Archive for the ‘முதல் திரு அந்தாதி’ Category

முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -21-30– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

இரண்டு பட்டாலும் சர்வேஸ்வரன் கிடீர் ஆஸ்ரித அர்த்தமாக இப்படி எளியனானான் என்று சொல்லிற்றாய் ஈடுபடுகிறார் –

அவன் பெருமையைப் பார்த்து பிற்காலியாதே-ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவன் -என்று அறிந்து
அவன் திருவடிகளைக் கிட்டப் பாராய் -நெஞ்சே என்கிறார் –

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி ———-21-

நின்று -சர்வேஸ்வரனானவன் அர்த்தித்தவம் தோற்றும் படிக்கு ஈடாக நின்று
நிலமங்கை நீரேற்று –நிலம் அங்கை நீர் ஏற்று -கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே பூமியை நீர் ஏற்று
மூவடியால்-சென்று திசை யளந்த செங்கண் மாற்கு –திக்குகள் தோறும் சென்று அளந்து அத்தாலே அலாப்ய லாபம் பெற்றானாய் இருக்கிறவனுக்கு –
என்றும்-படையாழி புள்ளூர்தி பாம்பணையான்–எல்லாவற்றையும் உடையவன் கிடீர் இரந்தான்
-கையிலே திருவாழியை பேராதே பிடிக்க வல்லவனும் -திருவடி முதுகில் நல் தரிக்க இருக்க வல்லவனும்
-திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும் சர்வேஸ்வரன் ஆகிறான் –
பாதம்-அடையாழி நெஞ்சே அறி ———மஹா பலியைப் போலே ஆகாதே அவன் திருவடிகளை அடை /
யாழி நெஞ்சே அறி -அளவுடைய நெஞ்சே அறி–ஓலக்க வார்த்தை என்று இராதே இத்தை புத்தி பண்ணி இரு
நின்ற இத்யாதி -பிராட்டியை ஸ்ரீ ஜனகராஜன் நீர் வார்க்கப் பெற்றால் போலே சென்று நின்று என்னுதல் -சென்று -நடந்தபடி சென்று அளந்து என்னுதல்
செங்கண் மால் -தம்தாமது பெற்றாலும் இனியராக வேணுமோ / என்றும் -பரிபூர்ணன் கிடீர்
பாதம் அடை யாழி நெஞ்சே-என்னை ஓதுவிக்க வல்ல நீ என் செல்லாமை அறி -அல்லாத வார்த்தை போல் அல்ல -இத்தை புத்தி பண்ணு
சீரால் பிறந்து -அன்று அறுபதினாறாயிரம் தபஸ் ஸூ பண்ணினவன் வயிற்றிலே -பிதரம் ரோசயாமாச-என்று ஆசைப்பட வந்து பிறக்கை
சிறப்பால் வளராது -வெண்ணெயும் பெண்களையும் களவு கண்டு மூலை படியே வளருகை
பேர் வாமனாகாக்கால் -நாராயணன் ஆனால் ஆகாதோ / பேராளா-ஐஸ்வர்யத்தில் இளைப்பாற வேணுமோ
/ மார்வு இத்யாதி -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமி –

———————————————————–

மஹாபலி யஜ்ஜ வாடத்து அளவும் நடந்து சென்று -அவன் முன்னே அபிமதம் பெற்று அன்றிப் போகேன் -என்று
மலையாளர் வளைப்பு போலே அர்த்தித்தவம் தோற்ற நின்று -எல்லாருக்கும் குறைவற கொடுத்துப் போந்த
அழகிய திருக் கையிலே பூமியை நீர் ஏற்று வாங்கிக் கொண்டு -ஓர் அடிக்கு அவனை சிறையிட்டு வைப்பதாக
மூன்று திருவடிகளாலே திக்குகளோடு கூடின சகல லோகங்களையும் அளந்து கொண்டவனாய்
-அத்தாலே வந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனுமான சர்வாதிகனுக்கு
-சர்வ காலத்திலும் ரக்ஷண பரிகரமான திவ்ய ஆயுதம் திரு வாழி -மேல் கொண்டு நடத்துகிற வாஹனம் பெரிய திருவடி
-திருவனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனாகை யாலே ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனுடைய
திருவடிகளைக் கிட்டி அனுபவிக்கப் பார்-கம்பீர ஸ்வ பாவமான நெஞ்சே இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே நன்றாக புத்தி பண்ணி இரு –

——————————————————————————————————–

ஆஸ்ரித பக்ஷ பாதம் போலே ஆஸ்ரித பவ்யத்தையும் –

நீர் நம்மை ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவன் என்று அறிந்த படி எங்கனே என்ன
நான் ஒருவனுமேயோ -லோகம் அடைய அறியாதோ -என்கிறார் –

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு   ———22-

அறியும் –ஆஸ்ரித அர்த்தமாக எளியனானான் என்னும் படி நீர் அறிந்த படி எங்கனே என்னில் –
உலகு எல்லாம் யானேயும் அல்லேன்–சிசுபாலன் கூட அறியானோ –
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை -பொறி கொண்டு இருந்துள்ள சிறகை யுடைத்தான திருவடியை ஊர்ந்த உன்னை
வெறி கமழும்-பிள்ளை முகம் வாட ஒண்ணாது என்று எப்போதும் ஒப்பித்த படியே இருக்கையாலே பரிமளம் கமழா நின்ற
காம்பேய் மென் தோளி–மூங்கிலோடு ஒத்த மிருதுவான தோளை யுடையவள்
கடை வெண்ணெய் யுண்டாயைத்-அவள் மார்த்த்வம் பாராதே கடைந்த வெண்ணெய் யுண்டாயை
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு   ——-கைக்கு எட்டிற்று தாம்பாலே கட்டின தழும்பு -கயிறை நீட்ட ஒண்ணாது
–உரலைச் சிறுக்க ஒண்ணாது –இவன் உடம்பில் இடம் காணும் அத்தனை -இ றே –
உலகு எல்லாம் -சிசுபாலனை இட்டுச் சொல்ல வேணுமோ
யானே -அனுக்ரஹம் யுடைய நானே ஆலன் –
பொறி இத்யாதி -நிரபேஷனாய்-அர்த்திக்கப் பிறந்த நீ –
வெறி -ஸ்வாபாவிகம் என்னுதல் / பிள்ளை முசியாமைக்கு என்னுதல்
காம்பு -பசுமையும் திரட்சியும் செவ்வையும் –
கடை வெண்ணெய் இத்யாதி -இருவருக்கு தாயகம் -அபலை கட்டிலே கட்டுண்பதே/ தாம்பே கொண்டு – குறும் கயிற்றைக் கொண்டு

——————————————-

சித்ர படம் போலே நாநா வர்ணமான சிறகை யுடைய பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனாய்
-பிள்ளை அனுங்காத படி ஸூ கந்த த்ரவ்யத்தாலே அலங்கரித்துக் கொண்டு இருக்கையாலே பரிமளம் அலை எறியா நிற்பாளாய்
-பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் ஒழுகு நீட்சிக்கும் வேய் போலேயாய்-அதில் வியாவிருத்தமான
மார்த்வத்தை யுடைய தோளை யுடையவளுமான யசோதை பிராட்டி உடம்பு நோவக் கடைந்து திரட்டி வைத்த வெண்ணெயை
அமுது செய்து அருளின உன்னை கைக்கு எட்டிற்று ஒரு அறுதல் தாம்பையே கொண்டு உறைக்கக் கட்டுகையாலே
வந்த தழும்பு நான் ஒருவனுமே யல்லேன் -நாடு அடங்க அறியும் காண் –உவணம் என்று பருந்துக்குப் பெயர் –

————————————————————————————-

ஒரு செயலைக் கொண்டு சொல்லும்படி என் என்னில் -ஒரு செயலிலேயோ -ஒரு அவதாரத்திலேயோ தழும்பு சுமந்து -என்கிறார் –

நாம் சிலருக்கு அஞ்சுகையாவது என் -கட்டுண்கை யாவது என் -அத்தைப் பின் நாடு அறிகை யாவது என் -என்று
அத்தை மறைக்கப் புக்கான் -ஒரு தழும்பு ஆகில் அன்றோ மறைக்கலாவது -உன் உடம்பு அடங்கலும்
ஆஸ்ரித கார்யம் செய்கையால் வந்த தழும்பு அன்றோ -என்கிறார் –

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல் –23-

தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த –பிராட்டி யும் கூட கூசி ஸ்பர்சிக்க வேண்டும் அழகிய கை
-சார்ங்க நாண் தோய்ந்த தழும்பு இருந்தவாம் -ஜ்யாகிணத்தாலே கர்க்கஸமாய் இருக்கும் -தாள் சகடம் சாடி தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரால் மார்பிடந்த –அடல் அரியாய்ப் பெருகினானை -என்கிறபடியே
வீங்கோத வண்ணர் விரல் -கால் தழும்பு -கை தழும்பு -அவாந்தர அவயமான விரல் தழும்பு -ஒன்றேயோ தழும்பு ஆயிற்று -என்கிறார்
பூங்கோதையாள் வெருவ-ஆஸ்ரிதர் உடைய கார்யம் என்றால் உகக்கும் அவளும் பயப்படும்படி உடம்பு அடையத் தழும்பு
சாடி -அவன் மூரி நிமிர்ந்தான் -இவர்க்கு குவாலாய் இருக்கிற படி –
பூங்கோதையாள் வெருவ-பொறாது என்று இருக்குமவள் -வீர வாசி அறியுமவள்-ருஷி வேஷத்தோடே திரிய வேணும் என்னுமவள் –
வீங்கோத வண்ணர் விரல்-வளர்த்தியும் குளிர்த்தியும் –மஹா விஷ்ணும் –விக்ரஹ வியாப்தி யாயிற்று

————————————————————–

அழகிய திருக்கையானது -ஸ்ரீ சார்ங்கத்தின் யுடைய நாண் அறைவால் வந்த தழும்பைச் சுமந்தன -அதி ஸூ குமாரமான
திருவடிகள் ஆனவை அஸூரா விசிஷ்டமான சகடத்தை முறிந்து விழும்படி உதைத்து அத்தால் எழுந்த தழும்பைச் சுமந்தன-
-கிளர்ந்து அலை எறிகிற கடல் போலே இருந்துள்ள வடிவை யுடையவருடைய திரு விரல்களானவை –
-அழகிய மயிர் முடியை யுடைய பிராட்டி என்னாகத் தேடுகிறதோ -என்று நடுங்கும் படியாக ஹிரண்யன்
மார்வைப் பிளந்து பொகட்டத்ததால் வந்த தழும்பை சுமந்தன
-விரல் தழும்பு -கால் தழும்பு -கை தழும்பு -இவற்றை எங்கனே உன்னால் மறைக்கும் படி -என்கை-

————————————————————————————————-

நாம் வெண்ணெய் களவு காணப் புக்கு கட்டுண்டோம் ஆக வேணுமோ என்ன -களவு கண்டு கட்டுண்டு இருக்கும் படி அறியாயோ -என்கிறார் –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று -குரலோவா
தேங்கி நினைந்த அயலார் காண இருந்திலையே
ஒங்கோத வண்ணா வுரை ———24–

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்  கண்டு–விரல் வாயிலே தோய்ந்த அளவிலே -வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு -என்றும் சொல்லா நின்றது -விரலோடு வாய் தோய்ந்த -என்றும் சொல்லா நின்றது -இவை எங்கனே சேரும் படி
என்று பிள்ளை திரு நறையூர் அரையர் பட்டரைக் கேட்க -இவனுக்கு என்றும் திருப்பணி இது வன்றோ -ஒரு நாள் அங்கனும் ஆகிறது
-ஒரு நாள் இங்கனும் ஆகிறது -என்று அருளிச் செய்தார் -வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் -என்கிற படியே
ஆய்ச்சி-உரலோடு உறப் பிணித்த நான்று —உரலோடும் அவன் என்றும் பிரித்துக் காணப் போகாத படி கட்டின அன்று /
குரலோவா-தேங்கி –அழப் புக்க த்வனி மாறாதே –என்கின்ற ஏக்கம் கீழ் விழாதே -/
நினைந்து -இப்படி அழா நிற்கச் செய்தேயும் பெரிய திருப் பணிகள் ஆயிற்று நினைப்பது -வெண்ணெய் களவு காணும் படி நினைத்து –
அயலார் காண இருந்திலையே–ஐந்து லக்ஷம் குடியில் பெண்களில் காணாதார் யுண்டோ -இவனால் நெஞ்சு புண் பட்டார் எல்லாம்
இவன் பட்டபாடு காண வருவார்கள் இ றே -அத்யுத்கடை புண்ய பாபை ரிஹைவ பலம் அஸ்னுதே–இ றே –
ஒங்கோத வண்ணா வுரை —–இவனைக் கட்டி வைத்தது ஒரு கடலைத் தேக்கி வைத்தால் போலே காணும் -/
உரை -இவ்வடிவு காண வேணும் -இவ்வடிவோடே கூடிய வார்த்தையும் கேட்க வேணும்
-பொய்யாகில் உரலோடே கூடி இழுத்துக் கொண்டு புறப்படுவனோ —
விரல் இத்யாதி -வயிறு வளர்த்து அகப்படப் பெற்றோமோ -மிடற்றுக்கு கீழ் இழியப் பெற்றோமோ -/
உரலோடு -உரலோடு தன்னோடு வாசி இல்லாமை -/ குரல் ஓவாது -அழப் புக்கவாறே இக் கோல் உண்டு பார் என்ன -ஏங்கி நின்றான்
/ நினைந்து -வெண்ணெயையே நினைந்து இருக்கை –
அயலார் காண -பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் அடைய -அவர்களை பந்தித்துத் தான் அகப்படா நிற்கும் –
-அவர்கள் இவன் அகப்பட வல்லனே என்று இருப்பார்கள் –
இருந்திலையே-ராம சாரத்தை ராவணன் மறக்கில் மறக்கலாம் / ஓங்கோத வண்ணா -நெருக்குணகையால் வந்த பூர்த்தி
உரை -நமே மோகம் -என்னும் நீ சொல்லிக் காண் -அவாப்த ஸமஸ்த காமன் குறையாய் அழுவதே –
சர்வ சக்தி மிடுக்கு இன்றி ஒழிவதே -சர்வஞ்ஞன் புரை அறுவதே –

——————————————————

திருக்கையாலே அள்ளித் திருப் பவளத்திலே வைத்த வெண்ணெயை அமுது செய்து அருளுவதற்கு முன்பே
வாயது கையதாகக் கண்டு இடைச்சியானவள் களவுக்குப் பெரு நிலை நின்ற உரலோடே எடுத்து உறைக்கக் கட்டின வன்று-
கூப்பிடுகிற கூப்பீடு உச்சிவீடு விடாத படி -வாய் விட்டு அழ மாட்டாமல் -விம்மல் பொருமலாய் -ஏங்கிக் கொண்டு
-அவ்வளவிலும் வெண்ணெய் எங்கே இருக்கிறது-அது களவு காணும்படி எங்கனே என்று இத்தையே உருவ நினைத்துக் கொண்டு
-உன்னாலே புண்பட்ட இடைப் பெண்கள் எல்லாரும் -கள்ளனுக்கு இத்தனையும் வேணும் -என்று சிரித்துக் கொண்டு
வந்து காணும் படியாக க்ருதார்த்தனாய்க் கொண்டு இருந்திலையோ -கட்டுண்ணப் பெற்ற ஹர்ஷத்தாலே
ஓங்கி கிளர்ந்த கடல் போன்ற வடிவை யுடையவனே -நீ இத்தை உண்மையாக சொல்லிக் காண்
-இவர்க்கு இவன் வடிவு காண வேணும் -வார்த்தை கேட்க வேணும் -என்றும் போலே காணும் ஆசை –

——————————————————————————————————

இவனுடைய இந்நீர்மை அனுபவித்தால்-வேறு ஒன்றால் போது போக்க ஒண்ணாது என்கிறார் –
இவனுக்கு நினைவும் பேச்சும் வெண்ணெயில் ஆனால் போலே ஆழ்வாருக்கு நினைவும் பேச்சும் இவன் பக்கலிலே ஆணைப்படி சொல்கிறது –

அவன் ஓவாதே அழுத படியைக் கண்டு இவரும் ஓவாதே ஏத்தத் தொடங்கினார் –

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும்  ———-25-

உரை மேல் கொண்டு -மேலான உரையைக் கொண்டு -அதாவது வாக்குக்கு விஷயமானத்தைக் கொண்டு
-அன்றிக்கே -உரைக்கையிலே மேற்கொண்டு -அதாவது சொல்லிச் செல்லுகையில் கிளர்ந்து
என்னுள்ளம் ஓவாது எப்போதும்-என்னுடைய ஹிருதயமானது உச்சிவீடு வீடாக கடவது அன்றிக்கே -ஸ்வரூபம் ஒரு காலாக அழியுமோ
வரை மேல் மரகதமே போலே திரை மேல்-கிடந்தானைக் -ஒரு மலையிலே ஒரு மரகத கிரியானது பரப்பு மாறப் படிந்தால் போலே
யாயிற்று திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின போது இருக்கும்படி
கீண்டானைக் கேழலாய்ப் பூமி-இடந்தானை யேத்தி எழும்  —சர்வேஸ்வரனாய் சர்வ சக்தியானவனுடைய ஸுலப்ய சரிதங்களை சொல்லுகைக்கு
என்னுள்ளம் -இத்யாதி –தாச வ்ருத்திகனான என்னுடைய மனசானது இடை விடாது -எப்போதும் இத்யாதி –
-ஒரு பர்வத சிகரத்தில் இந்த்ர நீல மணி இருந்தால் போலே விளங்குகிற சமுத்திர சாயியானவனை
-கிடந்தானை -கீண்டானை -ஆர்த்தரைக் கண்டால் படுக்கை அடிக் கொதிக்கும் படி / ஏத்தி எழும் -ஸ்துதித்து உஜ்ஜீவிக்கும் –
உரை மேல் கொண்டு -வாக்குக்கு விஷயமாகக் கொண்டு -வாக் விருத்தியை மேற்கொண்டு -என்னவுமாம்
என்னுள்ளம் இத்யாதி -ஒரு மலை மேல் மரகதம் கிடந்தால் போலே திரள் மேல் கண் வளர்ந்து அருளுகிறவனை –
கீண்டானை இத்யாதி -வராஹரூபியாய்ப் புக்கு அண்டபித்தியில் நின்றும் ஓட்டுவிடுவித்து பூமியை இடந்தவனை
/ ஏத்தி எழும் -ஏத்தி உஜ்ஜீவியா நின்றது

—————————————————————-

ஒரு மலையின் மேலே ஒரு மரகத கிரி படிந்தால் போலே ஸ்வ சந்நிதானத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளினவனாய் -கிறுக்கன் ஆர்த்தி தீர்க்கைக்காக நரசிம்ஹமாய் தூணிலே வந்து தோற்றி
ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனாய் -மஹா வராஹமாய் பிரளயத்தில் கரைந்து அண்டபித்தியிலே ஒட்டின பூமியை
இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனை என்னுடைய ஹிருதயமானது -உரைக்கையிலே தத்பரமாய்க் கொண்டு
உச்சிவீடு விடாதே சர்வகாலத்திலும் இவ்வாபதானங்களையே சொல்லிப் புகழ்ந்து உஜ்ஜீவியா நிற்கும்-
-உரை மேல்கொண்டு -என்று மேலான உரையைக் கொண்டு -உத்க்ருஷ்டமான சப்தங்களைக் கொண்டு என்னவுமாம்
-கேழலாய்க் கீண்டவனை பூமியிடந்தானை -என்று இரண்டையும் இங்கே யாக்கி அண்டபித்தியில் ஒட்டின இத்தை
முதலிலே கீண்டு பின்னை இடந்து எடுத்துக் கொண்டு ஏறின படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

——————————————————————————————————–

எல்லார்க்கும் நினைவும் செயலும் ஒக்கப் பரிமாறலாவது பரமபதத்தில் அன்றோ என்னில் -நித்ய ஸூ ரிகளும் கூட
அவனுடைய ஸுலப்யம் காண வருகிறது திருமலையில் அன்றோ -என்கிறார் –

அவதாரங்களுக்குப் பிற்பாடானார் இழவைப் பரிஹரிக்கைக்காகத் திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை ——26-

எழுவார் -ஐஸ்வர்யம் வேணும் என்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள் –
விடை கொள்வார் -ஆத்மபிராப்தியே அமையும் -நீ வேண்டா என்று இவன் பக்கலிலே நின்றும் அகலுமவர்கள்
ஈன் துழாயானை-வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்–இவனை பிரியாது ஒழிய வேணும் என்று நினைத்து காலம் எல்லாம் தொழுவார்கள் –
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
-ஆனபாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –
வானோர்-மனச் சுடரைத் தூண்டும் மலை –நித்ய ஸூ ரிகளுடைய கிளர்ந்த மனசை அவனுடைய ஸுலப்யம் காணப் போரி கோள்-என்று கிளர்ந்து
–நிற்கும் திருமலை -காலாந்தரம் அன்று –சந்நிஹிதம்
எழுவார் -பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர்யார்த்திகள் / விடை கொள்வார் -பலம் நித்யம் ஆகையால் மீட்சி இல்லை கேவலர்க்கு
வினை -இத்யாதி -இம்மூவருக்கும் உத்தேச்ய விரோதிகளை போக்கும் / நந்துவிக்கை -அவிக்கை -/
வானோர் -இத்யாதி -இங்கு உள்ளார் – ஒழிவில் காலம் என்ன -அங்குள்ளார் -அகலகில்லேன் -என்னைச் சொல்லும்

———————————————————–

போற்றி என்று ஏற்றெழுவர் -என்கிறபடியே எங்களுக்கு அபிமதமான த்ருஷ்ட ஐஸ்வர்யத்தை தரலாகாதோ என்று
பிரயோஜனத்துக்கு கை ஏற்றுக் கிளர்ந்து -அது கைப் பட்டவாறே -விட்டு அகன்று போம் ஐஸ்வர்யார்த்திகளும்
உன் அனுபவம் வேண்டா -எங்கள் ஆத்மாவை அனுபவித்துக் கொண்டு ஒரு நாளும் உன் முகத்திலே விழியாது இருக்கும் படி
விடை கொள்ளுகைக்கு திருக்கை சிறப்பிட்டு அருள வேணும் என்று விடை கொண்டு போகும் கைவல்யார்த்திகளும் –
-நிரதிசய போக்யமான திருத் துழாயாலே அலங்க்ருதமான பரம ப்ராப்ய பூதனானவனை ஒரு நாளும் விட்டு நீங்காதே
கிட்டி நின்று அனுபவிக்கும் பிரகாரத்தை அனுசந்தித்து சர்வ காலமும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்கும்-
-பகவத் சரணார்த்திகளுமான -ஈவதிகாரிகளுடைய தத் தத் புருஷார்த்த பிரதிபந்தகமான பாபாக்கினியை
உருத் தெரியாத படி நசிப்பிக்கும் திருமலையே காணும் -அஸ்ப்ருஷ்ட பாப கந்தரான நித்ய ஸூ ரிகளுடைய
திரு உள்ளம் ஆகிற விளக்கை அவன் சீலாதி குண அனுபவத்தின் ஸ்ரத்தையை வர்த்திப்பித்துக் கொண்டு ப்ரேரியாய் நிற்கும் திருமலை –

————————————————————————————————————–

சேஷ்டிதங்களிலே உருகுகிறார் –ஸூ குமாரமான கையைக் கொண்டே இப்பெரிய செயல்களை செய்வதே
-செய்யா நின்றால் அநாயாசேன செய்வதே –
திருவேங்கடமுடையானுடைய திருக்கையைப் பார்த்தார் போலே –

இங்கே எழுந்து அருளி இருக்கிற திருவேங்கடமுடையானடைய தோலின் துடிப்பைக் கண்ட போதே
அவதாரங்களில் விரோதி வர்க்கத்தை பொடி படுத்தின வீரப்பாடு அடங்கலும் காணலாம் -என்கிறார் –

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை ———27-

மலையால் குடை கவித்து -வர்ஷத்துக்கு குடை அபேக்ஷிதம் இ றே -இந்த்ர அஸூர ப்ரக்ருதி அல்லாமையாலே
பசி க்ராஹத்தாலே செய்தானாகில் மலையை எடுத்து நம்மை நோக்கிக் கொள்வோம் என்று மழையைக் குடையாகக் கவித்து –
மாவாய் பிளந்து-பண்ணின ப்ராதிகூல்யத்தின் கனத்தாலே கேசியைக் கொன்று —சிலையால் மராமரம் ஏழ் செற்று–
அவதாரத்துக்கு அடுத்த ஆயுதத்தாலே மரா மரம் ஏழையும் செற்று
கொலையானைப்-போர்க்கோடு ஒசித்தனவும் –கொல்லக் கடவதாக நிறுத்தின குவலயா பீடத்தினுடைய
பொரா நின்ற கோட்டை அநாயாசேன முறித்தனவும்
பூங்குருந்தம் சாய்த்தனவும்-பூப்பறித்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை —–சிரமஹரமாய முழக்கத்தை உடைத்தாய் இருக்கும் -என்கை
-அன்றிக்கே திருக்கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இருந்த போது மேகத்தைப் பற்றி இருந்த சங்கு போலே இருந்தது என்கை
-இடையவர் செய்வது எல்லாம் முன்கை உரத்தாலே-க்ஷத்ரியர் என்றும் வில்லாலே -என்னும் இடம் தோற்றுகிறது
-ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் பிடிக்கவும் பொறாத மிருதுவான கையைக் கொண்டு கிடீர் இது எல்லாம் செய்தது –
மலை இத்யாதி -மலையாக விநியோகம் கொண்டானோ / மாவாய் பிளந்து –நாரதாதிகள் கூப்பிடும்படி
வந்த கேசியை நெட்டிக்கோரை கீண்டால் போலே கீண்டு –
சிலை இத்யாதி -எய்ய ஒண்ணாத படி திரள நின்ற மரா மரங்களை -/ கொலை இத்யாதி -கொலையில் உற்ற ஆனை /
பூங்குருந்தம் -தழைத்துப் பூத்து நின்ற / கார்க்கோடு -குளிர்ந்து சிரமஹரமாய பெருத்து முழங்குகை –ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் தொடப் பொறாத கை கிடீர் –

———————————————————————-

இந்திரன் ப்ரவர்த்திப்பித்த கல் வர்ஷத்திலே ரஷ்ய வர்க்கம் அழியாத படி கைக்கு எட்டிற்று ஒரு மலையாலே
குடை பிடிப்பாரைப் போலே கீழது மேலதாக மறித்து -ரக்ஷித்து –
தன்னை விழுங்குவதாக வந்த கேசி யாகிற குதிரையினுடைய வாயை இரு பிளவாக கிழித்துப் பொகட்டு –
-ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமாக எடுத்த திரு வில்லாலே ஓர் ஆஸ்ரிதனை விசுவசிப்பிக்கைக்காக மரா மரங்கள் ஏழையும் இழியச் செய்து
-எதிர்த்தவர்களைக் கொன்று விழ விடும் குவலயா பீடத்தினுடைய பொருகைக்கு பரிகரமான கொம்பைப் பிடுங்கி பொகட்டனவும் –
-கண்டார்க்கு ஆகர்ஷகமாம் படி முட்டாக்கிடப் பூத்துக் கிடக்கிற குருந்தை வேர் பறியும்படி தள்ளி விழ விட்டனவும்-
-குளிர்ந்து முழங்குகிற ஸ்வ பாவத்தால் மேகத்தோடு ஒத்து இருந்துள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை தரித்து அருளினவனுடைய திருக் கைகள் கிடீர் –

—————————————————————————————————

ஐஸ்வர்யம் சொல்லுகிறது என்னவுமாம் -நீர்மை சொல்லுகிறது என்னவுமாம் –

திருமலையிலே எழுந்து அருளி நிற்கிற திருவேங்கடமுடையான் திரு மேனியில்
அழகும் ஐஸ்வர்யமும் சீலாதி குணங்களும் நிழல் இட்டுத் தோற்றா நின்றது கிடீர் -என்கிறார் –

கைய  வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை ——–28-

கைய  வலம் புரியும் நேமியும்–கைய -கையிலே உள்ள
கார் வண்ணத்தைய–சிரமஹரமான வடிவை யுடைய ஸ்வாமி யானவனே
மலர்மகள் நின்னாகத் தாள் -கோலா மலர்ப்பாவை நின் திரு மார்விலாள் –
செய்ய-மறையான் நின்னுந்தியான் -நேரே உன்னைக் காட்ட வற்றான வேதத்தை யுடைய ப்ரஹ்மா உன் திரு நாபீ கமலத்திலானான் –
மா மதிள் மூன்று எய்த-இறையான் நின்னாகத் திறை ——த்ரி புரம்-தஹநம் பண்ணி ஈஸ்வர அபிமானியாய் இருக்கிற ருத்ரன்
உன் திருமேனியைப் பற்றி இறையாயிற்று –
அன்றியே -நின்னாகத்து இறை -என்று திருமேனியில் ஏக தேசத்தில் என்னவுமாம் –
இத்தால் ஐஸ்வர்யமும் அழகும் சொல்லிற்றாயிற்று / கார் வண்ணம் -வேறே வேணுமோ -வடிவமையாதோ /
ஐய-என்னது என்னலாய் இருக்கை / அலர்மேல் மங்கை உறை மார்பன் /
மா மதிள் மூன்று எய்த-இறையான் நின்னாகத் திறை –ஊரைச் சுட்டு பேரைப் படைத்தான் –கோட் சொல்லி பிரசித்தராமா போலே
–ஆகத்திலே ஏக தேசத்தை பற்றினான் -என்னுதல் / ஆகத்தைப் பற்றி இறையானான் என்னுதல் –

————————————————————–

மேகம் போலே சிரமஹரமான வடிவையுடைய நிருபாதிக பந்துவானவனே -ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் திருவாழியும்
திருக் கைகளிலே உளவாய் இரா நின்றன -அலர்மேல் மங்கை யானவள் உன்னுடைய திரு மார்வில்
-அகலகில்லேன் இறையும்-என்று உறையா நின்றாள்-உன்னை உள்ளபடி காட்டும் செவ்வையை யுடைய வேதத்தை
தனக்கு நிரூபகமாக யுடைய ப்ரஹ்மா உன்னுடைய திரு மேனியைப் பற்றி லப்த சத்தாகனாய் இரா நின்றான்
-பெரிய மதிளையுடைய த்ரி புரத்தை தக்தமாம் படி எய்து விழ விட்ட ஈஸ்வர அபிமானியான ருத்ரன்
உன் திருமேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபன் ஆகா நின்றான் –

———————————————————————————————————–

ஐஸ்வர்யம் கண்டு அஞ்ச வேண்டா -ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்கிறார் –
ஐஸ்வர்யம் கண்டு வெருவாதே சீலத்தை அநுஸந்தி -என்கிறார் –

நெஞ்சே உபய விபூதி நாத்தனாய் இருக்கிற அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே
-அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய் -இத்தை நன்றாகக் புத்தி பண்ணு -என்கிறார் –

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி ——–29-

இறையும்– பரம பதத்தில் இருப்பை சொல்கிறது –
நிலனும் இரு விசும்பும் காற்றும்-அறை புனலும் –செந்தீயும் ஆவான்– ஜகதாகாரனாய் லீலா விபூதி உக்தனான படி சொல்கிறது –
பிறை மருப்பின்-பைங்கண் மால் யானை -பிறை போலும் கொம்பை யுடைத்தாய் -ஜாதி உசிதமான கண்ணை யுடைத்தாய்
-பெருத்த யானை–ஆனைக்குப் போரும்படியான துயரைப் போக்கி ரஷித்த
செங்கண் மால் கண்டாய் தெளி —–வாத்சல்ய அம்ருதத்தை வர்ஷியா நின்ற கண்ணை யுடையனான சர்வேஸ்வரன் /
தெளி -இவனுக்கு ஆஸ்ரித பாரதந்தர்யமே ஸ்வரூபம் என்னும் இடத்தைப் புத்தி பண்ணு –
இறையும் -நியாமகனாய்க் கொண்டு பரமபதத்தில் இருக்கும் -/ நிலன் இத்யாதி -இந்த விபூதியை யுடையனாய் இருக்கும் இருப்பு
/ மால் யானை -உடம்பில் பெருமை பாடாற்ற ஒண்ணாமை / அளித்த -புண் பட்டத்தை ஸ்பரிசித்து அருளின படி /
செங்கண் -வாத்சல்யம் / மால் என்று அரை குலைய தளை குலைய வந்து தோற்றின படி /
அவன் தம்மை மாஸூச -என்ன திரு உள்ளத்தைத் தாம் மாஸூச -என்கிறார் -வாசலைத் திறந்து வைப்பாரைப் போலே
பெறுகைக்கு அங்கும் போக வேண்டா -இசைவே வேண்டுவது -ஆர்த்தியே வேண்டுவது
-அவனே வாரா விடில் சமாயதிக தரித்ரனே அவன் -மற்று அவனைப் பெற உபாயம் உண்டோ
-வாசனையால் அம்மே என்பாரைப் போலே அழைத்தது அத்தனை –

————————————————————————-

பரம பதத்தில் சர்வ ஸ்வாமித்வம் தோற்ற எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுமாய்
-பூமியும் பரப்பை யுடைத்தான ஆகாசமும் வாயுவும் -அலை எறிகிற ஜலமும் -தேஜஸ் தத்வம் ஆகிற பஞ்ச பூத ஆரப்தமான
லீலா விபூதியை பிரகார தயா சேஷமாக யுடையவனுமாய் இருக்கிற பெருமையை யுடையவன் –
-பிறை போலே இருக்கிற கொம்பையும் ஜாதி உசிதமான பசுமையையும் யுடைய கண்ணை யுடையனுமாய்
-அடிமை செய்கையில் பெரும் பிச்சனுமாய் இருக்கிற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் யுடைய -முதலையின் கையில்
அகப்பட்டுப் பட்ட துக்கத்தை பரிஹரித்து -கையிலே பறித்த பூ செவ்வி அழிவதற்கு முன்பே திருவடிகளிலே
பணிமாறி வித்துக் கொண்டு ரக்ஷித்து அருளின வாத்சல்ய ஸூ சகமான சிவந்த திருக் கண்களை யுடைய
வ்யாமுக்தன் கிடாய் -இத்தை அழகிதாகப் புத்தி பண்ணு -மால் என்று அரை குலைய தளை குலைய வந்து தோற்றின படி —

——————————————————————————————

சம்சாரத்தில் ஸமாச்ரயணீயர் பலர் உண்டு என்று பிரமிக்க வேண்டா -சம்பந்த ஞானம் உண்டாகவே
நெஞ்சு தானே அவனை ஆராய்ந்து பற்றும் –

வியதிரிக்தங்களிலே போகாத படி மனசை நியமித்து திருவடிகளின் உறவை அறிந்து இருப்பார்க்கு-
அம் மன்ஸூ தானே -வர பிராப்தி பற்றாதபடி பற்றிக் கொண்டு அத்யபி நிவிஷ்டமாய் அவனைக் கிட்டும் என்கிறார் –

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து ——30-

செந்நிறீஇ—நன்கு நிறுத்தி / புரிந்து போய் –விரும்பி அடைந்து-

தெளிதாக உள்ளத்தைச்–உள்ளத்தை தெளிதாக -விஷய ப்ராவண்யத்தாலே காலுஷ்யமான ஹிருதயத்தினுடைய காலுஷ்யம் போக /
செந்நிறீஇ–செவ்விதாக நிறுத்தி /
ஞானத்தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்–ஞானத்தால் எளிதாம் படி -அவன் சேஷீ நாம் சேஷபூதர் –என்று
அவனை உணர்வாருடைய சிந்தை
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து —-அநேகம் பசுக்கள் நின்றால் தாயைத் தேடும் கன்றே போலே
தண் துழாயான் அடிக்கே புரிந்து போய் நாடிக் கொள்ளும்
செந்நிறீஇ-இந்திரியங்களை தாம் வெல்லப் பாராதே எம்பெருமான் பக்கலிலே மூட்டி விஷயங்களை ஜெயிக்கப் பார்க்கை –
தெளிதாக -ஞானத்தால் விகசிதமான பக்தியால் / எளிதாக -விஷயங்களில் பழக்கம் போலே தானே மூளும் படியாய் இருக்கை
-தாயாய் இருக்கிறபடி
அடியே -அல்லாத ஸ்தலங்களைக் கடந்து /புரிந்து -விரும்பி –

—————————————————————-

விஷயாந்தரங்களால் உள்ள காலுஷ்யம் போய் தெளிவுடையதாம் படிக்கு ஈடாக -ஹ்ருதயத்தை
பகவத் பிரவணமாம் படி என்னை நிறுத்தி
தத் விஷய பக்தி ரூபா பன்ன ஞானத்தினால் -அவன் சேஷி நாம் சேஷம் -என்கிற தெளிவு
யுண்டாம்படியாக சாஷாத்கார பர்யந்தம் நன்றாக உணர்ந்து இருக்குமவர்களுடைய மனசானது வருத்தம் அற
கூட நிற்கிற பசுக்களையும் கணிசியாதே-தன் தாயைக் கிட்டிக் கொண்டு நிற்கும் கன்று போலே
-சிரமஹரமான திருத் துழாயாலே அலங்க்ருதனாகையாலே வகுத்த சேஷியுமாய் -நிரதிசய போக்யனுமான
எம்பெருமானுடைய திருவடிகளையே வாக்யாதி இந்திரியங்களை கணிசியாதே அங்கே
அபிமுகமாய் கொண்டு போய் தேடிக் கொள்ளா நிற்கும் -இத்து நிச்சயம் –

——————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -11-20– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

இவனுடைய ரக்ஷகத்வத்தில் த்வரையைக் கண்டு தம்முடைய இந்திரியங்கள் வியாகுலமாம் படி சொல்லுகிறது –

இப்படி அவன் படிகளை அனுபவித்துக் கொண்டு போகிற வழியாலே -தமக்கு அவன் பக்கல் உண்டான அபி நிவேசத்தைப் பேசினார் கீழ்
-இப்போது கரணியான தம்மிலும் காட்டில் தம்முடைய கரணங்களுக்கு அவன் பக்கல் உண்டான அபிநிவேச அதிசயத்தை பேசுகிறார் –

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி ——–11-

வாய் அவனை அல்லது வாழ்த்தாது –நீ அளவிதாம் படி அமையும் காண் என்றாலும் கேளாது
கை யுலகம்-தாயவனை அல்லது தாந்தொழ –திரு உலகு அளந்து அருளினவனுடைய நீர்மையைக் கண்டால்
நான் வேண்டாம் என்னிலும் தொழுது அல்லது நில்லாது
பேய் முலை நஞ்-சூணாக வுண்டான்–பேய் நஞ்சாகக் கொடுத்தால் -இவன் தாரகமாக யுண்டான்
-அவள் தன் நெஞ்சில் தண்மையால் முடிந்தாள் அத்தனை –
உருவோடு பேர் அல்லால்-காணாக் கண் கேளா செவி ——அவன் உரு அல்லது கண்கள் காணா / அவன் பேச்சே அல்லது செவிகள் கேளா –
ஆஸ்ரித விஷயத்திலும் -சாமான்ய விஷயத்திலும் இருக்கும் இருப்பில் சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமான படி –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -தாம் புறம்பே வாழ்த்தப் பார்க்கிலும் -தாம் செய்யா
கை யுலகம்-தாயவனை அல்லது தாந்தொழ–தொழாதார் தலையிலும் இருந்து தொழுவித்துக் கொள்ளும் திருவடிகளை
யுடையவனை அல்லது -தாம் தொழா-அவனும் ஏற வாங்கிலும் -நானும் ஏற வாங்கிலும் –
  பேய் முலை நஞ்-சூணாக வுண்டான்–கொடா விடில் பிழையேன் என்று கொடுக்க -உண்ணா விடில் பிழையேன் என்று உண்டான் -அநந்யார்ஹம் ஆயிற்று –
உருவோடு பேர் அல்லால்-காணாக் கண் கேளா செவி -ஹ்ருஷீ கேசன் அன்றோ —

———————————————

என்னிலும் காட்டிலும் அவன் எங்குற்றான் என்று பார்க்கிற என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனை ஒழியப் புகழாது –
கைகளானவை தரதம விபாகம் பாராதே இருந்ததே குடியாக லோகத்தை அடைய அநாயாசேன அளந்து கொண்ட
சீலாதிகனாவனை ஒழிய தாம் தொழப் பாராது –பூதனையுடைய முலையில் விஷத்தை தாரகமாக விரும்பி
-அமுது செய்தவனுடைய வடிவை ஒழிய கண் காணாது -குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஒழியச் செவி கேளாது —

———————————————————————–

தம்முடைய அனுபவமான பக்தியைச் சொல்லுகிறது என்னவுமாம் -பக்தியை விதிக்கிறது என்னவுமாம் –
கீழ் ப்ராப்ய சிஷை பண்ணினார் -இனி ப்ராபகம் சொல்லுகிறார் –

கீழ் ஸமாச்ரயணீயனாகச் சொன்னவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே தத் அனுரூபமான சாதனம் பக்தி -என்கிறார் –

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு ——-12-

அவியாத ஞானம் -நாஸம் அற்ற பக்தி ரூப பன்னமான ஞானம்
செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்-பஞ்ச பூதங்களிலான தேஹமும்
வேள்வியும் -அக்னி ஹோத்த்ரம் போன்ற பக்திக்கு சாதனமான கர்மங்களும் –
நல் அறமும் -பக்திக்கு விருத்தியைச் செய்யும் விவேகம் விமோகம் முதலான ஆத்மகுணங்களும்
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —என்பரே–நிரபேஷ ரக்ஷகனான ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு சாதனம் என்கிறார்களே -என்ன அறிவு கேடு –

வேள்வியும் -பக்தி விவ்ருத்தி யர்த்தமாகவும் -பாப ஷயத்துக்காகவும் அனுஷ்டிக்கிற கர்மங்கள் –
அக்னி ஹோத்ராதி து தத் கார்யா யைவ தத் தர்ச நாத் –/ ஆ ப்றா யாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -என்றும் /
யஞநேன தாநேந தபஸா அநாசகேன ப்ராஹ்மனோ விவிதி ஷந்தி -என்றும் சொல்லுகிறபடியே
நல்லறம் -விவேகாதிகள் -/ என்பரே ஏனமாய் நின்றார்க்கு இயல்வு -ஏனமாய் நின்றாரைப் பெறுகைக்கு பண்ணும் பிரவ்ருத்தி இவை என்பர் –
ஆபத்தே அடையாளமாக தானே ரஷிக்கும் என்கையாலே –
அவன் உபாயமாகத் தன்னுடைய பக்தியைச் சொல்லுகிறது என்றுமாம் –
செ வி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் –சர்வ இந்திரியங்களுக்கும் உ ப லக்ஷணம்
செந்தீ-புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் -ஆக இருபத்து நாளுக்கும் உப லக்ஷணம் –
அவியாத்-ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே–கர்மா யோக அந்தரகதமான ஞானம் -ப்ரக்ருதி ஹேயதாயா ஜ்ஜேயை
-ஆத்மா உபாதேயதயா ஜ்ஜேயன் -ஈஸ்வரன் உபாதேய தமனாய் கொண்டு ஜ்ஜேயன் -சஞ்சலம் ஹி
வேள்வி -கர்ம யோகம் -/ நல்லறம் ஆன்ரு சம்சயாதி தர்மங்கள்/ என்பர் -வேத சாஸ்திரங்களில் பிரசித்தி
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —தளர்ந்த போது எடுக்குமவன் -என்று ஷேபமான போது பிரவ்ருத்தி கொண்டு
புகுவதைக் கை வாங்கின அன்று எடுக்க இருக்க -ஞானப் பிரானை அல்லால் இல்லை / அறிவானாம் -என்றால் போலே -இயல்வு -உபாயம்

————————————–
ஸ்ரோத்ர ஜிஹ்வா சஷூர் க்ராண த்வக்குகள் ஆகிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
-தேஜஸ் பிருத்வி வாயு ஜலம் ஆகாசங்கள் ஆகிற பூத பஞ்சகமும்
தத் பலஷிதமான சரீரமும் -இந்த கரண களேபரங்களால் சாதிக்கப் படுமதாய்-அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான
பக்தி ரூபா பன்ன ஞானமும் -பக்தி உத்பத்தி விவ்ருத்தி ஹேதுவாய் -பல சங்க கர்த்ருத்வ தியாக பூர்வகமாக பண்ணும் யாகாதி கர்மங்களும்
-நாள் தோறும் பக்தியை வளர்க்கக் கடவ விவேக விமோதாதிகளும் -ஆன்ரு சம்சய தாநாதிகளும் ஆகிற விலக்ஷண தர்மமும்
-சர்வ ஸூலபனாய்-ஆபத் சகனாய் நின்ற சர்வேஸ்வரனுக்கு -சத்ருச சாதனம் என்று வேத வைதிக புருஷர்கள் சொல்லா நின்றார்கள்
-பக்தித–என்றும் -பக்த்யா த்வத் அநந்யா ஸக்ய-என்றும் சொல்லக் கடவது இ றே
அங்கண் இன்றிக்கே தமக்கு போக உபகாரணமான பக்தியை -உபாசகர் உபாயமாக அநுஸந்திக்கும் கட்டளையைச் சொல்லி
பக்தியை ஷேபித்து பிரபத்தியை அருளிச் செய்கிறார் ஆகவுமாம் -அப்போதைக்கு –
ஏனமாய் நின்றார்க்கு நல்லறமான இவை இயல்வு என்பரே-தானே வந்து நிஹிதனாய் ரக்ஷிக்குமவனைப் பெறுகைக்கு
இவற்றை சத்ருச சாதனம் என்று சொல்லா நிற்பார்கள் -என்ன அறிவிலிகளோ -என்று ஷேபமாகக் கடவது
-ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்று இ றே தம்முடைய சித்தாந்தம் –

———————————————————————————————–

வாயவனை யல்லது வாழ்த்தாது -என்னும்படியாய் இருந்தது -உம்மது–அல்லாதார்க்கு அவனை ஆஸ்ரயிக்கும் போது
அவதானம் வேணும் -எங்கனே கூடும்படி என்னில் -அல்லாதாரும் ஆஸ்ரயிக்கும் படி தானே பிரதமபாவியாம் -என்கிறார் –

உபகரணங்களையும் கொடுத்து -ருசியையும் ஜநிப்பித்து-உபாயமுமாய் -தானே பல பிரதானம் பண்ணும் என்கிறார்

அவனை நேர் கொடு நேர் கிட்டிப் பரிமாறுகைக்கு அதிகாரிகள் நித்ய ஸூ ரிகளே –இப்படி இருக்கச் செய்தேயும்
சம்சாரிகளான நம் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி தன்னை ஸூ லெபனாக்கி வைக்கும் -என்கிறார் –

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் ——-13–

இயல்வாக –சத்ருசமாக
யீன் துழாயான் அடிக்கே செல்ல-ஆக முதலியாகத் தோள் மாலை இட்டிருக்கிறவதுக்குப் போரும்படியாக
முயல்வார் இயல் அமரர் முன்னம்-இயற்றியை யுடையரான நித்ய ஸூ ரிகள் முன்னே மஹா யத்னம் பண்ணுவார்கள் –
விஷய பிரவணராய் அவனை அறியாதவர்களும்
-இயல்வாக-சத்ருசமாக
நீதியால் ஓதி -முறையால் திரு நாமங்களை சொல்லி
நியமங்களால் பரவ-பரவும் படிக்கு ஈடாக -சாஸ்திரங்களில் சொல்லும் நியமங்களாலே பரவசமாகும் படிக்கு ஈடாக
-ஆதியாய் நின்றார் அவர்–அவர் தாமே –பிரதம ஸூ க்ருதம் ஆனார் –

இயல் அமரர் –இயற்றியை யுடைய அமரர் -/ முன்னம் -முந்துற முன்னம் /இயல்வாக–இதுவே யாத்திரையாக
யீன் துழாயான்-பரி பூர்ணன் / அடிக்கே செல்ல–திருவடிகளுக்குச் சேர /முயல்வார்-யத்னம் பண்ணுவார் –
-இயல்வாக-சத்ருசமாக /நீதியால் ஓதி -சாஸ்திர யுக்தமான படியே / நியமங்களால் பரவ-ஸ்ரவணாதிகளால் ஆஸ்ரயித்து
ஆதியாய் நின்றார் அவர் -அவர்களுக்கு உபேயத்துக்கு அடியானால் போலே வேண்டினவிடத்துக்கு இவர்களுக்கு
உபாயத்துக்கு அடியாக நின்றால் ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ -அவனே இதுக்கும் வேண்டின பின்பு அவனையே பற்ற அமையாது என்றுமாம் –

————————————-

ஐஸ்வர்ய ஸூசகமான அழகிய திருத் துழாயை யுடையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே கிட்ட -சத்ருசமாக உத்யோகிப்பர்
-முந்துற முன்னம் அதுக்கு ஈடான யோக்யதையை யுடையரான நித்ய ஸூ ரிகள் -அல்லாத நம் போல்வாரும்
-ஸ்வ வர்ணாதிகளுக்கு நழுவுதல் வாராத படி அழகிதாகக் கொண்டு சாஸ்திர யுக்தமான விரத நியமாதி க்ரங்களோடே
அத்யயனத்தைப் பண்ணி -அதீதமான வேதத்தின் அர்த்தத்தை ஆச்சார்யன் பக்கலிலே கேட்டு மனனம் பண்ணி
அர்ச்சனை பிரணாமா கீர்த்த நாதிகளோடேகூட அனவரத பாவனை பண்ணுகை யாகிற நியமங்களாலே
பக்தி பரவசராய் பரவும்படிக்கு ஈடாக அப்படிப் பட்ட பெருமை யுடையவர் -பூர்வஜ -என்கிறபடியே
-ருசி உத்பாதகராய்க் கொண்டு முற்பாடராய் நின்றார் –ஆகையால் நமக்கு எல்லாம் ஆஸ்ரயிக்க குறையில்லை என்று கருத்து –
-இயலமரர் –இயற்றியை யுடையரான -யோக்யதை யுடையரான நித்ய ஸூ ரிகள் -என்றபடி –

————————————————————————————————————

பிரக்ருத்யா ஆஸ்ரயிக்குமவர்களை யும் சொல்லி -ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுமவனையும் சொல்லிற்று
-இது ஒன்றும் பெறாதாரைச் சொல்லுகிறது –
அவனை வேண்டாதார் படுகிற பாடு பாரீர் -என்கிறார் –

இப்படி ருசி உத்பாதகனாய்க் கொண்டு முற்பாடானாய் நிற்கிறவனை விட்டு -சம்சாரிகள் ஷூத்ர தேவதா ஸமாச்ரயணம்
பண்ணா நின்றார்கள் என்னில் –
அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆசிரயணீயரான தேவதைகளுக்கும் ஆசிரயணீயன் அவனே -என்கிறார் –

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் ———-14-

அவரவர் –ரஜஸ் பிரசுரரும் தமஸ் பிரசுரரும்
தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி-குணானுகுணமாக வெளிச் செறிந்த படி ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று -ரஜஸ் தமஸ் ஸூக்களுக்கு விஷயமானவரை என்னுடைய ஸ்வாமி என்று
சுவர் மிசைச்-சார்த்தியும் வைத்தும் தொழுவர் ——-சர்வேஸ்வரன் பக்கல் -எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பர்
-என்கிற செயலில் பித்தியிலே எழுதியும் வைத்தும் தொழுவர் –
உலகளந்த-மூர்த்தி யுருவே முதல் —-இவர்களுடையவும் -ஆசிரயணீயங்கள் யுடையவும் தலையிலே அடியை வைத்தவனே பிரதானம் –
/ மூர்த்தி யுருவே முதல்–சர்வேஸ்வரனுடைய திரு மேனியே பிரதானம் –

அவரவர் பின்ன ருசிகள் / தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி -சாஸ்திரத்தின் பின் செல்லார் /
இவர் இவர்–சகர புத்திரர்கள் கண்டாரை -என் குதிரை பிடித்தாய் -என்று பிடிக்குமா போலே -தோற்றினாரை
உலகளந்த-மூர்த்தி யுருவே முதல் –சமாஸ்ரயிப்பார் தலையிலும் ஸமாச்ரயணீயர் தலையிலும்
ஓக்கத் திகைத்த சர்வேஸ்வரன் -உருவே முதல் -வடிவே முதல் –

———————————————–

ரஜஸ் தமஸ் பிரசுரராய் பின்ன ருசிகளான அவ்வதிகாரிகள் -சாஸ்திர முகத்தால் அன்றிக்கே குணானுகுணமாக
தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே வாய் விட்டுப் புகழ்ந்து தங்கள் உகந்த குணங்களை யுடைய ஐயன் துர்க்கை
தொடக்கமாக ருத்ரன் முடிவாக உண்டான இவர்கள் நமக்கு ஆசிரயணீயரான ஸ்வாமிகள் என்று ஆதரித்துக் கொண்டு
ஒவ்வொரு தேவதைகளை ஓரோர் பித்திகளிலே சித்ர ரூபேண எழுதியும் க்ருஹம் தொடக்கமான
ஓரோர் இடங்களிலே ப்ரதிமா ரூபேண ப்ரதிஷ்டித்து வைத்தும் ஆஸ்ரயியா நிற்பார்கள் –
இவர்கள் இப்படிச் செய்தாலும் ஆச்ரயிக்கிறவர்களோடு -ஆசிரயணீயராக இவர்கள் விரும்புகிற அத்தேவதைகளோடு வாசியற
எல்லோரும் தன் கால் கீழே துகை யுண்ணும் படி ஜகத்தை அடைய அளந்து கொண்ட சர்வேஸ்வரன் திருமேனியை பிரதானம் –

——————————————————————————-

அவ்வோ தேவதைகளும் ஆச்ரயணீயராய்ச் சொல்லா நிற்கச் செய்தே -அவர்கள் அப்ரதானர் இவன் பிரதானன் என்று
சொல்லுகிறது உம்முடைய பக்ஷத்தாலே இ றே என்ன -அர்த்த தத்வம் இருந்தபடியேப் பார்க்கலாகாதோ -என்கிறார் –

நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் -புறம்பே ஆஸ்ரயிப்பார் சிலரும் ஆஸ்ரயித்தார்கு பலம் கொடுப்பார்
சிலருமாய் அன்றோ நாட்டில் நடந்து போருகிறது-என்ன -அவை யடங்கலும் வியர்த்தம் என்கிறார் –

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது ——–15-

முதலாவார் மூவரே –இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயர் அன்று இ றே -மூவர் இ றே பிரதானர்
அம்மூவருள்ளும்முதலாவான் –ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஜீவ வ்யவதாநத்தாலே -அந்தர்யாமியாயும்
-தன் பக்கலிலே ஸ்வேன ரூபேண நின்றும் காரணம் ஆவான் –
மூரி நீர் வண்ணன்-பொன்னுருவும் தீயுருவும் ஆனவர்கள் அன்று -பரப்பை யுடைத்தான கடல் வண்ணன் –
-முதலாய–காரணமான
நல்லான் அருள் அல்லால்-அறவனானவன் அருள் அல்லால்
நாம நீர் வையகத்துப்-பல்லார் அருளும் பழுது ——அவனுடைய அருள் ஒழிய அல்லாதார் எல்லாருடைய அருளும் பழுது
-அதிகாரிகள் ஆகையால் அவர்களை முற்படச் சொன்ன அத்தனை -பழுதாம் இடத்தில் அவர்களோடு அல்லாதாரோடு வாசி இல்லை
-அவனுக்கு வசராய்க் கொண்டு பலம் தரிலோ என்னில் இரண்டும் வியர்த்தம் –
முதலாய நல்லான் -பெற்ற தாய் ஆகையால் பரிவன்-தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-முளை பால் இருக்க விஷ பானம் பண்ணுவாரோ
நாமம் -நாம மாத்ரரான பல்லார் என்னுதல் –பிரசித்தமான நீர் வையகம் என்னுதல் -பல்லார் -கீழ்ச் சொன்ன ப்ரஹ்ம ருத்ராதிகள் அகப்பட
-தனித்தனியவும் திரளவும் பழுது -வியர்த்தம் –

—————————————————

இவர் இவர் என்று இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயர் என்று பிரமியாதே ஸ்ருஷ்டியாதி கார்யங்களை
அதுக்கு அடைத்த வடிவு எடுத்து நடத்திக் கொண்டு போருகிற-ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதிகள் ஆகிற மூவருமே
ஜகத்துக்கு ப்ரதானர் ஆவர் -அம் மூவர் தம்மில் சமர் என்றும் -மூவரும் கூட ஓன்று என்றும்
-மூவருக்கும் அவ்வருகே ஒருவன் பிரதானன்-என்றும் பிரமியாதே -அந்த மூவரிலும் வைத்துக் கொண்டு பிரதானனாவான்
ப்ரஹ்மாதிகளை இடுக்கி ஸ்ருஷ்டியாதிகளை நிர்வகித்துப் போருமவனாய்-சஞ்சரியா நின்றுள்ள கடல் போலே இருக்கிற
வடிவையும் யுடையவன் ஆனவன் -ஜகத் காரண பூதனுமாய் சர்வ விஷயமான வாத்சல்யத்தையும் யுடையனானவனுடைய
கிருபை ஒழிய -பிரசித்த மான நீரையுடைத்தான ஜகத்தில் உள்ள பலருடைய பிரசாதமும் வியர்த்தம்
-இவனை ஒழிந்த மற்ற இவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர் களோடு வாசியற சர்வமும் வியர்த்தம்
அன்றிக்கே -நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது என்னவுமாம் -தான் பலியாத அளவன்றிக்கே
-பகவத் பிரசாதத்தையும் விலக்குவதாகையாலே-பழுது -என்கிறார்-

—————————————————————————————–

நல்லான் அருள் பெற்ற -எனக்கு சோகம் உண்டாயிற்று -என்கிறார் –
பண்டு உபாயாந்தரங்களிலும் தேவதாந்தரங்களிலும் ப்ரவணனாய் இழந்தேன் என்று சொல்லுகிறார் –

இதர தேவதைகளைப் பற்றி இவ்விஷயத்தை இழந்த நாட்டார் இழவைப் பரதவ நிஷ்கர்ஷ முகத்தாலே பரிஹரித்தவர்
-அநாதி காலம் இதர தேவதைகளையும் -இதர சாதனங்களையும் பற்றி இவ்விஷயத்தை அகன்று -திரிந்த தம் இழவை நினைத்து சோகிக்கிறார்

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி———16–

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் –போன காலம் அநாதி –வரும் காலம் அநந்தம் -இத்தோடு ஒத்த காலம் இறே போயிற்று என்று அழுதேன்
-இழவுக்கு அழுதார் ஆகில் அச்சம் ஆவது என் -வருமத்தை குறித்து அன்றோ அஞ்சிற்று என்னில் -அதிகாரி நான் ஆகில்
போன காலம் போலே ஆகிறதோ வருகிற காலமும் என்கிறார் –
யஸ்ய ராமம் ந பஸ்யேத்து யம் ச ராமோ ந பஸ்யதி –நிந்திதஸ்ச வ ஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே-என்று
சொல்லுகிறது பெருமாளுடைய ஒரு நாளைக்கு இழவுக்கு இ றே
கடலோதம் காலலைப்பக் -திருவடிகளை -கடலோதமானது துடை குத்துமா போலே அலைப்ப
கண் வளரும் செங்கண்-அடலோத வண்ணரடி——அரவணை மேல் கண்டு தொழுதேன்–தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
பழுதே -பழுதும் பழுது அல்லாததும் கூடப் பெற்றேனோ / பல பகல் -இழந்த அநாதி காலம் பலவாய் -அதுக்கு அநந்தரம் அனந்த காலமான படி
போயின -போன நீர்களைக் கோலவோ–வரும் காலமும் பழைய காலமும் ஓன்று -பழைய நானே இன்னம்
அப்படியாகில் செய்வது என் –என்கிறார் -காலேஷ் வபி ச –
அரவணை மேல் கண்டு -பரியங்க வித்யையில் படியே பூர்ணமாகக் கண்டேன் / கண்டு தொழுதேன் -கண்டால் செய்யும் தொழில் /
கால் அலைப்ப -சிறு திவலை துடை குத்த / செங்கண் –வாத்சல்யம் தோற்றுகை / அடலோதம் -நெருங்கின ஓதம் –

———————————————

ஸுகுமார்ய அனுரூபமாக கடலின் சிறு திவலைகள் ஆனவை துடை குத்துவாரைப் போலே அனுகூலமாகத் திருவடிகளை ஸ்பர்சிக்க –
பாத்தாலே பள்ளி கொண்டு அருளுமவனாய் -வாத்சல்யத்தாலும் ஐஸ்வர்யத்தாலும் குதறிச் சிவந்த திருக் கண்களை யுடையனுமாய் –
-அனுபவிக்கப் புக்கவர்களை அபி பவித்து எழ வீசுகிற ஸுந்தர்ய தரங்கங்களோடு கூடின வடிவை யுடையவனுமானுடைய திருவடிகளை –
-வெளுத்த நிறத்தை யுடையனான திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே -ஞான சாஷாத்கார முகேன கண்டு அனுபவித்து –
-தத் அனந்தர பாவியான தொழுகையிலும் அந்வயிக்கப் பெற்றேன் –இப்படி அனுபவத்தோடு அடிக்க கழஞ்சு பெற்றுச் செல்லுகைக்கு-
உறுப்பான கீழ்க் கழிந்த காலம் எல்லாம் ஓன்று ஒழியாத படி வ்யர்த்தமே போய் விட்டதே -என்று கண்ண நீர் வெள்ளமிட இருந்து சோகித்தேன் –
கீழ் இழவுக்கு அடியான நம்முடைய கர்மம் இப்போதும் குறி அழியாதே கிடக்கையாலே
-மேலுள்ள காலத்திலும் -இவ்வனுபவத்துக்கு குறைத்தல் வரில் செய்வது என் -என்று பயப்பட்டு அழுதேன் –

———————————————————————————————

சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அனுபவிக்கப் போமோ -பரமபதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன
-இங்கே வெள்ளம் இட்ட அன்று தான் பெற்றேனோ -என்கிறார் –
பழுது என் என்னில் -இன்று கதை கேட்க இருந்தேன் என்பார் இ றே

திருப் பாற் கடலிலே சென்று கிட்ட வேண்டும் படி தூரமாய் நான் இழந்தேனோ-அவன் தானே எல்லார் தலையிலும்
திருவடிகளை வைத்து தூளிதானம் பண்ணா நிற்கச் செய்தே கிடீர்-நான் இழந்தேன் -என்கிறார் –

அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா
லீர்ந்தான் ஈராணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று ——–17-

அடியும் படிகடப்பத் -கோலமாம் என் சென்னிக்கு -என்னும் திருவடிகளைக் கொண்டு காடுமோடையும் அளப்ப
தோள் திசை மேல் செல்ல–திருத் தோள்கள் திக்குகளில் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் –திரு அபிஷேகம் அண்ட பித்தி அளவும் நிமிர்ந்தது
வடியுகிரா-லீர்ந்தான் ஈராணியன தாகம்–கூரிய உகி ராலே ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்தான்
இருஞ்சிறைப் புள்-ளூர்ந்தான் உலகளந்த நான்று ——-பெரிய திருவடி முதுகில் இருக்கப் பொறாத மிருதுவான
திருவடிகளைக் கொண்டு உலகு அளந்த அன்று -அடியும் படி கடப்ப-தோள் திசை மேல் செல்ல -முடியும் விசும்பு அளந்தது -என்கிறார்
-நான் கேட்டார் வாய் கேட்டுப் போம் அத்தனை –
அடியும் படி கடப்ப-இத்யாதி -சென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப்படுத்திக் கொண்டது
-தோள் திக்குகளை எல்லை கண்டது –முடியும் அபரிச்சேத்யமான ஆகாசத்தை அளவு படுத்திற்று
-நின்றார் நின்ற படியே வெற்றி கொள்ளுமா போலே
வடிவு -இத்யாதி ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி -ஓர் இடத்திலே சென்று முகம் காட்டும் -அளவன்று இறே
ஜகத்துக்கு எல்லாம் ஏக காலத்திலே உதவின இது –

———————————

இந்திரன் கார்யம் செய்க்கைக்காக திரு வுலகு அளந்து அருளின காலத்திலே -கோலமாம் என் சென்னிக்கு -என்கிறபடியே
என் தலைக்கு அலங்காரமாக நான் ஆசைப்பட்டு இருக்கும் திருவடிகள் -காடும் ஓடுமான பூமியை அளந்து கொள்ள
-பிராட்டியை பரிஷ்வ்ங்கிக் கடவ திருத் தோள்கள் ஆனவை இடமடையும் படி திக்குகளின் மேலே வளர்ந்து செல்ல
-திரு அபிஷேகமும் அபரிச்சேதயமான ஆகாசத்தை முசிவற நிமிர்ந்து அளவு படுத்திக் கொண்டது -என்று
தத்வ வித்துக்களான ரிஷிகள் சொல்லா நிற்பர்கள் –
தானே வந்து தலையிலே இருந்த அன்று இழந்து -இன்று -கேட்டார் வாய் கேட்பதே நான் -என்று வெறுக்கிறார்

———————————————————————————————

திரு உலகு அளந்தித்திலேயோ இழந்தது -அத்தோடு ஓக்க வரையாதே தீண்டிப் பரிமாறின கிருஷ்ணாவதாரத்தில் இழந்திலேனோ-என்கிறார் –

கடலில் கிடையிலும் அங்கு நின்றும் வந்து ஞாலத்தூடே நடந்த இடத்திலும் இழந்த அளவோ –
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும் படி இடைக்குலத்திலே வந்து பிறந்த இடத்திலும் இழந்தேன் இறே -என்று சோகிக்கிறார் –

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் ———18-

நான்ற முலைத்தலை–தொங்குகிற ஸ்தாத்தில் இருக்கிற
தோன்ற வுண்டான்-திருடி எல்லாரும் அறியும் படியாக அமுது செய்தவனும் –
வென்றி சூழ் களிற்றை-வெற்றியையும் சூழ்ச்சியையும் யுடைய குவலயா பீடத்தை –

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு -இவன் தன்னுடைய வாயை முலையில் வைக்க ஸ்வரூபா பத்தியைப் பெற்றாள் அவள்
–ஆரேனுமாக இவனை ஸ்பர்சித்தார்க்கு ஸ்வரூபாபத்தி தப்பாது -எல்லாருக்கும் வந்தேறி போம் -ஸ்வேன ரூபேண அபி நிஷ் பத்யதே–என்கிறபடியே –
உறி வெண்ணெய்-தோன்ற வுண்டான் -உறியில் சேமித்து வைத்த வெண்ணையைக் கண்டு எட்டி யுண்டு -களவு தோற்றும் படி உண்டான் –
வென்றி சூழ் களிற்றை –வென்றி மிக்க களிற்றை-வெற்றியை யுடைத்தாய் இவனைச் சூழ்க்க நினைத்த களிற்றை -என்றுமாம் –
ஊன்றிப்-ஆனைப் பூசல் என்று இராதே கிட்டி -மருப்பொசித்த பாகன் -என்னும் படியே
பொருதுடைவு கண்டானும் -பசலைக் கலம் போலே உடையும் படி கண்டவன் -இடைவு கண்டான் -என்றுமாம் –
புள்ளின் வாய் கீண்டானும்-மருதிடை போய் மண்ணளந்த மால் —திரு உலகு அளந்து அருளின நீர்மை பின்னாட்டுகிறது-
-கிருஷ்ணாவதாரத்துக்கும் திரு உலகு அளந்து அருளின இடத்துக்கும் அழகும் முஃத்யமும் ஆஸ்ரித பக்ஷபாதமும்
-உள்ளிடடவை இரண்டு இடத்துக்கும் ஒத்து இருக்கும் –
நான்ற -இத்யாதி -தன் க்ருத்ரிமான பால் போன வாறே அந்த முலை பையான படி /
தோன்ற யுண்டான் -சிசுபாலாதிகளும் ஏசும் படி / வென்றி இத்யாதி -வெற்றியையும் சூழ்ச்சியையும் யுடைய
/ஊன்றி -தரித்து நின்று /உடைவு -கருவிப் பை போலே ஆக்கின படி / மண்ணளந்த மால் -பின்னாட்டின படி –

———————————————–

பேய் வடிவை மறைத்து தாய் வடிவு கொண்டு வந்த பூதனையுடைய பாலின் கனத்தாலே சரிந்து நாலுகிற
முலையில் யுண்டான நஞ்சை -அவள் பிணமாய் விழும்படி அமுது செய்து -உறிகளிலே சேமித்து வைத்த
வெண்ணெயை சிசுபாலாதிகள் கோஷ்ட்டியிலும் பிரசித்தமாம் படி அமுது செய்து அருளினவனாய்-
-வெற்றியை யுடைத்தாய் -எதிர்த்தவர்களை தப்பாமல் சூழ்த்துக் கொள்ள வல்ல குவலயா பீடத்தை
கஜ யுத்தத்துக்கு தேசிகரான வர்களை போலே உறைக்க நின்று பொருது தலை எடுக்க மாட்டாமல்
உரு அழிந்து உளுக்காம் படி பண்ணினவனும் -தன்னை விழுங்க வந்த பகாஸூரன் வாயை
கிழித்துப் பொகட்டவனும்-யாமளார்ஜுனங்களின் நடுவே அவை வேர் பரிந்து விழுந்தபடி தவழ்ந்து
போய் பூமி முதலான லோகங்களை அளந்து கொண்ட சர்வாதிகன் கிடீர் –

———————————————————————————————–

அவதாரம் ஒழியப் பெற்றாரும் உண்டு கிடீர் -என்கிறார் –
நான் தீண்டப் பெறாதே மயங்கா நின்றேன் -நீ தீண்டப் பெற்று பரவசமாகா நின்றாய் -பூமியைப் போலே ஒரு கால் இன்றியே
நித்ய சம்ச்லேஷம் பெறுவதே கடல் -என்று கொண்டாடுகிறார் –

காதாசித்கமான அனுபவம் கிடையாமையால் -நான் கண்ண நீர் விழ விடா நிற்க -அவனை மடியிலே சாய விட்டு
முழு நோக்குச் செய்து நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற நீ என்ன பாக்யம் பண்ணினாய் -என்கிறார் –

மாலும் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று ———-19-

மாலும்-மது பான மத்தரைப் போலே பிச்சேறா நின்ற
கருங்கடலே-பெற்ற பேறு உன்னுடம்பே கோள் சொல்லுகிறது இல்லையோ -இல்லையாகில் உடம்பு வெளுத்து இராதோ–
என்நோற்றாய்-ஆசையை விட்டு நானும் நோற்கும் படி சொல்லாய் –
வையகமுண்-டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று ——–சிறு வயிற்றிலே பூமி எல்லாவற்றையும் அடக்கி -பவனான ஆலிலையில்
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருமேனியைத் தீண்டப் பெற்று
மாலும் -மதுபான மத்தரைப் போலே பிச்சேறுகிற கடலே –
கருங்கடல் -உடம்பு வெளுக்க வேண்டாவே
ஆழியான் -ஏகார்ணவத்திலும் -திருப் பாற் கடலிலும் துயின்ற -என்னுதல் -/ ஆஸிலே கை வைத்து
-பிரளயத்தை இரு துண்டமாக விடுவேன் என்று இருக்கும் -என்றுமாம் –
பிராட்டிமாரோடு ஊடின போதும் உனக்கு பிரிவு இல்லை –
கடலும் எம்பெருமானும் -ஸ்ரீ பாரத ஆழ்வானும் பெருமாளையும் போலே நிறம்
ப்ரஹ்ம பிராப்தி பலமாய் கைங்கர்யம் ஆனுஷங்கிகம் -ஆனால் போலே திருமேனி தீண்டுகை பிராப்தம் –
-கைங்கர்யம் அவகாதத்தில் ஸ் வேதம் போலே உபாயத்திலும் ஸ்வரூப ஞானம் பிறந்தால் வியவசாயம் ஆனுஷங்கிகம் –

———————————————

ஜகத்தை அடைய பிரளயத்தில் அழியாத படி திரு வயிற்றிலே எடுத்து வைத்து ஓர் ஆலம் தளிரிலே -கண் வளர்ந்து அருளினவனாய்
-பிரளயம் வரில் இரு துண்டமாக விடுகைக்கு பரிகரமான திருவாழியை யுடையனுமாய் -அழகிய கறுத்த நிறத்தை யுடைய திரு மேனியையும்
-அதுக்குப் பகைத் தொடையாகும் படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த திருக் கண்களையும் யுடையனாய்-
-ஆஸ்ரித வியாமுக்தனானவன் கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் -சர்வ காலத்திலும் அவன் திருமேனியை நீ அனுபவிக்கப் பெற்று-
-அந்த ஸ்பர்ச ஸூகத்தாலே மயங்கா நிற்பதாய் -அவன் வடிவின் நிழலீட்டாலே கறுத்த நிறத்தை யுடைய கடலே-
-இப்பேறு பெறுகைக்கு என்ன சாதன அனுஷ்டானம் பண்ணினாய் -அத்தைச் சொல்ல மாட்டாயோ நானும் அனுஷ்ட்டித்துப் பார்க்கைக்கு -என்று கருத்து –
மால் -என்று பெருமையைச் சொல்லுகிறது என்றுமாம் –

——————————————————————————————-

பெற்றார் தளை கழல -என்கிற -இத்தால் கிருஷ்ணாவதாரத்தை சொல்லவுமாம்
-வாமனாவதாரம் தன்னையே சொல்லுகிறது ஆகவுமாம் –
படுக்கையாய் கிடந்த கடலுக்குத் தன்னைக் கொடுக்கச் சொல்ல வேணுமோ -தேவதாந்தரங்களுக்கு தன்னைக் கொடா நிற்க என்கிறார்

கடல் அவனைப் பெற்று களித்த அளவேயோ-அப்படுக்கையை விட்டு -இங்கே வந்து அவதரித்த இடத்திலும்
சில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று——-20–

பெற்றார் தளை கழலப் -பேர்ந்து -பிறந்து -என்றுமாம் -ஆரேனுமாக ஸ்பர்சிக்கப் பெற்றார்க்கு –தளை கழல-
பேர்ந்தோர் குறளுருவாய்ச்-செற்றார் படி கடந்த –செங்கண் மால்— இந்திரனுக்கு அன்று ஆகாத சத்ரு தனக்கு ஆகாதே
–த்விஷத் அன்னம் நபோக்த்வயம்–யஸ்த்வாம் த்வேஷ்ட்டிச மாம் த்வேஷ்ட்டி –மஹா பலி என்னது என்று அபிமானித்த பூமியை அளந்த சர்வேஸ்வரன் –
  நற்றா-மரை மலர்ச் சேவடியை –செவ்வி மாறாதே இருந்துள்ள திருவடிகளை
வானவர் கை கூப்பி-நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று——-திரள நின்று பூவைக் கொண்டு ஏத்துவார் -என்றுமாம்
-தொடுத்த மாலை கொண்டு ஏத்துவார் என்றுமாம் –

பெற்றார் -நிதி எடுக்கப் பெற்றார் என்னுமா போலே -என் பிள்ளை என்று அபிமானித்தால் தளை கழலா நின்றால்
-அடியோம் என்றால் தளை கழலச் சொல்ல வேணுமோ –
பேர்ந்து -ஸ்ரீ வைகுண்டத்தில் நின்று என்னவுமாம் -திருப் பாற் கடலில் நின்றும் வந்தான் ஆகவுமாம் –
ஓர் குறள்-நாட்டில் வாமனர்கள் இவன் வளர்ந்து அருளின இடத்தோடு ஒக்கும் –
செற்றார் -தன்னைச் செற்றார் -மம பிராணா ஹி —
படி கடந்த -இக்காடுமோடையும் அளந்த -பிறரது பெற்றால் போலே இருப்பதே /
செங்கண் -ஆஸ்ரிதர் அபேக்ஷிதம் முடிக்க பெறுகையால் -/மால் -செய்தது போராது என்று இருக்கை
நல் தாமரை -செவ்விக்கும் அழகுக்கும் குளிர்த்திக்கும் சத்ருசமான தாமரை தேடுகிறார் /
வானவர் -எட்டாத படி பரண் இட்டுக் கொண்டு இருக்கை
கை கூப்பி -அவசா பிரதிபே திரே / நிரை மலர் -ஏற்கவே தொடை ஒத்த துளபம் கொண்டு இருந்தார்களோ
ஏத்துவரால் -இப்படி பிறந்தார் பெறாது ஒழிவதே / நின்று-கிண்ணகத்தே எதிர்த்து நின்று –

—————————————-

தன்னைப் பிள்ளையாகப் பெற்ற ஸ்ரீ வாஸூ தேவர் தேவகியாருடைய காலிலிட்ட விலங்கு நீங்கும் படியாகப் பரம பதத்தின்
நின்றும் போந்து -இங்கே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அவ்வளவு இல்லாமல் அழகுக்கு அத்விதீயமாய் –
-கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படியான வாமன வேஷத்தை யுடையனாய் -ஆஸ்ரிதனான இந்திரனை
நெருக்குகையாலே தனக்கு சத்ருவான மஹா பலி போல்வார் என்னது என்று அபிமானித்திருக்கிற பூமியை
அநாயாசேன அளந்து கொண்டவனாய் -பாத்தாலே வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்
-ஆஸ்ரித வியாமுக்தன் ஆனவனுடைய அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளை-
-இந்நீர்மை ஏறிப் பாயாத ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கிற இந்த்ராதிகள் இச்செயலுக்குத் தோற்று அஞ்சலி பந்தத்தைப் பண்ணி
-தொடை வாய்ந்து இருந்துள்ள செவ்வித் பூக்களை பரிமாறிக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பெறுவார்களாம்
-பாவியேன் நாமே இழப்போம் -என்று வெறுக்கிறார் –

———————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

முதல் திருவந்தாதி- / பாசுரங்கள் -2-10 – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

கார்யாத் காரண அநு மானம் வேணுமோ -அவனுடைய அதி மானுஷா சேஷ்டிதங்கள் கிடைக்கச் செய்தே

இப்படி அநு மானப் பிரமாணம் கொண்டு வருத்தத்துடன் அவனுடைய பரத்வம் அறுதியிட்டு வேணுமோ
–அவன் விபூதி விஷயமாக பண்ணி அருளின உமிழ்ந்த பர்யந்த திவ்ய சேஷ்டிதங்கள்
ஓர் ஒன்றே அவனுடைய பரத்வத்தை அறுதியிட்டுத் தராதோ -என்கிறார் —

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன்  நான் -அன்று  அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-

என்று-இன்னமும் கடல் கடைந்த நுரையும் திரையும் மாறிற்றோ / கடைந்தது-கடையப் புக்கு கை வாங்கினவர்களை
ஈஸ்வரனாகக் கொள்ள வேணுமோ
எவ்வுலகம்-லோகாந்தரத்தையோ -அடிச்சுவடு தெரியாதோ -/
எவ்வுலகம் நீர் ஏற்றது–இன்று மஹா பலியால் நோவு படா நின்றதோ -அவன் அடிச்ச சுவடு மாறிற்றோ
-வாமனன் மண் இது என்று தோற்றுகிறது இல்லையோ –இவ்வுலகம் அன்றோ நீர் ஏற்றது -என்கிறது –
/ ஒன்றும் அதனை யுணரேன் -அன்று எங்கே போனேனோ
-இச் சேஷ்டிதங்கள் கிடக்க கார்யாத் காரண அநு மானம் பண்ணித்த திரியவோ நான் /
அன்றிக்கே -ஒன்றும் அதனை யுணரேன்-என்றது -அதி மானுஷ சேஷ்டிதங்களைக் கண்டு எத்திறம் -என்று மோஹிக்கிறார் ஆகவுமாம் –
/ யுணரேன்  நான் -அன்றைக்கே எனக்கு என்னவோ ஒரு விஷயம் தேடி அநர்த்தப் பட்டேன் /
ஒன்றையோ -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டது இல்லையோ -யுணரேன் -என்று இழந்த நாளைக்கு சோகிக்கிறார்-
என்று கடல் கடைந்தது எவ்வுலகம்-என்றது எல்லாச் செயல்களுக்கும் உப லக்ஷணம்
-என்று -என்று ஞான வைஸத்யம் சொல்லுகிறது -ஞானமாவது -யத்தேச கால சம்பந்தி தயா யாதோர்த்தர்தம் தோற்றிற்று
-தத் தேசகால சம்பந்தி தயா அவ்வர்த்தத்தை காட்டுகை இ றே
அன்று -இத்யாதி -நீ அணை அடைத்து திரு வில்லாலே அழித்து உண்டாக்கின கடலிலே -/
கண் படுத்த -கண் வளர்ந்த ஆழி -/ உடைத்து -சம்ஹரித்து -என்றுமாம் –
இது -இத்யாதி -இல்லாத அன்று ஸ்ருஷ்டித்து -பிரளயம் கொள்ள அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து
-பிரளயம் வருகிறது என்று ஏற்கவே திரு வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறப்பட விட்ட பார் –
இது -என்றது -தாம் இருந்த பூமி யாகையாலே / அது -என்றது அத்தோடு சம்பந்தித்த கடலாகையாலும்
அஸந்நிஹிதம் ஆகையாலும்–ஆழி அது -என்று அந்வயம்–
செய்யுடையவன் அன்றோ கிருஷி பண்ணுவான் –அல்லாதார்க்கும் ஈஸ்வரத்வ பிரசங்கம் யுண்டாகில்
இதிலே அவர்களுக்கும் ஒரு தொழில் யுண்டாகாதோ

————————————————

தன்னை அர்த்தித்த தேவர்கள் அபேக்ஷிதம் செயகைக்காக-அண்ணல் செய்து அலைகடல் கடைந்து -என்னும் படி
தன் ஸர்வேச்வரத்வம் தோற்ற கடல் கடைந்து அருளிற்று எத்தனை நாள் உண்டு என்றும்
-ஈஸ்வர அபிமானிகளான ருத்ராதிகளும் -திருவடி விளக்குவார் –விளக்கினை தீர்த்தத்தை சிரஸா வஹித்து பரிசுத்தரராம் படி
இந்திரன் பிரார்த்தனை சார்த்தமாக்கும் படி அர்த்தியாய்க் கொண்டு மஹா பாலி பக்கல் நீர் ஏற்று அளந்து கொண்டது எந்த லோகம்
–என்றும் அவ்வவோ செயல்களில் குமிழ் நீர் உண்ணக் கடவதான அந்த சேஷ்டிதத்தை ஏக தேசமும் யான் அனுசந்திக்க மாட்டுக்கிறிலேன் –
ராவணன் திருவினைப் பிரித்த அன்று -சீதா முக கமல சமுல்லாச ஹே தோஸஸ சே தோ-என்கிறபடியே
தத் உல்லாச அர்த்தமாக தத் சஜாதீயமான லவண சமுத்திரத்தை மலைகளால் அடைத்து -அங்கு உள்ளவர்கள் இங்கு வந்து நலியாத படி
தனுஷ்கோடியாலே உடைத்து -/ எழுப்பிக் கார்யம் கொள்ளலாம் படி கண் வளர்ந்த கடலாகும் அந்தக் கடல்
-ரஷ்ய வர்க்க சம் ரக்ஷணத்தில் நித்ய தீஷிதனாய் இருக்கிற நீ -அழிந்த அன்று ஸ்ருஷ்டித்து
-அவாந்தர பிரளயத்தில் இடந்து எடுத்து -மேல் பிரளயத்தில் அழியாத படி திரு வயிற்றிலே வைத்து வெளி நாடு காணப் புறப்பட விட்டு
-இப்படி உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டுக் கிடக்கிற பூமியாகும் இந்த பூமி –
கண்டவாற்றால் தனதே உலகு என்றான் -என்கிறபடியே இவ்வோ திவ்ய சேஷ்டிதங்கள் தானே அவனே சர்வாதிகன்எ
ன்னும் இடத்தை காட்டுகிறது இல்லையோ -என்கை –
என்று -என்கையாலே திரையும் நுரையும் இப்போதும் மாறிற்று இல்லை -என்கை –
எவ்வுலகம் என்கையாலே அளந்த அடிச்சுவடு இப்போதும் அப்படியே எடுக்கலாய் இருக்கை –

—————————————————————————————

அப்பூமியை அடைய அளந்தான் என்று -இவனுக்கு ஈஸ்வரத்வம் சொல்ல -அளக்கைக்கு விஷயம் யுண்டாகில் அன்றோ -என்கிறார் —

எவ்வுலகம் நீர் ஏற்றது -என்று சொன்ன திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே திரு உள்ளம் சென்று
அத்தை அனுபவிக்கப் புக்க இடத்திலே நிலை கொள்ள மாட்டாமல் -அதிலே கிடந்தது -அலைகிறார்

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–

நீரளவும்–ஆவரண ஜலம் வரையில் / சூருருவின்
பேய் அளவு கண்ட -தெய்வப் பெண்ணின் வடிவை யுடைய பேயான பூதனை யுடைய உயிருக்கு எல்லையைக் கண்ட
/ நீயளவு கண்ட நெறி -நீ செய்து முடித்த செயல்களை –

பாரளவும் ஓரடி வைத்து –பூமி உள்ள அளவும் ஓர் அடி வைத்து -/
ஓரடியும் -வைத்த அடியை -சொல்லவுமாம் -மற்றை அடியை யாகவுமாம் –
பாருடுத்த-நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –பவ்வ நீரோடை ஆடையாகச் சுற்றி -என்கிறபடியே
-பூமியை ஆவரித்த ஜலத்தை கடந்து -என்னவுமாம் –(கண்ணார் கடல் உடுக்கை -சிறிய திருமடல் )
-மேலில் அண்டத்தைச் சூழ்ந்த ஜலத்து அளவும் சென்றது என்னவுமாம் –
சூருருவின்-பேயளவு கண்ட பெருமான் –சூரும் அங்கும் தெய்வப் பெண் -என்கிறபடியே –
-விலக்ஷணமான வடிவு என்கிறது -பேயைத் தெய்வப் பெண் என்னலாமோ என்னில் -பிசாசோ –தேவ யோநயா -என்று
பிசாசையும் தேவ யோனியிலே கூட்டுகையாலே யாம் –
பேயளவு கண்ட-பேயாகப் பரிச்சேதித்த –பேயாகப் பரிச்சேதிக்கை யாவது -முடிக்கை என்று பொருளாம் இ றே
பெருமான் -பூதனையை முடித்து ஒரு சேஷியை ஜகத்துக்குத் தந்தாய் -ஸ்தந்யம் தத் விஷ சம்மிஸ்ரம் ரஸ்யம் ஆஸீஜ் ஜகத் குரோ –
அறிகிலேன்-நீயளவு கண்ட நெறி —-நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை –
அன்றியே -மஹா பலியாலே அபஹ்ருதையான பூமியை அளந்து உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே
-என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு -பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி
என்னை விஷயீ கரித்த படி அறிகிலேன் என்னவுமாம் –
பாரளவும் -அளவிலே குசை தங்கின அருமை / உடுத்த நீர் அளவும் -ஆவரண ஜலம் / பேயளவு -எல்லை /
பெருமான் -அச் செயலாலே என்னை யுண்டாக்கினவன் –
நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை -உன்னை பரிச்சேதிப்பார் முடிந்ததே போம் இத்தனை
-தாயைப் பேயாக்கின படி -நீ அளவிட்டு வைத்த உபாயம் உணராது ஒழியப் பண்ணுகிறாயோ -உணரப் பண்ணுகிறாயோ

——————————————————–

அதி லோகமான அழகை யுடைய ஒரு திருவடியை -படிக்கு அளவாக நிமிர்த்த -என்கிறபடியே
பூமியுள்ள வளவே நிற்கும் படி குசை தாங்கி வைத்து
அத்தோடு துல்ய விகல்பம் பண்ணலாம் படியான மேலே எடுத்த மற்றொரு திருவடியும்
அண்ட கடாஹத்தைச் சூழ்ந்த ஆவரண ஜலத்து அளவும் செல்ல வளர்ந்ததது இ றே
தன் வடிவை மறைத்து தெய்வ நங்கையான யசோதை வடிவு கொண்டு வந்த பூதனையை-அவள் நினைவு அவளோடு போம் படி
அளவிட்டு முடித்த செயலாலே-ஜகத்துக்கு சேஷியான உன்னை நோக்கித் தந்தவனே –
நீ அளந்து கொண்ட வழியை நான் இன்ன படி என்று அறிய மாட்டுகி றிலேன் -இச்செயலை அனுசந்தித்தால்
அதிலே ஆழங்கால் படும் அது ஒழிய அளவிட்டு அனுபவிக்க மாட்டுகி றிலேன் -என்று கருத்து –
சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் -என்கிறபடியே திவ்ய ஆகாரையான பேய் என்றபடி
பேயளவு கண்ட-என்ற இத்தால் ஸ்வ யத்தனத்தாலே அவனை அறியப் புகில் பூதனை பட்டது படுவர் என்று கருத்து –
அறிகிலேன்-நீயளவு கண்ட நெறி-என்கிறது நீ என் திறத்தில் நினைக்கிற மார்க்கம் என்ன வென்று அறிகிறிலேன் -என்றுமாம் –

———————————————————————————————

நீர் அறிந்திலீர் ஆகில் -ஈஸ்வரன் அறியானோ -என்ன -எம்பெருமான் பிரசாதம் அடியாக பிறந்த அறிவுடைய நான் தடுமாறா நின்றேன் –
தபஸ் சமாதியாலே பெற்ற அறிவுடையவன் உபதேசிப்பதே -என்று ஷேபிக்கிறார்

அவன் அருள் அடியாக வந்த தெளிவால் குறைவற்ற நானும் உட்பட நீஞ்சிக் கரை ஏற மாட்டாமல் கிடந்தது அலையா நிற்க –
ஸ்வ யத்னத்தாலே வந்த ஞான சக்திகளை போரப் பொலிய நினைத்து —
ஒருவனை -ஒருவன் -அறிய ஒருப்படுவதே-என்ன மதி கேடனோ என்று ருத்ரனை ஷேபிக்கிறார்

நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் ———–4—

நெறி வாசல்-உபாயமும் -ப்ராப்யமும் / நால்வர்க்கு-அகஸ்தியர் -தக்ஷர் -புலஸ்தியர் -கஸ்யபர் -என்னும் நால்வருக்கும் /
ஐந்து-பொறி வாசல்–ஐந்து ஞான இந்த்ரியங்களுடைய துவாரங்களில் யுள்ள -/ போர்க்கதவம் -அடைக்க ஒண்ணாத கதவுகளை –

நெறி வாசல் தானேயாய் நின்றானை–நெறியான வாசல் -உபாயமான வாசல் என்னவுமாம் –
நெறி என்று உபாயமாய் –வாசல் என்று உபேயத்தைச் சொல்லிற்றாய் –
உபாயமும் உபேயமும் தானேயாய் நின்றவனை -என்றுமாம் -இப்போது இது சொல்கிறது -பிராப்தி அவனை ஒழிய
உண்டாகில் அன்றோ அறிவும் அவனை ஒழிய உணர்வது என்கைக்காக-
யைந்து பொறி வாசல்–ஒன்றை அடக்கில் ஓன்று திறக்கும் -என்கை -நீரை அடைக்கப் புக்கால் ஓர் இடம் அடைக்க
ஓர் இடம் கோழைப் படுமா போலே –சஞ்சலம் ஹி மன-
போர்க்கதவம் சாத்தி -அடைக்கப் புக்கால் –ஒண்ணாத படி பொரா நின்ற கதவம் -/ சாத்தி -என்றது அடைக்கப் போகாமையாலே –
அறிவானாம்-என்று ஷேபிக்கிறார்
ஆலமர நீழல் -தான் தபஸ்ஸூ பண்ணின ஆழ மாற நிழலிலே – தான் பகவத் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னே
சிஷ்ய பரிக்ரஹம் பண்ணுவாரைப் போலே —
சர்வஞ்ஞனான அஜாத சத்ருவுக்கு ப்ரஹ்ம ஞானம் இன்றியே இருக்கிற -பாலாகி -உபதேசத்தால் போலே –
அறம் -ஸமாச்ரயண பிரகாரம் / நால்வர்க்கு -அகஸ்திய புலஸ்யாதி களுக்கு –
அன்றுரைத்த ஆலமர் கண்டத் தரன் —–தாமஸ குணத்துக்குச் சேர்ந்தது செய்யுமது அல்லது –
-சத்வாத் சஞ்ஜாயதே ஞானம்–ஸ்ரீ கீதை -14-17–என்கிறபடியே கதற அவன் கடவானோ -என்கிறார்
நெறி வாசல் -ஸ்வரூப அனுரூபமான உபாயம் என்றுமாம் –
யாய் நின்றானை–சித்தம்
சாத்தி-வருந்திச் சாத்தலாம் அத்தனை -தாளிட ஒண்ணாது-முகத்திலே அறையும் -நல்ல விஷயம் காட்டா விடில் குதறு கொட்டும்
–பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே -பண்ணா விடில் உபாயம் உண்டோ –
அறிவானாம்-பட பட என சிஷிஷு கொள்ளும் அத்தனை அல்லது அறிவுக்கு அடைவுண்டோ –
சீராமப் பிள்ளைக்கு பட்டர் -இதுவே தாரமாக இருக்கிற சாதுவை நாழியாதே என்று அருளிச் செய்தார் –
நால்வர்-தஷாதிகள் /அன்றுரைத்த-ஆலமர் கண்டத் தரன் —எம்பெருமான் கொடுத்த வெளிச்சிறப்பு மாத்ரத்தையும்
-விஷ ஹரண சக்தியையும் கொண்டு இத் துறையிலே இழியப் போமோ –

——————————————————–

– வட வ்ருஷச்சாயையிலே பகவச் ஸமாச்ரயண ரூபமான தர்மத்தை -அகஸ்திய புலஸ்திய தக்ஷ மார்கண்டேயர்கள் ஆகிற நாலு சிஷ்யர்களுக்கு
பகவத் விஷயத்தில் உவ்வக் குழியிட இழிந்த அன்று பகவத் விஷயத்தை மறுபாடுருவும் படி தர்சித்துச் சொல்ல வல்ல பேரளவுடையார்
பண்ணக் கடவ உபதேசத்தைப் பண்ணி ஆச்சார்ய பதம் நிர்வஹித்தோம் என்று இருக்கும்
பெரிச அறிவாளனாய் -அமிருத மதன தசையில் பிறந்த ஹாலாஹலம் என்கிற விஷத்தை நாராயணன் ஆஜ்ஜையாலே
கழுத்திலே அடக்கிக் காள கண்டன் என்று விருது பிடித்துத் திரியும் பெரு மிடுக்கனாய்
-சம்ஹாரத்வ சக்தி யுக்தனாய் அபிமானித்து இருக்கிற ருத்ரன் –
ஸ்ரோத்ராதி ரூபேண ஐந்து வகைப் பட்டு இருப்பதாய் -விஷயங்கள் ஆகிற வரை நாற்றத்தை காட்டித் தன்னுடன்
சேர்ந்தாரை முடிக்கும் யந்த்ர கல்பமான இந்திரிய துவாரங்களில் –
அடைக்கப்புக்கவர்கள் முகத்தில் அறைந்து பொருகிற கதவை -வருத்தத்தோடு அடைத்து
-உபாயமும் தத் ஸாத்யமுமான உபேயமும் -அநந்ய ஸாத்யனான தானேயாய்க் கொண்டு நின்ற சர்வேஸ்வரனை
ஸ்வ யத்ன ஸித்தமான தன் ஞான சக்தியாதிகளைக் கொண்டு அறிவதாக இருக்கிறானாம் -என்ன அஞ்ஞனோ -என்று கர்ஹிக்கிறார் –
நெறி வாசல் என்று ஸ்வரூப அனுரூபமான உபாயம் -என்னவுமாம் –

—————————————————————————————————

நாட்டிலே ஈஸ்வரனாக நிச்சயித்து போருகிறவனை-அறிவானாம் -என்று நீர் சொல்லுகிற படி எங்கனே என்னில்
அவ்வீஸ்வரத்வம் போலே காணும் கோள் அறிவும் -என்கிறார் –
ஞானம் இல்லாமையால் இவன் ஐஸ்வர்யம் ஆறல் பீறல் -என்கிறார் —

நாடு அடங்க ருத்ரனே சர்வாதிகன் என்று அறுதியிட்டு -அவன் கால் கீழ்த் தலை மடுத்து -போற்றுவது புகழ்வதாய் யன்றோ போருகிறது-
நீர் அவனை ஷேபிக்கப் கடவரோ -என்ன -ருத்ரனுடைய அநீஸ்வரத்வமும்-எம்பெருமானுடைய ஈஸ்வரத்வமும்
தத் தத் நாம வாஹ நாதி ஸ்வரூபங்கள் கொண்டே அறுதியிடலாம் -என்கிறார் –

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி  யொன்று ——–5-

அரன் நாரணன் நாமம் -ஒருத்தனுக்கு நாமம் அரன் / ஒருத்தனுக்கு நாமம் நாராயணன் /
ஸ்ருஷ்டமான ஜகத்திலே தீம்பிலே கை வளர்ந்து தன்னை முடித்துக் கொள்ளப் புக்கால்
அத்தை சம்ஹரிக்கைக்காக அவன் கொண்ட வடிவுக்கு பிரகார பூதனான தான் அரனாகிறான் –
ஈஸ்வரன் கை யடைப்பாக கார்யம் செய்யும் இடத்திலும் அழியும் லீலா விபூதியில் இவனுக்கு அந்வயம் -மாநாவிக்கு நிர்வாஹகரானார் போலே
நாராயணன் -உபய விபூதியும் தனக்கு வாசஸ் ஸ்தானமாய் -அவற்றுக்கு ஆலம்பனமாய் இருக்கும் என்றிட்டு நாராயணன் -என்று திரு நாமம் –
ஆன் விடை புள்ளூர்தி-கைக் கொள் ஆண்டிகளை போலே ஒருத்தனுக்கு ஒரு எருது வாஹனம்–
ஒருத்தனுக்கு ஒரு வேதாத்மாவாய் இருந்துள்ள பெரிய திருவடி
உரை நூல் மறை-ஒருத்தனுக்கு உதகர்ஷம் சொல்லுவது ஆகமம் -ஒருத்தனுக்கு உத்கர்ஷம் சொல்லுவது அபவ்ருஷேயமான வேதம்
யுறையும் கோயில் வரை நீர்-தன் காடின்யத்துக்குச் சேர்ந்த மலை ஒருவனுக்கு வாசஸ் ஸ்தானம்
-தன்னுடைய தண்ணளி க்குச் சேர்ந்த நீர் ஒருவனுக்கு –
கருமம் அழிப்பு அளிப்புக்-ஒருவனுக்கு கர்மம் அழிக்கை -ஒருவனுக்கு கர்மம் ரக்ஷை -அழிக்கை என்றால் அது ஒன்றிலும் நிற்கும்
-அளிப்பு என்றால் அழிக்கும் அதிலும் செல்லும் –
கையது வேல் நேமி-ஒருவனுக்கு ஆயுதம் பிணம் தின்னிகளைப் போலே வேல் -ஒருவனுக்கு ஆயுதம் –
தமச பரமோ தாதா சங்க சக்ர கதாதரா -என்கிற ஆயுதம் –
நிலத்துக்குறி பகவன் பட்டரை பரம பதத்திலும் ஈஸ்வரன் சதுர் புஜனாய் இருக்கும் என்னும் இடத்துக்கு பிரமாணம் உண்டோ என்று கேட்க
-தமச பரமோ தாதா சங்க சக்ர கதாதரா-என்று பேசா நின்றது இ றே என்று அருளிச் செய்ய
-அவன் கோபிக்க -பிராமண கதி இருந்தபடி இது -ப்ரசன்னராம் அத்தனை இ றே -என்று அருளிச் செய்தார் –
உருவம் எரி கார் -ஒருவனுக்கு வடிவு எரி -சம்சார தப்தனாய் சென்றவனுக்கு நெருப்பிலே விழுமா போலே –
ஒருவனுக்கு வடிவு கார் -தப்தனாய் சென்றவனுக்கு ஒரு நீர்ச் சாவியிலே வர்ஷித்தால் போலே ஸ்ரமஹரமான வடிவு
மேனி  யொன்று —-இப்படி விசத்ருசமாய் இருக்கையாலே ஓன்று சரீரம் ஒருத்தன் சரீரி
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா என்றால் -சர்வஞ்சாஸ்ய சரீரம் என்று தோற்றுமா போலே
-ஒருத்தன் சரீரம் என்றால் ஒருத்தன் சரீரி என்று தோற்றும் இ றே

அரன் -சிலரை நசிப்பிக்குமவன் ஒருவன் -/ நாரணன் –ததீயத்தை ஒழிய உளன் ஆகாதவன் ஒருவன் -நீ என்னை அன்று இலை –
ஆன் விடை -அநஸ் வர்ய ஸூசகம் /புள்ளூர்தி-கெருட வாஹனம் நிற்க -இவன் ஐஸ்வர்யா ஸூசகம்
நூல்-ஆப்தி கேட்க வேண்டில் விப்ர லம்பாதி தோஷ தூஷிதம்/ மறை-அபவ்ருஷேய நித்ய நிர் தோஷ ஸ்ருதி
வரை-காடின்யத்துக்கு சத்ருசமான இடம் /நீர்-தண்ணளிக்குத் தக்க இடம்
கருமம் அழிப்பு -நசிப்பிக்கை /அளிப்புக் -ரஷிக்கை
வேல் -காண வயிறு அழலும் /நேமி-விட்டாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்
எரி-நெருப்பைத் தூவும் -/கார் -காண ஜீவிப்பிக்கும்
மேனி  யொன்று-ஓன்று சரீரம் என்றால் மற்று யவன் சரீரி என்று தன்னடையிலே வரும் இ றே -அந்தர்யாமி ப்ராஹ்மணத்தை நினைக்கிறார் –

அரன் -தன்னை ஒழிய ஒன்றை அழியாதே நிற்கில் ஈஸ்வரத்வம் இல்லை
நாரணன் -தன்னை ஒழிந்த வற்றில் ஓன்று வழியில் ஈஸ்வரத்வம் இல்லை
ஆன் -அநீஸ்வரத்வ ஸூ சகம் / புள் -ஈஸ்வரத்வ ஸூ சகம்
நூல் -சொன்னவனுக்கு ஆப்தி இல்லையாகில் அப்ரமாணம் / மறை -ஆப்த வாக்யமான பிரமாணம்
அழிப்பு அளிப்பு– இவற்றை ஸூ சிப்பிக்கிறது அரன் நாரணன் வாசக சப்தத்துக்கு வசன கிரியை போலே
வேல் -கலக்க வரிலும் -பயமாம் / நேமி -பிரிந்தாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்
உருவம் எரி மேனி ஓன்று கார் மேனி ஓன்று -இங்கனம் சேர்ந்து இருக்க வேண்டாவோ -ஷேபம்-அறிவுடையார்க்குச் சொல்ல வேணுமோ சேர –

———————————————–

பிணம் சுடும் தடி போலே கண்டதடைய அழிக்கையே தொழிலாக உடையவன் என்னும் இடத்தை தெரிவிக்கிற ஹரன் -என்று ஒருவனுக்குப் பெயர் –
ஸமஸ்த வஸ்துக்களையும் உள்ளும்புறமும் ஓக்க வியாபித்து சத்தையையே நோக்கும் என்று அறிவிக்கிற நாராயணன் என்று ஒருவனுக்கு பெயர் –
அறிவு கேட்டுக்கு நிதர்சநமாகச் சொல்லப்படும் ருஷபமே ஒருவனுக்கு வாஹனம் -த்ரயீ மய-என்று சொல்லப்படுகிற பெரிய திருவடி ஒருவனுக்கு வாஹனம் –
ஒருவனைச் சொல்லும் பிரமாணம் வேத விருத்தார்த்தைச் சொல்லும் பவ்ருஷேயமான ஆகமம்
-ஒருவனைச் சொல்லும் பிரமாணம் நித்ய நிர்தோஷமாய் அபவ்ருஷேயமாய்-யதாபூதவாதியாய் -ஸ்வதபிரமணமான
வேதம் –
ஒருவன் நித்ய வாசம் பண்ணும் ஸ்தானம் கடின ப்ரக்ருதியான -தன் பிரக்ருதிக்கு சேர்ந்த கைலாசம்
ஒருவன் உகந்து வசிக்கும் ஸ்தானம் தண்ணளி பண்ணி ரஷிக்கும் தன் படிக்குச் சேர்ந்த ஷீரார்ணவம்
ஒருவன் செய்யும் தொழில் கண்டது எல்லாவற்றையும் கண்ணற்று அழிக்கை –
ஒருவன் செய்யும் தொழில் ஸமஸ்த வஸ்துக்களையும் தண்ணளி பண்ணி ரஷிக்கை
ஒருவன் கையில் ஏற்கும் ஆயுதம் கொலைக்கு பரிகரமான மூவிலை வேல் -ஒருவன் கையில் ஏற்கும் ஆயுதம் ரக்ஷணத்துக்கு பரிகரமான அறம் முயல் ஆழி
ஒருவன் ரூபம் நெருப்பு போலே -ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத படி காலாக்கினி ஸந்நிபமாய் இருக்கும்
ஒருவன் வடிவு கண்டவர்கள் கண் குளிரும்படி காள மேகம் போலே இருக்கும் –
இப்படி பரஸ்பர விசத்ருசமான இரண்டு வஸ்துக்களில் ஓன்று சரீரமாய் இருக்கும் –ஓன்று சரீரியாய் இருக்கும் என்னும் இடம் அர்த்த சித்தம்
–சர்வாத்மா -சர்வ பூத அந்தராத்மா நாராயண -என்றால் சர்வஞ்சாஸ்யை சரீரம் என்று ப்ரதிகோடி வருகிறாப் போலே –
அன்றிக்கே இவர்கள் ரூபம் பார்த்தால் -எரி மேனி ஓன்று -கார் மேனி ஓன்று என்னவுமாம் –

————————————————————————

அவனை சரீரதயா சேஷம் என்றீ ராகில் ஆகில் நீரும் சேஷ பூதர் அன்றோ -நீர் உபதேசிக்கிற படி எங்கனே என்னில்
-எனக்கு அவன் பிரசாதம் அடியாகையாலே விஸ்ம்ருதி சங்கை இல்லை -என்கிறார் –

அவன் அறிவானாம் -என்று ருத்ரனை அறிவு கேடன் என்று ஷேபித்துச் சொன்னீர் –நீர் தாம் அறிந்து பிறர்க்கு உபதேசிக்கும் படி எங்கனே -என்ன –
சத்வம் தலை எடுத்த போது ஸ்வ யத்னத்தாலே சிறிது அறிந்தானாய் ரஜஸ் தமஸ் ஸூ க்கள் தலை எடுத்த போது ஈஸ்வரோஹம் -என்று இருக்கும்
அவனைப் போலேயோ நான் -நிர்ஹேதுகமாக அவன் தானே காட்டக் கண்டவன் ஆகையால் எனக்கு ஒரு விஸ்ம்ருதி பிரசங்கம் இல்லை -என்கிறார் –

ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை –6-

ஓன்று மறந்து அறியேன்–அன்று-கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்–கர்ப்ப வாசம் பண்ணா நிற்கச் செய்தே
-ஐயோ நோவு பட்டாயாகாதோ -என்று அவன் கடாக்ஷிக்க -அவனைக் கண்டேன் தம்முடைய விலக்காமையைக்
கொண்டு சாஷாத் கரித்ததாகச் சொல்லுகிறார்
திருவரங்க மேயான் திசை –ஓன்றும் மறந்து அறியேன்–பெரிய பெருமாள் இடையாட்டத்தில்-அவனுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒன்றும் மறந்து அறியேன் –
ஓதம் நீர் வண்ணனை நான்-இன்று மறப்பனோ -ஸ்ரமஹரமான வடிவை யுடைய பெரிய பெருமாளை இன்று மறப்பேனோ
-இது தான் தேஹ யாத்ரையாய் பர ப்ரதிபாதன யோக்கியமான காலத்திலே மறப்பேனோ –
ஏழைகாள்-இவ்விஷயத்தில் புதியது உண்டு அறியாதவர்களே -என்கிறார் –
திசை என்றது -அவன் இடையாட்டத்திலே என்றபடி -அத்திக்கிலே என்று சொல்லக் கடவது இ றே
ஒன்றும் மறந்து அறியேன் -கண்ட அளவிலே ஒன்றும் மறந்து அறியேன் -உம்முடைய ஸுஜன்யமோ -என்னில் அன்று
-ஓத நீர் வண்ணனை -மறக்க ஒண்ணாத அழகு -/ ஏழைகாள்-மறக்க ஒண்ணாத விஷயத்தை விட்டு
நினைக்க ஒண்ணாத விஷயத்தைப் பற்றி நிற்கிறவர்களே –
அன்று -அறியாக் காலத்துள்ளே–ஜாயமானம் ஹி –கரு இத்யாதி -மறைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில் மறந்திலேன்
-நினைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில் இன்று மறப்பேனோ
திருவரங்கமே யான் -இடையாட்டம் பர திசையிலேயோ-எல்லை நிலத்திலே –
அன்று-கருவரங்கத் துட்கிடந்து–திருவரங்க மேயான் திசை – கை தொழுதேன் கண்டேன்-ஓன்று மறந்து அறியேன்
-ஓதம் நீர் வண்ணனை நான்-இன்று மறப்பனோ வேழைகாள் -என்று அந்வயம்

——————————————————————

அறிவு நடையாடுகைக்கு யோயத்தை இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்தில் கிடந்தது ஜயமான காலத்திலே
இத்தலையிலே அபிரதிஷேதமே பற்றாசாக குளிராக கடாக்ஷித்து தன் படிகளைக் காட்டித் தருகையாலே
-சம்சாரிகளை தண்ணளி பண்ணி ரஷிக்கைக்காக தாமே கோயிலிலே வந்து பள்ளி கொண்டு அருளுகிற
பெரிய பெருமாளுடைய ஸ்வரூப ரூப குணாதி ஸமஸ்த ஸ்வ பாவங்களையும் சாஷாத் கரித்து அனுபவித்தேன்
-காட்சிக்கு அனந்தரமான அஞ்சலி பந்தம் முதலான வ்ருத்தியிலும் அந்வயிக்கப் பெற்றேன்
-மறுக்க இடம் அறும் படி தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள வற்றாய்-ஓதம் கிளர்ந்த சமுத்திர ஜலம் போலே
-இருந்து குளிர்ந்த வடிவு அழகை யுடையவனை ஏக தேசமும் மறந்து அறியேன் –
உலக இதர விஷயங்களில் மண்டித் திரிகிற அறிவு கேடர்காள்-மறைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில்-
மறவாத நான் நினைக்குக்கு ஹேது உள்ள இன்று மறப்பேனோ –

————————————————————————-

அல்லாத தேவதைகள் -சரீரதயா சேஷ பூதர் -நிர்வாஹ்யர் -அவனே சேஷி -நிர்வாஹகன் -என்று சொல்லும்படி எங்கனே-
–அவர்களும் ஒரோ தேசங்களுக்கு ஈஸ்வரருமாய் -அவர்களுக்குப் பிரதானமான செயல்களும் உண்டாயச் செல்லா நிற்க -என்ன
-அதுக்கும் அடி அவனே -அது அவன் ஸ்வாதந்தர்யத்துக்கு வர்த்தகம் -என்கிறார்

அப்படியாகில் நாட்டடங்க எம்பெருமானை விட்டுக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்து –
எடுத்து-திரிகைக்கு அடி என் என்ன உகவாதார் தன்னை வந்து கிட்டாமைக்கு அவன் பண்ணின மயக்குகள் -என்கிறார் –

திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு ——-7–

திசையும் –திக்கோடு கூடின பூமியும் –
திசையுறு தெய்வமும்-அத்திக்கிலே வியாப்தரான தேவர்களும்
தெய்வத்-திசையும் கருமங்கள் எல்லாம்-அவ்வவ தேவதைகளுக்கு பொருந்தின கர்மங்கள் எல்லாம் -த்ரிபுரதஹநாதி
அசைவில் சீர்க்-அல்லாதாருடைய சீருக்கு அசைவு உண்டு போலே காணும்
கண்ணன் -தன்னை இதர சஜாதீயன் ஆக்குவது -தன்னுடைய இச்சையால்
நெடுமால் -யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஓதப்படும் பெரியவன்
கடல் கடைந்த -பெரியவன் என்று இராதே அரியன செய்து நோக்குமவன்
காரோத-வண்ணன் -நோக்காதே அழிக்கிலும் விட ஒண்ணாத வடிவு –
படைத்த மயக்கு —–பல சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியையும் கொடுத்து வைத்தால் தன் வழி வாராதவர்களை
அறிவு கெடுக்கும் படி –அல்லாதார் அறியா விடுவான் -தைவீ ஹ்யேஷா குணமயீ-ஸ்ரீ கீதை -7-14-
தெய்வத் திசையும் -ஸ்ருஷ்டியாதி கர்மங்கள் / அசைவில் சீர் -நித்தியமான கல்யாண குணங்கள் /
கண்ணன் நெடுமால் -ஆஸ்ரிதரை விடாத பெரும் பித்தன் /கடல் கடைந்த -அபேக்ஷிப்பாரே வேண்டுவது/
காரோத வண்ணன் -குண ஹீனன் ஆனாலும் விட ஒண்ணாதே
திக்கு பலஷிதையான பூமியும் -அவ்வவ திக்குகளில் வர்த்திக்கிற தேவதைகளும் -அத்தேவதைகளுக்குச் சேர்ந்த-ஸ்ருஷ்டியாதி வியாபாரங்களும் யாவும் –
அப்பஷயாதி தோஷங்கள் இன்றிக்கே-நித்தியமான கல்யாண குணங்களை யுடையனாய் -அக்குணங்கள் ப்ரேரிக்க வந்து
-கிருஷ்ணனாய் வந்து பிறந்த ஸுலப்யத்தை யுடையனாய் –
ஸூ லபனான இடத்திலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையவனாய் -தன் பெருமை பாராதே சரணம் புக்க
தேவர்களுக்காக உடம்பு நோவக் கடலைக் கடைந்து அபேக்ஷித சம்பவித்தானாம் பண்ணுமவனாய் –
ரஷியாதே அழியச் செய்யிலும் விட ஒண்ணாத கறுத்த கடல் போலே இருந்து குளிர்ந்த வடிவை உடையனானவன் –
தன் பக்கல் வாராதாரை அகற்றுகைக்கு உண்டாக்கின ப்ராமக வஸ்துக்களாய் இருக்கும் –மயக்கு -மயங்கப் பண்ணும் வஸ்துக்கள் –

———————————————————————

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது ——–8-

முயங்க மருள்-முயங்கு அமருள்-சைன்யம் நிறைந்த பாரத யுத்த களத்திலே-

-இம் மயக்கு பொதுவோ என்னில் –ஆஸ்ரிதரை தன்னை அழிய மாறியும் நோக்கும் -என்கிறார் –

இப்படி அநாஸ்ரீதரை மயங்கப் பண்ணுகிற அளவன்றிக்கே-ஆஸ்ரீத விஷயத்தில்
ஸத்ய சங்கல்பனான தன் நிலை குலைந்து பக்ஷ பதித்து ரஷிக்கும் என்கிறார் –

மயங்க வலம்புரி வாய் வைத்து –அர்ஜுனன் தன்னை நிமித்தமாக நிறுத்தி யுத்தம் பண்ணப் புக்கால் -இவன் க்ரமத்தாலே
தொடுத்து விட்ட அம்புக்கு எதிரிகள் போகாத அளவிலே -தன் திரு வாயிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வைக்கும் அத்தனை
-அதுக்கு ஒருத்தராலும் இறாய்க்கப் போகாது -அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற எல்லாரும் மயங்கும் இத்தனை
–உகவையாலே மயங்குவாரும் -பயத்தாலே மயங்குவாரும் –யஸ்ய நாதேந தைத்யா நாம் பலஹானி ரஜாயத
-தேவா நாம் வவ்ருதே -தேஜ-பிரசாத ஸ் சைவ யோகி நாம் -ஸ்ரீ விஷ்ணு புரா-5-21-29-என்கிறபடியே
ச கோஷோ தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்–ஸ்ரீ கீதை -1-19-
அத்யைவ நஷ்டம் குருணாம் பலமிதி தார்த்த ராஷ்ட்ரா மே நிரே-தத் விஜயா காங்ஷிணே சஞ்சயோ-அகதயத் ஈத்ருசீ பவதியானாம் விஷய ஸ் திதி ரிதி
வானத்து –மறைக்க ஒண்ணாத நிலத்திலே
இயங்கு -ஒரு க்ஷணம் ஓர் இடத்தில் நில்லாதவனை
மெரி கதிரோன் தன்னை-குறித்துப் பார்க்க போகாதபடி கிரணங்களை விடா நின்றுள்ளவனை
முயங்க மருள்-தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது ——ஸத்ய சங்கல்ப என்ற ஸ்ருதிக்குச் சேருமோ -நமே மோகம் வஸோ பவேத் -என்று-
அருளிச் செய்த வார்த்தைக்குச் சேருமோ -ஈஸ்வரத்துவத்துக்குச் சேருமோ
திருமாலே -ஸத்ய சங்கல்பத்தை அழிக்குமவனைச் சொல்லுகிறது -/
போராழி இத்யாதி -ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்று சொன்ன பீஷ்மாதிகள் முன்னே ஆயுதத்தை எடுத்துக் பொருது –

மயங்க -எல்லார்க்கும் ஆஸ்ரீத விஷயத்திலே அவர்கள் சங்கல்ப்பித்த படியே நடத்தும் பக்ஷ பாதி
மயங்க -ஆயுதம் எடேன் என்று வைத்து அர்ஜுனன் அம்பால் தனித் தனியே கொல்லப் பற்றாமே ஒருகால் முழுக்காயாக அவிய
வானத்து -தூரத்து நிற்கிறவனை / இயங்கும் -சஞ்சரிக்கிறவனை -/ முயங்கு அமருள் -தனி இடத்தில் அல்ல -எல்லாரும் காண -எத்திறம் அறிந்தேன் –
திருமால் -நாட்டார் பரிமாற்றம் அல்ல -அவை அந்த புரத்தில் பரிமாற்றம்
போரிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தாலே கொன்றான் -ஆதித்யனை மறைத்தான் –ஸ்ரீ பீஷ்மரைத் தொடர்ந்தான் -/
முயங்கு அமருள்-நெருங்கிய யுத்தம் / தேராழி –ரதாங்கம்-திரு வாழி –

——————————————

துரியோத நாதிகள் பீதி அதிசயத்தாலே அறிவு அழியும்படியாக -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருப் பவளத்திலே மடுத்தூதி –
மறைக்க ஒண்ணாத தன்னிலமான ஆகாசத்தில் -குறிக்க ஒண்ணாத படி இதஸ்தநஸ் சஞ்சரிக்குமவனாய்
-ஸ்வ தேஜஸால் சர்வரையும் அபி பவிக்கிற கிரணங்களை யுடையவனான ஆதித்யனை ஆஸ்ரீத விஷயத்திலே
ஓரத்துக்கு உவாத்தான பிராட்டியார் பக்கல் பெரும் பிச்சானவனே -சகல பிராணிகளும் யுத்த தித்ருஷயா வந்து
நெருங்கிக் கிடக்கிற சமரபூமியிலே பொருகைக்குப் பரிகரமான திரு வாழி யோடே கூடின திருக் கையாலே
பீஷ்மாதிகளைத் துரத்திப் பொருது ஸத்ய சங்கல்பனான நீ அத்தைக் குழைத்து திரு வாழி யாலே மறைத்து அருளிற்று எதுக்காக
–சர்வ சாதாரணமான உறவுக்குச் சேருமோ – ஸத்ய சங்கல்பனாய் இருக்கும் இருப்புக்குச் சேருமோ
-உன் பெருமைக்குப் போருமோ-இவை எல்லாவற்றையும் கால் கடைக் கொண்டு இங்கனே செய்து அருளிற்று எதுக்காக
-ஆஸ்ரீத விஷயத்தில் ஓரம் ஆகாதே -என்று வித்தாராகிறார் -தேராழி –ரதாங்கம்-

————————————————————————

ஆஸ்ரிதரை ஒழியவும் ஜகத்துக்கு சத்தா நாஸம் வரில் பரிஹரிக்கும் என்கிறார் –

இவ்வளவு அன்றிக்கே ஆபத்து முதிர்ந்த அளவில் -ஆஸ்ரிதர் -அநாஸ்ரிதர் -என்று தரம் பாராதே-இருந்ததே குடியாகத்
தன்னை அழிய மாறி நோக்கும் ஸ்வபாவன் -என்கிறார் –

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண் ———9-

விரி தோட்ட-சேவடியை-மலர்ந்த இதழ்களை யுடைய தாமரையைப் போன்ற சிவந்த திருவடியை -/
விஸ்திருதமாய் பிரகாசிக்கிற திருத் தோடுகளை உடையவனே என்று சம்போதம் ஆக்கவுமாம் –

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் – பொரா நின்ற கோட்டை யுடைத்தான-ஏனமாய்-அத்விதீயமான ஏனமாய்
-ஜாதிச் செருக்காலே பூமியை உழுது கொடு திரியா நிற்கும்
புக்கு இடந்தாய்க்கு அன்று உன்-ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே –பிரளயம் கொண்டு உழுகைக்கு பூமி இல்லாத அன்று
தன் திருவயிற்றிலே வைத்து நோக்கும் -இத்தால் சொல்லிற்று யாயிற்று உதாரனாய் இருப்பான்
ஒருவன் நாலு பேருக்குச் சோறிட நினைத்தால் நாற்பது பேருக்கு இட்டு மிகும்படி சோறு உண்டாக்குமா போலே
-ரஷ்யத்தின் அளவன்று இ றே ரக்ஷகன் பாரிப்பு –
விரி தோட்ட-சேவடியை நீட்டித்-விரியா நின்ற தோடுகளை யுடைத்தான தாமரை போலே இருந்துள்ள சேவடியை நீட்டி
-விரிதோட்ட -என்று சம்புத்தி யாகவுமாம் -திரு மேனியில் ஒளி விரியும் தோட்டை யுடையவனே –
திசை நடுங்க-திக்குகள் எல்லாம் நடுங்க –
விண் துளங்க-விண்ணில் உள்ள தேவ ஜாதி எல்லாம் நடுங்கும் படியாக
மாவடிவின் நீ யளந்த மண் —-பெரிய வடிவைக் கொண்டு நீ அளந்த மண் –
-ஆஸ்ரிதர் கார்யம் பெரிய வடிவைக் கொண்டு புக்குச் செய்யிலும் செய்யும் -சிறிய வடிவைக் கொண்டு பெரியனாய்ச் செய்யிலும் செய்யும் –

பொரு-அபன்னராய் விலக்காதார்க்கும் -தன்னைக் கொண்டு கார்யம் கொள்ளுவார்க்கும் செய்யும் படி -/
விரி தோட்ட-விரிகிற தோட்டை உடையவை போலே இருந்துள்ள –
விண் துளங்க -அபி மானிகளான தேவர்கள் -நடுங்க
பெரிய வடிவாலே அளந்த மண் -திரு எயிற்றுக்கு ஒரு நீல ரத்னம் போலே இருப்பதே -என்ன ஆச்சர்யம் –
——————————————–
விகசிதமான இதழையுடைய தாமரை போலே சிவந்த திருவடிகளை வளர்த்து திக்கு பலஷிதையான பூமியில் உள்ளார்
நடுங்கவும் உபரிதன லோகத்தில் உள்ளார் நடுங்கவும் பெரிய வடிவை யுடையையாய்க் கொண்டு நீ அளந்து
கால் கீழ் இட்டுக் கொண்ட பூமியானது -நில மகள் முலையில் குங்குமத்தோடே நிலத்தோடு வாசி அற எங்கும்
ஜாதி உசிதமான செருக்காலே பொருது கொடு வருகிற கொம்புகளை யுடைத்தாய் அழகுக்கு அத்விதீயமான
வராஹ வேஷத்தை உடையனாய்க் கொண்டு -பிரளய ஜலத்திலே முழுகி அண்ட பித்தியினின்றும் இடந்து எடுத்துக் கொண்டு
ஏறின உனக்கு அக்காலத்தில் உன் எயிற்றின் ஏக தேசத்திலே ஒரு மறுப் போலே கிடந்தது ஓன்று அன்றோ –
ஆபத்து வந்தால் தலையால் நோக்குதல் –தலையிலே காலை வைத்து நோக்குதல் -செய்யுமவன் அன்றோ நீ
-ரஷ்ய வர்க்கத்தை நோக்கும் அளவில் உனக்கு ஒரு நியதி உண்டோ -என்று உகந்து அனுபவிக்கிறார்
விரி தோட்ட என்று விஸ்திருதமாய் பிரகாசிக்கிற திருத் தோடுகளை உடையவனே என்று சம்போதம் ஆக்கவுமாம் –

————————————————–

சேராதன செய்தும் ஆஸ்ரிதரை நோக்குமவன் -என்கிறார்-

இப்படி பெரிய வடிவைக் கொண்டு சிறிய செயலைச் செய்து நோக்கும் அளவு அன்றிக்கே -சிறிய வடிவைக் கொண்டு
பெரிய செயலைச் செய்து நோக்கிலும் நோக்கும் -என்கிறார் –

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்——-10-

மறி கடலும்-அலை எறியும் சமுத்ரங்களும்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு–எண்ணிக்கைகளை எல்லை கண்ட -எண்ணிறந்த கல்யாண குணங்களையும்–திருச் சக்கரத்தையும் யுடைய உனக்கு –

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்–ஆதாரமான மண்ணும் -அதற்கு உறுதியான மலையும் –வேலியான கடலும் –
-தாரகமான காற்றும் –அவகாச பிரதானம் பண்ணும் ஆகாசமும் -விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் –
-ஐந்தர ஜாலிகர் செயல் போலே பொய்யன்று இது -ஆப்தரான ஆழ்வார்கள் மெய்யென்பர்
எண்ணில்-ஆராயில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு -எண்ணிறந்த குணங்களையும் திரு வாழி யையும் யுடையனான யுனக்கு
அலகாவது -பரிச்சேதகம் இ றே -அத்தை அளவு கண்ட சீர் -அபரிச்சேதயமான அலகை பரிச்சின்னமாக்கின சீர்
அன்றிவ்வுலகளவும் உண்டோ வுன் வாய்—-இந்த ரக்ஷணத்தில் த்வரை தான் சிறிய வடிவில் பெரிய ஜகத்தை வைத்தான் –
மண்ணும் இத்யாதி -சேராச் சேர்த்தியானவை அடைய மெய் என்பர் -இந்திர ஜாலம் என்னப் பெற்றதோ -ரிஷிகள் கூப்பிடா நிற்பார்கள்
எண்ணில்-அலகளவு கண்ட-எண்ணை அளவு படுத்தும் குணங்கள் தாதூ நாமிவ சைலேந்தரோ-
-குணா நாமா கரோ மஹான் -கிஷ் -15-21-/ பஹவோ ந்ருப கல்யாண குணா -அயோத்யா -2-26-
ஆழி யாய்க்க்கு-குணங்களும் அப்படியே சீரிய கை / வுலகளவும் உண்டோ-ரக்ஷகத்வ பாரிப்புக்கு அடைவில்லாமை –

————————————————–

சர்வ சாதாரணமான பூமியும் -அதுக்கு தாரகமான குலா பர்வதங்களும் அத்தைச் சூழ்ந்து கிடந்து அலை எரிகிற சமுத்ரங்களும்
-தத் அந்தர்வர்த்திகளுக்கு உஸ்வாசாதி ஹேதுவான காற்றும் -அதுக்கு அவகாச பிரதமான ஆகாசமும் -இவற்றை அடையத்
திருவயிற்றிலே ஒரு புடையில் அடங்கும் படி அமுது செய்து அருளின இத்தை -பரமார்த்தம் என்று உன் சக்தி சாமர்த்தியத்தை
தறை காண வல்ல வைதிக புருஷர்கள் சொல்லா நின்றார்கள் –
உன்படியைப் பரிச்சேதித்து அநுஸந்திக்கும் அளவில் அளவிடுகைக்கு பரிகரமான ஆயுதங்களையும் பரிச்சேதித்து எல்லை
கண்டு இருக்கிற அசங்க்யாதமான கல்யாண குணங்களையும் –
திரு வாழியையும் யுடையையான உனக்கு இவற்றை எடுத்துத் திரு வயிற்றிலே வைத்து அருளின அன்று
இஜ் ஜகத்தோ பாதியும் பெருமை யுடைத்தோ உன்னுடைய திருப் பவளமானது-இந்த சிறிய திருப்பவளத்தைக் கொண்டு
பெரிய ஜகத்தை அமுது செய்து அருளின இவ்வாச்சர்யம் என்னாய் இருக்கிறதோ -என்று ஈடுபடுகிறார் –

————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

முதல் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரம் -1- -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 8, 2016

ஸ்ரீ யதோத்தகாரி சந்நிதியில் -பொற்றாமரை பொய்கையில்-பத்ம மலரில் –படை போர் புக்கு முழங்கும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் அம்சம்
-துலா ஐப்பசி மாச திருவோணம்
பொய்கையை ஆழ்வார் திருவவதாரம் –
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ஸஸ ப்ரஹினோதி தஸ்மை -போலே
தமிழ் மறைகளை வெளிப்படுத்தி அருள பத்மத்தில் அவதரிப்பித்தான் போலும் –
செந்தமிழ் பாடுவார் -செஞ்சொற் கவிகாள் –இன்கவி பாடும் பரம கவிகள் -திருவோணத்தான் உலகாளும் என்பார்களே –

————————————————–

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யானாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —

கலிவைரி க்ருபா பாத்ரம் காருண்யைக மஹா ததிம்
ஸ்ரீ கிருஷ்ண பிரவணம் வந்தே க்ருஷ்ண ஸூரி மஹா குரும்-

————————————————————–

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு –வையத்
தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து —-ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் –தாழைகள் நெருங்கிச் சேர்ந்து இருக்கிற
படி விளங்கச் செய்தான் பரிந்து –படி -பூமியிலே -அன்புடன் கூடியவராய் -பிரகாசிக்கும் படி செய்து அருளினார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் – வியாக்யானம்
க இதி ப்ரஹ்மணோ நாம தேன தத்ராஞ்சிதோ ஹரி –தஸ்மாத் காஞ்சீ தி விக்யாதா புரீ புண்ய விவர்த்த நீ –என்னும் படியான
ஸ்ரீ காஞ்சீ புரத்திலே-புஷ்காரணீயிலே புஸ்கரத்திலே-விஷ்ணு நஷத்த்ரத்திலே ஆவிர்பவித்து
-திவ்ய பிரபந்த தீப முகேன லோகத்தில் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி வாழ்வித்த படியைச் சொல்கிறது இதில் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த-பொய்கைப் பிரான்–இத்தால் இவர் ஜென்ம வைபவம் சொல்கிறது
கைதை-கேதகை –தாழை-கைதை வேலி மங்கை –பெரிய திருமொழி -1-3-10–என்றும்
-கொக்கலர் தடந்தாழை வேலி –திருவாய்எ -4-10-8—என்றும் சொல்லுமா போலே –அது தானே நீர் நிலங்களிலே யாயிற்று நிற்பது –
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய் –பெரியாழ்வார் -4-10-8–என்னும் படி –
அம் பூம் தேன் இளஞ்சோலை —திருவிருத்தம் -26–சூழ்ந்த கச்சி வெஃகாவில் -பொய்கையிலே
எம்பெருமான் பொன் வயிற்றிலே பூவே போன்ற பொற்றாமரைப் பூவிலே ஐப்பசியில் திருவோணம் நாளாயிற்று இவர் அவதரித்தது
-பத்மஜனான பூவனைப் போலே யாயிற்று பொய்கையரான இவர் பிறப்பும் –
வந்து உதித்த என்கையாலே ஆதித்ய உதயம் போலே யாயிற்று இவர் உதயமும் –
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் -என்னக் கடவது இ றே –
பொய்கையிலே அவதரிக்கையாலே அதுவே நிரூபகமாய் இருக்கை -அது தான் ஸரஸ்வதீ பயஸ்விநியாய் ப்ரவஹித்த ஸ்தலம் யாயிற்று
-தத்தீரமான பொய்கை என்கை -பொய்கைப்பிரான் -மரு பூமியில் பொய்கை போலே எல்லார்க்கும் உபகாரகராய் இருக்கை
–தீர்த்தக்கரராய்த் திரியுமவர் இ றே
கவிஞர் போரேறு -ஆகையாவது கவி ஸ்ரேஷ்டர் -என்றபடி -ஆதி கவி என்னும்படி அதிசயித்தவர்-
-உலகம் -படைத்தான் கவியாலும்–திருவாய் -3-9-10- -பரகால கவியாலும் -செஞ்சொற் கவிகாள் என்றும்
-செந்தமிழ் பாடுவார் என்றும் கொண்டாடப் படுமவராய் -நாட்டில் கவிகளுக்கும் வி லக்ஷண கவியாய் இருப்பர்
-இது பொய்கையார் வாக்கினிலே கண்டு கொள்க -என்று இறே தமிழர் கூறுவது -அந்த ஏற்றம் எல்லாம் பற்ற கவிஞர் போரேறு -என்கிறது –
ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடையவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழும் படி ஸ்நேஹத்தால் விலக்ஷண பிரமாண நிர்மாணம் பண்ணின படி சொல்கிறது –
வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி-படி விளங்கச் செய்தான் பரிந்து -என்று –
வையத்தடியவர்கள் -ஆகிறார் -பூ சூ ராரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அவர்கட்கே இ றே வாழ வேண்டுவது
-வானத்து அணி அமரர்க்கு -இரண்டாம் திரு -2–வாழ்வு நித்தியமாய் இ றே இருப்பது –
-இத்தால் இவர்கள் வாழுகையாவது –சேஷத்வ வைபவத்தை ஸ்வ அனுசந்தானத்தாலே உண்டாக்குமதான பிரபந்தம் -என்கை
-நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்னக் கடவது இ றே -இவ்வநுஸந்தானமே வாழ்வு -என்னவுமாம் –
அரும் தமிழ் நூற்றந்தாதி-ஆவது -அர்த்த நிர்ணயத்தில் வந்தால் -வெளிறாய் இருக்கை அன்றிக்கே அரிதாய்
-தமிழான பிரகாரத்தாலே ஸூ லபமாய் -அது தான் நூறு பாட்டாய் -அந்தாதியாய் இருக்கை-அன்றிக்கே –
-வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி–என்று வையத்து அடியவர்வர்கள் வாழ வருமதான தமிழ் நூற்றந்தாதி என்றுமாம் –
நூற்றந்தாதி படி விளங்கச் செய்கையாவது –வையம் தகளியாய் -என்று தொடங்கி -ஓர் அடியும் சாடுதைத்த முடிவாக அருளிச் செய்த
திவ்ய பிரபந்த தீபத்தாலே பூதலம் எங்கும் நிர்மலமாம் படி நிர்மித்தார் என்கை –
வருத்தும் புற விருள் மாற்ற எம் பொய்காய்ப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி
ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு யாகையாலே –
படியில் -பூமியிலே பிரகாசிக்கும் படி செய்து அருளினார் என்றாகவுமாம்
அன்றிக்கே -படி -என்று உபமானமாய் -திராவிட வேதத்துக்கு படிச்சந்தமாய் இருக்கும் படி செய்து அருளினார் என்றுமாம் –
விளக்கம் -பிரகாசம் / படி என்று விக்ரஹமாய் -திவ்ய மங்கள விக்ரஹம் -திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றபடி
கண்டு அறியும் படி செய்து அருளினார் என்றுமாம் –
செய்தான் பரிந்து -பரிவுடன் செய்கை யாவது -சேர்ந்த விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல் -பர விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல்
-செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை என்றார் இ றே -ஸ்நேஹத்தாலே இ றே விளக்கு எரிவது
-இத்தால் அவர் திவ்ய பிரபந்த உபகாரகத்வத்தாலே வந்த உபகார கௌரவம் சொல்லி ஈடுபட்டதாயிற்று –

———————————————————–

அவதாரிகை –
ஆழ்வார்களில் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான அவகாஹ நத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும்
நித்ய ஸூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே -திரு விருத்தம் -75
இன்கவி பாடும் பரம கவிகள் -செந்தமிழ் பாடுவார் -என்னும் இவர்கள் அவதரித்தது -ஒரோ தேசங்களில் யாகிலும்
( கச்சி நகர் வந்துதித்த /கடல் மல்லை பூதத்தார் / தோன்றியவூர் வன்மை மிகு கச்சை மல்லை மா மயிலை )
–ஞானப் பெருமையால் -( காலப் பழமையால் ) இன்ன விபூதி ( விடம் )என்று நிச்சயிக்கப் போகாது –
பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும்–பகவத் விஷயத்தில் அவகாஹியாதார் எல்லாரும் தமக்குப் பேயராய் இருப்பர்
-அவர்கள் நிலையிலே தாம் நில்லாத படியால் அவர்களுக்குத் தாம் பேயராய் இருப்பர் -இப்படியாலே பகவத் விஷயத்திலே
அவகாஹியாதார் இருக்கும் இடத்தில் ஸ்தாவரங்கள் உள்ள காடே அமையும் என்று இருப்பார்கள் –
ஆன்விடை ஏழு அன்று அடர்த்தற்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே
–சர்வேஸ்வரன் திரு உள்ளம் ஊற்றம் அறுத்த அளவிலும் கிருபையைப் பண்ணும் தம்முடைய மனசிலும் கொடுமையை வைத்தேன் என்கிறார்
-இனி அவர்கள் மனுஷ்யர் அல்லர் என்று செம்பிலும் கல்லிலும் வெட்டிக் கொள்ள அமையும் –
சிறந்தற்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்-என்னும் படியே அறிவு நடையாடாதவர்கள்
இருக்கும் இடத்தில் வசிக்குமதில் காட்டிலே வர்த்திக்க அமையும் என்று காடுகளில் வர்த்திப்பார்கள்-
-இங்கனே செல்லுகிற காலத்திலே ஒரு மழையையும் காற்றையும் கண்டு திருக் கோவலூரிலே ஒரு இடை கழியிலே ஒருத்தர் புக்கு கிடக்க
-இருவராவார் சென்று -ஒருவர் கிடக்கும் இடம் இருவர் இருக்கப் போரும் -என்று இருக்க
-மூவராவார் சென்று -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கப் போரும் என்று மூவரும் நிற்க –
இருவர் வந்து நெருக்க –நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி – முதல் திரு -86–என்றும்
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்கு மேல் என்னடியார் அது செய்யார் -பெரியாழ்வார் -என்னும் நீயும்
உன் பரிகாரம் -திருவடி -நலிய புக –நகச்சின் நாபராத்யதி -என்று ஏறிட்டுக் கொண்டு நோக்கும் திருமகளும் –
குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா -மலை எடுத்து உடம்பிலே விழுகிற மழையைக் காத்த நீர்மையை யுடையவனே-
-உடம்பிலே விழுந்த மழையை மலை எடுத்துக் பரிஹரித்த போது பிறந்த ஹர்ஷம் போலே யாயிற்று
இவர்கள் நெருக்குப் பெற்ற போது இவனுக்கு இருந்த படி –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி –காமுகரானவர்கள் உகந்த விஷயங்களில்
போகச் சொன்னாலும் தூனைக் கட்டிக் கொண்டு நிற்குமா போலே -இவ்வாசலுக்கு புறம்பு போக மாட்டிற்றிலன் -உள்ளுப் புக மாட்டிற்றிலன் –
இனி-இப்போது
இப்படிஇருவருமாக தங்களை நெருக்கப் புக்கவாறே-தம்மை ஒழிய வேறே சிலர் நெருக்குகிறார் உண்டு என்று
-ஞானம் ஆகிற விளக்கை ஏற்றினார் -ஞான தீபேன பாஸ்வதா –
விளக்கு யுண்டானாலும் ஞானம் இல்லையாகில் பதார்த்தங்களை விவேகிக்கப் போகாதே –
முதல் ஆழ்வாருக்கு ஞானம் பிறந்த படி சொல்லிற்று -( சேமுஷீ பக்தி ரூபா )-இருவராவாருக்கு ஞானம் முற்றி பக்தியானபடி சொல்லிற்று
–மூவராவார்க்கு பக்தியை யுடையராய் அவனை ஒழிய செல்லாதவர்களுடைய சாஷாத் காரம் பிறந்த படி சொல்லிற்று
இம்மூவருக்கும் அர்த்தம் ஒன்றே -மூன்று ரிஷிகள் கூடி ஒரு வியாகரணத்துக்கு கர்த்தாக்கள் ஆனால் போலே
கர்த்ரு பேதம் யுண்டே யாகிலும் -அர்த்த சரீரம் ஒன்றே -த்ரி முனி வியாகரணம் -என்னுமா போலே

——————————————————————–

-அவதாரிகை –
ஸ்ரீ அப்புள்ளை ஸ்வாமி —
ஸ்ரீ யபதியாய்-அவாப்த ஸமஸ்த காமனாய்-ஸமஸ்த கல்யாண குணாதி மகனான -சர்வேஸ்வரன்
நித்ய விபூதியில் -நித்ய அங்குசித ஞானரான நித்ய ஸூ ரிகளை நித்ய கைங்கர்யம் கொண்டு நித்ய ஆனந்தியாய் இருக்கச் செய்தேயும்
அவர்களை போலே கைங்கர்ய நிரதராய்-வாழுகைக்கு இட்டுப் பிறந்து வைத்து -அதுக்கு அசலாய் –
அவித்யா கர்மா வாசனா ருசி ப்ரக்ருதி பரவஸ்யராய் பரபிரமிக்கிற சம்சாரி சேதனரை திருத்தி பணி கொள்ளுகைக்காக –
-இவர்கள் அழிந்து கிடக்கிற தசையில் ஸ்வ ஆஸ்ரய உபகரணமாக காரண களேபரங்களைத் தன் கருணையால் கொடுத்து அருளி
அவற்றைக் கொண்டு விபசரியாதே நல் வழி நடக்குகைக்கு உடலாக ஸ்ருதியாதி சாஸ்திரங்களை ப்ரவர்த்திப்பிக்க
-அவற்றைத் திரஸ்கரித்து -ஸ்வைரம் சஞ்சரிக்கிற தசையிலே ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து அவதரித்து அருளி
-உபதேச அனுஷ்டானங்களாலும் ரூபா உதார குண சேஷ்டிதங்களாலும் வசீ கரித்து இவர்களைத் திருத்தப் பார்த்த இடத்தில்
அவற்றுக்கும் அகப்படாத படி இதர விஷயங்களில் மண்டி இவர்கள் நஷ்ட கல்பராய் போகக் கண்ட படியால்
-ஆழ்வார்களைக் கொண்டு இவர்களை சேர்த்துக் கொள்வானாக -ஆ முதல்வரான -முதல் ஆழ்வார்களை அனந்தரம் அவதரிப்பித்து அருளினான் –
இவர்கள் ஆகிறார் -பகவதாகஸ்மிக கடாக்ஷ விசேஷ லப்தமான ஞான ப்ரேமங்களை குறைவற யுடையராய்
-நித்ய ஸூ ரிகளைப் போலே பிறப்பே பிடித்து -பகவத் அனுபவத்தில் பழுத்து -சம்சார யாத்திரையில் கண்ணற்று
-இன்கவி பாடும் பரம கவிகள் – என்றும் -செந்தமிழ் பாடுவார் -என்றும் நாவீறுடைய பெருமாளும் -நாலு கவிப் பெருமாளும்
-கொண்டாடும்படியான வேண்டப்பாடு யுடையராய் -பரத்வாதிகள் ஐந்தையும் ஒரு காலே கண்டு மண்டி அனுபவிக்கும்
சதிரை யுடையராய் இருக்கச் செய்தே-ஆறு பெருக்கு எடுத்து எங்கும் ஒத்துப் போகா நிற்கச் செய்தே
-நீருக்கு நோக்கு ஓர் இடத்திலேயாய் இருக்குமா போலே திரு வுலகு அளந்து அருளின இடத்திலும் -திருமலையிலும் கால் தாழ்ந்து
-அனுபவித்துப் போருமவர்களாய்-அறிவுண்டாய் இருக்க பகவத் விஷயத்தை கால் கடைக் கொண்டு இதர விஷயங்களில்
மண்டித் திரிகிற சம்சாரிகளோட்டை ஸஹவாசம் துஸ் சஹமாய் -அவர்கள் வர்த்திக்கிற நாட்டை விட்டு
-அறிவுக்கு அடைவில்லாத ஸ்தாவரங்கள் வர்த்திக்கிற காட்டை விரும்பி -அவ்விடத்தில் யாத்ர சாயங்க்ருஹராய்
ஒருவரை ஒருவர் அறியாத படி மறைந்து வர்த்தித்தார் சிலமாஹா புருஷர்கள் ஆயிற்று –
இப்படி வர்த்திக்கிற இவர்கள் மூவரும் யாதிருச்சிகமாக ஒரு நாள் திருக் கோவலூர் பிரதேசத்தில் வந்து சங்கதராக
-அவ்வளவில் பெரும் மழையும் பெரும் காற்றும் பிரவர்த்தமாக -அத்தைக் கண்டு மழைக்கு ஒதுங்க ஓர் இடை கழியிலே
ஒருவர் புக்கு கிடக்க மற்றையவர் வந்து -திறக்க வேணும் என்ன -ஒருவர் கிடக்க இடம் போரும் அத்தனை -என்ன
-ஒருவர் கிடந்த இடம் இருவருக்கு இருக்கலாம் காணும் என்ன –ஒருவர் மூச்சு ஒருவர் பொறாத சம்சாரத்திலே
இப்படிச் சொன்ன இவர் கேவலர் அல்லர் -என்று திறக்க -அவரும் புகுந்து இவ்விருவருமாக இருக்கிற அளவிலே
-மற்றையவரும் வந்து திறக்கச் சொல்ல -எங்கள் இருவருக்கும் இருக்க இடம் போரும் அத்தனை -என்ன -இருவர் இருந்த இடம் மூவருக்கு நிற்கலாம்
இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே -ஈஸ்வரன் தானும் பிராட்டியுமாக வந்து தனித்தனியே இவர்களை பின் பற்றி
திரிந்த நெஞ்சாறல் தீர இவர்கள் மூவருக்கும் நடுவே புக்கு நெருக்க -நம் மூவரையும் ஒழிய வேறு புக்கு நெருக்குகிறவர்கள் யார் என்று
விளக்கு ஏற்றி பார்க்க வேணும் என்ன -அவர்களில் ஒருவரான பொய்கையார் -லீலா விபூதியில்
கார்ய காரண ரூபேண ஸமஸ்த வஸ்துக்களும் பகவத் அதீனமாய் இருக்கிறபடியை -பயபக்தி ரூபா ஞானத்தால் தரிசித்து
-அத்தை ஒரு விளக்காக ரூபித்துக் கொண்டு அனுபவ பரிவாஹ ரூபமான -வையம் தகளி -அருளிச் செய்தார் –
அநந்தரம் ஸ்ரீ பூதத்தார் வையம் தகளி -கேட்க்கையாலே அந்தப் பரபக்தி ரூபா பண்ண ஞானம் முற்றி பகவத் தத்துவத்தை விசதமாக
தர்சிக்கைக்கு உபகரணமான பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றுகிற வழி யாலே-அன்பே தகளி -அருளிச் செய்தார் –
அநந்தரம் மூன்றாம் ஆழ்வார் அவனை அனுபவிக்கப் பெறில் தரித்து -பெறா விடில் மூச்சடங்கும் படியான
பரம பக்தியை யுடையராய்க் கொண்டு -அவன் படிகளைக் கட்டடங்கக் கண்டு மண்டி அனுபவிக்கிற வழியாலே-திருக் கண்டேன் அருளிச் செய்தார் –
ஞான பக்தி சாஷாத்காரங்கள் -மூன்றும் பிரபந்த த்ரயத்துக்கும் தாத்பர்யமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து
இருக்க -விருத்தமாகஇங்கனே சொல்லலாமோ என்னில்-அதுக்கு குறை இல்லை -அங்கு ஞானம் என்கிறது –
பர பக்தி ரூபா பண்ண ஞானத்தை -பக்தி என்கிறது -பர ஞான தசரா பன்னமான ப்ரேமத்தை-
சாஷாத்காரம் என்கிறது -பரஞான விபாக ருபாய் யான பரம பக்தியை -கர்மா அனுஷ்டானகாந்தமாக ஞானம் உதித்து –
அது த்யான உபாஸனாத் யவஸ்தா பன்னமாய் முற்றி -அநந்தரம் -த்ரஷ்டவ்ய -என்னும் படி சாஷாத்கார ரூபமாய்
அநந்தரம் விஷய வை லக்ஷண்யத்தை அவகாஹித்து பக்தி ரூபாபன்னமாய்-பின்னை பர பக்தியாதிகளாக பரிபக்வமாம்
பிராமாணிகர் படியில் இவர்களுக்கு முதலிலே அன்வயம் இல்லை இ றே –
கர்மா ஞான அநு க்ருஹீதை யான பக்தியினுடைய ஸ்தானத்தில் பகவத் பிரசாதம் நின்று அநந்தரம் விளைந்த பர பக்தி யாய்த்து
இவரது என்று இ றே பிரதம ஆச்சார்யரான ஆழ்வாருக்கு நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்வது -(-ஈட்டில் -வீடுமின் முற்றவும் -)
அது அல்லாத ஆழ்வார்களும் ஒக்கும் இ றே -அல்லாத போது ஆழ்வார்கள் எல்லாரும் ஏக ப்ரப்ருதிகள் என்னப் போகாதே
-ஆகையால் விரோதம் இல்லை –
பரபக்த்யாதிகள் மூன்றும் ஓர் ஒருவருக்கே குறைவற யுண்டாய் இருக்கச் செய்தெயும் ஓர் ஒருத்தருக்கு ஒவ் ஒன்றிலே ஊற்றமாய் இருக்கும்-
பகவத் ஸ்வரூபாதிகள் எல்லாம் எல்லார்க்கும் அனுபாவ்யமாகா நிற்கச் செய்தே ஓர் ஒன்றிலே ஒவ் ஒருத்தருக்கு ஊற்றம் சொல்லுகிறாப் போலே
அனுபவ அபி நிவேச ரூபை யான பரபக்த்யாதி அவஸ்தைகளிலும் தனித்த தனியே ஊற்றம் சொல்லக் குறை இல்லை –
-கர்த்ரு பேதம் யுண்டாய் இருந்ததே யாகிலும் ஒருவனுக்கே க்ரமத்திலே பிறக்கக் கடவ பரபக்த்யாதி அவஸ்த்ய த்ரயமும்
தளமாக பிரபந்த த்ரயமும் அவதரிக்கையாலே அர்த்த க்ரமம் பார்த்தால் ஏக பிரபந்தமாய்த் தலைக் கட்டக் கடவது –
-பூர்வ உத்தர மீமாம்சைகளுக்கு கர்த்ரு பேதம் –ஜைமினி வியாசர் –உண்டாய் இருக்கச் செய்தே வேத ஐக்கிய பிரபந்த
வியாக்கியான ரூபம் ஆகையால் பிரபந்த ஐக்கியம் கொள்ளுகிறாப் போலேவும்
-பாணினி வரருசி பதஞ்சலி மூவரும் கூடி ஷூ த்ர வ்ருத்தி பாஷ்யங்களும் ஒரே சாஸ்திரமாகக் கொள்ளுமா போலேயும் –
இங்கும் பிரபந்த ஐக்கியம் கொள்ளத் தட்டில்லை –

———————————————————————

விசித்திர கார்யமான ஜகத்துக்கு காரணமாம் போது –விசித்திர ஞான சக்தி உக்தனாய் -சங்க சக்ராதி திவ்யாயுத தரனான
ஸர்வேஸ்வரனே காரணம் ஆக வேணும் என்னும் அநு மானத்தாலே-ஜகத் காரண வஸ்துவை நிர்ணயியா நின்று கொண்டு
-சர்வ சேஷியான சர்வேஸ்வரன் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமாக வாசிக கைங்கர்யம் செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

தகளி – என்றும் -விளக்கு -என்றும் – நெய்-என்றும் வர்ணிக்கிற படி எங்கனே என்னில் -ஜகத்தானது –ச அவயத்வாத்-கார்யம் என்னக் கடவது –
கார்யமாவது கர்த்ருமத்தாகக் கடவது -அந்த கர்த்தா சங்க சக்ர கதாதரன் என்கிறது –
சாஸ்திர யோநித்வாத்-என்று ஆநுமாநிகரை சாஸ்திர காரர் தூஷிக்கச் செய்தே -இங்கு ஆநுமாநிகமாக கொள்ளும் படி எங்கனே -என்னில்
வேத சாஸ்த்ரா அவிரோதி நா -யஸ் தர்க்கேண அநு சந்தேத்தே ச தர்மம் வேத நேதர -என்று வேத சாஸ்த்ரங்களோடு
விருத்தமான தர்க்கம் நிஷேதிக்கப் படுகிறது -அவிருத்தமானது ஸ்வீகரிக்கப் படும் என்று சொல்லுகையாலே
அது தர்க்கமாகக் கொள்ளுகிறது -நியாயா அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ்ய அர்த்த நிஸ் சாயகத்வாத்-என்கிறபடியே –

வையம் தகளியா –ச அவயவுமாய் -காரியமும் ஆகையால் -வையம் தகளி-என்கிறது –
வார் கடலே நெய்யாக-வார் கடல்-சூழ்ந்த கடல்-/ பூரணமான கடல் என்னவுமாம் -நதியினாலே ஜலம் புகுந்தது என்று
பூர்ணமாகாது இருக்கையாலும் -இல்லை என்று குறையாது இருக்கையாலும் -பூமிக்கு உயர்ந்து இருக்கச் செய்தே
பூமியை அழிக்க மாட்டாமையாலும் -கார்யம் -என்று தோற்றுகையாலே -நெய்யாகக் கொள்ளுகிறது –
வெய்ய கதிரோன் விளக்காக -முப்பது நாழிகையில் ஒரு நாழிகை குறையவும் ஏறவும் நிற்கப் போகாமையாலே-
-பீ ஷோ தேதி ஸூ ர்ய -என்று ஈஸ்வர கார்ய பூதன் என்று தோற்றுகையாலே விளக்கு -என்று சொல்லிற்று –
-தன்னையும் காட்டி -ஈஸ்வரனையும் பிரகாசிப்பிக்கையாலே -வெய்ய கதிரோன் என்று விளக்கினுடைய ஸ்தானத்தில்
சொல்லுகையாலே -இப்படி சகலத்துக்கும் அவன் சேஷி -சகலமும் அவனுக்கு கார்யதயா சேஷம் என்று அறிந்தால்
செய்ய அங்குத்தைக்கு அசாதாரண பரிசர்யை பண்ணும் படி சொல்கிறது மேல்
செய்ய சுடர் ஆழியான் -செய்ய சுடர் என்றது ஸ்யாமமான திருமேனிக்கு பகைத் தொடையாய் இருக்கை –
இத்தால் -நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம-என்கிற பக்ஷத்தைத் தவிர்க்கிறது -/ இதர ஆயுதங்களை யுடைய தேவதாந்த்ரங்களையும் தவிர்க்கிறது
/ அடிக்கே -என்று விக்ரஹ வத்தையைச் சொல்லுகிறது -ஆதி என்றதால் தம்முடைய சேஷத்வம் சொல்லுகிறது
அடிக்கே சூட்டினேன் சொன்மாலை–பரிமளம் மாறாத மாலையைச் சூட்டினேன் -சொல் தொடை -என்னுமா போலே
இடர் ஆழி நீங்குகவே யென்று -இடர்க்கடலானது வற்ற வேணும் என்று -தாபா த்ரயத்தாலே தப்தரானவர்கள் இதைக் கற்று
தம் வழியே போந்து இடர்க்கடலை பிழைப்பார்கள் என்று -அன்றிக்கே அவனைப் பேசப் பெறாத தம்முடைய இடர் போக என்றுமாம் –

மற்றை ஆழ்வார்களில் இவர்கள் ஞான பிரதராய் -பர தசையோடு -உக்காந்து அருளின நிலங்களோடு வாசி அற கடல் கோத்தால் போலே
இவர்களுடைய பக்தி எங்கும் ஓக்க வியாபித்து இருந்ததே யாகிலும் -கிண்ணகத்தில் ஆறு எங்கும் ஓக்க பரந்து வாரா நிற்க
-நீருக்கு ஓர் இடத்திலே நோக்கமாப் போலே -திரு வுலகு அளந்து அருளின இடத்திலும் -திருமலையிலும் ஊன்றி இருக்கும் –
-இவர்கள் பேயரே எனக்கு யாவரும் -என்னுமா போலே சம்சாரிகளோடு பொருந்தாமையாலும் -ஸ்தாவரங்களுக்கு
விபரீத ஞானம் இல்லாமையாலும் அவற்றோடு பொருந்தி காடுகளில் வர்த்திப்பார்கள் -யத்ர சாயங்க்ருஹராய் அஸ்தமித்த இடத்தே
உறங்கி ஒருவரை ஒருவர் அறியாமல் திரியா நிற்பார்கள் -இவர்களைக் கூட்டி இவர்கள் தன்னை அனுபவித்து
ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு –வழிந்த சொல்லாலே தானும் ஜகத்தும் வாழ வேணும் என்னா நின்றான் எம்பெருமான்
யாதிருச்சிகமாக ஒரு இடை கழியிலே பெரும் காற்றும் மழையும் கண்டு புக்கு ஒருவர் கிடக்க மற்று ஒருவர்
-ஒருவர் கிடக்கிற இடம் இருவருக்கு இருக்கலாம் -என்றார் -மற்றையவர் -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கலாம் -என்றார்
-இவர்களை எம்பெருமானும் பிராத்தியும் புகுந்து நெருக்குகிறார்கள் –
வாசல் கடை கழியா யுட் புகா -இவர்கள் சம்பந்தம் இல்லாத புறம்பும் உள்ளும் காட்டுத் தீயோடு ஒக்கும்
-நம்மை ஒழிய நெருக்கினாரை அறிய ஒரு பிரகாசம் வேணும் என்ன உண்டாக்குகிறார் இவர்களில் ஒருவர் –
பதிம் விஸ்வஸ்ய -என்கிறபடியே ஸ்ரீ யபதியே ஜகத்துக்கு நிர்வாஹகர் என்கிறார் ஒருவர் -விஷயத்திலே ஈடுபட்டு
பக்தி ரூபமான விளக்கு ஏற்றினார் ஒருவர் –அது உடையோருக்கு அவன் காட்டக் காணும் வடிவை சாஷாத் கரித்தார் ஒருவர்
-ஞான பக்தி சாஷாத் காரங்கள் மூன்றும் அடைவே ஒருவருக்கு பிறந்ததானாலோ என்னில் -ஒண்ணாது
-வ்யாகரணத்துக்கு மூன்று கர்த்தாக்கள் யுண்டானால் போலே மூவரும் கூடி இவ்வர்த்தத்தை நிலையிட்டார்கள்
-அநுமான முகத்தாலே இழிகை தரிசனத்துக்கு விருத்தம் அன்றோ என்னில் வேத சாஸ்திர விருத்தமான அநு மானம் இங்கே தவிருகிறது-
ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத சாஸ்திர அவிரோதி நா யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத நே தர -என்று
சாஸ்திரத்தோடே சேரும் அநு மானம் இ றே இது
ச அவயத்வாத் கார்யம் -கார்யம் விசித்திரம் ஆகையால் கர்த்தாவும் ஆச்சர்ய சக்தி உக்தனாக வேணும் –
வையம் தகளியா -பூமி கடனை யாகையாலே தகளி யாக்கிற்று
வார் கடலே நெய்யாக-திரவ த்ரவ்யமாகையாலே நெய்யாகக் கொண்டது
வெய்ய கதிரோன் விளக்காக -தேஜோ பதார்த்தம் ஆகையால் விளக்காகக் கொண்டது –
இம் மூன்றும் பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம்

வையம் தகளியா-பெரிய வெள்ளத்திலே ஒரு கழல் மிதக்குமா போலே பூமி ஜலத்திலே நிற்கும் போது இதுக்கு ஓர் ஆதி வேண்டாவோ
வார் கடலே நெய்யாக-பூமியை அபி பவியாதே நிற்கும் போது ஓர் அடி வேண்டாவோ –
வெய்ய கதிரோன் விளக்காக –முப்பதில் ஓன்று ஏறுதல் குறைதல் செய்யாத போதே -பீ ஷோ தேதி ஸூ ர்ய -ஆக வேண்டாவோ
-யஸ் சர்வஞ்ஞா -இத்யாதிகளில் சொல்லுகிறவனாக வேண்டாவோ –
இதுக்கு ஒரு நாதன் உளன் என்று இருந்தால் அடிமை செய்ய வேண்டும் –
-செய்ய-சுடர் ஆழியான் –ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் ஜகத்தில் ஏக தேச சம்பந்தம் உண்டே என்னில் -அத்தை வ்யாவர்த்திக்கிறது
-ரூபாதிகள் இல்லை என்னும் வாதிகளை நிரஸ்தராக்குகிறது
அடிக்கே -பிராட்டி அல்லீரே -முறை தப்பாத படி வேணுமே
சூட்டினேன் சொன்மாலை–யாதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை மாறுபாடுருவப் பேசி பண்டு அல்லாத அழகும் உண்டாக்கினேன்
இடர் ஆழி நீங்குகவே யென்று —என்னை உளன் ஆக்குகைக்காக சொல்லாது இருக்கை இடர் -இடரார் படுவார் -இத்யாதி வத்
–குணத்தை அனுசந்திக்கிலும் பிரகாரி பர்யந்தமாய் இருக்கும் இவர்களுக்கு –
மாறனேர் நம்பி -எம்பெருமானை மறக்க விரகு இல்லையோ -என்றாராம் -ஜகத்தின் இடர் தீருகை அர்த்தாத் சித்தம் –

————————————————————

காடின்யவான் யோ பிபர்த்தி-ஜெகதே தத சேஷத -சப் தாதி ஸம்ஸரயோ வ்யாபீ தஸ்மை பூம்யாத்மனே நம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-28–
என்கிறபடியே பகவத் சங்கல்பாயத்தமான காடின்யத்தை யுடைத்தானா பிருத்வியானது –மேல் நெய்யும் திரியுமாக ரூபிக்கப் படுகிற
வஸ்துக்களுக்கு ஆதாரமான தகளியாகவும் -அந்த பிருத்வியை சுற்றும் சூழ்ந்து -த்ரவ்ய ஸ்வபாவமாய்
-தேன ச க்ருத சீமா நோ ஜலாசயா -என்கிறபடியே பகவத் ஆஜ்ஜையாலே கரையை அதிக்ரமியாமல் அதுக்குள்ளே அடங்கிக் கிடக்கிற
கடலின் நீரான அம்சமானது -மேல் யேற்றப் போகிற விளக்கை உத்தர உத்தர ஒளி வீட்டுக் கிளரப் பண்ணும் நெய்யாகவும் –
-கிரண முகேன கிரசிக்கப் பட்ட ஜலத்தாலே அபிவ்ருத்தமாய் -பிரதாப உத்தரமான கிரணங்களை யுடையனாய் –
-பீ ஷோ தேதி ஸூ ர்ய-என்கிறபடியே ஈஸ்வர ஆஜ்ஜைக்கு நடுங்கி வட்டம் உதிப்பதும் அஸ்தமிப்பதுமாகத் திரியக் கடவ
ஆதித்யன் அர்த்த பிரகாசகமான விளக்காகவும்
இருளன்ன மா மேனிக்கு எம் இறையோர் -பெரிய திரு -26- விளக்கு ஏற்றினால் போலே பகைத் தொடையாக சிவந்த ஒளியை யுடைய
திரு வாழி யாழ்வானை நிரூபகமாக யுடைய சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறாத
என்னுடைய துக்க சாரமானது விட்டு நீங்கும் படியாக -தத் குண சேஷ்டிதங்களை உள்ளீடாக வைத்து தொடுத்த
நிரதிசய போக்யமான சப்த சந்தர்ப்பங்களை அவற்றுக்கு அலங்காரமாம் படி சாதரமாக சமர்ப்பித்தேன் –
இவ்விஷயத்தை அறியப் பெறாமல் அஸத் கல்பராய் நோவு படுகிற சம்சாரிகளுக்கு பரவஸ்து வாஸ்தவ ப்ரகாசகமான
இப் பிரபந்த அப்யாஸ முகத்தாலே-அனந்த கிலேச பாஜகமான சம்சார சாகரம் வற்ற வேணும் என்று சொன்மாலை சூட்டினேன் -என்றுமாம் –
இப்படி விசித்திர பிரபஞ்ச நிர்மாண அநு குணமான ஞான சக்த்யாதி குண வைச்சித்ராதி யுக்தனான ஸர்வேஸ்வரனே
ஜகத் காரணம் என்னும் அனுமானத்தாலே காரண வஸ்துவை நிர்ணயித்தார் யாய்த்து –

ஆர்ஷம் தர்ம உபதேசஞ்ச வேத சாஸ்திர அவிரோதி நா யஸ் தர்க்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத நே தர -என்று
வேத சாஸ்திரத்தோடே விருத்தமான தர்க்கத்தை அழித்தது-
அவிருத்தமான தர்க்கத்தை சுவீகரிக்கையாலே இங்கும் அப்படி விரோத பிரசங்கம் சொல்ல இடம் இல்லை –
ந்யாயான் அநு க்ருஹீ தஸ்ய வாக்யஸ் யார்த்த நிஸ் சாய கத்வாத் -என்று இ றே ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
பிருதிவ்யாதி காலாலே லீலா விபூதியை உப லஷிக்கிறது -சுடர் ஆழி -என்று நித்ய விபூதிக்கு உப லக்ஷணம்
-அடிக்கே என்று திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு உப லக்ஷணம் -இப்படி ஸ்வ பக்ஷத்தை சிஷிக்கவே
-ஸூ ந்யமே தத்வம் -என்றும் -நிர் விசேஷ வஸ்துவே தத்வம் என்றும் -விசேஷனாந்தர விசிஷ்டமே தத்வம் என்று
சொல்லப் படுகிற பர பக்ஷங்கள் அர்த்தாத ப்ரதிஷிப்தங்கள் –

——————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பாவை — கனைத்திளம் கற்று எருமை – — வியாக்யானம் .தொகுப்பு –

August 18, 2015

அவதாரிகை
கிருஷ்ணனைப் பிரியாமல் –இளைய பெருமாளைப் போலே இருப்பான் ஒருவன் -தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய்
இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
இப்பாடலில்–பாகவத அபிமான நிஷ்டரை எழுப்புகிறார்கள்-

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –
நற் செல்வன் தங்காய்-
பால் சேறாக கறவாமல் -நோற்று ஸ்வர்க்கம் -வாழும் சோம்பர் செய்த வேள்வியர் கற்று கறவை -கறந்து ஜாதி உசித அனுஷ்டானம்
இங்கே கறவாமல் -தானாக விட்டு போனதே -அந்தரங்க கைங்கர்யம் -கர்ம அனுஷ்டானம் அவகாசம் இல்லாமல்
பெரிய கோயில் -க்ரஹனம் -ஆரம்பம் தொடக்கி முடியும் வரை திரு மஞ்சனம் சேர்த்து –
அரையர் -பட்டர் -ச்தாநீகர் -அர்ச்சகர் -கிரகண தர்ப்பணம் -எப்பொழுது செய்வார்கள் – முடிந்த பின்பு பின்னால் செய்வார்கள் –
பிடிக்கும் பொழுது நடுவில் செய்ய முடியாதே தேவதாந்தர –கைங்கர்யம் – அத்தாணிச் சேவகத்தில் பொதுவானவை நழுவும்
ஆஸ்தானம் சேவகம் நழுவும் -விடுவான் சொல்ல வில்லை உறங்குவான் கைப் பண்டம் போலே தன்னடையே நழுவும் -மா முனிகள்
கைங்கர்ய பரருக்கு உபவாசமே வேண்டாம் – கோவலர் பன்மை கீழே நற் செல்வன் -ஒருமை விசேஷ வ்யக்தி இவன்

செல்வம்-கைங்கர்யம்–அந்தரிஷ கத ஸ்ரீ மான் லஷ்மண சம்பன்னன் கஜேந்த்திரன் போலே –
சாமான்ய தர்மங்கள் விட்டு அந்தரங்க கைங்கர்யம் எம்பெருமானை பற்றி இருப்பது வேற எம்பெருமானுக்கு கைங்கர்யம் வேற –
பெரிய திருநாளிலும் சந்த்யா வந்தனம் விடாதவர் – கண்ணனை கட்டிப் போட்டு யசோதை கார்யம் செய்தாள் –
இளைய பெருமாளை போலே -கிருஷ்ணன் பின்னே சென்று அவனை அல்லது அறியாதே -அவனுக்கே பரிந்து
தோழன் மார் -சுரி கையும் தெறி வில்லும் செண்டு கோலும் -மேலாடையும் ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி -நற் செல்வன் –
ஸு தர்மத்தை அனுஷ்டித்த -கீழ் இங்கு ஸு தர்மம் விட்டவன் – அவர்கள் உடைய அனுஷ்டானமும் இவன் அஅனுஷ்டானமும் உபாய கோடியில் சேராது –
தேவதாந்தர பஜனம் -எம்பெருமான் திருவடி கைங்கர்யம் ஒன்றே கேட்க வேண்டி இருக்க -அவன் இடம் தானே கேட்க வேணும்
அல்ப அஸ்த்ர பலன் உதாசீனம் பண்ண வில்லை நமக்கு கார்யம் இல்லை அங்கே–எம்பெருமான் அனுமதி தான்
உபேயம்-தானே உபாயம்- விடுவித்து பற்றுவிக்கும்  –அவனே உபாயம் நஞ்சீயர் ஸ்ரீ ஸூ க்தி விடுகையும் பற்றுகையும் உபாயம் இல்லை-

ஜாதி ஆஸ்ரமம் தீஷை கர்மங்கள் நழுவும் கொண்டிப் பசுவுக்கு தடி கட்டுவாரைப் போலே – சமிதா தானம் -அக்னி கோத்திரம் -ஆஸ்ரமம் மாறி
தீஷா காலத்தில் வேற அனுஷ்டானம் தீட்டு இல்லை தீஷா காலத்தில் காப்பு கட்டிக் கொண்டால் தீட்டே இல்லை
காப்பு அவிழ்த்து வைத்த உடன் தீட்டு வரும் மூன்றும் ஒரே -வ்யக்தி இடம் இருக்குமே-

வியாக்யானம் –
கனைத்து-
கறப்பார் இல்லாமையாலே–முலை கடுத்து கதறுகை –
ஸ்வாசார்யன் தனக்கும் ஸ்வ சந்தானத்துக்கும் பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று வியசனப் பட்டு –
கனைத்து
கறக்க வில்லை–வேதனையால் கனைக்கிறது–உதாரார் கொடுக்கா விட்டால் கதறுவது போலே –
வள்ளல் பெரும் பசுக்கள் –
ஆஸ்ரிதர் -ரிணம் பிரவர்தம் -கோவிந்தா குரலுக்கு -செய்ய வில்லையே எல்லாம் செய்த பின்பு – வாசலிலே கன்று காலியாய் நான் பட்டதோ
குமுறி – இளைய பெருமாளுக்கு அக்னி கார்யம் அன்வயம் ஆகும் பொழுது இவன் கறப்பான்-
கிருஷ்ணனை பிரிய மாட்டாமையாலே சாஸ்திரம் -ஒத்து கொள்ளுமா பக்தி யோகம் -தைல தாராவது –
தபஸ் – நித்ய கர்மாநுஷ்டானம் உண்டா இப்படிப் பட்டவனுக்கு -பிரேமத்தால் பிரிய மாட்டாதவன் –
ஆலச்யத்தால் விட கூடாது – தொல்லை மால் நாமம் ஏத்தவே பொழுது – ஈக்காடு தாங்கல்-இரவு 1 மணி கிளம்பி மத்யானம் —
கெடும் இடர் ஆயன வெல்லாம் கேசவா – சந்த்யா வந்தனம் – யமன் கணக்கு எழுதுவானோ -பட்டர் –
இவன் தன்னை நேராக விட்டிலன் கர்மம் கைங்கர்யத்தில் புகும்

இளம் கற்று எருமை-
இளம் கன்றாகையாலே பாடாற்றாமை –பால சந்தானமுடைய சிஷ்யர்
கறவா மட நாகு -தன கன்று உள்ளினால் போலே வெறுத்து வார்த்தை திருமங்கை ஆழ்வார் மறவாது அடியேன் உன்னையே அமுதனார் –
தாய் பசு -ஆழ்வார் எம்பெருமான் -கன்று விபரீதம் பட்டர் -நாகு தன் கன்று –சேர்த்து நாகு தன்னுடைய கன்று இல்லை –
தர்க்கம் பட்டர் -விதுஷா அன்னம் பட்டேன் பாதம் கூட வில்லை -7 திருப்பி போட மனைவி சொல்ல -தோசை செய்து கொண்டே அன்னம் பட்டேனே விதுஷா
முலைக் கடுப்பு வேதனை விட கன்றை நினைந்து -இரங்கி ஏழை எதலன் கீழ் மகன் இரங்கினால் போலே
கோபிகள் கன்று ஸ்தானம் வாசலில் -கறவாத எருமை ஸ்தானம்

கன்றுக்கிரங்கி –
தன் முலைக் கடுப்பு கிடக்க – கன்று என் படுகிறதோ -என்று இரங்கி –
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்கும் படிக்கு நிதர்சனம் இ றே
இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
அவன் எருமைகள் கறவா விட்டால் அவை படும் பாட்டை நாங்கள் உன்னாலே படா நின்றோம் -என்கை
ஸ்வ சந்தானத்திலே தயை பண்ணி –

நினைத்து முலை வழியே நின்று பால் சோர
கன்றை நினைத்து பாவன பிரகர்ஷத்தாலே முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்—மீன்  -பார்வையாலே -/ பறவை- ஸ்பரிசத்தால் /ஆமை நினைத்த மாத்திரத்தாலே போஷணம் -என்பர் தேசிகர் சங்கல்ப ஸூர்யோயதத்தில் –
முலை வழியே – கை வழி தவிர – நின்று பால் சோர – நினைவு பாராமையாலே
திருமலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே சொரிகை
இவன் எருமை கறவாமை ஒழிவது என் என்னில் இளைய பெருமாள் ஷத்ரிய தர்மமான அக்னி கார்யத்துக்கு உறுப்பாம் அன்று இறே
இவன் எருமைகளை விட்டுக் கறப்பது அது என் என்னில் கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அல்லாமையாலே பிராப்ய விரோதிகளில் நசை அற்ற படி யாகவுமாம்-
நினைத்து-ஸ்வா சார்யன் தன்னை அதிஷ்டித்துக் கொண்டு ஸ்வ சந்தானத்துக்கு பகவத் குணாநுபவம்பண்ணுவித்து அருளுகிறான் -என்று நினைத்து –
பாவன பிரகர்ஷத்தாலே ஸ்வாசாரய அபிமானம் ஈடாக பகவத் குணங்கள் சுரக்க –

நினைத்து -தானே பால் பொழிய – கஜேந்த்திரன் நினைக்க பாகவதா த்வராயா நம-வேகத்துக்கு நமஸ்காரம்
அவன் வேகம் போலே பால் சொரிய மனசா சிந்தயந்தே ஹரிம் நினைத்த பாவனா பிரகர்ஷத்தால் கன்று வழியே இன்றி பாத்ரம் வழியே அன்றி
முலை வழியே நின்று பல் சோர –மேகம் கடலில் சென்று புக்கு வர்ஷிக்க வேண்டும் நினைவு மாறாமல் திரு மலை அருவி போலே
திருமலை -சப்தம் பேயாழ்வார் -இரண்டு பாசுரம் -மற்றவர் திருவேம்கடம் திருமலை -திருக் குறும் தாண்டகம் காட்டி
திருமலை அதுவே சார்வு -நம் ஆழ்வார் திரு மால் இரும் சோலை – ஆழ்வார் தீர்த்தம்-இப்பொழுது கபில தீர்த்தம்
பெரிய ஜீயர் மடம் அருகில் ஒரு நம் ஆழ்வார் பகவத் விஷயம் தனது செல்லாமையால்
அர்ஜுனன் கேளாமல் பூயயோகோ மகா யோ ஸ்ருனு-18 அத்யாயம் 700 ஸ்லோகம் –மறுபடியும் சொல்கிறேன் – எடுப்பும் சாய்ப்புமாக –
கரிஷ்யே வசனம் தவ -நீ சொன்னதை கேட்கிறேன் சொல்வதை நிறுத்து
பால் வெள்ளம் இல்லம் சேறாக்கும் மேட்டிலும் கடலை அகழி
படகு கட்டி -சேற்றுக்கு அடைப்பு போட்டு-காலில் தடவி சேற்று புண் வராமல்மிருக்க
கண்ண நீர் –அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் பொன்னி நீர் போலே –பால் சோறு அப்புறம் இங்கே பால் சேறு – கர்மம் ஐஸ்வர்யம் அந்தவத் தேதான்தரர் மூலமும் அந்தவத்
இளைய பெருமாள் ஐஸ்வர்யம் -நற் செல்வம் நிரந்தர சேவை போல கைங்கர்ய ஸ்ரீ பிராப்ய விரோதி -தோற்றி மாறி -இம்மையிலே தாம் பிச்சை கொள்வர்
ஒரு கையால் ஒருவன் தன் தோளை தன்னை போல் அவன் பேரே தாரே பிதற்றி – தெனாச்சார்யா சபை 70 பேருக்கு சந்தை சொல்லி –
எம்பெருமான் அனுக்ரகம் தான் காரணம் ஊர் அவிசேஷஞ்ஞர் நாடு விசேஷஞ்ஞர் திருவாய்ப்பாடி சீர் மல்கும் ஆனது இவனால்

தங்காய் –
ரஷ்ய வர்க்கம் நோக்காமல் -ஜன்ம சித்தம் ராவணச்ய அனுஜோ பிராதா விபீஷணன் பின் பிறந்த தம்பி -அதே கர்ப்பத்தில் இருந்தேன் -நிகர்ஷம்
நீ நற் செல்வன் தங்காய் திரிஜடை-அவன் பெண் – பிராட்டிக்கு அடிமை செய்து நீ கைங்கர்யம் செய்ய வேண்டாமா எனக்கு-
விபீஷணன் கன்னிகா -அனலா முத்த புத்ரி –
கிருஷ்ணன் ரஷ்யம் என்றால் நாங்களும் அந்தர்பூதர் மேலே வர்ஷம் பனி வெள்ளம் கீழே பால் வெள்ளம்-
தண்டியம் பிடித்து தொங்கி இருக்கிறோம் பிராப்ய பூமியில் இங்கே ஐஸ்வர்யம் இனியே அங்கே தேட போவது
ஈஸ்வரன் அபிநிவேசம் அறியும் அளவும் பேசாதே கிடந்தாள் விடுகை விள்ளாமை விரும்பி -பாசுரம் –

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியாலே அகம் வெள்ளம் இடும் – அத்தாலே துகை உண்டு சேறாகும்
இத்தால் சேறாகையாலே புகுர ஒண்கிறது இல்லை -என்கை
ஸ்ரோத்தாக்கள் உடைய ஹிருதயத்தை சம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிரப் பண்ணி – குணானுபத்தாலே களிக்கும்படி பண்ணுகிற –

நற்செல்வன் –
தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து – அதாகிறது -கிருஷ்ணன் திருவடிகளில் நிரந்தர சேவை
லஷ்மணா லஷ்மி சம்பன்ன போலே கைங்கர்ய லஷ்மி இ றே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –
லஷ்மி சம்பன்ன -என்றது ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி
தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை -ஸ்லாக்கியமான சம்பத்தை உடைய பாகவதன் உடைய

தங்காய்-
குணத்துக்கு தமையனில் தன்னேற்றமுடையவள் -என்கை –
நற்செல்வன்
உன்னுடன் பிறந்தவன் ரஷ்ய வர்க்கங்களை நோக்கினால் அன்றோ நீயும் ரஷ்ய வர்க்கங்களை நோக்கப் போகிறாய்

பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்-
மேல் வர்ஷம் வெள்ளம் இட – கீழ் பால் வெள்ளம் இட – நடுவு மால் வெள்ளம் இட நின்ற நிலை யாகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே நின் வாசல் கடையில் தண்டியத்தைப் பற்றிக் கிடக்கிற இந்த தர்மஹாநி அறிகிறிலை –
பனியானது தலை மேல் சொரிய–அதாவது–மயர்வற மதிநலம் அருளப் பெற்ற–ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ சூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம் –
கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும் பகவத் குணானுபவ பிரவாஹம் என்ன – மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய-அருளிச் செயலால் வரும் குணானுபவ பிரவாஹம் என்ன – நடுவே பாகவத குணானுபவ பிரவாஹம் என்ன –
இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம் உனக்கு பிரதிபாதகமான நமஸிலே த்வாரவர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி-
கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற நகாரத்தைப் பற்றி என்றபடி -இப்படி சொன்ன இடத்திலும் இவர்கள் படும் அலமாப்பு காண்போம்

சினத்தினால் –
பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழிய பெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்
இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –
சினத்தினால் –
தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் – ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இ றே
மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார் அவர் அழுத போது கூட அழுதார் இ றே –
கோபத்தினாலே யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான அஹங்காரத்தை நசிப்பித்து

சினத்தினால் தென் இலங்கை -ராமனை பாடும் பொழுது சேர்க்கை -கிருஷ்ணன் நாமம் சொல்லி
பெண்களை நெஞ்சாரல் -தீரா -எரிச்சல் – ராமன் நினைத்தால் நெஞ்சு சில்லாகும் உண்ணாது உறங்காது –
பெண்ணை பிரிந்தால் படு பாடு படுவான்–ராம விருத்தாந்தம் சொல்லி ஆஸ்ரித விரோதி போக்குவது தனது பேறாக-தனது கோபம் தீரும் படி –
சினத்தினால் – ராமனுக்கு சினம் உண்டோ ஜித குரோத கக- திருவடி மேலே அம்புபட்ட பொழுது சீறினார்-மனத்துக்கு இனிய சினம் -பகவான் இடம் இருந்து -ஹிதம் அருளி நம்மை நியமித்து அருளுவான் -சீறி அருளாதே -என்பார்களே –
தம் மேல் அம்பு பட்டால் அமைதி கோபம் வசம் -ஆனார் – நீரிலே நெருப்பு எழுந்தால் போலே –
வர்ஷம் காண -கோபமிட்ட வழக்கு திருவடி ராவணன் அம்புக்கு வசப்பட்டது போலே
மகாராஜர் சிற்றம் வாலி அவன் அழ இவரும் அழுது – பையல் செய்த பாபம் திக்கும் தென்னிலங்கை கோமானை -திருவடி மதித்த ஐஸ்வர்யம் தென் -இனிமை -அழகு-திருவடி -அகோ வீர்யம் அகோ தைர்யம் மதித்த ஐஸ்வர்யம்-

செற்ற
படை புத்திர பௌத்ர அரக்கர் தம் கோன் போலும் அஹங்காரம் அழித்து-
பட்டர் அனுபவம்
தாம் போலும் -என்று எழுந்தான் -கோன் போலும் – இயலை ஒரு தடவை கேளா –
சந்தை கூட சொல்லிக் கொள்ள வில்லை – ராவணன் வார்த்தை காண் என்று விட்டார் –
தான் போலும் -தாரணி யாளன்
மனிஷா பையல் -தான் என்று யுத்தம் வர அரக்கர் கோன் பூ பறித்தால் போலே இருப்பேனா -என்று எழுந்தவன்
அஹங்காரம் மனத்து இனியான் செற்ற காலத்தில் இன்று போய் நாளை வா சொன்ன இனிமை –
சசால சாபஞ்ச -முமோஷ வில்லையும் கீழே போட்டான் வெறும் கை வீரன் ஆனான் –
சிங்கம் கண்ட யானை கருடன் கண்ட பாம்பை போலே ஆனான்
இரவுக்கு அரசன் தூக்கம் வராது கையும் வில்லுமாகா கையும் அஞ்சலியுமாக வர வேண்டுமா
திருவினைப் பிரிந்த கடு விசை அரக்கன் – செற்ற காலத்தில் மனத்துக்கு இனியான்
பெண்களை ஹிம்சை கண்ண நீர் அடிக்கும் தீம்பன் இல்லை சத்ருக்களுக்கும் கண்ணநீர் பெருக்கும் கண்ணன் நாமமே குளறிக் கொன்றீர்
மிருத சஞ்சீவனம அனந்தாழ்வான் -திருவேம்கடத்தான் எம்பெருமானார் -வடுக நம்பி நம் ஆழ்வார் உயிர்க்கு அது காலன் –
பட்டர் ராம அவதாரம் போர பஷித்து – வேம்பே ஆக வளர்த்தாள் -பெற்ற தாயையும் குற்றம்
கௌசல்யா சுப்ரஜாராம் உண்ண புக்க வாயை மறந்தால் போலே பாடவும் -உம்மை

செற்ற –
ஓர் அம்பால் தலையை தள்ளி விடாதே படையைக் கொன்று தேரை அழித்து ஆயுதங்களை முறித்து
தான் போலும் -இத்யாதி -கோன் போலும் என்று எழுந்து கிளர்ந்து வந்த மானத்தை அழித்து நெஞ்சாரல் பண்ணிக் கொன்ற படி –

மனத்துக் கினியானைப் –
வேம்பேயாக வளர்த்தால் -என்னும்படியாக பெண்களை படுகுலை யடிக்கும் கிருஷ்ணனை போலே அன்றிக்கே
ஏகதார வ்ரதனாய் இருக்கை – பெண்களை ஓடி எறிந்து துடிக்க விட்டு வைத்து பின் இரக்கமும் இன்றிக்கே இருக்கும்
கிருஷ்ணனை ஒழிய சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாயுமவனை என்றுமாம் -அத ஏவ மனத்துக்கு இனியானை – சக்கரவர்த்தி திருமகனை –

பாடவும் -நீ வாய் திறவாய்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்-
எங்கள் ஆற்றாமை காண வேண்டும் என்று இருந்தாயாகில் கண்ட பின்பும் உறங்கும் இத்தனையோ – எழுந்து இராய்

நீ வாய் திறவாய் –
நீ வாய் திறக்கிறது இல்லை – ப்ரீதிக்கு போக்கு விட வேண்டாவோ –

இனித் தான் எழுந்திராய் –
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ – எழுந்திராய் –
உன்னுடைய மகிழ்ச்சிக்காக எழுந்து ஆர்த்திக்கு உணராவிடில் உனது பேற்றுக்கு இது என்ன பேர் உறக்கம் – வைதிக உறக்கம்
லௌகிக உறக்கம் 19 பாஷை பிறர் ஆர்த்திக்கு த்வரித்து – பனி பட்ட மூங்கில் போலே பர சம்ருத்தி ஏக பிரயோஜனம் –
உன் வாசலில் எழுப்ப இத்தால் வந்த மதிப்பு இனி தான் எழுந்திராய் –

யீதென்ன பேருறக்கம் –
பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவனுடன் பழகி வைத்து இங்கனே உறங்குவதே -என்கிறார்கள் –
ஆபன்னர்க்காக உணருமவன் படியும் அன்றிக்கே காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் படியும் அன்றிக்கே இருப்பதே உன்னுறக்கம் –
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் நித்தரை போலும் அன்றிக்கே
ஆஸ்ரிதர்கள் ஆர்த்தி உணர உணரும் ஈஸ்வரன் உடைய உறக்கம் போல் அன்றிக்கே உபய விலஷணமான இம் மகா நித்தரை ஏது –
சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே சத்த்வதோரமான காலத்தில் தீருபடியாய் இருக்கும் –
ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷணசிந்தா ரூபம் ஆகையாலே பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும் –

அனைத்தில்லத்தாரும் அறிந்து
பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில் எல்லாரும் அறிந்தது –
இனி எழுந்திராய் பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை – புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தம் என்றுமாம் – எம்பெருமானார் திரு அவதரித்தாப் போலே காணும் இப் பெண் பிள்ளையும்

பால் வெள்ளம் பனி வெள்ளம் மால் வெள்ளம் –மூன்றும் –
சரபம் சலபமானதே கூரத் ஆழ்வான் 19 புராணம் சரபேஸ்வரர் கல்பனை விட்டில் பூச்சி -பிரத்யங்கா தேவி சரபம் கோபம் குறைக்க
மதி விகற்ப்பால் அவரவர் தமதம தறிவகை–17 பரமத கண்டனம் ஸ்ரீ ய பதி-நம்பிள்ளை – பாஹ்யர் -11குத்ருஷ்டிகள் -6 சங்கர பாஸ்கர -தங்கள் மதம் –
கணங்கள் பல ஒரே கோவலன் -பர ஸ்வரூபம் ஒன்றே – அர்த்த பஞ்சகம் -உள்ளே உள்ளே பிறிவு உண்டே
சிபி சக்கரவர்த்தி 3700 ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைத்து -திரு வெள்ளறை-திவய தேசம் – ஆடுக செங்கீரை பதிகம் –
ஸ்வதிகா திருக் குளம் -வராக ஷேத்ரம் -ரிஷி தபஸ்- யுகமாக -அரசன் வர காட்சி
பாலால் புற்றில் அபிஷேகம் வடக்கே குடி ஏற்ற ஆணை – என்னையும் சேர்த்து 3700 தானே இருந்து நடத்தில்-திருச் சித்ர கூடம் – சில்லி காவல் ஸ்ரீ மூஷ்ணம் காவல் தெய்வம் இன்றும் தில்லி தில்லிகா வனம் தில்லை நகர்
தஞ்சகன் சகோதரிகள் இவர்கள் இருவரும் சித்ர கூடம் நாட்டிய அரங்கம் திருவடி ஸ்பர்சத்தில் ஆட்டம்
3000 அந்தணர் ஏத்த -குல சேகரர் -அரி ஆசானத்தே 16108 ஒரே பதி
56 படிக்கட்டு ஏறி கோமதி த்வாரகை 56 கோடி யாதவர்கள் 52 கஜம் நீல கொடி – 27 நஷத்ரங்கள் 12 ராசி நவ கிரகங்கள் நாலு நிலை கோபுரம்
7 நிலை விமானம் சப்த ரிஷிகள் ஒரே ஈஸ்வரன் நியமன சாமர்த்தியம் -உண்மையான சொத்து கல்யாண குண யோகம்

கீழ் பாட்டில் -கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து -என்று ஸ்வ வர்ண உசித தர்ம அனுஷ்டானத்தைச் சொல்லி
இப்பாட்டில் சொல்லாமையாலே அனுஜ்ஞா கைங்கர்ய நிஷ்டனுக்கு ஆஞ்ஞா கைங்கர்ய ஹானி ஸ்வரூப விரோதம் என்கிறது
இவன் எருமை கறவாமைக்கு இளைய பெருமாளை திருஷ்டாந்தமாக அருளிச் செய்து உபாயாந்தர த்யாகத்துக்கு பிரமாணமாக
ஐஸ்வர்ய கைவல்ய லாபங்களில் அபேஷை இல்லாதார்க்கு தத் சாதன அனுஷ்டானத்தில் அபேஷை பிறவாது என்னும் அபிப்ராயத்தாலே

அறிவு மாலை
அனைத்தில்லத்தாரும் அறிந்து –
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் -முதல் திருவந்தாதி -தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு –
சிற்றில் இளைத்தவன் கண்ணனாய் இருக்க சீதை வாய் அமுதுண்டாய் என்று சிற்றில் நீ சிதையேல் என்னலாமோ
வளையல்கள் துகில்கள் கைக்கொண்டு வேண்டவும் தாராதான் -கண்ணனாய் இருக்க இரக்கமே ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே -என்னலாமோ-

கனைத்து இளம் கற்று எருமை – ஸ்ரீ பெரும் பூதூரில் இரண்டு தடவை சேவிக்கும் பாசுரம்
நற் செல்வன் -ஸ்வாமி யை குறிக்கும் லஷ்மி சம்பன்ன -அஹம் சர்வம் கரிஷ்யாமி விபவம் போலே இவர் அர்ச்சையில் -நித்ய கிங்கரோ பவாதி
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் –
எம்பெருமானார் உகந்த பாசுரம் இதுவும் —பெரும்பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே-
பொய்கை ஆழ்வார் -இந்த பாசுரம் –
செல்வன் லஷ்மனோ லஷ்மி சம்பன்னன் -மண் வெட்டி கையில் இருக்கும் பொழுது – அந்தரிஷா கத ஸ்ரீ மான் -விபீஷண ஆழ்வான்
நாகவர ஸ்ரீ மான் -மூவரையும் சொல்லிய கைங்கர்ய செல்வம்
துஞ்சும் போது அழைமின் -துயர் வரில் நினைமின் – துயர் இனில் சொல்லில் நன்றாம் –இளைய ஆழ்வான் விபீஷண ஆழ்வான் கஜேந்திர ஆழ்வான் -எம்பெருமானார் -கைங்கர்யம் –
ஜாதி ஆஸ்ரம தீஷா தர்மங்களில் பேதிக்கும் போலே அத்தாணி சேவகத்தில் பொதுவானவை கை நழுவும்-புத்தி பூர்வகமாக இவன் விட வேண்டாம் உறங்குவான் கை பண்டம் போலே தன்னடையே நழுவும்
கனைத்து -உபதேசிக்க பெறாவிட்டால் -தரிக்க மாட்டாத ஆசார்யர்கள் -திணறி
நீரால் நிறைந்த ஏரி- பரபக்தி -பால் நெய் அமுதாய் -தானும் நானும் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் வாய்கரை -வழியே – ஞானாம்ர்தம்ம் –
பொய்கை ஆழ்வார்
நற் செல்வன் தங்காய் தாமரை பூவில் அவதரித்த சந்த மாமா -பாற்கடலில் லோக மாதா –பொய்கை-பூவில் ஆவிர்பாவம் -தமிழ் மறை செய்ய -நான்முகன் நாபி கமலத்தில்  போலே – தேக சம்பந்தம் -இளம் கற்று எருமை -லஷிய ளஷனை கழுக்காணி கண்ணன் புண்டரீகாஷன் –
சக்கரத்து ஆணி -வேங்கை மரம் -செடி புலி – புலிக்கு புண்டரீகம் நினைத்து
சுவாமிநாத ஐயர் தம் வாத்தியார் த்யாகராஜ செட்டியார் வடக்கு சித்ர வீதி குடி இருந்து –
இந்த அர்த்தம் கேட்டு உகந்தாராம் –
தங்கையான பார்வதி உடன் அமுது செய்ய வேனும் வேதம் ருத்ரனுக்கு
பகினி -சௌபாக்யவதி -அம்பிகையா சகா -தாவி தாவி அர்த்தம் –
எருமை மகிஷி தேவதேவ்ய திவ்ய மகிஷி -பொய்கை ஆழ்வார்
வனசமரு கருவதனில் பிராட்டி போலே தாமரை மலரில் அவதாராம் – இளம் கற்று எருமை முதல் ஆழ்வார்-முதலில் கனைத்து பேச ஆரம்பித்து – கன்றுக்கு இரங்கி நம் போல்வாருக்கு-கனைத்து முதல் முதலில் பேச-
இளம் -நம் போல்வார் நினைத்து
முலை வழியே கிருபை மூலம்
நின்று முதல்திருவந்தாதி
பாலே போலே சீரில்
கல்யாண குணங்கள்
பழுதே -அஞ்சி அழுதேன்
கண்ண நீர்
பனித்தலை
சக்கரவர்த்தி திரு மகன் -பூ மேய -நீண் முடியை பாதத்தால் எண்ணினான் – சரித்ரம் ஆமே அமரக்கு அறியா நாமே அறிவோம்
இனித் தான் –
மயர்வற மதி நலம் அருள பெற்ற பின் மறையின் குருத்தின் பொருளையும் அனைத்து இல்லத்தாரும் அதி கிருதா அதிகார்யம் இல்லை தமிழ் –

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் ஆழ்வார்களும் கண்ணனும் –

June 2, 2015

முதல் திருவந்தாதி

அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் -7
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் –11
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை யூன்றி
பொருது வுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும் மருதிடை போய் மண்ணளந்த மால் -18
கடை வெண்ணெய் உண்டாயை தாம்பே கொண்டார்த்தழும்பு-22
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவ -23
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப் பிணித்த நான்று -குரலோவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே ஒங்கோத வண்ணா வுரை -24
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று -கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்ந்தனவும் கார்க்கோடு பற்றியான் கை -27-
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆயத்தை முலை தந்தவாறு -34
வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர் -37-
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன்னஞ்ச-39-
அரவ மடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குடமுலை மற்குன்றம் கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்து கீண்டு கோத்தாடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் –54 –
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் –56
புனர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து மணமருவ மால் விடை யேழ் செற்று –62
வரைகுடை தோள் காம்பாக ஆ நிறை காத்து ஆயர் நிறை விடை யேழ் செற்றவாறு என்னே –83-
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -86
கனிசாயக் கன்று எறிந்த தோளான் கணை கழலே காண்பதற்கு நன்கறிந்த நா வலம் சூழ் நாடு –87-
திருமாலே ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –92-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே
ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை –100-

——————————————————————————————————————————————————–

இரண்டாம் திருவந்தாதி –

உகந்து உன்னை வாங்கி ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து –9
பெர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –10-
திரிந்தது வேஞ்சமத்துத் தேர் கடவி –15
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் வழக்கு என்று நீ மதிக்க வேண்டா
குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே பார் விளங்கச் செய்தாய் பழி–19-
கரியதோர் வெண் கொட்டு மால் யானை வென்றி முடித்தன்றே தண் கொட்டு மா மலரால் தாழ்ந்து –22
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எரிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்தடிக் கீழ்க் கொண்டவவன் -23
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனாற யுன்பன் என்று உண்டு
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை நீராக வெய்து அழித்தாய் நீ -29-
அறியாமை மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்னெஞ்சே இரு –36

ஆயவனே யாதவனே என்று அவனை யார் முகப்பும் மாயவனே என்று மதித்து –50-
ஏரின் பெருத்த எருத்தம் கோடொசியப் பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாய ரேறு –62
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில்
கதையும் திரு மொழியாய் நின்ற திருமாலே உன்னைப் பரு மொழியால் காணப் பணி –64-
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை யொசித்து–89-
அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும் படியான் கொடி மேல் புள் கொண்டான் –92
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள்ளொடுங்க
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை –98
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மேலால் விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு –100-

——————————————————————————————————————————————————————-

மூன்றாம் திருவந்தாதி –

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நங்கண் -8
மொய் குழல் ஆய்ச்சி இழுதுண்ட வாயானை மால் விடை யேழ் செற்றானை வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து –25-
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்கே அன்று மிடைந்தது பாரத வெம்போர்
உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப் பேய்ச்சி பாலுண்ட பிரான் -28 –
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே
வாய்த்த இருளார் திரு மேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியானைச் சேர்ந்து –29
மனமும் இடமாகக் கொண்டான் குருந்து ஒசித்த கோபாலகன் –32-
கேடில் சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–34-
மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ –41-
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -42-
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து புனமேய பூமியதனை தனமாகப் பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார் –43-
நீ யன்றே மா வா யுரம் பிளந்து மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –48-
சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -49-
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி ,மருதம் சாய்த்தான் அவனே கலந்கப் பெரு நகரம் காட்டுவான் –51
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி நீளா மருதிடை போய்க் கேழலாய் –54-
பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம் முற்றக் காத்தூடு போயுண்டுதைத்து
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு –60-
அரியுருவமாயப் பிளந்த அம்மான் அவனே கரியுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து -65-
மேல் நாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு -68
மேல் நாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –71
வெங்கொங்கை யுண்டானை மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன கொங்கை வாய் வைத்தான் சார்ந்து –74-
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய் செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார்
புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்கா ஏற்று இரையட்டான் எழில் –85
மன்னுண்டும் பேய்ச்சி முளையுண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு
ஆய்ச்சி கன்னிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன் –91-
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம் அவன் மகன் தன காதல் மகனை
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை –92-

—————————————————————————————————————————————-

பொய்கை ஆழ்வார் பூதத் தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-91-100–திவ்யார்த்த தீபிகை —

September 25, 2014

ஊனக் குரம்பையினுள் புக்கு இருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும்-ஏனத்து
உருவாய் உலகிடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்–91-

—————————————————————–

ஊனக் குரம்பையினுள் புக்கு
மாம்சத்தினால் ஆகிய
சரீரம் ஆகிற குடிசையில்
உள்ளே பிரவேசித்து
அதாவது
சரீரத்தின் தோஷம் எல்லாம் மனத்தில் படியும்படி
அதை நன்றாக ஆராய்ந்து
தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும்வேண்டா நாற்றமிகு உடல் –

இருள் நீக்கி
சரீரம் போக்கியம் என்று நினைக்கிற
அஞ்ஞானம் ஆகிற இருட்டைப் போக்கி

ஞானச் சுடர் கொளீஇ
தத்வ ஞானம் ஆகிற விளக்கை ஏற்றி
சுடர் கொளுவி
நாடோறும்-
நாள் தோறும்

ஏனத்து உருவாய் உலகிடந்த ஊழியான் பாதம்
வராஹ ரூபியாகி
பிரளயம் கொண்ட பூமியைக் குத்தி
எடுத்துக் கொணர்ந்த
எம்பெருமான் உடைய திருவடிகளை
யுகாந்த காலத்திலும் சத்தை அழியாமல் பாதுகாத்து கொண்டு இருந்தான் என்பதால் -ஊழியான்-

மருவாதார்க்கு உண்டாமோ வான்
சேவியாதவர்களுக்கு பரமபதம் கிடைக்குமோ
கிடைக்க மாட்டாது

ஆக
சரீரம் பற்றிய அஞ்ஞானம் தொலைந்து
ஆத்மாவைப் பற்றின சத்ஞானம் திகழ்ந்து
ஞானப் பிரானது திருவடிகளை அடைந்து
வாழுமவர்கட்கே வானுலம் சித்திக்கும் என்றதாயிற்று –

——————————————————————————————————————————————————————————–

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே -ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு–92-

—————————————————————————————-

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
ஆகாசமாகியும்
அக்னியாகியும்
அலை எரிகிற கடலாகியும்
காற்றாகியும்
பஞ்ச பூதங்கள் ஐந்துக்கும் உப லஷணம்
இவற்றால் சமைத்த அண்டங்களுக்கு நிர்வாஹகன் என்றபடி

தேனாகிப் பாலாம் திருமாலே –
தேன் போன்றும்
பால் போன்றும்
பரம போக்யனான
எம்பெருமானே
பரம போக்யனான உன்னை ஞானிகள் உட்கொள்ள கருதா நிற்க
நீ வேறு ஒரு வஸ்துவை போக்யமாக நினைத்து உட்கொள்வது என்னோ -என்றபடி

ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே
இடைக்குலத்தில் பிறந்தவளான
யசோதை என்னும் இடைச்சி கடைந்து வைத்த வெண்ணெயை
அள்ளி அமுது செய்ததினால் நிறைந்து விடுமோ
நிறைய மாட்டாது
உலகமுண்ட பெருவாயனான உனக்கு –

முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு
பிரளயம் நீங்கின காலத்தில்
பிரளய காலத்தில் உட்கொண்டு இருந்த இவ்வண்டத்தை
உள்ளே கிடந்து தளர்ந்து போகாதபடி
வெளியிட்ட உன் வயிறானது

அவாப்த சமஸ்த காமன் -உனக்கு பசி இல்லை
வெண்ணெய் உண்டது பசி நீங்க இல்லையே
ஆஸ்ரித ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற வஸ்துவில் உட்கொண்டால் அல்லது தரிக்க மாட்டாமை

உண்டாய் உலகு ஏழு முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசருவ வலையாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே -திருவாய்மொழி

ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாத படியான வ்யாமோஹத்தாலே
அமுது செய்தான் அத்தனை அன்றோ -அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி

தாழ் குலத்தார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு
இவ் ஏழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் சாழலே -என்றும்
உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறிநீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே -என்றும்
திரு மங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகள்-

————————————————————————————————————————————————————————————————

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ -பொறி யுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா நின்
சேவடி மேல் ஈடழியச் செற்று–93-

——————————————————————————————————-

வயிறு அழல
என்ன தீங்கு நேருமோ என்று அனுகூலர்
வயிறு எரியும்படி

வாளுருவி வந்தானை யஞ்ச
வாளை உருவிக் கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அவன் உன் வடிவைக் கண்டு
நடுங்கும்படி

எயிறு இலக வாய் மடுத்தது என் நீ –
பற்கள் வெளித் தெரியும்படி
நீ வாயை மடித்துக் கொண்டு இருந்தது எதுக்காக

பொறி யுகிரால்
நாநா வர்ண நகங்களால்

பூவடியை யீடழித்த
புஷ்பத்தின் சுகுமாரத் தன்மையை
அடியோடு போக்கிய
மிகவும் ஸூ குமாரமான

பொன்னாழிக் கையா
அழகிய திரு ஆழியைக் கொண்ட
திருக் கையை உடையவனே –

பொன்னாழிக் கையால் -பாட பேதம்

நின் சேவடி மேல்-
உனது திருவடிகளின் மேலே போட்டுக் கொண்டு

ஈடழியச் செற்று
கட்டுக் குலைந்து போம் படி கொன்று
பின்னையும் சீற்றம் மாறாமையால்

ஆஸ்ரிதற்கு பிராப்யமான திருவடிகளின் மேலே போட்டுக் கொண்டு
ஆஸ்ரித விரோதிகளின் மீது கொள்ளும் கோபமே நமக்குத் தஞ்சம்
கொடியவாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஓன்று உண்டு ஓன்று உளது அறிந்து
உன்னடியனேனும் வந்து அடியிணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -திருமங்கை ஆழ்வார்
அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி
தரித்ரனானவன் தனிகனை அடையுமா போலே சீற்றம் உண்டு என்று ஆயத்து இவர் பற்றுகிறது —
விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இ றே சீற்றம் -பெரியவாச்சான் பிள்ளை
அளவு கடந்த சீற்றமே தஞ்சம் என்று ஆஸ்ரிதர்களுக்கு காட்டத் தானே
எயிறு இலக வாய் மடித்தது-

—————————————————————————————————————————————————————————————————————-

செற்று எழுந்து தீ விழித்துச் சென்ற விந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து -முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா–94

——————————————————————————

செற்று எழுந்து தீ விழித்துச் சென்ற விந்த வேழ் உலகும்
எழுந்து தீ விழுத்து இந்த ஏழ் உலகும் செற்று
அநியாயம் மேலிட்ட படியால்
எழுந்து
லௌகிக பதார்த்தங்களை எல்லாம்
அடியோடு அழிக்க பெரு முயற்சியோடு கிளம்பி
தீ விழித்து
உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி
நெருப்பு எழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும் செற்று
இந்த உலகங்களை எல்லாம் அழித்து
யுகாந்த காலத்தில் அக்கிரமம் விஞ்சி அதனால் எம்பெருமான் உக்ரம் கொண்டு
உலகங்கள் அழித்து தன்னிடம் அடக்கிக் கொள்வான் –

மற்றிவை
பின்பு
பிரளயத்தில் அழிந்த இப்பதார்த்தங்கள்

சென்ற
என்னிடத்து அடங்கிக் கிடக்கின்றன என்று சொல்லி

யா வென்று வாய் அங்காந்து
ஆ என்று வாயைத் திறந்து

-முற்றும் மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்
சகல ஜகாத்தையும்
வைதிகனான மார்கண்டேய மகரிஷிக்கு
முன்பு போலவே இருப்பதைக் காட்டி அருளிய
ஆச்சர்ய சக்தி உக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
காலகதியைக் கடந்துஎன்றும் பதினாறாக நீடூழி வாழ
பத்ர நதிக் கரையிலே தவம் புரிந்த மார்கண்டேயர்
நர நாராயணன் சேவை பெற்று
பின்பு பிரளயம் வந்தவாறே
ஆலிலை குழந்தை வயிற்றுக்குள் தன்னையும் உலகங்கள் எல்லாம் கண்டார்
எய்த்த மார்க்கண்டன் கண்டிட வமலைக்கும் உலகு அழியாது உள்ளிருந்தது என்னே -என்றும்
ஆலத்திலை சேர்ந்து அழி உலகை உட்புகுந்த காலத்தில்
எவ்வகை நீ காட்டினாய் –வேதியர்க்கு மீண்டு -என்றும்
பிள்ளை பெருமாள் ஐயங்கார் -அருளுகிறார்

வேறு ஒருவனை
இறையேனும் ஏத்தாது என் நா
எனது நா வானது சிறிதும் துதிக்க மாட்டாது –

——————————————————————————————————————————————————————————————

நா வாயில் உண்டே நமோ நாராயணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே –மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகையுண்டே என்னொருவர்
தீக்கதிக் கண் செல்லும் திறம்–95-

—————————————————————————————–

நா வாயில் உண்டே
ஸ்தோத்ரம் பண்ண கருவியான நாக்கு
ஸ்ரமம் பட்டு தேட வேண்டாதபடி
ஒவ்வொருவர் வாயிலும் படைக்கப்பட்டு இருக்கின்றதே

நமோ நாராயணாய வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
சஹஸ்ரநாம மந்த்ரம் போலே இடை இடையே
விட்டு விட்டு சொல்ல வேண்டாமல்
எளிதாக ஒரே மூச்சிலே சொல்லக் கூடிய
திரு அஷ்டாஷர மந்த்ரம் சித்தமாய் இருக்கின்றதே
நமோ நாரணா வென்று -பிழையான பாடம்

-மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகையுண்டே
கிழத் தன்மை அற்ற -திரும்பி வருதல் அல்லாத
பரமபிராப்யமான மோஷத்தில்
சென்று சேருவதற்கு ஏற்ற உபாயம் உண்டே

இப்படி இருக்கவும் உஜ்ஜீவியாமல்

என்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம்
சிலர்
விநாசத்துக்கு காரணமான கெட்ட வழிகளிலே
போய் விழுகிற படி என்னோ

உபயோகம் அற்ற விஷயங்களை சொல்ல நாவைப் பயன்படுத்தி அனர்த்தப் படுகிறார்களே
நாராயாணா ஆதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த் நீதி
ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -சாஸ்திர வாக்கியம்
தாமுளரே தம்முள்ளம் உள்ளுள்ளதே தாமரையின்
பூவுளதே ஏத்தும் பொழுதுண்டே வாமன்
திருமருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது -இரண்டாம் திருவந்தாதி பாசுரம்

—————————————————————————————————————————————————————————–

திறம்பாது என்னெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் – புறம் தான் இம்
மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கட் பிடி –96-

—————————————————————————–

திறம்பாது பிடி
தவறாமல் உறுதியாக கொள்

என்னெஞ்சமே

செங்கண் மால் கண்டாய்
புண்டரீ காஷனான எம்பெருமானே ஆவான்
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் –
புண்ணியம் பாவம் எனப்படும்
இருவகைக் கர்மங்களுக்கும் நிர்வாஹகன்
எந்த ஆத்மாவை நல்ல கதி பண்ணுவிக்க கருதுகின்றானோ அவனைக் கொண்டு நல் வினையைச் செய்விக்கின்றான்
எந்த ஆத்மாவை அதோகதி அடைவிக்கக் கருதுகின்றானோ
அவனைக் கொண்டு தீ வினையை செய்விக்கின்றான்
என்ற வேத வக்யத்தின் படியே -அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் -என்று அருளிச் செய்கிறார்

புறம் தான் இம் மண் தான் மறிகடல் தான் மாருதம் தான்வான் தானே
இந்த பூமியும்
அலை எறிகிற கடலும்
வாயுவும்
ஆகாசமும்
இவை தவிர உள்ள மகான் முதலிய தத்தவங்களும்
அந்த திருமாலே யாவான்

கண்டாய் கடைக்கண்
முடிவாக ஆராய்ந்து பார்க்கும் அளவில்
இதுவே உண்மை என்பதை
திறம்பாமல் பிடி – தவறாமல் உறுதியாக கொள்

சம்சாரிகள் எந்த வழியில் போனாலும் போகட்டும்
நெஞ்சே நீ மாத்ரம்
சர்வ நிர்வாஹகன் அவனே என்பதில் விப்ரதிபத்தி பண்ணாமல்
இதுவே பரமார்த்தம் என்று உறுதி கொண்டு இரு-

—————————————————————————————————————————————————————————————————-

பிடி சேர் களிறு அளித்த பேராளா உன்தன்
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே -பொடி சேர்
அனல் கங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப்பொன் –97-

———————————————————————————

கீழில்
அறம் பாவம் இரண்டும் அவன் இட்ட வழக்கு என்றார் அதன் விவரணம் இதில்
விஷய பிரவணமாய் திரிந்து கொண்டு இருந்த யானைக்கும் அருளினான்

ஆனின் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ -திருச் சந்த விருத்தம் -94-
பஞ்ச கவ்யமும் அதன் பரி சுத்தமும் நீ என்றார் திரு மழிசை பிரான்
பிடி சேர் களிறு அளித்த பேராளா
பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆகிற
ஆண் யானையை
காத்து அருளின மஹானுபாவனே

உன்தன்அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே
உன்னுடைய திருவடிகளைக் கிட்டி
பாபிகளை பரிசுத்தன் ஆக்கும் படி
உன்னுடைய திருவருளைப் பெற்றாள் அன்றோ

-பொடி சேர் –
தான் பண்ணின பாபத்துக்கு பிராயச் சித்தமாக
பஸ்மத்திலே சாயுமவனாகி

அனல் கங்கை ஏற்றான்
அனற்கு அங்கை ஏற்றான்
அக்னிக்கு தனது அழகிய கையை ஏற்ற பாதகியான
ருத்ரனுடைய
அவிர் சடை மேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர்ப்பொன்
ஒளி பொருந்திய ஜடையின் மேலே
அவனுடைய சுத்தியின் பொருட்டு வந்து குதித்த
ஜலமயமான
கங்கை என்னும் பெயர் பூண்டுள்ள
சிறந்த பெண்
பெயர்ப்பொன்-தவறான பாடம்- மோனை இன்பம் குறையும்-

—————————————————————————————————————————————————————————————-

பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடு மாலும் -என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்–98-

———————————————————————

பொன் திகழும் மேனிப்
பொன் போலே விளங்குகின்ற உடலையும்

புரி சடை அம் புண்ணியனும்
பின்னிய சடை முடியை உடையனாய்
அழகிய சாதனா அனுஷ்டானம் ஆகிற
புண்ணியத்தை உடையனான ருத்ரனும்

நின்று உலகம் தாய நெடு மாலும் –
நின்று உலகங்களை எல்லாம்
அளந்து கொண்ட சர்வேஸ்வரனும்

என்றும்
எக்காலத்திலும்

இருவர் அங்கத்தால் திரிவரேலும்
இருவாராக வெவ்வேற வடிவத்தோடு
இருந்தார்களே யாகிலும்

ஒருவன்
சடை புனைந்து
சாதனா அனுஷ்டானம் பண்ணும்
ஒருவனாகிய சிவன்

ஒருவன் அங்கத்து என்றும் உளன்
நெடுமாலான மற்று ஒருவனுடைய
சரீரத்திலே
எப்போதும் சத்தை பெற்று இருப்பன் –
அவனுடைய ஈச்வரத்வம் எம்பெருமான் உடைய சரீர பூதன் ஆகையாலே தானே –
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே -நம் ஆழ்வார்
புரிசடை புண்ணியன் -அவன் வேஷமே ஈஸ்வரன் அல்லன் என்பதைக் காட்டுமே
நின்று உலகம் தாய நெடுமால் -ருத்ரன் தலையோடு மற்றவர் தலையோடு வாசி அற திருவடியை
நீட்டி தானே சர்வேஸ்வரன் என்று காட்டி அருளினான்

ஒருவன் அங்கத்து என்றும் உளன்
வலத்தனன் திரிபுரம் எரித்தனன்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய அங்கத்தில் ஏக தேசத்தில் என்றும்
சரீர பூதனாகி என்றும் பொருள் கொள்ளலாம்-

—————————————————————————————————————————————————————————-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –99-

———————————————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்
எனக்கு பாங்கான நெஞ்சமே
நம்மை ரஷிப்பதனாலேயே
சத்தை பெற்று இருப்பவன்
புருஷோத்தனான எம்பெருமான்
காண் –

என்றும் உளன் கண்டாய்
எக்காலத்திலும்
நம்மை ரஷிப்பதில்
தீஷை கொண்டு இருக்கிறான்
காண் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
ஆஸ்ரிதர்கள் உடைய
மனத்திலே
நித்ய வாஸம் பண்ணுபவன்
காண்

வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருள்பவனும்
திருமலையிலே நிற்பவனும்

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்
இப்போது நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
நித்ய வாஸம் பண்ணுகிறான் என்று
தெரிந்து கொள்

அங்குத்தை வாஸம் ஆஸ்ரிதர் மனத்தில் இடம் கொள்ளத்தானே
திருமால் இரும் சோலை மலையே -என்கிறபடி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும்
அங்குத்தை வாஸம் சாதனம்
இங்குத்தை வாஸம் சாத்தியம்
கல்லும் கனை கடலும் என்கிறபடியே இது சித்தித்தால்
அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி
இதை அறிந்து நீ உவந்து இரு என்கிறார் –

இதில் நெஞ்சை விளித்து நன்னெஞ்சே -உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் -என்றது
உள்ளமும் நெஞ்சும் ஓன்று தானே
நெஞ்சுக்கும் ஒரு உள்ளம் இருப்பது போலே சொல்லி இருக்கிறதே
தம்மைக் காட்டில் நெஞ்சை வேறு ஒரு வ்யக்தியாக ஆரோபணம் போலே இதுவும் ஒரு ஆரோபணம்
நெஞ்சை விட வேறே உசாத் துணை யாவார் வேறு ஒருவர் இல்லாமையால்
நெஞ்சை விளித்து சொல்லுகிறார் இத்தனை-

—————————————————————————————————————————————————————————-

ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்னெஞ்சே–ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை –100-

—————————————————————————————
-ஓரடியில் தாயவனைக் கேசவனைத்
தனது ஒப்பற்ற அடி வைப்பினாலே
லோகங்களை எல்லாம் அளந்து கொண்டவனும்
கேசி என்னும் அசுரனைக் கொன்றவனும்

தண் துழாய் மாலை சேர்
குளிர்ந்த திருத் துழாய் மாலை உடன் சேர்ந்தவனுமான

மாயவனையே மனத்து வை
எம்பெருமானையே
மனத்தில் உறுதியாக கொள்வாயாக
இப்படி அவனே உபாயம் என்று உறுதி கொண்டால்

ஓரடியும்
உலகங்களை எல்லாம்
அளந்து கொண்ட ஒரு திருவடியும்

சாடுதைத்த ஒண் மலர் சேவடியும்
சகடம் முறிந்து விழும்படி உதைத்த
பூ போன்ற திருவடியும்
ஆகிய

ஈரடியும் காணலாம் என்னெஞ்சே-
இரண்டு திருவடிகளையும்
சேவிக்கப் பெறலாம் காண்

மாயவனை மனத்து வைத்தால் -உபாயமாக கொண்டால்
ஈரடியையும் சேவிக்கப் பெறுவது எளிதாகும்
சாடுதைத்த திருவடி –அநிஷ்ட நிவ்ருத்தி
உலகளந்த திருவடி– இஷ்ட பிராப்தி

திரிவிக்ரமாவதாரமும்
கிருஷ்ணாவதாரமும்
இவ் வாழ்வார் ஈடுபட்ட துறைகள்
அதனால் இத்தை பேசி தனது திவ்ய பிரபந்தத்தை முடித்து அருளுகிறார்
மீண்டும் தாயவனைக் கேசவனை என்பதும் இதே நோக்கம்

உபாயமும் உபேயமும் எம்பெருமானே
சைதன்ய கார்யமான இந்த அத்யாவசியம் ஒன்றே நமக்கு வேண்டியது
என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்-

————————————————————————————————————————————————————————————————

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று -1-

—————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-81-90–திவ்யார்த்த தீபிகை —

September 25, 2014

ஆளமர் வென்றி யடுகளத்துள் அந்நான்று
வாளமர் வேண்டி வரை நட்டு -நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை –81-

—————————————————————————————–

ஆளமர்
யுத்த வீரர்கள் நெருங்கி
இருக்கப் பெற்றதும்
கடல் கடையும் காலம் தேவாசுரர்கள் பரஸ்பரம் பெரிய போர் புரியும் காலம்
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரர் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான்

வென்றி
ஜெயத்தை உடையதுமான

யடுகளத்துள்
எதிர்த்தவரை கொல்லுகின்ற
யுத்த களத்திலே

அந்நான்று
அசுரர்களை தேவர்கள் மேல் விழுந்து நலிந்த
அக்காலத்திலே

வாளமர் வேண்டி
அனுகூலரான தேவர்கட்கு வெற்றி
உண்டாகும் படி
மதிப்புடைய யுத்தத்தை விரும்பி

அதற்கு ஏற்ப

வரை நட்டு –
தண்ணீரிலே அமிழக் கூடிய
மந்த்ர பார்வத்தை மத்தாக நாட்டி

நீளரவைச்சுற்றிக் கடைந்தான்-
உடல் நீண்ட வாசூகி நாகத்தை
கடை கயிறாக சுற்றி
அமுதம் உண்டாகும் படி திருப் பாற் கடலை கடைந்தவன் உடைய

பெயரன்றே தொன்னரகைப் பற்றிக் கடத்தும் படை
திரு நாமம் எப்படிப் பட்டது என்றால்
சம்சாரிகளை வாரிப் பற்றாக
பிடித்துக் கொண்டு போய்
பழைமையாய் இருக்கிற சம்சாரம் என்னும் நகரத்து
தாண்டுவிக்கின்ற சாதனம்
நரகு -சம்சாரம்

பிரயோஜனாந்தர பரர்களுக்கும்
தன் திருமேனி நோவக் கடல் கடைந்து அருளிய அவன் திரு நாமமே உத்தாரகம்-

——————————————————————————————————————————————————————–

படையாரும் வாள் கண்ணார் பாரசிநாள் பைம்பூம்
தொடையலோடு ஏந்திய தூபம் -இடையிடையின்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேலோருநாள்
மானமாய வெய்தான் வரை –82-

——————————————————————————-

படையாரும் வாள் கண்ணார் –
வேலாயுதம் போன்ற ஒளி பொருந்திய
கண்களை உடைய பெண்கள்
அறிவு ஒன்றும் இல்லாத பெண்களும் ஆஸ்ரயிக்கும் படி

பாரசிநாள்-
த்வாதசி அன்று –
சத்வோத்தரமான நாள்

பைம்பூம் தொடையலோடு ஏந்திய தூபம் –
வாடாத மலர்களைக் கொண்டு
தொடுத்த மாலையோடு கூட
திரு வேங்கடமுடையானுக்கு
சமர்ப்பிக்கும் படி ஏந்தி உள்ள
தூபமானது
தூபத்தின் கமழ்ச்சியே திருமலை எங்கும் பரவிக் கிடக்கிறது –

இடையிடையின் மீன் மாய
ஆகாசத்தில் நடுவே நடுவே தோன்றுகின்ற
நஷத்ரங்கள் மறையும்படி

மாசூணும்
மாசு ஏறும்படி பண்ணா நிற்கும்

வேங்கடமே
திருமலையே யாகும்

மேலோருநாள் மானமாய வெய்தான் வரை
முன் ஒரு காலத்திலே
ஸ்ரீ ராமாவதாரத்திலே
மாரீசன் ஆகிய மாய மான் இறந்து விடும்படி
அம்பு தொடுத்து விட்ட ராமபிரான்
நித்ய வாசம் செய்கின்ற மலை யாவது

———————————————————————————————————————————————————————————

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே -உரவுடைய
நீராழி உள்கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

———————————————————————

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து
ஒருவராலும் அசைக்க முடியாத
கோவர்த்தன மலையே குடையாகவும்
தனது திருத் தோளே அந்தக் குடைக்கு காம்பாகவும் ஆக்கி
பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து

ஆயர் நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே
ஆயர்கள் வைத்திருந்த திரண்ட
ரிஷபங்கள் ஏழையும்
முடித்த விதம்
எங்கனே

-உரவுடைய நீராழி உள்கிடந்து-
மிடுக்கை உடைத்தான நீரை உடைய திருப் பாற் கடலிலே
திருக் கண் வளர்ந்து

நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான்
எதிரியாக வந்த
மதுகைடபர் முதலிய ராஷசர்களின் மீது
அவர்கள் நீறாகும்படி
பெரிய சக்ராயுதத்தை திருக் கையிலே கொண்டு இருக்கிற உபகாரகனே
நிராசரர் -இரவில் திரிகின்றவர்கள் –

இப்படி கருதும் இடம் சென்று பொருது கை நிற்க வல்ல
திரு ஆழியான் திருக்கையிலே இருக்கச் செய்தேயும்
அவனைக் கொண்டு கார்யம் கொள்ளாமல்
உடம்பு நோவ கார்யம் செய்து அருளியது
ஆஸ்ரித பாரதந்த்ரயத்தாலே
பெறாப் பேறாக நினைத்து —
மழுங்காத வை நுதிய சக்கர நல்வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே -திருவாய்மொழி -3-1-9-

——————————————————————————————————————————————————————————–

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராய் யுலகளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

————————————————————————

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உபகாரகனே
உனது பெருமையை அறிவார் யாரும் இல்லை
சர்வஞ்ஞனான உன்னால் தான் அறிய முடியுமோ
உன்னால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற என்போல்வாரால் ஒருக்கால் அறியப் போகலாமே ஒழிய
சுய யத்னத்தால் உணர விரும்புவார்க்கு ஒருநாளும் காண முடியாதே

உராய் யுலகளந்த நான்று
எங்கும் சஞ்சரித்த படி அளந்த காலத்திலே
உராய் -உலாவி என்றபடி
சிறிதும் சிரமம் இன்றி -பட்டர் உடைய கருத்து
உராய் – உரசிக் கொண்டு -எல்லாரையும் தீண்டிக் கொண்டு
உரையாய் -மருவி உராய் சொல்லு என்றுமாம் –

வராகத்துஎயிற்று அளவு போதாவாறு என் கொலோ
வராஹ ரூபியான உன்னுடைய
திரு எயிற்றின் ஏக தேச அளவும்
போதாதாக இருந்த விதம்
எங்கனேயோ

எந்தை அடிக்களவு போந்த படி
எனது ஸ்வாமியான உன்னுடைய
திருவடிகட்கே அளப்பதற்குப் போந்திருந்த
பூமியானது-

——————————————————————————————————————————————————————————————————

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள்ளடக்கிக் போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ —85-

———————————————————————————

படி கண்டு அறிதியே –
அவனது திருமேனியை
சேவித்து
அனுபவித்து அறிந்து இருக்கிறாயோ

பாம்பணையினான்
சேஷசாயி யான பெருமானுடைய

புட்கொடி கண்டு அறிதியே கூறாய்
கருடப் பறவை யாகிற த்வஜத்தை
சேவித்து
அனுபவித்து
அறிந்து இருக்கிறாயோ
சொல்லு –

வடிவில் பொறி ஐந்தும் உள்ளடக்கிக் போதொடு நீர் ஏந்தி
பஞ்ச இந்த்ரியங்களையும்
சரீரத்துக்கு உள்ளே அடங்கி இருக்கச் செய்து
திருவாராதன சாமக்ரியான
புஷ்பங்களையும்
தீர்த்தத்தையும்
தரித்துக் கொண்டு

நெறி நின்ற நெஞ்சமே நீ –
ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நிலைத்து நிற்கும் மனமே

இத்தால்
எம்பெருமான் கருடாரூடனாய் சேவை சாதிக்கும் நிலையில்
சேவிக்கப் பெறுதலிலும்
சேஷசாயியாய் சேவை சாதிக்கும் நிலையிலும்
சேவிக்கப் பெறுதலிலும்
தமக்கு ஆசை கொண்டு இருக்கும் படியை வெளியிட்டு அருளுகிறார்-

—————————————————————————————————————————————————

நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா -வாசல்
கடை கழியா வுள்புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றியினி–86-

———————————————————————

குன்று எடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –
கோவர்த்தன மலையை
வேரோடு பிடுங்கி எடுத்து
மேலே வந்து சொரிகிற மழையை
மேலே விழாமல் தடுத்த
குணசாலியே
பனி மறைத்த -என்றும் பாட பேதம்

கழியா வுள்புகாக்
வெளிப் பட்டு போகாமலும்
உள்ளே புகாமலும்

காமர் பூங்கோவல்
விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரிலே

வாசல் கடை
திரு வாசலுக்கு வெளியிலே

இடை கழியே
நடுக் கட்டான
இடை கழியிடத்தையே
ரேழி-வெளியிலே சம்சாரிகளும்
உள்ளே உபாசகனான ரிஷியும்
அநந்ய பிரயோஜனரான மூவர் நின்ற இடமே உகந்து சேரும் இடமாக பற்றினான்

பொய்கை பூதம் பேயாழ்வார் நாங்கள் மூவரும் தங்கி இருந்ததனால்

பற்றி
விரும்பிய இடமாகக் கொண்டு

நீயும் திருமகளும்
நீயும் பிராட்டியுமாக

இனி

நின்றாயால்
நின்று அருளினாய் -ஆச்சர்யம் –

பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின்
மூவரும் நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனை தொழுத நன்னாடு –
இவ்வரலாற்றுக்கு மூலமாய் இருக்கும் இப்பாட்டு
இஃது என்ன திருவருள்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய நீல மேக ச்யாமளமான திருமேனியையும்
மின்னல்கொடி பரந்தால் போன்ற திருமகளாரையும்
நெஞ்சு என்னும் உட்க் கண்ணால் கண்டு
அனுபவித்த படியை
இத்தால் வெளியிட்டு அருளினார் ஆயிற்று
இடையரோடும் பசுக்களோடும் நெருக்கி நின்றால் போலே ஆயிற்று இங்கு மூவரையும் நெருக்கி நின்று அருளினான்

கீழ் பாட்டில் நெஞ்சமே நீ அவனைசாஷாத் கரித்து அனுபவிக்கப் பெற்றாய் இல்லை -என்றாரே
அப்படி சொன்னது பொறுக்க மாட்டாமல்
இவர் இருந்த இடம் தேடி பிராட்டியுடன் வந்து கலந்தான்
இவர் தம்முடைய திரு உள்ளத்தை குறித்து
சாஷாத் கரிதில்லை -என்னத் தரியான் இ றே-பெரியவாச்சான் பிள்ளை –
முன்னே நடந்த திருக்கோவல் இடை கழி நெருக்கத்தை
மீண்டும் அனுபவிப்பித்து அருளினான் போலும்-

————————————————————————————————————————————————————————————————–

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் -கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கறிந்த நாவல் அம் சூழ் நாடு –87-

—————————————————————————————-

இனியார் புகுவார் எழு நரக வாசல்
ஏழு வகைப் பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனிமேல் யாவர் பிரவேசிப்பார்
ஒருவரும் இல்லை ஒ யம கிங்கர்களே
ஏழு நரகங்கள் -கொடிய நரகங்கள்
பெரும் களிற்று வட்டம் /பெரு மணல் வட்டம் /எரியின் வட்டம்
புகையின் வட்டம் /இருளின் வட்டம் /பெரும் கீழ் வட்டம் /அரிபடை வட்டம்
என்று ஓர் இடத்திலும்
கூட சாலம் கும்பீ பாகம் அள்ளல் அதோகதி யார்வம்பூ செந்து என்ற ஏழும் தீ நரகப் பெயர்
என்று ஓர் இடத்திலும்
ரௌரவம் /மகா ரௌரவம் /தமஸ் /நிக்ருந்தனம் /அப்ரதிஷ்டம் /அசிபத்ரம் /தப்த கும்பம்
என்றும் வேறு வகையாக கூறுவார்
அன்றிக்கே
எழு நரகம்
சம்சாரிகள் அடங்கலும் சென்று புகுகிற நரகம்
கிளர்த்தியை உடைய நரகம் என்றுமாம்

முனியாது மூரித்தாள் கோமின்
உங்கள் ஸ்தானத்துக்கு
அழிவு உண்டாவதாகச் சொல்லும் என் மேல்
கோபம் கொள்ளாமல்
இனி ஒருக்காலும் திறக்க முடியாத படி
பெரிய தாழ்பாளை போட்டுப்
பூட்டுங்கோள்

-கனிசாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே
காண்பதற்கு
விளாம் பழம் உதிர்ந்து விழும்படி
வத்சாசூரனை
எறி தடியாக எடுத்து எறிந்து
இரண்டு அசுரரையும் முடித்த
திருத் தோள்களை உடையனான
சர்வேஸ்வரன் உடைய
ஆபரண த்வனியை உடைய திருவடிகளை
சேவிப்பதற்கு சாதனம்
ஆபரண த்வனியில் ஈடுபட்டு கனை கழல் என்கிறார்

அவன் உகந்து வாழ்கிற திருக் கோவலூர் க்கு சமீபமான
இடத்தில் வசிப்பது தான் என்று

நன்கறிந்த நாவல் அம் சூழ் நாடு
நன்றாக
அழகிய ஐம்பூ என்று பேர் படைத்த பரந்த
த்வீபத்தில் உள்ள பிராணிகள் அறிந்து விட்டன –
அறிந்த -அறிந்தன –விரைவில் பகவத் ஞானம் உண்டாகி விடும்
எதிர் கால செய்தியை இறந்த காலமாகவே அருளிச் செய்கிறார்

ஆழ்வார் திரு உள்ளம் ஆனந்த்தின் எல்லை கண்டது
நெருக்குண்டு இருக்கும் நிலைமை தாம் அனுசந்தித்தார்
உலகோரை உபதேசத்தாலே திருத்தி பணி கொண்டதும்
பாவனா பிரகர்ஷத்தாலே
அனைவரும் அவனுக்கு ஆட்பட்டதாக கருதி
கம்பீரமாக அருளிச் செய்கிறார்
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் நடமாடும் ஜம்பூத்வீபமே நாடு மற்றவை காடு
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை போலே –

————————————————————————————————————————————————————————————–

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் -சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு–88-

———————————————————————

நாடிலும் நின்னடியே நாடுவன்
மனத்தினால் தேடும் பொழுது
உனது திருவடிகளையே தேடுவேன்

நாடோறும்பாடிலும் நின் புகழே பாடுவன் –
எப்பொழுதுவாய் விட்டு ஏதாவது
சொல்லும் போதும்
உனது புகழ்களையே பாடுவேன்

சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
ஏதாவது ஒன்றைத் தலையிலே
அணிவதாய் இருந்தாலும்
அழகிய திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உன்னுடைய அழகிய திரு வடிகளையே
சிரோ பூஷணமாக கொள்பவனான

என்னாகில் என்னே எனக்கு
எனக்கு
எது எப்படி யானால் என்ன

உண்டியே உடையே உகந்தோடும் மண்டலத்தவர்கள்
அநாதி கால துர்வாசனையை எளிதில் அகற்றப் போமோ
தம்மைப் பார்த்தார்
நல்லபடியாக ஈடேறப் பெற்றோமே
நாடிலும் நின்னடியே நாடுவன்-மநோ வ்ருத்தியையும்
நாடோறும்பாடிலும் நின் புகழே பாடுவன் -வாக் வ்ருத்தியையும்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு -சரீர வ்ருத்தியையும்
சொல்லி மூன்றும் பகவத் விஷயத்தில் அவஹாஹித்த படியை அருளிச் செய்தார் ஆயிற்று
என் ஆகில் என்
இங்கு இருந்தால் என்ன
பரம பதத்தில் இருந்தால் என்ன என்றுமாம்-

——————————————————————————————————————————————————————

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் -புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம்–89-

————————————————-

எனக்கு
எம்பெருமான் நிர்ஹேதுக கடாஷத்துக்கு
பாத்ரபூதனான எனக்கு

ஆவார் ஆர் ஒருவரே
ஒப்பு ஆகுவார் எவர் ஒருவர் இருக்கின்றார்
யாரும் இல்லை

எம்பெருமான்
அந்த சர்வேஸ்வரனும்

தனக்காவான் தானே மற்றல்லால் –
தானே தனக்கு ஆவான் அல்லால் -மற்று
தானே தனக்கு ஒப்பாவானே அல்லாமல்
அவன் தானும்
எனக்கு ஒப்பாக வல்லானோ –
இப்படி சொல்லும்படி உமக்கு வந்த ஏற்றம் என் என்ன

புனக்காயாம் பூ மேனி
தனக்கு உரிய நிலத்திலே தோன்றின
காயம் பூ வின் நிறமும்

காணப் பொதியவிழும் பூவைப் பூ
காணக் காண கட்டவிழா நிற்கும்
பூவைப் பூவின் நிறமும்

மா மேனி காட்டும் வரம்
வரம் -சிறந்ததான
அவனது கரிய திருமேனியை எனக்கு காட்டா நிற்கும்

ஆகையாலே போலியான பொருள்களைக் கண்டும் அவனை கண்டதாகவே நினைத்து மகிழ்கிற எனக்கு
ஒருவரும் ஒப்பாகார் என்றபடி

இதுவும் கீழ்ப் பாட்டின் சேஷம்
ஹர்ஷப் பெருக்கால் அருளிச் செய்கிறார்
அவன் அடிமையில் ஈடுபட்டு அதன் மூலமாக செருக்கு கொள்ளுதல்
அடிக் கழஞ்சு பெறுதலால்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே
எனக்கு யாரும் நிகர் இல்லையே
மற்றையோரும் அருளிச் செய்தவை
இது ஹேயம் அன்று உபாதேயம்

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும்
பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று –
பெரிய திருவந்தாதி பாசுரம் இங்கே அனுசந்தேயம்-

———————————————————————————————————————————————————————————————–

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே -உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை
ஒரரியாய் நீ இடந்த தூன்–90-

—————————————————————————————-

வரத்தால் வலி நினைந்து
ப்ரஹ்மாதிகள் கொடுத்த வரத்தினால்
தனக்கு உண்டான பலத்தை பெரிதாக மதித்து
வரம் கொடுத்தவர்கள் ஸ்ரீ மன் நாராயணன் ஆதீனம் என்று உணர வில்லையே –

மாதவ
திருமாலே

நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே
உனது திருவடிகளை தனது தலையினாலே
வணங்காமல் இருந்தான் என்ற காரணத்தினாலோ
இல்லையே
பக்தனான பிரஹ்லாதனை நலிந்தான்
என்ற காரணத்தினாலே அன்றோ

-உரத்தினால்
உனது மிடுக்கினாலே

ஈரரியாய்
இரண்டு கூறாக கிழித்துப் போட வேண்டிய
சத்ருவாகி
பெரிய சத்ரு என்றுமாம்

நேர் வலியோனாய
எதிர்த்து நின்று போர் செய்யும் வலியை உடையனாகிய

விரணியனை
ஹிரண்யாசூரனை

ஒரரியாய் நீ இடந்த தூன்
ஒப்பற்ற நரசிம்ஹ மூர்த்தியாகி
நீ உனது நகங்களால் குத்தி கீண்டதானது
சரீரத்தை
ஓரரி – ஓர்தல் த்யாநித்தல் -த்யானிக்கப் படுகிற நரசிங்கம்

விமுகனாய் இருந்த காரணம் இல்லையே
ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம்
பாகவத அபசாரம் பொறாமை என்று சீயர் அருளிச் செய்வர் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம-பெருமாள் அருளினாரே
தனக்கு உயிர் நிலையான பாகவதர்களுக்கு தீங்கு என்றால் கொண்ட சீற்றம் உண்டே
கோபமாஹாரயத் தீவரம்
ததோ ராமோ மஹாதேஜா ராவனேண க்ருதவ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லவக சார்தூலம் கோபச்ய வசமே யிவான்
பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகிப்
பிள்ளையை சீறி வெகுண்டு நலிந்தான் என்றவாறே
நம்மளவில் எத்தனை தீம்பனாய் இருந்தாலும் பொறுத்து இருப்போம்
நம்முடைய சிருக்கனை நலிந்த பின் பொறுத்து இருக்கவோ –
கேள்வி மட்டும் இங்கே
உத்தரம் அருளிச் செய்ய வில்லை
கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம் -68 ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்
இது போலே
பெரிய திருவந்தாதி பாசுரத்தில்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாக்கால் பேராளா
மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பது அரிதே
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து –
இதற்கு அதிமாநுஷ ஸ்தவத்தில்
த்வன் நிர்மிதா ஜடரகாச தவ த்ரீலோகீ கிம் பிஷனாதியம்ருதே பவதா துராபா -என்று அனுவதித்து
மத்யே கதாது ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதமிவ ஸ்ருதிரஞ்சித ஸ்யாத்-என்று உத்தரம் அருளிச் செய்தார்
இது போலே ஆழ்வார் வெளிப்படையாக அருளிச் செய்த
மழுங்காத –சுடர் சோதி மறையாதே -என்பதற்கும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் சூத்ரம் இயற்றி அருளினார் –
—————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-71-80–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று  நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —71-

——————————————————————–

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
பிணி மூப்பு
வியாதியையும் கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி
மரணத்துக்கும் உப லஷணம்
ஜரா மரணம் மோஷாயா மமாஸ்ரித்ய யதந்தி யே-கீதை
நன்றாக அடியோடு தொலைந்து ஒழியும்படி விட்டும்
கை வலய மோஷத்தைப் பெற்றாலும்
நான்கூழி
நான்கு யுகங்களில் உள்ள -காலதத்வம் உள்ள வரையிலும் –

நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் –
ஸ்திரமாக நின்று
பூமி தொடங்கி ப்ரஹ்ம லோகம் வரையிலும்
ஸ்வா தீனமாக நிர்வஹிக்கப் பெற்றாலும்
பரமைச்வர்யம் கிடைத்தாலும்
உம்மை தொகை அதில் தமக்கு விருப்பம் இல்லாமை காட்டி அருளி

என்றும் விடலாழி நெஞ்சமே
என்றுமே விடாமல் இரு
ஆழி நெஞ்சே -நீயே பகவத் விஷயத்தில் ஆழ்ந்து உள்ளேயே
நான் பிரார்த்திக்க வேண்டியது இல்லை
ஏதோ சொல்லி வைத்தேன்

வேண்டினேன் கண்டாய்
உன்னைப் பிரார்த்திக்கிறேன் காண்
பகவத் விஷயம் அறிந்த நெஞ்சுக்கு உபதேசிக்கிறார்
பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப் போலே

அடலாழி கொண்டான் மாட்டன்பு
தீஷணமான திரு வாழியைக் கையில் ஏந்திய –
கை கழலா நேமியான் –
பெருமான் இடத்தில்
ப்ரீதியை-

————————————————————————————————————————————————————

அன்பு ஆழியானை யணுகு என்னும் நா வவன்தன்
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் -முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ்–72-

————————————————————————————

ஆசார்ய சிஷ்ய க்ரமம் மாறாடுகிறது
கரணங்கள் தனித் தனியாக ஆசார்ய பதம் வகித்து
உபதேசிக்க முற்படுகிற படியை பேசி அருளுகிறார் இதில்

அன்பு ஆழியானை யணுகு என்னும்
பகவத் பக்தியே வடிவு எடுத்தது போன்று
இருக்கிற என் நெஞ்சானது
சர்வேஸ்வரனை கிட்டி அனுபவி என்று
எனக்கு உபதேசிக்கிறது –
அன்பு ஒரு வஸ்து நெஞ்சு வேற வஸ்து இல்லாமல்
அன்பு தானே நெஞ்சாக
அறிவுக்கு ஆஸ்ரயமான ஆத்மாவை விஞ்ஞான சப்தம் சொல்வது போலே

நா வவன்தன் பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் –
வாக்கானது அவனது சௌந்தர்ய சாகரமான
திருத் தோள்களைப் பேசி துதி என்று
உபதேசிக்கின்றது
பண்பு ஆழி -அழகுக்கு கடல் போன்ற
பண் பாழி -அழகையும் வலிமையையும் உடைய தோள் என்றவாறு

முன்பூழி காணானைக் காண் என்னும் கண்
கண்களானவை
நாம் அவனை வந்து ஆஸ்ரயிப்பதற்கு முன்புஇருந்த
காலத்தில் உள்ள
வைமுக்யத்தை நிலைமையை
நெஞ்சாலும் எண்ணாத பெருமானை சேவி
என்று உபதேசிக்கின்றன
மகா பாதகன் -அபராதகன் -இன்று ஆஸ்ரயித்தால் நேற்று வரையில் எப்படி இருந்தான்
முற்கால பாபங்களை சிறிதும் ஆராயதவன் -காணான்
எம்பெருமான் -என்றவாறு –

செவி கேள் என்னும் பூணாரம் பூண்டான் புகழ்
காதுகள் ஆபரணமான ஹாரம் முதலியவற்றை
அணிந்து கொண்டு இருக்கிற
அப்பெருமான் உடைய திருக் கல்யாண குணங்களை கேள்
என்று தூண்டுகின்றன –

————————————————————————————————————————————————————————————-

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான்–73-

———————————————————-

புகழ்வாய் பழிப்பாய் நீ
ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு
அன்றியே
நிந்திப்பதனாலும் நிந்தி
சிசுபாலாதிகளைப் போலே

பூந்துழாயானை –

அன்றிக்கே
இகழ்வாய்-
அநாதாரித்தாலும் அநாதரி
அன்றிக்கே
கருதுவாய்-
ஆதரித்தாலும் ஆதரி
உனக்கு இஷ்டப் பட்டபடி செய்
நீ எது செய்தாலும் அவனுடைய பெரு மேன்மைக்கு ஒரு குறையும் வாராது காண்

நெஞ்சே
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண
நின்றவா நில்லா நெஞ்சு
கருதுவாய் என் நெஞ்சே என்றும் பாட பேதம்

-திகழ் நீர்க் கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும் உடலும் உயிரும் ஏற்றான்
விளங்குகின்ற ஜல பூர்த்தியை உடைய சமுத்ரமும்
பர்வதங்களும்
பரம்பிய ஆகாசமும்
வாயுவும்
தேவாதி சரீரங்களும்
அந்தந்த சரீரங்களில் உள்ள பிராணன் களும்
ஆகிய இவற்றை எல்லாம்
தரித்து கொண்டு இருப்பவன் அவ்வெம்பெருமானே காண்
தான் என்ற சொல்லுக்குள் அடங்கும்படி எல்லா வற்றையும் தனக்கு விசேஷணம் ஆகக் கொண்டு உள்ளான் என்றுமாம்
சர்வ தாரகத்வத்தை சொல்லி
நம்முடைய புகழ்வு இகழ்வு எல்லாம் அவனுக்கு அப்பிரயோஜகம் –

——————————————————————————————————————————————————————————–

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் -கூற்றொருபால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு –74-

—————————————————————————————–

ஸ்ரீ மன் நாராயணன் உடைய பரத்வத்தையும்
ருத்ரனின் அபரத்வத்தையும் சொல்லி
சிவனும் எம்பெருமான் உடைய ரஷணத்தில் அடங்கினவன் என்கிறார்

ஏற்றான்
ரிஷபத்தை வாகனமாக உடையவனும்
தமோ குணமே வடிவு எடுத்ததாயும்
மூடர்களுக்கு உவமையாக சொல்லத் தக்கதாயும்

புள்ளூர்ந்தான்
கருடனை வாகனமாக உடையவனும்
வேத ஸ்வரூபி

எயில் எரித்தான்
திரிபுர சம்ஹாரம் பண்ணினவனும்
தன்னை ஆஸ்ரயித்தவர்களின் குடி இருப்பை எரித்தவன்

மார்விடந்தான்
இரணியனது மார்பை பிளந்தவனும்
ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதன் விரோதியை மார்பை பிளந்து ஒழித்தவன்

நீற்றான்
சாம்பலை பூசிக் கொண்டு இருப்பவனும்
தான் பிராயச் சித்தி என்று தோன்றும்படி
நீறு பூசின சர்வாங்கம் உடையவன்

நிழல் மணி வண்ணத்தான் –
நீல ரத்னம் போலே குளிர்ந்த வடிவை உடையவனும்
ஸ்ரமஹரமான குளிர்ந்த வடிவை உடையவன்

கூற்றொருபால்மங்கையான்
தனது ஒரு பக்கத்தில்
பார்வதியை தரித்துக் கொண்டு இருப்பவனும்
உடலின் பாதி பாகத்தை ஸ்திரீ ரூபம் ஆக்கிக் கொண்டவன்

பூ மகளான்
பெரிய பிராட்டியை திவ்ய மகிஷியாக உடையவனும்
உலகுக்கு எல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாக கொண்டவன்

வார் சடையான்
நீண்ட ஜடையைத் தரித்து உள்ளவனும்
சாதனா அனுஷ்டானம் பண்ணுவது உலகோருக்கு தெரியும் வண்ணம் சடை புனைந்தவன்

நீண் முடியான்
நீண்ட கிரீடத்தை அணிந்து உள்ளவனும்
சர்வேஸ்வரத்வ ஸூசகம்

கங்கையான்
ஜடை முடியில் கங்கையை தரித்து கொண்டு இருக்கும் ருத்ரன்
பரிசுத்தன் ஆவதற்காக கங்கையை தரித்தவன்

நீள் கழலான் காப்பு
நீண்ட திருவடிகளையும் உடையவனான
சர்வேஸ்வரன் உடைய
ரஷணத்தில் அடங்கினவன்
அந்த கங்கைக்கு உத்பத்தி ஸ்தானமான திருவடியை உடையவன்

மாறி மாறி சொல்லி அருளியது வாசி நன்றாக விளங்குவதற்காக-

———————————————————————————————————————————————————————

காப்பு உன்னை உன்னக் கழியும் அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் -மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி–75-

—————————————————————————————————–

திருமாலே
உன்னை ஆஸ்ரயிப்பவர்கள்
பிரதிபந்தகங்கள் நீங்கப் பெற்று
பிரகிருதி சம்பந்தமும் நீங்கி
திவ்ய லோக பிராப்தியும்
வாய்க்கப் பெறுவார்கள் -என்கிறார் இதில்
கர்மவச்யர் ஆகார் -பரம சாம்யா பத்தியை பெறுவார் என்றவாறு

காப்பு உன்னை உன்னக் கழியும்
பிரதிபந்தங்கள்
பரம புருஷனான உன்னை
ரஷகனாக அனுசந்திக்கும் அளவில்
விட்டு நீங்கும் –
காப்பு -பிரதிபந்தகம்-தடை
பாப சாஷியாக பதினால்வர் நியமிக்கப் பட்டு
சூர்யன்/சந்தரன்/வாயு /அக்னி /த்யுலோகம் /பூமி /ஜலம்
ஹ்ருதயம் /யமன் /அஹஸ் /ராத்திரி /இரண்டு சந்த்யைகள்/தர்ம தேவதை
இப்படிப் பட்ட கர்ம சாஷிகளும் ஆராயக் கடவர் அல்லர் -என்றபடி

அருவினைகள் ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும்
போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
உன்னை நினைக்கும் அளவில்
அவிழ்ந்து போம்
ஆப்பு -யாப்பு -கட்டு -கரும பந்தம்

-மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை
உன்னை த்யானிப்பவர்களுக்கு
கிழத் தனம் முதலிய ஷட்பாப விகாரங்களும் இல்லை யாம்
உளதாகை/பிறக்கை/மாறுகை/வளர்க்கை/மூப்பு-குறுகை/அழிகை-ஆகிய ஷட் பாவங்களும் இல்லை

திருமாலே
ஸ்ரீ யபதியே

நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள்
அர்ச்சிராதி மார்க்கத்தை -வழி காண்பர் –
கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள்-

——————————————————————————————————————————————————————————————–

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்தியரே யாவர் -பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76

——————————————————————————

வழி நின்று நின்னைத் தொழுவார்
பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
உன்னை ஆஸ்ரயிக்குமவர்கள்

வழுவா மொழி நின்ற மூர்தியரே யாவர் –
உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற
ஸ்வரூப ஆவிர்பாவத்தை
உடையராகவே ஆவார்கள்
வழுவா மொழி -வேதம்
அதில் சொல்லப் பட்ட மூர்த்தி யாவது -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம்
ஞ்ஞாநாநந்த விகாசம்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வர் -திருமங்கை ஆழ்வார் –

பழுதொன்றும்வாராத வண்ணமே
ஒரு குறையும் இல்லாதபடி

விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம்
உலகளந்த மகானுபாவன் எழுந்து அருளி இருக்கிற
திருமலையே
ஆஸ்ரிதர்களுக்கு மோஷம் அளிக்கக் காண்கிறோம் அன்றோ
கைமுதிக நியாயம்
அவன் எழுந்து அருளி இருக்கும் திரு மலையே கொடுக்க வல்லது என்றால்
அவன் கொடுத்து அளிப்பான் என்பது சித்தமே

எம்பார் நாள்தோறும் சிற்றம் சிறு காலையில்ஓவாதே இந்த பாசுரம் அனுசந்திப்பாராம் -பெரியவாச்சான் பிள்ளை –

—————————————————————————————————————————————————————————-

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்–77-

————————————————————————

எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்து அருளி
இருக்கும் படிகளை நாம் அனுசந்தித்தால்
நமது இடர் எல்லாம் நீங்கி விடும் -என்கிறார் இதில்
அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதும் ஆனபடிகளை நாம் சொல்ல
நாம் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்கள் எல்லாம் தன்னடையே போம்

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும்
திருமலையும்
வைகுண்ட மா நகரும்
திரு வெஃகாவும்

அஃகாத பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்
பூ மாறாத நீர் நிலைகளை உடைய
சிறந்த திருக் கோவலூர் என்கிற
திவ்ய தேசமும்

ஆகிய
நான்கு இடத்தும்
நான்கு திருப்பதிகளிலும்
வரிசை கிரமமாக

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால்
எம்பெருமான்
நிற்பதும்
வீற்று இருப்பதும்
பள்ளி கொண்டு இருப்பதும்
நடப்பதுமாய்
இருக்கிறான் என்று அனுசந்தித்தால்

கெடுமாம் இடர்
துக்கங்கள் எல்லாம்
விட்டோடிப் போய் விடும்
விண்ணகர் பரமேஸ்வர விண்ணகர் வீற்று இருந்த திருக் கோலம் என்பதால்
அத்தை சொன்னதாகவும் கொள்ளக் குறை இல்லை-

—————————————————————————————————————————————————————————

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த -படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு –78-

———————————————————————-

இடரார் படுவார்
அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்
துக்கத்தை அனுபவிக்க யாரால் முடியும்
என்னால் முடியாது -என்கிறார்

எழு நெஞ்சே
எழுந்திரு

வேழம் தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை விழுங்குவதாக
தொடர்ந்து வந்த
பெரிய நெஞ்சில் இரக்கம் இன்றியே
கொடுமை பூண்ட முதலையை
தப்பிப் போகாதபடி எண்ணிக் கொன்றவனும்

-படமுடைய பைந்நாகப் பள்ளியான் –
படத்தையும்
பசுமை நிறத்தையும் உடைய
திரு வநந்த ஆழ்வானை
திருப் பள்ளி மெத்தையாக உடையவனுமான எம்பெருமான் உடைய

பாதமே கை தொழுதும்
திருவடிகளை தொழுவோம்

கொய்ந்நாகப் பூம் போது கொண்டு
கொய்யப்பட்ட புன்னையின்
அழகிய மலர்களைக் கொண்டு

நாம் அவனை ஆஸ்ரயிக்கவே துக்கங்கள் எல்லாம் போம்
துக்கப் படுக்கைக்கு ஆள் இல்லை
ஒருகால் துக்கம் வந்தாலும் அது முதலை பட்டது படும்-

—————————————————————————————————————————————————————–

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பர்
மண் தா என இரந்து மா வலியை-ஒண் தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து –79-

————————————————————————————

எம்பெருமான் தனது ஸ்வரூபத்தை மாறாடிக் கொண்டாவது கார்யம் செய்து அருளுபவன்
என்று மூதலிக்க வேண்டி இருக்க
சம்சாரத்தில் அவனை கொண்டாடுபவர் இல்லையே
வஞ்சகன்/ சர்வஸ்பஹாரி /தனக்கு தானம் கொடுத்தவனை பாதாளத்தில் தள்ளினவன் என்பரே
மகாபலியை அஹங்காரி/ ஆசூர பிரகிருதி என்று நினைக்காமல்
ஔதார்ய குணம் ஒன்றாலே கொல்லாமல் விட்டு அருளினானே

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பர்
தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானை
பழிக்கிறார்களே அன்றி
தன்னது அல்லாததை தன்னதாக அபிமானித்துக் கொடுத்த
அந்த மாவலியை
பழிப்பவர்கள் யாரும் இல்லையே
இஃது என்ன அநியாயம் –

மண் தா என இரந்து மா வலியை-
மாவடி நிலத்தை எனக்குத் தா என்று
மாவலி இடத்தில் யாசித்து

ஒண் தாரை நீர் அங்கை தோய
அழகிய நீர் தாரை
தனது அழகிய திருக் கையிலே
வந்து விழுந்ததும்

வடுத்து நிமிர்ந்திலையே
கடுக ஓங்கி வளரவில்லையோ
மாவலி தாரை வார்த்த உதகமும்
ப்ரஹ்மாதிகள் திருவடி விளக்கின உதகமும்
ஏகோதகம் என்னலாம் படி அத்தனை விரைவாக நீ வளர வில்லையோ –

நீள் விசும்பில் ஆரங்கை தோய
பரம்பின மேல் உலகில்
வாழ்கின்ற ப்ரஹ்மாதிகள் உடைய
அழகிய கைகள் ஸ்பர்சித்து
திருவடி விளக்கும்படி –

நீள் விசும்பிலார் அங்கை தோய
விசும்பில் உள்ள தேவர்கள் உனது திருத் தோளில் வந்து அணையும்படியாகவும்

நீள் விசும்பில் ஆரம் கை தோய –
பரந்த விசும்பில் உனது திரு மார்பில் அணிந்திருந்த
முத்தா ஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி
ஓங்கி -என்றுமாம் –

——————————————————————————————————————————————————————–

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த -விடத்தரவை
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள் –80-

————————————————————————–

அடுத்த கடும் பகைஞற்கு
நெருங்கிய கொடிய சத்துருவான
கருடனுக்கு

ஆற்றேன் என்று ஓடி
நேரே நின்று பிழைத்து இருக்கத் தக்க
வல்லமை உடையேன் அல்லேன் என்று
சொல்லிக் கொண்டு
விரைந்து ஓடிப்போய்

படுத்த பெரும் பாழி
எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு
விரித்த
பெருமை பெற்ற
படுக்கை யாகிற சேஷனை

சூழ்ந்த –
சுற்றிக் கொண்ட

விடத்தரவை
விஷத்தை உடைய ஸூ முகன்
என்கிற சர்ப்பத்தை
தேவேந்தரன் சாரதி மாதலி தனது புத்திரி குணகேசி என்பவளுக்கு வரம் தேடி
நாரத மகரிஷி உடன் புறப்பட்டு
பாதள லோகம் போகவதி நகரம் அடைந்து
ஐராவத குலத்தில்-ஆர்யகன் பௌத்ரன் -வாமனன் தௌஹித்ரன் -சிக்ரன் புத்திரன் -ஸூ முகன் நாக புத்ரன்
ஆர்யகன் இவனை கருடன் பஷித்து இவன் தந்தையை யும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக கருடன் சொல்லி இருப்பதை சொல்ல
மாதலி அந்த சுமுகனைஉபேந்திர மூர்த்தி உடன் இருந்த தேவேந்தரன் இடம் கூட்டிச் செல்ல
உபேந்த்ரன் இவனுக்கு அமிர்தம் தரலாம் இஷ்ட பூர்த்தி உண்டாகும் சொல்ல
வலது திருக்கை பாரம் கூட தாங்க முடிய வில்லை கருடனுக்கு
அபராத ஷாமணம் செய்து கொள்ள

வல்லாளன் கைக்கொடுத்த
வலிமை உடைய கருடன் கையிலே
அடைக்கலப் பொருளாக
தந்து ரஷித்த
கருடா சுகமா சொல்லி
குசலப் பிரச்னம் பண்ணுவான் ஆயினான்

மாமேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள்
சிறந்த திருமேனி உடைய
எம்பெருமானுக்குத் தவிர
மற்ற தேவதாந்தரங்கட்கு
அடிமை ஆவாரோ –

————————————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-61-70–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கரும் கடலும் வெற்பும் -உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு –61-

—————————————————————————————

உலகு இறந்த ஊழியும் அழிந்து கிடந்த பிரளய காலத்திலும்

புந்தியிலாய-சங்கல்ப ஞானத்தினால் படைக்கப் பட்ட

புணர்ப்பு -படைப்புகளாம்

ரக்த சம்பந்தமே யாகும்
பெற்றவனை ஒழிய வளர்ப்பவன் இல்லை என்றது ஆயிற்று
இவை அறியாத காலத்திலும் அவனே ஸ்ருஷ்டிக்கையாலே
இப்போது உபாயம் அறிவானும் அவனே என்று
கீழ்ப் பாசுரத்துடன் சேர்த்து பொருள் –

————————————————————————————————————————————————

புணர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மணமருவ மால் விடை ஏழ் செற்று–கணம் வெருவ
ஏ ழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும்
சூழ் அரவப் பொங்கணையான் தோள்–62-

———————————————————————————
ஸ்ருஷ்டித்து தூரச்தனாய் நில்லாமல்
களைகளைப் பிடுங்கி ரஷிப்பவனும் அவனே
தோள் என்றது கை
தவழ்ந்து போய் மருதம் முறித்ததால் கைகளின் மேல் ஏறிட்டு கூறுகிறார்

கணம் கூட்டம் -வேறுபாடி இன்றி அனைவரும் வெருவ

சூழ் அரவப் பொங்கணையான் தோள்
பரிமளம் குளிர்த்தி -பொருந்திய திரு அரவப் படுக்கையும் பொறாத சௌகுமார்யம்
இப்படி அல்லாடி திரிகிறான் -வயிறு எரிகிறார்-பொங்கும் பரிவு
எல்லா செயல்களையும் தோளின் மேல் ஏறிட்டு அருளுகிறார்-

——————————————————————————————————————————————————————-

தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேளவனது இன்மொழியே கேட்டு இருக்கும் நா நாளும்
கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்–63-

————————————————————————————-

தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்

கேளவனது –
சகல வித பந்துவான அப்பெருமான்
விஷயமாகவே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே –

இன்மொழியே கேட்டு இருக்கும்
நா நாளும்
கோள் நாகணையான்-
மிடுக்கை உடைய திருவநந்த ஆழ்வானை படுக்கையாக
உடைய அப்பெருமானது

குரை கழலே
ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்த திருவடிகளையே

கூறுவதே

நாணாமை நள்ளேன் நயம்
சப்தாதி விஷயங்களை வெட்க்கப் படாமல்
விரும்புவாரைப் போல் நான் விரும்ப மாட்டேன்
நயம் -நயக்கப் படுவது நயம் -ஆசைப் படத் தக்க விஷயாந்தரங்கள்
நயந்தரு பேரின்பம் எல்லாம் -இராமானுச நூற்றந்தாதி
எல்லா இந்த்ரியங்களும் அவன் மேல் ஊன்ற பட்ட படியை
ஹர்ஷத்துடன் அருளிச் செய்கிறார்
ஒரே உறுதியாக இருக்கவே நானும் நாமம் கொண்டு இதர விஷயங்களை காறி உமிழ்ந்தேன்-

——————————————————————————————————————————————————–

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் -வியவேன்
திருமாலை அல்லால் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என்மேல் வினை–64-

————————————————————————

விஷயாந்தரங்கள் துர்வாசனையால்
தம்மை இழுக்க மாட்டாது என்கிறார் இதில்
அவன் அனுக்ரஹத்தை பூரணமாக பெற்று இருக்கிறேன் –
நயவேன் பிறர் பொருளை
பரமபுருஷன் உடைய ஆத்மவஸ்துவை
என்னுடையது என்று விருமப மாட்டேன்
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத -என்பதால் எம்பெருமானை- பிறர்- என்கிறார்
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -கண்ணி நுண் சிறுத் தாம்பு
கௌஸ்துப ஸ்தானமான ஆத்மவஸ்துவை -என்னது -என்று அபிமானித்ததால்
இராவணன் செயல் உடன் ஒக்கும்

நள்ளேன் கீழாரோடு
சம்சாரிகளோடே ச்நேஹம் கொள்ள மாட்டேன்
மாரீசன் போல்வார் உடன் ச்நேஹம் கொள்ள மாட்டேன்

உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் –
சரிந்த ஸ்ரீ வைஷ்ணவர்களோடு அல்லால்
மற்றவர்கள் உடன் கால ஷேபம் செய்ய மாட்டேன்
உய்வேன் -உசாவேன் என்றபடி வார்த்தையாடி போது போக்குதல்
உசாத்துணை -ஸ்ரீ வைஷ்ணவர்களே

திருமாலை அல்லால் தெய்வம் என்று ஏத்தேன்
ஸ்ரீ யபதியை தவிர வேறு தேவதாந்தரங்களை
தெய்வமாக கொண்டு துதிக்க மாட்டேன்

வியவேன்
இப்படி இருக்க ஹேதுவான சத்வ குணம் என்னிடம் தான் உள்ளது
என்று அஹங்கரித்து என்னைப் பற்றி
நானே ஆச்சர்யம் பட மாட்டேன்

திருமாலை அல்லது வியவேன் -என்றுமாம்

வருமாறு என் என்மேல் வினை
இப்படியானபின்பு
அவன் அனுக்ரஹத்துக்கு இலக்கான என்மேல்
அவன் நிக்ரஹ ரூபமான பாபம்
வரும் விதம் எது -வர மாட்டா -என்றபடி
அவசியம் அனுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் -சாஸ்திர வாக்கியம்
வருமாறு என் நம் மேல் வினை -என்றும் பாடம்
தம்முடன் சம்பந்தித்ததவர்களையும் கூட்டிக் கொண்டு அருளுகிறார்
ஒருமையில் பன்மை வந்த வழு வமைதி-

———————————————————————————————————————————————————-

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிகட் செல்லார் -நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்
கரியானை கை தொழுதக் கால்–66-

—————————————————————————————-

ஆழ்வார் தாம் ஒருங்கு பட்ட நிலையை அருளிச் செய்த அநந்தரம்
நாமும் அந்த நிலை பெற இலகுவான உபாயம் காட்டி அருளுகிறார்

வினையால் அடர்ப்படார்
நல்வினை தீ வினை இரண்டாலும்
நெருக்குப் பட மாட்டார்கள்
பொன் விலங்கு புண்யம் இரும்பு விலங்கு பாபம்

வெந்நரகில் சேரார்
கொடிய சம்சாரம் ஆகிய நரகத்திலே மீண்டும் சென்று
சேர மாட்டார்கள்
அவன் உடன் கூடி இருத்தல் ஸ்வர்க்கம் பிரிந்தால் நரகம் -சீதை –

தினையேனும் தீக்கதிகட் செல்லார் –
சிறிதேனும் கெட்ட வழியிலே போக மாட்டார்கள்
தர்ம புத்திரன் நரக தர்சனம் பண்ணினவோபாதியும் கூடாது இவர்களுக்கு
அஸ்வத்தாமா ஹத குஜ்ஞ்ஞர

நினைதற்கு அரியானை
ஸ்வ பிரயத்தனத்தால்
நினைக்க கூடாதவனும்

சேயானை
நெஞ்சுக்கு விஷயமாகாத படி
தூரச்தனாக இருப்பவனும்

ஆயிரம் பேர்
ஆயிரம் திரு நாமங்களை உடையவனும்

செங்கண் கரியானை கை தொழுதக் கால்
சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவையும் உடையவனுமான பெருமானைக் குறித்து
அஞ்சலி பண்ணினால்

————————————————————————————————————————————————————————————

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் -வேலைக்கண்
ஓராழியான் அடியே ஓதுவதும் ஒர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர்–66-

——————————————————————————–

காலை எழுந்து உலகம் கற்பனவும்
உயர்ந்தவர்கள் சத்வம் வளரக் கூடிய விடியல் காலையில் துயில் எழுந்து அப்யசிப்பனவும்
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே

கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்
படித்து அறிவு நிரம்பிய
வைதிகோத்தமார்கள்
சாஷாத் கரிக்க ஆசைப்படுவனவும்
கீழ் வேதம் -கர்ம காண்டம்
மேல் வேதம் -ப்ரஹ்ம காண்டம் உபநிஷத்
மேலைத் தலை மறையோர் -வேதாந்திகள் என்றபடி

எவை என்றால் –

வேலைக்கண் ஓராழியான் அடியே
திருப் பாற் கடலிலே
ஒப்பற்ற திரு வாழியை உடையவனாய்
பள்ளி கொண்டு இருக்கும் பெருமான் உடைய
திருவடிகளேயாம்

ஓதுவதும்
மகான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்

ஒர்ப்பனவும்
மனனம் பண்ணப் பெறுவனவும்
எவை என்றால்

பேராழி கொண்டான் பெயர்
பெரிய கடல் போன்ற திரு மேனியைக் கொண்ட
அப்பெருமான் உடைய
திரு நாமங்களே யாம்-

—————————————————————————————————————————————————————————————

பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனையே நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு–67-

—————————————————————————–

பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு
பொங்கிக் கிளறுகின்ற மகா சமுத்ரம் நோக்கியே
ஆறுகளானவை செல்லும்

ஒண் பூ உயரும் கதிரவனையே நோக்கும்
அழகிய தாமரைப் பூவானது
உக்கத ஸ்தானத்தில் ஆகாசத்தில்
இருக்கிற சூரியனைக் கண்டே மலரும்

-உயிரும் தருமனையே நோக்கும்
பிராணனும் யமதர்ம ராஜனையே
சென்று சேரும்
இவை போலவே

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
ஞானமானது
அழகிய தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்கு
வல்லபனான பெருமான் ஒருவனையே சென்று பற்றும்
பகவத் விஷயம் அல்லாத ஞானம் செருப்பு குத்த கற்றது போலேயாம்

தொக்கிலங்கி யாரு எல்லாம் பறந்தோடி தொடு கடலே
புக்கன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கிலங்கு முகில் நிறத்தாய் வித்துவக் கோட்டு அம்மா உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே -பெருமாள் திருமொழி

முமுஷுப்படி திரு மந்திர பிரகரணம் -73-இத்தால் தாமரையாள் கேள்வன் ஒருவனையே
நோக்கும் உணர்வு என்றதாயிற்று
இதற்கு மா முனிகள் உணர்வு -ஞான மாயனான ஆத்மா
திருமாலுக்கு அனன்யார்ஹ சேஷ பூதன் -என்பதை இப்பாட்டு உணர்த்தும் என்று காட்டி அருளுகிறார்

ஆக
எம்பெருமானைப் பற்றிய ஞானமே ஞானம்
ஆத்மா எம்பெருமானுக்கே உரியவன்
மிதுன சேஷத்வமே ஜீவாத்மா லஷணம் -தாமரையாள் கேள்வன் என்பதால்

ஸ்ரீ வைஷ்ணவ பிராணன் யமனை கிட்டி சேராதே சங்கை உண்டே
உயிரும்-பகவத்பரர் அல்லாத நாட்டில் பிராணிகள் அடங்கலும் -அப்பிள்ளை உரை
ஆத்மா வேறு பிராணன் வேறு -சித்தாந்தம்
ஸ்ரீ வைஷ்ணவ ஆத்மா எம்பெருமானைச் சேர்ந்தாலும்
பிராணன் யமனைச் சென்று சேரும் என்பர் சிலர்
மற்றும் சிலர்
யாமோ வைவஸ்வதோ ராஜா யச்தவைஷா ஹ்ருதி ஸ்தித -என்றும்
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம் -என்றும்
எம்பெருமானையே யமனாகவும் தருமனாகவும் சொல்லி இருப்பதாலே
அங்கு எம்பெருமானே பொருள் என்பர் சிலர்-

————————————————————————————————————————————————————————————————————

உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோரூழி
உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை -உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்–68-

—————————————————————————————

உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோரூழி
இப்படிப் பட்ட உன்னுடைய பெருமையை
காலதத்வம் உள்ளதனையும் இருந்து ஆராய்ந்தாலும்
அறியக் கூடியவர் ஆர்

உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை -உணர்வாரார்
உனது திவ்யாத்மா ஸ்வரூபத்தை
தான் அறியக் கூடியவர் ஆர்

விண்ணகத்தாய்
பரமபதத்தில் எழுந்து அருளி இருப்பவனே

மண்ணகத்தாய்-
இந்த மண்ணுலகில் திரு வவதரிப்பவனே

வேங்கடத்தாய்-
திருமலையில் நின்று அருளுபவனே

நால் வேதப் பண்ணகத்தாய்
பண் நால் வேதத்து அகத்தாய்
ஸ்வர பிரதானமான நான்கு வேதங்களாலும்
அறியப் படுபவனே

நீ கிடந்த பால்
ஆர்த்த ரஷணத்துக்காக
நீ பள்ளி கொண்டு இருக்கப் பெற்ற திருப் பாற் கடலை தான்
உணர்வார் ஆர்

யாரும் இல்லை
சர்வஞ்ஞன் உன்னாலும் உணர முடியாதே
தனக்கும் தன் தன்மை அறிவரியான்-

——————————————————————————————————————————————————————–

பாலன் தனது உருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின்
மேல் அன்று நீ வளர்ந்தது மெய் என்பர் -ஆல்அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல் –69-

——————————————————————————–

சமத்காரமான கேள்வி
எத்திறம் என்று நினைந்து ஈடுபடும்படியான
ஏழு பிராயத்தில் கோவர்த்தனம் குடையாக பிடித்த
செயலை விட ஆச்சர்யமான
அகடிதகட நா சாமர்த்தியமான செயல்
பாலன் தனது உருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்தது மெய் என்பர்-

வேலை நீருள்ளதோ
பிரளய சமுத்ரத்தில் தோன்றிய ஆலம் தளிரா

விண்ணதோ
பிடிப்பு ஒன்றும் இல்லாத ஆகாசத்தில் தோன்றியதா
மண்ணதோ
பிரளயத்தில் கரைந்து போன மண்ணில் நின்றும் தோற்றியதா

சர்வஞ்ஞன் உன்னாலும் கண்டு பிடித்து சொல்ல முடியாத கேள்வி
அதிமாநுஷ சே ஷ்டிதங்களில் குதர்க்கம் பண்ணுதல் தகாது
அல்பபுத்திக்கு அசம்பாவிதமாக தோற்றினாலும்
விசித்திர சக்தனான
அவன் செயல்களில் துராபேஷங்கள் செய்ய அதிகாரம் இல்லை-

———————————————————————————————————————————————————————————-

சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை-நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று –70-

————————————————————————————-

சொல்லும் தனையும்
சொல்லக் கூடிய சக்தி உள்ள வரையிலும்

தாமத்தால்
மந்த்ரம் இல்லாத கிரியைகளாலும்

தவறாமல் சரிந்தே போகக் கூடியது உடல்
இதம் சரீரம் பரிணாம பேதலம் பதத்யவச்யம் ச்லதசந்தி ஜர்ஜரம்
அப்படி உடலால் செய்ய முடியாவிடில் வாயாலே திரு நாமங்களை சொல்லலாமே

தொழுவதற்கு சக்தி இல்லா விடில்
திருநாமங்கள் சொல்லும் சக்தி உள்ள வரையில்
புகழ்ந்தீர்கள் ஆகில் அது மிகவும் நன்று

————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்