Archive for the ‘மூன்றாம் திருவந்தாதி’ Category

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -91-100–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

எம்பெருமானுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்கிறார்
அவனுடைய அபரிச்சேத்யதைக்கு ஓர் அவதி காண ஒண்ணாதா போலே கிடீர்
அவன் சரித்ரம் தானும் ஒருவரால் ஓர் அவதி காண ஒண்ணாத படி என்கிறார் –

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

சாமான்யேன ஜகத்தையும் பிரதிகூலருடைய பிராணங்களையும் உண்டும் – அனுகூலர் ஸ்பரசித்த த்ரவ்யத்தை
யுண்டு அல்லது பர்யாப்தம் ஆய்த்து இல்லை –மண் உண்டது முதல்வன – இவற்றின் ஆற்றாமை பரிஹரித்த படி –
இங்கு தன் ஆற்றாமை பரிஹரித்த படி –ஜகத்துக்கு தன வயிறு போலே தனக்கு வெண்ணெய் –
சர்வ நியந்தா வானவன் – சம்சார சம்பந்த ஸ்திதி மோஷ ஹேது வானவன் ஒரு அபலை கையாலே கட்டுண்டு
போக மாட்டாதே இருந்தான் –இவ்விடத்தை இயலைக் கேட்டு ஹர்ஷத்தாலே
பிள்ளை உறங்கா வில்லி தாசர் வயிற்றை அறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ – என்று பணித்தார் –

———–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனான எம்பெருமானை நெஞ்சே பூரணமாக நினை -என்கிறார் –
அவன் சிறைப் பட்டான் ஒருவன் என்று இராதே நம் சிறையை வெட்டி விட வல்லான் ஒருவன் என்று
புத்தி பண்ணு -என்கிறார் –

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

சர்வர்க்கும் பிதாவானவன் தான் புத்ரனாய் அவதரிக்கும் –சர்வேஸ்வரனுக்கு அலாப்ய லாபம் இறே –
தனக்கு இல்லாத ஒன்றிலே இறே ஸ்நேஹாம் ஜனிப்பது-தன்னாலே ஸ்ருஜ்யமான பதார்த்தங்களின் உடைய
ரஷண ஹேதுவாகத் தான் புத்ரத்வத்தை ஏற்றுக் கொண்டு பித்ருமானாம் –

———-

இப்படி இருக்கிற எம்பெருமான் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்திலே ஒருவரும் அறிந்து
ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை – ஆனாலும் நெஞ்சேநீ யவனை உன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு
புகுந்து வை கிடாய் என்கிறார் –

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து —–93-

கோஷித்துக் கொண்டு கண்ட இடம் எங்கும் தடையற சஞ்சரிக்கிற பிரளயத்திலே அத்விதீயமான முக்த சிசு
விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு வயிற்றில் புக்க பதார்த்தத்துக்கு ஓர் அலைச்சல் வாராத படி
மெல்லக் கண் வளர்ந்து அருளினவனை –கொடு வந்து வை –
கொடு வருகை யாவது அவன் புகப் புக்கால் விலக்காது ஒழிகை –
நமக்கு இவன் அல்லது தஞ்சம் இல்லை என்று அனுசந்தித்து லோகத்தில் கலங்காமல் அறிய வல்லார் ஒருவரும் இல்லை –
ஆனாலும் நெஞ்சே இப்படி இருக்கிறவனைக் கொடு வந்து உன் ஹிருதயத்திலே வை –
அவன் புகுரப் புக்கால் விலக்காதே கிட்டி அநுஸந்தி

————

இப்படி -வையம் தகளி-தொடங்கி இவ்வளவும் வரத் தாம் பெற்ற பேற்றைச் சொல்லுகிறார் –
கீழில் பாட்டில் நெஞ்சே உள்ளத்தே வை -என்றார் –
இப்பாட்டில் – தாம் அவனை அனுசந்தி என்ற அளவிலே அத்யாபி நிவேசத்தோடே கூட எம்பெருமான் உள்ளே புகுந்து
தம் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடியை அருளிச் செய்கிறார் –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

இவனுடைய க்ருஷியே அவனுக்கு வலை –அவனும் இவ்வலையிலே அகப்பட்டு என்னுடைய நெஞ்சிலே வந்து புகுந்து –
மெல்லக் கொள்ளக் கொண்டு கால் பாவி தரித்து –நிற்பது-இருப்பது- கிடப்பதானான் –
நான் நசியாமல் -ஹிருதயத்தில் ஸ்திதி யாதிகளுக்கு விச்சேதம் இன்றிக்கே -இடைவிடாதே புறம்பு போக்கு இல்லை என்று
தோற்ற வாசனை பற்றுண்டாய் இருந்தான்

—————–

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச்
சொல்லுகிறார் – நெஞ்சே இப்படி உபகாரகனான எம்பெருமான் திருவடிகளிலே வணங்கி அவனை வாழ்த்து
என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து ——95-

ஆஸ்ரிதன் பக்கல் ஓரத்துக்கு அடி பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –
அவனை பஜிக்கும் போது அவளுக்கும் பிரியம் செய்து பஜிக்க வேண்டுகையைச் சுட்டி –
வந்திக்கைக்கும் வாழ்த்துக்கைக்கும் விஷயம் அவளோடு கூடினவன் போலே –
ஆசைப் பட்டாருடைய விரோதிகள் ஹிரண்யன் பட்டது படும் அத்தனை

—————

நித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றமும் பொறாதே சுகுமார்யத்தை உடையவன் -என்கிறது –அன்றிக்கே –
அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும் அவன் திருவடிகளிலே வணங்கித் தங்கள் அபேஷிதம் பெறுவது -என்கிறார்
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -11 -என்னக் கடவது இறே –

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் ———-96-

இத்தால்-நித்ய ஸூரிகளுக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி –

———-

கீழில் படியாய் ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே அவனை ஆஸ்ரயித்துப் பெறில்
பெரும் அத்தனை -அல்லது ஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது -என்கிறார் –
அயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று என்கிறார் –

அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை ——-97-

இவர்களுக்கு சிந்திக்கத் தான் போமோ – இவ்வர்த்த ஸ்திதியை இவர்களால் மநோ ரதிக்கவும் முடியாது –

——–

தன்னை ஆச்ரயித்தவர்கள் உடைய விரோதிகளைப் போக்குமவன் என்கிறார் –
நம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சம்சார நிவ்ருத்தியைப் பண்ணித் தருவான் எம்பெருமான் என்றபடி –

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமஞ்சூழ்ந்தற விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

ஜகதாகாரதையைச் சொல்லுகிறது–ஆஸ்ரித விரோதி என்று கை தொட்டுப் பிளந்து பொகட்டான்
பத்தும் பத்தாக நம்மாலே சூழ்த்துக் கொள்ளப் பட்ட சம்சாரம் ஆகிற நரகம்-துரகம் பட்டது படும் இத்தனை

————-

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே நமக்கு பரம பிராப்யம்
என்கிறார் –

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

சர்வ சக்தியைப் பற்ற வேண்டாவோ -பயம் கெடும் போது –பிரதானமான திருவடிகளே நமக்குப் புகலிடம் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸ்தோத்ர ரத்னம் -22-என்னும்படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு -உதவினவன் திருவடிகளே நமக்கு ஸூ பாஸ்ரயம்-
நம்முடைய சஹாயம் வேண்டா-உண்டானவன்று -பலியாமையே யன்று விரோதியேயாம் அத்தனை –
ஒன்றினுடைய விநாசம் ஒன்றுக்கு உத்பத்தி-ஸ்வாதந்த்ர்ய பார தந்த்ர்யங்களுக்கு சஹாவ ஸ்தானம் இல்லை இறே –
ஈரரசு உண்டோ

——–

எம்பெருமான் புகலிடமாவது பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு
என்கிறார் –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

ஆபத்து உள்ள போதும் அல்லாத போதும் என்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –
நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும் அவனுக்கும் பிராட்டிக்கும்
ரஷணத்துக்கு பரிகரமான திரு ஆழியைக் கையிலே யுடையவன்-
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையை யுடைத்தாய் மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவன்-
அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –அவளை -அகலகில்லேன் -என்னும் –
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற உதாரமான தாமரை போலே இருக்கிற
ஒழுகு நீண்ட கண்ணை யுடைய நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் –
நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -81-90–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

கீழே சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே நெஞ்சு பகவத் விஷயத்திலே ப்ரவணமாய்த்து
என்று கொண்டாடினார் –விஷயத்தைப் பார்த்தவாறே முதலடி இட்டிலராய் இருந்தார் –
அவன் துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து
இவனை இம்மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு ஹேது என்னோ -என்கிறார்
இத்தால் தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி தமக்கு அவ் விஷயத்தில் உண்டான
ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் –
அவன் பெருமை பார்த்த போது அறிவொன்றும் இல்லையாத் தோன்றும்
புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

ஓர் உழக்கைக் கொண்டு கடலை யளக்கப் போகாது இறே –அப்படியே
ஷூத்ரமான மனசைக் கொண்டு அபரிச்சேத்யனானவனை பரிச்சேதிக்க ஒண்ணாது இறே
நாம் ஒருக்கால் நினைத்தால் ருணம் ப்ரவ்ருத்தம் -என்று ஒருக்காலும் மறவான் –
நிரந்தரம் நினைத்தாலும் நினையாதாரையோ நினைப்பது –
அவனை நினையாதே மண்ணை முக்கப் பார்க்கிறதோ

———

இது தன்னை நாம் இன்னாதாகிறது என் – அவன் தான் சிலரால் அறிய ஒண்ணாத படியாய் இருப்பான் ஒருவனுமாய்
நிரதிசய போக்யனுமான பின்பு இனியவனை நாம் கிட்டிக் கண்டோமாய்த் தலை கட்ட விரகு உண்டோ என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

இணர் -பூங்கொத்து-

இவன் தான் காணும் அன்று காண வரிதாய் அவன் தானே காட்டும் அன்றும் காண வரிதானாலும்
இழந்து ஆறி இருக்க ஒண்ணாது போக்யதையும் ஸ்வாமித்வமும் –
லௌகிகர் படியிலும் காண விரகற்று அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும் காண விரகற்ற பின்பு
இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ-கிட்டாது ஒழிய மாட்டேன்-கிட்ட மாட்டேன் –

————

அவன் ஒருக்காலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவனே ஆகிலும் அவன் இருந்தபடி இருக்க –
இப்போது முந்துற முன்னம் ஹ்ருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இறே-மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இறே
இப்படி சந்நிஹிதன் என்றதே யாகிலும் கீழ்ச் சொன்ன அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –

———–

வேதைக சமதி கம்யனாய் உள்ளவனை ஒருவரால் கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாது –
கண்டாராகச் சொல்லுகிறவர்கள் அடைய கவிகளைக் கொண்டாடினார்கள் அத்தனை அல்லது
ஒருவரும் கண்டார் இல்லை என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண் மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

ஆஸ்ரிதர்க்கு அனுபவ யோக்யமான விக்ரஹத்தை யுடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று சுருதி பிரசித்தமான கண் அழகை யுடையவனை
தமக்குக் காட்டின வடிவு ஆர் தான் காணப் பெற்றார்களோ –

———

ஒருத்தரால் அறியப் போகாதாகில் வாழ்த்துவார் பலராக –திருவாய் மொழி -3-1-7-என்னும்படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினால் அறியப் போமோ-என்னில்
எல்லாரும் அடையத் திரண்டு தந்தாமுடைய கரண சக்திகளைக் கொண்டு அவனை ஸ்தோத்ரம் பண்ண வென்று
புக்கால் பின்னையும் அவர்கள் நின்ற நிலைக்கு இவ்வருகாய் அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

அவனுடைய மணக் கோலத்தையும் ருஷபங்களை யடர்த்த ஒரு செயலையும் வடிவு அழகையும்
சொல்லப் போமோ –அவனுடைய ஒரு அபதானம் எல்லை காணப் போகாது –
இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ-

————-

ஸ்வரூப ரூப குணங்களைப் பரிச்சேதிக்கப் போகாது – உபமானத்தில் சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –
எம்பெருமான் உடைய அழகை அனுபவிக்க முடியாது என்னிலும் விட ஒண்ணாத படி ஸ்ப்ருஹநீயமாய் இருக்கும்
அது காண வேணும் என்று இருப்பாருக்கு மேகங்களே அவன் வடிவைக் காட்டும் -என்கிறார் –
சம்சாரத்தில் இருப்புக்கு ஒரு பிரயோஜனம் உண்டு – அதாகிறது அவன் வடிவுக்கு போலியான
பதார்த்தம் கண்டு அனுபவிக்கலாம் என்கிறார் –

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார்வானம் காட்டும் கலந்து ——-86-

கலந்து காட்டும் –சேர்ந்து காட்டும் –கேவலம் மேகம் காட்டுகிறதும் அன்று -கேவலம் ஆகாசம் காட்டுகிறதும் அன்று
இப்படி மின்னி முழங்கி வில்லிட்டுக் கொண்டு தோற்றுவது-சஜாதீயமாய் இருப்பதொரு மேகம் யுண்டானால்
அப்போது அத்தை யுடைத்தான ஆகாசம் சர்வேஸ்வரன் உடைய திருமேனிக்குத் தகுதியாய்க் கொண்டு தோற்றுவது

———–

பின்னையும் வடிவு அழகு தன்னை உபமான முகத்தாலே இழிந்து அனுபவிக்கிறார் –
எம்பெருமானுடைய ஸ்வா பாவிகமான வடிவு அழகை மரகத மணி காட்டும் –
ஒப்பனையால் வந்த வடிவு அழகை சந்த்யா காலத்திலேயே மேகம் காட்டும் என்கிறார் –

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

ஸ்ரீ கௌஸ்துபத்தின் உடைய சிவந்த தேஜஸ்ஸூம் ஸ்ரீ வத்ஸத்தின் உடைய கருத்த தேஜஸ்ஸூம்
ஸ்யாமமான திரு நிறத்திலே விரவினவாறே – ஸ்யாமமான திரு நிறத்தைக் கொண்டு பிரகாசிக்கிற
உன்னுடைய திரு மேனியை ஸ்ரமஹரமான மரகதத்தின் உடைய பிரபை விஸ்த்ருதமாய்க் கொண்டு
ஸ்பஷ்டமாகக் காட்டா நின்றது –
திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்தி வான் காட்டும் –
இவை போலி காட்டும்

———–

இப்படி இருக்கிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களில் உண்டான உள்மானம் புறமானத்தை ஆராய்ந்து
சம்சயியாதே சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய சமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

சம்சயம் இல்லாத விஷயம்-மது மாறாதே இருப்பதுமாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை
யுடைத்தான மார்வை யுடையவன் –சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய் ஸ்ப்ருஹநீயமாய்
அழகிதான திருவடிகளை தொழப் பாருங்கோள் –தொழுகைக்கு விரோதியான அநாதி கால சஞ்சிதமான பாபங்கள்
நீங்கள் தொழுவதாக் ஸ்மரிப்பதற்கு முன்பே நசிந்து ஓடிப் போம் –

———-

அனுபவிக்கலாவது திருமலையிலே கிடீர் -என்கிறார் –திருமலையில்
குறவரோடு மூங்கிலோடு திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேச்யமாய் இருக்கிறபடி –

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

பண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே
வைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை

————-

திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேச்யமான விடத்தில் அதிலே நின்றவன் உத்தேச்யனாகச் சொல்ல வேண்டா விறே –
திருமலையிலே நின்று அருளினவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணும் படியை அருளிச் செய்கிறார் –
இவன் பண்ணினானான அதுக்கோர் அவகாசம் காண்கிறிலீ கோளீ என்கிறார் –

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

அளக்கைக்கு இடம் போராத படியாய் இருக்க இவன் அளந்து கொண்டானபடி எங்கனயோ என்று
ஆச்சர்யப் படுகிறார் –நின்று அளக்கைக்கு இடம் போராது-என்ன ஆச்சர்யமோ –
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -71-80–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

இப்படித் திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூ லபமான திருவேங்கடமுடையான் வர்த்திக்கிற
திருமலை வ்ருத்தாந்தாத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து நிற்கிறவன் வந்து வர்த்திக்கிற தேசம் –
அந்த ஆனையினுடைய மௌக்த்யம் போலே இருப்பது ஓன்று ஆய்த்து இவனுடைய மௌக்த்யமும்-
திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகமாமோ என்னில் அக்னீஷோமீய ஹிம்சை போலே இருப்பது
ஓன்று இறே அவற்றிற்கு –

———–

அயர்வறும் அமரர்கள் அதிபதியான சர்வேஸ்வரனை கண்டு அனுபவிக்கலாவது திருமலையிலே கிடீர் -என்கிறார் –

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-

ராம பக்தியாலே திருவடி பரம பதத்தை விட்டு சம்சாரத்தைப் பற்றினான் –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராகையாலே நித்ய ஸூரிகள் சம்சாரத்தை விட்டு பரம பதத்தைப் பற்றினார்கள்
குற மகளிர் அவ்விரண்டையும் விட்டுத் திருமலையைப் பற்றி இருப்பார்கள் –
திருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடையராய்க் கொண்டு
வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் இருப்பார்கள் –
பரம பதத்தில் தன்னோடு ஒக்க எல்லோரும் பஞ்ச விம்சதி வார்ஷ்கராய் இறே இருப்பது
அவர்களுக்கு சேஷியானவன் வர்த்திக்கிற தேசம் –

————-

இவனுடைய திருவடிகளை ஏத்தும் இதுவே கிடீர் வாக் இந்த்ரியத்தால் கொள்ளும் பிரயோஜனம்
என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-

அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடக் கூத்தாடின இளைப்பாலே திருமலையிலே வந்து நின்றான்
குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை நாவால் படைக்கும் சம்பத்து
நாவால் கொள்ளும் பிரயோஜனம் –

——————-

அவன் பக்கல் ஸ்நேஹம் உடையாரில் யசோதைப் பிராட்டிதனைப் பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –
நமக்கு எம்பெருமான் பக்கலிலே வலியமூட்ட வேண்டி இருக்கும் –
இவருக்கு வெளிச் சிறப்பு கார்யகரமாகாதே கலக்கமே கார்யகரமாய்த்து என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ -சலமே தான்
வெங்கொங்கை யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

அறிவில் காட்டிலும் பிரேமமானது சால வலிதாய் இருக்கும் ஆகாதே –
ஸ்த்ரீத்வ பிரயிக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே –
தன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –
ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார்-

————–

இப்படி விரோதி நிரசன சீலனான கிருஷ்ணன் தனக்கு வாசஸ் ஸ்தானமாக விரும்பி இருக்கும் திருமலை
விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

கிருஷ்ணன் என்னது என்று அபிமானிக்கும் நிலமாய் ஜாதி உசிதமான வேங்கையின் பரிமளத்தை யுடைத்தான திருமலை –
காட்டு வேங்கையின் பரிமளமே யான திரு மலை –ஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய்
ஆயன் – காடும் மலையும் உகக்குமவன் – காட்டிலே வர்த்திக்கும் இடையருக்குக் காட்டில்
மரங்களுடைய நாற்றம் சாலப் ப்ரியம் இறே-

———–

உகந்து அருளின நிலங்களில் இங்கே சந்நிஹிதன் ஆனபின்பு இனி -அவ்வோ விடங்களில் முகம் காட்டிப்
பிழைத்துப் போம் இத்தனை -போக்கி தம் தம் உடம்புகளை நோவ வருத்தி துக்கப் பட வேண்டா கிடீர் –
புருஷார்த்த லாபம் வேண்டி இருப்பார்க்கு என்கிறார் –
சர்வேஸ்வரன் சம்சாரத்தில் புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நிற்க
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

வெக்காவே சேர்ந்தானை –இருவர் சாதன அனுஷ்டானம் பண்ண வேணுமோ –
பாபங்கள் ஆனவை நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அறிந்து தப்பாவே பின்பு அவை நிற்கை
என்று ஓன்று உண்டோ –தானே ஆராய்ந்து நமக்கு இவ்விடம் அன்று என்று ஓடிப் போம் –

————–

கீழே சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் உடைய பாபங்கள் எல்லாம் போம் என்றார் –
இதில் அளவில்லாதார்க்கே யன்று – பேரளுவு உடையரானவர்களுக்கும் விழுக்காடு அறியாதே தங்களை முடியச்
சூழ்த்துக் கொள்ளும் அன்று அவர்களுக்கும் எல்லாம் ஹித காமனாய்க் கொண்டு நோக்குவான் அவனே -என்கிறார் –
அவன் அல்லது நாம் ஹிதம் அறியோம் என்றார் கீழ் –
இதில் நாமே யல்ல ப்ரஹ்மாதிகளும் ஹிதம் அறியார்கள் – அவர்களுக்கும் ஹிதம் பார்ப்பான் அவனே -என்கிறார் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–77-

அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ ஆகிஞ்சன்யராய் அநந்ய பிரயோஜனரான நமக்கும் அரண் –
முஃயத்தாலே-மூன்று ஏழு என்று அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி
ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் நமக்கு ரக்ஷை –

———–

நெஞ்சே விரோதி நிரசன ஸ்வபாவனானவன் நமக்கு ரஷகனாம் –ஆன பின்பு அவனையே புகலாக அனுசந்திக்கப் பார் என்கிறார் –
அவன் சர்வ ரஷகன் ஆகிலும் நம்முடைய ஜ்ஞான வ்ருத்த ஜன்மங்களில் கொத்தை பார்க்க வேண்டாவோ -என்ன
வேண்டா -என்கிறார் –

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-

இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்–அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –
எது ஞானம் எது வ்ருத்தம் எது ஜன்மம் என்று இவை ஒன்றும் பாராதே ரஷகனாம் –
கதியாக ஸ்ரீ யபதியான அவன் திருவடிகளை அனுசந்தித்துச் சொல்லு –

————

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ என்னில் –
அவனை அனுசந்தித்து – சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப் போக்கலாம் -என்கிறார் –
நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச் செய்தார்கள் ஆகில் ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர் என்கிறார் –

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

இது கிடீர் நான் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்
பச்சை நிறத்தையும் மிக்க பரிமளத்தையும் யுடைத்தான திருத் துழாய் மாலையையும்
தேங்கின கடல் போலே தர்ச நீயமான வடிவு அழகையும் யுடையவன் –
அவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்
சப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம்

———–

இவ்விஷயத்தில் தமக்கு முன்னே தம் திரு உள்ளமானது பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –
உபதேச நிரபேஷமாக என்னுடைய நெஞ்சானது அவனுடைய விரோதி நிரசன ஸ்வ பாவத்தை அனுசந்தித்து
இந்த்ரிய ஜெயம் பண்ணி சம்சாரத்தைப் போக்கி அனுசந்திக்க முயலா நின்றது –என்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன் துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

இவனே சரண்யன் என்னும் இடமும் அல்லாதார் வ்யர்த்தர் என்னும் இடமும் சொல்லுகிறது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -61-70–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 23, 2020

பிரதி பந்தகங்கள் போக்கும் அளவேயோ –பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் சம்சாரத்திலே
உகந்து அருளின திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாக கொள்ளுகிறது –
இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலங்களிலும் காட்டில் தம்முடைய திரு உள்ளத்தை மிகவும்
ஆதரியா நின்றான் என்னும் தாத்பர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு திருப்பாற்கடலையும் விட்டு திருப்பதிகளைப் பற்றி இவை இத்தனையோடும்
தம்முடைய திரு உளத்திலே வந்து புகுந்தான் – இன்று என் துரிதத்தைப் போக்கி-என்னை அல்லது அறிகிறிலன்

————

ஆஸ்ரித ரஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் என்கிறார் –
கேவலம் சம்சாரத்தில் வந்து நின்ற மாத்ரமோ –பரமபதத்திருப்பும் மனிச்சுக்கவாய் அத்தாட்சியோடே கூடி இருப்பது
உகந்து அருளின தேசத்திலே அன்றோ என்கிறார் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

தன் உடைமையை மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தி யானவன் தன்னது மீட்டுக் கொள்ளுகைக்கு அர்த்தியாய் இருக்கிறபடி –
மகா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தி யானால் போலே உகந்து அருளின தேசங்களிலே
அர்த்தித்வம் தொடரும்படி நின்றான் –
அபேஷித்த சமயத்திலே ஒருக்கால் உதவிப் போகை அன்றிக்கே எப்போதும் உதவும்படி வந்து நிற்கப் பெற்றோமே என்று
திரு உள்ளம் மண்டி இருக்கிற இடங்கள் –
ஆஸ்ரிதர் அபேஷித்த போதாக வந்து அவதரிக்க வேண்டாதபடி கால் தாழ்ந்து வர்த்திக்கிற தேசங்களாய் இருக்கும் –

———————

இந்த தேசங்களிலே வந்து சந்நிஹிதனான அவன் தான் சால சீலவானாய் இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார் –
தாழ்வுக்கு எல்லையான சௌசீல்யம் –சாதக வேஷத்தையும் சித்தமான வேஷத்தையும் ஒக்க தரிப்பதே என்கிறார் –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

சிக்குத் தலை என்று அறுவராது ஒழிவதே-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு வபிஷேக பாதியாக நினைத்து
இருப்பதே தாழ் சடையும் –இவை ஒக்க தோன்றா நின்றது –அவனும் சரீர பூதன் இறே-
விசஜாதீயமான வடிவுகளாய் இருக்கச் செய்தேயும் அசாதாராண விக்ரஹம் போலே இரா நின்றதீ –
கெட்டேன் -இது ஒரு சீலாதிசயம் இருக்கிற படியே-என்று ஆச்சர்யப் படுகிறார் –

———-

இவன் தான் –பிரயோஜனாந்தர பரராய் தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத் தன்னை அழித்துத்
கார்யம் செய்து கொடுப்பான் -என்று அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்-

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

கடைந்த வருத்தமோ-உலாவிக் கடைந்த வருத்தமோ–திருக் கச்சியிலும் திரு வெஃகாவிலும்
கிடப்பது இருப்பது நிற்பது ஆகிறது தனியே கடலைக் கடைந்ததாலே திரு மேனியில் பிறந்த ஆயாசமோ –
இங்கனே நோவு படுகிறான் ஆகாதே -என்று வயிறு எறிகிறார் –

————

அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே மற்றுள்ள அவதாரங்களிலும் ஆயாச ஹேதுவான
வியாபாரங்களை யருளிச் செய்கிறார் –

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-

பொங்கி –மகா விஷ்ணும் -என்கிறபடியே -கிளர்ந்து கொண்டு புறப்பட்டு
அரி யுருவமாய்ப் – ஜ்வலந்தம் -என்கிறபடியே நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் –

————

தானொரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்னுமது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –
உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணுகை ஓர் ஏற்றமோ
அவதானம் இன்றிக்கே இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு என்கிறார் –

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு ——-66-

அப்படுக்கையிலே கிட்டினவர்கள்-ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்கிறபடியே
ஸ்வரூப ப்ராப்தி பெற்றுப் போகா நிற்க
இவர்களுக்கு பிரகிருதி தோஷத்தாலே விநாசமே சித்தித்து விட்டதாய்த்து –
சத்தையோடு ஜீவிக்கைக்கு ப்ரதிகோடியுமான விநாசமுமாய் விட்டது –
அதுகேடவர்கு இறுதி யாங்கு —-என்றும் என் பிள்ளைக்குத் தீமை செய்வார்கள் அங்கனம்
ஆவர்களே-பெரியாழ்வார் திரு மொழி -3-3-7-

——————

அங்கு கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபி கமலமானது -ஆழ்வார்கள் -இருவர் உடைய
சேர்த்தியையும் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –
ஹிரண்யனும் பட்டு மதுகைடபர்களும் முடிந்த பின்பு கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகை அனுபவிக்கிறார் –

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து ——67-

சந்த்ராதித்யர்கள் இருவர் உடைய அவஸ்தையிலும் செய்யக் கடவத்தை
இருவரும் கூட ஏக காலத்திலே தோற்றினாப் போலே இருக்கையாலே
இதுவும் இரண்டு அவஸ்தையிலும் செய்யக் கடவ கார்யத்தை ஓர் அவஸ்தையிலே செய்யா நிற்கும் –
திகிரி மொட்டிக்க ஒட்டாது-வெண் சங்கு மலர ஒட்டாது-நடுவே நிற்கும்
அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1–என்னுமா போலே –

————–

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவிக்கும் போது திருப்பாற் கடல் ஏறப் போக வேண்டா
திருமலையிலே அனுபவிக்கலாம் கிடீர் என்கிறார் –

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

இவற்றின் உடைய மௌக்த்யம் போலே யாய்த்து-அவனுடைய மௌக்த்யம் -இருக்கும்படி –
அசூரா வேசத்தாலே வந்தது என்று அறியாதே அவனும் ஏதேனும் ஒன்றைக் கொண்டு பழம் பெறப் பார்க்கிறான் இறே-
இருவர் செயலும் ஓன்று போலே இருக்கை

—————–

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக இப்பாட்டை அன்யாப தேசமாக நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –
அதாகிறது ஆழ்வாரான அவஸ்தை போய் பகவத் விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து அவளுடைய பாசுரத்தையும் செயல்களையும் திருத் தாயார் சொல்லுகிறாள் –
அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பாடுகை சூடுகை குளிக்கை முதலான லோக யாத்ரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –
ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும் திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய வேறு ஒரு மலை அறியாள் –இக் குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம்
பரோபதேசமாக-திருமலையைப் பாடும் கோள்-அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –
அவன் சாய்ந்த கடலிலே நாடோறும் அவகாஹிக்கப் பாரும் கோள் –
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

——————

ஆகில் இப்படி ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை யுண்டாக்கிக் கொள்ள வேண்டாவோ -என்னில்
அது வேண்டா-திர்யக்குகளுக்கும் புக்கு ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் -என்கிறார் –
இனி ஆஸ்ரயணம் தன்னிலும் ஒரு நியதி இல்லை – செய்தது எல்லாம் நியதியாம் அத்தனை – என்கிறது –
அனுகூலர் உடைய தேக யாத்ரை எல்லாம் தன் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாகக் கொள்ளும் -என்கிறது –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

திருமலையில் திரியக்குகளும் தன்னை வணங்கும் ஞானத்தைக் கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது
ஞான கார்யமான சமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ண விருக்கும்
ஓர் ஆனைசென்று ஆஸ்ரயித்தால் போலே யாய்த்து திரு வேங்கடமுடையானை ஆஸ்ரயிக்கலாம் படி –
களிறு –ஆஸ்ரயிப்பாருக்கு ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்கள் அப்ரயோஜகம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -51-60–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 22, 2020

இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்
நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான் என்கிறார் –
ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ0ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி
பரமபதத்திலே செல்ல நடத்துவான் அவனே என்கிறார் –
சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷபாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது முதலாக விச் செயல்கள் –

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

மலைக் கீழ் ஒதுங்கோம் என்னாத மாத்ரமே –இவற்றுக்குச் செய்யல் யாவது இல்லை-
எல்லா ரஷைக்கும் தானே கடவனாய் இருக்க அவளுடைய சகாயம் ஒழியவே
தன்னுடைய ரஷையை நடத்தினான் –அவனே -என்று சஹகாரி நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
கலங்கா பெரு நகரம் –ஒருவர் கூறை எழுவர் உடாத தேசம் –
அறிவில்லாத பசுக்களோடு அறிவுடைய பிராட்டியோடு வாசி இல்லை –
அறிவுக்குப் பிரயோஜனம் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-40-என்கைக்கு உடலாயிற்று
அறியாமைக்கு பிரயோஜனம் -பண்ணுகிற ரக்ஷணத்தை விலக்காமை –

———–

கீழே ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப் பேசுகிறார் –
கீழே கலங்கா பெரு நகரம் காட்டுவான் -என்றாரே -ருசி உடையாருக்குப் பரமபதம் கொடுக்கும் அத்தனையோ
என்னில் –ருசி பிறப்பிப்பானும் அவனே என்கிறது –

எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-

ருசி இல்லாதாருக்கு ருசியைப் பிறப்பிக்கும் போதும் ருசி யுடையாருக்குச் செய்யுமா போலே செய்யும் –
பிராட்டி சொல்லு மறுக்க மாட்டாமையாலே அந்த மான் புரண்டு விழும்படியாக எய்தான் –
இத்தாலும் அவளுடைய ருசியை வர்த்திப்பித்த படி –
அழகுக்கு இலக்காகாதாரையும் புக்கு இலக்காக்கின படி –
மஹா பலி பக்கலிலே சென்று வடிவு அழகைக் காட்டுவது–முக்த ஜலப்பிதங்களைப் பண்ணுவதாய்க் கொண்டு
மிகவும் உத்தியோகித்து லோகத்தை யடங்கக் கைக் கொண்டான் –

———–

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வடதள சாயியை அனுபவிக்கிறார் –
எம்பெருமான் படி இதுவான பின்பு மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் –
துர்க்கடங்களை கடிப்பிக்க வல்லவன் என்கிறார் –

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண் அலங்கல் மாலையான் தாள் —–53-

ஆலிலையின் மேல் கண் வளர்ந்து அருளுகிற போது இட்ட தோள் மாலையும் தானுமாய்க் கிடந்த படி –
யசோதைப் பிராட்டி உண்டோ ஒப்பிக்க – எல்லாம் ஆச்சர்யமாய் இருப்பதே –
நெஞ்சே -வரில் பொ கடேன்-கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே
உத்ஸாஹித்துக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பார்

—————

வடதள சாயி வ்ருத்தாந்தத் தோடு சேரச் சொல்லலாம் படியான கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை
அனுபவிக்கிறார் –

தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —–54-

பெண்ணகலம் காதல் பெரிது –நாரீணாம் உத்தமையான பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று
விரும்பும் படியான திரு மார்வை யுடையவனுடையவனுக்கு ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம்
சாலக் கரை புரண்டு இருந்தது –பெண்ணகலம்-என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை-

———–

ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் இப்படி வத்சலனாய் -பெரும் பிச்சானாவன் -உடைய அழகை -அனுபவிக்கிறார் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

திரியுங்கால்–தெரியுங்கால் -பாட பேதம் -அநுஸந்திக்கும் போது -சஞ்சரிக்கும் காலத்தில்-

அவனுடைய மற்றை நீண் நெடும் கண்ணில் உண்டான நிறத்தை –
அவனுடைய பரிச்சேதிக்கப் போகாத கண்ணின் உடைய நிறத்தைக் காட்டா நின்றது –
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம்-45-

———

இப்படிப் பட்டவனுடைய அழகை அனுபவித்துப் போமித்தனை போக்கி இன்ன படிப் பட்டு இருக்கும் என்று
கொண்டு நம்மால் பரிச்சேதிக்கப் போகாது கிடீர் என்கிறார் – பிரயோஜனத்திலே சொல்லில் சொல்லும் அத்தனை –

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

ஸ்ரீ யபதியினுடைய ஸ்வரூப ரூப குணாதிகளால் யுண்டான ஸம்ருத்தியை சிலராலே பேசப் போமோ-
அவனும் அவளுமாய் நிற்கிற இடத்திலே சொல்லலாமோ
அப்ரமேயம் ஹித்த்தேஜ யஸ்ய சா ஜநகத்மஜா -ஆரண்ய -37-18-உயர்வற உயர்நலம் உடையவன் –
இறையுருவம் யாம் அறியோம் எண்ணில் –அவன் கொண்ட வடிவு ஒன்றுக்கும் இத்தனை –
அவன் கல்யாண குணங்களைப் பேச முடியுமோ

—————

இப்படிப் பட்ட பெருமையை யுடையவனை அனுசந்திக்கும் இதுவே கிடாய் நமக்கு உத்க்ருஷ்டமாகை ஆகிறது
என்கிறார் – கருடத்வஜனுமாய் ஸ்ரீ யபதியும் ஆனவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –
முடியாது என்று பேசாது இராதே அவனை ஆஸ்ரயிக்கில் எல்லாரும் மேலாவது என்கிறார் –

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

அவளும் தண்ணீர் தண்ணீர் என்று ஆசைப் படா நிற்கும்
மகா மேருவிலே ஓர் அஞ்சன கிரி இருந்தாப் போலே இருக்கை –
திருவடி மேரு போலே – எம்பெருமான் அஞ்சன கிரி போலே-
மேல் கண்டாய் – இது எல்லாவற்றுக்கும் மேலாக அனுசந்தி – இத்தை ஒழிந்தவை அடங்கலும் கீழ் –
இது ஒன்றுமே கிடாய் மேல் – சேஷ பூதன் ஸ்வ ரூபத்துக்கு ஈடான உத்க்ருஷ்டம் இது கிடாய் –
தெருள் -என்று ஞானமாய் -ஞானத்தில் மேலாய் இருக்கிற பக்தியைச் சொல்லுகிறதாய் -ஞான விபாக ரூபையான
பக்தியால் கரியான் கழலைக் கண்டு அனுபவிக்கப் பெற்றாயே-

—————

இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்தை உடையவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே காண வேணுமே -என்ன
காணலாம் படி திரு மலையிலே நின்றான் என்கிறார் –

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

ஸ்படிக மயமான சிலா தளத்திலே பெண் குரங்கு திருச் சித்ர கூட பரிசரத்தில் சிலா தலத்திலே
பிராட்டியும் பெருமாளும் இருந்தாப் போலே இருக்கிறது –
கடுவனையே நோக்கி –ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே தானே பார்த்து வரத்தை சொன்னபடி
இங்கு இளையபெருமாள் இல்லையே –நோக்கி –சர்வ ஸ்வதானம் பண்ணி-
சர்வேஸ்வரன் தனக்கு சர்வ சம்பத்துமாக நினைத்து இருக்கும் தேசம் –

————

கீழ் கரியான் கழலே தெருள் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் –
அப்படிப் பட்ட திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவிக்கிறார் –

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

பகவத் விஷயத்திலே இவனுடைய இச்சையும் அநிச்சையும் இறே உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
எங்கள் பெருமான் –ஒரு மிதுனம் இவருக்கு போக்கியம்-அஸ்மத் ஸ்வாமியாய் உள்ளான் –
போக்ய பூதனாய் மேன்மையை உடையனாய் வகுத்தவனுடைய திருவடிகளைப் பெற்று
ஸ்வரூப அனுரூபமாக வாழும் பிரகாரத்தை அறிந்தேன் –

———–

உமக்கு வாழ்விலே அந்யமாகில் பிரதி பந்தகம் போனால் அன்றோ வாழலாவது –
விரோதி செய்த படி என் என்ன – அது போக்குகை அவனுக்கு பாரமாய் விட்டது என்கிறார் –

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-இந்த பாசுரம் நிரல் நிறை அணி பாசுரம் –

பருவம் நிரம்புவதற்கு முன்னே ஆசூர வர்க்கத்தை கை தொடானாய் முடித்தான்
பின்பு ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தின் உடைய த்வநியாலே முடித்தான் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -41-50–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 22, 2020

திரு வுலகு அளந்து அருளின இடம் ப்ராப்தமாய்த் திரியட்டும் அவ்விடம் தன்னிலே அந்த
அபதானத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

ஒருக்கால் திருவடிகளை யிட்டு ஜகத்தை மறைத்தான் –ஒருக்கால் மலையை இட்டுத் தன்னை மறைத்தான் –
பிறந்தவன்றே செய்த காரியமும் ஏழு பிராயத்தே செய்த காரியமும் லோகத்தையும் ஒரு ஊரையும் நோக்கின படி –

————-

ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு நோக்கினான் என்கிற பிரசங்கத்தாலே
ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார் –

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–

விரோதியைப் போக்குகையாலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு நின்றவன் –அப்போதை அழகு –
அருள் அன்று நமக்கு உத்தேஸ்யம்-ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சினம் உத்தேஸ்யம் –
அச்சினத்தை அனுசந்தி –

———-

ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான் ஒருவனையும் நோக்கின அளவேயோ
ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர் என்கிறார் –
அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது என்கிறார் –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

தன்னுடைமை யானது ரஷிக்கப்பட்டது என்ற ஹர்ஷத்தாலே ஒருபடி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிறபடி –
அத்விதீயமாய் அபரிச்சேத்யமான சங்கல்பத்து உள்ளது ஜகத்து –
சங்கல்ப்பத்தாலே ரஷிக்க வல்லனாய் இருக்கச் செய்தே கை தொட்டு செய்கிறது ஆஸ்ரித வாத்சல்யம் –

————

நெஞ்சே உபய விபூதி யுக்தனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆச்ரயிக்கப் பார் என்கிறார் –

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

நூறாயிரம் ஆதித்யர்கள் உடைய ஒளியை யுடைத்தாய் அநேகம் கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள
ஸ்ப்ருஹநீயமான திரு வபிஷேகத்தை யுடையவனுடைய –பைம் பொன் முடி-திவி சூர்ய-என்றதுவும்
போந்து இருந்தது இல்லை –ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பூர்ணமாய் அபிமுகமாய்க் கொண்டு ஆஸ்ரயி –

———-

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று
ப்ரஸ்துதமான வாறே அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –
அவன் நமக்கு ஸூ லபனோ என்னில் – அக்குறைகள் தீர நமக்காக வன்றோ
திருமலையிலே வந்து சந்நிஹிதனாய் ஸூலபன் ஆயத்து -என்கிறார் –

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

முன்னொரு நாள் பூமி அடங்கலும் தன் திரு எயிற்றிலே அடக்கினவன் வர்த்திக்கிற திருமலை
ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவன் உடைய மலை
திரு மலையில் ஆனைகளுக்குச் சேரும் இறே ஸ்ரீ வராஹமான வடிவு
இந்த மத்த கஜத்தின் உடைய ஸ்வரூபமானது ஸ்ரீ வராஹ ரூபியானவனுடைய செருக்கை ஸ்மரிப்பித்த தாய்த்து

———

திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவன் பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும்
செய்து தலைக் கட்டுமவன் கிடீர் என்கிறார் –

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் – ——46–

கார்யமான இவை அழிந்து தானே யான அன்று இவற்றுக்கு அடங்க ஹிதம் பார்க்கும் உபகாரகன்
ஜகத் காரண பூதனான பரிவன் -பெற்ற பாவிக்கு ஜீவனம் தேடி விட வேண்டாவோ
சங்கல்ப்பத்தாலே ரஷிக்கலாய் இருக்க உடம்பு நோவக் கடல் கடைவதே என்ன சௌலப்யம் தான் –

————

தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர் நம்முடைய விரோதிகளைப் போக்கி
நம்மை அடிமை கொள்ளுவான் என்கிறார் –

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

சேஷித்வம் தோன்றும்படி நின்றவனே –ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து
உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே-எங்கள் உடைய சம்சாரத்தின் வாயைக் கிழித்துப் பொகட்டவன் அன்றோ –
விலஷணர்க்கு சம்சாரம் இறே நரகம் –நிரயோ யஸ்த்வயா விநா -ஆரண்யம் -30-18-
உன்னைப் பிரிந்து இருப்பது அன்றோ நரகம் -சீதைப் பிராட்டி –
ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ -எங்கள் நரகத்தின் வாயைக் கிழித்த யுனக்கு –

———

நீர் சொல்லுகிறவை எல்லாம் நாம் அறிகிறிலோமீ-என்ன 0பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர் என்கிறார் –

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

ஜ்ஞான ஹீனமான அசேதனங்களைப் போக்கின அதுவேயோ-சேதனரான விரோதி களையும் போக்கிற்று இலையோ
தேவாசூர சம்ப்ரமத்திலே அசூர வர்க்கத்தை முடித்துப் பொருதாய் நீ அன்றோ
திரிபுர தஹனம் பண்ணின ருத்ரனை இவருக்கு தோற்றுகிறது இல்லை

———–

இன்னும் இவ்வளவேயோ-அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும் வியாபாரம் என்கிறார் –

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

பின்னைக்காய் –ரசிகத்வத்தாலே தன்னை அழிய மாறின படி –

———————-

அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை என்றதே -கீழே –
அது எங்கே கண்டோம் -என்னில் ஓர் ஆனைக்காக பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை
ஒரு நீர்ப் புழுவின் மேலே பண்ணிற்றிலனோ -என்று ஆஸ்ரித பஷபாதத்தை யருளிச் செய்கிறார் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

அணி நீல வண்ணத்தவன்-இத்தை முடித்துப் பின்னை தன்னிறம் பெறுகிறான் ஆய்த்து –
ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்றது என்று ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –
அணி நீல வண்ணத்தவன் –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விடாய் தீர்த்த படி –
மா முதலை கொன்றான் –தன் விடாய் தீர்ந்தான் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -31-40–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 21, 2020

இவ்வோ இடங்களிலே நிற்கிறவன் தான் ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணுமவனுமாய் ஸூசீலனுமாய்
இருப்பான் ஒருவன் கிடீர் என்கிறார்-கீழ்ச் சொன்ன திருப்பதிகள் நெஞ்சை அனுவர்த்திக்கிற படி –
இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும்
புறையறக் கலக்கும் ஸீலாவான் கிடீர் -என்கிறார்-

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான் —–31–

நற வென்று பொல்லாத மதுவாய்-தண்ணிதான மதுவைக் கையிலே ஏற்றுள்ள ருத்ரனுக்குத் தன் திரு மேனியிலே
இடம் கொடுக்கும் ஸ்வ பாவனாய் உள்ள சீலவான் –

————

இப்படி சீலவானான இவன் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் –என்கிறார் –

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

விரோதி நிரசன சீலனான கிருஷ்ணன் ஆவான் இப்படி இருக்கிற இவன் கிடீர் எனக்கு எளியன் ஆனான் –
இவனுடைய உண்மை எல்லாம் பரார்த்தம்-

———

இப்படி இருக்கிறவன் அபேஷித்தார் அபேஷித்தது எல்லாம் கொடுக்குமவன் கிடீர் என்கிறார் –
இவனுடைய உடைமை எல்லாம் பரார்த்தம் என்கிறது

பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம்
மேலோருநாள் உண்டவனே மெய்ம்மையே -மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம்
அந்தரத்தாக்கு ஈந்தாய் நீ யன்று —33–

ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கக் கடவரான தேவர்களுக்கு அன்று கொடுத்தாய்
சம்சாரத்தைப் பூண் கட்டி நடுவில் பரணிலே இருக்கிறவர்கள் –

–——-

காஞ்சி புரத்திலே பல திருப்பதிகளிலே நிற்பது இருப்பது கிடப்பதான இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து
இதுக்கடி பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ என்று கொண்டு அஞ்சுகிறார் –
அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு அவனைக் காண ஆசைப்படாய் என்று தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்—-34-

உனக்கு இது ஒழிய வேறு அந்ய பரதை என்-நமக்காகத் தன்னை அழிய மாறினவனை அனுசந்தியாது இருக்க வேணுமோ
பூமியை அடங்கலும் அளந்த வருத்தத் தாலேயோ-திரு வேளுக்கையில் இருக்கிறதுவும்
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளுகிறதுவும் என்று வயிறு எரிச்சலாலே நெஞ்சே அனுசந்திக்கப் பார்-

———–

நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே – அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர் தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன-
மனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் –
இந்த்ரியங்கள் தான் முற்பட்டு இவர் மூட்டும் அளவாய்த்து –

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள் ஷாம காலத்தில் பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –
வண்டுகள் மீட்கில் இறே என் இந்த்ரியங்களை மீட்கலாவது –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு இனி நாமும் அவனுடைய ஸ்லாக்யமான திருவடிகளை
வாயாரப் பாடி கையாலே தொழுவோம் –

—————-

யாம் தொழுதும் என்றாரே –மநோ ரதித்த படியே அனுபவிக்கிறார் –

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ் சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

செய்ய படை என்கிறது-ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு விதேயமாய் இருக்கை-
ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது –
அப்போது அவனுக்கு என் புகுகிருறதோ என்று அஞ்ச வேண்டா
அவை தனக்கு -திசை வாழி எழ -என்று மங்களா சாசனம் பண்ண அமையும்

———-

இப்படிப் பட்டவன் திருவடிகளிலே நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன்-இங்கனே இருந்துள்ள நான்
அவனை ஸ்ப்ருஹநீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் தானே என்னை ஸ்ப்ருஹநீயனாக
புத்தி பண்ணா நின்றான் என்கிறார் –

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

அஹ்ருதயமாக அடிமை புக்கேன்-அடிமையிலே அந்வயித்த மாத்ரத்திலே உள்ளும் புறமும் ஒக்கக்
கை விட மாட்டாதே சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு பூஜியா நின்றான் -விட சக்தன் ஆகிறிலன்-
அகத்தான் புறத்தான் ஆகைக்கு அடி அவள் முறுவல் பெறுகைக்கு-
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்று ஈடுபடுகிறார் –

————

இப்படி என்னை வந்து விரும்பினவன் தான் சால எளியான் ஒருவனோ-சர்வேஸ்வரன் கிடீர் என்கிறார் –

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

உபமான ராஹித்யத்துவக்கு அடி-சகல பதார்த்தங்களும் தனக்குப் பிரகாரமாய்த் தான் ப்ரகாரியாய்
தனக்கு ஒரு ப்ரகார்யந்தரம் இன்றிக்கே இருக்கை -சகல ஜந்துக்களும் தனக்கு சரீரம் என்றபடி-
எல்லாம் தான் இட்ட வழக்கு-இவை எல்லாமாய் நின்ற சர்வேஸ்வரன் தனக்கு ஒப்பாகச் சொல்லலாவானும் தானே-

————-

இப்படி ஜகதாகாரனான சர்வேஸ்வரன் திரு மலையிலே புகுந்து சந்நிஹிதனாய்ப் பின்பு
என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன் என்கிறார் –

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-

திருமலையில் நின்று என்னுடைய ஹிருதயத்தில் புகுர அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு வந்து புகுந்தான் –
அங்குத்தை இருப்பானது என் பக்கலிலே வருகைக்குக் காலம் பார்த்து இருந்தான் என்று தோற்றி இரா நின்றது –
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே நித்ய சந்நிஹிதனாய் இரா நின்றான் –

———–

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன் என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

பண்டு உளன் அன்றிக்கே-இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி – அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –
நாம் வேண்டாத காலமும் நம்மை வேண்டி இருக்குமவன் –சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –
புகுரப் புக்கால் விலக்காதார் ஹிருதயத்திலே உளன் –
மன்-உடையவன் –இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்-மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது –
தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்-அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -21-30–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 21, 2020

அவனை ஒருவரால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –
கீழ்த் திரு வுலகு அளந்த அருளின இடம் ப்ரஸ்திதமான வாறே அப்படி வரையாதே பரிமாறும்
கிருஷ்ணாவ தாரத்தைச் சொல்லுகிறார் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-

பரிச்சேதித்துப் பேச ஒண்ணாமைக்கு தனித் தனியே ஹேதுக்களை அருளிச் செய்து –வடிவு பிரகாரம்
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே –உள்ளபடி கண்டு பேச ஒண்ணாது-

—————

ஒருவராலும் அவனை அளவிட்டுப் பேச ஒண்ணாது என்றாரே –
அநந்தரம் திரு வுள்ளத்தைக் குறித்து நீ முன்னம் அவனை அழகிதாக சாஷாத் கரிக்கையிலே
ஸ்ரத்தை பண்ணு கிடாய் என்கிறார் –

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர் தூவிக் காணும் -படியானை
செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு ——22-

நாம் ஒரு நாளைக்கு ஒரு நாள் உண்ணுமோ பாதி எப்பொழுதும் தொழுமவர்கள் –சதா பஸ்யந்தி -இறே –
செம்மையால்–அவன் சேஷி நாம் சேஷ பூதர் என்னும் புத்தி பண்ணி ஹ்ருதயம் சிதிலமாய் –
செவ்வனே –நீ ஓன்று கொண்டு அவனைக் காண இருக்கை அன்றிக்கே-ஒரு யத்னம் செய்யாது இருக்கத்
தானே தன்னைக் கொடு வந்து காட்டுவதாகக் கொண்டு –
மெய்ம்மையே –மனஸ்ஸே ஒரு குண ஆவிஷ் கார மாத்திரத்திலே தெகுட்டி விடாதே
அவனைப் பத்தும் பத்தாக சாஷாத் கரிக்கையிலே யாதரி-
பிரயோஜன நிரபேஷமாக ஆசைப்படு–பிரயோஜனமும் அவனே-பிரயோஜனமும் அவனே -என்றபடி
முதல் தன்னிலே இவர் சாஷாத் கரித்தன்றோ அனுபவிக்கிறது -என்னில்-ஒருக்கால் கண்டோம் இறே என்றால்
அவ்வளவால் பர்யவசிக்கும் விஷயம் அல்லாமையாலும்
இவர் இருந்து கண்டது சம்சாரத்தே ஆகையாலும் ஆறி இருக்க விரகு இல்லையே –

——————

மெய்ம்மையைக் காண விரும்பு -என்றாரே – அந்த உபதேசம் கடுகப் பலித்துக் கொடு நின்றதாய் இருந்தது –
தான் சொன்னபடியே திருவுள்ளம் விரும்புகிற படி-இவருடைய நெஞ்சாகில் இங்கனே இருக்க வேண்டாவோ –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

மனஸ்ஸானது முன்னாடி தோன்றாமல் நின்ற நிலம் துழாவிப் கொண்டு பிச்சேறி வாரா நிற்கும் –
ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு பிச்சேறா நிற்கும்-
வ்யாமோஹத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –வண்டுகள் பட்டது படா நின்றது –

————–

அபி நிவிஷ்டராய்க் கொண்டு எல்லாம் செய்தோம் இறே என்று ஏறி மறிந்து இராதே -நெஞ்சே
அவனை மேலே விழுந்து ஆஸ்ரயிக்கப் பார் கிடாய் என்கிறார் –
ஆசை பிறந்த பின்பு இனி விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பார் என்கிறார் –

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீருருவு மானான் -பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது —-24-

அவ்வோ பதார்த்தங்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலே லீலா விபூதி விசிஷ்டனாய் –
தேஜோ ரூபமான திரு வாழியை யுடையனாகையாலே நித்ய விபூதி யுக்தனாய் யுள்ளான்-
தொழு வித்துக் கொள்ளப் பரிகரம் உண்டு-
சூழ் கழலே – ஆஸ்ரிதரை அகப்படுத்துக் கொள்ளுகிற திருவடிகளையே
புறம்பு போகாமல் சூழ்த்துக் கொள்ளும் திருவடிகளையே -என்னுதல்
இத்தால் அவன் எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால் அத்தை அறிந்த இன்றாகிலும் நீ தொடராயோ
கீழ் விச்சேதித்துப் பட்டது போரும் இனி மேல் உள்ள காலம் முறையாலே இடைவிடாதே தொடர்ந்து ஆஸ்ரயி-

———-

இவர் இப்படி உபதேசிக்கச் செய்தேயும் திரு உள்ளமானது திமிர்த்துத் தன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்து
இருந்தாப் போலே இருந்தது -அத்தைப் பார்த்து நீ இங்கே கிட்டி ஆஸ்ரயித்தால்
உனக்கு வருவதொரு குறை இல்லை காண் என்கிறார் –

தொழுதால் பழுதுண்டே தூ நீருலகம்
முழுதுண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து ——-25–

ஜகத்துக்கு அவன் வயிறு தாரகமானால் போலேயும் நெய் அவனுக்கு தாரகமானால் போலேயும்
அடிமை உனக்கு தாரகம் அன்றோ –நான் சொல்லுகிற வேப்பங்குடி நீர் இது வன்றோ என்கிறார் –
வெண்ணெய் உண்ணா விடில் அவனுக்கு பிரளயம் வந்தது போலே –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளத் த்ரவ்யத்தாலே அங்கு வயிறு நிறையாமையாலே வந்த குறை தீர்ந்தானாய் இருக்கிறவன் –
தனக்கு அசாதாரண பரிகரத்துக்குத் தானே விரோதியைப் போக்கும்-
ப்ரஹ்மாதிகளுக்கும் கூட அவ்வருகாய் இருப்பான் ஒருவன் ஆன பின்பு
இனி அவன் காலிலே விழுந்து பிழைக்கில் பிழைக்கும் அத்தனை-
நெஞ்சே -சம்பந்தத்தை நினைத்து அங்குத்தைக்குத் தகுதியாய்க் கொண்டு ஆஸ்ரயித்ததால்
உனக்கு வருவதொரு தப்பு உண்டோ –

———-

இப்படிக் கிட்டி ஆஸ்ரயிக்கத் தம் திரு உள்ளத்தை அவன் உகந்து அருளின நிலங்களில் காட்டில் விரும்பின படியை
அருளிச் செய்கிறார் –கோயில்களில் இருக்கிறது இசைந்தார் நெஞ்சிலே புகவிறே –
அங்கன் இன்றிக்கே-யசோதை பிராட்டி வெண்ணெயை விழுங்கும் காட்டில் நாம் பெற்றது என் என்னில்
உகந்து அருளின தேசங்களிலே நமக்காக வந்து ஸூலபனானான் என்கிறார் -என்னவுமாம்
தொழுதால் பழுதுண்டே என்றாரே-இவர் இப்படிச் சொல்ல அவன் பேசாது இரானே –

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

அவனுடைய ஆதரத்துக்கு இவை இரண்டும் ஒரு கோவையாய் இருக்கிறது –
உகந்த படுக்கையான திரு வநந்த வாழ்வானோபாதி என்னுடைய நெஞ்சும் –
திரு வநந்த ஆழ்வானையும்-என்னுடைய நெஞ்சையும் தன்னதாக அபிமானித்து இருப்பது –
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும்-இத்தையும் தாங்கடவார்-சாதரமாக யுறைந்து -அதிக்ரமியார்-
திருக் கச்சி முதலான திருப்பதிகளிலும் ஸூரிகளில் பிரதானனான திரு வனந்த ஆழ்வானில் காட்டிலும்
தம் திரு உள்ளத்தை மிகவும் விரும்புகையாலே முந்துற திரு உள்ளத்தை அருளிச் செய்தார் –

————–

பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் ஆரானும் ஒருவர் பாபபலம் புஜித்தார் உண்டு என்று இதுக்கு
முன்பு எங்கேனும் கேட்டு அறிவதுண்டோ என்கிறது –

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-

அக்னி நா சிஞ்சேத்-நெருப்பினால் நனைத்தல் போல இருப்பது ஓன்று இறே
பகவத் பஜனம் பண்ணியும் பாப பலானுபவம் பண்ணுகை யாகிறதும் –
கடலுக்கு தொடுத்த அம்பு அவன் மேல் விடாமையே அன்றிக்கே அவன் சத்ருக்கள் மேலே விட்டது இல்லையோ
அனுக்ரஹ பலம் காணுதலே இறே உள்ளது –ஆஸ்ரித கார்யம் செய்கைக்காகக் கிட்டக் கிடக்கிற படி –
எக்காலத்தில் எத்தேசத்தில் யார் அவனைப் பற்று துஷ்கர்ம பலத்தை அனுபவித்தார் –

————-

இவர்கள் பண்ணின பாப பலம் இவர்களுக்கு புஜிக்க வேண்டுவது
பாண்டவர்கள் தங்கள் சத்ருக்களை தாங்கள் நிரசிக்கும் அன்று அன்றோ என்கிறார் –
கீழ் வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியும் -என்ற பிரசங்கத்தாலே
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –

அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் -உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான் ——28-

உகந்தாருக்கு தன உடம்பைக் கொடுக்கும் –-ஆஸ்ரிதர்க்காகத் தன் உடம்பை அழிய மாறியும் நோக்கும்
இவன் அஞ்சாததும் பீஷ்மாதிகளுக்கே –அஞ்சுவதும் யசோதைப் பிராட்டிக்கே-
அம்மனே –இது ஒரு எத்திறம் இருக்கிறபடி –கெட்டேன் இவனால்

————

யசோதைப் பிராட்டி ப்ரஸ்துதை யானவாறே அவளுடைய ஸ்நேஹத்தையும் குணங்களையும் சொல்லி
அவளும் ஒருத்தியே -என்று கொண்டாடுகிறார் –
கீழே உடைத்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கு-என்றாரே அச்சத்துக்கு இவன் பால் ஒப்பு இல்லாதாப் போலே
ஸ்நேஹத்துக்கும் யசோதைப் பிராட்டிக்கு ஒப்பில்லை – என்கிறது –
கீழே மிடைந்தது பாரத வெம்போர் -என்று ஆஸ்ரிதர்க்காக அவன் தன்னை அழிய மாறின படியைச் சொன்னாரே
இதில் அவனுக்காக இவள் தன்னை அழிய மாறின படி சொல்லுகிறது –
அச்சம் கெடுகை ஸ்த்ரீத்வம் அழிய மாறுகை -ஸ்த்ரீத்வ பிரயுக்தம் இறே அச்சம் –
அவளும் ஒருத்தியே என்று கொண்டாடுகிறார் –

பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே -வாய்த்த
இருளார் திருமேனியின் பவளச் செவ்வாய்
தெருளா மொழியானைச் சேர்ந்து —-29–

ஸ்த்ரீத்வ பிரயுக்தமான பயத்தைப் பொகட்டு கடுக வந்து எடுத்து ப்ரத்யௌஷதம் பண்ணுகையிலே ஒருப்பட்டாள் ஆய்த்து
கேட்ட விடத்தே மோஹித்து விழுகை அன்றிக்கே கால் நடை தந்து–வந்து— எடுத்து-பிரதிகிரியை பண்ண தொடங்கினாள் ஆய்த்து
மோஹித்து விழுமதுவும் பிரேம கார்யமே யாகிலும் -அவனைப் பெறும் படியும் கார்யம் பார்க்க வேணும் இறே
மயர்வற மதி நலம் பெற்றும் -யாம் மடலூர்ந்தும் -என்னப் பண்ணும் விஷயம் இறே –

——————

அவன் சந்நிஹிதன் ஆகையாலே அவள் ஸ்நேஹித்தாள் –இப்போது நமக்கு அவன் சந்நிஹிதன் அன்றே என்னில்
அவன் சந்நிஹிதனான இடங்களைச் சொல்லுகிறார் –
ஒரு கால விசேஷத்திலே ஒருத்திக்கு எளியனான இந்நிலை எல்லார்க்கும் உண்டாம்படி கோயில்கள் எங்கும்
வந்து நின்று அருளின படியை அருளிச் செய்கிறார் –

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

நேர்ந்த வென் சிந்தை – என்கையாலே இத் திருப்பதிகளிலே வந்து நின்றது எல்லாம் என் ஹிருதயத்திலே
புகுந்து இருக்கைக்கு – என்கிறது –
வேதத்தில் நின்றதோடு கண்ணால் காணப் படுகிற திருப்பதிகளோடு வாசி அற இவருக்கு பிரகாசமாய் இருக்கிறபடி
இறைபாடி யாய இவை–ஸ்ரீ யபதி அத்யபி நிவிஷ்டனாய் சேர்ந்து வர்த்திக்கிற ராஜ தானி

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -11-20–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 20, 2020

கூரிதான அறிவை  உடையார்க்கு அல்லது போக்கி அவனை அறிந்ததாய்த்தலைக் கட்ட ஒண்ணாது கிடீர் -என்கிறார்
அவன் திருநாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை –அல்லாதார்க்கு துர்ஜ்ஞேயன் –என்கிறார் –

நன்கோது நால் வேதத் துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் -சங்கோதப்
பாற் கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11-

அந்த நீர் உறுத்தாத படி திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின் படி
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனாய்-தர்ம வீர்ய ஞானத்தால் வேதார்த்தங்களை உத்தர உத்தரம் அவகாஹித்து –
தரிசித்து –லோக உபகாரகமாகச் சொல்லிப் போரும் மன்வாதி பரம ரிஷிகளால் நிர்மிதங்களான
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் ஆகிற சாஸ்திர வர்க்கங்களாலே ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனாய்-
ஸூஷ்ம அர்த்த அவகாஹியான விலக்ஷண ஞானத்தால் அறியப்படும் ஸ்வபாவனாய் இருக்கும்-
பரிசலான அறிவால் அறியப்படுமவன் அல்லன் என்று கருத்து

————-

ஆகில் இவனை ஒருவராலும் அறிந்து கண்டதாய் விட ஒண்ணாதோ என்னில் நான் சொல்லுகிற வழியாலே
காண்பாருக்குக் காணலாம் -என்கிறார் – இப்பாட்டிலும் அறிய வரிது என்னுமத்தை உபபாதிக்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி ——12-

உபாசனம் -த்ருவ அநு ஸ்ம்ருதி-தர்சன-சாமானாகார ப்ரத்யக்ஷதாபத்தி -இவ்வளவாக நன்கு உணர்ந்தவர்கள் –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய படி நாள் தோறும் காண்பார்கள் –

—————

கீழ் இரண்டு பாட்டாலும் அருமை சொல்லிற்று –
இதில் அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை என்கிறார் –
அன்றிக்கே
இப்படி அரியனாய் இருந்து உள்ளவனுடைய சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

இத்தால் இவன் வளரக் கோலித்தது இவ்வளவு அன்று இடம் போராமை நின்றான் இத்தனை என்று தோற்ற நின்றது ஆய்த்து-
வடிவில் பெருமை –பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துக் கிளருகிற ஒளி வெள்ளத்தை யுடைத்தாய் முசிவற வளர்ந்த
திரு வபிஷேகமானது அந்த்ரிஷாதிகளான ஊர்த்வ லோகங்களை ஊடுருவிக் கொண்டு போய்
அண்ட கடாஹத்து அளவும் செல்ல வளர்ந்ததே -இது என்ன ஆச்சர்யம் என்று அனுபவிக்கிறார் –

————

எம்பெருமானை அகற்றுகைக்கு விஷயங்கள் உண்டாய்த்து
விஷயங்களை அகற்றுகைக்கு உகந்து அருளின நிலங்கள் உண்டாய்த்து –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

வ்யாமுதனாய் இருக்கிறவன் பக்கலிலே நெஞ்சு மண்டும்படி பண்ணி–அவன் பிச்சுக் கண்டு பிச்சேறி –
அல்ப மாதரம் அவன் பக்கலிலே நெஞ்சை வைக்க அந்த ஆஸ்ரயம் தான் எளிதாம்-
சகல வேதத்துக்கும் சார பூதமான திரு மந்த்ரத்தை அனுசந்திக்கவே சால எளிதாம் –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி திருமலையிலே வந்து நிற்கிறவன் –நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹநீயன் ஆனவன்
நித்ய ஸூரிகள் வந்து ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடான திருவடிகளை யுடையவன் தாழ நின்ற இடத்திலும் மேன்மை குறைவற்று இருக்கிறபடி
அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே வந்து ஸூலபன் ஆனான் –
ஆன பின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம்

——–

இப்படிப் பெரியனான சர்வேஸ்வரனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன
நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளர்ந்து அருளக் கண்டேன் இத்தனை என்கிறார்
அவன் தன்னாலே ஸ்வயம் வரிக்கப் பட்ட எனக்கு இத்துக்கம் ஒன்றும் இல்லை இறே என்கிறது –
இவருக்கு அவன் தானே யோகாப்யாசம் பண்ணி வந்தபடி-

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

பரியவும் அறியாதே –படுக்கை வாய்ப்பும் இன்றிக்கே -இருக்க வந்து என் மனசிலே தங்கா நின்றான் –
பரிவாரைக் கை விட்டுப் பரிய வறியா விடிலும் -முறை யுணர்ந்தாரை தானே வந்து உகக்கும் –
அங்கு வகுத்தது என்று கிடக்கும் இங்கு உகந்து கிடக்கும்-எங்கே தங்குமவன் எங்கே வந்து தங்குகிறான்
கிடைக்கைக்கு ஒரு படுக்கை இல்லாதவன் படுக்கை உள்ள இடம் தேடி வருமா போலே தானே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு வந்து உகக்கும்-

————

திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –
மனம் தன் அணைக் கிடக்கும் -என்றாரே-இப்படி வந்து கிடைக்கைக்கு அடி பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று —-16–

கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை
அவன் புருஷோத்தமன் ஆனாப் போலே இவள் நாரீணாம் உத்தமை –
மலர்மகள் விரும்புகையாலே சர்வாதிகத்வம் ஆகை-
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி-
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்-
ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்-

————-

இப்படிப் பட்ட சர்வேஸ்வரன் நம் பக்கல் வ்யாமுக்தன் என்று அறிவதொரு நாள் உண்டானால்
அதுக்கு முன்பு உள்ள காலத்தோடு மேல் வரக் கடவ காலத்தோடு வாசி அற எல்லாம்
ஸ பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் அவளோடே கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டில்லை –
இனி என்னுடைய வாக்கானது அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக என்கிறது
எம்பெருமான் படி இதுவான பின்பு நாம் க்ருதக்ஞராய் இருக்கும் அத்தனை வேண்டும் –என்கிறார்
இந்நாள் மருவுகைக்கு யுடலாய்க் கொண்டு
கழிந்த நாள்களும் இப்பேற்றை அனுபவித்து இருக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு
மேல் வரக் கடவ எல்லா நாள்களும் அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற நல்ல நாளாகத் தலைக் கட்டும் –
இத்தை அசையிடும் நாள் இறே –

———–

கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு உன் திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே யாத்ரையாய்
இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி பண்ணி யருள வேணும் -என்கிறார் –
உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –என்கிறார் –
மறவாது என்றும் நான் நினைத்தால் லாபம் உண்டோ –நீ அஞ்சாது இருக்க அருள் என்கிறார் –

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

சர்வேஸ்வரனே உன்னது அல்லாததை அளந்து கொண்டாயோ-என்னுடைமையை நான் விடுவேனோ
மீட்டுக் கொண்ட பின்பு நீ அஞ்ச வேண்டா -என்று அருளிச் செய்ய வேணும்-
இந்த்ரன் அபேஷிதம் செய்து தலைக் கட்டினாப் போலே நானும் இதொன்றும் பெறும்படி பண்ணி யருள வேணும்
ஒரு ஔஷதத்தை சேவித்தான் ஒருத்தன் பயம் இன்றிக்கே சர்ப்பத்தின் வாயிலே கையைக் கொடா நின்றான் இறே
அவனுடைய அருள் பெற்றவன்று சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இறே –

—————

அஞ்சாது இருக்க அருள் என்றார்
அநந்தரம்- திரு உள்ளமானது நாம் அவனை இப்படி அருள் என்று நிர்பந்தித்தால்
அவன் முன் நின்று அருளுகைக்கு வேண்டும் யோக்யதை நம் பக்கலிலே உண்டாயோ –
அன்றிக்கே –
அவன் தான் செய்ய வல்லானோ -என்று நெஞ்சு பிற்காலிக்க-அவை ஒன்றும் இல்லை காண்-
யோக்யராய் இருப்பாருக்கு முன்னே அயோக்யரான நமக்குத் தன் அகடிதகட நா சாமர்த்யத்தாலே அருளும்
நீ பயப்பட வேண்டா என்கிறார் –

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

அவனுக்கு அருள ஒண்ணாதது இல்லை -அஞ்சாது இருக்க அருள் -என்று அபேஷிக்கவும் அறியாதார்க்கும்
அருளுமவன் நமக்கு அருளானோ-
தம்தாமுக்கு என்ன ஒரு கைம்முதல் உடையார் பக்கல் காணும் அவன் தாழ்ப்பது –
யோக்கியருக்கு முன்னே அயோக்யரான நமக்கு தன் அக்கடிகடனா சாமர்த்தியத்தால் அருளும் –
நீ பயப்பட வேண்டா என்று திரு உள்ளத்தைக் குறித்து மாஸூச -என்று தேறி அருளுகிறார்-

————-

அவன் தன்னை அபேஷித்தார்க்குத் தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது என்கிறார் –
சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே –
உன் படியை நீயே சொல்ல வேணும் என்று எம்பெருமானைக் கேட்கிறார் –

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

இப்படி உனக்கு இஷ்ட சேஷ்டா விஷயமாய்ப் பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வந்த லோகம்
தன்னையே பின்பொரு நாளிலே மூன்றடியை இரந்து அளந்து கொண்ட விது பெரியதொரு செயலாகச் செய்தாயோ
அவனுக்கு மறுக்க மாட்டாத வ்யாமோஹம் இறே
இந்திரன் பல் காட்டின்து பொறுக்க மாட்டாமல் உன் வியாமோஹத்தால் செய்த செயல் அத்தனை இறே –
என்னே இது என்ன ஆச்சர்யம் என்று வித்தாராகிறார் –
இச் செயல்களைச் செய்யும் இத்தனையோ–சொன்னால் ஆகாதோ
இவர் பேச்சுக் கேட்டு இனியனாய் இருந்தான் அவன்
அவன் பேச்சுக் கேட்டு வாழ நினைக்கிறார் இவர்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -1-10–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

July 19, 2020

ஸ்ரீ குருகை காவல் அப்பன் அருளிச் செய்த தனியன் –

சீராரும் மாடத் திருக் கோவலூர் அதனுள்
காரார் கரு முகிலைக் காணப் புக்கு –ஒராத்
திருக் கண்டேன் என்று உரைத்த சீரான் கழலே
உரைக் கண்டாய் நெஞ்சே யுகந்து-

மாட மா மயிலையில் அவதரித்து-மஹ்தாஹ்வயர்-என்னும்படி –
செம்மை +வடி -சேவடி போலே –பெருமை +ஆழ்வார் -பேயாழ்வார்
நிரதிசய ப்ரேமத்தை யுடையராய் – அத்தாலே திருக் கண்டேன் என்று உரைத்த
பேயாழ்வார் திருவடிகளிலே நிரந்தர அனுசந்தானத்தை விதிக்கிறது இதில் –
கோவலன் வர்த்திகையாலே அதுவே நிரூபகமான தேசம்-

புற மழைக்கு ஒதுங்கினவர்க்கு உள்ளும் மழை முகில் போல்வான் தன்னை அன்பு கூரும்படியான தாம் அனுபவிக்கப் புக்கு –
அனுசந்தித்து -மனனம் பண்ணி -திருக் கண்டேன் என்று உரைத்த -அவ்வனுப ஜெனித ப்ரீதி யாலே
தாம் சாஷாத் கரித்த படியை – அவர் திருக் கண்டேன் என்று அனுசந்தித்தால் போலே நீயும் அவர் திருவடிகளை
வாக்காலே அனுசந்திக்கப் பார்

———

கண்டு அடைவு கெட்டுப் பேசிற்று ஆகையாலே – ஆகையாலே அன்றோ பேயர் ஆய்த்து-
பர பக்திக்கு அநந்தரம் சாஷாத் காரமாய் இறே இருப்பது
தன்னைக் காட்டிக் கொடுக்கக் கண்டேன் -என்கிறார் இதில் –

ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி –
பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
-திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இறே நம்மாழ்வார் )

முதலாமவர் -உபய விபூதி யுக்தன் -என்று அனுசந்தித்தார்
மற்றவர் அவனுக்கு வாசக சப்தம் -நாராயண சப்தம் -என்றார்
இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேணும் -என்கிறார்-

சேஷியுடைய ஸ்வரூபம் சொன்னார் முதல் ஆழ்வார்
சேஷ பூதன் ஸ்வரூபம் சொன்னார் நடுவில் ஆழ்வார்
இரண்டுக்கும் அடியான ஸ்வரூபம் சொல்லுகிறார் இவர்

எம்பெருமான் கடல் கடைய தேவர்கள் நடு நின்றால் போலே முன்புற்றை ஆழ்வார்கள் பிரசாததத்தாலே
கண்டு கொண்டு நின்றேன் என்கிறார் –

அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித் தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்-

————–

அவனைக் காண்கிற காட்சியில் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தேயும் -ஆதார அதிசயத்தாலே
அது கண்டேன் இது கண்டேன் என்று தாம் கண்டு அனுபவிக்கப் பெற்ற படி பேசுகிறார் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

இவள் கடாஷம் பெறாத போது-அவனோடு அல்லாதாரோடு வாசி இன்றிக்கே இருக்கும்
இந்த்ரன் தம்பியாய் அவன் பின்னே திரியச் செய்தே அவள் பாராத போது இந்த்ரன் ஐஸ்வர்யம் நஷ்டமாயிற்று
உபாசன வேளையில் இவள் புருஷகாரமாக வேண்டினாப் போலே சாஷாத் கார வேளையிலும் முற்பாடு உடையவள் இவள் –
பேணிக் கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நங்கள் திரு -இரண்டாம் திரு -56-என்று
சாஷாத் காரத்துக்கும் அடி இவள் –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்று ஞானத்துக்கும் அடி இவள் –
திருக் கண்டேன்–-தர்மம் தன்னைக் கண்டேன் –
பொன் மேனி கண்டேன்–-அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்-
அவளும் தண்ணீர் தண்ணீர் என்று மேல் விழும்படி இருப்பதாய் –
பொன் போலே ஸ்ப்ருஹணீயமாய் இருக்கிற திரு மேனியைக் கண்டேன்-
புரி சங்கு –கூனல் சங்கம் – என்னுமா போலே சேஷத்வத்தாலே எப்போதும் ப்ரஹ்வீ பாவத்தை உடைத்தாய் இருக்கும்-
என் ஆழி வண்ணன் –இவருடைய கடல் இருக்கிறபடி
கடலின் உள்ளே இறே பிராட்டியும் சங்கும்ரத்னமும் எல்லாம் பிறப்பது –
இன்று –அவன் காட்டக் கண்ட இன்று-இவள் புருஷ்காரமாகக் கண்டேன் இன்று

———–

அவனைக் கண்ட போதே விரோதி வர்க்கம் அடையப் போய்த்து என்கிறார் –கைங்கர்யமே யாத்ரையாம் படி யானேன் –
(கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —–2-

திருவடிகளைக் காண்கைக்கும் ஜன்மத்துக்கும் சஹாவஸ்தானம் இல்லாமை –
அவள் விரும்புகிற விஷயம் என்றும் ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த பெருமையை நினைத்தும் பிற்காலியாதே மருவிக் கண்டு
கொண்டது என்னுடைய மனஸ்ஸூ –அந்தப்புர பரிகரமான நான் இன்று உன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
பிராட்டியோபாதி பரிவு உண்டாய்க் கண்டேனோ – விலக்காமையே உள்ளது –
ஒரு பிரயோஜனத்தை கொண்டு போகை அன்றிக்கே உன் பக்கலிலே மருவிற்று
பிராட்டியோட்டை சம்பந்தம் உறவு அறியாதார்க்கு வெருவுகைக்கு உடலாம்
உறவு அறிந்தார்க்கு அயோக்யன் என்று அகலாமைக்கு உடலாம் –

———-

கீழ் இவருடைய மனஸ் ஸூ அங்கே மறுவின படி சொல்லிற்று
அவன் இவருடைய மனசை அல்லது அறியாத படி சொல்லுகிறது இதில் –

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——–3-

மனத்துள்ளான் –உத்தேச்யம் அவ்விடமே-மனசைப் படுக்கையாகப் புகுந்தான் –
சம்சார சம்பந்தத்தை அறுப்பானாய்க் கொண்டு மனசிலே புகுந்தான் –
என் நெஞ்சினில் வந்து பேர்க்க முடியாதபடி வாழ்கிறான் –
மலராள் தனத்துள்ளான் –அவனுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –
தண் துழாய் மார்வன்-அவளுடைய நல் ஜீவன் இருக்கும் இடம் –

——–

சர்வ ரஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகங்கள் என்கிறார் –
கீழ் – தமக்குச் செய்த படி சொன்னார் –இதில் பொதுவான ரஷையைச் சொல்லுகிறது –
அது ஸ்வஜன ரஷணம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—

மருந்தும் பொருளும் அமுதமும் தானே-விரோதியைப் போக்குவானும் அபிமதத்தைத் தருவானும் அபிமதம் தானும் அவனே –
சம்சார வியாதியைப் போக்கும் பேஷஜமும்-
இஷ்டமான மோக்ஷ ஸூகத்தைத் தரும் பொருளும் -ஸ்வத இஷ்டமாய் இருக்கிற போக்யமான அம்ருதமும்-
திரு வுலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளே-சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து–அர்த்தியாய் வருகையாலே பொருளானான்
திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்
உண்டு -மருந்தான படி–உமிழ்ந்து -பொருளான படி -செங்கண் மால் -அமுதமான படி

————-

திரு வுலகு அளந்து அருளின படி பிரச்துத்தமானவாறே அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –
அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே இனி அழகை அனுபவிப்போம் என்கை-
அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது – அலமாப்பாலே இறே-
அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது-பேச ஒண்ணாது –

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–

கையிலே திரு வாழி பிடித்தால் வேறு ஒரு ஆபரணம் சாத்த வேண்டாது
இருக்கிறவனுடைய அழகு அடி வண்ணம் தாமரை-அவன் அழகிலே ஆழங்கால் பாட்டு அனுபவிக்கிறார் –

————–

கீழ்ச் சொன்ன அழகையும்-அத்தோடு ஒத்த சேஷ்டிதங்களையும் சேர்த்து அனுபவிக்கிறார் –

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-

திருவாழி யோபாதி நிறமும் சிறந்து இருக்கும் -இந் நிறம் உடையவனுக்கு வேறொரு ஆபரணம் வேணுமோ –
திருவடிகள் பாவனமானது மாத்ரம் அல்ல போக்யமும் என்றபடி-
ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் -என்கிறபடியே வல்லார் ஆடினால் போலே
அழகுக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றோ-

———–

இப்படி அவன் அழகிலே தோற்ற இவர் தம் திரு உள்ளத்தைக் குறித்து
அவன் திருவடிகளிலே நாம் அடிமை செய்து வாழும் படி வாராய் என்கிறார் –

கழல் தொழுதும் வா நெஞ்சே கார்க் கடல் நீர் வேலை
பொழில் அளந்த புள்ளூர்திச் செல்வன் எழில் அளந்தங்கு
எண்ணற்கரியானை எப்பொருட்க்கும் சேயானை
நண்ணற்கரியானை நாம் –7-

எழிலை அளந்து மநோ ரதிக்க ஒண்ணாதவனை–அவர் காட்டக் காண இருக்கிற நாம்
திருவடிகளைத் தொழுவோம் போரு –

—————-

எல்லா இந்த்ரியங்களும் அவனை அனுபவிக்க வேணும் என்கிறார் –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண் ———8–

பிச்சர் வாழைத் தோட்டம் புக்கால் போலே தோற்றின திரு நாமங்களை அடங்கச் சொல்லி –
அவை எல்லாவற்றுக்கும் அடியான பிரதான நாமத்தைச் சொல்லி-
பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-வெளி நாடு காண உமிழ்ந்து –
நிரதிசய போக்ய பூதனான ஸூலபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண்

——-

காண்க நம் கண் என்று இவர் சொன்னவாறே அவன் தன்னைக் காட்டக் கண்டு அவனுடைய அழகை அனுபவிக்கிறார் –

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணி வண்ணன் தேசு ——-9-

ஜிதந்தே புண்டரீகாஷா எண்ணப் பண்ணும் கண் –முதலுறவு பண்ணும் திருக் கண்கள் –
ஸ்பர்சத்துக்குத் தோற்று விழும் நிலமாய் – காடும் மோடுமான பூமியை அளந்து கொண்ட திருவடிகளும்
அந்தக் கமலம் போலே இரா நின்றன-
திருமா மணி வண்ணன் – காந்தி மிகுத்ததான பெரு விலையனான ரத்னத்தை உடைய நிறத்தை உடையவன்
ஸ்ரீ மத்தாய் ஸ்லாக்கியமான -ஸ்ரீ மன் நாராயண அர்க்கமான மணி-சர்வதா சாம்யம் காணாமல் கதிர் பொறுக்குகிறார் இறே
புறம்பு உபமேயம் பொய்யாய் இருக்கும் -இங்கு உபமானம் பொய்யாய் இருக்கும் –

———–

இப்படி அழகு குறைவற்ற விஷயத்தை-அனுபவிக்கும் போது –யோக்யராய்ப் பேச வேணுமே –
ஆனால் சிறிது நன்மை தேடிக் கொண்டு வந்து புகுர வேண்டாவோ என்ன
நீங்கள் மேல் விழுந்து அனுபவிக்க -எல்லா நன்மையையும் தன்னடையே உண்டாம் என்கிறார்
அங்குள்ள நன்மையே பேசிப் போம் இத்தனையோ-நமக்கும் சில பேறு உண்டாவோ -என்ன
நாம் அவனுடைய திருநாமம் சொல்லி உபக்ரமிக்க-எல்லா சம்பத்துக்களும்-தங்கள் ஸ்வரூபம் பெருகைக்குத்
தாமே வந்தடையும் என்கிறார் –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

இஸ் சம்பத்துக்கள் எல்லாம் நமக்கு-இவ் வாஸ்ரயத்தை சென்று கிட்டி ஸ்வரூபம் பெற வேணும் என்று கொண்டு
ஸ்நேஹித்துச் சென்று மேல் விழும் தன் பேறாகச் சென்று அடையும்-
இவன் திரு நாமம் சொல்லி அல்லது நிற்க மாட்டாதாப் போலே அவையும் இவனை அடைந்து அல்லது நிற்க மாட்டா –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.