ்வார் திரு உள்ளம் என்பது தெளிவு –

பூ மன்னு மாது–என்பதால் ஸ்ரீ சப்தமும்
பொருந்திய -என்பதால் நித்ய யோகத்தையும் -காட்டும் -மதுப் ப்ரத்யயமும்-
புகழ் மலிந்த என்பதால் குணம் உடைமை கூறும் நாராயண சப்தமும் –
மார்பன் -என்பதால் திரு மேனிக்கு உப லஷணமான சரண சப்தமும் –
பணிந்து -என்பதால்-சரணம் பிரபத்யே -என்னும் சப்தங்களும் –
உய்ந்தவன் -என்பதால் பிற் பகுதியில் கூறும் பயனும் தோன்ற அமுதனார் சொற்களை-அமைத்து உள்ளமை காண்க –

சரம பர்வ ப்ரபந்தம் என்பது தோன்ற எம்பெருமானை அடி பணிவதாக கூறாது-
எம்பெருமான் பாவில் மன்னும் மாறன் அடி பணிந்ததாக அமுதனார் அருளிய-நயம் வியந்து இன்புறத் தக்கது
மந்த்ரத்தின் தாத்பர்யம் தோன்ற-மாறன் அடி பணிந்து –என்றார் அமுதனார் -என்க –

இனி திருவாய் மொழியை –
அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்ற பட்டர் நிர்வாகத்தின் படி –
அமுதனாரும் கருதுவதாக கொள்ளலுமாம் –
தொடக்கத்தில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்று பொதுப்பட அருளி செய்ததற்கு ஏற்ப
முடிவில்-தென் அரங்கன் அணியாக மன்னும் பங்கய மா மலர்ப்பாவை -என்று சிறப்பித்து காட்டுதல் காண்க –
என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடை யாவியே -என்று நம் ஆழ்வாரும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானை திருவாய் மலர்ந்து இருப்பது ஈண்டு அறிய தக்கது –
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை யாயிரத்து இப்பத்தும் வல்லார் -என்னும் இடத்து –
பெரிய பெருமாள் திருவடிகளிலே திருவாய் மொழி ஆயிரமும் சொல்லிற்று -திரு மோகூர்க்கு ஈத்த பத்து –
திரு வேம்கடதுக்கு இவை பத்து -என்று பிரித்துக் கொடுத்த இத்தனை —
பெருமாள் திருப் பலகையில்-அமுது படியில் மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமா போலே
என்று -பிள்ளை-அருளி செய்வர் -என்று ரச கனமாக அமைந்த ஈடு வியாக்கியானம் இங்கு அனுசந்தித்து இன்புறத் தக்கது –

பூ மன்னு மாது -அம்ருத மயமான பாசுரம்
அண்ணல் செய்து -விண்ணவர் அமுது உண -சக்கை -அமுதில் வரும் –பெண்ணமுதம் தான் கொண்டான்
மாது பொருந்திய மார்பன் -அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்
மார்பன் புகழ் மலிந்த பா -திருவாய் மொழி –பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
பா மன்னு மாறன் -இன்ப மாரி-அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே –
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜன் -ராமானுஜன் எனக்கு ஆரமுதே –
பிராட்டி -பகவான் -பா -ஆழ்வார் -எம்பெருமானார் -பஞ்சாம்ருதம் கொடுத்த அமுதக்கவி -ஆறு சுவைகளும் அமுதம் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜர் தர்சனம் – முக்கிய தாத்பர்யங்கள்/ஸ்ரீ இராமானுச திருநாமம் விளக்கம் / ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரங்கள் விளக்கும் –

April 29, 2019

ஸ்ரீ யபதியே பரத்வம் -அர்ச்சையே / ஆழ்வார்கள் / ஆச்சார்யர்கள் /
குருபரம்பரை -விசிஷ்டாத்வைத சித்தாந்தம் -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி –

ஸ்ரீ ராமானுஜர் தர்சனம் ஏழு முக்கிய தாத்பர்யங்கள்
1-சரீராத்மா பாவம்
2-ஸ்ரீ மன் நாராயணன் பாராம்யம்
3-ஸமஸ்த வாஸ்ய -சர்வாத்ம பாவம் -சர்வ காரணத்வம்-
4-சர்வ கர்ம சமாராதத்வம்
5-பக்தி பிரபத்தி வசீகரத்வம்-இதயம் நல்ல எண்ணம் இதய எண்ணெய் ஒழுக்கு போலே இடைவிடாமல் தியானமே பக்தி
6-சரணாகதி எளிமை கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து கொக்கு பிடிக்கும் கதை
7-போக சாம்யம் –நான் உன்னை அன்றி இலேன் –
அவள் இல்லாமல் நான் இல்லை சினிமா பாடல் இதைப் பின்பற்றியே என்று வாலியே சொல்லிக் கொண்டார்
திரு மழிசை ஆழ்வார் பாடலை பின் பற்றி எழுதினேன் /நித்ய விபூதி அனைவருக்கும் -கிட்டும் /
நரை கமழ் பால் குடிக்கும் கலவுக்கு பிள்ளைப் பெருமாள் –ஏலக்காய் பால் கறக்கும் பசு —

———————————

1–ஸ்ரீ யபதித்தவம்

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -1-
கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் -10-
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் -16-
வெறி தரு பூ மகள் நாதனும் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே-19-
நாங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் -28-
அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -33-
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லா உலகோர்கள்-41-
மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் -42-
மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் -60-
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் -66-
மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் -78-
அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப்பாவையைப் போற்றுதும் -108-

————————————

2–சரீராத்மா பாவம் —

வந்து நீ என்னை யுற்ற பின் உன் சீரே யுயிர்க்கு யுயிராய் அடியேற்கு இன்று தித்திக்கும் -25-
கொழுந்து விட்டு ஓங்கிய யுன் வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் -27-
மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் -42-
பற்பல் உயிர்களும் பல்லுலகு யாவும் பரனது என்னும் நற்பொருள் தன்னை இந் நாநிலத்தே வந்து நாட்டினனே -53-
உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ் வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம்மிராமாநுசன் மெய்ம் மதிக்கடலே -58-
உயிரை யுடையவன் நாரணன் -59-
எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் எம்மிராமாநுசன் மிக்க புண்ணியனே -91-
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே பண்ணும் பரனும் -95-
அவை தன்னோடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் -106-

————————————————————————————–

3–ஸமஸ்த வாஸ்ய -சர்வாத்ம பாவம் -சர்வ காரணத்வம்-

ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமானுசன் -4 –
மூவுலகும் பூத்தவனே என்று போற்றிட -22-
மன் பல்லுயிர்கட்க்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமானுசன் -30-
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன் -47-
பற் பல்லுயிர்களும் பல்லுளுக்கு யாவும் பரனது என்னும் நற் பொருள் -53-
யாவும் சிதைந்து முன்னாள் அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு அவை என் தனக்கு அன்று அருளால் தந்த வரங்கன் -69-
எல்லா யுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் -91-

—————————-

4-சர்வ கர்ம சமாராதத்வம்
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற் காமமும் என்று இவை நான்கு என்பர்
நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் -40-
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை-71-

———————————————-

5-பக்தி பிரபத்தி வசீகரத்வம்-
தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே -10-
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன் -29-
தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே -31-
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் -37-
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் உற்றவர் தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் -57-
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நாய்பாவர்க்கு வானம் கொடுப்பது மாதவன்
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -66-

———————

6-சரணாகதி எளிமை –
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -66-
அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் தான் அது தந்து எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே -69-
உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய கார் கொண்ட வன்மை இராமானுச இது கண்டு கொள்ளே -83-
பத்தி எல்லாம் தங்கியது என்னத்த தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே -108-

————————

7-போக சாம்யம் —
வந்து நீ என்னை உற்ற பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே-25-
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரும் ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே -41-
இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே -47-
இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே -52-
அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே -84-
தவம் தரும் செல்வம் தகவும் தரும் சலியாப்பிறவிப் பவம் தரும் தீ வினை பாற்றித் தரும்
பரந்தாபம் என்னும் திவம் தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்க்கு -94-

——————————-

ஸ்ரீ இராமானுச திருநாமம் விளக்கம்

மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்
பொருவரும் சீர் ஆரியன்
திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன்
பூதத்திருவடி தாள்கள் நெஞ்சத்துறைய வைத்து ஆளும் இராமானுசன்
தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்

பாண் பெருமாள் சரணாம் பதுமத்தாரியல் சென்னி இராமானுசன்
மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது அடங்கும் இதயத்து இராமானுசன்
சீர் அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன்
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையான் தாள் பேராத உள்ளத்து இராமானுசன்

சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்
நீலன் தனக்கு உலகில் இனியான்
சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும் இராமானுசன்

மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே இராமானுசன் எனக்கு ஆரமுதே
நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன் என் தன் மா நிதியே
யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்
வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்
நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசன்

புறச்சமயங்கள் நிலத்து அவியக் கைத்த மெய்ஞ் ஞானத்து இராமாநுசன் என்னும் கார்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
பல்லுயிர்கட்க்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் அநகன்
தென் அத்தி யூரர் கழலிணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன்

பொன்னரங்கம் என்னில் மயிலே பெருகும் இராமானுசன்
இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில்
புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே
அண்ணல் இராமானுசன்

தீதில் இராமானுசன்
நல்லார் பரவும் இராமானுசன்
தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தான் அதில் மன்னும் இராமானுசன்
தொல் சீர் எதித் தலை நாதன்
தேர் விடும் கோனை முழுது உணர்ந்த அடியவர்க்கு அமுதம்

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை ஆளவந்த கற்பகம்
தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன்
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிடப்பார்த்து அருளும் கொண்டல்
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஓர் கூர் மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன்
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன்

எம் இராமானுசன் மெய்ம்மதிக் கடலே–சத்யம் ஞானம் அநந்தம் -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
அரு முனிவர் தொழும் தவத்தோன்
இராமானுசன் மிக்க பண்டிதனே
பண் தரும் மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
இராமானுச எம் பெரும் தகையே

இராமானுசன் என்னும் சீர் முகிலே
கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்
போற்ற அரும் சீலத்து இராமானுச
இந் நீணிலத்தே என்னை ஆள வந்த இராமானுசன்
எம் இராமானுசன் மிக்க புண்ணியனே

இராமானுசன் என்னும் மெய்த் தவனே
இந் நீணிலத்தே பொற் கற்பகம் எம் இராமானுசன்
இராமானுச என் செழும் கொண்டலே
நல் வேதியர்கள் தொழும் திருப் பாதன்

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -சாரம்/

April 22, 2017

பூ மன்னு/ மூ வகை பூ -வண்டுகளோ வம்மின் –நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித்து உழல்வீர்க்கு –/
மற்றும் மூவகை -எம்பெருமான் திருமேனியில் –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் / கள்ளார் துழாயும் கண்வலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் -போல்வன
/வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் -போல்வனவும்
மன்னு –புன்னை மேலுறை பூம் குயில்கள் — குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி பாவின் இன்னிசை
பாடிக் களிக்கும் குயில்கள் -மதுரகவி ஆழ்வார் போல்வார் –

————————————-

ஸ்ரீ பரமான பாசுரங்கள்
1–பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
2–கோவலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
3–அரங்கன் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
4—பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
5–நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன்
6–அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன்
7–மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா
8—மா மலராள் நாயகன் எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன்
9—மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி
10–ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன்
11—-நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் பொருத்தப் படாது எம்மிராமாநுச மற்றோர் பொய்ப் பொருளே
12—அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் –

——————————-

இராமானுச நூற்றந்தாதியில்-12- திவ்ய தேச மங்களா சாசனம் –

1-திருவரங்கம் –14-பாசுரங்களில் / கள்ளார்-2-/தாழ்வு -16-/ நயவேன் -35-/ஆயிழை -42-/இறைஞ்சப்படும் -47-/ஆனது -49-/பார்த்தான் -52-/
கண்டவர் -55-/மற்றொரு -57-/சிந்தையினோடு -69-/ செய்த்தலை -75-/சோர்வின்றி -81-/மருள் சுரந்து -91-/அங்கயல் -108-
2-திருவேங்கடம் -2-பாசுரங்கள் /நின்ற வண் -76-/இருப்பிடம் -106-
3-திருக்கச்சி -1-பாசுரம் –ஆண்டுகள் -31-
4—திருக் கோவலூர் -1-/ மன்னிய -10-
5—திருக் குறையலூர் -1-/ கலி மிக்க -88-
6—திரு மழிசை -1-/ இடம் கொண்ட -12-
7–கொல்லி நகர் -1-/ கதிக்கு -14-
8—திருமால் இரும் சோலை -1-/ இருப்பிடம் -106-
9—திருக்கண்ண மங்கை -1-/ முனியார் –17-
10—திருக் குருகூர் –3-பாசுரங்கள் /ஆரப் பொழில் -20-/காட்டும் /நாட்டிய -54-
11—திருப்பாற் கடல் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ செழும் திரை -105-
12—திரு பரம பதம் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ இருப்பிடம் -106-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-60-திவ்ய தேச சாமான்ய பாசுரம் /தானுகந்த ஊர் –திரு நெடும் தாண் -6-போலே –

——————————-

இதத்தாய் ராமானுஜன் -மறை யாதனின் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே –மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே –
மா முனிகளாக புனர் அவதாரத்தில் செய்து அருளினாரே
சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற -ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமானுஜ முனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் அன்றோ அனந்தாழ்வான் வணங்குகிறார்
இராமானுச முனியே –மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கும் மனம் நீ எனக்குத் தா -எம்பார் பிரார்திக்கிறார்
இராமானுச நூற்றந்தாதியில் -25-பாசுரங்களில் ஆழ்வார் திருவடிகளில்– அருளிச் செயலில்
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தோறும் புக்கும் இராமானுசன் –

——————————–

சொல்லுவோம் அவன் நாமங்கள் -குணங்களை சொல்வதே திரு நாமம் -அருளிச் செய்த குணங்கள்

1-மிக்க சீலம் /
2-பொருவரும் சீர் /
3-மன்னிய சீர் /
4-பெரும் கீர்த்தி
5-பிறங்கிய சீர் /
6-வள்ளல் தனம் /
7-நயப் புகழ் /
8-தன் ஈறில் பெரும் புகழ்
9-வாமனன் சீலன் இராமானுசன் /
10-தூயவன் தீதில் இராமானுசன் /
11-திசை அனைத்தும் ஏறும் குணனை
12-தொல் சீர் எதித்தலை நாதன் /
13-அற்புதன் -என்னை ஆள வந்த கற்பகம் /மண்ணுலகில் ஈட்டிய சீலத்து
14-பார்த்து அருளும் கொண்டல் /
15-உத்தமன்
16-புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி
17-சுடர் மிக்கு எழுந்த தொல் புகழ்
18-உன் பெரும் கருணை
19-வண்மை இராமானுசர்
20-மிக்க வண்மை
21-வண்மை –மா தகவு /மதி புரையும் தண்மை/
22-கொண்டல் அனைய வண்மை
23-மொய்த்து அலைக்கும் நின் புகழே
24-சீர் ஒன்றிய கருணை
25-தெரிவுற்ற கீர்த்தி
26-கார் கொண்ட வண்மை
27-சீர் வெள்ள வாரி
28-உணர்வின் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி
29-போற்ற யரும் சீலம்
30-ஈண்டிய சீர்
32-அனைத்தும் தரும் அவன் சீர்
33-கடல் புடை சூழ் வையம் இதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே
34-மெய்யில் பிறங்கிய சீர்
35-இன்புற்ற சீலம்
36-பொங்கிய கீர்த்தி

———————-

சௌகர்ய ஆபாத குண சதுஷ்டயமும்
கார்ய ஆபாதக குண சாதகமும்
இங்கே அனுசந்தேயம் -அது எங்கனே என்னில்
இப்படியைத் தொடரும் இராமானுசன் -என்னும்படி அவர் பின் படரும் குணனாய்
தீம்பன் இவன் என்று நினைத்து என்னை இகழார் எதிராசர் அன்று அறிந்து அங்கீ கரிக்கையால் -என்கிற வாத்சல்யமும்
அண்ணல் இராமானுசன் -என்னும்படி உடையவர் ஆகையால்
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பானாய் விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலத்து உதித்த படியாலே-
வைத்து இருந்த இடத்தே வந்து வந்து நோக்கும் படியான ஸ்வாமித்வமும்
என்னருவினையின் திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை யுள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் -என்னும்படி
ஒரு நீராக கலந்த சௌசீல்யமும்
என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற -தென்று சொல்லும்படி சௌலப்யமும்
மெய்ஞானத்து இராமானுசன் -கதி இராமானுசன் -உண்மை நன்ஞானம் உரைத்த இராமானுசன் -என்று
அறியாதன அறிவிக்கைக்கும் அவர்களுக்கு செய்ய வேண்டுமதுவும் தவிர்க்க வேண்டுமதுவும் அறிக்கைக்கும் ஈடான ஜ்ஞானமும்
நிலத்தை செறுத்து யுண்ணும் நீசக்கலியை நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் என் பெய்வினை தென் புலத்தில்
பொறித்தவப் புத்தகச் செம்மை பொறுக்கியும் போருகிற பாப விமோசகத்வ சக்தியும் –
சலியாப் பிறவிப் பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரம் தாமம் என்னும் திவம் தரும் -என்னும்படி
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் பிராப்தியை உண்டாக்கிக் கொடுக்கும்தான சக்தியும்
பகவத் விஷயத்தை அண்டை கொண்ட பூர்த்தியும்
எந்தை இராமானுசன் வந்து யெடுத்தனன் இன்று என்னை -என்கிற பிராப்தியும்
காரேய் கருணை என்கிற காருணிகத்வமும்-
கொண்டலனைய வண்மை–உன்னுடைய கார் கொண்ட வண்மை–உன் வண்மை என் பால் என் வளர்ந்ததுவே -என்று
அபேஷா நிரபேஷமாக உபகரிக்கும் ஔதார்ய ஸ்வ பாவமும் ஆகிற
ப்ரபத்ய அபேஷித குணங்கள் எல்லாம் -குணம் திகழ் கொண்டல் இராமானுசன் இடத்திலே கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இ றே –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் -யென்னும்படியாய் இருக்கும்
சரனௌ சரணம் -இராமானுசன் நம்மை நம் வசத்தே விடுமே சரணம் என்றால் -என்கிற உபாயத்வ அத்யாவச்யத்தை சொல்லுகிறது
ப்ரபத்யே -என்று உபாய ச்வீகாரம் சொல்லுகிறது
நையும் மனம் யுன் குணங்களை யுன்னி என்னாவிருந்து எம்மையன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன் கையும் தொழும்-
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் கூராதி நாத -என்னும்படி
த்ரிவித கரணத்தாலும் பற்றுகிறார்
இராமானுசனை உன்னும் திண்மை -என்று எல்லார்க்கும் மானஸ அத்யாவசாயம் ஆகலாம்
இவர் பூர்ண அதிகாரி ஆகையாலே த்ரிவித கரணத்தாலும் பூர்ண பிரபத்தி பண்ணுகிறார்
இந்த ச்வீகாரம் பிராப்யம் ஆகையாலே
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -என்று வர்த்தமானமாய் நடக்கின்றது-

-மிக்க சீலமல்லால் உள்ளாதென்நெஞ்சு- 2- என்று முதலில் சீல குணத்தில் ஈடுபட்டவர்–இன்புற்ற சீலத்து இராமானுச -என்று முடிவிலும் ஈடுபடுகிறார் .

————————————————

ஸ்வாமியை விளித்து அருளும் ஸ்ரீ ஸூக்திகள் –

1-எம் இறையவனே/
2-மா முனியே /
3-உறு துணையே /
4-எனக்கு ஆரமுதே /
5-மா நிதியே /
6-சேம வைப்பே
7-கார் தன்னையே /
8-விளங்கிய மேகத்தை /
9-அன்பன் அனகன் /
10-பூண்ட அன்பா
11-குடி கொண்ட கோயில் /
12-மெய்ம்மதிக் கடலே
13-குணம் திகழ் கொண்டல்
14-குலக் கொழுந்து
15-அரு முனிவர் தொழும் தவத்தோன்
16-மிக்க பண்டிதனே
17-ராமானுஜ முனி வேழம்
18-ஆர் உயிர்க்கு அரண்
19-கீதையின் செம்மைப் பொருள் தெரிய பாரினில் சொன்ன இராமானுசன்
20-எந்தை இராமானுசன்
21-இராமானுசர் எம் பெரும் தகையே
22-சீர் முகில்
23-புண்ணியனே
24-வலி மிக்க சீயம்
25-மிக்க புண்ணியனே
26-அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த மெய்த்தவன்
27-நீணிலத்தே பொற் கற்பகம்
28-செழும் கொண்டல் –

————————–

ஸ்வாமியை புகழும் பெரியோர்களை விளித்து அருளும் ஸ்ரீ ஸூக்திகள் –

1-புகழோதும் நல்லோர்/
2-திருவுடையார் என்றும் சீரியரே /
3-சார்ந்தவர் தம் காரிய வண்மை /
4-இறைஞ்சும் திரு முனிவர் /
5-கவி பாடும் பெரியவர் /
6-நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும்மேவு நல்லோர்/
7-பெரியவர் சீரை /
8-இனியவர் தம் சீர் /
9-மெய்யுணர்ந்தோர் ஈட்டங்கள்
10-புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசர் /
11-குணம் கூறும் அன்பர் /
12-எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன்
13-புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுச /
14-முழுது உணர்ந்த அடியவர்க்கு அமுதம் /
15-கற்றவர் காமுறு சீலன்
16-தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன் /
17-உதிப்பன உத்தமர் சிந்தையுள் –இணை யடியே /
18-கொண்டலை மேவித் தொழும் குடி
19-நற்றவர் போற்றும் ராமானுஜன்
20-பெரும் தேவரைப் பரவும் பெரியோர்
21-இராமாநுசனைப் பணியும் நல்லோர்
22-இராமானுசர் யுன்னைச் சார்ந்தவர்
23-உள்ளம் நைந்து அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோர்
24-நல்லார் பரவும் இராமானுசன்
25-இராமானுசனைத் தொழும் பெரியோர்
26-ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமாநுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் —
27-எம்மை நின்று ஆளும் பெரியவரே
28-இரும்கவிகள் புனையும் பெரியவர்
29-இராமாநுசனை உற்றவர் எம் இறைவரே
30-இராமானுசனைத் தொழும் பெரியோர் –

—————————

ஸ்வாமி -அருளிய -அநிஷ்ட நிவ்ருத்திகள் பற்றி -ஸ்ரீ ஸூக்திகள் –

1-புலைச்சமயங்கள் நிலைத்தவியக் கைத்த மெய்ஞ்ஞானத்து இராமானுசன்
2-கூறும் சமயங்கள் ஆறும் குலைய குவலயத்தே மாறன் பணித்த மறை யுணர்ந்தோன்
3-பொய்ம்மை அறு சமயம் போனது
4-பொன்றி இறந்தது வெங்கலி
5-ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன –இணை யடியே
6-பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப
7-நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
8-மருள் சேர்ந்தோர் சிதைந்து ஓட வந்த
9-வாதியார்கள் உங்கள் வாழ்வற்றதே /
10- வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு
11-தீய சமயக் கலகரைக் கைத்தனன்
12-கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன்
13-நாதன் என்று அறியாது உழல்கின்ற தொண்டர் பேதைமை தீர்த்த இராமானுசன்
14-பிறவியை நீக்கும் பிரான்

———————————-

ஸ்வாமி -அருளிய -இஷ்ட ப்ராப்திகள் பற்றி -ஸ்ரீ ஸூக்திகள் –

1-தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
2-ஆனது செம்மை அற நெறி
3-நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது–வண் தமிழ் மறை வாழ்ந்தது
4-பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்து அருளும்
5-மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தான்
6-மறையவர் தம் தாழ்வற்றது
7-தாரணி தவம் பெற்றது
8-தத்துவ நூல் கூழற்றது
9-அத் தானம் கொடுக்கும் தன் தகவு என்னும் சரண்
10-தூய மறை நெறி தன்னை காசினிக்கே உய்த்தனன்
11-உண்மை நல் ஞானம் உரைத்த இராமானுசன்
12-ஈயாத இன்னருள் ஈந்தனன்
13-கீர்த்தியினால் அனைத்தும் ஈந்தனன்

————————————–

பாசுர வகைகள் –

1-தான் பெற்ற பேறு பற்றி -அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்
2–தன் நெஞ்சுடன் சம்வாதம் -நெஞ்சு -பற்றி -அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்
3-சம்சாரிகள் பெறாமல் இழந்து போகிறார்களே என்று பரிதபித்து -அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்
4-சம்சாரிகள் பெறாமல் இழந்து போகிறார்களே என்று -அவர்களுக்கு உபதேசித்து அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்–
5-இராமானுசர் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்
6-இராமானுஜர் இடம் நேராக சம்போதானம் -இப்படி ஆறு வித பாசுரங்கள் உண்டே –

———————————————

1-தான் பெற்ற பேறு -விவரணம் –

1–ராமானுஜ முனிக்கு அன்பு செய்யும் சீரிய பேறுடையார் அடிக்க கீழ் என்னை சேர்த்தான் –
2–என்னை புவியில் ஒரு பொருள் ஆக்கி —
3– மருள் சுரந்த முன்னைப் பழ வினை வேர் அறுத்து –
4–ஊழி முதல்வனையே பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான்
5–என் செய்வினையால் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகம்
6–கொழுந்து விட்டு ஓங்கிய யுன் வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்
7–என் பெய்வினை தேன் புலத்தில் பொரித்த வைப்புத்தகச் சும்மாய் பொறுக்கிய பின் இராமானுசன் தன் நாயக் புகழ் நலத்தைப் பொறுத்தது
8–என்னை ஆக்கி யடிமை நிலைப்பித்தனை இன்று
9–இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தண்ணீரில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து செய்த சேமங்கள்
10—ஆயிழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளற்றில் அழுந்தி மாயும் என்நாவியை இன்று வந்து எடுத்தான்
11– மதியிலேன் தெரியும்படி என் மனம் புகுந்தான்
12–என் அருவினையின் திறம் செற்றான்
13–இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே நிறைந்து ஒப்பற்ற விருந்தான்
14–இராமானுசன் தன் இணை அடியே – கொள்ளை வன் குற்றம் எல்லாம் பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன
15– ராமானுஜன் என்னை ஆழ வந்து இப்படியில் பிறந்தது -மாற்று இல்லை காரணம் பார்த்திடிலே
16—புன்மையினேன் இடைத் தான் புகுந்தான்
17–இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணை யோடு ஆர்த்தான்
18— என்னை ஆள வந்த கற்பகம் –
19–ராமானுசனை இந்நாணிலத்தே பெற்றனர் -பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே
20–கொழுந்து விட்டு ஓடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்து அழுந்தியிட்டேனை வந்து ஆட்க்கொண்டான்
21—வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன்
22–அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் தானது தந்து எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே
23–உன்னி உள்ளம் நைந்து அன்போடு இருந்து ஏத்தும் நிரை புகழோருடனே வைத்தனன் என்னை மிக்க வண்மை செய்தே
24– ஈயாத இன்னருள் ஈந்தனன்
25—என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன்
26–கருத்தில் புகுந்து -உள்ளில் கள்ளம் கழற்றினாய்
27 -கருத்தரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கினாய்
28–தொண்டு பட்டவர்பால் சார்வின்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வின்றி இன்று பெருத்தினாய்
29—வெந்தீ வினையால் உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொலித்தீன் பொருவற்ற கேள்வியனாக்கி -நின்றான்
30–உன்னுடைய கார் கொண்ட வண்மையால் உன் பாத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன்
31–உன்னை கண்டு கொண்டேன் காண்டலுமே தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் –
32–காண்டலுமே என் தொல்லை வெந்நோய் விண்டு கொண்டேன்
33—காண்டலுமே அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன்
34—இந்நீணிலத்தே எனை ஆள வந்த ராமானுசன்
35– இன்று நீ புகுந்து என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இக்காரணம் கட்டுரையே
36—என் பெரு வினையைக் கிட்டிக் கிழங்கோடு தன்னருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த இராமானுசன்
37–மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னை-துயர் அகற்றி -உயக் கொண்டு நல்கினான்
38—என் மெய் வினை நோய் களைந்து நல் ஞானம் அளித்தனர் கையில் கனி என்னவே –
39–இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தன்னோடும் வந்து
-இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து இன்று அவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே –
40–இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும் இன்புற்ற நோயுடன் தோறும் பிறந்து இறந்து எண்ணரிய துன்புற்று வீயினும்
சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி அங்கு ஆட்படுத்தே -என்று அருளி தலைக் காட்டுகிறார் –

——————————–

2–தன் நெஞ்சுடன் சம்வாதம் -நெஞ்சு -பற்றி -அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்-

1–பூ மன்னு –மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -ராமானுசன் சரணாரவிந்தம் தாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே-
2—குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத வன்பன் ராமானுசன் மிக்க சீலம் அல்லால் உள்ளது என்னெஞ்சு
3–பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை
4–பத்தியில்லாத வென் பாவி நெஞ்சால் முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே
5–ஒப்பார் இல்லாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது வவன் மொய் புகழ்க்கே
6— மனம் நீ புகுந்தாய் வெள்ளைச் சுடர் விடு முன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுசா என் தனி நெஞ்சமே
7–மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மாற்றுளார் தரமோ
8–இராமானுசனை அடைந்த பின் என் வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே
9—இராமானுசனைப் பணியும் நல்லோர் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே
10–சார்ந்தது என் சிந்தை யுன் தாளிணைக் கீழ்
11–திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்நெஞ்சில் பொருத்தப் படாது எம்மிராமானுசா மற்றோர் பொய்ப் பொருளே –
12–அவருக்கே எல்லாவிதத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே
13–என் மனம் ஏத்தி யன்றி ஆற்ற கில்லாது
14–இன்று நீ புகுந்து என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக்காரணம் கட்டுரையே
15–இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்க்கு உவந்து இருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே
16–இனி நம்மிராமாநுசன் நம்மை நம் வசத்தே விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே
17–போந்து என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு உனது அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி
18—நையும் மனம் உன் குணங்களை யுன்னி
19–மாயன் இராமானுசன் – இன்று வவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே
20—பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம் தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே –

————————————

3-சம்சாரிகள் பெறாமல் இழந்து போகிறார்களே என்று பரிதபித்து அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள் -விவரணம் –

1–கள்ளார் பொழில் தென்னரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில் கொள்ளா மனிசர்-
2–பேய்ப் பிறவிப் பூரியர்
3–எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா மனக்குற்ற மாந்தர்
4–பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள்
5—பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்
6–பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே மருள் கொண்டு இளைக்கும்
7—நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக் கல்லார் அகல் இடத்தே எது பேறு என்று காமிப்பரே
8–ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட இராமானுசன் தன் இணை அடியே மாறி நடப்பன
9–பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று ஓதி மற்று எல்லா யுயிரும் அஃது என்று
உயிர்கள் மெய் விட்டு ஆதி பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அல்லல்
10–எம்மிராமாநுசன் மன்னு மா மலர்த்தாள் பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்
11—ராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொல்ல வல்ல தெய்வம் இங்கு யாது என்று அலர்ந்து அவமே ஐயப்படா நிற்பர் வையத்து உள்ளோர் நல்லறிவு இழந்தே
12–ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதனுச்சி மிக்க சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்
13—-பிறவியை நீக்கும் பிரானை நினையார்
14–ராமானுசனை இரும் கவிகள் புனையார்
15–பெரியவர் தாள்களில் பூந்தொடையல் வனையார் –

——————————-

4-சம்சாரிகள் பெறாமல் இழந்து போகிறார்களே என்று -அவர்களுக்கு உபதேசித்து அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள்–விவரணம் –

1—பொருந்திய தேசம் போரையும் திரளும் புகழும் நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் –எங்கள் ராமானுசனை யடைபவர்க்கே
2–காசினியோர் இடரின் கண் வீழ்ந்திடத் தானும் அவ் வொண் பொருள் கொண்டு அவர் பின் படரும் குணம் எம்மிராமாநுசன்
3–சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம் பரக்கும் இரு வினை பற்றற வோடும் படியில் உள்ளீர் உரைக்கின்றனன் உமக்கு யான்
4–அறம் சீறும் கலியைத் துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே
5–எண்ணரும் சீர் நல்லார் பரவும் ராமானுசன் திரு நாமம் நம்புமின்
6–என்றார் குணத்து எம்மிராமாநுசன் அவ்வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே
7–இராமானுசன் மறை தேர்ந்து உலகில் புரியும் நல் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே
8— தவம் தரும் செல்வம் தரும் தகவும் தரும் சலியாப் பிறவிப் பவம் தரும் தீ வினை பாற்றித் தரும் பரம் தாமம் என்னும் திவம் தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்க்கு
9–பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலத்து உதித்து மறை நாலும் வளர்த்தனனே

—————————————

5-இராமானுசர் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள் -விவரணம் –

1—தொல் உலகில் மன் பல்லுயிர்கட்க்கு இறைவன் மாயன் என மொழிந்தான் அன்பன் அனகன் இராமானுசன்
2—நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் ஆறாம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன்
3—மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் தீதில் இராமானுசன்
4—இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்
5—கருதரிய பல் பல் உயிர்களும் பல் உலகி யாவும் பரனது என்னும் நற்பொருள் தன்னை இந்நாநிலத்தே வந்து நாட்டினான்
6—மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை உமக்கு அன்று என்று இராமானுசன் உயிர்கட்க்கு அரண் அங்கு அமைத்தான்
7—தெய்வத் தெரிநிலை செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன்
8—மதி புரையும் தண்மையினாலும் இத்தாரணி யோர்கட்க்குத் தான் சரணாய் உண்மை நல் ஞானம் உரைத்த இராமானுசன்
9—எண்ணில் மறைக் குறும்பைப் பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் –
10–இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமானுசன்
11– ஓதிய வேதத்தின் உட்ப்பொருளாய் அதனுச்சி மிக்க சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர் பேதைமை தீர்த்த இராமானுசன்
12—உலகிருள் நீங்க தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து எல்லா யுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான்
13—என் தன் மெய்வினை நோய் களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே

————————————

6-இராமானுஜர் இடம் நேராக சம்போதானமாக -அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகள் -விவரணம் –

1–காரேய் கருணை இராமானுச –25-
2–வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் –சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுசா என் தனி நெஞ்சமே –27-
3–இராமானுச நின்னருள் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே –38-
4–உன்னைத் தந்த செம்மை சொல்லால் கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடுலே –45-
5–இராமானுச இனி நாம் பழுதே அகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆனபின்னே –48-
6–யான் உன் பிறங்கிய சீர் அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் –இராமானுச மிக்க பண்டிதனே –63-
7–சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக் கீழ் –வண்மை இராமானுசா வெம் பெரும் தகையே –71-
8–நின் புகழே மொய்த்து அலைக்கும் வந்து இராமானுசா வென்னை முற்று நின்றே –75-
9–நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற் கடலும் உன் தனக்கு
எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர்த்தாள் என் தனக்கும் அது இராமானுசா இவை ஈந்தருளே –76-
9–திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்நெஞ்சில் பொருத்தப் படாது எம்மிராமானுசா மற்றோர் பொய்ப் பொருளே -78-
10–அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமானுச இனி யுன் சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே -81-
11–உன் பதயுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய கார் கொண்ட வண்மை இராமானுசா இது கண்டு கொள்ளே -83-
12–போற்ற அரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து சாற்றுவனேல் அது தாழ்வு -89-
13—எண்ணரும் கீர்த்தி இராமானுச இன்று நீ புகுந்து என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக்காரணம் கட்டுரையே -92-
14–உனது அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் அதுவே ஈந்திட வேண்டும் இராமானுச இது வன்றி ஒன்றும் மாந்தகில்லாது-100-
15–துயர் அகற்றி உயக் கொண்டு நல்கும் இராமானுச வென்றது உன்னை யுன்னி பயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லார் -101-
16–இராமானுச –உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே -102-
17–உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –இராமானுச என் செழும் கொண்டலே -104-
18–இன்புற்ற சீலத்து இராமானுச –உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி யங்கு ஆட்படுத்தே -107-

———————————————

ஆழ்வார்கள் சம்பந்த கிரமம்-காரணம் 

பெயர் ஊர் பலன் சொல்லா ஐவரையும் முதலில் சொல்லி –முதல் ஆழ்வார்கள் -திருப் பாண் ஆழ்வார் -திரு மழிசை ஆழ்வார் –
திருமழிசை -சம்பந்தம் சொல்வதற்கு முன் திருப் பாண் ஆழ்வார் –பெயர் பலன் சம்பந்தம் இல்லாத இவர்கள் பிரசித்தம் என்பதால் –
-பின்பு –தொண்டர் அடிப்பொடி – குலசேகரர் -பெரியாழ்வார் ஆண்டாள் சம்பந்தம் சொல்லி -மீண்டும் கலியன் / மதுரகவி /நம்மாழ்வார் -அருளிச் செயல்களின் சம்பந்தம் சொல்லி பிரபந்தம் ஆரம்பம் என்றபடி –

ஓடித் திரியும் யோகிகள் முதல் ஆழ்வார் -இடை கழி இருந்த இடத்தில் சேவை-
தான் இருப்பிடம் அழைக்கப்பட்டு -அடுத்து சேவை சாதிக்க-திருப் பாண் ஆழ்வார்
ஆழ்வார் சொன்ன படி இருந்ததை காட்டி -அர்ச்சாவதார சமாதி கடந்து-திரு மழிசை ஆழ்வார்
அதிலே இருந்து அழகை காட்டி ஆள் கொண்ட தொண்டர் அடி பொடி ஆழ்வார்-
கர்ம ஆராதனம் பொய்கை நீர் வேண்டுமே பொய்கை ஆழ்வார் முதலில் சொல்லி –
அடுத்து -இதயத்து இருள் கெட இறை -உடையவன் காட்டி -அடுத்து சொல்லி -நாராயணன் -பர்யந்தம்-பூதத்தாழ்வார் சம்பந்தம் –
அடுத்து மா மலராள் தன்னோடு மாயன்-திருமால் காண்பித்த –பேயாழ்வார் சம்பந்தம் –
சாஸ்திரம் தான் -அனுபவித்து அருளி செயல்-சீரிய நான் மறை செம்பொருளை செம் தமிழால் அளித்த பாண் பெருமாள்-
இடம் கொண்ட கீர்த்தி -உலகு வைத்து எடுத்த பக்கம்-புலவர் புகழ் கோலால் அளக்க -கற்று தெளிந்து
இனி அறிந்தேன் -காரணம் நீ கற்றவை நீ-தேறின பொருள் பரமத நிரசன பூர்வகமாக அருளியவர் –
சரீரம் ஆத்மா உடன் அவனை அணைந்து இருக்க வேண்டுமே அவன் என்று அறிந்த பின் –
தோளில் மாலை சரீர பிரத்யுக்தம் செம் தமிழ் மாலை ஆத்மா -விட்டு பிரியாமல் –
உற்றமும் உன் அடியார்க்கு அடிமை கொல்லி காவலன் -ஆழ்வாருக்கு விசேஷணம் இங்கே சொல்ல வில்லை –
உயிர் கொல்லி அஹங்காரதிகள் கொன்று பாகவத நிஷ்டை அருளியவர் -அவர்களுக்கு வரம் கொடுத்த
கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என் ஆவதே –
கர்ம நிஷ்டையுடன் பல்லாண்டு காப்பு -இடுவது -பெரியாழ்வார் நிஷ்டை சொல்லி/ஆண்டாள்– சம்பந்தம் /
விசிஷ்ட அத்வைதம் காட்டிய கண்ண மங்கை நின்றான் நீலன்
மிக்க வேதத்தின் உள் பொருள் நிறுத்தினான்-‘திருவாய் மொழியே தாரக போஷாக போக்யங்கள் –

————————————————

 

1–மாறன் அடி பணிந்து உயந்த இராமானுசன்
2–குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத வன்பன்
3–ஷரம் பிரதான அம்ருத அஷரம் ஹா -இத்யாதி பேத ஸ்ருதிகளின் உண்மை பொருளை உணர்ந்த இராமானுசன்
4- என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி -மருள் சுரந்த முன்னை பழ வினை வேர் அறுத்த ராமானுசன்
5–எனக்குற்ற செல்வம் இராமானுசன்
6—பெரிய பிராட்டியாரால் கடாக்ஷிக்கப் பெற்ற -அஸ்து தே -சதைவ சம்பத்யே -பெறும் கீர்த்தி யுடைய இராமானுசன்
7—பழியைக் கடத்தும் இராமானுசன் –திருவடி சம்பந்திகளுக்கு மோக்ஷம் நிச்சயம்
8—பொய்கைப்பிரான் அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் இராமானுசன் எம் இறைவனே
9–பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்தாளும் இராமானுசன்
10—தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்
11–பாண் பெருமாள் சரணம் பதுமத்தாரியல் சென்னி இராமானுசன்
12—மழிசைக்கிறைவன் இணையடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன்
13–சீர் அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன் இராமானுசன்
14—கொல்லி காவலன் சொல் பாதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் இராமானுசன்
15—பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத யுள்ளத்து இராமானுசன்
16–சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமானுசன்
17–நீலன் தனக்கு இனியான் எங்கள் இராமானுசன்
18–சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை யுயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும் இராமானுசன்
19–உறு பெறும் செல்வமும் –மாறன் விளங்கிய சீர் –செந்தமிழ் ஆரணமே என்று –அறிதர நின்ற இராமானுசன்
20–நாத முனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்
21–யமுனைத்துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்
22–வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்
23–வைப்பாய் வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசன்
24—புலச் சமயங்கள் நிலைத்தவியக் காய்த்த மெய்ஞ்ஞானத்து இராமானுசன்
25—காரேய் கருணை இராமானுச
26–திக்குற்ற கீர்த்தி இராமானுசன்
27–வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் புகுந்த இராமானுசன்
28—பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அறிய இராமானுசன்
29–தென் குருகைப் பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
30—பல்லுயிர்கட்க்கு இறையவன் மாயன் என மொழிந்த அன்பன் அனகன் இராமானுசன்
31–காண் தகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் இராமானுசன்
32— செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன் எங்கள் இராமானுசன்
33—இந்த பூதலம் காப்பதற்கு என்று –கை யாழி – நாந்தகமும் தண்டும்- வில்லும் – சங்கமும் -இடையே யான இராமானுச முனி
34–என் பெய்வினை தென் புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய புகழ் யுடைய இராமானுசன்
35–பொன்னரங்கம் என்னில் மயிலே பெருகும் இராமானுசன்
36–ஒண் பொருள் கொண்டு –படரும் குணம் இராமானுசன்
37–படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன்
38–புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுச
39–வெந்துயர் மாற்றித் தண்ணீரில் பெறும் புகழே தெருளும் தெருள் தந்த இராமானுசன்
40—கண்ணனுக்கே ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன்
41–உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே
42–அழுந்தி மாயும் என்னாவியை வந்து எடுத்து -மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் தீதில் இராமானுசன்
43–அறம் சீறும் உறு கலியைத் துரைக்கும் பெருமை இராமானுசன்
44–சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர் நல்லார் பரவும் ராமானுசன்
45—நின் சரண் அன்றி பேறு ஓன்று மற்று இல்லை ஆறும் ஒன்றும் இல்லை என்று இப்பொருளை தேறும் அவர்க்கும் எனக்கும் உன்னைத் தந்த செம்மை –இராமானுசன்
46–மாறன் பணித்த மறை யுணர்ந்தோன் –மதியிலேன் தேறும்படி என் மனம் புகுந்தான் -திசையனைத்தும் ஏறும் குணம் இராமானுசன்
47–பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்
48—இராமானுசா என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகழ் ஒன்றும் இல்லை -அருட்க்கும் அஃதே புகல்
49–தென்னரங்கன் கழல் சென்னி வைத்து– மன்னும் இராமானுசன்
50—இராமானுசன் தன் இணை யடியே உதிப்பது யுத்தமர் சிந்தையுள் -ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன
51–தேர் விடும் கோனை முழு உணர்ந்த அடியார்க்கு அமுதம் இராமானுசன்
52–இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் இராமானுசன்
53–பற்பல உயிர்களும் பல்லுலகியாவும் பரனது என்னும் நற்பொருள் தன்னை இந்நாநிலத்தே வந்து நாட்டின இராமானுசன்
54—மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்வு கண்டே
55–தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன்
56–மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் இராமானுசன்
57—நல் தவர் போற்றும் இராமானுசன் -அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவராக் தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன்
58—உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம் வாதில் வென்றான் எம்மிராமாநுசன்
59–நான்மறையின் சுடர் ஒளியால் –கலி இருளை துரந்த இராமானுசன் -உயிரை யுடையவன் நாரணன் என்று உற்று உணர வைத்தான்
60—மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தோறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன்
61—அரு முனிவர் தொழும் தவத்தோன் இராமானுசன்
62–இராமானுசன் மன்னு மலர்த்தாள் பரவும் பெரியோர் கழல் பிடித்து இரு வினை பாசம் கழற்றி இருந்தேன்
63–மருள் செறிந்தோர் சிதைந்து ஒட வந்து இப்படியைத் தொடரும் இராமானுசன்
64–பண்டாரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
65–இராமானுசன் தந்த ஞானத்திலே தொல்லை வாத்தியார் வாழ்வு அற்றது -மறையவர் தாழ்வு அற்றது -தாரணி தவம் பெற்றது
66–தன்னை எய்தினார்க்கு – தன் தகவு என்னும் சரண் கொடுத்து -அத்தானும் கொடுக்கும் இராமானுசன்
67–மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை யுமக்கு அன்று என்று உயிர்கட்க்கு அரண் அமைத்த இராமானுசன்
68–கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன்
69–அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து இன்று என்னை வந்து எடுத்த எந்தை இராமானுசன்
70– -எண்ணில் பல் குணத்த இராமானுசா
71–இராமானுசா நீ செய்வினை யதனால் முன் செய்வினை பேர்ந்தது
72–தூய மறை நெறி தன்னை காசினிக்கே உய்த்தனன் இராமானுசன்
73—தான் சரணாய் உண்மை ணங்கினானாம் உரைத்த இராமானுசன்
74–கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம்மிராமாநுசன்
75–இராமானுசா நின் புகழே என்னை முற்று நின்று மொய்த்தலைக்கும்
76–நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் வைகுந்த நாடும் உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் இராமானுசா
77–ஈந்தனன் ஈயாத இன்னருள் வண்மை இராமானுசன்
78–இராமானுசா நீ இந்த மண்ணகத்தே திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கினாயே
79-இந்த பூதலத்தே – மெய்யைப் புரக்கும் இராமானுசன்
80–நல்லார் பரவும் இராமானுசன்
81–அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி பெறுத்தும் இராமானுசன்
82–பொருவற்ற கேள்வியனாக்கி நின்ற சீர் முகில் இராமானுசன்
83–கார் கொண்ட வண்மை இராமானுச
84–எம் இராமானுசனை கண்டு கொண்டேன் -காண்டலுமே அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன்
85–வேதத்தின் உச்சி மிக்க சோதியை நாதன் என்று அறியாது உழல்கின்ற தொண்டர் பேதைமை தீர்த்த இராமானுசன்
86–ஒள்ளிய நூல் கற்றார் பரவும் இராமானுசன்
87—உணர்வின் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி இராமானுசன்
88–கலைப் பெருமான் ஒளி மிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்
89–போற்ற அரும் சீலத்து இராமானுச
90–இன் நீணிலத்தே எனையாள வந்த இராமானுசன்
91–அருள் சுரந்து எல்லா உயிர்கட்க்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் எம்மிராமாநுசன்
92—செம்மை நூல் புலவர்க்கு எண்ணரும் கீர்த்தி இராமானுச
93–என் பெரு வினையைக் கிட்டிக் கிழங்கோடு தன்னருள் என்னும் ஒள் வாள் யுருவி வெட்டிக் களைந்த இராமானுசன்
94–பரம் தாமம் என்னும் திவம் தரும் தீதில் இராமானுசன்
95–பரனும் பரிவிலானாம் படி பல்லுயிர்க்கும் வீடளிப்பான் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்த இராமானுசன்
96—எம் இறைவர் இராமானுசன் தன்னை யுற்றவரே
97–இராமானுசன் தன்னை உற்றாரை உற்று ஆட் செய்ய என்னை உற்றான் இன்று
98–நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே விடான்
99–நீசர்கள் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் எம்மிராமாநுச முனி போந்த பின்னே
100–இராமானுசா உனது அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி என் நெஞ்சு என்னும் பொன் வண்டு போந்தது
101–துயர் அகற்றி உயக் கொண்டு நல்கும் இராமானுசன் என்றது உன்னை யுன்னி நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லார்வர் என்று நைந்தே
102 —இராமானுச உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே
103–வாள் அவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து விளைந்திடும் சிந்தை இராமானுசன்
104—இராமானுச என் செழும் கொண்டலே
105–நல் வேதியர்கள் தொழும் திருப் பாத்தான் இராமானுசன்
106—மாயன் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை அவை தன்னோடும் வந்து இருப்பிடம் இராமானுசன் மனத்து -இன்று அவன் வந்து என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே இருப்பிடம்
107—இன்புற்ற சீலத்து இராமானுச
108—பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ நம் தலை மிசையே மன்னவே பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் –

—————————————–

பாவனம்-32/42/52 பாசுரங்களால்/தந்த அரங்கனும் தந்திலன் தான் அது தந்து-வள்ளல் தனம்/போக்கியம் -பொன் வண்டு தேன் உண்டு அமர்ந்து/காமமே -கண்ணனுக்கு புருஷார்த்தம்-/பர மத கண்டனம் பல பாசுரங்கள்/திருவிலே தொடங்கி திருவிலே முடிக்கிறார்/திரு கண்டேன்- தேன் அமரும் பூ மேல் திரு -நமக்கு என்றும் சார்வு – திரு பேய் ஆழ்வார் போல

அடியில் பூ மன்னு மாது – 1-என்றார் –இங்கே பங்கய மா மலர் பாவை -108- என்றார்
அங்கே பொருந்திய – – என்றார் –இங்கு -அணி யாகமன்னும் — – என்றார்
அங்கு -இராமானுசன் உன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -1- – என்றார்

இங்கு -தலை மிசையே இராமானுசனடிப் பூ மன்ன – 108- என்றார் .
அங்கு நெஞ்சே – 1- என்று திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் –
இங்கு –நெஞ்சே – 108- என்று திரு உள்ளத்தோடு கூட அனுசந்தித்து தலைக் கட்டினார் .

நெஞ்சே -பேற்றினைப் பெற அவாவுகின்ற நெஞ்சே
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்
ஒண் சீராம் தெளிதேன் உண்டு அமர்ந்திட வேண்டி -100 – என்று இப் பேற்றின்
சுவையைத் துய்ப்பதற்கு -தம் நெஞ்சு முற்பட்டதை முன்னரே கூறினார் அன்றோ –
நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார் .
நம் தலை மிசை –அடிப்பூ மன்ன
நம் தலை மிசை -தலை குளித்து பூசூட விரும்புவர் போன்று
சரணாரவிந்தம் எப்போதோ என்று ஆசைப் பட்டுக் கொண்டு இருக்கிற
நம் தலையிலே -என்றபடி ..பொங்கிய கீர்த்தி -பரந்த புகழ் -திக்குற்ற கீர்த்தி -என்றார் முன்னம் –

அடிப்பூ நம் தலைமிசை மன்ன –மன்னும் பாவையைப் போற்றுதும் -என்கிறார் –
தான் அணி யாகத்தில் மன்னி இருப்பது போலே நம் தலை மிசை அடிப்பூ மன்னி இருக்கும்படி
செய்வதற்காக பாவையை ஆஸ்ரயிப்போம் என்கிறார் .
———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி–பாசுரங்கள் -77-108-/அவதாரிகை /-ஸ்ரீ மா முனிகள் /ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் / ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் -அருளிச் செய்தவை –

April 15, 2017

77-தாம் அபேஷித்த படியே திருவடிகளை கொடுத்து அருளப் பெற்று க்ருத்தார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து
-இவை எல்லாம் செய்த பின்பு-இனிச் செய்வதாக நினைத்து அருளுவது ஏதோ ?–என்கிறார்-

கீழ் பாட்டிலே எம்பெருமானாரை குறித்து -தேவரீருடைய திருவடிகளை சர்வதா அனுபவித்துக்-கொண்டு இருக்கும் படி எனக்கு தந்து அருள வேணும் -என்ன –
அவரும் உகந்து அருளி-தாம் அபேஷித்த படியே விலஷணமான கிருபையை பண்ணி -திருவடிகளைக் கொடுக்க -அவரும் க்ர்த்தார்த்தராய் -வேத பிரதாரகரான
குதர்ஷ்டிகளை பிரமாண தமமான அந்த வேதார்த்தங்களைக் கொண்டே நிரசித்தும் -பூமிப் பரப்பு எல்லாம்-தம்முடைய கீர்த்தியை எங்கும் ஒக்க வியாபித்தும் -என்னுடைய ப்ராப்தி பிரதிபந்தக கர்மங்களை வாசனையோடு ஒட்டியும் -இப்படி பரமோதாரரான எம்பெருமானார் எனக்கு
இன்னமும் எத்தை உபகரித்து அருள வேணும் என்று நினைத்து இருக்கிறார் -என்கிறார் –

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ –என்கிறார் –
————————–
78-இப்படி செய்த உபகாரங்களை யனுசந்தித்த அநந்தரம் -தம்மைத் திருத்துகைக்காக-அவர் பட்ட வருந்தங்களைச் சொல்லி -இப்படி என்னைத் திருத்தி
தேவரீருக்கு உத்தேச்ய-விஷயத்துக் உறுப்பாக்கின பின்பு வேறொரு அயதார்த்தம் என் நெஞ்சுக்கு-இசையாது -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே -லோகத்தை எல்லாம் பிரமித்து அளித்த குத்ர்ஷ்டிகளை பிரபல பிரமாணங்களாலே-நிரசித்து -தம்முடைய பாபங்களை எல்லாம் போக்கி
இன்னும் அதுக்கு மேலே சிறிது கொடுக்க வேணும் என்று நினைத்தார்-என்று எம்பெருமானார் செய்த உபகார பரம்பரையை அடைவே அனுசந்தித்து -இதிலே
தரிசு கிடந்த தரையை செய் காலாகும் படி-திருத்தும் விரகரைப் போலே -இவ்வளவும் விஷயாந்தர ப்ரவணனாய் போந்த என்னைத் திருத்துகைக்காக –
படாதன பட்டு -அரியன செய்து -திருத்தி -தேவரீருக்கு வகுத்த விஷயமான ஸ்ரீயபதிக்கு ஆளாகும்படி பண்ணி அருளின பின்னும்-
வேறு சில அயதார்த்தங்களை என்னுடைய மனசில் வலிய பொருத்திலும் – பொருந்தாதே இருப்பன் –என்கிறார் –

இங்கனம் தமக்கு செய்து அருளிய உபகாரங்களை அனுசந்தித்த பிறகு -தம்மைத் திருத்துவதற்காக அவர் பட்ட வருத்தங்களைச் சொல்லி
இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உகந்த விஷயமான திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-வேறு ஒரு பொய்ப் பொருளை
என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் –
—————————-
79-எம்பெருமானார் யதார்த்த ஜ்ஞானத்தை கொடுக்கையாலே அயதார்த்தங்கள்-தமக்கு பொருந்தாத படியாயிற்று என்று ஸ்வ நிஷ்டையை யருளிச் செய்தார் கீழ்
உஜ்ஜீவன ருசியும் உண்டாய் இருக்க -அருமந்த ஜ்ஞானத்தை இழந்து –இவ்விஷயத்துக்கு அசலாய் போருகிற லவ்கிகர் படியை அனுசந்தித்து–இன்னாதாகிறார் இதில் –

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் தம்முடைய மனோ தோஷத்தைப் போக்கி –அது தன்னைத் திருத்தி –சம்யஜ்ஞ்ஞானத்தை பிறப்பித்து-ஸ்ரீயபதிக்கு சேஷம் ஆக்கின பின்பு
என்னுடைய மனசு வேறு ஒன்றைத் தேடித் போமோ-என்று தம்முடைய அத்யாவச்ய தார்ட்யத்தை அருளிச் செய்து -இதிலே -அந்தப்படியே சம்சாரி சேதனருக்கும்-
அத்யாவசிக்க ப்ராப்தமாய் இருக்க -அது செய்யாதே -ஆத்மாவினுடைய தேக பரிமாண த்வம் -ஷணிகத்வம்-தொடக்கமான வேதார்த்த விருத்தார்ந்தகளை
வாய் வந்தபடி பிரலாபிக்கிற பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய மத-ப்ரேமேயத்தை வாசனையோடு ஒட்டி விட்ட பின்பு -அந்த மறைக் குறும்பாலே வ்யாப்தமான
பூ லோகத்திலே-சத்யமான அர்த்தத்தை -எம்பெருமானார் இருக்கச் செய்தேயும் சஜாதீய புத்தியாலே-அவரை விட்டு அகன்று வேறு ஒரு தேவதை நம்மை
ரஷிக்க-கடவது உண்டோ என்னும் உள் வெதுப்பாலே சுஷ்கித்துப் போய் வ்யர்த்தமே சம்சயாத்மாக்களாய் நசித்துப்-போகிறவர்கள் படியைக் கண்டு இன்னாதாகிறார் –

எம்பெருமானார் உண்மை யறிவை  உபதேசித்தமையால் எனக்குப் பொய்ப் பொருள்-பொருந்தாத நிலை ஏற்பட்டதென்று -தன் நிலை கூறினார் கீழே-
உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து உஜ்ஜீவிப்பிக்க காத்திருக்கும்
எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ அருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் –இப்பாசுரத்தில் –
—————————-
80-இவ்விஷயத்தை ஆஸ்ரயிக்க இசையாத சம்சாரிகள் நிலையைக் கண்டு இழவு பட்டார் கீழ் .-உம்முடைய நிஷ்டை தான் இருக்கும் படி என் -என்ன –இவ்விஷயமே
உத்தேச்யம் என்று இருப்பாரை உத்தேச்யம் என்று இருக்கும் அவர்களுக்கே-ஒழிவில் காலத்தில் -திரு வாய் மொழி – 3- 3-1 – படியே நான் அடிமை செய்வேன் -என்கிறார்-

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணியும் -பிரமாணிகமாக வேத மார்க்க-பிரதிஷ்டாபநம் பண்ணியும் இருக்கச் செய்தே அஜ்ஞான பிரசுரமான இந்த பூலோகத்திலே
இருந்துள்ள சேதனர் அவரை ஆஸ்ரயிக்க இசையாதே -வேறொரு ரஷகாந்தரம் உண்டோ என்று தேடித் தடுமாறி திரிந்து -அவசன்னராய் விட்டாட்கள் என்று அவர்கள் படியை சொல்லி
-இதிலே -அவர்களை போல் அன்றி -அவர்களைக்காட்டில் அத்யந்த விலஷணராய் எம்பெருமானார் திரு நாமத்தையே விஸ்வசித்து இருக்கும் மகாத்மாக்கள் இடத்தில்
பக்த ச்நேகராய் -ஒருக்காலும் அவர்களை விஸ்மரியாதே இருக்குமவர்கள்யாவர் சிலர் –அந்த ததீயர்க்கே சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்
சர்வ வித கைங்கர்யங்களையும் -சர்வ கரணங்களாலும்-சர்வரும் அறியும்படி -பண்ணக் கடவேன் என்று தம்முடைய நிஷ்டையை சொல்லுகிறார் –

எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி உய்வுறாதவர்களும்-சொன்னாலும் -அதனுக்கு இசையாதவர்க்களுமான-சம்சாரிகள் நிலையைக் கண்டு தாம் இழவு பட்டார் கீழே –
சம்சாரிகள் நிலை கிடக்கட்டும் -உம்முடைய நிலை எவ்வாறு உள்ளது -?என்பாரைநோக்கி-எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு-இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் –
———————————
81-எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தி சம்பந்திகளுக்கே சர்வ சேஷ வ்ருத்திகளும்-பண்ணுவேன் என்றார் கீழே .
இந்நிலைக்கு -முன்பு இசையாத தமக்கு இந்த ருசி உண்டாயிற்று -எம்பெருமானார் பிரசாதத்தாலே
ஆகையாலே -தமக்கு அவர் செய்த உபகாரத்தை -அவர் தம்மைக் குறித்து விண்ணப்பம் செய்து -தேவரீர் உடைய கிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் –

கீழ்ப் பாட்டில் சர்வோத்தமரான எம்பெருமானார் உடைய சம்பந்தி சம்பந்திகளுக்கே-சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சர்வ கரணங்களாலும்
சர்வ வித கைங்கர்யங்களும் செய்யக் கடவேன் என்று அவர்கள் பக்கலிலே தமக்கு உண்டான ஊற்றத்தை சொல்லி -இதிலே –
எம்பெருமானார் திரு முக மண்டலத்தைப் பார்த்து இவ்வளவும் தேவரீருக்கு சேஷ பூதராய்-இருக்கிறவர்கள் திறத்திலே அடிமை தொழில் செய்ய இசையாத என்னை
தாம் உகந்தாரை-தமக்கு அந்தபுர பரிகரமாக்குகிறவர்கள் விஷயத்தில் அடிமை படுத்துகைக்கு உத்தேசிக்கலாய்-தன் அடியார்க்கு அடிமை படாதே இருக்கிறவர்களுக்கு
அந்த திருவடிகளை கொடுக்க இசையாது-இருக்கிற பெரிய பெருமாளுடைய திருவடிகளில் சேர்த்து அருளின தேவரீர் உடைய பரமகிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் –

எம்பெருமானார் அடியார் அடியார் கட்கே -எல்லா அடிமைகளும் செய்வேன் என்றார் கீழே -இதனில் இந்நிலை ஏற்படுவதற்கு முன்பு ஏனைய சம்சாரிகள் போலே
இவ் விஷயத்தில்-இசைவில்லாமல் இருந்த தமக்கு –எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை-நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை -நேரே அவரைநோக்கி –
விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை –என்கிறார் .
—————————————————-

82-அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி யின்று பெறுத்தும் -என்று கீழ்ச் சொன்ன-பேற்றுக்கு உடலாக தமக்கு பண்ணின உபதேசத்தை அனுசந்தித்து –
வித்தராய் -எம்பெருமானார் என்ன தார்மிகரோ –என்கிறார் –

அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமானுச -என்று-கீழ் பிரஸ்த்துதமான பரம புருஷார்த்தத்துக்கு உறுப்பாக சம்சார ப்ரவ்ருத்திகளிலே மண்டி இருந்து
சம்யஜ்ஞ்ஞானத்தை பெற மாட்டாதே -அதி குரூரமான துஷ் கர்மத்தாலே தேகாத்மா அபிமானியாய் கொண்டு -ஒன்றிலும் ஒரு நிலை இன்றிக்கே தட்டித் திரிகிற என்னை
ஆண்டுகள் நாள் திங்கள் -என்றால் போல் சிர காலம்-கூடி இன்றி அன்றிக்கே ஒரு ஷண மாத்ரத்திலே தானே நிஸ் சம்சயமாக தத்வ ஹித புருஷார்த்தங்களை
தத் யாதாம்யத்தளவும் உபதேசித்து -உபமான ரஹீதமான ஸ்ருதயத்தை உடை யேனாம் படி பண்ணி-சர்வ விஷயமாக வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் என்னலாம் படி
பரம உதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ என்று அனுசந்தித்து வித்தார் ஆகிறார்-

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –
——————————-
83-பொருவற்ற கேள்வியனாக்கி -நின்றேன் -என்ன-உம்முடைய ச்ருதத்துக்கு வ்யாவ்ருத்தி எது -எல்லார்க்கும் ஒவ்வாதோ சரணாகதி -என்ன –
-நான் பிரபத்தி பண்ணி பரமபதம் பெறுவார் கோடியில் அன்று -தேவரீர் திருவடிகள் ஆகிற மோஷத்தை -தேவரீர் ஔதார்யத்தாலெ பெருமவன் -என்கிறார்

கீழ்ப் பாட்டில் இவர் தம்முடைய ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் –என்று சொன்னவாறே -அத்தைக் கேட்டருளி
உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடையனாம்படி பண்ணி யருளினார்-என்று நீர் நம்மை ச்லாகித்தீர் -உம்மை ஒருவரையோ நாம் அப்படி பண்ணினது
ஒரு நாடாக அப்படி பண்ணி பரம பத்தில்-கொண்டு போகைக்கு பக்த கங்கனராய் அன்றோ நாம் அவதரித்தது -ஆகையாலே உமக்கும் உம்மை ஒழிந்தாருக்கும்
தன்னிலே வ்யாவ்ருத்தி ஏது என்று -எம்பெருமானாருக்கு திரு உள்ளமாக –இவர் அவர் திரு முக மண்டலத்தைப்-பார்த்து நான் என்னை ஒழிந்தார் எல்லாரையும்
போலே பகவத் சரணா கதியைப் பண்ணி பரம பதத்தை பிராப்பிப்போம்-என்று இருந்தேன் அல்லேன் காணும் –தேவரீர் திருவடிகளாகிற மோஷத்தை
தேவரீர் ஔதார்யத்தாலே கிருபை பண்ணப் பெறக் கடவேன் -என்று நேரே விண்ணப்பம் செய்கிறார் –

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் -ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன -ஏனையோர் கேள்வி அறிவு
பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -பகவானிடம் பிரபத்தி பண்ணி பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி-அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் -அவர் கூட்டத்தில் சேராது
தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை –என்கிறார்-
————————–
84-மேல் பெரும் அம்சம் கிடக்கச் செய்தே இதுக்கு முன்பு தான் பெற்றவை தனக்கு-ஒரு அவதி உண்டோ -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே பிரதம பர்வ கோஷ்டியிலே அந்வயியாதே இருக்கிற என்னை சரம பர்வமான-எம்பெருமானார் திருவடிகளை பரம ப்ராப்யமாக இவர்
அத்யவசித்து இருக்கிறார் என்று லோகத்தார் எல்லாரும்-அறியும் படி பண்ணி யருளினார் என்று சொல்லி -இதிலே -எனக்கு வகுத்த சேஷியான எம்பெருமானாரை
கண்ணாரக் கண்டு -அந்த காட்சி கொழுந்து விட்டு ஓடிப் படர்ந்து -ததீய பர்யந்தமாக வளருகையாலே-அவர்கள் திருவடிகளில் அடிமைப் பட்டு அதி குரூரமான
துஷ் கர்மங்களை கட்டடங்க விடுவித்துக் கொண்டு -அவருடையகல்யாண குணாம்ர்தத்தை வாயார அள்ளிக் கொண்டு பருகா நின்ற நான்
இன்னமும் பெற்றவற்றை சொல்லப் புக்கால் -மேல் பெற வேண்டுமவற்றுக்கு ஒரு தொகை இன்றிக்கே இருக்கச் செய்தே இவை தன்னை
ஒரு வாசகம் இட்டு என்னால் சொல்லித் தலைக் கட்டப் போகாது என்கிறார் –

எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை-ஒரு புறம் இருக்க -இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ -என்கிறார்-
———————————-
85-இராமானுசன் தன்னைக் கண்டு கொண்டேன் —அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றீர் -இரண்டில் உமக்கு ஊற்றம் எதிலே என்ன –
எம்பெருமானாருக்கே அனந்யார்ஹ்யமாய் இருப்பார் திருவடிகள் ஒழிய-என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் –

இராமானுசன் –தன்னை கண்டு கொண்டேன் -என்றும் -அவர் தொண்டர் பொற்றாளில்-தொண்டு கொண்டேன் –என்றும் தத் விஷயத்திலும் ததீய விஷயத்திலும் ஈடுபடா நின்றீர்
ஆனால் இவ்விரண்டிலும்-வைத்துக் கொண்டு உமக்கு எந்த விஷயத்தில் ஊற்றம் அதிசயித்து இருக்கும் -என்ன -அருகே இருந்து கேட்டவர்களைக் குறித்து -தாம் அதிகரித்துப் போந்த வேதத்தின் உடைய பொருளாய் கொண்டு -அந்த வேத ஸ்ரச்சுக்களான வேதாந்தங்களிலே-ப்ரதிபாத்யனான அவனே நமக்கு வகுத்த சேஷி என்று அறிய பெறாதே
அப்ராப்த விஷயங்களிலே தொண்டு பட்டும்-கதாகதங்களாலே இடர்பட்டும் போருகிற சம்சாரிப்ராயருடைய அறிவுகேட்டை விடுவித்த எம்பெருமானாருக்கு
அனந்யார்ஹரர் ஆனவர்களுடைய திருவடிகளை ஒழிய என் ஆத்மாவுக்கு வேறு ஒரு அபாஸ்ர்யம் இல்லை என்கிறார் –

இராமானுசன் தன்னைக் கண்டு கொண்டேன் -என்றும்-அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன் -என்றும் சொன்னீர் இவ்விரண்டு விஷயங்களிலும்
உமக்கு எதனில் ஈடுபாடு அதிகம் -என்பாரை நோக்கி –எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார்-
—————————————
86-இராமானுசனைத் தொழும் பெரியோர் பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு-யாதொன்றும் பற்று இல்லை -என்ற அநந்தரம் -முன்பு அப்ராப்த விஷயங்களை
பற்றி இருப்பாரை பந்துக்களாக நினைத்து -அவர்கள் அளவிலே தாம் ப்ராவண்யராய்-போந்த படிகளை யனிசந்தித்து -இனி அது செய்யேன் –
எம்பெருமானாரை சிந்திக்கும் மனச்சு உடையார் ஆரேனும் ஆகிலும் அவர்கள் என்னை யாள உரியவர் என்கிறார்-

இராமானுசனை தொழும் பெரியோர் பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று-இல்லையே -என்று தம்முடைய நிஷ்டையை சொன்னார்
இப்பாட்டிலே -முற் காலம் எல்லாம் அப்ராப்த விஷயங்களை-தங்களுக்கு அபாஸ்ர்யமாக பற்றிக் கொண்டு -போந்து அவர்களை பந்துக்களாக நினைத்து -அவர்கள் அளவில்
தாயே தந்தை என்னும் தாரமே கிளை மக்கள் என்கிற படியே தாம் அதி மாத்ரா ப்ரவனராய் போந்த படிகளை அனுசந்தித்து-பீத பீதராய் அப்படி செய்யக் கடவேன் அல்லேன்
தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறியக் கடவரான பெரியோர்களாலே ஸ்துத்திக்கப் படுகிற எம்பெருமானாரை சிந்திக்கும் மனசை –
நிதி பெற்றால் போலே லபித்தவர்கள் ஆரேனும் ஆகிலும் அவர்களே என்னை ஆள உரியவர்கள் என்கிறார் –

இராமானுசனை தொழும் பெரியோர் பாதம் அல்லால் வேறு எதுவும் பற்று இல்லாத-நிலை எனக்கு இன்றையது -முன்போ -வேறு விஷயங்களில் ஈடுபட்டு
ஒன்றுக்கும் உதவ மாட்டாத அற்ப மனிசர்களை அண்டி -அந்நிலையை விட மாட்டாது -அவர்களை உறவினராக நினைத்து -அவர்கள் மிக பரிவு கொண்டு இருந்த நிலை .
இனி-அந்நிலை எனக்கு மீளாது -எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர்-எவராயினும் -அவர் -மேல் உள்ள காலம் எல்லாம் –
என்னை ஆள்வதற்கு -உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –
—————————–
87-சேதனருடைய ஜ்ஞான வ்யவசாயங்கள் கலங்கும்படி ஆக்ரமியா நின்றுள்ள-கலி காலத்திலே – உமக்கு இந்த வ்யவசாயம் ஒருபடிப் பட நில்லாது இறே-என்ன –
அது ஆக்கிரமிப்பது எம்பெருமானாராலே உபக்ருதமான ஜ்ஞானத்திலே அனந்விதராய்-இருந்துள்ளவர்களை -என்கிறார் –

அவர் எம்மை நின்று ஆளும் என்று ததீயர் விஷயமாக உமக்கு உண்டான ப்ராவண்யத்தை சொன்னீர்-ஆனால் சேதனருடைய ஜ்ஞான வ்யவஸாய பிரேமங்கள்
கலங்கும்படி ஆக்ரமியா நின்றுள்ள இந்த கலி காலத்திலேயே-உமக்கு இப்படிப்பட்ட அத்யாவசியம் என்றும் ஒக்க ஒருபடி பட்டு இருக்கக் கூடுமோ என்று அருகே இருப்பார் சிலர் கேட்க –
பரத்வ சொவ்லப்யாதி குண பரிபூர்ணர் ஆகையாலே -அளவுடையாராயும் அறிவிலிகளாயும் இருக்கிற அதிகாரிகள்-ஸ்தோத்ரம் பண்ணப் புக்கால் -அவர்களுடைய அதிகாரத்துக்கு தகுதியானபேச்சுக்களாலே பேசுகைக்கு ஈடான-ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையரான எம்பெருமானாராலே உபகரிக்கப்பட்ட விலஷண-ஞானத்தை பெறா இருந்தவர்களை
அந்த கலி காலம் ஆக்கிரமித்து ஞான பிரசாதத்தை பண்ணும் இத்தனை ஒழிய-அந்த ஞானத்தை பெற்ற என்னை ஆக்ரமிக்க மாட்டாது
ஆகையாலே எனக்கு இந்த வ்யவசாயம் யாதாத்மா பாவியாக-நடக்கத் தட்டில்லை என்று திரு உள்ளமாக அருளிச் செய்கிறார் –

யாவரையும் கலக்குறும் இக் கலி காலத்திலே-குல கோத்ரம் பாராது -இராமானுசனை கருதும்-உள்ளம் பெற்றவரை -ஆளும் பெரியவராக ஏற்கும் துணிபு நிலை நில்லாதே
-என்பாரை நோக்கி -எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு-உண்டாகும் என்கிறார் –
————————————————-
88-எம்பெருமானார் உபகரித்த ஜ்ஞானத்தில் அந்வயம் இல்லாதாரை-கலி தோஷம் நலியும் என்றார் கீழே -அந்த ஜ்ஞானத்தை வுபகரிக்கைக்காக அவர் வந்து
அவதரித்த படியை யனுசந்தித்து -எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை-நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் -என்கிறார் -இதில் –

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தில் அந்வயம் இல்லாதவரை கலி-பிரயுக்தமான தோஷம் ஆக்கிரமித்து நலியும் என்று சொல்லி -இதில் –
அந்த ஞானத்தை லோகத்தார் எல்லாருக்கும்-உபதேசிக்கைக்காக –அவர் விண்ணின் தலை நின்றும் -மண்ணின் தலத்து உதித்தபடியை அனுசந்தித்து –செந்நெல்
விளையா நின்றுள்ள வயல்களை உடைய திருக் குறையலூருக்கு ஸ்வாமியான திரு மங்கை ஆழ்வாருடைய-திவ்ய பிரபந்தமாகிற பெரிய திரு மொழியை
அனுபவித்து களித்து – பிரதி பஷிகளுடைய கந்தத்தையும் சகிக்க மாட்டாதே –பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார்
வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக-இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி
லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்-தன்னரசு நாடாக கொண்டு தடையற நடமாடா நின்ற -அவர்களுடைய மதங்களை
நிரசிக்கைக்காக அவர்கள்-நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன் என்கிறார் –

எம்பெருமானார் மறை தேர்ந்து அளிக்கும் நல் ஞானத்தில் சேராதாரைக் கலி-நலியும் என்றார் கீழ் ..யாவரும் சேர்ந்து கலியை விலக்கலாம் படியான –
அத்தகைய நல் ஞானத்தை உபகரிப்பதற்காக-அவர் இவ் உலகில் வந்து அவதரித்த படியை-அனுசந்தித்து -அதனால் இத்தகைய வைதிக ஞானம்
உலகினருக்கு கிடைக்க ஒண்ணாதபடி-வேதத்திற்கு -அவப் பொருள் கூறும் குத்ருஷ்டிகள் தொலைந்தமை கண்டு –எம்பெருமானார் ஆகிற சிம்மம்
குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக-இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –
——————————
89-போற்றுவன் -என்று புகழ்வதாக ஒருப்பட்டவர் -அது நிமித்தமாக-தமக்கு உண்டான பலத்தை எம்பெருமானார் தமக்கு-விண்ணப்பம் செய்கிறார்

கீழ்ப் பாட்டிலே வேத ப்ரதாரகராய் -லோகத்தார் எல்லாரையும் விபரீத ஞானராக பிரமிப்பித்து-நசித்துப் போந்த குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை -பக்னர் ஆக்குக்கைக்கு
அவதரித்த -வலி மிக்க சீயமான-எம்பெருமானாரை -ஸ்துதிக்கிறேன் என்று ஸ்வ அத்யாவசாயத்தை ஆவிஷ்கரித்து -இதிலே -தம்முடைய பூர்வ வ்ர்த்ததை
அனுசந்தித்துக் கொண்டு -புகழ்ந்து தலைகாட்ட வரிதான சீல குணத்தை உடையரான-எம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து மகா பிரபாவம் உடைய தேவரீரை
அத்யந்த-அதமனான நான் ஸ்துதிக்கை தேவரீருக்கு அவத்யமாய் தலைக் கட்ட கடவது ஆகையாலே ஸ்துதியாது-ஒழிகையே தேவரீருக்கு அதிசயம் இறே
-ஆனாலும் ஸ்தோத்ரம் பண்ணாது ஒழியில் என்மனசு ஆறி இராது -இப்படி ஆன பின்பு -மூர்க்கு பேசுகின்றான் இவன் -என்று தேவரீர் திரு உள்ளத்தில்
என்ன வோடுகிறதோ என்று நான் அத்தை-நினைத்து எப்போதும் பீதனாய் நின்றேன் என்று விண்ணப்பம் செய்கிறார் –

போற்ற முற்பட்டவர் -தகுதி யற்ற நான் புகழின்-தேவரீர் புகழ் மாசூணாதோ என்று தவிர்ந்து புகழின்-ஏற்றத்தை நிலை நிறுத்தலே நல்லது என்று தீர்மானித்தாலும்
என் மனம் தாங்குகிறது இல்லை -போற்றியே யாக வேண்டி இருக்கிறது –தேவரீர் நினைப்பு இவ் விஷயத்தில் எத் தகையதோ -என்று பயமாய் இருக்கிறது -என்று
தம் நிலையை எம்பெருமானார் இடத்தில் விண்ணப்பம் செய்கிறார்-
———————-
90-இவர் -அஞ்சுவன் -என்றவாறே இவர் பயம் எல்லாம் போம்படி குளிரக் கடாஷிக்க-அத்தாலே நிர்பீகராய் -கரண த்ரயத்திலும் -ஏதேனும் ஒன்றால்-
இவ் விஷயத்தில் ஓர் அநு கூல்யத்தை பண்ணி-பிழைத்து போகலாய் இருக்க சேதனர் ஜன்ம கிலேசத்தை அனுபவிப்பதே என்று இன்னாதாகிறார்-

கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் உடைய மதிப்பையும் -அவரை ஸ்தோத்ரம் பண்ணாமைக்கு-தமக்கு உண்டான அயோக்யதையும் அனுசந்தித்து -இவ் விஷயத்திலே
-நான் ஸ்துதிப்பதாக போர சாஹாச-கார்யத்துக்கு உத்யோகித்தேன் என்று அணாவாய்த்து -இவர் அஞ்சினவாறே -எம்பெருமானார் –
இவருடைய அச்சம் எல்லாம் தீரும்படி குளிர கடாஷிக்க -அத்தாலே நிர்பரராய் -ஸ்தோத்ரம் பண்ண ஒருப்பட்டு -இதில் லவ்கிகர் படியை கடாஷித்து
-எம்பெருமானார் யோக்யா அயோக்யா விபாகம் அற சர்வரையும்-கடாஷிக்கைக்காக வந்து அவதரிக்கச் செய்தே -இந்த லவ்கிகர் தம்மை ஒருக்கால் ப்ராசுரிகமாக-நினைத்தவர்களுடைய -சோஷியாத பவக்கடலை சோஷிப்பிக்குமவரான -இவரை நினைக்கிறார்கள் இல்லை -என்னை ரஷிக்கைக்காக நான் இருந்த இடம் தேடி வந்த இவரை
-ஈன் கவிகளால் ஸ்துதிக்கிரார்கள் இல்லை -அப்படி ஸ்துதிக்கைக்கு அதிகாரம் இல்லை என்றாலும் ஸ்துதிக்கும் அவர்களுடைய திருவடிகளை-ஆராதிக்கிறார்கள் இல்லை
ஐயோ இவற்றுக்கு எல்லாம் உறுப்பான ஜென்மத்தை பெற்று இருந்தும் அறிவு கேட்டாலே-ஜன்ம பரம்பரைக்கு அது தன்னை ஈடாக்கி கிலேசப்பட்டு போனார்களே என்று இன்னாதாகிறார் –

எம்பெருமானார் கடாஷத்தாலே அச்சம் தீர பெற்ற அமுதனார் -மூன்று கரணங்களுள் ஏதேனும் ஓன்று கொண்டு -எம்பெருமானார் திறத்தில் அநு கூலமான
செயலில் ஈடுபட்டு உய்யலாமே -அங்கன் உய்யாமல் மாந்தர் பிறந்து படும் துன்பத்தில்-அழுந்து கிறார்களே -என்று பிறருக்காக வருந்துகிறார்
—————————————-
91-இவர்கள் இப்படி இருக்கச் செய்தே இவர்களுடைய உஜ்ஜீவனார்த்தமாக-எம்பெருமானார் செய்தருளின க்ருஷியை யனுசந்தித்து அவரைக் கொண்டாடுகிறார் –

கீழ்ப் பாட்டிலே நித்ய சம்சாரிகளாய் இருக்குமவர்களையும் -அல்ப அநு கூலமுடையாரையும் -ஒக்க உத்தரித்த சர்வோத்தமரான எம்பெருமானாரை அநு வர்த்தியாதே -கர்ப்ப நிப்பாக்யராய் போந்தார்கள்-என்று அவர்கள் படியை அடைவே சொல்லி -இதிலே -தமோ குண முஷித சேமுஷீகராய்-ருத்ர ப்ரோக்தமான-ஆகமத்தை உத்தம்பகமாகக் கொண்டு பௌ த்த்யாத்த சாரங்களாய் ருத்ர பஷ பாதிகளான பாசுபதர்-சொல்லுகிற துஸ் தர்க்கங்கள் ஆகிற அந்தகாரத்தை பூ லோகத்தில் நின்றும் அகன்று போம்படி-பண்ணி அருளின எம்பெருமானார் –தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையை ஒரு பாட்டம் மழை-பொழிந்தால் போல் லோகத்தில் எங்கும் ஒக்க ப்ரவஹிப்பித்து -சகல ஆத்மாக்களுக்கும் சுலபனாய்-கண்ணுக்கு இலக்காய் இருக்கிற பெரிய பெருமாளே வகுத்த சேஷி என்னும் அர்த்தத்தை நமக்கு எல்லாம்-பூரி தானம் பண்ணினார் –இவர் எத்தனை தார்மிகரோ என்று
-அவர் உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து-அவர் தம்மை கொண்டாடுகிறார் –

இன்னும் பிறப்பில் வருந்தும் மாந்தர் உய்வதற்காக எம்பெருமானார் கைக் கொண்ட முயற்சியை-நினைவு கூர்ந்து அவரைக் கொண்டாடுகிறார் –
——————————-
92-சேதனர் இவ் விஷயத்தில் அல்ப அனுகூல்யத்தாலே உஜ்ஜீவிக்கலாய் இருக்க –ஜென்மாதி துக்கங்களை அனுபவிக்கிறபடியையும் -இவர்களுக்கு உஜ்ஜீவன அர்த்தமாக
-எம்பெருமானார் செய்த க்ருஷியையும் அனுசந்தித்தார் -கீழ் -இரண்டு பாட்டாலே –இப்பாட்டில் –தாம் அறிய ஒரு ஹேது அன்றிக்கே -இருக்க -தம்மை அங்கீ கரித்து
அருளுகைக்கும் -அருளுகையும் -அங்கீகரித்து அருளி பாஹ்யாப் யந்தர கரண விஷயமாய் -எழுந்து அருளி இருக்கிறபடியையும்-அது –அனுசந்தித்து -வித்தராய்
-இதுக்கு காரணம் இன்னது என்று -அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

எம்பெருமானாரை ஆஸ்ரியாத கர்ப்ப நிர்பாக்யரை நிந்தித்தும் சமயக் ஞான ஹீனராய்-நிஷித்த மார்க்க நிஷ்டர் ஆனவர்களுடைய துர் உபதேசத்தாலே அவசன்னராய் போந்த
சேதனருடைய-அஞ்ஞானத்தை மாற்றி சர்வருக்கும் ஸ்ரீ ய பதியே சேஷி என்று உபதேசித்த பரம தார்மிகர் எம்பெருமானார்-என்று சொல்லிப் போந்தார் கீழ் இரண்டு பாட்டுக்களிலும்
இதிலே எம்பெருமானார் உடைய திருமுக மண்டலத்தைப் பார்த்து -அடியேன் இவ்வளவும் நான் அறிந்ததாக ஒரு சத் கர்மமும் பண்ணினேன் அல்லேன்
அப்படியே உத்தாரகமாய் இருப்பதோர் சூஷ்மமான விசேஷார்த்தத்தை கேட்பதாக பிரசங்கிப்பித்தும் செய்திலேன் -இது என் ரீதியாய் இருக்கச் சாஸ்திர
ப்ரவர்த்தகரானவர்களுக்கும் தொகை இட்டு சொல்ல வரிதான குணவத்தா-பிரதையை உடையரான தேவரீர் இவ்வளவும் வெறுமனே இருந்து -இன்று என்னுடைய
சமீபத்திலே பிரவேசித்து உட் கண்ணுக்கும் கட் கண்ணுக்கும் விஷயமாய் நின்றீர் -இதுக்கு ஹேது தேவரீரே சொல்ல வேணும் என்று-விண்ணப்பம் செய்கிறார் –

தம்மிடம் உள்ள மூன்று கரணங்களுள் -ஏதேனும் ஓன்று கொண்டு -எளிதில் மாந்தர் உய்வுற வழி இருந்தும் -பிறப்பிற்குள்ளாகி வருந்துவதையும் -அத்தகையோரும் உய்வதற்காக எம்பெருமானார் அருள் சுரந்து –மெய்ப் பொருள் சுரந்து -உபகரித்ததையும் -கீழ் இரண்டு பாட்டுக்களாலே அனுசந்தித்தவர் -இப்பாட்டில் -தாமறியத் தம்மிடம்
ஒரு ஹேதும் இல்லாத போது – தம்மை ஏற்று அருளுகைக்கும் -பின்னர் கண் என்னும் வெளிக் கரணத்திற்கும் -நெஞ்சு என்னும் உட் கரணத்திற்கும் விஷயமாய் -நிலை நின்று
எழுந்து அருளி இருப்பதைக் கண்டு –மிக்க ஈடுபாட்டுடன் -இதனுக்கும் காரணம் -இன்னது என்று -அருளிச் செய்ய வேணும் என்று -எம்பெருமானார் இடமே கேட்கிறார் –
—————————
93-அவர் இதுக்கு ஒன்றும் அருளிச் செய்யாமையாலே –நிர்ஹேது கமாகாதே -என்று தெளிந்து-என் பிரபல கர்மங்களை தம்முடைய கிருபையாலே அறுத்து அருளின எம்பெருமானார்
ஒருவர் அபேஷியாது இருக்க -தாமே வந்து -குத்ருஷ்டி மதங்களை நிராகரித்தவர் அன்றோ –அவர் செய்யுமது வெல்லாம் நிர்ஹேதுகமாக வன்றோ -விருப்பது -என்கிறார்-

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் உடைய திரு முக மண்டலத்தை பார்த்து இத்தனை-நாளும் என்னை அங்கீ கரிக்கையில் கால் கண்டித்து கொண்டு இருந்த தேவரீர்
-இப்போது அடியேன் பக்கல்-ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க -இப்படி அங்கீ கரிக்கைக்கு ஹேது ஏது-அத்தை சொல்லிக் காணீர்-என்று இவர் மடியைப் பிடித்தாலும்
அதுக்கு அவர் மறு உத்தரம் சொல்லாதே கவிழ்ந்து தலை இட்டு இருந்தவாறே –இப்படி நிர்ஹேதுகமாக கண்டிடுமோ என்று நினைத்து இதிலே
என்னுடைய பிரபல பாதகங்களை வாசனையோடு கூட தம்முடைய கிருபை யாகிற கட்கத்தை-சங்கல்பம் ஆகிற-உறையில் – நின்றும் உருவி அத்தாலே சேதித்து பொகட்டு
பிரபன்ன குலத்துக்கு எல்லாம் ஒக்க உத்தாரகரான-எம்பெருமானார் ஸ்வ அஞ்ஞான விஜ்ர்ம்பிதமான அபார்த்தங்களை எல்லாம் வேதார்த்தங்கள் என்று
பரம மூடரான குத்ருஷ்டிகள் சொலுகிற ப்ராமக வாக்யங்களை நிவர்ப்ப்பித்த பரம உபாகரர் ஆகையாலே
அவர் செய்வது எல்லாம் நிர்ஹேதுகமாக அன்றோ இருப்பது என்று தெளிந்து தம்மிலே தாமே சமாஹிதராய்-சொல்லுகிறார் –

தாம் கருதிய படியே பதில் கிடையாமையாலே -தம் வினைகளை வேரற களைந்து-தம்மை ஏற்று அருளியது -ஹேது வற்றது-என்று தெளிந்து -அத்தகைய எம்பெருமானார்
எவருமே வேண்டாது இருக்க தாமாகவே வந்து -குத்ருஷ்டி மதங்களை களைந்து –
உலகினர்க்கு உதவினவர் அன்றோ -அவர் செய்யும் அவை யாவையும் -கருணை யன்றி வேறொரு-காரணம் அற்றவைகளாய் அல்லவோ -உள்ளன -என்கிறார்-
——————————-
94-தம்மை நிர் ஹேதுகமாக அங்கீகரித்து -கர்மங்களைப் போக்கின படியை அனுசந்தித்தார் கீழ் ..இப்பாட்டில் எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தார்க்கு-
பிரபத்தி நிஷ்டை தொடங்கி-பரமபதம் பர்யந்தமாக கொடுத்து அருளுவாரே ஆகிலும் –நான் அவர்கள் குணங்களை ஒழிய ஒன்றையும் விரும்பி புஜியேன் -என்கிறார்-

தம்மை நிர்ஹேதுகமாக அங்கீ கரித்து அநாதியான பாபங்கள் மறுவலிடாதபடி-தம்முடைய கிருபை யாகிற கடாக்ஷத்தாலே சேதித்து அத்தாலே பிரபன்ன ஜன கூடஸ்தரான
எம்பெருமானார் லோகத்திலே அபசித்தாந்தங்களை வேதார்த்தங்களாக பிரமிப்பிக்கும் குத்ருஷ்டிகளை நிரசித்த உபாகரகர் என்று கொண்டாடினார் – கீழ்ப் பாட்டில் –
இப் பாட்டில் -அந்த எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தவர்க்களுக்கு சர்வோத்தரக ஹேதுவான பிரபத்தி உபாயத்தையும் -தத் உத்தர கால க்ர்த்யமான கைங்கர்ய ரூப சம்பத்தையும்
சரீர அநுரூப சம்பந்தத்தை அறுத்து பொகட்டு –பரம புருஷார்த்த லஷண மோஷத்தையும் அடைவே கொடுத்து அருளுவரே ஆகிலும் -அடியேன் அவருடைய
கல்யாண குணங்களை ஒழிய வேறொன்றை ஆதரித்து புஜியேன் என்று ஸ்வ அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் –

காரணம் இன்றி தம்மைக் கைகொண்டு -கன்மங்களை கழலச் செய்தமையைக் கூறினார் கீழே –இப்பாட்டில் எம்பெருமானார் –தம்மைச் சார்ந்தார்க்கு தவம் தொடங்கி
திவம் முடிய அளிப்பரே யாயினும்–நான் அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பி அனுபவியேன்-என்கிறார் –
——————————-
95-எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு வேண்டுவது எல்லாம்-தாமே உண்டாக்கி உஜ்ஜீவிப்பித்து விடுவர் என்றார் கீழ் .
இப்படி இருக்கிறவருடைய ஜ்ஞான சக்தியாதிகளை அனுசந்தித்த வாறே -இந்த லோகத்தில் உள்ளார்படி யன்றிக்கே -வ்யாவ்ருத்தமாய் இருக்கையாலே –
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவர் பரார்தமாக சம்சாரத்தில் அவதரித்தாராகவே நினைத்து அருளிச் செய்கிறார் -இதில் –

எம்பெருமானார் தம்மை ஆஸ்ரித்தவர்களுக்கு உத்தாரண ஹேதுவான உபாய விசேஷத்தையும் -அத்தாலே உண்டாக கடவ -பகவத் ப்ரீதி ரூப சம்பத்தையும்
ப்ராப்தி பிரதி பந்தகமான பாப விமோசனத்தையும் -தத் அனந்தர பாவியான பரம பத ப்ராப்தியையும் -பண்ணிக் கொடுப்பாரே யாகிலும் -நான் அவருடைய
கல்யாண குணங்களை ஒழிய வேறு ஒன்றை விரும்பி அனுபவியேன் -என்று அருளிச் செய்தார் -கீழ்ப் பாட்டிலே –
இப்பாட்டிலே -சகல ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமியாய் -அவர்களுடைய சகல பிரவர்த்தி நிவ்ருத்திகளையும்-பண்ணிக் கொடுக்கிற சர்வேஸ்வரனும்
இவரைப் போலே ஆஸ்ரித வ்யாமுக்தன் அல்லன் என்னும் படியாயும் -ஞான வைராக்யாதிகளாலே சம்சாரிகளைக் காட்டில் அத்யந்த வ்யாவ்ர்த்தர் என்னும் படியாயும்
இவர் தான் இருக்கையாலே –பரம பதத்தின் நின்றும் அந்த பரம ப்ராப்யத்தை எல்லார்க்கும் கொடுப்பதாக அச்பர்ஷ்ட சம்சார கந்தரில் ஒருவர் பரார்த்தமாக
இந்த லோகத்தில் -எம்பெருமானாராய் அவதரித்து -சர்வ காலமும் வேதார்த்தத்தை-ப்ரவர்த்திப்பித்தார் என்று அருளிச் செய்கிறார் –

தம்மை சார்ந்தவர்கட்கு உய்வுற வேண்டுமாவை யாவும் தானே உண்டு பண்ணி உதவி-எம்பெருமானார் உய்விப்பதை கூறினார் கீழே .இங்கனம் உய்விக்கும் அவருடைய
அறிவாற்றல்களைக் கண்டு உலகத்தாருக்கு உள்ளவை போன்றவைகள் அல்ல இவை -தனிப்பட்டவையாய் விளங்குகின்றன -ஆதலின் இவர் இவ் உலகத்தவர் அல்லர் .
சம்சார சம்பந்தம் அறவே அற்று இருக்கும் நித்ய சூரிகளில் ஒருவர் -வீடளித்து பிறரை உய்விப்பதற்க்காகவே அவதாரம் செய்தவராய் இருத்தல் வேண்டும் -என்று
தீர்மானித்து -அவதரித்து செய்யும் அவற்றை அனுசந்திக்கிறார் –இந்தப் பாசுரத்திலே –
————————————-
96-மறை நாலும் வளர்த்தனன் -என்றீர்-அவர் சேதனருக்கு உஜ்ஜீவன உபாயமாக வேதாந்த பிரக்ரியையாலே அருளிச் செய்தது-பக்தி பிரபத்தி ரூப உபாய த்வயம் இறே-
அதில் ஸூகர உபாயமான பிரபத்தியிலேயோ உமக்கு நிஷ்டை -என்ன -அதுவும் அன்று –தாம் அபிமத நிஷ்டர் என்னும் அத்தை அருளிச் செய்கிறார் –

கீழ்ப் பாட்டிலே நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டுக்கும் பொதுவாய் தண்டதரனான-சர்வ ஸ்மாத் பரனிலும்-அஞ்ஞான நிக்ரஹராய் – பரம பதத்தில் நின்றும் ரஷண ஏக தீஷிதராய் வந்து –
அவதரித்த எம்பெருமானார் -நிர்ஹேதுக கிருபையை உடையவர் ஆகையாலே -சேதன சம்ரஷணார்த்தமாக-வேத வேதாந்த பிரவர்த்தனம் பண்ணி அருளினார் என்று
இவர் அருளிச் செய்ய கேட்டு -அருகில் இருப்பார் அந்த வேதாந்தந்களிலே-முமுஷூர்வை சரணமஹம் பிரபத்யே -என்று மோஷ அதிகாரிகளுக்கு சொன்ன
சரணாகதியில் நிஷ்டராய் இருந்தீரோ என்ன -சரணா கதி பெருகைக்கு பிரதி பந்தங்களான பிரபல கர்மங்களாலே -அது தன்னிலும் -மகா விசுவாசம் கிடையாதே
துர்கந்த பிரசுரமாய் -மாம்ஸா ஸ்ர்காதி மயமான சரீரம் கட்டுக்குலைந்து போம் அளவும் சுக துக்க அனுபவம் பண்ணிக் கொண்டு சகாயம் இன்றிக்கே இருக்கும் எனக்கு
அந்த சரமோ உபாயமான எம்பெருமானாரிலும் -சுலபமாய் -சேஷிகளாய் -எனக்கு ஸ்வாமியான அவர் தம்மையே
தந்தை நல் தாயம் தாரம் -இத்யாதிப்படியே சர்வ வித பந்துவாய் அத்யவசித்து -தேவு மற்று அறியேன் -என்று இருக்கும்
மகாத்மாக்களே வழித் துணையாய் -ரஷகராய் -இருப்பார் என்று அத்யவசித்தேன் -ஆகையால் -நான் ததீய அபிமான நிஷ்டன்-என்று அருளிச் செய்கிறார் –

மறை நாலும் வளர்த்தனன் என்றீர்-அவர் வேதாந்தத்தில் கூறிய முறையைப் பின் பற்றி உயிர் இனங்கள்-உய்வதற்கு உபாயங்களாக பக்தியையும் -பிரபத்தியையும்
அன்றோ அருளிச் செய்தார் -அவற்றில் எளிய உபாயமான பிரபத்தியையோ நீர் கைக் கொண்டது -என்ன-
நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்-எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான்-என்கிறார் –
—————————
97-இப்படி எம்பெருமானார் தம்மள வன்றிக்கே-அங்குத்தை க்கு அனந்யார்ஹராய் இருப்பார்-உத்தேச்யர் என்று இருக்கைக்கு இந்த ருசி உமக்கு
வந்த வழி தான் என் என்ன –அதுவும்-எம்பெருமானார் தம்முடைய கிருபையாலே வந்தது என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம் இறைவர் -இராமானுசனை உற்றவரே -என்று சர்வம் யதேவ நியமே ந மதந்வயாநாம் -என்றால் போலே எம்பெருமானாரை- தேவு மற்று அறியேன்
என்று பற்றி இருப்பாரே -தமக்கு உறு துணை -என்று இவர்-சொன்ன வாறே -உமக்கு அவர்தம் அளவில் அன்றிக்கே -அங்குத்தைக்கு -நிழலும் அடிதாரும் போலே
அனந்யார்ஹராய்-இருப்பாரும் கூட உத்தேச்யர் என்று இருக்கைக்கு ஈடான இந்த ருசி வந்த வழி தான் ஏது என்ன -திக்குற்ற கீர்த்தி -என்னும்படியான இவர்
தம்முடைய வைபவத்தை -கண்களால் கண்டும் செவிகளால் கேட்டும் -தம் பக்கலிலே-அடிமைப்படுவாரை இத்தனை ஒழிய -தமக்கு அனந்யார்ஹராய் இருப்பார்
பிறர்க்கு அடிமைப் படுவார் கிடக்க-தக்கார் என்று திரு உள்ளமாய் –முந்துற முன்னம் தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலே என்னை-
அடிமைப்படுத்தினர் ஆகையாலே -இந்த ருசி அடியேனுக்கு அவருடைய கிருபையாலே வந்தது -என்கிறார் –

இப்படி எம்பெருமானார் அளவோடு நில்லாது -அவர் தம்மை உற்றவர்-அபிமானத்திலே நிஷ்டை ஏற்படும் படியான விருப்பம் -எவ்வாறு உமக்கு வந்தது
என்பாரை நோக்கி அதுவும் எம்பெருமானார் கிருபையினாலே வந்தது -என்கிறார் –
—————————————-
98-இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை பேசினவாறே-இவர் திரு உள்ளமானது -நிருபாதிக பந்துவான ஈஸ்வரன் அநாதி காலம் ஸ்வர்க்க நரக கர்ப்பங்களிலே
தட்டித் திரிய விட்டு இருந்தது -கர்மத்தை கடாஷித்து அன்றோ –பிரகிருதி சம்பந்தம் கிடக்கையாலே துர் வாசனை மேலிட்டு விபரீதங்களிலே போகவும் யோக்யதை உண்டே –
இன்னும் ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே என்று தளர -எம்பெருமானார் தன்னை சரணம் என்றால் -அப்படி ஒன்றிலும் விட்டுக் கொடார்-
ஆகையாலே ப்ராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டா -என்கிறார் –

இப்படி எம்பெருமானார் தம்முடைய சர்வ உத்கர்ஷ்டமான அதிகாரத்திலே மூட்டின-உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டரானவாறே -இவருடைய திரு உள்ளமானது
நீர் இப்படி சொன்னீரே யாகிலும் -சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் -அநாதி காலம் தொடங்கி -தத் தத் கர்ம அனுகுணமாக பலத்தை-கொடுப்பதாக சங்கல்பித்துக் கொண்டு இருக்கிறான் ஒருவன் ஆகையாலே -இவ்வளவும் ஸ்வர்க்க நரக-கர்ப்பங்களிலே இடைவிடாது அடைவே தட்டித் திரிய விட்டு இருந்து -நம்முடைய கர்மத்தை-கடாஷித்து அன்றோ
அக் கர்மங்களை உண்டாக கடவதான பிரகிருதி சம்பந்தம் நமக்கு இன்னும் கிடைக்கையாலே-துர்வாசனை மேலிட்டு திரும்பவும் நிக்ரஹத்துக்கு உடலான -துஷ்கர்மங்களிலே
அன்வயிக்கவும் -யோக்யதை உண்டே -ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே -நீர் இப்படி நிர்பரராய் சொல்லக் கூடுவது என்று தளரா நிற்க -எம்பெருமானார் தம்மை சரணம் என்றால்
அப்படி ஸ்வர்க்க நரகாதிகள் ஒன்றிலும் விட்டுக் கொடுக்கும்-ஸ்வபாவர் அல்லர் ஆகையாலே -இனி பிராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டாம் என்கிறார் –
——————————
99-நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையேல் -என்றவாறே -ஆனாலும் -ஜ்ஞான வ்யவசாயங்களை பங்கிக்கும் பாஹ்ய குத்ருஷ்ட்டி பூயிஷ்டமான
தேசம் அன்றோ -என்ன –எம்பெருமானார் அவதரித்த பின்பு -அவர்கள் எல்லாரும் நஷ்டர் ஆனார்கள் என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -நம்மை நம் வசத்தே விடுமே -என்று-இவர் மகா விச்வாசத்தோடே சொன்னவாறே -அது சத்யம் -ஆனாலும்
சமயக் ஞானமும் -தத் அனுரூபமான அனுஷ்டானமும் -இவ்விரண்டையும் அடைவே அறிவிப்பிக்க கடவதான-வேதம் நடையாடாதபடி -அத்தை மூலை யடியே
நடப்பித்துக் கொண்டு உபத்ராவாதிகளான-பாஹ்ய குத்ருஷ்டிகள் தனிக்கோல் செலுத்தும் தேசம் என்பது என்ன -சமஸ்த புருஷார்த்த-பிரதத்வத்தாலே -கற்பகம்-என்று
சொல்லப்படுகிற எம்பெருமானார் இந்த மகா பிர்த்வியில்-அவதரித்த பின்பு அப்படிப்பட்ட நீச சமய நிஷ்டர் எல்லாரும் சமூலகமாக நஷ்டமாய் போனார்கள் -என்கிறார் –

நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையல் -என்று மனத்தை தேற்றினார் -கீழ்-நம் வசத்தில் விட மாட்டார் என்னும் நம்பிக்கை குலையாமல் இருக்க வேண்டாமா –
பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் நிறைந்த இவ் உலகத்திலே அவர்களது சேர்க்கையாலே-அது குலைந்து விடில் என் செய்வது என்று -தம் மனம் தளர –
எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் அழிந்து ஒழிந்தனர் -தளரற்க-என்கிறார் –
——————————-
100-இப்படி தாம் உபதேசிக்கக் கேட்டு க்ருதார்த்தமாய் -தம்முடைய திரு உள்ளம் -எம்பெருமானார் திருவடிகளிலே போக்யத அனுபவத்தை ஆசைப் பட்டு
மேல் விழுகிற படியை கண்டு –அதின் ஸ்வபாவத்தை அவர்க்கு விண்ணப்பம் செய்து -இனிவேறு ஒன்றைக் காட்டி தேவரீர் மயக்காது ஒழிய வேணும் -என்கிறார்

கீழ்ப் பாட்டில் பிராப்தி நிமித்தமாக தளரா நின்ற தம்முடைய நெஞ்சினாரைக் குறித்து நாம்-சரம பர்வமானவரை ஒருக்கால் தொழுதோமாகில் நம்மை நம் வசத்தே
காட்டிக் கொடார் என்று உபதேசித்து தேற்றி -பூ லோகத்திலே பாஹ்ய குத்ருஷ்டிகள் வியாபித்து -லோகத்தாரை எல்லாரையும் அழிக்கப் புக்கவாறே
வேத-மார்க்க பிரதிஷ்டாபன முகேன -அவர்களை எல்லாரையும் ஜெயித்து -தமக்க கல்பக ஸ்த்தாநீயராய் இருந்த படியை-சொன்னவாறே -ஸ்ரீ ருக்மிணி பிராட்டியார்
கிருஷ்ணனுடைய வைபவத்தை கேட்டு அவனை வரிக்க வேணும் என்று-துடித்தால் போலே -இவருடைய திரு உள்ளமானது எம்பெருமானார் உடைய திருவடித் தாமரைகளில்
உள்ள மகரந்தத்தை வாய் மடுத்து பருகுவதாக பிர்யன்காயமாநமாய் இருக்கிறபடியை கடாஷித்த எம்பருமானார் உடன்-அதனுடைய தசையை விண்ணப்பம் செய்து
இனி வேறு ஒரு விஷயத்தை காட்டி என்னை தேவரீர் மயக்காது ஒழிய-வேணும் என்கிறார் –

இங்கனம் தேற்றப் பெற்ற நெஞ்சு -எம்பெருமானார் திருவடிகளிலே இன்பம் நுகர விழைந்து மேல் விழ-அதனது இயல்பினை
எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்து தேவரீர் வேறு ஒன்றினைக் காட்டி மயக்காது ஒழிய வேணும்-என்கிறார்-
————————–
101-இப்படி எம்பெருமானாருடைய போக்யதையிலே நெஞ்சு வைத்தவாறே-முன்பு இவ் விஷயத்தில் தாம் பண்ணின பாவனத்வ அனுசந்தானம்
அவத்யமாய்த் தோற்றுகையாலே-நான் தேவரீருடைய பாவனத்வத்தை-பேசினதானவிது தேவரீர் போக்யதையை அனுசந்தித்து இருக்குமவர்களுக்கு
அவத்யம் என்று சத்துக்கள் சொல்லுவார்கள்-என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானாருடைய போக்யதையிலே –அருவினையேன் வன் நெஞ்சு –என்னும்படியான தம்முடைய திரு உள்ளமானது -ஈடு பட படியைச் சொல்லி
இப்பாட்டுக்கு கீழ் பல-இடங்களிலும் –தீதில் இராமானுசன் -என்றும் –தூயவன் –என்றும் –எங்கள் இராமானுசன் -என்றும்-தாம் அனுபவித்த பாவநத்வத்தை ஸ்மரித்து
இந்த போக்யதைக்கும் -அந்த பாவனத்வத்துக்கும் -நெடு வாசி உண்டாகையாலும் -இப்படி இருந்துள்ள இவ்விஷயத்துக்கு அது அவத்யமாய்தலைக் கட்டுவதாலையாலும்
அப்போது அத்தை தப்பைச் சொன்னோம் -அத்தாலே அவர்க்கு என் பக்கல்-ப்ரீதி மட்டமாய் போகிறதோ என்று திரு உள்ளம் புண்பட்டு -இதிலே
-பந்தாயா விஷயா சங்கி -என்னும்படியான-மனசை உடையனான -தீர கழிய செய்த துஷ் கர்மத்தாலே -ஜன்ம பரம்பரைகளில் தட்டி திரியா நிற்கிற என்னை
அந்த துஷ் கர்ம பலமான ஜன்ம பரம்பரையாகிற துக்கத்தைப் போக்கி உஜ்ஜீவிக்கும் படி கைக் கொண்டு-கிருபை பண்ணியருளின எம்பெருமானாரே என்று
தேவரீர் உடைய பாவநத்வத்தை கீழ் பல இடங்களிலும்-நான் சொன்ன இது -தேவரீரை அனுசந்தித்து நீர்ப் பண்டம் போலே சிதிலமாய் போமவர்களுக்கு
அவத்யமாய் என்று ஞானாதிகரானவர்கள் சர்வ காலமும் சொல்லுவார்கள் என்று எம்பெருமானாரைப்-பார்த்து விண்ணப்பம் செய்கிறார் –

இங்கனம் எம்பெருமானார் உடைய போக்யதையிலே நெஞ்சு படிந்ததும் -முன்பு தாம்-அவர் திறத்து பண்ணின –பாவனர் -தூய்மை படுத்துமவர் -என்னும் பாவனை
குற்றமாகப் பட -எம்பெருமானாரை நோக்கி தேவரீரது போக்யதையிலே ஈடுபட்டு இருப்பவர்களுக்கு-நான் –பாவனர் -என்னும்பாவனையுடன் பேசினது
குற்றமாக தோன்றும் என்று -நல்லவர்கள் சொல்லுவார்கள் என்கிறார் –
—————————-
102-இப்படி பாவனத்வ அனுசந்தானமும் அசஹ்யமாம்படி -பரம போக்யபூதரான -எம்பெருமானார்-விஷயத்தில் -தம்முடைய அந்தக் கரணத்தொடு-பாஹ்ய கரணங்களோடு
-வாசி யற-அதி மாத்திர ப்ரவண மாய்ச் செல்லுகிற படியைச் சொல்லி –இந்த பூமிப் பரப்பு எல்லாம் கிடக்கச் செய்தே
தேவரீர் ஔ தார்யம் என் பக்கலிலே வர்த்திக்கைக்கு ஹேது என் -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே -எம்பெருமானாருடைய போக்யதையில் ஈடு பட வேண்டி இருக்க –அப்படி இராதே -அவருடைய பாவனத்தைக் கொண்டாடினது -அவரை அனுசந்தித்து சிதிலராய் இருக்குமவர்களுக்கு-அசஹ்யமாய் இருக்கும் என்று சொல்லி -இதிலே -அவர்கள் விஷயத்தால் குற்றம் தீரும்படி-அந்த கரணத்தொடு பாஹ்ய கரணங்களோடு வாசி யற -எல்லாம் எம்பெருமானார் பக்கலிலே-அதி மாத்ர ப்ராவன்யத்தாலே சக்தங்களாய் ஆழம்கால் பட்டன என்று சொல்லா நின்று கொண்டு -இந்த பூ லோகத்தில் இருக்கும்
எல்லா சேதனரும் இருக்கச் செய்தே -தேவரீருடைய திவ்ய ஔதார்யம் என் ஒருவன் பக்கலிலும் கிளர்ந்து வருகைக்கு ஹேது என் என்று -அவர் தம்மையே கேட்கிறார் –

இங்கனம் தூய்மைப் படுத்துபவர் என்பது கூடப் பொறுக்க ஒணாத படியான-இனிமை வாய்ந்த எம்பெருமானார் திறத்து -தம் உட் கரணமும் -புறக் கரணங்களும்
எவ்வித பாகுபாடும் இன்றி -தாமே மிகவும் ஈடுபட்டு இருப்பதைச் சொல்லி –இப்பரந்த உலகினிலே அனைவரும் இருக்க -தேவரீருடைய வள்ளல் தனம்
என் மீது வளருவதற்கு ஹேது என்ன -என்று எம்பெருமானாரிடமே வினவுகிறார் –
——————————
103-இப்படி சர்வ கரணங்களும் தம் பக்கலிலே ப்ரவண மாகைக்கு உறுப்பாக-எம்பெருமானார் தம்முடைய ஔதார்யத்தாலே உமக்கு உபகரித்த
அம்சத்தை சொல்லீர் -என்ன-என்னுடைய கர்மத்தை கழித்து -அழகிய ஜ்ஞானத்தை விசதமாகத் தந்து அருளினார் -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே தம்முடைய சர்வ கரணங்களையும் எம்பெருமானார் தம் விஷயத்தில்-அதி பிரவணராகும்படி பண்ணி -அனிதர சாதாரணமாகத் தம்முடைய ஔதார்யத்தை தம்மிடையே
வர்ப்பித்து அருளினார் -என்று சொல்லி வித்தரானவாறே -ஆக இப்படி சர்வ கரணங்களும் தம் விஷயத்திலே-யதி ப்ரவணராம் படி ஈடு படுகைக்கு உடலாக அவருடைய
ஔ தார்யத்தாலே இன்னமும் உமக்கு உபகரித்தமை ஏதாகிலும் உண்டோ என்ன -இதிலே -அத்யந்த கோபோவிஷ்டமாய் -அத்விதீயமான-நரசிம்ஹ அவதாரத்தை கொண்டாடி
ஸ்வ ஆஸ்ரிதரான தேவதைகளுடைய ஸ்தானங்களை-ஆக்கிரமித்து -லோகத்தை எல்லாம் பாதிக்கைக்காக கடக ஹஸ்தனாய் தனிக் கோல் செலுத்திக் கொண்டு திரிகிற
ஹிரண்யா சுரனுடைய ஸ்வரூபமான சரீரத்தை துரும்பைக் கிழிக்குமா போலே அநாயாசேன கிழித்துப் பொகட்ட-சர்வேச்வரனுடைய திவ்ய கீர்த்தியை தம்முடைய திரு உள்ளத்திலே எம்பெருமானார் உடைய –ஆத்யாத்மிகாதி துக்கங்களை வாசனையோடு ஒட்டி விட்டு -கரதலாமலகமாக -தத்வ ஹித புருஷார்த்த-யாதாம்ய ஞானத்தை கொடுத்து அருளினார் என்கிறார் –

எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும்-தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு
என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் –
————————–
104-உபதேச ஜ்ஞான லாப மாத்ரம் ரசிக்கிற படி கண்டால் -பகவத் விஷயத்தைசாஷாத் கரித்தீர் ஆகில் உமக்கு எப்படி ரசிக்கிறதோ என்று -எம்பெருமானாருக்கு
கருத்தாகக் கொண்டு –பகவத் விஷயத்தை விசதமாகக் காட்டித் தரிலும் -தேவரீர் திரு மேனியில் பிரகாசிக்கிற குணங்கள் ஒழிய நான் வேண்டேன் –
இதுக்கு ஈடான பிரசாதத்தை செய்து அருளில் இரண்டு விபூதியிலும்-கால் பாவுவன் -அல்லது தரியேன் -என்கிறார்-

கீழ்ப் பாட்டில் தத்வ ஹித புருஷார்த்த தத் யாதாம்ய ஞானத்தை சுவ்யக்தமாம்படி-உபதேசித்தார் என்று இவர் இனியராய் இருந்தவாறே -அத்தைக் கண்டு உபதேச மாத்ரத்துக்கே
இப்படி-இனியராய்க் கொண்டு ரசித்து இருந்தீர் –பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்கும்படி பண்ணிக்-கொடுத்தோம் ஆகில் எப்படி ரசித்து இனியராக கடவீரோ என்று
எம்பெருமானாருக்கு கருத்தாக-நினைத்து -தேவரீர் சகல ஜன மநோ ஹாரி -திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணிக் கொண்டு போந்த-கிருஷ்ணனை கரதலாமலகமாக
காட்டித் தரிலும் தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரகத்திலே பிரகாசியா நின்றுள்ள-கல்யாண குணங்களை ஒழிய அடியேன் வேறு ஒரு விஷயத்தை வேண்டேன் என்ன
இவன் இப்படி-மூர்க்கு பேசலாமோ என்று சீறிப்பாறு செய்து அடியேனை சம்சாரமாகிற நரகத்தில் விழப் பண்ணினாலும் -நம்மையே பற்றி இருக்கிறான் இறே என்று
கிருபையாலே –நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்திலே-கொண்டு போய் சேர்த்திடிலும்-வர்ஷூ கவலாஹம் போலே பரம உதாரரான எம்பெருமானாரே -தேவரீர் உடைய
திவ்ய மங்கள விக்ரகத்தை அனுபவிக்கைக்கு உடலான நிர்ஹேதுக பரம கிருபையாலே தேவரீர்-செய்து அருளின விபூதி த்வயத்திலும் வைத்துக் கொண்டு
ஏதேனும் ஓர் இடத்தில் கால் பாவி நின்று-தரிப்பன் – இல்லை யாகில் தரிக்க மாட்டேன் என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே கண்ணனைக்-காட்டிக் கொடுத்து விட்டால் எங்கனம் நீர் ரசிப்பீரோ -என்று-எம்பெருமானாருக்கு
கருத்தாகக் கொண்டு –கண்ணனை நன்றாக காட்டித்-தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை-ஒழிய நான் வேண்டேன்
இந்நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் -சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் -இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார்-
———————–
105-எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு-வஸ்தவ்யதேசம் அதுவே என்று அங்கே போக ஆசைப்படா நிற்க –
நீர் பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர் –உமக்கு வஸ்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பது எது -என்ன அருளிச் செய்கிறார்

கீழே -எம்பெருமானார் தமக்கு பண்ணி அருளின உபகாரத்தை அனுசந்தித்து-மகா உதாரரான எம்பெருமானாரே -என்று அவரை சம்போதித்து-தேவரீர் சுலபனான கிருஷ்ணனை
கரதலாமலகமாக பண்ணிக் கொடுத்தாலும் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரம பதத்தை கொடுத்தாலும் -அவனுக்கு கிரீடாகந்துக ஸ்தாநீயமான இந்த லீலா விபூதியைக் கொடுத்தாலும் –தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரக-அனுபவம் ஒழிய அவற்றில் ஒன்றும் எனக்கு வேண்டுவது இல்லை -ஆகையால் இவ் அனுபவம் எனக்கு எப்போதும்
நடக்கும்படி கிருபை பண்ணில் தரிப்பன் – இல்லை யாகில் ஜலாதுத்தர்த்த மத்ஸ்யம் போலே தரிக்க மாட்டேன் என்ன
அத்தைக் கேட்டவர்கள் -ஜ நிம்ருதி துரித நிதவ் மே ஜகதி ஜிஹா சாந்த்ரஜாம் பிதா பவத -பவ நு ச ந பசி பரஸ்மின் நிரவதிகா-நந்த நிர்ப்ப ரெலிப்ச – என்கிறபடியே
லோகத்தார் எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் என்றும் -பரம பதம்-உபாதேயம் என்றும் -அறுதி இட்டு அங்கே போக ஆசைப்படா நிற்க -நீர் இவ்விரண்டையும் சஹ படித்து சொன்னீர் –
இனி உமக்கு வஸ்தவ்ய தேசமாக அறுதி இட்டு இருப்பது என் என்று கேட்க –திருப்பாற் கடலிலே-கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரனுடைய குணங்களில் ஈடுபட்டு -கலக்கமில்லா
நல் தவ முனிவராலே விரும்பப்பட்ட விலஷண ஞானத்தை உடையரான -பரம வைதிகராலே – தொழுது முப்போதும் -என்கிறபடியே-அநவரதம் சேவிக்கப் படா நின்றுள்ள
திருவடிகளை உடைய எம்பெருமானாரை -தேவும் மற்று அறியேன் -என்று சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருக்குமவர்கள் எழுது அருளி இருக்குமிடம்
அவர்கள் அடியேனான-எனக்கு வஸ்தவ்ய தேசம் என்று கீழே தாம் சொன்ன ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -பரம பத்திலே
போய் இருக்க ஆசைப்படா நிற்பர் -நீரோ -சம்சாரத்தையும் பரம பதத்தையும்
ஓன்று போலேபேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –
அது தன்னை அருளிச் செய்கிறார் –

——————————-
106-இப்படி இவர் தமக்கு -தம் பக்கல் உண்டான அதி மாத்திர ப்ராவண்யத்தை கண்டு -எம்பெருமானார் -இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள –
அத்தைக் கண்டு உகந்து அருளிச் செய்கிறார் –

திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்கள் –அவர் தம்முடைய குண அனுபவ ஜனித-ஹர்ஷ பிரகர்ஷத்தாலே களித்து சசம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணும் இடம் தமக்கு
வாசஸ்தானம் என்று கீழ்ப்பாட்டில் அருளிச் செய்து -இப்பாட்டிலே -வேத -தத் உப ப்ரஹ்மணாதிகளாலே பரிசீலனத்தை பண்ணி இருக்குமவர்கள்
சர்வேஸ்வரனுக்கு உகந்து அருளின நிலங்களாக சொல்லுகிற -ஸ்ரீ வைகுண்டம் வட திருமலை தென் திருமலை-தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட
எம்பெருமானாருடைய திரு உள்ளத்திலே அவன் மிக விரும்பி வர்த்திக்குமா போலே –இப்போது –அந்த திவ்ய தேசங்களோடும் – அந்த திவ்ய தேசங்களுக்கு நிர்வாஹனான
சர்வேச்வரனுடனும் கூட வந்து எம்பெருமானார் தாமும் நிரதிசய சுகமாக எழுது அருளி இருக்கிற ஸ்தலம்-தம்முடைய திரு உள்ளம் என்று அனுசந்தித்து பிரீதர் ஆகிறார் –

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட எம்பெருமானார் -அமுதனாருடைய திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி -அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார் .
—————————-
107-இப்படி தம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற-எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து -தேவரீருக்கு விண்ணப்பம்
செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட-நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே
அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து – இதிலே-அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு -அசந்க்யேயமான துக்கங்களை அனுபவித்து
உரு மாய்ந்து முடியிலும் -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்—தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய்
அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்-கொண்டு அடிமைப்படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார்

தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய்-இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் -எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம்
இருக்க வேண்டும் என்று –அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற -அவரை விளித்து -தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான்-ஆட்படும்படியாக அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை-விண்ணப்பம் செய்கிறார்-
————————-
108-நிகமத்தில்-இப்ப்ரபந்த ஆரம்பத்திலே-இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம் தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் -அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி-100 -என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் –

நிகமத்தில் -கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக-அபிமானித்து தம்முடைய திரு உள்ளத்திலே எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற
படியையும் -அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ-வ்ர்த்திகளும் பண்ணிக் கொண்டு போரும்படி என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய-அபிமத்தை அருளிச் செய்து -இப்பாட்டிலே –எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை-நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து ஸ்தாவர-பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே –அந்த பரிக்ரஹா அதிசயத்தை கொண்டு திவ்ய தம்பதிகளான- ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே குடி கொண்டது என்னும்படி அத்ய அபி வர்த்தமான தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார்
இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு -அது தலைக்கட்டினவாறே அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே-இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் -அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக்-கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே -இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி-அனுபவித்து தலை கட்டுகிறார் –

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது -இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்றுதாம் அருளிச் செய்த பேறு -தமக்கு ஆத்மா உள்ள அளவும்
கைப்படவும் -அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் –விரும்பி-அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் -அதனுக்கு ஏற்ப -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி-
உயரினம் அனைத்துக்கும் சார்வகிச் செல்வம் அளிப்பவளான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார் .

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி–பாசுரங்கள் -22-76-அவதாரிகை -/ஸ்ரீ மா முனிகள் /ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் / ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் -அருளிச் செய்தவை –

April 14, 2017

22-முன்பு தன்னோடு எதிரிட்ட தேவ ஜாதி -பின்பு தன் வைபவத்தை அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –அவர்களுக்காக வாணன் அபராதத்தை
பொறுத்த சர்வேஸ்வரனை ஏத்தும் எம்பெருமானார்-எனக்கு ஆபத்து தனம் –என்கிறார் –

ருத்ரன் முதலான தேவ ஜாதிக்காக –பாணனுடைய ஆர்த்த அபராதத்தைப் பொறுத்த க்ர்ஷ்ணனை ஸ்துதிக்கும் எம்பெருமானார்
எனக்கு மகா நிஷேப பூதர் -என்கிறார்

தன்னை எதிர்த்து போரிட்ட அமரர் மக்கள் இவர்களோடு கூடிய முக் கண்ணன் என்னும் இவர்கள்-தோல்வி அடைந்து தன் வைபவத்தை அறிந்து துதிக்க
அவர்களுக்காக வாணன் அபராதத்தை பொறுத்த சர்வேஸ்வரனை ஏத்தும் எம்பெருமானார்-எனக்கு சமயத்துக்கு உதவ சேமித்து வைத்த செல்வம்-என்கிறார் .
—————————–
23-நிர்தோஷரான பிரேம யுக்தர் பரம தனமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும்-விஷயத்தை பாபிஷ்டனான நான்
ஹேயமான மனசிலே வைத்து ஏத்தா நின்றேன் -இது-அவ்விஷயத்தின் உடைய குணத்துக்கு என்னாகும் என்கிறார் –

பூர்வாசார்யர்கள் எல்லாரும் -வைத்த நிதி -என்னுமா போலே -தங்களுக்கு-ஆபத்து ரஷகமாக வைக்கப் பட்ட -அஷய பரம தனம் -என்று கொண்டு -தங்களுடைய
திரு உள்ளத்திலே சர்வ காலமும் வைக்கும் விஷயமான எம்பெருமானாரை -அதி பாபிஷ்டனான-என்னுடைய மனசிலே வைத்துக் கொண்டு அவருடைய
கல்யாண குணங்களை ஸ்துதிக்கத் தொடங்கினேன்-மகா பிரபாவம் உடைய அவருடைய கல்யாண குணங்களுக்கு இது என்னாய் விளையுமோ-என்று பரிதபிக்கிறார் .

நல்ல அன்பர்கள் சிறந்த செல்வமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும் எம்பெருமானாரை-மிக்க பாவியான நான் குற்றம் உள்ள
நெஞ்சிலே வைத்து எப்போதும் ஏத்தா நின்றேன் -இது அவரது சீரிய-கீர்த்திக்கு என்னவாய் முடியுமோ –என்கிறார் –
———————————-
24-ஒப்பார் இலாத உறு வினையேன் -என்றீர் -இப்படி இருக்கிற உமக்கு இவ்விஷயத்தை-முப்போதும் வாழ்த்துகை கூடின படி என் -என்ன –
தாம் முன்பு நின்ற நிலையையும் –இன்று தமக்கு இவ் உத்கர்ஷம் வந்த வழியையும் சொல்லுகிறார் –

சாஸ்திர விஹிதமான தபச்சுகளை பண்ணும் -நீச சமய நிஷ்டர் எல்லாம் – பக்நராம்படி ஸ்ரீ பாஷ்யாதிகளைப் பண்ணும்-யதார்த்த ஜ்ஞானத்தை உடையரான
எம்பெருமானார் என்னுடைய காள மேகமானார் – அவரைக் கண்டு உத்கர்ஷ்டன் ஆனேன் –ஆகையால் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் -என்கிறார் .

இப்பாரில் ஒப்பார் இல்லாத மா பாவியாய் முன்னர் கீழ்ப் பாட்டு இருப்பினும்-இன்று உயர்ந்தவராய் எம்பெருமானாரை முப்போதும் வாழ்த்துதல் எங்கனம் உமக்கு
வாய்ந்தது என்ன –தமது முன்னைய நிலையையும் -இவ் உயர்வு வந்த வழியையும் –அருளி செய்கிறார் –
———————————-
25-எம்பெருமானார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து அத்தாலே அவர் திருமுகத்தை-பார்த்து –தேவரீர் உடைய க்ருபா ஸ்வபாவம்
இந்த லோகத்தில் யார் தான் அறிவார் என்கிறார் –

மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும் க்ர்பையை உடைய எம்பெருமானாரே –சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதமான இந்த பூ பிரதேசத்திலே –
தேவரீர் உடைய கிருபா ஸ்வபாவத்தை தெளிந்தவர் யார் -சகல துக்கங்களுக்கும் சாஷாதாகரமான என்னை தேவரீரே எழுந்து அருளி
அங்கீ கரித்த பின்பு -தேவரீர் உடைய கல்யாண குணங்கள் -என்னுடைய பிராணனுக்கு பிராணனாய் –
அடியேனுக்கு ரசியா நின்றது என்று –எம்பெருமானார் திரு முகத்தைப் பார்த்து -நேர் கொடு நேரே-விண்ணப்பம் செய்கிறார்

தனக்கு பண்ணின உபகாரத்தை நினைந்து நேரே எம்பெருமானாரை நோக்கி-தேவரீர் உடைய அருளின் திறத்தை இவ் உலகில் யார் தான் அறிவார் என்கிறார் –

—————————————-
26-எம்பெருமானார் விஷயீ கரித்து அருளின பின்பு –அவருடைய குணங்களே தமக்கு தாரக போஷாக போக்யங்கள்-ஆயிற்று என்றார் கீழ் –
அவ்வளவு அன்றிக்கே –அவர் திருவடிகளுக்குப் அனந்யார்ஹராய் இருக்கும் மகா ப்ரபாவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய
பூர்வ அவஸ்தைகளில் ஓர் ஒன்றே என்னை எழுதிக் கொள்ளா-நின்றது -என்கிறார்

மேகம் போலே உதாரரான எம்பெருமானார் தம்மை விஷயீ கரித்த பின்பு அவருடைய-கல்யாண குணங்கள் -தமக்கு தாரகமாய் இருந்த படியை கீழ்ப் பாட்டில் சொல்லி
இப்பாட்டிலே –அவர்க்கு அனந்யார்ஹராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஜன்ம வ்ருத்தாதிகளிலே ஓர் ஒன்றே அடியேனை எழுதி கொள்ளா நின்றது என்கிறார் .

எம்பெருமானார் என்னை ஏற்ற பிறகு அவர் குணங்களே எனக்கு தாரகமும் போஷகமும் போக்யமும் ஆயின என்றார் கீழ்-
அவ்வளவோடு அமையாது அவரையே தஞ்சமாக பற்றி -விடாது நிற்கும் பெருமை வாய்ந்தவர்கள்-பற்றுவதற்கு முன்-அவர் பால் இருந்த அறிவுக்குறை இழிபிறப்பு
-இழி தொழில் -இவற்றில் ஒவ் ஒன்றுக்குமே நான்-அடிமைப் பட்டு விடுகிறேன் –என்கிறார் –
———————————–
27-இப்படி இவர் தமக்கு அநந்யார்ஹர் அளவிலே ஊன்றினவாறே -எம்பெருமானார் -இவர் நெஞ்சுக்கு தம்மை –சர்வ காலமும் -விஷயம் ஆக்கிக் கொடுக்க
பாபிஷ்ட்டனான என் நெஞ்சிலே புகுந்து அருளின இது –தேவரீர் பிரபாவத்துக்கு அவத்யம் அன்றோ என் நெஞ்சு தளரா நின்றது என்கிறார் –

இப்படி இவர் தமக்கு அனந்யார்ஹர் பக்கலிலே பிரதி பத்தி பண்ணின வாறே -எம்பெருமானார்-இவருடைய நெஞ்சு -குற்றமே சர்வ காலமும் விஷயமாக்கிக் கொடுக்க
பாபிஷ்டனான என் நெஞ்சிலே-புகுந்து அருளின இது -தேவரீருடைய பிரபாவத்துக்கு அவத்யம் அன்றோ என்று என் நெஞ்சு தளரா நின்றது-என்கிறார் –

தன்னை மேவும் நல்லோர் திறத்து மிகவும் அமுதனார் ஈடுபாடு கொண்டு இருப்பது கண்டு எம்பெருமானார் இவர் நெஞ்சுக்கு தன்னை எக்காலத்திலும்
விஷயம் ஆக்கிக் கொடுக்க –கொடிய பாவியான என்னுடைய நெஞ்சிலே புகுந்தது-தேவரீர் மகிமைக்கு மாசு விளைவிக்குமே என்று
தனிப்பட்ட என் மனம் தளர்ச்சி அடைகின்றது –என்கிறார் –
————————————————
28-மன பூர்வோ வாகுத்தர -என்னும் மனஸ்ஸூக்கு அநந்தரமான வாக்குக்கு அவர் விஷயத்தில் உண்டான-ப்ராவண்யத்தை கண்டு ப்ரீதர் ஆகிறார் –

கீழ்ப் பாட்டிலே மனச்சினுடைய சம்ர்த்தியைச் சொல்லி –இதிலே -வாக்கு உள்ள சம்ர்த்தியை-சொல்ல ஒருப்பட்டு -துர் புத்தியான கம்சனை சம்ஹரித்து
அதி கோமளமான ஸ்ரீ பாதங்களை உடைய-நப்பின்னை பிராட்டிக்கு ச்நேகியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸ்ரீ பாதங்களை ஆஸ்ரயியாத ஆத்மா அபஹாரிகளுக்கு
அகோசரரான எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை ஒழிய வேறொரு விஷயத்தை என் வாக்கானது-ஸ்துத்திக்க மாட்டாது
ஆகையாலே இப்போது எனக்கு ஒரு அலாப்யலாபம் சேர்ந்தது என்று வித்தார் ஆகிறார் –

என் மேன்மைக்கு ஒரு குறையும் ஏற்படாது -நீர் உம் வாயாலே -கண்டு உயர்ந்தேன் -என்றீரே –காண்டலுமே -வினையாயின எல்லாம் விண்டே ஒழிந்தன -ஏன் –
உமது நெஞ்சம் தனியாய்-தளர வேண்டும் -என்று எம்பெருமானார் தேற்ற -தேறின அமுதனார் –
மனத்தை பின் பற்றி –வாக்கு அவர் திறத்து ஈடுபடுவதை கண்டு உவந்து அருளி செய்கிறார் –
—————————–
29-எம்பெருமானார் திவ்ய குணங்களை உள்ளபடி அறிந்து இருக்கும் அவர்கள் திரள்களை
என் கண்கள் களிக்கும்படி கூட்டக் கடவ -ஸூக்ருதம் இன்று கூடுமோ-என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே -தம்முடைய வாக்கானது –எம்பெருமானாருடைய கல்யாண குணங்களுக்கு-அனந்யார்ஹமாய் விட்டது என்று அந்த ச்மர்த்தியை சொல்லி –
அவ்வளவிலே சுவறிப் போகாதே -மேல் மேல்-பெருகி வருகிற அபிநிவேச அதிசயத்தாலே -இப்பாட்டில் -தர்சநீயமான -திரு குருகைக்கு நிர்வாஹராய் –
திரு வாய் மொழி முகத்தாலே -தத்வ ஹித புருஷார்த்தங்களை -சர்வருக்கும் உபகரித்து அருளின நம் ஆழ்வார்-உடைய திவ்ய சூக்தி மயமான வேதமாகிற
செந்தமிழ் தன்னை -தம்முடைய பக்தி யாகிற கோயிலிலே-பிரதிஷ்டிப்பித்து கொண்டு இருக்கிற எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை
உள்ளபடி-தெளிந்து இருக்கும் ஞாநாதிகர்கள் உடைய திரள்களை என் கண்கள் கொண்டு ஆனந்தித்து களிக்கும்படி-
சேரக் கடவதான பாக்யம் எப்போது லபிக்கும் என்று -ததீய பரந்தாமன ப்ரீதியை பிரார்த்தித்து அருளுகிறார் –

என் வாய் கொஞ்சிப் பரவும் எம்பெருமானார் குணங்களை உள்ளபடி உணர்ந்து உள்ளவர்களின்-திரளை
என் கண்கள் கண்டு களிக்கும்படி செய்ய வல்ல பாக்கியம் என்று வாய்க்குமோ –என்கிறார் –
——————————-
30-இப்படி இவர் பிரார்த்தித்த இத்தைக் கேட்டவர்கள்-இவ்வளவேயோ -அபேஷை உமக்கு -இனி பரம பத ப்ராப்தி-முதலானவையும் அபேஷிதங்கள் அன்றோ -என்ன –
எம்பெருமானார் என்னை அடிமை கொண்டு அருளப் பெற்ற பின்பு-சுகவாஹமான மோஷம் வந்து சித்திக்கில் என் –துக்க அவஹமான நரகங்கள் வந்து சூழில் என் –என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானாருடைய கல்யாண குண வைபவத்தை உள்ளபடி அறியும் பெரியோர்கள் உடைய-திரள்களைக் கொண்டு –
ஆனந்தத்தை பெறுவிக்குமதான -பாக்யம் உண்டாவது எப்போதோ -என்று இவர் அபிநிவேசிக்க –
இத்தைக் கண்டவர்கள் உம்முடைய அபேஷை இவ்வளவேயோ பின்னையும் உண்டோ என்ன -அநாதியான சம்சார சாகரத்திலே-பிரமித்து திரிகிற –
ஜந்துக்களுக்கு எல்லாம் ஸ்வாமி யாய் -ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையனான சர்வேஸ்வரன் என்று
ஸ்ரீ பாஷ்ய முகேன அருளிச் செய்து -பிரயோஜனாந்தர கந்த ரஹீதமான -ப்ரீதியோடு உபகரித்து அருளும் எம்பெருமானார்
அடியேனை அடிமை கொண்டு அருளினார் -இனி ஆனந்த அவஹமான பதம் வந்து ப்ராபித்தால் என்ன – அசங்க்யாதங்களான-துக்கங்கள் வந்து பிராபித்தால் என்ன –
இவற்றை ஒன்றாக நினைக்கிறேனோ என்று தம்முடைய அத்யாவசாய தார்ட்யத்தைஅருளிச் செய்கிறார் –

இங்கனம் ஈட்டங்கள் கண்டு நாட்டங்கள் இன்பம் எய்திடல் வேண்டும் என்று இவர் ப்ரார்த்தித்ததைக்-கேட்டவர்கள்-உமக்கு இவ்வளவு தானா தேட்டம் –
வீட்டை அடைதல்-முதலிய பேறுகளில் நாட்டம் இல்லையா -என்று வினவ –எம்பெருமானார் என்னை ஆட் கொண்டு அருளப் பெற்ற பிறகு இன்பம் அளிக்கும்
வீடு வந்தால் என் -துன்பத்தினை விளைக்கும் நரகம் பல சூழில் என் -இவற்றில்-ஒன்றினையும் மதிக்க வில்லை -நான் என்கிறார்
————————————
31-அநாதி காலம் அசங்க்யாதமான யோநிகள் தோறும் தட்டித் திரிந்த நாம் இன்று-நிர்ஹேதுகமாக எம்பெருமானரை சேரப் பெற்றோமே என்று –
ப்ரீதி பிரகர்ஷத்தாலே –திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார் –

லோகத்தில் ஒருவனுக்கு ஒரு நிதி லபித்தால் தன்னுடைய அந்தரனுக்கு சொல்லுமா போலே –இவரும் தம்முடைய பந்த மோஷங்களுக்கு எல்லாம் பொதுவான
மனசை சம்போதித்து கலா முகூர்த்தாதி-ரூபமாய்க் கொண்டு வர்த்திக்கும் காலம் எல்லாம் தேவாதி தேகங்கள் தோறும் சஞ்சரித்து இவ்வளவும் போந்தோம் –
இப்போது ஒரு சாதனம் இன்றிக்கே –சுந்தர பாஹுவாய் -தமக்கு உபாகரகரான பேர் அருளாளன் திருவடிகளின் கீழே-அங்குத்தைக்கு -ஒரு ஆபரணம் போலே
இருந்துள்ள பிரேமத்தை உடையரான எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு-நிற்கப் பெற்றோம் கண்டாயே -என்று சொல்லி ஹ்ருஷ்டர் ஆகிறார் –

நெடும் காலம் பல பல பிறப்புகளில் புக்கு பெரும்பாடு பட்ட நாம்-இன்று நினைப்பின்றியே எம்பெருமானாரை சேரப் பெற்றோம் என்று
பெறும் களிப்புடன் தம் திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார் .
——————————————
32-இராமா னுசனனைப் பொருந்தினம் -என்று இவர் ஹ்ருஷ்டராகிற வித்தைக் கண்டவர்கள் -நாங்களும் –இவ்விஷயத்தை லபிக்கப் பார்க்கும் அளவில்
எங்களுக்கு உம்மைப் போலே ஆத்ம குணங்கள்-ஒன்றும் இல்லையே என்ன –எம்பெருமானாரை சேரும் அவர்களுக்கு ஆத்ம குணாதிகள் எல்லாம்
தன்னடையே வந்து சேரும் -என்கிறார் –

இராமானுசரைப் பொருந்தினமே என்று இவர் ஹ்ருஷ்டரான -இத்தை கண்டவர்கள் -நாங்களும்-இவ் விஷயத்தை லபிக்கப் பார்க்கும் அளவில்
எங்களுக்கு உம்மைப் போலே ஆத்ம குணங்கள் ஒன்றுமே இல்லையே என்ன –
எம்பெருமானாரை சேருமவர்களுக்கு ஆத்ம குணங்கள் முதலியனவை எல்லாம் தன்னடையே-வந்து சேரும் என்கிறார்-

இராமானுசனைப் பொருந்தினமைக்கு இவர் களிப்பதைக் கண்டவர்கள் -நாங்களும் இங்கனம் களிக்க-கருதுகிறோம் -ஆயின் -எங்களிடம் ஆத்ம குணங்கள்
சிறிதும் இல்லையே -அவை உம்மிடத்தில்-போலே இருந்தால் அன்றோ -நாங்கள் இராமானுசனைப் பொருந்த இயலும் என்று கூற
எம்பெருமானாரைச் சேரும் அவர்களுக்கு ஆத்ம குணங்கள் எல்லாம் தாமே வந்து அமையும் -என்கிறார்-
———————————–
33-அஸ்த்ர பூஷண அத்யாயத்தில் சொல்லுகிறபடியே -மனஸ் தத்வாதிகளுக்கு அபிமாநிகளாய்-இருக்கிற திரு வாழி முதலான திவ்ய ஆயுதங்களினுடைய
ப்ரசாதத்தாலே-இந்திரிய ஜயாதிகள்-உண்டாக வேண்டி இருக்க – எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கவே இவை எல்லாம் உண்டாம் என்கிறது –
என் கொண்டு -என்ன – அந்த ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களும் லோக ரஷண அர்த்தமாக எம்பெருமானார் பக்கலிலே யாயின-என்கிறார் –
அதவா –அவை எல்லாம் லோக ரஷண அர்த்தமாக எம்பெருமானாராய் வந்து திருவவதரித்தன -என்னவுமாம் –

-இலைகளாலே நெருங்கி இருக்கிற -தாமரைப் பூவிலே அவதரித்த பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான-சர்வேஸ்வரனுடைய திருக்கையிலே
ஸ்தாவர பிரதிஷ்டை யாய் இருக்கிற திரு ஆழி ஆழ்வானும் – அவனோடு ஒரு கோர்வையாய் இருக்கிற ஸ்ரீ நந்தகம் என்னும் -பேரை உடைத்தான கட்கமும்
ஆஸ்ரித ரஷணத்தில் பொறுப்பை-உடைத்தான ஸ்ரீ கதையும் – அதி ச்லாக்யமான ஸ்ரீ சார்ங்கமும் -புடையாலே தர்சநீயமாய் வலம்புரி என்னும்
பேரை-உடைத்தான ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -கலி தோஷாபிபூதமாய் காணப்படுகிற இந்த லோகத்தை ரஷிப்பதாக எம்பெருமானார்
அதிகரித்த கார்யத்துக்கு சஹா காரியர்களாக கொண்டு -அவர் பக்கலிலே ஆய்த்து என்கிறார் –
அன்றிக்கே பஞ்ச-ஆயுதங்களும் எம்பெருமானாராய் வந்து திரு அவதரித்து அருளின –என்கிறார் ஆகவும்-

புலன் அடக்கம் முதலானவை மனம் முதலிய தத்துவங்களுக்கு அபிமானியான
திரு வாழி யாழ்வான் முதலிய திவ்ய ஆயுதங்களினுடைய ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்க –எம்பெருமானாரை சேரவே இவை எல்லாம்
உண்டாகும் எனபது எங்கனம்பொருந்தும் என்ன –அந்த திவ்ய ஆயுதங்களும் எம்பெருமானார் இடத்திலேயே உள்ளன –என்கிறார் –
——————————
34-கலி தோஷ அபிபூதமான ஜகத்தை ரஷித்தமையை சொல்லி -இவரை -ஆஸ்ரயிப்பார்க்கு-ஆத்ம குணாதிகள் தானே வந்து சேரும் என்னும் அத்தையும்
இவருடைய ஆத்ம குணோத்-பாதகத்வ ஹேதுவான சகாய பலத்தையும் அருளிச் செய்தார் கீழ் இரண்டு பாட்டாலே –
இப்பாட்டிலே -இப்படி கலி தோஷத்தைப் போக்கி -லோகத்தை ரஷித்த அளவிலும் –எம்பெருமானார் குணங்கள் பிரகாசித்தது இல்லை
என் கர்மத்தைக் கழித்த பின்பு வைலஷண்யத்தை தரித்தது -என்கிறார் –

கீழ் இரண்டு பாட்டாலே -கலியினுடைய க்ரௌர்யத்தாலே க்லேசப்பட்ட லோகத்தை ரஷித்த –எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஸ்வரூப அனுரூபமான
சம்பத்துக்கள் தன்னடையே வந்து சேரும்-என்றும் -அவர்தாம் அந்த ரஷணத் துக்கு உறுப்பான வைபவத்தை உடையவர் என்றும் பிரதி பாதித்து
இப்பாட்டிலே -அப்படிப்பட்ட ரஷணத்திலே எம்பெருமானார் உடைய பிரபாவம் பிரகாசித்தது இல்லை –என்னுடைய ஆசூர க்ருத்யங்களை யம லோகத்தில்
எழுதி வைத்த புஸ்தக பாரத்தை எல்லாம்-தஹித்த பின்பு காணும் அவருடைய கல்யாண குண வைபவத்துக்கு ஒரு பிரகாசம் லபித்தது -என்கிறார் –

செறு கலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்தமையும் –ஆஸ்ரயிப்பார்க்கு ஆத்ம குணாதிகள் தாமே வந்து சேருதலும்
-ஆத்ம குணங்களை உண்டாக்குவதற்கு-இவருக்கு ஏற்ப்பட்டு உள்ள சகாய பலமும் -கீழ் இரண்டு பாட்டுக்களாலும் கூறப் பட்டன
இந்தப் பாட்டில் இப்படிக் கலியை செறுத்து உலகை ரஷித்த படியால் எம்பெருமானார் குணங்கள்-பிரகாசிக்க வில்லை
என் வினை யனைத்தையும் விலக்கிய பின்னரே அவை பிரகாசித்தன -என்கிறார் –
——————–
35-எம்பெருமானார் உம்மளவில் செய்த விஷயீகாரத்தை பார்த்து -கர்மம் எல்லாம் கழிந்தது –என்றீரே யாகிலும் -பிரக்ருதியோடே இருக்கையாலே
இன்னமும் அவை வந்து ஆக்ரமிக்கிலோ-என்ன –இனி -அவற்றுக்கு வந்து என்னை அடருகைக்கு வழி இல்லை என்கிறார் –

எம்பெருமானார் உம்மை நிர்ஹேதுகமாக அங்கீகரித்து அருளின ராஜகுல மகாத்ம்யத்தால்-களித்து -அநாதியான கர்மங்கள் என்னை -பாதிக்க மாட்டாது என்றீர்
நீர் ப்ரக்ருதி சம்பந்தததோடு இருக்கிற-காலம் எல்லாம் -நா புக்தம் ஷீயதே கர்ம -என்கிறபடியே கர்மபல அனுபவமாய் அன்றோ இருப்பது -என்ன –
தேவதாந்திர பஜனம் அசேவ்ய சேவை தொடக்கமான விருத்த கர்மங்களை அனுஷ்டித்தால் அன்றோ-அநாதி கர்மம் மேல் யேருகைக்கு அவகாசம் உள்ளது
அவற்றை சவாசனமாக விட்டேன் –எம்பெருமானார்-திருவடிகளை சர்வ காலமும் விச்மரியாதே வர்த்தித்தேன்
இப்படியான பின்பு க்ரூர கர்மங்கள்-என்னை வந்து பாதிக்கைக்கு வழி இல்லை –என்கிறார் –

பிரகிருதி சம்பந்தத்தாலே இன்னமும் வினைகள் உம்மை அடர்க்காவோ என்னில் –அவை என்னை அடர்க்க வழி இல்லை என்கிறார் –
—————————-
36-இராமானுசன் மன்னு மலர்த் தாள் அயரேன்-என்றீர் –
நாங்களும் இவரை ஆஸ்ரயிக்கும்படி இவர் தம்முடைய ஸ்வபாவம் இருக்கும்படி சொல்லீர் என்ன –அதை அருளிச் செய்கிறார் –

இராமானுசன் மன்னு மலர்த்தாள் அயரேன் -என்றீர் -நாங்களும் அவரை ஆஸ்ரயிக்கப் பார்க்கிறோம் –அவருடைய ஸ்வபாவம் இருந்தபடி சொல்லிக் காணீர் என்று கேட்க
பிரதி பஷத்துக்கு பயங்கரனான திரு வாழி யாழ்வானை-ஆயுதமாக வுடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும் சேஷி யானவன் -உபய சேனா மத்யத்திலே பந்து ச்நேகத்தாலே
அர்ஜுனன் யுத்தா நிவர்த்தனான அன்று -கடலிலே அழுந்தி தரைப் பட்டு கிடக்கிற ரத்னங்களை கொண்டு வந்து-உபகரிப்பாரைப் போலே -வேதாந்த சமுத்ரத்திலே -குப்த்தங்களாய்-ச்லாக்யங்களான அர்த்தங்களை-ஸ்ரீ கீதா சாஸ்திர முகேன – உபகரித்து அருளின பின்பும் -இந்த கலி காலத்திலே லௌகிக ஜனங்கள்
அவசாதத்தாலே கிடக்க -அந்த கீதா ரூபமான அத்யந்த சாஸ்த்ரத்தை வியாக்யானம் பண்ணி உபதேசிகைக்கு-அந்த லௌகிக ஜனங்களை ஸ்ரீ பத்ரிகாச்ரமம் அளவும்
பின் தொடர்ந்த மகா குணம் உடைய பேர் இல்லை கிடீர்-என்று கொண்டு இப்படி இருந்துள்ள எம்பெருமானார் உடைய ஸ்வபாவம் இது என்று அருளிச் செய்கிறார் .

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் -என்றீர்-நாங்களும் இவரை ஆசரிக்கும் படி இவர்தம்முடைய ஸ்வபாவம் இருக்கும் படி சொல்லீர்
என்பாரை நோக்கி எம்பெருமானார் ஸ்வபாவத்தை அருளிச் செய்கிறார் –
—————————
37-இப்படி இருக்கிற இவர் தம்மை நீர் தாம் அறிந்து பற்றின படி என் -என்ன-நான் அறிந்து பற்றினேன் அல்லேன் –
அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்களே -உத்தேச்யர் என்றும் இருக்குமவர்கள் –என்னையும் அங்குத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள்-என்கிறார் –

இப்படி ஆச்ரயண சௌகர்யாபாதகங்களான கிருபாதி குணங்களை நீர் அறிந்த பின்பு இறே ஆஸ்ரயித்தது-இப்படி உமக்கு தெளிவு பிறந்தது என்
என்று கேட்டவர்களைக் குறித்து -முதலிலே நான் அறிந்து ஆஸ்ரயித்தேன் அல்லேன் –எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை அனுபவிக்கும்
பிரிய தமருடைய திருவடிகளிலே அவஹாகித்து-அனுபவிக்கும் ரசஜ்ஜர் தங்களுடைய பரசமர்த்தை ஏக பிரயோஜனதையாலே
என்னைப் பார்த்து அங்குத்தைக்கு ஆளாக்கி அனந்யார்ஹராம்படி பண்ணினார்கள் -அத்தாலே நான் அறிந்தேன் என்கிறார் –

எம்பெருமானாருடைய ஸ்வபாவத்தை எப்படி அறிந்து பற்றினீர்-என்பாரை நோக்கி-அவர் அன்பர் திருவடிகளில் சம்பந்தம் உடைய
ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்னையும் சேர்க்க சேர்ந்தேன்-நானாக அறிந்து பற்றினேன் அல்லேன் –என்கிறார் –
—————————————
38-இப்படி ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேர்க்கும் போதும் -அத்வேஷாதிகள் வேண்டுகையாலே -தத் ப்ரவர்தகனான-ஈஸ்வரன் இறே
இப் பேற்றுக்கு அடி என்று நினைத்து -சாஷாத் நாராயணோ தேவ -இத்யாதிப் படியே –
எம்பெருமானார் தம்மை ஈஸ்வரனாக பிரதி பத்தி பண்ணி –இன்று என்னைப் பொருளாக்கி –திரு வாய் மொழி -10 8-9 –என்கிற பாட்டில்
ஆழ்வார் அருளிச் செய்தால் போலே -இவரும் அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –இவர்களை முன்னிட்டு தம்மை அங்கீகரித்து அருளின எம்பெருமானார் -ஆகையாலே –
இவர் திரு முகத்தைப் பார்த்து -இத்தனை நாள் இவ்வூரிலே நான் வர்திக்கச் செய்தே
என்னை அங்கீகரியாது இருக்கைக்கும் இப்போது அங்கீகரிக்கைக்கும்-ஹேது என் என்று-கேட்கிறார் ஆகவுமாம் –

இப்படி ஆழ்வானை இட்டு அடியேனை திருத்தி சேர்த்து -சேஷத்வத்துக்கு இசைவிப்பித்து –தத் யாதாத்ம்ய ஸீமா பூமியான சரம பர்வதத்திலே
அத்ய அபிநிவிஷ்டனாம் படி பண்ணி யருளின-தேவரீர் -இதற்க்கு முற்காலம் எல்லாம் அந்த ரசத்தை அடியேனுக்கு அனுபவிப்பியாதே வ்யர்த்தமே
விஷயாந்தரங்களிலே வைத்ததுக்கு மூலம் ஏது-பாக்யவான்கள் உடைய வாக்கிலே இடை விடாது சர்வ காலமும் ஸ்துதிகப்படும் எம்பெருமானாரே –
தேவரீர் உடைய க்ருபா பாத்ரம் உள்ளபடி அறியப் பார்த்தால் எத்தனை-தரம் உடையார்க்கும் அரிதாய் இருக்கும் –
தேவரீரே இந்த சூஷ்ம அர்த்தத்தை அருளிச் செய்ய வேணும்-என்றே நேரே கேட்கிறார் –

நல்லோர் ஆள் அவர்க்கு ஆக்கும் போதும் அத்வேஷாதிகள்-த்வேஷம் இன்மை முதலியவை -வேண்டும் அன்றோ –அவைகட்கு ஈஸ்வரன் அன்றோ காரணம்
ஆக இப் பேற்றுக்கு அடி ஈச்வரனே யாதல் வேண்டும் -அந்த ஈஸ்வரன் தானும் –சாஷாத் நாராயணோ தேவ -க்ருத்வா மர்த்யமயீம் தநூம்
மக்நான் உத்தரதே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணி நா -என்று நாராயணன் நேரே ஆசார்யன்-வடிவம் கொண்டு -கீழ்ப்பட்டவர்களை
சாஸ்திரக் கையினால்-கை தூக்கி விடுகிறான்-என்றபடி –நமக்கு ஆசார்யனான எம்பெருமானாரே என்று நினைந்து அவரை நோக்கி
இன்று என்னைப்-பொருள் ஆக்குவதற்கும் முன்பு என்னைப் புறத்து இட்டதற்கும் என்ன ஹேது என்று வினவுகிறார் –
அல்லது –தன்னடியார்களைக் கொண்டு எம்பெருமானார் தன்னை அங்கீகரித்தவர் ஆகையால் அவரை நோக்கி
இத்தனை நாள் நான் இவ்வூரிலேயே இருந்தும் என்னை அங்கீ கரியாதற்கும் இன்று என்னை-அங்கீ கரித்தத்தற்கும் காரணம் என்ன -என்று கேட்கிறார் ஆகவுமாம்-
————————————
39-இப்படி கேட்ட இடத்திலும் ஒரு மாற்றமும் அருளி செய்யக் காணாமையாலே அத்தை விட்டு-செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
ப்ரீதியாலே தம் திரு உள்ளத்தைப் பார்த்து –நமக்கு-எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ –என்கிறார்-

உரையாய் இந்த நுண் பொருளே -என்று இவர் நேர் கொடு நேர் நிற்று கேட்ட அளவிலும் –எம்பெருமானார் ஒரு மாற்றமும் அருளிச் செய்யக் காணாமையாலே
அத்தை விட்டு -அவர் செய்த உபகாரங்களை-அனுசந்தித்து அவற்றை தம் அருகே இருக்கும் பாகவதோரோடே சொல்ல ஒருப்பட்டவாறே -இவ்வளவும்
இவர் தாம் அவர்களைக் குறித்து எம்பெருமானார் உடைய கல்யாண குண வைபவத்தை பிரசங்கித்தார்
ஆகையாலே அவர்களும் அந்த குணங்களில் ஆழம் கால் பட்டு வித்தராய் –இவர் சொல்லும் அத்தை-கேட்கவும் மாட்டாதே பரவசராய் இருக்க
தம்முடைய திரு உள்ளத்தை சம்போதித்து -புத்திர தார் க்ரஹா-ஷேத்திர அப்ராப்த விஷயங்களிலே மண்டி நிஹீனராய் போந்த நமக்கு
அஞ்ஞா னத்துக்கு உடலான துக்கத்தைப் போக்கி-நித்தியமாய் நிரவதிகமாய் இருக்கிற தம்முடைய கல்யாண குண ஜாதம் எல்லாம்
தெளியும் படியான-அறிவைக் கொடுத்து அருளின -எம்பெருமானார் செய்த ரஷணங்கள் பின்னை ஒருவராலே செய்யப் போமோ -என்கிறார் –

உரையாய் இந்த நுண் பொருளே -என்று அமுதனார் கேட்டும் –மறு மாற்றம் காணாமையாலே-அத்தை விட்டு –அவர் செய்த உபகாரங்களை -அனுசந்தித்து
ப்ரீதியாலே -தம் திரு உள்ளத்தைப் பார்த்து –எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ –என்கிறார்-
—————————-
40-எம்பெருமானார் தமக்கு செய்த உபகாரத்தை அருளிச் செய்தார் கீழ்ப் பாட்டில் –இப்பாட்டில் லோகத்துக்கு செய்த உபகாரத்தை அனுசந்தித்து வித்தராகிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்மை ரஷித்த படியை சொல்லி ஹ்ர்ஷ்டராய்க் கொண்டு போந்து –
இதிலே -அர்த்தித்வ நிரபேஷமாக ஸ்ரீ வாமன அவதாரத்திலே -தாள் பரப்பி மண் தாவிய ஈசனை -என்கிறபடியே-சர்வருடைய சிரச்சுகளிலே -ஸ்ரீ பாதத்தை வைத்து
உபகரித்தால் போலே -இவரும் அதிகார நதிகார விபாவம் அற-எல்லார்க்கும் ஸ்வரூப அநு ரூபமான அர்த்தத்தை உபகரித்தார் என்று வித்தர்- ஆகிறார்-

எம்பெருமானார் தமக்கு செய்த உபகாரங்களை அருளிச் செய்தார் கீழ் –இப்பாட்டில் உலகிற்க்குச் செய்த உபகாரத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –
———————————-
41-இப்பாட்டில் எம்பெருமானார் உபதேசத்தாலே லோகம் திருந்தின படியைக் கண்டு-சர்வேஸ்வரன் அநேக அவதாரங்கள் பண்ணித் தன்னைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின
அளவிலும் காண மாட்டாத லவ்கிகர் எல்லாம் எம்பெருமானார் காலத்திலே-யதாஜ்ஞானம் பிறந்து பகவதீயர் ஆனார்கள் என்கிறார் –

கீழ் பாட்டிலே எம்பெருமானார் பண்ணின உபதேச வைபவத்தை சொல்லி -இப்பாட்டிலே பூ லோகத்திலே-பிரகிருதி வச்யராய் இருக்கிற சேதனரை ரஷிக்கைக்காக
சர்வேஸ்வரன் மனுஷ்ய திர்யகாத்யநேக தேக பரிக்ரகம்-பண்ணி எல்லாருக்கும் சுலபனாய் கண்ணுக்கு இலக்காய் நின்றாலும் –
இவன் சாது பரித்ராண அர்த்தமாக அவதரித்தான்-என்று அறிய மாட்டாத லவ்கிகர்களே–நமக்கு பிதாவான எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர் ப்ரசாதத்தாலே-
சம்யக் ஜ்ஞான நிஷ்டராய் -நாராயணனே நமக்கு சர்வ பிரகாரத்தாலும் வகுத்த சேஷி என்று தெளிந்து -அவனுக்கு தங்களை சேஷமாக்கி வைத்தார்கள் என்று அருளிச் செய்கிறார் –

எம்பெருமானார் செய்த உபதேசத்தாலே உலகம் திருந்தின படியைக் கண்டு-திருமகள் கேள்வன்-பல அவதாரங்கள் புரிந்து கண்ணிற்கு இலக்காகி நிற்பினும்
கண் எடுத்துப் பார்க்க மாட்டாத உலகத்தவர் அனைவரும் -எம்பெருமானார் காலத்தில்-மெய்யறிவு பிறந்து அவ்விறைவனை சார்ந்தவர்கள் ஆனார்கள் என்கிறார் –
——————
42-பகவத் அவதாரங்களில் திருந்தாதவர்கள் எல்லாரும் எம்பெருமானார் உடைய அவதாரத்தாலே-திருந்தினார்கள் என்றார் கீழ் -விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற
வென்னைத் தம்முடைய பரம கிருபையால்-வந்து எடுத்து அருளினார் என்று தம்மை விஷயீகரித்த படியை அனுசந்தித்து தலை-சீய்க்கிறார் இதில்

கீழில் பாட்டிலே ஈஸ்வரன் அவதரித்து உபதேசித்த இடத்திலும் -திருந்தாத–லவ்கிகர் –எம்பெருமானார் அவதரித்த பின்பு திருந்தி -விலஷணராய்-பகவதீயர் ஆனார்கள் -என்கிறார் –
இப்பாட்டிலே –ஆபாத ரமணீய வேஷைகளான தருணீ ஜனங்களுடைய ஸ்தனங்களிலே பத்தமான ப்ரீதியாலே-ஆழம்கால் பட்டு நசித்துப் போகிற என் ஆத்மாவை –
ஸ்ரீயபதியான -திருவரங்க செல்வனாரே-சகல ஆத்மாக்களுக்கும் வகுத்த சேஷி என்று உபதேசிக்கும்படியான ஞான வைசையத்தை உடையராய்
நிர்துஷ்டரான எம்பெருமானார் -இப்போது அந்த லவ்கிகர் எல்லார் இடத்திலும் பண்ணின தம்முடைய-ஸ்வாபாவிக கிருபையை -அடியேன் ஒருவன் இடத்திலும்
கட்டடங்க பிரவஹித்து -விஷயாந்திர-பிராவணயத்தில் கர்த்தத்தில் நின்றும் உத்தரித்தார் கண்டாயே -என்று தலை சீய்க்கிறார்

மாதவன் அவதாரங்களிலும் திருந்தாவதர்கள் எல்லாரும் எம்பெருமானார் அவதாரத்தாலே-திருந்தினார்கள் என்றார் கீழ்ப் பாட்டிலே -விஷய ப்ரவணனாய்
நசித்துப் போகிற என்னைத் தமது பரம கிருபையால் எம்பெருமானார் வந்து எடுத்து அருளினார் என்று தமது பண்டைய இழி நிலையையும்
இன்று எய்திய பேற்றின் சீர்மையையும் பார்த்துப்பெருமைப்பட்டுப் பேசுகிறார் –இந்தப் பாட்டிலே –
——————————-
43-இப்படி தம்மை விஷயீ கரிக்கையால் வந்த ப்ரீதியாலே -லவ்கிகரைப் பார்த்து –எல்லாரும் எம்பெருமானார் திரு நாமத்தை சொல்லும் கோள்-
உங்களுக்கு எல்லா நன்மையையும் உண்டாகும் –என்கிறார்-

இப் பாட்டிலே -எம்பெருமானார் -தம்முடைய தோஷங்களைப் பாராதே -தம்மை-விஷயீ கரித்த வாத்சல்ய குணத்திலே ஈடுபட்டு -அந்த ப்ரீதி தலை மண்டை இட்டு
லோகத்தார் எல்லாரையும் –உஜ்ஜீவிப்பிக்க வேணும் பர சமர்த்தி பரராய் -அவர்களை சம்போதித்து -சம்சார மக்னரான உங்களுக்கு-கரை கண்ட நான் -உபதேசிக்கிறேன்
தர்ம பிரத்வேஷியான கலியை வைதேசிகமாக போக்கக்-கடவதான சதுரஷரி மந்த்ரத்தை அதிகரியும் கோள் ..உங்களுக்கு சகல சுபங்களும் தன்னடையே-வந்து சேரும் என்கிறார் –

இப்படி தம்மைக் கை தூக்கி விட்ட ப்ரீதியாலே உலகினரை நோக்கி-எம்பெருமானார் திரு நாமத்தை சொல்லும் கோள்
உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும் -என்கிறார்..
———————————–
44-இப்படி உபதேசித்த விதத்திலும் ஒருவரும் இதில் மூளாமையாலே-அவர்கள் உடைய படியை அனுசந்தித்து இன்னாதாகிறார்

கீழ் பாட்டில் லோகத்தார் எல்லாருக்கும் அவருடைய அதிகார நதிகார விபாகம் பாராதே அத்யந்த விலஷணமான-உபாயத்தை உபதேசித்ததாலும்
அத்தை அத்யவசிக்க மாட்டாதே புருஷார்த்தம் எது என்று சந்தேகியா நின்று கொண்டு –சிஷிதமான சப்த ராசியால் நிறையப் பட்டதாய் –
அத்விதீயமாய் இயலும் இசையும் சந்தர்ப்பமும் கூடிய விலஷணமான இப் பிரபந்தமும் -ரிகாதி வேத சதுஷ்டயமும் -அபரிமாய் தத் உப பிரஹமணமான
தர்ம சாச்த்ரமாகிற இவற்றை அடைவே ஆராய்ந்து இருக்குமவராய் -சத்துக்களாலே அடைவு கெட ஸ்துதிக்கும்படியாய் இருக்கிற எம்பெருமானாருடைய
திருநாமத்தை அப்யசியாதே போனார்களே என்று இன்னாதாகிறார்-

இப்படி இவர் உபதேசித்தும் படியில் உள்ளோரில் ஒருவரும் இவர் வார்த்தையின்படி –இராமானுச நாமத்தை சொல்ல முற்படாமையாலே –
அவர்கள் தன்மையை நினைந்து வருந்திப் பேசுகிறார் –
——————————
45-இப்படி விமுகராய் இருந்த சேதனரிலே-அந்ய தமராய் இருந்த தம்மை நிர்ஹேதுகமாக விஷயீகரித்துத் தம் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று
விஸ்வசித்து இருக்கும்படி-பண்ணின உபகாரத்தை யனுசந்தித்து -தேவரீர் செய்து அருளின உபகாரம்வாசகம் இட்டுச்-சொல்ல ஒண்ணாது -என்கிறார் –

கீழில் பாட்டிலே அஞ்ஞராய் போருகிற மனுஷ்யர் படியை சொல்லி – விஷண்ணராய் -இதிலே-அப்படிப்பட்ட அஞ்ஞரில் அந்ய தமராய் போந்த தம்மை
நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து –தம்முடைய திருவடிகளே-ப்ராப்யமும் பிராபகமும் என்று விச்வசித்து இருக்கும்படி பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து
அப்படிப்பட்ட பிரபாவத்தை கொண்டாடுகிறேன் என்று -சொல்ல ஒருப்பட்டால் -அதுவே -நமக்கு வாசா மகோசரமாய் இருந்தது என்கிறார் –

கல்லார் அகலிடத்தோர் என்று கூறப் பட்டோரில் ஒருவராய் இருந்த தம்மை –ஹேது எதுவும் இன்றி -ஏற்று அருளித் தம் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக
நம்பும்படி செய்த எம்பெருமானார் உடைய உபகாரத்தை அனுசந்தித்து அவரை நோக்கித் தேவரீர் செய்து அருளின உபகாரம் பேசும் திறத்தது அன்று -என்கிறார் .
—————————
46-எம்பெருமானார் செய்து அருளின உபகாரத்தை யனுசந்தித்து அதுக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகிறார்-

கீழ்ப் பாட்டில் சொல்லுகிறபடியே சமஸ்த கல்யாண குணாத் மகரானவர் -தம்மை-இவர்க்கு முற்றூட்டாக கொடுக்கையாலே -அந்த உபகாரத்தை அனுசந்தித்து
விஸ்ரப்பத்தராய் கொண்டு -துச்தர்க்கங்களாய் -கேவலம் உக்தி மாத்திர சாரங்களாய் இருக்கிற -பாஹ்ய சமயங்கள் ஆறும் -குத்ருஷ்டி சமயங்கள் ஆறும் –
அடியோடு நசிக்கும்படி பூ லோகத்தில் நம் ஆழ்வார் அருளிச் செய்த த்ரமிட வேதத்தை சார்த்தமாக அறிந்தவராய் -சகல திக் வ்யாபையான பிரதையை உடையவராய்
அறிவு கேடனான நான் விச்வசிக்கும்படி -என்னுடைய-மனசிலே ஸ்தாவர பிரதிஷ்டையாக புகுந்து அருளின -எம்பெருமானாரை -ஆஸ்ரயிக்கிறோம் –என்கிறார் –

எம்பெருமானார் செய்து அருளிய உபகாரத்திற்கு தோற்று-அவர் திருவடிகளில் வணங்குகிறார்-
—————————
47-மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தான் -என்றார் கீழ் .-லோகத்தில் உள்ளவர்களுக்கு தத்தவ ஸ்திதியை யருளிச் செய்து –பகவத் சமாச்ரயண ருசியை
ஜநிப்பிக்குமவர் தம்மளவில் பண்ணின விசேஷ விஷயீகாரத்தை-யனுசந்தித்து -இப்படி விஷயீகரிக்க பெற்ற எனக்கு சத்ருசர் இல்லை என்கிறார் இதில் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே பிரகாசித்து உஜ்ஜ்வலமாக-அவரை வணங்கினோம் என்று சொல்லி –இதிலே
லோகத்தார் எல்லாரையும் குறித்து -சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன் கோயிலிலே சந்நிகிதனாய் இருந்தான் -அவனை ஆஸ்ரியும் கோள் என்று
பரம தர்மத்தை-உபதேசித்த உபகாரகன் -எம்பெருமானார் –என்னுடைய ஆர்த்த அபராதங்களை நசிப்பித்தி திவாராத்ரி விபாகம் அற
என்னுடைய ஹ்ர்த்யத்திலே சுப்ரதிஷ்டராய் -இவ் இருப்புக்கு சதர்சம் ஒன்றும் இல்லை என்னும்படி எழுந்தருளி இருந்தார் –
இப்படி ஆனபின்புதமக்கு சர்தர்சர் ஒருவரும் இல்லை என்கிறார்-
———————————
48-எனக்காரும் நிகரில்லை -என்று இவர் சொன்னவாறே எம்பெருமானார் இவரைப் பார்த்து -நீர் நம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை அவலம்பித்தல்
-நாம் உம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை-விரும்புதல்-செய்யில் இந்த ஹர்ஷம் -உமக்கு நிலை நிற்க மாட்டாதே என்ன –என்னுடைய நைச்யத்துக்கு-
தேவரீர் கிருபையும் -அந்த கிருபைக்கு என்னுடைய நைச்யமும் ஒழிய புகல் இல்லையாய் இருக்க -வ்யர்த்தமே நாம் இனி அகலுகைக்கு காரணம் என் –என்கிறார் –

இராமானுசன் இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே நிறைந்து-ஒப்பற விருந்தான் -எனக்காரும் நிகர் இல்லை -என்று இவர் சொன்னவாறே
எம்பெருமானார் இவரைப் பார்த்து -நீர் -நம்மை விட்டு காலாந்தரத்தில் வேறு ஒரு விஷயத்தை விரும்புதல் -நாம் உம்மை விட்டு வேறு ஒரு
விஷயத்தை ஆதரித்தல் செய்யில் இந்த ஹர்ஷம் நிலை நிற்க மாட்டாதேஎன்ன –என்னுடைய நைசயத்துக்கு-தேவரீருடைய கிருபையும்
அந்த கிருபைக்கு என்னுடைய நைச்யமே ஒழிய -புகல் இல்லையாய் இருக்க -வ்யர்த்தமே நாம் அந்ய பரர் ஆகைக்கு காரணம் என்கிறார் –

எனக்காரும் நிகரில்லை என்று களித்து கூறும் அமுதனாரை -நமிருவரில் எவரேனும் ஒருவர் மற்று ஒருவரை விட்டு விளகிடின் உமது இக்களிப்பு
நிலை நிற்க மாட்டாதே -என்று எம்பெருமானார் வினவ –என்பால் உள்ள நீசனாம் தன்மைக்குத் தேவரீர் அருள் அன்றி வேறு புகல் இல்லை –
அவ்வருளுக்கும் இந்நீசத் தண்மை யன்றி வேறு புகல் இல்லை-ஆக இனி நாம் வீணாக என் அகலப் போகிறோம் –என்கிறார் –
———————————–
49-எம்பெருமானார் விரோதிகளை நிரசித்துக் கொண்டு தம் திரு உள்ளத்தின் உள்ளே நிரந்தர வாசம்-பண்ணி அருளுகிற மகா உபகார அனுசந்தானத்தால்
வந்த ப்ரீதியையும் -அந்த ப்ரீதியினுடைய அஸ்த்தையர் ஹேது வில்லாமையையும் -அருளிச் செய்தார் கீழ் இரண்டு பாட்டாலே –
இதில் –அவர் திருவவதரித்து அருளின பின்பு-லோகத்துக்கு உண்டான சம்ருத்தியை அனுசந்தித்து-இனியராகிறார்

எம்பெருமானார் தம்முடைய பிராப்தி பிரதிபந்தங்களை எல்லாம் -போக்கி தம் திரு உள்ளத்திலே-நிரந்தர வாசம் பண்ணுகிற மகோ உபகாரத்தால்
வந்த ப்ரீதி பிரகர்ஷத்தையும் -அந்த ப்ரீதி எப்போது உண்டாகக் கூடுமோ -என்று அதி சங்கை பண்ணினவரைக் குறித்து -அதினுடைய சாஞ்சல்ய ஹேது இல்லாமையும்
கீழ் இரண்டு பாட்டுக்களாலே அருளிச் செய்து -இதிலே –எம்பெருமானார் திருவவதரித்து அருளின பின்பு -வேதத்துக்கு உண்டான-சம்ர்தியையும்
துர்மதங்களுக்கும் கலி தோஷத்துக்கும் உண்டான விநாசத்தையும் அனுசந்தித்து -இனியராகிறார்

இரு வினையின் திறம் செற்று இரவும் பகலும் விடாது என் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற-இருந்தான் -எனக்காரும் நிகரில்லையே -என்று
எம்பருமானார் செய்த மகா உபகாரத்தை-அனுசந்தித்தனால் வந்த ப்ரீதியையும் –இனி நாம் பழுதே யகலும் பொருள் என் -பயன் இருவோமுக்கும் ஆனபின்னே –என்று
அந்த ப்ரீதி குலைதலுக்கு காரணம் இல்லாமையின் நிலை நின்றமையையும்-கீழ் இரண்டு பாட்டுக்களாலே கூறினார் –
இதில்-எம்பெருமானார் அவதரித்து அருளின பின்பு உலகிற்கு உண்டான நன்மைகளை-கூறி இனியராகிறார் –
—————————-
50-தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும் -என்று-எம்பெருமானாற்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ப்ராவண்ய அதிசயத்தை-அனுசந்தித்தார் கீழ் –
அந்த பிரசங்கத்திலே தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளை-அனுசந்தித்து -தத் ஸ்வபாவ அனுசந்தானத்திலே வித்தராகிறார் -இதில் –

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தான் அதில் மன்னும் -என்று எம்பெருமானாருக்கு-பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தை அனுசந்தித்தார் கீழ்
இதில் அந்த பிரசங்கத்தில் தமக்கு உத்தேச்யரான எம்பெருமானார் திருவடிகளை அனுசந்தித்து –
அவற்றினுடைய ஸ்வரூப ஸ்வபாவன்களை அடைவே அருளிச் செய்து கொண்டு -வித்தார் ஆகிறார் –

எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு முன் பாசுரத்தில்-கூறப்பட்டது .
இங்கு தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளின் ஸ்வபாவத்தை-அனுசந்தித்து ஈடுபாடுகிறார் .-
————————–
51-எம்பெருமானார் இந்த லோகத்தில் அவதரித்து அருளிற்று என்னை யடிமை கொள்ளுகைக்காக -வேறு ஒரு ஹேதுவும் இல்லை -என்கிறார்.-

பால்யமே பிடித்து -மாதுலேயன் என்று நினையாதே ரஷகன் என்றே அத்யவசித்து இருக்கிற-பஞ்ச பாண்டவர்களுக்கு பிரதி பஷம் அழியும்படி சாரத்தியம்
பண்ணின கிருஷ்ணனுடைய ஆனைத்-தொழில்கள் எல்லாம் தெளிந்த ஸ்வரூப ஞானம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆராவமுதாய்-இருக்கும் எம்பெருமானார் –
இந்த பாப பிரசுரமான பூ லோகத்திலே -அவதரித்தது -ஆராய்ந்து பார்த்தால்
என்னை ஆளுகைக்காகவே என்று நிச்சிதமாய்த்து இத்தனை ஒழிய வேறு ஒரு ஹேது இல்லை என்கிறார் –

என்னை அடிமை கொள்வதற்காகவே எம்பெருமானார்-அவதாரம் செய்து அருளினார் -என்கிறார்-
——————————
52-என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் என்னை ஆள வரியனான-என்னை ஆளுகைக்காக வந்து அவதரித்தார் என்றீர் .
இவர் தாம் இப்படி அகடிதகடநா சமர்த்தரோ என்ன –அவர் செய்த அகடிதகடனங்களை-அருளிச் செய்கிறார் .

என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் ஆள அரிய என்னை-ஆள வந்து அவதரித்தார் என்று அவரைக் கொண்டாடா நின்றீர்
-இந்த அவதாரத்திலே உம்மை ஒருவரையே-ஆளா நின்றாரோ என்ன -முதல் முன்னம் உத்தேசித்து அவதரித்தது என்னை ஆளுக்கைக்காகவே -ஆகிலும்
இவர் அவதரித்துஅருளி -அவைதிக சமயங்களாலே நசித்துப் போன லோகங்களை எல்லாம் சகிக்க மாட்டாதே -அந்த அவைதிக மதங்களை நசிப்பித்து –
தம்முடைய கீர்த்தியாலே லோகங்கள் எல்லாவற்றிலும் வியாபித்து -க்ரூர பாவியான என் பக்கலிலே பிரவேசித்து -என்னுடைய பாபங்கள் எல்லாம் நசித்துப் போகும்படி பண்ணி –
பின்பு பெரிய பெருமாள் உடைய அழகிய திருவடிகளோடு சம்பந்திப்பித்தார் -இப்படி ஒரு கார்யத்தை உத்தேசித்து-அநேக கார்யங்களை செய்தார் –
இப்படி இந்த எம்பெருமானார் செய்து அருளும் ஆச்சர்யங்களைக் கண்டீரே-என்று வித்தார் ஆகிறார்-

ஒருவராலும் ஆள முடியாத என்னை ஆண்டதுபோலே –இன்னும் பல பொருந்தாவற்றையும் பொருந்த விடும் திறமை -எம்பெருமானார் இடம் உண்டு என்கிறார் .
———————-
53-பார்த்தன் அறு சமயங்கள் பதைப்ப -என்று பாஹ்ய சமயங்களை குலைய பண்ணி -இவ்விபூதியில்-இவர் ஸ்தாபித்த வர்த்தம் ஏது என்ன –
சகல சேதன அசேதனங்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷணமான-அர்த்தத்தை ஸ்தாபித்து அருளினார் -என்கிறார் .

பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப -என்று பாஹ்ய சமயங்களை குலைய பண்ணினார் என்றும் -அரங்கன் செய்ய தாளிணை யோடு ஆர்த்தான் -என்று
பரம புருஷார்த்த சாம்ராஜ்யத்தை கொடுத்தார் என்றும் -சொன்னீர் -அம் மாத்ரமேயோ -அவர் செய்தது என்னில் -அவ்வளவு அன்று –
சகல அபேஷிதங்களையும் -1–அபேஷா நிரபேஷமாக கல்பகம் போலே கொடுக்குமவராய் –2-சௌசீல்யம் உடையவராய் –3-அத்ய ஆச்சரிய பூதராய்
-4–ஆர்ஜவ குண யுக்தரான எம்பெருமானார் -சகல லோகங்களிலும் இருந்து உள்ள சகல ஆத்மாக்களும் சர்வ
ஸ்மாத் பரனுக்கே சேஷ பூதர் என்று இந்த லோகத்திலே பிரதிஷ்டிப்பித்து அருளினார் –

அறு சமயங்கள் பதைப்ப பார்த்து இவர் இவ்வுலகத்தில் நிலை நாட்டின பொருள் ஏது என்ன –எல்லாப் பொருள்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் -என்ற
இந்த நற் பொருளை நிலை நாட்டி யருளினார்-என்கிறார்
—————————-
54-இப்படி எம்பெருமானார் யதார்த்த ச்த்தாபனம் பண்ணி யருளின ஸ்வபாவத்தைக் கண்டு-பாஹ்ய சமயங்களுக்கும் வேதத்துக்கும்
திரு வாய் மொழிக்கும் உண்டான ஆகாரங்களை அருளிச் செய்கிறார்

கீழ் எல்லாம் எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணினார் என்றும் -வேதொத்தரணம்-பண்ணினார் என்றும் -ஆழ்வார்களுடைய திவ்ய சூக்திகளிலே
தானே அவஹாகித்தார் என்றும் -சொன்னீர் -ஆன பின்பு -அத்தால் துர் மதங்களுக்கும் -வேதங்களுக்கும் -ஆழ்வாருடைய அருளிச் செயல்களுக்கும்
உண்டான-ஆகாரத்தை சொல்ல வேண்டாவோ என்ன -துர் மதங்கள் அடங்கலும் வேரோடு கூட நசித்துப் போனதன –வேதமானது பூ லோகத்தில் எனக்கு
யாரும் நிகர் இல்லை -என்று கர்வித்து இருந்தது -அருளிச் செயல்கள் எல்லாம்-அனைவரும் உஜ்ஜீவிக்கும்படி நித்யாபிவ்ர்த்தங்களாய் கொண்டு இருந்தன –என்கிறார் –

நற்பொருள் நாட்டிய தன்மை கண்டு -புற மதங்களும் -வேதங்களும் -திருவாய்மொழியும்-அடைந்த நிலைகளை -இதில் அருளிச் செய்கிறார் .
————————–
55-எம்பெருமானார் ஸ்வபாவத்தைக் கண்டு வேதம் கர்வோத்தரமாய் ஆயிற்று என்றார் கீழ் -இப்படி ஒருவர் அபேஷியாது இருக்கத் தாமே –சகல வேதங்களும்
பூமியிலே நிஷ்கண்டமாக நடக்கும் படி பண்ணின ஔதார்யத்திலெ ஈடுபட்டு அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை யாள உரிய குடி –என்கிறார் இதில் –

கீழ்ப் பாட்டிலே வேதமானது எம்பெருமானாருடைய வைபவத்தை கண்டு கர்வித்து தனக்கு ஒருவரும் லஷ்யம் ஆக மாட்டார்கள் என்று பூ லோகத்தில் சஞ்சரியா நின்றது என்றார்-
இதிலே அப்படி அந்த வேதங்களை ஒருவர் அபேஷியாது இருக்க தாமே நிஷ்கண்டனமாக ப்ரவர்ப்பித்த-ஔதார்யத்தை உடையராய் -சகல ஜன மநோ ஹரமாய் –
பரிமளத்தை உடைய திவ்ய உத்யானங்களாலே-சூழப்பட்டு -தர்சநீயமான கோயிலுக்கு ஸ்வாமியான பெரிய பெருமாளுடைய அடியவரான ஆழ்வார்களை-
கொண்டாடுகிற எம்பெருமானார் –இந்த ஸ்வபாவன்களிலே ஈடுபட்டு ஆஸ்ரயித்து இருக்குமவர்களுடைய குலத்தார் -எங்களை ஆளக்கடவ ஸ்வாமித்வத்தை உடைய குலத்தார் என்கிறார் –

நாரணனைக் காட்டிய வேதம் களிப்புரும்படியாகச் செய்த எம்பெருமானார் உடைய வள்ளன்மையில்-ஈடுபட்டு
அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை ஆள்வதற்கு உரிய குடி –என்கிறார் –
———————————-
56-கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடி -என்று இவர் சொன்னவாறே -முன்பும் ஒரோ விஷயங்களில் நின்றால் இப்படி யன்றோ நீர் சொல்லுவது .
இதுவும் அப்படி அன்றோ -என்ன-எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு என் வாக்கு மனச்சுக்கள் இனி வேறு ஒரு விஷயம் அறியாது -என்கிறார் .

கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே -என்று சொன்னவாறே -நீர் இப்போது-எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை அனுபவித்து
வித்தராய் சொன்னீர் -நீர் விஷயாந்தரங்களை-விரும்பின போது முற்காலத்தில் அப்படியே அன்று சொல்லுவது -ஆகையாலே உமக்கு இது ஸ்வபாவமாய் விட்ட பின்பு
இவரையே பற்றி இருக்கிறேன் என்ற இது நிலை நிற்க கடவதோ என்று சிலர் ஆட்சேபிக்க -அவர்களை குறித்து-
நான் துர்வாசனையாலே விஷயாந்தரங்களை விரும்புவதாக யத்நித்தேன் ஆகிலும் என்னுடைய வாக்கும்-மனசும் அவற்றை விரும்ப இசையாதே இருந்தது -என்கிறார் –

கொண்டலை மேவித் தொழும் குடி எங்கள் கோக்குடி எனபது நீர் பற்றின ஒவ் ஒரு விஷயத்திலும்-தனித் தனியே உணர்ச்சி வசப்பட்டு பேசினது போனது அன்றோ –
அது போலே இதுவும் உணர்ச்சி வசப்பட்ட பேச்சாய் நிலை நிற்காதே -என்ன –எம்பெருமானாரை பற்றின பின்பு -மற்று ஒரு விஷயத்தை –
என் மனம் பற்றி நினையாது -என் வாக்கு உரையாது -என்கிறார் –
——————————
57-இனி என் வாக்கு உரையாது -என் மனம் நினையாது -என்பான் என் -விபூதி இதுவாகையாலே அஞ்ஞானம் வரிலோ -என்ன
எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்த பின்பு -விவேகம் இன்றியே -கண்டது ஒன்றை-விரும்பக் கடவ பேதைத் தனம் ஒன்றும் அறியேன் -என்கிறார் –

-இனி என் வாக்கு உரையாது -என் மனம் நினையாது மற்று ஒன்றையே -என்றீர் -இருள் தரும் மா ஞாலத்திலே -இந் நாளிலே இந்த நியமம் நிலை நிற்குமோ -என்ன –
சஞ்சலம் ஹி மன-என்று மனச்சு ஒரு விஷயத்தில் தானே சர்வ காலமும் நிற்க மாட்டாது இறே -ஆகையாலே மற்றொரு காலத்திலே மனச்சு வ்யபிசரித்து
அஞ்ஞாநத்தை விளைத்தாலோ என்று ஆஷேபித்தவர்களைக் குறித்து -நீங்கள் சொன்னதே சத்யம் -ஆகிலும் நான் கீழே இழந்து போன நாள் போல் அன்று இந் நாள் –
இப்போது தம்தாமுடைய பரமை ஏகாந்த்யத்தாலே ஸ்ரீ ரங்கநாதன் உடைய பரம போக்யமான திருவடிகளுக்கு அடிமைப் படுக்கையே பரம புருஷார்த்தம் என்று அத்யவசித்து
இருக்குமவர்களையே தமக்கு பந்து பூதராக அங்கீ கரித்து கொண்டு பிரபன்ன குல உத்தேச்யராய் -சர்வ தபச்சுக்களிலும் வைத்துக் கொண்டு –
விலஷணமான தபசான சரணாகதி தர்மத்திலே நிஷ்டர் ஆனவர்கள் -தம்முடைய வைபவத்தை சொல்லி புகழும்படியான எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்தேன் –
ஆன பின்பு ப்ராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே கண்டதொன்றை விரும்பக் கடவதான அஞ்ஞாநமானது என் இடத்தில் சேரக் கண்டிலேன் -என்கிறார் –

என் வாக்கும் மனமும் மற்று ஒன்றை இனி உரையாது நினையாது என்னும் உறுதி எங்கனம் கூடும் -இருள் தரும் மா ஞாலம் அன்றோ –
மீண்டும் அறியாமை வாராதோ -என்பாரை நோக்கி –இன் நானிலத்தில் எம்பெருமானாரை நான் பெற்ற பின்பு நன்மை தீமைகளைப் பகுத்து அறியாது
கண்டதொன்றை விரும்பும் பேதைமை ஒன்றும் அறியேன் –என்கிறார் –
————————-
58-கீழே பல இடங்களிலும் எம்பெருமானார் பாஹ்ய மத நிரசனம் பண்ணின ஸ்வபாவத்தை-அனுசந்தித்து வித்தரானார் –
குத்ருஷ்டி நிரசனம் பண்ணின படியை அனுசந்தித்து வித்தார் ஆகிறார் இதில் –

பல இடங்களிலும் -வேத பாஹ்ய சமயங்கள் பூ லோகத்தில் நடையாடாதபடி எம்பெருமானார்-சாஸ்திர முகத்தாலே அவர்களோடு பிரசங்கித்து –
அவர்களை சவாசனமாக நிரசித்த வைபவத்தை கொண்டாடினார்-
இதிலே -கட்டப் பொருளை மறைப் பொருள் என்று சொல்கிற குதர்ஷ்டிகளை வேதாந்த வாக்யங்களாலே பிரசங்கம்பண்ணி ஜெயித்தவருடைய வைபவத்தை கொண்டாடுகிறார் –

கீழே தம் பேதைமை தீர்ந்தமை கூறினார் -இங்கே வேதப் பொருள் கூறுவதில் வரும் பேதைமை தீர்ந்தமையைக் கூறுகிறார் .
புறச் சமயங்களை களைந்த ஸ்வபாவம் கீழ்ப் பல கால் ஈடுபாட்டுடன் கூறப்பட்டது –குத்ருஷ்டி மதம் களைந்தபடி இங்கே ஈடுபாட்டுடன் அனுசந்திக்கப் படுகிறது
———————————
59-இவர் இப்படி வித்தராகிற இத்தைக் கண்டவர்கள் -இவர் இது செய்திலர் ஆகிலும் -சேதனர் பிரமாணங்களைக் கொண்டு நிரூபித்து
-ஈஸ்வரன் சேஷி-என்று அறியார்களோ -என்ன –கலியுக பிரயுக்தமான அஞ்ஞான அந்தகாரத்தை எம்பெருமானார் போக்கிற்றிலர் ஆகில்
ஆத்மாவுக்கு சேஷி ஈச்வரனே என்று நிரூபித்து ஒருவரும் அறிவார் இல்லை-என்கிறார் –

எம்பெருமானார் வேத உத்தாரணம் பண்ணி அருளினார் என்றும் -தத் அர்த்த-உத்தாரம் பண்ணி அருளினார் என்றும் கீழ் எல்லாம் படியாலும் சொன்னீர் —
அவர் இப்படி செய்தார் ஆகிலும் -பிரமாதக்களான சேதனரும் நித்தியராய் -பிரமாணங்களான வேதமும் நித்தியமாய் இருக்கையாலே -அவர்கள்
அந்த வேதத்தை அடைவே ஓதி -தத் ப்ரதிபாத்யனான நாராயணனே ஆத்மாக்களுக்கு சேஷி என்று தெளிந்து -உஜ்ஜீவிக்கலாகாதோ என்று சொன்னவர்களைக் குறித்து
கலி இருளானது லோகம் எல்லாம் வியாபித்து-தத்வ யாதாம்ய ஜ்ஞானத்துக்கு பிரதிபந்தகமாயிருக்கையாலே –எம்பெருமானார் திருவவதரித்து -சகல
சாஸ்திரங்களையும் அதிகரித்து -அவற்றினுடைய நிரவதிக தேஜச்சாலே அந்த கலி பிரயுக்தமான அஞ்ஞான-அந்தகாரத்தை ஒட்டிற்றிலர் ஆகில் –
நாராயணன் சர்வ சேஷி என்று இந்த ஜகத்தில் உள்ளோர் ஒருவரும்-அறியக் கடவார் இல்லை என்கிறார் –

அத்வைதிகளை இங்கனம் வாதில் வென்றிலர் ஆயினும் -அறிவாளர்கள் பிரமாணங்களைக் கொண்டு -நாராயணனே ஈஸ்வரன் ஆதலின் உலகமாம் உடலை
நியமிக்கும் ஆத்மா வான சேஷி என்று அறிந்து கொள்ள-மாட்டார்களோ -என்று தமது ஈடுபாட்டை கண்டு கேட்பாரை நோக்கி -கலிகால வேதாந்தங்கள் ஆகிய
அத்வைதங்களாம் அக இருள் உலகு எங்கும் பரவி உள்ள இக் கலி காலத்தில்-எம்பெருமானார் அவ் விருளைப் போக்காவிடில் —
ஆத்மாவுக்கு ஆத்மாவான சேஷி ஈச்வரனே -என்று எவரும்-நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார் –
————————–
60-இப்படி எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை இவர் அருளிச் செய்ய கேட்டவர்கள்-அவர் தம்முடைய பக்தி வைபவம் இருக்கும்படி என் -என்ன –
பகவத் பாகவத விஷயங்களிலும்-தத் உபய வைபவ பிரதிபாதிகமான திருவாய் மொழியிலும்-அவர்க்கு உண்டான ப்ரேமம் இருக்கிற படியை-அருளிச் செய்கிறார் –

கீழ் எல்லாம் எம்பெருமானாருடைய வேத மார்க்க பிரதிஷ்டாப நத்தையும் -பாஹ்ய மத-நிரசன சாமர்த்த்யத்தையும் -வேதாந்தார்த்த பரி ஜ்ஞானத்தையும் –
அந்த ஜ்ஞானத்தை உலகாருக்கு எல்லாம்-உபதேசித்த படியையும் அருளிச் செய்து -இதிலே அந்த ஜ்ஞான பரிபாக ரூபமாய்க் கொண்டு பகவத் விஷயத்திலும் –
அவனுக்கு நிழலும் அடிதாருமாய் உள்ள பாகவதர் விஷயத்திலும் -தத் உபய வைபவ பிரதிபாதகமான-திருவாய் மொழியிலும் -இவருக்கு உண்டாய் இருக்கிற
நிரவதிகப் பிரேமத்தையும்-இம் மூன்றின் உடைய வைபவத்தையும் சர்வ விஷயமாக உபகரிக்கைக்கு உடலான இவருடைய ஔதார்யத்தையும் அருளிச் செய்கிறார் –

எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை கேட்டு அறிந்தவர்கள் -பக்தி வைபவத்தையும்-கேட்டு அறிய விரும்புகிறோம் என்ன -பகவான் இடத்திலும்
பாகவதர்கள் இடத்திலும் -அவ் இருவர் பெருமையும் பேச வந்த திருவாய் மொழி இடத்திலும் -அவருக்கு உண்டான-ப்ரேமம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் .
இனி புக்கு நிற்கும் என்பதனை -வினை முற்றாக்கி -பிறருக்கு உபதேசிப்பதாக கொள்ளாது -நிற்கும் குணம் என்று பெயர் எச்சமாக கொண்டு –
ஞான வைபவம் பேசினதும் தாமே பக்தி வைபவம் பேசி ஈடுபடுகிறார் என்னலுமாம் –
————————–
61-குணம் திகழ் கொண்டல்-என்று இவருடைய குணத்தை ச்லாகித்தீர் -இவர் தம்முடைய குண வைபவம் இருக்குபடி என் -என்ன -அது இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –

குணம் திகழ் கொண்டல் -என்று இவர் தம்முடைய குணங்களைக் கொண்டாடினீர் -அவற்றினுடைய வைபவம் இருக்கும்படி எங்கனே என்று கேட்டவர்களைக் குறித்து –
அத்யந்த க்ரூர பாவியாய் -சம்சார கர்த்தத்திலே அழுந்து கிடக்கிற என்னை அர்த்தித்வ நிரபேஷமாக-தம்முடைய பரம கிருபையாலே தாமே நான் இருந்த இடம் தேடி வந்து
என்னை தமக்கு சேஷமாம்படி திருத்தி ரஷித்து அருளின பின்பும் -பராங்குச பரகாலநாத யாமுநாதிகள் எல்லாம் தம் பக்கலிலே விசேஷ பிரதிபத்தி-பண்ணும்படி இருப்பாராய்
பெரிய பெருமாள் திருவடிகளிலே சகல சேதன உஜ்ஜீவன விஷயமாக செய்யப்பட-சரணாகதி யாகிற மகா தபஸை உடையவரான –எம்பெருமானார் உடைய
கல்யாண குணங்கள் சமஸ்த திக்கிலும்-வ்யாப்தங்களாய்-அத்யந்த ஔஜ்வல்ய சாலிகளாய் கொண்டு -பூமியிலே எங்கும் ஒக்க காணப்படுகின்றன -என்கிறார் –

குணம் திகழ் கொண்டல் என்று தம் குணத்தை எல்லார் திறத்தும் வழங்கும் வள்ளல் என்று வருணித்தீர் -அங்கனம் வழங்கப்படும் குணங்கள் இன்னார் திறத்து
பயன் பெற்றன என்று கூறலாகாதோ என்பாரை நோக்கி –வல்வினையேனான என் திறத்திலே அவை பயன் பெற்று மிகவும் விளங்கின -என்கிறார் –
—————————–
62-தம்முடைய கர்ம சம்பந்தம் அறப் பெறுகையால் வந்த-கார்த்தார்த்த்யத்தை-(-க்ருதார்த்தம் -க்ருத க்ருத்யம் இரண்டையும் சேர்த்து இந்த சப்த பிரயோகம் )யருளிச் செய்கிறார் –

கீழ்ப் பாட்டிலே-சமஸ்த கல்யாண குணாத் மகரான எம்பெருமானார் -தம்மைப்பெற வேண்டும் என்று தேடித் திரிந்த படியையும் – அவர் நிர்ஹேதுகமாக தம்மை
அடிமை கொண்ட பின்பு -அவர் தம்முடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படியையும் -அருளிச் செய்து -இதிலே –
எம்பெருமானார் பர்யந்தமும் அல்ல -அவருடைய தாஸ்யத்தை பண்ணிக் கொண்டு போரும் அவர்களுடைய-பர்யந்தமும் அல்ல -தம்முடைய தாஸ்யம் -என்று
துர்மாநிகளாகக் கொண்டு வன் நெஞ்சரான-ஆத்மா அபஹாரிகளுக்கு வ்யதிரேக முகேன தாஸ்யத்தை பண்ணுமவர்களுடைய சம்பந்தத்தால்
அவர்க்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை –(க்ருதார்த்தம் -க்ருத க்ருத்யம் இரண்டையும் சேர்த்து இந்த சப்த பிரயோகம் யருளிச் செய்கிறார் -)

இருவினையும் இன்றிப் போக பெறுகையால் தனக்கு வந்த கிருதார்த்தத்தை -பயன் அடைந்தமையை -அருளிச் செய்கிறார் .
———————–
63-அநிஷ்டமான கர்ம சம்பந்தம் கழிந்தபடி சொன்னார் கீழ் –இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபேஷிதமான தேவரீர் திருவடிகளில்
ப்ராவண்ய அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் -என்கிறார் –

கீழில் பாட்டிலே -இராமானுசன் மன்னு மாலர்த்தாள் பொருந்தாத மனிசரைக் குறித்து -ஹித லேசமும்-செய்யாத பெரியோரை அனுவர்த்திக்கும் மகாத்மாக்களுடைய
திருவடிகளை ஆஸ்ரயித்து – பிராப்தி பிரதி பந்தங்களான-புண்ய பாப ரூப கர்மங்களை கழற்றிக் கொண்டு -சம்சார வெக்காயம் தட்டாதபடி இருந்தேன் என்று
எம்பெருமானார் திருவடிகள் உடைய சம்பந்தி சம்பந்தி பர்யந்தமாக செல்லுகிற ப்ரபாவத்தைக் கொண்டாடினார் -இதிலே -அப்படிப்பட்ட திருவடிகளில்
தமக்கு உண்டான ப்ராவண்யா அதிசயம் பிறக்க வேணும் இறே என்று கொண்டு -அவைதிக சமயத்தோர் அடங்கலும்-பக்னராய் வெருவி வோடும்படி அவதரித்து
பூ லோகத்தில் எங்கும் பாஹ்யரைத் தேடி -அவர்கள் மேல் படை எடுத்து -அவர்களைத் தேடித் திரியும்படியான -ஜ்ஞான பௌ ஷ்கல்யத்தை உடையரான எம்பெருமானாரே
தேவரீர் திருவடிகளில் அதி மாத்ர ப்ராவன்யத்தை அடியேனுக்கு தந்தருள வேணும் என்று நேர் கொடு நேரே விண்ணப்பம் செய்கிறார் –

வினைகள் கழன்ற மையின் கேடு நீங்கினமைகூறப் பட்டது முந்தைய பாசுரத்திலே -தொடர்ந்து விட்டுப் பிரியாது இணைந்து நிற்கும்
அன்புடையாம் நன்மை வேண்டப் படுகிறது-இந்தப் பாசுரத்திலே-
———————————
64-அறுசமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று-பாஹ்ய மத நிரசன அர்த்தமாக -எம்பெருமானார் எழுந்து அருளின
பிரகாரத்தை யனுசந்தித்தார் கீழில் பாட்டில் .அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற வாதிகளைப்-பார்த்து -இராமானுச முனி யாகிற
யானை உங்களை நாடிக் கொண்டு பூமியிலே வந்து எதிர்ந்தது -உங்கள் வாழ்வு இனிப் போயிற்று -என்கிறார் -இதில் –

அறுசமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று பாஹ்ய மத-நிரசன அர்த்தமாக எம்பெருமானார் எழுந்து அருளின பிரகாரத்தை
அனுசந்தித்தார் கீழ் –அந்த ப்ரீத்தி பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற வாதிகளைப் பார்த்து -ராமானுச முனியாகிற யானை –
வேதாந்தம் ஆகிற கொழும் தண்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு -உங்களை நிக்ரஹிக்கைக்காக-
இந்த பூமியிலே நாடிக் கொண்டு வந்தது-இனி உங்களுடைய வாழ்வு வேரோடு அற்றுப் போயிற்று என்கிறார் –

அறுசமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று புறச் சமயத்தோர்களை-தொலைப்பதற்காக எம்பெருமானார் எழுந்து அருளின
பிரகாரத்தை அனுசந்தித்தார் கீழ்ப் பாசுரத்தில் –அக்களிப்பு மீதூர்ந்து புற மதத்தவரும் குத்ருஷ்டிகளும் ஆகிய வாதியரைப் பார்த்து
இராமானுச முனி யாகிய யானை உங்களை நாடிக் கொண்டு பூமியிலே வந்து எதிர்ந்தது -உங்கள் வாழ்வு இனிப் போயிற்று என்கிறார் இந்தப் பாசுரத்திலே .
——————–
65-இப்படி எழுந்து அருளின எம்பெருமானார் பாஹ்ய குத்ருஷ்டி நிரசன அர்த்தமாக-உபகரித்து அருளின ஜ்ஞானத்தால் பலிதங்களை அனுசந்தித்து ப்ரீதராகிறார்

கீழ்ப் பாட்டிலே -எம்பெருமானார் திவ்ய தேச யாத்ரை எழுந்து அருளினவாறே பிரதிவாதிகளுடைய-வாழ்வு வேருடனே நசித்துப் போன படியை சொல்லி -இதிலே
அவருடைய சமீசீன ஞானத்தாலே பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு உண்டான விநாசத்தையும் -லோகத்தர்க்கு எல்லாம் உண்டான சம்ர்த்தியையும்
பலபடியாக அருளிச் செய்து கொண்டு பிரீதராகிறார் –

வாதியர் வாழ்வு அற-எம்பெருமானார் உதவிய ஞானத்தாலே விளைந்த நன்மைகளை கண்டு-களிப்புடன் அவற்றைக் கூறுகிறார் –
————————–
66-நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே -என்று எம்பெருமானார் உபகரித்து அருளின-ஜ்ஞான வைபவத்தை யருளி செய்தார் கீழ்
இதில் அவருடைய மோஷ பிரதான-வைபவத்தை யருளிச் செய்கிறார் –

நம் இராமானுசன் தந்த ஞானத்திலே -என்று எம்பெருமானார் உபகரித்து அருளின ஞான வைபவத்தை-கீழ்ப் பாட்டிலே அருளிச் செய்து -இதிலே
ஈஸ்வரன் மோஷத்தை கொடுக்கும்போது -சேதனர் பக்கலிலே-சிலவற்றை அபேஷித்தே அத்தைக் கொடுப்பன் -இவர் அப்படி அன்றிக்கே தம்முடைய
கிருபா பாரதந்த்ராய்-கொண்டு காணும் சேதனருக்கு மோஷத்தைக் கொடுப்பது – என்று இவர் தம்முடைய மோஷ பிரதான வைபவத்தை-அருளிச் செய்கிறார் –

எம்பெருமானார் தந்த ஞானத்தின் வைபவம் கூறப்பட்டது கீழ்ப் பாசுரத்திலே –
மோஷத்தை அவர் கொடுத்து அருளும் வைபவத்தை அருளிச் செய்கிறார் இப்பாசுரத்திலே .
———————————–
67-எம்பெருமானார் உடைய ஜ்ஞான ப்ரதத்வ-மோஷ பிரதத்வங்களை-அருளிச் செய்து நின்றார் கீழ் .பகவத் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பான
கரணங்களை கொண்டு-வ்யபிசரியாதபடி எம்பெருமானார் ஸ்வ உபதேசத்தாலே நியமித்து ரஷித்து இலராகில்-
இவ்வாத்மாவுக்கு வேறு ரஷகர் ஆர் என்று ஸ்வ கதமாக வனுசந்தித்து-வித்தராகிறார் இதில் –

கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானாருடைய ஞான பிரதான வைபவத்தையும் -மோஷ பிரதான-வைபவத்தையும் அருளிச் செய்து -இதிலே
இந்திரிய கிங்கரராய்ப் போருகிற சம்சாரிகளைப் பார்த்து -அசித விசேஷிதராய் -போக மோஷ சூன்யராய் இருந்த வுங்களுக்கு -புருஷார்த்த யோக்யராய் –
ஸ்வ சரண கமல சமாஸ்ரயணம் பன்னுக்கைக்கு உடலாக-அடியிலே கொடுத்த கர சரணாதிகளைக் கொண்டு -வ்யபசரியாதே சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவியும் கோள் என்று எம்பெருமானார் உபதேசித்து இலர் ஆகில் -இந்த சேதனருக்கு வேறு ரஷகர் யார் என்று -சொல்லா நின்று கொண்டு
அவ் வழியாலே எம்பெருமானார் தம்முடைய மகா உபகார்த்வத்தை கொண்டாடி வித்தர் ஆகிறார் –

எம்பெருமானார் ஞானம் கொடுப்பதன் சீர்மையும் -மோஷம் கொடுப்பதன் சீர்மையும்-கீழ்ப் பாசுரங்களில் கூறப் பட்டன .-இறைவன் தன்னைப் பற்றுகைக்கு
உறுப்பாக கொடுத்த கருவிகளை அவன் திறத்து அன்றி பிறர் திறத்து பயன் படுத்தாத படி –எம்பெருமானார் -தமது உபதேசத்தாலே கட்டுப் படுத்தி-
இவ் ஆத்மவர்க்கத்தை ரஷித்து இலர் ஆகில் வேறு எவர் காப்பாற்றுவார் என்று தாமே-நினைந்து ஈடு பட்டுப் பேசுகிறார் –
————————–
68-இப்படி பகவத் சமாஸ்ரயணத்துக்கு மடைத்தேற்றலாயும் (அடைத்து ஏற்றலாவது -கொண்டம் கட்டி நீர் பாய்ச்சுதல் -என்றவாறு )
ஆஸ்ரயித்தார்கள் ஆகில் அவ்வளவில் சுவறிப் போரக் கடவதான (சரம பர்வ நிஷ்டை இல்லாமல் )-வித்தேசத்தில் -என்னாத்மாவும் மனசும் எம்பெருமானாரை
ஆஸ்ரயித்து இருக்கும் அவர்கள் குணங்களிலே சென்று பிரவணம் ஆயிற்று -ஆன பின்பு எனக்கு சத்ருசர் இல்லை –என்கிறார் –

கீழ் பாட்டிலே எம்பெருமானாருடைய ஜ்ஞான பிரதான வைபவத்தையும் -மோஷ பிரதான-வைபவத்தையும் -இந்திரிய பரவசரான சேதனரைக் குறித்து
அவருடைய யதாவசிதித்த பிரகாரத்தை தெளிவித்து -மகாபாரதசமரத்திலே -திருத் தேர் தட்டிலே உபதேசித்த பகவத்கீதைக்கு எதாவச்த்திதார்த்தத்தை
அருளிச் செய்த எம்பெருமானாரை ஆஸ்ரயித்த-சத்துக்களுடைய கல்யாண குணங்களிலே -என்னுடைய பிராணனும் மனசும்-த்வரித்துப் போய் -அங்கே கால் தாழ்ந்தது
ஆனபின்பு இப்போது வ்யபிதிஷ்டரை கணிசித்து சொல்லத் தொடங்கி எனக்கு சத்ர்சர் லோகத்தில் யார் உளர் -என்று தமக்கு உண்டான அதிசயத்தை சொல்லுகிறார் –

இப்படி தம் கரணங்களை கண்ணன் தனக்கே உரியவை ஆக்குவாரும் அரியராய் -அங்கனம் ஆக்கினார் உளராயினும் அவர்கள் அளவோடு ஆளாதல் சுவறிப்போமதமான
இந்நிலத்திலே என்னுடைய ஆத்மாவும் மனமும் எம்பெருமானாரைப் பற்றினவர்களுடைய-குணங்களிலே நோக்குடன் சென்று ஈடுபட்டு விட்டது ..
ஆகவே எனக்குச் சமமானவர் எவருமே-இல்லை என்று களிப்புடன் கூறுகிறார் .
——————————-
69-எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள் விஷயத்தில் தமக்கு உண்டான-அதி ப்ராவண்யத்தை அனுசந்தித்து திருப்தராகா நிற்கச் செய்தே –
ஈச்வரனிலும் காட்டிலும் இவர் ஸ்வ விஷயத்தில் பண்ணின உபகாரம்-ஸ்ம்ருதி விஷயமாக -அத்தை அனுசந்த்திது -வித்தராகிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்களுடைய-கல்யாண குணங்களிலே தமக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தை -சொல்லி -ஹ்ர்ஷ்டராய்
இதிலே சர்வ சேதனர்களும் சம்ஹார தசையிலே மனசோடு கூட சர்வ விஷயங்களையும் இழந்து -அசித் கல்பராய்-இருக்கிற தசையைக் கண்டு -அப்படிப் பட்ட எனக்கு
அபேஷா நிரபேஷமாக-தம்முடைய நிர்ஹே துக பரம கிருபையாலே-கரண களேபர பிரதானம் பண்ணின பெரிய பெருமாளும் -ஸ்ர்ஷ்டித்த மாத்ரம் ஒழிய
அவ்வோபாதி சம்சார சம்பந்தத்தை-விடுத்து தம்முடைய திருவடிகளைத் தந்திலர் -இப்படி அதி துர்லபமான வற்றை நமக்கு பிதாவான எம்பெருமானார்
தம்முடைய திருவடிகளை உபாய உபேயமாக எனக்கு தந்து இப்போது என்னை சம்சாரத்தில் நின்றும் உத்தரித்தார் என்கிறார் –

எம்பெருமானார் திருவடி சம்பந்தம் வாய்ந்தவர்களிடம் தமக்கு ஏற்ப்பட்ட மிக்க ஈடுபாட்டை-கண்டு களியா நிற்கும் அமுதனார் – இந்நிலை தமக்கு ஏற்படும் படி
தம்மைக் கை தூக்கி விட்ட எம்பெருமானார் உடைய பேருதவி நினைவிற்கு வர -இறைவன் செய்த உதவியினும் சீரியதாய் –
அது தோன்றலின் -அவ்வுதவியில் ஈடுபட்டுப் பேசுகிறார் .
————————-
70-எம்பெருமானார் செய்து அருளின உபகாரத்தை அனுசந்தித்து வித்தரானார் கீழ் .அநந்தரம்-செய்த அம்சத்தில் காட்டிலும் செய்ய வேண்டும் அம்சம்
அதிசயித்து இருக்கிற படியை அனுசந்தித்து -அவருடைய திரு முகத்தைப் பார்த்து ஸ்வ அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் .

-கீழ் பாட்டிலே எம்பெருமானார் தமக்கு பண்ணி யருளின உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டராய் -இதிலே -என்னையும் என்னுடைய துர்வ்ரத்தத்தையும்-
தேவரீருடைய அப்ரதிமப்ரபாவத்தையும் -ஆராய்ந்து பார்த்தால் -என்னை விஷயீ கரித்து கைக் கொள்ளுகையே நல்லது – இது ஒழிய நான் தீரக் கழியச் செய்த
அபராதங்களைப் பத்தும் பத்துமாக கணக்கிட்டு மீளவும் ஆராயும் அளவில் என்னிடத்தில் நன்மை என்று பேரிடலாவது ஒரு தீமையும் கூடக் கிடையாமையாலே-
என்னைக் கைவிட வேண்டி வருகையாலே –சர்வோத்தரான தேவரீருடைய நிர்ஹேதுக கிர்பையை -தேவரீர் திருவடிகளை
ஆஸ்ரயித்தவர்கள் என் சொல்வார்களோ என்று நேர் கொடு நேர் விண்ணப்பம் செய்கிறார் –

எம்பெருமானார் செய்து அருளின உதவியினும் இனிச் செய்து அருள வேண்டிய-உதவி மிகுதியாய் இருத்தலை நினைந்து-
மேலும் விடாது -அருளல்வேண்டும் என்று-தம் கோரிக்கையை திரு முகத்தைப் பார்த்து-விண்ணப்பிக்கிறார் –
—————————
71-இப்படி விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் ஒக்கும் இறே என்று என்று இசைந்து -தம்முடைய விசேஷ கடாஷத்தாலே –இவருடைய ஜ்ஞானத்தை
ஸ்வ விஷயத்திலே ஊன்றும்படி விசதமாக்கி அருள தாம் லபித்த அம்சங்களை அனுசந்தித்து க்ருதார்த்தார் ஆகிறார் –

இப்படி இவர் நேர்கோடு நேர் விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் -ஒக்கும் ஒக்கும் -என்று-இசைந்து தம்முடைய விசேஷ கடாஷத்தாலே இவருடைய
கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்திலே தானே ஊன்றி-இருக்கும்படி பண்ணி அருள –அவருடைய திரு முக மண்டலத்தை பார்த்து -பரம குஹ்யமான அர்த்தத்தை
பூரி தானம் பண்ணும்படியான ஔதார்யத்தை உடைய எம்பெருமானாரே -என்று சம்போதித்து – தம்முடைய மனச்சு அவருடைய-திருவடிகளிலே சேர்ந்து
அமைந்து இருக்கிற படியையும் –அத் திருவடிகளின் போக்யதையில் ஈடுபட்டு பிரேமமானது-தமக்கு மிக்க படியையும் -தாம் அவருடைய குணங்களிலே
அத்யபி நிஷ்டராய் கொண்டு தத் தாஸ்யத்தில் வுற்று இருந்தபடியையும் -தம்முடைய பூர்வ க்ரத கர்மம் எல்லாம் அவருடைய விஷயீ காரத்தாலே
தம்மை விட்டு -சும்மனாதே-ஓடிப்போன படியையும் ஹ்ர்ஷ்டராய் கொண்டு விண்ணப்பம் செய்கிறார் –

இவர் விண்ணப்பத்தை எம்பெருமானார் இசைந்து ஏற்று அருளி -விசேஷ கடாஷத்தாலே –இவருடைய ஞானத்தை தம் திறத்தில் ஊன்றி
நிற்குமாறு தெளிவுறுத்தி விட தமக்கு கிடைத்தவைகளைக் கூறி க்ருதார்த்தர் ஆகிறார்-
—————————–
72-எம்பெருமானாருடைய ஔதார்யத்தாலே தாம் லபித்தவற்றை யனுசந்தித்து-க்ருத்தார்த்தர் ஆனார் கீழ் ..
இன்னமும் அந்த ஔதார்யத்தாலே தமக்கு அவர் செய்ததொரு மகோ உபகாரத்தை யனுசந்தித்து வித்தராகிறார் .-

எம்பெருமானார் தம்முடைய ஔதார்ய அதிசயத்தாலே அதி ஹேயங்களான வேத பாஹ்யர் உடைய-சமயங்களைப் பற்றி நின்று கலஹிக்குமவர்களை நிரசித்தார் என்றும்
அத்யந்த பரிசுத்தமான வேதமார்க்கத்தை பூமியிலே எங்கும் ஒக்க நடத்தி அருளினார் என்றும் -அனுசந்திதுக் கொண்டு ப்ரீதி-பிரகர்ஷத்தாலே
ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள பெரியோர்களுடன் கலந்து -பரிமாறும்படி-அடியேனை வைத்து அருளினார் என்று அனுசந்தித்து வித்தர் ஆகிறார் –

எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .
———————————
73-தம்முடைய ஔதார்யாதிகளாலே இந்த லோகத்தில் உள்ளார்க்கு தாமே-ரஷகராய் யதா ஜ்ஞான உபதேசத்தை பண்ணின எம்பெருமானாரை அனுசந்தித்து
இருக்கும் பலம் ஒழிய- எனக்கு வேறு ஒரு தரிப்பு இல்லை என்கிறார் .

இந்த பூ லோகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கட்டடங்க தமோ ரஷகராய் கொண்டு -யதா வஸ்த்திதமாய் -விலஷணமான ஞானத்தை உபதேசித்து அருளின
எம்பெருமானாரே ரஷகர் என்று அனுசந்தித்து கொண்டு-இருக்கையே நான் ஈடேறுகைக்கு உடலாய் விடும் இத்தனை ஒழிய -என்னுடைய ஞான பிரேமங்கள்
அதுக்கு உடல் அன்று -என்கிறார் –

தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே ரஷகராய் –உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் எம்பெருமானாரை
ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும் நிலை இல்லை என்கிறார் .
———————————
74-யதாஜ்ஞானத்துக்கு விரோதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து அருளுகிற அளவில் -சர்வேச்வரனிலும் காட்டில்
அனாயாசேன செய்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்து-வித்தராகிறார்-

பாஹ்ய குத்ர்ஷ்டிகளை தாதாத்விகையான ஒரு கஷியாலே நிரசித்தார் என்று-கஷி -யுக்தி என்றவாறு-
அவர் தம்முடைய வைபவத்தை கொண்டாடுகிறார் –

உண்மை நல் ஞானத்திற்குப் பகைவரான புறச் சமயத்தவரையும் -அகச் சமயத்தவரான குத்ருஷ்டிகளையும் -களைந்து எறியும் விஷயத்தில் சர்வேஸ்வரனைப்
பார்க்கிலும் அவ் எம்பெருமானார் எளிதினில் காட்டி யருளும் திறமையை பாராட்டி–அதனில் ஈடுபடுகிறார் .
—————————————
75–எம்பெருமான் தன் அழகோடு பிரத்யஷித்து -உன்னை விடேன் -என்று இருந்தாலும்-தேவரீர் உடைய குணங்களே வந்து என்னை மொய்த்து நின்று அலையா நிற்கும் –

சர்வேஸ்வரன் சங்கு சக்ராதி திவ்ய ஆயுத-அலங்க்ர்தனாய் கொண்டு அடியேன் இருந்த இடம் தேடி வந்து தன் வைலஷ்ண்யத்தை அடியேனுக்கு முற்றூட்டாக
காட்டி உன்னை நான் விடுவது இல்லை என்று என் முன்னே நிற்கிலும் -அவன் வைலஷண்யத்தில் ஈடுபடாதே
தேவரீர் பக்கலில் தானே ஈடுபடும்படி –தேவரீர் உடைய கல்யாண குணங்கள் கட்டடங்க வந்து அடியேனை சூழ்ந்து கொண்டு ஆகர்ஷியா நிற்கும் –

பகவான் தான் அழகு அனைத்தையும் புலப்படுத்திக் கொண்டு கண் எதிரே வந்து -உன்னை விடேன் என்று இருந்தாலும் –
தேவரீர் குணங்களே வந்து போட்டி இட்டு நாலா புறங்களிலும் சூழ்ந்து மொய்த்துக் கொண்டு என்னை நிலை குலைந்து ஈடுபடும்படி செய்யும் –
——————————-
76–தம்முடைய ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அபேஷிக்கிறார் –

தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளும் அடியேனுக்கு அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும் –
ஆகையாலே அவற்றைத் தந்தருள வேணும் என்று அபேஷித்து அருளுகிறார் –

தமக்கு வேண்டும் பேற்றினை இன்னது என்று முடிவு கட்டிக் கோருகிறார்
———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி–பாசுரங்கள் -1-21-/அவதாரிகை /-ஸ்ரீ மா முனிகள் /ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் / ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் -அருளிச் செய்தவை –

April 14, 2017

1-தம் திரு உள்ளத்தை குறித்து -எம்பெருமானார் உடைய திருவடிகளை நாம் பொருந்தி-வாழும் படியாக அவருடைய திரு நாமங்களை சொல்லுவோம் வா –என்கிறார்-

பிள்ளை அமுதனார் -தமக்கு ஆசார்ய பிரசாதத்தாலே -லப்தமாய் –மந்திர ரத்ன கண்ட த்வயார்த்த யாதாத்ம்ய ஜ்ஞான ரூபமாய் –
பரம ரகஸ்யமாய் இருந்துள்ள -அர்த்த விசேஷங்களை -ஏகஸ் ஸ்வா து ந புஞ் ஜீத -என்கிறபடியே கிண்ணத்தில் இழிவார்க்கு -துணை தேட்டமாமாப் போலே
எம்பெருமானருடைய கல்யாண குண சாகரத்திலே -இழிவதுக்கு துணைத் தேட்டமாய் -உபய விபூதியிலும் ஆராய்ந்தால்
நித்ய விபூதியில் உள்ள நித்ய சூரிகளும் முக்தரும் -சதா பஸ்யந்தி -என்கிறபடியே -பரத்வத்தை முற்றூட்டாக அனுபவித்து -சாம கானம் பண்ணிக் கொண்டு களித்து
நோபஜன ஸ்மரன் நித சரீரம் -என்கிறபடியே -லீலா விபூதியிலே -கண் வையாதே-இருந்தார்கள் ஆகையாலும்
லீலா விபூதியில் உள்ள சம்சாரி ஜனங்கள் ப்ராக்ர்தத்வேன அஜ்ஞ்ஞர் ஆகையாலே-நந்தத்த்யுதித ஆதித்ய நந்தன் த்யச்தமி தேரவவ் -என்றும்-
உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலம் -என்றும்-சொல்லுகிறபடியே உண்டு உடுத்து -புறமே புறமே யாடி -என்கிறபடி
லீலா விபூதியிலே -ஸௌரி சிந்தா விமுகராய் -விஷயாந்தரந்களிலே மண்டி இருக்கையாலும்
எம்பெருமானார் சம்பந்தம் உடைய ஜ்ஞாநாதிகர் எல்லாரும் -பாலே போல் சீர் -என்கிறபடியே-பரம போக்யமான அவருடைய கல்யாண குணங்களை -அனுபவித்து –
காலாழும் நெஞ்சழியும் இத்யாதிப்படியே அவ் அனுபவத்தில் ஆழம்கால் பட்டு -குமிழ் நீருண்டு நின்றார்கள் ஆகையாலும்-இந் நால்வரும் துணை யாகாது ஒழிகையாலே
தம்முடைய சுக துக்கங்களுக்கு எப்போதும் பொதுவாய் இருக்கிற தம் மனசே துணையாக வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி -அது தன்னையே சம்போதித்து சொல்லுகிறார் –

எம்பெருமானார் திருவடிகளில் பொருந்தி நல் வாழ்வு பெறும்படி அவர் திரு நாமங்களை சொல்லுவோம் வா-என்று அமுதனார் தம் திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார்-
———————————-
2-என்னுடைய நெஞ்சானது எம்பெருமானாருடைய சீல குணம் ஒழிய-வேறு ஒன்றை நினையாதபடி யாயிற்று-–இது எனக்கு சித்தித்த பெரு விரகு ஒன்றும் அறிகிலேன் என்கிறார் –

கீழில் பாட்டில் -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று தம்முடைய மனசோடு கூடி உபதேசித்த வாறே-மனசானது அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் பட்டு
அநந்ய சிந்தயந்தோமாம் -என்கிறபடியே-அவர் திருவடிகளை அனுபவித்துக் கொண்டு -தத் வ்யதிரிக்தமானவற்றை விரும்பாதே இருந்தது –இது என்ன ஆச்சர்யம் –என்கிறார் –

நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்றதும் என்நெஞ்சு எம்பெருமானாரது பழகும் தன்மையில்-மூழ்கி –சீல குணத்தில் ஈடுபட்டு
வேறு ஒன்றையும் நினைக்க கில்லாததாயிற்று -இச் சீரிய நிலை எய்துதற்கு-காரணம் ஏதும் தெரிய வில்லை என்கிறார் –
——————–
3-ப்ராக்ருதரோட்டை சம்பந்தத்தை நீக்கி எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள்-
திருவடிகளிலே என்னை சேர்த்த உபகாரத்துக்கு நெஞ்சே உன்னை வணங்கினேன் என்கிறார் –

கீழ்ப்பாட்டில் தம்முடைய நெஞ்சானது எம்பெருமானார் உடைய சீல குணத்தில்ஈடுபட்ட மாத்ரமன்றிக்கே -இப்படி அனுபவிக்க அனுபவிக்க–அபிநிவேசம் கரை புரண்டு
என்னைக் கொண்டு போய் ததீயர் உடைய திருவடிக் கீழ் சேர்த்தது –இந்த மகா உபகாரத்துக்கு தக்க-
சமர்ப்பணம் தம் பக்கல் ஒன்றும் இல்லை என்று நெஞ்சினாருடைய காலில் விழுகிறார் –

எனக்கு கருவியாகிய நெஞ்சு எம்பெருமானாருடைய மிக்க சீலம் என்னும் குணத்தை ஒழிய -வேறு ஒன்றும் சிந்திக்கிறது இல்லை–இந்நிலை எனக்கு வாய்க்க நான்
ஒரு உபாயமும் அனுஷ்டிக்க வில்லையே -என்று வியந்தார் -இந்தப் பாட்டில் என் நெஞ்சு எனக்கு உரிய-கருவி இல்லாமல் என்னைத் தனக்கு உரியவனாக
ஆக்கிக் கொண்டு விட்டது -விடவே என்னிடம் பேர் இயல்வு ஒன்றும் இல்லாமல்–சீல குணத்தில் ஆழ்ந்து –
அவன் அடியாரார் அளவும் தான் ஈடுபட்டதோடு அமையாமல் -தீய பிறப்பாளரோடு எனக்கு உள்ள உறவை அறுத்து –எம்பெருமானாருக்கு
அன்பர்கள் உடைய அடிகளில் என்னை சேர்த்தும் விட்டது -அவ உபகாரத்துக்காக -அந் நெஞ்சினைப் பணிந்தேன் -என்றார்-
————————————
4-இப்படி இவர் திரு உள்ளத்தைக் கொண்டாடின வாறே –இன்னமும் துர் வாசனையாலே இந் நெஞ்சு தான் நழுவ நிற்குமாகில் உம்முடைய-நிஷ்டைக்கு
ஹானி வாராதோ -என்ன சர்வரும் விரும்பி விவேகித்து அனுபவிக்கும் படி-ஸ்ரீ பாஷ்யமும் கீதா பாஷ்யமும் அருளி-விவேக்கும் படி-
எம்பெருமானார் தாமே நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கப் பெற்ற-எனக்கு ஒரு ஹானியும் வாராது -என்கிறார் –

-இப்படி மூன்று பாட்டு அளவும் தம்முடைய அபிநிவேச அதிசயத்தை சொல்லினால் –இது ஸ்வகதமாக வந்தது –அத்யந்த பாரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு
சேருமோ -பரகதமாக வந்ததே யாகிலும்-அதுக்கு பிரச்யுதி இல்லையோ என்ன அருளிச் செய்கிறார்-

அடிக் கீழ் சேர்த்த நெஞ்சு -நின்றவா நில்லாது பண்டைய பழக்கம் தலை தூக்கி அந்நிலை யினின்றும்-நழுவி விடில் -உம் நிலை என்னாவது என்ன –
எம்பெருமானார் நிர் ஹேதுக கிருபையாலே கண்டு-கொண்டேன் -என்னைப் பண்டை வல் வினை வேர் அறுத்து தம் பாதத்தினை என் சென்னியில்
வைத்திடலால் எனக்கு ஒரு குறையும் வர வழி இல்லை என்கிறார் –
———————-
5-இப்படி எம்பெருமானார் உடைய விஷயீகார தார்ட்யத்தை அருளி செய்த அநந்தரம் –அவர் திரு நாமங்களை சொல்லுவோம் -என்று முன்பு உபக்ரமித்த படியே
ஸ்தோத்ரம் பண்ணுவதாக-உத்யோகித்தவர் -அதில் நிரவத்யமாக-செய்கை அரிது ஆகையாலே லாஷணிகர் நிந்திப்பார்களே-என்று
நிவ்ருத்ய உன்முகராய்-மீளவும் தாமே சித்த சமாதானம் பண்ணிக் கொண்டு பிரவ்ருத்தர் ஆகிறார் –

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தார் என்றுகொண்டாடினார் -இதில் -அந்த ப்ரீதியாலே ப்ரேரிதராய்க் கொண்டு –
அவருடைய குண கீர்த்தனம் பண்ண உத்யோகித்து –குத்ருஷ்டிகளாய் இருப்பார் இதில் ஏதேனும் ஒரு குற்றத்தை ஆரோபித்து -தூஷித்தார்கள் ஆகில் –
அதுவே எனக்கு பூஷணம் -என்று சொல்லா நின்று கொண்டு -இதன் ரசம் அறிந்தவர்கள்-குணமாக விரும்புவார்கள் –என்கிறார் –

எம்பெருமானார் தாமாகவே என்னை அபிமானித்த படியால் -இந்நிலையினின்றும்-நான் நழுவ வழி இல்லை என்றார் கீழே –இனி -சொல்லுவோம் அவன் நாமங்களே
-என்று தொடங்கின படியே துதி செய்ய இழிந்தாராய்-இலக்கணம் வல்லவர்கள் இத் துதியில் குற்றம் குறை கண்டு பழி ப்பார்களே என்று மீண்டு-மறுபடியும்
எம்பெருமானாற்கு அன்பர்கள்-பக்தன் சொன்னது -என்று இதில் குற்றம் குறை காண-இயலாது என்று தேறித் தோத்திரம் செய்ய முற்படுகிறார் –
———————————
6-பத்தி ஏய்ந்த வியல்விதென்று என் பாவினக் குற்றம் காண கில்லார் -என்றார் கீழ்.
அந்த பக்தி தான் தமக்கு உண்டோ என்று பார்த்த இடத்தில் –அதவும் விஷய அனுகுணமாக-தமக்கு இல்லாமையாலே-ஸ்தோத்ர யுக்தரான தம்மை கர்ஹிக்கிறார் –

கீழில் பாட்டிலே மந்த மதிகள் -பழி சொன்னார்கள் ஆகில் -அதுவே தமக்கு பூஷணம் என்றார் –இப்பாட்டிலே -என்னைப் பார்த்து
-கீழ்ப்பாட்டிலே ப்ரஸ்துதரான அஞ்ஞர் சொல்லும் பழிக்கு ஒரு படி-சமாதானம் பண்ணிக் கொண்டு போனதாம் –
என்னைப்பார்த்தால் -சர்வ லோக பிரசித்தரான எம்பெருமானார் உடைய வைபவத்துக்கு தகுதியாய்-இருந்துள்ள பக்தி பிரேமங்களில் ஒன்றாகிலும்
என் பக்கலிலே இல்லை -ஆனாலும் -அவர் தம்மை-ஏத்துவதாக உத்சாஹியா நின்றேன் -எத்தனை சாஹசம் பண்ணத் தொடங்கினேன் என்று – கர்ஹிக்கிறார் –

அன்பர் பக்தி பாட்டு என்று என் பாவினக் குற்றம் காணகில்லார் –ஆதலின் புகழ் முழுதும் உள் பொதியத் துதிப்பேன் என்று ஊக்கம் மிக்கவராய்
முற்பட்டுத் துதிக்கப் பட-வேண்டிய எம்பெருமானாருடைய ரூப குணாதிகளிலே நாட்டம் செலுத்தினார் –
-அவை எம்பெருமானார்-அருளால் அளவிடற்கு அரியனவாய் விரிந்து கிடந்தமை தெரிந்தது இவர்க்கு -பீடு வாய்ந்த இவற்றை பற்றிப் பாடுவதற்கு
ஏற்ற பக்தி தம்மிடம் உண்டோ என்று பார்த்தார் -பாட வேண்டிய விஷயமோ மிகப்பெரியது .பாடுவதற்கு வேண்டிய பக்தியோ இல்லை என்று
சொல்லலாம்படி மிக சிறியது .அங்கனம் இதனை ஆராய்ந்து என் நெஞ்சம் இதனில் ஈடுபட்டது என்று தம்மை இகழ்ந்து-துதிப்பதினின்றும் மீளுகிறார் –
—————————
7-இப்படி தம்முடைய அயோக்யதையை பார்த்து -நமக்கு இது துச்சகம் -என்று மீள நினைத்தவர் –ஆழ்வான் திருவடிகளில் சம்பந்தமுண்டான பின்பு
எனக்கு அசக்ய அம்சம் ஒன்றும் இல்லை -என்று-ஸ்தோத்ரத்திலே பிரவ்ருத்தர் ஆகிறார் –

கீழ்ப் பாட்டிலே ஞான பக்த்யாத்யா அனுபவ ரூபமான தம்முடைய அயோக்யதையை-நினைத்து பிரபந்த ஆரம்பத்திலே பிற்காலித்து-இப்பாட்டிலே-ஆழ்வான் திருவடிகளின்
சம்பந்தம் ஆகிய ராஜ குல மகாத்ம்யத்தை அனுசந்தித்து –இப் பிரபந்த உத்யோகம் கடினம் அல்ல –சுலபமாயே யாய் இருக்கும் என்று-அதிலே ஒருப்படுகிறார்

துதிக்கத் தகுதி இன்மையின் எனக்குத் துதித்தல் அரிய செயல் என்று மீண்டவர் -இப் பொழுது –ஆழ்வான் திருவடி சம்பந்தம் உண்டான பின்பு தகுதி இன்மை
அப்படியே நிற்குமோ ?-அது நீங்கி விட்டமையின் எனக்கு அரியது ஒன்றும் இல்லை என்று மீண்டும் துதிக்க இழிகிறார் –
——————–
8-இனி மேல் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணுகிறார் —பொய்கை ஆழ்வார் அருளி செய்த திவ்ய பிரபந்தத்தை திரு உள்ளத்திலே வைத்து கொண்டு
இருக்கும்-பெருமையை உடைய எம்பெருமானார் எங்களுக்கு நாதன் என்கிறார் –

இவ்வளவும் ஸ்தோத்ர உத்போகாதம் –இனி மேல் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்-லோகத்தாருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்திப்பித்து –
அவர்களுக்கு ஹேய உபாதேய விவேகத்தை உண்டாக்கி -உபகரிப்பதாக ஞான தீபத்தை எடுத்து பொய்கை ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய பிரபந்தத்தை –
தம்முடைய-திரு உள்ளத்திலே ஸூ பிரதிஷ்டிதமாம்படி வைத்த பெருமை உடையரான எம்பெருமானார்-நமக்கு நாதர் என்கிறார் –

கீழ் ஏழு பாட்டுக்களும் முக உரையாய் அமைந்தன –அவைகளும் எம்பெருமானார் பெருமையை புலப்படுத்துவனவாய் அமைதலின்-துதிகளாகவே கொள்ளத்தக்கன -இனி துதியை தொடங்குகிறார் –எம்பெருமானார் பெருமைகளில் ஆழ்வார்கள் சம்பந்தமே சிறந்து விளங்குவது ஆதலின்-அதனைப் பேச முற்பட்டு
பொய்கை ஆழ்வார் அருளி செய்த திவ்ய பிரபந்தத்தை தம் சிந்தையிலே அனுசந்தித்து கொண்டே இருக்கும் பெருமையை கூறி –
அத்தகைய எம்பெருமானார் எங்களுக்கு இறைவர் -என்கிறார் –
———————-
9-பூதத் ஆழ்வார் திருவடிகளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் எம்பெருமானார்
திவ்ய குணங்களைச் சொல்லும் அவர்கள் -வேதத்தை ரஷித்து-லோகத்திலே பிரதிஷ்டிப்பிக்கும்-அவர்கள் என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே பொய்கை யாழ்வார் சம்பந்தத்தாலே -சர்வோ நாதரான-எம்பெருமானார் தமக்கு ஸ்வாமி என்று அருளிச் செய்தது -இப்பாட்டிலே
சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனை காண்கைக்கு சர்வர்க்கும் உபகரணமாய்-இருந்துள்ள ஹ்ருதயம் -அஞ்ஞான அந்தகாரத்தாலே மோஹித்து போகையாலே
அத்தை நசிப்பதாக பர ஞானம் ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றி அருளின -பூதத் ஆழ்வாருடைய திருவடிகளை மனசிலே வைத்துக் கொண்டு-அனுபவிக்கிற
எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை அனுசந்தித்து சத்துக்களானவர்கள் இந்த லோகத்திலே சகல வேதங்களையும்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அழிக்க ஒண்ணாதபடி ரஷித்து சூபிரதிஷ்டமாக வைக்க வல்லவர்கள்-என்கிறார் –

பூதத்தாழ்வார் திருவடிகளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து அனுபவிக்கும் எம்பெருமானார் கல்யாண
குணங்களை சொல்லும் அவர்கள் -வேதத்தை காப்பாற்றி நிலை நிறுத்தும் அவர்கள் என்கிறார் –
————————-
10-பேயாழ்வார் திருவடிகளை ஸ்துதிக்கும் ஸ்வபாவரான எம்பெருமானார்-விஷயத்திலே சிநேக யுகதர் திருவடிகளை
சிரசா வஹிக்குமவர்கள்-எல்லா காலத்திலும் சீரியர் என்கிறார் –

கீழ் இரண்டு பாட்டாலும் பொய்கை யாழ்வார் பூதத் தாழ்வார் ஆகிற இருவராலும் எடுக்கப் பட்ட-பரி பூர்ண தீபமான திவ்ய பிரபந்தங்கள் இரண்டாலும்
லோகத்திலே ஒருவராலும் பரிகரிக்க அரிதாம் படி-வ்யாப்தமாய் நின்ற அஞ்ஞானம் ஆகிற அந்தகாரம் நசித்த பின்பு-தாம் திருக் கோவலூரில் வீற்று இருந்த
ஸ்ரீயபதியை சாஷாத் கரித்து -அந்த லாபத்தை எல்லார்க்கும் திவ்ய பிரபந்த ரூபேண -உபதேசிக்கும்-பேய் ஆழ்வாருடைய ச்ப்ர்ஹநீயமான திருவடிகளை ஸ்துதிக்கிற
எம்பெருமானார்-விஷயமான ப்ரீதியாலே பரிஷ்கரிக்க பட்டவர்களுடைய ஸ்ரீ பாதங்களை தம்தாமுடைய
தலை மேல் தரிக்கும்-சம்பத்தை உடையவர்கள் சர்வ காலத்திலும் ஸ்ரீ மான்கள் –என்கிறார் –

பேய் ஆழ்வார் -இருள் நீங்கியதும் -தாம் கண்ட இறைக் காட்சியினைத் தம் திவ்ய பிரபந்தத்தால் காட்டும்-வள்ளன்மைக்காக-அவர் திருவடிகளைப் போற்றும்
எம்பெருமானார் திறத்து அன்புடையார் திருவடிகளை தலையில் சூடும் திருவாளர்கள் எல்லா காலத்திலும் சிறப்புடையோர் ஆவர் என்கிறார் –
———————
11-திருப் பாண் ஆழ்வார் திருவடிகளை சிரஸா வஹிக்கும் எம்பெருமானாரைத் தங்களுக்கு-அபாஸ்ரயமாகப் பற்றி இருக்கும் அவர்களுடைய
கார்ய வைலஷண்யம் இந்த லோகத்தில் என்னால் சொல்லித் தலைக் கட்ட ஒண்ணாது-என்கிறார் –

இவ்வளவாக மூன்று பாட்டாலும் -முதல் ஆழ்வார்கள் மூவருடைய சம்பந்தத்தை உடைய-எம்பெருமானாரை கொண்டாடி -இப்பாட்டிலே -தமக்கு இவ்வளவாம்
அதிகாரம் உண்டாகும்படி -முதல் அடியிலே-தம்மை விஷயீ கரித்த பெரிய பெருமாளுடைய திருவடிகளிலே –திரு அவதாரமே பிடித்து -இடைவிடாதே –
நிரவதிக பிரவணராய் –இசைகாரர் -என்று நம் ஆழ்வாரால் கொண்டாடப் பட்ட மகா வைபவத்தை உடையரான –திருப் பாண் ஆழ்வார் திருவடித் தாமரைகளிலே
நிரவதிக பிரவணரான -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த வருடைய-அனுஷ்டானம் -இந்த மகா பிருதிவியிலே -என்னால் சொல்லித் தலைக் கட்ட போகாது -என்கிறார் –

திருப் பாண் ஆழ்வார் திருவடிகளைத் தலையால் தாங்கும் எம்பெருமானாரைச் சார்வாக கொண்டவர்கள் உடைய
அனுஷ்டானத்தின் சிறப்பு இவ்வுலகில் என்னால் சொல்லித் தலைக் கட்ட ஒண்ணாது என்கிறார் –
———————————
12-திரு மழிசை பிரானுடைய திருவடிகளுக்கு ஆவாசமான திரு உள்ளத்தை உடைய எம்பெருமானாரை-ஆஸ்ரயித்து இருப்பார்க்கு ஒழிய
ச்நேஹியாதவர்கட்கே நான் ச்நேஹித்து இருப்பது -என்கிறார்-

கீழ் நாலு பாட்டாலும் -ஆழ்வாருடைய சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரை அனுபவிக்கும்-பிரகரணம் ஆகையாலே -முதல் ஆழ்வாரோடு சம காலராய்
பேயாழ்வார் உடைய பிரசாதத்தாலே-தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஜ்ஞானரான திரு மழிசை ஆழ்வாருடைய பரஸ்பர சதர்சமான-திருவடிகளை
தம்முடைய திரு உள்ளத்தில் நிறுத்திக் கொண்ட எம்பெருமானாருடைய பரம போக்யமான
திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு விதேயமாகாத த்ரட அத்யவசாய பரரான-ஜ்ஞாநிகளுக்கு அடியேன் பக்தனாக நின்றேன் -என்கிறார்-

திரு மழிசைப் பிரான் திருவடிகளுக்கு உறைவிடமான திரு உள்ளத்தை உடைய-எம்பெருமானாரைப் பற்றும் திருவாளரை ஒழிய
மற்றவரை விரும்பாத உறுதிப்பாடு வாய்ந்த ஞாநியரையே தாம் விரும்புவதாக கூறுகிறார் –
——————-
13-ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளை ஒழிய மற்று ஒன்றில்-ஆதாரம் அற்று இருக்கும் எம்பெருமானார் திருவடிகளே எனக்கு ப்ராப்யம் -என்கிறார் –

கீழ்ப் பாட்டிலே திரு மழிசை ஆழ்வார் உடைய சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரைக் கொண்டாடி –இப்பாட்டில் -தாம் முந்துற முன்னம் தொண்டு பட்ட
பெரிய பெருமாள் திருவடிகளில் அதி ப்ரவண ராய் –மற்றுமோர் தெய்வம் உண்டே -என்று அவரை ஒழிந்த எம்பெருமான்களை விரும்பாத -பாதிவ்ரத்யத்தை உடையரான
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் உடைய திருவடிகள் ஒழிய வேர் ஒன்றில் ஆதாரம் அற்று இருக்கிற எம்பெருமானார்-திருவடிகளே எனக்கு பிராப்யம் என்கிறார் –

தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளை ஒழிய மற்று ஒன்றில் ஆதரம் அற்று இருக்கும்-எம்பெருமானார் திருவடிகளே நமக்கு ப்ராப்யம் -என்கிறார் –
———————
14-ஸ்ரீ குலசேகரப் பெருமாள் உடைய திவ்ய சூக்தியை பாடுமவர்களை ஏத்தும் எம்பெருமானார்-என்னைப் பிரியாமையாலே -புருஷார்த்த லாபத்துக்கு
துச்சக சாதனங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் –

இவ் எம்பெருமானார் தம்முடைய பூர்வ அவதாரத்திலே -தாம் ஈடுபட்ட சக்கரவர்த்தி திரு மகன் –விஷயத்திலே அதி வ்யாமுக்த்தரான –ஸ்ரீ குலசேகர பெருமாள்
சூத்ரே மணி கதா இவ -என்னும்படி-முகம் அறிந்தவர் -மாணிக்கங்களை கோக்குமா போலே -சாஸ்திரம் சொல்லைக் களை பறித்து –தம்முடைய திவ்ய சூக்திகளாலே
நிர்மித்த திவ்ய பிரபந்தங்களை -அனுசந்திக்கும் பெரியோர்களுடைய திருவடிகளை ஸ்துதிக்கும் -எம்பெருமானார் என்னை விட மாட்டார் -ஆன பின்பு
புருஷார்த்த லாபத்துக்காக –துஸ் சககங்களான சாதனாந்தரங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் –

ஸ்ரீ குலசேகர பெருமாள் உடைய கவிகளை பாடும் அவர்களை ஏத்தும் எம்பெருமானார்-என்னை கை விட மாட்டார் -ஆகையாலே இனி
பேறு பெற வேண்டி தவம் செய்யும் கொள்கை இல்லாதவன் ஆயினேன் -என்கிறார்
———————————————
15-பெரியாழ்வார் திருவடிகளிலே பிரவண சித்தரான எம்பெருமானார் குணங்களில்-அனந்விதரைச் சேரேன் -எனக்கு என்ன தாழ்வு உண்டு -என்கிறார் –

-கீழ்ப் பாட்டிலே குலசேகரப் பெருமாள் சம்பந்தத்தை இட்டு -தம்மாலே கொண்டாடப் பட்ட-எம்பெருமானார் -தம்மை பரிகிரகித்த வைபவத்தை சொல்லி -இப்பாட்டிலே –
சர்வ பூத ஸூஹ்ர்த்தாய் சர்வ ரஷகனான சர்வேஸ்வரனை -சாஷாத் கரித்து -அவனுடைய-ரஷகத்யவாதிகளிலே கண் வையாதே –பிரேம தசை தலை எடுத்து
அவனுக்கு என் வருகிறதோ-என்னும் அதி சங்கையாலே-திருப் பல்லாண்டாலே மங்களா சாசனம் பண்ணி -அவனுக்கு காப்பிட்ட-பெரியாழ்வார் உடைய திருவடிகளுக்கு
ஆஸ்ரயம் ஆக்கின திரு உள்ளத்தை உடையரான-எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை -தங்களுக்கு ஆஸ்ரயமாக பற்றி இராத
மனுஷ்யரை நான் கிட்டேன் -ஆகையாலே எனக்கு இனி என்ன குறை -என்கிறார் –

பெரியாழ்வார் திருவடிகளை விட்டு -நீங்காத திரு உள்ளம் படைத்த எம்பெருமானார் குணங்களை-தங்களுக்கு சார்பாக
கொள்ளாதவர்களை சேர மாட்டேன் -இனி எனக்கு என்ன தாழ்வு இருக்கிறது –என்கிறார் –
———————————-
16-இப்படி ஸ்வ லாப அனுசந்தானத்தாலே ஹ்ருஷ்டரானவர் -எல்லாரும் தம்மைப் போலே-தத் விஷய பிரவணர் ஆகைக்கு உறுப்பாக -பகவத் வல்லபையான
ஆண்டாள் உடைய ப்ரஸாத பாத்ரமான எம்பெருமானார் லோகத்துக்கு செய்த உபகாரத்தை அருளி செய்கிறார் –

கீழ்ப் பாட்டிலே பெரியாழ்வார் சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரைக் கொண்டாடி –இப்பாட்டிலே -அந்த ஆழ்வாருடைய பெண் பிள்ளையான ஆண்டாளுடைய
ஸ்வபாவிக கிருபையாலே வாழ்ந்து கொண்டு -பரமோதார ஸ்வபாவராய்-அத்தாலே எல்லார்க்கும் பரம பதத்தை கொடுக்கைக்கு- மனனம் பண்ணிக் கொண்டு
போருகிற எம்பெருமானார் -வேத மார்க்கம் எல்லாம் அழிந்து -பூ மண்டலம்-எங்கும் ஒக்க -வியாபித்து கலியானது -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –
விண்ணின் தலை நின்றும் –மண்ணின் தலத்து உதித்து -எல்லாரையும் ரஷித்து அருளின நல்லன்பர் என்று சர்வரும் தம்மைப் போலே
தத் விஷய ப்ரவணர் ஆகைக்கு உடலாக அவர் செய்து அருளின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

தாழ்வு வர வழி இல்லாத வாழ்வு தமக்கு கிடைத்தது போலே எல்லோருக்கும் கிடைக்க வேணும் என்ற பெரு நோக்குடன் –அவர்கட்கு எம்பெருமானார் திறத்தும்
அவர் குணங்களை சார்ந்தோர் திறத்தும் -ஈடுபாடு உண்டாவதற்கு உறுப்பாக –அரங்கற்கு இனிய துணைவியான ஆண்டாள் அருளினால் வாழ்வு பெற்றவரான
எம்பெருமானார் மறை நெறியை நிலை நாட்டி -கலி யைக் கெடுத்து -உலகினுக்கு பேருதவி புரிந்ததை அருளி செய்கிறார்-
—————————
17-இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை கேட்டு தத் சமாஸ்ரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை-ஆஸ்ரயித்தாலும்-சுக துக்க நிபந்தனமான
கலக்கம் வரில் செய்வது என்ன –திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய் -எங்கள் நாதராய் இருக்கிற
எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் அவை மேலிட்டாலும் கலங்கார் என்கிறார் –

கீழ் எல்லாம் ஆழ்வார்களை இட்டே எம்பெருமானாரை கொண்டாடுகிற பிரகரணம் ஆகையாலே-இப்படி எம்பெருமானார் செய்து அருளின உபகாரங்களைக் கேட்டு
தத்சமாசரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை-ஆஸ்ரயித்தாலும் சுக துக்க நிபந்தமாக கலக்கம் வரில் -செய்வது என் என்று -திருக் கண்ண மங்கையுள்
நின்று அருளின பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த –திருமங்கை ஆழ்வாருக்கு பிரிய தமரான-
எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் –ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் –

இங்கனம் கலியினால் நலி உறாது உலகினைக் காத்து எம்பெருமானாரைப் பற்றிடினும்-இன்ப துன்பங்களால் நேரிடும் கலக்கம் விளக்க ஒண்ணாதது அன்றோ
என்பாரை நோக்கி-திரு மங்கை ஆழ்வாருக்கு இனியரும் எங்களுக்கு நாதருமான எம்பெருமானாரைப்-பற்றினவர்கள் இன்ப துன்பங்களால் கலங்க மாட்டார்கள் –என்கிறார் —
——————————
18-நம் ஆழ்வாரைத் திரு உள்ளத்திலே வைக்க அநுரூப வைபவரான ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்-குணங்களை சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக
உபகரிக்கும் எம்பெருமானார்-எனக்கு ஆன துணை -என்கிறார் –

கீழில் பாட்டுக்களில் பிரதி பாதிக்கப் பட்ட ஆழ்வார்களில் வைத்துக் கொண்டு –பிரதாநராய் -சர்வாதிகார்ரராம் படி -திருவாய்மொழி என்கிற பிரபந்தத்தை
அருளிச் செய்கைக்காக அவதரித்து அருளின நம் ஆழ்வாருக்கு -அனந்யார்ஹரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய கல்யாண குணங்களை
சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரித்து அருளின எம்பெருமானார் -எனக்கு சகாயம் என்கிறார் –

நம் ஆழ்வாரைத் தம் திரு உள்ளத்திலே வைத்து கொள்வதற்கு ஏற்புடைய பெருமை வாய்ந்தவரான-ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் உடைய குணங்களை
எல்லா ஆன்மாக்களும் உஜ்ஜீவிப்பதற்க்காக உபகரித்து அருளும் எம்பெருமானாரே எங்களுக்கு நல்ல துணை என்கிறார் –
——————————-
19-ஐஸ்வர்யாதி பரதேவதா பர்யந்தமான அபேஷித வஸ்துக்கள் எல்லாம் திருவாய்மொழியே –என்று ஜகத் பிரசித்தமாக நின்ற எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் -என்கிறார் –

ஐஹிக ஆமுஷ்மிக சமஸ்த சம்பத்தும் -சர்வவித பந்துக்களும் -வகுத்த சேஷியான-ஸ்ரீயபதியும் – நம் ஆழ்வார் -தமக்கு பகவத் நிர்துஹேதுக கிருபையாலே பிரகாசியா நின்று
உள்ள அர்த்த விசேஷங்களை-அடைவே அருளிச் செய்த த்ரமிட உபநிஷத்தே என்று சகல ஜனங்களுக்கும் உபதேசிக்கிற எம்பெருமானார்-எனக்கு நிரதிசய போக்யர் – என்கிறார்-

திருவாய் மொழியே சொத்தும் -தந்தையும் -தாயும்-குருவும் -ஸ்ரீ ய பதியான பர தேவதையுமாக-உலகில் பிரசித்தமாகும் படி நின்ற எம்பெருமானார் எனக்கு மிகவும் இனியர் -என்கிறார்-
——————————
20-நாதமுனிகளை தம் திரு உள்ளத்திலே அபிநிவேசித்து அனுபவிக்கும் எம்பெருமானார்-எனக்கு பரம தனம் -என்கிறார்-

தர்சநீயமான திரு நகரிக்கு நிர்வாஹரான நம் ஆழ்வார் உடைய அமிர்தமய திவ்ய ஸூக்தி-ரூபமாய் இருந்துள்ள -திருவாய் மொழியை சார்த்தமாக அப்யசிக்க வல்லார்
திறத்திலே -அதி ப்ரவணராய் இருக்குமவர்களுடைய -கல்யாண குணங்களிலே சக்தராய் -உஜ்ஜீவிக்கும் ஸ்வபாவத்தை உடையரான
ஸ்ரீமன் நாதமுனிகளை -தம்முடைய மனசாலே அனுபவிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு-மகா நிதியாய் இருப்பார் என்கிறார் –

இதுகாறும் ஆழ்வார்கள் இடம் எம்பெருமானாருக்கு உள்ள ஈடுபாடு பேசப்பட்டது –இனி ஆசார்யர்கள் இடம் உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது -யோக முறையில் நேரே
சாஷாத்காரம் பண்ணின -மாறன் இடம் இருந்து -செம் தமிழ் ஆரணத்தை -அடைந்து -அதன் இசையை உணர்ந்தவர்களுக்கு-இனியவர்களின் குணங்களில்
பலகால் பயின்று உஜ்ஜீவிக்கும் நாத முனியை ஆர்வத்தோடு நெஞ்சால் அனுபவிக்கும் எம்பெருமானார் எனக்கு கிடைத்த புதையல் –என்கிறார் –
—————————-
21-ஆளவந்தார் உடைய திருவடிகள் ஆகிற ப்ராப்யத்தை பெற்றுடைய எம்பெருமானார்-என்னை ரஷித்து அருளினார் -ஆகையால்
ஷூத்ரருடைய வாசல்களிலே நின்று அவர்கள் ஒவ்தார்யாதிகளைச் சொல்லி ஸ்துதியேன்-என்கிறார் –

இவ்வளவும் -ஆழ்வார்கள் உடையவும் -ஸ்ரீ மன் நாத முனிகள் உடையவும் சம்பந்தத்தை இட்டு –எம்பெருமானார் உடைய வைபவத்தை யருளிச் செய்து கொண்டு வந்து
இதிலே சரம பர்வ நிஷ்டர் எல்லாருக்கும்-ஸ்வாமியான ஆளவந்தார் உடைய திருவடிகளை உபாய உபேகமாக பற்றின -எம்பெருமானார் என்னை ரஷித்து-
அருளின பின்பு -இனி நீசரான மனுஷ்யரை ஸ்துதித்து க்லேசப் பேடன் என்கிறார் –

ஆளவந்தார் உடைய திருவடிகளை பெரும்பேறாக உடைய எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் -ஆகையால் அற்பர்கள் உடைய வாசல்களில்
நின்று அவர்கள் உடைய வள்ளன்மை முதலியவற்றைக் கூறிப் புகழ் பாட மாட்டேன் -என்கிறார் –
———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ வைபவ ஸ்தோத்ரங்கள் / வைபவம்–

April 2, 2017

யோ நித்யம்   அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் தாதி தராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ கூரத் ஆழ்வான் அருளிச் செய்ததனியன் –

வந்தே வேதாந்த கர்ப்பூர சாமீகர கரண்டகம்
ராமாநுஜார்ய மார்யாணாம் சூடாமணி மஹர் நிசம் -ஸ்ரீ சரணாகதி கத்ய தனியன் –

சித் அசித் பரத்வா நாம் தத்வ யாதாம்ய வேதிநே
ராமாநுஜாய முனயே நமோ மம கரீயஸே–ஸ்ரீ ரெங்க கத்யம் தனியன் –

யாமுநார்ய ஸூதாம் போதிம் அவகாஹ்ய யதா மதி
ஆதாய பக்தி யோகாக்யம் ரத்னம் சந்தர்சயாம் யஹம் –ஸ்ரீ வைகுண்ட கத்யம் தனியன்

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு
ஸ ஏவ சர்வ லோகானாம் உத்தர்த்தா நாத்ர சம்சய –ஸ்ரீ கூரத் ஆழ்வான் –

புண்யம் போஜ விகாசாய பாப த்வாந்த ஷயாயச
ஸ்ரீ மான் ஆவீர் பூத் பூமவ் ராமானுஜ திவாகர —

த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூத்ய
ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந —

வேதோத்தம்ச குஹா விஹார படு நா ஸ்ரீ சைல ஸ்ருங்கோல்லசந்
மாயா கேசரி மா நிதேன கஹ நன்யாயாட வீ சாரிணா
கம்பீரேண பாராத்ம பேதந மஹா நாதேந நாதேந மே
குப்தோஹம் யதி ஸார்வ பவ்ம ஹரிணா வரத்தே ப்ருசம் நிரப்பய –எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோக ரத்னம்-
வலி மிக்க சீயம் -ஐந்து விசேஷணங்கள் இதில் –1–உபநிஷத்துக்குள் ஆகிய குகையில் மன்னி –
24-காம்பீர ஸ்ரீ ஸூ க்திகள் உண்டே -5–பெரு முழக்கம் இதர ஜந்துக்களை புற மதஸ்தர்களை மாய்க்கும்
பரத்வ ஜீவாத்மா ஐக்கியம் சொல்லும் மாதா வாதிகளை நிரசித்த பெருமை உண்டே –
இந்த ராமானுஜ சிம்மத்தின் திருவடியில் ஒதுங்கி சிங்கக் குட்டிகளாக பயம் இல்லாமல் அன்றோ நாம் உள்ளோம்-

ஆழி மழைக்கு அண்ணா ஓன்று நீ கை கரவேல் -பிரதிகூலமான சம்சார துக்க வ்ருஷ்டியைப் போக்கி அனுகூலமான பகவத் கடாக்ஷ அம்ருதமாகிற வ்ருஷ்டியைப் பெறுவிக்கும் விஷயத்தில் –கோயில் அண்ணரே நீர் நன்றாக கை கொடுக்க வேணும் –சம்சாரிகளுக்கும் சர்வேஸ்வரனுக்கும் கை கொடுக்க வேணும் -ஞானக் கை தா –
ஆழி மழைக் கண்ணா
கண்ண நீர் மழையை-ஆஹ்லாத சீத நேத்ராம்பு –வண் பொன்னிப் பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர்
ஆழி மழைக் கண்ணா
மழைத் தெய்வமே –மேகமே –குணம் திகழ் கொண்டல் அன்றோ / விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-
ஆழியுள் புக்கு முகந்து கொடு -உபய வேதக் கடல்
ஆர்த்து -கர்ஜித்து –பத்ரவேதீம் த்ரிவேதீம் -கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் மேல் ஏறி-ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து-
பாலன்ன திருமேனியாய் இருந்தும் –தேவ பிரானுடை கரிய கோலத் திரு உருவைத் தம் உள்ளே அடக்கி அந்த நீல மேனியின் நிழலீட்டாலே ஸ்வாமி திருமேனியும் -முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியாக சேவை சாதிக்க வேணும் -என்றதாயிற்று -அண்ணரே   நீர் பால் போன்ற திருமேனியுடன் திருவவதரித்து இருந்தாலும் முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனா ஊழி முதல்வன் திரு உருவை உள் அடக்கிக் கொண்டு தத் சாதர்மயத்தை பெற்று இருப்பீர் –ஸ்ரீ ரெங்க விமானம் போலவே என்றதாயிற்று –பாழியம் தோளுடைப் பற்ப நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் பூரி போல் நின்று அதிர்ந்து –அடையார் –-கை யாழி என்னும் படையோடு -என்று திருவாழியை முன்னே சொல்லி –புடையார் புரி சங்கமும் –என்றால் போலே -விரோதி நிரசனத்துக்கும் ஞான பிரதத்வத்துக்கும் –
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர் –திரு விருத்தம் —உடையவர் அன்றோ -உபய விபூதி நாதத்வம் -வலம் புரி போல் நின்று அதிர்ந்து -படை போல்  புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியம் —தற்கச் சமணரும் –மாண்டனர் –
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் -கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே -திருவரங்கச் செல்வனார் திருவருள் பெற்று இணை பிரியாது தூய அமுதைப் பருகிப் பருகி மகிழ்ந்தவர் அன்றோ நம் ஸ்வாமி
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் பெய்திடாய் -என்றும் – வாழப் பெய்திடாய் –என்றும் -போலே நாட்டிய நீசச் சமயங்கள் மாலாவும் நாரணனைக் காட்டிய வேதம் களிப்புறவும் தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழவும் – பாஹ்ய குத்ருஷ்டிகள் ஒழியவும் ஆஸ்ரித சம் உஜ்ஜீவனத்துக்காகவும்
தாழாதே பெய்திடாய் –
கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம்மிராமாநுசன் அவ் வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே

ந சேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுரக்ஷரீ
காம வஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ -சேமவைப்பான திருநாமம் -ஸ்ரீ முதலியாண்டான் -அருளிச் செய்த முக்த ஸ்லோகம்

புரா ஸூத்ரைர் வ்யாஸ சுருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான்
விவத்ரே தத் ஸ்ராவ்யம் வகுள தரதாமேத்ய ச புன
உபா வேதவ் க்ரந்தவ் கடயிது மலம் யுக்தி ப்ரஸவ்
புநர் ஐஜ்ஜே ராமாவரஜா இதி ச ப்ரஹ்ம முகுர–எம்பார் / முதலியாண்டான் /ஸ்ரீ பராசர பட்டர்-அருளிச் செய்த முக்த ஸ்லோகம்
வ்யாஸர் -ப்ரஹ்ம சூத்ரம் -விவரணமே -நம்மாழ்வார் -திருவாய்மொழி –உபய க்ரந்தங்களையும் சமன்வயப் படுத்தி அருளவே ஸ்வாமி
-இது கொண்டு சூத்ரம் ஒருங்க விடுவார் என்றார்களே –

யத் பதாம் போருஹ-த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ –வஸ்துதாம் உபாயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் —என்று
யத் பதாம் போருஹ-ஆறு எழுத்துக்களுக்கு -14-வர்ண கிராமம் -14-திருவடிகள் -நம்மாழ்வார் / ஆளவந்தார் / பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை சொன்னபடி
பத அம்போருஹ -தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே/ மண் வின் முழுதும் அளந்த ஒண் தாமரை /
பகாரம் -ஸ்ரீ -பராங்குச தாசர் பெரிய நம்பி /

காஷாய சோபி கம நீய சிகா நிவேசம்
தண்டத்ர யோஜ்ஜ்வலகரம் விமலோபவீதம்
உத்யத்தி நேச நிப முல்லஸ தூர்த்வ புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –பூர்வர்கள்-ஸ்ரீ கூரத் தாழ்வான்-என்பர் – அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

ஸ்ரீ ராமானுஜ முனிர் ஜியாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரத
கலி கோலா ஹல க்ரீடாம் உதாக்ர ஹம பாஹரத்–ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்

நம பிரணவ சோபிதம் நவ கஷாய கண்டம் பரம்
த்ரிதண்ட பரிமண்டிதம் த்ரிவித தத்வ நிர்வாஹம்
தயாஞ்சித த்ருகஞ்சலம் தலித வாதி வாக் வைபவம்
சமாதி குண சாகரம் சரணமேமி ராமானுஜம்–பூர்வர்கள் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

ஏதாநி தாநி புவன த்ரய பாவநாநி சம்சார ரோக சநலீ காரா ஒளஷதாநி
ஜிஹ்வாதலேம மலிகாநி யதாசிலாயாம் ராமானுஜோதி சதுராண்யம்ருத்ரஷராணி–பூர்வர்கள் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாராவதீ பிரயாக மதுரா யோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனி –ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்

அர்வாஞ்சோயத் பத சரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரிதய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வய முபகதா தேசிகா முக்திமாபு –
சோயம்ந் ராமானுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் -பத சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத —

யஸ் ஸ்வாபாகலே கருணாகரஸ்சான் பவிஷ்ய தாசார்ய பர ஸ்வரூபம்
சந்தரசயா மாச மஹாநுபவம் தம் காரி ஸூ நும் சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ மன் நாதமுனிகள் ஆழ்வார் விஷயமாகவும் பவிஷ்யதாசார்யர் விஷயமாகவும் அருளிச் செய்தது –

யஸ்மின் பதம் யதி வரஸ்ய முகாத் ப்ரணேது
நிஷ் காம தேவ விததே நிகமாந்த பாஷ்யம்
தஸ்யைவ தம் பகவத ப்ரிய பாகி நேயம்
வந்தாமஹே வரத விஷ்ணு பதாபிதேயம்-

ஸ்ரீ மன் ரங்க பதிச்ச வேங்கடபதி ஸ்ரீ வாரணாத்ரே பதி
ஸ்ரீ யாதவத்ரி பதிச்ச கிம் ச ததா திவ்ய ஸ்தலா தீஸ்வரா
ஆச்சார்யச்ச ச யாமுனோ முனிவர ஸ்ரீ சைல பூர்ணஸ் ததா
ஸ்ரீ ராமானுஜ சன்ய மிந்த்ர குரவே தத்யக் பிரசாதம் தது –ஸ்வாமி பூர்வாஸ்ரம இளைய சகோதரி -ஸ்ரீ -கமலா தேவி திருக் குமாரர் ஸ்ரீ வரத விஷ்ணு என்னும் ஸ்ரீ நடாதூர் அம்மாள் அருளிச் செய்தவை

யதி பரிப்ருடோ யத் கீதாநாம் அதர்சய தஞ்ஜசா
நிகம பரிஷன்நேதீ யாம்சம் ஸூதாமயமாசயம்
ஜனன பதவீ யாதாயா தஸ்ரமாபஹாரம் தியம்
ஜனயது ஸ மே தேவ ஸ்ரீ மான் தனஞ்ஜய சாரதி –ஸ்ரீ தேசிகர் ஸ்ரீ கீதா பாஷ்ய தாத்பர்ய சந்திரகை –

தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நான்யத்ர–
அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா தேசிகா முக்திமாபு -சோயம் ராமானுஜ முனி ரபி –
பத்யஸ் சம்யமி நாம் ப்ரணம்ய சரணவ் தத் பாத கோடீரயோஸ் சம்பந்தேன சமித்யமானவிபவான் தன்யான் ததா அன்யான் குரூன் –நியாய பரிசுத்தி மங்கள ஸ்லோகம் -ஸ்ரீ தேசிகன்
பத்யஸ் சம்யமி நாம்-சரணவ்-எம்பெருமானாருடைய திருவடிகளை / ப்ரணம்ய-வணங்கியும் –
தத் பாத கோடீரயோஸ் சம்பந்தேன -அந்த எம்பெருமானாருடைய திருவடி என்ன திரு முடி என்ன -இவற்றினுடைய சம்பந்தத்தினால் —கோடீரம் -திருமுடி
சமித்யமானவிபவான்-மிகப் பெருமை பெற்றவர்களாய் / தன்யான்-க்ருதார்த்தர்களாய்
ததா அன்யான் குரூன் ப்ரணம்ய--எம்பெருமானார் அடியார்களை வணங்கியும் -என்றவாறு–குரும் பிரகாசயேத் தீமான் மந்த்ரம் யத்நேந கோபயேத்-அப்ரகாச ப்ரகாசாப்யாம் ஷீயதே சம்பாதயுஷீ –என்றபடி குருவை பிரகாசப்படுத்தியும் உபதேசிக்கப்பட்ட  மந்த்ரங்களை பொக்கிஷமாக பாதுகாப்பதும் கர்தவ்யம் —அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ஸ்யதேஸ்வ சம்பந்தி சம்பந்தி நிஸ்தரண மபி சர்வ சப்தாபிப்ரேதம் -என்று சம்பந்தம் சாஷாத்தாகவோ பரம்பரையாகவோ உள்ளவர்களுக்கும் பேறு தப்பாது என்று அன்றோ பிராட்டி அருளிச் செய்கிறாள்

முன்னே பிறந்து இறந்து மூதுலகில் பட்டதெல்லாம்
என்னே மறந்தனையோ என்னெஞ்சமே-சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி—-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

ஜயஜய எதி சார்வ பௌமா மலஸ்வாந்த துப்யம் நம
ஜய ஜய ஜநி சிந்துமக்நாத்ம சந்தாரக கிராமணி
ஜய ஜய பஜநீயா கூரேசமுக்யை ப்ரசீத பிரபோ
ஜய ஜய விதுஷாம் நிதே ஜாக்ருஹீ ஸ்ரீ நிதே ஜாக்ருஹீ –ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ ஸூப்ரபாதம் –

கத்யத்ரயம் நிகமசேகரே தீப சாரௌ
வேதாந்த சங்க்ரஹம்  அபி பிரதிதஞ்ச நித்யம்
கீதார்த்த பாஷ்யமபி தேசிக புங்கவாநாம்
தாதும் ப்ரசீத யதிசேகர ஸூப்ரபாதம்—ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ ஸூப்ரபாதம் –

பாஷாண்ட சாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமானுஜோ விஜயதே யதி ராஜ ராஜ —

தேவராஜா க்ருபா லப்த ஷட்வாதார்த்த மஹோததி
பூர்ணார்யா லப்தசே மந்த்ர சௌரிபாதாப்ஜ ஷட்பத –ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

ஸ்ரீ வேங்கடா ஜலபதி ப்ரிய லஷ்மணார்யா
சர்வக்ஞ பவ்யயதி சேகர சார்வ பௌம
வஷாவனே சஹிதத்ருஷ்ண வரார்ச்சி தௌ
ஸ்ரீ பாஷ்யகார சரனௌ சரணம் பிரபத்யே தே –ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் 

நச ராமானுஜேத்யேஷா சதுரா சதுராஷர
காம வஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்ததோஹம் தமாத்ருச-ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

ஸ்ரீ ராமாநுஜார்ய ரமணீய குணாபிராமம்
ராகாதி தூஷக குரோ குரு சார்வ பௌம
சத்வ பிரதான சரணாகத வத்சல த்வத்
பாதாப்ஜ யோரிஹா பரதர ச கிங்கரஸ் ஸ்யாம்-

கோதற்ற ஞானத் திருப்பாவை பாடிய பாவை தங்கை
வாதுக்கு வல்லவன் ஆண்டான் மருமான் தம்பி எம்பார்
தீதற்ற செல்வப் பிள்ளையோ பிள்ளை நம்பி சிச்சன்
ஏதுக்கு இராமானுசனை எதி என்று இயம்புவது இரு நிலமே–

வையம் குருடன்றோ மா மறை நூல் பொய்யன்றோ
அய்யனுரைத்த தமிழ் யார் அறிவர் வையத்துக்கு
ஊன்று கோல் எந்தை எதிராசர் உத்தரித்த
மூன்று கோல் காண்பதற்கு முன்

———————————-

ஸ்ரீ பகவத் ராமானுஜ ஸூப்ரபாதம் –

ஜய ஜய யதிராஜ ஸார்வ பவ்ம அமல ஸ்வாந்த துப்யம் நம
ஜய ஜய ஜனி சிந்து மக்நாத்ம சந்தாரக க்ராமணீ
ஜய ஜய பஜநீய கூரேச முக்யை ப்ரசீதவிபோ
ஜய ஜய விதூஷாம் நிதே ஜாக்ரஹி ஸ்ரீ நிதே ஜாக்ரஹி —1-

பூர்ணார்ய பூர்ண கருணா பரி லப்த போத வைராக்ய பக்தி முக திவ்ய குணாம்ருதாப்தே
ஸ்ரீ யாமு நார்ய பத பங்கஜ ராஜ ஹம்ஸ ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் –2-

ஆநேது மத்ய வர தஸ்ய கஜாத்ரி பர்த்து பாநீயமச்சமதி சீத மகதா கூபாத்
த்வாந்தம் நிரஸ்த மருணஸ்ய கரைஸ் சமந்தாத் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —3-

ஸ்ரீ ரெங்க ராஜ பதபங்கயோர சேஷ கைங்கர்ய மாகாலயிதும் ச குதூஹலஸ் த்வம்
உத்திஷ்ட நித்ய விதி மப்ய கிலஞ்ச கர்த்தும் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —4-

த்வாம் வீஷீதும் சமூபயாதி வ்ருஷாச லேந்திர த்வத் ஸம்ப்ரகசுப்த வர சங்கர தாங்க பாணி
சம்யோஜி தாமுரசிமாம் பவதைவ பிப்ரத் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —5-

ஸ்ரீமத் குரங்க பரிபூர்ண விபுஸ்தவ துக்தம் ஸ்ரீ பாஷ்ய சாஸ்திர மமலம் த்வயீ பக்தி யுக்த
ஸ்ரோதும் ஸமிச்சதி யதீந்த்ர சிதோர்த்வ புண்ட்ர தம்போதயார்த்த மகிலம் தவ ஸூ ப்ரபாதம் –6-

ஸ்ரீ பாஷ்ய மாலிகிதுமாத்த விசால லேக்ய ஸ்ரீ வத்ச சிஹ்ன குருராநத திவ்ய காத்ர
வேதாந்த ஸூ த்ர மபிவக்து மமுஷ்ய சர்வம் உத்திஷ்ட லஷ்மண முநே தவ ஸூ ப்ரபாதம் –7-

ஸ்ரீ மான் ச பூர்ண வடுராதரத ப்ரக்ருஹ்ய ஸ்ரீ பாதுகாம் யதிபதே பதயோ ப்ரயோக்த்தும்
த்வாரிஸ் திதிம் வித நுதே ப்ரணதார்த்தி ஹாரின் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் –8-

காஷாய வஸ்திர கடி ஸூத்ர கமண்டல லூச்சஸ் ஸ்ரீ தந்த காஷ்டமபி தேதிக ஸார்வ பவ்மா
பாணவ் நிதாய நிவஸந்தி விசுத்த காத்ரா ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் –9-

த்வாம் போத யந்தி குரவ பிரதிதா மஹாந்த ஸ்ரீ வைஷ்ணவாச்ச யமிநஸ்தவ பாத பக்தா
ஏகாந்தி நச்ச விமலா ஸ்த்வத அநந்ய பாவா ஸ்தான் பால யாத்ய யதி சேகர ஸூப்ரபாதம் –10-

ப்ராஹ்மேப்ரபுத்ய விபுதாஸ் ஸ்வ குரூன் ப்ரணம்ய ராமாநுஜாய நம இத்ய ஸக்ருத் ப்ருவாணா
அஷ்டாக்ஷரம் ச சரமம் த்வயம் உச்சாந்தி ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —11-

ப்ராத படந்தி பரம த்ரவிட ப்ரபந்ந காயத்ரி மந்த்ர சதமஷ்ட சிரஸ் கமச்சம்
ஸ்ரீ வைஷ்ணவாஸ் தவ பதாப்ஜ நிவிஷ்ட பாவா ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —12-

ஆராத்நம் ரசயிதும் கமலா சகஸ்ய ஸ்ரீ யாதவாசல பதே விவிதோபஸாரை
பாதும் சத்ருஷ்ட்டி கமலேந நதா ந சேஷான் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —13-

சம் ஸேவ்ய சப்த சத சம்யமி ஸார்வ பவ்மை சத்தேசிகை சகல சாஸ்திர விதம் வரிஷ்டை
ஏகாந்திபி பரம பாகவதைர் நிஷேவ்ய ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —14-

கத்ய த்ரயம் நிகம சேகர தீப சாரவ் வேதார்த்த சங்க்ரஹம் அபி பிரதி தஞ்ச நித்யம்
கீதார்த்த பாஷ்யம் அபி தேசிக புங்கவா நாம் தாதும் ப்ரஸீத யதி சேகர ஸூப்ரபாதம் —-15-

பாதாம்புஜம் யதிபதே சரணம் விஹர்த்தும் சங்கத்ய சம்சரண வாரிதி தர்த்து காமா
ஆயாந்தி ஹஸ்தக மலாபித்ரு தோபஸாரா தான் பாஹி தே கருணயா தவ ஸூப்ரபாதம் –16-

ஸ்நாதும் கவேரத நயா சலிலேஷூ சிஷ்யை ஆச்சார்ய புருஷ வரை யதிபிர் விசுத்தை
ஸ்ரீ வைஷ்ணவச்ச சஹ ஸேவ்ய மஹானுபாவை ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —17-

ஸ்ரீ ராமாநுஜார்ய ரமணீய குணாபிராம ராகாதி தூஷக குரோ குரு ஸார்வ பவ்ம
சத்வ பிரதான சரணாகத வத்ஸல த்வத் பாதாப்ஜ யோரிஹ பரத்ரச கிங்க ரஸ்யாம் –18-

ஸ்ரீ பகவத் ராமானுஜ ஸூப்ரபாதம் ஸமாப்தம்

—————————————————–
பிரார்த்தனா பஞ்சகம்
யதீஸ்வர ச்ருணு ஸ்ஸ்ரீமன் கிருபயா பரயா தவ
மம விஞ்ஞாபனம் இதம் விலோக்ய வரதம் குரும் –1-
அநாதி பாபரசிதாம் அந்தக்கரணம் நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிர்வாசய வாசநாம் -2-
அபி பிரார்த்தயமாநாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்யமே வாத்ர ஹித காரின் யதீந்த்ர ந –3-
யத் அபராதா நஸ்யுர்மே பக்தேஷூ பகவத்யபி
யதா லஷ்மண யோகீந்த்ர யாவத்தேஹம் ப்ரவர்த்தய –4-
ஆ மோக்ஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலஷே போஸ்து ந சத்பி ஸஹவாசம் உபேயுஷாம் –5-
இத்யேதத சாதாரம் வித்வான் பிரார்த்தனா பஞ்சகம் படன்
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ

பிரார்த்தனா பஞ்சகம் ஸமாப்தம்
———————

ஓம் பகவன் நாராயண
அபிமத அநுரூப
ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணாம்
பத்மவ நாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம்
அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே-ஸ்ரீ சரணாகதி கத்யம் ஸ்ரீ ஸூ க்திகள் —

அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ஸ் யதே –அஸ்து தே -முதல் வாக்யமே போதுமே –மேலே தயைவ சம்பத்ஸ் யதே -என்றும் சர்வம் சம்பத்ஸ் யதே –
பேறு உமக்கு மாத்ரம் அன்று -உம்மோடு அவ்யஹித சம்பந்தம் பெற்ற சாஷாத் சிஷ்யர்களுக்கு மாத்ரம் அன்று -சம்பந்தி சம்பந்திகள்
என்னும் படியான பரம்பரா சம்பந்திகளுக்குமாகக் கடவது -சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி —
இதையே மா முனிகள் –காலத்ரயேபி —ஷேமஸ் ச ஏவ ஹி யதீந்திர பவச்சிரிதா நாம் –
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் —பிடித்தார் பிடித்தார் பிடித்து இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
தேசிகன் -பாதுகா சஹஸ்ரத்தில் -திராவிட உபநிஷத் அந்நிவேச சூன்யான் அபி லஷ்மீ ரமணாய ரோசயிஷ்யன் –
தருவமாவிச திஸ்ம பாதுகாத்மா சடகோபஸ் ஸ்வ யமேவ மா நநீய
அனைவருக்கும் திருவாய்மொழியில் அந்வயம் ஆவதற்கே சடாரி யாகி கைக்கொண்டு அருளுகிறான் -என்கிறார்
விதீர்ணம் வரம் ச்ருத்வா -அரங்கன் லஷ்மண முனிக்கு கொடுத்த அனுக்ரஹம்
பத்யுஸ் சம்யமி நாம் ப்ரணம்ய சரனௌ தத் பாத கோடீரயோ
சம்பந்தேன சமித்யமா நவிபாவன் தன்யான் ததான்யான் குரூன்
கோடீரம் திருமுடி சம்பந்தம் -தத் பாத கோடீரேயோ -திருவடி திருமுடி சம்பந்தத்தால் -ச்ருத்வா -கர்ண பரம்பரையாக வந்த விஷயம்
துடுப்பு இருக்க கை வேக வேணுமோ -கிடாம்பி யாச்சான் -முன்னோர்களே ஸ்ரீ ராமானுஜர்க்கு அரங்கன் கொடுத்த வரம் இப்படிப் பட்டது
என்பதை சொல்லிய பின்பு நாம் ஆராய வேண்டுமோ
சம்பந்த சம்பந்திகள் அளவும் பாடும் படி இருகரையும் அழிக்கும் படி கிருபா பிரவாகம் கொண்டவன் –
ஒரு மலையில் நின்றும் ஒரு மலைக்குத் தாவும் சிம்ஹ சரீரத்தில் ஜந்துக்களைப் போலே பாஷ்யகாரர் சம்சாராதி லங்கனம் பண்ண
அவரோடு உண்டான குடல் துவக்காலே நாம் உத்தீர்னர் ஆவுதோம் –
லஷ்மீ பதேர் யதி பதேச்ச தயை கதாம் தோர் யோ சௌ புரா சமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் ப்ராச்யம்
பிரகாசயது ந பரமம் ரஹச்யம் சம்வாத ஏஷ சரணாகதி மந்த்ரசார –முதலியாண்டான் –

தஸ்யை தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணே நாராயணஸ்ய -அபரிச்சேதய ஞான ஆனந்த அமலத்வ -ஸ்வரூபவத்
-ஞான சக்தி பலைஸ் ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் -ப்ரப்ருத்ய அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணவத்-
ஸ்வ அபிமத ஸ்வ அநுரூபைக ரூப திவ்ய ரூப -தத் உசித நிரதிசய கல்யாண விவித அனந்த பூஷண
-ஸ்வ சக்தி சத்ருச அபரிமித அனந்த ஆச்சர்ய நாநாவித யுத ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதி மஹிம மஹிஷி
ஸ்வ அநு ரூப கல்யாண ஞான க்ரியாத் அபரிமேய குண ஆனந்த பரிஜன பரிச்சத-ஸ்வ உசித நிகில போக்ய போக உபகாரணாத்யா அனந்த மஹிஷீ பவா
வாங்மனச கோசார ஸ்வரூப ஸ்வாபாவ திவ்ய ஆஸ்தாநாதி–நித்ய தர நிரவத்யதர கோசராச்ச சஹஸ்ர ரஸ க்ருத்தயஸ் சந்தி–வேதாந்த சங்க்ரஹம் ஸ்ரீ ஸூக்திகள்

பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபவத்வம் –ஸூ த்ர காரச்சவததி –அந்தஸ் தத்தர் மோபதேசாத்—இதி
-யோசாவாதித்ய மண்டல அந்தர்வர்த்தி தப்த கார்த்தஸ்வரகிரி வரவ்ரப
சஹஸ்ராம்சுச தசை சஹஸ்ர கிரண-கம்பீராம்ச -ஸமுத்பூத –ஸூம் ருஷ்ட நாள–ரவிகர–விகசித–புண்டரீக -தலாமலாய -தேஷண-
ஸூப்ருலலாட ஸ்வ ரஸாஸூஸ்மி தர தர வித்ரும -ஸூருசிர கோமல கண்டம் கம்புக்ரீவ சமுன் நதாம்ச விலம்பீ சாருரூப திவ்ய கர்ணகி சலய பீன வ்ருத்தாயத புஜ
சாருதராதாம் ரகரதலா நுரக்த அங்குலீ ப்ரலன்க்ருத-தனுமத்த்ய -விசால வக்ஷஸ்தல -சமவிபக்த சர்வாங்க அநிர்தேஸ்ய திவ்ய ரூப சம்ஹநன-
ஸ்நிக்த வர்ண பிரபுத்த புண்டரீக சாரு சரண யுகல ஸ்வ அனுரூப பீதாம்பர தர
அமல கிரீட குண்டல ஹார கௌஸ்துப கேயூர கடக நூபுர உத்தர பந்தனாத்ய-அபரிமித ஆச்சர்ய அனந்த திவ்ய பூஷண
சங்க சக்ர கத அஸி சார்ங்க ஸ்ரீ வத்ச வனமாலா அலங்க்ருத -அனவதிக அதிசய ஸுந்தர்ய ஹ்ருத அசேஷ மனோ த்ருஷ்ட்டி வ்ருத்தி –
லாவண்யம் ருதபூரிதர சேஷ சர அசர பூத ஜாத -அத்யத்புத அசிந்த்ய நித்ய யவ்வன புஷப ஹாஸ ஸூகுமார புண்ய கந்த வாசிதா நந்ததி கந்தரால
த்ரை லோக்யா க்ரமண ப்ரவ்ருத்த கம்பீர பாவ கருணை அநு ராக மதுர லோக நாவலோகிதாச்ரித வர்க்க புருஷவரோ த்ருச்யதே ஜக்துதய விபவ லய லீல
நிரஸ்த ஸமஸ்த ஹேய ஸமஸ்த கல்யாண குண நிதி ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண
பரமாத்மா பரம் ப்ரஹ்ம நாராயண் இத்யவ கம்யதே–தத்தர் மோப தேசாத் — வேதாந்த சங்க்ரஹம் ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பத்தாம் புஜ பருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத்ஸ சிந்ஹ சரணம் யதிராஜ மீடே –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த யதிராஜ விம்சதி ஸ்லோகம்-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த -ஆர்த்தி பிரபந்தம் —-1

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான சூரியர் கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாறி தமக்காமோ
மற்றுள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி வீசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -ஆர்த்தி பிரபந்தம் – 26-

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம்புதல்வர்
தம்மதன்றோ தாயமுறை தான் -ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த –ஆர்த்தி பிரபந்தம் -60-

ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூ க்தி ஸ்வாதீந பதிகாம் ச்ருதிம் -ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–10-

உபவீதிநம் ஊர்த்வ புண் ட்ரவந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணா கத சார்த்த வாஹம் ஈடே சிகாயா சேகரிணம் பதிம் யதீ நாம் – ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–11

சமித உதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான் நநு ராம அவரஜ ச ஏஷ பூய -ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி-13

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் -குன்றம்
எடுத்தான் அடி சேர் இராமானுசன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி —ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் அருளிச் செய்தது –

இதுவோ திரு நகரி இவ்வாறோ தண் பொரு நல்
இதுவோ பரம பதத்து எல்லை -இதுவோ தான்
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருட்கும்
உட்பொருளாய் ஓதும் சடகோபன் ஊர்  -ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்தது-

கலியும் கெடும் கண்டு கொண்மின் –திருவாய்மொழி –5-2-1-

செம்பொன் திருவமைந்த செல்வப் பிள்ளையாம் அவனை
ஐம்பத் திருவர் தம் அடைக்கலமா வைத்தாரோ
திருவரங்கம் கோயில்தனை நோக்கிச்  சிறப்புடனே
யதிகளுடன் ஆரியர்கள் சூழ்ந்து இறைஞ்சும் வேதியனோ —

அநந்தம் ப்ரதமம் ரூபம் லஷ்மணஸ்ஸ தாதா பரம்
பல பத்ரஸ் த்ரிதீ யஸ்து கலௌ கஸ்சித் பவிஷ்யதி —
—————————-
ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராயாகி லாத்மநே
ஸ்ரீ மதே நிர்மலா அனந்த அதன்வதே விஷ்ணு வேதமே –ஸ்ரீ வேதாந்த சாரம் மங்கள ஸ்லோகம்
ஸ்ரீய காந்த அனந்தோ வர குண கணை காஸ் பதவபு
ஹதா சேஷா வத்ய பரம கபதோ வாங்மனசயோ
அபூமிர் பூமிர்யோ தனஜனத்ருசாமதி புருஷோ
மனஸ்தத் பாதாப்ஜே பரிசரண சக்தும் பவதுமே –ஸ்ரீ வேதாந்த தீபம் மங்கள ஸ்லோகம்
———————————

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா—ஸ்ரீ பாஷ்யம்-முதல்-மங்கள ஸ்லோகம்

விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
ஸ்தேம -சர்வ ரக்ஷகன் / மோக்ஷ பிரதானம் -விசேஷ ரக்ஷணம்
விநத-வணங்கின / விவித –பல வகைப்பட்ட / பூத வ்ராத-பிராணி சமூகங்களை
ரக்ஷைக தீஷே –ரஷிப்பதே முக்கிய விரதமாக கொண்டவன்
தத ஏவ காரணாத்விநத பிராணிகளுக்கு மட்டும் அன்றிக்கே -அந்த பிராணிகளோடு சம்பந்தம் பெற்றவர்களுக்கும்
மோக்ஷம் அளிக்கிறான் -என்பதையே தத ஏவ காரணாத் -என்கிறார்-
அஸ்து தே –தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே –சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி சர்வ சப்த அபிபிரேதம்
ஸ்ரீ தேசிகன் –உக்த்யா தனஞ்சய விபீஷண லஷ்யயா தே -ப்ரத்யாய்ய லஷ்மண முநேர் பவதா விதீர்ணம்
ச்ருத்வா வரம் தத் அநு பந்த மதா வலிப்தே-நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத –
பரம்பரா சம்பந்திகளுக்கும் பேறு கை புகுரும்-
அந்தோ நந்த க்ரஹண வசகோ யாதி ரெங்கேச யத்வத் -பங்குர் நவ்கா குஹர நிஹிதோ நீயதே நாவிகேன-
புங்க்தே போகான் அவிதித ந்ருபஸ் சேவகஸ்யார்ப்ப கர்தி -த்வத் சம்பிராப்தவ் ப்ரபவதி ததா தேசிகோ மே தயாளு –
மூன்று த்ருஷ்டாந்தங்கள் -கண் தெரியாதவன் கண் தெரிந்தவன் கை பிடித்தும் -கால் இல்லா முடவன் தோணிக்காரனால்
-இருவருடைய பேறு தப்பாது என்று சொல்லி
புங்க்தே போகான் அவிதித ந்ருபஸ் சேவகஸ்யார்ப்ப கர்தி-அத்யந்த வ்யவஹித சம்பந்தம் -என்றைக்கோ இருந்த அரசன் இடம்
சேவை செய்து பெற்ற-நிதியை பரம்பரையில் உள்ளார் ராஜ சேவை செய்யாமல் கால தத்வம் உள்ளதனையும் அனுபவிக்கலாம்
எம்பெருமானார் சம்பந்தம் கொண்டு நாம் -நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மி-என்று இருக்கலாமே
மா முனிகளும் –கால த்ரயேபி கர்ண த்ரய நிர்மிதித்யாதி யான ஸ்லோகம் இத்தை காட்டுமே –
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே –திருவாய் -6-10-11-

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்-ஸ்ரீ பாஷ்யம்-இரண்டாம்-மங்கள ஸ்லோகம்

அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம -ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்-முதல் மங்கள ஸ்லோகம்

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி –ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்–இரண்டாம் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம் வபு-
ஹத அசேஷ அவத்யா-பரம கம் பத –வாங்க மனஸ் யோகோ அபூமிகி
-நத ஜன த்ருஷான் பூமி -ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே
பரி சரண சத்தம் பவது மே—ஸ்ரீ வேதாந்த தீபம்-முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே—ஸ்ரீ வேதாந்த தீபம்-இரண்டாவது மங்கள ஸ்லோகம்

—————————-

பரித்ராணாயா ஸாதூ நாம்-காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து – -தளர்ந்து –நினைந்து நைந்து கரைந்து உருகி நிற்கும் ஆழ்வார்களே சாதுக்கள்
சாத்வ -உக்த லக்ஷண -தர்ம சீலா -வைஷ்ணவ அக்ரேஸரா -மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா மன் நாம கர்ம ஸ்வரூபணாம்
வாங்மனசா கோசாரதயா மத் தர்ச நேந விநா ஸ்வாத்ம தாரண போஷணாதிகம் அலபமானா
-க்ஷண மாத்திர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வானா-பிரசிதில சர்வகாத்ரா பவேயுரிதி மத் ஸ்வரூப சேஷ்டித்த அவலோகந
ஆலா பாதிதநேந தேஷாம் பரித்ராணாயா -ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்தியின் காம்பீர்யம்

தேஷாம் சதத யுக்தா நாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் –10–10-
ப்ரீதி பூர்வகம் மாம் பஜதாம் -சங்கரர் /-ஸ்வாமியோ -ப்ரீதி பூர்வகம் ததாமி –வெறிதே அருள் செய்வர் உகந்து-

பஹு நாம் ஜென்ம நாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்தியதே வா ஸூ தேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூ துர்லப —7–19-
இங்கும் ஸ்வாமி –மச் சேஷத்தைக ரஸ ஆத்ம யாதாம்யா ஞானவான் –மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூன்று தோன்றினானையே மழுங்காத ஞானமே படையாக
மலருலகில் தொழும் பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே —

அடியேன் செய்யும் விண்ணப்பம் போன்ற இடங்களில் தேஹ விசிஷ்டா ஆத்மா
அடியேன் சிறிய ஞானத்தன் –காண்பான் அலற்றுவன் -இங்கும் தேஹ விசிஷ்டமே
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளான் -இங்கும் விசிஷ்டமே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -இங்கு மட்டுமே அநு பிரவேசம் உடலிலும் ஆத்மாவிலும் என்பதால்
-ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிரூபகம்
ஜ்ஜோத ஏவ -ஸூ த்ரத்துக்கு -அயமாத்மா ஜ்ஞாத்ரு ஸ்வரூப ஏவ -என்று அருளிச் செய்தார்
-ஜ்ஞாநீ--பகவத் சேஷ தைக ரஸ ஆத்ம ஸ்வரூபம் இதை ஞாநீ-

யத்யதா சரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவ இதரோ ஜன ச யத்பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே –ஸ்ரீ கீதை -3-21-
யத்பிரமாணம்-பஹு வ்ரீஹி சமாசமாகக் கொண்டு -ஒரே பதமாக -சிரேஷ்டர் அனுஷ்ட்டிக்கும் கர்மத்தையே குறிக்கும் என்பர் நம் பாஷ்யகாரர் –
அந்த கர்மம் செய்கிறார்கள் மட்டும் இல்லாமல் அதே அனுஷ்டான ரீதியில் என்றபடி
மேலையார் செய்வனகள் கேட்டியேல் -மட்டும் இல்லாமல் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -இதையே யத்பிரமாணம் -என்கிறது –

மன்மநாபவ மத் பக்த –மயி சர்வேஸ்வர –நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாநே –சர்வஞ்ஞஜே –சத்யசங்கல்பே –
-நிகிலா ஜகத் ஏக காரணே–பரஸ்மின் ப்ரஹ்மணி–புருஷோத்தமே –புண்டரீக தலாமலாய தேஷணே-
-ஸ்வச்ச நீல ஜீமுத சங்காஸே யுகபுதுதித தி நகர சஹஸ்ர சத்ருச தேஜஸி லாவண்ய அம்ருத மஹோததவ்
உதார பீவர சதுர் பாஹவ் அத் யுஜ்வல பீதாம்பரே அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே அபார காருண்ய
ஸுசீல்ய ஸுந்தர்ய மாதுர்ய காம்பீர்ய உதார வாத்சல்ய ஜலதவ் அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே
சர்வ ஸ்வாமிநீ தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட –மநா பவ -என்ற கம்பீர ஸ்ரீ ஸூ க்திகள் – -18-விசேஷணங்கள் வைத்து –

-மன்நாம கர்ம ஸ்வரூபணாம் வாக் மனசா கோசரதயா –
மத் தர்சநேந விநா ஸ்வாத்மதாரணா போஷாணாதிகம் அலபமாநா க்ஷணம் மாத்ரம் காலம் கல்ப சஹஸ்ரம்
மன்வானா ப்ரசிதில சர்வகாத்ரா பாவேயுரிதி மத் ஸ்வரூப சேஷ்டிதா வலோகநா ஆலாபாதிதா நேந தேஷாம் பரித்ராணாய –என்பர் நம் பாஷ்யகாரர்
ஆழ்வார்களை நினைத்தேகாண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்று தளர்ந்து –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி நிற்கும் ஆழ்வார்கள் -இவர்களே யுக்த லக்ஷண தர்ம சீலர்கள் -வைஷ்ணவ அக்ரேஸர்கள் –
தர்மஸ்ய வேதோதி தஸ்ய சாதுரீ வர்ணய சாதுராசரம்ய வ்யவஸ்தயா அவஸ்தி தஸ்ய —
மத் ஸமாச்ரயண ப்ரவ்ருத்தா
-துயர் அறு சுடர் அடி தொழுது ஏழு என் மனனே -ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்பார்களே
-மன்நாம கர்ம ஸ்வரூபணாம் வாக் மனசா கோசரதயா-
என் சொல்லிச் சொல்லுகேன் –நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே -என்பார்களே –
மத் தர்சநேந விநா ஸ்வாத்மதாரணா -போஷாணாதிகம் அலபமாநா–
தொல்லை மாலை கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -என்றும் அருளிச் செய்வர்களே
க்ஷணம் மாத்ரம் காலம் கல்ப சஹஸ்ரம் -மன்வானா-
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ –ஊழியில் பெரிதால் நாழிகை என்னும் –ஓயும் பொழுது இன்றி ஊழி யாய் நீண்டதால்
-அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதவர்கள் அன்றோ
ப்ரசிதில சர்வகாத்ரா-
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –காலும் எழா கண்ணா நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலும் எழா
மயிர் கூச்சம் அறா–என்றும் -உள்ளம் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் -உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோராத் துயில் அணை கொள்ளேன் -என்று சர்வ அவயவ சைத்திலயங்களைக் காட்டினார்கள் –

யதா பரம புருஷ –யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந ஜெகஜ் ஜென்மாதிகாரணம் ஸமஸ்த வஸ்து விலக்ஷண
சர்வஞ்ஞ ச ஸத்யஸங்கல்ப ஆஸ்ரித வாத்ஸல்யைக ஜலதி நிரஸ்த சாமாப்யதிக சம்பாவன பரம காருணிக பர ப்ரஹ்ம அபிதான பரம புருஷ -என்ற
விசேஷணங்களை விடாமல் அருளிச் செய்வார்

கம்பீராம்பஸ் -ஸமுத்பூத –ஸூம்ருஷ்ட நாள–ரவிகர விகசித-புண்டரீக தளாமல ஆயதேஷண –
கம்பீராம்பஸ் -ஸமுத்பூத –
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை யுலர்த்துமா போலே –
கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி–
நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் –சிறிய திருமடல்
அழல் அலர் தாமரைக் கண்ணன் -திரு விருத்தம் -58-அழறு-என்று அளறு -நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்து
செவ்வி மாறாத தாமரை போன்ற திருக் கண்களை யுடையவன் –
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் பெரும் கண்ணன் -திருவாய்மொழி
ஸூம்ருஷ்ட நாள-புண்டரீக –
எம்பிரான் தடம் கண்கள் –மென்கால் கமலத்து தடம் போல் பொலிந்தன–திருவிருத்தம்
-மென்கால -மெல்லிய நாளத்தில் -என்றபடி -கமலத்துக்கு கால் போல அன்றோ –
-ரவிகர விகசித-புண்டரீக –
செஞ்சுடர் தாமரைக் கண் செல்வன் –திருவாய் -5-4-9-
செந்தண் கமலக் கண் –சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மானே –திருவாய் மொழி
செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோக்கு அல்லால் அலராவால் –பெருமாள் திருமொழி
புண்டரீக தளாமல ஆயதேஷண-புண்டரீக மேவ மஷிணீ- என்பதே மூலம் –
ஸ்வாமி இதில் –தள-அமல -ஆயத-மூன்றையும் சேர்த்து வியாக்யானம் அருளிச் செயல்களைக் கொண்டே -அருளிச் செய்கிறார் –
தாமரைக் கண்ணன் –தாமரைத் தடம் கண்ணன் –கமலத் தடம் கண்ணன் –கமலத் தடம் பெரும் கண்ணன் –
தடம் -விசாலம் -தளம் -தடாகம் -மூன்று பொருள்களிலும் உண்டே
நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்களை போலே –எம்பிரான் கண்ணின் கோலங்கள் –திரு விருத்தம் -தடம் -தடாகம் பொருளில் –
கமலக் கண்ணன் –அமலங்களாக விழிக்கும் –நம்மாழ்வார் –
-காரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்பெரியவாய கண்கள் -திருப் பாணாழ்வார்
இப்படி -தள/ அமல/ ஆயத-மூன்றையும் ஆழ்வார்கள் அருளிச் செயல்களைக் கொண்டே ஸ்வாமி அருளிச் செய்கிறார்

உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் —1–1–7-நிதியான பாசுரம் -பிள்ளான் வியாக்யானம் விபுலம் –
அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாதோ நிரஸ்த நிகில தோஷ அனவதிக அதிசய சங்க்யேய கல்யாண குண கண புருஷோத்தம அபிதீயதே –என்று
உயர்வற உயர் நலம் உடையவன் -சந்தையையே நீராக மொழி பெயர்த்து அருளுகிறார்
அனவதிக அதிசய –உயர்வற /அசங்க்யேய-உயர் / கல்யாண குண கண– நலமுடையவன் / புருஷோத்தம -யவனாவான்
நித்ய கிரந்தத்தில் –சுருதி ஸூகை ஸ்தோத்ரை ரபீஷ்டூய -செவிக்கினிய செஞ்சொல் -ஆழ்வார்கள் அருளிச் செயல்களால் அவன் உகப்பான் என்று காட்டி அருளுகிறார்
சரணாகதி கத்யத்தில் -5–அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய உதார ஐஸ்வர்ய ஸுந்தர்ய மஹோ ததே —என்றும்
மீண்டும் ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனித்து ஸ்பஷ்டமாக -நிகரில் புகழாய்-கௌரவ அதிசயம் புலப்படும் –
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதம் -ஆழ்வார் பாசுரங்களை ஒட்டியே –
கிரீட மகுட சூடாவதாம்சம் / திரு அபிஷேகம் -கொண்டை -தொப்பாரம் /
பாரளந்த பேர் அரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்ததோர் அரசே – ஸுலப்யம் பரத்வம் பிரணயித்தவம் -மூன்றுக்கும் கவித்த திருமுடி

நித்ய கிரந்தத்தில் -திருவாராதனத்தில் –ஸ்ருதி ஸூ கை ஸ்தோத்ரை அபிஷ்டூய
-செவிக்கினிய செஞ்சொல் -என்பதையே ஸ்ருதி ஸூ கை என்று அருளிச் செய்கிறார் –
—————————–

மிதோ பேதம் தத்வேஷ் வபிலபதி பேத ஸ்ருதி ரதோ-விசிஷ்டா ஐக்யாத் -ஐக்கிய ஸ்ருதி ரபி ச சார்த்தா பகவதி
இமா வர்த்தவ் கோப்தும் நிகில ஜகதந்தர் யமயிதா -நிரீசோ லஷ்மீ ச ஸ்ருதி பிரபராபி ப்ரணிததே –சங்கல்ப ஸூர்யோதயம்-என்றும்
யத்யேதம் யதி ஸார்வ பவ்மகதிதம் வித்யாத் அவித்யா தம -ப்ரத்யூஷம் ப்ரதிதந்த்ர மந்திமயுகே கச்சித் விபச்சித்தம
தத்ரை கத்ர ஜடித்யுபைதி விலபம் தத் தன்மத ஸ்தாபநா -ஹேவாக ப்ரதமான ஹேதுககதா கல்லோல கோலாஹல–ஸ்ரீ மத ரஹஸ்ய த்ரய சார ஸ்லோகம் -என்றும்
நம் சித்தாந்தத்துக்கு சரீராத்மா பாவமே உயிர் என்றும் அதை திடமாக தெரிந்து கொள்ளப் பெற்றால் மற்ற மதாந்தஸ்தர்களை எளிதில் வெல்லலாம் என்று காட்டி அருளிச் செய்தார்

—————————–
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதிக் கணித்த -சீதக் கமலத்தை நீரேற ஒட்டிச் சிறந்து அடியேன் ஏதத்தை மாற்றும்
எதிராசனார் தம் இனிமை தரும் பாதக் கமலங்கள் வாழியரோ பாதக் கமலங்கள் வாழியரோ –

பற்பம் எனத் திகழ் பைம் கழலும் உந்தன் பல்லவமே விரலும் -பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கு அழகும்
முப்புரி நூலோடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும் முன்னவர் தந்திடும் மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா வழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண் அழகும் காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவு அழகு என் இதயத்து உளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே —

தேவரீருடைய திருவடித் தாமரைகளின் போக்ய அதிசயத்துக்கு ஒரு போலியாக கம்பீராம்பஸ் ஸமுத்பூத ஸூம் ருஷ்ட நாள ரவிகர விகசிதமான
தோர் செந்தாமரைப் பூவை அதனுடைய கர்வ சர்வஸ்வ நிரவாரண பூர்வகமாக திருவடிகளின் கீழ் அமுக்கி
அதன் தலை மேல் வெற்றியுடன் வீற்று இருக்கும் இருப்பின் அழகும் –
பங்கஜ ரஜஸ் ஸூம் பாதாருந்துகமாம் படி சேடீ ஜன லோசன அர்ச்சா ஸஹ ஸுகுமார்ய சாலிநிகளான பிராட்டிமாரும் பிடிக்கக் கூசும்படி
புஷ்ப்ப ஹாஸ ஸூ குமாரதரான பெரிய பெருமாளுக்கும் மெத்தென்ற பஞ்ச சயனமாய் அத்யந்த ஸூ குமாரரான தேவரீர் தமக்கு ஆசனமாய்க் கொண்டு
தொண்டு பூண்ட புண்டரீகத்துக்கு ஸ்வ தாஸ்ய அர்ஹ சாரஸ்யாதிகளை யூட்டுகைக்காகத் தத் தாஸ்யாந்தரத்தில்
சொருகியிட்டு வைத்தால் போலே மறைத்திட்ட இடது திருவடிகளும்-
சம்சரண தவ தஹன தன் தஹ்யமான சகல ஜகதவநபர சந்தத சிந்தா சமாக்ராந்தியாலே நிப்ருததயா பணிபத சயன சாயனரான பெரிய பெருமாளுடைய
யோக நித்ரா முத்ரா அநு சாரியாக இடத் தொடையின் மேல் வளர்த்தி கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு முற்றூட்டாகக் காட்டியிட்ட வலது திருவடிகளும்
பர ப்ரஹ்ம பூத பர புருஷ விஷயக சங்ககாமாத் யுத்தீபகரான மன்னிய சீர் மாறன் என்னும் மாறனுக்கு தேவரீருடைய பத சரஸிஜ வ்யாஜேந
குஸூமசர ஸஹிதமாக அமைத்து வைத்த அம்பறாத் துணிகள் போலே இணைத்து வைத்த கணைக் கால்களும் –இத்யாதி கட்டியம் —

——————————————————

ஸ்ரீ தேவ பெருமாள் -ஸ்ரீ திருக் கச்சி நம்பி மூலம்-ஸ்வாமிக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1-அஹம் ஏவ பரம் தத்வம் /2- தர்சனம் பேதம் ஏவ ச /3-உபாயேஷு ப்ரபத்திஸ்யாத் /4-அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் /
5- தேக அவசானே முக்திஸ்யாத் /6-பூர்ணாச்சார்யாம் ஸமாச்ரய –

156-இதி அதிகரணம் /-9000-கிரந்தம் ஸ்ரீ பாஷ்யம் /பட்டர் திருவாய்மொழி பீடம் / ஸ்ரீ பாஷ்ய பீடம் முதலி ஆண்டான் கிடாம்பி ஆச்சான் –
நடாதூர் அம்மாள் -பிள்ளான் -நால்வருக்கும் –
உபய வேதாந்த பீடம் பிள்ளானுக்கு மட்டும் –
26000-ஸ்ரீ கேசவன் சந்நிதிகள் மேல் நாட்டில் -ஸ்தாபித்து அருளினார் –

வைதிக உபகாரம் –
நடுவில் ஆழ்வான் குமாரர் -நால்வர் -ஏகாயனர்-த்வய நிஷ்டை -பூர்வ கண்டம் நிஷ்டர் அத்வைதிகள் த்வைதிகள் –
அஸ்தி நாஸ்தி திஷ்டம் -பாணினி சூத்ரம்
அஷ்டகம் –மூன்று –24-வருஷம் -இங்கே உள்ளேன் -அழகர் கோயிலிலே
ஆஸ்திகன் நாஸ்திகன் -தைஷ்டிகன்-அதிருஷ்டம் இல்லாமல் உம்மை பிரிந்து -ஆஸ்திக ஞானம் உம்மை சேவிப்பேன் என்ற நம்பிக்கை -ஸ்ரீ கூரத் தாழ்வான்-அருளிச் செய்த ஸ்லோகம்
-36-வருஷம் மேல் நாட்டில் எம்பெருமானார் -என்பர்
அதி ராஜேந்திரன் -அதி யமன் -கிருமி கண்ட சோழன்

——————————————-

திரு அவயவ பிரபாவம் –ஒண்ணான ஸ்ரீ வானமா மலை ஜீயர் அருளிச் செய்தது –

மஸ்தக ஸ்ரீ சடாராதி நாதார்யோ முக மண்டலம்
நேத்ர யுக்மம் சரோஜாஷ தத கபோ லௌ ராக வஸ்ததா —-1

ஸ்ரீ நம் ஆழ்வார் -சிரஸ்–கிருஷ்ண பக்தி விளையும்
ஸ்ரீ நாத முனிகள் -திரு முக மண்டலம் -கீர்த்தனம் —இசை -இயல் நாடகம் -பக்தியை அனுபவிக்க -கும்பிடு நட்டமிட்டு ஆட –
ஸ்ரீ -புண்டரீகாஷர் -உய்யக் கொண்டார் –இரு  திருக் கணகள்-பிணம் கிடைக்க மணம் புணர்வார் உண்டோ -திவ்ய பிரபந்தம் வேத சாம்யம் ஸ்திர புத்தி கிட்டும்
ஸ்ரீ ராம மிஸ்ரர் -மணக்கால் நம்பி –இரண்டு கன்னங்கள்-ஆச்சார்ய கைங்கர்யம் கிட்டும் –

வஷஸ் ஸ்தலம் யாமு நார்ய கண்ட பூர்ணோ  மஹாம்ஸ்ததா
கோஷ்டி பூர்ணோ  பாஹூ யுக்மம் சைல பூர்ண ஸ்தந த்வயம் –2-

ஸ்ரீ யாமுனாசார்யர் -ஆளவந்தார் -திரு மார்பு–ஆச்சார்ய கடாக்ஷம் கிட்டும் -எண் கண்கள் -முக்கண்கள் -சகஸ்ர கண்கள் -தாண்டி –
ஸ்ரீ மஹா பூர்ணர் -பெரிய நம்பிகள் திருக் கழுத்து–த்வயம் கழுத்து ஸ்தானம் -த்வயார்த்தம் கிட்டும் -ஷேம கரணம் –
ஸ்ரீ கோஷ்டீ பூர்ணர் -திருக் கோஷ்டியூர் நம்பிகள் -இரு திருக் கைகள்-திருமந்த்ரார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் கிட்டும் –
ஸ்ரீ சைல பூர்ணர் –திருமலை நம்பிகள் -இரண்டு மார்பகங்கள்-பகவத் கைங்கர்யம் கிட்டும் –

குஷிஸ்து வர ரங்கார்ய ப்ருஷ்டம் மாலாதரஸ் ததா
கடி காஞ்சி முநிர் ஜ்ஞேய  கோவிந்தார்யோ  நிதம்பக –3

ஆழ்வார் திரு வரங்கப் பெருமாள் அரையர் –திரு வயிறு-ஆச்சார்யர் பரகத ஸ்வீகாரம்-அறிவோம் -தேவ பெருமாள் இடம் அரங்கனுக்கு எம்பெருமானாரை கூட்டி அருளினார்
திரு மாலை யாண்டான் –திரு முதுகு–திருவாய் மொழியே கிட்டும் –
திருக் கச்சி நம்பிகள் –இடுப்பாக அறியத் தக்கவர்-ஆச்சார்ய உச்சிஷ்டம் கிட்டும் -அவருக்கே கிடைக்காதது -நாம் பெறுவோம் -ஸூ பாவனம் -தருவரேல் புனிதம் அன்றே
கோவிந்த முனி -எம்பார் –இடையின் பிற்பகுதி-வைராக்யம் வளரும் –இருட்டு வரவே இல்லையே -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –

பட்ட வேதாந்தி நௌ ஜங்கே ஊருயுக்மம் ஜகத் குரு
ஜாநு யுக்மம் கிருஷ்ண பாதோ லோகார்யா பாத பங்கஜே –4-

ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ வேதாந்தி என்னும் நஞ்சீயரும் இரு கணைக் கால்கள்-வேதாந்த சாஸ்திர ஞானம் கிட்டும் -செய்ய மறை தன்னுடனே சேர்ந்து –
ஜகத் குருவான ஸ்ரீ நம்பிள்ளை -இரண்டு தொடைகள்-உபய வேதார்த்தங்கள் அர்த்தம் கிட்டும்
கிருஷ்ண பாதர் -ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை -இரண்டு முழம் தாள்கள்-பிரமாண பிரமேய ப்ரமாதரு கைங்கர்யம் -பிரமாண ரக்ஷணம் செய்தார் -ஈடுபடுத்தி –
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் -திருவடித் தாமரைகள்–ரகஸ்யார்த்தம் -ஆச்சார்ய அபிமானம் -பிரமேயம் ரக்ஷணம் கைங்கர்யம் கிட்டும் –

ஸ்ரீ சைல  தத் ரேகா பாதுகே வர யோகிராட்
புண்டர சேனாபதி ப்ரோக்த ஸூ த்ரம் கூர பதிஸ் ததா –5

திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப் பிள்ளை -திருவடிகள் ரேகை-திருவாய் மொழியே -அனைத்தும் -அறிவோம்
ஸ்ரீ மணவாள மா முனிகள் -இரண்டு திருவடி நிலைகள்–வியாக்கியான ப்ராவண்யம் விளையும் –
ஸ்ரீ சேனை முதலியார் –திருமண் காப்பு–கார்ய சித்தி -கைங்கர்யம் கிட்டும் –
ஸ்ரீ கூரத் ஆழ்வான்-யஜ்ஞ ஸூத்ரம் திருப் பூணூல்–பிரமாத்ரூ ரக்ஷணம் — ஆச்சார்யர்கள் ரக்ஷணம் கிட்டும்

பாகி நேயஸ் த்ரி தண்டச்ச காஷாயச் சாந்த்ர பூரணக
மாலாச்ச குரு கேசார்யா சாயா ஸ்ரீ சாப கிங்கர –6-

சஹோதரி  திருக் குமாரர் ஸ்ரீ முதலியாண்டான் -முக்கோல்-தத்வ த்ரயார்த்தம் -திவ்ய தேச கைங்கர்யம் கிட்டும் –
ஆந்திர பூர்ணர் -ஸ்ரீ வடுக நம்பிகள் -காஷாயம்–ஆச்சார்ய அபிமானம் கிட்டும் -வாஞ்சை உடன் -அளியல் நம் பையல் என்னா அம்மாவோ கொடியவாறே -வடுகா -வைஷ்ணவ நம்பி
திருக் குருகைப் பிரான் பிள்ளான் -குருகேசார்ய-தாமரை துளசி மணி மாலைகள் -பிள்ளையாக நம்மை ஸ்வாமி அபிமானிக்கப் பெறுவோம் –
ஸ்ரீ சாப கிங்கர -ஸ்ரீ தனுர் தாசர்-ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் –நிழல்-ஸ்வார்த்த கைங்கர்யம் தாண்டி பரார்த்த கைங்கர்யம் கிட்டும் –களை அற்ற கைங்கர்யம்
-25-ஆச்சார்யர்களை இது வரை சேவித்தோம் –26-அங்கியாக எம்பெருமானார் –பரமாத்மா -26-தத்வம் அன்றோ –

ஏவம் ராமானுஜார்யஸ் யாவயவா நகிலான் குரூன்
மஹாந்தஞ்சாவயவி நம்  ராமானுஜ முனிம் பஜே –7-

திருவவய பூதர்கலான எல்லா ஆச்சார்யர்களையும்
அந்த திரு அவயவங்களை யுடைய பெரியவரான ஸ்ரீ ராமானுஜ முனிவரையும் சேவிக்கிறேன்-
பரம்பரை பரமாத்மா முக விலாசம் களை அற்ற கைங்கர்யம் கிட்டும் –

குரு மூர்த் யாத்ம யோகீந்த்ரம் யோத்யாயேத் பிரத்யஹம் நர
சர்வான் காமா நவாப்நோதி லபே தாந்தே பரம்பதம் –8-

தினம்  தோறும் இவ்வாறு தியானம் செய்கிறவர்கள் விரும்பிய பொருள்கள் அனைத்தையும் அடையப் பெறுகிறார்கள் –
மரணமாம் அடைந்த பண்பு ஸ்ரீ வைகுண்டத்தையும் அடைவார்கள் -பலன் சொல்லித்  தலைக் கட்டுகிறார்-
சதா ஸ்மராமி யதிராஜம் — லீலைக்கு விஷயமாகாமல் போகத்துக்கு விஷயம் ஆவோம் –

எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மணம் நீ எனக்குத் தா -பெரிய திருமொழி தனியன்

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத உள்ளம் பெற –திருவாய்மொழி தனியன்

வான் புகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன் –திருவாய்மொழி தனியன்

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீநிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆராவமுதே -இராமானுச நூற்றந்தாதி -19-

ராமானுஜ முதிர் ஜீயாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரத–காளி கோலாகல கிரீடா முதாக்ரஹமபா ஹரத்--ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -1–3-
பக்தி யந்திரத்தாலே கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று காட்டி அருளினார் –
கலவ் கிருதயுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய க்ருதயுக –ஹ்ருதயே யஸ்ய கோவிந்தோ யஸ்ய சேதஸி நாஸ்யுத-
எம்பெருமான் ஹ்ருதயத்தில் ஸூ பிரதிஷ்டனாக எவன் இடத்தில் நித்ய வாசம் செய்கிறானோ -அவனுக்கு கலியுகம் க்ருத யுகம்

உபய விபூதி நாதன் இருக்க விரிதலையானை விரும்பி நின்றேன்
புதுக்கணிப்புடைய புண்டரீகாக்ஷன் இருக்க பொறி பறக்கும் கண்ணனை பூசித்தேனே
கடல் மண்ணுண்ட கண்டன் இருக்க கறை கொண்ட கண்டனைக் காதலித்தேன்
கல்லெடுத்து கல்மாரி காத்த கற்பகம் இருக்க கையார் கபாலியைக் காதலித்தேனே
திருவிருந்த சிரீதரன் இருக்க திருவில்லாத் தேவனைத் தொழுது நின்றேனே
பீதகவாடைப்பிரானார் இருக்க புலியுரியானைப் பின் தொடர்ந்தேனே
சதிரான கங்கையடியான் இருக்க சுடுகாடு காவலனைச் சுற்றி வலம் வந்தேனே
பெரும் துழாய் வனம் இருக்க பெரும் கையால் பேய்ச்சுரைக்கு வார்த்தேனே –பூவும் பூசனையும் தகாது தகாது -என்று எம்பார் புலம்பிய புலம்பல்

சரம ஸ்லோகார்த்தம் கேட்க்கைக்காக இ றே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம் திருக் கோஷ்ட்டியூர்  நம்பி பக்கல் எழுந்து அருளிற்று
நம்பி தாமும் இதில் அர்த்தத்தினுடைய கௌரவத்தையும் -இதுக்கு அதிகாரிகள் இல்லாமையையும் பார்த்து இ றே இவருடைய
ஆஸ்திக்ய ஆதார பரிஷார்த்தமாகவும் பலகால் நடந்து துவள பண்ணி சூளுறவு கொண்டு மாச உபவாசம் கொண்டு அருமைப்படுத்தி அருளிச் செய்து அருளிற்று
அதிகாரி துர்லபத்தாலும் அர்த்த கௌரவத்தாலும் இத்தை வெளியிடாதே மறைத்துக் கொண்டு போனார்கள் முன்னோர்கள்
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாமல் கருணை கரை புரண்டு ஓடி அர்த்தத்தை சீர்மை பாராதே
அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டு அருளினார் எம்பெருமானார் –மா முனிகள்

கோபால இதி கிருஷ்ணா த்வம் ப்ரசுர ஷீர வாஞ்சயா ஸ்ரீதோ மாத்ரு ஸ்தன ஷீரம் அப்யஹோ துர்லபம் க்ருதம் –
கண்ணா நின்னை ஆயன் என்று கண்டு மிக்க பால் பெற எண்ணி நின்ன பாத பங்கயத்தை பண்ணினேன் –
எண்ணம் இது மாறு பட்டு ஒழிந்தவாறு கேட்டியோ -அன்னை பாலும் என் தனக்கு அருமை யாக்கினாயே –ஸ்வாமியும் கண்ணனை போலே நம் பிறவி அறுப்பாரே

சம்சார விஷ விருக்ஷம் – அமிருத பழங்கள்
கதா சித் கேசவ பக்தி -தத் பக்தைர் சமகாமம் விவஸ்தித விகல்பம் -என்று பாகவத பிரபாவம் அருளிச் செய்தார் –

உக்த்த்யா தனஞ்சய விபீஷண லஷ்யயா தே
ப்ரத்யாய்ய லஷ்மண முநேர் போவதா விதீர்ணம்
ச்ருத்வா வரம் தத் அனுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத –ஸ்ரீ தேசிகன்
ஸ்ரீ ரெங்க நாதா -நீயே ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் –ஸ்ரீ அர்ஜுனனுக்கும் -ஸ்ரீ ராமானுஜருக்கும் அருளிய கிருபை
ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் உள்ள நம் அளவும் பாயட்டும் –

இன்றோ எதிராசர் இவ்வுலகில் தோன்றிய நாள் இன்றோ கலியிருள் நீங்கு நாள் –
-திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்ததை மா முனிகள் மேலே பூர்த்தி செய்து அருளுகிறார் –
இன்றோ தான் வேதியர்கள் வாழ விரை மகிளோன் தான் வாழ வாதியவர்கள் வாழ்வடங்கு நாள் –

இதுவோ பெரும் பூதூர் இங்கே பிறந்தோ
எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார் –இதுவோ தான்
தேங்கும் பொருநல் திரு நகரிக்கு ஒப்பான
ஓங்கு புகழுடைய வூர் -என்று மா முனிகள் அருளிச் செய்தார்-

சௌமித்ரி ரேவதீ சௌ ஸ்ரீ ராமானுஜ வரோ பயன்த்ருமுநீ
இத்யவதாரான் சதுர க்ருதவான் பணீந்திர ஏவம் பரம் —
இளைய பெருமாள் -நம்பி மூத்த பிரான் -இராமானுஜர் -மா முனிகள் -சதுர்த்தி -திருவனந்த ஆழ்வான்- சதுரன் என்றவாறு-

ஹே கோபாலகா -பசு பிராயர்களான நம்மையும் -கோ வாக் -ஸ்ருதி ப்ரஹ்ம சூத்ரம்-யத் கோ சஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் – இவற்றையும் ரஷித்த ஸ்வாமி
ஹே க்ருபா ஜலந்தி -க்ருபா மாத்ர பிரசன்னாசார்யர் -பகவதோஸ்ய தயைக சிந்தோ
ஹே சிந்து கன்யாபதே -ஸ்ரீ யபதே -கைங்கர்ய ஸ்ரீ மிக்க ஸ்வாமி
ஹே கம்சாந்தக -கலியும் கெடும் –
ஹே கஜேந்திர கருணா பாரீண-ராமானுச முனி வேழம் -பெருகு மத வேழம் பாசுரம்
வாத்சல்யம் இரண்டு தடவை கத்யத்தில் அருளியது போலே இங்கும் கிருபா ஜலந்தி கருணா பாரீண
ஹே மாதவ –மது -சித்தரை மாசம் -மதுச் ச மாதவச் ச வாஸந்தி காவ்ருதூ -மதௌ ஜாத-மாதவ -சித்திரத் திங்களில் திருவவதரித்தவர்
ஹே ஜகத் த்ரய குரோ -தஸ்மின் ராமாநுஜார்ய குருரிதி ச பதம் பாதி நான்யத்ர
ஹே புண்டரீகாஷா -கம்பீராம்பஸ் -சமுத்பூத – ஸூ ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித -புண்டரீக தளா மலாயதே ஷண-
ஹே கோபி ஜன நாத -ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான் ஆச்சான் போல்வர் கோபி ஜன ஸ்தாநீயர்கள்
ஹே ராமானுஜ –ராமஸ்ய அனுஜ-இளைய பெருமாளைப் போலே கைங்கர்ய சாம்ராஜ்ய துரந்தரர்-
ராம அனுஜ யஸ்ய -பர பாஷா பிரதிஷேபத்தில் பரசுராமனையும் பிற்பட்டவர் ஆக்குபவர்
ராமா அனுஜா யஸ்ய -பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே –

——————

 

——————
குருபரம்பரா பிரபாவத்தில் —

தீர் லப்தா -அறிவு அடையப் பட்டது -அசரீரி -திருவவதரித்த பின்பு -திரு நாடு அலங்கரித்த போது –தர்மோ நஷ்ட– அறம் அழிந்தது அசரீரி கேட்டதாம் –
கடபயாதி சங்க்யா–பிறந்த வருஷம் சக வருஷம் -939-/ சக வருஷம் -1059-
கந்தனின் கடைசி தலை–ஆறாவது -நரசிம்மனின் ஜென்ம ஸ்தானம் -தூண் –மறை வில் -/
விழுவது எழுவது தொழுவதாய் அன்றோ கோயிலுக்கு எழுந்து அருளினார் /
திருப்பதிக்கு வழி காட்டிய மஹான் என்று வணங்கி –ஏற்றச்சாலை இறைவிக்கும் விவசாயியைக் கூட -/வணங்கினார் ஸ்வாமி 
கீழ் திருப்பதி -30- ஸ்ரீ வைஷ்ணவர்களை குடி ஏற்றம் செய்து -அருளினார் ஸ்வாமி –
-5–4–4-பாசுரம் சொல்லி கைப்பிடி மண்ணை தூவி –விரோதிகளை போக்கலாம் /

—————————

தென் அரங்கனாரும் திரு மகளும் ஆதியா அன்னவயல் பூதூர் மன் ஆங்கிடையா என்னை அருள்
ஆரியனே தானளவா அன்ன குருமுறையின் சீரிய தாள் சேர்ந்து உய்ந்தேனே

முந்தை வினையகல முன்னருளும் ஆரியனால் எந்தை எதிராசர் இன்னருள் சேர்ந்து
அந்தமில் சீர் பொற்பாவை தன்னருளால் பொன்னரங்கர் தாள் பணிந்து நற்பால் அடைந்து உய்ந்தேன் நான் –ஸ்ரீ விவரண மாலை

யாதவ பிரகாசர் இவரை ஆஸ்ரயித்து -கோவிந்த ஜீயர் -பெயருடன் –
யதி தர்ம சமுச்சயம் -ஸ்ரீ வைஷ்ணவ யதிகள் வாழும் முறை அருளி-/ லலிதா சரித்ரங்களில் பூர்வ ஜென்மம் அறிவு -எலியாக இருந்து திரு விளக்கில் உள்ள திரியை உண்ண செல்ல -பூனை காத்த மயங்கி மாண்டதே -மூக்கின் நுனியால் திரியை நொந்த புண்ய பலனாக லலிதாவாக அவதரித்து பூர்வ ஜென்ம நினைவு
யாதவ பிரகாசர் -மதுரகாந்தம் -தாமரை தடாகத்தில் புத்தில் உடும்பாக இருந்து –பாகவத சேஷம் உண்ட பலன் -/

நலம் தரும் சொல்லை நான் அறிந்தேன்
அந்த நல்லது நடந்திட அருள் புரிந்தாய்!!
இராமானுஜனே உன் தயவாலே  நாராயணனை சரணடைந்தேன்!!
நான் நாராயணனை சரண் புகுந்தேன்!!
எட்டு எழுத்தின் பொருளோ எட்டா இருக்கையில் எத்தனை தடவைகள் நீ நடந்தாய்!!
எத்தனை இடர் கடந்தாய்!
எத்தனை தடை கடந்தாய்!
எங்களை உய்விக்க பொருள் உரைத்தாய்!!
மூவாறு முறை நடந்த முனியரசே!
ஒரு நோவாற மருந்து அளித்த தனியரசே!
நாவாற நான் உன்னை பாடுவது
ஸ்ரீமன் நாராயணன் மந்திரம் ஓதுவதே!!
நரகம் நீ புகுந்தால் வைகுண்டமாகும்!
அந்த நாராயணனையே இடம் பெயர்க்கும்!!
அரங்கனின் அருளாளே பொருள் அறிந்தாய் உந்தன் அருகினில் எதிரி என்று எது நிலைக்கும்!!
கோட்டியூர் கோபுரத்தில் மேலே ஏறி நின்று கோடி உயிர் வாழ வழி உரைத்தாய்!!
ஈட்டிய பொருள் உரைக்க வகை சொல்ல
அந்த நம்பியின் பெருமானா ஆகி நின்றாய்!!

“ஸ்ரீ இராமாநுஜர் திருவடிகளே சரணம்”

சந்ததி இல்லா மண மகள் போலே -செந்தழல் இல்லா ஆஹூதி போலே -தேசிகன் இல்லா ஓதுகை போலே -சந்திரன் இல்லா தாரகை போலே – இந்திரன் இல்லா உலகம் போலே -எங்கள் இராமானுசன் முனி போனால் இப் புவி என்னாகும்-
திக்கு நோக்கி திரும்பி திரும்பி -பிரியா விடை —புக்ககத்துக்கு போகும் பெண் போலே போனார் –சோர்ந்த கண்கள் நீர் –உடன் – -திருக் காஞ்சி -விட்டு -போக –

——————————————————————–

ஸ்ரீ ஸூதர்சன ஸூ ரி அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யகார ஸ்துதி ஸ்லோகங்கள் – 

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே
ய ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூ த்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத்–1-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்கம் இவை அபரம்
பரஸ்ய ப்ரஹ்மனோ யாத்ரா சேஷித்வம் ஸ்புடம் இஷ்யதே–2-

அ விஸ்த்ருதாஸ் ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிர
தர்சய்ந்து ப்ரசாநேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம்–3-

பாஷ்யம் சேத் வ்ய வ்ருணோத் ஸ்வயம் யதிபதி வ்யாக்யான வாசம் ததா
காம்பீர்யாதநவஸ்திதி மித மதிர்துரே ஜனஸ்த திராம்
ப்ரஷடவ்ய கத மீஸ்வர ச ஹி ந ந ப்ரத்யக்ஷரூபோ த்ருஸாம்
தத் பாஷ்யம் ச ச பாஷ்யக்ருத் ச ச ஹரி சம்யக் ப்ரஸீதந்து ந–4

———————

ஸ்ரீ யதிராஜாய மங்கள ஸ்லோகங்கள் 

ஸ்ரீ பராங்குச பாதாப்ஜ ஸூரபீக்ரு மௌலயே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன நாதாய யதிராஜாய மங்களம் –1-

நாத பந்மாஷ ராமர்ய பாத பங்கஜ சேவிதே
சேவ்யாய சர்வ யமிநாம் யதிராஜாய மங்களம் –2-

பூர்ணார்ய பூர்ண கருணா பாத்ரா யாமித தேஜஸே
மாலாதர ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் –3-

சம்சேவ்ய யாமுனாசார்யா மேகலவ்யோச்ம்ய ஹம்குரோ
அம்யன்னேதி வதே நித்யம் யதிராஜாய மங்களம்-4-

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிஸ்ரோக்தா ரஹஸ்யார்த்த விதேசதா
தேவராஜா ப்ரியா யஸ்து யதி ராஜாய மங்களம்–5-

ஸ்ரீ மத் கோஷ்டி புரி பூர்ண திவ்யாக்ஞாம் குர்வதேமுதா
ஸ்லோகார்த்தம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் —6-

கூரேச குர்கா நாதா தாசாரத்யாதி தேசிகா
யச் சிஷ்ய பாந்திதே தஸ்மை யதிராஜாய மங்களம்–7–

சரம ஸ்லோக தத்வார்த்தம் ஞயாத் வார்யாஜ்ஞாம் விலங்க்யச
தததே தம் ஸ்வகீ யோப்யோ யதிராஜாய மங்களம் –8-

ஸ்ரீ சைல பூர்ண க்ருபயா ஸ்ரீ ராமாயணம் அர்த்தத
பக்தியாயை ஸ்ருதம் தஸ்மை யதிராஜாய மங்களம்—9-

சங்கராதி குத்ருஷ்டீநாம் பாஹ்யாநாம் நித நாயச
ஸ்ரீ பாஷ்யம் குர்வதே தஸ்மாய் யதிராஜாய மங்களம் —10-

குர்வந்து பநிஷத் பாஷ்யம் ஜகத் ரஷாம் கரோதிய
தாயாயா பரதந்த்ராய பாஷ்யகாரய மங்களம் —-11–

த்ரமிட உபநிஷத் வ்யாக்யாம் வதேதி மதநுஜ்ஞாய
சாஸதே குருகேசம்தம் பாஷ்யக்காரய்யா மங்களம் –12-

கத்வாது சாரதா பீடம் உருத்திபி போதைய நஸய சா
அவலோக்யாகதா யாஸ்து பாஷ்யகாராய மங்களம் –13-

பரமாணும் ருஷாவாதி வாதி சம்ஹார காரிணே
தஸ்மை பகவதே ஸ்ரீ மத பாஷ்யகாரய மங்களம் –14-

ஸ்ரீ மத் குரங்க பூர்ணாய ஸ்ரீ பாஷ்யம் வததேஸ்வயம்
பித்ரே சம்பத் ஸூதஸ்யாபி பாஷ்யகாரய மங்களம் –15-

தத்வா வ்ருஷகிரீசஸ்ய சங்க சக்ர ரமாபதே
பரம ப்ரீதி யுக்தாய பாஷ்யகாராய மங்களம்—-16-

சந்ந்யாசம் குர்வதே காஞ்ச்யாம் அனந்த சரஸீ தடே
வரதே ந்யச்த பாராய பாஷ்ய காராய மங்களம்—17-

ஸ்ரீமத் மகா பூதபுரே ஸ்ரீமத் கேசவ யஜ்வன
காந்திமத்யாம் ப்ர ஸூதாயா யதிராஜாய மங்களம் —18-

சேஷேதிவா ஸைன்ய நாதோவா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை
விதர்க்யாய மஹா ப்ராஜ்ஜை யதிராஜாய மங்களம் —-19-

ப்ரக்ருஷ்ட குண பூர்ணாய ப்ராப்யாய ஸ்வாங்க்ரி சேவிநாம்
ப்ரபந்ந சார்த்த வாஹாய யதிராஜாய மங்களம் —-20-

வேதாத்மக பிரமானேன சாத்விகைச்ச ப்ரமாத்ருபி
ப்ரமேயேண சஹ ஸ்ரீமான் வர்த்ததாம் யதிசேகர —21-

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜர் / ஆழ்வார்கள் -அனுபவம் –

April 2, 2017

பொய்கைப் பிரான் மறையின் குருத்தை பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஓன்றத் திரித்து அன்று
எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் /
ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்துறையை வைத்து ஆளும் இராமானுசன் /
கோவலுள் மா மலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் /

ஆழ்வார்களில் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான அவகாஹ நத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும்
நித்ய ஸூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் –
அறிவு நடையாடாதவர்கள் இருக்கும் இடத்தில் வசிக்குமதில் காட்டிலே வர்த்திக்க அமையும் என்று காடுகளில் வர்த்திப்பார்கள்-
-இங்கனே செல்லுகிற காலத்திலே ஒரு மழையையும் காற்றையும் கண்டு திருக் கோவலூரிலே ஒரு இடை கழியிலே ஒருத்தர் புக்கு கிடக்க
-இருவராவார் சென்று -ஒருவர் கிடக்கும் இடம் இருவர் இருக்கப் போரும் -என்று இருக்க
-மூவராவார் சென்று -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கப் போரும் என்று மூவரும் நிற்க –
இருவர் வந்து நெருக்க –நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி – முதல் திரு -86- நீயும் திருமகளும் –
குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா -மலை எடுத்து உடம்பிலே விழுகிற மழையைக் காத்த நீர்மையை யுடையவனே-
-உடம்பிலே விழுந்த மழையை மலை எடுத்துக் பரிஹரித்த போது பிறந்த ஹர்ஷம் போலே யாயிற்று
இவர்கள் நெருக்குப் பெற்ற போது இவனுக்கு இருந்த படி –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி –காமுகரானவர்கள் உகந்த விஷயங்களில்
போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு நிற்குமா போலே -இவ்வாசலுக்கு புறம்பு போக மாட்டிற்றிலன் -உள்ளுப் புக மாட்டிற்றிலன் –
இனி-இப்போது இப்படி இருவருமாக தங்களை நெருக்கப் புக்கவாறே-தம்மை ஒழிய வேறே சிலர் நெருக்குகிறார் உண்டு என்று
-ஈஸ்வரன் தானும் பிராட்டியுமாக வந்து தனித்தனியே இவர்களை பின் பற்றி
திரிந்த நெஞ்சாறல் தீர இவர்கள் மூவருக்கும் நடுவே புக்கு நெருக்க -நம் மூவரையும் ஒழிய வேறு புக்கு நெருக்குகிறவர்கள் யார் என்று
விளக்கு ஏற்றி பார்க்க வேணும் என்ன -அவர்களில் ஒருவரான பொய்கையார் -லீலா விபூதியில்
கார்ய காரண ரூபேண ஸமஸ்த வஸ்துக்களும் பகவத் அதீனமாய் இருக்கிறபடியை -பயபக்தி ரூபா ஞானத்தால் தரிசித்து
-அத்தை ஒரு விளக்காக ரூபித்துக் கொண்டு அனுபவ பரிவாஹ ரூபமான –வையம் தகளி -அருளிச் செய்தார் –
அநந்தரம் ஸ்ரீ பூதத்தார் வையம் தகளி -கேட்க்கையாலே அந்தப் பரபக்தி ரூபா பன்ன ஞானம் முற்றி பகவத் தத்துவத்தை விசதமாக
தர்சிக்கைக்கு உபகரணமான பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றுகிற வழி யாலே-அன்பே தகளி -அருளிச் செய்தார்
அநந்தரம் மூன்றாம் ஆழ்வார் அவனை அனுபவிக்கப் பெறில் தரித்து -பெறா விடில் மூச்சடங்கும் படியான
பரம பக்தியை யுடையராய்க் கொண்டு -அவன் படிகளைக் கட்டடங்கக் கண்டு மண்டி அனுபவிக்கிற வழியாலே-திருக் கண்டேன் அருளிச் செய்தார்

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53- நம் ராமானுஜனின் பிரதம ரூபமான திரு அனந்தாழ்வான் கைங்கர்யம்

கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் -இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் -அந்த ஜ்ஞானம் தான் போய் -பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
கீழில் திருவந்தாதியில் ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று பரதவ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் -சங்க சக்ர கதாதரன் -என்றது இ றே –
இதுவும் பக்தி யாகிறது –திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

ராமானுஜ முனி வேழம் –அனந்தாழ்வான் போன்ற பிடிகளுக்கு த்வயார்த்தம்–சிறு கண் இள மூங்கில் – அருளிச் செய்யும் பொழுது -அருகு இருந்த
திருமந்த்ரார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் -ஆகிய தேனை கலந்து அன்றோ அருளிச் செய்தார் –

உபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் முதல் ஆழ்வார்
-அதுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் நடுவில் ஆழ்வார் –
-அதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் இவ்வாழ்வார் –
ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி -‘பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
-திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இ றே நம்மாழ்வார் )
பகவத் பிரசாத லப்தமான பயபக்தி ரூபா பன்ன ஞான விசேஷத்தாலே உபய விபூதி நாதனான எம்பெருமானுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரி பூர்ணமாக அனுபவித்துப் பேசினார் பொய்கையார் -ஸ்ரீ பூதத்தார் எம்பெருமான் அருளாலே விளைந்த பரபக்தி வையம் தகளி கேட்க்கையாலே பர ஞான அவஸ்தமாம் படி பரி பக்குவமாய்
அந்த பர ஞானத்தால் அவன் படியை ஓன்று ஒழியாமல் அனுபவித்து ஹ்ருஷ்டராய் பேசினார் –
அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித்தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்
உபய விபூதி உக்தன் என்றார் பொய்கையார் -அவனுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ பூதத்தார்
-இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார்
-(-மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் அன்றோ இவர் )

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

————————–

மழிசைக் கிறைவன் இணை யடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் /

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் -ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி -அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –
சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து-க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் –
சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்-அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய
பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

————————

கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் /

ஸ்ரீ யபதியாய் -ஜ்ஞானானந்தைக ஸ்வரூபனாய்-சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-உபய விபூதி உக்தனாய் –சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் அடியாக
பெருமாள் பெற்றது -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆகையாலே க்ரமத்தாலே காண்கிறோம் என்று ஆறி இருக்கலாவது தம் தலையால் வந்ததாகில் இ றே-
அவன் தானே காட்டக் காண்கிறவர் ஆகையாலே அப்போதே காண வேண்டும் -படி விடாய் பிறந்தது –
பரமபதத்திலும் அனுபவிப்பது குண அனுபவம் ஆகையாலே -அந்த சீலாதி குணங்கள் பூரணமான கோயிலிலே அனுபவிக்கப் பிரார்த்திக்கிறார்
இங்கே அனுபவிக்கக் குறை என்-பிரார்த்தனை என் என்னில் –
ஸ்வா தந்த்ர்யம் பிறப்பே உடையராகையாலே -மனுஷ்யர் நிரோதிப்பார் பலர் உண்டாகையாலே -இங்கு வந்து அனுபவிக்க மாட்டாதே
அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும் நம்மாழ்வார் பிரார்த்தித்துப் பெற்ற பேற்றை இங்கேயே அனுபவிக்க ஆசைப் படுகிறார் –

/முதல் ஆழ்வார்கள் -பரத்வத்தில் நோக்கு
/திரு மழிசை பிரான்-அந்தர்யாமியில் நோக்கு/ எல்லாம் கடந்தவன் உள்ளே இருக்கிறான்-கடவுள்
/நம் ஆழ்வார் பெரிய  ஆழ்வார் ஆண்டாள்-கண்ணன் இடத்திலே காதல்
/திரு பாண் ஆழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் வேர் பற்றான ஸ்ரீரங்கத்திலே  மண்டி/
திரு மங்கை ஆழ்வார் அர்ச்சையிலே நோக்கு /
குலேசேகரர் ராமன் அல்லால் தெய்வம் இல்லை/பாவோ நான்யத்ர கச்சதி – திருவடி-வீரத்தில் தோற்று
-குலேசேகரர் ஷத்ரிய ராஜ-ராமனால் ஈர்க்க பட்டார்/நித்யம் ராமாயண கதை கேட்டது
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன்
கொல்லி காவலன் குலேசேகரர் /கர தூஷணர் கதை கேட்டும் சீதை பிராட்டி சிறை வைத்ததும் கேட்டு உணர்ச்சி வசப் பட்டார்/
பெருமாள்-ராமனின் சுக துக்கம் தனது என்று கொண்டவர் என்பதால்
-குலேசேகர பெருமாள் /நம் பெருமாள்-ராமன்-பெரிய பெருமாள்-கண்ணன்-/
நித்யம் ஸ்ரீ ரெங்க யாத்ரை பாரித்து -ரெங்க யாத்ரை தின தினே-ஊரும் நாடும் இதை பிதற்றும் படி ஆக்கி வைத்து இருந்தார் –
திக்கு நோக்கி நித்யம்  ஸ்ரீ ரெங்கம் கால் எடுத்து நடக்க வேண்டும்/ஹரி நாம சங்கீர்த்தனம்–இந்த ஹரி /இரண்டு எழுத்துகள் தான்  திரு மண தூண்கள் //
ஸ்ரீ வைஷ்ணவர்கள்கூட்டி  ஸ்ரீ ரெங்க யாத்ரை நிறுத்தி -அரண்மனை முழுவதும் ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டம்  ஆக
– மந்த்ரிகள்-குற்றம் -ஆரம் கெட–குட பாம்பில் கை இட்டவர்/பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே -பஷ பாதி
மந்த்ரிகள் மன்னிப்பு கேட்க்க/திட விரதன் பிள்ளையை ராஜ்யத்தில் வைத்து /

இன்னமுத மூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு -ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த தனியன் –

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

முகுந்தமாலை அனுபவம்-

————————————-

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் –சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை யுயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் இராமானுசன் –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீநிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆராவமுதே

தென் குருகைப் பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
பண் தரும் மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்

கண்ணன் கழலிணை /ஓழி வில் காலம் எல்லாம் / கழியும் கெடும் கண்டு கொண்மின் / பொலிக பொலிக பொலிக /இத்யாதி

———————————-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத உள்ளத்து இராமானுசன் /

இன்னமும் மற்றைய ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு நெடு வாசி உண்டு
அவர்கள் தம் தாமுடைய ஸ்மர்த்திகளை எம்பெருமானாலே பெற நினைத்து இருப்பார்கள்
இவர் தம்மை அழிய மாறி வரும் பகவத் ஸ்மர்த்தியையே தமக்கு புருஷார்த்தமாக
நினைத்து இருப்பர் -அவர்கள் ஈஸ்வரனை கடகாக பற்றி தம் தாமுடைய பய நிவ்ர்த்தியை பண்ணா நிற்பர்கள்
இவர் தாம் கடகராய் நின்று -அவனுக்கு என் வருகிறதோ -என்று பயப்பட்டு அந்த
பய நிவ்ர்த்தியில் யத்னம் பண்ணா நிற்பர்-
இப்படி மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –

திருப்பல்லாண்டு / திருமகள் போல் வளர்த்தேன் –இத்யாதி

———————————

அரங்கர் மௌலி சொல்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் /

தேகாத்ம அபிமானிகளுக்கும் ஆத்ம ஸ்வரூபம் கை வந்து இருக்கும் ரிஷிகளுக்கும்
பர்வத பரமாணு வோட்டை வாசி போரும் –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் அத்தனை வாசி போரும் –
பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் அத்தனை வாசி போரும்
அவர்களில் இவளுக்கு வாசி என் என்னில் அநாதி மாயயா- சம்சாரத்தில் உறங்கு கிறவர்களை எழுப்பி
எம்பெருமான் தானே தன்னைக் காட்ட கண்டார்கள் ஆழ்வார்கள் –
இவள் தானே சென்று எம்பெருமானை எழுப்பி தன் குறையை அறிவித்தாள்-
ஆகையால் அவர்களிலும் இவள் விலக்ஷணை-பால்யாத் என்றால் போலே -தொடக்கமே பிடித்து பகவத் குணங்களில் அவஹாகித்துப் போகும்
புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேஹிப்பதில் காட்டில்-ஸ்திரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடை –
ஆழ்வார்களைக் காட்டிலும் எம்பெருமான் பக்கல் பரம பக்தி உடையாளான ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்கு கருத்து –
மார்கழி நீராட -நோன்பு வியாஜ்யமாக கொண்டு -நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தாலே எம்பெருமான் பக்கலிலே சென்று
உனக்கு சேஷமாய் இருக்கிற ஆத்மா அனர்த்தப் படாதபடி பண்ணி
இதுக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களையும் கொடுத்து
அது தானும் யவதாத்மபாவியாம் படி பண்ணி அருள வேணும் -என்று அபேஷிக்கிறது–

தனியன் -சில திருப்பாவை பாசுரங்கள் /திருப்பாவை ஜீயர் -இதனால் / நாச்சியார் திருமொழி மூலம் கோயில் அண்ணன் -இரண்டாலும் த்வயார்த்தம்
நாறு நாறும் பொழில் -பாசுரம் -ஐ திக்யம் –

————————-

சீர் அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன் /
பச்சை மா மலை போல் மேனி -இத்யாதி

——————————

பாண் பெருமாள் சரணாம் பதுமத் தாரியல் சென்னி இராமானுசன் /
ஆலமா மரத்தின் / கொண்டல் வண்ணனை -இத்யாதி –

———————————-

/ குறையல் பிரன் அடிக் கீழ் விள்ளாத அன்பன் /தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் இனியானை /
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை
சாஸ்த்ரத்தைக்காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து –
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு
தன் அழகைக் காட்டிக் கொடுக்க கண்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் -ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வாடினேன் வாடி -தொடங்கி
ஒரு நல் சுற்றம் -அளவும்
உகந்து அருளின இடமே
ஆஸ்ரய ணீயமும் -சாதனமும் -போக்யமும் –
என்று அனுபவித்தார் –
சுகாதிகளும் முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
சனகாதிகளும் திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
வால்மிகீகாதிகளும் குலசேகரப் பெருமாளும் ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
பராசர பாராசாராதிகளும் -நம் ஆழ்வாரும் பெரியாழ்வாரும் ஆண்டாளும் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் திருப் பாண் ஆழ்வாரும் கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –

அல்லாத ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ச்லேஷா சஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது –
விச்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ச்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ச்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –

ஆக
எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக சித அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்க கண்டு –
அனுபவத்து -அதனில் பெரிய என் அவா -என்று
தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே
அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்-அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் –

குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி

———————

சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்
எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்
வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்
வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசன்
காரேய் கருணை இராமானுசா

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும் படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சாரங்க வில்லும்
புடையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று இடையே இராமானுச முனியாயின இந்நிலத்தே –33-

பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன்

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் –

காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் இராமானுசன்
செறு கலியால் வருந்திய ஞாலத்தை வன்மையினால் வந்து எடுத்து அளித்த யரும் தவன் எங்கள் இராமானுசன்-

திருச்சின்ன மாலை –வந்தார் –தாமே பாசுரங்கள் அனுசந்தேயம்  

——————–

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன்
இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் –எம்மிராமாநுசன் -என்னை ஆள வந்த கற்பகம்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் எம் குலக் கொழுந்தே

கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன்
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையால் கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலத்துதித்து உமரை நாளும் வளர்த்தனனே
நீணிலத்தே பொற் கற்பகம் எம்மிராமாநுசன் –

————————-

திருவடி விடாத திரு வருளிச் செயல்கள் -திருவடி நிலைதானே நம்  நம்மாழ்வார் திருவடி நிலை தானே நம் ராமானுஜர் –
பொய்கையார் –செய்ய சுடராழி யான் அடிக்கே -என்று தொடங்கி-ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே ஓரடியில் தாயவனைக் கேசவனை -என்று திருவடி மயமாகவே பேசித் தலைக்கு காட்டினார்-பூதத்தார் –அறை கழல சேவடியான் செங்கண் நெடியோன் -என்று நிகமிக்கிறார்
பேயார் -இன்றே கழல் கண்டேன் என்று தொடங்கி –சக்கரத்தான் தாள் முதலே நங்கட்க்குச் சார்வு -என்று தலைக்கட்டுகிறார்
திருமழிசைப்பிரான் -உன்னபாதம் அன்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் –என்று திருச்சந்த விருத்தத்தில் நிகமிக்கிறார்-திருவிருத்தம் –தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய –என்று தொடங்கி –அடிக் கண்ணி சூடிய மாறன் -என்று நிகமனம் -திருவாசிரியம் தொடக்கம் -மூ வுலகு அளந்த  சேவடியேயோ  / பெரிய திருவந்தாதி நிகமனத்தில் மொய் கழலே ஏத்த முயல்/ திருவாய்மொழி தொடக்கம் -துயரறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –
பெருமாள் திருமொழி –திரைக்கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் -என்று தொடங்கி –நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவாரே-என்று நிகமனம்
பெரியாழ்வாரும் –உன் சேவடி செவ்வி திருக் காப்பு -தொடங்கி -திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் –என்று நிகமனம் -திருநாமத்தில் திருவடி அடி பட்டு அன்றோ கிடக்கிறது தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இடம்
திருப் பாண் ஆழ்வார் -திருக்கமல பாதம் வந்து என் கண்ணின்னுள்ளன ஒக்கின்றவே —
திருமங்கை ஆழ்வார் வயலாலி மணவாளன் திருவடியில் வாயை வைத்தே பிரபந்தம் தொடங்கி நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று நிகமிக்கிறார்  -மதுரகவியாரும் -முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே / ஆண்டாளும் -உன் பொற்றாமரை அடியே பிரியாது என்றும் இருப்பரே-அமுதனாரும் -மாறன் அடி பணிந்து உயந்த இராமானுசன் அடிப்  பூ மன்னவே-என்பாரே -உலகம் உண்ட பெறுவாயா -6-10–திருவாய் மொழி பாசுரம் தோறும் திருவடியும் -அடியேன் -பத பிரயோகமும் உண்டே —அரு வினையேன் என்று -6–10–4-பாசுரம் மட்டும் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -192- இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–64/76/88/98/105/106/107/108–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 27, 2016

பெரிய ஜீயர் அருளிய உரை –
-அவதாரிகை –
அறுசமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று
பாஹ்ய மத நிரசன அர்த்தமாக -எம்பெருமானார் எழுந்து அருளின பிரகாரத்தை யனுசந்தித்தார்-கீழில் பாட்டில் .
அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற வாதிகளைப்-பார்த்து -இராமானுச முனி யாகிற யானை
உங்களை நாடிக் கொண்டு பூமியிலே-வந்து எதிர்ந்தது -உங்கள் வாழ்வு இனிப் போயிற்று -என்கிறார் -இதில் .

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

வியாக்யானம்
எங்களுக்கு விதேயமாய் இருக்கும் இராமானுச முனி யாகிற யானை –
பண்ணார் பாடல் -திருவாய் மொழி – 10-7-5- -என்னும்படி ஆழ்வார் பண்ணிலே-உபகரித்து அருளின செவ்வித் தமிழான
திருவாய் மொழியால் விளைந்த ஆனந்தமானது –ஒழுகா நின்றுள்ள -மாதமாய்க் கொண்டு -விஸ்த்ருதமாக -வேத நூலோதுகின்றதுண்மை – என்னும்படி
யதாபூத வாதித்வத்தால் வந்த மெய்ப்பாட்டை உடைய விலஷன வேதமாகிற எழில்-தண்டையும் ஏந்திக் கொண்டு
–நீங்கள் தன்னரசாக நடத்துகிற பூமியிலே ஒருவருக்கும்-நேர் நிற்க ஒண்ணாதபடி -தள்ளிக் கொண்டு வந்து உங்கள் மேலே எதிர்ந்தது –
வாதிகளாய் உள்ளீர் -சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பல்கிப் பணைத்து இருந்த-உங்களுடைய சம்பத்து முடிந்ததே –
லோகம் பிழைத்ததே -என்று கருத்து .
ஏகாரம் ஈற்றசையாய் உங்கள் வாழ்வு முடிந்தது என்று தலைக் கட்டவுமாம் .
பண்டரு மாறன் பசும் தமிழ் -என்றதுக்கு பண்டே உள்ளதாய் -பெறுதற்கு அரிதாய் –இருந்துள்ள மாறன் பசும் தமிழ் -என்று பொருள் ஆனாலோ என்னில்
-அது ஒண்ணாது .பண்டு என்கிற சொல்லு பூர்வ கால வாசி இத்தனை அல்லது பூர்வ காலீன வஸ்து வாசி-யல்லாததினாலே.
பசுமை -செவ்வி / விள்ளுதல் -விரிதலாய் விஸ்ருதயைச் சொல்லுகிறது /மண்டுதல்-தள்ளுதல் -விரிதலுமாம்–

————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
அறுசமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து -என்று பாஹ்ய மத-நிரசன அர்த்தமாக எம்பெருமானார்
எழுந்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்தார் கீழ் –
அந்த ப்ரீத்தி-பிரகர்ஷத்தாலே பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற வாதிகளைப் பார்த்து -ராமானுச முனியாகிற யானை –
வேதாந்தம் ஆகிற கொழும் தண்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு -உங்களை நிக்ரஹிக்கைக்காக-
இந்த பூமியிலே நாடிக் கொண்டு வந்தது-இனி உங்களுடைய வாழ்வு வேரோடு அற்றுப் போயிற்று என்கிறார் –

வியாக்யானம் –
எங்கள் இராமானுச முனி வேழம் –
எங்கள் இராமானுசன் -எம் இராமானுசன் -என்னை ஆள-வந்து இப்படியில் பிறந்தது -என்று பாட்டுத் தோறும் இப்படி அருளிச் செய்தது –
அவருடைய விக்ரக விஷய-பிரேம அதிசயம் காணும் –
எங்களுக்காக வவதரித்த எம்பெருமானாராகிற மத்த கஜம் -லோகத்தில் பிராக்ர்த்த கஜம் போலே –ஞான சந்கோசமாய் -இருக்கை அன்றிக்கே
-சர்வதா அபதே ப்ரவர்த்தான ஹீனரை நிரசிக்கைக்கும் -அவர்களுக்கு-உபதேசித்து சன் மார்க்கத்தில் நிறுத்துகைக்கும்
-அனுகூலரை ரஷிக்கைக்கும் -மனனம் பண்ணுக்கைக்கும் உடலான-ஞான விகாசத்தோடே இருக்கும் ஆனை –
இப்படி அப்ராக்ருதமான ஆனைக்கு உண்டான ஞானம் அதுக்குத் தக்கதாய்-இருக்கும் இறே
-கஜமாக உத்ப்ரேஷிக்கிறது -விபஷிகளை சித்ரவதம் பண்ணவும் -தாம் பரிக்கிரகித்தவர்களை-பட்டாபிஷேக யோக்யராம்படி செய்யவும் வல்லவர் ஆகையாலே
-பண்டரு மாறன் பசும் தமிழ் –
எழுத்து அசை சீர்-பந்தம் அடி தொடை நிரை நிறை ஓசை தளை இனம் யாப்பு பா துறை பண் இசை தாளம் முதலான செய் சொல்லும்
இதுக்கு உண்டாகையாலே -யாழினிசை வேதத்தியல் -என்று காநோ பலிஷிதங்களான -சகல லஷணங்களும்-
அனுசந்தாக்களுக்கு தெளிந்து -அனுபவிக்கும்படியாய் இருக்கிற –
அன்றிக்கே பண்டு அரு என்ற பதச் சேதமாகில்-
பண்டு என்கிற பதம் காலபரமே யானாலும் -கங்கா யாகோஷம் – என்கிற இடத்தில் கங்கா சப்தம் தீர வாசகம் ஆனால் போலே –
லஷணையாய் இச் சப்தம் காலீன வஸ்து வாசகம் என்று சொல்லலாம் இறே -அந்த பஷத்தில்
-பிரதித்வாபராந்தரத்திலும்-வியாச அவதாரம் பண்ணி -சம்ஸ்ர்க வேதங்களை சர்வேஸ்வரன் தானே வ்யவசிக்குமா போலே பிரதி கலி யுகத்திலும்
ஜ்ஞான யோகியாய் அவதரித்து த்ரமிட வேதங்களை சர்வேஸ்வரன் வெளி இட்டு போகிறான் என்று –
பிரம்ம பார்க்கவா-வ்ர்த்தபாத்மாதி புராணங்களிலே சூபிரசித்தமாக சொல்லுகையாலே -நித்தியமாய் -அ பௌருஷேயமாய் இருந்துள்ள-திருவாய் மொழி –
பாகவதர்கு ஒழிய -அந்யருக்கு வாக் மனச்சுக்களாலே ஸ்பரசிக்கவும் கூட அரிதான -என்றபடி –
மாறன் -நம் ஆழ்வாருக்கு பிரதம உபாத்தமான திரு நாமம் –
பசும் தமிழ் -அவராலே கட்டப்பட்டு -அசந்கலிதமான-சுத்த திராவிட பாஷையாய் விளங்குகிற திருவாய்மொழி –
மாறன் பணித்த தமிழ் மறை -என்றும் -ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றும் -சொல்லுகிறபடியே-நம் ஆழ்வார் சம்பந்தியான திருவாய் மொழி என்றபடி –
ஆனந்தம் பாய் மதமாய் –
லஷ்மி நாதாக்ய சிந்தவ்-சடரிபுஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நா தாத்ரா வப்யஷி சத்த நுர குபதாம்போஜா சஷூர் ஜ்ஜ்ராப்யாம் –
கத்வாதாம்ய மு நாக்யாம் சரிதம நுய தீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் சம்பூர்ய ப்ரானிசச்யே ப்ரவஹதி நிதராம்-தேசிகேந்திர பிரமௌநை –என்கிறபடியே
-ஸ்ரீ ய பதி யாகிற கடலில் நின்றும் -ஆழ்வார் ஆகிற முகில் –
பெரும் கருணை யாகிற நீரை முகந்து -பெரிய முதலியார் ஆகிற குன்று தன்னிலே வர்ஷிக்க -அக் கருணை யானது
மணக்கால் நம்பி உய்யக்கொண்டார் -ஆகிய திரு வருவியாய் -பரம ஆசார்யரான ஆள வந்தார் -ஆகிற
ஆற்றிலே சென்று -எம்பெருமானார் ஆகிய பொய்கையை பூரித்து -பூர்வாச்சார்யர்கள் ஆகிற மடையாலே
தடையறப் பெருகி -சம்சாரி சேதனராகிற பயிரை நோக்கி -ரஷித்தது என்று சொல்லுகையாலே –
கவியமுதம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலை -என்றும் ஸ்லாக்கிக்கும்படி-சர்வருக்கும்-அமுதமயம் ஆகையாலே
-ஆனந்தாவஹமான திருவாய் மொழியாலே விளைந்த ஆனந்த மானது –இவ்வளவாக பெருகி வாரா நின்றுள்ள -அம்ர்தமாய்க் கொண்டு
-விண்டிட –
எல்லா காலத்திலும்-எல்லா இடத்திலும் விஸ்த்ரமாய் இருக்க -விள்ளுதல்-விரிதலாய் -விஸ்த்ரியை சொல்லுகிறது –
மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்தி –
மெய்ம்மை -சத்யம் -அதாவது-வேத நூல் ஓதுகின்றது உண்மை -என்னும்படியான யதாபூதவாதித்வம் -இப்படிப்பட்ட
மெய்ப்பாட்டை உடைத்தாய் இருக்கையாலே சகல பிரமாண விலஷணமான வேதம் -நன்மை வை லஷண்யம் –
சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மம் -என்கிற பரத்வத்தை பிரகாசிக்குமதான வேதம் -என்றபடி –
பராவர தத்வா நியாதாவத்-வேதய தீதி வேத -என்று இறே இதுக்கு வுயுத்பத்தி இருப்பது –
மெய்ம்மை கொண்ட -என்ற விசேஷணத்துக்கு தாத்பர்யம்
ரஜ்ஜாவயம்சர்ப்ப -என்கிற ப்ரமத்துக்கு-இயம் ரஜ்ஜு ரேவ ந சர்ப்ப -என்கிற ஞானம் நிவர்த்தகமாம் போலே –
அநாதி அஞ்ஞான மூலங்களாய் ஸ்வ கபோல கல்பிதங்களாய்-பாஹ்ய குத்ர்ஷ்டி சமயங்களுக்கு -யதா பூதார்த்த வாதியான
வேதம் நிவர்த்தகமாய் இருக்கும் என்று -ஆகையாலே பிரதிவாதிகளுடைய நிரசனத்துக்கு உறுப்பான
-வேதமாகிற-அழகிய தண்டையும் ஏந்திக் கொண்டு
-கொழுமை -பெருமை -அன்றிக்கே -இங்கு சொன்னது சம்ஸ்க்ருத வேதமானாலும் –கீழ் அருளிச் செய்த த்ரமிட வேதத்தோடு கூடின வேதம் என்றுமாம்
-அப்படிப்பட்ட வேத ரூபமாய் -மகத்தாய் -அழகிதான –கதையை -கையிலே எடுத்துக் கொண்டு -என்றபடி –
ச காரத்தாலே கையிலே தண்டத்தை ஏந்திக் கொண்டு நின்ற-மாத்ரம் அன்றிக்கே – அத்தால் பர்யாப்தி பிறவாமல் -காலாலே மிதித்தும் –
கொம்பாலே குத்தியும் பிரதிவாதிகளை சித்ரவதம் பண்ணுகைக்கு வந்தபடியை அருளிச் செய்கிறார் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -என்கிறபடி சர்வேஸ்வரன் -எப்போதும் திரு வாழியையும்-திருச் சங்கையும் ஏந்திக் கொண்டு இருக்கிறாப் போலே
-இவரும் வேத ரூபமான பெரும் தண்டை-ஏந்திக் கொண்டு இருந்தார் காணும் -குவலயத்தே மண்டி வந்து ஏன்றது –
நீங்கள் தன்னரசு நாடாக எண்ணி நடத்துகிற-ஆசேது ஹிமாசலமாக -வேங்கடாசல -யாதவாசல -சாரதாபீடாதி திவ்ய ஸ்தலங்களிலே எதிர்கொண்டு
பிரத்யவச்த்தானம்-பண்ணின வாதிகளை கட்டடங்க நிரசித்துக் கொண்டு வந்து -உங்கள் மேலே எதிர்த்தது -மண்டுதல்-தள்ளுதல்-யேன்றுதல்-எதிர்த்தல் –
வாதியர்காள்-
பாஹ்ய குத்ர்ஷ்டி சமய நிஷ்டராய் கொண்டு வாதியர்களாய் உள்ளீர் –
உங்கள் வாழ்வு அற்றதே
-சிஷ்யர்களும் பிரசிஷ்யர்க்களுமாய் பணைத்து இருந்த உங்களுடைய சம்பத்து முடிந்ததே –
சிஷ்ய பிரசிஷ்ய பர்யந்தமாகக் கொண்டு வர்த்திக்க வேணும் என்று நீங்கள் நினைத்து இருந்த உங்களுடைய-துர்மதங்கள் அடங்கலும் விநஷ்டமாய் போயின என்றபடி
-சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிராபகர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்னச் சதுர்மறை வாழ்ந்திடும் நாள் -என்று இவ்வர்த்தத்தை ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
கணதா பரி பாடிபி -என்கிற ஸ்லோகமும் -காதா தாதா கதானாம் -என்கிற ஸ்லோகமும் இவ் வர்த்தத்துக்கு பிரமாணமாக-அனுசந்தேயம் –

—————————————————————————————————————-

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
பகவத் வைலஷண்யம் காணாமையாலே தேவரீரை ஒழிய அறியேன் என்று இருக்கிறேன் அல்லேன் –
கண்ட காலத்திலும் நான் தேவரீரை ஒழிய அறியேன் என்றார் கீழ் .
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானார் மிகவும் உகந்து அருளி
இவர்க்கு எத்தைச் செய்வோம் என்னும் இடம் தோற்ற எழுந்து அருளி இருக்கிற படியைக் கண்டு
தம்முடைய ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அபேஷிக்கிறார் இதில் .

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

வியாக்யானம்
காதா சித்கம் அன்றிக்கே ஒருபடிப்பட்டு நின்ற அழகிய கீர்த்தியும்-
வார் புனல் அம் தண் அருவி -திருவாய் மொழி – 3-5 8- – என்னுமா போலே –
ஒழுகுடைய புனலும் நிறைந்து இருப்பதாய் -திருவேம்கடம் என்னும்-திரு நாமத்தை உடைத்தாய் -ச்ப்ருஹணீயமான திருமலையும் –
ஸ்ரீ வைகுண்டம் ஆகிற திரு நாடும் –ஆர்த்தர ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற இடம் என்று
விசேஜ்ஞ்ஞர் எல்லாம் கொண்டாடும் திருப்பாற்கடலும் –தேவரீருக்கு யாதோரளவு ஆனந்தத்தை விளைக்கும் –
தேவரீருடைய -சேர்த்தி அழகை உடைத்தாய் -போக்யமாய் -இருந்துள்ள-திருவடிகள் எனக்கும் அவ்வளவான ஆனந்தத்தை உண்டாக்கும் .
ஆன பின்பு தேவரீர் திருவடிகளை எனக்கு தந்து அருள வேணும் –
குலவுதல்-கொண்டாட்டம் / ஈதல் -கொடுத்தல் .
பாட்டு கேட்க்கும் இடமும் கூப்பீடு கேட்க்கும் இடமும் குதித்த இடமும் ஊட்டும் இடமும் வளைத்த இடமும் வகுத்த இடமான ஆச்சார்யர் திருவடிகளே –

—————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
கீழ் பாட்டில் பும்ஸா சித்த அபஹாரியான சர்வேஸ்வரன் -சமஸ்த திவ்ய பூஷணம் களாலும்-சமஸ்த திவ்ய ஆயுதங்களாலும் ஒப்புவித்துக் கொண்டு வந்து
-என் முன்னே நின்று-உன்னை நான் விடுகிறேன் அல்லேன்என்று பலாத்காரம் பண்ணினான் ஆகிலும்
-குணைர் தாஸ்யம் உபாகத -என்றால் போலே தேவரீர் உடைய கல்யாண-குணங்களிலே ஈடுபட்ட அடியேனை அக் குணங்கள் தானே
தேவரீருக்கு அனந்யார் ஹனாம் படி பண்ணிற்றன என்று-விண்ணப்பம் செய்ய கேட்டருளி –
இவருடைய பாவ பந்தம் எங்கனே -என்று மிகவும் உகந்து -இவருக்கு நாம் எத்தை செய்வோம்-என்னும் இடம் தோற்ற
-அவர் எழுந்து அருளி இருக்கிற படியைக் கடாஷித்து -தேவரீருக்கு அபிமதங்களாய் இருந்துள்ள –
தண்ணார் வேங்கடமும் -வைகுந்த மா நகரும் -திருப்பாற்கடலும் -யாதொரு ஆனந்தத்தை விளைக்குமோ-
அப்படியே -தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளும் அடியேனுக்கு அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும் –
ஆகையாலே அவற்றைத் தந்தருள வேணும் என்று அபேஷித்து அருளுகிறார் -இப்பாட்டில்

வியாக்யானம் –
நின்ற வணகீர்த்தியும்
-ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -என்கிறபடியே -காதாசித்கம் அன்றிக்கே -கால த்ரய வர்த்தியாய்
-அழகியதாய் -தெழில் அருவித் திரு வேங்கடம் -என்றும் -பரன் சென்று சேர்-திரு வேங்கட மா மலை -என்றும்
-வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும் –
வில்லார் மலி வேங்கட மா மலை -என்றும் -ஆழ்வார்கள் ஈடுபடுக்கைக்கு உடலான குணவத்தா ப்ரதையையும் –
நீள் புனலும் –
வார் புனல் தண அருவி வட திரு வேங்கடம் -என்றும் -குளிர் அருவி வேங்கடம் -என்றும் –
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் -என்றும் -சொல்லுகிறபடி அநவரதம் பாயா நின்று உள்ள- நீண்ட திரு அருவிகளும்
-நிறை வேங்கடப் பொற் குன்றமும் –
இவை இரண்டாலும் நிறைந்து இருப்பதாய்-தெள்ளியார் வணங்கும் மலை திரு வேங்கடம் -என்கிறபடியே –
திரு வேங்கடம் என்னும் திரு நாமத்தை உடைத்தாய் –எம்பெருமான் பொன் மலை -என்கிறபடியே அத்யந்த ச்ப்ர்ஹநீயமாய் –
பரன் சென்று சேர் திரு வேங்கடம் –என்கிறபடியே வகுத்த சேஷியான சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலமான திரு மலையும் –
வைகுந்த நாடும்
-யத்ர பூர்வே சாத்த்யாஸ் ஸந்தி தேவா -என்றும் -விஷ்ணோர் யத் பரமம் பதம் -என்றும் –
தேவாநாம் பூரயோத்வா -என்றும் -அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்த்தானம் விஷ்ணோர் மகாத்மன-என்றும் –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹா –என்றும் -சொல்லுகிறபடியே
-அந்தமில் பேர் இன்பத்து அடியாரான நித்ய சூரிகளுக்கு இருப்பிடமாய் –
சர்வேஸ்வரனுக்கு போக விபூதியான -நலமந்தம் இல்லாதோர் நாடாய்-ஸ்ரீ வைகுண்டம் என்னும்-பேரை உடைத்தான பரம பதமும்
-குலவிய பாற்கடலும்
-பாற்கடலில் பையத் துயின்ற பரமன் அடிபாடி –என்கிறபடி ஆஸ்ரிதரான தேவர்கள் உடைய கூப்பீடு கேட்பதாக சர்வேஸ்வரன் வந்து கண் வளர்ந்து
அருளுகிற இடம் என்று விசேஷஞ்ஜர் எல்லாரும் கொண்டாடும்படியாய் இருந்துள்ள திருப்பாற் கடலும் –
குலவுதல் -கொண்டாட்டம் -இப்படிப் பட்ட உகந்து அருளின நிலங்கள்
-உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் –
ஆநந்த நிலயே சேஷ தல்பே வேங்கட பூதரே -இத்யாதிகளிலும் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவே நிகேதன –
நாக பர்யங்க முத்சர்ஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரிம் -இத்யாதிகளிலும் கௌ ஷீதகீ பிராமணத்தில் பர்யங்க வித்தையிலும்-சொல்லுகிறபடியே –
திரு வேங்கடமுடையானுக்கும் திரு பாற்கடல் நாதனுக்கும் -வான் இளவரசு வைகுந்த-குட்டனுக்கும் -பர்யங்கமாய் இருக்கிற தேவரீருக்கு
எவ்வளவு ஆனந்தத்தை கொடுக்கும் –இப்படி அவ்வவ-ஸ்தலங்கள் தோறும் ஸ்ரீ ய பதியினுடைய திவ்ய மங்கள விக்ரகத்தாலே வந்த ஆனந்தத்தை அறியுமவர்
இவர் ஒருவருமே இறே -ரம்மணாவ நேத்ராய -என்றிவர் தம் அவதாரத்துக்கு பூர்வ அவதாரமான இளைய பெருமாளுக்கு
அந்த திவ்ய தம்பதிகளுக்கு உண்டான ஆனந்த்ததோடு ஒத்த ஆனந்தம் உண்டாய்த்து என்று சொன்னான் இறே-ரிஷியும் –
உன் இணை மலர்த் தாள் –
அநந்தம் பிரதமம் ரூபம் -இத்யாதிகளில் படியே -சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைய-சோதியிலே -வான் இள வரசு வைகுந்த குட்டன் விஷயமாக
-நிவாஸா சய்யாசன பாதுகாம் ஸூ கோ பதா ந-வர்ஷாதப வாரணாதிபி-சரீர பேதைஸ் தவ சேஷ தாங்கதைர்ய தோசிதம் சேஷ இ தீரி தேஜ நை -என்கிறபடியே
அநேக சேஷ வ்ர்த்திகளிலும் அந்வயித்து -சேஷன் -என்னும் திரு நாமத்தை உடையராய் –
பால்யாத் ப்ரப்ர்தி ஸூ ஷ் நிக்த -என்கிறபடியே அவதார தசையிலும் பால்யம் தொடங்கி பெருமாள் திருத் தொட்டிலோடு
இணைத் தொட்டில் இடாத போது பள்ளி கொண்டு அருளாதே -அவர் பக்கலிலே அதி வ்யாமுக்தராய் –
முஹூர்த்தம்-அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்ய விவேர்த்த்ர்ரௌ-என்று பிரியில் தரியாமையை விண்ணப்பம் செய்து மகா ஆரண்யமான
தண்ட காரண்யத்தில் சென்று -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பிரார்தன பூர்வகமாக வழு இலா அடிமைகள் செய்து
நம்பி மூத்த பிரானாக அவதரித்த தசையிலும் அவனை அனுவர்த்திதுக் கொண்டு போந்து -அங்குத்தைக்கு அந்தரங்கராய் –
இருந்துள்ள தேவரீர் உடைய பாவநத்வ போக்யத்வங்களுக்கு ஒன்றுக்கு ஓன்று போலியாய் -சேர்த்தி அழகை உடைத்தாய்
புஷ்பஹாச ஸூ குமாரமாய் பரம போக்யமாய் இருந்துள்ள திருவடிகள் -என் தனக்கும் அது -கீழ் சொன்னபடியே அந்தரங்கராய்
சர்வஜஞ்ராயிருக்கிற தேவரீருக்கு அவ்வவ விஷயங்களிலே எத்தனை ப்ரீதி உண்டோ –
அப்படியே இவ்வளவும் விமுகனாய்-அஞ்ஞா னாய்ப் போந்த அடியேனுக்கு ஸ்வ விஷயமாய் இருந்துள்ள அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும்
-எம்பெருமானார் உடைய-ஆனந்தம் பிரதம பர்வ விஷயம் ஆகையாலே -அரையாறு பட்டு
-அமுதனார் உடைய ஆனந்தம் சரம பர்வ விஷயம் ஆகையாலே-கரை புரண்டு காணும் இருப்பது –
இராமானுச –
-எம்பெருமானாரே –
இவை ஈந்து அருளே
-எனக்கு புருஷார்த்தம் தேவரீர் உடைய-திருவடிகளே யான பின்பு -அவற்றை தேவரீர் தாமே பரகத ச்வீகாரமாக கொடுத்து அருள வேணும் ஈதல்-கொடுத்தல் –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -நின் செம்மா பாத பற்புத் தலை மேல் சேர்த்து ஒல்லை -கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று பிரதம பர்வத்தில் நம் ஆழ்வாரும் இப்படியே அபேஷித்து அருளினார் இறே –
அங்கும் மூன்றை தவிர்த்து ஒன்றைக் கேட்டார் -த்யாஜ்ய அம்சத்தில் வாசி உண்டே –

———————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை –
-அவதாரிகை –
எம்பெருமானார் உபகரித்த ஜ்ஞானத்தில் அந்வயம் இல்லாதாரை-கலி தோஷம் நலியும் என்றார் கீழே .
அந்த ஜ்ஞானத்தை வுபகரிக்கைக்காக அவர் வந்து அவதரித்த படியை யனுசந்தித்து –
எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை-நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் -என்கிறார் -இதில் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமைபோற்றுவனே – – 88- –

வியாக்யானம்
உழுவது -நடுவது -அறுப்பதாக செல்லுகிற ஆரவாரத்தால் மிக்க செந்நெற்கள் விளையா நின்றுள்ள
வயல்களை உடைய -திருக் குறையலூருக்கு நிர்வாஹகராய் –இரும் தமிழ் நூல் புலவராகையாலே -பெரிய திரு மொழி -1- 7-10 -சாஸ்திர ரூபமான
பிரபந்தங்களை செய்து அருளின வைபவத்தை வுடையரான -திரு மங்கை ஆழ்வார் உடைய –
ஒலி கெழு பாடல்-பெரிய திரு மொழி -11-4 10- -என்னும்படி மிக்க த்வனியை உடைத்தான-திருமொழியை தாரகமாகவும் -போக்யமாகவும் -அனுபவித்து –
தம்முடைய திரு உள்ளம் பூரித்து -அத்தாலே
பிரதி பஷ தர்சநத்தை சஹியாதபடி – – அதி பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார் –
பாஹ்யரைப் போல் அன்றிக்கே -வேதங்களை அங்கீகரித்துக் கொண்டு நின்று –வாதங்களைப் பண்ணி -லோகத்தை நசிப்பிக்கிற குத்ருஷ்டிகள் ஆகிற புலிகள்
மிக்கதென்று -சாது மிருகங்களை நலியா நின்றுள்ள -துஷ்ட மிருகமான புலி மிக்க-காட்டிலே அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப் படுமாலே –
சன்மத தூஷகரான குத்ருஷ்டிகள் வர்த்திக்கிற இந்த பூமியிலே-தன்மத தூஷகராய் வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன்
கலி -ஆரவாரம் மிடுக்குமாம் / அப்போது பூ சரத்தை சொல்லுகிறது / கழனி -வயல் /சீயம் -சிம்ஹம் / போற்றுதல் -புகழ்தல்–

———————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தில் அந்வயம் இல்லாதவரை கலி-பிரயுக்தமான தோஷம் ஆக்கிரமித்து நலியும் என்று சொல்லி –
இதில் -அந்த ஞானத்தை லோகத்தார் எல்லாருக்கும்-உபதேசிக்கைக்காக –
அவர் விண்ணின் தலை நின்றும் -மண்ணின் தலத்து உதித்தபடியை அனுசந்தித்து -செந்நெல்-விளையா நின்றுள்ள வயல்களை உடைய
திருக் குறையலூருக்கு ஸ்வாமியான திரு மங்கை ஆழ்வாருடைய-திவ்ய பிரபந்தமாகிற பெரிய திரு மொழியை அனுபவித்து களித்து –
பிரதி பஷிகளுடைய கந்தத்தையும் சகிக்க மாட்டாதே –பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார்
-வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக-இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி
-லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்-தன்னரசு நாடாக கொண்டு தடையற நடமாடா நின்ற
-அவர்களுடைய மதங்களை நிரசிக்கைக்காக அவர்கள்-நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன் என்கிறார் –

வியாக்யானம் –
கலி மிக்க செந்நெல் கழனி
-உழுவது நடுவது அறுப்பதாய் கொண்டு சர்வ காலத்திலும் செல்லுகிற-ஆரவாரத்தாலே மிக்க செந்நெல்லை உடைத்தான கழனி களுடைய
-கலி-ஆரவாரம் -அன்றிக்கே -கலி -என்று மிடுக்காய்-சாரவத்தானே பூமியிலே விளைந்த செந்நெல் என்னுதல் –
கழனி -வயல் -குறையல் கலை பெருமான் -இப்படிப் பட்ட-செந்நெல் களோடு கூடின வயல்களை உடைத்தாய் ஆகையாலே –
மன்னிய சீர் தேங்கும் குறையலூர் –என்கிறபடியே சகல சம்பத்துக்களையும் உடைத்தான திருக் குறையலூருக்கு நிர்வாஹராய்
-இரும் தமிழ் நூல்-புலவன் -என்கிறபடியே சாஸ்திர ரூபங்களான திவ்ய பிரபந்தங்களை செய்து அருளி -உபகரித்த மகா உபகாரரான
திரு மங்கை ஆழ்வார் உடைய–குறையல் பிரான் அடிக் கீழ் -என்று இப் பிரபந்தத்திலேயும் இவருடைய உபகாரத்தை அனுசந்தித்தார் இறே –
செய் -தவம்சத்தில் கிருதஜ்ஜராய் போருகிறவர் இவரும் அவருமே காணும்-
ஒலி மிக்க பாடல்
-இம்மாகா உபகாரத்தால் அருளிச் செய்யப்பட திரு மொழி -திரு குறும் தாண்டகம்-திரு நெடும் தாண்டகம் -தொடக்கமான திவ்ய பிரபந்தங்களை
-இன்பப் பாடல் -என்கிறபடியே அனுசந்திக்கப்-புக்கவர்களுக்கு -அர்த்த ரசத்தாலும் போக்யதையாலும் ஆனந்தம் மிகுதியாய் கரைபுரண்டு இருக்கையாலே
மிகுந்து -கலியனது ஒலி மாலை -என்கிற படியே பெரு மிடறு செய்து அனுசந்திக்க வேண்டுகையாலே-
மிக்க த்வனி யை உடைத்தான திவ்ய பிரபந்தங்கள்-மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூறுவதாக பண்ணி
அருளின திவ்ய பிரபந்தங்கள் என்றபடி
-ஒலி த்வனி -அந்த பிரபந்தங்களை தாரகமாகவும்-போஷகமாகவும் போக்யமாகவும் நினைத்துக் கொண்டு முற்றூட்டாக அனுபவித்து –
தன்னுள்ளம் தடித்து –
அந்த அனுபவ ஜனித ப்ரீதியாலே தம்முடைய திரு உள்ளம் பூரித்து -இவ் வனுபவத்தாலே காணும் பிரதி பஷ-நிரசனத்துக்கு தகுதியான மிடுக்கு
அவருக்கு உண்டானது -தடித்தல் -பூரிக்கை-அதனால்
வலி மிக்க சீயம் –
அந்த-பரி பூர்ண ஞானம் ஆகிற மிக்க பலத்தை உடையராய் –சிம்ஹம் போலே இருக்கிற இராமானுசன் -எம்பெருமானார் –
பிரதி பஷ தர்சனத்தை சகியாதே அவர்களை பக்னராய் பண்ணுமவர் ஆகையாலே -வலி மிக்க சீயம் -என்கிறார்
வலி -பலம் -சீயம் -சிம்ஹம் -மறை வாதியராம் -வேத அப்ராமான்ய வாதிகளான பௌத்தாதிகளை போல்
அன்றிக்கே -வேதத்தை பிரமாண மாக அங்கீ கரித்து வைத்து -அதுக்கு அபார்த்தங்களை சொல்லி -இவற்றைக் கொண்டு
துர்வாதம் பண்ணி லோகத்தார் எல்லாரையும் பிரமிக்க பண்ணி நசிப்பித்து கொண்டு போகிற குத்ர்ஷ்டிகள்
ஆகிற -புலிமிக்கதென்று -புலி கள் மிக்கது என்று -நிவாரகர் இல்லாமையாலே அவை தனிக்கோல் செலுத்தா நின்றன என்று –
இப்புவனத்தில் வந்தமை-சாது ம்ர்கங்ககளை நலியா நின்றுள்ள துஷ்ட ம்ர்கமான புலி மிக்க காட்டிலே
அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப்படுமா போலே -சந்மத தூஷிகரான குத்ர்ஷ்டிகள்
வர்த்தித்து தனிக்கோல் செலுத்துக்கிற இந்த பூமியிலே தன்மத தூஷகராய் கொண்டு
-விண்ணின் தலை நின்று –வந்து அவதரித்த பிரகாரத்தை போற்றுவனே -ஸ்துதிக்க கடவேன் –
போற்றுதல் -புகழ்தல் -குரும் பிரகாச எத்தீ மான் –என்கிறபடியே அவர் தம்முடைய குண சேஷ்டிதங்களை புகழக் கடவேன் என்று அருளிச் செய்தார் ஆய்த்து –

————————————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை பேசினவாறே-இவர் திரு உள்ளமானது –
நிருபாதிக பந்துவான ஈஸ்வரன் அநாதி காலம் ஸ்வர்க்க நரக கர்ப்பங்களிலே-தட்டித் திரிய விட்டு இருந்தது -கர்மத்தை கடாஷித்து அன்றோ –
பிரகிருதி சம்பந்தம் கிடக்கையாலே துர் வாசனை மேலிட்டு-விபரீதங்களிலே போகவும் யோக்யதை உண்டே –
இன்னும் ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே என்று தளர –எம்பெருமானார் தன்னை சரணம் என்றால் -அப்படி ஒன்றிலும் விட்டுக் கொடார்
ஆகையாலே ப்ராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டா -என்கிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

வியாக்யானம் –
தம்மை உத்தரிப்பிக்கைக்காக வந்து அவதரித்த எம்பெருமானார் –தேவரே சரணம் -என்று ஓர் உக்தி மாதரம் பண்ணினால் –
-பிரகிருதி வச்யருக்கு-சப்தாதி போக விஷயங்களாலே இனிதாக தோற்றி இருக்கும் ஸ்வர்க்கத்திலே இட்டு வைப்பாரோ –
தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ –
அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே –
அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ –
மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –
ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –
மேவுதல்-பொருந்துதல் -அதாவது ப்ராபித்தல் /
சோற்றுக்கு கரையாதே கொள் -என்றால் சோறு நிமித்தமாக கரையாதே கொள் -என்னுமா போலே –
/மேவுதற்கு நையல் -என்றது மேவுதல் நிமித்தமாக -என்றபடி /நடுதல்-ஸ்த்தாபித்தல்–

——————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
-இப்படி எம்பெருமானார் தம்முடைய சர்வ உத்கர்ஷ்டமான அதிகாரத்திலே மூட்டின-உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டரானவாறே –
இவருடைய திரு உள்ளமானது -நீர் இப்படி சொன்னீரே யாகிலும் –
சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் -அநாதி காலம் தொடங்கி -தத் தத் கர்ம அனுகுணமாக பலத்தை
கொடுப்பதாக சங்கல்பித்துக் கொண்டு இருக்கிறான் ஒருவன் ஆகையாலே
-இவ்வளவும் ஸ்வர்க்க நரக-கர்ப்பங்களிலே இடைவிடாது அடைவே தட்டித் திரிய விட்டு இருந்து -நம்முடைய கர்மத்தை-கடாஷித்து அன்றோ –
அக் கர்மங்களை உண்டாக கடவதான பிரகிருதி சம்பந்தம் நமக்கு இன்னும் கிடைக்கையாலே
துர்வாசனை மேலிட்டு திரும்பவும் நிக்ரஹத்துக்கு உடலான துஷ்கர்மங்களிலே அன்வயிக்கவும் -யோக்யதை-உண்டே
-ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே -நீர் இப்படி நிர்பரராய் சொல்லக் கூடுவது என்று தளரா நிற்க –
எம்பெருமானார் தம்மை சரணம் என்றால் அப்படி ஸ்வர்க்க நரகாதிகள் ஒன்றிலும் விட்டுக் கொடுக்கும்-ஸ்வபாவர் அல்லர் ஆகையாலே –
இனி பிராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டாம் என்கிறார் –

வியாக்யானம் –
மனமே –
இப்படி அதி சங்கை பண்ணா நிற்கிற நெஞ்சே –
எம் இராமானுசன் –
சாஷான் நாராயணோ தேவ க்ர்த்தவா மர்த்த்யமயீம் தநும் -மக்னா நுத்தரதே லோகன் காருண்யாஸ் சாஸ்திர பாணி நா –என்றும் –
பாபத்வாந்த ஷயாயச -ஸ்ரீ மான் ஆவிரபூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்றும் சொல்லுகிறபடியே
எங்களுடைய முன்னை வினை பின்னை வினை யார்த்தம் என்று மூன்று வகைப் பட்டு இருக்கிற வினைத் தொகை-அனைத்தும் நசிப்பித்து –
சம்சார கர்த்தத்தில் நின்றும் உத்தரிப்பிக்க வேணும் என்று தீஷித்துக் கொண்டு –இக்கொடு உலகத்தில் திருவவதரித்து அருளின எம்பெருமானார் –
சரணம் என்றால்-ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்றும் சரணமேமி ராமானுஜம் -என்றும் –
இராமானுசா உன் சரணே கதி -என்றும்
-மூலே நிவேச்ய மஹதாம் நிகமத்ருமாணாம் முஷ்ண ந ப்ரதாரக பயம்-
த் ர்த நைக தண்ட -ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ஸோ ராமானுஜஸ் சரணமஸ்து முநிஸ் ஸ்வயந்ர – என்றும்
ராமானுஜாய முநயே நம உக்தி மாதரம் காமாதுரோபிகுமதி கலயன்ன பீஷணம் -யாமாம நந்திய மிநாம்
பகவஜ் ஜாநாநாம் தாமேவவிந்தித கதிம் தமஸ பரஸ்தாத் – என்கிறபடியே-
தேவரீரே சரணம் -என்கிற ஒரு-உக்தி மாத்ரத்தை பண்ணினால் –
இனிய ஸ்வர்க்கத்தில் –
பிரகிருதி வச்யராய் இருப்பார்க்கு -சப்தாதி போக விஷயங்களாலே அத்யந்தம்-போக்யமாய் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே -இனிமை -போக்யதை
-ஸ்வர்க்கமாவது -த்ரைவித்யாமாம்-சோம பர பூத பாபா -யஜ்ஞை ரிஷட் வாஸ்வர்காதிதம் ப்ரார்த்தயந்தே -தே புண்யமாசாத்யா ஸூ ரேந்த்ரலோகம்
அஸ் நந்தி திவ்யான் திவிதேவ போகான் –தேதம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புன்யே
மர்த்த்யலோகம் விசந்தி -என்கிறபடியே -நச்வரமாய் சோபாதிகமாய் இருப்பதொரு ஸூக விசேஷம்-இறே இப்படி பட்ட ஸ்வர்க்கத்தில்
–இடுமே –
இட்டு வைப்பாரோ –தந்தும் கேன சம்பின்னம் -இத்யாதிப்படியே அதுக்கு இதோபி விலஷனமாய் இருந்ததே ஆகிலும் –
முமுஷுக்கு நரக கல்பமாயும் -பிரதி கூலமாயும் இறே இருப்பது –
தேவேந்திர த்வாதி கம்பதம் ஏதேவைநிரயாஸ் ததாஸ் த்தா நஸ்ய பரமாந்தமான –ஷேத்ராணி மித்ராணி தனானி நாத புத்ராச ச தாரா
பஸவொக்ரஹாநித்வத் பாத பத்ம ப்ரவனாத்மாவர்த்தேர்ப்பவந்தி சர்வே பிரதி கூல ரூபா -என்னக் கடவது இறே
பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ -போர வைத்தாய் புறமே -நெறி காட்டி நீக்குதியோ –
அற்ப சராசரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –
என்று ப்ராக்ர்த்த ஸூகத்தை கட்டடங்க பிரதி கூலமாகவும் ஸ்வரூப நாசககமாகவும் நம் ஆழ்வார்-அனுசந்தித்து அருளினார் இறே –
இன்னும் நரகில் இட்டு சுடுமே
-உபாய உபேய பாவேன தத்வதஸ் சர்வே தேசிகை -ஸூ நிச்சிதான்க்ரி பத்மாய –என்கிறபடியே –
தன திருவடிகளையே உபாயம் உபேயம் என்று அத்யவசித்து -அனந்யார்ஹராய் போன பின்பு
கேட்ட உடனே அஞ்சும்படி -அதி துஸ் சகங்களான ரௌவராதி நரகங்களிலே விழ விட்டு தஹிப்பிப்பாரோ-
கர்ச்ச்ரென தேஹான் நிஷ்க்ராந்திம் யாம் யகிங்கர தர்சனம் -யாத நாதேக சம்பந்தம் யாம்யபாசைஸ் ச கர்ஷணம் –
உக்ர மார்க்க கதின்லேசம் யமச்ய புர தஸ்திதம்–தன்னி யோகேன தாயாதா யாதனாச்ச சகஸ்ரசா -ஸ்ருத்வாஸ்
ம்ர்த்வாச தூயேஹம் தத் ப்ரேவேச பயாகுல -என்றும்
-கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர்-கொடுமிறைக்கு அஞ்சி – என்றும் –
எண்ணிறந்த துன்பம் தரு நிரயம் பல -என்றும் சொல்லப்பட்ட நரகங்களிலே சென்று-துக்கப்ப்படும்படி உதாசீனராய் இருப்பாரோ -என்றபடி
அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் சுடுமே
-கர்ம பிரம்மோத் த்பவம் வித்தி -என்கிறபடி –
அந்த ஸ்வர்க்க நரகாதிகளுக்குஈடான புண்ய பாப் ரூப கர்மார்ஜனத்துக்கு -பிரம சப்த வாச்யமான சரீரம்-
ஹேதுவாய் இருக்கையாலே அத்தை அனுசரித்து கொண்டு இருப்பதாய்
-தொன் மாயப் பல் பிறவி –
என்கிறபடி -அநாதியாய் -ஏவம் சம்சர்த்தி சக்ரச்தே ப்ராம்ய மானே ஸ்வ கர்மபி -என்றும் -மாறி மாறி-பல பிறப்பும் பிறந்து -என்றும் சொல்லுகிறபடி
-சக்ரம் போல் சுழன்று வாரா நின்றுள்ள ஜன்ம பரம்பரைகளில்-நிறுத்துவாரோ -அவற்றில் அன்வயிக்கும்படி பிரவர்த்திப்பிப்பாரோ என்றபடி
-நடுதல் -ஸ்தாபித்தல் –
இனி நம்மை நம் வசத்தே விடுமே –
-எம்பெருமானார் திருவடிகளுக்கு நிழலும் அடிதாறும் போல் அத்யந்த-
பரதந்த்ரராய் போந்த நம்மை மேல் உள்ள காலம் எல்லாம் ஸ்வ தந்த்ரராக்கி -நம்முடைய ருசி அனுகுணமாக
ச்வைர சம்சாரிகளாய் போகும்படி விட்டு விடுவாரோ
-எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்து-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஏதே -என்னும்படியான நிஷ்கர்ஷத்தைப் பெற்ற அடியோங்களை –
அப்ராப்தமானவை ஒன்றும் தட்டாதபடி பண்ணி அருளுவார் -என்று கருத்து-
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரம்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலி ந -என்றும்
மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்னக் கடவது இறே
-மேவுதற்கு –
அடியார் குழாம் களை உடன்-கூடுவது என்று கொலோ – என்றும் -ராமானுஜச்ய வசக பரிவர்த்தி ஷீய -என்றும் சொல்லுகிறபடியே -நம்மால்
பிரதி பாதிக்க படுகிற ப்ராப்தி நிமித்தமாக -நையல் -சிதிலமாகாதே கொள் -மேவுதல் -பொருந்துதல் -அதாவது ப்ராபித்தல் –
சோற்றுக்கு கரையாதே கொள் என்றால் -சோறு நிமித்தமாக கரையாதே கொள் என்னுமா போலே
மேவுதற்கு நையேல் என்றது –
மேவுதல் நிமித்தமாக நையல் வேண்டா -என்றபடி -ந புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -அவசியம் அனுபோக்தவ்யம் க்ர்தம் கர்ம ஸூ பா ஸூ பம் –
என்கிற சாஸ்த்ரத்தை உட் கொண்டு சர்வேஸ்வரன் சம்சாரத்தில் மூட்டும் ச்வாபவனாய் விட்டாப் போலே
எம்பெருமானாரும் தம் சாஸ்திர மரியாதையை உட் கொண்டு உதாசீனராய் இருப்பாரோ என்று அதி சங்கை
பண்ணின நெஞ்சைக் குறித்து -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பும் -பிரபன்னராய் -சரம பர்வ நிஷ்டராய் இருக்கும்
நம்மை உபாசகரைப் போலே ப்ராப்ய அவசான பர்யந்தம் சம்சார வெக்காயம் தட்டும்படி காட்டிக் கொடார் -என்றது ஆய்த்து –
மனமே நையல் மேவுதற்கே –
என்று சேதன சமாதியால் அருளிச் செய்கிறார் -அசித்தை கூட திருத்தும் படி காணும்
இவர் உபதேசம் இருப்பது -நகலு பாகவதாய மவிஷயம்கச்சந்தி -பரிஹர மது ஸூ தன பிரபன்னான் பிறப்பு ரஹமன்ய நிர்னாம்
-த்யஜபட தூரதரென தானபாபான் -என்னக் கடவது இறே –
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – என்று-
இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தார் இறே –

——————————————————————————————————————-
பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை
எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு-வஸ்தவ்யதேசம் அதுவே என்று அங்கே போக ஆசைப்படா நிற்க –
நீர் பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர் –
உமக்கு வஸ்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பது எது -என்ன-அருளிச் செய்கிறார் –

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 – –

வியாக்யானம் –
அழகிய திரைகளை வுடைத்தான திருப்பாற் கடலிலே –கடலோதம் காலலைப்ப கண் வளரும் -திருவந்தாதி – 16- என்கிறபடியே-
துடைகுத்த உறங்குவாரைப் போலே -அத்திரைகளானவை திருவடிகளை அநு கூலமாக அசைக்க-
கண் வளரா நிற்பானாய் – உறங்குவான் போல் -திருவாய்மொழி -5 4- 11- – யோகு செய்கிற
ஆச்சர்யத்தை உடையவனான சர்வேஸ்வரனுடைய குணத்தில் ஈடுபட்டு –ஜிதந்தே -என்று
திருவடிகளின் கீழே விழுந்திருந்த ஸ்வபாவத்துக்கு ஒருகாலும் சலனம் அற்று இருக்கிற
கலக்கமில்லா நல் தவ முனிவரும் -திருவாய் மொழி -8-3 10–
இது ஒரு ஞான வைபவமே-என்று இத்தையே பல காலும் ஸ்லாகித்துக் கொண்டு போருகையாலே -அவர்கள் நெஞ்சிலே
மேவப்பட்ட விலஷணமான ஜ்ஞானத்தை உடையவராய் -பரம வைதிகரானவர்கள்
ப்ராணாமாத்ய அநு வர்த்தங்களைக் பண்ணா நின்றுள்ள திருவடிகளை வுடையரான-எம்பெருமானாரை
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா -பார மோஷ -என்கிறபடியே சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள-வைபவத்தை உடையவர்கள் –
அவ் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே
கிளர்ந்து கடல் இரைத்தால் போலே இரைத்துக் கொண்டு சசம்பிரம வியாபாரங்களை பண்ணும் இடம்-அவர்கள் அடியானான எனக்கு வஸ்த்வ்ய தேசம்
செழுமை -அழகு பெருமையுமாம் / பாற்கடல் பள்ளி கொள் மாயன் -என்றும் பாடம் சொல்லுவர்–

—————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
கீழே -எம்பெருமானார் தமக்கு பண்ணி அருளின உபகாரத்தை அனுசந்தித்து-மகா உதாரரான எம்பெருமானாரே -என்று அவரை சம்போதித்து-
தேவரீர் சுலபனான கிருஷ்ணனை-கரதலாமலகமாக பண்ணிக் கொடுத்தாலும் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரம பதத்தை கொடுத்தாலும் –
அவனுக்கு கிரீடாகந்துக ஸ்தாநீயமான இந்த லீலா விபூதியைக் கொடுத்தாலும் -தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரக-அனுபவம் ஒழிய
அவற்றில் ஒன்றும் எனக்கு வேண்டுவது இல்லை -ஆகையால் இவ் அனுபவம் எனக்கு எப்போதும்
நடக்கும்படி கிருபை பண்ணில் தரிப்பன் – இல்லை யாகில் ஜலாதுத்தர்த்த மத்ஸ்யம் போலே தரிக்க மாட்டேன் என்ன –அத்தைக் கேட்டவர்கள்
-ஜ நிம்ருதி துரித நிதவ் மே ஜகதி ஜிஹா சாந்த்ரஜாம் பிதா பவத -பவ நு ச ந பசி பரஸ்மின் நிரவதிகா-நந்த நிர்ப்ப ரெலிப்ச – என்கிறபடியே
லோகத்தார் எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் என்றும் -பரம பதம் உபாதேயம் என்றும் -அறுதி இட்டு அங்கே போக ஆசைப்படா நிற்க
-நீர் இவ்விரண்டையும் சஹ படித்து சொன்னீர் –இனி உமக்கு வஸ்தவ்ய தேசமாக அறுதி இட்டு இருப்பது என் என்று கேட்க –
திருப்பாற் கடலிலே-கண் வளர்ந்து அருளின சர்வேஸ்வரனுடைய குணங்களில் ஈடுபட்டு -கலக்கமில்லா நல் தவ முனிவராலே
விரும்பப்பட்ட விலஷண ஞானத்தை உடையரான -பரம வைதிகராலே – தொழுது முப்போதும் -என்கிறபடியே
அநவரதம் சேவிக்கப் படா நின்றுள்ள திருவடிகளை உடைய எம்பெருமானாரை -தேவும் மற்று அறியேன் –
என்று சதா அனுபவம் பண்ணிக் கொண்டு இருக்குமவர்கள் எழுது அருளி இருக்குமிடம் அவர்கள் அடியேனான
எனக்கு வஸ்தவ்ய தேசம் என்று கீழே தாம் சொன்ன ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

வியாக்யானம் –
செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன்
-செழும் என்றது -திரைக்கு விசேஷணம் ஆகவுமாம்-கடலுக்கு-விசேஷணம் ஆகவுமாம் –திரைக்கு விசேஷணம் ஆனபோது
-செழுமை -அழகியதாய் -பால் கிளருமா போலே-ஒன்றுக்கு ஒன்றாக திரண்டு வருகிற இவற்றினுடைய சமுதாய சோபையை சொன்னபடி –
கடலுக்கு-விசேஷணம் ஆன போது-செழுமை -பெருமையாய் -நளி நீர் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடி
-சர்வேஸ்வரனுக்கு இடங்கை வலங்கை கொண்டு கண் வளருகைக்கு-ஈடான பரப்பை உடைய கடல் என்றபடி –
அன்றிக்கே -செழுமை மாயவனுக்கு விசெஷணம் ஆகவுமாம் –இப்படிப் பட்ட திரு பாற் கடலிலே -கடலோதம் கால் அழைப்ப கண் வளரும் -என்கிறபடி
துடைகுத்த-உறங்குவாரைப் போலே -திரைகளானவை திருவடிகளை அனுகூலமாக அலைக்க – ஊஞ்சலிலே-கண் வளருமவனைப் போலே –
கண் வளரா நிற்பானாய் -உறங்குவான் போலே யோகு செய்கிற -ஆச்சர்யத்தை-உடையனான சர்வேஸ்வரன்
-ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன -என்றும் -வெள்ளத்தரவில்-துயில் அமர்ந்த வித்தினை -என்றும் சொல்லுகிறபடி –
அநந்த அவதார கந்தமாய்க் கொண்டு திருப்பாற்-கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் -என்றபடி
-செழும் திரை பாற்கடல் பள்ளி கொள் மாயன் –என்றும் பாடம் சொல்லுவார்கள் –
திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் –
பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து –என்கிறபடியே அப்படிப் பட்ட சர்வேஸ்வரனுடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே
ஈடுபட்டு -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றபடி -அவனுடைய திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும்
போலே பிரியாதே விழுந்து இருக்குமவர்களான – கலக்கமிலா நல் தவ முனிவராலே –நெஞ்சில் மேவும்-நல் ஞானி -இது ஒரு ஞான வைபவமே என்று
இத்தையே பலகாலும் அவர்கள் ஸ்லாகித்துக் கொண்டு –போருகையாலே அவர்கள் நெஞ்சிலே வைக்கப்பட்ட ஞான வைலஷண்யத்தை உடையவராய் –
மேவுதல் -விரும்புதல் –
நல் வேதியர் –
பரம வைதிகர் ஆனவர்கள் -தொழும் திருப் பாதன் -லஷ்மணாய முநயே தஸ்மை நமஸ் குர்மஹே-என்றும்
–தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே -என்றும் – பிரமாணம் லஷ்மண முநி ப்ரதி க்ர்ஹ்ணா து மாமாம் –என்றும்
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்றும் சொல்லுகிறபடியே பிரணமாத்ய அனுவர்த்தனந்களை-பண்ணா நின்றுள்ள திருவடிகளை உடையனான
-இராமானுசனை
-எம்பெருமானாரை -தொழும் பெரியோர் –நித்யாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்றும் -புணர்த்தகையனராய் – என்றும் -கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும் –
சொல்லுகிறபடியே சர்வ காலமும் சேவித்துக் கொண்டு இரா நின்றுள்ள பெருமையை உடையவர்கள் –
எழுந் திரைத்தாடுமிடம்
-அவ அனுபவ ஜநிதமான ஹர்ஷம் உந் மஸ்தகமாய் -அத்தாலேஉடம்பு இருந்த இடத்தில் இராதே கிளர்ந்து கடல் இரைத்தால் போல் இரைத்துக் கொண்டு –
சசம்ப்ரம வியாபாரங்களை பண்ணுமிடம்-
அடியேனுக்கு இருப்பிடமே –
தன்னை உற்றாட் செய்யும் தன்மையினோர்-மன்னு தாமரைத் தாள் தன்னை உற்றாட் செய்ய என்னை உற்றான் -என்கிறபடியே
அவர்களுக்கு-சரமாவதி தாசனான அடியேனுக்கு வஸ்தவ்ய தேசம்
-சிரீதரன் தொல் புகழ் பாடி கும்பிடு-நட்டமிட்டாடி கோகுகட்டுண்டு உழலுகிற -பிரதம பர்வ நிஷ்டரைப் போலே -இச் சரம பர்வதத்திலும்
எழுந்து இரைத்து ஆடுமவர்கள் இருக்குமிடம் அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார் –
யா வைகுண்ட கதா ஸூ தாரச புஜாம் ரோசேத நோ சேதசே-என்றும் -வாஸ ஸ்தானம் ததிஹ க்ர்தி-நா பாதி வைகுண்ட கல்பம் –என்றும்
-வஸ்தவ்யம் ஆசார்ய சந்நிதியும் -என்னக் கடவது இறே-

—————————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
இப்படி இவர் தமக்கு -தம் பக்கல் உண்டான அதி மாத்திர ப்ராவண்யத்தை கண்டு –
எம்பெருமானார் -இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள –அத்தைக் கண்டு உகந்து அருளிச்-செய்கிறார் .

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்துன்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –

வியாக்யானம்-
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் – ஆச்சர்ய பூதனான சர்வேச்வரனுக்கு வச்தவ்ய தேசம்-
ஸ்ரீ வைகுண்டமும் -வடக்குத் திரு மலையும் -திரு மால் இரும் சோலை என்று பிரசித்தமான -திருமலை யாகிற –ஸ்த்தலமுமாக-
வைகுந்தம் கோயில் கொண்ட –திருவாய் மொழி – 8-6 5- வேங்கடம் கோயில் கொண்டு -திருவாய்-மொழி – 2-1 7-
அழகர் தம் கோயில் -திருவாய்மொழி – -2 9-3 – என்று- சொல்லா நிற்பவர்கள்-பகவத் தத்வத்தை சாஷாத் கரித்து இருக்கிற விலஷணரானவர்கள் —
அப்படி பட்டு இருந்துள்ள சர்வேஸ்வரன் -அழகிய பாற்கடலோடும் -பெரிய திருமொழி 5-2 10– என்கிறபடியே
அந்த ஸ்த்தலங்கள் தன்னோடே கூட வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்த்தலம்-என்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்கள் -அவர் தம்முடைய குண அனுபவ ஜனித
ஹர்ஷ பிரகர்ஷத்தாலே களித்து சசம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணும் இடம் தமக்கு வாசஸ்தானம் என்று கீழ்ப்-பாட்டில் அருளிச் செய்து –
இப்பாட்டிலே -வேத -தத் உப பிரமனாதிகளாலே பரிசீலனத்தை பண்ணி இருக்குமவர்கள்
சர்வேஸ்வரனுக்கு உகந்து அருளின நிலங்களாக சொல்லுகிற -ஸ்ரீ வைகுண்டம் வட திருமலை தென் திருமலை
தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட எம்பெருமானாருடைய திரு உள்ளத்திலே அவன் மிக விரும்பி-வர்த்திக்குமா போலே –
இப்போது -அந்த திவ்ய தேசங்களோடும் – அந்ததிவ்ய தேசங்களுக்கு நிர்வாஹனான-
சர்வேச்வரனுடனும் கூட வந்து எம்பெருமானார் தாமும் நிரதிசய சுகமாக எழுது அருளி இருக்கிற ஸ்தலம்-
தம்முடைய திரு உள்ளம் என்று அனுசந்தித்து பிரீதர் ஆகிறார் –

வியாக்யானம்-
வைகுந்தம் –
அவ்யாஹதளம் கல்பம் வஸ்து லஷ்மி தரம் விது -என்கிறபடியே சமஸ்த சங்கல்ப்பங்களும்
மாறாதே செல்லுக்கைக்கு உடலான தேசமாய் -நலமந்த மில்லதோர் நாடு -என்று ஸ்லாக்கிக்கப் படுமதான-ஸ்ரீ வைகுண்டமும் –
அன்றிக்கே -தர்ம பூத ஞானத்துக்கு திரோதானம் இல்லாத தேசம் என்னுதல் –
வேங்கடம் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பு -என்றும்
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை -என்றும் சொல்லுகிறபடியே -இரண்டு பிரஜையை பெற்ற
மாதாவானவள் இருவருக்கும் முலை கொடுக்க பாங்காக நடுவே கிடைக்குமா போலே –நித்ய சூரிகளுக்கும்-நித்ய சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கைக்காக –
அவன் நின்று அருளின திரு மலையும் மாலிரும் சோலை என்னும் பொருப்பிடம் -புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் -என்றும் –
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -என்றும் -கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க-வளர் ஒளி மால் சோலை மழை -என்றும் சொல்லுகிறபடியே
-திருமால் இரும் சோலை என்னும்-பேரை உடைத்தாய் -ஆழ்வார் பிராரத்து அருளின படியே உகந்து வர்திக்கைக்கு ஏகாந்த ஸ்தலம்
என்று அவன் விருப்பத்தோடு வர்த்திக்கிற தென் திருமலை ஆகிய ஸ்தலமும் –
பொருப்பு
-பர்வதம்-இருப்பிடம் -ஆவாஸ ஸ்தானம் -மாயனுக்கு -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா -என்றும்
நமே விதுஸ் ஸூ ர கணா-என்றும் -பிரபவன்ன மகர்ஷய -என்றும் -யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் –
என்றும் சொல்லுகிற படியே அசிந்த்ய ஸ்வபாவனாய்-ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
தான் ஒரு உருவாய் தனி வித்தாய் -என்றும் -சொல்லுகிறபடியே சர்வ காரண பூதனாய் -ஸ்வரூப ரூப
குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனுக்கு
-நல்லோர் –
மகாத்மா ந சதுமாம் பார்த்த-தைவீம் ப்ரகர்தி மாஸ்திதா -பஜன்த்ய நன்ய மனசொஜ்ஞாத்வா பூதாதி மவ்யயம் -என்கிறபடியே பரா வரதத்வயா
தாத்ம்ய விதக்ரே ஸ்ரரான மக ரிஷிகள் -என்பர் -சொல்லுவார்கள்
-வைகுண்டேது பார் லோகே ஸ்ரீ யா சார்த்தம்-ஜகத்பதி -ஆச்தே விஷ்ணுர சிந்த்யா த்மா பக்தைர் பாகவதஸ் சஹா -இத்யாதியாலே பிரதிபாதிப்பர் -என்றபடி
அன்றிக்கே -நல்லோர் -மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்வார்கள் என்றுமாம் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் -திரு மால் வைகுந்தம் என்றும் –
தெண்ணல் அருவி மணி பொன் முத்து-அலைக்கும் திரு வேம்கடத்தான் -என்றும் –
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் வளர் இளம் பொழில் சூழ்-மால் இரும் சோலை -என்றும்
-விண் தோய் சிகரத் திருவேங்கடம் -என்றும் -சீராரும் மால் இரும் சோலை -என்றும் –
வேங்கடத்து மாயோன் -என்றும் -விரை திரை நீர் வேங்கடம் -என்றும் -மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தான் -என்றும் –
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் -என்றும் இத்யாதிகளாலே அருளிச் செய்வார்கள் -என்றபடி –
அவை தன்னொடும் –
அந்த வைகுண்டம் வேங்கடம் மால் இரும் சோலை தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட-வந்து –
அழகிய பாற்கடலோடும் -என்கிறபடியே அந்த திவ்ய தேசங்களில் -அவரைப் பெறுகைக்கும்
ஜகத் ரஷணம் பண்ணுகைக்கும் -உறுப்பாகையாலே அந்த கிருதக்ஜ்ஜையாலும் தனக்கு பிராப்யரான
இவர் தம்முடைய ப்ரீதி விஷயங்கள் ஆகையாலும் -அவற்றை பிரிய மாட்டாதே -அந்த திவ்ய தேசங்களோடு கூடே தானே வந்து –
மாயன் –
சுவையன் என்னும்படி நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுக்கு – ஜ்ஞாநீத்வாத் மைவமே மதம் -என்று
அவன் தானே சொல்லும்படி -தாரகராய் இருக்குமவர் -அன்றிக்கே -ஏன் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கிறபடி
சர்வேஸ்வரன் தானே வந்து உபகரித்து -படாதன பட்டு -உபதேசித்தாலும் திருந்தாத ப்ராக்ருத ஜனங்களை எல்லாம்
அனாயாசேன திருத்திப் பணி கொண்ட ஆச்சர்ய பூதர் -என்னுதல் -இராமானுசன் -இப்படிப் பட்ட எம்பெருமானாருடைய –
மனத்து –
திரு உள்ளத்திலே வாசஸ்தானமாக எழுந்து அருளி இருந்தார் -என்றபடி –
இன்று-
அடியேனை-அந்தரங்கராக கைக் கொண்ட இப்போது -என் தன் இதயத்து உள்ளே – தம்முடைய திரு உள்ளம் போல் பக்தி ரச
சந்துஷிதமாய் -நிச்ச்சலமாய் – விஷய விரக்தமாய் -இருக்கை அன்றிக்கே -கஷ்கமாய் -சஞ்சலமாய் -விஷய சங்கியான –என்னுடைய ஹ்ருதயத்திலே
-தனக்கு இன்புறவே –
அந்த எம்பெருமானார் தமக்கு -யமைவைஷ வர்நுந்தேதேலப்ய – என்னும்படி நிரவதிக பிரீதி யோடு-எழுந்து அருளி இருக்கும் இடம் –
காமினி உடம்பில் அழுக்கை காமுகன் உகக்குமா போலே என் பக்கல்-
வ்யாமோஹத்தாலே என் ஹ்ர்தயத்தை விட்டு மற்று ஒன்றை விரும்பார் என்றபடி -உச்சி உள்ளே நிற்கும் –
என்னும் படி சர்வேஸ்வரன் ஆழ்வார் திரு முடிக்கு அவ்வருகு போக்கு இல்லை என்று அங்கே தானே-
நின்றால் போலே எம்பெருமானாரும் இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகே போக்கு ஓன்று இல்லை என்று திரு உள்ளமாய் –
அங்கே தான் ஸ்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருந்தார் காணும் –

——————————————————————————————-

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை
இப்படிதம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற-எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து –
தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று-தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107- –

வியாக்யானம் –
எத்தனையேனும் தண்ணியனான என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து –அது தன்னைப் பெறாப் பேறாக நினைத்து –
ஆநந்த நிர்பரராய் -எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை உடையவரே –
இப்படி இருக்கிற தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது-ஒரு கார்யம் உண்டு –அது ஏது என்னில் –
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –என்னுமா போலே -திரு வாய் மொழி -2 9-3 – –
தோற்புரையே போமதன்றியிலே அஸ்த்திகதமாய் இன்று நலிய கடவ-வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும் -ஜநிப்பது மரிப்பதாய் –
அசந்க்யேய துக்கங்களை அனுபவித்துமுடியிலும்-சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும்
அவர்களுக்கே மாறுபாடுருவின ச்நேஹத்தை உடையேனாய் இருக்கும்படியாக செய்து-என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் -என்று கருத்து .
இன்பு -சுகம்
சீலமாவது -பெரியவன் தண்ணியன் உடன் புரையறக் கலக்கும் ஸ்வபாவம்
என்பு -எலும்பு
துன்பு -துக்கம் –

—————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட
நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து – இதிலே
அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு –
அசந்க்யேயமான துக்கங்களை அனுபவித்து உரு மாய்ந்து முடியிலும் -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்
தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய் -அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்
கொண்டு அடிமைப் படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார் –

வியாக்யானம்
-இன்புற்ற சீலத்து இராமானுசா –
திரு வேம்கட முடையானுக்கும் திரு குறும்குடி நம்பிக்கும்-திரு இலச்சினையும் -ஸ்ரீ பாஷ்யதையும் பிரசாதித்த ஆசார்யராகவும் –
செல்லப் பிள்ளைக்கு பிதாவாயுமாய் இருக்கிற-தேவரீருடைய மதிக்கையும் -அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய தண்மையையும் பாராதே -என்னை
தேவரீருக்கு அவ்வருவாக எண்ணி -என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து -அது தன்னையே பெறா பேறாக நினைத்து –
ஆனந்த நிர்பரராய் எழுந்து அருளி இருக்கிற சௌசீல் யத்தை உடைய எம்பெருமானாரே
-இன்பு -ஸூ -கம்
சீலமாவது பெரியவன் தண்ணியரோடு புரை யறப் பரிமாறும் ஸ்வாபம் -இப்போதாக காணும் இவருடைய
சீலம் அமுதனாருக்கு வெளியாகத் தொடங்கிற்று –
சொல்லுவது ஓன்று உண்டு
-சர்வஞ்ஞாரான தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
நத்வே வாஹம் -என்று தொடங்கி- கர்ம ஞான பக்திகளை பரக்க உபதேசித்து கொண்டு போந்து -சர்வ குஹ்ய தமம்
பூய ஸ்ருணுமே பரமம் வச -என்று உபதேசிக்கும் போது கீதச்சர்யன் அருளிச் செய்தால் போலே இவரும் –
இராமானுசா இது என் விண்ணப்பமே -என்கிறபடியே இவ்வளவும் தம்முடைய அபிநிவேசம் எல்லாம் விண்ணப்பம் செய்து-
இப்பாட்டிலே தம்முடைய அபேஷிதத்தை நிஷ்கரிஷித்து அருளிச் செய்கிறார் –
-அங்கு சேஷி உடைய உக்தி –இங்கு சேஷ பூதனுடைய அபேஷிதம் -ஒரு பிரயோஜனம் உண்டு என்றீர் அது என் என்ன
-என்புற்ற நோயுடல் தோறும்-பிறந்து இறந்து எண்ணரிய துன்புற்று –
-நோய் -வியாதி -அதாகிறது -ஆத்யாத்மிகாதி துக்கங்கள் -அந்த நோயானது-
அந்தர்பஹிந்திரிய வியாபார ரூப ஸ்வ க்ரத கர்ம பலம் ஆகையாலே தோற்புரையே போம் அது அன்றிக்கே –
அஸ்திகதமாய் கொண்டு இருக்கையாலும் ஆத்மா நாசகம் ஆகையாலும் -என்புற்ற -என்று விசேஷிக்கிறார் –
என்பு -எலும்பு -உறுகை -அத்தைப் பற்றி நிற்கை -உடல் தோறும் -அப்படி அஸ்திகதங்களாய் கொண்டு நலியக்
கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரம் தோறும் -துர்வார துரித மூலம் துஸ்தர துக்காநாம் பந்த நீ ரந்தரம்வபு –என்னக் கடவது இறே –
அன்றிக்கே – நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -என்கிறபடியே அந்த வியாதி
தானே உருக் கொண்டு இருக்கிற -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சரீரங்கள் என்று என்னுதல் –
ஜன்ம பரம்பரைகள் தோறும் -என்றபடி-பிறந்து இறந்து என்ற இது மற்ற அவஸ்த தாந்தரங்களுக்கும் உப லஷணம் –
இறப்பு -நாசம் -பிறந்து இறந்து எண்ணற்ற துன்புற்று வீயினும்
-அவ்வவ ஜன்மங்களிலே ஜநிப்பது-மரிப்பது தொடக்கமான அவஸ்தா சப்தகத்திலும் விரலை மடக்கி ஓன்று இரண்டு என்று எண்ணப் புக்கால்
அது கால தத்வம் உள்ள அளவும் எண்ணினாலும் எண்ணித் தலைக் கட்ட அரிதான துக்கங்களை ஒன்றும்
பிறிகதிர் படாதபடி அனுபவித்து முடியிலும் -போற்றலும் சீலத்து இராமானுச -என்கிறபடியே தேவரீர் உடைய
சீல குணத்தை அளவிட்டு சொல்லினும் -இஸ் சரீர அனுபந்தியான துக்கத்தை அளவிட்டு சொல்ல
ஒண்ணாது என்கிறார் காணும் -துன்பு -துக்கம்
-என்றும் -எல்லா காலத்திலும் -எவ்விடத்தும் -எல்லாஇடத்திலும் -உன் தொண்டர் கட்கே
-பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இராதே மோஷ-பிரதான தீஷிதராய் அன்றோ -இவ்வளவாக திருத்தி என்னுடைய
ஹிருதயத்திலே புகுந்து நித்ய-வாசம் பண்ணா நிற்கிற தேவரீருக்கு அனந்யார்ஹா சேஷமாய் இருக்கும் அவர்களுக்கே –
அவதாரணத்தாலே -அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகிறார் -உனக்கே நாம் ஆட செய்வோம் —
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே — ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் – என்றும்
தமேவசாத்யம் புருஷம் பிரபத்யே -என்றும் பிரதம பர்வத்தில் சொல்லுகிறபடியே –
குருரேவ பரம் பிரம்ம -என்றும் -உபாய உபேயே பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்றும்
தேவு மற்று அறியேன் -என்றும் தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாக மன்னுமது –
என்றும் சரம பர்வத்தில் சொல்லுகிறபடியே சொல்லுவித்தார் -இறே
-அன்புற்று இருக்கும் படி –
-நிரவதிக-பிரேம யுக்தனாய் இருக்கும்படி -அன்பு -ச்நேஹம் –
என்னை ஆக்கி –
-தேவரீருக்கு கிருபா விஷய பூதன் ஆகும் படி-என்னைப் பண்ணி –
அங்கு ஆள்படுத்தே –
பவதீயர் திருவடிகளில் விஷயமான எல்லா அடிமைகளிலும் அன்வயித்து-க்ர்த்தார்த்தனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார்
-ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் நீங்காது ஏத்த-அருள் செய் எனக்கே என்று இப்படியே ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –

—————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
நிகமத்தில்
இப்ப்ரபந்த ஆரம்பத்திலே
-இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம்-தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் –
அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே தமக்கு அபேஷிதமாகையாலே –
தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி-100 –
என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் .

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

வியாக்யானம் –
நெஞ்சே -பக்தி தத்வமானது நிரவசேஷமாக -நம் அளவிலே குடி கொண்டது என்னும்படி
சம்ருத்தமாய் விஸ்ருதையான கீர்த்தியை உடைய ரான எம்பெருமானார் உடைய-திருவடிகள் ஆகிற செவ்விப் பூ –
மயிர் கழுவிப் பூ சூட விருப்பாரைப் போலே எப்போதோ என்று-ஆசைப் பட்டு இருக்கிற நம் தலை மேலே நித்ய வாசம் பண்ணும்படியாக –
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1- -என்கிறபடியே
ஜல சம்ருதியாலே அழகிய கால்கள் உகளா நின்றுள்ள -வயல்களை உடைத்தாய் –
தர்சநீயமான கோயிலையே தமக்கு நிரூபகமாக உடையரான பெரிய பெருமாளுடைய
அழகிய திரு மார்விலே -இறையும் அகலகில்லேன் -திரு வாய் மொழி -6 10-10 – என்று நித்ய வாசம்
பண்ணா நிற்பாளாய்–ஸ்லாக்கியமான தாமரைப் பூவை பிறப்பிடமாக வுடையாளாய் –நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை வுடையாளான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை ஆஸ்ரயிப்போம் ..
போற்றுதல் -வணங்குதல் புகழ் தலுமாம்
அடியில் பூ மன்னு மாது – 1-என்றார் –இங்கே பங்கய மா மலர் பாவை -108- என்றார்
அங்கே பொருந்திய – – என்றார் –இங்கு -அணியாகமன்னும் — – என்றார்
அங்கு -இராமானுசன் உன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -1- – என்றார் – இங்கு -தலை மிசையே இராமானுசனடிப் பூ மன்ன – 108- என்றார் .
அங்கு நெஞ்சே – 1- என்று திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் –
இங்கு –நெஞ்சே – 108- என்று திரு உள்ளத்தோடு கூட அனுசந்தித்து தலைக் கட்டினார் .
இத்தால்
ப்ராப்ய ருசி வ்ருத்தியும்–ப்ராப்ய சித்தியும் ஆகிற –ஸ்வரூப அநு ரூப சம்பத் சித்திக்கடி –
சகல ஆத்மாக்களுக்கும் -தத் தத் அதிகார அநு குணமாக அபேஷித்த சம்பத் விசேஷங்களை-
ஸ்வ கடாஷ விசேஷங்களாலே உண்டாக்கி யருளும் –பெரிய பிராட்டியார் என்றும் –ப்ராப்யம் தான் ஆசார்ய சரணாரவிந்தம் -என்றும் –
அத்ரபரத்ர சாபி நித்யம் -ஸ்தோத்ர ரத்னம் – 2- என்கிறபடியே-யாவதாத்மம் விச்லேஷம் அற்று இருக்கை என்றும் –
இதுக்கு அதிகாரிகளும் இந்த ப்ராப்யத்தில் சஹ்ருதயமான ப்ராவண்யம் உடையவர்கள் என்றும் சொல்லிற்றாயிற்று –

——————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
-ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ர முநயே விததே நம
யச்மர்திஸ் சர்வ ஸித்தீ நாமந்தராய நிவர்ரணே –
அவதாரிகை
-நிகமத்தில் -கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக-அபிமானித்து
தம்முடைய திரு உள்ளத்திலே எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற-படியையும் –
அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ-வ்ர்த்திகளும் பண்ணிக் கொண்டு போரும்படி
என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய-அபிமத்தை அருளிச் செய்து –
இப்பாட்டிலே -எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை-நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து
ஸ்தாவர-பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே -அந்த பரிக்ரஹா அதிசயத்தை கொண்டு திவ்ய தம்பதிகளான
ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை மங்களா சாசனம் பண்ணுவோம் என்று பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே-குடி கொண்டது என்னும்படி
அத்ய அபி வர்த்தமான தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வியாக்யானம் -நெஞ்சே –
இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –
எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு –
அது தலைக்கட்டினவாறே அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே
இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் –
-அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக்-கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே -இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி
அனுபவித்து தலை கட்டுகிறார் –
பத்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து நெஞ்சே –
-பக்தி சப்த வாச்யம் எல்லாம்-ஏக ரூபமாய் கொண்டு உன்னளவிலே சேர்ந்து குடி கொண்டு இருந்தது என்னும் படி சம்ர்த்தமாய்-இருக்கிற நெஞ்சே
-போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -உனதடிப் போதில் ஒண் சீராம்
தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் -என்று இவர் தாமே தம்முடைய திரு உள்ளம்
பக்த பரிதம் என்னும் இடத்தை கீழே அருளிச் செய்தார் இறே –
அன்றிக்கே -பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து -என்கிற இத்தை எம்பருமானார் திருவடிகளுக்கு-விசேஷணம் ஆக்கவுமாம்-
-பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து
-சஹ்யத்தில் ஜலம் எல்லாம்-கீழே குதித்து ஒரு மடுவாகத் தங்கினால் போலே -என்னுடைய பக்தி ரசம் எல்லாம் பரம பக்தி ரூபமாய்க் கொண்டு
பரி பக்குவமாய் படிந்து -எம்பெருமானார் திருவடிகளிலே தங்கிற்று -என்னும் படி தழைத்து இருக்கிற –
பொங்கிய கீர்த்தி
–ஏய்ந்த பெரும் கீர்த்தி -என்கிறபடியே பரம பதத்தின் அளவும் வளர்ந்து கொண்டு ஓங்கி இருக்கிற-கீர்த்தியை உடையரான
-இராமானுசன் –
எம்பெருமானாருடைய –
உபக்ரமத்திலே -பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் -என்கிறார் ஆகையாலே -இங்கு பொங்கிய கீர்த்தி-இராமானுசன் -என்கிறார்
-அடிப்பூ–
கீழ் சொன்ன தழைப் பதோடு கூடி இருக்கிற எம்பெருமானாருடைய-திருவடித் தாமரைகள் –
அடியிலே சரணாரவிந்தம் -என்கிறார் ஆகையாலே -இங்கே அடிப்பூ என்கிறார் –
மன்னவே
-யாவதாத்மபாவி ஸூபிரதிஷ்டமாய் இருக்கையாலே
–அம் கயல் பாய் வயல் தென்னரங்கன்-அணி யாகம் மன்னும் -செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் -என்கிறபடியே உபய காவேரி களினுடையவும்
ஜல சம்ர்த்தியாலே வளர்ந்த மத்ச்யங்கள் உகளா நின்றுள்ள -கேதாரங்களாலே சூழப்பட்டு -அத்யந்த
தர்சநீயமான -அரங்கத்துக்கு நிர்வாஹனாய் -அத்தையே நிரூபகமாக உடையரான -பெரிய பெருமாளையும் –
அவர் தம்முடைய அழகிய திரு மார்பிலே அலங்கார பூதையாய் -இறையும் அகலகில்லேன் -என்றும்
அப்ரமேயம் ஹிதத் தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிரபையும் ப்ரபாவனையும் போலே –
அப்ர்தக் சித்தையாய்-ஸ்வரூப நிரூபகையாய் -கொண்டு நித்ய வாசம் பண்ணுமவளாய் —
உபக்ரமத்திலே -பொருந்திய மார்பன் -என்றார் ஆகையாலே -இங்கே மன்னும் -என்கிறார் –
அம் -அழகு கயல்-மத்ஸ்யம் -பாய்தல்-சலித்தல் வயல்-கழனி அணி -அலங்காரம் -ஆகம்-மார்பு
மன்னுதல் -பொருந்துதல்
-பங்கய மா மலர் பாவையை
-தாமரை மலரிலே பெரிய பிராட்டியார் அவதரிக்கையாலே
அத்தை கடாஷித்து அதற்கு ஒரு மகத்வத்தை சொல்லுகிறார் – அப்படிப்பட்ட தாமரைப்பூவை பிறப்பிடமாகவும்
நிரூபகமாவும் உடையவளாய் -பால்ய யவன மத்யச்தையான ஸ்ரீ ரெங்க நாயகியாரையும் -அலர்மேல் மங்கை
என்னக் கடவது இறே –
பாவை -ஸ்திரீ -அடியிலே பூ மன்னு மாது என்றார் ஆகையாலே இங்கு-பங்கய மாமலர் பாவையை -என்கிறார்
-போற்றுதும் -இப்படி இருந்துள்ள திவ்ய தம்பதிகளை –மங்களா சாசனம் பண்ணுவோம் -போற்றுதல்-புகழ்தல்
-ஆசார்யன் சிஷ்யனை திருத்துவது –சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்கிறபடியே –
பகவத் விஷயத்திலே யாவதாத்மா பாவியாக-மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு போருகை -இறே
-உகந்து அருளின நிலங்களிலே-ஆதர அதிசயமும் -மங்களா சாசனமும் சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக்-கொண்டு போர்க் கடவன்
-என்று ஸ்ரீ வசன பூஷணத்திலே பிள்ளையும் அருளிச் செய்தார் இறே –
ஆக இத்தாலே -எம்பெருமானார் தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே பரகத ஸ்வீகார பாத்ரனான-பின்பு -அதற்கு பலமாக
-இப்படி மங்களா சாசன பரராய் இருந்தோம் என்று -தாம் பெற்ற பேற்றை
தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து -இப்பிரபந்தத்தை தலை கட்டி அருளினார் ஆய்த்து –
திருப்பல்லாண்டு -ஆரம்பித்து -போற்றுதும் -மங்களா சாசனத்தில் நிகமித்து அருளிச் செயல்கள் உள்ளனவே —

—————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம் –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பகவத் விஷயம் காலஷேபம் -191- இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-1/2/7/16/18/19/20/25/31/44–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

July 27, 2016

ஸ்ரீ யபதி அவதாரங்கள் -ஆழ்வார்கள் அவதாரங்கள் -ஆச்சார்யர்கள் -அவதாரங்கள் –
ஒரு சேர -ஸ்ரீ பகவத் ராமானுஜர் – ஸ்ரீ ஆதி சேஷ -அடையார் கமலத்து -பஞ்ச திவ்ய ஆயுதங்கள் சக்தி உடன் -கழியும் கெடும் கண்டு கொண்மின் –
செய்ய திருவாதிரை -ஆதி கேசவ பெருமாள் அனுக்ரகம்
அனந்தம் பிரதம ரூபம் -இளைய பெருமாள் -பல பத்ரன் -ராமானுஜர் —
பகுமுகம் கைங்கர்யம் -கிரந்த நிர்மாணம் -திருக் கோயில்கள் கைங்கர்யம் -அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே –
பெரிய கோயில் நம்பி -திருவரங்கத்து அமுதனார் -பங்குனி ஹஸ்தம் திருவரங்கம் -ரெங்கார்ய ஸ்வாமி திருக் குமாரர்
சதுரா சதுரக்ஷரீ -ராமானுஜர் -பிரபன்ன காயத்ரி –
சப்தாவரணம் -ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே நம்பெருமாள் கேட்டு அருள -திருச் செவி சாதிக்க வாத்யத்தையும் நிறுத்தி –நிதானமாக செவி சாய்த்து அருளி-
திருவேங்கடமுடையான் -தனியாக 22 நாள் அத்யயன உத்சவம் அனந்தாழ்வான் விண்ணப்பம் படி -தண்ணீர் அமுது திருத்தும் உத்சவம் 23- தாதா கூட்டு –
உய்வதற்கு ஒரே வழி உடையவர் திருவடிகளே -எம்பெருமானார் திருவடிகளே சரணம் –
பகவத் பவிஷயம் பகவானுக்கு பிடித்த விஷயம்
-திருப்பல்லாண்டு -கண்ணி நுண் சிறுத்த தாம்பு -ஆச்சார்ய அபிமானம் -பக்தாம்ருதம் -ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி –
-அவன் ப்ரீதி அடைவது கண்டு நாமும் உகக்க-இந்த நான்கும் அனுபவிக்கிறோம் –

——————————————————————————-

வேத பிரான் பட்டர் அருளிய முதல் தனியன்-

முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதன்
பொன் அம் கழல் போது இரண்டும் என் உடைய
சென்னிக்கு அணியாக சேர்த்தினேன் தென் புலத்தார்க்கு-
என்னுக்கு கட வுடையேன் யான்….

பெருமாள் -ஆழ்வார்கள் -ராமானுஜர் -அமுதனார் -நாம் -திருவடிகள் -தாங்கும் – பரம்பரை -விஸ்வம் பரா -பாதுகை பெருமை போலே
அரங்க மா நகர் உளானே -நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -நமன் தமர் தலைகள் மீதே -நாவலிட்டு
உழி தருகின்றோம் ( திருமாலை -1 – )என்றும்
அரங்கம் என்று அழைப்பராகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் ஒழிந்து ஒழியும் அன்றே ( திருமாலை -13 – )என்றும்
அரங்கத்து அமுதனார் என்றால் சொல்ல வேண்டாமே
ராமானுஜர் பத்து மடங்கு பெருமாள் இடம் ஸ்ரீ பரத ஆழ்வான் கொடுத்தால் போலே -செல்வம் முற்றும் திருத்தி -மாதவனுக்கு ஆள் ஆக்கினார்
-கைகேயியும் கூட திருந்தி பெருமாள் மேலே காதல் மிக்கு இருக்க -பெருமாள் ராஜ்ஜியம் வண்ணான் குறை உண்டே

—————————————-

நயம் தரு பேரின்பம் எல்லாம் பழுது என்று நண்ணினார் பால்
சயம் தரு கீர்த்தி இராமானுசமுனி தாள் இணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத் தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை யந்தாதி யோத விசை நெஞ்சமே –

நல்ல நெஞ்சே -தொழுது எழு -நீயும் நானும் நேர் நிற்கில் – நெஞ்சைக் கூட்டிக் கொள்ள வேண்டுமே -மன ஏவ காரணம் பந்த மோக்ஷம் –
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் –

——————————————————————————————-

அமுதனார் அருளி-செய்த தனியன்-அபியுக்தர் அருளி செய்த-தனியன்-என்றும் சொல்வர்

சொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்கு தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அரு சமய
வெல்லும் பரம இராமானுச இது என் விண்ணப்பமே –

நாமம் எல்லாம் -சங்கல்பித்து -மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று சகஸ்ர நாமங்கள் போலே
இவர் ராமானுஜர் திரு நாமங்கள் பலவற்றுக்கும் -சொல்லி இருப்பார்
சதா சொல்லும் ராமானுஜர் -அல்லும் பகலும் -சாமர்த்திய திரு நாமம் -நெறி முறைப்படுத்தி சமுதாயம் முழுவதுக்கும் –
மா முனிகள் ஆஞ்ஜை திருக் குருகூரில் –
ஆறு சமய செடி அதனை அறுத்து -சங்கர பாஸ்கர –நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன -சஞ்சீவினீம் -சிம்ஹாசனத்தில் ஸ்தாபித்து -அருளினார் –

——————————————————————————

பெரிய ஜீயர் அருளி செய்த உரையின் அவதாரிகை –

சகல சாஸ்திர சந்க்ரஹமான திரு மந்த்ரத்தின் உடைய தாத்பர்யமாய் —பகவத் ஆகஸ்மிக க்ருபா லப்த பரிசுத்த ஜ்ஞானரான –
ஆழ்வார்களுடைய திவ்ய பிரபந்த சாரார்தமாய் —பரம காருணிகரான நம் ஆழ்வார் உடைய – பரி பூர்ண கடாஷ பாத்ர பூதரான-
ஸ்ரீ மதுரகவிகள் உடைய–உக்த்யனுஷ்டங்களாலே ப்ரகடிதமாய் –ஆழ்வார் தம்மாலே நாத முனிகளுக்கு அருளி செய்யப் பட்டதாய் –
–அவர் திருவடிகளை ஆஸ்ரயித்த யோக்ய விஷயங்களுக்கு உபதேசித்து அருள —அவர்கள் தாங்களும் அப்படியே உபதேசிக்கையாலே –
-உபதேச பரம்பரா ப்ராப்தமாய்–அகில சேதனருக்கும் ஸ்வரூப உபாய புருஷார்த்த -யாதாத்ம்ய ரூபேண அவஸ்ய அபேஷிதமாய்–
பரம ரகஸ்யமாய் இருந்துள்ள -சரம பர்வ நிஷ்ட பிரகாரத்தை-
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்னும் இத்தையே -இவற்றுக்கே முன்புள்ள விசேஷணங்கள் –
-எம்பெருமானார்–கேவல கிருபையாலே தம்மை ஆழ்வான் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பித்து—தந் முகேன உபதேசித்து அருள கேட்டு –
—அவ்வர்த்தங்களை யதா தர்சனம் பண்ணி —அனவரதம் எம்பெருமானார் திருவடிகளை சேவித்துக் கொண்டு —போரா நின்றுள்ள பிள்ளை அமுதனார்–

அவருடைய திவ்ய குணங்களை தம்முடைய பிரேமதுக்கு போக்கு வீடாக பேசி-அனுபவிக்கும் படியான தசை தமக்கு விளைகையாலும்–
இவ்வர்த்த ஞானம் அப்பொழுதே –சேதனர்க்கு சூக்ரஹமாம் படி பண்ண வேணும் என்கிற பரம கிருபையாலும்–
தாம் எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை -பிரேம அநு குணமாக பேசுகிற பாசுரங்களாலே –
—தத் பிரபாவத்தை எல்லார்க்கும் பிரகாசிப்பியா நின்று கொண்டு-
–முன்பு ஆழ்வார் திருவடிகளுக்கு அனந்யார்ஹமான ஸ்ரீ மதுர கவிகள்–ஸ்வ நிஷ்டா கதன ரூபேணவும் –
-பர உபதேச ரூபேணவும் – உஜ்ஜீவன அர்த்தத்தை–லோகத்துக்கு வெளி இட்டு அருளினால் போலே-
-தாமும் ஸ்வ நிஷ்ட கதன ரூபத்தாலும் -பர உபதேசத்தாலும் – அவரைப் போலே சங்கரஹேன பத்துப் பாட்டாக அன்றிக்கே- பரக்கக் கொண்டு
-ஆசார்ய அபிமான நிஷ்டர்க்கு ஜ்ஞாதவ்யங்களை எல்லாம் – இப்ப்ரபந்த முகேன அருளி செய்கிறார் –

எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேமம் உடையவர்களுக்கு சாவித்திரி போலே இது நித்ய அனுசந்தேய விஷயமாக வேணும் -என்று ஆயிற்று
-பாட்டு தோறும் திரு நாமத்தை வைத்து நூற்று எட்டு பாட்டாக அருளி செய்தது -ஆகையால்
இத்தை பிரபன்ன சாவித்திரி என்று ஆயிற்று நம்முதலிகள் அருளி செய்தது-

பத்துப் பாட்டாக அன்றிக்கே- பரக்கக் கொண்டு-ஓன்று பத்தாக்கி பிராட்டி நடத்துமா போலே –

—————————————————————————————————–

பெரிய ஜீயர் அருளி செய்த உரை-

முதல் பாசுரம்-
தம் திரு உள்ளத்தை குறித்து -எம்பெருமானார் உடைய திருவடிகளை நாம் பொருந்தி-
வாழும் படியாக அவருடைய திரு நாமங்களை சொல்லுவோம் வா -என்கிறார்

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பூ மன்னு மாது
மாது பொருந்திய மார்பன்
மார்பன் புகழ் மலிந்த பா –புகழ் -கல்யாண குணங்கள்
பா மன்னு மாறன்
மாறனடி பணிந்து உய்ந்தவன் –
உய்ந்தவன் -பல்கலையோர்-தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்-
விராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ –
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே-

பத்மேஸ்த்திதாம்-ஸ்ரீசூ -என்கிறபடியே தாமரைப் பூவை இருப்பிடமாக வுடைய பெரிய பிராட்டியார்-
இந்த போக்யதையைக் கண்ட பின்பு அதை யுபேஷித்து-இறையும் அகலகில்லேன் – திருவாய் மொழி -6 10-10 – -என்று
நித்ய வாசம் பண்ணும் திரு மார்பை வுடையவனுடைய கல்யாண குணங்களால் சம்ருத்தமாய்-இருந்துள்ள திரு வாய் மொழியிலே –
கவியமுதம் நுகர்ச்சி யுறுமோ முழுதும் -திருவாய் மொழி -8-10 5- -என்னும்படி திரு உள்ளத்தில்-
ஊற்றத்தை உடையரான ஆழ்வார் உடைய திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தவராய் –
அநேக சாஸ்த்ரங்களை அதிகரிக்க செய்தேயும்
-தத்வ ஹித புருஷார்த்த நிர்ணயம் பண்ண-அறியாதே ஒன்றிலும் ஒரு நிலை அற்று இருக்கும் அவர்கள் –
அவற்றின் உடைய யாதாம்ய வேத நத்தாலே ஸூ ப்ரதிஷ்டிதராம்படியாக வந்து அவதரித்த-
எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை -இதுவே ப்ராப்யம் -என்று அறிந்த நாம்-
பொருந்தி வாழும்படியாக நெஞ்சே அவருடைய திரு நாமங்களை பேசுவோம்-

தாம் மன்ன என்றது தாங்களே வந்து ஆஸ்ரயிக்கும் படி என்றுமாம்-
நாம் -என்றது அநாதி காலம் இதர விஷயங்களின் கால் கடையில் துவண்ட நாம் என்னவுமாம்
மன்னுதல் -பொருந்த்தமும் நிலைப்பாடும் –

—————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

பிள்ளை அமுதனார் -தமக்கு ஆசார்ய பிரசாதத்தாலே -லப்தமாய் –
மந்திர ரத்ன கண்ட த்வயார்த்த யாதாத்ம்ய ஜ்ஞான ரூபமாய் –
பரம ரகஸ்யமாய் இருந்துள்ள -அர்த்த விசேஷங்களை -ஏகஸ் ஸ்வா து ந புஞ் ஜீத –
என்கிறபடியே கிண்ணத்தில் இழிவார்க்கு -துணை தேட்டமாமாப் போலே –
எம்பெருமானருடைய கல்யாண குண சாகரத்திலே -இழிவதுக்கு துணைத் தேட்டமாய் –
உபய விபூதியிலும் ஆராய்ந்தால் –நித்ய விபூதியில் உள்ள நித்ய சூரிகளும் முக்தரும் -சதா பஸ்யந்தி -என்கிறபடியே –
பரத்வத்தை முற்றூட்டாக அனுபவித்து -சாம கானம் பண்ணிக் கொண்டு களித்து –
நோபஜன ஸ்மரன் நித சரீரம் -என்கிறபடியே -லீலா விபூதியிலே -கண் வையாதே-இருந்தார்கள் ஆகையாலும் –
லீலா விபூதியில் உள்ள சம்சாரி ஜனங்கள் ப்ராக்ர்தத்வேன அஜ்ஞ்ஞர் ஆகையாலே –
நந்தத்த்யுதித ஆதித்ய நந்தன் த்யச்தமி தேரவவ் -என்றும்
உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலம் -என்றும்
சொல்லுகிறபடியே உண்டு உடுத்து -புறமே புறமே யாடி -என்கிறபடி
லீலா விபூதியிலே -ஸௌ ரி சிந்தா விமுகராய் -விஷயாந்தரந்களிலே மண்டி இருக்கையாலும் –
எம்பெருமானார் சம்பந்தம் உடைய ஜ்ஞாநாதிகர் எல்லாரும் -பாலே போல் சீர் -என்கிறபடியே
பரம போக்யமான அவருடைய கல்யாண குணங்களை -அனுபவித்து -காலாழும் நெஞ்சழியும் –
இத்யாதிப் படியே அவ் அனுபவத்தில் ஆழம்கால் பட்டு -குமிழ் நீருண்டு நின்றார்கள் ஆகையாலும் –
இந் நால்வரும் துணை யாகாது ஒழிகை யாலே –
தம்முடைய சுக துக்கங்களுக்கு எப்போதும் பொதுவாய் இருக்கிற தம் மனசே துணையாக வேண்டும் என்று
திரு உள்ளம் பற்றி -அது தன்னையே சம்போதித்து சொல்லுகிறார் .

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் –
பத்மேஸ்திதாம் -என்றும் -மலர் மேல் மங்கை என்றும் -அரவிந்த வாசிநீ-என்றும் சொல்லுகிறபடியே –
ஸௌ கந்த ஸௌ குமார்யங்களாலே -அத்யந்த போக்யமான தாமரைப் பூவின்-பரிமளம் தானே ஒரு வடிவு கொண்டாப் போலே –
அதிலே அவதரித்த பெரிய பிராட்டியார்-ஸ்வயம் பத்மினி -என்கிற பேரை உடையளாய் -அவ்வீட்டின் போக்யதையாலே அத்தை விட மாட்டாதே –
இருப்பிடமாக அதிலே இருந்து -அதுவே நிரூபகமாக சொல்லப் பட்ட பின்பு –
சாஷான் மன்மத மன்மதமான -நாராயணன் தனக்கு பத்நியாக பரிணயித்து பரிஷ்வங்கம் பண்ணவே –
அவன் திரு மார்பை அனுபவித்து -அந்த போக்யதையிலே ஈடு பட்டு நின்ற பின்பு -தாமரைப் பூவின்-போக்யதையும் அருவருத்து –
ஒருக்காலும் அத்தை ஸ்மரியாதே- இறையும் அகலகில்லேன் -என்று-நித்ய வாசம் பண்ணப் படுகிற திருமார்வை உடையனான சர்வேஸ்வரனுடைய –
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -என்று விசேஷ்ய பூதனான சர்வேஸ்வரனுடைய-நாம நிர்த்தேசம் பண்ணாதே
-அமுதனார் விசேஷண பூதையான பெரிய பிராட்டியாரை-மாத்ரமே அருளிச் செய்தது
-அகஸ்த்யப்ராதா – என்றால் போலே-மாமான் மகளே போலே – இருக்கிறது காணும் –
அப்படியே இறே ச்ருதி ஸ்ம்ருதிகளிலும் -ச்ரத்தயா தேவோ தேவத்வமச்னுதே -என்றும்
அப்ரமேயஹிதத்தேஜோ யச்யாசாஜன காத்மஜா -என்றும் இவளை இட்டே அவனுடைய-அதிசயம் சொல்லப்படுகிறது –
-பிதுச்சத குண மாதா கௌ ர வேணா த்ரிச்யதே -என்று-பர்த்தாவுக்கு இப்படியே பிரபத்தி வுண்டாக வேண்டி இருக்கும் இறே –

புகழ் மலிந்த-
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –உபய லிங்க உபய விபூதி விசிஷ்டன்
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை-படர் பொருள் முழுவதும் ஆய் அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரன் –
-நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -என்றும்-வியாபகத்வம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்- காரணத்வம்
உலகமுண்ட பெருவாயா வுலப்பில் கீர்த்தி யம்மானே –என்றும் –
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்-வீர தீர பராக்ரமம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண்ணுர்வில்
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் -என்றும்
செந்தாமரைக்கண் செங்கனிவாய் நால் தோள் எந்தாய் எனது உயிரே -என்றும்-ஸுந்தர்யம்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -என்றும்-சர்வ சரீரத்வம்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர் சோதீயோ –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -என்றுதலைக் கட்டுகையாலே
உயர்வற -என்று தொடங்கி-உயர்ந்தே -என்னும் அளவும் -ஆதி மத்திய அவசானங்களிலே-ஒருபடிப்பட்ட கல்யாண குணங்களால் ஏற்பட்ட –

பா –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி விசததமா வனுபவிக்க வனுபவிக்க-அது உள்ளடங்காமே –
பக்தி பலாத்காரத்தாலே வந்ததானாலும் –
பாதபத்தோஷ ரசமச்தன் த்ரீலய சமன்வித -என்னுமாபோலே- நிர்ஹேதுக பகவத் விஷயீகாரத்தாலே-சர்வ லஷனோபேதமாய்
கவியமுதம் -என்றும்-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –
தாமே ஸ்லாக்கிக்கும்படியான திருவாய் மொழியிலே –

மன்னு
சர்வதா நிச்சலராய் இருந்துள்ள-மாறன்
அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன்
குழல் மலிய சொன்ன ஓர் ஆயிரம் இறே –
கர்ப்பம் போலே திருவாய்மொழி மன்னி இருந்ததே –

மாறன்
இது வாய்த்து பிரதம உபாதானமான திரு நாமம் .
விநாசாய சதுஷ்க்ர்தாம் -என்னுமா போலே பாஹ்ய குத்ர்ஷ்டிகளை சிஷித்து-அவர்களுடைய சம்சார நாசகர் ஆனவர் –
மாறன்
அஞ்ஞானத்துக்கு மாரகர்-
அன்றிக்கே
சாஷான் மன்மத மன்மத -என்கிறவனும் பிச்சேறி ஊமத்தங்காய் தின்றவனைப் போலே
மின்னிடை மடவாரில் வ்யாமுக்தனாம் படி பண்ண வல்லதாய் பெண் பிள்ளைத் தனத்தையும் –
ஊனில் வாழ் உயிரிலே ஒரு நீராக கலந்து வ்யாமுக்தனாம்படி பண்ண வல்ல ஜ்ஞாநாதிக்யத்தை-வுடையவர் ஆகையாலே
-மாறன் -என்னவுமாம்-இப்படிப் பட்ட ஆழ்வாருடைய-

அடி
ஆழ்வார் பர்யந்தம் அல்ல இவர் தம்முடைய ச்வாமித்வ அத்யாவசயம்-
ஆக -தமக்கு நிருபாதிக ஸ்வாமி யானவன் -என்னுதல்-
தம்மை வசீகரிக்கைக்கு மூலமானவன் என்னுதல் -இப்படிப் பட்ட திருவடிகளை-

பணிந்து-
ஆஸ்ரயித்து -ஸ்ரீ மத் ததன்க்ரி உகளம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று ஆளவந்தார் அருளிச் செய்தது –
அடியிலே இப்படி அருளிச் செய்கையாலே -இப் ப்ரபந்தம் சரம பர்வ நிஷ்டர் விஷயம் என்று தோற்றுகிறது –

உய்ந்தவன் -உஜ்ஜீவித்தவன்
இவருக்கு உஜ்ஜீவனம் அன்ன பாநாதிகளாலே அன்று காணும் .
-ஆழ்வார் தம்முடைய திருவடிகளை-இவருக்கு படியாக விட்டுப் போந்தார் இறே-
அவ் ஆழ்வார் திருவடிகளைப் பணிந்த பின்பு இவர் அவை தன்னையே-அனுபவித்து போந்தார் –
ஆழ்வாருக்கும் இவர்க்கும் கால விப்ரக்ர்ஷ்டமானாலும் –
-முதலிலே ஆழ்வார் நாதமுனிகளுக்கு-உபதேசம் பண்ணும் போது -இவரை த்யானம் பண்ணி
-யஸ்வாப காலே கருணா கரஸ் சந் பவிஷ்யதாசார்யா வர ஸ்யரூபம்
சந்தர் சயாமாச மகானுபாவ தகாரி சூனு சரணம் பிரபத்யே -என்கிறபடியே-
இவருடைய பவிஷ்யதாசார்யா விக்ரகத்தை ஸ்வப்ன முகேன நாதமுனிகளுக்கு கொடுத்திட்ட படியை-அபிமானித்து –
பரகத ச்வீகாரத்தாலே அவருக்கு ஆசார்யர் ஆகையாலே இவரும் அவ் ஆழ்வார் திருவடிகளைப் பற்றி –
அவர் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்று
அத்யவசித்த பகவத் பிரபாவத்தை -ஸ்ரீ பாஷ்ய முகேன -பெருமையையும் பக்தி மஹாத்ம்யத்தையும் –பிரகாசிப்பித்தது-
-வேங்கடாசல யாதவாசல ஸ்தலங்களை –
குத்ருஷ்டி குஹ நாமுகேனி பதத பர பிரமண சுரக்ரஹா விசஷனே ஜயதி லஷ்மனோயமுனி-என்கிறபடியே
நிர்வகித்து -சகல திவ்ய தேசங்களையும் திருத்தி -இதுவே உஜ்ஜீவனமாய் இருக்கிறவர் -என்றபடி –

பல் கலையோர்-
சகல சாஸ்திர பாரீணரான-கூரேச குருகேச கோவிந்த தாசரதி முதலான முதலிகளும் –பிரத்யவச்தானம் பண்ணி –
பிரசங்கித்த பின்பு -எம்பெருமானார் தம்முடைய விஷயீகாரத்தாலே-
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஞானத்தைப் பெற்ற -யாதவ பிரகாச- யஜ்ஜமூர்த்யாதிகளும் –

தாம் மன்ன-
யதாவஸ்த்தித ஞானத்தினாலே சூப்ரதிஷ்டராம் படி -மன்னுதல் -பொருத்தமும் -நிலைப்பாடும்-
வந்த
பரம பதத்தினின்றும் சர்வேஸ்வரன் உடைய நியமனத்தாலே எழுந்து அருளின-
இராமானுசன்
இவர் சக்கரவர்த்தி திரு மகனை அனுசரித்து ஜனித்தார் காணும் –
அவன் -அபயம் சர்வ பூதேப்யோ-ததாம்யே தத் வ்ரதம் மம -என்று சர்வர்க்கும் அபாயப் பிரதானம் பண்ணினாப் போலே -இவரும்
மோஷ உபாயமான மந்த்ரத்தை பூரிதானம் பண்ணினார் இறே -இப்படிப் பட்ட எம்பெருமானார் உடைய –

சரணாரவிந்தம்
அரவிந்தம் என்கிற மன்மத பானம் போலே தம்மை மோஹிப்பித்தவை யாகையாலே –
-சரணங்களுக்கு-அரவிந்தத்தைப் போலியாக சொல்கிறார்
-ஆஸ்ரிதற்கு பாவனத்வ போக்யதைகளாலே -ஏக ரூபமாய் இருக்கையாலே-ஏக வசன பிரயோகம் பண்ணுகிறார்-
மன்னி
ஆஸ்ரயித்து -நிச்சலமாக -த்ரட அத்யாவச்யத்தை பண்ணி நாம் வாழ-
நான் ஒருத்தனுமே ஆஸ்ரயிக்க -என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் எல்லாம்-உஜ்ஜீவிக்கும்படியாக-
வாழ
ஸ்ரீ மதே ராமானுஜாய நாம -என்றபடி-
நெஞ்சே
ஒரு மகா நிதி லாபத்தால் அந்தரங்கராய் இருப்பார்க்கு சொல்லுவார் லவ்கிகர்-
அப்படியே தனக்கு அந்தரங்கமான மனசை சேவித்து தாம்பெற்ற பேற்றை சொல்லுவதாக சம்போதிக்கிறார்-
சொல்லுவோம் அவன் நாமங்களே
நாம் இருவரும் கூடி அவன் திரு நாமங்களை சொல்லுவோம் –வாசா தர்ம மவாப்நுஹி-என்கிறார் –
ஒரு உக்தி மாத்ரத்திலே பிராப்ய ப்ராபகங்கள் இரண்டும் -தர்ம பூதமான சரணார விந்தத்திலே-
அத்திருநாமம் தானே நம்மைச் சேர்க்கும் -ரச்யமான பதார்த்தம் லபித்தால் – இனியது தனி அருந்தேல் –
அன்யோன்யம்-ரசித்து கொண்டு அனுபவிக்கக் கடவோம் -என்றபடி-

அவன் நாமங்களே –
தேவு மற்று அறியேன் -என்று அநந்ய பரராய் கொண்டு அவருடைய திரு நாமங்களைச் சொல்லுவோம் –
த்ரிவித கரணங்களால் இல்லையாகிலும் -நாம சங்கீர்த்தனம் மாத்ரமே அமையும் –
குரோர் நாம சதா ஜபேத் -என்னக் கடவது இறே –
நெஞ்சே சொல்லுவோம் -என்றது தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து சேதன சமாதியாக சொல்லுகிறார் –
நசேத் ராமானுஜேத் ஏஷா சதுரா சதுரஷரீ-காமஹச்தா ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ர்சா -என்றான் இறே ஆழ்வான்-
வேதம் ஒரு நான்கினுள் உள் பொதிந்த மெய்ப் பொருளும் -கோதில் மனு முதல் கூறுவதும் –
தீதில் சரணாகதி தந்த தன் இறைவன் தாளே -அரணாகும் என்னும் அது -என்று-அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தார் இறே –
பூ மகள் கோன் தென்னரங்கன் பூம் கழற்கு பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்தாட்கு ஏய்ந்து
இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை வாய்ந்து எனது
நெஞ்சமே வாழ் -என்று இறே ஜீயரும் அருளிச் செய்தது –

————————————————————————————–

பெரிய ஜீயருரை

என்னுடைய நெஞ்சானது எம்பெருமானாருடைய சீல குணம் ஒழிய-வேறு ஒன்றை நினையாத படி யாயிற்று
–இது எனக்கு சித்தித்த பெரு விரகு ஒன்றும் அறிகிலேன் என்கிறார் –

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

மது மிக்க பொழிலை உடைத்தாய் -தர்சநீயமாய் இருந்துள்ள கோயிலிலே –கண் வளர்ந்து அருளுகையாலே
-அத தேச சம்பந்தத்தை இட்டுத் தம்மை நிரூபிக்கலாம் படி இருக்கிற –
பெரிய பெருமாளுடைய விகாசாதிகளால் தாமரை போலே போக்யமான திருவடிகளைத் தங்கள் மனசிலே
ஒரு காலும் வையாதே -சாஸ்திர வச்யமான ஜன்மத்திலே பிறந்து வைத்து நிர் பாக்யராய் இருக்கும் அவர்களை விட்டு
அகன்று திருக் குறையலூரை திரு அவதார ஸ்தலமாக உடையவராய்-
-திவ்ய பிரபந்த நிர்மாண முகத்தாலே லோக உபகரகாரகரான திரு மங்கை ஆழ்வாரை உடைய-
திருவடிகளின் கீழ் விண்டு நீங்காத சிநேகத்தை உடையராய் இருந்துள்ள-
எம்பெருமானார் உடைய நிரவதிகமான சீல குணத்தை ஒழிய என்னுடைய நெஞ்சானது-வேறு ஒன்றையும் சிந்திக்கிறது இல்லை –
விள்ளுதல்-நீங்குதல்
இயல்வு -விரகு

——————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை-
கீழில் பாட்டில் -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று தம்முடைய மனசோடு கூடி உபதேசித்த வாறே
மனசானது அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் பட்டு -அநந்ய சிந்தயந்தோமாம் -என்கிறபடியே-
அவர் திருவடிகளை அனுபவித்துக் கொண்டு -தத் வ்யதிரிக்தமானவற்றை விரும்பாதே இருந்தது –இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் .
திருமங்கை ஆழ்வார் அடிக் கீழ் மாறாத காதல் இன்றும் ஸ்ரீ ராமானுஜர் திரு உருவம் –
திருநகரியில் திருமங்கை ஆழ்வார் திருவடியில் சேவை உண்டே –

வியாக்யானம்-
கள்ளார் பொழில் –
மது இருந்து ஒழுகின மா மலர் எல்லாம் -கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவிக் கூர்ந்தது –
குணதிசை மாருதும் இதுவோ -எழுந்தன மலர் அணைப் பள்ளி கொண்ட அன்னம் ஈர் பனி நனைந்த –
தமிரும் சிறகு உதறி -பைம்பொழில் கமுகின் மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது
மாருதம் இதுவோ -என்றும்-
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் -என்றும்
பூகி கண்ட த்வய சசரசஸ் நிக்த நிரோபகண்ட ஆவிர் மோதாஸ் திமிதச குநா நுதி தப்ரம்மகோஷாம்-என்றும்-சொல்லுகிறபடி –
மதுச்யந்தியான புஷ்ப விசெஷங்களால் வ்யாப்தங்களான உத்யானங்களாலே சூழப்பட்ட-
தென்னரங்கன் –
அத்தாலே தர்சநீயமான திருவரங்கமே தனக்கு நிரூபகமாம்படி நித்ய வாசம் பண்ணுகிற ஸ்வாமி உடைய-திருப்பதி – என்றபடி –
இவ்விடத்துக்கு இது முக்யமான திரு நாமம் -காணும் –
கமலப்பதங்கள் –
கமலப்பதம் -தீர்த்த வாசகமாய் -பாவனமான -என்னுதல்-
சம்சார தாபதப்தனுடைய ஸ்ரமஹரமான -என்னுதல் –
பாத கமலம் -என்னாதே- முந்துற முன்னம் கமலம் என்றது -சர்வேஸ்வரன் திருவடிகளை சேவிக்கும் போது
பாவநத்வாதிகளுக்கு முன்பே போக்யதையைக் கண்டு முற்றூட்டாக அனுபவித்தவர் ஆகையாலே –
நெஞ்சில் கொள்ளா மனிசரை –
விசித்ரா தேக சம்பந்தி ரீச்வராய நிவேதிதும் பூர்வமே வக்ர்தா பிரம்மன் ஹஸ்த பாதாதி சாயுதா -என்கிறபடியே-
அலாப்யலாபமாக பகவச் சரண கமல பரச் சரணத்திற்கு இட்டு பிறந்த மனுஷ்ய தேகத்தை பெற்றும் –
திருவடிகளை நெஞ்சில் கொள்ளாதே இருக்கிற -கர்ப்ப நிர்பாக்யர் கோஷ்டியில் -நின்றும்-
நீங்கி
அகன்று – சர்வரும் ஸ்லாகிக்கும்படி -பாஹ்ய குத்ருஷ்டிகளை பராஜிதமாக பண்ணுவித்து குறையல் பிரான் –
திருக் குறையலூரில் அவதரித்து -திவ்ய பிரபந்த நிர்மாணத்தாலும் –
-திரு அத்யயனத்துக்கு-ஏகாதசியிலே திரு நாள் நடப்பித்த படியாலும் –
அவ்விடத்திலே பெருமாளுக்கு அரணாக திரு மதிளை-நிர்மாணம் பண்ணி வைத்த படியாலும்
-ருத்ர பஷபாதிகளான குத்ருஷ்டிகளுடன் தர்க்கித்து அவர்களை ஜெயித்து –
அவர்களாலே பழிக்கப் பட்ட திவ்ய தேசங்களை நிர்வஹித்த படியாலும் -இப்படிகளாலே-உபகாரகரான திரு மங்கை ஆழ்வார் உடைய –

இவ்விடத்திலே இன்னும் ஒரு யோஜனையும் உண்டு –
குறையல் பிரான் -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்கிறபடியே ஹேய பிரத்யநீகனான கோவிந்தன் –
கோவர்த்தநோதாரணம்இந்திரன் கோவிந்த பட்டாபிஷேகம் பண்ணினவாறே பண்ணின போது –
கோப கோபி ஜனங்களை ரஷித்த உபகாரகன் -அந்த அவதாரத்திலே பூதனா சகட யமளார்ஜுன வரிஷ்ட
ப்ரலம்ப தேனுக காளிய கேசி குவலயாபீட சாணூர கம்சாதிகளை நிரசித்து -ஸ்வ ஆஸ்ரிதர்களான
பாண்டவர்களுக்கு தூத்ய சாரத்யங்களை பண்ணி -தத்வ உபதேசம் பண்ணியும் பண்ணியும் -இப்படி
நிகில மனுஜ மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டிதங்களை பண்ணின உபகாரகன் –
இதில் சரம ஸ்லோகத்தை உபதேசிக்கை உபகாரங்களில் பிரதானம் –
இப்படி ஒரு அர்த்த விசேஷம் தோன்றினாலும் நம் ஆசார்யர்கள் திரு மங்கை மன்னன் விஷயமாக
அருளிச் செய்கையாலே -பேசிற்றே பேசுகையே அவர்களுக்கு ஏற்றம் என்று முதல் சொன்ன-பொருளே சங்கதமாக கடவது –
அடிக்கீழ்
திரு மங்கை ஆழ்வார் உடைய திருவடிகளின் கீழே –
விள்ளாத அன்பன் –
இவ் ஆழ்வார் பிரதம பர்வ நிஷ்டர் ஆகையாலே -அணி பொழில் திருவரங்கத்து அம்மானை பிரார்த்தித்துக் கொண்டே- இருப்பர் –
இவ் எம்பெருமானார் சரம பர்வத்தில் ஊற்றமுடையவர் ஆகையாலே அவ் ஆழ்வாருடை திருவடிகளிலே –
ஒருக்காலும் விடாதே சக்தமான பக்தியை உடையராய் இருப்பர் .
விள்ளுதல் -நீங்குதல் -அன்பு -பக்தி –
இராமானுசன் –
பூர்வ அவதாரத்திலே ராம அனுவர்த்தனம் பண்ணின வாசனை இப்போதும் அநுவர்த்திக்கையாலே-
இதுக்கு சரம பர்வமான இதிலே ஈடுபட்டார் காணும் –
மிக்க சீலமல்லால் –
தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என் போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து-
பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது-
உள்ளுதல் -சிந்தித்தல்
என் நெஞ்சு-
என் மனசு -என்னாலே உபதேசிக்கப் பட்ட நெஞ்சு-
ஓன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே-
என்ன ஆசார்யம்-இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்
எனக்கு –
பகு ஜன்மங்கள் தன்னில் தபோ ஜ்ஞான சமாதிகளை பண்ண வேண்டி இருக்க -அங்கன் இன்றிக்கே-
சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று அத்யாவாஸ்யம் மாத்ரம் பண்ணின படி -எனக்கு –
பகவத் பிரசாதம் -கர்மா ஞான ஸ்தானங்களில் ஆழ்வாருக்கு -இவருக்கு ராமானுஜர் நாமமே -என்றவாறு –
உற்ற -சித்தித்த
பேர் இயல்வே -சமஸ்த உபாயங்களை காட்டிலும் -பெரியதாய் விலஷணமான உபாய விசேஷம் –ஓன்று அறியேன் –
எத்தாலே இந்த சொல் சேர்த்தி லபித்தது –நான் ஒன்றும் அறிகிலேன் –
முந்துற்ற நெஞ்சே -நீ அறிந்தே ஆகில் சொல்லிக் காண்-
நிர்ஹேதுகமாக சித்தித்த ஒன்றாய் ஆய்த்து-இயல்வே -விரகு –

——————————————————————————————————

ஏழாம் பாட்டு –
பெரிய ஜீயர் உரை –
அவதாரிகை –
இப்படி தம்முடைய அயோக்யதையை பார்த்து -நமக்கு இது துச்சகம் -என்று மீள நினைத்தவர் –
ஆழ்வான் திருவடிகளில் சம்பந்தமுண்டான பின்பு எனக்கு அசக்ய அம்சம் ஒன்றும் இல்லை -என்று-ஸ்தோத்ரத்திலே பிரவ்ருத்தர் ஆகிறார் –

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-

பேச்சுக்கு நிலம் இல்லாத பெரிய புகழை உடையராய் -ஆத்ம அபஹாரத்தை விளைப்பதாய் —
தனித் தனியே பிரபலமாய்க் கொண்டு மூலை அடியே நடத்துவதான –
அபிஜன / வித்யா / வ்ருத்தங்கள்-ஆகிற படு குழியைக் கடந்து இருப்பாராய்-
நமக்கு நாதரான கூரத் ஆழ்வான் உடைய திருவடிகளை ஆஸ்ரயித்த பின்பு-
பழி போலே அவஸ்யம் அனுபோக்த்யமான பாப கர்மங்களிலே மக்னர் ஆகாதபடி-
நிஸ்தரிப்பிக்கும் எம்பெருமானார் உடைய திவ்ய குணங்களை ப்ரீதி ப்ரேரிரிதராய் கொண்டு-பாடி
ஸ்வரூபம் அனுரூபம் இல்லாத மார்க்கங்களை தப்புகையாலே எனக்கு இனி ஒன்றும்-அருமை இல்லை –
குழியைக் கடத்தும் -என்று பாடம் ஆன போது தம்முடைய அபிமான அந்தர்பூதரையும்-இப் படு குழியில் விழாமல் கடத்தும் அவர் -என்கை –
எம் கூரத் ஆழ்வான் -என்றும் பாடம் சொல்லுவார்கள்-

———————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–
அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே-ஆறாம் பாட்டில் – ஞான பக்த்யாத்யா அனுபவ ரூபமான தம்முடைய அயோக்யதையை-
நினைத்து பிரபந்த ஆரம்பத்திலே பிற்காலித்து-இப்பாட்டிலே
ஆழ்வான் திருவடிகளின் சம்பந்தம் ஆகிய ராஜ குல மகாத்ம்யத்தை அனுசந்தித்து –
இப் பிரபந்த உத்யோகம் கடினம் அல்ல — சுலபமாயே யாய் இருக்கும் என்று-அதிலே ஒருப்படுகிறார் .
வியாக்யானம் –
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் –
-ஒரு சப்தத்தை இட்டு வர்ணிக்க அரியதாய் -நித்ய அபிவ்ர்த்யங்களாய்-கொண்டு –
-பரம பதத்தளவும் பெருகி வருகிற கல்யாண குணங்களை உடையவன் –வாசா மகோசரம் –
ஆச்சார்ய லக்ஷண பூர்த்தியையும் சிஷ்ய லக்ஷண பூர்த்தியையும் பூர்ணமாகக் கொண்டவர் அன்றோ –
வஞ்ச முக்குறும்பாம் -வஞ்சக ஹேதுக்களாய்-ததீய விஷயத்திலே ஸ்வ சாம்ய புத்திகளையும்
ஸ்வ ஸ்மின் ஆதிக்ய புத்திகளையும் பிறப்பித்து -ஸ்வரூப நாசங்களாய் இருந்துள்ள –
அபிஜன வித்யா வ்ர்த்தங்கள் ஆகிற அஹங்கார த்ரயமும் -ஜகத் பிரதாரகங்களான இம் மூன்றும் ஆகிற-
குழியை கடத்தும் -தம்முடைய அபிமான அந்தர் பூதரை அந்த படு குழியில் விழாதபடி தம்முடைய-உபதேசத்தாலே –
தத்வ ஹித புருஷார்த்த யாதாம்ய ஞானத்தை பிறப்பித்து -அதில் நின்றும்-கடத்துமவன் -கடத்துகை -தாண்டுவிக்கை –
குழியைக் கடக்கும் -என்று பாடமான போது -இம் மூன்றுமாகிய படு குழியை கடந்து இருக்குமவர்-என்றபடி –
நம் கூரத் ஆழ்வான் -நம்முடைய கூரத் ஆழ்வான் -இவரை உத்தரிப்பிக்கைக்கு காணும்-அவருடைய அவதாரம் –
ஆகையால் இறே நம் கூரத் ஆழ்வான் என்கிறார் .கூரம் என்னும் திவ்ய தேசத்துக்கு
நிர்வாஹரான ஸ்வாமி உடைய திரு நாமத்தை வஹித்தவர் -எம் கூரத் ஆழ்வான் -என்றும் பாடம் சொல்லுவார்கள்-
சரண் கூடிய பின் –
இப்படிப் பட்ட வைபவத்தை உடையரான -ஆழ்வான் உடைய திருவடிகளை –
ஆஸ்ரயித்த பின்பு -இப்படிப் பட்ட ராஜ குல மகாத்ம்யத்தை நான் பெற்ற பின்பு –
பழியை கடத்தும்
-இவ்வளவாக நான் மூலை யடியே நடந்து போகையாலே வந்தேறியாய் –
லோக கர்ஹிதமாய் -தம்முடைய குண கீர்த்தனம் பண்ணுகைக்கு விரோதியான என்னுடைய-
பாபத்தை சவாசனமாக நிவர்திப்பிக்கீம்
-இராமானுசன் –
எம்பெருமானார் உடைய –புகழ் பாடி –
-ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிவன்-தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் -இராமானுசன்-
என்னும்படியான-அவருடைய கல்யாண குணங்களை -இப் ப்ரபந்தம் முகேன கீர்த்தனம் பண்ணி –
அல்லா வழியை கடத்தல் –
என்னுடைய அபத ப்ரவர்தியை தப்புகை – அன்றிக்கே -கர்ப்ப-யாம்ய தூமாதிகளை ஆக்ரமிக்கையால் என்னுதல் –
எம்பெருமானார் உடைய திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கையில் -என்றபடி –
எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே –
-எனக்கு இனி -இப்படி எம்பெருமானார் உடைய-கைங்கர்யத்தில் அதி கரித்து க்ர்தார்த்தனான எனக்கு –
-இத்தனை நாளும் சில உபத்ரவம்-உண்டாய் இருந்தாலும் -இன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம்-
யாதும் -எந்த விஷயத்திலே யாகிலும் /வருத்தம் அன்றே -அசாத்தியமானது இல்லை-
அல்லா வழியை என்று -அம் மார்க்கங்கள் அதி ஹேயங்கள் ஆகையாலே -திருப் பவளத்தாலே-இன்னது என்று நிர்தேசிக்க அருவருத்து –
-சாமான்யேன அருளிச் செய்கிறார் .
அல்லா வழியை கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே –
சகல பாப விமோஷன பூர்வகமான பரம பதத்தை பெருகையிலும் இவருக்கு ஒரு-கண் அழிவு இன்றிக்கே
அத்யந்த சுலபமாய் காணுமிருப்பது –
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்னக் கடவது இறே –

—————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை-
இப்படி ஸ்வ லாப அனுசந்தானத்தாலே ஹ்ருஷ்டரானவர் -எல்லாரும் தம்மைப் போலே-
தத் விஷய பிரவணர் ஆகைக்கு உறுப்பாக -பகவத் வல்லபையான ஆண்டாள் உடைய-
ப்ரஸாத பாத்ரமான எம்பெருமானார் லோகத்துக்கு செய்த உபகாரத்தை அருளி செய்கிறார் –

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

பெரிய பெருமாள் உடைய திருமுடியை -சூழா நின்று உள்ள திரு மாலையை -தன்னுடைய திருக் குழலிலே சூடி-
வாஸிதம் ஆக்கிக் கொடுத்த வைபவத்தை உடையளான ஆண்டாள் உடைய ஸ்வாபாவிகமான கிருபையையே-
விளை நீராக வாழா நிற்பவராய் –பரம ஒவ்தாரராய் -முனி ஸ்ரேஷ்டரான -எம்பெருமானார் –
நித்யத்வ -அபௌருஷேயத்வ -பிரயுக்தமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய் -யதாபூதவாதயாய் –
இருக்கையாலே -ஸ்வ பிரமாண்யத்தில் -ஒரு குறை வற்று இருக்கிற வேதமானது
-பாஹ்ய குத்ருஷ்டிகளாலே –அபிபூதமாய் கொண்டு -இழிவு பட்டு -தீப சங்கோசத்திலே திமிர வ்யாப்தி போலே பூமி எங்கும் கலி யுகமானது-
தனிக்கோல் செலுத்துகிற காலத்திலே-அபேஷா நிரபேஷமாய் வந்து -அந்த வேதத்தை உத்தரிப்பித்து –லோகத்தை ரஷித்து அருளினவர் காணும் கோள்–
ஆதலால் நீங்களும் என்னைப் போலே அவரை அல்லாது-அறியோம் என்று இருக்கை அன்றோ அடுப்பது என்று கருத்து –

என்றும் -பாட பேதம் –

————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ்ப் பாட்டிலே பெரியாழ்வார் சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரைக் கொண்டாடி –
இப்பாட்டிலே -அந்த ஆழ்வாருடைய பெண் பிள்ளையான ஆண்டாளுடைய ஸ்வபாவிக கிருபையாலே
வாழ்ந்து கொண்டு -பரமோதார ஸ்வபாவராய்-அத்தாலே எல்லார்க்கும் பரம பதத்தை கொடுக்கைக்கு
மனனம் பண்ணிக் கொண்டு போருகிற எம்பெருமானார்
-வேத மார்க்கம் எல்லாம் அழிந்து -பூ மண்டலம்-எங்கும் ஒக்க -வியாபித்து காலியானது -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில்
-விண்ணின் தலை நின்றும் –மண்ணின் தலத்து உதித்து -எல்லாரையும் ரஷித்து அருளின நல்லன்பர் என்று சர்வரும் தம்மைப் போலே
தத் விஷய ப்ரவணர் ஆகைக்கு உடலாக அவர் செய்து அருளின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

வியாக்யானம் –
அரங்கர் மௌலி
-கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் தானே-
ஸ்ரீ வில்லி புத்தூரிலே வட பெரும் கோவில் உடையான் என்னும் திரு நாமத்தை உடையராய் கொண்டு
கண் வளர்ந்து அருளுகையாலே -அவரை -அரங்கர் -என்று அருளிச் செய்கிறார் -அப்படி பட்ட ஸ்வாமி உடைய-உத்தமாங்கத்துக்கு –
சூழ்கின்ற மாலையை –
அலங்கரிக்கத் தக்க புஷ்ப மாலையை -சூடிக் கொடுத்தவள்-முந்துற முன்னம்-
தாழ் குழலாள்-என்னும்படியான தன்னுடைய திருக் குழலிலே அலங்கரித்துக் கொண்டு -அது தன்னை களைந்து
ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கும்படி கொடுத்தவள் -இப்படி யாகையாலே இவளுக்கு -சூடிக் கொடுத்தவள் -என்று அதுவே நிரூபகமாய்
ஆய்த்து -சூடிக் கொடுத்த சுடர் கொடியே -என்னக் கடவது இறே –
தொல் அருளால்
-உததி பரம வ்யேம் நோர்க்கவிஸ் ம்ர்த்யமாதர்ச ரேஷன ஷமமிதிதி யாபூயஸ் ஸ்ரீ ரங்க தாமனி மோதசே –என்றும்
-அனுக்ரஹா மயீம் வந்தே நித்ய அஞ்ஞான நிக்ரஹம் -என்றும் சொல்லுகிறபடி-இயற்கையான அருள் என்றவாறு –
அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –
வாழ்கின்ற –
அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –
ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே –
பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே
-வள்ளல்-
இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை-இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –
காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ –
சரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத்ச்ரிதானாம்-என்று இந்த சௌந்தர்யத்தை –ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
என்றும் மா முனி –
-இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித-ரஷனத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற
-இராமானுசன் –
எம்பெருமானார் –
தாழ்வு ஒன்றும் இல்லா மறை
-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –
ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம்-
அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-
மறை தாழ்ந்து
-இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் –கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு
-கலி யுகமானது வேதத்தை-சங்கோசிப்பித்து அழித்தபடி
-ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரென-உபபாதிக்கப் பட்டது இறே –
கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டாரமீச்வரம் -நார்ச்சயிஷ்யந்தி
மைத்ரேய பாஷண்டோ பகதாஜன -என்றும் -அந்தஸ் சக்தாம் -பஹிஸ் சைவம் சபரமேத்யதுவைஷ்ணவம்
கலவ் கஷ்டா ப்ரவர்த்தந்தே வர்ணாஸ்ரம ஜனாமுனே கலவ் கார்த்த யுக தர்மம் கர்த்தும் இச்சதி யோ நர
ச்வாமித்ரேர் ஹீதிதம் மத்வா தஸ்மை பிரத்விஷதே கலி -என்றும் சொல்லுகிறபடி
-நிஷித்த-மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –
தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான-பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி
-சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –தேச காலங்கள் சமீசீநங்களானால் திருத்தி ரஷிக்கலாம்–
அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது –
வந்து
-இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து
அருளி -அளித்தவன் காண்மின் –
உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரசித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள்-என்று கருத்து –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

——————————————————————————————————————

பெரிய ஜீயர் அருளிய உரை –
பதினெட்டாம் பாட்டு-அவதாரிகை-
நம் ஆழ்வாரைத் திரு உள்ளத்திலே வைக்க அநுரூப வைபவரான ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
குணங்களை சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரிக்கும் எம்பெருமானார்-எனக்கு ஆன துணை -என்கிறார் –

எய்தற்குஅரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

துஷ் ப்ராபங்களான வேதங்களை –
பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-
வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும்-அது தான் சாரமாகவும்
ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படி யான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து-அவதரித்து அருளினவராய் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே –சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை –
தம் திரு உள்ளத்திலே வைக்கைக்கு-தகுதியாய் இருந்துள்ள -பிரபாவத்தை உடையரான ஸ்ரீ மதுர கவிகள் உடைய -ஜ்ஞாநாதி குணங்களை-
சகல ஆத்மாக்கள் உடையவும் உஜ்ஜீவன அர்த்தமாக உபகரித்து அருளா நிற்கும் -எம்பெருமானார் –எனக்கு சீரிய துணை
அதவா
சடகோபனை சிந்தை உள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் -என்று-
ஆழ்வாரை அல்லது அறியோம் என்று இருக்கும் அவர் எல்லோரையும் சொல்லவுமாம்-

—————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழில் பாட்டுக்களில் பிரதி பாதிக்கப் பட்ட ஆழ்வார்களில் வைத்துக் கொண்டு –பிரதாநராய் -சர்வாதிகார்ரராம் படி –
திருவாய்மொழி என்கிற பிரபந்தத்தை அருளிச் செய்கைக்காக-அவதரித்து அருளின நம் ஆழ்வாருக்கு —
அனந்யார்ஹரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய -கல்யாண குணங்களை-சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக –
உபகரித்து அருளின எம்பெருமானார் -எனக்கு சகாயம் என்கிறார் .
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் வாழ்வாக வந்து உதித்த மாதங்கள் நாள்கள்
தம்மின் வாசியையும் இந்த உலகோர்க்கு உரைப்போம் நாம் -சரம பர்வ நிஷ்டர்கள் மூவரும் –

வியாக்யானம் –
எய்தற்கு அரிய மறைகளை –
அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய்
-சர்வோப ஜீவியங்கள் ஆகாதே -அதிக்ர்த்தாதிகாரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே –
-ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய-ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்த கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –
ஆயிரம் இன் தமிழால் –
வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –
ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் –
ஆதி மத்திய அவசானங்களிலே -பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் -சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் –
சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் -தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதா வஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் -அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்
-அநந்த கருட விஷ்வக் சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் –
தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே –
லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் -தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும்
-விசதமாக பிரதிபாதிப்பதாய் -ஸ்வா ர்த்தத்தை எல்லாம் சூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெரிவிக்குமதாய் –
அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி –
அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட-பாஷையாலே -திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண
-செய்தற்கு
-அவதரிப்பிப்பதர்க்கு –ஆவிர்பாவத்தை பண்ணுவதற்கு -என்றபடி –
உலகில் –
அசுத்தாஸ் தேசமஸ்தாஸ்து தேவாத்யாம-கர்ம யோநயா ஆவிரிஞ்சாதி மங்களம் – என்றும்
-இருள் தரும் மா ஞாலம் -என்றும் –
கர்ம ஜன்மாத்யவஸ்தாச-துக்கமத்யந்த துச்சகம் -ந கிஞ்சித் கணயன் நித்யம் சராமீந்த்ரிய கோசர -என்றும் –
சொல்லப்படுகிற-இந்த லீலா விபூதியிலே -வரும் சடகோபனை –
வரும்
என்ற வர்த்தமான நிர்தேசத்துக்கு –அவருடைய திவ்ய-மங்கள விக்ரகம் -சமஸ்த திவ்ய தேசங்களிலும்
சமஸ்த பிரபன்ன ஜனங்களுடைய திரு மாளிகைகளிலும் –நவம் நவமாய்க் கொண்டு ஆராத்யமாகையும் -அவருடைய திவ்ய சூக்திகள்
-இந்த லோகத்தில் இவ்வளவும்-இன்னும் உள்ள காலத்திலும் நடை யாடிப் போருகையும் பொருளாகக் கடவது
-சடகோபனை –
சடராவார் –ஸ்வரூப ஞானம் இல்லாத சம்சாரிகள் -அவர்களைக் குறித்து -ஒரு நாயகத்திலும் -நண்ணாதார் முறுவலிலும் –பருஷம் பண்ணினவனை
-பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற சடர்க்கு பிரதிபடர் ஆனாரை -என்னுதல் .-இப்படிப்பட்ட நம் ஆழ்வாரை
-சிந்தை உள்ளே
-தம்முடைய திரு உள்ளத்திலே -பெய்தற்கு -தமக்கு பர தேவதையாய்-ஆராத்யராய் இருக்கும்படி வைக்கைக்கு
-இசையும்-
வுபயுக்தமான பிரபாவத்தை உடைய -மேவினேன் அவன் பொன்னடி-மெய்ம்மையே தேவு மற்றறியேன் -என்றும்
-மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்றும் -இறே இவர் தாம் அருளிச் செய்த படி –
பெரியவர்
-உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார்-
பத்துப் பேர் உண்டு இறே -அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடக் கடவது –
அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே -அவர் பாசுரம் கொண்டு இவ் வர்த்தம் அறுதிஇடக் கடவோம் -என்று
ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லுகிறபடியே-
யஸ்மாத் ததுபதேஷ்டா ஸௌ-தஸ்மாத் குருதரோ குரு – அரச்ச நீயச்ய சவந்த்யஸ்ச -இத்யாதி சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட
சரம பர்வ-நிஷ்டராயும் -தத் ப்ரவர்த்தகராயும் -இருக்கை யாகிற மகா பிரபாவத்தை உடையவர் ஆகையாலே
சர்வாதிகரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் உடைய –
சீரை –
மாறன் சடகோபன் வண் குருகூர் எங்கள் வாழ்வாம்-என்று ஏத்தும் மதுரகவியார் யம்மை யாள்வார் அவரே அரண் -என்றும்
-பார் உலகில் மற்று உள்ள ஆழ்வார்கள்-வந்து உதித்த நாள்களிலும் -உற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர் -என்று இப்படி ச்லாக்கிக்கப்பட்ட
கல்யாண குணங்களை –
உயிர்கள் எல்லாம் –
வர்ணாஸ்ரம குண வ்ருத்தாத் உத்கர்ஷ்ட அபகர்ஷ்ட விபாகம் அற –ருசி உடையரான சகல சம்சாரிகள் உடையவும்
-உய்தற்கு –
உஜ்ஜீவன அர்த்தமாக -இது ஒழிந்த உபாயங்கள்-எல்லாம் உஜ்ஜீவன ஹேதுக்கள் அன்று காணும் -இந்த வமுதனாருடைய திரு உள்ளத்தில் ஓடுகிறது –
உதவும் –
உபகரித்து அருளும் -எல்லாருக்கும் மோஷ உபாயமான திரு மந்திர அர்த்தத்தை உபதேசிக்கும் வேளையிலே
அர்த்த விசேஷங்கள் எல்லாம் ததீய பர்யந்தமாக அனுசந்திக்க வேணும் -என்னும் மதுரகவி ஆழ்வாருடைய நிஷ்டையே காணும்-
எம்பெருமானார் உபதேசிப்பது –
இராமானுசன் எம் உறு துணையே –
இப்படிப் பட்ட எம்பெருமானார் எனக்கு த்ர்டமான துணை –
துணை-
சகாய பூதர் -உறு -த்ர்டம் -இத்தால் பரம பதத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்றபடி –
அன்றிக்கே -பெரியவர் என்ற பதத்துக்கு –
ஆழ்வாருடைய திருவடிகளை தம் திரு உள்ளத்திலே நிறுத்திக் கொண்ட-ஸ்வாமிகள் எல்லாரும் -என்று பொருள் ஆகவுமாம்-

———————————————————————————————–

பெரிய ஜீயர் உரை
-அவதாரிகை –
ஐஸ்வர்யாதி பர தேவதா பர்யந்தமான அபேஷித வஸ்துக்கள் எல்லாம் திருவாய் மொழியே –
என்று ஜகத் பிரசித்தமாக நின்ற எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் -என்கிறார் –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

ஸ்வ சம்பந்தத்தை வுடையவர்களுக்கு இன்னார் என்னும் மதிப்பை கொடுக்குமதாய்-
ஹித பரமுமாய் -ப்ரியகரமுமாய் -அஞ்ஞாத ஜ்ஞாபகமுமாய் -பிராப்ய ப்ராபகங்களுமாய்-இருக்கையாலே –
சீரியதாய் -நிரவதிகமான சம்பத்தும் -பிதாவும் -மாதாவும் -சதாசார்யனும் –
பரிமளிதமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான சர்வேஸ்வரனும் –
ஆழ்வார் பகவத் ப்ரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த -பரபக்தி -யாதி –ச்வபாவங்களின் உடைய அடைவிலே –
உபகரித்து அருளின -திராவிட வேதமான திருவாய் மொழியே-என்று –
இம் மகா ப்ருதிவியில் உள்ளார் அறியும்படி நின்ற எம்பெருமானார் எனக்கு-நிரதிசய போக்யர் –
அதவா
விளங்கிய சீர் நெறி தரும் என்றது -சீர்த் தொடை யாயிரம் -திருவாய் மொழி -1 2-11 – –
என்னும்படி தமக்கு பிரகாசித்த பகவத் குணங்களை அடைவே உபகரித்து அருளின -என்னவுமாம் –

————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
ஐ ஹிக ஆமுஷ்மிக சமஸ்த சம்பத்தும் -சர்வவித பந்துக்களும் -வகுத்த சேஷியானஸ்ரீயபதியும் –
நம் ஆழ்வார் -தமக்கு பகவத் நிர்ஹெதுக கிருபையாலே பிரகாசியா நின்று உள்ள அர்த்த விசேஷங்களை
அடைவே அருளிச் செய்த த்ரமிட உபநிஷத்தே என்று சகல ஜனங்களுக்கும் உபதேசிக்கிற எம்பெருமானார்
எனக்கு நிரதிசய போக்யர் – என்கிறார்-

வியாக்யானம்
-உறு பெரும் செல்வமும்
-அவிந்தந தனஞ்சய பிரசமதம் தனம் தந்தனம் -என்கிறபடியே-அப்ராப்தமான சம்பத் அன்றிக்கே –
-தனஞ்சய விவர்த்தனம் தனமுதூட கோவர்த்தனம் சூசாத நம பாதநம்-சூ மனசா சமாராதனம் -என்றும்
-ஸாஹி ஸ்ரீ ர்ம்ர்தாசதாம் -என்றும் -முக்த ஐச்வர்யத்துக்கு உடல் ஆகையாலே –
ப்ராப்தமாய் –பெரும் -ஷீணே புன்யே மர்த்த்ய லோகாம் விசந்தி -என்றும்
-ஒரு நாயகம் ஓட வுலகுஉடன் ஆண்டவர்-கரு நாய்கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண இம்மையிலே
பிச்சை தாம் கொள்வர் -என்றும்-சொல்லுகிறபடியே அதி ஸ்வல்பமாய் -அநித்யமாய்-இருக்கை அன்றிக்கே -கொள்ளக் குறைவற்று இலங்கி –
கொழுந்து விட்டோங்கிய -என்கிறபடியே – கொள்ளக் கொள்ள பெருகி வரக் கடவதாய் இருக்கிற –
செல்வமும் -சம்பத்தும் -அளவியன்ற யந்தாதி யாயிரம் இறே -இது
-தந்தையும் தாயும் –
மாதா பித்ர் சஹஸ்ரேப்யோ-வஸ்தலதரம் சாஸ்திரம் -என்று -சகல ஜன உஜ்ஜீவன ப்ரவர்த்தமாய் இறே
-வேதத்வ சாமான்ய விசிஷ்ட வேதம்-எல்லாரும் விரும்புவது -அப்படியே -திராவிட வேத சாகரம் -என்று இத்தை வேதமாக நிதர்சிக்கையாலே –
சகல ஜன உஜ்ஜீவன ஏக ப்ரவர்த்தம் ஆகையாலும் -பக்தாம்ர்தம் விஸ்வ ஜன அநு மோதனம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் சொல்லுகிறபடியே பிரியத்தையே-நடத்தக் கடவதாகையாலும் –
திரு வாய் மொழியிலே -வீடு முன் முற்றவும் -என்று தொடங்கி -கண்ணன் கழலினை –என்னும் அளவும்
ஆதி அந்தத்திலே ஹிதத்தையே போதிக்கையாலே – ஹிதத்தை நடத்தக் கடவதாகையாலும்-தாயும் தந்தையுமாய் இருக்கும் என்றபடி –
உயர் குருவும் –
-புத்ரான் பந்தூன் சகீன் குருன் -சர்வ தர்மாம்ச சம் த்யஜ்ய – என்று த்யாஜ்ய கோடியிலே-பரி கணிக்கப்பட்ட -குரு அன்றிக்கே –
அத்ர பரத்ர சாபி – என்கிறபடியே உபய விபூதியிலும் இச் சேதனனுக்கு-உபாதேய தமனாய் –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணின சதாசார்யனும் –
இவ் உபகார ஆதிக்யத்தாலே காணும் இவன் பரித்யாஜ்யனாகாதே ஒழிந்தது -உயர்த்தியை உடையனானதும் –
சேதனருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்த்திப்பவன் ஆகையாலே குரு -என்கிறார் –
-அந்தகார-நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே -என்னக் கடவது இறே –
வெறி தரு பூ மகள் நாதனும் –
வெறி -பரிமளம் -இந்த பதம் புஷ்பத்துக்கு விசெஷணமாய்-பரிமளமான-புஷ்பத்தை பிறப்பிடமாக உடையளான பெரிய பிராட்டியாருக்கு
-பூ மகளார் தனிக் கேள்வன் -என்கிறபடியே-வல்லபனான சர்வேஸ்வரன் -என்றபடி –
–அன்றிக்கே -வெறி தரு பூ மகள் -வெறி -என்கிற பதம் பிராட்டிக்கு-விசேஷணமாய் -கந்தத்வாரம் – என்கிறபடியே
-திவ்ய கந்த பிரதமான திரு மேனியை உடைய பெரிய பிராட்டியார்-என்னவுமாம்
-அன்றிக்கே -வெறி தரு பூ மகள் நாதனும் -வெறி -என்கிற பதம் ஈஸ்வரனுக்கு விசேஷணமாய் –
சர்வ கந்த -என்கிறபடியே -திவ்ய பரிமள ஸ்வரூபனான ஸ்ரீ யபதி என்றும் சொல்லவுமாம் –
இவ் அபிநிவேசம் எல்லாம் இவருக்கு எவ் விஷயத்தை பற்ற -என்றால்
-மாறன் விளங்கிய சீர் நெறி-தரும் செந்தமிழ் ஆரணமே –
என்று -மாறன் -நம் ஆழ்வார் உடைய -பிதாவான காரியாலே சமர்ப்பிக்கப் பட்டதிரு நாமம் ஆய்த்து -இது
-இப்படிப் பட்ட நம் ஆழ்வாருக்கு -விளங்கிய -பிரகாசித்த -சர்வேஸ்வரன் தன்னுடைய நிர்ஹேதுக
கிருபையாலே உபய விபூதி வ்ருத்தாந்தகளை எல்லாம் -அடைவே அறியலாம்படி -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற –
நம் ஆழ்வாருக்கு -ஏவம் நித்யாத்ம பூகாதாஸ் சடகோப ப்ரனேஷ்யதி – என்கிறபடி நித்ய அபௌருஷேயமாய் இருக்கிற இது –
அவர் தம்மாலே உண்டாக்கப் பட்டது என்று –தோற்றும் -பிரகாசித்தது -என்றபடி -ஆகையாலே இறே விளங்கிய –
என்று அருளிச் செய்கிறார் .
சீர் நெறி தரும் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ஸ்ரீ யை எல்லாம் -எல்லாரும்-அறியும் படி -சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்குமதாய்
-நெறி -ஒழுக்கம்-அதாகிறது சாத்மிக்க -என்றபடி –
அன்றிக்கே -மாறன் விளங்கிய சீர் நெறி தரும் -ஆழ்வார் பகவத் பிரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த
பர பக்தியாதி ச்வபாவங்களின் உடைய அடைவிலே உபகரித்து அருளின என்று யோஜிக்க்கவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
சீர் நெறி தரும் –
அகஸ்த்யோ பகவான் சாஷாத் தஸ்ய வியாகரணம் வ்யதாத்-சந்தஸ் சாஸ்திர அநு சாரனே வ்ர்த்தானா அபி லஷணம்-
உக்த மந்யைஸ் சதாசார்யை த்ராமிடச்யமகாமுனே-சம்ச்கர்தச்ய யதாசந்தி பாட்யபந்த ச்ய சர்வத லஷணா நிதாதே -சாந்தி திராமிட ஸ்யாபி பூதலே -என்கையாலே
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை நிரை பா -என்று சொல்லப் படுகிற பிரபந்த லஷண பேதமாய் இருக்கும் என்னவுமாம் –
சீர் -என்கிற இது -எழுத்து அசை தொடக்கமானவற்றுக்கு உப லஷணமாக கடவது –
நெறி -ஒழுக்கம் அதாவத்-ஸ்வபாவமாய்-லஷணம் -என்றபடி -தருகை -உடைத்தாகை
-செந்தமிழ் ஆரணமே என்று –
ஆதி மத்திய-அவசானங்களிலே ஏக ரூபமாய் திராவிட பாஷா ரூபமான உபநிஷத்தே -என்று -அவதாரணத்தாலே –
அனநயோக வியவச்சேதம் பண்ணுகிறது -இது காணும் எம்பெருமானாருடைய பிரதி பத்தி –
எம்பெருமானார்-தமக்கு ஐஸ்வர்யாதி பரதேவதா பர்யந்தமான புருஷார்த்தங்கள் எல்லாம் திரு வாய் மொழியே அன்றி
வேறு ஒன்றை அத்யவசித்து இரார் -என்றபடி
-இந் நீணிலத்தோர் அறிதர நின்ற –
இவ் அர்த்தத்தை விச்தீர்னையான-இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு
அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –
அன்றிக்கே -இவ் அர்த்தத்தை மகா ப்ர்த்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –
ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி
-இராமானுசன்
-எம்பெருமானார் –எனக்கு ஆரமுதே -அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –

———————————————————————————————————————

பெரிய ஜீயர் உரை
அவதாரிகை –
நாதமுனிகளை தம் திரு உள்ளத்திலே அபிநிவேசித்து அனுபவிக்கும் எம்பெருமானார்
எனக்கு பரம தனம் -என்கிறார்-

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம்கோல் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

சந்தனச் சோலைகளை உடைத்தாய் -தர்சநீயமான திருநகரிக்கு நாத பூதரான ஆழ்வார் உடைய-
பரம போக்யமான திருப் பவளத்தில் பிறந்த ஈரப் பாட்டை உடைத்தான திரு வாய் மொழி இன் இசையை-
அறிந்தவர்களுக்கு ச்நிக்தராய் இருக்கும் அவர்கள் உடைய குணங்களிலே செறிந்து –
தன் சத்தை பெறா நிற்கும் -ஸ்வபாவத்தை உடையரான நாதா முனிகளை பெரு விடாயர்
மடுவிலே புகுந்து வாரிப் பருகுமா போலே தம் திரு உள்ளத்தாலே அபிநிவிஷ்டராய்க் கொண்டு
அனுபவிக்கும் எம்பெருமானார் எனக்கு அஷயமான நிதி –
ஆரம்-சந்தனம்–

—————————————————

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
தர்சநீயமான திரு நகரிக்கு நிர்வாஹரான நம் ஆழ்வார் உடைய அமிர்தமய திவ்ய சூக்தி
ரூபமாய் இருந்துள்ள -திருவாய் மொழியை சார்த்தமாக அப்யசிக்க வல்லார் திரத்திலே -அதி ப்ரவணராய்
இருக்குமவர்களுடைய -கல்யாண குணங்களிலே சக்தராய் -உஜ்ஜீவிக்கும் ஸ்வபாவத்தை உடையரான
ஸ்ரீமன் நாதமுனிகளை -தம்முடைய மனசாலே அனுபவிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு- மகா நிதியாய் இருப்பார் என்கிறார் –

வியாக்யானம் –
ஆரப் பொழில் தென் குருகை
-திருத் தாம்ரபர்ணீ தீர்மாகையாலும் -நீர் வாசியாலும்-நித்ய அபி வர்த்தங்களான சந்தன சோலையாலே சூழப்பட்டு
தர்சநீயமான திருக் குருகூருக்கு –ஆரம்-சந்தனம்
பிரான்
-சர்வர்க்கும் சேவ்யமாம் படி உபகாரகர் -குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று ஸ்ரீ மதுரகவி-ஆழ்வார் அருளிச் செய்தார் இறே
-குருகை பிரான் –
திருக் குருகையிலே அவதரித்து -சகல ஜனங்களுக்கும்-திருவாய் மொழி முகத்தாலும் -நாத முனிகளுக்கு சகல அர்த்தங்களையும் -உபதேசித்து
சம்ப்ரதாயத்தை நடத்தின படியாலும்-உபகாரகர் -என்றபடி
-அமுதத் திருவாய் ஈரத் தமிழின்
-இப்படிப் பட்ட நம் ஆழ்வாருடைய -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்-மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே பரம போக்யமாய் கொண்டு
-திருப் பவளத்திலே பிறந்ததே -ஸ்வ நிஷ்டரான-சேதனருடைய சம்சார தாபம் எல்லாம் ஆறும் படியாக ஈரப் பாட்டை உடைத்ததாய்
-த்ரமிட பாஷா ரூபமான-திருவாய் மொழி யினுடைய -இசை -கானம் ராகாதி லஷனன்களோடு கூடி -உணர்ந்தோர்கட்கு
-அப்யசித்து-பின்னையும் ஆவர்த்தி பண்ணி -அதிலே பூர்ண ஜ்ஞானம் உடையவர்களுக்கு –
ஸ்ரீ மன் மதுர கவிகள் -திரு மங்கை ஆழ்வார்-முதலானவர்களுக்கு -என்றபடி –
இனியவர் –
அவர்களுக்கு அத்யந்தம் பிரிய தமராய் -ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு -கண்ணி நுண் சிறுத் தாம்பினை-உபதேசித்து அருளின
-ஸ்ரீ பராங்குச நம்பி -இனியர் தம் சீரைப் பயின்று -அவர்களுடைய கல்யாண குணங்களை-
சர்வ காலமும் அனுசந்தித்து -அவர் செய்த உபகாரத்தை விஸ்மரியாதே -க்ர்த்கஞராய்க் கொண்டு –
பயிலுதல் -அனுசந்திக்கை -உய்யும் -அவ்வளவாக இவருக்கு உஜ்ஜீவனம் இல்லை -அந்த மதுரகவி ஆழ்வார் உடைய
சம்ப்ராயச்தரான ஸ்ரீ பராங்குச நம்பி உபதேசித்த அநந்தரம் -அவர் பக்கலிலே க்ர்த்கஞராய் போந்த பின்பு -காணும்-இவர் உஜ்ஜீவித்தது
-சீலம் கொள் நாத முனியை –
இப்படி உஜ்ஜீவனமே ஸ்வபாவமாக உடையரான-ஸ்ரீ மன் நாத முனிகளை-ஸ்ரீ ரங்க நாதருடைய திருநாமத்தை வகித்து
-ஆழ்வார் தமக்கு உபதேசித்த-அர்த்தங்களை அடைவே சர்வதா -மனனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற-ஸ்ரீ மன் நாதமுனிகளை -என்றபடி
நெஞ்சால் வாரிப் பருகும் –
சமான காலமானால் -காயிகமாகத்-தழுவி -முழுசிப் பரிமாறி அனுபவிப்பார் காணும் –அத்யந்த கால வ்யவதானமாக இருக்கையாலே-அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளை
-நெஞ்சாலே அள்ளிக் கொண்டு –
பிறி கதிர் படாதபடி விக்ரக குணங்களோடு-கூட அனுபவிக்கை -பருக்கை-அனுபவிக்கை –
இராமானுசன் –
-எம்பெருமானார் –
என் தன் மா நிதியே
-லோகத்தார் எல்லாருக்குமாக அவதரித்தார் ஆகிலும் அமுதனாருடைய-அத்யாவசாயம் -தமக்கேயாக அவதரித்தார் என்று காணும்
-என் தன் மாநிதி –
அடியேனுடைய மகா நிதி –நவநிதியான தனங்களும் -தைனம்தினய பிரளயத்திலும் அழிவு உண்டு –
அப்படி அன்றிக்கே அவற்றைக் காட்டில்-விலஷணமாய் அப்ராக்ருதமான நிதி -என்றபடி –
-அத்ர பரத்ர சாபி நித்யம் யாதிய சரணவ் சரணம் மதீயம்-என்று அருளிச் செய்தார் இறே ஆள வந்தாரும் .

—————————————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை –
-அவதாரிகை –
எம்பெருமானார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து அத்தாலே அவர் திருமுகத்தை
பார்த்து -தேவரீர் உடைய க்ருபா ஸ்வபாவம் இந்த லோகத்தில் யார் தான் அறிவார் என்கிறார் –

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

வியாக்யானம் –
ஜல ஸ்தல விபாகம் பாராதே வர்ஷிக்கும் மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும்
கிருபையை உடையவரே –
துக்கத்துக்கு நேரே ஆவாச பூமியே இருப்பானொருவன் நான் –
இப்படி இருக்கிற என்னை தேவரீர் தாமே வந்து ப்ராபித்து அருளின பின்பு தேவரீர் உடைய
கல்யாண குணங்களே ஆத்மாவுக்கு தாரகமாய் -அடியேனுக்கு இன்று ரசியா நின்றது-
தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை இக்கடல் சூழ்ந்த பூமியில் யார் தான் அறிவார் –
காரேய் கருணை -என்றது -கார் ஏய்ந்த கருணை என்றபடி –
ஏய்கை-ஒப்பு–

ஊமைக்கு திருவடி அருளி /கொங்கு பிராட்டிக்கு இரண்டு தடவை த்வயார்த்தம் சாதித்து அருளி /ஷீராப்தி செய்தி
/ப்ரஹ்ம ரஜஸ் /வீடு தந்தோம்-நீட்டும் இடத்தில் பரம் பொருள் / /கிரந்த நிர்மாணம் /ஆசை உடையார்க்கு எல்லாம் /
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ/ஸ்ரீ பாஷ்யம் அருளி /ஸூ கம்பீரம் –

————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை-
அவதாரிகை –
-மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும் க்ர்பையை உடைய எம்பெருமானாரே –
சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதமான இந்த பூ பிரதேசத்திலே -தேவரீர் உடைய கிருபா ஸ்வபாவத்தை
தெளிந்தவர் யார் -சகல துக்கங்களுக்கும் சாஷாதாகரமான என்னை தேவரீரே எழுந்து அருளி-
அங்கீ கரித்த பின்பு -தேவரீர் உடைய கல்யாண குணங்கள் -என்னுடைய பிராணனுக்கு பிராணனாய் –
அடியேனுக்கு ரசியாது நின்றது என்று -எம்பெருமானார் திரு முகத்தைப் பார்த்து -நேர் கொடு நேரே
விண்ணப்பம் செய்கிறார் –

வியாக்யானம் –
காரேய் கருணை –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷூ கவலாஹகம் போலே –
அனலோசித விசெஷா லோக சரண்யமான – க்ர்பை -சித்தே ததீய சேஷத்வே -சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி –என்னக் கடவது இறே –
-கார் -மேகம் ஏய்கை -ஒப்பு -இப்படிப் பட்ட க்ர்பையை உடைய -இராமானுச -எம்பெருமானாரே –
இக் கடல் இடத்திலே –
சதிஸ் சமுத்திர பரி வேஷ்டிதமான -இந்த -இருள் தரும் மா ஞாலத்திலே –
நின் அருளின் –
பர துக்க அசஹிஷ்ணுத்வ நிராசி கீர்ஷத்வாதி லஷணங்களோடு கூடி இறே கிருபை இருப்பது –
அப்படிப் பட்ட கிருபைக்கு நின் அருளின் என்று ஆஸ்ரிய ப்ராபல்யத்தாலே வந்த வெளிச் செறிப்பு
ஸ்வர்ணத்துக்கு பரிமளம் வந்தால் போலே-காணும் -இருப்பது –
தன்மை
-இப்படிப் பட்ட கிருபை ஸ்வபாவத்தை –
ஆரே அறிபவர் –
தெளிந்தவர் தான் யார் –
நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –
சார்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை
-யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி –என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும் பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –
அல்லலுக்கு –
-கர்ப்ப ஜன்மாத்யவச்தாஸ் துக்கம் அத்யந்த துச்சகம் -என்னும் படியான துக்கங்களுக்கு –
நேரே உறைவிடம் நான் –
-சாஷாத் ஆவாச பூமியாய் இருப்பான் ஒருவன்நான் – சரீர சம்பந்திகளுக்கு
வந்த துக்கங்கள் எல்லாம் தத் சம்பந்தத்தாலே -எனக்கு ப்ராப்தமானால் சிறிது இலகுவாய் இருக்கும் –
அப்படி அன்றிக்கே சாஷாத் எனக்கு வந்தது ஆகையாலே அவற்றுக்கு எல்லாம் நான் த்ர்டமான ஆஸ்ரயமாய்-இருந்தேன் -என்றபடி –
வந்து நீ –
நீ வந்து -தேவரீர் பர துக்க அசஹிஷ்ணுவாகையாலே -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய- ஆர்த்த த்வனி கேட்டவாறே
சர்வேஸ்வரன் அரை குலைய தலை குலைய வந்தால் போலே -பரம பதத்தின் நின்றும்-இவ்வளவாக எழுந்து அருளி
-என்னை
-துக்க ஆஸ்ரயமான என்னை –
உற்ற பின் –
த்வயாபி லப்த்த பகவன் நிதா நீ மனுத்த-மாம்பாத்ரம் இததயாயா -என்றால் போலே அலாப்ய லாபமாக என்னைப் பெற்றபின்பு –
உன் சீரே
-தேவரீர் உடைய கல்யாண குணங்களே – குணா நாமா கரோ மஹார் -என்றால் போலே சீர் என்னும்படியான-வாத்சல்ய சௌசீல்யாதி குணங்களை
-உயிர்க்கு உயிராய்
-ஆத்மாவுக்கு தாரகமாய் -லோகத்தில் எல்லாருக்கும் தம் தாமுடைய பிராணன் ஜீவன ஹேதுவாய் இருக்கும்
-இங்கு அப்படி அன்றிக்கே இவருடைய பிராணனுக்கு பிராணனாய்-காணும் அவருடைய சீர் இருப்பது
-அடியேற்கு
-சேஷ பூதனான எனக்கு -இன்று -இன்று -ரசஹ்யே வாயலப்த்த்வா நந்தீ பவதி -என்றும் –
சோச்நுதே சர்வான் காமான் சஹா -என்றும் –சொல்லப்படுகிற பிரம்மத்தின் உடைய கல்யாண குண அமர்த்த அனுபவமும்
-அடியார்கள் குழாம் களை-உடன் கூடுவது என்று கொலோ -என்று ததீயர் உடன் கூடிப் பண்ணக் கடவேன் என்று பிராத்தித்தபடி
தலைக் கட்டுவது பரம பதத்திலே யாய் இருக்கும் -அப்படி அன்றிக்கே எனக்கு இந்த பந்த -பத்த -தசையிலே தானே –
தித்திக்குமே –
ரச்யமாய் -ஆனந்த அவஹமாய் இருக்கும் என்று ஆய்த்து -தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித்
தித்தித்தால் போலே ஆய்த்து -என்றபடி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே – என்னக் கடவது இறே—

————————————————————————————–

பெரிய ஜீயர் அருளிய உரை
-அவதாரிகை –
அநாதி காலம் அசங்க்யாதமான யோநிகள் தோறும் தட்டித் திரிந்தநாம் இன்று-நிர்ஹேதுகமாக
எம்பெருமானரை சேரப் பெற்றோமே என்று -ப்ரீதி பிரகர்ஷத்தாலே –திரு உள்ளத்தை குறித்து அருளி செய்கிறார் –

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

வியாக்யானம் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கையாலே இரண்டு தசையிலும் கூடி நிற்கிற நெஞ்சே –
தினமாய்-மாசமாய் -சம்வத்சரங்களாய் -கொண்டு வர்த்தியா நின்றுள்ள -காலம் எல்லாம் –
தேவாதி பேதத்தாலும் -அதில் அவாந்தர பேதத்தாலும் -பரிகணிக்க ஒண்ணாதபடி -திரண்டு-பல வகைப்பட்ட -யோநிகள் தோறும் –
ஒரு கால் நுழைந்த இடத்தே -ஒன்பதின் கால் நுழைந்து-தட்டித் திரிந்த நாம்-இன்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே
-காணத் தகுதியாய் இருந்துள்ள-திருத் தோள்களை உடையராகையாலே -ரூப குணத்தாலும் உத்தேச்யராய் -நமக்கு வகுத்த சேஷிகளாய் –
தர்சநீயமான திரு வத்தியூரிலே -நித்ய வாசம் பண்ணுகையாலே -அவ்வூரைத் தமக்கு நிரூபகமாக-உடைய பேர் அருளாள பெருமாள் உடைய –
பரஸ்பர சத்ருசமான -திருவடிகளின் கீழே -பிணிப்புண்ட-சிநேகத்தை உடையரான -எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு நிற்கப் பெற்றோம் –
நிகழ்தல்-வர்த்தித்தல் / ஈண்டுதல்-திரளுதல் /யோனி-ஜாதி–

—————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
லோகத்தில் ஒருவனுக்கு ஒரு நிதி லபித்தால் தன்னுடைய அந்தரனுக்கு சொல்லுமா போலே –
இவரும் தம்முடைய பந்த மோஷங்களுக்கு எல்லாம் பொதுவான மனசை சம்போதித்து கலா முகூர்த்தாதி
ரூபமாய்க் கொண்டு வர்த்திக்கும் காலம் எல்லாம் தேவாதி தேகங்கள் தோறும் சஞ்சரித்து இவ்வளவும் போந்தோம் –
இப்போது ஒரு சாதனம் இன்றிக்கே -சுந்தர பாஹுவாய் -தமக்கு உபாகரகரான பேர் அருளாளன் திருவடிகளின் கீழே
அங்குத்தைக்கு -ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள பிரேமத்தை உடையரான எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு-
நிற்கப் பெற்றோம் கண்டாயே -என்று சொல்லி ஹ்ர்ஷ்டர் ஆகிறார் –

வியாக்யானம் –
ஆண்டுகள் நாள் திங்களாய் –
நிகழ் காலம் எல்லாம் -கலா முகூர்த்தம் க்ர்ஷ்டாச்சா ஹோராத்ரச்சா-சர்வச -அர்த்தமாசாமா சாரிதவத்சம் வத்சரஸ் சகல்பதம் -என்றும் –
நிமேஷோ மாநுஷோயோசவ் மாத்ரா மாத்ர ப்ரமாணாத –தைரஷ்டாதசபி காஷ்டாத்ரி சத்காஷ்டா கலாச்ம்ரத்தா –
நாடிகாது பிரமானே னகலா தசசபஞ்சச -நாடிகாப்யா மதத்வ்யாப்யோ-முஹூர்த்தொர்விஜச த்தம -அஹோராத்ரா முஹூர்த்தாஸ்து
த்ரிம்சன்மாசாஸ் துதைச்ததா -மாசைர்த்வாதச பிர்வர்ஷா-மகோராத்ரம் துதத்வி -என்றும் சொல்லப்படுகிற – சர்வ காலமும்
-ஆண்டுகள்-வத்சரங்கள் -நாள்-தினம் -திங்கள்-மாசம் –நிகழ்தல் -வர்த்தித்தல்
ஈண்டு பல் யோனிகள் தோறு உழல்வோம் –
தேவ மனுஷ்யாதி ஜாதிகள் -ஒவ் ஒன்றிலே தானே அநேகம் அநேகமாக-அவாந்தர ஜாதிகள் உண்டு -அவை எல்லாவற்றிலும்
ஒருக்கால் புகுந்ததிலே ஒன்பதின் கால் புகுந்து –மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே அநாதிகாலம் பிடித்து
-சஞ்சரித்து போந்தோம் -ஈண்டுதல் -திரளுதல் -யோநி-ஜாதி -உழலுகை -தட்டித் திரிகை
-மனமே –
-பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் -அறிவுக்கு பிரசவ த்வாரமான-நீ அறிந்தாய் என்று -அந்தரங்கமான மனசை சம்போதித்து அருளிச் செய்கிறார்
-ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே பிராமய மானேஸ்-ச்வகர்மபி ஜீவேது காகுலே -என்கிறபடி இவ்வளவும் சஞ்சரித்துப் போந்தோம்
-இன்று-
இப்போது-
ஓர் எண் இன்றியே –
-நான் ஒன்றை எண்ணிக் கொண்டு இராதே இருக்க –எம்பெருமானார் திருவடிகளிலே-ஒரு சைதன்ய கார்யத்தையும் பண்ணாதே இருக்க –
காண் தகு தோள் அண்ணல் –
ஆயதாஸ்ஸ சூவ்ர்த்ததாச சபாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா -என்கிறபடியே இருந்துள்ள-
திருத் தோள்களை உடையவராய் -விந்த்யாடவியில் நின்றும் காஞ்சி புரத்துக்கு துணையாக வந்து –
அஹம் ஏவ பரதத்வம் -என்று திரு கச்சி நம்பி மூலமாக உபதேசித்த உபாகாரகனாய் –
தென் அத்தியூர் –
தர்சநீயமான –நகரேஷு காஞ்சி -என்னப்பட்ட காஞ்சி புரத்திலே -ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரிஜாதம் -என்று தாமே அருளிச் செய்யும்படி
ஹஸ்த கிரியில் எழுந்து அருளி வகுத்த சேஷியான பேர் அருளப் பெருமாள் உடைய –
-கழல் இணைக் கீழ் –
-பாவனத்வ-போக்யத்வங்களுக்கு பரஸ்பர சதர்சமான திருவடிகளின் கீழே பூண்ட அன்பாளன் -சிரோ பூஷணமான-
திரு அபிஷேகத்தை அலங்கரிக்கும் அவர்களைப் போலே தம்மாலே அலங்கரிக்கப்பட்ட-பக்தி பிரகர்ஷத்தை உடையரான –
இராமானுசனை –
-எம்பெருமானாரை –
பொருந்தினமே –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே-என்றும் -ராமானுஜ பதாச்சாயா -என்றும் சொல்லுகிறபடியே பொருந்தி விட்டோம் கண்டாயே -என்று
தாம் பெற்ற வாழ்வுக்கு ஹர்ஷித்துக் கொண்டு நின்றார் ஆய்த்து –

—————————————————————————————————-

பெரிய ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை-
இப்படி உபதேசித்த விதத்திலும் ஒருவரும் இதில் மூளாமையாலே-அவர்கள் உடைய படியை அனுசந்தித்து இன்னாதாகிறார் –

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

விச்தீர்னையான பூமியில் உள்ளோர் புருஷார்த்தம் எது என்று இச்சியா நிற்பார்கள் –
சொல் நிரப்பத்தை உடைத்தாய் -அத்விதீயமாய் -இயல் இசை நாடக சம்பந்தத்தாலே-மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழும் –
ருகாதி சதுர்வேதங்களும் -அசங்யேயமான -தர்ம மார்க்கங்களான சகலமும் -அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய் –
எண்ணப் புக்கால் எண்ணித் தலைக்கட்ட வரிதான கல்யாண குணங்களை உடையவராய் –
சத்துக்களுடைய ப்ரீதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படியாய் இருக்கிற-
எம்பெருமானாருடைய -திரு நாமத்தை -நான் சொன்ன வார்த்தையை -விஸ்வசித்துக் கற்கிலர்கள் .
ஐயோ இவர்கள் அளவு இருந்தபடி என் என்று கருத்து –
எண்ணரும் சீர் -என்கிற இது நல்லாருக்கு விசெஷணம் ஆகவுமாம் –
நம்புதல்-விருப்பமுமாம் –

———————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ் பாட்டில் லோகத்தார் எல்லாருக்கும் அவருடைய அதிகார நதிகார விபாகம் பாராதே அத்யந்த விலஷணமான
உபாயத்தை உபதேசித்ததாலும் -அத்தை அத்யவசிக்க மாட்டாதே புருஷார்த்தம் எது என்று சந்தேகியா நின்று கொண்டு –
சிஷிதமான சப்த ராசியால் நிறையப் பட்டதாய் –அத்விதீயமாய் இயலும் இசையும் சந்தர்ப்பமும் கூடிய விலஷணமான
இப் பிரபந்தமும் -ரிகாதி வேத சதுஷ்டயமும் -அபரிமாய் தத் உப பிரஹமணமான தர்ம சாச்த்ரமாகிற இவற்றை
அடைவே ஆராய்ந்து இருக்குமவராய் -சத்துக்களாலே அடைவு கெட ஸ்துதிக்கும்படியாய் இருக்கிற எம்பெருமானாருடைய
திருநாமத்தை அப்யசியாதே போனார்களே என்று இன்னாதாகிறார்-

வியாக்யானம் –
அகலிடத்தோர் –
அநந்தா என்றும் விபுலா என்றும் பேரை உடைத்தான இந்த மகா ப்ர்த்வியில் உள்ள சேதனர்கள்-
எது பேறு என்று காமிப்பர்-நான் இவர்களது இழவைக் கண்டு பொறுக்க மாட்டாதே
-மந்த்ரம் யத்நேன கோபயேத்-என்கிற-சாஸ்திரத்தையும் அதிக்ரமித்து -அத்யந்த சுலபமாய் குரோர் நாம சதா ஜபேத் -என்கிறபடியே
-ததீய சேஷ தைகரஸ்-ஸ்வரூப அநு ரூபமாய் -பரம போக்யமான சதுரஷரியை உபதேசித்தாலும் -அதிலே நிஷ்டர் ஆகமாட்டாதே
அறிவு கெட்டு -பின்னையும் -நமக்கு ஓர் சரணம் எது என்று இங்கும் அங்கும்நாடி -அந்த இச்சையோடு காலம் எல்லாம் இப்படியே
வ்யர்தமாகப் போக்குகிறார்கள் -ஐயோ இவர்கள் ப்ராப்தத்தின் உடைய க்ரௌர்யம் இங்கனே யாய் தலைக்கட்டிற்று-என்று இன்னாதாகிறார்
ஆனால் அத்யயனம் பண்ணுவிக்கும் அவர்கள் மந்த மதிகளுக்கு பின்னையும் ஒரு சந்தையை சொல்லி
அவர்கள் தரிக்கும் அளவும் க்ர்ஷி பண்ணுவார்கள் இறே-அப்படியே நீரும் செய்ய வேண்டாவோ என்ன –
யச்சகிம் கிஞ் ஜகத் சர்வம் த்ர்சயதே ச்ருயதேபிவா -அந்தர்பகிச்த தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித -என்றும்-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -என்றும் பிரபாவ புரச்சரமாக
அந்த மந்த்ரத்தை உபதேஸித்தால் போலே -இவரும் தாம் முன்பு அருளிச் செய்த சதுரஷரி மந்த்ரத்தை எதிரிட்டு
பிரபாவ வர்ணன பூர்வகமாக அருளிச் செய்கிறார் –
-சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் –
சீர் தொடை ஆயிரம் -என்றும்-சடகோப வாங்மயம் -என்றும் சொல்லுகிறபடியே கோமளங்களாய்-
தத்வார்த்த நிச்சாயகங்களான சப்தங்களாலே நிறையப்பட்ட-தமிழ் என்று -திரு வாய் மொழி –
ஒரு
என்ற சப்தம் காகாஷி நியாயேன பூர்வ உத்தர பதங்களிலே அன்வயிக்கும் -லோகத்திலும்-வேதத்திலும் அதுக்கு சதர்சமான பிரமாணம் இல்லை என்ற படி –
மூன்றும் -அதுக்கு மூன்று பிரகாரமாக கணிசிக்க தக்கதாய்-அத்விதீயமான மற்ற மூவாயிரப் பிரபந்தமும்-
-இப்படி ஆழ்வார் பதின்மராலும் செய்யப்பட சமஸ்த திவ்ய பிரபந்தங்களும் –
அன்றிக்கே ஒரு மூன்று என்றது திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திரு