Archive for the ‘பெரிய திரு மொழி’ Category

ஸ்ரீ திருக்கண்ண புரம்-மூலவர் உத்சவர் -த்யான ஸ்லோகார்த்தம்-ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் —

February 14, 2022

மூலவர்: ஸ்ரீநீலமேகப்பெருமாள்
உற்சவர்: ஸ்ரீசவுரிராஜப்பெருமாள்
தாயார்: ஸ்ரீகண்ணபுரநாயகி
தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் போன்ற
ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பட்ட பெருமாள்.

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.-ஸ்ரீநம்மாழ்வார்

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் உத்பலாவதக விமானம் எனப்படுகிறது.

முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர்.
சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால்
அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர்.
மகாவிஷ்ணுவிடம் “அஷ்டாட்ஷர மந்திரம்’ கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன்
இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது.
எனவே, இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர்.
முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார்.
மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான்.
அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது.
இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான்.
விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார்.
அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
பின், மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.

‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம்.
இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது.
மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.
இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார்.
இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம்.

இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது.
சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.

திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ
(ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே.
நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.

கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று
திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று
இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்

இத்தலத்தில் உள்ள உற்சவர் “சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார்.
அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும்.
“சவுரி’ என்ற சொல்லுக்கு “முடி’ என்றும், “அழகு’ என்றும் பொருள்கள் உண்டு.

கோயிலின் பெருமைகள் ;

1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால்
இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.

2. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.

3. ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததைக்
காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால்
செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.

4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று
பகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.

5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார்.
மஹரிஷிகளின் பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.

6. முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு
கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார்.
மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது மூலஸ்தானத்தில் வெண்பொங்கல் வாசனை நிரம்பி இருந்தது.
அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர்.
தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .

திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு.
சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது. பாடல்:

புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
அனைய சவுரிராசருக்கே ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
வளையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ மண்டலமே

மங்களாசாஸனம்: பாசுரங்கள்
பெரியாழ்வார் – 71
ஆண்டாள் – 535
குலசேகராழ்வார் – 719- 729
திருமங்கையாழ்வார் _ 1648-1747- 2067- 2078- 2673 (72)
நம்மாழ்வார் – 3656-3666
மொத்தம் 128 பாசுரங்கள்.

திருநெற்றியில் தழும்பு
உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம்.
முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி,
“பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ’ என்று
கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது.
“தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்’ என்ற
பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார்

காளமேகப்புலவரும் கண்ணபுரம் பெருமாளும்
வைணவக்குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம்.
மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப்
பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி,
பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம்.

கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்
உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்
என் பிறப்போ எண்ணத் தொலையாது

————————

புண்டரீக விசாலாக்ஷம் சரத் சந்த்ர நிபா நநம்
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் நீல மேகம் அஹம் பஜே

புண்டரீக விசாலாக்ஷம் -தாமரை போன்ற திருக்கண்கள் -அகன்ற பருத்த நீண்ட
சரத் சந்த்ர நிபாநநம் –சரத் காலச் சந்த்ரன் நிர்மலம் தெளிந்த அழகிய அம்ருத தாரை சொட்டும்
கோவர்த்தனம் -சரத் பூர்ணிமா கொண்டாடுவார்கள் -த்வாரகையிலும் பல லக்ஷம் பேர் வருவார்களே –
அதே போல் திருமுக மண்டலம் –
நீலாத்ரி இவ த்ருஷ்டந்தம் கருவரை போல் நின்றானை
நீல மேகம் -நைல்யம்-சமஸ்க்ருதத்தில் – கறுமை -கான்சத்யாமாம் கார் முகில் கார் வானம்
அஹம் பஜே -அடியேன் வணங்குகிறேன்

16 குணங்கள் இதில் உண்டே -நான்கு விசேஷணங்களிலும் உண்டே
ஷோடஸ கலா பரிபூர்ணன்

புண்டரீகாக்ஷ விசாலாக்ஷம்
தாமரைக்கண்ணன் –
1-பராத்பரன்
மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவாவோ
கப்யாஸம் புண்டரீக மேவ அக்ஷிணீ -சாந்தோக்யம்
க புண்டரீக நயன புருஷோத்தம
ஸ்ரீ யபதி -கண்ணபுர நாயகி கேள்வன் -சர்வாதிகன்
இணைக் கூற்றங்களோ அறியேன்
தூது செய் கண்கள்

2-ஸுந்தர்யம்
கரியவாகி –பேதைமை செய்தனவே
அதீர்க்கம் –ஸூ ந்தர பஹு ஸ்தவம்
தாமரை ஒப்புமை சொல்ல முடியாதே
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம்
கண்டவர் தம் மனம் கமழும் கண்ணபுரத்தம்மானே

3-ஸுலப்யம்
தூது செய் கண்கள் ஓன்று பேசி -முதல் தொடர்பு
கடாக்ஷித்து வஸ்துவாக்கி -குளிரக் கடாக்ஷித்து –
ஸம்பாஷணம் –வீக்ஷணனே -பராசர பட்டர்

4- வாத்சல்யம்
செவ்வரியோடி -ஐஸ்வர்யத்தாலும் சிவந்து – -வாத்சல்யம் அடியாகவும் சிவந்து —
ஸூத்த ஸத்வ குணத்தால் -குற்றங்களையே குணமாகக் கொண்டு –
காட்டவே கண்டார் திருப்பாணாழ்வார்

5-பாவந கரத்வம் –தோஷங்களைப் போக்கி -பூதராக்கின நெடு நோக்கு –
காம க்ரோதம் அஹங்கார மமகாரங்கள் -கர்மங்கள் அனைத்தையும் போக்கி
செங்கண் சிறுச் சிறிதே –எங்கள் மேல் சாபம் களைந்து

சரத் சந்த்ர நிபாநநம்
மாசற்ற பூர்ண சந்திரன் போல் அழகிய முகம்
அபூத உவமை
6-ஆஹ்லாத கரத்வம்
தாபத் த்ரயங்கள் போகும்படி –
ஆத்யாத்மிக-ஆதி தைவிக -ஆதி பவ்திக

7-ப்ரீதி கரத்வம்
சந்த்ர காந்த –அத்தீவை ப்ரிய தர்சனம் –பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம்

8- நிர்ஹேதுக விஷயீ காரத்வம்
ஸூர்யன் இவ ஞானம் -ப்ரயத்னம் -ஸூர்ய துல்ய யாதாத்ம்ய ஞானம் -ரிஷிகள் -உபாசகர்கள்
முளைத்து எழுந்த திங்கள் தானாய் -மயர்வற மதிநலம் அருளி –
அக்லிஷ்ட்ட அத்புத அசிந்த்ய ஞான வைராக்ய ராஸயே ம் -நாதனுக்கு ஆழ்வார் அருள –

நீலாத்ரி இவ –
ஊற்றம் உடையாய் பெரியாய்
மலை இலங்கு தோள் நான்காய்
கருவரை போல் நின்றானே
9-தைர்யம் -ஹிமவான் இவ
அடியார் ரக்ஷண தீக்ஷிதம்
சுக்ரீவன் -விபீஷணன்
பிராட்டி இளைய பெருமாள் எனது உயிர் விட்டாலும் தீஷிதம் விடேன் -பெருமாள் -சத்ய ப்ரதிஜ்ஜை -ஸ்திர ப்ரதிஞ்ஞன்

10-ரக்ஷகத்வம்
காக்கும் இயல்பினன் கண்ணன்
கோவர்த்தனமே ரக்ஷிக்கும் காட்டிய வ்ருத்தாந்தம்

11-ஜகத் காரணத்வம்
த்ரிவித காரணம்
நதிகளுக்கு உத்பத்தி ஸ்தானம் -சாக்யாத்ரி -காரணம்
ஆறு பெருகும் ஸ்தானம்
உபாதான நிமித்த ஸஹ காரி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -ஆறுக்கும் காரணம்

த்ருஷ்டந்தம்
நிலையார நின்றானே
ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து நின்ற வண்ணம் நிற்கவே
12-அபேக்ஷ நிரபேஷத்வம்
கருட வாஹனனும் நிற்க
ஒன்றும் தேவும் –நின்ற ஆதிப்பிரான் நிற்க -மற்றது தெய்வம் நாடுதிரே
64 சதுர்யுகங்களாக நின்று அருளி இங்கு

13-ஸூஹ்ருதத்வம்
இரா மடமூற்றுவாரைப் போலே
என் ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய்
சோம்பாது -திருத்திப் பணி கொள்ளவே அனைத்து வியாபாரங்களும் –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று அவசர ப்ரதீஷிதனாய் நிற்கிறான்

நீலமேகம் கரு முகில்
14- வள்ளல் தன்மை
வஸிஸிஷ்டர் சண்டாள விபாகம் அற –
கார் வானம் நின்ற கண்ணபுரத்து அம்மானைக் கண்டார் கொலோ
மின்னு மா மழை தவழும் மேக ஒண்ணா
மழை முகிலே ஒக்கும்

15-பர கத ஸ்வீ காரம்
மலை இருக்கும் இடம் நாம் செல்ல வேண்டும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட
வந்து உனது அடியேன் உளம் புகுந்தாய் புகுந்த பின் சிந்தனைக்கு இனியாய்

16-சரண்ய முகுந்தத்வம்
மிக சேஷனே -மேகம் -எங்கும் தெளிக்கும் சாமர்த்தியம்
ஸகல பல ப்ரதத்வம்
மலையிலே படிந்து உள்ள சீதள காள மேகம் -பட்டர்

———————-

உத்பலாவதகே திவ்யே புஷ்பக்ரேஷணம்
சவுரி ராஜம் அஹம் வந்தே ஸதா ஸர்வாங்க ஸூந்தரம்

விமானம் –உத்பலா வதகம் என்ற பெயருடனும் திவ்யமாகவும் உள்ள விமானம்
மாம்ஸ -பலம் ஆசை விட்டு -உபேக்ஷித்து
ஆத்மாவில் நோக்கு தேகத்தில் ஆசை இல்லாமல்
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார்
ஆத்மாவை நிழலிலே வைத்து தேகத்தை பேணாமல் வெய்யிலில் வைத்தவர்
கைங்கர்யத்துக்கு வேண்டிய அளவு -தர்ம சாதனம் சரீரம் –

வாடினேன் வாடி -இத்யாதி
ஆத்ம ஞானம் வந்து -அனைத்தும் அவனது சரீரம் -உணர்ந்து
இதுவே உத்பல –
மோக்ஷமே பரம புருஷார்த்தம் -அத்தை அருளவே இதன் கீழே நிற்கிறார்
உத்பலரானவர்களுக்கு அருளவே –
விக்ரமாதித்யன் ஸிம்ஹாஸனம் போல்
கோயிலுக்குள்ளே இருந்து சேவிக்க முடியாது
வெளிப்பிரகாரத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சந்நிதியில் இருந்து ஸேவை யாகும்படி
சிற்பக்கலை அர்த்தம் அறிந்து செய்தது
காரியத்தால் வந்த பண்புப்பெயர் இது

திவ்யமான விமானம்
மோக்ஷ பூமி திவ்ய பூமி -அப்ராக்ருதம் -ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால்
ஸூத்த ஸத்வ மயம் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பு
மூன்றும் இங்கு உண்டே
அஞ்ஞானம் -அனுஷ்டானம் தப்பாக்கும் -அதன் காரணமாக தூய்மையான ஆத்மாவுக்கு அழுக்கு உடம்பு கிடைக்குமே –
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டுமே

புஷ்பம் -ஈஷணம் கண் அழகும் குழல் அழகும் சேர்ந்து
மீனுக்கு எங்கும் தண்ணீர் போல் எங்கு சேவித்தாலும் ஸூந்தரம்
நீல மகத்துக்கு உள்ளே ஒளி பிழம்பு போல்
ஸுவ்ரி ராஜன் -குழல் அழகர் –
அருகிலேயே திரு நாகை அழகியார் -சவுந்தர ராஜன்
அழகும் அரசும் சேர்ந்தால் -ஆசையுடன் கைங்கர்யம் ராக பிராப்தம் –

வணங்குதல் -வாசக -காயிக -மாநஸம் –
வணங்கா முடி -உள்ளம் அடங்காமல் அஹங்காரம் கொண்டவன் –

பொய் நின்ற ஞானம் -பாசுரம் அர்த்த பஞ்சகமும் உண்டே
இனி யாம் உறாமை அடியேன் செய்யும் விண்ணப்பம் இதர விஷய சங்கம் அற்று —
வாசிக கைங்கர்ய பிரார்த்தனை -உபேய ஸ்வரூபம்
அடியேன் -ஜீவாத்ம-ஸ்வ ஸ்வரூபம்
இமையோர் தலைவா -பர ஸ்வரூபம்

உத்பல வதகம்-விரோதி ஸ்வரூபம்
அஹம் -ஸ்வ ஸ்வரூபம்
ஸுரி ராஜம் -பர ஸ்வரூபம்
வந்தே -சரணம் வரிக்கச் செய்யும் -புஷ்கர ஈஷணம் -உபாயம்
ஸர்வாங்க ஸூந்தரம் -பல்லாண்டு பாடுவதே -கைங்கர்யம் -புருஷார்த்தம்
பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -விரோதி ஸ்வரூபம்
அருளாய் -ப்ராபக -உபாய ஸ்வரூபம்
பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே –

ஸுரி ராஜம் அஹம் வந்தே
திருவல்ல வாழ் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் –
ஆசை யுடையோருக்கு எல்லாம் ஆரியர்கள் கூறும் –வரம்பு அறுத்து –

வந்தே -வணங்கத் தகுதி
உத்பலா –அஹம் -வைராக்யம் யுடைய அடியேன் –
புஷ்கர ஈஷணம் -அஹம் -தாமரைக் கண்ணுக்கு இலக்கண அடியேன்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடரே
உன் அருளுக்கும் அதுவே புகல்-இனி அகலும் பொருள் என் -பயன் இருவோருக்குமான பின்பு -அமுதனார் –
இரக்கத்துத் தகுதியான அடியேன்
ஸுரி ராஜம் அஹம் -ஸ்வாமி சொத்து அறிந்த அடியேன்
ஸதா வந்தே அஹம் -ஸ்வரூப ஞானம் விடாமல் எப்போதும் இருக்கும் அடியேன்
ஸர்வாங்க ஸூந்தரம் அஹம் –போக்யம் –காட்டிலே எரிந்த நிலைக்கு ஆகாமல் -அனுபவிக்க -எப்போதும் ஏங்கும் அடியேன்

வந்தே பதம் தோறும் -சேர்த்து
ஜிதந்தே போற்றி பல்லாண்டு வந்தே பர்யாயம்
புஷ்கர ஈஷணம் வந்தே -தாமரைக் கண் கடாக்ஷம் உபாயம்
நம -ந ம -ச கண்ட வாகவும் -அகண்ட வாகவும் -வணங்குகிறேன் -நான் எனக்கு அல்லேன்
உனது கடாக்ஷம் உபாயம் -விஷ்ணோர் கடாக்ஷம் பெற்றால் தானே கார்ய கரம் ஆகும் -சகண்ட நமஸ் ஸூ
ஸுரி ராஜம் வந்தே -ஸ்வாமி -அரசே வணக்கம் அகண்ட நமஸ்ஸூ
அஹம் வந்தே -ஸ்வரூப ஞானம் வந்து பல்லாண்டு பாடுதல் இங்கு அர்த்தம் -அவனுக்கே அற்றுத் தீர்ந்து -சேஷத்வம் பாரதந்தர்யம் அறிந்து –
ஸதா வந்தே -சூழ்ந்து இருந்து -இங்கும் அங்கும் -வினைச் சொல் இல்லாத பல்லாண்டு பாசுரம் -போல் -இருக்க வேண்டுமே –
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
ஸதா ஸர்வாங்க ஸூ ந்தரம் வந்தே -எல்லா இடங்களிலும் அழகு
சங்கு சக்கரம்
திருப் பிராட்டியார்
திரு அபிஷேகம்
திரு ஆபரணம்
ததீய சேஷத்வம் -அடியார்களுக்கு பரதந்த்ரம் சேஷத்வம் அறிந்து -பல்லாண்டு
அடியோமோடும் நின்னோடும் -பாசுரார்த்தம் உணர வேண்டுமே –
அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடும் பல்லாண்டு –

——————————————————–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

தாய் எட்டு அடி பாய்ந்தால் குழந்தை 16 அடி பாடுமே
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
அநன்யார்ஹ சேஷத்வ அநந்ய சரண்யத்வ அநந்ய போக்யத்வங்கள்
யாதாத்மயமே ததீய பர்யந்தம் –
திருமந்த்ரார்த்தமும் இந்த த்யான ஸ்லோகம் சொல்லுமே
அறிவு உணர்வு உணர்த்தி -அநந்யார்ஹ சேஷத்வம்-ஸுரி -ராஜா என்றாலே சேஷி -ஓங்கார பிரணவம் அர்த்தம்
திட அத்யவசாயம் -உத்பல வதகே திவ்யே விமானே -அருகில் ஸந்நிஹிதன் -அநந்ய சரண்யத்வம்
பேற்றுக்கு த்வரிக்க–ஸதா -ஸர்வாங்க ஸூந்தரம் -இனிமை அழகு இனிமை -அநந்ய போக்யத்வம்

———–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே

———–

திவ்ய விமானே -இரங்கி வந்து ஸுசீல்யம்
புஷ்கார ஈஷனே -வாத்சல்யம் -செவ்வரியோடே
சவுரி ராஜா ஸ்வாமித்வம்
ஸதா சர்வாங்க ஸூ ந்தரம் –ஸுலப்யம் –
கொற்றப் புள் ஏறி –ஸகல மனுஷ நயன விஷய தாங்கம்

பற்றின பின்பு
ஞாப்தி பக்தி இருக்க முக்தி தருவான் ஆவான்
ஆஸ்ரித கார்ய ஆபாத கல்யாண குணங்கள்
1-சர்வஞ்ஞத்வம்
2-ஸர்வ சக்தித்வம்
3-பிராப்தி
4-பூர்த்தி
நான்கும் வேண்டுமே

திவ்யே விமானே –நம்முடையவர் -பிராப்தி உண்டே -64 சதுர்யுகமாக நமக்காக உள்ளானே
புஷ்கர ஈஷணம் -ஸர்வஞ்ஞத்வம்-கண் என்றாலே ஞானம்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
சவுரி ராஜா -சர்வ சக்தித்வம்
கோதில மணி வண்ணன் வேண்டிற்று எல்லாம் தருவான்
ஸதா சர்வாங்க ஸூந்தரம் -பூர்த்தி

————

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-2-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-4-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும் என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-6-

செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவ்ளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7-

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8-

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

ஸுரிக்கொண்டைக்கு ராஜா -முன்னிலும் பின் அழகு பெருமாள்
புஷ்கார ஈஷணம் -ஸுரி ராஜம் -அவயவ சோபை சவுந்தர்யம்
ஸர்வாங்க ஸூந்தரம் – சமுதாய சோபை லாவண்யம்
அரசன் என்று -வந்தே-வணங்குவது – வேறே வகை ஸ்வரூப க்ருத தாஸ்யம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்
அழகுக்கு -வந்தே-வணங்குவது குண க்ருத தாஸ்யம் -இதுவே நிலைக்கும்

——

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

——–

ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -நமக்கு வேண்டும்
ஆஸ்ரயண ஸுபாதக ஆபாதக கல்யாண குணங்கள்
ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குணங்கள்
இரண்டு வகைகளும் அவனுக்கு உண்டே

அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,*
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,*
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,*
புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

நிகர் இல் புகழாய் –வாத்சல்யம்
உலகம் மூன்று உடையாய்! -ஸ்வாமித்வம்
என்னை ஆள்வானே,–ஸுஸீல்யம் -ஸ்ரீ ரெங்க நாத மம நாத
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,* -ஸுலப்யம்

வைத்த அஞ்சல் என்ற கையும் –இத்யாதி
குற்றம் கண்டு வெறுவாமைக்கு வாத்சல்யம்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு ஸுசீல்யம்
கண்டு பற்றுகைக்கு ஸுலப்யம்
விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுக்கைக்கு ஞான சக்திகள் –முமுஷுப்படி –138-

திருக்கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சல் என்ற கையும்
கவித்த முடியும்
மிகவும் முறுவலும்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம் —

கையும் உழவு கோலும் பிடித்த சிறுவாய்க்கயிறும் ஸேனா தூளி தூ சரிதமான திருக்குழலும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய வேஷத்தை மாம் என்று காட்டுகிறான்

இவற்றுக்கு எல்லாம் அடி
திருக் கண்ண புர நாயகித் தாயார்
பரத்வ ஸுலப்ய இரண்டுக்கும் இவள் ஸம்பந்தமே ஹேது

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீகண்ணபுரநாயகி ஸமேத ஸ்ரீநீலவண்ண பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கோயில் பெரிய திருமொழி -ஸ்ரீ பரகாலன் பனுவல்கள் —

April 8, 2021

ஸ்ரீ கோயில் பெரிய திருமொழி –

1-வாடினேன் வாடி
2-தாயே தந்தை
3-விற் பெரு விழவும்
4-அன்றாயர்
5-திவளும்
6-தூ விரிய
7-நும்மைத் தொழுதோம்
8-ஏழை ஏதலன்
9-பெடை அடர்த்த
10-கண் சோர
11-தெள்ளியீர்
12-மூவரில்
13-காதில் கடிப்பு
14-மாற்றமுள

———–

ஸ்ரீ பரகாலன் பனுவல்கள் —

மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை–1-1-10-

மங்கையர் கலியனது ஒலி மாலை அரிய வின்னிசை –1-2-10-

மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை–1-3-10-

கலியன் வாயொலி செய்த பனுவல் வரம் செய்த வைந்தும் ஐந்தும்–1-4-10-

மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை–1-5-10-

காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை–1-6-10-

இரும் தமிழ் நூல் புலவன் மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை-1-7-10-

மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்-1-8-10-

திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்து-1-9-10-

கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை–1-10-10-

———-

கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல்-2-1-10-

மங்கையர் கோன் கலியன் கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும்-2-2-10-

கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன சொல் மாலை பத்து-2-3-10-

மங்கையர் கோன் அமரில் கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை-2-4-10-

கடமாரும் கருங்களிறு வல்லான் வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல் திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்–2-5-10-

வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி -2-6-10-

மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல்–2-7-10-

கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை–2-8-10-

மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த சீர் மன்னு செந்தமிழ் மாலை -2-9-10-

மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும்-2-10-10-

————–

வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த பாவு தண் தமிழ் பத்திவை-3-1-10-

உலகுக்கு அருளே புரியும் காரார் புயல் கைக் கலி கன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும்-3-2-10-

மங்கையர் கோன் மருவார் ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்-3-3-10-

அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம் கொங்குமலர் குழலியர் கோன்
மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன சங்க முத்தமிழ் மாலை பத்து–3-4-10-

கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும்–3-5-10-

கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை-3-6-10-

காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்து-3-7-10-

நெடுமாலுக்கு என்றும் தொண்டாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -3-8-10-

மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை–3-9-10-

————-

கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்து–4-1-10-

ஆலிமன் அருள் மாரி பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப் பத்து-4-2-10-

மங்கையார் வாள் கலிகன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும்–4-3-10-

கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் –4-4-10-

மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள்–4-5-10-

கலியன் சொன்ன பாவளம் பத்தும் –4-6-10-

கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை–4-7-10-

வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்து–4-8-10-

காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த சீரார் இன் சொல் மாலை-4-9-10-

வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்-4-10-10-

————

கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலி கன்றி சொல் தான் ஈரைந்து இவை -5-1-10-

கோவைத் தமிழால் கலியன் சொன்ன பா–5-2-10-

நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்–5-3-10-

கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல் நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் –5-4-10-

நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார் கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை–5-5-10-

காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர் நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்–5-6-10-

மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல்–5-7-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ்
திரு வரங்கத் தம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் –5-8-10-

மாட மங்கை திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை–5-9-10-

ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்–5-10-10-

————-

காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை–6-1-10-

வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார் ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை –6-2-10-

காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை-6-3-10-

கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலி கன்றி சொல்–6-4-10-

காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை–6-5-10-

பொய்ம் மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்–6-6-10-

கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை–6-7-10-

வம்பவிழ் தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலி–6-8-10-

வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன் பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்து–6-9-10-

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை–6-10-10-

————-

நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை–7-1-10-

கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன் சொன்னீர் சொல் மாலை –7-2-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன்
நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்
தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை பாடல் பத்திவை–7-3-10-

தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை–7-4-10-

மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொதிந்த தமிழ் மாலை -7-5-10-

யணி யாலியர் கோன் மருவார் கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்–7-6-10-

கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்து–7-7-10-

கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்–7-8-10-

காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை–7-9-10-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை–7-10-10-

———–

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று காவளரும் கடி பொழில் சூழ்
கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும்–8-1-10-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்–8-2-10-

கடல் சூழ் வயலாலி வள நாடன் காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை–8-3-10-

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை–8-4-10-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து ஆர்வத்தால் அவர் புலம்பிய
புலம்பலை யறிந்து முன்னுரை செய்தn கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி–8-5-10-

கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத் திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி –8-6-10-

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு ஒலி –8-7-10-

கண்ண புரத் தடியன் கலியன் ஒலி -8-8-10-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள்–8-9-10-

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை–8-10-10-

————–

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த சொல் –10-1-10-

அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம்–10-2-10-

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்ற மன்னார் ஆடி யுய்ந்த குழ மணி தூரத்தை–10-3-10-

எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்–10-4-10-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை –10-6-10-

கடல் சூழ் கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும்-10-7-14-

அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-10-8-10-

வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த பாட்டிவை–10-9-10-

சுரும்பார் பொழில் மங்கையர் கோன் ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்–10-10-10-

—————

அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல்–11-1-10-

வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்–10-2-10-

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை-11-3-10-

வேலை புடை சூழ கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல் ஒழி கெழு பாடல்–11-4-10-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-

யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை–11-6-10-

மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே —11-8-10-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமொழி நூற்றந்தாதி–ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்-

March 26, 2021

ஸ்ரீ நம்மாழ்வார் ஆழ்வார்களில் பிரதானமானவர்.
திருமால் என்னும் உயிரான கருத்தின் விளக்கத்திற்கு வாய்த்த உடலாக இருப்பவர்.
அவருடைய நான்கு பிரபந்தங்கள் திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி என்பன.
இந்த நான்கும் அவர் மூலம் வெளிப்பட்ட நான்கு திராவிட வேதங்கள், தமிழ் மறைகள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் கூறும் கருத்து.
இதில் முக்கியமானது திருவாய்மொழி ஆயிரம் பாட்டுகள்.
இவருடைய திவ்ய பிரபந்தங்கள் உடல் என்றால் அந்த உடலுக்கு உறுப்புகளாக நின்று பொருள் விளங்க உதவும் நூல்கள்
திருமங்கையாழ்வார் என்னும் கலியன் அவர்களது ஆறு நூல்களாகும்.
பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என்பன.
மற்றைய ஆழ்வார்களின் நூல்களும் இவ்வாறு உறுப்புகள் என்ற நிலையில் கொள்ளப்படும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாம் எடுத்துக்கொண்டால், அதில் ஆயிரம் பாட்டுகளும் பத்து பத்துகளாகவும்,
ஒவ்வொரு பத்துக்கும் பத்து திருவாய்மொழிகளாகவும், ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் பத்து பாசுரங்களாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமின்றி ஒவ்வொரு பாசுரமும் முன்பின் பாசுரத்திற்கு அந்தாதி என்னும் தொடையில் அமைந்துள்ளது.
முதல் பாசுரமும் கடைசி, அதாவது பத்தாம்பத்து பத்தாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமும் அந்தாதியாக அமைந்துள்ளன.
அதாவது, உயர்வற என்று ஆரம்பித்து திருவாய்மொழி உயர்வே என்று முடிகிறது.

இதற்கு ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் அதன் சாரமான பொருளை உள் பொதிந்து ஒவ்வொரு வெண்பாவாக
அப்படி நூறு வெண்பாக்கள் பாடியிருக்கிறார் பெரிய ஜீயர் என்று வைணவ உலகம் குலவும் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
திருவாய்மொழி எப்படி அமைந்திருக்கிறது? அந்தாதியாகவன்றோ?
அப்படியே நூறு வெண்பாக்களும் அந்தாதித் தொடையில் அமையுமாறு பாடியுள்ளார் மாமுனிகள்.
முதல் வெண்பாவின் முதல் சொல் உயர்வில் ஆரம்பித்து நூறாவது வெண்பாவின் ஈற்றுச் சொல் உயர்வு என்று முடியவேண்டும்.
ஒவ்வொரு வெண்பாவிலும் மாறன் பெயர் வரவேண்டும். மையக்கருத்து இடம் பெற வேண்டும்.
அந்தத் திருவாய்மொழிக்கான முக்கியமான விளக்கக் குறிப்பும் உள்ளே பெய்திருக்க வேண்டும்.
ஈடு போன்ற பெரும் விளக்க உரைகளோடு உயிரான கருத்தில் நன்கு பொருந்துவதாய் அமைந்திருக்க வேண்டும்.
இத்தனை அம்சங்களும் பூர்ணமாய் நிறைய திருவாய்மொழி நூற்றந்தாதியை இயற்றியுள்ளார் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள்.
இதைச் சுருக்கமாக வெண்பாவில் ஈடு என்று சொல்லிவிடலாம். அவ்வண்ணம் நன்கு சிறப்புற அமைந்த துணை நூல் இதுவாகும்.
இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதிக்கு பிள்ளைலோகம் ஜீயர் என்பவருடைய அருமையான வியாக்கியானம் இருக்கிறது.
வெண்பாக்களும், வியாக்கியானமும் சேர்ந்து பெருங்கடலுக்குள் சிறு கடல் என்னும் ஆழமும் விரிவும் கொண்டு இலகுபவை.

பல நூற்றாண்டுகளாக வைணவத்தில் வரியடைவே கற்கப்படும் பனுவல் பயிற்சியான காலக்ஷேபம் என்னும் முறையில்
கற்கப்படும் நூலாகவும் இருந்து வருவது திருவாய்மொழி நூற்றந்தாதி.
வழிவழியாகப் பல வித்வான்களும், பக்தர்களும் திருவாய்மொழிக்கு இப்படி ஓர் அற்புதமான வெண்பாவில்
அந்தாதி அமைந்தது போல திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிக்கும் அமைந்திருந்தால்
நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்ததுண்டு.

அவ்வண்ணம் ஒரு முறை ஸ்ரீராமானுஜனில் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர்
அவ்வாறு பெரிய திருமொழிக்கு ஒரு நூற்றந்தாதி அமையாது போனதைக் குறித்து
வருத்தம் தெரிவித்ததைப் படித்தார் ஒரு தமிழறியும் பெருமாள்.
அவர்தான் திருக்குருகூர் வரி பாடிய திரு கே பக்ஷிராஜன், வழக்குரைஞர் அவர்கள். வைணவத்தில் ஆழங்கால் பட்டவர்.
அருமையான தமிழ்ப் புலமையும் இருக்கிறது. கூடவே திருமாலின் தண்ணருள், அடியாரின் ஆசி. கேட்க வேண்டுமா?
அற்புதமாகப் பாடியிருக்கிறார் திருமொழி நூற்றந்தாதி என்று. 16-11-1969ல் பரகாலன் பைந்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மொத்தம் இருபது பக்கங்கள். பெற்றவர்கள் எல்லாம் பெருநிதியம் பெற்றார்கள்தாம்.!

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியை ஆயிரம் பாட்டுகளாகப் பாடியிருந்தாலும் அவற்றை அந்தாதியாக அமைத்துப் பாடவில்லை.
ஆனால் பத்து பாசுரங்கள் ஒரு திருமொழி, பத்து திருமொழிகள் ஒரு பத்து அது போல் பத்து பத்துகள் என்று அமைப்புகள்.
ஒவ்வொரு திருமொழிக்கும் ஒரு வெண்பா என்று திரு பக்ஷிராஜன் ஸ்வாமி அந்தாதியாகவே பாடியிருக்கிறார்.
மாறன் செந்தமிழ் மாநாடு போன்று பரகாலன் பைந்தமிழ் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து
அதற்கு திரு பக்ஷிராஜன் அவர்களை ஏதாவது எழுத்துப் பங்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
திரு N S கிருஷ்ணன் என்பாரின் தூண்டுதல் இவருக்கு உற்சாகத்தை மூட்டியிருக்கிறது.

முன்னுரையில் எழுதுகிறார் –

“திருமங்கை மன்னன் கிருபையையும், ஸ்ரீமணவாள மாமுனி திருவருளையும் அவலம்பித்து,
ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகைகளையும் ஒவ்வொரு திருமொழிப் பருப் பொருளையும் பொதுவாக நோக்கி
அப்பொருளின் சாயையிலே வெண்பாவாக எழுத முற்பட்டேன்”

கடவுள் வாழ்த்திலேயே நல்ல நறுந்தமிழுக்கு அச்சாரம் போட்டுவிடுகிறார் திரு பக்ஷியார்.

மாலை வழி மறித்தே மந்திரங்கொள் வாட் கலியன்
கோலத் திரு மொழியால் கூறு பொருள் – ஞாலத்தார்க்
கந்தாதி யில் சுருக்கி ஆக்க முயல் பணியைச்
சிந்தாதே காத்திடுமத் தேவு.

மாறன் எனுமங்கி மற்றை யவன் அங்கமாக்
கூறும் குறையலூர்க் கொற்றவனாம் – வீறுடைய
நீலன் இருவரது நீள் பதங்கள் சூடுகின்றேன்
கோல வணியாகக் கொண்டு.

பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரின் முதல் திருமொழி ஆரம்பிக்கிறது.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

திருமொழி அந்தாதி பேசுகிறது –

வாடி வருந்துமுயிர் வாழ்வு பெறற் கேற்றவழி
ஏடுடைய எட்டெழுத்தே ஏத்துமென – நீடுலகத்
தின்பிலே நைந்த கலியன் இசை மொழிகள்
அன்புடனே தாமொழிந்த வால்.

அடுத்த திருமொழி ஆரம்பம்

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே

திருமொழி நூற்றந்தாதி பேசுகிறது –

வாலி மதனழித்த வல் வில்லி நம் வாழ்வு
கோலிப் பிரிதியிலே கூடினான் – கோல நெஞ்சே
கிட்டி வணங்கென்றே கலியன் கிளத்தினான்
முட்டி வரு பேரார்வ முற்று.

அடுத்த திருமொழி தொடக்கம்

முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே

திருமொழி நூற்றந்தாதி –

முற்ற மூத்து மொய் குழலார் முன்னின் றிகழாமுன்
பற்றிடுமின் தொண்டீர் பதரியுறை – நற்றவன் தன்
தாளை யவன் ஆயிரம் பேர் சாற்றி எனும் கலியன்
மீள வுரை தந்தே நமக்கு

இவ்வாறு போகிறது திருமொழி நூற்றந்தாதி.

ஏனமாய் மண்ணேந்தும் எம்மான் வதரியெனும்
தேனமரும் ஆச்சிரமம் சேர்ந்துள்ளான் – ஊனில்
நலி நெஞ்சே நாளும் தொழு தெழுகென்றே சொல்
கலியனுரை வேதக் கலை.

கலையொடுதீ ஏந்தியவன் சாபம் கழல
அலைகுருதி அன்போ டளித்தான் – நிலவிடுசீர்ச்
சாளக் கிராமமே சாருமெனும் நீலனெனும்
வாளுழவன் சொல் வினைக்கு வாள்.

__________________

வாணிலவு மாதர் நகை தப்பி நிமி வனத்தே
சேணுயர் வான் சேவடியே சேர்தி யெனப் – பேணு நெஞ்சை
மங்கையர்கோன் சொன்ன மறைபேணின் நம்மைவினை
அங்கணுகா மாநிலத்தங் கண்.

__________________

அங்க ணரியாய் அவுணனுடல் கீண்டானைச்
சிங்கவேள் குன்றதனில் சேவித்தே – பொங்குமுளத்
தொள்வாள் கலியன் உரை தேர்ந்து நஞ்சென்னி
கொள்வமவன் பாதமலர்க் கொங்கு

__________________

கொங்கலரும் சோலைக் குளிர்வேங் கடமலையே

இங்கடைவாய் நெஞ்சென் றிதமுரைத்து – மங்கையர்கோன்

செஞ்சொலால் சொன்ன திருமொழியே நந்தமக்குத்

தஞ்சமவன் நங்களுக்குத் தாய்.

__________________

தாய்தந்தை மக்களொடு தாரமெனும் நோய்தவிர்ந்தேன்

வேயுயரும் வேங்கடமே மேவினேன் – மாயா

புவியிலெனை ஆட்கொள் எனப்புகன்ற நீலன்

கவிநமக்கு வாழ்வருளும் கண்

__________________

கண்ணார் கடலை அடைத்தானை வேங்கடத்தே
நண்ணி இடர் களைந்து நல்கெனவே – பண்ணால்
வணங்கியே வேண்டிடுமொள் வாட் கலியன் சொல்லால்
வணங்குவர் ஏறிடுவர் வான்.

———————————–

ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ
பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ
நேயத்தே பித்தளை நற் செம்புகளால் ஆகாதோ
மாயப் பொன் வேணுமோ மதித்து உன்னைப் பேணுகைக்கே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு கே பக்ஷிராஜன்- திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ -கலியன் ஒலி – சப்தம் இல்லாத சாற்றுப் பாசுரங்கள் –

November 16, 2020

கலி கன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை -1-1-10-

திருவேம்கடத்துறை செல்வனை மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்-1-8-10-

வேங்கட வேதியனை திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்து-1-9-10-

வேங்கட மா மலை மேய மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை -1-10-10-

கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல்-2-1-10-

எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும்-2-2-10-

திருவல்லிக்கேணி நின்றானை கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்து-2-3-10-

கடல் மல்லை தல சயனத்துத் தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
திடமாக விவை யைந்தும் ஐந்தும்-2-5-10-

அட்டபுயகரத்து ஆதி தன்னை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை-2-8-10-

பரமேச்வர விண்ணகர் மேல் கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன்
கலி கன்றி குன்றாதுரைத்த சீர் மன்னு செந்தமிழ் மாலை -2-9-10-

தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி
விரித்து உரைத்த பாவு தண் தமிழ் பத்திவை-3-1-10-

சித்திர கூடம் அமர்ந்த– ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் தானிவை –3-3-10-

காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை சங்க முத்தமிழ் மாலை பத்து–3-4-10-

வயலாலி கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை –3-6-10-

வைகுந்த விண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல்
துணிய வாள் வீசும் பரகாலன் கலி கன்றி சொன்ன சங்கமலி தமிழ் மாலை பத்து இவை — –3-9-10-

திருத் தேவனார் தொகை மேல் கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும்-4-1-10-

வண் புருடோத்தமத்துள் ஆலி மன் அருள் மாரி பண்ணுளார் தரப்பாடிய பாடல் இப்பத்து -4-2-10-

செம் பொன் செய் கோயிலினுள்ளே வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையர்
வாள் கலி கன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் –4-3-10-

திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் -4-4-10-

நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன பாவளம் பத்து-4-6-10-

திரு வெள்ளக் குளத்து உறைவானைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-4-7-10-

நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்து-4-8-10-

புள்ளம் பூதங்குடி தன் மேல் கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை -5-1-10-

கூடலூர் மேல் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பா–5-2-10-

திரு வெள்ளறை அதன் மேய அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்–5-3-10-

அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும்-5-4-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் பத்திவை-5-8-10-

திருப்பேர் வரிவரவு அணையில் பள்ளி கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை-5-9-10-

விண்ணகர் மேல் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை -6-1-10-

நறையூர் தொழு நெஞ்சமே என்ற கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்-6-4-10-

திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப் பொய்ம்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன்
புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல் -6-6-10-

திருநறையூர் நின்றானை வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்து-6-9-10-

நறையூர் நின்ற நம்பியைக் கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை-7-2-10-

மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை பாடல் பத்திவை-7-3-10-

அழுந்தூர் நின்றானை வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை -7-5-10-

தென் அழுந்தையில் மன்னி நின்ற அறமுதல் ஆனவனை யணி யாலியர் கோன் மருவார்
கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்-7-6-10-

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன்
மங்கைக் குல வேந்தன் சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை-7-7-10-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை-7-10-10-

கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும்-8-1-10-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை-8-2-10-

திருக் கண்ண புரத் துறையும் வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை நா மருவி யிவை -8-3-10–

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் -8-9-10-

நாகை யழகியாரை கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் -9-2-10-

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் -9-5-10-

திருக் குறுங்குடி சேருவதே பயன்
இலங்கை பாழாளாகப் படை பொருதவன் -பெரிய பிராட்டியாரை இடைவிடாமல் அனுபவிக்கச் செய்தேயும்
என் பக்கல் விருப்பம் செய்து என்னுடன் சேர்ந்து கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இலக்காக்கி அருளி
ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல் இங்கே நித்ய வாசம் செய்து அருளும் திருக் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
காமரு சீர் கலியன் -என்னை -என்று சொல்வதால் -பரகால நாயகி – வேறே வ்யக்தி போலே-

திரு மாலிருஞ்சோலை நின்ற ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன பாடல் பனுவல் பத்து–9-9-10-

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில் சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந் நாலும் ஆறும்–9-10-10-

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த சொல்-10-1-10-

இலங்கை யழித்தவன் தன்னைப் பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம்-10-2-10-

எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை-10-4-10-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

நிகமன பாசுரத்திலும் வழக்கத்துக்கு மாறாக யசோதை பாவனை தொடருகிறது
என் நெஞ்சிலே போலேவே திரு மங்கை ஆழ்வார் திரு உள்ளத்திலும் குடி கொண்டு இருக்கும் திருமாலே
சப்பாணி கொட்ட வேணும் -என்று யசோதை பிராட்டி சொல்வதாகவே அமைந்துள்ளது
இப்படிப் பட்ட பிரார்த்தனையே பயன் என்று ஸூசிப்பித்து வேறு பயன் சொல்லாமல் தலைக் கட்டி அருளுகிறார்-

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே -10-7-14-

அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-10-8-10-

அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே -11-1-10-

வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை
மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்–11-2-10-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

ஷீராப்தி நாதனே
திரு வேங்கடத்தானே
ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாசம் செய்து அருளி பரத்வ சௌலப்ய திருக் கல்யாண குணங்களைக் காட்டி அருளினவன்
இவரைப் பெறவே அங்கு எல்லாம் இருந்து வந்தவன் -பரம உத்தேச்யம்
இது சித்தித்து விட்டால் அங்கு ஆதாரம் மட்டமாய் விடுமே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவமே
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்தகம் -பெரிய திருவந்தாதி
குணாநுபவம் செய்வதே பரம போக்கியம் என்பதால் பல சுருதி தனியாக அருளிச் செய்ய வில்லை-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-11-8-10-

விளக்கின் முன் இருள் போலே
காட்டுத் தீயின் முன் பஞ்சுத்துப் போலேயும்
இத் திருமொழி ஒதுகையாகிய ஞானத்துக்கு முன் வினைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் —

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை –
ரஷ்ய வர்க்கம் ஏதேனும் ஒரு படி நின்றாலும் ரஷணம் தான் மிறுக்கு உடைத்தான் ஆகையாலும்
ஒரு குறைகள் வாராது காணும் -என்று
அதுக்கு உடலாகத் தான் கோவர்த்தன உத்தாரணம் பண்ணின படியைக் காட்டி அருளினான்

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும் வாசனையோடு கழியும் படி
அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டி அருளினான் –

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியாழ்வார்-பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல் பதிகம் -2-9–/ ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் — வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே – பதிகம்-10-6-/களவு காணும் பருவமாய் இருக்கிற படியை அனுசந்திக்கும் பதிகம்-10-7–

June 30, 2020

ஸ்ரீ திருவரங்கத்தில் பகல் பத்து முதல் நாள் திருப்பல்லாண்டு தொடங்கி –
இந்த பண்டு அவன் செய்த க்ரீடை பதிகம் வரை முதல் நாள் அரையர் சேவை உண்டு

அவதாரிகை
கீழ் பூ சூட்டி -காப்பிட்டு -தனக்கு வசவர்த்தியாக்கி -தன் அருகே இவனை உறக்கி -நிர்ப்பரையாய் –
மாதாவான யசோதை பிராட்டி தானும் உறங்கி -உணர்ந்து -தன்னுடைய கரஹகார்யா பரவசையாய் வ்யாபரியா நிற்க
இவனும் உணர்ந்து போய் -ஊரில் இல்லங்களிலே புக்கு –
அங்குண்டான வெண்ணெய்களை விழுங்கி –
அவை இருந்த பாத்ரங்களை உருட்டி -உடைத்து –
காய்ச்சி வைத்த பாலை சாய்த்து பருகி –
அவர்கள் சமைத்து வைத்த பணியாரங்கள் முதலானவற்றை நிச்சேஷமாக எடுத்து ஜீவித்து –
சிறு பெண்ணை அழைத்து -அவள் கையில் வளையலை கழற்றிக் கொண்டு போய் –
அத்தை கொடுத்து நாவல் பழம் கொண்டு –
இப்படி தீம்புகள் செய்கையாலே -அவ்வவ க்ரஹங்களில் உள்ளார்கள் தனித்தனியே வந்து முறைப்பாட்டு –
உன் பிள்ளையை இங்கே அழைத்துக் கொள்ளாய் -என்ற பிரகாரத்தையும் –

இவளும் இவர்கள் சொன்ன அனந்தரத்திலே இவனை இங்கே அழைத்துக் கொள்கைக்காக
பல காலும் இவனை ஸ்தோத்ரம் பண்ணுவது –
உன்னை பிறர் சொலும் பரிபவம் எனக்கு பொறுக்க போகிறது இல்லை -வாராய் -என்பதாய்-இப்புடைகளிலே
பலவற்றையும் சொல்லி இவனை அழைத்த பிரகாரத்தையும்
தத் அவஸ்தா பன்னராய் கொண்டு பேசி
முன்பு அவன் செய்த க்ரீடைகள் எல்லாவற்றையும் அனுபவித்து ஹ்ர்ஷ்டராகிறார் -இத்திருமொழியில்

——————————————————–
முதல் பாட்டு –
ஊரில் ஸ்திரீகளில் சிலர் தங்கள் கிருஹங்களிலே இவன் செய்த தீம்புகளை
தாயாரான ஸ்ரீ யசோதை பிராட்டிக்கு வந்து சொல்லி
அவனை நீ இங்கு அழைக்க வேணும் என்ற படியை சொல்லுகிறது

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான் மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 – –

அண்ணற்கு அண்ணான் -தமையான பல ராமனுக்கு சேஷ்டித்தால் ஒத்து இராதவனாய் -தூரஸ்தன்
பிரான் -உபகாரகன் -இது வெறுத்து சொல்லும் வார்த்தை அபகாரகன் -என்று -விபரீத லக்ஷணையால் பொருள் –

வெண்ணெய் விழுங்கி —
கடைந்து எடுத்த தாழிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை நிச்சேஷமாக களவிலே விழுங்கி –
அவ்வளவும் இன்றிக்கே –
வெறும் கலத்தை வெற்ப்பிடை இட்டு
அது இருந்த பாத்தரத்தை கல்லிலே இட்டு உடைத்து
வெண்ணெய் தான் விழுங்கினான் ஆகிறான் -வெறும் கலங்களை வெற்ப்பிடை இட்டு உடைக்குமோ –

இத்தால் இவனுக்கு பிரயோஜனம் என் என்ன –
அதனோசை கேட்கும் –
அது உடைகிற போதை ஓசை கேட்கை ஆய்த்து இவனுக்கு பிரயோஜனம் –
அதுக்காக செய்யும் என்ன –
ஆனால் உங்கள் க்ரஹங்களை இவனுக்கு புகுர அவகாசம் இல்லாத படி அடைத்து நோக்கிக் கொள்ளும் கொள்-என்ன –

கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்ககில்ளோம்-
கிருஷ்ணான உபகாரகன் கற்ற க்ரித்ரிம வித்யையை நாங்கள் காக்க மாட்டுகிறிலோம்
எல்லாருடைய களவும் காக்கலாம் -இவனுடைய களவு எங்களால் காக்கப் போகாது என்கை-
பிரான் என்கிறது வ்யதிரேக உக்தி -சர்வஸ்வ அபஹாரி என்கிறபடி –
உந்தம் க்ரஹங்களை நீங்கள் காக்க மாட்டி கோள் ஆகில் ஆர் காப்பார் என்ன –

உன் மகனை காவாய் –
உன்னுடைய பிள்ளையை நீ காத்து கொள்ளுவுதி யாகில் எல்லாம் காவல் படும்
நீ அத்தை செய்யாய் என்றவாறே
சிறு பிள்ளைகள் தீம்புகளை செய்யார்களோ –
அவன் அறியாமல் ஏதேனும் சில செய்தது உண்டாகில் நீங்களும் சற்று பொறுக்க வேண்டாவோ –
இப்படி அலர் தூற்றலாமோ என்ன –

புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை –
புண்ணிலே புளியை குறந்திட்டால் கரிக்குமா போலே துஸ்ஸகமான தீமைகளை செய்யா நின்றால் எங்கனே பொறுப்பது –
நீங்கள் ஓரகத்தில் உள்ளார் அன்றோ இப்படி சொல்லுகிறிகோள்
உங்கள் ஓரகத்திலும் இப்படி நின்று இவன் தீம்புகளை செய்கிறான் ஆகாதே என்ன –
எங்கள் அகம் ஒன்றிலும் அன்று –

புரை புரையால் இவை செய்ய வல்ல –
அகம் தோறும் இப்படி இருந்துள்ள தீமைகளை செய்ய வல்லவன் காண் இவன் என்கிறார்கள் –
புரையாவது -க்ரஹம்-வீப்சையால் அகம் தோறும் என்றபடி -ஆல்-அசை

அண்ணல் கண்ணான் –
அண்ணல் என்றது ஸ்வாமி வாசகம்
அண்ணல் கண்ணான் என்றது ஸ்வாமித்வ சூசுகமான கண்ணை உடையவன் என்றபடி –
இத்தால் இவ்விடத்தில் ஸ்வாமி என்றது -க்ரித்ரிமர்க்கு தலைவன் என்றபடியாய்
இதுக்கு பிரகாசமான கண்ணை உடையவன் என்றது ஆய்த்து –
அன்றிக்கே –
அண்ணற்கு என்றது அண்ணனுக்கு என்றபடியாய்
அண்ணான் என்றது -அண்ணியன் ஆகாதவன் என்றபடியாய்
இப்படி தீம்புகளை செய்கையாலே
தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான் -என்கிறபடியே
சாதுவாய் திரியும் நம்பி மூத்த பிரானுக்கும் தனக்கும் ஒரு சேர்த்தி இல்லாதவன் என்னவுமாம் –

ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் –
இப்படி அத்விதீயனான பிள்ளையை பெற்ற பூர்த்தியை உடையவளே
உன் மகனைக் கூவாய் –
இப்படி தீம்புகளை செய்து திரியாமே உன் மகனை உன் பக்கலிலே அழைத்து கொள்ளாய்-

————————————————-

இரண்டாம் பாட்டு
இப்படி இவர்கள் சொன்ன அநந்தரம் ஸ்ரீ யசோதை பிராட்டி தன் புத்ரனானவனை
அழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது –

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசலகத்தார்
பரிபவம் பேச தரிக்க கில்லேன் பாவியேன் உனக்கு இங்கே போதராயே -2 9-2 –

வாமன நம்பீ –
குறள் பிரமச்சாரியாய் கொண்டு -அபிமதம் பெற்று பூரணன் ஆனவனே
நங்காய் -உன் மகனை புகழ்ந்து அழைக்கிறாய் அல்லது அச்சம் உறும்படி கடிந்து
பேசுகிறது இல்லையே -என்று என்னை பொடிகிற நங்காய்
பரிபவம் பேச -கள்ளன் தீம்பன் என்றால் போலே உன்னை பரிபவித்துப் பேச
பாவியேனுக்கு—உன் மேல் ஊரார் தூரேற்றக் கேட்க்கும் படியான பாபத்தைப் பண்ணின
என் மனக் கவலை தீரும்படி

வருக வருக வருக இங்கே –
அங்கே இருந்து தீம்புகளை செய்து -கண்டார் வாயாலே பரிபவம் கேளாதே –
இங்கே வா என்கிறாள் -வருக என்றது வா என்றபடி –
அவன் கடுக வருகைக்காக பல காலும் சொல்லுகிறாள் –
இப்படி அழைத்த இடத்திலும் வாராமையாலே –

வாமன நம்பீ வருக இங்கே –
நீ வாமன நம்பீ அன்றோ -ஆஸ்ரித ரஷணம் செய்யும் குண பூர்த்தியை உடைய நீ இங்கே வாராய் -என்கிறாள் –
அவ்வளவிலும் வாராமையாலே –

கரிய இத்யாதி –
கறுத்த திருக் குழலையும் -சிவந்த திருப் பவளத்தையும் -உபமான ரஹிதமாய் கொண்டு
இரண்டுக்கும் நடுவே விளங்கா நின்ற திரு முகத்தை உடையவனாய் –
மாதா பிதாக்கள் சொல்லிற்று செய்யும் குண பூர்த்தியை உடைய காகுத்தன் அன்றோ நீ –
இங்கே வாராய் என்ன –
முறைப்பட்டு வந்து நின்றவர்களில் ஒருத்தி -அஞ்ச உரப்பாள் யசோதை -என்கிறபடியே
நீ நியமியாமல் கொள் கொம்பு கொடுத்து அன்றோ -இப்படி இவன் தீம்பிலே தகண் ஏற வேண்டிற்று –
இப்போது இவனை புகழ்ந்து கொண்டு -அழைக்கிறாய் இத்தனை போக்கி நியமித்து
ஒரு வார்த்தை சொல்லுகிறது இல்லையே என்ன –

அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் -என்கிறாள் –
பிள்ளை பெற்று சிநேகித்து வளர்த்து போரும் பூர்த்தியை உடையவளே –
இவன் எனக்கு இன்று பெறுவதற்கு அரியவன் அன்றோ –
இப்படி இருக்கிறவனை நான் கருக நியமிக்க மாட்டேன் -என்கை
இப்படி இவள் சொன்னதற்கு உத்தரம் சொல்லி -மீளவும் தன பிள்ளையானவனைக்
குறித்து பரிபவம் பொறுக்க மாட்டாமையால் வந்த தன் க்லேசத்தை சொல்லி அழைக்கிறாள்-

அஞ்சன வண்ணா –
கண்டவர்கள் கண் குளிரும்படி -அஞ்சனம் போன்ற திரு நிறத்தை உடையவனே

அசலகத்தார் பரிபவம் பேச தரிக்க கில்லேன் –
அசலகத்தார் ஆனவர்கள் -கள்ளன்-தீம்பன் -என்றால் போலே உன்னை பரிபவங்கள் சொல்லக் கேட்டு
பொறுக்க மாட்டுகிறிலேன்
பாவியேனுக்கு இங்கே போதராயே
இச் சொலவுகள் கேட்க்கும் படியான பாபத்தை பண்ணின எனக்கு இந்த க்லேசம் தீரும்படி இங்கே வாராய்-

—————————————–

மூன்றாம் பாட்டு –
முன்புத்தை அவர்களை ஒழிய -வேறு சிலர் வந்து தங்கள் க்ரஹத்திலே அவன் செய்த
தீம்புகளை சொல்லி -இப்படி அருகிருந்தாரை அநியாயம் செய்யலாமோ –
உன் பிள்ளையை உன் பக்கலிலே அழைத்துக் கொள்ளாய் என்ற
பிரகாரத்தை சொலுகிறது –

திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிச்சி உடைத்திட்டு போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான் வழக்கோ யசோதாய்
வருக என்று உன் மகன் தன்னை கூவாய் வாழ ஒட்டான் மது சூதனனே -2 9-3 – –

தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையன் –
தீம்புகள் செய்யும் வகைகிளில் சிறிதேனும் தேங்குதல் இல்லாதவனாய் –
அது தன்னையே தனக்கு தேஜஸ்ஸாக உடையனாய் இரா நின்றான்
உறிச்சி-உறிஞ்சி
வாழ ஒட்டான் மது சூதனனே –
முன்பு விரோதியான மதுவை நிரசித்தவன் -இப்போது தானே விரோதியாய் நின்று –
எங்கள் குடி வாழ்ந்து இருக்க ஒட்டுகிறிலன்

திரு உடைப் பிள்ளை –
ஐஸ்வர்யத்தால் குறைவற்றவன் என்கை -இத்தால்
ஸ்வ க்ரஹத்தில் ஜீவனம் அற்று வயிறு வாழாமல் செய்கிறான் அன்றே
செல்வக் கிளர்ப்பாலே செய்கிற தீம்புகள் இறே இவை என்கை

தான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் –
தான் தீம்பு செய்யும் பிரகாரங்களில் -தன் பிறப்பையும் ஐஸ்வர்யத்தையும் பார்த்து –
நாம் இத்தை செய்யும்படி என்-என்று தேங்குதல் அல்பமும் உடையவன் அல்லன் –
தடை அற செய்யா நிற்கும் என்கை
தேசுடையன் –
தேக்கம் இல்லாத அளவேயோ -இது தன்னையே தனக்கு தேஜசாய் உடையனாய் இரா நிற்கும்
இத்தால் –
பிறர் சொலும் பழிச் சொல்லுக்கு அஞ்சான் என்கை –
இப்படி நீங்கள் சொல்லுகைக்கு இவன் தான் செய்தவை என் என்ன –

செய்தவற்றில் ஒன்றை சொல்லுகிறாள் -உருக -இத்யாதி
உருக்குவதாக வைத்த பாத்ரத்தோடே-வெண்ணெயை உறிஞ்சி -பாத்ரத்தையும் உடைத்து –
தான் அல்லாதாரைப் போலே இவ்வருகே போந்து நில்லா நின்றான் –
அருகு இத்யாதி –
உன் அயலிலே குடி இருந்த எங்களை -உன் பிள்ளையை கொண்டு வேண்டிற்று செய்கிறது
இது தான் நியாயமோ

யசோதாய் வருக என்று உன் மகன் தன்னை கூவாய் –
உன்னுடைய பிள்ளையானவனை-இங்கே நின்று இன்னமும் தீம்புகளை செய்யாமல் உன் அருகே வா
என்று அழைத்துக் கொள்ளாய் –
வாழ ஒட்டான் மது சூதனனே –
நீ இது செய்யாய் ஆகில் எங்களை அவன் குடி செய்து குடி வாழ்ந்து இருக்க ஒட்டான் காண்-என்கை
மது சூதனன் -என்றது முன்பு விரோதி நிரசனம் செய்து போந்தவன் இப்போது
தான் விரோதியாய் நின்று நலியா நின்றான் என்கிற வெறுப்பாலே –

———————————————

நான்காம் பாட்டு –
வருக என்று உன் மகன் தன்னை கூவாய் -என்றவாறே
இவள் அவனை ஸ்துதி பூர்வகமாக அழைக்க –
அவனும் ப்ரீதனாய் ஓடி வந்து –
அகத்திலே புகுர –
இவள் எதிரே சென்று எடுத்துக் கொண்ட படியை சொல்லுகிறது

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம்புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே -2 9-4 – –

தெண் திரை சூழ்—நிர்மலமான அலைகளை உடைய புனலாலே சூழப்பட்ட
இங்கே போதராயே -இங்கே அம்மம் உண்ண வா என்று பஹுமாநித்து அழைக்க
அம்மம் -என்பது முலைப்பாலுக்கும் அன்னத்துக்கும் பர்யாய நாமம் -அடைய வளைந்தான்
கொண்டல் இத்யாதி –
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவனே
அங்கு நின்று இங்கே போதராயே
போதராய் -என்றது வாராய் என்றபடி
கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
கொண்டல் வண்ணன் வெண்ணெய் உண்ட வாயன் -என்னும்படி
ஸ்ரீ கோவிலிலே வசிக்கிற பிள்ளை யானவனே இங்கே போதராயே

தெண் திரை இத்யாதி –
தெளிந்த திரைகளை உடைத்தான புனலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருப் பேரிலே கண் வளர்ந்த ஸ்ரீ மானான
நாராயணனே -இங்கே அம்மம் உண்ணப் போதராயே –
உண்டு இத்யாதி –
இப்படி ஸ்துதி பூர்வகமாக அவள் அழைத்தவாறே -கிட்டே வந்து அம்மம் உண்டு வந்தேன் காண் –
என்று சொல்லி ஓடி வந்து அகத்திலே புகுந்து –
தாயாரான இவளும் இவன் வந்த வரத்தையும் முகத்தில் பிரசன்னத்தையும் கண்டு
ப்ரீதையாய் எதிரே சென்று எடுத்து கொள்ள
கண்ண பிரான் அவன் கற்ற கல்வி இருந்தபடியே -என்று ப்ரீதர் ஆகிறார்

அன்றிக்கே –
ஆய்ச்சி தானும் கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ள என்றது –
பிறர் சொல்லுமா போலே தன் செயலை தானே சொன்னபடியாய்-அம்மம் உண்ண வர வேண்டும் என்று அழைத்தால் –
அருகே வந்து நின்று -வேணும் வேண்டா -என்ன அமைந்து இருக்க –
உண்டு வந்தேன் அம்மம் என்ற படியும் -ஓடி வந்து உள்ளே புகுந்த படியும் –
அந்த உக்தி வர்த்திகளைக் கொண்டு வித்தையாய் –
தாயாரான தானும் -முன் தான் செய்த தீம்புகளை மறந்து -எதிரே வந்து எடுத்துக் கொள்ளும்படியாக பண்ணின படியும் –
இவை எல்லாம் அனுசந்தித்து -கண்ண பிரான் கற்ற கல்வி தானே -என்று
ஒருவன் கற்ற கல்வி இருந்தபடியே-இப்பருவத்தில் இத்தனை விரகு எல்லாம் இவன் அறிவதே –
என்று தன்னில் ஸ்லாகித்து ப்ரீதையாகிறாள் என்று யோஜிக்கவுமாம்
இப்படி ஆனபோது பூர்வோத்தார்தங்கள் சேர்ந்து கிடக்கும் –

————————————-

ஐந்தாம் பாட்டு –
இப்படி க்ரஹத்தில் வந்து புகுந்து -இவளை உகப்பித்து நின்று -அவன் முன்பு போலே அசலகங்களிலே
போய் தீம்புகளை செய்ய -அதிலே ஒருத்தி வந்து தன் அகத்திலே அவன் செய்த தீம்புகளை சொல்லி
முறைபட்டு -உன் மகனை இங்கே அழைத்துக் கொள்ளாய் என்ற படியை சொல்லுகிறது –

பாலைக் கறந்து அடுப்பேற வைத்து பல் வளை யாள் என் மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9- 5-

பாலைக் கறந்து –
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களினால் உண்டான பாலை எல்லாம் கறந்து –
அடுப்பேற வைத்து –
அந்த பாலை எல்லாம் காய்ச்சுகைக்காக மிடாக்களோடும் தடாக்களோடும் அடுப்பிலே ஏற்றி வைத்து
பல் வளை யாள் என் மகள் இருப்ப
பல் வளைகளையும் உடையாளான என் மகள் இதுக்கு காவலாக இரா நிற்க
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று –
உன் அகத்துக்கு மேலையான அகத்திலே இது காய்ச்சுகைக்கு நெருப்பு எடுத்து கொள்வதாகப் போய்
இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
ஷண காலம் அங்கே அவர்களோடே வார்த்தை சொல்லி நின்றேன்
இதுவே அவகாசமாக
சாளக்ராமம் இத்யாதி –
ஸ்ரீ சாளக்ராமத்தில் நித்யவாசம் செய்கிற பூரணன்
அபூர்ணனைப் போலே அத்தனை பாத்ரங்களையும் மறித்து பருகி -தான் –
அல்லாதாரைப் போலே இடைய போந்து நில்லா நின்றான்
ஆலைக் கரும்பு இத்யாதி –
ஆடுகைக்கு பக்குவமான கரும்பு போலே இனிதாய் இருக்கிற மொழியையும் பூர்த்தியையும் உடையவளே
உன் மகனைக் கூவாய் –
உன் பிள்ளை யானவனை -அங்கு நின்று தீமை செய்யாதே உன் பக்கலிலே வரும்படி விரைந்து அழையாய்

—————————————————

ஆறாம் பாட்டு
அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -என்றவாறே தன் மகனை
இவள் அழைத்த படியை சொல்லுகிறது

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

போதரு -என்கிற இது போதர் என்று கிடக்கிறது
போதர் கண்டாய் இங்கே –
அங்கே நின்று தீம்பு செய்யாதே இங்கே போரு கிடாய் –
போதர் என்ற இது போதரு என்றபடி
போதர் கண்டாய்
இவள் கடுக வருகைக்காக மீளவும் ஒருக்கால் சொல்லுகிறாள் –
இப்படி இவள் அழைக்கச் செய்தே -அவன் வர மாட்டேன் என்ன –
போதரேன் என்னாதே போதர் கண்டாய் –
வாரேன் என்னாதே வா கிடாய் என்கிறாள்
என் செய்யத்தான் நீ இப்படி நிர்பந்தித்து அழைக்கிறது என்ன –

ஏதேனும் சொல்லி அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –
அசலகத்தானவர்கள் உன் விஷயமாக வாசாமகோசரமான தோஷங்களை தங்களிலே சொல்லி –
அவ்வளவும் அன்றிக்கே –
என் பக்கலிலே வந்து என் செவியால் கேட்கவும் வாக்கால் சொல்லவும் ஒண்ணாதவற்றை
சொல்ல நான் கேட்டு இருக்க மாட்டேன்

கோதுகுலமுடைய குட்டனே ஒ
எல்லாரும் கொண்டாடும்படி சீரை யுடைய பிள்ளாய்
இப்படி இருந்துள்ள நீ எல்லாரும் பழிக்கும்படி ஆவதே என்று விஷண்ணையாய் ஒ என்கிறாள்-
குன்று எடுத்தாய் –
கோக்களையும் கோப குலத்தையும் கோவர்த்தன கிரியையும் எடுத்து ரஷித்தவனே
குடமாடு கூத்தா –
கோ ச்ம்ரத்தியால் வந்த ஐஸ்வர்ய செருக்குக்கு போக்கு வீடாக
குடக்கூத்து ஆடினவனே-குடம் எடுத்து ஆடின கூத்தை உடையவன் -என்றபடி –
இவ்விரன்டாலும் இக்குலத்துக்கு ரஷகனாய் -இக்குலத்தில் பிறப்பால் வந்த
ஐஸ்வர்யமே உனக்கு ஐஸ்வர்யம் என்று நினைத்து இருக்குமவன் அன்றோ
நீ இதுக்கு ஈடாக வர்த்திக்க வேணும் காண் – என்கை –

வேதப் பொருளே –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே சகல வேத பிரதிபாத்யன் ஆனவனே
என் வேம்கடவா –
அப்படி சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே -கண்ணாலே காணலாம்படி
வானோர்க்கும் வைப்பான திரு மலையிலே இரண்டு விபூதியில் உள்ளாரையும்
ஒரு துறையிலே அனுபவித்து கொண்டு என்னுடையவன் என்னும்படி நிற்கிறவனே
வித்தகனே
இப்படி நிற்கையாலே விஸ்மயநீயன் ஆனவனே
இங்கே போதராயே –
உன்னுடைய குணஹானி சொல்லுவார் வர்த்திக்கிற இடத்தில் நின்றும்
உன் குணமே பேசா நிற்கும் நான் இருக்கிற இடத்தில் வாராய் –

————————————–

ஏழாம் பாட்டு –
வித்தகனே இங்கே போதராயே -என்று இவள் அழைத்த இடத்தில் வாராமல் –
வேறு ஓர் அகத்தில் போய் புக்கு -அவர்கள் வ்ரதார்தமாக சமைத்து வைத்த
பதார்த்தங்களை அடைய ஜீவிக்கையாலே -ஒருத்தி வந்து அத்தைச் சொல்லி
முறைப்பட்டு -உன் மகனை அழைத்து கொள்ளாய் என்ற படியைச் சொல்லுகிறது-

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்கார நறு நெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இப்பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே – 2-9 7-

செந்நெல் இத்யாதி –
உர நிலத்திலே -ஸார ஷேத்ரம் -பழுதற விளைந்து சிவந்து சுத்தமான செந்நெல் அரிசியும் –
அப்படிப்பட்ட நிலத்தில் விளைந்த சிறு பயறு நெரித்து உண்டாக்கின பருப்பும் –
பாக தோஷம் வாராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச் செய்த கறுப்புக் கட்டியும் –
நல்ல பசுவின் பாலாய் -நால் ஒன்றாம்படி காய்ச்சித் தோய்த்து செவ்வி குன்றாமல் கடைந்து உருக்கின நெய்யும்
நல்ல பசுக்களில் கறந்த பாலும் ஆகிற இவற்றினாலே –

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் –
பன்னிரண்டு திருவோணம் வ்ரதாங்கமாக பாயாசபூபங்கள் சமைத்தேன் –
பண்டு இப்பிள்ளை பரிசு அறிவன்
முன்பும் இப்பிள்ளை பிரகாரம் அறிவன்
அதாவது -திருவோண வ்ரதத்துக்கு என்று ஆரம்பித்து -இவை சமைத்த போதே –
இவனும் தீம்பிலே ஆரம்பித்து -தேவார்ச்சனம் செய்வதற்கு முன்பே இவற்றை வாரி ஜீவித்து விடும் -என்கை –
இப்போதும் அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –
இத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி –
அதிலும் த்ருப்தி பிரவ்பாமல் -இன்னமும் வேண்டி இருப்பன் நான் என்று சொல்லி –
போந்து நின்றான் –
அந்ய பரரைப் போலே அங்கு நின்றும் விடப் போந்து நில்லா நின்றான் –

உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –
யசோதை பிராட்டீ-அங்கு நின்று தீமை செய்யாமல் -உன்னுடைய பிள்ளையை
உன் பக்கலிலே அழைத்துக் கொள்ளாய் –
இவையும் சிலவே –
பிள்ளை பெற்றார்க்கு பிள்ளை தீம்பு செய்யாமல் பேணி வளர்க்க வேண்டாவோ –
இவையும் சில பிள்ளை வளர்க்கையோ –

—————————————–

எட்டாம் பாட்டு –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் –என்றவாறே
தன் மகனை அவள் அழைத்த பிரகாரத்தை சொல்லுகிறது-

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- – –

கேசவனே இங்கே போதராயே –
பிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை
அழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்
இப்படி இவள் அழைத்த இடத்தில் –
நான் இப்போது வர மாட்டேன் -என்ன –

கில்லேன் என்னாது இங்கே போதராயே –
மாட்டேன் என்னாதே இங்கே வாராய் -என்கிறாள்
நான் இங்கு சற்று போது இருந்து விளையாடி வருகிறேன் -என்ன –

நேசம் இத்யாதி –
விளையாடும் போதைக்கு உனக்கு வேறு இடம் இல்லையோ –
உன் பக்கல் சிநேகம் இல்லாதார் அகத்தில் இருந்து நீ விளையாடாதே இங்கே வாராய்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும் –
இவ்வளவேயோ -இடைச்சிகளுக்கு அடிச்சிகளாய் போருகிறவர்களும்
இடையருக்கு அடியாராய் போருகிறவர்களும்
உனக்கு சொல்லுகிற தூஷணங்களுக்கு ஓர் அவதி இல்லை காண் –
அவர்கள் நின்ற இடத்தில் நில்லாதே போராய் –
இப்படி சொன்ன இடத்திலும் அவன் வாராமையாலே

தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்- என்று இரக்கிறாள்
பெற்ற தாய் வசனம் கொள்ளுகை பிள்ளைகளுக்கு தர்மம் காண்
நீ தான் பிறந்த போதே -மாதா வசன பரிபாலனம் பண்ணினவன் அன்றோ –
சதுர்புஜ ரூபோப சமஹரனத்தை-திரு உள்ளம் பற்றி அருளி செய்கிறார் –
தாமோதரா –
கயிற்றை விட்டு வயிற்றிலே கட்டலாம்படி எனக்கு தான் முன்பு பவ்யனாய் இருந்தவனும் அன்றோ –
இங்கே போதராயே –
ஆன பின்பு என் சொல்லை மாறாதே-திரச்கரியாமல்- இங்கே வாராய் –

————————————–

ஒன்பதாம் பாட்டு –
தாமோதரா இங்கே வாராய்-என்று அழைத்த இடத்திலும் வாராதே -வேறே ஒரு க்ரஹத்தில்
போய் புக்கு -அவர்கள் சமைத்து வைத்த -அபூபாதிகளை அடைய வாரி ஜீவிக்கை முதலான
தீம்புகளை செய்ய -அவ்வகத்துக்கு கடவள் ஆனவள் வந்து முறைப்பட்டு
உன் பிள்ளையை இங்கே அழைத்து கொள்வாய் -என்றபடியை சொல்கிறது –

கன்னல் இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளில் உண்டை கலத்திலிட்டு
என்னகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்தி போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே -2 9-9 – –

பெறுத்தி -நான் பெறும்படி பண்ணி -இது வ்யதிரேக உக்தி -அதாவது அவற்றில் எனக்கு
ஒன்றும் சேஷியாதபடி தானே களவு கண்டான் -என்கை

கன்னல் -கருப்புக்கட்டி -இது மேல் சொல்லுகிறவை எல்லாவற்றிலும் அன்வயித்து கிடக்கிறது
கருப்பு வட்டோடு சமைத்தவை -வட்டிலும் காட்டிலும் ரசிக்கும் இறே
இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளிளுண்டை-
இலட்டுகம் ஆவது -ஓர் பூப விசேஷம்
அத்தோடே சீடையும் கார் எள்ளோடு வாரின எள்ளுண்டையும்
கலத்திலிட்டு –
அவற்றுக்கு அனுரூபமான பாத்ரங்களிலே இட்டு
என்னகம் என்று நான் வைத்துப் போந்தேன் –
என்னகம் அன்றோ இங்கு புகுவார் இல்லையே என்று வைத்து நான் புறம் போந்தேன்

இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் –
நான் போந்ததே அவகாசமாக இவன் சென்று புக்கு அவற்றை நான் பெறும்படி பண்ணிப் போந்தான்
என்று வ்யதிரேகமாக சொல்லுகிறாள்
அதாவது
அவற்றில் எனக்கு ஒன்றும் லபியாதபடி தானே ஜீவித்து போந்தான் என்கை –

பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி –
அது போராமல் மீண்டும் அகத்திலே புக்கு -உறியைப் பார்த்து
பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
மிகவும் செவ்வியை உடைத்தான வெண்ணெயும் உண்டோ என்று ஆராயா நின்றான் –

உன் மகன் இத்யாதி –
யசோதை பிராட்டீ -உன்னுடைய பிள்ளை யானவனை அங்கு நின்றும் தீமை செய்யாதே உன் அருகே
அழைத்துக் கொள்ளாய்
இவையும் சிலவே –
இப்படி இவனை தீம்பிலே கை வளர விட்டு இருக்கிற இவையும் ஒரு பிள்ளை வளர்க்கையோ –
அன்றிக்கே –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் என்று
குண பூர்த்தியை உடைய யசோதாய் -அவனும் உன்னைப் போலே குண பூர்த்தி
உடையனாம்படி உன் அருகே அழைத்து கொள்ளாய் என்றவாறே
என்னுடைய குண பூர்த்தியும் அவனுடைய தோஷங்களும் சொல்லிக் கதறுகையோ உங்களுக்கு உள்ளது –
சிறு பிள்ளைகள் படலை திறந்து -திறந்த -குரம்பைகளிலே புக்கு -கண்டவற்றை
பொறுக்கி வாயிலே இடக் கடவது அன்றோ -உங்கள் பிள்ளைகள் தானோ உங்களுக்கு
வச வர்த்திகளாய் திரிகிறன என்று இவள் இவர்களை வெறுத்து விமுகையாக –
அவள் செய்தவற்றுக்கு மேலே இவையும் சிலவே என்று இவள் இன்னாப்பாலே சொல்லுகிறாள் ஆகவுமாம்-

————————————–

பத்தாம் பாட்டு –
உன் மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் -என்று
ஒருத்தி சொல்லி வாய் மாறுவதற்கு முன்னே வேறு ஒருத்தி வந்து
தன்னுடைய க்ரஹத்தில் இவன் செய்த தீமைகளை முறைப்பட்ட படியை சொல்லுகிறது –

சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிகின்றானே -2 9-10 – –

அரசிப்படுதி -கோபியா நின்றாய்
சூழல் உடையன் -பற்பல வஞ்சக செயல்களை உடையனாய் இரா நின்றான்
சொல்லிலரசிப் படுதி நங்காய் –
முன்பே ஒருத்தி சொன்னதுக்கு மேலே -புண்ணின் மேல் புண்ணாக -இவளும் ஒருத்தி வந்து –
தன் மகன் குறைகளை சொல்லப் புக்கவாறே -இதுவும் ஒரு சிலுகோ-என்று தாயான யசோதை பிராட்டி
குபிதையாக -நங்காய் -உன் பிள்ளை செய்த வற்றை சொல்லில் நீ கோபியா நின்றாய் –

சூழல் உடையன் உன் பிள்ளை தானே –
உன் பிள்ளையானவன் தானே -துஸ்ஸஹமாய் உனக்கு வந்து சொல்லி அல்லது நிற்க
ஒண்ணாத படியான சூழல்களை உடையனாய் இரா நின்றான் –
சூழல் ஆவது -சூழ்ச்சி -அதாவது நானாவான கரித்ரிம வகைகள்
அவற்றில் இவனுக்கு இல்லாதது இல்லை காண் என்ன –
இப்படி சொல்லுகைக்கு அவன் இப்போது துச்சகமாய் செய்தது தான் ஏது-அத்தை சொல் என்ன –
சொல்கிறாள் மேல் –

இல்லம் புகுந்து என் மகளைக் கூவி –
என் அகத்திலே புகுந்து -என் மகளைப் பேரைச் சொல்லி அழைத்து
கையில் வளையை கழற்றிக் கொண்டு –
அவள் கையில் அடையாள வளையை கழற்றிக் கொண்டு போய் –
கொல்லை இத்யாதி –
கொல்லையில் நின்றும் கொடு வந்து -அங்கே நாவற் பழம் விற்கிறாள் ஒருத்திக்கு அவ் வளையைக் கொடுத்து

நல்லன நாவற் பழங்கள் கொண்டு –
தனக்கேற அழகிதான நாவற் பழம் கொண்டு -போரும் போராது என்று சொல்லுகிற அளவில் –
நான் கண்டு -இவ்வளை உனக்கு வந்தபடி என் -என்று அவளைக் கேட்க –
அவள்-இவன் தந்தான் -என்ன –
நீயோ இவளுக்கு வளை கழற்றி கொண்டு கொடுத்தாய் -என்ன

நான் அல்லன் என்று சிரிக்கின்றானே –
நான் அல்லேன் காண் -என் கையில் வளை கண்டாயோ -நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ –
உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறதைக் கேட்டாயோ -வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ
கண்டாயாகில் உன் வளையை அங்கே பறித்து கொள்ளா விட்டது என் -என்றாப் போலே
எனக்கு மறு நாக்கு எடுக்க இடம் இல்லாதபடி சில வார்த்தைகளைச் சொல்லி நின்று சிரியா நின்றான்
இதில் காட்டில் உண்டோ துஸ்ஸகமான தீம்பு -என்கை –

—————————————————-

நிகமத்தில் இத்திரு மொழி கற்றார் நமக்கு ப்ராப்யர் ஆவார் என்கிறார் –

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 11- –

வண்டு இத்யாதி
வண்டுகள் ஆனவை மது பானத்தால் களித்து பாடுகிற கோஷத்தை உடைத்தான பொழில்களாலும்
பொழில்களுக்கு தாரகமாக பெருகி வாரா நின்றுள்ள புனலை உடைத்தான காவிரியாலும் சூழப்பட்டு
திரு மதிள்களும் – திருக் கோபுரங்களும் -திரு வீதிகளும் -மாட மாளிகைகளுமான -இவற்றோட சேர்த்தியால் வந்த
அழகை உடைத்தாய் இருந்துள்ள -ஸ்ரீ திருவரங்கப் பெரு நகரிலே நித்யவாசம் பண்ணும் வைபவத்தை உடையனானவன்
முன்பு -விபவ அவதாரத்திலே -செய்த லீலா சேஷ்டிதங்கள் எல்லாவற்றையும்

பட்டர் பிரான் இத்யாதி –
சர்வ வ்யாபகனான விஷ்ணுவை மனசிலே உடையராய் -ப்ராஹ்மன உத்தமரான
ஸ்ரீ பெரியாழ்வார் பாடின பாடலான இவற்றைக் கொண்டு
பாடிக் குனிக்க வல்லார் –
ப்ரீதி ப்ரேரிதராய் பாடி -உடம்பு இருந்த இடத்திலே இராதே -விகர்தராய் ஆட வல்லவர்களாய்
கோவிந்தன் இத்யாதி –
இந்த சேஷ்டிதங்கள் எல்லாம் செய்த கோவிந்தனுக்கே அடியார்களாய்–தங்களுடைய சந்நிதி விசேஷத்தாலே
எட்டு திக்கிலும் உண்டான அந்தகாரம் போம்படி பிரகாசராய் கொண்டு -நிற்கும் அவர்களுடைய
இணை அடி என் தலை மேலனவே
சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகள் ஆனவை என் தலை மேலே சர்வ காலமும் வர்த்திக்கும் அவைகள் என்கிறார் –

இத்தால்
ஓத வல்ல பிராக்கள் நமை ஆளுடையார்கள் பண்டே -என்னுமா போலே
இத்தை அப்யசித்தவர்கள் உடைய வைபவத்தையும்-அவர்கள் பக்கல்
தமக்கு உண்டான கௌரவ பிரதிபத்தியும் அருளி செய்தார் ஆய்த்து-

—————————————————-

எங்கானும் -பிரவேசம் –

சப்பாணி கொட்டி விளையாடும் பருவத்தை அனுபவித்தார் கீழ் –
அதுக்கு அனந்தரமாக வெண்ணெயும் தயிரையும் களவு கண்டு
அமுது செய்த படியை -பரிவுடைய யசோதை பிராட்டி பாசுரத்தாலே
அனுபவிக்க வென்று –
வார்த்தை மறந்து –
தாம் அதிலே ஈடுபட்டு
அவனுடைய –
சர்வேஸ்வரத்தையும்-
பராபிபவன சாமர்த்யத்தையும்
வேண்டப்பாட்டையும் –
சர்வ பிரகாரத்தால் உண்டான உத்கர்ஷத்தையும் –
அடைய அனுபவித்து –
அப்படிப்பட்ட மேன்மை உடையவன் -இன்று
இங்கனே -ஓர் அபலையாலே
கட்டுண்டு –
அடியுண்டு –
நோவு படுவதே -என்று
இவன் சௌலப்யத்தை அனுசந்தித்து –
இனியராகிறார் –

———————————————-

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –10-6-1-

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே-
எங்கேனும் ஓர் இடத்திலே தான்
இத்தோடு ஒத்து இருப்பதோர் ஆச்சர்யம் உண்டோ –

இப்படி பட்ட ஆச்சர்யம் தான் என் என்னில் –
நர நாரணனாய் யுலகத் தற நூல் சிங்காமை விரித்தவன் –
நர நாராயண ரூபியாய்க் கொண்டு லோகத்திலே அற நூல் உண்டு –
ஹிதானுசாசனம் பண்ணப் போந்த வேதம் –
அது சிங்காதபடியாக-அது சங்குசிதம் ஆகாமே
விஸ்த்ருதமாம் படி பண்ணிணவனே –
உபதேசத்தாலும்
அனுஷ்டானத்தாலுமாக
விஸ்த்ருதமாம் படி பண்ணினான் –

எம்பெருமான் –
தான் ஹிதகாமனாய் இருக்கும் இருப்பைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவனே –

அதுவன்றியும் –
அத்தை ஒழியவேயும் –

செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது-
சந்திர சூரியர்களும்
பூமியும்
திரைக் கிளப்பத்தை உடைத்தான் பெரிய கடலும்
மலைகளும்
அக்னியும்
இவை அடைய நெருக்கிக் கொடு புகும்படியாக
ஸ்லாக்கியமான மிடற்றை –
இவை புகும் அளவும் –

அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே –
விரித்துக் கொண்டு இருந்தவன் கிடீர்
இன்று தயிரையும் வெண்ணையும் களவு கண்டு
அமுது செய்து
ஓர் இடைச்சி கையாலே கட்டுண்டு
அடியுண்டு
ஒரு பிரதிகிரியை அற்றுப்
போக மாட்டாதே -இருக்கிறான் –
காரேழ் -திருவாய் மொழி -10-8-2-என்கிற பாட்டின் படியே –

——————————————————–

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –10-6-2-

குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
அத்விதீயமான மலையை மத்தாகக் கொண்டு –
வாசூகி யினுடைய உடலை அங்கே கடை கயறாகச் சுற்றி –
கோஷத்தை உடைத்தான் பெரும் கடலை கடைந்தான் –

நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் –
முன்பு நின்ற நிலையிலே நின்று
வில்லில் உண்டான உண்டைகளை நடத்தி
வலிய கூன் நிமிரும்படி செய்த சர்வேஸ்வரன் –

அதுவன்றியும் –
அதுக்கு மேலே –

முன் -நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி அன்றுண்டவன் காண்மின்-
அங்கே இங்கே சில பிறிகதிர் படாமே
அழகியதாக தன்னுள்ளே அடங்குகை யாகிற நிரவதிக சம்பத்தை உடைத்தாய்
மகரங்களை உடைத்தான கடல் ஏழும்
மலை ஏழும்
உலகு ஏழும்
இவை ஒன்றும் தப்பாத படி யாக ஆதரித்து
தன திரு வயிற்றிலே வைத்தவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே –
அந்த பிரளய காலத்து
அவை தன் வயிற்றில் புகாத போது உண்டான தளர்த்தி எல்லாம்
இவ் வெண்ணெய் பெறாத போது உடையனாய்க் கொண்டு
அமுது செய்தான் –

—————————————————————-

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-3-

உளைத்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வ்லியாலவர்பால் வயிரம்
உலப்பில் வலியராய் கொண்டு எழுந்த மதுகைடபரோடே
வைரம் விளைந்தது என்று எண்ணி

விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் –
விண்ணோர் விளைந்திட்டு பரவ –
மிக்க பலத்தை உடையராய்க் கொண்டு
பெரிய கிளற்றியோடே தோன்றின மதுகைடபர்களோடே
நினை நின்ற சாத்ரவ மானது விளைந்தது என்று
புத்தி பண்ணி -தேவர்கள் நடுங்கி வந்து
திருவடிகளில் தொழுது ஏத்த –
அவர்களுக்காக அந்த மதுகைடபர்கள்
ஆயுஸ்ஸை கழித்த சர்வேஸ்வரன் –

முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போலே அவுணன் உடல் வள்ளுகிரால்
சத்ரு பஷமானது முடியும்படி வளைந்த வில்லை
கையிலே உடைய பெரிய மிடுக்கன்
வன்மையையும் ஒளியையும் உடைத்தான எயிற்றை உடையனாய்
மலை போலே இருக்கிற வடிவை உடையனான
ஹிரண்யாசுரன் உடைய முரட்டு உடலை
வளைந்த உகிராலே இரண்டாகக் கிழித்தவன் கிடீர்
பெரு மிடுக்கனான ஹிரண்யனை நிரசித்தவன் கிடீர் –

அளைந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
இன்று ஒரு அபலையால் கட்டுண்டு இருக்கிறான் –

————————————————————————

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-4-

தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் –
தேவர்கள் அசுரர்களால் நெருக்குண்டு
போரத் தளர்ந்து வந்து
நீ எமக்கு ரஷகனாக வேணும் -என்ன
ரஷகனாய் –

முரணாயவனை உகிரால் பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் –
பெரு மிடுக்கனான ஹிரண்யனை
திரு உகிராலே பிளந்து
தேவர்களுக்கு கிருபை பண்ணி –
அவர்கள் விரோதி போக்கப் பெற்றோம் இறே என்று உகந்த
சர்வேஸ்வரன் –

அதுக்கு நிபந்தனம் என் என்னில் –
திருமால்
ஸ்ரீ யபதியாகை –

விரி நீருலகை –
கடல் சூழ்ந்த பூமியை –

வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை –
மேன் மேல் என்று வளரா நின்றுள்ள
நிரவதிக சம்பத்தை உடைய
பெரு மிடுக்கனான மகா பலியை –

மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய் –
பூமியை கொள்ளுகைக்காக
தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு
க்ருத்ரிமித்து லோகத்தை அளந்தவன் கிடீர் –
மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் –

அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
ஓர் அபலை இட்ட சிறை
விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான் –

————————————————————

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் –
வாமன வேஷத்தோடு வந்து தோற்றி
பரப்புடைத்தான ஆகாசம் எங்கும்
இடம் அடையும் படி வளர்ந்தான் –

அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம் –
தன் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்கும் சேஷ பூதருக்கு
அனுபவித்தால் அல்லது நசியாத பாபங்கள் எல்லாம்

தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன் –
அவர்களை ஸ்பர்சியாத படி யாக மநோ ரதித்து
விரோதியைப் போக்கிக் கொடுத்து
அவ்வளவே அன்றிக்கே
நித்ய சூரிகள் அளவும் செல்லும்படியாக வைத்த உபகாரகன் –

வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று
யமனுடையார் நம்முடையாரை ஆராயக் கடவர் அல்லர் –
அதுக்கு நிபந்தனம் என் என்னில்
வேண்டாமை
அல்லாதாரை இவன் ஆராயக் கடவன்
என்று இட்ட நாமே இத்தைக் கழித்துக் கொடுத்தோம் -என்று
இப்படியாலே

உலகேழ் ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
லோகங்கள் ஏழையும் தன் ஆஞ்ஞையாலே
நடத்தினவன் கிடீர்
இன்று
தன் ஆஞ்ஞை அழிந்து
ஓர் அபலை கையிலே கட்டுண்டு
அடி யுண்கிறான் –

——————————————————————-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் திருமால் அதுவன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –10-6-6-

பழித்திட்ட வின்பப் பயன் பற்றறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் –
சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப் பட்ட
ஐஹிக சுகமாகிற பிரயோஜனங்களை
வாசனையோடு கழித்து
திருவடிகளிலே விழுந்து ஏத்த வல்லவர்களுக்கு
கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்து முடிய ஒண்ணாத படியான
பாபங்களை யடையக்

ஒழித்திட்ட வரைத் தனக்காக வல்ல பெருமான் –
கழித்து —
அவர்கள் தாங்களே -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
என்னப் பண்ண வல்ல சர்வேஸ்வரன் –

அதுக்கு நிபந்தனம் –
திருமால் –
ஸ்ரீ யபதியாகையாலே –

அதுவன்றியும் முன்=

தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை யாயிரமும் மழுவால் -அழித்திட்டவன் காண்மின்-
பெரிய ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு
மிக்க கிளர்த்தியோடே
நான் எதிரி என்று பொருவதாக முன்னே வந்து நின்ற மன்னன் உண்டு –
சஹஸ்ர பாஹ் வர்ஜுனன் –
அவனுடைய சினத்தை உடைத்தான தோள்கள் ஆயிரத்தையும்
அழகுக்குப் பிடித்த மழுவாலே துணித்துப் பொகட்டவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியாரால் அளை வெண்ணெய் யுன்டாப்புண்டு இருந்தவனே –
இன்று ஓர் அபலை கையாலே கட்டுண்டு இருந்தான் –

———————————————————

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே—10-6-7-

படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம் -துடைத்திட்ட வரைத்-
முன்பு இது அடங்கலும் பிரளயம் கொண்டு
உப சம்ஹ்ருதயமாய்க் கிடக்க
இவற்றுக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
சிருஷ்டித்து
அவை வழி படுகைக்கு உடலாக
அது பலித்து
திருவடிகளிலே விழுந்து யேத்துமவர்கள் உடைய
பாபம் என்று பேர் பெற்றவை அடையப் போக்கி –

தனக்காக வென்னத் –
அவர்களை அடையத் தான் இட்ட வழக்காக என்ன –

தெளியா வரக்கர் திறல் போயவிய –
ஈஸ்வர அபிப்ராயம் இது வாகாதே என்று தெளிய மாட்டாதே
துஷ்ப்ரக்ருதிகளான ராஷசர் மிடுக்கு அழியும் படியாக-

மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை –
நெருக்கிக் கொண்டு தோற்றின
ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு
மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி
கடலை அணை செய்தவன் கிடீர் –

அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர்
இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –

——————————————

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
நெறித்து
மிருதுவான
மயிர் முடியை உடையளாய்
விலஷணமான ஆபரணங்களாலே அலங்க்ருதையான
பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்
பிரசித்தியை உடைத்தாய்
மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –
இவ்வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே
உடையனாய் -என்கிறது
அல் -என்று இருளாய் -இருண்ட வில் என்னவுமாம்

இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு செறித்திட்டு-
இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
அந்த வில்லை முறித்து
அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து
யுவ ராஜாவாய்
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி

லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின்-
இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக
ராவணன் உடைய முடியோடு
தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான் –

——————————————

சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது
திரிந்திட்டு இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-9-

சுரிந்திட்ட செங்கேழ் உளைப் பொங்கரிமாத தொலையப் பிரியாது சென்று எய்தி –
சுருண்டு
சிவந்த நிறத்தை உடைத்தாய் –
கேழ் -என்று நிறம்
உளை மயிரை உடைத்தாய்க் கொண்டு
களித்து வருகிற கேசி முடியும்படியாக
அத்தை விடாதே சென்று கிட்டி

எய்தாது-திரிந்திட்டு –
ஒரு காலும் வந்து கிட்டாதே அங்கே இங்கே திரிந்து –

இடம் கொண்ட அடங்காத தன் வாய் இரு கூறு செய்த பெருமான் –
அவகாசம் கொடாதே
அபவ்யமாய் திரிகிற அதனுடைய வாயை
இரு பிளவாம்படி பண்ணின சர்வேஸ்வரன் –

முன நாள்-
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்தோர் ராக்கதி மூக்கு-அரிந்திட்டவன் காண்மின்-
கட்டுடைத்தான வில்லாலே
மகாராஜரை விஸ்வசிப்பிக்கைக்காக
மராமரங்கள் ஏழையும் எய்து –
மலை போலே இருக்கிற வடிவை உடையளாய் இருக்கச் செய்தேயும்
பிராட்டி போலே தன்னை சாமானை யாக புத்தி பண்ணி
வந்த சூர்பணகைக்கு வைரூப்யத்தைப் பண்ணிவிட்டவன் கிடீர் –

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –
ப்ரதிகூல்யையாய் வருகையாலே இறே
வைரூப்யத்தை விளைத்து விட்டது –
அனுகூல்யைக்கு அகப்படாமை இல்லை இறே –

—————————————————————————–

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே —10-6-10-

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் –
களவோடு கண்டு பிடித்து கட்டினவாறே
பலரும் பார்க்க வருவார்களே
அவர்கள் முகத்தை பார்த்து
லஜ்ஜிக்குமது ஏக தேசமும் இல்லை –

வயிற்றை நிறைப்பான் உறியில் தயிர் நெய் –
இது ஒன்றையும் ஆயிற்று எப்போதும் நினைத்து இருப்பது –

அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல் –
உறிகளிலே இடைச்சிகள் சேமித்து வைத்த
பால் தயிர் நெய் வெண்ணெய் –
இவற்றை அமுது செய்து
அவர்கள் உரலோடு சேர்த்துக் கட்ட
கட்டுண்டவன் மேலே சொல்லிற்று –

நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார் –
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே –
ஒரு காலும் துக்கத்தை ப்ராபியார்கள் –
நிரதிசய ஆனந்தத்தை ப்ராபித்து
ப்ரஹ்மாதிகள் குடி இருப்புக்கும் அவ்வருகான பரம பதத்தை ப்ராபிப்பார் –

———————————————————

மானம் -பிரவேசம் –

வெண்ணெய் களவு காணும் பருவத்தைத் தப்பி –
வெண்ணெயும் பெண்களையும் களவு காணும் பருவமாய் இருக்கிற படியை அனுசந்தித்து
யசோதைப் பிராட்டி யானவள் விளைவது அறியாமையாலே
இது எவ்வளவாய் புகுகிறதோ -என்று அஞ்சி இருக்க
இவனாலே நோவு பட்டு
ஊரில் உள்ளார் அடங்கலும்
அது போயிற்று இது போயிற்று -என்று இங்கனே முறைப்பட
அவளும் -அவர்களுமாக
பரிமாறின அப் பெரிய குழாங்களை
தாம் அனுபவிக்கிறார் –

———————————————————

ஒருத்தியைப் பார்த்து வார்த்தை சொல்கிறார் இதில் –

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை
ஊனமுடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –10-7-1-

மானமுடைத்து உங்கள் ஆயர் குல மதனால் பிறர் மக்கள் தம்மை ஊனமுடையன செய்யப் பெறாய் என்று -இரப்பன் –
எங்கேனும் ஓர் இடத்தில் -ஸூரு ஸூரு -என்னக் கேட்டால்
பின்னைக் கொண்டு ஜீவியார்கள் மானத்தாலே –
ஆகையால் பிறர் உடைய பெண்களை சம்போக சிஹ்னங்களை விளைத்து
விடப் பெறாய் என்று -இங்கனே இரப்பன்

உரப்பகில்லேன் -நானும் உரைத்திலன் நந்தன் பணித்திலன்
பொடியில் தீம்பிலே இரட்டிக்குமே –
காலைப் பிடித்து இரப்பன் –
பொடிகிறிலேன்-
நான் சொல்லிற்று செய்தல்
தமப்பனார் சொல்லிற்றைச் செய்தல்
செய்யாத பருவம் இறே உன் பருவம் –
நானும் சொல்லிற்றிலேன்
தமப்பனாரும் அருளிச் செய்திலர் –

நங்கைகாள் நான் என் செய்கேன் –
நீங்கள் எல்லாரும் பிள்ளை பெற்று வளர்க்கிறி கோளே –
நான் இனிச் செய்வது என் –

தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –
ஸூசக மாத்ரமே அன்றிக்கே
காரகமும் உண்டாய் இருந்தது -காரகம் -காரணம் –

——————————————————————————————–

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து
ஹித சிந்தனை பண்ணுவாரைப் போலே –
கடைந்த –
இவை அடைய பாழிலே போக்க ஒண்ணாதே –
போகா நிற்கச் செய்தே நடு வழியிலே கண்டு
இது எவ்வளவாய் விளையைக் கடவதோ -என்று அஞ்சிப் போனேன் –

மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை –
ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய
செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய
இது செய்யக் கடவார் இல்லை –

மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த-பாலும் பதின் குடம் கண்டிலேன்-
வந்தாருக்கு அறிவிக்குமது தவிர்ந்து
அழைத்துக் காட்ட வேண்டும் அளவாய் வந்து விழுந்தது –
கடைந்து சேமித்து வைத்த வெண்ணெயே அன்றிக்கே
கடைககைக்கு யோக்யமான பாலும் கூடக் கண்டிலேன் –

பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –
கோ தனர் ஆகையாலே
உபஜீவ்யம் கவ்யமாய் இருக்கும் இறே
அத்தை இழந்தால் பின்னைப் பொறுக்க மாட்டார்கள் இறே –

———————————————————-

தெள்ளியவாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ —10-7-3-

தெள்ளியவாய்ச் சிறியான் –
கண்ணுக்கு இருக்கிறபடியும்
செயல் இருக்கிற படியும் காண் –

நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கிட்டு –
மேலே தடாத் தன்னிலே வெள்ளி மலை போலே
சேமித்து வைத்த வெண்ணெயை வாரி அமுது செய்து

கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு –
இவனை இங்கனே இது சொல்லும்படி -என்னும்படி யாகத்தான்
அறியாதாரைப் போலே கிடந்தது உறங்கா நின்றான் –
நீங்கள் எல்லாம் இத்தை வந்து பாருங்கோள்-
இவன் மறைக்கப் பார்த்தாலும் பிரயோஜனம் இல்லை –
கை எல்லாம் நெய்யாய் இருக்க –

பிள்ளை பரமன்று –
இவன் பருவத்து அளவல்ல வயிற்றின் பெருமை –
வெண்ணெயே அன்றிக்கே –

இவ் வேழ் உலகும் கொள்ளும் –
இவ் வேழ் உலகும் கொள்ளும் –

இத் தயிரும் பாலும் பாழ் போகாமே ஒரு பிள்ளை வேணும் என்று அன்றோ நீ பெற்றது –
அவன் இப்பது அமுது செய்தான் ஆகில்
நீ இப்பாடு படுகிறது என் -என்ன –
பேதையேன் என் செய்கேனோ –
அவனுக்கு இது சாத்மியாது ஒழியில்-செய்வது என்
என்று அன்றோ அஞ்சுகிறது நான் –

——————————————————-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்றவளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –10-7-4-

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்ற –
அஞ்சனம் பற்றின வேல் போலே யாயிற்று
கண்ணில் கருமையும் புகரும் இருக்கிறபடி –
அவ்வளவு அல்லாத ஆத்ம குணத்தை உடையவள் பெற்ற –

வளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான் –
சங்கு வர்ணனாய் இறே நம்பி மூத்த பிரான் இருப்பது –
தன் தமையன் தீம்பாலே குறையற்றான் ஒருவன் இறே –
அவன் முற்காலத்திலே இங்கே விளையாடித் திரியும் போது
நாங்கள் இப்பாடு பட்டு அறியோம் –

பொய்ந்நம்பி –
பொய்யால் குறைவற்று இருக்கிறவன் –

புள்ளுவன் –
கண்ணி வைப்பாரைப் போலே
கடைகிற போதே துடங்கி
இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று -கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ராம கிருஷ்ணர்கள்
-அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –

கள்வம் பொதியறை –
களவிட்டு வைக்கைக்கு ஒரு கொள்கலம் –

போகின்றவா தவழ்ந்திட்டு –
இக்களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே
தவழா நிற்கும் –

இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை –
நிரபேஷனான இவன்
இவனாக
இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –

என் செய்கேன் என் செய்கேனோ –
இவர்கள் கீழே எங்கனே நான்
இவ்வூரில் குடி இருக்கும் படி –

—————————————————–

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்
நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ —10-7-5-

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் –
சொன்ன படியே தலைக் கட்டிற்று-
இவர்கள் தமப்பனார் புகுந்திலர் –
நானும் இங்கே இருந்திலேன் –

தோழிமார் ஆரும் இல்லை –
கூட்டிக் கொடுக்கைக்கு தோழி மாரும் இல்லை –

சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி –
இவன் தான் பெண் பிறந்தார் தனியே விளையாடும் இடம்
பார்த்துக் கொடு திரியும் –

பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப்
அவர்களோடு சென்று கிட்டி
பந்தைப் பறித்தும்
பரியட்டங்களைக் கிழித்தும் –

படிறன் படிறு செய்யும் —
பின்பு சொல்ல ஒண்ணாத படி களவு செய்யும் –

நந்தன் மதலைக் கிங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –
பிரபுக்கள் கீழே குடி இருக்க ஒண்ணாதே சாதுக்களுக்கு –

————————————————————

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ—-10-7-6-

மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் –
தாய்மாரும்
தாய்மாரோடு ஒரு கோவையாய் இருப்பாரும்
உகக்கும் பாசுரம் –
மண் மகள் நாதனோ –
மா மலராள் நாயகனோ-என்று ஆயிற்று உகப்பது –
அன்றிக்கே –
ப்ரணய தாரையிலே அவர்களுக்கு தேசிகன் ஆனவன் கிடீர்
இவளைப் இப்படிப் படுத்தினான் -என்னவுமாம் –

அதுக்கு மேலே
நந்தன் பெற்ற மதலை-
பிறப்பால் உண்டான ஏற்றம்

அண்ணல்-
எல்லாரையும் எழுதிக் கொண்டு இருக்குமவன் –

இலைக் குழலூதி —

நஞ்சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை
ராத்ரியிலே வந்த பின்னை –

கண் மலர் சோர்ந்து -முலை வந்து விம்மிக்-
சம்போக அநந்தரம்

கமலச் செவ்வாய் வெளுப்ப
தாமரை போலே இருக்கிற அதரமானது
வெளுத்த -என்றபடி –

என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –
இவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன் –

—————————————————–

ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய்
மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10-7-7-

ஆயிரம் கண்ணுடை இந்திரனாருக்கு என்று ஆயர் விழவு எடுப்ப
தான் ஆயிரம் கண் உடையவன் ஆகையாலே
இதர விசஜாதியனாய்
தான் தேவ யோநியிலே பிறந்தவனாய்
அத்தாலே துர்மானியாய் இருக்கிறவனுக்கு
இடையவர் உத்சவமாகப் போத்தி

பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம்
நல்ல பாஜனங்களிலே சோற்றை எடுத்து
சகடத்தாலே கொடு வந்து தள்ள –

போயிருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் -மாயன் –
அத்தை அடங்கலும்
கோவர்த்தநோச்மி-என்று தான் அமுது செய்த ஆச்சர்ய பூதன் –

அதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –
அத்தை அடங்கலும் அமுது செய்தானாய்
அல்லாதாரைப் போலே இருந்தான் ஆயிற்று –

—————————————————–

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே—10-7-8-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடந்துற்றிடும் என்று
நின்ற நின்ற அவஸ்தைகள் தோறும் சேஷியாத படி பண்ணினான் ஆயிற்று –
தோய்த்து அட்டின தயிரையும் –
புத்துருக்கு நெய்யையும் –
நெய் வாங்குகைக்கு யோக்யமான பாலையையும் –
சேஷியாத படி அமுது செய்யும் என்று

ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் –
ஆய்ச்சியர் எல்லாரும் கூப்பிடச் செய்தேயும்

நான் இதற்க்கு எள்கி யிவனை நங்காய்-
நான் இதற்கு ஈடுபட்டு
இவனை ஆக்ரஹியாதே –

சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன்-
பிரானே சோத்தம்-
இங்கனே செய்யல் ஆகாது காண்-என்றும் இரவா நிற்பன் –

என் செய்ய –
உன் மகனான பின்பு நிக்ரஹிக்க லாகாதோ -என்ன –
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே —–
இவன் பூதனை உடைய முலையை அமுது செய்த பின்பு
என்னுடைய பிள்ளை என்று இருக்க அஞ்சுவன் –

——————————————

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில்
ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்தது திருவடியால் மலை போல்
ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே —10-7-9-

ஈடும் வலியும் உடைய இந்நம்பி பிறந்த வெழு திங்களில் ஏடலர் கண்ணியினானை வளர்த்தி எமுனை நீராடப் போனேன் –
கனம் உடைமையும்
மிடுக்கும் உடைய இப்பிள்ளை
ஏழா மாசத்திலே குளிப்பாட்டி
செவ்வியை உடைய மாலையைச் சூட்டி
வளர்த்தி வைத்துப் போந்தேன்-
யமுனையிலே நீராட –

சேடன் திரு மறு மார்பன் கிடந்தது –
அத்யந்த சைசவத்தை உடையவன் –
இவன் செய்யும் செயல்கள் அடைய
சர்வேஸ்வரன் உடன் ஒக்கும் –

திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிப் பின்னை உரப்புவது அஞ்சுவனே –
திருவடிகளாலே மலை போலே ஊருகிற சகடத்தைச்
சாடித்
துகளாக்கின பின்பு
இவனைப் பொடிய அஞ்சுவன் –

———————————————————-

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை
நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ —10-7-10-

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
பஞ்சு போலே மிருதுவான அடியை உடையராய் இருக்கிற
பிள்ளைகள் ஆயிர நாழி நெய்யை உண்கிற இடத்தில்
பாதியும் சேஷியாத படி யாயிற்று புஜித்தது-

கஞ்சன் கடியன் –
கம்சன் ஆனவன் சாலக் கொடியவன் –

கறவெட்டு நாளில் –
கற வென்று இறைக்குப் பெயர்
எட்டு நாளில் இறை இடையர் பால் இருக்கக்
கடவதாய் இருக்கும் இறே-

என்கை வலத்தாது மில்லை –
எனக்குக் கைம்முதல் ஒன்றும் இல்லை –
அன்றிக்கே
என் கையில் பலமில்லை -என்னவுமாம் –

நெஞ்சத் திருப்பன செய்து வைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ –
என் நெஞ்சு புண் மாறாத படி யாகப் பண்ணினாய் –
நான் இக் கார்ஹச்த்த்ய தர்மத்தை எங்கனே அனுஷ்டிக்கும் படி –

————————————————–

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு அரவு ஏர் இடையர் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –10-7-11-

அங்கனும் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை –
சொல்ல ஒண்ணாத படி யான தீம்புகளை விளைக்கக் கடவதோ –
ஒரு குடியிலேபிறந்த பெண் பிள்ளைகளை செய்யும் தீம்பு –

பங்கய நீர் குடைத்தாடு கின்றார்கள் பின்னே சென்று ஒளித்து இருந்து –
தாமரைப் பொய்கையிலே சென்று
ஒளிந்து இருந்து –

அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு –
அவர்கள் உடைய பரியட்டங்களை அடைய வாரிக் கொண்டு –

அரவு ஏர் இடையர் இரப்ப-
அரவு போலே நுண்ணிய இடையை உடைய
ஸ்திரீகள் இரக்க-

மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரமேறி யிருந்தாய் போலும் –
வேணுமாகில் இங்கனே
ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள்-
என்று இருந்தாய் –

——————————-

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-12-

அச்சம் தினைத்தனை யில்லை யப்பிள்ளைக்கு –
பயம் ஏக தேசம் கூட இல்லை -இப்பிள்ளைக்கு –

ஆண்மையும் சேவகமும் –
ஆண் பிள்ளைத் தனமும்
சேவகப்பாடுமே யாயிற்று -உள்ளது –

உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய்-
உச்சி மோந்து வளர்த்து எடுத்தேனுக்கு
ஒன்றும் உரைத்திலன் தான்
இன்று போய் –

பச்சிலைப் பூங்கடம்பு ஏறி விசை கொண்டு பாய்ந்து புக்கு –
திருவடிகளால் உண்டான ஸ்பர்சத்தாலே
தழைத்துப் பூத்த கடம்பிலே ஏறிப்
பெரிய வேகத்தாலே மடுவிலே ஏறப் பாய்ஞ்சு –

ஆயிர வாய் -நச்சழற் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
ஆயிரம் வாயாலும் விஷத்தை உமிழா நிற்பானாய்
தான் நச்சுப் பொய்கையிலே கிடக்கிற காளியனோடே பிணங்கி
வந்தாய் போலே இருந்தது –

—————————————————-

தம்பர மல்லன வாண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ
எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை
வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –10-7-13-

தம்பர மல்லன –
ஒரோ கார்யங்க ளிலே இழிவார் தம்தாமால் செய்து
தலைக் கட்டலாம் கார்யங்க ளிலே அன்றோ இழிவது –

வாண்மைகளைத் –
ஒரோ ஒன்றையே தலை காண ஒண்ணாதபடி இருக்கை –

தனியே நின்று –
நம்பி மூத்த பிரானோடே கூட நின்று செய்தான் ஆகில்
கண் எச்சில் வாராத படி
அவன் தலையிலே ஏறிடலாம் –

தாம் செய்வரோ –
தம்தாமையும் பார்க்க வேண்டாவோ –

எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுடையேன் இனி யான் என் செய்கேன் –
உன்னைப் பெற்ற இதுவே அமையாதோ
வயிறு எரிச்சலுக்கு வேண்டுவது –
நீ ஒரு செயலைச் செய்ய வேணுமோ –

அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்கண் உடை –
உபரிதன லோகங்கள் அதிரும்படியான
த்வனியை உடைத்தாய்
அகவாயில் மரம் எல்லாம் தெரியும்படி
நெருப்புப் போலே சிவந்த கண்ணை உடைத்தாய் இருக்கிற –

வம்பவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் –
வ்ருஷபங்களோடு கூட
நித்ய வசந்தமான சோலைக்குள்ளே
பிணங்கி வந்தாய் போலே இருந்தது -என்கிறாள் –

————————————————-

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14-

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச –
ஆகர்ஷகமான நடையை உடையளாய்
ஆத்ம குணோபேதையாய் இருக்கிற –
யசோதைப் பிராட்டி யானவள் வயிற்றிலே அடித்துக் கொள்ள –

அருவரை போல் மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை –
மலை கால் கொண்டு நடந்தால் போலேயாய்
கண்டார் கண்கள் பிணிப்படும் படி இருக்கிற ஆனையை
முடித்து பொகட்ட மிடுக்கனை –

மா கடல் சூழ் கன்னி நன் மா மதில் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி –
கடலை அகழாக உடைத்தாய்
அரணாகப் போரும்படியான மதிளை உடைத்தான
திருமங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் –

இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –
இத்திரு மொழியை வல்லவர்களுக்கு யசோதைப் பிராட்டியார் உடைய
அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார்-சப்பாணி பதிகம் -1-7–/ ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் — சப்பாணி பதிகம்-10-5–

June 30, 2020

அவதாரிகை-
கீழில் திருமொழி யிலே
சப்பாணி கொட்டுகை யாகிற அவனுடைய பால சேஷ்டிதத்தை -தத் காலத்திலேயே யசோதை பிராட்டி
அனுபவித்தாப் போலே -பிற் பாடராய் இருக்கிற தாமும் -அதிலே ஆதார அதிசயத்தாலே –
அவளுடைய பாவ யுக்தராய் கொண்டு -பேசி அனுபவித்தாராய் நின்றார் –
அவன் தளர் நடை நடக்கை ஆகிற சேஷ்டிதத்தை தத் காலம் போலே -அனுபவித்து இனியர் ஆகிறார் இதில் –

துடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப
படு மும் மதப்புனல் சோர வாரணம் பைய நின்ற்றூர்வது போலே
உடன் கூடி கிண் கிணி ஆரவாரிப்ப வுடை மணி பறை கறங்க
தடம் தாள் இணை கொண்டு சாரங்க பாணி தளர் நடை நடவானோ -1 7-1 –

தளர் நடை ஆவது -திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் அன்றிக்கே –
நடை கற்கும் பருவம் ஆகையாலே தவறி தவறி நடக்கும் நடைமதாதி அதிசயத்தாலே –

கம்பத்தை முறித்து -காலில் துடரை இழுத்து கொண்டு -நடக்கையாலே –
காலில் கிடந்த சங்கிலித் துடரானது -சலார் பிலார் என்று சப்திக்க –
துடர் என்று விலங்கு-ஆனை விலங்கு சங்கிலியாய் இறே இருப்பது -சலார் பிலார் என்கிறது சப்த அநு காரம் –
தூங்கு இத்யாதி -முதுகில் கட்டின பொன் கயிற்றால் தூங்குகிற மணியானது த்வநிக்க-
பொன் மணி -என்கிற இடத்தில் -பொன் என்கிற இத்தால் -பொற் கயிற்றை சொல்லுகிறது –
படு இத்யாதி -உண்டாக்கப் பட்ட மூன்று வகையான மத ஜலம் அருவி குதித்தால் போலே வடிய –
மும் மதப் புனலாவது -மதத்தாலே கபால த்வ்யமும் மேட்ர ஸ்தானமுமாகிற த்ரயத்தில் நின்று வடிகிற ஜலம்-

வாரணம் இத்யாதி -ஆனையானது அந்த மத பாரவச்யத்தாலே -அலசமாய் கொண்டு -மெள்ள நடக்குமா போலே –
உடன் இத்யாதி -சேவடிக் கிண் கிணி-என்றபடி -திருவடிகளில் சாத்தின சதங்கைகள் யானவை –
தன்னிலே கூடி சப்திக்க –
அன்றிக்கே –
திருவரையில் சாத்தின சதங்கை வடமானது -நழுவி விழுந்து -திருவடிகளோடு சேர்ந்து –
இழுப்புண்டு வருகையாலே அதிலுண்டான சதங்கைகள் தன்னிலே கூடி சப்திக்க என்னவுமாம் –

உடை இத்யாதி -திருவரையில் கட்டின மணியானது பறை போல் சப்திக்க –
தடம் தாள் இத்யாதி -பருவத்துக்கு ஈடாய் -விகாச யுக்தமாய் -பரஸ்பரதர்சமாய் -இருக்கிற திருவடிகளைக் கொண்டு –
சாரங்க பாணி -ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையிலே உடையவன் -இது ஈஸ்வர சிக்னங்களுக்கு எல்லாம்
உப லஷணம்-அவதரிக்கிற போதே ஈஸ்வர சிக்னங்கள் தோன்றும் படியாக இறே அவதரித்தது –

———————————

செக்கர் இடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பறை முளைப் போல்
நக்க செந்துவர்வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடம் உடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – 1-7 2-

செக்கர் வானத்து இடையிலே சாகாரத்திலே தோன்றும்படி உன்நேயமான பால சந்தார்ங்குரம் போலே –
ஸ்மிதம் செய்கையாலே -மிக சிவந்து இருந்துள்ள திரு அதரமாகிற உயர்ந்த நிலத்தின் மேலே
குளிர்ந்து வெளுத்து இருக்கிற திரு முத்தின் அங்குரத்தினுடைய தேஜசானது பிரகாசிக்க –
அக்கு வடம் உடுத்து -சங்கு மணி வடத்தை திருவரையிலே தரித்து
ஆமைத்தாலி பூண்ட -கூர்ம ஆகாரமான ஆபரணத்தை திருக் கழுத்திலே சாத்திக் கொண்டவனாய்
அனந்த சயனன் -அவதாரத்தின் உடைய மூலத்தை நினைத்து சொல்கிறது –
நாக பர்யங்க முத்சர்ஜ்ப ஹ்யாகத -என்னக் கடவது இறே
தகுதியான நீல ரத்னம் போன்ற திரு நிறத்தை உடையவன் -ஸ்ரீ வாசு தேவர் திருமகன் –
தளர் நடை நடவானோ –

—————————————

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசு இலையும் பீதகச் சிற்றாடையோடும்
மின்னில் பொலிந்ததோர் கார் முகில் போல கழுத்தினில் காறையோடும்
தன்னில் பொலிந்த இடுடீகேசன் தளர் நடை நடவானோ – 1-7 3-

மின்கொடியும் அத்தோடு சேர்ந்ததோர் அகளங்க சந்திர மண்டலமும் அத்தை சூழ்ந்த பரிவேஷமும் போலே –
திருவரையில் சாத்தின பொன் பின்னாலும் -அதிலே கோவைபட்டு பிரகாசிக்கிற வெள்ளி அரசிலைப் பணியும் –
இவற்றுக்கு மேலே சாத்தின பொன்னின் சிற்றாடையும் ஆகிற இவற்றோடும் –
மின்னாலே விளங்கப் பட்டதொரு -காள மேகம் போலே -திருக் கழுத்தில் -சாத்தின காறையோடும் –
இவ் ஒப்பனைகள் மிகை யாம்படி தன் அழகாலே சமர்தனாய் இருப்பனாய்-அவ் வழகாலே கண்டவர்கள்
உடைய இந்திரியங்களை தன் வசமாக கொள்ளுமவன் தளர் நடை நடவானோ –

——————————————

கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி கண கண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்க்குத் தன் திருவாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலை கண் மீதே தளர் நடை நடவானோ -1 7-4 –

கன்னல் இத்யாதி -கரும்பு சாறு குடம் இந்த பதங்கள் சேர்ந்து -கருப்பம் சாற்றுகுடம் -என்று கிடக்கிறது –
இல்லி திறந்தால் பொசிந்து புறப்படுமா போலே -திருப் பவளத்தில் ஜலம் ஆனது ஊறி வடிய –
கண கண என சிரித்து ப்ரீதனாய்க் கொண்டு –
கண கண என்றது -விட்டு சிரிக்கிற போதை சப்த அநு காரம் –

முன் இத்யாதி -முன்னே வந்து நின்று -தன்னுடைய அதராச்வாதத்தை தாரா நிற்கும் –
முத்தம் -அதரம்
என் இத்யாதி -எனக்கு பவ்யனாய் -காள மேகம் போன்ற வடிவை உடையனாய் -அந்த பவ்யதைக்கு
ஊற்று வாயான ஸ்ரீ லஷ்மி சம்பந்தத்தை உடையவன் –

தன்னை இத்யாதி -தன்னை பிள்ளையாக பெற்ற பாக்யத்தை உடைய எனக்கு தன்னுடைய
வாகம்ர்தத்தை தந்து -என்னைத் தழைப்பியா நின்றான் –
இங்கே -வாய் அமுதம் தந்து தளர்ப்பிக்கின்றான் -என்று வர்தமானமாக சொல்லுகையாலே –
முன்பு -முத்தம் தரும் என்றது -எப்போதும் தன் விஷயத்தில் அவன் செய்து போரும்
ஸ்வபாவ கதனம் பண்ணினபடி –
தன் எற்றி-இத்யாதி -தன்னோடு எதிர்ந்த சத்ருக்கள் ஆனவர்களுடைய தலைகள் மேலே தளர் நடை நடவானோ

————————————

முன்னலோர் வெள்ளிப் பெரு மலை குட்டன் மோடு மோடு விரைந்தோடே
பின்னை தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல்
பன்னி உலகம் பரவி யோவாப் புகழ் பல தேவன் என்னும்
தன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ -1 7-5 –

உலகம் எனபது -உயர்ந்தோர் மாட்டே -தொல்காப்பிய சூத்தரம் –
உலகம் பன்னி பரவி -உயர்ந்தவர்கள் ஆராய்ந்து துதித்து –
முன்னே விலஷணமாய்-அத்வீதியமாய் -பெரிதாய் இருந்துள்ள -வெள்ளி மலை ஈன்ற
குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோடே
பின்னை இத்யாதி -அந்தக் குட்டியின் பின்னே -தன் செருக்காலே அத்தை பிடிக்கைக்காக தொடர்ந்து –
அஞ்சன கிரி ஈன்றதொரு குட்டி தன் சைசவ அநு குணமாக காலுக்கு கால் பேர்ந்து அடி இட்டு
செல்லுமா போலே –
பன்னி இத்யாதி -லோகம் எல்லாம் கூடி -தங்கள் ஞான சக்திகள் உள்ள அளவெல்லாம் கொண்டு
ஆராய்ந்து ஸ்துத்திதாலும் முடி காண ஒண்ணாத புகழை உடையவனாய் –
பல தேவன் என்னும் பெயரை உடையனான தன்னுடைய தமையனாவன் செருக்கி முன்னே ஓட –
அவன் பின்னே அவனை கூட வேணும் என்று தன் சைசவ அநு குணமாக
த்வரித்து நடக்குமவன் தளர் நடை நடவானோ –

—————————————–

ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த
இருகாலும் கொண்டு அங்கு அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கருகார் கடல் வண்ணன் காமர்தாதை தளர் நடை நடவானோ -1 7-6 –

ஒரு கால் இத்யாதி -ஒரு திருவடிகளிலே ஸ்ரீ பாஞ்ச சந்யமும் -ஒரு திருவடிகளிலே திரு ஆழி
ஆழ்வானுமாக உள்ளடி களிலே ரேகா ரூபேண பொறித்து சமைந்த இரண்டு திருவடிகளையும் கொண்டு –
அங்கு அங்கு இத்யாதி -அடி இட்ட அவ்வவ ஸ்தலங்களிலே தூலிகை கொண்டு
எழுதினால் போல் அடையாளம் படும்படி நடந்து –

பெருகா இத்யாதி -இந்த நடை அழகையும் வடிவு அழகையும் கண்டு மேன்மேல் என்று
பெருகா நின்ற -ஆனந்த சாகரத்துக்கு மேலே -பின்னையும் உத்தரோத்தரம் –
ஆனந்தத்தை உண்டாக்கி –
கரு கார் இத்யாதி -இருண்டு குளிர்ந்து இருக்கிற கடல் போன்ற நிறத்தை உடையவன் –
கருமை -இருட்சி
கார் -குளிர்த்தி
அன்றிக்கே
கருமை -பெருமையாய்
கார் -இருட்சியாகவுமாம்
அன்றிக்கே
கார் என்று மேகமுமாய் –
காள மேகம் போலேயும் கடல் போலேயும் இருக்கிற திரு நிறத்தை உடையவன் என்னவுமாம் –

காமர் தாதை இத்யாதி -அழகால் நாட்டை வெருட்டி திரிகிற காமனுக்கு -உத்பாதகன் ஆனவன் –
காமனைப் பயந்த காளை-இறே
பிரசவாந்தஞ்ச யவ்வனம் -என்னும் படி அன்றிக்கே
காமனைப் பயந்த பின்பு கீழ் நோக்கி பிராயம் புகும் ஆய்த்து-

காமர் தாதை இன்ப வெள்ளத்தின் மேல் -பின்னையும் பெய்து பெய்து –
தளர் நடை நடவானோ -என்று அந்வயம்-

———————————–

படர் பங்கயமலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி இற்று இற்று வீழ நின்று
கடும் சேக் கழுத்தின் மணிக் குரல் போலுடை மணி கண கண என
தடம் தாள் இணை கொண்டு சாரங்கபாணி தளர் நடை நடவானோ – 1 7-7-

படர் இத்யாதி -பெருத்து இருந்துள்ள தாமரை பூவானது -முகுளிதமாய் இருக்கை அன்றிக்கே –
வாய் நெகிழ்ந்த அளவிலே குளிர்த்தியை உடைத்தான அகவாயில் மதுவானது
சிறுக துளித்து -விழுமா போலே –

இடம் கொண்ட இத்யாதி -இடம் உடைத்தாய் -சிவந்து இருந்துள்ள -திருப் பவளத்தில்
ஜலமானது -நிரந்தரமாக ஊறி முறிந்து விழும்படி நின்று –

கடும் சேக் கழுத்தின் -இத்யாதி -கடிதான சேவின் கழுத்தில் -கட்டின மணி உடைய
த்வனி போலே -திருவரையில் கட்டின மணியானது -கண கண என்று சப்திக்கும்படி –

தடம் தாள் இத்யாதி -சவிகாசமாய் பரஸ்பர சதர்சமான திருவடிகளைக் கொண்டு
சாரங்க பாணியானவன் தளர் நடை நடவானோ

———————————

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவின் உருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -1 7-8 —

பக்கம் இத்யாதி -கருத்த நிறத்தை உடைத்தாய் -சிறுத்தி இருந்துள்ள மலையினுடைய
பார்ச்வத்திலே நிம்நோன் நதமான அருவிகள் ஒளி விடுமா போலே –
பகர் -ஒளி
அக்கு இத்யாதி -திருவரையில் சாத்தின வளை மணி வடமானது -தாழ்ந்தும் உ
மக்கள் இத்யாதி -லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –
தக்க இத்யாதி -தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர்
திருமகன் தளர் நடை நடவானோ –

———————————————

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்தது ஒரு வேழத்தின் கரும் கன்று போல்
தெள் புழுதி யாடி திருவிக்ரமன் சிறு புகர் விட வியர்த்து
ஒண் போது அலர் கமல சிறுக் கால் உறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ -1 7-9 –

வெண் புழுதி இத்யாதி -வெளுத்த புழுதியை மேலே ஏறிட்டு கொண்டு அளைந்த
ஒரு ஆனைக் கன்று போலே
தெள் இத்யாதி -தெள்ளிய புழுதியை திருமேனியிலே ஏறிட்டு கொண்டு
திருவிக்ரமன் -ஆஸ்ரிதனான இந்த்ரன் அபேஷிதம் செய்க்கைக்காக –
திருவடிகளின் மார்த்த்வம் பாராதே லோகத்தை அளந்தவன்
சிறு புகர் பட வியர்த்து -ஏறிட்டு கொண்ட புழுதி ஸ்வேத பிந்துக்களாலே
நனைந்த இடங்களிலே திருமேனி சிறிது புகர்த்து தோன்றும்படி வியர்த்து
ஒண் போது இத்யாதி -அழகியதாய் -தனைக்கடைத்த காலத்திலே அலர்ந்த தாமரை பூ போலே
இருக்கிற சிறியதான திருவடிகள் மிதித்த இடத்திலே -ஓன்று உறுத்தி நோவாதபடி யாக
தண் இத்யாதி -குளிர்ந்த பூக்களை உடைத்தான மெத்தை மேலே தளர் நடை நடவானோ –
தவிசு -மெத்தை –

—————————————

திரை நீர் சந்திர மண்டலம் போல் செம்கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்தபலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-

சண்ணம் -குஹ்ய அவயவம்
திரை நீர் இத்யாதி -திரைக் கிளப்பத்தை உடைத்தான சமுத்திர மத்யத்திலே சலித்து தோற்றுகிற
சந்திர மண்டலம் போலே –
செம்கண் மால் இத்யாதி -சிவந்த திருக் கண்களையும் அதுக்கு பரபாகமான கருத்த
நிறத்தையும் உடையவனாய் -பிரசச்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –
தன் இத்யாதி -தன்னுடைய அழகியதாய் -நீர்மையை உடைத்தான திரு முக மண்டலத்தில் –
விளங்குகிற திரு சுட்டியானது -எங்கும் ஒக்க பிரகாசித்து -இடம் வலம் கொண்டு அசைய –
பெருநீர் இத்யாதி -தீர்த்தங்களில் பிரசித்தமாய் -ப்ரவாஹா ஜலம் மாறாமல் –
அலை எரிகிற கங்கையிலும் காட்டிலும் -பெரியதாய் அத்வீதியமான தீர்த்த பலத்தை
தரும் ஜலத்தை உடைத்தான சிறுச் சண்ணம் ஆனது துளிக்க துளிக்க தளர் நடை நடவானோ –

————————————-

அவதாரிகை
நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தொடர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே – 1-7 11- –

ஆயர் இத்யாதி -கோப குலத்தில் வந்து ஆவிர்பவித்த -ராஜ குலத்தில் ஆவிர்பவித்த வித்தமை –
அடி அறிவார் அறியும் இத்தனை இறே-இது இறே எல்லாரும் அறிந்தது –
அஞ்சன வண்ணன் தன்னை -கண்டவர் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருக்கிற
திரு நிறத்தை உடையவனை –
தாயர் இத்யாதி -பெற்ற தாயான யசோதையும் -அவளோபாதி ஸ்நேஹிகள் ஆனவர்களும்
ப்ரீதராம் படியாகவும் -தொட்டில் பருவத்திலே பூதன சகடாதிகள் நிரஸ்தர் ஆனமை அறிந்த –
கம்சாதிகளான சத்ருக்கள் தலை எடுத்து நடக்க வல்லன் ஆனமை கண்டு -என் செய்ய புகுகிறோம் –
என்று பீதராய் அவசன்னராம்படி யாகவும் தளர்நடை நடந்த பிரகாரத்தை –

வேயர் இத்யாதி -வேயர் தங்கள் குலத்து உதித்தவர் ஆகையாலே –
அக்குடியில் உள்ள எல்லோரும் தம்முடைய வைபவத்தை சொல்லி புகழும்படியான ஸ்ரீ பெரியாழ்வார் –
சீரால் இத்யாதி -சீர்மையோடே விஸ்தரித்து சொன்ன -இவற்றை ஏதேனும் ஒருபடி சொல்ல வல்லவர்கள் –

மாயன் இத்யாதி -ஆச்சர்யமான குணங்களை உடையவனாய் -நீல ரத்னம் போன்ற வடிவை
உடையவன் ஆனவனுடைய திருவடிகளிலே ஸ்வ சேஷத்வ அநு ரூபமான வ்ருத்தி
விசேஷத்தை பண்ணும் -சத்புத்ரர்களைப் பெறுவர்-
மக்கள் -என்று அவி விசேஷமாக சொல்லுகையாலே -வித்தையாலும் ஜன்மத்தாலும் வரும் –
உபய வித புத்ரர்களையும் சொல்லுகிறது –

—————————————

பூங்கோதை -பிரவேசம் –

முலையில் வாசி அறிந்து உண்ணும்
பிள்ளைப் பருவத்தை அனுபவித்து
இனியரனார் -கீழ்
அதுக்கு அநந்தரம்
லீலையிலே இழிந்து
சப்பாணி கொட்டும் பருவத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –

————————————————

பூங்கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஒங்கோத வண்ணனே சப்பாணி யொளி மணி வண்ணனே சப்பாணி -10-5-1-

பூங்கோதை ஆய்ச்சி –
செவ்வி மாலையாலே அலங்க்ருதமான மயிர் முடியை உடைய
யசோதை பிராட்டி கடைகிற வெண்ணெயை –
ஒப்பித்து நின்றாயிற்று தயிர் கடைவது
வாச நறும் குழல் ஆய்ச்சியர் -என்னக் கடவது இறே –

கடை வெண்ணெய் புக்கு உண்ண –
கடைந்து திரட்டிச் சேமித்து வைத்தால் களவு காண்கை அன்றிக்கே
கடைகிற போதே நிழலிலே ஒதுங்கி
களவு கண்டாயிற்று அமுது செய்வது –

ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்டு –
அவளுக்கு தயிர் கடைகையில் அன்றே அந்ய பரதை-
இவனை நோக்குகையிலே இறே
ஆகையாலே அவள் கண்டு பிடித்து
கட்டி
அடிக்க
அடி உண்டு –

ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஒங்கோத வண்ணனே சப்பாணி
பிரதம பரிபவம் ஆகையாலே முந்துற ஏங்கி
அநந்தரம்
அது ஆறிச் சீராட்டி
பின்னை லீலையோடே தலைக் கட்டும்
தேங்கின கடல் போலே யாயிற்று அப்போது இருக்கும் இருப்பு
விரலோடு இத்யாதி -முதல் திருவந்தாதி -24

யொளி மணி வண்ணனே சப்பாணி –
அவ்வளவே அன்றிக்கே புகரை உடைத்தான
மணி போலே இருக்கிறவனே –

சப்பாணி –
வடிவைக் காட்டி வாழ்வித்ததுவே அன்றிக்கே
சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

————————————————

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்
டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம்
ஆயர் அழக வடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி-10-5-2

தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண்டு
பெற்று வளர்த்த தன்னோடு ஒத்த பிராப்தியை உடையவர்கள் –
அமூர்த்தமான நெஞ்சு -கண்ணுக்கு தோற்றும் படி துடியா நின்றது –
சரீரத்வாரா தோற்றும் இறே-
தயிரையும் நெய்யையும் உண்டு –

ஏய் எம்பிராக்கள் –
தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே
இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே
தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய்
அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே –
தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய்
செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது –

இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக –
பரப்பை உடைத்தான பூமியில் எங்களிடை
ஜாதியில் உள்ளாரில் மிக்க அழகை உடையவனே –

வடிகள் அரவிந்த வாயவனே கொட்டாய் சப்பாணி-
திருவடிகளும் திரு அதரமும் செவ்வித் தாமரை போல் இருக்கிறவனே
அன்றிக்கே
அடிகள் அரவிந்த வாயவனே -என்ற பாடம் ஆகில்
திருவடிகள் தாமரையாய் இருக்கிறவன் -என்கிறது
எம்பிராக்கள் -என்பான் என்-அழகா -வாயவன் -என்று ஏக வசனமாய் இருக்க என்னில்
பத்துடை அடியவர்க்கு எளியவன் –அரும் பெறல் அடிகள் -என்றால் போலே-

மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
அதுக்கு பரபாகமான நிறத்தை உடையவனே
சப்பாணி கொட்ட வேணும் –

————————————————

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம்மோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —10-5-3-

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுந்கிட்டுத்
தயிரையும் நெய்யையும் மோரையும் சேர வைப்பார்கள் –
பாகவதர்களோடே அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே –
இங்கனே தாவா மோரை உருட்டி
பிரயோஜனபரமான தயிரையும் நெய்யையும் அமுது செய்யும் யாயிற்று-

தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் –
அப்பெரிய செயலைச் செய்யா -பின்னை தவழா நிற்பார் –
முன்பு எல்லாம் கிடந்தது உறங்கி
அவர்கள் பேர நின்ற அநந்தரம் –
இவனை இங்கனே சொல்லும்படி எங்கனே -என்னும்படி தவழா நிற்கும் –

தாமோதரக் கையால் ஆர்க்கத் தழும்பு இருந்த –
நீ எல்லாம் செய்து -மறைக்கப் பார்க்கிலும்
உன்னை ஒழிய இச் செயலை செய்வார் உண்டோ
என்று இடைச்சிகள் தாம்பாலே
மோதரக் கையாலே கட்ட -என்னுதல் –
அன்றிக்கே
அலங்க்ருதமான கையால் கட்ட –
தாமோதரக் கையால்-என்று பிரித்து மோதரத்தை
மோதிரம் என்று வ்யவஹரித்தது இத்தனை
படாகை கணறு -என்கிற இவற்றை பிடாகை கிணறு -என்கிறாப் போலே –

தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி –
உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே
தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –
எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

———————————————–

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-4-

பெற்றார் தளை கழலப் பேர்ந்து –
மாதா பிதாக்கள் காலில் விலங்கு கழலும்படி வந்து
அவதரித்து –
பேருகை யாவது -முன்பு இருந்த இருப்பின்றும் போருகை –
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -இத்யாதி –

அங்கு அயல் இடத்து -உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட –
அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே
லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற
மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் –

கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே
கன்றுகள் மேய்க்குமவனே –

————————————————

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5-

சோத்தென நின்னைத் தொழுவன் –
சோத்தம் என்று வாயாலே சொல்லா நின்று கொண்டு
உன்னைத் தொழுவன் –

எதுக்காக என்னில் –
வரம் தரப் —
என்னுடைய பிரார்த்திதங்களை நீ தருகைக்காக –

பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன ஆய்ச்சியர் அப்பம் தருவர் –
பருவம் நிரம்பாத அளவில் உபகரித்தவனே
உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –

அவர்க்காகச் -சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி –
அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் –

தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி —
கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால்
சப்பாணி கொட்ட வேணும் –

———————————————–

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நானவலப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே
கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி —10-5-6-

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு-நானவலப்பம் தருவன்-
ஓர் அப்பம் தந்தோம் என்று கை வாங்கி இருக்க ஒண்ணாது –
உன் வயிற்றுக்குப் போரும்படி
நான் அவல் அப்பம் தருவன் –

கருவிளைப் பூவலர் நீண் முடி நந்தன் தன் போரேறே –
கருவிளைப் பூவைக் காட்டா நின்றுள்ள நிறத்தையும் –
ஆதி ராஜ்ய சூசகமான முடியையும் உடையனாய்க் கொண்டு
ஸ்ரீ நந்த கோபர் கொண்டாடி வளர்க்க
வளர்ந்த செருக்கை உடையவனே –

கோவலனே கொட்டாய் சப்பாணி குடமாடி கொட்டாய் சப்பாணி –
ஜாத்யுசிதமாம் படி குடமாடி வாழ்வித்த நீ
சப்பாணி கொட்டி வாழ்விக்க வேணும் –

———————————————-

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத்
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி -10-5-7-

புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத் –
வாயை அங்காந்து கொண்டு வந்த பகாசூரன் வாயைக் கிழித்து
அடியே துடங்கி தலை யளவும் தர்ச நீயமாய் பூத்து நின்ற
குருந்தை வேரோடு பறித்து –

துள்ளி விளையாடித்-
சசம்பிரம ந்ருத்தம் பண்ணி
லீலா ரசம் அனுபவித்து –

தூங்குறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் –
தூங்கா நின்றுள்ள உறியிலே
சேமித்து வைத்த வெண்ணெயை அள்ளி அமுது செய்த கையில்
முடை நாற்றத்தோடு கூட
உன்னுடைய செயலிலே மோஹிக்கிற
என்னுடைய முலைக் கண்களைப் பால் சுரக்கைக்காக நெருடுகிற –

பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி –
பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே
உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே –

பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி —
அன்று பூதனை தன்னை முடித்து உன்னை
நோக்கித் தந்த நீ
இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ –

———————————————————

யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி —10-5-8-

யாயும் பிறரும் அறியாத யாமத்து –
பெற்ற தாயும்
மற்று உள்ளவாள் ஒருவரும்
இவர்கள் ஒருவரும் அறியாத நடுச் சாமத்திலே –

மாயா வலவைப் பெண் வந்து முலை தரப்-
வஞ்சனத்தை உடையளாய் இருக்கச் செய்தேயும்
யசோதை பிராட்டி பரிவு தோற்ற ஏத்திக் கொண்டு வருமா போலே
பூதனையானவள் ஜல்ப்பித்துக் கொண்டு வந்து முலையைக் கொடுக்க –

பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட –
பேய் என்று அவளை புத்தி பண்ணி
முலை வழியே அவளைப் பிடித்து முலை உண்டு
அவளை முடித்த திருப் பவளத்தை உடையவனே –

வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
உகவாதாரை அழியச் செய்வுதி
உகப்பார் சொல்லிற்றும் செய்ய வேண்டாவோ –

————————————————–

கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை
மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9-

கள்ளக் குழவியாய்க் –
பிள்ளைப் பருவத்திலே க்ருத்ரிமத்தை யுடையையாய் –

காலால் சகடத்தை தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை –
முலை வரவு தாழ்த்தது என்று
திருவடிகளை நீட்டின வ்யாஜ்யத்தாலே நலியக் கோலி
மேலிட்ட சகடத்தை பொடியாம்படி தள்ளி உதைத்து –
யசோதை பிராட்டி வடிவு உடையளாய் வந்து தோற்றின
பூதனையை –

மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட -வள்ளலே-
அவள் வரும் அளவும் ஆறி இருந்து
கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு
அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே –

கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –
உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ –

——————————————-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-

காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன் –
கார் காலத்திலே
கழுத்தே கட்டளையாக
நீரைப் பருகின காள மேகம் போலே
சர்வாதிகாரமாம் படி பிரபந்தத்தைப் பண்ணின மகோ தாரராய் –
திருமங்கையில் உள்ளாருக்கு நிர்வாஹகருமான –

பேராளன் –
நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா
அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே
கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே
பேராளன் -என்கிறார் –

பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட சீராளா –
இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே
நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது –
பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று –

செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்தாராளா -கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி-
இவை எல்லாம் ஐஸ்வர்ய சூசகமாய் இருக்கிறது –
இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது
தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே
பிறருக்கும் பலமாய் இருக்கிறது –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார்-அம்மம் உண்ண–அழைக்கும் பதிகம் —2-2-/ அம்மம் தர அஞ்சுவன் பதிகம் -3-1- / ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –என் அம்மம் சேமம் உண்ணாயே பதிகம்-10-4–

June 30, 2020

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாபதேசம்
அரவணை பிரவேசம் –

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்-என்று அல்வழக்கு ஒன்றும் இல்லாதே
அறுதியிட்டது தேசமாக்கி-தத் தேசிகனை அவதார கந்தமாக வஸ்து நிர்த்தேசம் செய்து
நாவ கார்யம் சொல் இல்லாதவர்களை தேசிகராக்கி
கார்ய பூதனானவன் அவதரித்த ஊரில் கொண்டாட்டம் ஒக்க நின்று கண்டால் போலே
மிகவும் உகந்து மங்களா சாசனம் செய்து
அவதரித்தவனுடைய திவ்ய அவயவங்களை பாதாதி கேசாந்தமாக நிரவத்யமான வளவன்றிக்கே
இதுவே பரம புருஷார்த்தம் என்று வஸ்து நிர்த்தேசம் செய்து
தாமும் மிகவும் உகந்து தம் போல்வார்க்கும் காணீர் –காணீர் -என்று -காட்டி அருளி
இவனுக்கு ஆஞ்ஞா ரூபமாகவும் அனுஜ்ஞ்ஞா ரூபமாகவும்
ப்ராப்தி நிபந்தனமான அபிமான ரூபமாகவும்
உபய விபூதியில் உள்ளாரும் உபகரித்த பிரகாரங்களை அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற
அவர்கள் வரவிட்ட வற்றையும்
அவர்கள் கொடுவந்த வற்றையும்
மேன்மையும் நீர்மையுமான மெய்ப்பாடு தோன்ற அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து-

அவன் அங்கீ கரித்த பின்பு
தொட்டிலேற்றித்
தாலாட்டி
ஜ்ஞானத்துக்கு ஆஸ்ரயத்தில் காட்டிலும் ஜஞேய ப்ராதான்யத்தைக் கற்ப்பித்து
அவற்றுக்கு ஜஞேய சீமை இவ்விஷயமாக்கி விஷயீ கரித்த ஜ்ஞானத்தை –
விஜ்ஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற ந்யாயத்தாலே ஜ்ஞாதாக்கள் ஆக்கி
இள மா மதீ -1-5-1-என்றும் –
விண்டனில் மன்னிய மா மதீ -1-5-6-என்றும்
உபய விபூதியில் உள்ளாரையும் உப லஷண நியாயத்தாலே இவன்
புழுதி அளைவது தொடக்கமான வ்யாபாரங்களைக் கண்டு
தாமும் மிகவும் உகந்து தம் போல்வாரையும் அழைத்துக் காட்டி

நோக்கின கண் கொண்டு போக வல்லீர்கள் ஆகில் போங்கோள்-என்று
முன்பு பச்சை வரவிட்டுத் தாங்கள் வாராதவர்களையும் வந்து கண்டு போங்கோள் -என்று
உய்ய உலகு படைத்து -என்று ஜகத் காரண பிரகாசகமான பரமபதம் முதலாக
கீழே அருளிச் செய்த திவ்ய தேசங்களையும்
இதில் அருளிச் செய்த திருக் குறுங்குடி முதலான திவ்ய தேசங்களிலும் சந்நிஹிதனாய் நின்றவனும்
நாநாவான அவதாரங்களும் அபதாநங்களுமாக பிரகாசித்தவனும்
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -கீதை -15-15-என்கிறபடியே
சகல வேத சாஸ்திர இதிஹாச புராணாதிகளாலும் அறியப்படுமவன் நான் -என்றவனை -கீழே

நாராயணா அழேல் அழேல் -என்றவர் ஆகையால் –
நான் மறையின் பொருளே -1-6-3-
ஏலு மறைப் பொருளே -1-6-9-
எங்கள் குடிக்கு அரசே -1-6-10-என்று வாசகத்துக்கு வாச்யமும் -வாச்யத்துக்கு வாசகமுமாக அறுதியிட்டு அவனை
செய்யவள் நின்னகலம் சேமம் எனக்கருதி –ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை -1-6-1- என்கையாலே
லோகத்தில் உள்ளாருக்கு பீதி பக்தி பிராப்தி மூலமான ஆசாரங்கள் பிரமாண அனுகுனமாகத் தோன்றும்படி யாகவும்
சொல் வழுவாத ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தோன்றும்படியாகவும்
செங்கீரை என்கிற வ்யாஜ்யம் முதலாக
சப்பாணி
தளர்நடை
அச்சோ அச்சோ
புறம் புல்கல்
அப்பூச்சி என்கிற வியாபார விசேஷங்களைப் பிரார்த்தித்து

அவன் இவை செய்யச் செய்ய அவற்றுக்குத் திருவடிகள் நோம் -என்றும்
தளர் நடையில் விழுந்து எழுந்து இருக்கையாலே திரு மேனி நோம் -என்றும்
அச்சோ புறம் புல்குகளாலே தம்முடைய திரு மேனியை வன்மை என்று நினைத்து
அத்தாலும் திரு மார்பு நோம் என்று அஞ்சி
நாம் பிரார்த்தித்து என்ன கார்யம் செய்தோம் -என்று அனுதபிக்கிற அளவில்

தன் நிவ்ருத்த அர்த்தமாக தன் திருத் தோள்களையும் ஆழ்வார்களையும் காட்ட
அவையும் பயா அபாய ஹேது வாகையாலே அவற்றை அமைத்து திரு மேனியில் வாட்டத்தை நினைத்து
படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் இத்தனை என்று உறங்குகிறவனை எழுப்பி
அநச்னன்-என்கிற பிரதிஜ்ஞ்ஞையைக் குலைத்து
அஸ்நாமி -என்கிறபடியே அமுது செய்ய வேணும் -என்கிறார் –

————————————————————————————

ஸ்ரீ மணவாள மா முனிகள்

அவதாரிகை –
ஆழ்வார்கள் எல்லாரும் ஸ்ரீ கிருஷ்ண அவதார ப்ரவணராய் இருந்தார்களே ஆகிலும் –
அவர்கள் எல்லாரையும் போல் அன்றிக்கே –
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அதி ப்ரவணராய் –
அவ்வதார ரச அனுபவத்துக்காக கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன்-என்கிறபடியே
அவ்வதார ரசம் உள்ளது எல்லாம் அனுபவிக்கிறவர் ஆகையாலே –

முதல் திருமொழியிலே அவன் அவதரித்த சமயத்தில் -அங்குள்ளார் செய்த உபலாவன விசேஷங்களையும் –

அநந்தரம்-1-2-
யசோதை பிராட்டி அவனுடைய பாதாதி கேசாந்தமான அவயவங்களில் உண்டான அழகை
ப்ரத்யேகம் பிரத்யேகமாக தான் அனுபவித்து –
அனுபுபூஷுக்களையும் தான் அழைத்துக் காட்டின படியையும் –

அநந்தரம் -1-3-
அவள் அவனைத் தொட்டிலிலே ஏற்றித் தாலாட்டின படியையும் –
பிற்காலமாய் இருக்க தத் காலம் போலே பாவனா பிரகர்ஷத்தாலே யசோதாதிகளுடைய
ப்ராப்தியையும் சிநேகத்தையும் உடையராய் கொண்டு -தாம் அனுபவித்து –

அநந்தரம் –
அவன் அம்புலியை அழைக்கை-1-4-
செங்கீரை ஆடுகை -1-5-
சப்பாணி கொட்டுகை -1-6-
தளர் நடை நடைக்கை -1-7-

அச்சோ என்றும் -1-8-
புறம் புல்குவான் என்றும் -1-9-
யசோதை பிராட்டி அபேஷிக்க
முன்னும் பின்னும் வந்து அணைக்கை ஆகிற பால சேஷ்டிதங்களை-
தத் பாவ யுக்தராய் கொண்டு அடைவே அனுபவித்துக் கொண்டு வந்து –

கீழ்த் திரு மொழியிலே -2-1-
அவன் திரு ஆய்ப்பாடியில் உள்ளோரோடு அப்பூச்சி காட்டி விளையாடின சேஷ்டிதத்தையும் –
தத் காலத்திலேயே அவள் அனுபவித்து பேசினால் போலே தாமும் அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டரானார் –

இனி -2-2-
அவன் லீலா வ்யாபாரச்ராந்தனாய் -முலை உண்கையும் மறந்து -நெடும் போதாக கிடந்தது உறங்குகையாலே –
உண்ணாப் பிள்ளையை தாய் அறியும் -என்கிறபடியே யசோதை பிராட்டி அத்தை அறிந்து –
அம்மம் உண்ணத் துயில் எழாயே-என்று அவனை எழுப்பி –
நெடும் போதாக முலை உண்ணாமையை அவனுக்கு அறிவித்து –
நெறித்து பாய்கிற தன முலைகளை உண்ண வேண்டும் என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் -விடாதே நிர்பந்தித்து முலை ஊட்டின பிரகாரத்தை
தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு –
தத் பாவ யுக்தராய் கொண்டு -அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்து
பேசி ஹ்ர்ஷ்டராகிறார் இத் திரு மொழியில் –

—————————————-

அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே -2 2-1 –

அரவணையாய் ஆயரேறே–
திரு வநந்த ஆழ்வான் படுக்கை வாய்ப்ப்பாலே கண் வளர்ந்த வாசனையோ
ஆயர் ஏறான இடத்திலும் பள்ளி கொள்ள வேண்டுகிறது

மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமானவற்றை பிரகிருதியாக உடைய
திரு அனந்தாழ்வானைப் படுக்கையாய் உடையனாய் இருந்து வைத்து –
நாக பர்யங்கம் உத்சர்ஜ்ய ஹ்யாகத -என்கிறபடியே அப்படுக்கையை விட்டு -போந்து -அவதீரணனாய்-
ஆயருக்கு பிரதானன் ஆனவனே -அப்படுக்கை வாய்ப்பாலே பள்ளி கொண்டு போந்த வாசனையோ –
ஆயர் ஏறான இடத்திலும் படுக்கை விட்டு எழுந்து இராதே பள்ளி கொள்ளுகிறது –
அவன் தான் இதர சஜாதீயனாய் அவதரித்தால்-
சென்றால் குடையாம் -என்கிறபடி -சந்தானுவர்த்தயாய் அடிமை செய்யக் கடவ –
திரு வனந்தாழ்வானும் அவனுடைய அவஸ்த அனுகுணமாக பள்ளி கொள்வதொரு திருப் படுக்கையான
வடிவைக் கொள்ளக் கூடும் இறே -ஆகையால்-அங்கு உள்ள சுகம் எல்லாம் இங்கும் உண்டாய் இருக்கும் இறே
கண் வளர்ந்து அருளுகிறவனுக்கு-

அம்மம் உண்ணத் துயில் எழாயே –
சோறு -என்றாலும்
பிரசாதம் -என்றாலும்
அறியான் என்று நினைத்து -அம்மம் உண்ணத் துயில் எழாயே என்கிறார் –
முலை உண்ண- என்னாதே- அம்மம் உண்ண -என்றது
சைசவ அனுகுணமாக அவள் சொல்லும் பாசுரம் அது ஆகையாலே
துயில் -நித்தரை
எழுகையாவது-அது குலைந்து எழுந்து இருக்கை-
எழாய்-என்கிற இது எழுந்து இருக்க வேணும் என்கிற பிரார்த்தனை-

இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ –
பகல் யுண்டத்தை மறந்தார் போலே காணும்
பகல் உண்ணாதார் இரவும் உண்ணார்களோ
எழுப்பின அளவிலும் எழுந்து இராமையாலே -கன்ற எழுப்ப ஒண்ணாது -என்று விட்டேன்
இன்றும் போய் உச்சிப் பட்டது என்கிறார் விடிந்த மாத்ரத்தையே கொண்டு –

நீ ராத்திரி உண்ணாதே உறங்கி -அவ்வளவும் இன்றிக்கே இன்றும் போது உச்சிப் பட்டது –
ராத்திரி அலைத்தலாலே கிடந்தது உறங்கினால் -விடிந்து ஆற்றானாகிலும் உண்ண வேண்டாவோ –
விடிந்த அளவேயோ போது உச்சிப் பட்டது காண்
ஆலும் ஓவு மாகிற அவ்யயம் இரண்டும் விஷாதாதிசய சூசகம்

வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாயத் –
உண்ண வேண்டா -என்னும் போதும் எழுந்து இருந்து வந்து
வேண்டா என்ன வேண்டாவோ -என்ற அளவிலே
எழுந்து இருந்து வருகிறவனைக் கண்டு
வயிறு தளர்ந்து முகம் வாடிற்று -என்று எடுத்து அணைத்துக் கொண்ட அளவிலே
அழகிய முலைகள் நெறித்துப் பாயத் தொடங்கிற்று –
வனப்பு -அழகும் பெருமையும்-

நீ எழுந்து இருந்து அம்மம் உண்ண வேண்டும் என்று வரவும் கண்டிலேன் –
அபேஷை இல்லை என்ன ஒண்ணாதபடி வயிறு தளர்ந்து இரா நின்றாய்
முலைகள் ஆனவை உன் பக்கல் சிநேகத்தால் நெறிந்து-பால் உள் அடங்காமல் வடிந்து பரக்க-
உனக்கு பசி உண்டாய் இருக்க -இப்பால் இப்படி வடிந்து போக -உண்ணாது ஒழிவதே -என்று கருத்து –

திருவுடைய வாய் மடுத்துத் –
பிராட்டிக்கு அசாதரணமான வாய் என்னுதல்-
திருவாய்ப்பாடியில் சுருட்டார் மென் குழல் -3-1-7-என்கிறபடியே குழல் அழகு படைத்தார்க்கு எல்லாம்
அம்ருத பானம் பண்ணும்படி சாதாரணமான வாய் -என்னுதல்
அழகிய வாய் -என்னுதல்
திரு-அழகு

அழகிய திருப் பவளத்தை மடுத்து -திரு-அழகு –
இவ்வண முலையிலே உன்னுடைய திரு உடைய வாயை அபிநிவேசம் தோற்ற மடுத்து –

திளைத்து உதைத்துப் பருகிடாயே –
முலையிலே வாய் வைத்து
முழுசி
வயிற்றிலே உதைத்து
அமுது செய்ய வேணும் என்று பிரார்த்திக்கிறார்-

முலை உண்ணுகிற ஹர்ஷம் தோற்ற கர்வித்து கால்களாலே
என் உடம்பிலே உதைத்து கொண்டு -இருந்து உண்டிடாய் –
பருகுதல்-பானம் பண்ணுதல் –

————————————-

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உணாயே- 2-2 2- –

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
நறு வெண்ணெய்-பழுதற உருக்கி வைத்த நெய்யும்
செறிவுறக் காய்ந்த பாலும்
பனி நீர் அறும்படி நன்றாகத் தோய்த்த தயிரும் -சாய்த்தால் வடிவத்தை இருக்கிற தயிர் என்னவுமாம் –
நறு வெண்ணெயும் -செவ்வி குன்றாமல் கடையும் பக்வம் அறிந்து கடைந்து வைத்த நறு வெண்ணெயும்-

பழுதற உருக்கி வைத்த நெய்யும் -செறிவுறக் காய்ந்த பாலும் –
நீர் உள்ள்து வடித்து கட்டியாய் இருக்கிற தயிரும் -செவ்வையிலே கடைந்து எடுத்த நறுவிய வெண்ணையும்

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
ஒன்றும் பெற்று அறியேன் -என்னுதல்
இவை வைத்த பாத்ரங்களில் சிறிதும் பெற்று அறியேன் என்னுதல்

அன்றிக்கே –
இத்தனையும் என்றது -ஏக தேசமும் என்றபடியாய்-இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்-
இப்படி என்னை களவேற்றுவதே-என்னைப் பிடித்தல் அடித்தல் செய்ய வன்றோ நீ இவ்வார்த்தை
சொல்லிற்று என்று குபிதனாக –

ஆரோ கொண்டு போனார் -என்று அறிகிலேன் -என்றவாறே –
எம்பிரான் -என்ற போதை முக விகாரத்தாலும்
நீ பிறந்த பின்னைப் பெற்று அறியேன் -என்றதாலும்
என்னைக் குறித்து அன்றோ நீ இவை இவை எல்லாம் சொல்லுகிறது -என்று கோபத்தோடு போகப் புக்கவனை
வா -என்று அழைத்த வாறே
என்னைப் பிடித்து அடித்தல் செய்ய வன்றோ நீ அழைக்கிறாய்
நான் எது செய்தேன் -என்ன –

எத்தனையும் செய்யப் பெற்றாய்-
உனக்கு வேண்டினது எல்லாம் செய்யக் கடவை -என்ன
இப்போது சொல்லுகிறாய் உன் வார்த்தை அன்றோ -என்ன

ஏதும் செய்யேன் கதம் படாதே –
நான் யுன்னை அடித்தல் கோபித்தல் செய்யேன்
நீ கோபியாதே வா -என்ன -என்றவாறே-
நான் உன்னைப் பிடித்தல் அடித்தல் ஒன்றும் செய்யக் கடவேன் அல்லேன் –
நீ கோபிக்க வேண்டா -கதம்-கோபம்

முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே
முத்துப் போலே இருக்கிற திரு முத்து தோன்ற மந்த ஸ்மிதம் செய்து நின்ற அளவிலே
சென்று எடுத்துக் கொண்டு
இவனை சிஷிப்பதாக நினைத்தவை எல்லாம் மறந்து
அந்த முறுவலோடு வந்து
முத்துப் போலே ஒளி விடா நிற்கும் முறுவலை செய்து –
அதாவது -கோபத்தை தவிர்ந்து ஸ்மிதம் பண்ணி கொண்டு -என்கை

மூக்காலே முழுசி
முலை மார்புகளிலே முகத்தாலும் மூக்காலும் உரோசி முலை யுண்ணாய் -என்கிறார்-
முலைக் கீழை -முழுசி -முட்டி -மூக்காலே உரோசி இருந்து
முலையை அமுது செய்யாய் –

இத்தால்
வைத்த நெய்யால் -சாஷாத் முத்தரையும்
காய்ந்த பாலால் -சொல்லுவதே ஓத்தின் சுருக்கு -என்றும்
நாம நிஷ்டோசம் யஹம் ஹரே -என்றும் இருக்கிறவர்களையும்
வடி தயிரால் -சதுர்த்தி உகாரங்களிலே தெளிந்து -தந் நிஷ்டராய் –
மகாரத்திலே ப்ர்க்ருத்யாத்ம விவேக யோக்யரானவர்களையும் –
நறு வெண்ணெயால் -செவ்வி குன்றாமல் இவ்வடைவிலே ப்ரக்ருத்யாத்ம விவேகம் பிறந்து
அஹங்கார மமகார நிவ்ருத்தமான ஆத்ம குணங்களால் பூரணராய்
மோஷ சாபேஷராய்-இருக்கிறவர்களையும் சொல்லுகிறது –

—————————————————————————-

தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்க கில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன் திறத்தர் அல்லர் உன்னை நான் ஓன்று உரப்ப மாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே -2-2-3 –

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் வந்து நின் மேல் பூசல் செய்ய –
தெருவிலே விளையாடுகிற பிள்ளைகள் முதலானோர் பலரும் -உன் மகன் எங்களை அடித்தான் -என்று முறைப்படுவதாக
பிள்ளைகளையும் கொண்டு வந்து தீம்பேற்றிக் காட்டின அளவிலே
ஆய்ச்சி நான் ஒன்றும் செய்திலேன்
இவர்கள் தாங்களாக்கும் இவை எல்லாம் செய்தார்கள் -என்று இவர் பீதனாய் அழப் புகுந்தவாறே
இவள் அமுது கொடு வந்தவர்களை அழுகை மாற்றுதல்
இவனை சிஷித்தல் செய்யாதே
தன்னைத் தானே நலிந்து கொள்ளப் புக்கவாறே
அவர்கள் தாய்மார் வந்தவர்கள் -இது என் என்று விலக்கப் புக்கவாறே
இந் நேரிலே தம் தாம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ -என்றது கேட்டு
அவர்கள் போனவாறே இவனைப் பிடித்து நலிவதாகத் தேடி -இவன் அழுகையைக் கண்டு
உன் மேல் எல்லாரும் தீம்பேற்றி அலர் தூற்ற -அதுவே யாத்ரையாக –

ஊரில் பிள்ளைகளோடே விளையாடப் புக்கால் எல்லாரையும் போல் அன்றிக்கே –
நீ அவர்களை அடித்து குத்தி விளையாடா நின்றாய் -இப்படி செய்யலாமோ -தம் தம் பிள்ளைகள் அழுது சென்றால் –
அவர்கள் தாய்மாரானவர்கள் பொறுக்க மாட்டார்கள் –
வந்து நின் மேல் பூசல் செய்ய -அவர்கள் தாங்கள்-தங்கள் பிள்ளைகளையும் பிடித்து கொடுவந்து உன் மேலே
சிலுகு -சண்டை -இட்டு பிணங்க

வாழ வல்ல வாசுதேவா -உந்தையார் உன் திறத்தரல்லர்-
பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ-என்று கோபித்து –
வாழ வல்ல -அதிலே ஒரு சுற்றும் இளைப்பு இன்றிக்கே -பிரியப்பட்டு -இதுவே போகமாக இருக்க வல்ல –
வாசுதேவா -வாசுதேவன் புத்திரன் ஆனவனே -பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ
அத்தை மறந்து

நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –
நந்த கோபனுக்கு என்றே வாய்த்த பிள்ளாய் -என்று கோபித்து
உந்தையரான ஸ்ரீ நந்தகோபர் உன் திறத்தல்லர் -உன்னை சிஷித்து வளர்க்க மாட்டார்-
உன்னுடைய தமப்பன் ஆனவர் உன்னிடையாட்டம் இட்டு எண்ணார்-என்றபடி –
ஸ்ரீ நந்த கோபர்க்கு வாய்த்த பிள்ளாய் -அணி -அழகு –
இவன் தீம்பிலே உளைந்து சொல்லுகிற வார்த்தை

உன்னை நான் ஓன்று இரப்ப மாட்டேன் –
நானும் உன்னை அதிரக் கோபித்து -நியமிக்க மாட்டேன் –
தீம்பனான உன்னை -அபலையான நான் -ஒரு வழியாலும் தீர நியமிக்க மாட்டேன் –

அத்தையும் மறைத்து -இவனை எடுத்து
சுரந்த முலையை -நான் தர -நீ உண்ணாய்-என்று பிரார்த்திக்க வேண்டி நில்லா நின்றது இறே-
அவை எல்லாம் கிடக்க -இப்போது நான் சுரந்த முலையை அமுது செய்யாய் –

—————————————

கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சகடு கலக்கழிய
பஞ்சி அன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர்கோவே ஆயர் கூட்டத்து அளவு அன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை உணாயே -2-2-4-

பஞ்சி என்கிற இது பஞ்சு என்பதற்கு போலி –

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு-
பிறப்பதற்கு முன்னே கொலை கருதிப் பார்த்து இருக்கிறவன்
திருவாய்ப்பாடியிலே வளருகிறான் -என்று கேட்டால் கொலை கருதி விடாது இரான் இறே
இனி -இதுக்காவான் இவன் -என்று தன் நெஞ்சில் தோன்றின க்ருத்ரிம வியாபாரங்கள் எல்லாத்துக்கும் தானே
சப்தமிட்டுப் புணர்ந்து சகடாசூரனைக் கற்பித்து வரவிட வருகையாலே -கள்ளச் சகடு -என்கிறார் –
பூதனையிலும் களவு மிகுத்து இருக்கும் காணும் -ஆவேசம் ஆகையாலே சகடாசுரனுக்கு-
உன் மேலே கறுவதலை உடையனான கம்சனாலே உன்னை நலிகைக்காக –
கற்ப்பிக்கப் பட்ட க்ர்த்ரிமமான சகடமானது -அசூரா விஷ்டமாய் வருகையாலே -கள்ளச் சகடு -என்கிறது –

கலக்கழியப்பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது -நொந்திடும் என்று-அஞ்சினேன் காண்
கலக்கழிய –
தளர்ந்தும் முறிந்தும் உடல் வேறாக பிளந்து வீய -என்கிறபடியே கட்டுக் குலைந்து உரு மாய்ந்து போம்படியாக
பஞ்சி இத்யாதி –
பஞ்சு போன்ற மிருதுவான திருவடிகளாலே உதைத்த போது -திருவடிகள் நோம் -என்று பயப்பட்டேன் காண் –
சாடு கட்டுக் குலைந்து அச்சு தெறித்து போம்படி பஞ்சிலும் காட்டிலும் அதி மார்த்வமான
திருவடிகளால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண்-

அமரர் கோவே -தேவர்களுக்கு நிர்வாகன் ஆனவனே –
அமரர் கோவே –
அமரருடைய பாக்யத்தாலே இறே நீ பிழைத்தது -என்னுதல்-
அன்றிக்கே
பிரதிகூலித்து கிட்டினார் முடியும்படியான முஹூர்த்த விசேஷத்திலே நீ பிறக்கையாலே -என்னுதல் –
இப்படி பய நிவர்த்தகங்களைக் கண்டாலும் பயம் மாறாது இறே இவருக்கு –
உன்னைக் கொண்டு தங்கள் விரோதியைப் போக்கி –
வாழ இருக்கிற அவர்கள் பாக்யத்தால் இறே -உனக்கு ஒரு நோவு வராமல் இருந்தது -என்கை –

ஆயர் கூட்டத்து அளவன்றாலோ-
பஞ்ச லஷம் குடி இருப்பிலும் திரண்ட பிள்ளைகள் அளவன்றாகில்
ஒ ஒ உன்னை எங்கனே நியமித்து வளர்ப்பேன்
ஆயருடைய திரள் அஞ்சின அளவல்ல காண் -நான் அஞ்சின படி –
ஆல் ஒ என்றவை விஷாத சூசகமான அவ்யயங்கள்

இங்கனே இவர் ஈடுபட புகுந்தவாறே -நம் கையில் கம்சன் பட்டது அறியீரோ -என்ன
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை யுணாயே-
கம்சன் பட்டது உன் பக்கல் பண்ணின வஞ்சனை ஆகிய பாப வலை சூழ்ந்து அன்றோ பட்டது
நீ வலைப்படுத்தாய் -என்கிறது வ்யாஜம் மாதரம் அன்றோ –
அன்றைக்கு நீ பிழைத்தது என் பாக்கியம் அன்றோ -என்னுதல் –
அன்றிக்கே
நீ வஞ்சனை செய்து சிறைப்படுத்திக் கொல்ல-அவன் பிராணன் இழந்த படியால் -நான் பிராணன் பெற்றேன்
என்று தேறி முலை யுண்ணாய் என்கிறார்-
உன் திறத்திலே வஞ்சனைகளை செய்த கம்சனை -நீ அவன் திறத்தில் செய்த வஞ்சனையாலே
தப்பாதபடி அகப்படுத்தி முடித்தவனே
முலை உணாயே -இப்போது முலையை அமுது செய்ய வேணும் –

—————————————————————————–

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2 -2-5 – –

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் –
ஜன்மாந்தர வாசனையாலும்
அசத் சஹ வாசங்களாலும்
துஷ்ட மந்த்ரிகள் வார்த்தை கேட்கையாலும்
சாதுவான அக்ரூரர் வார்த்தை கேலாமையாலும்
ராஜ குலத்தில் பிறந்து இருக்கச் செய்தேயும் தனக்கு என்று ஓர் அறிவு இல்லாமையாலும்
சகல பிராணி விருத்தமான அசன் மார்க்க நிரூபகன் ஆகையாலும்
இவை எல்லாத்துக்கும் ஹேதுவான கர்ப்ப தோஷத்தாலும் -தீய புந்திக் கஞ்சன் -என்கிறார் –

தீய புந்தியாவது –
அஹங்கார மமகார நிபந்தனமாக
தன்னைத் தானே முடிக்க விசாரித்து அத்யவசித்து இருக்கை-
இப்படிப்பட்ட புத்தியை யுடையவன் நிர் நிபந்தனமாக உன் மேல் அதி குபிதசலித ஹ்ருதயனாய்
விபரீத தர்மங்களான மாயா ரூபிகளை பரிகாரமாக யுடையவனாய்

தீய புந்திக் கஞ்சன் -துர் புத்தியான கம்சன் -பிள்ளைக் கொல்லி இறே-
மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாபிஷ்டன் இறே –
உன் மேல் சினமுடையன் -தேவகி உடைய அஷ்டம கர்ப்பம் உனக்கு சத்ரு -என்று
அசரீரி வாக்யத்தாலே கேட்டு இருக்கையாலும் –
பின்பு துர்க்கை சொல்லிப் போந்த வார்த்தையாலும் –
நமக்கு சத்ரு வானவன் கை தப்பிப் போய் நம்மால் கிட்ட ஒண்ணாத ஸ்தலத்திலே புகுந்தான் –
இவனை ஒரு வழியாலே ஹிம்சித்தாய் விடும்படி என் -என்று இருக்கையாலும் –
உன்னுடைய மேலே மிகவும் குரோதம் உடையவன் –

எப்போதோ இடம் -என்று சோர்வு பார்த்து மாயா ரூபிகளை வரவிட்டு
அவர்களுடைய சூட்சி யாகிற வலையிலே அகப்படில் நான் உயிர் வாழ்ந்து இரேன்-முடிவன் –
சோர்வு பார்த்து-மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா-
தனியே புறப்படுகை –
உன்னாலே இறே சாதுவான வாசுதேவன் முதலானாரையும் அவன் நலிகிறது
உன்னைக் கண்டால் அவன் வர விட்ட மாயா ரூபிகள் விடுவார்களோ –

சோர்வு பார்த்து -அவிழ்ச்சி பார்த்து -அதாவது நீ அசஹாயனாய் திரியும் அவசரம் பார்த்து -என்கை-
மாயம் தன்னால் வலைப் படுக்கில் -உன்னை நலிகைக்காக மாயா ரூபிகளான ஆசூர பிரகிருதிகளை
திர்யக்காகவும் ஸ்தாவரமாகவும் உள்ள வடிவுகளை கொண்டு நீ வியாபாரிக்கும்
ஸ்தலங்களில் நிற்கும் படி பண்ணியும் -நீ அறியாமல் வஞ்சனத்தால் நழுவாதபடி பிடித்து கொள்ளில் –
வாழ கில்லேன் -நான் பின்னை ஜீவித்து இருக்க ஷமை அல்லேன் -முடிந்தே விடுவேன் –
வாசுதேவா -உன்னாலே இறே சாதுவான அவரும் சிறைப்பட வேண்டிற்று

தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா-
கீழே -தேவகி சிங்கமே -என்று சொல்லி வைத்து
இப்போது தன்னை மாதாவாக சொல்லும் போது
பித்ருத்வம் நோபலஷயே -அயோத்யா -58-31-
உந்தை யாவன் என்று உரைப்ப -பெருமாள் திரு மொழி -7-3-
நந்த கோபன் மைந்தன்
நந்த கோபன் பெற்றனன் –
எங்கு இங்கிதத்தாலே காட்டினானாக வேணும் இறே
பிறந்த அன்றே மாத்ரு வசனம் கார்யம் -என்று கொண்ட யுனக்கு
என் வார்த்தையும் கார்யம் என்று கைக் கொள்ள வேணும் காண்-
பலரும் அறியும்படி பல காலும் சொன்னேன்
லீலா ரசத்தை நச்சியும் போகாதே கொள்-
உத்தேச்யதையாலும் பரிவாலும் தாய்மார் வாக்கால் சொல்லுவது பிள்ளைகளுக்கு அவசிய கரணீயம் காண் -என்கை-
சாற்றிச் சொன்னேன் போக வேண்டா -இது தன்னை குன்னாம் குருச்சியாக -ரகஸ்யமாக -அன்றிக்கே
எல்லாரும் அறியும் படி பிரசித்தமாக சொன்னேன் -லீலா அர்த்தமாகவும் நீ தனித்து ஓர் இடத்தில் போக வேண்டா

ஆயர்பாடிக்கு அணி விளக்கே –
என் அளவேயோ
இவ் ஊரில் உள்ள எல்லாரும் உன்னையே காணும்படி அழகிதான தீபம் போலேயான
சௌந்த்ர்யாதி குணங்களாலே பிரகாசிதன் ஆனவனே –
விளக்குக்கு அழகு தூண்டாமையும் நந்தாமையும் –
இப்படி இருப்பதொரு விளக்கு யுண்டோ என்னில்
ப்ரதீதியில் ப்ரத்யஷ மாத்ரத்தாலே யுண்டு என்னவுமாம் –
அனுமானம் ப்ரத்யஷ சாபேஷம் ஆனாலும் ப்ரத்யஷம் அனுமானம் சாபேஷம் ஆகாது
ஆயிருக்க இரண்டும் ஸ்மாரக தர்சனத்தாலே ஏக ஆஸ்ரயத்திலே காண்கையாலே
இவை நிரூபியாமல் கண்ட மாத்ரமே கொண்டு -அணி விளக்கு -என்னுதல்
அன்றியிலே
அபூதம் என்னுதல் –

ஆயர்பாடிக்கு அணி விளக்கே -திரு வாய்ப்பாடிக்கு ஒரு மங்கள தீபம் ஆனவனே –
அணி-அழகு
இத்தால்-எனக்கே அன்று -உனக்கு ஒரு தீங்கு வரில் -இவ்வூராக இருள் மூடி விடும் கிடாய் -என்கை

யமர்ந்து என் முலை யுணாயே —
உன் இஷ்டத்திலே போக்குவரத்து சீகர கதி யானாலும்
அழைக்க வரும் போது மந்த கதியாக வேணும் காண் –
ஆனபின்பு பரபரப்பை விட்டு பிரதிஷ்டனாய் வந்து உனக்கு என்று சுரந்து இருக்கிற முலையை
அமுது செய்ய வேணும் –

இனி இவர்க்கு முலைப்பால் ஆவது
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமாய் –
மங்களா சாசன பர்யந்தமான பக்தி ரூபா பன்ன ஜ்ஞான ப்ரவாஹம் இறே
பக்தி உழவன் ஆனவனுக்கு தாரகாதிகள் எல்லாம் இது தானே இறே-

————————————————————————–

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –

மின்னனைய நுண்ணிடையார் –
மின்கொடி ஒரு வகை ஒப்பாயிற்று ஆகிலும் -அது போராமை இறே நுண்ணிடையார் என்கிறது –

மின்னோடு ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்-
மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே சூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –

விரி குழல் மேல் நுழைந்த வண்டு –
விரி குழல் -என்கையால் -நீண்டு பரந்து இருண்டு சுருண்டு நெய்தது-என்றால் போலே
சொல்லுகிற எல்லா வற்றுக்கும் உப லஷணம்
விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –
குழல் மேல் வந்து படிந்து உள்ளே முழுகின வண்டுகள் மது பானம் செய்த செருக்கால் –

இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
இனிதான இசைகளைப் பாடா நிற்கிற ஸ்ரீ வில்லிபுத்தூரை-
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே –
ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே-
பரம சாம்யாபந்யருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே –

இனிது அமர்ந்தாய் –
பரமபதத்திலும் காட்டிலும் மிகவும் விரும்பி அந்த இசையைக் கேட்டு
இனிது அமர்ந்து இறே- வட பெரும் கோயில் யுடையான் கண் வளர்ந்து அருளுகிறது –
நித்ய நிர்தோஷ
ஸ்வயம் பிரகாச
அபௌருஷேய
ஏகாரத்த நிர்ணயமான
சகல வேதங்களையும் மங்களா சாசன பர்யந்தமாக நிர்ணயித்து
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் -என்று பிரசித்தரான இவர்
வேறு ஒரு வ்யக்தியில் சேர்க்கவும் அரிதாய்
அசாதாரணங்களான-விஷ்ணு வாசுதேவன் -நாராயணன் -என்னும் திரு நாமங்கள் யுண்டாய் இருக்க
வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் -என்று வஸ்து நிர்த்தேசம் செய்தார் இறே
இது இறே பிரமாணிகருக்கும் சாஷாத் கர பரருக்கும் உத்தேச்யம் –

யுன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த –
உன்னைக் கண்ட பாக்யாதிகர் -ஸூக தாதம் -என்னும்படி யான வ்யாசாதிகள் உடைய உபாசன மாத்ரங்கள் அன்றிக்கே
இதுவே இறே ஒரு படியாய் இரா நின்றதீ -என்று விஸ்மிதராய்
இவனைப் பெற்ற வயிறு யுடையாள்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ-என்று
பலகாலும் சொல்லும்படியான வார்த்தையால் வந்த பிரசித்தியை யுன்டாக்கித் தந்த –

நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால் வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் –
நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும் உண்டு இறே –
அவ்வளவு அன்றிக்கே லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் –
இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை –
எனக்கு உண்டாக்கித் தந்த

இருடீ கேசா முலை யுணாயே-
இந்த்ரியங்கள் வ்யக்தி அந்தரங்களிலே செல்லாதபடி சௌந்தர்யாதிகளாலே அபஹரிக்க வல்லவனே –
இருடீகேசா -கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாதபடி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –
முலை உணாயே-

இடையாலே
ஒன்றையும் பொறாத வைராக்யமும் –
இடை நோக்குவது
முலைகள் விம்மி பெருத்தல் ஆகையாலே மிக்க பக்தியையும்
விரி குழல் -என்கையாலே –
நாநா வானப் பிரபத்திகளை ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் -ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்
மேல் நுழைந்த வண்டு -என்கையாலே இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்
இன்னிசை -என்கையாலே
ஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்
இவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது திரு மாளிகையிலே ஆகையாலே இத்தை உகந்து அருளி
இனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-

—————————————————————————

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்கி நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 7- –

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
புத்ர சாபேஷராய் வர்த்திக்கிற ஸ்திரீகள் உன்னைக் கண்டால் அபஹ்ருத சித்தைகளாய்-
நாம் இப்படி ஒரு பிள்ளை பெறப் பெறுகிறோம் இல்லையே நமக்கு இது கூடுமோ என்கிற ஆசையோடு –
ஸ்வ பர்த்தாக்களுக்கு பார்யைகளாய் வர்த்திப்பராய் உன்னைக் கண்டவர்கள் –
உன்னைப் போலே இருக்கும் பிள்ளைகளை பெற வேணும் என்னும் ஆசையாலே கால் வாங்கி
போக மாட்டாதபடியாய் விட்டார்கள் –

கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
தம்தாமுடைய உத்தியோகங்களை மறந்து நில்லா நின்றார்கள் –

வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக் கொண்டு போவான் வந்து நின்றார்-
வேறு யுவதிகளாய் இருப்பார் வண்டு முழுகி முழுசும்படியான செவ்வி மாறாத மாலைகளாலே
அலங்க்ருதமான குழல்களையும் யுடையார் சிலர்
தம் தாமுடைய அபிமதங்களாலே ஸ்பர்சிப்பதாக நினைத்து
தங்கள் கண்களாலே சமுதாய சோபா தர்சனம் செய்து அணைத்து எடுத்து
வாக் அம்ருத சாபேஷைகளாய் கொண்டு போவதாக வந்து நில்லா நின்றார்கள் –
நீயும் அவர்களோடு போவதாக பார்த்து ஒருப்படா நின்றாய் –

வண்டுலாம் பூம் குழலினார் கண் இணையால் கலக்கி நோக்கி-பெருக்காற்றிலே இழிய மாட்டாமையால்
கரையிலே நின்று சஞ்சரிப்பாரைப் போலே
மதுவின் சமர்த்தியாலே உள்ளே அவஹாகிக்க மாட்டா வண்டுகள் ஆனவை மேலே நின்று சஞ்சரிக்கும் படி –
பூவாலே அலங்க்ர்தமான குழலை உடையவர்கள் –
தன்னுடைய கண்களால் உன்னுடைய சமுதாய சோப தர்சனம் செய்து –
கலக்க நோக்குகையாவது -ஓர் அவயவத்தில் உற்று நிற்கை அன்றிக்கே திருமேனியை எங்கும் ஒக்க பார்க்கை –

கீழ் -பெண்டிர் வாழ்வார் -என்று
பக்வைகளாய் பர்த்ர் பரதந்த்ரைதகளாய்-புத்திர சாபேஷைகளானவர்களை சொல்லிற்று –
இங்கு வண்டுலாம் பூம் குழலினார் என்று –
ப்ராப்த யவ்வனைகளாய்-போக சாபேஷைகளானவர்களை சொல்லுகிறது –
உன் வாக் அமிர்தம் புசிக்க வேண்டி -உன்னை எடுத்து கொண்டு போவதாக வந்து நின்றார்கள்-

கோவிந்தா நீ முலை யுணாயே –
நீ கோவிந்தன் ஆகையாலே அவர்களோடு போகவும் வேணும்
போம் போது- யுண்டு போகவும் வேணும் காண்-என்று பிரார்த்திக்கிறார் –
கோவிந்தா -சர்வ சுலபனாணவனே -உன் ஸுவ்லப்யத்துக்கு இது சேராது -நீ முலை உணாயே –

————————————————–

இருமலை போல் எதிர்ந்த மள்ளர் இருவர் அங்கம் எரி செய்தாய் உன்
திரு மலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே -2 2-8 – –

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய்-
ஷீராப்தியில் வந்து நலிவதாகக் கோலி
இரண்டு பெரிய மலை போலே கிளர்ந்து வந்த
மது கைடபர்கள் என்கிற இரண்டு மல்லரை
திரு வநந்த ஆழ்வானாலே உரு மாயும் படி எரித்துப் பொகட்டாய்-என்னுதல்-
கம்சனுடைய மல்லர் உன்னைக் கண்ட பய அக்னியாலே எரித்து விழும்படி செய்தாய் -என்னுதல் –
வடிவின் பெருமையாலும் -திண்மையாலும் இரண்டு மலை போலே வந்து
அறப் பொருவதாக எதிர்த்த சாணூர முஷ்டிகர் ஆகிற இரண்டு மல்லருடைய சரீரம் ஆனது
பய அக்னியால் தக்தமாம் விழும் படி பண்ணினவனே-

உன் திரு மலிந்து திகழ் மார்வு தேக்க –
திரு மலிந்து தேர்க்கும் உன் மார்வு திகழ –
மலிகை யாவது -க்ராம நிர்வாஹன் முதலாக
பஞ்சாசத் கோடி விச்தீர்ண அண்டாதிபதி பர்யந்தமான அளவன்றிக்கே
த்ரிபாத் விபூதியில் யுள்ளாரிலும் வ்யாவ்ருத்தையாய்
சர்வ பூதாநாம் ஈஸ்வரி -என்கிற சர்வாதிக்யத்தை யுடைய
பெரிய பிராட்டியாராலே நிரூபிக்கப் பட்ட உன் மார்பு திகழ –
இத்தால் -அவன் ஸ்ரீ யபதி -என்ன வேணுமே
மலிதல் -கிளப்பும்
தேர்க்கை -நிரூபகம்
திகழ்தல் -ஸ்ரீ யபதி -என்னும் விளக்கம்

உன் இத்யாதி -உன்னுடைய அழகு மிக்கு விளங்கா நின்று உள்ள மார்பானது
மலிதல் -மிகுதி —
திகழ்ச்சி -விளக்கம்
அன்றிக்கே-திரு என்று பிராட்டியை சொல்லுகிறதே -அவள் எழுந்து அருளி இருக்கையாலே
மிகவும் விளங்கா நின்று உள்ள உன்னுடைய மார்வு என்னவுமாம் –

தேக்க -தேங்க -முலைப்பாலாலே நிறையும்படியாக –
அன்றிக்கே
தேக்க -என்ற பாடம் ஆயிற்றாகில் -உன் மார்பில் முலைப்பால் தேங்க -என்கிறது –

என்னல்குல் ஏறி-
என் ஒக்கலையிலே வந்து ஏறி –என் மடியிலே வந்து ஏறி –

ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
ஒரு முலையைத் திருப் பவளத்திலே வைத்து-ஒரு முலையை திருக்கையிலே பற்றி நெருடிக் கொண்டு

இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே-
இரண்டு முலையையும் மாறி மாறி பால் வரவின் மிகுதி திருப் பவளத்தில் அடங்காமையாலே-விட்டு விட்டு என்னுதல்-
உடலை முறுக்கி ஏங்கி ஏங்கி என்னுதல்
அமர விருந்து யுண்ண வேணும் –
மிகுதி -திருப் பவளத்தில் அடங்காமையால் நடு நடுவே இளைத்து இளைத்து -அமர இருந்து –
அமுது செய்ய வேணும் –

———————————–

புழுதி அளைந்த ஆயாசத்தாலே வந்த வேர்ப்பு முகத்திலே காண வந்து
அமுது செய்ய வேணும் -என்கிறார் –

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வெயர்ப்ப தீமை செய்தீம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக வளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே -2 2-9 – –

போதகத்தில்-நிறத்தாலும் -மணத்தாலும் -செவ்வியாலும் -விகாசத்தாலும் அழகியதாய் இருக்கும் –
தாமரைப் பூவின் இடத்தில் -போது -புஷ்பம் -அகம் -இடம்
அணி இத்யாதி -நீர்மையாலும் -ஒளியாலும் -அழகாய் உடைத்தான முத்துக்கள் ஆனவை சிதறினால் போலே

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல் செங்கமல முகம் வியர்ப்பத் –
அழகிதாக மலர்ந்த தாமரைப் பூவினுள்ளே
செவ்வி மாறாத மது வெள்ளத்தை வண்டுகள் யுண்டு களித்து சிதறின மது திவலை முத்து போலே –
அச் செங்கமலம் போலே இருக்கிற திரு முகத்திலே வேர்ப்பு துளிகள் அரும்ப -என்னுதல்-
அங்கமலச் செங்கமல முகத்தில் ஒளியை யுடைத்தான முத்துக்கள் சிந்தினால் போலே வேர்ப்ப அரும்ப -என்னுதல்
அப்போது -கமலம் -என்று ஜலத்துக்கு பேராம்
அம் -என்று அழகு-

சிவந்து மலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திரு முகமானது குறு வெயர்ப்பு அரும்பும்படியாக –

தீமை செய்து இம் முற்றத்தூடே அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா-
இப்போது முற்றத்தோடு அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா –
இப்போது திரு மேனி எல்லாம் புழுதியாக முற்றத்தின் நடுவே இருந்து அளைய வேண்டா-
இம்முற்றத்துள்ளே நின்று தீம்புகளை செய்து -உடம்பு எல்லாம் புழுதியாக இருந்து புழுதி அளைய வேண்டா –

வம்ம-
ஆச்சர்யம் -என்னுதல்
இவன் சேஷ்டித தர்சனத்தால் வந்த ஆசார்ய உக்தி ஆதல் –
ஸ்வாமி -என்னுதல் –

விம்ம அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை யுணாயே
அங்கு அமரர்க்கு விம்ம அமுதம் அளித்த அமரர் கோவானவனே
விம்மல் -நிறைதல் –
விம்ம-நிரந்தரமாக –
துர்வாச சாபோபஹதராய் அசுரர்கள் கையில் ஈடுபட்டு சாவாமைக்கு மருந்து பெறுகைக்கு
உன்னை வந்து ஆஸ்ரயித்த தேவர்களுக்கு -அத்தசையில் வயிறு நிரம்ப அம்ர்தத்தை இடுகையாலே
அவர்களுக்கு நிர்வாஹனானவனே-

முலை உணாயே –
அப்போது அவர்கள் அபேஷைக்கு அது செய்தால் போலே -இப்போது என்னுடைய
அபேஷைக்காக நீ முலை உன்ன வேணும் என்கை-

————————————————-

ஓட ஓட கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்து இட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி
ஓடி ஓடி போய் விடாதே உத்தமா நீ முலை உணாதே -2 2-10 – –

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே பாடிப் பாடி –
ஓசைக் கிண்கிணிகள் ஓடவோட ஆட ஒலிக்கும் பாணியாலே
பாணி -த்வனி –
கிண்கிணி ஒலிக்கும் பாணி தாளமாகப் பாடிப் பாடி –
அதனுக்கு ஏற்ற கூத்தை அசைந்து அசைந்து ஆடி –

ஓட ஓட இத்யாதி –
நடக்கும் போது மெத்தென நடக்கை அன்றிக்கே -பால்யத்துக்கு ஈடான செருக்காலே பதறி ஓட ஓட –
பாத சதங்கைகளான கிண் கிணிகள் த்வனிக்கும் -த்வநியாகிற சப்தத்தாலே
பாடிப்பாடி -அதனுக்கு ஏற்ற கூத்தை -அசைந்து அசைந்து இட்டு –
ஆடி ஆடி -அந்த பாட்டுக்கு தகுதியான ந்ர்த்தத்தை
திரு மேனி இடம் வலம் கொண்டு -அசைந்து அசைந்திட்டு நடக்கிற நடையாலே-ஆடி ஆடி –
கூத்தன் கோவலன் -இறே-நடக்கிற நடை எல்லாம் வல்லார் ஆடினால் போலே இறே இருப்பது –
ஆகையால் விரைந்து நடந்து வரும் போது -திருவடிகளில் சதங்கைகளின் உடைய ஓசைகள்
தானே பாட்டாய்-நடக்கிற நடை எல்லாம் ஆட்டமாய் இருக்கும் ஆய்த்து –
அன்றிகே –
கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசை தாளமாய் -வாயாலே பாடிப் பாடி -அதனுக்கு ஏற்ற
கூத்தை அசைந்து அசைந்திட்டு ஆடி ஆடி என்று பொருளாகவுமாம்

வருகின்றாயைப்
வருகிற யுன்னை –

பற்பநாபன் என்று இருந்தேன் –
கீழே பற்பநாபா சப்பாணி -1-7-5-என்றத்தை நினைத்து
பற்ப நாபன் என்று இருந்தேன் -என்கிறார் –
ஜகத் காரண வஸ்துவான மேன்மையை நினைந்து இருந்தேன் –
அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்றும்படி பிள்ளைத்தனத்தால் வந்த நீர்மை மாத்ரம் அன்றிக்கே
அதிமாத்ரமான இந்த லீலா ரசம் எல்லாம் வேணுமோ -வாராய் -என்ன –

வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் –
இப்படி என்னை நோக்கி வாரா நின்றுள்ள
உன்னை -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -என்கிறபடியே வேறு ஒரு ஆபரணம் வேண்டாதே –
திரு நாபி கமலம் தானே ஒரு ஆபரணம் ஆம்படி இருப்பான் ஒருவன் அன்றோ –
இவனுக்கு வேறு ஒரு ஆட்டும் பாட்டும் வேணுமோ –
சதங்கை ஓசையும் நடை அழகும் தானே பாட்டும் ஆட்டுமாய் இருந்தபடி என்-என்று
ஆச்சர்யப்பட்டு இருந்தேன் -என்னுதல்
அழிந்து கிடந்ததை உண்டாக்கும் அவனன்றோ -நம்முடைய சத்தியை தருகைக்காக வருகிறான் என்று
இருந்தேன் -என்னுதல்-

ஆடியாடி யசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே –
ஒடப்புகுந்தான் –
தாமும் அடிப்பதாக செல்ல ஓடி ஓடி போகிறதைக் கண்டு
போகாதே கொள்ளாய்-நீ உத்தமன் அன்றோ -முலை யுண்ண வாராய் -என்கிறார் –
புருஷோத்தமத்வம் ஆவது -ஆஸ்ரித பாரதந்த்ர்யம் போலே காணும்
இத்தால் அப்ராப்ய மனசா சஹ -என்று வேதங்களுக்கு எட்டாமல் போனால் போலே
பரம வைதிக அக்ரேசரராய் இருக்கிற இவர்க்கும் எட்டாமல் போகலாமோ என்று தோற்றுகிறது-

ஓடி ஓடி இத்யாதி -இவள் சொன்னதின் கருத்து அறியாதே -இவள் நம்முடைய நீர்மையை சொல்லாமல் –
ஸுவ்ந்தர்ய பிரகாசமான மேன்மையை சொல்லுவதே -என்று -மீண்டு ஓடிப் போக தொடங்குகையாலே-
இப்படி ஆடி ஆடி கொண்டு என் கைக்கு எட்டாதபடி -ஓடி ஓடி போய் விடாதே -நீ புருஷோத்தமன் ஆகையாலே –
ஆஸ்ரித பரதந்த்ரனான பின்பு -என் வசத்திலே வந்து -என் முலையை உண்ண வேணும் -என்கிறாள் –

ஓசை கிண்கிணிகள் ஓடவோட ஆடியாடி ஒலிக்கும் பாணியாலே
பாடிப் பாடி அதனுக்கு ஏற்ற கூத்தை யசைந்து யசைந்திட்டு
ஆடியாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே -என்று அந்வயம் –

———————————————————————–

நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்றசிந்தை பெறுவார் தாமே -2 2-11 – –

வாரணிந்த கொங்கை யாச்சி –
ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை
பரிசாரகர் ஆனவர்கள் கட்டி இலச்சினை இட்டு கொண்டு திரிவாரைப் போலே இறே
கிருஷ்ணனுக்கு அபிமதமான முலைகள் கச்சிட்டு சேமித்து வைத்து -என்னும் இடம் தோன்ற
வாரணிந்த கொங்கை யாச்சி -என்கிறார்
புத்ரவத் ஸ்நேஹம் நடக்கும் போது ராஜவத் உபசாரமும் வேணும் இறே
வார் -கச்சு –

ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை பரிசாரகரானவர்கள் கட்டி
இலச்சினை இட்டுக் கொண்டு திரியுமா போலே -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு போக்யமான முலைகள் பிறர்
கண் படாதபடி கச்சாலே சேமித்துக் கொண்டு திரிகையாலே -வாராலே அலங்க்ர்தமான முலையை
உடையவளான ஆய்ச்சி என்று ஸ்லாகித்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –

மாதவா யுண் என்ற மாற்றம் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே அவாப்த சமஸ்த காமன் ஆனவனை இறே
முலை யுண்ண வா -என்று ஆச்சி அழைத்ததும் –அவள் அளித்த பிரகாரங்களை-

மாதவா உண் என்ற மாற்றம் -ஸ்ரீ யபதி யாகையாலே -அவாப்த சமஸ்த காமனான அவனை –
அவதாரத்தின் மெய்ப்பாட்டுக்கு ஈடாக முலை உண் என்ற சப்தத்தை –

நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர் –
நீருக்கு அலங்காரமாக மலர்ந்த செங்கழு நீரில் மிக்க பரிமளம் ஒருபடிப்பட தோன்றுகிற
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகராய்-

பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார் –
பூமியில் யுண்டான ராஜாக்களுக்கு எல்லாம் பிரதானனான
ஸ்ரீ வல்லபன் -செல்வ நம்பி -முதலானோர் கொண்டாடும் படியுமாய்
அநாதி சித்தமான மங்களா சாசன பிரசித்தியையும் யுடையவர் –
பட்டர் பிரான் –
சத்ய வாதிகளான ப்ராஹ்மன உத்தமர்க்கு உபகாரகர் ஆனவர்
பாடல் வல்லார் –
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும்
இவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே பாட வல்லார்-

பூமியில் ராஜாக்களுக்கு பிரதானனான பாண்டியனும் –
ஞாதாக்களில் பிரதானரான செல்வ நம்பி தொடக்கமானவர்கள் அன்றிக்கே
பூமி எங்கும் கொண்டாடும்படி வ்யாப்தமாய் -வந்தேறி அன்றிக்கே -ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான
புகழை உடையராய் ப்ராஹ்மன உத்தமரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளி செய்த பாடலை அப்யசிக்க வல்லவர்கள் –

சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே —
பாட வல்லார் தாமே சென்ற சிந்தை பெறுவார்
சீர் –
ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
செங்கண் –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த ஐஸ்வர்யம் -ஆதல்
பெருமை யாதல்
வ்யாமோஹம் ஆதல் –

ஆத்ம குணங்களாலே அலங்க்ர்தனாய்-அவயவ சோபைக்கு பிரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையனாய் –
இவை இரண்டையும் ஆஸ்ரிதர் அனுபவிக்கும்படி அவர்கள் பக்கல் வ்யாமோகத்தை உடையவனாய் -இருக்குமவன் விஷயத்தில் –
அன்றிக்கே –
சீர் இத்யாதிக்கு -ஆஸ்ரித பாரதந்த்ரம் ஆகிற குணத்தாலே அலங்க்ர்தனாய் -இந்நீர்மைக்கும் மேன்மைக்கும்
ப்ரகாசகமான சிவந்த திருக் கண்களை உடையவனாய் -சர்வ ஸ்மாத்பரனாய் -இருக்குமவன்
விஷயத்திலே என்று பொருளாகவுமாம்
சென்ற இத்யாதி -பாடல் வல்லார் தாம் செங்கண் மால் பக்கலிலே ஒருபடி படச் சென்ற மனசை உடையவர் ஆவர்

ஜல சம்ருதி மாறாத செங்கழு நீரைச் சொல்லுகையாலே
மங்களாசாசன குணத்திலே ஒருப்பட்ட ஸூமநாக்களையும்-
நிகழ் நாறும் -என்கையாலே -அவர்களுடைய பிரசித்தியையும் சொல்லுகிறது –

————————————————————————————-

அவதாரிகை –3-1-
திரு ஆய்ப்பாடியிலே ப்ராப்த யவனைகளாய் லீலா பரைகளாய் திரிகிற –
பெண்கள் திறத்திலே அவன் -துச்சஹமான தீம்புகளை செய்து -தணலை நலிகிற பிரகாரத்தை –
தத் பாவ யுக்தராய் கொண்டு –
தாமும் அவர்களைப் போலே பேசி –
அவனுடைய அந்த லீலா அனுபவ ரசத்தை அனுபவித்தாராய் நின்றார் கீழ் –2-10-

மாதர் ஸ்நேஹத்தாலே பலகாலும் அவனை அம்மம் உண்ண அழைத்தும் –
அம்மமூட்டியும் போரும் ஸ்ரீ யசோதை பிராட்டி –
அவனுடைய பருவத்தின் இளமையையும் –
அதுக்கு அநுரூபம் அல்லாதபடியான – அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் கண்டு –
அவனை -தன்னுடைய பிள்ளை -என்று நினைந்து இருக்கை தவிர்ந்து –
அநியாம்யனாய் அப்ரதிஹத லீலா ரச பரனான சர்வேஸ்வரன் -என்று அனுசநதித்து –
அவனைக் குறித்து அவை தன்னைச் சொல்லி –
உனக்கு அம்மம் தர அஞ்சுவன் -என்று பல காலும் பேசின பாசுரத்தை –
தத் அவஸ்தா பன்னராய் கொண்டு –
தாமும் அப்படி பேசி –
அந்த ரசத்தை அனுபவிக்கிறார்
இத் திருமொழியில் –

——————————————————-

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடை இட்டு வருவான்
பொன் ஏய் நெய்யோடு பால் அமுதுண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 – –

அன்னே -அம்மே என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை
தன்னேர் இத்யாதி –
கிருஷ்ணன் திரு ஆய்ப்பாடியிலே வந்து அவதரித்த போது அவனோடு ஒக்க ஆயிரம் பிள்ளைகள்
சேரப் பிறந்தார்கள் -என்று சொல்லுவதொரு பிரசித்தி உண்டு இறே
பிறப்பாலும் வளர்ப்பாலும் வயஸ்சாலும் வளர்த்தியாலும் -அந்யோந்யம் உண்டான ஸ்நேகத்தாலும் –
தன்னோடு ஒக்க சொல்லலாம்படி இருப்பார் ஆயிரம் பிள்ளைகளோடு ஆய்த்து தளர் நடை இட்டு வருவது –
பால்யாத் பிரபர்த்தி சுச்நிக்த – என்று பால்யம் தொடங்கி ஸ்ரீ பெருமாளை
ஒழிய தரிக்க மாட்டாத ஸ்ரீ இளைய பெருமாளைப் போலே -இவர்களும் பால்யமே தொடங்கி
இவனை ஒழிய தரிக்க மாட்டாத சிநேகத்தை உடையராய் -எப்போதும் ஒக்க கூடித் திரிகையாலே
இவர்களோடு கூடியே தளர் நடை இட்டு வருமவனே -என்று சம்புத்தி

பொன் ஏய் நெய்யோடு பால் அமுதுண்டு –
செவ்வி குன்றாமல் உருக்கி துஞ்சினது ஆகையாலே பொன்னோடு ஒத்த நிறத்தை உடைத்தான
நெய்யோடு -ரச்ச்யமான பால் அமுதை உண்டு –

ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்
புள்ளுவம் ஆவது -மெய் போல் இருக்கும் பொய் —
உண்டு இருக்க செய்தே -உண்டிலேன் -என்கையாலே -அசத்யவாதி -என்று தோற்றும் இறே –
ஒரு புள்ளுவன் -என்றது -களவுக்கு அத்வதீயன் -என்றபடி
பொய்யே தவழும் –
தளர் நடை இட்டுத் திரிகிறவன் -அதுக்கு ஷமர் அல்லாதாரைப் போலே –
தவழுகிறதும் -க்ரித்ரிமம் என்று தோற்றும் இறே -ஆகை இறே பொய்யே தவழும் -என்ற இது –
இதுவும் பொய்யே தவழும் ஒரு புள்ளுவனே-என்று சம்புத்தி

மின்னேர் இத்யாதி –
பெற்ற தாய் வருகையாலே மின்னொடு ஒத்த நுண்ணிய இடையும் வஞ்சனத்தையும்
உடையளான பேய்ச்சி யானவள் முடியும் படி -அவள் முலையிலே திருப் பவளத்தை வைத்துண்ட உபகாரகன் ஆனவனே
இவ்விடத்தில் உபகாரம் ஆவது –
உலகங்கட்க்கு எல்லாம் ஓர் உயிரான தன்னை முடிக்க வந்தவளை நிரசித்து -தன்னை நோக்கி தந்த இது இறே

அன்னே
அதாவது -அம்மே -என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை
உன்னை அறிந்து கொண்டேன் –
முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை
உனக்கு தாரகாதிகளாகவும் நினைத்து இருந்தேன் -உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன்
நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
இப்படி இருக்கிற உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
தவழுகை பொய் என்றவோபாதி அம்மம் என்கிற இவன் சொலவும் பொய் என்று தோற்றா நிற்கச் செய்தேயும்
அவன் சொலவை அனுசரித்து சொல்கிறாள்

—————————————

பொன் போல் மஞ்சனமாட்டி யமுதூட்டிப் போனேன் வரும் அளவு இப்பால்
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 – –

பொன் இத்யாதி
திருமேனி அழகு விளங்கும்படியாக திரு மஞ்சனம் செய்து –
என் இளம் கொங்கை அமுதூட்டி-என்கிறபடியே அமுது செய்யப் பண்ணி –
யமுனை நீராடப் போனேன் -என்கிறபடியே
யமுனை யாகிற ஆற்றிலே குளிப்பதாக போன நான் வருவதற்கு முன்னே –

வல் பாரச் சகடம் இறச் சாடி –
வலியதாய் கனவிதாய் இருக்கிற சகடமானது கட்டுக் குலைந்து முறியும் படியாக –
முலை வரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்த திருவடிகளாலே உதைத்து –
வடக்கில் அகம் புக்கு இருந்து -இவ்வகத்துக்கு வட அருகில் அகத்திலே புக்கு இருந்து –
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை –
மின் போலே நுண்ணியதான இடையை உடையளாய்-நவ யவ்னையாய் இருப்பாள் ஒருத்தியை

வேற்று உருவம் செய்து வைத்த –
சம்போக சிஹ்னங்களாலே விகர்த வேஷையாம்படி பண்ணி வைத்த
அன்பா
கண்டது ஒன்றிலே மேல் விழும்படியான சிநேகத்தை உடையவனே
இத்தால்
தீம்பன் -என்ற படி –
உன்னை அறிந்து கொண்டேன் –
இவன் நம்மோடு சஜாதீயன் அல்லன் -வ்யாவர்த்தன் என்று உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன் –
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————–

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3- –

கும்மாய இத்யாதி –
குழைய சமைத்து வைத்த -பருப்போடு வெண்ணெயையும் சேர விழுங்கி
குடத்தயிர் இத்யாதி –
குடத்திலே நிறைந்த தயிரை-அத்தோடு சாய்த்து -அமுது செய்தது –
பொய் இத்யாதி –
தங்கள் வேஷம் அது அன்றிகே இருக்க செய்தே -பொய்யே ஆஸ்ரயமான மருதுகளாய் நின்ற
அசுரர்களை மறிய விழுந்து முறியும்படி பண்ணி
இன்று நீ வந்தாய் –
இப்போது ஒன்றும் செய்யாதவரைப் போலே நீ வந்தாய்
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ –
இந்த ஆச்சர்யங்களை செய்ய வல்லவனாய்-பிள்ளைத் தனத்தால் பூர்ணம் ஆனவனே

உன் என் மகனே என்பர் நின்றார் –
இப்படி இருக்கிற உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்-என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் –
நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –
எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் -உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்

——————————————————–

மையார் கண் மட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்தவர் பின் போய்க்
கொய்யார் பூம் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்தக்குள் கேட்டேன்
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-4 – –

கொய்யார் பூம் துகிலாவது -புடைவைகளின் கொய்ச்சகம்
மையார் இத்யாதி –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமான கண்களையும் –
ஆத்ம குணங்களில் பிரதானமான மடப்பத்தையும் -குடிப் பிறப்பையும் உடையரான பெண்களை –
மையன்மை செய்து –
உன் பக்கலிலே ஸ்நேகிதிகளாய் -தாய்மார் முதலானாருக்கு வசவர்த்திநிகள் ஆகாதபடி
உன்னுடைய ஸௌந்தர்யாதிகளால் பிச்சேற்றி –
அவர் பின் போய் –
அவர்களுடையே பின்னே போய்
கொய்யார் பூம் துகில் பற்றி –
கொய்தல் ஆர்ந்து இருந்து உள்ள அழகிய பரியட்டங்களை பிடித்து –
இத்தால் –
அவர்கள் பரியட்டங்களின் கொய்சகங்களைப் பிடித்து கொண்டு -அவர்கள் பின்னே போய் -என்கை

தனி நின்று குற்றம் பலபல செய்தாய் –
ஏகாந்த ஸ்தலத்திலே நின்று -அவஸ்யமான வியாபாரங்களை அபரிகங்யமாம்படி செய்தாய்
ஆவது என் -நான் ஒரு குற்றமும் செய்திலன் -நீ மாற்றுக் கண்டாயோ என்ன –
பொய்யா -இத்யாதி –
க்ரித்ரிமனே -உன்னைப் பொல்லாங்கு பலவற்றையும் பிறர் சொல்லும் அவைகள்
ஒரு புஸ்தகம் நிறைய எழுத தக்கவை கேட்டேன்
அவர்கள் சொல்லுவதும் நீ கேட்டதுமேயோ சத்யம் -நான் சொன்னதன்றோ சத்யம் -என்ன
ஐயா இது என்ன தெளிவு தான் என்று கொண்டாடுகிறாள்
அன்றிக்கே
ஐயா என்று க்ரித்மர்க்கு எல்லாம் ஸ்வாமி யானவனே என்கிறாள் ஆதல்
உன்னை அறிந்து கொண்டேன்
உன்னை அதி லோகமான வுக்தி சேஷ்டிதங்களை உடையவன் என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————–

முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் யினோடு தயிரும் விழுங்கிக்
கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த காலத்தோடு சாய்த்துப் பருகி
மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மி விம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 5- –

கப்பால்-தோளாலே
முப்போதும் இத்யாதி –
எப்போதும் கறப்பன கடைவனவாய் செல்லும் போலே காணும் திரு ஆய்ப்பாடி –
சிறு காலையும் உச்சியும் அந்தியும் ஆகிற மூன்று பொழுதும் கடைந்து திரண்ட
வெண்ணெய் யோடே-அக்காலங்கள் எல்லாவற்றிலும் உண்டான செறிய தோய்த்த தயிரையும் விழுங்கி –
கப்பால் இத்யாதி –
தோளாலே இடையர் காவில் கொண்டு வந்த பால்களை -கொண்டு வந்த பாத்ரத்தோடே சாய்த்துப் பருகி
மெய்ப்பால் இத்யாதி –
உடம்பில் முலைப்பால் தாரகமாக உண்டு- அது பெறாத போது அழும் பிள்ளைகளைப் போலே
என் இளம் கொங்கை அமுது உண்கைக்கு நீ பொருமிப் பொருமி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் –
இந்த அதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய பெரியோனே -உன்னை
மனுஷ்ய ஜாதி அல்லன் -என்று அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி
ஆன பின்பு உனக்கு அஞ்சம் தர அஞ்சுவன்

——————————————-

கரும்பார் நீள் வயல் காய் கதிர் செந் நெலைக் கன்று ஆநிரை மண்டி தின்ன
விரும்பா கன்று ஓன்று கொண்டு விளம் கனி வீழ எறிந்த பிரானே
கரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும்
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 6- –

கரும்பு இத்யாதி –
பரந்த வயலிலே கரும்பு போலே எழுந்து பசும் காயான கதிரை உடைய செந் நெல்லை
கற்றாநிரை –
கன்றுகளோடு கூடின பசு நிரையானது –
மண்டித்தின்ன –
விரும்பி மேல் விழுந்து -தின்னா நிற்கச் செய்தே

விரும்பா கன்று ஓன்று கொண்டு –
தானும் தின்பாரைப் போலே பாவியா நிற்க செய்தே -தின்கையில் விருப்பம் இல்லாததொரு கன்றைக் கொண்டு –
விளம் கனி வீழ எறிந்த பிரானே –
ஆகர்ஷமாம்படி பழுத்து நின்ற விளாவினுடைய பழங்கள் சிதறி விழும்படி எறிந்த உபகாரகனே –
ஓர் அசுரன் கன்றாய் வந்து நிற்க -ஓர் அசுரன் விளைவாய் வந்து நிற்க –
இத்தை அறிந்து -ஒன்றை இட்டு ஒன்றை எறிந்து -இரண்டையும் நிரசித்து பொகட்ட -உபகாரத்தை சொல்லுகிறது –

கரும்பார் இத்யாதி –
எப்போதும் ஒக்க பூ மாறாமையாலே வண்டுகளானவை நெருங்கப் படிந்து –
கிடக்கும்படி இருப்பதாய் -மிருதுவாய் இருந்து உள்ள குழலை உடையளாய்-
நவ யவ்னையாய் இருப்பாள் ஒருத்திக்கு

சூழ் வலை வைத்து திரியும் அரம்பா –
வாசுதேவன் வலை -என்றும் –
தாமரைத் தடம் கண் விழிகளினகவலை -என்றும் –
காரத் தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு –என்றும் சொல்லுகிறபடியே
தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் திருக் கண்கள் ஆகிற வலையை
எப்போதும் ஒக்க அவள் விஷயத்தில் வைத்து -அகப்படும் அளவும் –
அந்ய பரரைப் போலே சஞ்சரிக்கிற தீம்பன் ஆனவன்

உன்னை அறிந்து கொண்டேன் –
ஏவம் பூதனானவனை நன்றாக அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————-

மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லான் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-7 – –

மருட்டார் இத்யாதி –
கேட்டவர்களை மற்று ஓன்று அறியாதபடி மருளப் பண்ணுதலால் மிக்கு இருப்பதாய்
அவர்கள் செவியைப் பற்றி வாங்கும்படியாய் மிருதுவான த்வனியை உடைத்தான வேய்ங்குழலைக் கொண்டு –
போகத்துக்கு ஏகாந்தமான பொழிலிலே போய்ப் புக்கு திருப் பவளத்திலே வைத்தூதி
அவ்வாயர் இத்யாதி –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் -என்று பெண்களை காத்துக் கொண்டு திரியும் -அவ்விடையருடைய ஊரில்
சுருட்டார் இத்யாதி –
சுருண்டு பூவாலே அலங்க்ருதமாய் -மிருதுவாய் இருந்துள்ள குழலை உடைய பெண்கள்
ஆனவர்கள் குழலோசையாலே ப்ரேரிதராய் வந்து உன்னை சூழ நின்று தொழ –
அத்தால் வந்த தேஜசை உடையனாய் நின்றவனே –

பொருள் தாயம் இத்யாதி –
என்னுடைய நாதனானவனே-இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய
இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன -எறிவார்களோடு ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்
இப்படி தீம்பனானவனே-உன்னை நன்றாக அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

————————————

வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதவன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –

வாளா இத்யாதி
நீ தீம்பு செய்யாது இருக்கிலும் -உன் மினுக்கம் பொறாதவர்கள் வெறுமனே ஆகிலும்
உன்னை காண வேண்டார்கள் -அதுக்கு மேலே –
பிறர் மக்களை மையன்மை செய்து –
பிறருடைய பெண்களை உன்னுடைய இங்கிதாதிகளாலே அறிவு கேட்டை விளைவித்து
தோளால் இட்டவரோடு திளைத்து
தோளாலே அணைத்திட்டு அவர்களோடே நின்று விளையாடி
நீ சொல்லப்படாதன செய்தாய் –
வாக்கால் சொல்ல ஒண்ணாத வற்றை நீ செய்தாய்

கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி
இடைக்குலத்தில் உள்ளவர்கள் இப் பழி கேட்க பொறார்கள்
கெட்டேன் வாழ்வு இல்லை –
கெட்டேன் இவ் ஊரில் எனக்கு ஒரு வாழ்வு இல்லை
அதாவது இவ் ஊரில் வர்த்திக்கப் போகாது என்கை
கெட்டேன் என்றது -விஷாதி அதிசயத்தாலே கை நெரித்து சொல்லுகிற வார்த்தை

நந்தன் காளாய்
பசும் புல்லுசாவம் மிதியாதே ஸ்ரீ நந்தகோபர் பிள்ளையான நீ இப்படி செய்யக் கடவையோ
அன்றிக்கே –
அவர் உன்னை நியமித்து வளர்க்காமை இறே நீ இப்படி தீம்பனாய் ஆய்த்து என்னுதல்-
உன்னை அறிந்து கொண்டேன் –
பருவம் இதுவே இருக்க -செய்கிற செயல்கள் இது வாகையாலே உன்னை
நாட்டார் படி இல்லை -என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்

——————————————————-

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-9 – –

தாய்மார் இத்யாதி –
பெண்களை அகம் பார்க்க வைத்து -தாய்மாரானவர்கள் மோர் விற்க போகா நிற்ப்பார்கள் –
இடையர்க்கு ஐஸ்வர்யம் மிக உண்டானாலும் இடைச்சிகள் மோர் விற்று ஜீவிக்கும் அது இறே
தங்களுக்கு தகுதியான ஜீவனமாக நினைத்து இருப்பது -மோர் தான் விற்கை அரிதாய் இருக்கும் இறே
திரு ஆய்ப்பாடியில் பஞ்ச லஷம் குடியிலும் கறப்பன கடைவன குறைவு அற்று இருக்கையாலே
அசலூர்களிலே போய் விற்க வேண்டுகையாலே -இக்கால விளம்பம் இவனுக்கு அவகாச ஹேதுவாய் இறே இருப்பது

தமப்பன்மார் இத்யாதி –
தாய்மார் போனால் தமப்பன்மார் தான் இருந்தாலும் இவனுக்கு நினைத்தபடி செய்யப் போகாதது இறே –
அதுவும் இல்லாதபடி தமப்பன்மார் ஆனவர்கள் கற்றா ஆநிரையின் பின்னே போகா நிற்ப்பார்கள் –
அவை மேச்சல் உள்ள இடங்களிலே தூரப் போகையும்-
இவர்கள் வரத்தை நியமியாமல் அவற்றின் பின்னே போகையும் –
அவை மேய்ந்து வயிறு நிறைந்தால் அல்லது மீளாது ஒழிகையும்-
அவை மீண்டால் அவற்றின் பின்னே இவர்கள் வருகையுமாம் இறே இருப்பது –
ஆகையால் இந்த கால விளம்பமும் இவனுக்கு அவகாசம் இறே

நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர் படவே கொண்டு போதி –
நீ திரு ஆய்ப்பாடியிலே யுவதிகளான பெண்களை உன் நினைவுக்கு வாய்க்கும்படி கொண்டு போதி
அதாவது –
உனக்கு அபிமதமான ஸ்தலங்களிலே கொண்டு போகா நின்றாய் -என்றபடி –
தாய்மார் தகப்பன்மார் போகையாலும்-கால விளம்பம் உண்டாகையாலும் –
அவ்வகம் தானே அபிமத ஸ்தலமாய் இருக்க செய்தேயும் –
ப்ராமாதிகமாக ஆரேனும் வரக் கூடும் -என்று இறே ஸ்த்லாந்தரம் தேடித் போக வேண்டுகிறது –

காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து –
உன் குணத்திலும் தோஷத்தை ஆவிஷ்கரிக்கும் அவர்களாய்-உன் பக்கல் த்வேஷ பரராயே போரும்
சிசுபாலாதிகளுக்கு -சொல்லி பரிபவிக்கைக்கு – இடம் பெற்றோம் -என்று சர்வ காலமும்
உகக்கும்படியானவற்றை செய்து
கண்டார் கழறத் திரியும் மாயா –
காய்வார் அன்றிக்கே -உனக்கு நல்லவர்களாய் நீ செய்கிற வியாபாரங்களை கண்டவர்கள்
நீ செய்கிற தீம்பு பொறாமல் நியமிக்கும்படி திரியா நிற்கிற ஆயனே –
குல மரியாதை தன்னையும் பார்கிறிலையே என்கை –
உன்னை அறிந்து கொண்டேன் –
நீ இப்படி திரிந்தாய் ஆகிலும் உன்னுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை கண்ட பின்பு –
உன்னை மனுஷ்ய சஜாதீயன் அல்லன் -என்று அறிந்து கொண்டேன்
உனக்கு இத்யாதி –
ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

———————————————

தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –

தொத்தார் இத்யாதி
கொத்தாய் சேர்ந்து உள்ள பூக்களாலே அலங்க்ர்தமான குழலை உடையளாய் –
திரு ஆய்ப்பாடியில் உள்ள பெண்களில் காட்டிலும் -இன்னாள்-என்று குறிக்க படுவாள் ஒருத்தியை –
சோலைத் தடம் கொண்டு புக்கு –
இடம் உடைத்தான சோலையிலே கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து –
முத்து வடத்தாலே அலங்க்ர்தமான முலைகளிலே சம்ச்லேஷித்து
இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய் –
ராத்திரி மூன்று யாமம் அற்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை –
உன் செயல் இதுவாகையாலே வேண்டுவார்க்கு வேண்டுவது சொல்லுவர் உன்னை –
உனக்கு தோஷம் சொல்லுவார்க்கு எல்லாம் இடம் ஆம்படி செய்யா நின்றாய் -என்கை

உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன் –
இப்படி இருக்கிற உன்னை கோபிக்க என்றால் நான் ஏக தேசமும் ஷமை ஆகிறேன் அல்லேன் –
பிள்ளைகள் தீம்பு கண்டால் தாய்மார் சிஷியார்களோ –
உன்னுடைய முகம் கன்றும் -என்னும் அத்தாலே அது என்னால் செய்யப் போகிறது இல்லை
அத்தா
என்னுடைய நாதனை
உன்னை அறிந்து கொண்டேன் –
உன்னுடைய அதிமானுஷம் கண்ட பின்னை -அநியாம்யன் -என்று அறிந்து கொண்டேன் –
உனக்கு இத்யாதி –
ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –

——————————————————-

நிகமத்தில் -இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

காரார் மேனித் நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே -3-1 11- –

காரார் இத்யாதி –
மேகத்தோடு சேர்ந்த திருமேனியின் நிறத்தை உடையனாய் -எனக்கு உபகாரகன் ஆனவனை –
கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி-
நறு நாற்றம் கமழா நின்று உள்ள அழகிய குழலை உடைய ளான யசோதை பிராட்டி
ஆரா இத்யாதி –
ஒருகாலும் தெகுட்டாததாய்-இனிதாய் இருந்துள்ள -என் இளம் கொங்கை அமுது
உண்ண முன்பும் தந்து மேலும் தருவாளாய் இருந்த நான் உன்னை அறிந்து கொண்ட பின்பு
உனக்கு அம்மம் தாரேன் அஞ்சுவன் -என்று சொன்ன சொலவை
பாரார் இத்யாதி –
விசேஷஞ்சரோடு அவிசேஷஞ்சரோடு வாசி அற-இருந்தார் இருந்த இடம் எங்கும் –
கொண்டாடுகையாலே பூமி எங்கும் நிறைந்து இருப்பதாய் -ஸ்வாபாவிகமான புகழை உடையராய் –
ஸ்ரீ திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த பாடலான
ஏரார் இத்யாதி –
இயல் அழகால் மிக்கு -அதுக்கு மேலே இனிய இசையோடு கூடி இருந்து -உள்ள சந்தர்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்கள்
இருடீகேசன் அடியாரே –
இந்திரியங்களை பட்டி புகாமல் ஸ்வரூப அநுரூபமாக நடக்கும்படி நியமிக்கும் அவனுக்கு
நித்ய கிங்கராய் பெறுவர்-

————————————————————–

சந்த மலர்-10-4- -பிரவேசம் –

ஸ்ரீ ராமாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு இறே-ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –
த்வேஷத்துக்கு எல்லையானார்க்கும் இசைய வேண்டும்படி இருக்கிற
ஸ்ரீ ராமாவதாரத்தில் விஜயத்துக்கு தோற்றவர்கள் பாசுரத்தாலே
அனுபவித்தார் கீழ் –
ராகத்துக்கு எல்லையான யசோதைப் பிராட்டி பாசுரத்தாலே
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை
அனுபவிக்கிறார் இதில் –

சந்த மலர்க் குழல் தாழத் தானுகந்தோடித் தனியே
வந்து என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-1-

சந்த மலர்க் குழல் தாழத் தான்-
செவ்விப் பூக்களாலே அலங்கரித்து வைப்பார்கள் இறே திருக் குழல்களை –
சந்தம் -என்று அழகாயிற்று –
வெறும் புறத்திலே ஆகர்ஷகமான குழல் –

தாழ –
பூவாலே அலங்க்ருதமாய்
பேணாமையாலே அலைந்து வர-

உகந்தோடித் –
ஆதரித்து அபி நிவேசத்தாலே ஓடி –

தனியே வந்து –
பலதேவன் என்னும் தன தம்பியோடத் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் திரு மொழி -1-8-5-
என்கிறபடியே இருவரும் கூட வாயிற்று முலை உண்ண வருவது –
கூடவரில் இருவருக்கும் ஒரோ முலையாம் என்று தனியே வந்து –

என் முலைத் தடம் தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து –
அவை தனக்கு போகமாய் இருக்கிறபடி –
பாலாலே நிரம்பின முலையை -தடத்தை என்னாதே –
தடம் தன்னை -என்கிறதால் பாலால் நிரம்பியவை என்றதாய்த்து –

நந்தன் பெறப்பெற்ற நம்பி நானுகந்து உண்ணும் அமுதே –
குணைர் தசரதோபம –
பரம பதத்தில் உள்ள ஸ்வாபாவிக குணங்களும்
அவதரித்து ஆர்ஜித்த குணங்களும்
கூடினால் சக்கரவர்த்தியோடு உபமானமாக மட்டமாய் நிற்கும் இத்தனை -என்று
இத்தை ஜீயர் அருளிச் செய்ய –
பரம புருஷனுக்கு ஓர் இடத்தே பிறந்து ஒரு குணம் தேட வேண்டுமோ -என்றார்
சுந்தர பாண்டிய தேவர் –
நாம் ஓடுகிற நரம்பு இவன் அறிந்திலன் -என்றத்தை விட்டு
பரம புருஷன் என்ற போதை அழகு இருந்தபடி என் -என்றாராம்
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் இல்லாதார்
பகவத் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் அர்த்தவாதம் என்று இருப்பார்கள் –
அது உடையவர்கள் பகவத் பிரபாவத்துக்கு அவதி இல்லாமையாலே
சொன்னவை சில சொன்ன அத்தனை -சொல்லாததுவே பெரிது -என்று இருப்பார்கள் –
சத்யே நாதி வததி-இறே –

நந்தன் பெறப்பெற்ற நம்பி –
ஈஸ்வரனுக்கு இது அலாப்ய லாபமாய் இருக்கிற படி –
இவர் பிள்ளையாகப் பெற்ற ஏற்றம் உடையவனே –
பிதரம் ரோசயா மாச -என்று அவனை ஆசைப் பட்டு இறே பிறந்தது
தனக்கு கிடையாதது பெறுகை இறே -அலாப்ய லாபம் –
பிறக்கிற சம்சாரிக்கு பிறவாமை ஏற்றமோபாதி இறே
அவனுக்குப் பிறக்கப் பெறுகையும் –

நானுகந்து உண்ணும் அமுதே -எந்தை பெருமானே உண்ணாய்-
தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்ருதத்தில் வாசி –
என் குல நாதனே –
நந்தன் பெறப்பெற்ற என்று தொடங்கி இவன் ஆதரித்து முலை உண்கைக்காக ஸ்தோத்ரம் பண்ணுகிறாள் –

என் அம்மம் சேமம் உண்ணாயே –
என்னுடைய அம்மம் ஆகிற சேமத்தை –
சேமம் எடுத்தது -என்னக் கடவது இறே –
ராஜாக்களுக்கு காவலோடே வரும் சோறாயிற்று சேமம் ஆகிறது –

—————————————————–

வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன்
எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே–10-4-2-

வங்கமறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கு நம்பி
மரக் கலங்களோடு கூடி
ஓதம் கிளர்ந்த கடல் போன்ற வடிவை உடையவனே –
வடிவு அழகுக்கு போலி தேடப் புக்கால்
அங்கும் இங்கும் கதிர் பொறுக்க வேண்டும்படியான
பூர்த்தியை உடையவனே

செங்கண்-
அவயவ சோபையோ தான் சொல்லி முடியலாய் இருக்கிறது –
நெடிய திருவே –
சர்வாதிக வஸ்துவை -திரு -என்று போலே காணும் சொல்லுவது –

செங்கமலம் புரை வாயா –
எல்லா அவயவமும் அப்படியேயாய் இருப்பது –

கொங்கை சுரந்திட யுன்னைக் கூவியும் காணாது இருந்தேன் –
நீயோ பாவஞ்ஞனாய்
தாய் முலை சுரந்து பார்த்து இருக்கும் அன்று வருகை அன்றிக்கே
நான் அழைத்தும் வரக் காணாது இருந்தேன் –

எங்கிருந்து ஆயர் தங்களோடு என் விளையாடுகின்றாயே –
எங்கே புக்கிருந்து
உன் பக்கல் நிரபேஷரானார் உடன் –
சாபேஷையாய் நான் பார்த்து இருக்க –
என்ன விளையாட்டு விளையாடுகிறது –

—————————————————–

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய்—10-4-3-

திருவில் பொலிந்த எழிலார் ஆயர் தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ –
சம்பத்தால் மிக்கு
வடிவு அழகிலும் உன்னோடு ஒத்த
தன்னேராயிரம் பிள்ளைகளோடு
தெருவிலே இருந்து விளையாடுகிற விளையாட்டுக்கு அவதி இல்லாதவனே
முலை உண்ணுகையும் விட்டு இறே அத்தை விரும்புகிறது
போகத்தையும் விட்டு லீலையை விரும்புமவன் நீ –

செய்கின்ற தீமைகள் கண்டிட்டு-
விளையாடுகிற படியை ஒளித்து கண்டு நின்றாள் போலே –

உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற –
உன் ஸ்வம் அடைய அன்றோ பாழ் போகிறது –
தீம் பால் -இனிய பால்

மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் –
அவயவங்கள் தோறும் முழுசா முகத்தைப் பாரா
முலை சுரக்கப் பண்ணாமல்
மடியிலே இருந்தாயிற்று உண்பது –
இது அடைய தரையிலே போகாமே
உன் வாயிலேயாம்படி முலை யுண்ண வாராய் –

————————————————————

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4-

மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார் மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா –
நாட்டிலே வர்த்திக்கிற ஸ்திரீகள்
மற்று உண்டான மனுஷ்யர்கள்
இவர்கள் கண்ணுக்கு பிள்ளை பெறுகைக்கு நோற்கும்
தபஸ்ஸூ தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிறவனே –

மதக் களிறன்னாய்-செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
சிவந்த ஆகாசம் இருக்கிறபடி கண்டாயே –
அதுக்கு பரபாகமான பிறை இருக்கிற படி கண்டாயே
அப்பிறை யை வாங்கி உன் சிவந்த கையிலே தருவேன் –

ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –
என் ஒக்கலையிலே இழியாது இருந்து
ஆதரித்து இனிதாக
அம்மம் உண்ண வாராய் –

———————————————————-

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே —10-4-5-

மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் –
மையின் தன்மையை உடைத்தாய்
கண்ணுக்கு குளிர்ந்து
இருண்ட குழலை உடைய முக்த்தனே –
பெரிய மருதுகளின் நடுவே நடந்தாய் –

வித்தகனே-
பெரியவற்றை எல்லாம் செய்கைக்கு ஈடான
ஆச்சர்ய சக்தியை உடையவனே –

விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா –
இனி இதுசெய்யான் -என்னும்படி
படுக்கையிலே கிடந்தது
அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும்
விகிர்தமான செயலை உடையவனே –

இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா –
நெடும் போது உண்டாயிற்று
முலைக் கடுப்போடு இருக்கிறது –
இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது –

உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே –
உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –
வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ-

——————————————–

பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசில் பெரிதும் வலியை
கள்ள மனத்தில் உடையைக் காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் —10-4-6-

பிள்ளைகள் செய்வன செய்யாய் –
உன் பருவத்தில் பிள்ளைகள் செய்வன
அன்று நீ செய்வது –

பேசில் பெரிதும் வலியை-
கண் எச்சில் ஆனவற்றை செய்யா நிற்புதி-
கண் எச்சிலாம் என்று சொல்லாது ஒழியும் இத்தனை –

கள்ள மனத்தில் உடையைக்-
சொல்லில் பெரிய மிடுக்கை உடைய உன் நெஞ்சில் நினைக்குமவை இன்னது என்று தெரியாது –

காணவே தீமைகள் செய்தி –
விலக்குவார்க்கும் கண்டு கொண்டு நிற்க வேண்டும்
தீமைகள் செய்யா நிற்புதி
கண்டு இருக்க ஆகர்ஷகமான தீம்புகளை செய்வுதி –

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற –
அத்தீமை காண என் ஹிருதயம் உருகி
முலை வழியே பாலாய் புறப்படா நின்றது –

பள்ளிக் குறிப்புச் செய்யாதே பாலமுது உண்ண நீ வாராய் –
கண்கள் சிவப்பது
மூரி நிமிர்வது
கொட்டாவி கொள்வது
அழுவது -ஆகாதே –

——————————————

தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே —10-4-7-

தன் மகனாக –
யசோதை பிராட்டியாக வந்தாள் ஆயிற்று –

வன் பேய்ச்சி –
இவனைக் கண்ட விடத்திலும் நெகிழாத
நெஞ்சில் வன்மையை உடையவள் –

தான் முலை யுண்ணக் கொடுக்க –
பரிவோடே கொடுக்கிறாள் என்று தோற்றும் படி கொடுக்க –

வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ –
தானும் தாய் என்று பிரமியாதே
அவள் அபிசந்தியைப் புத்தி பண்ணி
அப்பருவத்திலே பெரிய ஆண் பிள்ளையாய்
அவள் பிராணன்களை முலை வழியே உண்டு
அவளை முடித்து இப்படிப் பட்ட செயல்களாலே
பூரணன் ஆனவனே –

நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா –
இப்படி பூதனை கையிலே அகப்பட்ட உன்னை
ஆராக நினைத்தாய் –
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய நப்பின்னை பிராட்டிக்கும்
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும்
வல்லபன் ஆனவனே –

என் மகனே –
அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும்
இவள் மகன் ஆனதுவும் –

அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –
அம்மம் என்று -புஜிக்கப் படும் எல்லாவற்றுக்கும் பெயர் –

—————————————————–

உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் உங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம்போது அங்கு நில்லேல் ஆழி யங்கையனே வாராய் —10-4-8-

உந்தம் அடிகள் முனிவர்-
தாயாரைக் கண்டால் தீமையிலே ஓன்று பத்தாக பணைக்கும்-
ஸ்ரீ நந்த கோபர்க்காயிற்று அஞ்சுவது
அத்தாலே அவனுக்கு அச்சம் உறுத்துக்கைக்காக
யசோதை பிராட்டி சொல்லும் பாசுரம் ஆயிற்று –
உங்கள் முதலியார் சீறுவர் கிடீர் –

உன்னை நான் என் கையில் கோலால் -நொந்திட மோதவும் கில்லேன்-
தீம்பிலே கை வளருகிற உன்னை
நோக்க இருக்கிற நான் –
கண்டாய் இறே இதன் பேர்
இப்போதே சிவட்கு என்ன அடிக்கலாம் இறே
அது மாட்டு கிறிலேன் –

அடிக்க வேண்டும்படி செய்த தீமை தான் என்ன –
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது –
உபய விபூதியோபாதியும் பரப்புப் போருமாயிற்று
இவன் தன்னை ஒழிய வேயும் கண் எச்சிலாம் படி யாயிற்று
அவை வந்து புகுரும் போது இருப்பது –

இங்கு காண்கின்றார் உண்டோ -என்ன -வேண்டா
வானிடைத் தெய்வங்கள் காண –
எத்தனை தேவதைகள் ஆகாசத்தில் பார்த்து நிற்கக் கடவது –

அந்தியம்போது அங்கு நில்லேல்
அசுரர்களுக்கு பலம் வர்த்திக்கும் போது அங்கு நில்லாதே கொள் –
அங்கு
இவன் இவனின -என்று உன்னோடு சேர்த்து சொல்லலாம் படி அங்கு நில்லாதே கொள் –

ஆழி யங்கையனே வாராய் —
இவற்றை ஒழியவேயும்
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –
என்னும்படி யாயிற்று இருப்பது –

————————————————-

பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே—-10-4-9-

பெற்றம் தலைவன் என் கோமான் –
பசுக்களுக்கு பிரதானன் ஆனவனே –
மேல் விழுந்து முலை உண்ண ஏத்துகிறாள் –
எனக்கு ஸ்வாமி யானவனே –
இத்தால் ஐஸ்வர்யம் சொல்லுகிறது –

பேர் அருளாளன் மதலாய்-
அருளால் குறைவற்றவன் மகன் அன்றோ நீ
அவன் படி உனக்கும் உண்டாக வேண்டாவோ –

சுற்றக் குழாத்து இளங்கோவே
பந்து வர்க்கத்துக்கு எல்லாம்
யுவராஜா வானவனே –

தோன்றிய தொல் புகழாளா-
எங்கும் ஒக்க பிரசித்தமான
ஸ்வா பாவிக மான புகழின் உடைய வார்த்தைப் பாட்டையும் உடையவனே –

கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே –
கன்றின் உடைய திரள்
ஓன்று இரண்டு போராது –
கன்றுகளை திரளாக மறித்து
காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது
ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது –

எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே –
உனக்கு விடாய் இல்லாமையோ –
உனக்கு முலை தாராது ஒழியும் போது
நான் தரிப்பனாயோ –

——————————————————

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே —10-4-10-

இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி –
இவள் முலை கொடுத்து அல்லது தரியாதாப் போலே
கவி பாடி அல்லது தரியாதாராய் பாடின கவி யாயிற்று –
மிக்க எழிலை உடைத்தான தோளை உடைய ஆழ்வார் –

செம்மைப் பனுவல் நூல் கொண்டு-
சாஸ்த்ரங்களில் பரக்கச் சொல்லுகிற லஷணங்களில் ஒன்றும் குறையாமல் செய்ததுமாய்-
இது தான் இவ்வருகு உள்ளாருக்கு சாஸ்த்ரமாய் எழுதிக் கொள்ளலாய் இருக்கிற இவற்றைக் கொண்டு
பனுவல் -என்றும் -நூல் -என்றும் -சாஸ்திரம் ஆகையாலே சொல்லிற்று –

செங்கண் நெடியவன் தன்னை
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –

அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –

மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –
அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு
வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே
அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம் –

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நரஸிம்ஹ பரமான ஆறு சுவைகள் அனுபவம் – –

June 6, 2020

ஸ்ரீ அஹோபில நவ நரஸிம்ஹர் சேவை–
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ பரமான திரு நாமங்கள்-
ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டோத்ரம் –
ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டகம் —
ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்-
ஸ்ரீ பெரிய திரு மொழி ஸ்ரீ சிங்க வேள் குன்ற அனுபவம் –
ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தி கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை ஸ்ரீ ராமானுசன்
ஸ்ரீ நரஸிம்ஹ பரமான ஆறு சுவைகள் அனுபவம் – தேனும் பாலும் கன்னலும் அமுதுமான அனுபவம் —

ஸ்ரீ நவ நரசிம்மர் –ஒன்பது என்றும் புதிது புதிதாக அனுபவம் என்றும் உண்டே

அம்ருத்யு -யோகானந்த நரசிம்மர்
அஹோபில க்ஷேத்ரம் -காருட சைலம்–தாரஷ்யாத்ரி -ஸூ பர்ணாத்ரி–வேதாத்ரி -மேற்கு பகுதியில் சேவை –
ம்ருத்யு ம்ருத்யு -பதம் -மந்த்ர ராஜ கடைசி -இந்த திரு நாமம்
முதல் பாசுரம் இந்த நரசிம்மர் மங்களா சாசனம் –

சர்வ த்ருஷே நம-அடுத்த திரு நாமம் சர்வ த்ருக் -சர்வதோ முகம் -யுகபத்-அறியும் ஞானவான் – சர்வம் ஸர்வத்ர சர்வ இந்திரிய –
அஹோ விலம்–பலம் -குகைக்குள் பலத்துடன் -ஆஸ்ரித சம்ரக்ஷணம் –

ஓம் ஸிம்ஹாய நம -அடுத்து
பவ நாசினி -புண்ய தீர்த்தம் -பிறவி அறுக்கும் -திரு புளிய மரத்தின் அடியில் இருந்து பெருகும் தீர்த்தம்
அஹோபில நரசிம்மர்–மாலோலன் -மேல் சேவை -ஸ்வயம்பு -மூர்த்தி –எட்டாம் பாசுரம்
வீர-இரண்டாம் பதம் – -சாளக்ராம மூர்த்தி செஞ்சுல வல்லி-
அருகில் சின்ன குகையில் நான்முகனும் ருத்ரனும் -உண்டே –
திரு மங்கை ஆழ்வார் இத்தையும் நா தளும்ப நான்முகனும் ஈசனும் ஏத்த என்கிறார்
ஆறாம் பட்டம் ஜீயர் உள்ளே ஒரு இடத்தில் ஆராதனம் இன்றும் செய்வதாக ஐதிக்யம்-தடுப்பு வலை வைத்துள்ளார்கள் இங்கு
எம்பெருமானார் தனி சந்நிதியும் உண்டு இங்கு

ஓம் சந்தாத்ரே நம –203-ஆஸ்ரிதர்களை சேர்த்துக் கொள்பவர் —சந்தாதா -பார்க்கவ நரசிம்மர்–கீழேயே சேவை –
அடர்ந்த வனப்பு மிக்க வனப்பகுதி -சாந்த ஸ்வரூபம் -அக்ஷய தீர்த்தம் அருகில் உண்டு -வசிஷ்டர் தவம் செய்த இடம் –
இங்கு இருந்து தான் அஹோபிலம் முழுவதும் தீர்த்தம் விநியோகம் -அக்ஷயமான மோக்ஷம் அருளும் தீர்த்தம்
நான்காம் பாசுரம் -மங்களா சாசனம் -தெய்வம் அல்லால் செல்லா ஒண்ணாத –
தசாவதாரம் பிரபையில் சேவை-

அடுத்த சந்திமாந் -204–ஆஸ்ரிதரை கை விடாதவன் – மாலோலன் அன்றோ -அருகில் மடியிலே பிராட்டியும் உண்டே –
கிருபா வசாத் சந்நிஹிதானாம்-சஞ்சாரம் செய்து இன்றும் உலோகருக்கு கிருபை
மா லோல லஷ்மி நரசிம்மன்-அல்லி மாதர் புல்க நின்ற -அழகியான் தானே அரி உருவம் தானே
நல்லை நெஞ்சே நம்முடை நம் பெருமாள்-கீழே தன்னிடம் வந்த ஆஸ்ரிதர் -இங்கு இவனே சஞ்சரித்து ஆஸ்ரிதர்கள் இடம் சேர்கிறான்-
கனக தீர்த்தம் அருகில்
பத்ரன் -பதம் இதுக்கு -மந்த்ர ராஜ ஸ்லோகத்தில் –
ராம பத்ரன் -பல பத்ரன் -அங்கு எல்லாம் விசேஷித்து -இங்கு மட்டுமே பத்ரன் என்றாலே மாலோலன்

ஸ்திராய நம -205-குற்றங்களினாலும் மாற்ற முடியாத திண்மை
ஏய்ந்த–பாசுரம் -வராஹ- க்ரோடா நரசிம்மன் -சிம்ஹாசலம் போலே -பவ நாசினி கரை வழியாக சென்று –
உடைந்த கற்கள் பாறைகள் வழியாக -சிறு ஸீரிய மூர்த்தி முதல் ஸ்லோகம் -உக்ரம் பதம் இவனுக்கு -உத்புல்ல விசாலாக்ஷம்–
பெரு மலர் புண்டரிக கண் நம் மேல் ஒருங்க விடுவான் -மானமிலா பன்றியாம்
மஹா வராஹ -ஸ்புட பத்ர விசாலாக்ஷன்-

நம்மையும் நிலைத்து நிற்கச் செய்து அருளுபவர்

அஜாய நம -206-முனைத்த சீற்றம் -பாசுரம் -தூணில் இருந்து தோன்றியதால் -பாவன நரஸிம்ஹர்-சேவிப்பது சிரமம் —
செல்ல ஒண்ணாத சிங்க வேள் குன்றம்
செஞ்சு ஜாதி வேடுவர் -கூட்டம் கூட்டமாக சேவை -ஸ்தம்பே அவதாரணம் —
பரத்வாஜர் மகரிஷி -ப்ரஹ்மஹத்தி பாவம் போக்க இங்கே -தாபம் –
மஹா விஷ்ணும் -பதம் இவனுக்கு

துர் மர்ஷணாய நம -207-ஜ்வாலா நரசிம்மன்
ஐந்தாம் பாசுரம் -இவனுக்கு -பாவ நாசினி அருவியாகக் கொட்டும் இடம்
சாளக்ராம திரு மேனி இவர் –பொன்னன் உருகி விழுந்தான் இவனது கோப ஜ்வாலையால் –
பரந்தப-பரர்களை தபிக்கச் செய்பவன் ஜ்வலந்தம் -இவனுக்கு

ஓம் சாஸ்த்ரே நம -208-விரோதிகளை நன்றாக சிஷித்தவர்–சாஸ்தா -காரஞ்ச நரசிம்மன் -மேல் அஹோபிலம் அருகில் –
காரஞ்ச வ்ருக்ஷம் அருகில் -கையில் சார்ங்கம் பிடித்து -ராகவ சிம்மம் –
பெரியாழ்வார் -கண்டார் உளர் -நாண் ஏற்றி உள்ள வில் கொண்டு இரணியனை பிளந்தான் என்று அருளிச் செய்கிறார்
அலைத்த பேழ் வாய் -இரண்டாம் பாசுரம்-செஞ்சுல வல்லி -தாயார் வேடர் குலம் -அதனாலே வில் பிடித்து வசீகரம் பண்ண –
பீஷணம் –பயங்கரமானவன் -மந்த்ர ராஜ பதம் இவனுக்கு
முக்கண்களையும் சேவிக்கலாம் இவனுக்கு -காம க்ரோதங்கள் -ரோகங்கள் தீர்ப்பவன் -பீஷணன் –
சிலைக்கை வேடர்கள் ஆரவாரம் -ஆனந்த அதிசயம் -ஆஞ்சநேயர் இங்கு சேவை -விலக்ஷணம்-நரசிம்ம ராகவன் –
ஸூந்தரன்–அழகியான் தானே அரி உருவம் தானே –
மாரீசன் சுக்ரீவன் ராமனை நரசிம்ம ராகவன் -கிள்ளிக் களைந்த-வ்ருத்தாந்தம் தானே அங்குலய அக்ர-என்று அருளிச் செய்கிறான்

ஓம் விஸ்ருதாத்மநே நம – 209 –சத்ரவட நரசிம்மன் -குடை சத்ரம்–கிழக்கு நோக்கி திரு மகம் -ஆல மர நிழல்
மந்தஸ்மிதம் காட்டி சேவை
சரித்திரங்கள் வியந்து கேட்க்கும் படியான –என் சிங்க பிரான் பெருமை ஆராய முடியுமோ-
சாஷாத் ம்ருத்யு ம்ருத்யு -இவனே -ஆஸ்ரித ரக்ஷணம் -தனக்குத்தான் சரித்திரம் வியப்பு –
சங்கீர்த்தன சாஸ்திரம் வர இவனை உபாசனம் –
ஹாஹா ஹூ ஹூ -கந்தர்வர்கள் -வ்ருத்தாந்தம் -இன்னிசையால் பாடி மகிழ்வித்து தவம் செய்தார்கள் –
அன்னமாச்சார்யார் இங்கே பல கீர்த்தனைகள் -ஸ்தோத்ரம்
கீழ் அஹோபில க்ஷேத்ரம் அருகில் சேவை

ஸூராரிக்நே நாம–210- உக்ர ஸ்தம்பம் -ஆவிர்பவித்த ஸ்தம்பம்
நமது கம்பம் போக்கடிக்க ஸ்கம்பத்தில் ஆவிர்பாவம் -ஸ்கம்பமாகவே இங்கே சேவை -அனைத்து திரு நாமங்களும் இவனுக்கு

யோக நரசிம்மர் -பிரகலாதனுக்கு யோகம் அருளி -ஆடி ஆடி –நாடி நாடி நரசிங்கா –

செஞ்சுல வல்லி தாயார் குகை பாவன நரசிம்மர் சந்நிதி அருகில்

அஹோபில மட மூலவர் நரசிம்மர் -உத்சவர் சக்ரவர்த்தி திரு மகன் சீதா பிராட்டி இளைய பெருமாள் -திருவடி –
பெரிய பெரிய பெருமாள் -மூலவர் பெருமாள் உத்சவர் -ராம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் -உண்டே –

————

ஒன்பது நரசிம்மர்களின் விவரங்கள்-
அஹோபிலம் என்றாலே மேல் அஹோபிலம், அதாவது மலை மேல் இருக்கும் இடத்தைக் குறிப்பதாகும்.
ஏனெனில், அங்குதான், நரசிம்மர் அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தது.
எகுவ / மேல் / பெரிய அஹோபிலம் மற்றும் திகுவ / கீழ் / சிறிய அஹோபிலம் என்று பிரித்துக் காட்டப் படுகிறது.
திகுவ-கீழ் அஹோபிலத்தில் மூன்று நரசிம்மர் கோவில்கள் உள்ளன.
ஒரு கமஸ்கிருத சுலோகத்தில், ஒன்பது நரசிம்மர்கள் குறிக்கப்படுகிறார்கள்:

“ஜுவாலா அஹோபில மலோல க்ரோத கரஞ்ச பார்கவ
யோகனந்த க்ஷத்ரவத பாவன நவ மூர்த்தயாஹ”

எண் நரசிம்மர் தன்மை நரசிம்மர் பெயர் கிரகத்துடன் தொடர்பு படுத்துவது
1 ஜுவாலா ஜ்வாலா நரசிம்மர் செவ்வாய்
2 அஹோபில அஹோபில நரசிம்மர் குரு
3 மலோல மாலோல நரசிம்மர் வெள்ளி
4 க்ரோத வராஹ (குரோத) நரசிம்மர் ராகு
5 கரஞ்ச கரஞ்ச நரசிம்மர் திங்கள்
6 பார்கவ பார்கவ நரசிம்மர் சூரியன்
7 யோகனந்த யோகானந்த நரசிம்மர் சனி
8 க்ஷத்ரவத சக்ரவட நரசிம்மர் கேது
9 பாவன பாவன நரசிம்மர் புதன்
என்று வரிசைப்படுத்துகிறார்கள்.
ஆனால், நரசிம்மரின் “அனுஸ்டுப் மந்திரம்” விஷ்ணுவே ஒன்பது விதமான நரசிம்மர்களாக தோன்றி காட்சியளித்தார் என்றுள்ளது
தலவரலாற்றின்படி இந்த இடம் கருடகிரி [கருடாச்சலம், கருடசைலம்] என்று அழைக்கப்படுகிறது.
கருடருக்கு காட்சி கொடுக்கவே ஒன்பது இடங்களில் பெருமாள் நரசிம்மராக தோற்றம் அளித்தாராம்.
மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட “உக்கிர ஸ்தம்பம்’ (தூண்) உள்ளது.
திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம
வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அவற்றைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
இங்கே ஹிரணியனைக் கொன்ற பின் பிரகலாதனுக்கு வரம்கொடுக்கும் தோற்றத்தில் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார்.
இன்னொரு கதையின்படி இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் செஞ்சுக்கள்.
அவர்களின் குலத்தில் மகாலட்சுமி செஞ்சுலட்சுமியாக வந்து பிறந்தார்.
அவரை நரசிம்மர் விரும்பி திருமணம் செய்து கொண்டார்.
எனவே செஞ்சுபழங்குடியினர் வழிபட்ட / வழிபட்டுவரும் நரசிம்மர் கோயில்களாக இவை இருக்கின்றன.

———-

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ பரமான திரு நாமங்கள்-200-210 திரு நாமங்கள் -11–திரு நாமங்கள்

200-அம்ருத்யு
ம்ருத்யு வின் விரோதி -பிரகலாதனை மிருத்யு விடம் இருந்து ரஷித்து அருளி
நமன் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் -மூன்றாம் திரு -98-
நரசிம்ஹ அவதாரத்தில் ம்ருத்யுவுக்கும் ம்ருத்யுவானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அழிவோ அதற்குக் காரணமோ இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்
அழிவில்லாதவர்-அழிவைத் தராதவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-

———————-

201- சர்வ த்ருக் –
யாவரையும் பார்ப்பவன் -நியமிப்பவன்
இவையா எரி வட்டக் கண்கள் -நான் முகன் -21
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -பிரமாணங்கள் பார்த்து அருளிய நம் ராமானுசன்
நண்பர் பகைவர் நடுநிலையாளர் ஆகியோரை அவரவர்க்கு உரிய முறையில் நடத்துதல் பொருட்டு
உள்ளபடி பார்த்து அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகளின் புண்ய பாவங்கள் எல்லாவற்றையும் இயற்கையான அறிவினால் எப்போதும் பார்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
எல்லாவற்றையும் உள்ளபடி பார்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

202- சிம்ஹ
சிங்கப் பிரான்
இமையோர் பெருமான் அரி பொங்கக் காட்டும் அழகன் -நான் முகன் -21
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான் முகன் திரு -22
அசோதை இளம் சிங்கம்
மீண்டும் வரும் -489-தண்டிப்பவன்
மஹா நரசிம்ஹ ஸ்வரூபி -ஸ்ரீ பராசர பட்டர் –
நினைத்த மாத்திரத்தில் பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
அருளைப் பொழிபவர் -சம்ஹரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

203-சந்தாதா –
பக்தர்களை தன்னிடம் சேர்த்து கொள்பவன்
யானையின் மஸ்தகத்தை பிளக்கும் சிங்கம் – குட்டிக்கு பால் கொடுக்கும்
பிரகலாதன் முதலிய பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் அஹல்யையை கௌதமரோடு சேர்த்து வைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராணிகளை வினைப் பயங்களுடன் சேர்ப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பிரஜைகளை நன்றாகத் தரிப்பவர் -போஷிப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

204-சந்திமான் –
சந்தி சேர்க்கை நித்யமாக பண்ணுபவன் -மான் -மதுப் -நித்ய யோகம் -ஸ்ரீ மான் போலே
ஆஸ்ரிதர் தவறு செய்தாலும் என் அடியார் –செய்தாரேல் நன்று செய்தார் -என்பவன்
அவர்களுக்குத் தமது சேர்க்கை எக்காலமும் நீங்காமல் இருக்கச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வினைப்பயன்களை அனுபவிப்பவரும் தாமாகவே இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
ஸூக்ரீவன் விபீஷணன் -முதலியவர்களுடன் உடன்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

205-ஸ்திர –
நிலையாய் நிற்பவன் -சலனம் அற்றவன்
நிலை பேரான் என் நெஞ்சத்து எம்பெருமான் எப்பொழுதும் -10-6-6-
நாம் பெற்ற நன்மையையும் அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் திரு -58-
அருளுகையே இயல்பாக உடையவன் –
கூடியிருக்கையில் அபசாரங்கள் செய்தாலும் அன்பு மாறாமல் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எப்போதும் ஒரே தன்மையுடன் மாறுபாடு இல்லாமல் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
எப்பொழுதும் நிலையாக உள்ளவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

206-அஜ –
பிறப்பிலி -ஸ்தம்பம் -நம் போல் பிறவாதவன் –
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுவே -பெரியாழ்வார் -1-6-9
இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான் -2-8-9-
அஜன் -யாவரையும் வெற்றி கொள்பவன் அகார வாச்யன் 96/514-
தூணில் தோன்றியதால் பிறரைப் போல் பிறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வ்யாபிப்பவர் -நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
பிறப்பில்லாதவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

207-துர்மர்ஷண-
எதிரிகளால் தாங்க முடியாத தேஜஸ் -ஹிரண்யன் பொன் உருகுமா போலே உருக்கிய தேஜஸ்
இவையா பிலவாய் இவையா எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
பொன் பெயரோன் ஆகத்தை கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
குடல் மாலை சீரார் திரு மார்பின் மேல் கட்டி ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -சிறிய திருமடல்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் -9-10-6-
பகைவர்களால் தாங்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ரதாங்க சங்க தாதாரம் ப்ருஹ்ம மூர்த்திம் ஸூ பீஷணம் –த்யான ஸ்லோகம்
அசுரர்களால் அடக்குவதற்கு முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –
எதிர்க்க முடியாதவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

208-சாஸ்தா –
சாசனம் பண்ணுமவன்
ஒரு மூ யுலகாளி -9-8-9-
சிம்ஹ கர்ஜனையால் சிஷிப்பவன் -இகலிடத்து அசுரர்கள் கூற்றம் -9-2-2-
இப்படி விரோதிகளை நன்கு தண்டித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
நிநாத வித்ராசித தானவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –கர்ஜனை மூலம் அசுரர்களை நடுங்க வைப்பவன்
த்ரவந்தி தைத்யா -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -திரு நாமத்தை உச்சரித்த உடன் அசுரர்கள் ஓடிச் செல்கின்றனர்
வேதம் முதலியவற்றால் கட்டளையிட்டு நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகிற்குக் கட்டளை இடுபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

209-விஸ்ருதாத்மா –
வியந்து கேட்கப்படும் சரித்ரம்
என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -2-8-9-
யாவராலும் வியந்து கேட்க்கத் தக்க ஸ்ரீ நரசிம்ஹ திருவவதார சரித்ரத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அசேஷ தேவேச நரேஸ்வர ஈஸ்வரை -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -திவ்ய சரிதம் அனைவராலும் கேட்கப்படும்
வேதத்தில் விசேஷமாகக் கூறப்பட்ட சத்யம் ஞானம் முதலிய லஷணம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
புகழ் பெற்ற ஸ்வரூபம் யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

210- ஸூராரிஹா –
தேவர்கள் எதிரிகளை முடிப்பவன்
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே -8-1-4-
ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கையன் -பெரியாழ்வார் -1-6-9-
தேவர்களுக்கு விரோதியான ஹிரண்யன் மார்பைப் பிளந்து கொன்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சத் சத்த்வ கரஜ ஸ்ரேணி தீப்தேந உபய பாணிநா சமயச்சத யதா சம்யக் பயாநாம் ச அபயம் பரம் -த்யான ஸ்லோகம் –
திரு நகங்களின் தேஜஸ்ஸாலே சம்சார பயத்தை போக்கி அபயம் அளிக்கிறார்
தேவர்களுக்கு விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –
தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டோத்ரம் —

1. ஓம் நர சிம்காய நம
2. ஓம் மகா சிம்காய நம
3. ஓம் திவ்ய சிம்காய நம
4. ஓம் மகா பலாய நம
5. ஓம் உக்ர சிம்காய நம
6. ஓம் மகாதேவாய நம
7. ஓம் சம்பாஜெய நம
8. ஓம் உக்ர லோகன்யாய நம
9. ஓம் ரதுராய நம
10. ஓம் சர்வ புதியாய நம
11. ஓம் ஸ்ரீமான்யாய நம
12. ஓம் யோக நந்தய நம
13. ஓம் திருவிக்ர மயா நம
14. ஓம் ஹாரினி நம
15. ஓம் ஹோலகலயா நம
16. ஓம் ஹாக்ரினி நம
17. ஓம் விஜயாய நம
18. ஓம் ஜெய வர்தநய நம
19. ஓம் பஞ்ச நாய நம
20. ஓம் பரமகய நம
21. ஓம் அகோரய நம
22. ஓம் கோர விக்ராய நம
23. ஓம் ஜிவாலன்முகாய நம
24. ஓம் ஜிவாலா மலின் நம
25. ஓம் மகா ஜிவாலாய நம
26. ஓம் மகா பிரபாஹய நம
27. ஓம் நித்திய லக்சய நம
28. ஓம் சகஸ்சர கசாய நம
29. ஓம் துர்றிகாசாய நம
30. ஓம் பர்தவானாய நம
31. ஓம் மகா தமாஸ்திரேய நம
32. ஓம் யத பரஞ்ஜனய நம
33. ஓம் சண்ட கோபினே நம
34. ஓம் சதா சிவாய நம
35. ஓம் இரணிய கசிபு தேவ மிசைன் நம
36. ஓம் திவ்விய தானவ பஜனய நம
37. ஓம் கன பகராய நம
38. ஓம் மகா பத்ராய நம
39. ஓம் பல பத்ராய நம
40. ஓம் சூபத்ராய நம
41. ஓம் கராலிய நம
42. ஓம் விக்ராயை நம
43. ஓம் விகர்த்ரே நம
44. ஓம் சர்வ கத்துருகாய நம
45. ஓம் சிசுமராய நம
46. ஓம் திரி லோக தர்த மனே நம
47. ஓம் ஜய்சிய நம
48. ஓம் சரவேஸ்ராய நம
49. ஓம் விபாய நம
50. ஓம் பரகம் பனாய நம
51. ஓம் திவ்யாய நம
52. ஓம் அகம்பாய நம
53. ஓம் கவின் நம
54. ஓம் மகா தேவியே நம
55. ஓம் அகோஜெய நம
56. ஓம் அக்சேரயா நம
57. ஓம் வனமலின் நம
58. ஓம் வரப ரதேய நம
59. ஓம் விஸ்வம்பராய நம
60. ஓம் அதோத்யா நம
61. ஓம் பராப ராய நம
62. ஓம் ஸ்ரீ விஷ்ணவ நம
63. ஓம் புருசோத்தமயா நம
64. ஓம் அங்கோஸ்ரா நம
65. ஓம் பக்தாதி வத்சலாய நம
66. ஓம் நாகஸ்ராய நம
67. ஓம் சூரிய ஜோதினி நம
68. ஓம் சூரிஷ்வராய நம
69. ஓம் சகஸ்ர பகுய நம
70. ஓம் சர்வ நய நம
71. ஓம் சர்வ சித்தி புத்தாய நம
72. ஓம் வஜ்ர தம்ஸ்திரய நம
73. ஓம் வஜ்ர நகய நம
74. ஓம் மகா நந்தய நம
75. ஓம் பரம் தபய நம
76. ஓம் சர்வ மந்திரிக நம
77. ஓம் சர்வ யந்திர வித்ரமய நம
78. ஓம் சர்வ தந்திர மகாய நம
79. ஓம் அக்தாய நம
80. ஓம் சர்வ தய நம
81. ஓம் பக்த வத்சல நம
82. ஓம் வைசாக சுக்ல புத்யாய நம
83. ஓம் சர நகத நம
84. ஓம் உத்ர கீர்த்தினி நம
85. ஓம் புண்ய மய நம
86. ஓம் மகாத் மய நம
87. ஓம் கந்தர விக்ர மய நம
88. ஓம் வித்ரயாய நம
89. ஓம் பரபுஜ்யாய நம
90. ஓம் பகாவான்ய நம
91. ஓம் பரமேஸ்வராய நம
92. ஓம் ஸ்ரீவத் சம்ஹய நம
93. ஓம் ஜெத்யாமினி நம
94. ஓம் ஜெகன் மயாய நம
95. ஓம் ஜெகத்பலய நம
96. ஓம் ஜெகனாதய நம
97. ஓம் தேவி ரூபா பார்வதியாய நம
98. ஓம் மகா ஹகாய நம
99. ஓம் பரமத் மய நம
100. ஓம் பரம் ஜோதினி நம
101. ஓம் நிர்கனய நம
102. ஓம் நர்கேஷ் ஸ்ரீனி நம
103. ஓம் பரதத்வய நம
104. ஓம் பரம் தமய நம
105. ஓம் ஷா சித் ஆனந்த விக்ரகய நம
106. ஓம் லட்சு-மி நரசிம் கய நம
107. ஓம் சர்வ மய நம
108. ஓம் த்ரய நம

———

ஸ்ரீ நரஸிம்ஹ அஷ்டகம் –

ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் பிராணிகளைக் கரை மரம் சேர்ப்பதற்கு உரிய தோணி போன்றதான
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் உடைய திருவடித் தாமரைகளை தஞ்சமாக பற்றுகிறேன் என்றவாறே –

ஸ்ரீ பெருமாள் கோயில் கரிகிரியின் கீழ்க் காட்சி தந்து அருளா நிற்கும் ஸ்ரீ அழகிய சிங்கர் விஷயம் என்றும்
ஸ்ரீ திரு வல்லிக் கேணி ஸ்ரீ தெள்ளிய சிங்கர் விஷயமாகவும் பணித்து அருளிய ஸ்லோகம் –

———————————————————————————————————————————————

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி
ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம்
தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ—————1-

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி -ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த–அழகியவாயும்-களங்கம் அற்றவையுமாயும் உள்ள-
பல வாயிரம் பௌர்னமி சந்திரர்களின் சோபையைத் தாங்குகின்ற மநோ ஹரமான உளை மயிர் திரள்களினால் –
சடாபடலம் -உளை மயிர்க் கற்றைகளாலே அழகியவரே —அழகியான் தானே அரி யுருவன் தானே –
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம் தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ ––கருணைக்கு இருப்பிடமானவரே
ஆசூர வர்க்கங்களுக்கு யமன் போன்ற அழகிய சிங்கப் பெருமாளே –
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ் புக நின்ற செங்கண்மால் -திருவாய் மொழி -3-6-6-
தைத்யவர் -இரணியன் போன்ற ஆசூர பிரக்ருதிகள்
காலன் -மிருத்யு
சம்சாரக் கடலில் வீழ்ந்த அடியேனை ரஷித்து அருள வேணும் –
நரசிம்ஹ நரசிம்ஹ -இரட்டிடித்துச் சொல்லுகிறது ஆதார அதிசயத்தினால் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் அடியேனுக்கு தேவரீர் உடைய திருவருள் அல்லது வேறு புகல் இல்லை என்றார் -ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————-

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம்
பாதக தவா நல பதத்ரிவரகேதோ
பாவந பராயண பவார்த்தி ஹரயா மாம்
பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ–2

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம் – தனது திருவடித் தாமரைகளில் வணங்கின பாபிஷ்ட ஜனங்களின் உடைய பாபங்களுக்கு
பாதக தவா நல –காட்டுத் தீ போன்றவனே
பதத்ரிவரகேதோ –பஷி ராஜனான பெரிய திருவடியைக் கொடியாக யுடையவனே –
பாவந பராயண –தன்னைச் சிந்திப்பார்க்கு பரகதியாய் யுள்ளவனே -உபாயமும் உபேயமுமாக இருப்பவனே
பவார்த்தி ஹரயா மாம் -பாஹி க்ருபயைவ – சம்சாரத் துன்பங்களைப் போக்க வல்ல உனது கருணையினாலேயே
அடியேனைக் காத்தருள வேணும்-போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
க்ருபயைவ -என்பதால்-ஏவ காரத்தால் என் பக்கலில் ஒரு கைம்முதல் எதிர் பார்க்கலாகாது என்கிறது –
நரசிம்ஹ நரசிம்ஹ–அழகிய சிங்கப் பெருமானே-

——————————————————————————————————————————————————————-

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக்
பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர
பண்டித நிதான கமலாலய நமஸ் தே
பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ——3-

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக் பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர –-நீண்ட திரு வுகிற் வரிசைகளினால்
பிளக்கப் பட்டவனான ஹிரண்யாசூரனுடைய உதிரக் குழம்பாகிற புதுமை மாறாத கும்குமச் சாறு தன்னால் வ்யாப்தமாய் இருக்கிற
அகன்ற திரு மார்பை யுடையவரே –

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் போன்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -என்றும் –

போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல் கட்டிச் செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -என்றும் சொல்லுகிறபடியே

பண்டித நிதான-அறிஞர்கட்கு நிதி போன்றவரே-வைத்த மா நிதி இறே
நிதியானது உள்ளே பத்தி கிடந்தது ஒரு கால விசேஷத்திலே பாக்யவாங்களுக்கு வெளிப்படுமா போலே –
கமலாலய – பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமானவரே –-கமலை கேழ்வனே-
நரசிங்க வுருக் கொண்ட போது மூவுலகும் அஞ்சிக் கலங்கிப் போகும்படியான சீற்றம் உண்டானது கண்டு
அதனைத் தணிக்க ஸ்ரீ மகா லஷ்மி வந்து குடி கொள்ள ஸ்ரீ லஷ்மி நருசிம்ஹன் ஆன்மை இங்கு நினைக்கத் தக்கது
பங்கஜ நிஷண்ண – ஆசன பத்மத்திலே எழுந்து அருளி இருப்பவரே –-தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான் -என்றபடி –
நரசிம்ஹ நரசிம்ஹா –நமஸ் தே உமக்கு வணக்கமாகுக –

————————————————————————————————————————————————————————–

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்
யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ் ஸூ நிகமா நாம்
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்நி நரசிம்ஹ நரசிம்ஹ—————–4-

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்- அமரவராணாம் மௌலிஷூ விபூஷண –சிறந்த தேவர்களின் முடிகளின் மீதும்
அமரர்கள் சென்னிப் பூ இறே
யோகி ஹ்ருதயேஷூ – யோகிகளின் உள்ளத்திலும் –
ச சிரஸ் ஸூ நிகமா நாம் – வேதாந்தங்களிலும் – வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு
மௌலிஷூ விபூஷண–சிறந்த தொரு பூஷணம் போன்று விளங்குகின்ற –
விபூஷணம் எனபது சப்தம் எந்த பதங்கள் எல்லாவற்றிலும் அந்வயிக்கக் கடவது
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்நி – தாமரை போல் அழகிய தேவரீருடைய திருவடி இணையை
என் சென்னி மீது வைத்து அருள வேணும் –

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் யாழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்றும்

நரசிம்ஹ நரசிம்ஹ-

——————————————————————————————————————————————————————

வாரிஜ விலோசன மதநதி மதசாயம்
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்ய விஹகா நாம்
நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ———————5-

வாரிஜ விலோசன – செந்தாமரைக் கண்ணரே –
கிண் கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே-செங்கண் சிறுத் சிறிதே எம்மேல் விழித்து அருள வேணும்
சரண்ய-அடியேன் போல்வார்க்குத் தஞ்சமானவரே –
மதநதி மதசாயம் –என்னுடைய சரம அவஸ்தையிலே
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம் – சமஸ்த கரணங்களையும் -செவி வாய் -கண் -முதலான –
க்லேசத்துக்கு வசப்படுதுமதான அந்த சரம அவஸ்தையிலே –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்றும்

மேல் எழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை யுள் எழ வாங்கி
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண் உறக்கமதாவது -என்றும்

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற -என்றும் –

காஷ்ட பாஷான சந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்றும்

ஏஹி ரமயா சஹ விஹகா நாம் நாதமதி ருஹ்ய –ரமயா சஹ விஹகாநாம் நாதம் அதிருஹ்ய ஏஹி
பிராட்டியோடு கூடப் பெரிய திருவடி மேல் ஏறிக் கொண்டு அடியேன் பால் வந்து அருள வேணும் –

பறவை ஏறு பரம் புருடனாய்ப் பிராட்டியோடும் கூட எழுந்தருளி பாவியேனைக் கை கொண்டு அருள வேணும்
என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று

நரசிம்ஹ நரசிம்ஹ-

————————————————————————————————————————————————————————-

ஹாடக கிரீட வரஹார வநமாலா
தார ரசநா மகர குண்டல ம ணீந்த்ரை
பூஷிதம சேஷ நிலயம் தவ வபுர் மே
சேதசி சகாஸ்து நரசிம்ஹ நரசிம்ஹ–6-

ஹாடக கிரீட –பொன்மயமான சிறந்த மகுடம் என்ன
வரஹார வநமாலா –வைஜயந்தி என்னும் வனமாலை என்ன
தார ரசநா –முத்து மயமான அரை நாண் என்ன –
தாரம் -என்று முத்துக்குப் பெயர்-நஷத்ரவடம் என்கிற திரு ஆபரணத்தை சொல்லிற்றாகவுமாம்
மகர குண்டல ம ணீந்த்ரை – திரு மகரக் குழைகள் என்ன –
மணீந்த்ரை –ரத்னா வாசகமான இந்த சப்தம் லஷண்யா ரத்ன பிரசுர பூஷண வாசகம் ஆகலாம் –
பூஷிதம – ஆகிய இத் திரு ஆபரணங்களினால் அலங்கரிக்கப் பட்டதும் –

செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ ஆழிகளும் கிண் கிணியும்
அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியுமான
திரு வாபரணங்கள் அணிந்த திரு மேனியே தமது திரு உள்ளத்தில் திகழ வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

அசேஷ நிலயம் –எங்கும் வ்யாபித்ததுமான-அசேஷத்தையும் நிலையமாக வுடைத்தான -என்கை
நிலய சப்தம் நித்ய பும்லிங்கம் ஆகையாலே இங்கு பஹூரீவ்ஹியாகக் கடவது

தவ வபுர்- தேவரீர் உடைய திரு மேனி
மே சேதசி சகாஸ்து –என் நெஞ்சின் உள்ளே விளங்க வேணும்
நரசிம்ஹ நரசிம்ஹ ––அழகிய சிங்கப் பெருமாளே-

———————————————————————————————————————————————————————————–

இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லசத்வர ரதாங்க
ஸூந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்திதித ஸூரேச நரசிம்ஹ நரசிம்ஹ—7-

இந்து ரவி பாவக விலோசன –சந்தரன் சூர்யன் அக்னி இவர்களை திருக் கண்ணாக யுடையவரே –
தீப் பொறி பறக்கும் நெற்றிக்கண் உண்டே -அதனால் அக்னியை சேர்த்து அருளுகிறார்
ரமாயா மந்திர – பெரிய பிராட்டியாருக்கு திருக் கோயிலாக இருப்பவரே –
அந்த நெற்றிக் கண்ணை அவிப்பதற்காக பிராட்டி வந்து திரு மேனியில் வீற்று இருந்த படியாலே ரமாயா மந்திர -என்றார் –
மஹா புஜ லசத்வர ரதாங்க–தடக்கையிலே விளங்கும் சிறந்த திரு ஆழி ஆழ்வானை யுடையவரே –
மஹா புஜ லசத் தரரதாங்க -என்றும் பாட பேதம்
தரம் -என்று சங்குக்குப் பெயர் ஆதலால்-சங்கு சக்கரம் இரண்டையும் சேரச் சொன்னபடி ஆகவுமாம்
ஸூந்தர – அழகு பொலிந்தவரே-
சிராய ரமதாம் த்வயி மநோ மே–அடியேனுடைய மனமானது தேவரீர் இடத்தில் நெடும்காலம் உகப்பு கொண்டு இருக்க வேணும்
நந்திதித ஸூரேச –அமரர் கோன் துயர் தீர்த்தவரே –
நரசிம்ஹ நரசிம்ஹ-

———————————————————————————————————————————————————–

மாதவ முகுந்த மது ஸூதன முராரே
வாமன நருசிம்ஹ சரணம் பவ நதா நாம்
காமத கருணின் நிகில காரண நயேயம்
காலமமரேச நரசிம்ஹ நரசிம்ஹ——8-

மாதவ –திருமாலே –
முகுந்த –முக்தி அளிக்கும் பெருமானே –
மது ஸூதன –மது கைடபர்களை மாய்த்தவனே
முராரே –நரகா ஸூர வதத்தில் -முரனைக் கொன்றவனே
வாமன-குறள் கோலப் பெருமானே
நருசிம்ஹ –நரம் கலந்த சிங்கமே –
சரணம் பவ நதா நாம் –அடி பணிந்தவர்களுக்குத் தஞ்சமாவாய் –
காமத–அபேஷிதங்களை எல்லாம் அளிப்பவனே –
கருணின் –தயாளுவே –
நிகில காரண –சகல காரண பூதனே
காலம் நயேயம் –யமனையும் அடக்கி யாளக் கடவேன் –
பொருள் சிறவாது
உன்னை வாழ்த்தியே வாழ் நாளைப் போக்கக் கடவேன் –
அமரேச –அமரர் பெருமானே
நரசிம்ஹ நரசிம்ஹ –இங்கனே உன் திரு நாமங்களை வாயார வாழ்த்திக் கொண்டே
என் வாழ் நாளைப் போக்கக் கடவேன்

க்ரோசன் மதுமதன நாராயண ஹரே முராரே கோவிந்தேதி அனிசமப நேஷ்யாமி திவசான் -ஸ்ரீ பட்டர்

——————————————————————————————————————————————————–

அஷ்டகமிதம் சகல பாதக பயக்தம்
காம தம சேஷ துரி தாம யரி புக்நம்
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே
கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ–9-

அஷ்டகமிதம் –எட்டு ஸ்லோகங்களினால் அமைந்த இந்த ஸ்தோத்ரத்தை –
சகல பாதக பயக்தம் –சகல பாபங்களையும் சகல பயன்களையும் போக்கடிப்பதும்
பாதகம் -மஹா பாதகங்களை -குறிக்கும்
காம தம –சகல அபேஷிதங்களையும் அளிப்பதும்
சேஷ துரி தாம யரி புக்நம் –சகல விதமான பாபங்களையும் பிணிகளையும் பகைவர்களையும் நிரசிப்பதுமான –
துரிதம் -உபபாதகங்களை
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ –யாவன் ஒருவன் கற்கின்றானோ
அவ்வதிகாரி அனைவருக்கும் ப்ராப்யமான தேவரீர் உடைய திவ்ய ஸ்தானத்தை அடைந்திடுவான்
நரசிம்ஹ நரசிம்ஹ –

இதனால் இந்த ஸ்தோத்ரம் கற்றாருக்கு பலன்சொல்லித் தலைக் கட்டுகிறார்
அநிஷ்ட நிவாரணம்-இஷ்ட ப்ராபணம் ஆகிற இரண்டுக்கும் கடவதான இந்த ஸ்தோத்ரத்தை
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வர் என்று பேறு கூறித் தலைக் கட்டினார் ஆயிற்று

ஸ்ரீ தெள்ளிய சிங்க பெருமாள் அக்காராக் கனி திருவடிகளே சரணம்

———-

ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் —

வருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷ க்ஷய தீஷிதம்
நிதாத்ரஸ்தா விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம் யஹம் –

சர்வை ரவத்யதாம் பிராப்தம் சபலவ்கம் திதே ஸூ தம்
நகாக்ரை ஸகலீ யஸ்தம் வீரம் நமாம் யஹம் –

பாதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரி விஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம் யஹம் –

ஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர ஜ்வல நாதீன் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம் யஹம் –

ஸர்வேந்த்ரியை ரபி விநா சர்வம் ஸர்வத்ர ஸர்வதா
ஜா நாதி யோ நமாம் யாத்யம் தமஹம் சர்வதோமுகம் —

நரவத் ஸிம்ஹ வஸ்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மன
மஹாஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் நரஸிம்ஹம் நமாம் யஹம் –

யன்நாம ஸ்மரணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணயஸ் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் –

ஸர்வோபி யம் ஸமாச்ரித்ய சாகலாம் பத்ரமஸ்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம் யஹம் –

சாஷாத் ஸ்வ காலே சம்பிராப்தம் ம்ருத்யும் சத்ரு குணா நபி
பக்தா நாம் நாசயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் –

நமஸ்காராத் மஹம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம்
த்யக்த துக்கோ கிலான் காமான் அஸ்நுதே தம் நமாம் யஹம் –

தாஸ பூதா ஸ்வத சர்வே ஹயாத்மாந பரமாத்மன
அதோ ஹமபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –

சங்க ரேணாதராத் ப்ரோக்தம் பதா நாம் தத்வமுத்தமம்
த்ரி சந்த்யம் யா படேத் தஸ்ய ஸ்ரீர்வித்யாயுஸ்ச வர்த்ததே

————–

ஸ்ரீ பெரிய திரு மொழி ஸ்ரீ சிங்க வேள் குன்ற அனுபவம்– 1-7-அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்–

அந்த ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம் பிற்பட்டார்க்குப் பயன்படாமல் போயிற்றே என்று வயிறு எரிய வேண்டாதபடி
நாம் ஸ்ரீ சிங்க வேள் குன்றம் என்னும் விலஷணமான திவ்ய தேசத்திலே நித்ய சந்நிதியும் பண்ணி வைத்து இருக்கிறோமே –
ஆஸ்ரிதர் விஷயத்தில் நாம் இப்படி பரிந்து கார்யம் செய்வோம் என்பது உமக்குத் தெரியாதோ –
ஏன் நீர் வருந்துகின்றீர் என்று அருளிச் செய்ய-
ஸ்ரீ ஆழ்வாரும் பரம சந்தோஷம் அடைந்து -அந்த ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தையும்
திவ்ய தேசத்தையும் அனுபவித்து இனியராகிறார் –

கீழ்த் திருமொழியில் ஒன்பதாம் பாட்டில் -தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே -என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டு
சரணாகதி செய்தது போலே
இத் திரு மொழியிலும் ஒன்பதாம் பாட்டில் அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்-என்று
ஸ்ரீ லஷ்மி சம்பந்தத்தை முன்னிட்டே அனுபவிக்கிறார் –

இத் திருமொழியில் எட்டாம் பாட்டு வரையில் ஒவ் வொரு பாட்டிலும் முன்னடிகளில் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தையும்
பின்னடிகளில் ஸ்ரீ சிங்க வேள் குன்றத்தின் நிலைமையும் வர்ணிக்கப் படுகின்றன –

இத்திருப்பதியின் திரு நாமம் ஸ்ரீ அஹோபிலம் -என வழங்கப் படும் -இது வட நாட்டுத் திருப்பதிகளில் ஓன்று
ஸ்ரீ சிங்க வேள் குன்றம் -என்றும் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் -என்றும் இதனை வழங்குவர்
வேள் -யாவராலும் விரும்பப் படும் கட்டழகு உடையரான பெருமாள் எழுந்து அருளிய -ஸ்ரீ திருமலை – என்று –
ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தி எழுந்து அருளி இருக்கின்ற ஏழு குன்றங்களை யுடைய திவ்ய தேசம் என்றுமாம் –
இத்தலம் சிங்கம் புலி முதலிய பயங்கரமான விலங்குகள் சஞ்சரிக்கப் பட்ட
கல்லும் புதரும் முள்ளும் முரடுமான கொடிய அரணியமாக இருப்பது இத் திரு மொழியால் நன்கு விளங்கும்
இப்படிப்பட்ட பயங்கரமான துஷ்ட மிருகங்களும் கொடிய வேடர் முதலானவர்களும் அத்தலத்தின் கண் இருப்பதும்
மங்களா சாசன பரரான நம் ஆழ்வார்களுக்கு ஒருவகையான ஆனந்தத்துக்கு ஹேது வாகின்றது போலும் –
எல்லாரும் எளிதாக வந்து அணுகக் கூடிய தேசமாய் இருந்தால் ஆசூர பிரக்ருதிகளும் பலர் வந்து
ஸ்ரீ எம்பெருமானுக்கு ஏதாவது தீங்கு இழைக்கக் கூடுமோ என்கிற அச்சத்துக்கு அவகாசம் இல்லாமல்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா -என்னும்படி கஹநமாய் இருப்பது மங்களா சாசன
ருசி யுடையாருக்கு மகிழ்ச்சியே இறே-

—————————————————————

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-

பக்த சிரோமணியான ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த துன்பங்களை சஹிக்க முடியாமையினாலே
ஸ்ரீ எம்பெருமான் அளவற்ற சீற்றம் கொண்டு பயங்கரமான ஒரு திருவுருவத்தை ஏறிட்டுக் கொண்டான் –
அந்தச் சீற்றம் ப்ரஹ்லாத விரோதியான இரணியன் அளவிலே மாத்ரமே யுண்டானாலும்
அளவு மீறி இருந்தததனால்
உலகங்கட்கு எல்லாம் உப சம்ஹாரம் விளைந்திடுமோ
என்று அனைவரும் அஞ்சி நடுங்கும்படி இருந்தது பற்றி
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய்-என்கிறார் –
வியாக்யான ஸ்ரீ ஸூக்தி-நரசிம்ஹம் ஆயிற்று ஜகத் ரஷணத்துக்காக இறே -அங்கனே இருக்கச் செய்தேயும்
விளைவது அறியாமையினாலே ஜகத்தாக நடுங்கிற்று ஆயிற்று –
இது எவ்வளவாய்த் தலைக் கட்டுகிறதோ என்று இருந்ததாயிற்று
இனி அங்கண் ஞாலம் அஞ்ச-என்பதற்கு இரணியனுடைய ஒப்பற்ற தோள் வலியைக் கண்டு
உலகம் எல்லாம் அஞ்சிக் கிடந்த காலத்திலே என்றும் பொருள் உரைப்பார் –
அங்கு -என்றது -எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து -இங்கு யில்லையா என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் -என்கிறபடியே
இரணியன் எந்த இடத்தில் எம்பெருமான் இல்லை என்று தட்டினானோ அந்த இடத்திலேயே -என்றபடி
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க யுருவாய் -என்றார் ஸ்ரீ பெரியாழ்வாரும் –

அவுணன் பொங்க -அசுரர்கட்கு அவுணன் என்று பெயர் -இங்கு ஹிரண்யாசுரனைச் சொல்லுகிறது
இவன் அன்று வரையில் தனக்கு எதிரியாக தன் முன்னே வந்து தோற்றின ஒருவரையும் கண்டு அறியாமல்
அன்று தான் புதிதாக ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியாகிய எதிரியைக் கண்டபடியால் கண்ட காட்சியிலே கொதிப்பு அடைந்தானாம் –
அப்படி அவன் கொதிப்படைந்த அளவிலே அவனது ஆகத்தை மார்வை –
தீஷணமான திரு நகங்களாலே கிழித்து எறிந்தனன் ஸ்ரீ எம்பெருமான் –
பொங்க என்பதுக்கு ஆகத்தை அடை மொழியாக்கி அவுணன் யுடைய அகன்ற மார்பை என்றும் உரைப்பர் –

போழ்ந்த புனிதன் –
புனிதன் என்றால் பரிசுத்தன் என்றபடி
இரணியனது மார்பைப் பிளந்ததால் என்ன பரிசுத்தி யுண்டாயிற்று -என்று கேட்கக் கூடும்
ஜகத்தை சிருஷ்டித்தல் முதலிய தொழில்களில் பிரமன் முதலானவர்களைக் ஏவிக் கார்யம் நடத்தி விடுவது போலே
பிரஹ்லாதனை ரஷிப்பதிலும் ஒரு தேவதையை ஏவி விடாமல் தானே நேராக வந்து தோன்றி
கை தொட்டு கார்யம் செய்வதமையே இங்கே பரிசுத்தி எனக் கொள்க –
இப்படி பரிசுத்தனான ஸ்ரீ எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஏது என்றால்-
அது எப்படிப் பட்டது என்னில்- சிங்கம் யானை முதலிய பிரபல் ஜந்துக்கள் திரியும் இடம் அது என்பதைக் காட்டுகிறார் பின்னடிகளில் –
பகவானுடைய சந்நிதான மகிமையினால் அவ்விடத்து மிருகங்களும் பகவத் பக்தி மிக்கு இருக்கின்றன என்கிறார் –
சிங்கங்கள் யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைப் பிடுங்கிக் கொண்டு வந்து
பெருமான் திருவடிகளில் சமர்பித்து வணங்கு கின்றனவாம் –
புருஷோ பவதி ததன்னாஸ் தஸ்ய தேவதா –எந்த எந்த உயிர்கட்கு எது எது ஆஹாரமோ-அந்த அந்த உயிர்கள்
அந்த ஆஹாரத்தைக் கொண்டு தம் தேவதைகளை ஆதாரிக்கும் –
என்கிற சாஸ்திரம் ஆதலால் யானைகளின் அவயவங்களை ஆகாரமாக யுடைய சிங்கங்களும்
யானைத் தந்தங்களைக் கொண்டு பகவத் ஆராதனம் நடத்துகின்றன -என்க
ஆளி -என்று சிங்கத்துக்கும் யாளிக்கும் பெயர் -இங்கே சிங்கத்தைச் சொல்லுகிறார்

செங்கண்-வியாக்யான ஸ்ரீ ஸூக்தி -இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே இருக்கச் செய்தேயும்
பகவத் பக்தி ஒருபடிப் பட்டுச் செல்லும் ஆயிற்று –
சீற்றம் விக்ருதியாய் -பகவத் பக்தி ப்ரக்ருதியாய் இருக்கும் ஆயிற்று –

——————————————————-

அலைத்த பேழ்வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே—1-7-2-

அலைத்த பேழ்வாய் –
சீற்றத்தாலே கடைவாய் யுடனே நாக்கை ஏற்றிக் கொள்ளுகிற பெரிய வாயை யுடைய ஸ்ரீ நரசிம்க மூர்த்தியாய்த் தோன்றி
பரஹிம்சையாகப் போது போக்கின இரணியனுடைய மார்பைப் பிளந்த ஸ்ரீ பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம்
அவ்விடத்தின் நிலைமையைப் பேசுகிறார் பின்னடிகளில் -தீர்த்த யாத்ரையாகப் பலர் அங்கே செல்லுகின்றாராம் –
அவர்களை அவ்விடத்து வேடர்கள் வந்து தகைந்து சண்டை செய்வார்கள் -பரஸ்பரம் பெரும் சண்டை நடக்கும்
அந்த சண்டையிலே வேடர்கள் பறை ஓசையும் வில் ஓசையும் இடைவிடாது இருந்து கொண்டே இருக்கும் –
இதுவே அத்தலத்தின் நிலைமை என்கிறார் -உள்ளதை உள்ளபபடி சொல்ல வேண்டும் இறே

மலைத்த செல் சாத்து –
மலைத்தலாவது ஆக்கிரமித்தல் –வேடர்களால் ஆக்கிரமிக்கப் பட்ட -என்றாவது
வேடர்களை எதிர் இட்டு ஆக்ரமித்த என்றாவது பொருள் கொள்ளலாம்
வேடர்கள் வந்து பொருகிற போது தாங்கள் வெறுமனிரார்கள் இறே –
தாங்களும் பிரதியுத்தம் செய்வார்களே இறே -அதைச் சொல்லுகிறது என்னலாம் –
செல் சாத்து –
வடமொழியில் சார்த்தம் -சமூஹம் போலே இங்கே சாத்து -யாத்ரை செய்பவர்களின் கூட்டம்
பூசல் யுத்தம் பெரிய கோஷம்
வேடர்களால் ஆக்கிரமிக்கப் பட்ட வழிப் போக்கர்கள் போடும் கூச்சல் பெரிய பறை அடிப்பது போலே ஒலிக்கின்றது -என்றும்
வேடர்கள் வழிப் போக்கர்களை மறித்து செய்கிற சண்டையிலே வேடர்கள் யுடைய பறைகள்
கர்ண கடூரமாக ஒலிக்கின்றன என்றும் கருத்து –

—————————————————

ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே–1-7-3-

ஏய்ந்த பேழ் வாய் –
வடிவின் பெருமைக்குத் தகுதியாக பெரிய வாயையும் -ஒளி -பொருந்திய -அல்லது வாள் போன்ற கோரப் பற்களையும் யுடைய
ஸ்ரீ நரசிம்ஹமாய்த் தோன்றி இரணியன் யுடைய மாமிசம் செறிந்த மார்பைப் பிளந்த ஸ்ரீ பெருமான் உடையும் இடம் ஸ்ரீ சிங்க வேள் குன்றம் –

நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஜ்ஞை நடமாட பொறிகொள் சிறை வண்டிசை பாடும் -என்றும்
வண்டினம் முரலும் சோலை மயில் இனம் ஆலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை -என்றும்
வருணிக்கத் தக்க நிலைமையோ அவ்விடத்து என்றால் -இல்லை –
அந்த சந்நிவேசம் வேறு வகையானது என்கிறார் –
ஆனை குதிரை சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இங்கும் அங்கும் ஓடி அலைந்து ஓய்ந்து நிற்கக் காணலாம் –
உடைந்து நிற்கும் கற்பாறைகளைக் காணலாம்
இன்னமும் சில காண வேண்டுமானால் -மூங்கில்கள் நெருப்புப் பற்றி எரிந்து குறைக் கொள்ளியாய் இருக்குமவற்றை விசேஷமாகக் காணலாம்
இவை ஒழிய வேறு ஒன்றையும் காண்பதற்கு இல்லையாம் அங்கு
இவை எல்லாம் இவ் வாழ்வாருக்கு வண்டினம் முரலும் சோலை போலே தோன்றுகின்றன என்பர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
அது இது உது என்னலாவன வல்ல என்னை யுன் செய்கை நைவிக்கும் என்றபடி
ஸ்ரீ எம்பெருமானுடைய சரித்ரம் எதுவாய் இருந்தாலும் எல்லாம் ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய நெஞ்சைக் கவர்வது போலே
அப்பெருமான் உகந்து அருளின நிலங்களில் உள்ளவைகளும் எதுவாய் இருந்தாலும்
அவ்விடத்தவை என்கிற காரணத்தால் எல்லாம் இவர்க்கு உத்தேச்யம் எனபது அறியத் தக்கது
பிறருக்கு குற்றமாய்த் தோற்றுமவையும் உபாதேயமாகத் தோற்றுகை இறே ஒரு விஷயத்தை உகக்கை இறே -வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –
ஓய்ந்த மாவும் –
நிலத்தின் வெப்பத்தினால் பட்டுப் போன மா மரங்களும் என்னவுமாம் –

————————————————————

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—1-7-4-

கையும் வேலுமாய் இருக்கும் இருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப் படுத்த வல்லனான
இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்பைப் பிளந்து அருளின ஸ்ரீ பெருமான் உறையும் இடமாவது ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் —
வேற்று மனிசரைக் கண்ட போதே வந்து துடைகளிலே கவ்விக் கடிக்கிற நாய்களும்
அப்படிக் கடிக்கப்பட்டு மாண்டு ஒழிந்த பிணங்களை கவ்வுகின்ற கழுகுகளும் ஆங்கு மிகுதியாகக் காணப்படுமாம் –
செடி மரம் ஒன்றும் இல்லாமையினாலே நிழல் என்பதும் காணவே முடியாது –
உச்சி வேளையிலே எப்படிப் பட்ட வெய்யில் காயுமோ -அதுவே எப்போதும் காய்கின்றது –
சுழல் காற்றுக்கள் சுழன்றபடி இரா நின்றன -இப்படி இருக்கையினாலே சாமான்யரான மனிசர் அங்குச் சென்று கிட்டுதல் அரிது –
மிக்க சக்தி வாய்ந்த தேவதைகளே அங்குச் செல்வதற்கு உரியர் -இங்கனே கஹனமான தலமாயிற்று இது –

எவ்வும் -எவ்வம் இரண்டு பாட பேதம் –
பொன் பெயரோன் -ஹிரண்யம் வட சொல் பொன் என்ற பொருள் -ஹிரண்யா ஸூரன் என்றபடி
யேதலன் -சத்ரு
சர்வ பூத ஸூக்ருதான ஸ்ரீ எம்பெருமானுக்கு இவன் நேரே சத்ரு அல்லன் ஆகிலும் –
பகவத் சிரோமணியான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு சத்ருவான முறைமையினாலே பகவானுக்கும் சத்ரு ஆயினான் –
ஆஸ்ரிதர்கள் விரோதிகளைத் தனது விரோதிகளாக நினைத்துப் பேசுமவன் இறே ஸ்ரீ எம்பெருமான் –
ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்து இன்னுயிரை வவ்வினான் -என்று
மார்வைப் பிளந்தது முன்னமும் உயிரைக் கவர்ந்தது அதன் பின்புமாகச் சொல்ல வேண்டி இருக்க இங்கு மாறாடிச் சொன்னது –
இரணியன் ஸ்ரீ நரசிங்க மூர்த்தியைக் கண்ட ஷணத்திலே செத்த பிணமாக ஆய்விட்டான் -என்ற கருத்தைக் காட்டுதற்கு -என்க-
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று -என்பதற்கு இரண்டு பொருள்
உச்சிப் போது என்று ஸூர்யனைச் சொல்லி நாய்களும் கழுகுகளும் கூட தரையின் வெப்பம் பொறுக்க மாட்டாமல் திண்டாடும்
ஸூர்யனே அவ்விடத்தில் வந்தாலும் அவனுக்கும் இதே கதி –
தன்னுடைய தாபத்தை தானே பொறுக்க மாட்டாமல் அவனும் கால் தடுமாறி பரிதபிப்பன் -என்ற வாறுமாம் –
இங்கே சென்று சேவிக்க விருப்பம் யுடைய ஸ்ரீ ஆழ்வார் -தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாது -என்று
அருமை தோன்ற அருளிச் செய்யலாமோ என்னில்
ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியின் அழகைக் கண்டு அசூயைப் படுவதற்கும் அவனுக்கு ஏதேனும் அவத்யத்தை விளப்பதற்கும்
உறுப்பாக ஆசூரப் பிரக்ருதிகள் அங்குச் செல்ல முடியாது –
ஸ்ரீ எம்பெருமானுடைய சம்ருத்தியைக் கண்டு உகந்து பல்லாண்டு பாட வல்ல
ஸ்ரீ ஆழ்வார் போல்வாருக்குத் தான் அவ்விடம் அணுகக் கூடியது என்ற கருத்து தோன்ற அருளிச் செய்கிறார் –

——————————————————————–

மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே–1-7-5-

சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்று கொண்டே இருக்கிற பெரிய வாயையும்
ஒளி விடுகிற எயிற்றையும் மிடுக்கையும் யுடைய ஸ்ரீ நரசிம்ஹமாய்த் தோன்றி
இரணியன் உயிர் மாளும்படியாக அவனது மார்பைப் பிளந்த ஸ்ரீ பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் –
அஃது எப்படிப் பட்டது -மாறாமல் நின்று எரிகிற அக்னியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு
ஆகாயம் எங்கும் பரவி வீசி எறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் ஸ்ரீ கோயில் –

அவுணன் பொன்ற வாகம் -இரண்டு வகை பொருள்
ஸ்ரீ நரசிம்ஹத்தைக் கண்டவுடனே இரணியன் பொன்ற -முடிந்து போக -முடிந்த பிறகு அந்தப் பிணத்தைக் கிழித்து போட்டான் என்னலாம்
இது அதிசய உக்தி -அன்றி அவுணன் பொன்றும்படி-முடியும்படியாக -அவனது உடலைக் கிழித்தான் என்னவுமாம் –
சூறை-சூறாவளிக் காற்று -அக்காற்று செந்தீயை மொண்டு கொண்டு ஆகாயத்திலே ஓடுகின்றதாம் –
நீள் விசும்பூடு எரிய-பாட பேதம் -ஆகாயத்தில் போய் ஜ்வலிக்க -என்றபடி –
சென்று காண்டற்கு அரிய கோயில் -வியாக்யான ஸ்ரீ ஸூக்தி –
இப்படி இருக்கையாலே ஒருவருக்கும் சென்று காண்கைக்கு அரிதாய் இருக்குமாயிற்று –
பரமபதம் போலே இந்நிலத்துக்கும் நாம் பயப்பட வேண்டா என்று ஹ்ருஷ்டராகிறார் –

——————————————————————

எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–1-7-6–

உழுவை -புலிகள் ஆனவை –
சீற்றத்தாலே அக்நி ஜ்வாலை போலே ஜ்வலிக்கிற சிவந்த கண்களையும் ஒளி விடா நின்ற பெரிய வாயையும்
கோரப் பற்களையும் கண்டு -அப்பப்ப இது என்ன உரு -என்று பயப்பட்டு தேவர்கள் அங்கும் இங்கும்
கால் தடுமாறி சிதறி ஒடும்படியாக
ஸ்ரீ நரசிங்க உரு கொண்டு எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் –
அஃது எப்படிப்பட்ட இடம் என்னில் -மூங்கில் புதர்களின் நின்றும் புலிகள் பெரு வழியில் வந்து சேர்ந்து
இங்கு யானைகள் நடமாடின அடையாளம் யுண்டோ -என்று பார்க்கின்றனவாம் –
யானைகளை அடித்துத் தின்பதற்காக அவை உலாவின இடங்களை தேடித் திரிகின்ற புலிகள் நிறைந்ததாம் அத்தலம் –

——————————————————————-

முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—-1-7-7-

ஸ்ரீ நரசிங்க மூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்று இருந்ததனால் அந்த கோப அக்நி
மேல் யுலகம் அளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப் புகவே சர்வ லோக சம்ஹாரம் பிறந்து விட்டது என்று
மூ வுலகத்தில் உள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியாய் இருந்ததாம் –
அப்படிப்பட்ட ஸ்ரீ உக்ர நரசிம்கன் எழுந்தி அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் – அவ்விடம் எப்படிப் பட்டது –

எரிகிற போது யுண்டான வேடு வெடு என்கிற ஓசையை யுடைத்தான நெருப்பும் –
அந்த நெருப்பிலே வைக்கோல் போர் போலே வேவுகின்ற கல்லுகளும் –
இவற்றில் காட்டில் கொடியவர்களான கையும் வில்லுமாய்த் திரிகின்ற வேடர்களும்
அங்கு நிறைந்து இருப்பதினாலே ஒரு நொடிப் பொழுதும் சென்று கிட்ட முடியாத தலமாம் அது –
உகவாதார்க்கு கண்ணாலே காணலாம் படி சென்று கிட்டி கண் எச்சில் பட ஒண்ணாத படி இருந்த தேசம் ஆயிற்று –
தினைத்தனையும் -தினை தான்யம் -ஸ்வல்ப காலம் என்றபடி
எட்டனைப் போது -எள் தான்யத்தை எடுத்துக் காட்டினது போலே –

——————————————————————

நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே–1-7-8-

நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறை வழுவாது துதிக்கும் படியாக விலஷணமான நரசிங்க உருக் கொண்டு
ஸ்ரீ எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் ஸ்ரீ சிங்க வேழ் குன்றம் –
அஃது எப்படிப் பட்டது
காய்கள் காய்த்துத் தொங்கப் பெற்ற வாகை மரங்களின் நெற்றுக்களானவை காற்று அடித்து கலகல என்று ஒலிக்கின்றனவாம் சில இடங்களில் –
மற்றும் சில இடங்களிலோ என்னில் -ஆகாசத்து அளவும் ஓங்கி வளர்கின்ற மூங்கில்கள் ஒன்றோடு ஓன்று உராய்ந்து
நெருப்பு பற்றி எரிந்து விண்ணுலகத்த்தையும் சிவக்கடிக்கின்றனவாம்
நாத்தழும்ப -என்றதானால் இடை விடாது அநவரதம் துதிக்கின்றமை தோற்றும்
முறையால் ஏத்த -என்பதற்கு -மாறி மாறி துதிக்க -என்றும் பொருள் கொள்ளலாம் –
ஒரு சந்தை நான்முகனும் மற்று ஒரு சந்தை சிவனுமாக இப்படி மாறி மாறி ஏத்து கின்றமையைச் சொன்னபடி
நெற்று -உலர்ந்த பழம் –
அதர் -வழி
வேய் + கழை = வேய்ங்ழை-

———————————————————————–

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-

கீழ்ப் பாட்டுக்களில் -தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா -என்றும்
சென்று காண்டற்கு அரிய கோயில் -என்றும்
தினைத்தனையும் செல்ல ஒண்ணா -என்றும்
இந்த ஸ்ரீ திவ்ய தேசத்தின் அருமை சொல்லி வந்தாரே –
அந்த அருமை ஆசூரப் பிரக்ருதிகளான பகவத் விரோதிகளுக்கே ஒழிய -உகந்து இருக்கும் அடியவர்களுக்கு அன்றே –
அதனை இப்பாட்டில் வெளியிடுகிறார் –

ஸ்ரீ பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக் கொண்டு நாம் அஞ்சாமல் ஸ்ரீ சிங்க வேள் குன்றத்தில் சென்று தொழுவோம் நெஞ்சமே -என்கிறார் –
அல்லி மாதரான ஸ்ரீ பிராட்டியோடு அணைந்து இருப்பதனாலே ஸ்ரீ நரசிங்க மூர்த்தியின் கோப அக்நிக்கு நான் அஞ்ச வேண்டியது இல்லை என்றும்
அவன் தான் நம்முடைய ஸ்ரீ நம் பெருமான் ஆகையாலே அந்நிலத்தின் கொடுமைக்கும் அஞ்ச வேண்டியது இல்லை என்றும் குறிப்பிட்ட படி –
ஸ்ரீ நம்பெருமான் -என்றாலே போதுமே இருக்க- நம்முடைய ஸ்ரீ நம் பெருமான் -என்றது-
அடியார் திறத்தில் அவன் மிகவும் விதேயனாய் இருக்கும் படியைக் காட்டும் –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன்-என்ற சொல் நயத்தால் -ஸ்ரீ பிராட்டியை அணைக்கும் போது ஸ்ரீ எம்பெருமானுக்கு
சந்தோஷ மிகுதியினால் தழுவுதற்கு உறுப்பான தோள்கள் சஹச்ர முகமாக வளர்கின்றமை விளங்கும் –
இவள் அணைத்தால் இவளைக் கட்டிக் கொள்ள ஆயிரம் தோள் யுண்டாம் ஆயிற்று -என்பர் ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளையும் –
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறாத் தோள்களை ஆரத் தழுவி
என்னுயிரை அறவிலை செய்தனன் -ஸ்ரீ திருவாய் -8-1-10-
என்னும்படியானால் பிராட்டியின் சேர்த்தியினால் யுண்டாக கூடிய உடல் பூரிப்பு சொல்லவும் வேணுமோ

நெல்லி மல்கி -இத்யாதி –
நெல்லி மரங்கள் ஆனவை கல்லிடைகளிலே முளைத்து வளர்ந்து கல்லிடைகளிலே வேர் ஒடுகையாலே
அந்த வேர்கள் பருத்து பாறைகளைப் பேர்க்கின்றனவாம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளையும் -நெல்லி மரங்கள் வேர் ஓடிக் கற்களை யுடையப் பண்ணும் -என்றே அருளிச் செய்கிறார் –
இங்கே சிலர் சொல்லும் பொருளாவது -நெல்லி மரங்களின் நின்று இற்று விழுகின்ற நெல்லிக் காய்கள் பாறைகளின் மேல்
விழுந்து கற்களை உடைக்கின்றன என்பதாம்
அப்போது நெல்லி என்றது ஆகுபெயரால் நெல்லிக் காய்களைச் சொல்ல வேண்டும்
புல்லிலை யார்த்து -மூங்கில்களின் ஓசையை சொல்லிற்று ஆகவுமாம்
பனை ஓலைகளின் ஓசையைச் சொல்லிற்று ஆகவுமாம் -ஆர்த்தல் -ஒலித்தல்
சில்லி சில்லி என்று சொல் அறாத –
வடமொழியில் சுவர்க் கோழிக்கு -ஜில்லிகா -என்று பெயர் -அச் சொல்லே சில்லி -என்று கிடக்கிறது –
நல்லை நெஞ்சே -நல்ல நெஞ்சே -பாட பேதங்கள்

————————————————————–

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

வீர லஷ்மி விளங்கும் கண்களை யுடைய சிங்கங்கள் ஆனவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு
சமர்ப்பித்து வணங்கும் படியான ஸ்ரீ சிங்க வேழ் குன்றத்திலே எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமான் விஷயமாக
ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்த சொல் மாலையை ஓத வல்லவர்கள் தீங்கு இன்றி
வாழ்வார்கள் என்று -இத் திருமொழி கற்றார்க்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

செங்கணாளி யிட்டிறைஞ்சும்-
நவம் சவமிதம் புண்யம் வேதபாரகமச்யுத –யஜ்ஞசீலம் மஹா ப்ராஜ்ஞம் ப்ராஹ்மணம் சிவ முத்தமம் –
என்ற கண்டாகர்ணன் வசனம் நினைக்கத் தகும்
அவன் தனக்கு யுண்டான பிணங்களை ஸ்ரீ எம்பெருமானுக்கு நிவேதனம் செய்து யுண்டால் போலே சிங்கங்களும் செய்கிறபடி –

————

ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தி கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை ஸ்ரீ ராமானுசன் –

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய் வினை நோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி – 103

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –
முனைத்த சீற்றம் விண் சுடப்போய்-ஸ்ரீ பெரிய திரு மொழி – 1-7 7- – என்கிற படியே அநு கூலரான
தேவர்களும் உட்பட வெருவி நின்று பரிதபிக்கும்படி -அத்யந்த அபிவிருத்தமாய் அதி க்ரூரமான-ஸ்ரீ நரசிம்ஹமாய் –
சிறுக்கன் மேலே அவன் முழுகின வன்று –
வயிறழல வாளுருவி வந்தான் -என்கிறபடியே சாயுதனாய்க் கொண்டு எதிர்ந்த ஹிரன்யாசுரனுடைய மிடியற வளர்ந்த
ஸ்வர்ண வர்ணமான சரீரத்தை
அஞ்ச வெயிறி லகவாய் மடித்ததென்-ஸ்ரீ முதல் திருவந்தாதி – 93- என்கிறபடியே
மொறாந்த முகத்தையும் நா மடிக் கொண்ட உதட்டையும் -குத்த முறுக்கின கையையும் கண்டு –
விளைந்த பய அக்நியாலே பரிதப்தமாய் பதம் செய்தவாறே –
வாடின கோரையை கிழித்தால் போலே அநாயாசேன கிழித்து பொகட்டவனுடைய திவ்ய கீர்த்தி யாகிய பயிர்
உயர் நிலத்தில் -உள் நிலத்தில் – பயிர் ஓங்கி வளருமா போலே யெழுந்து சபலமாம் படியான
திரு உள்ளத்தை உடையராய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார்

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீP .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் -பதினொன்றாம் பத்து ஸ்ரீ திருமொழிகளின் பிரவேசங்களின்–தொகுப்பு–

July 15, 2019

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1-பிரவேசம் –

பஷிகளின் காலிலே விழுந்து என்னையும் அவனையும் சேர விட வேணும் என்றாள்- கீழ்த் திரு மொழியிலே –
அவை இது செய்தன வில்லை –
அதுக்கு மேலே
தென்றல் தொடக்கமான பாதக பதார்த்தங்களின் கீழே-ஜீவிக்கப் போகாமையாலே
ஜீவனத்தில் நசை அற்று நோவு பட்டுச் சொல்லுகிற ஸ்ரீ பிராட்டி பாசுரத்தாலே தம் தசையைப் பேசுகிறார் –

——————–

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–11-2-1- பிரவேசம் –

என் செய்கேன் -என்ற இடத்திலும் இரங்காதே பாதக பதார்த்தங்கள் மிகைத்தன –
ரஷகன் ஆனவன் கை விட்டான் –
என் கார்யம் ஸ்வ யத்ன சித்தமாய் இருந்தது –
எனக்கு இனி ரஷகராக வல்லார் உண்டோ – என்கிறார் –

———————

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1- பிரவேசம் –

பிரிந்தவன்று தொடங்கி பாதக பதார்த்தங்களாலே நோவு பட்டு அத்தாலே மிகவும் அசந்நையாய்-
நம்மை உபாஸ்ய கோடியிலே நினைத்து -அவன் தான் – வேணுமாகில் நம்மை உபாஸித்து வந்து பெறுகிறான் – என்று
நாம் தலைமை கொண்டாடி இருந்தது அமையும் –
அவனை உபாச்யனாய்க் கொண்டு-நாம் உபாஸித்து போரும் இத்தனை என்று அதிலே ஒருப்பட்டார் கீழ் –

காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் -என்கிறபடியே இத்தனை பொறுப்பான் ஒருவன் அல்லனே அவன் –
அநந்தரம்
வந்து முகம் காட்டி அரை ஷணம் தாழ்க்கும் காட்டில் இத்தனை சாஹசத்தில் ஒருப்படக் கடவதோ
இத்தலை பெறுகைக்கு எதிர் சூழல் புக்கு திரிந்தேன் நான் அல்லேனோ –
என்னது அன்றோ கிலேசம் –
ஜன்ம வ்ருத்தாதிகளாலே குறைய நின்றார் ஆகிலும் நம்மை ஒழிய செல்லாமை உண்டானால்
பின்னை அவர்களை ஒழிய ஜீவிப்பேனோ நான் –
ஆஸ்ரித ஸ்பர்ச த்ரவ்யம் ஒழிய எனக்குத் தாரகம் உண்டோ -என்று
அவன் செல்லாமை அடங்கலும் காட்ட அவற்றை அடைய அனுசந்தித்து
பிபாசி தனுக்கு குடித்த தண்ணீர் தாக சாந்திக்கு உடலாகி தவிர்ந்து-மேன்மேல் என விடாய்க்கு உடல் ஆமா போலே
அவ்வனுசந்தானம் தான் மேலே விடாயைப் பிறக்க –
அத்தாலே போர நோவு பட்டு-பின்னையும் அவனைக் கிட்டி நித்ய அனுபவம் பண்ணப் பெற்றிலோமே யாகிலும்
இவ்விடாயும் த்வரையும் எல்லாம் இவ்விஷயத்தில் ஆகப் பெற்றோம் இறே -என்னும்
இவ்வளவால் வந்த திருப்தியோடு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –

———————

நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1-பிரவேசம் –

கார் முகில் வண்ணரை கண்களால் காணலாம் கொலோ -என்றும்
நெஞ்சுடலம் துயின்றால் நமக்கினி நல்லதே -என்றும் இவர் வெறுக்க –
நமக்கு உள்ள வெறுப்பு உண்டோ உமக்கு
உம்மைச் சுட்டி நாம் பிறந்த பிறப்பு அறியீரோ -யென்ன –
பரித்ராணாய சாதூனாம் – என்கிறபடியே
நமக்காக இறே வந்து பிறந்தது -யென்று ஹிருஷ்டராய்-அவனை ஆஸ்ரயிக்கப் பார் -யென்று
திரு உள்ளத்தை நோக்கி அருளிச் செய்கிறார் –

அங்கன் இன்றிக்கே
ஸ்ரீ திருவாலியிலே வந்து சந்நிஹிதனாகப் பெற்றோம்
அங்கே புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பெற்றோம் -யென்று இவர் ஆஸ்வசித்த படியைக் கொண்டு
நம்முடைமையான இஜ் ஜகத்தை விட மாட்டாமை வந்திருக்கிற இந்த அர்ச்சாவதாரமேயோ –
நாம் விபூதி ரஷணார்த்த மாகவும்
அவர்கள் விரோதிகளை நிரசித்து அவர்களுக்கு காட்சி கொடுக்கைக்காவும் அன்றோ நாம் அவதரித்தது –
அந்த அவதாரங்களையும் அனுசந்தித்து தரிக்க மாட்டீரோ யென்று தன் அவதாரங்களைக் காட்டிக் கொடுத்தான் –
அவற்றை அனுசந்தித்து
ஹ்ருஷ்டராய்-அந்த ஹர்ஷம் தன்னளவிலே அடங்காமையாலே பரோபதேசத்தில் ப்ரவர்த்தர் ஆகிறார் –
அவன் தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை கை விடாதவனாய் இருந்தான் – இனி நமக்கு ஒரு குறை உண்டோ -என்கிறார் –

————————-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1- பிரவேசம் –

கீழில் திரு மொழியில் ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணினத்தை அனுசந்தித்து –
அவ்வாஸ்ரித பாரதந்த்ர்யத்திலே ஈடுபட்டு –
தாமான தன்மை அழிந்து –
வேறே இரண்டு பிராட்டிமார் பேச்சாலே –
ஒருத்தி மேன்மையை அனுசந்திக்க –
ஒருத்தி சௌலப்யத்தை அனுசந்தித்து -இவனுடைய தாழ்வுகளைச் சொல்ல
அப்படி தாழ்வுகள் செய்தானே யாகிலும்
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு மேலானவன் கிடாய் இப்படிச் செய்கிறான் -என்று
இருவர் பேச்சாலுமாக-அவனுடைய மேன்மையையும் சௌலப்யத்தையும்-பேசுகிறார் –

இரண்டு ஸ்ரீ பிராட்டிமார் தசை ஏக காலத்தில் கூடும்படி என் –
என்று ஸ்ரீ ஜீயர் ஸ்ரீ பட்டரைக் கேட்க
தேச விசேஷத்திலே அநேக சரீர பரிக்ரஹம் ஏக காலத்தில் கூடும் படி எங்கனே
அப்படியே இவரையும் பார்த்து அருளினால் -ஸ்ரீ எம்பெருமான் கடாஷித்து அருளினால் -கூடும்
நதே ரூபம் நச ஆகாரோ ந ஆயுதானி ந சாஸ்பதம் ததாபி புருஷாகாரோ பக்தா நாம் த்வம் பிரகாசசே-
உன் ஸ்வரூப ரூப குண விபூதிகள் அடைய உனக்கு இல்லையாய்த் தோற்றுவதி -என்ன –
இப்படி இதடையே தனக்கு இன்றிக்கே இருந்தால்
இத்தடைய ஆருக்கு என்னும் அபேஷையில்
பக்தா நாம் –
ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் –
இப்படி ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் என்னும் இடம் எங்கே கண்டோம் என்னில்
த்வம் பிரகாசசே –
தூத்ய சாரத்யாதிகளிலே நீயே காட்டுவுதி
இதடைய ஆஸ்ரித அர்த்தமாக பெறுகையாலே நீ உஜ்ஜ்வலனாகா நிற்புதி -என்னவுமாம் –

இப்படி
பரத்வத்தையும்
அவதாரங்களையும்
அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களையும்
இவ்விடத்தே உண்டான மனுஷ்யத்வே பரத்வத்தையும் –-அனுசந்தித்து
தனக்காக்கிக் கொண்டு இருக்கும் இவ்விருப்பையும்
தனக்கு உதவுகைக்கும்
உறுப்பாக வந்து அவதரிக்கும் அவதாரத்தையும் அனுசந்தித்து
இப்படி அவதரித்து வ்யாபரிக்கிறதும்-ஆஸ்ரித ரஷண அர்த்தமாக –
அவன் பரா அவஸ்தனாய் இருக்கிறதும் ஆஸ்ரிதர் குறை தீர்க்கைக்காக –
இப்படி இது அடைய ஆஸ்ரித அர்த்தமான பின்பு
நமக்கு ஒரு குறை உண்டோ -என்று அனுசந்தித்த இத்தால்
பிறந்த ப்ரீதி பிரகர்ஷம்-ஓர் ஆஸ்ரயத்தில் அடங்காது இருக்கையாலே
அந்தபுர பரிகரமாய்-sதங்களில் தோழமையாய் இருப்பார்
ஒருவருக்கு ஒருவர்
பரத்வ அவதாரங்களில் இரண்டிலும் தனித் தனியே ஊன்றி அவற்றை அனுசந்தித்து
களித்துப் பேசுகிற இவர்கள் பேச்சாலே தாம் அவற்றையே பேசி அனுபவிக்கிறார் –

இவ்வாத்மாவின் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
தனாக்காய் இருக்கை -ஸ்வரூப விரோதியாய் –
அவனதாய் இருக்கும் இருப்பு -ஸ்வரூப அனுரூபமாய் – இருக்குமா போலே
அவன் ஸ்வரூபத்தை அனுசந்திக்கப் புக்காலும்
அதடைய ஆஸ்ரித அர்த்தமாக இருக்கும் இருப்பை அனுசந்தித்தால்
ஆனந்த நிர்பரராய் களிக்கும் படியாய் இருக்கும் இறே-
இப்படி பரத்வ சௌலப்யங்கள் இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கிறார் –

———————

மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1- பிரவேசம் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய வைலஷண்யத்தையும் சௌலப்யத்தையும் சேர
ஓர் ஒன்றே கரை காண ஒண்ணாத இரண்டையும் சேர அனுபவித்தார் –
அநந்தரம்
போதயந்த பரஸ்பரம் -பண்ணுகைக்கு சிலர் தேட்டமாயிற்று
அதுக்கு ஆவாரார் -என்று லோகத்தில் ஆராய்ந்தார் –
அவர்கள் அடைய ஸ்ருஜ்யத்வ -கர்ம வஸ்யத் வாதிகளால் தங்களோட்டையரான
இதர தேவதையை ஆஸ்ரயிப்பாரும்- ஸ்துதிப்பாருமாய்ச் செல்லா நின்றது –
இவர்கள் இப்படிச் செய்கிறது -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்ரீ சர்வேஸ்வரத்வ விஷயமாயும்
சௌலப்ய விஷயமாயும்
பிராப்தி விஷயமாயும்-உள்ள ஜ்ஞானம் இல்லாமை என்று பார்த்து –
கெடுவிகாள்-நீங்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு-உங்களோடு வாசி இல்லை காணுங்கோள்
அவனுக்குக் குழைச் சரக்காம் இடத்தில் –
ஆனபின்பு அவனையே ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்- என்கிறார் –

———————–

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே —11-7-1-பிரவேசம் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்னை அனுபவிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு வ்யர்த்தமே திரிகிறவர்களை –
அவனுடைய செயல்களை அனுபவியாதவர்கள் கரணங்கள் – ஒன்றும் அன்று – என்கிறார் –

———————–

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-பிரவேசம் –

அடியிலே வாதி பிரதிவாதிகளாய் யாயிற்று இழிகிறது –
இவர் தாம் ஒரு வார்த்தை சொன்னால் இறே-அவனுக்கு மறு மாற்றம் உள்ளது –
இவர் சொன்ன வார்த்தை ஏது என்றல் –
இவ்வாத்ம வஸ்து வானது அங்குத்தைக்கு-
ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதியும் -பூணார மார்வனை –
ஸ்ரீ நாய்ச்சியார் திரு முலைத் தடத்தோபாதியும்-தட மலர்க் கண்ணிக்காய் –
ஸ்ப்ருஹ விஷயமுமாய்
போக்யமுமாய் இருந்தது –
அநாதி காலம் இழந்து அதபதிக்க வேண்டுவான் என் -என்று கேட்டால்
சொல்லலாவன சில வார்த்தைகள் உள-
அவ்வார்த்தைகள் தான் என் என்னில்
அங்கைத் தலத்திடை -இத்யாதி -என்றும் ஒக்க ஸ்ரீ ஈஸ்வரன் முகத்தில்
விழியேன் என்று பிரதிஞ்ஞையைப் பண்ணி
நம் பக்கலில் விமுகனாய்
சப்தாதிகளிலே பிரவணனாய்
நம் பக்கலிலே அத்வேஷமும் இன்றிக்கே
போருகையாலே சம்சரித்துப் போந்தான் -இது ஒரு வார்த்தை –

அநித்யம் சுகம் லோகம் -இத்யாதி
சம்சார பீதனாய்க் கொண்டு
நம் பக்கல் புகுராதே
நம் பக்கல் நிரபேஷனாய்
கர்ம சாபேஷையைப் பண்ணிப் போந்த
அநாதி கால வாஸிதமான புண்ய பாப ரூபமான கர்ம பரம்பரை யானது
ஜன்ம பரம்பரைகளிலே மூட்ட -அவ் வழிகளாலே சம்சரித்துப் போந்தான் –

இனி
கர்த்தா காரயிதா -என்றும்
கர்த்தா சாஸ்த்ரத்வாத் -என்றும்
சாஸ்திர பலம் பிரயோக்தரி -என்றும்
சொல்லுகிறபடியே
கர்த்த்ருத்வ போக்த்ருத்வங்கள்
சைதன்ய க்ருத்யமாய் யாயிற்று இருப்பது –
அது இல்லாமையாலே சம்சரித்துப் போந்தான் என்றாப் போலே சொல்லலாம் –
இவை உனக்கு வார்த்தை அல்ல –

ஆகிலும் சொல்லுவன்-
இது பக்நமாம் படி -இவற்றுக்கு மேலே உத்தரம் சொல்லுவன்-
எங்கனே என்னில் –
ருசி இல்லை என்றே முதல் வார்த்தை –
ருசி அசுருசிகளுக்கும் அடி ஏது என்னில் -மனஸ்ஸாயே யாய் இருப்பது –
அந்த மனஸ்ஸூ நீ இட்ட வழக்கு அன்றோ –
சர்வஸ் யசாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்ட –
தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று சொல்லுகிறபடியாலே-ருசி ஜனகன் நீயான பின்பு
ருசி இல்லை என்று சொன்ன இடம் வார்த்தை இல்லை –

அநந்தரம்
கர்மம் அடியாக சம்சரித்து போந்தான் என்னாதே –
கர்ம ஸ்வரூபத்தைப் பார்த்தால் -அது கிரியா ரூபம் ஆகையாலே அப்போதே நசிக்குமே –
கிரியாவான் மறக்குமே –
அது நிக்ரஹ அனுக்ரஹ ரூபேண உன் திரு உள்ளத்தில் கிடந்து அன்றோ அனுபாவ்யம் ஆவது –
உனக்கு நிவாரகர் இல்லாமையாலே -அத்தை ஷமிக்கத் தீருமே –
ஆகையால் அதுவும் வார்த்தை அல்ல –

இனி
கர்ம கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சைதன்ய க்ருத்யம்-
அது இல்லாமையாலே சம்சரித்துப் போந்தான் -என்னதுவும் வார்த்தை அல்ல –
உனக்கு இது சரீரதயா பரதந்த்ரம் ஆகையாலே –
ஸ்வ தந்திர க்ருத்யமான கர்த்ருத்வம் பரதந்த்ரனுக்கு கூடாமையாலே -அதுவும் வார்த்தை அல்ல –
சரீர ரஷணம் சரீரி அன்றோ பண்ணுவான் –
சம்பந்தத்தையும் மறந்தாயோ -என்கிறார்

ஆன பின்பு உன்னுடைய அநாதாரமே ஹேது –

இருவரும் என் நினைத்து சொன்னார்கள் -என்னில் –
அவன் -கர்மத்தைப் பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் ப்ரஹ்மத்தை பற்றி நின்று அத்தை அழித்தார்-
அவன் வேதத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் வேதாந்த தாத்பர்யத்தைப் பற்றி நின்று அத்தை அழித்தார் –
அவன் ஸ்வரூபத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் ஸ்வரூபய தாம்யத்தைப் பற்றி நின்று அத்தை அழித்தார் –
அவன் பாரதந்த்ர்யத்தைப் பற்றி நின்று சாத்திய உபாயத்தை பற்றி நின்று சொன்னான்
இவர் பாரதந்த்ர்யா காஷ்டையைப் பற்றி நின்று
சித்தோ உபாயத்தைப் பற்றி
அத்தை அழிக்கிறார்-
இது காணும் உபாசகனில் காட்டில் பிரபன்னனுக்கு ஏற்றம் –
மக்கள் தோற்றக் குழி -தொடங்கி
மேல் பாட்டு குறையும் இவற்றைச் சொன்னபடி –

மெய்நின்ற -இத்யாதி
போக்யதை அளவிறந்தது
அனுபவித்து வாழுங்கோள் நாடடைய -என்கிறார் –
மெய்நின்ற பாவம் அகல –
அனுபவித்து அல்லது நசியாத படியான பாபமானது போக -என்னுதல் –
தேஹோபாதிகமானது அகல -என்னுதல் –
திருமாலை –
விரோதி என்று பேர் பெற்றவை அடைய போக்குவிக்கும் பிராட்டியை அருகே உடையவனை –
கைநின்ற-
எப்பொழுதும் கை கழலா நேமியானாய் இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய போக்யதை மிக்கு இருந்துள்ள திருவடிகளை -என்னுதல்
ஸூலபமான திருவடிகளை சிரஸா வஹித்து -என்னுதல்
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஐஸ்வர்ர்ய ப்ரகாசகமான ஸ்ரீ திரு வாழியைக் கையிலே உடையவன் ஆனால் போலே
சேஷத்வ பிரகாசகமான வேலை உடைய ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தையும்
பாடுவது ஆடுவது ஆங்கோள்-
விரோதி போக்குகையில் பணி இல்லை –
அது தன்னடையே போம் –
மேல் உள்ளத்து உங்களுக்கு ஹர்ஷமே –

ஸ்ரீ பகவத் விஷயத்தில் அந்வயியாதார் உடைய கரணங்கள்
அவர்கள் அவற்றைத் தங்களுக்கு உறுப்பு என்று நினைத்தார்களே யாகிலும் –
அவை அவர்களுக்கு அடைத்தவை அல்ல வென்றும்
பகவத் ப்ராவண்யம் இல்லாதார் முதலிலே சேதனர் அல்லர் என்றும் சொன்னார் கீழில் திரு மொழியில் –
இவர் தாம் பிறர் குறை அறிந்து பரிஹரிப்பாராய் நின்றார் –
நாம் நின்ற நிலை ஏது என்று ஆராய்வோம்
இவர் தாம் தம் குறை கிடக்க பிறர் குறை பரிஹரிக்கப் பார்க்கிறது –
தான் குறைவற்றவராக நினைத்து இருந்தோ –
அன்றிக்கே –
தம்முடைய கிருபா குண ப்ராசுர்யத்தாலேயோ –
தயாவான்களாய் இருப்பார் தம்தாம் குறை கிடக்கச் செய்தேயும்
பிறர் குறையைப் பரிஹரிக்கப் பார்ப்பார்கள் இறே –
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பிராட்டியைப் பிரிந்து
தடுமாறி
கண்ணாஞ்சுழலை இட்டு வாரா நிற்கச் செய்தேயும்
ஸ்ரீ மகா ராஜர் இழவைக் கண்ட பின்பு அவற்றை மறந்து
அத்தைப் பரிஹரிக்கப் பார்த்தார் இறே –

இவை கிடக்க –
இவர் தாம் நின்ற நிலையை இவருக்கு அறிவிப்போம் –
சம்சாரத்தின் உடைய பொல்லாங்கை அறிவித்தால்
இதுவே அமையும் என்று அறிந்தார் ஆகில் இங்கே வைக்கிறோம்
இதில் பொருந்தாத படி ஆனார் ஆகில் அமர்ந்த நிலத்திலே கொடு போகிறோம் -என்று பார்த்து
பிறரை இகழ்கிற நீர் தான் நின்ற நிலையைப் பார்த்து காணீர் -என்ன
தம்மைப் பார்த்தார் –
ஜ்ஞான லாபம் உண்டே யாகிலும்
அவன் உபேஷித்த அன்று இவ்வருகே போகைக்கும் உடலாய்
அவன் ஆதரித்த போது அவ்வருகே போகைக்கும் உடலாம் படி
பொதுவான நிலத்திலே
தேக சம்ஸ்ருஷ்டராய் இருக்கிற இருப்பைக் கண்டார் –
குறைவற்றார் இருக்கிற் கோடியிலேயுமாகப் பெற்றது இல்லை –
இக்குறை நெஞ்சில் படாதே போது போக்கி இருக்கிறவர்கள் கோடியிலேயுமாகப் பெற்றது இல்லை-

இது தான் –
தேஹமாயும்
இந்த்ரியமாயும்
போக்யமாயும்
பந்தகமாயும் -தோற்றி இருந்தது –
இது தான் அசத் கல்பபாம் படி இறே பிறந்த ஜ்ஞானம் –
அந்த ஜ்ஞானம் தான் ஆறி இருக்கைக்கு உடல் அன்றிக்கே –
த்வரிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே –
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் -பாம்பு -என்றே பயம் அனுவர்த்திக்கும் இறே
ஆகையால் இது தான்
அவசியம் பரிஹரித்து கொள்ள வேண்டுவது ஒன்றாய் இருக்கிற படியும் –
தம்மால் பரிஹரித்து கொள்ள ஒண்ணாத படியாய் இருக்கிற படியும் –
அவனையே கால் கட்டி பரிஹரித்துக் கொள்ள வேண்டி இருக்கிற படியையும் –
அனுசந்தித்து –
த்வத் அனுபவ விரோதியான தேக சம்பந்தத்தை
அறுத்துத் தந்து அருள வேணும் என்று
ஸ்ரீ திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார் –

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழியில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்-பதினொன்றாம் நூறு -பாசுரங்களின் -அவதாரிகைகளின் –தொகுப்பு —

July 15, 2019

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் –11-1-1-

பசுக்களும் இடையரும் வர்ஷத்தைப் பரிஹரித்துக் கொள்ளுதல் –
ஸ்ரீ பிராட்டி -அதார்மிகனான ராவணன் நஷ்டன் ஆவான் -என்று சபித்து போரும் என்று ஆயிற்று –
இவளுக்கு தென்றல் பரிஹரித்துக் கொள்ள ப்ராப்தி உள்ளது –

———————

காரும் வார்பனிக் கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈரவாடை தான் ஈரும் என்னையே—–11-1-2-

தோளும் தோள் மாலையுமான மார்வும் கண்டு ஆசைப் பட்டு வந்த தண்டமோ –
இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் –
புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்கிறபடியே விநாசத்தைப் பலிப்பித்தான் –
இதர விஷய ப்ரவணர் பட்டது படா நின்றோம் -இப்பிராப்த விஷயத்தை ஆசைப் பட்ட நாங்களும்

—————–

சங்கும் மாமையும் தளரும் மேனி மேல்
திங்கள் வெங்கதிர் சீறும் என் செய்கேன்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்
கொங்கலர்ந்த தார் கூவும் என்னையே —11-1-3-

ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையராய் இருக்கிறவருடைய – பரிமள பிரசுரமாய் இருக்கிற
தாரானது உள்ளே புக்கு ஸ்த்ரீத்வத்தை நோக்கிக் கொண்டு மறைய இருக்கிறது என் –
இங்கனே புறப்பட்டாயோ -என்று அறை கூவா நின்றது –

——————

அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று
அங்கோர் தாயிருவாகி வந்தவள்
கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே —11-1-4-

போன இடத்திலே நலிய வேணும் என்று தாய் வடிவு கொண்டு வந்தவளை அனுகூலை என்று புத்தி பண்ணாதே
அவளை பிரதிகூலை என்றே அறிந்து அவள் முலையை உண்டு முடித்த ஆராட்சி இல்லாத செயலோ –

———————

அங்கோர் ளரியாய் அவுணனைப்
பங்கமா விரு கூறு செய்தவன்
மங்குல் மா மதி வாங்கவே கொலோ
பொங்கு மா கடல் புலம்புகின்றதே —11-1-5-

அரியவற்றை வருத்தமறச் செய்து தலைக் கட்ட வல்லவன் தன்னை நெருக்கிக் கடைந்து உள்ளுண்டான மதியை
வாங்குகையோ-இக்கடல் இங்கனே கிடந்தது கூப்பிடுகின்றது என்னைப் போலே மதி இழந்தோ இக்கடலும் கூப்பிடுகின்றது –
மதி எல்லாம் உள் கலங்கி இறே இவளும் கிடக்கிறது –
ஒன்றுக்கும் விக்ருதையாகாத நான் கலங்கிக் கூப்பிடுகிறாப் போலே இருந்ததீ
இக்கடலும் தன் காம்பீர்யம் எல்லாம் அழிந்து கூப்பிடுகிறபடியும் –

———————

சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரல் அடரும் என்னையே –11-1-6-

அன்றிலின் உடைய த்வனி எனக்கு பாதகமாகா நின்றது – நான் இதுக்கு எத்தைச் செய்வேன் –
நான் இதுக்கு மார்விலே அம்பு ஏற்கவோ –

—————

பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ
வீவில் ஐங்ணை வில்லி யம்பு கோத்து
ஆவியே இலக்காக எய்வதே—11-1-7-

வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான ஆகர்ஷகமான வடிவை உடையவர் –
ஒரு மேருவை இனிய மேகம் படிந்தால் போலே ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே வர –
சிதிலை யாகாதே நின்று-நான் கண்டத்துக்கு தண்டமோ –காமன் ஆனவன் தன்னுடைய
புஷ்ப பாணங்களாலே-தோல் புரையே அன்றியே மர்மத்திலே எய்கிற இது –

———————-

மாலினம் துழாய் வரும் என்நெஞ்சகம்
மாலினந்துழாய் வந்து என்னுள் புகக்
கோல வாடையும் கொண்டு வந்ததோர்
ஆலி வந்தது ஆல் அரிது காவலே —11-1-8-

தேசிகனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நின்று வழி இட்டுக் கொடுக்கையாலே
ராஷசர்கள் வெல்ல மாட்டிற்று இலர்கள் இறே –
அப்படியே நிலவரே வழி காட்டி கொடு வந்து நலியா நிற்க நம்மால் பரிஹரிக்கப் போமோ –

——————

கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9-

அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –
மிக்க சீர் தொண்டர் இட்ட -என்பான் என் என்னில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே
இவளுக்கு கண் உறங்குவதும்-பழைய நிறம் வருவதுவும் –
அநந்ய பிரயோஜாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்குத்தைக்கு பரியா நின்றார்கள் என்று கேட்ட வாறே
இனி நமக்கு ஒரு குறை இல்லை என்று கண் உறங்கா நிற்கும்-நிறமும் பழைய படியேயாம்-

——————–

அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-

ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே
நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம் –

——————

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–11-2-1-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என்
அவனை என் முலையோடு கொடு வந்து சேர்க்க வல்லார் இல்லையோ -என்கிறாள் –

——————

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -11-2-2-

இந்த இடையனானவன் வாயிலே வைத்து-ஸ்த்தானே சத்தான நின்று
ஏங்கி ஊதுகிற குழலானது என்னோடே பாலிசமான வியாபாரங்களை பண்ணா நின்றது –

————————

மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்
அல்லி மலர்த் தண் துழாயை நினைந்து இருந்தேனையே
எல்லியின் மாருதம் வந்தடும் அதுவன்றியும்
கொல்லை வல்லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே —11-2-3-

அப்போது இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டத்தையே நினைத்துக் கொண்டு இருக்கிற என்னை –
சந்த்யா சமயத்திலே தென்றல் ஆனது வந்து நலியா நின்றது –அதுக்கு மேலே –
வெளி நிலத்தில் நாகைத் தொடர்ந்து-அது கை புகுந்தால் அல்லது மீளாத படி இருக்கிற
வ்ருஷத்தின் உடைய கழுத்தில் மணி யோசையானது ஆராட்சி இல்லாத இடத்தில் செயலைச் செய்யா நின்றது –

———————-

பொருந்து மா மரம் ஏழு எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அதுவன்றி
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்—11-2-4-

அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் –
கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல் ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் –
அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது –
ஓர் அபலை இதுக்கு கடகிடவோ –

—————

அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்
பொன்னம் கலை அல்குல் அன்னம் மென்னடைப் பூங்குழல்
பின்னை மணாளர் திறத்த மாயின பின்னையே —11-2-5-

ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபரான அவர் இடையாட்டாத்தோமான பின்பு இறே இவை நமக்கு இப்படியாகப் புகுந்தது –
அவருடைய பிரணயித்வம் கண்டு நாம் அகப்பட்ட பின்பு இறே- இவை நமக்குப் பாதகமாகப் புக்கது –
பூர்வ அபராதங்களுக்கு சேர்த்தி போராதாகிலும்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பின்னை மணாளன் திறத்தோம் ஆன பின்பு அன்றோ-இவை இப்படி யாயிற்று –
சாமான்யன் என்று ஈடும் ஈடெல்லாம் இட அமையும் என்பாரைப் போலே
அவளோடு ஒரு சம்பந்தம் சொல்லி நலிகிறவை நலிந்தால் என்-என்பாராம் –

——————–

ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் தாம்
பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே –11-2-6-

கோழியும் கூகின்றது இல்லை –விடிவுக்கு பிராப்தமான இதுவும் கூட அரிதாக நின்றது –
கூர் இருள் ஆயிற்றே –விடிந்த பின்பும் இருள் கால் வாங்குகிறது இல்லை –

——————–

காமன் தனக்கு முறை யல்லேன் கடல் வண்ணனார்
மா மணவாளர் எனக்குத் தான் மகன் சொல்லில்
யாமங்கள் தோறும் எரி வீசும் என்னிளம் கொங்கைகள்
மா மணி வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே —11-2-7-

அந்த காமன் -எனக்கு நன் மகன் –சாமங்கள் தோறும் காமாக்னியை தூவா நின்றான் –
தனக்கு நான் அனுவர்த்த நீயையான ஆகாரம் கிடக்கச் செய்தே என்னுடைய இம்முலைகள் தாம்
அவனுக்கு என்றே யாயிற்று வளருகிறது –

——————-

மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சு நிறை கொண்டு போயினர் நினைக்கின்றிலர்
வெஞ்சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ
நைஞ்சுடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8-

ரஷகன் பாதகன் ஆனவாறே அவன் பரிகரமும் பாதகமாம் அத்தனை ஆகாதே –
அவன் பாதகனாய் புக்கவாறே அவனை அனுவர்த்தித்த அவன் பரிகரமும் பாதகமாகப் புக்கது –
இவள் சன்னதியிலே வர்த்திக்கில் இவளை அனுவர்த்தித்துக் கொண்டு பிராப்த காலத்தில் விடிய வேணும் என்று
நினைத்து அது செய்யாத போன விடம் தெரியாத படி போனான் –
இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி
இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே –

——————-

காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் நலத்தின் மிகு
பூமரு கோல நம் பெண்மை சிந்தித்து இராது போய்
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ –11-2-9-

அவன் முறை தப்பி நின்றான் – அவன் பரிகரமும் முறை தப்பி நின்றது –
இனி நாமும் முறை தப்பி நின்றாகிலும் ஜீவிக்கும் அத்தனை – என்கிறாள் –

——————

வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை
மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல்
என்றும் நில்லா வினை யொன்றும் சொல்லில் உலகிலே –11-2-10-

பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் சில நாள் போய் சில நாள் நிற்கை அன்றிக்கே
ஒரு நாளும் ஒன்றும் நில்லாது –இவ்வளவு அன்றிக்கே மேல் பெறப் புகுகிற பேற்றின் கனத்தைச் சொல்லப் புகில் –
வருந்தி பனை நிழல் போலே தங்கள் அளவிலே போகை அன்றிக்கே இவர்கள் இருந்த தேசத்திலும் கூட இன்றிக்கே ஒழியும் –
பாதக பதார்த்தங்களின் கையிலே நோவு படாதே அவை தானே அனுகூலமாம் படி அவனோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர் –

——————–

மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே -11-3-1-

நான் வந்தேறியாயும் ஸ்வா பாவிகமாயும் உண்டான என்னுடைய ஆபரணங்களை இழந்து இருக்கிற
இப்போது கிடிகோள்- அவர் ஆஸ்ரித அர்த்தமாக தம்மைத் தாழ விட்டு சாரத்தியம் பண்ணியும் -இரப்பாளனாகவும் –
தம்மைப் பேணாதே அம்பு ஏற்றும் பண்ணும் வியாபாரங்கள் அடைய நமக்குப் பலித்த படி இது கிடிகோள் –

————————

இருந்தான் என்னுள்ளத்து இறைவன் கறை சேர்
பருந்தாள் களிற்றுக் கருள் செய்த செங்கண்
பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட
வருந்தாது என் கொங்கை யொளி மன்னு மன்னே-11-3-2-

அகவாயில் வாத்சல்ய பிரகாசமான திருக் கண்களை உடையனாய் –
எல்லாம் பட்டுக் காண வேண்டும்படியான தோள் அழகை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
அவனுடைய திரு நாமங்களைச் சொல்லி பாடுவதாக –ஒரு கிலேசம் இன்றிக்கே
என் முலைகள் சம்ச்லேஷ சமயத்தில் போலே தன் நிறம் பெற்று வாரா நின்றது –

———————-

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே —11-3-3-

அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –
தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து
அது பலிக்கும் அளவானவாறே ஸ்ப்ருஹநீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே
த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்மவஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –
இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –
உடைமை நாம் இட்ட வழக்கான தற்குப் பின்னே உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று
இருக்க மாட்டுகிறிலர்-

——————

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே ——11-3-4-

இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன –ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய
தமக்கு தாரகம் இல்லையாம் படி -யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் –
யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில் அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு
அறியப் போகாது யென்று சொல்லலாமே –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை
அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

———————

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே -11-3-5-

உபாசன வேளையிலே இப்படி புத்தி பண்ணி பின்பு வேறு ஒரு படியாகை அன்றிக்கே
உபாசநாநுகுணம் பலம் ஆகையாலே அவ்வளவும் போனால்
பெரும் பரம பிரயோஜனமாய்க் கொண்டு பற்றப்படுவதும் தாமேயாக மனசிலே வைத்தோம் –

——————

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும்
எய்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே -11-3-6-

அவன் தானே பிரதம ஸூஹ்ருதமாய் நின்று வ்யாபரிக்கை யாலே
பூமி அந்தரிஷாதிகளை அளந்து கொள்ளுகிற இடத்தில்-ஆகாசமானது எட்டுத் தொட்டாய் போந்தது
பூமியானது திருவடிகளுக்கு போராது ஒழிவதே -யென்று இதிலே வித்தராய் – ப்ரஹ்மாதிகள் எழுதிக் கொடுத்து –
கைத்தாமரை குவிக்கும் –ஸூக பிரதனான என்னுடைய ஸ்ரீ கிருஷ்ணனை வைத்தார் அடியார் மனத்தினில்
வைத்து இன்பம் உற்றார் –

———————–

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –11-3-7-

நம்முடைய விடாய்-அவனை ஹிருதயத்திலே வைத்து அனுசந்தித்து ஆனந்தித்தவர்கள் அளவன்றிக்கே இரா நின்றதி –
பிரத்யாசத்தி யன்றே சைதில்யத்துக்கு பரிகரம் –நான் கேட்டிருந்த படி ஒழிய கிட்டக் கொள்ள மற்றைப் படியேயாய் இருந்தது –
ஒரு வசன மாத்ரத்தாலே பிறககுமவை போல் அன்றிக்கே விஷயா தீனமாக பிறக்குமவையாய் இருப்பது –
இவை யென்ன ஆச்சர்யங்கள் –

——————-

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே –11-3-8-

பரம பிராப்ய பூதனானவனை கிட்டுகையில் அருமை உண்டோ –
அவன் நினையாமையாலே யன்றோ -என்னுதல் –
நமக்கு அவன் பக்கல் ருசி இல்லாமை அன்றோ -என்னுதல் –

———————–

நன்னெஞ்சே நம்பெருமான் நாளும் இனிதமரும்
அன்னம் சேர் கானல் அணியாலி கை தொழுது
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன்
பொன்னம் சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே –11-3-9-

அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்திலே அந்வயிக்கப் பெற்றிலோமோ யாகிலும்
காதாசித்கமான கைங்கர்யத்திலே யாகிலும் அந்வயிக்க லாம் படி அவன் இங்கே சந்நிஹிதனாகப் பெற்றோமே
இது தான் முந்துற முன்னம் உண்டாகப் பெற்றோமே -யென்று இவ்வளவால் உண்டான திருப்தியோடு தலைக் கட்டுகிறது –

—————————

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
கற்றோர் முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10-

கற்றோர்கள் பூமி அடங்கலும் ஆள்வர்கள்- கற்க வேண்டா – இவை கேட்போம் யென்று செவி தாழ்த்தார்க்கு
அனுபவிக்க வேண்டியது ஒரு துயர் இல்லையே –

———————

நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1-

தன் திரு முதுகிலே மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம் தாரகமான வஸ்துவை –
சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை – அவன் அப்படி தன்னுருக் கொடுத்து வேற்றுருக் கொண்டு
அரியன செய்து ரஷியா நின்றான் –
உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை இத்தனையும் செய்யப் பாராய்
மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாது இருக்க வேண்டாவோ –

——————-

செருமிகு வாள் எயிற்ற வரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணுமுடனே
வெரு வர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய
பருவரை யொன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும்
அருவரை யன்ன தன்மை யடலாமையான திரு மால் நமக்கோர் அரணே –11-4-2-

ஒரு மலை சாய்ந்து கிடக்கிறாப் போலே இருக்கிற வலியை உடைய
ஆமையான ஸ்ரீ யபதி -இனி ஒரு ரஷகம் வேண்டாத அரண் –

———————-

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வடகுன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-

அனுரூபஸ் சவை நாத – என்னுமா போலே இதுக்கு அடைய-இவை அடையத் திருவடிகளிலே சேர்ந்து
அருளுவதற்கு தகுதியான காரணம் ஸ்ரீ வராஹ கல்பாதியிலே மஹா வராஹமாய் ரஷித்த ஸ்ரீ திரு மேனி –
அது நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹ வஸ்து –

———————-

தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அள வெழ வெம்மை மிக்க வரியாகி யன்று பரியோன் சினங்கள் அவிழ
வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒரு உகிரால்
விள வெழ விட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11-4-4-

வளைந்த திரு உகிர்களை உடையவன் -வலி மிக்க பெரிய மறத்தை உடைய ஹிரண்யன்
வடிவைக் கண்டு அத்தை ஒன்றாக மதியாதே கிட்டு ஸ்ரீ திரு வாழிக்கு இரை போதாது யென்று ஒரு ஸ்ரீ உகிராலே-
இரண்டு பிளவாம்படி இட்ட குழி மஹா பிரளயத்தில் மும்மடங்கு பெரிது –

——————–

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே —11-4-5-

மந்தரத்துக்கு மேல் போய் சந்த்ராதித்யர்கள் ஸ்தானத்து அளவிலே நின்று ஆதரிக்க
ப்ரஹ்மா-நம் இருப்பில் திருவடிகள் வந்தது -யென்று புறப்பட்டு ஆஸ்ரயிக்கும் படி – வளரா நிற்பதாய் –
சேரக் குடி ஏறி இருக்கிற உபரிதன லோகங்கள் ஏழும் நடுவே போம்படி நடத்தின திருவடிகள் நமக்கு ரஷகம் –

————————–

இரு நில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகியவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன்
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -11-4-6-

ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபர்-ஸ்ரீ யபதி -ஈஸ்வரன் உடைய சர்வ இந்த்ரியங்களையும்
அபஹரிக்க வல்ல நீளைப் பிராட்டிக்கு வல்லவர்-யச்யஸா -என்னும்படி இவளை உடையவர் -என்னும்
பெரும் புகழை உடையவர் –
சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ரஷித்து ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகத்வ பாரிப்பை உடையராய்
இப்படிக்கொத்தவர் நம்முடைய் ஆஸ்ரயணத்தின் சிறுமை பாராதே யாவதாத்மபாவியாக நம்மை அடிமை கொள்வர் –

——————–

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற் கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-

ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின –
இதடையச் செய்தது -ஸ்ரீ பிராட்டி பக்கல் பிச்சாலே இறே
இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –

————————

முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

லோகத்தில் அஞ்ஞானம் தீர்ந்து தன்னைக் கண்டார் எல்லாரும் ஆனந்த நிர்பரராம் படியாக
கேட்பார் உபசத்தி பண்ண மாட்டாமையாலே இழக்க வேண்டாத ஸ்ரீ திர்யக்காய் – ஸ்ரீ சாரதியாய் உபதேசித்தால் போலே
ஹிதானுசந்தானம் பண்ணக் கடவ அவனே ரஷகன் –

————————

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைப்
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே —11-4-9-

ஸ்ரீ யசோதை பிராட்டி உரலோடு கட்ட அத்தைக் கொண்டோடின மிடுக்கை உடைத்தாய் –
ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக-நடை கற்ற தெள்ளியவன்
நம்முடைய பாபத்தை சவாசனமாக போக்கும்-இது நிச்சிதம்

————————

கொலை கெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல்
ஒழி கெழு பாடல் பாடி யுழல் கின்ற தொண்டரவர் ஆள்வர் உம்பர் உலகே —11-4-10-

நெஞ்சாலே தரித்தும்-இதுவே யாத்ரையாக யுழலு கிறவர்கள்
ஸ்ரீ பரம பதத்தைப் பெற்று அனுபவிப்பார்கள்-

———————-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

காணேடீ — தோழமையால் ஏடீ -என்கிறது ஆதல் –
பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே ததிமுகனை குத்தினால் போலேஹர்ஷத்தாலே சொல்லுகிறாள் ஆதல் –
இப்படி தன் ஸ்வரூபத்தை அழிய மாறி ஆஸ்ரித ரஷணத்துக்காக கிலேசப் பட்டவன் ஆனால்
இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ –
அவன் நிரதிசய ஆநந்த பரி பூர்ணனாய் இருக்கிறது நமக்காகவாய் இருந்த பின்பு
இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ –

——————-

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே —11-5-2-

ஸ்ரீ ராமன் சௌலப்யம் அனுபவித்தார் முதல் பாசுரத்தில்
இது முதல் எட்டாம் பாசுரம் வரை ஸ்ரீ கிருஷ்ணன் சௌலப்யம் அனுபவிக்கிறார் –
கர்ம வஸ்யர் உடைய ரஷணத்துக்கு வந்து பிறக்குமவன் ஆகையாலும்
அவன் தான் சர்வ காரண பூதன் ஆகையாலும்-நமக்கு ஓர் குறை உண்டோ -என்கிறது –

—————————–

ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3-

அவன் ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் நேரே கிடையா விட்டால் களவு கண்டாகிலும் ஜீவிக்குமவன் ஆகையாலும்
ரஷணத்தில் பர்யாப்தி பிறந்து இராதவன் ஆகிலும் நமக்கு ஒரு குறை உண்டோ –

————————

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே —11-5-4-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ப்ரவணர் ஆகையாலே அது பின்னாட்டுகிறபடி –
மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு தயிரை வருந்திக் கடைந்து உறியிலே சேமித்து வைத்த அன்று
கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் –
சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது –
இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண் –

————————

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே —11-5-5-

இடைச்சிக்கு பரிச்சின்னனாய் இருந்தானே ஆகிலும் ஸ்வ யத்னத்தால் அறியும் ப்ரஹ்மாதிகளுக்கு
அபரிச்சின்னனாய் இருக்கும் –

——————

கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே —11-5-6-

கேட்டார் நெஞ்சு ஈரும் படி த்வனிக்க இடையர் மனஸ் களிப்ப மன்றிலே மரத்தைக் காலிலே கட்டி ஆடினான் காண் –
இப்படி இடையர் கண் வட்டத்திலே நிற்கிற வஸ்துவை ப்ரஹ்மாதிகள் கண் வட்டத்திலே கண்டு அறிவார் இல்லை –

——————–

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் வாகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிந்தான் சாழலே –11-5-7-

துர் உக்தி பண்ணுவதற்கு ஒருவரும் இல்லாத சமயத்தில் துர்யோதனில் குறைந்தார் இல்லாத இஜ் ஜகத்தை
வயிற்றிலே வைத்து ரஷிததான் காண் –

——————

பார் மன்னர் மங்கப் படை தொட்டு வெஞ்சமத்துத்
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்ஆகிலும்
தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே —11-5-8-

இப்படி தாழ்வு செய்தவன் லோகத்தில் ராஜாக்கள் ஆனார் முடி மேல் மாலையிலே காண்
திருவடிகளை வைத்துக் கொண்டு இருப்பது – ராஜாதி ராஜ சர்வேஷாம் -இத்யாதி –

———————–

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —–11-5-9-

வடிவு அழகாலும் வரையாதே தீண்டும் படி யாலும் ஆஸ்ரிதர்க்கு தாழ்வு செய்யும்படியாலும் –
கிருஷணாவதாரத்தோடு போலியாய் இறே ஸ்ரீ வாமன அவதாரம் இருப்பது –
உதாரனாய் இருக்கிற மஹா பலி யஞ்ஞ பூமியிலே அவன் கண் வட்டத்துக்கு உள்ளே நின்று
மூன்றடி மண் இரந்தான் காண் –
அவன் கண் வட்டத்தே நின்ற இவனை நாட்டில் கண்டவர் இல்லை கிடாய் –

—————————–

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-

கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி
ஸ்ரீ திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது –
சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி ஸ்ரீ திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண்
அப்படி இருக்கிறவன் காண் ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும் புறப்படத் தள்ளினாலும்
புறப்படாதே கிடக்கிறான் –

———————

மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே –11-6-1-

தமோ குணா அபிபூதராய் இருக்கையாலே ஸ்ரீ பரமாத்மாவுக்கு சரீரம் என்று
உபாசிக்கப் போகாதவர்களை –செய்ந்நன்றி குன்றேல்மின் –
அப்ராப்த விஷயங்களில் தாழ்வு செய்ய ஆசைப் பட்ட நீங்கள் –ஸ்ரீ சர்வேஸ்வரனையே ஏத்தப் பாருங்கோள் –

———————

நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று
எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர்களே —11-6-2-

இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி இவனைக் கை விட்டி கோளோ-
லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதாயத்தம் என்னும் இடம் அறியீர்களோ –

————————–

நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே —11-6-3-

ஐஸ்வர்ய சூசகமாய் எதிரிகளை முடிக்க வற்றான ஸ்ரீ திரு வாழியை உடையவன் உடைய குணங்களை
அடைவு கெடச் சொல்லாத தண்ணிய ஷூத்ரங்களை-சஹிக்க அரிதாய் இருக்கிறவவர்கள்
க்ரௌர்யம் இருந்த படி என் –

—————————

பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலேயான காலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித்தலைவன் முழங்கொளி சேர் திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –11-6-4-

இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே
சத்வஸ்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் முழங்கா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருந்து உள்ள
ஸ்ரீ திரு வயிற்றிலே வைத்து உம்மை உய்யக் கொண்ட –கனிந்து இருந்து களாம் போலே இருந்துள்ள
ஸ்ரீதிரு உடம்பை உடைய ஒருவனையே – கழல் தொழுமா கல்லீர்களே –

————————

பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலேயான காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே —-11-6-5-

சைதன்யம் உண்டாகில் வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து
அத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகனாய் –
அளவுடையவனாய் இருந்துள்ளவனுடைய பெயரான திரு நாமங்களையே பேசீர்களே –

——————-

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே —11-6-6-

நாம் கொடுத்த கரணங்களைக் கொண்டு நம்மைப் பற்றப் பாராதே புறம்பே போயிற்றன-என்று வெறுத்து போய் இருக்க –
அங்கே புதுசாக இருக்கிற தேவதைகளை கொண்டாடுகிற தொண்டீர் –
அசேதனமாய் இருப்பது ஒன்றை வெந்நீர் ஆட்டுதிரோ – செய்ய மாட்டாத கிருபை அற்றீரே –

——————-

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே –11-6-7-

கிருபை பண்ணி சந்நிஹிதனாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ணமங்கைக்கு நிர்வாஹகன்
ஆனவனுடைய திருவடிகளைப் பேணி –அவனை ஹிருதயத்தில் எண்ணாத மனுஷ்யரை –
பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அவைஷ்ணவர்களை நினையாத போது –
இனிது என்கை- –

————————

மறம் கிளர்ந்து கரும் கடல் நீர் உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்
புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே —11-6-8-

ரஷ்யத்தின் அளவில்லாத ரஷண தர்மத்தாலே விஞ்சின திரு வயிற்றின் உடைய உள்ளே வைத்து
உம்மை உய்யக் கொண்ட –கறுத்து இருந்துள்ள தேஜஸ்சை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை நினையாதார் தண்ணியவர்கள் –

———————

அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே –11-6-9-

பிரளயம் தேடுகின்றது என்று இளைத்துக் காட்டி அல்லாத அவயவத்தோடு ஒத்த திரு வயிற்றின் உள்ளே வைத்து
உம்மை உய்யக் கொண்ட –மேகம் போலே உதாரனான கையை உடையனாய்
மணி போலே ஸ்ரமஹரமான நிறத்தை உடையவன் ஸ்ரமஹரமான ஸ்ரீ திருக் குடைந்தையை பாடி ஆடீர்களே –

——————

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே —11-6-10-

இப்பாட்டுக்கு இதையே பொருள்
திரண்டு பரந்த சோலைகள் உடைய ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் அறிந்து உரைத்தார் –
இதையே பொருள் -ஸ்ரீ த்வயத்தின் க்ரமத்திலே பல சுருதி அருளுகிறார் –
சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் -என்றும்
குடந்தையே தொழுமின் என்றும் –உபக்ரமித்து –
தண் குடந்தை பாடி ஆடீர்களே என்று உபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –

—————-

நீணாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானைப்
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன் மலையைக்
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே —11-7-1-

அமுதம் கொண்டுகந்த- பிறருக்கு உபகரித்தானாய் இராதே தன் பேறாக உகந்தான் –
இப்படிச் செய்கிறது -உடையவன் ஆகையாலே –
பூணார மார்வனைப்-இவர் தம்முடைய -அம்ருதம் –சர்வாபரண பூஷிதனாய் பெரிய திருவடி தோளில் இருந்த இருப்பு –
ஒரு பொன் மலை மேலே ஒரு பொன் மலை இருந்தாப் போலே –
இதுக்கு முன்பு கண்டவை என்றும் கண் அல்ல –ஷேபமாகக் கண்டோமே -என்கிறார் முதல் பாசுரத்தில்

———————————

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே —-11-7-2-

உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று ஆஸ்ரிதர் ஈடுபட்டு
நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவனுடைய கீர்த்தி கேட்க வென்றால் கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல –
கேட்டோமே –ஷேபம் –

——————-

தூயானைத் தூய மறையானைத் தென்னாலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை வணங்கி யவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சல்ல கேட்டாமே –11-7-3-

கீழ் இரண்டு பாட்டாலே ஞாநேந்த்ரியன்களை நிரசித்த்தார்
இனி மூன்று பாட்டாலே கர்மேந்திரியங்களை நிரசிக்கிறார் –
இதில் அவனுடைய கீர்த்திகளை ஒழிய பேசுமவை கடலோசை பேச்சாய் இருக்கச் செய்தேயும் –
அர்த்தம் இன்றிக்கே இருக்கிறாப் போலே – கேட்டுத் திரிகிறிகோள் இறே -என்று ஷேபம் –

————————-

கூடா விரணியனைக் கூருகிரால் மார்விடந்த
ஓடா வடலரியை யும்பரார் கோமானைத்
தோடார் நறுந்துழாய் மார்வனை யார்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டல்ல கேட்டாமோ —11-7-4-

சிறுக்கனுக்கு விரோதியைப் போக்கி மாலை இட்டு இருந்தவனை –பிரேம பரவசராய்
பாடும் பாட்டு அல்லது பாட்டு அல்ல –

——————-

மையார் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானைக் கை தொழாக் கையல்ல கண்டாமே —11-7-5-

ஒன்றைச் சொல்லி இன்னது உபமானம் என்ன ஒண்ணாத வடிவு –
சொல்லும் இடத்தில் உபமானம் கொண்டு இழிய வேணும் – அவை தான் இதுக்குப் போராவாய் இருக்கும் –
காமினிக்கு காந்தனுடைய தேஹமும் –ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லாருக்கும் படி –
சங்கேந்தும் கையானைக் –தொழுகைக்கு இவன் கை போலே-தொழுவித்துக் கொள்ளுகைக்கு அவன் கை –
தமச பரம -இத்யாதி –
கை தொழாக் கையல்ல கண்டாமே –-தொழாக் கை கை யல்ல -என்று அந்வயம்-

———————

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-

அவனுக்கு என்று இராத-ஞான இத்ரியங்கள்-கர்ம இந்த்ரியங்கள்
அனைத்துக்கும் நிர்வாஹகமான மனஸ்ஸை இரண்டு பாசுரங்களால் நிரசித்து அருளுகிறார் –
தான் நினைக்கும் அவை ஒழிய நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் –
ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது –

——————–

கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே —11-7-7-

உபமானம் இல்லை என்று பேசாதே இருக்க மாட்டாரே – திவ்ய விக்ரஹத்துக்கு உபமானம் அபூமியானால்
ஆத்மா குணங்களுக்கு உள்ளுப் போகார் இறே-
இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை –
நினைவுக்கு அநதிஷ்டமான நெஞ்சு -நெஞ்சு அல்ல –

———————–

வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானைச் செங்கண் நெடியானைச் சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமோ —-11-7-8-

ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் – மேன்மையால் குறையற்று சிவந்த கண்களை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை –
நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும்-இரண்டையும் அறியாதவர்கள்

———————-

தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –11-7-9-

அவன் தன்னைப் பேணாது ஒழிய தங்களைப் பேணித் திரியுமவர்கள மானிடவர் அல்லர் –
பிரித்து அவயவங்களைச் சொல்லுகிறது என் – கட்டடங்க மனுஷ்யர் அல்லர் –
என்று என் மனத்தே வைத்தேனே –ஸ்ரீ சர்வேஸ்வரன் குற்றங்களும் பொறுக்கும் இறே –
அவன் கழித்த வன்றும் கிருபை பண்ணுமவர் இறே ஸ்ரீ ஆழ்வார்
இருவரும் அகப்பட கை விடும்படி யானார்கள் –
மித்ர பௌ பிகம் கர்த்தும் -என்னும் அவளிலும் இவருக்கு வாசி உண்டு –
தலை தான் போனது அவனுக்கு ஸ்வரூபம் நசிக்கும் இவனுக்கு

—————–

மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-

எல்லாரையும் ஆக்கிக் கொள்ளும் திருவடிகள் –திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை –
இத் திருவடிகளைச் சூடும் ஸ்ரீ ஆழ்வார் –சேஷித்வத்துக்கு அவன் ஸ்ரீ திரு வாழியைப் பிடித்தால் போலே
சேஷத்த்வத்துக்கு இவர் வேலைப் பிடித்த படி-
முன்பே பாசுரம் இட்டுத் தந்தோம் – இனி சரீரத்தால் உள்ள விநியோகம் கொள்ளுங்கோள்-

——————–

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

பயத்துக்கு பரிஹாரமும்-உத்பாதகனும் -நீயாய் இருந்தாய் – அதுக்கு பய ஸ்தானம் ஆறு –
உமக்கு பய ஸ்தானம் ஏது என்ன –
அதுக்கு ஆறு ஓன்று-எனக்கு ஐஞ்சு ஆறு அகழ்ந்து பொகடுகிறது –
அஞ்சும் ஆறும் ரசோக்தி விஷயங்கள் ஐந்தும் – தத் க்ராஹங்கள் ஆறும்
கர்மேந்த்ரியங்கள் ஐந்தும் -ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஆறும் –
ரூபத்தை சொல்லாமல் விட்டது -பயத்தாலே கண்ணாஞ்சுழலை இட்டமை தோற்றுகைக்கு –
உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் – அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் –
மமாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது-
என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர்
வார்த்தையை நினைப்பது-

———————-

சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சி
காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல்
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா —11-8-2-

பெரும் காற்றிலே அகப்பட்ட மரக் கலத்துக்கு உள்ளே சேதனர் உடைய நெஞ்சு போலே
பயப் படுக்கைக்கு மேற்பட பரிஹாரத்தில் அந்வயம் இல்லை இறே
அதுக்கு உட்பட்ட மனுஷ்யர் எல்லாருக்கும் உள்ள பயம் இவர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கிறது –
மிகவும் நடுங்கா நிற்பன் -சரீர வியோக மாத்ரத்திலே இவர்களுக்கு –
ஆழி வலவா –உன் கையில் திரு வாழிக்கும் எனது உள் நடுக்கத்துக்கும் சேர்த்திச் சொல்லிப் போ –
உனக்கு அசக்தி உண்டு என்று சொன்னாய் ஆதல் -என் நடுக்கைத்தை பரிஹரித்தல் செய் –

——————-

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3-

ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே இவ்விடம் த்யாஜ்யம் ஆவது
அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே –
இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும்
இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன்
சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே
அநந்தரம் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே
இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று
அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் ஸ்ரீ நஞ்சீயர் –
இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை
இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால் பொய்யாகாது என்ற படி –
இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது –

—————-

உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4-

இரண்டு தலையும் நெருப்பு பற்றி எரியா நிற்க நடுவே அகப்பட்டு நோவு படுகிற ஷூத்ர பதார்த்தம் போலே யாயிற்று
ஜன்ம மரணங்கள் இரண்டிலும் அகப்பட்டு நோவு படுகிற படி –
பிரளயத்தில் அகப்பட்டு அழிந்து போகப் புக்கதை எடுத்து ரஷித்தவன் அன்றோ –

———————–

கொள்ளக் குறையாத விடும்பைக் குழியில்
தள்ளிப் புகப்பெய்தி கொல் என்றதற்கு அஞ்சி
வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே
உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி முதல்வா —11-8-5-

நீ பரிஹரித்த பிரளய ஆபத்தின் அளவல்ல நான் நோவு படுகிற சம்சார பிரளயம் –
அங்கு ஒருவருமே அபேஷியாது இருக்க பரிஹரித்தாய் இங்கு நான் அபேஷிக்க வேண்டுகிற ஹேது என் –

———————-

படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன்தன் அருளே –11-8-6-

இப்பாட்டில் அருளிச் செய்யும் போது
இதுவே அமையும் என்னும் படி ஆர்த்தி தோற்ற அருளிச் செய்து அருள்வர் –
நான் உன்னை அடையும் படியாக அருள வேணும் –
அம்மரத்தின் உலர்ந்த அம்சமும் தன்னிலே ஒன்றிப் பச்ச்சையாம் படி பண்ண வேணும் –
அது பின்னை செய்யப் போமோ என்னில்
வேர் பறிந்தவையும் புகட்டிடத்தே செவ்வி பெறும்படி பண்ணும் தேசத்தில் அன்றோ நீ வர்த்திக்கிறது
முதல் பறிந்ததுக்கு செவ்வி பெறுத்த வல்ல உனக்கு உள்ளத்துக்கு ஒரு பசுமை பண்ண தட்டு என் –
தய நீயனான எனக்கு கொள்வர் தேட்டமான உன் அருளை அருள வேணும் –

———————

வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7-

விசத்ருச த்ருஷ்டாந்தமாய் இருந்ததீ என்ன –அந்வயம் -விச்சேதத்தைப் பொறுக்கும்
வ்யதிரேகம் அப்படி விச்சேதத்தைப் பொறாது இறே-அத்தைப் பற்றச் சொல்லிற்று –
உன்னைக் கொண்டு விரோதியைப் போக்கிக் கொள்ள அமையும் என்று இருப்பாருக்கு விரோதியைப் போக்கிக் கொடுப்புதி –
உன்னோடு அணைய வேண்டும் என்று ஆசைப் பட்டாருக்கு நித்ய சம்ச்லேஷம் பண்ணுகைக்கு உடம்பு கொடுப்புதி –
நீ வேண்டா பிரயோஜனமே அமையும் என்று இருப்பாருக்கு அத்தைக் கொடுத்து
உன்னையே பெற வேணும் என்று இருப்பாருக்கு உன்னைக் கொடுப்புதி –
பரஞ்சோதீ – நீ அணைக்குக்கு உடம்பைக் கொடுக்காதே-ஷயத்தை வர்த்திப்பான் ஒருவன் ஆனாலும்
உன்னை விடலாயோ வடிவு அழகு இருப்பது –

———————-

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-

சோகித்த அர்ஜுனனைக் குறித்து உன்னுடைய சர்வ பரங்களையும் நம் தலையிலே ஏறிட்டு
நம்மையே தஞ்சமாக நினைத்து இரு –நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம் மாஸூச -என்னுமா போலே
நான் உஜ்ஜீவிக்கும் படி யெனக்கு ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேணும் –
பூ வலரும் போதை விகாசம் போலே வார்த்தை அருளிச் செய்யும் போது-திருமேனியில் பிறக்கும் செவ்வி காண
வாயிற்று ஆசைப் படுகிறது –
ஆஸ்ரித பரதந்த்ரனாகை -வென்றால் உகப்பார் ஒருவர் ஆயிற்று –

———————

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-

பணியாய் என்றார் கீழ் பாட்டில்
தத் அனுஜாநந்தம் உதார வீஷணை-என்றும்
தூது செய் கண்கள் -என்ற படியும்
மலர விழித்துக் கடாஷிக்க -க்ருதார்த்தராய் –
சம்சார உத்தரணத்துக்கு சம்சயம் உண்டோ என்று கொண்டு
உமக்குத் திரு உள்ளம் ஆனபடி என் மநோ ரதத்தை தலைக் கட்டி அருள பிரார்த்திக்கிறார் -என்று சங்கதி –

————————–

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே —11-8-10-

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்-வாசனையோடு கழியும் படி
அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் –
இவர் நோவு பட்ட ஒன்பது பாட்டும்-அதுக்கு பரிஹாரமாகச் சொன்ன ஒரு பாட்டையும்
சொல்ல வல்லவர்களுக்கு –
பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உபபாதித்து-மாஸூச -என்று பரிஹரித்தால் போலே யாயிற்று
ஒன்பது பாட்டாலும் நோவு பட்டவர்க்கு-ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி –
சம்சாரத்துக்கு ஹேதுவான அவித்யாதிகள் கழிந்து
பின்னையும்-வித்து முதல் கிடந்து அரும்புகை அன்றிக்கே இவர் தாம் -த்வத் அனுபவ விரோதியான
பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று பிரார்த்தித்த படியே சவாசனமாகக் கழியும் –

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்