Archive for the ‘மூன்றாம் திருவந்தாதி’ Category

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 23, 2019

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

எம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே
முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

————

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் –

கைங்கர்யமே யாத்ரையாம் படி யாயிற்று –
அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போயிற்று என்கிறார் –

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —–2-

———————

கீழ் இவருடைய மனஸ்ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று
அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில்

கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மருவினபடி சொல்லிற்று –
அவன் இவருடைய மனசை யல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –
இப்படி தன்னுடைய மனஸ்ஸூ அவன் பக்கலிலே மருவிக் கண்டவாறே அவனும் தம்முடைய மனசிலே
அபி நிவிஷுடனாய்க் கலந்த படியை அருளிச் செய்கிறார் –

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3–

———————————–

சர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் –
கீழ் –தமக்குச் செய்த படி சொன்னார் –
இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –அது ஸ்வஜன ரஷணம் –

சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—

—————————-

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –
அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை-
அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது –அலமாப்பாலே இறே-
அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது பேச ஒண்ணாது –

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்த்துதம் ஆனவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

—————————–

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் –

கீழ்ச் சொன்ன அழகையும் அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார்

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-

——————————-

அழகு இப்படி குறைவற்ற பின்பு நாமும் இப்படி அனுபவிப்போம் என்று திரு உள்ளத்தை அழைக்கிறார் –

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து அவன் திருவடிகளிலே
நாம் அடிமை செய்து வாளும் படி வாராய் என்கிறார் –

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க்கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திக் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-

——————————————

எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

எல்லா இந்திரியங்களும் அவனை அனுசந்திக்க வேணும் என்கிறார் –

எல்லா இந்திரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–

—————————–

காண்க நம் கண் என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் –

காண்க நம் கண் -என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார்

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

—————————————-

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது –யோக்யராய்ப் பேச வேணுமே –
ஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன
நீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம் என்கிறார்
அங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ-நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன
நாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க எல்லா சம்பத்துக்களும்
தங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத் தாமே வந்தடையும் என்கிறார் –

அங்குள்ள அழகைப் பேசிப் போம் அத்தனையோ-நமக்கும் சில பேறுகள் வேண்டாவோ -என்னில் –
நாம் அவனுடைய திரு நாமங்களைச் சொல்ல உபக்ரமிக்க -எல்லா சம்பத்துக்களும் தங்களுடைய ஸ்வரூபம்
பெறுகைக்காகத் தானே வந்து அடையும் என்கிறது –

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை அனுபவிக்கும் போது அதுக்கு ஈடான நன்மைகள் வேண்டாவோ -என்ன
மேல் விழுந்து அனுபவிக்கவே எல்லா நன்மைகளும் தன்னடையே உண்டாம் -என்கிறார் –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

——————-

கூரிதான அறிவை உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார்
அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் –

அவன் திரு நாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை -அல்லாதார்க்கு துர்ஜ்ஜேயன்-என்கிறது –

கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் –

நன்கோது நால் வேதத்துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் -சங்கோதப்
பாற்கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11–

—————————–

ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில்
நான் சொல்லுகிற வழியாலே காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் –
இப் பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் –

ஒருத்தருக்கும் அறியப் போகாதோ என்னில் -இப்படி அறிவிற்கு அறியலாம் என்கிறது –

ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில்
நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி ——12-

———————————

கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று –
இதில்-அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் –
அன்றிக்கே
இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே
கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்-

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

—————————————–

அறிவென்னும் தாள் கொளுவி -என்கிற பாட்டில் படியே இந்த்ரிய ஜெயம் பண்ணுகை அரிதாய் இருந்ததீ-
பிரத்யஷத்தால் அல்லது இந்த்ரிய ஜெயம் பண்ண ஒண்ணாது
ஆனால்-எங்களுக்கும் இவனைக் கண்டு அனுபவிக்கலாமாவதொரு வழி இல்லையோ என்னில்
அசக்தர் ஆனாருக்கும் இழக்க வேண்டாத உபாயம் சொல்லுகிறது –
அவ்வருமையால் வரும் குறை தீர ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
அவன் திருவடிகளை யாஸ்ரயித்து எளிதாகக் காணலாம் -என்கிறார்
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19-
மெய்ம்மையே காண்கிற்பார் -திருக் குறும் தாண்டகம் -18-என்னக் கடவது இறே
ஸ்ரீ எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து
விஷயங்களை அகற்றுகைக்கு ஸ்ரீ உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –

அறிவு என்னும் தாள் கொளுவி-என்கிற பாட்டில் சொல்லுகிற படியே இந்திரிய ஜெயம் பண்ணி அறிகை அரிதாய் இருந்ததீ
அசக்தர் இழக்கும் அத்தனையோ என்னில் -இழக்க வேண்டாத உபாயம் சொல்கிறது –

கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது
இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது
ஆன பின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸ்ரீ திருமலையிலே
வந்து ஸூலபன் ஆனான் -ஆனபின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

———————————————-

இப்படிப் பெரியனான ஸ்ரீ சர்வேஸ்வரனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளர்ந்து அருளக் கண்டேன் இத்தனை என்கிறார்
அவன் தன்னாலே ஸ்வயம் வரிக்கப் பட்ட எனக்கு இத் துக்கம் ஒன்றும் இல்லை இறே என்கிறது –
இவருக்கு அவன் தானே யோகாப்யாசம் பண்ணி வந்தபடி-

அவனாலே ஸ்வயம் பட்டவனுக்கு துக்கம் ஒன்றும் இல்லை இறே -என்கிறது –

இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன-
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார்

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

——————————

ஸ்ரீ திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –
மனந்தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –

இப்படி வந்து தங்குகைக்கு அடி ஸ்ரீ பிராட்டியோடே இருக்கை என்கிறார் –

ஸ்ரீ திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது ஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வந்து தங்கினான் -என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று —-16–

————————————–

இப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால்
அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற
எல்லாம் ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

அவளோடு கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டு இல்லை -இனி என்னுடைய வாக்கானது
அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக –

இப்படிப்பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால்
இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் ச பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

—————————-

கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய்
இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் –
உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் –
மறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் –

உன்னுடைமையை ஒன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் –

கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து
தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் –

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

————————————

அஞ்சாது இருக்க அருள் என்றார்
அநந்தரம்-திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால்
அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ –
அன்றிக்கே –
அவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்-
யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும்
நீ பயப்பட வேண்டா என்கிறார் –

அருள் என்னும் காட்டில் அருளுமோ என்று திரு உள்ளம் விசாரிக்க -நமக்கு அருளாது ஒழியுமோ -என்கிறார் –

அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷித்தல்
அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க
அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே -நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் –

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

———————————–

அவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் –
சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே –
உன் படியை நீயே சொல்ல வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானைக் கேட்கிறார் –

அவன் தன்னை அபேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் என்கிறார் –

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20–

——————————

அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –
கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும்
ஸ்ரீ கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் –

கீழ் திரு உலகு அளந்து அருளின இடம் ப்ரஸ்த்துதம் ஆகையால் அப்படி வரையாதே பரிமாறும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொல்லுகிறார் –

அவனை ஒருவராலும் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

————————————–

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே –
அநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே
ஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் –

அவன் படி பரிச்சேதிக்கப் போகாத பின்பு அவன் தானே காட்டக் காண் என்கிறார் –

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றவர் தன் திரு உள்ளத்தைக் குறித்து -நீ முன்னம்
அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே ஸ்ரத்தை பண்ணு கிடாய் -என்கிறார் –

வடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு ——22-

———————————–

மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே –அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது –
தான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி – இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ

உபதேசம் பலித்த படி சொல்கிறது –

காண விரும்பு -என்று இவர் சொன்ன வாய் மூடுவதற்கு முன்னே -திரு உள்ளம் அவன்
திருவடிகளிலே பிச்சேறி விழுகிற படி யைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

—————————-

அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே
அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –
ஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் –

ஆசை பிறந்த பின்பு விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார்-

அபிநிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று இறுமாந்து இராதே-
நெஞ்சே -மேல் விழுந்து அவனை ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –

வருங்கால் இருநிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

————————————

இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத்
தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து இருந்தாப் போலே இருந்தது –
அத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால் உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் –

நான் சொல்லுகிறது தப்புண்டோ என்கிறார் –

அவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து நிமிர்த்து இருக்கிற திரு உள்ளத்தைக் குறித்து
அவனை நீ கிட்டி ஆஸ்ரயித்ததால் உனக்கு வருவது ஒரு குறையில்லை காண் என்கிறார் –

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

—————————–

இப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை
அவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே –
அங்கன் இன்றிக்கே
யசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது ஏன் என்னில்
ஸ்ரீ உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூலபனானான் என்கிறார் -என்னவுமாம்
தொழுதால் பழுதுண்டே என்றாரே இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே –

இப்படி கிட்டி ஆஸ்ரயித்த தம் திரு உள்ளத்தை உகந்து அருளின நிலங்களில் காட்டிலும்
அவன் விரும்பின படியை யருளிச் செய்கிறார் –

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

————————————–

பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் ஆரானும் ஒருவர் பாபபலம் புஜித்தார் உண்டு என்று இதுக்கு முன்பு
எங்கேனும் கேட்டு அறிவதுண்டோ என்கிறது –
ஒருவன் பாபபலம் புஜிய நின்று உள்ளவனை
கெடுவாய் நீ ஒரு காலும் பகவத் சமாஸ்ரயணம் பண்ணிற்று இல்லையோ –என்பார் உண்டு இத்தனை இறே –
கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ க்லேச நாசன -ஸ்ரீ விஷ்ணு தர்மம்
கெடுவாய் நீ நல்ல வழி போய்த்திலை யாகாதே -உன்னை நீ கெடுத்துக் கொள்வதே –
மித்ரா மௌபிகம் கர்த்தும் ராம ஸ்த்தானம் பரீப்சதா வதம் ச அநிச்சதா கோரம் த்வயா சௌ புருஷர்ஷப -சுந்தர -21-19-
என்னக் கடவது இறே
அனர்த்தத்தை வேண்டுவத்தைப் பண்ணிப் பரிகாரத்தில் இழிந்திலை யாகாதே –

அவன் படி இதுவான பின்பு -அவனை ஆஸ்ரயித்தும் தங்கள் பண்ணின பாபத்தின் பலம் புஜிப்பார் யுண்டோ என்கிறார் –

இப்படிப்பட்ட அவனை ஆஸ்ரயித்தவர்களில் யாரேனும் ஒருத்தர் -தங்கள் பண்ணின பாப பலம்
புஜித்தார்களாகக் கேட்டு அறிவது யுண்டோ -என்கிறார் –

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27–

—————————————

இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது
பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –
கீழ்-ஸ்ரீ வேங்கடமும் ஸ்ரீ வெக்காவும் ஸ்ரீ வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –

இவனைப் பற்றினார்க்கு பாப பலம் அனுபவிக்க வேண்டுவது பாண்டவர்கள் தங்கள்
சத்ருக்களைத் தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –

அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான் ——28-

———————————-

ஸ்ரீ யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ச்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி
அவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் –
கீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே
அச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கும் ஸ்ரீ யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது –
கீழே-மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே
இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது –
அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை–ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் –

அச்சத்துக்கு இவனுக்கு ஒப்பு இல்லாதாப் போலே ஸ்நேஹத்துக்கு ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு ஒப்பு இல்லை -என்கிறார் –

ப்ரஸ்துதையான ஸ்ரீ யசோதைப் பிராட்டி யினுடைய ஸ்நேஹ குணங்களைச் சொல்லி அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

———————————

அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் – இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் –
ஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி
ஸ்ரீ கோயில்கள் எங்கும் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

அவன் சந்நிஹிதன் ஆகையால் ஸ்நேஹித்தாள்-இப்போது நமக்கு சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்கள் சொல்லுகிறார் –

அன்று அங்கனே அவள் ஒருத்திக்கும் எளியனான நிலை எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் யுண்டாம் படி
ஸ்ரீ கோயில்களில் எல்லாம் வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

—————————————

இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய்
ஸூசீலனுமாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார்
கீழ்ச் சொன்ன ஸ்ரீ திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி –

இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார்

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான் —–31–

————————————–

இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் –

இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

—————————

இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –
இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது –

இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–

————————————

ஸ்ரீ காஞ்சி புரத்திலே பல ஸ்ரீ திருப்பதிகளிலே-நிற்பது-இருப்பது-கிடப்பதான
இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து இதுக்கடி
பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ என்று கொண்டு அஞ்சுகிறார் –
அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் -என்று
தம்முடைய நெஞ்சைக் குறித்துச் சொல்கிறார் –

ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு
திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–34–

————————————-

நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே –அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர் தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன-
மனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் –
இந்த்ரியங்கள் தான் முற்பட்டு இவர் மூட்டும் அளவாய்த்து –

நெஞ்சமே காண் என்று உபதேசித்தார் கீழ் -இந்திரியங்கள் தாம் முற்பட்டு இவரை மூட்டுமளவாயிற்று -என்கிறது –

நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்
தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

——————————-

யாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

கையனலாழி கார்க்கடல்வாய் வெண் சங்கம்
வெய்யகதை சார்ங்கம் வெஞ்சுடர்வாள் -செய்ய
படை பரவை பாழிபனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

—————————-

இப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன்
இங்கனே இருந்துள்ள நான் அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே
அவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணா நின்றான் என்கிறார் –

நாம் அடிமையில் அந்வயிக்க ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது –

இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

————————————-

இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் –

இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

————————————

இப்படி ஜகதாகாரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு
என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் –

இப்படி ஜெகதாகாரனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-
பின்பு எண் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-

————————————–

இப்படி சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –

இப்படி சர்வாதிகனானவன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

———————————–

திரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த
அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மண் ஒடுங்கத் தான் அளந்த என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே
மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

——————————-

ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு நோக்கினான் என்கிற பிரசங்கத்தாலே
ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார்

ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்
ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–

———————————-

ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் ஒருவனையும் நோக்கின அளவேயோ
ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர் என்கிறார் –
அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது என்கிறார் –

அவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் –

இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

——————————–

நெஞ்சே உபய விபூதி யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் –

நெஞ்சே -உபய விபூதி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

——————————-

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று ஸ்ரீ பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று
ப்ரஸ்துதமான வாறே அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –
அவன் நமக்கு ஸூலபனோ என்னில் – அக்குறைகள் தீர நமக்காக வன்றோ
ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனாய் ஸூலபன் ஆயத்து -என்கிறார் –

பல கதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் –என்று பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு
ஸூலபனாமோ என்னில் -நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் –

இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு
ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் –

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

———————————-

ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும்
செய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் –

ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும் அபேக்ஷித சம்விதானம்
பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் – ——46–

——————————–

தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர்
நம்முடைய விரோதிகளைப் போக்கி நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் –

தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுவான் -என்கிறார் –

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

————————————–

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ என்ன -பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

———————————–

இன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் –

இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள் அநேகம் அன்றோ -என்கிறார் –

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

————————————–

அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை என்றதே -கீழே –
அது எங்கே கண்டோம் -என்னில்
ஓர் ஆனைக்காக பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை
ஒரு நீர்ப் புழுவின் மேலே பண்ணிற்றிலனோ -என்று ஆஸ்ரித பஷ பாதத்தை யருளிச் செய்கிறார் –

ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி அவனை பக் ஷபதித்து
ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

——————————-

இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்
நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் –
ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி
ஸ்ரீ பரம பதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் –
சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷ பாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் –

இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்
நமக்கு எல்லாம் உபய பூதன் ஆவான் -என்கிறார்

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

———————————

கீழே ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப் பேசுகிறார் –
கீழே ஸ்ரீ கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே ருசி உடையாருக்கு ஸ்ரீ பரமபதம் கொடுக்கும் அத்தனையோ
என்னில் –ருசி பிறப்பிப்பானும் அவனே – என்கிறது –

கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-

——————————

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமன்னோடு போலியான ஸ்ரீ வடதள சாயியை அனுபவிக்கிறார் –
ஸ்ரீ எம்பெருமான் படி இதுவான பின்பு
மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் – துர்க் கடங்களை கடிப்பிக்க வல்லவன் என்கிறார் –

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான ஸ்ரீ வட தள சாயியை ஆஸ்ரயி என்று
தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண் அலங்கல் மாலையான் தாள் —–53-

—————————–

ஸ்ரீ வடதள சாயி வ்ருத்தாந்தத் தோடு சேரச் சொல்லலாம் படியான
ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

ஸ்ரீ வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான
ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —–54-

————————————

ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் இப்படி வத்சலனாய் உள்ளவன் உடைய அழகை அனுபவிக்கிறார் –

இப்படி ஸ்ரீ பூமிப பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

——————————

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவித்துப் போமித்தனை போக்கி இன்ன படிப் பட்டு இருக்கும்
என்று கொண்டு நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர் என்கிறார் –
பிரயோஜ்னத்திலே சொல்லில் சொல்லும் அத்தனை –

என்னுடைய ஸ்ரீ ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது –
பிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் –

இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய நம்மால்
அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

————————————

இப்படிப் பட்ட பெருமையை யுடையவனை அனுசந்திக்கும் இதுவே கிடாய் நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது என்கிறார் –
ஸ்ரீ கருடத்வஜனுமாய் ஸ்ரீ யபதியும் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –
முடியாது என்று பேசாது இராதே அவனை ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது என்கிறார் –

ஸ்ரீ கருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது –

ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் –

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

——————————-

இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே காண வேணுமே -என்ன
காணலாம் படி ஸ்ரீதிரு மலையிலே நின்றான் என்கிறார் –

அஸ்மின் மயா சார்த்தம் -என்று பிராட்டி செய்த செயலை
ஸ்ரீ திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் –

இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி
ஸ்ரீ திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் –

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

———————————-

கீழ் ஸ்ரீ கரியான் கழலே தெருள் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் –
அப்படிப் பட்ட திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவிக்கிறார் –

ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் –

ஸ்ரீ கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-
திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

————————-

உமக்கு வாழ்விலே அந்யமாகில் பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது –
விரோதி செய்த படி என் என்ன அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது என்கிறார் –

பிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் –
அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது –

உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-
அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் –

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-

———————————–

பிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ – ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன்
சம்சாரத்திலே உகந்து அருளின ஸ்ரீ திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது –
இப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில்
தம்முடைய திரு உள்ளத்தை மிகவும் ஆதரியா நின்றான் என்னும் தாத்பர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் –

பிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் -சம்சாரத்திலே உகந்து அருளின
ஸ்ரீ திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் –

பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -ஸ்ரீ பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

——————————-

ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் என்கிறார் –
கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாதரமோ – ஸ்ரீ பரம பதத்திருப்பும் மனிச்சுக்கவாய் அத்தாட்சியோடே கூடி இருப்பது
உகந்து அருளின தேசத்திலே அன்றோ என்கிறார் –

கேவலம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ -ஸ்ரீ பரம பதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட
இருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் –

ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

——————————–

இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான் சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் –
தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் – சாதக வேஷத்தையும் சித்தமான வேஷத்தையும் ஒக்க தரிப்பதே – என்கிறார் –

ஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே -இது ஒரு சீலவத்தையே -என்கிறார் –

இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

——————————

இவன் தான் –பிரயோஜனாந்தர பரராய் தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத் தன்னை அழித்துத்
கார்யம் செய்து கொடுப்பான் -என்று அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்-

பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

——————————

அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே மற்றுள்ள அவதாரங்களிலும்
ஆயாச ஹேதுவான வியாபாரங்களை யருளிச் செய்கிறார் –

அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-

—————————

தானொரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்னுமது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –
உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ
அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –

உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே
இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ -கண் வளர்ந்து
அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு ——-66-

———————————

அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய
சேர்த்தியையும் கண்டு-அலருவது-மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –
ஹிரண்யனும் பட்டு மதுகைடபர்களும் முடிந்த பின்பு கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகை அனுபவிக்கிறார் –

ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் –

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து ——67-

————————————

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது ஸ்ரீ திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா
ஸ்ரீ திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் –

இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக ஸ்ரீ திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –
ஸ்ரீ திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

—————————————

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக இப்பாட்டை அன்யாப தேசமாக நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –
அதாகிறது-ஆழ்வாரான அவஸ்தை போய் பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து அவளுடைய பாசுரத்தையும் செயல்களையும் திருத் தாயார் சொல்லுகிறாள்-

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட ஸ்ரீ திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி
தசையைப் பிராப்தராய் -அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

————————————

ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில்
அது வேண்டா-திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் -என்கிறார் –
இனி-ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை – செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை – என்கிறது –
அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம் தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக் கொள்ளும் -என்கிறது –

ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன அது வேண்டா
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

———————————–

இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபமான ஸ்ரீ திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற
ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நின்று அருளின ஸ்ரீ திருமலை வ்ருத்தாந்தத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் –

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

————————————

அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் –

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல்வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-

—————————–

இவனுடைய திருவடிகளை ஏத்தும் இதுவே கிடீர் வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

ஸ்ரீ திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-

———————————

அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில் ஸ்ரீ யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –
நமக்கு ஸ்ரீ எம்பெருமான் பக்கலிலே வலிய மூட்ட வேண்டி இருக்கும் –
இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே கலக்கமே கார்யகரமாய்த்து-என்கிறார் –

அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் ஸ்ரீ யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ -சலமே தான்
வெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

——————————

இப்படி விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணன் தனக்கு வாசஸ் ஸ்தானமாக
விரும்பி இருக்கும் ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற
ஸ்ரீ திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

——————————-

உகந்து அருளின நிலங்களில் இங்கே சந்நிஹிதன் ஆனபின்பு
இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப் பிழைத்துப் போம் இத்தனை -போக்கி
தம் தம் உடம்புகளை நோவ வருத்தி துக்கப் பட வேண்டா கிடீர் –
புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு – என்கிறார் –
ஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நிற்க
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா –என்கிறார் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷகரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா –
ஸ்ரீ வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும் தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

—————————–

கீழே-ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் –
இதில்-அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே
தங்களை முடியச் சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு
நோக்குவான் அவனே -என்கிறார் –
அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் –
இதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் –

கீழ் ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல் தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ்வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரேசகம் என்கிறார் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–77-

—————————–

நெஞ்சே விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நமக்கு ரஷகனாம் –ஆன பின்பு அவனையே
புகலாக அனுசந்திக்கப் பார் என்கிறார் –
அவன் சர்வ ரஷகன் ஆகிலும் நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில் கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன
வேண்டா -என்கிறார் –

அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய
கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது –

அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆனபின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

——————————–

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ என்னில் –
அவனை அனுசந்தித்து – சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப் போக்கலாம் -என்கிறார் –
நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச் செய்தார்கள் ஆகில் ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர் என்கிறார் –

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது –

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் –

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

—————————————–

இவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து
இந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது – என்கிறார் –

நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது –
அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் –

பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

—————————

கீழே-சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே
ப்ரவணமாய்த்து என்று கொண்டாடினார் –
விஷயத்தைப் பார்த்தவாறே-முதலடி இட்டிலராய் இருந்தார் –
அவன் துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து
இவனை இம் மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு ஹேது என்னோ -என்கிறார்
இத்தால்-தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி தமக்கு அவ் விஷயத்தில் உண்டான
ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் –
அவன் பெருமை பார்த்த போது அறிவொன்றும் இல்லையாத் தோன்றும்
புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் –

கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு ஸ்ரீ பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று
கொண்டாடினார் -விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

———————————

இது தன்னை நாம் இன்னாதாகிறது என் –
அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய் நிரதிசய போக்யனுமான பின்பு
இனி யவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த் தலை கட்ட விரகு உண்டோ என்கிறார் –

இம் மனசை இன்னாதாகிறது என் -ஒருவருக்கும் ஒருவகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய் நிரதிசய போக்யனுமாய்
இருந்த பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத் தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

————————————

அவன் ஒருக்காலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும் அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் -அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

—————————————

வேதைக சமதி கம்யனாய் உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாது –
கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை
அல்லது ஒருவரும் கண்டார் இல்லை என்கிறார் –

வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

—————————–

ஒருத்தரால் அறியப் போகாதாகில்-வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால் அறியப் போமோ-என்னில்
எல்லாரும் அடையத் திரண்டு தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று புக்கால்
பின்னையும் அவர்கள் நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

ஒருத்தரால் அறியப் போகாதாகில் -வாழ்த்துவர் பலராக என்னும் படியே பூமியில் உள்ளார் எல்லாரும்
கூடினாலும் அறியவும் ஏத்தவும் போமோ -என்னில் ஒண்ணாது என்கிறார் –

நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும் அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

———————————–

ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது –உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –
ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும் விட ஒண்ணாத படி ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும்
அது காண வேணும் என்று இருப்பாருக்கு மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் –
சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு –
அதாகிறது அவன் வடிவுக்கு போலியான பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம் என்கிறார் –

ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது -உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –

அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும் அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

————————————

பின்னையும் வடிவு அழகு தன்னை உபமான முகத்தாலே இழிந்து அனுபவிக்கிறார் –
ஸ்ரீ எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை மரகத மணி காட்டும் –
ஒப்பனையால் வந்த வடிவு அழகை சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும் என்கிறார் –

பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

——————————–

இப்படி இருக்கிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை
ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ சமாஸ்ரயநீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் –

இதர விஷயங்களில் உள்மனம் புறமானங்களை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ ஸமாச்ரயணீயனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

———————————

இப்படி சர்வ சமாஸ்ரயநீயன் ஆனவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திருமலையிலே கிடீர் -என்கிறார் –
ஸ்ரீ திருமலையில்-குறவரோடு-மூங்கிலோடு-ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற
எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி –

ஸ்ரீ திருமலையிலே குறவரோடு -ஸ்ரீ திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேசியமாய் இருக்கிறபடி –

இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது ஸ்ரீ திரு மலையிலே கிடீர் என்கிறார் –

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

——————————-

ஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேச்யமான விடத்தில் அதிலே நின்றவன்
உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே –
ஸ்ரீ திருமலையிலே நின்று அருளினவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் –
இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம் காண்கிறிலீ கோளீ என்கிறார் –

ஸ்ரீ திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில் அதில் நின்றவன்
உத்தேச்யமாக சொல்ல வேண்டா இறே என்கிறார் –

ஸ்ரீ திருமலையில் மூங்கில்களோ பாதி ஸ்ரீ திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

—————————–

ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்கிறார்
அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி காண ஒண்ணாதா போலே கிடீர்
அவன் சரித்ரம் தானும் ஒருவரால் ஓர் அவதி காண ஒண்ணாத படி என்கிறார் –

சாமானியேன ஜகத்தை யுண்டும் பிரதிகூலருடைய பிராணனையும் அனுகூலர் ஸ்பர்சித்த
த்ரவ்யத்தையும் யுண்டும் பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் –

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

—————————-

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமானை நெஞ்சே பூரணமாக நினை -என்கிறார் –
அவன் சிறைப் பட்டான் ஒருவன் என்று இராதே நம் சிறையை வெட்டி விட வல்லான் ஒருவன் என்று
புத்தி பண்ணு -என்கிறார் –

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

———————————

இப்படி இருக்கிற ஸ்ரீ எம்பெருமான் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்திலே ஒருவரும் அறிந்து
ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை –
ஆனாலும்-நெஞ்சே நீ யவனை உன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து —–93-

———————————-

இப்படி -வையம் தகளி-தொடங்கி-இவ்வளவும் வரத் தாம் பெற்ற பேற்றைச் சொல்லுகிறார் –
கீழில் பாட்டில்-நெஞ்சே உள்ளத்தே வை -என்றார் –
இப் பாட்டில் – தாம் அவனை அனுசந்தி என்ற அளவிலே அத்யபி நிவேசத்தோடே கூட
ஸ்ரீ எம்பெருமான் உள்ளே புகுந்து தம் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடியை அருளிச் செய்கிறார் –

இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

———————————-

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –
நெஞ்சே-இப்படி உபகாரகனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளிலே வணங்கி-அவனை வாழ்த்து என்று திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச்
சொல்லா நின்று கொண்டு -நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து ——95-

——————————-

நித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றமும் பொறாதே ஸுகுமார்யத்தை உடையவன் -என்கிறது –
அன்றிக்கே –
அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும் அவன் திருவடிகளிலே வணங்கித் தங்கள் அபேஷிதம் பெறுவது -என்கிறார்
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -11 -என்னக் கடவது இறே –

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் ———-96-

———————————

கீழில் படியாய்-ஸ்ரீயபதியாய்-அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே
அவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெரும் அத்தனை -அல்லது
ஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது -என்கிறார் –
அயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று என்கிறார் –

இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –

அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை ——-97-

—————————–

தன்னை ஆஸ்ரயித்தவர்கள் உடைய விரோதிகளைப் போக்குமவன் என்கிறார் –
நம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சம்சார நிவ்ருத்தியைப் பண்ணித் தருவான் ஸ்ரீ எம்பெருமான் என்றபடி –

தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –

இமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்
அமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

———————————–

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே நமக்கு பரம பிராப்யம் என்கிறார் –

ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வபாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

—————————–

ஸ்ரீ எம்பெருமான் புகலிடமாவது ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்கிறார் –

ஸ்ரீ எம்பெருமான் ஆபாஸ்ரயமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

—————————-

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———1-

அவனையே உபாயமாகப் பற்றுகையாலே சாஷாத் கரிக்கிறார் –அபாஸ்ரயமான தாயைக் காணப் பெற்றேன் –

பொன் மேனி கண்டேன் – அவளுடைய சிம்ஹாசனம் கண்டேன்

திகழும் அருக்கன் -இத்யாதி
கூட்டரவால் உள்ள புகர்ப்பு –

செரு -இத்யாதி –
தனியே குமிழி நீர் உண்ணாமே கூட்டுப் பெற்றேன்

என்னாழி வண்ணன் பால் இன்று –
முழுகுவாரைப் போலே நான் முழுகும் கடலிலே இன்று –பெரிய பிராட்டியார் கடாஷம் பெற்ற இன்று
ப்ராப்யத்ருஷ்ணை உடையவனுக்கு ப்ராபகம் வேண்டுவது –
அவனே ப்ராபகம் என்று நிலை யிட்டாருக்குத் திருஷ்ணை மிக வேண்டாவோ –
ஆறி இருக்குமவனுக்கு ஸ்வீகாரம் இல்லை —

————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குருகை காவல் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 21, 2019

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
பிரவேசம் –

கீழ் இரண்டு ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய ப்ரசாதத்தாலே ரத்னாகாரத்தைக் கண்டாப் போலே
ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமானைப் பரிபூர்ணமாகக் காணப் பெற்றேன் –என்கிறார்
இத்திருவந்தாதி ஒருவருக்கு நிலம் அல்ல –கண்டு அடைவு கெட்டுப் பேசிற்று ஆகையாலே –
ஆகையாலே அன்றோ ஸ்ரீ பேயர் ஆய்த்து-
பேயரே எனக்கு -இத்யாதி -பெருமாள் திருமொழி -3-8-
மயர்வற மதி நலம் அருளப் பெற்றது

பக்தி ரூபா பந்நமான ஸ்ரீ முதல் திருவந்தாதி –
எந்தன் அளவன்றல் யானுடைய அன்பு -இரண்டாம் திரு -100–என்கையாலே
அது பர பக்தியாய்த் தலைக் கட்டிற்று கீழில் திருவந்தாதி –
அப் பர பக்திக்கு அநந்தரம் சாஷாத் காரமாய் இறே இருப்பது
தன்னைக் காட்டிக் கொடுக்கக் கண்டேன் -என்கிறார் இதில் –

——————

முதலாமவர் -உபய விபூதி யுக்தன் -என்று அனுசந்தித்தார்
மற்றவர் அவனுக்கு வாசக சப்தம் -நாராயண சப்தம் -என்றார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேணும் -என்கிறார்

வையம் தகளி -ஞானத்தைச் சொல்லுகிறது
அதாகிறது
அவன் சேஷி என்றும்
நாம் சேஷம் என்றும் அறியும் அறிவு
அன்பே தகளி -ஞான விபாகமாய்
அது உண்டானால் உண்டாகக் கடவ பர பக்தியைச் சொல்லுகிறது
இனி அந்த பர பக்திக்கு அநந்தரம் ஆன சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது

ஸ்ரீ சேஷியுடைய ஸ்வரூபம் சொன்னார் ஸ்ரீ முதல் ஆழ்வார்
சேஷ பூதன் ஸ்வரூபம் சொன்னார் நடுவில் ஸ்ரீ ஆழ்வார்
இரண்டுக்கும் அடியான ஸ்வரூபம் சொல்லுகிறார் இவர்

ஸ்ரீ எம்பெருமான் கடல் கடைய-தேவர்கள் நடு நின்றால் போலே
முன்புற்றை ஸ்ரீ ஆழ்வார்கள் பிரசாததத்தாலே கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –

————————————————————————————————–

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து

———————————————————————————————

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

வியாக்யானம் –
திருக் கண்டேன் –
எல்லா ஐஸ்வர் யத்துக்கும் உடலான ஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் கண்டேன் –
தன்னை ஒழிந்தார் அடைய தன்னைப் பற்றி லப்த ஸ்வரூபராக வேண்டும்படி ப்ரதானையான
ஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் கண்டேன் –
இவள் கடாஷம் பெறாத போது
அவனோடு
அல்லாதாரோடு
வாசி இன்றிக்கே இருக்கும்
இந்த்ரன் தம்பியாய் அவன் பின்னே திரியச் செய்தே
அவள் பாராத போது இந்த்ரன் ஐஸ்வர்யம் நஷ்டமாயிற்று
உபாசன வேளையில் இவள் புருஷகாரமாக வேண்டினாப் போலே
சாஷாத் கார வேளையிலும் முற்பாடு உடையவள் இவள் –
யதோ உபாசனம் பலம் இறே –
தத் க்ரது நியாயம் போலே உபாசனம் ஒன்றாய் பலம் ஒன்றாய் அல்லவே இருப்பது-இரண்டும் ஒன்றாய் இறே இருப்பது-

கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -இரண்டாம் திரு -56-என்று
சாஷாத் காரத்துக்கும் அடி இவள் –

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்று ஞானத்துக்கும் அடி இவள் –

திருக் கண்டேன் –
நிரூபக தர்மமான பிராட்டியைக் கண்டேன்
பிரபையைக் கண்டு இறே ஆதித்யனைக் காண்பது –
பாஸ்கரேண பிரபா யதா -சுந்த -21-16-

பொன் மேனி கண்டேன் –
அவளும் தண்ணீர் தண்ணீர் எண்ணும்படியான நிறம் கண்டேன்
ருக்மாபம் ஸ்வனப்தீ கம்யம்
திரு உடம்பில் ஸ்லாக்யதை இருக்கிறபடி –

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
இவருடைய சேர்த்தியாலும்
பாலார்க்கன் திகழா நின்ற நிறம் கண்டேன்
இள வெய்யில் கலந்தால் போலே
புகர் மிக்க நிறமும் கண்டேன் –
சோபயன் தண்ட காரண்யம் -ஆரண்ய -38-15-
இருவருடைய ஒளியும் கலசின் படி –

திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்-
இருவருடைய சேர்த்திக்கும் என் வருகிறதோ என்று
அஸ்தானே
பய சங்கை பண்ணி
யுத்தோன் முகமாய்-கண்டார் மேல்சீறி விழுகிற திருவாழியைக் கண்டேன் –

பொன்னாழி –
தனக்குச் சிலர் பரிய வேண்டும் அழகு உடையவன்
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –என்னும் படி இருக்கிற திருவாழியைக் கண்டேன் –

புரிசங்கம் கைக் கண்டேன் –
ஸ்ரீ ஆழ்வானைப் போலே சீறி விடுகை அன்றிக்கே-எங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்துச் சீறுகிற
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கண்டேன் –
ஸ்ரீ பரதன் தம்பி யன்றோ என்று
ஸ்ரீ இளைய பெருமாளையும் அதி சங்கித்துக் கொண்டு திரியும்
ஸ்ரீ குஹப் பெருமாளைப் போலே
ஸ்ரீ திருவாழி தன்னையும் அதி சங்கை பண்ணிக் கொண்டு புகுகிற ஸ்ரீ சங்கை அழகிய கையிலே கண்டேன்
ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே
ப்ராஞ்ஜலிம் ப்ரஹ்வமா ஸீ நம் -அயோத் -4-42-என்னும்படி யாகவுமாம்-

என்னாழி வண்ணன் பால் –
எனக்கு ஸ்வம்மாய்க்
கடல் போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் பக்கல் –
அபரிச்சேத்யனானவன் பக்கலிலே
இவ்வடிவு அழகை எனக்குக் காட்டினவன் பக்கல் -என்றுமாம் –

என் ஆழி வண்ணன் –
இவருடைய கடல் இருக்கிறபடி
கடலின் உள்ளே இறே
ஸ்ரீ பிராட்டியும்
ஸ்ரீ சங்கும்
ஸ்ரீ ரத்னமும்
எல்லாம் பிறப்பது –
கலைகளும் -இத்யாதி
மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் போன்று இவர் -பெரிய திருமொழி -2-8-5-

இன்று –
அவன் காட்டக் கண்ட இன்று
இவள் புருஷ்காரமாகக் கண்டேன் இன்று
என்றுமாம் –

——————-

அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமான் புகலிடமாவது
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்கிறார் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

வியாக்யானம் –

சார்வு நமக்கென்றும் –
ஆபத்துக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் சார்வு –
ஆபத்து உள்ள போதும்-அல்லாத போதும்-என்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –
ஆத்மை வரிபுராத்மன -கீதை -6-5-என்று
நாம் தஞ்சம் அல்லாத போது ஸ்ரீ எம்பெருமான் உளன் –
அவன் ஸ்வா தந்த்ர்யத்தாலே அழன்ற போதைக்கு ஸ்ரீ பெரிய பிராட்டியார் உண்டு –

நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும்-அவனுக்கும் ஸ்ரீ பிராட்டிக்கும்
நாம் அநர்த்தம் சிந்திக்கும் இத்தனை-
அவன் சீறுபவன்-
ராகவத்தி பயம் கோரம் -சுந்தர -27-45-
ஸ்வ தந்த்ரன் சீறினால்-அவள் சார்வாகை யாவது பிரணயினி ஆகையாலே –
அவள் பிரியம் செய்து அல்லது நிற்க ஒண்ணாது –

சக்கரத்தான் –
ஸ்ரீ திரு வாழியை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ரஷணத்துக்கு பரிகரமான ஸ்ரீ திரு ஆழியைக் கையிலே யுடையவன்
எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-

தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் –
ஸ்ரீ திருத் துழாய் மாலையைத் தோளிலே யுடையனானவன் –

தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் -தான் –
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ திருத்துழாய் மாலையை யுடைத்தாய் –
மலை போலே இருக்கிற ஸ்ரீ திரு மார்வை யுடையவனான தானே –

தானே முயங்கும் –
போக உபகரணமான ஸ்ரீ திருத் துழாயை யுடையவன் தானே முயங்கும் –
முயங்குகை -தழுவுகை –
அபி நிவேசித்து சம்ஸ்லேஷிக்கும் -என்றபடி-அவள் உடம்பு கொடுத்திடும் -அத்தனை –
தான் முயங்கும் –
இப்படி இருக்கிற தான் –
அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –
அவளை -அகலகில்லேன் -என்னும் –
தாயுடைய பர்த்ரு வால்லப்யம் அடைய பிரஜைக்கு உடல் இறே –
இதுக்கு உபமானம் மேல் –

காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் –
மேகங்கள் செறிந்து இருந்துள்ள ஆகாசத்திலே மின்னினாப் போலே
கருப்புக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பதும் செய்யும் –

வண்டாமரை நெடுங்கண்-
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற உதாரமான தாமரை போலே இருக்கிற
ஒழுகு நீண்ட கண்ணை யுடையவள் –
பஸ்யதாம் சர்வதேவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-
அநாதரே ஷஷ்டி –
தயா விலோகிதா தேவா ஹரி வஷச்தலஸ் தயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-
மார்விலே இருந்து அவர்கள் புறங்கால் வீக்கம் தீரக் குளிர நோக்கினாள்-

தேனமரும் பூ மேல் திரு –
தேன் செறிந்து இருந்துள்ள பூவின் மேலே இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –

தேனமரும் பூ மேல் திரு —
நிரதிசய போக்யையான ஸ்ரீ பெரிய பிராட்டியார் –

—————————————————————————————–

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———1-

திருக்கண்டேன் –
அவனையே உபாயமாகப் பற்றுகையாலே சாஷாத் கரிக்கிறார் –

திருக்கண்டேன் –
அபாஸ்ரயமான தாயைக் காணப் பெற்றேன் –

பொன் மேனி கண்டேன் –
அவளுடைய சிம்ஹாசனம் கண்டேன்

திகழும் அருக்கன் -இத்யாதி
கூட்டரவால் உள்ள புகர்ப்பு –

செரு -இத்யாதி –
தனியே குமிழி நீர் உண்ணாமே கூட்டுப் பெற்றேன்

என்னாழி வண்ணன் பால் இன்று –
முழுகுவாரைப் போலே நான் முழுகும் கடலிலே
இன்று –
பெரிய பிராட்டியார் கடாஷம் பெற்ற இன்று
ப்ராப்ய த்ருஷ்ணை உடையவனுக்கு ப்ராபகம் வேண்டுவது –
அவனே ப்ராபகம் என்று நிலை யிட்டாருக்குத் திருஷ்ணை மிக வேண்டாவோ –
ஆறி இருக்குமவனுக்கு ஸ்வீகாரம் இல்லை —

—————————————————————————————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-

பரபக்தி பர ஞான பரம பக்தியை யுடையராய் -அத்தாலே பகவத் சாஷாத் காரத்தை யுடையராய் –
ஞான திருப்தஸ்ய யோகின -என்னும் படி தத் ஏக தாரகராய் -லோக யாத்திரையில் கண் வையாதே
அலௌகிகராய் வர்த்திக்கிற ஸ்ரீ முதல் ஆழ்வார்களில் -ஸ்ரீ மாட மா மயிலையில் அவதரித்து
மஹதாஹ்வயர்-என்னும்படி நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் -அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்–
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் -பெரிய திரு -2-10-8-ஆகையால்
ஸ்ரீ மத்தாய் அவர்களுக்குப் பாங்காக வசிக்கும் படி யான மாடங்களை யுடைத்தாய் -அத்தாலே தத் ஏக நிரூபணீயமாய் இருக்கிற
ஸ்ரீ திருக் கோவலூர் என்றபடி –
ஸ்ரீ கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம் / வூர் -தானுகந்த வூர் –
பின்புள்ளவர்க்கும் ஆஸ்ரயணீயன் ஆகைக்காக ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் எல்லாம் தோற்ற
நீயும் திரு மகளும் நின்றாயால் -இத்யாதி படியே வர்த்திக்கும் தேசம் –
அதனுள் –
இப்படி விலக்ஷணமான தேசத்துக்கு உள்ளே –விலக்ஷணராலே-அன்று எரித்த ஞானச் சுடர் விளக்குகளாலே
புற இருளும் இதயத்து இருளும் -போனவாறே -காரார் கரு முகிலைக் காணப் புக்கு -மழை முகிலே போல்வானான
அவனைப் பொலிந்து இருண்ட கார் வானில் படியே கண்டு அனுபவிக்கப் புக்கு –புர மழைக்கு ஒதுங்கினவர்க்கு
உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செலவத் திருக் கோவலூர் –பெரிய திருமொழி -2-10-10– இருக்கிறபடி –

காணப் புக்கு –
அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு –
அதனுள் காரார் கரு முகில்–
ஸ்ரீ குருங்குடியுள் முகில் போலே க்ருபாவானான மேகம் இறே –
காரார் கரு முகிலை வர்ஷூக வலாஹகம் போலே மேக காந்தியாய் இருக்கை —
காள மேகம் அன்றிக்கே -வர்ஷூக வலாஹக தர்சனத்தாலே ஒரு நிவேசனத்திலே ஒதுங்கப் புக்கு மூவரை ஒழிய மாற்றார் என்று
ஆராயும் இடத்து –என்றுமாம் -ஏவம் விதனானவனை -நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காணப் புக்கு

ஓரா –
திரு உள்ளத்திலே அவ்வனுபவம் விசதமாம் படி
ஓர்ந்து –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ்வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை -திருக் கண்டேன் -என்று தொடங்கி- பின்புள்ளவர்க்கும் பிரசித்தமாக அருளிச் செய்த
சீரான் கழலே –
இப்படி ஸ்ரீ மானை அனுபவித்தவருடைய ஸ்ரீயை யுடையரான ஸ்ரீ மானுடைய ஸ்ரீ பாதங்களே
மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் பொன்னடி -என்னைக் கடவது இறே –
உரைக் கண்டாய் நெஞ்சே உகந்து -அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்–
யத்தி மனஸா த்யாயதி தத் வாசா வத தி இறே –

நெஞ்சே உகந்து –
இப்படி ததீய சேஷத்வத்துக்கு தகுந்த நெஞ்சே -அநுஸந்திக்கும் இடத்தில் ஹர்ஷத்துடனே அனுசந்தித்து
உகந்து பணி செய்து -என்னுமா போலே தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல்-என்றார் இறே
சீரான் என்று ஸ்ரீ பகவத் சாஷாத்கார ஹேதுவான ஞான பக்தியாதி குணங்களை யுடையவர் என்னவுமாம் –
இத்தால் ஸ்ரீ பகவத் சாஷாத் காரம் யுடையராய் -அத்தை சம்சாரிகளும் அனுபவிக்கும் படி ஸ்வ ஸூக்தி முகேன பிரகாசிப்பிக்கும்
அவர்களான ஸ்ரீ மான்கள் திருவடிகள் நித்ய அனுசந்தேயம் என்றதாய்த்து –

——————————————————————————

அவதாரிகை –
உபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் ஸ்ரீ முதல் ஆழ்வார்
அதுக்கு வாசக சப்தம் ஸ்ரீ நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ நடுவில் ஆழ்வார் –
அதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் ஸ்ரீ இவ் வாழ்வார் –

ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் –
வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )

—————————————————–

பகவத் பிரசாத லப்தமான பயபக்தி ரூபா பன்ன ஞான விசேஷத்தாலே உபய விபூதி நாதனான எம்பெருமானுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரி பூர்ணமாக அனுபவித்துப் பேசினார் ஸ்ரீ பொய்கையார் –
ஸ்ரீ பூதத்தார் எம்பெருமான் அருளாலே விளைந்த பரபக்தி வையம் தகளி கேட்க்கையாலே பர ஞான அவஸ்தமாம் படி பரி பக்குவமாய்
அந்த பர ஞானத்தால் அவன் படியை ஓன்று ஒழியாமல் அனுபவித்து ஹ்ருஷ்டராய் பேசினார் –
அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே ஸ்ரீ பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித்தனி கண்டு உகக்குமா போலே
ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ சங்க ஸ்ரீ கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
ஸ்ரீ எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் ஸ்ரீ பேயார்-

உபய விபூதி உக்தன் என்றார் ஸ்ரீ பொய்கையார் –
அவனுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ பூதத்தார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார்
(-மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் அன்றோ இவர் )

—————————————————————————————————————–

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

திருக் கண்டேன்–
தர்மம் தன்னைக் கண்டேன் –
பொன் மேனி கண்டேன்–
அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்
திகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
இருவரும் சேர்ந்த சேர்த்தியாலே இள வெய்யில் கலந்தால் போலே இருக்கிறபடி –
செருக்கிளரும்-பொன்னாழி கண்டேன்–
அஸ்தானே பய சங்கை பண்ணி -வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் அலையும் பல்லாண்டு -என்கிறபடியே ஸ்ரீ திரு வாழியைக் கண்டேன் –
புரிசங்கம் கைக் கண்டேன்-
ப்ராஞ்ஜலி ப்ரஹவ மாஸீனம் -என்கிறபடியே
என்னாழி வண்ணன் பால் இன்று —–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எனக்கு காட்டினவன் பக்கலிலே –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் –ப்ரபைக்கு ஆஸ்ரயம் கண்டேன்
திகழும்-அருக்கன் அணி நிறமும் கண்டேன் –
செருக்கி–இருவரும் கலந்த கலவியாலே பிறந்த சமுதாய சோபை
கிளரும்-பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று —-கடலிலே இறே ஸ்ரீ பிராட்டியும் மற்றும் உள்ள ரத்னங்களும் எல்லாம் பிறப்பது –
இன்று –
அவன் காட்டக் கண்ட இன்று -இவர்கள் புருஷகாரமாகக் கண்ட இன்று என்றுமாம் –

——————————————————————–

உனக்கு ஸ்வம்மாய் கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் பக்கலிலே ஸ்ரீ ஆழ்வார்கள் இருவரும் காட்டக் கண்ட இன்று
தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைப் பற்றி லப்த ஸ்வரூபராக வேண்டும்படி பிரதானையான ஸ்ரீ பெரிய பிராட்டியாரைக் கண்டேன்
அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் -பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்
மரகத கிரியிலே உதித்து ஒளி விட்டுக் கிளருகிற பாலார்க்கனைப் போலே இவருடைய ஒளியும் தன்னிலே கலசி
விளங்கா நின்றுள்ள அழகிய நிறத்தையும் கண்டேன் –
இச் சேர்த்திக்கு என் வருகிறதோ என்று அஸ்தானே பய சங்கை பண்ணி
யுத்த உன்முகமாய் கண்டார் மேலே சீறி விழா நிற்பதாய் ஸ்யாமளனான அவன் வடிவுக்குப் பகைத் தொடையாம் படி
பொன் போலே நிறத்தை யுடைத்தான ஸ்ரீ திரு வாழியைக் கண்டேன் –
ஸ்ரீ திரு வாழியைப் போலே சீறி விடுகை அன்றிக்கே
எங்கே எங்கே என்று சுற்றும் முற்றும் சீறிப் பார்க்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வெறும் புறத்திலே ஆலத்தி
வழிக்க வேண்டும் படி அழகிதான் திருக் கையிலே கண்டேன் –
இன்று நிர்ஹேதுகமாக-என்னவுமாம்
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும் ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும் என்னவுமாம் –

——————————————————————————————————

ஸ்ரீ எம்பெருமான் ஆபாஸ்ரயமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்–தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் –
ஆபத்துக்கு ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ஆபத்து உள்ள போதும் எற்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் ஸ்ரீ பெரிய பிராட்டியார் -ரக்ஷணத்துக்கு உபகரணமான
ஸ்ரீ திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய் -போக உபகரணமான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய்
போக உபகரணமான ஸ்ரீ திருத் துழாயை யுடையவன் தானே -ஸம்ஸ்லேஷியா நின்றுள்ளவளான –இதுக்கு உவமானம் மேலே –
காரார்ந்த-வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு –மேகங்கள் செறிந்து இருந்துள்ள
ஆகாசத்தில் அமர்ந்த மின்னைக் காட்டா நின்று உள்ளாளுமாய்-ஆஸ்ரித ரக்ஷணத்திலே குளிர நோக்கா நின்ற
திருக் கண்களை யுடையாளாய் –
தேன் செறிந்த பூவின் மேலே இருக்கும் திரு சார்வு நமக்கு என்றும் -ஸ்ரீ பெரிய பிராட்டியார் நமக்கு எல்லா காலத்துக்கும் அபாஸ்ரயம் –

———————-

ஸ்ரீ திரு வாழியைத் திருக் கையிலே யுடையனாய் போக உபகரணமாய் சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த
ஸ்ரீ திருத் துழாய் மலையானது செவ்வி பெற்றுத் தழைத்துச் செல்லா நிற்கிற மலை போலே உறைத்து பரந்த
திரு மார்வை யுடையனான தான் அத்யபிநிவிஷ்டனாய்க் கொண்டு அநவரதம் சம்ஸ்லேஷிக்கும் படி இருக்குமவளாய் –
மேகங்கள் நிறைந்து இருந்துள்ள ஆகாசத்தில் பொருந்தின மின் போலே கறுத்த
திரு நிறத்துக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பாளாய் -ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்குகிற
உதாரமான தாமரைப் பூ போலே இருக்கிற அழகான நீண்ட திருக் கண்களை யுடையாளாய்
தேன் நிறைந்து இருந்துள்ள பூவின் மேலே எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் தன்னை ஒழிய வேறு புகல் இன்றியே
இருக்கிற நமக்கு ஆபத்து உள்ள போதோடு இல்லாத போதோடு வாசியற சர்வ காலத்திலும் அபாஸ்ரயம் –

————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

முதல் ஆழ்வார்கள் அனுபவம் / அருளிச் செயல்களில் அண்ணல் அப்பன் அண்ணன் அத்தன் -பத பிரயோகங்களின் தொகுப்பு —

January 29, 2018

பர பக்தி பர ஞானம் பரம பக்தி -மூன்றுக்கும் மூவரும்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையுமே இம் மூன்று சப்தங்கள்
ஞான தரிசன பிராப்தி நிலைகள் மூன்றையும் காட்டவே
உக்கமும் தட்டொளியும் நப்பின்னை மணாளனும் போலே இம் மூன்றும்
அக்ரூரர் யாத்திரை திருவேங்கட யாத்திரை அர்ச்சிராதி கதி இம் மூன்றும்
வையம் தகளியா -அன்பே தகளியா-திருக் கண்டேன் இம் மூன்றும் இவற்றையே காட்டி அருளும் அருளிச் செயல்கள்

பூதத்தாழ்வார் என் நெஞ்சமே யான் -நெஞ்சிலே திருக் கைகள் வைத்து நம் ஆழ்வார் போலே சேவை –
ஆழ்வார்கள் அனைவரும் உடையவர் சந்நிதியில் சேவை திருக் காஞ்சியில் /
மூவரும் மூன்று நாளும் -நடுவில் அந்த ஆழ்வார் திரு நக்ஷத்ரம் -அவருக்கு மட்டும் கிரீடம் மற்றவர்க்கு கொண்டை – /
ஸ்ரீ ரெங்கத்தில் சதயம் அன்று மட்டும் /

பூதத்தாழ்வார் -முதலில் பாகவத சேஷத்வம் -சரம் துரந்தான் தாழ் இரண்டும் யார் தொழுவார் அவர் பாதம்
தொழுவது என் தோளுக்கு சிறப்பு என்று காட்டி அருளி –
அதனால் தான் பாகவத சேஷத்வம் -இவரே முதலில் அருளிச் செய்தார் –

திருக் கடல் மல்லை பதிகம் -விசேஷமாக காட்டி அருளி திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
சிஷ்யர் ஸ்ரீ கூரத் தாழ்வான்–பெரியவர் /- ஆச்சார்யர் திருவரங்க பெருமாள் அரையர் -வைகாசி திருவதாரம் -1000-இவருக்கும் –சின்னவர்

ஆகஸ்த்யமும் அநாதி -செந்தமிழ் பாடுவார் என்று முதல் ஆழ்வார்களையே அருளிச் செய்கிறார் -என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை /-அஷ்ட புஜ பதிகம் –
சர்வாதிகம் -அருளிச் செயல் -எளிதில் -மான மேய சரமங்களில் -மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகாவே அளிக்கும் வீடு -/
தமிழ் ஆழ்வார்களுக்கு தொண்டு புரியுமே /
வரலாற்று மாற்றம் -ஸ்ரீ வைகுண்டம் -அர்ச்சை / சம்சரிதம் தமிழ் -எல்லாருக்கும் -எப்போதும்–மோக்ஷம் எளிதில் கிடைக்குமே -சொல்வதே
செம்மை இது தானே / இவர்களை வைத்தே -வித்து பீஜம் –
வேதம் உரைத்து இமையோர் வணங்கும் -வெந்திறல் வீரரின் வீரம் ஒப்பார் -ராமனாக —
ராவண வத அனந்தரம் -தேவர்கள் வணங்க -பவான் -நாராயணோ தேவா
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல்–ராமனா தேவனா -தெரிக்க மாட்டேன் —
திரு வேங்கடமுடையானோ -என்ற அர்த்தம் பெரியவாச்சான் பிள்ளை –
அனு கூலர் -கலப்பற்ற -பசும் தமிழ்-/ பெருமை வீரம் -எளிமை மூன்றும் கண்டார் கலியன் இவன் இடம் -/எளிமையும் பெருமையே –
பவான் -நாராயணோ தேவா -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா-இங்கே -உள்ளான் -/
அந்தணர் கொல் திருவிக்ரமன் -வாமனன் -குறள் உருவாய் நிமிர்ந்து -மண் அளந்த அந்தணர் —
வந்து நிமிர்ந்து -திரு விக்ரமன் -ஒரே இடத்தில் எளிமையும் பெருமையும் –
முதல் ஆழ்வார்களை சொல்லும் ஸூ சகம் -இவை இரண்டும் -/

247-பாசுரம் வாங்கிக் கொண்ட தமிழ் கடவுள் அரங்கன் –
மா பிடிக்கு முன் நின்று -பெருகு மத வேழம்-இரு கண் /தூய தமிழ் – நல் தமிழ்- செந்தமிழ் -/
அட்டபுயகரத்தேன் -கழஞ்சு மண் கேட்ட அவதாரம் இல்லை -பெண்ணை கேட்டவன் -/
எனக்காக பிச்சை -இந்திரனுக்காக இல்லையே /
திருக்கண்ண மங்கை -பெரும் புறக்கடல் –தெள்ளியார் வணங்க்கப்படும் தேவன்-7-10-4- —
இங்கும் -முதல் ஆழ்வார்களால் -மாயனை மதில் கோவல் இடை கழி மைந்தனை மிடுக்கனை
மாயனாகவும் ஆயனாகவும் –கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் /இவர்கள் தொடக்கம் தானே தெளிந்த ஞானம் –
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானம் உடையவர்கள் -/
இன்கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது -திருவாய்மொழி-7-
இன்கவி தமிழையும் – பரம கவிகள் -செந்தமிழ் பாடுவார் என்னப்படும் முதல் ஆழ்வார் -நம்பிள்ளை
மாலே- மாயப் பெருமானே -மா மாயனே என்று என்று –மாலே ஏறி -மயர்வற மதிநலம் அருளியது –
பாலேய் தமிழர் இசை காரர் பத்தர் பரவும் ஆயிரத்து பாலே பட்ட இவை பத்தும் —
அபரியாப்தமருதன் -ஆராவமுதன் -இரண்டுக்கும் வாசி உண்டே –
பராங்குச தாசர் -/ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் / பிள்ளை உறங்கா வல்லி தாசர் -கூரத் தாழ்வான
முதல் ஆழ்வார்/ திருப் பாண் ஆழ்வார் / பெரியாழ்வார் -ஒரு நிர்வாகம்
அக இருள் போக்க பொய்கை பிரான் -அன்று எரித்த திரு விளக்கு – செந்தமிழ் தன்னையும் கூட்டி -திரி -அமுதனார் -/
தத்வ ஹித புருஷார்த்தம் -மாறாமல் / தமிழ்த்தலைவன் பேயாழ்வார் -திராவிட சாஸ்த்ர ப்ரவர்த்தகர் மூலம் –
வித்திட்டவர்கள் -திருக் கண்டேன் -நமக்கு சொல்லி அருளிய நம்மாழ்வார் அன்றோ –
இசைகாரர்-சீரிய நான் மறை செம் பொருள் செந்தமிழால் அளித்த பாண் பெருமாள் –
பழ மறையின் பொருள் என்றே பரவுகின்றோம் –

——————————————-

சாது கோஷ்டியுள் கொள்ளப் படுபவரே -பரம புருஷார்த்த ம் –
ரிஷ்ய சிங்கர் -அங்க தேசம் நுழையும் பொழுது மழை பெய்தால் போலே தபோ பலம் –
கொம்பு முளைத்ததா -கேட்டார்கள் -ரிஷ்ய சிங்கர் -தலை கோட்டு முனிவர் -நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பொழியும் மழை
பரத ஆழ்வானுக்கு விசனம் தீர -முற்ற முற்ற அயோத்யா மக்கள் மகிழ்ந்து -பெருமாள் கட்டாயம் சீக்கிரம் வருவாரே –
இவர்களும் கிருஷ்ணன் உடன் கூடினால் -சம்ச்லேஷம் -மழை பொழியுமே விச்லேஷம் அனாவருத்தி

ஓங்கி -பிறர் கார்யம் செய்ய உடம்பு பணைக்குமே -உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து – –அண்டம் -அளந்த நீண் முடியன் -பனி பட்ட மூங்கில் போலே
பையத் துயின்ற பரமன் -பிறர் கார்யம் செய்வது சத்தா பிரத்யுக்தம் -ஆர்த்த நாதம் இவனுக்கு ஓங்க காரணம் -வளர்ந்த சடக்கு -கையில் விழுந்த நீரும்
பிரம்மா விட்ட நீரும் ஒக்க விழுந்ததே -சென்னி மேற ஏறக் கழுவிய நீரும் –
உலகளந்த -இருந்ததே குடியாக குணாகுணம் நிரூபணம் பாராமல் -ஏக் தேசம் இன்றிக்கே -ரஷித்து-
அகவாயில் வியாப்தி -ஸ்வரூப வியாப்தி -உயிர் மிசை எங்கும் கரந்து-விக்ரஹமும் அப்படியே வியாப்தி -அனைவர் உடன் கலந்து
தாரகமாக நின்றான் -இங்கு -அனச்னன்- அந்ய -அங்கு -இரண்டு பறவை -உண்ணாமல் ஸ்புஷ்டியாக இருப்பான் –
ந தே ரூபம் நிஷேதம் தன்னது என்பதை தவிர்ந்து -பக்தாநாம் – நாம் அஹம் அபி என் உடைமையும் உன் சக்கரப்படை ஒற்றிக் கொண்டு போலே
அவனும் ந தே ரூபம்
சர்வாதிகன் உத்தமன் -ஈஸ்வரர் காலில் -அடங்கப் பெற்றதால் உத்தமன் -திருவடி சேர்த்து மத்யமன் –
ஆசார்யர் -திருவடி வையாமல் அன்றோ நாம் கைங்கர்யங்கள் செய்ய முடியாமல் -அந்தராத்யாமா உடன் ஒக்கும்

பேர் -அம்மா என்னுமா போலே –
சித்தி -அஹங்காரம் -துரபிமானம் -அகலப் பண்ணும் —அவன் பண்ணும் சித்தி தான் சுத்து –
தானும் தன்னை விட்டு பிறரும் கை விட்டு எம்பெருமான் கைக் கொள்ள அர்ஹனாவான்-
புண்டரீகாஷன் -திருக்கண் நோக்காலே சுத்தி –த்வயம் உத்தர வாக்கியம் சொல்லி சுத்தி பண்ணனும் –
தங்கம் ஜலத்தால் -வெள்ளி திருதீயம் மூணாவது போட்டு -சுத்தி -பித்தளை
புளியால் -மரத்துக்கு மஞ்சளால் மண் பாத்ரம் புதிதாகவே -ஊறுகாய் -இரவில் தொட மாட்டார்கள் –
எவர்சில்வர் கூடவே கூடாது –
பேர் -பெரிய -திரு நாமம் பெரியது எம்பெருமானை விட -பேய் ஆழ்வார் -மஹத்-மஹதாவ்யஹ -மகான் என்று அழைக்கப் படுகிறவர் -பட்டர் –
பெரிய மழை பேய் மழை போலே
பாடி -அன்புடன் பாடி –
உத்தமன் பேர் பாடி -நாங்கள் நம் பாவைக்கு -பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாயாம்சம் அவனே -தாரகமும் திரு நாமம் சொல்வதே
நம் பாவை –அனுஷ்டானமும் அனநுஷ்டாமனும்-விகல்பிதமாக -சாதனம் என்று கொள்ளாமல் பிராப்ய ருசிக்காக செய்பவை –
அவனே உபாயம் என்ற போதுஅனுஷ்டிக்கா விடிலும் பலன் கிட்டும் –
பொறி வண்டு -ரசாயன சேவை பண்ணுவாரை போலே இளகிப் பறித்து -உள்ளது எல்லாம் உத்தேச்யம்-

உத்தமன் -நீ பண்ணின ஓரம் பஷபாதம் -பிரமாணித்தார் பெற்ற பேறு ஆஸ்ரித்தார் விஸ்வசிக்க –கரு மாணியாய் உலகு அளந்தாய் –
தார்மிகன் -துர்பலனான கோவிந்த நாம கீர்த்தனம் -கோவிந்த புண்டரீகாஷன் -த்ரௌபதி -பிரபலனை அண்டை கொண்டு நிர்பரனாய் –
வியாசர் -அர்ஜுனனும் விச்வசித்து -துப்புடையாரை -அடைவது சோர்வுக்கு துணை -ஆனைக்கு நீ அருள் செய்தது போலே அரியது எளிதாகும் –
ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரை மால் யானை -ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் —
கழுத்திலே ஓலை கட்டி தூது போயும் மார்பிலே அம்பு ஏற்றி சாரத்தியம் பகலை இரவாக்கி சத்தியமும் செய்தும் அசத்தியம் ஆயுதம் எடுத்தும்
பொய் சொல்லியும் மெய் சொல்லியும் வார் கொத்து -எல்லை நடந்தும் -கார்யமே நிர்வாகியா நிற்கும்
சாரஜ்ஞ்ஞர் விட்டத்தில் இருப்பாரை போலே கரை காணும் காலத்தை எண்ணி இருப்பார் -உத்தமர் பேர் பாடி நன்மை –
மந்திரத்தால் –திருவிக்கிரம -ஓங்கி -உத்தமன் -வாசகம் பேர் -மந்த்ரம் சொல்லி அர்த்தம் சொல்வது -நாரணன் திண் கழல் சேர் எண் பெறுக்கு அந்நலம்
ஈறில வண் புகழ் -நாராயணன் நங்கள் பிரான் பேர் ஆயிரம் உடைய பீடு உடையான் –

———————————————————————

நான் கண்ட நல்லதுவே –உபக்ரமித்து -மதியத்தில் ஸ்ரீ வானமா மலை பதிகத்திலும் –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எம்மான் -உபஸம்ஹாரம் –
பன்றியாய் பாழியான்—திருமங்கை ஆழ்வாரும் உபக்ரமித்து -மேலே திருவிடவெந்தை பதிகம் முழுவதும்
பட்டர் இத்தை கொண்டே ஸ்ரீ வராஹாவதார மகிமை அருளினார்

———————————————-

அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யோமோஹதஸ்-
அச்யுதனாகை யாவது
குண விக்ரஹ விபூதிகளை நழுவுதல் இன்றிக்கே இருக்குமவன் என்னுதல் –
ஆஸ்ரிதரை நழுவ விடாதவன் -என்னுதல்
ஆஸ்ரித ரஷணத்தில் நின்றும் நழுவாதவன் என்னுதல் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் -என்றும்
ஆதுமில் காலத்து எந்தை யச்சுதன் அமலன் -என்றும்
அயர்வாங்கு நமன் தனக்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -என்றும்

வெண்ணெய் கடையும் பொழுது பார்க்க வில்லையே / கடை வெண்ணெய் களவு -கடைகின்ற காலத்திலேயே வெண்ணெய் ஆனந்தம்
கும் கும் இதி கிம் ப்ரமதி–அம்பா ததி மத்ய
டிம்பா நஙு பூதம் இஹ தூரம்
அம்பா நவ நீதம் இதி -கிருஷ்ண
மந்த ஹஸிதம் மாதரம்-தொல்லை இன்பத்து இறுதி –
மிடறு மழு மழுத்தோட -கையிலும் வாயிலும் வைத்து ஒட வெண்ணெய் ஓன்று மட்டுமே
இப்படி ஸ்ருஷ்டித்த பின்பே அவதரித்தான் –
தேன் குழல் நாழியில் மாவை அடைப்பது போலே வெண்ணெய் வாயில் வைத்துக் கொண்டு போடலாமே

————————————————————-

அண்ணல் அண்ணன் –திருவேங்கடம் / அண்ணன் கோயில் / திரு விண்ணகர் மேயவனே -இராமானுஜர் -நால்வரும் –
உபாயம் உபேயம் -இடர் நீக்கி கைங்கர்யம் -இரண்டுக்கும் இரண்டு சப்த பிரயோகங்கள்

குடி கெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்
வெண்ணெயும் மெத்தத் திருவயிறாற விழுங்கிய அத்தன்
பாலும் தயிரும் விழுங்கிய அப்பன்
கோபால கோளரி அத்தன்
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல்
புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல அண்ணல்
அம்மா-அப்பா -அத்தா – உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
ஆழி மழைக்கு அண்ணா / பூவைப் பூ அண்ணா /
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
வித்துவக்கோட்டு அம்மா -வித்துவக்கோட்டு அம்மானே
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்திராயே
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான்
அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம் அண்ணல்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே
ஆதியை அமுதை என்னை யாளுடை அப்பனை
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
அலை கடல் துயின்ற அம்மானை
திரு வெள்ளத்துக் குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே
எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா வென்று பேசுகின்றனர் பிறர் என்னை
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற நறையூர் நம்பீ
கண் துயிலும் தண் சேறை எம்மான் தன்னை
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
அண்டத்துப் புறத்து உய்த்திடும் ஐயனை
அரியைப் பரி கீறிய அப்பனை
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பில்லா என்னப்பா என்கின்றாளால்
ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
மூ வெழு கால் படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
அணியுருவில் திருமாலை அம்மானை அமுதத்தை
வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேன்
அத்த எம்பெருமான் –அஞ்சினோம் தடம் பொங்கத் தம்பொங்கோ
மா மழை அன்று காத்த அம்மான்
ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு
வானோர்க்காய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை
எந்தை ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக் கேணியான்
என்றும் இறவாத வெந்தை இணை யடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக என் வாய்
பொங்கி அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே
அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே
வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த அம்மானை ஏத்தாது அயர்த்து
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய் நீடு நின்று அவை ஆடும் அம்மானே
அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாயுடை அம்மான்
என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா
பொழில் ஏழும் உண்ட எந்தாய்
ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தன்னை
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய் யான் உன்னை அங்கு வந்து அணுகிற்பனே
உலகம் எல்லாம் தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –திருவேங்கடத்து அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன்
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அநந்தனை
அரவம் ஏறி அலை கடல் அரும் துயில் கொண்ட அண்ணலை
அமரர்கட்க்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவராமினோ
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ
ஆலிலை யன்ன வசம் செய்யும் அண்ணலார்
தூவி யம் புள்ளுடையான் அடலாழி யம்மான் தன்னை
ஆற்ற நல் வகை காட்டும் அம்மானை அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
அப்பனே அடலாழி யானே
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்
அலை கடல் பள்ளி யம்மானை ஆழிப் பிரான் தன்னை
நிலம் கீண்ட அம்மானே
கை தவங்கள் செய்யும் கருமேனி யம்மானே
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை யாள்வானே
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்டு அழு கூத்த வப்பன் தன்னை
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பனுமாய் மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த வப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்
உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
என் வாய் முதல் அப்பனை என்று
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் யமர்ந்து உறையும்
யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே அடியனேன் பெரிய வம்மானே
பெரிய வப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
எங்கள் செல்சார்வு யாமுடையமுதம் இமையவர் அப்பன் என்னப்பன்
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்
அமர்ந்த நாதனை அவரவராகி அவர்க்கருள் அருளும் அம்மானை
தேனை நன்பாலைக் கன்னளை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
அல்லி யம் தண்ணம் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக் கடித் தானமே
வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்து அம்மானே
கூத்தவம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த வம்மான் மதுஸூத வம்மான்
ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான்
திருப் புலியூர் முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே
புயல் மேகம் போல் திருமேனி யம்மான் புனை பூங்கழலடிக் கீழ் சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி
களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே
அரியாய அம்மானை அமரர் பிரானை பெரியானைப் பிரமனை முன் படைத்தவனை
சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என்னப்பன் கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேனே
ஈன் தண் துழாயின் அலங்கலங்கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நிச்சயித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிதுடையன்
நாள் தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே
என் மாய வாக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்
என் கொல் அம்மான் திருவருள்கள்
அலி வண்ணன் என்னம்மான்
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன் வாழ் புகழ் நாரணன்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
காண் தகு தோள் அண்ணல் தென்னத்தியூரர்
உலகோர் எல்லாம் அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினர்
ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-91-100—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

சாமானியேன ஜகத்தை யுண்டும் பிரதிகூலருடைய பிராணனையும் அனுகூலர் ஸ்பர்சித்த
த்ரவ்யத்தையும் யுண்டும் பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் –

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய்–ஜகத்தை வயிற்றிலே வைத்தும் -பூதனையுடைய பிராணனை யுண்டும்
இரண்டாலும் அபரியாப்தனாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -இவனுக்கு வெண்ணெய் களவு காண்கையிலே ஸ்நேஹம் போரும் இ றே
-அவளுக்கு ரஷிக்கையிலும் -வெண்ணெய் களவு போயிற்று என்ற மாத்திரத்திலே இவன் முகத்திலே பையாப்பையைக் கண்டு தாயார் சீறி –
கண்ணிக்-கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் —–பல பிணை யுடைத்தான கயிற்றாலே அவள் கட்டுவதற்கு பரிஹாரம் இன்றிக்கே கட்டுண்டு இருந்தான்
-தாய் எடுத்த சிறு கோளுக்கு உளைந்து–நெய்யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள்ள நீ யுன் தாமரைக்கு கண்கள்
நீர் மல்கப் பையவே நிலையும்–முழுதும் வெண்ணெய் அளந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக்கு கையும் –
வயிற்றினோடுஆற்றா மகன் -இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ என்று பணித்தார் –

—————————————————————————-

அனுகூல பிரதிகூல விபாகமற பூமியில் உள்ளவர்களை திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும் -பிரதிகூலையான பூதனையுடைய
முலையை அவள் பிணமாய் விழும்படி அமுது செய்தும் -இவற்றால் பர்யாப்தி பிறவாமல் அனுகூலர் கடைந்து சேர்த்து வைத்த
வெண்ணெயைக் களவிலே அமுது செய்ய -பரிவுடையாளான யசோதை பிராட்டி ஸ்நேஹம் தோற்றச் சீறி
-பல முடிச்சுகளை யுடைத்தான தாம்பாலே உரைக்கப் பட்ட ஸ் வ சங்கல்பத்தாலே சர்வரையும் கட்டுவது விடுவதாய் போரும்
சர்வ சக்தியான தான் கட்டுண்டு அதுக்கு ஒரு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருந்தான்
-வயிற்றைக் கொண்டு எங்கு புகுவோம் என்று பாடாற்ற மாட்டாத பிள்ளை –

————————————————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்–பிதா புத்ரேண பித்ருமான் -என்னும்படி இல்லாமையாலே சர்வேஸ்வரனுக்கு
அலாப்ய லாபம் இறே-புத்ர லாபம் –தனக்கு இல்லாத ஒன்றிலே இ றே ஸ்நேஹாம் ஜனிப்பது
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்–சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே–நிறை செய்தேன் நெஞ்சே நினை—புத்ரனைக்
காட்டில் பவுத்ரன் பக்கல் ஸ்நேஹம் யுண்டு இ றே –ஸ்நிக்தனுமாய் பவ்த்த்ரனுமான அநிருத்த ஆழ்வானைச் சிறை செய்த சீற்றத்தால்
பாணனுடைய தோளைக் கழித்தவனுடைய திருவடிகளை -நெஞ்சே அவன் பிரதிபந்தகங்களைப் போக்க -ஸ்நேஹித்து அனுபவி –

——————————————————————–

கர்மம் அடியாக ஒருவனுக்குப் பிள்ளையாய் பிறக்குமவன் அன்றிக்கே -சர்வ லோகத்துக்கும் பிதாவான பெருமையை யுடையனாய்
-அப்ராக்ருதம் ஆகையால் பரம பூஜ்யமான திருமேனியை யுடையனாய் -அத்யாச்சர்யமான ஞானாதி குணங்களை அமைத்துக் கொண்டு
ஸ்ரீ வாஸூதேவர்க்குப் பிள்ளையாய்ப் பிறந்த கிருஷ்ணன தன்னுடைய புத்ரனுக்குப் புத்ரனாய் -அத்தாலே மிகவும் ஸ்நிக்தனாய்
இருக்கிற அநிருத்த ஆழ்வானைச் சிறையிலே வைத்த பாணாசூரனுடைய செருக்கும் அடியான தோள்கள் ஆயிரத்தையும்
அறுத்துப் பொகட்டவனுடைய திருவடிகளை -எனக்கு விதேயமான நெஞ்சே பூர்ணமாக அனுசந்திக்கப் பார்–

———————————————————————————————————————–

இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–93-

நினைத்து உலகிலார் தெளிவார் -அவனை அனுபவித்துத் தம் தாமுக்கு உரியராக வல்லார் யுண்டோ –
நீண்ட திருமால்-அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல்
-லோகத்தை எல்லாம் அளக்கைக்கு வளர்ந்து -அளந்த லோகத்தை ஒரு வயிற்றிலே வைத்து ஒரு பவனாய் இருபத்தொரு ஆலிலையிலே
-கனைத்துலவு-வெள்ளத்தோர் பிள்ளையாய்–சப்தித்துப் பரந்து வளரா நின்றுள்ள வெள்ளத்திலே உளனான பிள்ளையாய்
மெள்ளத் துயின்றானை-உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–வயிற்றிலே புக்க லோகம் தளராத படிக்கு ஈடாக
மெள்ளக் கண் வளர்ந்தவனை —உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து-கொடு வருகை யாவது -அவன் புகுரப் புக்கால் விளக்காது ஒழிகை –

———————————————————————–

சர்வ பிரகாரத்தாலும் அபரிச்சேதயனான ஸ்ரீ யபதியாய் -இப்படி இருந்து வைத்து -சகல லோகங்களையும் திரு வுதரத்திலே
ஏக தேசத்திலே அடக்கி வைத்து ஒரு பவனாய் இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே கோஷித்துக் கொண்டு கண்ட இடம் எங்கும்
தடையற சஞ்சரிக்கிற பிரளயத்தில் அத்விதீயமான முக்த சி ஸூ விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு வயிற்றிலே புக்க
பதார்த்தத்துக்கு ஓர் அலசு வராதபடி மெள்ள கண் வளர்ந்து அருளினவனை -நமக்கு இவன் அல்லது தஞ்சம் இல்லை என்று
அனுசந்தித்து லோகத்தில் கலங்காமல் அறிய வல்லார் ஒருவரும் இல்லை -ஆனாலும் நெஞ்சே இப்படி இருக்கிறவனைக் கொடு வந்து
உன் ஹிருதயத்திலே வை -அவன் புகுரப் புக்கால் விலக்காதே கிட்டி அநுஸந்தி -என்றபடி
-அன்றிக்கே நீண்ட திருமால் அனைத்து உலகும் உள்ளொடுக்கி என்றாய் -லோகத்தை எல்லாம் அளக்கைக்காக வளர்ந்த ஸ்ரீ யபதியாய்
-அளந்த லோகத்தைத் திரு வயிற்றிலே வைத்து ஆலின் மேலே மெள்ளத் துயின்றானை என்றுமாம் –

——————————————————————————————————–

இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி–உணர்வு ஆகிற –தைலவர்த்திகளால் யுண்டான அழுக்கு இன்றிக்கே-
திணுங்கின தேஜஸ்ஸை -ஒளி விளக்கு ஏற்றி –
உய்த்து – வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -கொடு வந்து வைத்து அநு சந்தித்து ஆனுகூல்யம் ஆகிற வலையிலே அகப்பட்டு
மெத்தனவே-நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்-பொன்றாமல் மாயன் புகுந்து —–விச்சேதம் இன்றிக்கே
என்னுடைய நெஞ்சிலே நிற்பது இருப்பது கிடப்பது ஆனான் -பொன்றாமை -என்றது நான் நசியாமல் -என்னவுமாம்
-ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் இன்றிக்கே என்றுமாம் –

————————————————————
ஞானம் ஆகிற தைலவர்த்திகளால் யுண்டான அழுக்கு இன்றிக்கே செறிந்த ஒளியை யுடைத்தான விளக்கை ஏற்றி
அவனைக் கொண்டு வந்து வைத்து -தத் ஸ்வபாவங்களை ஆராய்ந்து அனுசந்தித்து -ஆனு கூல்யம் ஆகிற வலையிலே
தப்ப ஒண்ணாத படி சேர்த்துக் கொண்டேன் -அநந்தரம் ஆச்சர்ய பூதனானவன் நான் நசித்துப் போகாத படியாக
என் ஹ்ருதயத்தில் வந்து புகுந்து மெள்ளக் கொண்டு கால் பாவி தரித்து நின்றான் -புறம்பு போக்கு இல்லை என்று
தோற்ற வாசனை பற்றுண்டாய் இருந்தான் -பின்னை படுத்த படுக்கை கொட்டுப் படாமல் பள்ளி கொண்டு அருளினான்
-பொன்றாமை என்று ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் வாராத படி என்றுமாம் –

————————————————————————————————-

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச்
சொல்லா நின்று கொண்டு -நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——95-

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் –ஹிரண்யன் வரம் கொள்ளாத ஸந்த்யையிலே
-புகுந்து இலங்கும் என்றது -ஸந்தையினுடைய பிரவேசத்தைச் சொல்லுகிறது –
அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —சுகிர்ந்தெங்கும்-சிந்தப் பிளந்த-ஆஸ்ரித விரோதி யாகையாலே கொன்றது
என்ற மாத்திரம் அன்றிக்கே சீற்றத்தின் உரம் இருந்த படி –
திருமால் திருவடியே–ஆஸ்ரிதர் பக்கல் ஓரத்துக்கு அடி பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –
திருமால் திருவடியே வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——வந்திகைக்கும் விஷயம் அவளோடு கூடினவன் போலே –

——————————————————————

வந்து பிரவேசியா நிற்பதாய் செக்கர் வண்ணத்தால் வந்த ஒளியை யுடைத்தாய் -அசூரர்க்குப் பலம் வர்த்தித்துச் செல்லக் கடவதான
சந்த்யா சமயத்திலே -அவன் வரத்துக்குள் அடங்காத நர சிம்ம ரூபியாய்க் கொண்டு நிர் நிபனந் தனமாகத் தன்னையும்
ப்ரஹ்லாதனையும் பஹு முகமாக நிந்தித்த அஸஹ்ய அபசாரத்தை யுடையனான ஹிரண்யாசூரனுடைய வர பலாதிகளால்
வளர்ந்த சரீரத்தை -சீற்றத்தின் மிகுதியால் -சின்னம் பின்னம் -என்கிறபடியே பல கூறாக வகிர்ந்து
சர்வ பிரதேசத்திலும் சிதறி விழும்படியாகப் பிளந்து பொகட்ட ஸ்ரீயபதியானவனுடைய திருவடிகளை
-என் கருத்திலே நடக்கும் நெஞ்சே -தலையால் வணங்கி வாயார மங்களா சாசனம் பண்ணு -அந்தித்துப் பொழுதத்து
இலங்கும் அரியாய்ப் புகுந்து என்றாய் -சந்த்யா காலத்திலே ஒளியை யுடைத்தான நரசிம்ஹமமாய் புகுந்து என்றுமாம் –
-திருமால் என்று ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு அடி அவ்ளோட்டைச் சேர்த்தி என்கை –

———————————————————————————————————-

நித்ய ஸூ ரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –

நித்ய ஸூ ரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்
அடித்தாமரை யாமலர் ———-96-

-கேழ்ந்த-அடி–பெருத்த தாளை யுடைய
தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்-அடித்தாமரை யாமலர் —திருவடிகள் ஆகிற தாமரைப் பூக்கள்
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்-தாழ்த்தி வணங்கத் தழும்பாமே — வாயாலே வாழ்த்தி மணிகள் அழுத்தின
கிரீடத்தை தாழ விட்டு வனக்குப்பதால் தழும்பு ஏறிக் கிடக்கின்றனவே –

—————————————————————————————————————–

இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான்   ஆமோ இமை ——-97-

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய-மலரெடுத்த மா மேனி மாயன் –அலரைக் காட்டா நின்ற திரு நாபியை யுடையனாய்
–எழிலை யுடைத்தாய் இருந்துள்ள மலர் காட்டா நின்ற திரு மேனியை யுடைய ஆச்சர்ய பூதன்
அலரெடுத்த-வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு-எண்ணத்தான்   ஆமோ இமை –
-இந்த்ராதிகளுக்கும் அவனை மநோ ரதிக்கத் தான் போமோ -இமை -விசாரி -சற்றுப் போது என்றுமாம்

——————————————————————-

சகல ஜகத் யுதபத்தி காரணமான தாமரைப் பூவை தோற்றுவியா நிற்கிற திரு நாபியை யுடையனாய் -அழகை யுடைத்தான
பூவை பிரகாசிப்பிக்கிற அதி ஸூ குமாரமான கறுத்த திருமேனியை யுடைய ஆச்சர்ய பூதனான அவன் இடையாட்டத்தில்
பூவைத் தெரிவிப்பிக்கிற நல்ல நிறத்தை யுடைய இந்திரன் சிலாக்யமான திரு நாபீ கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா
-தாழ்ந்த ஜடையை யுடையனான ருத்ரன் என்று பிரசித்தரான இவர்களுக்கு நெஞ்சால் தான் நினைக்கத் தான் போமோ
-இது ஒக்குமோ ஒவ்வாதோ என்று விசாரித்துப் பார் -சற்றுப் போது என்றுமாம்
-அலர் எடுத்த உந்தியான் எழிலாய மலர் எடுத்த மா மேனி ஆயன் அங்கு -அவன் இடையாட்டத்திலே -என்றுமாம் –

——————————————————————————————————–

தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –

இமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்
அமஞ்சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

அமம் சூழ்ந்து -பருமன் உயர்த்தி வேகத்தாலும்-கீழ்ப் படுத்தி வியாபித்து –
துரகத்தை-குதிரை வடிவு கொண்டு வந்த கேசி என்னும் அசுரனை –

இமம் சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்-அமஞ்சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு–ஹிமவானிலும்
வாயுவின் பக்கலிலும் அமைத்துப் பரந்து அற பிரகாசித்துத் தோன்றுகிற துரகத்தைத் தொட்டு வாய் பிளந்தான்
நமஞ்சூழ்-நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்–துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —-கேசியை ஆஸ்ரித விரோதி என்று
கை தொட்டுப் பிறந்தவன் நமனாலே சூழ்க்கப் பட்டு உள்ள நரகத்திலே நம்மைக் கிட்டாமல் காக்குமவன் –

————————————————————————–

பனியால் சூழப் பட்டு இருக்கிற பர்வதமும் -சர்வத்துக்கும் அவகாச பிரதமான பெரிய ஆகாசமும் -வாயுவும் -சகல பதார்த்தங்களிலும்
வியாபித்து நிற்குமவனாய் இருந்து வைத்துக் கண் காண வந்து அவதரித்து -ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
மிகவும் உஜ்ஜவலமான குணங்களை யுடையனாய்க் கொண்டு பிரகாசிக்குமவனாய் -பத்தும் பத்தாக நம்மாலே
சூழ்த்துக் கொள்ளப் பட்ட சம்சாரம் ஆகிற நரகத்திலே நம்மைக் கிட்டாதபடி ரக்ஷிக்குமவன் -கேசியாகிற குதிரையைப் பிடித்து
வாயைக் கிழித்துப் பொகட்ட கிருஷ்ணன் -அன்றிக்கே எம வஸ்யத்தை தவிராத படியான சம்சாரத்தில் நம்மைக் கிட்டாத படி
காப்பான் என்னவுமாம் -அற விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் என்று குதிரைக்கு விசேஷணம் ஆகவுமாம்
-அப்போது மிகவும் பிரகாசித்தது தோற்றுகிற குதிரை வாயைக் கிழித்துப் பொகட்டான் என்று பொருளாகக் கடவது –

—————————————————————————————————–

ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ் வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான்  அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்-அட்ட புயகரத்தான்  அந்நான்று–ஏதேனும் ஒரு ஆயுதத்தைத் தொட்டால் அவ்வாயுதத்தால்
எதிரிகளுக்கு தோலாதே-வெற்றியை யுடையனாய் திரு அட்ட புயகரத்திலே நின்றவன் –
குட்டத்துக்-கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்-தாள் முதலே நங்கட்குச் சார்வு -த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
என்னும் படியே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவினவனுடைய திருவடிகளே நமக்கு அபாஸ்ரயம் –

——————————————————————–

எடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும் போரிலே தோலாதே எதிரிகளை மூலமற மாய்த்து -வெற்றியை யுடையனாய் இருக்கும் ஆண் பிள்ளையாய்
-இந்த வடிவோடும் மிடுக்கோடும் எட்டா நிலத்திலே இருக்கை யன்றிக்கே -திரு அட்ட புயகரத்திலே சந்நிஹிதனாய் –
-ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் ஆபன்னனான அத்தசையிலே மடுவில் முடிக்கும் ஸ்வ பாவமான முதலையானது உருவழிந்து சிதிலமாம் படி –
-அவ்வாபத்திலும் கலங்காத ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே இலக்குத் தப்பாத படி எறிந்த திரு வாழியை
யுடையவனுடைய பாத மூலமே ப்ராப்ய ருசி பரவசரான எங்களுக்கு பரம ப்ராப்யம் -அன்றிக்கே ஸ்வ ரக்ஷணத்திலே அசக்தரான எங்களுக்கு
-த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்கிறபடியே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவின சிவந்த திருவடிகளே
சஹாயாந்தர நிறபேஷமான உபாயம் என்னவுமாம் –

————————————————————————————————————

எம்பெருமான் ஆபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்–தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் –ஆபத்துக்கு சர்வேஸ்வரன் –
-ஆபத்து உள்ள போதும் எற்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் -ரக்ஷணத்துக்கு உபகரணமான
திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய் -போக உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய்
-போக உபகரணமான திருத் துழாயை யுடையவன் தானே -ஸம்ஸ்லேஷியா நின்றுள்ளவளான –இதுக்கு உவமானம் மேலே –
-காரார்ந்த-வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு –மேகங்கள் செறிந்து இருந்துள்ள
ஆகாசத்தில் அமர்ந்த மின்னைக் காட்டா நின்று உள்ளாளுமாய்-ஆஸ்ரித ரக்ஷணத்திலே குளிர நோக்கா நின்ற
திருக் கண்களை யுடையாளாய் –
-தேன் செறிந்த பூவின் மேலே இருக்கும் திரு சார்வு நமக்கு என்றும் -பெரிய பிராட்டியார் நமக்கு எல்லா காலத்துக்கும் அபாஸ்ரயம் –

——————————————————————-

திரு வாழியைத் திருக் கையிலே யுடையனாய் போக உபகரணமாய் சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த
திருத் துழாய் மலையானது செவ்வி பெற்றுத் தழைத்துச் செல்லா நிற்கிற மலை போலே உறைத்து பரந்த
திரு மார்வை யுடையனான தான் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு அநவரதம் சம்ஸ்லேஷிக்கும் படி
இருக்குமவளாய் -மேகங்கள் நிறைந்து இருந்துள்ள ஆகாசத்தில் பொருந்தின மின் போலே கறுத்த
திரு நிறத்துக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பாளாய் -ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்குகிற
உதாரமான தாமரைப் பூ போலே இருக்கிற அழகான நீண்ட திருக் கண்களை யுடையாளாய்
-தேன் நிறைந்து இருந்துள்ள பூவின் மேலே எழுந்து அருளி இருக்கிற பெரிய பிராட்டியார் தன்னை ஒழிய வேறு புகல் இன்றியே
இருக்கிற நமக்கு ஆபத்து உள்ள போதோடு இல்லாத போதோடு வாசியற சர்வ காலத்திலும் அபாஸ்ரயம் –

————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-81-90—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று
கொண்டாடினார் -விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

நெஞ்சால் நினைப்பரியனேலும் –நெஞ்சமே உன்னால் நினைக்கப்போகாதது ஆகிலும் –
நிலைப் பெற்றேன்- நெஞ்சமே பேசாய்–நிலை பெற்று என் நெஞ்சமே பேசாய் -ஐஸ்வர்யம் கன்று பிற்காலியாதே அனுபவியாய் –
நினைக்கும் கால் -நெஞ்சத்துப்பேராது நிற்கும் பெருமானை -ஒரு கால் நினைக்கில் நாக்குண்டா நா எழா என்ற நெஞ்சு
விட்டுப் போக அறியாத சர்வேஸ்வரனை -கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் -என்கிறபடியே
என் கொலோ- ஓராது நிற்பது உணர்வு —–அவனை நினையாதே மணலை முக்கப் பார்க்கிறதோ
-அவனை நினையாதே தான் உண்டாம் படி எங்கனே -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு —

—————————————————————————-

பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான மனஸ்ஸாலே பரிச்சேதித்து நினைக்க ஒண்ணாத பெருமையை யுடையனாய் இருந்தானேயாகிலும்
-அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே ஆஸ்ரித ஸூ லபன் என்று அனுசந்தித்து காலூன்றி தரித்து நின்று
எனக்கு பவ்யமான நெஞ்சே -அவனைப் பேசப் பாராய் -இப்படிச் சொன்ன இடத்திலும் திரு உள்ளம் மெத்தென்று இருந்தவாறே
தனக்குப் பாங்கான சமயத்திலே இவன் ஒரு கால் நினைத்துக் கை வாங்கினால் பின்னை எப்போதும் நெஞ்சு விட்டுப் போக மாட்டாமே
நித்ய வாசம் பண்ணும் சர்வேஸ்வரனை அறிவுக்கு வாய்த்தலையான மனஸ்ஸானது அநுஸந்தியாதே இருக்கிறது என்னோ
-வேறே சில துராராத தேவதைகளை பற்ற இருக்கிறதோ -சப் தாதி விஷயங்களை பற்ற இருக்கிறதோ
-இந்த மனஸ் ஸூ எத்தை நினைத்து அவனை நினையாது இருக்கிறது -என்று ஸ் வ களமாக அனுசந்தித்தார் யாய்த்து –

————————————————————————————————————–

இம் மனசை இன்னாதாகிறது என் -ஒருவருக்கும் ஒருவகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய் நிரதிசய போக்யனுமாய்
இருந்த பின்பு இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத் தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

உணரில் உணர்வரியன் –தன்னாலும் அறியப் போகாது -இவனால் அறியப் போகாது -தனக்கும் தன் தன்மை அறிவரியானை
-ஸ்வ யத்னத்தால் காண்பார்க்குக் காணப் போகாது
உள்ளம் புகுந்து-புணரிலும் காண்பரியன் உண்மை -தானே வந்து ஹிருதயத்திலே புணர்ந்தானே யாகிலும் அவனுடைய உண்மை அறியப் போகாது
இணரணையக்-கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை-எங்கணைந்து காண்டும் இனி —
—–காண அரியன் என்று கை வாங்கப் போகாது என்கிறது -பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக -மதுவைப் பானம் பண்ணின
வண்டுகள் சப்தியா நின்ற திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை எங்கே கிட்டிக் காண்போம் இனி –

————————————————————————–

யாரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தால் அறியப் பார்க்கும் அளவில் அறிவரியனாய் இருப்பான் ஒருவன்
-இவ்வருமை தீர அவன் தானே வந்து ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்தானே யாகிலும் இவ்வளவு என்று
பரிச்சேதித்துக் காண்கைக்கு அரியனாய் இருப்பான் ஒருவன் -இது பரமார்த்தம் -இப் படியான பின்பு
பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக தேனில் வண்டுகள் வந்து கிட்டி அத்தை கழுத்தே கட்டளையாகப் பருகிச் செருக்கி
அதுக்கு போக்குவிட்டு சப்தியா நின்றுள்ள குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனை எங்கே கிட்டுக் காணக் கடவோம்
-காண்பரியன் உண்மை -என்றான போது ஒருவருக்கும் இவ்வளவு என்று அளவிட்டுக் காண அரிதான
வைலக்ஷண்யத்தை யுடையவன் என்று பொருளாகக் கடவது -இணர் -பூங்கொத்து-

——————————————————————————————————–

இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் -அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்–வர்த்தமான தசையில் -பிரக்ருதியில் சம்பந்தித்து
-மம மாயா துரத்யயா–என்னும் படி காண அரியன் ஆகிலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்-கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்-உள்ளத்தின்
உள்ளே உளன் —நெஞ்சுக்கு இனியனுமாய்த் தன்னுடைமையை மஹா பலி பக்கலிலே
வஞ்சித்தானாய்க் கொண்டு அளந்தவன் ஹிருதயத்திலே நின்று மறக்க ஒட்டான்–

——————————————————————

பகவத் ஸுலப்யத்தின் ஏற்றம் அறியாத வாய்கரையர் ஆனவர்கள் இப்போது அந்த சர்வேஸ்வரன் ஒருவராலும்
அறிய அரிய ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்கள் யாகிலும் -இப்போது அவன் ஒருவராலும் கண்டு அனுபவிக்கைக்கு
அரியனாய் இருந்தானே யாகிலும் -ஈஸ்வரன் என்று தெரியாதபடி க்ருத்ரித்மத்தாலே மஹா பலி பக்கலிலே பூமியை
நீர்ஏற்று வாங்குவாரைப் போலே அபஹரித்துக் கொண்டு ஆகாசாதிகளான லோகங்களை அநாயாசேன அளந்து கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அவன் -இப்போது பட்டது பட -என் ஹிருதயத்தினுள்ளே ஸ்தாலாந்தரம் அறியாத படி
சந்நிஹிதனாய் இரா நின்றான் -இவ்வம்சத்தை ஒருவராலும் இல்லை செய்ய ஒண்ணாது இ றே -என்கை –
இனி -என்று -இப்போது -என்றபடி -அன்றிக்கே இனியவன் என்று ஒரே சொல்லாய் அனுசந்திப்பார்க்கு
நிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –
-மாயன் -என்றது மம மாயா துரத்யயா -என்கிறபடியே தன்னுடையதான ப்ரக்ருதியாலே பந்தித்து இவர்களுக்கு
காண அரியனாய் இருக்குமவன் -என்றுமாம் -பைங்கழலான் -என்று அழகிய திருவடிகளை யுடையவன் என்றுமாம் –

———————————————————————————————————–

வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

உளனாய நான் மறையினுள் பொருளை –நிர்தோஷ பிராமண சித்தன் ஆகையால் தான் உளனாய் -வேதத்தாலே பிரதிபாதிக்கப் பட்டவனை
உள்ளத்து-உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்–கர்ம யோகத்தாலே ஞான யோகம் கை வந்து -ஞான யோகத்தாலே காண ஆசைப் பட்டாரே யாகிலும்
உளனாய-வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டார் கவி ———–யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்று ஸ்ருதி ப்ரஸித்தமான கண் அழகை யுடைய
சர்வேஸ்வரனை ஆர் காண வல்லார் -/ உகப்பார் கவி -பின்னைக் காணும் படி எங்கனே என்னில்
அவனுடைய ஸ்தோத்ரத்தை உகக்கும் அத்தனை –

—————————————————————————

ருகாதி பேதத்தாலே நாலு வகைப்பட்ட வேதத்தில் பூர்வ பாக ஸித்தமான கர்மாதிகள் போல் அன்றிக்கே
-உபநிஷத் பாக்க ஸித்தமான ரஹஸ்யார்த்த பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கிறவனை -கர்ம யோக ஸித்தமான
ஞான யோகத்தாலே யதாவாக ஆராய்ந்து ஹ்ருதயத்தில் சந்நிஹிதனாகப் பரிச்சேதித்து அறிந்தார்களே யாகிலும்
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்கிறபடியே அழகிய தாமரைப் பூ போலே நீண்ட திருக் கண்களை யுடைய
ஆச்சர்ய பூதனாய்க் கொண்டு உளனானவனை யார் தான் கண்டு அனுபவிக்கப் பெற்றார்
-கண்டாராகச் சொல்லுகிறவர்களும் இவ்விஷயத்தில் கிஞ்சித் கரித்தோமாக வேணும் என்னும் ஆசையினால்
கவியை உக்காந்தாள் அத்தனை அல்லது உள்ளபடி காணப் பெற்றார்களோ என்று கருத்து –

—————————————————————————————————————–

ஒருத்தரால் அறியப் போகாதாகில் -வாழ்த்துவர் பலராக என்னும் படியே பூமியில் உள்ளார் எல்லாரும்
கூடினாலும் அறியவும் ஏத்தவும் போமோ -என்னில் ஒண்ணாது என்கிறார் –

நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும் அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

கவியினார் கை புனைந்து-ஸ்தோத்ரத்தால் அபிமான ஸூன்யராய்த் தொழுது –
கண்ணார் கழல் போய்ச்-கண் விலக்ஷணமான திருவடிகளை அடைந்து –
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் -புவியினார்–செவி நிறைந்த கேள்வியை யுடையராய்ச் சேர்ந்தாரான பூமியில் உள்ளார் எல்லாம் –
போற்றி யுரைக்கப் பொலியுமே —–எல்லாரும் கூடிப் போற்றி உறையா நின்றால் அங்குத்தைக்கு ஏதேனும் அதிசயத்தைப் பண்ணப் போமோ –
பின்னைக்காக-ஏற்று யிரை யட்டான் எழில்–நப்பின்னை பிராட்டி கலவிக்கு பிரதிபந்தகமான வ்ருஷபங்களை அடர்த்த
ஒரு செயலையும் நடுவு அழகையும் முடியாகி சொல்லப் போமோ –

——————————————————————-

நப்பின்னைப் பிராட்டிக்கு பர தந்திரனாய்க் கொண்டு தத் சம்ச்லேஷ பிரதிபந்தகமான ரிஷபங்களுடைய ப்ராணன்களை முடித்து
பொகட்டவனுடைய மணக்கோலமும் -ஏறு தழுவின ஒரு செயலும் வாயாலே சொன்ன கவியோடே கூடிக் கொண்டு –
-கையாலே அஞ்சலியைப் பண்ணி -கண்களானவை அழகு நிறைந்துள்ள திருவடிகளிலே சென்று கிட்டி –
செவியில் நிறையும்படியான அவன் கல்யாண குணங்களில் கேள்வியை யுடைய ராய்க் கொண்டு கிட்டினாரான
பூமியில் உள்ளார் எல்லாம் மங்கள வாசகமான சப்தங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி அவர்கள்
புகழப் புகழ மேன் மேல் என சம்ருத்தமாம் அத்தனை போக்கிச் சிறிது வரையிட்டுக் காட்டுமோ-
-இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ என்றுமாம் –

—————————————————————————————————————–

ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது -உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –

அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும் அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து –எழிலை யுடைத்தான மின்னைக் கொடியாக எடுத்து
வேகத்-தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -வேகத்தை யுடைத்தான தொழிலைக் கொண்டு தானே முழங்கித் தோன்றா நின்ற கார் வானம்
எழில் கொண்ட-நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து —–ஆகளமாக நீரைப் பானம் பண்ணின காள மேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரன்
உடைய நிறம் போலே –கார் காலத்திலே மேகமானது கலந்து காட்டும் –

——————————————————————————

அழகை யுடைத்தாய் கொண்டு மின்னை த்வஜமாகத் தரித்து வேகமாகிற வியாபாரத்தை உடைத்தாய்க் கொண்டு தான்
மிகவும் கோஷித்துக் கொண்டு தோற்று கிற கார் காலத்திலே மேகமானது கண் மாற வைக்க ஒண்ணாத அழகை யுடைத்தாய்
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின காளமேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரனுடைய நிறம் போலே சேர்ந்து பிரகாசியா நிற்கும்
-எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து -என்று பாடமான போது அழகை யுடைத்தாய் இருக்கிற கார் வானம் என்று மேகத்துக்கு விசேஷணமாகக் கடவது –

——————————————————————————————————

பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

கலந்து மணியிமைக்கும் கண்ணா–நின்-மேனிமலர்ந்து மரகதமே காட்டும் –ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற
உன்னுடைய திரு மேனியை –பிரகாசியா நின்ற ஸ்ரமஹரமான மரகதமே காட்டா நின்றது –
-நலந்திகழும்-கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை-அந்தி வான் காட்டுமது –அழகு நிகழா நின்ற கொத்திலே
வண்டு அறையா நின்ற திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனை சந்த்யா ராகத்தாலே சிவந்த மேகம் காட்டா நின்றது
————————————————————————-

ஆஸ்ரித ஸூலபனானவனே-ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற உன்னுடைய திருமேனியை -ஸ்ரமஹரமான
மரகத ரத்னமானது விஸ்திருதமான பிரபையை யுடைத்தாய் கொண்டு ஸ் பஷ்டமாக பிரகாசிப்பியா நின்றது
-அழகு விளங்கா நின்றுள்ள கொத்துக்களிலே படிந்து மது பானம் பண்ணின வண்டுகள் சப்தியா நின்றுள்ள
குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனான உன்னை சந்த்யா ராகத்தை யுடைத்தான அந்த ஆகாசமானது பிரகாசிப்பியா நின்றது
-திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்திவான் காட்டும் என்றபடி -அது போல் காட்டும் என்னவுமாம் –

—————————————————————————————————————

-உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் –

இதர விஷயங்களில் உள்மனம் புறமானங்களை ஆராய்ந்து சம்சயியாதே சர்வ ஸமாச்ரயணீயனான சர்வேஸ்வரன்
திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே–பகவத் ப்ராவண்யம் நன்று விஷய ப்ராவண்யம் பொல்லாது என்று சம்சயப் படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன்–பொது நின்ற-பொன்னங்கழலே தொழுமின் -சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான
திருத் துழாயை யுடையவனுடைய திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்
முழுவினைகள்-முன்னம் கழலும் முடிந்து ——நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும் –

——————————————————————————-

சாஸ்திர ஸித்தமான பகவத் விஷயம் நல்லது -ப்ரத்யக்ஷ ஸித்தமான இதர விஷயங்கள் சாலப் பொல்லாதது -என்னும் இவ்வர்த்தத்தில்
சம்சயப்படாதே –ஐஸ்வர்ய பிரகாசமாய் தேன் நிறைந்து இருக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையவனுடைய
சர்வ ஆஸ்ரித சாதாரணமாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் இருந்துள்ள திருவடியை ஆஸ்ரயியுங்கோள்
-ஆஸ்ரயண விரோதிகளான ஸமஸ்த பாபங்களும் வியாக்த்யந்தரங்களில் கார்யகரம் ஆகமாட்டாத படி நசித்து
-தொழுவதாக ஒருப்பட்ட அளவிலே விட்டு நீங்கும் -அது நன்று இது தீது என்று ஐயப்படாதே என்று அனுபூதமான
விஷயம் நல்லது இப்போது அனுபவிக்கிற விஷயம் பொல்லாது என்று இதர விஷயங்களில்
உள்மானம் புறமானங்களைப் பார்த்து சம்சயியாதே என்னவுமாம் –

—————————————————————————————————

திருமலையிலே குறவரோடு -திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேசியமாய் இருக்கிறபடி –

இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

முடிந்த பொழுதில் குறவாணர் –சரம அவஸ்தையில் வர்த்திக்கிற குறவர்க்கு நிர்வாஹகர் –
ஏனம்-படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தங்களுக்கு பலம் இன்றிக்கே பன்றி உழுத சாலிலே அழகிய திணைகளை வித்த
தடிந்து எழுந்த-வேய்ங்கழை போய் விண் திறக்கும்–வேங்கடமே -தினை விரைக்காக வெட்டி எழுந்த
வேய்ங்கழை போய் விண்ணைத் திறக்கும் திருமலை
மேலோருநாள்-தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———பண்டு ஒரு நாள் இனிய குழலை வாயிலே வைத்து திரு வாய்ப்பாடியில்
உள்ளாரை வசீகரித்தால் போலே ஒரு மலையிலே நின்று சம்சாரிகளை வசீகரிக்க நிற்குமவன் சிலம்பு –

———————————————————————

அப்போது முடித்தார்கள் இப்போது முடித்தார்கள் என்னும் படி சரம தசை ஆபன்னரான குற வ்ருத்தர்கள் தங்கள் ஏர் பிடித்து உழ
மாட்டாமையாலும் ஜாதி உசித வ்ருத்தி தவிர ஒண்ணாமையாலும் வராஹங்களானவை தாங்கள் செருக்காலே மூங்கில்கள்
வேர் பறிந்து விழும்படி படிந்து உழுத சால்களிலே -உழுத செவ்வி போவதற்கு முன்பே அழகிய தினை களை விதைக்க
-பிற்றை நாள் பன்றிகள் சாய்த்துப் பொகட்ட மூங்கில்களை தினைக்கு களையாக ஒண்ணாது என்று அவர்கள்
வெட்டிக் களைந்த வேய் மூங்கில்கள் ஆனவை போய் ஆகாசத்தை ஊடுருவ வளர்ந்து நிற்கும்படியான திருவேங்கடமே
பண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே
வைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை / சிலம்பு -மலை –

—————————————————————————————————————-

திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில் அதில் நின்றவன் உத்தேச்யமாக சொல்ல வேண்டா இ றே என்கிறார் –

திருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த  மண் ————90-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -சிலம்பையும் செறி கழலையும் யுடைத்தாய் -கங்கையிலே விளக்கின் திருவடி போய் அண்டம் சென்று இசைப்ப
புலம்பிய தோள்-எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ-வண்டுழாய் மாலளந்த  மண் ——சங்கைஸ் ஸூ ராணாம் என்ற
தேவர்களால் திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட தோள் எட்டுத் திக்கும் சூழ இடம் போராது
-அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –

——————————————————————

திருச் சிலம்பும் செறியச் சாத்தின திரு வீரக் கழலும் சர்வோதிக்கமாக ஒக்கச் சென்று தவனிக்க -ஆகாச கங்கையில் விளக்கப்பட்ட
சிவந்த திருவடிகளானவை அண்ட பித்தியிலே தாக்க -சகல லோகங்களும் வாய் புலத்தும் படியான அழகை யுடைத்த
திருத் தோள்களானவை எட்டுத் திக்குகளையும் வியாபிக்க -அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரன் அளந்த பூமியானது அவன் தனக்கு நின்று அளக்க இடம் போதாது -இது என்ன ஆச்சர்யம் தான் –

———————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-71-80—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை அனுபவித்து இனியர் ஆகிறார் –

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி–கையை எடுத்துக் கொண்டு ஓடிக் களிறானது முகிலைக் குத்த –
ஒளிறு மருப்பொசிகை யாளி –வெண் மருப்பை முறியா நின்ற யாளி –கை எடுத்தோடி என்று யாளிக்காகாச் சொல்லவுமாம் –
-பிளிறி-விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே–யானையானது பிளிறிக் கொண்டு விழும் படிக்கு ஈடாகக் கொன்று
சினத்தாலே நின்று அதிரா நின்ற திருமலை –
மேனாள்-குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றது என்று
உகந்து நிற்கும் அவனுடைய திருமலை இ றே -திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகம் ஆகுமோ என்னில்
-அக்நீஷோமீய ஹிம்சையோ பாதி இ றே அவற்றுக்கும் –

—————————————————————-

ஆனையானது தன் துதிக்கையை எடுத்துக் கொண்டு பெரிய வேகத்தோடு சென்று மத யானை போலே எழுந்த
மா முகிலை பிரதிகஜம் என்று புத்தி பண்ணி குத்த -இத்தைக் கண்ட யாளியானது -அந்த யானையினுடைய வெளுத்த
நிறத்தை யுடைத்தான கொம்பை அநாயாசேன முறியா நின்ற கையை யுடைத்தாய்க் கொண்டு
-அது வாய் விட்டு அலறிக் கொண்டு முறிந்து விழும்படி கொன்று பொகட்டு பின்னையும் சீற்றம் மாறாத படியால்
இவ்விடம் தன்னிலே நின்று ஷூத்ர மிருகங்கள் மண் உண்ணும் படி கர்ஜியா நிற்கும் வேங்கடமே முன்பு ஒரு நாளிலே
குழக் கன்றைக் கொண்டு விளங்கனி எறிந்தவனுடைய திருமலை –

—————————————————————————————————-

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல்வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை  போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர்   கோமான் இடம் —–72-

குன்று ஒன்றினாய குற மகளிர் –திருமலைக்கு கீழ் இழியில் குடிப் பழியாம் குறவருடைய பெண்கள் /
கோல்வளைக்கை-சென்று விளையாடும் திங்கழை  போய் -குறவருடைய பெண்கள் கோல் வளையை யுடைத்தான கையாலே
சென்று விளையாடுகிற கழலானது போய் -வென்று விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர்   கோமான் இடம் —-உஜ்ஜவலமான சந்திரனை ராஹு வானது க்ரஹிக்க ஒண்ணாது என்று
வென்று சந்திரனுக்கு அந்த வியசனத்தைப் போக்கும் திருமலை பரம பதத்தில் தன்னோடு ஓக்க
-த்வி த்வாதஸ வார்ஷிகரான நித்ய ஸூ ரிகளுக்கு சேஷியானவன் இடம் –
-தீங்கிழை -என்று இவர்கள் ஊஞ்சல் ஆடுகைக்குப் பிடித்து விளையாடும் மூங்கில் ஆகவுமாம் –

————————————————————

திருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடையராய்க் கொண்டு
-வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் -ஸ்வ இச்சையால் சென்று விளையாடும் குறப் பெண்களுடைய
தர்ச நீயமான வளையை உடைத்தான கையானது -பசுமையாலும் சுற்று உடைமையாலும் ஒழுகு நீட்சியாலும்
அழகிய மூங்கில்களை வென்று அதுக்கு மேலே உஜ்ஜவலனான சந்திரனை க்ரஸிக்க ஒருப்படுகிற
ராஹுவாலே வந்த அவன் வியசனத்தைப் போக்கும் திருமலையே –சர்வ உத்தமராய் -நிரந்தர அனுபவத்தால்
நித்ய யவ்வன ஸ்வ பாவரான நித்ய ஸூ ரிகளுக்கு ஸ்வாமி யானவன் விரும்பி வர்த்திக்கும் ஸ்தானம் –
-விளையாடும் குற மகளிர் கோல் வளைக்கையானது சென்று நல்ல மூங்கில் செறிவை நீக்கிக் கிரணங்களை யுடைய
சந்திரன் இங்குப் புகுரப் பெறாமையால் உண்டான இடரை நீக்கும் என்றுமாம்
-அன்றிக்கே -அவர்கள் வளையின் ஒளி சந்திரன் ஒளி புகுரப் பெறாத மூங்கில் இருளை அறுத்து வெளி யாக்கிச் சந்திரன்
–மறுவையும் போக்கும் -என்றுமாம் -அங்கனும் இன்றிக்கே -குற மகளிர் கோல் வளைக் கையாலே ஊஞ்சல்
ஆடுகைக்காக வளைத்து விட்ட மூங்கிலானது போய் விளங்கு மதி கோள் விடுக்கும் என்றுமாம் –

——————————————————————————————————————–

திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள  நலம் ——73-

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி-இடத்திலும் வலத்திலுமாக ஏழு குதிரை பூண்ட ஆதித்யனுடைய தேரை ஒட்டி
-ஏழு பூண்ட ஆதித்ய ரதத்தை மஹா மேருவுக்கு வலமே இடமாக -மார்க்கமாக ஒட்டி என்றுமாம்
-இரவியினுடைய தேரை பாரத சமரத்திலே நடத்தி -என்றுமாம் –
வடமுக வேங்கடத்து மன்னும் -வடக்கில் திக்கில் உண்டான திருமலையிலே நித்ய வாசம் பண்ணுகிற –
குட நயந்த-கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள  நலம் ——குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை
நாவால் படைக்கும் சம்பத்து -குடக் கூத்து ஆடின இளைப்பு ஆறத் திருமலையிலே வந்து நின்றான் போலே –

———————————————————————-

மேருவுக்கு இடமாயும் வலமாயும் சஞ்சரிக்கக் கடவதாய் -ஏழு நாமத்தை யுடைத்தாய் இருப்பதாய் -ஏழு குதிரை பூண்ட
ஆதித்ய ரதத்தை தத் அந்தர்யாமியாய்க் கொண்டு ஒட்டி வடக்குத் திக்கில் பிரதானமாய் இருந்துள்ள திருமலையிலே
நித்ய வாசம் பண்ணா நின்றானுமாய் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடம் எடுத்து ஆடுகிற மநோ ஹாரி சேஷ்டிதத்தை
உடையவனாய் நின்றவனுடைய ஆபரணத் த்வனியை உடைத்தான திருவடிகளை ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் –

——————————————————————————————————-

அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ  -சலமே தான்
வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

நலமே வலிது கொல் –ஸ்த்ரீத்வ பிரயுக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே–
சலமே தான்- நஞ்சூட்டுவன் பேய்–தாய் வேஷத்தைக் கொண்டு நஞ்சூட்டுவதாக வந்த வலிய பேயானது –
நிலமே புரண்டு போய் வீழ  -நிலத்திலே புரண்டு விழும் படிக்கு ஈடாக
வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——விஷ முலை யுண்டத்துக்குப்
நலமே வலிது கொல்-அச்சமும் ஸ்நேஹமும் கூடினால் -ஸ்நேஹமே வலிதாகாதே —

———————————————————

பேய் வடிவை மறைத்துத் தாய் வடிவு கொண்டு வருகை யாகிற க்ருத்ரிமத்தாலே விஷத்தைப் புஜிப்பதாக ஒருப்பட்ட
கடின சித்தையான பூதனையானவள் பூமியிலே பிணமாய் மறிந்து போய் விழும்படியாக வெவ்விய முலையை
அமுது செய்தவனை முலையை அமுது செய்தவனை அவள் பக்கலில் நின்றும் மீட்டு யசோதை பிராட்டி யானவள்
விஷத்துக்கு ப்ரத்ய ஒளஷதமான அம்ருதத்தை புஜிப்பதாக கேட்ட இடத்திலே மோஹித்து விழாதே அவ்வளவும்
கால் நடை தந்து சென்று கிட்டித் தன்னுடைய முலையை அவன் திருப் பவளத்திலே கொடுத்தாள் –
ஆனபின்பு நம்மை இழக்க வரில் செய்வது என் என்று பயப்பட்டு மீளுகைக்கு உடலான அறிவில் காட்டிலும்
தன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –
-ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –

—————————————————————————————————–

இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்–பரந்த கொடு முடியில் கிட்டிக் கீழ் வயிறு தெப்ப-
-ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -போக்ய தையாலே மெள்ள சஞ்சரியா நின்ற சிகரத்தில் தேய்க்கையாலே
-ஒளியை யுடைத்தான சந்திரன் பக்கல் முயலை –
சேர்ந்து-சின வேங்கை பார்க்கும் திருமலையே –கிட்டிச் சினத்தாலே புலி படப் பார்க்கும் திருமலை –
ஆயன்-புன வேங்கை நாறும் பொருப்பு —–இடையர்க்கு காட்டில் மரங்களுடைய நாற்றம் சால பிரியம் இ றே –

——————————————————————

பரப்பை யுடைத்தான சிகரங்களினுடைய உச்சி இடத்திலே கீழ் வயிறு தேயும் படியாகக் கிட்டி அங்குத்தை போக்யத்தையிலே
கால் தாழ்ந்து மெள்ள சஞ்சரிக்கக் கடவனாய் -கொடு முடியில் தேய்க்கையாலே சாணையிலே இட்டால் போலே ஒளியை யுடையனாய்
இருக்கிற சந்திரன் பக்கல் யுண்டான அழகிய முயலை -கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது கிட்டித் தனக்கு
ஆமிஷமான முயலாகக் கருதி -பிடித்துக் கொள்ளுதல் -விட்டுப் போதல் செய்ய மாட்டாதே எப்போதும் பார்த்த படியே நிற்கும் திருமலையே
ஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய் ஜாதி உசிதமான தன்னிலத்திலே வேங்கைகள் நிரந்தரமாகப் பரிமளிக்கும் பர்வதம் –

————————————————————————————————-

சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
-நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷகரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா –வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை
ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும் தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–பனி நாள் மலைகளில் பொய்க்கைகளிலே புக்குக் குளித்து
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –
-விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –
மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி
உபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் -அசேதனமான கொடிய பாபங்கள் தானே
தன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ -தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –
-வருஷடி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –

——————————————————————–

பனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் -குளிர் காலத்திலே பொய்க்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்
உஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் -இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –
அவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்
-தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்
-துஷ் கர்மங்கள் அடங்க லும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ
-சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே சேதன சமாதியாலே சொல்லுகிறது —
அன்றியே மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து கை தொழுதால் தீ வினைகள் அக்காவே என்னவுமாம்
–மென்மலர் என்ற பாடமாகில் மிருதுவான மலரை -என்றதாகிறது –

———————————————————————————————————

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
-இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல் தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ்வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரேசகம் என்கிறார் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் — சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல
ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக -இவனால் நோவு பட்டாலும்
நம்முடைய பாடே இ றே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து -/ வாய்ந்த குழவியாய்–அழகிய பிள்ளையாய் -/
வாளரக்கன்-சாயுதனான ராக்ஷஸன் யுடைய
-ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
-ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

——————————————————————-

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

—————————————————————————————————

அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய
கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது –

அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆனபின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்–சர்வ சக்தி நமக்கு ரக்ஷையாம் -வலவருகே திரு வாழி பிடிக்குமவன்
போலே காணும் ரக்ஷகனாவான் -தன்னைப் புரஸ்கரித்து இ றே மா ஸூ ச -என்றது -இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்
-அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -விரோதியைப் போக்கி ரக்ஷிக்க வல்லன் என்னும் இடத்தை உபபாதிக்கிறது
-முரனுடைய ஆயுசு ஸூ ஆகிற மிடுக்கை முடிக்க வல்ல மிடுக்கன் –
சரணாமேல்-ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
-ஆழி வலவன்-அரணாம்–ஆஸ்ரயணீயன் ஆகும் -சமோஹம் சர்வ பூதேஷூ நமே த்வேஷயோ அஸ்தி ந ப்ரிய
–யோ அபி ஸ் யு பாபயோ நய–எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் –
ஒது கதி மாயனையே ஓர்த்து–சரண்யனாய் ஆச்சர்ய பூதனானவனை அனுசந்தித்து அவன் திரு நாமங்களை சொல்லு –

————————————————————————

ரக்ஷண பரிகரமான திரு வாழியை வலவருகே யுடையனாய் முராஸூரனுடைய ஆயுசாலே வந்த பலத்தைப் போக்கின
மிடுக்கை யுடையனானவன் ரக்ஷகனாகும் இடத்தில் -ஏது ஞானம் -ஏது வ்ருத்தி ஏது ஜென்மம் என்று
வித்யா வ்ருத்த ஜென்மங்கள் யுடைய நிகர்ஷம் பார்த்து உபேக்ஷியாதே -ஆபன்னராய்-ரக்ஷக அபேக்ஷை யுடையரான நமக்கு
சர்வ காலத்திலும் ரக்ஷகனாம் -ஆனபின்பு நம்முடைய குற்றத்தைப் பார்த்து பிற்காலியாதே சரணத்வஏகாந்தமான
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனானவனையே உபாயமாக அத்யவசித்து -அவன் திரு நாமங்களை
இடைவிடாமல் நெஞ்சே சொல்லு -நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு -என்று மேலே சொல்லுகிற நெஞ்சு
இங்கும் முன்னிலைக்கு விஷயம் -அன்றிக்கே நிலை வரம்பில பல பிறப்பாய் -என்கிறபடியே
-முரன் நாள் வலம் சூழ்ந்த மொய்ம்பன் சரணாம் இடத்தில் தனக்கு என்ன ஒரு நியதி இன்றிக்கே ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு
உறுப்பான ஏதேனும் ஒரு ஜென்ம வித்யா வ்ருத்தங்களைத் தான் உடையனாய்க் கொண்டு நமக்கு என்றும் காரணாம் என்றுமாம்
-ஒது கதி மாதவனையே ஓர்த்து -என்ற பாடமாகில் -ஸ்ரீ யபதியை உபாயமாகப் புத்தி பண்ணி
அவன் திரு நாமங்களை ஏத்து -என்று பொருளாகக் கடவது –

—————————————————————————————————-

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது –

நாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் –

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி-நிரையார மார்வனையே —–அழகிய திருத் துழாய் மாலையை யுடையவனுமாய்
-தேங்கின கடல் போலே இருக்கும் திரு மேனியை யுடையவனாய் சப் தாதிகளை நாக்கு வளைக்கலாம் படி ஆபரண அழகை யுடையவனை –
நின்று ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம்-நின்று அனுசந்தித்த மனசை யுடையராய் இந்திரியங்களை விஷயங்களில் போகாத படி அடக்கி
-அவை பொல்லாது என்று ஆராய்ந்து -சம்சாரத்தைப் போக்கப் புக்கால் போக்கலாம்
ஏழு பிறப்பு என்றது உப லக்ஷணம் -ஜென்மம் அடங்கப் போக்கலாம் என்ற படி –

—————————————————————

பசுத்த நிறத்தை யுடைத்தாய் பரிமள பிரசுரமான செவ்வித் திருத் துழாயாலே அலங்க்ருதனாய் -தேங்கின கடல் போலே
இருண்டு குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் -ஒழுங்கு பட்டு இருக்கிற திரு ஆரத்தாலே அலங்க்ருதமான
திரு மார்வை யுடையவனையே ஒருபடப் பட நின்று -நிரந்தரமாக அனுசந்திக்கிற மனஸை யுடையராய்
ஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்த்ரியங்களையும் விஷயங்களில் போகாத படி நியமித்து -சம்சார தோஷத்தை அனுசந்தித்து –
-அதில் நின்றும் ஹிருதயத்தை மீள விட்டால் ஒன்றின் பின் ஒன்றாக வரக் கடவ ஜென்ம பரம்பரைகளை அநாயாசேன பேர்க்கலாம்-
அவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்
சப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம் என்று கருத்து –

————————————————————————————————————

நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது –
-அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் –

பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -தாமஸ தேவதையை ஆஸ்ரயிக்கையாலே சர்வேஸ்வரன் என்று அறியாதே
எதிரிட்டு தேரை யுடையனான பாணன் யுடைய தோளோடு தோள் ஒன்றிய அல்லாத ஆயிரம் தோளும் துணியும் படிக்கு ஈடாக வென்று –
வென்றிலங்கும்-ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே-ஒளியையும் கூர்மையையும் யுடைய திரு வாழியை யுடைய
அநந்த சாயியுடைய திருவடிகளிலே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —அணைய நெஞ்சானது தானே ப்ரவர்த்தியா நின்றது –

————————————————————————-

ருத்ரனை அண்டை கொண்ட பலத்தால் சர்வேஸ்வரன் என்று அறியாதே கூசாமல் முன்னே வந்து நின்று எதிராய் நின்றவனாய்
-ஒழுங்கு பட அழுத்தின மணிகளோடே கூடின தேரிலே எறி வந்த பாணாஸூ ரனுடைய அடி ஒன்றாய் பணைத்து இருந்துள்ள
ஆயிரம் தோளும் யேகோத் யோகேன அறுப்புண்டு விழும்படியாக ஜெயித்து -அத்தாலே ஒளி விடா நிற்பதாய் –
-கூர்மையை யுடைத்தாய் அதி பிரபலமான திரு வாழியை யுடையனான அநந்த சாயியை யுடைய சிவந்த திருவடிகளிலே
நெஞ்சானது எனக்கு முன்னே கிட்டுவதாகத் தானே உத்சஹியா நின்றது-
ஆர் படுகை–கூர்மையை யுடைத்தாகை–அரங்களை யுடைத்தாகை -என்றுமாம் – -வான் -வலி-

————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்–61-70— -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

பிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் -சம்சாரத்திலே உகந்து அருளின
திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் –

பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்-கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல்–
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே -என்று பரம பதத்தோ பாதி யாகத் திருமலையைச் சொல்கிறது
-வைகுந்தம் கோயிலாகக் கொண்டு அங்கு உறைவார்க்கு -வேங்கடம் பாற் கடல் –
-வண்டு-வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —-விண்ணகரான இவை இளங்குமரனான தனக்கு இப்போது கோயில் போலே

—————————————————————————

ஸ்ரீ வைகுண்டத்தைத் தனக்கு அபிமத வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு -அங்கே ஆதரித்து நித்ய வாசம் பண்ணுகிற
வைபவத்தை உடையவர்க்கு -திருப் பாற் கடலும் -திருமலையும் -வண்டுகளினுடைய திரள் மிக்கு வாரா நின்றுள்ள
பரப்பை யுடைத்தாய் அழகியதாய் போக்யமான திருக் கடிகையும்-நித்ய யுவ ஸ்வ பாவனானவன் தன்னது என்று
ஆதரித்து வர்த்திக்கிற -இவ்விவ திவ்ய தேசங்கள் என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பு எல்லாம் உகப்புடன்
எழுந்து அருளி இருக்கிற கோயில்கள் போலே இருந்தன -என்னை அங்கீ கரித்த பின்பு அவ்வவ தேசங்களைக் காட்டிலும்
என்னுடைய ஹிருதயமே அவனுக்கு வாசஸ் ஸ்தானமாய் விட்டது என்று கருத்து-

———————————————————————————————————————–

கேவலம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ -பரமபதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட
இருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் –

ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்  கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  ——62-

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்–திரு விண்ணகரம் -வெக்கா -விரிதிரை நீர் வேங்கடம்-
-திருமலையை ஒரு விசேஷண ரஹிதமாகச் சொல்ல மாட்டார் இ றே
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்  கோட்டி-போக்யதை குறைவற்ற கோயில்
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  —-மஹா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தித்தவம் தோற்றும்படி
அர்த்தியாய் நின்றால் போலே -உகந்து அருளின தேசங்களில் தாழ்வு தோற்றும் படி நின்றான் —

—————————————————————————–

திரு விண்ணகரமும் திரு வெக்காவும் விஸ்தீர்ணமாய் அலை எறிகிற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலையும்
-பூமியிலே யுண்டாய் வைகுண்ட மா நகர் போலே அவனுக்கு போக ஸ்தானமான திவ்ய நகராய்
-பெரிய மாடங்களை யுடைத்தான திரு வேளுக்கையும் -பூமியிலே யுண்டான அழகிய திருக் குடந்தையும்
-தேன் வெள்ளம் இடுகிற திருச் சோலையை யுடைத்தான திருவரங்கப் பெரு நகரும்
-தெற்குத் திக்கில் யுண்டான திருக் கோட்டியூரும் ஆகிற இவ்விவ திருப்பதிகள் -தன்னுடைய சிறாங்கித்த திருக் கையிலே
நீர் ஏற்றுத் தன் உடமை பெறுகைக்கு அர்த்தியானவன்-இந்த ஆத்மாக்களை பெறுகைக்கு அர்த்தியாய்க் கொண்டு
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே எப்போதும் உதவும்படி கால் தாழ்ந்து வர்த்திக்கிற தேசங்களாய் இருக்கும் –

————————————————————————————————————

ஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே -இது ஒரு சீலவத்தையே -என்கிறார் –

இத்தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்-சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் -சூழும்-திரண்டருவி பாயும்
திருமலை மேல் எந்தைக்கு–சூழத் திரண்டு அருவி பாயா நின்ற திருமலை மேலே-நிற்கிற என்னுடைய ஸ்வாமிக்கு –
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —ஓன்று சாதகமாய் ஓன்று சித்தமானால் சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்னில்
இரண்டு உருவும் இசைந்து ஒன்றாய் இருக்கும் பொருந்தி இருக்கும் –

——————————————————————–

சாதகத்வ ஸூ சகமாம் படி -தாழக் கட்டின ஜடையும் -ஆதி ராஜ்ய ஸூ சகமான ஒக்கத்தை யுடைத்தான திரு அபிஷேகமும்
-கொலைக்குப் பரிகரமான அழகிய மழுவும் -ரக்ஷணத்துக்கு பரிகரமான அருளார் திருச் சக்கரமும்
-பயாவஹமாம் படி இடையிலே சூழப் பட்ட சர்ப்பமும்-ஐஸ்வர்ய ஸூ சகமாம் படி திருவரையிலே சாத்தின
பொன்னரை நூலுமாகக் கொண்டு ஒன்றுக்கு ஓன்று சேராச் சேர்த்தியாய் இருக்கும் இரண்டு வடிவும்
-நாலு பாடும் சூழ்ந்து கொண்டு திரண்டு அருவிகள் வந்து குதியா நிற்கிற திருமலை மேலே நித்ய வாசம்
பண்ணா நின்றுள்ள என் ஸ்வாமி யானவனுக்குத் தன் திரு மேனிக்கு இதுக்கும் ஒரு வாசி தோற்றாத படி
பொருந்தி ஒரு கோவையாய்க் கொண்டு தோற்றா நின்றது -கெட்டேன் -இது ஒரு சீலாதிசயம் இருக்கிற படியே
-என்று ஆச்சர்யாப் படுகிறார் –

———————————————————————————————————

பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

இசைந்த வரவும் வெற்பும் கடலும்–கடலிலே ஒரு மலையை நட்டு -ஒரு பாம்பைக் சுற்றிக் கடையா நின்றால்
சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்றால் -இசைந்த -தன்னில் பொருந்தி இருந்தபடி –
பசைந்தங்கு அமுது படுப்ப —-அதிலே அமிருதம் வரும்படிக்கு ஈடாகப் பசை கொடுத்து –
அசைந்து-கடைந்த வருத்தமோ-உலாவிக் கடைந்த வருத்தமோ
கச்சி வெக்காவில்-கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–திருக் கச்சியிலும் திரு வெஃகாவிலும்
கிடப்பது இருப்பது நிற்பது ஆகிறது தனியே கடலைக் கடைந்ததாலே திரு மேனியில் பிறந்த ஆயாசமோ –

————————————————————————–

கடை கயிறாகக் கொள்ளுகைக்கு தகுதியான வாஸூகியும் -மத்தாக நாட்டுகைக்குத் தகுதியான மந்த்ர பர்வதமும்
-தாழி யாக்குகைக்குத் தகுதியான கடலுமான இம் மூன்றையும் கொண்டு -நீர் கோதாம் படி கலக்கி
-அந்தக் கடலிலே அமிர்தம் உண்டாக்குகைக்காக அலைச்சல் பட்டுக் கடைந்த ஆயாசமோ –
-திருக் கச்சியிலே திரு வெஃகாவிலே கண் வளர்ந்து -அந்த திருக் கச்சி தன்னிலே திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருந்து
-திரு ஊரகத்திலே எழுந்து அருளி நின்றதுவும் –கடல் கடைந்த இளைப்பாலே நிற்பது இருப்பது கிடப்பதாகக் கொண்டு
இங்கனே நோவு படுகிறான் ஆகாதே -என்று வயிறு எறிகிறார் –

—————————————————————————————————–

அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-

அங்கற்கு இடரின்றி — -பிள்ளை யுடைய விடாய் தீர –அங்குக்கு இடர் இன்றி -என்ற பாடமாகில் -அவ்விடத்தில் விடாய் தீர –
/ அந்திப் பொழுதத்து-அ ஸூ ரர்க்கு பலம் வர்த்திக்கும் காலத்திலே /
மங்க விரணியன தாகத்தை–ஹிரண்யனுடைய ஹிருதயமானது மங்கும் படிக்கு ஈடாக
-பொங்கி-அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் -பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை -என்னும் படி –
அவனே கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து —அவனே குவலயா பீடத்தினுடைய கொம்பை ஓசித்தான் –
–காய்ந்து –சீற்றம் இல்லாதவன் சீறி —

—————————————————————————-

சிறு பிள்ளையான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு துக்கம் வாராத படி -அஸூரர்க்கு பலம் வர்த்திக்கும் படியான
சந்த்யா காலத்திலே ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய வர பலாதிகளாலே பூண் கட்டின மார்வை
உருத் தெரியாத படி அழிந்து போம்படி யாக பெரும் கிளர்த்தியை யுடையனாய்க் கொண்டு நரசிம்ஹ ரூபியாய் இடந்து பொகட்ட
சர்வேஸ்வரனான அவனே -சீறிக் கொண்டு குவலயா பீடத்தின் யுடைய கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்டவன்
-அங்கர் என்றது அங்கன் என்ற படியாய் பிள்ளை என்றபடி -அன்றிக்கே –சர்வகத்வாத நந்தஸ்ய ச ஏவாஹ
அங்கு -அவ்விடத்து -என்று பிரித்து -மகற்கு என்கிறதை தலைக் குறைத்தலாய்க் கிடக்கிறது என்னவுமாம்
-ஹிரண்யனுடைய மகனுக்கு இடர் இல்லாத படி -என்று பொருளாகக் கடவது –
-அங்கக் கிடர் -என்ற பாடமான போது அவ்விடத்து இடர் இல்லாத படி என்று பொருளாகக் கடவது –

————————————————————————————————————-

உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே
இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ -கண் வளர்ந்து
அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு   ——-66-

காய்ந்திருளை மாற்றிக் சீறி இருளைப் போக்கி / கதிரிலகு மா மணிகள்-ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-ஒளி விடா
நின்றுள்ள மணிகள் சேர்ந்த பணத்தில் யுண்டான தேஜஸ்ஸின் மேலே நெடு மூச்சு விட
வாய்ந்த-மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்–கிட்டின மது கைடபர்கள் வயிறு உருகி முடித்தார்கள்
அதுகேடவர்கு இறுதி யாங்கு   —-என்றும் என் பிள்ளைக்குத் தீமை செய்வார்கள் அங்கனம் ஆவர்களே-

——————————————————————–

சஹாவஸ்தானம் இல்லாத மாத்திரம் இன்றிக்கே சீறிக் கொண்டு இருளைப் போக்கிக் கிரணங்கள் ஒளி விடா நின்றுள்ள
பெரு விலையனான ரத்தினங்கள் சேர்ந்து இருக்கிற தன்னுடைய பணங்களின் ஒளிக்கு மேலே திருவனந்த ஆழ்வான்
அனுபவ ஜெனித ஹர்ஷ பிரகர்ஷத்துக்குப் போக்கு விட்டு வெவ்விதாக உச்சவாச நிசுவாசங்களைப் பண்ண-
-இவ்வளவிலே விரோதித்து வந்து கிட்டின மது கைடபர்களும் குடல் அழுகி முடிந்து விட்டார்கள் –
-அனுகூலர்க்கு வாழவும் ஜீவிக்குமான அந்தக் கண் வளர்ந்து அருளுகிற ஸ்தலத்திலே பிரதிகூலித்து வந்து
கிட்டினவர்களுக்கு அந்தக் கிட்டினதுவே வாழ்வுக்கு பிரதிகோடியான கேடும்-
-சத்தையோடு ஜீவிக்கைக்கு ப்ரதிகோடியுமான விநாசமுமாய் விட்டது –

—————————————————————————————————————

ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் –

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  ——67-

மாலுந்தி வாய்-ஓங்கு கமலத்தின் ஓண் போது —திரு நாபீ கமலத்தில் ஓங்கி இருந்துள்ள அழகியதான தாமரைப் பூ
-ஆங்கைத்-திகிரி சுடர் என்றும் –கையில் திரு வாழியை ஆதித்யன் என்றும்
வெண் சங்கம் வானில்-பகருமதி என்றும் பார்த்து–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் விளங்கா நின்றுள்ள சந்திரன் என்றும் பார்த்து-அனுசந்தித்து –
ஆங்கு மலரும் குவியும்-ஆல்–இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது –

——————————————————————

திரு நாபீ கமலத்தில் உண்டாய் -உயர வளர்ந்த தாமரையினுடைய செவ்வி குன்றாத அழகிய பூவானது அவனுடைய
வலத்திருக் கையிலே உண்டான திரு வாழியை ஆதித்யன் என்றும் -மற்றைத் திருக் கையிலே ஏந்தின வெளுத்த
நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் வர்த்திக்கிற ஒளியையுடைய சந்திரன் என்றும்
உத் ப்ரேஷித்துக் கொண்டு -அக்காலத்திலே அலர்வது மொட்டிப்பதாக நிற்கும் -இது ஓர் ஆச்சர்யம் இருக்கிற படியே என்று அனுபவிக்கிறார்
-மாலுந்தி வாய் -என்ற போது சர்வேஸ்வரனுடைய திரு நாபீயில் என்றாகக் கடவது –
அங்கு -அந்தப் பொழுதில் -ஏக காலத்திலே என்றபடி -வானிலே வர்த்திக்கிற ப்ரசித்தனான சந்திரன் -என்னவுமாம் –

———————————————————————————————————

இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா -திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு–சுனை நீரிலே கடுவானானது தன்னுடைய நிழலைக் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -வேறே தனக்கு எதிரியான கடுவன் எனப் பேர்ந்து
கார்த்த–கள்ங்கனிக்கிக் கை நீட்டும் -பின்னையும் தன்னுடைய சாபலத்தாலே அருகில்
களாப் பழத்தை அறுத்துத் தா என்றும் கை நீட்டா நிற்கும் /வேங்கடமே -திருமலை –
மேனாள்-விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-பண்டு கன்றைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்தவனுடைய திருமலை –

——————————————————————

கரையிலே காளாவிலே நின்று சுனையின் நீரைப் பார்த்த கடுவானானது -நீருக்கு உள்ளே தன்னுடைய நிழலைக் கண்டு
-இது நம்முடைய நிழல் என்று புத்தி பண்ண மாட்டாதே -தனக்கு எதிரியான வேறு ஒரு கடுவன் என்று பிரதி பத்தி பண்ணி
-தன் கையின் சிவப்புக்குப் பகைத் தொடையான கறுத்த நிறத்தை யுடைத்தான காளாவின் பழத்துக்கு
-தான் நிற்கிற களாவின் நிழல் என்று அறியாதே வேறு ஒன்றாகக் கருதி அதின் பலமும் பெற வேணும் என்னும்
சாபலத்தாலே அத்தை அறுத்துத் தா என்று கை நீட்டா நிற்கும் -வேங்கடமே -பண்டு ஒரு நாளில் விளாம்பழத்துக்கு
கன்று எறிந்தவன் வர்த்திக்கிற திருமலை -இதினுடைய முஃத்யம் போலே யாய்த்து அவனுடைய முஃத்யம் இருக்கும் படி –

———————————————————————————————————-

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி
தசையைப் பிராப்தராய் -அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
-திருமலையை ஒழிய வேறு ஒரு மழையையும் அறியாள்-
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் –காட்டுப் பூ சூடாள்-தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும்
இத் தொண்டர்களோம்-என்கிறபடியே விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–கற்பு என்று பாதி வ்ரத்யம் –
-மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
–விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் -வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்
-இப்பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-
அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கொள் இ றே -ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்/
ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இ றே -ஆனபின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள் /
பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இ றே -ஆனபின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுக்குங்கோள்–

———————————————————————-

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்காள் ஆகில் திருமலையையே ப்ரீதி பிரேரிதையாய்ப் பேசா நிற்கும்
-ஏதேனும் ஒரு பூவைச் சூட நினைத்தாள் ஆகில் விஸ்மயமான திருத் துழாய் குல மரியாதைக்கு சேருவது ஓன்று
என்று தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் -என்கிறபடியே இருண்ட குழலின்
மேலே சாதரமாகச் சூடா நிற்கும் -மல்ல வர்க்கம் பொடி படும் படி வளர்ந்த திருத் தோள்களை யுடைய
சர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளின பரந்த திருப் பாற் கடலிலே நீராடுகைக்காக விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும்
-வேறு ஒரு மலையில் பேர் சொல்லுதல் – நாறு பூச் சூடுதல் – வேறு ஒரு நீர் நிலைகளில் குளித்தல் செய்யாள்
-பாதுகை சூடுகை முதலான லோக யாத்திரை அடங்க லும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கிற படி
-மால் கிடந்த -வியாமுக்தனானவன் பள்ளி கொண்டு அருளின என்னவுமாம் -இங்கண் இன்றிக்கே கீழும் மேலும்
அந்யாபதேசம் அற்று இருக்க இது ஒன்றும் இப்படி கொள்கிறது என் என்று பர உபதேசமாக நிர்வஹிப்பார்கள்
-அப்போது அம்மலை இம்மலை என்று ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் பார்த்தீர்கள் ஆகில் திரு மலையைப் பாடுங்கோள் /
ஏதேனும் ஒரு பூச் சூட நினைத்தீர்கள் ஆகில் திருத் துழாயைச் சூடுங்கோள் /
ஏதேனும் ஒரு நீர் நிலைகளில் புக்கு பிராதஸ் ஸ்நானம் பண்ண ப் பார்த்தீர்கள் ஆகில் அவன் சாய்ந்து அருளின
கடலிலே நாள் தோறும் அவகாஹிக்கப் பாருங்கோள் என்று பொருளாகக் கடவது -கற்பு என்று பாதி வ்ரத தர்மம் என்றுமாம் –

——————————————————————————————————-

ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன அது வேண்டா
-திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

புகு மதத்தால் வாய் பூசிக் –வாயிலே புகுந்த மத ஜலத்தால் வாய் கழுவி
கீழ்த் தாழ்ந்து அருவி-உகு மதத்தால் கால் கழுவிக் –கீழே தாழ்ந்த அருவி போலே உகா நின்ற
மத ஜலத்தாலே கால் கழுவி கையால் -மிகு மதத்தேன்-விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
-கையாலே மிக்க மதத்தை யுடைத்தாய் -அலரா நின்ற பூவைக் கொண்டு களிறு ஆனது விறல் வேங்கடவனையே
-கண்டு வணங்கும் களிறு —விறல் வேங்கடவனையே-என்று திருமலையிலே திர்யக்குகளும் தன்னை வணங்கும்படி
ஞானத்தை கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது -ஞான கார்யமான ஸமாச்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ணி வைக்கும் –

——————————————————————

மஸ்தக ஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றின் நின்றும் பாய்ந்து வாயிலே புகு கிற மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து
ஆசமனம் பண்ணி கீழே தாழ்ந்து அருவிகள் போலே வந்து விழுகிற மத ஜலத்தாலே காலைக் கழுவி துதிக்கையாலே
மிக்க மதத்தைப் பண்ணிக் கடவ தேனை யுடைத்தாய் அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களை பொய்க்கைகளிலே
புக்குப் பறித்துக் கொண்டு சாஸ்திர வஸ்யம் அல்லாத திர்யக்குகளும் ஸ்வ விஷயத்தில் ஞான ப்ரேமங்களை விளைக்க வல்ல
பெரு மிடுக்கனான திருவேங்கடம் மேய எந்தையைக் கண்டு தலையார வணங்கி ஆஸ்ரியியா நிற்கும்
அங்குண்டான ஆனையானது -மதம் என்று கந்தமாய் மிக்க கந்தத்தையும் தேனையும் யுடைய செவ்விப் பூக்களைக் கொண்டு என்னவுமாம் –

——————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்–51-60— -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர் நமக்கு எல்லாம் உபய பூதன் ஆவான் -என்கிறார்

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா  பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்–வர்ஷத்தாலே நோவுபட்ட பசுக்கள் தம்முடைய ரக்ஷணத்துக்குத்தா
ம் ப்ரவர்த்தித்தது யுண்டோ -அவனே யன்றோ -என்று சஹஹாரி நைரபேஷயத்தைச் சொல்கிறது
அவனே அணி மருதம் சாய்த்தான் –நிரபேஷ மாக மருதத்தைச் சாய்த்தானும் அவனே
-அவனே-கலங்கா  பெரு நகரம் காட்டுவான் -பரம பதம் அவனே காட்டக் காணும் அத்தனை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்குக் காணப் போகாது –
கண்டீர்-இலங்கா புரம் எரித்தான் எய்து ——லங்கையை அழித்து பிராட்டியைப் பெறுகைக்கு யத்னம் பண்ணினானும் தானே –

———————————————————–

ஒருவராலும் சலிப்பிக்க அரிதான கோவர்த்தன பர்வதத்தாலே -வர்ஷத்திலே அகப்பட்டு அழிப்புக்க பசுக்களை
ஒரு நோவு வாராமல் குறைவற ரக்ஷித்து அருளி தான் சஹாயாந்தர நிரபேஷமாக ரக்ஷிக்க வல்ல சக்திமானாவான் அவனே கிடீர்
-தன்னிலே இடை வெளி யறச் சேர்ந்து நின்ற யமளார்ஜுனங்களை யசோதாதிகள் சஹகாரியாது
இருக்க தள்ளி விழ விட்டான் அவனே தானே கிடீர்
-பிராட்டியைப் பெறுகைக்காக திருச் சரங்களை ப்ரேரித்து விட்டு ப்ரஹ்மாதிகளுக்கும் கணிச்சிக்க ஒண்ணாத
லங்கா புரத்தை அவர்கள் ஏக தேசமும் சஹகரியாது இருக்க தக்தமாக்கி விழ விட்டான் அவன் தானே கிடீர்
-அப்படியே ஒருவர் கூறை எழுவர் குடுக்கிற சம்சாரத்தில் உள்ள கலக்கம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற
பெரிய ராஜ தானியான பரம பதத்தை நீ கண்டு கொள் என்கிறபடியே அகிஞ்சனரான நமக்கு காட்டித்தருவானும்
நிரபேஷ உபாய பூதனான அவனே கிடீர்
-அறிவில்லாத பசுக்களோடு அறிவில் தலை நின்ற பிராட்டியோடு ஒரு வாசி இல்லை
–அறிவுக்கு பிரயோஜனம் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கை
அறியாமைக்கு பிரயோஜனம் -பண்ணுகிற ரக்ஷணத்தை விலக்காமை என்றபடி –

——————————————————————————————————–

கீழ் ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே தெரியவும் ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   ——-52-

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்-இராமனாய் ஆஸ்ரிதர்க்காக மராமரம் ஏழையும் எய்தான் –
எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் -மான் குட்டி என்று பாராதே பிராட்டி சொன்னால் என்று எய்தான் –
எய்ததுவும்-தென்னிலங்கைக் கோன் வீழச் -எய்ததும் ராவணனைக் கொல்லுகைக்காக
சென்று குறளுருவாய்-முன்னிலம் கைக் கொண்டான் முயன்று — குறளுருவாய் சென்று மூன்று லோகத்தையும் அடங்கலும் கைக் கொண்டான் –

————————————————————–

சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்து அருளி மஹா ராஜரை வீஸ்வசிப்பைக்காக மராமரங்கள் ஏழையும் பட்டுருவ எய்து விட்டான்
-தரிக்கப்பட்ட ஆபரணங்களை யுடைய பிராட்டிக்காக –அவ் வாபரண சேர்த்தி அழகிலே ஆழம் கால் பட்டு மேல் விளைவது அறியாமல்
–அந்த மாயாமிருகம் புரண்டு விழும்படியாக எய்து பொகட்டான்-அவள் சிறை இருப்பு மாற்றுகைக்காக தெற்குத் திக்கில் யுண்டான
லங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் குட்டிச் சுவர் போலே உருண்டு விழும்படியாக எய்ததும் –
-முன்பு ஒரு காலத்திலே ஸ்ரீ வாமனனாயக் கொண்டு மஹா பலி பக்கலிலே சென்று வடிவு அழகைக் காட்டுவது-
-முக்த ஜலப்பிதங்களைப் பண்ணுவதாய்க் கொண்டு மிகவும் உத்தியோகித்து பூமியை வாங்கிக் கொண்டான்
-இது ஒரு செயல்கள் இருக்கும் படியே என்று வித்தகராய் அனுபவிக்கிறார்
-அம் மான் மறியை என்ற பாடமான போது-அந்த மான் குட்டியை எய்தான் -என்றாகக் கடவது –

———————————————————————————————————

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வட தள சாயியை ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம்  கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண்  அலங்கல் மாலையான் தாள்  —–53-

முயன்று தொழு நெஞ்சே-யத்னம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பார் –
மூரி நீர் வேலை-இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று -உலவா நின்ற நீரை யுடைத்தான கடலிலே
யுண்டான மரத்தினுடைய பல்லவமான இருபத்தொரு ஆலிலை மேலே பயின்று
அங்கோர்-மண்ணலம்  கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்-சேதனர்க்கு போக உபகரண -போக ஸ்தான போக்யமான பூமியை
அழியா நின்ற வெள்ளத்திலே ஆச்சர்யமான பிள்ளை யானவன்
தண்  அலங்கல் மாலையான் தாள்  —–ஆலின் இலை மேலே கண் வளர்ந்து அருளுகிற போது பொகட்ட மாலையும்
தாணுமாய்க் கிடந்த படி -அவனுடைய திருவடிகளை முயன்று தொழு நெஞ்சே –

————————————————————————–

சஞ்சரியா நின்றுள்ள நீரை யுடைத்தான சமுத்ரத்திலே பொருந்தி இருக்கிற ஆல மரத்தின் யுடைய பவனாய் இருபத்தொரு
ஆலின் இலை மேலே சிர காலம் சாய்ந்து அருளி -அங்கே பூமியினுடைய –சேதனர்க்கு போக்யாதிகளாய்
விநியோகிக்கப் படுகிற சாராம்சத்தை க்ரஸியா நின்றுள்ள பிரளயத்தில் அக்கடிகடனா சாமர்த்தியம் ஆகிற
ஆச்சர்ய சேஷ்டிதத்தை யுடைய முக்த சி ஸூ வானவன் ஸ்ரமஹரமாய அசைந்து வாரா நின்றுள்ள திருமாலையாலே
அலங்க்ருதனானவன் திருவடிகளை -நெஞ்சே -வரில் பொ கடேன்-கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே
உத்ஸாஹித்துக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பார் -அலங்கல் -அசைவு –

————————————————————————————————————–

வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை  போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம்   காதல் பெரிது —–54-

தாளால் சகட்முதைத்துப்–திருவடிகளாலே சகடாசூர நிரசனம் பண்ணி
பகடுந்தி–குவலயா பீடத்தைத் தள்ளி
கீளா மருதிடை  போய்க்-இரண்டாய் அருகே நின்ற மருதூடே போய் -கீளா -பிளவா மருதிடை போய் என்றுமாம் –
கேழலாய் -மீளாது-மண்ணகலம் கீண்டு –அங்கோர் மாதுகந்த மார்வற்குப்-ஸ்ரீ வராஹ ரூபியாய் மீளாத படிக்கு ஈடாக
பூமியைக் கீண்டு ஸ்ரீ பூமிப பிராடையை உகந்த மார்பர்க்கு
பெண்ணகலம்   காதல் பெரிது —–பிராட்டி பக்கலிலே ஸ் நே ஹம் பெரிது –

—————————————————————–

அஸூரா விஷ்டமாய் மேல் விழுகிற சகடத்தை முலை வரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்த திருவடிகளாலே உத்தைத்து விழ விட்டு
-புகுவாய் நின்ற போதகம் என்னும் படி வழியிலே நின்று நலிய புக்க குவலயா பீடத்தைத் திருக் கையாலே உருண்டு விழும் படி
தள்ளிப் பொகட்டு இடை வெளி யறப் பொருந்தி நின்ற மருதுகளின் நடுவே அவை அடி அற்று விழும் படி தவழ்ந்து கொண்டு போய்
-ஸ்ரீ யபதியான தன் பெருமை பாராதே வராஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு வடிவை அழிய மாறின அளவிலே மீளுகை இன்றிக்கே
அந்த பிரளயத்தில் முழுகி அண்ட பித்தியிலே ஒட்டிக் கிடக்கிற அத்விதீயமான பரப்பை யுடைத்தான பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி-
நாரீணாம் உத்தமையான பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று விரும்பும் படியான திரு மார்வை யுடையவனுடையவனுக்கு
ஸ்ரீ பூமிப பிராட்டியுடைய அபரிச்சின்ன்ன போக்யமான திரு மேனியில் பிரேமம் கரை புரண்டு இருந்தது
பகடு -யானை -/ கீளா மருதிடைபோய் –கிழித்துக் கொண்டு மருதுகளின் நடுவே போய் என்னவுமாம் –
காதல் பெரிது -அவள் பக்கல் பிரேமத்தின் கனத்தாலே இ றே அவள் அபிமானித்த பூமியை எடுத்தது என்கை

———————————————————————————————————

இப்படி ஸ்ரீ பூமிப பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு–ஆராதித்தால் பரிச்சேதிக்கப் போகாத மார்பிலே —
-பேராரம் பூண்டு-மடித்துப் பூண வேண்டும் பெரிய ஹாரத்தைப் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -மார்புக்கும் ஹாரத்துக்கும் த்ருஷ்டாந்தம் -மேகத்திலே மின்னினால் போலே
ஸ்யமமான திரு மார்பிலே ஹாரம் கிடந்த படி
திரியுங்கால்–தெரியுங்கால் -பாட பேதம் -அநுஸந்திக்கும் போது -சஞ்சரிக்கும் காலத்தில் என்றுமாம் –
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ——-பாண் சாதியாக ஒடுங்கும் படி பாடா நின்ற வண்மை யுடைத்தான பங்கயமே
-அவனுடைய பரிச்சதிக்கப் போகாத கண்ணினுடைய நிறத்தைக் காட்டா நின்றது –

————————————————————————-

ஹாரத்தால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி பெரிய மலை போலே பரந்து இருக்கிற திரு மார்பிலே இரு மடி
இட்டுச் சாத்த வேண்டும் படி பெருத்து இருக்கிற திரு வாரத்தைச் சாத்தி மநோ ஹராமாம் படி சஞ்சரிக்கப் புக்கால்
-காளமேகத்திலே மின் கொடி பரந்தால் போல் அத்தியாநுபாவ்யமாய் -அதுக்கு மேலே அவனுடைய மிக்க அழகை
யுடைத்தான திருக் கண்களுடைய நிறத்தை பாட்டு என்று பேர் பெற்றவை அடக்க லும் லஜ்ஜித்து ஒடுக்கும் படிக்கு
ஈடாக வண்டுகளானவை சப்தியா நின்றுள்ள தாமரைப் பூவே காட்டா நிற்கும்
-தெரியுங்கால் -என்று பாடமாகில் -அவ் வழகை அநுஸந்திக்கும் போது -என்று பொருளாகக் கடவது –

——————————————————————————————————

என்னுடைய ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது -பிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் –

இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று-இறையுருவம் —யாம் அறியோம் எண்ணில் –இறையினுடைய வடிவானது
வெளுப்பு சிவப்பு பசுமை கருமை என்று எண்ணில் நாம் அறியோம் –
-நிறைவுடைய-நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
—–நாமே மாட்டாதோமானால் மதிப்புடையளான சரஸ்வதி அங்குத்தைக்குத் தரமாகப் புகழ வல்லளோ-
பூ மங்கை கேள்வன் பொலிவு -புகழப் போகாமை என் என்னில் ஸ்ரீ யப்பதியுடைய ஸம்ருத்தியை சிலவரால் பேசப் போமோ –

—————————————————————————–

சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹமானது -நிறத்தால் வெளுத்து இருக்கும் சிவந்திருக்கும்
பச்சென்று இருக்கும் கறுத்து இருக்கும் என்று ஆராயும் இடத்தில் ஏக தேசமும் அறிய மாட்டுகிறிலோம் –
-இது கிடக்க எல்லாரும் அவனைப் பேசும் இடத்தில் தன்னைப் பற்ற வேணும் படியுமாய் -தான் உள்ளபடி அறிந்து
பேசுகைக்கு ஈடான ஞான சக்த்யாதி பூர்த்தியை யுடையளான சரஸ்வதி யானவளும் புஷப நிவாசியான
பெரிய பிராட்டியார்க்கு வல்லபனானவனுடைய ஸ்வரூப ரூப குணாதிகளால் யுண்டான ஸம்ருத்தியை
அங்குத்தைக்குத் தகுதியாம் படி நன்றாகக் புகழ வல்லளோ-ஸ்ரீ யப்பதியினுடைய ஸம்ருத்தி யைச் சிலரால் சொல்லாய் இருந்ததோ என்றபடி –

——————————————————————————————————————

கருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது –

ஏவம்விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் –

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி–மலிந்து திருவிருந்த மார்வன்–சம்ருத்தமாய் இருண்ட கார்காலத்தில்
மேகத்தில் மின் போலே தோற்றித் தண்ணீர் தண்ணீர் என்று ஆசைப்படா நின்ற பெரிய பிராட்டியார் உகந்த திரு மார்வை யுடையவன் –
-பொலிந்த-கருடன் மேல் கண்ட கரியான் கழலே
——-மஹா மேருவில் ஒரு அஞ்சன கிரி இருந்தால் போலே சம்ருத்தனான பெரிய திருவடி மேலே இருந்தவனுடைய திருவடிகளில் யுண்டான –
தெருடன் மேல் கண்டாய் தெளி -ஞான விபாகையான பக்தியை எல்லா வற்றுக்கும் மேலாகக் கொண்டு அநுஸந்தி
-ஓலக்க வார்த்தை என்று இராதே கொள்

————————————————————————-

செறிந்து இருளை யுடைத்தான கார்காலத்தில் மேகத்தில் யுண்டான மின் போலே பிரகாசித்துப் பெரிய பிராட்டியார் ஆனவள்
ஸ்வரூப ரூப குணாதிகளாலே வந்த வைபவத்தை யுடையளாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற திரு மார்வை யுடையனாய்
-அதுக்கு மேலே மிக்க வைபவத்தை
யுடையனாய்க் கொண்டு -மஹா மேருவில் ஒரு அஞ்சன கிரி இருந்தால் போலே பொற்க்கென்று இருக்கிற நிறத்தை யுடைத்தாய் –
-பெரிய திருவடி மேல் கொண்டு நடத்தா நின்றுள்ள கறுத்த நிறத்தையுடைய சர்வேஸ்வரனுடைய திருவடிகளே கிடாய்
உத்கர்ஷ ஹேதுவாக அனுசந்திக்கப்படும் ஸ்வ பாவம் எல்லா வற்றிலும் மேலான உத்கர்ஷம்-
-நெஞ்சே நீ இத்தை நன்றாக புத்தி பண்ணு -சேஷ பூதனுக்கு ஸ்வரூப அனுகுணமான உத்கர்ஷம் சேஷி திருவடிகளை அறிகை இ றே /
பொலிந்த கருடன் என்ற பாடமான போது -சம்ருத்தமான திருவடி என்ற பொருளாகக் கடவது
-தெருடன் மேல் கண்டாய் –தெருடல் தெருடப்படுமது-அனுசந்திக்கப் படுமவற்றில் இதுவே கிடாய் மேலானது என்றபடி
-அன்றிக்கே தெருள் -என்று ஞானமாய் ஞானத்தில் மேலாய் இருக்கிற பக்தியைச் சொல்லுகிறதாய் -ஞான விபாக ரூபையான
பக்தியால் கரியான் கழலைக் கண்டு அனுபவிக்கப் பெற்றாயே என்றுமாம் –
– முயன்று தொழு நெஞ்சே என்கிற பாட்டில் சொன்ன நெஞ்சே இங்கும் முன்னிலை –

——————————————————————————————————————-

அஸ்மின் மயா சார்த்தம் -என்று பிராட்டி செய்த செயலைத் திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் –

இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் –

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி-ஸ் படிகப் பாறையில் இருந்த பெண் குரங்கு
அளிந்த கடுவனையே நோக்கி -தன் பக்கல் ஸ்நேஹித்த
ஆண் குரங்கை நோக்கி –
விளங்கிய வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே –ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே தானே
சந்திரனுடைய மேல் புறம் ஆகையால் களங்கம் அற்று உஜ்ஜவலமாய் இருந்துள்ள சந்த்ர மண்டலத்தை தா என்னா நின்றது
-இழிந்து வாங்க வேண்டும் காண் திருமலையினுடைய உயர்த்தி –
மே லோருநாள்-மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-பண்டு ஒரு நாள் பூமியை மதியால் கொண்டு
அலாப்யா லாபம் பெற்றானாய் உகந்தவனுடைய ஐஸ்வர்யம் –

——————————————————————-

ஸ்படிகமான சிலா தலத்திலே தன் வேண்டல் பாடு தோற்ற இருந்த பெண் குரங்கானது -நம்மை ஏவிக் கார்யம் கொள்வது
எப்போதோ என்று அவசர பிரதீஷமாய்-ஸ்நேஹமே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற ஆண் குரங்கை ப்ரணய ரோஷம்
மாறி சாதரமாகப் குளிரப் பார்த்து பார்க்கைக்குக் கண்ணாடி கொண்டு வந்து தா என்பாரைப் போலே மேல் புறம் ஆகையால்
களங்கம் அற்று ஒளி விடுகிற பூர்ண சந்த்ர மண்டலத்தைத் தா என்று சொல்லும் படி இருக்கிற திருவேங்கடமே பண்டு
ஒரு காலத்திலே பூமியைத் தன் புத்தி யோகத்தாலே மஹா பலி இருப்புக்குப் பொருந்தும்படி அர்த்தித்து வாங்கிக் கொண்டு
அலாப்ய லாபம் பெற்றால் போலே உகந்த சர்வேஸ்வரன் தனக்கு சர்வ சம்பத்துமாக நினைத்து இருக்கும் தேசம் –

—————————————————————————————————————

சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் –

கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-
-திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்–தாழும் அருவி போல் தார் கிடப்ப–அஞ்சன கிரியில் பாயா நின்ற
அருவி போலே திரு மார்பிலே சாத்தின தோள் மாலை கிடப்ப
-சூழும்-திரு மா மணி வண்ணன் –அதிலே ஆசைப்படா நின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய் -ஸ்ரமஹராமான வடிவை யுடையவன் –
செங்கண் மால்–ஈஸ்வரத்வத்தை ஸூசிப்பியா நின்ற திருக் கண்களை யுடையவன் –
எங்கள்-பெருமான் அடி சேரப் பெற்று —–போக்ய பூதனாய் -என்னை யுடையவனாய் -வகுத்தவனுடைய திருவடிகளைக் கிட்டப் பெற்று
-புத்தி நாஸாத் பிரணஸ்யதி-என்று சப்தாதிகளைப் பற்றாதே வாழும் பிரகாரம் அறிந்தேன் –

——————————————————————-

அஞ்சனம் போலே இருண்ட நிறத்தை யுடைத்தான பெரிய மலையிடத்திலே இரண்டு அருகும் தாழ விழுந்து பாயா நின்ற
அருவி போலே திருத் தோள்களில் சாத்தின திருமாலையானது அனுபாவ்யமாய்க் கிடந்தது பிரகாசியா நிற்க-
-இவ் ஓப்பனை அழகைக் கண்டு -இறையும் அகலகில்லேன் -என்று சூழ்ந்து போந்து அங்கே நித்ய வாசம் பண்ணுகிற
பெரிய பிராட்டியாரை யுடையனாய் -பெரு விலையனான நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான திருமேனியை யுடையனுமாய்-
-இவ் வைச்வர்ய ஸூ சகமான சிவந்த திருக் கண்களை யுடையனாய் -சர்வாதிகனாய் -ஆஸ்ரிதரான எங்களுக்கு
வகுத்த சேஷியுமான சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் கிட்டப் பெற்று ஸ்வரூப அனுரூபமாக வாழும் பிரகாரத்தை அறிந்தேன் –

————————————————————————————————————

பிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் -அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது –

உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-
-அது போக்குகை அவனுக்கு பாரமாய் விட்டது -என்கிறார் –

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக்  கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து —இது நிரல் நிறை–
பெற்றம் முற்றாக காத்து / பிணை மருதமூடு போய் / பேய் முலை யுண்டு / மாச்சகடம் உதைத்து -என்றபடி –
கற்றுக் குணிலை-விளங்கனிக்குக்  கொண்டு எறிந்தான்
-கன்றாகிய எறி கருவியைக் கொண்டு விளங்கனிக்கு கொண்டு எறிந்தவன் –
வெற்றிப்-பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு — வெற்றியை விளைப்பதான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே
வைத்து உகந்தவன் -பண்டு உண்டான பிரதிபந்தகங்களை எல்லாம் போக்கும் –

———————————————————————

பசுக்களை ஓன்று ஒழியாமல் ரக்ஷித்து –ஒன்றோடு ஓன்று பிணைந்து நிர்விவரமாய் நின்ற மருந்துகளை ஊடறுத்துக் கொண்டு
போய் விழ விட்டு –பூதனையுடைய முலையை அவள் பிணமாக விழும் படி உண்டு -பயாவஹமான பெரிய சகடத்தை
முறிந்து விழும் படி உதைத்துப் பொகட்டு -கன்றாகிய எறி கருவியைக் கொண்டு விளவினுடைய பழத்துக்கு எறிந்து-
-இரண்டையும் முடித்துப் பொகட்டவன்-முன்பு ஒரு நாளிலே விஜயத்தை யுண்டாக்குமதான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
பிரதி பக்ஷம் நசிக்கும் படி திருப் பவளத்திலே மடுத்தூதி -விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து அருளினவன் கிடீர் –

——————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 41-50– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

மண் ஒடுங்கத் தான் அளந்த என்று ப்ரஸ்துதமான திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே
மீளவும் திரு உள்ளம் சென்று -அந்த அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான்   குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

அண்டம் போய் எண்டிசையும்—மன்னு மணி முடி நீண்டு–அண்டத்தையும் -எட்டுத் திக்குகளையும் ஆதி ராஜ்ய ஸூ சகமான
திரு அபிஷேகம் வியாபிக்கவும் –
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –சேதனராலே செறியப் பட்ட பூமி யடங்கலும் திருவடிகளே யாகவும் –
மின்னை-உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான்  -மேக பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து அருளுகிற போது
மின்னைத் திருப் பீதாம்பரமாகக் கொண்டு உலகு அளந்தான் –
குன்றம்-குடையாக ஆ காத்த கோ ——-த்ரை லோக்யத்தையும் தன்னுடைய திரு மேனியில் மறைத்தவன்
ஒரு மலையாலே தன்னுடைய திரு மேனியை மறைத்துக் கொண்டான் –

————————————————————-

மலையைக் குடையாக தரித்துக் கொண்டு நின்று வர்ஷத்திலே அழியப் புக்க பசுக்களை ரக்ஷித்து அருளின நிருபாதிக
ஸ்வாமியான கிருஷ்ணன் உபய விபூதி நாதத்வத்துக்குத் தகுதியாய்க் கொண்டு பொருந்தி அழகிய ரத்னங்களாலே
சமைக்குப் பட்டு இருக்கிற திரு அபிஷேகம் ஆனது முசிவற வளர்ந்து அண்ட பித்தியிலே சென்று கிட்டும் படியாகவும்
எட்டுத் திக்குகளையும் பிராணிகள் நிறைந்து கிடக்கிற பூமி எல்லாவற்றையும் திருவடிகளே வியாபிக்கும் படியாகவும்
மேக பதத்துக்கு அவ்வருகே செல்ல வளருகையாலே அங்குண்டான மின்னலை திருப் பீதாம்பரமாகக் கொண்டு
மஹா பலி உதகம் பண்ணிக் கொடுத்த வன்று லோகத்தை அளந்து கொண்டான் –

——————————————————————————————————

ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில்
ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் –

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி–ப்ராஹ்மணானாய் ஒத்துச் சொல்லப் பெறுமா போலே
இடை ஜாதிக்கு உசிதமாகப் பசுக்களையும் மேய்த்துக் குழலையும் ஊதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -அப்பருவம் -நிரம்பாமையிலே கேசியினுடைய வாயைக் கிழிக்க வல்லனாய்
-விரோதியைப் போக்குகையாலே -ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
-மேவி-அரியுருவமாகி இரணியனதாகம்-தெரியுகிரால் கீண்டான் சினம் —மேவி -நரத்வ சிம்ஹத்வமான இரண்டு வடிவு கொண்டால்
பொருந்தாதே இருக்குமோ என்னில் -ஒரு வடிவு போலே பொருந்தின படி-
-அன்றிக்கே -மேவி என்று ஹிரண்யனுடைய வரத்தைக் கிட்டி -என்றுமாம் –
-எரி உருவமாகி –ஒளி யுண்டான ரூபத்தை யுடையவனாய்ச் சினத்தாலே இரணியன் ஆகத்தைக் கீண்டான்-
-அன்றிக்கே அருள் என்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு யுண்டான சினம் உத்தேச்யம்
-அச் சினத்தை தெரி -அநுஸந்தி -என்றுமாம் –

————————————————————————-

பசு மேய்க்கைக்கு யோக்யதை யுண்டாம் படி இடையனாய் பிறந்து ஜாதி உசிதமாக பசுக்கள் திரளைப் புல்லும் தண்ணீரும்
உள்ள இடம் தேடி வயிறு நிறைய மேய்த்து -திருக் குழலை ஊதி அந்தப் பருவத்தே தான் பிற்காலியாதே
நினைத்தது செய்ய வல்ல சமர்த்தனாய்க் கொண்டு கேசியினுடைய வாயைக் கிழித்தவனாய் –
-விரோதி போகப் பெற்ற ஹர்ஷத்தாலே –நீல ரத்னம் போலே -இருந்து குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய்-
-இரண்டு வடிவை ஏக காலத்திலே எடுத்துக் கொண்ட அளவிலே சேராச் சேர்த்தியாய் இராதே –
-சேர்ப் பாலும் கண்ட சர்க்கரையும் போலே பொருந்தி இருக்கிற -நரசிம்ஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு-
ஹிரண்யனுடைய முரட்டு உடம்பைத் திரு உகிராலே கிழித்துப் பொகட்டவனுடைய ஆஸ்ரித விரோதி விஷயமாகக் கிளர்ந்த
பரம ப்ராப்யமான சீற்றத்தை நெஞ்சே -ஆராய்ந்து அநுஸந்தி -அன்றிக்கே மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன்
சினத்தை யுடையனாய்க் கொண்டு -இரணியனது ஆகம் தெரி யுகிராலே கீண்டான் என்னவுமாம் –
-தெரி யுகிர் — விசத்தமாகப் பிரகாசிக்கிற உகிர் என்றபடி –

——————————————————————————————————-

அவன் சங்கல்பத்தாலே அன்றோ இந்த லோகம் கிடக்கிறது என்கிறார் –

இப்படி ஆஸ்ரித மாத்ரத்தை நோக்குகிற அளவு அன்றிக்கே தன் சங்கல்பத்தாலே லோகத்தை அடங்க நோக்கும் என்கிறார் –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள்  ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

ஓரகலத்துள்ள உலகு–ஓர் அகலத்து உலகு உள்ளது -சங்கல்ப ஞான ரூபத்தில் ஏக தேசத்தில் உலகம் எல்லாம் நிலை பெற்று உள்ளது –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து–சினத்தை யுடைத்தாய் -பெருத்து மதித்த குவலயா பீடத்தின் யுடைய
இரண்டு மருப்புகளையும் அநாயாசேன பறித்து –
புனமேய பூமி யதனைத் -சேதனர்க்கு போக்யங்களை யுடைத்தான பூமியை –
தனமாகப்-பேரகலத்துள்  ஒடுக்கும் —-தனம் போலே இருக்கத் திரு வயிற்றிலே வைத்துக் காக்கும் –
பேரார மார்வனார்–தன்னுடைமையானது ரக்ஷிக்கப் பட்டது என்றத்தாலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிற படி –
-ஓரகலத்துள்ள உலகு –அம்சமான சங்கல்பத்து உள்ளது லோகம் -ஓரப்படுகிற சங்கல்பத்து உள்ளது -என்றுமாம் –

——————————————————————————

மிக்க கோபத்தையும் முரட்டு வடிவையும் யுடைத்தாய் -மத முதிதமாய்க் கொண்டு -முன்னாடி தோற்றாதே வருகிற
குவலயா பீடத்தினுடைய திண்ணிதான கொம்புகளை அநாயாசேன முறித்து விழ விட்டு –
-சேதனர்க்கு நல்ல போகங்களை விளைத்து கொள்ளுகைக்கு அனுரூபமான பிரதேசங்களோடு கூடின பூமியை
சீரிய நிதியாக நினைத்துக் கொண்டு பெரிய பரப்பை யுடைத்தான திரு வயிற்றுக்கு உள்ளே வைத்து நோக்கும்
ஸ்வபாவனாய் இரு மடியிட்டுச் சாத்த வேண்டு படி பெரிதாய் இருக்கிற திரு ஆரத்தாலே ஒப்பித்து இருக்கிற
திரு மார்வை யுடையவனுடைய -அத்விதீயமாய் அபரிச்சின்னமான சங்கல்ப ரூப ஞானத்தால் உண்டாய் இருக்கும் ஜகத்து
-அன்றிக்கே -ஓரப்படுவதாய் -அனுசந்திக்கப் படுமதான சங்கல்ப ரூப ஞானத்து என்னவுமாம் –

———————————————————————————————————-

நெஞ்சே -உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கப் பார் என்கிறார் –

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்-அலர் கதிரும் செந்தீயும் ஆவான் –லோகமும் -எல்லாம் ஸம்ஹ்ருதமாய்க் காலமே
சேஷித்த காலமும் –கடலும் –அழகிய தாய் -அலரா நின்றுள்ள -ஒளியை யுடைத்தான ஆதித்யனும் -அக்னியும்
தனக்கு பிரகாரமாக யுடையவன் -இத்தால் ஜெகதாகாரதையைச் சொல்கிறது –
-பல கதிர்கள்-பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே—-பரம பதத்திலே எழுந்து அருளி இருக்கும் படி
-திவி ஸூ ர்ய சகஸ்ரஸ்ய பவேத் யுகபுதுத்திதா–என்னும் படியே நூறாயிரம் ஆதித்யர்களை ஓட வைத்த
ஒளியை யுடைத்தாய் ஸ்ப்ருஹணீயமான திரு அபிஷேகத்தை யுடையவனுடைய திருவடிகளிலே -/
பூரித்து என்னெஞ்சே புரி -ஸ்நேஹித்து ஆஸ்ரயி

——————————————————————–

லோகங்களும் -கால ஷேமமாம் படி சர்வமும் உப ஸம்ஹ்ருதமான சம்ஹார காலமும் -கடல்களும் –
அழகிய நிறத்தை யுடைத்தாய் விஸ்திருதம் ஆகா நின்றுள்ள கிரணங்களை யுடைய சந்த்ர ஸூ ர்யர்களும்
-சிவந்த நிறத்தை யுடைத்தான அக்னியும் ஆகிற பதார்த்தங்களை பிரகாரமாக யுடையனாய் -இவ்வளவு அன்றிக்கே
பரம பதத்திலே அசங்க்யாதமான கிரணங்களைப் புறப்பட விடா நிற்பதாய் -அழகிய பொன் போலே ஸ்ப்ருஹணீயமான
திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்குமவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளிலே
எனக்கு பவ்யமான நெஞ்சே -ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –

————————————————————————————————

பல கதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் –என்று பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் நமக்கு
ஸூலபனாமோ என்னில் -நமக்காக வன்றோ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆயிற்று -என்கிறார் –

இப்படி உபய விபூதி உக்தனான பெருமையோடு பரமபதத்திலே இருக்கக் கடவ அவன் நமக்கு
ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூ லபன் ஆனான் என்கிறார் –

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

விரிந்த சீர்-வெண் கோட்டு -வீர ஸ்ரீ யை யுடைய வெளுத்த கொம்புகளினின்று –/ கோடு-கோரப் பல்லின் மீது –

பொருகையால் வீர ஸ்ரீ யை யுடைத்தான வெள்ளைக் கோட்டிலே யுண்டான முத்தை யுதிரா நின்ற திருமலை –
பண்டு ஒரு நாள் பூமியை ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவனுடைய மலை –
-திருமலையில் ஆனைகளுக்குச் சேரும் இ றே செய் வராஹ ரூபமான வடிவு –

——————————————————–

பெரிய சீற்றத்தை யுடைத்தாய் கொண்டு பொருது அத்தாலே விஸ்திருதையான வீர ஸ்ரீ யை யுடைத்தாய்-
-வெளுத்த கொம்புகளினின்றும் முத்துக்களைச் சொரியா நிற்கும் வேங்கடமே முன்னொரு நாளிலே
ஸ்ரீ வராஹ ரூபியாய்க் கொண்டு பூமியைத் தன் திரு எயிற்றிலே எடுத்து வைத்துக் கொண்டவனுடைய திருமலை –

———————————————————————————————————

திருமலையிலே வந்து சந்நிஹிதனானவன்-ப்ரயோஜனாந்தர பரர்க்கும் அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன் கிடீர் -என்கிறார் –

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் –  ——46–

பிண்டமாய் நின்ற பிரான் –  -உபாதான காரணமாய் நின்ற எம்பெருமான் –

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்– ஓங்கி இருந்துள்ள மலையைத் தன் முதுகின்
மேலே வைத்து -அதிலே வாசுகியைச் சுற்றி – / –
தலை முகடு தான் ஒரு கை பற்றி -கீழ் கடைகிறது குலையாமல் ஆமையாய்த் தாங்கி -மேலே வைத்த சிகரம்
அடிக் கிளர்ந்து போகாத படி ஒரு கையாலே பற்றி –
-அலை முகட்டு-அண்டம் போய் நீர் தெறிப்ப –இத்திறந்த திவலை போய்த் தெறிப்ப –அலை மேல்
நீர் அண்ட பித்தியிலே போய்த் தெறிப்ப-
அன்று கடல் கடைந்தான்–பிண்டமாய் நின்ற பிரான் —இதுக்கு உபாதான காரணமானவன் –ஏகோ ஹவை நாராயண ஆ ஸீத்-

——————————————————————–

உயர்ந்த சிகரத்தை யுடைத்தான மந்த்ர பர்வதத்தைக் கீழே ஆதார கூர்மமாய் இருக்கிற தன் மேலே வைத்து
-வாஸூகியாகிற பாம்பை -அதன் நடுவே கடை கயிறாகச் சுற்றி -அது கொந்தளியாத படியாக அதன் தலையான
சிகரத்தைத் தான் ஒரு கையைக் கொண்டு அமுக்கி -கடைகிற வேகத்தால் அலைகளில் சிறு திவலைகள் ஆனவை
அண்டத்தினுடைய உச்சியிலே சென்று ஜலமானது தெறிக்கும் படியாக இந்த்ராதிகள் திருவடிகளில் வந்து விழுந்த அன்று
மஹத்தத்வமான கடலைக் குளப்படி போலே கலக்கிக் கடைந்து அருளினான் –கட சராவாதிகளுக்கு காரணமான
ம்ருத் பிண்டம் போலே -ஏகமேவ என்னும் படி பிண்டமாய் சகல காரியங்களும் தன்னோடு ஒன்றி நாம ரூப விபாக அநர்ஹ
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டானாய்க் கொண்டு நிகிலா ஜகத் உபாதான காரண பூதனாய் நின்ற உபகாரகன் கிடீர் —

——————————————————————————————

தேவர்களுடைய அபேக்ஷிதம் செய்தவனே கிடீர் நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுவான் -என்கிறார் –

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

நின்ற பெருமானே நீரேற்று–மஹா பலி பக்கல் நீர் ஏற்று சேஷித்வம் தோற்றும்படி நின்றவனே
உலகெல்லாம்-சென்ற பெருமானே –லோகத்தை எல்லாம் அளந்து உடையவன் என்று தோற்றும்படி நின்றவனே –
செங்கண்ணா -ஸ்நே ஹம் தோற்றும்படி நின்றவனே –
அன்று-துரக வாய் கீண்ட துழாய் முடியாய்–வைத்த வளையம் வாடாமல் கேசி வாயைக் கிழித்தவனே –
நங்கள்-நரகவாய் கீண்டாயும் நீ ——–ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –

————————————————————————–

மஹா பலி பக்கலிலே சென்று உதக ஜலத்துக்குக் கை ஏற்றுக் கொண்டு சேஷித்வம் தோற்ற நின்று அருளின வனாய்
-அவன் உதகம் பண்ணின அநந்தரம் சகல லோகங்களிலும் சென்று அளந்து கொண்ட சர்வ ஸ்மாத் பரனாய்
-இந்திரன் கார்யம் தலைக் கட்டப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனாய்
-ஜகத்து அஸ்தமிதமாகப் புக்க வன்று குதிரை வடிவு கொண்டு வந்த கேசியினுடைய வாயை கிழித்துப் பொகட்டவனாய்-
அத்தசையிலும் திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு அவ் ஓப்பனை
குறி அழியாமே நின்றவனே -இப்படி விரோதி நிரசன சீலனாய் இருக்கிற நீயே யாய் இருக்கும்
அநந்ய பிரயோஜனரான எங்களுடைய சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டாயும்-

——————————————————————————————————————

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ என்ன -பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்-உன்னுடைமைக்கு மஹா பலி பக்கலிலே நீர் ஏற்று அத்தை திருவடிகளால் அளந்தாய் –
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்துப் பசு மேய்த்தாய் –
-நீ யன்றே-மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —கேசி வாயைப் பிளந்து மருதினிடை போய் -ஞான ஹீனமான அசேதனங்களைப்
போக்கினதுவேயோ –சேதனரான விரோதிகளையும் போக்கிற்று இல்லையோ –

—————————————————————————

மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று நீர் ஏற்று -ஜகத்தை அடையத் திருவடிகளால் அளந்து கொண்டாய் நீ யன்றோ
-ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து ரக்ஷணத்திலே ஒருப்பட்டு நின்று -கையும் கோலுமாய்க் கொண்டு பசுக்களை
வயிறு நிறையும் படி மேய்த்தாய் நீ யன்றோ -உன்னை விழுங்குவதாக வந்த கேசியினுடைய வாய் வலி குலையும் படி
வயிற்றைக் கிழித்துப் பொகட்டு -பெரிய மருதுகளின் நடுவே அவை வேர் பறிந்து விழும்படி தவழ்ந்து போய்-
-தேவா ஸூர சங்க்ராமத்திலே அ ஸூ ற வர்க்கத்தை அழியச் செய்து யுத்தம் பண்ணின நீ யன்றோ

—————————————————————————————————————

இன்னம் இவ்வளவேயோ–ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரங்கள் அநேகம் அன்றோ -என்கிறார் –

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

செற்றதுவும் சேரா இரணியனைச் -ஆஸ்ரிதரோடு சேராத ஹிரண்யனைக் கொன்றது –அவன் இழவுக்காக என்றவுமாம்
சென்றேற்றுப்-பெற்றதுவும் மா நிலம்-மஹா பலி பக்கல் நீர் ஏற்றுப் பெற்றது பூமி –
பின்னைக்காய் -முற்றல்-முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய்-நப்பின்னைப் பிராட்டிக்காக திண்ணியதாய்
-உலவா நின்ற ஏற்றினுடைய மிடுக்கை அழித்தாய்/
மூரிச்-சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —சூழ்ந்து -இடம் பார்த்து நின்று -கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையவனே –

—————————————————————————

நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்காக-மிடுக்கு யுடைத்தாய்க் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள ருஷபங்களின் முன்னே
பயப்படாதே உறைத்து நின்று -கொல்லும் விரகு விசாரித்து -அவற்றின் மிடுக்கைப் போக்கினவனாய் –
-இடமுடைத்தாய் சுரியையும் யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திவாயுதமாக யுடையவனே -இப்படி இருக்கிற நீ
கை கூசாமல் முடித்துப் பொகட்டதுவும் உன்னுடனே பொருந்தோம் என்று இருக்கும் துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை
-மஹா பலி பக்கல் சென்று நீர் ஏற்று அலைபாய லாபமாகப் பெற்றதுவும் உன்னதான மஹா பிருத்வியை
–மூரி என்று -குனிவாய் -அத்தாலே புடை பெருத்து இருக்கையை நினைக்கிறது
-மூரி என்று கடலாய் -கடலைப் பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -என்னவுமாம் —

————————————————————————————————————-

ஆஸ்ரிதர்களிலே ஒருவனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விரோதியைப் போக்கி அவனை பக்ஷபதித்து ரஷித்த படியை அருளிச் செய்கிறார் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை   வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்–ஆக முதலியாய் இட்ட திருத் துழாய் மாலையையும்
ஆதி ராஜ்ய ஸூசகமான மணி முடியையும் யுடையவன் –
தாழ்ந்த வருவித் தடவரைவாய் –தாழ்ந்த அருவிகளை யுடைத்தாய் இருந்துள்ள தடவரையில்
-ஆழ்ந்த-மணி நீர்ச் சுனை   வளர்ந்த மா முதலை கொன்றான்–ஆழ்ந்து நிர்மலமான நீரை யுடைத்தான
சுனையில் வளர்ந்த பெரிய முதலையை நீர்ப் புழு என்று பாராதே சினத்தோடு கொன்றான் –
அணி நீல வண்ணத்தவன் ———–ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்று என்று ஸ்ரமஹராமான வடிவுடையவன் ஆனான் –

——————————————————————————

வளையச் சாத்தின திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் மிக்க தேஜஸை யுடைத்தான ரத்னங்களோடே கூடின
திரு அபிஷேகத்தை யுடைய சர்வாதிகனாய் -கண்ட போதே சகல சிரமங்களும் போம்படி அழகிய நீல நிறத்தையும்
யுடையனான அந்த சர்வேஸ்வரன் -பூமி அளவும் வரத் தாழ்ந்த அருவிகளும் -தாழ் வரைகளையும் யுடைத்தான மலையிடத்து யுண்டான
=-ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான மடுவில் மனுஷ்யர் முகம் காணாமல் வளர்ந்த பெரிய முதலையை ஒரு நீர்ப் புழு
என்று பாராதே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கல் வாத்சல்யத்தால் தன் சினம் தீர முடித்துப் பொகட்டான் –

————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 31-40– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார்

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான்   —–31–

செவி தெரியா-நாகத்தான் –
கண்ணையே செவியாக யுடையவன் ஆகையால் தனிப்பட செவி தெரியாமல் இருக்கிற
திருவனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனும்

நறவேற்றான்-பாகத்தான் –தேன் போன்ற கங்கையை ஏற்றுக் கொண்டவனுடைய /நறவையும் ஏற்றையும் யுடைய-ருத்ரனை
திருமேனியில் ஏக தேசத்திலே கொண்டவன் –

இரணியனதாகம்-அவை செய்தரியுருவமானான் —
உபசயாத்மகமான ஹிரண்யனுடைய சரீரத்தைப் பலவாகச் செய்து சிம்ம ரூபியானான் –

செவி தெரியா-நாகத்தான் —
ஒரு இந்த்ரியத்தாலே எல்லாவற்றையும் க்ரஹிக்குமவன் -சஷூஸ் ஸ்ரவா இறே –

நால் வேதத்துள்ளான் –
நாலு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்பட்டவன்

நறவேற்றான்-பாகத்தான்–
நறவை ஏற்றவன் –நறவையும் ஏற்றையும் யுடைய ருத்ரனுக்குத் திருமேனியிலே இடம் கொடுத்த சீலவானாவான்-

பாற் கடலுளான்–
திருப் பாற் கடலிலே உள்ளவன் / இவையவன் கோயில்-கீழ்ச் சொன்னவை -நெஞ்சை வருந்தி அனுவர்த்தித்தபடி –

—————————————————————–

அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற ஸ்தலங்களாய் இருக்கும் கீழ்ச் சொன்ன இந்தத் திருப்பதிகள் எல்லாம்
ஹிரண்யனுடைய முரட்டு உடம்பை சின்னம் பின்னம் என்னும்படி பல கூறாம் படி பண்ணி அவன் வாரத்துக்கு
உள்ளடங்காத நரசிம்ஹ ரூபியானவன் –
சஷூஸ் ஸ்ரவா யாகையாலே சஷூர் இந்திரியம் கொண்டே ஸ்ரோத்ர இந்திரிய காரியமும்
கொள்ள வல்லவன் ஆகையால் செவியால் தெரியும் தெரிவின்றிக்கே இருக்கிற திருவனந்த ஆழ்வான் உடைய
திரு மேனியில் நிரந்தர சம்ச்லேஷம் பண்ணி வர்த்திக்குமவனாய்
நிர்தோஷ ப்ரமாணமான நாலு வேதங்களுக்கும் ப்ரதிபாத்யனாய் வர்த்திக்குமவனாய் –
ஹேயமான மதுவையும் ருஷபத்தையும் யுடைய துர்மாணியான ருத்ரனைத் திருமேனியின் பார்ஸ்வத்திலே
யுடையவன் ஆகையால் அத்யந்தம் ஸூ சீலனுமான சர்வேஸ்வரன் ப்ரஹ்மாதிகளுக்கு ஆசிரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினான் –

——————————————————————–

இப்படி சீலவானான அவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார்

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்

நூற் கடலும் —
இதிஹாச புராணங்கள் ஆகிற கடலும் –

நுண்ணூல தாமரை மேல் –
இதிஹாச புராணங்களில் ஹ்ருதய கமலம் என்று

பாற் பட்டு-
சொல்லப் படுகிறதின் மேல் வைக்கப் பட்ட

இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்-
இந்திரியங்களை யுடைய மனஸை தனக்கு இருப்பிடமாகக் கொண்டான்

குருந்து ஒசித்த கோபாலகன் —-
விரோதியைப் போக்கி ஸூலபனானவன்-இவனுடைய உண்மை எல்லாம் பரார்த்தம் என்கிறது –

——————————————————————–

குருந்தத்தை அநாயாசேன முறித்துப் பொகட்ட கோப குல அவதீர்ணனான கிருஷ்ணன் -திருப் பாற் கடலும் -திரு மலையும்
திருவனந்த ஆழ்வானும் -சம்சார வெக்காயம் தட்டாத படி -குளிர்த்தி மிக்கு நிரதிசய போக்யமான ஸ்ரீ வைகுண்டமும்
ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளான சாஸ்திர சமுத்திரமும் –பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோமுகம்-என்று
அதி ஸூ ஷ்மமான வேதாந்த சாஸ்திர ஸித்தமான ஹ்ருதய கமலத்தின் மேலே ஸமஸ்த கரணங்களும்
ப்ரவணமாம் படி யோகத்தில் ஸூ பிரதிஷ்டராய் இருக்கிற பரம யோகிகளுடைய மனஸ்ஸூம் ஆகிற
இவ்விவ ஸ்தலங்களை அபிமதமான இருப்பிடமாகக் கொண்டான் –

——————————————————————-

இப்படி இருக்கிறவன் அபேக்ஷித்தார் அபேக்ஷித்தத்தை எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்–
ஒரு பாவனாய் இருபத்தொரு ஆலிலையின் மேலே பருவம் நிரம்பாப் பிள்ளையாய் –

மேலோருநாள் உண்டவனே —
லோகங்களை எல்லாம் நோவு படாமல் மெள்ளத் திரு வயிற்றிலே வைத்தவன் –

மெய்ம்மையே —
ஐந்த்ர ஜாலகரைப் போலே யன்றிக்கே சத்யமே–

மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம் அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று–
பிராணனைக் கொடுக்கவல்ல மிடுக்கை யுடைத்தான அம்ருதத்தை ஆகாசத்தே நிற்கிறவர்களுக்குக் கொடுத்தாய் நீ அன்று –

———————————————————————–

தனக்கு சிலர் பரிய வேண்டும் படி முக்த சிஸூவான விக்ரஹத்தை யுடையவனாய்க் கொண்டு பவனாய் இருபத்தொரு
ஆலந்தளிரின் மேலே பூர்வ காலத்திலே லோகங்கள் எல்லாவற்றையும் நெருக்குப் படாதபடி மெள்ள இந்த்ர ஜாலமாக வன்றிக்கே
பரமார்த்தமாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினவனாய் –
இந்த அக்கடிகடனா சாமர்த்தியத்தால் சர்வாதிகன் என்று தோற்ற இருக்கிறவனே-
ஏவம் விதமான சக்தி மஹாத்ம்யத்தை யுடைய நீ தேவர்கள் சாகாமைக்கு மருந்து தேடித் தர வேணும் -என்று
அர்த்தித்த அன்று மந்த்ர பர்வதத்தாலே-மிக்க ஜலத்தை யுடைத்தான திருப் பாற் கடலைக் குளப்படி போலே கலக்கி
உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்கும் உரப்பை யுடைத்தான அம்ருதத்தை ஸ்வர்க்க வர்த்திகளான தேவர்களுக்கு கொடுத்து அருளினாய் –

——————————————————————

அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் -என்று
தம்முடைய நெஞ்சைக் குறித்துச் சொல்கிறார் –

ஸ்ரீ காஞ்சீ புரத்தில் பல திருப்பதிகளிலும் நிற்பது இருப்பது கிடப்பது ஆகிற அவன் படியை அனுசந்தித்து முன்பு
திரு உலகு அளந்து அருளின போதை சிரமத்தாலே வந்ததாகக் கொண்டு அஞ்சுகிறார் –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–34–

கேடில் சீரானை —
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையவனை —

முன் கஞ்சனைக் கடந்தானை நெஞ்சமே காண்–
கம்சன் நினைத்த வஞ்சனையை அவன் தன்னோடு போம்படி முடித்து உபகாரகன் ஆனவனை –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்-நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று-கிடந்தானை-
பூமி அடங்கலும் நின்று அளந்த வருத்தத்தாலேயே திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுகிறதும் –
திரு வேளுக்கையில் இருக்கிறதும் என்று நெஞ்சே அநுஸந்தி

————————————————————————-

திரு வேளுக்கையிலே எழுந்து அருளி இருந்து -மஹா நகரமான திரு வெஃகாவில் சாய்ந்து அருளினவனாய் –
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையனாய் முன்பு ஒரு நாளிலே விரகிலே நலியப் பார்த்த கம்சனை
முடித்துப் பொகட்டுத் தன்னை நோக்கித் தந்தவனை –
நினைவற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கிற அன்று
அநாயாசேன நின்று காடு மோடையுமான இஜ்ஜகத்தை அளந்து கொண்ட அலசுதலாலேயோ இருப்பது கிடப்பது ஆகிறது
என்று வயிறு எரிச்சலாலே நெஞ்சே அனுசந்திக்கப் பார்-

————————————————————————

நெஞ்சமே காண் என்று உபதேசித்தார் கீழ் -இந்திரியங்கள் தாம் முற்பட்டு இவரை மூட்டுமளவாயிற்று -என்கிறது –

நெஞ்சமே காண் என்று உபதேசித்து -இவர் வாய் மூடுவதற்கு முன்னே சஷூராதியான பாஹ்ய கரணங்கள்
தாம் முற்பட்டுத் தம்மையும் ப்ரேரித்துக் கொண்டு அங்கே மேல் விழுகிற படியைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார் –

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு பூண்டார கலத்தான் பொன் மேனி —
காண் காண் என விரும்பும் கண்கள்–ஒளி விடா நின்ற ஹாரத்தையும் தாரையும் யுடைத்தான –
திரு மார்பை யுடையவனுடைய ஸ்ப்ருஹணீயமான திருமேனியைக் கண்கள் காண் காண் என விரும்பா நின்றது –

பாண் கண்-தொழில் பாடி —
பாட்டிலே தொழில் யுண்டாக பாடி –பாண் தொழில் உண்டாகப் பாடி என்றுமாம்-
அவனுடைய தொழிலைப் பாட்டிலே வைத்துப் பாடி என்னவுமாம் –

வண்டறையும் தொங்கலான செம்பொற்-கழல் பாடி யாம் தொழுதும் கை —-
வண்டுகள் சப்தியா நின்றுள்ள மாலையை யுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளைக் கையாலே தொழுவோம் –

————————————————————————-

என்னுடைய கண்களானவை புகர் ஒளி விடா நின்றுள்ள ஆபரணங்களையும் திரு மாலையையும் யுடைத்தான
அகன்ற திரு மார்வை யுடைத்தானவனுடைய பொன்மலை போலே ஸ்ப்ருஹணீயமான திருமேனியைக்
காண வேணும் காண வேணும் என்று ஷாம காலத்தில் சிறு பிரஜைகள் சோறு சோறு என்று அலையுமா போலே
மிகவும் ஆசைப்படா நின்றன –
பாட்டினிடத்திலே அவனுடைய சேஷ்டிதங்களை வைத்துப் மதுபான மத்தமாய்க் கொண்டு
வண்டுகள் சப்தியா நின்றுள்ள திரு மாலையாலே அலங்க்ருதனானவனுடைய –சிவந்த பொன் மேலே அதி சிலாக்யமான
திருவடிகளை நாம் வாயாரப் பாடி –கையாலே அத்யபி நிவேசம் அடங்கும் படி -தொழுவோம்
பாண் -என்று பாட்டாய் -கண் என்று இடமாய் -பாட்டின் இடத்திலே தொழிலை வைத்துப் பாடி என்றபடி –
அன்றிக்கே பாண் என்று அழகாய் அழகிய தொழிலைப் பாடி என்னவுமாம் -பாணருடைய தொழிலிலே-ரீதியிலே பாடி -என்னுதல்
பாட்டுக்களைத் தொழில் யுடைத்தாம் படி பாடி என்னவுமாம் –

—————————————————————————

யாம் தொழுதும் என்று மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

கையனலாழி கார்க்கடல்வாய் வெண் சங்கம்
வெய்யகதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  -செய்ய
படை பரவை பாழிபனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

அனலாழி கார்க்கடல்வாய் வெண் சங்கம்-வெய்யகதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  -செய்ய–படை –கைய-இவை கையில் உள்ளன
-செய்ய என்று ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது –
பரவை பாழி—-திருப் பாற் கடல் படுக்கை —/ பனி நீருலகம்-அடியளந்த மாயரவர்க்கு –கடல் சூழ்ந்த பூமி யளந்த சர்வேஸ்வரனுக்கு –

—————————————————————————

குளிர்ந்த நீரை யுடைத்தான கடல் சூழ்ந்த பூமியைத் திருவடிகளாலே அளந்து கொண்ட ஆச்சர்ய பூதனான அந்த
சர்வேஸ்வரனுக்கு பிரதி பக்ஷத்தின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு வாழி –கறுத்த நிறத்தை யுடைத்தான
கடல் இடத்தே பிறந்த வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -செவ்விதான ஸ்ரீ கதை –
அப்படி இருந்துள்ள ஸ்ரீ சார்ங்கம் -வெவ்விய தேஜஸ்ஸை யுடைய திருக் குத்துடை வாள் இவை யாகிற அழகிய
திவ்ய ஆயுதங்கள் திருக் கையிலே யுளவாய் இரா நின்றன –
திருப் பாற் கடல் படுக்கையாய் இரா நின்றது -என்று வித்தராய் அனுபவிக்கிறார் –

———————————————————————-

நாம் அடிமையில் அந்வயிக்க ஸுபரியைப் போலே அநேகம் வடிவு கொண்டு புஜிக்க ஆசைப்படா நின்றான் -என்கிறது –

இப்படி தாம் அவனை அனுபவிக்கப் புக்கவாறே அவனும் தன் பெருமையைப் பாராமல் தம் பக்கலிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு பல வடிவு கொண்டு தம்மை அனுபவியா நின்றான் என்கிறார் –

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் —
திருப் பாற் கடலை வாசஸ் ஸ்தானமாக உடையனாய்

துவர்க்கும்-பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம் திகழும் திரு மார்வன் தான் —-
பெரிய பிராட்டியாரையும் அநேகம் மாணிக்கங்களையும் யுடைத்தாய் இருந்துள்ள
பூண் ஆரத்தாலே திகழா நின்றுள்ள திரு மார்பையும் யுடையவன் -அவனுக்கு அடிமைப் பட்டவன்-
குறைவற்ற மேன்மையையும் -வடிவு அழகையும் யுடைய ஸ்ரீயபதியானவன் நான் அடிமையிலே அந்வயித்த
மாத்திரத்திலே உள்ளும் புறமும் விட சக்தன் ஆகிறிலன்-

—————————————————————-

அப்படிப்பட்ட வைபவத்தை யுடையனானவனுக்கு ஒரு பிரகாரத்தாலே அடிமை புக்கேன் -அநந்தரம் பூமியைச் சூழ்ந்து
லவண உத்தரமாய் -கறுத்து இருந்த கடல் நீரிலே கண் வளர்ந்து அருளுமவனாய் -சிவந்த பவளம் போலே இருந்துள்ள
திரு அதரத்தை யுடையளான பெரிய பிராட்டியாரையும் -பல வகைப்பட்ட ரத்தினங்களை யுடைத்தான ஆபரணங்களையும் –
திரு ஆரத்தையும் யுடைத்தாய்க் கொண்டு விளங்கா நின்றுள்ள திரு மார்வை யுடையனான அவன் தான் –
அந்த ஒப்பனையையும் குறைவற்ற மேன்மையையும் பிராட்டியுடைய ஆதாரத்தையும் புரிந்து பாராமல் ஸுபரியைப் போலே
பல வடிவு எடுத்துக் கொண்டு உள்ளொடு புறம்போடு வாசி அறக் கலந்து நின்று அனுபவியா நின்றான்-
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்று ஈடுபடுகிறார் –

———————————————————————

இப்படி என்னை மேல் விழுந்து விரும்புகிறவன் ஒரு கா புருஷன் அல்லன் -சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

தானே தனக்குமவன் –
தனக்கு உபமான ரஹிதன் / உபமான ராஹித்யத்துக்கு அடி -சகல பதார்த்தங்களும் அவனுக்கு
பிரகாரங்களாய் -தான் பிரகாரியாய் -பிரகாரயந்த்ரம் இன்றிக்கே இருக்கை –
தன்னுருவே எவ்வுருவும் -எல்லா பதார்த்தங்களும் அவனுக்கு சரீரம் –
தானே தவவுருவும் –தபஸ் ஸூ பண்ணி புண்ய சரீரான அதிகாரிகளும் அவனுக்குப் பிரகாரம் –

————————————————————-

தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் தனக்கு சரீரமாய் இருக்கும் -தபஸ்ஸைப் பண்ணின புண்ய சரீரராய் –
ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களிலே அதிகரித்த ப்ரஹ்மாதி பதார்த்தங்களும் நக்ஷத்ரங்களும் தான் என்கிற சொல்லுக்குள்ளே
அடங்கும் படி தனக்கு பிரகாரமாயேயாய் இருக்கும் -ஜ்வலன ஸ்வபாவமான அக்னியும் -பெரிய குல பர்வதங்களும் –
எட்டு திக்குகளும் -அண்டாந்தர வர்த்திகளான சந்த்ர ஸூரியர்கள் ஆகிற இரண்டு வகைப்பட்ட தேஜஸ் பதார்த்தங்களும்-
தனக்கு பிரகாரமாய் இருக்கும் -இப்படி கார்ய காரண ரூபமான சகல பதார்த்தங்களும் தனக்கு பிரகாரமாய்-
தான் பிரகாரியாய் -தனக்கு ஒரு பிரகாரயந்த்ரம் இன்றிக்கே இருக்கக் கடவ சர்வேஸ்வரன் தனக்குத் தானே
உபமானமாய் இருக்கும் –
இன்னமும் இப்படி இருப்பான் ஒரு ஈஸ்வரன் உண்டாகில் இறே ஒப்புக் சொல்லலாவது என்று கருத்து–

——————————————————————–

இப்படி ஜெகதாகாரனாய் நின்ற சர்வேஸ்வரன் திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்-
பின்பு என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் -என்கிறார் –

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய்  மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி  நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே  உளன் —–39-

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்-மறையாய்
உபாயவிபூதி உக்தனாய் -பூமியும் எட்டுத் திக்குகளும் வேதங்களும் தான் இட்ட வழக்கு –

மறைப் பொருளாய்
வேத ப்ரதிபாத்யனாய் –

வானாய்-பிறை வாய்ந்த வெள்ளத்தருவி விளங்கொலி  நீர் வேங்கடத்தான்-
சந்த்ர பதத்தில் கிட்டின வெள்ளத்தை யுடைத்தாய் இருந்துள்ள திருமலையில் நின்று

உள்ளத்தின் உள்ளே  உளன்-
என்னுடைய ஹிருதயத்திலே புகுர அவசர பிரதீஷனாய் இருக்கிறான் –

————————————————–

சர்வ ஸ்வாமியாய் -பூமிக்கு அந்தர்யாமியாய் -எட்டுத் திக்கில் யுண்டான ஸமஸ்த சேதனரையும் தனக்கு
பிரகாரமாக யுடையனாய் -சேதனர்க்கு ஹித அஹித ஞாபகமான வேதங்களுக்கு நிர்வாஹகனாய் –
பரம ஆகாச சப்த வாஸியான பரம பதத்தையும் பிரகாரமாக யுடையனாய் -சந்த்ர பதத்தைக் கிட்டி இருப்பதாய்-
மிக்க ஜலத்தை யுடைத்தான திரு அருவிகளினுடைய விளக்கத்தை யுடைத்தாய் த்வனியா நின்றுள்ள
ஜல ஸம்ருத்தியோடே கூடி இருப்பதுமான திருமலையை வாசஸ் ஸ்தானமாக யுடையனான சர்வேஸ்வரன்
திருமலையிலே நிலை இங்கே வந்து புகுருகைக்கு அவசரம் பார்த்து நின்ற நிலை என்று தோற்றும்படி
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே நித்ய சந்நிஹிதனாய் இரா நின்றான் –

——————————————————

இப்படி சர்வாதிகனானவன் எண் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

உளன் கண்டாய்-
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது —இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா —

நன்னெஞ்சே –
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
நம்முடைய சத்தா ஹேது அவன் என்று நினைத்திரா அன்றும் -என்றும் -அவன் இருக்கும் படி இதுவே –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
புகுரப் புக்கால் விலக்காதாருடைய ஹ்ருதயத்தில் உளன் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் —
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறதை உபபாதிக்கிறது –
உபரிதன லோகங்களும் சில எல்லை யுண்டு என்று இராதே இவை வேண்டா என்று கொண்டு உயரா நின்ற
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படிக்கு ஈடாக உயரா நின்ற சிகரத்தை யுடைத்தாய் இருந்துள்ள
திருமலையிலே நின்றவன் பரப்பின திருவடிகளிலே பூமி தோற்றாத படி அளந்து கொண்ட மன்னன் -உடையவன்
இந்திரன் இழந்தது பெறுகையாலும் -மஹா பலியைப் பறித்து வாங்கிக் கொடுக்கையாலும்
இவனை உடையவன் என்று தோற்றா நின்றது –

————————————————————————

அவனுடைய உண்மைக்கு இசைந்து அத்தை சபலமாக்கின நல்ல நெஞ்சே -நம் பேறு தன் பேறாக விரும்பி ரஷிக்கும்
ஸ்வபாவனான சர்வேஸ்வரன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கையிலே உளனாய் இருக்குமவன் கிடாய் –
நாம் அவனுடைய உண்மைக்கு இசைந்த இன்றோடு இசையாத முன்போடு வாசி அற சர்வ காலத்திலும்
நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனாய்க் கொண்டு உளனாய் இருக்குமவன் கிடாய் -அவன் தானே வந்து புகுரும் இடத்திலே
விலக்காமல் பொருந்தி அனுசந்தித்து இருக்குமவர்களுடைய ஹிருதயத்திலே உளனாய் இருக்குமவன் கிடாய்-
ஆகாசாதிகளான ஊர்த்வ லோகங்கள் அடங்க ஓர் அருகே ஒதுங்கும் படி சிகரங்கள் ஓங்கி இரா நிற்பதாய்-
நாலு பாடும் நிறைந்து துளும்பி வெள்ளம் இடுகிற திரு அருவிகளை யுடைத்தான -திருமலையை இருப்பிடமாக
உடையனானவன் பூமிப பரப்பு அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி தான் அளந்து கொண்ட ராஜாவாய் இருக்கும் –

—————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்