Archive for the ‘பெரிய திரு அந்தாதி –’ Category

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள்- 1-10–

January 1, 2020

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

முயற்றி சுமந்து –
எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை

எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-வாசிக கைங்கர்யத்தில் -உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை
ஆழ்வார் திரு உள்ளம் முந்துற்று -இளைய பெருமாள்
ஸ்ரீ ஸூந்தர காண்டம் – 33-28 “–பிராகேவது மஹா பாக ஸுமித்ரிர் மித்ர நந்தன -பூர்வஜஸ் அநு யார்த்தே
த்ருமசிரைர் அலங்க்ருத -மரவுரி தரித்து முன்னால் சென்றால் போலே –
அயோத்யா காண்டம் – 21-17 -தீப்தமக்னிம் ஆரண்யம் வ யதி ராம பிரவேக்ஷயதி ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி த்வம் பூர்வமதாரய -என்று
பெருமாள் அக்னி பிரவேசமோ ஆரண்ய பிரவேசமோ பண்ணினால் முன்னால் நான் போவேன் என்றான் சுமத்தரை இடம்-

எழுந்து –
உடனே ஆர்வத்துடன் கிளம்பி

முந்துற்ற நெஞ்சே –
அவ்விஷயத்திலே என்னை விட முற்பட்டு இருக்கிற மனமே –
நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டு போது போக்க உசாத் துணை நெஞ்சு ஒன்றே தானே-
இந்த இருள் தரும் மா ஞாலத்தே-யானும் என்நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்பார் மேலே
யதித்வம் பிரஸ்திதோ துர்கம் வனமாத்யைவ ராகவா அக்ரஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நாதி குசக் அந்தகாந் -என்று
முன்னே சென்று முற்கள் போன்றவற்றை அகற்றுவேன் -என்ற இளைய பெருமாளைப் போலே –

இயற்றுவாய் –
கார்யத்தை நடத்த வேண்டும்

எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து –

இயற்றுவாய் எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து கார்யத்தை நடத்த வேண்டும்-கைங்கர்யம் செய்ய தூண்டிய எனக்கு
நன்றிக் கடனாக என்னையும் கூட்டி அன்றோ நீ செய்ய வேண்டும்

இருவரும் கூடி நடத்தவேண்டிய கார்யம் என்னவென்றால்
நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –
அழகிய காயாம்பூ வில் உண்டான-நிறம் போன்ற நிறத்தை உடையனான
எம்பெருமான் உடைய-திருக் கல்யாண குணங்களை –
“கோ சத்ரூஸோ கவ்ய : கவ்ய சத்ரூஸோ கவ் போலே பூவீன்ற வண்ணன் –
அவனது வண்ணம் கொண்ட பூ என்றும் பூவின் வண்ணம் கொண்ட அவன் என்றும்
பூவைப் பூ த்ருஷ்டாந்தம் ஆகாதே ஆகவே நல் பூவைப் பூ என்று விசேஷண விசிஷ்டா பூவைப் பூ

புகழ் –
அப்ராக்ருதம் -ஞான ஆனந்த சுத்த சத்வ மயம் -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவை அன்றோ –

நயப்புடைய –
அன்பு பொருந்திய-இது நாவுக்கும் சொல்லுக்கும் அந்வயம்
ஆசை கொண்ட நாவினால்-அன்பு கொண்ட சொற்களால்
என்னால் தன்னைப் பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு–7-9-10-என்றபடி உயர்வுடைய -என்றபடி

நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-
நாவினாலே கனனம் செயப்படுகிற –
ஈனுதல் -உண்டாக்குதல் –
நெஞ்சின் உதவி இல்லாமல் பாடப்பட்டதால் ஸ்ரமம் இல்லையே –
சேர்க்கைப் பொருத்தம் உடைய சொற்களாலே-அடக்குவோமாக –
பதங்களுக்கு ஒன்றோடு ஓன்று அமையும் சேர்த்தி அழகு தொடை
பதா நாம் சௌ ப்ராத்ராத நிமிஷ நிஷேவ்யம் ச்ரவண்யோ -ஸ்ரீ குண ரத்ன கோசம் –

தைத்ரியம் ஆனந்த வல்லி– “யதோ வவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ
வித்வான் ந பிபேதி குத்ஸநேதி ” என்று மீண்டாலும் ஆழ்வார் முயன்று அவனது குணங்களை அனுபவிக்கிறார்

நாவின்
நாவால் -நெஞ்சின் சஹகார்யம் இல்லாமலும் நானும் வேண்டாமலும் பாட முடியுமே
என்னால் தன்னைத் தானே பாடிக் கொண்டான்

————————————————————————–

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

நற் பூவீன்ற பூவை வண்ணன் புகழை –நயப்புடைய –பொதிவோம் என்றார் கீழ்-
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாக கிளர்ந்து சூழ்த்த அமரர் துதித்தால்-உன் தொல் புகழ் மாசூணாதோ –
இந்த நீசன் புகழலாமா –

புகழ்வோம் பழிப்போம்
ஒருவராலும் புகழ்ந்து முடிக்க முடியாத உன்னை-அற்ப ஞானிகளான நாங்கள் புகழ்வோம் ஆகில்-
அயோக்யர் புகழ்வது புகழ்ச்சி அன்று ஆதலால்-உன்னை நாங்கள் பழித்தவர்கள் ஆக ஆகி விடுவோம் –
ஆசார ஹீனன் வசிஷ்டர் நல்ல ஆச்சார்ய சீலர் -என்னுமா போலே

புகழோம் பழியோம் –
இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு புகழாது இருந்தோம் ஆகில்
உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம் –
மேல் அருளிய அர்த்தத்தையே ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார்

இகழ்வோம் மதிப்போம்-
மதிப்போம் இகழ்வோம்-
உன்னை சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோம் ஆகில்
உன்னை அகௌரவப் படுத்தினவர்களாக ஆகி விடுவோம் –
தைத்ரிய சம்ஹிதை 7-5-3-மன பூர்வோ வாக் உத்தர -நினைத்தாலும் அவனை இகழ்ந்தோமாய் ஆவோம்
புகழ்வோம் பழிப்போம்-கீழே சொன்னதை புனர் யுக்தி தோஷம் இல்லை –

மதியோம் -இகழோம் –
அப்படி நெஞ்சால் நினையாது இருந்தோம் ஆகில்-அகௌரவப் படுத்தாதவர்களாக ஆவோம்-
வாயால் புகழா விட்டாலும் நெஞ்சால் நினைப்பதும் இகழ்வாகும்

ஆக-இவற்றை அறிந்து இருந்தும் புகழாமலோ மதியாமலோ இருக்க மாட்டோம்
அப்படி புகழ்ந்தாலும் மதித்தாலும்

மற்று இகழ்வோம் மதிப்போம்
யஸ்ய மதம் அமதம் -இத்யாதி
அமதம் மதம் மதம் அதமம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜ முதஜூகுஷாத் த்ரயி ஸ்துமஹே வயம் நிமிதி தம் ந சக்னுமா–ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் –1-13 –

மற்று எங்கள் மால் செங்கண் மால்-சீறல் நீ தீ வினையோம் –
நீ கோபம் கொள்ளல் ஆகாது –
திரு நா வீறுடைய பிரானான ஆழ்வார் இப்படி அருளிச் செய்ததும்-ஆசை கொண்டு இருந்த எம்பெருமான்-
அந்த ஆசை ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழியும்படி
ஆழ்வார் நைச்ய அனுசந்தானம் பண்ணி -சொல்லவும் இன்றிக்கே நினைக்கவும் கூடாது -என்ன-
உண்ணும் சோற்றை எதிர் பார்த்து இருந்த பசியன் சோறு தடுமாறிப் போனால்
கண்கள் சிவந்து கோபம் கொண்டதும்-அந்த நிலைமையை கண்ட ஆழ்வார்
எங்கள் மால் செங்கண் மால் என்று விளிக்கிறார் –

தஸ்ய யதா புண்டரீகம் ஏவம் அஷிணி –சாந்தோக்யம் — 1-6-7-
செங்கண்மால் -பரத்வம்
எங்கள் மால் -ஸுவ்லப்யம்
செங்கண் மால் சீறேல்
எங்கள் மால் சீறேல்

ஆழ்வீர் நினைக்கவும் சொல்லவும் மாட்டீர் என்றீரே
ஏன் அழைக்கிறீர் போம் போம் என்று சீற்றம் தோன்ற திரு முகத்தை மாற வைக்க
அநந்ய கதியான என் மேலே சீறுவதே-என்ன
ஆழ்வீர் நீர் புகழவும் நினைக்கவும் மாட்டேன் என்று சொன்ன இதுக்கு சீறாமலும் இருக்க வேணுமோ -என்று-
எம்பெருமான் திரு உள்ளமாக
தீவினையோம் எங்கள் மால் கண்டாய் இவை –-என்கிறார்
புகழவும் நினைக்கவும் பார்த்தால் என் அந்தராத்மா சீறுகிறது-இல்லையேல் நீர் சீறுகிறீர்-
இந்த பாவத்துக்கு என்ன பண்ணுவேன்-யான் என் செய்வேன் என்கிறார்

எங்கள் மால் கண்டாய் இவை –
இப்படி புகழ நினைப்பதும்-புகழாமல் பின் வாங்குவதும்-மகா பாபிகளான எங்களுடைய பிரமமே யாகும்-
இங்கு -மால் -ஆச்சார்யம்-

—————

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா நிறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

சீறல் நீ -என்று பிரார்த்த ஆழ்வார் இடம்-அது கிடக்கட்டும் -நீர் என்ன தீர்மானம் செய்து உள்ளீர் என்ன –
இவை அன்றே நல்ல–
உன்னை புகழாமையும் சிந்திப்பாமையும் -இவை -அன்றோ நல்லது –

இவை அன்றே தீய –
உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதும் -இவை -அன்றோ கெட்டது –

இவை என்று இவை அறிவனேலும் –
இவை இவை என்று அறிவேனேலும்-
ஆகவே இப்பது இப்படிப் பட்டது என்று உண்மையாக-நான் தெரிந்து கொண்டு இருந்தேன் ஆகிலும்

இவை எல்லாம் –
புகழாமையும் மதியாமையும் -புகழ்தலும் மதித்தாலும் -ஆகிய
ஆகிற இவை எல்லாம் –

என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா –
என்னாலே-பற்றவும் முடியாது-விடவும் முடியாதே –
அடைப்பு -பரிஹரித்தல்
நீக்கல் -பரித்யஜித்தல்

நிறையவனே என்னால் செயற்பாலது என் –
சபலனான என்னால் செய்யக் கூடியது-என்ன இருக்கிறது -என்னுடைய எண்ணம் ஒன்றும் பலிக்கிறது இல்லை –
என் நா முதல் வந்து புகுந்து நல்லீன் கவி-தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பன் -என்றபடி-
என் வாக்குகளுக்கு பிரவர்த்தகன் நீ –
ஆகையால்-புகழ்வதோ இகழ்வதோ உன் கார்யம் தான்-என்னால் செயற்பாலது என்
அன்பு செய்கிறது ஒழிய வேறு ஒன்றும் இல்லை -என்றபடி-

கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷

முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்ம ஸ்வரூபத்திலேயே விருப்பம் வைக்கத் தக்கது –
அந்த அந்த கர்மங்களுக்குப் பலமாக ஓதப்படும் ஸ்வர்க்காதி அல்ப பலன்களில் ஒரு போதும் விருப்பம் வைக்கத் தகாதது
கர்மத்திற்கும் பலத்திற்கும் காரணமாக நீ ஆகாதே –
மோக்ஷ சாதனமான கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில் உனக்கு ஈடுபாடு வேண்டாம்
அகர்மா -பண்ணாமல் இருப்பது –சங்கம் -கூட்டு -நினைக்காதே -செய்தே ஆக வேன்டும் —
கர்மா பண்ணுவதில் தான் யோக்யதை —
பலம் எதிர்பார்க்காமல் -ஸ்வர்க்காதி பலன்களில் கண் வைக்காமல் -பலன் கிடைப்பது நம்மால் இல்லை –
கார்ய காரண பாவ விசாரம் –
பஞ்ச பிராணன் இந்திரியங்கள் மனஸ் தேகம் ஆத்மா பரமாத்மா -ஐந்தும் சேர்ந்தே -காரியம் –
காரணம் நாமே என்ற நினைவு கூடாதே –
அகர்த்ருத்வ அனுசந்தானாம் -கர்த்ருத்வ -மமதா -பல -தியாகம் மூன்றும் வேண்டுமே-
பல தியாகம் – தாழ்ந்த பலன்களில் கண் வைக்காமல் – மமதா -என்னுடையது -கர்த்ருத்வம் -நான் பண்ணுவது-

பலம் கேட்க அறியாத குழந்தை -போலே நாம் -பலம் அவனே கொடுப்பான் -பலம் எதிர்பார்க்காமல்-
த்ரிவித தயக்கத்துடன் – கர்மம் செய்வதே கர்தவ்யம் –
தொட்டால் தங்கமாகும் வரம் பெற்ற கதை –

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக -அதிலும்
என்னிடத்தில் மிகவும் அன்புடையவனாக ஆவாயாக -அதிலும்
என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
என்னை முக்கரணத்தாலும் வணங்குவாயாக
இப்படி அனுஷ்டிப்பதன் மூலம் என்னையே அடைவாய் -இது சத்யம் -உண்மை என்று உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
ஏன் எனில் எனக்கு நீ இனியவனாய் இருக்கிறாய் அன்றோ –
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன்
கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்

என்னால் செயற்பாலது என் –
இவற்றை நீ அருளிச் செய்த பின் என்னால் செயற்பாலது என் -புகழாமல் இருக்கத் தான் முடியுமோ என்னால் –

————————————————————————–

ஹா ஹா -நம்முடைய வாயால் எம்பெருமான் உடைய-திருக் குணங்கள் பாடப் பெற்றோமே-
நம்மில் யார் பாக்கியசாலிகள் -என்கிறார் -இதில் –

என்னில் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள் பெற்று -4-

என்னில் மிகு புகழார் யாவரே -என்றும்-
பின்னையும் மற்று எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் -என்றும் –
இரட்டித்து சந்தோஷ அதிசயத்தால் அருளிச் செய்கிறார்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –போலே
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு –ஸ்ரீ பூதத்தாழ்வார் -100-
யான் அணுவானாலும் என் புகழ் அவனைப் போலவே விபூவாயிற்றே-

என்னில்-
என்னை விட –

மிகு புகழார் யாவரே –
மிக்க புகழை உடையார் யார் கொல்-

பின்னையும் மற்று எண்ணில்-
மற்று பின்னையும் எண்ணில் –
இன்னமும் ஆராய்ந்து பார்க்கும் அளவில் –

மிகு புகழேன் யான் அல்லால் —
மிக்க புகழை உடையவன் நானே தவிர-வேறு யாரும் இல்லை –

என்ன கருஞ்சோதிக் கண்ணன் –
என்னுடையவனான கறுத்த நிறத்தை உடைய ஸ்ரீ கிருஷ்ணனும்-

கடல் புரையும் சீலப –
கடல் போன்ற கம்பீர ஸ்வபாவம் உடையவனும் –
தன்னுடைய வடிவை ஆழ்வாருக்கு அனுபவிக்கக் கொடுத்தவனும் –

பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று –
மிகப் பெரும் சோதி வடிவமானவனுமான எம்பெருமானுக்கு-என்னுடைய நெஞ்சானது அடிமைப் பட்டதால் –
நைச்ச்ய பாவம் நீங்கி-நெஞ்சு ஆழ்ந்து அவஹாக்கிக்கப் பெற்றதால்-நானே பாக்யசாலி -என்கிறார் –

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்றும் -சீலம் இல்லா சிறியேனேலும் செய் வினையோ பெரிதால் -என்றும் –
தாம் நினைவு வந்தால் –
வடிவு அழகும் போக்யதையும் நெஞ்சையையும் மனத்தையும் மூடி வைக்க விடாமல்
பரவசமாக பிரவர்த்தம் உண்டாக்கப் பண்ணுமே-
யானே தவம் செய்தேன்
என்னில் மிகு புகழார் யாவரே –
எனக்கு ஆரும் நிகர் இல்லையே -பேச வைக்குமே-

ஸுவ்சீல்யம்-மஹதாய் இருந்தாலும் மந்தவர்கள் உடன் நீர் போலே கலப்பவன் அன்றோ
இதனாலே பரஞ்சோதி –
ஈசன் வானவர்க்கு என்பேன் என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே –

ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும்-பண்ணின பிறகு அனுதாபம் காட்டுதலும்
இரண்டும் அவிருத்தம் அல்ல என்று கொள்வது போலே இதனையும் கொள்ள வேண்டும்

————————————————————————–

அசந்நேவ பவதி அசத் ப்ரஹமேதி வேதேசேத் -அஸ்தி ப்ரஹமேதி சேத் வேத சந்தமேநம் ததோ விது–தைத்ரியம் ஆனந்த வல்லி
அவனைப் புகழாமல் நீச பாவனை பாவித்து விலகினால் ஸ்வரூபமே இழக்க நேருமே –
பரம காருண்யத்தால் ஆழ்வாரை மீட்டு அருளியத்துக்கு க்ருதஜ்ஜை அருளிச் செய்கிறார் இதில் –

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–

பெற்ற தாய் நீயே –
பெற்ற தாய் போலே-பிரியமானதையே செய்பவனும் நீயே –
நைச்ய பாவம் மாற்றி பிரவர்த்திப்பிக்கும் படி செய்து அருளிற்றே-

பிறப்பித்த தந்தை நீ –
மாதா பாஸ்த்ரா பிது புத்ரா -மாதா பாத்திரம் போலே புத்ரன் பிதுவுக்கே-
உண்டாக்கின பிதாவை போலே-ஹிதமானதையே செய்பவனும் நீயே –

மற்றையார் யாவாரும் நீ –
ஆத்மாவுக்கு நன்மைகள் செய்து-விலஷண ஜென்மத்தைக் கொடுக்கிற
மற்றும் ஆசார்யரும் நீயே-உன்னை புகழாமல் இருந்தால் என் சத்தையே போய் விடும்
அது போகாதபடி காப்பாற்றி அருளின உபகாரகர்
சரீரம் ஏவ மாதா பிதா ஜனதயா-ச ஹி வித்யாஸ் தம் ஜனயதி தச் ஸ்ரேஷ்டம் ஜென்ம -ஸ்ரீ ஆபஸ்தம்ப ஸூத்ரம் –1-1-6 –

பேசில் –
உன்னால் நான் பெற்ற உபகாரங்களைப் பேசப் புகுந்தால்

எற்றேயோ –
எற்றே ஒ -எனக்கு ஆச்சர்யமானவை-என்று உருகுகிறார் –

மாய –
மாயவனே –

மா மாயவளை மாய-
மகத்தான வஞ்சனை உடையவளான-பூதனையை முடிப்பதற்காக

முலை –
அவளது விஷம் தடவின முலையை –

வாய் வைத்த நீ-
அமுது செய்த நீ –

யம்மா –
ஸ்வாமியே –
அந்த ஆச்சர்ய செயல் போலே-அடியேனுடைய நைச்ச்ய பாவம் மாற்றி
புகழ வைத்து அருளினாயே-உன் பக்கலிலே அவஹாகிக்கும் படி வழி காட்டிற்றே

காட்டும் நெறி –
எனக்குக் காட்டின வழிகள்-

————————————————————————–

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-

எம்பெருமான் இடம்-ஸ்வா தந்த்ர்யமும்-நிர்ஹேதுக கிருபா குணம்-இரண்டுமே உண்டே
நெறி காட்டி-நின்பால்- நீக்குதியோ –
கர்மம் ஞானம் போன்ற உபாயாந்தரங்களைக் காட்டி-இவற்றை அனுஷ்டித்து பலன் பெறுவாய் என்று-சொல்லி
என்னை கை விடப் பார்க்கிறாயோ —

மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக -அதிலும்
என்னிடத்தில் மிகவும் அன்புடையவனாக ஆவாயாக -அதிலும்
என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
என்னை முக்கரணத்தாலும் வணங்குவாயாக
இப்படி அனுஷ்டிப்பதன் மூலம் என்னையே அடைவாய் -இது சத்யம் -உண்மை என்று உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
ஏன் எனில் எனக்கு நீ இனியவனாய் இருக்கிறாய் அன்றோ –
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன்
கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷

தேர்தட்டு வார்த்தையாக சரம ஸ்லோகம் அருளிச் செய்தானே-
நளன் தமயந்திக்கு–ஏஷ பந்தா விதர்பானாம் ஏஷ ஏத்தி ஹி கோசலான் – என்று நெறி காட்டி பின் கை விட்டானே –

நெறி காட்டுகையும் -நீக்குகையும் பர்யாயம் போலும் இவருக்கு –
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயத்தைக் காட்டி-உன் பக்கலில் நின்றும்-என்னை அகற்றப் பார்க்கிறாயோ -அல்லது –

கரு மா முறி மேனி காட்டுதியோ –
கறுத்த மா மரத்தின் தளிர் போன்ற உனது திரு மேனியை-சேவை சாதிப்பித்து
அனுக்ரஹிக்க நினைக்கிறாயோ –
நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ச்ருதேன
யமேவைஷ வ்ருணதே தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்—கட உபநிஷத் – 1-2-23-
அனுக்ரஹிக்க திரு உள்ளம் பற்றி இருப்பவர்க்கு பூரணமாக காட்டி அருளுவான்
முறி -என்று தளிர்க்குப் பெயர் -முறிக்கப் படுவது முறி
மா முறி -மாந்தளிர் -அது போல் ஸூகுமாரமாயும்
கரு -ச்யாமளமாயும்-இருக்கிற திருமேனியைக் கட்டி அருளுவாயோ –
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ –

மேனாள் –
மேல் நாள் -அநாதி காலமாக –

அறியோமை –
அறியாதவர்களான எங்களை -அஞ்ஞான் அசக்தன் -நெறி காட்டினால் உபயோகிக்க ஞானாதிகர் இல்லையே-
அதனால் நிர்ஹேதுக கிருபை ஒன்றே வேணும்

என் செய்வான் எண்ணினாய் –
என்ன செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிறாய்-
மந் மநா பவ இத்யாதி-18-65– என்பாயோ–
சர்வ தர்மான் பரித்யஜ்ய -மாஸூச -18 -66 -என்பாயோ

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–49–

பகவன் அச்யுத—அடியாரைக் கை விடாத எம்பெருமானே
அவிவேகக நாந்த திங்முகே–அவிவிவேகம் ஆகிற மேகங்களினால் இருந்து கிடக்கிற திசைகளை உடையதும்
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி–பலவிதமாக இடைவிடாமல் பெருகுகின்ற துக்கங்களை வர்ஷித்துக் கொண்டு இருப்பதுமான
பவதுர்த்திநே –சம்சாரமாகிற துர் ததிநத்திலே–மழைக் கால விருளிலே—மப்பு மூடின தினத்துக்கு துர்த்தினம்
நண்ணாதார் முறுவலிப்ப நல்ல உற்றார் கரைந்து ஏங்க எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
பத ஸ்கலிதம் மாமவ லோகயா–கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம்
வழி திகைத்து அலமருகின்றேன்-3-3-9-என்கிறபடியே
நல் வழியில் நின்றும் தப்பி இருக்கிற அடியேனை கடாக்ஷித்து அருள வேணும்
கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று-உனது கடாக்ஷம் அடியேனுக்கு உஜ்ஜீவன ஹேது

கண்ணனே ஈதுரையாய் –
தேவரீர் உடைய திரு உள்ளம் இன்னது-என்பதை அருளிச் செய்ய வேண்டும் –
மாஸூசா -என்று உனக்கு வார்த்தை -எங்களுக்கு உஜ்ஜீவனம் –

என் செய்தால்–
நீ எமக்கு எந்த நன்மை செய்தாலும் –

என்படோம் யாம் –
1-யாம் எந்த அனர்த்தத்தைத் தான்-அனுபவிக்க மாட்டோம் -நீ எது செய்தாலும் அதன் படி உடன்படத் தக்கவன் அடியேன் –
அன்றிக்கே
2-நன்மை செய்தாலும் யானையை குளிப்பாட்டி-உடனே அது அழுக்கை தலையிலே போட்டுக் கொள்வது போலே-
நீ செய்து அருளும் நன்மையையும் ஏற்றுக் கொண்டு தீமையையும் ஏறிட்டுக் கொள்வேன் -என்றுமாம் –

————————————————————————–

மானஸ சாஷாத்காரமே பெற்றேன் -அவனை நேராக கண்டு ஆலிங்கனம் பெற ஆசைப்பட்ட அடியேனுக்கு
இது மலைக்கும் அணுவுக்கும் உள்ள வாசி அன்றோ -யாமே அரு வினையோம்-என்கிறார் –

யாமே அரு வினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத் தருகு –7-

யாமே அரு வினையோம் –
போக்க முடியாத பாவத்தைப் பண்ணி யுள்ள-நாங்கள் மாத்திரமே –
நெஞ்சுக்கு மட்டும் சேவை-கட் கண்ணால் காண வில்லை
கைகளால் அணைத்து களிக்கும் படியாகவும் சேவை சாதிக்கப் பெற வில்லை –

பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த அம்மா –
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய் நின் பாதத்தருகு -சார்ந்து ஒழிந்தார் –
அருவினையோம் யாமே சேயோம் -என்று அந்வயம்

என்னை சேர்த்து கார்யம் செய் என்ற சொல்லிய எனது சொல்லை லஷ்யம் செய்யாமல் –
தான் மாத்ரம் அந்தரங்க அணுக்கராக திரு வடிகளில் சேர்ந்து விட்டது –
நல்ல பேறு பெற்றதே-தாம் மட்டும் இருள் தரும் மா ஞாலத்திலே உழல
அவர் திரு உள்ளம் பாதார விந்தத்திலே அழுந்தி விட்டதே –

நெஞ்சினார் சார்ந்து ஒழிந்தார்-
உயர் திணை-திருவடிகளில் அழுந்தி ஆழம் கால் பட்டதால்-உயர்த்தி அருளிச் செய்ய வேண்டுமே
அணுக்கர் –
அந்தரங்கர் -சமீபத்தில் உள்ளவர் –
சேயோம் -தூரத்தில் இருக்கிறோம் –

என் நெஞ்சினார்-தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் –
பூ மேய –தாமரைப் பூவிலே பொருந்தி இருக்கிற –செம் மாதை
ஹிரண்ய வர்ணனையான-ஸ்ரீ பிராட்டியை —நின் மார்வில் சேர்வித்து –
உனது திரு மார்பிலே சேர்த்து கொண்டவனாயும் -கடல் கடைந்து பெண்ணமுதம் கொண்டானே-
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் மார்பனாய் இருந்தும் அன்றோ இழந்தேன்-

பாரிடந்த –
பிரளயத்தில் அழுந்திக் கிடந்த பூமியைக்-குத்தி எடுத்தவனுமாய்-இருக்கிற -ஸ்ரீ வராஹாவதார அனுபவம் –
ஸ்ரீ கோல வராஹம் ஒன்றாய் பூமியையையே பிரளயத்தில் இருந்து இடந்து எடுத்த உனக்கு சிறியேனான அடியேனை
சம்சார பிரளயத்தில் இருந்து இடர்ந்து எடுத்து உன் திருப்பாதத்தில் சேர்த்துக் கொள்ளுவது அருமையோ-

அம்மா –ஸ்வாமி-

நின் பாதத்தருகு –
தேவரீர் உடைய திருவடிகளின்-சமீபத்திலே –

—————————————————————-

கண்ணால் காணாமல் இருக்கச் செய்தேயும்-கண்ணால் கண்ட விஷயங்களில் போலே
அன்பு அதிகரித்து வருகின்றதே-இதற்க்கு என்ன காரணம்-சொல்லாய் -என்று
அப்பெருமானையே கேட்கிறார் –

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

பருகலாம் பண்புடையீர் பாரளந்தீர்-பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்-
நும்மை அருகும் சுவடும் தெரி யுணரோம்-அப்படி இருந்தும்-நுமக்கே அன்பு மிக பெருகும்-இது என் பேசீர் -என்று அந்வயம் –

அருகும்-கிட்டுவதையும்
சுவடும் -கிட்டுவதற்கு உபாயத்தையும் –
தெரி யுணரோம்- நாங்கள் பகுத்து அறிந்தோம் இல்லை –
அப்படி இருக்கச் செய்தேயும் –

நும்மை நுமக்கு – அன்பே பெருகும் மிக-
உம் விஷயத்திலேயே-எமக்கு ஆசையானது மிகவும் பெருகா நின்றது —

பருகலாம் பண்புடையீர்-
வாய் மடுத்து பானம் பண்ணுவதற்கு உரிய திருக் கல்யாண குணங்களை உடையவரே –
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஓத்தே -2-3-1
பொதுவாக சொன்னாலும் சௌசீல்யம் குணத்தில் நோக்கு–
சாரங்கன் தொல் சீரை ஓவாத உணவாக ஊண்-என்று மேலே அருளிச் செய்கிறபடியால்-
பகவத் குணங்களை உணவாக கொள்கிறவர் –
அப்படிக் காட்டி அருளின இடம் மேலே அருளுகிறார் –

பாரளந்த்தீர்-
திரு விக்ரமனாய் பூமி எல்லாம் அளந்து அருளினவரே –

பாவியேம் கண் காண்பரிய –
பாவிகளான எங்களுடைய கண்களாலே-காண முடியாத வைலஷண்யத்தை உடையவரே –
கருதரிய உயிர்க்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம் -என்றபடி-
நீ எங்கும் நிறைந்து இருந்தாலும் அருகில் இருப்பதாக தெரிந்து -கொள்ள வில்லை –
நீ அருகில் வந்து சேவை சாதிக்க வில்லை -என்றபடி –
இப்போது அறிந்து கொள்ள வில்லை என்றாலும் மேலும் அறிந்து கொள்ள வழி உண்டோ என்னில்-

சுவடும் தெரிந்து யுணரோம்-
சேவை கிடைக்கும் என்கிற அடையாளமும் இல்லையே
அடியேன் இடம் யோக்யதையும் இல்லை என்னவுமாம்-
சுவடு -யோக்யதை-அடையும் உபாயம் -அடையும் ஸூசகம் என்றுமாம் –

நுண்புடையீர்-
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ அயோத்யையில் ஸ்ரீ பெருமாள் உடன் 12 ஆண்டு காலம் இருந்து அனுபவித்தால் போலே
ஆயினும் அன்பு மாதரம் வளர்ந்து சென்று கொண்டே இருக்கிறதே-
இது என் பேசீர் -இதுக்கு என்ன காரணம்-நீர் தான் சொல்ல வேணும் –

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் -10 சூர்ணிகை-அருகும் சுவடும் -ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம்-
உம்முடைய அருகு வருதல்-உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க
உம்மளவிலே ஸ்நேஹமானது அறமிக்கு வாரா நின்றது -இதுக்கு அடி அருளிச் செய்ய வேணும் -என்று
இந்த பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார்

பாட்டின் முடிவில் நும்மை நுமக்கு -என்று இருக்கிறதே-அதற்கு எங்கே அந்வயம் என்று
ஸ்ரீ நஞ்சீயர்-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரைக் கேட்க-
நும்மை அருகும் சுவடும் –
நுமக்கு அன்பே பெருகும் மிக -என்று அன்வயித்து பொருள் உரைக்கலாம் என்று அருளிச் செய்தாராம்-

————————————————————————–

அந்த எம்பெருமான் நம்மை அனுக்ரஹித்தாலும் அனுக்ரஹிக்கா விடிலும் போகட்டும்
திரு உள்ளம்,ஆன படி செய்யட்டும்-நெஞ்சே-நீ மாத்ரம் அவர் திறத்தில் செய்திடுக-

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9

மாலார் அவர் தாம்-
எம்பெருமான் ஆகிற அப்பெரியவர் தாம் –

சார்வரியரானால்-
நமக்கு கிட்ட முடியாதவராய் இருக்கும் பொழுது-ஆர்த்தி உடன் கத்தினாலும் சேவை சாதிக்காமல் இருப்பவன்

மாலார் தமக்கு –-
அவ் வெம்பெருமானை நோககி -ஆஸ்ரிதர் பேரில் வ்யாமோஹமே வடி எடுத்தவர்-என்று பேர் மாத்ரமே கொண்டவர்

நுமக்கு அடியோம் என்று என்று-
நாங்கள் உனக்கு அடிமைப் பட்டவர்கள் என்று பல தடவை –
ஸக்ருத் உச்சாரணமே பேற்றுக்கு -கிடையாமல் மீண்டும் மீண்டும் சொல்வது அவன் திரு உள்ளத்தை புண்படுத்தும்
ஆர்த்தோ வா யதி வா திருப்தா பரேஷாம் சரணாகத –பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மனா–ஸ்ரீ யுத்த காண்டம் –18-28-

நொந்து உரைத்தென்
வாய் நோவச் சொல்வதில் என்ன பலன்-
நோவு நமக்கு மட்டும் அல்ல -அவனது திரு உள்ளத்துக்கும் தானே

இனி-
இன்று முதலாக

எமக்கினியாதானும் ஆகிடு-
நமக்கு எது வேணுமாகிலும் நடக்கட்டும் –
பசிக்கு உணவு கிடைக்காமல் பின்பு கிடைத்தால் என்ன பயன் –
இங்கே அனுபவத்துக்கு கரையும் பொழுது கிடைக்காமல் அங்கே பெற்று என்ன பயன் –

கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்க்கு ஓர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே
இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் -ஸ்ரீ நாச்சியார் திருமொழி -13-9–

இரீஷியா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய புக்த சேஷம் இவை உதகம் நய மாம் வீர விஸ்ரப்த பாபம் மயி ந வித்யதே–அயோத்யா -27-8-
ஸ்ரீ சீதா பிராட்டி பெருமாளை விட்டு பிரிந்தால் உயிர் வாழகில்லேன் என்றாளே தண்டகாரண்யத்துக்கு எழுந்து அருளும் பொழுது –

இரீஷியா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய
பொறாமை கோபம் விட்டு -நான் உம்மை பின் தொடர்ந்தால் தந்தை சொல் கேட்டு போன உம்மைப் போலே
நான் உம்மை தொடர்ந்தேன் என்று உலகம் சொல்வதால் உமக்கு பொறாமையோ –

இரீஷியா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய புக்த சேஷம் இவை உதகம்
வசிஷ்டர் சிஷ்யராக இருந்து இவை உமக்குக் கூடுமோ –
தாகம் தீர்ந்த பின்பு தண்ணீர் குடிப்பார் உண்டோ -கோபமும் பொறாமையும் உமக்குக் கூடாதே –
நய மாம் -அடியேனையும் கூட்டிச் செல்லும்
வீர -நீர் வீரர் அன்றோ
விஸ்ரப்த -அடியேன் சொற்களை விஸ்வசித்து அருளும் -இது வாய் வார்த்தை சொல் அல்ல -மனப் பூர்வகமாக சொன்னதே
பாபம் மயி ந வித்யதே–உம்மை விட்டு பிரிந்தால் உயிர் வாழகில்லேன்

அவர் திறத்தே
அப் பெருமான் விஷயமாகவே

யாதானும் சிந்தித்து இரு-
எதையாவது
நல்ல என் தோழி நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என் -என்றபடி-
அவர் நெறி காட்டி நீக்கினாலும் நீக்கட்டும்-
கரு மா முறி மேனி காட்டினாலும் காட்டட்டும் நீ அவர் விஷயமாக ஏதாவது சிந்தித்து இரு

பேறும் இழவும் இரண்டும் ஒக்க எண்ணி இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன-
அவனே வேண்டும் என்றது அவனுடைய அனுக்ரஹம் வேண்டும் என்றபடி-
சத்தைக்கு இது எல்லாம் வேண்டா காண்-
அவன் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும்-நம்முடைய சத்தைக்கு அவன் சத்தை இறே காரணம்-
அவன் நம்மை விட்டாலும் நம்மிடம் இருந்து அவன் தன்னைப் பிரித்து போககில்லேனே -அப்ருதக் சித்தம் அன்றோ –

அவனுடைய அனுக்ரஹம் போலே நிக்ரஹமும் நமக்கு அனுசந்தேயமே
நம்மைப் பற்றி எம்பெருமான் திரு உள்ளத்தில் பட்டிருக்க வேண்டும் -அதுவே அபேஷிதம்-
கூவிக் கூவி நெஞ்சுருகி கண் பனி சோர நின்றால் பாவி நீ என்று என்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய்மொழி -4-7-3-
விருப்போ வெருப்போ கண் முன்னே வந்து தோற்றி அருளிச் செய்ய வேணும் என்பதே அருளிச் செய்கிறார்-
ஆண்டாளும்-செம்மை உடைய திரு மார்பில் சேர்த்தானேலும்-
ஒரு நான்று மெய்ம்மை சொல்லி முகம் நோககி விடை தான் தருமேல் மிக நன்றே-

கை விடப் போகிறேன் என்ற சொல்லை யாவது முகம் நோக்கிச் சொல்வான் ஆகில்
அப்போது சேவை யாவது கிடைக்குமே-கண்ணிலே தென் பட்டான் ஆகில்
அப்போது உபாயங்களால் ஸ்வாதீனப் படுத்திக் கொள்ளலாமே
நல்ல அபிப்ராயமோ தீய அபிப்ராயமோ-நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்து அன்றோ உண்டாக வேண்டும்
அந்த நினைவு தானே நமக்கு போதுமானது -என்கிறார்

காண் -முன்னிலை அறை
ஆகிடு ஆகிடுக –

————————————————————————–

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

நாம் அயோக்யர் என்று கை வாங்கி இருப்பதே நல்லது-என்று நைச்யானுசந்தானம் செய்து-
ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தேவர்கள் அன்றோ துதிக்க அர்ஹ்யர்
ஒரு குணமுமே அன்றி குற்றமே வடிவாக உள்ள நாம்-எம்பெருமானை வணங்குவதற்கு எவ்வளவு என்பதற்கும்-
நம்முடைய வணக்கம் என்பதற்கும் இங்கே என்னே விஷயம் இருக்கிறது-
எதற்காக வீணாக நாக்கை நீட்டி இருக்கிறாய் -என்கிறார் நெஞ்சை பார்த்து-

இதற்கு வேறு படியாகவும் அவதாரிகை உண்டு –

நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காணலுமாம் கொலோ என்றே –
எம்பெருமான் வடிவு அழகில் சிறிதும் ஈடுபாடு இன்றியே
உப்புச்சாறு கேட்டு -சாவாமைக்கு கடலைக் கடைந்து கொடு-மாவலியைக் கொல்லு இரணியனைக் கொல்லு -என்று-
நிர்பந்திக்கிற பிரயோஜனாந்திர பரர்களுக்கு சேவை கிடைக்குமே ஒழிய-
உம் வடிவு அழகின் அனுபவமே பரம பிரோஜனம் என்று இருக்கும் நமக்குக் கிடைக்குமோ நெஞ்சே-
பிரயோஜனாந்திர பரர்களுக்கே கார்யம் செய்யக் கடவோம் என்று சங்கல்பித்து கொண்டு இருக்கிற அந்த பெரியவருக்கு
நம்முடைய அநந்ய பிரயோஜனத்வம் தோஷமாக அன்றோ திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது-
நமக்கு அவனுடைய அனுக்ரஹம் கிடைக்குமோ-என்று
இன்னாப்பாகச் சொல்லுகிறார் என்னவுமாம்

வள வேழ் உலகம் -1-5- தலை எடுத்து அருளுகிறார் என்றுமாம்

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர் –முதல் திருவந்தாதி –52-
அவர் அஷ்ட வசுக்களை எண்மர் என்றார் இவர்– இரு நால்வர் -என்கிறார்
அவர் ஏகாதச ருத்ரர்களை பதினொருவர் -என்றதை இவர் ஈரைந்தின் மேல் ஒருவர் என்கிறார்
அவர் த்வாதச ஆதித்யர்களை ஈரறுவர் என்றதை இவர் எட்டொரு நால்வர் என்கிறார்
அச்விநீ தேவதைகளை இருவரும் ஓரிருவர் -என்கிறார்கள்–
ஆண்டாளும்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று-20- -என்றாள் இறே-
வேதமும் –
த்ரயஸ் த்ரிம்சத் வைதேவா -என்று பல இடங்களும் ஓதா நின்றது
ஆக-ஆழ்வார் நிச்சய அனுசந்தானமாகவோ வெறுப்பாகவோ அருளிச் செய்கிறார்-
இரு நால்வர்-அஷ்ட வசுக்கள் என்ன– ஈரைந்தின் மேல் ஒருவர் -ஏகாதச ருத்ரர்கள் என்ன –
எட்டோ டொரு நால்வர் -த்வாதச ஆதித்யர்கள் என்ன –ஓர் இருவர் அல்லால் –
அஸ்விநீ தேவர்கள் என்ன-ஆகிய முப்பத்து மூன்று அமரர்கள் தவிர மற்றவர்களான

திரு மாற்கு யாமார் –
நாம் எம்பெருமானை பணிவதற்கு-எவ்வளவு மனிசர் –

வணக்கமார்-
வணக்கம் யார் –
நம்முடைய பணிவு தான் எத்தகையது –
பிறப்பு ஒழுக்கம் இவற்றால் அயோக்யரான நாம்-ரஷ்ய வர்க்கத்தில் சேர்ந்தவர்கள் அல்லோம் –
அயோக்யரான நம்முடைய ஆஸ்ரயணம் தான் எங்கனே-
அயோக்யரான நாம் ஆஸ்ரயித்தோம் எனபது அவனுக்கு ஒரு பொருளா –
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாக இருந்து ஏத்த வீற்று இருந்த இது வியப்பே -என்னும்படியாக உள்ள அவனுக்கு
அறிவொன்றும் இல்லாத நம்முடைய வணக்கம் ஒரு வஸ்துவாகவும் இட்டு எண்ணத் தக்கதோ -என்றபடி
வணக்கம் எது -என்னாது–வணக்கம் ஆர் -என்று உயர் திணையாக அருளிச் செய்தது ஒரு வகைக் கவி மரபு

ஏ பாவம் –
அந்தோ –இரு நிலத்தோர் பழி படித்தேன் ஏ பாவமே -திரு நெடும் தாண்டகம்

நன்னெஞ்சே –
நல்ல மனமே –

நாமா மிகவுடையோம் நாழ் –
நாமோ என்றால் ‘குற்றம் உள்ளவர்களாக-இருக்கிறோம் இறே-
புருஷோத்தமனான அவன் முன்னே ஒரு பதார்த்தமாக நிற்பதும்-வணங்கினோம் என்பதும்-எவ்வளவு ஹேய விஷயம் –
நாமாமிக வுடையோம் நாழ்-நாமா -நாமோ என்றபடி
நைச்யம்-பண்ணும் பஷத்தில் – அபராத சஹச்ர பாஜனம்-
வெறுத்து அருளுகிற பஷத்தில்-பிரயோஜனாந்தர பரர்களுக்கே கார்யம் செய்வதாக திரு உள்ளத்தில் சங்கல்பம் கொண்டவர்-
குற்றமாக கொண்ட அநந்ய பிரயோஜனத்வத்தை கொண்ட நாமோ -என்றபடி-
நாழ் -குற்றம்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –அவதாரிகை–

December 31, 2019

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –அவதாரிகை–

அதர்வண வேத சாரமாகும் –

(அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –
தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்
ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –
தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வசக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185
பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்
ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் -ஸத்யம் ஞானம் –
அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் -அவனை ஆஸ்ரயிப்போம் )

குணங்களால் பெருமை எனபது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் ஸ்ரீ பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

ஸ்ரீ ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-
மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-
அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி
அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

ஸ்ரீ பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -ஸ்ரீ திரு விருத்தம் –
ஸ்ரீ சித்ரகூடம் சென்று பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை ஸ்ரீ திருவாசிரியம்
ஸ்ரீ நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை இந்த ஸ்ரீ பெரிய திருவந்தாதி
ஸ்ரீ திரு அயோத்யைக்கு எழுந்து அருளி பட்டாபிஷேகம் செய்து அருளியைதைக் கண்டு ஸ்வரூப அனுரூபமான பேறு பெற்ற நிலை ஸ்ரீ திருவாய்மொழி –

திரு விருத்தம் -பரபக்தி
திருவாசிரியம் -பரஞானம்
பெரிய திருவந்தாதி -பரம பக்தி
திருவாய் மொழி -பிராப்தி -என்றுமாம்

ஸ்ரீ ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-
ஸ்ரீ திரு விருத்தம்
இமையோர் தலைவா -விளிக்கிறார்
அவன் தனது ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி அனைத்தையும் விஷத்தை தமமாகக் காட்டி அருள
நித்ய ஸூரிகள் நித்ய விபூதியில் அனுபவிக்க நித்ய ஸூர்யர்கள் மாரி மாரி பல பிறப்பும் பிறந்து உழலும் படியைக் கண்டு –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று -உபக்ரமித்து
அழுந்தார் பிறப்பாம் பொல்லா மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே — என்று நிகமித்து
இதுவே அடியேன் செய்யும் விண்ணப்பமே–என்பதைக் காட்டி அருளினார் ஸ்ரீ திருவிருத்தத்தில்-
பிரபந்தங்கள் தலைக்கட்டவும் -நாடு நச்சுப் பொய்கை யாகாமைக்கும் -ஆர்த்தி விளைவிக்கவும் -தம் பிள்ளையைப் பட்டினி இட விட்டு
அதிதிகளுக்கு உணவிடுவது போலேவும்-அப்பொழுதே இவர் விண்ணப்பம் செய்தபடி அருள வில்லை
இதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்களை -பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு நாளும் பிரிகிலேன் –ஸ்ரீ பெரிய திரு மொழி -7-4-4-
என்றபடி அவர்களையே தம் திருவிருத்தத்தில் முக்கியமாக அருளுகிறார் –
மச் சித்தா மத் கதா பிராணா போதயந்த பரஸ்பரம் -கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –ஸ்ரீ கீதை -10-9-

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
ஆழ்வாருக்கு தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளை நித்ய ஸூரிகளுக்குப் போலவே இங்கேயே காட்டி அருள
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த ஹர்ஷ அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி
அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

ஸ்வ கீயாம் பகவத் அநுபவே ஸ்போதயாமாச தீவ்ரம் ஆசாம்-பெரிய த்வரை உடன் அவனையே மடி பிடித்து
ஆர்த்தியை வெளியிட்டு அருளுகிறார் இதில் –
விஷய கௌரவரத்தால் இது பெரிய திருவந்தாதி –
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி–56—
அவனுடைய நிர்ஹேதுக கிருபைக்கு அடி அறிய ஒண்ணாதே-காரணம் எதுவாய் இருந்தால் என்ன-
வாழ்ச்சி நன்றாக இருக்கிறது அத்தனை-என்கிறார் இதில்-

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-
உகந்து அருளின நிலங்களை எல்லாம் விட்டு உம்முடைய நெஞ்சில் அன்றோ நித்ய வாஸம் செய்கிறோம் என்ன-
அது கேட்டுத் தேறி
ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்கிறார் இதில்
ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத் தடங்கடலை மேயார் தமக்கு–31-
எம்பெருமானுக்கு நிழலும் அடி தாறும் ஆனோம்-விட்டு நீங்காது அத்தாணிச் சேவகம் செய்யப் பெற்றோம்-
ஆகையாலே கார்யம் கை கூடிற்று –ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய
ஹ்யா கதோ மதுராம் புரிம் -என்றபடி-திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-குடக்கூத்தாடி-அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-
இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறும் ஆனோம்

வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை–60–
வல்வினைகள் அடர்த்தாலும்-தமது அத்யாவசாயம் குலையாமல் இருப்பதை அருளிச் செய்கிறார் இதில்-
நெஞ்சே உனக்கு புதிதாக உபதேசிக்க வேண்டியது இல்லை
அவனை விஸ்வசித்து அவனையே அனுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாய் ஆகில் உகக்கிறேன்
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும்
என்று வெறுத்து இருக்கிறேன் -என்கிறார்
மட நெஞ்சே கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-சம்சாரம் ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாவான் என்றபடி-

மாலார் குடி புகுந்தார் என் மனத்தே – –22-
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீமற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த நீ யம்மா காட்டும் நெறி —-5–
நல்காப்பான் தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-
தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான் தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால் அளக்கிற்பார் பாரின் மேலார்–24-
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-
சீறேல் நீ –2-அபராத ஷாமணம்
உன் அடியார்க்கு என் செய்வேன் என்றே இருத்தி நீ -53-
நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூசசா –

இவ்வாறு பலவாறும் தாஸஸ்த்வம் அருளிச் செய்வதாலும் இது பெரிய திருவந்தாதி –
ஸ்வரூப ஞானம் பெற்று குணக்கடலுள் அழுந்தி குள்ளக் குளிர நீராட கடாக்ஷ லேசத்தாலே
அருளுவான் என்றதை எடுத்துக் காட்டியதால் பெரிய திருவந்தாதி-

அதர்வண வேதம் -5977-வேத மந்த்ரங்களைக் கொண்டது –
உச்சிஷ்டே நாம ரூபம் சோசிஸ்தே லோக ஆஹிதா -ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே
ஸர்வான் காமான் பூரயத்யபவன் பிரபாவன் பவன் ஆஹுதி ப்ரோ அவித்தார்த்ததஸ் சித்திஸ் பான் நோபபதஸ்யதி -566-
அவனே அநாதி -சகல புருஷார்த்தங்களையும் அளிப்பவன்
தோஷோ காயா ப்ருஹத் காயா த்யுமத்தேஹி அதர்வண ஸ்துஹி தேவம் சவிதாரம்-1291-
இரவும் பகலும் அவனது கீர்த்தியைப் பாடி தேஜா மயனான அவனையே தியானிக்க வேண்டும்
சோ அக்னி ச உ சூர்ய ச உ ஏவ மஹாயம ரஸ்மிபிர் நாப ஆப்ருதம் மஹேந்திர ஏத்யாவ்ருத –3695-சர்வ அந்தர்யாமித்வம்
தமிதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகவ்ருதேக ஏவ யா ஏதம் தேவமேகவ்ருதம் வேத (3710)-ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
யோகிகள் மனத்தில் ஸவித்ரு மண்டல வர்த்தி போலே தேஜஸ்ஸுடன் விளங்குகிறான் -5035-
அஞ்ஞானம் போக்கி-மயர்வு அற மதி மலம் அருளுகிறார் -5185-
பூரி தா இந்திரா வீர்யம் -5048-பரஞ்சோதி ரூபம் உபய விபூதி நாதன்
யா ஏக இத் த்வயஸ் சர்ஷணின மீந்திரம் – 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்யஸங்கல்பன் -சர்வசக்தன் -சர்வஞ்ஞன்-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் – ஜகத் ரக்ஷகன் -ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –

————-

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற்பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-என்று தொடங்கி

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-என்று நிகமிக்கிறார் –

இங்கே இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாத அவனது பெருமையை முழுவதும் பேச முடியாதே –
முயற்சியே வேண்டுவதே
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் -குருகூர் நம்பி முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்றாரே

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –தனியன்–

December 31, 2019

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
நல்ல விஷயங்களிலே-முற்பட்டு செல்லுகிற-ஒ மனமே
நான் இப்போது உனக்கு உரைக்கும் விஷயத்தில்
உத்சாகம் கொண்டு-என் நிலைமையை ஆழ்வார் இடம் விஞ்ஞாபித்து

முயற்றி தரித்து –
ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு என்றுமாம்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -என்றே தொடங்கும் பிரபந்தம் –

வந்தித்து வாயார வாழ்த்திச் –
தண்டன் சமர்ப்பித்து-வாய் படைத்தது சபலமாம் படி வாழ்த்தி
வாயார வாழ்த்தியே -வெண்டளை பிறழாத பாடம் –

முருகூரும் -சந்த சோலை சூழ் –
தேன் பெருகுகின்ற சந்தனச் சோலைகள் சூழ்ந்ததும்

மொய்பூம் பொருநல்-
நெருங்கிய-அழகிய-தாமர பரணியை உடையதுமான

குருகூரன் –
திரு நகருக்குத் தலைவரான

மாறன் பேர் கூறு –
நம் ஆழ்வார் உடைய திரு நாமங்களை நீ சொல்லு

முந்துற்ற நெஞ்சே-
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் முன்புற்றது போலே
ஸ்ரீ எம்பெருமானாரது திரு உள்ளம் ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் முன்புற்றதே ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலவே –

என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி — நாண் மலர்ப் பாத மடைந்ததுவே–ஸ்ரீ திருவாய் மொழி-8-2-10-

என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்––ஸ்ரீ திருவாய் மொழி-7-3-4-

என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-7-

காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–49-

தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி–50-

என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி –-ஸ்ரீ திரு விருத்தம்-30-

முயற்றி தரித்து –
முயல்கிறேன் உன் தண் மொய் கழற்கு அன்பையே -ஸ்ரீ கண்ணி–
முயற்றி சுமந்து -என்ற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி

முயற்றி தரித்து உரைத்து –
ஸ்ரீ பெரிய திருவந்தாதியை அருளிச் செய்ததை காட்டி அருளிய படி

என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே––ஸ்ரீ திருவாய் மொழி-6-8-1-என்றபடி -ஸ்ரீ ஆழ்வார் போலவே
ஸ்ரீ ராமானுஜர் பிரிவாற்றாமையால் உரைத்தபடி

முயற்றி தரித்து உரைத்து வந்தித்து
ஞான முத்திரை -திரு மார்பை சேவித்து –

இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-3–என்றால் போலேவும்

கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலேவும்

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்––ஸ்ரீ திருவாய் மொழி-4-10-11-என்றால் போலேவும்

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு––ஸ்ரீ பெரிய திருவந்தாதி-12-என்றால் போலேவும்

அவன் புகழே வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-39—என்றால் போலேவும்

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-84-என்றால் போலேவும்

புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-5-என்றால் போலேவும்

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்ற ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலே
பிரத்யஷே குருவ ஸ்துதியா –என்று வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டுமே –

சந்த முருகூரும் சோலை சூழ்
முருகூரும் சந்த சோலை சூழ்
ஆரப் பொழில் தென் குருகை–ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி –
நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் –ஸ்ரீ திரு விருத்தம் -100-
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் சடகோபன் –ஸ்ரீ திருவாய் மொழி -4-5-11-
குருகூர் சடகோபன் -2-5-11–
நான் கூறும் கூற்றாவது இத்தனையே –ஸ்ரீ பெரிய திருவந்தாதி –46-
சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்––5-9-11–
நாராயணன் நாமங்களே–5-9-10-
நாமம் பராங்குசமோ –இத்யாதி போலே

குருகூரன் மாறன்
குருகூர் நம் மாறன்
நம்மாழ்வார் என்றபடி –

பேர் கூறு –-
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே–5-4-5–
குருகூர் சடகோபன் என்றதுமே கை கூப்பி வணங்குவோம்
எண்டிசையும் அறிய இயம்புகேன் –போலே
குரு பதாம்புஜம் த்யாயேத் குருர் நாம சதா ஜபேத் -குரு சேவாம் சதா குர்யாத் சோம்ருதத்வாய கல்பதே-ப்ரபஞ்சசாரம் –
ஆச்சார்யர் திருவடி தியானித்து -ஆச்சார்ய திரு நாம சங்கீர்த்தனமும் ஆச்சார்ய கைங்கர்யமும் செய்து முமுஷுத்வம் பெறுவோம்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 10, 2019

ஸ்ரீ பெரிய திருவந்தாதி–—அதர்வண வேத சாரமாகும் –

குணங்களால் பெருமை எனபது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஸ்ரீ ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட ஸ்ரீ பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

ஸ்ரீ ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-
மேலும் பல ஸ்ரீ பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-
அந்த அனுபவம்-அந்த ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி அருளுகிறார்
இந்த ஸ்ரீ பிரபந்தத்தில் –

ஸ்ரீ பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -ஸ்ரீ திரு விருத்தம் –
ஸ்ரீ சித்ர கூடம் சென்று ஸ்ரீ பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை ஸ்ரீ திருவாசிரியம்
ஸ்ரீ நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை இந்த ஸ்ரீ பெரிய திருவந்தாதி
ஸ்ரீ திரு அயோத்யைக்கு எழுந்து அருளி பட்டாபிஷேகம் செய்து அருளியைதை கண்டு ஸ்வரூப அனுரூபமான
பேறு பெற்ற நிலை ஸ்ரீ திருவாய்மொழி –

———————–

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற்பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

முயற்றி சுமந்து –
ஸ்ரீ எம்பெருமானை பற்றிப் பேசுகையிலே-உத்சாகம் கொண்டு-பிரயத்னம் படுகை

எழுந்து –
கிளம்பி

முந்துற்ற நெஞ்சே –
அவ்விஷயத்திலே என்னை விட முற்பட்டு இருக்கிற மனமே –
நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டு போது போக்க உசாத் துணை நெஞ்சு ஒன்றே தானே-
இந்த இருள் தரும் மா ஞாலத்தே-யானும் என்நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்பார் மேலே

இயற்றுவாய் –
கார்யத்தை நடத்த வேண்டும்

எம்மோடி நீ கூடி —
நீ தனிப் பட்டு போகாமல் என்னுடன் சேர்ந்து –

இருவரும் கூடி நடத்தவேண்டிய கார்யம் என்ன வென்றால்
நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –
அழகிய காயாம்பூ வில் உண்டான-நிறம் போன்ற நிறத்தை உடையனான
ஸ்ரீ எம்பெருமான் உடைய-திருக் கல்யாண குணங்களை –

நயப்புடைய –
அன்பு பொருந்திய-இது நாவுக்கும் சொல்லுக்கும் அந்வயம்
ஆசை கொண்ட நாவினால்-அன்பு கொண்ட சொற்களால்

நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-
நாவினாலே கனனம் செயப்படுகிற –ஈனுதல் -உண்டாக்குதல் –
சேர்க்கைப் பொருத்தம் உடைய சொற்களாலே-அடக்குவோமாக –
பதங்களுக்கு ஒன்றோடு ஓன்று அமையும் சேர்த்தி அழகு தொடை
பதா நாம் சௌ ப்ராத்ராத நிமிஷ நிஷேவ்யம் ச்ரவண்யோ -ஸ்ரீ குணரத்ன கோசம் –

————————————————————————–

கால ஷேப அர்த்தமாக-ஸ்ரீ பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும்-என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

கார் கலந்த மேனியான்
மேகத்தோடு ஒத்த திரு மேனியை-யுடையவனும்

கை கலந்த வாழியான்
திருக் கையோடு சேர்ந்த திரு வாழியை-யுடையவனும்

பாரளந்த வல் வயிற்றான்-
பிரளய காலத்தில் உலகம் எல்லாம் வந்து சேரப் பெற்ற-வலிய திரு வயிற்றை யுடையவனும்

பாம்பணையான் –
திரு வநந்த ஆழ்வானைப்-படுக்கையாக யுடையவனுமான-ஸ்ரீ எம்பெருமானுடைய

சீர் கலந்த சொல்-
திருக் குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூக்திகளை-
ஸ்ரீ ராமாயணம்
ஸ்ரீ மகா பாரதம்
ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
அருளிச் செயல்கள்

நினைந்து
அனுசந்தித்து

சூழ் வினையின் ஆழ் துயரை -போக்காரேல்-
கொடிய பாபங்களினால் யுண்டாகும்-மிக்க துன்பங்களை போக்கிக் கொள்ளார்கள் ஆகில்-ஒழியட்டும்

என்னினைந்து போக்குவார் இப்போது
வேறு எதை அனுசந்தித்து இந்தப் போதை-போக்குவார்கள்

————————————————————————–

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -பாசுர அவதாரிகைகள் தொகுப்பு —

December 2, 2016

முன் உறைத்த திரு விருத்தம் நூறு பாட்டும் -முறையில் வரும் ஆசிரியம் ஏழு பாட்டும் –
மன்னிய நற்பொருள் பெரிய திருவந்தாதி மறவாத படி எண்பத்து ஏழு பாட்டும்
தம் பேரும் ஊரும்-சொல்லாத பிரபந்தங்கள் திருவாசிரியமும் பெரிய திருவந்தாதியும் –
அர்ச்சா மூர்த்தி மங்களாசானமும் இவை இரண்டிலும் இல்லை
கல்லும் கனை கடலும் -கல் திருவேங்கடம் என்று பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருளினாலும்
-திருவேங்கடத்து மங்களாசாசன பாசுரங்கள் –202–கணக்கில் இது இல்லை என்பர்
உட்கண்ணால் காணும் உணர்வு -அந்தர்யாமித்வமே -பிரதானம் இதில் –
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி -பேயாழ்வார் -94-என்றும்
-உணர்வு என்னும் பெரும் பதம் தெரிந்து -பெரிய திருமொழி -1 -1–1-
பெரிய திரு மடல் -பெரிய திருமொழி -பெரிய திருவந்தாதி
-மூன்று பிரபந்தங்கள் -பெரிய -விசேஷணம்

தம் திரு உள்ளத்துக்கு -36 –பாசுரங்களில் -இதில் -23–நேராகவும் -13 –மறைமுகமாகவும் அருளிச் செய்கிறார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -34-யாம் என்று-ஏக கண்டம் கொண்ட ஆழ்வார்களை சேர்த்து அருளுகிறார் -உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்-68-  -73-
ஆழ்வார் -யாமும் என் உடைமையும் -நீ கொண்ட பின் பூரிக்க கேட்க வேண்டுமோ
திரு உள்ளத்துக்கு சொல்வது போலே நமக்கும் உபதேசித்து அருளுகிறார் –எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே -84-என்றும்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனைச் சொல் மாலை எப்பொழுதும் சூட்டு -65-என்றும் -கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் -67-

பரத்வ ஸுலப்யங்கள்-இரண்டும் உள்ளவன்-இவனே சர்வ ஸ்மாத் பரன்– என்பதை
உணரத் தனக்கு எளியவர் எவ்வளவர் அவ்வளவரானால் எனக்கு எளியவன் எம்பெருமான் இங்கு -29-என்றும்
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை -60-என்றும்
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு -58-என்றும்
இதே போலவே திருமழிசைப் பிரானும் -பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம்
நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே –திருச்சந்த விருத்தம் -101-என்பர் –

Dark Energy -என்று சொல்வதையே -13-பாசுரங்களில் அருளிச் செய்கிறார் -4-14-21–26-34-46-49-63-68-72-73-85-86-
கூர் இருள் தான் -49-என்பர் –
நிகரில் இலகு கார் உருவா நின்னகத்தன்றே புகாரிலகு தாமரையின் பூ -72-என்றும் –கார் கலந்த மேனியான் -86-

திருக் குருகூரில் இன்றும் நம் பெரியவர் -என்றே நம்மாழ்வாரையும் –
அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன் -என்றும் நம்மாழ்வாரை சொல்லுவார்கள் –
ஆழ்வாருடைய மிகப்பெரிய அவா- த்வரையை– வெளிப்படுத்தியதால் -பெரிய திருவந்தாதி -என்றுமாம் –
த்வரை வளர்ந்து பரிபூர்ண அனுபவ பிரகாசத்துக்கு தயார் பண்ணும் திவ்ய பிரபந்தம் -என்றவாறு –

———————————————————————

தனியன் -எம்பெருமானார் அருளிச் செய்தது –

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -ஆழ்வார் பாசுரம் போலே எம்பெருமானாரும் -முந்துற்ற நெஞ்சே -முயற்றி -என்று அருளிச் செய்கிறார் –
என் நெஞ்சு என்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி நாண் மலர் பாதம் அடைந்தது –திருவாய்மொழி -7-3-10-என்றும்
என் நெஞ்சினாரும் அங்கே  ஒழிந்தார் –திருவாய்மொழி -7-3-10-என்றும்
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி -திருவிருத்தம் -30-என்றும்
என் கார் உருவம் காண் தோறும் கண்ணனார் பேர் உரு என்று எம்மைப் பிரிந்து -பெரிய திருவந்தாதி -49-என்றும்
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய் சார்ந்து ஒழிந்தார் –பெரிய திருவந்தாதி -7-
முயற்றி –என்றது -முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே -போலே
தரித்து உரைத்து -என்றது -என் நிலைமை உரைத்து -திருவாய்மொழி -6–8-1-
வந்தித்து -என்றது –இறங்கி நீர் தொழுது பணியீர்-திருவாய் -6-1-3-என்றும் –கண்ணன் தாள் வாழ்த்துவதாய் கண்டாய் வழக்கு —பெரிய திருவந்தாதி -12-
குருகூரன் மாறன் பேர் கூறு -என்றது எண் திசையும் அறிய இயம்புகேன் -போலே –

—————————————————

திருவிருத்தத்தில் –பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று தொடங்கி
அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே -என்று நிகமத்தில்-
அடியேன் செய்யும் விண்ணப்பம் என்று தொடங்கி –மாறன் விண்ணப்பம் செய்த –என்று நிகமித்தார்
பாகவத நிஷ்டை -பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன் -பெரிய திருமொழி -7-4-4-
மச்சித்தா மத்கத பிராணா போதயந்த பரஸ்பரம் -கதயன் தஸ்ய மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமேந்தி ச –ஸ்ரீ கீதை -10–9-

திருவாசிரியத்தில் அவன் தன் ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி சேஷ்டிதங்களைக் காட்டக் கண்டு அவற்றை அருளிச் செய்து மகிழ்கிறார் –

பெரிய திருவந்தாதி —முயற்றி சுமந்து -தொடங்கி —மொய் கழலே ஏத்த முயல் -என்று நிகமிக்கிறார் –

—————————————————-

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற்பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

முயற்றி சுமந்து -இளைய பெருமாள் தண்டகாரண்யத்துக்கு பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முந்துற்று விரைந்தது போலே
ஸுமித்ரிர் பூர்வஜஸ்ய அநு யாத்ரார்த்தே –பவாமஸ்து ஸஹ வைதேஹ்யா கிரி சானுஷூரம்ஸ்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்பதஸ் ச தே —
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாசாய –அக்ரஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதீ குச கண்டகான் —அடி சூடும் அரசு
நாவீன்–என்னால் தன்னைப் பதவிய இன் கவி பாடி
நற்பூவைப்-பூ வீன்ற வண்ணன் புகழ்–பூவைப் பூவை சிஷிக்க வேண்டுமே –

—————————————————-

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

இத்தை ஒட்டியே ஆளவந்தார் –தத்வேன யஸ்ய மஹி மார்ணவ ஸீகராணு–சக்யோ ந மாதுமபி சர்வ பிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய மஹ்யம் நமோஸ்து கவயே நிரபத்ரயாய –ஸ்தோத்ர ரத்னம் -7-

யஸ்ய மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -அவிஞ்ஞாதம் விஜானதாம் விஞாதம் அவிஜா நதாம்-கேனோ உபநிஷத் -2–3

அமதம் மதம் -மத மதா மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம ஸ்துதம் -இதி ரங்கராஜ முத ஜு குஷத் த்ரயீ
-ஸ்துமஹே வயம் கிமதி தம ந சக்நும–ரங்கராஜஸ்த்வம் -1-13-

எங்கள் மால் செங்கண் மால்-தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-சாந்தோக்யம் -1-6-7–இரண்டு மால் ஸுலப்ய பரத்வங்கள்
சீறல் நீ தீ வினையோம்–சீறி அருளாதே -அறியாத பிள்ளைகளோம் அன்பினால் சிறு பேர் அழைத்தனம் போலே
எங்கள் மால் கண்டாய் இவை -நீயே எங்கள் புகழ்வோம் புகழோம் கண்டு கொள் –

——————————————

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா நிறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

அடியேன் பரதந்த்ரன் அன்றோ
கர்மண்யே வாதிகாரஸ தே மா பலேஷூ கதாசந –ஸ்ரீ கீதை -2-47-
மன்மனாபவ மதபக்தோ மத்யாஜீ மாம் நமஸ் குரு மாமேவைஷ்யசி சத்யம் தே ப்ரதிஜா நே ப் ரியோ அஸி மே–ஸ்ரீ கீதை -18-65-

——————————————————–

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று –4-

என்னின் மிகு புகழார் யாவரே-என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் -என்கிறார் -அவனை பார்க்கும் பொழுது எல்லாம் -மேலும்
சீலமில்லா சிறியேனேலும் செய் வினையோ பெரிதால் -என்பர் -தம்மை பார்க்கும் பொழுது எல்லாம் –
என்ன-கருஞ்சோதிக் கண்ணன்-அவனே காட்டக் கண்டவர் அன்றோ
கடல் புரையும் சீலப்-பெருஞ்சோதிக் -அவன் சீல குணத்துக்கு -கடல் கொஞ்சம் ஒப்புமை-
-அவனோ பெறும் சோதி -நாமோ நீசன் நிறை ஒன்றும் இல்லாதவன்
கென்னஞ்சாள் பெற்று-என் நெஞ்சு அன்றோ அவனுக்கு ஆட்பட்டது-
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திரு வேங்கடத்தானுக்கு -நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
-என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே -திருவாய் -3-3-4-

————————————————————-

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய்வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5-

அஸந் நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ் மேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது -தைத்திரயம் ஆனந்த வல்லி -6-

மாதா பஸ்த் ரா பிது புத்ர –சரீரமேவ மாதாபிதரவ் ஜெநயத-ச ஹி வித்யாதஸ் தம ஜெநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜென்மம் –ஆபஸ்தம்ப ஸூ தரம் -1-1-6-
மற்றையார்-ஆச்சார்யர் என்றபடி / பேசில்எற்றேயோ-மாய-நீ செய்த உபகாரகங்கள் சொல்லி முடிக்கவோ –
அந்த மாயத்தில் ஒன்றை –மாய மா மாயவளை மாய முலை வாய்வைத்த-அதே போலே என் பிரதிபந்தகங்கள்
-நைச்ய பாவம் போக்கி -பிரபந்தம் தொடர அருளினாய் –நீ யம்மா காட்டும் நெறி-

———————————————————————-

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-

நெறி காட்டி நீக்குதியோ-நளன் தமயந்திக்கு -ஏஷ பந்தா விதர்பாணாம் ஏஷ யாத ஹி கோசலான் -என்று
விதர்ப தேசம் கோசல தேசம் போக வழி காட்டினால் போலே

நாயாத்மா ப்ரவசனே லப்யோ ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந -யமேவைஷ வ்ருணேத தேந லப்ய-
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் -கதோ உபநிஷத் -1-2-23-

கருமா-முறி மேனி -கதிர் பொருக்கி சிஷித்து -மாந்தளிர் -கருமை கூட்டி /
மேனாள் அறியோமை-அநாதியாக ஸ்வரூப ஞானம் சம்பந்தம் ஞானம் இல்லாமல்
அவிவேகக நாந்த திங்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி–பகவன் பவதுர்த்தி நே பத ஸ்கலிதம் மாம் அவலோகயச்யுத–ஸ்தோத்ர ரத்னம் -49-

——————————————————————–

யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு –7-

ஆழ்வார் தம் இச்சையை வெளியிட்ட அநந்தரம் –அவனே காட்டக் கண்டு ஆழ்வார் திரு உள்ளம் முந்துற்று அவனை அடைந்தது
-என் நெஞ்சினார்-தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார்
அணைக்கப் பெறாமல் –தம்மை -யாமே அருவினையோம் சேயோம்-
ஸ்ரீ தேவி அகலகில்லேன் இறையும் என்று இருந்தாலும் – அதற்கு மேலே பூ தேவியும் இருக்க இழக்கவோ –

—————————————————————

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

பருகலாம்-பண்புடையீர்பண்பு -ஸுலப் யாதி கல்யாண குணங்கள்
-தேனும் பாலும் நெய்யும் கன்னலும்  அமுதும் ஓத்தே -திருவாய் -2-3–1-அன்றோ
திரு உலகு அளந்து அனைவரையும் தீண்டினீர் –பாரளந்தீர்
இருந்தாலும் ஸூ ஷ்மமாய்–பாவியேம் கண் காண்பரிய-நுண்புடையீர்
நும்மை அருகும் சுவடும் தெரி யுணரோம் –நுமக்கு அன்பே-பெருகும் மிக இது என் பேசீர்-என்று
அன்வயித்து பிள்ளை திரு நறையூர் அரையர் நஞ்சீயருக்கு அருளிச் செய்தார் –

————————————————————————–

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9-

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென்
சேஷ பூதன்-சேஷி இடம் மீண்டும் மீண்டும் சம்பந்தம் உணர்த்துவது பிள்ளை அப்பா இடம் நான் உன் பிள்ளை என்று என்று சொல்வது போல் அன்றோ
மாலார்-வ்யாமோஹமே வடிவானவர் அன்றோ –
ஆர்த்தோ வா யதி வா திருப்த பரேஷாம் சரணாகத -அரி ப்ராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா-யுத்த -18–28-
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் –எமக்கினி-யாதானும் ஆகிடு காண் –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -நாச் திரு -13–9-
ஈர்ஷ்யா ரோஷவ் பஹிஷ்க்ருத்ய புக்த சேஷ மிவோ தகம்–நய மாம் வீர விஸ் ரப்தே பாபம் மயி ந வித்யதே –அயோத்யா -27-8-
அவர் திறத்தே-யாதானும் சிந்தித்து இரு
-ப்ரஹ்மாத்மகமான வஸ்துவே இல்லையே -அவன் உபேக்ஷித்து நமக்கு அவனைக் காட்டாவிடிலும்–இத்தையே சிந்தித்து கால ஷேபம் பண்ணலாமே –
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே –திருவாய் -4-1-3-
ஒரு ஞான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே –-நாச் திரு -13-9-

——————————————————————

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

ஏ பாவம்வள வேழ் உலகம் தலையெடுத்து அணுக ஒட்டாமல் பண்ணுவதே
எண்மர் பதினொருவர் ஈரருவர் ஓரிருவர் -முப்பத்து மூவர் –த்ரயஸ் த்ரிம் ஸத்வை தேவா —

—————————————————————-

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-

ஜெகதாகாரன் -சர்வ நியாம்யன் –விரோதி நிரசன சீலன் -தன்னையும் மீள வைத்து பாட அருளினதில் வியப்பு இல்லையே –
இதை -பார்த்தால் – வல்லரக்கன் இன்னுயிரை-வாழா வகை வலிதல் நின் வலியே –அது ஒரு விஷயமோ –

—————————————————————-

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்-வள வேழ் உலகம் நிலை உன்னால் அன்றோ என்ன
-நெஞ்சு -முந்துற்ற நெஞ்சே –யாமே சேயோம் என் நெஞ்சினார் சார்ந்து ஒழிந்தார் -என்றீரே -என்ன
-யார் குற்றம் என்று பார்க்க வேண்டாம் -மேல் உள்ள காலம் எல்லாம் –கண்ணன் தாள்-வாழ்த்துவதே கண்டாய் வழக்கு-

————————————————————————–

வழக்கொடு மாறுகொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டு இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-

ஓடு வழக்கு அன்று மாறுகொள் வழக்கு அன்று -நீ அவதரித்து அனுஷ்டித்துக் காட்டினாலும் சம்சாரிகள் திருந்த மாட்டார்கள்
-தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ளார்கள்-
அடியார் வேண்ட-இழக்கவும் காண்டு இறைவ -உன்னை அழிய மாறியும் அடியார்கள் அபேக்ஷித்ங்களை நிறைவேற்றி அருளுகிறாய் –
இறைவா -நீ ஸ்வாமி என்றவாறு -ஆகிலும் —யான் வேண்ட-எம்மை ஆட் கொண்டுஎன் கண்கள்-தம்மாற் உன் மேனிச்சாய்–காட்டாய் –
யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை சோகாபி கர்சிதை ஸம்ஸ்ப்ருசேயம் சகாமாஹம் ததா குரு தயாம் மயி –சுந்தர -40-3-
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -நாச் திரு -13–9
இவ்வுலகில் இவ்வுடம்போடு இப்பொழுதே இவ்வுலக கைங்கர்யம் கொடுத்து அருள வேண்டும் என்கிறார் –

———————————————————————

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

நீ யார் -பூதனை பேயாகி இருந்து செய்த செயலை விட மனுஷ்ய ஜென்மத்தில் இருந்து -அவன் நீல மேக ஸ்யாமளமான
வடிவைக் காட்ட -மீண்டும் வள வேழ் உலகு தடையெடுத்து விலகுவது -அவளிலும் கீழ்ப் பட்டவன் அன்றோ –
தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–சப்தாதி விஷயங்களை சுவைப்பார் போலே -இழக்கவோ –

———————————————————-

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம்மேனிக் கண் வளர்வார் சீர்–15-

உறங்குவான் போல் யோகம் செய்து அருளி –ஓதம் ஆர்த்து -தம் திரு மேனி தாள் தடவ -நாம் பாடுவதால் அவத்யம் வராதே –

—————————————————————

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

மஹதா தபஸா ராம மஹதா சாபி கர்மணா ராஜ்ஞ்ஞா தசரதே நாசி லப்தோ அம்ருதமிவாமரை -ஆரண்ய -66-3-போலே அல்லவே ஸ்ரீ வாமநவதாரம் –
தன்னை அழிய மாறி ரஷித்த ஸ்ரீ வராஹ ஸ்ரீ வாமன அவதாரம் அனுபவித்து- எத்திறம் -மோகித்து -தெளிந்து அவனையே சொல்லக் சொல்கிறார் –
ஜென்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் வேத்தி தத்வத-த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி சோர் ஜு ந –ஸ்ரீ கீதா -4–9 –
அவனே திவ்யம் என்பான் -அவதார ரகஸ்யம் –அஜாய மாநோ பஹூ தா விஜாயதே தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோநிம்-புருஷ ஸூ க்தம்–27-

———————————————————

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாமிடிய
தாள்வரை வில்லேந்தினார் தாம்–17-

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்-வாழ்ந்திடுவர்--எதிர் சூழல் புக்கு -பல அவதாரங்கள் எடுத்து
வந்தாலும் அவஜாநந்தி மாம் மூடா -என்று சம்சாரிகள் அலட்சியம் செய்தாலும் -கவலைப்படாமல் முயன்றோம் என்றே இருப்பவன் அன்றோ
பின்னும் தாம் வாய் திறவாதார் –
ஸ்ரீ வசன பூஷனத்தில் மூன்றாம் பிரகரணத்தில்
பிராட்டி ராஷசிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதது போலே தனக்கு பிறர் செய்யும் குற்றங்களை
-பகவத் பாகவத் விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் -என்று அருளிச் செய்த பின்-அறிவிக்க உரியவன் அகப்பட
வாய் திறவாதே-சர்வஜஞன்- விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது இ றே -என்று அருளிச் செய்தது இப்பாசுரத்தைக் கொண்டேயாம்
மா முனிகள் வியாக்யானம்
எதிர் சூழல் புக்கு என்றபடியே-தன்னுடைய சீல சௌலப் யாதிகளைக் காட்டி
சம்சாரி சேதனர்களை தப்பாமல் அகப்படுத்திக் கொள்வதாக-வந்து அவதரித்து
தமக்கு அடியார் வேணும் என்று அபேஷித்தால்-இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்
நாம் இதற்க்கு உறுப்பாக பெற்றோமே இ றே என்று-அது தானே போக்யமாக விரும்புவர்
அதற்கு மேல்
அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்கள் என்று-அவர்கள் குற்றத்தை பிராட்டிமார்க்கும் தனி இருப்பிலே அருளிச் செய்யார் என்கிற
-சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டிலே-சேதனர் செய்த குற்றங்களை தன திரு உள்ளத்தில் உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு
பிராப்தனான சர்வேஸ்வரனும் உட்பட-தன் திருப்பவளம் திறந்து அருளிச் செய்யாதே
தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் அறிய வல்ல சர்வஜ்ஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்று சொல்லா நின்றது இ றே-
அன்றிக்கே–
சூழ்ந்து எங்கும்-வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாமிடிய-தாள்வரை வில்லேந்தினார் தாம்-அடியார்-சூழ்ந்து
வேண்டினக்கால் தோன்றாது -விட்டாலும்-வாழ்ந்திடுவர்-அநந்ய பிரயோஜனர்கள் -பெருமாள் சேவை சாதிக்கா விடிலும்
-நாம் சொத்து -அவன் ஸ்வாமி -முறை உணர்ந்து அவன் ஆஜ்ஜை படியே வாழ்ந்திடுவார் -என்றவாறு –

———————————————————————-

தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18-

தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இளக-பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் —யசோதை காட்டியதால் வந்த தழும்பு ஒன்றும் இல்லை என்னும் படி அன்றோ காளியன் படுத்திய பாடு
உன் தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–நானும் உனக்கு பழ வடிமை -சேஷி சேஷ -சம்பந்தம் அநாதி அன்றோ –

————————————————————————–

சொல்லில் குறையில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

குழந்தை பருவ ரக்ஷணம் கீழே சொல்லி வளர்ந்த பின்பு பாண்டவ ரக்ஷணம் -ஸ்ரீ கீதை அருளும் பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் -64-வயசு என்பர்

————————————————————————–

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

நம்மில் அவன் அவா–குளப்படியும் கடல் போன்றதும் அன்றோ –நாணப்படும் அளவு அன்றோ –

————————————————————————–

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-

வெந்நரகம் -சம்சாரம் / -வள வேழ் உலகு தலை எடுத்து கூடாமல் இருப்பதுவும் –

————————————————————————–

காலே பொதத்திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-

மாலார் குடி புகுந்தார் என் மனத்தே-அரவத்தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து

————————————————————————-

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –

————————————————————————-

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

தானே தனித் தோன்றல் -அஜாயமானோ பஹுதா விஜாயதே -இச்சையால் பல அவதாரங்கள்
தன் அளப்பு ஓன்று இல்லாதான்-ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் –ஏஷ தை ஆத்மா அந்தர்யாம் யம்ருத-ப்ருந்தாரண்யாகம் -5-7-

————————————————————————–

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத்தலை வன்துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான் —25-

வணங்கும் துறைகள் -நின் கண் வேட்கை எழுவிப்பேனே–திருவிருத்தம் -96-
ஓ ஓ உலகீனது இயல்வே –திருவாசிரியம் -6-
நாம் தப்பித் பிழைத்தோம் -என்கிறார் இதில் –

————————————————————————–

யானும் என்நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம்மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-

இசைவே நம் கர்தவ்யம் -அவன் கிருபை அருள் –இரக்கமே உபாயம் –

————————————————————————–

அடியால் படிகடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

இசைந்து ஒழிந்தோம் என்றதும் அருள் என்னும் தண்டால் பெற்ற அனுபவம் –உடைமையை பெற்ற ஸ்வாமி
– திருமுகம் தேஜஸ் கண்டு அருளிச் செய்கிறார் –அடியால் படி கடந்த முக்தன் –மாணிக் குறள்-முத்து என்றுமாம் –
செறி கழல் -நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் –திருவிருத்தம் -50-திருவடியில் திரு முடியிலும் முத்துக்கள்
உண்டே / சிலம்பும் செறி கழலும் –பேயார்-90-

————————————————————————–

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

பக்தி பரம பக்தியாக பரிணமித்தால் அன்றி ஆழியான் கார் உருவம் காண இயலாதே -மயில்கண் பீலி போலே தானே புறக்கண்-

————————————————————————–

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறுதுறக்கம் -பரிபாடல்
தேஷாம் ஜ்ஞ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே ப்ரியோ ஹி ஜ்ஞானிநோ அத்யர்த்தம் அஹம் ச ச மம ப்ரிய -ஸ்ரீ கீதா -7-17-
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பார் –நாச் திரு -11-10-

————————————————————————–

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-

————————————————————————–

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-

————————————————————————–

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது–32-

தமக்கு அடிமை வேண்டுவார்–ஆச்ரித பாரதந்தர்யம் -காட்டுவானே-கைத்தது உகப்பார் -புளித்தது உகப்பார் என்னுமா போலே
-இத்தை அன்றோ தாமோதரன் வெளிப்படுத்தி அருளினான் –
இப்படி இருந்தும் -எமக்கென்று-தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர்ஏவகாரம்-இவற்றையே என்றவாறு –

————————————————————————–

யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

யாதானும் ஓன்று அறியில் -அனைத்துக்கும் அந்தர்யாமி அன்றோ –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
தன் உகக்கில் என் கொலோ –-தன்னை உகக்கில் அவன் நம்முள்ளும் இருப்பதால் அவனை உகப்பது ஆகும் அன்றோ
இப்படி இருந்தும் -யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான்-அனைத்தும் அவனதாக இருந்தும்
இப்படி யாதானும் அவனுக்கு என்று நேர்ந்தால் -போதுமே
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத் தழுவி
என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ –என்றதுமே
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க கண்கள் ஆயிரத்தாய் –-என்றாரே –

————————————————————————–

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-

கிடந்தோர் கிடக்கை -என்றே இறே ஆழங்கால் படுவார்கள் -/ காலாழும்கால் -கர்ம இந்திரியங்களுக்கு உப லக்ஷணம் /
கண் சுழலும் -கண் ஞான இந்திரியங்களுக்கு உப லக்ஷணம்
காலும் எழா கண்ணா நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலும் எழா மயிர்க் கூச்சம் அறா என் தோள்களும் வீழ் ஒழியா
மால் உகளா நிற்கும் என் மனனே –பெரியாழ்வார் -5-3-5-
அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ —திருமாலை -19-
கண்ணனைக் கண்ட கண்கள் பனி  யரும்புதிருமாலோ -திருமாலை -18-

————————————————————————-

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என்நெஞ்சு அகலான் -அன்று அம்கை
வன்புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
ஆன்புடையன் அன்றே அவன்–35-

——————————————————————–

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-

பரதஸ்ய வச குர்வன் யாசமா நஸ்ய ராகவ ஆத்மாநம்நாதி வர்த்தேதா ஸத்ய தர்ம பராக்ரம–அயோத்யா -111-7-
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூ ஹ்ருசஸைவ ஜனார்த்தன -ஹரிஸ் த்ரை லோக்ய நாதஸ் ச கின்னு தஸ்ய ந நிர்ஜிதம்-வனபர்வம் -49–20-

————————————————————————–

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யதுவுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ -பந்தாய விஷய சங்கி முக்த்யை நிர்விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-
ஸ்திரமாக மங்களா சாசனம் பண்ணுவதே கர்த்தவ்யம் என்றவாறு –

————————————————————————–

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-

————————————————————————–

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39–

————————————————————————–

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-

யஸ் த்வயா ஸஹ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா-இதி ஜானன் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ –அயோத்யா -30-18-
வாழ்த்தே வலி-அவன் திருக் கல்யாண குணங்களை வாழ்த்துதலில் ஸ்திரமாக இரு –

————————————————————————–

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-

வில் விழா -சாணூர முஷ்டிக மல்லர் நிரசனம் –
பூமவ் ஸ்திதஸ்ய ராமஸ்ய ரதஸ் தஸ்ய ச ராக்ஷஸ -ந சமம் யுத்தம் இத்யாஹூர் தேவ கந்தர்வ கின்னரா–யுத்த -102–5-

—————————————————————-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

ரஷ்ய ரக்ஷக பாவம் / கார்ய காரண பாவம் / சரீர சரீரீ பாவம் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலா நிதி சாந்த உபாஸீத –சாந்தோக்யம் -3-14–1-

——————————————————————-

அவயம் என நினைந்து வந்த சுரர்பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத்துயரை மாய்க்கும் வகை–43-

யதாவத் கதிதோ தேவைர் ப்ரஹ்மா ப்ராஹா தத ஸூரான்-பரா வரேசம் சரணம் வ்ரஜத் வம ஸூ ரார்த்தனம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9–35-
அவயம் -அபயம் என்றவாறு / கவை -சங்கை / மனத்து உயர வைத்து இருந்து –அவனே ப்ராப்யம் -ப்ராபகம் -தாரகம் -போஷகம் -போக்யம்-
பரிபூர்ணமாகக் கொண்டு மங்களாசாசனம் பண்ணுகை –

——————————————————————–

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இதுவன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

சத்வாத் சஞ்சாயதே ஞானம் ரஜஸோ லோப ஏவ ச -பிரமாத மோஹவ் தமஸோ பவதோ அஞ்ஞான மேவ ச –ஸ்ரீ கீதை -14-17-
மேலைத் தாம் செய்த வினை-முன் செய்த கர்மம் என்றும் -மேலே செய்யப் போகும் கர்மம் -பிரக்ருதியிலே இருப்பதால் -என்றுமாம் –

————————————————————————–

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி-முன்னமே –இங்கு இல்லை -30-என்றும் வானோ மறி கடலே -54-
-இங்கே வினையார் முன் செய்த கர்ம வினைகள்
தொழுது -மனம் காயம் –இறைஞ்சி -வாக்கால் -/ பொன்னடிக்கள் -ப்ராப்யம் -ப்ராபகம் இரண்டும்

————————————————————————–

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங்கண் மால் -நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

————————————————————————–

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47-

————————————————————————–

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

————————————————————————

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருரு என்று எம்மைப் பிரிந்து –49-

————————————————————————–

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மாவாய் பிளந்தார் மனம்–50-

————————————————————————–

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு –51-

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர்–ஆத்மா மனசை ஆண்டு இந்திரியங்களை ஆளாமல் –இவை மனசை ஆள -மனாஸ் ஆத்மாவை ஆளுவது போலே
இன்னதனை த்ரவ்யத்தை அரசு செய்வாரைக் கிடைக்கும் என்னும் வன்னியரைப் போலே -லஞ்சம் கொடுத்து ஆட்சியாளரை ஆளும் கயவர் போலே -என்றவாறு
த்யாயதோ விஷயான் பும்ஸஸ் சங்க ஸ் தேஷூ பஜாயதே -சங்காத் சஞ்சாயதே காம காமத் க்ரோதோ பிஜாயதே –ஸ்ரீ கீதை -2–62-
இன்னம் கெடுப்பாயோ –பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ –சிற்றின்பம்

————————————————————————

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண்ணவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

பேய் முலை நஞ்சு ஊணாக உண்டான் -பொய்கையார் -11-

———————————————————————

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

ஆரேனுமாகத் தெளிந்தார் கலங்கினார்க்குச் சொல்லக் கடவது இ றே –வ்யாமோஹத்தால் கலங்கின அவனுக்கு அறிவிக்கிறார்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸினம் -ருணம் ப்ரவர்த்தமிவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதே-உத்யோக பர்வதம் -47-22–
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்-சித்தத்துக்கு இடை நிற்குமோ சாத்தியம் -என்றார்
காரார் புரவி யேழ் பூண்ட தனி யாழி தேரர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு ஆராவமுதம் அங்கு எய்தி
அதின் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே -அது நிற்க – முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –சிறிய திரு மடல்

————————————————————————

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் – கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54

வன் துயரை மருங்கும் கண்டிலமால் -உம்மை தொகை –ஒருங்கிற்றும்

————————————————————————–

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மனக்கவலை தீர்ப்பார் வரவு –55

ப்ரஜாபதிஸ் த்வம் வேத ப்ரஜாபதிம் த்வோ வேதயம் ப்ரஜாபதிர் வேத ச புண்யோ பவதி —அவனாலே காட்டக் காண வேண்டுமே

————————————————————————–

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

————————————————————————–

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இ க்கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-

வளை யுகிராளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஓர் உகிரால் பிளவெழ விட்ட குட்டமது
வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே -கலியன் -11–4–4-

————————————————————————–

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

சாவித்ரி சத்யவான் விருத்தாந்தம் போலே –மறப்பின்மை யான் வேண்டும் மாடு -என்று கேட்க்கிறார்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருப்பவருக்கு மறப்புத் தான் உண்டோ என்னில்
பிரகிருதி சம்பந்தம் உடையோருக்கு வருவது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார் -ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால்-
நம் அகம் ஒன்றும் பிழைக்கும் என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –

————————————————————————–

மாடே வரப் பெறுவாராம் என்றே வல்வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

———————————————————————–

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60-

————————————————————————

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-

சிறியாச்சான் நம்பிள்ளை இடம் -சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதாப் போலே
ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் என்று பணித்தானாம் –

————————————————————————–

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

————————————————————————–

பின் துரக்கும் காற்று இலோந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

வாய்மைத்து –என்பதை வாய்மையின் -என்றோ வாய்மைத்து படி என்றோ கொண்டு -பெருமாள் ராவண வத அநந்தரம்
திருப் பாற் கடல் சென்று சயனித்த படி -அன்றிக்கே இருந்த படி உபமேயம் சொல்லி உவமானம் பின்பு என்றுமாம் –

————————————————————————-

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனாய் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழவே கலந்து–64-

————————————————————————–

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல்மாலை எப்பொழுதும் சூட்டு–65-

———————————————————————–

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

ப்ரஹ்ம தண்ட ப்ரகாசானாம் வித்யுத் சத்ருச வர்ச்சஸாம் ஸ்மரன் ராகவ பாணானாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர –யுத்த -60-3-

———————————————————————–

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

——————————————————

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–68-

கல் திரு வேங்கடம் –தம் பாம்பு -நாச் திரு -10-3-ஆதி சேஷன் –
சவ்பரி   ஐம்பது பெண்களோடு கலந்து பொருந்த இடத்தில் தம் மக்களை தனித் தனியே உனக்கு குறை இல்லையே என்று கேட்க
என்னுடன் பிறந்தாரை ஒருத்தரையும் அறியாதே எப்போதும் என்னுடனே இருக்கும் இதுவே வெறுப்பு -வேறு ஒரு குறை இல்லை என்று சொன்னால் போலே –
ஆழ்வார் திரு உள்ளம் மற்று வேறு ஓன்று அறியாதாப் போலே ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்தான் –

————————————————————————

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

தாதூனாம் இவ சைலேந்தரோ குணா நாமா கரோ மஹான் –கிஷ்கிந்தா -15–21-தாரை பெருமாளை சொன்னால் போலே –

——————————————————————

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர்ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதேயினி–70-

—————————————————————–

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் சாஸ்வதம் சிவம் அச்யுதம்-என்றும் –
ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித-ப்ரஹ்ம மம ஆஸ்ரிதோ ராஜன் -நாஹம் சஞ்சிது பாச்ரித-
வலத்தனன் த்ரி புரம் எரித்தனன் –

—————————————————————–

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

த்ரி மூர்த்தி சாம்யவாதிகள் / த்ரி மூர்த்தி உத்தீர்ண வாதிகள் / த்ரி மூர்த்தி ஐக்கிய வாதிகள் /
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ ஓன்று மா கடல் உருவம் ஒத்து நின்ற மூ உருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகில் உருவம் எம்மடிகள் உருவம் தானே -திரு நெடும் தாண்டகம் -2-
ஸ்ருஷ்டி ஸ்திதி அந்தகரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மகம் ச சம்ஜ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-66-
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே சர்வே சம்ப்ரஸூயந்தே –
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதமாவதார -தத் சாம்யத ஸ்தகயிதம் தவ சேத் ஸ்வரூபம் -கிம் தே பரத்வ பி ஸூ நைரிஹ ரங்க தாமன்
-சத்வ ப்ரவர்த்த நக்ருபா பரிபால நாத்யை -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -2–51-
த்ரயோ தேவாஸ் துலயா -த்ரி தயமித மத் வைதம் அதிகம் -த்ரி காதைஸ் மாத் தத்த்வம் பரமிதி விதர்க்கான் விகடயன்
விபோர் நாபீ பத்மோ விதி சிவ நிதானம் பகவத -ததன்யத் ப்ரூபங்கீ பரவதிதி சித்தான் தயதி ந –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம்-1-16-

————————————————————————–

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

————————————————————————–

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –74-

அவருக்கு நீர்மை இல்லை என்னப் போகாது இ றே -அவர் நீர்மை ஏறிப் பாயாத தோர் இடம் தேடி எங்கே கிடந்தோம் –

————————————————————————–

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-

————————————————————–

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப்படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

கீழே செவியின் வழி புகுந்து —ஸ்ரவணம்–இதில் அந்த ஞானம் சிந்தனை த்யானம் –
அவன் ஸ்வரூபமே விபு -ஆத்மாவின் தர்ம பூத ஞானம் தானே விபு

——————————————————————-

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

————————————————————————–

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78

————————————————————————-

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழி விற்றானாலும் ஆழியங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசு இ றே –ஆச்சார்ய ஹிருதயம் –சூர்ணிகை -81-இதற்கு மா முனிகள் வியாக்யானம்
ஆழியங்கைப்-பேராயற்கு ஆளாம் பிறப்பு -உண்ணாட்டுத் தேசன்றே-என்கிறபடியே பகவத் விமுக பிரசுரமாகையாலே
புற நாடான லீலா விபூதி போல் அன்றிக்கே -பகவத் ஆநு கூல்ய ஏக போக ரசத்தில் நெருங்கி போக விபூதியாய் –
அவனுக்கு அந்தரங்கமாய் இருக்கிற பரமபதத்தில் வர்த்திக்கிற தேஜஸை யுடையது இ றே என்கை
பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி
சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ் கரம் என்று கருத்து –
யத்தூரே மனசோ யதேவ தமச பாரேயதத் யத்புதம் -யத் காலாத் அபசேளிமம் ஸூ ரபுரீ யத் கச்சதோ துர்கதி ஸாயுஜ் யஸ்ய யதேவ
ஸூ திரதவா யத் துர்க்ரஹம் மத்கிராம்-தத் விஷ்ணோ பரமம் பதம் தவ க்ருதேமாத சமாம் நாசி ஷூ -ஸ்ரீ குண ரத்ன கோசம் -21-
ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே ஐஸ்வர்யம் வா அபி லோகாநாம் காமயே ந த்வயா விநா–அயோத்யா -3-5-
வாஸூதேவ மநோ யஸ்ய ஜபஹோமார்ச்ச நாதி ஷூ தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ரத்வாதிகம் பதலம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6–41-

——————————————————————

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

ஜரா மரண மோஷாயா –ஸ்ரீ கீதை -7-29-/ பிறவித் துயர் அற மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்று இவை மாயத்தோம் -திருவாய் -8-3-2-
குறுகா நீளா இறுதி கூடா எனையூழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும் -மறுகால் இன்றி மாயோன் உனக்கே யாளாகும்
சிறு காலத்தை யுறுமோ அந்தோ தெரியிலே –திருவாய் -6-9-10—கைவல்ய பரம் –

——————————————————————–

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவைமே யார் தெரிந்து–81-

———————————————————————–

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்
சம்ஜ் ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம நிர்மல மேக ரூபம் சந்த்ருச்யதே வாயபதி கம்யதே வா
தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்நிய துக்கம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-87-
தத் கர்ம யன்ன பந்தாய சா வித்யா யா விமுகத்தயே ஆயாசாயா பரம் கர்ம வித்யா அந்நிய சில்பநை புணம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9–41-
வாளா-இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் –குனியாக் குறுணி பற்றும் காலம் எல்லாம் வியர்த்தமே இருந்தேன்
கரந்த உருவின்-அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை-அம்மானை ஏத்தாது அயர்த்து-அன்று மாயமானை பின் தொடர்ந்த
பெருமாளுக்கு -இளைய பெருமாளும் இல்லாமல் தனியான இருப்பில் கைங்கர்யம் செய்யாது ஒழிந்தேனே-
ஆழியங்கை -இது ஒன்றே கைகேயி வாங்காமல் இருந்த ஆபரணம் –
பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு
அதின் மேலே எழுந்து அருளினார் என்று ஒருவன் கவி பாடவும் எம்பெருமானார் கேட்டு அருளி மாறியிடுகிற திருவடிகளில்
என் தலையை வைக்கப் பெற்றிலேன் என்று எம்பெருமான் அருளிச் செய்தார் என்பர் –

———————————————————————

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வல்வினனை வாழ்த்து –83-

———————————————————————

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால்கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும்தங்கு–84-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்-தாழ்த்தி இரு கை கூப்பு என்றால்  கூப்பாத–மநோ வாக் காயங்கள் -ஆகிய – முக்கரணங்களாலும்
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே–எங்கு சென்றாகிலும் கண்டு -திருவாய் -6-8-5-/ பாழ்த்த விதி-அயோக்கியன் என்று அகலுகை-

——————————————————————

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

மேகங்களோ உரையீர் -திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் -திருவிருத்தம் -32-
உயிர் அளிப்பான் மாகங்கள்எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம் ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள் பெற்றதே –

—————————————————————–

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

கார் கலந்த மேனியான் சொல் -ஸ்ரீ மத் ராமாயணம் -மேஹா ஸ்யாமம் மஹா பாஹும்
கை கலந்த வாழியான் சொல் -ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ மத் பாகவதம்
பார் கலந்த  வல்வயிற்றான் சீர் கலந்த சொல் -புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் -முகில் வண்ணன் –
சொல் நினைந்து போக்காரேல்--திரு நாமங்களை

——————————————————————

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

திண்ணியதாக இருக்கும் திருவடிகள் என்றவாறு -ரக்ஷணத்திலே தீக்ஷை கொண்டு –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -11-20–திவ்யார்த்த தீபிகை –

October 7, 2014

(நாழாலமர் முயன்ற.) அநந்யப்ரயோஜநரான நம்மை உபேக்ஷிக்கின்ற எம்பெருமானுடைய சிந்தனை இனி நமக்கு ஏதுக்காக?
அவனைக் குறித்துப் பாசுரஞ் சொல்வதுதான் இனி நமக்கு எதுக்கு? இனி நாம் வாயை மூடிக்கொண்டு கிடப்போம்- என்றிருக்கப் பார்த்தார் ஆழ்வார்;
எம்பெருமான் அவரை அப்படியே இருக்கவொட்டவில்லை; பாசுரம் பேசவே தூண்டிவிட்டான்; இதென்ன அற்புதம்!
நாம் வாயை மூடிக் கிடப்போமென்று பார்த்தாலும் பரவசமாகவே வாய் பேசத் தொடங்குகின்றதே!
நமது முயற்சி இல்லாதிருக்கச் செய்தேயும் வாய்பேச எழும்புகிறதென்றால் இது யாருடைய செயலாக இருக்கவேணுமென்று ஆராய்ந்தார்;
”***- தோ விநாத்ருணாக்ரமபி ***- (அவ்வெம்பெருமானையொழியத் துரும்பும் எழுந்தாடாது”) என்றிருப்பதனாலே,
அவ்வெம்பெருமானே இனி செய்விக்கிறானாக வேண்டும்;
அவன்றான் மறைந்து உறைந்திருந்து நம் வாயைக் கிளப்புகிறான் போலும் என்று நிச்சயித்து
‘இனி நாம் இவன் விஷயமாக வாய் திறப்பதில்லை’ யென்று உறுதியாக நாம் கொண்டிருந்த எண்ணத்தைப் போக்கி
வாயைக் கிளப்புகின்ற இவனுடைய ஸாமர்த்தியத்தை நாம் என்ன சொல்வோம்! என வியப்புற்று,
பண்டு இராவணமென்பானோரரக்கன் ‘நான் யார்க்கும் தலை சாய்ப்பதில்லை; நிமிர்ந்த தலையைக் குனியவேமாட்டேன்’ என்று
கொண்டு இறுமாப்புடனிருந்த நிலைமையைத் தொலைத்து அவனைப் பங்கப்படுத்தினான் இப்பெருமான் என்று
எல்லாரும் மிக்க புகழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே. அந்தோ! இஃதொரு புகழ்ச்சியோ இவனுக்கு?
இராவணனது உறுதியைக் காட்டிலும் வலிதான எனது உறுதியைச் சிதைத்து என்னை வாய்திறக்கப் பண்ணாநின்ற
இப்பெருமானுக்கு அது ஒரு அருந்தொழிலோ? என்று ஈடுபட்டு எம்பெருமானையே நோக்கி இதனைப் பேசுகிறார்.

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-

பதவுரை

ஆழாத பாரும் நீ–(நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ–ஜலதத்வமும்*;
தீயும் நீ–தேஜஸ்தத்வமும் நீ;
காலும் நீ–வாயுதத்வமும் நீ;
வானும் நீ–ஆகாசமும் நீ;
ஆய் நின்ற நீ–இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாகவுடைய நீ,
நாழால் அமர் முயன்ற–அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கைவைத்த
வல் அரக்கன்–கொடிய இராவணனுடைய
இன் உயிரை–இனிமையான பிராணனை
வாழா வகை–வாழ்ந்திருக்க ஒட்டாமல்
வலிதல்–கவர்ந்து கொண்டது
நின்வலியே–உனக்கு ஒரு சூரத்தனமோ? அல்ல.

நாழால் அமர் முயன்ற –வணங்கா முடித்தனம் ஆகிற அஹங்காரத்தால் யுத்தம் செய்வதில் கை வந்த / வல்லரக்கன்-கொடிய ராவணனுடைய -/ இன்னுயிரை –
இனிமையான பிராணனை -/ வாழா வகை வலிதல் -வாழ்ந்து இருக்க ஒட்டாமல்
கவர்ந்து கொண்டது/ நின் வலியே -உனக்கு ஒரு சூரத் தனமோ –வலியே -ஏகாரம் -வலி அல்ல என்றபடி

ஆழாத பாரு நீ –நீரில் அழுந்தாது இருக்கிற பூமியும் நீயே /வானு நீ காலு நீ தீயு நீ நீரும் நீயாய்-நீரும் தீயும் காலும் வானும்–ஜல தத்வமும்-தேஜஸ் தத்வமும்-வாயு தத்வமும்-ஆகாச தத்வமும் நீ- / நின்ற நீ -இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாய் நின்ற நீ

விருத்தமான விபூதிகளைச் சேர விட்டு அனுபவிக்கிற உனக்கு என்னைச் சேர விடுகை ஒரு பணியோ
விபூதி சாமான்யங்களுக்கு நிர்வாஹகனாய்-அவற்றைச் சொல்லும் சப்தங்கள் உன் அளவில் வரும்படி நிற்கிற உனக்கு-உனக்கே அசாதாரணமாய்
உன்னால் அல்லது செல்லாதவர்களை சேர விடுகை ஒரு பணியோ
யஸ்ய பிருத்வி சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -என்று வேதங்கள் சொல்லக் கூடிய உனக்கு
அருமை என்று-சொல்லக் கூடிவது இல்லையே-

(திருமாலே!,) “ஆழாத பாரும் நீரும் தீயும் காலும் வாலும் நீயாய் நின்ற நீ,
நாழலமர் முயன்ற வல்லாக்கனின்னுயிரை வாழாவகை வலிதல் நின்வலியே?” என்று அந்வயம்.

மண் நீர் எரி காற்று ஆகாயம் என்கிற பஞ்ச பூதமுமாய் நிற்கிற நீ என்றதற்குக் கருத்து யாதெனில்;
“விருத்தமான விபூதிகளைச் சேரவிட்டு அநுபவிக்கிறவுனக்கு என்னைச் சேரவிடுகை ஒரு பணியோ;
விபூதி ஸாமாந்யங்களுக்கு நிர்வாஹகனாய் அவற்றைச் சொல்லுகிற சப்தம் உன்னளவும் வரும்படி நிற்கிற வுனக்கு,
உனக்கே அஸாதாரணமாய் உன்னலல்லது சொல்லாதவர்களைச் சேரவிடுகை பணியோ வென்றுமாம்” என்பது
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

மண்ணானது நீரில் கரைந்துவிடும்; நீரானது தீயை அணைத்துவிடும்; இப்படி பரஸ்பரம் விருத்த ஸ்வபாவங்களான
பஞ்சபூதங்களை ஒன்று சேர சரீரமாகக் கொண்டு = யஸ்ய ப்ருதிவீ சரீரம். யஸ்ய ஆபச்சரீரம்” என்று வேதங்கள் ஓதும்பட நிற்கிறவுனக்கு
அருமையென்று சொல்லக்கூடிய காரியம் ஒன்றுமேயில்லை என்றவாறு. ஆனாலும், நீ அருமையான காரியங்களைச் செய்கிறவன் என்று
பாராட்டிச் சொல்ல வேண்டுமானால் என்னுடைய உறுதியைப் போக்கடித்து என்னை வாய்திறக்கப் பண்ணின இக்காரியமொன்றே
அருமையாகப் பாராட்டிச் சொல்லவுரியது; என் உறுதியைக் காட்டிலும் லகுவான உறுதியையுடையரான இராவணாதிகளைப்
பங்கப்படுத்தினாயென்பதை அருந்தொழிலாகப் பலரும் பாராட்டிச் சொல்லுகிறார்களே, அது பயனற்ற சொல் என்றாராயிற்று.

நாழாலமர்முயன்ற என்றது – வணங்கா முடித்தனமாகிற அஹங்காரதோஷத்தினால் உன்னை எதிரிட்டுச் சண்டை செய்வதாக
ஒருப்பட்டு வந்த என்றபடி அப்படிப்பட்ட வல்லரக்கனுண்டு- பெருமிடுக்கனான இராவணன், அவனுடைய தித்திப்பான பிராணனை
அந்த சரீரத்தில் வாழவொட்டாமல் கவர்ந்து கொண்டது உனக்கு மிடுக்கோ? வலியே என்ற ஏகாரம்- வலியல்ல என்பதைக் காட்டும்.
என்னுடைய உறுதியைப் போக்கினது வலியேயன்றி அவனது உயிரைப் போக்கினது வலியல்லகாண் என்கை.

———————————————————————

(நீயன்றே யாழ்துயரில்.) கீழ்பத்தாம்பாட்டில் “திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம் நன்நெஞ்சே!,
நாமா மிகவுடையோம் நாழ்” என்று சொல்லி எம்பெருமானிடத்தில் நின்றும் பின்வாங்கப் பார்த்ததை நினைத்துக்கொண்டு.
அப்படியும் நமக்கொரு எண்ணம் தோற்றிற்றே! என்ன கஷ்டகாலம்!;
ஏகஸ்மிந்நப்யதிக்ராந்தே முஹூர்த்தே த்யாநவர்ஜிதே- தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திலும் க்ருணாம்”
(எம்பெருமானுடைய சிந்தனையில்லாமல் ஒரு க்ஷணகாலம் கழிந்து போனாலும், ஸர்வஸ்வத்தையும் கள்வர் கவர்ந்தால்
எப்படி முட்டிக்கொண்டழுவர்களோ அப்படி ‘பழுதே பல பகலும் போயின’ என்றும்
‘ஊமனார் கண்ட கனவிலும் பழுதாயொழிந்தன கழிந்தவந்நாள்கள்’ என்றுங் கதறியழவேண்டும்) என்று சொல்லிக்கிடக்கிறதே;
‘எம்பெருமானைச் சிந்தியாமலே யிருந்து விடுவோம்’ என்கிற ஒரு கெட்ட எண்ணம் நமக்கு உண்டாயிற்றே!
அந்த எண்ணமே நமக்கு நிலைத்திருக்குமாகில் துக்க ஸாகரத்திலேயன்றோ நாம் மூழ்கிக் கிடக்க வேண்டியதாகும்;
எம்பெருமான் றானே அருள் செய்து அந்த எண்ணத்தை ஒழிக்கவே இப்போது தேறினோம்;
அவன் அருள் செய்யாவிடில் ஆழ்துயரில் அழுந்தியே போயிருப்போமே” என்றிப்படியெல்லாம் பலவாறாக வருத்தமுற்று,
‘இந்த கெட்ட எண்ணம் நமக்கு உண்டானதற்கு எது காரணம்?’ என்று பார்த்தார்;

மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ:” என்று எல்லாவற்றுக்கும் நெஞ்சுதான் காரணமென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே
நமக்கு இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் தோன்றினது நெஞ்சில் குற்றமேயாம் என்று நிச்சயித்து.
அந்த நெஞ்சோடே வாது செய்யத் தொடங்கினார்- நீயன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய் என்று அதாவது-
“திருமாற்கு யாமார் வணக்கமா! ஏபாவம்!” என்று சொல்லி அகன்று துன்பக்கடலில் நான் விழுந்தேனாம்படி
என்னைக் கொலை செய்யப்பார்த்து பாவி நீயன்றோ நெஞ்சே! என்றார்.
யத் மனஸா த்யாயதி தத் வாசா வததி-என்றும் –
மன பூர்வோ வாக்குத்தர-என்றும்
நீ இல்லாமல் வாய் சொல்லுமா-நீராக நன்னெஞ்சே சொன்னீரே -என்ன
முந்துற்ற நெஞ்சே -என்றும் சொன்னீரே-இயற்றுவாய் எம்மோடு நீ கூடி என்று நியமித்து-
இப்பொழுது வாய் பேசினால் தடுக்காமல் இருந்தது என்ன என்று கேட்பது என்ன-பகவத் அனுபவ குணத்துக்கு உசாத் துணையாம்படி-
இப்படி வாத பிரதிவாதங்கள் நியமித்தேனே ஒழிய-வீண் பேச்சுக்கள் ஒழியட்டும் என்கிறார்
நெஞ்சு விநேதயமாக நின்று  ஸ்வாமி என்ன நியமனம் என்ன-உபதேசம் தரினும் நீ என்றும் காழ்த்துக் கைக் கொள்ளாய் என்ன-ஷமிக்க வேணும்
அடியேன் கர்த்தவ்யம் ஸ்பஷ்டமாக அருளிச் செய்ய வேணும் என்ன
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு –அயோக்யா நுசந்தானம் பண்ணாமல்-
எம்பெருமான் நம்மைத் தேடித் திரிவானாக-நாம் விமுகராய் பின் வாங்கலாமா-அவன் திருவடிகளை வாழ்த்துவதே பிராப்யம் -காண் -என்கிறார்

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
ஆழ் துயரில்–அநாதமான துக்க ஸாகரத்தில்
வீழ்விப்பான்–என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக
நின்று உழன்றாய் நீ அன்றே-இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீயன்றோ;
(என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயேயன்றோ.)
(உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்வித்துக் கொள்ளுகிறீர்’ என்ற நெஞ்சு பதில் சொல்ல
போய் ஒன்று சொல்லி என்–மேன்மேலும் நீயொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ–அது கிடக்கட்டும்.
உபதேசம்தரினும்-(எம்பெருமானுக்கு நம்பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும்
நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய்–நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை;
(உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல)
போய் ஒன்று சொல்லி என்-மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ–அது கிடக்கட்டும்.
(இப்போது முடிவாகச்சொல்கிறேன் கேள்;)-
கண்ணன் தான்–எம்பெருமானது திருவடிகளை
வாழ்த்துவதே–வாழ்த்துவதுதான்
வழக்கு–நியாயம்
(கண்டாய் – முன்னிலையசை)

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்-நெஞ்சே
ஒ மனமே-அநாதமான துக்க சாகரத்தில்-என்னைக் கொண்டு போய் தள்ளுவதாக
இடைவிடாமல் நின்று-யத்னம் பண்ணினது நீ அன்றோ

நான் இல்லை நீரே உம்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்-என்று நெஞ்சு பதில் சொல்வதாக கொண்டு-
போ என்று சொல்லி என்-
மேன்மேலும் நீ ஓன்று நான் ஓன்று
வாத பிரதிவாதங்கள் போலே சொல்லுவதனால் என்ன பயன் / போ-அது கிடக்கட்டும்

உபதேசம் தரினும்-எம்பெருமானுக்கு நம் பக்கல் வாத்சல்யம் உண்டு என்று உனக்கு நான் உபதேசித்தாலும்-
நீ என்றும் காழ்ந்து கைக் கொள்ளாய்-நீ என் மேல் கோபம் கொண்டு-என்றைக்கும்
அந்த உபதேசத்தைக் குறிக் கொள்ளுகிறாய் இல்லை-காழ்த்து-– கோபித்தல் உறைத்து பேசுதல்-த்ருடமாக நான் உபதேசித்தாலும் –

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு -எம்பெருமான் திருவடிகளை-வாழ்த்துவதே நியாயம்-
கண்டாய் -முன்னிலை அசை –

இதைக் கேட்ட நெஞ்சானது ஆழ்வாரை நோக்கி “ஓய்! என்ன சொன்னீர்? நானா உம்மை ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றது,
ஸாஹஸமாக நீர் இப்படி சொல்லிவிடுவது யுக்தமன்று, ‘திருமாற்கு யாமர் வணக்கமார்‘ என்று சொன்ன பாசுரத்தை
மறுபடியும் ஆலோசித்துப் பார்த்து வார்த்தை சொல்லும்“ என்று சொல்லிற்று.

அதுகேட்ட ஆழ்வார், ‘நெஞ்சே‘ எது நீ ப்ரமாதமாகக் கத்துகிறாய், “யத் மநஸா த்யாயதி, தத் வாசா வத்தி“ என்றும்.
மந, பூர்வோ வாகுத்தர.“ என்றும் ‘நெஞ்சு எதை நினைக்கிறதோ அதை வாய் சொல்லக்கடவது‘ என்றுதானே சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது,
அனுபவமும் அப்படி தானேயுள்ளது, ஆனபின்பு நீ யில்லாமல் என் வாய்தானே? “திருமாற்கு யாமார் வணக்கமார்“ என்று சொல்லிவிட்டதோ? என்றார்.

இதைக் கேட்ட நெஞ்சானது, “ஆழ்வீர்! நீர் சொன்ன பாசுரத்தை மறுபடியும் சொல்லிப்பாரும்;
“திருமாற்கு பாமார் வணக்கமார் ஏபாவம் நன்னென்சே” என்றன்றோ சொல்லியிருக்கிறீர்;
நன்னெஞ்சே! என்று என்னை அழைத்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீரே யொழிய உமக்கு நான் யாதொன்றும் சொல்லவில்லையே;
நீராகவே என்னையழைத்து அயோக்கிதாநூஸந்தாநம் பண்ணிவிட்டு, இப்போது “நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்” என்று
என் தமலைமேல் பழி சுமத்துவது என்ன தருமம்!’ என்று சொல்லிற்று.

அது கேட்ட ஆழ்வார், ‘நன்னெஞ்சே! என்று உன்னை நோக்கி நான் சொன்னேனென்பது உண்மையே;
அதை நான் இல்லைசெய்ய வரவில்லை; நான் ‘யாமார் வணக்கமார்’ என்ற தப்பாகச் சொன்னால் அதை நீ ஏன் தடுக்கக்கூடாது?’
அதற்கு நீ இசைந்தாயன்றோ; ஆகையாலே “நீயன்றோ ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்” என்று நான் சொல்லுகிறேன்’ என்றார்.

அது கேட்ட நெஞ்சானது, ‘ஆழ்வீர்! பூர்வோத்தர விருத்தமாக நீர் இப்படி வார்த்தை சொல்லுவது உசிதமல்ல;
முதலிலேயே நீர் என்னையழைத்து “முயற்சி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று
உம்மோடே வடிக் காரியம் செய்யும்படி எனக்குக் கட்டளையிட்டீர்; ‘நான் சொன்னால் அதை நீ தடுப்பதற்கென்ன?’ என்று இப்போது சொல்லுகிறீர்;
நான் போகிற வழிக்கே நீ தலையாட்டவேண்டியதென்று எனக்கு நீர் முன்னாடியே நியமித்துவிட்டு இப்போது அதற்கு விருத்தமாகச் சொல்லுவது யுக்தமன்று’ என்றது.

அது கேட்ட ஆழ்வார், ‘நெஞ்சே! நான் எப்போதும் விருத்தமாக ஒன்றும் சொல்லமாட்டேன்; “இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று
நான் சொன்னது உண்மையே; என்ன காரியத்திற்கு உன்னை நான் உடன்படச் சொல்லியிருக்கிறேன் தெரியுமா?
“நயப்புடையநாவீன் தொடைகிளவியுள்” பொதிவோம் நற்பூவைப் பூவீன்றவண்ணன் புகழ் என்றுதானே நான் சொன்னது;
பகவத்குணாநுபவத்திற்கு உசாத்துணையா யிருக்கும் படி உனக்கு நியமித்தேனே யொழிய “திருமாற்குயாமார் வணக்கமார்” என்கிற
அயோக்யதாநுஸந்த்திற்கோ உன்னை நான் துணை கூட்டினது?’ என்றார்;
இதைக் கேட்ட நெஞ்சானது, அதற்கும் ஏதோ மறுமொழி கூறுவதாகத் தொடங்க, அவ்வளவிலே ஆழ்வார்
‘இந்த வாத ப்ரதிவாதங்களுக்கு முடிவு எங்கே? இந்த வீணாண கக்ஷி ப்ரகக்ஷி வார்த்தைகளால் என்ன பயன்?’ என்று
நினைத்து நெஞ்சை நோக்கி, ‘போய் ஒன்று சொல்லி என் போ நெஞ்சே! = போதும் போதும்; நான் ஒன்றுசொல்ல நீ ஒன்று சொல்ல
இப்படி மேன்மேலும் வாத ப்ரதிவாதங்களை வளர்த்துக் கொண்டு போவதில் என்ன பலன்? இந்த வீண் பேச்சுகள் ஒழியட்டும் என்கிறார்.

அதற்குமேல் நெஞ்சானது ஆழ்வாரை அடிபணிந்து விநயமுடன் நின்று ‘ஸ்வாமிந்! அடியேன்மீது தேவரீர்க்குச் சீற்றம் வேண்டா;
அடியேன் தேவரீர்க்கு நிதேயனான சேஷபூதன்; ஆன பின்பு அடியேன் தேவரீர்க்கு உகப்பாக எப்படி நடந்து கொள்ள வேணுமோ
அப்படி உததேசித்தருளீர்; அதன்படியே நடந்து கொள்கிறேன்’ என்ன;
அதற்கு ஆழ்வார். “உபதேசம் தரிநம் நீ என்றும் காழ்த்துக் கைக்கொள்ளாய்= நெயஞபுசே! என் உபதேசத்தை நீ லக்ஷியம் பண்ணுகிறாயோ?
இதுவரை உனக்கு எத்தனையோ உத்தேசங்கள் செய்தாயிற்று. ஒன்றையும் நீ கைக் கொண்டாயில்லை; நீர் என்ன எனக்கு உபதேசிக்கிறது?’
என்று சீறி உதறித்தள்ளிவிடுகிறாய்” என்று சொல்ல;
அதற்கு நெஞ்சானது ‘ஸ்வாமி! இதுவரை அடியேன் ஒருநாளும் இப்படி அபசாரப்பட்டதில்லை; பட்டிருந்தாலும் க்ஷமிக்கவேணும்;
இப்போது அடியேனுக்குக் கர்த்தவ்யத்தை ஸ்பஷ்டமாக உபதேசித்தருளீர்’ என்று வேண்ட,
அதற்கு உதபேசிக்கிறார் கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு என்று. நானம் ஒரு நாளும் அயோக்யதாநுஸந்தாநம்
பண்ணி அகலப் பார்க்கலாகாது; எம்பெருமான் நம்மையே தேடித் திரிவானாயிருக்க. நாம் விமுகராய்ப் பின்வாங்கலாமோ?
அவன் திருவடிகளை வாழ்த்துவதே நமக்கு ப்ராப்பதம்காண் என்றாயிற்று.

காழ்த்து – காழ்த்தலாவது கோபித்தல். உறைப்பாகச் சொல்லுதலுக்கும் பேருண்டு; அப்போது, காழ்த்து உபதேசம் தரினம் –
உனக்க நான் த்ருடமாக உபதேசிமத்தாலும் என்றவாறு. கைக்கொள்ளய் – முன்னிலை யெதிர்மறை வினைமுற்று.

————————————————————

(வழக்கொடு மாறுகொளன்று.) கீழ்ப்பாடடி“ல் “கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு” என்று
திருவுள்ளத்திற்கு உபதேசித்தபடியே எம்பெருமானை வாழ்த்தத் தொடங்கினார்;
வாழ்த்துவதென்றால் விஷயத்தைக் கண்ணாலே நன்கு கண்டு வாழ்த்த வேணுமே;
அப்படிக்கு அவனுடைய திவ்யமங்கள விக்ரஹ ஸேவை கிடைக்கவில்லை ஆழ்வார்க்கு;
அது கிடைக்காமல் என்னவென்று வாழ்த்துகிறதென்று தடுமாறு, எம்பெருமானை நோக்கி
‘இறைவனே! உன் வடிவழகை அடியேனுடைய கண்களுக்குக் காட்டியருளவேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.

வழக்கொடு மாறுகொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டு இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-

பதவுரை

வழக்கொடு மாறுகொள் அன்று–(இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று;
(அஃது என்னவெனில்)
அடியார் வேண்ட–(மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில்
இழக்கவும் காண்டும்–(மேன்மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்;
இறைவ–ஸ்வாமீ!
இழப்பு உண்டே–(என்வேண்டுகோளை நிறைவேற்றுதற்காக) கஷ்டப்படவேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை)
யான் வேண்ட–என்னுடைய வேண்டுகோளுக்காக
எம் ஆள் கொண்டு ஆகிலும்–என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது
என் கண்கள் தம்மால்–எனது கண்களுக்கு
உன்மேனி சாய்–உனது திருமேனியின் ஒளியை
காட்டு–காட்டியருள வேணும்

வழக்கொடு மாறுகொள் அன்று-
இப்போது அடியேன் விஞ்ஞாபிக்கிற விஷயம்-நியாயத்தோடு மாறு பட்டது அன்று–அஃது என் என்னில்-
அடியார் வேண்ட-
மேன்மக்களை நோக்கி கீழோர் ஓன்று பிரார்த்தித்தார்கள் ஆகில் –
சேஷ பூதர் சேஷியை அபேஷிக்க-நம் அடியார்கள் அன்றோ /இழக்கவும் காண்டு-மேன்மக்கள் கஷ்டப் பட்டாகிலும்
கார்யம் செய்வதை உலகில் காண்கிறோம் -உமக்கு இழப்பு உண்டோ-நீர் மெய்யே அடியரோ -என்ன /இறைவ
ஸ்வாமி -/ இழப்புண்டே–என் வேண்டுகோளை நிறை வேற்றுவதற்காக
நீ கஷ்டப் பட வேண்டியது ஏதேனும் உண்டோ-ஒன்றும் இல்லை –

எம்மாட் கொண்டாகிலும் –
எம்மை அடிமை கொண்டாகிலும்-என்னை அடிமை நீரே கொண்ட பின்
எத்தைக் கொண்டு என்ன / யான் வேண்ட-என்னுடைய வேண்டு கோளுக்காக –
ரஷ்ய அபேஷிதம் ப்ரதீஷதே-வாயாலே ஸ்வாமி இறை என்றேனே-உகந்து உம்முடைய அபேஷிதம் என்ன –
என் கண்கள் தம்மாற் -எனது கண்களுக்கு -கண்கள் தமக்கு /காட்டுன் மேனிச்சாய்
உனது திரு மேனி ஒளியைக் காட்டி அருள வேணும்-

வழக்கொடுமாறுகொளன்று- அடியேன் பிரார்த்திக்கிற விஷயம் வழக்கோடு மாறுகொண்டதன்று; வழக்காவது நியாயம்;
நியாயத்தோடு மாறுபட்டதன்று; நியாத்திற்கு ஒவ்வாததை அடியேன் விண்ணப்பம் செய்கின்றிலேன்;
நியாயமானதையே சொல்ல வருகின்றேனென்றபடி.

வார்த்தை சொல்லத் தொடங்கும்போதே இன்ன விஷயமென்று சொல்லாமலே ‘அநியாயமாக நான் ஒன்றும் சொல்லவரவில்லை’ என்று
ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், ஆழ்வீர்! நீர் சொல்வது நியாயமோ அநியாயமோ விஷயத்தைக் கேட்டன்றோ நான் தெரிந்து கொள்ள வேண்டும்;
சொல்ல நினைத்த விஷயத்தைச் சொல்லிக்காணீர்’ என்ன;
அடியார் வேண்ட இழக்கவுங் காண்டும் என்கிறார். அதாவது-
சேஷபூதராயுள்ளவர்கள் சேஷியைநோக்கி ஏதாவ அபேக்ஷித்தார்களாகில் சேஷியானவன் தான் நஷ்டப்பட்டாகிலும்
சேஷபூதர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றக் காணாநின்றோம் உலகத்தில்- என்றபடி (அடியார் வேண்ட இழக்கவுங் காண்டும்.)
‘நம்முடைய அடியார்களன்றோ நம்மை வேண்டுகிறார்கள்; இவர்களுக்கு நாம் உயிரைவிட்டாகிலும் பரிந்து காரியம் செய்ய வேண்டாவோ’
என்று நெஞ்சுகனிந்து, பொருளையோ உடலையோ உயிரையோ எதையேனும் இழப்பதற்கும் இசைந்து
தங்கள் பேறாகக் காரியஞ் செய்யக் காண்கிறோமிறே என்கை.

இப்படி ஆழ்வார் சொன்னதைக் கேட்ட எம்பெருமான், ‘ஆழ்வீர்! நன்றாகச் சொன்னீர்; உமக்காக என்னை உயிரிழக்கச் சொல்லுகிறீரோ இப்போது;
வார்த்தை அழகாயிருக்கிறது!’ என்றான்.

எம்பெருமான் இப்படி திருவுள்ளங் கன்றினாற்போல் அருளிச்செய்வதைக் கேட்ட ஆழ்வார் அநுதபித்து இறைவ! இழப்புண்டே? என்கிறார்.
அதாவது- உலகில் நடக்கிறபடியை ஏதோ நான் எடுத்துக்காட்டினேனேயொழிய,
தேவரீருக்கு இழவு உண்டாகவேணுமென்று அடியேன் சொன்னேன் அல்லேன் ; தேவரீர் எதையும் இழக்க வேண்டா- என்கை.

இதுகேட்ட எம்பெருமான், “ஆழ்வீர்! உலகத்தில் தலைவராயுள்ளவர்கள் அடியார் விஷயத்தில் உயிர் முதலியவற்றை இழந்தாகிலும்
காரியம் செய்கிறார்களென்று எடுத்துக்காட்டின் உம்முடைய கருத்து எனக்குத் தெரியாமையில்லை; நீர் மறைப்பதில் என்ன பயன்?
உம்முடைய எண்ணப்படி நான் எதைவேணுமானாலும் இழந்து காரியம் செய்யத் தடையில்லை;
“அடியார் வேண்ட இழக்கவுங்காண்டும்” என்று நீர் சொல்லியிருக்கிறீர்; நீர் மெய்யே அடியாராகிலன்றோ நான் காரியம் செய்வேன்;
நீர் அடியவர்தானோ?’ என்று கேட்டான்.

அதற்கு ஆழ்வார் எம்ஆட்கொண்டாகிலும் என்கிறார். நான் அடியவனோ அல்லேனோவென்று உனக்கு ஸந்தேஹமிருக்குமானால்
நீயே என்னை அடியவனாக்கிக் கொண்டாவது காரியம் செய்ய வேணும் என்கை.
எதைக்கொண்டு உம்மை நான் அடியவராக்கிக் கொள்வதென்று எம்பெருமான் கேட்க; அதற்கு ஆழ்வார் யான் வேண்ட என்கிறார்.
ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே” என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது; ரக்ஷ்யனுடைய அபேடிக்ஷயை மாத்திரமன்றோ ரக்ஷகனான நீ எதிர்பார்த்திருப்பது;
நான் இப்போது அபேக்ஷிக்கிறேனன்றோ; இவ்வளவையேகொண்டு காரியம் செய்யலாமே என் வாயால் உன்னை இறைவ! என்று சொன்னேனே;
என்னுடைய அடிமைக்கு இசைந்ததுதானே உன்னை இறைவனென்றேன்- என்றார்.

அது கேட்ட எம்பெருமான் ‘இந்த விபூதியில் இவ்வளவு வார்த்தை சொல்லுவார் ஆர்?’ என்று ஆச்சரியப்பட்டுத் திருவுள்ளமுவந்து
‘ஆழ்வீர்! உமக்கு என்னால் ஆக வேண்டிய காரியம் என்ன? சொல்லும்’ என்ன;
என் கண்கள் தம்மால் காட்டு உன்மேனிச்சாய் என்கிறார்.
உனது திருமேனியின் சாயலை என்கண்களுக்குக் காட்டவேணுமென்னுமிவ்வளவே நான் வேண்டுவது என்றாராயிற்று.

கண்கள்தம்மால்- உருபு மயக்கம்; கண்கள் தமக்கு என்க. அன்றி, மூன்றாம் வேற்றுமைப்பொருளைக் கொண்டு, உன் மேனிச்சாயை
என் கண்களால் நான் காணும்படி செய் என்றுரைக்கவுமாம். சாய் = (சாயா) என்ற வடசொல் சாயை எனத் திரிந்து சாய் எனச் சிதைந்தது.

இப்பாட்டுக்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிய வியாக்கியானத்தில் சிறிதுவேறுவகையான பொருள் கொள்ளப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது.
அப்பொருளை வல்லார்வாய்க் கேட்டுணர்க.

—————————————————————–

(சாயற்கரியானை.) கீழ்ப்பாட்டில் “காட்டு உன்மேனிச் சாய்” என்று வடிவழகைக் காட்டுமாறு பிரார்த்தித்தார்;
அப்படியே இவர்க்கு வடிவழகைச் சிறிது காட்டுவோமென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினான்;
அஃதறிந்த ஆழ்வார் ‘அயோக்யனாகிய நான் பரம்பொருளை அநுபவிக்கப் பார்ப்பது தகுமோ?’ என்று பழையபடியே நைச்சியம் சிந்தித்து
‘நெஞ்சே!’ பகவத் விஷயத்தை நீ அநுபவிக்கப் பார்ப்பது அதனைக் கெடுக்கிறபடியன்றோ;
பண்டு பூதனை யென்பவள் அவ்வெம்பெருமானைக் கிட்டி அவனைக் கெடுக்கப் பார்த்ததை ஒக்குமன்றோ உனது நினைவும்;
அந்தப் பூனையொடு உனக்கும் உறவுறை உண்டு போலும்’ என்கிறார்.

ஐந்தாம் பாட்டிலும் பூதனை விருத்தாந்தம் உண்டே–

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
பேயார்–பூதனையானவள்,
சாயல் கரியானை–நிறத்தால் கரியனான கண்ணபிரானை
உன் அறியார் ஆய்–உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய்
(அப்பெருமானைக் கொன்றுவிட நினைத்து)
பேயார் ஆய்–அறிவுகெட்டவளாய்
முலை கொடுத்தார்–(விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்;
நீ ஆர்–அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆகவேண்டும்?
(இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;)
தேம்பு ஊண் சுவைத்து–ஆத்மா கெட்டுப்போம்படியான சப்தாதி விஷய போகங்களை நீ அநுபவித்து
ஊன் அறிந்து அறிந்தும்–(அதனால்) ஊனமடைந்திருக்கிறாயென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும்
போய்–நம்முடைய தாழ்வுக்குத் தகாததான சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய்
தீ வினை ஆம்பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி–அநர்த்தத்தை விளைக்கவல்ல பாம்பின் வாயிலே கை வீட்டுவாரைப் போலலே
பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே.

சாயல் கரியானை-நிறத்தால் கரியனான கண்ணபிரானை / உள்ளறியாராய்
உள்ளே புகுந்து அனுபவிக்க அறியாதவளாய்-இவன் சாஷாத் பரம புருஷன் நாம் யார் இவனை அழிக்க முயல்வது -உண்மையைத் தெரிந்து கொள்ளாதவளாய் என்றுமாம்

நெஞ்சே –ஒ மனமே -/ பேயார் –மீண்டும் பேயராய்-என்றது ஞான ஹீனராய் –
அறிவு கெட்டவளாய் -பெருமை தோன்ற பேயார்
உவப்பிலும் உயர்விலும் சிறப்பினும் செறலிலும் இழிப்பிலும் பால் திணை இழுக்கினும் இயல்பே -நன்னூல் சூத்ரம்
கோபத்தினால் இந்த இழிவு செயலை விளக்க ஆழ்வார் உயர் திணையில் அருளிச் செய்கிறார்/
முலை கொடுத்தார் –
விஷம் தடவின முலையை-உண்ணக் கொடுத்தாள்

பேயராய்--நீ யார் -அவளுக்கு உறவு முறையில் நீ என்ன ஆகவேண்டும்-அவளுக்கு முன் பிறந்தாயோ-பின் பிறந்தாயோ -இப்படி கேட்பது -/ தேம பூண் சுவைத்த-தேம்பு ஊண் சுவைத்து-ஆத்மா கெட்டுப் போம்படியான-சப்தாதி விஷய போகங்களை நீ அனுபவித்து –ஊன் அறிந்து அறிந்தும் –அதனால் ஊனம் அடைந்து இருக்கிறாய்
என்பதை நன்றாக நீ அறிந்து இருந்தும் –போய்த்-தன்னுடைய தாழ்வுக்கு மிகவும் தகாததான சிறந்த-பகவத் விஷயத்தை அனுபவிப்பதே போந்து / தீ வினையாம் பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி –அனர்த்தத்தை விளைக்க வல்ல பாம்பின் வாயிலே
கை நீட்டுவாரைப் போலே-பகவத் அனுபவம் பண்ணி-முடியப் பார்க்கிறாயே
அயோக்யர் நாம் அவனை அனுபவிக்கப் பார்ப்பது அவனுக்கு அவத்யம்
நமக்கும் ஸ்வரூப நாசம் -உணரானால்-அதனால் பூதனைக்கு உறவாக இருக்க வேண்டும் என்கிறார்-பூதனை கார்யத்தால் அவனுக்கு ஒன்றும் ஆகாதது போலே
இதுவும் அதி சங்கை
பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே-பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை -இறே-உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய சூரிகளோடு ஒக்கும் இறே
பாம்பின் வாய் என்னாமல் பாம்பர் வாய் -என்றது திணை வழுவமைதி
ஆர் -விகுதி கொடுமையின் கனத்தைக் காட்டும்
பார்த்தி முன்னிலை ஒருமை வினைமுற்று
இரா ஈற்றான இந்த வெண்பா முடிவு சாந்தஸ பிரயோகம் போலே போற்றத் தக்கது-

பேயார் சாயால்கரியானை உள்ளறியாராய் பேயராய் முலை கொடுத்தார் = பேய்ச்சி முலை கொடுத்த வரலாறு ஐந்தாம் பாட்டினுரையிற் காணத்தக்கது.
“பேய் முலை கொடுத்தது” என்றாவது, “பேய்ச்சி முலைகொடுத்தாள்” என்றாவது சொல்ல வேண்டிருக்க,
பேயார் என்றும் கொடுத்தார் என்றும் பெருமை தோற்றக் கூறியது என்? எனில்;
“உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்புனும் பால்திணை இழுக்கினுமியல்பே” என்பது நன்னூற் சூத்திரம்.
ஆழ்வார்க்கு அப் பேய்ச்சியினிடத்துள்ள கோபத்தினாலும் அவளுடைய இழிவை விளக்க வேண்டியும் பெயார் என்றாரென்க; பெருமைப்படுத்திக் கூறினாரல்லர்.

சாயால் கரியானை என்றது- கரியசாயலையுடையனான கண்ணபிரானை என்றபடி. சாய் -(சாயா) என்ற வடசொற் சிதைவு;
நிறம் எனப்பொருள்படுமிங்கு.
உள் அறியாராய் = இதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம்;
நிறமழகிய பெருமானை நாம் கிட்டி நல்ல எண்ணத்துடன் பக்தியைச் செலுத்தி உள்ளூற அநுபவிக்கலாமென்று ஆசைப்படாதவளாய் என்னுதல்;
(அன்றி.) உள் அறியாராய் = உண்மையைத் தெரிந்து கொள்ளாதவளாய்; ‘இவன் ஸாக்ஷாத் பரமபுருஷன்; இவளைத் தொலைக்க நம்மாலாகாது; நாம் தொலைந்திடுவோமேயன்றி இவனைத் தொலைக்க நாமோர்?’ என்று உண்மையுணராதவளாய் என்னுதல்.

பேயராய் முலை கொடுத்தார் = விவேகமற்றவளாய் முலைகொடுக்கிற வியாஜத்தாலே அப்பெருமானை அழிக்கப்பார்த்தாள் என்கை.
“உள்ளறியாராய்” என்றவளவே போதுமாயிருக்க, மீண்டும் “பேயராய்” என்றது அவளுடைய ஞான ஹீனத் தன்மையை நன்கு விளக்குதற்காகவாம்.

இங்ஙனே பூதனை செய்த செயலைச் சொன்னவுடனே “நீ யார்?” என் கையாலே ‘அந்தப் பூதனைக்கு நீ என்ன ஆக வேண்டும்?
அவளுக்கு நீ முன்னே பிறந்தாயோ? பின்னே பிறந்தாயோ?’ என்று கேட்பதாகப் பொருள்படுகின்றது.

நெஞ்சை நோக்கி நீ யார்? என்று கேட்ட ஆழ்வாரைப் பார்த்து அந்த நெஞ்சானது,
‘ஆழ்வீர்! படுபாவியான பூதனை செய்தாற்போலே நான் என்ன கொடுந் தொழில் செய்து விட்டேன்?
எனக்கு அவளை ஒப்புக் கூற வேண்டிய காரணம் யாது? சொல்லீர்” என்று கேட்க; அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார்
‘தேம்பூண் சுவைத்து ஊனறிந்தறிந்தும் தீவினையாம் பாம்பார்வாய் கைநீட்டல் பார்த்தி’ என்று.
ஊண் என்று இவ்விடத்தில், வியாந்தரங்களைச் சொல்லுகிறது. உண்ணப்படுவது ஊண்;
சப்தாதி விஷயங்கள் செவிவாய் கண் முதலிய இந்திரியங்களினால் உண்ணப்படுதல் (அநுபவிக்கப்படுதல்) பற்றி அவை ஊணெனப்படும்.
தேம்புதலாவது நாசமடைதல். தேம்பூண் என்றது- ஆத்மா நசிக்கும்படியான விஷயாந்தரங்கள் என்றபடியாயிற்று.
பகவத் விஷயத்தை அநுபவித்தாலே ஆத்மா ஸத்தை பெறுவதற்கு ஹேது வென்றும்,
மற்ற விஷயங்களை அநுபவித்தல் ஆத்மா நாசமடைவதற்கு ஹேதுவென்றும் உணர்க.
இப்படிப்பட்ட விஷயங்களைச் சுவைக்கையானவது இனிதாக அநுபவித்தல். அப்படி அநுபவிப்பதனாலே உண்டாவது ஊன்;
ஊநம் என்ற வடசொல் ஊனென்று கிடக்கிறது; குறைவு என்று பொருள்;

நெடுநாளாக விஷயாந்தரங்களை அநுபவித்து வருவதனாலே நீ மிகவும் குறைவு அடைந்துவிட்டாய்; (அதாவது) அயோக்யனாய்விட்டாய்;
இந்த அயோக்யதை உனக்குத் தெரியாமையில்லை; நன்கு தெரிந்திருந்தும், உன்னுடைய நிலைமைக்குத் தகாததொரு தப்புக் காரியத்தை
நீ செய்ய நினைப்பது இன்னமும் கெடுதியை விளைத்துக்கொள்ளப் பாம்பின் வாயிலே கை நீட்ட முயல்வதுபோலிரா நின்றது.
அயோக்யரான நமக்கு எம்பெருமானை யநுபவிக்க ஆசை பிறப்பது தப்பு; அது அப்பெருமானுக்கு அவத்யம்;
நமக்கும் ஸ்வரூப நாசம்- என்று தெளிந்து ஒதுங்கி யிருக்கவேண்டியிருந்தும் நீ பகவதநுபவத்திற்கு நாக்கை நீட்டிச் செல்லுகிறாயே!
இதைவிட வேறு தீவினையுண்டோ? பாம்புபோலே அநார்த்தத்தை விளைக்கவல்ல தீவினையன்றோ இது.
இந்தப் பாம்பின் வாயிலே கை வைக்கவன்றோ நீ பார்ப்பது. ஆகையாலே பூதனைக்கு நீ உறவாகவே யிருக்க வேண்டுமன்றோ.
பூதனையானவள் தனக்குக் கேடு வரும்படியான காரியத்தை எப்படிச் செய்தாளோ,
அப்படி. நீயும் உனக்குக் கெடுதிவிளைவிக்கும்படியான காரியத்தைச் செய்யப் பார்க்கிறாயாகையாலே பூதனையோடு ஒப்பாயன்றோ நீ…

பூதனையின் காரியத்தால் எம்பெருமானுக்கு யாதொரு கேடும் விளையாதது போல, ஆழ்வாருடைய பதவதநுபவவிருப்பத்தாலும் பகவானுக்கு
யாதொரு கெடுதியும் விளையமாட்டாது; இவருடைய அதிசங்கை மாத்திரமேயுள்ளது- என்பதும் இதில் குறிப்பிடப்படுகிறது.

பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி:- “பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாளன்றே; பேயாகையாலே வஞ்சித்தாளத்தனையாயிறே;
உன்னைப் பார்த்தால் பூதனை நித்யஸூரிகளோடொக்குமிறே.”

“பாம்பின்வாய்” என்னாமல் பாம்பார்வாய் என்றது திணைவழுவமைதி; இங்கு ஆர் விகுதி கொடுமையின் கனத்தைக் காட்டும்.
பார்த்தி = முன்னிலையொருமை வினைமுற்று.

——————————————————————-

(பார்த்தோரெதிரிதா.) கீழ்ப்பாட்டுக்கு எதிர்த்தடையாயிருக்கும் இப்பாட்டு; ‘
ஹேயரான நாம் பகவானை அநுபவிக்கப் பார்ப்பது பொல்லாங்கு’ என்றார் கீழ்ப்பாட்டில்;
இப்பாட்டிலோவென்னில்;
எம்பெருமானுடைய குணங்களைப் பேசுவதனால் நமது பாவங்களெல்லாம் தொலையுமாகையால் அது செய்யலாம்;
அவனுடைய பெருமைக்கு யாதொரு குறையும் விளையமாட்டாது என்கிறார்.

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம்மேனிக் கண் வளர்வார் சீர்–15-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
ஓதம்–கடலானது
ஆர்த்து–கோஷித்துக்கொண்டு
தம்மேனி தாள்–தம்முடைய திருமேனியையும் திருவடியையும்
தடவ–(அலையாகிற கையினாலே) தடவும்படியாக
தாம் கிடந்து–(அக்கடலில்) பள்ளி கொண்டருளி
தம்முடைய செம்மேனி கண் வளர் வார்–தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப்பெறுகின்றவரான பெருமாளுடைய
சீர்–திருக்குணங்களை,
படு துயரம் பேர்த்து ஓத–கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால்
பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை–அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய்விடுமென்பதில்லை;
எதிரிதா பார்த்து ஓர்–(இவ்விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்துகொள்.

ஓதம் ஆர்த்து -தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து-தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீரை-நெஞ்சே -எதிர் எதிரா பார்த்து ஓர்-படு துயரம் பேர்த்து ஓதப்
பீடு அழிவாம் பேச்சில்லை –என்று அந்வயம்
கங்கையில் நீராடினால்-நாயின் பாபங்கள் தீரும் ஒழிய-கங்கையின் பெருமையில் ஒன்றுமே குறையாதே-அது போலே
உறங்குவான் போலே யோகு செய்த பெருமானை -நம்முடைய ரஷணத்துக்கு சிந்தனை பண்ணிக் கொண்டு இருப்பவனை-அவனுடைய கல்யாண குணங்களை பேசி பாவங்களைப் போற்றிக் கொள்ள வேண்டாவோ-
எதிர் எதிரா பார்த்து -ஓர்-இவ்விஷயத்தை கண் எதிரே நிற்பதாகக் கொண்டு தெரிந்து கொள் –

நெஞ்சே-ஒ மனமே -/ படு துயரம் பேர்த்து ஓதப்-கொடிய துக்கங்கள் தீரும்படி
நாம் பேசுவதனால் -சம்சார துக்கங்களை பேர்த்து உதறி அவனுடைய கல்யாண குணங்களை ஆனந்தமாக பேச-
தீருவதற்காக -என்றுமாம் –பேர்த்து- எச்சம் திரிபாக கொண்டு

பீடு அழிவாம் பேச்சில்லை —அவனுடைய பெருமைக்கு-அழிவு உண்டாய் விடும் எனபது இல்லை -/ ஆர்த்தோதம் தம்மேனி தாள் தடவத் -ஆர்த்து ஓதம் தம்மேனி தாள் தடவ-
பெரிய கோஷத்துடன்-தம்முடிய திரு மேனியையும்-திருவடிகளையும்-அலையாகிற கைகளால் தடவும் படியாக / தாம் கிடந்து-தாம் பள்ளி கொண்டு அருளி –

தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார்-தம்முடைய செந்நிறமான திருக் கண்கள்
வளரப் பெருகின்றவரான-பெருமாளுடைய -/ சீர் –திருக் கல்யாண குணங்களை –

இப்படி எதிர் எதிராக பாசுரங்கள்-நம்முடைய தாழ்ச்சியைப் பார்க்கும் இடத்து அயோக்யானுசந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும்
அவனுடைய விலஷணமான போக்யமான குணங்களை பார்க்கும் இடத்து
நம் வாயாலும் பேசி ஆனந்திப்போம் என்பதும்-மாறி மாறி வரும்-ஒன்றோடு ஓன்று விருத்தம் இல்லை –

ஓதம் ஆர்த்து தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீரை நெஞ்சே! எதிரிதாப்பார்த்து ஓர்;
படு துயரம் பேர்த்து ஒதப்பீடு அழிவாம் பேச்சு இல்லை என்றும் அந்வயம்.
கடலானது ஆரவாரஞ் செய்துகொண்டு (தனது அலைகளாகிற கைகளாலே) திருவடிகளைத் தடவப்பெற்று இனிதாகத்
திருக்கண் வளர்ந்தருளாநின்ற பெருமானுடைய திருக்கல்யானகுணங்களை நெஞ்சே! நம் கண்முன்னே நிற்பவனாகக்கொண்டு அநுஸந்தானம் செய்;
கங்கையில் நாய் நீராடினால் நாயின் பாவங்கள் தொலையுமேயன்றி, கங்கைக்கு உள்ள பெருமை குறைந்து விடாது;
அதுபோல, எம்பெருமானுடைய குணங்களை நாம் பேச, நமது பாவங்கள் தொலையுமேயன்றி, அவனுடைய பெருமைக்குக் குறைவு
நேரிடுமென்கிற பேச்சுக்கே இடமில்லைகாண்;
திருப்பாற்கடலிலே சயனித்துக்கொண்டு 1. “உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை” (திருவாய்மொழி 5-4. 11) என்கிறபடியே
நம்முயை ரக்ஷணத்தையே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற பெருமானுடைய குணங்களை நாம் பேசி
நமது பாவங்களைப் பாற்றிக் கொள்ள வேண்டாவோ? அவனுடைய குணங்கள் நம்மால் மறக்க முடியுமோ?
கண்ணெதிரே நிற்பனபோல் தோன்றுகின்றனவன்றோ என்றாராயிற்று.

எதிரிதா = எதிரில் உள்ளது எதிரிது. ஆ – ஆக என்பதன் குறை; எதிரிதாக என்றபடி.
படுதுயரம் பேர்த்து ஓத = ஸம்ஸாரத்திலே நாம் படுகிற துக்கங்களையெல்லாம் உதறிவிட்டு ஆநந்தமாக அக்குணங்களையே
பேசுகிற பக்ஷத்தில் என்றும் பொருள் கொள்ளலாம்;
‘நமது துக்கங்கள் தீருவதற்காக’ என்று பொருள் கொள்ளில், போர்த்து என்பதை எச்சத்திரிபாகக் கொள்ள வேண்டும்; போ என்றபடி.

பீடு அழிவுஆம் பேச்சு இல்லை = பீடு என்ற பெருமைக்குப் பெயர்; உயர்ந்தோருடைய குணங்களைத் தாழ்ந்தோர் பேசினால்
உயர்ந்தோருடைய உயர்த்திற்கு அழிவு உண்டாகுமோவென்று சங்கிக்கவேண்டிய பிரஸக்தியில்லையென்றபடி.

செம்மேனிக்கண் = மேனி என்று இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. செந்தாமரையின் நிறம்போன்ற நிறத்தையுடைய திருக்கண் என்றவாறு.
நித்திரை செய்வதைக் கண்வளர்தலென்பர். சீர் என்னுஞ் சொல் பால்பகா அஃறிணைப் பெயராதலால் குணங்கள் என்று பன்மைப் பொருள்படும்;
இரண்டாம் வேற்றுமைத்தொகையாதலால் குணங்களை என்க.

கீழ்ப்பாட்டில் ‘பகவதநுபவத்திற்கு நாம் அயோக்யர்’ என்று கருதி நெஞ்சைச் சீறி உரைத்தவர்
இப்பாட்டில் “சீர் ஓதப்பீடழிவாம் பேச்சில்லை” என்று உரைத்தல் கூடுமோ? என்று சங்கிக்கவேண்டா;
தம்முடைய தாழ்ச்சியை நோக்குமிடத்து அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும்,
அவனுடைய விலக்ஷணமாய் போக்யமான திருக்குணங்களை நோக்குமிடத்து
‘நம் வாயாலும் இக்குணங்களைச் சிறிது பேசி ஆநந்திப்போம்’ என்று ஒருப்படுவதும்
ஆக இவ்விரண்டும் மாறி மாறி வருமென்றும் இவை ஒன்றோடொன்று விருத்தமல்ல என்றும் கீழே பன்னியுரைத்தோம்.

————————————————————————

(சீராற் பிறந்து.) “சீர் ஓதப் பீடழிவாம் பேச்சில்லை” என்றாரே கீழ்ப்பாட்டில்;
அப்படியே அவனுடைய திருக்குணங்களை ஓதத் தொடங்குகிறார்; ஸ்ரீவாமநாவதார குணத்திலீடுபட்டு அருளிச்செய்யும் பாசுரம் இது.

சீர் ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை என்றார் கீழில்-இப்பொழுது சீர் பாடத் தொடங்குகிறார்
ஸ்ரீ வாமனாவதாரத்தில் குணத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
யாசகனாக வர வேண்டுமோ-வாமனன் -குள்ள வடிவு கொண்டு வர வேண்டுமோ-
குள்ளன் என்றே திருநாமம் கொள்ள வேண்டுமோ-ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் போலே
சீராகப் பிறந்து சிறப்பாக வளர்ந்தவன் அன்றோ நீ –

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

பதவுரை

பேராளா–‘மஹாநுபாவனான பெருமானே!
சீரால் பிறந்து சிறப்பால் வளராது–சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல்
பேர் வாமன் ஆகாக்கால்–திருநாமம் வமானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால்
மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி-உன்னாலே மார்பால் அணையப்பட்டும் வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப்படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப்பூமியானது.
நீர் ஏற்பு அரிதே–தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப்பெற முடியாதோ?’
யாம் அறிய–இவ்விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி
நீ சூழ்ந்து சொல்லு–நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும்.

சீரால் பிறந்து சிறப்பால் வளராது–
சிறப்புடனே பிறப்பதையும்-சிறப்புடனே வளர்வதையும் செய்யாமல்
சீரும் சிறப்பும் ஒரே பொருள்-சீரால் சிறப்பால் பிறந்து வளராது என்றும் அந்வயம் கொண்டு-மிக்க சீருடன் பிறந்து வளர்ந்து
வளராது -இதில் உள்ள எதிர்மறை பிறந்து என்பதிலும் கொண்டு பிறவாது
சீரால் சிறப்பால் பிறவாமலும் வளராமலும்-வாமனன் ஆக ஆனாயே அப்படி ஆகாமல் போனால் -என்றபடி

பேர் வாமன் ஆக்காக்கால்-
திரு நாமமும் வாமனன் என்று-வைத்து கொள்ளாமல் இருந்தக்கால்
பேர் பெரிய -என்றுமாம்-பெரிய வாமனன் -இதற்க்கு மேற்பட்ட குள்ளன் இல்லை

பேராளா –
1-மஹாநுபாவனான பெருமானே -பெருமை பொருந்தியவனே–2–பல திரு நாமங்களை உடையவனே -என்றுமாம்

மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி-
உன்னாலே மார்பால் அணையப்பட்டும்-வயிற்றிலே வைக்கப்பட்டும்
பின்பு வெளிப்படுத்தப் பட்டும்-இப்படி ஸ்வ அபிமானமாய்  இருந்த
இந்த பூமியானது –
ஸ்ரீ பூமிப் பிராட்டி திவ்ய மகிஷி என்பதால் மார்பாரப் புல்கி
மஹா வராஹத்தில் அண்ட பித்தியில் ஒட்டி கிடந்த பூமியை
கோட்டால் குத்தி எடுத்த பொழுது மார்பார புல்கி என்றுமாம்

நீர் ஏற்பு அரிதே-சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –

கூரத் ஆழ்வான் இந்த பாசுரக் கருத்தை ஸ்ரீ ஸூந்தர பாஹூ  ஸ்த்வத்தில்
ஷிதிரியம் ஜனி சம்ஹ்ருதி பாலநை நிகிரண உத்கிரணோத்தரனை ரபி
வநகிரீச தவைவ சதீ கதம் வரத வாமன பிஷண மர்ஹதி -என்று
இந்த பூமியை படைப்பவனும் நீ–துடைப்பவனும் நீ-காப்பவனும் நீ
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனும் நீ
பிறகு வெளி நாடு காண புறப்பட விட்டவனும் நீ
ஆகையால் உனக்கே உடைமையாய் இரா நின்ற பூமியை
நீ பெற வேண்டி பிச்சை பெற்றது எங்கனே

உனக்கு திரு நாமங்கள் பலவாக இருக்க-இந்த பெரிய வாமனன் மிகப் பெரிய குள்ளன் திரு நாமம் வைத்துக் கொள்ள வேணுமோ -என்றபடி-

எல்லா விதங்களாலும் உனக்கே அஸாதாரணமாக உரிமைப்பட்டதான இப்பூமியை நீ மாவலியிடமிருந்து பெற வேண்டில்,
அதற்காக யாசகனாக வரவேண்டுமோ? எல்லோரும் கண்டு ஏசும்படியான குள்ள வடிவமெடுத்துக்கொள்ள வேண்டுமோ?
குள்ளனென்றே திருநாமமும் தரிக்க வேண்டுமோ? ஸ்ரீராமனாகப் பிறந்து வளர்ந்த காலத்தும் ஸ்ரீகிருஷ்ணனாகப் பிறந்து வளர்ந்த
காலத்தும் எவ்வளவோ சீராகப் பிறந்து எவ்வளவோ சிறப்பாக வளர்ந்தவனன்றோ நீ;
அப்படியே பிறந்து வளராமலும், ஸ்ரீராமன் ஸ்ரீக்ருஷ்ணன் என்றாற்போலே சிறந்த திருநாமங்களை இட்டுக் கொள்ளாமலும்,
சீரும் சிறப்புமின்றிப் பிறந்து வளர்ந்து பரிஹாஸத்துக்கு ஆஸ்பதமான வாமநனென்ற நாமத்தையும் வஹித்து நின்றது. ஏதுக்கு?
இப்படியானால் நான் பூமியை ஸம்பாதித்துக் கொள்ள முடியுமென்றும் இல்லாவிட்டால் முடியாதென்றும் திருவுள்ளமோ? என்கிறார்.

இந்தப் பூமி உனக்கே உரிமைப்பட்டதென்பதை மார்பாரப் புல்கி நீ உண்டுமிழ்ந்த என்ற விசேஷணத்தால் விளங்குகின்றார்.
மார்பரப் புல்கி என்றது- பூமிப்பிராட்டி திவ்யமஹிஷியாயிருப்பது பற்றியென்க. பண்டு அண்டபித்தியில் ஒட்டிக் கிடந்த பூமியை,
வராஹாவதாரம் பணிக் கொட்டாற்குத்தி ஒட்டுவிடுவித்தெடுத்தபோது மார்பாரப் புல்கி யெடுத்தானென்னவுமாம்.

இப்பாசுரத்தின் தாம்பரியத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ஸுந்தரபஹுஸ்தவத்தில் அருளிச் செய்துள்ள ச்லோகம்
(க்ஷிதிரியம் ஜநிஸம்ஹருதி பாலகை: நிகிரணோத்கிரணோத்தரனை ரபி- வநகிரீச! தவைவ ஸதீ கதம் வரத வாமந! பிக்ஷணமர் ஹதி?) என்பதாம்;
இப்பூமியைப் படைப்பவனும் நீ; துடைப்பவனும் நீ; காப்பவனும் நீ; பிரளயத்தில் திருவயிற்றில் வைத்து நோக்குபவனும் நீ;
பிறகு வெளிநாடுகாணப் புறப்பட விடுமவனும் நீ; ஆகையாலே உனக்கே உடைமையா யிராநின்ற இந்தப் பூமியை
நீ பெற வேண்டிப் பிச்சை யெடுத்தது எங்ஙனே? என்று திருமாலிருஞ்சோலையழகரை நோக்கி விண்ணப்பஞ் செய்த ச்லோகம் இது.

அதிமாநுஷஸ்தவத்திலும் இங்ஙனே ஒரு ச்லோக முண்டு; அதாவது-
த்வந்நிர்மிதா ஜடாகாச தவ த்ரிலோகீ கிம் பிக்ஷணாதியம்ருமே பவதா துராபா?
மத்யே ததாது நவிசக்ரமிஷேஜகச் சேத் த்வத்விக்ரமை: கதமிவ ச்ருதி ரஞ்சி தாஸ்யாத்” என்பதாம்.
கீழ் எடுத்துக் காட்டிய ஸுந்தரபாஹு ஸ்தவச்லோகத்தின் பொருளை இந்த ச்லோகத்தில் பூர்வார்த்தத்தில் அடக்கி,
உத்தரார்த்தத்தால் அதற்கு ஸமாதாநமருளிச் செய்கிறார்.
குள்ளவடிவைக் கொண்டு முதலில் யாசித்துப் பிறகு பெரிய வடிவெடுத்து த்ரிவிக்ரமனாக நீ வளர்ந்திராவிடில்
உன்னடைய விக்ரமங்களாலே வேதம் எப்படி அலங்கரிக்கப்படும்;
த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய” என்றும்
“த்ரிர் தேவ; ப்ருதி வீமேஷ ஏதாம்” என்றும்
உலகளந்த சரிகையைப் பேசி வேதம் புனிதமாவதற்காகவே நீ வாமநாவதாரம் செய்வதேயன்றி, வேறு வழியால் பூமியை மாவலியிடத்தில்
நின்றும் மீட்டுக்கொள்ள முடியாமல் செய்தாயல்லை; பெரும்பாலும் பகவத் பக்தர்களுக்கு உபயோகமில்லாத விஷயங்களையே
(யஜ்ஞயாகம் முதலிய காமபகருமங்களையே) விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டு போகிற வேதத்தில் இந்த பவித்திரமான
சரித்திரத்தைப் பற்றின பேச்சு வருவதற்காகவே நீ வாமனனானாய் போலும் என்கை.
வேதத்தில் த்ரிவிக்ரமாவதாரத்தைப் பற்றிச் சொல்லிற்றேயொழிய வாமாவதாரத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே;
வாமநனாகப் பிறந்து பிச்சை யெடுப்பானேன் என்ற கேள்விக்கு இது எங்ஙனே ஸமாதாநமாகுமென்னில்; .
“நீளவான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண், தாளாலளவிட்ட” ( பெரிய திருமொழி 11-7-2) என்ற திருமங்கையாழ்வாரருளிச் செயலில்
“நீள்வான் குறுளுருவாய்” என்று- த்ரிவிக்ரமனாக நீள்வதற்காகவே குறளுருவெடுத்ததாகச் சொல்லுகையாலே
வாமாநாவதாரம் திர்விக்ரமாவாதாரத்திற்கு சேஷ பூதமாயிற்றாதலால் இது ஸமாதானமாகக் குறையில்லையென்க.
“பேர்வாமனா காக்கால்… பூமிநீரேற்பரிதே?” என்று இங்கு எம்பெருமானை நோக்கி ஆழ்வார்கேட்ட கேள்விக்கே
கூரத்தாழ்வான் அதிமாநுஷ ஸ்தவத்தில் மேல் விவரித்த வண்ணம் ஸமாதநமருளிச் செய்தாரென்றுணர்க.

சீரால்பிறந்து சிறப்பால்வளராது = சீர் என்றாலும் சிறப்பு என்றாலும் பொருள் ஒன்றே.
“சீரால் சிறப்பால் பிறந்து வளராது” என்று அந்வயித்து, மிக்க சிறப்புடனே பிறந்து வளராமல் எனப்பொருள் கொள்க.
வளராது என்றவிடத்துள்ள எதிர்மறை, பிறந்து என்றவிடத்தும் கருதத்தக்கது; பிறவாமலும் வளராமலும் என்றவாறு.
“பிறவாமலும் வளராமலும் பேர்வாமனாகக்கால்” என்றால் கருத்து ஒட்டிவரவில்லையே என்று சிலர் மயங்குவர்;
‘சிறப்பால் பிறவாமலும் வளராமலும் வாமநனாக ஆனாயே, அப்படி ஆகாமற்போல்’ என்று விரித்துக் கொள்ள வேண்டுகையாலே
பொருந்தாமை யொன்றுமில்லையென்க.

பேர்வாமனாகாக்கால் = ‘வாமநன்’ எனச் சிதைந்தது. வாமநனென்று பேரிட்டுக் கொண்டு குள்ளனாகாவிடில் என்றபடி.
பேர் என்பதற்குத் திருநாமமென்று பொருள் கொள்ளாமல் ‘பெரிய’ என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.
பெரிய வாமனனென்றது- இவனுக்கு மேற்பட்ட குள்ளனில்லையென்னும்படியான ஒப்பற்ற குள்ளன் என்றபடி.

பேராளா!= பெருமை பொருந்தியவனே! என்றும், பல திருநாமங்களையுடையவனே! என்றும் பொருள்படும்.
வாமனனென்று பேரிட்டுக்கொண்டது உன் பெருமைக்குத் தகுமோ? என்றும்,
பேரிட்டுக்கொள்ளப் பல திருநாமங்களிருக்கவும் இந்தத் திருநாமந்தானா உனக்கு அகப்பட்டது? என்றும் கேட்கிறார் போலும்.

————————————————————–

தாம் அபேஷித்த படியே அடியார்களாக அனைவரும் ஆகிவிட்டால்
லீவா விபூதி ஆள் அற்று போகுமே-இத்தை நோக்குவோம் என்று உகந்து-

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாமிடிய
தாள்வரை வில்லேந்தினார் தாம்–17-

பதவுரை

எங்கும் சூழ்ந்து–நாற்புறங்களிலும் சுற்றிக் கொண்டு
அரக்கன்–இராவணனுடைய
வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய–ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி
தாள் வரைவில் ஏந்தினார் தாம்–காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்
சூழ்ந்து–(இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு
அடியார் வேண்டினக்கால்–‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப்பட வேணும்’ என விரும்பினால்
தோன்றாது விட்டாலும்–ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்
வாழ்ந்திடுவர்–திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தேயிருப்பர்;
பின்னும்–எக்காலத்திலும்
தம் வாய் திறவார்–(பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக் கொள்ளமாட்டார்.

எங்கும் சூழ்ந்து-அரக்கன் வாள்வரைகள் போல வன்தலைகள் தாமிடிய
தாள்வரை வில்லேந்தினார் தாம்-சூழ்ந்து அடியார் வேண்டினக்கால்
அடியார் -த்வம் மே அஹம் மே -வணங்கா முடி தனத்தால் அநாதரவு காட்டி
தோன்றாது விட்டாலும்-வாழ்ந்திடுவர்-பின்னும் தாம் வாய் திறவாதார் -என்று அந்வயம்

சூழ்ந்து –
இந்த லீலா விபூதியிலே வந்து-வளைத்துக் கொண்டு –

அடியார் வேண்டினக்கால்-
ஒ ஜனங்களே-நீங்கள் அடிமைப்பட வேண்டும் என்று விரும்பினால்

தோன்றாது விட்டாலும் –
ஒரு அடியவனாவது அகப்படாமல்-உபேஷிக்கப் பெற்றாலும் –

வாழ்ந்திடுவர்-
திரு உள்ளத்திலே வெறுப்பு இல்லாமல்-உகப்புடன் இருப்பார் –

பின்னும்-
எக்காலத்திலும்

தாம் வாய் திறவாதார் –
பிராட்டிமார் இடத்திலும்-இந்த மனக் குறையை-வாய் திறந்து சொல்லிக் கொள்ள மாட்டார் –

சூழ்ந்து எங்கும் –
நாற்புறங்களிலும் சுற்றிக் கொண்டு –

அரக்கன்-
ராவணனுடைய

வாள்வரைகள் போல் வன்தலைகள் தாமிடிய-
ஒளி பொருந்திய-மலைகள் போலே வலிதான-தலைகளானவை இற்று விழும்படி

தாள்வரை வில்லேந்தினார் தாம்
காலுரைத்தை உடைத்தாய்-மலை போன்றதான-வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்-

ஸ்ரீ வசன பூஷனத்தில் மூன்றாம் பிரகரணத்தில்
பிராட்டி ராஷசிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதது போலே
தனக்கு பிறர் செய்யும் குற்றங்களை-பகவத் பாகவத் விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் -என்று அருளிச் செய்த பின்
அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே-சர்வஜஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது இறே
என்று அருளிச் செய்தது இப்பாசுரத்தைக் கொண்டேயாம்
மா முனிகள் வியாக்யானம்
எதிர் சூழல் புக்கு என்றபடியே-தன்னுடைய சீல சௌலப் யாதிகளைக் காட்டி
சம்சாரி சேதனர்களை தப்பாமல் அகப்படுத்திக் கொள்வதாக-வந்து அவதரித்து
தமக்கு அடியார் வேணும் என்று அபேஷித்தால்-இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்
நாம் இதற்க்கு உறுப்பாக பெற்றோமே இ றே என்று-அது தானே போக்யமாக விரும்புவர்
அதற்கு மேல்
அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்கள் என்று-அவர்கள் குற்றத்தை பிராட்டிமார்க்கும் தனி இருப்பிலே அருளிச் செய்யார்
என்கிற-சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டிலே
சேதனர் செய்த குற்றங்களை தன திரு உள்ளத்தில் உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு
பிராப்தனான சர்வேஸ்வரனும் உட்பட-தன் திருப்பவளம் திறந்து அருளிச் செய்யாதே
தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் அறிய வல்ல சர்வஜ்ஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்று சொல்லா நின்றது இறே

அன்றிக்கே
அடியார் சூழ்ந்து வேண்டினக்கால்-சூழ்ந்து எங்கும் வாள்வரைகள் போல் அரக்கன் வன்தலைகள் தாமிடியத்-தாள்வரை வில்லேந்தினார் தாம்-தோன்றாது-விடிலும்-அடியார் தாம் வாழ்ந்திடுவர்-என்று அந்வயித்து
அவன் திரு உள்ளமான படி ஆகக்கடவது என்று மகிழ்ந்து இருக்கக் கடவர்கள் அடியார்கள் என்றபடி-
ஆர்த்தியின் கனத்தாலே நாங்கள் ஓயாது புலம்பி வேண்டினாலும்
எங்களுக்கு சேவை சாதியாமல் இருப்பது என்று ஆஷேபிக்கவும்
வாய் திறக்கக் கடவர் அல்லர்
அபேஷிப்பது மாத்ரமே அடியவர்களின் கடைமையே அன்றி
அவனை எதிர்த்து வாய் திறக்க அதிகாரம் இல்லை -என்றபடி

முந்தின யோஜனையில் எம்பெருமான் உடைய ஸ்வரூபம் சொல்லிற்று
இதில் சேதனர் உடைய ஸ்வரூபம் சொல்லுகிறது-

(சூழ்ந்தடியார்.) ஆச்ரிதர்களிடத்தில் *எம்பெருமானுக்குள்ள வாத்ஸல்யத்தைப் பேசுகிறார்.
“எங்கும் சூழ்ந்து அரக்கண் வாள்வரைகள் போல் வன்தலைகள் தாம் இடியத் தாள் வரை வில்லேந்தினார் தாம் சூழ்ந்து
அடியார் வேண்டினக்கால் (அடியார்) தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர்; பின்னும் வாய் திறவார்” என்று அந்வயம்.
இராவணனது தலைகளை அறுத்துத் தள்ள வலிய வில்லைக் கையிலேந்தி நின்ற இராமபிரானாகிய திருமால் இந்த லீலா விபூதியில்
வந்து சேர்ந்து இங்குள்ள ஸம்ஸாரிகளைச் சூழ்ந்து கொண்டு ‘எனக்கு நீங்கள் அடியாராக வேண்டும்’ என்று அபேக்ஷித்தவளவில்,
“த்வம் மே” என்றால் “அஹம் மே” என்கிற ஸம்ஸாரிகள் வணங்காமுடித்தனத்தினால் அநாதரவுகாட்டி அடியவர்களாக ஆகாவிட்டாலும்,
அதனால் திருவுள்ளத்தில் சிறிதும் வருத்தங் கொள்ளாமல் “நாம் அபேக்ஷித்தபடியே இந்த ஸம்ஸாரிகளெல்லாரும் அடியவர்களாக
ஆய்விட்ட பக்ஷத்தில் இந்த லீலாவிபூதி ஆளற்று அழிந்துபோய் விடுமன்றோ;
இஃது அழியாதபடி நோக்குவதற்கு இவர்கள் அமைந்தார்கள் என்று தேறி மகிழ்ந்தே செல்வர்;
ஏகாந்தமான ஸங்கதிகளை யெல்லாம் கூசாமல் சொல்லுகைக்குரிய பிரட்டிமாரிடத்திலும் இவ்விஷயத்தைச் சொல்லிக் கொள்ள வாய் திறக்கமாட்டார்;
‘ஸம்ஸாரிகள் என்னை அலக்ஷியம் பண்ணிக் கைவிட்டார்கள்” என்று ஒருபோதும் சொல்லமாட்டார் என்றதாயிற்று.

ஸ்ரீவசநபூஷத்தில் (மூன்றாம் ப்ரகரணத்தில்- “பிராட்டி, ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதாப்போல,
தனக்குப் பிறர் செய்த குற்றங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவனல்லன்” என்றருளிச் செய்தபின்
“அறிவிக்கவுரியவனகப்பட வாய்திறவாதே ஸர்வஜ்ஞவிஷயங்களுக்கும் மறைக்குமென்னோநின்றதிறே” என்று அருளிச் செய்தது
இந்தப் பாசுரத்தைக் கொண்டேயாம். அவ்விடத்தில் ஸ்ரீமணவாள மாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:-
“எதிர்சூழல்புக்கு’ என்கிறபடியே தன்னுடைய சீல ஸௌலப்யாதிகளைக் காட்டி ஸம்ஸாரி சேதநர்களைத் தப்பாமல்
அகப்படுத்திக்கொள்வதாக வந்தவதரித்துத் தமக்கு அடியார் வேணுமென்றபேக்ஷித்தால் அவர்கள் அப்படி அநுகூலமாய்த் தோன்றாதொழிந்தாலும்
‘இவர்கள் செய்தபடி செய்கிறார்கள்; நாம் இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோமிறே’ என்று அதுதானே போக்யமாக விருப்பர்;
அதுக்குமேல், அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்களென்று அவர்கள் குற்றத்தைத் தனியிருப்பிலே
பிராட்டிக்கு மருளிச் செய்யாரென்கிற சூழ்ந்தடியார் என்கிற பாட்டிலே, சேதநர் செய்த குற்றங்களைத் தன் திருவுள்ளத்துக்கு உகந்தவர்களுடன்
அறிவிக்கைக்கு ப்ராப்தனான ஸர்வேச்வரனுமுட்படத் தன் திருப்பவளம் திறந்து அருளிச்செய்யாதே,
தானருளிச் செய்யா தொழிந்தாலுமறியவல்ல ஸர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்குமென்று சொல்லா நின்றதிறே.” என்று.

இப்பாட்டை மற்றொரு வகையாகவும் பெரியவாச்சான்பிள்ளை உரைத்தருளினார்;-
“அடியார் சூழ்ந்து வேண்டினக்கால், சூழ்ந்தெங்கும் வாள் வரைகள் போலரக்கன் வன்தலைகள் தரமிடியத்
தாள்வரைவில் லேந்தினார்தாம் தோன்றாது விட்டாலும் (அடியார்) வாழ்ந்திடுவர்; பின்னும் தம் வாய்திறவார்” என்று அந்வயித்து,
அடியவர்களாயுள்ளவர்கள் எம்பெருமானைச் சூழ்ந்து கொண்டு எமக்கு நீ ஸேவைஸாதிக்க வேணுமென்று வேண்டிக்கொள்ள
எம்பெருமான் அவர்களுக்கு முகங்காட்டாவிடினும், அவன் திருவுள்ளமானபடியே ஆகக்கடவது’ என்று மகிழ்ந்திருக்கக் கடவர்கள் அடியவர்கள்;
‘ஆர்த்தியின் கனத்தாலே நாங்கள் ஓயாது புலம்பி வேண்டினாலும் எங்களுக்கு ஸேவை ஸாதியாமலிருப்பது ஏன்?’ என்று ஆக்ஷேபிக்க
வாய் திறக்கவும் கடவரல்லர்; அபேக்ஷிப்பது மாத்திரம் அடியவர்களது கடமையேயன்றி அபேக்ஷித்தபடியே
அவன் காரியஞ் செய்யாவிடில் அவனையெதிர்த்து வாய் திறக்க இவர்களுக்கு அதிகாரமில்லை- என்று
சேதநர்களின் ஸ்வரூபத்தை சிக்ஷித்தருளிச் செய்வதாக.

முந்தின யோஜநையில் எம்பெருமானுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது;
இந்த யோஜநையில் சேநருடைய ஸ்வரூபம் சொல்லுகிறது. இரண்டு வகையும் பொருந்தக் குறையில்லை.

சூழ்ந்து எங்கும் = இலங்கை முழுவதையும் ஆக்ரமித்துக்கொண்டு என்றபடி. வாள் என்பதும் வரைகள்போல் என்பதும்-
அரக்கனது வன்தலைகட்கு விசேஷணங்கள்; வாள்- ரத்னங்களிழைத்த கிரீடங்களணிந்திருக்கையாலே ஒளிபொருந்திய என்றபடி.
தாள் வரை வில் = விற்களுக்கு அடிப்பக்கம் உரத்திருக்க வேண்டியது அவசியமாதலால்; தாள்வில் எனப்பட்டது; காலுரமுடைய வில் என்றபடி.
மலைபோல் பிறரால் சலிப்பிக்கவும் ஒண்ணாதபடி சிக்கென்றிருத்தல் பற்றி “வரைவில்” எனப்பட்டது.

——————————————————————-

(தாம்பாலாப்புண்டாலும்.) ஸம்ஸாரிகள் அலக்ஷியம் பண்ணினாலும் எம்பெருமான் திருவுள்ளம் வெறுக்கமாட்டான் என்றது கீழ்ப்பாட்டில்;
அவ்வளவேயன்று; ஸம்ஸாரிகள் எம்பெருமானுக்கு பலவகையான துன்பங்களை உண்டுபண்ணினாலும்
அப்போதும் அவன் தன் காரியத்தைத் தான் விடுவதில்லையென்கிற மஹா குணத்தைப் பேசுகிறாரிதில்.

தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18

பதவுரை

தாம்பால் ஆப்புண்டாலும்–(அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டியடிக்கப் பெற்றாலும்
அத்தழும்புதான் இளக–அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி
பாம்பால்–காளியனாகிய பாம்பினால்
ஆப்புண்டு–கட்டப்பட்டு
பாடு உற்றாலும்–கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது–(ஜகத் ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல்
இ பல் உருவை எல்லாம்–இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம்.
படர்வித்த–விஸ்தாரமாக வுண்டாக்கின
வித்தா–ஆதிமூலமே!
உன் தொல் உருவை ஆர் அறிவார்–உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ?
சொல்லு–நீயே சொல்லு.

நீராமிது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால்-ஊரார்கள் எல்லாரும் காண யுரலோடு
தீரா வெகுளியாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப-ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்
இது அனுகூலர் அன்பினால் கட்டின கட்டாகையாலே எம்பெருமானுக்கு சஹ்யம் –
காளியன் வாலால் கட்டின காய்ப்பு அசஹ்யம்
தாம்பால் ஆப்புண்டாலும் –
யசோதையினால் தாம்பு கொண்டு-அடிக்கப் பெற்றாலும்

அத்தழும்பு தான் இளக-
அத்தாம்பினால் கட்டினத்தால் உண்டான காய்ப்பு-அல்பம் என்னலாம் படி

பாம்பால் ஆப்புண்டு –
காளியன் ஆகிற-பாம்பினால் கட்டப்பட்டு

பாடுற்றாலும் –
கஷ்டங்களை அடைந்தாலும்-சிறிதும்திரு உள்ளம் வருந்தாமல்

சோம்பாது-
ஜகத் சிருஷ்டியிலே சோம்பல் படாமல் -நிக்ரஹிக்க நினையாமல்
சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் களிப்போம் என்று எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –

இப் பல்லுருவை எல்லாம் –
இவ்வுலகிலே காணப் படுகிற-பல பல பிராணிகளை எல்லாம்

படர்வித்த வித்தா-
விஸ்தாரமாக உண்டாக்கின-ஆதி மூலமே –

உன் தொல்லுருவை யார் அறிவார்
உன்னுடைய ஸ்வரூபத்தை அறிவார் உண்டோ –

சொல்லு –
நீயே சொல்லு
இக்கருத்தை ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகத்தில்
சார்வ த்வத்கம் சகல சரிதம் ரங்க தாமன் துராசாபா சேப்யஸ் ச்யான்ன யதி ஜகதாம் சாது மூர்க்கோத்தராணாம்-
நிஸ் தந்த்ராளோஸ் தவ நியமதோ நர்த்து லிங்க ப்ராவாஹா

சர்க்கச்தே மப்ர ப்ருதிஷூ சதா ஜாகார ஜாகடீதி-

சேதனர் மேலே நப்பாசை கொண்டு சிருஷ்டித்து அருளுகிறான்-
சம்சாரிகள் நன்மையே நாடி இருக்கிற உன்னுடைய ஸ்வ பாவம் யாராலும் நிலை காண ஒண்ணாது –

ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தகாலத்து யசோதைப் பிராட்டியாகிற மாதாவானவள் “நீராமிது செய்தீரென்றோ நெடுங்கயிற்றால்,
ஊரார்களெல்லராருங் காணவுரலோடே தீரா வெகுளியனாய்ச் சிக்கன ஆர்த்தடிப்ப, ஆரா வயிற்றினோடாற்றாதான்” (சிறிய திருமடல்) என்றபடி.
வெண்ணெய் களவுகண்ட காரணத்திற்காகக் கண்ணிநுண் சிறுத் தாம்பினால் உரலில் பிணைத்து அடித்துப் பகவானுடைய
திருமேனியில் கஷ்டத்தை யுண்டுபண்ணினாள்;
“தாம்பே கொண்டார்த்த தழும்பு” (முதல் திருவந்தாதி 22) என்றபடி அவள் தாம்பினால் கட்டினவிடம் காய்ப்புக் காய்த்துக் கிடந்ததென்றும் தெரிகிறது.
இது அநுகூலர் அன்பின் மிகுதியால் கட்டின கட்டாகையாலே எம்பெருமானுக்கு ஸஹ்யம் என்று கொண்டாலும்,
யமுனையில் ஒரு துறையிலிருந்து கொண்டு விஷத்தைக் கக்கி அனைவர்க்கும் கொடுமை புரிந்த காளிய நாகத்தோடு பிணங்க நேர்ந்தபோது,
அந்த நாகம் கண்ணபிரானைத் தனது வாலால் கட்டிற்றென்றும், எசோதை கட்டின தாம்பினாலுண்டான காய்ப்பு அற்பமென்னும்படி
காளியன் வாலால் கட்டின காய்ப்பு வலிதாயிருந்த தென்றும் சொல்லப்படுகிறது.
இப்படி அநுகூலரோடு பிரதிகூலரோடு வாசியற எல்லாரும் அவனைக் கட்டியடித்துத் துன்பப் படுத்துவதே
இந்த பிராகிருத லோகத்தின் காரியமாக இருக்கின்றது. இருந்தாலும் எம்பெருமான் தன்னுடைய கிருஷியில் நின்றும் கைவாங்குவதில்லை.
‘நமக்குத் தன்பத்தையே உண்டு பண்ணுகிற இவ்வுலகை அடியோடு ஒழித்திடுவோம்’ என்று நிக்ரஹிக்க நினையாமல்
“சென்று சென்றாகிலுங் கண்டு சன்மங் கழிப்பானெண்ணி ஒன்றியொன்றி யுலகம் படைத்தான்” (திருவாய்மொழி 3-9-10) என்றபடி
என்றைக்காவது ஒருநாள் இவ்வுலகம் சீர்படக் கூடுமென்றே திருவுள்ளம் பற்றிச் சிறிதும் சோம்பலடையாமல் பிரஜைகளைப்
படைக்கின்றானென்று இதனால் சொல்லிற்றாயிற்று.

இப்பாட்டின் கருத்தைக் கூரத்தாழ்வான திருக்குமாரரான ஸ்ரீபராசரபட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் உத்தரசதகத்தில்-
ஸார்வ! த்வத்கம் ஸகலசரிதம் ரங்கதாமந்! துராசாபாசேப்யஸ் ஸ்யாந்ந யதிஜகதாம் ஜாது மூர்க்கோத்தராணாம்.
நிஸ்தந்த்ராளோஸ் தவநியமதோ நர்த்துலிங்க ப்ரவாஹா ஸர்கஸ்தேமப்ர ப்ருதிஷா ஸதாஜாகரா ஜாகடீதி.” என்ற ச்லோகத்தால் அநுஸந்தித்தமை அறியத்தக்கது.

தாம்பாலாப்புண்டாலும் = நம்மாலே படைக்கப்படுகிறவர்கள் நம்மையே கயிற்றால் கட்டி நலிகின்றார்களே!;
இப்படிப்பட்ட பாவிகளை நாம் ஏன் ஸ்ருஷ்டிக்கவேணும்; இறகொடிந்த பறவைபோலே கரணகளேபரங்களற்று ப்ரளய ஸீமாவில்
மங்கிக் கிடக்கிற சேதநவர்க்கங்கள் அப்படியே மங்கிக் கிடக்கட்டும்; அவற்றுக்குக் கையுங் காலும் உண்டாம்படி நாம் ஸ்ருஷ்டிக்கவேயன்றோ
அந்தக் கையையும் காலையுங் கொண்டு அவை நம்மையே புடைக்கின்றன; அவற்றை அப்படியே மங்கிப் போகும்படி போட்டு வைத்தால்
நம்மைக் கட்டியடிப்பார் ஆருமில்லையே என்று கருதி எம்பெருமான் வெறுமனிருந்து விடலாம்;
ஆயினும் இந்த சேதநர்கள் பக்கல் உள்ள நப்பாசையானது அப்படி இருக்க வொட்டுகிறதில்லைஎன்று உணர்க.

அத்தழும்புதாளினகப் பாம்பலாப்புண்டு பாடுற்றலும் = காளியன் தனது வாலினால் கண்ணபிரானை அழுந்தக் கட்டி,
திருமேனி தழும்பேறும்படி வருத்தத்தை உண்டுபண்ணினன்; இந்தத் தழும்பின் முன்னே எசோதையின் தாம்பாலாப்புண்ட தழும்பு
அற்பமென்னவேண்டும்படி பாம்பாலாப்புண்ட தழும்பே வலிதாயிருந்ததென்பது விளங்க “அத்தழும்புதானிளக” என்றார்.
பாடு- வருத்தம் வித்தா = உலகங்கட்கெல்லாம் வித்தாக இருப்பவனே! என்றபடி.
இப்படிப்பட்ட உன்னுடைய ஸ்வரூபத்தை அறியவல்லார் ஆர்? என்றது- ஸம்ஸாரிகள் உன்னைப் பரிபவித்தாலும் அவர்கள் மேல்
ஆசாபாசம் விட்டு நீங்காமல் நன்மையையே நாடி யிருக்கையாகிற உன்னுடைய ஸ்வரூபம் ஒருவர்க்கும் நிலைகாண வொண்ணாதது என்றபடி.

————————————————————

(சொல்லில் குறையில்லை.) பஞ்ச பாண்டவர்கள் விஷயத்தில் கண்ணபிரான் பக்ஷபாதியாயிருந்து செய்தருளின் செயல்களை
ஆலோசித்துப் பார்த்தால், அவன் அடியவர்களுக்கு எளியவன் என்பது நன்கு வெளியாகும்.
அந்த பஞ்சபாண்டவர்களைப்போல நாமும் அப்பெருமான் மீது அன்பு வைத்து அவனை ஸேவிக்க வேணுமென்று மெய்யே ஆசைப்பட்டால்
“மெய்யர்க்கே மெய்யனாகும்” என்னப்பகிற அவன் ஸேவை ஸாதித்தே தீருவன்; அவனை ஸேவிப்பதற்கு இதுவே உபாயம்.
இப்படிப்பட்ட உபாயத்தைத் தெரிந்து கொள்ளாமல் நெஞ்சே நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய்?
இப்போதாவது நான் சொல்வதைக் குறிக்கொள்; என்கிறார்.

சொல்லில் குறையில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும்  –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

பதவுரை

சூது அறியா நெஞ்சமே–செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே!
சொல்லில் குறை இல்லை–பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை; (அல்லது) நமக்கொரு குறையில்லை;
தொல்லை கண்–அநாதியான இப்பூமியில்
மா தானைக்கு எல்லாம்–(துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம்.
ஓர் ஐவரையே மாறு ஆக–பஞ்சபாண்டவர்களே எதிரிகளாம் படி
எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை–இரவுபகலென்னாமல் எக்காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை
(மெய்யே காண விரும்பினால்)
காண்டும்–காண்போம்!
நீ காண்–நீ காணலாம்.

சூதறியா நெஞ்சமே-
செய்ய வேண்டியது-இன்னது என்று அறியாமல் தளும்புகின்ற-மனமே
சூது -உபாயம்
மெய்யான விருப்பமே என்ற எளிய உபாயம் அறியாத மட நெஞ்சமே

சொல்லில் குறையில்லை-
பகவத் விஷயத்தை பேசினால் பேச்சில் குறை இல்லை –
எவ்வளவு பேசினாலும் சொல்லி முடிக்கும் படி அல்லவே எல்லை இல்லா அவனது கல்யாண குணங்கள்
அல்லது
நமக்கு ஒரு குறை இல்லை -நமது குறைகள் நீங்கி விடுமே பேசத் தொடங்கினாலும்
அப்படி கரை காண முடியாத ஒரு குணத்தை எடுத்துக் காட்டுகிறார்
தொல்லைக் கண்
அநாதியான இப்பூமியிலே

மா தானைக்கு எல்லாம் –
துரியோத நாதிகள் உடைய-பெரிய சேனைகளுக்கு எல்லாம் -மலைபுரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் –

ஓர் ஐவரையே மாறாக –
பஞ்ச பாண்டவர்களே-எதிரிகளாம் படி –

எல்லிப் பகல் என்னாது எப்போதும் –காத்தானைக்
இரவு பகல் என்னாமல்-எக்காலத்திலும்-ரஷித்துக் கொண்டு இருக்கும் பெருமானை –

மெய்யே காண விரும்பினால் –

காண்டும் –
காண்போம் –

நீ காண் –
நீ காணலாம் –
எல்லிப் பகல் என்னாது எப்போதும் காத்தானை–எல்லிப் பகல் என்னாது எப்போதும் நீ காண்

சொல்லில் குறையில்லை = இதற்குப் பலவகையாகப் பொருள் கொள்ளலாம்.
பகவத் குணங்களைப் பேசத் தொடங்கினால் அவற்றுக்கு ஓய்வே இல்லை; எவ்வளவு பேசினாலும் குறைவுபடாமல்
மேன்மேலும் பெருகுகின்ற குணங்கள் அவனுக்கு எல்லையில்லாமலிருப்பதால் நாம் சொல்லி முடிக்கும்படியானவையல்ல
பகவத் குணங்கள் என்று கொள்ளலாம்.
பரமபுருஷனுடைய குணங்களை அயோக்யரான நாம் பேசினால் அவற்றுக்குக் குறைவு நேரிடுமென்பதில்லை என்றும் கொள்ளலாம்.
அவனுடைய குணங்களை நாம் சொல்லத் தொடங்கினோமாகில் நம்முடைய குறைகளெல்லாம் நீங்கிவிடும் என்பதாகவுங் கொள்ளலாம்.
நாம் கற்ற கல்விகளுக்கீடாகக் குறைவில்லாமல் பலபல பாசுரங்களைவிட்டு பகவத் குணங்களைப் பேசிவிடலாம்;
பேச்சில் குறையில்லை;
ஆனால் அந்தக் குணங்கள் எல்லையற்றவையாதலால் அவற்றைக் கரை காண்பதில் குறையுண்டு என்பதாகக் கொள்ளுதல் சிறக்கும்.

அப்படி கரைகாண முடியாத குணங்களில் ஒரு குணத்தைச் சொல்லிக் காட்டுகிறார்- பாண்டவ பக்ஷடாதித்வத்தை யருளிச் செய்கிற முகத்தாலே.

சூது அறியா நெஞ்சமே! = சூது என்பதற்குப் பல பொருள்களுண்டு; உபாயம் என்ற பொருள் இங்குக் கொள்ளத்தக்கது.
உபாயமறியாத நெஞ்சே! என்றபடி. எம்பெருமானை நாம் காண வேண்டில், மெய்யே காண வேறுமென்று விரும்புகிற பக்ஷத்தில் தவறாக காண முடியும்;
ஆகையாலே நம்முடைய மெய்யான விருப்பமே அவனைக் காண்பதற்கு உபாயம் என்று தெரிந்து கொண்டு
அந்த வுபாயத்தால் அவனைக் காணலாமாயிக்க அது செய்யாத மடநெஞ்சே! என்கிறாரென்க.

மெய்யே காணவேணுமென்று விரும்பினால் காண்பதற்க எளியனோ அவன்? என்ன; அவனுடைய எளிமையை எடுத்துக் காட்டுகிறார் மேல்.
தொல்லைக்கண் மாத்தானைக்கெல்லாம் ஓரைவரையே மாறாகக் காத்தவனன்றோ அவன். தொல்லைக் கண் என்றது அநாதியான இப்பூமியிலே என்றபடி.
“மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்” (பெரியாழ்வார் திருமொழி 2-1-2) என்றபடி
பாண்டவர்கட்கு எதிர்த்தலையில் திரண்ட சேனைகள் பிரபலமாகையால் மாத் தானைக்கெல்லாம் என்கிறார்.
தானை யென்று சேனைக்குப் பெயர். ஓர் ஐவரையே மாறாக = பல்லாயிரம் போர்வீரர்கள் திரண்டு கிடக்கிற சேனைகளுக்கெல்லாம்
எதிர்க்கக்ஷியில் பாண்டவர்கள் ஐந்துபேர் மாத்திரமே நின்று வெற்றி பெற்றார்களென்று உலகில் புகழ் கிளம்பும்படி ரக்ஷித்தமை சொல்லுகிறது.
எம்பெருமான்தானே துரியோதனாதியர்க்கு எதிரியாய் நின்று போர் செய்யக்கூடுமாயினும், அப்படி நின்றால் அவர்கள் போர்க்களத்திற்கே
வரமாட்டார்களென்று, தான் ஆயுத மெடுப்பதில்லையென்று ப்ரதீஜ்ஞையும் பண்ணி, பஞ்சபாண்டவர்களே
போர் புரிந்து வெற்றி பெற்றனரென்று பாரோர் புகழச் செய்து வைத்தனனென்க.

காத்தானைக் காண்டும் நீ காண் = ‘அடியவர்கள் விஷயத்தில் இவ்வளவு பக்ஷபாதம் வைத்து ரக்ஷிப்பதில்
தீக்ஷிதனாயிருப்பவன் எம்பெருமான்’ என்று நாம் தெரிந்து கொண்டோமாயின், இனி நாம் அவøன் காண வேணுமென்று மெய்யே
விரும்பவேண்டுமென்பதேயுள்ளது. அப்படி காண விரும்புகிறபக்ஷத்தில் கண்டே விடலாம்;
இதை நீ அநுபவத்தில் காண்பாய் என்று ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கி அருளிச் செய்தாராய்த்து.

எல்லிப்பகலென்னாதெப்போதும் என்பதை காத்தானை என்றவிடத்திலும் அந்வயிக்கலாம், காண் என்றவிடத்திலும் அந்வயிக்கலாம்.
இரவுபகலென்று பாராமல் ஸர்வ காலத்திலும் பாண்டவர்களை ரக்ஷித்துக்கொண்டிருந்தவனை என்று முந்தின யோஜகையில் பொருளாம்;
நெஞ்சே! அவனை நீ இரவு பகல் வாசியின்றி எப்போதும் காண் என்று பிந்தின யோஜகையில் பொருளாம்.

காண்டும் = தன்மைப் பன்மை வினைமுற்று. காண்போம் என்றபடி.

————————————————————-

(காணப்புகில்.) ஸ்வநதஸ்வீகாரமென்றும் பரகத ஸ்வீகாரமென்றும் சாஸ்த்ரங்களில் இரண்டு வகையான பற்றுதல்கள் சொல்லப்படும்.
எம்பெருமானை நாம்சென்று பற்றுகிற பற்று ஸ்வதஸ்வீகார மெனப்படும். அவன்தானே வந்து தம்மை ஸ்வீகரித்தருள்வது பரகதஸ்வீகாரமெனப்படும்
இவ்விரண்டுள், எம்பெருமான்தானே நம்மை வந்து ஸ்வீகரிக்கையாகிய பரதக ஸ்வீகாரமே சிறந்த தென்பது ஸந்ஸம்ப்ரநாய ஸித்தாந்தம்.
“அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம்; அவத்யகாரம்; அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்” என்றார். பிள்ளையுலகாசிரியரும்,
கீழ்ப்பாட்டில் ‘அவனை நாம் காண நினைத்தோமாகில் காணலாம்’ என்றருளிச் செய்த ஆழ்வார்;
‘அப்பெருமானை நாமாகக் காண நினைப்பது தகுதியன்றே, அவன்தானே வந்து நம்மை ஸ்வீகரிக்கும்படி
பார்த்திருக்கையன்றோ ஸ்வரூப ப்ராப்தம்’ என்று தெளிந்து அந்தத் தெளிவை இப்பாட்டால் வெளியிடுகிறார்.

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

பதவுரை

அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம்–அறிவுடைய நல்ல நெஞ்சே
மாணி உரு ஆகிக்கொண்டு–வாமநரூபியாய்
உல்கம் நீர் ஏற்ற சீரான்–(மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால்.
சென்று–தானே எங்கும் பரவி
திரு ஆகம–தனது திருமேனியினாலே
தீண்டிற்று–உலகங்களையெல்லாம் தீண்டினானென்பதை
காணப்புகில்–ஆராய்ந்தோமாகில்
நாம் பேசில்–நாம் பேசும் வார்த்தைகளுக்கு
நாணப்படும் அன்றே–வெட்கப்பட வேண்டுமன்றோ

காணப் புகில் –
ஆராய்ந்தோம் ஆகில் –

அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்-
அறிவை யுடைய நல்ல நெஞ்சே -நான் சொன்னதை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டாமோ

நாணப்படும் அன்றே –
வெட்கப் பட வேண்டும் அன்றோ –

நாம் பேசில் –
நாம் பேசும் வார்த்தை களுக்கு –

மாணி யுருவாகிக் கொண்டு-
வாமன ரூபியாய் –

உலகம் நீரேற்ற சீரான் –
மாவலியிடம் சென்று-உலகங்களை நீர் ஏற்றுப் பெற்ற-சீர்மை பொருந்திய திருமால்

திருவாகம் தீண்டிற்றுச்-தனது திரு மேனியினாலே-உலகங்களை எல்லாம்-தீண்டினான் என்பதை –

சென்று –
தானே எங்கும் பரவி -நம்மை வந்து தீண்டி கைக் கொள்ளுகைக்கு சித்தமாய் இருக்க –
அபேஷை இல்லாமல் எல்லார் தலையிலும் திருவடியை கொண்டு வைத்தவன் அவனாய் இருக்க-
நம்முடைய முயற்சி காணத் தக்கது அன்றோ -என்கிறார்
அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்-நாணப்படும் அன்றே நாம் பேசில்
-மாணியுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான் திருவாகம்
தானே-சென்று தீண்டிற்று-இப்படி இருக்க-நாம்-காணப் புகில்-நாம் பேசில்
நாணப்படும் அன்றே-என்று அந்வயித்து
மாணியுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்-தானே-சென்று-தன்னுடைய திருவாகத்தால்-உலகத்தை தீண்டின விஷயத்தை
காணப் புகில்-ஆராயும் அளவில்

நாம் பேசில்-அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே-என்றும் அந்வயித்து பொருள் கொள்ளலாம்

யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய-தச்யைஷ ஆத்மா வ்ருணுதே தநூம் ஸ்வாம்-ஸ்ருதி

சேதனரான நாம் த்ரிவிக்ரம அவதாரம் அறிந்து இருந்தும்-நான் சென்று நாடி நறையூரிலே கண்டேனே –
கால ஷேபார்த்தம் தான் இவை-அவனுடைய ச்வீகாரமே ரஷகம்-
பிராட்டி அசோகவனத்தில் தரித்து இருக்க-பெருமாள் உடைய திருக் கல்யாண குணங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தது போலே
இந்த சம்சாரத்தில் உள்ளவரையில் பகவத் குணாநுபவம் செய்து பொழுது போக்குவது
அவசியம் ஆதலால் அதற்காக பாசுரங்கள் பேசுவது அயுக்தம் இல்லை-

அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் என்பது நெஞ்சை, நோக்கின அண்மை விளி; நெஞ்சே! நீ அறிவு இல்லாத அசேதந வஸ்துவன்றே;
அறிவு கொண்டிருப்பவனன்றோ; உன் அறிவுக்கு என்ன ப்ரயோஜநம்?
நான் ஒன்று சொன்னால் ‘இது தகும், தகாது’ என்பதை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டாவோ?
“காத்தானைக் காண்டும் நீகாண்” (கீழ்ப்பாட்டு) என்று நான் சொல்லிவிட்டால் இதை நன்கு ஆராயாமல் காணமுயல்வதுதானோ உனக்குத் தகுதி?
இப்படியாகில் உன் அறிவுக்குப் பயனில்லையே; உன்னையும் அசேதநரமாகவே எம்பெருமான் படைத்திருக்கலாமே என்கிறார் போலும்.

நாம் காணப்புகில் பேசில் நாணப்படுமென்றே = எம்பெருமானை நாம் காணப்புகுவதும் பேசப்புகுவதும் வெட்கப்படத்தக்க விஷயமன்றோ.
ஏனென்றால், இதைப் பின்னடிகளில் விவரிக்கின்றார். எம்பெருமான் குறட்பிரமசாரியாகி மாவலிபக்கல் நீரேற்றுப் பெற்ற காலத்துத்
தானே தனது திருமேனியைக் கொண்டு இவ்வுலகத்தையெல்லாம் தீண்டினான் என்பது உனக்குத் தெரிந்ததேயன்றோ.
ஆகையாலே நம்மை வந்து தீண்டிக் கைக் கொள்வதற்கு அவன்தானே ஸித்தனாயிருக்க, அதற்கு மாறாக அவனை நாம்
காணப்புகுவதும் பேசப்புகுவதும் தகாத காரியமன்றோ. ஒருவருடைய அபேக்ஷையுமில்லாமல் எல்லார் தலையிலும்
திருவடியைக் கொண்டு வைத்தான் அவனாயிருக்க. நம்முடைய முயற்சி நாணத்தக்கதன்றோ என்கிறார்.

“மாணியுருவாகிக் கொண்டு உலகம் நீரேற்ற சீரானுடைய திருவாகமானது (தானே) சென்று தீண்டிற்று; (இப்படியிருக்க)
நாம் காணப்புகில் நாம் பேசில் நாணப்படுமன்றே” என்றும்,
“மாணியுருவாகிக் கொண்டு உலகம் நீரேற்ற சீரானானவன்தான் சென்று தன்னுடைய திருவாகத்தாலே உலகத்தைத் தீண்டின
விஷயத்தைக் காணப்புகில் – (ஆராயுமளவில்.) நாம் பேசில் அறிவுகைக் கொண்ட நன்னெஞ்சம் காணப்படுமன்றோ” என்றும்
அந்வயித்துப் பொருள் கொள்ள இடமுண்டு.

(யமேவைஷ வ்ருணுதே தேந லப்ப தஸ்லயஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்) என்ற வேதவாக்கியம் இங்கே நினைக்கத்தக்கது.
இதன் பொருள்:- இந்த எம்பெருமான் தானே எந்த சேதநனை ஸ்வீகரிக்கிறானோ, அந்த சேதநனாலே இவன் அடையத் தக்கவன்;
பரகத ஸ்வீகார நிஷ்டனான அப்படிப்பட்ட சேதநனுக்கே எம்பெருமான் தனது திருமேனியை வ்யக்தமாக ஸேவைஸாதிப்பிக்கிறாள் என்பதாம்.

தைத்திரீய ஸம்ஹிதையில் முதற் காண்டத்தில் ஆறாவது ப்ரச்நத்திலும் –
ப்ரஜாபதிம் த்வோவேத ப்ரஜாபதிஸ் த்வம்வேத யம் ப்ரஜாபதிர் வேத ஸ புணயோ பவதி”) என்று சொல்லப்பட்டது.
இதன் பொருள் – ஒரு சேதநன் ஸர்வசேக்ஷியான எம்பெருமானைப் பற்றுகிறான்;எம்பெருமான் ஒரு சேதநனை ஸ்வீகரிக்கிறான்;
(இவ் இருவர்களுள்) எம்பெருமானைப் பற்றுகிறவனைக் காட்டிலும் எம்பெருமானாலே பற்றப்படுகிறவனே புண்ணியனாகிறான் என்பதாம்.
எம்பெருமானே உலகங்களை யெல்லாம் தன் பேறாகச் சென்று தீண்டினான்(த்ரிவிகரமாவதார வ்யாஜத்தாலே) என்று நாம் தெரிந்துகொண்டால்,
அவனை நாம் பற்ற நினைப்பது தகாது; ஆகிலும் நாம் சேதநராகையால் வெறுமனிருக்க நேர்கின்றது;
எதையாவது வாயாலே சொல்லிக்கொண்டிருக்க நேர்கின்றது; அதனால் நாம் காண வீரம்புவதாகவும் நாம் பற்றுவதாகவும்
ஏதோ போது போக்குக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோமத்தனை.
“நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே” என்றாற் போலே ஆழ்வார்கள் அருளிச்செய்வதும் காலக்ஷேபார்த்தமாகவே யொழிய வேறில்லை.
அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம். அசோகவனத்திலே பிராட்டி தரித்திருப்பதற்காகப் பெருமாளுடைய குணங்களை அநுபவித்துக் கொண்டிருந்தது
போல இந்த ஸம்ஸாரத்தில் நாம் உள்ள வரையில் பகவத் குணாநுபவம் பண்ணிப் போது போக்க வேண்டியது அவசியமாதலால்
அதற்காகப் பாசுரங்கள் பேசுவை அயுக்தமல்ல.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -73-87–திவ்யார்த்த தீபிகை –

September 17, 2014

(பூவையுங்காயாவும்) கீழ்ப்பாடில் “நிகரிலகு காருருவா” என்று விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அநுஸந்திக்கவே,
போலிகண்டு மேல்விழும்படியான அளவிறந்த அன்பு அத்திருமேனியிலே தமக்கு விளைந்தபடியை அருளிச்செய்கிறாரிதில்.
முதலடியின் முடிவிலுள்ள ‘பூக்கின்ற’ என்ற விசேக்ஷணம் (அடைமொழி) பூவை காயா நீலம் எல்லாவற்றிலும் அந்வயிக்கம்.
அப்போதுõன் மலர்கின்ற பூவைப்பூ, காயாம்பூ, நீலேற்பலம், கழுநீர்ப்பூ என்னுமிவற்றை நான் எப்போதெப்போது காண்கிறேனோ
அவ்வப்போதிலெல்லாம் எம்பெருமானுருவைக் கண்டதாகவே நினைத்து ஆவியும் உடலும் பூரிக்கப் பெறுகின்றேன் என்றாயிற்று.

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

பதவுரை

பூவையும்–பூவைப்பூவையும்
காயாவும்–காயாம் பூவையும்
நீலமும்–கரு நெய்தல் பூவையும்
பூக்கின்ற–புஷ்பிக்கின்ற
பிரான்–எம்பெருமானுடைய
உருவே என்று–திருவுருவமே என்ற கொண்டு
பாவியேன்–அடியேனுடைய
காவி மலர்–செங்கழுநீர்ப் பூவையும்
என்றும் காண் தோறும்–பார்க்கிற போதெல்லாம்
அவ் அவை எல்லாம்–அந்தந்த மலர்களெல்லாம்
மெல் ஆவி–மிருதுவான உயிரும்
மெய்–சரீரமும்
மிகவே பூரிக்கும்–மிகவும் பருத்து வளர்கின்றது

பூக்கின்ற பூவையும் காயாவும் நீலமும்–புஷ்ப்பிக்கின்ற
பூவைப் பூவையும் -காயம் பூவில் அவாந்தர பேதம் பூவைப் பூ –
மல்லிகை வனமாலை மௌவல் மாலை -பெரியாழ்வார் போலே
காயாம்பூவையும்-கரு நெய்தல் பூவையும்

பூக்கின்ற காவி மலர்
புஷ்பிக்கின்ற-செங்கழு நீர் பூவையும்

என்றும் காண் தோறும் –
பார்க்கிற போது எல்லாம்-காண் தோறும் என்னாமல்– என்றும் காண் தோறும் என்றது-
இந்த பிரமம் ஒரு கால் இரு கால் அன்று-பிரமிப்பதும் தெளிவதும் மீண்டும் பிரமிப்பதும் நித்யமாக செல்லும்

பாவியேன் மெல்லாவி
அடியேனுடைய-மிருதுவான உயிரும்-பாக்யவான் -விபரீத லஷணை யால்-
இப்படி அன்பு விளைந்த உள்ளம் கொண்டேனே என்றுமாம்

மெய் மிகவே பூரிக்கும்
சரீரமும்-மிகவும் பருத்து ஊருகின்றன

அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று
அந்த அந்த மலர்கள் எல்லாம்-எம்பெருமானுடைய திரு வுருவமே என்று கொண்டு-

பூவை யென்பது காயாம்பூவில் ஒரு அவாந்தரபேதம்; “மல்லிகைவனமாலை மௌவல்மாலை” (பெரியாழ்வார் திருமொழி) என்றாற்போல.
“காண்தோறும் ” என்னுமளவே போதுமாயிருக்க, “என்றும் காண்தொறும்” என்றதென்னென்னில்;
போலிகண்டு பூரித்தலென்கிற இந்த ப்ரமம் ஒருகாலிருகாலன்று; ஒருதடவை அவற்றைக்கண்டு பூரித்த பின்பு
‘ஓ! நாம் ப்ரமித்தோம்; இவை வெறும் புஷ்பங்களே யொழிய எம்பெருமானது திருவுருவமல்ல” என்று தெளிந்து கொண்டாலும்,
அடுத்த க்ஷணத்தில் இது மறந்து போய், பழைய ப்ரமமே அநுவர்த்திக்கும்;
இப்படியே ப்ரமிப்பதும் தெளிவதும், ப்ரமிப்பதும் தெளிவதுமாய் நித்தியம் செல்லுமென்பது தோன்றும்.

“பாவியேன்மெல்லாவி” என்றவிடத்து, “பாவியேன்” என்றது விபரீதலக்ஷணையால் ‘பாக்யசாலியான என்னுடைய’ என்று பொருள்படவுங்கூடும்.
போலியான பொருள்களைக் கண்ட மாத்திரத்திலே ஆவியுமுடனும் பூரிக்கும்படியான பாக்கியம் எனக்கேயிறேயுள்ளது என்றவாறாம்.

“மெல்லாவியும் மெய்யும்” என்னவேண்டுமிடத்து “மெல்லாவிமெய்” என்றது- உம்மைத்தொகை.
பூரிக்கம் வடமொழித் தாதுவடியய்கப் பிறந்த வினைமுற்று.

————————————————————–

(என்றுமொருநான்) கீழப்பாட்டிற் சொன்னபடி போலிகண்டு மேல்விழும்படியான காதலர் கிளர்ந்திருக்கச் செய்தேயும்
அப்பெருமானைக் கண்ணாலே கண்டு அநுபவிக்கப்பெறாமையாலே வருந்தி,
‘பேரருளாளனான அப்பெருமான் தன் திருமேனியை நமக்குக் காட்டுகின்றானில்லையே!’ என்று தளர்ச்சி தோற்றப் பேசுகிறார்.
ஒழிவில் காலம் எல்லாம் அழுது கதறினாலும் -இயற்கையில் அருள் நிறைந்தவர்
ஆ நிரை காத்து அருளிய பிரான் அன்றோ-இது என்ன கொடுமை –

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

பதவுரை

ஒரு நாள் ஒழியாமை-ஒருநாளும் தப்பாமல்
என்றும்–எந்நாளும்
யான் இரந்தால்–அடியேன் பிரார்த்தித்தால்,
குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார்–(முன்பு) கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப் பசுக்களை ரக்ஷித்த கோபாலகிருஷ்ண பகவான்
ஒன்றும் இரங்கார்–சிறிதும் தயவு செய்கிறாரில்லை;
உரு காட்டார்–தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை;
நெஞ்சே–ஓ மனமே!
புவி–நாமிருக்கும் இடம்
பெரிதே புடை தான்–(அவருடைய அருள் வெள்ளம் ஏறிப்பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ?

என்றும் ஒரு நாள் ஒழியாமை
என்று ஒரு நாளும் தப்பாமல்

யான் இரந்தால்
அடியேன் பிரார்த்தித்தால்

ஒன்றும் இரங்கார்-
சிறிதும் தயவு செய்கிறார் இல்லை –

உருக்காட்டார் –
தனது திரு மேனியைக் காட்டுகிறார் இல்லை

குன்று குடையாக ஆ காத்த கோவலனார்
முன்பு-கோவர்த்தன மலையை ஏந்தி-பசுக்களை ரஷித்த-கோபால கிருஷ்ண பகவான்

நெஞ்சே
ஒ மனமே

புடை தான் பெரிதே புவி
அவருடைய அருள் வெள்ளம் ஏறிப் பாய முடியாத-மிகப் பெரிய மேட்டு நிலமோ –

அவருக்கு நீர்மை இல்லை என்னப் போகாது இ றே
அவர் நீர்மை ஏறிப் பாயாத தோர் இடம் தேடி-எங்கே கிடந்தோம்

புடை மேடான இடம்
புடை பெரிது -விசாலமானது-விசாலமான இந்த பூமியிலே அவனது அருள் வெள்ளம் பாய ஒண்ணாத
எந்த மூலையிலே கிடந்தோம்-முந்தின  பொருளே சுவை உடைத்து-

நான் ஒழிவில்காலமெல்லாம் அல்லும் பகலும் கதறிக்கதறி வேண்டிக்கொண்டாலும் அப்பெருமான் சிறிதும் நம்மேல்
இரக்கம் காட்டுகின்றாரில்லையே!; அவர்க்கு இயற்கையாக அருள் கிடையாதென்றுதான் நாம் நினைக்கமுடியுமோ?
இந்திரன் பசிக்கோபத்தினால் ஏழு நாள் விடாமழை பெய்வித்தகாலத்திலே கோவர்த்தனத்தைக் குடையாகவேந்திநின்ற
கோக்களையும் கோவலரையும் பரிந்து காத்தருளின பரமதயாளுவன்றோ அவர்; அப்படிப்பட்ட பேரருளாளன்
நம்மேல் அருள் செய்கின்றிலனென்றால் இஃது என்ன கொடுமை!.

நெஞ்சே! புடைதான் பெரிதே புவி= இந்த வாக்கியத்தின் ஆழ்பொருளைக் கண்டறிந்து பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்யுமழகு பாரீர்; –
“அவர்க்கு நீர்மையில்லையென்னப்போகாதிறே; அவர்நீர்மை ஏறிப்பாயாததோரிடந்தேடி எங்கே, கிடந்தோம்!.’ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
மேடான இடத்தைப் புடையென்று சொல்வதுண்டாகையாலே, புவி புடை பெரிதே= நாமிருக்குமிடம்
(அவருடைய கருணைப் பெருவெள்ளம் ஏறிப்பாயமுடியாத) மேட்டுநிலமோ? என்றதாயிற்று.

இதற்கு மற்றொருபடியாகவும் பொருள் கொள்ளலாம்; “புடைபெரிது” என்றால் ‘விசாலமானது’ என்று ப்ரஸித்தமாகச்
சொல்லுவதுண்டாகையாலே அப்பொருளையே இங்குங்கொண்டு, ‘இந்தப் பூமி விசாலமன்றோ?” என்றதன் கருத்தாவது-
விசாலமான இந்த நிலவுலகத்திலே எம்பெருமா-னுடைய அருள்வெள்ளம் பாயவொண்ணாத எந்த மூலையிலே கிடந்தோம்! என்றதாகலாம்.
முந்தின பொருளே சுவையுடைத்து.

—————————————————————–

(புவியுமிருவிசும்பும்.) கீழ்ப்பாட்டில் “ஒன்றுமிரங்காருருக்காட்டார்” என்று வெறுத்துரைத்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான்
“நீர் ஏனிப்படிவருந்துகின்றீர்; உமக்கு நாம் அருளாதிருக்கிறோமோ? உருக்காட்டாதிருக்கிறோமோ?
‘கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-வெல்ல,
நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்?’ (68) என்று உம்வாயாலே பேசினதும் மறந்தொழிந்ததோ?
உகந்தருளினவிடங்களெல்லாவற்றையும் விட்டிட்டு உம்முடைய நெஞ்சிலேயன்றோ நாம் நித்யஸந்நிதிபண்ணியிருக்கிறது” என்றருளிச்செய்ய,
ஆழ்வார் அது கேட்டுத் தேறி ஆநந்தத்துக்குப் போக்குவீடாக அப்பெருமானோடே போராடுகிறாரிதில்.

ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75

பதவுரை

ஊன் பருகு நேமியாய்–(அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!,
புவியும்–இவ்வுலகமும்
இரு விசும்பும்–விசாலமான மேலுலகமும்
என் உள்ளாய்–என் பக்கல் இரா நின்றாய்:
யான் பெரியன்–நானே பெரியவன்;
நின் அகத்த–உன்னிடத்தேயுள்ளன;
நீ–உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ
என் செவியின் வழி புகுந்து–என் காது வழியே புகுந்து
அவிவு இன்றி–ஒருநாளும் விட்டு நீங்காமல்
நீ பெரியை என்பதனை யார் அறிவார்–நீ பெரியனென்று அறிவாருண்டோ?
உள்ளு–இதை நீயே ஆலோசித்துப் பார்.

புவியும்
இவ்வுலகமும்

இருவிசும்பும்
விசாலமான மேல் உலகமும்

நின்னகத்த
உன்னிடத்தே உள்ளன

நீ
உபய விபூதியையும் உள்ளே-அடக்கிக் கொண்டு இருக்கிற நீ

என்செவியின் வழி புகுந்து
எனது காதின் வழியே புகுந்து

என்னுள்ளே –
என் பக்கல் இரா நின்றாய்

அவிவின்றி
அவிவு இன்றி-ஒரு நாளும் விட்டு நீங்காமல்

ஆனபின்பு

யான் பெரியன்-
நானே பெரியவன்

நீ பெரியை என்பதனை யார் அறிவார்
நீ பெரியவன் என்று அறிவார் உண்டோ

ஊன் பருகு நேமியாய்
அசூர ராஷசர்களின் சரீரத்தில் உள்ள-மாம்சங்களை கவர்கின்ற திருவாழி ஆழ்வானை திருக் கையிலே-ஏந்தி உள்ள பெருமானே

உள்ளு
இத்தை நீயே ஆலோசித்துப் பார் –
யான் பெரியன் -தனி வாக்யமாகவும்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் -என்பதனை தனி வாக்யமாகவும்-கொண்டு உரைக்கப் பட்டது
அங்கனம் அன்றிக்கே இரண்டையும் சேர்த்து-நான் பெரியவனோ நீ பெரியவனோ
இதைப் பிறரால் அறியப் போகாது-நீ தான் ஆராய்ந்து அறிய வேணும் -என்கை-

எம்பெருமானே! கீழுலகங்களும் மேலுகங்களுமாகிய வெல்லாம் உன்னிடத்தேயுள்ளன; அப்படி எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிரா
நின்ற நீ என் காது வழியாக என்னுள்ளே புகுந்து பேராமலிருக்கின்றாய்; ஆனாலும் ‘ப்ரஹ்மம்’ என்ற உனக்குப் பேராயிருக்கிறது.
எது எல்லாவற்றிற்காட்டிலும் பெரிதான வஸ்துவோ அது ப்ரஹ்மமென்னத்தகும்;
விபூதிகளைமாத்திரம் வஹித்துக்கொண்டிருக்கிற நீ பெரியவனா? அல்லது, விபூதிகளை வஹிக்கிற வுன்னையுங்கூடச் சேர்த்து
வஹிக்கிற நான் பெரியவனா? என்று ஆராயவேண்டாவோ? இதனை நன்கு ஆராய்ந்தால் நானே மிகப் பெரியவனானவேன்;
என்னுள்ளே ஒரு மூலையிலே அடங்கிக் கிடக்கவல்ல உன்னைப் பெரியவனென்று சொல்ல வொண்ணுமோ?
இதனை நீயே ஆராய்ந்து பார்- என்கிறார்.

“யான் பெரியன்” என்று தனி வாக்கியமாகவும் “நீ பெரியையென்பதனை யாரறிவார்” என்று தனிவாக்கியமாகவும் கொண்டு உரைக்கப்பட்டது.
இங்ஙனன்றியே இரண்டையும் சேர்த்து ஏக வாக்கியமாகவே உரைத்தலுமொக்கும்.
‘நான் பெரியவனோ நீ பெரியவனோ, இதைப் பிறரால் அறியப்போகாது; நீ தான் ஆராய்ந்து அறியவேணும்’ என்கை.

—————————————————————-

(உள்ளிலுமுள்ளந்தடிக்கும்) கீழ்ப்பாட்டிற் கூறியவடி எம்பெருமானை நெஞ்சால் அநுபவிக்கிற வளவிலேயே
நெஞ்சு பூரித்துத் தடிக்கிறபடியைப் பார்த்தால், மெய்யே பரமபதத்திற்சென்ற பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் பண்ணப் பெறில்
உலகம் முழுவதையும் வியாபிக்கவல்லேனாம்படி குறைவின்றித் தடித்துவிடுவேன்போலுமென்கிறார்.

உருவற்ற நெஞ்சு தடிக்குமோ-ச்தூலிப்பது-ஒரு திருப் புளிய மரத்தின் பொந்தின் அடியில் இருந்து-
நெஞ்சாலே நினைக்கும் மாத்ரத்திலே-இப்படி பூரித்தோம் ஆகில்
என்னுடைய கரும பாசங்கள் தொலையும்படி-உன்னாலே கடாஷிக்கப் பெற்று
நலமந்தம் இல்லாதோர் நாட்டில் நித்யானுபவம் பண்ணப் பெற்றால்-பின்னை தடிப்பதற்கு இடம் போதாது போலும்-

ஸ்வரூபத்தால் நீ வியாபித்து இருப்பது போலே
நானும்-அப்படியே ஸ்வபாவத்தாலே வியாபித்து இருப்பேன் போலும் என்கிறார்-
உலகம் எல்லாம் பூரிக்க வல்லனாம் படி உடல் தடிக்கும் அளவு பேர் ஆனந்தம் அடைவேன் என்கிறார் இதில்

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப்படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

பதவுரை

உலகு அளந்த மூர்த்தி–த்ரிவிக்ரம பகவானே,
உன்னை உள்ளிலும்–உன்னை(நெஞ்சில்) அநுஸந்தித்த மாத்திரத்திலும்
உள்ளம்–எனது நெஞ்சானது
துடிக்கும்–(ஸந்தோஷத்தினால்) பூரிக்கின்றது
வினை படலம் விள்ள–பாவங்களின் கூட்டங்கள் என்னை விட்டு ஒழிந்து போம்படி
விழித்து–உன்னாலே நான் கடாக்ஷிக்கப் பெற்று
உன்னை மெய்யுற்றால்–(பரமபதத்திலே வந்து) உன்னை உள்ளபடியே அடைந்து விட்டேனாகில்
உள்ள உலகு அளவும்–நீ வியாபித்திருக்கிற உலகமெங்கும்
யானும் உளன் ஆவன்–நானும் வியாபித்தவனாவேன்;
என் கொலோ–நான் சொல்லுகிற விது ஸம்பாவிதநதானோ?
உரை–நீயே சொல்லு.

உள்ளிலும் உள்ளம் தடிக்கும்
உன்னை நெஞ்சிலே அனுசந்தித்த-மாத்ரத்திலே-எனது நெஞ்சானது-சந்தோஷத்தினால் பூரிக்கின்றது

வினைப்படலம் விள்ள
பாபக் கூட்டங்கள்-என்னை விட்டு ஒழிந்து போம்படி

விழித்து
உன்னாலே கடாஷிகப் பெற்று

உன்னை மெய்யுற்றால்
பரம பதத்தில் வந்து-உன்னை உள்ளபடியே-அடைந்து விட்டேனாகில்

உள்ள உலகளவும்
நீ வியாபித்து இருக்கிற உலகு எங்கும்

யானும் உளனாவன்
நானும் வ்யாபித்தேன் ஆவேன்

என்கொலோ உலகளந்த மூர்த்தி உரை
த்ரிவிக்ரம பகவானே-நான் சொல்லும் இது சம்பாவிதம் தானோ-நீ சொல்லு-

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் = பகவத் விஷயாநுஸந்தாநத்தினால் தமக்க உண்டாகிற ஆநந்த மிகுதியை அறிவிப்பதான
அதிசயோகதியாமிது. உள்ளம் தடித்தலாவது நெஞ்சு ஸ்தூலிப்பதாம்.
உருவற்ற நெஞ்சுக்கு ஸ்தூலத்வம் அஸம்பாவிதமாபினும் ஸம்பாவிதம் போலப் பேசுவதன் கருத்து ஆநந்தமிகுதியைக் காட்டுவதேயாம்.
இவ் விருள்தருமாஞாலத்தில் ஒரு மூலையிலே திருப்புளியின் பொந்திலே யிருந்துகொண்டு உன்னை நெஞ்சால் நினைக்கம்
மாத்திரத்திலேயே நெஞ்ச இப்படி பூரிக்கமேயானால், என்னுடைய கரும பாசங்களெல்லாம் அடியோடே தொலைந்தொழியும்படி
பரிபூர்ண கடாக்ஷம் செய்தருளப்பெற்று நலமந்த மில்லதோர் நாட்டிலே வந்து நித்யாநுபவம் பண்ணப்பெற்றால்
பின்னைத் தடிப்பதற்கு இடம் போராதுபோலும்.
ஸ்வரூபத்தாலே உலகத்தையெல்லாம் நீ எப்படிவியாபித்து நிற்கிறாயோ அப்படி நானும்
ஸ்வபாவத்தாலே உலகமெங்கும் வியாபித்து நிற்பேன்போலும் என்கிறார்.
உலகத்தையெல்லாம் பூரிக்கவல்லதாம்படி உடல் தடிக்குமளவு ஆநந்தத்தை அடைந்திடுவேனன்றோ என்றவாறு.

—————————————————————-

(உரைக்கிலோர் சுற்றத்தார்.) எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக
இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்;
ஸகலவித பந்துவும் எனக்கு நீயே காண்” என்கிறார்.

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

பதவுரை

இரைக்கும் கடல்–கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே
கிடந்த–பள்ளிக்கொண்டிரா நின்ற
எந்தாய்–ஸ்வாமீ!
உரைக்கில்–ஆராய்ந்து சொல்லில்,
ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே–(நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?
எனது உயிர்க்கு–என் ஆத்மாவுக்கு
ஓர் சொல்–‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே
நன்றி ஆகும் துணை–உதவி செய்யும் துணையும்
உரைப்பு எல்லாம்–மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய்–உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண்.

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
ஆராய்ந்து சொல்லி-நீ தவிர-தாயாதிகள் என்றும்-பந்துக்கள் என்றும்-சொல்லக் கூடியவர்கள்-எனக்கு ஆரேனும் உண்டோ
வேறு யாரும் இல்லை நானே உளன் என்று உத்தரம் சொல்லி அருளுவான்  போலும்
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய்
கோஷிக்கின்ற திருப் பாற் கடலிலே-பள்ளி கொண்டு இரா நின்ற-ஸ்வாமி

உரைப்பெல்லாம்
மற்றும் சொல்லப் படுகிற-எல்லா வகையான துணையும்

நின்னன்றி மற்றிலேன் கண்டாய்
உன்னைத் தவிர வேறு ஒருவரையும்-உடையோம் அல்லோம் காண்

எனது உயிர்க்கு ஓர் சொல் நன்றி யாகும் துணை
எனது ஆத்மாவுக்கு-சர்வ தரமான் பரித்யஜ்ய-என்கிற சரம ஸ்லோஹம் ஆகிற
ஒரே சொல்லே-உதவி செய்யும் துணையாம்
அர்ஜுனனை நோக்கி அருளிய ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோஹம்
விபீஷணனை நோக்கி அருளிய ஸ்ரீ ராமபிரானின் சரம ஸ்லோஹம்
ஸ்ரீ வராஹ நாயனார் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அருளிச் செய்த-ஸ்ரீ வராஹ சரம ஸ்லோஹம்
இதுவே நமக்கு துணை-

“ஓர் சுற்றத்தாருற்றா ரென்றில்லை” என்ற நிஷ்கர்ஷித்தே சொல்லலாமாயிருக்க அங்ஙனம் சொல்லாது
“உற்றாரென்ற ஆரோ?” என்ற எம்பெருமானைக் கேள்வி கேட்பதன் கருத்துயாதெனில்;
நாம் எம்பெருமானை இப்படி கேள்வி கேட்டால் அதற்கு அவன் சோதிவாய்திறந்து “வேறுயாருமில்லை; நானேயுளேன்” என்று
உத்தரமருளிச் செய்திடுவான் என்ற கருத்துப்போலும்.
இரைக்கும் கடல்= எம்பெருமானுடைய நித்ய ஸந்நிதாநத்தாலே மகிழ்ந்து கொந்தளிக்கின்ற கடல் என்றபடி. எந்தாய்- ‘எந்தை’ என்பதன் விளி.

ஓர் சொல் நன்றியாகுந்துணை= அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு
“ஸர்வதர்மாந் பரித்யஜய் சரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:” என்று பிரதிஜ்ஞை பண்ணிச்சொன்ன
ஒரு சொல்லாலே எமக்கு நீ துணையாவதுபோல வேறு ஆரேனும் ஆவாருண்டோ என்கை.
ஸ்ரீ விபீஷணாழ்வானை வியாஜமாகக்கொண்டு “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே –
அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று சொன்ன ஒரு சொல்லையும் இங்க அர்த்தமாகக்கொள்ளலாம்.
இவ்வகையாக சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களை நோக்கிப் பிரதிஜ்ஞைபண்ணி எந்தெந்தத் துணையாகத்தான்
ஆவதாக அருளிச் செய்திருக்கிறானோ அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பெல்லாம்” என்கிறார்.

——————————————————————-

(துணைநாள் பெருங்கிளையும்.) ஸாமாந்யமாக உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பலனை விரும்புவர்;
நல்ல துணையோடு கூடியிருத்தல் நன்று என்று சிலர் நினைப்பர்; ‘நாம் சிரஞ்ஜீவியாக வாழக்கடவோம்’ என்று சிலர் காமுறுவர்; ‘
பிள்ளைகளும் பேரன்களுமாகப் பரந்த ஸந்ததிகளுடனே வாழப்பெறுவோம்’ என்று சிலர் விரும்புவர்;
நற்குலப்பிறவியே நச்சுத்தகுந்தது’ என்று சிலர் நச்சுர்; ‘பந்துக்களோடு கூடி வாழ்தல் சிறப்பு’ என்று சிலர் கருதுவர்;
ஆகவிப்படி அவரவர்கள் விரும்பும் புருஷார்த்தங்கள் இந்த ஸம்ஸார நிலத்திலே அநர்த்தமாகப் பர்யவஸிக்குமேயன்றி இன்பமாகத் தலைக்கட்டாது;
ஒருகால் இவையெல்லாம் இன்பமயமாகவே யிருந்தாலும் நெஞ்சே! நீ இந்த அற்ப பலன்களில் கால்தாழாது
பகவத் குணாநுபவமாகிய நல்ல காலக்ஷேபத்தையே மேற்கொள்ளக்கடவை என்று தம் திருவுள்ளத்திற்கு ஹிதமருளிச் செய்கிறார்.

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

பதவுரை

துணை–ஸ்நேஹிதர்களும்
நாள்–ஆயுஸ்ஸும்
பெரு கிளையும்–பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குணமும்–பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை–பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்
(ஆகிய இவை யெல்லாம்)
நாளும்–நாள்தோறும்
இன்பு உடைத்து ஆம் எனும்–(துக்கத்தை யுண்டு பண்ணாமல்) ஸந்தோஷத்தையுண்டு பண்ணுவனவென்றே வைத்துக்கொண்õடலும்,
நல்நெஞ்சே–நல்மனமே!
(நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்)
கணை நாணில் ஒவா தொழில்சார்ங்கன்==அம்புகள் நாணில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி வீரத்தொழில் செய்துகொண்டேயிருக்கிற வில்லையுடையனான இராமபிரானுடைய
தொல் சீரை–இயற்கையான நற்குணங்களையே
ஓவாத ஊண் ஆக உண்–நித்யபோக்யமாக அநுபவிக்கக் கடவாய்.

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத் திணை
ச்நேஹிதர்களும்-ஆயுஸ்ஸூ ம்-பிள்ளைகள் பேரன்கள் என்கிற பெரிய சந்தானமும்
பரம்பரையாக சத்குலமும்-பந்துக்களோடு சேர்ந்து இருப்பதும்

நாளும்-
நாள் தோறும் –

இன்புடைத்தா மேலும் –
துக்கத்தை உண்டு பண்ணாமல்-சந்தோஷத்தை உண்டு பண்ணுவன என்று-வைத்துக் கொண்டாலும்

கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன்-அம்புகள் நாணில் நின்றும் ஒரு காலும் மாறாத படி-
வீரத் தொழில் செய்து கொண்டே இருக்கிற-வில்லை உடைய ஸ்ரீ இராமபிரான் உடைய

தொல்சீரை-
இயற்கையான நற் குணங்களை

நல் நெஞ்சே

ஓவாத ஊணாக வுண்
நித்ய போகமாக அனுபவிக்கக் கடவாய்

மகா வீரனான ஸ்ரீ ராமபிரான் உடைய சரித்ரமே நித்ய போக்யமாகக் கடவது
சோத்ரைவ ஹந்த ஹனுமான் பரமாம் விமுக்திம் புத்யாவதூய சரிதம் தவ சேவதேசௌ -அதிமாநுஷ ஸ்தவம்-
பாவோ நான்யத்ர கச்சதி
– திருவடி போலே-

(கணைநாணில் இத்யாதி.) ஆச்ரித விரோதிகளைக் கிழங்கறக் களைவதே காரியமாகக் கொண்ட இராமபிரான்
ஒருநொடிப்பொழுதும் வில்தொழிலை விட்டிருக்கமாட்டான். அப்படிப்பட்ட மஹாவீரனுடைய சரிதமே நித்ய போக்யமாகக்கடவது என்கை.
ஸோத்ரைவ ஹநச்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் புத்த்யாவதய சரிதம் தவ ஸேவதேஸௌ.” என்று அதிமாநுஸ்தவத்திலே
ஆழ்வானருளிச் செய்தபடி சிறிய திருவடி இன்றைக்கும் ஸ்ரீராம குணாநுபவமே போதுபோக்காக இருப்பதுபோல் ஆழ்வார்தாமும் ஆசைப்படுகிறாராய்ந்து.

ஓவாத- ஒரு க்ஷணகாலமும் விட்டு நீங்காத ஊண்- உணவு “பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருத” இத்யாதிகளை நினைப்பது.

———————————————————————-

(உண்ணாட்டுத்தேசன்றே.) எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எவ்வகையான கெட்ட நடத்தைகளை
யுடையவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருந்தலாகிற ஒரு குணம் உள்ளதாகில் அப்படிப்பட்டவர்களுடைய
பிறப்பு நித்ய ஸூரிகளின் திருமேனி போலே மிக்க தேஜஸ்ஸையுடையதேயாம்;
எப்படிப்பட்ட பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கு அஞ்சவேண்டியதில்லை;
சுவர்க்க லோகத்திலுள்ள தேவர்களின் பிறவியிற்காட்டிலும் அவர்களுடைய பிறவி எவ்வளவோ சீர்மை பொருந்தியதாதலால்
தேவபோனிப்பிறவியையும் இழிவாக நினைக்கவுரியது- என்று,
பகவானுக்குத் தொண்டரயிருப்பாருடைய ஜன்மமே சிறந்த ஜன்மமென்கிறார் இப்பாட்டில்.

ப்ராஹ்மணஜாதியே சிறந்ததென்று பலர் ப்ரமித்திருப்பதுண்டாகையாலே அந்த ப்ரமத்தைப்போக்கித்
தொண்டர்குலமே சிறந்த குலமென்கிறது இப்பாட்டு. பிராமண ஜாதியிற் பிறந்து வைத்தும் எம்பெருமானுக்கு அடிமைப்படாவில்
அக்குலம் சண்டாள குலததிலும் நடை கெட்டதாம்;
சண்டாளகுலத்திற் பிறந்து வைத்தும் வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆளென்று உள்கலந்தார்களாகில்
அவர்களே விண்ணுளாரிலுஞ் சீரியராவர்; ஆகவே ஜாதி அப்ரேயோஜகம்; பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம் என்றதாயிற்று.
இவ்வர்த்தம் ஸ்ரீவசந பூஷண்த்திலும் ஆசார்ய ஹ்ருதயத்திலும் நன்கு விசதமாகும்.
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி
உண்ணாட்டுத்தேசிறே” என்ற ஆசார்யஹ்ருதய ஸ்ரீஸூக்தி இவ்விடத்தில் அது ஸந்திக்கவுரியது.

எம்பெருமானை கண் எடுத்தும் பாராத பாவிகள் உள்ள இந்த லீலா விபூதி புற நாடு
பகவத் கைங்கர்ய பரர்கள் நெருங்கி உள்ள பரமபதம் உள் நாடு-இழி பிறவியும் சேஷத்வம் இருந்தால் தேஜோ கரம்–
அணைய ஊர புனைய-அடியும் பொடியும் பட -பர்வத பவனங்களிலே-ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழி விற்றானாலும் ஆழியங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

பதவுரை

மண் நாட்டில்–இந்த மண்ணுலகத்திலே
ஆர் ஆகி–எப்பிறவியிலே பிறந்தவராயினும்
என் இழிலிற்று ஆனாலும்–எப்படிப்பட்ட இழி தொழில்களையுடையவர்களாயினும்
ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு–திருவாழியை அழகிய கையிலேயுடைய
ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது.
உன் நாடு தேச அன்றே–பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ?
ஊழ் வினையை அஞ்சுமே–அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?
விண் நாட்டை–ஸ்வர்க்க லோகத்தை
ஒன்று ஆக–ஒரு பொருளாக
மெச்சுமே–விரும்பக்கூடுமோ?

உண்ணாட்டுத் தேசன்றே
பரம பதத்தில் உள்ளதேஜஸ் உடையது அன்றோ

ஊழ் வினையை யஞ்சுமே
அநாதியான பாபங்களை-குறித்து அஞ்ச வேணுமோ-சேஷத்வமாகிய ராஜ குல மகாத்ம்யத்தினால்-
எவ்வகைப் பட்ட பாவத்துக்கும் அஞ்ச வேண்டியது இல்லை

விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-
ஸ்வர்க்க லோகத்தை ஒரு பொருளாக-விரும்பக் கூடுமோ
ப்ரஹ்ம பட்டம் இந்திர பட்டம் போன்றவை ஓர் பொருளாக நெஞ்சில் படாதே

-மண்ணாட்டில்
இந்த மண் உலகத்தில்

ஆராகி
எப்பிறவியில் பிறந்தவர் ஆயினும்

எவ்விழி விற்றானாலும்
எவ் இழி விற்று ஆனாலும்-எப்படிப் பட்ட இழி தொழில்களை உடையவர்கள் ஆயினும்

ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு
திரு வாழியை அழகிய திருக் கையிலே உடைய-ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு
அடிமைப் பட்டவர்களாக-பிறக்கும் பிறவியானது –

உண்ணாட்டுத்தேச = எம்பெருமானைக் கண்ணெடுத்தும் பாராத பாவிகள் நிறைந்த இந்த லீலாவிபூதி புறநாடென்னும்,
பகவத் கைங்கர்ய ரஸிகர்கள் நெருங்கி அவனுக்கு அந்தரங்கமாயிருக்கிற நித்யவிபூதி உள்நாடென்றும் கொள்ளத்தகும்.
‘ உள்நாட்டுத்தேக” என்றது – பாமபவத்தில் எம்பெருமானுடைய கைங்கரியத்திற்குத் தகுதியாகக் கொள்ளுகிற
தேஹம்போலே சேஷவஸ்துவான ஆத்மாவுக்கு இழிபிறப்பும் தேஜஸ்கரம் என்றவாறு.

ஊழ்வினையை அஞ்சுகமே?= எம் பெருமானுக்கு அடிமைப்பட்டிருக்கையாகிற ராஜகுல மாஹாத்மியத்தாலே
எவ்வகைப்பட்ட பாவத்திற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்றபடி.

விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே? = இங்கு ‘விண்ணாடு’ என்ற பிரமன் முதலிய தேவர்கள் வாழும் உலகத்தைச் சொல்லுகிறது
ப்ரஹ்மாதி தேவர்கள் வாழும் உலகத்தைச் சொல்லுகிறது. ப்ரஹ்நாதி தேவர்களின் பிறவியிற் காட்டிலும் பகவத் பக்தர்களின் பிறவி சீரியது என்றபடி.
அன்றியே, எம்பெருமானுக்கு அடிமைச்செய்து கொண்டு வாழப்பெறில், ப்ரஹ்ம பட்டம் இந்திர பட்டம் முதலிய எப்படிப்பட்ட பதவிகளும்
ஒரு பொருளாகவே நெஞ்சிற்படாது என்றபடியுமாம். பகவானுக்கு அடிமை செய்துகொண்டு இந்நிலத்தில் கிடந்தாலும்
இதுவே பரமபதத்தினும் சிறந்ததாகையால் தேவலோகமும் நரகமாய்த் தோற்றுமென்கை.

—————————————————————-

(பிறப்பிறப்பு.) ஸம்ஸார நிலத்தில் உண்டாகக்கூடிய எவ்வகைத் துன்பங்களும் தொலைந்து கைவல்ய மென்கிற
ஆத்மாநுபவ மஹாநந்தம் கிடைப்பதானாலும் எம்பெருமானுடைய அநுபவமில்லாமல் அவனை மறந்தொழிந்து
அநுபவிக்கும் அநுபவமெல்லாம் துக்கமயமேயாகும்- என்கிறாரிப்பாட்டில்.
கைங்கர்யம் இல்லாத குறையால் –

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

பதவுரை

பிறப்பு–பிறவியையும்
இறப்பு–மரணத்தையும்
மூப்பு–கிழத்தனத்தையும்
பிணி–வியாதிகளையும்
துறந்து–ஒழிந்து
பின்னும்–அவ்வளவோடு மல்லாமல்
இறக்கவும்–மிகவும்
இன்பு உடைத்து ஆம் ஏலும்–ஆநந்தமுடையதான கைவல்யமோக்ஷம் உண்டாவதானாலும்
மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல்–உலகளந்த பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தப்பெறாத காலங்களிலுண்டான
மறப்பு எல்லாம்–மறப்புகள் எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே–துன்பமென்றே எண்ணுவனேயொழிய வேறுவகையாக எண்ணுவனோ?

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
பிறவியையும்
மரணத்தையும்
கிழத்தனத்தையும்
வியாதிகளையும்
ஒழித்து
அவ்வளவோடல்லாமல்

இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் –
மிகவும் ஆனந்தம் உடைத்தான
கைவல்ய மோஷம்
உண்டாவதானாலும்
இறக்கவும் -மிகவும் -அளவில்லாமல் என்கை –

மறப்பெல்லாம்
மறுப்புக்கள் எல்லாம்

ஏதமே என்றல்லால் எண்ணுவனே –
துன்பம் என்றே எண்ணுவனே ஒழிய-வேறு வகையாக எண்ணுவனோ
மண்ணளந்தான் பாதமே ஏத்தாப் பகல் –
உலகு அளந்த பெருமான் உடைய-திருவடிகளை வாழ்த்தப் பெறாத
காலங்களில் உண்டான –ஜரா மரண மோஷாயா மாமாஸ்ரித்ய யதந்தி யே-கீதை -7-29-

மோக்ஷம் இருவகைப்படும்; ஸ்வாத்மாவையே அநுபவிப்பது மற்றொரு மோக்ஷம். இதுவே கைவல்யமோக்ஷ மெனப்படும்.
பகவததுபவமோக்ஷமே ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததென்றும் கைவல்யமோக்ஷம் ஹேயமென்றும்
கைவல்யநிலம் பறைச்சேரிபோலே இகழத்தக்க இடமென்றும் ஆரியர் கொள்வர்.
மறுபடியும் பிறப்பில்லாமை, பிணியில்லாமை, கிழத்தனமில்லாமை, இறப்பில்லாமை என்னுமிவை மேற்சொன்ன,
இருவகை மோக்ஷங்களைப் பெற்றவர்களுக்கும் பொதுவாயினும் கைவல்யமோக்ஷத்தில் பகவத் கைங்கரியமில்லாமையாகிற
பெரியதொரு குறை உண்டாகையாலே இக்கைவல்ய மோக்ஷம் ஹேயமா யொழிகின்றது;
இவ்வர்த்தமே இப்பாட்டில் அருளிச்செய்யப்படுகின்றது.

“ஜராமரணமோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் (7-39) சொல்லியிருப்பதை அடியொற்றி,
“பிறப்பிறப்பு மூப்புப் பணிதுறந்து” எனப்பட்டது. இறக்கவும்- மிகவும்; அளவில்லாமல் என்கை).

———————————————————————

(பகலிரா.) எம்பெருமானுடைய அநுக்ரஹம் தம் மேல் அல்லும்பகலும் அமர்ந்திருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.
எம்பெருமான் என்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை நன்கு ஆராய்ந்திருப்பனாகில்
என்னை ஒருபொருளாக நோக்குவதற்கே ப்ரஸந்தியில்லை; அவனுடைய திருவருளுக்கு இலக்காகமாட்டாத நீசன் அடியேன்;
அவ்வளவேயோ? குணாநுபவம் பண்ணுவதற்குத்தக்க ஸஹயமுமில்லாதவனாயிருக்கின்றேன்;
இப்படிப்பட்ட என்படிகளை எம்பெருமான் ஆராய்ந்திருப்பானாகில் என்னைக் கடாக்ஷிக்கவே மாட்டான்;
இப்படிகளை ஆராயாமல், பகலென்று மிரவென்றும் பாராமல் எக்காலும் என்னை வலிகட்டாயப்படுத்தியிழுத்துத்
தன் அநுபவத்தை எனக்குத் தந்தருளி என்னை அநுக்ரஹஞ் செய்கின்றான்- என்கிறார்.

எம்பெருமான் அனுக்ரஹம் அல்லும் பகலும் தம் மேல் விழுந்த படியை-அனுசந்தித்து ஹிருஷ்டர் ஆகிறார் –
உபேஷிக்காமல் நிர்ஹேதுக கிருபையால் செய்து அருளுவதை தெரிவிக்கிறார்–

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவைமே யார் தெரிந்து–81- 

பதவுரை

செழு பரவை மேயார்–அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,
இவர் தகவாதொழும்பர்–“இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;
சீர்க்கும் துணை இலர்–சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார்–என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும்–பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து–வலிகட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர்–அடியேனை அநுபவியா நின்றான்.

பகலிரா வென்பதுவும் பாவியாது இரு பொழுதும்
பகல் பொழுது-இராப் பொழுது-என்கிற வாசி இன்றியே எப்போதும்

எம்மை ஆள்வர்
அடியேனை அனுபவியா நின்றான்

இகல் செய்து
வலு கட்டாயப் படுத்தி-
இகல் செய்தல் -யுத்தம் செய்தல்
தம்முடைய குணங்களாலே-எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்
அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து உண்டு-குணத்தாலே ஈடுபட்ட புண்ணுக்கு மருந்து இல்லை இ றே

-தகவாத் தொழும்பரிவர்
இவர் தகவாத் தொழும்பர் -இந்த ஆழ்வார் நம்முடைய அருளுக்கு-பாத்ரமாக கடவாத நீசர்-
தொழும்பர்
-அடிமை செய்பவர்-தகவு -தயவுக்கு பெயர்-தயவுக்கு விஷயமாகக் கூடாத நீசர் என்றபடி

சீர்க்கும் துணை இலர்
சீர்மை பொருந்திய துணையை-உடையரும் அல்லர்
மச் சித்தா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம்-கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திச்ச ரமந்திச -கீதை -10-9-

என்று தெரிந்து ஓரார் –
என்பதை ஊன்றி ஆராதவனாய்

செழும் பரவை மேயார் –
அழகிய திரு பாற் கடலிலே-பொருந்திக் கண் வளர்ந்து அருளும் பெருமான்-

இகல் செய்தல்- யுத்தம் பண்ணுதல்; எம்பெருமான் ஆழ்வாரோடு யுத்தம் பண்ணுகையாவது என்னென்னில்;
தன்னுடைய குணங்களை அநுபவிக்குமாறு நிர்பந்தப்படுத்துதலாம். இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தி:-
“தம்முடைய குணங்களாலே எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்; அம்புபட்ட புண்ணுக்கு மருந்தில்லையிறே.”

இவர் தகவாத் தொழும்பர் தொழும்பர், சீர்க்கும் துணையிலர் என்று ஓரார்- ‘தொழும்பர்’ என்று அடிமை செய்பவர்க்குப் பெயர்;
நீசர்களே அடிமைசெய்ய உரியவராதலால் இங்குத் ‘தொழும்ப’ என்றது நீச ரென்றபடி. தகவு என்று தயவுக்குப் பெயர்;
‘தகவன்’ என்றால் ‘தயவுக்கு விஷயமாகக் கூடியவன்’ என்று பொருளாம்;
‘தகவாத் தொழும்பர்’ என்றது- தயவுக்கு விஷயமாகக் கூடாத நீசர் என்றதாயிற்று.

(சீர்க்கும் துணையிலர்.) ‘சீர்க்கும்’ என்றது துணைக்கு அடைமொழி; ‘சீர்மை பொருந்திய’ என்றபடி
பகவத்கீதையிலே (10-9) மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்- கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திசரமந்திச.”
(இதன் பொருள்- நெஞ்சை நமக்கென்றே பறிகொடுத்து, அப்படியே நம்மைப் பிரிந்தால் தரித்திருக்கமாட்டாமல்
பிராணனையும் நம் அதீனஞ்செய்து தாம் தாம் அநுபவித்த நம் குணங்களையெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு
அப்படியே நாம் செய்த திவ்ய சேஷ்டிதங்களையுமெடுத்துப் பேசிக்கொண்டு ஆநந்திக்கிறார்கள்.) என்றருளிச் செய்திருப்பதில்,
பகவத் குணங்களை ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளுதலும் ஒரு சிறந்த காரியமாகச் சொல்லப்பட்டுள்ளது;
அப்படி பேசிக்கொள்வதற்குத் தாம் (ஆழ்வார்) துணை அற்றவர் என்கிறார். இப்படியிருக்கச் செய்தேயும் எம்பெருமான் என்னை
உபேக்ஷித்திடாமல் தனது நிர்ஹேதுக கருணையினால் குணாநுபவம் செய்விக்கிறானென்றாராயிற்று.

பரவை- ஸமுத்ரம்.

———————————————————–

(தெரிந்துணர்வு.) ஆழ்வார் இப்போது பகவத் குணாநுபவம் பண்ணப் பெற்றதுபோல கீழ்நாள்களிலும் பண்ணப்பெறவில்லையே!
என்று அனுதாபம் அதிகரிக்கப்பெற்று, “பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று
பொய்கையாழ்வார் கதறினதுபோலத் தாமும் கதறுகின்றார்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

பதவுரை

தீ வினையேன்–மஹாபாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால்–விவேகவுணர்ச்சி சிறிதுமில்லாமையினாலே
அந்நான்று–முன்பொருகாலத்தில்
கரந்த உருவிய அம்மானை பின் தொடர்ந்து–நிஜமான வுருவத்தை மறைத்துக்கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை–அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையிலணிந்திருந்த இராமபிரானை
ஏத்தாது–தோத்திரம் செய்யாமல்
அயர்த்து–அறிவுகெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன்–கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்-
விவேக உணர்ச்சி-சிறிதும் இல்லாமையினாலே-
1-உணர்வு இன்மையால்
2-உணர்வு ஓன்று இன்மையால்
3-தெரிந்து உணர்வு இன்மையால்
என்று மூன்று படியாக யோஜிக்க வேணும்
தேகாத்மா விவேகம் இல்லாமை -உணர்வு இன்மை
சேஷ வஸ்து ஆத்மா என்று அறியாமை -உணர்வு ஓன்று இன்மை
பாகவத சேஷத்வம் அறியாமை -தெரிந்த உணர்வு இன்மை

தீ வினையேன்
மகா பாபியான நான்

வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
கீழ்க் கழிந்த நாள்கள் எல்லாம்-வீணாக இருந்து விட்டேன்

கரந்த உருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த
சிறு மான் உருவத்தை மறைத்து கொண்டு வந்த-அந்த மாரீச மானை பொன் தொடர்ந்து கொன்ற-
அன்பர்கள் ஏவின கார்யத்தை அன்புடன் ஏற்று செய்ய வல்ல பெருமான்
திருக் கல்யாண குணங்களில் ஈடு படாமல்-
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட-நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்த எம்பெருமான்
துதிக்க பெறாமல் காலத்தை வீணாக கழித்தேன்

ஆழியங்கை அம்மானை ஏத்தாது அயர்த்து
அறு காழி மோதிரத்தை-அழகிய திருக் கையில் அணிந்து இருந்த-ஸ்ரீ ராமபிரானை ஸ்தோத்ரம் செய்யாமல்-அறிவு கெட்டு-
கைகேயி வரத்தில் அகப்படா விட்டது பெருமாள் திருக்கையில் அறு காழி ஒன்றுமே இறே –
பெருமான் மாயமானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது-அடிக்கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு-
அதன் மேலே எழுந்து அருளினார் என்று ஒருவன் கவி பாட எம்பெருமானார் கேட்டருளி-
மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேனே -என்று வித்தராய் அருளினார்-

“உணர்வின்மையால், உணர்வொன்றின்மையால், தெரிந்துணர் வொன்றின்மையால்” என்று மூன்றுபடியாக்கி யோஜிக்கவேணும்.
‘தேஹத்திற் காட்டில் ஆத்மா வேறுபட்டவன்’ என்கிற ஞானமில்லாமையைக் கருதி ‘உணர்வின்மையால்’ என்றார்;
‘ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்ட வஸ்து’ என்கிற ஞானமில்லாமையைக் கருதி ‘உணர்வொன்றின்மையால்’ என்றார்;
‘பகவத்சேஷத்வத்துக்கு எல்லைநிலம் பாகவதசேஷத்வம்’ என்கிற ஞானமில்லாமையைக் கருதித் ‘தெரிந்துணர்வோன்றின்மையால்’ என்றார்.
ஆக, இப்படிப்பட்ட விவேகவுணர்ச்சிகளில்லாமையினாலே பாவியேன் வாணான் பலவற்றை வீணாளாகக் கழித்தொழிந்தேன்- என்கிறார்.

(கரந்துருவின் இத்யாதி.) அன்பர்கள் ஏவின காரியத்தை அன்புடன் ஏற்றுச் செய்யவல்ல பெருமானுடைய
திருக்குணங்களிலீடுபட்டுத் துதிந்துவாழமே பாழேபோனேனென்கிறார்
மாரீசன் நிஜ ரூபத்தை மறைத்துப் பொன்மான் வடிவுபூண்டு பஞ்சவடியில் வந்து தோன்றினபோது,
1. “பொன்னொத்தமானொன்று புகுந்தினிதுவிளையாடவு நின்னன்பின் வழிநின்று சிலை பிடித்தெம்பிரானேக” (பெரியாழ்வார் திருமொழி 3-10-7)
என்கிறபடியே, பிராட்டியின் முகம் கன்றாமைக்காக அம்மாயமானைப் பிடித்து வருவதாக அதன்பின்னேயெழுந்தருளினவனும்
அறுகாழி மோதிரத்தைத் திருக்கையிலே அணிந்திருந்தவனுமான இராமபிரானைத் துதிக்கப்பெறாமல்
அறிவு கெட்டுக் காலங்களைப் பாழேகழித்தேன்.

“கைகேயிலரத்தில் அகப்படாவிட்டது பெருமான் திருக்கையில் அறுகாழியொன்றுமெயிறே” என்றும்,
“பெருமாள் மாயமானை எய்து மீண்டெழுந்தருளுகிறபோது அடிக்கொதித்து நடக்கமாட்டாமை தளிர்களை முறித்திட்டு
அதன்மேலே எழுந்தருளினாரென்று ஒருவன் கவிபாட எம்பெருமானார் கேட்டருளி
‘மாறியிடுகிற திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேனே.” என்று வித்தராயருளினார்” என்றுமுள்ள
வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் அநுஸந்திக்கத்தக்கன.

“தெரிந்துணர்வு” என்றவிடத்தும் “கரந்துருவின்” என்ற விடத்தும் தொகுத்தல் விகாரம்; தெரிந்த + உணர்வு; காந்த + உருவின்

————————————————————–

(அயர்ப்பாய்.) கீழ்க்கழிந்த காலம்போலே இனிமேல் வரும் காலமும் பாழே போகாதபடி இப்போதுள்ள
பகவத்குணநுபவம் தம்முடைய நெஞ்சுக்கு நிலைத்திருக்கும்படி ஹிதோபதேசம் பண்ணுகிறார்.
யோக்யதை இல்லாத நாம்-நெஞ்சால் நினைப்பதும்-வாயால் துதிப்பதும்-தலையால் வணங்குவதும்-அவத்யம் என்று
அயோக்யானுசந்தானம் பண்ணி பின் வாங்கும் வழக்கம் உண்டே திரு உள்ளத்துக்கு-
அதனால் ஹித உபதேசம் பண்ணி அருளுகிறார்-

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வல்வினனை வாழ்த்து –83-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
செயற்பால அல்லவே–செய்யத்தகாதவற்றையே
செய்கிறுதி-செய்ய முயல்வாயென்று
அஞ்சினேன்–(உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்;
மல்லர் நான் வல்வினளை வாழ்த்து–மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ணபிரானை மங்களா சாஸநம் பண்ணிக் கொண்டிரு
உயப்போம் நெறி இதுவே கண்டாய்–உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்;
அயர்ப்பாய்–(அப்பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு;
அயர்ப்பாய்–மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்;
சொன்னேன்–(உனக்கு நான் சொல்லவேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன்.

அயர்ப்பாய்
எம்பெருமானை மறந்து கெட்டாலும் கேடு

அயயர்ப்பாய் –
மறவாமல் வாழ்ந்தாலும் வாழ்

நெஞ்சமே சொன்னேன்
ஒ மனமே-நான் உனக்கு சொல்ல வேண்டிய ஹிதத்தைச் சொல்லி வைத்தேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய்
உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்

-செயற்பால வல்லவே
செய்யத் தகாத வற்றையே

செய்கிறுதி நெஞ்சமே
செய்ய முயல்வாய் என்று

யஞ்சினேன்
உன்னைப் பற்றிப் பயப்படுகின்றேன்

மல்லர் நாள் வல்வினனை வாழ்த்து
மல்லர்கள் ஆயுளை முடித்த-கண்ணபிரானை-மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இரு –

யோக்யதை யில்லாத நாம் எம்பெருமானை நெஞ்சால் நினைப்பதும் வாயால் துதிப்பதும் தலையால் வணங்குவதும்
அவனுக்கு அவத்யம் என்று அயோக்யதாநுஸந்தாகம் பண்ணிப் பின்வாங்குதலில் ஆழ்வாருடைய திருவுள்ளம் அடிக்கடி ஊன்றுகிற வழக்கமுண்டே;
அப்படி இன்னமும் உண்டாகப்பெறில் பகவத்குணாது பலம் முட்டுப்படுமேயென்று அஞ்சி நெஞ்சை நோக்கி,
ஓ நெஞ்சே! அயோக்யனென்று பின்வாங்குகையிலே மறுபடியும் நீ இறங்கி விடுவாயோவென்று நான் மிகவும் அஞ்சுகின்றேன்.
இனி நீ அப்படி ஒருகாலும் செய்யலாகாது; இப்போது நாம் பகவத் குணானுபவம் செய்துகொண்டிருப்பதுபோலவே
எப்போதும் செய்தும் கொண்டிருப்பதான் நாம் உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான வழியாம்.
மல்லர்களை மடித்த கண்ணபிரானை வாழ்த்துவதே நமக்குப் பணி; என்பேச்சை நீ ஆதரித்துக் கேட்பாயென்று நம்பி
நான் இதை உனக்குச் சொன்னேன்; இந்த உபதேசத்தை நீ ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்தது வாழ்தியேல் வாழ்ந்திடு;
மறந்தொழிந்து கெட்டுப்போதியேல் போயிடு- என்றாராயிற்று.

செயற்பால- செய்யக்கூடியவை; செயற்பால அல்ல- செய்யக்கூடாதவை; அயோக்யதாநுஸந்தாகட்பண்ணிப் பின்வாங்குதல் முதலியன.
செய்கிறுதி அஞ்சினேன் = செய்வாயென்று பயப்படுகின்றேனென்கை.

———————————————————————-

(வாழ்த்தியவண்டியை.) இனி எப்போதும் அயோக்யபாதையை நினைந்து பின் வாங்கலாகாதென்று
நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில்
அப்படி பின்வாங்கி உயிர்தரித்திருக்க முடியுமாகில் அப்படியே பின்வாங்கிக்கிட என்கிறாரிப்பாட்டில்.
இத்தால்- மனமொழிமெய்களென்னும் மூன்று காணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக் காரியம் செய்யப்பெறாவிடில்
தாம் தரித்திருக்க முடியாமையைப் பேசினாராகிறார்.
வாய் கை தலை பெற்ற பயனை அனுபவித்து-
எங்கே காண்கிறேன் நம் துழாய் அம்மான் தன்னை யான் என்று அலற்றி-சத்தை பெற்று உயிர் தரிக்கை-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-

பதவுரை

அவன் அடியை வாழ்த்தி–“அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம் பண்ணி
பூ புனைந்து–(அத்திருவடிகளிலே) புஷபங்களைச் சாத்தி
நின் தலையை தாழ்த்து–உன் தலையை வணங்கு;
இரு கை கூப்பு–இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலி பண்ணு”
என்றால்–என்று சொன்னால்
கூப்பாத–அப்படி செய்யாத
பாழ்த்த விதி–பாழும் விதியையுடைய
என் நெஞ்சமே–என்னுடைய மனமே!
அவனை–அந்த ஸர்வேச்வானை
எங்கு உற்றாய் என்று ஏத்தாது–‘எங்கேயிருக்கிறாய்’ என்று சொல்லி யழைத்துத் துதியாமல்
தங்க ஆம் எனில்–தரித்திருக்கக் கூடுமாகில்
தங்கு–தரித்திரு.

வாழ்த்தி யவனடியைப்
அப்பெருமானுடைய-திருவடியை மங்களா சாசனம்  பண்ணி

பூ புனைந்து
அத்திருவடிகளிலே புஷ்பங்களைச் சாத்தி

நின்தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு
உன் தலையை வணக்கு-இரண்டு கையையும் கொண்டு அஞ்சலி பண்ணு

என்றால்
என்று சொன்னால்

கூப்பாத -பாழ்த்த விதி
அப்படி செய்யாத-பாழும் விதியை உடைய
கூப்பாத -நிகழ காலத்து நிலைமையை சொல்லுகிறது அன்று
எதிர் காலத்தில் நேரக் கூடிய நிலைமையை சங்கித்துச் சொல்லுகிறபடி

எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
என்னுடைய மனமே-அந்த சர்வேஸ்வரனை-எங்கே இருக்கிறாய் என்று சொல்லி அழைத்து-துதியாமல் –

தங்க ஆம் ஏலும்
தரித்து இருக்கக் கூடுமாகில்-தங்க தான் ஆம் ஏலும் -தான் -அசைச்சொல்

தங்கு
தரித்திரு –

வாய்ப்படைத்தது பயன்படும்படி அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தியும்,
கைபடைத்தது பயன்படும்படி அந்தத் திருவடிகளிலே பூக்களைப் பணிமாறியும்,
தலை ஸபலமாம்படி அதனை அத்திருவடிகளிலே வணக்கியும் அஞ்ஜலி பண்ணு என்று நன்மையாகச் சொன்னால்
அப்படி செய்யாதேயிருந்தும், “எங்கே காண்கேன் ஈன்துழாயம்மான் தன்னையான்” என்று அலற்றாமலிருந்தும்
உயிர்தரித்திருக்கவல்லையெல், நெஞ்சே! உன் இஷ்டப்படியே இருந்திடு.
ஸத்தை பெற்றிருக்கைக்காக இத்தனையும் செய்து தீர வேண்டியதேயாம் என்று குறிப்பித்தவாறு.

“இருகை கூப்பென்றால் கூப்பாத” என்றது நிகழ் காலத்திய நிலைமையைச் சொல்லுகிறதன்று;
எதிர்காலத்தில் நேரக்கூடிய நிலைமையைச் சங்கித்துச் சொல்லுகிறபடி.
அவனடியை வாழ்த்தாமலும் பூப்புனையாமலும் தலையைத் தாழ்த்தாமலும் இருகை கூப்பாமலும் ஸத்தை பெற்றிருக்க முடியாமையைச் சொன்னபடி.

“தங்கத்தானாமேலும்” என்றவிடத்து, தான்- அசை. தங்கு நல்- ஸத்தைப்பெறுதல்

——————————————————————–

(தங்கா முயற்றியவாய்.) இடைவிடாது பகவத்குணாநுபவம் செய்பவர்கட்கும் உலகத்துப் பொருள்களிலும் கண் செல்லுமே;
சென்றாலும், பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டு அப்பொருள்கள் அறியப்படுமேயன்றி லௌகிகப்பொருள்களாக
மாத்திரம் அவை அறியப்படமாட்டாவே, அப்படியே மேகங்களிலே கண்செலுத்தின ஆழ்வார்
அவற்றின் உருவத்தை எம்பெருமானுடைய திருநிறமாகவே திருவுள்ளம்பற்றி,
ஆஆ! இந்த மேகங்கள் ஆசாசமடங்கலும் திரிந்து எந்த க்ஷேத்ரத்திலே சென்று என்ன தபஸ்ஸைச் செய்து
இங்ஙனே திருமாலின் திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டனவோ! என்று வியந்து பேசுகிறார்.

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே -ஸ்ரீ திரு விருத்தம்–32—வைகல் பூம் கழிவாய் -6-1-

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -ஸ்ரீ திரு விருத்தம்-38–சொன்னால் விரோதம் இது -3-9-

இப்பாட்டை ஒருபுடை ஒத்தனவாக இங்கு அநுஸந்திக்கத் தக்கன.

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

பதவுரை

பொங்கு ஓதம்–கிளர்ந்த அலைகளையுடைத்தாய்
தண் அம்–குளிர்ந்து அழகிய
பால்வேலைவாய்–திருப்பாற்கடலிலே
நல் நிறம் கொள் கார்–நல்ல திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள்
தங்கா முயற்சிய ஆய்–மாறாத முயற்சியை யுடையனவாய்க் கொண்டு
தாழ் விசும்பின் மீது பாய்ந்து–விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால்–எமது கண்ண பிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு–எந்த தேசத்திலே போய்
எத்தவம் செய்திட்டன கொல்–எவ்வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)

தங்கா முயற்றியவாய்த்
தங்கா முயற்றிய ஆய்-மாறாத முயற்சியை உடையவனாய்க் கொண்டு

தாழ் விசும்பின் மீது பாய்ந்து
விசாலமான ஆகாசத்தின் மேலே-சஞ்சரித்து

எங்கே புக்கு
எந்த தேசத்திலே போய்

எத்தவம் செய்திட்டன கொல் –
எவ்விதமான தபஸை செய்தனவோ-அறியேன் –

பொங்கோதத்
கிளர்ந்த அலைகளை யுடைத்தாய் –

தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும்-
குளிர்ந்த அழகிய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன –நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம்
அத்தை விட்டு கண்ணபிரானாக வந்து தோன்றினான்

என்னுடைய கண்ணன் பால் நல் திறம் கொள் கார் –
என் கண்ணபிரான் இடத்தில் உள்ள-நல்ல திரு மேனி நிறத்தை கொள்ளை கொண்டு இருக்கிற-மேகங்கள்-

“பால்வேலையாய்” =‘வேலா’ என்ற வடசொல் கடற்கரைக்குப்பெயர்;
அது தமிழில் ‘வேலை’ என ஐயீறாகி ஆகு பெயரால் கடலை உணர்த்திற்கு; ஆகவே, பால்வேலை- க்ஷீரஸாகரம்.
“பால் வேலை நாயகன் வளரு மென்னுடைய கண்ணன்” என்றது-
‘ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ண நிகேதக:- நாகபர்யங்கம் உத் ஸ்ருஜ்ய ஆகதோ மதுராம் புரீம்” என்ற
பிரமாணத்தின்படியே திருப்பாற்கடலில் பள்ளிகொள்ளுதலை விட்டிட்டுக் கண்ணபிரானாக வந்து தோன்றின எம்பெருமானென்றபடி.

——————————————————————–

(கார்கலந்தமேனியான்.) உலகத்தில் எல்லாரும் பகவத் குணாநுபவம் பண்ணியே போது போக்கவேணுமென்கிறார்.
பகவத் குணங்களை அநுஸந்தித்தால் பாவங்களெல்லாம் தொலையுமென்று ஸாமாந்யமாகப் பலரும் சொல்லுவதுண்டு;
அப்படி பாவங்களைத் தொலைத்துக் கொள்வதற்காக பகவத் குணாநுபவம் செய்யாவிடில் செய்ய வேண்டா;
பகவத் குணாநுணுந்தாந முகத்தினால் பாவங்களைத் தொலைத்துக்கொள்ளா தொழியில் ஒழிக;
ஒவ்வொருவனும் போதை போக்கியாக வேண்டுமே; வேறு எந்தக் காரியஞ் செய்தால் போதுபோரும்.
பகவத் குணாநுபவத்தாலன்றி வேறொன்றாலும் போது போக்க முடியாதாகையாலே காலக்ஷே பார்த்தமாகவாது
ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியேயாக வேணுமென்கிறார்.

கால ஷேப அர்த்தமாக-பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும்
என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

பதவுரை

கார் கலந்த மேனியான்–மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும்
கை கலந்த ஆழியான்–கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும்.
பார் கலந்த வல் வயிற்றான்–(பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சேரப் பெற்ற வலிய திருவயிற்றையுடையவனும்
பாம்பு அணையான்–திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து–திருக்குணங்கள் நிரம்பிய
சொல்–ஸ்ரீஸூக்திகளை
நினைந்து-அநுசந்தித்து
சூழ்வினையின் ஆழ் துயரை போக்கார் –கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக்கொள்ளார்களாகில் (ஒழியட்டும்)
என் நினைந்து இப்போது போக்குவர்–வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள்.

கார் கலந்த மேனியான்
மேகத்தோடு ஒத்த திரு மேனியை-யுடையவனும்

கை கலந்த வாழியான்
திருக் கையோடு சேர்ந்த திரு வாழியை-யுடையவனும்

பாரளந்த வல்வயிற்றான்
பிரளய காலத்தில் உலகம் எல்லாம் வந்து சேரப் பெற்ற-வலிய திரு வயிற்றை  யுடையவனும்

பாம்பணையான் –
திரு வநந்த ஆழ்வானைப்-படுக்கையாக யுடையவனுமான-எம்பெருமானுடைய

சீர் கலந்த சொல்-
திருக் குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூ க்திகளை-
ஸ்ரீ ராமாயணம்
மகா பாரதம்
ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
அருளிச் செயல்கள்

நினைந்து
அனுசந்தித்து

சூழ் வினையின் ஆழ் துயரை -போக்காரேல்-
கொடிய பாபங்களினால் யுண்டாகும்-மிக்க துன்பங்களை போக்கிக் கொள்ளார்கள் ஆகில்-ஒழியட்டும்

என்னினைந்து போக்குவார் இப்போது
வேறு எதை அனுசந்தித்து இந்தப் போதை-போக்குவார்கள்

இப்படி ஏன் சொல்ல வேண்டும்? உலகத்தில் ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியோ போதுபோக்குகிறான்?
இல்லை; சூடாடிப் போதுபோக்குவபார் சிலரும், சதுரங்கம் பொதுபோது போக்குவார் சிலரும்,
உண்டியே உடையே உகந்தோடிப் போது போக்குவார் சிலருமாய் இப்படி பலவகைகளாலே போது போக்குவாரைக் காணா நின்றோமே;
குணாநுபவத்தாலே போது போக்குவாராக ஒருவரையுங் கண்டிலோமே; ஆழ்வாரொருவரேயன்றோ அப்படிப்பட்டவர்;
இப்படியிருக்க “என்னினைந்து போக்குவர் இப்போது” என்று குணாநுபவத்தாலன்றிப் போது போக்க முடியாதென்று
இவர் எப்படி சொல்லலாம்?- என்று கேள்வி பிற்கும். இதற்கு நாம் என்ன ஸமாதானம் சொல்வல்லோம்;
உலகத்தில் தம்முடைய ஸ்வபாவத்தையே பிறர்க்கும் ஸ்வபாவமாக நினைத்துக்கொள்ளுதல் பெரியோர்களின் இயல்பு;
பரமைகாந்திகளாய்ப் பரம வைதிகர்ளான அந்தணர்கள் இரவில் சயனிக்கும்போது தம் மனைவியரை விளித்து,
‘அடீ! சொம்பிலே ஜலம் வையாதே. கவிழ்த்துவை’ என்று சொல்லுவார்களாம்; இப்படிச் சொல்லுவதன் கருத்து அறிவீர்களே!
இரவிலே கண்ணன் வந்தால் பொம்மைக் கொள்ள கொள்ள நினைத்து அதனருகே வருந்த அதை யெடுக்கப் பார்க்கும் போது
கையலம்பாமல் சொம்பைத் தொடலாகாததென்று தீர்த்தம் தேடுவானாம்; தீர்த்தம் கிடைத்தால் கையை அலம்பிக் கொண்டு
செம்மை எடுத்துக்கொண்டு போய்விடுவானாம்; தீர்த்தம் கிடையாவிடில் அசுத்தமான கையாலே சொம்பை எப்படி எடுப்பதென்று
ஆசாரம் கொண்டாடி வெறுமனே போய்விடுவானாம்.
இதற்காகவே ‘சொம்பிலே ஜலமின்றிக் கவிழ்த்துவை’ என்று புராதநவைதிகர்கள் திட்டம் செய்வார்களாம்.
தங்களுடை ஆசாரமே கள்ளர்க்கும் உள்ளதாக அவர்கள் நினைப்பதுபோல், ஆல்வாரும் பகவத் குணாநுபவத்தாலன்றி
மற்றொருதனாலும் தமக்குப் போது போக்க அரிதாயிருக்குமியல்வவயே எல்லார்க்கும் உளதாக நினைத்து
மிக அற்புதமாகவும் அழகாகவும் இப்பாசுரம் அருளிச் செய்கிறாரென்றுணர்க.

‘கார்கலந்த மேனியான் சீர்கலந்த சொல், கைகலந்தவாழியான் சீர்கலந்த சொல், பார்கலந்த வல்வயிற்றான் சீர்கலந்து சொல்
பாம்பணையான் சீர்கலந்த சொல்” என்று இங்ஙனே யோஜித்து உபர்யஸித்தல் அழகு;
( கார் கலந்த மேனியான் சீர்கலந்தசொல்.) இராமபிரானைச் சொல்லும்போது** =மேகச்யாமம் மஹாபாஹும்” என்று முன்னே
நீலமேகவடிவுடைபவ னென்கையாலே, கார் கலந்த மேனியானென்று இராமபிரானைச் சொல்லிற்றாய்,
அவனுடைய சீர்கலந்த சொல்- ஸ்ரீராமாயணம் என்றபடி.

(கைலந்தவாழியான் சீர்கலந்த சொல்.) ***- ஜாதோஸி தேவதேவேச சங்கசக்ரகநாதா!” என்று கண்ணபிரான் திருவவதரிக்கும்போது
\கையும் திவ்யாயுதமுமாக திருவவதரித்தனனாதலால் கைகலந்தவாழியனென்று கண்ணபிரானைச் சொல்லிற்றாய்,
அவனுடைய சீர்கலந்த சொல்- ஸ்ரீபாசுவதம், ஸ்ரீமஹாபாரதம், ஹரிவம்சம் முதலியனவென்க.

(பார்கலந்தவல்லவயிற்றான் சீர் கலந்த சொல்.) பிரளயகாலத்திலே எம்பெருமான் உலகங்களையெல்லாம் திருவயிற்றினுள்ளே
வைத்துக் காத்தருளினபடியைப் பேசுகிற புராணங்கள்.

(பாம்பணையான் சீர் கலந்த சொல்.) பாம்பனையாளென்று அரவணைமேற் பள்ளிகொள்ளும் அணியரங்கநாதனைச் சொல்லுகிறது;
அவனுடைய சீர்கலந்த சொல்- திருவாய்மொழி; “வான் திகழுஞ் சோலைமதிளரங்கர் வான்புகழ்லோன்ற தமிழ் மறைகாளியதரமும்”
(திருவாய் மொழியின் தனியன்) என்கிறபடியே திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமென்று
நம் ஆசாரியர்கள் அருளிச் செய்கையாலே பாம்பனையான் சீர்கலந்த சொல்- திருவாய் மொழியாம்;

ஆக, ஸ்ரீராமாயண பாரதாதி இதிஹாஸங்களைக் கொண்டும் ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலிய புராணங்களைக் கொண்டும்,
திருவாய்மொழி முதலிய அருளிச் செயல்களைக் கொண்டும் பாவத்தைப் போக்கிக் கொள்ளார்களாகில் போகட்டும்;
போதைப் போக்குவதற்கு இவையொழிய வேறொன்றும் ஸாதநமல்ல என்றாராயிற்று.

————————————————————————–

இப்போதும்.) முதற்பாட்டிலே தம்முடைய நெஞ்சை விளித்து அருளிச் செய்ததுபோலவே
முடிவு பாட்டையும் நெஞ்சை நோக்கியுரைத்து முடிக்கிறார்.
பகவத் குணாநுபவத்தால்தான் உலகத்தார் யாவரும் போதுபோக்க வேணுமென்று கீழ்ப்பாட்டில் சொன்னேன்;
அவர்கள் தங்கள் போதை எப்படி போக்கினாலும் போக்கிக் கொள்ளட்டும்; சூதாடியோ, சதுரங்கம் பொருதோ, களவாடியோ,
கண்ணுறங்கியோ எவ்விதமாகவேனும் போரதைப் போக்கிக் கொள்ளட்டும்; அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நெஞ்சமே!
உனக்கு நான் சொல்லுவதைச் சிக்கனம் கேளாய்; இன்றைக்கோ நாளைக்கோ; இன்னும் பத்தெட்டு வருஷங்கள் கழித்தோ
மற்றுமெப்போது நான் உனக்கு உரைப்பதானாலும் இந்த ஒருசொல்லையே சொல்லுவேன்; அந்தச் சொல் யாதெனில்-
“நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான் மொய்கழலே ஏத்த முயல்” என்பதே.
அடியாருடைய விரோதிகளைத் தொலைப்பதற்காகவே “உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடரொழியும் சங்கும்,
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால்” என்றபடி திவ்யாயுதங்களை எப்போதும் தரித்திரா நிற்கும் பெருமானுடைய
பரமபோக்கியமான திருவடிகளை ஏந்துவதற்கு உத்ஸாஹப்பட்டுக் கொண்டிருப்பதே
உனக்கு எப்போதும் காரியமாகக் கடவதென்று நெஞ்சுக்குரைத்துத் தலைகட்டினாராயிற்று.

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
நம்மேல் வினை கடிவான்–நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக
எப்போதும் கை கழலா நேமியான்–ஒருபோதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய
மொய்கழலே–அழகிய திருவடிகளையே
ஏத்த–ஸ்துதிக்க
முயல் உத்ஸாஹப்படு;
இப்போதும்–இக்காலத்திலும்
இன்னம் இனி சிறிது நின்றாலும்–மேலுள்ள காலத்திலும்
எப்போதும்–ஆக எந்தக் காலத்திலும்
ஈதே சொல்–இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.

ஸ்ரீபட்டர் “எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்” என்கிறவிதைத் திருவுள்ளம்பற்றி ஸ்ரீரங்கராஜஸ்தலத்தில்
பாது ப்ரணதரக்ஷாயாம் விளம்ப மஸஹந்நிவ- ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸந: ஸ்ரீரங்கநாயக: என்றருளிச் செய்த ச்லோகம் இங்கு அநுஸந்தேயம்.

‘எப்போதும்’ என்பதை நான் காமடியிலே கூட்டி உரைக்கவுமாம் ‘எப்போதும் ஏத்த முயல்’ என்று.

“மொய்கழலே ஏத்து” என்னாதே “ஏத்த முயல்” என்கையாலே, பகவத் விஷயத்தை ஏத்திக் கரை காண்பதென்பது இல்லை,
ஏத்தவேணும் ஏத்தவேணும் என்கிற உத்யோக நிலைமையை எப்போதுமிருக்கும் என்பது காட்டப்பட்டதாம்.
ஆளவந்தாரும் “ஸ்தா ஸ்திதா. நோத்யமதோதிசோதே” என்றருளிச் செய்ததை ஸ்மரிப்பது.

கீழ்ப் பிரபந்தமாகிய திருவாசிரியத்திற் போலவே இப்பிரபந்தத்திலும்
தம் திருநாமிட்டுக் கவிபாடுதல், பிரபந்தாத்யயநத்திற்குப் பலன் சொல்லுதல் முதலியவற்றை விட்டருளினர்; நிர்ப்பந்தமில்லாமையாலே.

சொற்சுவையாலும் பொருட்சுவையாலும் மிகச் சிறந்த இந் திவ்வியப் பிரபந்தம் ஒருவாறு வியாக்கியானித்துத் தலைக்கட்டப்பட்டதாய்த்து.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -61-72–திவ்யார்த்த தீபிகை –

September 17, 2014

(இறைமுறையான்.) ஆழ்வார் இவ்விருள் தருமாஞாலத்தின் தன்மைகளைச் சிந்திக்கிறபோது ஒன்றுந்தோன்றாமல்
ஆகாசத்தை நோக்கிக் கிடப்பண்டு;
“நலத்தால்மிக்கார் குடத்தைக் கிடந்தாய்! உன்னைக் காப்பான் நானலாப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் தோழுவனே” என்ற
திருவாய்மொழியில் அருளிச்செய்தபடியே ஆகாசத்தை நோக்க நேருவதுமுண்டு;
ஏதோவொரு காரணத்தினால் ஆகாசத்தை நோக்கினார் ஆழ்வார்; ஆகாசமடங்கலும் நக்ஷத்ரமயமாகக் காணப்பட்டது;
உலகத்தில் எந்த வஸ்துவைக் கண்டாலும் பகவத் ஸம்பந்தத்தை முன்னிட்டே அந்த வஸ்துக்கள் ஆழ்வாருடைய திருவுள்ளத்திற்கு
விஷயமாகுமேயன்றி ஸாமாந்யமான லௌகிக வஸ்துவாக விஷயமாகா தாகையாலே இந்த நக்ஷத்ரங்களிலும் பகவத் ஸம்பந்தத்தை
முன்னிட்ட உத்ப்ரேக்ஷை திருவுள்ளத்திற்படவே அந்த அத்ப்ரேக்ஷையை இந்தப் பாசுரத்தினால் வெளியிடுகிறார்.

நஷத்ரங்கள் விஷ்ணு பதம் என்னும் ஆகாசத்தில் நிரம்பி-உலகு அளந்த திருவடிகளிலே தாது நிறைந்த புஷ்பங்களை-
தூவினது போலே
-ஆழ்வார் திரு உலகு அளந்த விருந்தாந்ததிலே ஊறி இருந்த படி –

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61

பதவுரை

தாழ் விசும்பின் மீது–வெளியான ஆகாசத்திலே
இலசி கிடக்கும் மீன்–விளங்காநின்ற நக்ஷத்திரங்களானவை
இறை முறையான்-ஸ்வாமியான முறைமையை யுடைய எம்பெருமான்
மண் அளந்த அந்நாள்–உலகளந்த அக்காலத்திலே
வான் நாடர்–வானுலகத்திலுள்ளாரெல்லாரும்
கூடி–கும்பல் கூடி
சே அடி மேல்–(அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்
மறை முறையால்–வேதங்களிற் சொல்லிய விதிப்படி
தாது இலகு பூ–தாதுக்களாலே விளங்கா நின்றுள்ள புஷ்பங்களை
முறை முறையின்–முறை முறையாக
தெளித்தால் ஒவ்வாதே–தெளிந்தாற் போன்றுள்ளன வன்றோ?

இறை முறையான்
ஸ்வாமியான முறைமையை-உடைய எம்பெருமான்

சேவடி மேல் –
செவ்விய திருவடிகளின் மேலே

மண்ணளந்த வந்நாள்
உலகு அளந்த அக்காலத்திலே

மறை முறையால் வானாடர் கூடி –
வேதங்களில் சொல்லிய-விதிப்படி-வானுலகத்தில் உள்ள எல்லாரும் கும்பலாகக் கூடி

-முறை முறையின்
முறை முறையாக

தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே –
தாதுக்களால் விளங்கா நின்றுள்ள-புஷ்பங்களை தெளித்தால் போல்-உள்ளது அன்றோ

தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
வெளியான ஆகாசத்திலே-விளங்கா நின்ற நஷத்ரங்கள் ஆனவை –

எம்பெருமான் முன்பு உலகளந்தருளின காலத்திலே மேலுலகத்திலுள்ளறாரெல்லாருங்கூடி அப்பெருமானது திருவடியின் மேல்
புஷ்பங்களைத் தூவினார்களன்றோ; அந்தப்பூகஙகள் போன்றுள்ளன இந்த நக்ஷத்திரங்கள் என்று உத்பரேக்ஷித்தபடி.
நக்ஷத்திரங்கள் சிறமுல்லைப்பூக்கள் போலேயிருத்தலாலும், விஷ்ணு பதமென்னப்படுகிற ஆகாசத்திலே நிரம்பியிருக்கையாலும்,
ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே எப்போதும் உலகளந்தவரலாற ஊன்றிக்கிடக்கையாலும் இங்ஙனே உத்ப்ரேக்ஷிக்கலாயிற்று.

இப்பாட்டின் வியாக்கியானத்திலே –
“லோக யாத்ரையை அநுஸந்திக்கப்புக்காலும் அவனைமுன்னாகவல்லது காணமாட்டாமை சொல்லுகிறது.” என்றும்;
“சிறியாச்சான் ‘சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதாப்போலே ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீளமாட்டார்கள்’
என்று பிள்ளைக்குப் பணித்தான்” என்றும் உள்ள ஸ்ரீஸூக்திகள் அநுஸந்திக்கத்தக்கன.

——————————————————————–

(மீனென்னுங்கம்பின்.) கீழ்ப்பாட்டில் “இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்தவந்தந்நாள்” என்று
உலகளந்த வரலாற்றைச் சிறிது பிரஸங்கிக்கவே, பின்னையும் அதனை ஒருவாறு வருணித்ததுப் பாசுரங்பேச விருப்பமுண்டாகி
ரூபகாலங்கார (உருவகவணி) ரீதியிலே அருளிச்செய்கிறார்.
ஆகாசம் குடையாக அருளிச் செய்ய பொருத்தமான வற்றை அருளிச் செய்கிறார் –

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

பதவுரை

மீன் என்னும் நம்பின்–நக்ஷத்திங்களாகிற நம்புகளையுடையதும்
வெறி என்னும் வெள்ளி வேய்–சந்தினாகிற வெள்ளிக்குழையையுடையதும்
வான் என்னம்–ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா–ஒருநாளும் அழிவில்லாததுமான
வான் குடைக்கு–பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து–ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான்–உலகளந்தவனான பெருமாள்
பின்–மேலுள்ள காலமெல்லாம்
நங்கள் பிணிக்கு–நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு
பெரு மருந்து ஆம்–சிறந்த ஔஷதமாவன்

மீன் என்னும் கம்பில்
நவ ரத்னங்கள் ஆகிற கம்புகளை உடைத்தும்-ஆகாசம் நஷத்ரங்கள் நிறைந்து
முத்துக்கள் அழுத்தின கம்பு போலே நஷத்ர சமூஹம் தோன்றுமே
குடையில் மேல் துணியைத் தாங்கும் கம்பிகள் –

வெறி என்னும் வெள்ளி வேய்
சந்தரன் ஆகிற வெள்ளிக்-குழையை யுடைத்தும்-வெறி என்று வட்ட வடிவத்துக்கு பெயர்
இலக்கணையால் சந்த்ரனைக் குறிக்கிறது
வான் என்னும்-
ஆகாசம் என்னும் பெயரை உடைத்தும்

கேடிலா வான்குடைக்கு
ஒரு நாளும் அழிவில்லாத-பெரிய குடைக்கு

தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து
ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போலே வளர்ந்து

மண்ணளந்தான் –
உலகு அளந்தவனான பெருமான்

நாங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
மேல் உள்ள காலம் எல்லாம்-நம்முடைய சம்சாரம் ஆக்கி வியாதிக்கு-சிறந்த ஔ ஷதம் ஆவான் –
ஆகவே, ஆகாசமாகிற குடைக்குத் தனது திருவடியாகிற காம்பைக் கோப்பதென்பகிற வியாஜத்தினால்
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித்-தாரகையின் புறம் தடவி
அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை யானவன்-சம்சாரம் ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாவான் என்றபடி-

எம்பெருமான் பண்டு உலகளப்பதற்காக ஒரு திருவடியை ஆகாசததேறத் தூக்கினது எங்ஙனே சொல்லலாம்படியிருக்கின்ற தென்றால்
ஆகாசமாகிற ஒரு பெரிய குடைக்கு நீலரத்நமயமான காம்பு கோப்பது போல் போசலாயிருந்ததென்கிறார்.
ஆகாசத்ததைக் குடையாக்க கூறுதற்கு உள்ள பொருத்தங்களை முதலடியிற் கூறுகின்றார்.
மீனென்னும் கம்பின் = உலகத்தில் சிறந்த குடையானது முத்துக்களழுத்தின பல கம்புகளையுடைத்தாயிருக்கும்;
ஆகாசமும் பல பல நக்ஷத்திரங்கள் விளங்கப்பெற்றிருக்கையாலே, தனித்தனி நக்ஷத்ரங்கள் முத்துக்கள் போலவும்.
நக்ஷத்ரஸமுக்ஷங்கள் முத்துக்கள் அழுத்தின கம்புகள் போலவும் காணப்படாநின்றன.
(முத்துக்களுக்கு வாசகமான பதம் மூலத்தில் இல்லை யெனினும், மீன் என்று நக்ஷத்திரங்களைச் சொன்னதற்கிணங்க
உபமேய கோடியில் முத்துக்கள் விவக்ஷிதமென்க.) கம்பாவது – குடையின் மேல் துணியைத் தாங்குவதற்காகப் போடும் கம்பிகள்.

வெறியென்னும் வெள்ளிவேய் = வெறி என்று வட்ட வடிவத்திற்குப் பெயர்; அஃது இங்க இலக்கணையால் சந்திரனைக் குறிக்கின்றது.
குடைக்காம்பின் நுனியில் வெள்ளிக்குழை போடுவதுண்டே; ஆகாசமாகிற இக்கடைக்குச் சந்திரன் வெள்ளிக்குழை போன்றுளனாம்.
ஆக இவ்வகைகளாலே குடையென்று சொல்லத்தக்கதும், சில நாளிருந்து அழிந்துபோகும் குடை போலன்றியே சாச்வதமாயிருக்கக்கூடிய
குடையென்று சொல்லத்தக்கதுமான ஆகாசத்திலே நீலமணி மேனியனான எம்பெருமானுடைய திருவடி நீண்டு சொருகப்பெற்றநது
மணிக்காம்பு கோத்தது போலலாகுமிறே.

—————————————————————

(பின்துரக்கும்காற்றிழந்த) முன்னோர்கள் இப்பாட்டை இரண்டு மூன்றுவகையாக அந்வயிக்கப் பார்த்தார்கள்;
தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனாகத்திருவவதரித்துக் தங்கையை மூக்கும் தமையனைத் ததலையும்தடிந்து
அவதார காரியங்களைச் செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்தானென்கிற
விஷயத்திற்கு ஓர் உபமானம் கூறுகின்றார் இப்பாட்டில்.
இதில் பின்னடிகளை உபமேயவாக்கியமாகவும் முன்னடிகளை உபமாக வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை; –
(அதாவது=) “அன்று திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கம் பரச்செவியுமீர்ந்தபரன்” என்றவளவும் உபமேயலாக்கியம்;
“பின்தூரக்குங் காற்றிழந்த ‘சூழ்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து”என்றவளவும் உபமானவாக்கியம்.
இதன் கருத்து யாதெனில்;- ஆழியங்கையனான பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்துமுடித்து
மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்ததானது எப்படியிருக்கின்றதென்றால்;
கடலில் மேகமானது காற்றுத்தள்ளத்தள்ள மேலே நடந்துகொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஓய்ந்துவிடுகிறதோ
அங்கிருந்து (மேகம்) மேலே செல்லமுடியாமல் அந்தக்கடலிலேயே வந்து விழுந்திடுமே; அதுபோலேயிராநின்றது என்றபடி.
இக்கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல்தொடைகள் மூலத்தில் உளவோ என்று ஆராயவேண்டும்.
பாட்டின் முடிவிலுள்ள பான் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை
‘வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்மைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர்திணைக்குச் சேராதிறே.
ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிப்பதில் குறையுண்டென்று மற்றொருவகையான யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்;
(அதாவது-) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்றபதத்தோடு ‘படி’ என்கிற ஒரு பதத்தை வருவித்துக் கூட்டிக்கொண்டு
“பரன்படியானது- வாய்மைத்து’ என்று அந்வயித்தால் திணை மாறாட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்தார்கள்.
ஆனாலும் இந்த யோஜநையில் – மூலத்திலில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற
அத்யாஹாரமென்பதம் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்;
இவ்விரண்டு குறைகட்கும் இடமில்லாதபடி நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்த போஜநை தான் இங்க நாம் பதவுரையில் காட்டினது.

கீழ்ச்சொன்ன இரண்டு யோஜனைகளில் எம்பெருமானை உபமேயமாகவும் காளமேகத்தை அபமாநமாகவும் நிறுத்தி உரைக்க வேண்டியதாயிற்று.
இப்போது அங்ஙனம் வேண்டா. மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த சூல் கொண்டல்” என்பதே உபமேயம்.
இப்போது பாசுரத்தின் கருத்தை நெஞ்சிலே விளக்கக் கொள்ளுங்கள்:-

கொண்டல் உபமேயம்-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் இங்கே கண் வைத்தாலும் பகவத் விஷய சம்பந்தம் இட்டே பார்க்கிறார்-
அவதார தூண்டுதல் -வேண்டித் தேவர்கள் இரக்க வந்து பிறந்ததும்-துஷ்ட நிக்ரஹம் இஷ்ட பரிபாலனம் தர்ம சம்ஸ்தாபனம்-
பிரார்த்தனை ஈடேறா நிற்க-தள்ளிக் கொண்டு வந்த காற்றை இழந்த காளமேகம் போலே-சூல் கொண்ட மேகம் -பூர்ண கர்ப்பமுடைய மேகம்-
இப்படி மேகத்தை உபமேயமாக நிறுத்தியே வியாக்யானம் செய்து அருளினார்

பின் துரக்கும் காற்று இலோந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

பதவுரை

பின் துரத்தும் காற்று இழந்த சூல்கொண்டல்–பின்பற்றித்தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காளமேகமானது
(எப்படி யிருக்கின்றதென்றால்)
திரு செய்ய நேமியான்–அழகிய சிவந்த சக்கரத்தையுடையவனும்,
தீ அரக்கி–கொடிய ராக்ஷஸியான சூர்ப்பணகையினது
மூக்கும்–மூக்கையும்
பரு செலியும்–பருத்தகாதுகளையும்
அன்று–ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த–அறுத்தொழித்தவனுமான
பரன்–ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய்–(அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து–பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல்
பின்பு பற்றித் தள்ளுகிற காற்றை இழந்து-கடலிலே போய் சேர்ந்த காளமேகமானது
எப்படி இருக்கிறது என்றால்

பேர்ந்தும் போய்
திருவவதார கார்யத்தை முடித்த பின்பு-மறுபடியும் சென்று

வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே
பெரிய திருப்பாற் கடலிலே-வந்து சேர்ந்த படியை-ஒத்து இருக்கின்றது

அன்று
ஸ்ரீ ராமாவதாரத்திலே

திருச் செய்ய நேமியான்
அழகிய சக்கரத்தை உடையவனும்

தீ அரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்ந்த பரன்
கொடிய ராஷசியினுடைய -சூர்பணகையின் மூக்கையும்-பருத்த செவிகளையும்
பரிச் செவி-என்றும் பாடபேதம் குதிரை காத்து போன்ற காதுகள் உடையவள் –
அறுத்து ஒழித்தவனுமான-ஸ்ரீ ராம பிரான்-

ஆழ்வார் எம்பெருமானை அநுபவிக்குந்திறத்தில் நித்ய ஸூரிகளுக்கு மேற்ப்பட்டவராயிருந்தாலும் இவர் தாம் எழுந்தருளியிருப்பது
பிரகிருதி மண்டலத்திலேயாகையாலே பிராகிருத பதார்த்தங்களிலும் கண்வைக்க நேருவதுண்டு;
அவற்றில் கண் வைத்தாலும் பகவத்விஷயத்தை முன்னிட்டுப் பேசும்படியாயிருக்குமேயொழிய, பகவத்விஷய ஸம்பந்தமின்றியே
பிராகிருத பதார்த்தத்தன்மையாக மாத்திரம் பார்ப்பதும் பேசுவதும் இவ்வாழ்வார்க்கு அஸம்பாவிதம் என்பது கீழ் அறுபத்தோராம்பாட்டிலும் நன்கு விளங்கியதே.

அதுபோலவே இப்பாட்டிலும் பிராகிருதபதார்த்தங்களில் ஆழ்வார் தமது திருக்கண் ஒட நேர்ந்தபோது,
ஒரு மேகமானது கடலில் சென்றிறங்கிக் கழுத்தே கட்டனையாக நீரை முகந்து கொண்டு மேலே கிளம்பி, காற்றுத் தள்ளத்தள்ள
ஆகாசத்திலே வந்து கொண்டிருக்கும்போது அந்தக் காற்று ஓய்ந்துவிட்டது; காற்றின் உதவியில்லாமல் மேகம் மேலே
நடைபயிலகில்லாமல் மீண்டும் அக்கடலிலேயே போய்ச்சென்றது; இதனைக் கண்ணுற்ற ஆழ்வார்க்கு நல்ல பொருத்தமான
உபமானம் நினைவுக்க வந்தது. பண்டொருகால், இராமபிரானாகிற காளமேகம் கருணாரஸமாகிற நீரைப் பரிபூர்ணமாக
முகந்து கொண்டு திருப்பாற்கடலினின்றும் புயப்பட்டு, தேவதைகளின் பிரார்த்தனையாகிற காற்று தூண்டத் தூண்ட
நிலவுலகத்தே நடந்து வந்து துஷ்டநிக்ரஹம், சிஷ்ட பரிபாலநம், தர்ம ஸம்ஸ்தாபநம் முதலிவற்றைச் செய்துமுடித்து,
அவ்வளவிலே தேவதைகளின் பிரார்த்தனை ஈடேறிற்றாக, (தூண்டும்காற்று ஓய்ந்தமையாலே) மறுபடியும்
திருப்பாற்கடலிலலே போய்ச் சேர்ந்தான் என்கிற செய்தி பொருத்தமான த்ருஷ்டாந்தமாக நினைவுக்கு வரவே அதனைப் பேசி அநுபவித்தாராயிற்று.

“பின்துரக்குங்காற்றிழந்த சூலு“கொண்டல்” என்ற உபமேயவாக்கியத்தில், மேகம் உபமேயமாக நின்றாலும்,
“பின்துரக்குங் காற்றிழந்த” என்ற விசேஷணத்தின் ஸாமர்த்தியத்தினால், மீண்டும் அம்மேகம் கடலில் போய்ச் சேர்ந்ததுவே
உபமேயமாக அநுஸந்திக்கத் தகும். பின்னாலே தள்ளிக்கொண்டு வந்த காற்றை மேகம் இழந்ததென்றால் –
மேகம் கடலில் போய்ச் சேர்ந்துவிட்டது என்ற தாமத்தனையிறே. (காற்றாடியின் கதியைநினைக்க) சூல் கொண்டல்- பூர்ணகர்ப்பமுடைய மேகம் என்கை.

“தீயரக்கிமூக்கும்பருச்செவியுமீர்ந்த” என்று சூர்ப்பணகாபங்கம் மாத்திரமே சொல்லப் பட்டிருந்தாலும் ராவணவதம் வரையிலுள்ள
ஸகலராக்ஷஸநிரஸநமும் இதில் அடங்கும். ஸகல ராக்ஷஸர்களையும் நிரஸிக்க நேர்ந்ததற்கு சூர்ப்பணகையின் பங்கமே
முதற்கிழங்காதலால் அதனைச் சொல்லவே மேலுள்ளதெல்லாம் சொல்லிற்றாகுமென்று ஆழ்வார் சுருங்கச்சொன்னபடி.
அரக்கி- ‘ராக்ஷஸீ’ என்ற வடசொற்சிதைவு. “பரிச்செவியும்” என்ற பாடமாகில், பரி என்று குதிரைக்குப் பெயராகையாலே,
குதிரையின் காதுபோன்ற காதை’ என்று பொருளாகும்.

நம்பிள்ளை காட்டியருளின இந்த யோஜநையில் மூலம் ஒழுங்காக அந்வயிக்கப்பெறுவது தவிர, மேகத்தை உபமேயமாக நிறுத்தி
யுரைத்தலாகிற ஸவாரஸ்யாதிசயம் போற்றத்தக்கது. ஆழ்வார்க்கு லோக யாத்திரையும் பகவதநுபவத்திலே அந்வயிக்கிறதென்கைக்குப் பாங்கு.

———————————————————————-

(பரனாமவனாதல்.) கீழ்ப்பாட்டில் ஸ்ரீராமாவதார விஷயம் ப்ரஸ்துதமாகவே, எம்பெருமான் நம்மைத் திருத்திப்பணி
கொள்ளவேண்டி ராமக்ருஷ்ணாதிரூபத்தாலே மநுஷ்யஸஜாதீயனாய்ப்பிறந்து “உங்களைப்போலே நானும் ஒரு மநுஷ்யனே”
என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், மராமரமேழெய்தது, புள்ளி ஸ்வாய் கீண்டது முதலிய அருமையான
திவ்ய சேஷ்டிதங்களையும் இடையிடையே காட்டிக் கொண்டிருந்தானாதலால் அவற்றை நோக்கி
‘இவன் நம்மைப்போன்ற ஸமாந்ய மநுஷ்யனல்லன்; இவன் பராத்பரனான பரமபுருஷனேயாவன்’ என்று கொண்டு
அவன் பக்கல் பக்திபண்ண வேண்டியிருந்தும், அவஜாநந்தி மாம் மூடா: மாநுஷ்யம் தநுமாச்ரிதம்”
(நான் மநுஷ்யயோநியிற் பிறந்தேனென்று என்னை மூடர்கள் அவமதிக்கின்றார்கள்) என்று கீதையில் அப்பெருமான் தானே
சொல்லி வருந்தும்படியாக அநியாயமாய் அவமதித்துப் பாவிகளாய்க் கெட்டுப் போனார்களே ஸம்ஸாரிகள்;
அப்படி அவமதியாமல் அவனே பரமபுருஷனென்று பாவித்திருப்பர்களாகில் அவர்களைத் தேவர்களெல்லாரும்
கையெடுத்துக் கும்பிட்டிருப்பர்களன்றோ?- என்று அநுதபிக்கிறார்.

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனாய் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப்  புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழவே கலந்து–64-

பதவுரை

அன்று–முற்காலத்தில்
மரம் ஏழ் எய்தானை–(ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,
புள்ளின் வாய் சீண்டானை–பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன இவர்களை நோக்கி
அவன் பரன் ஆம் ஆதல்–‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;) ஸாக்ஷாத் பரமபுருஷரேயாவர்’ என்கிற விஷயத்தை
உõனால்-தங்களுடைய மனத்தினாலே
பாவிப்பர் ஆகில்–அநுஸந்திப்பர்களேயானால்
(அப்படிப்பட்ட விவேகிகளை)
அமரர் கை-தேவர்களின் கைகளானவை
கலந்து–ஒன்றுசேர்ந்து
ஒரு மூன்று போதும்–எப்போதும்
தொழாவே–ஸேவிக்க மாட்டாவோ.

பரனாம் அவனாதல்
அவன் பரனாம் ஆதல்-அந்த ஸ்ரீ ராமபிரானும் ஸ்ரீ கண்ண பிரானும்-நம்மைப் போன்ற மனுஷ்யர் அல்லர் –
சாஷாத் பரம புருஷரே ஆவார் என்கிற விஷயத்தை-அனுசந்திப்பவர்களை-தேவர்கள் கை எடுத்து தொழுவார்கள்
அன்றிக்கே
தேவர்களே தங்கள் அஹங்காரம் ஒழித்து-கை தொழுவார்கள் என்றுமாம்

பாவிப்பராகில்
அனுசந்திப்பர்களே ஆனால்

உரனாய் ஒரு மூன்று போதும்
தங்களுடைய மனத்தினாலே எப்போதும்
உரஸ் -மார்வுக்கு வாசகம் -நெஞ்சையும் சொல்லும்
உரம் -வலி என்றுமாம் -அத்யாவசாயம் உறுதியாக கொண்டால்

மரம் ஏழு அன்று எய்தானைப்
சுக்ரீவன் உடைய நம்பிக்கைக்காக-சப்த சால வருஷங்களை எய்த ஸ்ரீ ராமபிரான் என்ன

புள்ளின் வாய் கீண்டானையே
பகாசுரன் வாயைக் கிழித்து எறிந்த-ஸ்ரீ கண்ணபிரான் என்ன-இவர்களையே

அமரர் கை தான் தொழவே கலந்து-
தேவர்கள் கைகள் ஓன்று சேர்ந்து-சேவிக்க மாட்டாவோ-

உரனால் = ‘உரஸ்’ என்னும் வடசொல் மார்வுக்கு வாசகமாய் நெஞ்சையும் சொல்லக்கடவது; அச்சொல் உரம் எனத் திரிந்து;
மகானகரப் போலியுண்டாகையாலே உரன் என்று கிடக்கிறதிங்கு எதுகையின்பம் நோக்கி,
இங்ஙனன்றிக்கே உரம் என்று தனியே ஒரு தமிழ்ச் சொல்லுமுண்டு; அதற்கு வலி என்று பொருள்;
இங்கு அத்யவஸாயத்தைச் சொன்னபடி ‘அவன் பரமபுருஷனேயென்று உறுதியாகப் பாவித்திருப்பர்களாகில்’ என்றபடி.

மரமேழன்றெய்தானை என்பதனால் ஸ்ரீராம வதாரத்தையும், புள்ளின்வாய்கீண்டயானை என்பதனால் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தையும் குறித்தது-
மற்றும் இப்படிப்பட்ட பல விபாவாவதாரங்களையுங்காட்டினபடி
“அமரர்கைதான் தொழாவே கலந்து” என்பதற்கு இங்கு நாம் உரைத்த பொருளாவது- ‘மநுஷ்யாவதாரம் பண்ணின எம்பெருமான்
திறத்திலும் பரத்வபுத்தியை யார் வஹிக்கின்றார்களோ அவர்களை அமரர்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள்’ என்று உரைத்தோம்.
மூலத்தின் நிலைமைக்கு நன்கு சேரும்படி வேறொருவகையாகவும் உரைக்கலாம்;-
அமரர் என்றது அஹங்காரிகளான தேவதைகளைச் சொன்னபடியாய்; ஸம்ஸாரிகள் விபவாவதாரங்களிலெம்பெருமான்களை
அலக்ஷியம் செய்யாமல் பரத்வத்தையே பாவித்துப் பணிந்திருப்பர்களாகில் அஹங்காரிகளான தேவர்களும் தங்களுடைய
அஹங்காரத்தை யொழித்துவிட்டுக் கூடவே தொழுது உஜ்ஜீவித்திருப்பர்களன்றோ? என்றுரைக்கவுமாம்.

மரமேழன்றெய்த வரலாறு:- ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலியின்
பேராற்றலைப்பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும், துந்துபியின் உடலெலும்பை
ஒரு போஜனை தூரம் தூக்கி யெறிந்ததையும் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவனைவெல்வது ஸாத்யமாகுமோ?
என்று சொல்ல அது கேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு விச்வாஸம் இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்ற, ஸுக்ரீவன்
‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புபோலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது ஸந்தேஹமுண்டாகின்றது;
எழுமரா மரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண்டாகும்’
என்று சொல்ல; ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்காமறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான்
துந்துபியின் உடலெலும்புக்குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து போஜனை தூரத்துக்கு அப்பால் எறிய,
அதனைக் கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலரா திருக்கையில். வாலி இதனைத் தூக்கியெறிந்தான்;
இப்போது உலர்நதுபோன இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பன்று’ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை
ஏழு மராமரங்களின்மேல் ஏவ,அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலங்கங்களையும் துளைத்துச் சென்று மீண்டும்
அம்புறாத் தூணியை அடைந்தது- (மராமரம்- ஆச்சாமரம்.)

புள்ஸின்வாய் கீண்ட வரலாறு:- ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாயொளித்து வளர்கின்ற கண்ணபிரான் மீது
கறுக்கொண்ட கம்ஸனால் கண்ணனை நலியுமாறு நியமிக்கப்பட்ட ஓரஸுரன் கொக்கின் உருவங்கொண்டு சென்று
யமுனைக்கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போலே எரிக்கவே,
அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்தநினைக்கையில்,
கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றிக் கிழித்திட்டனன் என்பதாம்.

——————————————————————

(கலந்துநலியும்.) இது முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு நன்மை உபதேசித்தருளுகிறார்.
நெஞ்சே; நம்முடன் கூடவேயிருந்து நம்மைத் துன்பப்படுத்துகின்றனவாய், அநுபவித்தே ஒழிக்க வேண்டுமமையான
பாவங்களை முகஞ்சிதறப்புடைத்து, பின் பொருகாலும் நம்மருகே நாடவொட்டாமல் துரத்த வேண்டுமானால்
எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசுரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில்.

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல்மாலை எப்பொழுதும் சூட்டு–65-

பதவுரை

நெஞ்சே-வாராய்மனமே!
கலந்து-நம்மோடு கூடவேயிருந்து
நலியும்–ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை–கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான்–முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலங்கல் போல்–மலை போன்றவனும்
தொல் மாலை–அநாதி காலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை–சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை–ஸ்ரீமன் நாராயணனும்
மாதவனை–திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை–பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும்–ஸர்வகாலமும்
குட்டு–ஸமர்ப்பி.

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
வாராய் மனமே -நம்முடன் கூடவே இருந்து-ஹிம்சிக்கின்ற கடுமையான துக்கங்களை
துயர்  – துக்கங்களும் காரணமான பாபங்களும் -சொல்லும்-
மலங்க அடித்தல் அசம்பாவிதம் ஆயினும் தோஷத்தைக் காட்ட-அருளிச் செய்கிறார்

மலங்க வடித்து மடிப்பான்
முகம் சிதறப் புடைத்து துரத்த வேண்டில்

விலங்கல் போல்
மலை போன்றவனும்-பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாத ஸ்திரபிரதிஷ்டையாய் இருப்பவன் –
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா வென்று கூவும்
-திருவாய் மொழி –

தொல்மாலைக்
அநாதி காலமாக நம் மேல் வ்யாமோஹம் உடையவனும்-
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய-
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே –
திருவாய்மொழி

கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்

நாரணனை
ஸ்ரீ மன் நாராயணனும்

மாதவனை
திருமகள் கேள்வனுமான-பெருமான் விஷயத்திலே

சொல்மாலை எப்பொழுதும் சூட்டு
பாசுரங்கள் ஆகிற மாலைகளை-சர்வ காலமும் சமர்ப்பிப்பாய்
அடியவர்கள் வாய்ச் சொல்லை பூ போலே தனது தலையிலே சூட்டிக் கொள்பவன்
தலை துலுக்கிக் கொண்டு கொண்டாடுவான் –
சூட்டு
சூட்டினேன் சொல்மாலை –பொய்கையாழ்வார்-
உலகில் மாதர்களுக்கு மலர்களால் அழகு உண்டாவது போலே-பராத்பரனுக்கு அருளிச் செயல்களால் அழகு உண்டாகுமே

துயர் என்று துக்கங்களையும் துக்கங்களுக்குக் காரணமான பாவங்களையுஞ் சொல்லும்.
அசேதநங்களான பாவங்களை மலங்கவடித்தால் அஸம்பாவிதமாயினும், அவற்றினிடத்துத் தமக்குள்ள
ரோஷத்தைக் காட்டினாராமித்தனை. மடிப்பான்- ஆன்விகுதிபெற்ற வினையெச்சம்.

விலங்கல்போல்தொன்மாலை = ‘விலங்கல்’ என்று மலைக்குப்பெயர்; மலையானது ஒருவராலும் அசைக்க முடியாமல்
ஸ்திரப்ரதிஷ்டையாக இருப்பதுபோல, எம்பெருமான் குத்ருஷ்டிகள் முதலான மாதாந்தரஸ்தர்களுடைய
எப்படிப்பட்ட குத்ஸிதவாதங்களாலும் சலிப்பிக்க முடியாமல் வேதவேதாந்தங்களில் ஸ்திரப்ரதிஷ்டையையுடையனாயிருத்தல் பற்றி
மலையை உவமையாகச் சொல்வார்கள். மற்றும் பல காரணங்களுமுண்டு.
“நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே’ வாவென்றுகூவும்” என்ற திருவாய்மொழியும் இங்கு அநுஸந்திக்கத்தகும்.
மால் என்பதற்கு ‘மோஹமுடையவன்’ என்று பொருள்; ‘தொல் மால்’ என்றது – நெடுநாள் முதற்கொண்டே நம்மேல் மோஹமுடையவன் என்றபடி:
“எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கேயருள்கள் செய்ய, விதிசூழ்ந்ததால் எனக்கேலெம்மான் திரிவிக்கிரமனையே.” என்று
திருவாய் மொழியிலருளிச் செய்வது காண்க.

கேசவன் என்பதற்கு- சிறந்த மயிர்முடியையுடையவன் என்றும், பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன் என்றும்,
கேசி யென்னும் பெயரையுடையவனாய்க் குதிரை வடிவங்கொண்டு நலியவந்த அசுரனைக் கொன்றவனென்றும்
மூன்றுவகையாகப் பொருள் கூறுவதுண்டு.

சொல்மாலை சூட்டு = அடியார்களின் வாயில் நின்றும் வருகிற பாசுரம் எம்பெருமானுக்குப் பூமாலைபோன்று பரமபோக்யமாயிருத்தலால் ‘
சொல்மாலை’ என்பது வழக்கம். பூமாலையைத் தலைமேலணிந்து மகிழ்வது போல, இப்படிப்பட்ட அருளிச்செயல்களையும்
எம்பெருமான் தலைதுலுக்கிக்கொண்டாடுவன் என்பது தோன்ற ‘சூட்டு’ எனப்பட்டது.
“சூட்டினேன் சொல்மாலை’ என்றார் பொய்கையாழ்வாரும் உலகில் மாதர்கட்குப் பூமாலையினால் அழகு உண்டாவது போலே
எம்பெருமானுக்கு அருளிச் செயல்களினால் அழகு உண்டாகுமென்க.

————————————————————————–

(சூட்டாய நேமியான்.) நெஞ்சே! நீ ஸாமாந்யமாக மற்றையோருடைய நெஞ்சாக இராமல் என்னுடைய நெஞ்சாக அமைந்தபடியாலும்,
நான் ஒரு வழிபோனால் நீ ஒருவழி போகையன்றியே சாலவும் எனக்கு நீ உடன்பட்டிருக்கையாலும்
உனக்கு ஒருவிசேஷார்த்தம் சொல்லுகிறேன் கேள்;
உலகத்திலே உணர வேண்டும் பொருள்கள் பலவுள்ளனவென்று பலர் நினைத்திருப்பர்களாயினும்,
நினைத்திருப்பதாவது உணரவேண்டும் பொருள் ஒன்றே; அஃதாவது பகவத்விஷயம்.
“ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” என்று பொய்கையாழ்வாரும் அருளிச் செய்தாராகையால்
பகவத்விஷயமொன்றே நமக்கு உணரத்தக்கது; அதனையே நீ உணர்; இதனை நான் மற்றையோர்க்குச் சொன்னால் ஏசுவார்கள்;
ஆகையாலே ஒருவருக்கும் இதை நான் சொல்வதில்லை, உனக்கே சொன்னேன்- என்கிறார்.

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

பதவுரை

நெஞ்சை–ஓ மனமே!
சூடு ஆய நேமியான்–(ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியையுடையவனும்
மாட்டே–அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த–துன்பப்படுத்தின
மாயவனை–ஆச்சர்யனும்
ஈட்ட–திரண்ட
வெறிகொண்ட–பரிமளம் மிக்க
தண் துழாய்–குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன்உயிரை–வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
வேதியனை–வைதிகனுமான எம்பெருமானை
அறிகண்டாய்–அநுஸந்தித்திரு;
அது சொன்னேன்–ஒருவர்க்கும் சொல்லவொண்ணாத அப்படிப்பட்ட இவ்விஷயத்தை உனக்குச் சொன்னேன்.

சூட்டாய நேமியான்
சூடு ஆய நேமியான்-திவ்யாயுதமாயும்-திவ்யாபரணமாயும் அலங்காரமாக இருக்கிற
திரு ஆழியை உடையவனும்-வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு

தொல்லரக்கன் இன்னுயிரை
வெகு காலமாக தீமைகளே செய்த-இராவணன் உடைய இனிய உயிரை-

மாட்டே துயர் இழைத்த
அவன் பக்கல் இருந்து கொண்டே துன்பப்படுத்தின-
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே ராஷேச்வர
-வால்மீகி-ஸ்ரீ ராம பாணங்களை நினைந்தே ராவணன் உரு அழிந்தான் –

மாயவனை –
ஆச்சார பூதனும்

ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை
திரண்ட -ஈண்ட எனபது எதுகைக்காக ஈட்ட -வல் ஒற்று
இது பரிமளத்துக்கும்-துழாய்க்கும் விசேஷணம்-பரிமளம் மிக்க-குளிர்ந்த-
திருத் துழாய் மாலை அணிந்த-வைதிகனுமான எம்பெருமானை

நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது
நெஞ்சே – அறி கண்டாய் -அது சொன்னேன் -ஒ மனமே -அனுசந்தித்து இரு
ஒருவருக்கும் சொல்ல ஒண்ணாத இந்த விஷயத்தை உனக்குச் சொன்னேன்
என்னுடைய நெஞ்சு என்பதாலும்-உடன்பட்ட நெஞ்சு என்பதாலும்-இது ஒன்றே உணர வேண்டிய பொருள்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –பொய்கையார்
சொன்னேன் இது என்னாமல் அது -என்றது அர்த்த கௌரவம் தோற்ற அருளிச் செய்கிறார்-

மூன்றடிகளால் பகவத்விஷயத்தை வருணிக்கிறார். சூட்டாய நேமியான் -சூடா” என்றகிற வடசொல் ‘சூடு’ என விகாரப்பட்டு,
அலங்காரமென்று பொருள் பெற்றுக்கிடக்கிறது. எம்பெருமானைக் கொண்டு அஸுரராக்ஷஸ ஸம்ஹாரம் முதலிய காரியங்களைக்
கொள்ள நினைப்பவர்கள் திருவாழியாழ்வானை ஆயுதமாகக் கருதுவார்கள்
அங்ஙனன்றிக்கே அநந்யப்ரயோஜநராய் “வடிவார்சோதி வலத்துறையுஞ்சுடாழியும் பல்லாண்டு” என்று திருப்பல்லாண்டு பாடுமவர்கள்
எம்பெருமானுடைய திவ்யாயுதங்களெல்லாவற்றையுமே திருவாபரணகோடியிலே அநுஸந்திப்பர்களாதலால்
அது தோன்ற இங்கு சூட்டாயநேமியான் என்றார். நேமி- திருவாழியாழ்வான்.

தொல்லாக்கனின்னுயிரை மாட்டே துயரிழைத்த மாயவன்- எம்பெருமான் அடியவர்களுக்கு அநாதிகாலமாகவே
நன்மைகளைச்செய்து வருவது போல, இராவணன் பாகவதர்களுக்கு அநாதிகாலமாகத் தீமைகளியற்றிவருதலால் தொல்லரக்கன் எனப்பட்டான்.
அவனுடைய இன்னுயிர்க்குத் துயருண்டாகின மாயவன் இராம பிரான். மாட்டே என்றது ஸமீபத்திலே யிருந்துகெண்டு என்றபடி.
“மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு. =ஸ்மாக் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேச்வர:” என்று-
இராவணன் இராமபிரானுடைய அம்புகளை நினைந்து நினைந்து உருவழிந்தானென்று ஸ்ரீவால் மீகிபகவான் பேசினபடியை இங்கு நினைப்பது.

“ஈட்ட வெறிகொண்ட” என்றவிடத்து, ‘ஈண்ட’ என்றிருக்கவேண்டுவது எதுகையின்பம் நோக்கி ‘ஈட்ட என்று வல்லொற்றாய்க் கிடக்கிறதென்ப.
திரண்ட என்றபடி. இது வெறி (பரிமளத்து)க்கு விசேஷணமாகவுமாம்; துழாய்க்கு விசேஷணமாகவுமாம்
வேதியன் = ‘வைதிக:’ என்ற வடசொல்லிகாரம். “சொன்னேனிது” என்ன வேண்டியிருக்க, “சொன்னேன் அது” என்றது அர்த்த கௌரவர் தோற்றவாம்.

————————————————————————–

(அதுவோநன்றென்று) உபய விபூதியையும் எளிதில் தந்தருளவல்ல எம்பெருமான் திருவடிகளையே வாழ்த்து நெஞ்சமே! என்கிறார்.
தேவதாங்தரங்கள் தம் தம் அடியவர்களுக்குச் சில அபேக்ஷிதங்களைத் தாக்கடவனவாகிலும் பரமபதத்தைத் தருவது
எந்த தேவதைக்கும் முடியாதகாரியம்; எம் பெருமானுக்கோ அது பரமஸுலபமானது;
ஆகையாலே, நெஞ்சமே! நீ பரமபதந் தவிர மற்றதெல்லாம் தீது என்று விட்டிட்டு,விலக்ஷணமான அப்பரமபதமொன்றையே விரும்புவாயாகிலும்,
அது எம்பெருமானுடைய திருவருளால் எளிதில் கிடைக்கக்கூடியதே; அதனைத் தருவதில் அவனுக்கு அருமையேயில்லை அவனுக்கு
இது ஒரு சரக்கேயன்று காண்;
அங்ஙனல்லாமல் பாவோ நாந்யத்ரா கச்சதி” என்று திருவடிசொன்னாற்போலலே அந்தப் பரமபதத்தையும் உபேக்ஷித்துவிட்டு
இந்த மண்ணுலகத்திலேயே நிலைபெற்று நின்று அநுபவிக்க வேணுமென்று விரும்பினாயாகிலும்
இதுவும் அவனால் எளிதில் தரக்கூடியதே; ஆகையால் ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தமும்
எம்பெருமானால் நாம் எளிதில் பெக்கூடியதே; ஆன பின்பு இப்படி ஸர்வேசக்தனான
எம்பெருமானுடைய திருவடிகளையே வாழ்த்தப்பாராய்- என்றாராயிற்று.
(பரமபதாநுபவத்திலும் இஹலோக போகத்திலும் விருப்பம் வைத்திடாமல்
கண்ணன் கழிலிணை வாழ்த்துவதொன்றிலேயே நோக்காக இருக்கக்கடவை என்பது உள்ளுறை.)

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

பதவுரை

மடநெஞ்சே–அறிவுகெட்ட மனமே!
அதுவோ நன்று என்று–(இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில்–அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும்–இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும்–அதையும் அவன் எளிதில் அருளக்கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே–அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து–அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன்–ஆகவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வாழ்த்துவதே–மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல்–அப்பஸிக்கக்கடவாய்.

அதுவோ நன்று என்று
இவ்வுலகம் இருப்பை விட-அந்த பரமபத அனுபவம் சிறந்தது என்று கொண்டு

அங்கு அமருலகோ வேண்டில்
அந்த பரம பதத்தை-விரும்புகிற பஷத்தில்-ஒ காரம் – பரமபத வைலஷண்யம் காட்டும்
ஸ்வர்க்க லோகம் விரும்புகிற பஷத்திலும் என்றும் கொள்ளலாம்

அதுவோர் பொருள் இல்லை அன்றே
அதனைக் கொடுப்பது-எம்பெருமானுக்கு ஒரு அசாத்தியமான-கார்யம் அல்லவே -ஒரு சரக்கே அன்று –
அதுவோ பொருள் பாட பேதம்

அது ஒழிந்து
அந்த பரமபத அனுபவத்தை உபேஷித்து விட்டு

மண்ணின் நின்று ஆள்வேன் எனினும்
இந்த மண்ணின் மேல் நின்று-ஐஸ்வர்யத்தை ஆள வேணும் என்று விரும்பினாய் ஆகிலும்-
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
-மண்ணிலே இருந்து பகவத் விஷயத்தை அனுபவிக்க என்றுமாம்

கூடும்
அதையும் அவன் எளிதிலே அருளக் கூடும்

மட நெஞ்சே

கண்ணன் தாள் –
ஆக-இப்படி உபய விபூதியையும் அளிக்க வல்ல-எம்பெருமானுடைய திருவடிகளை
ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தத்தையும் அளிக்க வல்லவன்

வாழ்த்துவதே கல்
மங்களா சாசனம் பண்ணுவதையே-அப்யசிக்கக் கடவாய்-உபய விபூதியையும் அபேஷியாமல்
கண்ணன் கழல் இணை வாழ்த்துவதே
-இது ஒன்றிலேயே –
நோக்காக இருக்கக் கடவை-

“அதுவோநன்று” என்றவிடத்து ஓகாரம் பரமபதத்தின் ஸவலக்ஷண்யத்தைக் காட்டும்.
“அமரருலகு” என்பது ‘அமருலகு’ எனக் குறைந்து கிடக்கிறது.
“அதுவோ பொருளில்லை” ‘அதுவோர் பொருளில்லை” என்பன பாடபேதங்கள்.

மண் நின்று ஆள்வேனெனிலும் = இதற்கு இரண்டுவகையாகப் பொருள்கொள்ளலாம்;
இந்த மண்ணுலகத்திலேயே யிருந்து கொண்டு பகவத்விஷயத்தையநுபவிக்க விரும்பினாலும் என்பது ஒருபொருள்.
“ஒரு நாயகாமய் ஒடவுலகுடனாண்டவர்” (திருவாய்மொழி 4-1-1-) என்கிறபடியே இவ்வுலகத்தில் ஐச்வரியத்தை
யநுபவிக்கவிரும்பினாலும் என்பது மற்றொரு பொருள். விரும்பும் பலன் எதுவாயினும் பகவானுடைய திருவடிகளை வாழ்த்துவதே
யாத்திரையாயிருக்க வேணுமென்று விளக்கியவாறு.
முதலடியில் “அமருலகோ வேண்டில்” என்றதக்கும் ‘ஸ்வர்க்கலோக புருஷார்த்தத்தை விரும்பினாலும் என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.
திவிவா புவிவா மாமஸ்து வாஸோ நரகேவா நரகாந்தக! ப்ரகாமம்- அவதீரித சாரதாரவிந்தௌ சரணௌ தே மரணேபி சிந்தயாநி” என்ற
முகுந்தமாலையை ஒரு புடையொக்குமிப்பாசுரம்.

கல்- முன்னிலை எவலொருமை வினைமுற்று.

——————————————————————–

(கல்லுங்கனைகடலும்.) கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார்.
அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை
இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார்.
எம்பெருமான் திவ்யமங்கள விக்ரஹத்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்திஷ்டையாக இருக்கும்படியைப் பேசுகிறாரிதில்.

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–68-

பதவுரை

வெல்ல நெடியான்–மிகவுயர்ந்தவனும்
நிறம் கரியான்–நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்
உள் புகுந்து–உள்ளே பிரவேசித்து
அடியேனது உள்ளத் தகம் நீங்கான்–அடியேனது உள்ளத்தைவிட்டு நீங்குகின்றனில்லை;
(ஆகையாலே)
கல்லும்–திருவேங்கடமலையும்
கனை கடலும்–கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம்–வைகுண்டமென்கிற
வான் நாடும்–வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல்–அல்பமாய் விட்டன போலும்;
ஏ பாவம்–ஐயோ பாவம்!

கல்லும்
திருவேங்கட மலையும்

கனைகடலும்
கோஷிக்கின்ற திருப்பாற் கடலும்-எம்பெருமான் உறைவதால் வந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக கோஷிக்குமே

வைகுந்த வானாடும்
ஸ்ரீ வைகுண்டம் என்கிற-வானுலகமும்

புல்லென்று ஒழிந்தன கொல்
அல்பமாய் விட்டன போலும்-போக்கு வரத்து அற்ற படியால் புல் மூடிப் போயின இவ்விடங்கள்

ஏ பாவம்
ஐயோ பாவம்-இரக்கம்  தோற்ற அருளிச் செய்கிறார் –

வெல்ல நெடியான்
மிக உயர்ந்தவனும்-நாம் எவ்வளவு முயன்றாலும் எட்டாமல் இருப்பவன் –

நிறம் கரியான்
நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்-வந்து புகுந்ததாக தோற்றம் மட்டும் இல்லை
மெய்யே வந்து புகுந்தான்

உள் புகுந்து
உள்ளே பிரவேசித்து

நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அடியேனுடைய உள்ளத்தை விட்டு நீங்குகிறான் இல்லை –
அகலகில்லேன் இறையும் என்று உருச் சொல்லிக் கொண்டே-ஸ்தாவர பிரதிஷ்டையாக உள்ளான்-

அங்குத்தை வாஸம் உபாயம்-மெய்யடியார் ஹிருதய கமலமே பரம உத்தேச்யம் அவனுக்கு-
கல்லும் கனை கடலும் வைகுந்த வானோடும் புல்லென்று ஒழிந்தன கொல்
என்கிற ஈரச் சொல் பாவியேனுடைய நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்பட பெறுவதே
ஆழ்வார்கள் அனுபவம் எங்கே நம்முடைய அனுபவம் எங்கே-ஏதோ பாக்ய விசேஷத்தால் நாமும் சொல்லப் பெற்றோமே-
இரவில் பள்ளி கொள்ளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுசந்திக்க வேண்டிய பாசுரம்

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு -தடவரைவாய் மிளிந்து மின்னும் –
இரண்டு பாசுரங்களும் இதில் இரண்டாம் அடிக்கு எதிர் நில்லா-என்பர் அழகிய மணவாள சீயர்-

வெல்ல நெடியான் = ‘வெல்ல’ என்றது (மிகவும்) என்றபடி. நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாதிருப்பவன் என்கை.
அவன் தானே தன்னருளாலே எளியனாகில் தடை செய்வாரில்லாமையாலே நிர்ஹேதுக க்ருபையாலே வந்து புகுந்தானென்கிறது.
(வெல்ல- வெல்வதற்கு, நெடியான்- முடியாதவன்; ஒருவராலும் ஜயிக்க முடியாதவன் என்று பொருள் கூறுதல் சிறவாது.)
வந்து புகுந்ததாகத் தோன்றிவிடுதல் மாத்திரமல்ல; மெய்யே வந்து புகுந்தானென்கைக்காக நிறங்கரியான் என்று
திருமேனியையுங்கண்டறிந்து பேசுகிறார் போலும்.
பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று
தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து
“அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே,
எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்”
என்று உருகிச் சொல்லிக் கொண்டு கிடக்கிறானென்பது தோன்ற, “உள்புகுந்து நீங்கான்” என்று அருளிச்செய்யுமழகு காண்மின்.

எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் திருமலை பெருமான்கோயில் முதலான
உகந்தருளினவிடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகின்றானெற்றும்,
ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும்,
இது ஸித்தித்துவிட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் ஆதரம் மட்டமாய் விடுமென்றும்
ஸ்ரீவசநபூஷணத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச்செய்ததெல்லாம்
இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டேயென்றுணர்க.
“கல்லும் கனைகடலும் வைகுந்தவனாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை என்சொல்வோம்?
இப்படிப்பட்ட ஈரச்சொற்கள் பாவியோமான நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப் பெறுவதே!
ஆழ்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவ்களுடைய அருளிச் செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு.
ஆயினும், ஏதோ பாக்யவிசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ
சற்றுப்போது நுழைந்து புறப்படும்படியாக வாய்ப்பது இவ்விருள் தருமாஞாலத்திடைய பெற்றதொரு கனத்த பேறாம்.

ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிக்கொள்ளும்போது இப்பாசுரத்தைப்
பலகால் அநுஸந்திக்க வேணுமென்பது பெரியோர்களின் உபதேசம்.

கல்லும் = கல் என்று ஸாமாந்யமாக மலையைச் சொல்லிற்றாய், அது இங்கே சிறப்பாய்த் திருவேங்கடமலையைச் சொல்லிற்றாகிறது.
கனைகடல் = எம்பெருமான் எப்போதும் தன்னிடத்து உறைகின்றானென்ற மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்கின்ற கடல் என்கை.
“புல்லென்றொழிந்தனகொல் = புல்லென்று – அற்பத்தனமடைந்து.
எனது நெஞ்சின் முன்னே அவையெல்லாம் அற்பமாய்விட்டன போலும் என்றவாறு.
அவ்விடங்களில் போக்குவரத்து அடியோடு அற்றுப்போனபடியாலே அவை புல்மூடிப்போயினவோ என்கிறார்- என்றரைப்பார் சிலர்.
ஏபாவம்! = சிறந்த ஸ்தலங்களென்று கொண்டாடப்படுகிற அவ்விடங்களுக்கு இப்படிப்பட்ட அவஸ்தையா வந்துவிட்டது!
ஐயோ பாவம்!! என்று இரங்கந் தோற்றப் பேசுகிறபடி.

பெரியாழ்வார் திருமொழியின் முடிவிலுள்ள “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு” “தடவரைவாய் மிளிர்ந்து மின்னும்”
என்ற இரண்டு பாசுரங்களும் இப்பாசுரத்தின் இரண்டாமடிக்கு எதிர்நில்லா என்று அழகிய மணவாளச்சீய ரருளிச் செய்யும்படி.

——————————————————————-

(அகஞ்சிவந்த கண்ணினராய்) இப்படி என்னுள்ளே மிகவும் அபிநிவேசத்தைப் பண்ணிக் கலந்து வாழ்கின்ற
திருமாலின் திருக்குணங்களை அநுஸந்திக்கப் பெறுகையாகிற ஏற்றமுடைய என்னை ஒருவராலும்
திரஸ்கரிக்க முடியாதென்று மகிழ்ச்சியின் கனத்தாலே மார்பு தட்டிப் பேசுகிறார் போலேயிருக்கிறது இப்பாசுரம்.
எம்பெருமான் ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருப்பதால்-உண்டான ஹர்ஷத்தால் மார்பு தட்டி பேசி அருளுகிறார் இதில்–

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

பதவுரை

வல்வினையர் ஆவார்–கடுமையான பாவங்களானவை
(தங்களுடைய குடியிருப்பை யிழந்தமையாலே)
அகம் சிவந்த கண்ணினர் ஆய்–(கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையுடையனவாய்
முக்கி–வருந்தி
முகம் சிதைவராம் அன்றே–முகம் வாடியிருக்கின்றனவல்லவோ?
மிகும்–எல்லாரிலும் மேற்பட்டவனான
திருமால்–திருமாலினுடைய
சீர் கடலை–கல்யாண குணங்களாகிற கடலை
உள் பொதிந்த–உள்ளே அடக்கிக் கொண்ட
சிந்தனையேன் தன்னை–சிந்தனையை யுடையேனான என்னை
செவ்வே–செவ்வையாக
அடர்ந்து–நெருக்கி
ஆர்க்கு அடல் ஆம்–யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)

அகம் சிவந்த கண்ணினராய்
கோபத்தினால் உள்ளே சிவந்த-கண்களை யுடையனவாய்-முன்பு போலே தனிக் கொல் செலுத்த முடியாமையினாலே

வல்வினையாராவார்
கடுமையான பாபங்களானவை-உயர் திணை யாகவும் கண்ணும் மூக்கும் உள்ளன போலும் பேசி-அவற்றின் கொடுமையை விளக்குகிறார்

முகம் சிதைவராம் அன்றே
முகம் வாடி இருக்கின்றன அல்லவோ

முக்கி
வருந்தி-வாய் விட்டு சொல்ல முடியாமல்-வெறுமனே இருக்க முடியாமல் முக்கி

மிகும் திரு மால்
எல்லாரிலும் மேம்பட்ட வனான-திருமாலினுடைய-மிகச் சிறியவனான உள்ள என்னுள்ளும் வந்து இருக்கச் செய்தேயும்-
விசாலமான இடங்கள் போலே உடல் பூரிக்கின்ற திருமால்-என்னவுமாம் –
சீர்க்கடலை யுள் பொதிந்த
கல்யாண குணங்கள் ஆகிற-கடலை உள்ளே அடக்க் கொண்ட-அவனது கல்யாண குணங்களை இடைவிடாமல் அனுசந்தித்து

சிந்தனையேன் தன்னை
சிந்தனையை உடையேனான என்னை

ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து
செவ்வையாக நெருக்கி-யாரால் உபத்ரவிக்க முடியும்-ஒருவராலும் என்னை திரஸ்கரிக்க முடியாது-

இதற்கு முன்பு என்னை மிகவும் வருத்தின கொடிய கருமங்கள் இப்போது முன்பு போலே தனிக்கோல் செலுத்தி
நலிய முடியாமையா லுண்டான சீற்றத்தாலே கண்கள் குதறிப்போய்,
“இதற்கு முன்பு செருக்கராய்த் திரிந்தநாமோ இப்போது இப்படி பரிபவப்படநின்றோம்” என்று வாய்விட்டுக் கதறவும்
கதறாதிருக்கவும் மாட்டாமல் ஊமைகள் உளறுமாபோல உளறிக் கொண்டு முகபங்கமடைகிறபடியைக் காணுங்கொள் என்கிறார் முன்னடிகளில்,
அசேதநங்களான கருமங்களை “வல்வினையராவார்” என உயர்திணைபோலக் கூறுவதும்,
அவற்றுக்குக் கண்ணும் முகமும் உள்ளனபோலக் கூறுவதும், ஆழ்வாருடைய தற்போதைய மகிழ்ச்சியினாலாய கற்பனைகளென்க.
முக்குதல்- வாய்விட்டுச் சொல்லமாட்டாமையும் வெறுமனிருக்கமாட்டாமையும்.

இனிமேல் எப்படிப்பட்ட கருமங்களும் தம்மை அடர்க்கமாட்டாவென்பதையும் அதன் காரணத்தையும் பின்னடிகளிற் பேசுகிறார்.
மிகும் திருமால் = மிகச் சிறிய என்னுள்ளே வந்திருக்கச் செய்தேயும் விசாலமான விடங்களிற்போல உடல் பூரிக்கின்ற திருமால் என்னவுமாம்.
சீர்க்கடலை உள்போதித்தலாவது- அப்பெருமானது அளவற்ற திருக்குணங்களை இடைவிடாது அநுஸந்தித்தல்.
பகவத்குணாநுபவம் பண்ணப்பெற்ற யான் இனி யார்க்கும் சளைக்கமாட்டேன்;
ஒன்றையும் பொருட்படுத்தாமல் எனது காரியமே கண்ணாயிருப்பேன் என்றாராயிற்று.

————————————————————–

(அடர்பொன்முடியானை.) வல்வினைகள் இனிமேல் என்னை அடர்க்கதில்லா என்றார் கீழ்ப்பாட்டில்.
இனி அந்த வல்வினைகள் என்னை என்ன செய்தாலும் எனக்கு வருவதொரு கெடுதியில்லையென்கிறாரிதில்.
எம்பெருமானே ஸகலவித பந்துவுமாவன் என்று உறுதியான அத்யவஸாயம் கொண்டேனான பின்பு
இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை யென்கிறார்.
இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான
தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே;
பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்;
சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள்.
ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ? பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும்
தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ?
பகவத் குணங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதற்குப் புறம்பான லாப நஷ்டங்களொன்றும் கணிசிக்கப்பட மாட்டாவாகையாலே ஆழ்வாரும்
“யாதாகில் யாதேயினி” என்று மிடுக்குத் தோற்றமொழிகின்றார்.

சர்வவித பந்துவாக அவனை ப்ரஹ்லாதன் கொண்டது போலே அடியேனும் கொண்டேனே
இனி என் குறை எனக்கு -இல்லை எனக்கு நிகர் -என்கிறார்–

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர்ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதேயினி–70-

பதவுரை

அடர்பொன் முடியானை–அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும்
ஆயிரம் பேரானை–ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும்
சுடர்கொள் சுடர் ஆழியானை–(சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை.
இடர் கடியும் மாதா பிது ஆக–துக்கங்களைப் போக்கவல்லதாயும் தந்தையுமாக
எனது உள்ளே வைத்தேன்–என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;
இனி–இனிமேல்
யாது ஆகில் யாதே–(எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?

அடர் பொன் முடியானை
அடர்ந்த பொன்மயமான திரு அபிஷேகத்தை உடையவனும்-
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திரு ஆழிகளும் கிண்கிணியும்
அரையில் தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்-
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்
-என்றபடி அனைத்து திவ்ய பூஷணங்களுக்கும் உப லஷணம்
பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே -என்றபடி
அவனுடைய விலஷணமான-திவ்ய ஆயுதங்கள்-திவ்ய ஆபரணங்கள்-திரு நாமங்கள்
இவற்றை சிந்திக்கப் புக்கால்-இதர விஷயங்களைப் பற்றின லாப நஷ்டங்கள் நெஞ்சிலே ஒரு பொருட்டாக படுமோ –

ஆயிரம் பேரானை
சஹச்ர நாமங்களால் பிரதி பாதிக்கப் படுபவனும்

சுடர் கொள் சுடர்ஆழியானை
சந்திர சூர்ய சுடர்களை வென்று-விளங்குகின்ற திரு ஆழியை உடையவனுமான
எம்பெருமானை
திரு ஆழி முன்னால் எல்லா தேஜஸ் பதார்த்தங்களும் இருள் போலே கிடக்குமே
பாநோ பா நோ த்வதீயா ஸ்புரதி-ஸூ தர்சன சதகம் -16- ஸ்லோஹம்

இடர் கடியும் மாதா பிதுவாக எனதுள்ளே வைத்தேன்
துக்கங்களைப் போக்க வல்ல-தாயும் தந்தையுமாக-என்னுடைய ஹிருதயத்திலே நிறுத்தினேன்-
மாதா பிதா-வாக என்று திருத்த வேண்டாம்
பித்ரு -என்பதை பிது என்கிறார்

யாதாகில் யாதேயினி
இனி மேல் எனக்கு-என்ன நேர்ந்தால் என்ன –

அடர்பொன் முடியானை = இங்குத் திருவபிஷேகத்தை மாத்திரம் சொல்லி யிருப்பது
“செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர் திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும்,
தாளநன்மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும், மங்கல வைம்படையுந் தோள்வளையும்
குழையும் மக்கரமும் வாளிகளும் சுட்டியும்” (பெரியாழ்வார் திருமொழி 1-5-10) என்கிற மற்றுமுள்ள திவ்ய பூஷணங்கள்
பலவற்றுக்கும் உபலக்ஷணமென்க. “பலபலவேயாபரணம் பேரும் பலபலவே” என்றபடி எம்பெருமானுடைய விலக்ஷணமான
திருவாபரணங்களையும் திருநாமங்களையும் திவ்யாயுதங்களையும் சிந்திக்கப் புகுந்தால்
இதர விஷயங்களைப் பற்றின லாப நஷ்டங்கள் ஒரு பொருளாக நெஞ்சிற்படுமோ என்பது உள்ளுறை.

சுடர்கொள் சுடராழி = உலகில் சந்திரன் ஸூர்யன் நக்ஷத்திரங்கள் அக்நி முதலிய சுடர்ப் பொருள்கள் எத்தனையுண்டோ
அவையெல்லாவற்றினுடையவும் தேஜஸ்ஸைக் கவர்கின்ற ஆழி;
திருவாழியின் முன்னே அவையெல்லாம் இருள் மூடினாற்போலே கிடக்குமென்றபடி.
பாநோ! பா நோ த்வதீய ஸ்புருதி” என்ற (13) ஸுநர்சநசதக ச்லோகத்தில் இது விரித்துரைக்கப்பட்டது.

மாதாபிதுவாக = “மாதா பிதாவாக” என்றிருக்க வேணுமென்று சிலர் பாடத்தைத் திருத்துவார்கள்;
அதுவேண்டா; வடமொழியில் பிதா என்னும் பதத்தின் பகுதியான பித்ரு என்பதை இங்கே பிது எனப் பிரயோகித்துள்ளார்.

—————————————————————-

(இனி நின்று நின்பெருமை) எம்பெருமானையே எல்லவுறவுமாகப் பற்றினேனென்றார் கீழ்ப்பாட்டில்.
இங்ஙனே பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகக் சொன்னீரே,
என்னுடைய படிகளெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவீராகில் சிறிது சொல்லிக்காணும்’ என்ற;
பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னாநிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.

ஆழ்வீர் எல்லா உறவாகவும் பற்றினீரே-என்னை பற்றி சொல்லிக் காணும் என்ன
என்னால் உனது பெருமைக்கு ஈடாக சொல்ல முடியுமோ-என்கிறார்-

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

பதவுரை

தனி நின்ற–தானொருவனுமே காரணமாய் நின்றவனும்
சார்வு இலா–வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான
மூர்த்தி–எம்பெருமானே!
அகத்து பனி நீர் உலவு செம்சடையான்–உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன்.
ஆகத்தான்–உன் திருமேனியை ஆச்ரயித்து வாழ்பவன்;
நான்கு முகத்தான்–நான்முகக் கடவுள்
நின் உந்தி முதல்–உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்;
இனி–இப்படியான பின்பு
நின் பெருமை–உனது மேன்மையை
யான் நின்று உரைப்பது என்னே-தான் முயன்று சொல்வது எங்ஙனே?
(என்னால் சொல்லப்போகாதென்கை)

இனி நின்று நின் பெருமை
இப்படியான பின்பு-உனது மேன்மையை

யான் உரைப்பது என்னே
நான் முயன்று சொல்வது எங்கனே -என்னால் சொல்லப் போகாது -என்கை –

தனி நின்ற
தான் ஒருவனே காரணமாய் நின்றவனும்

சார்விலா
வேறு ஒருவரை தனக்கு-ஆதாரமாக உடைத்தாகாதவனுமான-ஏகோஹைவ நாராயணா ஆஸீத் –
தனியனாக இருந்தானே-வேறு ஒருவரையும் சாராமல் –

மூர்த்தி –
எம்பெருமான்

பனி நீர் அகத்துலவு செஞ்சடையான்
அகத்து பனி நீர் உல வு செஞ்சடையான் -உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற
சிவந்த ஜடையை உடையனான சிவன்

ஆகத்தான்-
உனது திரு மேனியை ஆச்ரயித்து வாழ்பவன்-ஒரு சமய விசேஷத்தில் இடம் கொடுத்ததைக் கொண்டு-
ஆழ்வார்கள் இதை அடிக்கடி அருளிச் செய்வார்கள்

நான்கு முகத்தான் நின்னுந்தி முதல்
நான் முகக் கடவுள்-உனது திரு நாபி கமலத்தை-மூல காரணமாக உடையவன்
நின் உந்தியை முதல் காரணமாக -அன்மொழித் தொகை-பஹூ வ்ரீஹ சமாசம்
அடங்கியது-உந்தியிலே பிறந்து உலகுக்கு எல்லாம் முதல் காரணம் என்றுமாம்

ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும்-கூறாளும் தனிவுடம்பன் –திருவாய்மொழி -என்றும்
அக்கும் புலியனகளும் உடையாரவர் ஒரு பக்கம் நிற்க நின்ற பண்பர் -பெரிய திருமொழி –என்றும்

தனி நின்ற சார்விலாமூர்த்தி = காரியப் பொருள்கள் யாவும் அழிந்த காலத்து
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்” (நாராயண னொருவனே இருந்தான்.) என்று உபநிஷத்தில் சொன்னபடியே
தனியனாக இருந்தவனே என்கிறது= தனிநின்ற என்பதனால் அக்காலத்தில் கீழ்ப்பட்ட தெய்வங்களெல்லாம்
மேற்பட்ட தெய்வங்களைச் சரணம்புக, எல்லாருமாக ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைச் சரணம் புகுந்து ஸத்தைபெற்றார்களென்று
சொல்லிற்றே யொழிய, நாராயணன் மற்றொருவனைப்பற்றி ஸத்தை பெற்றதாகச் சொல்லாமையாலே சார்விலா மூர்த்தி என்றார்;
நான் மற்றொரு தெய்வத்தைச் சாராதமூர்த்தி என்கை. மூர்த்தி-= அண்மைவிளி; ஸ்வாமியே! என்று விளித்தவாறு.

(பனிநீர் இத்யாதி.) கங்கையைச் சடையிலே கொண்ட சிவன் உன்னுடைய திருமேனியில் ஏகதேசத்தை இருப்பிடமாகக் கொண்டு ஸத்தை பெற்றான்;
நான்முகனோ உனது நாபிக் கமலத்தில் நின்றும் பிறந்து ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவானான்;
இப்படியிருக்க உனது பெருமையை புல்லியனான நான் பேசுவதென்று ஒன்றுண்டோ?- என்றாயிற்று.

ஆகத்தான் = ஆகமாவது சரீரம் ஒரு ஸமய விசேஷத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு எம்பெருமான் தனது திருமேனியின்
ஒருபுறத்திலே இடம் கொடுத்து உதவினன் என்கிற இதைப் பெரிய குணமாகக் கொண்டு ஆழ்வார்கள் இதனை அடிக்கடி அருளிச்செய்வார்கள்;
“ஏறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனியுடம்பன்” என்பர் திருவாய்மொழியிலும்;
“அக்கும் புலியினதளுமுடையாரவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றார் பெரிய திருமொழியிலே திருமங்கையாழ்வார்.

நின்னுந்திமுதல் = அன்மொழித்தொகை; (பஹுரீஹிஸமாஸமடங்கியது) நின் உந்தியை முதற்காரணமாக வுடையவன் என்று பொருள்படுதலால்.
நின் உந்தியிலே பிறந்து உலகுக்கெல்லாம் முதற்காரணமாயிருப்பவன் என்றுரைத்தலுமாம்.

————————————————————————–

(முதலாந்திருவுருவம்.) கீழ்ப்பாட்டில் பிரமனுடையவும் சிவனுடையவும் பேச்சு வந்தமையாலே பரத்வ விஷயமாகப்
பிறர் சொல்லுகிற வாதங்கள் நினைவுக்கு வந்து, அவற்றைத் தள்ளி ஸித்தாந்தம் அருளிச் செய்கிறாரிதில்.

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

பதவுரை

முதல்வா–ஸகலகாரண பூதனான பெருமானே!
மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர்–பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்;
மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர்–‘மேற்சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள்.
நிகர் இலகு கார் உருவா–மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்காநின்ற திருமேனியை யுடையவனே!
புகர் இலகு தாமரையின் பூ–தேஜஸ்ஸுமிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது
நின் அகத்தது அன்றே–உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிடவல்லது என்றவாறு.)

முதலாம் திருவுருவம் மூன்று என்பர்
ப்ரஹ்ம விஷ்ணு சிவன் என்று-மூன்று திவ்ய மூர்த்திகள்-தலைவராவர் என்பர் சிலர்
அரி அயன் அரன் மூவரும் சமம் என்பர் பிறர்

ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
மூன்றுக்கும் ஒன்றே முதலாகும் என்பர்-மேல் சொன்ன மூவருக்கும்-வேறு ஒரு மூர்த்தி தலையாக
இருக்கும் என்பர் சிலர்-துரீய ப்ரஹ்ம வாதிகள்

முதல்வா
சர்வ காரண பூதனான பெருமானே-ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம் தோன்ற முதல்வா என்று விளிக்கிறார்

நிகரிலகு காருருவா
மேகம் என்று சொல்லலாம் படி -அதனோடு ஒத்து விளங்கா நின்ற-திருமேனியை உடையவனே -சேவிக்கும் பொழுதே சகல தாபங்களும் ஆறும்படி
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ ஓன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவம் கண்ட போதே ஓன்று ஆம் சோதி முகில் உருவம் எம்மடிகள் உருவம் தானே -திரு நெடும் தாண்டகம்

நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ
தேஜஸ் மிக்கு நின்ற தாமரைப் பூவானது-உன்னிடத்தில் உள்ளது அன்றோ-
திரு நாபி கமலமே உன்னுடைய பரத்வத்தை வெளியிட வல்லது -என்றபடி
சிவன் பிரமன் இடமும் அந்த பிரமன் உன்னிடமும் இருந்து தோன்றி -நீ அன்றோ பராத்பரன் –

பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம்
த்ரயோ தேவாஸ் துல்யா த்ரியதயமித மத்வைதம் அதிகம் த்ரிகா தஸ்மாத் தத்வம் பரமிதி
விதர்க்கான் விகடயன் -விபோர் நாபீ பத்மா விதி சிவ நிதானம் பகவத்
தத் அந்யத் ப்ருபங்கீ பாவ திதி சித்தாந்தயாதி ந-என்று அருளிச் செய்கிறார்

த்ரயோ தேவாஸ் துல்யா
அரி அயன் அரன் மூன்று தெய்வங்களுக்கும் சாம்யம் சொல்வார்கள் -த்ரி மூர்த்தி சாம்ய வாதம்-
வஸ்துக்களின் பேதம் ஒத்துக் கொண்டு அவற்றுக்கு ஏற்ற தாழ்வு இல்லாததை சொல்வது சாம்ய வாதம்
த்ரியதயமிதம் அத்வைதம்-இம் மூன்று தெய்வங்களும்வேறு வேறு அல்ல
ஒன்றே என்பர் சிலர் –ஐக்ய வாதம்
வஸ்துக்களின் பேதத்தையே ஒத்துக் கொள்ளாமை-அதிகம் த்ரிகாதஸ்மாத் தத்வம் பரம் -இம்மூவரில் மேம்பா துரீய ப்ரஹ்மமே பரதத்வம் என்பர்
இதி விதர்க்கான் விகடயன் -விபோர் நாபீ பத்மா இத்யாதி
நாபி பத்மம் முதல் கிழங்காய் இருந்து கொண்டு-சித்தாந்தம் நமக்கு அறிவிக்கின்றது-

(முதலாந்திருவுருவம் மூன்றென்பர்.) ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்கிற மூன்று மூர்த்திகளும் துல்யமாகவே
உலகுக்குத் தலைவர்கள் என்று கொள்ளுகிற சிலருடைய கொள்கையை இதனால் அநுவதித்தபடி,
அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளும் பரஸ்பரம் ஏற்றத்தாழ்வின்றியே ஸமாநராயிருப்பரென்று சிலர் சொல்லுவார்கள்-
என்றவிதனால் அது ஸ்வஸித்தாந்தமல்ல, பரபக்ஷம் என்பது விளங்கும்.

(ஒன்றே முதலாகும் மூன்றுக்குமென்பர்.) உத்தீர்ணவாதிகனென்று சிலருண்டு; அவர்களுடைய கொள்கை இது;
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்களிற்காட்டில் வேறுபட்ட நான்காவது தத்துவம் ஒன்றுண்டு;
அதுவே இம்மூன்று தத்துவங்கட்கும் நிர்வாஹகமாகனது என்பராமவர்கள்; அவர்கள் துரீய ப்ரஹ்மவாதிகளெனப்படுவார்கள்.
அவர்களுடைய பக்ஷமும் ஸ்வஸித்தாந்தமல்லவென்று இதனால் காட்டப்பட்டது.
ஸ்ரீமந்நாராயணனொருவனே பரதத்துவமென்பது தோன்ற முதல்வா! என விளிக்கின்றார் காண்மின்.
ஸேவிக்கும்போதே ஸகலதாபங்களும் ஆறும்படியான திருமேனிகொண்ட தெய்வமே பரதத்துவம் என்பது விளங்க நிகரிலகுகாருருவா! என்றும் விளிக்கின்றார்.
“ஒருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்று மாகடலுருவம் ஒத்துநின்ற, மூவுருவுங் கண்டபோது ஒன்று ஆங்சோதி முகிலுருவமெம்மடிகளுருவந்தானே” என்று திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்தில் பரதத்துவநிர்ணயம் பண்ணும் பாசுரத்தில் அருளிச் செய்தமை காண்க.

ஸ்ரீமந்நாராயணனே பரத்துவமென்பது நன்கு பொருந்துமாறு விஷயம் காட்டுகிறார்
நின்னகத்ததன்றே புகலிலகு தாமரையின்பூ என்பதனால் சிவன் பிரமனிடத்துத் தோன்றியவனென்றும்;
அந்தப் பிரமன் உனது திருநாபிக் கமலத்தில் தோன்றியவனென்றும் காஸ்த்ரங்களிற் சொல்லியிருக்கும்போது
அந்தத் தாமரையைத் திருநாபியிலேயுடைய நீயேயன்றோ பரதத்துவமாக இருக்கத் தகதியுண்டென்ற காட்டியவாறு.

இந்தப் பாசுரத்தையே பட்டர் ஸ்ரீரங்ராஜஸ்தவ – பூர்வசதகத்தில் பெரியவொரு ச்லோகமாகப் பன்னியுரைத்தார்” அதாவது
த்ரயோ தேவாஸ்துல்யா:, த்ரிதயமிதமத்வைதம், அதிகம் த்ரிகா தஸ்மாத்தத்வம் பாரமிதி விதர்க்காந் விகடயந்-
விபோர் நாபீபத்மோ விதிசிவநிதாநம் பகவத: ததந்யத் ப்ரூபங்கீபரவதிதி ஸித்தாந்தயதி ந: ” என்பதாம்.
இந்த ச்லோகத்தின் பொருளையும் சிறிது விவரிப்போம்;
(த்ரயோ தேவாஸ் துல்யா.) அரி அயன் அரனென்றம் மூன்று தெய்வங்களும் ஸாம்யஞ்சொல்லுவர் சிலர்.
(த்ரிதயமிதம் அத்வைதம்.) இம்மூன்று தெய்வங்களும் வெவ்வேறல்ல; ஒன்றேயென்பர் சிலர். கீழே சொன்னது த்ரிமூர்த்திஸாம்யவாதம்;
இது ஐக்யவாதம். வஸ்துக்களின் பேதத்தை ஒப்புக்கொண்டு அவற்றுக்கு ஏற்றத் தாழ்வுகளில்லாமை சொல்லுவது ஸாம்யவாதமெனப்படும்.
வஸ்துக்களுக்கு பேதத்தையே ஒப்புக்கொள்ளாமை ஐக்யவாதமெனப்படும். இந்த ஐகய்வாதம் இப்பாட்டில் அநுவதிக்கப்படவில்லையாகிலும்
அதனை நிரஸிப்பதும் ஆழ்வார்க்குத் திருவுள்ளமே யென்றணர்ந்த பட்டர் அதனையும் எடுத்துக் கூறினாரென்க.
(அதிகம் த்ரிகாதஸ்மாத் தத்வம் பரம்.) இம்மூன்று தெய்வங்களிற் காட்டிலும் மேற்பட்டதான துரீயப்ரஹ்மமே
பரதத்துவமென்று உத்தீர்யவாதம் பண்ணுவர் சிலர்..
(இதி விதர்க்காந் விகடயந் விபோ: நாபீபத்ம: இத்யாதி.) இப்படிப்பட்ட சங்கைகளை யெல்லாம் அடியறுக்கின்ற
திருநாபிக்கமலமானது ப்ரஹ்மருத்ரர்களுக்கும் முதற்கிழங்காயிருந்துகொண்டு
‘உலகமெல்லாம் எம்பெருமானுடைய புருவநெறிப்புக்குப் பரவசப்பட்டது’ என்கிற ஸித்தாந்தத்தை நமக்கு நன்கு தெரிவிக்கின்றது- என்றாராயிற்று.
ஆகையாலே இப்பாசுரத்தின் மொழிபெயர்ப்பாயிருக்கும் இந்த ச்லோகமென்ற அநுஸந்திக்கக்கடவது.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -51-60–திவ்யார்த்த தீபிகை –

September 17, 2014

(மனமாளுமோரைவர்.) கீழ்ப்பாட்டில் “மாவாய் பிளந்தார் மனம்- அந்தோ! வலிதேகொல்” என்று
எம்பெருமானைக் கல்நெஞ்சனாகச் சங்கித்தார்; உடனே தம் ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தார்;
சேஷியான எம்பெருமான் விஷயத்திலே சேஷபூதர். இப்படிச் சொல்லத் தகாதென்று விவேகமுற்று,
எம் பெருமான் திருவுள்ளமானபடியே செய்யக்கடவுள்; அவனை நாம் நிர்ப்பந்திப்பதென்பது தகுதியன்று;
நம்முடைய இந்திரியங்களையெல்லாம் அவன் பக்கலில் ஊன்றவைத்து அவனது திருவடித்தாமரைகளை ஸேவித்துக்
கொண்டிருப்பதேயன்றோ நமக்கு ஸ்வரூபம்” என்று அருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு –51-

பதவுரை

மனம் ஆளும்–மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான
ஓர் ஐயர்–ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற
வன் குறும்பர் தம்மை–பிரபலர்களான துஷ்டர்களை
சினம் மாள்வித்து–கோவமடங்கச் செய்து
ஓர் இடத்தே சேர்த்து–(பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,
புனம்மேல் தண் துழாயான் அடியை–தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை
தாம் காணும் அஃது அன்றே–ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ
வண் துழாம் சீரார்க்கு மாண்பு–அழகிய விசாலமான நற்குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு.

மனமாளும் ஓர் ஐவர்
மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி-ஆளுமையான-ஒப்பற்ற
பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற-எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப்பட்டது
ஆத்மாவுக்கு மனஸ் சேஷப்பட்டது-மனசுக்கு இந்த்ரியங்கள் சேஷப்பட்டன
இந்த முறை மாறி மனசை தமக்கு அடிமை ஆக்கிக் கொண்டனவே
கொடுமையை பற்றிய கோபத்தினால் ஐவர் -உயர் திணை யாக அருளிச் செய்கிறார்
கோவாய் ஐவர் என் மெய் குடியேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து போகார் நான்-
அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே –
திருமங்கை ஆழ்வார்

வன் குறும்பர் தம்மை
பிரபலமான துஷ்டர்களை

சினமாள்வித்து
கோவம் அடையச் செய்து-காமாத் க்ரோதாத் அபிஜாயதே
விஷயங்கள் அல்பம் என்பதால் ஆசை-அடங்காமல் கோபம் உண்டாகும்
பகவத் விஷயம் அள்ள அள்ள கொள்ளக் குறை யற்ற இன்பம் தருவதால்
இரை போரவில்லையே என்கிற கோபம் மாண்டு போகுமே
பூர்ண திருப்தி உண்டாகும் படி பகவத் விஷயத்தில் பிரவணமாக்கி என்றபடி

ஓர் இடத்தே சேர்த்து –
பகவத் விஷயமாகிய-ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி

புனமேய தண் துழாயான் அடியைத்
தன்நிலத்திலே பொருந்திய-குளிர்ந்த திருத் துழாய் மாலையை அணிந்துள்ள
அபெருமானது திருவடிகளை –

தான் காணும் அஃது அன்றே –
சேவித்துக் கொண்டே இருப்பது அன்றோ

வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு
அழகிய விசாலமான-நற் குணங்களை யுடைய-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு
இங்கன் அன்றி அவன் மனம் கல் எனபது ஸ்வரூபம் அன்று
துழாம்-என்றது துழாவும் -என்றபடி -துழாவுகை –பரம்புகை -விசாலமான என்றபடி
அவன் திரு உள்ளம் ஆனபடி ஆயிடுக என்று இருப்பதே தகுதி -வெறுத்தல் கூடாது என்றவாறு-

(மனமாளும் ஓரைவர்.) எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப்பட்டது; ஆத்மாவுக்கு மநஸ்ஸு சேஷப்பட்டது;
மநஸ்ஸுக்கு இந்திரியங்கள் சேஷப்பட்டவை; அதாவது-
மனம் போனவழியே செவி வாய் கண் முதலிய இந்திரியங்கள் போகக் கடவன- என்றிப்படி ஒரு நியதி உண்டு;
இந்த நியமம் குலைந்து, இந்திரியங்களானவை மனத்தைத் தம் வழியிலே இழுக்கின்றனவாம்.
மனத்தையும் தங்கள் வசத்திலேயாக்கி ஆளுகின்ற வன்குறும்பர்களான ஐவருண்டு- பஞ்சேந்திரியங்கள்- செவிவாய் கண் மூக்கு உடல் என்பவை,
அவற்றை வலியடக்கி பகவத் விஷயத்திலே ஊன்றவைக்க வேணுமென்கிறார் முன்னடிகளால்.
அசேதனங்களான இந்திரியங்களை ஐவர் என்று உயர்திணையாகக் கூறுதல் அவற்றின் கொடுமையைப்பற்றிய கோபத்தினாலென்க.
“கோவாய் ஐவரென்மெய் குடியேறிக் கூறை சோறியை தாவென்று குமைத்துப் போகார்,
நான் அவரைப் பொறுக்ககிலேன் புனிதா! புட்கொடியாய் நெடுமாலே!” (பெரிய திருமொழி 7-8-9) என்ற திருமங்கையாழ்வார் பாசுரமுங் காண்க.
வன்குறும்பர் என்ற விசேஷணத்தினாலும் இந்திரியங்களின் கொடுமை நன்கு விளக்கப்பட்டது.

சினம் மாள்வித்து- ** காமாத் க்ரோதோபிஜாயதே” (ஒரு பொருளில் ஆசை உண்டாகி அது கைகூடாவிடில் பிறகு கோபம் உண்டாகிறது)
என்று கீதையிலே சொல்லியிருக்கிறபடி அந்த இந்திரியங்களுக்கு உண்டான கோபத்தை மாளந்செய்து என்கை;
இதன் கருத்து யாதெனில் இந்திரியங்கள் விஷயாந்தரங்களை அநுபவித்துப் புகுந்தால் அவ்விஷயங்கள் அற்பமாகையாலே
தங்களுக்கு இதை போரவில்லையென்று கோபமுண்டாகும்;
அந்த இந்திரியங்களுக்கு பகவத் விஷயாநுபவத்தை இரையாக்கிவிட்டால், அவ்விஷயம் கனத்ததாகையாலே தங்கள் பசி
நன்றாகத் தீருமாதலால் கோபமுண்டாக ப்ரஸக்தியில்லை; இரை போரவில்லையே என்கிற கோபம் மாண்டுபோம்;
ஆகவே “சினம் மாள்வித்து” என்பதை எச்சத் திரிபாகக்கொண்டு, ‘கோபத்தைத் தணிக்க’ என்றுரைத்தல் பொருந்தும்.
பஞ்சேந்திரியங்களுக்கு விஷயாந்தராநுபவத்தில் வயிறு நிறைய வில்லையேயென்கிற கோபம் தீரும்படி (பூர்ணத்ருப்தி உண்டாகும்படி)
அவற்றை பகவத் விஷயத்திலே ப்ரவணமாக்கி- என்றதாயிற்று.

புனமேயதண்துழாயானடியைக் காணுமஃதன்றே =வுனமாவது நிலம்; எந்த வஸ்துவும் தன்னிலத்தைவிட்டுப் பிரிந்தால் செவ்விகுன்றுமாதலால்,
அப்படியல்லாமல் தன்னிலத்திலேயே இருக்கிற திருத்துழாயானது எவ்வளவு செழிப்பாக இக்குமோ அவ்வளவு செழிப்பாகத்
தனது திருமேனியிலே அத் துழாய்மாலை விளங்கப்பெற்ற பரமபேரிக்யனான அப்பெருமானுடைய திருவடிகளே
நமக்குத் தஞ்சம் என்று கொண்டு அவற்றை ஸேவித்துக் கொண்டிருப்பதேயன்றோ
வண்துழாம்சீரார்க்கு மாண்பு- பரமவிலிக்ஷணரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீர்மை;
இங்ஙனன்றி ‘எம்பெருமானுடைய மனம் கல்லோ’ என்று சொல்லுதல் தகுதியன்று;
கல்லாகவே யிருந்தாலும் அவனுடைய திருவடிகளே தஞ்சமென்றிருத்தலே ஸ்வரூபம் என்றாராயிற்று.

வண்துழாம் சீரார்க்கு என்றது- ஆத்மகுணங்கள் நிரம்பப் பெற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு என்றபடி.
துழாம் என்றது- துழாவும் என்றபடி; துழாவுகை- பரம்புகை; விசாலமாயிருத்தலைச் சொன்னபடி;
அழகிய விசாலமான நற்குணங்களமைந்த பாகவதர்களுக்கு என்கை.
இப்படிப்பட்ட ஆத்மகுணங்கள் நிறைந்த ஸாதுக்களாயிருந்தால் ‘அவன் திருவுள்ளமானபடியே ஆயிடுக’ என்றிருப்பதே தகுதி;
வெறுத்தல் கூடாது என்றவாறு.

———————————————————–

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண்ணவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

பதவுரை

அஞ்ஞான்று–முன்னொரு காலத்தில்
மாண்–வாமாவேஷத்தை
பாவித்து–பாவனை செய்துகொண்டு
மண் இரந்தான்–(மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவன்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
நஞ்சு–(முலையிலே தடவியிருந்த) விஷத்தை
ஊண் பாவித்து உண்டானது–உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய
ஓர் உருவம்–விலக்ஷணமான திருமேனியை
காண்பான்–ஸேவிக்கும் விஷயத்திலே
நம் கண் அவா–நமது ஆண்களுக்கு ஆசை;
மற்று ஒன்று காண உறா–வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை!
வாய்தான்–வாக்கானது
சீர் பரவாது–(அவனது) திருக்குணங்களைப் புகழ்வது தவிர்த்து
ஒன்று–வேறொன்றை (சோற்றை)
உண்ண-உண்பதற்கு
உறுமோ–விரும்புமோ?

(மாண்பாவித்து) நம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயத்திலே ஆழ்ந்தபடியைப் பேசுகிறார்.
இந்திரனுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக வாமநவேஷம் பூண்டுகொண்டு மாவலி பக்கலிற் சென்று
மூவடி மண்தரவென்று இரந்தவனும், தான் கிருஷ்ண சிசுவாயிருக்கும்போது கம்ஸனுடைய தூண்டுதலால்
தன்னைக் கொல்வதற்காகத் தாய்வடிவு கெணண்டு முலைகொடுக்க வந்த பூதனியினுடைய முலையைச் சுவைத்துண்கிற பாவனையிலே
அவளுயிரை உறிஞ்சியுண்டவனுமான எம்பெருமானுடைய விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தைக்
காணவேணுமென்கிற ஒரு விருப்பமே நமது கண்களுக்குள்ளது; வேறு எந்த அற்புதமான வஸ்துவையும் இக்கண்கள் காண விரும்புகின்றில.
வாய்தானும் அப்பெருமானுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசதலொன்றிலேயே ஊற்றமுடையது;
சோறு திண்பதிலும் வாய்க்கு விருப்பமில்லை- என்றாராயிற்று.

மாண்- மாணியின்தன்மை; வாமாநத்வம். பாவித்து – வடமொழியில் ***- பூ- ஸந்தாயம்” என்ற தாதுவடிவாகப் பிறந்த
வினையெச்சம் அஞ்ஞான்று- அக்காலத்தில்; முன்பொரு காலத்திலென்றபடி. (ஞான்று- காலம். ‘நான்று’ என்பதுமுண்டு; ஞகரநகரப்போலி.)

————————————————————-

(ஒன்றுண்டு செங்கண்மால்.) கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தம்முடைய இந்திரியங்கள் எம்பெருமான் விஷயத்திலே
ஆழ்ந்தபடியைப் பேசி ‘இனிமேல் தமக்கு ஒரு குறையுமில்லை; தாம் க்ருதக்ருத்யாக ஆய்விட்டார்’ என்று தோற்றுமாறு
இருந்ததைக் கண்ட எம்பெருமான், ‘அந்தோ! ஆழ்வார் இவ்விருள் தருமா ஞாலத்தில் இருந்து கொண்டே இப்படி களிக்கிறாரே;
இவ்வநுபவம் இவர்க்கு நித்தியமாய்ச் சொல்லுமோ? ஸ்ரீவைகுண்டம் பெற்றாலன்றோ அநுபவ பூர்த்தியுள்ளது’ என்று
திருவுள்ளம்பற்றி அந்த ஸ்ரீவைகுண்டத்தையும் ஆழ்வார்க்குத் தந்தருள்பவன்போல விளங்கினான்;
அதனைக்கண்ட ஆழ்வார் “இச்சுவைதவிர யான் போய் இந்திரலோகாமளுமச்சுவை பெறினும் வேண்டேன்” என்றாற்போல
‘இந்த குணாநுபவத்திற்காட்டிலும் ஸ்ரீவைகுண்டமென்பது போக்யமோ? பிரானை!’ என்கிறார்.

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

பதவுரை

செம்கண் மால்–(அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே;
யான் உரைப்பது–அடியேன் விண்ணப்பஞ் செய்வது
ஒன்று உண்டு–ஒரு விஷயமுண்டு;
அவர்க்கு–இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு
வைகுந்தம் என்று அருளுமி வான்–ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது.
நீ–நீயோ வென்றால்
உன் அடியார்க்கு–உனது அடியார்களுக்கு
(எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்)
என் செயவன் என்றே இருத்தி–இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்;
நின் புகழில் வைகுந்தம் சிந்தையிலும் இனிதோ–உனது திருக்குணங்களிலேயே ஊன்றியிருக்கப்பெற்ற தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ?

ஓன்று உண்டு
ஒரு விஷயம் உண்டு -கலங்கினவனுக்கு தெளிவிக்க வேண்டுமே-
சர்வஞ்ஞனுக்கும் ஓன்று அறிவிக்க வேண்டும்

செங்கண் மால்
அடியார்கள் மேலே வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை-உடைய திருமாலே
வ்யாமோஹத்தாலே சிவந்து உள்ள திருக் கண்கள்

யான் உரைப்பது-
அடியேன் விண்ணப்பம் செய்வது –

உன் அடியார்க்கு –
உனது அடியவர்களுக்கு

எத்தனை நன்மைகள் செய்து அருளினும் திருப்தி பெறாமல்
நீ
நீயோ வென்றால்

என் செய்வன் என்றே இருத்தி –
இன்னமும் என்ன நன்மைகள் செய்வோம் என்றே-பாரித்து இரா நின்றாய்
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ
உனது திருக் குணங்களிலே ஊன்றி இருக்கப்-பெற்ற-தமது சிந்தையில் காட்டிலும்
நீ-இப்படிப் பாரிக்கின்ற நீ-யவர்க்கு-அவ்வடியார்களுக்கு

வைகுந்தம் என்று அருளும் வான்
ஸ்ரீ வைகுண்டம் என்று சிறப்பித்துச் சொல்லுகின்ற-பரமபதமானது
நீ ஒருவன் தான் வைகுந்தம் வைகுந்தம் என்று சிறப்பாக சொல்லிக் கொண்டு இருக்கிறாய்-
பாவோ நான்யத்ர கச்சதி
என்று -உள்ளார்கள் இங்கேயே பலர் உண்டே

இப்போது சித்தமான குணாநுபவம்-சித்திக்கப்  போவது ஸ்ரீ வைகுண்டம்
பிரதிபந்தங்கள் மலிந்து கிடக்கும் இங்கே குணாநுபவம்
பிரதி பந்தங்களே இல்லா அங்கே அனுபவிக்கை  ஏற்றமோ

எனக்கு என் செய்வன் என்றே இருத்தி தன்மையில் சொல்லாமல்
அடியார்க்கு அவர்க்கு படர்க்கையாக சொல்லி இருந்தாலும்-தன்மை பொருளே விவஷிதம்
திருப்பாவை -மாற்றமும் தாராயோ வாசல் திறவாதே -முன்னிலையாக சொல்லும் இடத்து படர்க்கை பிரயோகம்

இனி இனி என்று கதறும் ஆழ்வார் இப்படி அருளிச் செய்வது-ஒருவகையான சமத்காரச் சொல்லாகும்-
இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் ஒன்றே முக்கியம் என்றதாயிற்று-

ஆழ்வார் திறத்திலே எதேனுமொன்றைச் செய்யவேணுமென்று ஸ்யாமோஹத்தினாலே எம்பெருமானுடைய
திருக்கண்கள் செவ்வியவாயிருந்ததால் செங்கண்மால்! என் விளிக்கின்றார்.
யானுரைப்பது ஒன்றுண்டே = நீ ஸர்வஜ்ஞனாயினும், உனக்கும் நான் தெரிவிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு காண் என்கை.
இப்பொழுது நீ வியாமோஹத்தாலே கலங்கியிருக்கிறாயதலால் ‘கலங்கினவர்களைத் தெளிந்திருப்பவர்கள் தெளிவிக்கக் கடவர்கள்’
என்னும் நீதியிலே உன்னை நான் தெளிவிக்கவேண்டி உனக்கொன்று சொல்லுகிறேன் கேளாய் என்றார்போலும்
எம்பெருமான் தெளிவழிந்து கலங்கி நிற்கும்படியை வெளியிடுகிறார். உன்னடியார்க்கு என்செய்வனென்றே இருத்தி நீ
என்பதனால் உன்னடியவர்களுக்கு நீஎவ்வளவு நன்மைகளைச் செய்துவைத்தாலும்
‘ஐயோ! ஒன்றும் செய்யவில்லையே, ஒன்றும் செய்யவில்லையே’ என்றே அமைந்து
‘என்ன நன்மை செய்வோம், என்ன நன்மை செய்வோம்’ என்றே அலைபாயா நின்றாய்; இஃது உன்னுடைய கலக்கமன்றோ என்கை.

ஆழ்வார் இப்படி சொன்னதைக் கேட்ட எம்பெருமான்
‘நான் இப்படி கலங்கி யிருக்கிறேனென்பதை நீர் எதுகொண்டு தெரிந்து கொண்டீர்?’ என்று கேட்க; அதற்கு ஆழ்வார்,
‘எப்போதும் உன்னுடைய குணாநுபவமே போதுபோக்காம்படி என்னை இவ்வளவு அநுக்ரஹித்துவைத்தும் ஒரு நன்மையும்
எனக்குச் செய்யவேயில்லையாக நினைத்துக்கொண்டு, இன்னமும் ஏதோ செய்வதாகப் பாரித்திருக்கிறாயன்றோ,
இதுகொண்டே உன்னுடைய வ்யாமோஹத்தைத் தெரிந்துகொண்டேன்’ என்ன;
அதற்கு எம்பெருமான் ‘ஆழ்வீர்! உண்மையில் உமக்கு நான் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தேனாகிலும்,
பரிபூர்ணாநுபவத்திற்குப் பாங்கான பரமபதத்தைக் கொடுக்காதவளவில் ஒரு நன்மையும் செய்யவில்லையென்று தானே அர்த்தம்;
அந்தப் பரமபதந்தன்னையே உமக்குக் கொடுப்பதாகப் பார்த்திருக்கின்றேன்; இதனால் என்னைக் கலங்கினவனாகக் கொள்ளலாகுமோ?’
என்றருளிச் செய்ய; அதன்மேல் ஆழ்வார் நின்புகழில் வைகுந்தம் தம்சிந்தையிலும் நீயவர்க்க வைகுந்தமென்றருளும் வான் இனிதோ? என்கிறார்;
இப்போது ஸித்தமான குணாநுபவத்திற்காட்டிலும் இனிமேல் ஸித்திக்கக்கடவதான வைகுந்தம் சிறந்ததல்லாகிடாய் என்கை.
பிரதிபந்தகங்கள் மலிந்துகிடக்கிற இவ்விருள் தருமாஞாலத்திலிருந்துகொண்டு குணாநுபவம் பண்ணுவதிற்காட்டிலும்
பிரதிபந்தகமற்ற தேசவிஷேத்திலேயிலுந்து கொண்டு அநுபவிக்கை ஏற்றமோ? என்பதும் உள்ளுறை.

“நீ அவர்க்கு அருளும் வைகுந்தம்” என்றாவது, “நீ அவர்க்கு அருளும் வான்” என்றாவது சொல்லலாமாயிருக்க,
அங்ஙனே சொல்லாது “நீ அவர்க்கு வைகுந்தமென்ற அருளம் வான்” என்று அருளிச் செய்ததன் கருத்து யாதெனில்;
நின்புகழில் வைகம் சிந்தையினோர் வைகுந்தத்தை ஒரு பொருளாகவும் மதிக்கமாட்டார்கள்;
பாவோ நாந்யத்ர கசசதி” என்று திருவடி சொன்னாப்போல சொல்லிவிடுவர்கள்;
நீ ஒருவன் தான் ‘வைகுந்தம் வைகுந்தம்’ என்ற வெகு சிறப்பாகச் சொல்லிக் கொண்டு கிடக்கிறாய் என்பதாகக் கருத்து தோன்றும்.

“உன் அடியேற்கு என் செய்வனென்றேயிருத்தி நீ” என்றும் “நீ எனக்கு வைகுந்தமென்றருளும் வான்” என்றும்
தன்மையாகச் சொல்லிக் கொள்ளாமல் ‘அடியார்க்கு’ என்றும் ‘அவர்க்கு’ என்றும் படர்க்கையைச் சொல்லியிருந்தாலும்
தன்மைப் பொருளே இங்கு விவக்ஷிதமென்க.
திருப்பாவையில் “மாற்றமும் தாராயோ வாசல் திறவாய்” என்று முன்னிலையாகச் சொல்ல வேண்டுமிடத்துப்
படர்க்கையாகச் சொல்லியிருப்பதுபோல.

“பொய்ந்நின்ற ஞானமுமம் பொல்லாவொழுக்கும் முக்குமழுத்தடம்புமிந்நின்ற நீர்மை யினியாமுறாமை-
அடியேன் செய்யும் விண்ணப்பமே” (திருவிருத்தம் –முதற்பாட்டு) என்று தொடங்கி அடிக்கடி வைகுந்தத்தையே
பிரார்த்திக்கின்ற ஆழ்வார் இப்பாட்டில் வைகுந்தத்தை வெறுத்துரைப்பது ஒருவகையான சமத்காரச்சொல்லாகும்.
‘இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் முக்கியம்’ என்ற அர்த்தத்தை விளக்கியவாறு.

—————————————————————-

(வானோமறிகடலோ) கீழ்ப்பாட்டில் ‘வைகுந்தம் இனிதன்றே’ என்றுரைத்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்,
‘இவ்வீபூதியில் எவ்வளவுதான் குணாநுபவம் பண்ணினாலும் பிரதீபந்தக்ங்கள் கூடவேயிருக்கிற நிலமாதலால்
இவ்வநுபவம் நிலைநிற்கக்கூடியதன்றே; பிரதிபநதகங்களுக்கு அஞ்சியிருக்க வேண்டியதுதானே’ என்று சொல்ல;
பகவத் விஷயத்தில் நான் இழிந்தவறே பிரதிபந்தகங்கள் போனவிடம் தெரியவில்லை என்கிறார்.

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும்  கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-

பதவுரை

ஆன் ஈன்ற கன்று–பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை
உயர எறிந்து–(விளாமரத்தின்) மேலே வீசியெறிந்து
காய் உதிர்த்தார்–(அவ்விளாமரத்தின்) காய்களை உதிர்த்த கண்ணபிரானுடைய
தாள்–திருவடிகளை
பணிந்தோம்–ஆச்ரயித்தோம் (அதன் பிறகு)
வன் துயரை–வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம்–ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று–(அப்பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ–ஆகாசமோ?
மறி கடலோ–மடிந்து மடிந்து அலையெறிகிற கடலோ?
மாருதமோ–காற்றோ?
தீயகமோ–நெருப்போ?
கானோ–காடோ?
(இன்னவிடத்தில் மறைந்து போயினவென்று தெரியவில்லை;)
ஆ ஆ ஆல்–ஐயோ பாவம்.

வானோ
ஆகாசமோ-ஆகாசத்தில் மறைந்து போயினவா

மறி கடலோ
மடிந்து மடிந்து அலை எரிகிற-கடலோ-கடலில் ஒளிந்து போயினவா

மாருதமோ
காற்றோ-காற்றில் உரு மாய்ந்து போயினவோ

தீயகமோ
நெருப்போ-நெருப்பிலே விழுந்து நசித்துப் போயினவோ

கானோ
காடோ-வனவாச யாத்ரை போயினவோ-அவை என்னருகில் இல்லை என்றதாயிற்று-
இன்ன இடத்தில் மறைந்து போயின என்று தெரியவில்லை

ஒருங்கிற்று
அப்பாபங்கள் மறைந்து போன இடம்
ஒருங்கிற்றும் -பாட பேதம்

ஆ ஈன்ற கன்று
பசுவினால் பெறப்பட்ட வத்சாசுரனை

உயரத் தாம் எறிந்து
விளா மரத்தின் மேலே வீசி எறிந்து

காய் உதிர்த்தார் –
அவ விளா மரத்தின் காய்களை உதிர்த்த-கண்ணபிரான் உடைய

தாள்
திருவடிகளை

பணிந்தோம்
ஆஸ்ரயித்தோம்-அதன் பிறகு-
வன் துயரை
வலிய நம் பாபங்களை

ஆ ஆ ஆல்
ஐயோ பாவம்

மருங்கு கண்டிலம்
சமீபத்தில் காணோம் –

முள்ளைக்கொண்டே முல்லைக் களைவதுபோல எம்பெருமான் பிரதிபந்தகங்களைத் தொலைப்பதில் மிக்க நிபுணன் என்று
காட்டுதற்காகக் கன்றினால் விளவெறிந்த கதையை இங்கு அருளிச் செய்கின்றார்;
கம்ஸனாலேவப்பட்ட அசுரர்களில் கபித்தாஸுரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ் வரும்பொழுது மேல் விழுந்து
கொல்லுவதாக எண்ணிவந்து நிற்க; அதனையறிந்து கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக் கொல்லும்பொருட்டுக்
கன்றின்வடிவங்கொண்டு வந்த வத்ஸாஸுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் எறிய,
விளவும் கன்றுமாகிய இருவரும் சிதைந்து தமது அசுரவடிவத்துடனே விழுந்து இறந்தனர் என்பது கன்றுயரவெறிந்து காயுதிர்த்த வரலாறு.

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளைப் பணிந்த மாத்திரத்திலே எனது பிரதிபந்தக பாபங்களெனல்லாம் இன்னவிடம்
போயினவென்று தெரியாதபடி பாறிப்பறந்து போயின; ஆகாசத்திலே மறைந்து போயினவோ, கடலில் ஒளிந்துபோயினவோ,
காற்றில் உருமாய்ந்து போயினவோ, நெருப்பிலே விழுந்து நசித்ததுப் போயினவோ, அன்றி
வனவாஸ யாத்திரை சென்றனவோ அறிகின்றிலேன்; அவை என்னருகில் இல்லை- என்றாயிற்று.

மறிகடல்= மறிதலாவது- அலைகள் மடிந்தும் மடிந்து வீசப்பெறுதல். மாருதம்- வடசொல். “ஒருங்கிற்றும்” என்றும் ஓதுவர்.
கண்டிலம்- தன்மைப்பன்மை யெதிர்மறை வினைமுற்று. ஆல்- அசை; வியப்புக்குறிப்பிடைச் சொல்லுமாம்.
ஆனீன்றி கன்று= ‘பசுவினால் பிரஸவிக்கப்பட்ட கன்று’ என்று சொல்வதன் கருத்து யாதெனில்;
‘வத்ஸாஸுரன்’ என்று ஒருவன் திடீரென்று ஆகாசத்தின்நின்றும் வந்து குதித்துவிடவில்லை; அவ்விடத்திலுள்ள பசுவின்
கன்றானவொன்றின் மேலே வந்து ஆவேசித்தனன் என்பதைக் காட்டுதலாம்.
காயுதிர்த்தாள் = ஆறாம் வேற்றுமைத் தொகை. ஆவா- ‘ஹா ஹா!’ என்ற வடமொழி அவ்யயங்களிரண்டு சேர்ந்து ஆவாவெனத் திரிந்தது.

————————————————————————–

(மருங்கோதமோதும்.) எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாதவனேயாகிலும்,
அவன்றானே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்ததனனாதலால்
எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியவனாகவே யிராநின்றானென்கிறார்.

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மனக்கவலை தீர்ப்பார் வரவு –55-

பதவுரை

வரவு–(தம்முடைய) வருகையினாலே
மனம் கவலை தீர்ப்பார்–(நமது) மனத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்
மருங்கு ஓதம் மோதும்–ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)
மணி நாக அணையார்–மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான்.
மருங்கே வர அரியர் எலும்–(ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்
எமக்கு–நமக்கு
அவரை–அப்பெருமானை
உன்னால்–மனத்தினால்
ஒருங்கே–ஒரே தன்மையாக
எப்பொழுதும் காணலாம்–எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும்.

மருங்கோத மோதும்-
சமீபத்திலே கடலை மோதும் படியாகவும்-திருப் பாற் கடலிலே
மணி நாகணையார்
மாணிக்கத்தை உடைய-திரு வநந்த ஆழ்வானை படுக்கையாக உடையவருமான பெருமாள்-
தென் திரை வருடத் திருப் பாற் கடலில் திரு வநந்த ஆழ்வான் மேல் திருக் கண் வளருமவர்
என்றபடி

மருங்கே வர அரியரேலும்
ஒருவர்க்கும் ஸ்வ பிரயத்னத்தாலே அணுகி வந்து-கிட்ட முடியாதவராயினும்

ஒருங்கே எமக்கு அவரை உள்ளால் எப்பொழுதும்-ஒரே தன்மையாக
நமக்கு-அப்பெருமானை-மனத்தினாலே-எப்போதும் கண்டு அனுபவிக்கக் கூடும்

மனக்கவலை தீர்ப்பார்
நமது மனத்தில் உள்ள துன்பங்களை தொலைப்பவரும்

வரவு
தம்முடைய வருகையினாலே-மூன்றாம் வேற்றுமை உருபு தொங்கி கிடக்கிறது
வரவினால் என்றபடி
அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே-எனது நெஞ்சிலே புகுந்து-எப்பொழுதும் சேவிக்க
எளியனாய் இருக்கிறான்-என் உள்ளத்திலே உறையும் அவனைக் காண அருமை உண்டோ –

“வரவு மனக்கவலை தீர்ப்பார்”= ‘வரவு’ என்பதில் மூன்றாம் வேற்றுமையுருபு தொக்கிக் கிடக்கிறது; வாயினாலே என்றபடி.
தானாகவே வந்து மனக்கவலையைத் தீர்க்கும் பெருமான் என்கை ஓதம் மருங்கு மோதும் மணி நாகணையார் ஃதெண்திரை வருடத்
திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளருமவர் என்றவாறு. இப்படிப்பட்ட பரமபுருஷன்.
மருங்கே வர அரியரேலும்= ஒருவர்க்கும் தமது முயற்சி கொண்டு அணுக முடியாதவனாயினும்;
உள்ளால் நமக்கு அவரைக் காணலாம் = என்னுள்ளத்துள்ளே உறைகின்றவனைக் காண எனக்கு அருமையுண்டோ? என்கிறாராயிற்று

————————————————————-

(வரவாறொன்றில்லையால்.) எல்லார்க்கும் அருமைப்படுமவன் உமக்கு எளியனானது எப்படி? என்று சிலர் கேட்க;
அவனுடைய நிர்வேஹதுகக்ருபைக்கு அடி அறிய முடியாதாகையாலே, எந்த வழியாலே இந்த பாக்கியம் வந்ததென்று
என்னாலும் நிரூபிக்க முடியாது. காரணம் எதுவானாலென்ன? வாழ்ச்சி நன்றாயிருக்கின்றதத்தனை என்கிறார்.

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

பதவுரை

ஒருவன்–எந்த சேனனும்
ஒரு ஆறு–எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு–பிரவேசிக்க வேண்டாதபடி
(அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)
உரு மாறும்–தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
ஆயவர் தாம்–ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம்–ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம்–முன்பொருநாள் உலகங்களைத் தாவி யளந்தவனும்
மாயவர் தாம்–ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி–காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று–இன்ன வழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது–பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே–ஆச்சரியம்

வரவாறு ஓன்று இல்லையால்
இன்ன வழியாக வந்தது என்று தெரியாது

வாழ்வு இனிதால் எல்லே
பலன் போக்யதாய் இரா நின்றது-ஆச்சர்யம்

ஒருவாறு ஒருவன்
எந்த சேதனனும்-எந்த உபாயாந்தரத்திலும்

புகாவாறு
பிரவேசிக்க வேண்டாதபடி

-உருமாறும்
தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாங்களை மாற்றிக் கொள்ளுகிற

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏக்கம் சரணம் வ்ரஜ-அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச
தானே தலை மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கும் கண்ணபிரான் –

அன்றிக்கே
உருமாறும்-
பரஞ்சோதி உருவை விட்டிட்டு அழுக்கு மானிட உருவை-ஏற்றுக் கொண்ட கோபால கிருஷ்ணன் என்றுமாம்

ஆயவர் தாம்
ஸ்ரீ கிருஷ்ணன் ஆனவனும்

சேயவர் தாம் –
ஆசூர பிரக்ருதிகளுக்கு-எட்ட முடியாதவனும்
பாண்டவர்களுக்கு அணியனாயும் துரியோத நாதிகளுக்கு தூரஸ்தநாயும்
ஒரு கால விசேஷத்திலே அனைவருக்கும் சமீபஸ்ததானாக இருப்பவன் -என்பதை
அன்று உலகம் தாயவர்தாம் – என்கிறது அடுத்து

அன்று உலகம் தாயவர் தாம்
முன்பு ஒரு கால்-உலகங்களைத் தாவி அளந்தவனும்

மாயவர் தாம்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனுமான-எம்பெருமான் –
இப்படி சேயனாயும் அணியனாயும் இருப்பது பற்றி மாயவர் தாம் என்கிறது

காட்டும் வழி
காட்டுகிற உபாயம்-

ஒருவன் ஒரு ஆறு புகாவாறு உருமாறும் ஆயவர்தாம் -ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ;
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யமி மாசுச:” என்ற சரமச்லோகததின் பொருளை அநுஸந்தித்தபடி.
கருமம் ஞானம் முதலிய எந்த உபாயங்களிலும் யாரும் இறங்க வேண்டாதபடி அவரவர்களுடைய காரியங்களைத்தான்
தன் தலை மீது ஏறிட்டுக்கொண்டு நோக்கும் கண்ணபிரான் என்னிகை.
(“உருமாறும்.”) உலகத்தில் எவன் பலனை அநுபவிக்க வேண்டியவனோ அவன் உபாயாநுஷ்டாகம் பண்ணவேணு மென்றிருக்க,
பலனை, அநுபவிப்பவனான சேதநனை ஒரு உபாயமும் அநுஷ்டிக்க வேண்டாவென்று விலக்கி, பலனை அநுபவியாத தான்
அவன் செய்ய வேண்டிய காரியங்களைத் தன் மீது ஏறிட்டுக் கொண்டு செய்கை உருமாறுகையிறே.
இனி, உருமாறுமாயவர் என்றது- பரஞ்சோதியுருவைவிட்டிட்டு அழுக்குமானிடசாதியுருவை ஏற்றுக் கொண்ட கோபாலக்ருஷ்ணன் என்றபடியாம்.
சேயர்தாம்- பாண்டவர் போல்வார்க்கு அணியனாயிருக்கச்செய்தேயும், துரியோதநன் போல்வார்க்கு தூரஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது.
ஒரு காலவிசேஷத்திலே எல்லார்க்கும் ஸமீபஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது அன்று லகந்தாயவர்தாம் என்று.
இப்படி ஒருகால் அணியனாய் மற்றொருகால் சேயனாய், சிலர்க்கு அணியனாய் சிலர்க்குச் சேயனாய் இருப்பது பற்றி மாயவர்தாம் என்கிறது.
இப்படிப்பட்ட எம்பெருமான் தன் இன்னருளாலேதானே காட்டும் வழி (உபாயம்) நிர்ஹேதுகமாகையாலே இன்னமார்க்கமாக
வந்ததென்று நமக்குத் தெரியாதாயினும், போக்யமாக அநுபவித்துக் கொண்டு ஆநந்தக்கடலிலே மூழ்கியிராநின்றோம்;
வாழ்ச்சியில் குறையில்லை; எல்லே- ஆச்சரியம்.

உலகத்தில் ஒருவனுக்கு மிகுந்த செல்வம் வந்தால் ‘இஃது நமக்கு எந்த வழியாலே வந்த’தென்று ஆராய்தல் அவசியமன்றோ;
ஆநந்தத்தை அநுபவிப்பதன்றோ ப்ராப்தம். அதுபோல ஆழ்வாரும் ‘பகவத்க்ருபை எனக்கு எந்தக் காரணத்தாலே வந்தாலென்ன?
ஆநந்தம் அளவற்றிராநின்றது காண்மின்’ என்கிறார்.

———————————————————————-

(வழித்தங்கு வல்லினையை.) இவ்விருள் தருமாஞாலத்தில் உள்ளவரைக்கும் ப்ரதிபந்தகங்கள் மேலிட்டுக்கொண்டேயிருக்குமே!
என்று ஆழ்வாருடைய நெஞ்சு தளும்ப. அதனை ஆழ்வார் ஸமாதானப்படுத்துகிறார் இதில்
அவ்வெம்பெருமானுடைய சக்தி எப்படிப்படட்து தெரியுமோ வுனக்கு? ஆச்ரிதனான ஒரு ப்ரஹ்லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றோ அவன்;
அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்திப்ரதிபந்தங்களைத் தொலைத்தருளானோ? தொலைத்தே யருள்வன்;
நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு- என்றாராயிற்று.

பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்று நெஞ்சு தளும்ப சமாதானம் படுத்துகிறார் இதில்–
கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய்
-பெரியாழ்வார்–
வளை யுகிர் ஒளி மொய்ம்பில் மறவோனது ஆகம் மதியாது சென்று ஒரு உகிரால்

பிள எழ விட்ட குட்டமது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே -திரு மங்கை ஆழ்வார்

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இ க்கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-

பதவுரை

நெஞ்சே–நெஞ்சமே!
போர்–யுத்த பூமியிலே
அவுணன் தன்னை–இரணியாசுரனை
தழீஇக் கொண்டு–அழுந்தக் கட்டிக்கொண்டு,
புலால் வெள்ளம்–ரத்த ப்ரவாஹமானது
தாழ்வு இடங்கள் பற்றி–பள்ள நிலங்கள் பக்கமாக
எங்கும் சுழித்து உகள–கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும்படியாக
வாழ்வு அடங்கா–(அவ்விரணியனுடைய) வாழ்ச்சி முடியும்படி
மார்வு இடந்தமால்–அவனது மார்பைப் பிளந்த பெருமான்,
வழி தங்கு வல்வினையை–இடைவழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை
மாற்றோனோ–(போக்கியருள மாட்டானோ? (போக்கியேவிடுவன்.)

வழித்தங்கு வல்வினையை
இடை வழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற-பிரதிபந்தகமான வலிய பாபங்களை

மாற்றானோ
போக்கி அருள மாட்டானோ -போக்கியே விடுவன்

நெஞ்சே
நெஞ்சமே

தழீ இ க்கொண்டு
அழுந்தக் கட்டிக் கொண்டு

பேராவுணன் தன்னை
யுத்த பூமியிலே-ஹிரண்யாசுரனை

சுழித்து எங்கும் உகள
கண்டவிடம் எங்கும் சுழுத்திக் கொண்டு-அலை எறிந்து கிளம்பும்படியாக

தாழ்விடங்கள் பற்றி –
பள்ள நிலங்கள் பக்கமாக

புலால் வெள்ளம்
ரத்த பிரவாஹமானது

வாழ்வடங்க
அந்த இரணியன் உடைய வாழ்ச்சி முடியும்படி

மார்விடந்த மால்
அவனது மார்பை பிளந்த பெருமாள் –

வழித்தங்கு வல்வினை = பிரதிபந்தகமொன்றுமில்லாவிடில் வழியில் எங்கும் தங்காமல் நேராகச் சென்று நற்கதி கண்ணலாம்;
பிரதிபந்தகமான பாவங்கள் உள்ளவர்கள் இடைவழியிலே தங்க நேர்ந்துவிடும், ஆகவே இங்கு, வழியிலே தங்கப்பண்ணுகிற
வல்வினையென்று ப்ராப்திப்ரதிபந்தகாமன பாவங்களைச் சொன்னபடி. மாற்றானோ என்றது- போக்கியே விடுவேன் என்றபடி.
தழீஇக் கொண்டே- தழுவிக்கொண்டு இரணியனைக் கொன்ற கோரச்செயலை வருணித்துக் கூறுகின்றார் சழித்தெங்கும் என்று தொடங்கி.
இரணியனைக் கொன்றபோது அவனுடம்பிலிருந்து கொழித்துக் கிளர்ந்த ரத்த வெள்ளமானது அங்கே ஸமீபத்திலிருந்த
பள்ள நிலங்கள் யாவும் நிறையும்படி பெருகிற்று என்றவிதனால் அவனுடைய உடல் தடிப்பு சொல்லிற்றாயிற்று.
“கோளரியினுருவங் கொண்டு அவுணனுடலம் குருதிகுழம்பியெழக் கூருகிரால் குடைவாய்” என்றார் பெரியாழ்வார்;
திருமங்கையாழ்வாரும் பெரிய திருமொழியில் (11-4-4.) “வளையுகிராளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது சென்றொருசொல்.
பிளவெழவிட்ட குட்டமது வையமூடு பெருநீரில் மும்மை பெரிதே” என்றருளிச் செய்தார்;
இரணியனைப் பிளந்தபோது உண்டான ரத்த வெள்ளக் குழியானது மஹா ப்ரளய ஸமுத்ரததிற்காட்டிலும் மூன்று மடங்கு பெரிது என்றாரிறே.

————————————————————

(மாலே படிச்சோதிமாற்றேலினி.) கீழ்ப்பாட்டில் “அவணன்றன்னை மார்விடந்தமால் – வழித்தங்க வல்வினையை மாற்றானோ நெஞ்சே!”
என்று தமது நெஞ்சை நோக்கி ஆழ்வார் சொன்னதை எம்பெருமான் கேட்டருளி
‘ஆழ்வீர்! நான் * வழித்தங்குவல்வினையை மாற்றுவது மாத்திரமோ செய்வேன், உம்மைப் பரமபதத்திலே கொண்டு
சேர்ப்பதும் செய்வேன் காணும்’ என்றருளிச் செய்ய;
அதுகேட்ட ஆழ்வார் ‘பிரானே! அடியேன் பரமபதத்தை விரும்புகின்றேனல்லேன்; இதுவரை * மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்தது
போலவே இன்னமும் பலபிறவிகள் பிறக்கப்பெறினும் வருத்தமில்லை; அடியேனை இனிப் பிறவாதபடி பண்ணித்
திருநாட்டிலே வைத்து அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக்கொள்ள வேணுமென்று வேண்டுகின்றேனல்லேன்;
நீ என்னை மறவாதிருக்க வேணும், உன்னை நான் மறவாதிருக்கவேணுமென்னு மித்தனையே அடியேன் விரும்புவது.
நீ என்னை மறாவதிருக்கையாவது – உன்னுடைய திவ்யாத்தகுணங்களையும் திவ்யமங்கள் விக்ரஹகுணங்களையும்
இப்போது நானநுபவிக்குமாற எங்ஙனே அருள் செய்திருக்கிறாயோ இப்படியே மேலுள்ள காலமும் அருளி செய்கையேயாம்;
உன்னை நான் மறவாதிருக்கையாவது- இப்போது உன்னை அநுபவிப்பது போலவே எந்நாளும்மநுபவிக்கையாம்.
ஆக இவ்வளவே அடியேன் பிரார்த்திக்கும் ஸம்பத்து – என்கிறார்.

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

பதவுரை

மாலே–திருமாலே!
உனது–உன்னுடைய
பால்போல் சீரில் பழுந்தொழிந்தேன்-பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;
இனி–இனிமேல்
பிறப்பு இன்மை பெற்று–வீடுபெற்று
அடிக் கீழ்–(உனது) திருவடிவாரத்திலே
குற்றவேல்–கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று–அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிச் சோதி–(உன்னுடைய) திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்வை
மாற்றேல்–எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நிற்யாநுபவ விஷயமாக்க வேணும் ;
மேலால்–மேலுள்ள காலத்திலே
(உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ணவேணுமென்று அடியேன் ஆசைப்படவில்லை.)
மறப்பு இன்மை–உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே
யான் வேண்டும் மாடு–அடியேன் ஆசைப்படும் செல்வம்.

மாலே
திருமாலே

படிச் சோதி மாற்றேல்-
உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ தேஜசை -எனக்கு ஒரு காலும் மாற்றாமல்
நித்ய அனுபவ விஷயம் ஆக்க வேணும்
படி -என்று திரு மேனிக்கு பெயர்
உனது திருமேனி ஒளியை இப்போது அனுபவித்துக் கொண்டு இருப்பது போலே
என்றைக்கும் மாறாமல் அனுபவித்துக் கொண்டே இருக்கும் படி அருள வேணும் –

இனி –
இனிமேல்

உனது-
உன்னுடைய –

பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன்
பால் போல் பரம போக்யமான-திருக் கல்யாண குணங்களிலே-ஆழ்ந்து விட்டேன் –
இத்தால் குணானுபவமே முக்கியமே ஒழிய கைங்கர்யம்-அவ்வளவு முக்கியம் இல்லை என்றபடி

மேலால் –
மேலுள்ள காலத்தில் –

பிறப்பின்மை பெற்று –
வீடு பெற்று

அடிக்கீழ் குற்றேவல்
உனது திருவடி வாரத்திலே-கைங்கர்யம் பண்ணுவது

யான் வேண்டும் மாடு அன்று
நான் அபேஷிக்கும் செல்வம் அன்று

மறப்பின்மை
உன்னை மறவாது இருத்தலே வேண்டுவது
இது ஒன்றே யான் வேண்டும் மாடு
சமத்காரமாக அருளிச் செய்கிறார்
அவி ச்ம்ருதிஸ் தவச் சரணார விந்தே பாவே பாவே மேஸ்து
பவத் பிரசாதாத் -முகுந்த மாலை ஸ்ரீ ஸூக்தியை போலே –

மாலே! படிச்சோதி மாற்றேலினி = படி என்று திருமேனிக்குப் பெயர்; அதனடைய சோதியை மாற்றவேண்டா என்றது –
உனது திருமேனியின் ஒளியை இப்போது நான் அநுபவித்துக் கொண்டிருப்பது போலவே என்றைக்கும் மாறாமல்
அநுபவித்துக் கொண்டேயிருக்கும்படி அருளி புரிய வேணுமென்றபடி.

உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் = உன்னுடைய பரமபோக்யமான திருக்குணங்களிலே நன்றாக ஆழ்ந்துவிட்டேன் என்கை
ஆதலால் எனக்குக் குணாநுபவம் முக்கியமே யொழிய, கைங்கரியம் அவ்வளவு முக்கியமன்று என்று காட்டினவாறு.
பிறப்பின்மை – பிறவாமை; அதாவது ஸம்ஸாரநிவ்ருத்தி; பரமபதத்தைச் சொன்னபடி. அங்கே சென்று குற்றேவல் செய்கையாகிற
செல்வத்தை அடியேன் வேண்டவில்லை; எங்கிருந்தாலும் உன் திருக்குணங்களை மறவாமலிருக்குமத்தனையே வேண்டுவது.

பரமபதம் சென்று அங்கே நித்ய கைங்கரியம்பண்ணவேணுமென்கிற அளவற்ற ஆசையும்
மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்ததில் வருத்தமும் வெறுப்பும் ஆழ்வார்க்குப் பூர்த்தியாக இருக்கச் செய்தேயும்
இப்பாட்டில் இப்படி அருளிச்செய்வது ஒருவகைச் சமத்காரமேயென்க.
இருக்கிறவரையில் எம்பெருமானை மறவாதிருத்தல் நன்று என்கிற சாஸ்த்ரார்த்தத்தைஇதனால் வெளியிட்டபடி.
“அவிஸ்ம்ருதிஸ்த்வச் சரணாரவிந்தே பவேபவே மேஸ்து பவத் ப்ராஸாதாத்” என்ற முகுந்தமாலையை அங்கே அநுஸந்திப்பது.

குறுமை+ஏவல்= குற்றேவல்; சிறிய கைங்கரியம். மாடு-செல்வம்; “மாடு பொன் பக்கம் செல்வம் ” என்பது நிகண்டு.

———————————————————————

(மாடே வரப்பெறுவர்.) இவ்விருள் தருமாஞாலத்திலே எப்படிப்பட்ட ஞானியர்களும் ப்ரக்ருதிஸ்வபாவங்களை உதறித்தள்ளிவிட்டு
எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுபவித்துக் கொண்டேயிருந்தாலும்,இடையிடையே இந்நிலத்தின் காரியம் நிகழ்ந்தே தீருமிறே.
இல்லாவிடில் இருள் தருமாஞாலமென்று இவ்விபூதியின் பெயர் பொய்யாகுமே; இருள் இடையிடையே கலந்து பரிமாறுமிறே.
கீழே சில பாட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணாநுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு இந்த ஸமஸார நிலத்திற்குரிய
துன்பங்களின் ஸம்பந்தம் தோன்றத் தொடங்கிற்று; தொடங்கவே, திருவுள்ளம் நொந்து பேசுகிறார்-;
திருப்பாற்கடலிலே அலைகள் துடைகுத்தத் திருக்கண் வளாந்தருளாநின்ற திருமாலின் திருநாமங்களை நாம்
அநுஸந்திக்க வேணுமென்று சிந்தித்த மாத்திரத்திலேயிருக்க இன்னமும் இவ்விடத்திலேயே சுற்றுக் காலிட்டுக்கொண்டு திரிகின்றனவே,
முன்போல இன்னமும் நம்மிடத்திலேயே தங்கியிருக்கலாமென்று நினைத்திருக்கின்றனவோ? என்கிறார்.

கீழ் ஐம்பத்து நான்காம்பாட்டில் “வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோவொருங்கிற்று” என்று
வல்வினைகள் போனவிடம் தெரியவில்லையென்றருளிச்செய்த ஆழ்வார் திருவாக்கிலே மீண்டும்
“வல்வினையார் காடானுமாதானும் கைக்கொள்ளார்” என்கிற இப்பாசுரமும் வெளிவரும்படியாயிருக்கிறகிறே
இவ்விருள் தருமாஞாலத்தின் கொடுமை!.

இருள் தரும் மா ஞாலத்திலே இருள் இடை இடையே கலந்து-பரிமாறும் இறே-
பகவத் குணங்களை அனுபவித்த ஆழ்வார்-சம்சார தண்மை தோன்றத் தொடங்க திரு உள்ளம் நொந்து பேசுகிறார் –

மாடே வரப் பெறுவாராம் என்றே வல்வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

பதவுரை

பேர் ஓதம்–விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடேபோய்–சிதறி விழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பேராளன்–எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓத–அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க–நினைத்த மாத்திரத்திலே,
வல்வினையார்–கொடிய பாவங்கள்
பேர்ந்து–நம்மைவிட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக்கொள்ளார்–காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப்பெறுவராம் என்றே?–இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?

மாடே வரப் பெறுவாராம் என்றே
இன்னமும் நம்மிடத்திலே-வாழப் பெறலாம் என்ற-எண்ணத்தினாலோ
கீழே மாடு -செல்வம் அர்த்தம் இங்கே பக்கம்-மாடு -பொன் பக்கம் செல்வம் -நிகண்டு
என்றே சொல் நயத்தால் வாராமை காட்டி அருளுகிறார்
இனி நம்மிடம் வல்வினைகள் தங்க இடம் இல்லை என்றபடி –

வல்வினையார்
கொடிய பாவங்கள்

காடானும் ஆதானும் கைக் கொள்ளார் –
காடுகளிலோ மற்று ஏதேனும் ஓர் இடத்திலோ-போய்ச் சேராமல் இருக்கின்றனவோ
கீழே வானோ மறி கடலோ –என்று அருளிச் செய்த ஆழ்வார்-இப்பொழுதும்
மீண்டும் இப்படி அருளிச் செய்யும்படி-இருள் தரும் மா ஞாலத்தின் கொடுமை

பேரோதம் –
விசாலமான கடலிலே

சிந்து திரை ஊடே போய்
சிதறி விழுகின்ற-அலைகளின் உள்ளே சென்று

கண் வளரும் –
திருக் கண் வளர்ந்து அருளா நின்றுள்ள –

பேராளன் –
எம்பெருமானுடைய

பேரோதச் சிந்திக்கப் –
திரு நாமங்களை சிந்திக்க வேணும்-என்று நினைத்த மாத்ரத்திலே

பேர்ந்து
நம்மை விட்டு கிளம்பி –

கீழ்ப்பாட்டில் மாடு என்பதற்கு செல்வம் என்று பொருள்; இப்பாட்டில் அப்பதமே பக்கமென்ற பொருளில் வந்தது.
(“மாடு பொன்பக்கம் செல்வம்” என்பது நிகண்டு.) வரப்பெறுவராமென்றே? என்ற சொல் நயத்தினால்,
இனி அவ்வாசைக்கு இடமில்லை; வல்வினைகட்கு இனி நம்மிடத்தில் தங்க முடியாது- என்பது விளக்கப்பட்டதாம்.

—————————————————————-

(போர்தொன்று.) வல்வினைகள் தம்மை அடர்க்க நினைக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்;
அவை அடர்ந்தாலும் தம்முடைய அத்யவஸாயம் ஒரே உறுதியாயிருக்கும்படியைப் பேசுகிறாரிதில்.
நெஞ்சே! திருத்துழாய்மாலையை அணிந்தள்ள திருமாலின் போய்வதையில் நீ பழகினவனன்றோ?
உனக்கு நான் பதிதாக உபதேசிக்க வேண்டுவதன்றே? அந்த போக்யதையில் நீ யீடுபட்டு வேறு எந்த வஸ்துவிலும் கண் செலுத்தாமல்
அவ்வெம்பெருமானொருவனையே பின்பற்றி நிற்க வேண்டியது உன் கடமை; இந்த ஸ்வரூபம் கெடாதபடி நின்றாலும் நில்லு;
நிற்காமல் லிஷயாந்தாங்களைப்பற்றி முடிந்து போவதானாம் போ; உன்னை நான் நிர்ப்பந்திக்கமாட்டேன்;
ஆனால், நம்மை நரகத்துக்குப் போகாதபடி தடுத்துக் காத்தருளவல்ல கடவுள் அவனைத் தவிர வேறொருவன்
எங்குமில்லையென்பதை மாத்திரம் உனக்கு உறுதியாய்ச் சொல்லுவேன்;
இதனை விச்வஸித்து நீ அப்பெருமானையே அநுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாயாகில் உகக்கிறேன்;
இல்லையாகில் தான்தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த்தொலையட்டும் என்று வெறுத்திருக்கிறேன் = என்றராயிற்று.

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
பேர்ந்து ஒன்று நோக்காது–வேறொன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின்நிற்பாய்–போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு;
நில்லாப்பாய்–அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி;
தொல்லை–அநாதியாய்
மா–பெரிதாய்
வெம்–கடினமான
நரகில்–நரகத்திலே
சேராமல்–போய்ப் புகாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை–வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண்–ஓரிடத்திலுமில்லைகிடாய்.

பேர்ந்து ஓன்று நோக்காது-
வேறு ஒன்றையும் கணிசியாமல்

ஈன் துழாய் மாயனையே பின்னிற்பாய்-
போக்யமான திருத் துழாய் மாலையை-அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி-நின்றாலும் நில்லு

நில்லாப்பாய் –
அப்படிஅவனைப் பற்றாது ஒழியினும் ஒழி-

என்னெஞ்சே

தொல்லை –
அநாதியாய்-பரமபதம் போலே நரகமும் அநாதியே
சுக்ல கிருஷ்ண கதீ ஹ்யதே ஜகதஸ் சாஸ்வதே மதே-இரண்டுமே நித்யமாக சொல்லப் பட்டதே-
ஸ்தானம் நித்யம் எனபது இரண்டுக்கும் ஒக்கும்
பரம பதம் சென்றார் நச புன ஆவர்த்ததே எனபது மட்டும் வாசி

மா வெந்நரகில்-
பெரிதாய் கடினமான நகரிலே –

சேராமல்
போய்ப் புகாமல்

காப்பதற்கு
நம்மை ரஷிப்பதற்கு –

-பேர்ந்து எங்கும் இல்லை காண் மற்றோர் இறை
பேர்ந்து மற்று ஓர் இறை எங்கும் இல்லை காண்-வேறு ஒரு ஸ்வாமியும் வேறு இடத்தில் இல்லை காண் –

தொல்லைமாவெந்நரகில்= நித்யவிபூதியென்று சொல்லப்படுகிற பரமபதம் மாத்திரமேயன்றோ ஆதியந்தமற்றது;
நரகமும் அப்படிப்பட்டதோ? தொல்லைநரகம் என்னலாமோ? என்று சிலர் சங்கிப்பர்கள்;
பகவத் கீதையில் = சுக்லக்ருஷ்ணகதீ ஹ்யதே ஜகதச் சாச்வதேமதே” என்று இரண்டுமே நித்யமாகச் சொல்லப்பட்டுள்ளமை காண்க.
பரம பதஞ் சென்றவர்கள் திரும்பி வருதலில்லாமையால் அதனை விசேஷித்து நித்யவிபூதியென்கிறது.
ஸ்தாநம் நித்யமென்பது இரண்டுக்குமொக்கும்.

காப்பதற்கு இல்லைகாண் மற்றொரிறை = “எருத்துக் கொடியுடையானும் பிரம்மனுமிந்திரனும் மற்றுமொருத்தரும்
இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை” என்று பெரியாழ்வார் திருமொழியும்,
“நீளரவைச் சுற்றிக்கடைந்தான் பெயரன்றே தென்னரகைப்பற்றிக் கடத்தும் படை” என்ற பொய்கையார் பாசுரமும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -41-50–திவ்யார்த்த தீபிகை –

September 16, 2014

(வலியமென நினைந்து) பூதனையைமுடித்த விஷயத்தைக் கீழ்ப்பாட்டில் பேசவே, அத்தோடு ஒரு கோவையான
மல்ல வத சரித்திரமும் நினைவுக்குவர, அதனை இப்பாட்டில் பேசுகிறார். முரட்டுமல்லர்களோடு நீ போர் செய்ய நேர்ந்த காலத்து
உனது ஸுகமாரமான திருக்கைகளாலே அந்த மல்லர்களை நீ புடைக்கும் போது இவ்வுலகில்கண் இருந்த படுபாவிஜனங்களெல்லாம்
“ஐயோ! நமது சரண்யனுக்கு என்ன தீங்க விளைந்திடுமோ!” என்று சிறிதும் வயிற்றெரிச்சல் படாதே கல்லாகக் கிடந்தவனே!
அந்தோ! என்று இன்று தாம் வயிற்றெரிச்சல் படுகிறார்.

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-

பதவுரை

வலியம் என நினைந்து–நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு
வலிய முடி–வலிதான தலைகள்
இடிய–சிதறியொழியும்படி
வாங்கி–போக்கடித்து
நின்–உன்னுடைய
வலிய பொன் ஆழி கையால்–வலிதாயும் அழகிய திருவாழியையுடையதாயுமுள்ள திருக்கையாலே
புடைத்திடுதி–(அந்த மல்லர்களை) அடித்துவிட்டாய்;
வந்து எதிர்த்த மல்லர்–எதிரிட்டு வந்த மல்லர்களுடைய
(நீ கை நோவக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்)
இப்பார்–இவ்வுலகமானது
கீளாதே–வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்
பல் நாளும் நிற்கும்–சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!)

வலியம் என நினைந்து-
நாமே பல சாலிகள் என்று நினைத்துக் கொண்டு –

வந்து எதிர்ந்த மல்லர் –
எதிரிட்டு வந்த மல்லர்களுடைய

வலிய முடியிடிய –
வலிதான தலைகள்-சிதறி ஒழியும்படி –

வாங்கி –
போக்கடித்து

-வலிய நின் பொன்னாழிக் கையால்
உன்னுடைய வலிதாயும்-அழகிய திரு ஆழியையும்-யுடைத்தாய் இருந்துள்ள
திருக் கையாலே

புடைதிடுதி –
அந்த மல்லர்களை அடித்து விட்டாய் –

நீ கை நோவ கார்யம் செய்தததை கண்ணாலே கண்டு வைத்தும்-கீளாதே பல் நாளும் நிற்குமிப்பார்-
இந்த உலகமானது-வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்-சிரஞ்சீவியா இருக்கின்றதே
என்ன நல்ல நெஞ்சே –
அன்றிக்கே
வலிய நின் பொன்னாழிக் கையால் கீளாதே புடைதிடுதி-இரணியனது மார்வைக் கீண்டு எறிந்தது போலும்-
கேசியின் வாயைக் கீண்டு எறிந்தது போலும்
மல்லர்களைக் கீண்டு எறியாமல் மல் போர் செய்யும் முறைமைக்குத் தகுதியாக
திருக் கைகளாலே புடைத்திட்டாய்
அப்படி புடைத்திரா விட்டால் இந்த உலகம் அஸ்தமித்து போயிருக்கும்
அந்த மல்லர்களை புடைத்திடவே நீயும் பிழைத்து-இவ்வுலகமும் நிலை பெற்று -நிற்கிறது-என்றுமாம்-

ஸ்ரீக்ருஷ்ண பலராமர்களை எவ்வகையினாலாவது கொன்றிட வேணுமென்று கறுக்கொண்ட கம்ஸன் வில்விழாவென்கிற
ஒரு வியாஜம் வைத்து அவர்களைத் தனது படைச்சாலைக்கு வரவழைத்தான்; அப்போது அவர்கள் அவனது ஸபையிற் செல்லுகையில்
அவர்களை யெதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த சாணூரன் முஷ்டிகள் முதலிய பெருமல்லர்கள்
சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய, அவர்களையெல்லாம் அவயாதவ வீரரிருவரும் மற்போரினாலேயே
கொன்று வென்றிட்டனர் என்பது மல்லரைப் புடைத்த வரலாறு. அன்றி, கண்ணன் பாண்டவ தூதனாய்த் துரியோதனனிடஞ் சென்றபொழுது
துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகக்பெரிய நிலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை
ஆயுதபாணிகளாய் உள்ளேயிருக்கவைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலே மூடி
அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை யமைத்து அவ்வாஸனத்திற் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல,
அங்ஙனமே ஸ்ரீபிருஷ்ணன் அதன் மேல் ஏறின பாத்திரத்திலே மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற்
செல்லுமளவில் அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துக் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே,
அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர் என்பதொரு கதையும் உண்டு.

நாங்களே மஹா பலசாலிகள் என்ற செருக்குற்று எதிரிட வந்த மல்லர்களுடைய வலிமிக்க முடிகள் சிதறிப்போம்படி நீ
உனது அழகிய திருக்கைகளால் புடைக்கச்செய்தே அதனைக் கண்டு கொண்டிருந்த இவ்வுலகமானது
வயிறுவெடித்து மாய்ந்து போகாமல் சிரஞ்சீவியாயிருந்ததே! என்ன கல் நெஞ்சே! என்றாயிற்று.

பின்னடிகட்கு மற்றொருவகையாகவும் பொருள் கொள்ளலாம்;
வலியநின் பொன்னாழிக்கையால் கீளாதே புடைத்திடுதி= இரணியனது மார்வைக் கீண்டெறிந்தது போலும்
கேசியின் வாயைக் கீண் டெறிந்தது போலும் மல்லர்களையும் கீண்டெறியாமல் மற்போர் செய்யும் முறைமைக்குத் தகுதியாகத்
திருக்கைகளாலே புடைத்திட்டாய்; அப்படி புடைத்திராவிடில் இந்த உலகம் அஸ்தமித்துப் போயிருக்கும்.
அந்த மல்லர்களை நீ புடைத்திடவே (நீயும் பிழைத்து) இவ்வுலகமும் நிலைபெற்றுநிற்கிறது என்னவுமாம்.

—————————————————————-

கீழ்ப்பாட்டில் இப்பார் என்ற இவ்வுலகத்தின் ப்ரஸ்தாவம் வரவே உலகிலுள்ள பிராணிகளின் தன்மைகளில்
ஆழ்வார்க்கு ஆராய்ச்சி சென்றது. ஸ்ரீமந்நராயணனையே ஸர்ஸ்வாமியென்ற கொண்டு பற்றாமல்
கண்ட தெய்வங்களின் காலிலே விழுந்து அலைந்து திரியும் ராஜஸதாமஸப் பிராணிகள் விஞ்சியிருக்கக் கண்டார்.
திருவுள்ளத்திலே பரிதாபம் தோன்றி, ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமைப்பட்டிருக்கை தவிர
வேறொன்றும் தகுதியல்ல என்பதைக் காரணத்துடன் வெளியிடுகிறார்.
வேதங்களும் வைதிகர்களும் பல பல செயல்களை செய்து அருளினவன்-
ஸ்ரீ மன் நாராயணனே என்று சொல்ல-சர்வ பிரகாரங்களாலும் அவனே ரஷகனாய் இருக்க-
மற்று ஒருவருக்கு சேஷப்பட்டு இருக்க வழி இல்லையே –

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

பதவுரை

(ஸ்ரீமந் நாராயணனே)

பார் உண்டான்–(பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்;
பார் இடந்தான்–(மஹா வராஹமாகிப்) பூமியை ஒட்டுவிடுவித்தெடுத்தான்;
பார் அளந்தான்–(திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்;
முன்–முதல்முதலாக
பார் இடம் படைத்தான்–இப்பூமியை யெல்லாம் உண்டாக்கினான்
என்பர்–என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்;
பார் உமிழ்ந்தான்–(பிறகு) அதைப் புறப்படவிட்டான்;
பார் இடம் ஆவானும் தான்–அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வருபியாகவுமிருக்கிறான்;
ஆனால்–ஆனபின்பு (நமக்கு)
இடம் ஆர்–ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை)
அவை–இவ்வுலகங்கள்
மற்று ஒருவர்க்கு–ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு
ஆவான் புகா–சேஷப்பட்டிருக்க மாட்டா.

பாருண்டான்
பிரளய காலத்தில் பூமியை விழுங்கினான்

பாருமிழ்ந்தான் –
பிறகு அதைப் புறப்பட விட்டான் –

பாரிடந்தான்
மகா வராஹமாய்-பூமியை ஓட்டுவித்து எடுத்தான்

பாரளந்தான்
திரு விக்ரமனாய் பூமியை அளந்து கொண்டான்

பாரிடம் முன் படைத்தான்
முதல் முதலாக இப் பூமியை எல்லாம் உண்டாக்கினான்

என்பரால் –
என்று சாஸ்திர ஞானிகள் சொல்லுகிறார்கள்

பாரிடம் ஆவானும் தான்
அவனே சகல பிரபஞ்ச ஸ்வ ரூபியாகவும் இருக்கிறான் -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -உபநிஷத்-எல்லா பொருள்களும்-
ப்ரஹ்மத்தை-ஆதாரமாகவும்-ரஷகமாகவும்
சேஷியாகவும்-தாரகமாகவும் -கொண்டவை -என்றபடி

ஆனால்
ஆனபின்பு –

ஆரிடமே
ஆர் இடம்-நமக்கு ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு ஆர் -யாரும் இல்லை

அவை
இவ்வுலகங்கள்

மற்று ஒருவர்க்கு
ஸ்ரீ மன் நாராயணனைத் தவிர-மற்று ஒரு தெய்வத்துக்கு

ஆவான் புகா
சேஷப்பட்டு இருக்க மாட்டா –

ஆவான் புகுதல்
அடிமைப்பட நேர்தல்-இவன் அவனுக்கு ஆனான் என்றது இவன் அவனுக்கு அடிமைப் பட்டான் -என்றபடி
புகா -பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினை முற்று
கீழ்ச் சொன்ன செயல்கள் எம்பெருமான் தவிர மற்று ஒருவர் இடமும் பொருந்த மாட்டா -என்றபடி-

பிரளயங் கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் நாராயணன்;
அவற்றை மறுபடியும் வெளிப்படுத்தினவனும் அவனே; பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு போன ஹிரண்யாக்ஷனை
மஹாவராஹமாகிக்கொன்று அப்பூமியை மீட்டுக் கொணர்ந்தவனும் அவனே;
மற்றொருகால் மஹாபலியின் அஹங்காரத்தை அடக்கி அவன் பக்கலில் நின்றும் இவ்வுலகை ஸ்வாதீநப்படுத்திக் கொண்டவனும் அவனே;
இங்ஙனே பல் பல சொல்வதேன்? இப்புவனி முழுவதையும் உண்டாக்கினவன் அவனே;
இவ்விஷயம் நான் உத்ப்ரேக்ஷித்துச் சொல்லுகிறதல்ல; வேதங்களும் வைதிகர்களும் சொல்லுவது இதுவே.
ஆசுவிப்படி எம்பெருமான் இவ்வுலகத்திற்கு ஸர்வப்ரகாரங்களாலும் ரசக்ஷனாயிருப்பதுபற்றி சாஸ்திரங்களில்
“எம்பெருமானே இவ்வுலகம், இவ்வுலகமே எம்பெருமான்” என்ற ஒற்றமைநயந் தோன்றச் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆகையாலே இவ்வுலரகங்கட்கு அப்பெருமாளைத் தவிர்த்து வேறொருவரும் ஆச்ரயமாயிருக்க முடியாது;
இவ்வுலகமும் அவனுக்கன்றி மற்றொருவர்க்கு சேஷப்பட்டிருக்க வழியில்லை என்றாயிற்று.

பாரிடமாவானம் தான் = உபநிஷத்தில்- ஸர்வம் வல்விதம் பரஹ்ம்” என்று சொல்லிருப்பது இங்கே நினைக்கத்தக்கது.
எல்லாம் பரப்ரஹ்மே யென்றது- எல்லாப் பொருள்களும் ப்ரஹமத்தையே ஆதாரமாகவும் ரக்ஷகமாகவும் சேஷியாகவும்
தாரகமாகவுங் கொண்டவை என்றபடி.

ஆனால் ஆர் இடமே = எல்லாவுலகமும் ஸ்ரீமந்நாராயணனிட்ட வழக்காயிருக்கும்போது வேறொருவர் புகலிடமாயிருக்கக்கூடுமோ? என்கை.
ஆனால் என்றது ஆனதால் என்றபடி. இரண்டாமடியிலும் நான்மகாமடியிலும், ஆல்- அசைச்சொல்.
அவை மற்றொருவர்க்கு அவனுக்கு ஆனான்” என்றால் ‘இவன் அவனுக்கு அடிமைப்பட்டான்’ எனப்பொருள்படுதல் காண்க.
புகா -பலவின் பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று. பாருண்கை, பாருமிழ்கை முதலிய கீழ்ச்சொன்ன செயல்களெல்லாம்
எம்பெருமானிடத்தில் தவிர மற்ற தெய்வங்களிடத்துப் பொருந்தமாட்டா என்னவுமாம்.

——————————————————————-

(அவயமென நினைத்து) ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை என்று கீழ்ப்பாட்டிற் சொன்னதையே மற்றொரு முகத்தாலும்
ஸ்தாபித்துக் கொண்டு அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்பவர்கட்கன்றி மற்றையோர்க்குத் துன்பங்கள்
நீங்க வழியில்லை யென்கிறார். ஸாமாந்யரான உலகர்கள் எந்தத் தெய்வங்களைப் பரதேவதை யென்று கொள்ளுகின்றார்களோ
அந்தத் தெய்வங்களும் தங்கள் தங்களுக்கு ஆபத்து நேருங் காலங்களில் ஸ்ரீமந்நாராயணனையே அடிபணிந்து
உய்ந்து போகின்றன என்பதை முன்னடிகளில் அருளிச்செய்கிறார்.

அவயம் என நினைந்து வந்த சுரர்பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத்துயரை மாய்க்கும் வகை–43-

பதவுரை

அவயம் என நினைத்து வந்த–அபயம் வேண்டிவந்து சரணமடைந்த
சுரர் பால்–தேவதைகளிடத்திலுள்ள
நவையை–குற்றங்குறைகளை
நளிர்விப்பான் தன்னை–போக்கடிக்கு மெம்பிரானை
சுவை இல் மனத்து–ஒரு படிப்பட்ட மனத்திலே
உயர வைத்து இருந்து–பரிபூர்ணமாக வைத்துக் கொண்டிருந்து
வாழ்த்தா தார்க்கு–மங்களாசாஸனம் பண்ணாதவர்களுக்கு
மனம் துயரை மாய்க்கும் வகையுண்டோ?– தங்கள் மனத்திலேயுள்ள துக்கங்களைப் போக்கிக் கொள்ள வழி ஏது?

அவயம் என நினைந்து வந்த
அபயம் வேண்டி வந்து சரணம் அடைந்த –
சக்ருதேவ பிரபன்னாய தவாச்மீ திச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம-
அபயபிரதானம் தேடி வருகின்ற தேவதைகள்-அபயம் -அவயமாக திரிந்து
அவையம் -அந்தாதிக்கு சேர பாட பேதம் -அப்போது இடைப்போலி

சுரர்பாலே –
தேவதைகள் இடத்திலே

நவையை –
குற்றம் குறைகளை -துக்கமும் நவை

நளிர்விப்பான் தன்னை –
போக்கடிக்கும் எம்பெருமானை-நளிர்வித்தல் -நடுங்கச் செய்தல்
பகைவர்களை நடுங்க செய்து அருளி ஒழித்து அருளி -செய்பவன் தன்னை

வேத அபஹார -மது கைடபர்கள் கையிலே பறி கொடுத்த ப்ரஹ்மன் துயரமும்
குரு அபஹார -ப்ரஹ்மஹத்தி தோஷம் பீடித்த ருத்ரன் துயரமும்
தைத்ய பீடா -மகா பலி இடம் பறி கொடுத்த இந்திரன் துயரம் என்ன
மற்றும் பலவற்றையும் தீர்த்து அருளிய பிரான் ஸ்ரீ மன் நாராயணனே –

கவையில் மனத்துயர வைத்திருந்து
ஒருபடிப் பட்ட மனத்திலே-பரிபூர்ணமாக வைத்துக் கொண்டு இருந்து
கவை -இரண்டு பட்டு இருத்தல்
கவை இல்லாமை -ஒருப் படி பட்டு இருத்தல்
அனந்யா சிந்த யந்தோ மாம் -ஸ்ரீ கீதை –
எம்பெருமானையே உபாயமாகவும் உபேயமாகவும் துணிந்து இருக்கை
எவைகோல் அணுகப் பெருநாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே -திருவாய்மொழி-9-8-3-

வாழ்த்தார்க்கு-
மங்களா சாசனம் பண்ணாதவர்களுக்கு

உண்டோ -மனத்துயரை மாய்க்கும் வகை
மனத்துயரை மாய்க்கும் வகை -உண்டோ-தங்கள் மனத்தில் உள்ள துக்கங்களை
போக்கிக் கொள்ள வழி ஏது-

சுரர்பாலே என்றவிடத்து ஸுரா: என்ற வடசொல் சுரர் எனத் திரிந்துகிடக்கிறது. தேவதைகள் என்று பொருள்.
இங்கே, பிரமன் சிவன் முதலிய ப்ரதாநதேவதைகளை நினைக்கிறது. வேதங்களை மதுகைடவர் முதலான அசுரர் கையிலே
பறிகொடுத்துவிட்டு அழுதுகொண்டேவந்து சரணம்புகுந்து நின்ற பிரமனென்ன, ப்ரஹ்மஹத்தி சாபத்தால் கண்டபிடமெங்குந் திரிந்து
எங்கும் புகலற்று வந்துநின்ற பரமசிவனென்ன, மாவலிபோல்வார் கையிலே தகர்ப்புண்டு பரிபவப்பட்டு வந்துநின்ற இந்திரனென்ன
இவர்கட்கும் மற்றும்பல தெய்வங்கட்கும் துன்பறந் தவிர்த்தபிரான் ஸ்ரீமந்நாராயணனேயிறே.

அவயமென நினைந்துவந்த = “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீ திச யாசதே- அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று
கடற்கரையிலே ஸ்ரீவிபீஷணாழ்வாரை நோக்கி அப்யமளித்ததை நெஞ்சிலே கொண்டு “அஞ்சேலென்ற கைகவியாய்” என்றும்“
அடைக்கலம் புகுந்தவென்னை அஞ்சலென்ன வேண்டுமே” என்றும் அபயப்ரதானம் வேண்டிவருகின்றனராம் தேவர்கள்.
அப்படிப்பட்டவர்கள் திறத்திலே திருவருள்செய்து அவர்களுடைய நவையை நளிர்விப்பவன் எம்பெருமான்;
நவையாவது குற்றம்; துக்கமுமாம். நளிர்வித்தலாவது நடுங்கச்செய்தல்;
பகைவரை நடுங்கச் செய்கிறானென்றால் பகைவரை ஒழிக்கிறானென்று கருத்தாகுமிறே.

அபயம் என்ற வடசொல் அவயமெனத் திரிந்தது. அந்தாதித் தொடைக்க நன்கு சேரும்படியாக அவையம் எனப் பாடமென்பாருமுண்டு;
அப்போது இடைப்போலி.

இப்படி ஸர்வரக்ஷகனான எம்பெருமானைக் கவை இல் மனத்து உயரவைத்திருந்து வாழ்த்தாதார்க்கு
மனத்துயரை மாய்க்கும்பகை உண்டோ? = கவை என்று இரண்டுபட்டிருக்கைக்குப் பெயர்;
கவையில்லாமையாவது ஒருபடிப்பட்டிருக்கை; “அநந்யாச் சிந்தயந்தோ மாம்” என்று கீதையில் சொல்லுகிற நிலைமை வாய்ந்திருக்கை.
எம்பெருமானையே உபாயமாகவும் உயோகமாகவும் துணிந்திருக்கையைச் சொன்னபடி.
பரமைகாந்திகளாய்க் கொண்டு அவனை வாழ்த்தாதவர்களுக்கு மனத்துன்பங்களை நீக்கிக்கொள்ள வழியில்லை யென்தாயிற்று.

திருவாய்மொழியில் (9-8-3) “எவை கொலணுகப் பெறுநாள்” என்ற பாட்டில், நவை, கவை என்ற பதப்பிரயோகம் காண்க.

—————————————————————

(வகைசேர்ந்த நன்னெஞ்சும்) இப்பாட்டுக்குப் பிள்ளைதிருநறையூரரையர் ஒரு படியாகவும் பட்டர் ஒருபடியாகவும் நிர்வஹிப்பராம்.
அரையர் நிர்வஹித்தபடி எங்ஙனமே யென்னில்; –
வகை சேர்ந்த நல்நெஞ்சும் = எம்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் ஏதோவொரு சரித்திரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும்,
அந்த ஒரு குண சேஷயயதத்தையே பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிற நாவோடு கூடின வாக்கம் அப்பெருமானுடைய
எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அநுபவிக்கமாட்டா திருந்தனவேயாகிலும்,
எப்படியாவது கஷ்டப்பட்டு ஸகலகுணங்களிலும் ஸகலசரித்திரங்களிலும் நெஞ்சு பொருந்தும்படி செய்து கொண்டு
ஸர்வேச்வரனை அநுபவித்து மங்களாசாஸநம் பண்ண வேண்டியிருக்க, அங்ஙனே பண்ணாதிருக்கிறார்கள் ஸம்ஸாரிகள் ;
இஃது ஏன்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த பாவமே இதற்குக் காரணம் – என்பதாக அரையர் நிர்வாஹம்.

பட்டர் நிர்வாஹமெங்ஙனே யென்னில்; –
ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ரஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசுகைக்கு
யோக்யமான நாவோடு கூடினவாயும் ரஜோகுணமும் தமோகுணமும் மிக்க ஸ்வயமாகவே பகவத் விஷயத்திற் படிந்தவில்லையே யாகிலும்,
‘நம்மை ஈச்வரன் படைத்தது ஏதுக்கு? நமக்குக் கைகால் முதலிய கரணகளே பரங்களைக் கொடுத்தது ஏதுக்கு?’ என்று
ஆராய்ச்சி செய்து பகவத் விஷயத்திலே பல்லாண்டு பாட இழிய வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாழும் ஸம்ஸாரிகள்
பகவத் விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே, இதுவரையில் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து ஸம்ஸாரிகளா யொழிந்தது போராதா?
இனி மேலாவது நல்ல வழிபோகத் தேடலாகாதா?
மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளாயிருப்பதற்கேயன்றோ இப்படி பாபிகளாய்த் திரிகிறார்கள்! – என்பதாம்.

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இதுவன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

பதவுரை

வகை சேர்ந்த நல்நெஞ்சும்–(ஞானத்திற்கு) மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்
மிக வாய்ந்து வீழா எனினும்–(எம்பெருமானை) நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும்,
தாம்–சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள்
மிக ஆய்ந்து–நன்றாக ஆராய்ச்சி பண்ணி
நா உடைய வாயும்–(எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான) நாவோடு கூடிய வாக்கும்
மாலை–எம்பெருமானை
வாழ்த்தாது இருப்பர்–வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்
மேலை தாம் செய்யும் வினை இது அன்றே–மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது.

வகை சேர்ந்த நல் நெஞ்சம்
ஜ்ஞானதிற்கு மார்க்கமாக ஏற்ப்பட்டு இருக்கிற நல்ல நெஞ்சமும்

நாவுடைய வாயும் –
எம்பெருமானை பேசுவதற்கு உறுப்பான-நாவொடு கூடிய வாக்கும்

மிக வாய்ந்து வீழா வெனிலும்-
எம்பெருமானை நன்றாக கிட்டி-அனுபவிக்கா விட்டாலும்

மிக வாய்ந்து மாலைத்-
நன்றாக ஆராய்ச்சி பண்ணி-எம்பெருமானை –

தாம்
சேதனராய் பிறந்து இருக்கிற தாங்கள்

வாழ்த்தாது இருப்பார் –
வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்

இதுவன்றே மேலைத் தாம் செய்த வினை
மேலைத் தாம் செய்த வினை இது வன்றே-மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காக
தாங்கள் செய்து கொள்ளுகிற-பாபம் அன்றோ இது –

————————————————————

மாறி மாறி பல பிறவிகள் எடுத்து இருந்தாலும்-இனி மேல் பிறவாமைக்கு வழி தேடிக் கொண்டேன் என்கிறார் –

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-

பதவுரை

விளையார்–பாவங்கள்
தர முயலும்–நமக்கு உண்டு பண்ண நினைக்கிற
வெம்மையை அஞ்சி–கொடிய துன்பங்களுக்கு அஞ்சி
தினை ஆம் சிறிது அளவும்–தினையளவு சிறிய அற்ப காலமும்
செல்ல நினையாது–வீணாகக் கழிய விரும்பமாட்டாமையினாலே,
நான்–அடியேன்
வானோர்–நித்யஸூரிகள்
தொழுது இறைஞ்சும் நாயாகத்தான்–தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த பெருமானுடைய
பொன் அடிகள்–திருவடிகளை
வாசகத்தால் ஏத்தினேன்–சொற்களாலே துதிக்கின்றேன்.

வினையார் தர முயலும்-
பாபங்கள் நமக்கு உண்டு பண்ண நினைக்கிற

வெம்மையை அஞ்சி –
கொடிய துன்பங்களுக்கு அஞ்சி

தினையாம் சிறிது அளவும்
தினை யளவு சிறிய அல்ப காலமும்-அதி அல்ப காலமும்

செல்ல -நினையாது
வீணாகக் கழிய விரும்ப மாட்டாமையினாலே

வாசகத்தால் ஏத்தினேன் –
சொற்களாலே துதிக்கின்றேன்

வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான்
நித்ய சூரிகள் தொழுது வணங்கும்-பெருமை வாய்ந்த பெருமானுடைய

பொன்னடிகள்
திருவடிகளை –

நான் –
அடியேன்-

(வினையார் தர முயலும்.) நானும் மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்தவனேயாகிலும் இனிமேல் பிறவாதபடிக்கு ஒரு வழி
தேடிக் கொண்டேனென்கிறார். எம்பெருமானோடு இடைவிடாது சேர்ந்திருக்கை புண்யபலமென்றும் அவளைப் பிரிந்து வருந்துகை
பாபபலமென்றும் நூல்கள் கூறும். நாம் இனிமேலும் பாவமே செய்வோமாகில் இன்னமும் வெவ்விதான பகவத் விச்லேஷ துக்கமே
நமக்கு நேர்ந்திடும் என்று அச்சமுண்டாயிற்று; அவனைப் பிரிந்து ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்க மாட்டாமையினாலே,
வானோர் தொழுதிறைஞ்சும் பெருமை வாய்ந்த அப்பெருமானுடைய பொன்னடிகளை நான் வாய்கொண்டு துதித்துப் போருகின்றேன் என்றாராயிற்று.

வினையார் = திணைவழுவமைதி; கோவத்தினால் உயர்த்திக்கூறுகிறபடி. வெம்மை = கடூரமான துக்கம்.
நினையாம் சிறிதளவும் = தானியங்களுள் தினயாம் சிறிதளவும் = தானியங்களுள் தினையென்பது மிகச்சிறதாதலால் அதனை உவமையாக எடுத்துக்கொண்டபடி; அத்யல்பகாலமும் என்றபடி. நாயகம்- பெருமை.

—————————————————————–

உபாய உபேயங்கள் இரண்டும்-எம்பெருமான் ஒருவனே என்னும் உறுதியை
அருளிச் செய்கிறார் –

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங்கண் மால் -நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

பதவுரை

தேங்கு ஓதம் நீர் உருவன்–ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திருநிறத்தையுடையவனும்.
செம் கண்-செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனுமான
மால்–ஸர்வேச்வரன்
நீங்காத–ஒருநாளும் விட்டுப்பிரியக்கூடாத
மா கதி ஆம்–சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,)
வெம்நரகில்–கொடியஸம்ஸாரத்திலே
சேராமல்–பொருந்தாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
கதி ஆம்–உபாயமாகவும் இராநின்றான்;
நெஞ்சே நினை–நெஞ்சே! (இதை) நீ அநுஸந்திக்கக்கடவை;
நாள் நாளும்–நாள்தோறும் (உடனுக்கு) நான்
நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே–சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண்.

கதி -கமன சாதனம்
கதி –கந்தவ்ய ஸ்தலம்
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
நாள் தோறும் நான் உனக்கு சொல்லும் சொல்லாவது-இவ்வளவே காண்
கூற்று– சொல்– கூறப்படுவது- கூற்று

தேங்கோத நீருருவம்-
ஓடாமல் தேங்குகின்ற-கடல் போன்ற திரு நிறத்தை யுடையவனும்

செங்கண் மால் –
செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடையவனுமான-சர்வேஸ்வரன்

நீங்காத மாகதியாம்-
ஒரு நாளும் விட்டுப் பிரியக் கூடாத-சிறந்த உபேயமாய் இரா நின்றான் –

அவ்வளவும் அல்லாமல்

வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
கொடிய சம்சாரத்திலே பொருந்தாமல்-நம்மை ரஷிப்பதற்கு
சம்சாரம் -வெந்நரகம்

கதியாம்
உபாயமாகவும் இரா நின்றான்

நெஞ்சே-நீ- நினை
நெஞ்சே நீ இத்தை-அனுசந்திக்கக் கடவை –

(நான் கூறும் கூற்றாவது.) உபாய உபேயங்களிரண்டும் எம்பெருமானேயென்னும் உறுதியை உரைக்கின்றார்.
கடல்வண்ணனாய்ச் செந்தாமரைக் கண்ணனான ஸ்ரீமந்நாராயணனே மீட்சியில்லாதபடி நம்மைச் சேரவொட்டாமல்
செய்தருளவல்ல உபாயமும் அவனே;
ஆகையாலே அவனைத்தவிர்த்து வேறொரு உபாய வஸ்துவும் உபேய வஸ்துவும் நமக்கு இல்லை என்கிற இவ்வுறுதியையே மனமே!
நீ எப்போதும் சிக்கனக் கொண்டிரு. இவ்வளவே உனக்கு நான் உபதேசிக்க வேண்டிய விஷயம்.
இந்த ஒரு வார்த்தையையே நான் உனக்கு நாள்தோறும் சொல்லிக் கொண்டிருப்பேன்- என்று தம் திருவுள்ளத்தை நோக்கி அருளிச் செய்தாராயிற்று.

கூற்று – சொல்; கூறப்படுவது கூற்று. நாணாளும் என்பது முதலடியிலேயே சேர்ந்து அந்வயிக்கவேண்டிய பதமாகையால்
அதனை இரண்டாமடியோடு கூட்டி ஓதுவது அஸம்ப்ரதாயமென்க. இப்பாட்டில் கதி என்ற சொல் மூன்றாமடியிலும் நான்காமடியிலும் உள்ளது.
இது வடசொல் விகாரம் கதி என்ற வடசொல் வ்யுத்பத்தி பேதத்தால் கமநஸாதநம் என்கிற பொருளையும்
கந்தவ்ய ஸ்தலம் (அடைய வேண்டுமிடம்) என்கிற பொருளையும் தரக்கடவது. அதாவது- உபாயம் உபேயம் என இரண்டையுஞ் சொல்லக் கடவது.
ஆகவே, இங்கு மூன்றாமடியிலுள்ள கதி சப்தம் உபேயப் பொருளது;
ஈற்றடியிலுள்ள கதி சப்தம் உபாயப்பொருளது “நீங்காத மாகதியாம் வெந்நரகில்” என்று கூட்டி ஓதுதல் ஒவ்வொது;
‘மாகதி ஆம்’ என்று முற்று; வெந்நரகுக்கு விசேஷணமல்ல. ஸம்ஸாரத்தை ‘வெந்நரகு’ என்கிறது.

————————————————————————–

(நினைத்திறைஞ்சிமானிடவர்.) கீழ்ப்பாட்டில் எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்ற உறுதியை வெளியிட்ட
ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! இப்படிப்பட்ட உறுதி உமக்கு மாத்திரமேயன்றோவுள்ளது; மற்றையோர்க்கு இல்லையே.
எல்லாரும் என்னை உபாயமாக மாத்திரம் பற்றுகிறார்களேயன்றி உபேயமாகவும் பற்றுகிறார்களில்லையே.
‘ஸம்பத்தைக் கொடு. ஸந்தனத்தைக் கொடு’ என்று சில க்ஷுத்ரபுருஷார்த்தங்களை வேண்டிப் பெற்றுக்கொண்டு
ஒழிந்து போகிறார்களே யல்லது ‘நீயே எமக்கு வேணும்’ என்று என்னையே புருஷார்த்தமாக விரும்புவாரைக் கிடைக்கவில்லையே!;
உமக்காவது இதை வுறுதி நிலைத்து நிற்குமா?” என்று கேட்க; அதற்கு உத்தரமாக அருளிச் செய்கிற பாசுரம் போலும் இது.

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47

பதவுரை

மாலே–ஸர்வேச்வரனே!
மானிடவர்–“இவ்வுலகத்தவர்கள்
நினைத்து இறைஞ்சி–நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி
ஒன்று–ஏதாவதொரு அற்ப பலனையாவது
இரப்பர்–நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள்
என்றேயும்–என்று கூட
நீ நினைத்திட வேண்டா–நீ நினைக்க வேண்டா;
(இப்பாவிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல் ஓடுமவர்களே யொழிய
அவற்றுக்காகவும் உன்னருகு வரமாட்டார்கள்; இப்படியான பின்பு.)
நேரே நினைத்து இறைஞ்ச–(இவர்கள்) உன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் நினைத்துத் தொழுவதற்கு
எவ் அளவர்–என்ன அறிவுள்ளவர்கள்?
என் இடத்தோர்–அப்படிப்பட்ட அறிவு உண்டாகக்கூடிய இடத்தில் தானுள்ளவர்களோ? (இருள் தருமாஞானத்திலுள்ளவர்களன்றோ.)
எமக்கு–உன்னுடைய நிர்ஹேதுந கடாஷத்திற்குப் பாத்திராமன அடியோங்களுக்கோவென்றால்
அது தானும்–கீழ்சொன்ன மானிடவர்களுக்குமான துர்ப்புத்தி
எவ்வளவும்–சிறிதேனும்,
உண்டோ–உண்டாகக் கூடியதோ?
(உபாயமும் உபேயமும் நீயேயென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றோ.)

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர்-
இவ்வுலகத்தவர்கள் நம்மை-ஒரு பொருளாக நினைத்து வணங்கி-ஏதாவது ஒரு அல்ப பலனையாவது-நம்மிடத்தில் வேண்டிக் கொள்வார்கள் –

என்றே நினைத்திடவும் வேண்டா
என்று கூட நீ நினைக்க வேண்டா

இப்பாவிகள் அல்ப பலன்களைக் கேட்டு அதுக்கும் உன் இடம் வராமல்
தேவதாந்த்ரங்கள் பக்கல் ஒடுமவர்கள் -ஆரோக்கியம் தேடி ஆதித்யனை பற்றி
செல்வம் வேண்டி சிவனைத் தொழுது-ஆயுளை வேண்டி அயனை அடைந்து
இப்படி உன்னை உபாயமாக கூட பற்றாமல் இருக்க -இப்படியானபின்பு

நீ நேரே -நினைத்து இறைஞ்ச
இவர்கள் உன்னையே உபாயமாகவும்-உபேயமாகவும் நினைத்து-தொழுவதற்கு

எவ்வளவர்-
என்ன அறிவுள்ளவர்கள் –

எவ்விடத்தோர்
அப்படிப் பட்ட அறிவு உடையோர்கள் இடத்தில் தான்-உள்ளார்களா
இருள் தரும் மா ஞாலத்தில் அன்றோ இருக்கிறார்கள்
நேரே நினைத்து இறைஞ்ச எவ்விடத்தோர் முதலில் சொல்லி-அப்புறம் எவ்வளவர்

மாலே –
சர்வேஸ்வரனே

அது தானும் –
கீழ் சொன்ன மானிடர்கள் போன்ற துர்புத்தி

எவ்வளவும் உண்டோ
சிறிதேனும் உண்டாகக் கூடியதோ-உபாய உபேயம் நீ தான் என்ற உறுதி
எமக்கு நிலை பெற்றது அன்றோ

எமக்கு
உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்துக்கு பாத்ரமான அடியோங்களுக்கு என்றால்

இத்தால்-உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்துக்கு இலக்காகும்படி அதிகாரம் இருந்தால் கடைத்தேறலாம் -என்றபடி-

“மாலே!, மானிடவர் நினைத்து இறைஞ்சி ஒன்று இரப்பர் என்றெயும் நீ நினைத்திட வேண்டா” என்று முன்னடிகளை
அந்வயித்துக்கொள்ள உலகிலுள்ள மனிதர்கள் ஐச்வர்யம் ஸந்தானம் முதலிய க்ஷுத்ர புருஷர்த்தங்களையாவது
உன்னிடத்திலே வந்து விரும்பினால், அவர்கள் உன்னிடத்திலே உபாயத்வபுத்தியையாவது வஹித்திருக்கின்றனர் என்று ஒருவாறு மகிழ்ந்திருக்கலாம்;
அக்கேடுமில்லை. “ஆரோக்கியம் வேண்டி ஆதித்தியனைப் பணிகின்றேன்; செல்வம் வேண்டிச் சிவனைத் தொழுகின்றேன்;
ஆயுள் வேண்டி அயனை யடைகின்றேன்” என்றிப்படி ஒவ்வொரு பலனை வேண்டி ஒவ்வொரு தேவதாந்தரத்தைப் பணிய
ஓடுமவர்களாயிருக்கின்றார்களே யொழிய, அந்த க்ஷுத்ர பலன்களை விரும்பியாகிலும் உன்னிடத்தில் வருகிறவர்களைக் காணோமே.
ஆகவே மானிடவர் உன்னை உபாயமாகவும் பற்றாதிருக்க, உபேயமாகப் பற்றுகைக்கு என்ன ப்ரஸக்தியுளது?
அடியோம் அப்படியல்ல; அவர்களுடைய துர்ப்புத்தி அடியோமுக்குச் சிறிதுமில்லை என்றாராயிற்று.

நேரே நினைத்திறைஞ்ச என்றவிடத்து நேரே என்றது உள்ளபடியாக என்றபடி. உன்னை உபாயமாகவும் கொள்ளாத பாபிகள்
உபாயோபேயங்களிரண்டுமாக உன்னை எப்படி கொள்வார்கள் என்று கைமுதிக நியாயத்தாற் காட்டுகிறபடி.

எவ்வளவரெவ்விடத்தோர் என்றதில், “எவ்விடத்தோர்” என்று முன்னே அந்வயித்து எவ்வளவர்’ என்று பின்னே
அந்வயிருக்கவேணுமென்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்போலும். இது தன்னிலே ஸ்வாரஸ்யமுமுண்டு.
“நேரே நினைத்திறைஞ்ச எவ்விடத்தோர்?” = இவ்விருள்தருமான ஞாலத்திலே பிறந்து வைத்து உன்னை உள்ளபடி
நினைத்திறைஞ்ச எப்படி முடியும்? என்றார் முதலில். அதற்கு மேல்,
இவ்விருள் தருமாஞாலத்திலேயே பிறந்திருக்கிற தமக்கு மாத்திரம் இந்த அத்யவஸாயம் எங்ஙனே உண்டாயிற்று?
என்று பிறர் சங்கிக்கக்கூடுமே யென்றெண்ணி அந்த சங்னீகக்குப் பரிஹாராமக. எவ்வளவர்? என்கிறார்;
இவ்விருள் தருமாஞாலத்திலே பிறந்து வைத்தாலும் உன்னுடைய நிர்ஹே துககிருபைக்கு இலக்காகும்படியான
அதிகாரமாவது இருந்தால் கடைந்தேறலாம்; அதுதானுமுண்டோ என்றவாறு.

அதுதானுமெவ்வளவுமுண்டோ எமக்கு? = “நேரே நினைத்திறைஞ்ச எவ்வளவரெவ்விடத்தோர்” என்று இகழ்ந்துரைக்க
வேண்டும்படியான நிலைமை அடியேனுக்கு இதுவரையிலுமில்லை, இனி மேலுமுண்டாகப்போகிறதில்லை என்றபடி.

——————————————————————-

இப்பாட்டிலும் தமது உறுதியை பேசுகிறார் –
பரமபதம் பாரித்து இருந்தோம் என்றும்-வேண்டாம் என்று இருந்தோம்
பாவோ நான்யத்ர கச்சதி -அச்சுவை பெறினும் வேண்டேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் போலேவும்-

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

பதவுரை

அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ–மூங்கில்போல் பருத்து விளங்குகின்ற மெல்லிய தோள்களையுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வெம்கோடு ஏழ் ஏறு–கொடிய கொம்புகளையுடைய ஏழு நாளைகளை
உடனே–ஒரு நொடிப்பொழுதில்
சொன்றானையே–முடிந்த எம்பெருமானையே
மனத்துகொண்டு–சிந்தையில் தியானித்துக் கொண்டு
யாம்–அடியோம்
விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை–மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரமபதத்தை
எமக்கு அமைத்திருந்தோம்–எமக்கு (ப்ராப்யபூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அஃது அன்றே ஆம் ஆற–அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது.

யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அடியோம்-மேல் உலகங்களுக்கு எல்லாம் மேலான பரமபதத்தை

எமக்கு அமைத்து இருந்தோம்-
எமக்கு பிராப்ய பூமியாக பாரித்துக் கொண்டு இருந்தோம்

அஃது அன்றேயாம் ஆறு
அப்படி இருப்பது அன்றோ-முமு ஷூத்வத்திற்கு ஏற்று இருப்பது

அமைப்பொலிந்த மென்தோளி காரணமா –
மூங்கில் போலே பருத்து விளங்குகின்ற-மெல்லிய தோள்களை உடையளான
நப்பின்னை பிராட்டிக்காக –
அமை -மூங்கில் -திரண்டு உருண்டு இருக்க திருஷ்டாந்தம்

வெம்கோடு ஏறு ஏழுடனே
கொடிய கொம்புகளை உடைய-ஏழு காளைகளை -ஒரு நொடிப் பொழுதிலே –

கொன்றானையே மனத்துக் கொண்டு
முடித்த எம்பெருமானையே-சிந்தையிலே த்யானித்துக் கொண்டு

கண்ணபிரான் குண சேஷ்டிதங்களையே மனத்தில்-த்யானித்து கொண்டு இருக்கும் அடியேனுக்கு பரமபதம் எதற்கு என்னவுமாம் –

(எமக்கியாம் விண்ணாட்டுக்கு) இப்பாட்டிலும் தம்முடைய உறுதியையே பேசுகிறார்.
இப்பாட்டுக்கு இரண்டுபடியாகப் பொருளுரைக்க இடமுண்டு. ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவவதரித்து நப்பின்னைப்பிராட்டியைத் திருமணம்
புணர்வதற்காக ஏழு ரிஷபங்களை வலியடக்கின எம்பெருமானையே நான் எப்போதும் உள்ளத்திற் சிந்தனை செய்து
கொண்டிருக்கிறேனாகையால் அப்பெருமானுடைய நித்யாநுபவத்திற்குப் பாங்கான பரமபதத்திற் சென்று
அநுபவிக்கவேணுமென்பதையே மநோரதித்துக் கொண்டிருக்கிறேன்;
ஸம்ஸாரத்தில் காலூன்றி நிற்கமாட்டாத முமுக்ஷுக்களுக்கு இதுவேயன்றோ தகுதி- என்பது ஓர் அர்த்தம்.
இப்பொருளில், வீட்டை அமைத்திருந்தோம் என்பதற்கு, பரமபதம் பெறப் பாரித்திருக்கின்றோம் என்று அர்த்தமாகும்;

இனி, அமைத்திருந்தோம் என்பதற்கு ‘வேண்டாமென்றிருந்தோம்’ என்றும் பொருளுண்டாகையாலே,
கீழ்க்கூறிய கருத்துக்கு நேர்மாறாக மற்றொரு தாத்பர்யமுங் கொள்ளலாம்; அதாவது-
ஸ்ரீராம குணங்களில் ஈடுபட்ட சிறிய திருவடி
“ஸ்நேஹோ மே பரமோ ராஜத்! த்வயி நித்யம் ப்ரதிஷ்டித: பக்திச்ச நியதா வீர! பாவோ நந்யத்ர கச்சதி” என்று –
இங்குற்ற அநுபவத்தைவிட்டுப் பரமபதம் போகவும் என் மனம் விரும்புவதில்லை என்றாற் போலவும்,
“பச்சைமாமலைபோல் மேனிப் பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா அமரரேறே ஆயந்தங்கொழுந்தே யென்னும்,
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்,அச்சுவைபெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே.” என்று
தொண்டரடிப்பொடியாழ்வாரருளிச் செய்தாற்போலவும் ஸ்ரீ கிருஷ்ணகுண சேஷ்டிதங்களின் அநுபவத்திலே மிக்க விருப்பமுடைய
இவ்வாழ்லார்தாமும் பரமபதத்தை வேண்டாவென்கிறார் என்க.
‘எம்மாவீட்டுத்திறமும் செப்பம்.” (2-9-1) என்று திருவாய்மொழியிலும் இங்ஙனே அருளிச்செய்தவரிறே.

அமை என்று மூங்கிலுக்குப் பெயர், மூங்கில்போலே திரண்டு உருண்டு விளங்குகின்ற தோள்களையுடையவளான
நப்பின்னைப் பிராட்டிக்காகக் கொடிய எழுரிஷபங்களை உடனே முடித்தவனான கண்ணபிரானையே நான்
மனத்திற் கொண்டிருப்பதனால் அந்த குணசேஷ்டிதத்தில் ஈடுபட்டிருக்கிற எனக்குப் பரமபதம் எதுக்கு? என்கிறார் காணும்.

எமக்கு + யாம், எமக்கியாம்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல் விண்ணாட்டுக்கு உச்சமதாம்
வீட்டை = இங்கு விண்ணாடென்று பரமபதத்திற்குக் கீழ்ப்பட்ட மேலுலகங்களைச் சொல்லுகிறது.
அவற்றிற்காட்டில் உச்சமதானவீடு- பரமபதம் உச்சம்- வடசொல்.

————————————————————–

இங்கே இருந்து குணாநுபவம் செய்து கொண்டு இருந்தாலும்
திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்க ஆசை உண்டாகுமே
அத்தால் அலமாப்பு அடைகிற படியை அருளிச் செய்கிறார் –

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருரு என்று எம்மைப் பிரிந்து –49-

பதவுரை

கொண்டல் தான்–மேகங்களையும்
மால் வரை தான்–பெரிய மலைகளையும்
மா கடல்தான்–கருங்கடலையும்
மற்று கார் உருவம்தான்–மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும்
கண்ட நாள்–பார்க்குங் காலத்தில்
காண்தோறும்–பார்க்கும்போதெல்லாம்
கூர் இருள் தான்–செறிந்த இருளையும்
வண்டு அறா பூவைதான்–(தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும்
நெஞ்சு–என் மனமானது
கண்ணனார் பேர் உரு என்று–இவை கண்ணபிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி
எம்மை பிரிந்து–என்னைவிட்டு நீங்கி
ஓடும்–அங்கே ஓடும்.

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
மேகங்களையும்-கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் என்றும்-
ஒக்கும் மால் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும்

தொக்க மேக பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவான் நான் -என்றும்

பெரிய மலைகளையும்-நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலோ வென்று கூவும்-
கரும் கடலையும்-கடல் வண்ணன் என்றே திருநாமம் இறே
செறிந்த இருளையும்-தானோர் இருளன்ன மா மேனி எம்மிறையார்
இருள்விரி சோதிப் பெருமான் -திருவாசிரியம்

வண்டு அறாப் பூவை தான்-
தேனில் நசையாலே வண்டுகள் விட்டு நீங்காத-பூவைப் பூவையும்
பூவைப் பூ வண்ணா -என்னும்

மற்றுத்தான் -காருருவம்-
மற்று கார் உருவம் தான் -மற்றுள்ள-குவளை குயில் மயில் முதலிய
கறுத்த உருவங்களையும் –
பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறுமலர்காள் ஐம் பெரும் பாதகர்காள்
அணி மால் இரும் சோலை நின்ற எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே –நாச்சியார் திரு மொழி -9-4-

கண்ட நாள்
பார்க்கும் காலத்தில்

காண்டோரும்
பார்க்கும் போது எல்லாம்-பிரமம் என்று இல்லாமல் காணும் தோறும் எல்லாம் இப்படியே

நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து
என் மனமானது-இவை கண்ணபிரான் உடைய-அழகிய திருமேனி என்று எண்ணி
என்னை விட்டு நீங்கி அங்கே ஓடும்-

கொண்டல்தான் = (“கருவுடை மேகங்கள் கண்டாலுன்னைக் கண்டா லொக்குங் கண்கள்” (பெரியாழ்வார் திருமொழி 2-7-2.) என்றும்,
“ஒக்குமம்மானுருவமென்று உள்ளங்குழைத்து நாணாளும் தொக்க மேகப்பல்குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான்” (திருவாய்மொழி 8-5-6) என்றும்
சொல்லுகிறபடியே மேகங்களைக் காணும்போது கண்ஓடுகின்றது.

மால்வரைதான் = “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலேவாவென்று கூவும்” (திருவாய்மொழி 4-4-4) என்கிறவரிறே இவ்வாழ்வார்.
பெரிய மலையைப் பார்க்கும்போது பெருமாளைக் கண்டாற்போலே ஓடுவர்.

மாகடல்தான் =கடல்வண்ண னென்றே எம்பெருமாலுக்குத் திருநாமமிறே.
கடலைக்கண்டால் எம்பெருமானைக் கண்டாற்போலே விரும்பி ஓடுவர்.

கூரிருள்தான் = “தானோரிருளன்ன மாமேனி எம்மிறையார்” என்று கீழுமருளிச் செய்தாரிறே.
“இருள் விரிசோதிப்பெருமான்” என்றார் திருவிருத்தத்திலும். இருளைக் கண்டால் எம்பெருமானைக் கண்டாற்போலே மகிழ்வர்.

வண்டறாப்பூவைதான் = பூவைப்பூவாவது காயம்பூவில் ஒருவகைப் பூ;
“பூவைப்பூவண்ணா வென்னும்” ‘காயாம்பூவண்ணங் கொண்டாய்” என்று எம்பெருமானுடைய நிறத்திற்குப் பூவைப்பூவை ஒப்புச் சொல்வதுண்டிறே.

மற்றுத்தான் என்றது- எம் பெருமான் திருநிறத்திற்குப் போலியாகக் கூடிய கருநெய்தற்பூ குயில், மயில், கருவிளை, களங்கனி
முதலிய பலவற்றைச் சொன்னபடி.
“பைம்பொழில்வாழ் குயில்காள் மயில்காள் ஒண்கருவிளைகாள், வம்பக்களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்கள்,
ஐம்பெரும்பாதகர்காள்! அணிமாலிருஞ்சோலை நின்ற, எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கென் செய்வதே?” என்ற நாச்சியார் திருமொழிப் (9-4) பாசுரங்காண்க.

ஆகிய இப்பொருள்களைக் காணும்போதெல்லராம் கண்ணபிரானுடைய திருவுருவையே ஸாக்ஷாத்தாகக் கண்டதாக நினைத்து
என்னுடைய நெஞ்சு என்னைப் பிரித்து அவ்வப்பொருள்களினருகே ஓடுகின்றது என்றாராயிற்று.
நெஞ்சானது தம்மைப் பிரிந்து ஓடுவதாகச் சொல்லுகிற விது ஒருவகைக் கவிமரபு.
“கண்ட நாள் நெஞ்சோடும்” என்றதே போதுமாயிருக்க, காண்தோறு என்றது ஏதுக்கென்னில்;
ஒரு நாளிரண்டுநாள் இப்படி பார்த்துவிட்டு ‘இதுப்ரமம்’ என்று பிறகு வெறுமனிருப்பதில்லை;
காருருவங்களைக் காண்கிற போதெல்லாம் இந்த ப்ரமம் உண்டாகியே தீரும் என்பதற்காக.

——————————————————–

(பிரிந்தொன்று நோக்காது.) எம்பெருமானுடைய திருவுருவத்திற்குப் போலியான பொருள்களைக் கண்டபோதெல்லாம் தாம்
பாவநாப்ரகர்ஷத்தாலே அவற்றினருகே போய் அநுபவிக்கப் பாரிக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்.
அருகே சென்றவாறே அவை உபமான பதார்த்தங்களாகவே (அதாவது- மேகமாகவும் கடலாகவும் இருளாகவும் பூவைப் பூவாகவும்)
இருக்குமேயன்றி உபமேயமான எம்பெருமானாக இருக்கமாட்டாவே;
“ஐயோ! நாம் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கப்பெற்றோமென்று களித்திருந்தோமே;
இப்படி அந்யதாஜ்ஞாநமாகவா முடிந்து விட்டது!” என்று வருத்தமுண்டாகி,
‘எம்பெருமான் நம்மை இப்படியே வருத்தப்படுத்தி வருகிறானே யொழிய ஒருகாலும் அவள் திருவுள்ளத்தில்
இரக்கம் பிறப்பதில்லையே!; என்ன கல்நெஞ்சோ!’ என்று வெறுக்கிறார்.

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மாவாய் பிளந்தார் மனம்–50-

பதவுரை

பிரிந்து–தம்மைவிட்டுப் பிரிந்து
ஒன்று நோக்காது–வேறொன்றிலும் கண் வையாமல்
தம்முடைய பின்னே–தம்மோடு கூடவே
திரிந்து உழலும்–அலைந்துகொண்டு திரிகிற
சிந்தனையார் தம்மை–என் நெஞ்சினாரை
ஒரு கால்–ஒரு காலாகிலும்
புரிந்து–அன்புகூர்ந்து
ஆ ஆ என இரங்கார்–ஐயோவென்று அருள்புரிகின்றலர் (பகவான்);
அந்தோ–கஷ்டம்!;
மா வாய் பிளந்தார் மனம்–கேசியென்னும் குதிரையின் வாயைக் கிண்டொழித்த அப்பெருமானுடைய நெஞ்சு
வலிதே கொல்–கடினமோ;

பிரிந்து ஓன்று நோக்காது
தம்மை விட்டு பிரிந்து-வேறு ஒன்றில் கண் வையாமல்

தம்முடைய பின்னே திரிந்து உழலும்
தம்மோடு கூடவே அலைந்து கொண்டு திரிகிற

சிந்தனையார் தம்மை
என் நெஞ்சினாரை

புரிந்து ஒரு கால்
ஒரு காலாகிலும் அன்பு கூர்ந்து

ஆவா வென இரங்கார்
ஐயோ என்று அருள் புரிகின்றிலர்-பகவான் –

அந்தோ

வலிதே கொல்மாவாய் பிளந்தார் மனம்
கேசி வாயைப் பிளந்த-அப்பெருமான் உடைய நெஞ்சு கடினமோ
ஆஸ்ரிதர்க்காக கேசி வதம் செய்து அருளின பிரான் திரு உள்ளம்
என் விஷயத்தில் கல் நெஞ்சாக உள்ளதே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
இரக்கம் அற்றவன் சொல்லக் கூசி
அந்தோ வலிதே கொல் என்று அருளிச் செய்கிறார்-

ஆவாவென = ‘ஹா ஹா’ என்கிற வடமொழி அவ்யயம் ஆவாயென்று கிடக்கிறது. இரக்கக் குறிப்பிடைச்சொல்.

மாவாய் பிளந்தவரலாறு :- கம்ஸனாலேவப்பட்ட அஸுரர்களில் கேசியெனபவன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சி
நடுங்கும்படி கனைத்துத் துரத்திக்கெண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி
அதன் வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களை யுதிர்த்து உதட்டைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவால் வகிர்ந்து தள்ளினள் என்பதாம்.

ஆச்ரிதர்கட்காகக் கேசிவதம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்து பாமகாருணிகள் என்று பேர் பெற்றிருப்பவன்
என் விஷயத்திலே கல்நெஞ்சனாவதே! என்று வெறுக்கிறார்.

“உயர்வற வுயர்நலமுடையவன்” என்று ஸமஸ்த கல்யாண குண பரிபூர்ணனாகத் தம் வாயாலே சொல்லத்தக்க எம்பெருமானை
‘இரக்கமற்றவன்’ என்று உறுதியாகச் சொல்லக்கூசி,
“அந்தோ! வலிதே கொல்?” என்று சங்கிப்பது போலக் கூறினபடி.

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்