Archive for the ‘பெரிய திரு மடல்’ Category

ஸ்ரீ பெரிய திருமடல்-பகுதி -2- -ஸ்ரீ உ . வே . ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய வியாக்யானங்கள் —

December 6, 2022

மால் விடையின் ———92
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலை வாய்த் ————93
தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின்
இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே ———–94
கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்
என்னிதனைக் காக்குமா சொல்லீர்-

பதவுரை

மால் விடையின்

(பசுவின்மேல்) வியாமோஹங்கொண்ட வ்ருஷபங்களினுடைய
துன்னு பிடர் எருத்து

பெருத்த பிடரியிலுள்ள முசுப்பிலே
தூக்குண்டு

தூக்கப்பட்டு
கன்னியர் கண் மிளிர

சிறுப்பெண்களின் கண் களிக்கும்படி
வன் தொடரால் கட்டுண்டு

வலிதான கயிற்றாலே கட்டப்பட்டு
மாலை வாய்

ஸாயம் ஸந்தியா காலத்தில்
இன் இசை ஓசையும் வந்து

இனிதான இசையின் ஒலியும் வந்து
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்

தனது நாக்கு ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கப் பறெற சிறந்த மணியினுடைய
என் செவி தனக்கே

என்னுடைய காதுக்கு மாத்திரம்
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்

கொலை செய்ய வல்ல வேலைக் காட்டிலும் கடூரமாகி நெடுகா நின்றது
இதனை காக்கும் ஆ என்

இந்த ஆபத்திற்குத் தப்பிப் பிழைக்கும் வழி என்ன?
சொல்லீர்

(ஏதாவது உபாயம் உண்டாகில்) சொல்லுங்கள்.

“மன்னு மருந்தறிவீரில்லையே?” என்றதும் “நல்லமருந்துண்டு“ என்று விடையளிக்க வல்லாருடைய வார்த்தை காதில் விழவேணுமென்று பாரித்திருந்த பரகால நாயகியின் காதிலே ஊராமாடுகளின் மணியோசை வந்து விழுந்தது, அதற்கு வருந்திப் பேசுகின்றாள்.

செவிக்கு இனிதாகக் கேட்கத்தக்க விடைமணிக்குரலும் என் காதுக்குக் கடூரமாயிராநின்றது, இந்த்த் துன்பமெல்லாம் நீங்கி நான் வாழும் வகை ஏதேனுமுண்டோ? சொல்லீர் என்கிறாள்.

மாட்டின் கழுத்தில் தொங்கும் மணியை மூன்றடிகளாலே கூறுகின்றாள். நாகின்மேலே பித்தங்கொண்டு காமித்து வருகின்ற காளையின் புறங்கழுத்திலுள்ள முசுப்பின்மேலே மநோஹரமாகக் கட்டப்பட்டு ஸாயங்காலத்தில் இடைவிடாது சப்தித்துக் கொண்டே யிருக்கிற மணியின் ஓசையும் வந்து செவிப்பட்டு, செவியிலே சூலத்தைப் பாய்ச்சினாற்போலே ஹிம்ஸை பண்ணா நின்றது.

அவ்வோசை ஓய்ந்தபாடில்லை, நெடுகிச் செல்கின்றதே! என்கிறாள. கடலோசை குழலோசை முதலியனபோல விடைமணி யோசையும் விரஹிகளுக்கு உத்தீபகமாதல் அறிக.

எஃகு – ஆயுதப் பொதுப்பெயர், சூலத்துக்குச் சிறப்புப்பெயருமாம். ஈட்டியையும் சொல்லும்.

———

இது விளைத்த ——–95
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் ——–96
சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலையிட்டணை கட்டி ——-97
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து——-98
தென்னுலக மேற்றுவித்த சேவகனை –

பதவுரை

இது விளைத்த மன்ன்ன்

(தென்றல் முதலானவை பாதகமாம்படி) இப்படிப்பட்ட நிலைமையை உண்டு பண்ணின மஹாநுபா பாவனாய்,
நறு துழாய் வாழ் மார்பன்

மணம்மிக்க திருத்துழாய் மாலை விளங்குகின்ற திருமார்பை யுடையனாய்,
முன்னம் மாமதி கோள் விடுத்த முகில் வண்ணன்

முன்னொருகால் சந்திரனுடைய துன்பத்தைப் போக்கின காளமேக வண்ணனாய்,
காயாவின் சின்ன நறு பூ திகழ் வண்ணன்

“காயா” என்னும் செடியிலுண்டான சிறிய மணம் மிக்க பூப்போல் விளங்குகின்ற நிறத்தை யுடையனாய்,
வண்ணம் போல் அன்ன கடலை

தன்னுடைய வர்ணம் போன்ற வர்ணத்தையுடைய கடலிலே
மலைஇட்டு

மலைகளைக் கொண்டெறிந்து
அணை கட்டி

ஸேதுவைக்கட்டி (இலங்கைக்கெழுந்தருளி)
மா மண்டு வெம் சமத்து

சதுரங்கபலம் நிறைந்த கொடிய போர்க்களத்தில்
மன்னன் இராவணனை

ராக்ஷஸ ராஜனான ராவணனுடைய
பொன் முடிவுகள் பத்தும் புரள

அழகிய பத்துத்தலைகளும் (பூமியில் விழுந்து) புரளும்படியாக
சரம் துரந்து

அம்புகளைப் பிரயோகித்து
தென் உலகம் ஏற்றவித்த சேவகனை

(அவ்விராவணனை) யமலோகமடைவித்த மஹா சூரகனாய்.

***- ஆகக் கீழ்வரையில், தானநுபவிக்கும் கஷ்டங்களைச் சொல்லி முடித்தாள்,

இக்கஷ்டங்களை விளைவித்த மஹாநுபாவன் இன்னானென்பதை நான் அறியாமையில்லை, நன்கு அறிவேன், அடிபணிந்தாரை ரக்ஷிப்பதற்கென்றே மார்பில் தனிமாலையிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லி உலகங்களை வஞசிப்பவனாம் அவன்,

“சந்திரனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தொலைத்தேன், அப்படி உங்களுடைய துன்பத்தையும் தொலைத்தொழிப்பேன் வாருங்கள்“ என்று மயக்கி அழைப்பவன அவன்.

“காளமேகம் போலும் காபாமலர்போலும் என் வடிவு விளங்குகின்ற அழகைக்கண்டு களியுங்கள்“ என்றுமெனி நிறத்தைக்காட்டி வலைப்படுத்திக் கொள்பவன் அவன்,

ஒரு ஸீதாப் பிராட்டிக்காகவும் எப்படி யெப்படியோ உருமாறிப் படர்படுகள் பட்டுஅதிகமாநுஷமான காரியங்கள் செய்தவனாக்கும் நான், என்னை யடுப்பார்க்கு ஒரு குறையுமுறாது என்று சொல்லி அகப்படுத்திக்கொள்பவன் அவன்,

பல திருப்பதிகளிலே தனது பெருமையைக் காட்டிக்கொண்டு மேனாணித்திருப்பவன் அவன், அவன் படிகளெல்லாம் நான்கறிவேன் நான்,

அவனுள்ள திருப்பதிகள்தொறும் நுழைந்து புறப்பட்டு என் மனவருத்தங்களை இனி நான் சொல்லிக்கொள்ளப் போகிறேன், ஆதரித்து உஜ்ஜீவப்பித்தானாகில் பிழைத்துப் போகிறான், இல்லையாகில் என் வாய்க்கு இரையாகி அவன் படப்போகிற பாடுகளைப் பாருங்கள் – என்கிறாள் மேல்.

முன்னம் மாமதிகோள்கிவிடுத்த – சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கியருளினவன் இன்று எனக்கு க்ஷணத்தை விளைக்கலானது என்னோ என்று இரங்குகின்றாளாகவுமாம்.

“இப்போது கீடீர் அவன் ஆபந்நரானாரை நோக்கத் தவிர்ந்தது“ என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும்,

“மதியுகுத்த இன்னிலாவின் கதிரும் என்றனக்கே வெய்தாகும்“ என்று கீழே அருளிச்செய்தபடி என்னை எரிக்கின்ற சந்திரனுக்கு நேர்ந்த ஆபத்தைப்போக்கி என்னை நன்றாகத் தப்பிக்குமாறு அந்த சந்திரனுக்கு நியமித்த மஹாநுபாவன் என்றதாகவுமாம்.

மா மண்டு வெஞ்சமத்து – மா என்று யானையையும் குதிரையையும் சொல்லும், ரதம், கஜம், துரகம், பதாதி எனச் சேனையுறுப்புக்ள நான்காதலால் மற்ற இரண்டு உறுப்புகட்கு உபலக்ஷணமென்க

மண்டுல் – நெருங்கியிருத்தல் சேவகனை – சேவகமாவது வீரம், அதனையுடையவன் சேவன். “செருவிலே அரக்கர்கோனைச் பெற்ற நம் சேவகனார்“ என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்.

“இது விளைத்த மன்ன்ன்“ என்று தொடங்கி, “தென்னறையூர்“ மன்னு மணிமாடக்கோயில் மணாளனைக் கன்னவில் தோள்காளையை“ என்கிற வரையில் எம்பெருமானுடைய விபவாவதார வைபவங்கள் அர்ச்சாவதார வைபவ“கள் முதலியன விரிவாகக் கூறப்படுகின்றன.

மார்பன். முகில்வண்ணன், சேவகனை, வீரனை, கூத்தனை என்கிற இவ்விசேஷணங்கள் எல்லாம் மேலே கன்னவில் தோள் காளையை என்ற விடத்தில் அந்வயித்து முடியும்.

———–

ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் ——99
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் ——100
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ——-101
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —–102
மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை

பதவுரை

ஆயிரம் கண் மன்னவன் வானமும்

ஆயிரங்கண்ணனான இந்திரனுடைய ஸ்வர்க்கலோகத்தையும்
வானவர் தம் பொன் உலகும்

(மற்றுமுள்ள) தேவதைகளின் திவ்ய லோகங்களையும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை

தனது புஜபலத்தாலே தன் வசமாக்கிக் கொண்ட ஹிரண்யா ஸுரனை
பின்

சிறிது காலம் பொறுத்து
ஓர் அரி உருவம் ஆதி

ஒரு நரசிங்கமூர்த்தியாக அவதரித்து
ஏரி விழித்து

நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து,
கொல் நலிலும் வெம் சமத்து கொல்லாதே

கொடிய போர்க்களதிலே (பகைவரைக்கொல்லுங்கணக்கிலே சடக்கெனக்) கொன்றுவிடாதே
வல்லாளன்

மஹாபலசாலியான அவ்வசுரனுடைய
மணி மன்னு குஞ்சிபற்றி வர ஈர்த்து

மணிமயமான கிரீடம் பொருந்திய தலைமயிலைப் பிடித்துக் கிட்ட இழுத்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி

(அவனைத்) தனது திருவடிகளின் மீது படுக்கவைத்துக் கொண்டு
அவனுடைய பொன் அகலம்

அவனது அழகிய மார்பை
வள்  உதிரால் போழ்ந்து

கூர்மையான நகங்களாலே பிளந்து
புகழ் படைத்த

(ஆச்ரிதனான ப்ரஹ்லாதனை ரக்ஷித்தானென்கிற) கீர்த்தியைப் பெற்றவனாய்
மின் இலங்கும் ஆழிபடை தட கை வீரனை

மின்போல் விளங்குகின்ற சுக்கராயுத்த்தைத் தடக்கையிலே உடைய மஹாவீரனாய்

***- தானவன் –அரசன், வடசொல். கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே – தூணில் நின்றும் தோன்றியனவுடனே திருகண்ணாலே அவனைக் கொளுத்திவிடலாம்,

“ஆச்ரிதனான ப்ரஹ்லாத்தன் விஷயத்திலே பல்லாயிரங் கொடுமைகள் புரிந்த இப்பாவியை இப்படி ஒரு நொடிப்பொழுதிலே கொன்றுவிடக் கூடாது, சித்திரவதைப் பண்ணிவிடவேணும்” என்று தான் மேல்கிடாத்திப் போழ்ந்தானாயிற்று.

தன்னுடைய தாள்மேல் கிடாத்தி வள்ளுகிரால் போழ்ந்து – தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி இரணியன் வரம்பெற்றிருந்தானாதலால் அந்த வரம் பழுதுபடாதபடி அவனைப் பிடித்து வாசற்படியில் தன் மடி மீது வைத்துக்கொண்டு அந்திப் பொழுதில் திருக்கை யுகிர்களாலே பிளந்தருளினன்.

———

மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104

,பதவுரை

மன்னு இ அகல் இடத்தை

எல்லாரும் பொருந்தி யிருக்கின்ற விசாலமான இப்பூமியை
மா முது நீர் விழுங்க

மஹா ஸமுத்ரம் விழுங்கிவிட
பின்னம்

அதற்கு பிறகு
ஓர் எனம் ஆய் புர்கு

ஒரு திவ்யவராஹமாய் (கடலினுள்ளே) பிரவேசித்து
வளை மருப்பின்

வளைந்த கோட்டினுடைய
கொல் நவிலும் கூர் நுதி மேல்

(பகவரைக்) கொல்ல வல்ல கூர்மையான நுனியின் மீது
வைத்து எடுத்து கூத்தனை

(அந்தப்பூமியை) வைத்துக் கொணர்ந்த அழகிய சேஷ்டித்த்தையுடையனாய்

***- வைத்தெடுத்த கூத்தனை –பூமியைக் கோட்டின் நுனியில் வைத்துக்கொண்டு எழுந்தருளும் போது அக மகிழ்ச்சி தோற்றக் கூத்தாடிக் கொண்டே யெழுக்கருளின்  போலும்.

மஹா வராஹ ரூபாயாய் -புண்ணியம் தெய்வதமும் சேர் பூ லோகத்தை புல் பாய் போலே சுருட்டிக் கொண்டே பாதாளம்
நண்ணி இரண்யாட்ச்சனை பின் தொடர்ந்தே ஏகி நலமுடனே யாதி வராகத் தேவாகி-மண்ணுலகம் அனைத்தும்
இடந்து எடுத்தோர் கோட்டில் வைத்து வர வவன் மறிக்க வதைத்துத் தேவர் எண்ண உலகீர் எழும் படியப் பண்ணா
இறைவா நாராயணனே எம்பிரானே-என்பர் பின்னோரும்
இப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பம்
வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்க–முது நீர் -சகல பதார்த்தங்களும் முற்பட்டு புராதானமாய் யுள்ள நீர்
அப ஏவ சசர்ஜாதவ்–நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணி –
வைத்து எடுத்த கூத்தனை -அக்காலத்தில்  மகிழ்ச்சி தோற்ற கூத்தாடினான் -என்பதை கண்டார்கள் ஆழ்வார்கள்

———-

மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் ——-105
தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய ———106
மன்னும் துயர் கடிந்த வள்ளலை –

பதவுரை

மன்னும் வடமலையை

அழுத்தமாக நாட்டப்பட்ட மந்தரகிரியை
மத்து ஆக

மத்தாகக்கொண்டு
மாசுணத்தால்

(வாசுகி யென்னும்) பாம்பினால் (சுற்றி)
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் தன்னினுடனே சுழல மலை திரித்து

விளங்குகின்ற சந்திர ஸூர்யர்களும் ஆகாசமும், ப்ரகாசிக்கின்ற (மற்றும் பல) தேஜ பதார்த்தங்களும் தன்னோடு சுழலும்படி அந்த மந்தர மலையைச் சுழற்றி (கடலைக்கடைந்து)
வானவரை இன் அமுதம் ஊட்டி

தேவர்களுக்கு இனிய அமிருத்த்தை உண்ணக் கொடுத்து
அவருடைய

அத் தேவர்களுடைய
மன்னும் துயர் கடிந்த

நெடுநாளைய துக்கத்தைப் போக்கடித்த
வள்ளலை

பரம உதாரனாய்

***- மாசுணம் என்று பாம்புக்கும் பெரிய பாம்புக்கும் பெயர்.

கடலைக்கடைய மந்தரமலையைச் சுற்றின போது அது சுழன்ற விசையின் மிகுதியினால் இரு குடர் விண் முதலிய ஸகல பதார்த்தங்களும் கூடவே சுழன்வனபோலத் தோற்றினமைபற்றி “மின்னுமிருசுடரும் தன்னினுடனே சுழல மலைதிரித்து“ என்றார்.

மந்த்ர மலை சுழன்ற பொழுது அந்த சுழற்சியின் விசையின் மிகுதியால் சகல பதார்த்தங்களும் சுழல்வன
போலத் தோன்றினமை–மின்னு மிருசுடரும் – -தன்னினுடனே சுழல மலைத் திரித்து –
அவருடைய –மன்னும் துயர் கடிந்த வள்ளலை–துர்வாச முனிவர் சாபத்தால் தேவர்களுக்கு நேர்ந்து இருந்த வறுமையைப் போக்கின-என்றவாறு –

————-

மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –

பதவுரை

மற்று அன்றியும்

தவிரவும்
தன் உருவம் ஆகும் அறியாமல்

தனது ஸ்வரூபத்தை யாரும் தெரிந்து கொள்ள வொண்ணாதபடி.
தான் ஓர் மன்னும்

பரமபுருஷனான தான் ஒரு திவ்யமான வாமந வேஷங்கொண்ட பிரமசாரியாகி
மா வலி தன்

மஹா பலியினுடைய தான
பொன் இயலும் வேள்விக் கண் புக்கிருந்து

ஸவர்ணதானஞ் செய்யும் யாக பூமியிலே எழுந்தருளி
போர் வேந்தர் மன்னை

போர் செய்யவல்ல மிடுந்தையுடைய அரசர்களில் தலைவனான அந்த மாவலியை
மனம் கொள்ள வஞ்சித்து

(இப்பிரமசாரி யாசிப்பதற்காகவே வந்தானென்று) நம்பும்படியாக மயக்கி
நெஞ்சு உருக்கி

(நடையழகு சொல்லழகு முதலியவற்றால) அவனது நெஞ்சை உருக்கி
மன்னா

மஹாப்ரபுவே!
என்னுடைய பாத்த்தால் யான் அளப்ப

என் காலடியால் நாளே அளந்து கொள்ளும்படி
மூ அடி மண் தருக என்று

மூவடி நிலம் கொடு என்று
வாய் திறப்ப

வாய் திறந்து கேட்க,
அவனும்

(அதுகேட்ட) அந்த மாவலியும்
என்னால் தரப்பட்டது என்றலும்

அப்படியே என்னால் மூவடி நிலம் கொடுக்கப்பட்டது என்று சொல்ல
அத்துணைக் கண்

அந்த க்ஷணத்திலேயே
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ

விளங்குகின்ற மணிமகுடம் ஆகாசத்தே போய் அளாவ,
மேல் எடுத்த

உயரத்தூக்கியருளின
பொன் ஆர் களை கழல் கால்

பொன்கள் நிறைந்து சப்திக்கின்ற வீரத்தண்டை யணிந்த திருவடி
ஏழ் உலகும் போய் கடந்து

மேலுலகங்களெல்லாவற்றையும் தாண்டி
அங்கு ஒன்னா அசுரர் துளங்க

அந்தயாக பூமியிலுள்ள (நமுசி முதலிய) பகையசுரர்கள் துன்பப்படும்படி
செல நீட்டி

(மேலே) நெடுகவியாபிக்கச் செய்து
மா வலியை வஞ்சித்து

(இவ்வகையாலே) மஹாபலியை வஞ்சித்து
மன்னும் இ அகல் இடத்தை

நித்யமாய் விசாலமான இப்பூ மண்டலத்தை
தன் உலகம் ஆக்குவித்த தாளானை

தன்னுடைய லோகமாகவே ஆக்கிக்கொடுத்த திருவடிகளை யுடையனாய்

அத்துணைக்கண் – துணை –அளவு, அவ்வளவில் என்றபடி.

———-

தாமரை மேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் ——-113
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை —–114
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல்
அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி ——–115
என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக்
கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை ——116
மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்
பொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை ——117
மன்னு மரங்கத் தெம் மா மணியை-

பதவுரை

தாமரை மேல் மின் இடையாள் நாயகனை

தாமரைப்பூவில் பிறந்தவளும் மின் போன்ற இடையை யுடையளுமான பிராட்டிக்கு நாயகனாய்
விண்ணகருள் பொன் மலையை

திருவிண்ணகரிலே பொன்மலை போல் விளங்குமவனாய்
பொன்னி மணி கொழிக்கும் பூ குடந்தை போர் விடையை

காவேரி நதியானது ரத்னங்களைக் கொண்டு தள்ளுமிடமான அழகிய திருக்குடந்தையிலே யெழுந்தருளியிருக்கிற

யுத்த ஸந்நத்தமான காளை போலச் செருக்குடையனாய்

தென் நன் குறுங்குடியுள் செம்பவளம் குன்றினை

தென் திசையிலுள்ள விலக்ஷணமான திருக்குறுங்குடியிலே சிவந்த பவழமலைபோல விளங்குமவனாய்,
தண் சேறை மன்னிய வள்ளலை

குளிர்ந்த திருச்சேறையிலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற பரம உதாரனாய்,
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வல் ஆலி என்னுடைய இன் அமுதை

சிறந்த தாமரைப் பூக்களின் மேலே அன்னப்பறவைகள் உறங்கப் பெற்ற அழகிய நீர் நிறைந்த வயல்களை யுடைத்தான திருவாலியிலே எனக்குப் பரம போக்யனாக ஸேவை ஸாதிப்பவனாய்.
எவ்வுள் பெருமலையை

திருவெவ்வுளுரில் பெரிய தொரு மலை சாய்ந்தாற் போலே சாய்ந்தருள்பவனாய்
கன்னி மதில் சூழ் கணமங்கை கற்பகத்தை

சாச்வதமான மதில்களாலே சூழப்பட்ட திருக்கண்ண மங்கையில் கல்பவ்ருக்ஷம்போல் எழுந்தருளியிருப்பவனாய்
மின்னை

மின்போல் விளங்குகின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய்
இரு சுடரை

ஸூர்ய சந்திர்ர்களோ என்னும்படியான திருவாழி திருச்சங்குகளை யுடையனாய்
வெள்ளறையுள்

திருவெள்ளறையிலே
கல் அறை மேல்

கருங்கல் மயமான ஸந்நிதி யினுள்ளே
பொன்னை

பொன் போல் விளங்குமவனாய்
மரதகத்தை

மரதகப்பச்சை போன்ற வடிவை யுடையனாய்
புட்குழி எம் போர் எற்றை

திருப்புட் குழியிலே எழுந்தருளி யிருக்கிற அஸ்மத்ஸ்வாமியான ஸமரபுங்கவனாய்,
அரங்கத்துமன்னும்

திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிறவனாய்
எம் மா மணியை

நாம் கையாளக்கூடிய நீல மணி போன்றவனாய்

ஆகக் கீழே சில விசேஷணங்களால் விபவாவதார சரித்திரங்களிற் சிலவற்றைப் பேசி இனி அர்ச்சாவதாரங்களிலுஞ் சிலவற்றை அநுசந்திக்க விரும்பித்  திருவிண்ணகரிலே வாய்வைக்கிறார்.

பல திருப்பதிகளையும் பற்றி அருளிச் செய்துகொண்டு போகிற இக்கண்ணிகளில் “கோயில் திருமலைபெருமாள் கோயில்“ என்னும் அநாதி வ்யவஹாரத்திற்கு ஏற்ப, “மன்னுமரங்கத்தெம் மாமணியை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும்

“மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை“ என்ற வளவில் ஒரு பகுதியாகவும்,

“வெஃகாவிலுன்னிய யோகத்துறக்கத்தை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும்,

அதற்குமேல் வினைமுற்று வருமளவில் ஒரு பகுதியாகவும் பிரித்துக்கொண்டு உரையிடுகின்றோம்.

விண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி. “தன்னொப்பாரில்லப்பன்“ என்று நம்மாழ்வார்ருளிச் செயல் “ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலா வென்னப்பா!“ (திருக்கண்ணப்புரத்துப் பாசுரத்தில்) என்றார் இத்திருமங்கையாழ்வாரும். உப்பிலியப்பன் என்கிற வ்யவஹாரம் ஸ்தர புராணத்தையடி யொற்றிய தென்பர்.

குடந்தை – குடமூக்கு என்றும் கும்பகோணமென்றும் வழங்கப்படும் தலம்

குறுங்குடி – குறிகியவனான வரமநனது க்ஷேத்ரமாதலால் குறுங்குடியெனத் திருநாம்மாயிற்றென்பர். இத்தலத்தெம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகார்ர் பக்கலிலே சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்“ என்கையாலே வைஷ்ணவ நம்பியென்று திரநாமம் பெற்றனன். நம்மாழ்வார் திருவ்வதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தத்து நம்பியே.

சேறை – பஞ்சஸார க்ஷேத்ரமென வழங்கப்படும்.

ஆலி –எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனஞ் செய்துகொண்ட திவ்யதேசமானது பற்றித் திருவாலியென வழங்கப்படுமென்பர், ஆலிங்கனம் என்பதன் ஏகதேசம் நாம்மாயிற்று.

எவ்வுள் –எம்பெருமான் சாலிஹோத்ர மஹாமுனிக்கு ப்ரத்யக்ஷமாகி “வாஸம் பண்ணுவதற்குத் தருதியான உள் எவ்வுள்? என வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளுரென்று திருநாம்மாயிற்றென்ப கிம்க்ருஹம் எனபர் வடமொழியில்

கண மங்கை – கண்ணமங்கை யென்பதன் தொகுத்தல்

மின்னை இருசுடரை –மின்னல்போலவும் சந்திர ஸூரியர்கள் போலவும் பளபளவென்று விளங்குபவன் என்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்

மின் என்று மின்னற் கொடிபோன்ற பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய், இருசுடர் என்று ஸூர்ய சந்திரர்களுக்கொப்பான திருவாழி திருச்சங்குகளைச் சொல்லிற்றாய் இம்மூவரின் சேரத்தியைச் சொல்லுகிறதாக அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவுள்ளம்

“அங்கு நிற்கிறபடி யெங்ஙனே யென்னில், பெரிய பிராட்டியாரோடும் இரண்டருகுஞ் சேர்ந்த ஆழ்வார்களோடுமாயிற்று நிற்பது“ என்ற ஸ்ரீஸூக்தி காண்க.

வெள்ளறை – வெண்மையான பாறைகளாலியன்ற மலை, (அறை –பாறை) இது வடமொழியில் ச்வேதாத்ரி எனப்படும்.

புட்குழி – புள் ஜடாயுவென்னும் பெரியவுடையார் அவரைக் குழியிலிட்டு ஸம்ஸ்பரித்தவிடமென்று சொல்லுதல பற்றிப் புட்குழி யென்று திருநாமமாயிற்றென்பர், போரேறு – ஸமரபுங்கவன் என்று வடமொழித் திருநாமம் ஸமர – யுத்தத்தில் புங்கவ – காலை போலச் செருக்கி யுத்தம் நடத்துபவர்.

அரங்கம் – எம்பெருமான் ரதியை அடைந்த இடம், ரதியானது ஆசைப்பெருக்கம். அதனை யடைந்து (ஆசையுடன்) வாழுமிடம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் ஸூர்யமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்திலும் இனிய தென்று திருமால் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமான தென்பதுபற்றி ‘ரங்கம்‘ என்று அவ்விமாநத்திற்குப் பெயர். அதுவே லக்ஷணையால் திவ்ய தேசத்திற்குத் திருநாமமாயிற்று. தானியாகுபெயர்.

இனி, ரங்கமென்று கூத்தாடு மிடத்துக்கும் பெயராதலால், திரு அரங்கம் –பெரிய பிராட்டியார் ஆநந்தமுள்ளடங்காமல் நிருந்தஞ் செய்யுமிடம் என்றும் மற்றும் பலவகையாகவங் கொள்ளலாம்.

————

வல்ல வாழ்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் ——–118
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119
மன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்
சென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத் ——–120
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை யரியை யருமறையை——-121
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னு மிடை கழி எம்மாயவனைப் பேயலறப் ——-122
பின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய்
அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்——-123
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —–124

பதவுரை

வல்லவாழ்

திருவல்லவாழிலே எழுந்தருளியிருக்கிற
பின்னை மணாளனை

நப்பின்னை நாயகனாய்
பேரில் பிறப்பு இலியை

திருப்பேர் நகரிலெழுந்தருளியிருக்கிற நித்யஹித்தனாய்
தொல் நீர் கடல் கிடந்த

என்று மழியாத நீரையுடைய கடலிலே பள்ளிகொள்பவனாய்
தோளா மணி சுடரை

துளைவிடாத ரத்னம்போலே ஜ்வலிப்பவனாய்
என் மனத்து மாலை

என்மேல் வ்யாமோஹ்முடையனாகி எனது நெஞ்சை விட்டுப்பிரியாதவனாய்
இடவெந்தை ஈசனை

திருவிடவெந்தையிலெழுந்தருளியிருக்கிற ஸர்வேவரனாய்
கடல் மல்லை மன்னும் மாயவனை

திருக்கடலமல்லையிலே நித்யவாஸம் செய்யும் ஆச்சரியானாய்
வானவர் தம் சென்னி மணி சுடரை

நித்ய ஸூரிகளுடைய சிரோபூஷணமாக விளங்குமவனாய்
தண்கால் திறல் வலியை

திருத்தண்காலில் எழுந்தருளியிருக்கிற மஹா பலசாலியாய்
தன்னை பிறர் அறியா த்த்துவத்தை

(தனது திருவருளுக்கு விஷயமாகாத) பிறர் அறிந்துகொள்ள முடியாத ஸ்வரூபத்தை யுடையனாய்
முத்தினை

முத்துப்போன்றவனாய்
அன்னத்தை

ஹம்ஸாவதாரஞ் செய்தவனாய்
மீனை

மத்ஸ்யாவதாரஞ் செய்தவனாய்
அரியை

நரஸிம்ஹாவதாரஞ் செய்தவனாய் (அல்லது) ஹயக்ரீ வாவதாரஞ் செய்தவனாய்
அருமறையை

ஸகல விதயாஸ்வருபியாய்
முன இ உலகு உண்ட முர்த்தியை

முன்னொருகால் இவ்வுலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸ்வாமியாய்
கோவலூர் இடைகழி மன்னும் எம்மாயவனை

திருக்கோவலூரடை கழியில் நித்யவாஸம் பண்ணுகிற எங்கள் திருமாலாய்
பேய் அலற முலை உண்ட பிள்ளையை

பூதனையானவள் கதறும்படியாக அவளது முலையை உண்ட பிள்ளையாய்
அன்னம்

ஹம்ஸங்களானவை
அள்ளல் வாய்

சேற்று நிலங்களில்
இரை ரே அழுந்தூர்

இரைதேடும்படியான திருவழுந்துரில்
எழும் சுடரை

விளங்கும் சோதியாய்
தென் தில்லை சித்தரை கூடத்து என் செலவனை

தென் திசையிலுள்ள தில்லைத் திருச்சித்திர கூடத்தில் (எழுந்தளியிருக்கிற) எனது செல்வனாய்
மழை

மேகங்களானவ
மின்னி

பளபளவென்று மின்னிக் கொண்டு
தவழும்

சிகரங்களில் ஸஞ்சரிக்கப்பெற்ற
வேங்கடத்து

திருவேங்கட மலையில் (எழுந்தருளியிருக்கிற)
எம் பித்தகனை

நமக்கு ஆச்சர்யகரமான குண சேஷ்டிதங்களை யுடையனாய்.

***- வல்லவாழ் – மலைகாட்டுத் திருப்பதிகள் பதின்முன்றனுள் ஒன்று, நம்மாழ்வாராலும் மங்களாசாஸனஞ் செய்யப்பெற்ற தலம். இதனைத் திருவல்லாய் என்று மலையாளர் வழங்குகின்றனர். வல்லவாழ்ப் பின்னை மணாளனை – நப்பின்னைப் பிராட்டியை மணம்புரிவதற்குக் கொண்ட கோலத்துடன் திருவல்லவாழில் இவ்வாழ்வார்க்கு ஸேவைஸாதித்தன்ன் போலும்.

பேர் –திருப்பேர்நகர், அப்பக்குடத்தான் ஸந்நிதி. பேரில் பிறப்பிலியே – அடியவர்களுக்காகப் பலபல பிறவிகள் பிறந்திருந்தும் இதுவரை ஒரு பிறப்பும் பிறவாதவன்போலும் இனிமேல்தான் பிறந்து காரியஞ் செய்யப் பாரிப்பவன்போலும் ஸேவைஸாதிக்கிறபடி.

தோளாமணிச்சுடரை – தோளுதலாவது துளைத்தல், துளைத்தல் செய்யாத மணி யென்றது – அநுபவித்து பழகிப் போகாமல் புதிதான ரத்னம் என்றபடி. (துளைவிட்டிருந்தால் நூல்கோத்து அணிந்து கொள்ளுவர்கள்) “அநாலித்தம் ரத்நம்“ என்று வடநூலாரும் சொல்லுவர்கள்.

இடவெந்தை இத்தலத்திலெழுந்தருளியுள்ள வாஹப்பெருமாள் தமது தேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால் இத்தவத்திற்கு திருவிடந்தை யென்று திருநாமமாயிற்று.

தன்கால் இது ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு ஸமீபத்திலுள்ளது. திருத்தாங்கல் என்று ஸாமாந்யர் வ்யவஹிப்பர்கள். தன்கால் என்பதற்குக் குளிர்ந்த காற்று என்று பொருள், சீதவாதபுர மென்பர்.

திறல்வலி –எதிரிகளை அடக்கவல்ல பெருமிடுக்கன்.

தன்னைப் பிறரறியாத் த்த்துவத்தை – தனான தன்மையைத் தானே நிர்ஹேதுக்ருபையால் காட்டி ஆழ்வார் போல்வர்க்கு அறிவிக்கலாம்தனை யொழிய மற்றையார்க்கு ஸ்வப்ரயத்நத்தால் அறிய வொண்ணாதபடி.

முத்தினை – முத்துப்பொலே தாபஹரனானவனை

அன்னத்தை மீனை அரியை

ஹரி என்னும் வடசொல்லுக்குப் பதினைந்து அர்த்தங்களுண்டு, *********** பிரகிருத்த்தில் குதிரை சிங்கம் என்கிற இரண்டு பொருள்கள் கொள்ளலாம். குதிரையென்று கொண்டால் ஹயக்ரீவாவதாரஞ் செய்தபடியைச் சொல்லிற்றாகிறது. சிங்கமென்று கொண்டால் நரசிங்காவதாரஞ் சொல்லிற்றாகிறது. ஹம்ஸாவதாரம் மத்ஸ்யாவதாரம் ஹயக்ரீவாவதாரம் என்ற மூன்றாவதாரங்களும் வித்யொப தேசத்திற்காகச் செய்தருளினவையாம்.

அருமறையை – ஸகல வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுவன் என்ற கருத்து.

கோவலூர் – மாயவனை – கோபாலன் எனப்படுகிற ஆயனார் எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசமானதுபற்றி இதற்குத் திருக்கோவலூரென்று திருநாமமாயிற்று. வடமொழியில் இது கோபாலபுரம் எனப்படும். “பாவருந்தமிழற் பேர்பெறு பனுவந் பாவலர் பாதிகாளிரவின், மூவரு நெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி பாடின தலம் இது.

இடைகழி – தேஹளீ என்று வடமொழியிற் கூறப்படும். “வாசற்கடை கழியாவுள்புகா காம்ரூபங்கோவல் இடைகழிய பற்றியினி நீயுந்திருமகளும் நின்றாயால்“ என்ற பொய்கையாழ்வார் பாசுரம் நோக்குக.

அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூர் – “சேறு கண்டு இறாய்க்கக்கடவ அன்னங்களும் சேற்றைக்கண்டு இறாயாதே மேல் விழுந்து ஸஞ்சரிக்கும்படியான போக்யதை யுடைய திருவழுந்தூரிலே நித்யவாஸம் பண்ணுகிற நிரவதிக தேஜோரூபனை“ என்ற அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீஸூக்தி காண்க.

அழுந்தூர் – தனது தபோபலத்தால் விமானத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சரிக்குந் தன்மையனான உபரி வஸுவென்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த விவாதத்தில் பஷபாதமாகத் தீர்ப்புச் சொன்னமையால் ரிஷிகளால் சபிக்கப்பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர் அழுத்தப்பெற்ற இடமானதுபற்றி இதற்கு அழுந்தூரென்று பெயர் வந்த்தென்பர், தேரழுந்தூர் எனவும் வழங்குவர் பிரகிருத்த்தில் மூலத்திலுள்ள தேர் என்னுஞ் சொல் ரதத்தைச் சொல்வதல்ல, தேர்தலாவது தேடுதல் புள்ளுப்பிள்ளைக் கிரைதேடு மழுந்தூரென்க.

தென் தில்லைச் சித்திரகூடம் – சித்தரகூடம் – விசித்திரமான சிகரங்களையுடையது, இது ஸ்ரீராமபிரான் வநவாஸஞ் செய்தபொழுது அவ்வெம்பெருமானது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்த்தொருமலை, அதனைப்போலவே இத்தலமும் எம்பெருமான் திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருப்பதென்பதுபற்றி அப்பெயரை இதற்கும் இடப்பட்ட தென்பர். இங்கு உத்ஸவ மூர்த்தி இராமபிரான் வனவாஸஞ் செய்கையில் சித்திரகூட பர்வத்த்தில் வீற்றிருந்த வண்ணமாக எழுந்தருளியிருக்கின்றனர். மூலமூர்த்தி க்ஷீராப்தி நாதன் போலச் சயனத் திருக்கோலமாகிச் சிவபிரானது நடனத்தைப் பார்த்து ஆமோதித்துக் கொண்டிருக்கின்றனர். இது தில்லை மரங்களடர்ந்த காடாயிருந்தனால் தில்லை திருச்சித்திர கூடமென வழங்கப்படும். இது எம்பெருமான் தேவர்களும் முனிவர்களுஞ் சூழக் கொலுவிற்றிருந்த ஸபை.

வேங்கடம் – தன்னையடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடமெனப் பெயர் பெற்றது வடசொல், வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப்பொருள் காண்க.

“அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசலமெனும் பேர், வைத்தனாதுவேதென்னில் – வேமெனவழங்கெழுந்தே, கொத்துறுபவத்தைக்கூறும்  கடவெனக் கூறிரண்டாஞ், சுத்தவக்கரம் கொளுத்தப்படுமெனச் சொல்வர் மேலோர“ என்றும்

“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திரடச்செய்வதால் நல் மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடலையான தென்று“ என்றுமுள்ள புராணச் செய்யுள்கள் காண்க.

அன்றி, வேம் என்பது அழிவின்மை. கடம் என்பது ஐச்வர்யம், அழிவில்லாத ஐச்வரியங்களைத் தன்னையடைந்தார்க்குத் தருதலால் வேங்கடமெனப்பெயர் கொண்ட தென்றலுமுண்டு.

————

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்
கொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் —-125
அன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை —-126
மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை
மன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில்—127
உன்னிய யோகத் துறக்கத்தை-

பதவுரை

மன்ன்னை

ஸர்வேச்வரனாய்
மாலிருஞ்சோலை

திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியிருக்கிற மணவாளப் பிள்ளையாய்
கொல் நவிலும் ஆழிபடையானை

பகைவரைக் கொல்ல வல்ல திருவாழியை ஆயுதமாகவுடையனாய்
கோட்டியூர்

திருக்கோடியூரில்
அன்ன உருவின் அரியை

அப்படிப்பட்ட (விலக்ஷணமான) திருமேனியையுடைய நரஸிம்ஹ மூர்த்தியாய்
திரு மெய்யத்து

திருமெய்யமலையில்
இன் அமுதம் வெள்ளத்தை

இனிதான அம்ருத ப்ரவாஹம் போல் பரம போக்யனாய்
இந்தளூர்

திருவிந்தளூரில்
அந்தணனை

பரமகாருணிகனாய்
மன்னு மதிள்

பொருந்திய மதிகள்களையுடைய
கச்சி

காஞ்சிநகரத்தில்
வேளுக்கை ஆனரியை

வேளுக்கை யென்கிற தலத்திலுள்ள ஆளழகிய சிங்கராய்
பாடகத்து மன்னிய எம்மைந்தனை

திருப்பாடகத்தில் நித்யவாஸம் பண்ணுகிற எமது யுவரவாய்,
வெஃகாவில்

திருவெஃகாவில்
உன்னியயோகத்து உறக்கத்தை

ஜாகரூகனாகவே யோகநித்ரை செய்பவனாய்

மாலிருஞ்சோலை “ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையிதே“ என்றபடி மிகப்பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் மாலிருஞ்சோலை யென்று திருநாமம் உயர்ந்து பரந்தசோலைகளையுடைய மலை. வந்திரி எனப்படும்.

கோட்டியூர் – ஹிரண்யாஸுரன் மூவுலகத்தையும் ஆட்சி செய்த காலத்தில் தேவர்கள் அய்வஸுரனை யொழிப்பதற்கு உபாயத்தை ஆலோசிப்பதற்கு ஏற்றதாய் அஸுரர்களின் உபத்ரவமில்லாதான இடத்தைத் தேடுகையில் கதம்ப முனிவரது சாபத்தால் ‘துஷ்டர் ஒருவரும் வரக்கூடாது‘ என்று ஏற்பட்டிருந்த இந்த க்ஷேத்ரம் அவர்கள் கூட்டமாக இருந்து ஆலோசிப்பதற்கு ஏற்ற இடமாயிருந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு கோஷ்டீபுரம் என்று வடமொழியில் திருநாமம், அதுவே கோட்டியூரெனத் தமிழில் வழங்குகிறது.

அன்னவுருவினரியை – “வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர் நாதனை நரசிங்களை“ என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்காண்க. தெக்காழ்வாரைக் குறித்தபடி.

திரு மெய்யம் – ஸத்ய தேவதைகள் திருமாலை நோக்கித் தவஞ்செய்த தலமானது பற்றி இத்திருமலை ஸத்யகிரி யென்றும் எம்பெருமான் ஸத்யகிரிநாரென்றும் பெயர் பெறுவர். ஸத்யகிரியென்ற அச்சொல்லை திருமெய்யமலை யென்றும், அத்திருப்பதி திருமெய்ய மென்றும் வழங்கப்பெறும்

இந்தளூர் – சந்திரன் தனது சாபம் நீங்கப்பெற்ற தலமாதலால் திருவிந்தளூரென்று திருநாமமாயிற்றென்பர். இந்துபுர் எனப்படும். ஸுகந்தவநம் என்றொரு திருநாமமும் வழங்குகின்றது.

அந்தணனை – “அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்“ (திருக்குறள்) என்றபடி அழகிய தன்மையையுடையவனென்று பொருளாய், பரமகாருணிகனென்றதாம். “அறவனை ஆழிப்படை அந்தண்னை“ என்றார் நம்மாழ்வாரும்.

வேளுக்கை – காஞ்சீபுரத்திலுள்ள திருப்பதிகளில் ஒன்று “வேள்இருக்கை“ என்பது மருவிற்றுப்போலும் வேள் – ஆசை, எம்பெருமான் தனது ஆசையினாலே வந்திருக்கும் தலம் என்றவாறாம் இத்திவ்ய தேசத்தைப்பற்றி ஸ்ரீவேதாந்த தேசிகன் அருளிச்செய்த காமஸிகாஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தில் “காமாத் அதிவஸந் ஜீயாத் கச்சித் அற்புத கேஸா“ என்றமையால் வேளுக்கை யென்பதற்கு இங்ஙனே பொருளாமென்று தோன்றுகிறது. காமாஸிகா என்பதன் அர்த்தமும் இதுவேயாம். காமேந ஆஸிகா – தன் ஆசையினாலே இருக்குமிடம். ஆளரியை – ஆளழகிய சிங்கர்ஸந்திதி என்று வ்யவஹரிக்கப்படும்.

பாடகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள பாண்டவ தூதர் ஸந்நிதி. “பாடுஅகம்“ என்ற பிரிக்க பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்கை. கண்ணன் பாண்டவதூதனாய்த் துரியோதனைனிடஞ் சென்றபொழுது துர்யோதன்ன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நீலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அநேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து

அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேமூடி அதன் மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல அங்ஙனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன்மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற் பிளப்புகள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கி பிலவறையிற் செல்லுமளவில்,

அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துப் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத் திருக்கோலத்திற்கு ஸ்மாரகமாகப் பெரிய திருமேனியோடே ஸேவை ஸாதிக்குமிடம் பாடகம்.

பாடு-பெருமை. (“அரவுநின் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரியமேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தேன்“ என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தில் அநுஸந்திக்கப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவை ஸாதிக்குமாறு காண்க.

வெஃகா – கச்சியில் ஸ்ரீ யதோத்தகாரி ஸந்நிதி. இவ்வெம்பெருமான் பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுக்கும்பொருட்டு அதற்கு அணையாகக் குறுக்கில் பள்ளிக்கொண்டருளினவனாதலால், அப்பிரானுக்கு, வடமொழியில் “வேகாஸேது“ என்று பெயர். அது தமிழில் “வேகவணை“ என்று மொழிபெயர்ந்து, அது பின் (நாகவணை யென்பது நாகணையென விகாரப்படுதல் போல) வேகணை என விகாரப்பட்டு, அது பின்னர் வெஃகணை“ எனத்திரிந்து, தானியாகுபெராய்த் தலத்தைக் குறித்து, அதுபின்பு வெஃகா என மருவி வழங்கிற்றென நுண்ணிதின் உணர்க.

———

ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை ——128
என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129
அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் ——130
மன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் ———131
மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் ——–132
கண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர்
மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் ——–133
கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——–134
தன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்——135
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்
கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும்—–136
தன்னிலை எல்லாம் அறிவிப்பன்

பதவுரை

ஊரகத்துள் அன்னவனை

திருவூரகத்தில் விலக்ஷணனாய்
அட்ட புயகரத்து எம்மான் எற்றை

அட்டபுயகரதலத்திலுள்ள அஸ்மத் ஸ்வாமி சிகா மணியாய்
என்னை மனம் கவர்ந்த ஈசனை

எனது நெஞ்சைக் கொள்ளைகொண்ட தலைவனாய்
வானவர் தம் முன்னவனை

தேவாதிராஜனாய்
மூழிக்களந்து விளக்கினை

திருமூழிக்களத்தில் விளங்குபவனாய்
அன்னவனை

இப்படிப்பட்டவனென்று சொல்ல முடியாதவனாய்
ஆதனூர்

திருவாதனூரில்
ஆண்டு அளக்கும் ஐயனை

ஸகல காங்களுக்கும் நிர்வாஹகனான ஸ்வாமியாய்
நென்னலை இன்றினை நாளையை

நேற்று இன்று நாளை என்னும் முக்காலத்துக்கும் ப்ரவர்த்தகனாய்
நீர்மலை மேல் மன்னும்

திருநீர்மலையிலெழுந்தருளியிருக்கிற
மறை நான்கும் ஆனானை

சதுர்வேத ஸ்வரூபியாய்
புல்லாணி

திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற
தென்னன் தமிழை வடமொழியை

உபயவேத ப்ரதிபாதயனாய்
நாங்கூரில்

திருநாங்கூரில்
மணிமாடக்கோயில் மன்னு மணாளனை

மணிமாடக் கோயிலில் நித்ய வாஸம் பண்ணுகிற மணவாளப் பிள்ளையாய்
நல் நீர் தலைச் சங்கம் நாண்மதியை

நல்ல நீர்சூழ்ந்த தலைச்சங்க நாட்டிலுள்ள நாண் மதியப் பெருமாளாய்
நான் வணங்கும் கண்ணனை

நான் வணங்கத்தக்க கண்ணனாய்
கண்ணபுரத்தானை

திருக்கண்ணபுரத் துறைவானாய்
தென் நறையூர்மணி மாடக்கோயில் மன்னுமணுள்னை

திருநறையூர் மணிமாடமென்று ப்ரஸித்தமான ஸந்நிதியில் எழுந்தருளியிருக்கிற மணவாளனாய்
கல் நவில் தோள் காளையை

மலையென்று சொல்லத்தக்க தோள்களையுடைய யுவாவாயுள்ள ஸர்வேச்வரனை
ஆங்கு கண்டு கை தொழுது

அவ்வவ்விடங்களில் கண்டு ஸேவித்து
என் நிலைமை எல்லாம் அறிவித்தால்

எனது அவஸ்தைகளையெல்லாம் விண்ணப்பஞ்செய்து கொண்டால் (அதுகேட்டு)
எம்பெருமான்

அப்பெருமான்
தன் அருளும் ஆக மும் தாரான்ஏல்

தனது திருவருளையும் திருமார்பையும் எனக்குத் தக்க தருவானாகில்
தன்னை

அவ்வெம்பெருமானை
நான்

(அவனது செயல்களையெல்லாமறிந்த) நான்
மின் இடையார் சேரியிலும்

ஸ்த்ரீகள் இருக்கும் திரள்களிலும்
வேதியர்கள் வாழ்வு இடத்தும்

வைதிகர்கள் வாழுமிடங்களிலும்
தன் அடியார்முன்பும்

அவனது பக்தர்கள் முன்னிலையிலும்
தரணி முழுதும் ஆளும் கொல் நலிலும் வேல்வேந்தர் கூட்டத்தும்

பூ மண்டலம் முழுவதையும் ஆள்கின்றவராயும் கொடிய படைகளை யுடையவராயுமிருக்கிற அரசர்களுடைய ஸபைகளிலும்
நாடு அநத்து

மற்றுமு தேசமெங்கும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன்

அவன் படிகளை யெல்லாம் பிரகாசப்படுத்தி விடுவேன்.

ஊரகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் ஸந்நிதி. இத்தலத்தில் திருமாள் உரகருபியாய் ஸேவை சாதிப்பதுபற்றி இத்திருப்பதிக்கு ஊரகம் என்று திருநாமமென்பர், உரகம் – பாம்பு வடசொல்.

அட்டபுயகரம் –இத்தலத் தெம்பெருமானுக்கு எட்டுத் திருக்கைகள் உள்ளது பற்றி அஷ்டபுஜன் என்று திருநாமமாய் அவன் எழுந்தருளியிருக்கின்ற கரம் – க்ருஹம் ஆதல்பற்றி அட்டபயக்ரமென வழங்கப்படும் அட்டபுயவகரம் என்பதன் மரூஉ வென்பாருமுளர்.

என்னை மனங்கவர்ந்த வீசனை வானவர்தம் முன்னவனை – வானவர்தம் முன்னவனென்று தேவாதிராஜனான பேரருளானப் பெருமாளைச் சொல்லுகிறதென்றும், “என்னை மணங்கவர்ந்த வீசனை“ என்கிற விசேஷணம் இவ்வர்த்தத்தை ஸ்திரப்படுத்துகின்றதென்றும் பெரியோர் கூறுவர். திருமங்கையாழ்வாருடைய மனத்தைக் பேரருளாளன் கவர்ந்தானென்னுமிடம் இவரது. பைவத்திலே காணத்தக்கது. கனவிலே காட்சிதந்து வேகவதியில் நிதியைக் காட்டித் துயர் தீர்த்த வரலாறு.

மூழிக்களம் – மலைகாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று, நம்மாழ்வாராலும் போற்றப்பெற்ற தலம் “மூழிக்களத்து வளத்தனை“ என்றும் பாடமுண்டாம், வளமானது ஸம்பத்து, ஸம்பத் ஸ்வரூபனை யென்றபடி – ஆதனூர் – ஆதன் ஊர் காமதேநுவுக்குப் பிரத்யக்ஷமான கலமாதல்பற்றி வந்த திருநாம மென்பர் ஆ-பசு.

ஆண்டு அளக்கும்ஐயனை –ஆண்டு வருஷம் இது காலத்துக்கெல்லாம் உபலக்ஷணம் ஸகல காலங்களையும் பரிச்சோதிக்க ஸ்வாமி என்றப. காலசக்ரநிர்வாஹகனென்கை. நென்னல் – நேற்றுக் கழிந்தநாள், இறந்த காலத்துக்கெல்லாம் உபலக்ஷணம். “ஆண்டளக்குமையன்“ என்றதை விவரிக்கின்றார் மூன்று விசேஷணங்களாலே, பூத வர்த்தமான பவிஷ்யத் காலங்களுக் குநிர்வாஹக்னென்றவாறு.

நீர்மலை – நீரானது அரண் போலச் சூழப்பெற்ற மலையானது பற்றித் திருநீர்மலை யெனப்படும்.

புல்லணை யென்பதன் மருஉ, ஸீதையைத் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லும் பொருட்டு ஸ்ரீராமபிரான் வாநரஸேனையுடனே புறப்பட்டுச்சென்று தென்கடற்கரையை யடைந்து கடல்கடக்க உபாயஞ் சொல்ல வேண்டுமென்று அக்கடலரசனான வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பத்தில் பிராயோபவேசமாகக் கிடந்த ஸ்தரமாதலால் புல்லனை யெனப்பட்டது. தர்ப்பசயா க்ஷேத்ரமெனவும் படும்.

தலைச்சங்க நாண்மதியை –சிறந்த சங்கத்தை யேந்திய நாண்மதியப் பெருமானுடைய தலமாதல்பற்றித் தலைச்சங்க நாண்மதியமென்று திவ்யதேசத்தின் திருநாமம்.

கன்னவில் தோள்களியை – கீழே “இதுவிளைத்த மன்னன்“ என்று தொடங்கி இவ்வளவும் எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளைப் பற்றிப் பேசினாராயிற்று. கீழே இரண்டாம் வேற்றுமையாக வந்த அடைமொழிகளெல்லாம் இங்கு அந்வயித்து முடிந்தன.

இப்படிப்பட்ட எம்பெருமானை ஆங்காங்குச் சென்று ஸேவித்து “ஸ்வாமிந்! இப்படிதானா என்னைக் கைவிடுவது? விரஹம்தின்றவுடம்பைப்பாரீர்“ என்று என் அவஸ்தையை விண்ணப்பஞ்செய்வேன்,

அதுகேட்டு திருவுள்ள மிரங்கித் திருமார்போடே என்னை அணைத்துக்கொள்ளாவிடில் மாதர்களும் வைதிகர்களும் பக்தர்களும் அரசர்களும் திரண்டுகிடக்குமிடங்கள் தோறும் புகுந்து அவனது ஸமாசாரங்களை யெல்லாம் பலரறிய விளம்பரப்படுத்துவேனென்றாயிற்று.

ஆண்டாள் ஆய்ச்சிமார்போன்ற பெண்ணரசிகளும், பெரியாழ்வார் வ்யாஸர் பராசர்ர்போன்ற வைதிகர்களும், இளையபெருமாள் ப்ரஹ்லாதன்போன்ற பக்தர்களும், குலசேகரப் பெருமான் தொண்டைமான் சக்கரவர்த்தி போன்ற அரசர்களும் இவனுடைய பெருமேன்மைகளைச் சொல்லிக்கொண்டு ப்ரமித்துக் கிடப்பர்களே,

அங்கங்கெல்லாம் நான் சென்று அவனைப்போன்ற நிர்க்குணன் இவ்வுலகில் எங்குமில்லை“ என்று பறையடித்து எல்லாரும் அவனைக் கைவிடும்படி பண்ணி விடுகிறேன் பாருங்களென்கிறார்.

“லோகமடங்கத் திரண்டவிடங்களிலே சென்று “ஸேச்வரம் ஜகத்து“ என்று ப்ரமித்திருக்கிறவர்களை “நிரீச்வரம் ஜகத்து“ என்றிருக்கும்படி பண்ணுகிறேன்“ என்ற வியாக்கியான ஸூக்தியுங் காண்க.

————

தான் முன நாள்
மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்——-137
துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்
தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்———138
மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கையிற்றால்
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்——–139

பதவுரை

முனம் நாள்

முற்காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்)
மின் இடை ஆச்சியர் தம் சேரி

மின்போல் நுண்ணியஇடையையுடைய இடைச்சிகளின் சேரியிலே
தன்னு படல் திறந்து

நெருக்கமாகக் கட்டிவைத்த படலைத்திறந்து
களவின்கண் புக்கு

திருட்டுத்தனமாகப் புகுந்து
தயிர் வெண்ணெய்

தயிரையும் வெண்ணெயையும்
தன் வயிறு ஆர தான் விழுங்க

தனது வயிறு நிறையும்படி வாரியமுதுசெய்த வளவில்
கொழு கயல் கண்மன்னு மடவோர்கள்

நல்ல கயல்மீன் போன்ற கண்களையுடைய அவ்வாயர் மாதர்
பற்றி

பிடித்துக்கொண்டு
ஓர் வான் கயிற்றால்

ஒரு குறுங்கயிற்றால்
உரலோடு

உரலோடே பிணைத்து (க்கட்டிவிட)
கட்டுண்ட பெற்றிமையும்

(கட்டையவிழ்த்துக் கொள்ளமாட்டாமல்) கட்டுண்டு கிடந்தன்மை யென்ன.

என்னினைவைத் தலைக்கட்டாவிடில் அவனுடைய ஸமாசாரங்களையெல்லாம் தெருவிலே எடுத்து விடுகிறேனென்று கீழ்ப் பிரதிஜ்ஞை பண்ணினபடியே சில ஸமாசாரங்களை யெடுத்துவிடத் தொடங்குகிறாள் பரகாலநாயகி –

“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியுமாகப்பெற்றான், பற்றியுரலிடையாப்புமுண்டான் பாவிகாளுங்களுக்கு எச்சுக்கொலோ? நற்றெனபேசி வசவுணாதே“ என்று – எம்பெருமானுடைய சரிதைகளை இழிவாகக் கூறி ஏசுமவர்களை வாய்புடைக்கவேண்டிய இவ்வாழ்வார் தாமே ஏசத்தொடங்குவது ப்ரணயரோஷத்தின் பரம காஷ்டையாகும்.

“ஏசியே யாயினும் ஈனதுழாய் மாயனையெ பேசியே போக்காய் பிழை“ என்பாருமுண்டே. குணகீர்த்தனங்களில் இதுவும் ஒரு ப்ரகாரமேயாகும்.

இவ்வாழ்வார்தாமே பெரிய திருமொழியில் பதினோராம்பத்தில் மானமருமென்னோக்கி என்னுந் திருமொழியில், இரண்டு பிராட்டிகளின் தன்மையை எக்காலத்தில் அடைந்து முன்னடிகளால் இகழ்ந்துரைப்பதும் பின்னடிகளால் புகழ்ந்துரைப்பதுமாக அநுபவித்த்தும் அறியத்தக்கது.

(தான்முனநாள் இத்யாதி) இடைச்சிகளின் சேரியில் பிரவேசித்து, படல்மூடியிருந்த மனைகளிலே திருட்டுத்தனமாகப் படலைத் திறந்துகொண்டு புகுந்து தயிரையும் வெண்ணெயையும் வயிறு நிறைய விழிக்கினவளவிலே அவ்வாயர் மாதர்கண்டு பிடித்துக்கொண்டு உரலோடே இணைத்துக் கயிற்றாலே கட்டிப்போட்டு வைக்க ஒன்றுஞ் செய்யமாட்டாமல் அழுது ஏங்கிக் கிடந்தானே, இது என்றைக்கோ நடந்த காரியமென்று நான் விட்டுவிடுவேனோ? இவ்வழிதொழிலை இன்று எல்லாருமறிந்து “கள்ளப்பையலோ இவன்“ என்று அவமதிக்கும்படி செய்து விடுகிறேன் பாருங்கள் – என்கிறாள்.

பெற்றிமையும், தெற்றெனவும் சென்றதுவும் என்கிற இவையெல்லாம் மேலே “மற்றிவை தான் உன்னி யுலவா“ என்றவிடத்தில் அந்வயித்து முடிவுபெறும். இப்படிப்பட்ட இவனுடைய இழிதொழில்கள் சொல்லி முடிக்கப் போகாதவை என்றவாறு.

“தன் வயிறார“ என்றவிடத்து “திருமங்கையாழ்வாரைப் போலே பரார்த்தமாகக் கனவு காண்கிறதன்று“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்தி காண்க.

வான்கயிறு என்றது எதிர்மறையில் கனையினால் குறுங்கயிறு என்று பொருள்படும்.  கண்ணி நுண் சிறுத்தாம்பினாவிறே கட்டுண்டது.

—————

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை——–140
முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்

பதவுரை

ஆயர் விழவின் கண்

இடையர்கள் (இந்திரனுக்குச் செய்த) ஆராதனையில்
துன்னு சகடத்தால் புக்க பெரு சோற்றை

பலபல வண்டிகளால் கொண்டுசேர்த்த பெருஞ்சோற்றை
அன்னது ஓர் பூதம் ஆய்

வருணிக்க முடியாத வொருபெரும் பூகவடிவு கொண்டு
முன் இருந்து

கண் முன்னேயிருந்து கொண்டு
முற்ற

துளிகூட மிச்சமாகாதபடி
தான்

தானொருவனாகவே
தூற்றிய

உட்கொண்ட
தெற்றௌவும்

வெட்கக்கேடென்ன.

 

இன்னு சகடத்தால்புக்க – சிலர் தலை மேலே சுமந்துகொண்டு போய்க்கொட்டின சோறன்று பல்லாயிரம் வண்டிகளில் ஏற்றிக் கொண்டுபோய்ப் பெரிய மலைபோலே கொட்டிவைத்த பெருஞ்சோறு, இவற்றையெல்லாம் ஒரு திரை வளைத்துக்கொண்டாவது உண்டானோ? இல்லை,

முன்னிருந்து உண்டான அதிலே சிறிது சோறு மிச்சமாமபடி உண்டானோ? இல்லை, முற்றத்துற்றினால், உற்றாருறவினர்க்கும் சிறிது கொடுத்து உண்டானோ? அதுவுமில்லை, முற்றவும் தானே துற்றினான்,

இப்படி வயிறுதாரித்தனம் விளங்கச் செய்த செயலுக்குச் சிரிது வெட்கமாவது பட்டானோ? அதுவுமல்லை. இப்படிப்பட்ட வெட்கக்கேடான செய்தியைத் தெருவேறச் சொல்லிக்கொண்டுபோய் “வயிறுதாரிப் பையலோ இவன்“ என்று எல்லாரும் அமைதிக்கும்படி செய்துவிடுகிறேன். பாருங்கள் என்கிறாள்.

————–

மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—–141
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்

பதவுரை

முனம் நாள்

முன்னொரு காலத்தில்
வாழ்வேந்தர் தூதன் ஆய்

பாண்டவர்களுக்குத் தூதனாய்
தன்னை இகழ்ந்து உரைப்ப

(கண்டாரங்கலும்) இழிவாகச் சொல்லும்படியாக
மன்னர் பெருசவையுள் சென்றதும்

(துரியோதனாதி) அரசர்களுடைய பெரிய சபையிலே சென்றதென்ன

கண்ணபிரான், பாண்டவர்களையும் துர்யோதநாதிகளையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதனாதியரிடம் தூது சென்ற வரலாறு ப்ரஸித்தமேயாம்

“கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலங் கூறிடுவான், தூதனாய் மன்னவனாய் சொல்லுண்டான்“ என்கிற இவ்விழிதொழிலை நாடறியச் சொல்லி “ஒரு வேலைக்காரப் பையவோ இவன்“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் என்கிறாள்.

————

மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—-142
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்————–143

பதவுரை

மங்கையர் தம் கண் களிப்ப

(இடைப்) பெண்களின் கண்களிக்கும்படி
மன்னு பறை கறங்க

(அரையிலே) கட்டிக்கொண்ட பறை ஒலிக்க
கொல்சவிலும் கூத்தன் ஆய்

(பெண்களைக்) கொலை செய்கின்ற கூத்தையாடுபவனாய்
போத்தும்

மேன்மேலும்
குடம் ஆடி

குடங்களை யெடுத்து ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்

“இப்படியும் கூத்தாடுவானொருவனுண்டோ!“ என்னும்படி பெற்ற சீர்கேடென்ன

கண்ணபிரான் அரையிலே பறையைக் கட்டிக்கொண்டு குடக்கூத்தாடுவது சாதி வழக்கத்தை அநுஸரித்த ஒரு காரியம்.

அந்தணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகம் செய்வதுபோல இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடுவார்கள்.

கண்ணபிரானும் சாதிமெய்ப்பாட்டுக்காக “குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே“ என்றபடி அடிக்கடி குடக்கூத்தாடுவது வழக்கம்.

தலையிலே அடுக்குக்குடமிருக்க. இரு தோள்களிலும் இரு குடங்களிருக்க, இருக்கையிலுங் குடங்களை ஏந்தி ஆகாயத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து இது என்பர்.

இதனைப் பதினோராடலிலொன்றென்றும் அறுவகைக் கூத்திவொன்றென்றும் கூறி, “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலதனுக் கடைக்குப வைந்துறுப் பாய்ந்து“ என்று மேற்கோளுங் காட்டினர் சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார்.

இவன் சில பெண்களைப் பிச்சேற்றுவதற்காகக் கூத்தாடினபடியைப் பலருமறியப்பேசி, “கூத்தாடிப் பையலோ இவன்!“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் என்றானாயிற்று.

ஈடறவு – சீர்கேடு, ஈடு- பெருமை, அஃது இல்லாமை – அற்பத்தனம் வீடறவும் என்று பிரித்து கூத்தனின்றும் மீளாமை என்று சிலர் சொல்வது எலாது.

————-

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் –

பதவுரை

தென் இலங்கை யாட்டி

தென்னிலங்கைக்கு அரசியும்
அரக்கர் குலம் பாவை

ராக்ஷஸ குலத்தில் தோன்றிய புதுமை போன்றவளும்
மன்ன்ன் இராவணன் தன் நல் தங்கை

பிரபுவாகிய ராவணனது அன்புக்குரி தங்கையானவளும்
வாள் எயிறு

வாள் போன்றபற்களையுடையளும்
துன்னு சுடு சினத்து

எப்போதும் (எதிரிகளைச்) சுடக்கடவதான் கோபத்தை யுடையளுமான
சூர்ப்பணகா

சூர்பணகை யென்பவள்
புலர்ந்து எழுந்த காமத்தால்

அதிகமாக வுண்டான காம நோயினால்
பொன் நிறம் கொண்டு

வைவர்ணிய மடைந்து
சோர்வு எய்தி

பரவசப்பட்டு (தளர்ந்து)
தன்னை நயந்தானை

தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை
தான் முனிந்து

தான் சீறி
மூக்கு அரிந்து

மூக்கையறுத்து
மன்னிய திண்ணெனவும்

இதையே ஒரு ப்ரதிஷ்டையாகநினைத்துக கொண்டிருப்பதென்ன.

ஸ்ரீ பெரிய திருமடல்-பகுதி -1- -ஸ்ரீ உ . வே . ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய வியாக்யானங்கள் —

December 6, 2022

கைகேயியின் சொற்படி நடக்கவேண்டியவனான தசரத சக்ரவர்த்தி இராமபிரானை அழைத்து வாஸஞ் செல்லுமாறு நியமிக்க அந்த நியமனத்தைச் சிரமேற்கொண்ட இராமபிரான் வனத்திற்குப் புறப்படுங்காலத்தில் ஸிதாதேவியிடஞ் சென்று இச்செய்தியைத்  தெரிவித்து ‘நான் போய் வருகிறேன், வருமளவும் நீ மாமனார்க்கும் மாமியார்க்கும் ஒரு குறைவுமின்றிப் பணிவிடை செய்துகொண்டிரு என்று சொல்லுங்கால் தன்னை நிறுத்திப் போவதாகச் சொன்ன வார்த்தையைக் கேட்ட

பிராட்டி மிகவும் கோபித்து ‘என்தகப்பனால் உம்மை ஒரு ஆண்பிள்ளையாக எண்ணி என்னை உமக்குக் கொடுத்தார் ஒரு பெண்டாட்டியை கூட கூட்டிக்கொண்டுபோய்க் காப்பாற்றி ஆளத்தக்க வல்லமையற்றவர் நிர் என்பதை அப்போது அவர் அறிந்திலர் இப்போது அவர்இச்செய்தியை கேட்டால் உம்மை நன்றாக வெகுமானிப்பார் ஒரு பெண்பிள்ளை ஆணுடை யுடுத்துவந்து நம் பெண்ணைக் கைக்கொண்டு போய்ந்துக்காண் என்று நினைப்பர் என்று ரோக்ஷந்தாற்ற வார்த்தை சொல்லி

தன்னையுங் கூட்டிக்கொண்டு போகவேணுமென்று நிர்பந்தித்து காட்டு வழிகளின் கொடுமையையுங் கணிசியாமல் காமஸித்தயையே தலையாகக்கொண்டு போகவில்லையா? இது மடலூர்தல்லவா? என்கிறார்.

தாத என்ற வடசொல் தாதையெனத் திரிந்தது. வலங்கொண்டு – (பலம்) என்ற வடசொல் வலமெனத்திரிந்தது. மனவலிவைச் சொல்லுகிறது. கொண்ட காரியத்தைக் குறையறத் தலைக்கட்டியே விடும்படியான அத்யவஸாயம்.

மன்னும் வளகாடு –மன்னும் –குலக்ரம்மாகத் தனக்கு ப்ராப்தமான என்றுமாம். மாதிரங்கள் –மாதிரம் என்று ஆகாயத்துக்கும் திசைக்கும் பூமிக்கும் மற்றும் பலவற்றுக்கும் வாசகம் “விண்டேர் திரிந்து“ என்று பாடம் வழங்கிவந்தாலும் வெண்டேர் என்றே உள்ளது பிரயோகங்களும் அப்படியே. வடமொழியில் ம்ருகத்ருஷ்ணா என்று சொல்லப்படுகிற கானல் தமிழில் வெண்டேர் என்றும் பேய்த்தேர் என்றும் சொல்லப்படும்.

வெளிப்பட்டு –செடி மரம் முதலியவை இருந்தால் வெய்யிலுக்கு அவற்றின் நிழலில் ஒதுங்கலாமே, அப்படி ஒன்றுமில்லாமல் பார்த்த பார்த்த விடமெல்லாம் வெளி நிலமாயிருக்கை.

கல்நிறைந்து – வழிமுழுவதும் க்றகள் நிரம்பியிருக்கும். தீய்ந்து எனினும் தீந்து எனினும் ஒக்கும். மருகாந்தாரங்களிற் கண்ட விடமெங்கும் தீப்பற்றி எரிந்துகிடக்குமாய்த்து.

கழை –மூங்கில். வெய்யிலின் மிகுதியினால் மூங்கில்கள் வெடித்துக்கிடக்கும் கால்சுழன்று எங்கும் சூறாவளியாய்க்கிடக்கும்.

சூறாவளி – சுழல் காற்று, மனிதரைத்தூக்கி யெறியுங்காற்று.

திரைவயிற்றுப்பேய் –ஜநஸஞ்சாரமுள்ள காடாயிருந்தால் அங்குள்ள பேய்களுக்கு எதாவது உணவு கிடைக்கும் வயிறும் நிரம்பியிருக்கும் நிர்ஜநமான காடாகையாலே பேய்கள் உணவின்றிச் சுருங்கி மடிந்த வயிற்றையுடைடயனவாயிருக்கும்.

திரிந்துலவா – உலவுதலாவதும் ஒழிதலும், திரிந்துலவா என்றது திரிந்து மாளாத என்றபடியாய் எப்போதும் பேய்களே திரிந்துகொண்டிருக்கிறகாடு என்னவுமாம்.

வைதேவி – ஸீதைக்கு வடமொழியில் வைதேஹீ என்று பெயர். விதேஹராஜனான ஜநகனது மகள் என்றபடி. அணங்கு – தெய்வப்பெண் “சூருமணங்கும் தெய்வப்பெண்ணே“ என்பது நிகண்டு.

—————

பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் ———52
கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு ——53
அன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்
கன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் ——–54
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே –

பதவுரை

பின்னும்

அது தவிரவும்
கரு நெடு கண்செம் வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல்

கறுத்து நீண்ட கண்களையும் சிவந்த வாயையும் மான் போன்ற நோக்கையும் மின்போல் ஸூக்ஷம்மான இடையையும் உடையவளாய்
வேகவதி என்று உரைக்கும் கன்னி

வேகவதியென்று சொல்லப்படுபவளான ஒரு பெண்பிள்ளை
தன் இன் உயிர் ஆம் காதலனை காணாது

தனது இனிய உயிர்போன்ற கணவனைத்தான் காண வொட்டாமல்
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக

தனது தமையன்(தடுத்துத்) தன்னைக் கொண்டுபோக
அங்கு

அவ்வவஸ்தையிலே
அன்னவனை

அந்தத் தமையனை
நோக்காது

லக்ஷியம் பண்ணாமல்
தான் சென்று

தான் பலாத்காரமாகப் புறப்பட்டுப்போய்
வாள் அமருள்

பெரிய போர்க்களத்திலே
கல் நவில் தோள் காளையை

மலைபோல் திண்ணிய தேர்களையுடையவனும் காளை போல் செருக்குற்றிருப்பவனுமான தனது காதலனை
அழித்து உரப்பி

இழிவான சொற்களைச் சொல்லி அதட்டி
கை பிடித்து

பாணிக்ரஹணம் செய்து கொண்டு
மீண்டும் போய்

அங்கிருந்து ஸ்வஸதாநந்திலே போய்ச் சேர்ந்து
பொன் நவிலும் ஆகம்

(அக்காதலனுடைய) பொன் போன்ற மார்பிலே
புணர்ந்திலளே

அணையப்பெற்றாளில்லையோ?

வேகவதி என்பாளொரு தெய்வமாதின் சரிதையை எடுத்துக் காட்டுகிறார்.

இதில் சிறிய திருடலிற் சொல்லப்பட்ட வாஸவதத்தையின் சரித்திரத்துக்கு மூலமாகிய புராணம் இன்னதென்றுதெரியாதுபோலவே இவ்வேகதியின் சரிதைக்கு மூலமான புராணமும் இன்னதென்று தெரியவில்லை.

தமிழ்நாடுகளில் ப்ரஸித்தமான பெருங்கதை என்ற தொகுதியில் உதயணன் சரித்திரப் பகுதியில் இத்தெய்வமாதுகளின் வரலாறு ஒருவிதமாக எழுதப்பட்டுள்ளது.

வடமொழியிலும் கதாஸரித்ஸாகரம் என்ற கதைப்புத்தகத்தில் இவர்களின் சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது.

பிற்காலத்தவர்கள் எழுதிய அப்புத்தகங்களை ஆழ்வார் –ஸ்ரீஸூக்திகட்கு மூலமாகச் சொல்ல வொண்ணாது. கதைப்போக்கிலும் வேறுபாடு உள்ளதுபோலும். ஆகையாலே இக்கதையை இங்கு விரித்துறைக்க விரும்புகின்றிலோம்.

அழகிற் சிறந்த வேகவதி என்னுமோர் தேவகன்னிகை தனது கணவன் முகத்திலே விழிக்க வொண்ணாதபடி தன்னைத் தனது தமையன் தடைசெய்து இழுத்துக்கொண்டுபோக அவள் அவனை லக்ஷியம் பண்ணாமல் திரஸ்கரித்து உதறித் தள்ளிவிட்டுத் தனது காதலன் ஒரு போர்க்களத்திலே யுத்தம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிந்து அங்கே போய் இப்படிதானா என்னை நீ கைவிட்டுத் திரிவது என்று தார்க்காணித்து அந்தப் போர்க்களத்திலே பலருமறிய அவன் கையைப் பிடித்திழுத்துத் தன்னூர்க்குக் கொண்டு சென்று இஷ்டமான போகங்களை அநுபவித்து வாழ்ந்தாள் – என்பதாக இவ்விடத்தில் கதை ஏற்படுகிறது.

இதன் விரிவை வல்லார் வாய்க்கேட்டுணர்க. முன் தோன்றல் முன்னே பிறந்தவன்.

———–

சூழ் கடலுள் —-59
பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் ——-60
தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய ——–61
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் ——-62
என்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் ——63
கன்னி தன் பால் வைக்க மற்று அவனோடு எத்தனையோர்
மன்னிய பேரின்பம் எய்தினாள் –

பதவுரை

சூழ் கடலுள்

பரந்த கடலினுள்ளே
பொன் நகரம் செற்ற

ஹிரண்யாஸுரனுடைய நகரங்களை அழித்தவனான
புரந்தரனோடு ஏர் ஒக்கும்

தேவேந்திரனோடு ஒத்த செல்வ முடையனான
மன்னவன்

ராஜாதி ராஜனாயும்
அவுணர்க்கு வாள் வேந்தன்

அசுரர்களுக்குள் பிரஸித்தனான தலைவனாயு மிருந்த

வாணன் தன்னுடைய பாவை பாணாஸுரனுடையமகளாய்

உலகத்து தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியாள்

எவ்வுலகத்திலும் தன்னோடு டொத்தமாதர்கள் இல்லையென்னும்படி அழகிற சிறந்தவளான உஷை யென்பவள்
தன்னுடைய இன் உயிர் தோழியால்

தனது ப்ராண ஸகியான சித்திரலேகை யென்பவளைக் கொண்டு
ஈன் துழாய் மன்னுமணிவரை தோள் மாயவன்

போத்தியமான திருத்துழாய் மாலையணிந்த ரத்ன பர்வதம் போன்ற திருத்தோள்களையுடைய ஆச்சரிய பூதனும்
பாவியேன் என்னை இது விளைத்த ஈர் இரண்டுமால் வரைதோள் மன்னவன்

பாவியான என்னை இப்பாடு படுத்துகின்ற பெரியமலைபோன்ற நான்கு புஜங்களையுடைய ராஜாதி ராஜனுமான
எம்பெருமான் தன்

கண்ணபிரானுடைய
காதலனை

அன்புக்கு உரியவனான (பௌத்திரனான) அநிருத் தாழ்வானை
மாயத்தால் கொண்டுபோய் கன்னிதன்பால் வைக்க

(யோக வித்தைக்கு உரிய மாயத்தினால் எடுத்துக் கொண்டுவந்து தன்னிடத்தில் சேர்க்கப்பெற்று
மற்றவனோடு

அந்த அநிருத்தனோடே
எத்தனை ஓர் மன்னிய பேர் இன்பம் எய்தினாள்

பலவிதமாய் ஒப்பற்ற அமர்ந்த பெரிய ஸுகத்தை அநுபவித்தாள்.

பலிச்சக்கரவர்த்தியின் ஸந்தியிற்பிறந்தவனான பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியதாக கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசை பற்றியவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்ரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து,

அவள் மூலமாய் அந்தப் புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருநத்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுதற்று உபாயஞ் செய்யவேண்டும் என்று அத்தோழியை வேண்ட,

அவள் தன் யோகவித்தை மஹிமையினால் த்வாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்த புரத்திலேவிட உஷை அவனோடு போகங்களை அநுபவித்து வந்தாள் என்கிற கதை அறியத்தக்கது (இதற்குமேல் நடந்த வரலாறு வாணனை தோள் துணிந்த வரலாற்றில் காணத்தக்கது).

பொன்னகரம் செற்ற –ஹிரண்யாஸுரனுக்குத் தமிழில் பொன் என்று பெயர் வழங்குதலால் பொன்னகரம் என்று அவ்வஸுரனுடைய பட்டணங்களைச் சொல்லுகிறது. புரந்தர என்ற வடசொல் (பகைவருடைய) பட்டணங்களை அழிப்படவன என்று பொருள்பட்டு இந்திரனுக்குப் பெயராயிற்று.

உஷையின் வரலாறு சொல்லப்புகுந்து அவ்வரலாற்றில் அநிருத்தனைப்பற்றி கண்ணபிரானுடைய ப்ரஸ்தாவம் வருதலால் தனது வயிற்றெரிச்சல் தோன்ற விசேஷணமிடுகிறாள் பரகாலநாயகி.

அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துக் கொண்டிருந்தும் என்னை அநுபவிக்க வொட்டாமல் இப்படி மடலெடுக்கும்படி பண்ணின மஹாநுபாவன் என்கிறாளாயிற்று.

கன்னிதன்பால் – தெய்வப் பெண்ணாகிய தன்னிடத்திலே என்கை.

மன்னிய பேரின்ப மெய்தினாள் – உஷை அநுபவித்து சிற்றின்பமேயாயினும் அதனில் மேற்பட்ட ஆநந்தமில்லை யென்று அவள் நினைத்திருந்தது கொண்டு மன்னியபேரின்ப மென்றார்.

—————

மற்றிவை தான் ———-64
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
மன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா ———65
மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்
அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —————66
பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்
தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு ——-67
அன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்
மன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் ———68
மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்
பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப ——–69
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே —–71
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம்-

பதவுரை

ஏழைகள்

அவிவேகிகளை!
மற்று இவை தான் என்னாலே கேட்டீரே

இன்னும் இப்படிப்பட்ட உதாஹரணங்களை கேட்க விருக்கிறீர்களோ?
என் உரைக்கேன்

(உங்களுக்கு) எவ்வளவு சொல்லுவேன்? (இன்னும் ஒரு உதாஹரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்)
மன்னு மலை அரையன் பொன்பாவை

(சலிப்பிக்க வொண்ணாமல்) நிலைநின்ற பர்வதராஜனான ஹிமவானுடைய சிறந்த பெண்ணாய்
வாள் நிலா மின்னு மணி முறுவல் செம் வாய்

ஒளிபொருந்திய நிலாப்போல் விளங்குகின்ற அழகிய புன்னகையையுடைய சிவந்த அதரத்தையுடையளாய்
உமை என்னும்

உமா என்னும் பெயரையுடையளாய்
அன்னம் நடையை அணங்கு

அன்ன நடையை யுடையளான (பார்வதி யென்கிற) தெய்வப் பெண்ணானவள்
தன்னுடையகூழை

தனது மயிர் முடியை
சடாபாரம் தான் தரித்து

தானே ஜடா மண்டலமாக்கித் தரித்துக்கொண்டு
நுடங்கு இடைசேர்பொன் உடம்பு வாட

துவண்ட இடையோடு சேர்ந்த அழகிய உடம்பு வாடவும்
புலன் ஐந்தும் நொந்து அகல

இந்திரியங்கள் ஐந்தும் வருந்தி நீங்கவும்

அன்ன அரு தவத்தின் ஊடு போய் (என்னபேறு பெற்றாளென்றால்)

ஆயிரம் தோள் மன்னுகாதலங்கள் மட்டித்து

(சிவன் தனது) ஆயிரம் புஜங்கள் பொருந்திய கைகளை (த்திசைகளிலே) வியாபிக்கச் செய்து,
மாதிரங்கள் மின்னி எரி வீச

திக்குகள் மின்னி நெருப்புப் பொறி கிளம்பும்படியாக
மேல் எடுத்த

மேற்புறமாகத் தூக்கின
கழல் சூழ் கால்

வீரக்கழலணிந்த ஒரு பாதமானது
பொன் உலகம் ஏழும் கடந்து

மேலுலகங்களை யெல்லாம் அதிக்கிரமித்து
உம்பர் மேல் சிலும்ப

மேலே மேலே ப்ரஸரிக்கும் படியாக (ஒற்றைக்காலை உயரத்தூக்கி)
மன்னு குலம் வரையும் மாருதமும் தாரகையும் தன்னினுடைனே சுழல

ஸ்திரமாக நிற்கிற குல பர்வதங்களும் காற்றும் நக்ஷத்திரங்களும தன்னோடு கூடவே சுழன்றுவர
சுழன்று ஆடும்

தான் சுழன்று நர்த்தனஞ் செய்பவனும்
கொல் நவிலும் மூ இலை வேல்

கொலைத்தொழில் புரிகின்ற மூன்று இலைகளை யுடைதான சூலத்தை யுடையவனும்
கூத்தன்

கூத்தாடியென்று ப்ரஸித்தனுமான
அன்னவன் தன்

அப்படிப்பட்ட சிவபிரானுடைய
பொன் அகலம் சென்று அணைந்திலளே

அழகிய மார்பைக்கிட்டி ஆலங்கனம் செய்து கொள்வில்லையா?
பன்னி உரைக்குங் கால்

(இப்படிப்பட்ட உதாஹரணங்களை இன்னும்) விஸ்தரித்துச் சொல்லுகிற பக்ஷத்தில்
பாரதம் ஆம்

ஒரு மஹாபாரத மாய்தலைக்கட்டும்.

நாண்மட மச்சங்களைத் தவிர்த்து அதிப்ரவ்ருத்திபண்ணி நாயகனைப் புணர்ந்தவர்கள் ஒருவரிருவரல்லர், பல்லாயிரம் பேர்களுண்டு, இங்கே சில மாதர்களை எடுத்துக் காட்டினேன். இன்னும் எத்தனை பேர்களை நான் காட்டுவது. இவ்வளவு உதாஹரணங்கள் போராதா? ஆயினும் இன்னும் ஒரு பெரியாள் மடலூர்ந்தபடியைச் சொல்லி முடிக்கிறேன். கேளுங்கள் – என்று பரமசிவனைப் பெறுதற்குப் பார்வதி தவம் புரிந்தபடியைப் பேசுகிறாள்.

தக்ஷப்ரஜாபதி யென்பவர்க்குப் பெண்ணாகப் பிறந்து, ஸதீ என்ற பெயரோடிருந்தாள் பார்வதி. அந்த தக்ஷப்ரஜாபதயானவர் ஒரு கால் ஓரிடத்தில் வேள்விக்குச் செல்ல அப்போது அங்கேயிருந்த தேவர்களும் மஹர்ஷிகளுமெல்லாரும் சடக்கென எழுந்து கௌரவிக்க, பிரமனும் சிவனும் எழுந்திராமல் இருந்தபடியே யிருக்க தக்ஷன் பிரமனை லோக்குருவென்று நமஸ்கரித்துவிட்டுத் தனது கௌரவம் தோற்றச் சிவன் எழுந்திருந்து வணங்கவில்லை யென்று சீற்றங்கொண்டு

“இந்த ருத்ரன் எனக்கு மாப்பிள்ளையானபோதே எனக்கு சிஷ்யனாயிருந்து வைத்து என்னை கண்டவாறே ஆசாரியனைக் கண்டாற்போல் கௌரவித்து வழிபடவேண்டியிருக்க இப்படி எழுந்திராதே இருக்கிறான்ன்றோ, இவனில்மிக்க கொடும்பாவி உலகிலுண்டோ? இப்படிப்பட்ட மூடனுக்கு அநியாயமாய் அருமந்த பெண்ணைக் கொடுத்து கெட்டேனே“ என்று பலவாறாக நிந்தித்து

‘தேயஜ்ஞத்தில் இப்பாவிக்கு ஹவிர்ப்பாகம் கிடைக்காமற் போகக்கடவது‘ என்று சாபமும் – கூறிவிட்டு மஹா கோபத்துடனே எழுந்து தன்னிருப்பிடம் போய்ச்சேர்ந்து, பிறகு நேடுநாளைக்கப்பால் அந்த தக்ஷன் ப்ருஹஷ்பதிஸவமென்றொரு யாகம் பண்ணத் தொடங்கின செய்தியை மகளாகிய ஸதி (பார்வதி) கேள்விப்பட்டுத்

தந்தையின் வேள்வி வைபவங்களை நாமுங்கண்டுவருவோம் என்று ஆவல்கொண்டு புறப்பட சிவபிரான் பழைய பகையை நினைத்து அங்கே நீ போகக்கூடாது என்று தடுத்தும் குதூஹலாதிசயத்தாலே அவள் விரைந்து புறப்பட்டுத் தந்தையினது இல்லம்செல்ல

அங்கே இவளைக்கண்டு தந்தை நல்வரவு கூறுதல் யோக்க்ஷேமம் வினவுதல் ஒன்றுஞ்செய்யாமல் பாங்முகமா யிருக்க மிருப்பையும் ருத்ரபாகமில்லாமல் வேள்வி நடைபெறுவதையுங்கண்டு வருத்தமும் சீற்றமுங்கொண்டு ‘இந்த மஹாபாபியான தக்ஷனிடத்தில் நின்று முண்டான இந்த என் சரீரம் இனி முடிநது போவதே நன்று என்று அறுதியிட்டுத்

தனது யோகபலத்தாலே அக்நியை உண்டாக்கி அதுதன்னிலே சரீரத்தைவிட்டொழிந்தாள். பிறகு மலையரசனாகிய ஹிமவானுக்குப் பெண்ணாய்ப் பிறந்து (பர்வத புத்ரீ என்னுங் காரணத்தால்) பார்வதி யென்று யெர் பெற்று அப்பிறப்பிலும் அந்தப் பரமசிவனையே கணவனாகப் பெறவேணுமென்று ஆசைகொண்டு கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பயனாக அங்ஙனமே மனோரதம் நிறைவேறி மகிழ்ந்தாளென்பது இங்கே அறியத்தக்கது.

மற்றொரு  மையத்திலும் பார்வதி தவம் புரிந்ததுண்டு முன்னொரு காலத்திற் கைலாஸ மலையிலே சிவபிரானும் தானும் ஏகாஸநத்தில் நெருக்கமாக வீற்றிருந்தபொழுது ப்ருங்கி யென்னும் மாமுனி சிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்யவிரும்பி ஒரு வண்டு வடிவமெடுத்து அந்த ஆஸனத்தை இடையிலே துளைத்துக்கொண்டு அதன் வழியாய் நுழைந்து சென்று அம்பிகையை விட்டுச் சிவனைமாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்ய,

அது கண்ட பார்வதீதேவி தன் பதியைநோக்கி முனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ் செய்யாமைக்கு காரணம் என்ன? என்று கேட்க

அதற்குச் சிவன் இம்மை மறுமைகளில் இஷ்டஸித்தி பெற விரும்புமவர்கள் உன்னை வழிபடுவார்கள், முத்திபெற விரும்புமவர்கள் என்னை வழிபடுவார்கள் இது நூல் துணிபு என்று சொல்ல

அதுகேட்ட பார்வதி இறைவன் வடிவத்தப் பிரிந்து தனியே யிருந்த்தனாலன்றோ எனக்கு இவ்விழிவு நேர்ந்தது என்று வருந்தி தான் சிவ்பிரானைவிட்டுப் பிரியாதிருக்குமாறு கருதி புண்ணியக்ஷேத்திரமான கேதாரத்திற்சென்று தவம் புரிந்து வரம் பெற்று அப்பிரானது வடிவத்திலே வாமபாகத்தைத் தனது இடமாக அடைந்து அவ்வடிவிலேயே தான் ஒற்றுமைப்பட்டு நின்றனள் என்று சைவபுராணங்களிற் சொல்லிப்போரும் கதையுமுண்டு.

முன்னே கூறிய தவமே இங்கு விவக்ஷிதம்.

மலையரையன் – அரையன் என்றது அரசனென்றபடி. பர்வதராஜன் என்கை. (உமை யென்னும்) பார்வதிக்கு உமா என்றும் ஒரு வடமொழிப் பெயருண்டு. அவள் தவம் புரிந்த காலத்து ஆஹாரமே யில்லாமையாலே பொன்னுடம்பு வாடப்பெற்றாள், அந்தந்த இந்திரியங்களுக்கு வேண்டிய விஷயங்களில் அவை பட்டிமேய வொண்ணாதபடி. காவலிற் புலனை வைத்துத் தவம் புரிந்தபடியாலே அந்த இந்திரியங்கள் ‘எத்தனை நாளைக்கு நாம் இவள்பால் பட்டினி கிடப்பது என வருந்தி அகனறனவாம்.

கூழை – கூந்தலுக்குப் பெயர் “முள்ளெயிறேய்ந்தில் கூழை முடிகொடா“ என்ற பெரிய திருமொழியுங் காண்க. தவநிலைக்கு தகுதியாகக் கூந்தலைச் சடையக்கின ளென்க.

(அன்ன அருந்தவத்தினூடு போய்) அவள் அநுஷ்டித்த தபஸ்ஸு ஸாமாந்யமல்ல. கோரமான தவஞ் செய்தன்ன் என்கிறது. ஊடுபோய் என்றது அந்த்த் தவத்தை முற்றமுடிய நடத்தி என்றபடி. “அருந்தவத்தினூடு போய் அன்னவன்றன் பொன்னகலஞ் சென்றாங் கணந்திலளே“ என்று அந்வயிப்பது.

ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து“ என்று தொடங்கித்“ தன்னினுடனே சுழலச் சுழன்றாடும்“ என்னுமளவும் சிவபிரானது நடனத்தின் சிறப்பு வர்ணிக்கப்படுகிறது. அப்படி அற்புதமான நாட்டியஞ் செய்ய வல்ல சிவபிரானது ஸம் ச்லேக்ஷத்தைப் பெற்றாளன்றோ என்கிறது. சிவன் கூத்தாடும் வகைகள் பல பலவுள்ளன. திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களில் அவற்றைக் கண்டுகொள்க.

இங்கே சொல்லப்படுகிற நாட்டியவகை – ஆயிரங் திசைகளில் வியாபிக்கச் செய்து ஒற்றைக்காலால் நின்றுகொண்டு மற்றொருகாலை மேலேதூக்கி, பம்பரம்போல் சுழற்றி ஆடினவகையாம்.

“தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க் கண்களாயிரத்தாய், தாள் களாயிரத்தாய் பேர்களாயிராத்தாய்“ என்று எம்பெருமானைச் சொல்வதுபோல சைவபுராணங்களில் சிவனைப்பற்றியும் சொல்லியிந்தலால் “ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து“ எனப்பட்டது.

தெய்வத் தன்மைக்குரிய சக்தி விசேஷத்தினால், வேண்டியபோது வேண்டியபடி வடிவுகொள்ள வல்லமைப் யுள்ளமைபற்றி ஒருநர்த்தன விசேஷத்தில் இங்ஙனே ஆயிரந்தோள் மன்னுகதலங்கள் கொண்டு ஆடினனாகவுங்கொள்க.

ஒருகால் தன்னுடைய நடனத்தைக்கண்டு அதற்குத் தகுதியாகத் தனது இரண்டு கைகளால் மத்தளங் கொட்டின பாணாஸுரனுக்கு உவந்து ஆயிரங்கைகள் உண்டாம்படி வரமளித்தன்னாகச் சொல்லப்பட்ட சிவபிரானுக்கு இஃது அருமையன்றென்ப. மட்டித்து –மட்டித்தலாவது மண்டலாகாரமாக வியாபிக்கச் செய்தல்.

மாதிரங்கள் மின்னி எரிவீச –“ஒருருவம் பொன்னுருவ மொன்று செந்தீ ஒன்றுமாகடலுருவம்“ என்றபடி சிவனது உருவம் செந்தீ யுருவமாதலால் அன்னவன் தனது காலை மேலே தூக்கிச் சுழன்று ஆடும்போது திசைகளெல்லாம் நெருப்புப்பற்றி யெரிவன்னபோல் காணப்படுமென்க. சூழ்கழற்கால் கழல் சூழ்ந்த கால் வீரத்தண்டை அணிந்த கால் என்றபடி.

பொன்னுலக மேழுங்கடந்து என்றது –கூத்தாடும்போது சிவனுடைய கால் நெடுந்தூரம் வளர்ந்து சென்றமையைச் சொன்னவாறு. உம்பர் மேல் மேன் மேலும்

(மன்னு குலவரையும் இத்யாதி) நாமெல்லாம் தட்டாமாலையோடும்போது அருகிலுள்ள செடிகொடி முதலியனவும் கூடவே சுழல்வதாகக் காணப்படுமன்றோ. சிவபிரான் பெரியவுருக்கொண்டு சூழன்றாடும்போது பெருப்பெருத்த பாதார்த்தங்களெல்லாம் உடன் சுழல்வனபோற் காணப்படுமாற்றிக.

இப்படியாக கூத்தாடின சூலபாணியும் பஸ்மதாரியுமான சிவனது மார்போடே அணையப்பெறுதற்காகப் பார்வதி தவம்புரிந்தபடியை மஹாபாரத்தில் பரக்கக் காண்மின் என்று தலைக்கட்டிற்றாயிற்று.

————

பாவியேற்கு
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75
மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80
பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81
இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82

பதவுரை

பாவியேற்கு என்று உறு நோய்

பாவியாகிய எனக்கு நேர்ந்த நோயை
யான் உரைப்ப கேண்மின்

நானே சொல்லக் கேளுங்கள் (என்னவென்றால்)
இரு பொழில் சூழ்

விசாலமான சோலைகள் சூழப்பெற்றதும்
மறையோர் மன்னும்

வைதிகர்கள் வாழப்பெற்றதுமான
திரு நறையூர்

திருநறையூரில்
மா மலைபோல பொன் இயலும் மாடம் கவாடம் கடந்து புக்கு

பெரிய மலைபோன்றதும் ஸ்வரண மயமுமான ஸந்நிதியின் திருக் காப்பை நீக்கிச் சென்று
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்

எனது கண்கள் களிக்கும்படி உற்றுப்பார்த்தேன்
நோக்குதலும்

பார்த்தவளவில்
மன்ன்ன்

(அங்குள்ள) எம்பெருமானுடைய
திரு மார்பும்

பிராட்டியுறையும் மார்வும்
வாயும்

(புன் முறுவல் நிறைந்த) அதரமும்
அடி இணையும்

உபய பாதங்களும்
பன்னு கரதலமும்

கொண்டாடத் தக்க திருக்கைகளும்
கண்களும்

திருக்கண்களும்
ஓர் மணிவரைமேல் பொன் இயல் பங்கயத்தின் காடுபூத்த்துபோல் மின்னி ஒளிபடைப்ப

ஒரு நீலரத்ந பர்வத்த்தின் மேல் பொன் மயமான தாமரைக் காடு புஷ்பித்தாற்போல் பளபளத்த ஒளியை வீச,
வீழ்நாணும்

விரும்பத்தக்க திருவரை நாணும்
தோள் வளையும்

தோள் வளைகளும்
மன்னிண குண்டலமும்

பொருத்தமான திருக்குண்டலங்களும்
ஆரமும்

திருமார்பில் ஹாரமும்
நீள் முடியும்

பெரிய திருவபிஷேகமும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப

மிக்க தேஜஸ்ஸை வெளிவிடுகின்ற முடியிற் பதித்த ரத்னமும் ப்ரகாசிக்க
மன்னு மாதகக்குன்றின் மருங்கே

எல்லார்க்கும் ஆச்ரயமான மரகதமலை யென்னும்படியான எம்பெருமான் பக்கத்திலே
ஓர் இன் இள வஞ்சி கொடி ஒன்று நின்றது

விலக்ஷணமாய் போக்யமாய் இளைசா யிருப்பதொரு வஞ்சிக்கொடி யென்னும் படியான பிராட்டி நின்றாள்.
அன்னம் ஆய்

(நடையில்) ஹம்ஸத்தை யொத்தும்
மான் ஆய்

(நோக்கில்) மானையொத்தும்
அணி மயில் ஆய்

(கூந்தலில்) அழகிய மயிலை யொத்தும்
இடை மின் ஆய்

இடையழகில மின்னலை யொத்தும்
இள இரண்டு வேய் ஆய்

(தோளில்) இளைதான இரண்டு மூங்கில்களையொத்தும்
இணை செப்பு ஆய்

(ஸ்தநத்தில்) இரண்டு கலசங்களை யொத்தும்
முன் ஆய் தொண்டை ஆய்

முன்னே தோற்றுகிற (அதரத்தில்) கொவ்வைக் கனியை யொத்தும்.
குலம் கொண்டை இரண்டு ஆய்

(கண்ணில்) சிறந்த இரண்டு கெண்டை மீன்களை யொத்தும்
அன்ன

அப்படிப்பட்டிருந்த
திரு உருவம்

திவ்ய மங்கள விக்ரஹம் (பிராட்டி)
நின்றது அறியாது

(பக்கத்தில்) நிற்கும் படியை அறியாதே (எம்பெருமான் மாத்திரமே யுளனென்று ஸேவிக்கப் புகுந்த)
என்னுடைய நெஞ்சும்

எனது நெஞ்சும்
அறிவும்

(அந்த நெஞ்சின் தருமமாகிய) அறிவும்
இனம் வளையும்

சிறந்த கைவளையும்
பொன் இயலும் மேகலையும்

ஸ்வர்ண மயமான மேகலையும்
ஒழிய போந்தேற்கு

(எல்லாம்) விட்டு நீங்கப்பெற்ற எனக்கு (இதற்குமேலும் ஹிம்ஸையாம்படி)
மன்னு மறி கடலும் ஆர்க்கும்

சலியாததும் மடிந்து அலையெறிவதுமான கடலும் கோஷம் செய்யா நின்றது
மதி உகுத்த இன் நிலாவின் கதிகும்

சந்திரன் வெளியிடுகின்ற இனிய நிலாவின் ஒளியும்
என் தனக்கே

எனக்கு மாத்திரம்
வெய்து ஆகும்

தீக்ஷ்ணமாயிரா நின்றது,
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொல்

நிலாவின் ஸ்வபாவமாகிய குளிர்த்தி தவிர்ந்து இப்படி வெப்பமாம்படி எம்பெருமான்றான் ஏதாவது செய்துவிட்டானோ.

இங்ஙனே ஊரிலுள்ள பெண்களின் சரித்திரங்களை எடுத்துரைப்பதனால் எனக்கு என்ன பயனாம்? அந்த வம்புக் கதைகளையெல்லாம் விரித்துரைப்பதற்கோ நான் பெண் பிறந்தது. அது கிடக்கட்டும், நான் பட்டபாடு நாடறியச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று திருநறையூ ரெம்பெருமான் ஸ்ந்நிதியிலே ஸேவிக்கப்புகுந்த தான் பட்டப்பாட்டைப் பேசத் தொடங்குகின்றாள் பரகால நாயகி.

பாவியேற் கென்னுறு நோய் என்று இங்ஙனே அந்வயித்துப் பொருள் கொள்வதிற் காட்டிலு ம் ‘பன்னியுரைக்குங்காற் பாரதமாம் பாவியேற்கு“ என்று கீழோடே அந்வயிப்பது பூருவர்களின் வியாக்கியானங்களுக்கு நன்கு பொருந்தும்.

************     (நெஞ்சினுள்ளே துக்கம் அதிகரித்தால் வாய் விட்டுக் கதறினால்தான் தீரும்.) என்று சொல்லியுள்ளபடி – தனது வருத்த்தை ஒருவாறு தணித்துக்கொள்ள வேண்டி வாய்விட்டுக் கதறுகின்றாளென்க.

யானுற்ற நோயை யான் சொல்லுகிறேன் கேளுங்கள் நான் திருநறையூரெம்பெருமானை ஸேவிக்கச்சென்று ஸந்நிதியுள்ளே புகுந்து பார்த்தேன், பார்த்தவுடனே அவ்வெம்பெருமானுடைய திருமார்வு திருவதரம் திருவடி திருக்கை திருக்கண் ஆகிய இவ்வவயவங்கள் நீலகிரிமேல் தாமரைக்காடு பூத்தாற்போல் பொலிந்தன.

திருவரைநாண் திருத்தோள்வளை திருமகர குண்டலம் ஹாரம் திருவபிஷேகம் அதனுச்சியிற்பதித்த மணி ஆகிய இவை பளபளவென்று ப்ரகாசித்தன, அவ்வெம்பெருமான் பக்கத்திலே அன்னம்போன்ற நடையழகும் மான்போன்ற நோக்கழகும் மயில்போன்ற கூந்தலகும் மின்போல் நுண்ணிய இடையழகும் வேய்ப்போன்ற தோளழகும் செப்புப்போன்ற முலையழகும் கோவைபோன்ற வாயழகும் கெண்டைபோன்ற கண்ணழகுமுடையளான பெரிய பிராட்டியார் இளவஞ்சிக்கொடி போலே நின்றதையுங் கண்டேன்.

கண்டதும் அறிவு போயிற்று பலவிகாரங்களுண்டாயின. இப்படி வருத்தபடாநின்ற எனக்குக் கடலோசை தானும் வந்து மேன்மேலும் ஹிம்ஸையைப்பண்ணா நின்றது. எல்லார்க்கும் இனிதான நிலா எனக்குத் தீ வீசுகின்றது குளிர்ச்சியையே இயல்வாகவுடைய நிலாவும் இப்படி கடும்படியான காரணம் என்னோ, அறியேன் – என்றாளாயிற்று.

திருநறையூர்ப் பொன்னியலுமாடம் – நாச்சியார் கோவிலுக்குத் திருநறையூர் மணிமாடம் என்று ப்ரஸித்தியுள்ளது. “திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே“ என்றார் பெரிய திருமொழியில், “தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணளனை“ என்பர் இத்திருமடலிலும். கவாடம் – கதவு, வடசொல்.

பன்னு கரதலம் – ‘இப்படிமொரு கரதலமுண்டோ‘ என்று வாய்வெருவப்பண்ணும் கை காரதலம் – வடசொல். ஓர் மணிவரைமேல் பொன்னியல் பங்கயத்தின் காடு பூத்த்துபோல் – எம்பெருமானது திருமேனி நீலரத்ந பர்வதமாகவும் திருக்கண் முதலியன தாமரைக் காடாகவும் ரூபிக்கப்பட்டன.

அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனாதலால் திருமார்பும் தாமரை யாக விளங்கக் குறையில்லை. பங்கயம் – பங்கஜம். ஒளிப்படைப்ப – ஒளியை யுண்டாக்க. வீணாணும் – வீழ் – நாண் – வீணான், வீரசோழிய மென்னும் இலக்கண நூலில் (சந்திப்படலம் – 18) “நவ்வரின் முன்னழிந்து பின் மிக்க ணவ்வாம் என்றது காண்க. வீழ்தல் –விரும்பப்படுதல். ஆரம் – ஹாரம்.

(“துன்னுவெயில்விரித்த சூடாமணி இமைப்ப“) சூடாமணியிமைப்ப என்றவிடத்து உம்மைத் தொகையாகவும் உவமைத்தொகையாகவுங் கொள்ளலாம், உம்மைத் தொகையாகக் கொள்ளும்போது, சூடாமணியாவது திருவபிஷேகத்தின் நுனியிற்பதித்த ரத்னம், அதுவும்  விளங்க – என்றதாகிறது. உவமத்தொகையாகக் கொள்ளும்போது,சூடாமணியாவது தேவலோகத்துச் சிறந்த்தொரு மாணிக்கம், அதுபோலே விணாணும். நீண்முடியும் விளங்க – என்றதாகிறது. சூடாமணி எனினும் சூளாமணி யெனினும் ஒக்கும். இமைத்தல் – ஒளிசெய்தல்.

மன்னுமரதகக் குன்றின் மருங்கே – எம்பெருமான்றன்னையெ ஸாக்ஷாத் மரகத பர்வதமாகக் கூறினது முற்றுவமை. அப்படியே, பிராட்டியை இளவஞ்சிக் கொடியாகக் கூறினதும் முற்றுவமை. இதனை வடநூலார் ரூபகாதிசயோக்தி யென்பர். ஒரு மலையினருகே ஒரு பொற்கொடி நிற்கக்கண்டேனென்று சமத்காரமாக அருளிச்செய்தபடி. மாதர்க்கு இளவஞ்சிக்கொடி ஒப்புச்சொல்லுதல் கவிமரபு.

அன்னமாய் மானாய்.  என்றவிடங்களிலும் உபமேயங்களான நடை நோக்கு முதலியன மறைக்கப்பட்டன. மயில் கூந்தற்செறிவுக்கும் சாயலுக்கும் உவமையாம். பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோள்களுக்கு உபமானமாக்குவது. செப்பு பொற்கலசம். தொண்டை – கோவைக்கனி.

அன்ன திருவுருவம் நின்றதறியாதே – “ப்ரஹ்மசாரி நாராயணன் மாத்திரமே யுள்ளான், கண்டு வந்தவிடுவோம் என்று கருதிச் சென்றேன். பக்கத்தில் ஒரு பிராட்டி யெழுந்தருளியிருப்பது தெரியாமற் போயிற்று. தெரிந்திருந்தால் உட்புகுந்தே யிருக்கமாட்டேன், அந்தோ! தெரியாமற்சென்று பட்டபாடு இது! என்கிறாள்போலும்.

நெஞ்சு போயிற்று, அறிவு போயிற்று, வளை கழன்றொழிந்தது, மேகலை நெகிழ்ந்தொழிந்தது. இபப்டிப்பட்ட பரிதாப நிலைமையில் கடல்தானும் தனது கோஷத்தைச் செய்து கொலை செய்யா நின்றது.

(தன்னுடைய தன்மை தவிரத்தா னென்கொலோ?) “சீதோபவ ஹநூமதா“ என்ன நெருப்புக் குளிருமாபோலே “நிலாச்சுடுக“ என்று நினைப்பிட்டதோ? இதுக்குக் காரணம் என்? என்கிறாள்“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி காண்க. சந்திரனுக்குத் தன்னுடைய தன்மையாகிய குளிர்த்தி மாறி வெப்பமுண்டாவதற்கு என்ன காரணம்?

—————-

தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து
மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83
இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் ———84
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85

பதவுரை

தென்னன் பொதியில்

தென் திசைக்கு தலைவனான பாண்டிய ராஜனது மலையமலையிலுள்ள
செமு சந்திரன் தா துஅளைந்து

அழகிய சந்தந மரத்தின் பூந்தாதுகளை அளைந்து கொண்டு
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்

நித்யமான இந்த லோகத்திலுள்ளவர்கள் மனம் மகிழும்படி வந்து உலவுகின்ற
இன் இள பூ தென்றலும்

போக்யமாய் அழகான இளந்தென்றற் காற்றும்
எனக்கே எரி வீசும்

எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது
முன்னிய பெண்ணை மேல்

முன்னே காணப்படுகிற பனை மரத்தில்
முள் முளரி கூடு அகத்து

முள்ளையுடைய தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட கூட்டிலே
பின்னும்அவ் அன்றில் பெடை வாய் சிறு குரலும்

வாயலகு கோத்துக் கொண்டிருக்கிற அன்றிற் பேடையின் வாயிலுண்டான சிறிய குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாள் ஆம்

எனது நெஞ்சை அறுக்கின்ற வொரு வாளாக இராநின்றது.
என் செய்கேன்

(தப்பிப் பிழைக்க) என்ன உபாயஞ் செய்வேன்?

எனக்கு ஹிம்ஸையை உண்டு பண்ணுவன கடலோசையும் நிலாவுமேயல்ல, தென்றல் முதலிய மற்றும் பல பொருள்களும் ஹிம்ஸிக்கின்றன என்கிறாள்.

தெற்குத்திசைக்குத் தலைவனாய் மலயத் வஜனென்று பெயருடையவனான பாண்டியராஜனது பொதிய மலையிலுள்ள திவ்யமான சந்தனமரத்தற் பூத்தாதுகளிற் படிந்து அவற்றின் பரிமளத்தைக் கொய்து கொண்டு நாடெங்கும் வந்து வீசி அனைவரையும் மகிழ்விக்கின்ற தென்றற் காற்று எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது,

இந்நிலைமையிலே அன்றிற் பேடையின் இன்குரலும் செவிப்பட்டுப் பரமஹிம்ஸையாகின்றது என்கிறாள்.

(என் செய்கேன்) –கீழே “தென்ன்ன் பொதியில் செழுஞ் சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார்“ என்று தொடங்கி“ இன்னிளவாடை தடவத் தாங் கண்துயிலும் பொன்ன்னையார் பின்னும் திருவுறுக.“ என்று சொல்லியுள்ளபடி –

விரஹ காலத்தில் ஹிம்ஸகங்களான இந்த வஸ்துக்களை லக்ஷியம் பண்ணாமல் இவற்றைப் பரமபோக்யமாகக் கொள்ளுகிற சில பெண்களாகப் பிறவா தொழிந்தேனே! இவற்றுக்கு நலிவுபடும் பெண்ணாக பிறந்தேனே! என்செய்வேன் என்கிறாள்.

————

கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86
தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-

பதவுரை

கல் நவில் தோள் காமன்

மலைபோல் (திண்ணிய) தோள்களை யுடையனான மன்மதன்
கரும்பு சிலை வளைய

(தனது) கருப்பு வில்லை வளைத்து
கொல் நவிலும் பூ கணைகள் கோத்து

(அந்த வில்லில்) கொலை செய்ய வல்ல புஷ்ப பாணங்களைத் தொடுத்து
பொத அணைந்து

(அந்த வில்லை மார்பிலே) அழுந்த அணைத்துக்கொண்டு)
தன்னுடைய தோள் கழிய வாங்கி

தனது தோள் வரையில் நீள இழுத்து
என்னுடைய நெஞ்சே இலக்கு ஆக தமியேன் மேல் எயகின்றான்

எனது நெஞ்சையே குறியாகக் கொண்டு துணையற்ற என்மீது (அந்த அம்புகளைப் பிரயோகிக்கின்றான்.
பின் இதனை காப்பீர்தான் இல்லையே

இப்போது இந்த ஆபத்தில் நின்றும் என்னைத் தப்புவிக்க வல்லீரில்லையே!

***- கீழ்ச் சொன்ன கடலோசை முதலியவற்றுக்கு ஒருவாறு தப்பிப் பிழைத்தாலும் பிழைக்கலாம், இனி ஜீவிக்க வழியில்லை யென்னும்படியாக மன்மதன் தனது பாணங்களைச் செலுத்தி வருத்துந்திறம் வாசாமகோசரம் என்கிறாள். மஹாபலசாலியான மன்மதனும் தனது கருப்புவில்லை வளைத்து என்னை இலக்காகக் கொண்டு புஷ்ப பாணங்களைப் பிரயோகிக்கின்றானே, நான் இதற்குத் தப்பிப் பிழைக்கும்படி செய்வாராருமில்லையே. என்கிறாள்.

கன்னவில் தோள் காமன் – ஒருகால் பரமசிவனுடைய கோபாக்கிநிக்கு இலக்காகி நெற்றிக் கண்ணால் தஹிக்கப்பட்டு உடலிழந்து அநங்கன் என்று பேர்பெற்றவனான மன்மதனுக்கு உடம்பு இல்லை யாயிருக்க, “கன்னவில் தோள் காமன்“ என்றும் “தன்னுடைய தோள் கழியவாங்கி“ என்றும் அருளிச் செய்வது சேருமோ எனின்,

அநங்கன் செய்கிற காரியத்தைப் பார்த்தால், திண்ணிய உடம்புடையானும் இவ்வளவு காரியம் செய்ய வல்லவனல்லன்“ என்னும்படியாகப் பெரிய கொலைத் தொழிலாயிருப்பதனால் அவனுக்கு வலிதான வுடம்பு இருந்தே தீரவேணுமென்று காமிகள் கருதுவதுண்டாதலால் இப்பரகால நாயகியும் அந்த ஸமாதியாலே சொல்லுகின்றாளென்க.

மன்மதனுக்குக் கரும்பை வில்லாகவும் ஐவகைப் புஷ்பங்களை அம்பாகவும் அந்த அம்புகளை வில்லிலே தொடுத்துப் பிரயோகிக்கின்றானாகவும் நூல்கள் கூறுகின்றமை காண்க.

கரும்பு –சிலை, கரும்புச்சிலை, பூங்கணைகள் – முல்லை, அசோகம், நீலம், மா, முளரி என்ற ஐந்து மலர்கள் மன்மத பஞ்ச பாணங்களெனப்படும். மத்தம், தீரம், சந்தாபம் வசீகரணம், மோகனம் என்கிற ஐவகைச் செயல்களைப் பஞ்ச பாணமாகச் சொல்லுவர் ஒரு சாரார்.

———

—————————————————————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமடல் -திவ்யார்த்த தீபிகை –

December 6, 2016

ஸ்ரீ மன் நாத முனிகள் வகுத்து அருளினை அடைவில் மூன்றாவது ஆயிரம் –இயற்ப்பாவில் பத்தாவது திவ்ய பிரபந்தம் –
சிறிய அஸ்திரம் விட்டதில் கார்யம் கை கூட வில்லை என்று பெரிய ப்ரஹ்மாஸ்திரம் விடுகிறாள் பரகால நாயகி இதில் –
இதிலும் மடலூர்வேன் என்று பகட்டின அளவே அன்றி -மெய்யே மடலூர்ந்தமை இல்லை -கீழே வாசவத்தையை எடுத்துக் காட்டினால் போலே இதில் -சீதை -வேகவதி -உலூபிகை -உஷை- பார்வதி -போன்றோர்-
பேறு பெற ஸ்வ பிரவ்ருத்தி கூடாது என்று இல்லாமல் பேற்றுக்கு த்வரித்து இருந்த இந்த பெண்ணரிசிகளை எடுத்துக் காட்டி அருளிச் செய்கிறார் –

——————————————-

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்த தனியன்

பொன்னுலகில் வானவரும் பூ மகளும் போற்றி செயும்
நன்னுதலீர் நம்பி நறையூரர் -மன்னுலகில்
என்நிலைமை கண்டும் இரங்காரே யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து –

ஆழ்வார் தியானம் முற்றி பாவனா பிரகரக்ஷத்தாலே தன்மயத்வம் -ஆழ்வார் திவ்ய பிரபந்த பாவனையில் அமைந்த தனியன் –
நன்னுதலீர் -தோழிகளை நோக்கி அருளிச் செய்தார் –
பூ மகனும் -பாட பேதம் / வந்து மன்னு மடலூர்வேன்–திருப்பதிகள் தோறும் வந்து -நித்யம் மடலூர்ந்தே கொண்டு இருப்பேன் -என்றபடி-

———————————————

மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்———-1
மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்
மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்————-2
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் -இரு சுடரை————-3
மன்னும் விளக்காக வேற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நில மங்கை———————4
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்———-5
என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8
பின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர்
மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள்-

மன்னிய -வாழ்ந்திடுக -மங்களாசாசனம் -நாடு வாழ்க -எம்பெருமான் வாழ்க –இத் திரு மடல் வாழ்க -என்றபடி –
பகவத் காமமே சிறந்தது என்று அருளிச் செய்ய உபக்ரமித்து -நான்கு புருஷார்த்தங்கள் –அவற்றை வெளியிட்ட வேதங்கள் –
-அவற்றையும் வெளியிட்ட நான் முகனையும் -அவன் தோன்றிய திரு நாபி கமலம் -உறங்குவான் போலே
யோகு செய்து அருளிய எம்பருமான் –அவன் கண் வளர்ந்து அருளிய திரு வனந்த ஆழ்வான் –
திருமேனி நிறைய புள்ளிகளைக் கொண்டவனும் -ஆயிரம் பைந்தலைகளைக் கொண்டும் -மஹா தேஜஸ்வியுமாகவும் இருந்து கொண்டு
அவன் படங்களில் உள்ள மாணிக்க மணிகளின் சிகைகளில் இருந்து கிளம்பிய தேஜோ ராசிகளால் முட்டாக்கு இடப்பெற்ற
அந்த சேஷ சயனத்தில் திரு மகரக் குழைகள் பள பள வென்று ஜ்வலிக்க கரிய மால்வரை போல் துயில்கின்ற பரஞ்சோதி
முத்துக்கள் என்னத்தக்க நக்ஷத்திரங்கள் நிறைந்த ஆகாச மண்டலம் மேல் கட்டியாக அமைய -நிகரின்றி ஜ்வலிக்கும்
திருவாழி திருச் சங்குகள் திரு விளக்குகள் ஆயின –
அன்று இவ் உலகம் அளந்து அருளின திருவடிகளின் விடாய் தீர பாற் கடல் அலைகள் சாமரமாக வீச பூமிப் பிராட்டி திருவடி வருடா நின்றாள் –
உறங்குவான் போல் யோகு செய்து அருளும் திரு நாபியில் திவ்ய தாமரைப் பூவைத்து தோன்றுவித்து
-உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் நான்முகனைத் தோற்றினான்-
அஃகொப்பூழ் செந்தாமரை மேல் நான்முகனைத் தோன்றுவிக்க -அவன் நான்கு வேதங்களையும் வெளியிட்டு அருளினான் –

எம்பெருமான் ஓதுவிக்க அவ்வேதங்கள் காட்டிய வழியே முன்னிருந்த வண்ணமே ஜகத் ஸ்ருஷ்ட்டி படைத்தான் என்றபடி –
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்--இத்தையே ஆளவந்தார் -பணா மணி வ்ராத மயூக மண்டல பிரகாச மநோ தர திவ்ய தாமநி
மன்னிய நாகத்தணை-எப்போதும் சித்தமாக கண் வளர்ந்து ஈடாக -என்றபடி –
நாகத்தணை மேல் ஓர் மா மலை போல் தான் கிடந்து –என்று அந்வயம்
இரு சுடரை –திருவாழி திருச் சக்கரம் / சந்த்ர சூரியர்கள் என்றுமாம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று –பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடும் காலத்து –
ஸூர்ய சந்த்ரர்களைக் கொண்டு வர்ணிப்பது எவ்வாறு பொருந்தும் -என்னில்-சத் சம்ப்ரதாயம் -இல்லாத வஸ்துவே இல்லையே –
ஸூஷ்ம ரூபமாய் இருக்குமே -அத்தையே ஆழ்வார் அருளிச் செய்கிறார்
நில மங்கை-தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்–மன்னிய சேவடியை–நோக்கி -மறி கடலும்-பன்னு திரைக் கவரி வீச -என்று அந்வயம் – உலகு அளந்த ஸ்ரமம் தீர என்றவாறு –
நக்ஷத்ரங்களை சிரம் மீது அணிந்த புஷபங்கள் -என்றும் –தாரகா -மீன் -இரண்டும் நஸ்த்ரங்களை —
அஸ்வினி முதல் 27–மற்றும் பல்லாயிரங்கள் உண்டே -நக்ஷத்ர தாரா கணங்கள் –
தென்னன் உயர் பொருப்பும் -தென்னன் கொண்டாடும் தென் திரு மாலிருஞ்சோலையே -மலயத்வஜன்-அகஸ்தியர் வாசம் செய்யும்
மலய மலையிலே த்வஜம் நாட்டி -அவர் முன்னிலையில் -தர்மமே நடத்தக் கட வேன்-என்று கொடு நாட்டினான்
-சிலம்பாறு – தென் நன் என்றும் பிரிக்கலாம் -உன்னிய யோகத்துறக்கம் -தூங்குபவன் போலே யோகு புணர்ந்து –
மற்றவனும்-முன்னம் படைத்தனன் நான்மறைகள்–அநாதி நித நாஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா-
-நான்முகன் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்தது என்றவாறு -நான்கு வேதங்களையும் சந்தை சொல்லி வைத்தான் என்றவாறு –

அம்மறை தான் –10
மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே நான்கினிலும் –11
பின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14
தொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்
இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் —-15
என்னவும் கேட்டு அறிவதில்லை-

பின்னையது பின்னைப் பெயர் தரும் என்பதோர்-இறுதியில் சொல்லப்பட்ட மோக்ஷம் சரீரம் தொலைந்த பின் -சாஸ்திரம் சொல்லும்
பரம பதம் அர்ச்சிராதி கதி தொன்னெறி
வேதங்கள் முழுவதும் இந்த நான்கு புருஷார்த்தங்களையே சொல்லும் -நான்கும் வேத பிரதிபாத்யம் என்று சொல்லி பின்பு
தம் அபிமதம் பகவத் காமமே சிறந்தது-என்கிறார் இதில்
-தேசாந்தரம் தேகாந்தரம் காலாந்தரம் அனுபவம் இல்லாமல் -இங்கேயே இவ்வுடலோடு இக்காலமே அர்ச்சானுபவமே –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய் செய்யும் தவம் தான் என்-ஆண்டாள் போலே –
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து தான் வாட வாட தவம் செய்ய வேண்டா —
காயோடு நீடு கனியுண்டு வீசு கடும் கால் நுகர்ந்து நெடும் காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா –
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -அர்ச்சாவதாரத்தில் எளிதாக அனுபவித்து ஆனந்திக்கலாய் இருக்க இப்படி காய கிலேசங்கள் பட வேண்டாவே என்பார்கள் ஆழ்வார்கள் –
ஈங்குடலம் விட்டு எழுந்து ––துர்லபோ மானுஷோ தேஹ –இந்த அருமையான மனுஷ்ய தேஹம் கொண்டு இங்கேயே அனுபவிக்கலாய் இருக்க இழக்கிறார்கள் –

உளது என்னில்
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் —16
அன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும்
தொன்னெறிக் கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே —-17
அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்ப்பிப்போம் யாமே அது நிற்க ——18-

அன்னதோர் இல்லியினூடு போய் –வாய் கொண்டு சொல்ல முடியாத ஸூ ஷ்மமான ரேந்த்ரத்தின் வழியே சென்று –
சுகோ முக்த -வாம தேவ முக்த –முதலானோர் அடைந்தார்கள் என்னில்-போய் வந்தார் சொல்லக் கேட்டதில்லையே –
கற்ப்பிப்போம் யாமே-எனக்கு பிடித்த புருஷார்த்தை இனிதாக பேசுவதை விடுத்து அறிவிலிகள் உடன் வாதம் செய்யவோ –
அவர்கள் ஏதேனும் சொல்லிக் கொண்டு இருக்கட்டும் -என்று கை ஒழிகிறார்-
ஆரானும் யாதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -என்ற நம்மாழ்வார் ஒரு புடை ஒப்பர் இவர் அன்றோ –

முன்ன நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்——–19
பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர்
கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர் ——–20
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாணெடுங்கண்
கன்னியரால் இட்ட கவரிப் பொதிய விழ்ந்தாங்கு——-21
இன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த
மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் —-22
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப
அன்னவர் தம் மானோக்கம் உண்டாங்கு அணிமலர் சேர் ——-23
பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்
மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை —————–24
இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் ——25
மின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து
மன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் ———-26
மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த
மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் ——27
அன்ன நடைய வரம்பையர் தங்கை வளர்த்த
இன்னிசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் ——28
மன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்
மின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் ——-29
மன்னு மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்
பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் ———30
துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப
அன்ன முழக்க நெரிந்துக்க வாணீலச்——31
சின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்
துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் ——32
மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர
இன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலைமேல் ——33
நன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத் தாங்க அருஞ்சீர்
மின்னிடை மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் ——-34
பொன்னரும் பாரம் புலம்ப வகம் குழைந்து ஆங்கு
இன்ன வுருவின் இமையாத் தடம் கண்ணார் ——-35
அன்னவர் தம் மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன்னமுதம் மாந்தி இருப்பர் இது வன்றே ——36
அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்
அன்ன திறத்தே யாதலால் காமத்தின் ———-37
மன்னும் வழி முறையே நிற்று நாம் –

கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த–சிங்கம் தானே சுமந்து நிற்கிறதோ என்று சங்கிக்கும் படி சிற்ப வேலைப்பாடு என்றபடி –
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப-அன்னவர்-நெஞ்சில் கருத்தை ஸூ சிப்பித்துக் கொண்டே புன்னகை செய்வார்களாம்
-பூ கொய்து விளையாட அழைப்பவர்கள் போலே
கவரிப் பொதிய விழ்ந்து ——-சாமரத் திரள்கள் தம் மேல் வந்து மலரப் பெற்று /
பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்-மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை –கற்பகக் காடுகள் நிறைந்த பிரதேசங்கள்
எல்லா வற்றிலும் நிலை பெற்று இருக்கிற பாரிஜாத பூக்களில் உள்ள மகரந்த பிந்துக்களில்
மழைத் தடம் கண் —–குளிர்ந்த விசாலமான கண்களை யுடைய வர்களாயும்
விசும்பூரும் மாளிகை மேல் ——ஆகாசத்தில் சஞ்சரிக்கும் விமானத்தில்
மழைக் கண்ணார்-குளிர்ந்த கண்களை யுடைய மாதர்கள்
துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப-நெருங்கிய சன்னல்களைச் சுற்றி உள்ள கதவுகள் திறந்து கொள்ள
அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்-அன்ன திறத்தே–தர்ம புருஷார்த்துக்கு பலமாக பெரும் பெரு இதுவே –சிறந்த அர்த்த புருஷார்த்தத்தின் பலனும் அப்படிக்கு ஒத்ததே யாம் –

ஸ்வர்க்க லோகத்தில் கிடைக்கும் விஷய போகங்களை விரித்து அருளிச் செய்கிறார் –
மோக்ஷம் முதலிலே தள்ளி அறம் பொருள் இரண்டும் காம சித்தியே பலனாக கொண்டவை என்று அருளிச் செய்து
பகவத் காமமே தமது துறை -என்று ஆழ்வார் தமது உறுதியை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்
சேம நல் வீடும் பொருளும் தர்மமும் சீரிய நல் காமமும் என்று இவை நான்கு என்பர் -நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -என்றார் இறே அமுதனாரும் –
யாதலால் காமத்தின் –மன்னும் வழி முறையே நிற்று நாம் -என்பதை —
யாதலால் காமத்தின் – வழி முறையே நாம் நிற்றும் -என்றும் – யாதலால் -காமத்தின் மன்னும் வழி முறையே நாம் நிற்றும் -என்றும்
அல்ப அஸ்திரம் இல்லாத பகவத் காமத்தில் நிற்போம் என்றவாறு

மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39
மன்னும் வட நெறியே வேண்டினோம் –

கடல் அன்ன காமத்தர் ஆயினும் மாதர் மடலூரார் மற்றையோர் மேல் —

வேண்டாதார்
தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் ——–40
அன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய்
இன்னிசை யோசைக் கிரங்கா தார் மால் விடையின் —–41
மன்னு மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல்
பின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு —–42
உன்னி யுடலுருகி நையாதார் உம்பர்வாயத்
துன்னு மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் ———43
தம்முடலம் வேவத் தளராதார் காம வேள்
மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் ——-44
பொன்னேடு வீதி புகாதார்

அரசிகர்களில் கடை கெட்டவர்கள் -விரஹத்தில் சந்தனத்துக்கு உண்டான தாஹத்வம் அறியாதவர்கள்
இடையர்கள் ஜாதிக்கு இயல்பான வேய் குழல் ஓசைக்கும் உருகி சுருண்டு விழாமல் இருப்பார்கள் –
கார் மணியின் நாவாடல் தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ-என்று உணராமல்
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ -நெருப்பை வாரி எறிந்தால் போலே அன்றோ இருக்கும் –
நவ யவ்வன ஸ்த்ரீகளாய் இருந்து வைத்து நாணம் காக்க வேணும் என்று இருந்து
தெருவில் புறப்படாமல் தத்வம் பேசி இருக்கும் அரசிக சிகாமணிகள் –

தம் பூவணை மேல்
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் ——-45
இன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும்
பொன்னனையார் பின்னும் திரு வுறுக

தம் பூவணை மேல்-சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் ——தங்களுடைய புஷப சயனத்தின் மீது
துகள்களை யுடைய புஷபங்கள் அணிந்த கூந்தலையும் நிதம்பத்தையும் மெல்லிய முலையையும்
இன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும்- பொன்னனையார் பின்னும் திரு வுறுக —இனிதாய் இளையதாய் உள்ள வாடைக் காற்று வந்து தடவ -ஆனந்தமாக தூங்கும் ஸ்த்ரீகள் மேன்மேலும் மேனி அழகு மேலிட்டு விளங்கட்டும்
விரஹமே விளை நீராக -ஒழிந்த பாவி அப்படியே ஒழிந்தே போகட்டும் என்று சுகமாக வாழ்பவர்கள் கோஷ்ட்டியில் நான் இல்லை என்றவாறு –
பொன் நெருப்பிலே இட உரு அழியாமல் அழுக்கு அற்று நிறம் பெறுமா போலே விரக அக்னியால் வாடாதவர்கள் என்பதால் பொன்னனையாள் என்கிறார்
திரு உறுக -உறுதல்-அதிகப்படுதல்-அதிகமான சோபை அடையட்டும் என்று ஷேபிக்கிறார்-

போர் வேந்தன் ——46
தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47
மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்
மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48
கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
அன்ன நடைய வணங்கு நடந்திலளே——–

போர் வேந்தன் -ரண ஸூரன் —பெருமாள் -/-தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து —
பொன்னகரம் பின்னே புலம்ப –அயோத்யா வாசிகள் அனைவரும் பின்னே அலுத்து கொண்டே வந்த போதிலும்
வலம் கொண்டு ——-தான் கொண்ட நிலையில் உறுதியாக கொண்டு
மாதிரங்கள் மின்னுருவில் வெண் தேர் திரிந்து –திக்குகள் தோறும் மின் போன்ற கானல் பரவி இருக்கப் பெற்றதும்
வெளிப்பட்டுக் ——எல்லாம் சூன்ய ஸ்தலமாக இருக்கப் பெற்றதும் -பார்த்த இடங்கள் எல்லாம் வெளி நிலமாகவே என்றவாறு
கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று
கற்கள் நிறைந்தும் –புல்லுகள் தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சூழல் காற்று அடித்து இருக்கப் பெற்றதும்
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-அதற்கு மேலே ஆகாரம் இல்லாமல் மடிந்த வயிற்றையுடைய பேய்களே
திரிந்து கொண்டு இருக்கப் பெற்றதும்
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்-கொலை பற்றியே சப்தமே இருக்கும் வெவ்விய காட்டில்
—காம சித்தியே -பெருமாள் கூடி இருப்பதே சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -கூட்டிப் போகா விடில்
ஆண் உடை உடுத்திய பெண் என்று ஜனகர் நினைப்பார் என்றாளே – –

பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் ———52
கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு ——53
அன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்
கன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் ——–54
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே –

வேகவதி என்னும் தேவ கன்னிகை -தமையன் தடை செய்தாலும் உதரித் தள்ளி போர் களம் சென்று பலரும் அறிய அவன் காதலனை
கைப் பிடித்து இழுத்து தன்னூர்க்குக் கொண்டு போய் இஷ்டமான போகங்களை அனுபவித்தாள்
-இவள் கதையும் வாசவத்தை கதையும் இன்ன புராணம் என்று அறியோம் –

பூம் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும்
கொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை
தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனைப் —-56
பன்னாக ராயன் மடப்பாவை பாவை தன்
மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் ———57
தன்னுடைய கொங்கை முக நெரியத் தானவன் தன்
பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது ——58
நன்னகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே –

அர்ஜுனன் தீர்த்த யாத்திரைக்கு சென்ற பொழுது -உலூபி என்னும் -கௌரயான் என்னும் ஐராவத குல சர்ப்ப ராஜன் பெண்
-கண்டு காம மோஹம் அடைந்து –
அப்பொழுது சம்வத்சர ப்ரஹ்மசர்ய விரதத்தில் நின்றாலும் சரண் அடைந்து விரதம் குலைக்கப் பட்டு
-இராவான் என்னும் புத்ரனை பெற்றதாக -மஹா பாரதம் ஆதி பர்வம் -234-அத்யாயம் –

சூழ் கடலுள் —-59
பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் ——-60
தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய ——–61
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் ——-62
என்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் ——63
கன்னி தன் பால் வைக்க மற்று அவனோடு எத்தனையோர்
மன்னிய பேரின்பம் எய்தினாள் –

பலி சக்ரவர்த்தி வம்சத்தில் -பாணாசுரன் -மக்கள் உஷை -அநிருத்தன் -அவள் தோழி -சித்ரலேகை –
எம்பெருமான் ஈன் துழாய்-மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் -என்னை அனுபவிக்க ஒட்டாமல் மடல் எடுக்கும் படி
பண்ணின மஹாநுபாவன் எம்பெருமான் என்றபடி
மன்னிய பேரின்பம் எய்தினாள்-உஷை அனுபவித்தது சிற்றின்பம் என்றாலும்
உஷை அத்தை பேரின்பம் என்று நினைத்து இருந்தாள் என்றவாறு –

மற்றிவை தான் ———-64
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
மன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா ———65
மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்
அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —————66
பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்
தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு ——-67
அன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்
மன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் ———68
மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்
பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப ——–69
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே —–71
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம்-

பர்வத ராஜன் ஹிமாவான் உடைய சிறந்த பெண் -உண்மை -தக்ஷன் சாபத்தால் -பார்வதி யோகத்தால் அக்னி உண்டாக்கி முடிந்து
மீண்டும் ஹிமாவான் புத்ரியாக பிறந்து தபஸ் -காவலில் புலனை வைத்து -கூழை கூந்தல் -தபஸுக்கு சேர சடையாக்கிக் கொண்டதால் சடாபாரம்
-கோரமான தபஸ் -செய்து -மூவிலை வேல் -த்ரி சூலம் –
வரும் தவத்தினூடு போய்–அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே –என்று அந்வயம்
சூழ் கழல் கால் -கழல் சூழ்ந்த கால் -வீரத் தண்டை அணிந்த கால் -கூத்தாடி சூல பாணி பஸ்மதாரி சிவன் உடன் அனைய பெற்றாளே

பாவியேற்கு
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75
மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80
பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81
இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82

திரு நறையூர் எம்பெருமான் சேவிக்கப் புகுந்த தான் பட்ட பாட்டை பேசாத தொடங்குகிறாள் பரகால நாயகி
திரு நறையூர் பொன்னியலும் மாடம் –திரு நறையூர் மணி மாடம் அன்றோ நாச்சியார் கோயில்
திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -தென்னறையூர் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை –
பன்னு கருதலம் -கொண்டாடத் தக்க திருக் கைகளும் –
பங்கயத்தின்-பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல்--ஓர் மணி வரை மேல் பங்கயத்தின் காடு பூத்தது போலே என்று
திரு மேனி நீல ரத்ன பர்வதம் -திருக் கண் முதலியன தாமரைக் காடு என்று காட்டி அருளி
அகலகில்லேன் இறையும் பிராட்டி குறைவதால் திரு மார்பும் தாமரை என்ன குறை இல்லையே –
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் —-மரகத பர்வம் முற்று உவமை –
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்-இதுவும் முற்று உவமை -ரூபக அதிசய யுக்தி –
நெஞ்சு போயிற்று அறிவு போயிற்று வளை கழன்றது மேகலை நெகிழ்ந்து ஒழிந்தது இப்படிப்பட்ட பரிதாப நிலையிலும் அவளும் இருந்தும் இழந்தேன்
கடல் கோஷம் நலிய -சீதோ பாவ ஹநூமதே என்றால் போலே நிலா சுடுக என்று நினைப்பிட்டானோ –

தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து
மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83
இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் ———84
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85

கடல் ஓசையும் நிலாவும் மட்டும் அல்ல -தென்றல் -அன்றில் போல் வனவும் நலிய -இவற்றால் நலிவு படும் பெண்ணாகப் பிறந்தேன் -என் செய்கேன்-

கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86
தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-

அதற்கு மேலே மன்மத பாணங்களால் படும் வருத்தம் வாசா மகோசரம் -அநங்கன் என்ற பேர் பெற்றவனும்
கன்னவில் தோள் காமன்-என்றும் –தன்னுடைய தோள் கழிய வாங்கி-என்றும் சொல்லும் படி திண்ணிய உடம்பு உடையவன் போல அன்றோ வதைக்கிறான் –
கருப்புச் சிலை / முல்லை அசோகம் நீலம் மா முளரி -ஐந்து புஷபங்கள்
அன்றிக்கே-மத்தம் தீரம் சந்தாபம் வசீகரணம் – மோகனம் என்றும் சொல்வர்
உன்மா தனஸ் தாப நச்ச சோஷண ஸ்தம்ப நஸ்ததா சம்மோஹ நச்ச காமஸ்ய பஞ்ச ப்ரகீர்த்திதா என்றும் சொல்வர் –

பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின் ———-88
நன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே –

காமன் செய்யும் ஹிம்சை இருக்கட்டும் -என் உடனே இருந்து என்னை ஹிம்ஸிக்கும் முலைகள் -தண்டிப்பார் யாரும் இல்லையே
ஒருவரும் புக்க கூடாத காட்டிலே சிறந்த கொடி தன்னிலே பரிமளோத்தரமான புஷ்ப்பம் புஷ்பித்து கமலா நின்றாள் யாருக்கு என்ன பலன் –
கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பேதையேன் -முடிந்து பிழைக்காமல் சாபல்யத்தால் பிராணனைப் பிடித்து கொண்டு நிற்கிறேன்
எனக்கே பொறையாகி -இருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ –
முன்னிருந்து -பெண்மைக்கு அவசியம் என்றால் முதுகில் முளைத்தால் ஆகாதோ –கண் எதிரே முளைத்து வாங்கவும் வேணுமோ
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் திரிவேன் –
பெண்ணாக இருப்பதால் வருத்தம் உணர்ந்து அருளிச் செய்ய பரகால நாயகி ஏறிட்டுக் கொண்டு
முலைகள் உள்ளே அடங்கிப் போக மருந்து கொடுப்பார் உண்டோ என்கிறாள் –

-மால் விடையின் ———92
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலை வாய்த் ————93
தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின்
இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே ———–94
கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்
என்னிதனைக் காக்குமா சொல்லீர்-

மன்னு மருந்து அறிவீர் இல்லையே -என்றதும் நல்ல மருந்து உண்டு -என்று சொல்லும் வார்த்தைக்கு பாரித்து இருந்த பரகால நாயகி
காதிலே ஊரா மாடுகளின் மணியோசை வந்து விழ-செவியில் சூலத்தைப் பாச்சினால் போலே
நெடுக்கச் சென்று ஹிம்சை பண்ணா நின்றதே -எக்கு -சூலம் ஈட்டி என்றவாறு –

இது விளைத்த ——–95
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் ——–96
சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலையிட்டணை கட்டி ——-97
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து——-98
தென்னுலக மேற்றுவித்த சேவகனை –

இக்கஷ்டங்களை விளைவித்த மஹாநுபாவன் இன்னான் என்று அறிவாள் பரகால நாயகி
அதி மானுஷ சேஷ்டிதங்களை செய்பவன் என்று அபிநயித்து அனைவரையும் அகப்படுத்திக் கொண்டு மேனாணித்து இருப்பவன் –
என் வாய்க்கு இரையாகி அவன் படப் போகும் பாடுகளை பாருங்கோள் என்கிறாள் மேல் -முன்னம் மா மதி கோள்- விடுத்த -இப்போது கிடீர் அவன் ஆபன் நரானரை நோக்கத் தவிர்ந்து -என்பர் நாயனார்
மதி யுகத்த இந்நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்தாகும்-சந்திரனுக்கு நேர்ந்த ஆபத்தைப் போக்கி என்னை நன்றாக தப்பிக்க நிர்வஹித்தான்-
இதை விளைவித்த மன்னன் –மார்பன் -முகில் வண்ணன் -சேவகனை -வீரனை -கூத்தனை –விசேஷணங்கள்–எல்லாம் கன்னவில் தோள் காளை-என்ற இடத்தில் அந்வயிக்கும் –

ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் ——99
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் ——100
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ——-101
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —–102
மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை

கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே–தூணில் நின்றும் தோன்றி திருக் கண்களால் கொளுத்தி விடலாம் என்றாலும் –
ஆஸ்ரித ப்ரஹ்லாதன் விஷயத்தில் பல்லாயிரம் கொடுமைகள் புரிந்த பாவியை ஒரு நொடிப் பொழுதில் கொன்று முடிக்காமல்
சித்திர வதை பண்ணி விட வேண்டும் என்றும் தாள் மேல் கிடாத்தி போழ்ந்தான் யாயிற்று-அந்திப் பொழுதில் திருக்கை யுகிர்களால் பிளந்து அருளினான்

மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104

மஹா வராஹ ரூபாயாய் -புண்ணியம் தெய்வதமும் சேர் பூ லோகத்தை புல் பாய் போலே சுருட்டிக் கொண்டே பாதாளம்
நண்ணி இரண்யாட்ச்சனை பின் தொடர்ந்தே ஏகி நலமுடனே யாதி வராகத் தேவாகி-மண்ணுலகம் அனைத்தும்
இடந்து எடுத்தோர் கோட்டில் வைத்து வர வவன் மறிக்க வதைத்துத் தேவர் எண்ண உலகீர் எழும் படியப் பண்ணா
இறைவா நாராயணனே எம்பிரானே-என்பர் பின்னோரும்
இப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பம்
வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்க–முது நீர் -சகல பதார்த்தங்களும் முற்பட்டு புராதானமாய் யுள்ள நீர்
-அப ஏவ சசர்ஜாதவ்–நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணி –
வைத்து எடுத்த கூத்தனை -அக்காலத்தில்  மகிழ்ச்சி தோற்ற கூத்தாடினான் -என்பதை கண்டார்கள் ஆழ்வார்கள்

மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் ——-105
தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய ———106
மன்னும் துயர் கடிந்த வள்ளலை –

மந்த்ர மலை சுழன்ற பொழுது அந்த சுழற்சியின் விசையின் மிகுதியால் சகல பதார்த்தங்களும் சுழல்வன
போலத் தோன்றினமை–மின்னு மிருசுடரும் – -தன்னினுடனே சுழல மலைத் திரித்து
அவருடைய –மன்னும் துயர் கடிந்த வள்ளலை–துர்வாச முனிவர் சாபத்தால் தேவர்களுக்கு நேர்ந்து இருந்த வறுமையைப் போக்கின-என்றவாறு –

மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –

அத்துனைக் கண் —அவ்வளவில் -அந்த ஷணத்திலேயே –

-தாமரை மேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் ——-113
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை —–114
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல்
அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி ——–115
என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக்
கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை ——116
மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்
பொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை ——117
மன்னு மரங்கத் தெம் மா மணியை-

கோயில் திருமலை பெருமாள் கோயில் —மன்னும் அரங்கத்து எம் மா மணியை —மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை –வெஃகாவில் உன்னிய யோகத்துறக்கத்தை
மின்னை இரு சுடரை –மின்னல் போலவும் சந்த்ர ஸூரியர்கள் போலவும் பள பள வென்று விளங்குபவன் -என்பர் பெரியவாச்சான் பிள்ளை
மின் என்று மின்னல் கொடி போன்ற பெரிய பிராட்டியார் -இரு சுடர் -ஸூர்ய சந்த்ரர்களுக்கு ஒப்பான திரு வாழி திருச் சங்குகள் சொல்லிற்றாய்
–இம்மூவரின் சேர்த்தி சொல்வதாக நாயனார் திரு உள்ளம் –
அங்கு நிற்கிற படி எங்கனே என்னில் -பெரிய பிராட்டியாரோடும் இரண்டு அருகும் சேர்ந்த ஆழ்வார்கள் உடன் ஆயிற்று நிற்பது –

வல்ல வாழ்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் ——–118
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119
மன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்
சென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத் ——–120
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை யரியை யருமறையை——-121
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னு மிடை கழி எம்மாயவனைப் பேயலறப் ——-122
பின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய்
அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்——-123
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —–124

ஹம்சம் மத்ஸ்யம் ஹயக்ரீவர் வித்யா ப்ரத அவதாரங்கள்
பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின் மூவரு நெருக்கி மொழி விளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு –
வாசல் கடை கழியா யுள் புகா காமரு பூங்கோவல் இடை கழியே பற்றி இனி –நீயும் திரு மகளும் நின்றாயால் -பொய்கையார் –
அள்ளல் வாய்–அன்னம் இரை தேரழுந்தூர் –சேறு கண்டு இறாய்க்கக் கடவ அன்னங்களும் சேற்றைக் கண்டு இறாயாதே மேல் விழுந்து
சஞ்சரிக்கும் படியான போக்யதை யுடைய திரு அழுந்தூரிலே நித்ய வாசம் பண்ணுகிற நிரவாதிக தேஜோ ரூபனை -நாயனார்
அத்திருமலைக்கு சீரார் வேங்கடாசலம் என்னும் பேர் வைத்தனர் அது ஏது என்னில் வேம் என வழங்கு எழுத்தே கொத்துறு பாவத்தைக் கூறும்
கடம் என கூறு இரண்டாம் சுத்த வக்கரம் கொளுத்தப்படும் எனச் சொல்வர் மேலோர் -என்றும்
வெம் கொடும் பவங்கள் எல்லாம் வெந்திடச் செய்வதால் நல் மங்களம் பொருந்தும் சீர் வேங்கட மலை யானது என்றும் புராணத் செய்யுள்
வேம்-அழிவின்மை / கடம் -ஐஸ்வர்யம் / வேங்கடம் என்னும் பெயரில் தென்றலும் உண்டு –

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்
கொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் —-125
அன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை —-126
மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை
மன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில்—127
உன்னிய யோகத் துறக்கத்தை-

ஆயிரம் பூம் பொழிலையும் யுடைய மாலிருஞ்சோலை யதுவே –வன கிரி அன்றோ –
அன்ன வுருவில் அரியை-வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை -தெற்காழ்வாரை குறித்த படி
அந்தணனை -அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்
-பரம காருண்யன் -அறவனை ஆழிப் படை அந்தணனை
வேளுக்கை –வேள் இருக்கை -உகந்து அருளினை தேசம் அன்றோ
-காமஸிகாஷ்டகம்–காமத் அதி வசன் ஜீயாத் கச்சித அத்புத கேஸரீ–காமேந ஆஸிகா-என்றபடி
பாடகம் -பாடு பெருமை -அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
அண்டமூடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்

ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை ——128
என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129
அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் ——130
மன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் ———131
மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் ——–132
கண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர்
மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் ——–133
கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——–134
தன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்——135
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்
கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும்—–136
தன்னிலை எல்லாம் அறிவிப்பன்

என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்-முன்னவனை–தேவாதி ராஜன் இவர் மனம் கவர்ந்த ஈசன் அன்றோ -வேகவதி நிதி காட்டி அருளிய சரித்திரம் –
மூழிகே காலத்து விளக்கினை -வளக்கினை —பாட பேதம் –சம்பத் ஸ்வரூபன் என்றுமாம்
ஆ தன் ஊர் –காமதேனுவுக்கு பிரத்யக்ஷம் / ஆண்டு அளக்கும் ஐயன் –ஆண்டு -சகல காலங்களுக்கும் உப லக்ஷணம் -கால சக்ர நிர்வாஹகன் என்றபடி
ஆண்டளக்கும் ஐயனை-நென்னலை இன்றினை நாளையை-மூன்று விசேஷணங்கள் -நென்னலை-இறந்த காலங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்
இது விளைத்த காளையை –என்று தொடங்கி-கன்னவில் தோள் காளை-ஸ்வரூப ரூப குண விபூதியை அருளிச் செய்தார்
விரஹம் தின்ற உடம்பைப் பாரீர் -திரு உள்ளம் இரங்கா விடில் -ஆண்டாள் பெரியாழ்வார் வியாசர் வால்மீகி ப்ரஹ்லாதன்
குலசேகர பெருமாள் தொண்டைமான் சக்கரவர்த்தி போன்றோர் -கூடி இவன் மேன்மையில் பிரமித்து இருப்பார்களே –
அங்கு எல்லாம் சென்று அவனைப் போலே நிர் குணன் எங்கும் இல்லை என்று பறை அடித்து சொல்வேன்
லோகம் அடங்க திரண்ட இடங்களில் சென்று -சேஸ்வரம் ஜகத்து என்று பிரமித்து இருக்கிறவர்களை நிரீஸ்வரம் ஜகத்து
என்று இருக்கும் படி பண்ணுகிறேன் -என்றவாறு –

தான் முன நாள்
மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்——-137
துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்
தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்———138
மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கையிற்றால்
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்——–139

கீழே ப்ரதிஜ்ஜை செய்த படி சில சமாசாரங்களை எடுத்து விடத் தொடங்குகிறாள் பரகால நாயகி –
ஏசத் தொடங்குவது ப்ராணாய ரோஷத்தின் பரம காஷ்டை யாகும்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை -குண கீர்த்தனங்களிலே இதுவும் ஒரு பிரகாரமே யாகும்
மானமரும் மென்னோக்கி-இரண்டு பிராட்டிகள் பேச்சாலே ஏக காலத்திலே முன்னடிகளால் இகழ்ந்தும் பின்னடிகளால் புகழ்ந்தும் அனுபவித்தாரே –
பெற்றிமையும் -தெற்றனவும்-சென்றதுவும் –என்ற இவை எல்லாம்- மற்றிவை தான் உன்னி உலாவ– என்ற இடத்தில் அன்வயித்து முடிவு பெறும்
இவனுடைய இழி தொழில்கள் சொல்லி முடிக்கப் போகாதவை -என்ற வாறு –
தன் வயிறார –திருமங்கை ஆழ்வாரைப் போலே பரார்த்தமாக களவு காண்கிறது அன்று -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்-
வான் கயிறு –எதிர் மறை இலக்கணையால் குறுங்கயிறு -கண்ணி நுண் சிறுத் தாம்பாலே இ றே கட்டுண்ணப் பண்ணிக் கொண்டது –

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை——–140
முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்

ஆயிரம் கண்ணுடை இந்திரனார்க்கு என்று ஆயர் விழ எடுப்ப பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்த அதனை எல்லாம்
போயிருந்தது அங்கொரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி
வளைத்து உண்டு இருந்தான் போலும் -பெரிய திரு மொழி –10-7-7-
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும் அடங்கப் பொட்டத்துற்று-பெரியாழ்வார்
திரை போட்டு உண்டானா -பிறருக்கு கொடுத்து உண்டானா முற்றவும் தானே யன்றோ துற்றினான்-வெட்கமாவது பட்டானா -என்பேன்
தெற்றனவு-தெளிவு வெட்கம் இல்லாமை என்றவாறு

மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—–141
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்

கோதை வேள் ஐவர்க்காய் மன்னிக்கலாம் கூறிடுவான் தூதவனாய் மன்னவனால் சொல்லுண்டான்-இழி தொழில் நாடு அறியச் சொல்லி நாடு எல்லாம் அவமதிக்கும் படி செய்வேன் –

மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—-142
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்————–143

செருக்குக்குப் போக்குவீடாக -குடங்கள் ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே —
ஈடறவு–சீர் கேடு –-ஈடு பெருமை -அஃது இல்லாமை -அல்பத்தனம் என்றவாறு /
வீடறவும்-என்றும் கொண்டு கூத்தின் நின்றும் மீளாமை என்றுமாம்

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் –

சூர்பணாகாவை செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அறிந்தானை பாடிப் பற அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -பெரியாழ்வார்
மலை போல் உருவத் தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே
ராமஸ்ய தஷினோ பா ஹூ
பொன்னிறம் கொண்டு -அபிமதம் பெறாமையாலே விவரணமான உடம்பை யுடையவள்
புலர்ந்து எழுந்த காமத்தால் -புலர்தல் -விடுதல் -உதயமாகி வளர்ந்த காமத்தினால் என்றபடி –
மன்னிய திண் எனவும் -ஸ்த்ரீ வதம் பண்ணினால்-அனுதாபமும் இன்றிக்கே பெரிய ஆண் பிள்ளைத் தானம் செய்ததாக
நினைத்து இருந்த நிலை நின்ற திருடத்வம் -என்று வியாக்யானம்

வாய்த்த மலை போலும்—–146
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—–147
உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–148
மன்னிய பூம் பெண்ணை மடல் –

தாடகை -ஸூ கேது -என்னும் யக்ஷன் மகள்-ஸூந்தன் என்பவனின் மனைவி -கணவன் அகஸ்தியர் சாபத்தால் நீறாய் ஒழிந்ததை அறிந்து தன்
பிள்ளைகள் ஸூ பாஹு மாரீசர்கள் உடன் எதிர்த்துச் சென்ற பொழுது சாபத்தால் ராக்ஷஸி ஆனால்
ஸ்த்ரீ ஹத்தி பண்ணுவதே இந்த மஹாநுபரின் தொழில் என்பேன்
திண் திறல்-ஒரு பெண்ணைக் கொலை செய்து விடுவது பராக்ரமோ என்று ஏசினபடி
மற்றிவை தான்—உன்னி யுலவா –-சொல்லி முடிக்கப் போகாதவை அன்றோ -உதாரணத்துக்கு சிலவற்றை சொன்னேன் என்றபடி
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–மன்னிய பூம் பெண்ணை மடல் –சிறப்பித்து பனை மடலைச் சொல்லி
இந்த ப்ரஹ்மாஸ்திரம் இருக்க இனி எனக்கு எண்ண குறை -என் கார்யம் கை புகுந்ததேயாம் -என்று
தான் பரிக்ரஹித்த சாதனத்தின் உறைப்பைக் காட்டி அருளுகிறார்

————————————————————————–

கம்பர்பாடல்

என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் -பின்னைப் போய்
ஒண்டுறை நீர் வேலை யுலகறிய யூர்வன் நான்
வண்டறை பூம் பெண்ணை மடல்-பரகாலன் பாவனையில் அருளிச் செய்த பாடல் –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

பெரிய திருமடல் –135-எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல்-148-மன்னிய பூம் பெண்ணை மடல் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

June 21, 2014

எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்——135
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்
கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும்—–136
தன்னிலை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள்
மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின்  கண்——-137
துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்
தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்———138
மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கையிற்றால்
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்——–139
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை——–140
முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்
மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—–141
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—-142
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்————–143
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் வாய்த்த மலை போலும்—–146
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—–147
உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த—–148
மன்னிய பூம் பெண்ணை மடல் –

————————————————————————–

கம்பர்பாடல்

என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் -பின்னைப் போய்
ஒண்டுறை நீர் வேலை யுலகறிய யூர்வன் நான்
வண்டறை பூம் பெண்ணை மடல்-

ஒண் துறை நீர் வேலை உலகு அறிய-ஒளி பொருந்திய துறைகளை உடைத்தாய்
நீர் நிரம்பியதுமான -கடல் சூழ்ந்த  உலகினர் அறியும் படி

————————————————————————–

மண்ணில் பொடிப்பூசி வண்டிரைக்கும் பூச்சூடி-பெண்ணை மடல் பிடித்துப் பின்னே -அண்ணல்-திரு நறையூர் நின்ற பிரான் தேர் போகும் வீதி-பொரு மறையாச் செல்வம் பொலிந்து-

அறையாய் -கூப்பிடாய் -அவனுடைய  சேஷ்டிதங்களை எல்லாரும் அறியும் படி கோஷிப்பாய்-
தேர் போகும் வீதி அறையாய்-
இன்றும் திருத் தேர் அன்று திருமடல் சாதிப்பது இப்பாசுரத்தை அடி ஒற்றியே
செல்வம் பொலிந்து பலன் கிட்டும்-அரை குலையத் தலை குலைய ஓடி வந்து
கைங்கர்ய செல்வத்தை அருளுவான் –

————————————————————————–

எம்பெருமான் தன்னருளும் –
தர்மத்துக்கு தண்ணீர் வார்க்கை -தன பேறாக அருளுதல்

ஆகமும் தாரானேல்-
நெஞ்சோடு கலந்த வன்று தேக தாரகமாம் அத்தனை –

தன்னை –
மெய் போலே பாவித்துப் பொரி புறம் தடவி இருக்கிற தன்னை

நான்-
அவை எல்லாம் வெளிவிடப் புகுகிற நான்-இருவர் ஸ்வரூபத்தை அழித்தாகிலும் அவனைப் பெற்று அல்லது விடேன் என்று இருக்கும் நான் –

மின்னிடையார் சேரியிலும் –
தான் ப்ரனயத்துக்குச் சமைந்து -உங்களிடை அல்லது அறியேன் -என்று இருக்கிறவிடம் -ரசிகத்வம் விலை செல்லுகிற இடம் -என்றுமாம் –

வேதியர்கள் வாழ்விடத்தும்-
பிரமாண கோடிகளாலே  தன்னை அறிந்து சமாராத நமான யாகாதிகள் பண்ணும் இடத்திலும் -ஆன்ரு சம்சயம் விலை செல்லும் இடம்

தன்னடியார் முன்பும் –
தன்னைப் பற்றாசாக நினைத்து இருக்கிற ஆஸ்ரிதர் முன்பும்
குணம் விலை செல்லும் இடம் -என்றுமாம்

தரணி முழுதாளும் கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் –
தன் வீரப்பாடு பேசும் ராஜாக்கள் முன்பும்-ஆபிஜாத்யமும் ஜகத் ரஷணமும் விலை பெறும் இடம் என்றுமாம் –

நாட்டகத்தும்–—-
இப்படி நாலைந்து இடத்திலே சொல்லி விடா நின்றேனோ-சர்வேஸ்வரனாக பாவிக்கிற இடம் எங்கும் -தன் வீரப்பாடு பேசும் இடம் எங்கும் -தன்னிலை எல்லாம் அறிவிப்பன் –
என் உடம்பைக் காட்டுகிறேன் –

தான் முன நாள்-
அன்று தான் இடைச் சேரியிலே வெண்ணெய் திருடி-உரலோடு கட்டுண்டு விட்டுப் புறப்பட்டதும் –

மின்னிடை –
நீ களவு காண்கிறது பெண்களிடை காணக் கிடாய் –

யாய்ச்சியர் தம் சேரிக் களவின்  கண்—
என்ன பட்டணத்தே புக்கான் -இடைச் சேரி அன்றோ
என்ன மகுடபங்கம் பண்ணினான் துன்னு படல் அன்றோ
என்ன பிரதிமை எடுத்தான் -வெண்ணெய் அன்றோ
என்ன திருப்பணி செய்தான் -தன் வயிறு வளர்த்தான் அத்தனை அன்றோ
சேரி -ஒழுகு ஒன்பதும் –

துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்-
மேலே படல் இருக்க கீழே நுழைந்ததும் களவு கை வந்ததும் அத்தனை அன்றி
அவள் கோலிட்டுத் திருகி வைக்கும் யந்த்ரம் அறியான்
பல்கால் புக்க வழக்கத்தாலே அறியும் -என் கை –
தன் வயிறார விழுங்கக்-திரு மங்கை ஆழ்வாரைப் போலே பரார்த்த மாக களவு காண்கிறது அன்று –

கொழும் கயற்கண் மன்னு மடவோர்கள் பற்றியோர்-எட்டாதே திரிந்தவன் பிடியுண்ட ப்ரீதி ஆய்ச்சியர் கண்ணிலே தோற்றி இருக்கை –

வன் கையிற்றால்-
எட்டிற்று ஒரு கயிறு -கண்ணி நுண் சிறுத் தாம்பு-கண்ணிக் குறும்  கயிறு –

பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
பெற்றிமை -பெருமை / அப்போதே உரலோடு இருக்கச் செய்தே கண்டேனாகிலோ -என்று கருத்து

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண் துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை-அன்னது -அம்மே அப்பூச்சி என்று முகத்தைத் திரிய வைக்கிறாள்
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும் -பெரியாழ்வார் -3-5-1-

முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்-
ஒரு திரை வளைத்துக் கொண்டால் என் செய்யும் -வயிறு தாரித்தனம்
தெற்றனவும்–நிர் லஜ்ஜையும்

மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்
நாழி யரிசி ஏற ஜீவித்தார்க்குத் தூது போம் வேண்டப்பாடு

தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்-
ஸ்ரீ விதுரரகத்தே உண்டது –

மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
பறை கொட்டுகைக்கு ஓர் ஆள் இல்லாமே அரையிலே கட்டிக் கொண்டது –

மங்கையர் -இது கொண்டாட வல்லவர்கள் அன்றோ –

கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி-
கண்டார் பிழையாத படி இருக்கிற அழகு

என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்-
என் செய்ய-இவன் இப்போது போகானோ-என்னும்படி படுகிற பாடு –
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்–
அவ் வைஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவள்
அரக்கர் -அவள் பிறந்தால் போல் பிறந்தார் இல்லை
நல் தங்கை -ராவணனுக்கு நேரே உடன் பிறந்தவள்

துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச்-
அவளை ஒப்பார் இல்லை-சௌந்தர்யத்தால் குறைவற்றவள் –

சோர்வெய்திப்-
அவசையாய் –

பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—தன்னை நயந்தாளைத்
உடம்பு வெளுத்து
துவண்டு
மிக்க ச்நேஹத்தால் தன்னை ஆசைப் பட்டவளை-
தான் முனிந்து மூக்கரிந்து-
வேண்டா என்பதும் அன்றிக்கே
மூக்கை அறுப்பதே -என்ன வீரமோ –

மன்னிய திண் எனவும் வாய்த்த மலை போலும்-
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
ஒரு பார்ப்பான் சொன்னான் இ றே-

தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—
தென் உலகம் -அவள் அங்கு இருக்கவும் பெற்றாளோ-

உன்னி யுலவா யுலகறிய ஊர்வன் நான்-
உலவா -ஆபத்துக்கு நான் தேடி வைத்ததுக்கு ஒரு முடிவு இல்லை
உலவு -முடிவு –உலவா -முடியா -என்றபடி

முன்னி முளைத்து எழுந்து ஓங்கி யொளி பரந்த-மன்னிய பூம் பெண்ணை மடல் –
முன்னி -மடல் எடுக்கக் கடவேன் -என்று முற்கொலி –
உயர்ந்து ஒளி மிக்கு அழகியதாய்
நிலை நின்றவை
மடலாய் இருக்கிறபடி
பிராட்டிக்கு விச்வாமித்ர பகவானைப் போலே
இவளுக்கும் இம்மடல்
பெண்ணை யாகிறது-பனை –

எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் -தன் பேறாக கிருபை பண்ணித்
தன் உடம்போடு வந்து என்னை அணையானாகில்-

தன்னை –
சர்வதா மடல் எடுத்தாகிலும் பெற வேண்டும்படியான
வைலஷ்ண்யத்தை உடைய தன்னை –

நான்-
ஏதேனும் செய்தாகிலும் அபேஷிதம் பெற்று அல்லது மீளுவது இல்லை
என்னும் துணிவை யுடைய நான் –

மின்னிடையார் சேரியிலும் –
அல்லாதவிடம் செய்தபடி செய்ய-என்னோட்டை சஜாதீயர்க்கு முந்துற அறிவிக்கத் தட்டில்லை இ றே
தான் ரசிகனாய் பிரணயித்வம் கொண்டாடி இருப்பது அவர்கள் பக்கலிலே இ றே
மின்னிடையார் என்று ஆண்டாள் போல்வார் கோஷ்டியிலும்
திருக் குரவை கோத்த பெண்கள் திறங்களிலும்  –
இதுவே அன்றோ அவனுடைய ரசிகத்வம் இருந்தபடி -என்று
என் உடம்பைக் காட்டி ஸ்திரீ காதுகன் கிடிகோள் -என்கிறேன் –

வேதியர்கள் வாழ்விடத்தும் –
உபாசக அக்ரேசரான  வ்யாசாதி கோஷ்டியிலும்
வேதியர் -என்று பெரியாழ்வார் வர்த்திக்கிற தேசங்களிலும் என்னவுமாம் –

தன்னடியார் முன்பும்-
குணைர் தாஸ்ய முபாகத -என்றார் போலே குண ஜ்ஞானத்தால் ஜீவித்துக் கிடப்பார் சிலர் உண்டு இ றே
நம் ஆழ்வார் போல்வார் -அவர்கள் சந்நிதியிலும்
அவர்கள் முன்பே இது கிடிகோள் அவன் குணம் இருந்தபடி என்று
என் வடிவைக் காட்டி -ந்ருசம்சன் -என்னக் கடவேன் –

தரணி முழுதாளும் கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும்-
ஒவ்வொரு நாடுகளுக்குக் கடவராய் இருப்பார் இவன் வீர வாசியை சொல்லி கொண்டாடி நிற்பார்கள் இ றே –
அவ்விடங்களிலே இது கிடிகோள் அவன் ரஷகனாய் இருக்கிறபடி என்று
அபலையான என் வடிவைக் காட்டுகிறேன் –
வேல் வேந்தர் -ஸ்ரீ குலசேகர   பெருமாள் -தொண்டைமான் சக்கரவர்த்தி போல்வார் இ றே -இங்கனே பிரித்துச் சொல்லுகிறது என் –
நாட்டகத்தும்–
லோகம் அடங்கத் திரண்ட இடங்களிலே சென்று-
சேஸ்வரம் ஜகத்து -என்று பிரமித்து இருக்கிறவர்களை
நிரீஸ்வரம் ஜகத்து -என்று இருக்கும்படி பண்ணுகிறேன்
நாட்டகத்தும் –
மற்றும் விலஷணர்  வர்த்திக்கும் திவ்ய தேசங்களிலும் –

தன்னிலை எல்லாம் அறிவிப்பன்
இவ்வடிவைக் காட்டி ஆற்றாமையை விளைத்து-மடல் எடுக்கும் படி பண்ணி
என்னுடைய உடம்பு கொடுப்பதில்லை -என்று இருக்கிற
தன் துணிவை எல்லாம் அறிவிப்பேன்
நான் ஆகாது என்று இருந்தான் அத்தனை -என்கிறாள்
இனி அதுக்கு உனக்கு என் -என்ன
லோகம் அடையக் கை விடும்படியாகப் பண்ணக் கடவேன்
பொரி புறம் தடவி
தன்னை ஈஸ்வரன் என்று இருப்பார் பக்கல்
அவன் இருக்கும் இருப்பை நாட்டிலே வெளியிடக் கடவேன் –

இப்படி பிரதிஞ்ஞை பின குண ஹானியை உபபாதிக்கிறார் மேல்
தான் -இது செய்தானாய் மேனாணித்து  இருக்கிற தான் –

முன நாள்-
செய்த நாள் பழகிற்று என்று இருக்கிறானோ –

மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின்  கண்
அகங்கள் தோறும் தனித்தனியே கண்ட களவு சேரிக் களவு என்று-தான் ஒரு சேரியாக வன்றோ களவு கண்டது
களவு கண்டு ஓடப் புக்கால் தொடருகிற பெண்கள் உடைய இடையினுடைய நுடங்குதல் காண்கைக்காக அன்றோ செய்தது –

துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்-
நெருங்கின படலை இட்டு வாசல்களை மரத்தை இட்டுத் திருகி வைப்பார்கள் யாயிற்று
அவற்றைத் திறந்து கொடு போய்ப் புக்கு –
திறந்து வைத்தார்கள் ஆகில் அடைத்துக் கொடு போய்ப் புக்கு களவு காண்பது
துச்சமான தயிரும் வெண்ணெயுமன்றோ –
பௌத்த பிரதிமையோ –

தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்-
ஏதேனும் ஒரு திரு மதில் செய்க்கைக்காகவோ-இவன் தீரா மாற்றுச் செய்து அகப்படாதே திரிந்த இழவு தீர-அகப்பட்ட போதே நல்ல தாம்பு என்று-நீளியது ஒரு கயிறு கொடு வந்து கொடுப்பார் இல்லை இ றே என்கிற-அஹங்காரம் தோற்றப் பார்க்கிற போதை
கண்ணில் புகரையும் ஆச்சர்யமாய் இருக்கிற வடிவையும் –

மன்னு மடவோர்கள் பற்றியோர் வன் கையிற்றால்-
இவன் அகப்பட்ட போதே ஒரு கைக்கு ஆயிரம் பெண்களாய் வந்து பிடித்து விடாதே நிற்பார்கள்
அப்போது கைக்கு எட்டிற்று ஒரு கயிறு
நல்ல தாம்பு அன்றே
கண்ணிக் குறும் கயிறு என்றும்
கண்ணியார் குறும் கயிறு -என்றும்
கண்ணி நுண் சிறுத் தாம்பு -என்றும்
இது தன்னை சிஷித்து வைத்தார்கள்  இ றே –
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்—
கையாலே பிடித்து விட்டார்களோ –
தன்னுடைய பெருமை இது அன்றோ –

அதுக்கு மேலே செய்ததொரு செயல் அன்றோ இது –
அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
நினைத்த வாறே துணுக என்னும் படியான வடிவை யன்றோ கொண்டது
பூத வேஷத்தையும் பரிக்ரஹிப்பார்  உண்டோ
ஆரேனுமாக நாழி அரிசி ஜீவிப்பாரைத் தேடித் திரியுமாயிற்று -ஆயர் விழாவின் கண் –
அங்கெ புக்கு ஜீவிக்கைக்கு -இடையர் உடைய உத்சவத்திலே

துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை–
நால்வர் இருவர் சுமந்து கொடு போன சோற்றை ஜீவித்தானோ
நெருங்கின சகடங்களாலே கொடு பொய் புக்கு
மலை போலே குவித்த சோற்றை அன்றோ ஜீவித்தது
அட்டுக் குவி சோறு இ றே இது –

முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்
ஒரு திரையை வளைத்துத் தான் ஜீவிக்கப் பெற்றதோ
அதிலே சிறிது சோறு வைக்கத் தான் பெற்றதோ
ஜீவிக்கும் இடத்தில் சில பந்துக்களோடே தான் ஜீவிக்கப் பெற்றதோ
இப்படிச் செய்தோம் என்று லஜ்ஜிக்கத் தான் பெற்றதோ –

மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்–
ராஜாக்கள் அடையத் திரண்டு கிடக்கிற பேர் ஒலக்கத்தின் நடுவே -தூதனாய்
தன்னை வாழ்வாகவும்
துணையாகவும்
தோழனாகவும்
தூதனாகவும்
உடையராய் இருக்கிற பாண்டவர்கள் உடைய தூதனாய்

தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்-
தன்னைக் கண்டார் அடைய அநாதர உக்தி-பண்ணும்படி அன்றோ செய்தது
இது செய்தோம் நாம் அன்றி -என்று இருக்கிறானோ
காலம் கடந்து போயிற்று என்று இருக்கிறானோ
நேற்று செய்தால் போலே யன்றோ இருக்கிறது –

மன்னு பறை கறங்க –
இவ்வசதச்ய பிரவ்ருத்திக்கு சஹ கரிப்பார் இல்லாமையாலே
தானே பறையை அறையிலே-கோத்தன்றோ அடிக்கிறது –

மங்கையர் தம் கண் களிப்ப——
இது செய்தான் என் என்றால்-கண்ட பெண்கள் களிக்கச் செய்தோம் -என்று இ றே இவன் சொல்லுவது –

கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி-
கண்டார்க்குப் பிழைக்க வரிதான கூத்தை யுடையனாயிற்று
அதுக்கு மேலே குடங்களை ஏந்திக் குடக் கூத்தாடி

என்னிவன் என்னப் படுகின்ற  ஈடறவும்–
இவன் படுகிற பாடு என்-
நாழி யரிசி ஜீவிப்பார்க்கு இப்பாடு பட வேணுமோ -என்று சொல்லுகிற எளிவரவையும் –

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை-
சொல்லீர் அவள் ஒருத்தியை
அவளைப் போலே பிறந்தாரும் உண்டோ
ராவணன் என்று ஓர் பேர் மாத்ரமாய்
அவள் அன்றோ அப்படை வீட்டுக்கு நிர்வாஹகையாய் போந்தாள்-
ஜனகச்ய குலே ஜாதா-என்னுமா போலே ராஷச குலத்துக்கு நிதி போலே யுள்ளாள்-

மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்-
சொல்லாய் ராஜ ராஜனை -அவனைப் போலே வாழ்ந்தார் உண்டோ
அவனுக்கு நல்ல ஜீவன் போலே வேறே தங்கை
சொல்லீர் எயிற்றின் ஒளியை
ஸ்திரீ யாகில் அங்கன் இருக்க வேண்டாவோ தான்

துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
எயிற்றின் ஒளி போலேயோ அகவையில் த்வேஷம் வெள்ளம் இருக்கிறபடி
சூர்ப்பம் போன்ற நகத்தை யுடையவள்
பெருமாளோடு தான் நினைத்து வந்த படி பரிமாறப் பெறாமையாலே சோர்ந்து பூமியிலே விழ –
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்-
அபிமதம் பெறாமையாலே விவர்ணமான உடம்பை யுடையளாய் –
கிளர்ந்து எழுந்த காமத்தை யுடையளாய்

தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து-
தன்னை ஆசைப்பட்ட இது அன்றோ அவள் செய்த த்ரோஹம்
தன்னை ஆசைப் பட்டாரை முனியக் கடவதோ
ஆசைப் பட்டாரை ஒக்க ஆசைப் படும் அது ஒழிய
அது செய்யா விட்டால் பின்னை முனியவும் வேணுமோ
முனிந்து விட்டு விடப் பெற்றதோ
அவளுக்கு வைரூப்யத்தையும் விளைத்து விட வேணுமோ

மன்னிய திண் எனவும் வாய்த்த மலை போலும்-—-
ஸ்த்ரீத்வம் பண்ணினால் அனுதாபமும் இன்றிக்கே
பெரிய ஆண் பிள்ளைத் தனம் செய்ததாக நினைத்து இருக்கிற நிலை நின்ற த்ருடத்வமும்
சொல்லீர் அவளுடைய வடிவின் பெருமையை –
சொல்லீர் அவளுடைய வடிவின் பெருமையை –
தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை –
தனக்கு ஒப்பார் இன்றிக்கே பெரிய மலை போலே இருக்கிற வடிவை யுடைய தாடகையை-
நே ஸ்திரீ வதம் பண்ணிற்று -என்று மடியைக் கோத்துப் பிடித்து கேட்டால்
ஒரு பார்ப்பான் சொல்லச் செய்தேன் -என்று ஆயிற்றுச் சொல்லுவது
இது பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்வர்
மா முனி
அவன் ஒருவன் படி இருந்த படி என்
ஸ்ரீ ஜனக ராஜன்  திருமகள் உடைய
ஆற்றாமைக்கு உதவ
கடுகக் கொடு சென்றவன்
கையும் மடலுமாய் இருக்கிற  என் ஆற்றாமைக்கு உதவக் கொடு வராது ஒழிவதே –

————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

பெரிய திருமடல் -113-தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை-134-என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

June 20, 2014

தாமரை மேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையைப்—-113
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை —–114
மன்னிய தண் சேறை வள்ளலை  மா மலர் மேல்
அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி ——–115
என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக்
கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை ——116
மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்
பொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை ——117
மன்னு மரங்கத் தெம்   மா மணியை வல்ல வாழ்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் ——–118
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119
மன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்
சென்னி மணிச்  சுடரைத் தண் கால் திறல் வலியைத் ——–120
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை யரியை யருமறையை——-121
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னு மிடை கழி எம்மாயவனைப்  பேயலறப் ——-122
பின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய்
அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்——-123
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத்  தெம் வித்தகனை —–124
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்
கொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் —-125
அன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை —-126
மன்னு மதிட் கச்சி  வேளுக்கை யாளரியை
மன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில்—127
உன்னிய  யோகத் துறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை ——128
என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129
அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் ——130
மன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் ———131
மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் ——–132
கண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர்
மன்னு மணிமாடக்  கோயில் மணாளனைக் ——–133
கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——–134

————————————————————————–

தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையைப்–
இதுக்கு எல்லாம் அடியான பிராட்டியோடே-திரு விண்ணகரிலே அவளோட்டை சம்ச்லேஷம் திரு மேனியிலே நிழலிட நிற்கிறவனை –

பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்
அவதாரங்களைப் பண்ணி-பிரதிபஷ நிரசனம் பண்ணி
இளைப்பாறச் சாய்ந்தவனை -திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை -திருவாய் மொழி -5-8-9-

தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –
வைத்த கண் வாங்க ஒண்ணாத அழகு –

மன்னிய தண் சேறை வள்ளலை-
ப்ரதிகூலர் நடுவே ஆஸ்ரிதர்க்குத் தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற -ஔதார்யம் –

மா மலர் மேல்-
ஊடல் தொடக்கமானவை கிட்டாமல்-அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி –
போகத்துக்கு ஏற்றவற்றை இட்டு உறங்கும் படுக்கை இ றே-

என்னுடைய வின்னமுதை –
இவள் பிறந்த விடமாய் -புக்க விடமுமாயிருக்கையாலே-மேல்வாரமும் குடிவாரமும் ஆகிற இரு தலை வாரமும் தம்முடையதாய் இருக்கிறபடி –

எவ்வுள் பெரு மலையைக்-
அனுபவித்து முடிக்க ஒண்ணாமை –

கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
என்று காவலிட்டு நின்றார் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்றும்
கண்கள் ஆரளவும் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திருமொழி -7-10-9- என்றரர் இ றே
காவல் உண்டு என்று ஆஸ்வாசம் அடைகிறார் மடல் எடுக்கும் பொழுதும் மங்களா சாசன பரர ஆகையாலே –

மின்னை யிரு சுடரை –
மின்னல் போலவும் சந்திர சூர்யர்கள் போலவும் தன்மை யுடையவனை –
பிராட்டி உடனும் -சங்க சக்கரங்கள் உடன் நிற்கிற படி
கரு முகில் தாமரைக் காடு பூத்து நீடு இரு சுடர் இரு புறத்தேந்தி யெடவிழ் திருவோடும் பொலிய -கம்ப நாட்டு ஆழ்வார் –

வெள்ளறையுள் கல்லறை மேல்  –
சீரிய வஸ்து என்று சேர்க்கிறார் -மாணிக்க அறை

பொன்னை மரகதத்தைப் –
பொன்னையும் மணிகளையும் கொண்டு ரத்னஆகாரம் தொடுப்பாரைப் போலே
அர்ச்சாவதார ஸ்தலங்களை சேர்க்கிறார்
மத்திய மணி நியாயம் முன்னும் பின்னும் அந்வயம் –

புட்குழி எம் போரேற்றை —–
பிரதி பஷத்துக்கு கணிசிக்க ஒண்ணாமை -ரிஷபம் போலே நிற்கிறவன் -அத்தாலே
என்னைத் தோற்பித்துக் கொண்டவன் –
அற்ற பற்றார் -சுற்றி வாழும் அந்தணீர் அரங்கம் -திருச்சந்த -52-என்றும்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் -நாச் திரு -11-5-என்றும்
ஸ்தாவர பிரதிஷ்டியாக மன்னி கண் வளரும் தேசம் –
கண்டார் விடாத தேசம் -என்றுமாம்
அரங்கத்தம்மா மணி –
அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி-

மா மணி -பெரிய மணி -கறுத்த மணி –
கோயில் மணியினார் -திருமாலை -21
தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணி -பெருமால்திருமொழி -1-1-
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா –மணியே மாணிக்கமே -பெரிய திரு -11-8-8-

வல்ல வாழ் பின்னை மணாளனைப்-
நப்பின்னைப் பிராட்டியை திருமணம் புணர்ந்த செவ்வி தோற்ற நிற்கை –

பேரில் பிறப்பிலியைத் –
இதுக்கு முன்பு பிறவாதே-பின்பு பிறக்க இருக்கிறவனை
தொல் நீர்க்கிடந்த தோளா மணிச் சுடரை -ச ஏகாகீ ந ரமேத -பரம பதத்தில் –
அவதாரம் செய்த பின் தொளை படாத மணியின் சுடர் போலே புகர் விஞ்சி நின்றான் –
தொல் நீர் -அவதாரத்துக்கு நாற்றங்கால்
தோளா மணிச் சுடர் -தோளைப் படாத மணியின் ஒளி தானானவன் –

என் மனத்து மாலை –
என் பக்கலிலே வ்யாமோஹத்தைப் பண்ணி என் ஹிருதயத்தில் நிற்கிறவனை
விச்வஸ் யாயதனம் மஹத் –
இளம் கோயில் கை விடேல் -இரண்டாம் திரு -54
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே -திருவாய் மொழி -3-8-2-
யிடவெந்தை ஈசனை —-
சர்வேஸ்வரத்வம் நிழலிட நிற்கிறவனை –

மன்னும் கடன்மலை மாயவனை-
ஆஸ்ரிதர்க்காகத் தரையிலே கண் வளர்ந்து அருளுகிறவனை-

வானவர்தம் சென்னி மணிச்  சுடரைத் –
அயர்வறும் அமரர்கள்  சிரோ பூஷணம் -அமரர் சென்னிப்பூ -திருக் குறும் தாண்டகம்-6-

தண் கால் திறல் வலியைத் —
எல்லாரையும் ஜெயிக்கும் மிடுக்கையுடையவனை –

தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை –
சௌலப்யத்தாலே தாழ நிற்க -சிசூபாலாதிகள் அறியாதே
வையும்படியாய் இருக்காய்-
பரம் பாவ மஜா நந்த அவஜா நந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11-

முத்தினை-
ஸ்ரமஹரமாயிருக்கிறவனை –

அன்னத்தை மீனை யரியை -சர்வ வித்யைகளுக்கும் உபதேஷ்டாவாய் இருக்கிறவனை
யரி -குதிரை ஹயக்ரீவன் –

யருமறையை-
அந்த வித்யைகள் தானாய் இருக்கை –
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-

முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக்-
முற்கோலி-இருந்ததே குடியாக தன வயிற்றிலே வைத்து நோக்குமவனை –

கோவலூர் மன்னு மிடை கழி எம்மாயவனைப்
ஆஸ்ரிதர் அடிச் சுவடும் விடாதே நிற்கிறவனை –
இடை கழி மன்னும் -எம்மாயவன்

பேயலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை –
யசோதை பிராட்டி  யுடைய ஸ்துதி போலே பேயினுடைய கத்துகையையும் ஸ்துதி யாகக் கொண்டு-முலை யுண்ட மௌக்த்யத்தை யுடையவனை  –

அள்ளல் வாய் அன்னம் இரை தேர்-
கலங்கின நீரில்  இழியாத  அன்னமும் கூட இழியும்படிக்கு ஈடான நல்ல சேறு –

அழுந்தூர் எழுஞ்சுடரைத்-—-
ஆஸ்ரிதர் கை தொடனாய் என்னையும் கண்டு உகந்து நிற்கிறவனை
அழுந்தூரிலே உதிக்கும் சூர்யன்
நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என் மேலும் பாசம் வைத்த பரஞ்சுடர் -நிரவதிக தேஜோ ரூபன்
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை-
அங்குத்தை அழகனை –

மின்னி மழை தவழும் வேங்கடத்  தெம் வித்தகனை –
மேகமானது மின்னாகிற கை விளக்கைக் கொண்டு
குச்சி வழியே புக்குத் திருவாராதனம் பண்ண இருக்கிற ஆச்சர்ய பூதனை –
வேங்கடத்துத்     தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு -நாச் -8-4-
மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மாரவில் மன்னத்தான் வைத்துகந்தான் -பெரிய திருமொழி -6-9-6-
நீலமுண்ட மின்னன்ன திரு மேனி-
நீல தோயாத மத்யச்தையான
அலர்மேல் மங்கை உறை மார்வா -திருவேங்கடத்தானே -திருவாய் -6-10-10-

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்-
நாட்டுக்கு ராஜா
தமக்கு மணாளன்

கொன்னவிலும் ஆழிப் படையானைக் –
நமுசி பிரப்ருதிகளை வாய் வாய் என்னப் பண்ணும் திரு வாழியை உடையவனை –
கோட்டியூர் அன்ன வுருவில் அரியைத்
முரியும் வெண் திரை முது காயம் தீப்பட முழங்கழல்   எரியம்பின் வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் -பெரிய திரு மொழி -8-5-6-
முரியும் வெண் திரை பாடினவர்க்கு நிலம் அன்றியே இருக்கிறவனை
திருக்கோட்டியூர் நாதனை நரசிங்கனை -பெரியாழ்வார் -4-4-6-

திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை-
நினைக்க விடாய் கெடும்படி  இருக்கிறவனை –

இந்தளூர் அந்தணனை —
அந்தணனை -ஆன்ரு சம்சயம்   உடையவனை –
அழகிய தண்மை இரக்கம் உடையவனை
அந்தணர் என்பர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலால் -திருக் குறள்-

மன்னு மதிட் கச்சி  வேளுக்கை யாளரியை-
வீரம் தோற்றாதே-அழகே தோற்றி பயப்பட்டு மதிளிட வேண்டும்படி நிற்கிறவனை  –

மன்னிய பாடகத் தெம் மைந்தனை –
அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணின படி தோற்ற இருக்கிறவனை –
நித்ய யுவா-என்னுமாம்

-வெக்காவில் உன்னிய  யோகத் துறக்கத்தை
ஆஸ்ரிதர் இட்ட வழக்காய் இருக்கிறவனை -ஆஸ்ரித ரஷண  சிந்தை உடன் விழி துயில் அமர்ந்து இருப்பவன் –
அதாவது-திரு மழிசைப் பிரான் -கிட -என்னக் -கிடந்து நிற்கிறபடி –
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் -விரித்துக் கொள் என்ன செய்தவன் –

ஊரகத்துள் அன்னவனை–

அட்ட புயகரத் தெம் மானேற்றை –
ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறுமவனை-
கஜேந்திர ஆழ்வானுக்கு அரை குலைய தலை குலைய ஓடி வந்து அருள் செய்தவனை  –

என்னை மனம் கவர்ந்த வீசனை –
சர்வ ஸ்வாபகாரம் பண்ணிப் பூர்ணனாய் இருக்கிறவனை –

வானவர் தம் முன்னவனை –
நித்ய சூரிகளுக்கும் கூட அனுபவித்து முடிய ஒண்ணாத படி இருக்கிறவனை
எதோ வாசோ நிவர்த்தந்தே –பூர்வோ யோ தேவேப்ய –

மூழிக் களத்து விளக்கினை –
உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை
பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய் -1-3-2-
ஸ்ரேயான் பவதி ஜாயமான –

அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை-
காலத்ரயத்தை பரிச்சேதிக்குமவனை-
இவன் காலத்தை அளவு படுத்துவான் –

நென்னலை இன்றினை நாளையை-
பரிச்சேதித்த படியைப் பேசுகிறார்  –
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய் -திருவாய் -3-1-5
சென்று செல்லாதான முன்னிலாம் காலமே -திருவாய் -3-8-9-

நீர்மலை மேல் மன்னு நான் மறை நான்கும் ஆனானைப்
வேதத்தாலே அறியப்ப்படுமவனை –

புல்லாணித் தென்னன் தமிழை –
காவார் மடல் பெண்ணை -பெரிய திரு -9-4-
தன்னை நைவிக்கிலென் -பெரிய திருமொழி -9-3-
என்கிற திரு மொழிகள் தானேயாய் இருக்கிறவனை –

வடமொழியை –
ஸ்ரீ ராமாயணாதிகள் –

நாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
என்னை மறுமுட்டுப் பெறாத படி பண்ணினவனை –
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை –
தர்ச   நீயமாய்   இருக்கிறவனை –

நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத்-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ–பெரிய திருமொழி -8-9-3-யென்னும்படியாய் இருக்கிறவனை –

தென்னறையூர் மன்னு மணிமாடக்  கோயில் மணாளனைக்
மடல் எடுக்கப் பண்ணினவனை -ஆணை செல்லாத தேசம் –

கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது-
பூண் கட்டின
கண்டு அன்றி விடேன்
தொழுது
அவனைக் கெடுத்த படி
ராஜ மகிஷி   உஞ்ச வருத்தி பண்ணுமோ பாதி
இவனுக்கு அஞ்சலியும்
ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளி மலர்ப்பாதம் நாளும் பணிவோம் –

என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் –
மடலிலே துணிந்த படி –

————————————————————————–

தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையைப்—
ஆஸ்ரித விஷயத்தில் இப்படிப் பண்ணின அவ்வபதானத்துக்கு நிதானம் -பிராட்டியோட்டைச் சேர்த்தி இ றே –
பிரணயினி பக்கலிலே முகம் பெற்று மதிப்பானவனை –
பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தால் வந்த புகர் அடங்கலும் வடிவிலே தோற்றும்படி
திரு விண்ணகரிலே வந்து உஜ்ஜ்வலனாய் நிற்கிறவனை –

பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப்-போர்விடையைத்-
காவேரியானது பெரு விலையனாய் இருந்துள்ள ரத்னங்களைக் கொழித்துக் கொண்டு வந்து-ஏறிடா நின்றுள்ள அழகிய திருக் குடந்தையிலே –
பிரதிபஷ நிரசனம் பண்ணின மேணாபபு எல்லாம் தோற்ற சந்நிஹிதனானவனை –

தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –
அவசியம் மடல் எடுத்தாலும் பெற வேண்டும்படி ஸ்ப்ருஹணீயமான வடிவோடு கூட –
தென்னனனதான திருக் குறுங்குடியிலே வந்து நின்று அருளினவனை –

மன்னிய தண் சேறை வள்ளலை –
திருச்  சேறையிலே நித்ய வாசம் பண்ணுகிற பரமோதாரனை-

மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி என்னுடைய வின்னமுதை –
அன்யோன்யம் ப்ரணய கோபத்தாலே ஊடினால் ஒருவர்க்கு ஒருவர் கடக்கக் கிடக்கலாம் படியான பரப்பை உடைத்தான பூவின் மேலே
ஒரு மஹா பாரதத்துக்கு வேண்டும்படியான பரப்பைப் பாரித்துக் கொண்டு இழிந்து படுக்கை வாய்ப்பாலே கிடந்து உறங்கி
விடிந்து  எழுந்து இருக்கும் போதாக எழுப்பாதாரைக் கோபித்துக் கொண்டு எழுந்து இருக்கும் ஆயிற்று அன்னம் ஆனது –
இப்படி இருப்பதாய் அழகிய ஜல சம்ருத்தியை யுடைத்தான திரு வாலியிலே நிரதிசய போகய தமனாய்க் கொண்டு இருக்கிறவனை
திருப்பதியுமாய் -பிறந்த விடமும் ஆகையாலே
இருதலை வாரமும் தம்மதாய் இருக்கும் இ றே  –

எவ்வுள் பெரு மலையைக்-
திரு வெவ்வுளிலே தன்னுடைய போக்யதையை ஒருவருக்கும் அனுபவிக்க ஒண்ணாத படியாக-போக்யதா பிரகர்ஷத்தை யுடையனாய்க் கொண்டு-கண் வளர்ந்து அருளினவனை –

கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை —
அரணாகப் பொருந்தி இருக்குமதாய்-புதுமை அழியாத திரு மதிளை உடைத்தான
திருக் கண்ணமங்கையிலே எழுந்தருளி நிற்கிற பரமோதாரனை –
கண்கள் ஆரளவும் -என்கிறபடியே தன்னைக் கண்ணாரக் கண்டு அனுபவிக்கலாம் படி
சர்வஸ்வதாநம் பண்ணிக் கொண்டு நிற்கிறவனை –

அங்கு நிற்கிறபடி எங்கனே என்னில் –
மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்-பொன்னை
பெரிய பிராட்டியாரோடும்-இரண்டு அருகும் சேர்ந்த  ஆழ்வார்களோடும் ஆயிற்று நிற்பது -அங்கே தோற்றுப் படப் புக்கவாறே அனுகூலர் இங்கே கொண்டு சேமித்து வைத்தார்கள்  -திரு வெள்ளறையுள் கல்லறையினுள்ளே ஸ்லாக்யமானவனை-
கல்லறை -மாணிக்க அறை –
தென்னருகே அரங்கும் -வடவருகே அறையுமாய் இருக்குமாயிற்று –

மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை —
அங்கு நிற்கிற படியே ஸ்ரமஹரமான வடிவோடே திருபுட் குழியிலே தோற்றி என்னைத்
தோற்பித்த மேணாணிப்போடேகூட நிற்கிறவனை –

மன்னு மரங்கத் தெம்   மா மணியை –
திருநாள் சேவிக்க வென்று வந்து-பின்பழகும் பிறகு வாளியும் அழகும் -கொக்குவாயும் கடைப்பணிக் கூட்டமும் இருக்கிற படியைக் கண்டு ஷேத்ர சன்யாசம் பண்ணி -வர்த்திக்கும் படிக்கு ஈடாக-வாயிற்று கோயிலிலே கண் வளர்ந்து அருளும் படி –
பெரு விலையனான ரத்னங்களை முடிந்து ஆளலாய் இருக்குமா போலே
ஆஸ்ரிதர்க்கு அத்யந்த ஸூ லபனாய் யுள்ளவனை –
மன்னும் அரங்கம் –
திருநாடு -திருப் பாற் கடல் மற்றும் உள்ள தேசங்களில் விரும்பி இருக்கும் தேசம் -என்றுமாம் –
கோயில் மணியனார் -திருமாலை -21 -என்னக் கடவது இ றே –
மணியே மணி மாணிக்கமே -பெரிய திருமொழி -11-8-8–என்று ரத்ன ஸ்ரேஷ்டம் இ றே -பொன்னி அடி வருடப் பள்ளி கொள்ளும்  கருமணி -பெருமாள் திருமொழி -1-1-என்றும்–மணி இரண்டு இ றே
மன்னும் அரங்கம் –
நல் சரக்கு படும் துறை –

வல்ல வாழ் பின்னை மணாளனைப் –
திரு வல்ல வாழிலே நப்பின்னை பிராட்டியோட்டை மணக் கோலம் எல்லாம் தோற்ற நின்று அருளுகிறவனை –

பேரில் பிறப்பிலியைத் –—-
ஆஸ்ரித அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணச் செய்தே பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்-பிறக்க ஒருப்பட்டு இருக்கிறவனை –

தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை என் மனத்து மாலை-
பரமபதம் கலவிருக்கை யாய் இருக்க -அங்கு நின்றும் போந்து-திருப் பாற் கடலிலே வந்து என் பக்கலிலே வ்யாமோஹத்தைப் பண்ணி அத்தாலே அத்யுஜ்ஜ்வலன் ஆனவனை –

இதுக்கு திருஷ்டாந்தம் –
யிடவெந்தை ஈசனை –
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பண்ணின வ்யாமோஹத்தாலே அத்யுஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை –

மன்னும் கடன்மலை மாயவனை –
திருக் கடல் மல்லையிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஆச்சர்ய பூதனை –
ஆச்சர்யம் தான் என் என்னில் -திரு வநந்த ஆழ்வானை ஒழிய
ஆஸ்ரிதன் உகந்த இடம் -என்று தரையிலே கண் வளர்ந்து அருளுகை-

இப்படியில் அங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறவன் தான் ஆர் என்னில்
வானவர்தம் சென்னி மணிச்  சுடரைத்-
நித்ய சூரிகளுக்கு சிரோ பூஷணம் ஆனவனை-அமரர் சென்னிப் பூவாகையாலே வானவர்க்கு சென்னி மணிச் சுடர் -என்னக் குறை இல்லை இ றே-

தண் கால் திறல் வலியைத் —
திருத் தண் காலிலே நின்று அருளி பிரதிபஷத்தை அடர்க்கிற பெரு மிடுக்கனை
வலியையும் மிடுக்கையும் காணும்படி கண்ணுக்குத் தோற்ற ஒரு வடிவு கொண்டு நின்று அருளினவனை  –

தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை-
தானான தன்மையைத் தானே காட்டில் அறியலாய்
அல்லாதார்க்கு அறிய ஒண்ணாத அர்த்த தத்தவத்தை –
நின்னை யாவர் காண வல்லர்–திருச் சந்த விருத்தம் -8-என்றார் இ றே திரு மழிசைப் பிரானும் –
முத்தினை-
ஆஸ்ரிதர்கள் ஏறிட்டுக் கொள்ளலாம் படி குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் இருக்கிறவனை –

அன்னத்தை மீனை யரியை –
அன்னமும் மீனுருவும் ஆளரியும்-பெரியாழ்வார் -1-6-11-என்று
வித்யாவ தாரங்களைச் சொல்ல்கிறது –

-யருமறையை—–
அத்தாலே பலித்த பலம் -தன்னைப் பெறிலும் பெற அரிதான வேதத்துக்கு பிரதிபாத்யன் ஆனவனை

முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியை-
பிரளய காலத்திலேயே பூமியை உண்டு அத்தாலே-விலஷண  விக்ரஹ யுக்தன் ஆனவனை –

கோவலூர் மன்னு மிடை கழி எம்மாயவனைப் –
ஆஸ்ரிதர்க்கு போக்யமான இடமே தனக்குப் பரம போக்யம்  -என்று
அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற சர்வ ஸூ லபன் ஆனவனை –

பேயலறப் பின்னும் முலையுண்ட பிள்ளையை-
கம்சனுடைய வ்ருத்தியாலே வந்த பேயின் உயிரை அவள் அலறும்படியாக
பிராண சஹிதம் பபௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-9-என்கிறபடியே
பானம் பண்ணின பாலன் ஆனவனை-முன்னே உலகு உண்டு-பின்முலை உண்டபடி –

அள்ளல் வாய் அன்னம்  இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்
சேறு கண்டு இறாய்க்கக் கடவ அன்னங்கள்-சேற்றைக் கண்டு இறாயாதே மேல் விழுந்து சஞ்சரிக்கும் படியான போக்யதை நித்ய வாஸம் பண்ணுகிற நிரவதிக தேஜோ ரூபனை
திரு வழுந்தூரிலே முளைத்த ஆதித்யனை -என்றுமாம் –
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை-
அங்குத்தை சம்ருத்தி இருக்கும் படி வாசா மகோசரம்-

மின்னி மழை தவழும் வேங்கடத்  தெம் வித்தகனை —
திருக் காப்பு கொண்டு போனாலும் குச்சி வழியே தன வடிவில் இருட்சிக்குக் கை விளக்காக-மின்னோடி புக்கு மேகம் சஞ்சரிக்கிற திருமலையிலே நின்று அருளினவனை-
தன்னாகத் திரு மங்கை தங்கிய -நாச் திரு மொழி -8-4- என்றும்
மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில் வைத்துகந்தான் –பெரிய திருமொழி -6-9-6- என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்வன் -திருவாய் -6-10-10- என்றும்சொன்ன இவற்றுக்கு
மின்னியும் மேகத்தையும் திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்
மின்னார் முகில் சேர் திரு வேங்கடம் -பெரிய திரு மொழி -1-10-6-
மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கடம் -பெரிய திருமொழி -2-1-10-

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்-
எனக்கு ராஜாவே-திருமலையிலே வந்து நின்று அருளி என் வல்லபன் ஆனவனை
மன்னனை -மன்னனாகவுமாம் –

கொன்னவிலும் ஆழிப் படையானைக் –
பிரதிபஷ நிரசனத்துக்கு ஈடான பரிகரத்தை உடையவனை –

கோட்டியூர் அன்ன வுருவில் அரியைத் –
திருக் கோட்டியூரிலே நரசிம்ஹ ரூபியாய் நின்று அருளின நிலை-தன்னுடைய பேச்சுக்கு நிலம் இன்றிக்கே இருக்கையாலே-அப்படிப் பட்ட உரு -என்னும் படியான வடிவு அழகை யுடையவனை –

திரு மெய்யத்து இன்னமுத வெள்ளத்தை
நடு வழியிலே விடாய்த்தார்க்கு விடாய் கெட-ஒரு அம்ருத சாகரத்தைத் தேக்கினால் போலே இருக்கிறவனை

இந்தளூர் அந்தணனை –
திரு இந்தளூரிலே நிற்கின்ற பரம பாவனனை-

மன்னு மதிட் கச்சி  வேளுக்கை யாளரியை-
திரு வேளுக்கையிலே நித்ய வாஸம் பண்ணுகிற நரசிம்ஹ வேஷத்தை உடையவனை –
மன்னும் மதிள்-ப்ரளயத்திலும் அழியாத மதிள்

மன்னிய பாடகத் தெம் மைந்தனை –
திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருக்கிற நவ யௌவன ஸ்வ பாவனை –

-வெக்காவில் உன்னிய  யோகத் துறக்கத்தை –
திரு வெக்காவிலே ஆஸ்ரித சம்ரஷணத்துக்கு பாங்கான அனுசந்தானத்தோடே
திரு மழிசைப் பிரானுக்காகப் படுக்கை மாறிப் படுத்தவனை –

ஊரகத்துள் அன்னவனை –
திரு ஊரகத்திலே திரு வுலகு அளந்து அருளின செவ்வி தோற்ற வந்து நிற்கிற நிலை
பேச்சுக்கு நிலம் அன்றிக்கே நிற்கிற நிலை அழகை யுடையவனை –

அட்ட புயகரத் தெம் மானேற்றை —-
திரு வட்ட புயகரத்திலே ஆனைக்கு அருள் செய்த வடிவைக் காட்டிக் கொண்டு
பெரிய மேணாணிப்பு   தோற்ற நிற்கிறவனை –

என்னை மனம் கவர்ந்த வீசனை –
யஸ்ய சா ஜனகாத்மஜா -என்னுமா போலே என்னுடைய நெஞ்சை அபஹரித்து
அத்தாலே வந்த மேன்மை தோற்ற இருக்கிறவனை –
வானவர் தம் முன்னவனை –
அயர்வறும் அமரர்களுக்கு எல்லா வகையாலும் தன்னை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனை –

மூழிக் களத்து விளக்கினை –
திரு மூழிக் களத்திலே மிகவும் விளங்கா நின்று உள்ளவனை
வளத்தினை -என்று பாடமான போது-சம்பத் ஆனவனை -என்றுமாம் –

அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை
திரு வாதனூரிலே இப்படிப் பட்ட அழகை உடையனாய்-காலத்துக்கு நிர்வாஹகனாய்க் கொண்டு-நின்று அருளின சுவாமியை

நென்னலை இன்றினை நாளையை –
அக்காலம் தன்னை பூத பவிஷ்யத் வர்த்தமானமாகப் பரிச்சேதிக்க லாம்படி
அதுக்கு நிர்வாஹகனாய் நின்றவனை –

நீர்மலை மேல் மன்னு நான் மறை நான்கும் ஆனானைப்-
திரு நீர்மலையிலே வந்து சனிஹிதனாய்-நித்ய நிர் தோஷமான வேதங்களாலே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிறவனை –

புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை-
தென்னனதான திருப் புல்லாணியிலே
சம்ஸ்க்ருத ரூபமாயும் திராவிட ரூபமாயும் உள்ள வேதம் என்ன
வேத சாரமான திருவாய் மொழி -என்ன
இவற்றுக்கு நிர்வாஹகனாய்
இவற்றுக்கு பிரதிபாத்யனாய் யுள்ளவனை –
வடமொழி -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதிபாத்யன் என்னவுமாம்
தென்னன் தமிழ் என்று அகஸ்த்யர் உடைய தமிழுக்கு பிரதிபாத்யன் -என்றுமாம் –
வடமொழியை நாங்கூரில் என்று மேலே கூட்டவுமாம் –

நாங்கூரில் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை-
திரு நாங்கூரில் திருமணி மாடக் கோயிலிலே விடாதே நின்று அருளி அடிமை கொண்டு அத்தாலே நாயகன் ஆனவனை –

நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை –
நல்ல ஜல சம்ருத்தியையுடைத்தான தலைச் சங்காட்டிலே –
கடலிலே சந்தரன் உதித்தால் போலே பரி பூர்ணனாய்க் குளிர்ந்து நிற்கிறவனை –

நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத் –
கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -பெரிய திருமொழி -8-9-3-என்னும்படி
அனந்யார்ஹை யாக்கின வடிவைக் கொண்டு நின்று அருளினவனை –

தென்னறையூர்மன்னு மணிமாடக்  கோயில் மணாளனைக் –
இவை எல்லா வற்றுக்கும் அடியாகத் திரு நறையூரிலேவந்து நின்று அருளின வடிவு அழகைக் காட்டி-என் கையிலே மடலைக் கொடுத்து-மணி மயமான கோயிலிலே நிரதிசய போக்யமான வடிவைக் காட்டி-என்னைத் தோற்பித்து
அத்தாலே -எனக்கு நிர்வாஹகனாய் நின்று அருளினவனை –

கன்னவில் தோள் காளையைக் –
ஓர் அபலையை வென்றோம் -என்று தோள் வலியைக் கொண்டாடி இருக்கிறான் -என்னுதல்-
அன்றியே
ஒரு ஸ்திரீயை மடல் எடுப்பித்துக் கொண்டோம் -என்று தன பருவத்தைக் கொண்டாடி இருக்கிறவனை -தோளையும் பருவத்தையும் கொண்டாடி இருக்கிறவனை –

கண்டு-
காண வேணும் என்னும் ஆசை கண்டு அல்லது நிற்க ஒட்டாது இ றே
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் –என்று முதல் நோக்கிலே இ றே ஆசை கை வளர்ப்புண்டது -இன்னமும் இவ்வாசைக்கு ஈடாகக் கண்டு அல்லது மீளேன் –

ஆங்குக் கை தொழுது –
கண்ட விடத்தே அவர்க்குச் செய்யக் கடவது ஓன்று உண்டு -தம்மை யன்றோ வென்று தொழக் கடவேன் –
நம் கண்களால் கண்டு தலையில் வணங்கவு மாம்   கொலோ -என்று உபாத்யாயன் அவன் இ றே
ஓதி நாமம் –பணிவோம் -பெரிய திருமொழி -9-3-9- என்ற இவ் வாழ்வார்
அடுத்த படியாக-அது அவனுடைய நெஞ்சுக்குத் தண்ணீர்த் துரும்பு போன்றது என்பதை
நமக்கே நலமாதலில் -பெரிய திருமொழி-9-3-9- என்று-ஏகாரத்தாலே உணர்த்தினார் –
தொழுது –என்னுமிது மிகையாதலின் -திருவாய் -9-3-9- என்றார் நம் ஆழ்வார்
கண்டு ஆங்கு கை தொழுது-மடல் எடுக்க துணிந்த நம் ஆழ்வாரும்
நம் கண்களால் கண்டு தலையில்  வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே -திருவாய் -5-3-7- என்று-பலர் முன்பே அவன் ஸ்வ ரூபத்தை அழிக்க ஆசைப் பட்டார்
பெருமாள் மேலே சீரிய பிராட்டியும்-தம் மமார்த்தே ஸூ கம் ப்ருச்ச சிரஸா சாபி வாதய-சுந்தர -39-55-என்றாள் –

என்னிலைமை எல்லாம் அறிவித்தால் –
என்னுடைய ஸ்த்ரீத்வத்தையும் குலைத்து மடலூருகை தவிரேன் என்கிற என்னுடைய துணிவை அறிவித்தால் –
உன்னைக் காண்பதோர் ஆசையினால் -1-9-1–என்று  தாயே தந்தையே  யில் ஆசைப் பட்ட படியும்
ஆகிலும் ஆசை விடாளால் -2-7-1–என்று பிறர் -தாயார் -சொல்லும்படி அவ்வாசை முடிய நடந்த படியும்
என் சிந்தனைக்கு இனியாய் -3-5-1- என்றும்
இனியையாம் படி புகுந்த உன்னைப் போகல ஒட்டேன் –3-5-6-என்றும்
கால் கட்டத் தாம் போய்த் திரு வாலியிலே தூது விட இருந்தபடியும் -3-6-

ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன்-4-8-3-என்று தம்முடைய பிரணயித்வத்தை அனுசந்தித்து சொல்ல வென்று
ஒருப்பட்டு மோகன்கதையாய்-கொல்லையானால் பரிசளிந்தாள்-4-8-4-என்று
பார்த்தன் பள்ளியிலே பரிசளிந்த படியும்
திரு இந்தளூரிலே அயலாரும் எச உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -4-9-3-
அறிவித்த படியும்
வெருவாதாளிலே-5-5–
வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றும்
அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ -என்றும்
தாதாடு வனமாலை தாரானோ -என்றும் வாய் வெருவிக்
கோயில் திரு வாசலலிலே முறை இட்ட படியும்
சினவில் செங்கணிலே-7-3-திரு நறையூரிலே கனாக் கண்ட படியும் –
தந்தை காலில் பெரு விலங்கிலே -7-5-திரு அழுந்தூரிலே
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு  பொன்னம் கலைகள் மெலிவெய்திப் போன படியும்

தெள்ளியீர் தேவரிலே -8-2- கண்ணபுரம் என்று பேசி உருகி வாய் வெருவின படியும்
கரை எடுத்த -8-3- யிலே வளை இழந்த படியும்
தந்தை காலிலே -8-5- நெஞ்சு தாரின் ஆசையில் போகத் துணை யற்று
நாழிகை ஊழியில் பெரிதான படியும்
காவார் மடலிலே -9-4- திருப் புல்லாணியிலே பொய் சொல்லிப் போன படியும்
தவள இளம் பிறையிலே -9-5-தரை கிடந்த படியும்
மூவரில் முன் முதல்வனில் -9-9- திருமலையிலே கூட ஆசைப் பட்டுக் கிடையாமே
திருத் தாய் செம்போத்திலே -10-10-நிமித்தம் பார்த்து இருந்த படியும் -இப்போது மடல் எடுக்கைருக்கிற நிலையையும்-ஆக இந்த நிலைகள் எல்லா வற்றையும் சொல்லுகிறது -எம்பெருமான் —-
தன்னை அழிய மாறியும் பெற வேண்டும்படி யன்றோ அத்தலையில் வைலஷண்யம்
அவன் வரும் தனையும் பார்த்து இருக்கலாம் படியோ என் தசை -என்கிறாள் –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

பெரிய திருமடல் — 95- இது விளைத்த மன்னன்-113-தன்னுலக மாக்குவித்த தாளானை-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

June 20, 2014

இது விளைத்த
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் ——–96
சின்ன நறும் பூந்திகழ்  வண்ணன்  வண்ணம் போல்
அன்ன கடலை மலையிட்டணை  கட்டி ——-97
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து——-98
தென்னுலக மேற்றுவித்த சேவகனை ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் ——99
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் ——100
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத்  ——-101
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —–102
மின்னிலங்கு  மாழிப் படைத் தடக்கை வீரனை
மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் ——-105
தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய ———106
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே  அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ்   உலகும் போய்க்   கடந்தங்கு  —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை -தாமரை மேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் ——-113

————————————————————————–

இது விளைத்த
மன்னன் –
இத்தலை அப்படியாக தான் உஜ்ஜ்வலனான படி –

நறுந்துழாய்-
இப்படிப் படுத்துகைக்கு பிரஹ்மாஸ்திரம்

வாழ் மார்பன் –
தானும் திருத் துழாயோ பாதி வாழ நினைக்கிறாள் –

மா மதி கோள்-
எங்கள் பகையை விளைக்கிறான் -என்கை –
நீ அவன் கோள் விடா விட்டாலும் அவன் தானே எங்களை பாதிக்க வல்லன் –

முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் –
ஜல ஸ்தல விபாகம் இல்லாதவன்
மதியை ரஷித்த உத்தமன் –

சின்ன நறும் பூந்திகழ்  வண்ணன் –
சின்ன நறும் பூங்கடல்-என்னுதல்
மேகம் -என்னுதல்
சிறுத்த காயாம்பூ என்கிறது அணுகலாய் இருக்கை-

வண்ணம் போல் அன்ன கடலை
சத்ருக்கள் அன்றிக்கே சஜாதீயமான கடல் என்ன குற்றம் செய்தது –

மலையிட்டணை  கட்டி மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்-
சதுரங்க பலத்துக்கும் உப லஷணம்-அவற்றை உடைய யுத்தம் –
திறந்து கிடந்த வாசலிலே நாய் புகுருமா போலே புக்குப் போம் அத்தனை யன்றிக்கே
யுத்தத்திலே நேர் நின்று –

பொன் முடிகள் பத்தும் –
மனிச்சன் இவன் என்று எதிரியையும் மதியாதே-ஒப்பித்து வந்த படி –

புரளச் சரந்துரந்து-
தலையோடே உயிரையும் துண்டித்தான் -அதாகிறது -உயிரும் தப்ப விரகில்லாத படி அம்பு நுழைந்த சடக்கு -வர பலத்தாலே அறுத்த தலை முளைக்க-அவற்றுக்குத் தக்கபடி விட்ட அம்பின் பெருமை –

தென்னுலக மேற்றுவித்த சேவகனை
யமலோகம் பாழ் படும்படி முன்பு இங்கே வந்து இவனுக்குப் பணி செய்த பேர் –
இப்போது அவனுக்குப் பணி செய்ய அவ் ஊர் பாழ் தீரும்படி குடியேறிற்று-ஆயிரக்கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் தன்னுடைய
தன் விபூதி ரஷிக்க வேண்டும் கண் -தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்-வர பலத்தால் அன்று -என்னது என்று வரையிட்டுப் போம் அத்தனை –

பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் –
பின் -சில காலம் சென்ற பின்பு –
ஓரரி -தன்னாலும் இவ்வடிவு கொள்ள ஒண்ணாது –
ஆகி -வர பலத்தாலே மிகைத்த ஹிரண்யனை அழிக்கைக்காக சேராத
நரத்வ சிம்ஹத்வங்களைச் சேர்ந்த படி –
எரி விழித்து -குளிர்த்தியை உடைத்தான கண்கள் –
ஆஸ்ரித விரோதி என்றவாறே நெருப்பை உமிழ வற்றான –
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே-
ஓர் அம்பை இட்டுத் தலையை உருட்டிற்றாகில் முடி சூட்டினதோடே ஒக்கும் –

வல்லாளன்-
நர சிம்ஹமும் பிற்காலிக்க வேண்டும்படி –

ஹிரண்யாய நம -என்று சொல்லும் படி செலுத்தின காலம்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத்  -தன்னுடைய தாள் மேல் கிடாத்தி –
முடியைப் பற்றின போதே பிராணன் போயிற்று-பின்னை பிணத்தை இழுக்குமோபாதி தன்னுடைய பிராட்டி சாயக் கடவ மடியிலே-என்னைப் போல் அன்றிக்கே-முருட்டுப் பையலையோ மடியில் ஏற்றுவது -என்கிறாள் –

அவனுடைய பொன்னகலம் –
திரு வுகிருக்கு இறை போற வளர்த்த மார்வு-

வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —-
தமப்பன் பகையாகச் சிறுக்கனுக்கு உதவினான் என்னும் புகழ் படைத்த –

மின்னிலங்கு  மாழிப் படைத் தடக்கை –
திரு வுகிருக்கு இரை போந்தது இத்தனை-
திருவாழி தனக்கிரை போராமையாலே சீறி நாக்கு நீட்டுகிற படி –

வீரனை-
திரு மந்த்ரத்தின் படியே அனுசந்திக்கிறது –

மன்னிவ் வகலிடத்தை –
எல்லாரும் பொருந்தும் பூமி –

மாமுது நீர் தான் விழுங்கப் –
அத்ப்ய ப்ருதிவீ -என்று உண்டாக்கின தானே விழுங்க –

பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-
பின்னும் -ரஷணத்திலே
ஓர் ஏனம் -அழிவுக்கு இட்ட உடம்புக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை –

கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை –
கூரியதான அக்ரம்-

மன்னும் வடமலையை மத்தாக
நற்றரிக்க வைத்த படி
கடையப் பிதிராத மலை –

மாசுணத்தால்மின்னு மிருசுடரும் விண்ணும்பிறந்கொளியும் –
தேஜோ பதார்த்தங்கள் எல்லாம்
தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய –

மன்னும் துயர் கடிந்த வள்ளலை –
யாவதாத்மபாவியான தாரித்ர்யம்-பிரயோஜனாந்தர பரர்க்கும் அகப்பட –

மற்றன்றியும்-
பிரதாபத்துக்கு எதிர்த்தட்டான தாழ்வுகள் பேசுகிறது –

தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் –
பெரிய பிராட்டியாரும் நித்ய சூரிகளும் –

மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்-
வைத்த கண் வாங்க ஒண்ணாத அழகு –

பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து
மகா பலியைப் போலே நானும் யாகம் பண்ணினேன் ஆகில் தானே வரும் இ றே-என்று கருத்து –

போர் வேந்தர் —மன்னை-
மகா ராஜனை-

மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்-
ஸூ க்ர பகவான் உள்ளிட்டார் –
நெஞ்சுருக்கி -புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி -1-8-6-
ராஜாவே -என்ன
திரியப் பார்க்க
மூவடி -என்ன
என்னன்புது -என்ன
மண் -என்ன
ஆர் காலாலே -என்ன
என் காலாலே -என்ன
பெரியதொரு காலாலே கொண்டாலோ -என்ன
என் அபேஷை அன்றோ நீ செய்யக் கடவது -என்ன
பேசாது இருந்தான்
இவன் பேச்சை கேட்க்கைக்காக
இவனும் ஈண்டென தாராய் -என்று வாய் விட
அவ்வாய் விட்டத்தைக் கண்ட மகா பலியும் இட்டு மாறினால் போலே
வேறு ஒருவன் ஆனபடியாலே -மற்றவனும் -என்கிறது –

என்னால் தரப்பட்ட தென்றலுமே  –
தத்த மச்யாபயம் மா -யுத்த -18-34-என்ற பெருமாளைப் போலே –

அத்துணைக் கண் —
அந்த ஷணத்திலே –

மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்தபொன்னார் கனை கழற்கால் ஏழ்   உலகும் போய்க்  கடந்தங்கு  –
ஸ்ப்ருஹா விஷயமாய் –
ஆஸ்ரித ரஷணத்துக்குப் பின்னை ஒன்றை வேண்டாதபடி
சப்தியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடிகள் –

ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி-
உகவாத நமுசி பிரப்ருதிகள் –

மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் –
அவனுக்கு அடி பட்டிருக்கை –

தன்னுலக மாக்குவித்த –
ஆஸ்ரிதரோடு தன்னோடு வாசி இல்லாமையாலே
இந்தரனுக்கு என்னாது ஒழிகிறது-

தாளானை –
தாள் என்று திருவடிகள் –

தான் குணவானாக பாவித்து நின்ற விடங்களிலே
இவன் குணவான் என்று அறியாதே கொள்ளுங்கோள்-என்று சாற்றுகிறேன் –
தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் –
இதுக்கு எல்லாம் அடியான பிராட்டியோடு-திரு விண்ணகரிலே அவளோட்டை சம்ச்லேஷம் திரு மேனியிலே நிழலிட நிற்கிறவனை

————————————————————————–

இது விளைத்த
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் –
நான் இப்படி கையும் மடலுமாம் படி பண்ணின வீரன் –
கண்டவர்களை மடல் எடுப்பிக்கைக்கு முடி சூடினவன் –
திருத் துழாய் மாலை சாத்தினால்-தன்னோட்டை ஸ்பர்சத்தாலே செவ்வி பெற்று வாரா நின்றுள்ள திரு மார்வை
யுடையவன் –
தோளும் தோள் மாலையையும்    கண்டால் மடல் எடாது ஒழியும்படி எங்கனே
இத்தலை மடல் எடுத்த பின்பு வெற்றி தோற்ற மாலை இட்டவன் -என்றுமாம் –
இவளுக்கு கையும் மடலும் போலே அவனுக்கு முடியும் மாலையும் –

மா மதி கோள் முன்னம் விடுத்த –
இப்போது கிடீர் அவன் ஆசன்னரானாரை நோக்கத் தவிர்ந்தது –
மா மதி -அபலைகள் நலியும் இடத்தில் சம்ஹாரகனை வேண்டாத படி யிருக்கிறவன் –

மா மதி கோள் முன்னம் விடுத்த -முகில் வண்ணன் –
சந்த்ரனுக்கு ராஹூவால் வந்த இடரை ஒக்கவே போக்கின பரமோதாரன்-
முன்னம் -முன்பு ஒரு காலத்திலேயே -என்றுமாம் –

காயாவின் சின்ன நறும் பூந்திகழ்  வண்ணன் –
காயாவினுடை-பூப் போலே திகழா நின்றுள்ள திரு நிறத்தை யுடையவன் –
சின்ன நறும் பூ -சிறுத்து நறு நாற்றத்தை யுடைய பூ-என்றுமாம் –
பூவளவல்லவே மணம்-
சின்னம்-சிறுமை
குணமும் குணியும் போலே  இவன் அபிமானத்திலே இது விளங்குவது –
வண்ணன் -ஊராகப் பகையானாலும் விட ஒண்ணாத வடிவு –

வண்ணம் போல்-
ஜ்ஞான ஆனந்தங்களோடே ஒக்கும் இ றே சாம்யா பத்தியிலே  –
உள்ள உலகளவும் -பெரிய திருவந்தாதி -76-இத்யாதி-
ஸ்வா தீன பராதீனமே இ றே  யுள்ளது –
எடுக்கத் தன்னோடு சமமாய் யுள்ளதொரு வஸ்துவைச் சொல்லக் கடவதுஇ றே –

அன்ன கடலை –
காம்பீர்யத்தாலும் சகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே இட்டுக் கொண்டு இருக்கையாலும்-பெருமையாலும் நிறத்தாலும் தன்னோடு போலியாய் இருப்பது ஒன்றைப் பெறாமையாலே –

மலையிட்டணை  கட்டி –
கண்ட மலைகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டு வந்து-கடலிலே நடு நெஞ்சிலே இட்டு
கான எண்கும் குரங்கும் வழி போம்படி -பெரிய திருமொழி -6-10-6–பண்ணினான் ஆயிற்று –
என்னையும் அப்படியே காம்பீர்யத்தையும் அழித்து மடல் எடுக்கும் படி பண்ணினான் -என்கிறாள் –

மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
நான் ராசாச ராஜன் -என்று அபிமானித்து இருக்கிற ராவணனையும்-அவனுடைய ரத கஜ துரக பதாதிகளான சதுரங்க பலத்தையும் உடையதாய்-மிகைத்து வருகிற  யுத்தத்திலே –

பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து தென்னுலக மேற்றுவித்த சேவகனை –
வர பல புஜ பலத்தாலே பூண் கட்டின முடிகள் பத்தும் பூமியிலே புரளும்படியாக அம்பையோட்டி-தனக்குத் திரையிட்டு இருந்தவனுக்குத் தான் அடிமை செய்யும்படி பண்ணின-ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனை –
அந்த ஆண் பிள்ளைத் தனம் எல்லாம் உடையவன் என் கையிலே படப் புகுகிறபடி எல்லாரும் காண-வி றே புகுகிறது-

ஆயிரக்கண்-
தன்னுடைய அலாபத்தில் விளம்பம் பொறுத்து இருந்தால் போல் அன்றிக்கே
ஆஸ்ரிதனுக்குப் ப்ரதிபந்தகம் வருகிற சமயத்திலே உதவா நின்றால் வருவதோர் ஏற்றம் உண்டுஇ றே-அந்த ஏற்றம் அழிய -அறிய -இ றே  -புகுகிறது-

ஆயிரக்கண்-மன்னவன் வானமும் –
ஆயிரம் கண்ணை யுடைய இந்த்ரனும் அந்த கண்கள் ஆயிரத்தாலும் உணர்ந்து நோக்குகிற லோகங்கள் மூன்றும் –

வானவர் தம் பொன்னுலகும் –
எற்றமுண்டான ஆதித்யர்கள் சஞ்சரியா நின்றுள்ள ஸ்லாக்கியமான லோகங்களும் –

தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட
அவன் தரக் கொள்ளுதல் –
அன்றியிலே
ஒரு தேவதை கொடுக்கக் கொள்ளுதல்
அன்றியிலே
தன் தபசால்   கொள்ளுதல் செய்கை அன்றிக்கே
தன் தோள் மிடுக்காலே கைக் கொண்ட அத்தனை மிடுக்கனான வான் கைக் கொண்ட பின்பு-நமக்குக் குடியிருப்பு அரிதென்று தம்தாமே விட்டுப் போம்படியாக

தானவனைப்-
ஆசூர பிரக்ருதியாய் உள்ளவனை-

பின்னோர் அரியுருவமாகி –
ஆன்ரு சம்சயத்தாலே அவனுக்காக நெடுநாள் பொறுத்துப் போந்தான் –
பின்பு சிறுக்கன்-இனி தோற்றி யருள வேணும் -என்று அபேஷித்த நர சிம்ஹஹமாய்
நரஸ் யார்த்த தநும் க்ருத்வா சிம்ஹஸ் யார்த்தாதநும் ததா  -என்று
அரியுருவும் ஆளுருவுமாய் -முதல் திருவந்தாதி -31-
அவ்வரத்தின் உள் வரியில்  அகப்பட்ட தொரு வடிவைக் கொண்டு –

யெரி விழித்துக் ——-
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண்  தாமரைக் கண்களாலே அழல விழித்து -பெரிய திருமொழி -7-1-9-

கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே –
முடித்தே விடக் கடவதான யுத்தத்திலே இவனைக் கொல்லுகையாவது
தலையிலே முடியை வைத்த வாசி இ றே –

வல்லாளன்-
வயிற்றில் பிறந்தவனுடைய உத்கர்ஷமும் கூடப் பொறாத துஷ் ப்ரக்ருதியாய் பெரு மிடுக்கை யுடையவன் –

மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத்  –
நெடு நாள் ராஜ்ஜியம் பண்ணுவதாக முடி கவித்து இருக்கிற குஞ்சியைப் பற்றி அருகே  வர இழுத்து-வரவீர்த்து -இற்றைக்கு முன்பு பரிபவப் பட்டு அறியாதவன் ஆகையாலே பிடித்த பிடியிலே பிணம் ஆனான் -பின்பு வர இழுத்துக் கொண்ட வித்தனை –

தன்னுடைய தாள் மேல் கிடாத்தி
இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்தார் – என் போல்வாரை இ றே மடியிலே எடுத்துக் கொள்ள வடுப்பது –
ஆஸ்ரிதருக்குப் பரம ப்ராப்யமான திருவடிகளிலே ஆசூர பிரகிருதி யானவனை ஏறிட்டுக் கொள்ளுவதே -என்கிறாள் –என்று –

அவனுடைய பொன்னகலம் –
ஹிரண்யன் இ றே
அவனுடைய மார்பத்தை
அசஹ்ய அபசாரத்துக்குக் கொள்கலமான மார்பு இ றே
அத்தை இ றே குட்டமிட்டு எடுத்தது –

வள்ளுகிரால் போழ்ந்து
அழகிய உகிராலே உருகிப் பதம் செய்தது –
பின்னை அநாயாசேன கிழித்துப் பொகட்டான் –

புகழ் படைத்த —
ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறி உதவினான் என்று வந்த-அப் புகழை உடைய புண்ணியனை-ஹிரண்யன் உடைய உடல் திரு வுகிருக்கு அரை வயிறு ஆம்படி யும் போந்தது இல்லை இ றே –

மின்னிலங்கு  மாழிப் படைத் தடக்கை
பின்னையும் பெரிய சன்னாஹங்களும் வீரப் பாடுகளுமாய் நாக்கை நீட்டா நின்றன –
விஷயம் பெறாமையாலே –

வீரனை-
வீரம் என்கிற மந்திர லிங்கம் தொடரச் சொல்லுகிறார் -போரார் நெடு வேலோன்
கிளரொளியால் குறைவில்லா –வளரொளிய கனலாழி-

மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் —
ஜ்ஞான அத்யவசாயங்கள் உள்ள விடத்தே உதவின அளவன்றிக்கே பட்ட பரிபவமும் அறிவிக்கையும் இன்றிக்கே-யோக்யதையும் இன்றிக்கே இருக்கிற இவற்றை -தன்னது -என்கிற பிராப்தியைக் கொண்டு-தன்னுருக்கெடுத்து வேற்றுருக்  கொண்டதொரு  நீர்மை உண்டு இ றே-அதுவும் அழிய இ றே  புகுகிறது –

மன்னிவ் வகலிடத்தை –
நெடுநாள் சர்வேஸ்வரனதாய் அடிபட்டுப் போருகிற இந்த பூமிப் பரப்பை

மாமுது நீர் தான் விழுங்கப் –
பாடி காப்பாரே களவு காணுமா போலே பூமிக்கு ரஷகமான கடல் தானே கொள்ளை கொள்ள –

பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை
இது உரு மாய்ந்து போமாகில் நாம் வ்யாபரித்து போருமது தான் எது -என்று மீண்டு
கை வாங்காதே -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாதே இருப்பதொரு மகா வராஹமாய்
ஜலத்திலே புக்கு உடைந்து எடுத்து கொண்டு அண்டத்தை கொம்பிலே
ஒரு நீல மணி அழுத்தினால் போலே யாயிற்று எடுத்து வைத்துக் கொண்டபடி –
கொன்னவிலும் கூர் நுதி மேல் –
இவன் ரஷகன் என்று அனுகூலித்தால் பிழைத்துப் போம் இத்தனை போக்கி
அவனோடு எதிரிட்டால் முடிந்து போம் இத்தனை –

கூத்தனை –
என்றும் ஒக்க பூமியை கீழ் மண் கொண்டு பிரளயம் கொண்டு போனால் ஆகாதோ
இம் மநோ ஹாரி சேஷ்டிதத்தை காணப் பெறில் –

மன்னும் வடமலையை –
அப்ரதி ஷேதம் உள்ள விடத்தே உதவினவளவு அன்றிக்கே
ஈச்வரோஹம் -என்று இருக்குமவர்கள் அளவில்
ஆயாசித்து கார்யம் செய்த ஓன்று உண்டு இ றே-
அதுவும் அழிய இ றே புகுகிறது –
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற மந்தர பர்வதத்தை –

மத்தாக மாசுணத்தால் –
மத்தாக கொண்டு
வாசூகியைக் கயிறாக கொண்டு –

மின்னு மிருசுடரும் விண்ணும் –
தர்ச நீய வேஷராய்  ஜகத்துக்கு த்ருஷ்டி பூதராய் இருந்துள்ளவர்களுக்கு
ஆவாஸ ஸ்தனமாய் இருந்துள்ள லோகங்களும்

பிறந்கொளியும் —
மற்றும் பிரகாசிக்கிற தேஜோ பதார்த்தங்களாய் உள்ள நஷாத்ர தாரா கணங்களும்

தன்னினுடனே சுழல –
கடைகிற போது இவை யடைய பூ போலே பறந்து மலையோடு ஒக்கச் சுழன்று வரும்படிக்கு ஈடாக கடைந்து
நெடும் போது தாங்கள் கடைந்து இளைத்துக் கை வாங்கின சமயத்திலே –

மலைத் திரிந்தாங்கு இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய -மன்னும் துயர் கடிந்த வள்ளலை –
ஆயிரம் தோளாலே சவ்யசாசியாய்க் கொண்டு தானே கடைந்த அம்ருதத்தை
அவர்களுக்கு சத்ருக்களான அசூரர்களை அழியச் செய்து தேவர்களை புஜிப்பித்து
அவர்கள் உடைய நிலை நின்ற புறங்கால் வீக்கத்தை தவிர்த்து ரஷித்த பரமோதாரனை-
வெள்ளை வேலை வெற்பு நாட்டி -திருச் சந்த விருத்தம் -88
எம் வள்ளலார் –மற்றன்றியும் தன்னுருவ-
ஈஸ்வர அபிமானிகளுக்கு கார்யம் செய்தானே யாகிலும்
தன்னுடைய ஐஸ்வர்யமான மேன்மையில்
ஒன்றும் குறையாமல் செய்தது இ றே அது –
இது அங்கன் இன்றிக்கே -தன்னுடைய ஸ்வ பாவத்தை தவிர்ந்து கார்யம் செய்த நீர்மை இ றே-அந்நீர்மையும் அழிய வி றே புகுகிறது
மற்றன்றியும் –
அதுக்கு மேலே -கண்டவர்கள் இவன் முன்பு உள்ள ஜன்மங்களிலும் இப்படி உளனாய்ப் போந்தவன் ஒருவன் என்னும்படியாக
கோசஹச்ர  ப்ரதாதாரம் -என்னும் நிலை ஒருவர்க்கும் தெரியாத படி –

மாரும் அறியாமல் தான்
பிராட்டிமார்க்கும் அகப்பட இவன் இப்படி இரப்பாளனாய்ப் போந்தான் அத்தனையோ -என்னுபடியாக-சர்வராலும் அபிகம்யனான தான் போய்ப் புக்கு

அங்கு
மகாபலி யஞ்ஞ வாடத்திலே –

ஓர் மன்னும் குறளுருவின் –
கண்ட கண்கள் வேறு ஒன்றைக் காணப் போகாதே தன பக்கலிலே துவக்குண்ணும் படி அத்விதீயமான வேஷத்தை உடைய

மாணியாய் மாவலி தன்-
உண்டு என்று இட்ட போதொடு
இல்லை என்று தள்ளின போதொடு வாசி அற முகம் மலர்ந்து போக வல்லனாம் படி இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையனாய் –

பொன்னியலும் வேள்விக் கண் –
மடல் எடுத்துப் பெற விருக்கிற இது போல் அன்றிக்கே பலத்தோடு வ்யாப்தமான யாகத்திலே
அன்றிக்கே
அபேஷித்தார் உடைய அபேஷிதங்கள் எல்லாம் கொடுத்துப் போருகையாலே ச்லாக்கியமான யாகம் -என்னவுமாம் –

புக்கு –
இப்பதத்தாலே இட்ட அடிகள் தோறும் பூமி நெரியும்படி போய்ப் புக்கு –
இருந்து –
மலையாள வளைப்பு போலே -கொள்வன் நான் மாவலி மூவடி தா -திருவாய் மொழி -3-8-9-என்று
சொல்லுகிறபடியே கொண்டு அல்லது போகேன் -என்று இருந்து –

போர் வேந்தர் மன்னை –
மதிப்புடைய ராஜாக்களுக்குஎல்லாம் பிரதானனாய் இருக்கிறவனை-இவன் தேவ கார்யம் செய்ய வந்தான் அல்லன் -அர்த்தியாய் வந்தான் -என்று அவன் நெஞ்சிலே படும்படியாக

வஞ்சித்து நெஞ்சுருக்கி-
அவனுக்கு தந்து அல்லது நிற்க ஒண்ணாத படி அவனுடைய நெஞ்சை
புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி-1-8-6-என்கிறபடியே
அவனுடைய இந்த்ரியங்களை தானிட்ட வழக்காக்கி
சூக்ராதிகள் வந்து விலக்கினாலும்-அது கேளாதபடி கரைத்து
முன்பு அவன் பண்ணின அபிசந்தியைக் குலைக்கைக்கு ஒன்றும்
பின்பு தான் சொல்லுவது ஒன்றுமாய்  இருக்கையைச் சொன்ன படி  –

என்னுடைய பாதத்தால் –
மகா பலீ -என் காலாலே மூன்றடி மண் தா -என்ன
உன்னுடைய சிறு காலாலே மூன்றடி மண் போருமோ –

யான் அளப்ப மூவடி மண் —
அர்த்தித்தார் அர்த்தித்த படியே கொடுக்கும் அத்தனை அன்றோ –

மன்னா தருக என்று வாய் திறப்ப –
ராஜாவே மூன்றடி மண் தர வேணும் என்று சொல்ல –

மற்றவனும்என்னால் தரப்பட்ட தென்றலுமே  –
தத்த மஸ்ய -யுத்த 18-34-என்கிறபடியே
முன்பே என்னாலே தரப் பட்டது அன்றோ -என்றான் –

அத்துணைக் கண் —
ஆசூர பிரக்ருதியான அவன் மறு மனஸ் ஸூ பட்டு இரண்டாம் வார்த்தை சொல்லுவதற்கு முன்பே அப்போதே

மின்னார் மணி முடி போய் விண் தடவ –
இவன் வாமனனாய் நின்றான்-திரு அபிஷேகமானது வளர்ந்து உபரிதன லோகங்கள் எங்கும்சென்று புக்கு வ்யாபரித்தது –

மேலேடுத்த-
எடுத்த திருவடிகள்
திரு அபிஷேகத்தொடே இசலி வளர்ந்த படி
முடி பாதம் எழ -திருவாய் மொழி -7-4-1-என்றும்
அத்ய திஷ்டத்த சாங்குலம்-என்றும் சொல்லக் கடவது இ றே –

பொன்னார் கனை கழற்கால் ஏழ்   உலகும் போய்க்   கடந்தங்கு  –
த்வனியை உடைய வீரக் கழலை யுடைத்தாய் சலாக்கியமான திருவடிகள்
மேல் உண்டான லோகங்கள் எல்லாம் கழியப் போய்-

ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி-
அவ்வளவிலே எதிரிட்டு வந்த நமுசிப் ப்ரப்ருதிகளை-ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி பண்ணி-அவனை ஆகாசத்திலே சுழற்றி எரிந்து அவ்வளவும் செல்லப் பரப்பி-

மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத்
பழையதாய் மகாபலி தான் அடி இட்டுப் போந்த ராஜ்யத்தை-சிறு காலைக் காட்டி மூவடி மண் தர வேணும் என்று இரந்து-கையிலே நீர் விழுந்த அனந்தரத்திலே
பெரிய அடியாலே அளந்த வஞ்சனையைச் சொல்லுகிறது –

மகா பலி பக்கல் நின்றும் வாங்கிக் கொடுத்தது இந்த்ரனுக்காய் இருக்கச் செய்தே
தன்னுலகம் -என்கிறது அவிவாதத்தைப் பற்ற
தாளானை
இதெல்லாம் இங்கனே செய்தான் அவன் அல்லன் -திருவடிகள் ஆயிற்று –

தாமரை மேல்மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் –—–
ஆஸ்ரித விஷயத்தில் இப்படிபண்ணின அவ்வபதானத்துக்கு நிதானம் பிராட்டியோட்டைமுகம் பெற்று மதிப்பானவனை-
பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தால் வந்த புகர் அடங்கலும் வடிவிலே தோற்றும்படி -திரு விண்ணகரிலே வந்து உஜ்ஜ்வலனாய்  நிற்கிறவனை   –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

பெரிய திருமடல் — 74-மன்னன் திரு மார்பும் வாயும்-95-என்னிதனைக் காக்குமா சொல்லீர் இது விளைத்த மன்னன்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

June 19, 2014

என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடியிணையும்—–74
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75
மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76
துன்னு வெயில் விரித்த சூளா மணி  யிமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று   நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே  ——–78
மின்னாய் இளவேய்   இரண்டாய்    இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80
பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81
இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து
மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83
இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப்  ———84
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85
கன்னவில்  தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86
தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின் ———-88
நன்னறு வாஸம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் ———-89
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம்  தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர்   இல்லையே -மால் விடையின்  ———92
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு   மாலை வாய்த்   ————93
தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின்
இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே ———–94
கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்
என்னிதனைக் காக்குமா சொல்லீர் இது விளைத்த ——–95

————————————————————————–

மன்னன் திரு மார்பும் -வாயும் அடியிணையும்—பன்னு கரதலமும் கண்களும்-
ராஜாதி ராஹஸ் சர்வேஷாம்
திரு மார்பு -தமக்கு பற்றாசு –
விரஹ ஸ்ரமஹரமான மார்பு தன்னைக் கணிசிக்கை
வ்ரீளை யாலே -வெட்கத்தாலே -முகம் பாராதே மார்வைப் பார்த்தாள் -என்னவுமாம் –
திரு மார்வு என்னா -வாயும் -என்பான் என் என்னில்
பிராட்டி பக்கல் பிரேமத்தாலே -அவளைப் பார்த்து முறுவல் பண்ணி இருக்கும் –
அவ்வழியாலே முறுவலைக் கண்டபடி –
அம்முறுவலுக்கு தோற்று விழும் திருவடிகள் –
திருவடிகளிலே விழுந்தாரைத் திருக் கையாலே ச்பர்சித்தால் -ஒரு கையே -என்று வாய் புலர்த்தும் கை-நோக்கும் கண்கள்-நின்ற விடத்தே நின்று ஸ்பர்சிக்கும் கண்
ஒரு கால் நோக்கினால் ஆலம் கட்டி விட்டெறிந்தால் போலே இருக்கை –

பங்கயத்தின்-பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் –
பொற்றாமரைக் காடு நீல கிரியிலே பரப்பு மாறாப் பூத்தால்  போலே திரு மேனியில் உண்டான திருக்கண்கள் திரு வாய் திருக்கை திருவடிகள்-இருக்கும் படி என்று கீழோடு அந்வயம் –

மின்னி யொளி படைப்ப
பளபளத்த ஒளியை உண்டாக்க –

வீணாணும் –
விடு நாணும்-சௌந்தர்யம் நிறைந்தால் போல் இருக்கை –

தோள் வளையும்–
திருவடிகளுக்கு வீரக் கழல் போலே –

மன்னிய குண்டலமும் –
காதிலே பூத்தால் போலே இருக்கை –

ஆரமும் –
மார்விலே சினைத்தால் போலே இருக்கை –

நீண் முடியும் —
திரு நறையூருக்குச் சூட்டின முடி –
சர்வேஸ்வரன் ஆகச்   சூட்டின முடி –

துன்னு வெயில் விரித்த சூளா மணி  யிமைப்ப-
சூடா மணியின் ஒளி எல்லா ஒளியையும் விஞ்ச
துன்னுகை -மிகுகை –
அழகு மிக்கால் கண் எச்சிலாம் என்று மறைப்பாரைப் போலே
சூடா மணியில் தேஜஸ் ஸூஎல்லாத் தேஜஸ் ஸிலும் மிக்க போது
இள வெயில் போன்றதொரு பிடம் விழ விட்டால் போலே இருக்கும் –

மன்னு மரகதக் குன்றின்-
தன்னைப் பற்றி லோகம் வாழ்வது ஒரு நீலகிரி –

மருங்கே யோர்
ஆழம் கால் –
உள் இழிய ஒண்ணாமை
இருவரும் நேர் பார்க்க மாட்டாமை -யாதல்
பெரு வெள்ளம் கண்டு நோக்குவாரைப் போலே –

ஓர் -இன்னிள வஞ்சிக் கொடி யொன்று   நின்றது தான்-
விலஷணமாய் -போக்யமாய் -இளையதாய் இருப்பதொரு வஞ்சிக் கொடி-
கொடி என்றது அல்லாத பெண்களை -பும்ஸ்தவ கந்தி-என்னும்படியான ஸ்த்ரீத்வம்-
சாஷான் மன்மத மன்மத  -என்னுமா போலே ஓன்று –
இவளைப் போக்கி வேறு ஒருவர் இல்லாமை ரூபகம் முற்றின படி
த்ருஷ்டாந்தமே பேசும்படி யாயிற்று –
(பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளோர் பகுதி அருளிச் செயல்களில் இது -வஞ்சுள வல்லித்தாயார் அன்றோ )

அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே  மின்னாய் –
அன்னம் -நடை
மான் -நோக்கு
அணி மயில் -அளக பாரம்
இடையே மின்னாய்-நடுவே மின்னாய் –

இளவேய்   இரண்டாய்
இரண்டு இள மூங்கில் போலே பசுமையும் சுற்று உடைமையும் உடைய திருத் தோள்கள் –

இணைச் செப்பாய்-
ஒன்றுக்கு ஓன்று ஒப்பு
ஈஸ்வரனை இட்டு வைக்கும் செப்பு
மலராள் தனத்துள்ளான் –

முன்னாய தொண்டையாய்க் –
எல்லாவற்றிலும் முற்படுகிறது திரு வதரத்தின் அழகு

கெண்டைக் குலம் இரண்டாய் –
மௌக்த்யத்தாலும் மதமதப்பாலும் இரண்டு கெண்டை போலே யாயிற்று திருக் கண்கள்

அன்ன -திருவுருவம் நின்றது –
அப்படிப் பட்டது என்னுமத்தை யன்றி இவ் வழகுக்கு தக்க வாசகம் இல்லை –

அறியாதே-
அறிவு கெட்டு-
அறியாமையனபடி எங்கனே என்னில்
பருப்பருத்தன சில பேசி முடியப் பேச மாட்டாமையாலே
பிரித்துப் பேசும் போது பேசலாம்
இருவரும் கூடி நின்றால் பேச முடியாது
கண்ணுக்கும் மனசுக்கும் அளக்க ஒண்ணாத விஷயம் ஆகையாலும்
கண்டாரைக் குமிழ் நீரூட்டும் விஷயம் ஆகையாலும் அறியாதே -என்றுமாம் –

என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் பொன்னியலும் மேகலையும்-
நெஞ்சாவது அறிவு இட்டு வைக்கும் கலம்-

ஆங்கு ஒழியப் போந்தேற்கு-
வெறும் தரையாகப் போந்தேன்
வாழச் சென்று உள்ளது எல்லாம் கொடுப்பாரைப் போலே சர்வத்தையும் இழந்து
கடலிலே துரும்பு போலே சௌந்த்ர்ங்கள் வீச
மடலோ -என்று புறப்பட்ட படி-

மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த இந்நிலாவின் கதிரும்
சலியாத கடல்-ராஜத்ரோஹிகளைக் கண்டால் போலே கூப்பிடத் தொடங்கிற்று –

என்தனக்கே வெய்தாகும்-
நாட்டை வாழ்வித்து என்னை நலியா  நின்றது-

தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ –
சீதோ பவ ஹனூமத -என்ன நெருப்பு குளிருமா போலே
நிலாச் சுடுக -என்று நினைப்பிட்டதோ
இதுக்கு காரணம் என் -என்கிறாள் –

தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து-
மலைய பர்வதம் –

மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இந்நிலம் பூம் தென்றலும் –
லோகத்தை வாழ்விக்கை நித்யமானால் போலே
எனக்கு ஒருத்திக்குச் சுடுகை நித்யம் ஆயிற்று –

வீசும் எரி எனக்கே-
விரஹாக்னி தன் மேல் தட்டாமே –

முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப்-பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்-
முன்பே நின்ற பனை -முள்ளைஉடைத்தான தாமரைத் தண்டாலே செய்த கூடு –

என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் –
நெஞ்சுக்கு புறம்பு நலிகை தவிர்ந்து
நெஞ்சை ஈரா நின்றது
பிழைக்க விரகு இல்லை –

கன்னவில்  தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்-
பெண்களை நலிய நக்கிப் பூண் கட்டும் தோள்-

கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத  வணைந்து
இலக்குத் தப்பாமல் நின்று –

தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல் என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் –
பெருமாளில் இவனுக்கு விசேஷம்
அமூர்த்தமான நெஞ்சை இலக்காக எய்கிறான் –
மாருகிறிலன் –
சரவர்ஷம் வவர்ஷ ஹ -யுத்தம் -94-18-
இம்மூல பலத்தை பெற்ற போதே –
என்னுடைய நெஞ்சு என்கிறது
அவனுடைய நெஞ்சிலும் ஓர் அம்பு பட்டாலோ -என்கிறது –

பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-
லஷ்மணச்ய ச தீ மத –சுத்தர -16-4-என்னும்படியே
பெருமாள் கையில் வில்லை வாங்கினால் போலே
காமன் கையில் வில்லை வாங்குவான் ஒரு தம்பி இல்லையே –
கட்டுக்குக் காப்பார் இல்லையே -என்று –

இவ்வாபத்துக்கு இட்டுப் பிறந்தாள் ஒருத்தி –

கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் –
விலஷணமான வல்லி-

கடி மலரின் –
மதுவை உடைய மலர்

நன்னறு வாஸம் –
நல்ல பரிமளம் –

மற்று ஆரானும் எய்தாமே மன்னும்
ஓர் ஒருத்தர்க்கு –

வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்-
வெறும் தரை –

மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் பொன் மலை போல் நின்றவன்தான்-
மலர் மங்கை மண்ணும் மைந்தன் –

பொன்னகலம் –
கூட இருந்தே அவளும் தண்ணீர் தண்ணீர் என்னும் மார்வு

தோயாவேல் –
அப்படி ஸ்ப்ருஹணீயமான மார்விலே தோயப் பெறாத இன்னாப்பு –
விடாய்த்தார் நினைத்த மடுவில் முழுக்கப் பெறாதாப் போலே –
மெல்லியல் தோள் தோய்ந்தாய் -என்னுமா போலே -அவனும் இத்தலையில் படி –

என்னிவைதான் வாளா-
பஸ்ய லஷ்மண புஷ்பாணி நிஷ்பலானி-கிஷ்கிந்தா -1-44-
நிஷப் பலமானவை எனக்கு என் செய்ய   –

வெனக்கே பொறையாகி–
இருவர் சுமக்கக் கடவ முலையை ஒருவர் சுமக்கப் போமோ -என்கை-

என் கண்கள் காண மூக்க வேணுமோ –
என்னை விட்டுக் கடக்க நின்று மூக்கல் ஆகாதோ –
வயோச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5-என்றமூவாமைக் காப்பதோர் –
அவனைக் கொடு வந்து தருவார் இல்லையே –

மன்னு மருந்து அறிவீர்  இல்லையே –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று
கடலைச் சரணம் புக என்றால்  போலே –
மடலைச் சரணம் புகு -என்பாரில்லையே
இங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள்  -என்று பட்டர் –

-மால் விடையின்  —
நாகின் மேலே பித்தேறின விடையின் –

துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு –
கடியுடைத்தான பிடரியிலே ககுத்திலே தூக்குண்டு –

வன்தொடரால்-
தார்மிகர்களுக்கு அவிழ்த்து விட ஒண்ணாத படி பிணைக்கை –

கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு-
பிரணயத்தில் புதியது உண்டு அறியாதாரும் வெருவி விழிக்கை-

மாலை வாய்த்   தன்னுடைய நா வொழியாதுஆடும் –
இட்டால் தீரும் காலம் –

தனி மணியின்-
வ்யசநிக்கைக்கு தானே தனி என்னும் அத்தனை –

இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே –
இனிய பாட்டுக் கேட்டால் படுமோபாதி படுத்த வற்றாய் இருக்கை-
ஹ்ருதயத்திலே வருவதற்கு முன்னே செவியிலே சுட்டுக் கொடு வரும் –

கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்-
ஒரீட்டிலே முடித்து விடாதே சித்ரா வதம் பண்ணும் –

என்னிதனைக் காக்குமா சொல்லீர் –
எவ்வழியாலே ஸ்த்ரீத்வத்தைக் காப்பேன் -சொல்லீர் -என்கிறாள் –

இது விளைத்த –தென்றல் அன்றில் குழல் விடை -உள்ளிட்டன-இருந்ததே குடியாக என்மேல் படை ஏறும்படி விளைத்த -கையும் மடலும் ஆக்கின படி என்றுமாம் –
இப்படியாகைக்கு அபி நிவேசத்தை விளைப்பிக்கை –

————————————————————————–

நோக்குதலும் மன்னன் –
த்ருஷ்ட ஏவ ஹி ந சோகமாப நேஷ்யதி ராகவ -என்னும்படியே நோக்கின அநந்தரம்
மமேதம் என்கிற பிரதிபன்தகம் அடங்கப் போய்
அவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றிலேன்
மமேதம் அடங்கலும் போயிற்று
அனுபவம் மடலேயாய் விட்டது –

மன்னன் திரு மார்பும் –
பற்றாசான பிராட்டிக்கு இருப்பிடமான- திரு மார்வும்-அவள்  சம்பந்தம் கொண்டு இ றே ராஜாவாவது-திருக்கண்டேன் -என்று இ றே கண்டவர்கள் சொல்லுவதும் –
மாத்ரு தேவோ பவ -முற்படக் கண்டது திரு மார்வாயிற்று –

வாயும்  –
அவள்  முன்னாகப் பற்றினாரை -மாஸூச-என்னும் திரு ஆஸ்யமும்-

அடியிணையும்—
அம்மார்வுக்கும் ஸ்மித்துக்கும் தோற்றார் விழுவனவான திருவடிகளும்

பன்னு கரதலமும் –
திருவடிகளிலே விழுந்தாரை எடுத்து அணைத்தால் இது ஒரு ஸ்பர்ச சௌக்யமே-என்று
இடைவிடாதே கூப்பிடப் பண்ணும் படியாய் இருக்கிற திருக் கைகளும்
பன்னுதல்-இவனை எடுத்து அனைக்கையாலே
தோள்கள் ஆயிரத்தாய்-திருவாய் மொழி -8-1-10-என்கிறபடியே
பணைத்த என்றுமாம் –
சோப்யே நம் த்வஜ வஜ்ராப்ச கருத சிஹ்நென பாணினா
சம்ச்ப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்க்யா ஸூ காடம் பரிஷச்வஜே-

கண்களும் –
ஸ்பர்சத்துக்குத் தோற்றாரை குளிர நோக்குகிற திருக் கண்களும்
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்கள் இ றே  –
பங்கயத்தின்பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —–
ஒரு பொற்றாமரைக் காடு நீல கிரியிலே பரப்பு மாறப் பூத்தால் போலே யாயிற்று
திவ்ய ஆபரண சோபையும் திருமேனியும் பொருந்தி இருக்கும் படி –
கீழில் திவ்ய அவயவங்களுக்கு த்ர்ஷ்டாந்தம் ஆகவுமாம் –

மின்னி யொளி படைப்ப
மின் செய் பூண் மார்வினன்-என்கிறபடியே மின்னினொளி
திரு வாபரணம் ஆயிற்றோ யென்னும்படியாய் இருக்கிற –

வீணாணும் தோள் வளையும்-
பெரிய பிராட்டியாருக்கு ஹிரண்ய ப்ராகாரமாகத் தாழ்ந்து இருக்கிற விடு நாணும்-
தோளை முட்டாக்கிட்டால்  போல் இருக்கிற தோள் வளையும் –

மன்னிய குண்டலமும் –
ஒரு நாள் வரையிலே சாதிற்றாய் இருக்கை அன்றிக்கே சஹஜமாய்
திருக் காதுகள் பூத்தால் போலே இருக்கிற
மின்னு மணி மகர குண்டலங்களும் –

ஆரமும்-
பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு -மூன்றாம் திருவந்தாதி -55-என்கிறபடியே
திரு மார்விலே இருமடி இட்டுச் சாத்த வேண்டும்படி இருக்கிற திருவாரமும் –

நீண் முடியும் –
இவற்றை எல்லாம் தன் அழகாலே முட்டாக்கிடா நிற்பதாய்
விண் முதல் நாயகன் நீண் முடி -திரு விருத்தம் -50-என்று
ஆதி ராஜ்ய ஸூ சகமாய் இருக்கிற திரு அபிஷேகமும் –

துன்னு வெயில் விரித்த சூளா மணி  யிமைப்ப-
நெருங்கின கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள சூடா ரத்னமானது தன் புகராலே
எல்லாவற்றையும் முட்டாக்கிகிட வற்றாய் –

மன்னு மரகதக் குன்றின் மருங்கே –
நித்தியமாய் இருப்பதொரு மரகத கிரியின் அருகே –
சேர நிற்கில் ஆழம் காலாம் -என்று அருகே
கிண்ணகப் பெருக்கை எதிர் செறிக்க ஒண்ணாதாப் போலே
எதிர் நிற்க ஒண்ணா மே கரை யருகைப் பற்றியாய் யாயிற்று இருப்பது –
யோர் இன்னிள வஞ்சிக் கொடி யொன்று   நின்றது தான்-
அத்விதீயமாய் கண்டார் கண்ணுக்கு இனிதாய்
இளையதாய் இருப்பதொரு வஞ்சிக் கொடி நின்றது –
கொம்பு -என்று சொல்லிற்றில்லை
அண்ணாறும் என்னுமத்தைப் பற்ற –
தான் -அது இருந்தபடி தான்

அன்னமாய் –
நடை அழகுக்கு

மானாய் –
நோக்கில் உண்டான மௌக்த்யத்துக்கு-

அணி மயிலாய் –
அளகபாரத்துக்கு-அணி -சாயை-

ஆங்கிடையே  மின்னாய் –
இவள் நாலடி நடக்கும் போதாக நாயகனுக்கு துணுக்குத் துணுக்கு -என்னும்படி இருக்கை –

இளவேய்   இரண்டாய்  –
சுற்றுடைமைக்கும் -பசுமைக்கும் -செவ்வைக்கும் -ஒழுகு நீட்ச்சிக்கும்
மூங்கில் திருஷ்டாந்தமாக சொல்லக் கடவது இ றே -இள வேய் -தோளுக்கு –

இணைச் செப்பாய்-
நம்பியை சேமித்து வைக்கைக்கு-
இணைச் செப்பாய் –
திரு முலைகளுக்கு –

முன்னாய தொண்டையாய்க்-
திவ்ய அவயவங்களின் அழகுகளில் மிகையாய் வந்து பற்றா நிற்க
முன்னோடி வருகிறது திரு வதரத்தின் புகராயிற்று
வாலியதோர் கனி கொல்-திருவாய்மொழி-7-7-3- -இத்யாதி-

கெண்டைக் குலம் இரண்டாய் –
கண்ணில் ஒழுகு நீட்ச்சிக்கும் அழகுக்கும் –

அன்ன திருவுருவம் நின்றது அறியாதே-
சில சொன்னோமாம் இத்தனை யல்லது என்னால் முடியப் பேசித் தலைக் கட்டப் போகாதே –
அப்படிப் பட்ட திருவுருவை –அன்ன திருவுருவம் -என்னலாம் இத்தனை இ றே சொல்லலாவது-
அன்ன திருவுருவம்
மருங்கே நின்றது அறியாதே
அறிந்தேன் ஆகில் கால் வாங்கிப் பிழைக்கலாம் கிடீர்
அறியாமையாலே இழிந்து கிடீர் நான் இப்படி பட்டது-

என்னுடைய நெஞ்சும் அறிவும் –
ஒன்றுக்கும் அழியாதே இருக்கக் கடவ என்னுடைய நெஞ்சு கிடீர்
அறிவை இட்டு வைக்கைக்கு கலமான  என் நெஞ்சும் –

இன வளையும் —-
ஆபரணமான வளையும் –

பொன்னியலும் மேகலையும்
ஸ்லாக்கியமான பரிவட்டமும் –

ஆங்கு ஒழியப் போந்தேற்கு மன்னு மறி கடலும் ஆர்க்கும் –
நொந்தாரைக் கண்டால் ஐயோ என்ன பிராப்தமாய் இருக்க-அங்கனே செய்யாதே
சர்வேஸ்வரன் இஜ் ஜகத்துக்கு ரஷகமாக கல்பித்து வைத்த கடலும் சப்தியா நின்றது –

மதி யுகுத்த இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்-
என்னளவிலே வந்தவாறே களளரைக்   காட்டிக் கொடுப்பாரைப் போலே
சந்தரன் தன் ஆஸ்ரயம் கொண்டு பொறுக்க மாட்டாமையாலே பொகட்ட
இனிய நிலாவினுடைய கிரணம் எனக்கே சூடா நின்றது –
நாட்டார் வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டு இருக்கிற சந்திரனும் எனக்கே பாதகனாகா நின்றான்
நிலா -என்னா நிற்க –கதிர் -என்கிறது ஏத்திப் பற்ற -என்னில்
த்ரவ்யமாய் இருக்கும் இ றே -அதின் குணத்தைப்   பற்ற –
ஆகையாலே கதிர் என்கிறது –

தன்னுடைய தன்மை தவிரத் –
பதார்த்த ஸ்வ பாவங்கள் அடங்கலும் வேறுபடா நின்றது
சைத்யம் இ றே இவற்றுக்கு ஸ்வ பாவம்

தான் என்கொலோ –
பதார்த்த ஸ்வ பாவங்கள் அந்யமாக-அபி பதித்தவாறே அதி சங்கை பண்ண வேண்டி இருக்கும் இ றே
இத்தை சீதோ பவ -என்றால் போலே
உஷ்ணோ பவ -என்றார் உண்டோ   -இந்த நிலா -என்று பிரத்யஷம் ஆகவுமாம் –

தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே-
தென்னதான பொதிய மலையிலேயாய்-அழகியதாய் இருக்கிற
சந்தனத்தை கந்தல் கழித்து -தான் அதில் தாதை யளைந்து
ப்ரவாஹ ரூபேண நித்யமான இந்த லோகமானது
த்ருப்தமாம் படி புண்யம் பண்ணினார் இருந்த விடத்திலே எங்கும் ஒக்க சஞ்சரியா நிற்கிற-இனியதாய் இளையதாய் பரிமள பிரசுரமான தென்றலானது –
என்னுடைய விரஹ அக்னி தன் மேலே படாத படி கடக்க நின்று நெருப்பை ஏறட்ட நின்றது –

முன்னிய பெண்ணை மேல் –
முன்னே நிற்கிற பெண்ணையின் மேல் உண்டான

முள் முளரிக் கூட்டகத்துப் 
தாமரை வளையத்தில் உண்டான கூட்டிலே-முள் முளரி என்று-பாதகத் வத்தில் உறைப்பைப் பற்றி சொல்லுதல் –
அன்றிக்கே
முள்ளு உண்டாய் இருக்கும் இ றே -அத்தைப் பற்றிச் சொல்லுதல் –

பின்னும் அவ்வன்றில்-
அதுக்கு மேலே என்னுதல்-
நெருங்கத் தொடுத்த வாய் அலகை யுடைத்தான அன்றில் -என்னுதல்  –

பெடைவாய்ச் சிறு குரலும்-
கோத்த வாயலகை யுடைத்தான அன்றிலுடைய பேடை வாய்ச் சிறு குரல் உண்டு –
ஒரு கால் சொல்லப் புக்கால் பதின்கால் பட்டைப் பொதி சோறு அவிழ்க்க வேண்டும்படி யான த்வனி -அது

என்னுடைய –
முன்பே அழிந்து இருக்கிற என்னுடைய –

நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் –
பேச்சுக்கு முன்னே என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாகா நின்றது –

என் செய்கேன் —
ஓர் அபலை இதுக்குப் பரிஹாரம் பண்ணிக் கொள்ளவோ –

கன்னவில்  தோள் காமன் –
கல் என்று சொல்லப்பட்ட தோளை யுடைய காமனுடைய –

கறுப்புச் சிலை வளையக்-
கண்ணுக்கு ஆசர்யமாய்   இருந்தும் பாதகத்வம் உறைத்து இருக்கிறபடி –

கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் –
இதுக்கு இலக்கானவர்கள் முடிந்தார்கள் என்று சொல்லுகிற புஷ்ப பாணங்களைத் தொடுத்து –

பொத வணைந்து –—-
தொற்றர அணைந்து -என்னுதல் -மறுபாடுருவும்படி அணைந்து நின்று -என்னுதல் –

தன்னுடைய தோள் கழிய வாங்கித் –
மார்வை நிரம்ப வலித்து-

தமியேன் மேல்-
தனியேனாய் இருக்கிற என மேலே –

என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான்—-
வர்த்தமானத்தாலே ஒரு காலும் எய்து கை வாங்குகிறிலன் –

பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-
ரஷகன் ஆனவன் ஜகத் சசைலம் பரிவர்த்தயாம் யஹம் -ஆரண்ய -64-78–என்ன
நாட்டுக்குத் தண்ணளி பண்ணி நோக்க வல்லவோ உங்கள் தமப்பனார் உம்மைப் பெற்றது -நீர் நாட்டை அழிக்கக் கடவீரோ -என்று இளைய பெருமாள் காலைக் கட்டினால் போலே-இவளும் -இக்காமனைக் காலைக் கட்டி நோக்க வல்லார் இல்லையோ -என்கிறாள் –

பேதையேன்-
பிரிந்து ஆற்ற மாட்டாத சமயத்தில் முடிந்து  பிழைக்கை  தேட்டமாய் இருக்க -இன்னம் ஒரு கால் காணலாம் படி இருக்குமாகில்
ஜீவித்துக் கிடந்தால் ஆகாதோ -என்று இருக்கும் படி அதி சபலையான நான் –

கன்னவிலும் காட்டகத்து
கல்லு நெருக்கின பெரும் காட்டுக்கு உள்ளே
பெரும் தூறாய் என்கிறபடியே சம்சாரம் ஆகிற பெரும் தூறு இ றே ஒரு காடாவது –

தோர் வல்லிக் கடி மலரின்
அதுக்கு உள்ளே ஒரு கொடியாவது-அது தான் முட்டப் பூத்ததாவது
அது தான் கடிமலரை யுடைத்தாய் இருப்பதொரு வல்லியாவது
சம்சார விபூதியில் இங்கன் ஒத்த ஆற்றாமை யுள்ளது இவர் ஒருவருக்குமே இ  றே –
ஓர் வல்லிக் கடிமலரின்  உடைய –

நன்னறு வாஸம் –
நல நறு வாசம் உண்டு –அத்யந்த விலஷணமாய் செவ்வி அழியாத பரிமளம் –

மற்று ஆரானும் எய்தாமே-மன்னும்-
தனக்காகக் கண்டது அன்றிக்கே பிறர்க்காக கண்ட  வஸ்து பிறர்க்கு ஆகப் பெறாதே தானே நின்று –

வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
வெறு நிலத்திலே நிஷ் பிரயோஜனமாகப் பொகடுமா போலே விழுந்த தரை தன்னிலே –
விநியோகம் கொள்ளுகைக்கு யோக்யமாய் இருப்பதொரு வஸ்துவும் இன்றிக்கே
பாழே பொகட்டால் போலே நல் நறு வாசம் தான் இருக்கிறபடி –

என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்-
என்னுடைய ஸ்த்ரீத்வமும்
என்னுடைய நன்மையையும்
என்னுடைய அவயவங்களும் –
பெண்மை -பாரதந்த்ர்யம்
நலன் -ஆத்மகுணம்
முலை -பக்தி

மன்னு மலர் மங்கை மைந்தன் –
மலராள் தனத்துள்ளான் ஆனவனுடைய மார்வோடே அணையா வாகில்
பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே யுவாச குமார -என்று
நித்தியமான யௌவனத்தை யுடையவன் –

கணபுரத்துப் பொன்மலை போல் நின்றவன் –
திருக் கண்ண புரத்திலே ஸ்லாக்யமான வடிவோடு கால் வாங்காதே நிற்கிறவனுடைய-
மதுரையில் புறச் சோலையிலே எடுத்து விட்டு இருந்தால் போலே யாயிற்று திருக் கண்ண புரத்திலே வந்து நின்ற நிலை –
மகா மேரு போலே அநுப யுக்தம் அன்றிக்கே சர்வ உப ஜீவ்யமாயிருப்பதொரு மலை   –

தன் பொன்னகலம்  தோயாவேல்-
அவனுடைய அழகிய திரு மார்விலே அணைத்து விடாய் ஆறாவாகில்
தோய்கை -மறு நனைகை-
மெல்லியல் தோள் தோய்ந்தாய்    -என்று அவன் இவள் தோளிலே தோயும்
இவள் அவன் மார்விலே தோயும்
பொன் அகலம் ஆகையாலே இவள் விரஹ அக்னி பட்டு நீராய் யுருகும்
அப்போது தோயலாம் என்று இருக்கிறாள்
இவளும் ஹிரண்ய வர்ணை இ றே-

என்னிவைதான் வாளா
வகுத்த விஷயத்தோடு அணையப் பெறாதாகில்
வ்யர்த்தமே இராது அன்றே  –

வெனக்கே பொறையாகி-
போக உபகரணம் ஆனால் இருவரும் கூடச் சுமக்கை அன்றிக்கே
எனக்கே  தலைச் சுமை யாகில் எங்கனே தரிக்கும்   படி –

முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்-
இவை யுன்டாகை தவிராவாகில் முதுகிலே யானால் ஆகாதோ
முன்னே இருந்து காணக் காணச் செவ்வி யழிய வேணுமோ
வயோ அச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5–என்னுமா போலே –

மன்னு மருந்து
தப்பாத மருந்து –

அறிவீர்   இல்லையே –
அறிவார் இல்லையோ-இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் -ஜகத்திலே ஓர்-ஆந்தராளிகனைக்-கடகரைக் – கிடையாதோ  -என்று
இவ்வருக்கு உண்டான பேறுகள் அல்பமாய் அஸ்த்ரமாய் இருக்கையாலே
பரிஹாரங்களும் அவ்வளவேயாய் இருக்கும் இ றே
இது அங்கன் இன்றிக்கே யாவதாத்மபாவியான  பேறாகையாலே பரிகாரமும் நிலை நின்ற பரிஹாரமாய் இருக்கும் இ றே –

மருந்து அறிவீர் இல்லையே என்ற வாயோடு -உண்டு உண்டு -என்றால் போலே இருக்க
சேய்க்களின் கழுத்திலே மணி யோசையானது செவிப்பட்டது –
மால் விடையின்  -துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு   –
நாகின் மேலே பிச்சேறி வருகிற வ்ருஷபத்தின் உடைய நெருங்கின ககுத்தோடே சேர்ந்த
கழுத்திலே தூக்கப் பட்டு
வழிய சங்கிலியால் நாற்றப் பட்டு –

மாலை வாய்த்   —-
யா நிசா சர்வபூதா நாம் தசாம் சாகரத்தி சமயமே -ஸ்ரீ பகவத் கீதை -2-69-என்கிறபடியே
கண் உறக்கம் தேட்டமான ராத்ரியிலே

தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின் இன்னிசை ஓசையும் –
நாகானது வெருவி இருக்க அது தன்னையும்
தன நசையாலே விட மாட்டாதே தொடருகையாலே
மாறாதே த்வநிக்கிற தனி மணியினுடைய இனிய இசையை யுடைத்தான த்வனியும் –

வந்து என் செவி தனக்கே –
நாட்டார்க்கு இதினுடைய த்வனி செவிப் படா நிற்கச் செய்தேயும் ஜீவியா நிற்பார்கள் இ றே
இவ் விரஹம் வேறு ஒருவர்க்கு இல்லையே –
ஆகையாலே பாதகத்வம் இவளுக்கே இ றே யுள்ளது –

கொன்னவிலும் எக்கில் கொடிதாய்
அங்கன் அன்றிக்கே எனக்கு ஒருத்திக்குமே கொலையைச் சொல்லா நின்று உள்ள வேலிலும் காட்டிலும் துஸ் சஹமாய்  –

நெடிதாகும்-
வேலிலும் காட்டில் மிகவும் கொடிதாகா நின்றது
அது போலே கடுக முடித்து விடுகை அன்றிக்கே
இது உருவ நலியா நின்றது –

என்னிதனைக் காக்குமா சொல்லீர் –
ஓர் அபலையாலே இத்தைப் பரிஹரித்துக் கொள்ளலாமோ
இத் த்வனி செவிப்படச் செய்தேயும் தரித்து  இருக்க வல்ல
உங்களுக்கு பரிஹாரம் தெரியாமை இல்லை இ றே
இத்தைப் பரிஹரிக்கும் படி சொல்ல வல்லீர்களோ
இதுக்கு ஒரு பரிஹாரம் இல்லை என்னா நான் மீளுவேனோ –

மடல் எடுத்து அவனைப் பழிக்கிலும் பெறத் தவிரேன் -என்கிறது மேல் –
இது விளைத்த மன்னன் -நான் இப்படி கையும் மடலுமாம் படி பண்ணின வீரன்
கண்டவர்களை மடல் எடுப்பிக்கை-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

 

பெரிய திருமடல் — 55-நன்னாடன் மின்னாடும் —74-நோக்குதலும் மன்னன் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

June 17, 2014

பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே பூம் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நன்னாடன்   மின்னாடும்  ——55
கொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை
தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனைப் —-56
பன்னாக ராயன் மடப்பாவை பாவை தன்
மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் ———57
தன்னுடைய கொங்கை முக நெரியத் தானவன் தன்
பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது ——58
நன்னகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே -சூழ் கடலுள் —-59
பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் ——-60
தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய ——–61
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் ——-62
என்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் ——63
கன்னி தன் பால் வைக்க மற்று  அவனோடு எத்தனையோர்
மன்னிய பேரின்பம் எய்தினாள் -மற்றிவை தான் ———-64
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
மன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா ———65
மின்னு மணி முறுவல்   செவ்வாய் யுமை என்னும்
அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —————66
பொன்னுடம்பு  வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்
தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு ——-67
அன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்
மன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் ———68
மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்
பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப   ——–69
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும்  ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே  —–71
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம் பாவியேற்கு
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74

————————————————————————–

பூம் கங்கை முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும் -கொன்னவிலும் நீள் வேல் குருக்கள் குலமதலை
ஒளியை உடைத்தாய்-பிரதி பஷங்கள் கண்ட போதே வயிறு அழுகும் நீள் வேல்

தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் –
வீரத்துக்கு எம்பெருமானும் எதிரன்று –

தனஞ்சயனைப் –
ஊர் வசியை தாய் என்ன வல்லவன் –

பன்னாக ராயன் மடப்பாவை பாவை –
நாக ராஜாவின் பெண் பிள்ளை
பாவை -அவன் மகள்-பாவை என்கிறது ஸ்த்ரீத்வத்துக்கு அவ்வருகு இல்லாமை –

தன் மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத்-தன்னுடைய கொங்கை முக நெறியத் தானவன் தன்-பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் தனது
கடல் வற்றினால் போலே சஹஜமான குணங்கள் குட நீர்-வழிந்து போகை –

நன்னகரம் புக்கு-
உங்களைப் போல் அன்றியே மடல் எடுப்பாரைக் கொண்டாடும் ஊர் –

நயந்து இனிது வாழ்ந்ததுவும் –
கொண்டாடி-நித்ய சம்ச்லேஷம் பண்ணி-

முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே -சூழ்-கடலுள்-பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்-மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்-தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்-கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய-இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்-மன்னு மணி வரைத் தோள் –
புண்யத்துக்காகிலும் மஹா பாரதம் கேட்டு அறிவது இல்லையோ –

மாயவன் –
பிரசங்காத் நினைக்க -தாம் ஈடுபட்ட படியாலே ஆச்சர்ய பூதன் என்கிறார் –

பாவியேன் –
தம்மை அணைத்த தோளை நினைத்துக் கிடையாமை –
வழி போவார் அடித்த படி -ஆழம்   காலிலே ஈடுபட்டு –பாவியேன் -என்கிறாள் –

என்னை யிது விளைத்த –
இப்படி மடல் எடுக்கப் பண்ணின –

ஈரிரண்டு -மால் வரைத் தோள் –
இவள் இப்படி படப்பட அவனுக்குத் தோள் பணைத்த படி –

மன்னவன் தன் காதலனை –
எம்பெருமான் உடைய ச்நேஹத்தை ஒரு வடிவாக வகுத்தது -என்னும்படி இருக்கும்
பேரனான அநிருத்த ஆழ்வான்-

மாயத்தால் கொண்டு போய் –
பெண்கள் களவு காண்பார்கள் -என்று காவலோடு கண் வளர்ந்து அருளுகிறவனைப்
பீட்கன்று போலே    படுக்கையோடு கொடு போந்த படி –

கன்னி தன் பால் வைக்க -மற்று  அவனோடு-
உஷை ஸ்வனப்பித்திலே கண்டவனைச் சித்ரலேகை எழுதிக் காட்டி
இவள் பக்கல் அவனை அவன் தான் அறியாமே கொடு வந்து வைத்தபடி –

எத்தனையோர் மன்னிய பேரின்பம் எய்தினாள் -மற்றிவை தான் என்னாலே கேட்டீரே ஏழைகாள் –
விலங்கிட்டு வைத்ததும் கூட வாகையாலே-அளவில்லாத சஹஜமான பெரிய இன்பத்தை புஜித்தாள் –

என்னுரைக்கேன்-
இவ்வதாஹரணம் என்னால் சொல்ல முடியுமோ -என்னால் எவ்வளவு சொல்லலாவது-
ஆகிலும் தவிர ஒண்ணாதது என்று சொல்லக் கேளுங்கோள் என்கிறாள்  –

மன்னு மலை யரையன் பொற்பாவை-வாணிலா மின்னு மணி முறுவல்   செவ்வாய் யுமை என்னும்-அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர்  பொன்னுடம்பு  வாடப் புலன் ஐந்தும்-நாட்டுக்கு மச்சமாகப் பெண் பிள்ளை பெற்ற பாக்யவான் –
வாணிலா -மின்னு மணி முறுவல்   செவ்வாய் யுமை என்னும்-அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —
ஒளியை உடைய நிலாப் போலே விலங்கா நின்றுள்ள ஸ்ப்ருஹணீயமான முறுவல் –

நொந்த அகல-
நாம் பட்டதோ -என்று அகல –

த்ன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு அன்ன-
பெருமாள் திரு முடையைத்ப் புனைந்தால் போலே ஜடை –

வரும் தவத்தினூடு போய் –
தபஸ் ஸூ என்ன வாய் வேம்-
அப்படிப் பட்ட தபஸ் சை முடிய நடந்து –

ஆயிரம் தோள்-மன்னு கர தலங்கள்-
இத்தலை இப்பாடுபட அத்தலை வளர்ந்த படி –
நைவ தம்சாந் ந மசகான்  ந கீடான் ந சரீஸ்ருபான் -சுத்தர -36-42-என்கிற க்லேசத்தின் படுமவன் அல்லன் என்கை –

மட்டிடித்து மாதிரங்கள் மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்-
திக்குகளிலே செல்ல

பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் –
திரு வுலகு அளந்து அருளின தேசம் எல்லாம் உபதஹதமான படி –

சிலும்ப   மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்-தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும்  –
கிடந்த விடத்தில் கிடவாது ஒழிகை-குலவரை யுள்ளிட்ட பதார்த்தங்கள் எல்லாம் புன்னைப் பூ போலே சுழன்று வர –

கொன்னவிலும் மூவிலைக் -வேற்கூத்தன்-
ஆசைப் பட்டாரும் வயிறு பிடிக்கும் படி இருக்கை-கண் மூன்றானால் போலே இருக்கிறது அன்றோ  –

பொடியாடி அன்னவன் தன் –
போகத்துக்குச் சந்தனம் பூசின படி –
அன்னவன் -முகத்தைச் செல்ல வைத்துப் பேசுகிறார்
இன்னும் இப்புடையில் உள்ளன –

பொன்னகலம் –
அவள் பஷத்தாலே –

சென்று ஆங்கு அணைந்து இலளே 
இவ்வளவிலும் அவன் வந்திலன்
இவள் தானே சென்ற வத்தனை –
ஓர் அஞ்சலி பண்ண மேல் விழுந்தும் அன்று-என்கை –

பன்னி யுரைக்கும் கால் பாரதமாம் –
இப்பரப்பு என்னால் பேசி முடியாது
வியாச பரசாதிகள் பேசும் அத்தனை

பாவியேற்கு-
உங்களுக்குச் சொல்ல பிறந்தேனோ –

என்னுறு நோய் யானுரைப்பக் –
நம்பி அழகிலே அகப்பட
ஸ்ரீ பரத  ஆழ்வான் நோவு போலே –

கேண்மின் –
இத்தனையும் செய்ய வேணும் –
சோக ஷோபேச ஹ்ருதயம் ப்ரலாபைரேவ தார்யதே -என்னும் படியாலே
தான் பிழைக்கைக்காக
வாய் விட்டு அழு
வதாலேயே நெஞ்சு தரிக்குமே –

இரும் பொழில் சூழ் —
பரப்பை உடைத்தான ஸ்லாக்யமான பொழி லாலே சூழப் பட்டு இருப்பதாய்
எங்கும் ஒக்க சோலையும் பணையுமாய் கிடக்கும் இத்தனை இ றே-

மன்னு மறையோர் திரு நறையூர் –
மறையோர் மன்னும் திரு நறையூர் –
மடல் எடுக்கை சாஸ்த்ரார்தம் என்று உபபாதிக்குமவர்கள் மன்னும் தேசம் –
அங்கன் உண்டோ என்னில் –
வ்யவசாயாத்ருதே ப்ரஹ்மன் நாசாத யதி தத்பரம் -என்று உண்டாகையாலே –

மா மலை போல்-
மலையைக் கொடு வந்து நெருங்க வைத்தால் போலே யாய்-

பொன்னியலும் மாடக் –
அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹநீயமான மாடங்களில் உண்டான –

கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண்-
அவன் காண்கை-
அவ வாளம் காலை தப்பின படி
பல ஹானிக்கு முன்னே புகும் இத்தனை
என்னுடைய படபாக்னி குளிர –

களிப்ப –
கண்கள் ஆரவளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திரு மொழி -7-10-9-என்னுமா போலே –
நெடும் காலம் பட்டினி விட்ட கண்கள் வயிறு நிரம்பும்  படி –
நணுகினம் நாமே -திருவாய் மொழி -1-1-3-
மன்யே ப்ராப்தா சம தம் தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -அயோத்யா -69-9-

நோக்கினேன் நோக்குதலும் மன்னன் –
நான் கண்ட பொழுதே எழுதிக்  கொண்டான் –
வாளும் பலகையும் பொகட்டு கண்ட போதே மடல் எடுக்கப் பண்ணினவன் –
கண்ட போதே தான் என்னலாம்படி இருக்கை-
ராஜாதி ராஜஸ் சர்வேஷாம் –

————————————————————————–

பூம் கங்கை-
இப்படி அப்ரசித்தனாய் இருப்பான் ஒருவனுக்கோ இவள் மடல் எடுத்தது –
இரண்டு அறுக்கும் பூத்த சோலையாய்
பூக்கள் உதிர்ந்து கிடைக்கையாலே வந்த அழகைச் சொல்லுதல் –
அன்றிக்கே
நலம் திகழ்  சடையான் -திரு வாய் மொழி -4-7-2-யில் சொல்லுகிறபடியே
ருத்ரன் ஜடையில் உண்டான கொன்றை மலரும் சர்வேஸ்வரன் திருவடிகள் உண்டான திருத் துழாயும் கலந்து வருகிற ஜலத்தை உடைத்தாயாகையாலே வந்த பிரவாகத்தைச் சொல்லுதல்
சதுர்முகன் நினைவின்றிக்கே இருக்கச் செய்தே திருவடி சென்று கிட்டின வாறே பார்த்தான் –
தர்ம தத்வம் உருகி நீராய் இருந்தது
அத்தாலே திருவடிகளிலே பிறந்து
ருத்ரனுடைய ஜடையிலே தங்கி வந்தாயிற்று
கங்கை கங்கை -பெரியாழ்வார் திரு மொழி -4-7-1-என்று
கங்கா கண்கேதி என்கிற உக்தி மாத்ரத்தாலே
அவஸ்யம் அநு போக்தவ்யம்    -என்கிறபடியே அநு பவ விநாச்யமான கர்மங்களை அடையப் போக்கா நின்றத்தால் வந்த அழகைச் சொல்லுதல் –

அற்புதமுடைய ஐராவத மதமும் அவரிளம்படியர் ஒண் சாந்தும்   கற்பக மலரும் கலந்து உழி கங்கை -பெரியாழ்வார் திருமொழி -4-7-7-
கரை மரம் சாடி -பெரியாழ்வார் திருமொழி -4-7-9
வடதிசை மதுரை -பெரியாழ்வார் திருமொழி -4-7-9
சதுர்முகன் கையில் சதுப்புயன் தாளில் -பெரியாழ்வார் திருமொழி -4-7-10
கான்றடம் பொழில் சூழ் -பெரியாழ்வார் திருமொழி -4-7–13-

முன்னம் புனல் பரக்கும் –
சஹ்யத்திலே அல்ப ஜலம் உண்டானாலும் முந்துறப் பரம்புவது இங்கே யாயிற்று

நன்னாடன்  –
நாட்டின் உடைய அழகு
அதாவது நீர் வாய்ப்பு யுண்டாய் அழகியதாய் இருக்கை –

இது நாடு இருந்த படி –
இனி அவன் தன படி சொல்லுகிறது –
மின்னாடும்  –கொன்னவிலும் நீள் வேல்
மின் போலே அசைந்து வாரா நிற்பதாய் கொலையை சொல்லா நிற்பதாய்
அவஷ்டப்ய மஹத் தநு -என்கிறபடியே அடக்கியாள வல்லார் அரிதாய் இருக்கிற வேலை யுடைய –

குருக்கள் குலமதலை-
இது எல்லாக் குருக்களுக்கும் உப லஷணம்-
லோகத்துக்காக இவர்கள் குருக்களாகத் திரிவார்கள்
அவர்களில் வைத்துக் கொண்டு இஷ்வாகு நாதன் -என்கிறபடியே-அவர்கள் குலத்துக்கு பிரதானனாய்த் திரியுமவன்  –

தன்னிகர் ஒன்றில்லாத-
தனக்கு ஒப்பாரும் இல்லாத –
மனுஷ்யத்வே பரத்வம் கூடின போது ஒப்பாகில் ஒப்பாம் இத்தனை –

வென்றித் தனஞ்சயனைப் —
கிருஷ்ணனும் வெற்றியில் தனக்கு ஒப்பில்லாத தனஞ்சயனை

பன்னாக ராயன் -மடப்பாவை பாவை தன்-
பன்னகராயன் -என்றத்தை நீட்டி பன்னாகராயன் -என்று கிடக்கிறது –
பன்னக ராஜன் உடைய   பெண் பிள்ளை  –

மன்னிய நாண் அச்சம் மடம் என்றிவை அகலத் –
பிறந்த பின்பு உண்டானது  அன்றிக்கே
தரமி பிரயிக்தமாய் இருந்துள்ள லஜ்ஜை தொடக்க மான வற்றை சந்யசித்து போக –

தன்னுடைய கொங்கை முக நெரியத் –
தன்னுடைய முலை முகம் நெரியும் படி தான் ஒருதலைக் காமமாக

தானவன் தன் பொன்வரை யாகம் தழீ இக் கொண்டு போய்த் –
அவனுடைய பொன் போலே ஸ்லாக்கியமான மார்வைத் தான் தழுவிக்  கொண்டு போய்
நாட்டார் ஊர்வசி சாலோக்யத்துக்கு   சாதனா அனுஷ்டானம் பண்ணுவார்கள் ஆகில்
அவன் தான் வந்து உபஸ்தானம் -உப சர்ப்பணம் -பண்ணும் படியான மார்வ  இ றே-இவனது –

தனது நன்னகரம் -புக்கு-
தன்னுடைய நல்ல நகரம்-இவ் ஊருக்கு ப்ரத்யா சத்தியை யுடைய ஊர் அது –
மடல் எடுப்பாரை விலக்குவாரும் இன்றிக்கே-மடல் எடுத்து தொடர்ந்து வருவார் திரள் கண்டு உகக்கும் ஊர் –

நயந்து இனிது வாழ்ந்ததுவும்-
நிரவதிக சம்ச்லேஷத்தைப் பண்ணி-பழி சொல்லுவார் புகழுவாராகச் சேர
தானும் அவனுமாய் அனுபவித்ததும்

முன்னுரையில் கேட்டு அறிவது இல்லையே –
ந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்தி -என்று காமதந்த்ரம், அறிந்திலிகோள்  ஆகில் தவிருகிறிகோள்  –
பாபம் போகைக்கு பாவனம் என்றாகிலும் மஹா பாரதம் கேட்டு அறியீர்களோ –

சூழ்   கடலுள் பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்-மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் தன்னுடைய –
கடலுக்கு உள்ளேயான ஹிரண்ய புர வாசிகளான ஆசூர வர்க்கங்களை அழியச் செய்த
இந்தரனோடு ஒப்பானாய்த் தான் ராஜாவான பேர் கிடக்க
அஞ்ச வேண்டும்படி இருப்பானாய்
அசூர வர்க்கத்துக்கு நிர்வாஹகனுமாய்  –
பாவை யுலகத்துத் தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியால் –
லோகத்தில் தன் பருவத்தில்  பெண்களில் தனக்கு ஒப்பார் இல்லாத தர்ச நீய விஷயம் –

தன்னுடைய இன்னுயிர்த் தோழியால் –
தன் கையாலே என்னுமா போலே தனக்கு நற் சீவனானவளாலே –

எம்பெருமான் ஈன் துழாய்-
நிர்குண வஸ்து என்றவர்களுக்கு சகுணம் என்று சொல்லி விடுகை அன்றிக்கே
குணங்களிலே கால் தாழ்க்கப் பார்க்கும் பாஷ்ய காரரைப் போலே
போனபடி  சொல்ல என்று புக்குச்
சொல்லவும் விடவும் மாட்டாமையாலே அங்கே ஆழம் கால் படுகிறாள்  –
எம்பெருமான் ஈன் துழாய்-மன்னு மணி வரைத் தோள் மாயவன் –
கையும் மடலுமாய்க் கொண்டு புறப்படும்படி-என்னை அனந்யார்ஹை யாக்கினவன் உடைய-நிரதிசய போக்யமான திருத் துழாய் பொருந்தி இருப்பதாய்
ரத்ன பர்வதம் போலே இருக்கிற தோள் அழகை யுடைய ஆச்சர்ய பூதன் –

பாவியேன் —
அவளும் ஒரு தோழியைப் படைத்தாள்
நானும் ஒரு  தோழியைப் படைத்து இருக்கிறேன் –
கொடு வந்து சேர்க்கும் தோழியாய் இருந்தாள் அவள் –
விலக்குமவர்களாய் இருந்தார்கள் இவர்கள் –

என்னை யிது விளைத்த –
இப்படி கையும் மடலுமாய்ப் புறப்படும்படி என்னைப் பண்ணின –

ஈரிரண்டு மால் வரைத் தோள்-
இத்தலை மடல் எடுக்கப் புக்க பின்பு அத்தலை பல்கின படி –

மன்னவன் தன் காதலனை –
புத்ரனைக் காட்டிலும் பௌத்ரன் பக்கலிலே ச்நேஹம் இரட்டித்து இருக்கும் இ றே –

மாயத்தால் கொண்டு போய் கன்னி தன் பால் வைக்க –
நாட்டில் ஒருவரை ஒழியாமே எழுதிக் காட்ட
இது வன்று இது வன்று என்று போந்து
கிருஷ்ணன் பக்கலிலே வந்தவாறே இவன் ஒரு பார்வையாய் இருந்தான் -என்று -பின்பு
அநிருத்தனைக் கண்ட வாறே இவன் இ றே என்ன
இவனாகில் அரியனோ- என்று
அப்போதே யோக பலத்தாலே போய்ப் படுக்கையோடு பீட்கன்றாக எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் –

மற்று  அவனோடு –
இவளுக்கு ஸ்வப்னத்தில் கண்டு  பிறந்த ச்நேஹம் எல்லாம் அவனுக்கு இவளைக் கண்டவாறே பிறந்தது-

எத்தனையோர் மன்னிய பேரின்பம் எய்தினாள் –
இருவர் காலிலும் விலங்கிட்டு வைக்கவும் அனுபவிக்கப் பெற்று இலர்களோ –

மற்றிவை தான் என்னாலே கேட்டீரே –
மடலூர என்று ஒருப்பட்டு அது தானும் மாட்டாத படி துர்பலையாய் இருக்கிற என்னைக் கொண்டு-இவை கேட்க இருக்கிறிகோள் இ றே

ஏழைகாள் –
உங்கள் அறிவு கேடு இருந்தபடி ஏன் –

என்னுரைக்கேன்-
நான் வருந்தி பாசுரம் இட்டுச் சொல்ல ஒருப்பட்டேன் என்று பாசுரம் இட்டுச்  சொல்லுகிறாள் –

மன்னு மலை யரையன் பொற்பாவை –
அவன் மகள் அன்றோ-வடிவு இல்லையோ -என்கிறாள்
லோகத்தில் மடலூர்ந்தார் ஆர் -என்றால்
அவர்கள் இன்னார் என்று நிர்தேசிக்கலாம் படி பிள்ளை பெற்றுத் தந்த ஸ்ரீ மான் கிடீர் –
அடியில்லாதால் ஒருத்தியோ மடலூர்ந்தாள்-
அவன் மகள் அன்றோ –
பெரியாள் ஒருத்தி அன்றோ –
ஒரு நிர்வாஹகன் பெண் பிள்ளை அன்றோ
அதி ஸ்லாக்கியையாய் நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள்   –

வாணிலா மின்னு மணி முறுவல்   –
வெறும் பாவை பிறப்பேயாய்
வடிவு அழகு தான் இன்றிக்கே இருக்கிறதோ
ஒளியை உடைத்தான நிலாவைப் புறப்பட விடா நிற்பதாய்
அழகியதாய் இருந்துள்ள தந்த பங்க்தியை யுடையளாய்
நிலாப் போலேயும் மின் போலேயும் -என்னவுமாம் –

செவ்வாய் –
இவ் வெண்மைக்குப் பரபாகமான அதரத்தில் பழுப்பை யுடையளாய் இருக்கை-

யுமை என்னும்-
இப்படி ப்ரசித்தையாய் இருப்பாளாய்-

அன்ன நடைய –
முன்னே நாலடி நடந்து காட்டினால் காந்தனுடைய சகல தாபங்களும் அரும்படியாய் இருக்கை –

வணங்கு –
தேவதையாக ப்ரசித்தை-

நுடங்கிடை சேர்
போக்தாவுக்கும் துணுக்கு துணுக்கு என்னும்படியான இடையையும்
அழகையும் உடையாளாய்-

பொன்னுடம்பு  வாடப் –
அவனுக்கு ஸ்லாக்கியமான உடம்பானது ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே வாட –
வாடினேன் -என்று ஸ்வரூப அனுரூபமான வாட்டம் அன்றே
இரண்டும் விஷய லாபத்தாலே இ றே
ஓன்று ப்ராக்ருதம்
ஓன்று அப்ராக்ருதம் –

புலன் ஐந்தும் நொந்த அகலத்-
இந்த்ரியங்கள் ஐந்தும் நொந்து மீண்டு நாம் பட்டதோ என்று போக –
நாட்டில் தபஸ் பண்ணுவார் எல்லாம் சரீர தாரண அர்த்தமாக சருகு இலையை பஷித்து யாயிற்று-தபஸ் ஸூ பண்ணுவது -அது வேண்டா -இவள் அபர்ணை யாகையாலே –
இவள் அத்தையும் தவிருகையாலே இந்த்ரியங்கள் ஆனவை போற நொந்து கூப்பிட்டு
இனி இவ்விடம் நமக்கு ஆஸ்ரயம் அல்ல வென்று அகல –

தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து –
போக்தாவானவன் உடைய முன்பே ஒரு கால் குழலை அலைத்தால்-அவனுடைய
சகல கிலேசங்களும் தீரும் படியாய் இருக்கிற மயிரை ஜடையாகத் தானே  தரித்து  –
தான் தரித்து-வேறு சிலர் அன்றிக்கே தானே தரித்து –

ஆங்கு —
அவ்வஸ்தையில்

அன்ன –
அப்படிப்பட்ட
இவளுடைய தபஸ் ஸின் க்ரௌர்யத்தை அனுசந்தித்து
அப்படிப்பட்ட -என்கிறாள் -இவளும் –

வரும் தவத்தினூடு போய் –
அப்படிப் பட்ட தபஸ் என்னுமதுக்கு மேற்பட வேறு பாசுரம் இன்றிக்கே இருக்கப் பின்னையும்
அரும் தவம் -என்கிறாள் இ றே
ஊடு போய்
அந்த தபஸ்  ஸூ தன்னிலும் உபக்ரமித்ததாய் நின்ற மாத்ரமோ-
அதினுடைய முடிவளவும் போய் கையும் மடலுமாய்ப் போகா நின்றால்
அவன் எதிரே வந்தாலும் -நான் தொடங்கின இது தலைக் கட்டி அல்லது விடுவது இல்லை -என்று எல்லை யளவும் போய் –
சென்று ஆங்கு அணைந்து  இலளே-என்று அந்வயம்-
இவள் இப்படி அபி நிவிஷ்டயாய் மடல் எடுத்துக் கொண்டு புறப்படா நின்றாள் ஆகில்   காந்தன் ஆனவன்
நைவ தம்சான் ந் மசகான் -என்று இருந்தபடி எங்கனே –

ஆயிரம் தோள்-
மகிஷி இப்படி நோவு படா நின்றால் தானும் ஆசைப் படானாய் நோவு படுகை அன்றிக்கே
நம்மைச் சிலர் ஆசைப் படப் பெற்றோம் -என்று தோள்கள் பணையா நிற்கும் –
தான் ஆசைப் படா நின்றால் அவனும் ஆசைப் பட்டு மேல் விழ வேண்டாவோ
இப்படி நொந்தால் தான் அவன் உடம்பை அணையப் பெற்றதோ –

மன்னு கர தலங்கள் மட்டிடித்து –
இவன் ஆடுகிற போது தோள்கள் ஆயிரமும் திக்குகளிலே சென்று அறையும்

மாதிரங்கள் மின்னி யெரி வீச –
அப்போது அந்த திக்குகள் பொறியும் புகையும் எழுந்து நெருப்பைப் புறப்பட விடா நிற்கும் –

மேல் எடுத்த-
ஆடுகிற போது மேலே எடுத்த வீரக் கழலாலே சூழப் பட்ட கால் –
திக்குகள் எங்கும் வியாபாரியா நிற்கும்
மகிஷியானவள் தன்னை ஆசைப் பட்டு நோவு படா நிற்க
தானே காலே பிடீத்துத் தலை அளவும் செல்ல ஆபரணம் அணியும்

சூழ கழற்கால்-சுற்றின கால் என்னவுமாம் –

பொன்னுலகம் ஏழும் கடந்து –
ஸ்லாக்கியமான போக பூமிகள் ஏழையும் கடந்து

உம்பர் மேல் சிலும்ப  
மேல் உள்ள தேவ ஜாதி என்னை விளைகிறதோ -என்று அஞ்சும் படி –

மன்னு குலவரையும் –
பூமிக்கு ஆணி அடித்தால் போலே நிற்கிற குல பர்வதங்களும்

மாருதமும் –
பிரஜைகள் இருந்த விடத்தே தான் சென்று நோக்கும் பிதாவைப் போலே சர்வ பிராணி பிராணனே ஹேது பூதமான காலும் –

தாரகையும்
மனுஷ்யர் உடைய நன்மை தீமைகளை அறிவியா நிற்பதான நஷத்ர தாரா கணங்களும்

தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் 
இவன் ஆடுகிற போதை வேகத்தாலே இவை யடையைப் பறந்தால்  போலே சுழன்று வருமாயிற்று-புரிந்த விடத்திலே ஒக்கப் புரியும் ஆயிற்று –

கொன்னவிலும் மூவிலைக் வேற்-
அவன் தரிக்கும் ஆயுதம்
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ -நாச் திரு -7-1-என்று கேட்கலாய் இருக்கிறதோ
அருளார் திருச் சக்கரம் -திரு விருத்தம் -33 என்றும்
அறமுயலாழி-திரு வாய் மொழி -2-10-5- என்றும்
எப்போதும் ஒக்க வ்ருத்த மந்த்ரிகளைப் போலே
அறத்திலே முயலச் சொல்லுகிற திருவாழி அன்றே –
சர்வ காலமும் கொலையிலே முயல வேணும் -என்று எப்போதும் சொல்லா நிற்பதாய்
அவனுக்கு ஸ்லாக்கியமான ஆயுதம் இ றே –

கூத்தன் –
தூய நடம் பயிலும் -பெரியாழ்வார் திரு மொழி -1-6-6-
என்று இனிதாய் இருக்கிறதோ –

பொடியாடி-
அவனுடைய அங்க ராகம் இருந்த படி –

அன்னவன் –
இப்புடைகளிலே -ஊமத்தை -எருக்கு -அஸ்தி -என்றால் போலே இவற்றால்   அலங்க்ருதனாய் இருக்கிற-அனுசந்தித்து -அத்தைத் தன் வாயாலே சொல்ல மாட்டாமையாலே-அன்னவன் -என்கிறாள்
வெந்தார் என்பும் –பெரிய திருமொழி -1-5-8-என்றும் –
ஆறும் பிறையும் -பெரிய திருமொழி -6-7-9-என்றும் –
அக்கும் புலியன தளமும் -பெரிய திருமொழி -9-6-1-என்றும் –
பொடி சேர் அனல் கங்கை -முதல் திருவந்தாதி -97-என்றும் –
நீற்றான் -முதல் திருவந்தாதி -74-என்றும் –
அவன் படிகள் சொல்லிற்று இ றே –

தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே  –
ஒருதலைக் காமமாய் தானே சென்று அத்தசையிலே சம்ச்லேஷித்து இலளோ-தான் இப்படி   அவன் பக்கலிலே அபி நிவிஷ்டையாகை-அதுக்கு ஸ்த விரகாரி-அவனை ஒழியச் செய்தாள் என்று பேராக வேணும் என்று அன்றோ தானே சென்று அணைந்தது –

பன்னி யுரைக்கும் கால் பாரதமாம் பாவியேற்கு-
இவற்றைப் பரக்க விருந்து உபபாதிக்கப் புக்கால் ஓர் அளவில் தலைக் கட்டுவது ஓன்று அன்று -பரக்கச் சொல்லப் புக்கால் –
மஹா பாரதம் போலே சபாத லஷ கிரந்தத்ததுக்குப் போரும்
பாவியேன் -கேட்கிற இவர்களுக்கு பறக்கச் சொல்லலாம் படி இட்டுப் பிறந்திலேன்
பரக்கச் சொல்லுமது கேட்க வேண்டில் அவ்யாசாதிகள் பக்கலிலே சென்று கேட்டுக் கொள்வது –

நாட்டார் படி கொண்டு கார்யம் என் எனக்கு –
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின்
நான் பட்ட பாடு சொல்ல வேணும் ஆகில் கேளுங்கோள்-என்கிறாள்-
என் அபிமத விஷயத்தை அனைத்து அல்லது தரிக்க மாட்டாத நான் கொண்ட நோவை
நீங்களும் கேளுங்கோள் –
என் உறு நோய்-
மறுபாடுருவக் கொண்ட நோய்
யான் உரைப்பக் கேண்மின்
நோய் கொண்ட நான் சொல்லக் கேளுங்கோள் –
வேறு ஒருவருக்கு நிலம் அல்ல என் நோய்
இதின் தலையைப் பற்றி அலையும் அதிலும் இந்நோய் தானே உத்தேச்யமாய் இருக்கை
யான் உரைப்ப
நோய் கொண்டார் இருக்க
வேறே சிலர் சொல்லப் புக்கால்
பட்டது எல்லாம் தெரியாமையாலே உள்ளத்து எல்லாம் சொல்லப் போகாது இ றே
இவள் நோய் என்றால் சாதுர்த்திகமாய் இராது இ றே –
ஸ்ரீ பரத ஆழ்வான் நோய் போலே –
கேண்மின் –
செவி படைத்த பிரயோஜனம் பெறக் கேளுங்கோள் –
பரத்வ ஜ்ஞானத்தாலே பகவத் தத்தவத்தை அறிந்தவர்கள் அன்றோ க்ரம ப்ராப்தி அறிந்து ஆறி இருப்பர்-உகந்து அருளின நிலங்களிலே புக்குக் கண்ணாரக் கண்டு அனுபவிக்கப் பெற்ற நான் ஆறி இருப்பேனோ-

இரும் பொழில் சூழ் –
பரப்பை உடைத்தான ஸ்லாக்யமான பொழிலாலே சூழப் பட்டு இருப்பதாய்
எங்கும் ஒக்கச் சோலையும் பணையுமாய்க் கிடக்கும் இத்தனை இ றே –

மன்னு மறையோர் திரு நறையூர் –
மறையோர் மன்னும் திரு நறையூர் –
வேத வாக்யங்கள் எல்லாம் உபாசனத்தையே விதிக்கிறது என்று அறுதி இட்டு இருக்கிறவர்கள்-வர்த்தியா நிற்கிற திரு நறையூர்
மடல் எடுக்கை நியத கர்த்தவ்யம் -என்று இருக்கிறவர்கள் நித்ய வாஸம் பண்ணுமூர்-
நிதித்யாசி தவ்ய -என்கிற வாக்யத்தையே பற்றி இருப்பார் வர்த்திக்கும் தேசம் –

மா மலை போல்-
மலையைக் கொடு வந்து நெருங்க வைததால் போலேயாய்-

பொன்னியலும் மாடக் –
அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹணீயமான மாடங்களில் உண்டான  –

கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் –
கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திருமொழி -7-10-9-என்னுமா   போலே
படபாமு காக்னி தெகுட்டினால் போலே விடாய்த்த கண்கள் குளிரும்படி நோக்கினேன் –
அதொரு பிரதாபமும் –

நோக்குதலும் மன்னன் –
த்ருஷ்ட ஏவ ஹி ந சோக மப நேஷ்யதி ராகவ -என்னும்படியே நோக்கின அநந்தரம்
மமேதம் -என்கிற பிரதி பந்தகம் அடங்கப் போய்-அவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றிலேன்-மமேதம் அடங்கலும் போயிற்று-அனுபவம் மடலேயாய் விட்டது  –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

பெரிய திருமடல் —40-மன்னும் வட வெறியே வேண்டினோம்- 55-மாகம் புணர்ந்திலளே-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

June 16, 2014

மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் ——–40
அன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய்
இன்னிசை யோசைக் கிரங்கா தார் மால் விடையின் —–41
மன்னு மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல்
பின்னு மவ் வன்றில்  பேடை வாய்ச் சிறு குரலுக்கு —–42
உன்னி யுடலுருகி நையாதார் உம்பர்வாயத்
துன்னு  மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் ———43
தம்முடலம் வேவத் தளராதார் காம வேள்
மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் ——-44
பொன்னேடு வீதி புகாதார் தம் பூவணை மேல்
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் ——-45
இன்னிள வாடை  தடவத் தாம் கண் துயிலும்
பொன்னனையார் பின்னும் திரு வுறுக போர் வேந்தன் ——46
தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47
மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்
மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48
கன்னிரைந்து தீய்ந்து கழை  யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49
கொன்னவிலும் வெங்கானத்தூடு    கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
அன்ன நடைய வணங்கு நடந்திலளே——————51
பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் ———52
கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு ——53
அன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்
கன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் ——–54
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே பூம் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நன்னாடன்   மின்னாடும்  ———-55

————————————————————————–

மன்னும் வட நெறியே வேண்டினோம் –
மடல் எடுக்கையே புருஷார்த்தம் என்று உபபாதிக்கிற ஸ்ரீ ராமாயணாதிகள்-

வேண்டாதார்-
காம புருஷார்த்தத்தை வேண்டாதார் –

தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் –
சந்தனம் துவளப் பண்ண வற்றாய் இருக்கை –
ருஷிகளையும் துவளப் பண்ண வற்றாய் இருக்கை
துரும்பு எழுந்தாடவும் பண்ண வற்று –

அன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய்-
சொல்ல வாய் வேம் தன்மை அறியாதார் –
தலை மகனைப் பிரிந்தால் சந்தனம் கொப்பளிக்கும்  என்று அறியாதார் –
குழல் ஓசை துடை குத்த உறங்க வல்லார் –
ப்ராஹ்மணர்க்கு ஒத்தும் -பாணர்க்கு பாட்டும் போலே -இடையர்க்கு குழல் –
அந்த ப்ரஹ்மாச்த்ரத்துக்கு ஈடுபடாதார் –

இன்னிசை யோசைக் கிரங்கா தார் –
த்வனியே நஞ்சு –
இது பாதகம் ஆகிறது -அவனுடைய சாந்த்வ நங்களை நினைத்து –

மால் விடையின் மன்னு  மணி புலம்ப வாடாதார்-
நாகின் மேல் பிச்சேறின விடையினுடைய த்வனி யோவாதே மணி புலம்ப
அக்னி சகாசத்திலே தளிர் சுருங்குமா போலே சுருளாதார்-
இது தான் இறாய்க்க-அது தான் மேலே விழும்படி  –

பெண்ணை மேல் பின்னு மவ் வன்றில்  பேடை வாய்ச் சிறு குரலுக்கு –
அன்றிலின் உடைய ஆர்த்த நாதத்தை கேட்டும் உருகி இரங்காதவர்கள் –
பின்னும் –
வாயலகு கோத்து இருக்கை-
முன்பில் விசனத்துக்கு மேலே என்றுமாம் –
சிறு குரல் –
பிரணயத்தால் இளைத்துப் பேசுகிறபடி  –
உன்னி யுடல் உருகி நையாதார் –
தங்கள் சம்ச்லேஷத்தை ஸ்மரித்து-

உம்பர்வாயத் துன்னு  மதி யுகுத்த
தலை மகனை ஒழிய நிலவிலே படுக்க வல்லவர்கள் –
உம்பர் வாய் -என்றது ஆகாசத்திலே
உகுத்த -ஸ்வ அனுமானத்தாலே அவனும் பொறுக்க மாட்டாமே உகுத்தான் என்று இருக்கிறாள் –

தூ நிலா –
கொப்பளித்த பின்பு நிலவு என்று அறிந்தாள் –

நீள் நெருப்பில் –
தாஹ்யம் சமைந்தாலும் சமையாது ஒழிகை –
அக்னி கணம் நிலவு என்னும்படி சுடுகை-
கேவல அக்னி தஹிப்பது சரீரத்தை இ றே-
இது ஆத்மாவை தஹிக்கையாலே –நீள் நெருப்பு -என்கிறாள்
நீருக்கு அவியாதே நீர் வண்ணனே அவிக்க வேண்டி -திரு நெடும் தாண்டகம் -18-இருக்கை –

தம்முடலம் வேவத் தளராதார் –
இரவல் உடம்பு அல்லவே
தம்முடலம் வேவ தரிப்பார் உண்டாகாதே
உணர்வும் உயிரும் உடம்பும்  மற்று உலப்பினவும் பழுதே யாம் உணர்வைப் பெற -திரு வாய் மொழி -8-8-3-
அப்படி பெற்று இருக்கிறாரும் அல்லரே –

காம வேள் மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் பொன்னேடு வீதி-
காமன் உடைய சிலை இடத்துப் பொருந்தி இருந்துள்ள புஷ்ப பாணங்களை தொடுத்து  எய்ய-அழகியதாய் நெடிதான வீதியிலே கையும் மடலுமாய் புறப்படாதே
ஸ்த்ரீத்வம் நோக்கிப் படி கிடந்து புறப்படாதே அடைத்துக் கொண்டு உள்ளே இருக்க வல்லவர்கள்
பொன் –அழகு
மடலூர்வாரை எதிர் கொள்ளும் வீதி   –
புகாதார் –
காம பாணங்கள் வாய் மடியும் படி கல் மதிளுக்கு உள்ளே புகாதார் –

தம் பூவணை மேல்-
காந்த கர ஸ்பர்சம் போலே தென்றல் ஸ்பர்சிக்க படுக்கை பொருந்தி கிடக்க வல்லவர்கள்
பூவணை –
மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளி -திருவாய் மொழி -9-9-4-என்னுமா போலே நெருப்பை உருக்கி வார்த்தால் போலே இருக்கை –

சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் -இன்னிள வாடை  தடவத்
சின்னப் பூவை உடைத்தான குழலையும் இடையையும் முலையையும்
அவன் தடவுமா போலே
நஞ்சூட்டின இளவாடை தடவ –
இள வாடை
பிறரை நலிய இளகிப் பதியா நின்றது –

தாம் கண் துயிலும்-
கண் உறங்குகிற போதே தம்மது அன்று
இரவல் கண்ணாக வேணும் –

பொன்னனையார் –
நெருப்பிலே கிடந்தது நிறம் பெறுவர்கள்-
காட்டுத் தீ கதுவிலும் உறங்க வல்ல பாக்யவதிகள் –

பின்னும் திரு வுறுக –
அவர்களுக்கு நித்யமாகிடுக –

போர் வேந்தன் –
ஆண் புலி –
ரணமுக ராமன் –
சக்ரவர்த்தியைக் கட்டி வைத்து ராஜ்ஜியம் பண்ண வல்ல மிடுக்கு –
ஸ்ரீ பரத ஆழ்வான் தோஷ பிரகரணத்திலே ந ச ராகவச்ய -என்று சப்த சாலங்களையும் ஓர் அம்பாலே உருவ எய்தவர் இத்தைச் செய்திலர் என்று கருத்து –

தன்னுடைய தாதை பணியால் –
சக்கரவர்த்தி ஹிருதயம் பாராதே உக்தி மாத்ரத்திலே –

அரசொழிந்து-
அரசு ஒழிந்து –
வாடல் மாலையைப் பொகடுவாரைப் போலே
தலைச் சுமை என்று
திரு வபிஷேகத்தை ஒழிந்து –

பொன்னகரம்-
பொன்னுலகுக்கு ஒக்கும் காணும் திரு வயோத்யை-
அதுக்கு காரணம் ராம சம்ச்லேஷ ஏக ரசராய் இருக்கை-
அபி வ்ருஷா பரிம்லா நாஸ் சபுஷ் பாங்குர கோரகா-அயோத்யா -59-9-என்கிறபடியே
ஸ்தாவரங்களும் உட்பட    ராம குணைக தாரகமாய் இ றே இருப்பது –

பின்னே புலம்ப-
பிரியில் தரியாதே பின்னே தொடர்ந்து கூப்பிட
சுற்றம் எல்லாம் பின் தொடர -பெருமாள் திரு மொழி -8-6-

வலம் கொண்டு –
நீர்மை இ ட்டுப் பேணின பெருமாள் போக வல்லரான மிடுக்கு
வலம் -பலம் –

மன்னும் வள நாடு கை விட்டு –
இவர்களுக்கு க்ரமா கதமாய் -இவ் ஊரில் இனிதான நாடு
மம தவச்வா நிவ்ருத் தஸ்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மனி
உஷ்ண மாசறு விமுஞ்ச்சந்தோ ராமே சம்ப்ரச்திதே வனம் -என்று
இவையும் அகப்பட நோவு படப் போன படி
திரிந்தது வெம்சமத்து தேர்கடவி -இரண்டாம் திரு -15
இவனாம் தரை கிடப்பான்
எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ -பெருமாள் திரு மொழி -9-2-
கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ -பெருமாள் திருமொழி -9-3-
என்று வயிறு பிடிக்கும் படி –

மாதிரங்கள்-
திக்குகள்-

மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் -கன்னிரைந்து தீய்ந்து கழை  யுடைந்து-
பேய்த்தேர் -கானல் –
கண்ணுக்கிட ஒரு பூண்டு இல்லாமை
தரை நிரந்தரமான கல்லாயிற்றுக் காணும்
சருகு போலே தீய்ந்து கிடக்கை –
கழை  -மூங்கில்

கால் சுழன்று-
கால் -சூறாவழி
அதாவது சுழல்  காற்று –

பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து
மற்று ஒருவர் இல்லாமை –

உலாவக்–
ஓவாதே இன்னான் பட்டான் இன்னான் படா நின்றான் என்னும் பேச்சாய்
அறக் கொடிதான காட்டின் நடுவே –

கொன்னவிலும் வெங்கானத்தூடு    கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் –
கைகேயி பாசத்தை ஆச்த்தானம் பண்ணினான்
வெய்யில் வறுத்த பரல் தானே எதிரிட்டு வெய்யில் வறுக்க வற்றாகை –
ஆதித்யனை எற்றி வைத்து எரிக்கை –

பஞ்சடியால் –
மெத்தென்று இருந்த அடி -பத்ம சம பிரபா –

மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
மன்னன் -நாட்டுக்கு சூடின முடி தவிர்ந்து
இவளுக்கே சூடின முடி
சக்ரவர்த்தி தன்னை நீர் வார்க்கப் புக ஐயர் வந்தார் -என்ன
அதிலே தோற்றால் போலே ராஜ்யத்தை பொகட்ட வேண்டப் பாட்டிலே தோற்ற படி –
இராமன் -பெருமாள் பின் போவார்க்கு இக்காடு அன்றாகில் எது கொள்ள வேணும்
வைதேகி -அவனுக்கு பிறந்தாள் என்னும் வேண்டப்பாடு –

அன்ன நடைய வணங்கு நடந்திலளே-
நடை கண்டால் மடலூர வேண்டும் படி இருக்கை –
அணங்கு -இவனைக் குறித்து அவள் தைவம் என்ன வேண்டும்படியாய் இருக்கை –
அவளும் கூடப் போனாள் இல்லையோ –

பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் –
பிராட்டியைப் பேசின வாயாலே பின்னையும் பேசலாவாள் ஒருத்தி-

கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது தன்னுடைய-
அனுபவித்தவள் அல்லள்-
பிராட்டியைப் போலே
சமா த்வாதச தத் ராஹம் ராகவச்ய நிவேசனே
புஞ்ஞ்ஜா நாமா நுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர 33-17-என்றால் –
போலே
அனுபவித்தவள் அல்லள்  –

முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு அன்னவனை நோக்கா-
தமையன் ஒட்டேன் -என்று இவளைக் கொண்டு போக

தழித் துரப்பி வாளமருள்-
ஸ்வயம் வரமும் நாமேயோ -என்றாள் –

கன்னவில் தோள் காளையைக் –
பந்து வர்க்கத்தை அடங்க விட்டுப் பற்றலான தோள்
காளை -தோள் மிடுக்கும் வேண்டாதே பருவமே அமைந்து இருக்கை-

கைப் பிடித்து மீண்டும் போய்ப் –
யுத்தத்தில் எல்லாரும் காணப் பிடித்து –

பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே-
ரத்தத்தின்  மேலே விழுந்து தழுவினாள்-
பிராட்டி கர வதத்தின் அன்று தழுவினாள்   போலே  –

————————————————————————–

மன்னும் வட நெறியே வேண்டினோம் –
நாங்கள் ஆதரித்த பஷம் சொல்லக் கேட்கில்
நிலை நின்றதாய்-ஆசார்யர்கள் பரிஹரித்துப் போருகிற சம்ச்க்ருதமான வைதிக மார்க்கத்திலே நின்றோம்  –

வேண்டாதார்-
இத்தை ஆதரியாதார்கள் -ஆதரித்த அபிமத விச்லேஷத்தில் நோவு படா நிற்கச் செய்தேயும்
போக உபகரணங்கள் கொண்டு கால ஷேபம் பண்ணி இருக்க வல்ல சாஹசிகர்கள் –

தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார் –
அவர்கள் தெற்குத் திக்குக்கு நிர்வாஹகனான ராஜாவையும்
அவன் சந்தன கிரியையும்
அப்பர்வதத்திலே படக் கடவதே வெளிறு கழிந்த சந்தனத்தையும்
அதினுடைய குழம்பிப் பூசினால் அழலக் கடவதான வ்யசனத்தையும் அறியாதவர்கள் –

ஆயன் வேய்இன்னிசை யோசைக் கிரங்கா தார் –
அதுக்கு மேலே பிராமணர் குழலூதக் கேட்டால் ஸ்வர வசன வ்யக்திகளை ஆராய்ந்து லஷணம் கொண்டாடி இருக்குமா போலே
இடையனுடைய குழலில் உண்டான இனிதான குழல் த்வநியைக் கேட்டு  வ்யசனப் படாதே தரித்து இருக்க வல்லவர்கள் –

மால் விடையின் மன்னு மணி புலம்ப வாடாதார் –
நாகின் மேலே பிச்சாய்த் தொடர்ந்து வருகிற ருஷபத்தின் கழுத்திலே கயிறு இட்டு கட்டுவார் இல்லாமையாலே
ஏக ரூபமாய் அணியரானவர்கள்  இத் தர்ம ஹானியை
அனுசந்தித்து கை எடுத்து கூப்பிடுமா போலே த்வனிக்க
அத்தை கேட்டு சத்தை அழிந்த தளிர் போலே சருகாய் போகாதார் –
பெண்ணை மேல் பின்னு மவ் வன்றில்  பேடை வாய்ச் சிறு குரலுக்கு -உன்னி யுடலுருகி நையாதார் –
பணியின் மேலே பரஸ்பரம் வாய் அலகைக் கோத்துக் கொண்டு உறங்கின அன்றிலின் உடைய
பரிவுக்கு பாடாற்ற வல்ல சேவலுடைய த்வனிக்கு அன்றிக்கே
மார்த்தவத்தோடே கூடின பேடையினுடைய   அதி தாருணமான   சிறு குரல் உண்டு  –
ஒரு கால் தொடங்கின வார்த்தையைத் தலைக் கட்டும் போது நடுவே பதின்கால்
இளைப்பாற வேண்டும்படி அத்யந்தம் ஆர்த்தமான சப்தம்
அத்தைக் கேட்டு தாங்கள் சேர இருந்தால் போக மத்யே பிறக்கும் சப்தங்களை அனுசந்தித்த அநந்தரம்
கிண்ணகப் பெருக்கானது   கரைகளைச் சென்று குத்திக் கரைத்துப் பொகடுமா போலே
சரீரமானது கட்டழிந்து பின்னை ஓர் அவயவியாகக் காண ஒண்ணாத படி சிதிலராய் போகாதார் –

உம்பர்வாயத் துன்னு  மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் தம்முடலம் வேவத் தளராதார்
மேலே நெருங்கின கிரணங்களை யுடைய சந்த்ரனானவன் தன கையில் நெருப்பை பிறர் கையிலே
பொகடுமா போலே பொகட்ட மறுவற்ற நிலா வாகிற பெரு நெருப்பில்
தாஹ்யம் வேறாய் தான் தாஹமாய் இருக்காய் அன்றிக்கே
இரண்டும் தானேயாய் இருக்கிற நெருப்பு படச் செய்தே சரீரமானது தக்தமாகா நிற்க -அதுக்கு ஈடுபடாதார் –

அல்ப கலஹம் தன்னிலேயும் வந்தால்
ஸ்ருஷ்டஸ்த்வம்-என்கிற போகத்திலே மிக்க நெருப்பு உண்டாகில் அப்படிப் பண்ணுவது இல்லையாகில்
தேடிக் கொண்டு வந்து செய்ய வேண்டுவது இல்லை
இத்தால் அதாஹ்ய வஸ்து படுகிற படி
நீர் சுட்டால் ஆற்றலாவது இல்லையே –

காம வேள் மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் பொன்னேடு வீதி புகாதார்-
காமனாகிற தேவதை சிறிது போது வில் கொண்டு வ்யாபரித்துத் பின்னை நெருப்பு சுட்டது என்று பொகடுகை அன்றிக்கே
கையிலே கொண்டு இருக்கும்படி வேறு ஓன்று வேண்டாத வில்லிலே புஷ்ப பாணங்களைத் தொடுத்து விட
அதுக்கு ஈடுபட்டு கையும் மடலுமாகக் கொண்டு
ஸ்லாக்கியமாய்ப் பெருத்து இருக்கிற வீதியிலே புறப்படாதார் –
நெடு வீதி  இரண்டு அருகும் அறத் தையலார் பழித் தூற்றும் படி பெருத்து இருக்கை –
திரு நறையூர் திரு வீதியிலே கையும் மடலுமாய்ப் போகாதார்
திரு நறையூரிலே புக்கார் அடங்கலும் தம்மைப் போலே மடல் எடுக்க வேணும் என்று இருக்கிறார் –
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்-

தம் பூவணை மேல்-
இவருக்குப் படுத்த படுக்கையிலே தனியே பூவும் தாதும் சுண்ணமுமாகப் பரப்பிக் கொண்டு –

சின்ன மலர்க் குழலும் –
பருவம் செய்கிற பூவை யுடைய குழலும் –
சின்னம் -விரிகை -முடி நெகிழ்ந்த குழல் என்னவுமாம் –

அல்குலும் மென் முலையும் –
விரஹ சஹம் அல்லாத முலை-
மேலும் தென்றல் பட மாந்தும் முலை –

இன்னிள வாடை  தடவத் –
காந்தன் உடைய கர ஸ்பர்சத்துக்கு யோக்யமான இடங்களிலே தென்றல் வந்து தடவ –
குன்றூடு பொழில் நுழைந்து -பெரியாழ்வார்திரு மொழி -4-8-9-இத்யாதி –
அதுக்கு இறாய்த்து கண் உறங்க வல்ல சாஹசிகர்கள்  –
இனியதான இளையதான வாடை யானது காந்தன் உடைய சமாதியிலே வந்து ஸ்பர்சிக்க –

தாம் கண் துயிலும்-
கெட்டேன் இரவல் கண்ணோ இவர்களுக்கு –

பொன்னனையார் பின்னும் திரு வுறுக –
பொன்னானது நெருப்பிலே இட தர்ம லோபமற அழுக்கற்று நிறம் பெறுமா போலே
விரஹ சமயத்தில் சம்ச்லேஷ சமயத்தில் அனுகூலமான பதார்த்தங்கள் முகம் காட்ட
அவற்றின் சந்நிதியில் முடியாது -அவற்றைக் கொண்டு போது போக்கி ஸ்வரூபத்தைப் பெற்று இருக்கிறவர்கள் –
மடல் எடுக்கும் நம் போல்வாரைப் போல் அன்றே -என்று அவர்களை நிந்தித்து
தங்களுக்கு மேல் வரக் கடவதான சம்பத்தை அனுபவிக்க இருக்கிறவர்கள் அங்கனே இருந்திடுக -என்கிறாள் –

அவர்கள் படி கிடக்க கிடீர் -நம் படி யுடையார்படி கேட்கல் ஆகாதோ –
சர்வ ஜ்ஞ்க்ன குலத்திலே பிறந்தவள் இ  றே இப்படி அனுஷ்டிக்கிறான் –
தான் மடலூர வி றே ஒருப்பட்டது
அதுக்கு சிஷ்டா சாரமாக ஆசரித்தார் படி சொல்லப் புக்கு
முந்துறப் பிராட்டியைச் சொல்லுகிறாள்
ஆசாரத்தில் வந்தால் முதலிலே எண்ணப் பட்டவள் இ றே –
ஜனக குலத்திலே பிறந்தவள் இ றே
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்தி தா ஜனகாதய -என்கிறபடியே ஜ்ஞான ப்ராதான்யம் கிடக்கச் செய்தே கர்ம யோகத்தால் அல்லது அபிமத சித்தி இல்லாதாரைப்போலே
அத்தை ஆதரித்து அனுஷ்டித்துக் கொண்டு போருவர்கள் பகவத் ஆஜ்ஞ அனுரூபமாக –

இவ்விடத்தை நஞ்சீயர் பட்டர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த அநந்தரம்-
பிரபன்னனுக்கு இவை அனுஷ்டேயமோ அன்றோ -என்ன
அனுஷ்டிக்க்கவுமாம் தவிரவுமாம் -என்ன
இவன் செய்யுமாகில் தவிர ஒண்ணாது
தவிருமாகில் செய்யப் படாது இருந்த படி என் -என்ன
நம்முடைய க்ரியா பாகத்திலேயாதல்
நம்முடைய நினைவாலே யாதல் வரக் கடவது அன்றே
அவன் நினைவே இ றே  எல்லா வற்றுக்கும் காரணம் -என்று அருளிச் செய்தார்

இனி பெருமாள் பின்னே போன பிராட்டி படியைச் சொல்லப் புக்கு
அதுக்கு உறுப்பாக பெருமாள் நைரபேஷ்யம் சொல்லுகிறது –
போர் வேந்தன் –
சக்கரவர்த்தி பெருமாளை காடேறப் போ -என்ன
இவ்வார்த்தை செவிப்பட்ட அநந்தரம்
கடுகப் புறப்பட்டுக் கொடு நின்ற இந்த நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –
பிராட்டி படியைச் சொல்லப் புக்கு பெருமாள் படியை பிரசங்கிப்பான் எனஎன்னில்
அதுதன்னிலே கால் தாழ்ந்து அது தன்னையே முடிய நடத்துகிறது –

தன்னுடைய தாதை –
பெருமாள் ஆகிறார் நமக்கு இஷ்ட விநியோக அர்ஹர் அன்றோ -ஆனபின்பு நாம் சொல்லிற்றுச் செய்வர் -என்று
அவன் நெஞ்சிலே படும்படி அவன் பக்கல் ப்ரவண்யராய் இருக்கை –
தயரதற்கு மகன்-திருவாய் -3-6-8-என்னக் கடவது இ றே –

பணியால்
அவனுடைய நினைவளவும் போயிற்று இலர்
இவர் காட்டேறப் போகாதே நம்மைக் காலிலும் கழுத்திலும் இட்டாகிலும் ராஜ்ஜியம் பண்ணினாராகிலோ என்று இ றே அவனுக்கு நினைவு –

அரசு ஒழிந்து
நாட்டை விட்டுக் காட்டேறப் போ என்கிற போ து
இத்தை விடுகிறோமே என்று பின்னாட்டாதே
வனவாசோ மஹோதய-என்று வன வாச முகனாய் இருக்கை-
அபி ஷேகாத் பரம் ப்ரியம் -என்னக் கடவது இ றே –
இவர் முடி சூட ஒருப்பட்ட போதே இவர் முகத்திலே விகாசம் இருந்த படி –
அழகியதாகக் கண்டோம் இ றே
இவர் இத்தை விட்டுக் காட்டேறப் போக ஒருப்பட்ட போது முகத்தில் உண்டான ஐஸ்வர்யம் ஒரு   காலும் கண்டிலோம் -என்றார்கள் இறே –
சகரவர்த்தி காட்டேறப் போய் வாரீர் -என்ற அநந்தரம்
ஸ்வா தந்த்ர்யா ஹேதுவான இந்த ராஜ்யத்தை  தவிரப் பெற்றோம் இ றே
என்று தலைச் சுமையை பொகட்டுப் போவாரைப் போலே  பொகட்டுப் போனார் –

ஸ்ரீ பரத ஆழ்வான் -போற வேணும் -என்று காலைக் கட்டி நிர்பந்திக்க
அப்போதும் ஒரு செவ்வி மாலையைச் சூடி செவ்வி கழிந்த வாறே பொகட்டுப் போவாரைப் போலே யாயிற்றுப் போன படி-

பொன்னகரம் –
அத்தேசத்துக்குப் போலியாய் இருப்பதொரு தேசம் உண்டே
அதுவும் ஒரு தேசமே –
பொன்னகரம் பின்னே புலம்ப
ஒருராக -காட்டேறப்போகில் பிழையோம்  -என்று பின்னே கூப்பிட
இஹைவ நித நம் -இத்யாதி
உயிரைப் பொகட்டு கேவல சரீரத்தைக் கொண்டு தரித்து இருக்க வென்றால் எங்கனே இருக்கும் படி -என்றார்கள் இ றே
ராமமேவ அனுபச்யத்வ -கச்சத்வ -மஸ்ருதிம் வாபி கச்சத -என்று  பெருமாளை சிறிதிடம் பின்னே தொடர்ந்து போக
அவர் வழி மாறிப் போனவாறே -மீண்டு வந்து தாம்தாம் க்ருஹங்களிலே புகுரப் புக்க வாறே
இவர்களைப் பார்த்து -பெருமாளைக் காட்டேறப் பொகட்டுப் பின்னையும் இருந்தவர்கள் ஸ்திரீகள் -என்று
எங்களுக்கு ஒரு பழி வாராதே அவரை மீட்டுக் கொண்டு வருதல் அன்றியே
அவ்வழியே போய் உங்கள் பேரும் கேளாது ஒழியும்படியாதல் செய்யுங்கோள்
என்று முகத்திலே தள்ளிக் கதவடைத்தார்கள் இ றே –

புத்ரம் ப்ரதமஜம் த்ருஷ்ட்வா லப்த்வா ஜநநீ நாப்ய நந்தத -என்று
முந்துறப் பிறந்தவன் அன்றோ  இவனும் காடேறப் போம் என்னும் நினைவாலே
பரத மஜனான புத்ரனைக் கண்ட தாய் உகந்திலள் -என்று இங்கனே சொல்லுவாரும் உண்டு –
பெருமாள் காட்டேறப் போனார் இனி ஆர் மடியிலே வைத்து உகக்கப் பிறந்தாய் என்று தம்தாம்
பிள்ளைகளை உகந்திலர்கள் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –

வலம் கொண்டு —
இவர்கள் இப்படிக் கூப்பிட்டுத் தொடரா நிற்கச் செய்தேயும்
அது கேட்டு இரங்காதே போன மிடுக்கு –

மன்னும் வள நாடு கை விட்டு –
க்ரமாதமாகை யாலே ஸ்ப்ருஹை பண்ணக் கடவதாய் இருக்கிற நாட்டை விட்டு
நித்ய விபூதியை விட்டுப் போனதால் போலேயோ –
இத்தை விட்டுப் போய்ப் புகுகிற தேசம் தான் இத்தோடு போலியாய் இருப்பதொரு தேசமாகப் பெற்றதோ-

மாதிரங்கள் மின்னுருவில் வெண் தேர் திரிந்து –
திக்கு விதிக்களுக்கு அடைய
மின் ஒளியோடே ஒத்த ஒளியை உடைத்தாய் பேய்த் தேரேராய்க்   கிடக்கும் –

வெளிப்பட்டுக் –
பேய்த் தேர் சஞ்சரிக்கும் அளவன்றிக்கே
கண்ணுக்கு விஷயமாய் ஓர் இடத்திலே ஒதுங்க ஒரு சிறு தூறும் இன்றிக்கே
கண்டவிடம் எங்கும் வெளி நிலமாய் –
கன்னிரைந்து –
அவ்வளவு அன்றிக்கே கற்களாலே நெருங்கி அவை தான் கருநிலம் போலே ஓர் இடங்களிலே வந்து திரளும்படி –

தீய்ந்து கழை  யுடைந்து –
அங்குள்ள உஷ்ணத்தாலே பச்சை மூங்கில்கள் வெடித்து எரிய

கால் சுழன்று-
அடிக்கிறது சுழல் காற்றேயாய்-ரஜோ ரனே-

பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்-
அங்கு சஞ்சரிக்கும் பேய்கள் ஆனவை நினைத்த படி ஜீவிக்கப் பெறாமையாலே நரம்பு புடைத்து-அவைதானே தன்னிலே பின்னி பத்தெட்டு மட்டும் திரைந்து கிடக்குமாயிற்று –
பேயே திரிந்து –
மனுஷ்யரும் கலந்து சஞ்சரிக்குமது இன்றிக்கே
இப்படிப் பட்ட பேய்களே சஞ்சரிக்குமத்தனை –
உலாவ –
சிறிது காட்டிலேயோ
அப்பெருமாளும் பெரும் காட்டிலே போய்ப் புகார்  என்னும் படி  –

கொன்னவிலும் –
அதுக்கு மேலே அவர் பட்டார் இவர்பட்டார் -என்று கொலை சொல்லுகிற
கூப்பீடேயாய்   இருக்கை-

வெங்கானத்தூடு    –
வெவ்விய காட்டூடே-
வெம் கானத்தூடு நடந்திலளே-என்று அந்வயம்-

கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த –
உஷ்ண கிரணனான ஆதித்யன் உடைய நெருங்கின கிரணங்களை வறுக்கும் ஆயிற்று

வெம் பரல் மேல் –
அங்கு உண்டான வெவ்விய பரல் கற்களின் மேலே –

பஞ்சடியால் –
அதி ஸூ குமாரமான திருவடிகளாலே –

மன்னன் இராமன் பின் –
இக்காலைக் கொண்டு போம்படியான மதிப்பையும் அழகையும் உடையவன் உடைய பின்னே

வைதேவி என்றுரைக்கும்-
விதேக ராஜன் உடைய பெண் பிள்ளை என்று சொல்லும் படி இருக்கிற

அன்ன நடைய –
அக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்று முன்னே நாலடியும் அவர்க்கு இருந்த படி

வணங்கு –
தேவதாபிஸ் சமா-த்ரயாணாம் ப்ரதாதீ நாம் ப்ரர்ரத்ரூணாம் தேவதா ச யா -என்கிறபடியே
பிள்ளைகள் நால்வர்க்கும் ஒக்கும் தேவதையாய் இருக்கும் இருப்பு -சீதை என்பதோர் தெய்வம் -பெரிய திரு மொழி -10-2-5–
அதில் மன காந்தையாய் இருக்குமது பெருமாளுக்கே யாயிற்று –

நடந்திலளே–
அவள் போக்கு  அடிக் கழஞ்சு பெற்றது இல்லையோ –

ஒரு கந்தர்வ ஸ்திரீயை ஒரு கந்தர்வன் விவாஹம் பண்ணிக் கொண்டு போக
அவளுடைய ப்ராதா வந்து யுத்தம் பண்ணி மீட்கப் பார்க்க
அவனுக்கு மீளாதே-அந்த கந்தர்வனோடே போய்த் தானும் அவனுமாக அனுபவித்தாள் என்று-மகா பாரதத்திலே ஒரு கதை யுண்டு -அத்தைச் சொல்லுகிறது –
பின்னும் –
முதலிலே பிராட்டியைச் சொன்னால் பின்னை சொல்லுவார் அன்றிக்கே இருக்க
அநந்தரம் சொல்லலாம் படியான கீர்த்தியை யுடையாள் ஒருத்தி யாயிற்று இவள் –

கரு நெடும் கண் –
அஸி தேஷணை என்று இ ரே பிராட்டி திருக் கண்ணுக்கு ஏற்றம்
அவளில் இவளுக்கு கண்ணில் பரப்பு ஏற்றமாய் இருக்கும்

செவ்வாய்ப்-
ரஷகனையும் கூட -ஜகத்ச சைலம் பரிவர்த்தயாம்   யஹம் -எண்ணப் பண்ணும் ஸ்மிதமத்துக்கு போலியாய் இருக்கை –

பிணை நோக்கின்-
அரை ஷணம் பேர நிற்கில்
ந ஜீவேயம் ஷணம் அபி -எண்ணப் பண்ணும் நோக்குக்குப் போலியாய் இருக்கை

மின்னனைய நுண் மருங்குல் –
நாயகனுக்கு எப்போதும் துணுக துணுக என்று தன்னோடு பணி போரும்படியாய் இருக்கை-

ஸூ மத் யமா -என்கிறவளுக்குப் போலியாய் இருக்கை
வேகவதி என்றுரைக்கும் —
வேகவதி என்று சொல்லுகிற-ஸ்ரீ ராமயணமாகப் பிராட்டி விருத்தாந்தம் சொன்னால் போலே-மஹா பாரதமாக தன்னைச் சொல்லும்படி இருந்தவள் –

கன்னி –
சமா த்வாதஸ தத்ராஹம் -என்று பன்னிரண்டு ஆண்டு கலந்தவள் அக்காலத்தின் சுவடு அறிந்து பின் தொடர்ந்து போன போக்கை
முதலிலே புறப்பட்டுப் போனவள் –

தன் இன்னுயிராம் காதலனைக் காணாது
காலைப் பிடித்து தலை யளவும் செல்லக் காதலை இட்டு நிரூபிக்க   வேண்டும்படி இருக்க்கிறவனைக் காணாமையாலே

தன்னுடைய  முன் தோன்றல் கொண்டேகத் –
தன் பின் பிறந்தவனை நியமித்து ஆளும் இன்றிக்கே
தனக்கு முன்னே பிறந்தவனாய்
தன்னை நியமிக்க உரியனானவன் கொண்டு போக –
தான் சென்று
தான் போய்-

அங்கு அன்னவனை
தான் போகிறவள் எனக்கு அறிவியாதே போவதே -என்று மீட்கப் புக்க ச்நேஹத்தை யுடைய தமயனை –

நோக்காது –
தமையன் என்று பாராதே

அழித்து-
இத்யுக்தா பருஷம் வாக்யம்-என்கிறபடியே அழித்து-

உரப்பி
வேறோர் ஆஸ்ரயத்துக்கு ஆகாதபடி பண்ணி
ஸ்வயம்வரம் புறம்பு அன்றிக்கே என் பக்களிலேயாய் அற்றதோ என்று  –

வாளமருள்-
மதிப்புடைத்தான பூசலிலே-

கன்னவில் தோள் காளையைக்
கல் என்று சொல்லப்படா நின்ற திண்ணிய தோளை உடையனாய்
மேல் விழுந்து அணைக்க வேண்டும்படியான பருவத்தை உடையனானவனை –

கைப் பிடித்து –
தனக்காக பூசலிலே அம்பேற்றவனைக் கையாலே பிடித்து சென்று பிடித்து –

மீண்டும் போய்ப் —
மீண்டு தன் இருப்பிலே போய் –

பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே –
பர்த்தாரம் பரிஷச்வஜே -என்கிறபடியே
ஸ்ப்ருஹணீயமான மார்விலே அணைத்தாள் இல்லையோ –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமடல் -19-முன்ன நான் சொன்ன-39-அதனை யாம் தெளியோம் — -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

June 14, 2014

முன்ன நான்  சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்——–19
பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செய்யப் பொங்கொளி சேர்
கொன்னவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலஞ்சேர் ——–20
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாணெடுங்கண்
கன்னியரால் இட்ட  கவரிப் பொதிய விழ்ந்தாங்கு——-21
இன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த
மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் —-22
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப
அன்னவர் தம் மானோக்கம் உண்டாங்கு அணிமலர் சேர் ——-23
பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்
மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை —————–24
இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் ——25
மின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து
மன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் ———-26
மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த
மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் ——27
அன்ன நடைய வரம்பையர் தங்கை வளர்த்த
இன்னிசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் ——28
மன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்
மின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் ——-29
மன்னு மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்
பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் ———30

துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப
அன்ன முழக்க  நெரிந்துக்க வாணீலச்——31
சின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்
துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் ——32
மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர
இன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலைமேல்  ——33
நன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத் தாங்க அருஞ்சீர்
மின்னிடை மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் ——-34
பொன்னரும் பாரம் புலம்ப வகம் குழைந்து ஆங்கு
இன்ன வுருவின் இமையாத் தடம் கண்ணார் ——-35
அன்னவர் தம் மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன்னமுதம் மாந்தி இருப்பர் இது வன்றே ——36
அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்
அன்ன திறத்தே யாதலால் காமத்தின் ———-37
மன்னும் வழி முறையே நிற்று நாம்  மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39

————————————————————————–

முன்ன நான்  சொன்ன -இத்யாதி
முன்பு நான் இந்த நாலு புருஷார்த்தைத்தையும் சொல்லுகிற இடத்தில்
தர்மத்தில் வந்தவாறே -சாத்திய ரூபத்தாலும் சாதன ரூபத்தாலும் நிர்ப்பதோர் ஆகாரத்தைக் கொண்டு
மன்னும் அறம் -என்றேன் –
இஹ லோக போகத்தை வ்யாவர்த்திக்கைக்காகச் சொன்னேன் அத்தனை
அதில் நான் நினைத்த அம்சம் அறியாதே குவால் உண்டாக நினைத்து இருக்கக் கூடும் அறிவு கேடராய் இருப்பார் ஆயிற்று –
ச்வர்க்கே அபி பாத பீதச்ய ஷபிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-5-50
அதுக்காக அவ்விடத்தை ஸ்பஷ்டமாக சொல்லா நின்றேன் -கேளுங்கோள்-

முன்ன நான்  சொன்ன அறத்தின் வழி முயன்ற   –
முன்பு நான் சொன்ன அறத்தை சாஸ்திர உக்தமாக அனுஷ்டித்தவர்கள்
அறத்தின் வழி என்கையாலே அந்த உபாய அனுஷ்டானத்தின் உடைய மிறுக்குத் தோற்றுகிறது-
அது அனுஷ்டிக்கும் இடத்தில் கரணம் தப்பினால் மரணம்
அதில் ஏதேனும் ஒரு  ஸ்வரத்திலே அங்கத்திலே வைகல்யம் பிறக்கில் பின்னை
ப்ரஹ்ம ரஜஸ்  சாயப் பிறக்கும் இத்தனை –

அன்னவர் தாம் கண்டீர்கள்-
அத்தை அருமைப் பட்டு அனுஷ்டித்த அப்படிப்பட்ட அவர்கள் –

ஆயிரக் கண் வானவர் கோன்-
இங்கு நின்றும் போகிறவனுக்கு நிர்வாஹகனாய் இருக்கிறவன் ஆயிரம் கண் கொண்டாயிற்று
அவ்விஷயத்தை அனுபவிப்பது –

பொன்னகரம் புக்கு –
அதில் ஸ்லாக்கியமான தேச வாசமே அமையும் என்னும் படி
இருக்கிற விடத்தே போய்ப் புக்கு –

அமரர் போற்றி செய்யப் –
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்னுமா போலே அங்குள்ள தேவர்கள்
அர்த்த பரராய் சம்சாரத்திலே இருந்து
இக்காம புருஷார்த்தத்தை ஆதரித்து
அதுக்கீடாக தன்னை ஒருத்து
சாதனா அனுஷ்டானம் பண்ணி வருவான் ஒரு மகாத்மா உண்டாவதே -என்று கொண்டாட –

பொங்கொளி சேர்-
காலம் செல்லச் செல்ல ஒளி மழுங்குகை  அன்றிக்கே
புண்ய  பலம் ஆகையாலே
மிக்கு வாரா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருப்பதாய் –

கொன்னவிலும் கோளரி மா –
கொலையைச் செய்யா  நிற்பதுமாய்
எழுந்து இருந்து பாயுமா போலே -என்று சொல்லலாம் படியாய்
பெரிய மிடுக்கை யுடைத்தாய் இருந்துள்ள சிம்ஹங்கள் ஆனவை –

தான் சுமந்த –
ஹிருதயத்திலே பரிவோடு சுமந்தால் போலே யாயிற்று தரிக்கும் படி –

கோலஞ்சேர்-
நாநா வான வகுப்புக்கள் சஹஜமானால் போலே பொருந்தி இருக்கும் ஆயிற்று –

மன்னிய சிங்காசனத்தின் மேல் –
சம்சாரிகமான போகங்களில் காட்டில் நாலு நாள் எழ இருந்து எழுந்து
இருக்கலாம் படியான சிம்ஹாசனத்தின் மேலே –

வாணெடுங்கண்கன்னியரால் இட்ட  கவரிப் பொதிய விழ்ந்தாங்கு-
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்களை உடையராய்
கால தத்வம் உள்ளதனையும் புஜியா நின்றாலும் அபூர்வைகளாய் இருக்கும் ஸ்த்ரீகளாலே இடப்பட்ட-கவரித் திரள் கட்டவிழ்ந்து -அவ்விடத்திலே –

இன்னிளம் பூந்தென்றல் இயங்க மருங்கிருந்த-
இனியதாய் மந்தமாய் பரிமளத்தை யுதைத்தான தென்றல் சஞ்சரிக்கக்
கிண்ணகத்தை எதிரிட ஒண்ணாதா  போலே -போக்யதையின் மிகுதியாலே நேருக்க ஒண்ணாத
அருகே இருக்க வேண்டியவராய் –

மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் –
விழேல் எண்ணப் பண்ணும் மின்னைப் போலி எண்ணப் படும் நுண்ணுய மருங்கை யுடையருமாய்
மிருது ஸ்வ பாவைகளுமாய் இருக்கிறவர்கள் உடைய ஹிருதயத்தில் கிடக்கிற பூக் கொய்கை யாகிற கார்யத்தைக் காட்டுகிற வெளுத்த முறுவல் ஆகிற –

முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப-
இள நிலா வந்து அரும்ப –

அன்னவர் தம் மானோக்கம் உண்டு-
அப்படிப் பட்டவர்கள் மான் போலே நோக்கை புஜித்து –

ஆங்கு அணிமலர் சேர் பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம் மன்னிய மந்தாராம் பூத்த –
புண்ய பலத்தாலே நினைத்த போதே முன்பு தோன்றுகிற
சோலையிலே
முறுவலால் தோற்றுவித்த பூக் கொய்கையைப் பேசுகிறது

மன்னிய மந்தாராம் பூத்த மதுத் திவலை இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர்-
நிலை நிற்கும் கற்பகங்கள் -குடியா வண்டு கள் உண்ணச்
சிறகு ஓசையிலே   அறியும் இத்தனை –

மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத்  தடம் கண்
மின்னிடை யாரோடும் –
அங்கு இவர்கள் ஒப்பனை இருக்கும் படி –

விளையாடி –

இனி ஓலக்கம் இருக்கும் படி சொல்லுகிறது –
வேண்டிடத்து-
அபேஷையின் படியே –

மன்னு மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின் மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த-
மாணிக்கங்களைக் கொத்துப்-பூம் கொத்தாகத்த் தூக்கி

மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் அன்ன நடைய –
ஆடுவார் சாய்ந்து இருக்கை-

அரம்பையர் –
தேவ ஸ்திரீகள் –

தம் கை வளர்ந்த இன்னிசை யாழ் பாடல் கேட்டு-
நீரூட்டி வளர்த்தால் போலே கையாலே தடவி வளர்த்த

இன்புற்று –
அந்த போக்யதையை அனுபவித்து –

இனி சம்போக அனுபவம் பேசுகிறது
இரு விசும்பில் மன்னு மழை தவழும் வாணிலா நீண் மதி தோய்மின்னொளி சேர் –
மேகம் இளைப்பாறும்-போக்யனான சந்திரனும் அப்படியே –

விசும்பூரும் –
பள்ளப் பாறை யுள்ள ஸ்தலம்

மாளிகை மேல் மன்னு மணி விளக்கை மாட்டி-
மாணிக்கத்தின் அழுக்கை கழற்றி-நிலை விளக்காக வைத்து –

மழைக் கண்ணார் –
அடுத்து ஒரு கால் பார்க்க-கால தத்வம் உள்ளதனையும் வவ்வலிடும்படி பண்ணும்

பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல்-
படுக்கை படுத்த படி கண்டு வாய் புலர்த்த –
விசித்ரம் -நாநா வர்ணமாகப் பரப்பப் படுத்த படுக்கையிலே –

துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் தாள் திறப்ப-
துன்னிய -காற்றைப் பிடித்து புகுரவிட வற்றாய் இருக்கை-
தாள் திறப்ப -வேண்டின போதே தானே திறப்ப –

அவ்வழியே புகும் தென்றலைப் பேசுகிறது
அன்ன முழக்க  நேரிந்துக்க வாணீலச் சின்ன நறுந்தாது சூடியோர் மந்தாரம்-
அன்னங்கள் புக்கு அள்ளல் சேற்றை உழக்குமா போலே-தேனும் சுண்ணமும் தாதும் ஒன்றாக உழக்க –

துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர-
அத்தாலே அது துகளாய்
ஒளி மிக்க நீலப் பாவின் சின்ன நறும் தாதை
ராஜாக்கள் வளையம் வைக்குமா போலே வைத்து
மந்தாரப் பூவைத் தோளில் தோள் மாலையாக ஏறிட்டு
கற்பகத்துக்கு எழுதிக் கொடுத்த வண்டுகள் தன்னைக் கொண்டு எழுந்து போகும் படியாய் –

இன்னிளம் பூந்தென்றல் புகுந்தீங்கு இள முலை  மேல்  -நன்னறும் சந்தனச் சேறுள் புலர்த்தத்-மந்தமாய் பரிமளத்தை யுதைத்தான தென்றல்
நாலடி இட்டுப் புகுந்து
அல்லோம் என்பாரும் விழ வற்றான போக்யதையை உடைத்தான சந்தனச் சேற்றை
சிற்றாள வட்டம் போலே முறையிலே உலர்த்த –

தாங்க அருஞ்சீர்மின்னிடை  மேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல்-
தாங்க அரியதாய் சீருடைய மின் போன்ற இடை மேலே கையை வைத்துக்
காந்தனுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ண இருந்து –

பொன்னரும் பாரம் புலம்ப –
சம்ச்லேஷத்தைப் பேசின படி –

வகம் குழைந்து ஆங்கு-
உடன் பட்ட படி –

இன்ன வுருவின் –
இட்டு மாற்றினால் போலே இருக்கை –

இமையாத் தடம் கண்ணார் அன்னவர் தம்-
வைத்த கண் வாங்க இன்னாத போக்யதையை உடையவர்கள் –

மாநோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் இன்னமுதம் மாந்தி
நோக்குப் பொறுத்த வாறே-முறுவல் பண்ண
அதுவும் உண்டு அறுக்க வல்லராம் படியாய் யாயிற்று  இருப்பது –

இருப்பர் –
போக்யாதிசயத்தாலே போக மாட்டாமை –

இது வன்றே அன்ன வறத்தின் பயனாவது –
ஒரு சிறாங்கை என்கிறது –
கிருஷிக்கு தக்க பலம் போராமை-

ஒண் பொருளும் அன்ன திறத்தே யாதலால் காமத்தின்
ஒண் பொருளும் அத்தனையே
ஒண் பொருள் -ஆச்சார்யர்களையும் விட்டுப் பற்றுமவன் பஷத்தாலே –

மன்னும் வழி முறையே நிற்று –
ஆபாச காமத்தை ஒழிய நிலை நின்ற
பகவத் காமத்தின் வழியே-

நாம் –
காமத்தை ஒழிய சர்வத்தையும் விட்ட நாம்

மான் நோக்கின் அன்ன  நடையார் –
நோக்குக்கும் நடைக்கும்
தனித் தனியே மடலூர வேண்டும்படி இருக்கை –

அலரேச –
பிறர் பழி சொல்ல –

ஆடவர் –
தலைமகன் பேர்
மேல் –

மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
பிராணனை தரிப்பிக்கும் மடல் -மன்னு மடல் –

தென்னுரை
மிலேச்ச ஜாதி பிதற்றும் தமிழ்
உக்தி மாத்ரமே
அர்த்த யுக்தம் அன்று-

 

————————————————————————–

முன்ன நான்  சொன்ன அறத்தின் வழி முயன்றஅன்னவர் தாம் கண்டீர்கள் –
வ்யவஸா யாத்மிகா புத்திரேகேஹ -அத்யாவஸா யாத்மிகையான புத்தியை உடையவனுக்கு
சாதன சாத்யங்கள் ஒன்றாய் இருக்கும் –
பஹூ சாகா ஹ்ய நந்தாச்ச புத்த யோ அவ்யவசாயி நாம் –
அவயவசாயிகள்   உடைய புத்தி பஹூ சாயையாய் இருக்கும்
பல தலையாய் இருக்கும்
சாதனங்களும் அநேகமாய்
சாத்யங்களும் அநேகமாய் இருக்கும் –
அப்படியே காம்ய ரூபமான கர்மம் தன்னையே
கர்மண்யே வாதி காரச்தே -என்கிறபடியே -அகர்த்ருகமாக பாலாபி சந்தி ரஹிதையான அனுஷ்டானத்தை அனுஷ்டித்தால்
மோஷ சாதனமாக கடவது என்கிற நியாயத்தைப் பற்ற பகவத் புருஷார்தத்துக்கு சாதனமாக சொன்ன முகத்தாலே தூஷித்தது கீழ் –
அந்த கர்மம் தனக்கு ஸ்வர்க்க போகத்தை புருஷார்த்தமாக  பிரதிபத்தி பண்ணி
அதுக்கு சாதனமாம் ஆகாரத்தாலே காம்யார்த்த பிரசுரமாய் இருக்கும் என்னும் இடத்தை காட்டுகிறது
கீழே நான் சொன்ன தர்ம மார்க்கத்திலே உத்சாகித்தவர்கள் கிடக்கிடி கோள்
அன்னவர் -என்கிறது
நேருவது எல்லாம் நேர்ந்து படுவது எல்லாம் படச் செய்தே
அல்பமேயாய் இருக்கிற
ஸ்வர்க்க புருஷார்த்தத்தை பலமாகக் கொள்ளுகிற ஹேயரை அநாதரிக்கிறார் –

அவர்கள் பலம் இருக்கும் படியைச் சொல்லுகிறது மேல்
ஆயிரக் கண்-
இப்படி நேருவது எல்லாம் நேர்ந்தவன் -விஷய தர்சனத்துக்கு ஆயிரம் கண் உடையவன் -விடத்தவாய் ஓராயிரம் இராயிரம் கண்   -என்று அவனுக்குப் பல கண் உண்டு இ றே -பகவத் அனுபவத்துக்கு –
புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்றும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்றும்
அடைவுடையார் தோற்று அடைவு கெட நின்று ஏத்தும் படியான
கண் அழகை உடையவன் முகத்திலே போய் விழிக்கிறது அன்றே –
பீறின சீலை போலே கண்ட விடம் எங்கும் துளையாம் படி இருக்கிறவன் முகத்திலே இ றே விழிப்பது-
என்றும் விஷய ப்ரவணரில் நேத்ர பூதனை இங்கனே இ றே இவர்கள் சொல்லுவது –

வானவர் கோன்-
அயர்வறும் அமரர்கள் அதிபதியோ -என்பார்கள்
மனுஷ்யனில் காட்டில் நாலு நாள் எழ இருந்து சாம்
இவ்வளவைக் கொண்டு போரப் பொலியத் தங்களையும் அவர்களாக அபிமானித்து இருக்கும் ஆக்கரான
அமரர்களுக்கு நிர்வாஹகனான முகத்திலே யாயிற்று விழிப்பது    –

பொன்னகரம் –
திகழ் பொன்னுலகு ஆள்வார்-என்கிற தேசத்திலேயோ –
நரகாதிகளில் வ்யாவ்ருத்தி
அல்பமான தேசத்திலே யன்றே புகுகிறது –

புக்கு –
புகுகை தானே உத்தேச்யமாய்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் சத்கரித்து கொண்டாடப் போகிறதோ –

அமரர் போற்றி செய்யப் –
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ளப் புகுகிறதோ
அமரராய்த் திரிகின்றார்கள் -என்று ஆக்கறன தேவதைகள்
சம்சார பூமியிலே இருந்து
ஸ்வர்க்க அனுபவத்திலே ஸ்ரத்தை பிறந்து
இதுக்கு உறுப்பாக சாதன அனுஷ்டானம் பண்ணி
இவ்வளவு வருவானைக் கிடைக்குமே -இவனும் ஒருவனே -என்று கொண்டாடா நிற்பார்கள் –

பொங்கொளி சேர்-
சிம்ஹாசனத் தொழில் வகுப்பைக் கண்டு கொண்டு இருக்கும் படி
கிளர்ந்த ஒளி சேர்ந்து இருப்பதாய்
கோப்புடைய –

கொன்னவிலும் –
கொல் நவிலும் -கிட்டின அப்போதே முடிக்கும் என்று
கொலையை வ்யவஹாரியா நிற்பதாய் –

கோளரி மாத் தான் சுமந்த –
விநாசத்தை தரிக்கைக்கு -மிடுக்கை உடைத்தாய் இருப்பதொரு சிம்ஹமானது
தானே சுமந்து நிற்கிறதோ -என்று சங்கிக்கும் படி –

கோலஞ்சேர் –
நாட்டில் உள்ள தொழில் எல்லாம் இதிலேயோ -என்னும் படி அழகு சேர்ந்து இருப்பதாய் –

மன்னிய சிங்காசனத்தின் மேல் –
சம்சாரிகமான போகத்தில் காட்டில் நாலு நாள் எழ இருந்து பொகட்டுப் போகிறவர்களைப் போலே அன்றியே
வருவார்க்கு எல்லாம் தானேயாம் படி இருக்கையாலே -மன்னிய -என்கிறது
அரிமா -சிம்ஹம்
பாய்மா -கைம்மா -என்னுமா போலே
கோள் -மிடுக்கு
தான் சுமந்த -சிலர் சுமத்தச் சுமக்கை அன்றிக்கே ஆதாரத்தோடு தானே சுமக்கை –

வாணெடுங்கண்-
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம்படியான கூர்மையை யுடைத்தாய்
புஜிக்கிறவன் அளவு அன்றிக்கே  விஞ்சின போக்யதையை யுடைத்தான கண் அழகை யுடைய –

கன்னியரால் இட்ட –
ஒரு கல்பம் எல்லாம் புஜியா நின்றாலும் பின்னையும் புதுமை மாறாதே இருக்கிற
ஸ்திரீகளால் இடப்பட்ட

கவரிப் பொதிய விழ்ந்து
அவர்கள் வீசின வாறே கட்டவிழ்ந்து எல்லாம் கூடத் தள்ளக் கடவது –
அத்தைப் பிரித்து வாங்கினவாறே விடக் கடவது
அத்தைப் பொதிகையும் விழுகையுமாகச் சொல்லுகிறது –

ஆங்கு –
அவ்வஸ்தையில் –
இன்னிளம் பூந்தென்றல் இயங்க –
ஆச்சா மரம் வீசுகையினாலே இனியதாய் இளையதாய் நன்றான தென்றல் வந்து சஞ்சரிக்க -என்னுதல்-
அன்றிக்கே
மந்த மாருதமாய் நாநா விதமான  பூக்களிலே போய் பிரவேசிக்கும் இடத்து
ஆவி எழுந்து வெக்கை தட்டி இருக்கிறபடி பிசுகி வருகை அன்றிக்கே
செவ்விப் பரிமளத்தை கொய்து கொடு வந்து –
தென்றலானது இயங்க என்று தோன்றல் தானாகவுமாம் –
ஒரு சேதனன் புகுந்தானாய் சம்போகத்துக்கு துணுக்குப் பிறக்கும் படி இருக்கை அன்றிக்கே
சம்போக வர்த்தகமுமாய் ஸ்பர்ச வேத்யமுமாய் இருக்கை –
கவரியான போது தன் பக்கல் நின்றும்  வேறு ஒன்றில் போகாதபடி நெஞ்சும் இனியதாய்
உடம்பிலே பட்டவாறே துணுக்குப் பிறக்கும் படி இருக்கை –

மருங்கிருந்த-
போக்யைகளான ஸ்திரீகளை ஒழிய தரிக்க மாட்டாமையாலே கூட வைத்துக் கொண்டு இருப்பார்கள்
அதின் முன்னே இருக்கிற கிண்ணகப் பெருக்குப் போலே
எதிர்ச் செறிக்க ஒண்ணாத படி ஆழம் காலாய் அருகே வைத்துக் கொண்டு இருப்பார்கள்  -மின்னனைய நுண் மருங்குல் மெல்லியலார் வெண் முறுவல் –
போக்தாவானுக்கும் இவள் இவ்விடையைக் கொண்டு எங்கனே தான் தரிக்கும் படி -என்று கண்ட போதெல்லாம்  துணுக்கு என்னும் படி –
மின்னொத்த நுண்ணிய இடையை யுடைய ராகையாலே கலக்கவும் பொறாதே கை வாங்கி இருக்கவும் பொறாத
மார்தவத்தை யுடையரான ஸ்திரீகள் உடைய
வெண் முறுவல் உண்டு -தந்த பங்க்தி -அதனுடைய –

முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்தரும்ப-
முன்னம் என்கிறது அபிப்ராயம் –
அந்த அபிப்ராயம் ஆனது போய் பக்வமாய் ஆரம்பித்தால்   போலே இருக்கிற இரு நிலாவானது வந்தரும்ப –

அன்னவர் தம் மானோக்கம் –
இன்ன விடத்தே போய் விளையாடக் கடவோம் என்கிற நினைவை
நோக்காலே ஸ்மரிப்பிபாள்  யாயிற்று –

உண்டு –
அப்படிப் பட்ட மிருதுவான நோக்கை யுடைய அவர்கள் நோக்கிப் பருகி
இது காணும் அவர்களுக்கு உஜ்ஜீவனம்
இவன் ஒன்றாக ஸ்மரித்து அத்தை உண்டு அறுக்க மாட்டாதே கிடந்து அலையா நிற்க -அதுக்கு மேலே குளிர்ந்து நோக்குவார்கள்

ஆங்கு
அவ்வளவிலே –

இவர்கள் லீலா ரசம் அனுபவிக்கும் படி சொல்லுகிறது மேல்
அணிமலர் சேர் பொன்னியல் கற்பத்தின் காடுடுத்த மாடெல்லாம்-
செறியப் பூத்த பூக்கள் பரப்பு மாறி இருப்பதாய் பொன்னாலே செய்யப் பட்டதாய்
கற்பகக் காடாய் தரிசு கிடக்கும் இடம் எல்லாம்
மாடெல்லாம் மன்னிய –
உண்டாய் உள்ள –

மந்தாராம் பூத்த –
பூவாய்க் கிடக்கும் –

மதுத் திவலை –
அப்பூவில் உண்டான மது வெள்ளத்தின் உடைய திவலையிலே-

இன்னிசை வண்டு –
அத்தைப் பானம் பண்ணுகைக்காக வண்டுகள் படிந்து கிடக்கும் –
அவற்றுள் வண்டு உண்டு என்று அறிவது அவற்றின் இன்னிசை  கேட்டவாறே யாயிற்று

அமரும் சோலை வாய்
பரிமளம் போலே படிந்து கிடக்கும் யாயிற்று சோலை இடத்திலே –

மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் –
ஒரு கொம்பில் நின்றும் பறித்துப் போந்து மாலையாக்கிக் சேர்க்கிற விளம்பத்தாலே வரும்-செவ்வி யழியுமது அன்றிக்கே-குழலிலே மாலையாய்ப் பூத்தால் போலே இருப்பதாய் –
நாயகன் முன்பே மயிரை ஒரு கால் குலைத்தால் அவனுக்கு சகல தாபங்களும் ஆறும்படியாய் –
பெரிய மயில் தோகை விரித்தால் போலே இருக்கிற அளக பாரத்தை யுடையருமாய்
கால தத்வம் உள்ளதனையும் துவக்குகைக்கும் மயிர் முடியே போந்து இருக்க
அதுக்கு மேலே கண்ணாலே ஒரு கால் கடாஷித்தால் ஒரு பாட்டம் வர்ஷித்தால் போலே இருக்கும் படி குளிர்ந்த  கண்களை யுடையருமாய் இருந்துள்ள –

மின்னிடை யாரோடும் விளையாடி வேண்டிடத்து
ஸ்திரீகளோடே போக உபோகாதத்திலே கால ஷேபத்தைப் பண்ணி
வேண்டிடத்து விளையாடுதல் -என்னுதல்-
வேண்டிடத்து மன்னும் மணித்தலத்து என்று மேலே கூட்டுதல்  –
நெடும் போது விளையாடி ஆயாசிக்கையால் உண்டான ஸ்ரமம் ஓர் இடத்திலே இருந்து ஆற வேண்டி இருக்கும் இ றே-
இவனுடைய புண்ய பலம் பக்வமாய் இருக்கையாலே இவன் இருக்க அபேஷிதமான விடத்தே  அப்போதே அது உண்டாய் இருக்கும் –

மன்னு மணித்தலத்து –
உண்டான நீல ரத்னங்களாலே சேர்த்துச் சமைக்கப் பட்டு இருந்துள்ள நிலத்திலே

மாணிக்க மஞ்சரியின்-
மாணிக்கக் கொத்துக்களை இடையிடையே அழுத்துவார்கள்
ஒரு பிரதேசத்திலே பொன் அரிதாய் இருக்குமா போலே
அங்குத்தையார்க்கு ஆச்சர்யமாய் இருப்பது பளிங்கு யாயிற்று –

மின்னொளி சேர் பளிங்கு விளிம்பிடத்த-
மின்னொளி போலே இருக்கிற ஒளியை யுடைத்தான பளிங்கைக் கொண்டு
வந்து -விளிம்பிலே குறடு கட்டுவார்கள்  –

மன்னும் பவளக்கால் செம்பொன் செய் மண்டபத்துள் –
சாய்ந்து நிற்கிற ஸ்திரீகளுக்கு ஓரடி போகில் தரிக்க வரிதாம் படியான பவளத் தூணை யுடைத்தாய்-மாற்றற்ற செம் பொன்னால் செய்யப் பட்ட மண்டபத்திலே

அன்ன நடைய வரம்பையர் தம் –
அன்னத்தோடு ஒத்த நடையை யுடையராய் இருக்கிற அப்சரஸ் ஸூ க்களுடைய –

கை வளர்த்த இன்னிசை யாழ் பாடல் கேட்டு –
நீர் வரத்து வளர்ப்பாரைப் போலே இவர்களுடைய கர ச்பர்சமே நீராக
வளர்ந்த இனிய இசையை யுடைத்தான யாழில் உண்டான பாட்டைச் செவியாலே அனுபவித்து-சாம க்ரியால் குறைவற்று இருக்கிற யாழைத் தட்டி பின்பு அது பண் பட்ட வாறே மிடற்றிலே மாற்றிப் பாட அத்தைக் கேட்டு –

இன்புற்று –
ஆனந்த நிர்பரனாய்-

இனி ஒரு வெளி ஒலக்கமும் சம்போகார்த்தமாய் இருப்பதொரு இருப்பும்
ஒரு தென்றலும் அபேஷிதமாய் இருக்கும் இ றே -அத்தைச் சொல்லுகிறது –

இரு விசும்பில் –
பரப்பு உடைத்தான ஆகாசத்திலே –

மன்னு மழை தவழும் –
கங்கை கடக்கிற போது ஒரு மழையும் துளியும் மின்னும் உதவினால் போலே
போகத்திலே அந்வயித்த போது ஒரு இருட்சியும் பிரகாசமும் அபேஷிதமாய் இருக்கும் இ றே –

வாணிலா நீண் மதி தோய் மின்னொளி சேர் விசும்பூரும் மாளிகை மேல் மன்னு மணி விளக்கை மாட்டி-
ஆகாசத்திலே சஞ்சரிக்கிற மாளிகைகளிலே பெரு விலையனான ரத்னன்களை
அவித்து ஏற்ற வேண்டாத படி விளக்காக ஏற்றி பிரகாச அபேஷை இல்லாமை  யாலே
மங்கள தீபமாய் இருக்கும் அத்தனை இ றே –

மழைக் கண்ணார்-
படுக்கை படுப்பார் என்று சில பெண்கள் உண்டு –
அவர்கள் படுக்கையை குளிரப் பார்த்தால் சேதன சமாதியாலே படுக்கையாய் இருக்கும் அத்தனை –

பன்னு விசித்ரமாப் பாப்படுத்த பள்ளி மேல் —
படுக்கையிலே போய் இவன் சாய்ந்தால் -படுக்கை வாய்ப்பு இருந்த படியே -என்று
வாய் புலர்த்தும் படியாய் நாநா வர்ணமாய் முடங்கலற்று
படுக்கப் பட்ட படுக்கையிலே யாயிற்று சாய்வது –
அப்போது காற்று அபேஷிதமாய் இருக்கும் இ றே –

துன்னிய சாலேகஞ் சூழ் கதவத் –
அவ்விடம் தான் சுற்றும் ஜாலகமுமாய் இருக்கும் இ றே
வேண்டின போது வேண்டின வடிவு கொள்ளலாய் இருக்கும் இ றே –

சூழ் கதவம் தாள் திறப்ப –
விரல் நுழையாத படியாய்க் காற்றுக்கு சீரை வடியிட்டுப் புகுர வேண்டும்படி நெருங்கி
இருந்துள்ள ஜாலகங்களில் சுற்றும் உண்டான கதவுகள் தாள் நீங்க –

தாள் திறப்ப –
தென்றல் புகுந்து -கருத சங்கேதிகள் சதவு திறக்குமா போலே
புண்யமடியாக வருகிறதாகையாலே சிலர்  அடைக்கவும் திறக்கவும் வேண்டா வி றே  –

அன்ன முழக்க –
அப்போது புகுரும் காற்று இருக்கும் படி சொல்லுகிறது
பெடையோடு செங்கால அன்னம் துகைப்ப -பெரிய திரு மொழி -3-8-9–என்னுமா போலே-அன்னமானது மிதுன சம்போகார்த்த மாகவும்-மதுபானார்த்த மாகவும் சென்று இழியும்-இவை சஞ்சரிக்கையாலே பூவும் தாதுவும் தேனும் சுண்ணமும் ஒன்றாகக் குழம்பும் –

நெரிந்துக்க வாணீலச் சின்ன நறுந்தாது சூடி-
பின்னைப் போய் நெரிந்து உகுந்து ஒளியை யுடைத்தாய்-இவை துவக்கையாலே முகம் கர்கிச் சிதறி-பரிமளம் அதிசயமாய் இருந்துள்ள தாதைச் சூடி-இத்தை யாயிற்று வளையமாக வைப்பது –

யோர் மந்தாரம்துன்னு நறு மலரால் தோள் கொட்டிக் –
ஒரு மந்தார மரத்தின் உடைய நெருங்கப் பூத்துப் பரிமள பிரசுரமாய் இருக்கிற பூக்களை
ஹர்ஷத்தாலே தோளிலே கொட்டிக் கொண்டு –

கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின் தொடர
ஒரு காலும் பிரியக் கடவோம் அல்லோம் என்று சூழ்த்துக் கொடுத்து –
ஒரு விஷயத்திலே தொடர்ந்து போவாரைப் போலே
கல்பக தருவிலே ஏக ரூபமாய் இருந்துள்ள புஷ்பத்திலே
மதுபானத்தாலும் பரஸ்பர சம்ச்லேஷத்தாலும் நரை திரை மூப்பு அற்று இருக்கிற வண்டுகளானவை பின் தொடர
இக்காற்றைக் கண்டவாறே இதுக்கு முன்பு இக்காற்றைக் கண்டறியோம் என்று தன்னை அநாதரித்துப் போகச் செய்தேயும்
ஒரு தலைக் காமமாகத் தானே காற்றை பின் தொடரா நிற்கும்
இது பின் தொடர் வேண்டும் படி –

இன்னிளம் பூந்தென்றல் புகுந்து
இனியதாய் இளையதாய் பரிமளிதமாய் இருந்துள்ள தென்றலானது
போக வர்த்தகமாய் கொண்டு புகுந்து

ஈங்கு இள முலைமேல் நன்னறும் சந்தனச் சேறு –
இவ்வளவிலே எப்போதும் ஒக்க ஷோடஸ வார்ஷிகைகளாய் இருக்கையாலே முலையும் இளையதாய் இருக்கும் இ றே –
அதின் மேலே போக யோக்யமாக அலங்கரிக்கப் பட்டு இருந்துள்ள
நன்றாய் பரிமள பிரசுரமான சந்தனக் குழம்பை –

உள் புலர்த்தத் –
மேல் எழ அன்றியிலே அந்தப் பணிக்குக் கடவார்  சிற்றால வட்டம் கொண்டு ஆற்றுமா போலே புலர்த்த –

போக்தாவும் ஈடுபடியான வைதக்த்யம் சொல்லுகிறது
தாங்க அருஞ்சீர்மின்னிடை மேல் கை வைத்து இருந்து –
இத்தை எங்கனே தான் கொண்டு தரிக்கும் படி -என்று கூச வேண்டும்படியான அழகை யுடைத்தாய் –
தாங்க அருஞ்சீர்மின்னிடை மேல் கை வைத்து இருந்து —
முலையைத் தாங்க அரிதாய்
அழகிய மின் போலே இருந்துள்ள இடையின் மேலே கையை வைத்து கொண்டு இருந்து

ஏந்து இள முலை மேல் பொன்னரும் பாரம் புலம்ப –
ஏந்தப் பட்டு சமைய வளர்ந்து இருந்துள்ள முலை மேலில்
சம்போக சமயத்திலும் கழற்றிப் பூனை வேண்டாத படி சஹாஜமாய் இருக்கிற
முத்துக்களும் பொன்னுமாய் அரும்பி
உட்கழுத்தாரம் சம்போகத்தில் உண்டான வ்யாகுலதையாலே அங்கே இங்கே அலச
இவளுக்கு நாம் ஆபரணமாகப் பட்டதே -என்று கூப்பிடுகிறாப் போலே யாயிற்று இருப்பது –
த்ரிசரம் பஞ்ச சரம் தனியாரம் இவை தன்னிலே அலசின ஓசையைச்  சொல்லுகிறது -புலம்பிற்றாக-இதாயிற்று புறம்பு படுகிறபடி –

வகம் குழைந்து –
அகவாயில் ஆட்டம் பேச்சுக்கு நிலம் அல்லவே
முலை மேல் பொன்னரும்பாரம் -என்று ஆரம் பூண்டதாய் இருக்கை அன்றிக்கே
முலை தான் ஆரமாய்க் கொண்டு அரும்பினால் போலே யாயிற்று ஆரம் பூண்டு இருக்கும் படி -என்றுமாம் –

ஆங்கு-
ஹிருதயம் அழிந்த அவ்வஸ்தையிலே-

இன்ன வுருவின் –
ஏவம் விதமான ஸ்வரூப வை லஷ்ண்யத்தை யுடையராய் –

இமையாத் –
கண் இமையோடு இமை பொருந்தில் ஜகத் உபசம்ஹாரம் என்னும்படி இருக்கையாலே
இமையோடு இமை பொருந்தாதே
இமையா -என்று ஸ்வரூப கதனம் அன்று
விஷய தர்சனத்தால் இமையாமை –

தடம் கண்ணார் –
கண்ணின் பரப்பு அடங்கிலும் இமையாமைக்கு உறுப்பு –

அன்னவர் தம் மாநோக்கம் உண்டு –
அப்படிப் பட்டவர் உடைய விலஷணமான நோக்கை யாயிற்று புஜிப்பது –

ஆங்கு அணி முறுவல்இன்னமுதம் மாந்தி இருப்பர்-
அந்நோக்கை பருகி அது சத்மியா நின்றவாறே முறுவல் பண்ண
அத்தாலே அழகிதான முறுவலோடு கூடின அதராம்ருதத்தைப் பானம் பண்ணி
அதினாலே தங்களை அழிந்து இருப்பார்கள் –

இது வன்றே அன்ன வறத்தின் பயனாவது –
இது வி றே அப்படிப் பட்ட தர்மத்தின் உடைய பிரயோஜனம் ஆயிற்று
ஆகையாலே தர்மமும் காம சேஷம்
மோஷம் தானே தள்ளுண்டது
இனி சேஷிப்பது அர்த்தம் இ றே –

ஒண் பொருளும் அன்ன திறத்தே –
சிறியார் பெரியார் இன்னார் என்று வாசி இன்றிக்கே எல்லாரும் ஒக்க நன்று நன்று என்று-விரும்புகிற அர்த்தமும் காம சேஷம் –

யாதலால் காமத்தின் மன்னும் வழி முறையே நிற்று நாம் 
ஆதலால் -அர்த்த ஸ்திதி இப்படியே இருக்கையாலே
பிரதான புருஷார்த்தமான காமத்தின் உடைய நிலை நின்ற வழியிலே
முறை கெடாத படி நின்றோம் நாம் –
இப்படி ஒழிய அபிமத விஷயத்தை பிரிந்த ஆற்றாமை கரை புரளச் செய்தேயும் எதிர்தலை வரக் கண்டு இருக்கைக்கு மேற்படத்-தாம்தாம் அர்த்திக்கக் கடவது அல்ல வென்று விவஷிதர் அல்லாதார் சொல்லுவது ஒரு பாசுரம் உண்டு
அது சாஸ்திரமே யாகிலும் நமக்கு அது பாஷம் அல்ல –

மானோக்கின்அன்ன நடையார் அலரேச –
அபிமத விஷயத்திலும் கண்ணிலும் மௌக்த்யத்திலும் குறி அழியாதே
நடையிலும் தோற்ற தோல்வி இன்றிக்கே  இருக்குமவர்கள்
இரண்டு மருங்கும் இருந்து பலி சொல்லா நிற்க-

ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு –
அபிமதம் எல்லாம் பெற்று அல்லது மீளாத படியான
மடலூரக் கடவர் அல்லர் என்று கொண்டு இங்கனே சொல்லிக் கொண்டு போருவதொரு நிரர்த்தக சப்தம் உண்டு –

அதனை யாம் தெளியோம் —
அப்படிப் பட்ட அது தன்னை நாங்கள் இகழ்ந்த மிலேச்ச ஜாதிகளிலே
அப்பாஷையிலே கேட்டுப் போருவது உண்டு
அத்தை  அபிமத விஷயத்தைப் பெற்று அல்லது தரியாத நாம்
அனுஷ்டேயமாகத் தேறோம் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .