Archive for the ‘பெருமாள் திருமொழி’ Category

பெருமாள் திருமொழி -5–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

அவதாரிகை –

திரு மந்தரத்தால் சொல்லிற்று யாய்த்து அனந்யார்ஹ சேஷத்வம் இறே –
இந்த அனந்யார்ஹ சேஷத்வ பிரதிபத்திக்கு விரோதி தான்
நான் என்னது -என்று இருக்கும் அஹங்கார மமகாரம் இறே –
அநாத்மன்யாத்ம புத்தியும் அச்வேஸ்வத்ய புத்தியும் இறே
சம்சாரம் ஆகிற வர்ஷத்துக்கு பீஜம் என்று பிரமாணங்கள் சொல்லுகிறது -அது சேதனர்க்குப் பொதுவானது இறே
அப்படி இன்றிக்கே ராஜாக்கள் ஆகையாலே அஹங்கார மமகார வச்யராய் இறே இருப்பது
நிலா தென்றல் சந்தனம் என்று சொல்லுகிற இவை பதார்த்தம் ஆகாத போது ஸ்வரூப சித்தி இல்லையாம் இறே
அப்படியே இறே பரார்த்தமான வஸ்துவுக்கும் அஹங்கார மாமாகாரத்தாலே ஸ்வரூப சித்தி அழியும் இறே

இப்படி பரார்த்தம் என்னும் படிக்கு பிரமாணம் உண்டோ என்னில்
இவனை -யஸயாஸ்மி -என்றும் ஓதி -பதிம் விஸ்வஸ்ய -என்றும் அவனை ஒதுகையாலே
இவன் ஒன்றுக்கும் கடவன் அல்லன் -உடையவனானவன் எல்லா வற்றுக்கும் கடவன் என்றது இறே
அப்படி பிரமாணங்களால் சொன்ன சேஷத்வ பிரதிபத்தியாவது -ததீய சேஷத்வ பர்யந்தமான அனந்யார்ஹ சேஷத்வம் இறே –

அப்படி தமக்குப் பிறந்து இருக்கச் செய்தே அது பல பிரதமாகக் கண்டிலர்
தான் தன் கருமம் செய்கிறான் என்றாதல் –
நாம் க்ரமத்தால் செய்கிறோம் என்று ஆறி இருந்தானாதல் –
நம்முடைய த்வரைக்கு அடியான ருசியும் அறியுமவன் ஆகையால் ருசி பாகமானால் செய்கிறோம்
என்று ஆறி இருந்தானாம் அத்தனை –

நம்மைப் போல் அன்றியே செய்தது அறிந்து இருக்கும் சர்வஜ்ஞனாகையும் –
நினைத்தது தலைக் கட்ட வல்ல சர்வ சக்தனாய் இருந்து வைத்து ஆறி இருக்கும் போது
சில ஹேதுக்கள் உண்டாக வேணும் இறே என்று பார்த்து
எனக்கு நானும் இல்லை –
பிறரும் இல்லை –
பேற்றில் த்வரையால் துடிக்கிறேன் அத்தனை அல்லது சாதன அனுஷ்டான ஷமனும் அல்லேன்-என்னும் இடத்தை
அநந்ய கதிகளாய் இருக்கும் பதார்த்தங்களை நிதர்சனமாக இட்டு தம்முடைய அநந்ய கதித்வத்தை
ஸ்ரீ திரு வித்துவக்கோட்டு நாயனார் திருவடிகளிலே விண்ணப்பம் செய்கிறார்-

—————

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றாயாகில்-
தன்னாலே தனக்கு விரோதி வந்தது என்றும்
தானே சாதன -அனுஷ்டானத்தாலே அது போக்கிக் கொள்வான் என்றும் சாஸ்திரங்கள் சொல்லிக் கிடக்கச் செய்தே
இவர் அவனே துயர் தந்தான் என்பான் என் என்னில்
பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையாலே சொல்லுகிறார் –
தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று
நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும்
நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் –
நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் –
நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பலபிரதன் ஆகையாலே
அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே -தரு துயரம் -என்கிறார் –

ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள்
விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து-
ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என்
என்று விசாரிக்கச் செய்தே –
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –
அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —
அதாவது ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –
யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால்
அவற்றின் அளவில் பர்யவசியாது இறே
இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே -தரு துயரம் -என்னலாம் -இறே –

தடாயேல் –
நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –
மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே -என்றும் –
நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் –
இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்
நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே –
துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது –
பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் -ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை
ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –
அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்

உன் சரண் அல்லால் சரண் இல்லை –
இவ்வளவாக விளைத்துக் கொண்ட நான் எனக்கு இல்லை
பிறர் ரஷகர் உண்டாகிலும் நான் அவர்களை ரஷகராக கொள்ள மாட்டாமையாலே அவர்களும் இல்லை –
நான் பண்ணும் சாதன அனுஷ்டானமும் எனக்கு கழுத்துக் கட்டி யாகையாலே
தேவரீர் திருவடிகள் அல்லது வேறு ஒரு உபாயம் இல்லை

விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே-
பரிமள பிரசுரமான சோலையை உடைத்தான ஸ்ரீ திரு வித்துவக் கோட்டிலே எழுந்து அருளி
இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனே –
விரை குழுவும் மலர் பொழில் சூழ்-
சர்வ கந்த -என்கிற பிராப்ய வஸ்து வந்து கிட்டின இடம் என்று தோற்றி இருக்குமாய்த்து –
வித்துவ கோட்டு அம்மானே–
உபாயமாம் போது ஸூலபமாக வேணும் இறே –
அம்மானே –
பிரஜை உறங்குகிற தொட்டில் கீழே கிடக்கும் தாயைப் போலே இங்கே வந்து கிட்டினவனே-
தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே தம்முடைய ரஷணத்துக்கு தமக்கு ஆனவையும் சொன்னார் –
சேஷியாகையாலே தம்முடைய ரஷணத்துக்கு ப்ராப்தன் -அவன் என்கிறார் -இப்போது –
ஒருவன் பேற்றுக்கு ஒருவன் சாதனமாம் போது இத்தனை பிராப்தி உண்டானால் அல்லது ஆகாது இறே
பிரஜை உடைய நோய்க்கு தாய் இறே குடி நீர் குடிப்பாள்
மேல் தாயை நிதர்சனமாகச் சொல்லப் புகுகிறவர் ஆகையால் இப்போது
அம்மான் என்று பிராப்தி தோன்றச் சொல்லுகிறார் –

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அவனே ரஷகன் என்னும் அத்யவசாயம் உண்டானாலும் -பேறு தாழ்த்தால் அவனை
வெறுக்க வேண்டும் பிராப்தி உண்டு இறே சேதனன் ஆகையாலே –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று அசித் சாமானமாக பாரதந்த்ர்யத்தைச் சொல்லி வைத்து
எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –என்கிறது புருஷார்த்த சித்தி சேதனனுக்கு ஆக வேண்டி இறே –
அவனைக் குறித்து சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பாரதந்த்ர்யம் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே
புருஷார்த்த சித்தி இவனுக்கு உண்டாகிறது சேதனன் ஆகையால் இறே

அரி சினத்தால் –
அரிந்து போக வேண்டும் சினத்தை யுடையாளாய்க் கொண்டு
ஈன்ற தாய் –
வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று
அகற்றிடினும் –
அகற்றிடினும் என்கையாலே அகற்றுகை அசம்பாவிதம் -என்கிறது
ஈன்ற தாய் -என்கையாலே
பெறுகைக்கு நோன்பு நோற்கையும்-பத்து மாசம் சுமக்கையும் -பிரவச வேதனை படுகையும்
என்கிற இவை எல்லாம் உடையவள் -என்கை-
அகற்றிடினும் –
இப்படி பெறுவதுக்கு முன்புள்ள வெல்லாம் துக்கமும் பட்டவள் ஆகையாலே
வருகிறதை நினைக்குமது ஒழிய அகற்ற நினையாள் இறே
அவள் தான் அகல விடினும் –
இத்தால் சொல்லிற்று யாய்த்து -நிருபாதிக தேவரீர் கை விடிலும் வேறு எனக்கு புகழ் இல்லை என்கிறார் –

மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி –
இவள் கோபித்து விட்டாலும் வேறு ஒருவருடைய அருளை அபேஷியாது இறே பிரஜை –
அதுக்கு அடியான பிரேமத்துக்கு அவதி உண்டாகில் இறே கோபத்துக்கு அவதி உள்ளது –
ஸ்நேஹம் இல்லாமையாலே கோபமும் இல்லை இறே பிறருக்கு –

ஸ்ரீ நம்பி திரு வழுதி வள நாடு தாசரை ஸ்ரீ முதலியாண்டான் கோபித்து கையாலும் காலாலும் துகைத்து
இழுத்தவாறே திண்ணையிலே பட்டினியே ஒரு நாள் போகாதே கிடந்தார் –
ஸ்ரீ ஆண்டான் மற்றை நாள் அமுது செய்யப் புகுகிறார் -அவன் செய்தது என் என்று கேட்ட வாறே
பட்டினியே வாசலிலே கிடந்தான் என்று கேட்டு அழைத்து -நீ போகாதே கிடந்தது என் -என்ன –
ஒரு நாள் ஒரு பிடி சோறிட்டவன் எல்லா படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறது இல்லை –
ஸ்ரீ நாத நான் எங்கே போவது -என்றார்

அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –
வேறு சிலரால் ஆற்ற ஒண்ணாது இறே
முன்னாள் முலை கொடுத்த உபகாரத்தை நினைத்து இருக்குமதாகையாலே -அவள் தானே ஆற்ற வேணுமே
ஸிஸூஸ்தநந்தய -என்றும் –
அளவில் பிள்ளைமை -என்றும் சொல்லுகிறபடியே
அதாவது -ரக்த ஸ்பர்சம் உடையார் எல்லாரையும் அறியாதே மாதா ஒருத்தியையுமே அறியும் அளவே யாய்த்து அதி பால்யம்
அப்படியே ஸ்ரீ எம்பெருமானைக் குறித்து இவ்வாத்ம வஸ்து நித்ய ஸ்தநந்த்யமாய்த்து இருப்பது
ஆகையால் இறே இவன் பேற்றுக்கு அவன் உபாயம் ஆகிறது –

————————————————————————–

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே-
அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான
அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்
காதலன் –
பிரேமத்தையிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல-
இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே
நினைத்து இருக்குமவளைப் போலே
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல-
அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே
கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று
குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று

விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா!
ஸ்ரீ பிராட்டி ஸ்வயம்வரத்துக்கு ஸ்ரீ மிதுலையிலே புறச் சோலையிலே விட்டிருந்தால் போலே இவரை
ஸ்வயம் வரிக்கைக்காக விறே ஸ்ரீ திரு வித்துவக் கோட்டிலே நிற்கிறது –

நீ கொண்டு ஆளாய் ஆகிலும் –
இவ்வளவாக உபகாரகனான நீ குறையும் தலைக் கட்டாதே உபேஷித்தாலும் –

உன் குரை கழலே கூறுவனே-
உன் திருவடிகள் அல்லது எனக்கு வேறு புகல் இல்லை –
உபகாரகனான நீ உபேஷித்தாய் என்று கை வாங்குபவன் அன்று நான் –
எனதாவியார் யானார் -என்று நீ பண்ணின உபகாரத்துக்கு தலை சீய்க்குமவன் நான் -என்கிறார் –

——————————————————————-

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே— 5-3-

மீன் நோக்கும் நீள் வயல் சூழ்
மத்ஸ்யம் என்று பேர் பெற்றவை யடையக் கடாஷிக்கும் தேசமாய்த்து —
கடலில் மத்ஸ்யம் -கடல் வற்றினால் நமக்குப் புகலிடம் -என்று நினைத்திருக்கும் தேசமாய்த்து –

வித்துவ கோட்டு அம்மா ! –
பரமபதத்தில் உள்ளாறும் சீல குணம் அனுபவிக்கும் தேசமாய்த்து –
தரமி பிரயுக்தம் என்று பிரமாணத்தாலே நாம் கேட்டு அறியுமா போலே
சீலாதிகள் தரமி பிரயுக்தம் என்று இருக்கும் அத்தனை இறே பரம பதத்தில்–
கண்டு அனுபவிக்கலாவது இங்கே இறே –

வித்துவ கோட்டு அம்மா ! -என் பால் நோக்காய் ஆகிலும்
பரமபதம் ஆகிற ஒரு நாடாக நீ நோக்குகிற நோக்கை -என்னை ஒருவனையுமே நோக்கி வந்து
இப்போது என்னை கடாஷியாது இருந்தாயே யாகிலும்

உன் பற்று அல்லால் பற்றி இலேன்
என்னுடைய ரஷையில் உத்யுக்தனான உன்னை விட்டு பாதகராக சம்ப்ரதிபன்னரானவரை பற்றுவேனோ
நித்ய சம்சாரியாக இவ்வளவாக சூழ்த்துக் கொண்ட என்னைப் பற்றவோ-
என்னுடைய ரஷணத்தில் என்னோபாதியும் பிராப்தி இல்லாத பிறரைப் பற்றவோ

தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
பிரஜைகளுடைய ரஷணத்திலே தீஷித்து தனிமாலை இட்டு இருக்கிற ராஜாவானவன் ரஷணத்தில் நெகிழ நிற்கும்
அளவன்றிக்கே -எல்லா துக்கங்களையும் விளைக்கிலும்

தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே—
ரஷகனாய் இருந்து வைத்து பாதகன் ஆனாலும் அவனுடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் பண்ணும் குடி போலே இருந்தேன்-
சிறியத்தை பெரியது தின்னாமல் காக்கத் தான் மாட்டான் —
செங்கற்சீரை கட்டி ரஷிப்பித்துக் கொள்ளும் முறை அவனுக்கு உண்டு
என் ரஷணத்தில் எனக்கு அந்வயம் அல்லாதாப் போலே சம்பந்தம் உடைய நீயே ரஷிக்கும் அத்தனை –
நான் செய்யலாவதும் இல்லை -நீ மாட்டாததும் இல்லை –

—————————————————————————————

அவதாரிகை —

ஒருவனாலே ஹிதம் என்றும் -பலத்திலே அந்வயம் ஒருத்தனுக்கே -என்றும் -அத்யவசித்தால்
ஹிதங்களையே பிரவர்த்தியா நின்றான் என்று தோற்றினாலும்-அவனே ரஷகன் என்று கிடக்க இறே கடவது –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரை -பிள்ளைகள் புகை சூழ்ந்த படி -சஹிக்கப் போகிறது இல்லை -என்ன –
சற்றுப் போதன்றோ வ்யசனப் படுவது –
ஸ்ரீ வைகுண்ட நாதன் திருவடிகளிலே ஸூகமாய் இருக்க வன்றோ புகுகிறது -என்றார் இறே
தான் தஞ்சமாகப் பற்றின விஷயத்துக்கு அந்யதா சித்தி பிறந்ததோ வென்று மீளும்படி இருக்கிற தசையிலே
ஹேத்வந்த்ரமது -அவ்வருகில் பேற்றில் குறையில்லை என்னும் அத்யவசாயம் இருந்த படி இறே
இதிலே மஹா விஸ்வாசம் ஆகிறது -தோற்றுகிற ஆபாத பிரதிபத்தியைக் கண்டு மீளாதே இருக்குமது இறே

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே— 5-4-

வாளால் அறுத்து சுடினும் –
ஹிம்சகர் சாதனத்தைக் கொண்டு அறுப்பது -சுடுவதானாலும்

மருத்துவன் பல் மாளாத காதல் நோயாளன் போல் –
அஹிதங்களை மேல்மேல் என பிரவர்த்திப்பிக்க செய்தேயும் பிஷக்கு –அவன் நமக்கு ஹித காமன் -என்று அவனுக்கு
தனது சர்வஸ்தையும் கொடுத்து அவன் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணும் வ்யாதியாளரைப் போலே

மாயத்தால் மீளா துயர் தரினும் –
மம மாயா -என்னும்படி உன்னுடையதான பிரகிருதி சம்பந்தத்தாலே அபுநராவர்த்தி லஷணமே துக்கத்தை விளைக்கிலும்

வித்துவ கோட்டு அம்மா ! நீ-மீளா துயர் தரினும் –
எனக்கு த்யாஜ்யமான சம்சாரத்திலே என்னுடைய ரஷணத்துக்காக குடி ஏறி இருக்கிற நீ நித்ய துக்கத்தை விளைக்கிலும் –
பெற்ற தாய் பிரஜைக்கு அஹிதம் செய்யில் இறே நீ செய்வது -அப்படி இருக்கிற நீ செய்யிலும் –

ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே—
ஆளா -ஸ்வரூப அனுரூபமான வர்த்தியைப் பெறுகைக்காக
வுனதருளே பார்ப்பன் –
இப்போது தோற்றுகிற வ்யசனங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணி இருப்பன் –
இப்படி இருக்கைக்கு நிபந்தனம் என் என்னில்
அடியேனே—
அடியேன் ஆகையாலே -என் ஸ்வரூபத்தையும் உன் ஸ்வரூபத்தையும் நேராக அறிந்தவன் ஆகையாலே –
அன்று கண்டாப் போலே கையும் வில்லுமாக நிற்பன் –
அவனுக்கு-ராவணனுக்கு- அச்சத்தாலே தனக்கு உருவு வெளிப்பாட்டாலே முன்னே நிற்பர்
தீரக் கழிய அபராதம் செய்த எனக்கு அவர் க்ருபை பண்ணுவாரோ என்று அவனுக்கு நினைவாகக் கொண்டு
புருஷர் ஷப–நீ அநு கூலனாய் ஓரடி வர நின்றால்-அத்தையே நினைத்து நீ பண்ணின அபகாரம் எல்லாம் புத்தி பண்ணுவாரோ
அவர் ஸ்ரீ புருஷோத்தமன் காண் –முன்பூழி காணான்-குற்றத்தை மறக்கும் -அன்றியே -குற்றம் செய்த நாளை நினைக்கில் குற்றம்
என்று ஸ்ரீ பிராட்டி ராவணனுக்கு அருளிச் செய்த படியே இனி நீர் அல்லது புகல் இல்லை என்கிறார் —

————————————————————-

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
வெவ்விய கண்ணையும் திண்ணிய நெஞ்சையும் உடைத்தான குவலயா பீடத்தை கொன்றவனே
பிரபல பிரதிபந்தகங்கள் உண்டு என்று இருக்க வேணுமோ தேவரீர் உள்ளீராய் இருக்க –

வித்துவ கோட்டு அம்மானே !–
அது தீர்த்தம் பிரசாதித்தது இறே என்று பிற்பாடற்கு இழக்க வேண்டாத படி திரு வித்துவக் கோட்டிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே
பரமபதம் கலவிருக்கையாக ஸ்வாம்யத்வத்தை நிர்வஹிக்கைக்காக வன்றோ இங்கே வந்து எழுந்து அருளி இருக்கிறது

வித்துவ கோட்டு அம்மானே ! எங்கு போய் வுய்கேன் ?-
பிராப்தனுமாய் பசியனுமானவன் வாசலிலே வந்து சோறு சோறு என்னா நிற்க அந்யராய்-நிரபேஷர் ஆனவர்களை உண்ண
அழைப்பாரைப் போலே உன்னை விட்டு பரம பதத்திலே இருக்கிற அவாப்த சமஸ்த காமனைப் பற்றவோ –

எங்கு போய் வுய்கேன் –
உஜ்ஜீவன ஹேதுவாக போமிடம் இல்லை -விநாச ஹேதுவாக போமில் போம் இத்தனை இறே –
உகந்து அருளின தேசங்களை விட்டு தேவதாந்தரங்களைப் பற்றுகை யாவது -விநாச பர்யாயம் இறே

உன் இணை அடியே அடையல் அல்லால்
அத்யவாச்யமாவது -புத்த்யர்த்தம் இறே –
அவன் தானே வந்து கிட்டச் செய்தே இழக்கிறார்
இழக்கிறதும் பெறுகிறார் பெறுகிறதும்-அப்ரதிபத்தியாலும் விப்ரதிபத்தியாலும் இறே

எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
பெரிய ஷோபத்தை உடைய கடலிலே ஒரு மரக்கலமாவது
அதின் கொம்பிலே இருந்ததொரு பஷி நாலு திக்கிலும் போக்கிடம் தேடித் பறந்தாலும் கரை காண ஒண்ணாது இறே
மீண்டு வந்து கால் பாவலாவது இம்மரக் கலத்திலே இறே
அப்படியே சம்சார சாகரத்தைக் கடக்கும் போது உகந்து அருளின தேசமான திரு வித்துவக் கோட்டை பற்றி அல்லது கடக்கலாம்
அத்தனை அல்லது வேறு உபாயம் இல்லை இறே
கடக்கைக்கு உகந்து அருளின தேசத்தை ஒழிந்தது எல்லாம் அக்கடல் போலே இறே

வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே—
தானே ஏறிட்டுக் கொண்ட அகலம் எல்லாம் நீரிலே ஆழுகைக்கு உடலாம் அத்தனை இறே –
அவன் கை நெகிழ்ந்தான் என்று தோற்ற அடி மட்டையை உரக்கப் பற்றும் அத்தனை இறே –

——————————————————————————

செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே—5-6-

செந் தழலே வந்து அழலை செய்திடினும் –
தாஹகமான அக்னி கிட்டி உஷ்ணத்தைப் பண்ணினாலும்

செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் -அலராவால்
தாமரையானது ஆதித்யன் தூரஸ்தன் ஆனானே யாகிலும் அவனுடைய கிரணத்துக்கு அலரும் அத்தனை யல்லது
அக்னி கிட்டிட்டு என்று அதினுடைய உஷ்ணுத்துக்கு அலராது

வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா !
அனுபவ விநாச்யமான பாபங்களைப் போக்கி -அதுக்கு விகாசத்தை விளைப்பிக்க வந்திருக்கிற நீ உபேஷித்தாயே யாகிலும்

உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
கல்யாண உக்தமான உன் குணங்களுக்கு அல்லது என் நெஞ்சு நெகிழாது –

————————————————————————

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7-

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
கார் காலத்திலே வர்ஷியாதே மேகங்கள் மறுத்த காலத்திலும் -பைம் கூழ்கள்-உண்டு -பயிர்கள் –

மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
ஆகாசத்திலே கறுத்த மேகங்களைப் பார்த்து இருக்கும் அத்தனை அல்லது நீர் நிலம் தேடித் போக வறியாதாப் போலே

மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா!
அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபத்தைப் போக்கி சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்க வந்து
இருக்கிற நீ அது செய்திலை யாகிலும்

என் சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —
என் ரஷணத்திலே நெகிழ்ந்தாய் என்று தோற்ற ஒருகாலுக்கு ஒருக்கால் உன் பக்கலிலே நெஞ்சு பிரவணமாகா நின்றது –

——————————————————————-

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! —5-8-

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி –
ஜல ராசி எல்லாம் திரண்டு ஒளியை உடைத்தாய் -பார்த்த இடம் எங்கும் பரந்தோடி

தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்-
ஆழ்ந்த கடலிலே சென்று புக்கு அல்லது புறம்பு நிற்க மாட்டாத ஆறுகள் போலே -சமுத்திர இவ சிந்துபி என்னுமா போலே
இவை புக்கால் கடல் நிறையும் இல்லையாகில் குறைப்படுகிறதும் அன்று இறே-
இவற்றுக்கு புறம்பு தரிப்பது அரிதாய் இறே புகுகிறன

மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா !
மிக்க உஜ்ஜ்வலமான காள மேகம் போலே இருக்கிற நிறத்தை உடையவனே –

வித்துவ கோட்டு அம்மா !
அம்மேகம் படிந்த மலை

உன் புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! –
உள் புக உள் புக உஜ்ஜ்வலமான கல்யாண குணங்களிலே யல்லது உள் புக உள் புக
ம்ஸ்ர்ணமாய் இருக்கும் குணங்களிலே அவகாஹித்திலேன் காண்
இதுக்கு நிபந்தனம் என் என்னில்
புண்ணியனே -பிரதம ஸூஹ்ருதம் நீ யாகையாலே –

———————————————————————–

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–5-9-

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் –
உன்னையே வேண்டி -நிரவதிக சம்பத்தை காற்கடைக் கொண்டவன் தன்னையே
அவசர பிரதீஷமாய் பார்த்து நிற்கும் ஐஸ்வர்யம் போலே என்னுதல் -மோஷ லஷ்மியைப் போலே என்னுதல்

மாயத்தால் மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
மின் போலே பளபளத்து இருந்துள்ள திரு வாழியை-எப்போதும் கை கழலா நேமியனாய் ஆசிலே வைத்த கையும் நீயுமாய்
என்னுடைய ரஷணத்துக்காக இங்கே வந்திருந்து வைத்து காற்கடைக் கொண்டாயே யாகிலும்

நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–
தன்னைக் காற்கடைக் கொண்டவனை ஐஸ்வர்யம் விடாதே போலே நீ என்னை உபேஷிக்க உபேஷிக்க-உன்னையே பற்றி நின்றேன் –

——————————————————————

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்-
இதுக்கு என்று வந்திருக்கிற நீ என்னை உபேஷித்தாயே யாகிலும்

மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
வேறு ஒரு புகலில்லை-நான் அநந்ய கதி என்று -அவன் திருவடிகளை ஆசைப்பட்டு

கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
பிரதிபஷத்தை பக்க வேரோடு வாங்க வற்றான வென்றியை உடைய வேலையையும் சேனையையும் உடைய
ஸ்ரீ பெருமாள் சொன்னவை –
பிரதிபஷத்தை வெல்லுகைக்கு ஈடான பரிகரம் உடையரானார் போலே யாய்த்து –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக-இவருடைய அநந்ய கதித்வத்வமும்

நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே–
கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –

இவை வல்லவர்கள் -நண்ணார் நரகமே –
சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும் இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -4–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

அவதாரிகை –

பகவத் ஜ்ஞானமும் பிறந்து –இதர விஷய த்யாகமும் பிறந்து –
குணாதிக விஷயத்தை அனுபவிக்க வேணும் என்னும் ருசியும் பிறந்து
அந்த குணம் பூரணமாக அனுபவிக்கலாம் இடத்தே அனுபவிக்க வேணும் என்னும் ஆசையும் பிறந்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்னுமா போலே
அடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -என்னும் அதுவும் பிறந்து
இப்படி பகவத் விஷயத்திலும் பாகவத் விஷயத்திலும் ஆநு கூல்யமும் –
இதர விஷய த்யாக பூர்வகமாக கண் அழிவறப் பிறக்கச் செய்தே
விரோதியும் போய்-அநந்தரம் பகவல் லாபமாகவும் காணாமையாலே

யதிவாராவணஸ் ஸ்வயம் – என்றும் –
ஆள் பார்த்துழி தருவாய் -என்றும் மேல் விழக் கடவவன் பக்கல் குறையில்லை

இதுக்கு வேறு ஒரு ஹ்ருதயம் உண்டாக வேணும் என்று பார்த்து —
சரீர சமனந்தரம் பகவல்லாபமாகில் பரிக்ரஹித்த சரீரம் ஷத்ரிய சரீரமாய்
போகங்களில் குறை வற்று இருந்த பின்பு சரீர அவசா நத்தளவும் போகங்களை புஜித்து
பின்னை க்ரமத்தாலே பகவத் பிராப்தி பண்ணுகிறோம் என்று நினைத்து இருக்கிறேன் என்று
நினைத்து ஆறி இருந்தேனாக வேணும் என்னுமத்தை திரு உள்ளத்திலே கொண்டு
தமக்கு க்ரம பிராப்தி பொறாமை தோன்ற —
ஒன்றியாக்கை புகாமல் உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் -என்றும்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றும்
கீழே அனுபவித்த ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்கைக்கும் –
கைங்கர்யம் கொள்ளுகைக்கும் திருமலையிலே நிற்கிறார்
ஆகையாலே ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து
விரோதியில் அருசியும்
கைங்கர்யத்தில் ருசியும்
பிறந்த த்வரையையும் ஆவிஷ்கரிக்கிறார் –

—————-

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1-

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
இந்த சரீரத்துக்கு சொல்லுகிற குற்றம் என் என்ன -நாள் செல்ல நாள் செல்ல மாம்ஸ பிரசுரமாய் வருகையாலே
சரீரம் தடித்து -ஆத்மாதிகளுக்கு -அத்தனை -அத்தாலே வேண்டேன் என்கிறார் –
தர்மமுடைய ஸ்வரூபமும் -நித்தியமாய் இருக்கச் செய்தேயும் -அசந்நேவ -என்கிறது ஜ்ஞான சங்கோசத்தை பற்ற விறே –
அப்படியே ஜ்ஞான சங்கோ சத்தை பிறப்பிக்குமது வாகையாலே வேண்டேன் என்கிறார் –

யான் வேண்டேன் –
தலை யறுத்துக் கொள்ளுமவர்கள் சந்தனம் பூசித் திரியுமா போலே விழுக்காடு அறியாதான்
வேணுமே என்று இருந்தானாம் அத்தனை –
விவேக ஜ்ஞானம் உடைய நான் வேண்டேன் –
சரீரத்தினுடைய ஹேயத்தையும்-ஆத்மாவினுடைய வைலஷண்யத்தையும்
இது தான் தனக்கே சேஷம் என்னும் இடத்தையும் அவன் தானே அறிவிக்க அறிந்த நான் வேண்டேன் –

ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
அவன் தானே விரோதியைப் போக்கி -கைங்கர்யத்திலே -அன்வயிப்பிக்குமவன் –
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்துக்கு இடைச் சுவரான ரிஷபங்கள் ஏழையும் வென்றவன் –
மாதாவின் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணின பிதாவை அனுவர்த்திக்கும் புத்ரனைப் போலே
அடிமைத் திறம் அல்லால் –
அடிமையிடையாட்டம் -என்னுதல்
அஹம் சர்வம் -என்றும் -வழு விலா அடிமை -என்றும் சொல்லுகிறபடியே அடிமைத் திறம் என்னுதல் –

கூனேறு சங்கம் இடத்தான் –
கைங்கர்ய ருசி உடையாரை நித்ய கைங்கர்யம் கொள்ளுமவன் –
ப்ராஞ்ஜலீம் ப்ரஹ்மா ஸீ நம் -என்னுமா போலே ஸ்ரீ பகவத் அனுபவ செருக்காலே ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே
காட்சிக்கு நோக்காய் இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யாழ்வான்-
சங்கம் இடத்தான் –
இடக்கையிலே காணில்-சங்கம் இடத்தான் -என்கிறார் –
வலக்கையிலே ஸ்ரீ திரு வாழி யாழ்வானைக் கண்டவர் ஆகையாலே -வலக்கை யாழி -என்கிறார்
திரு மார்வில் ஸ்ரீ பிராட்டியைக் கண்டவாறே -நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை -என்கிறார் –
இவர் படி இது இறே

தன் வேங்கடத்து –
அங்கே அடிமை கொள்ளுகைக்கு பாங்கான தேசமாகையாலே என்னது என்று
இவன் விரும்பின ஸ்ரீ திருமலையில் –

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –
விரஜையைப் பற்றி அமாநவ வசத்திலே வர்த்திக்குமா போலே –
கோனேரியைப் பற்றி வர்த்திக்கும் குருகாய் பிறப்பேன் -என்கிறார் –
வாழும் –
ஸ்ரீ கோயில் வாஸம் போலே காணும் ஸ்ரீ திருக் கோனேரி யிலே-
வர்த்திக்கும் என்கிற இடத்துக்கு வேறே வாசக சப்தங்கள் உண்டாய் இருக்கச் செய்தே –
வாழும் -என்கிற சப்தத்தை இட்டபடியாலே
அங்குத்தை வாஸம் தானே போக ரூபமாய் இருக்கும் என்கை-

குருகாய் பிறப்பேனே –
பிரகிருதி புருஷ விவேகம் பண்ணுகைக்கு உறுப்பான -மனுஷ்ய ஜன்மமுமாய் –
அதிலே பர ரஷணத்துக்கு உறுப்பும் ஆகையாலே
புண்ய சரீரமான ஷத்ரிய ஜன்மமும் வேண்டாம் -என்கிறார் –
அது துர்மான ஹேதுவாகையாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணவும் மாட்டாதே –
பர ரஷணத்துக்கும் உறுப்பும் இன்றிக்கே
பாப யோநியுமாய் இருக்கிற திர்யக்காய் பிறக்க யமையும் –
ஸ்ரீ திருமலை எல்லைக்குள் பிறக்கப் பெறில் -என்கிறார் —
உடல் பிறவி யான் வேண்டேன் -என்கிறார் -குருகாய் பிறப்பேனே -என்கிறார் –
பிறவி அன்றே போலே காணும் அங்கே பிறக்கை –

—————————————————————————

அவதாரிகை –

இங்குத்தை போகங்களில் காட்டில் நிலை நின்ற போகங்களுமாய் இது போலே சாவதி யன்றியே
நிரவதியுமாய் இருக்கும் இறே ஸ்வர்க்கத்தில் போகம்
அவை பெற்றால் செய்வது என்னீர் என்ன –
அவையும் கீழில் கழித்த பூமியில் போகமும் இரண்டும் கூடக் கிடக்கிலும் வேண்டா என்கிறார் –

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் –
கெடாத சம்பத்து -அதாவது அழியாத யௌவன ஸ்ரீ யையுடைய அப்சரஸ் ஸூக்கள்

தற் சூழ
இவன் தான் தப்ப நினைத்தாலும் தப்ப ஒண்ணாத படி அவர்கள் மேல் விழ –

வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
ஸ்வர்க்காதிகள் அனுபவிக்கும் சம்பத்தோடு கூட கீழில் கழிந்த ராஜ்ய ஸ்ரீ யையும் கூட்டினாலும் வேண்டேன் –
வேண்டேன் -என்கிறது –
இவற்றுக்கு குறை உண்டாய் அன்று -நான் நினைத்த புருஷார்த்தம் அல்லாமையாலே வேண்டேன் என்கிறார் –
நீர் வேண்டி இருப்பது என் என்ன –

தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
தேன் மிக்கு இருந்துள்ள பொழில் என்னுதல் –
வண்டுகள் மிக்க பொழில் என்னுதல் –
பொழில் சூழப் பட்டு இருக்கிற ஸ்ரீ திருமலையில் சுனைகளில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே—
கீழ்ச் சொன்ன குருகாய் பிறக்கில் அதுக்கு சிறகு உண்டாகையாலே ஸ்ரீ திருமலையில் அல்லனாய்
கழியப் பறக்கைக்கு யோக்யதை யுண்டு இறே
அப்படியும் ஓன்று அன்றியே உத்பத்தி ஸ்திதி லயங்களுக்கு ஸ்ரீ திருமலையிலேயாய் மீனாய்ப் பிறப்பேன் -என்கிறார் –
பிறக்கும் விதியுடையேன் ஆவேனே –
இப்போது மீனாய் பிறக்கவும் வேண்டா
ஒரு ஸூஹ்ருதத்தாலே அந்த ஜன்மம் மேல் வரும் என்று திண்மை பெறவும் அமையும் என்கிறார் —

——————————————————————————–

அவதாரிகை –

பார தந்த்ர்யத்துக்கு உறுப்பாகப் பெறில் கீழில் கழிந்த மனுஷ்ய ஜன்மமே யாகிலும் அமையும் என்கிறார் –

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3-

பின் இட்ட சடையானும் –
பின்னப் பட்ட சடையான் என்னுதல் –
பின்னே நாலப்பட்ட சடையான் -என்னுதல்
பின்னே வர்த்திக்கக் கடவன் இறே புத்ரன்-அப்படியே ப்ரஹ்மாவின் பின்னே நிற்கும் சடையான் என்னுதல் –

பிரமனும் –
இவனுக்கு ஜனகனான ப்ரஹ்மாவும்

இந்த்ரனும்
ச ப்ரஹ்ம ச சிவ -என்றால் இவர்களோடு ஒக்க -சேந்திர-என்னும்படியான இந்த்ரனும்

துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
ஒருவருக்கு ஒருவர் முன்பு போக வேண்டி இருக்கையாலே புக வரிதாய் இருக்கிற வைகுந்த நீள் வாசலிலே –

மின் வட்ட சுடர் ஆழி –
மின்னை வளைத்தால் போலே ஜ்யோதிச்சையும் உடைத்தாய் -சுற்றும் வாயையும் உடைத்தாய் இருக்கிற
ஸ்ரீ திரு வாழி யாழ்வானை யுடைய

வேம்கட கோன் தான் உமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே–
ப்ரஹ்ம ருத்ராதிகள் நெருக்கிப் புகப் பெறாதே நிற்க -பணிக்குக் கடவன் -இவனைப் புகுர விடு -என்று
உள்ளே அந்தரங்க வர்த்திக்கக் கடவர்களோடே நானும் சஜாதீயனாகப் புக வேணும் –

—————————————————————————–

அவதாரிகை –

மனுஷ்ய சரீரம் ராஜாவாகைக்கும் பொதுவாகையாலே-அது வேண்டா –ஸ்ரீ திரு வேங்கடமுடையானுக்கு உறுப்பாம் படி
ஸ்ரீ திருமலையிலே நிற்பதொரு ஸ்தாவரமாக வமையும் நான் என்கிறார்

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்-
ஒள்ளிய பவளத்தை கரையிலே கொடு வந்து கொழிக்கிற பாற் கடல் -என்னுதல்
ஒள்ளிய பவளங்களை கொண்டு உலாவுகிற திரைகளை உடைய ஸ்ரமஹரமான திருப் பாற் கடலிலே என்னுதல்

கண் துயிலும் மாயோன்-
ஸ்ரீ திருப் பாற் கடலிலே -கிடந்ததோர் கிடக்கை -என்று சொல்லும்படி கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனானவன் –

கழல் இணைகள் காண்பதற்கு
அங்குச் சென்று கிட்டிக் காண ஒண்ணாத அருமை தீரக் காணலாம் தேசத்திலே காண்கைக்காக-

பண் பகரும் –
இயலைக் கற்று சிஷா பலத்தாலே இசை வரும் தனைய வார்த்தை சொல்லும் போதும் பண்ணாய் இருக்கை

வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
தாங்கள் பாடுகிற பாட்டுக்கு இசைந்து வண்டினங்களானவை பண் பாடுகிற ஸ்ரீ திரு மலையிலே

செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே
ஸ்ரீ திருமலையிலே செண்பகமாய் நிற்கும் சம்பத்து உண்டாக வேணும் -அதாவது -பகவத் பிரத்யாசத்தி இறே பிராப்யம்
அது கிட்டுமான பின்பு ஸ்தாவரமாய் நிற்கவும் அமையும்-மேலே ஏறின சைதன்யத்தாலே கார்யகரம் இல்லை –என்கிறார் –

————————————————————– –

அவதாரிகை –

செண்பகமானால் பரிமளத்துக்காக உள்ளே கொண்டு புகுவார்கள் என்று ஒரு பிரயோஜனத்தை கணிசித்ததாம் இறே –
அப்படியும் ஒன்றும் இல்லாத தம்பகமாகவும் அமையும் என்கிறார் –

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5-

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
கண்டார் எல்லாம் நடுங்கும்படி மதிப்பை உடையவனை என்னுதல் –
மதத்தாலே கம்பத்தின் நின்றும் விட ஒண்ணாத படி நிற்கும் யானை என்னுதல் –
ஒருவராலும் மேற்கொள்ள ஒண்ணாதாகிலும் ராஜாக்களை மேற்கொள்ள ஓட்டும் இறே யானைகள்
எல்லார்க்கும் பயாவஹமான யானையை மேற்கொண்டு தன் கருத்திலே நடத்தி

இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
அங்கே இருந்து எல்லா போகங்களும் புஜிக்கும் சம்பத்தும் அதுக்கு அடியான ராஜ தர்மமும் யான் வேண்டேன் –
நீர் வேண்டுவது என் என்னில்

எம்பெருமான் ஈசன் –
அகில ஜகத் ஸ்வாமி அஸ்மத் ஸ்வாமி

எழில் வேம்கட மலை மேல்
எல்லார்க்கும் ஸ்வாமி யாய் இருந்து வைத்து என் பக்கலிலே விசேஷ கடாஷத்தை பண்ணின என்னதான
எழிலையுடைய ஸ்ரீ திருமலையிலே –

தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனோ -ஒரு பிரயோஜனத்துக்கு காகாதே அங்கே மூத்தற்று தீய்ந்து போவதொரு
ஸ்தாவரமாம் தவம் உடையன் ஆவேனே -அநேக ஜன்ம தப பலம் என்று இருக்கிறார் காணும் இது தன்னை –

——————————————————————————-

அவதாரிகை –

ஸ்தாவரமானால் ஒரு நாள் உண்டாய் ஒரு நாள் இன்றியே போம் இறே -அங்கன் இன்றியே
என்றும் ஒக்க உண்டாய் இருந்த திருமலையிலே ஏக தேசமாக வேணும் நான் -என்கிறார்

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்-அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்-
மின் போலே நுண்ணிய இடையை உடையரான தேவ ஸ்திரீகளைப் போலே அழகியராய் இருக்கிற
ஸ்திரீகளுடைய ஆடல் பாடல்களில் எனக்கு ஆதரம் இல்லை

தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
தென் தென் என்று ஆளத்தி வைத்து வண்டினங்கள் பண் பாடுகிற ஸ்ரீ திருமலையிலே

அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –
அப்படிப்பட்ட பொற்குவடம் என்னும் அத்தனை -வேறு உபமானம் இல்லை –

அரும் தவததேன் ஆவேனே –
ஸ்ரீ திருவேங்கடமுடையானுக்கு அவ்வருகு இருக்கில் இறே -ஆகையால் அரும் தவத்தன்-என்னக் குறை இல்லை இறே –

———————————————————–

அவதாரிகை –

ஸ்ரீ திருமலையில் அதிகாரமானால் ஏற வல்லார் அனுபவித்து -மாட்டாதார் இழக்குமதாய் இருக்கும் இறே
அப்படி இன்றியே எல்லார்க்கும் அனுபவ யோக்யமாய் இருக்கும் இருக்கும் கானாறாக வேணும் நான் என்கிறார் –

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் –
ஆகாசப் பரப்புக்கு எல்லாம் சந்தரன் ஒருவனுமே யானாப் போலே லோகம் எல்லாம் தன்
வெண் கொற்றக் குடைக்கீழே ஒதுங்கும் படியாக

மன்னவர் தம் கோனாகி –
நஷத்ர தாரா கணங்கள் சந்த்ரனை சேவித்து இருக்குமா போலே ராஜாக்கள் எல்லாம் வந்து
சேவித்து இருக்கும் படி ராஜராஜனாய்

வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
வேறு பட இருந்து கொண்டாடும் சம்பத்து எனக்கு பிரதிபத்தி விஷயமாய் இருக்கிறது இல்லை

தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
தேன் மிக்கு இருந்துள்ள சோலையை உடைய ஸ்ரீ திருமலை மேல்

கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே–
சஹ்யம் பற்றினதாகில் கீழே போம் இறே -அங்கே சுவறிப் போம் காட்டாறுகள் அபிசந்தியை யுடையேனாக வேணும் –

—————————————————————

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே– 4-8-

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
சாதக வேஷம் தோற்றும் படி ஜடையோடு இருக்கச் செய்தே ஸூ க பிரதானன் என்று தோற்றும்படி

பிறையை தரித்துக் கொண்டு இருக்கிற ஹரனும் –
அவனுக்கு ஜனகனான ப்ரஹ்மாவும் -சேந்திர -என்னும் படியான இந்த்ரனும் –

முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் –
தந்தாமுடைய அதிகார அனுகுணமாகப் பண்ணும் யஜ்ஞ பலமான அதிகாரங்களைக் கொடுக்குமவன் –

மறை யானான்
ப்ரஹ்மாதிகளுக்கு-ஆஸ்ரயணீயம் என்னும் வேதைக சமதி கம்யனானவன்

வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல் நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே–
பரிமளம் மிக்கு குளிர்த்தியை உடைய ஸ்ரீ திருமலை மேலே ஆறானாலும் ஒருக்கால் பெருகினால் விநியோகப்பட்டு
வற்றினால் விநியோகப்படாது இறே
அங்கன் இன்றியே எப்போதும் ஒக்க வைஷ்ணவர்கள் சஞ்சரிக்கையாலே அவர்கள் பாத ரேணு படும்படி வழியாய்க் கிடக்கும்
துணிவு உடையேன் ஆவேனே –
தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் -என்று இருக்குமவர் இறே –

——————————————————

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

செடியாய வல் வினைகள் தீர்க்கும் –
தன திருவடிகளிலே தலைசாய்த்தாருடைய பாபபலமான சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்குமவன் யாய்த்து –
செடி -பாபம் –

திரு மாலே!
அதுக்கு நிபந்தனம் கூட இருந்து செய்விப்பார் உண்டாகை

நெடியானே!
அவளாலும் -என்னாலும் பொறுக்கப் போகாது -என்ற போது -என்னடியார் அது செய்யார் -என்று ஆஸ்ரித விஷயத்தில்
ஓரம் எல்லை காண ஒண்ணாதவன் –

வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
தேவரீருடைய திரு வாசலிலே

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய் கிடந்தது –
அநந்ய பிரயோஜனரும் -பிரயோஜனாந்தர பரரும்-அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால்
ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்

உன் பவள வாய் காண்பேன –
பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் -அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும் –

—————————————————————————–

அவதாரிகை –

கிட்டும் அளவும் வேண்டா என்கிறீர் -கிட்டின வாறே அனுபவிக்கிறீர் என்ன -அவை கிட்டினாலும் வேண்டா என்கிறார் –

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் –
உபரிதன லோகங்கள் எல்லாம் தன் ஒரு முத்தின் குடைக் கீழே செலுத்தி

உருப்பசி தன் அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
அவற்றைக் கிட்டுவித்தாலும் எனக்கு ஆதரம் பிறவாது

செம் பவள வாயான்
உருப்பசியைக் கண்டால் அநாதரிக்கும் படி யாய்த்து உள்ளு நிற்கிற விஷயத்தின் படி –

திரு வேம்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் –
என்னாயனுடைய மலை மேல்
என்னாயனுடைய ஸ்லாக்யமான ஸ்ரீ திருமலையிலே

ஏதேனும் ஆவேனே –
ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும்
அது என் என்னில் -சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை
அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –
நாம் அறிய வேண்டா
திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –
கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா
ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும் -என்றார் –

——————————————————————–

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11-

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன் பொன் இயலும் சேவடிகள் காண்பான்-
கண்டால் கால் வாங்க மாட்டாதே பிணிப்ப்படும்படி ஸ்ரமஹரமான பர்யந்தத்தை உடைய தமிழுக்கு எல்லையான
ஸ்ரீ திருமலையை உடையவனுடைய ஸ்லாக்யமான திருவடிகளைக் காண்கைக்காக

புரிந்து இறைஞ்சி
காண வேண்டும்படி பக்தியை உடையரேத் தலையாலே வணங்கி கவி பாடினாராய்த்து

கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பிரதி பஷத்தை வெல்ல வல்லார் போலே யாய்த்து கவி பாடி இருக்கும் படியும்

பன்னிய நூல் தமிழ் வல்லார்
பரம்பின லஷணோபேதமான தமிழ்த் தொடையை வல்லவர்கள்

பாங்காய பத்தர்களே –
இங்கேயே இருந்து -அது வர வேணும் இது வர வேணும் என்னாதே அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆவார்கள் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -3–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

அவதாரிகை –

பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேன் -என்று –
பகவத் பிராவண்யம் ததீய சேஷத்வ பர்யந்தமாய்
அவர்கள் அல்லது செல்லாமை பிறக்கும் அளவும் உண்டு –அது சொல்லிற்று கீழில் திரு மொழியில்

எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனியவாறே -என்றும்
மானிடவர் அல்லர் என்று மனத்தே வைத்தேனே -என்றும் –
பித்தர் என்றே பிறர் கூற -என்றும் -பிறக்கும் அவஸ்தை உண்டு
பகவத் பிராவண்யத்தாலே முன்பில் அதுக்கு சங்கல்பமே யாய்த்து வேண்டுவது –
அடிமை அவர்கள் கொள்ளக் கொள்ள விறே செய்வது
ப்ராதி கூல்யத்தில் வர்ஜித்தே நிற்க வேணும்
பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அநு பாவ்யம் சொன்ன சாஸ்திரம்
தானே இறே இத்தை த்யாஜ்யம் என்றதும்
ஜ்ஞான கார்யமாய் இறே ததீயர் உத்தேச்யம் ஆகிறதும்
தமோ குண பிரசுரரோடு சஹவாசம் பொருந்திற்றாகில் அஜ்ஞான கார்யம் இறே –

மத்தஸ் சர்வமஹம் -என்று சாமான்ய புத்தி பண்ணின ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்-
பூர்வ அவஸ்தையில் மத்பிது என்று அவனை
ரஷிக்கப் பார்த்தவன் ப்ராதிகூல்யத்தில் விஞ்சின வாறே அவனை விட்டுக் காட்டிக் கொடுத்தான் இறே

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஆந்தனையும் ஹிதம் சொல்லிப் பார்த்து தன் ஹிதத்துக்கு மீளாத வவஸ்தை வானவாறே
நெருப்புப் பட்ட விடத்திலே விலக்க ஒண்ணாத போது தன்னைக் கொண்டு
தான் தப்புவாரைப் போலே -ப்ராதிகூல்யம் அசலிட்டு
தன்னளவும் வரும் என்று தன்னைக் கொண்டு தான் தப்பினான் இறே

ப்ராதி கூல்யமாகிறது –
தேஹாத்மா அபிமானிகள் ஆகையும்-
விஷய பிரவணராய் இருக்கையும் –
தேஹாத் வ்யதிரிக்த வேறொரு வஸ்து உண்டு என்று அறியாது இருக்கையும் இறே –
இப்படி இருப்பாரோடு எனக்குப் பொருந்தாது என்கிறார் இத் திருமொழியில் –

—————-

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்
வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1-

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும்
மெய் என்றும் -பொய் எனபது நில்லாமையும் -நிலை நிற்குமத்தையும் சொல்லுகிறது –
நிலை நில்லாததிலே -நித்யமான ஆத்ம வஸ்துவைப் பண்ணும் பிரதிபத்தியைப் பண்ணும் என்னுதல் –
மெய்யிலே உண்டான வாழ்க்கை – என்னுதல் -அதாகிறது பிரகிருதியைப் பற்றி வரும் ப்ராக்ருத போகங்கள் இறே

இவ் வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
தேஹாத்ம அபிமாநிகளாய் இருப்பாரோடு எனக்கு ஒரு சேர்த்தி இல்லை –

ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
தேஹாத்ம வ்யதிரிக்தம் வேறு ஒருவர் உண்டு -என்று அறிந்தவன் -என்கிறார்
ஐயனே –
நிருபாதிக பந்துவே
அரங்கா –
அனுஷ்டான பர்யந்தம் ஆக்கின முதலித்தாப் போலே ஸ்ரீ கோயிலிலே வந்து ஸூலபனானவனே-
என்று அழைக்கின்றேன் –
கார்யப் பாடறக் கூப்பிடா நின்றேன்

மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே –
அவன் எனக்குப் பித்தேறின படியைக் கண்டு நானும் அவனுக்கு பித்தனானேன் –

——————————————————————————–

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
நூல் போலே நுண்ணிய இடையை யுடையராய் இருக்கும் ஸ்திரீகள் திறத்திலே நிற்கும் –
ஒரு அவயவத்தை அனுபவிக்கப் புக்கால் மற்ற அவயவத்தில் போக மாட்டாதே நிற்கும்

ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
பிராப்த விஷயத்தில் இருக்கக் கடவ இருப்பை அப்ராப்த விஷயத்தே இருக்கும் அவர்களோடு
எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை

ஆலியா அழையா அரங்கா! என்று
இவர்கள் அப்ராப்த விஷயத்திலே படும் பாடெல்லாம் ப்ராப்த விஷயத்தே படுமவன் நான் என்கிறார் –
ஆலியா அழையா அரங்கா! என்று-
ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே –
ஆலியா -ஸ்ரீ பெரிய பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி அடைவு கெடக் கூப்பிட்டு

மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே –
தேநத்தேதம நு வ்ரதா-என்னுமா போலே அவன் என் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடி கண்டு நானும் பித்தேறினேன் –

—————————————————————-

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்-பாரினாரோடும் கூடுவதில்லை யான்-
காமனுடைய -தர்ச நீயமாய் தப்ப ஒண்ணாத படியாய் கொடிதாய் இருக்கிற வில்லுக்கு குடிமகனாய்த் திரியும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்-என்னுதல் –
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தனக்கு ஆட்செய்யுமவன் நான்

ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நர காந்தகன் பித்தனே –
ஆர மார்வன் அரங்கன்-
ஆகர்ஷகமான ஒப்பனையை உடைய ஸ்ரீ பெரிய பெருமாள்
அனந்தன் –
மனுஷ்யத்வே பரத்வம் போலே இங்கே வந்து ஸூலபராய்க் கிடக்கச் செய்தே
பரிச்சேதிக்க ஒண்ணாத படி இருக்கிறவர் –
நல் நாரணன் –
தன் உடமையை விட மாட்டாமையாலே அழுக்கை விரும்புமவன்
நர காந்தகன் பித்தனே –
அவன் தன வாத்சல்யத்தாலே மேல் விழா நிற்க நடுவே விரோதியும் போய்க் கொடு நிற்கும் இறே –
இப்படி இருக்கிறவர்க்குப் பித்தனே –

—————————————————————————

உண்டியே வுடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை
உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–3-4-

உண்டியே வுடையே உகந்து ஓடும்
உபாசனத்துக்கு சரீரம் வேண்டுகையாலே -அது தரிக்க வேண்டும் அளவன்றியிலே
எல்லாவற்றையும் அழிய மாறி உண்டியும் உடையும் ஆக்கும்

இம் மண்டலத்தோடோம் கூடுவதில்லை யான்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்று இருக்க –
ஒரு விபூதி உண்டானாப் போலே
ப்ராக்ருத போகங்களை விரும்புகைக்கு ஒரு விபூதி இறே இதுவும்

அண்ட வாணன் அரங்கன்
அண்டாந்த வர்த்திகளுக்கு நிர்வாஹகன் –
இதுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் இருப்பு ஒழிய இதினுள்ளே புகுந்து ஸூலபனாய்
ஸ்ரீ கோயிலிலே சந்நிஹிதன் ஆனவன் –

வன் பேய் முலை உண்ட வாயன் தன் உன்மத்தன் காண்மினே–
இங்கே வந்து அவதரித்து பிரதி பந்தங்களைத் தானே போக்குமவனுக்குப் பித்தன் நான் –
தன் உன்மத்தன் காண்மினே–
ஔஷத சேவை பண்ணினாரையும் இழக்க ஒண்ணாதாப் போலே -அவனுடைய குண சேஷ்டிதங்களிலே
அகப்பட்டு பித்தனான என்னைக் கேவல சரீர பரவசரோடே சேர விட ஒண்ணுமோ –

—————————————————–

தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே– 3-5-

தீதில் நல் நெறி நிற்க
தீமையோடு பிறவாத நல் வழி நிற்க -இவனை ஒழிந்த பலங்களுக்கு-சாதன அனுஷ்டானம்
பண்ணிப் பெரும் பேற்றில்
இழவே நன்று என்னும்படி இறே இருப்பது

அல்லாது செய் நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
இதர புருஷார்த்தங்களை யாசைப்படுகையே யாத்ரையாய் இருப்பாரோடும் கூடுவது இல்லை யான்

ஆதி ஆயன் அரங்கன்
ஆதி –
பிரமாணங்கள் உபாஸ்ய வஸ்து என்று சொல்லப் படுகிறவன்
ஆயன் –
உபாஸ்ய வஸ்து தான் அரிது என்ன ஒண்ணாதபடி யவதரித்து ஸூ லபனானவன்
அரங்கன் –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்து பிற்பாடர் இழவாமே-ஸ்ரீ கோயிலிலே வந்து சந்நிஹிதர் ஆனவர்

அம் தாமரை பேதை மா மணவாளன் தன் பித்தனே–
அழகிய தாமரைப் பூவைத் தனக்கு இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபர்
ஆனவருக்கு பித்தனானேன் நான்
ஓரடி இவன் புகுரா நின்றால்-அத்தைக் குவாலாக்கி -அவன் நெஞ்சிலே புண்படும்படி
இவன் பண்ணின அபராதத்தை அவன் காணாத படி இருக்கிற புருஷகார பூதை-
மா மணவாளன் –
அப்ரமேயம் ஹி தத்தேஜ-இவளுக்கு வல்லபனாகையாலே வந்த பெருமை உடையவன் பித்தன் நான் –

——————————————————————

எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
தம் பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே–3-6-

எம் பரத்தர் அல்லாரோடும் கூடலன்
என் யாத்ரையே யாத்ரையாய் இராதாரை நாக்கு வளைத்து இருப்பன்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றும் –
வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்றும் இராதாரோடு சம்பந்தம் இல்லை

உம்பர் வாழ்வை ஒன்றாக கருதிலன்
சம்சாரத்தில் அருசியும் கைங்கர்யத்தில் ருசியும் இல்லையாகில் -ப்ரஹ்மாதிகள்
சம்பத்தே யாகிலும் த்ர்ணவத் கரிப்பன்

தம் பிரான் அமரர்க்கு –
அயர்வறும் அமரர்கள் அதிபதி

அரங்க நகர் எம்பிரானுக்கு –
நித்ய ஸூரிகள் எல்லாம் அனுபவிக்குமா போலே சம்சாரிகள் எல்லாம் இழவாதபடி-
ஸ்ரீ கோயிலிலே வந்து ஸூலபரானவர்

எழுமையும் பித்தனே–
இச் செயலுக்கு என்றுமே பித்தனாய் திரியுமவன் –

—————————————————————————-

எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே! அரங்கா! என்று அழைகின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—3-7-

எத் திறத்திலும் யாரொடும் கூடும் –
அபாகவதனோடு சம்பாஷிக்க அபிமத புருஷார்த்தங்களை எல்லாம் லபிக்கலாம் என்னிலும்
அத்தையும் கால் கடைக் கொள்ளும் படி யானேன் –

அச் சித்தம் தன்னை தவிர்த்தனன் செங்கண் மால்
கண்ணாலே குளிர நோக்கி -தன வ்யாமோஹத்தைக் காட்டி பிறரோடு மனஸ்ஸூ
பொருந்தாத படி பண்ணினான்
அத்தனே!
எனக்கு ஸ்வாமி யானவனே
அரங்கா! என்று அழைகின்றேன்
அந்த ஸ்வாமித்வத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக ஸ்ரீ கோயிலிலே வந்து
ஸூ லபன் ஆனவன் என்று கூப்பிடா நின்றேன்

பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே—
இதர விஷய பிராவண்யத்தோடு பொருந்தாதபடி பண்ணின உபகாரகனுக்கு பித்தனானேன் –

——————————————————————-

பேயரே எனக்கு யாவரும் யானுமோர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்?
ஆயனே அரங்கா என்று அழைகின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —3-8-

பேயரே எனக்கு யாவரும் –
நிலை நின்ற புருஷார்த்தை விட்டு அஸ்திரமான பிராக்ருத போகங்களை விரும்புவதே —
பேயராய் இருந்தார்கள் என்று விட்டேன் நான் –

யானுமோர் பேயனே எவர்க்கும் –
கண்ணால் காண்கிறது ஒழிய வேறு ஓன்று உண்டு என்று பிரமியா நின்றான் -பித்தனாய் இருந்தான்
என்று விட்டார்கள் இவர்களும் என்னை

இது பேசி என்?
இத்தைப் பரக்கச் சொல்லுகிறது என்

ஆயனே
கண்ணால் காண்கிறது பொய் என்று இராத படி வந்து அவதரித்து தான் பகுத்தின படிகளை எனக்குக் காட்டினவன்

அரங்கா என்று அழைகின்றேன்
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவோடே தலைக் கட்டாத படி ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளின ஸ்ரீ பெரிய பெருமாள்
திரு நாமத்தைச் சொல்லி அடைவு கெடக் கூப்பிடா நின்றேன்

பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே —
ஒரு விஷயத்திலே பித்தேறினவன்-நமக்கு இனி யாகான் காண்-விடாய் என்று
இதரர் என்னை உபேஷிக்கும் படி யானேன் –

——————————————————————

அங்கை ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம்
கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–3-9-

அங்கை ஆழி அரங்கன் அடியிணை-
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளிலே

தங்கு சிந்தைத்
ஸ்ரீ பெருமாள் திருவடிகளுக்கு அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையாலே அங்கே தங்கு சிந்தையை உடைய

தனிப் பெரும் பித்தனாம்
பகவத் விஷயத்திலே இவர்களோபாதி பித்தேறினார் வேறு ஒருவர் இல்லாமையும் –
சிலவரால் மீட்க ஒண்ணாமையுமான பித்தனாம்

கொங்கர் கோன் குலசேகரன் சொன்ன சொல்
மேலைத் திக்குக்கு நிர்வாஹகரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்தது

இங்கு வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே–
இவற்றில் வல்லவர்களுக்கு இங்கே ஏதம் ஓன்று இல்லையே
ஏதமாவது-
அபாகவாத ஸ்பர்சமாதல்-பகவத் பிராவண்யத்தில் குறையாதல் -வரும் துக்கம் போம் என்றும்
இஸ் சம்சாரத்தில் இருக்கும் நாளில்லை -இத் துக்க பிரசங்கம் உள்ளத்து இவ்விடத்தே இறே –
இவை கற்றவர்களுக்கு இப்பிரசங்கம் உள்ள இத்தேசத்திலே இல்லை –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -2–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

அவதாரிகை

பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்கு சம்பவிப்பன சில ஸ்வ பாவங்கள் உண்டு —
ஆநு கூல்ய சங்கல்ப -ப்ராதி கூலச்ய வர்ஜனம் –
ஆநு கூல்யமாவது -பாகவத விஷயத்திலும் பகவத் விஷயத்திலும் பண்ணுமவை-
பகவத் விஷயம் பூர்ணம் ஆகையாலே இவனுக்கு ஆநு கூல்யம் பண்ணுகைக்கு துறை இல்லை இறே –
இப்படி துறை இல்லை என்று இவன் கை வாங்காமைக்காக இறே இவன் உகந்த த்ரவ்யமே தனக்குத் திரு மேனியாகவும்
இவன் திரு மஞ்சனம் பண்ணின போது அமுது செய்து அல்லாத போது பட்டினியுமாம் படி இறே அவர்களுக்குத் தன்னை அமைத்து வைப்பது –
இப்படி யாய்த்து இல்லையாகில் பரி பூர்ண விஷயத்தில் இவனுக்கு கிஞ்சித் கரிக்கைக்கு துறை இல்லை இறே
ஜ்ஞாநீத் வாத்மைவமேமதம் -என்றும் –
மம பிராணா ஹி பாண்டவா –என்றும்
பத்தராவி -என்றும்
ததீய விஷயத்தில் பண்ணும் ஆநு கூலயமும் பகவத் விஷயத்திலே பண்ணிற்றாம் இறே
ஆகையால் இவரும் தமக்கு இவை இரண்டும் பிறந்தது என்கிறார் –

பகவத் விஷயத்தில் பிறந்த ஆநு கூல்யம் சொன்னார் -கீழில் திரு மொழியில்
ததீய விஷயத்தில் ஆநு கூல்யம் பிறந்தபடி சொல்லுகிறார் இத் திரு மொழியில் –

—————————————–

முடிய பாகவத விஷயம் உத்தேச்யம் ஆகிறதும் பகவத் விஷயத்தில் அவகாஹித்தார் -என்னுமது இறே
இன்னான் அர்த்தமுடையன் -ஷேத்ரமுடையன் -என்று ஆஸ்ரயிப்பாரைப் போலே -பகவத் பிரத்யாசத்தி யுடையார்
என்று இறே இவர்களைப் பற்றுகிறது
பகவத் விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ண இழிந்தவர் ஆசார்ய விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணப் புக்கு அவர்க்கு
நிறமாகச் சொல்லிற்று பகவத் விஷயத்தில் ஜ்ஞான பக்திகளை இறே ஜ்ஞான வைராக்ய ராசயே-

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

தேட்டரும் –
தாமே வந்து ஸூலபராம் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தால் காண ஒண்ணாது என்கை-

திறல் தேனினை –
ய ஆத்ம தாபலதா-என்னுமா போலே -தன்னையும்
கொடுத்து -தன்னை அனுபவிக்கைக்கு ஈடான பலத்தையும் கொடுக்கும் தேன்-

தேனினை தென் அரங்கனை -திரு மாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை
ஸ்பர்ஹணீயமான ஸ்ரீ திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்-திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-
ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –

வாழ்த்தி –
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே அவளும் இவனும்
சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி

மால் கொள் சிந்தையராய்
பித்தேறின மனஸை உடையராய்

ஆட்ட மேவி –
ஆட வேணும் என்னும் கார்யா புத்யா யன்றியிலே ப்ரேமம் ஒட்டாமையாலே ஆட்டமேவி

அலர்ந்து அழைத்து
அலர்ந்து கார்யப் பாடறக் கூப்பிட்டு

அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
க்ரம பிராப்தி பெறாமையாலே -அறிவு குடி போய் பரவசராய் அநந்ய பிரயோஜனருடைய

ஈட்டம் –
இப்படி இருப்பார் உமக்கு எத்தனை பேர் வேணும் என்ன –

அடியார்கள் குழாங்களை காணப் பெறில்
கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–
இது கூடிற்றாகில் பிரயோஜனம் கண்ணுக்கு இது அல்லது இல்லை -த்ரஷ்ட பிரயோஜனம் இது –

——————————————————————

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும்
இதழ் மிக்கு இருந்த தாமரைப் பூவை வாசஸ் ஸ்தானமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருத் தோள்கள்
இரண்டையும் தோய்ந்ததும் –
தனியன் பெரு வெள்ளத்திலே இழிந்து அனுபவிக்கத் தேடினது போலே தோய்ந்ததுவும் –

சுடர் வாளியால்-
புகரை உடைய அம்பாலே –

நீடு மா மரம் செற்றதும்-
ஒக்கத்தை உடைத்தான மரா மராமரங்கள் ஏழையும்-பண்டே துளையான வற்றிலே ஓட்டினால் போலே யாய்த்து –
அந்தமாய் பலவத்தரமான சப்த சாலத்தை நிரசித்ததும் -ஆஸ்ரிதரை விஸ்வசிப்பிக்கும் செயல் இறே

நிரை மேய்த்ததும் –
உபய விபூதி நாயகனாய் இருந்து வைத்து கையிலே ஒரு கோலையும் கொண்டு பசு மேய்த்ததும்
இவையே நினைந்து
இந்த சீலாதி குணங்களையே நினைந்து இவற்றை நினைக்கும் அது ஒழிய வேறொரு பிரயோஜனத்தையும் கணிசியாதே –

ஆடி பாடி-
ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே ஆடிப்பாடி

அரங்காவோ! என்று அழைக்கும் –
ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி யாற்ற மாட்டாதே கூப்பிடும்

தொண்டர் அடி பொடி ஆட நாம் பெறில் –
பகவத் குண வித்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத ரேணுக்களிலே அவகாஹிக்கப் பெறில்

கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே –
எப்போதும் ஒக்க பகவத் சம்பந்தம் உடையராகையாலே தீர்த்த பாதரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத ரேணுக்களிலே
அவகாஹிக்கப் பெறில் கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே –
காதாசித்க சம்பந்தமேயாய் பல சிக்குத் தலைகளிலே புக்கு உபகதிப்பட்ட கங்கை யாடினால் என்ன பிரயோஜனம் உண்டு
நலம் திகழ் சடையான் -இத்யாதி -பொதுவானது இறே அது –

——————————————————————————–

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

ஏறு அடர்த்ததும்
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச்சுவரான ரிஷபங்கள் ஏழையும் அடர்த்ததும்

ஏனமாய் நிலம் கீண்டதும் –
ஸ்ரீ பூமிப் பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச்சுவரான விரோதியாய் -அவர்களுக்கு பிரகாரமான பூமியை
பிரளயம் கொள்ள உதவிற்றிலன் என்னும் அவத்யம் வாராத படி மஹா வராஹமாய் அண்ட புத்தியிலே புக்கு
ஒட்டின பூமியை ஒட்டு விடுவித்து

முன்னி ராமனாய் மாறு அடர்ததும் –
பிராட்டியைப் பிரித்த பையலை எதிரியாக்கிக் கொன்றதுவும்

மண் அளந்ததும்-
ஸ்ரீ பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியை போக்கினாப் போலே இந்த்ரனோடு விரோதித்த மஹா பலியைக் கைக் கொண்ட
பூமியை மீட்டு எல்லை நடந்து கொடுத்ததும்

சொல்லி பாடி –
இவ்வபதானங்களைச் சொல்லி ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாடி –

வண் பொன்னி பேர் ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு –
காவேரி பெரு வெள்ளமாய் மலைப் பண்டம் கொண்டு வருமா போலே அமைக்க நில்லாதே கடல் குடமாக
வெள்ளம் இடுகிற கண்ணீரைக் கொண்டு

அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் –
அங்குப் பாங்காக திரு அலகு பணி செய்து வைத்தால் இவர்கள் கண்ணா நீராலே சேறாக்குவார்கள் யாய்த்து

சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –
அமங்கலமான புழுகு நெய்யாலே அலங்கரித்து உள்ள தோஷம் தீர மங்களார்த்தமான ஸ்ரீ வைஷ்ணவர்களின்
திருவடிகளில் அழகிய சேற்றை யணிவன்-

————————————————————————

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் –
கடைந்து பிரித்த வெண்ணெய்-அதுக்கு உறுப்பாக தோய்த்த தயிர் -அதுக்கு அடியான பால் –

உடன் உண்டலும் –
இவை அடங்கலும் நிச்சேஷமாக ஒருக்காலே யமுது செய்தவாறே

உடன்று
உடைக்கொணா விட்டவாறே கோபித்தாள்-
தீரா வெகுளியளாய் -ஸ்நேஹத்துக்கு அவதி உண்டாகில் இறே-கோபத்துக்கு அவதி உண்டாவது –

ஆய்ச்சி கண்டு-
வாயது கையதுவாகக் கொண்டு அடியோடு கண்டு பிடித்தாள் யாய்த்து

ஆர்த்த தோள் உடை எம்பிரான் –
கண்டவாறே பிடித்துக் கொண்டு கட்டினாள்

எம்பிரான் –
ஆஸ்ரீத ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது செல்லாமை காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினான்

என் அரங்கனுக்கு அடியார்களாய்-
அவதார காலத்தில் இழந்தார் இழவு தீர வந்து ஸூலபரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய செயலாலே
எழுதிக் கொடுத்தவர்கள் யாய்த்து –

நா தழும்பு எழ –
நாவானது தழும்பு ஏறும்படி

நாரணா என்று அழைத்து –
அம்மே என்பாரைப் போலே திரு நாமத்தை அடைவு கெடச் சொல்லி

மெய் தழும்ப தொழுது-ஏத்தி-
ப்ரணாமம் பண்ணின படி தோற்ற உடம்பு எல்லாம் தழும்பாக -ஸ்ரீ சிறியாத்தானைப் போலே ஏத்தி –
இப்படிப்பட்ட செயல்களை சொல்லி ஏத்தி –

இன்புறும் தொண்டர் சேவடி-
மனசிலே வைத்து ஏத்துகையாலே விஷயத்தைக் கிட்டினால் பிறக்கும் நிரதிசய ஆனந்த யுக்தராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாதங்களை

தொண்டர் சேவடி-ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே-
அவர்கள் தாங்கள் அகப்பட்ட நவ நீத சௌர்யத்தில் போகாது என் நெஞ்சு -அதிலே அகப்பட்டவர்கள்
தங்களை ஏத்தி வாழ்த்தும் அத்தனை –
ஏத்தி வாழ்த்தும் –
இச் செயலுக்கு இவர்கள் நிலவராவதே -என்று ஸ்தோத்ரத்தை பண்ணி -இது நித்யமாக வேணும் என்று
மங்களா சாசனம் பண்ணும் என் நெஞ்சு –

——————————————————————————————

பொய் சிலை குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவீர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-

பொய் சிலை குரல் ஏறு -எருத்தம் இறுத்து
பொய் -க்ரித்ரிமம் –சிலை -கோபம் -அஸூரா வேசத்தாலே க்ர்த்ரிமமாய் கோபத்தையும் உடைத்தாய்
இருந்துள்ள ஏறும் உறாயப் பொருது –
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு விரோதியானவையுமாய் பொருகிறவையுமாய்
சிலை போலே கோரமான த்வனியை உடைத்தாய் இருந்துள்ள ரிஷபங்களைக் கழுத்தை முறித்து –

போர் அரவீர்த்த கோன்-
ஸ்ரீ திருவாய்ப்பாடியில் பசுக்களும் இடையரும் தண்ணீர் குடிக்க ஒண்ணாத படி ஜலத்தைத் தூஷித்துக் கிடந்த காளியன்
யுத்த உன்முகனாய் புறப்படும்படி கலக்கி பொய்கையில் நின்றும் போகவிட்டு –
அத்தாலே ஸ்ரீ திருவாய்ப்பாடியில் உள்ளார்க்கு நாதனானவனை

செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
கல்லாலே செய்யப்பட்டு பிறரால் அபிபவிக்க ஒண்ணாத படியான மதிப்பை உடைத்தான திண்மையையும்
ஒக்கத்தாலும் விஞ்சின திரு மதிள்கள் பலவும் சூழ்ந்து இருக்கிற ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற

மெய் சிலை கரு மேகம் –
உடம்பிலே வில்லை உடைய மேகம் என்னுதல்—மெய்யே வில்லோடு கூடின மேகம் தான் என்னுதல் –

ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே மாணிக்கக் குப்பியிலே உள்ளு நின்ற நிலை புறம்பே தெரியுமா போலே
ஸ்ரீ பெரிய பெருமாளை தங்கள் நெஞ்சிலே எழுந்து அருளிவித்து வைக்கையாலே நிழல் இடா நிற்கும் இறே

மெய் சிலிர்ப்பவர் -தம்மையே நினைந்து
உள்ளே எழுந்து அருளி இருக்கிற படியே அனுசந்தித்து புளகித காத்ரராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தம்மை நினைத்து

என் மனம் மெய் சிலிர்க்குமே
ஸ்ரீ பெரிய பெருமாளை அனுபவித்து அவர்கள் உடம்பு படும் பாட்டை -அவர்களை அனுபவித்து என் நெஞ்சு படா நின்றது
ஸ்பர்ச த்ரவ்யம் பட்டது எல்லாம் படா நின்றது அமூர்த்த த்ரவ்யம் –

——————————————————————————-

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
ஆதி –
ஜகத் காரண பூதன் –
அநந்தம் –
காரண அவஸ்தையிலும் கார்ய அவஸ்தையிலும் ஒக்க வியாபித்து நிற்குமவன்
அற்புதம் –
காரண அவஸ்தையோடு சதாவஸ்தனாய் நிற்குமத்தோடு வாசியற நிற்கும் நிலைகள் வேறொரு இடத்தில்
காண ஒண்ணாது என்னும்படி இருக்கும் ஆச்சர்ய பூதன் –
ஆன வானவர் தம்பிரான்-
ஆன போதும் அமர்ந்த போதும் எப்போதும் ஒக்க உளராய் இருக்கும் நித்ய ஸூரிகளுக்கு நாதன் –
உபய விபூதி நாதன் -என்றபடி –

பாத மா மலர் சூடும் பத்தி இலாத –
அவன் திருவடிகளாகிற செவ்வித் தாமரையைச் சூடும் பக்தியை உடையராய் இருக்கை யாய்த்து கர்த்தவ்யம் –
அது இல்லாத –

பாவிகள் உய்ந்திட
பக்தி இல்லாத மஹா பாபத்தைப் பண்ணி -அசந்நேவ–என்னும்படி இருக்கிற தேசம் எங்கும் புக்கு சஞ்சரித்து
அவர்களை பக்தி உண்டாக்கி யுஜ்ஜீவிப்பைக்காக

தீதில் நல் நெறி காட்டி –
தீமையோடு கூடின நெறி யன்றிக்கே -சேதனர் நல் வழி போம் படி தாங்கள் ஆஸ்ரயித்துக் காட்டி

எங்கும் திரிந்து –
புகக் கடவது அல்லாத தேசம் எங்கும் புக்கு சஞ்சரித்து

அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர்க்கு –
என்னை அனந்யார்ஹம் ஆக்கின ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளிலே பக்தி உண்டாய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு

எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –
அநேக ஜன்மங்கள் பிறந்து அவர்களுக்கு அடிமை செய்ய வேணும் என்று ஆசைப் படா நின்றது என் நெஞ்சு –

—————————————————————————————-

கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-

கார் இனம் புரை மேனி-
தொக்க மேகப் பல் குழாங்கள் -என்றும்
கார்த்திரள் அனைய மேனி -என்றும் -சொல்லுகிறபடியே அழகிய திருமேனியையும் உடையராய்

நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
கண்டாரைப் போகாமல் துவக்க வல்ல ஒளியை உடை முத்து நிரை போலே இருக்கும் தந்த பந்தியையும் –
இதுக்கு பரபாகமான திருவதரத்தில் பழுப்பையும் உடையவராய்

ஆர மார்வன் –
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு -என்று ஐஸ்வர்ய பிரகாசகமாம் படி இட்டுப் பூண வேண்டும்படி உள்ள
ஹாரத்தையும் திரு மார்பிலே உடையராய் இருக்கிற

அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
ஸ்ரீ பெரிய பெருமாள் என்று -உபய விபூதியிலும் பிரசித்தராய் நிரவதிக தேஜோ ரூபராய் அத்விதீயரானவரை
சேரும் நெஞ்சினராகி –
அவர் வந்து கிட்டும் போது விலக்காமை யடியாகப் -பிறந்த பக்தியை உடையராய்

சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால் வார நிற்ப்பவர் தாள் இணைக்கு –
அவனைக் கிட்டி நிரதிசய பக்தி உக்தராய் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் அவர்களுக்கு பக்தி
பாரவச்யத்தாலே இறே என்று அங்குத்தைக்கும் இவர்களுக்குமாய் நில்லாதே
இவர்களுடைய திருவடிகளுக்கு

ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –
அநந்ய பிரயோஜனமாய் நில்லா நின்றது என் நெஞ்சு –

—————————————————————————————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

மாலை யுற்ற கடல் கிடந்தவன்-
ஸ்வ ஸ்பர்சத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன்

வண்டு கிண்டு நறும் துழாய் மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை –
வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற
பெரும் திரு மார்வை உடையராய் –
மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே

மலர் கண்ணனை
செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை

மாலை உற்று எழுந்து ஆடி பாடி திரிந்து –
பக்தியை உடையராய் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் –
ப்ரீதி பிரேரிக்க இருக்க மாட்டாதே சஞ்சரித்து

அரங்கன் எம்மானுக்கே மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு –
ஸ்ரீ கோயிலிலே ஸூலபரான படியைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே
பக்தி கார்யமான பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு

மாலை யுற்றது என் நெஞ்சமே–
பித்தேறா நின்றது -என்கிறார் –

———————————————————————-

அவதாரிகை –

பித்தேறித் திரிவார்க்கு ஒரு நீர் பித்தேறுவது என்ன -பிராப்த விஷயத்தில் பித்தேறுமவர்கள் பித்தர் அன்று என்கிறார் –

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப இளைத்து நின்று
இரண்டு கண்ணாலே வர்ஷ தாரை போலே சொரிய புளகித காத்ரராய்

ஏங்கி எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி –
விஷயத்தை நினைத்து ஏங்கி இளைத்து சிதிலராய் –அவ்வளவு அன்றியிலே ஸ்தப்ராய் நின்று –
அந்நிலையும் நில்லாதே –
கும்பிடு நட்டம் இட்டு -எழுந்து ஆடி பாடி
சசம்பிரம நர்த்தம் பண்ணி
இறைஞ்சி –
தீர்க்க பிரணாமத்தைப் பண்ணி

என் அத்தன் அச்சன் –
எனக்கு ஜனகனுமாய் ஸ்வாமியும் ஆனவனை

அரங்கனுக்கு அடியார்களாகி –
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அநந்ய பிரயோஜனராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடியாராகி

அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள்
அவர்க்கு பக்திமான்களாய் பக்தி கார்யமான பித்தேறித் திரிகிறவர்கள் -பித்தர் அல்லர்கள் –

மற்றையார் முற்றும் பித்தரே–
இந்த பக்தி கார்யமான பித்தர் அல்லாதவர்கள் அடைய பித்தரே –
இக் கலக்கம் இல்லாதே தெளிந்து இருக்கும் ஸ்ரீ சனகாதிகளே யாகிலும் அவர்களே பித்தரே –

———————————————————————-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்–
ஸ்ரீ யபதியான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
அநந்ய பிரயோஜனராய் இருக்கும் ஸ்ரீ-வைஷ்ணவர்களுடைய

எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
ஆத்ம தாச்யத்திலே என்றும் ஒக்கப் பொருந்தின திரு உள்ளத்தை உடையரோம்

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்-
கொல்லிக்கும் மதுரைக்கும் உறையூருக்கும் -நாயகரான பெருமாள் –
ஸ்ரீ பெரிய உடையாருடைய இழவாலே வந்த வெறுப்பாலே -வனவா சோம ஹோதயா -என்று போய்-
ராஜ்யாத்பரம்சோ வ நே வாச –என்றுவந்ததுக்குப் போந்து அது பிரியமாய் இருந்தவர் இவ் விழவாலே
அடியிலே போந்ததுவும் எல்லாம் தமக்கு வெறுப்புக்கு உடலானாப் போலே
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் -என்றும்
இவ்வரசும் யான் வேண்டேன்-என்றும்-சொல்லுகிற
இவர்க்குத் ததீய சேஷத்வத்தைத் தந்த ஜன்மம் என்று ராஜ ஜன்யம் தன்னையும் கொண்டாடுகிறார் இறே

சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் –
இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்

தொண்டர் தொண்டர்கள் ஆவரே –
இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -1–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

November 8, 2015

அவதாரிகை –

ஸ்ரீ யபதியாய் -ஜ்ஞானானந்தைக ஸ்வரூபனாய்-சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-உபய விபூதி உக்தனாய் —
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் அடியாக
ஸ்ரீ பெருமாள் பெற்றது -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆகையாலே
க்ரமத்தாலே காண்கிறோம் என்று ஆறி இருக்கலாவது தம் தலையால் வந்ததாகில் இறே-
அவன் தானே காட்டக் காண்கிறவர் ஆகையாலே அப்போதே காண வேண்டும் -படி விடாய் பிறந்தது –
ஸ்ரீ பரமபதத்திலும் அனுபவிப்பது குண அனுபவம் ஆகையாலே -அந்த சீலாதி குணங்கள் பூரணமான
ஸ்ரீ கோயிலிலே அனுபவிக்கப் பிரார்த்திக்கிறார்
இங்கே அனுபவிக்கக் குறை என்-பிரார்த்தனை என் என்னில் –
ஸ்வா தந்த்ர்யம் பிறப்பே உடையராகையாலே -மனுஷ்யர் நிரோதிப்பார் பலர் உண்டாகையாலே –
இங்கு வந்து அனுபவிக்க மாட்டாதே
அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும்
ஸ்ரீ நம்மாழ்வார் பிரார்த்தித்துப் பெற்ற பேற்றை இங்கேயே அனுபவிக்க ஆசைப் படுகிறார் –

முதல் பாட்டு –

அவதாரிகை –

பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே இறே முமுஷூ மநோ ரதிப்பது —
அத்தை இங்கே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து கிடக்கிற இடத்திலே அனுபவிக்க மநோ ரதிக்கிறார் –
சம்சாரி முக்தனாய்ச் சென்றால் -பாதே நாத்யா ரோஹதி -இத்யாதிப்படியே எழுந்து அருளி இருக்கிற பர்யங்கத்திலே மிதித்து ஏறினால்
நீ ஆர் என்றால் -நான் ராஜ புத்ரன் என்னுமா போலே -அஹம் பிரஹ்மாஸ்மி -என்று இறே இவன் சொல்வது –

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இருள் சிதறிப் போம் படி ஜ்யோதிஸ்சை உடைய மணிகள் விழுக்கிற நெற்றியையும்

இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
இனமான துத்தி -அதாவது இரண்டாய்ச் சேர்ந்த திருவடி நிலை என்று சொல்லுகிறவற்றை உடைத்தான
பணங்கள் ஆயிரத்தையும் பூரணமாக யுடையனாய்

அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
நாகா ராஜா வென்னும் மகா தேஜஸ் சை யுடையனாய்
எல்லா வற்றையும் வியாபித்து நிற்கிற சர்வேஸ்வரனை விளாக்குலை கொள்ளுகிற ஸ்வரூப குணங்களை உடையவன்
ஆகையாலே அனந்தன் என்று சொல்லப்படுகிற –
ஸூ முகன் -வாஸூகி -தஷகன் -என்றும் உண்டு இறே
அவர்களில் காட்டில் பகவத் பிரத்யாசித்தியை உடையது என்னும் பிரசித்தியை உடையவன் –

அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
அழகு மிக்கு ஒக்கத்தை உடைத்தாய் மறுவற்ற வெள்ளப் படுக்கை யாகிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வானை மேவி

திரு அரங்க பெரு நகருள்
வைகுண்டேது பரே லோகே –என்று சொல்லுமது அங்கே காணும்
இவருக்கு திருவரங்கம் ஆகிற மஹா நகரத்திலே

தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட
தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட

பள்ளி கொள்ளும் கருமணியை –
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிறவனை

கோமளத்தை 
கண்ணார துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் உடையவன்

கண்டு கொண்டு –
கலியர் -சோற்றைக் கண்டு கொண்டு -என்னுமா போலே

என் கண் இணைகள்
பட்டினி விட்ட என் கண்கள்

என்று கொலோ களிக்கும் நாளே-
அங்கே கண்டு -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்கும் களிப்பை
இங்கே கண்டு களிப்பது என்றோ –

——————————————————–

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
யசோதைப் பிராட்டி ஸ்ரீ கிருஷ்ண ஸ்பர்சத்தால் வந்த ஸூகத்துக்கு போக்கு விட்டு ஏத்துமா போலே பகவத் அனுபவ ஹர்ஷ
பிரகர்ஷத்தாலே வந்த ப்ரீதிக்கு போக்கு விட்டு ஏத்துகைக்காக ஆயிரம் வாயையும்
துதங்கள் ஆவது –
ஸ்தோத்ராதிகளைப் புறப்பட விடுகை -ஸ்துதம் இறே

வளை வுடம்பின் அழல் நாகம்
வெளுத்த நிறத்தை உடையவனுமாய் -பிரதி பஷத்துக்கு வந்து அணுக ஒண்ணாத படி அநபிபவ நீயானாய்
இருக்கிற ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான்

உமிழ்ந்த செந்தீ வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
அவன் வாயாலே இடை விடாதே யுமிழ்கிற அக்னி ஜ்வாலைகளின் ஜ்யோதிஸ் ஆகிற மேற்கட்டியின் கீழே

வீயாத மலர்ச் சென்னி
பூ மாறாத திரு முடியை உடையனுமாய்

காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
காயாவின் அழகிய பூவாலே செய்யப்பட மாலை போலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை

கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
அரணாகப் போரும் மதிளை யுடைய ஸ்ரீ கோயிலிலே
அப்படி பரிவனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற

மாயோனை –
சமயோ போதிதாஸ் ஸ்ரீ மான் -என்னும் படி கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனை

மணத் தூணே பற்றி நின்று
ஆமோத ஸ்தம்ப த்வயங்களைப் பற்றி நின்று –
அழகிலே அகப்பட்ட ஹர்ஷத்தாலே தள்ளுண்ணாமே இரண்டு ஸ்தம்பங்களைப் பற்றி நின்று

என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே
கண்டால் கொள்வது வேறொரு பிரயோஜனம் இல்லை இறே
பல்லாண்டு பல்லாண்டு என்னும் இத்தனை இறே –

—————————————————————-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எப்படிப் பட்ட மாட்சிமாசி உடைய ப்ராஹ்மா ஸ்தோத்ராதிகளைப் பண்ணும் தன்மை குறை வற்று இருக்கை-
ஸ்தோத்ராதிகளுக்கு பரிகரமான நாலு நாக்காலும்

எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
தன ஸ்ரத்தைக்குத் தக்கபடி எடுத்தேத்தி -நாலு வேதத்துக்கு சமைந்த நாலு முகமும் கொண்டு

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
பின்னும் முன்னும் மட்டங்கள் ஆகிற பர்யந்தங்கள் எங்கும்
அழகை அனுபவிப்பைக்கு பல கண் படைத்த பிரயோஜனம் பெற்றான்

தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற
ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு தொழுது ஸ்தோத்ராதிகளைப் பண்ணுவது தண்டன் இடுவதாம் படி நின்ற

செம்பொன் அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
ஸ்பர்ஹணீயமாய் இவ்வருக்கு உண்டான கார்ய வர்க்கத்துக்கு எல்லாம் காரணம் என்னும் மஹத்வம் தோற்றும் படியாய்
இருக்கிற தாமரைப் பூவை உடைய தன் திரு நாபி தோன்ற

அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும் அம்மான் தன்
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய

அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அவன் திருவடிகளின் கீழே புஷ்பாத் உபகரணங்களைப் பணிமாறி

அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–
அங்கு அந்தரங்க வ்ருத்தி செய்யும் அவர்களோடு சஜாதீயனான நானும் கிட்டுவது என்றோ
அடியார்கள் குழாங்கள் –இத்யாதி —

—————————————————–

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை
கேசியை அநாயாசேன பிளந்து – ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த ஆஸ்ரீத-வ்யாமுக்தனை

வேலை வண்ணனை –
ஆஸ்ரித விரோதிகளை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவனை

என் கண்ணனை-
வெறும் வடிவு அழகே அன்றியே எனக்கு பவ்யனானவனை

வன் குன்றம் ஏந்தி
இந்த்ரன் வர்ஷிக்கிற கல் வர்ஷத்திலே வர்ஷிக்கிற கல் வர்ஷத்துக்கு சலியாத மலையை என்னுதல்-
ஸ்ரமஹரமான குன்றம் என்னுதல்

ஆவினை அன்று உய்ய கொண்ட
உபகார ஸ்ம்ர்தியும் இல்லாத பசுக்களை ரஷித்த

ஆயர் ஏற்றை
தன பருவத்தில் பிள்ளைகளைக் காட்டில் தான் மேனாணிப்பு உடையவனை

அமரர்கள் தம் தலைவனை –
தன்னோடு சாம்யா பத்தி பெற்று இருக்கிற நித்ய ஸூரிகளில் காட்டில் தலைவனானவனை –

அம் தமிழ் இன்ப பாவினை –
இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி போலே இனியவனை

அவ் வட மொழியை
ஸ்ரீ மன் நாராயணனைப் போலே இனியவனை

பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும் கோவினை –
தன்னையே பற்றி புறம்புள்ளவற்றை அநந்ய பிரயோஜனர் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற நாதனை

நாவுற வழுத்தி
நாத் தழும்பு ஏறும்படி ஸ்தோத்ரங்களைப் பண்ணி

என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-
கை தழும்பு ஏறும்படி புஷ்பாத் யுபகரணங்களைப் பணிமாறி அஞ்சலி பண்ணப் பெறுவது என்றோ –

———————————————————-

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி –
உபமான ரஹிதமான இனிய இசையை உடைய யாழை நெருங்கி

இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
பாட்டாலே வந்த ஆனந்தத்தை உடைய தும்புருவும் நாரதனும் திருவடிகளிலே விழுந்து ஸ்தோத்ரங்களைப் பண்ண

துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
ஒப்பில்லாத பழைய வேத சாஸ்திரம் ஆகிற ஸ்தோத்ரத்தாலே

தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
திரு நாபீ கமலத்தின் இடத்திலே இருக்கிற ப்ரஹ்மா திருவடிகளில் பிரமாணம் பண்ணி விடாதே ஸ்தோத்ரம் பண்ணி

மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மணி மயமான மாடங்களையும் மிக்க ஐஸ்வர்யத்தையும் உடைய

மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மிக்க அரணான பெரிய மதிளை உடைய பெரிய கோயிலிலே திரு வநந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளும்

மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு –
அழகிய வடிவை உடைய சர்வேஸ்வரனைக் கண்டு கொண்டு

என் மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே-
நான் பூ முடி சூடின தலை என்றோ அவன் திருவடிகளில் வணங்குவது –

————————————

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு –
வண்டுகள் படிந்த அரவிந்தத்தின் மேலே இருக்கிற ப்ரஹ்மாவும்-அவன் மகனான ருத்ரனும் -அவர்களோடு
சஹ படிக்கப்பட்ட இந்த்ரனும் -இவர்களுடனே

ஏனை அமரர்கள் தம் குழுவும் –
அவர்கள் மூவரையும் ஒழிந்த தேவர்கள் திரளும்

அரம்பையரும் –
ரம்பை முதலான அப்சரஸ் ஸூக்களும்

மற்றும் தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் –
ப்ரஹ்ம பாவனையாகச் சொல்லும் சனகாதிகள் திரளும்

உந்தி
ஒருவருக்கு ஒருவர் நெருக்கித் தள்ளி

திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
பார்த்த பார்த்த இடம் எல்லாம் புஷ்ப வர்ஷ்டியைப் பண்ணிக் கொண்டு சென்று கிட்டும்

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
மது மலரை யுடைத்தான பொழிலை யுடைய அரங்கத்திலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஏறி

கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
பள்ளி கொள்கிற நீர் வண்ணர் கமலக் கண்ணும்

ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு –
குளிர்த்து மிக்கு புகரை யுடைய சந்த்ரனை ஒப்புச் சொல்லலான அழகிய திரு முகத்தையும் கண்டு கொண்டு

என் உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே-
என் நெஞ்சு குளிர்ந்து உருகுவது என்றோ –

————————————————

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

மறம் திகழும் மனம் ஒழித்து –
மறம்–கொலையும் -சினமும் -கொடுமையும் -இவற்றால் விளங்கா நின்ற மனஸை வாசனையோடு போக்கி –

வஞ்சம் மாற்றி
பொய்யைப் போக்கி

ஐம்புலன்கள் அடக்கி
வன்புலச் சேக்களை பட்டி புகாமே கட்டி

இடர் பார துன்பம் துறந்து –
மிக்க துக்கத்தை விளைப்பதான -பாரமாய பழவினை பற்று அறுத்து

இரு முப் பொழுது ஏத்தி
பஞ்ச காலம் -என்னுதல்-
பெரிய முப்பொழுது என்னுதல்
இக்காலங்களிலே ஏத்தி

எல்லை இல்லா தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான-
அளவிறந்த பழைய மரியாதையிலே -சிலவரால் கலக்க ஒண்ணாத படி -நிலை நின்ற வைஷ்ணவர்களான –

அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை –
ஆன்ருசம்சய பிரதானராய் இருக்கும் அவர்களுக்கு பரம பிராப்யமானவனை

பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்-
பொன்னி சூழ் அரங்கத்திலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளும்
லீலா விபூதிக்கு ஆபரணமான ஸ்ரீ கோயில் –

நிறம் திகழும் மாயோனை கண்டு
அழகு விளங்கா நின்ற ஆச்சர்ய பூதனைக் கண்டு

என் கண்கள் நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே
அவனுடைய வடிவு அழகைக் கண்டு களித்து ஆனந்தாச்ரு ப்ரவஹிக்கா நிற்கும் நாள் என்றோ –

———————————————————-

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-

கோலார்ந்த நெடும் சார்ங்கம் –
திருச் சரங்களோடு கூடின ஸ்ரீ சார்ங்கம் –
எப்போதும் கை கழலா நேமியான் -என்னுமா போலே எப்போது இவனை யுண்டாம் என்று அறியாமையாலே
திருச் சரங்களை தொடுத்த படியே யாய்த்து ஸ்ரீ சார்ங்கம் இருப்பது

கூன் நல் சங்கம்
பகவத் அனுபவ ஜனிதத்தாலே வந்த செருக்காலே கூனியாய் யாய்த்து ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இருப்பது

கொலை ஆழி –
இவர்கள் அனுபவத்தில் இழியப் போது இன்றியே பிரதிபஷத்தை இரு துண்டமாக விடுகை
பணிப் போருமாய்த்து ஸ்ரீ திரு வாழி ஆழ்வானுக்கு

கொடும் தண்டு –
பிடித்த பிடியிலே உகவாதார் மண் உண்ணும் படி யாய் இருக்கிற கதை –

கொற்ற ஒள் வாள்
ஐஸ்வர்ய பிரகாசகமான திருக் கொற்ற வாள்-கொற்றம் -வெற்றி –

காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை –
காற்றினுடைய மிக்க வேகம் போலே இருக்கிற கதியை உடையனாய் ஸ்ரீ பெரிய திருவடி என்கிற
பேரையும் உடையனாய் இருக்கிற பறவை –

இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
ராம லஷ்மண குப்தாஸா–என்னுமா போலே கடல் கரை வெளியில் ஸ்ரீ சேனை எல்லாம் குழைச் சரக்காய்-
தாமும் தம்பியாருமாய் காக்குமா போலே
ஸ்ரீ பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகையாலே ஸ்ரீ பெரிய திருவடி முதலாக ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்கள்
சுற்றும் காத்துக் கொண்டாய்த்து நிற்பது

சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் மாலோனை –
சேலாலே நிரம்பின கழனிகளும் சோலைகளும் சூழ்ந்த கோயிலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகனை

கண்டு இன்ப கலவி எய்தி
கண்டு நிரதிசய ஆனந்த யுக்தனாம் படி சம்ச்லேஷித்து

வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே –
லோகாந்தரத்திலே போய்க் காண வேண்டும் வஸ்து இங்கே சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே அனுபவிக்க ஒண்ணாத
மகா பாபத்தைப் பண்ணின நான் அனுபவித்து வாழப் பெறுவது என்றோ –
பகவத் அனுபவத்துக்கு விரோதியாய் உள்ளவை எல்லாம் பாபமாய் இருக்கும் இறே-

————————————————————————-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி –
தூராக் குழி தூற்று எனை நாள் அகன்று இருப்பன் -என்று சம்சாரிகள் சப்தாதி விஷயங்களிலே அனுபவித்தாலும்
இந்த்ரியங்களைத் திருப்தி யாக்கப் போகாதாப் போலே பகவத் அனுபவம் ஒருக்காலும் ஆராது இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
குழாத்திலே என்னையும் கூடிக் கலசி –

திரு புகழ்கள் பலவும் பாடி
அவனுடைய கல்யாண குணங்களுக்கு வாசகமான திரு நாமங்கள் பலவற்றையும் பாடி

ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர –
திரு நாமங்களைச் சொன்ன படியாலே மனஸ்ஸூக்கு ஆராமையாலே ஹ்ர்ஷ்டனாய் அத்தாலே ஆனந்தாச்ரு ப்ரவஹிக்க

நினைந்து உருகி ஏத்தி –
இவர்கள் திரளிலே கூடி திரு நாமத்தைச் சொன்ன படியாலே திருநாமத்வாரா விஷயத்தை நினைத்து அத்தாலே உருகி –
உருகி வழிந்து புறப்பட்ட சொல் -என்னும் படி ஸ்தோத்ராதிகளைப் பண்ணி

நாளும் சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும் திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும் போராழி அம்மானை கண்டு துள்ளி-
ஐஸ்வர்ய பிரகாசகமான வாத்திய கோஷங்கள் சமுத்திர கோஷத்தை காட்டா நிற்கிற ஸ்ரீ கோயிலிலே
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே நித்ய வாசம்
பண்ணுகிற யுத்த உந்முகமான திரு வாழியைக் கையிலே உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
துள்ளி –
ஸஸபிரமநர்த்தம் பண்ணி

பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே-
சிம்ஹாசனத்திலே இறுமாந்து இருக்கும் இருப்பு ஒழிந்து ஹ்ர்ஷ்டனாய் பூமியிலே புரளுவது என்று கொலோ –

———————————————————-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே பூமியும்
பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க

துன்பம் மிகு துயர் அகல
நித்ய துக்கத்தை விளைப்பதான பாபங்கள் அகல

அயர் ஒன்றில்லா சுகம் வளர –
துக்கம் விஸ்ரமியாத நித்யமான ஸூகம் வளர

அக மகிழும் தொண்டர் வாழ
பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ

அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து -அத்திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே

அடியார் தங்கள் இன்ப மிகு பெரும் குழுவு கண்டு –
நிரதிசய ஆனந்த உக்தராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைக் கண்டு

யானும் இசைந்து-
அபிஷிர்த ஷத்ரியன் -என்று என்னை நினையாதே அவர்களிலே ஒருவனாக இசைந்து

உடனே என்று கொலோ விருக்கும் நாளே-
என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –

—————————————————–

அவதாரிகை –

திரு நாமப் பாட்டு –
பூவோ பூத்யை பூ புஜாம் பூ ஸூ ராணாம் திவ்யோ குப்தைஸ் ஸ்ரயசே தேவதா நாம்-ச்ரியை ராஜ்ஞாம்
சோளவம் சோத்பவா நாம் ஸ்ரீ மத் ரங்கம் சஹ்ய ஜாமாஜகாம –

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
விளங்கா நின்ற திருக் கரையை உடைத்தாய் -காவேரி சூழ்ந்த

திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற -கடல் போலே ஸ்ரமஹரமான
திருமேனியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை

கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் என்னும் ஆசைப் பாட்டோடு

குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர் கோன் –
விளங்குகிற வெண் கொற்றக் கொடையையும் வெற்றியையும் உடைய சேனையையும் -ஐஸ்வர்ய பிரகாசகமான
ஆனையையும் உடையராய் மதுரைக்கு நிர்வாஹகருமான

கொடை குலசேகரன் சொல் செய்த
கொடை மாறாதே கொடுக்கும் ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த –

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
உள்ளில் அர்த்தத்தில் இழிய வேண்டாதே -பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்க வேண்டாதே -இது தானே ஆகர்ஷகமாய்
இருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார்

நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–
சீலாதி குண பூரணராய் -சர்வ ஸ்வாமிகளாய்-வத்சலராய் இருக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே
யனுபவிக்க ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

பெருமாள் திருமொழி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன்கள் வியாக்யானம்–

November 8, 2015

ஸ்ரீ இராமாயண சாரம் ஆகிய பெருமாள் திருமொழி –

ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த தனியன் –

இன்னமுத மூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் வியாக்யானம் —

அவதாரிகை –

இதில் -திவ்ய தேசங்களில் வர்த்திக்கும் திர்யக்குகள் தான் திரு நாமங்களைச் சொல்ல வற்றாய் இறே இருப்பது -ஆகையால் –
சகு நா நூதித ப்ர்ஹ்ம கோஷம் -என்றும்
பூ மருவி புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குளறும் புனல் அரங்கமே -பெரிய ஆழ்வார் திரு மொழி  4-9-5–என்றும்
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறுகாலைப் பாடும் -பெரிய ஆழ்வார் திரு மொழி-4-2-8-என்றும்
எல்லியம் போது இரு சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி -பெரிய ஆழ்வார் திரு மொழி  -4-8-8-என்றும்
அள்ளியம் பொழில் வாயிருந்து வாழ் குயில்கள் அரியரி என்று அவை அழைப்ப -என்றும்
செவ்வாய்க் கிளி நான் மறை பாடும் -என்றும் -சொல்லுகையாலே

ஸ்ரீ ராம பக்தரான குல சேகரர் ஸ்ரீ ராமன் திரு நாமத்தை அவற்றுக்குக் கற்ப்பித்துக் கேட்குமா போலே –
ஸ்ரீ குலசேகர பக்தரானவர்களும் அவர் திரு நாமங்களை அவற்றின் வாயாலே கேட்க
இச்சிக்கிற படியை சொல்லுகிறதாகவுமாம்
அன்றிக்கே –
ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் என்றும்
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன் என்றும் இறே
ஸ்ரீ ராமாயணத்திலும் ஸ்ரீ ரெங்க தாமத்திலும் எம்பெருமானார் மண்டி இருப்பது –

ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் –
எல்லையில் சீர்த் தயரதன் தன மகனாய்த் தோன்றிற்று முதலா தன்னுலகம் புக்கதீறா -என்றும்
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் இன்றே -என்றும்
ஸ்ரீ ரங்க யாத்ரா திநே திநே -என்றும் –
ஸ்ரீ அணியரங்கன் திரு முற்றம் -என்றும்
ஸ்ரீ அரங்கன் அடியிணைத் தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாம் –என்றும்
இரண்டையும் ஆதரித்துக் கொண்டு இறே போருவது

ஆகையால் -கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் இராமானுசன் -என்னும்படி
ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள் இடத்தில் யதி ராஜரான ஸ்ரீ எம்பெருமானார் மடு விட்டு இருப்பது –
அற்ற பத்தர் அபிமானத்திலே ஒதுங்கிப் போருகிற ஸ்ரீ ஆழ்வான் போல்வரை யாய்த்து –
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே -என்கிறார் ஆகவுமாம் –
கிளியும் கற்ப்பித்ததே சொல்லும் –
இவரும்-கற்பியா வைத்த மாற்றம் இறே சொல்லுவது –
மேல் சொல்லுமவர் அன்றே -சொன்னதைச் சொல்லுமவர் இறே
ஆகையால் ஸ்ரீ கூரத் தாழ்வான் போல்வாரைக் கொண்டு ஸ்ரீ குலசேகர ஆழ்வார் வைபவத்தை கூறுவிக்கிறார்–
இன்னமுத மூட்டுகேன் -கூறு என்கிறார்

இன்னமுத மூட்டுகேன்
இன்னடிசிலொடு பாலமதூட்டி எடுத்த என் கோலக் கிளியை -என்னக் கடவது இறே –
இங்கு -தேனும் பாலும் அமுதுமாகிய திருமால் திரு நாமத்தை இறே ஊட்டி வளர்த்தது –
அது தோன்ற ஆழ்வான் வலத் திருச் செவியிலே முன்பு பிரசாதித்த த்வயத்தை மீளவும் பிரசாதித்து அருளிற்று –

இங்கே வா –
என்று -திரு நாமம் சொல் -என்றத்தால் வடிவில் பிறந்த ஹர்ஷத்தை கண்டு வர அழைக்கிறது

பைங்கிளியே
பசுத்து மரகதம் போலே இருக்கிற மடக் கிளியே
இத்தால் –
என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசும் சாம நிறத்தனன் –
என்னும் படியான ரூப சௌம்யத்தைச் சொல்லுகிறது
பரமம் சாம்யம் உபைதி இறே
ஏதுக்காக என்னை அழைக்கிறது என்னில்

தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ் சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன்
எங்கள் குலசேகரன் என்றே கூறு -என்கிறது

தென்னரங்கம் பாட வல்ல சீர் பெருமாளாவது –
இருளிரிய -தேட்டரும் திறல் தேன் –மெய்யில் வாழ்க்கை -என்கிற மூன்று திருமொழியிலும் பாடி
முடிவிலும் -யாவரும் வந்து அடி வணங்க வரங்க நகரத் துயின்றவனே -என்றும்
மற்றும் ஸ்ரீ திருமலை முதலாய் இருக்கிற ஆராமங்களான ஸ்ரீ திருப்பதிகளையும்
காகுத்தா கண்ணனே -என்றும் அர்ச்சாவதாரத்துக்கு அடியான ஸ்ரீ அவதாரங்களையும் அருளிச் செய்து தலைக் கட்டுகையாலும்
அவர் தாம் -செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் ஆகையாலும்
வெண்ணெய் உண்ட வாயனாகையாலும் -எல்லாம் திருவரங்கத் திருப்பதி விஷயம் ஆகலாம் இறே

பொன்னஞ் சிலை சேர் நுதலியர் வேள்
பொன்னின் -என்றும் பாடம்
ஸ்பர்ஹணீயமான வில்லுக்கு சதர்சமான புருவத்தை முகத்திலே சேர்ந்துடைய ஸ்திரீகளுக்கு ரஞ்ச நீயராய் இருக்கிறவர் –
வேள் -காமன்
கந்தர்ப்ப இவ மூர்த்திமான் -என்றும் –
காமர் மானேய் நோக்கியர்க்கே –என்னக் கடவது இறே
இத்தால் -ஜ்ஞானத்துக்கு மேலான ஸ்வரூப தாந்தியை உடையவர்களுக்கு தர்ச நீயமாய் இருக்கிறவர் -என்றபடி

சேரலர் கோன் –
சேர வம்சத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் ராஜா -என்றபடி
ராஜாதி ராஜ சர்வேஷாம்
கோன் -ராஜா -குடிக்கு நிர்வாஹகர் -என்றபடி

எங்கள் குலசேகரன்
பிரபன்ன குல சேகரர் என்கை-இராமானுசன் என் குலக் கொழுந்து -என்னுமா போலே

குலசேகரன் என்றே கூறு-
நான் வளர்த்த சிறு கிளி பைதலே இன் குரல் நீ மிழற்றாதே குலசேகரன் என்றே கூறு
கூறின வாய்க்கு அமுதமாய திருமால் திரு நாமமான இன்னமுத மூட்டுகேன் -ஆகையால் குலசேகரன் என்றே கூறு
வக்தவ்யம் ஆச்சார்யா வைபவம் -என்னக் கடவது இறே –

————————————————

ஸ்ரீ மணக்கால் நம்பி அருளிச் செய்த தனியன் –

ஆரங்கெடப் பரனன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரங்கொடு குடப்பாம்பிற் கையிட்டவன் மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகா மணியே –

அவதாரிகை –

இதில் அவர் ஸ்ரீ வைஷ்ணவர் திறத்தில் பஷபாதித்து இருக்கிற படியைச் சொல்லுகிறது –

ஆரங்கெடப்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்தில் அவர்க்கு உண்டான பிராவண்யத்தைக் குலைக்க வேணும் என்று
மந்த்ரிகள் அவர் திரு ஆரத்தை எடுத்து மறைய வைத்து அவர்கள் பேரிலே ஆரோபிக்க -அத்தைக் கேட்டு

பரனன்பர் கொள்ளார் என்று –
பர வஸ்துவிலே பக்தி பண்ணுமவர்கள் பர வஸ்துவைக் கொள்ளார் என்று பிரதிஜ்ஞ்ஞை பண்ணி –
பரன் அன்பர் அல்லாதவர்கள் இறே -பிறர் நன் பொருள் தன்னை நம்புவது
இப்படி யாகையாலே

அவர்களுக்கே வாரங்கொடு-
அவ்வளவு அன்றிக்கே அவர்கள் விஷயத்திலே பஷபதித்தது –
குடப்பாம்பிற் கையிட்டவன்
பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி -என்கிறபடியே பாம்புக் குடத்திலே அதின் படத்திலே படக் கையிட்டு
அவர்கள் ஆபரணம் எடார்கள் என்று பணத்திலே கையிட்டவர்
அப்படி செய்தவர் தான் அல்பரோ என்னில்

மாற்றலரை வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்-
சத்ருக்களை நிரசிக்கும் சார்வ பௌம்யர் -என்கிறது –
சத்ருக்கள் வீர்யத்தை நிர்வீர்யமாகப் பண்ணின இது எத்தாலே என்னில்
செங்கோல் –
ஆஞ்ஞையாலே
இருளார் வினை கெட செங்கோல் நடாவுதிர்
கொல்லி காவலன் –
குருகை காவலன் -என்னுமா போலே -கொல்லி -என்கிற நகரத்துக்கு நிர்வாஹகர் -என்கை

வில்லவர் கோன்
அவாந்தர ராஜாக்களுக்கும் அதி ராஜன் -என்கை
அன்றிக்கே
வில்லவர் கோன் -என்று வில்லவர் -என்று பேர்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -என்றார் இறே
கோழி -உறையூர் -உறையூருக்கும் இறையவர் என்றபடி -அது சோழன் ராஜ தானி –

சேரன் குலசேகரன்
சேரனுடைய குலத்துக்கு சேகரன் –
குலசேகரர் -திரு நாமம்
இப்படி ராஜாதி ராஜர் ஆகையாலே –

முடி வேந்தர் சிகா மணியே -என்கிறது
முடி வேந்தர் சிகா மணி யாவது –
மணி மகுடம் தாழ துளங்கு நீண் முடி யரசர் -அடியிலே வணங்குகையாலே-
மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் -என்று தமக்கு இருக்குமா போல –
தாமும் அவர்களுக்கு சிகா மணி போலே சேகரிக்குமவராய் அலங்கார வஹராய் இருக்கை –

பெரு மணி வானவர் உச்சி வைத்த —
ஈஸ்வராணாம் ஸ்ரீ மத கிரீட தட பீடிதபாத பீடம் -என்னக் கடவது இறே -இவர் பெருமாளை
குலசேகரப் பெருமாளான இவர் பெருமையும் அப்படியே
இப்படி முடி வேந்தர் சிகாமணியான இவரும் ஒருவரே என்னுதல்
இப்படி பெரிய வேண்டப்பாட்டை உடையவரே குடப் பாம்பில் கையிடுவதே -என்று ஈடுபாடு ஆதல்
இத்தால் -அரங்கன் மெய்யடியார்கள் தம் எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தனனாம் -என்றத்தை
அனுஷ்டான பர்யாவசாயியாம் படி அனுஷ்டித்த பிரகாரத்தை சொல்லிற்றாய்த்து –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ராமாயணமும் திவ்ய பிரபந்தமும் –ஸ்ரீ உ வே அக்காரக் கனி ஸ்வாமிகள்-

November 8, 2015

சபரி தந்த கனி உவந்து -இந்த ஒன்றே ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூ கதிகளில் இல்லாமல் பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் –
24000 ஸ்லோகங்களின் சுருக்கம் பெருமாள் திருமொழி –
கங்கை காங்கேய கதைகள் -விஸ்வாமித்ரர் வசிஷ்டர் சண்டைகள் இல்லையே -எச்சில் வாய் -அசத் சங்கீர்த்தனம் இல்லாமல்
எல்லா இழவுகளும் தீர -தேவகி புலம்பல் தசரதர் புலம்பல் தீர -திருச்சித்திர கூடம் -திருப்பதி -ஸ்ரீ கோவிந்தராஜன் -சபா பதி -வேறு தெய்வம் சமானமோ –

போக சயனம் -நடராசன் ஆடும் ஆட்டத்தை பார்த்துக் கொண்டு –சித்ரா கூடம் ஆனந்தம் போலே இங்கே கிட்ட –
அம் கண் -அழகிய இடங்கள் -கோப பவனம் -கைகேயி கோபித்து வரம் பெற்ற இடம் –
வகுள பூஷண பாஸ்கர உதயம் ஆனதே -த்வாதசி ஸூ ர்ய உதயத்துக்கு காத்து இருக்க வேண்டாம் –
பெண்களும் பேதையும் தெரிந்து கொள்ளும் பொருட்டே அருளிச் செயல்கள் -வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
ராம திவாகரன் -அச்யுத பானு –வகுள பூஷண பாஸ்கரர் -லோக திவாகரன் -ராமானுஜ திவாகரன் –
ஜய ஜய மஹா வீர -ரகுவீர கத்யம் -ஸ்ரீ வீர ராகவன் -சூர்பணகை அழகாலே வென்றான் ராவணனை சீலத்தாலும் விபீஷணனை சீலத்தாலும் வென்றான் –
தாசரதியே திருவேங்கடத்தான் –
நடுவில் திரு வீதிப்பிள்ளை -பராசர பட்டர் பேரன் -நம்பிள்ளை இடம் அசூயை -ராமன் சத்ய வாக்யத்தால் லோகங்கள் வென்றான் ஐதிகம் –
சத்யமேவ ஜயதி –
ஜய ஜய ஜன்ப பூமி -பெருமாள் விபீஷணன் இராவண வத அநந்தரம் இலங்கையில் தங்க சொன்ன போது-அருளியதை
நேபால் அரசு சின்னத்தில் இன்றும் கொண்டுள்ளார்கள்
உத்தர ராமாயணம் -நாய் குலைக்க -அந்தணர் -கல்லை எடுத்து -தண்டனைக்கு -உண்மை ஒத்துக் கொண்டார் –
நாய் இடமே கேட்க -ஸ்தாபனத்துக்கு அதிகாரி –
இது தண்டனையா -தர்மாதிகாரியாக இருந்து -ஈன ஜென்மமாக பிறந்தேன் –
ராமன் -தாடகை -கண்ணன் -பூதனை முதலில் பெண்ணை கொன்ற ஒற்றுமை
மந்த்ரம் கொள் மறை முனிவர் -விஸ்வாமித்ரர் காயத்ரி மந்த்ரம் -ருஷி சந்தோ தேவதைகள் சொல்லியே மந்த்ரம் –
மந்தாரம் தாரயதி மந்த்ரம் -உச்சரிப்பவனை தாங்கும் –
இதே அர்த்தம் காயத்ரி —
விடுபட்ட அனுஷ்டானம் காமம் குரோதம் -காமோ காரிஷி மன்யுகாரிஷி -சொல்கிறோம்
பயம் இல்லாமல் அனுஷ்டானம் பண்ணலாம் பய நாசனன் பெருமாள் அருகில் இருப்பதால் -மாரீசனைக் கொன்ற பிள்ளை தனம்
-பின்னை இருந்த இருப்பு மிருக ஸ்தானம் -தானே
திருவடி அருளிய அடையாளங்கள் -வால்மீகி அருளிச் செய்யாதவை -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள்
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹன்தாரம் –தம் -அவரை –பல விளக்கங்கள் -வைதேஹி -சப்தார்த்த ரசம் –கர தூஷ்ணாதி வத அநந்தரம் –
ஜடாயுவுக்கு -பெருமாள் -ஈமச் சடங்கு திருஷ்டாந்தம் -மாறநேர் நம்பிக்கு -பெரிய நம்பி –
லோக நாத சுக்ரீவன் நாதன் இச்சதி –
விபீஷணனுக்கு கடல் கரையிலே பட்டாபிஷேகம் -ராவணன் சீதையை கொடுத்தால் அயோத்யைக்கு அரசனாக்கி இருப்பார் –ஜ்வரம் நீங்கப் பெற்றான் -பிரமோதக -விஜ்வர -பஷி -குரங்குகளை மீட்ப்பித்து இந்த்ரன் -பெருமாள் அழுதான் -ஜடாயுவுக்கு ஈமச் சடங்கு பண்ணாமல் இருந்தால்
உயிர் பிழைப்பித்து இருக்கலாம் -பஷி விஷயமான தாபம் –
ஸ்ரீயஸ்ரீ திருமகளோடு வீற்று இருந்த செல்வன் –கைங்கர்ய ராஜ்யத்தில் அபிஷிக்தனாக ஆசைப் படுவார் -ஸ்ரீ மான் வனஸ்பதி
-பிராட்டி இடம் பெருமாள் -ஸ்ரீ மாதவம் கைங்கர்யம் கொடுத்ததால் –
தன் சரிதை கேட்டான்-அகஸ்த்யர் முதலில் சொல்லி -லவ குசர்கள் சொல்ல -தன்னை விட தன கதையில் மக்கள் மூழ்கி இருக்க
கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பட்ட நாம் -குலசேகர் ஆழ்வார் காட்டிக் கொடுக்க -வேறு இன்னமுதம் மதியோம் நாமே
உத்தர நாராயணம் வால்மீகி அருளியதே ஆசார்யர்கள் பல பிரமாணங்கள் காட்டி –
பகவத் பாகவத சம்பந்தம் உள்ள இடம் என்பதாலே வடமதுரையில் அவதரித்தான் கண்ணன்
சென்றால் குடையாம் -லஷ்மணன் படுக்கை விட்டு பிரியாமல் பெருமாள் -திறல் விலங்கும் இலக்குமணனை பிரிந்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளி –
திரு இந்தளூர் விசாலமான கர்ப்ப க்ருஹம் –அதே போலே தில்லைச் சித்ர கூடம்
நல் பாலுக்கு உய்த்தனன் -சம்ச்லேஷத்தில் சுகமும் விச்லேஷத்தில் துக்கமும் -என்ற அர்த்தம் –
தேவை இடாதவர் -ராமன் –
சர்வ தரமான் பரித்யஜ்ய -எல்லா தர்மங்களையும் நன்றாக விடு -மாம் மாம் ஏக்கம் சரணம் வ்ரஜ -எவ்வளவு தேவைகள் –
தில்லை நகரச் சித்ர கூடம் -கோவிந்தராஜர் -இன்றும் அதே பாசுரங்கள் -அனுசந்தேயம்
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவார் -நிகமத்தில் –
பெரியாழ்வார் -திரு மொழி -ராமன் மேல் பதிகம் -பெரிய ஜீயர் வைபவம் –
மாற்றுத்தாய் -சீற்றம் இலாதானைப் பாடி -கோபம் வசம் -நாம் வசம் கோபம் உத்தேச்யம்
மாறு -பெற்ற தாய்க்கு போலியான சுமுத்ரா தேவி -வனம் போ -சொன்னாள்-நல்லது தான் –
அந்த அகைகேயி அபிமானித்த ராஜ்ஜியம் -உனக்கு வேண்டாம் ஒருவரும் அபிமாநியாத ஒன்றே உனக்கு -வானமே போ என்றாள்
திருப்படை வீடு அலங்கரித்து -காப்புக் கட்டி -திரு அபிஷேகம் மட்டும் செய்ய வேண்டியதே
ஐயர் அழைக்கிறார் –பிராட்டி மங்களா சாசனம் பண்ணி அனுப்ப -திக்குகள் ரஷிக்கட்டும்
பிராட்டிக்கு சன்மானம் பண்ணி -தோள் மாலையை சாத்தி -கூரத் ஆழ்வான்
-பட்டர் -திருவடியை வருடி பிடித்து அனைவரும் பார்க்க செய்தார் பெருமாள் -ராசிக்யம் –
உபநிஷத் பூர்த்தி வியாக்யானம் ஆதி சங்கரர் சொன்னவை நாம் கொள்ளலாம்
-நம் சம்ரதாயம் விரோதமாக வியாக்யானம் மட்டுமே -வேதாந்த சங்கரஹம் -காட்டி -அருளி
எப்பொருள் யார் யார்ர் வாய் கேட்டாலும் மெய்ப் பொருள்
-பட்டர் பகவத் குண தர்ப்பணம் -பரம ரசிகர்
மன்னவன் பணி அன்று ஆகிலும் நும் பணி மறப்பனோ -பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ -அவனும் என்னைப் போலே -ஆவான் –
கூற்றுத் தாய் -கைகேயி -யமன் போன்ற -சௌகுரார்யம் பார்க்காமல் வனம் போகச் சொன்னதால் –
கைகேயி வெறுப்பினால் சுமத்ரை அன்பினால் போகச் சொல்லி
நாலூர் பிள்ளை அருளிய அர்த்தம் –நாலூர் ஆச்சான் பிள்ளை -பகவத் விஷயம் நினைவுடன் வணங்கி திரு நாராயண புரம்
ஆசார்யர் ஸ்பர்சம் பட்ட இடம் கொண்டாட்டப் பட வேண்டியதே –
மாற்றுத்தாய் -கைகேயி -ச பத்னி கௌசல்யை நினைவாக -மாறு -விபரீதம் ஒப்புமை போலி பல அர்த்தங்கள்
-பரத ஆழ்வான் நினைவுக்கு விரோதம் என்பதால் -கூற்று -கூறு பாயசம் -உண்டே -வனம் போ சொன்னதால் -அன்புள்ளார் நினைவால் கூற்றுத் தாய்
வனம் சென்ற பிராட்டி -கருப்பேந்த்ரம்-கண்டு சீதை பிராட்டி பயப்பட வில்லை -கரும்பு ஆலைகள் –
யாளி -மிருகம் துதிக்கையில் யானை மாட்டி -சிம்ஹம் முகம் துதிக்கை உண்டு
திருமங்கை ஆழ்வார் ராமன் அனுபவம் –
ராஷச கோஷ்டியிலும் பாடி அருளி -அவர் பஷத்தில் பேசி பெருமாள் பராக்கிரமம் பேச –
10-2- தடம் பொங்கத்தம் பொங்கோ –தோற்ற வர வார்த்தை –எம் கோன் -ராவணன் செய்த தீமை –இம்மையிலே நாங்கள் பலன் பெற்றோம் –
அயோத்யாவசிகள் பெருமாள் பின்னே போக பாரித்து இருக்க லஷ்மணன் போகிறான் என்றதும் நாம் அனைவரும் செய்யும்
கைங்கர்யம் இவன் செய்வான் என்று அறிந்து மகிழ்ந்தார்கள் -மித்ர நண்பன் –என்பர் வால்மீகி
அர்ச்சா மூர்த்தி ஸ்ரீ வைகுண்ட நாதன் போலே கோயில்களில் அனைத்துமே நித்ய சூரிகள் அம்சம் -என்ற எண்ணம் வேண்டுமே
எம் கோன் பட்டான் -முதல் பாசுரம் -ஸ்பஷ்டமாக தெரிந்ததால் சொல்கிறார்கள் -பெரியவாச்சான் பிள்ளை
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை -நஞ்சீயர் அப்பிள்ளை -ஆடு -ஆடு போலே மே மே காத்த கூட ஆள் இல்லை வெற்றி அர்த்தம்
-அத்தை பேச்சுக்கு கூட சொல்ல ஆள் இல்லை –ஆடு சிம்ஹம் -கதை –
பெருமாள் மடி கிடைத்ததே ராவணனுக்கு ஹிரண்யனுக்கு —அத்தை ஆசைப் படுகிறார் திருமங்கை ஆழ்வார்
எரிகிற வீட்டில் ஏதேனும் உள்ளதா என்று தேடுவர் இருவர் -நம்பிள்ளை விபீஷணன் இராவணனுக்கு உபதேசம் -சீதா பிராட்டி மற்று ஒருவர்
அஹங்காரம் மமகாரம் கொண்டு எறிந்த இராவணன் -உடலையும் உயிரையும் பிரித்த பையல் –
தம்பி சொல் கேளாத கோஷ்டியில் இருந்து தம்பி சொல் கேட்கும் கோஷ்டிக்கு போனான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
நெய் உண்ணோம் –சொன்ன பின்பு ஓங்கி உலகளந்த உத்தமன் -என்கிறாள் ஆண்டாள் -கூட்டில் இருந்து கோவிந்தா என்று கூப்பிடும் கிளி
ஊட்டுக் கொடாது -செறுப்பனாகில் -உலகளந்தான் என்று உயரக் கூவும்
-தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்-சீதா பிராட்டி -அதில் என்ன சந்தேகம்-கிளி கதை –
அடியேன் -சொல்லி சமாதானம் -அடியே என்றால் சண்டை மல்லிகை மாலை கொண்டு ஆர்த்ததுவும் ஓர் அடையாளம் -கணையாழி சேர்த்து வைத்த கதை
துணைத்தேடல்
தருமம் அறியா குறும்பன்
எல்லாப் பொய்கள் உரைப்பான்
இந்த திரு நாமங்களுக்கு எதுவுமே ஈடாகாதே –
ரணசோர்–கத்தினால் மகிழ்வானாம்-நந்தன் வீட்டில் நவநீத ஆட்டம் -எளிவரும் இயல்வினன்-
சிறையா வைத்ததே குற்றமாயிற்று -திருமங்கை ஆழ்வார்
மனித கூற்றம் -சாதிப்பேச்சு -மானிடமாக வந்து -சாஷாத் நாராயணன் -இராவணன் வரம் அறிந்தவர்கள் என்பதால் –
பொல்லா வரக்கனை கிள்ளிக் களைந்தான் -அசுரனை -என்று இருந்தால் ஹிரண்யன் என்னலாம் –அரக்கர் நிசாசரர் –
இரட்டை வடம் சாத்த -வடை மாலை ஆஞ்சநேயர் -வடையும் வாயு அவரும் வாயு புத்ரன் –
சிந்தூரம் -ராமன் வென்றதும் –செய்தி கேட்டதும் குங்குமம் பூசிக் கொண்டதும் -வெற்றிச் செல்வம் –
பதிம் விச்வச்ய -எனக்கும் அவன் கணவன் -உடம்பு எல்லாம் பூசிக் கொண்டானாம் –

—————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரிய வாச்சான்  பிள்ளை  திரு வடிகளே சரணம்.
குலேசேகரர்    ஆழ்வார் திரு வடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

திருப்பாவை — கீசுகீசு என்று எங்கும் — வியாக்யானம் .தொகுப்பு –

August 16, 2015

அவதாரிகை –
பகவத் விஷயத்தில் சுவடு அறிந்தே -நாயகப் பெண் பிள்ளாய் —மறந்து கிடக்கிறாள் ஒருத்தியை -பேய்ப் பெண்ணே-இப்பாட்டில் பகவத் விஷயத்திலும்–பாகவத விஷயம் நன்று என்று அறிந்தும்–மறந்து இருப்பார் ஒருவரை எழுப்புகிறார்கள்-
அசல் வாய்ந்தாள் ஐந்து பட்டினி -கூடாதே கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்-குழாம் இனிமை அடியார் குழாம் களை -உடன் கூடுவது என்று கொலோ -இங்கு இருந்தால் அங்கும் ஆசை வரும் -அடியரொடு இருந்தமை கிட்டும்
ஆட் கொண்ட வில்லி ஜீயர் -நஞ்சீயர் தண்டம் சமர்பிக்க -மங்களா சாசனம் -பகவத் விஷயத்தில் மெய்யே ருசி இல்லை-பாகவதர்களைக் கண்டு உகக்கும் அன்றோ தானே –பிரதிபந்தனம் செய்ய வில்லை —எம்பெருமானார் சிஷ்யர் –
அடுத்த ஷணம் உணர்ந்தார் -பரம பாகவர் இவர் -பிரதி பத்தி உண்டாக வில்லையே என்று உணர்ந்தார்–பார்யை பர்த்தா சம்பந்திகள்-இடம் ப்ரீதி வைக்கா விடில்–அவன் உகந்தாரை உகக்கை தானே ஒருவன் ஒருவரை உவக்கை-
தன் குருவின் -தாள் இணைகள் மேல் அன்பு இல்லாதார் தன்பு தன் பால் இருந்தாலும் இன்பமிகு விண்ணாடு -தான் அளிக்க வேண்டாதா நண்ணார் திரு நாடு மணவாள மா முனி -இந்த விஷயம் ஆச்சார்யர் பேரில்–திருவகீந்தர–அன்பு தன்பால் செய்தாலும் அம்புயையர் கோன் —தன் குரு -எம்பெருமான் -எம்பெருமான் குரு -மணவாள மா முனி–அம்புஜா -நாயகி தாயார்–தேவநாதன்–காஞ்சி சுவாமி –
மணவாள மா முனி இடம் அன்பு இல்லாமல் தேவராஜன் இடம் அன்பு காட்டினாலும் தேவபிரான் அருள மாட்டான்-அலர்ந்த கடவ ஆதித்யன் நீரை விட்டு பிரிந்தால் உலர்த்துவான் –

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

வியாக்யானம் –
போது விடிந்தது -எழுந்து இராய் -என்ன —விடிந்தமைக்கு அடையாளம் -என் -என்ன —ஆனைச்சாத்தன் கீசுகீசு என்னா நின்றது –
கீசு -கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன்—அநஷர ரசமாய் இருக்கை
ஓர் ஆனைச் சாத்தன் பேசும் காட்டில் போது விடிந்ததாக வேணுமோ என்ன —எங்கும் பேசா நின்றது என்ன -அவற்றைக் கலக்குகைக்கு நீங்கள் உண்டே -என்ன–எங்களால் அன்று -தாமே உணர்ந்தன -என்ன-அதுக்கு அடையாளம் என் என்ன —கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ-
கீசுகீசு என்று ஆனைச்சாத்தன் பேசின–கீசுகீசு என்று ஆனைச்சாத்தன் எங்கும் பேசின -கீசுகீசு என்று ஆனைச்சாத்தன் எங்கும் கலந்து பேசின
மரக்கலம் ஏறுவான் மீண்டும் வரும் தனையும் ஜீவனம் ஏற்றிக் கொண்டு வருவது போலே–பிரியா விடை -அனுபவம் தேக்கி விளை நீர் அடித்தல்-கரிய குருவி – வலியன் கரிச்சான் குருவி -கண் அழகாக இருக்கும் -கஞ்சரீகிகா பஷி -ஆனைச்சாதம் மலையாள -சின்ன கலியன் ஸ்வாமி -25 பட்டம் -மலையாள யாத்ரையில் பார்த்து -இந்த பெயரைச் சொல்லி இந்த விஷயத்துக்கு நீ அன்றோ ஆசார்யன் கை கூப்பினார் —

கலந்து பேசினபடி அறிந்த படி என் -என்ன–பிரிந்து போனால் பகல் எல்லாம் தரிக்கும்படி கலந்து —பிரியப் புகா நின்றோம் என்னும் தளர்த்தி தோற்ற-
பேசுகிற மிடற்று ஓசை கேட்டிலையோ -கேளாமைக்கு அங்கே ஆரவாரம் உண்டாயாகாதே செல்லுகிறது என்று மர்மம் சொல்லுகிறார்கள் –கேட்டிலையோ -என்று -எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து -கீசு கீசு -என்ற பேச்சரவம் கேட்டிலையோ –
சர்வோத்திக்கமாக அஹங்கார நிவர்த்தகரான மகா பாகவதர்–நாம் பிரியப் புகா நின்றோமே -என்று பிரிந்தால் மறுபடியும் கூடும்தனையும் தரித்து இருக்கைக்காக–பரஸ்பரம் சம்ச்லேஷித்து–கத்கத ஸ்வரம் ஆகையாலே அநஷர ரசமாக பேசின பேச்சரவம் —
-விஸ்லேஷ வ்யசனம் தோற்றும்படியாக பேசின பேச்சின் உடைய த்வனியை கேட்டிலையோ –ஆனைச்சாத்தன் கீசு கீசு எல்லாம் உத்தேச்யம் முனிவர்கள் யோகிகள் ஹரி என்பதும்–பறவையும் பாகவதர் -என்பதால் –
கீசு கீசு -அனஷர ரசம் அஷரமாக இல்லாமல் குழந்தை மழலை ––குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலை சொல் கேளாதவர்
ஆனை ச்சாத்தன் -தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை —தமிழ் இலக்கிய சொல் விளக்கம் -30 வருஷம் தொகுத்து–ஆனை சாத்தான் பறவை திருப்பாவை ஏழாம் பாட்டு —மலையாள தேசம் சின்ன கலியன் சுவாமி -5 பட்டம் முன்பு –
ஆனை சாத்தம் சொன்னானாம் -காஞ்சி சுவாமிக்கு ஸ்ரீ முகம் சாதித்து —தாமதித்து எழும் பறவை-பஷி நாதம் கேட்டு முமுஷு ஆகிறோம் மோஷம் அடைகிறோம் பிள்ளை திரு நறையூர் அரையர்–ஆசார்ய உபதேசம் பஷி நாதம் –காலை எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்கள் -மேல் கட்டி விதானம் -நீ உருகி நீர் சொரிய கூடாதே சேர்த்தி பார்த்த ஹர்ஷத்தால் –காவேரி விராஜா சேயம்-/ கருட பஷி -சடகோபர் -தோழப்பர்- ரஷித்த விருத்தாந்தம் –பக்ஷிகள் சப்தம் உத்தேச்யம் –

-கீசு கீசு கிருஷ்ணா கிருஷ்ணா -தன்னைப் போல் பேரும் தாருமே பிதற்றி -தில்லைச் சித்ர கூடம்-பத்னிகள்-கிளி -வேதம் சந்தை சொல்வதை கேட்டு -பேசவும் தான் செவ்வாய்க் கிளி நான் மறை பாடு -இள– மங்கையர் பேசவும் தான் -மறையோர் சிந்தை புக -ஆனைச் சாத்தான் -உடல் சிறுத்து கண் பெரிதாக -ஆசார்யர்கள் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் –அறு கால சிறு வண்டே –
பிள்ளை திரு நறையூர் அரையர் -மூத்தவர் -பட்டர் இடம் பவ்யம் -கிடாம்பி ஆச்சானும் அப்படியே -எம்பெருமானார் -நம்மைப் போலே நினைத்து
அருள் 10-6-1-பாசுரம் -ஞானம் நான் கொடுத்தேன் -ஆயுசை நீர் கொடும் பெரிய பெருமாள் இடம் பிரார்த்தித்து -நம்மைப் போலே நினைத்து இரும்-சர்வமும் கிருஷ்ணா கிருஷ்ணா என்றே ஆய்ப்பாடியிலே உள்ளது -பக்ஷிகள் கலந்து பேசும் அரவமும் -தயிர் அரவமும் கீசு கீசு -கிருஷ்ணா கிருஷ்ணா என்று அன்றோ இங்கே உள்ளது -அத்தை போலே என்றபடி-
-பரஸ்பர நீச பாவம் –ஸ்ரீ வைஷ்ணவர் -கீசு கீசு -கலந்து -பிரமாணங்கள் /பாஷைகள் /ஒருவருக்கு ஒருவர் கலந்து மணிப்பிரவாளம் ஸ்ரீ வைஷ்ணவ தனி சொத்து
–நீல மணி பவளம் –ஒருவர் சொன்னதையே -பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள் -அர்த்தம் கலந்து பேசி –

கலந்துபேசின பேச்சரவம் –
முன்னோர் மொழிந்த முறைப்படியே ஸ்ரீ ஸ்வாமி உடைய எல்லா ஸ்ரீ ஸூ க்திகளும்–பகவத் போதாயன க்ருதாம் விச்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத் ர வ்ருத்திம்-பூர்வாச்சார்யாஸ் சஞ்சிசிஷிபு -தன்மாதானு சாரேண ஸூத்ராஷராணி வ்யாக்யாஸ்யந்தே –
வடமொழி தென்மொழி கலந்த மணிப்பிரவாளம் -திரு ஆறாயிரப்படி -எதிராசன் பேரருளால் பிள்ளான் அருளியது-அபசூத்ராதி கரணம் ஸ்ரீ பாஷ்யம் –
ஞானஸ்ருதி ரைக்குவர் கதை – ப்ரஹ்ம ஞானம் பெற —உனக்கு நான் சொல்ல முடியுமா -நான்காவது வரணம் -அடியேன் இடம் ஒன்றும் இல்லை -வந்ததும் சொல்வேன்–ஷத்ரிய ராஜா -சூத்திரன் சோகம் உடையவர் சூத்ரர்
பஷி நாதம் கொடுத்த நீதி —கடல் கரையில் பஷி புண் படுத்தி பெருமாளை -கதை –குரங்கு மனிசன் புலி கதை புறா கதை விபீஷணன் கட்டம்
விறகிடை வெந்தீ மூட்டி-வேதத்தின் விழுமியதன்றோ கம்பர் பாசுரம் –
கிளி சோழன் -கைங்கர்யம் காவேரி விரஜா சொல்லி –கிளி கைங்கர்யம்-கலந்துபேசின பேச்சரவம் –-பேய் முலை  வெளியில் உள்ளவர் வார்த்தை -நஞ்சுண்டு உள்ளே உள்ளவள் வார்த்தை / கள்ளச் சகடம் -இங்கும் இப்படியே கலந்து -என்றுமாம்

பேய்ப் பெண்ணே –
அன்யதா ஞானம் பேய் பெண்ணே–உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -பாகவத சம்ச்லேஷ பர்யந்தம் அறிந்து வைத்தும் மறந்து-
இவர்கள் ஆகில் இப்படி சொல்லுகையே பணி என்று பேசாதே கிடக்க -அறிந்து வைத்து காற்கடைக் கொள்வாயே -மதி கேடீ என்கிறார்கள் –
இவர்களுக்கு அறிவாகிறது -பகவத் விஷயத்திலும் ததீய விஷயம் நன்று என்று அறிகை–அத்தை அறிந்து வைத்தே பேசாதே கிடைக்கயாலே சொல்லுகிறார்கள் –
என் அறியாமை சொல்லாதே விடிந்தமைக்கு அடையாளம்–சொல்லுங்கோள் என்ன —தயிர் கடைகிற ஓசை கேட்டிலையோ –
காசும் பிறப்பும் —அச்சு தாலியும்–முளைத் தாலியும்–கலகலப்ப —கடைகிற போதை வ்யாபாரத்தாலே–அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி -என்னுமா போலே த்வநிக்கை –கை பேர்த்து –
தயிரின் பெருமையாலும்–இவர்கள் சௌகுமார்யத்தாலும் மலை பேர்த்தாப் போலே கை பேர்க்கப் போகாதபடி –
கிருஷ்ணன் சந்நிதி இல்லாமையாலே கை சோர்ந்தது என்னவுமாம்–அன்றியே அவன் சந்நிஹிதனாய் நின்று–தயிரை மோராக்க ஒட்டேன் என்று-கையைப் பற்றி நாலுகையாலே-என்றுமாம் —மோரார் குடமுருட்டி -என்னக் கடவது இ றே-

காசும் பிறப்பும் கல கலப்ப கை பேர்த்து –
திருமந்த்ரமும்–த்வய சரம ஸ்லோகங்களும்–ஒன்றோடு ஓன்று சேர்ந்து த்வனிக்க–ஸ்வரூப–உபாய–புருஷார்த்த–ஞானம் தலையெடுத்து -ரகஸ்ய த்ரயம் /தத்வ த்ரயம் /தத்வ ஹித புருஷார்த்தம் விளக்கும் பேச்சுக்கள் –

காசு பிறப்பு -துளசி தாமரை மணி மாலை -திருமண் லஷணம் போலே -சமமும் தமமும்-
கை பேர்த்து -ஸ்ரமப்பட்டு கிரந்தப்படுத்தி -உபதேச முத்ராம் -சூஷ்மார்த்தம் சொல்ல கை பேர்த்து-ஞானக்கை கொடுத்து -குத்ருஷ்டி வாதத்தால் எம்பெருமான் விழ எம்பெருமானார் தூக்கி விட -நிபதத்த -விழுந்து கொண்டே இருப்பவன் -கை பேர்த்து –
திருவேங்கடமுடையான் -ஐஸ்வர்யம் மதம் -திமிர் -சேவை தராமல் –இரண்டு பேர் கை கொடுத்தால் ஏறுபவனுக்கும் தூக்குபவனுக்கும் எளிதாகுமே -முதலியாண்டான்
உம்முடைய கொள்ளுப் பேரனுக்காக காணும் மா முனிகள் சரம தசையில் ஆசார்ய ஹிருதயம் வியாக்யானம் –
நாராயணன் மூர்த்தி -ஆசார்யர் -சாஷாத் நாராயணோ தேவா -தானே பிரம குருவாகி வந்து –கேசவன் இந்த்ரியங்கள் குதிரைகள் அழித்து-தேசுடையாய் உள் நாட்டு தேசு -ஆழியம் கை பேராயர்க்கு  ஆட்பட்டார்க்கு அடிமை —

வாச நறும் குழல் ஆய்ச்சியர்
ஆயாசத்தினாலே–மயிர்முடி நெகிழ்ந்து–பரிமளம் தானே புறப்பட்டு–ப்ரவஹிக்கிற படி-மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ –
மந்தரத்தாலே கடலைக் கலக்கினாப் போலே–இந்த கோஷமும் செவியில் பட்டது இல்லையோ —அவன் கண் அழகிலே தோற்று பாடுகிற த்வனியும்
கடைகிற தயிர் ஓசையும்–ஆபரண ஓசையும்–கிளர்ந்து ஊர்த்த்வ லோகங்களிலே சென்று கிட்டுவதான ஓசை–உன் செவியில் படாது ஒழிவதே –
இவ் ஊரில் -முப்போதும் கடைந்தீண்டிய வெண்ணெய்-என்று–இரவும் பகலும் விடாதே தயிர் கடைகை ஸ்வ பாவம் அன்றோஎன்று பேசாதே கிடக்க

வாச நறும் குழல் இத்யாதி –
மிக்க பரிமளத்தை உடைய–பகவத் விஷய வ்யாமோகத்தை உடைய–அனன்யார்ஹ சேஷபூதரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் சங்கல்ப்பத்தால்-சிஷிதரான சம்சாரி சேதனர் உடைய திவ்ய பிரபந்த அனுசந்தான த்வனியை கேட்டிலையோ

மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம்-
காம்யத்தில் பல சரத்தை -இல்லாவிடில் தவிரலாம்–நித்ய அனுசந்தானம் விட முடியாதே--காம்ய கர்மா -நித்ய கர்மா -வாசி உணர்த்துகிறார் -நாயனார் –
அனுஷ்டித்தால் பலம் இல்லை–அகர்னே பிரத்யு உண்டு பாபம் வருமே
அச்சுத்தாலி–ஆமைத்தாலி–காசும் பிறப்பும்-
கை பேர்த்து சரமம் -தயிர் சமர்த்தி -/தங்கள் சௌகுமார்யம் /கிருஷ்ணன் அசந்நிதி கை சோர்கை –சந்நிதியில் -கடைய விட மாட்டான்
மோராக்க விட்டான் கையை வலிக்கையால்–மோர் உருட்டி -திரு மங்கை ஆழ்வார் மட்டும் சொல்லி —கலப்படம் பக்தியில் கூடாதே -ஒரு காரணம்
அது அசாரம்–மோர் விலக்கு தேசிகன் ஆகார நியமம் காட்டி அருளி —வாச நறும் முடை நாற்றம் மறைக்கும் படி
கூந்தல் அவிழ —பரிமளம் வெள்ளம்–காவி கமழ–இருந்ததே குடியாக அனைவரும் கடைய–மந்தரத்தால் கடலை கடையும் பொழுது ஒலி

அரவிந்த லோசனன் பாடியே கடைய பரமபதம் கிட்டியதாம்–பாட்டுக்கு தயிர் கடைவது தாளம்–திக்குகள் நிறைத்து
கிருஷ்ண குணங்கள் பூமியிலே நடமாடாப் இருக்க மலையில் இருப்பதே வசை போலே–என்ன செய்தாலும் கண்ணன்
கோவிந்த தாமோதர மாதவ -விக்ரேது காமம் -விற்க போகும்பொழுது —தத்யாதிகம் -முராரி பாதாம் அன்பு வைத்து -மோகவசத்தால் –
கிருஷ்ணன் பக்கல் ப்ரீதி மிக்கு -நினைவு இவன் இடமே–கடையும் பொழுதும் கண்ணனை தான் பாடுவார் என்பதற்கு பிரமாணம்
கிருஷ்ணன் உடம் ஏகாந்த உள்ளேயும் தயிர் கடைதல் நடக்கிறதோ–ஒல்லை நானும் கடையவன் —கள்ள விழியை -விளித்து
தாமோதரா நான் மெய் அறிவன் நானே -குலசேகர் ஆழ்வார் -கெண்டை ஒண் கண் இத்யாதி–கண்ணன் -பிறந்த பின்பு இவை மிக்க
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள் அன்றோ–முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய்

நாயகப் பெண் பிள்ளாய் –
இப் பெண்களுக்கு எல்லாம் நிர்வாஹகை யானபடி இதுவோ -என்கிறார்கள் —சொல்லிற்றுக்கு எல்லாம் மறு மாற்றம் சொல்லிக் கிடக்கிறது
உன்னுடைய ஐஸ்வர்ய செருக்காலே -என்னவுமாம்
பேய்ப்பெண்ணே என்பதோடு–நாயகப் பெண் பிள்ளாய் என்பதோடு வாசி இல்லை இ றே–அகவாயில் பாவம் ஒன்றாகையால்-

நாயக பெண் பிள்ளாய்
சொல்வதற்கு எதிர் பேச்சு–பேய் பெண்ணே -நாயகப் பெண் பிள்ளாய் நெருங்கி பழக்கம்–அனுக்ரகம் போலே நிக்ரகம் உத்தேச்யம்
நம்மை திருத்து பக்குவ படுத்து இரண்டும் வேண்டுமே–வசவும் உண்டே book post கூட அனுப்ப தெரியவில்லை என்பார் காஞ்சி சுவாமி-
காகிதம் சுற்றி வைக்க வேண்டாமா என்பார்–மிதுனமாக பரிமாறா நின்றால் தாழ சொல்வதும் உசத்தி சொல்வதும் உண்டே
பரஸ்பர நீச பாவம் -இருக்கு எப்படி என்பதே சங்கை —உனக்கு நான் நீசன் சொல்ல வேண்டும் —அழகியதாய் நிர்வாகர் ஆனாய்-நான் அடிமை அன்றோ திறக்கிறேன் என்றாளாம்-என்றவிடத்திலும் வாய் திறவாமையாலே–நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ-நீ எழுந்திருப்புதி என்று நாங்கள் பாட–அதுவே குறங்குகுத்த கிடந்தது உறங்கு கிறாயோ-

நாராயணன் –
முகம் தோற்றாமே நின்று–வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ–சர்வேஸ்வரன் –

மூர்த்தி
தன்னுடைய சௌசீல்யத்தாலே பிறந்தது

கேசவன் –
கண்ணுக்கு தோற்ற நின்று–நம் விரோதிகளை போக்குமவன்-
பூதனை முதலில் கேசி இறுதியில் -ஸ்ரீ மத் பாகவதம் சொல்லி முடித்தார்கள் புள்ளும் சிலம்பின தொடங்கி கீசு கீசு பாசுரங்களில் –

பாடவும் –
இப்படி வாத்சல்யதையும்–சௌசீல்யத்தையும்–ஆஸ்ரித விரோதி நிரசனத்தையும்–பேசின விடத்திலும்—பின்னையும் இவர்கள் பேச்சே தனக்கு தாரகமாக கிடைக்கையாலே-

கேட்டே கிடத்தியோ -என்கிறார்கள் –
இவள் துணுக என்று எழுந்து இருக்கைக்காக–நிருபாதிக ஸ்வாமியான சர்வேஸ்வரன்–ஆஸ்ரித வத்சலனனாய் கிருஷ்ணனாய் வந்து-அவதரித்த இடத்தில் கேசி வந்து நலியப் புக–அவனை கிருஷ்ணன் கொன்றான் காண் என்ன —அதுக்கும் பேசாதே கிடந்தாள் –

சர்வ ஸ்மாத் பரனான நாராயணன் உடைய அவதாரமாய்–கேசி ஹந்தாவான கிருஷ்ணனை பாடச் செய்தேயும்-கிருஷ்ண விஜயத்தை கேட்டு புறப்பட்டு அவனை அணைக்க கடவ நீ–அதுவே துடைக்குத்தாக பகவத் அபாய பயம் தீர்ந்து–உறங்கக் கடவையோ-

பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
அவனுடைய விஜயத்தைக் கேட்டு–கேசி வந்து கழியப் புக்கான் என்ற துணுக்கும் கேட்டு–கர வத அநந்தரம் சக்கரவர்த்தி திருமகனை-ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்–அணைத்தாப் போலே நீயும் கிருஷ்ணனை அணைக்க-புறப்படுவாயோ -என்று சொன்னோம் -அதுவும் உனக்கு கிருஷ்ண விரோதி பயம் தீர்ந்து–மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி ஆவதே -என்றுமாம் —

கீசு கீசு–கல கலப்ப–பேச்சரவம்–நாராயணன் கேசவன் மூர்த்தி கேட்டே–முதல்இரண்டும் கேட்க வில்லை-அடுத்து கேட்டால் அனாதரம்–சப்தம் சத்தம் —முதலில் ஒன்றும்–அப்புறம் சத்தம்–அப்புறம் சப்தம் –

தங்கள் தளர்ச்சி கீசு கீசு –ஆங்கு ஆராவாரம் அது கேட்டு -பயப்பட்ட
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்ப்பிடை இட்டு ஓசை கேட்டு உகக்கும் கண்ணன் இங்கே பழகி இருக்கிறோம் நாங்கள் –
பாட்டு கேட்கும் இடம் கூப்பீடு கேட்கும் இடம் -கேட்டிலையோ
ஜீவாத்மா கேட்க சொன்னது கீதை பரமாத்மா கேட்டது சஹஸ்ரநாமம் ஜீவாத்மா ஜீவாத்மாவை கேட்க சொன்னது
ஹோதம் பிரியம் மதுரா மதுராலாபம்–கேட்பார் செவி சுடு சிசுபாலன்
கேசவன் கீர்த்தி அல்லால் கேட்பாரோ கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
திருப் புல்லாணி -வண்டே கரியாக வந்தான் —-எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே —மெய்ம்மை பெரு வார்த்தை -கிருஷ்ண சரம ஸ்லோகம–சொல் -குமரனார் சொல் -ராம சரம ஸ்லோகம்–பேசி இருப்பன ஸ்ரீ வராக சரம ஸ்லோகம்
திருமந்தரம் பேர் அரவம் ஸ்வரூபம்–சரம ஸ்லோகம் புருஷார்த்தம்–த்வயம் ஸ்லோகம் மூன்றுமாம்-அனந்யார்க்க சேஷத்வம் சரணத்வம் போக்யத்வம்–கேட்டோம் பாடுவோம் —சரவணம் -கீர்த்தனம் –

கலந்து-பேசின பேச்சரவம் கேட்டிலையோ-செஞ்சொல் கவிகாள் என்றும் -செந்தமிழ் பாடுவார் என்றும் -இன்கவி பாடும் பரம கவிகாள் -என்றும் -பதியே பரவித் தொழும் தொண்டர் என்றும் -ஆடிப்பாடி அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் என்றும் -ஒருவர் ஒருவரை ஸ்லாகித்துக் கொண்டு பேசுவதே பேசும் ஏக கண்டர்கள் கலந்து அருளிய அருளிச் செயல் என்றுமாம்-

தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்
உன்னைக் காணப் பெறாதே–அந்தகாரமாய் கிடக்கிற எங்களுக்கு–இத்தை திறந்து புறப்பட்டு–உன்னுடைய நிரவதிக தேஜசாலே-வெளிச் செறிப்பிக்கைகாகவும்–உன்னுடைய அழகு காண்கைக்காகவும்–நீயே வந்து திற –

தேசமுடையாய் திற –
இவள் பின்னையும் பேசாதே கிடைக்கையாலே–ஜாலக ரந்த்ரத்தாலே பார்த்தார்கள் —இவளுக்கு கிருஷ்ண விஜய அனுசந்தான அனுபவ ப்ரீதியாலே
வடிவில் பிறந்த புகரைக் கண்டு–கிண்ணகத்தை அணை செய்யாதே வெட்டி விடாய்–என்கிறார்கள் ஆகவுமாம்-

இப்படி சொன்ன இடத்திலும் எழுந்திராமையாலே
ஜாலகரந்தரத்தாலே பார்த்து பகவத் குண அனுபவத்தால் உண்டான மகா தேஜசை உடையவளே இத் தேஜஸ் காட்டில் எறிந்த நிலா வாகாமே
நாங்கள் அனுபவிக்கலாம்படி -எங்கள் அஞ்ஞானத்தை நீக்காய் -என்கிறார்கள்
கண்ணன் திரு நாமம் கேட்டதால் வந்த பிரகர்ஷம் தோற்ற–நாங்கள் வாழ்ந்து போக அந்தகாரம் போக்க தேஜஸ் காட்டி–அனுபவிப்பிக்க பாராய் –

குல சேகர ஆழ்வார் மந்த்ரிகள் குசு குசு பேசரெங்க யாத்ரை தினே தினே கிளம்புவார் ஸ்ரீ வைஷ்ணவர் ஆராதித்து கொண்டு இருக்க –
ரத்னா ஹாரம் -சக்கரவர்த்தி திரு மகன் ஆராதனா பெருமாள் –
பேய் பெண்ணே -பேயனாக சொல்லி- பேயரே எனக்கு யாவரும் பேயனாய் ஒழிந்தேன் —பெண்ணாகவும் பாடி உள்ளார்
காசு பிறப்பு -காசு மாலையை ஒளித்து–கை பேர்த்து குடப்பாம்பில் கை இட்டு–அவர்கள் கை பேர்த்து-
கெண்டை ஒண் –பூம் குழல் தாழ்ந்து உலாவ–நாயக பெண் பிள்ளாய் -நடு நாயகம்
எம்பெருமானை பாடிய 11 ஆழ்வார் -நடுவில் -உள்ளார் -முன்பு 5 பின்பு 5
கொல்லி காவலன் கூடல் நாயகன் —ஷத்ரிய குலம்
நாராயணன் -நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவரே
மாவினை வாய் பிளந்து உகந்த -முதலில் அருளி
நீ கேட்டே கிடத்தியோ இவரே கிளம்புவார் -இராமாயண கதை கேட்டு கர தூஷணாதிகள்
பதறி அடித்து போனவர்

தேசம் உடையாய்
பல தேசங்கள் கொல்லி சேர –கூடல் பாண்டியன்-கோழி சோழ மும்முடி சேரர் இவர்-தேஜஸ் -மிக்கு —ஆசார்ய ஹிருதயம் –
அடிமைப் பட்டு இருக்கும் யாராகப் பிறந்தாலும் ஆழி அம் கை பேராயன்–உள் நாட்டு தேசு அன்றே -பரமபதத்து தேசு இல்லை
மண்ணாட்டில் ஒன்றாக மெச்சுமே–அடியார் வீட்டில் புழுவாக இருப்பதே தேசு
அவனே -அஹம்வோ பாந்தவ–ஒளி வரும் ஜனி —மீனாய் பிறக்கும் விதி -தம்பகமாய் இருக்கும் தவம் —பொன் வட்டில் பிடித்து -ஏதேனும் ஆவேனே –
இது தானே தேஜஸ் ––தேசம் உடையாய் –
அஸ்மத் பரம குருப்யோ ஆசார்யருக்கு ஆசார்யர் -அர்த்த விசேஷங்கள் காட்டி அருளிய அனைவரையும் குறிக்கும்
நாயக பெண் பிள்ளாய் தேஜஸ் உடையவர்–வானமா மலை ஜீயர் காட்டி அருளி –

பேய் பெண்ணே -நாயகப் பெண் பிள்ளாய் -தேசமுடையாய் -மூன்று விளிச் சொற்கள் —குறுக்கும் மலையாள திசை சொல்
தட்ட பழம் சிதைந்து மது சொரியும் சீர்காழி பாசுரம் -திருமங்கை ஆழ்வார் -பழுத்த பழம் அர்த்தம்
உடையவர் -நாவல் மரத்தில் -தட்ட பழமாக போடு என்றானாம்–கனிய பழுத்த பழம் என்றானாம்
ஆனைச்சாத்தன் -ஆனைச்சாத்தம் -கலந்து பேசின- திரண்டு பேசின- இல்லை–மணிப்பிரவாளம் சமஸ்க்ர்தம் தமிழ் இரண்டையும் கலந்து பேசின பேச்சு அரவம்
ஆசார்ய ஹிருதயம் -தமிழ் ஆழ்வார்கள் ஒவ் ஒருவரை புகழ்ந்து —செஞ்சொல் -கவிகாள் -வஞ்சக் கள்வன்  மா மாயன்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் –திரு அஷ்டபுஜ -தொட்ட படை எட்டும்–கண்டம் என்னும் கடி நகர் -ஆழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம் கை எழுத்து -இன் கவி -பரம கவிகளால் தன கவி தான் கவி பாடுவியாது —பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்கு கதி —கண்டியூர் –மண்டினார் உய்யல் அல்லல் மற்றை யார்க்கு உய்யல் ஆமே–அழைக்கும் -ஆடி பாடி அரங்க அரங்க ஒ ஒ அழைக்கும் தொண்டர் —செஞ்சொல் -செந்தமிழ் -இன் கவி -பரவி -அழைக்கும் -ஐந்தும் காட்டி

கலந்து –
மணிப்பிரவாளம்–அபிப்ராயம் கலந்து —உபய வேதாந்தம் கலந்து
உ வே தெரியாமல் -கதை -உபயோகம் அற்ற -வெற்று
காஞ்சி சுவாமி சங்கரர் -சீர் பாடல் -நாம கரணம் ஆன உடனே -உ வே சொல்லும் -உபய வேதாந்த பிரவர்தகர் –
ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ ய பதி நாராயணன் அவதாரம் -கிருஷ்ண ராமா -இல்லாமல் -கத்ய த்ரயம் மூலம் நமக்கு —பாஷ்யகாரர் இது கொண்டு ஒருங்க விடுவர் –
பய வேதாந்தம் -சமஸ்க்ருத வேதாந்தம் —அபய வேதாந்தம் -மண்டினார் உய்யல் அல்லால் —அரவம் த்வனி
பேச்சு கேட்டிலையோ சொல்ல வில்லை வார்த்தை சப்தம்–பேர் அரவம்- நேற்றும் சொல்லி —த்வனிக்கும் அர்த்தம் த்வனி பிரதானம் காவ்யம்
தயிர் கடையும் ஒலி -ஆபரண த்வனி -உத்காதாயதி அரவிந்த லோசனம் -பரமபதம் வரை சென்றதாம் இந்த கோஷம் -சுகர் –
காசு பிறப்பு -ஆண்டாள் மட்டும்–வெண்பா கடைசி சீர் காசு பிறப்பு நாள் மலர் –
இடைச்சிகள் பூஷணம் -துளசி திருமகள் -கௌஸ்துபம் வைஜயந்தி -பட்டர் சேவிக்க -கிடக்கட்டும்
கூர்ம வ்யாக்ரி -ஆமைத்தாலி புலி நகம் -அக்குவடை பூண்ட வாசுதேவன் தளர் நடை நடவானோ –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -கொருட்டையை மோந்து பார்த்தால் குறட்டை -தெரியுமே -பட்டர் –

பேய்ப்பெண்ணே நாயகப் பெண் பிள்ளாய்–ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால்–தாழச் சொன்ன போதும் உயரச் சொன்ன போதுமே இ றே இருப்பது
அகவாயில்  பாவம் ஒன்றாகையாலே வாசி இல்லை இ றே
எம்பெருமான் விஜய அனுசந்தானத்தாலே வடிவில் தோன்றி உள்ள புகரைக் கண்டு தேசமுடையாய் -என்கிறார்கள்

கேட்டே கிடந்தாயோ–மைத்ரேயர் -பராசரர் புருஷார்த்தம் கேட்பதே —பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் உண்டா –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே —44 வருஷங்களாக சொல்லி அனுபவம் காஞ்சி-வானமா மலையே அடியேன் தொழ வந்து அருளே -புளிய மரத்தின் பொந்தில் இருந்து ஆழ்வார் கூப்பிட வந்து சேவை சாதிக்க –

நமக்கு பஷி நாதம் அல்லது உஜ்ஜீவினம் வழி இல்லை ஆட் கொண்ட வில்லி ஜீயர் -அருளி-வேதாத்மா -கஸ்யபர் விநாதா சிறுவன் –பகைவி கத்ரு-அமர்த்த கலசம் -அடிமை தனம் விளக்க அருணோதயம் -அருணன் கருடன் தம்பி -சூர்யன் தேரோட்டி –
மேலே பறக்கும் வரம் -கேட்டு வாங்கு கருடன் -நமக்கு கீழே வஹனம் -சமாப்யதைக ராஹித்யம் ஒப்பிலி யப்பான் –
சர்பாசனன்-
விஷ்ணு அமிர்தம் -அம்ர்தத்திலும் ஆற்ற இனியன் –அஞ்சிறைய –கூட்டி வரும் பொழுது -வெஞ்சிறைய -கூட்டி போகும் பொழுது
கருட தண்டகம் -தேசிகன் அருளிய முதல் ஸ்தோத்ரம் என்பர் —சாஸ்திர யோநித்வாத் -மூன்றாவது அதிகரணம் வேதம் கொண்டே அவனை அறிய முடியும்
புள்ளை கடாகின்ற வாற்றை காணீர் -பஷி நாதம் திரு குழம்பாலே ஏசல் வையாளி குதிரை வாகனம் –
கோணல் வையாளி உள் மணல் வெளி -கோதண்ட ராமர் சந்நிதி வாசலில் —மனம் பண பட்டு ஈர்க்க ஏற்பாடு –
காரணம் து தேய்தா -அடையாளம் வேதாத்மா -கருடசேவை -திரு நாங்கூர் ஆழ்வார் திரு நகரி -வையம் காஞ்சி கருட சேவை -கல் கருட சேவை –
அருள் ஆழி புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் -ஆழ்வார்–ஜடாயு கச்ச லோகம் -ஆயுஷ்மான் –

சம்பாதியும் ராம கைங்கர்யம்--புள் சிலம்பின கூஜந்தம் பஷி நாதம் -வால்மீகி–பஷி நாதம் தமஸா நதி நீராட்டம் க்ரய்ந்சம் மிதுனம் வேடன்
சோக வார்த்தை மாநிஷிதாமம் ஸ்ரீ ராமாயணம் தூண்டியதும் பஷி நாதம்–சுகர் கிளி கொடுத்த கிருஷ்ண கதாம்ருதம் -கிளி கொத்தின பலம் ஸ்ரீ மத் பாகவத் –
பஷி காட்டிக் கொடுத்து தான் -நம்பெருமாள் தர்ம வர்மன் -கேட்க விபீஷணன் விட்டு போக–கிளி சோழன் கிளி மண்டபம் –
காவேரி விரஜா சேயம் –வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச வாச்தேவோ ரெங்கேச பிரத்யஷம் பரமம் பதம் —விமானம் பிரணவாகாரம் –இங்கே காட்டி –
நம் ஆழ்வார் -திருக்கனாம்பி- மலைச்சரிவில் -பெட்டி -இறக்கி —1318
1323 -1371 48 வருஷங்கள் இல்லையே -1325 பிள்ளை லோகாசார்யர் —மூன்று படை எடுப்பு –
தோழப்பர் திருவாய் மொழி பிள்ளை ஸ்ரீ சைலேசர் ஓலை அனுப்பி -திருவிதாங்கூர் அரசர்க்கு அனுப்ப–முத்திருப்பு ஊரில் –
அலங்கல் மாலை பிரசாதம் தோழப்பர் —ஷேமகாரி பறவை பெட்டி மேல் சடகோபர் -காட்டிக் கொடுக்க —ஆழ்வார் தோழப்பர் -இன்றும் -மரியாதை
பஷி நாதமே உஜ்ஜீவனம் —-உலகு அளந்தான் வரக் கூவாய் கிளியே–கோலக் கிளியை உன்னுடன் தோழமை கொள்ள
கருடன் அம்சம் பெரியாழ்வார் மதுரகவி ஆழ்வார் —இவர் என்ன பெரிய ரைக்குவரோ -பஷி -பறவை அனுப்பி வந்தாயோ -சாஸ்திரம்
புறா பறவை சொல்லி சுக்ரீவன் இடம் பெருமாள்
நாராயண -அருவம் -பரத்வம் -அந்தர்யாமி சௌலப்யம் —மூர்த்தி நம்முடன் கலக்க வந்த விபவம் அர்ச்சை -சௌசீல்யம்
முதலாவார் மூவரே -நல் தமிழால் -லோகம் உஜ்ஜீவிக்க தீர்தகரராய் —சகல மநுஜ நயன விஷயமாகி —கேசவன் –

–கீசுகீசு என்று எங்கும் –
கலந்து பேசின பேச்சரவம் -பூர்வாசார்யர் திவ்ய ஸூ க்திகள் உடன் கலந்து ஸ்ரீ ஸூ க்திகள் அருளிச் செய்தார் ஸ்வாமி –
பகவத் போதாயன க்ருதாம் விச்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூ த்ர வ்ருத்திம் பூர்வா சார்யாஸ் சஞ்திஷூபு தன்மதாநு சாரேண-ஷூத்திரஅஷராணி வ்யாக்யாஸ் யந்தே –
வடமொழி தென்மொழி கலந்து அருளிய ஸ்ரீ ஸூ க்திகள் என்றுமாம் –
எதிராசர் பேர் அருளால் திரு ஆறாயிரப்படி பிள்ளான் அருளியது மணிப்பிரவாளம்

தேசமாலை -சாற்றி அருளுகிறாள்
தேசமுடையாய் -பரமபத தேஜஸ் –
மண்ணாட்டிலராகி எவ்விழி விற்றானாலும் ஆழி யங்கை பேராயர்க்கு ஆளாம் பிறப்பு உள்நாட்டு தேசு இ றே
ஞான பல வீர ஐஸ்வர்ய சக்தி தேஜஸ்--உண்ணாட்டு தேஜஸ் -பெரியதிருவந்தாதி
பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ -என்றும்–
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாவுதீர் -என்றும்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -என்றும்
உபய விபூதி நாதத்வம் -தேசம் மாலை -என்றுமாம்–தம்மையே ஒக்க அருள் செய்வான் –உடையவர் போல்வார் உடைய தேஜஸ் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –சொல் தொடர் ஒற்றுமை – பெருமாள் திருமொழி —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 18, 2013

290-
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் -2-10
தென்னாடன் குட கொங்கன் சோழன் -பெரிய திருமொழி -6-6-6-

——————————————-
291-
பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே-3-8-
அத்தா ..என்று உன்னை அழைக்கப் பித்தா என்று -பெரிய திருமொழி -7-1-9-

—————————————-
292-
சங்கம் இடத்தான் தண் வேங்கடத்து -4-1
ஊனிடை யாழி சங்குத் தமர்க்கு -நாச்சியார் திருமொழி -1-5-

—————————————————–

293-
மின் வட்டச் சுடராழி வேங்கடக் கோன் -4-3-
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை -நாச்சியார் திருமொழி -1-1-

——————————————–
294-
போகு நம்பீ -6-7-
போகு நம்பீ -திருவாய்மொழி -6-2-1-

———————————————-
295-
ஏழ் பிறப்பும் -9-9
ஏழ் ஏழ் பிறவிக்கும் -திருப்பாவை -29-

——————————————–
296-
அணி மணி யாசனம் -10-2-
சீரிய சிங்காசனம் -திருப்பாவை -23-

——————————————-

297
நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் -10-11
நலம் திகழ் நாரணன் அடிக் கீழ்-1-11-

———————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –பெருமாள் திருமொழி –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

December 30, 2012

146
தென்னீர் பொன்னி -1-1-
தெளிவிலாக் கலங்கள் நீர் -திருமாலை -37
காவேரி நீர் தெளிந்து இருந்தாலும் காவேரி நாச்சியாரின் உள்ளக் கலகத்தை கூறினபடி –
ஊற்று மாறி தெளிகைக்கு அவகாசம் இல்லாதபடி பெருககுகையாலே கலக்கம் மாறாதது ஆய்த்து –
இவரைப் போலே ஆய்த்து ஆறும் –
பிராப்திக்கு முன்பு சொகத்தாலே கலங்கி இருப்பர் –
கிட்டினால் பிரேமத்தாலே கலங்கி இருப்பர் –
ஆறும் கோயிலுக்கு மேற்கே பெருமாளை காண புகா நின்றோம் என்ற ஹர்ஷத்தாலே கலங்கி –
கிழக்கு பட்டால் பிரிந்து போகும் சோகத்தாலே கலங்கி –
வழி போவாரில் சேதன அசேதன விபாகம் இல்லை –
துக்தாப்தி -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-21-
ரத்நாகரமான ஷீராப்தி தகப்பனார் -ஜனனீ சாஷாத் லஷ்மீ பெண் -மணவாள பெருமாள் சர்வ லோக ஆதரரான
அழகிய மணவாள பெருமாள் -இதுக்கு சத்ருசமாக அங்கமணி செய்யலாவது எது -என்று விசாரித்துக் கொண்டு
வருகிறாப் போலே ஆய்த்து -மத்தகஜம் போலே பிசுகிப் பிற் காலித்துவருகிறபடி –
——————————————————————————————–

147-
அம் தமிழ் இன்பப் பாவினை -1-4-
செந்திறத்த தமிழோசை -திரு நெடும் தாண்டகம் -4
அம தமிழ்-இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி போலே இனியவனை –
ஆழ்வாரின் தமிழ் பாசுரத்தின் போக்யதையும் -அந்த போக்யதைக்கு பெரிய பெருமாளின் போக்யதையை
த்ருஷ்டாந்தமாக்கும் பாங்கும் தெளிவாகிறது -இத்தால் தமிழ் கடவுளைக் காட்டிலும்
தமிழுக்கு உண்டான ஏற்றம் அறியலாகிறது -உபமேயத்தில் காட்டிலும் உபமானத்துக்கு ஏற்றம்
பிரசித்தம் இ றே
செந்திறத்த -இது-தமிழ் மறை -சர்வாதிகாரம் ஆகையாலும் -ஸ்வார்த்தத்தை செவ்வே பிரகாசிப்பிக்க
கடவதாய் இருக்கை யாலும் -தம் பாழி யாகையாலும் -இன்னமும் அத்தோபாதி -வட மொழி மறை போலே –
இதுவும் பிரமாணம் என்கைக்காக -முற் பட அருளிச் செய்கிறார் -வேதங்கள் போலேவும் இதிஹாச புராணங்கள்
போலவும் அன்று இ றே ஆழ்வார்கள் அருளிச் செயல் -அனுஷ்டாதாவின் வார்த்தை இ றே இது -ஐஸ்வர்ய
கைவல்யங்கள் த்யாஜ்யதயா புகுரும் இத்தனை இ றே இவர்கள் பக்கலில்
செந்திறத்த தமிழோசை -திறம் -கூறுபாடும் பிரகாரமும் -ஸ்வார்தத்தை செவ்விதாக பிரகாசிப்பிக்கையே
கூறான த்ரமிட சப்தம் -உபப்ரும்ஹன அபேஷை அற்று இருக்கை -வேதங்களுக்கு உப ப்ரும்ஹன
அபேஷை உண்டு இ றே
——————————————————————————————-
148
தேட்டரும் -2
கண்ணி  நுண் சிறு தாம்பு -ஸ்ரீ மதுர கவிகள்
நண்ணாத வாள் அவுணர் -பெரிய திருமொழி 2-6-
கண் சோர -பெரிய திருமொழி -7-4
பயிலும் சுடர் ஒளி -திருவாய்மொழி -3-7
நெடுமாற்கு அடிமை -8-10
அடிமையில் குடிமை இல்லா -திருமலை -39
இவற்றில் ஆழ்வார்களுக்கு உள்ள பாகவத சேஷத்வம் வ்யக்தமாகிறது
——————————————————————————————

149
மாலை உற்ற கடல் -2-8-
மாலும் கரும் கடலே -முதல் திருவந்தாதி –19
பகவத் சம்பந்தத்தாலே கடலுக்கு உண்டான களிப்பை ஆழ்வார்கள் அனுபவித்த படி –
——————————————————————————————
150-
துழாய் மாலை யுற்ற வரைப்  பெரும் திரு மார்பு -2-8-
மை போல் நெடு வரை வாயத் தாழு மருவி போலே தார் -மூன்றாம் திருவந்தாதி -59
பேய் ஆழ்வார் உவமை காட்டி திரு மார்புக்கும் திருத் துழாய் மாலைக்கும் உள்ள சேர்த்தி அழகை
அனுபவிக்க -தேனோ பமீ யே த தமால நீலம வஷ -மகா கவியும் -திரு மார்பில் தவழும்
முத்து மாலைக்கு உவமை அருளி யது போலே –
——————————————————————————————–
151-
அம் தாமரைப் பேதை மா மணாளன் -3-5
பெரும் தேவீ -பெரியாழ்வார் திருமொழி -3-10-4-
பெருமாளுடைய பெருமைக்கு தக்க தேவீ -என்று அர்த்தம்
பெருமானுடைய பெருமையே பிராட்டி சம்பந்த்தாதாலே என்றும் கூறலாம் –
முந்திய  நிர்வாஹம் பெரியாழ்வார் திரு உள்ளம் -பூர்வர்கள் வியாக்யானம் –
பிந்திய நிர்வாஹத்தை -பேதை மா மணாளன் -இவளுக்கு வல்லபனாகையாலே வந்த பெருமை –
——————————————————————————————
152–
திருமாலே நெடியானே -4-9-
நினைமின் நெடியானே -திருவாய்மொழி -10-5-10-
பிராட்டி சம்பந்தம் சொல்லி நெடியானே என்றது -பிராட்டி குற்றம் சொல்லி அகற்ற பார்த்தாலும்
அவனுக்கு உள்ள பஷ பாதத்தின் நீட்சி -அவன் நினைவு ஒருபடிப்பட்டு மாறாத நிலை –
நினைமின் -சிந்திப்பே அமையும் -உங்களுக்கு பாங்கான சமயத்தில் ஒருகால் நினையும் கோள் –
அவன் அஹம் ஸ்மராமி என்று உங்கள் நினைத்த படியே இருக்கும் -சர்வ குண சம்பன்னன்
அகர்ம வச்யன் -உருவ நினைத்த படியே இருக்குமவன் –
———————————————————————————————

153
தரு துயரம் தடாயேல் -5-1-
மாற்றமுள ஆகிலும் சொல்லுவன் -பெரிய திருமொழி -11-8-1-
என்னை போர வைத்தாய் புறமே -திருவாய்மொழி -5-1-5-
தரு துயரம்-நீயே தரும் துக்கத்தை நீயே மாற்றாய் ஆகில் -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பவர்
ஆகையாலே -அவனைக் குறித்து பரதந்த்ரன் -செய்யும் கர்மமும் பரதந்த்ரம் -பலப்ரதணும் தான் –
என்பதால் தரு துயரம் -என்கிறார் -மம மாயா துரத்தயா -என்று தானே சொல்லுகையாலே
நீயே துயர் தந்தாய் என்று தோற்றும் படியாக -பிரஜை தெருவிலே இடறி தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் -சக்தனாய் இருக்கிறவன் விலக்காமல் ஒழிந்தால் -அப்படி சொல்லலாம் இ றே –
பிரஜையை கிணற்றின் நின்றும் வாங்காது ஒழிந்தால் தாயே தள்ளினாள் -என்னக் கடவது இ றே –
துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இ றே இருப்பது –
ஒரு குருவி பிணைத்த பிணையல் அவிழ்க்க ஒண்ணாது இருக்க -சர்வசக்தன் பிணைத்த
பிணையை எலி எலும்பன் அவிழ்க்க போமோ -அவன் தன்னையே கால் கட்டிப் போம் இ றே –
பிள்ளை திரு நறையூர் அரையர் –
மாற்றமுள -இவர் சொன்ன வார்த்தை ஏது என்றால் -இவ்வாத்ம வஸ்து அங்குத்தைக்கு
ஸ்ரீ கௌச்துப த்தோபாதியும் -நாச்சியார் திரு முலைத்தடத்தோபாதியும் -சப்ருஹாவிஷயமுமாய் போக்யமுமாய்
இருந்தது -அநாதி காலம் இழந்து போனது -நம் பக்கலில் விமுகனாய் -சப்தாதிகளில் பிரவண னாய்
நம் பக்கலில் அத்வேஷமும் இன்றிகே போருகையாலே சம்சரித்து போந்தான் -என்று இதொரு வார்த்தை –
நம் பக்கலிலே நிரபேஷனாய் கர்மசாபேஷையைப் பண்ணிப் போந்த -அநாதி கால வாஸிதமான
புண்ய பாப ரூப கர்ம பரம்பரையானது ஜன்ம பரம்பரைகளிலே மூட்ட சம்சரித்து போந்தான் என்று இதொரு வார்த்தை –
ஆகிலும் சொல்லுவன் -ருசி இல்லை என்று முதல் வார்த்தை -ருசி அருசிகளுக்கு அடி மனம் -நீ இட்ட வழக்கு –
ருசி ஜனகனான நீ யான பின்பு ருசி இல்லை என்று சொன்ன இடம் வார்த்தை இல்லை –
கர்மம் அடியாக சம்சரித்தான் என்ற இரண்டாம் வார்த்தை -கர்மம் -நிக்ரக அனுக்ரக ரூபமாய்
உனது திரு உள்ளத்தே கிடக்கும் -உனக்கு நிர்வாகர் இல்லாமையாலே அத்தை ஷமிக்க தீருமே –
ஆகையால் இதுவும் வார்த்தை இல்லை -இனி பல போக்தாவான நீ  சாஸ்திர அர்த்த கர்த்தாவாக
வேண்டாவோ என்னில் -உனக்கு இவ்வாதம வஸ்து சரீரதயா பரதந்த்ரம் ஆகையால் -ஸ்வ தந்த்ர்ய
க்ருத்யமான கர்த்ருத்வம் பரதந்த்ரனுக்கு இல்லை -சரீர ரஷணம் பண்ணுவான் சரீரி யன்றோ –
இருவரும் என் நினைத்து வார்த்தை சொன்னார்கள் என்னில் –
அவன் கர்மத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் பரஹமத்தை பற்றி நின்று அத்தை அழித்தார் –
அவன் வேதத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் வேதாந்த தாத்பர்யத்தை பற்றி அழித்தார் –
அவன் ஸ்வரூபத்தை பற்றி வார்த்தை சொன்னான் –
இவர் ஸ்வரூப யாதாம்யத்தை பற்றி அழித்தார் –
அவன் சாத்திய உபாயத்தை பற்றி வார்த்தை சொன்னான் –
இவர் பாரதந்த்ர்யா காஷ்டையை பற்றி நின்று சித்த உபாயத்தை பற்றி அழித்தார் –
இது காணும் உபாசகரில் காட்டில் பிரபன்னனுக்கு ஏற்றம் –
மக்கள் தோற்ற குழி தொடங்கி மேல் பாட்டுக்குறையும் இவற்றைச் சொன்னபடி –
என்னைப் போர வைத்தாய் புறமே -உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்தில் வைத்தாய்
போர வைத்தாய் -என்று அவன் செய்தானாக சொல்லுகிறார் இ றே –
தம்முடைய ஸ்வரூபத்தோ பாதி -கர்மமும் அவனைக் குறித்து பரதந்த்ரம் என்று இருக்கும்
பரம வைதிகர் ஆகையாலே –
————————————————————————————————

154-
மீன் நோக்கும் வள வயில் -5-3-
ஏர் நிரை வயலுள வாளைகள் — பொய்கை சென்றணை -பெரிய திருமொழி -4-10-5-
மத்ஸ்யம் என்று பேர் பெற்றவை அடைய கடாஷிக்கும் தேசமாய்த்து –
கடல் அவற்றினால் நமக்குபுகலிடம் என்று நினைத்து இருக்கும்தேசம் ஆய்த்து திரு வித்துவக்கோடு –
ஏரி யில் உள்ள வாளைக் களஞ்சி உழப் புக்கவாறே -நிர் அபாயமாக வர்த்திக்க சீர் மலி பொய்கை
சென்று அணையும் -ஏர்கள் விட்டு பொய்கை உழுவார் இல்லையே -சம்சாரம் துக்கம் என்று விட்டு
விரஜை யைச்சென்று பற்றுவாரைப் போலே –
இப்படி திருவித்துவக்கோடு -திரு வெள்ளியங்குடி திவ்ய தேசங்களின் சம்ருத்தியை
அனுபவித்த படி –

————————————————————————————————–

155
வாசுதேவா உன் வரவு பார்த்தே -6-1
வாழ வல்ல வாசுதேவா -பெரியாழ்வார் திருமொழி -2-2-3-
வாசுதேவா உன் வரவு பார்த்தே-நீ நிற்கிறது உன்னை விஸ்வசித்து அன்று -உன் பிதாவை
விஸ்வசித்து -ஒரு வார்த்தை அல்லது அறியாத ஸ்ரீ வாசுதேவர் பிள்ளை என்னும் அத்தை
விஸ்வசித்து நின்றேன் –
நாயகி பாவத்தை அடைந்த குலேசேகரப் பெருமாள் ஊடலிலே அருளின பாசுரம் –
மெய்யன் வயிற்றில் பொய்யன் பிறந்தாயீ
வாழ வல்ல வாசுதேவா -ஒரு சற்றும் இளைப்பு இன்றிக்கே பிரியப்பட்டு இதுவே போகமாக
இருக்க வல்ல -வாசுதேவ புத்ரனானவனே -பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ –
பெரியாழ்வார் இனியராய் அருளி அவனைக் கொண்டாடுகிறார் –
——————————————————————————————

156-
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் -6-6
போகு நம்பீ -திருவாய்மொழி -6-2-2-
யாரைத் தீண்டி வந்தாய் -என்னைத் தீண்டாதே கடக்க நில்லு –
போகு நம்பி -6-2-1- முன்பே சொல்லியும் ஓன்று இரண்டு அடி இட்டு வர விட்டு கிட்ட நின்றானாக
புடைவை படாமே கடக்க நில்லும் என்கிறாள் –
நாயிகா பாவம் நாடி அறிந்து வியாக்யானம் அருளிச் செயும் பூர்வர்கள் –
——————————————————————————————

157
பைய அரவின் அணைப் பள்ளியினாய்  பண்டையோம் அல்லோம் -6-7-
மன்னுடை இலங்கை யரண் காய்ந்த மாயவனே -திருவாய்மொழி -6-2-1-
பைய அரவின் -நீ எனக்கு நல்லை யல்லை யாகிலும் நான் உனக்கு நல்லேன் –
ஆசைப்பட்டார்க்கு உடம்பு கொடுக்குமவன் எதிர் தலையினுடைய ரஷண சிந்தை
பண்ணுமவன் அவன் -என்று அவன் சொல்ல -பைய அரவின் அணைப் பள்ளியினாய் -என்கிறாள் –
பண்டையோம் அல்லோம் நாம் -அகப்படுத்துகைக்கு ஆக நீ  செய்யும் செயல்கள் அறிந்தவர்கள் ஆகையால் –
பழையவர்கள் அல்லோம் காண் நாங்கள் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று இருக்கும்
நிலை தவிர்ந்தோம் காண் நாங்கள் –
மன்னுடை-உண்ணாது உறங்காது என்று ஏக தார வ்ரதனாய்க் கொண்டு -நான் பட்டது எல்லாம்
பொய்யோ -என்றான் -அது தான் நீ செய்ய வேண்டிச் செய்தாயோ -ஒரு துறையிலே ஒரு மெய்
பரிமாறா விடில் நமக்கு மேலுள்ளது எல்லாம் ஒரு தொகையில் அகப்படாது என்று -செய்தாய்
அத்தனை அன்றோ -அபலைகளை அகப்படுத்திக் கொள்ள இட்ட வழி யன்றோ –
ப்ராவண்யா அதிரேகத்தாலே ஆழ்வார்கள் இப்படி ஏசும் பாசுரங்கள் பல பல –
——————————————————————————————–

158-
காணுமாறு இனி உண்டு எனில் அருளே -7-9-
ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார் தாளிணை –துழாய் -திருவாய்மொழி -4-2-1-
நீ நினைத்தால் செய்ய ஒண்ணாதது இல்லை -தேவகி பாவனையில் கால அதீதமான
அனுபவங்களைப் ஆசைப்பட்டபடி –
ஆலிலை-வட தள சாயி யினுடைய திருவடிகளில் சாத்தின -திருத் துழா யை பராங்குச நாயகி ஆசைப்படுகிறாள்
இவன் சக்திமான் என்று அறிந்தபடியாலும் -தன் சாபல அதிசயத்தாலும் -அவாவின் மிகுதியாலும்
பூத காலத்து உள்ளவற்றையும் பற்ற வேண்டும் என்றுஆசைப்படா நின்றாள் -என்கிறாள் – திருத் தாயார்
————————————————————————————————–
159-
வன் தாளிணை -9-1
திண் கழல் -திருவாய்மொழி -1-2-10-
வண் புகழ் நாரணன் திண் கழல் -என்னுமா போலே -ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் –
என்னும் திருவடிகள் -பெருமாள் விட்டாலும் பிராட்டி விடாள் -பிராட்டி விடிலும் பெருமான் விடான் –
இருவரும் விட்டாலும் இவை விடாமல் திண் கழலாய் இருக்கும் –
————————————————————————————————-
160-

காகுத்தா கரிய கோவே -9-3-
தத்துவம் அன்று தகவு -திருப்பாவை -29-
தயரதன் புலம்பல் -என்னைப் பிரிந்து என் மனம் உருக்கும் வகையே கற்றாயே -இது உம்முடைய
குடிப்பிறப்புக்கு சேராது -என்பதை -காகுத்தா -என்கிற சொல்லாலும் -இது உம்முடைய வடிவு
அழகுக்கு சேராது -என்பதை -கரிய கோவே -என்று அருளுகிறார் –
தத்துவம் -கோபிமார் நப்பின்னையை ஏசும் பாசுரம் -கண்ணன் ஆய்ச்சிமாருக்கு மறுமாற்றம்
சொல்லப் புக -அவள் -ஆர்த்த விஷயத்தில் தம்மில் முற்பாடனாக ஒண்ணாது என்று கண்ணாலே
வாய் வாய் -என்று வாயை நெரித்தாள் -அப்போது அவர்கள் இவளை -மைத் தடம் கண்ணினாய் –
என்று விளித்து -இது உன் ஸ்வரூபத்துக்கும் போருமதன்று ஸ்வபாவத்துக்கும் போருமதன்று –
புருஷகாரமாய் நின்று சேர்ப்பாருடைய ஸ்வரூபத்துக்கும்-ஸ்வபாவத்துக்கும் -சேருமதோ இது
என்கிறார்கள் -அகில ஜகன் மாதரம் -என்கிறதுக்கும் சேராது -அசரண்ய சரண்யாம் -என்கிறதுக்கும்
சேராது -தேவ தேவ திவ்ய மகிஷீ -என்று கட்டின பட்டத்துக்கு சேரும் இத்தனை –
———————————————————————————————-
161
நெடும்தோள் வேந்தே -9-9-
-பாழியம் தோளுடை -திருப்பாவை -4
நெடும் தோள்-ரஷ்ய வர்க்கத்தின் அளவு அல்லாத காவல் துடிப்பை உடைய தோளை உடையவன் –
பாழியம் தோளுடை-ஆள் சுருங்கி நிழல் பெருத்து இருக்கை
உபய விபூதியும் ஒதுங்கினாலும் ரஷ்ய வர்க்கம் அளவு பட்டு
ரஷகனுடைய காவல் துடிப்பே மிக்கு இருக்கை –
————————————————————————————————
162-

தவம் உடைத்து தரணி தானே -10-5-
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன -பெரியாழ்வார் திருமொழி -4-4-4-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய சஞ்சாரத்துக்கு விஷயம் ஆகையாலே பூமியானது பாக்கியம் உடைத்தாய்
ஆனது என்கிறார் ஸ்ரீ குலசேகர பெருமாள் –
நாம ரூப விசிஷ்டமான சகல வஸ்துக்களிலும் ஒரோ ஜீவ அதிஷ்டானம் உண்டு என்று கொள்ள வேண்டும் –
கடபடாதிகளில் ஞான சங்கோச அதிசயத்தாலே ஜீவ அதிஷ்டானம் உண்டு என்று தோற்றாமல் இருக்கிறது –
பாபிகள் பருகும் நீருக்கும் உடுக்குமகூறைக்கும் -அபிமானியான ஜீவர்களுக்கு பாபம் உண்டு –
ஊனேறு -இத்யாதியில் பகவத் பாகவத ஸ்பர்சம் உள்ளவை ஞானாதிகர்க்கும் பக்தி பரவஸ்ர்க்கும்
உத்தேச்யம் ஆகா நின்றால் -இதர ஸ்பர்சம் உள்ளவை சத்துக்களுக்கு நிஷிதங்கள் -என்றது ஆய்த்து –
————————————————————————————————
163
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -10-10-
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை -திருவாய்மொழி -7-5-2-
நடந்தமை என்று நம் ஆழ்வார் அஸ்பஷ்டமாக அருளிச் செய்ததை
இவர் ஸ்பஷ்டமாக -சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்று அருளிச் செய்கிறார் –
கலங்கா பெரு நகரம் காட்டுவான் இலங்கா புரம் எரித்தான் -என்னா நின்றது இ றே
————————————————————————————————-
ஸ்ரீ குலசேகர பெருமாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .