Archive for the ‘பெரியவாச்சான் பிள்ளை’ Category

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -91-100–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

May 31, 2022

அவதாரிகை

இப்படி கால விளம்பம் போறாது ஒழிந்தாலும்
அவன் தானே வந்து முகம் காட்ட வேண்டுகையாலே
பதறினாலும் பிரயோஜனம் இல்லை
அவன் தன் நினைவாலே இருக்கிற உமக்கு அவன் விபூதியைக் கண்டு கால ஷேபம் பண்ணி இருக்கக் குறை என் என்ன

ஆஸ்ரித வ்யாமுக்தனாய்

ஆபத் சகனாய்

ஸர்வஞ்ஞனானவனை ஒழிய என் நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது -என்கிறார் –

இப் பாட்டு தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தோடே நின்று உரைத்தல் ஆகவுமாம் –

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –

பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –
துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –

வார் கடா அருவி -8–4-

பதவுரை

சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமனவடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒருசேர விடாமல் உட்கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலை  யல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை
கள்ளக் கயிறு உருவிக் கட்டுகையால் சுருங்கின உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவிலே புக்கு
அமுத செய்த க்ருத்ரிமனானவனை

இத்தால்
இச்சரீரமாகிற சிக்கத்திலே கட்டுண்ட நவநீத ப்ராயனான முமுஷு சேதனனைப்

பிறர் அறியாதபடி அபி நிவிஷ்டனாய் புஜிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –

வையமுற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை
இப்படி ஆஸ்ரிதர் உகந்த விஷயத்தை உகக்கும் அளவு அன்றிக்கே
ஸாமான்யமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் ஒன்றும் பிரி கதிர்ப் படாமல்
பசியர் யுண்டால் போலே மேல் விழுந்து திரு வயிற்றிலே வைத்து நோக்கும்படியான ரக்ஷகத்வ சக்தியின் மிகுதியை யுடையவனை –

(மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)

மாவலி மாட்டு-இருங்குறளாகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால்
மஹா பலி யருகே லோகத்தில் வாமன வேஷம் வளர்ந்து அருளின இடம் என்னும்படி மிக்க வாமனனாய்
அவன் தானே இசையும்படி அத்விதீயமான சிற்றடியாலே மூன்றடி வேண்டி அழகிய நடையிலே மதி மயங்கும்படி சென்ற
பெரிய நல் விரகை யுடையவனை ஒழிய

பெரும் கிறியாரை -என்றும் சொல்லுவார்

இத்தால்
தன்னுடைய வஸ்து பிறர் கொள்ளாமல் தன்னதே யாக்கிக் கொள்ளும் பேர் அறிவுடையவன் என்கை

அடியேன் நெஞ்சம் பேணலதே –
இந்த ஸ்வ பாவங்களால் அவனுக்கே சேஷமான நெஞ்சு
வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது

அறத்தொடு நிலை

தொடு உண்ட கள்வன் -என்கையாலே
புணர்ச்சி தோற்றிற்று

வையம் இத்யாதியாலே –
நீரிடை யுதவி தோற்றிற்று ( புனல் தரு புணர்ச்சி )

மாவலி மாட்டு -இத்யாதிகளாலே ‘தானே குறை நயந்து வரைந்து கொள்ளும் பேர் அறிவுடைமை தோற்றிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
இங்கே கிடந்தது -காலம் நெடிதாகா நின்றது குறுகா நின்றது என்று
ஆழங்கால் பட்டுக்கிடவாதே நாங்கள் கண்டீரே
புறம்புள்ள விஷயங்களாலே தரித்துக் காலம் நெடுகுதல் குறுகுதல் செய்யாதே ஸூகித்து இருக்கிறோம்
அப்படியே நீரும் பகவத் விஷயத்தில் நின்றும் மாறி நெஞ்சைப் புறம்பே வைக்கைக்குப் பார்த்தாலோ என்ன
அப்படிச் செய்யலாயிற்றே அதுக்கு ஈடாய் இருபத்தொரு நெஞ்சைப் பெற்றோமாகில்
என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஓன்று அறியாது என்கிறார்
என் நெஞ்சு தன்னைப் புறம்பே வைக்கலாயிற்று இறே அவன் நவநீத ஸுர்யம் பண்ணானாகில்

வியாக்யானம்

சுருந்குறி வெண்ணெய்
கள்ளக் கயிறு உருவி வைத்த உறி யாயிற்று

வெண்ணெய் தொடு வுண்ட
வைத்த குறி அழியாமே வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த

கள்வனை
களவு தன்னை யாயிற்று களவு கண்டது ஆகிறது –

———————————————————————

அவதாரிகை

இப்படி அனுபவ அர்த்தமாக இவர் ஆதரித்த படியைக் கண்ட ஈஸ்வரன்
நம்மை அபேக்ஷித்தாருக்கு முகம் காட்டாது ஒழிவோமோ
தம் தம்முடைய அபிமத ஸித்தி யர்த்தமாக ப்ரயோஜனாந்தர பரரான தேவர்கள் அகப்பட அபேக்ஷிக்க

வந்து பிறந்து கார்யம் செய்து கொடுக்கிலோமோ என்று-தன் திரு உள்ளக் கருத்தை ஆவிஷ்கரிக்க

உன்னுடைய போக்யமான வடிவை அனுபவிக்க ஆசைப்படாதே

சத்ரு நிரஸனம் பண்ணித் தர வேணும் என்று அபேக்ஷிப்பதே என்று
அவர்களை பழித்து அருளிச் செய்கிறார்

இதுவும் நாயகி வினைத் தொழிலில் பிரியலுற்ற நாயகனைக் குறித்துக் காணலுற்றுக் கவர்ந்து உரைத்தல் ஆகவுமாம் –

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
தாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-

பாசுரம் -92- பேண் நலம் இல்லா அரக்கர் –
துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –
ஆழி எழ -7–4-

பதவுரை

பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்–தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள் தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)

வியாக்யானம்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று
உன் பக்கல் அனுவர்த்தனம் ஆகிற நலம் இல்லாத ராக்ஷஸருடைய
சமுத்ரமாகிற நீர் அரண் யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே
பெரிய ஓலக்கத்தை யுடைத்தான லங்கையாகிற படை வீட்டிலே
பட்டினி கிடக்கிற அக்னியானவன் பசி தீர்ந்து யுண்டு வளரும்படி ப்ரஷேபிக்க வேணும் என்று அபேக்ஷித்து

நின்னை
நிரதிசய போக்ய பூதனான உன்னை

விண்ணோர்
விலக்ஷண போகம் அறிந்து புஜிக்கிறாராக பாவித்து இருக்கிறவர்கள்

தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
நிலத்திலே தோய்ந்து தாள் தொழுவர் என்று ப்ரணாமத்தைக் காட்டுகிறது
தேவர்களாய் இருக்கச் செய்தே தங்கள் அர்த்தித்து
அத்தாலே
உத்தரம் தீர மா ஸாத்வ -யுத்த -17-10-என்று பூமியிலே கால் பொருந்தித் தொழுவர் என்றுமாம்

(வடக்குக்கரை அடைந்து -கிழக்குக்கரை இல்லாமல் -லங்கைக்கு வடக்கு தானே –
கால் பூமியிலே படாமல் இருந்தான் விபீஷணன் அங்கு
பொருந்தாமல் இருந்தான் -)

நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
இப்படி பரம உபாயமான பிரணிபாதாதிகளைப் பண்ணுகிறது நிரதிசய போக்யமாய் ஆஸ்ரித அர்த்தமாக
நீ பரிக்ரஹித்த நாநா வான விக்ரஹங்களிலே ஓர் அம்சத்தைக் காணலாம் என்றோ -அன்றிலே என்றபடி –

போகத்துக்கு ஆசைப்பட்டுக் காலிலே விழுந்தார்களை அறுக்கை தானே செய்யும் என்று கருத்து

வைகல் மாலையும் காலையுமே –
அஹோ ராத்ர விபாக யுக்தமான காலம் உள்ளதனையும் காணலுமாம் கொல் என்று அந்வயம் –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றார் கீழே
அளவுடைய அதிகாரி புருஷர்களாக தேவர்களுக்கு இதுவும் இன்றி ஒழிவதே என்கிறார்
என் தான்
அவர்களுக்கு வந்த குறை என் என்னில்
நாம் எல்லாவற்றையும் அழிய மாறிப் பெறக் கடவத்தையும் அழிவுக்கு இட்டு

வேறே சில ப்ரயோஜனங்களைக் கொள்ளா நின்றார்கள் இறே -என்கிறார் –

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

தன் நெஞ்சு வேறே ஒன்றை ஆதரியாது என்று அருளிச் செய்தார்
விண்ணோரும் என்னைப் போலே யாகாதே விருத்த ஸ்வபாவர் ஆவதே என்று

வெறுத்து அருளிச் செய்கிறார் இதில்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
ஸர்வ பூத ஸூஹ்ருத்தான உன்னையே விண்ணில் உள்ளவரான விலக்ஷண ஞான சக்திகரும்
இந்நிலம் நாம் கால் வைப்பதற்கு யோக்யம் அன்று என்று இருக்குமவராய்
ஸ்வ பிரார்த்தனைக்காக இந்நிலத்தில் கால் பதிய வைத்தவர்களாய்

நீணகர்
பஹு காலம் தொடங்கிக் கடல் சூழ்ந்த மஹா த்வீபத்தில் உண்டான இலங்கையில்

நீள் எரி
பஹு நாளாகப் பட்டினி இருக்கிற மஹா அக்னியை
சரமுகத்தால் பிரவேசிப்பிக்க அருள் செய்ய வேணும் என்று உன்னை பிரார்த்திப்பதே

வைகலும்
எப்போதும்

தொழுவர்
இதுக்காக உன்னைத் தொழவும் வேணுமே

நீள் நகருக்கு விசேஷணம்

பேணல் இத்யாதி
உன் விபூதியைப் பேணவும்
உன்னை அனுவர்த்திக்கவும் ஆகிற நன்மை இல்லாத ராக்ஷஸருடைய ஸமுத்ரமாகிற
முந்நீரை யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே இருக்கிற என்றபடி
இப்படி பர அநர்த்தத்துக்காக உன்னை விண்ணோர் தொழுவர் அத்தனை போக்கி

நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத்யத்புதம் -(சதுஸ் ஸ்லோஹி-4 ) -என்றபடியே
உனக்கு நிரதிசய ப்ரியமாய் எங்களுக்கு த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான பலவகைப்பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ பேதங்களில் ஒன்றை யாகிலும் காணலாமோ என்றே அல்லவே
ஊரைச் சுட்டுக் தர வேணும் என்றதற்காக அத்தனை

வைகல் மாலையும் காலையுமே –
சாயம் ப்ராதஸ் சமயங்களில் -புன புன தொழுவர் என்றபடி –

———————————————

அவதாரிகை

இப்படி ப்ரயோஜனாந்தர பரராய்ப் போருகிற அளவன்றியே ஸம்ஸாரிகள்

அஹோ ராத்ர விபாகத்தாலே காலம் கழிக்கிற படி கண்டு வைத்து
பகவத் விஷயத்தில் அந்வயியாதே இருப்பதே -என்று

அவர்கள் இழவுக்கு வெறுத்து அருளிச் செய்கிறார் –

வியாக்யானம் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –

பாசுரம் –93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த
துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —
ஒரு நாயகமாய் -4–1-

பதவுரை

காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்க மாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய-அஸ்தமிக்க
வையகம் பரவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி
(ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
கண் போது செய்து–பக்தி பாரவஸ்யத்தாலே கண்களை மூடிக் கொண்டு-

(உலக விஷயத்தில் மொட்டு போல் பகவத் விஷயத்தில் மலர்ந்து)
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர் கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.

வியாக்யானம்

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
ப்ராத காலத்திலே ஆதித்யன் வருகிறான் என்று அவன் பிரதாபத்துக்கு அஞ்சி
ஏலக்கோலி ஓடிப்போன ராத்ரியாகிற குறும்பர்

மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
சாயம் காலத்திலே அந்த பிரதா போத்தரனான ஆதித்யனானவன் அஸ்தமிக்க
லோகம் அடங்கப் பரம்பா நிற்பர்கள்

அன்ன கண்டும்
அப்படிக் கால பேதேந ப்ரகாஸ அந்தகாரங்கள் கலசி வருகிறபடி கண்டு இருக்கச் செய்தேயும்

காலை நன் ஞானத் துறை படிந்தாடிக்
ஸத்வ உத்தர காலத்திலே வைதிகமான அத்யாத்ம ஞானத்துக்குத் துறையான
ஆச்சார்ய விஷயத்தைப் பிராணாமம் பண்ணி
அவன் உபதேசத்தில் அவகாஹித்து

கண் போது செய்து
பாஹ்ய இந்த்ரியத்தைப் புறம்பு போகாதபடி மொட்டுவித்து

மாலை நல் நாவில் கொள்ளார்
ஆஸ்ரித வத்ஸலனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் பண்ண இட்டுப் பிறந்த நாக்கிலே ஸ்வீ கரியார்கள்

நினையார் அவன் மைப்படியே –
அவனுடைய ஸ்யாமளமான திருமேனியை நெஞ்சுக்கு விஷயமன் ஆக்கார்கள்
இப்பொழுதைப் பழுதே போக்குவதே என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தேவர்கள் தான் ஓர் அபிமான விசேஷத்தாலே இருக்கிறார்கள்
அல்லாதாரோ தான் பகவத் போஜனம் பண்ணுகிறார்களோ
அவர் இவர் என்று விசேஷிக்கிறது என்
எல்லார்க்கும் புறம்பே யன்றோ போது போக்கு என்கிறார்

வியாக்யானம் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்-மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது
அந்த ராத்திரி ஆதித்யனை மேலிடுவதாய் இருக்கிற இத்தைக் கண்டு வைத்து

நந்தத்த யுதித ஆதித்யே -அயோத்யா -105-24
விடிந்தவாறே அபிமத விஷயங்களை புஜிக்கும் படி உபகரணங்களைத் தேடுகைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள்

நந்தத்த யஸ்தமிதே ரவவ்
அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதபடி அவ்விஷயங்களை புஜிக்கும்படியான காலம் வந்தது என்று களிப்பார்கள்

ஆத்மந இத்யாதி
பகல் என்றும் இரவு என்றும் கூறிட்டுக் கொண்டு இங்கனே தந்தமுடைய ஆயுசை ஈர்க்கிறதோர் ஆயுதம்
சாலில் வார்த்த நீர் போல் நம் ஆயுஸ்ஸூ போகிறபடி படி என்று புத்தி பண்ணுகிறவர்கள் அல்லர்
சாவக்கடவராய் இருக்கிறவர்கள்
காலை -ப்ரபாத சமயத்திலே வெய்யோன் உண்டு ஆதித்யன்
அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று கங்குல் ஆகிற குறும்பர்
அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே
மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்
நித்ரையாலே பூமியாகப் பரவசமாம் படி பண்ணிக்கொடு வரும் இறே

அன்ன கண்டும்
அப்படியைக் கண்டு வைத்தும்
பகவத் விஷயம் ப்ரத்யக்ஷத்துக்கு விஷயம் அல்லாமையாலே தான் அறியாது ஒழிகிறார்கள்
இத்தினுடைய அவஸ்தையை ப்ரத்யஷியா நிற்கச் செய்தேயும் நெஞ்சில் படாது ஒழிவதே

காலை
ஸத்வ உத்தரமான காலத்திலே

நன் ஞானத்
ஞானம் ஆகிறது பகவத் விஷயத்தைப் பற்றி யல்லது நில்லாது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -( முதல் திரு -67 ) என்னக் கடவது இறே
தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-87 )
வித்யா அன்யா சில்ப நை புணம் –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-41 )
புறம்பே ஒன்றைக் கற்றத் தோடு
துன்னம் பெய்யக் -கந்தை தைக்க -கற்றத்தோடு வாசி இல்லை இறே

துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

நன்மை பெற வல்ல நாக்கால் அனுசந்திப்பதும் செய்யார்கள்
அவன் மை போன்ற திருமேனியை ஸாஸ்த்ரத்தில்
பஞ்சத்தாவிபக்த காலங்களில் ஸ்மரியார்கள்
யூகித்தார்த்த விபரீதமாய்
நந்தத்த் யுதித ஆதித்யே நந்தத்த் யஸ்தமிதே ரவவ் ஆத்மநோ நாவபுத் வந்தே மனுஷ்யா ஜீவிதா ஷயம் -அயோத்யா -105-24-

என்றபடியாய் இரா நின்றார்கள் என்கிறார்–

————————-

அவதாரிகை

மாலை நல் நாவில் கொள்ளார் -என்று நாட்டாரைப் பழித்தீர்
நீர் தாம் நம்மை யுள்ளபடி அறிந்து சொன்னீரே என்று ஈஸ்வர அபிப்ராயமாக
விலக்ஷணரான வைதிகர் அன்றோ அது செய்ய வல்லார்
நான் அவர்கள் போன வழியே போமவன் அன்றோ -என்று அருளிச் செய்கிறார் –

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-

பாசுரம் –94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –
துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –
இருத்தும் வியந்து -8-7–

பதவுரை

மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைத்திகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மை யுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்து மீண்டு) ஊர் வந்து சேர்ந்த
(கண் தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?

வியாக்யானம்

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்
அஞ்ஜனத்தின் வடிவு போலே இருக்கிற திருமேனியையும்
அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையும்

வைதிகரே
நீல தோயத -தைத்ரியம் என்றும்
யதா கப்யாஸம் புண்டரீகம் -சாந்தோக்யம் என்றும்
திரு வடிவையும் திருக்கண்ணையும் வேதத்தில் சொல்லுகிறபடி அறியுமவர்களே

மெய்ப்படியால்
கேட்டார் வாய்க் கேட்கை அன்றிக்கே
மெய்யாகக் கண்டபடியாலே

உன் திருவடிச் சூடும் தகைமையினார்
பிராப்தமுமாய்
போக்யமுமான உன்னுடைய திருவடிகளை
சிரஸா வஹித்து அனுபவிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்கள்

எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
ஊர் அணைந்த ஆக்கள் கன்று நிலை கண்டு கனைக்க

கண்ணில்லாத ஆவும் அது கேட்டு ஒக்கக் கனைக்கும் என்று லோகம் யாதொருபடி சொல்லும்

அப்படி யானும் சொன்னேன்
அந்த ப்ரகாரத்திலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டு நானும் சொன்னேன்

அடியேன்
சொல்லுகைக்கு அடியான உறவையுடைய நான்

மற்று யாது என்பனே —
அல்லது என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேன் என்ன வல்லேனோ என்றார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
துர்மானத்தாலே இழப்பாரும்
அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பார்கள் என்றீர்
உமக்கு குறையில்லையே என்ன
எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாய்
முன்னடி தோற்றாதபடி மயர்வற மதிநலம் அருளினாயே
பக்தி ரூபா பன்ன ஞானத்தை இறே அருளிற்று
அந்த பக்தி பாரவஸ்யத்தாலே ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்
வள வேழ் உலகில் படியே அயோக்யதா அனுசந்தானத்தாலே -1-5- ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

குருட்டா மிலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன்

அடியேன் மற்று யாது என்பனே
உனக்கே அடிமைப்பட்ட நான்
என்முன் சொல்லிச் சொல்லும் நான்
நீ சொல்லுவியாத மற்று எத்தைச் சொல்லுவேன் என்கிறார் –

————-

அவதாரிகை

ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் என்று கண்டவர்கள் சொன்ன பாசுரத்தைச் சொன்னேன் இத்தனை என்கிறீர்
கதாநுகதிகை யன்றி உமக்குத் தஞ்சமாக பகவத் விஷயத்தில் நீர் செய்த அம்சம் ஏது என்ன

அநாதியான சரீர ஸம்பந்தத்தாலே விஸ்லேஷித்துப் போகாத படி என்னை அங்கீ கரித்து அருள வேணும் என்று நிருபாதிக பந்துவான
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய பிரபத்தி நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –

பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு —
துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
திருமாலிருஞ்சோலை -10-8-

பதவுரை

உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம் –
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆப்புண்டும்-பிராரப்த கர்மத்தால் அதிலே உழன்று -பந்தத்தில்
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிழ்ந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்-வாசனையால் -பதிவினால்
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான

கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
மாதாவினை–தாய் போன்றவனும்-ப்ரியபரனுமாய் –
பிதுவை–தந்தை போன்றவனுமான-ஹித பரனுமாய்
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.

வியாக்யானம்

யாதானும்
முன்பு பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஜாதி நியமம் இல்லை
ஆஸ்ரய நியமம் இல்லை
கர்ம அனுரூபமாக உப பன்னமானது -என்கை

ஓர் ஆக்கையில்
பந்தகமாம் இடத்தில் கர்மத்துக்கும் தான் வேண்டும்படி அத்விதீயமாய் இருக்கை

ஆக்கை என்று
சரீரத்தைச் சொல்லுகையாலே
பந்தகத்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்கை

புக்கு
சரீர பிரவேசம் சேதனனுக்கு வந்தேறி என்கிறது

அங்கு ஆப்புண்டும்
அந்த சரீரத்திலே அஹம் அபிமாநாதிகளைப் பண்ணி
போக ஆயதநத்வாதிகளாலே ஸக்தனாயும்

ஆப்பு அவிழ்ந்தும்
இஸ் சங்கம் நடவா நிற்கச் செய்தே பந்தக கர்ம விச்சேதத்தாலே சரீர விஸ்லேஷம் பிறந்தும் –

மூதாவியில் தடுமாறும்
இவனை விடாதே பழையதாய்ப் போருகையாலே முதிர்ந்து இருப்பதாய்
ப்ராணஸ் தேஜஸி -சாந்தோக்யம் என்று
ப்ராண ஆஸ்ரயம் ஆகையாலே ஆவி என்று சொல்லப்படுவதான ஸூஷ்ம சரீரத்தில் நின்று
ஸ்வர்க்க நரகங்களிலே யாத ஆயாதம் பண்ணித் தடுமாறா நிற்கும்

உயிர்
ஜீவனானது
முன்னமே –
இப்பிரக்ருதி ஸம்பந்தம் -அநாதி மாயயா ஸூப்த -மாண்டூக்ய காரிகா -என்கிறபடியே அநாதியாய் இருக்கும்

அதனால்
இப்படி இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு சரீர ஸம்பந்தம் அநாதி ஆகையாலே

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே ஏதேனும் ஒன்றை அவலம்பித்து பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தே போரும்படியான
இஸ் ஸம்ஸாரி சேதனனுடைய ஸங்கல்பத்தை

நல் வீடு செய்யும்
நன்றாக புந ப்ரரோஹம் பிறவாதபடி விடுவிக்கக் கடவனான

மாதாவினைப் பிதுவை
பிரிய பரனுமாய்
ஹித பரனுமாய் உள்ளவனை

வத்சலனுமாய் ஸ்வாமியுமாய் யுள்ளவனை என்றுமாம்

திரு மாலை
அந்த வாத்சல்ய ஸ்வாமித்வங்களுக்கு ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவை
வாத்ஸாலும்மும் பந்தமும் தோற்றுவது புருஷகார பூதையான ஸ்ரீ லஷ்மீ ஸம்பந்தத்தாலே இறே
பிதா மாதா ச மாதவ -பாரதம் ஆரண்ய -189-
மாத்ருத்வ பித்ருத்வங்கள் விஸிஷ்ட விஷயம் என்றுமாம்
அதாவது
ஸ்புரத்தா ஹேதுவான விசேஷண ப்ரதாந் யத்தாலே மாத்ருத்வமும்
சத்தா ஹேதுவான விசேஷ்ய ப்ரதாந் யத்தாலே பித்ருத்வமும் என்றபடி

வணங்குவனே –
ஏவம் பூத விஷயத்தை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய ஸ்வ பாவ கதநம் பண்ணுகிறார்

கால ஷேப அர்த்தமாகவும் பிரபதனம் ஒழிய ப்ரவ்ருத்தி இல்லை என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் –

(வர்த்தமான பிரயோகம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டுமே)

—————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பக்தி பாரவஸ்யத்தாலே யாதல்
அயோக்யதா அநு சந்தானத்தாலே யாதல்
ஏதேனும் ஒருபடி கண்ணழிவு சொல்லிக் கை வாங்காமே
தன் பக்கலிலே ப்ராவண்ய அதிசயத்தை யுடையேனுமாய்
இதர விஷயங்களில் அருசி யுடையனுமாம் படி பண்ணின
மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார்

இவ்விடத்தில் உருத்தோறும் குறியாக ஜீயர் அருளிச் செய்வதொரு வார்த்தை யுண்டு
பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே அங்கே ராமானுஜ தாசர் என்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் -என்ன
நம்பெருமாளைப் பிரிந்த சோகத்தால் செவி சீ பாய்ந்து இருக்கையாலே நான் ஒன்றுக்கும் ஷமன் அல்லேன்
ஜீயர் நீர் சொல்லும் என்று அருளிச் செய்ய

ஜீயர் அருளிச் செய்து கொடு போகா நிற்க
வளவன் பல்லவதரையர் என்று திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை யுடையார் ஒருவரும் அதை அனுசந்தித்திக் கொண்டு போந்தாராய்
அவர் இப்பாட்டு அளவிலே வந்தவாறே கண்ணும் கண்ண நீருமாய் புள கீக்ருத காத்ரருமாய் இருக்கிற இத்தைக் கண்டு
இப்பாட்டில் வார்த்தை சொல்லுவது இனி
ப்ரசங்க மாத்திரத்திலே வித்தரானீர் இது என் என்ன

நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே
எம்பெருமான் திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார்
அத்தை இப்போது ஸ்மரித்தேன்-என்ன

அவர் இதுக்கு ஏதேனும் வார்த்தை அருளிச் செய்தது உண்டோ என்ன

எனக்கு அவை போகாது -இப்பாசுரத்தை நினைத்து இருப்பன் -என்றாராம்
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று இப்பாட்டை ஐந்தாறு நாழிகைப் போது கொண்டாடினாராம் –

வியாக்யானம்

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு
ஏதேனும் ஒரு சரீரத்தே பிரவேசித்து
அறவும் தண்ணிய ஸூகர ஜென்மத்தில் ஜனித்தாலும்
மமாயம் தேஹ -என்று கொண்டு
அதிலே அபிமானித்து
அங்கே உண்டானவற்றோடே சில ஸம்பந்த விசேஷங்களும் உண்டாய்
அவற்றை விட மாட்டாதேயுமாய்ப் போறா நிற்குமாயிற்று

ஆக்கை என்கையாலே
உபசயாத்மகம் என்று தோற்றுகிறது

புக்கு
சேதனனுக்கு அசித் சம்சர்க்கம் ஸ்வத உள்ளது அன்று -கர்ம நிபந்தனம் என்கை

அங்கு ஆப்புண்டும்
கர்ம வாஸனையாலே ருசி வாசனையாய்
அதிலே பத்தனாய் இருக்கும்
இது தண்ணிது என்று அறியா நிற்கச் செய்தேயும்
இத்தை விடில் செய்வது என் -என்று துணுக்குத்

——————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

முமுஷுக்களான சிலர்
சம்சரண நிவர்த்தகன் படியையும்
எந்தக் கிரமத்தால் நாம் எத்தைச் செய்ய அவன் தன் நிவர்த்தகனாமது அத்தையும்
நமக்கு அவனோடு உண்டான சம்பந்தத்தையும் அருளிச் செய்யீர் என்ன
தாம் தத்வித ஜனதாதா பத்ம்யதா பன்னராய் நான் செய்யுமது இதுவே என்று

நம்மையும் இதில் அந்வயிப்பிக்க ஸித்த ஸாத்ய உபாயங்களை க்ரமத்தால் அருளிச் செய்கிறார் இதில் –

வியாக்யானம்

ஜீவ வர்க்கமானது அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு

அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே –
ஆப்பு அவிழ்தவன் ஸ்வதித அஹங்கார மமகார னானவன்

அதுக்கும் மேலே
மூதாவியில் உயிர்
அநாதியாய்ப் பழையதாக ஓட்டின் ப்ராணாதி வாயு ஸம் சக்த ஸூஷ்ம சரீரத்தால்
இந்த லியோக -லோகாந்தர -சஞ்சரண துக்க ஸூக அனுபவங்களால்
அலைச்சல் படும் ஜீவ வர்க்கமானது எல்லாம்

முன்னமே
யாவதாத்ம உபக்ரமாயே

அதனால்
ஏவம்பூத சக்ர ப்ரவ்ருத்தி மூல காரணமான அநாதி ப்ரக்ருதி சம்பந்தத்தால்

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
அப்ராப்த விஷயங்களையும் கர்மங்களையும் அவலம்பித்து
ப்ராப்த விஷய கர்மங்களை விட்டுத் திரியும் விரதம்
நியமபூர்வ ப்ரவ்ருத்தியை
விவேக நிர்வேத விரக்தி பீதிகள் உள்ளவரில்

நல் வீடு
நிச்சேஷமாக நிவர்த்திப்பிக்க வல்லளான

மாதாவினைப்
வேரி மாறாத பூ மேல் இருக்கிற-4-5-11-ஜகன் மாதாவை

வணங்குவனே –
பகவத் வசீகரணத்துக்கு முன்பு புருஷகார வசீகரணத்தைச் செய்வேன்

தத் அநந்தரமே
பிதுவை திரு மாலை வணங்குவனே –
ஜகத் காரண பூதனான ஜகத் பிதாவை ஆத்ம வித்யா நிவர்த்தகையான தெருவில் மால் செய்யுமவனை
ஆத்ம ராஷா பர ஸமர்ப்பணத்தால் வசீகரிப்பேன் என்று
முமுஷு ஜனங்களால் வசீகரிக்க வேண்டிய க்ரமத்தை
தத்தாதாத்ம்யா புத்தியால் தாம் அனுஷ்டித்ததாக அருளிச் செய்தார் ஆயிற்று

இத்தால்
திருமாலே ஸித்த உபாயம் என்றும்
தத் வசீகரணமே ஸாத்ய உபாயம் என்றேனும்
அருளிச் செய்து
தத் அனுஷ்டான கிரமத்தை அருளிச் செய்தார் –

————————————

அவதாரிகை

இப்படி
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
பந்தத்தையும்
புருஷகார யோகத்தையும்
முன்னிட்டுத் தாம் ஆஸ்ரயித்த படியைச் சொல்லக்கேட்ட ஈஸ்வரன்
ஸம்ஸாரிகள் நாநா மத பேதங்களாலே நாநா தேவதைகளை ஆஸ்ரயித்து அநர்த்தப்பட்டுப் போகா நிற்க
நீர் நம்மை உறவு அறிந்து ஆஸ்ரயிக்கப் பெறுவதே
இனி உமக்கு நிரந்தர அனுபவமே க்ருத்யம்
நீர் செய்யப் பார்த்தது என் என்று
இவரைக் கொண்டு ஜகத்தைத் திருத்தப் பார்த்து இருக்கிறவன்
ஸா பிப்ராயமாக இவருக்கு கார்யம் செய்ய உத்யோகிப்பாரைப் போலே அருளிச் செய்ய
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –திரு விருத்தம் -93- என்று
ஸம்ஸாரிகள் இழவுக்கு நொந்தவர் ஆகையாலே
நீ ப்ரவர்த்திப்பித்த பாஹ்ய மார்க்கத்தாலே உன் பக்கல் விமுகமான ஜகத்தை
உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாம்படி பண்ணக் கடவேன் என்று
ஈஸ்வரன் திரு உள்ளக் கருத்தைத் தாமே அருளிச் செய்கிறார் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –

பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி –
துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தால் –
ஒன்றும் தேவும் -4-10-

பதவுரை

வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை-முதலில் மத உபதேஷ்டாக்கள் குருக்கள் -துறை –
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பலபல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின்மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் -சரீரத்தை -பரவச் செய்து வைத்துள்ளாய்-ஜகத் ஸர்வம் சரீரம் தே அங்க -அங்கீ பாவம்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத் தக்க உன் போல்வார் எவரையு மில்லாதவனே!-இணைவனாம் சத்ருஸ்த்தம் தோற்றி -முதல் -வைலக்ஷண்யம்
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வளரச் செய்வேன்-

வியாக்யானம்

வணங்கும் துறைகள் பல பல வாக்கி
ஆஸ்ரயிக்கைக்கு இழியும் தீர்த்தங்களை நாநா விதமாக்கி
அதாவது
தத் தத் மத ப்ரவர்த்தக புருஷர்களைச் சொன்னபடி

மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பல வாக்கி
பரஸ்பர விருத்தங்கள் ஆகையாலே மதி பேதம் பிறக்கையாலே

அந்யோன்யம் விவாத சீலமான ஸாங்கேதிக ஸித்தாந்தங்களையும் நாநா விதமாக்கி

அவை யவை தோறு அணங்கும் பல பல வாக்கி
அந்த ஸித்தாந்தங்கள் தோறும் ஆஸ்ரயணீயமான தேவதைகளையும் நாநா விதமாக்கி

பல பல என்ற
வீப்சையாலே அந்த தேவ ஜாதிகளுடைய
ஸ்வரூப பேதத்தையும்
அவாந்தர பேதத்தையும் நினைக்கிறது

நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
உன்னுடைய சரீரமானத்தை விஸ்தீர்ணமாக்கி வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்
இத் தேவ ஜாதிகளில் இணைத்துச் சொல்லலாம்படி உன் போல்வாரை உடையான் அல்லாதவனே

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இப்படி ஸமாப்யதிக தரித்ரனாய்
ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

உம்முடைய மநோ ரதங்கள் எல்லாம் கைபுகுந்து நம் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே வணங்கும்படி யானீர் இறே
இனி உமக்கு ஒரு கர்தவ்ய அம்சம் இல்லையே என்ன
எனக்கு ஒரு கர்தவ்யம் உண்டு என்கிறார்
ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கி யல்லது நான் ஓர் இடத்தில் இரேன் என்கிறார்
நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப்போந்த நானும் கை விடவோ
சித் சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் அடியிலே இவை அசித் கல்பமாய்க் கிடக்கிற சமயத்திலே
இவற்றினுடைய தய நீய தசையைக் கண்டு புருஷார்த்தத்தை இன்னது என்று அறிந்து
ருசித்துப் பற்றுகைக்கு ஈடாகக் கொடுத்து விட –

அவை தான் இதர விஷயங்களை ருசிக்கைக்கும் அதுக்கு ஈடாக ப்ரவர்த்திகைக்கும் பொதுவாகையாலே
கர்ம ப்ரவாஹம் அடியாக வந்த இத்தைக் கொண்டு இதர விஷயங்களிலே ஒழுக

நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கையாலே

இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பித்தாய் நீ என்னலாம்படி இருந்தது
பிரஜை கிணற்றில் விழா நின்றால் வாங்காத தாயை தள்ளினாய் என்னக் கடவது இறே –

வியாக்யானம்

நாம் இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன
வணங்கும் இத்யாதி
ரஜஸ் தமஸ்ஸூக்களை உடையவர்களாய் இறே புருஷர்கள் இருப்பது
அவ்வவ குண அனுகுணமாக ருசி பிறந்தால் அவ்வளவிலே ராஜஸராயும்

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
தன் மார்க்க ப்ரவர்த்தந பூஜா தத் விக்ரஹ ஸ்தாபன பஜ நாதிகளையும்
தத் தத் தேவதா விக்ரஹ துல்யத்வாதி பிரம விஷயமாம் படியான உன் திவ்ய மங்கள விக்ரஹங்களையும் எங்கும் வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்
உன் போல்வாரையும்
உன் ஸமர் அல்லாரையும் இல்லாத

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இங்கனே உன் பிரகிருதி பரவசராய் உன் நிக்ரஹத்தால் தானே அந்நிய விஷய ப்ரவணர்க்கு
அடியேன் எங்கனே உன்னில் ப்ராவண்யத்தைப் பிறப்பிக்கக் கடவேன்
எங்கனே என்பது இதில் அர்த்த ஸித்தம் –

———

அவதாரிகை

நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்று ஜகத்தைத் திருத்துகையிலே இவர் ஒருப்பட்ட பிரகாரத்தைக் கண்ட பார்ஸ்வஸ்த்தர்
இவர் பகவத் அனுபவம் பண்ணப் பரகு பரகு என்னாதே ஜகத்திலே கண் வைக்கப் பெற்றோம் இறே என்று ஸந்துஷ்டாராக
அத்தைக் கண்டவர்
அஸ்திரமான ஸம்ஸாரத்தை அகலத் தேடுமது ஒழிய அநுபவத்திலே ப்ராவண்யம் உடையோருக்கு

அனுபாவ்ய விஷய பிரகாசம் ஸங்கோசிக்குமோ என்று அருளிச் செய்கிறார் –

(எம்பார் -இருளே காண வில்லையே என்றார் அன்றோ)

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-

பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு –
துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –
பரிவதில் ஈசனை -1-6-

பதவுரை

எழுவதும்–ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும்–மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு–இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள்–எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும்–சென்று கழிவதையும்
கண்டு கண்டு–பார்த்துப் பார்த்து
எள்கல் அல்லால்–வருந்துதலே யல்லாமல்
இமையோர்க்கள் குழாம் -தேவர்கள் கூட்டம்–

தொழுவதும் வணங்குவதையும்–

சூழ்வதும் (பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும்.
செய்–செய்யப் பெற்று
தொல்லை மாலை–ஆதியந்த மில்லாதவனான திருமாலை
கண் ஆர கண்டு–கண்கள் த்ருப்தியடைய ஸேவித்து
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்–(அவன் பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்

உம்மைத் தொகை -தோழி சொல்ல இவள் பதில் என்பது தேறும்
கண்கள் துஞ்சுதல்–கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ–உள்ளதோ? (இல்லை என்ற படி.)

வியாக்யானம்

எழுவதும்
உத்பன்னமான பிரகாரத்தையும்
மீண்டே படுவதும்
உத்பத்தி தசையிலே மற்றைப்படியே நசிக்கிற பிரகாரத்தையும்

படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
உத்பன்னமாய் அநேக காலம் சென்று முடிகிற பிரகாரத்தையும்

இங்கு பட்டு என்று
முத்துப் பட்டு என்னுமா போலே உத்பத்தியைச் சொல்லுகிறது

கண்டு கண்டு எள்கல் அல்லால்
இப்படி அல்ப கால உத்பத்தி விநாசத்தையும்
சிர கால உத்பத்தி விநாசத்தையும்
பிரதி க்ஷணம் அபரோக்ஷித்து நெகிழுமது ஒழிய

இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்
அஸ்க்கலித (நழுவாத குறையாத )ஞானரான ஸூரிகளுடைய சங்கமானது
நித்ய அஞ்சலி பந்தத்தையும்
கைங்கர்ய பரராய்க் கொண்டு பரிசர ஸேவையையும் பண்ணா நிற்கிற

தொல்லை மாலைக்
இவ் வாத்மாவின் பக்கல் அநாதியான வாத்சல்யத்தை யுடையவனை

மால் என்று
பெரியவனாய் -ஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்

கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்
கண்கள் நிறையும்படி அனுபவித்துக் காலம் கழியும்படி
அத்விதீயமான ஆசையிலே நின்றவர்களுக்கும்

உண்டோ கண்கள் துஞ்சுதலே –
அவன் பக்கல் வைத்த கண்கள் செம்பளிக்கைக்கு விரகுண்டோ

பகவத் அனுபவ அபிநிவிஷ்டரானார்க்கு ஞான ஸங்கோசம் பிறக்க விரகு இல்லை என்று கருத்து –

——————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

கண் உறங்கிற்றோ
பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் உண்டு என்று கேட்டு அறிவார் உண்டோ

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்பது தவிர்ந்து
ஸூக ஸூபத்தராய் இரீர் என்று பகவத் அபிப்ராயமாக
தெளி விசும்பில் உள்ள இமையோர்கட்க்கு எல்லாம் இதுவே ஸ்வ பாவமாய் இருக்க
அவர்களில் ஒருவரான எனக்கு அது உண்டோ என்கிற
அபிப்ராயத்தால் இவ்வர்த்தத்தை ஸ்வ ஸித்தாந்தஸ்த்தரிலும் அறிய அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம் –

எழுவதும்
ஆதித்யாதி கிரஹங்கள் உதிப்பதும்

மீண்டே
உதய கார்யம் கழிந்தவாறே

படுவதும்
அஸ்தமிப்பதும்

படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
சதுர் முகர் செத்து அநேக கல்பங்களாகக் காலம் கழிவதும்

கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
ஸதா பஸ்யந்தி ஸூரய-ருக்வேதம் -என்கிறபடியே
இதுகளை எல்லாம் அவரோக்ஷித்துக் கண்டு ஐயோ என்ற
ஆர்த்த ஹ்ருதயம் ஒழிய நித்ய ஸூரி சங்கத்துக்கு கண் துஞ்சுதல் உண்டோ என்று அந்வயம்

இமையோர்க்கு விசேஷணம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் -என்பது

தொல்லை மாலை
அநாதியாக த்ரிவித ஆத்ம வர்க்கத்தில்
ஆதேயத்வ சேஷத்வ ஸ்வா யத்த சத்தாஸ்தேம ப்ரயத்ன பலத்வங்களால்
ஸ்வ தேஹமாகவே விபூதி த்வயத்திலும் எப்போதும் மால் செய்யுமவனை ஸதா கண்டு கொண்டு
ஸ்வா பாவிக ஸர்வ ஸாஷாத் காரம் உள்ளவர்களாய் என்றபடி

கண்ணார
யாவத் தர்மபூத ஞான வியாப்தியும்

திவ்ய விக்ரஹங்களில்
தொழுவதும் -அடிமை செய்வதும்
நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே -ஸ்ரீ கீதை -11-40-

சூழ்வதும்
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –திருப்பல்லாண்டு -12-
யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -என்றபடி செய்து கொண்டு

கழிவதோர் காதல் உற்றார்க்கு
காலம் கழியக் கழிய அத்விதீயமான அன்பும் ஆர்வமும் வளர்ந்து வருமவர் களானவர்களுக்கு

உண்டோ கண்கள் துஞ்சுதலே –
கண்கள் துஞ்சுதல் உண்டோ
அவர்களில் தலைவனான எனக்கு அது இல்லை என்பது கை முத்ய ஸித்தம் என்று அபிப்ரேதம்-

————–

அவதாரிகை

இப்படி அனுபாவ்யனான ஈஸ்வரனுடைய-1- மேன்மையிலும் -2-நீர்மையிலும் உண்டான

போக்யதை பரிச்சேதிக்க அரிது என்கிறார்

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –

பாசுரம் -98-துஞ்சா முனிவரும் அல்லாதாவரும் –
துறையடைவு-தலைவனது அருமையை தோழி கூறுதல் –
கெடுமிடராய-10-2-

பதவுரை

துஞ்சா முனிவரும்–கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும்-ஸநகாதி முனிவர்கள் -ப்ரஹ்ம ஏக பாவனை
அல்லாதவரும்–தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று–பின்பற்றி வழிபட நிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான்–(அடியார்களுடைய) குறைவற்ற -சுருக்கம் அற்ற -பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத–தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத
தனிபெரும் மூர்த்தி தன்–ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.
வெண்ணெய் ஊண் என்னும் ஈனம் சொல்–வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழி சொல்லுக்கு இடமான
மாயம்–ஆச்சரியம்
இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்–ஞான சங்கோசம் இல்லாத நித்ய ஸூரிகள்
செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது–நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.

செவ்வே நெஞ்சால்-திருட்டுக்கு உண்மையான -யதார்த்த ஆழ்ந்த ஞானம் கொண்ட நெஞ்சு-யோ வேத்தி தத்வதக

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
முடிவில்லாத மனனத்தை யுடைய ஸநகாதிகளும்

அல்லாதவரும்
ஸ்வ அதிகார தத் பரரான ப்ரஹ்மாதிகளும்

தொடர நின்ற
தந்தாமுடைய அபிமத ஸித்தி யர்த்தமாக அனுவர்த்திக்க
அவர்களுக்குப் புருஷார்த்த ப்ரதனாய் நின்ற

எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
குன்றாது இருக்கிற சரீர ஸம்பந்த நிபந்தனை துக்கத்தைப் போக்குமவன்
சரீர ஸம்பந்தம் அறுக்கை ஈஸ்வரனுக்கு ஸ்வா பாவிக வேஷம்
அல்லாத புருஷார்த்தங்களை அபேக்ஷைக்கு ஈடாகக் கொடுக்கும் என்றபடி

இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபரிச்சின்ன ப்ரகாஸ யுக்தரான நித்ய ஸூரிகளுக்கும்
தன்னோடு சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி அத்யந்த விலக்ஷணமாய்
த்ரிவித (கால தேச வஸ்து )பரிச்சேத ரஹிதமான ஸ்வரூபத்தை யுடையவன்

இவ் விடத்தில் மூர்த்தி என்று
ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது
ஸ்வாமித்வம் ஆகவுமாம்

(தன் சார்வு இல்லாத மூர்த்தி
தனி மூர்த்தி
பெரு மூர்த்தி)

தன் சால்வு -என்றபாடமாய்
தன்மை இல்லாத என்றுமாம்

தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
இப்படி பெரியனானவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதமானது
நேரே நெஞ்சால் பரிச்சேதித்து நினைக்கை அரிது

அவ் வாச்சர்யம் ஏது என்னில்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
வெண்ணெயை அமுது செய்தான் என்று சொல்லப்பட்ட அபக்ருஷ்ட வசனம்
இவ் வபதானத்திலும்
இவ் வபதான ப்ரஸம்ஸியான வசன ஸாரஸ்யம் தான் பரிச்சேதிக்க அரிது என்று கருத்து –

(அவனது சீற்றமும் அருள் தானே
எந்த குணமும் எந்த சேஷதீதமும் அவன் இடம் இருப்பது ஸ்ரேஷ்டம்)

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கக் கடவேன் என்றீர்
பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்குக் கண் உறக்கம் இல்லை என்றீர்
இப்படி கிடந்தது அலமாவாதே உம்முடைய பாழி யன்றோ கிருஷ்ண அவதாரம்
நவநீத ஸுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்து ஈடுபடுமவர் அன்றோ நீர்
ஆனபின்பு அத்தை அனுசந்திக்கப் பார்த்தாலோ என்ன
அல்லா இடங்களில் கரை மேலே யாகிலும் போகலாம்
இதில் இழிய என்றால் நினைக்கவும் போகாது
அதில் இழிவதில் கை வாங்கி இருக்கையை நன்று என்கிறார் –

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
ஸம்ஸாரிகள் ஸப்தாதி விஷயங்களிலே உணர்ந்து இருக்குமா போலே
ஆத்ம விஷயத்திலும் ஈஸ்வர விஷயத்திலும் உணர்த்தியை உடையவர்களாய்
தமோ குண அபி பூதர் இன்றிக்கே இறே ஸநகாதிகள் இருப்பது
யா நிசா –ஸ்ரீ கீதை -2-69-
இவர்கள் தங்களை ஸர்வேஸ்வரன் ஸ்ருஷ்டிக்கைக்கு உடலாக உண்டாக்கி இருக்கச் செய்தேயும்
ஜன்மாந்தரத்தில் ஸூ ஹ்ருதத்தாலே ஸம்ஸாரத்தில் விரக்தராய் முமுஷுக்களாய் இருக்கிறபடியைக் கண்டு
இவர்கள் இதுக்கு ஆள் அல்லர்
இதுக்கு புறம்பே ஆள் தேடிக்கொள்ள வேணும் -என்னும்படி இருந்தவர்கள் இறே

அல்லாதவரும்
ஸூஹ்ருத தாரதம்யத்தாலே அவர்கள் போல் அன்றிக்கே
கர்ம பாவனையும் ப்ரஹ்ம பாவனையும் இரண்டும் கூடி இ ப்ரஹ்மாதிகள் இருப்பது

எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஒருகாலும் சுருங்கக் கடவது அன்றிக்கே முடிவு காண ஒண்ணாத படியாய்
அனாதையாய் வருகிற ஜென்ம பரம்பரையால் உண்டான இடரைத் தவிர்த்துக் கொள்ளுகைக்காக
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
இவ்வகண்ட காலத்தில் சிஷ்ய குரு பரம்பரா விச்சேதம் இல்லாமலே சாதன பக்தி யதிக்ருதரான ஸர்வரும்

அல்லாதவரும்
அப்படியே ஸாத்ய பக்தி க்ருதரான ஸர்வரும்

மற்றும் ஸ்ரோத ஸ்மார்த்த கர்மாதி க்ருதரும்

தொடர நின்ற எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஸம்ஸாரி ஆத்மாவைத் தொடர்ந்து நின்ற எண்ணப்படாத ஜன்ம பரம்பரைகளால் வந்த ஜரா மரணாதி துக்க பரம்பரையைக்

கடிவான்
நிச்சேஷமாக நிவர்த்திக்குமவன்

இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
நித்ய ஸூரிகளுக்கும் ஸ்வ விக்ரஹங்களால் தன் விக்ரஹங்களுக்குச் சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி
அத்விதீயமான ஸ்வ பாவமுள்ள திவ்ய மங்கள விக்ரஹங்களையும்
அப்படியே அபரிச்சின்னமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுமுடையவன்

தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் மாயிநம் து மஹேஸ்வம் -ஸ்வேதாஸ்வரம்
மயே த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ஸ சதாசனம் -ஸ்ரீ கீதை -9-10-
ப்ரக்ருதிக்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-39-இத்யாதிகளில்
சொல்லப்பட்ட அவனுடைய ப்ரக்ருதி ஸ்வரூபாதிகள் தான் வாங் து மனஸ் பரிச்சேத்யமோ

நெஞ்சால் தான் இவ்வளவு என்று எண்ணப் போமோ
இனி அவன் ஸ்வரூபாதிகளையோ இவ்வளவு என்று எண்ணுவது
மூடர்காள் ஸ்ருதிகளாலும் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம் என்னப்பட்ட
அவன் ஆனந்தாதிகளில் நாம் அபரிச்சிந்ததையைச் சொல்ல வேணுமோ

வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
அவனுடைய ஒரு கிருஷ்ண அவதாரத்தில் ஒரு போதில் வெண்ணெய் யூண் தான் தத் காலகத்தில் சொன்ன ஹிதச் சொற்கள் தான்
பக்தர் நெஞ்சால் தான் நினைத்துத் தரிக்கப் போமோ
ஒவ்வொன்றில் -எண்ணானாய் என்னானாய் -திருநெடும் -10-என்று உருகினீராய் நீ மக்நராய்க் போக வேண்டாவோ -என்கிறார் –

——————-

அவதாரிகை

போக்யதையில் நவநீத ஸுர்ய அபதாநத்தில் காட்டில் இல்லை என்றீர்
ஸம்ஸார உத்தாரணத்துக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இவ்விஷயத்தை என்ன
பிரஜை விழுந்த கிணற்றிலே ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே

ப்ரளயம் கொண்ட பூமியை முழுகி எடுத்த மஹா உபகாரகனே என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்கிறார் –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-

பாசுரம் -99-ஈனச் சொல் ஆயினும் ஆக –
துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –
செஞ்சொல் கவிகாள் -10-7-

பதவுரை

ஈனம் சொல் ஆயினும் ஆக–(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) -பிரயோஜனம் அல்லாத -இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம்–வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
ஏனத்து உரு ஆய் கிடந்த–பாதாளத்தில் இருந்தும் -வராஹ மூர்த்தியாய்க் கோட்டாற் குத்தி எடுத்து வந்த
பிரான்–தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும்–பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும்–அவர்களலல்லாத நித்ய ஸூரிகள் -மற்றும் மனிதர்கட்கும்
மற்று எல்லாயவர்க்கும்–மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம்–அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால்–தலைவனுமாகிய எம்பெருமானையன்றி
நான் கண்ட நல்லது இல்லை–நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.

வியாக்யானம்

ஈனச் சொல்லாயினுமாக
நான் சொல்லுகிற பரமார்த்தம் விமுகரான ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாதே இகழும்படி தண்ணிதான சொல்லாகிலுமாக
அர்த்த பவ்ருஷாதிகள் (சொத்து வீரம் )ரக்ஷகம் என்று நினைத்து இருக்கிற தேஹாத்ம அபிமானிகளுக்கு

ஸாஸ்த்ர கம்யமான பகவத் விஷயம் உத்தார ஹேது என்று உபதேசிக்கை
இகழுகைக்கு உறுப்பாம் என்று கருத்து –

எறி திரை வையம் முற்றும் ஏனத்துருவாய் யிடந்த பிரான்
எறிகிற திரையை யுடைத்தான ப்ரளயத்திலே பூமி எல்லாவற்றையும்

நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தைப் பரிக்ரஹித்து
அண்ட கபாலத்தில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த மஹா உபகாரகன்

இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்
அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய

செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்

(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)

அல்லாதவர்க்கும்
அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்

மற்று எல்லா யவர்க்கும்
இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்

ஞானப் பிரானை யல்லால் இல்லை
ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே
உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை

நான் கண்ட நல்லதுவே –
நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்துக் கிடப்புதீர் என்று அறிகிறிலோம் -உம்மை விஸ்வஸிக்கப் போகிறது இல்லை
அத்ய ராஜ குலஸ் யாஸ்ய த்வததீனம் ஹி ஜீவிதம் புத்ர வ்யாதிர் நதே கச்சித் சரீரம் பரி பாததே -அயோத்யா -87-9-
ரஸவாதம் கீழ் போனால் போலே பரதாழ்வான் மோஹித்துக் கிடக்கத் திருத்தாய்மார் சொல்லுகிறார்கள் –
படைவீடாக உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்க இருக்கிறது
சக்கரவர்த்தியும் துஞ்சினான்
பெருமாள் காடேறப் போனார்
நீ இருந்தாய் என்று அன்றோ நாங்கள் இருப்பது
உன் முகத்தில் பையாப்புக் கண்டால் மீளுவர் என்னும் நசையாலே யன்றோ ஜீவித்துக் கிடக்கிறது
நீ இல்லை என்று அறிந்தால் இத் திக்கு என்று நோக்குவதோ
புத்ரேத்யாதி அபி வ்ருஷா -அயோத்யா -59-4-என்கிறபடியே படை வீட்டில் சுத்தாவரங்களும் கூட நோவு ஒன்றாய் இருக்கச் செய்தே
பிள்ளாய் உனக்கு நோவு என் என்று கேட்க வேண்டும்படி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி
இப்படி ஸத் ப்ரக்ருதிகளாய் இருக்கையாலே இன்ன போது மொஹிப்பார் என்று தெரிகிறது இல்லை
ஸுலப்ய குணத்தை உபதேசிக்கப் புக்கு எத்திறம் என்று மோஹித்துக் கிடக்குமவர் இறே இவர்
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்கப் புக்கால் பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
(அத்தை இத்தை பரத்வத்தை ஸுலப்யத்தை ) ப்ரசங்கித்து சிதிலராய்க் கிடப்பர்
அத்தைக்கு கூரத்தாழ்வான் கண்டு -மஹா பாஷ்யம் கற்று சதுரஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே
பகவத் குண ப்ரசங்கத்திலே சிதிலராம்படி பிறந்த உம்முடைய ஜென்மம் ஒரு ஜென்மமே -என்று கொண்டாடினான்
ஆழ்வான் வீராணத்தில் ஒரு பெண் பிள்ளையை குடங்காலிட்டு
கள்வன் கொல் யான் அறியேன் -பெரிய திருமொழி -3-7-1- என்று சந்தையிட்டு மேலடி தோற்றாமல் மோஹித்தாராம்
இப்படிப்பட்டவர் இறே தன்னை வன்னெஞ்சராகச் சொல்லுகிறார்-
ஸ்வாமிகள் திருமழிசை தாஸரும் நஞ்சீயருமாகத் திருவாய் மொழி ஓதா நிற்க

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவனே
அவன் சரமத்தால் யுக்தார்த்த ஞானமே உங்களுக்கு மோக்ஷ உபாயத்தில் நல்லதும்
அவனை அல்லால் மற்றொரு ஸித்த உபாயமாவை இல்லை
அவனால் யுக்த உபாயம் அல்லது வேறொரு ஸாத்ய உபாயம் இல்லை
இது என் ஸித்தாந்தம் என்கிறார் –

—————————–

அவதாரிகை

இப்படி ஸர்வேஸ்வரன் திருச் செவி படும்படி(கேட்டு அருளாய் )
தத் விஷயத்திலும்
ததீய விஷயத்திலும்
தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தையும்
தத் விஸ்லேஷ ஹேதுவான தேச வாஸாதிகளால் உண்டான உத்வேக யோகத்தையும் வெளியிட்டு
இம் முகத்தாலே தம்முடைய விருத்த கீர்த்தனம் பண்ணின இப்பிரபந்தத்தில் அபி யுக்தரானவர்களுக்குப் பலம்
தாம் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேக்ஷித்த ஸம்ஸார நிவ்ருத்தி என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-

பாசுரம் -100-நல்லார் நவில் குருகூர் நகரான் —
துறையடைவு–
முனியே நான்முகன் -10-10-

பதவுரை

நல்லார்–நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில்–புகழ்ந்து கூறப்பெற்ற
குருகூர் நகரான்–திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால்–லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர்–திருநாமங்களை
நல்லார்–பயின்றவரான அடியார்களுடைய
அடி–திருவடிகளாகிற
கண்ணி–பூமாலையை
சூடிய–தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன்–நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த–(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல்–சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும்–இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
பிறப்பு ஆம்–ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை–ஆத்மாவை கெடுக்க வல்ல கொடியவையாய் போக்க முடியாதவையான அரியதான  ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல்–ருசி வாசனைகளை பிறப்பித்து வஞ்சிக்குமதான  கொடிய சேற்றின் அடர்த்தியை யுடைய
பொய் நிலத்து–பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார்–அழுத்தமாட்டார்கள் (முக்தராகப் பெறுபவர்கள் என்றவாறு.)

வியாக்யானம்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
நல்லார் ஆகிறார் ஆச்சார்ய விஷயத்திலே சேஷத்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு
ஈஸ்வரனை தத் ஸம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் மதுரகவிகள் போல்வார்

அவர்களாலே நவிலப்பட்ட-ஸ்துதிக்கப்பட்ட -திருக்குருகூர் என்று
திரு நாமமான திரு நகரி யுடையவர்-

திரு மால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மூல மந்த்ர த்வயங்களில் அர்த்த அபி யுக்தரான பரம பாகவதருடைய திருவடிகள் ஆகிற
பூம் கொத்தை சிரஸா வஹித்துப் போருகிற ஆழ்வார்

இத்தால் -ஸஹோ வாஸ வ்யாஸ பாராசர்ய -யஜுர் என்றும்
வால்மீகிர் பகவான் ருஷி -பால -4-1- என்றும் சொல்லுமா போலே
விலக்ஷண பரிக்ரஹத்தையும்
ஜென்ம தேச பூர்த்தியையும்

வல்லார் அடிக்கண்ணி சூடிய என்று ஞானாதிக்யமும் சொல்லுகையாலே
பிரபந்த கர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்த தமத்வம் தோற்றிற்று

விண்ணப்பம் செய்த
என்று பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப ஞானம் ப்ரகாசிக்கையாலே
பிரம விப்ர லம்பாதி தோஷ ராஹித்யம் தோற்றிற்று –

சொல்லார் தொடையில்
என்று ஸப்த சந்தர்ப்பத்தை மாலாகாரம் ஆக்குகையாலே
இது கர்த்தவ்ய புத்த்யா செய்தது அன்று -கைங்கர்ய புத்த்யா செய்தது என்றபடி

இந்நூறும்
என்று இப்பாட்டுக்கள் நூறும் தனித்தனியே மாலா ரூபமாய்
பகவத் விஷயத்துக்கு சிரஸா வாஹ்யமாயும் ஹ்ருத்த்ய மாயும் இருக்கிற படி உகப்புக்கு விஷயம் என்றதாயிற்று –

வல்லார்
இப்பாட்டு நூற்றினுடையவும் பாவ கர்ப்பமான அர்த்தத்தை அனுசந்திக்க வல்லவர்கள்

அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –
பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –நிலத்து – அழுந்தார்
பிறப்பாலே உண்டாகக் கடவதாய் துக்க ஹேதுவாய் இருக்கிற
கடக்க அரிய கர்மத்தை யுடைத்தாய்
அறிந்தாலும் கால் வாங்க ஒண்ணாத படியான ஆச்சர்யத்தை யுடைத்தான
புத்ர தாராதி சங்கம் ஆகிற சிக்கென்ற சேற்றையும் கொண்டு முழுக்கும்படியான நரகம் ஆகிற அள்ளலை யுடைத்தாய்
அஸத்ய ஸப்த வாஸ்யமான ப்ரக்ருதி மண்டலத்தில் எழுந்தார்கள்

பொய்ந் நிலத்தில் அழுந்தாரே
என்று ஏகாரம் தேற்றம் ஆகவுமாம்

பொய்ந் நிலத்தே என்று ஈற்று அசையாகவுமாம்

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டில் பிரபந்தம் கற்றாருடைய பேறு சொல்லுகிறது
பகவத ப்ரஸாத லப்த்த ஞானத்தை யுடையீருமாய்
இப்படி அறுதியிட்டுக் காண்கைக்கு ஈடான சக்தியை யுடையீருமாய் இருக்கையாலே நீர் இப்பேறு பெற்றீர்
உம்மைப் போலே ஞானம் இன்றிக்கே பாக்ய ஹீனராய்ப் பிற்பாடருமான ஸம்ஸாரிகள் செய்வது என் என்ன
அவர்களுக்கு என்னத்தனை ஞானம் இல்லையே யாகிலும் நான் சொன்ன இப்பாசுர மாத்ரத்தைச் சொல்ல வல்லாரும் எல்லாம்
நான் பெற்ற பேறு பெறுவார்கள் என்கிறார்

வியாக்யானம்

நல்லார் நவில்
லோகத்தில் சத்துக்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னும் அத்தனை
ராமோ ராமோ ராம -யுத்த -131-101-இதிவத்
ஸர்வதா பிகத ஸத்பி -பாலா -1-16-
பெருமாள் ஸ்ரமம் செய்து விட்டு ஒரு நிழலிலே இருந்த அளவிலே பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனரானவர்கள்

தங்களுக்கு உறுப்பானவை கற்கைக்காக வந்து படுகாடு கிடப்பர்கள்
ஸமுத்ர இவ ஸிந்துபி
இப்படிக் கிடக்கிறது இவர் குறை நிரப்புகைக்கோ என்னில் பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புகைக்கு அன்று இறே ஆறுகள் வந்து புகுருகிறது
நடுவு தரிப்பில்லாமை இத்தனை இறே
பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு -7-4-4-என்னுமா போலே இவர்களை நல்லார் என்னும் இத்தனை ஒழியப் பாசுரம் இடப்போகாது
இவர்கள் பேச்சுகளும் தலை மிக்கு இருக்கும்

திருமால் இத்யாதி
அவர்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னா நிற்கச் செய்தே
இவர் தாம் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் –எம்மை ஆளும் பரமர் –3-7-1- என்னா நிற்பார்

ஸ்ரீ யபதியினுடைய திரு நாமங்களை சொல்லுகைக்கு அதிகாரம் உள்ளவர்களுடைய
திருவடிகளாகிற மாலையைச் சூடுகிற இத்தையே நிரூபகமாக யுடைய ஆழ்வார்

விண்ணப்பம் செய்த
அடியேன் செய்யும் விண்ணப்பமே -திருவிருத்தம் -1-என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த வார்த்தை யாயிற்று

சொல்லார் தொடையல்
ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா
பாட்யே கேயே சதுரம் -பாலா -4-8- என்று இருக்கிற இதில்
ஸாரஸ்யத்துக்காக ஆதரிக்க வேண்டும்

இந்நூறும்
பாரதம் போலே பரந்து இருத்தல்
ப்ரணவம் போலே சுருங்கி இருத்தல் செய்யாதே நூறு பாட்டாய் ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை

வல்லார் அழுந்தார்
பலத்தை முற்படச் சொல்லுகிறார்

அது எங்கே என்னில்
பிறப்பாம்
ஜென்மம் ஆகிற

பொல்லா
ஞான ஆனந்த லக்ஷணமாய்
ஈஸ்வர சேஷமாய் இருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு அனுரூபம் அன்று இறே அசித் ஸம் சர்க்கம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -81-90–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

May 2, 2022

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ்வஸிப்பிக்க வேணும் என்று பரிவரானவர்கள்
தங்கள் பிரிவின் கனத்தாலே முகாந்தரங்களாலே இவர் ஆர்த்தியை
சமிப்பிக்க வேணும் என்று உத்யோகித்து
இவர் பிரகிருதி அறிந்தவர் இவ்வார்த்தி சமிக்கும் ப்ரகாரங்களிலே இழியாதே
ப்ரகாராந்தரங்களிலே இழிந்து என்ன கார்யம் செய்கிறார் என்று
தம்மிலே வெறுத்து உரைத்த பாசுரத்தை

தலைவி தளர்த்தி கண்டு தாயார் முதலானார் வெறி யாடலுற
தலைவி நினைவு அறிந்த பாங்கி வெறி விலக்க லுற்ற
அவர்கள் கேட்கும்படி தன்னில் உரைத்த பாசுரத்தாலே (முன்னிலை படர்க்கை )
அருளிச் செய்கிறார் –

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81

பாசுரம் -81–உறுகின்ற கன்மங்கள் மேலன-
துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –
வீடுமின் முற்றவும் -1-2-

பதவுரை

ஓர்ப்பு இலர் ஆண்–(இவளுக்கு நேர்ந்துள்ள நோயின் தன்மையையும் அதன் காரணத்தையும்
அத்தனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய்
கூறுகின்ற–(இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள்-(வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன–மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர்–இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல்–உடம்பு வருந்திப் பெற்றாரில்லையோ?
குழல்வாய்–(இவளது) கூந்தலிலே
துழாய்–(எம்பெருமானது) திருத்துழாயை
கூறுகின்றிலர்–சூட்டுகின்றாரில்லை;
தொல்லை வேங்கடம்–பழமையான திருவேங்கட மலையிலே
ஆட்டவும்–இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
சூழ்கின்றிலர்–ஆலோசிக்கின்றாரில்லை;
இவள் ஆகம்–இவளது உடம்பு
மெல் ஆவி எரி கொள்ள–மென்மையான உயிரை விரஹத் தீக் கவர்ந்து கொள்ளும்படி
இறுகின்றது–முடிகறிவளவாகா நின்றது.

வியாக்யானம்

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய்
இவள் நோயின் தன்மை ஆராயாதே உற்று நடத்துகிற வெறியாட்டு
முதலான கருமங்கள் மேன் மேலுண்டாகா நின்றன

இவளைப் பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல்
இவளைப் பெறுகிற அளவிலே தாயாருடம்பு நொந்து பெற்றவராகக் கூடும்
வருந்திப் பெற்றார்கள் ஆகில் இவள் பிழைக்கும் வழியிலே முயலுவர் இறே
பிழைக்கும் வழி இல்லை இறே

துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்
திருத் துழாயைக் குழல் இடத்திலே நிரம்பச் சூட்டு கிறிலர்

தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
பழையதான பெரிய திருமலையிலே கொண்டு போகைக்கும்
விரகு பண்ணு கிறிலர்

ஆட்டுதல் –
அங்கே நடையாடப் பண்ணுதல்

சூழ்தல் –
விரகு செய்தல்
அன்றியே –
திரளுதல் ஆகவுமாம்

இறுகின்ற தாலிவாளகம்
இறுகின்றதால் இவள் ஆகம்
விரஹத்தாலே மெலிந்த இவளுடைய சரீரம் முடிகிற அளவாகா நின்றது –

மெல்லாவி எரி கொள்ளவே –
மிருதுவான பிராணனை விரஹ அக்னி க்ரஸித்து சரீரமும் முடியா நின்றது –

மெய் நொந்து பெறார் கோல்
என்று அந்வயம்

இத்தால்
பிரிவின் கனத்தாலே நிரூபியாமல் பிரகாராந்தரத்தாலே இவள் ஆர்த்தியைப்
பரிஹரிக்கத் தேடா நின்றார்கள்
பகவத் ப்ரஸாதமும்
தேச வாஸமுமே பரிஹாரமாய் இருக்க
அது செய்யாமையாலே சத்தையும் குலையும்படி சைதில்யமே விஞ்சா நின்றது –
இவர் அருமை அறிந்து வருந்திக் கிட்டினவர்கள் அல்லரோ இவர்கள் என்று
ப்ரக்ருதி அறிந்த ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரமாய் இருக்கிறது

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
இருள் போய் முடுகி
இவளும் மோஹித்துக் கிடக்க
இவள் அவஸாதத்தைக் காணா நிற்கச் செய்தேயும்
பந்து வர்க்கத்தில் உள்ளார்
க்ரமத்தில் பரிஹரிக்கிறோம் என்று ஆறி இருக்க
அத்தைக் கண்டு
இவளுடைய அவஸாதம் இருந்தபடி இது
ஸ்லாக்யதை இருந்தபடி இது
இப்படி இருக்க இவர்கள் ஆறி இருக்கைக்கு இவளை
நேர் கொடு நேரே பெற்றவர்கள் அன்றோ என்று
இங்கனே ஒரு மூதறிவாட்டி சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம் –

உறுகின்ற-இத்யாதி
இவர்கள் நிரூபிக்கட் கடவதொரு கார்யம் இல்லையோ
என்கிறாள்

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய்
மேல் வரக் கடவதானவை வர்த்தமானம் போலே இருக்க
வந்து கிட்டி நிற்கிற கார்யங்களை ஒன்றும் ஒரக் கடவர்கள் அன்றிக்கே

இவளைப் பெறுகின்ற தாயர்
இவளை பெற்ற தாயார்களுக்கு எப்போதும் ஓக்க வயிறு எரிந்த படியேயாய்
இருக்க வேண்டாவோ
ஒரு லாப அலாபங்கள் வேணுமோ
இவள் தானாகவே அமையாதோ

மெய்ந்நொந்து பெறார் கொல்
இவளைப் பெற்றவர்கள் உடம்பு நொந்து அன்றோ பெற்றது
வளர்த்துக் கொண்டது அத்தனையோ

என் தான்
இப்படிச் சொல்லுகைக்கு இவர்கள் செய்யாதது என் என்ன

துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்
மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்னும் அளவு போயிற்று
கடக்க நின்று வீசும் அளவு போராதே
அது தன்னையே கொடு வந்து குழலிலே நிரம்பத் துற்க வேண்டும்படி யாயிற்று தசை முறுகின படி

தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர் இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே –
இக்குடிக்குப் பழையதாகச் செய்து போரும் பரிகாரத்தையும் செய்கிறிளர்கள்

வேங்கட மாட்டவும்
கல்லும் காடுமாய் இருக்கிறதடைய ஒரு தடாகம் போலே யாயிற்று
இவளுக்குத் தோற்றுகிறது

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி -மோக்ஷ தர்மம் –4-50-

————

அவதாரிகை

இப்படி அனுபவ அலாபத்தாலே சிதிலரானவர்
தம்மை பிரதம அங்கீ காரம் பண்ணின ஈஸ்வர கடாக்ஷம் தான்
நமக்குத் பரிதாப ஹேதுவான ப்ரகாரத்தை நாயகனான ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண்களைக் கண்டு அனுபவிக்கப் பெறாமையாலே
அவை தானே பரிதபிப்பிக்கிற பிரகாரத்தை
நாயகி தோழியர்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82-

பாசுரம் -82–எரி கொள் செந்நாயிரு இரண்டுடனே-
துறையடைவு–தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —
உருகுமால் நெஞ்சு -9–6-

பதவுரை

எரிகொள்–வெப்பத்தைக் கொண்ட
செம் ஞாயிறு இரண்டு–சிவந்த இரண்டு ஸூர்ய மண்டலம்
உடனே–ஒருங்கே
உதயமலையாய்–உதய பர்வதத்திலே
விரிகின்ற–தோன்றி விளங்குகிற
வண்ணத்த–தன்மை போன்ற தன்மையை யுடைய
எம்பெருமானது கண்கள்–எம்பெருமானது திருக்கண்கள்,
அவற்றுள்–அந்த ஸூர்ய வடிவங்களிலே
எரிகொள்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுகிற
செம் தீ–சிவந்த நெருப்பிலே
மீண்டு வீழ்–(வேறு புகலிடமில்லாமையால்) மீண்டும் வந்து விழுந்து இறக்கிற
அசுரரை போல–(பகைவரான கொடிய மாந்தேஹரென்னும்) அஸுரர்களுக்குப் போல
எம் போலியர்க்கும் (அநுகூலரான மெல்லிய) எம்போன்றவர்களுக்கும்-
விரிவ–தாபஞ்செய்வனவாய்ப் பரவுகின்றன;
முன்னம் தோன்றா நின்றன -உருவ வெளிப்பாடு
வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
இதுவோ–இதுதானோ?
சொல்லீர்–சொல்லுங்கள்.

எம்போலியர்க்கும்-பகவத் விஷயத்தில் பிரேம உக்தரான எம் போல்வாருக்கும்

வியாக்யானம்

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த
சிவப்பாலும்
ஒவ்ஷ்ண் யத்தாலும் அக்னி ஸ்வபாவத்தைக் கொள்ளுவதாய்
உதய தசையில் ராகத்தை யுடைத்தான ஆதித்யனுடைய இரண்டு வடிவு
ஏக காலத்திலே ஸஹ சரிதமாய்
உதயகிரி இடத்திலே பரம்புகிறது என்னலாம் படியான ரூபத்தை யுடையன ஆயின

எம்பெருமான் கண்கள்
அடியிலே என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஸ்வாமியினுடைய திருக்கண்கள்

மீண்டவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே
அந்த ஆதித்ய ரூபங்களுக்குள்ளே காயத்ரீ பூதமான அர்க்ய ஸக்தியாலே
ஜ்வலித்துக் கொண்டு தோற்றின சிவந்த அக்னியில் ஆதித்யனுக்கு பாதகராய் வந்து
நாங்களே மீண்டு விழும்படியான மந்தே ஹாதிகளான ஆஸூர ப்ரக்ருதிகளைப் போலே
(மந்தேஹர் ராக்ஷசர் -அசூரத் தன்மை உள்ளவர் )

எம்போலியர்க்கும் விரிவ
ஆனுகூல்யம் யுடையவராய்
அபலைகளான நம் போல்வாருக்கும்
தாஹகங்களாய்க் கொண்டு பரம்பா நின்றன

சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி –7-1-9-என்கிறபடியே
இந்தக் கண்ணோ லோகத்தை எல்லாம் வெளிச் செறிப்பித்து ரஷித்தது
இப்படி பாதகங்களான இவற்றுக்கு அந்த ரக்ஷகத்வம் உண்டான படி என் -சொல்லீர் என்று
தன் ஆற்றாமையைத் தோழிக்கு உரைத்தாள் யாயிற்று –

இத்தால்

ஜிதம் தே புண்டரீகாக்ஷ -என்கிறபடியே
பிரதமத்திலே சேஷித்வத்தைப் பிறப்பித்த ஸ்வாமி கடாஷமானது
அனுபவத்தைக் கொடாமையாலே
பிரதிகூல விஷயத்தில் பரிதாப ஹேதுவாமோபாதி
அனுகூலரான நமக்கும் ஆர்த்தி ஜனகமாகா நின்றன
இது லோகத்துக்கு ரக்ஷகமான படி எங்கனே என்று
ஸூஹ்ருத்துக்களுக்கு (பாகவத உத்தமர்களுக்கு ) நொந்து உரைத்தார் ஆயிற்று

விளரி என்று
வெளுப்பாய்
வெளிச் செறிப்பிக்கிற முகத்தாலே
ரக்ஷணத்தைச் சொல்லிற்று ஆயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஜீயர்
எனக்கு இப்பாட்டுச் சொல்ல அநபிமதமாய இருக்கும்
என்று அருளிச் செய்வர்
உரு வெளிப்பாட்டாலே ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் பாதகமாகிறபடியைச் சொல்லுகிறது
இவளுடைய ஆற்றாமை யுண்டாகில் இறே இப்பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
ஆதித்ய உதய விரோதி மந்தேஹர் மேல் பிரயோகித்த படியால்
அத்தால் உத்பூத சக்திக ஆதித்யனால் உத்பூத ப்ரஜ்வவநாத்ய குணாக்னியில் விழுந்து
நசிக்கிற அசூரரைப் போலே என்னைப் பார்ப்பது
என்னைப் போன்ற வரீலுமாய்

இதுவோ வையமுற்றும் விளரியதே –விரிவ சொல்லீர்
இந்தத் த்ருஷ்ட்டி பூமி எங்கும் பரவா நின்றது
இதுக்கு என்ன உபாயம் சொல்லீர் என்று தன் தோழிமார்களைக் கேட்க்கிறாள்

மீண்டவற்றுன் என்றது
கச்ச அநு ஜாநாமி ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த–யுத்த -59-144-என்று
பெருமாள் அருளிச் செய்தும்
மூல பலத்தோடு வந்த ராவணாதி விஷயம் ஆகவுமாம் –

————–

அவதாரிகை

இப்படி இவருடைய சைத்திலயத்தைக் கண்ட பரிவர்
ஆஸந்நமான பாதக சந்நிதி இருந்தபடியால் இவர் தரித்து இருக்க அரிதாய் இருந்தது
என்று வெறுத்து உரைத்த பாசுரத்தை
நாயகன் பிரிவாற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
இனி இவளுக்கு இருக்கை அரிது என்று இரங்கி உரைத்த
தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – – -83 –

பாசுரம் -83-விளரிக் குரல் அன்றில் மென் பெடை-
துறையடைவு-அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –
உண்ணிலாய ஐவரால் -7–1-

பதவுரை

விளரி–விளரியென்னும் இசையையுடைய-உச்ச ஸ்வர கண்ட த்வநி
குரல்–குரலையுடைய
அன்றில்–அன்றிற்பறவை
மெல் பெடை–மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான
மூன்றில் பெண்ணை முளரி குரம்பை–முன் வாசலிலுள்ள பனைமரத்திலுள்ளதும் முட்களையரிந்து செய்யப்பட்டதுமான கூடு
மெல் ஆவியும்–(இவளது) மெலிவடைந்த உயிரும்
நையும்–(உடம்பின் ) இளைப்பும்
எல்லாம்–என்னும் இவையாவும்
இது இது ஆக–இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,
(இவ் வன்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு)
முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும்–காள மேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை
(வலியின்மையால் வருந்தி யெடுத்தெடுத்துக் கூறி வாய் பிதற்றும் படியான
தளரின் கொலோ–முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ
இ தையலுக்கு–இம்மகளுக்கு
உய்யல் ஆவது–(அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?
அறியேன்–அறிகிறேனில்லை.

முன்றில் பெண்ணை -முற்றத்தில் உண்டான பனை மரம்
முளரி குரும்பை -தாமரை பூவினால் செய்யப்பட கூடு

வியாக்யானம்

விளரிக் குரலன்றில்
விளரியாகிற ஸ்வரத்தை யுடைத்தாய் இருக்கிற குரலை யுடைய அன்றிலானது

குரல்
துத்தம்
கைக்கிளை
உழை
இனி
விளரி
தாரம் -என்று
ஷட்ஜ
ருஷப
காந்தார
மத்யம
பஞ்சம
தைவத
நிஷாதங்கள்
ஆகிற ஸப்த ஸ்வரத்துக்கும் பேராகையாலே
ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறது

விளரி என்று
ஒரு பண் என்றும் சொல்வர்

மென் பெடை மேகின்ற
புணர்ச்சியிலே துவண்டு மெல்லிதான பேடையோடே மேவிப் போருகிற

முன்றிற் பெண்ணை
முற்றத்திலே பனையிலே

முளரிக் குரம்பை யிதுயிதுவாக
முள்ளை அரிந்து செய்யப்பட்ட இந்தக் கூடு இவ் வன்றிலுக்கு இருப்பிடமாக-

முளரிக் குரம்பை என்று
தாமரையாலே செய்த கூடு என்னிலுமாம்

முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும்
இதினுடைய ஆர்த்தி ஸ்வரத்தாலே ஸ்மரித்து
ஸ்யாமளமாய்
ஸ்ரம ஹரமாய் இருக்கிற காள மேகம் போலே இருக்கிற வர்ணத்தை யுடைய
ஸர்வேஸ்வரனுடைய ஒவ்தார்ய ஸூசகமான திரு நாமங்களை
பல ஹானியாலே வருந்தி
எடுத்து எடுத்து
அக்ரமாகச் சொல்லும்படியான

மெல்லாவியும்
மெலிந்து
சென்று அற்ற பிராணனும்

நைவும்
அதுக்கு அடியான சரீர ஸைதில்யமும்

எல்லாம் தளரிற் கொலோ
ஓன்று ஒழியாமல் முடிந்தாலோ

அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே
இந்தப் பெண் பிள்ளைக்கு உஜ்ஜீவிக்கலாவது அறிகிறிலேன்

அறிகிறிலேன் -என்கையாலே
முடியவுமாம்
அவனைப் பெற்று ஆஸ்வஸிக்கவுமாம் என்று கருத்து

இத்தால்
தாம் இருக்கிற தேசத்திலே ஆசன்னமாக போக ப்ரஸக்தரானாரைக் கண்டு
தம்முடைய போக அலாபத்தாலே அது ஸ்மாரகமாக
ஆர்த்தி விஞ்சி பிரலாபிக்கிற பிரகாரத்தைக் கண்டவர்கள்
இவருக்கு போக சித்தி இல்லாத அளவிலே இவர் முடிந்து பிழைக்கும் அத்தனையோ
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அசிவதாரிகை

உரு வெளிப்பட்டாலே நோவு படா நிர்க்கச் செய்தே
அதுக்கும் மேலே வாசலிலே ஒரு பனையாய்
அப்பனையிலே தங்கிற்று ஓர் அன்றிலாய்
அது தான் வாய் அலகைக் பேடையோடே கோத்துக் கொண்டு இருக்கிறவித்தை
நெகிழ்த்தவாறே கூப்பிடக் கடவதாய்
அதனுடைய த்வனியிலே மோஹித்துக் கிடக்க
அத்தைக் கண்டு
இத்தினுடைய த்வனி இருக்கிற படி இது
இவளுடைய ஆற்றாமை இருக்கிற படி இது
இவளுடைய மார்த்வம் இருக்கிற படி இது
இவளுடைய ஸைதில்யம் இருக்கிற படி இது
இது எல்லாம் இருந்த படியாலே இவள் அபிமானதாம் கை புகுந்து ப்ரீதையாய் இருக்கக்
காண மாட்டோம் ஆகாதே என்று இங்கனே
திருத்தாயார் வார்த்தையாய் இருக்கிறது

பட்டர் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க
நஞ்சீயர் ஸ்ரீ ராமாயணத்தில் இவ்விடத்துக்குப் போலியாக அருளிச் செய்யலாம்
இடம் உண்டோ என்று கேட்க
இளைய பெருமாள் பிராட்டியைக் கொண்டு போய் விட்டுப் போந்த அநந்தரம்
அவளுடைய ஆர்த்த த்வனி கேட்ட வால்மீகி பகவானுக்கு இத்திருத்தாயார் படி யுண்டு
என்று அருளிச் செய்தார் –

வியாக்யானம் –

விளரிக் குரலன்றில்
விளரி என்று
உச்சமான த்வனிக்குப் பேர்
உயர்ந்த த்வனியை யுடைத்தாம் படி காரியப்பாடு அறக் கூப்பிடுகிற அன்றிலினுடைய

மென்பெடை
கலக்கும் போது பூத் தொடுமா போலே தொட வேண்டும்படி யாயிற்று மார்தவம்
இம்மார்த்வத்திலே விரஹமும் ஆனால் பாடாற்றப் போகாது இறே

மேகின்ற
மேவா நிற்கிற
நித்ய ஸம்ஸ்லேஷமாய்ச் செல்லா நிற்கும் இறே
அந பாயினிக்கு ஸ்மாரகமாய் இருந்தபடி

முன்றிற் பெண்ணை
முற்றில் என்று முற்றத்துக்குப் பெயர்
வாசலுக்கும் பேர்

முற்றில் பனை நடலாமோ என்று இவ்விடத்தை நிர்வஹியா நிற்க
வங்கி புரத்து நம்பியைச் சிலர் கேட்க
அதுவோ -இவள் கார்யம் தளிரும் முறியுமாய்ச் செல்லுகிறது என்று பணித்தார்

மூன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற அன்றிலின்
கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ -பெரிய திருமொழி –11-2-1-

அவரை வரப் பண்ணுவார் ஆரோ -என்றபடி –
அல்லது பிரிப்பன பிரித்துக் கூட்டுவது கூட்டித் திரிகின்றாள் அன்றே இவள்

முளரிக் குரம்பை
இத்தினுடைய ஸுகுமார்யத்துக்கு ஈடாகத் தாமரை இதழ்களையும் பூக்களையும் கொண்டு
வந்து கூடாகப் பண்ணி வைக்கும் இறே
அந்நிலத்தில் உள்ளவையாய் இருக்கும் இறே

அன்றிக்கே
முளரி என்று முள்ளாய்
முள்ளாலே செய்த கூடு என்னவுமாம்
முளரி என்று நெருப்புக்கு துடைப்பத்துக்கும் பேராகையாலே
இன்னெருப்பான கூடு இதுவாக
திருத்தாயார் பாசுரமாகையாலே சேரும் இறே

முளரிக் குரம்பை என்று

யிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே

—————–

அவதாரிகை

இப்படி பரிவரும் வெறுக்கும் படி ஆர்த்தரான இவர்
போக்ய பூதனான ஸர்வேஸ்வரனைக் காண ஆசைப்பட்டுத்
தம்மிலே அவனை நோக்கி ப்ரலாபித்த ப்ரகாரத்தை
நாயகியானவள் நாயகனான ஸர்வேஸ்வரனைப் புறம்பே திரளிடை யாகிலும்
காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84-

பாசுரம் -84-தையல் நல்லோர்கள் குழாங்கள் குழிய-
துறையடைவு-தலைவி தலைவனைக் காண விரைதல்–
மையார் கருங்கண்ணி -9–4-

பதவுரை

மைய வண்ணா–மையுடைய நிறம் போன்ற கரிய திருநிறமுடையவனே!
மணியே முத்தமே என்றதன் மாணிக்கமே–நீலமேணியும் முத்தும் மாணிக்கமும் போல
நிறத்தையும் அழகையும் ஒளியையும் உடைய எம்பெருமானே!
தையல் நல்லார்கள்–அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும்–கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள்–சிறந்தவர்களான நல்ல புருஷர்கள்
குழிய விழவினும்–திரண்ட திருவிழாக்களிலாயினும்-உத்ஸவங்களிலும்
அங்கு அங்கு எல்லாம்–இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும்–கைகளிலுள்ள பொன்னிறமான சக்கரத்துடனும் வெண்ணிறமான சங்கத்துடனும்
நான் காண்பான் அலாவுவன்–நான் (உன்னைக்) காண ஆசைப்பட நின்றேன்.

காண்பானவாவுவன் நான்-காண்பான் அவாவுவன் நான்

வியாக்யானம்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
விலக்ஷணை களான நாரீ ஸமூஹங்களானவை திரண்ட திரட்சி யுள்ளும்

குழாங்கள் குழிய குழு-என்கையாலே
அஸ் ஸமூஹம் தான் பலவாய்ச் சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது

ஐய நல்லார்கள் குழிய விழவினும்
பூஜ்யரான விலக்ஷண புருஷர்கள் திரண்ட மஹா உத்ஸவத்திலும்

அங்கங்கெல்லாம்
அவ்வவ் விடங்கள் எல்லாவற்றிலும்

கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
போக்யத்வ
ரக்ஷகத்வங்களுக்கு
ஸூசகமாய்
கற்பகக் கவடு விழுந்தால் போலே திருக்கைக்கு அலங்காரமாய்
ஒவ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவாழியோடும்
அத்யந்த பரி ஸூத்தமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும்
கூடக் காண வேணும் என்று ஆசைப்படா நிற்பன்

வந்து காண்கைக்குக் கால்நடை தாராத நான்

(கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -இவருக்கு
காரார் காணும் அளவு போய் -ஆடல்மா குதிரையில் கானால் விடேன் என்றவர் திருமங்கை ஆழ்வார்)

மைய வண்ணா
ஆசை யற்று இருக்க ஒட்டாத வடிவழகை யுடையவன்

மணியே
துர்லபன் என்று மீள ஒண்ணாத படி முடிந்து ஆளவானவனே

முத்தமே
நீர்மை இல்லை என்று தவிர வேண்டாதபடி முழு நீர்மை யுடைய ஸூத்த ஸ்வ பாவனே

என் தன் மாணிக்கமே
பிரகாஸ குண அதிசயத்தாலே என்னை உன் அநு ராகத்திலே
அகப்படுத்திக் கொண்டவனே -என்று
அவன் ஸ்வ பாவங்களைச் சொல்லிப் புலம்பினாள் ஆயிற்று

இந்தக் கிளவி
மள்ளர் குளீஇய விழவினானும் மகளிர் தலீஇய நுணங்கை யானும் யாண்டும்
காணேன் மாண் தக்கோனை -என்று அகத் தமிழிலும் சொல்லப் பட்டது-(குறுந்தொகை பாடல் )

இத்தால்
நமக்கு போக்ய பூதனான கிருஷ்ணனை
கோபீ ஜன மத்யத்திலும்
வித்வ ஜ்ஜன மயத்தை யுடைத்தான யாகாதி மஹா உத்ஸவத்திலும்
அசாதாரண சிஹ்னங்களோடே அனுபவிக்க ஆசைப்பட்டமை சொன்னார் ஆயிற்று

அன்றிக்கே
பாரதந்தர்ய காஷ்டா நிஷ்டரான பிரபத்தி நிஷ்டர் ஸமூஹத்திலும்
கர்ம கலாபாதி ப்ரவ்ருத்தி சீலரான கைங்கர்ய நிஷ்டர் ஸமூஹத்திலும் காண ஆசைப்பட்டார் ஆகவுமாம்

(கர்மமும் கைங்கர்யத்தில் புகும்)

அன்றியே
இரண்டும் ப்ராப்ய தசையிலேயாய்
வைகுண்டே து பர லோகே –பக்தைர் பாகவதை ஸஹ -லிங்க புராணம் என்றும்
அமரரும் முனிவரும் -திருவாய் -10-9-9-என்றும்
சொல்லுகிறபடியே
குண பரதந்த்ரரும் கைங்கர்ய வ்ருத்தி சீலருமான ஸூரி சங்கங்களைச்
சொல்லிற்று ஆகவுமாம்

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

மோஹத்துக்கு அநந்தரம் அரதியாய்
ஓர் இடத்திலே தரியாதே பகவத் அலாபத்தாலே அங்கேயிங்கே தடுமாறிக்
கூப்பிட்டுக் கொண்டு திரிகிற படியைச் சொல்லுகிறது

க்வசித் உத் பிரமதே வேகாத் க்வசித் விப்ரமதே பலாத் க்வசின்மாந்த இவாபாதி
காந்தான் வேஷண தத் பர -ஆரண்ய –50-36-

வியாக்யானம்
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
தையல் நல்லோர்கள் உண்டு ஸ்த்ரீ ரத்னங்கள்

குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
திரளாகத் திரண்ட திரள்களிலும்
பெண்கள் திரளைக் கண்டவாறே
திருக்குரவை என்று இருப்பார் ஆயிற்று இவர்

ஐய நல்லார்கள்
அறிவோர் அரும் தவத்தோர் ஐயர் என்று பண்டித வாசகங்கள்
ஐய நல்லோர்கள் உண்டு -பண்டிதராய் நல்லவராய் இருக்குமவர்கள்
அவர்களுடைய

குழிய விழவினும்
தீர்க ஸத்ரங்கள்
மற்றை யவற்றுக்காகத் திரள இருக்கிற படி இறே
அவற்றிலும் ஸ்ரீ தாண்ட காரண்யத்தில் ரிஷிகள் திரள் போலே இருக்கிற வற்றிலும்

ஸமாஜேஜூ மஹத் ஸூ ச -அயோத்யா –57-13 என்னுமா போலே

அங்கங்கெல்லாம்
அவற்றோடு போலியான இடங்கள் எல்லாவற்றிலும்

கைய பொன்னாழி வெண் சங்கோடும்காண்பானவாவுவன் நான்
திருவாழி இன்றிக்கே மனிச்சேயான அவதாரத்தோடு
அவற்றை மறைத்த அவதாரத்தோடு வாசியற
திவ்ய ஆயுதங்களோடே காண ஆசைப்பட்டு ஆயிற்று இவர் இருப்பது

ஆஸூர ப்ரக்ருதிகளுக்கு அன்றோ மறைப்பது
எனக்குக் காண தட்டென் என்று இருப்பார் ஆயிற்று

ஜா நாதும் அவதாரம் தே காம் சோயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13
ஸத் ப்ரக்ருதியானவன்
தேனைவ ரூபேண சதுர் புஜேந -ஸ்ரீ கீதை -11-45- என்றான் இறே

அவாவுவன் நான்
ஆசைக்காக கண் உண்டோ
காண வேணும் என்று ஆசைப்படும் இத்தனை போக்கிக் காண அரிது என்று அறிய மாட்டேன்
காண அரிதாகில் காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டார் யாரோ என்ன

மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே
விஷய தோஷம் இறே இதுக்கடி என்கிறார்
நற் சரக்கை இழந்தார் ஆறி இருப்பார்களோ

மைய வண்ணா
கண்டார் கண்ணிலே அஞ்சனம் எழுதினால் போலே குளிர்ந்து இருக்கிற படி

மணியே
அப்படியே இருக்கச் செய்தே முடிந்து ஆளலாய் இருக்கிறது

முத்தமே
உடம்பிலே ஏறிட்டுக் கொண்டால் விடாய் எல்லாம் தீரும்படி யாய் இருக்கை

என் தன் மாணிக்கமே
பெரு விலையனாய் இருக்கை –

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இதுக்கு மேல் தன் கணவனைக் காணாமல் பொறுக்க மாட்டாத நாயகியாய்
கோப ஸ்த்ரீ சங்க ஸேவ்யனான கண்ணனாயும் –
அத்வர்ய் வாதிகளோடு மஹா சாவாத்யரோத் சாயாதிக்ருதனான சக்ரவர்த்தி திருமகனாயும்
திவ்ய அப்சரஸ் சங்க திவ்ய ஸூரி சங்க பரிசரண விஷய பரமபத நிலயனாயும்
மற்றும் அங்கங்காக தத் தத் சங்க சேவ்யனாயும்
காண அவாவைப் பெற்று
அவனில் தன் ப்ரீத்யபி வ்யஞ்ஜகமான திரு நாமங்களை உரக்கச் சொல்லி
விமுக்த லஜ்ஜையாய்க் கூப்பிடுகிறார் இதில்

வியாக்யானம் –

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
நல் ஸ்த்ரீகள் கூட்டமாய்க் கூடின கூட்டத்திலும்

ஐய நல்லார்கள் குழிய விழவினும்
ஸத் புருஷர்களாய்க் கூடிச் செய்யும் உத்ஸவங்களிலும்

அங்கங்கெல்லாம்
இப்படியாக அங்கங்காக உள்ள சங்கங்களில் எல்லாம்

கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
திருக்கைத் தலங்களுக்கு அழகு பெறுத்தும் அழகுள்ள திருவாழி ஆழ்வானோடும்
திருச்சங்கு ஆழ்வானோடும் காண வேணும் என்று மிக்க அவனைப் பெற்ற நான்

மைய வண்ணா
கரு வளர் மேனியாய்க் கண்ணுக்கு இட்டுக் கொள்ளவான மை போன்றவனே

மணியே
ஸ்வாதீன நீல ரத்னம் போன்றவனே

முத்தமே
கருணை யாகிற தெளி நீரால் அதிசயித்து எங்களை வெள்ளுயிராக்க வல்லவனே

என் தன் மாணிக்கமே
எனக்கு ஸர்வதோமுக நிரதிசய அதிசய நாயகனே
என்று ஸ்வயமேவ புலம்புகிறார் —

—————-

அவதாரிகை

இப்படி ப்ரலாபித்தவர் தமக்கு அனுபவ யோக்யமான காலம் வந்திருக்க
அனுபவம் ஸித்தியாத ஆர்த்தி அதிசயத்தாலே
ஆர்த்தி தீருகைக்கு ரக்ஷகனான ஈஸ்வரன் பக்கலிலே ஆத்ம நிக்ஷேபத்தைப் பண்ணிக்
கூப்பிட்ட பிரகாரத்தை
மாலை கண்டு வருந்தின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85-

பாசுரம் -85-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –
துறையடைவு-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –
எம்மா வீடு -2-9-

பதவுரை

உலகு அளந்த–உலகங்களை அளந்து கொண்ட
மாணிக்கமே–மாணிக்கம் போலச் சிறந்தவனே
என் மரகதமே–மரகதப் பச்சைப் போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா–தன்னை யொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணி பொன்னே–மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்த–மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால்
அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல் போன்று
துணிபொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும்–மாற்றுயர்ந்த பொன் போன்ற ஒளியையுடைய
ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலமே-இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமான உயிர்
உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி
மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம்
அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே
அன்றியே
மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்

குரங்குதலாவது வளைதலாய்
உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி

உலகு அளந்த மாணிக்கமே
உன்னதான லோகத்தைப் பிறர் கொள்ளாதபடி எல்லை நடந்து
அநந்யார்ஹம் ஆக்கி
உடைமை பெற்றவாறே உஜ்ஜ்வல ஸ்வ பாவனானவனே

என் மரகதமே
அக் காலத்தில் வடிவில் பசுமையைக் காட்டி என்னை உனக்கு ஆக்கிக் கொண்டவனே

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணமான ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்யத்தை யுடையவனே –

அடியேன் அடி யாவி
சேஷத்வமே நிரூபகமான என்னுடைய சேஷ பூதமான பிராணனானது

யடைக்கலமே
உன் பக்கலிலே நிஷிப்தம் அன்றோ
ஆதலால் ரக்ஷணீயம் என்றதாயிற்று

இத்தால்
மோஹ அந்தகாரத்தின் கையிலே அத் யுஜ்ஜ்வலமாய் உன்னதமான விவேகமானது

(குரங்கு கையில் மாணிக்கம் -இருளின் கையில் சூர்யன்)

விழுந்து அகப்படும் படியான அவஸ்தையில் உன் பக்கலிலே நிஷிப்தமான இவ் வாத்மாவுக்கு
நீ யன்றோ ரக்ஷகன் என்று தம்மிலே நொந்து உரைத்தார் ஆயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு பிராட்டி வார்த்தை யாதல்
அன்றிக்கே
அவள் தசையை அனுசந்தித்த திருத்தாயார் வார்த்தை யாதல் –

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து
குரங்கானது மாணிக்கம் கொண்டு எறியுமா போலே
பெரு விலையனான மாணிக்கத்தை குரங்கானது அதின் சீர்மையை அறியாதே
எடுக்க ஒண்ணாத இடத்தே மங்கிப் போம்படி எறியுமாப் போலே

அன்றிக்கே
குரங்கு என்று
விலங்குதலாய்
அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள ஒண்ணாத இடத்திலே எறியுமா போலே என்னுதல்
அப்போது
எறிவாரை அழைத்துக் கொள்ளுதல்

இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
இருளோடே வந்து சந்தித்து
மாற்று அற்ற பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை மறைத்துக் கொடு மாலை வந்து தோற்றிற்று –
என் பக்ஷத்தில் உள்ளாரையும் அழியச் செய்து கொண்டாயிற்று இது வந்து தோற்றிற்று
எனக்கு ஆஸ்வாஸ கரனான ஆதித்யனை முடித்துக் கொண்டாயிற்று வந்து தோற்றுகிறது
குரங்கின் கையிலே புக்க மாணிக்கம் நசித்தால் போலே யாயிற்று –
ராத்திரிக்கு அவயவமான இருளின் கையில் புக்க ஆதித்யன் மாய்ந்த படி

இனி உருமாயுமாகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி யாயிற்று அவன் படி

உலகு அளந்த மாணிக்கமே

ரக்ஷகராக விட்ட இந்த்ராதிகள் தங்களால் முடியாமை கை வாங்கின வன்று
தான் வந்து கைக்கொண்டு தாமஸ ப்ரக்ருதிகளைத் தள்ளி நெருக்குமவன் இறே
காடும் மலையான இந்த பூமியை அளந்தது
ஒரு மாணிக்கத்தை இட்டுக் காணும்

மாணிக்கமே
பெறு விலையன் என்கை
தன்னைப் பாராதே அழிய மாறின படி

என் மரகதமே
உடம்பிலே அணைத்தால்
ஸ்ரம ஹரமாய் இருக்கை

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
முதலிலே ஸ்லாக்யமாய்
உபமான ராஹித்யத்துக்கு மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே

அடியேன்
போக்யதையிலே தோற்று அடியேன் என்கிறார்

அடி யாவி
தலைமகள் வார்த்தை யானபோது
உனக்கு சேஷமான என்னுடைய ஆத்ம வஸ்துவானது என்கை
ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணும் போதும்
வஸ்து நிர்தேசம் பண்ணும் போதும்
சேஷத்வத்தை இட்டு அல்லது நிரூபிக்க ஒண்ணாத படியாய் இருக்கை

திருத்தாயார் வார்த்தையான போது
அடியேன் அடி
நாய்க்குட்டி என்னுமா போலே

யடைக்கலமே-
இருளுக்கு அஞ்சின படியால் சொல்லுகிறாள்
அல்லது ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே
இவனுக்கு அத்யந்தம் சேஷமாய் இருக்கும் படி

பிரமித்தபோது இறே ஸமர்ப்பிக்கலாவது
ஸமர்ப்பித்த அனந்தர க்ஷணம்
என்னதை அவனுக்கு கொடுத்தேன் என்று நினைக்க ஒண்ணாத படி
தன்னோடு தனக்குத் தொற்று அற்றபடி இறே இருப்பது

அதவா கிம் து ஸமர்ப்பயாமி தே -ஸ்தோத்ர ரத்னம் -53-

உற்று எண்ணில் அதுவும் மற்று அங்கு அவன் தன்னது –திருவாய் -7-9-10-என்னக் கடவது இறே

ஆழ்வான் திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அநந்தரத்திலே
பிள்ளாய் எனது உள்ளத்து என்ன வேண்டும் அவஸ்தையிலே
அடியேன் உள்ளான் -திருவாய் -8-8-2- என்று
ஆழ்வார் அருளிச் செய்தபடி கண்டாயே என்று பணித்தான் –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

கையில் அகப்பட்ட மாணிக்கத்தைக் குரங்கானது எறியுமா போலே
உதய காலத்தில் இருளாக்கிரகுரங்கால் எறியப்பட்ட மாணிக்கம் போன்ற ஆதித்யன்
அவ்விருளோடே முட்டும்படி ஆணிப்பொன் போல் சுடர் விடு மாலை என்னை நலியா நின்றது
உனக்கே அடிச்சியான ஆத்மாவாய் அடிமைப்பட்ட அடைக்கலமாக என்னை என்று
அவன் தத் தத்ப் பலங்களை வெளியிடும் திரு நாமங்களால்
அநு நயிக்கும் தலை மகளாய் ஆர்த்தி அதிசயத்தால் புலம்புகிறார் இதில் –

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு
மாணிக்கத்தைக் கைக்கொண்டு

குரங்கு எறிவு ஒத்து
குரங்கு எறிந்தால் போலே

இருளோடு முட்டி
முன்னுற்ற ஆதித்யன் இப்போது இருளோடு முட்டிப் பாயுமவனாய் இரா நின்றான்

ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படு மாலை யிலே
இந்த மாலையாலே நான் இங்கனே பாதைப்படுவது உசிதமோ என்று அபிப்ராயம்

மேல் அநவ்சித்ய பிரகடனம் பண்ணுகிறார்
தன் ஸ்வரூப ப்ரகடனத்தால்

உலகு அளந்த மாணிக்கமே
அந்நிய பரரான அசுத்தரையும் திருவடியால் ஆக்ரமித்து உஜ்வலனாய் விளங்குமவனே

என் மரகதமே
நீ என் பரிரம்பண விஷயனான போது என் அதீனனாய்
மரகத மாணிக்கம் போன்று என்னை உனக்காக்கிக் கொண்டவனே

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
பூசலாம் பொன்னொளி பெற்ற நிஸ் ஸமாப்யதிக திவ்ய விக்ரஹனே

அடி யாவி
உனக்கு அடிச்சியோம் தொழுத்தையோமாய்

அடியேன்
யாவதாத்ம உபக்ரமமாய் அடிமைப்பட்ட ஆத்மாவே நான்

அதுக்கும் மேலே
உன் யடைக்கலமே
த்வத் ஏக ரக்ஷயை யானவளே நான்
இப்போது உன்னைப்பிரிந்து இந்த மாலையால் நலிவு பாடவோ –

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தராய்ப் புலம்பினவர்
ஆபத் சகன் அல்லாமையும்
ஆபந் நிவ்ருத்தி பரிகரம் இல்லாமையும்
ஆஸ்ரித பவ்யன் இல்லாமையும்
உதவாது ஒழிகிறானோ
இப்படி இருக்க முகம் காட்டாத போதே நாம் எத்தைச் சொல்லி பிரலாபிப்பது என்று
நிராசரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86-

பாசுரம் -86-அடைக்கலத்து ஓங்கு கமலத்து அலர் –
துறையடைவு-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –
வள வேழ்வுலகு -1-5-

பதவுரை

அடை–இலையாகிய
கலந்து–இடத்திலே
ஓங்கு–உயர்ந்துதோன்றின
கமலத்து–(திருமாலின் நாபித்) தாமரை மலரிலே
அலர்–வெளிப்பட்டுத் தோன்றின
அயன்–ப்ரஹ்மாவினுடைய
சென்னி என்னும்–தலையாகிய
முடை கலந்து–முடை நாற்றமுடைய பிக்ஷாபாத்திரத்திலே
ஊண்–உணவு இரத்தலை
முன்–முன் ஒரு காலத்தில்
அரனுக்கு–சிவனுக்கு
நீக்கியை–போக்கியருளினவனும்
ஆழி சங்கம்படைக்கலம் ஏந்திய–ஸுதர்சந பாஞ்சஜந்யங்களை ஆயுதங்களாகத் திருக் கைகளிற் கொண்டுள்ளவனும்
வெண்ணெய்க்கு–வெண்ணெய்க்காக
அன்று–களவுங்கையுமாக அகப்பட்ட அந் நாளில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வல் தாம்புகளால்–வலிய கயிறுகளால்
புடைக்க-அடிக்க
அலந்தானை–வருந்தினாற்போலத் தோற்றினவனும்
எம்மானே–எமது தலைவனுமான திருமாலைக் குறித்து
என் சொல்லி புலம்புவனே–நான் என்னவென்று சொல்லிப் புலம்புவனே?

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
பசுத்த இலையாகிற இடத்திலே உயர்ந்த கமலத்திலே விகசிதனாய்த் தோன்றின
ப்ரஹ்மாவினுடைய தலை என்று சொல்லப்பட்ட முடை நாற்றத்தை யுடைய பாத்திரத்தில் ஊணை
சாப உபஹதனான காலத்தில் ஸம்ஹார கர்த்தாவான ருத்ரனுக்குப் போக்கினவனை

(பிஷாண்டர் கோயில் ஹர சாபம் போக்கிய கரம்பனூர் அருகில்)

இலையில் ஓங்கின கமலம் -என்கையாலே
பசுத்த திரு மேனியைக் காட்டுகிறது

அரனுக்கு நீக்கிவை -என்கையாலே
ஸ்வ சாப ஸம்ஹாரம் பண்ண மாட்டாதவன் கிடீர் லோக ஸம்ஹாரம் பண்ண இருக்கிறான் என்றபடி

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-என்றும்
அடங்காரை எரி அழலம் புக வூதி–திருவாய் -4-8-8-என்றும்
விரோதி நிரசன பரிகரத்தைக் கை விடாதவனை

படைக்கலம் -ஆயுதம்

(படை-என்று ஆயுதம் என்றும் அவையே கலம்-காலன் -ஆபரணம் என்றுமாம்)

நீக்கி ஏந்தி என்று சொல்லாய்
இரண்டாம் வேற்றுமையாய் இருக்கிறது

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை
வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று
பெற்ற தாயான இடைச்சியானவள் திருமேனியின் மார்த்தவம் பாராதே
சிக்கெனத் தாம்புகள் கைக்கு எட்டியது எல்லாம் எடுத்துத்
தன் கோப அநு ரூபமாகப் புடைக்க
அதுக்கு பிரதிகிரியை காணாதே
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -பெருமாள் திருமொழி -7-8- என்னும்படி அலமருகிறவனை

எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –
இந்த அபதானத்தாலே எத்திறம் அபவ்யனானவன் பவ்யனாக வேணும் என்னவோ
அபரிகரனானவன் ஸ பரிகாரனாக வேணும் என்னவோ
எத்தைச் சொல்லிக் கூப்பிடுவது என்கிறார் ஆயிற்று

இது நாயகி புலம்பலுக்கும் ஒக்கும் –

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எத்தனையேனும் இருள் வந்து மேலிட்டு பாதகமானாலும் அத்தலையில் ஒரு குறை சொல்ல
ஒண்ணாத படி இறே அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும் படி –

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு
சர்வேஸ்வரன் பக்கலிலே போலே யாயிற்று ப்ரஹ்மா இருப்பது
நிஷேபம் போலே என்றவிடம் குறை வராதபடி யுணர்ந்து நோக்குகின்ற
படியைப் பற்றச் சொன்னது அத்தனை

கமலத்தல ரயன்
அவ்வளவு அன்றிக்கே
ஸர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜென்மத்தாலே வந்த ப்ராப்தியை யுடையவன்

சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
லோக குருவுமாய்
பிதாவுமானவன்
தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் ஒருவன்
தலை யறுப்புண்டு கிலேசியா நின்றான் ஒருவன்
இவருடைய கிலேசத்தையும் போக்கினவன்

அயன் சென்னி என்னும் முடைக்கலம்
ப்ரஹ்ம சிரஸ் என்ற ஒரு நாமத்தை யுடைத்தான முடைக்கலம் ஆயிற்று

பார் ஏறி யுண்ட தலைவாய் -இரண்டாம் திரு -63-என்னும்படி
கழுகும் பருந்தும் தொடர்ந்து திரியும்படிக்கு ஈடாக வாயிற்று ஸஞ்சரிப்பது

முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு கமலத்தலரயன்
கதுப்பும் கருமையும் பசுமையும் அகலமுள்ள இலை உள்ளதும்
ஓங்கினதுமான செங்கமலத்தில் உத்பவித்தவன்
அவனுடைய

சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
அவனுடைய சிரஸ் கபாலமான அதி ஹேய நாற்றமுள்ள
பிஷா பாத்திரத்தில் பிஷிக்கும் ருத்ரனுக்கு
ஸர்வரும் பார்க்க அவர் முன்னாகவே அந்த ப்ரஹ்மஹத்தியைப் போக்கினவனை

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை
திருக்கைகளிலே திருவாழி திருச்சங்கு முதலான திவ்ய ஆயுதங்களை
திவ்ய ஆபரணமாகப் பூ ஏந்தினால் போல் தரித்தவனை

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை
வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயே
பலவத்தான கண்ணி நுண் சிறுத் தாம்புகளால் கட்ட
உரவிடை யாப்புண்டு அவன் படைக்கப்புடைக்க முக கமல விகசநத்தோடே
ஒளி விகஸநத்தை யுள்ளவனை

எம்மானை
இவைகளை எல்லாம் எனக்கு காட்டி என்னை
அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை

என் சொல்லிப் புலம்புவனே –
எத்தைச் சொல்லிப் புலம்ப வல்லேன் நான் என்கிறார் –

———

அவதாரிகை

இப்படி இவருடைய ஆர்த்த ஸ்வரத்தைக் கேட்ட
ஸூஹ்ருத்துக்கள் இவருடைய ஆர்த்தியின் மேலே லௌகிக வியாபாரங்கள்
ஸ்மாரகமாய்க் கொண்டு இவரை நலிகிற படியைக் கண்டு
இப்படி லோக உபக்ரோசம் பிறக்கும் படி ஸ்மாரகங்கள் நலிவதே என்ற
ஈஸ்வரனை நோக்கி யுட் கொண்டு
வெறுத்து உரைத்த பாசுரத்தை
அன்றிலுக்கும் ஆழிக்கும் ஆற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
தோழி கிளர்ந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

புலம்பும் கனகுரல் போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87-

பாசுரம் -87-புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் –
துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –
பண்டை நாளாலே -9-2-

பதவுரை

திருமால்–பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும்–(விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல்–கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும்–பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்
பூ கழி பாய்ந்து அலம்பும்–அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல்–கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும்–சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை–அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த பாதக வஸ்துக்களானவை.
நின் வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக–உனது வலிமையை யுடைய கருடப் பறவையினது நன்மையை
(இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக் கொண்டு
வையம் சிலம்பும்படி–உலகத்தார் முறையிடும்படி-குற்றம் சொல்லி கோஷிக்கும் படி –
இத் திருவினை–திருமகள் போன்ற இப் பெண்ணை
செய்வதே–துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)

போழ்-பிரிந்தாரை இறு துண்டாக விடுவாரை

வியாக்யானம்

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
தன்னில் தான் புகுந்து வாய் அலகைக் கொடுத்து
அது உறக்கத்திலே நெகிழ்ந்தவாறே
விஸ்லேஷ ஆர்த்தி பிறந்து புலம்பும்படியான பிளந்த வாயையும்
கனத்த குரலையும் யுடைய அன்றிலும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழிக்கு உள்ளே புகுரப் பாய்ந்து அலைகிற கம்பீர த்வநியை யுடைத்தாய்
ஆலிங்கநம் பண்ணுவாரைப் போலே சூழ்ந்த திரைக்கையை யுடைத்தான ஸமுத்ரமும்

ஆங்கவை
அந்த அவைகள்

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உன்னுடைய பிரபலமான பெரிய திருவடியினுடைய ஆஸ்ரித ஸம் ரக்ஷணத்தில்
உதவியாகிற நலத்தைப் பாடின இதுவே குற்றமாக

வையம் சிலம்பும்படி செய்வதே
லோகம் எல்லாம் கூப்பிடும்படி யாக இவ்வன்றிலும் ஆழியும் செய்யக் கடவதோ

திருமால்
திருமாலே என்று தன்னிலே முன்னிலையாகச் சொல்லுகிறாள்
நீயும் ஒருத்திக்கு நல்லையாய் அன்றோ இருக்கிறாய்
அவள் என் நினைக்கும் என்று கருத்து

இத் திருவினையே
அத் திருவுக்கு நிழல் என்றாகிலும்
இவளைப் பார்க்க வேண்டாவோ என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று —

இத்தால்

சிறியாரோடு பெரியாரோடு (அன்றிலும் கடலும் )வாசியற போக அர்த்தமான
பரஸ்பர ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே சோக ஹர்ஷங்கள் யுண்டாய்க் கொண்டு
நடக்கிற படியைக் கண்டு
தமக்கு ஈஸ்வரனோடு போகம் சித்திக்கைக்கு ஈடான பரிகரம் (பெரிய திருவடி )அவனுக்கு உண்டாய் இருக்க
நமக்கு இழக்க வேண்டுவது இல்லை இறே என்கிற
ஸந்தோஷமே குற்றமாக
இந்த ஸ்மாரகங்கள் இவரை நலியும் படியாவதே என்று ஸூஹ்ருத பூதர்
ஈஸ்வரனைக் குறித்துத் தம்மிலே வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அனுகூல பதார்த்தங்களும் பிரதிகூலமாய் இவள் நோவு பட அத்தாலே
இவளையும் உம்மையும் நாட்டார் பழி சொல்லும்படியான செயல்களை
நீர் பண்ணுவதே என்று திருத்தாயார் சொல்லுகிறாள் –

வியாக்யானம் —

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் செறிந்த த்வனியை யுடைத்தாய்
பிரிந்து தனி இருப்பாரே இரு துண்டமாக விடுகிற வாயையுடைய அன்றில்களும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழியிலே வரப் பாயா நிற்பதாய்
ஊமைக் கூறான த்வனியை யுடைத்தாய் பரந்த திரைகளை யுடைய கடலும்

ஆங்கவை
பிரிந்து இருப்பார்க்கு மேடும் பாதகங்களும்
சேக்கழுத்தில் மணி ஓசை என்ன
தென்றல் என்ன
சந்த்ர உதயம் என்ன
இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்று ஆதல்
கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லி ற்று ஆதல்
இவை பாதகம் ஆகா நின்றன

என்ன குற்றம் செய்தாள் என்று
இவை பாதகம் ஆகிறது

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உனக்கு அசாதாரணமாய்
பலத்தை யுடைத்தாய்
கருடோ வாருணம் ச்சத்ரம் ததைவ மணி பர்வதம் ஸா பர்யாஞ்ச ஹ்ருஷீ கேசம்
லீலையைவ வஹந்யயவ் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-30-1 )என்கிறபடியே
தாரண சாமர்த்தியத்தை யுடையனான பெரிய திருவடியின் நலம் உண்டு
த்வத் அங்கரி ஸம் மர்த்த கிணாங்க ஸோபிநா -ஸ்தோத்ர ரத்னம் –41- என்கிறபடியே
அவன் அடிமை செய்து தழும்பு சுமந்தால் போலே ஸம்ஸ்லேஷ சிஹ்னங்களைத்
தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு அவனைப் பாடின
இது குற்றமாக

வையம் சிலம்பும்படி செய்வதே
சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே இருந்ததே குடியாகக்
கை எடுத்துப் பழி சொல்லும்படி பண்ணுவதே

திருமால்
நீர் ப்ரணயிகள் இல்லீராய்த் தான் இப்படிச் செய்கிறீரோ

இத்திருவினையே
உம்மை ஆசைப்பட்ட அளவில் குறைந்தாளோ அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்ட இவள்
ராவணாதிகள் பெருமாளை பழி சொல்ல ராக்ஷஸிகள் தன்னை நெருக்க
இருந்தவளைப் போலே இருக்க வல்லளோ இவள்
அன்றில்
கடலோசை
தொடக்கமானவை நலிய அத்தால் நோவு படா நின்றாள் என்று
நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு இருப்பதே
உம்முடைய மஹிஷி நோவு படப் பார்த்து இருக்கை உமக்கு குறை அன்றோ என்றபடி –

ஸ்வாபதேசம்

இத்தால்
அத்தலையாலே வரக்கண்டு ஆறி இருக்குமது அன்றிக்கே இவள் க்ரம பிராப்தி பற்றாமை பதறி மேல் விழ
நீர் தாழ்த்தீராய் இருக்கும் இது உமக்கு குறை அன்றோ என்று
இவர் தசையை அனுசந்தித்தவர்கள் பாசுரமாய் இருக்கிறது

ந மே பக்த பிரணஸ்யதி -ஸ்ரீ கீதை -9-31-
மறந்தீரோ என்கிறாள்

——————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி உன் பிரிவு பொறாமல் உன்னைப் புலம்பும் இத்திருவினை
அன்றிலும் ஆழியும் பாதிப்பதும்
உன்னைப் பாடுமது குற்றமாக வையம் எல்லாம் இவளைப் பழி சொல்லுமத்தும்
செய்வதே திருமால் என்று சொல்லும்
தாயாராய் அருளிச் செய்கிறார் இதில் —

வியாக்யானம்

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
உன்னைப்பிரிந்து தனி இருப்பாரே இரு பிளவாக்கும் சஞ்சுவையும்
அத்தால் சிலம்புவதும் கணைப்பதும் உள்ள அன்றிலும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழிக்குள் புகுரப் பாய்ந்து அதில் உள்ள பதார்த்தங்களை அலப்பும் போது
கனைத்துக் கொண்டும்
பெரும் குரல் செய்து கொண்டும் ஒன்றுக்கு ஓன்று ஆஸ்லேஷித்துக் கொண்டு
வருகிற திரைகளை யுள்ள கடலும்

ஆங்கவை
ஏவம் பூதமாயுள்ள
புலம்புறு மணி
தென்றல்
முல்லை
மல்லிகை –(திருவாய் –9-9-1–9-9-2)முதலானவையும்

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உனக்கே சேஷமும்
பலவத்தரமுமான
பசி ராஜனுக்குள்ள நன்மையைப் பாடின இதுவே ஒரு தப்பாக்கி

வையம் சிலம்பும்படி செய்வதே
லோகம் எல்லாம் இவளை பழி சொல்லும்படி செய்வைத்து உனக்குத் தகுமோ

திருமால்
நீர் தெருவில் மால் செய்யுமதுக்கும்
இவளை பிரிந்து இங்கனே பாதிப்பத்துக்கும் என்ன சேர்த்தி யுண்டு

இத்திருவினையே
அத்திருவுக்கு இவள் அன்றோ ஸ்தந பாஹ் வாதிகளாய் விளங்கினவள்
உம்முடைய ரசிகதைக்கு இது கொத்தை காண் என்கிறாள் –

—————

இப்படி ஸூ ஹ்ருத்துக்களும் நொந்து உரைக்கும் படி ஈடுபட்டவர்
பகவத் ப்ராவண்யம் உடையாரைப் பாபம் ஸ்பர்சியாது இருக்க
அனுபவ அலாப ஹேதுவான பாபம் நமக்கு எங்கனே வந்தது என்று
விஷண்ணரான (துன்புற்ற )பாசுரத்தை
நாயகி வெறுத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-

பாசுரம் -88-திருமால் உரு ஒக்கும் மேரு –
துறையடைவு–போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –
புகழும் நல் ஒருவன் -3-4-

பதவுரை

மேரு–மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும்–திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அ மேருவில் செம் சடரோன்–அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியையுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும்–அத்தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும்–(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே–அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும்
(நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால்–ஒப்பற்ற செல்வமாக வேட்கை-போற்றத்தக்க வ்யாமோஹம் -பக்தி –
தலைக் கொண்ட நங்கட்கு–ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை–(பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும்–எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)

வியாக்யானம்

திருமாலுரு வொக்கும் மேரு
மஹா மேருவானது ஸ்ரீ யபதியினுடைய திருமேனியோடே ஒக்கும்

பிராட்டி திருமேனியின் ஒளி விரவுகையாலே
ருக்மாபம் ஸ்வப்னம் தீ கம்யம் -(மனு 12-12 ) திருமேனியோடே ஒக்கும் என்றபடி

அம் மேருவில் செஞ்சுடரோன்
அம் மஹா மேருவிலே சிவந்த சுடரை யுடைய ஆதித்யனானவன்

திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்
ஸ்ரீ மானுடைய வலது திருக்கையிலே உறைகிற திருவாழியோடே ஒக்கும்

மேருவானது ஸர்வ வர்ஷங்களுக்கும் உத்தரமாகையாலே
ஆதித்யன் வலத்ததாகக் குறையில்லை

அன்ன கண்டும்

அவன் தன்னைக் காண்கை அன்றிக்கே
ஒப்புக் கண்டும்

திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது
ஸ்ரீ மானுடைய வடிவோடே
அசாதாரண சிஹ்னத்தையே ப்ரேம பாரவஸ்யத்தாலே
அக்ரமமாகச் சொல்லும்படியான

ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு
அத்விதீயமாய்
சம்பத்தாய் இருக்கிற பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு

எங்கே வரும் தீ வினையே –
விஸ்லேஷ ஹேதுவான துஷ் கர்மமானது எங்கனே வருவதாயிற்று

ஏவம் ஹவா வத தபதி கிமஹம் ஸாது நா கரவம் கிமஹம் பாப மகரவமிதி -( தைத்ரியம் -ஆனந்த -2-9 ) என்று
அக்ருத்ய கரணாதிகள் இவனைத் தபிப்பியாது என்று அன்றோ சொல்லுகிறது

ஷீண பாபரானவர்களுக்கு பக்தி பிறக்கும் என்னச் செய்தே
பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு
பிரிகைக்கு அடியான பாபம் வர விரகு யுண்டோ என்றதாயிற்று

கிளவியிலும்
நாயகன் ஈஸ்வரனாகையாலே
நல்லோமான நாம் பிரிந்து இருக்கைக்கு அடியான
தீ வினை எங்கே வந்தது என்று உரைத்தாள் யாயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே
இத்தைப் பழி சொல்லும்படியாகப் பெற்ற நமக்கு குறை யுண்டோ என்கிறார்
இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்
ஸர்வதா ஸத்ருசமாய் இருபத்தொரு வஸ்து இல்லாத படி இருக்கிற ஸர்வேஸ்வரன்
திரு மேனிக்குச் சேர்ந்து இருபதொரு உபமானத்தைக் கண்டால்
உபமான ரஹிதமான வஸ்துவுக்குக் கதிர் பொறுக்கி யாகிலும் இங்கனே
ஒரு உபமானம் உண்டாகப் பெற்றோம் என்று இது
ஆஸ்வாஸ ஹேது யன்றியே –
அவ்வுபமேயம் தன்னையே பெற வேணும் என்ற விடாய் பிறந்த நமக்கு
இனி ஒரு குறை யுண்டோ என்றது ஆதல்

அன்றிக்கே
அவனுடைய ஜெகதாகாரதையை அநு சந்தித்தால் அவ்வளவில் பர்யவசியாதே
அவனுடைய அசாதாரண விக்ரஹத்தைக் காண வேணும் என்னும் அபேக்ஷை
பிறக்கும் படியான எனக்கு ஒரு குறை யுண்டோ என்னுதல்

வியாக்யானம்

திருமாலுரு வொக்கும் மேரு
ஸ்ரீ யபதியினுடைய வடிவோடு ஒத்து இரா நின்றது மேருவானது
வளர்த்தியாலும்
புகாராலும்

அம்மேருவில் செஞ்சுடரோன்
அம் மேருவில் ஸஞ்சரியா நிற்கிற ஆதித்யன்

திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்
வடிவார் சோதி வளைத்து உறையும் சுடர் ஆழியும் -( திருப்பல்லாண்டு -2-)என்றபடியே
அவர் திருக்கையில் திருவாழியைப் போலே இருக்கும்

அன்ன கண்டும்
இப்படி அவனுக்குப் போலியானவற்றைக் கண்டு வைத்தும்

திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது
ஸ்ரீ யபதியுடைய அந்த மேரு ஒக்கும் திருமேனியையும்
வலக்கை யாழி இடக்கைச் சங்கம் –(திருவாய் -6-4-9 ) என்கிறபடியே
அவ்வாசாதாரண சிஹ்னத்தையும் காணவென்று ஆசைப்பட்டுப் பிதற்றா

ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே –

————–

அவதாரிகை

இப்படி பக்தி விரோதி பாபம் கழிந்தாலும்
பிராப்தி பிரதிபந்தகம் கிடக்கையாலே அது கழிந்தால் அன்றோ பெறலாவது என்ன
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்
நிரதிசய போக்ய பூதனாய்
ஸ்ரீ யபதியாய்
ஸூலபனான இவனை
என்று கிட்டி அனுபவிக்கக் கடவோம் என்கிறார்

இது நாயகி இரங்கி உரைத்ததாகவுமாம்

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

பாசுரம் –89–தீ வினைக்கு அரு நஞ்சை –
துறையடைவு-தலைவனது கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —
அங்கும் இங்கும் -8-3-

பதவுரை

தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்-பிரபத்தி செய்வித்து -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் என்றுமாம்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும்வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?

வியாக்யானம்

தீ வினைக்கரு நஞ்சை
கொடிதாய்
துக்கத்தை விளைப்பதான
துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை

ஆறு நஞ்சினை -என்றால்-எழுத்து மேறும் -பாடமும் அல்ல

அரு நஞ்சினை -நல் வினைக்கின்ன முதத்தினை-என்னவுமாம்

நல் வினைக்கின்ன முதத்தினை
ஆஸ்ரயண ரூபமான நல் தொழிலுக்கு
நிரதிசய ரஸமான நித்ய போக்யமானவனை

பூவினை மேவிய தேவி மணாளனை
அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே
நித்ய வாஸத்தை யுடையளாய்
நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை

(இதம் இத்தம்-ஸ்வரூபத்துக்கும் ஸ்வாதந்தர்யத்துக்கும் நீயே நிரூபனம் பட்டர்)

புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை
இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே
சிறுமை என்று இகழாதே பசுக்களை மேக்கப் கடவனாய்
அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை

அன்றுலகீரடியால் தாவின வேற்றை
இப்படி இனியனானாலும்
தன்னுடைமை பிறர் கொள்ளும் அளவில்
தன் கால் கீழே இட்டுக் கொள்ளும் மேனாணிப்பை யுடையவனை

எம்மானை
கீழ்ச் சொன்ன ஸ்வபாவங்களைக் காட்டி
என்னை அடிமையாக்கிக் கொண்ட ஸ்வாமி யானவனை

எஞ்ஜான்று தலைப் பெய்வனே –
இப் பிரகாரங்களாலே கிட்டக் குறை யில்லை
அது எக்காலம் என்றதாயிற்று –

———————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸம்ஸாரிகளில் காட்டில் வ்யவ்ருத்தராகப் பெற்றோம்
இனி அவனைப் பெற்று அனுபவிக்கிறவர்களோடே ஸஜாதீயராகப் பெறுவது என்றோ -என்கிறார்

வியாக்யானம்

தீ வினைக்கரு நஞ்சை
பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகமான துஷ் கர்மங்களுக்கு
ஆற்ற ஒண்ணாத நஞ்சாய் யுள்ளவனை

நல் வினைக்கு
பலாபி சந்தி ரஹிதமான
இன்ன முதத்தினை

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ் வஸிப்பிப்பதாக
நம் பக்கலிலே நீர் ஆபி முக்யம் பண்ணி நம்மை ஆஸ்ரயிக்கைக்கு ஹேதுவான
விலக்ஷண சரீரத்தைப் பெற்றீர்
நம் பக்கலிலே நிரதிசய ப்ராவண்யம் உண்டாயிற்று
முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்று
பக்தி யுடையார்க்கு பிராப்தி கைப்பட்டது அன்றோ என்று
ஈஸ்வரன் தன் திரு உள்ளக் கருத்தைப் ப்ரகாசிப்பிக்க

இதுக்கு முன்பு நின்ற நிலையை நிரூபித்தால் விளம்பம் பொறுக்கிறது இல்லை என்கிறார்

இதுவும் தலை மகள் ஆற்றாது உரைத்தலாகவுமாம்

தலைப் பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப் பெய்த வாக்கைக்கு நோற்ற விம் மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90-

பாசுரம் -90-தலைப் பெய்து யான் உன் திருவடி –
துறையடைவு–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தல் –
குரவை ஆய்ச்சியர் -6–4–

பதவுரை

அசுரர் குழாம்–அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த–அழிவைப் பண்ணின
நேமி–சக்கராயுதத்தை யுடைய
எந்தாய்–எம்பெருமானே!
யான்–நான்
தலைப்பெய்து–(யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த–நிலைப் பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு–இவ்வுடம்பைப் பெறுதற்கு
நோற்ற–தவஞ்செய்த
இ மாயமும்–இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி–உனது திருவடித் தாமரை மலர்களை
சூடும்–(எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால்–அடிமைக்குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்–இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலை
நின்று முடிவு பெறமாட்டாத நிலைமையையும்
காண்தோறு–நோக்கும் போதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது–பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)

வியாக்யானம்

தலைப் பெய்தி (பெய்து) யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
பகவத் அனுபவ ப்ரஸங்கம் அற்று இருக்கிற நான் உன் திருவடிகளை
கோலமாம் என் சென்னிக்கு -(திருவாய் –4-3-6-)என்று
சிரஸா வஹிக்கும் படியான சேஷத்வமாகிற ஸ்வபாவத்தாலே கிட்டி
திருவடிகளே பிராப்தி ஸாதனம் என்று நிலை பெறுகைக்கு உறுப்பான இந்த சரீரத்தைப் பெறுகைக்கு
உன்னுடைய கிருபை யாகிற புண்யத்தை நோற்று வைத்த இந்த ஆச்சர்யத்தையும்

(ஸூ ஹ்ருத தேவர் யார் -முதலிகள் ஐதிகம்
தனக்கும் தெரியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் -எனது அடியாருக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய்
ஸாஸ்த்ர வேத்யனான புறப்பாடு கண்டு அருளும் அவனே அறிவான்)

மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும்
கிருபா லாபம் ஆகிற ஆச்சர்யம் ஒருபடிப்பட நிலை நின்று
நடத்தித் தாராதே நிற்கிற படியையும்

காண் தோறு
பார்க்கும் தோறும்

அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
அஸூர ஸமூஹங்களுக்கு முடிவைப் பண்ணின
திருவாழியை யுடைய
என் ஸ்வாமி யானவனே

தொல்லை யூழி சுருங்கலதே –
விரோதி நிவ்ருத்திக்குக் காலம் பார்க்க வேண்டாமையாலும்
பரிகரம் தேட வேண்டாமையாலும்
பிராப்தி விளம்பிக்கைக்கு ஹேது இல்லாமையால்
முன்பு பழையதாக அகன்று போந்த காலத்தோடு
ஸஜாதீயமான ஆகாமி காலமானது கல்ப ஆகாரமாய்க் கொண்டு
வளர்ந்து வரையிட்டுக் காட்டுகிறது இல்லை என்று அருளிச் செய்தார் ஆயிற்று

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எஞ்ஞான்று தலைப் பெய்வன் -என்று இறே கீழ் நின்றது
என்றாகில் என்
பகவத் விஷயத்தில் ஸ்பர்சம் பலத்தோடு சம்பந்திப்பித்து விடும் என்று
விஸ்வஸித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன
அப்படி செய்யலாயிற்று இறே ஸம்ஸாரிகளைப் போலே நிரபேஷனானேனாகில் –
எனக்கு உன்னை ஒழியக் கால ஷேபம் பண்ண அரிதாகா நின்றது என்கிறார்

இப் பாட்டில் சொல்லுகிறது என் என்னில்
உன் திருவடிகளை ஸமாஸ்ரயிக்கைக்கு ஈடாய் இருபத்தொரு

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இவ்விடம் பொறாமைக்கு மூன்று ஹேது யுண்டு –
இதில் அத்தை அருளிச் செய்கிறார்

வியாக்யானம் —

இதில் இங்கனே அந்வயம்
உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த
யான்
தலைப்பெய்த
வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
தொல்லை யூழி சுருங்கலதே –என்று

உம்மை விட்டு இங்குப் பொறாமைக்கு அடியேனுடைய நிஜ ஸ்வபாவம் ஒரு ஹேது

இப்போதாக வந்தேறின ஆக்கைக்கு தேவரீர் ஸங்கல்பித்த ஆச்சர்யமும் ஹேதுவாம்

பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் -சத்யத்ரயம் என்று
தொடங்கி அருளிச் செய்தபடி
ஸ்வ விஷய போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியானது
ஸ்வ
பர
ஸ்வரூப யாதாம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஹேதுவாம்

உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
தகைமை என்று ஸ்வ பாவம்
இடை விடாதே த்வதீய புக்தோஜ்ஜித -ஸ்தோத்ர ரத்னம் -42-இத்யாதி யுக்த விதனாய்
உன் திருவடிகளில் கீழ் இருப்பதை நிலை நின்ற யான் இங்கனே
இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
எனக்கு இப்போது வந்தேறினதான இத்தேஹத்துக்காக தேவரீர் நோன்பு நோற்றதே -ஸங்கல்பித்ததே -என்றபடி

இந்த ஆச்சார்யம் இன்னம் எத்தனை அநர்த்தத்துக்கு ஹேதுவோ என்று
ஏங்கப் பண்ணுமது அன்றி இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி

மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
மயாத்யஷேண ப்ரக்ருதி –ஸ்ரீ கீதை -9-10-என்று
உன்னால் புகழப்பட்ட மாய ப்ரக்ருதி யானது
ஸ்வரூப யாதாத்ம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஒட்டாத
நியத ஸ்வ பாவம் யுடையது என்பதும்

இத்தேஹத்தில் அகப்பட்ட எனக்கும்
ராஜ்யாத் பிரம்ஸோ வநே வாஸே –ஆரண்ய -67-24-என்னும்படி
பிரிந்து பட்ட உனக்குப் போலே அதி பயாவஹம் ஆகையாலே இங்கனே
இங்கு இருப்பைப் பொறுத்து இருக்கப் போமோ என்றபடி

இம்மூன்றையும்

காண் தோறு
பார்க்கும் தோறும்

அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
அஸூர வர்க்கத்தை உரு அழிக்கும் திருவாழியை ஏந்தின அழகாலே
என்னை ஆண்டு கொண்டவனே

தொல்லை யூழி சுருங்கலதே
உன்னையே அனுபவித்தும்
உனக்கே அடிமை செய்தும்
கழிந்த யாவதாத்ம உபக்ரமமாய் இந்நாள் வரைக்குள்ள காலம் எல்லாம் நாம் அங்கனே இருந்தோமோ
அங்கனே இருந்தது அத்யல்ப காலங்கள் என்றே போனதாகா நின்றதே
ஆகையாலே
எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்று
இங்கு இருப்பைப் பொறாமையால் ஜலாதுத் த்ருத மத்ஸ்யம் போன்று இரா நின்றேன் என்கிறார் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -71-80–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 30, 2022

அவதாரிகை
இப்படித் தளர்ந்தவர் தம்முடைய ப்ராவண்ய அதிசயத்தாலே
பல வை லக்ஷண்யத்தின் பெருமையை அனுசந்தித்து
வார்த்தை சொன்னபடியைக் கேட்ட பரிவுடையார்
இவர் ப்ராப்ய ப்ராவண்யத்தாலே சொன்ன பாசுரம் என்று அறியாதே

சாதநந்தர நிஷ்டரைப் போலே உபாஸ்ய வேஷத்தைப் போற்றி விடுகிறாராக நினைத்துப்
பரிவாலே நியமித்த பாசுரத்தைத்
தம்முடைய ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ் கரித்து
இவர்கள் நெஞ்சு அறியாமல் ஆரோபித்துச் சொல்லுகிறார்கள் என்று அருளிச் செய்து
அந்த ஸூஹ்ருத்துக்களை விட்டுப் பரிவரைத் தெளிவிக்கும் பாசுரத்தை

தலைவன் அடியான தலைவி தன் ஆர்த்தியை ஊரார் முதலான குறியாலே அறிந்து
அன்னை முனிந்த பாசுரத்தைத் தோழிமார்க்கு யுரைத்து
அவர்களால் தெளிவித்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71-

பாசுரம் -71-ஊழி களாய் உலகு ஏழும் உண்டான் –
செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –
எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-

ஊழிகள் ஆய்–காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே)
உலகு ஏழும் உண்டான்–உலக முழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம்–என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) கூறினோமில்லை.
களா பழம் கண்டு–களாப் பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு–‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று
(குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு–அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை–(எனது) தாய்
இவளோ நாழ் என்னும்–‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி)
சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்;
ஞானம் உண்டான் வண்ணம் சொல் விற்று என்னும்–உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு
இது என்று குற்றங் கூறுவன்;
தோழிகளோ–தோழிகளே!
எம்மை அம்மனை சூழ்கின்ற–எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
உரையீர்–நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள்

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
மஹா கல்பமான காலங்களுக்கு நிர்வாஹகானாய்
(பூத பவ்ய பவத் பிரபு -காலங்களில் உள்ள வஸ்துக்களுக்கு பிரபு அங்கும் )
கால அவசாநத்திலே ஸப்த லோக உப லஷிதமான ஸமஸ்த ஜகத்தையும்
பசியர் உண்டால் போலே அமுது செய்ததுவே பற்றாசாக
திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் என்று சொல்லிற்றிலோம்

பழம் கண்டு ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
களாப் பழத்தைக் கண்டு அதின் நிறம் ஆழியின் நிறம் என்று சொன்னேனுக்கு

அக்தே கொண்டு
அந்தச் சொல்லிலே பொருள் கொண்டு

அன்னை
எனக்கு பிரியம் செய்து போந்த தாயானவள்

நாழி வளோ வென்னும்
இவள் தன்னிலே நடத்தும் ஸ்வ தந்தரையாய் இரா நின்றாள் என்னும்

நாழ்-என்று
மேனாணிப்பு
நறு வட்டாணித்தனம் என்றும் சொல்லுவார்

ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
காளாம் பழ வண்ணத்துக்குக் கடலை ஒப்புச் சொன்ன போதே
எல்லாவற்றையும் தனக்குள்ளே அடங்கின ஈஸ்வரன் நிறத்தைச் சொல்லிற்று
என்னா நின்றாள்

தோழிகளோ உரையீர்
என் நினைவு அறிந்து பரிமாறிப் போந்த நீங்கள்
நான் சொன்ன வார்த்தையின் உட்பாடு சொல்ல வேணும்

தோழிகள் -என்ற
பன்மையாலே பலரும் சொல்லித் தெரிவிக்க வேணும் என்றபடி

எம்மை யம்மனை சூழ் கின்றவே –
உள் ஓன்று வைத்துச் சொல்ல அறியாத எம்மைப் பெற்ற தாயானவள்
சூழ்ந்து ஏறிட்டுச் சொல்லுகிறவற்றை உரையீர் என்று
இதற்கு மறுமாற்றம் சொல்லுகிறீலீர் -என்றுமாம்

இத்தால்

களாம் பழ வண்ணம் ஆழி போலும் -என்கையாலே
பல வேஷம் அபரிச்சின்னம் என்று
ஸூசிப்பித்ததாயிற்று

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் -என்கையாலே
உபாஸ்யமான காரண வேஷம் சொல்லிற்றிலோம் என்றபடி

நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-என்கையாலே
பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தமான ஸ்வா தந்தர்யத்தை
ஏறிட்டமை சொன்னபடி
(குகன் குகை பரிகரங்கள் சங்கித்தால் போல் )

தோழிகளோ உரையீர் -என்கையாலே
ஸ்வரூப விரோதி சங்கை பிறந்தால்
நெஞ்சு அறிவாரை இட்டுத் தெளிவிக்க வேணும் என்றபடி

எம்மை யம்மனை சூழ் கின்றவே-என்கையாலே
பரிவுடையாரானார் ஸ்வரூபத்துக்கு எங்கே விரோதம் வருகிறதோ என்று
ஏறிட்டு சங்கிப்பர் என்றதாயிற்று —

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
களவிலே புணர்ந்து பிரிந்த தலைமகன்
இவள் ஆற்றாமையைப் பரிஹரிக்கைக்காக இவள் வர்த்திக்கிற தேசத்தில்
தன் நிறத்தோடு போலியான பழங்களைச் -பலங்களைச் –
சிலர் விற்பார்களாகப் பண்ண
இவளும் அத்தைக் கண்டு தரிக்க
அத்தைத் தாயார் அறிந்து நிஷேதித்துச் செய்கிற மிகையைத்
தலைமகள் தோழிமார்க்குச் சொல்லுகிறாளாய் இருக்கிறது

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
இப்படி சொன்னேன் ஆகில் குற்றமாம் இறே
கால உபலஷித ஸகல பதார்த்தங்களும் நிர்வாஹகனாய்
இவற்றை பிரளயம் வர எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகன் என்றிலேன்
குண நிஷேதத்தைப் பண்ணப் புக்கவர்கள் ஸத்ய ஞானாதி பதங்களுக்கு
வ்யாவர்த்ய பதத்தாலே பேதம் சொல்லுமா போலே
இவளும் குண ஸத் பாவத்தை சாதிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே குணங்களை சொல்லித் தரிக்கிறாள்
இவளுக்குச் சொல்லுகைக்கு பிராப்தி யுண்டு
அவளுக்கு இதிலே ஒரு கருத்து உண்டு என்று நிஷேதிக்கைக்கு பிராப்தி யுண்டு
உபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்களும் பேசாது இருக்க ஒண்ணாது இறே
சேதனரானார் பேசாது இரார்கள் இறே
இவளுக்கு இது விபாகத்திலே பொல்லாதாம் என்று ஆயிற்று அவள் நிஷேதிக்கிறது
குணாதிக விஷயத்தில் ப்ராவண்யம் கிலேச அவஹமாய்த் தலைக்கட்டும் என்று இருக்கும் இறே

பழம் கண்டு
புரோ வர்த்தியான பதார்த்தங்களை
கடமாகில் கடம் என்றும்
படமாகில் படம் என்றும் சொல்லக் கடவது இறே
பிள்ளாய் கண்டது சொல்லுகையும் குற்றம் ஆவதே

ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
களாம் பழ வண்ணமானது –

அக்தே கொண்டு அன்னை

———————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
ஸர்வ கல்ப நிர்வாஹகனாய்
லோகங்கள் ஏழையும் ஸ்வ முகம் கொண்டு தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான்
என்று சொல்லேன் அல்லேன்

பழம் கண்டு
களாம் பழத்தைக் கண்டு

ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
இக் களாம் பழத்தின் வண்ணம் கருங்கடல் போன்றது என்ற அளவே சொன்ன எனக்கு

அக்தே கொண்டு அன்னை
அவ்வளவே கொண்டு எனக்குத் தாயானவள்

நாழி வளோ வென்னும்
நாழ்-என்று நிறம் உடைமை
அத்தாலே ஏற்றத்தைச் சொல்லுகிறது
இவள் எங்களில் ஏற்றம் பெற்றவளோ என்னா நின்றாள்
நான் என்ன குற்றம் செய்தேனாய் இவள் என்னைப் பொடியுமது

இவ்வளவு அன்றிக்கே
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
இந்தப் பெண் இந்நிலத்தோடு கூடியவற்றை எல்லாம் உண்டவனுடைய
வர்ணத்தைச் சொல்லிற்று என்னா நின்றாள்
நான் அங்கனே சொன்னேனோ

தோழிகளோ உரையீர்
ஓ தோழிகாள் -என் அன்னைக்கு உன் மகள் அங்கனே சொல்லவில்லை
என்று சொல்லா நின்றாளே

அவளை நீ தூற்றாதே கொள் —
என்னுங்கோள்-

எம்மை யம்மனை சூழ் கின்றவே
என்னை மனைப்பாம்பு போலே நான் போன போன இடம் எங்கும் தான்
சூழ்ந்து கொண்டாடியும்
தூற்றியும்
என்னைக் கொல்லா நின்றாள்

ஓ தோழி காள்
என்று இலம் என்றேர்க்கு
என்கிற பஹு வசனம்
இங்கனே தரிப்பாரைக் கூட்டிக் கொண்டுமாம் –

———-

அவதாரிகை

இப்படி பிறரும் அதி சங்கை பண்ணும் படி பலத்தில் த்வரையை யுடைய இவருக்கு
அனுபவ ஸித்தி இல்லாமையாலே பிறந்த மோஹமும்
பல வை லக்ஷண்ய விஷயமான ஞானமும் நடந்து
அலாப நிபந்தநமான கிலேசத்தை விளைக்க ஆர்த்தரான பிரகாரத்தை
இருளுக்கு ஆற்றாத ஈடுபாட்டின் மேலே
இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்த
தலைவி வார்த்தையால் அருளிச் செய்கிறார்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – 72-

பாசுரம் -72-சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின்
இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –
சீலமில்லாச் சிறியன் -4-7

பதவுரை

சூழ்கின்ற–(இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல்–ராத்ரியினுடைய
சுருங்கா இருளின்–சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை–கறுத்த செறிவை
போழ்கின்ற–பிளக்கிற
அம்பிள்ளை திங்களும்–அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க–(என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து–(நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன்–ஒரு துணையும் இல்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு–(இயல்பான) மேனி நிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு–(இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று–சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ–இப்படியோ?

வியாக்யானம்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
சூழ்ந்து நிற்கிற ராத்ரியின் நீண்ட இருளினுடைய கறுத்த செறிவைப் பிளவா நிற்கிற
அழகிய பாலசந்த்ரனும் என்னைக் கீளுக

திணும்பு -என்று செறிவு

பிள்ளையும் என்று
இருளை போக்குகையாலே உபகாரகமான இதுவும்
ப்ரகாசத்தாலே நலிகிறமை சொல்லுகிறது

துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை
யுடையேனான என்னுடைய –

மாமைக்கின்று வாழ்கின்றவாறு
ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்

இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே
முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று
இதுவும் போழ்க

வாலிமையாவது
சீர்மையாய்
கனத்தைச் சொல்லுகிறது

அன்றியே
பிறையின் வெளுப்பு ஆகவுமாம்

இத்தால்
போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும்
மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும்
அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே
ராத்திரி வந்து இருளாய் நலிய
இத்தாலே வந்த நலிவைப் போக்கித் தந்து நம்மை ரக்ஷிப்பாரோ என்று இருக்கிற அளவிலே
சந்திரன் வந்து தோற்றினான்

இவ்விடத்தில் அமுதனார் ஒரு கதை சொல்லுவார்
ஒரு ஸாது ப்ராஹ்மணன் காட்டிலே தனியே வழி போனானாய் அங்கே ஒரு பசு தொடர்ந்து வந்ததாய்
ஒரு மரத்திலே ஏறி இருந்து
இத்தாலே வந்த நலிவைப் போக்கி நம்மை ரக்ஷிப்பாரோ என்கிற சமயத்திலே
ஒரு புலி வந்து தோற்றி பசுவையும் கொன்று அதனுடைய ரத்தத்தையும் பானம் பண்ணி
இவன் முன்னே வந்து தண்டையை முறிக்கு இட்டு இருந்ததாய்
அந்தபசுவே யாகில் ஒருபடி பிராண ரக்ஷணம் பண்ணிப் போகலாயிற்று
இனி இத்தை நம் சத்தையை நோக்குகை என்றதொரு பொருள் இல்லையாகாதே என்றான்
அது போலே இறே இங்கும் –

வியாக்யானம்
சூழ்கின்ற
பிரளயம் கோக்குமா போலே எங்கும் ஓக்க தானே வந்து சூழ்ந்தது
ஓர் இடத்திலே இதுவாய்
மற்ற ஒரு இடத்திலே ஒதுங்க நிழல் உன்படாம்படி இருக்கை அன்றிக்கே

கங்குல் சுருங்காவிருளின்
ராத்ரியினுடைய சுருங்காது இருள்
இன்னதனைப் போது இருள் செறிந்து வரக்கடவது
இன்னதனைப் போது சுருங்கி வரக்கடவது
என்ற ஒரு மரியாதை உண்டு இறே
அது இன்றிக்கே இரா நின்றது

கருந்திணிம்பை
கறுத்த நிறத்தை யுடைய
திணிம்பை என்று ஒரு சொல்லாய்
ஆத்தாள் திண்மையைச் சொல்லுகிறது
இருளினுடைய புற இதழைக் கழித்து
அகவாயில் திண்மையான வயிரத்தைச் சேரப் பிடித்தால் போலே இருக்கிறது

போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
அவ்விருளைப் போழ்ந்து கொண்டு -பேதித்துக் கொண்டு -தோற்றுகிற சந்திரனும்
தனக்குப் புறம்பு பாத்யம் இல்லாத படியாலே
நம்மையே பாதித்திடுக

போழ்கின்ற
ஸஹஜ ஸாத்ரவத்தாலே அவன் ஸந்நிதியாலே இது போழ்கின்றது ஓன்று அன்றியிலே
கை தொட்டு அழிக்கிறாப் போலே யாயிற்று
இருளினுடைய திண்மையும்
சந்திரனுடைய பருவம் நிரம்பாமையும்

திங்களம் பிள்ளையும்
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
முந்துற அநுகூலரைப் போலே தோற்றிப்

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
தனிமைப் பட்டேனான என்னுடைய

மாமைக்கின்று வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று
உடலுக்கு இன்றாக இப்பிறையால் பிளக்கப்படும் இதுவோ வாழ்கின்றபிரகாரம்
என் உடலுக்கு உலகள நிறத்தையும் கெடுத்து
அத்தையே பிளந்து விடவும் தோன்றிற்று

வாலியதே
இந்தப் பிறையானது இதுக்கே வந்ததாய்
நிராதாரமாகத் தொங்குமதாய்
தன் மிக்க வெளுப்போடும் சீர்மையோடும் ஆவிர்பவித்தது
இதுக்கு எங்கே ஒதுங்குவேன் என்கிறாள் –

————

அவதாரிகை

இப்படி விஷய வைலக்ஷண்ய ஞானம் மிகவும் நடக்க
அனுபவ யோக்ய காலத்தில் போக ஸித்தி இல்லாமையாலே
பிறந்த தளர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
நொந்து உரைத்த பாசுரத்தை

(இருள் -அனுபவம் பெறாமல் நலிய அதுக்கும் மேல் ஸ்வரூப
ஞானம் -நிலவு போல் -அறிவு பெற்றாலும் -பக்தி முத்த -அனுபவம் பெறாமல் –
இப்படி வைலக்ஷண்யம் அறிந்தாலும் -இழந்து தவிக்கிறோம் -என்று
மேலும் துன்பம் பட்டத்தைக் கீழே பார்த்தோம் )

நிலவு விஞ்சும்படியான மாலைக்கு ஆற்றாத் தலைவி தளர்த்தி கண்டு
இரங்கின பாங்கி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-

பாசுரம் -73 வால் வெண் நிலவு உலகு ஆரச் சுரக்கும் –
துறையடைவு-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –
வேய் மரு தோள் இணை -10 -3 –

பதவுரை

விண்–ஆகாயத்தில் நின்று
வால் வெள் நிலவு–மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால்-பாலை
உலகு ஆர சுரக்கும்–உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற
வெண் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய
சுரவி–பசுவினது
சுர–சுரம்பு
முதிர்–மிகப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
தமியாட்டி தளர்ந்தது–(நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்த தன்மை
பரிதிவட்டம் போலும்–இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய
அடல் அழி–வலிய சக்கராயுதமுடைய
பிரான்–அத்தலைவன்
ஏழ்பொழில்–ஏழுவகைப்பட்ட லோகங்களையும்
அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம்–ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா?

வியாக்யானம்

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
மிகவும் வெளுத்த நிலவை லோகம் நிறைய சுரவா நிற்பதாய்
வெள்ளைத் திங்கள் என்று சொல்லப்படுவதான
விண்ணில் பால் பசுவினுடைய சுரப்பு முதிரா நிற்கிற மாலையிலே

பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான்
இத் திங்கள் ஒளியை விழுங்குவதான ஆதித்ய மண்டலம் போலே ஒளியை உடைத்தாய்
ஆஸ்ரித விரோதி நிரசன ஸீலமாய்
யுத்த காலத்தில் பரிகரமாக திருவாழியை யுடையனாய்த்
தன்னைப் பற்றினார்க்கு உபகாரகனானவன்

பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்
லோகம் ஏழையும் ரக்ஷிக்கிற அமைவு யுடைமையின் பெருமையாகக் கூடும் இறே

தமியாட்டி தளர்ந்ததுவே
தாம் வாராமையாலே தனிமையை உடையளான இவள் தளர்ந்தது
என்று நொந்து உரைத்தாள் யாயிற்று

இத்தால்
அனுபவ யோக்ய காலத்திலே அநுபாவ்ய விஷய வைலக்ஷண்யம் அடியாக
ஞான பிரகாசம் அதிசயித்து நடக்க
அனுபவ ப்ரதாநம் பண்ணாமையாலே
ஸ்வாபாவிகமான ரக்ஷகத்வமும் அகிஞ்சித் கரமாம் படி இருந்ததீ என்று
ஸூஹ்ருத்துக்கள் சங்கித்து உரைத்தாராயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நிலாவும் போய் முறுக நின்று பாதகமாய்
அத்தாலே இவளும் நோவுபட்டு மோஹித்துக் கிடைக்க இத்தைக் கண்ட திருத்தாயார்
தர்ம ஹாநி கிடீர் -என்று கூப்பிடுகிறாள்

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

ரக்ஷகத்வ ஸ்வபாவமாமதோ
இதோ வெண் திங்களாகிற ஸூரபி பால் வெண் நிலாவாகிற முதிர்ந்த பாலை
எங்கும் சுரக்கப் பண்ணுகையாலும்
இந்த முதிர்ந்த மாலையாலும் தனியாட்டி தளர்ந்ததுவே
தம் பொழில் ஏழையும் ரக்ஷகத்வ ஸ்வ பாவமாய் என்னை நலியா நின்றான் என்று
தளருகிற தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
வெண் திங்கள் என்னும் விண் சுரபி
உலகார வாழ் வெண்ணிலவு என்ற முதிர்ந்த பால் சுரக்கும் முதிர் மாலை
என்று அந்வயம்
முதிர்ந்த மாலையில் வெளுத்த சந்த்ரனாகிற ஆகாசத்தில் உள்ள ஸூரபியானது
லோகங்கள் எல்லாம் நிறையும்படி
வான் -மிகவும் வெளுத்த நிலாவாகிற முதிர்ந்த பாலை சுரக்குமாயிற்று
முதிர்ந்த மாலை பால் சுரக்கும் காலமாகையாலே அற முதிர் மாலை யாயிற்று

பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்
பரிதி வட்டம் -ஆதித்ய மண்டலம்
தேஜஸ்ஸில் அத்தைப் போன்றதாய்
யுத்தத்தில் அசூரரைத் தொடருமதான திருவாழியால் அவர்களை நிரசித்தும்
கையும் திருவாழியுமான அழகை நமக்கு காட்டியும்
உபகரிக்கிறவனுடைய விஹாரணா ராமமான ஸப்த லோகங்களுக்கும்
ரக்ஷகனானவனுடைய சால்பு ரக்ஷண சாமர்த்தியம்
அதின் தகைமை -அதனுடைய விஜ்ரும்பணம்

கொலோ
ஆமதோ

தமியாட்டி தளர்ந்ததுவே
தம்மால் தனிப்பட்டவள் அத்யாவசந்நை யாமதுவே
ஜகாத் ரக்ஷண விஜ்ரும்பணம் ஆமதோ –

———-

அவதாரிகை
இப்படித் தளர்ந்தவரை ஆஸ்வஸிப்பித்தாக ஈஸ்வரன் தன் கிருபையாலே
சேஷித்வ
போக்யத்வங்களினுடைய
மிகுதியைப் பிரகாசிப்பிக்க

ஆஸ்வஸ்தரான ப்ரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாயோடே
சீலித்த (ஸஹ வாஸம் பண்ணிய )தென்றல் உலாவுகிற படியைக் கண்டு
ஆஸ்வஸ்த்தையாய்
நாயகி தோழிக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –திரைப்பாயல் பாட பேதம்

பாயில் -ஷீராப்தி யாகிற படுக்கையிலே —
மறிதர -கீழ் மேலாக-
பாசுரம் -74 -தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயில்-
துறையடைவு–தலைவி மகிழ்வுடன் சொல்லும் பாசுரம் என்றும்
தென்றல் வருகிறதே -அவன் வரவில்லை -என்று வருந்த
தோழி திரு மேனி ஸ்பர்சம் முகந்து வருவதால்
அருகில் வந்து கொண்டு இருக்கிறார் -அறியலாம் –
தோழி அவன் வருகைக்கு அறிகுறி என்பதாகவும் கொள்ளலாம்
செய்ய தாமரை -3 -6 –

பதவுரை

தளர்ந்தும் முறிந்தும் வருதிரை–(கொந்தளித்து விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல்–(ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும்–அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும்–(அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும்–பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான்–கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி
பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய்–திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன்–அளாவியுண்ட
பசு சிறு தென்றல்–புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது–மகிழ்ச்சியுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.

வியாக்யானம்

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
பகவத் ஸ்பர்ச ஸூகத்தாலே கொந்தளித்து விழுவது எழுவதாய்
பரஸ்பர ஹானியாலே முறிந்தும் வருகிற திரைக் கிளப்பத்தை யுடைத்தான
ஷீரார்ணவத்தில் படுக்கையிலே

திரு நெடுங்கண் வளர்ந்தும்
ஸ்ரீ மத்தாய்
அதிசய ஸூசகமான திருக்கண்கள் உறங்கியும்

அழகிய
நெடும் கண் என்றுமாம்

அறிவுற்றும்
அவ்வுறக்கம் தமஸ் கார்யம் அல்லாமையாலே
அத்தோடே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணியும்

வையம் விழுங்கியும்
ரக்ஷணீயமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தவாறே
திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
ஆஸ்ரித ரானவர்களை -அந்தர் வர்க்கமான இந்த்ராதிகள் பசிக் கோபத்தாலே
வர்ஷாதிகளாலே நலியும் அளவிலே
பெரிய மலையை உயர மறித்துக் குடையாக்குகைக்காக இடந்து எடுத்த மஹா உபகாரகனுடைய

முடி சூடு துழாய்
இந்திரன் கோவிந்த அபிஷேகம் பண்ணின திரு முடியிலே
சாத்தின திருத்துழாயை

அளைந்து உண் சிறு பசுந்தென்றல்
தழுவி
முழுசி
அனுபவித்த மந்தமான புதிய தென்றலானது

அந்தோ வந்து உலாகின்றதே
ஐயோ வந்து உலவா நின்றது என்று
தன்னுடைய சந்தோஷத்தைத் தோழிக்கு உரைத்தாளாயிற்று

அன்னோ -என்ற பாடமாய்
உலவா நின்றதீ என்றுமாம்

இவ் விடத்தில் தென்றல் உலாவுதலை உகந்து உரைத்தது
தலைவனான ஈஸ்வரன் ஆசன்னனானான் என்கிற அபிப்ராயத்தாலே

இத்தால்
தன்னோட்டை ஸம்ஸ்லேஷ ஸூகத்தாலே பெரும் கடல் கிளர்ந்தால் போலே
தான் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தின் நீர்மையை யுடையரானவர்கள் அனுபவிக்கும் படி
தன்னை ஸர்வ ஸ்வ தானம் பண்ணி ஜகத்துக்கு ஸர்வ பிரகார ரக்ஷகனாய்
ஆபத் சகனாய்
விரோதி நிவர்த்தன சீலனான
கிருஷ்ணனுடைய நிரவதிக
சேஷித்வ
போக்யத்வங்களானவை
அவனுடைய தாக்ஷிண்ய அதிசயத்தாலே பிரகாசியா நின்றது என்று
ஆஸ்வஸ் தராய் ஸூஹ்ருத்துக்களுக்கு அருளிச் செய்தார் ஆயிற்று

(சிறு பசும் தென்றல் தழுவி முழுசி -தாக்ஷிண்ய அதிசயம் )

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஒரு தென்றல் வந்து உலாவிற்று ஆயிற்று
அத்தென்றல் வந்தது -அவனை வரக்கண்டிலோம் என்று தலைமகள் தளர்ந்தாள்
அத்தைக்கண்ட தோழியானவள்
வெறும் தென்றல் என்று இருந்தாயோ
மாளிகைச் சாந்து நாறி இரா நின்றாள் ராஜபுத்ரன் வர அணித்து என்று இருக்க வேண்டாவோ
இது அவன் நல் வரவுக்கு ஸூசகம் காண்
நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வஸிப்பிக்கிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும்
தளர்ந்து பெரும் திரையாக எடுத்து -அக்கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற திரைகளை யுடைத்தானா படுக்கையிலே
இவன் ஸர்வேஸ்வரன் என்று ஐஸ்வர்யத்தைக் கோள் சொல்லிக் கொடுப்பதாய்
பரப்புக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற கண்களைக் கொண்டு உறங்கியும்
ஜகத் ரக்ஷண சிந்தையைப் பண்ணிக் கொண்டு கண் வளர்ந்ததும்

அறிவுற்றும்
பிரளயம் வந்து நலியப் புக்கவாறே
இவற்றினுடைய ரக்ஷண அர்த்தமாக நாம் வந்து கிடக்கச் செய்தே
இவற்றை நோவு பட விட்டு இருக்கையாவது என் என்று உணர்ந்து அருளியும்

வையம் விழுங்கியும்
பிரளய ஆபத்திலே நோவு படாதபடி பூமியை எடுத்து திருவயிற்றிலே வைத்து நோக்கியும்

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே ஒரூராக நோவு படப்புக்கால்
வந்து நோக்கும் படியைச் சொல்லுகிறது
கோவர்த்தனம் ஆகிற மஹா கிரியை நின்ற நிலையிலே கிளம்பும்படி
கீழது மேலதாம் படி பேர்த்து எடுத்தவனுடைய

முடி சூடு துழாய் அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே
தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -திருவாய் -4-2-1- என்று
அவன் இருந்தாலும்
கிருஷ்ணாதி சிரஸா ஸ்வயம் -என்று அவன் இருக்கும்படியாலே
இவள் அத்தைச் சொல்லுகிறாள்
அவன் திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயைப் புக்கு உழறி
அதிலே வாஸனை பண்ணி நடுவு ஒன்றிலே தங்காதே
கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலவுகிறது
இனி உனக்கு சோகிக்கைக்கு அவகாசம் உண்டோ

அவன் முடி சூடு துழாய் என்ன அமைந்து இருக்க
கீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்குக் கருத்து என் என்னில்
அவன் ஆஸ்ரித அர்த்தமாக வியாபாரித்த இடம் எங்கும் புக்கு
ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை

இத்தால்
அவன் ஆஸ்ரித அர்த்தமாகாது திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பொடியையும்
பிரளய ஆபத்திலே ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து நோக்கின இம் மஹா உபகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணின பொடியையும்
ஆக இக்குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்த்தர் ஆஸ் வஸி ப்பிக்கும் படியைச் சொல்லுகிறது
ஆக குண ஞானத்தாலே ஜீவித்த படியைச் சொல்லுகிறது

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி இவருடைய ஜகத் ரக்ஷணமும் ஜகத் ஆஹ்லாதனமும்
ஸ்வா தந்தர்ய அசஹை களானவர்களுடைய வதனே யாமதோ என்று
மோஹங்கதையான தன்மைகளை ஆஸ்வஸிப்பிக்க
இவளின் பரம பிரணயியான சர்வ ரக்ஷகன் திரு அபிஷேகத்தில் சாத்தின
திருத்துளாய்ப் பரிமள மயமான தென்றலை இவன் மேலே ப்ரஸவிப்பித்தான்
அத்தால் ஆஸ்வஸ் தையான நாயகி பாவம் பெற்றாராய்
அவள் தன் தோழிக்கு உரைத்த பாசுரத்தால் தாம் அதுக்கு ஆச்சர்யப்படுகிறார்

வியாக்யானம்
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
ஒன்றுக்கு ஓன்று கொந்தளித்து விழுந்தும்
புரளுமதாய் முறுகளைப் பெற்றும் மேல் வருகிற திரைப்பாயனுள்ள ஆழ் கடலிலே

திரு நெடுங்கண் வளர்ந்தும்
திருவும் தாமும் தீர்க்க லோசனாத்மக யோக நித்திரை செய்தும்

அறிவுற்றும்
மத்யே வந்தவர்களைக் கடாக்ஷிக்கக் கண் விழித்தும்

வையம் விழுங்கியும்
மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
மஹத்தான கோவர்த்தனத்தை விஜ்ரும்பணத்தால் விஜ்ரும்பித்து
மேற்புறம் உட் படும்படி நிலத்தோடு ஒட்டு விடுவித்தவனுடைய

முடி சூடு துழாய் அளைந்து உண்
திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயில் விளையாடி
தத்கத கந்த மகரந்த ஆஸ்வாதீ யானதாய்

சிறு பசுந்தென்றல்
சிறுகச் சிறுக வருகிற குளிர்ந்த தென்றலானது

அந்தோ வந்து உலாகின்றதே –
இப்போதாக ஸஞ்சரியா நின்றபடி என்று
ஆஸ்வஸிக்கிறார் –

———–

இவருடைய ஆஸ்வாஸ அதிசயம் கண்ட அன்புடையார்
இவர் திவ்யராய் இருக்கிறாரோ
இந்த விபூதியிலே இவ்வதிசயத்தைப் பெற்றவரோ என்று
விஸ்மிதராய்ச் சொன்ன பாசுரத்தை
தலைவன் பாங்கியுடன் தலைவியை எதிர்ப்பட்டு வியந்து உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –

பாசுரம் -75-உலாகின்ற கெண்டை ஒளி யம்பு –
துறையடைவு-தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் –
சன்மம் பல பல -3 -10 –

பதவுரை

உலாகின்ற–(காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற
கெண்டை–கெண்டை மீன் வடிவமான
ஒளி அம்பு–ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள்
எம் ஆவியை ஊடு உருவ–எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி
குலாவுகின்ற–(அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற-இந்திரியங்களுக்கு விஷயமாக
வெம்சிலை–(புருவமாகிய) கொடிய வில்லையுடைய
வாள் முகத்தீர்–ஒளியுள்ள முகமுடையவர்களே!
குனி சங்கு இடறி–வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து
புலாகின்ற–மீன் நாற்றம் வீசப்பெற்ற
வேலை–அலைகிளர்ச்சியையுடைய
புணரி–கடலை
அம்பள்ளி–அழகிய படுக்கை யிடமாகவுடைய
அம்மான்-ஸர்வேஸ்வரனது
அடியார் நிலா கின்ற–பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற
வைகுந்தமோ–ஸ்ரீவைகுண்ட லோகோமோ
வையமோ–இந்த நிலவுலகமோ
நும் நிலை இடம்–உங்களது இருப்பிடம்?

வியாக்யானம்
உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
குழை யளவும் சென்று மீளுகையாலே உலாவா நிற்பதாய்
கெண்டையான ஒளியையுடைய அம்புகளானவை
என்னுடைய ப்ராணனைத் தோற் புரையிலே போகாதே
உள்ளுருவும் படியாக வளைந்து வியாபரிக்கிற புருவமாகிற
கொடிய சிலையையுடைய ஒளி விஞ்சின முகத்தை யுடையவர்களே

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான்
குனி சங்கைக் கீழ்ப்படுத்தி மேலே போய்த் தன் வெறி நாற்றத்தை யுடைத்தான
திரைக் கிளப்பத்தை யுடைய கடலை அழகிய படுக்கையாக யுடைய
ஸ்வாமி யானவனுடைய

வேலை -என்று
கரை யாகவுமாம்
(அலை யுடைய கடல் என்றும் கரையை யுடைய கடல் என்றும் )

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ
சேஷத்வ பாரதந்தர்யங்களை வடிவாக யுடையவர்கள்
நித்ய வாஸம் பண்ணுகிற அழிவற்ற தேசமோ

வையமோ
அவனுடைய லீலா விபூதியோ

வையம் என்று
விபூதிக்கு உப லக்ஷணம்

நும் நிலை இடமே
உங்களுடைய வாஸஸ்தானமானது

வைலக்ஷண்யத்தைப் பார்த்தால் நித்ய விபூதி என்னலாய் இரா நின்றது
இங்கே காண்கையாலே இந்த விபூதி என்னலாய் இரா நின்றது என்கை –

இத்தால்
உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற
வெஞ்சிலை வாள் முகத்தீர் -என்கையாலே
நித்ய விகாஸ ப்ரவ்ருத்தி ஸீலமாய் (சென்று சென்று பரம் பரமாய் -அறிந்து அறிந்து தேறித் தேறி )
சீதள ஸ்வபாவமாய்
பிரகாசத்தையும்
கூர்மையையும் உடைத்தாய் இருக்கும்
ஞானம் என்றபடி

எம்மா வீடு -திருவாய் 2-9-இத்யாதியாலே
இந்த ஞானத்தை அன்புடையார் நெஞ்சிலே அவகாடமாம்படி ப்ரதிபாதிக்கும் அளவில்
ப்ரூ விஷேபாதியான முக விகாஸத்தை ஸூ சிப்பிக்கிறது

(வீடு வேண்டாம்-மா வீடு-கைவல்யம் வேண்டாம்-எம்மா வீடும் வேண்டாம் –
ப்ரூவம் அழுத்தி திருத்தமாக சொல்வாரே
நின் செம் பாத பற்ப்பு ஒல்லை தலை மேல் சேர்க்கவே வேண்டும் -அடியேன் வேண்டுவது இதே
திருவடித் தாமரை தரித்து கைங்கர்யம்
என் நெஞ்சுள் நிறுத்தினான் -ஆழமாக காட்டி அருளினார் அன்றோ )

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் -என்கையாலே
சேஷத்வ நிரூபித ஸ்வபாவரான ஸூத்த ஸ்வபாவரைக் கீழ்ப்படுத்தி
தன்னுடைய தவ்ராத்ம்யமமே (துராத்மாவின் ஸ்வபாவமே ) கந்திக்கும்படியான
மேல் எழுச்சியை யுடைய ஸம்ஸார சாகரத்தை
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தத்தாலே கைவிடாமல் நினைக்கிற ஸ்வாமியான என்று
லீலா விபூதி யோகம் சொன்னபடி

(நாரங்களுக்கு அயனம் -கைவிடாமல் இங்கே வந்து கண் வளருபவன் அன்றோ
அம்மான் -ஸ்வாமி )

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – என்கையாலே
ஸ்வரூப பிரகாசம் யுடையாருக்கு உத்தேச்யம் நித்ய விபூதி என்றும்
இந்த விபூதியிலே யானாலும்
நேமிப்பிரான் தமர் போந்தார் -திருவாய் -5-2-6- என்று
அங்குள்ளார் இங்கே வந்தார் என்று சொல்ல வேண்டும்படியாய் இருக்கும் என்றதாயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒருவகை யாதல்
இயற்கையிலே ஐயமாதல்

வியாக்யானம்

உலாகின்ற கெண்டை
உலாகின்ற கெண்டை போலே யாயிற்றுக் கண்களின் மௌக்த்யம் இருக்கிற படி

யொளியம்பு
இவன் பார்த்த போதே பாராதே —

எம்மாவியை யூடுருவக்

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
ப்ரஹ்ம வித் அக்ர கண்யர்கள் இவருடைய ப்ரபாவத்தைத் தங்கள் பார்வையால்
முகந்து கொண்டு ஸந்துஷ்டார்களாய்
ஸேவித்துப் பரிமண்ட விதராய் நிற்க
அவர்களைக் கடாக்ஷித்து இன்னபடியாக அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
எம்மாவியை -எனக்கு ஆவியான அகண்ட ப்ரஹ்மத்தை
ஊடுருவ -வியாபகாவதி வியாபாரிக்க வல்ல
ஒள்ளிய அம்பாயும்
ஒள்ளிய கெண்டையாயுமுள்ள கண்களைக் கொண்டே அவர்களைத் திரஸ்கரிக்க வுமானது கொண்டு
ஒளி பெற்ற முகங்களை யுடையவர்களே

கிஞ்ச

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
வேலையில் -கரையிலே
குனிந்து இருக்கும் சங்குகளை
புணரி -ஆஸ்வேஷிப்பித்தும் இடறியும் உலாவும் அவைகளால்
அழகிய பாற்கடலில் பள்ளிகொள்ளும் அஸ்மத் ஸ்வாமிக்கு அடிமைப் பட்டவர்காள்

நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே –
உங்களுடைய ஞான வைஸத்யத்தை அப்பார்வையுள்ள முகத்தால் கண்டோம்
உங்கள் இருப்பிடமே கேட்க்கிறோம்
ஸ்வரூபவ யாதாத்ம்ய ஞானம் நிலையாகி நிற்கும்படியான அவ்வைகுந்தமேயோ
இவ்வையம் தானேயோ
சொல்லுங்கோள் விருப்புற்றுக் கேட்க்கிறேன் என்றபடி –

——————————–

அவதாரிகை

இப்படியான பின்புடையாரும் ஆச்சர்யப்படும்படியான ஞான வைலக்ஷண்யத்தை யுடையவர்
இதுக்கு அநுரூபமான பகவத் அனுபவம் ஸித்தியாமையாலே
தமக்கு உண்டான ப்ரகாஸமும் ( ஞானம் மதி சந்திரன் ) ப்ரதிகூலமான பிரகாரத்தை
தலைவனான ஸர்வேஸ்வரனுடைய திருத்துழாய் மாலையிலே நசை பண்ணி
சிதிலமான நெஞ்சைக் குறித்து சந்திரனுடைய விகாஸத்துக்கு ஆற்றாளாய்த்
தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – -76 –வடம் போதில் -பாட பேதம்

பாசுரம் -76 – இடம் போய் விரிந்து இவ்வுலகு அளந்தான் –
துறையடைவு-தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் —
ஓராயிரமாய் -9 -3-

பதவுரை

இடம்போய் விரிந்து–எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து
இ உலகு அளந்தான்–இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய
எழில் ஆர்–அழகு நிறைந்த
தண்–குளிர்ந்த
துழாய்போது வடம்–திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு
இனையும்-வருந்துகிற
மட நெஞ்சமே–பேதைமையுடைய மனமே!
வியல் தாமரையின் தடபோது–சிறந்த பெரிய தாமரைமலர்
ஒடுங்க–குவிய
மேல் ஆம்பல்–புல்லிய ஆம்பலை
அலர்விக்கும்–அலரச் செய்கிற
வெள் திங்கள்–வெள்ளிய சந்திரன்
நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது–நமது வெளுத்த வளைகளைக் கழலச்
செய்வதற்காகவே விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது
வியப்பே–ஓர் ஆச்சரியமோ?

வியாக்யானம்

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே
அவகாசம் யுள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி
இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய வெற்றி அழகாலே புனையப்பட்ட
செவ்வித் திருத்துழாயினுடைய தொடையு ண்ட பூந்தாரிலே
சிதிலமாய்
பற்றிற்று விடமாட்டாமல் ஈடுபடா நிற்கிற நெஞ்சமே

வடம் -என்று தொடை

நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே –
வியன் தாமரையின் தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்கள்
நாங்கள் வெண் வளைக்கே விடம் போலே விரிதல் இது வியப்பே
என்று அந்வயம்

பெரிய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தாமரையினுடைய இடமுடைத்தான பூவானது
மொட்டிக்கும்படி அல்பமான ஆம்பலை அலர்விக்கும் வெளுத்த சந்த்ரனானவன்
நம்முடைய வெளுத்த வளைக்கு விஷம் போலே பரம்புகிற இது ஆச்சர்யமோ என்று
நெஞ்சைக் குறித்து இரங்கி உரைத்தாள் யாயிற்று

இத்தால்
ஸர்வ ஸூலபனாய்
ஸூ சீலனான
ஸர்வேஸ்வரனுடைய
சேஷித்வ போக்யத்வாதி குண உன்மேஷத்திலே ஈடுபட்ட திரு உள்ளத்தைக் குறித்து
நிரதிசயமான போக்ய விகாஸத்தை ஸங்கோசிப்பித்து
அர்வா சீத விகாஸம் பண்ணிப் போருகிற இந்தப் ப்ரகாஸ விகாஸமானது
நம்முடைய கையில் ஸூத்த ஸ்வ பாவமான மினுக்கத்தையும் குலைப்பதாக ப்ரசரிக்கிற
இது ஆச்சர்யமோ
என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை சந்த்ர உதயத்திலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து
இச்சந்திரனுக்கு இங்கனே எளிய செயல் செய்கை ஸ்வபாவம் காண்
இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வஸி ப்பிக்கிறாள்

வியாக்யானம்

இடம் போய் விரிந்து
பள்ளமுள்ள இடம் எங்கும் போய் வெள்ளம் பரக்குமா போலே
அவகாசமுள்ள இடம் எங்கும் பரந்து

இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்

இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய
எழிலார் தண் துழாய் யுண்டு
இதுக்கு எல்லாமாக முதலியாய் இட்டமாவை அவன் திருமேனியிலே ஸ்பர்சத்தாலே
அழகியதாய்க் குளிர்ந்து இருந்துள்ள திருத்துழாய்

வடம் போதினையும் மட நெஞ்சமே
வடமாகிற பூவை இச்சித்துப் பெறாமல் சிதிலமாய் இருக்கிற திருத்துழாய் மாலையில்
செவ்வியைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே தளரா நிற்பதாய்
அதில் அருமை சொன்னால் கொள்ளாதே பற்றிற்று விடாதே கிடக்கிற நெஞ்சே

நங்கள் இத்யாதி
நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ

வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே
தம் தாமுக்கு பிராப்தி யுள்ள இடங்களிலே நலிகை முறைமை இறே
தானும் வெண் திங்களாய்
இதுவும் வெள் வளையாகையினாலே
நிறத்தில் ஸாம்யம் கொண்டு நலியலாம் இறே

வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும்
வாசி அறியாதார் என் செய்யார்
விஸ்மய நீயமாய் இருந்துள்ள தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கும்படியாகவும்
ஷூத்ரமாய்ப் புல்லிதான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணும்படியான

வெண் திங்களே –
வெள் வளைக்கே விடம் போல் வருமிது வியப்பே

ஸ்வாபதேசம்
இத்தால்
திரு வுலகு அளந்து அருளின போது சாத்தின அச்செவ்வி மாலை
இப்போது பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே
அநுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமான படியைச் சொல்லுகிறது

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படியுள்ள ப்ரஹ்ம வித்துக்களில் இவருடைய பரிவால் வந்த ஸ்மரணம்
பிரிவாற்றாத் தலைமகள் ஆக்க
அப்போதே இவள் வளை கழலப் பண்ணும் வெண் திங்கள் உதிக்க
அத்தைக் கண்ட இவருடைய நெஞ்சு ஐயோ என்று சோகிக்க
அப்போதில் நையும் நீ வெண் திங்கள் நம் வளை கழலப் பண்ணுமத்துக்கு
ஆச்சர்யப்படவும் சோகிக்கவும் வேண்டா

அவன் அல்ப விகாசகனும் அதிக சங்கோசகனும் காண் என்று
விஷம் பரந்தால் போல் வியாபிக்கும் நிலவுக்குத் தளர்ந்தவளாய்த் தன் நெஞ்சுக்கு
அருளிச் செய்கிறாள் இதில்

வியாக்யானம்

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே
அவகாசம் உள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி இந்த லோகத்தை அளந்து கொண்ட
அவனுடைய விபூதி த்வய ஆதி ராஜ்ய அர்ஹமான செவ்வித் திருத்துழாய்த் திருமாலைக்கு
அழகு பெறுத்தும் குஸூ மங்களில் பாடிய ஆசைப்பட்டு
அது கிடையாமையாலே நைந்து இருக்கிற எனக்கு பவ்யமான நெஞ்சமே
அவன் துஸ் ஸ்வ பாவத்தைக் கேளாய்

வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே –
இந்த வெளுத்த சந்த்ரனான இவன்
விஸ்மய நீயமும் விசாலமுமான தடாகங்களில் யுள்ள கமலங்கள் எல்லாம் முகிளிதமாம் படி
அதி ம்ருதுவும் அதி அல்பமுமான ஆம்பல்களை விகசிப்பிக்குமவன் அன்றோ

ஏவம் பூதன்
நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே
நம்முடைய வளைகள் கழலுமதுக்குத் தன் நிலவால் விஷம் போலே
விஸ்த்ருதனாமது இது நமக்கு ஓர் விஸ்மயமோ

ஆளும் பரமன் -திருவாய் -3-7-2-என்றும்
அளிக்கும் பரமன் -திருவாய் -3-7-6-என்றும்
பேர் பெற்ற நம் இறைவன் நமக்குத் தன் எழிலார் தண் துழாய் வடத்தைத் தந்தால்
நாம் நையோமே
அப்போது நம் வளை கழலப் பண்ண வல்லவன் அல்லனே என்கிறாள் —

————————-

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான இவர் தமக்கு அனுபவ யோக்ய காலம் சந்நிஹிதமாய்க் கொண்டு
போக்ய விஷயத்தை ஸ்மரிப்பித்து பாதகமான பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-

பாசுரம் -77–திங்கள் அம் பிள்ளை புலம்ப –
துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–
தாள தாமரை -10-1-

பதவுரை

திங்கள்–பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை–அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப–(தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட–சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய
செங்கோள்மையை யுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம்–செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி–அடைந்து
நின்று–(நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
எள்கு–வருந்துகிற
புல்மாலை–சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை–தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம் செய்த–கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார்–நமது தேவாதி தேவனான தலைவனது
துழாய்–திருத்துழாயை
துணை ஆ–தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்களை மாமை கொள்வான்–நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது–எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது

வியாக்யானம்

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்பிற்று என்னும் படியாக
சிவந்த கிரணங்கள் நடப்பாகிற செங்கோலை யுடைய தன்னரசான ஆதித்யன் பட்ட ரக்தத்தாலே
சிவந்த களம் என்னலாம்படியான செக்கர் வானத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிறது
என்னலாம் படி புல்லிதாய் உறாவித் தோற்றின மாலையானது

தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார்
இப்படி இழந்து கிலேசிக்க வேண்டாதபடி தெற்குத் திக்கு இடத்திலேயான லங்கையிலே
சத்ருக்களை ச புத்ர பவ்த்ர பாந்தவமாம் படி கொன்று கொடிய களத்தைப் பண்ணின வெற்றியாலே
ப்ரஹ்ம ருத்ராதிகளான தேவர்களுக்குக் குடி இருப்புக் கொடுத்த மஹா உபகாரத்தாலே
பெண் பிறந்த நமக்கு விஸ்வஸித்துப் பற்றலாம் படியானவருடைய

துழாய் துணையா
வெற்றி மாலையான திருத்துழாய் நமக்கு ஸ்மரிப்பிக்கிற முகத்தாலே
நலிகைக்குத் துணையாகக் கொண்டு

நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –
நம்முடைய மாமை நிறத்தை அபஹரித்துக் கொள்ளுவதாக வந்து தோன்றி தன்
தைன்ய பிரகாரத்தாலே நலியா நின்றது என்று ஆற்றாது உரைத்தாள் ஆயிற்று –

இத்தால்
தமக்கு உண்டான ஞான ப்ரகாஸமும் (திங்கள் அம் பிள்ளை )ப்ரலாப பர்யவசாயியாம் படி
அநுராக உத்தரமான மஹா விவேகமும் (ஸூர்யன் )குலைந்து
அநுபாவ்ய விஷயமான ராகம் விஞ்சும்படியான அவஸ்தா விசேஷமானது
அநந்யார்ஹர் ஆனவருக்கு அதிசயித விரோதிகளை அழித்துக் கொடுக்கும்
சர்வாதிகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக போக்யதா ஸஹ சரிதமாய்க் கொண்டு
நம்முடைய ஸ்வரூப விபர் யாசத்தைப் பிறப்பித்து ஈடுபடுத்தா நின்றது என்று
தம்முடைய ஆர்த்தியை அருளிச் செய்தார் ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஸந்த்யையிலே நோவு படுகிறாள் ஒரு தலை மகள்
வார்த்தையாய் இருக்கிறது

வியாக்யானம்

திங்களம் பிள்ளை
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
மஹதா தபஸா -ஆரண்ய -66-13- என்கிறபடியே
வருந்திப் பெற்ற பிள்ளை இறே

புலம்பத்
வாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே
விம்மல் பொருமலாய் இருக்கும் கடலோசை ஆதல்
அக்காலத்திலே பக்ஷிகளுடைய ஆரவாரமாதல் இறே

தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
தன்னுடைய ஆஜ்ஞா ப்ரதானனான ராஜாவானவன் பட்ட யுத்த பூமியைப் பற்றி நின்று
ஈடுபடுகிற புல்லிய மாலை
ருதிர வெள்ளத்தாலே சிவந்த பூமியைப் போலே இருக்கும் இறே அப்போதை ஆகாசம்
ராவணன் பட்ட களத்திலே மந்தோதரி கூப்பிட்டால் போலவும்
வாலி பட்ட களத்திலே தாரை அங்கதப் பெருமாளைக் கொண்டு நின்று கூப்பிட்டால் போலவும் ஆயிற்று
ஆதித்யனை இழந்த அந்த ஸந்த்யையும் அப்பிரதேசத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிற படி

பகல் கண்டேன் -இரண்டாம் திரு -31-என்கிற
வஸ்துவை இழந்து இறே இவள் நோவு படுகிறது

தென் பாலிலங்கை வெங்களம் செய்த
ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச தேசமான தெற்குத் திக்கில்
அறிவுடையார் நடையாடாத லங்கையை வெவ்விய களமாம் படி
ஸ்மசாந கல்பமாம்படி பண்ணின

நம் விண்ணோர் பிரானார்
ராவண வத அநந்தரம்
பவான் நாராயணோ தேவ -யுத்த -120-13-என்று
ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி நின்ற

துழாய் துணையா
அவர் தோளில் மாலையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்ட
இதுவே பரிகாரமாகக் கொண்டு

நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –
தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே இது
நம் இழவுக்குக் கூப்பிடுகிறதாய் இருக்கிறது

நங்களை மாமை கொள்வான்
நிறம் கொள்வாருக்கு நிறம் தான் வேண்டாவோ
தன் இழவும் கூப்பிடும் கிடக்கச் செய்தே
பண்டே குறைபட்டு நொந்து இருக்கிற நம்மை நலிகைக்குப் பாரிகிற படியாய் இருந்ததீ –

ஸ்வா பதேசம்
கீழ்
திரு அளந்து அருளினை பொது இட்ட மாலையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுக்
கிடையாமையாலே நோவு பட்ட படி சொல்லிற்று
இதில்
ராவண வத அநந்தரம் இட்ட வெற்றி மாயையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுக் கிடையாமை
நோவு படுகிறபடியைச் சொல்லுகிறது

—————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை
இதுக்கு மேல் மாலை வந்து தோன்றி நலிய
அம்மாலைக்கு ஆற்றாத் தலைமகளாய் நலிவு படுகிறாள் இதில்

வியாக்யானம்

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
மாலைக்கு அரசு ஆதித்யன் சாயம் ஸந்த்யையிலே திங்களாகிற இளம் பிள்ளை
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தால் கோஷிக்கவே
தனக்கு அரசாய்ச் சிவந்த கிரண தண்டங்களை ப்ரவர்த்திப்பித்த
ஆதித்யன் ஹதன் -என்னும்படி அஸ்தமித்த இடமான
செங்களம் -ரக்தமயமான களம் -யுத்த பூமி
அதிலே தான் நின்று எள்கு -துக்கத்தால் ஈடுபடுகிறது கண்டு

புன்மாலை
புன்னிய -ஏழைத்தனம் பெற்று
மாலை -ஸந்த்யையானது
வந்து தோன்றி நலிகின்றது
என்று அந்வயம்

அது தனக்குத் துணை கூட்டிக் கொண்டு நலிகிற பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான்
தெற்கில் உள்ள லங்கா த்வார அங்க கணத்தை வெவ்விய போர்க்களமாக்கி
தன் விரோதிகளை நிரசித்த நம் ஸ்வாமியாய்
இந்த்ராதிகளான விண்ணோர்க்குக் குடி இருப்பைத் தந்து உபகரித்தவனுடைய
துழாய் மாலையை அவனால் வரப் பெற ஆசைப்பட்டாள் என்பதே
தனக்குத் துணையாகக் கொண்டு நல் நிறத்தை அபஹரிப்பதாய் வந்து நமக்கு
எதிர்ப்பட்டு நம்மை நலியா நின்றது

வந்து தோன்றி நலிகின்றதே
புன்மாலை என்றதால் செக்கர் நல் மேகங்களைக் காட்டி
பீதாம்பரம் சாத்திக் கொண்டு மேகம் போன்று இருக்குமவர்
திருமேனியை ஸ்மரிப்பித்து நலிகிற படி சொல்லிற்று ஆயிற்று
தன் தைன்ய பிரகாச நத்தாலே நலிகிறது என்பாரும் உண்டு –

———————

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவ்வாழ்வாருடைய –
விரோதி நிரசன ஸ்வபாவங்கள் உண்டாகச் செய்தே
நம்முடைய பிரதிபந்தகங்கள் போய் அவனுடைய போக்யதையை அனுபவிக்கப் பெறாமல்
(இவ்வாழ்வாருடைய )திரு உள்ளம் தளும்பி
அத்தாலே கிலேசித்த பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரன் சக்தனாய் இருக்கக் கிட்டப் பெறாமையாலே
நெஞ்சு அழிந்து இரங்கின நாயகி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – 78-

பாசுரம் –78-நலியும் நரகனை வீட்டிற்றும் –
துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –
இன்பம் பயக்க-7-10-

பதவுரை

(எமது நாயகனார்)
நலியும் நரகனை வீட்டிற்றும்–(உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும்
வாணன் திண் தோள் துணிந்த வலியும்–பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும்–(அப்போரில் வெளிக் காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல–(எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரை போல் பொலியும் உருவின் பிரானார்–அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தை யுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே–சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப் பெறுவதற்காகவே
மெலியும்–ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார்–(எமது) பேதை நெஞ்சு
தந்து போயின–(தான் எம்மை விட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்து விட்டுப் போனவை
வேதனை–இத் துன்பங்கள்.

வியாக்யானம்

நலியும் நரகனை வீட்டிற்றும்
மேலிட்டு நலிந்து வருகிற நரகா ஸூரனை ஸத்யபாமைப் பிராட்டி வார்த்தைக்காக
விழப் பண்ணினதும்

வாணனை திண் தோள் துணித்த வலியும்
உஷையையும் அநிருத்தரையும் கொண்டு போய் இருக்கைக்காக பாணனுடைய
யுத்த ஆகாங்ஷியான திண்ணிய ஆயிரம் தோளையும் அறுத்து விழவிட்ட
ஆயுத பலமும்

பெருமையும்
அந்த பாண யுத்தத்தில் ஈஸ்வர அபிமானியான ருத்ரனை முதுகு புறம் கொண்ட
சர்வேஸ்வரத்வமும்

யான் சொல்லும் நீர்த்தல்ல
வேதங்கள் அகப்பட எல்லை காண மாட்டாத இக்குணங்கள்
அல்ப ஞானனான நான் சொல்லும்படியான நீர்மையை யுடையது அல்ல

மைவரை போல் பொலியும் உருவில் பிரானார்
அஞ்சன கிரி போலே வளர்ந்த வடிவை யுடையராய் இருக்கிற உபகாரகர் ஆனவர்

புனை பூம் துழாய் மலர்க்கே
வெற்றிக்கும்
அழகுக்கும்
சூட்டின அழகிய திருத் துழாய்த் தாருக்காக

மெலியும் மட நெஞ்சினார்
ஈடுபட்டு பற்றிற்று விட மாட்டாத நெஞ்சினாரானவர்

தந்து போயின வேதனையே –
அத் தார் நசையாலே நம்மை விட்டுப் போகிற போது
நமக்குத் தந்து போனவை கிலேசங்களாய் இருந்தன விறே
என்று
அழிந்து உரைத்தாள் யாயிற்று

இத்தால்
ஈஸ்வரனுடைய விரோதி நிரசன சக்தி
அபரிச்சிந்னையாய் இருக்கச் செய்தேயும்
அநுபவ ஸித்தி பிறவாத அளவிலே
அதிசயித போக்யதை ஆர்த்தியைப் பிறப்பிக்கும்
என்றதாயிற்று

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டு
நோவு படுகிறாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது

வியாக்யானம் –

நலியும் நரகனை
ஸர்வேஸ்வரன் பரிக்ரஹிகைக்கு யோக்யர்களாய் இருக்கிறவர்களைக் கொண்டு வந்து சிறை செய்தான் இறே

நலியும்
அந் நலிவு தம்மதாய் இருந்தபடி

வீட்டிற்றும்
வீழ்த்ததுவும் -முடித்ததுவும்

வாணனை திண் தோள் துணித்த வலியும் பெருமையும்
உஷையையும் அநிருத்த ஆழ்வானையும் சேர ஒட்டாதே சிறை செய்த

வாணனை திண் தோள்
தேவதாந்த்ர சமாஸ்ரயணத்தைப் பண்ணி
பகவத் சமாஸ்ரயணத்தைப் பண்ணினாரைப் போலே திண்ணிய தோளை யுடையனாக நினைத்து இருந்தான்

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவன்
நபி பேதிரு தச்சந -தைத்ரியம் -ஆனந்த -2-7-
ஏஷ ஹ்யேவ ஆனந்த யாதி இறே

அத்தால் வந்த தைர்யத்தாலே தான் புத்தி பூர்வம் பண்ணினவற்றையும் மதியாது இருக்கும் இறே

துணித்த வலியும் பெருமையும்
அவன் திண்ணிய தோளைத் துணித்த வலியும் பெருமையும் என்னுதல்
வலியின் பெருமை என்னுதல்

மிடுக்கும் மேன்மையும்
அன்றிக்கே
வழியினுடைய பெருமையும்

யான் சொல்லும் நீர்த்தல்ல
நாம் இப்போது இருந்து சொல்லும் அளவோ

நீர்த்தல்ல

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

திவ்ய ஆயுதாதிகளை நமக்கு அனுபாவ்யமாக்கி உபகரிக்குமவரால்
தம் அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் அநு குணமாகச் சாத்திக் கொள்ளப்பட்ட
அழகிய திருத்துழாய் மாலையில் உள்ள குஸூ மங்களுக்கே ஆசைப்பட்டு
கிலேசிக்கும் எனக்கு பவ்யமான பெருமையுள்ள மனஸ்ஸாகிறவர் தாம் என்னை விட்டு
அவன் இடத்தில் போம் போது தந்து போன வேதனை இது என்று அறியுங்கோள்
என்கிறாளாய் அருளிச் செய்தார் –

—————

அவதாரிகை

இப்படி ஆர்த்தி அதிசயத்தாலே ஈடுபட்டவர்
இவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷனர் ஆவர்கள்
இறே என்று தம்முடைய இழவை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79

பாசுரம் –79-வேதனை வெண் பூரி நூலனை –
துறையடைவு-தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –
மொய்ம்மாம் பூம் பொழில் –3 –5-

பதவுரை

வேதனை–வேதம் வல்லவனும்
வெள் புரி நூலனை–சுத்தமான யஜ்ஜோபவீத முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை–மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை–(பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி
(அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை–உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல்–திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும்–யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே–குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார்–இடைவிடாது வணங்கியநுபவிக்கப்பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர்–பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.

வியாக்யானம்

வேதனை
வேதங்களால் சொல்லப் படுமவனை

வெண் புரி நூலனை
வைதிக புருஷன் என்கைக்கு அடையாளமான
ஸூத்த யஜ்ஜோபவீதத்தை யுடையவனை

விண்ணோர் பரவ நின்ற நாதனை
வேத ப்ரதிபாத்யர்களான அல்லாத தேவதைகள்
தம் தாமுடைய பத ஸித்திக்காக ஸ்தோத்ரங்களைப் பண்ண
அவர்களுக்கு அபிமத பல ப்ரதாநம் பண்ணி
அவர்களுக்கு ஸ்வாமியாய் நின்றவனை

ஞாலம் விழுங்கும் அநாதனை
அத் தேவதைகளோடு
அவர்களுக்கு இருப்பிடமான ஜகத்தோடு
வாசியற பிரளயம் கொள்ளாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
தன்னை நோக்குகைக்கு ஒருவர் வேண்டாதவனை

ஞாலந்தத்தும் பாதனைப்
அந்த ஜகத்துக்குத் தானே சேஷி என்னும் இடம் தோற்றத்
தன் கீழே ஆக்கிக் கொள்ளும் திருவடிகளை யுடையவனை

பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார்
ஜகத்துக்குப் பின்னையும் இடையூறு வந்தால்
ரக்ஷிக்க வேணும் என்று திருப்பாற்கடலிலே
பிரிய ஒண்ணாத போகத்தை யுடைய திரு அனந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
ரக்ஷண சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளும் சீதள ஸ்வ பாவம் உள்ளவனை

சீதனையே
அந்நிய விமுகராய்க் கொண்டு
(வேறே ஒன்றைக் காணாமல் -கணிசியாமல்) அனுபவிக்கப் பெற்றவர்கள்

விண்ணுளாரிலும் சீரியரே –
நித்ய அனுபவம் பண்ணப் பெற்ற பரமபத வாஸிகளிலும் கனத்தவர்கள்

இவ்விடத்தில் சீதன் என்றது
தாப ஆர்த்தோ ஜல சாயிநம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –41-30-என்று
அனுபவிக்கப் பெறாதார் ஆர்த்தி தீர்க்கைக்காகத்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகையாலே
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸுசீல்ய சீதனத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

————-

அவதாரிகை

இப்படி அனுபவ அபி நிவேசம் பிறந்தவர்
அதுக்கு ஈடாக அனுபவிக்கப் பெறாமையாலே தம்முடைய விவேக பிரகாசம் குலைந்து
மோஹ அந்தகாரம் மேல் இடுகிறபடியை
பிரிவாற்றாது பொழுதொடு புலம்பின தலைவி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

பாசுரம் –80-சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் –
துறையடைவு-பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் –
முடிச் சோதியாய் -3–1-

பதவுரை

சீர் அரசு ஆண்டு–சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ–தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச்சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த–பின்பு இறந்தொழிந்த
பார் அரசு–ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து–போன்று
ஞாயிறு–ஸூர்யன்
மறைந்து–அஸ்தமித்தான்;
பார் அளந்த–உலகத்தை அளந்து கொண்ட
பேர் அரசே–சிறந்த தலைவனே!
எம் விசும்பு அரசே–பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே!
எம்மை நீத்து வஞ்சித்த–எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த
ஓர் அரசே–ஒப்பற்ற நாதனே!
அருளாய்–(இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள்புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்)
இருள் ஆய் வந்து கூறுகின்றது–இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது

வியாக்யானம்
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு
அழகிய ராஜ்யத்தைப் பண்ணி
தன்னுடைய அபங்குரையான ஆஜ்ஜையைச் சில காலம் நடத்திக் கழிந்து போன பூமியில்
ராஜாக்களோடு ஒத்தது என்னலாம் படி
ஆதித்யனானவன் பகல் எல்லாம் ப்ரதா போத்தரனாய் நடத்தி அஸ்தமித்தான்

பாரளந்த பேரரசே
ரக்ஷணீயமான பூமிக்கு அந்நிய அபிமானத்தைக் கழித்து
உன் திருவடிகளின் கீழே ஆக்கிக் கொண்ட பெரிய ஸ்வாமி யானவனே

எம் விசும்பரசே
அந்நிய அபிமான ப்ரஸங்கம் இல்லாத நித்ய விபூதிக்கு ஸ்வாமி யானால் போலே
எங்களையும் அநந்யார்ஹ மாக ஆண்டு கொண்டவனே

எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே
இப்படி அநந்யார்ஹதை ஒத்து இருக்க
அவர்களைப் போலே அனுபவம் பெறாதபடி எங்களை நீக்கி
வஞ்சித்து வைத்தமைக்கு அத்விதீய நாயகன் ஆனவனே

அருளாய்
இப்படி நீங்கி இராதபடி கிருபை பண்ணி அருள வேணும்

இருளாய் வந்து உறுகின்றதே –
தனித்து இருக்கில் இருளின் கையிலே அகப்படும் அத்தனை
ஆகையால் அருள வேணும் என்றதாயிற்று

இத்தால்
ஆதித்ய ப்ரகாஸம் என்னலாம்படி ஸர்வ லோகத்தையும் வெளிச் சிறப்பிக்கிற
தம்முடைய விவேகம் அனுபவ அலாபத்தாலே குலைந்து
மோஹ அந்தகாரமும் மேலிடுகையாலே
ஸமஸ்த விபூதி ரக்ஷகனாய் நம்மைக் காரியப்பட்டாலே
பிரித்து வைத்து இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய கிருபையை
இவ் வஸ்தைக்கு ரக்ஷகம் என்று அறுதியிட்டு
இரங்க வேணும் என்று அபேக்ஷித்தார் ஆயிற்று

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஆதித்யனும் போய் அஸ்தமித்து
இருளும் வந்து
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி சார்த்தையாய் இருக்கிறது –

வியாக்யானம்

சீரரசாண்டு
குணமாக ஆண்டு
தர்ம புத்ரன் ராஜ்ஜியம் பண்ணா விடில் நாங்கள் ராஜ்யத்திலே இரோம் என்று
அக்னி ஹோத்ரங்களையும் கொண்டு அவன் இருந்த காடே புறப்பட்டுப் போனார்கள் இறே
அப்படியே சீரியதாக ராஜ்யத்தை நடத்தில்

தன் செங்கோல் சில நாள் செலீஇக்
அது தான் அல்ப காலத்தோடே

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இவ்விபூதியில் தம் இருப்பைத் தாம் அசஹமாநராய்
வைத்தவனையே நிவர்த்திப்பாய் என்ற அபிப்ராயத்தால்
இருளுக்கு அஞ்சின நாயகியாய்
அருளாய் என்று பிரார்திக்கிறார் இதில்

வியாக்யானம்

சீரரசாண்டு
இந்த லோகமான பூமி எல்லாவற்றையும்
ராஜ்ய ஆஜ்ஞக ராஜாவாய் அனுபவித்தவனாய்

தன் செங்கோல் சில நாள் செலீஇக்
தன் ஆஜ்ஜையைச் சில நாள் நடத்தி

கழிந்த பார் அரசு ஒத்து
கழிந்து போன பூபரோடு ஒத்தவளாய்

மறைந்தது ஞாயிறு
மறைந்தான் ஆதித்யன்

பாரளந்த பேரரசே
இந்தப்பூமியை எல்லாம் ஓர் அடியால் அளந்து கொண்ட மஹா பிரபுவானவனே

எம் விசும்பரசே
எங்களதான தெளி விசும்புக்கு அரசானவனே
அங்காகவே இருப்பதான எங்கள் பதின்மரையும் சில நாள் அங்கு இராதபடி விலக்கி
எங்களை வஞ்சிப்பதற்கு அத்விதீய பிரபு ஆனவனே

அருளாய்
அங்காக நான் வந்து இருப்பதாக அருளிச் செய்யாய்

இங்கு உமக்கு என்ன பாதகம் என்ன
இருளாய் வந்து உறுகின்றதே –
அஞ்ஞான அந்தகாரமே எவரிலும் வந்து திணுங்கி எல்லாரையும் பாதியா நின்றது

ஆர் தான் இந்த ப்ரபந்ந அதிகாரிகள்
இவர்களுக்கு அனுபவ காரகமான இந்த பிரபந்தங்களை இங்கனே வைத்து
தேவரீர் ப்ரவர்த்திப்பத்துக்கு என்ன பலம்
ஆகையால் என்னை அங்கு வாங்கு என்றபடி –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான சாரங்கள் —

April 23, 2022

ஸ்ரீ ஆராவமுதன் இடம் சரணாகதிக்கு ஸ்ரீ நம்மாழ்வார் போல் இவரும்
சம்சார துக்கம் போக்கவே
ஆறு அங்கம் கூற அவதரித்தவர் அன்றோ –

20- குணங்களை காட்டி சரண்

1-ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி
2-விரோதி நிரஸனம்
3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை
4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை
5-ஸர்வ பல பிரதத்வம்
6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை
7-சர்வ ரக்ஷகத்வம்
8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை
9-ஆயுதங்கள் தரித்து
10-புருஷகாரம்
11-சாமான்ய ரஷணம் சொல்லுகிறது –
12-சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –
13-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-
14-ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –
15-ஆராதனைக்கு எளியவன்
16-சரீர சரீரீ பாவம் –
17-பிரதிபந்தகம் போக்கி
18-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
19–சர்வ அந்தர்யாமி
மேன்மைகள்-இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –
20-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்
ஸ்ரீ நம்மாழ்வார் போல்

————-

ஸ்ரீ திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் மதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

————–

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன் –

எம்பெருமானுக்கு திரு மதிள் போல் அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள்
செய்து அருளின ஆழ்வாருடைய திரு நாமங்கள்
பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது இதில் –

பிரத்யசேஷ குரவஸ் ஸ்துத்யா-என்னக் கடவது இறே –
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லாருக்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்-

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலரானவர் வாழி

வாழி கலிகன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் —
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையராய் –
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல்-
அங்கே வாழுகிறவர் என்னுதல்

வாழியரோ–மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -என்று
ஆழ்வாரையும்
அவர் திருக்கையிலே வேலையையும் ஒருகாலே ஆசாசித்த படி –

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே வாள் வலியால் மந்திரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே –
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்திலே இறே மந்திரப் பொருள் கைக் கொண்டது –
மந்திரத்தைப் பற்றி இறே மந்திரம் கொண்டது

மங்கையர் கோன்-
மங்கையர் மன்னன் இறே

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியை யுடையவர்

அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -என்று
தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே

சுடர்மான வேல் –
தேஜோ ரூபமான மான வேல் –
பெரிய வேல்
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

வாழியரோ –
இத்தால் ஆழ்வாரோ பாதி
ஆயுதமும் ஆசாஸ்யம் என்றபடி –

நின் கையில் வேல் போற்றி என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல் ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும் –
இதன் விஜயத்தை வேண்டுகிறது —ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

————————————————————————–

அவதாரிகை -1-
சம்சார ஸ்வபாவ அனுசந்தானத்தாலே மிக அவசன்னரான ஆழ்வார்
அவற்றின் பரிகாரமாக
அவனை கைகளால் தொழுது
மனசாலே நினைத்து
வாயாலே பேசி திருவடிகளிலே விழுந்தார் –

இங்கனே கிடந்தது நோவு பட உமக்கு அபேஷிதம் என் என்ன
பகவத் விரோதியாகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கித் தர வேணும் -என்றார்

அத்தை நம்மால் செய்யல் ஆவாதே என்ன

உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
சர்வ சமாஸ்ரயநீயன் ஆகவும்
ஆபத் சகன் ஆகவும்  இருக்கிற நீயே
என்னுடைய சம்சாரத்தை கழித்து அருளா விடில்
என்னால் கழித்துக் கொள்ளப் போகாதே -என்று
திருவடிகளிலே விழுந்து தம் தசையை அறிவிக்கிறவராய் -இருக்கிறது –

அவதாரிகை -2-
முதலிலே கரண களேபர விதுரமாய்
அவிஜ்ஞ்ஞேய ஸ்வரூபமாய்
அசித் கல்பமாய் இருக்கிற இவற்றை –

அர்த்தித்வாதி நிரபேஷமாக
உன்னுடைய நிரவதிக தயையாலே உண்டாக்கின நீயே அருளிக் கடாஷியாயகில்
அமூநி புவநாநி பாவித்தும் நாலம்-ஸ்தோத்ர ரத்னம் -10–
முதலிலே இவை யுண்டாகவே மாட்டாது
சத்தையே தொடங்கி உன்னதீனமான பின்பு
உன்னை ஒழிய இவற்றுக்கு ஒரு பிரவ்ருத்தி நிவ்ருத்தி கூடாது
என்னும் இடம் சொல்லவும் வேணுமோ

இது இல்லாத வன்று உண்டாக்கின நீயே
இதுக்கு ஒரு போக்கடி பார்க்கை ஒழிய
நான் ஓன்று செய்து உன்னைப் பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ-

சரணா மறை பயந்த -தாமரை யானோடு
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம் -அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு –முதல் திரு -60-என்றபடி

ஜ்ஞானாதிகனான சதுர முகனோடே கூட உத்பத்தி விநாசாதிகளுக்கு கர்மீ பவிக்கிற சகல சேதனர்க்கும்
ரஷை என்று பெற்ற பெற்றவை எல்லாம்
நம் மேல் வினை கடிவான் என்றபடி
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக கையிலே திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உபகாரகனான அவன் பார்க்கில் பார்க்கும் இத்தனை அல்லது
வேறு கடல் சூழ்ந்த பூமியில் உள்ள சேதனர் தங்களுக்கு ரஷை தாங்கள் அன்றியார்கள்

அவனை ஒழிய இவை அறியாது ஒழிய வேண்டுகிறது என் என்னில் –
நைவ கிஞ்சித் -ஜிதந்தே -1-6-இத்யாதி –
உனக்கு-பரோஷமாய் இருப்பது ஓன்று இல்லை
எத்தனை யேனும் ஜ்ஞானாதிகரராய் இருப்பாருக்கும் நீ கண்ணுக்கு விஷயம் ஆகாய்
உனக்கு கை புகராதது ஒன்றும் இல்லை –
எத்தனை யேனும் அதிசய ஜ்ஞானாதிகர்க்கும் நீ கை புகுந்தாய் இராய்-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன வென்றால்
ஒருவனுக்கு கண்ணும் தோற்றாதே
காலும் நடை தாராதே இருப்பது

ஒருவனுக்குக் கண்ணும் தோற்றி
காலும் நடை தருவது

இப்படி இருந்தால் யார் வழி காட்டிக் கொடு போவார்கள்

நான் அஜ்ஞனாய் அசக்தனாய் இருந்தேன் -நீ சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தாய்
இங்கனே இருந்த பின்பு நீ என் கார்யம் செய்து தலைக் கட்டும் இத்தனை போக்கி
நான் என் கார்யம் செய்து தலைக் கட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார்-

நீ தந்த ஜ்ஞானம் கொண்டு அறியப் பார்த்தாலும்
அறிந்த படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தி எனக்கு யுண்டோ –

ஆழ்வாருக்கு முதலிலே செப்பேட்டைக் கையிலே கொடுத்து
நிதியைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
திரு மந்த்ரத்தையும்
அதில் அர்த்தத்துக்கு எல்லை நிலமாகக் கோயில்களையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
க்ருதக்ருத்யராய் –
சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஒக்க மறந்தார்

ஆழ்வாரைப் பார்த்து எம்பெருமான் –
நீர் இருக்கிறது சம்சாரத்தில் கிடீர் -என்று அருளிச் செய்ய –
அதன் கொடுமையை அனுசந்தித்து ஆற்றாமையாலே
மநோ வாக் காயங்களாலே எம்பெருமானை அனுபவித்து ஆற்றப் பார்த்தார்

அது பண்டையிலும் இரட்டையாய்
மிகவும் ஆற்றாமையாலே
எம்பெருமானுடைய சரண்யதவத்தைப் பேசிக் கொண்டு
அதுக்கு எல்லை நிலமான திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வார் திருவடிகளையே
எத்தசைக்கும்
இஷ்ட பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும் உபாயமாக பற்றி முடிக்கிறார் –

சித்திர கவி வகைகள்
சக்ரபந்தம் -பத்ம பந்தம் -நாக பந்தம் -ரதபந்தம்

————————————————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு  மானுரியிலங்கு மார்வினன் இரு  பிறப் பொரு மாணாகி
ஒரு முறை  ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து
நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி  ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை 
ஏழு உலகு எயிற்றினில்  கொண்டனை 
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை 
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை 
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின்னீரடி யொன்றிய மனத்தால்
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை 
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே
அறுபத முரலும்   கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

தனிப்பாடல் –
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருத்துந்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே

————————————————————————–

1- ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –

———–

2-விரோதி நிரஸனம்

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

தான் உண்டாக்கின பயிருக்குக் களை பறிப்பானும் தானே யானால் போலே
ஸ்ருஷ்டமான ஜகத்தை அழிவு செய்யும் ராஷசரை நிரசிப்பானும் தானே —

இல்லாததை யுண்டாக்கின உனக்கு உள்ளதுக்கு
ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ என்கையும்

பிராட்டியோட்டைக் கலவிக்கு விரோதியான ராவணனை அழியச் செய்த உனக்கு
என்னுடைய பிரதிபந்தகம் போக்குகை அரிதோ என்கையும்

ப்ரஹ்ம சிருஷ்டி போலே சங்கல்ப்பத்தாலே செய்கை அன்றிக்கே
நேர் கொடு நேரே பூசலில் நின்று அழியச் செய்தாய் –

————-

3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

—————-

4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை

நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்கயோ அபேஷிதம் செய்தது என்னில்
அன்று
ஆபத்தும் விசுவாசமும் என்கிறது அல்பம் உண்டானால்
தான் தண்ணியரான திர்யக்குகளுக்கும் அபேஷிதம் செய்யும் என்கிறது-

பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்காக உன்னை அழிய மாறிக் கார்யம் செய்த அளவேயோ –
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்தவன் அன்றோ –

————-

5-ஸர்வ பல பிரதத்வம்

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-

உபாயாந்தர நிஷ்டருக்கும் அவற்றை நடத்திக் கொடுப்புதி இறே –
யோகோ யோகவிதாம் நேதா -என்கிறபடியே –

வர்ணங்களில் உத்க்ருஷ்ட வர்ணமாய் நல்வழி போகக் கடவதாய் இருக்கும்
ப்ராஹ்மண ஜாதிக்கு அடைய-
ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படியைச் சொல்கிறது

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –

கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –
இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது-

——————–

6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-

தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும்
ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் –
அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது –

அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்-
அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது –

—————

7-சர்வ ரக்ஷகத்வம்

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-

ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே
சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்

————

8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை

கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-

மனுஷ்யருக்குப் போக்யமான ஷட் ரச ரூபமான பிரயோஜனம் ஆனாய்
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

சாஸ்த்ரங்களால் ஷட் ரசங்களுடைய பிரயோஜனமாய் இருந்து வைத்து-
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

———–

9-ஆயுதங்கள் தரித்து

சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

தம்முடைய போக்யமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
மிகவும் பிரகாசத்தை யுடைத்தாய் இருக்கிற திவுய ஆயுதங்களை
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகிய திருக் கையிலே தரிப்பாய்

——————

சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

10-சர்வ பல பிரதத்வம்

——————

11-புருஷகாரம்

நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –

தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –
எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

————

12-சாமான்ய ரஷணம் சொல்லுகிறது –

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-

முன்பு அனுசந்தித்த படியே ரஷித்த ரஷண பிரகாரம் சொல்லுகிறது —

சாஸ்திர முறை தப்பாத படி முறையிலே நடக்கிற நாலு வகைப் பட்ட வர்ணங்களும்
நீ இட்ட வழக்காய் இருக்கிறது
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் நீ இட்ட வழக்கு
சத்தாதிகளும் உன் அதீனமான பின்பு உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ –

—————-

13-சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –

அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –

சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –
என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் –

——————-

14-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-

————-

15-ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –

மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –
ந கச்சித் ந அபராத்யதி என்னும்
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-

————–

16-ஆராதனைக்கு எளியவன்
17-சரீர சரீரீ பாவம் –
18-பிரதிபந்தகம் போக்கி
19-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
20-ஸ்ரீ யபதித்தவம்
21-சர்வ அந்தர்யாமி
22- மேன்மைகள்-இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –

அற முதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-
தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற புருஷார்த்த சதுஷ்ட்யங்களுமாய்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே ஸ்வ ரூபேண நின்று -அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று

ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ஸ சம்ஜஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு புராணம்
என்னலாம் படி நிற்பானாய்
சுக துக்கங்களுக்கு நியாமகனாய்
காரண அவஸ்தையிலே சத் சப்த வச்யனாய்
சிருஷ்டி காலத்தில் வந்தவாறே
பஹூஸ்யாம் என்கிறபடியே –
விஸ்த்ருதனாய் நிற்கிறாயும் நீ

———–

23-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –

இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும்
சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –

என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

—————

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -61-70–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 21, 2022

அவதாரிகை

இப்படி இவளுடைய பிராப்தி த்வரையைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
உபய விபூதிக்கும் நாயகனான மேன்மையை யுடைய ஸர்வேஸ்வரன்
ஆஸ்ரித ஸூலபனாகைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த பிரகாரம்
வாஸா மகோசரம் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான்) அன்றோ என்று
அவனுடைய ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை

வரைந்து தோளிலிலே விரைந்த தலைமகனைக் குறித்து
அவன் பெரியவனே யாகிலும் நமக்கு எளியனாய் வரும் காண் என்று
தோழி நாயகனுடைய சீலம் புகழ்ந்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

பாசுரம் -61-வாசகம் செய்வது நம் பரமே –
தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –
பிறந்தவாறும் -5-10-

பதவுரை

தொல்லை வானவர் தம் நாயகன்–பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈஸ்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும்
(தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும்–உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை–ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன்–(தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம்மிறையே–நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று–இடையர் குலத்தை யுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்து வளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது–எடுத்துப் புகழ்ந்து கூறுவது
நம் பரமே–நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)

வியாக்யானம்

வாசகம் செய்வது நம் பரமே
அவன் மேன்மைக்கு வேதங்களும் அகப்படப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமல் மீளா நிற்க
அவன் நீர்மைக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகை நம் தலையிலே கிடப்பது ஒன்றோ

தொல்லை வானவர் தம் நாயகன்
நீர்மைக்கு ஊற்றான மேன்மையைச் சொல்லுகிறது
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம் -என்று
பழையவரான நித்ய ஸூரிகளுக்கு அசாதாரண சேஷி யானவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லிற்று

மேல் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது

நாயகர் எல்லாம் தொழுமவன்
ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே
இந்த்ராதிகளான லோக பாலாதிகளோடே வாசியற
ஸ்வ அதிபத்ய ஸித்யர்த்தமாகத் தொழப்படுமவன்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
ரக்ஷணீயமான விபூதி எல்லாவற்றையும்
குழற் குத்தும் சோராத படி

இரண்டே யடியால் தாயவன்
அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இரண்டும்
இரண்டு திருவடிகளாலும் போம்படி அளந்து கொண்டவன்

இப்படி
1-ஸூரி போக்யனுமாய்
2-ப்ரஹ்ம ருத்ராதி ஸேவ்யனுமாய்
3-நிருபாதிக பந்துவுமானவன்
4-ஆஸ்ரிதற்கு பவ்யனாகைக்காக

ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று
இடைக் குலத்தை யுடையனாய்க் கொண்டு
ஆவிர் பவித்தது

நம்மிறையே
நமக்கு ஸ்வாமி யானவன்

நம் இறை வந்து தோன்றிற்று
வாசகம் செய்வது நம் பரமே
என்று அந்வயம்

இத்தால்
பிராப்தி த்வரையாலே கலங்கின இவரை
ஸூஹ்ருத்துக்கள்
ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி
ஆஸ்வஸிப்பித்த தாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பெருமாள் மலையோ திருவேங்கடம் -என்று
இவள் சொன்ன பாசுரமாகத் திருத்தாயார்
அநு பாஷித்த இத்தைக் கொண்டு
பிராட்டியான தசை போய் தாமான நிலையானாம் படி தரித்தார்
இவர் தம்மைத் தாம் உணர்ந்தால்
பின்னை இவர் இழியும் துறை ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் இறே
அங்கு புக்கு
எத்திறம் -என்கிறார்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
எத்திறம் -திருவாய் -1-3-1- என்று
மோஹித்திக் கிடக்குமத்தனை போக்கி
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது

என் தான்
பாசுரம் இட்டுச் சொல்லப் போகாமை என் என்ன

தொல்லை வானவர்
நித்ய ஸூரிகள் உண்டு
யத்ர ர்ஷய பிரதமஜா யே புராணா -(அச்சித்ரம் -92-)என்கிறவர்கள்

தம் நாயகன்
அவர்களுக்கு நிர்வாஹகனானவன்

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் சேருவது நம் பரமே -என்கிறார்

வேதங்களோடு
வைதிக புருஷர்களோடு
வாசியில்லை யாயிற்று பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமைக்கு
வேதங்களும் ஆனந்தாதி குணங்களைப் பேசப்புக்க மாத்திரத்திலே இறே
ய தோ வாஸோ நிவர்த்தந்தே -(தைத்ரியம் ஆனந்த வல்லி )என்றது

தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -(புருஷ ஸூக்தம் )

அகர்ம வஸ்யனானவன்
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க வந்து பிறந்த நீர்மையை
தீமதாம் அக்ரேசரராய் இருக்குமவர்கள்
அது தன்னிலும் இழியப் போகாமையாலே
அத்தைச் சுற்றும் வந்து ஆழங்கால் படுகிறார்கள்

ஸர்வஞ்ஞனான தான் சொல்லும் போதும்
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9-

அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்
உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-

அபுத்தய: மம அநுத்தமம்-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,
அவ்யயம் பரம் பாவம்-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,
அஜாநந்த:-அறிந்து கொள்ளாமல்,
அவ்யக்தம் மாம்-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,
வ்யக்திம் ஆபந்நம்-கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக),
மந்யந்தே-கருதுகின்றனர்.

என்றும் சொல்லும் அத்தனை

இவருக்குத் தான் எத்திறம் என்று மோஹித்துக் கிடக்கை ப்ரக்ருதி இறே

தொல்லை வானவர் தம் நாயகன்
நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு வானவன்

நாயகர் எல்லாம் தொழுமவன்
இவ்வருகு ஆக்கரான நாயக்கர் உண்டு -ப்ரஹ்மாதிகள்
சதுர்தச புவனங்களுக்கும் கடவோம் என்கிற அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள்
பிறவாதாய் இருக்கிறவர்கள் இறே
பிறக்கிறவனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்
மனுஷ்யர் கண்ணுக்கும் கூடத் தோற்றாதவர்கள்
ராவண வத அநந்தரத்திலே வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் இறே

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
பூமிப் பரப்பு அடங்க ஒரு கோல் குத்து நிலம் விடேன் என்று அபிமானித்தால் போலே யாயிற்று
இவனும் இந்திரனுக்காக மஹா பலிக்கு ஒரு கோல் குத்தும் விட்டேன் என்றபடி

இரண்டே யடியால் தாயவன்
மூன்று அடியை இரந்து
இரண்டு அடிக்காக்கி
ஓரடிக்காக அவனைச் சிறை யிடுகைக்காக
இரண்டு அடியாலே யாயிற்று அளந்து கொண்டது

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
இப்படிப் பூமிப் பரப்பு அடங்கலும் தன் காலின் கீழே இட்டுக் கொண்டவன்
காலின் கீழே துகையுண்ட பதார்த்தத்துக்குத் தான் புத்ரனாய் வந்தவன்
இது நம்மாலே பாசுரம் இட்டுச் சொல்லலாவது ஓன்று அன்று இறே

ஆய்க்குலமாய்
ஸம்ஸாரிகளிலே ஒருவன் அல்ப விவேகம் யுண்டானால்
பால்யேந திஷ்டா ஸேத் -(ப்ருஹதாரண்யம் -5-4-) என்று
அபிஜன வித்யா விருத்தங்களால் வந்த அபிமானத்தைப் பொகடா நின்றான் இறே
அல்பம் விவேகியாய் இருக்கிறவன் உட்பட பொகடா நிற்க
ஸர்வஞ்ஞனான தான் அபஹத பாப்மத்வாதிகளைக் காற் கடை கொண்டு
இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று அறியாதானாய் வந்து பிறந்தான்

ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-என்றபடியே
தன்னைப் பற்றினாரும்
பழையாரும்
பிறவாதாருமாம் படி இருக்கிறவன்
வந்து பிறக்குமதுக்குப் பாசுரம் இடப்போமோ

வந்து தோன்றிற்று நம்மிறையே
ஆவிறர் பூதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-2-2-என்னக் கடவது இறே

இரண்டே அடியால் தாயவனான நம்மிறை
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியாகத் தன் தாய்க்குச் சொன்ன தோழிமார்களை
ஒன்றும் அறியாச் சிறுமியனாய் நம்மிறை வெறும் பரனேயோ
வெறும் ஸூலபனேயோ
அதுகள் தான் அவனுக்கு எவ்வளவு என்று கேட்டவனான தனக்கு
நம்மிறையோடீ
அவர் வாக் கோசரத்துபய ஸ்வ பார்
அதுகள் எங்களால் தான் அளவிட்டுப் பேசத் தகுமோ – என்று
அவர்களாய்த் தாம் அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
வாய் அவனை விட்டுச் சொல்லுவது நம்மால் தகுமோ
அவன் பர ஸானத்தைக் கேளாய்

தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன்
யத்ர பூர்வே -என்னப்பட்ட விண்ணவர்க்கு எல்லாம்
நித்ய நிர்வாஹக சேஷி யானவன்
சில ஒவ்பாதிக சேஷியான விதி சிவ இந்த்ராதிகளால் தொழப்படுமவன்

இப்படிப்
பரனே
ஸூஸீலனுமானவனே -என்கிறார்கள்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன்
பூ லோக
உபரித லோகங்களில்
ஒரு கோல் குத்து நிலமும் விடாதபடி
க்ருத்ஸ்நத்தையும் இரண்டு அடியாள் அளந்து கொண்டவன்

இப்படியான நம்மிறையே

அவனே
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று –
இடைக்குலத்திலும் ஆவிர் பவித்தான்

இவனுடைய
1- பரத்வ
2-ஸுசீல்ய
3-ஸுலப்யங்கள்
வாசா -இவ்வளவு என்று நம்மால் சொல்லப் போமோ

———————

அவதாரிகை

இப்படி ஆஸ்ரித ஸூலபனாய் வந்து அவதரித்தது
தமக்குச் சடக்கென லபிக்கைக்கு உறுப்பாகக் காணாமையாலே
(கீழே நமக்கு இறை என்றாரே ஸ்வாமித்வம் தானே
ஆய்க் குலத்துக்குத் தான் எளியவன் )
ஆர்த்தரான இவருக்கு
ஸம்ஸார சாகர கோலாஹல தர்சனத்தால் பிறந்த ஸைதில்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து யுரைத்த பாசுரத்தை
கடவோதத்துக்கு ஆற்றாத தலைவி யுடைய தளர்த்தி கண்டா தோழி
புலம்பி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-

பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் –
தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –
தேவிமார் ஆவார் -8-1-

பதவுரை

இரக்கினும்–எவ்வளவு வேண்டிக் கொண்டாலும்
ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது–இவள் ஒரு பெண் மகளென்று கருதியும்
இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல்
கருங் கடல்–கரியகடலானது
அறையோ என நின்று அதிரும்–(இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும்
நிலை நின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது;
ஓ–இஃது ஒரு கொடுமையே
அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது
பள்ளி கொண்ட–சயனித்தருளா நின்ற
முகில் வண்ணனே–காளமேகம் போன்ற வடிவுடையவனே!
ஈங்கு–இவ்விடத்தில்
இவள்தன்–இவருளுடைய
நிறையோ–நிறைக் குணமோவென்னில்,
இனி–இனிமேல்
உன் திருஅருளால்–உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்)
அன்றி–பாதுகாத்து வைக்க முடியாது;காப்பு அரிது–
முறையோ–(இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ?

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
சக்ரவர்த்தி பரசுராமனை இரந்து
பிள்ளைகள் பால்யத்தை முன்னிட்டால் போலே
நான் ப்ரார்த்தனா ரூபமான பிரபதனத்தைப் பண்ணிலும்
அவள் ஒரு பெண் அன்றோ
இன்று பல ஹானியை முன்னிடிலும் இவ்விடத்தில் இறையும் இரக்கம் இன்றியே இருந்தது
ஓ ஒரு கொடுமையே

இரக்கம் இல்லாமை கண்டபடி என் என்னில்

அறையோ என நின்றதிரும்
இவள் எதிராக அறை கூவுகிறதோ -என்னலாம் படி
நிலை நின்று கோஷியா நிற்கும்

கருங்கடல்
இவள் அளவில் கடலுக்கு யுண்டான நெஞ்சில்
கருகுதல் வடிவிலும் தோன்றா நின்றது

ஈங்கிவள் தன் நிறையோ
இவ்விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய
ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது

வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
பிரபல விரோதி யுண்டாய்
ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு
ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி
ரஷிக்கை சக்யம் அன்று

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே முறையோ
நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க
இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ

முறையோ என்று
க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி

1-ஸ்ரம ஹரமாய்
2-தர்ச நீயமாய்
3-உதாரமான வடிவை யுடைய நீ
இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று
தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு
விளித்து யுரைத்தாள் யாயிற்று

இது செவிலி இரங்கல் யாகவுமாம் –
(தமிழர் அகத்துறைப்படி தோழி பாசுரம் கொள்ளத் தகும் என்பர் )

இத்தால்
அநந்த க்லேச பாஜனமாய்
கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய
கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால்
இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து
ஆழ்வாருடைய ஸ்வரூபம்
ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால்
ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத்
தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கீழ் ஸ்ரீ கிருஷ்ண அவதார ஸுலப்யத்தை அனுசந்தித்து
அவதார சமகாலத்திலே தாமாகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே
கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தரானார்
அந்த பிரிந்த ஆற்றாமைக்கு மேலே கடலோசையும் வந்து பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள்
என்று திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும்
சரணம் புகுகை தான் மிகை என்னும்படிக்கு ஈடாய் இருக்கிறவளுடைய
தசையைக் காட்டாச் செய்தேயும்
புறம்பு ஒரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் என்னச் செய்தேயும்
ஏக தேசமும் இரங்குகிறது இல்லை
பாதகர்க்கு இத்தலையிலே அருமை காற்றுமது அன்று இறே

அறையோ என நின்றதிரும்
இங்கனே வெளியில் புறப்படாயோ என்று
அறையோ என்று அலற கூவுகிறால் போலே இரா நின்றது –

கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை

வியாக்யானம்
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது அறையோ என
நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே
அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும்
ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்
இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது
இவ்வவஸ்தையில் இவள் நிறை
அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே
இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு
உன்னருளால் அன்றி இல்லையே
அத்தால் அவ்வவஸ்தை யானானாள்

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

——————-

அவதாரிகை

இப்படித் தாங்களும் ஆர்த்தராய்க் கூப்பிடும்படி இவருக்கு
ஆர்த்தியை ஈஸ்வரன் ஜநிப்பித்து
கடுக முகம் காட்டாமையாலே
ஈஸ்வரன் பக்கலிலே க்ரூர்ய சங்கையைப் பண்ணின
ஸூஹ்ருத்துக்களைக் குறித்து

அவனுடைய பூர்ண கடாக்ஷம் நடத்தாத தம்முடைய திரு உள்ளத்தில் ப்ரதிஷ்டிதமாம் படி
ப்ரகாசிப்பித்த பிரகாரத்தை அவர்களுக்கு அறிவித்து
சமாதானம் பண்ணின பாசுரத்தை

தலைவன் கொடுமையைச் சொல்லி இயல்பு அழித்த தோழிக்கு
இயற்பட மொழிந்த தலைவி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே — 63-

பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் –
தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –
இவையும் அவையும் -1-9-

பதவுரை

வண்ணம் சிவந்துள–திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் விழிய–பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையை யுடைவையும்
தண் மெல் கமலம் தடம் போல் பொலிந்தன–குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம் போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம்–இத்திருக்கண்களோ
கண்ணன்–கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால்–திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும்–திருமுக மண்டலத்திலே
காதல் செய்தேற்கு–வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம்–மனத்திலே
புகுந்து–பிரவேசித்து
இ காலம்–இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற–(விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
தம் பக்கல் இவருக்கு யுண்டான ராகம்
இக் கண்களினுடைய நிறத்தில் சிவப்பிலே காணலாம்

அது சீற்றத்தாலோ என்னில்

வானாடமரும் குளிர் விழிய
நித்ய விபூதியிலே இருந்து
நித்ய அனுபவம் பண்ணி
நிரதிசய ஆனந்தத்தாலே குளிர்ந்த பார்வையை யுடைத்தாய் இரா நின்றன

இவர் திரு உள்ளத்தில் பிரகாசிக்கிற தசையிலும்
குளிர்த்தி மாறாது இருக்கை –

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
இக் கண் அழகுக்கு சீதளமாய் மிருதுவான தாமரைத் தடாகத்தைப் போலி யாக்கினால்
மிகுத்துத் தோன்றா நின்றன –

தாமிவையோ
இவை ஸ்ம்ருதி மாத்ரமும் இன்றியே
உரு வெளிப்பாடாம் படி பிரகாஸியா நின்றன

(ஸ்ம்ருதி -நினைவு மட்டும்
அத்தையும் தாண்டி உருவ வெளிப்பாடு -முழுவதாக அறிவது
அத்தையும் தாண்டி பிரத்யக்ஷம் நேராக் காண்பது )

கண்ணன்
பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்
(சுவையன் திருவின் மணாளன் )

திருமால்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே
சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே
ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு

எண்ணம் புகுந்து
தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே
என் நெஞ்சிலே புகுந்து

அடியேனோடு
தனக்கே சேஷமான என்னோடே கூட
(ஏவகாரம்-அநந்யார்ஹ சேஷத்வம் )

இக்காலம் இருக்கின்றதே
க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன

ஆதலால் அவன் நம்மை அநாதரித்தான் என்று
இயல் பழிக்கப் படாது காண் என்று
தோழிக்கு
இயற் பட மொழிந்ததாயிற்று

இத்தால்
வண்ணம் சிவந்துள என்கையாலே
ஆழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்குப் பிறந்த
ராகம் ஸூசிதமாயிற்று

வானாடு இத்யாதியாலே
அந்த விபூதியில் அனுபவத்தாலே யுண்டான செவ்வியும்
இவர் பக்கல் செறிவாலே உண்டானமை தோற்றிற்று ஆயிற்று

(அந்தா மத்து அன்பு செய்து –என்னாவி சேர் அம்மான்
சேர்ந்த பின்பு தானே அவையும் சித்தி பெற்றது
என் உச்சி உள்ளே நிற்கும் -தேவதேவன் -நின்றபடியாலே தேவ தேவன் ஆனான் )

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

முறையோ என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
திருக்கண்களுக்குச் சிவப்புப் பிறப்பே பிடித்து
ஸ்வ பாவமாய் இருக்கும் இறே
இப்போது வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால்
பூர்வ அவஸ்தையில் வை வர்ண்யம் அத்தலையில் என்னும் இடம் தோற்றுகிறது

ந ஜீவேயம் க்ஷணம் அபி -ஸூந்தர –66010-என்னும்படி இறே
அத்தலையில் ஆற்றாமை
ஆகையால் கண் உறங்காமையாலே வந்த சிவப்பும்
வை வர்ண்யமும் தீர்ந்தது இப்போது என்னும்படி இருக்கை

வானாடமரும் குளிர் விழிய
ஒரு த்ரிபாத் விபூதியாக ஒரு கண்ணில் குமிழில் கீழே யாயிற்று ஜீவித்துக் கிடப்பது
வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாக்ஷத்தை யுடையவன்

அமருகையாவது
இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை
தாரகமும் போஷகமும் போக்யமும் எல்லாம் இவையே என்று இருக்கை

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
குளிர்ந்து
மிருதுவாய் இருபத்தொரு தாமரைப் பொய்கை பரப்பு மாற
அலர்ந்தால் போலே யாயிற்று
திருக்கண்கள் இருப்பது

தாமிவையோ
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -(சாந்தோக்யம் -1-6-7-)என்று
கேட்டார் வாய் கேட்டு இருந்தோம்
அவை தான் இருக்கும் படி இதுவோ

கண்ணன் திருமால்
திருமால் கண்ணன்
ஸ்ரீ யபதி யாகையாலே
ஆஸ்ரிதற்குக் கையாள் யானவன்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
அழகிய திரு முகத்தோடு வந்து
குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு

எண்ணம் புகுந்து
மநோ ரதித்த படியே கை புகுந்தது என்னுதல்
அன்றிக்கே
எண்ணம் புகுந்து என்றாய்
என்னுடைய மநோ ரதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு

அடியேனோடு
ஜிதம் -ஜிந்ததே ஸ்தோத்ரம் என்கிறார்
அஹம் அர்த்தத்தினுடைய ஸ்வரூபம் தான் அடியேன் என்று போலே காணும் இருப்பது
ஜீவா ஸ்வரூப பரமான வாக்கியத்தில் அப்படியே இறே சொல்லுகிறது
அது ஜீவா ஸ்வரூப பரமோ என்னில்
ஓம் இத்யாத் மாநம் யூஞ்ஜீத -தைத்ரியம் -என்றும் யுண்டு
ஓங்காரே பகவான் விஷ்ணு என்றும் சொல்லா நின்றது இறே

இக்காலம்
இப்பேற்றுக்கு வரவாறு முன்நாள் அறிந்திலேன் கிடீர்

இருக்கின்றதே
நச புநரா வர்த்ததே -சாந்தோக்யம் -8-15- என்னும்
பேற்றைப் பெற்றோம் ஆகாதே என்று தோற்றி இரா நின்றது
ஒரு நாளும் இனிப் பிரிகைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றி இரா நின்றது
ப்ரத்யக்ஷ ஸமாநா காரமாகிலும் இவர்க்கு
சமாநாசா காரம் என்று தோற்றாதே
ப்ரத்யக்ஷம் என்றே தோற்றுகிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இது உசிதமோ என்று நொந்து சொன்னால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்
அந்நோக்குக்கு இலக்கான தலைமகள்
ஹ்ருஷ்டையாய்
தன் தாய்க்கும் தோழிக்கும் சொல்லுகிறாளாய்
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
என்னில் அநு ராக உத்தரமான கண்ணில் சிவப்பு இப்போது யுண்டாயிற்று

அதுக்கும் மேலே

வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
இவை திருக்கண் மலர்கள்
வான் நாட்டில் உள்ளாரில் காட்டிலும் என்னிவ் வக்நமாய்
ஸூ சீதளமான பார்வையை யுடைத்தாய் குளிர்த்தியும் மார்த்தவமும் யுள்ள
கமலங்களேயான தடாகத்தைப் போன்றதாய்
அது தான் இவைக்கு சரியோ என்னலாய் இரா நின்றது


இது ஹாவு ஹாவு -தைத்ரியம் என்றபடி

கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே
என்பது இங்கே கூடும்
திருமால் வ்யாமோஹம் செய்யும் கண்ணனுடைய திரு முகத்தோடே
கோள் இழைத்த தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாண் முகமாய்க் கொள்கின்ற –திருவாய் –7-7-8-
ஸகல ஆனந்த ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்தில்
அதீப் தீயா நித்ய உபாயான சீலர்க்கு த்யான ரூடமாய் இருக்குமே அது

அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே
தனக்குப் பூவின் மீசை நங்கை போல் அடிமை செய்ய வேண்டின என்னோடே இப்போது
அநு பாவ்யமாய் இருக்கிறது
ப்ரத்யக்ஷமாய்த் தானே
இங்கும் ஓ என்பது அன்விதம்

—————

அவதாரிகை

இப்படி அனுபாவியனான ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் உம்முடைய திரு உள்ளத்திலே
அபரோக்ஷ சித்தமாம் படி அனுபவித்து
இதுக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுவதும் செய்யா நின்றீர்
இனி வேண்டுவது என் என்ன

விலக்ஷணமான புருஷர்கள் ச க்ரமமாக ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
பூர்ண அனுபவம் பண்ணப் பெறாமையாலே
தரித்து இருக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன்
இத்தனை யன்றோ என்கிறார் –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –

பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை –
தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –
பாமுரு மூவுலகும் -7-6-

பதவுரை

நிலத் தேவர் –பூமி தேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால்–வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை–முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர்–உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது)
திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும்–நாமும்
அவா ஒருக்கா–(எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து–(அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும்
(அப் பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக் கொண்டு
கனி இன்மையின் கருக்காய் கடிப்பவர்கள் போல–பழம் கிடைக்காமையாற் பிஞ்சைத் தின்பவர் போல
திருநாமம் சொல் கற்றனம்–(பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது)
திருநாமங்களாகிய சொற்களைச் சொல்லுதல் செய்கிறோம்.

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர்
வேதங்கள் எல்லாம் தனக்குள்ளே யாகும்படியான மூல மந்திரமான மொழியாலே
(ஓம் என்னும் படி உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் இருக்குமே )
ஆஸ்ரயண பிரகாரத்தில் ஒன்றும் வழுவாதபடி அந்த மந்த்ரார்த்த ப்ரகாசமாய்க் கொண்டு
ஸகல லோகங்களையும் தனக்குள்ளே யாக்கின திருவடிகளை
பூமிக்கு தேவர்களான ப்ராஹ்மண உத்தமர் ஆஸ்ரயித்து அனுபவியா நிற்பர்கள்

யாமுமவா
யாமும் அவா
அந்த அதிகாரம் இல்லாத நாமும் அப்படியோ
அல்ல என்றபடி

ஆனால் உம்முடைய அளவு என் என்னில்
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து
அனுபவ விரோதியான பாபத்தை ஒருங்க விடாமையையும்
பிரதிபந்தகம் யுண்டானால் ஆறி இருக்க ஒண்ணாதபடி சபலமான ஸ்வரூபத்தையும்
பார்த்து ஈடுபட்டு (துன்பப்பட்டு )-

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
பழம் கிடையாமையாலே பசுங்காயைத் தின்பாரைப் போலே

திருநாமம் சொல் கற்றனமே
பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக
அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி

இப்பாட்டு
கலந்து பிரிந்த நாயகி
கலவி கிட்டாமையாலே நாயகனான ஈஸ்வரனுடைய குண நாமங்களைத் தான்
தரித்து இருக்கைக்காக உரைத்தேன் என்று
பாங்கியிடம் உரைத்தலாகவுமாம்

சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே –திரு நெடும் -13-

திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் -14-

என்றதாய்க் கொண்டு
திரு நாமத்தால் நாயகி தரித்த இடங்களும் உண்டு இறே

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இவரைத் திருக்கண்களால் கடாக்ஷித்தான் என்று இறே கீழ் நின்றது
அல்லாதார் மேல் வையாதே நம் மேலே இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணுகைக்கு
நிபந்தம் என் என்று ஆராய்ந்தார்
அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொன்னேன்
அத்தாலே அன்றோ என்கிறார் –

வியாக்யானம்

இருக்கார் மொழியால்
இருக்கில் ஆர்ந்த மொழியாலே
பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே அரை வயிறாகவும் பதராகவும்
பார்க்கலாய் இருக்கும் இடங்கள் உண்டாய் இருக்குமாயிற்று வேதங்களிலே
அவன் விபூதியைப் பரக்கச் சொல்லா நின்றால் –
அதில் ஏகதேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தியைப் பண்ணியும்
ப்ரஸம்ஸா பரம் என்றும் சொல்லா நிற்பர்கள் இறே

அவன் ஸ்வரூப ரூபா குண விபூதிகளைப் பேசுகிற இடத்தில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பாரும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற
அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை யாயிற்று
இதில் ஆர்ந்த மொழியாகச் சொல்லுகிறது

ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி -(யஜுஸ் ஆர ப்ரச்னம் -3)இத்யாதியால்
எல்லா வாக்யங்களுக்கும் அவனே வாஸ்யனாகை இறே யுக்தம்
உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான ஸப்தங்கள்
இவ்வநுவாகத்திலே நின்று அவன் பக்கலிலே ப்ரயோகிக்கையாலே
எல்லாம் அவனையே சொல்லிற்று ஆக வேணும் இறே

நெறி இழுக்காமை
பகவத் ஸமாராதநம் ஆகிற வைதிக மர்யாதையைத் தப்பாமே

உலகளந்த திருத் தாளிணை
இவை அறியவுமாம்
அறியாது ஒழியவுமாம்
என்னுடைமையை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வ பாவனாய் யுள்ளவனை
இவை அறியாதே இருக்கச் செய்தேயும்
தானே எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் இறே

நிலத் தேவர் வணங்குவர்
ஸம்ஸாரத்திலே வர்த்தியா நிற்கச் செய்தேயும்
விண்ணுளாரிலும் சீரியர் –திரு விருத்தம் –79- என்னும்படியே
பூ ஸூரர் ஆனவர்கள் உலகு அளந்த திருத்தாளிணை நெறி இழுக்காமை வணங்குவர்

யாமும்
அவர்களுடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும்

அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே

———————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
கனிந்த பழம் இல்லாத போது
காய்ப்பழத்தைப் புஜிப்பாரைப்
உபாயத்தில் ஸூ விசத ஞானமும் அனுஷ்டான சக்தியும் உண்மைக்கு கனி நிதர்சனமும்
மந்த ஞான சக்திகளுக்குக் கருக்காயும்

திருநாமம் சொல் கற்றனமே
அவன் அறியப் பரி பூர்ண உபாய கர்ப்பமாய் அவன் திரு நாமத்தை உட் கொண்ட சொல்
நமோ நாராயணாய என்பது
அத்தை உச்சரித்தேன்
அத்தால் கடாக்ஷத்தைப் பெற்றேன் என்றதாயிற்று –

—————

அவதாரிகை

இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே
எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்
கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று
பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு

(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்
உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல் )

இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே )
அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை

தலைவி நோக்கின் வாசி கண்டு
தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே –65 –

பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று –
தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –
நோற்ற நோன்பு -5-7-

பதவுரை

கன்று பிணை–இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின்–பரந்த கண்களின்
குலம்–சாதியை
வென்று–ஜயித்து
ஒரே கருமம் உற்று–ஒரு காரியத்திலே பொருந்தி
பயின்று–அக்காரியத்திலே பழகி
செவியோடு உசாவி–(அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,
உற்றும் உறாதும் மிளிர்ந்த–(எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற
கண் ஆய்–கண்களாய் (இவை)
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ்–எல்லா வுலகங்களையும் மிச்சமில்லாதபடி
(பிரளய காலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)
எம்மை உணர்கின்ற–எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று

ஒரோ கரும முற்றுப் பயின்று
தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே
பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்

செவியொடு உசாவி
மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை
ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்
நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த
ஈஸ்வரனுடைய திருவடிகளிலே

உற்றமுறாதும்
உற்றும் உறாதும்
கிட்டினார் கண் போலேயும்
கிட்டாதார் கண் போலேயும்

அதாவது
உகப்பும்
செல்லாமையும்
தோற்றி இருக்கை

நாயகனைக் கண்ட உகப்பும்
இவனை ஒழியச் செல்லாமையும்
தோற்றும்படி
பார்வையிலே அறியலாய் இருக்கை

மிளிர்ந்த கண்ணாய்
உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி
கண் என்று பேராய்

எம்மை உண்கின்றவே
நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள்
கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று

இத்தால்

கற்றுப் பிணை -இத்யாதியாலே
இவ்வாழ்வாருடைய ஞானம்
ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய
ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே
ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும்
ஸ்வரூப விரோதிகளிலும்
புருஷார்த்த விரோதிகளிலும்
சாதனா விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி

செவியொடு உசாவி -என்கையாலே
இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு
நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே
சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )

உலகம் இத்யாதியாலே
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது

மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று

எம்மை யுண்கின்றனவே -என்கையாலே
இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை
வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன்
ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப்
பாங்கனுக்குச் சொல்லுகிறான்

வியாக்யானம் –

கற்றுப் பிணை
கன்றான மான்
முக்தமான மானினுடைய

மலர் கண்ணின்
மலர் போலே இருக்கிற கண் என்னுதல்
விகஸிதமான கண் என்னுதல்

குலம் வென்று
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று

ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி
ஒரோ கார்யத்திலே யுற்று
அதிலே நெருங்கி
அத்தைச் செவியோடே உசாவி
ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே
ஒன்றிலே துணிந்து
அதிலே நெருங்கி
அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே
இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே
கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து
அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது

உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்
மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது
அந்நோக்கிலே பரவசனாய்
இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்

எம்மை உண்கின்றவே
கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது

இத்தால்
ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால்
கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறது

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால்
ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது
பின்னை ஞான கார்யம் அன்றோ
கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில்
அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது
இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே
ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே

செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வண்ணம் சிவத்தில்
அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன்
அவன் நோக்கின் வாசியை
செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த
தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்

ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்
தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய்
ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்

செவியொடு உசாவி
அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும்
அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய

உற்றமுறாதும்
கிட்டின அவளாயும்
கிட்டாத அவளாயும்

மிளிர்ந்த கண்ணாய்
கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்

எம்மை
என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு

உண்கின்றவே
எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –

—————-

அவதாரிகை

இப்படி இவருடைய ஞான வைலக்ஷண்யத்தைக் கண்ட அன்பர்
நம்முடைய அளவிலேயே இவருடைய ஞானம் விஷயீ கரித்தது
விலக்ஷண ஞானரான பரம யோகிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய் யன்றோ இருப்பது என்று
தங்கள் ஸூஹ்ருத்துக்களுக்குச் சொன்ன பாசுரத்தை

தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன்
தன்னுறாவுதல் கண்டு வினாவின பாங்கனைக் குறித்து
உற்றது யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –

பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை –
தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –
ஆராவமுதே -5-8-

பதவுரை

எரி–அக்நியும்
நீர்–ஜலமும்
வளி–வாயுவும்
வான்–ஆகாசமும்
மண்–பூமியும்
ஆகிய–என்னும் பஞ்ச பூதங்களின் வடிவமான
எம்பெருமான் தனது எம்பெருமானுடைய
காவிகள்–செங்கழுநீர்ப் பூக்காளனவை
உண்ணாது–உண்ணாமலும்
உறங்காது–தூங்காமலும்
உணர்வு உறும்–(எப்பொழுதும் த்யாக ரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான்–ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய
கண் ஆய்–கண்களென்று பேராய்
அரு வினையேன் உயிர் ஆயின–தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர் நிலையான
எத்தனை யோகியர்க்கும்–மிக்க யோக நிலையை யுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்
எண் ஆய்–(அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத் தக்கவையாய்
மிளிரும்–பிறழ்ந்து தோன்றுகிற
இயல்வின் ஆம்–தன்மையை யுடையவையாம்.

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அத்யசனமும்
அதி நித்தரையும்
யோக விரோதியாம் என்று துறந்து
யுக்தாஹார விஹாரராய்
யுக்த ஸ்வப்ந அவ போதராய்க் கொண்டு
நிரந்தர த்யான தத் பரரான
ஸநகாதி பரம யோகிகளுக்கும் ஹ்ருதயமாய்க் -(எண்ணாய் )கொண்டு
நிரந்தர அனுபாவ்யமாய்
மிளிர்ந்து தோற்றும் ஸ்வ பாவத்தை யுடையனவாகா நிற்கும்
(ஆழ்வாரது கண்கள் )

எரி நீர் வளி வான் மண்ணாகிய வெம்பெருமான்
பிராணிகளுக்கு சீதோஷ்ண பரிஹார ரூபமாயும் (எரியும் நீரும் )
ஆஸ் வாஸ கரமாயும் (காற்று)
அவகாஸ ப்ரதமாயும்
தாரகமாயும் யுள்ள பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்மாவாய்
அக் கணக்கிலே நமக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய

தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்
அசாதாரணமாய்
அழிவற்ற தேசம் போலே
நித்ய அநுபாவ்யை யானவளுடைய கண் என்ற பேராய்

அருவினையேன் உயிராயின
நிரந்தர அனுபவம் பண்ணப் பெறாமல் பிரிகைக்கு
அடி முடி காண ஒண்ணாத (அநாதியான -அந்தமும் இல்லாத ) பாபத்தை யுடையேனான
எனக்கு முடிய ஒண்ணாத படி பிராணனாய்ப் புக்கு நில்லா நிற்பன வாயின

காவிகளே
ராக உத்தரதையாலே செங்கழுநீர்த் தடாகம் போலே இருக்கையாலே
காவி என்னாலானவை

கண்ணாய் அருவினையேனு யிராயின காவிகள் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
என்று அந்வயம்

இத்தால்
ஆஸ்ரிதரான அன்பருக்கு தாரகமாய்
ராகோத்தரமான ஆழ்வாருடைய ஞானமானது
அசநாத்ய தீதராய் அசங்குசித ஸ்வ பாவராய் நிரந்தர அனுபவ தத் பரரான
நித்ய யோகத்தை யுடைய ஸூரிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய்க் கொண்டு
விளங்கித் தோற்றும் ஸ்வ பாவத்தை யுடைத்தாகா நிற்கும் என்றதாயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது கீழ் போலே

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
பிராகிருத போகங்களால் தரியாதாராய்
ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற புத்தியே யன்றியே
உபாதேயமான ஆத்மவஸ்து உத்தேச்யம் என்னும் புத்தியை யுடையராய்
அவ்வாத்ம வஸ்து தான் ஸ்வ தந்திரம் என்று இருக்கை அன்றிக்கே
ஆத்ம யாதாத்ம்ய ஞான பூர்வகமாக ஈஸ்வர ஞானத்தை யுடையராய்
இது அவனுக்கு பிரகாரம் என்று இருக்கும் படி பரம யோகம் கை வந்து இருக்குமவர்களுக்கும்

எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானார்கள் ஆகில்
தங்களுக்கு ஸூபாஸ்ரயமான பரதத்வம் தன்னையும்
காற்கடைக் கொண்டு
இத்தையே அது அது என்னும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாக யுடையனவாய் யுள்ளன

எரி நீர் வளி வான் மண்ணாகிய
காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம் உப லக்ஷணம்
அக்னி நீர் காற்று ஆகாசம் பூமி இவை யடையத் தனக்கு விபூதியாக யுடையவன்

வெம்பெருமான்
அவனுடைய விபூதி யோகம் தனக்குப் பேறாய் இருக்கிற படி

தனது வைகுந்த மன்னாள்
மானாவிச்சோலை போலே ஆவது அழிவதாம் இவ்விபூதி போல் அன்றிக்கே
ஒரு நாளும் அழியாததாய்
அவனுக்கு அஸாதரணமாய்
அந்தரங்கமான நித்ய விபூதியோடே ஒத்து இருந்தவள்
அவனோடே அழியாத விபூதியோடே ஒத்து இருந்துள்ளவள்

கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே
அப்படிப்பட்டவன் பக்கலிலே வந்தவாறே
பிரதான அவயவமாய்
என் பக்கலிலே வந்தவாறே அச்சேத்யமாய் அதாஹ்யமாய் அழியாததாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய்
பாதகமாம் இடத்தில் ஸ்வ தந்திரமாய் நின்று பாதகமாகா நின்றன

ஆறு வினையேன்
ரக்ஷகமானவை தானே பாதகமாம் படி பாபத்தைப் பண்ணினேன் –

—————

அவதாரிகை

இப்படி அனுபாவ்யமான ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்தை
போக்தாக்கள் உகந்து யுரைத்த பாசுரத்தை
தலைமகள் கண்ணழகு கண்டு தலைமகன் வியந்து யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – 67-

பாசுரம் -67-காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல –
தலைவன் தன் வலி யழிவு உரைத்தல் –
உலகமுண்ட பெரு வாயா -6-10-

பதவுரை

அசுரை–அசுரர்களை
செற்ற–அழித்த
மா விய புள் வல்ல–பெரிய ஆச்சர்ய கரமான கருடப் பறவையை ஏறி நடத்துகிற
மாதவன்–திருமகள் கணவனும்
துணை மலர்–ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்
காவியும்–செங்கழுநீர்ப் பூவையும்
நீலமும்–கருநெய்தற் பூவையும்
வேலும்–வேற்படையையும்
பலபல–(மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும்
கோவிந்தன்–பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய
வேங்கடம்–திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற
தூவி அம்பேடை அன்னாள்–சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது
கண்கள் ஆய்–கண்களாகிய
வென்று–தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து
பாரிப்பு–என்னை வருத்துவதற்கு அடி கோலிய பரப்பு
ஆவியின் அல்ல–(எனது) உயிரின் தன்மைக்கு
அளவு அல்ல–ஏற்ற அளவல்ல.

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
நைல்யத்தாலே நெய்தலையும்
கூர்மையாலும் ஒளியாலும் வேலையும்
குளிர்த்தியாலும் மிளிர்த்தியாலும் கயலையும்

மற்றும்
கண்ணுக்கு ஒப்பான
வாள்
அம்பு
வடி
மான் விழி
முதலான பலவற்றையும் வென்று

அன்றியே
கீழ்ச் சொன்னவற்றைத் தனித்தனியே
பலவற்றையும் வென்று என்னவுமாம்

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
நம்முடைய பிராணனின் ஸ்வரூபத்துக்குத் தக்கதல்ல
இவற்றினுடைய கோலுதலின் பரப்பு

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன்
விரோதி நிரசன ஸமர்த்தனாய்
பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்

பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே
இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்

கோவிந்தன்
வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ
பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன்

வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில்
பொருந்தி வர்த்திக்கிற
அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய

(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா வேங்கடேசாயா ரமயா ராமமாணாயா ஸ்வாமி புஷ்காரணீ தடே
ஸ்லோகத்தில் -இவை அனைத்துமே உண்டே )

கண்களாய துணை மலரே
கண் என்று பேராய் இருக்கிற
தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை

இவற்றுக்கு -என்று
அத்யாஹரித்து
ஆவியின் தன்மை அளவுள்ள பாரிப்பு -என்று
அவயம்

இத்தால்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு -என்கையாலே
ஆழ்வாருடைய ஞானமானது
ராக ஹேதுவான ரஜஸ்ஸையும்
கார்ஷ்ண்ய ரூபமான தமஸ்ஸையும்
லகுவாய் ப்ரகாசகமான சத்வத்தையும் கடந்து
(மிஸ்ர ஸத்வம் தாண்டி ஸூத்த ஸத்வம் வேண்டுமே
முக்குணம் தாண்டி நித்ய ஸத்வம் வேண்டுமே )

இப்படி குண த்ரய உத்தீர்ணம் ஆகையால்
ஜட ப்ரக்ருதியான பதார்த்தங்களில் சேர்த்தி அற்ற படி
பஹு பிரகாரமான வ்யாவ்ருத்தியை யுடைத்தாய்க் கொண்டு
நம்முடைய ஸ்வரூபத்தின் அளவன்று இதினுடைய பாரிப்பு என்றபடி

தூவியம் பேடை யன்னாள் -என்கையாலே
இவருடைய ஸூத்த ஸ்வபாவத்தையும்
(வேல் வெளுப்பு மிஸ்ர ஸத்வம் )
ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய அந்வயமும்
பாரதந்தர்யமும் (பேடை)
ஸூசிதமாயிற்று

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை -என்று
அலர் மேல் மங்கையைச் சொல்லி
அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்
(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )

கண்களாய துணை மலரே -என்றவிடம்
இவருக்கும் துணையாய்
ஆஸ்ரிதற்கும் துணையான
விகாஸத்தை உடைத்து என்று தோற்றுகிறது

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டாலும் கண்ணழகு தன்னையே சொல்லுகிறான்
தலைமகன்

வியாக்யானம் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால்
விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே –ஸ்ரீ பாலா -1-18-என்கிறபடியே
ஒரோ ஆகாரங்களாலே ஒப்பாகப் பலவற்றையும் பிடித்தால்
எல்லாம் கூட ஒப்பாகவற்றோ
மாட்டாது என்னும்படி இறே இவை தான் இருப்பது

விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே
பரத்வமும் வீர்ய குணம் ஒன்றுக்கும் ஒப்பாம் அத்தனை

இப்படி சீலாதி குணங்கள் கண்டு அனுபவிக்கப் போகாதே இறே அங்கு

சிவப்பாலே செங்கழுநீரை வென்று
கருமையாலே நெய்தலை வென்று
ஓராளும் ஓர் நோக்குமாய் இருக்கும்படி இருக்கையாலே வேலை வென்று
மவ்க்யத்தாலே கயலை வென்று
மற்றும் ஒப்பாகச் சொல்லும் அவற்றை அடையப் புக்கவிடம் புக்கு வென்று

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
தன்னடையே அழியுமவற்றை வெல்லுகை வெற்றிக்கு உடலோ என்று
அழியாத ஆத்ம வஸ்துவையும் அழிப்பதாகக் கோலா நின்றன

ஆவியின் தன்மை அளவுள்ள
இவ்வாத்ம வாஸ்துவின் அளவன்றியே
இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்வன போலே இரா நின்றன
இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மயக்க வல்ல போலே காணும்

அசுரைச் செற்றமாவியம்புள் வல்ல மாதவன்
அசுரர் வர்க்கத்தை யடைய அழியச் செய்து
மஹானாய்
அவன் தன்னோ பாதியும் பெரியனாய்
விஸ்மய நியாமான வியாபாரங்களை யுடையனாய்
இருந்துள்ள பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்லவன்

மாதவன்
கருட வாஹனனான ஏற்றத்துக்கு மேலே
ஸ்ரீ லஷ்மீ பதியான ஏற்றத்தை யுடையவன்

கோவிந்தன்
அவளோட்டைக் கண் கலவியாலே ஆஸ்ரித ஸூலபனானவன்

வேங்கடம் சேர்
அந்த ஸுலப்யமும் மேன்மை என்னும்படி
திருமலையிலே வந்து ஸூலபனானவன்

தூவியம் பேடை யன்னாள்
கோவிந்தனதான வேங்கடத்தைச் சேருமதாய்
புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாததான
தூவியம் பேடை யுண்டு
அழகிய சிறகை யுடைய அன்னப்பேடை
அத்தோடு ஒத்து உள்ளவள்

அன்றிக்கே
தூவியம் பேடை -என்று
பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய்
அவளோடே ஒத்து உள்ளவள் என்றுமாம்

கருட வாஹனன்
ஸ்ரீ லஷ்மீ பதி
என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில்
ஸுலப்யத்தைச் சொல்ல நினைத்து
அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தைச் சொல்லி
பின்பு அந்த ஸுலப்யத்தின் எல்லையில் வந்து ஆறுகை

கண்களாய துணை மலரே
கண் என்கிற வியபதேசத்தாலே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன இரண்டு பூக்களாயிற்று

கண்களாய துணை மலரின் பாரிப்பு
காவியும் என்று தொடங்கி
ஆவியின் அளவுள்ள பாரிப்பு
என்று அந்வயம்

இத்தால்
திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற
ஆழ்வார் படி போக்த்தாக்கள் அளவல்ல என்று
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை
பார்ஸ்வஸ்த்தர் பாசுரத்தாலே அனுபவிக்கிறார் தாம்

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி பகவானுடைய உக்த வித கடாக்ஷத்தாலே
தாம் இங்குள்ள இருப்பில் உயரப் பெற்றமையை அருளிச் செய்து
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து –திருவாய் -9-2-1- என்று
அருளிச் செய்த படியே
இவ்வாழ்வார் அவ்விருவராலும் ஒரு நினைவால் நீயதராய்
இந்த திவ்ய பிரபந்த கரணத்தில்
அதிக்ருதரானது கொண்டு அவன் கடாக்ஷத்தைக் கடாஷித்தவராய்
இங்கான வெந்நிலத்தில் உள்ள பங்கயத்தாள் பாரிப்பு என்னாத்ம ஸ்வரூபம் மட்டுல்ல என்று
அவளுடைய இப்போதான் விசேஷ கடாக்ஷத்தில் தாமான தன்மையில் ஈடுபடுகிறார் இதில்

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
கறுப்பாலே நெய்தலையும்
தன் படியை ஸ்வ வசமாக்கிக் கொள்ளுமத்தால் வேலையும்
ஒளியோடு கூடின ஆகார ஸுந்தரியத்தாலே கயலையும்
மற்றும் கண்ணுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட அம்பு மான் விழி என்று
பல பல வானவைகளையும் வென்ற கண் படைத்தவள்

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
அதி விஸ் மய நீய விரோதி நிரசனமுள்ள ககேந்த்ரனை நடத்த வல்ல
ஸ்ரீ லஷ்மீ வல்லபன் கிடீர்
கோவிந்தனாய் வந்து அவதரித்தவனும்
திருவேங்கடம் சேர்ந்தவனும்
அவனுடையதாய் அமைந்த ஸர்வ ஸரீரியாய்
தத் கத தத் ப்ரயுக்த தோஷ அஸ்பர் ஸித்வம் உள்ளது கொண்டு
அவனுக்கு அழகியளான பேடை யானப்பட்டவளுடைய

கண்களாய துணை மலரே
ஒன்றுக்கு ஒன்றே ஸுந்தர்ய சாத்ருஸ்யம் கொண்டதான திருக்கண் மலர்களே

என் ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
என்னாத்மாவுக்கு யுள்ள ஸ்வ பாவ ஸித்த ஞான சக்த்யாதிகளின் மாட்டு இல்லாத
பலவிதரண உத்ஸாஹம் உள்ளது

ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -68- என்று அருளிச் செய்த
ஸுந்தர்யத்தின் மாட்டு அல்லவாய் இரா நின்றது என்னில்
கடாக்ஷத்தால் அறியப்பட்ட ஸுந்தர்யம் என்றபடி –

————–

அவதாரிகை

இப்படி நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தம்முடைய ஞானத்தால்
பகவத் பாகவத விஷயங்களை நிறைந்த அனுபவம் பண்ணப் ப்ராப்தமாய் இருக்க
யோக்ய காலங்களில் அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த ஸைதில்யத்தை
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றினை பாசுரத்தை
காலம் கண்டு இரங்கின தலைவியைக் காலம் இளையது என்று ஆற்றினை
தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-

பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் –
கால மயக்கு காலம் இளையது என்றல் –
கொண்ட பெண்டிர் -9-1-

பதவுரை

பொரு கடல் சூழ்–அலை மோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம்–பூலோகத்தை
தாவிய–அளந்தருளின
எம்பெருமான் தனது–எம்பெருமானுடைய
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய்–ஒத்து விளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர் கொண்டு–(உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள்–வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனவே–கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும்–மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும்–பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழை பந்தர்–மநோஹரமான தழைகளார் சிறு பந்தலிலே
தண்டு–கொம்புகளிலே
உற–நெருங்க
நாற்றி–தொங்க விட்டுக் கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில–முற்றும் மலர்ந்து விட்டனவில்லை

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாகவும்
மாலையாலே சமைந்த பொன்னின் வாசிகையாயும் இருக்கிற பூக்களை
கண் வைத்தால் வாங்க ஒண்ணாத படி செறிந்த தழைப் பந்தலிலே
கொம்புகள் சிக்கனைத் தூக்கி
மலர்ந்தே வியானவில்லை

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்
அலைகள் தன்னில் தான் பொருகிற கடலாலே
சூழப்பட்ட பூமியை அளந்து கொண்ட நம்முடைய
ஸ்வாமியானவனுடைய

பொருகடல்
செறிந்த கடல் என்னவுமாம்

தனது வைகுந்த மன்னாய்
அவனுக்கு அசாதாரணமான பரமபதம் போலே
அந்நிய அபிமான பிரசங்கம் யுண்டாய்க் கழிக்க வேண்டாதபடியான
ஸ்வ பாவத்தை யுடையவளே

(உலகு அளந்த பொன்னடி -சாத்ய பூமி அது
பற்றுவது இங்கே -திருவிக்ரமனது திருவடி பற்றி
அங்கு சென்று அந்த ஸ்ரீ வைகுண்டம் போல் இனியவளே
நித்யம் நிரதிசய போக்யம் -கீழ்
அந்நிய அபிமான பிரசங்கம் இல்லாத ஆழ்வார் –
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிரே என்று இகழல்பவர் அன்றோ )

கலந்தார் வர வெதிர் கொண்டு
தம்மோடு முன்பு ஸம்ஸ்லேஷித்த அன்புடையாருடைய வரவை முற்கோலி

வன் கொன்றைகள்
நாம் மலர்ந்தால் இவள் ஈடுபடும் என்னும் இரக்கம் இல்லாத
வன்மையை யுடைய கொன்றைகள்

கார்த்தனவே –
கருவடைந்து அரும்பின இத்தனை
மலர்ந்தன வில்லை என்றதாயிற்று

வன் கொன்றை என்று
அரும்பின சிக்கனவைச் சொல்லி
மலர விளையது என்றதாகவுமாம்
(வன் -செறிந்து அடர்ந்து என்றபடி இதில் )

இத்தால்
விஸ்லேஷித்த நண்பரான பாகவதருடைய ஆகமநத்தை
ஸாம்ஸாரிக போக தர்சனத்தாலே
(கொன்றைப்பூக்கள் பூக்க ஆரம்பிப்பது ) வந்த ஆர்த்தி சமிக்கைக்கு
உஸாத் துணையாக ஆசைப்பட்டவர்
விளம்ப அஷமதையாலே சிதிலராக
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரமாய் இருக்கிறது

இதில்
வன் கொன்றை -என்கையாலே
ஸ்த்தாவர பிராயராய்
அஞ்ஞரான சரீரிகளுடைய
தேவதாந்த்ர அபிமானத்தை சிக்கனவை ஸூசிப்பிக்கிறது
(கொன்றைப்பூ சிவனது )

புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே
இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி

மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் )
வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே )
யுண்டான போக்ய வஸ்துக்களை
ஸூசித்தப்படி

தண்டுற நாற்றி -என்கையாலே
(கிளையில் பொருந்தி )
இவ்விஷயங்களினுடைய அநு பந்தம் ஆஸ்ரய பர்யந்தமாய் இருக்கும் என்றபடி
(கிளையும் தள்ளுபடி -விஷயாந்தரம் போல் விஷயாந்தர பரரும் த்யாஜ்யம் )

மலர்ந்தே ஒழிந்தில -என்கையாலே
கிலேச கரமான வைஷயிக போக விகாஸம் உம்முடைய ஸந்நிதியில்
அதிசயித்தது இல்லை என்றபடி
அப்போது இறே உஸாத் துணை வேண்டுவது

பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு -என்று
உஸாத் துணையான நண்பருடைய ஆகமநம் மேல் அபேக்ஷிதம் என்றபடி

கார்த்தனவே -என்கையாலே
ஆகாமியான விகாஸத்துக்கு ஸூசகம் யுண்டு இத்தனை என்றதாயிற்று

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

ஸ்வாபதேசம்
இத்தால்
அவனுடைய குண ஞானத்தாலும்
இக்கலையை அவகாஹித்த படியாலும்
போக யோக்கியமான காலத்தில் வாராது ஒழியான் என்று
பார்ஸ்வஸ்த்தர் ஆஸ்வஸிப்பிக்கிற படியைச் சொல்லுகிறது

——

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகள்
கொன்றை பூக்கிற காலத்திலே வருகிறேன் என்று போனானாய்
அக்காலமும் வந்து
அவையும் பூக்கவும்
அவன் வரக் காணாமையாலே
தலை மகள் தளர
அத்தைக் கண்ட தோழி
அவை இப்போது பூக்க உத்யோகிக்கிற அத்தனை –
காலம் தாமும் இளையது என்று ஆற்றினை தோழி பாசுரத்தாலே
தம்மில் தாமே ஸமாஹிதராகிறார்
இதில்

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாயும்
மாலைகளால் கட்டப்பட்ட பொன் வாசிகையாயும் யுள்ள பூக்களை
வைத்த கண் வாங்காதபடி அழகுள்ள பசும் தழைப் பந்தலில் யுள்ள கொம்புகளிலே
தூக்கின அளவே காண்

மலர்ந்தே ஒழிந்தில
மலர உபக்ரமித்தனை
இன்னும் மலர்ந்தது இல்லை
அவன் வரும் அளவில் அல்லது மலராது காண்
மலரும் காலத்தில் அவன் வருவது நிச்சிதம்

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார்
வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே
அலைகள் தன்னில் தாம் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்டு
நம் ஸ்வாமியால் நம் விபூதகி எல்லாம் ஒரு தட்டு
இவள் ஒரு தட்டு என்று அபிமானிக்கப் பட்டவளே
உன்னோடு கலந்தவருடைய வரவுக்கு எதிர்கொண்டு அவரைக் கண்டு அல்லது அலரலாகாது
என்கிற புத்தி சக்தி பலமுள்ள கொன்றைகள்
கார்த்திக் கொண்டே நின்றன காண்

கலந்து பிரிந்தவர்கள் ஆராரோ
அவர்களை எல்லாம் எதிர்கொண்டு என்றுமாம்

—————–

அவதாரிகை

இப்படி ஆஸ்வாஸ கறாரான பாகவதருடைய ஆகமநமும் இன்றியே
அனுபவ யோக்ய காலத்தில் பகவத் அனுபவமும் ஸித்தியாமையாலே
சிதிலரான இவரை ஸூஹ்ருத்துக்கள் ஆனவர்கள்
இவ்வவஸ்தையில் பகவத் அங்கீ காரத்துக்குக் குறையில்லை என்று
ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத் தலை மகளை ஆற்றி யுரைத்த
தோழி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 –

பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு
மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –
கற்பார் இராம பிரானை -7-5-

பதவுரை

கார்–கருத்த
இருள்–இருளாகிய
ஏறு–எருதானது
செகில்–சிவந்த
சுடர்–ஸூர்யனாகிய
ஏற்றிற்கு–எருதுக்கு எதிரில்
உளைந்து–இளைத்து
வெல்வான்–(மீள) வெல்லும் பொருட்டு
போர் ஏற்று–போர் செய்வதை ஏற்றிக் கொண்டு
எதிர்த்தது–வந்து எதிரிட்டது.
நீர் ஏற்று–(மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று
புவனி எல்லாம்–எல்லா வுலகங்களையும்
அளந்த–அளந்து கொண்ட
நெடிய–நீண்ட வடிவமுடைய
பிரான்–தலைவன்
புன்தலை மாலை–அற்புதமான தன்மையையுடைய மாலைப் பொழுதிலே
அருளாவிடுமே–(உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.)
வார் ஏற்றும் இன முலையாம்–கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்த இளமை மாறாத தனங்களை யுடையவனே!
உன் வளை திறம்–உனது கைவளையின் நிமித்தமாக
வருந்தேன்–வருத்தப்படாதே.

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து
கறுத்த ஏறு போலே மேல் எழுச்சியை யுடைத்தான இருளானது
சிவந்த ஏற்றினை ஒத்த ஆதித்யன் சுடருக்கு முன்பு இடைந்து

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
வெல்லுகைக்காக யுத்தத்தை ஏன்று கொண்டு எதிர
புல்லிய தலைப்பாட்டை யுடைத்தான மாலையிலே

இதுக்கு வன்மையாவது
பிரிந்தாரை நலிகை

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் பிறர் மேலிடாதபடி இரந்து
தன் கைப்படுத்தி எல்லை நடந்து காற் கீழே யிட்டுக் கொண்ட
சர்வாதிகனான மஹா உபகாரகன்
பூமியோ பாதி அநந்யார்ஹை யான உனக்கு அருளாது ஒழியுமோ

வாரேற்றி இள முலையாய்
வாரை ஏற்றுவிக்கும் படி வளருகின்ற இளமையே வடிவான
முலையை யுடையவளே

ஏற்றுகை -முடிகை
(
வருந்தேல் உன்வளைத் திறமே
உன் முகப்படம் கிழிந்து இருக்க வளை கழலுகிறதே என்று
கிலேசிக்க வேண்டுவது இல்லை
அவன் அருளும் என்றதாயிற்று –

இத்தால்

காரேற் றிருள் -என்று
(மயர்வற மதிநலம் அருளுவதுக்கு முன்பு )
பூர்வகமான அஞ்ஞானத்தை ஸூசிப்பித்து

செகிலேற்றின சுடருக்கு உளைந்து -என்று
அது ராகோத்தரமான விவேகம் ஆகிற பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே
கழிந்தமை சொல்லி

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம் நீரேற்று
அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-என்று
யோக்ய காலத்தில் அனுபவ அலாபத்தாலே இருந்த விவேகமும் அழியும்படி
மோஹ அந்தகாரம் மேலிடும் அவஸ்தையை ஸூசிப்பித்ததாயிற்று

வாரேற்றி இள முலையாய் –என்கையாலே
இவளுடைய பக்தி அபி விருத்திக்குத் திரோதாயகர் இல்லை என்றபடி

வருந்தேல் உன் வளைத் திறமே -என்று
இப்படி பக்தி ப்ரபாவத்தை யுடைய உம்முடைய கையில்
பாரதந்தர்ய ஸூசகமான மினுக்கம் கழலுகிறது என்று கிலேஸிக்க வேண்டா

சம்பந்தம் உள்ளாரைத் தானே இரந்து வந்து
அநந்யார்ஹர் ஆக்கிக் கொள்ளும்
சர்வாதிக ஸ்வாமி யானவன் அருளாது ஒழியுமோ என்று
ஆஸ்வஸிப்பித்தார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அதுக்கு மேலே ஸந்த்யையும் வந்து நலிய
போக யோக்கியமான காலமாய் இருக்க அவன் வந்து தோற்றாமையாலே
தலைமகள் நோவு பட
இத்தைக் கண்ட தோழியானவள்
ஸந்த்யை அல்ல -இரண்டு வ்ருஷபங்கள் தன்னிலே பொருகிறன காண் என்று
இங்கனே சொல்லி ஆஸ்வஸிப்பிக்கிறாள்

வியாக்யானம்

காரேற் றிருள்
இருளான கார் ஏறானது
கறுத்த வ்ருஷபமானது

செகிலேற்றின சுடருக்கு உளைந்து
ஆதித்யன் ஆகிற சிவந்த வ்ருஷபத்துக்குத் தோற்றுப் போய் சுரமடைந்தது

வெல்வான் போரேற்று எதிர்ந்தது
நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடைக்கும் இத்தனையோ
நாமும் ஒரு கால் மேலிட வேணும் என்று பார்த்து
போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது

புன் தலைமாலை
புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது
ஜசுகைசான இருள் கொழுந்துகளை உடைத்தான ஸந்த்யையானது

நக நிர் லுஞ்ச நீயா தமோ வல்லய
(இந்த ஸ்லோகத்தின் அக்ஷரங்கள் சரியாகாது தெரியவில்லை என்று
பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் குறிப்பு உள்ளது )
ஸந்த்யையினுடைய உபக்ரமம் அத்தனை
ஸந்த்யை தான் அல்லது காண் இது

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
இருளாகிற கறுத்த ருஷபமானது முன்
செகிலேறு சிவந்த வ்ருஷபமான ஆதித்யனுடைய கிரணங்களால் பஃனமாய் ஓடிப்போனது
இப்போது அந்த சிவந்த வ்ருஷபத்தை ஜெயிக்கவே பொரும் விருஷபமாய் எதிர்த்தது

மேகத்தின் செக்கரைத் தான் ஏறிட்டுக் கொண்டு
பொன்னிறம் போன்ற மாலைகள் அசைய அசைய

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் தன் பொற் கையில் நீர் ஏற்றவனாய்
தன் திருவடிகளால் அளைந்து கொண்டு
ஸர்வத்திலும் நெடு மாளாய் உபகரித்தவன் தான் கடுக வாராமல் அருளிச் செய்த மாத்ரமாய் விடுமோ
கண் எச்சில் வாராதபடியும் வெளிறு மேல் இடாதபடியும்
கச்சை காட்டும் படி இள முலைகள் அழகியளானவளே
உன் வளைகள் கழலுமதாய் மநோ விசாரப்பட்டு ஆயாசப்படாதே கொள்ளாய்

உன்வளைத் திறமே
வளை விஷயத்தில் உன்னோடு வரும் காலம் குறித்தவன் அக்காலம் வரவே
வாராமல் தப்பான் காண் என்கிறாள் –

——————–

அவதாரிகை
இப்படி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வஸிப்பித்த இடத்திலும்
விளம்ப அஷ மத்வத்தாலே கால தைர்க்யம் பொறாமையாலே
வந்த ஆர்த்தியை
இரவின் நெடுமைக்கு இரங்கின
தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

பாசுரம் -70-வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் –
தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –
பிறவித் துயரற -1-7-

பதவுரை

வளை வாய் திரு சக்கரத்து–வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார்–எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல்–திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய்–கட்டு வாய்ந்த
நறு–பரிமளமுள்ள
கண்ணி–மாலை வடிவமான
தண் அம்–குளிர்ந்து அழகிய
துழாய்க்கு–திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான்–(எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து–அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க–நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து–எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல்–இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே-ஆயிரம் கற்பமாகா நின்றது.

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
வளைந்த வாயை யுடைத்தான திருவாழியை யுடையனாய்
எங்கள் பக்கலிலே பரமபதத்திலே பண்ணின அபிமானத்தை பண்ணும்
ஸர்வேஸ்வரனுடைய திரு முடியில் சாத்தின

தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
கட்டு வாய்ந்து பரிமளத்தை யுடைத்தான
மாலா ரூபமான குளிர்ந்த திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
ஸ்வ பாவிகமான நிறம் ஒழிந்து
வெளுப்பு நிறம் விஞ்சி வருகைக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு ராத்ரி மிக்கு நாளாயும்
மாஸமாயும்
ஆண்டாயும்
ஊழியாயும்
வந்து ஒழிய

எம்மைஉளைவான் புகுந்து
எம்மை ஈடுபடுத்துகைக்காகக் கிட்டி

இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இந்த ஒரு ராத்ரியானது
ஆயிரம் கல்பம் ஆகா நின்றன

ஆயிரம் என்றது
அநந்தம் என்றதாகவுமாம் –

இத்தால்
வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு

ஈஸ்வரத்வ சிஹ்னமான பரிகரத்தையும்
விபூதியையும்
பூஷணத்தையும்
ஒப்பனையையும் யுடைய
ஸர்வேஸ்வரனுடைய போக்யதையை

வண்ணம் பயலை
அனுபவிக்கப் பெறாமையாலே
ஸ்வரூப விபர்யாசம் பிறக்கும் படி நம்மை கிலேசிப்பதாகக்

விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

காலமானது
அவச்சேதகங்களால் பரிச்சின்னமாகை யன்றியே பிரகாச பிரஸங்கம் இல்லாதபடி
அபரிச்சின்னம் ஆகா நின்றது என்று தளர்ந்து அருளிச் செய்தார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு –

அவதாரிகை –

ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின திருத்துழாய் மாலையைப் பெற வேணும்
என்னும் அபேக்ஷையால் உண்டான
த்வரையாலே காலம் செலுத்த உள்ள அருமை சொல்லுகிறது

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து
வளைந்த வாயை யுடைய திருச்சக்கரம் என்னுதல்
அன்றிக்கே
வளையையும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
வாயையும் யுடைய -திருச்சக்கரத்தையும் என்னுதல்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர -யுத்த –114-15-என்னக் கடவது இறே

எங்கள் வானவனார் முடிமேல்
த்ரிபாத் விபூதியை யுடையராய்
திவ்ய ஆயுதங்களும்
சாத்தின மாலைகளுமான
அழகேயாய் இருக்கிறவர்
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய திரு அபிஷேகத்தில் யுண்டான

தளைவாய்
தொடை வாய்ப்புள்ள
அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே

நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
செவ்வியை யுடைய மாலைத் திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
அம்மாலையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிறமானது பயலை விளையும்படியாக
விவரணமாம் படியாக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
முந்துற வந்ததொரு ராத்ரி ஒரு நாளாய்ப் பெருகிற்று
அது போய் ஓர் ஆண்டாய்ப் பெருகிற்று
அது போய் ஒரு கல்பமாய்ப் பெருகிற்று

அது நிற்க
அத்தைக் கடக்க நிறுத்தி
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்
அவை போலே இன்றிக்கே இது வேறு ஒன்றாய் இரா நின்றது

எம்மைஉளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இவை யடைய நமக்கு அனுகூலம் என்னும்படி என்னை நலிகைக்காக வந்து புகுந்தது
அநேகம் ஊழிகளாய் இரா நின்றன

மிக வந்து
ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல்
அநேக ராத்ரிகள் எல்லாம் வந்தது இறே
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்

ஸ்வா பதேசம்
இத்தால்
பதி ஸம்மாநிதா ஸீதா –அயோத்யா -16-21-
அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே பெற வேணும்
என ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலம் செல்ல அரிதான படியைச் சொல்லுகிறது

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இதுக்கு மேல் வந்த நெடுகைக்கு இரங்கின
தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் ஸ்வயம் விளம்ப அஷமராய்
இப்பாசுரத்தில்

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித்
தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான்
வளையவும் பர பேத நத்துக்கான தீக்ஷணமாகிய வாயுள்ள திருவாழியை யுடையவராய்
எங்கள் பக்கல் வானில் பண்ணும் ப்ரீதியைப் பண்ணுமவருடைய
திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயாதான
மரு கானத்தில் எங்கும் வாய்ந்த நறு நாற்றமுள்ள திருமாலையான திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு
என்னில் பசுமையான வர்ணத்தை உண்டாக்கி விளைப்பதுக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு நாழிகையே வந்து
நாளாயும்
திங்களாயும்
ஆண்டையும்
ஊழியாயும்
மிகவும் வளர்ந்து நிற்குமே

எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
ஒரு ராத்ரியானது பதினாயிரம் ஊழி களாய்க் கொண்டு
நம்மை வளைத்துக் கொண்டு கொள்ளப் புக்கது
எங்கனே நான் தரிக்கும் படி –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -51-60–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 12, 2022

அவதாரிகை

தூரஸ்தரான அன்பரும் த்வரித்து வந்து ஆஸ்வஸிப்பிக்கும் படி ஆர்த்தரான இவர்
அதுக்கு மேலே
ஸம்ஸார கோலஹலத்தைக் கண்டு சிதிலரான பிரகாரத்தை
கடலோசைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –

பாசுரம் -51-மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய –
கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –
நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

பதவுரை

கடல்–கடலானது
மலை–மந்தர பர்வதத்தை
மத்து ஆ கொண்டு-மத்தாகக்கொண்டு
அரவால்–வாஸுகிநாகமாகிய கடை கயிற்றால்
சுழற்றிய–(தன்னைக் கடைவதற்குச் சுழலச் செய்த
மாயம்–அற்புத சக்தி வாய்ந்த
பிரான்–எம்பெருமான்
அலை கண்டு–(தன்னை) அலைத்து
கொண்ட–(தன்னிடத்தினின்று) எடுத்துக் கொண்ட
அமுதம்–அமிர்தத்தை
கொள்ளாது–(மீண்டும்) வாங்கிக்கொள்ள மாட்டாமல்,
வேரி துழாய் துணை ஆ–பரிமளத்தையுடைய (எம்பெருமானது) திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
துலை கொண்டு–ஒத்து எதிர்வந்து
தாயம் கிளர்ந்து–பங்காளி யுரிமை கொண்டாடுதல் போலே மேலெழுந்து
பரதர் விலை கொண்டு தந்த சங்கம் இவை கொள்வான் ஒத்து–நெய்தல் நிலமக்களான வலையம் (என்னிடத்தினின்று)
விலை வாங்கிக் கொண்டு எனக்குக் கொடுத்த இச்சங்கு வளைகளை மீட்டும் வாங்கிக் கொள்வது போன்றது.
அழைக்கின்றது,–(சண்டைக்குக்) கூப்பிடுகின்றது.

வியாக்யானம்

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மந்த்ர பர்வதத்தை மத்தாகக் கொண்டு
வாஸூகி யாகிற பாம்பாலே கடைந்த ஆச்சர்யத்தை யுடைய ஸர்வேஸ்வரன்

அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்
தன்னை அலையும் படி தன் பக்கலில் நின்றும் வாங்கிக் கொண்ட அம்ருதத்தை
மீட்டுக் கொள்ள மாட்டாது கடலானது

பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை
இச்சங்கங்கள் விலை வாங்கிக் கொண்டு பரதர் தந்தவை

பரதர் என்று
நுளை யருக்குப் பேர்

வேரித் துழாய் துணையா
மதுவை யுடைத்தான திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
அதாவது
திருத்துழாயில் ஆசையால் யுண்டான தளர்த்தி இவளை
நலிகைக்கு உறுப்பாகை

துலை கொண்டு
ஒத்து எதிர் ஏறி
துலைத்தல் -முடித்தலாய்
இவளை முடிக்க வேணும் என்று உட்கொண்டு என்றுமாம் –

தாயம் கிளர்ந்து
ஞாதேயம் கொண்டாடுவாரைப் போலே
மேல் எழுந்து

கொள்வான் ஒத்து
வளையை மீட்டு வாங்கிக் கொள்வாரைப் போலே

அழைக்கின்றதே
அவஷ்டம்ப (பற்றுக்கொம்பு )பலமுடையார் வியவஹாரத்துக்குத் தொடர்ந்து
அழைக்கும் கணக்கிலே
அதி கோஷம் பண்ணா நின்றது என்று
தன் ஆற்றாமை கூறினாள் ஆயிற்று –

இத்தால்

மலை கொண்டு என்று தொடங்கி -அமுதம் கொள்ளாது கடல் -என்கையாலே
ஸம்ஸார சாகர மத்யத்திலே
நிச் சலமான வியவசாய மந்த்ரத்தை நாட்டி
ப்ராப்ய ருசி யாகிற பாசத்தாலே
நித்ய மதனம் பண்ணின ஸர்வேஸ்வரன் தானே
தமருற்றார் தலைத்தலைப் பெய்து -திருவாய் -4-9-2-
நூற்றும்படி யாக்கி
அம்ருத அக்ஷர -ஸ்வேதாஸ்வர
ஸப்த வாஸ்யனான இவ்வாத்மாவை உத்தரித்துக் கொண்டு போய் புஜிப்பிக்கிற இத்தை
ஸம்ஸார சாகரம் மீட்டுக் கொள்ள மாட்டாது என்று தோற்றுகிறது –

பரதர் இத்யாதியாலே
எங்கள் கையில் யுண்டான இந்த ஸூத்த பாவமானது
தேசிகரானார் எங்களுடைய சமர்ப்பணாத் அநு விருத்தியாலே தந்தது என்று காட்டுகிறது

வேரித் துழாய் இத்யாதியாலே
பகவத் போக்யதையில் யுண்டான அபி நிவேசமானது
ஸாம்ஸாரிக கோலா ஹலத்தையும் ஸஹியாதபடி பண்ணுகையாலே
ஆற்றேன் உலகு இயற்கை -திருவாய் -4-9-3-என்கிறபடியே
இவருக்கு ஆர்த்தியை ஜெநிப்பித்தமை தோற்றுவித்தாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு அது பாதகமாகிற படியைச் சொல்லுகிறது –
பதினாலு ஆண்டு கூடப்போன வழியை ஒரு பகலிலே வாரா நிற்கச் செய்தே
க்ரம பிராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக்காட்டினார் இறே
அப்படியே இங்கு ஓர் ஆள் வரவிட்டால் கண்டது எல்லாம் பாதகமாம் இறே
சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யே -நார்த்தீ ஸ்வயம் பவேத் -யுத்த -128-17-
அய்யர் நியமிக்க நடுவில் ஆய்ச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் நம்மைப் பின் தொடர்ந்து வர
அவனுக்கு நாம் சொன்ன நாள் எல்லை கழிந்தால் பின்னை ஒரு க்ஷணம் தாழ்க்கில்
தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான்
இன்று சென்று நாம் கிட்டினால் பதினாலாண்டும் பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே
நீ முடி சூடு என்றால் அத்தை அல்லேன் என்னாதே இசையப் பெறுவது காண்
அய்யர் நம்மை முடி சூடிக் காணப் பெறாதே போன இழவு தீர நாம்
பிள்ளையை முடி சூடக் கண்டு வாழப் பெறுவது காண்

சநைர் ஜகாம ஸா பேஷ -அயோத்யா -19-31-
இத்தை ஸா வேஷ -என்று திருத்தி
கீழ் விழியாலே பார்த்துப் போனார் என்று பொருள் சொன்னபடியாலே
அத்தை பட்டர் கேட்டு அருளி

அது வேண்டா காண் -கீழ் நடந்த பாடம் தனக்குப் பொருள் சொல்லலாம் காண் -என்று
இவ்வுபரணங்களைக் கொண்டு பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் என்னும்
அபேஷையோடே போனார் – என்று அருளிச் செய்தார்

அத்தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்பே கடலோசை வந்து பாதகமாகிற படியைச் சொல்லுகிறது

வியாக்யானம் –

மலை கொண்டு மத்தா
ஒரு தாழிக்கு உட்பட்ட தயிரை ஒரு மத்தை இட்டுத் திரிக்குமா போலே
மலையை மத்தாகக் கொண்டு அசலத்தை சலிப்பிக்கும் படி பண்ணி

அரவால்
ஸர்ப்ப ஜாதிக்கு மார்த்தவம் ஸ்வ பாவம் இறே
அத்தை வலிக்கைக்கு ஈடான திண்மையை உடைய கயிறாகக் கொண்டு
பதார்த்தங்களுக்கு நியதமாய் இருபத்தொரு ஸ்வ பாவம் இல்லை
அவன் புத்தி அதீனமாய் இருக்கும் அத்தனை காண்

சுழற்றிய
அஜ்ஜலத்தை பிரமிப்பித்தான்

மாயப்பிரான்
அதுக்கு ஈடாக ஆச்சர்ய சக்தியை யுடையவன்
அன்றிக்கே
தோளும் தோள் மாலையுமாய் நின்று கடைந்த வாற்றைச் சொல்லவுமாம்

அலை கண்டு கொண்ட
அப்ரமேயோ மஹோ ததி-யுத்த -19-31-என்கிறபடியே
ஒருவரால்

———–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இவர் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு
அத்தால் பாதைப்படும் நாயகியாய் அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மஹா அசலத்தை மத்தாகக் கொண்டு
அதி மிருதுவான வாஸூகி யாகிற கயிற்றால் கடலைக் கடைந்த ஆச்சர்யத்தைக் காட்டி
எனக்கு உபகரித்தவன் –

அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்
தன்னை மிகவும் அலையும்படி மதித்தது கண்டு
தன்னால் வாங்கிக் கொண்ட அம்ருதத்தைத் தான் அபஹரித்துக் கொள்ள மாட்டாது
இக்கடலானது
அவனில் அத்யந்தம் அசமர்த்தனான தான்

பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை
வளைகாரரால் விலை கொடுத்துப் பெற்ற வளைகள் அன்றோ இவை

வேரித் துழாய் துணையாத்
இவைகளைத் தானே அபஹரிக்க மாட்டாமல்
ஸ்வ அபஹாரத்துக்கு வேரித் துழாயையும் துணையாக்கிக் கொண்டது என்கிறாள்

வேரித் துழாய் துணையா-என்று
அவ்வளவு அன்றிக்கே
ஓர் துர் வ்யவஹாரத்தையும் அவலம்பித்ததாய் என்னை அழையா நின்றது என்கிறாள்

துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே-என்று
அந்யாயப் படுகிறாள்

சங்கு எல்லாம் தன்னதேயாய்
பரதர் தன் தம்பிமார்களாய்
இந்த வளையிலும் தன்னினுள்ள சங்கு ஸாம்யத்தைக் கொண்டு
தன தம்பிமார்கள் அல்ப விலைக்கு இட்டார்கள் என்கிற தாயத்தைக் கொண்டு
வ்யவஹார ஸப்த உத் கோஷத்தால் விஜ் ரும்பித்ததாய் காட்டில் வழி பறிப்பார்
தன் கிட்ட வா என்று அழைப்பாரைப் போலே என்னை அழையா நின்றது
இதுக்கு நான் என் செய்கேன் -என்கிறாள் –

——————-

அவதாரிகை

இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத் பூதர்
அனுபவ யோக்ய தசையிலே அனுபவிக்கப் பெற்றிலோம்
ஆசந்ந ரானார் நித்ய அனுபவம் பண்ணப் பெறா நின்றார்கள்
நமக்கு அவனோடு உண்டான அசாதாரண சம்பந்தமும் அகிஞ்சித் கரமாயிற்றே -என்று
இவர் ஈடுபடுகிறாராக நினைத்து
நிதர்சன முகத்தாலே ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்தை ஸூசிப்பித்து ஆற்றின பிரகாரத்தை
காலம் கண்டு கலங்கின தலை மகள் ஆற்றாமையை
தோழி காலம் மறைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – 52-

பாசுரம் -52–அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே –
கால மயக்கு –
அந்தாமத் தன்பு -2-5-

பதவுரை

அழைக்கும்–(அன்போடு) அழைக்கிற
கரும் கடல்–(தன்னிடத்திற் பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானது திருமேனியின் நிழலீட்டாலே) கறுத்துள்ள திருப்பாற்கடலானது.
வெண் திரை கை–(தன்னுடைய) வெளுத்த அலைகளாகிய கைகளாலே
கொண்டு போய்–எடுத்துக் கொண்டு போக,
விண்வாய்–ஆகாயத்திலே
புலம்பி அழைத்து–(மேக கர்ஜனை முகமாக அழுது கூப்பிட்டு
முலை மலை மேல் நின்றும்–(தனது) ஸ்தனங்களாகிய மலைகளின் மேல் நின்றும்.
அலர் வாய் மழை கண் மடந்தை–தாமரை மலரில் வாழ்பவளும் மழை போலக் குளிர்ந்த கண்களை யுடையவளுமான திருமகள்
அரவு அணை ஏற00(அப்பாற் கடலினிடையிற் பள்ளி கொண்டுள்ள எம் பெருமானது) ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது ஏற,
(அது கண்டு)
மண் மாதர்–பூமிப்பிராட்டி
ஆறுகள் ஆய்–ஆறுகளாக பெருக விட்ட
மழை கண்ண நீர்–மழையாகிய கண்ணீரானது
திருமால் கொடியான் என்று–திருமால் கொடியவனென்று வெளியிட்டு
வார்கின்றது–பெருகுகிறது.

வியாக்யானம்

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்-மழைக் கண் மடந்தை யரவணை ஏற
பிறந்த அகவாசி தோன்ற ஆதரித்து அழைப்பாரைப் போலே அழைப்பதாய்
தன்னுள் அகவாயில் கண் வளருகிற ஸர்வேஸ்வரன் திருமேனியின் நிழலீட்டாலே
ஸ்யாமளமான கடலானது
தன்னுடைய வெளுத்த திரக் கைகளாலே எடுத்துக் கொண்டு போகப் போய்
தாமரைப்பூ இடத்திலே இருக்கிற
மழை போலே அத்யுதாரமான கண்ணை யுடையளாய்
மடப்பம் முதலான ஸ்த்ரீத்வ குணத்தாலே பூர்ணையாய் இருக்கிற பெரிய பிராட்டியார்
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏற

குளிர்ந்த கண் -என்றுமாம்

மண் மாதர்
பூமியாகிய பிராட்டி யானவள்

விண் வாய் அழைத்து புலம்பி
தானும் கிட்டு அனுபவிக்கப் பெறாத இழவாலே
ஆகாசத்திலே மேக த்வனி முகத்தால் புலம்பி அழைத்து

முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
பூமிக்கு முலையாய் இருக்கிற மலை மேல் நின்றும்
ஆறுகளாகிற பிரவாகத்தை யுடைத்ததாய்க் கொண்டு

மழைக் கண்ண நீர்
வர்ஷமான கண்ண நீரானது

திருமால் கொடியேன் என்று வார்கின்றதே
பெரிய பிராட்டியாருக்குப் பிச்சானாவான் கொடியனாய் இருந்தான் என்று
வடியா நின்றது என்று
உத் ப்ரேக்ஷையாலே காலத்தை மயக்கி உரைத்தாளாயிற்று –

இத்தால்

இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருதுக்கள்
நித்ய அநபாயினி யான பிராட்டியாரோடு ஒத்த போகத்தை யுடைய
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு
க்ஷண விஸ்லேஷத்தில் அதிசய ஆர்த்தி பிறக்கும்படி அன்றோ
(இது நாலாவது நிர்வாகம் –
கீழ் பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகத்தில் மூன்று பார்த்தோமே )
அத் தலையில்
வை லக்ஷண்யமும்
ஸ்வா தந்தர்யமும் இருக்கும்படி
நீர் அவன் செய்தது கண்டு ஆறி இருக்கை காணும் பிராப்தம் என்று
இவரை ஆஸ்வஸிப்பித்ததாயிற்று

பூமி பக்கல் யுண்டான இந்த உத் ப்ரேக்ஷை
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்துக்கு ஸூசகம் –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகன்
கார் காலத்திலே வருகிறோம் என்று போனானாய்
காலமும் வந்து
வர்ஷிப்பதும் செய்யா நின்றது என்று தலைமகள் தளர
தோழியானவள்
அக்காலம் அன்று காண் இது –
பெரிய பிராட்டியார் ஸர்வேஸ்வரனையும் கொண்டு திருவனந்த ஆழ்வான் மேலே
ஸம்ஸ்லேஷ அர்த்தமாக ப்ரவேசிக்க
அத்தைக்கண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டியானவள்
இப்பரிமாற்றத்துக்கு நான் கூட்டு அன்றிக்கே ஒழிவதே -என்று அழுகிற கண்ணநீர் காண் இது
நீ நினைக்கிற வர்ஷம் அல்ல காண் இது -என்று
இங்கனே காலத்தை மயக்கி தரிப்பிக்கிறாளாய் இருக்கிறது

வியாக்யானம்

அழைக்கும்
போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலம் இங்கே யுண்டாய் இருக்க
போக்தாக்களாய் இருக்கிற நீங்கள் வாரிகளோ என்று
அழைக்கிறாப் போலே யாயிற்று
கடல் கோஷிக்கிற படி

கருங்கடல் வெண் திரைக்கே
நீர்ச்சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே
கீழ் கறுத்து அவகாசம் யுண்டாய் மேல் திரைந்து காட்டின பொது வெளுத்து இருக்கும் இறே
அபாமபி சுக்லம் -என்று ஜலத்துக்கு ஸ்வ பாவம் வெளுப்பே யாகிலும்
அந்நீர்ச் சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே
கீழே கறுத்து மேலே

——-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

மண் மாதர் விண் வாய் அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே –
வாய் -இடம்
ஸ்வாவதாரத்தில் அவன் பிரிவைப் பொறாத மண் மகளுக்காக
இவ்வாகாசத்தை தனக்கு இடமாகக் கொண்ட மேகங்கள்
வேங்கடவனைத் தன் முழக்கத்தால் அழைத்ததாயிற்று
அதுக்கு அவன் வாராமையாலே
அவனுக்கு இருப்பிடமாகிற முலையில் நின்றும் அவன் கேட்கத் தன் சீர் முழக்கத்தால்
தான் அவன் கொடுமைகளைப் புலம்பிக் கொண்டு மழையாகிற தன் கண்ணீர்கள்
ஆறுகளாய்ப் பெருக அழா நின்றதே
மழை -மேகம்
வார்கின்றதே -பெருகா நின்றதே –

—————–

அவதாரிகை

இப்படி பார்ஸ்வஸ்த்தரும் ஆஸ்வஸிப்பிக்க வேண்டும்படியான இவருடைய
ஆர்த்தியைக் கண்ட பரிவரானவர்கள்
இதுக்குப் பரிஹாரம் ஏதோ என்று கலங்கின அளவிலே
நிதானஜ்ஞரான நிரூபகர் பகவத் விஷய மூலமான ஆர்த்திக்கு (இதுவே நோய் )
தத் சம்பந்தியான பரிஹாரம் செய்ய பிராப்தம்
என்று சொன்ன பாசுரத்தை
தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்குப் பரிஹாரம் ஏதோ என்று வினவின
செவிலி முதலானார்க்கு
கட்டுவிச்சி நோய் நாடி
பரிஹாரம் சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –

பாசுரம் 53-வார் ஆயின முலையாள் இவள் –
கட்டுவிச்சி கூறுதல்-
வைகுந்தா மணி வண்ணனே -2-6-

பதவுரை

வாரா ஆயின முலையான–கச்சுப் பொருந்திய தனத்தை யுடையவளான
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
இது–இந்த நோயானது
வானோர் தலைமகன் ஆம் சீர் ஆயின தெய்வம் நல்நோய்–தேவாதி தேவனான திருமாலினது தகுதியான
திருக்கல்யாண குணவிஷயமாக வுண்டான சிறந்த நல்ல நோய்;
(இதற்குப் பரிஹாரமுறை யாதெனில்;)
தெய்வம்–திய்வமான
தண்–குளிர்ந்த
அம்–அழகிய
துழாய் தார் ஆயினும்–(அப்பெருமானது) திருத்துழாய் மாலையையாயினும்
தழை ஆயினும்–(அத்திருத்துழாயின்) ஓரிலையையாயினும்
தண் கொம்பு அது ஆயினும்–குளிச்சியான (அதன்) கிளையை யாயினும்
கீழ்வேர் ஆயினும்–கீழிலுள்ள (அதன்) வேரையாயினும்
நின்ற மண் ஆயினும்–(அதற்கு இருப்பிடமாய்) நின்ற மண்ணையாயினும்
கொண்டு வீசுமின் (நீங்கள்) கைக்கொண்டு (அதன் காற்று இவள் மேற்படும்படி) வீசுங்கள்

வியாக்யானம்

வாராயின முலையாள் இவள்
இவள் கச்சை யுடைத்தான முலையை யுடையவள் என்று
பருவத்தைச் சொல்லுகையாலே
இவள் நோய் வேறு ஒரு முகம் அல்ல என்றபடி

ஆனால் யாராலே வந்த நோய் என்னில்

வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸர்வேஸ்வரனுடைய குணங்கள் அடியாக யுண்டாய்
நாட்டார் கொள்ளுவது அன்றியே
திவ்யமாய்
கிலேச பலம் இன்றியே
போக பலமான நோயாய் இருக்கும்

இத்தால்
நோய் முதலும்
நோயும்
நாடினாள் ஆயிற்று
மேல் துணிவுக்கு உபாயம் நாடிச் சொல்லுகிறாள்

தெய்வத் தண் அம் துழாய் தாராயினும்
நோய் திவ்யமானவோ பாதி
பரிஹாரமும் திவ்யமாக வேணும் என்கிறாள்

அவனோட்டை ஸ்பர்சத்தாலே
அப்ராக்ருதமாய்
செவ்வியாலும் குளிர்த்தியாலும் ஆர்த்தி சாந்த கரமாய்
நிரதிசய போக்யமான திருத்துழாயினுடைய விகஸிதமான
பூ வாகிலுமாம்

தழை யாயினும்
அதனுடைய விகாஸத்தை யுடைத்தான
இலைத் தழை யாகிலுமாம்

தண் கொம்பதாயினும்
அந்தத் தழையாலே குளிர்த்தியை யுடைத்தான
அதின் கிளை யாகிலுமாம்

கீழ் வேராயினும்
இவை எல்லாவற்றையும் தன் மேலே யாம்படி பரிணமிப்பதான
மூலம் ஆகிலுமாம்

நின்ற மண்ணாயினும்
அந்தத் திருத்துழாய்க்கு வாசஸ்தானமான பூமியின் பரப்பு ஆகிலுமாம்

கொண்டு வீசுமினே
நீங்கள் ஸ்வீ கரித்து
அதின் காற்று இவள் மேல் படும்படி வீச அமையும் என்று
ப்ரயோக பிரகாரமும் சொன்னாள் ஆயிற்று –

இத்தால்

வாராயின முலையாள் இவள் -என்கையாலே
இவளுக்கு பகவத் விஷயத்தில் பரிணதையான பக்தியானது
சங்க பாச அநு பந்தை யானமை தோற்றுகிறது
(ஸத்ஸங்க சேர்க்கை -பகவத் சங்க பாசம் )

வானோர் தலைமகனாம் சீராயின -என்கையாலே
ஸூரி போக்யனான ஸர்வேஸ்வரனுடைய குண கணங்கள்
பக்தி அபி விருத்தி ஹேது என்னும் இடம் தோற்றுகிறது

ஸ்வகல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்நஸ்வாதீநதாமதி:
பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-14-10 – விபூதி யோகம்:

பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

தெய்வ நல் நோயிது-என்கையாலே
இந்த பக்தி உத் க்ருஷ்டையாய் இருந்ததே யாகிலும்
போக அலாப தசையில் ஆர்த்தியை விளைக்கும் என்னும் இடம் தோற்றுகிறது

தெய்வத் தண் அம் துழாய்-இத்யாதியாலே
இவ்வார்த்தி சாந்தி பகவத் சம்பந்தி பரம்பரா சம்பந்தத்தாலே
என்னும் இடம் தோற்று கிறது

அதாவது
தெய்வத் தண் அம் துழாய்-என்று
ஈஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமானவர் ஆதரணீயர் என்றபடி

தாராயினும் -என்று
ஸுவ் மனஸ் யோத்தரான சிரோ பூதரைக் காட்டுகிறது
(பூம் கொத்து -தலையால் தாங்க
நம்மாழ்வாருக்கு மேலிட்ட முதல் ஆழ்வார் போல்வார் )

தழை யாயினும் -என்று
அந்த ஸுவ் மனஸ் யத்தாலே கந்தளிதரான பரிசர வர்த்திகளைக் காட்டுகிறது –
(மதுரகவி ஆழ்வார் போல்வார் )

தண் கொம்பதாயினும் -என்று
அந்தத் தழைப்பாலே குளிர்த்தி பெற்ற கிளைஞ்சரைக் காட்டுகிறது
( கிளைஞ்சர்-உறவினர்)

கீழ் வேராயினும் -என்று
இந்த சாகோச்ச் ராயத்துக்கு அடையக் கீழாம் படியான
தாழ்ச்சியை யுடையார்
தாழ நிற்கிற சேஷத்வ ஸ்வ பாவத்தாலே
இப் பரம்பரையை வர்த்திப்பிக்கிற மூல பூதர் என்னும்படியானவரைக் காட்டுகிறது
(நைச்ய அனுசந்தானம் பண்ணும் பூர்வர் )

நின்ற மண்ணாயினும் -என்று
ஏவம் பூதர் வர்த்திக்கிற தேச ஸம்பந்தம் அமையும் என்று காட்டுகிறது

கொண்டு வீசுமினே-என்று
ஏவம் வித பரிஹார ஹேதுவைக் கொண்டு ப்ரவர்த்திக்குமதே
உங்களுக்கு க்ருத்யம் என்றதாயிற்று

யே து பாகவதாஸ் சங்கை ஸப்ருசந்த் யுபவிசந்தி ச பஸ்யந்த்யபி ச ஸ்ருண்வந்தி
தாஸஸ் தேஷாம் அஹம் முனே-என்று
பகவத் சம்பந்தி பரம்பரா ஸம்பந்தம் உத்தேச்யமாகச் சொல்லக் கடவது இறே

(கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே கடுவினை களையலாமே
பாகவதர்கள் ஸ்பர்ச வேதிகள் என்றவாறு )

——-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இவள் இருந்து பகட்டக் கேளாது இறே அது
காலமும் அதுவேயாய் நிலை நின்று அவளும் மோஹித்தாள்
இம்மோஹத்துக்கு நிதானம் அறியாதே ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாகக் கருதி
பந்துக்கள் கலங்கி வழி அல்லா வழியே பரிஹரிக்க இழிய
இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி
நீங்கள் செய்கிற இது கார்யம் அன்று
இவள் பிழைக்க வேணுமாகில் நான் சொல்லுகிறபடியே இங்கனே பரிஹரிக்கப் பாருங்கோள்
என்கிறாள் –

வியாக்யானம்

வாராயின முலையாள் இவள்
நீங்கள் செய்கிற இவ்வெறியாட்டம் கொண்டு பரிஹரிக்கும் பருவம் அல்ல
கால ஷேபம் பண்ணாதே கடுக சிகித்ஸித்துக் கொடு நிற்க வேண்டும்படி யன்றோ
இவள் பருவம் இருக்கிற படி

வாராயின முலையாள் இவள்
வாராலே யான முலை
வாராலே தாங்கப்பட்ட முலையை

—————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இப்படி அருளிச் செய்து அத்யார்த்தியாய்
மோஹங்காத நாயகி பாவத்தைப் பெற்றார்
இந்த மோஹத்தை மற்ற நோய்களில் ஒன்றாக்கி
இந்நோய் முதலையும்
இந்நோய் ஸ்வரூபத்தையும்
இத்துக்கு இதுதான் தணிவு என்னுமத்தையும்
அறியாதாள் ஒருத்தி எத்தையோ இதுக்குப் பரிஹாரமாகச் செய்ய நினைக்க
அது எல்லாம் அறிந்த இவள் உயிர்த் தோழியானவள்
அவளை நிராகரித்து
இது செய்யுங்கோள் என்று ஸ்வ பஹு மான்யைகளைக் குறித்து விதிக்கிறாள்

வியாக்யானம் –

வாராயின முலையாள் இவள்
இம்முலைகள் அதி மாத்ரமாய் வளரப் புக
அத்தைத் தடுக்கும் வாரால் அதில் பஹு மதி செய்தவளாய்
அத்தால் அவைகளை ஒப்பிக்கும் அவள் ஆயிற்று இவள்
இதுக்குப் பலம் பர த்ருஷ்டி பிரசரண நிவாரணம்
கொடிப்பந்தலுக்கு அணுக்கம் தீர்ப்பது போன்றதாயிற்று இவ்வார் இவளுக்கு
இவளும் பொற்கொடி இறே
உபாஸகனுக்கு ஸ்மர்த்வ்யாதபி ஸ்ம்ருதி அத்யர்த்த பிரியமானால் போலே
தத் பக்தியேயான இம்முலைகளிலே இப்படி பக்தி செய்யும் இவளுக்கு
மற்ற நோய் அப்ரஸக்தம் என்றதாயிற்று
முலைக் கச்சு உள்ளவளான இவள் என்றபடி

இந்நோய்க்கு நிதானத்தையும் சொல்லுகிறாள்
வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது
என்னை ஈர்க்கின்ற குணங்களை யுள்ளவன் இறே -நித்ய ஸூரி நிர்வாஹகன்
அந்த குணங்களின் ஈடுபட்டால் வந்த நல்ல திவ்யமான நோய் காண் இது
சீராயின நோய் பரிஹரிப்பது அன்றாகில் இனி கண் விழித்து
வார்த்தை சொல்லுமதுக்கு உபாயம் ஏது என்ன

தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
என்கிறாள்
தேச கால பேதேந ஸம்பவா ஸம்பவா பிப்ராயம் இவ்விகல்பம்

துளஸீ காந்தம் யத்ர –தத்ர சந்நிஹிதோ ஹரி -என்ற
தேவ தேவ சாந்நித்யத்தாலே
பரிமளத்தாலும்
கோமளதையாலும்
அழகியதும் குளிர்ந்ததுமான
பூத்தாருள்ள துழாயை நீங்கள் சிரஸா தரித்துக் கொண்டு வீசிப் பரிஹரிக்கவே
கண் விழிப்பள் என்றபடி

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவர் ஆர்த்தியை சமிப்பிக்கும் இடத்தில்
ஸாரஞ்ஞரான கடகராலே சமிப்பிக்க வேணும் என்று நினைத்து
அவர்களை அபேக்ஷித்த பிரகாரத்தை
வண்டுகளைத் தூதாக நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே போக விடுகிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –

பாசுரம்-54-வீசும் சிறகால் பறத்தீர் –
வண்டு விடு தூது –
கேசவன் தமர் -2-7-

பதவுரை

நெய்–(திருவாய்ப்பாடியிலே) நெய்யை
தொடு உண்டு–கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து
ஏசும்படி–(பலரும்) பரிஹஸிக்கும்படி
அன்ன செய்யும்–(மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தருளிய
எம் ஈசர்–எமது தலைவரும்
விண்ணோர் பிரானார்–(மேலுலகிலுள்ளார்க்கு) தலைவருமாகிய எம்பெருமானுடைய
மாசு இல் மலர் அடி கீழ்–குற்றமில்லாத செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின் கீழ்
எம்மை சேர்விக்கும்–எம்மை அடைவிக்கவல்ல
வண்டுகளே–ஓ வண்டுகளே! (நீங்கள்)
வீசும் சிறகால் பறத்தீர்–வேகமாக வீசுகிற சிறகுகளாலே பறந்து செல்ல வல்வீர்;
விண் நாடும் துங்கட்டு எளிது–(அவர் வீற்றிருக்கு மிடமான பரம பதமும் உங்களுக்குச் செல்ல) எளிது;
(எனக்காக நீங்கள் அவர் பக்கல் தூது செல்லுதற்குப் புறப்படும் பொழுது)
பேசும்படி அன்ன பேசியும் போவது (நீங்கள் எனக்காக அவரிடம் சொல்லும்
படியான வார்த்தைகளை (எனக்கு) சொல்லியும் போக வேணும்.

வீசும் சிறகால் பறத்தீர்
அவன் தன்னைப் போலே கால் கொண்டு நடக்க வேண்டாதே
எழ வீசுகிற சிறகாலே ஆகாசத்திலே போவுதீர்

விண்ணாடு நுங்கட்கு எளிது
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாஸே பஷிணாம் கதி -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் -என்கிறபடியே
பக்ஷ பலமுடைய உங்களுக்கு பரம வ்யோம ஸப்த வாஸ்யனான திருநாடு
செல்லுகிறது எளிதாய் இருக்கும்
ஆகையால் போகைக்கு உறுப்பாகச் செய்ய வேண்டுவது இல்லை

பேசும்படி யன்ன பேசியும் போவது
அங்குச் சொல்லும்படியான அந்த வார்த்தைகளை நான் கேட்டு ஆஸ்வஸித்து
இருக்கும் படி எனக்குச் சொல்லியும் போக வேணும் –

நெய் தொடு வுண்டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர்
நெய்யைக் களவிலே அமுது செய்தயாராக ஏசும்படியான அந்தச் செயலை அனுஷ்ட்டித்து
அத்தாலே எத்திறம் -1-3-1- என்று
நான் ஈடுபடும்படி எனக்கு ஸ்வாமி யானவர் –

விண்ணோர் பிரானார்-
நித்ய ஸூரிகளுக்கு நிரந்தர போகத்தை உபகரிக்கிறவருடைய

மாசின் மலரடிக் கீழ் –
ஹேய ப்ரதிபடமாய்
நிரதிசய போக்யமான
திருவடிகளின் கீழே

எம்மை சேர்விக்கும் வண்டுகளே
என்னைச் சேர விடுவதாக உத் யுக்தங்களான வண்டுகளே
பேசும்படி அன்ன பேசியும் போவது -என்று அந்வயம்

இத்தால்
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது-என்கையாலே
ஸாரஞ்ஞரான கடகருடைய ஞான அனுஷ்டான ரூபமான பக்ஷ த்யவத்தாலே
நிரந்தர பகவத் அனுபவத்தில் யுண்டான உச்ச்ரித கதியாய் இருப்பார்க்கு
முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்னும் கணக்கிலே
போக பூமி எளிது என்னும் படி தோற்றுகிறது

பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கையாலே
அப்படிப்பட்ட கடகருடைய கடிப்பிக்கைக்கு ஈடான வார்த்தை
இவ்வதிகாரிக்கு ஆஸ்வாஸ கரம் என்றபடி

நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்-என்கையாலே
ஈஸ்வரனுடைய
நீர்மையும்
மேன்மையும்
இச்சேதனனுக்கு நிரந்தர உஜ்ஜீவன ஹேது என்றபடி –

மாசின் மலரடி-என்கையாலே
ஆஸ்ரித விஷயத்திலே தாரதம்யம் ஆகிற மாசு இல்லாமையும்
ஆஸ்ரித லாபத்திலே விகாஸத்தையும் சொன்னபடி

அடிக் கீழ் -எம்மை -என்கையாலே
இரண்டு தலைக்கும் சம்பந்தம் ஸ்வ ஸ்வாமி பாவம் என்றபடி

சேர்விக்கும் வண்டுகளே-என்கையாலே
தன் வாங் மாதுர்யத்தாலே சேர விடுகை ஆச்சார்ய க்ருத்யம் என்றதாயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றாளே
வீச வேண்டுவது இல்லை
இவளுடைய யுக்தி மாத்திரத்திலே உணர்ந்தாள்
உறங்கின போது பசி பொறுக்கலாம்
உணர்ந்தால் புஜித்து அல்லது தரிக்க ஒண்ணாது இறே
மோஹம் தானே நன்றாய் விழுந்தது
அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல்
இங்கு நின்றும் ஓர் ஆள் விட்டு வரவு பார்த்து தரித்தல் செய்ய வேண்டும்படி யாயிற்று
அங்கு நின்றும் ஒருவரை வரக்கண்டது இல்லை
தன் பரிகரத்தில் கால் நடை தந்து போக வல்லார் இல்லை யாயிற்று –
இனித் தன பரிசரத்திலே வர்த்திக்கிற வண்டுகளைத் தூது விடுமத்தனை
என்று தூது விடுகிறாள்

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி

அவதாரிகை

அப்படி சிலர் சிரஸா தரித்து வந்து உடம்பைத் தடவவே கண் விழித்தாளாய்
ஸ்வ ஆச்சார்யர்களைக் கண்டு
ஞான கர்மங்கள் ஆகிற சிறகால் எம்மை வீசும் வண்டுகளே
அச்சிறகால் எம்மை விண்ணாடு சேர்விக்கும் வண்டுகளே
பரத்தில் சேர்விக்கும் வண்டுகளே
விண்ணாடு உங்களுக்கு எளிது -நீங்கள் பரத்திலே தூது போங்கோள்
போவதும் அங்கே நீங்கள் பேசும்படி என்ன
அத்தை ஏன் முன்னே பேசியும் போக வேணும் -என்று அவர்களைத் தூது விடுகிறாள் –

வியாக்யானம்

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது
இதுக்கு அர்த்தமும்
அந்வயமும்
சொன்னதாயிற்று

நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசின் மலரடிக் கீழ் –
சிசுபாலாதிகள் ஏசும்படி களவால் நெய் அமுது செய்ய
அத்தால்
பிரகடித ஸுசீல்ய வாத்சல்யாதிகளால் என்னைத் தாம் அடிமை கொண்டு
எண்ணில் ப்ரீத்தியையும் விளைத்து
எம் ஈஸரானவர் விண்ணோர் பிரானாரே
இத்தாலும்

மாசின் மலரடிக் கீழ்
ஸுர்யாதி தோஷ ராஹித்யத்தால் ஜகத் ஆதரணீயரானவருடைய திருவடி மலர்களுக்கு
என் தலை கீழ் பீடமாம்படி என்னைச் சேர்த்து விடும் வண்டுகள் நீங்கள் அன்றோ
இப்போதே நமக்காகத் தூது போங்கோள் -என்கிறாள்
எம்மை சேர்விக்கும் வண்டுகளே

———————————

அவதாரிகை

இப்படி நிரவதிகமாக இவருக்குப் பகவத் விஷயத்தில் பிறந்த பக்தி வைலக்ஷண்யத்தைக் கண்ட
அன்புடையார் ஸ்லாகித்து யுரைத்த பாசுரத்தை
தலைவியை நலம் பாராட்டின (கிளவித் )தலைமகன் வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

பாசுரம் -55-வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ –
நலம் பாராட்டுதல்-
சார்வே தவ நெறி -10-4-

பதவுரை

வண்டுகளோ–வண்டுகளே!
வம்மின்–வாருங்கள்;
நீர் பூ–நீரிலுண்டாகிற பூவும்
நிலம் பூ–நிலத்திலுண்டாகிற பூவும்
மரத்தின் ஒண்பூ–மரத்திலுண்டாகிற சிறந்த பூவும் என்கிற இவை யெல்லாவற்றிலும்
உண்டு–(தேனைக்) குடித்து
களித்து–களிப்படைந்து
உழல்வீர்க்கு–(எங்கும்) திரிகிற உங்களுக்கு
ஒன்று உரைக்கியம்–(யாம் இப்பொழுது) ஒரு புதுமையைச் சொல்லுவோம்.
ஏனம் ஒன்று ஆய்–ஒப்பற்ற வொரு வராஹ மூர்த்தியாய்
நண் துகள் ஆடி–பூமியின் தூளியை அளைந்து எம்பெருமானுடைய
வைகுந்தம்–பரமபதத்தை
அன்னாள்–ஒத்திருக்கின்ற இப்பராங்குச நாயகியினுடைய
குழல்வாய்–கூந்தலிலே இயற்கையாய் அமைந்துள்ள
விரைபோல்–பரிமளம்போல
விண்டு–மலர்ந்து மணம் வீசி
கள் வாரும்–தேன் பெருகப்பெற்ற
மலர்–பூக்கள்
தும் வியல் இடத்து–உங்களாட்சிக்கு உட்பட்ட (நீங்கள் தடையின்றி ஸஞ்சரிக்கிற) விசாலமான இடத்திலே
உளவோ–இருக்கின்றனவோ?

வியாக்யானம்

வண்டுகளோ வம்மின்
பூவின் வாசியும்
மணத்தின் வாசியும்
தேனின் வாசியும்
அறியும் நீங்கள் -புறம்பு யுண்டான உங்களுடைய ரஸத்தில் பராக்கை விட்டு
நான் சொல்லுகிற வார்த்தை கேட்க்கும்படி வாருங்கோள்

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித் துழல் வீரக்கு
எளிதாக ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத நீர்ப் பூக்களிலும்
எல்லார்க்கும் கிட்டலாம்படியான நிலத்தில் பூக்களிலும்
உயர்ந்த சாகைகள் நிற்கிற மரத்தில் பூக்களிலும்
உண்டான வாசியை அறிந்து புஜித்துக் களித்து
அத்தாலே
நிரதிசய ஆநந்திகளாய் எங்கும் ஓக்க ஸஞ்சரிக்கிற உங்களுக்கு

ஓன்று உரைக்கியம்
நீங்கள் கண்ட வாசி போல் அன்றியே
அத்யந்த வ்யாவ்ருத்தமாய் இருபத்தொரு வை லக்ஷண்யம் சொல்லுகிறோம்

ஏனம் ஒன்றாய்
அத்விதீயமாய் இருபத்தொரு வராஹமாய்
அன்றியே
வராஹ ஜாதியோடே வேறுபாடு இல்லாதபடியான ஜாதி ஐக்யத்தை யுடையனாய்
(மானமிலா பன்றியாய் -அபிமானம் இல்லாத உப மானம் இல்லாத -இப்படி இரண்டு போல் இங்கும் )

மண்டுகளாடி
மண்ணினுடைய துகளை ஆசினவனுடைய
அதாவது
துகள் என்று
ஏக தேசமாய்
மஹா வராஹத்தினுடைய திரு வயிற்றுக்கு பிரளய ஆர்ணவ கதையான பூமி
ஒரு கஸ்தூரி பிந்துவாலே அலங்காரம் இட்டால் போலே இருக்கை
(திரு எயிற்றுக்கு -கோரைப்பல்லுக்கு என்றுமாம் )

வைகுந்த மன்னாள்
இப்படி ஆபத்து வந்து உதவ வேண்டாத படி அவனுடைய அழியாத தேசம்
போலே இருக்கிறவளுடைய

குழல்வாய் விரை போல்
புஷ்பாதியாலே வந்தேறியான பரிமளம் அன்றியே
ஸ்பா விகமான குழலின் பரிமளம் போலே
(கந்தம் கமழும் குழலீ அன்றோ இவள் )

விண்டு
எங்கும் ஒக்கப் பரம்பி

கள் வாரும்
மதுஸ் யந்தியாய்க் கொண்டு ஆனந்திப்பியா நிற்கும்

மலருளவோ நும் வியலிடத்தே
நீங்கள் ஸஞ்சரிக்கிற பரந்த தேசத்திலே இப்படிக்கொத்த பூவும் உளதோ

இத்தால்
வண்டுகளோ வம்மின்
இவ்வாழ்வாருடைய வை லக்ஷண்யத்தை அன்பரானவர்கள்
பகவத் அனுபவ தத் பரராய்த் திரிகிற ஸாரஞ்ஞரைப் பார்த்து

(பகவத் ப்ராவண்யம் – மொட்டு-பல்லவம் -பிரமம்
பாகவத சமாஹம் -மலர்ந்து -மத்யமம்
ஆச்சார்யர் அபிமானம் – பழுத்தால் போல்
சரமபர்வ நிலை அன்றோ
ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் திரிந்து -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனால் போல் )

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம்
ஷீராப்தி சாயியான வ்யூஹ ஸ்தலத்தின் விகாஸத்தையும்
பூதல வர்த்தியான அவதாராதி வை லக்ஷண்யத்தையும்
நாநா சாகைகளின் முடியிலே காணும் படியாய் நித்ய போக்யமான
பர தசையில் (வேதாந்த விழுப்பொருள் தானே பர வாஸூதேவன் )வை லக்ஷண்யத்தையும்
நிரந்தர அனுபவம் பண்ணி ஆநந்திகளாய்
ஸர்வ லோகங்களிலும் காம சாரிகளாய்த் திரிகிற உங்களுக்கு ஓன்று சொல்லுகிறோம்

ஏனம் ஒன்றாய் மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய அழிவற்ற தேசம் போலே
ஆஹ்லாத கரரான இவருடைய
தூராத் கந்தோ வாதி -தைத்ரியம் -2 ப்ரச்னம் -என்கிற கணக்கிலே
இவ் விகாஸமும்
யசஸ் ஸுரப்யமும்
(எண் திசையும் அறிய இயம்பிய கீர்த்தி அன்றோ ஆழ்வாரது )
நீங்கள் அனுபவித்த பகவத் சம்பந்திகளில் யுண்டோ என்று
ஸ்லா கித்து உரைத்தார் ஆயிற்று –

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தூதுக்கு வந்து –
பிரிய நினைத்து –
பிரிந்தால் வரும் தனையும் இவள் ஆறி ஜீவித்து இருக்கைக்காக
இப்படி இருக்கிறவன் அகலான் -என்று அவள் நெஞ்சிலே படுகைக்காக
நலம் பாராட்டு என்று ஒரு கிளவியாய்
அவளைக் கொண்டாடுகிறான்

குலே மஹதி ஸம்பூதே -அயோத்யா -26-21-என்று
பெருமாளும் கொண்டாடினார் இறே

வியாக்யானம்

வண்டுகளோ வம்மின்
வண்டுகாள் வாருங்கோள்

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
மூன்று வகையாதல்
நாலுவகை யாதல் சொல்லக் கடவது இறே
நிலப்பூவும் கொடிப்பூவும் என்று நிலத்திலே இரண்டாக்கி
மற்றை இரண்டையும் கூட்டி
நாலாகச் சொல்லுவாரும் உண்டு
நல்ல மலர்ப் பொழில் நாலும் நுழையீர்காள் -என்னக் கடவது இறே
பூ யுள்ள இடம் எங்கும் புக்கு
மதுபானம் பண்ணிக் கழித்து
அதுவே யாத்ரையாகத் திரிகிற உங்களுக்கு நல்லதொரு வார்த்தை சொல்லுகிறேன் வாருங்கோள்

ஏனம் ஒன்றாய்
அத்விதீயமான மஹா வராஹமாய் பூமியைத் தன்

—————————————-

அவதாரிகை

இப்படி அன்பர் ஸ்லாகிக்கும் படி பகவத் விஷயத்தில் இவருக்குப் பிறந்த
ப்ராவண்ய அதிசயத்தாலே இவருடைய அனுபவ அலாபத்தாலே
வந்த கிலேசம் தீரும்படி
ஸர்வேஸ்வரன் ஒரு முகத்தாலே ஸம்ஸ்லேஷத்தை ப்ரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பிக்க
பார்ஸ்வஸ்த்தரனானவர் தம்முடைய முன்புத்தை ஆர்த்தி கண்டு கலங்கின
ஸூஹ்ருத்துக்களை ஆஸ்வஸிப்பித்த பாசுரத்தை
தன் ஆற்றாமைக்குக் கலங்கி இருந்த தோழியைக் குறித்துத்
தலைவி இரவிடத்துத் தலைமகன் கலந்தமையைத்
தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –

பாசுரம் -56-வியலிடம் உண்ட பிரானார் விடுத்த –
தலைவன் இரவில் கலந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல் –
கண்கள் சிவந்து -8-8-

பதவுரை

வியல்–விசாலமான
இடம்–உலகங்களை
உண்ட–திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார்–பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த–(எம்மிடத்துச்) செலுத்திய
திரு அருளால்–சிறந்த கருணையினால்
உயல் இடம்பெற்று–உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று
உய்ந்தும்–வாழ்ந்திட்டோம்,
அஞ்சலம்–(இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம்
தோழி–வாராய்தோழி!
ஓர் தண் தென்றல் வந்து–ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து
அயிலிடை யாரும் அறிந்திலர்–அருகில் எவரும் அறியாதபடி
அம் பூ துழாயின் இன் தேன்–அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனிய தேன் துளிகளை
புயலுடை நீர்மையினால்–மழை துளித்தல் போலத் துளிக்குந் தன்மை யுடையதாய்
என்–என்னுடைய
புலன்–அவயவங்களிலும்
கலன்–ஆபரணங்களிலும்
தடவிற்று–ஸ்பர்சித்தது

வியாக்யானம்

வியலிடம் உண்ட பிரானார்
விஸ்த்ருதமான தேசத்துக்கு பிரளய ஆபத்து வர
வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகர் ஆனவர்

விடுத்த திரு அருளால்
அவர் நம்மளவில் வர விட்ட சம்பத்தான அருளாலே

உயலிடம் பெற்று உய்ந்தும்
உய்கைக்கு அவகாசம் பெற்று உஜ்ஜீவித்தோம்

அஞ்சலம்
இனி வாடை தொடக்கமான வற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லை

தோழி
இன்னாமைக்குத் தளர்ந்த வுனக்கும் ஒக்கும் இறே பேறு

ஓர் தண் தென்றல் வந்து
நாட்டில் தென்றலோடு கூட்டலாவது ஓன்று இன்றியே
அத்விதீயமாய்
நம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி அதி சீத ஸ்பர்சமாய்
நம் பக்கல் ப்ரேமத்தாலே தாக்ஷிண்யத்தை
யுடைத்தான தென்றலானது
தன் வரத்துத் தானே ஆஸ்வாஸ கரமாம் படி வந்து

அயலிடை யாரும் அறிந்திலர்
தென்றலுக்கு இடையுமவள் தென்றல் வரவுக்கு உகந்து உரைத்தமையாலே
நாயகன் வரவு சொன்னாள் என்று அறிந்து

(நேராக நாயகன் கலந்தமை சொல்ல வில்லை
ஓர் தண் தென்றல் வந்து என்று உகந்து உரைத்ததே நாயகனுடைய வரவைச் ஸூசிப்பிக்கிறாள் )

தோழி அசல் அறியில் செய்வது என் -என்று
துணுக்கு என்ன

அயல் இடத்து ஒருவரும் அறிந்தார் இல்லை
என்கிறார்

மேல் செய்வது என் என்று கேட்க
அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே
அழகிய பூந்தாரை யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற
ஸ்வ பாவத்தை யுடைத்தாய்க் கொண்டு
என்னுடைய இந்திரியங்களை ஸ்பர்சித்து ஆஸ்வஸிப்பித்தது

அன்றியே
பொலன் கலன் என்ற
பாடமான போது
பொன்னாலே சமைத்த கலன் என்று சொல்லுவர்

இத்தால்

ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக கிருபையாலே
நமக்கு உஜ்ஜீவிக்கக் குறையில்லை

பிராணஸ்ய பிராண -என்கிறபடியே
நமக்கு ஆஸ் வாஸ கரனானவன் –
லௌகிகரான ஒருவர் அறிவுக்கும் விஷயம் ஆகாத படி
தன்னுடைய நிரதிசய போக்யதையையும் பிரகாசிப்பித்து
தம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி
தம்முடைய கரணங்களையும்
ஞானாதி குண அலங்காரங்களையும்
தான் விரும்பினான்

(புலன் கலனே -இந்திரியங்கள் -ஆபரணங்கள் -என்று கொண்டு
பிரித்து அருளிச் செய்கிறார் )

நமக்கு இனி அஞ்ச வேண்டுவது இல்லை என்று
ஸூஹ்ருத் பூதரை ஆஸ்வஸி ப்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று –

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க
பிரிவாற்றாத் தலை மகளைக் கண்ட தோழி
இவளுடைய ஆற்றாமை இருந்த படி இதுவாய் இருந்தது
நாயகனையோ வரக் காண்கிறிலோம்
இனி இவள் ஜீவிக்கை என்ற ஒரு பொருள் இல்லை -இவளை இழந்தோம் ஆகாதே என்று நோவு பட
இத்தைக் கண்ட தலைமகள்
ஸந்நிதியில் யாத்ருச்சிகமாக ஒரு ஸம்ஸ்லேஷம் விருத்தமாயிற்று காண்
நீ அஞ்ச வேண்டா காண் -என்று
தலைமகள் தான் தோழிக்கு விருத்தமான ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிறாள்

வியாக்யானம்

இது யுண்டாம் போது நம் பக்கலிலே ஒரு கைம்முதல் வேணும்
அதுவும் இன்னது என்று அறிகிறிலோமே என்ன

வியலிடம் யுண்ட பிரானார்
பிரளயத்தில் பூமிக்குள்ள கைம்முதலே இறே நமக்கு யுள்ளது என்கிறாள்
ஆபத்தே காண் வேண்டுவது அவன் அருளுக்கு –
பிரளய ஆபத்தில் அவன் வயிற்றிலே வைத்து நோக்குகிற போது
பூமிக்காக ஏதேனும் கைம்முதல் யுண்டோ
அப்போது பூமிக்கு யுண்டான ஆற்றாமை இவள் ஒருத்திக்கு யுண்டு போலே காணும்

பிரானார்
உபகாரமே காண் அவர் பக்கல் உள்ளது
அவர் பண்ணும் கிருபைக்குப் பாத்ரபூதராம் இத்தனையே காணும் இத்தலைக்கு வேண்டுவது
அவர் பண்ணும் இது ஒரு ஸஹ காரியை அபேக்ஷியாது இறே

எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருக்கிற வர்கள்
தமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது என் என்று கேட்க
வங்கி புரத்து நம்பி இருந்தவர்
மூடோ யமல்ப மதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –98-93-என்கிற
க்ஷத்ர பந்துவின் வாக்கியம் அன்றோ என்ன
அது ஒண்ணாது காண்
ப்ரணதே-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -98-93-என்று ஓன்று யுண்டு
அதிலே ஸர்வஞ்ஞன் அறிய நிர்மமனாய் விழ வேணும் இறே
நம் தலையிலே ஏதேனும் ஒரு அம்சம் ஒதுங்கில் செய்து தலைக் கட்டுகையில் யுள்ள அருமையாலே
அது இழவோடே தலைக்கட்டும்படியாய் இருக்கும் காண்
இத்தலையிலே ஒரு அம்சம் ஒதுங்கில் அது அப்ரதி ஷேதத்தில் ஒதுங்கும் அத்தனை அல்லது
உபாயத்துக்கு ஸஹ காரியாகாது
நீ உபாயமாக வேணும் என்கிற ஸ்வீ காரம் அவஸ்ய அபேக்ஷிதமாய் இருக்கச் செய்தே
அத்தலையிலே உபாய பாவமாம்படி இறே இருப்பது
இவன் பக்கலிலே பரமபக்தி பர்யந்தமாக விளைந்தால்
அது ஸ்வரூப ப்ரயுக்தமான வகையில் அந்வயிக்கும் அத்தனை அல்லது
ஸ்வ தந்திரமாய் நின்று பல பிரதமாக மாட்டாதாய் இறே இருப்பது

ஆனால் பின்னை நினைத்து இருக்க வேண்டுவது என் என்ன
காளியனுடைய வார்த்தையை நினைத்து இருக்கும் அத்தனை -என்று அருளிச் செய்தார்

ஸோ அஹம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-7-
திருமேனியில் என்னுடைய உடலை இட்டுச் சுற்றி பிராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தனாகாத நான்

தேவ தேவ ச
பிராதி கூல்ய நிவ்ருத்தியே

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும்
விசேஷ பலத்தைப் பெற்று உஜ்ஜீவித்தோம்
தன் உஜ்ஜீவனமே தன் தோழிமார்க்கு எல்லாம் ஆகையாலே இந்த பஹு வசனம்

அஞ்சலம் தோழி
நீ இவ்வாடை கூடகமானவற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லையடி

ஓர் தண் தென்றல் வந்து அயலிடை யாரும் அறிந்திலர்
அயல் இடத்தாரும் அறியாத படி தன் வரவே எனக்கு ஆஸ் வாஸ கரமாம்படி
குளிர்ந்த தென்றல் வந்தபடி

வந்தது என் செய்தது என்ன

அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே
என்கிறாள்
அழகிய பூந்தராய் யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற
ஸ்வ பாவத்தை உடையதாய்க் கொண்டு தடவிற்று
என் கண் முதலான இந்த்ரியங்களையும் அணி கலன்களையும்
அது செய்து போந்துள்ள ஸூகத்தை
நான் ஏது என்று சொல்லுவேனடி

—————————————

அவதாரிகை

இப்படி இவர்க்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ஞான வைலக்ஷண்யத்தை அனுபவித்து
ஈடுபட்ட அன்பரானவர்கள் தங்கள் ஈடுபாட்டைக் கண்டு
ப்ராவண்யத்தை மட்டம் செய்விக்க வேணும் என்று நியமித்த
பந்துக்களைக் குறித்துச் சொன்ன பாசுரத்தை
தலைவி கண் அழகிலே ஈடுபட்ட தலைமகனைக் குறித்துக் கழறின
பாங்கனுக்குத் தலைமகன்
கழற்று எதிர்மறையான பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – -57-

பாசுரம் -57-புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை –
தலைவன் தோழனிடம் எதிர்வார்த்தை பேசுதல் –
முடியானே மூவுலகும் -3-8-

பதவுரை

புலம் குண்டலம்–அழகிய குண்டலங்களையுடைய
புண்டரீகத்த–தாமரைமலர் போன்றதான தலைவியின் முகத்திலுள்ள
போர்கெண்டை–(தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்) போர் செய்கிற இரண்டு கெண்டை மீன்கள் போன்ற கண்கள்
வல்லி ஒன்றால் விலக்குண்டு–(மூக்காகிய) ஒரு கொடியால் (குறிக்கிட்டு இடையில்) விலக்கப்பட்டு
உலாகின்று–(தனித்தனி சீற்றத்தோடு) உலாவிக் கொண்டு
வேல் வழிக்கின்றன–வேலாயுத்த்தைக் கொண்ட குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன.
கண்ணன்–எம்பெருமானுடைய
கையால்–திருக் கைகளால்
மலக்குண்டு–கடைந்து கலக்கப்பட்டு
அமுதம் சுரந்த–(தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின
மறி கடல் போன்று–அலை கிளரப் பெற்ற கடல்போல
அவற்றால் கலக்குண்ட நான்று–அக்கண்களால் (யாம்), கலக்கப்பட்ட பொழுது
கண்டார்–(அக்கண்களின் நிலைமையை ப்ரத்யக்ஷமாகப்) பார்த்தவர்கள்
யாரும்–எவரும்
எம்மை–எம்மை
கழறலர்–(ஒருத்தியின் கண் பார்வையில் அகப்பட்டு இப்படி கலங்கினானென்று) குற்றஞ் சொல்லமாட்டார்கள்.

வியாக்யானம்

புலக் குண்டலப்
புலப்படும்படி அழகிதான் குண்டலத்தை யுடைய
புலப்படுத்தல் -காணப்படுதல்

பொலக் குண்டலம் என்று பாடமாய்
பொற் குண்டலம் என்றுமாம்

புண்டரீகத்த
குண்டலத்தை யுடைய
புண்டரீகம் என்கையாலே
செவ்வியும்
அழகும்
மணமும் யுடைமையால்
புண்டரீகம் ஒப்பான முகத்தைச் சொல்லுகிறது

போர்க் கெண்டை
அப்புண்டரீகத்திலே தன் நீல முகம் ஒன்றிப் போருவது (பொருவது)
இரண்டு கெண்டையானது என்கையாலே
கண்ணைக் காட்டுகிறது

வல்லி யொன்றால் விலக்குண்டு
வல்லி ஒன்றாலே விலக்கப் பட்டு
அதாவது
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ -திருவாய் -7-7-2- என்று
கற்பகக் கோடியை மூக்குக்கு உவமையாகச் சொல்லுகையாலே
பொருகிற கெண்டை போன்ற கண்கள் மூக்காகிற கற்பகக் கொடியால்
விலக்கப் பட்டால் போன்றன என்கை

உலாகின்று
உலவா நின்று கொண்டு
விலக்கின அளவிலும் ஸ்ப்ரத்தை யாற்றாமையாலே
உலவா நின்றன என்னலாய் இருக்கை

வேல் விழிக்கின்றன
வேல் போலே கூரிய பார்வையை யுடையன -என்கையாலே
க்ரூர்யம் மாறாதன என்கை

கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணன் கைகளாலே மலங்கும்படி கடையப்பட்டு
அகவாயில் கிடந்த அம்ருதத்தைச் சுரந்த அலை எறிகிற கடல் போலே
அபரிச் சின்னையான போக்யதையை யுடைய அவற்றாலே
வெறும் கொடுமையே யன்றியே ஆஹ்லாத கரமானவை என்றபடி

கலக்குண்ட நான்று கண்டார்
அக்கடல் அவன் கையிலே பட்டது அத்தனையும் இக்கண்
என்னைப் படுத்தின நாள் கண்டவர்கள்
அதாவது
அவன் கடலைக் கலக்கி ஸாரமான அம்ருதத்தை க்ரஹித்தால் போலே
இக் கண் அகாதமான நெஞ்சைக் கலக்கி ஸாரமான அறிவை அபஹரித்தது என்கை

நான்று கண்டார் -என்கையாலே
அனுபவித்தார்க்கு அல்லது அறிய முடியாது என்கை

எம்மை யாரும் கழறலரே
இப்படி அகப்பட்டுக் கலங்கின எங்களைப் பரிவாலே நியமிக்கிற நீயே யன்றியே
விஷய விரக்தராய் அதிசயித ஞானரான சனகாதி முனிகளும்
வாசி அறிவாராகில்
(ஆழ்வார் வை லக்ஷண்யம் -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பார் என்று அறிந்து )
நியமிக்க மாட்டார்கள் என்றதாயிற்று –

இத்தால்

இவருடைய ஞானமானது
1-ஸ்ரவண
2-மனன
3-சாஷாத்கார ரூபமாய்ப்
பரிணமித்த பிரகாரத்தை ஸூசிப்பிக்கிறது
எங்கனே என்னில்

புலக் குண்டலம் என்று
கர்ண ஆபரணத்தைச் சொல்லுகையாலே
1-பிரதம பாவியான ஸ்ரவணமான அலங்காரத்தைக் காட்டுகிறது
(ஸ்ரோதவ்யா
ஸ்ரவணம் -பக்தி நவ லக்ஷணம் -அங்கும் முதல் )

குண்டலப் புண்டரீகம் -என்கையாலே
2-அந்த ஸ்ரவண முதித ஹ்ருதய புண்டரீகத்தைக் காட்டுகிறது –
(வட்ட வடிவு தாமரை-கவிழ்த்தால் போல் -ஆனந்தப்பட்டு உள்ளம் )

போர்க் கெண்டை -என்கையாலே
3-அந்த ஸ்ரவண ஞானத்தை மனனம் பண்ணும் இடத்தில்
பூர்வ பக்ஷ ஸித்தாந்த யுக்தியாலே விரோதத்தை உப பாதித்துப் பண்ணும்
ஆராய்ச்சியைக் காட்டுகிறது

வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று -என்கையாலே
4-மத்யஸ்த்தை யான ஸித்தாந்த யுக்தியாலே விரோதம் சமித்து
ஸ்வ காரியத்தில் வ்யாபாரித்தமையைக் காட்டுகிறது

வேல் விழிக்கின்றன -என்கையாலே
5-இப்படி யுக்தித ப்ரதிஷ்ட அபிதமான ஞானமானது
பாவநா ஸித்தமான கூர்மையாலும்
நெடுமையாலும்
சாஷாத்கார ரூபமான ஆபரோஷ்யத்தைப் பண்ணினமையைக் காட்டிற்று
(கண் முன்னே தோற்றும்படி கூர்மையான தெளிந்த ஞானம் )

கண்ணன் கையால் மலக்குண்டு -என்கையாலே
6-இப்படி அபரோக்ஷ ரூபமான ஞானத்துக்கு த்யேய விஷய வை லக்ஷண்யத்தாலே
பிறந்த பாரவஸ்யத்தையைக் காட்டிற்று
(பக்தி ரூபா பன்ன ஞானம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -அவன் வசம் பட்டாரே )

அமுதம் சுரந்து -என்கையாலே
7-இந்த பாரவஸ்யம் அடியாக இந்த ஞானத்துக்கு அத்யந்த ப்ரீதி ரூபையான
பக்தி ரூபாபத்தியைக் காட்டிற்று
(மதி நலம் -பிரேம ரூபமான பக்தி )

மறி கடல் போன்று -என்கையாலே
8-காதல் கடல் புரைய-5-3-4-என்றும்
கடலின் மிகப் பெரிதால் -7-3-4-என்றும்
கழியப் பெரிதால் -7-3-6- என்றும்
சொல்லுகிற விகாஸ அதிசயத்தைக் காட்டிற்று –

அவற்றால் கலக்குண்ட -என்கையாலே
9-இந்த ஞானம் அனுபவ உபகாரணமாம் அளவன்றியே
பிறரையும் தன் வசமாக்கிக் கொள்ளும் படியைக் காட்டிற்று –

(கடல் போன்ற ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் ஆழ்வாருக்கு ஆனபின்பு
நம்மளவும் -இது அடுத்த நிலை நம் உள்ளமும் கலங்கிற்றே
ஆழ்வார் ஞானம் பக்தி நினைத்து நினைத்து -அம்ருதம் போன்ற பக்தி
நாமும் உருகுகிறோமே
காண்பதற்கு உதவும் -கண்டவர்களைக் கலக்குவத்துக்கும் இதே தானே )

நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – என்கையாலே
10-புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய
பிறரை நியமிக்கைக்கு சக்தர் அல்லர் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

என்று இருப்பார்கள் போலே காணும்
பவத பரமோ மத -ஸ்ரீ சஹஸ்ர நாம
அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது

——–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

நீ இங்கனே அவனில் தானே ஆழங்கால் பட்டு ஈடுபடா நின்றாய்
அவனில் அத்தனை பிரவணை யாவது உனக்கு உசிதமோ என்றால் போலே
உயிர்த் தோழி சில சொன்னாள்
அதுக்கு அவன் தான் நாயகன் கண் அழகுப் பார்வைகளில் தான் ஈடுபட்ட
நாயகியாய் அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன
ஒரு புண்டரீகத்துக்கு இரு புறமும்
சுடர் இலகு விலகு மகர குண்டலங்கள் -8-8-1-
தானே தானாய்ப் புறப்படும் படியான குண்டலங்களால் அலங்க்ருதமான புண்டரீகத்திலே
பரஸ்பர ஸ்பர்தையால் பொருகிற கெண்டை மீன்களானவை
வல்லி ஒன்றால் தடுக்கப் பட்டு ஸ்பர்தை தீராமையாலே உலவா நின்று கொண்டு
வேல் போலே ஒன்றுக்கு ஓன்று கூரிய பார்வையை உடையனவாயிற்று

அவைகள் எது போன்றன வென்று கேட்டாள் தோழி
அதுக்கு

கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்று -என்கிறாள்
கிருஷ்ணன் கைகளால் கலங்கும்படி கடையப்பட்டதாய் அகவாயில் அம்ருதத்தைச் சுரந்த மறுக்கத்தால்
அலை எறிகிற கடலைப் போன்றன காண் அவை என்றான்

அவற்றால் உனக்கு என் என்றான்
அதுக்கு

அ வற்றால் கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே -என்கிறாள்
என் அகாதமான நெஞ்சாகிற கடலானது அவைகளால் கலங்கினதாயிற்று என்றாள்

கலங்கிற்றோ என்ன

அந்நாள் அவைகளை நீ கண்டாயாகில் நீயும் என்னைப் போல்வாய் காண் –
அவ்வழகையும் ஆகர்ஷணத்தையும் கண்டவர்கள் என்னை யாராகிலும் கழறலாய் இருக்குமோ
இராது கிடாய்
நீ அத்தைக்கு காணாதவளாகையாலே இங்கனே சில என்னில் சொன்னாயாளாய் என்று
இங்கனே சொன்ன தோழியை ஒக்கும் எண்பித்தாள் ஆயிற்று

இவ்வளவும் அருளிச் செய்ய மாட்டாத பட்டர்
விதோ பத்தஸ் பர்த்த ஸ்புரித சபரத் வந்த் வவளிதே-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-99-
த்ருஸவ் தே -ஸ்ரீ குணரத்ன -9-என்று அருளிச் செய்தார் –

—————

அவதாரிகை

இப்படி விலக்ஷணமான ஞான பாகத்தை யுடைய இவர்
ஈஸ்வரன் தம்மைத் தனக்கே யாம்படி பண்ணிக் கொள்ளுகைக்கு
விளம்பம் என் என்று தளும்ப

அவனுடைய ஸர்வ சக்தி யோகத்தை பிரகாசிப்பித்து
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரத்தை

தன்னை வரைந்து கொள்ளாமையாலே தளர்ந்த தலைவியைக் குறித்து
உன்னுடைய நாயகனான ஈஸ்வரனுக்குச் செய்யப்படாதது யுண்டோ என்று தோழி
தலைவன் தலைமையை யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரே இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-

பாசுரம் -58-கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று –
தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் –
திண்ணன் வீடு -2-2-

பதவுரை

ஒன்றே–ஒரு திருவடியிடமே
ஆயிற்று–பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது;
மற்றொரு திருவடி
முழுதாயிற்று–(பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய்
உழறு அலர்–உலகுங்செல்ல வல்ல பரந்த
ஞானத்து சுடர் ஆய் விளக்காய்–ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய்
உயர்ந்தோரே இல்லா–(தன்னிலும்) மேற்பட்டவரை யுடையவனல்லாதவனும்
நிழல் தர–நிழலைச் செய்யும்படி
எல்லா விசும்பும்–ஆகாசாவகாம் முழுவதிலும்
நிறைந்தது–வியாபித்தது
நீண்ட அண்டத்து–அளிவிட வொண்ணாத பரமபதத்தில் எழுந்தருளியிருப்பனும்
அழறு அவர் தாமரைக் கண்ணன்–சேற்றில் மலர்ந்த செவ்வி மாறாத செந்தாமரை மலர் போன்ற
திருக்கண்களை யுடையவனுமான திருமால்.
இங்கு அளக்கின்றது என்னோ–இந்த லீலாவிபூதியில் அளக்க வேண்டுவதுண்டோ?

வியாக்யானம்

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று
ஒரு அடித்தலமே பூமி அடையாத தானாயிற்று

ஒரு கழல் போய்
ஒரு திருவடி பூமியில் இடம் இல்லாமையாலே போய்

நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது
சேஷத்வமாகிற நிழலைக் கொடுக்கைக்காக
ஊர்த்வ லோகம் எல்லாவற்றிலும் நிறைந்தது

ஈஸ்வரரான ப்ரஹ்ம ருத்ரர்களும் –
ஒருவன் திருவடியை விளக்க –
ஒருவன் தீர்த்தத்தைச் சுமக்கும் படியான நிழலை இறே
அவர்களுக்குள் கொடுத்தது

நீண்ட வண்டத்து
அபரிச்சின்னமாய்
பரம ஆகாஸ ஸப்த வாஸ்யமான
பரமபதத்திலே

உழறலர் ஞான சுடர் விளக்காய்
உழன்று சஞ்சரிப்பதால்
அலர்ந்து
விகஸிதமான
ஞானமாகிய சுடருக்கு ஆஸ்ரயமான விளக்காய்

இத்தாலே
ஈஸ்வரனுடைய ஞானமும்
அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் -திருவாய் -4-1-8-என்கிற
கணக்கிலே ஸகல வியாபார மூலமாய்
ஸர்வத்ர விகஸிதமாய் இருக்கும் என்றும்
ஆஸ்ரயமான ஸ்வரூபமும் ஸ்வயம் ப்ரகாசமாய் இருக்கும்
என்றும் சொல்லிற்று ஆயிற்று

உயர்ந்தோரே இல்லா
தன்னில் உயர்ந்தவர்களை உடையவன் அல்லாதவன்

இத்தாலே
உயர்வற உயர்நலம் யுடையவன் -1-1-1- என்னும்படி
ஆனந்த வல்லி ப்ரக்ரியையாலே சத குண உத்தரிதமாய் வளர்ந்து வளர்ந்து
யதோ வாசோ நிவர்த்தந்தே -தைத்ரியம் என்கிறபடியே
வாக்குக்கும் மனஸ்ஸுக்கும் நிலம் அல்லாத ஆனந்தத்தை யுடையவன் என்றபடி

அழறலர் தாமரைக் கண்ணன்
இந்த ஆனந்தத்துக்குப் ப்ரகாசகமான கண்ணழகை யுடையவன்
அழறு என்று அளறு
நீரிலும் சேற்றிலும் நின்று வளர்ந்து
செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவன் என்றபடி

என்னோ விங்களக்கின்றதே
இப்படி நித்ய விபூதி லோகத்தையும்
நிரதிசய ஞான ஆனந்த யோகத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் யுடையவன்
ஒரு திருவடியாலே பூமியை அநந்யார்ஹமாக்கி
ஒரு திருவடியாலே ஊர்த்வ லோகத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்டவனுக்கு
இவ்விபூதியில் அளக்க வேண்டுவது உண்டோ

அளப்பது நின்ற இடம் ஒழிய மாறி இட வேண்டும் இடம் யுண்டாகில் இறே
நிலமும் விசும்பும் இரண்டு திருவடிகளுக்கு இடமாயின இத்தனையே இறே -என்று
அவன் பெருமை உரைத்தாள் ஆயிற்று –

இத்தால்
விலக்ஷணமான ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன்
த்ரைவிக்ரம அபதானத்தாலே ஸமஸ்த விபூதிகளையும் தனக்கே யாக்கினால் போலே
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4- என்று
உம்முடைய அபேக்ஷைக்கு ஈடாகக் கொண்டு அருளக் குறையில்லை என்று
அவனுடைய ஸம்பந்தத்தையும்
ஸக்தியையும்
பிரகாசிப்பித்து
ஆஸ்வஸிப்பித்தாராயிற்று –

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

விபூதி த்வய வ்யாப்த ஞான ப்ரபர் அநேகர் உளர்

இப்படிக் கொத்தவன்
அழறலர் தாமரைக் கண்ணன்
அதிகர்தம ஸூத்த ஜவாப்த் யுத்பூத ரவி கர விகஸித தாமரை போன்ற
கண்ணுள்ள கண்ணன்
அழறு -சேறு

என்னோ விங்களக்கின்றதே –
எந்தப்பிரகாரமாக இங்கு அளந்தானோ
அளப்பது நின்ற இடம் ஒழியவாம்
நிலமும் விசும்பும் இரண்டும் திருவடிகளுக்கு இடமான வித்தனை
ஸ்ருதியும் த்ரிணீ பாத்தா வி சக்ரமே -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் என்றது
இவன் எங்கனே மூட்டியோ தாள் அளந்தான்
சொல்லாய் நீ தான் தோழி –

—————-

அவதாரிகை

இப்படி சக்தனான ஸர்வேஸ்வரன் விளம்பிக்கையாலே
இவருக்குப் பிறந்த ஆர்த்தியைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள்
நொந்து யுரைத்த பாசுரத்தை
இரவு நீடுதலுக்கு ஆற்றாளாய்த் தலை மகள் ஈடுபாடு கண்டு
பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –

பாசுரம் -59-அளப்பரும் தன்மை அவ் ஊழி அம் கங்குல் –
இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் –
முந்நீர் ஞாலம் -3-2-

பதவுரை

வல்வினையேன்–கொடிய தீவினையையுடைய எனது
தள பெரு நீள் முறுவல் செய்யவாய தடமுலை–முல்லை யரும்பினளவான பெருமையும் நீட்சியுமுள்ள பல் வரிசையை யுடைய
சிவந்த வாயுடையளாயிப் பெரிய தனங்களை யுடையவளாகிய இப்பெண்பிள்ளை
(என்ன சொல்லுகிறாளென்றால்)
அளப்பு அரு தன்மைய–“அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய
ஊழி–கற்பங்களினும்
அம்–அழகிய (நீண்ட)
கங்குல்–இராப்பொழுதுகள்
அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன்–அழகிய குளிர்ந்த திருத்துழாய் விஷயமாக
(என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன.
ஓங்கு முந்நீர் வளம் பெரு நாடன்–உயர்ந்த கடல் சூழ்ந்த வளப்பமுள்ள பெரிய நாட்டையாளுபவன்
மதுசூதனன்-மதுவென்னும் அசுரனையழித்தவன்
என்னும்–என்று வாய்விட்டுச் சொல்லி யலற்றுகிறாள்.

வியாக்யானம்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்
அளவிட வரிதாம் படியான ஸ்வ பாவத்தை யுடைத்தான கல்பங்களில் காட்டில்
அழகிய கங்குலானவை

கங்குலுக்கு அழகாவது
கல்பத்திலும் நெடிதாய் இருக்கை

அந் தண் அம் துழாய்க்கு உளப் பெரும் காதலின் நீளிய வாயுள
அழகிய குளிர்ந்த திருத்துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே
நீளிய வாயுள்ளன

காதலுக்கு முடிவு காணாதவோ பாதி
கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை
(கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -)

ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன்
உயர்ந்த முந்நீரை யுடைத்தாய் வளப்பத்தையும் யுடைத்தான
பெரிய நாட்டை யுடையவன் என்கையாலே
லோகம் கடல் விழுங்காமல் நோக்குமவன் என்றபடி

மது சூதன்
அந்த லோகத்துக்கு ஆஸூர ப்ரக்ருதிகளால் வந்த
நலிவு தீர்த்துக் கொடுக்குமவன்

என்னும்
1-இப்படிக் கங்குலின் நெடுமையையும்
2-ரக்ஷகத்வத்தையும்
3-விரோதி நிவர்த்தகத்வத்தையும்
வாய் விட்டுச் சொல்லா நிற்கும்

வல் வினையேன்
கங்குலைக் குறுக்குதல்
அவனைக் காட்டுதல் செய்ய மாட்டாத
மஹா பாபத்தை யுடையேனான என்னுடைய

தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
அவன் தன்னை ஓர் ஒன்றிலே எழுதிக் கொள்ள வல்லவான
அவயவ வை லக்ஷண்யத்தை யுடையவள்

தளம் என்று முல்லை
முல்லை யரும்பின அளவான பெருமையையும்
நீட்சியையும் யுடைத்தான முறுவலையும்
(போக்யதையில் நீட்சி )

இங்கு முறுவல் என்பது
தந்த பங்க்தியை

செய்ய வாய்
முறுவலுக்குப் பரபாகமாய் சிவந்த வாய் அழகையும்

தடமுலை
பெரிய முலைகளையும் யுடையவள்
என்னும் -என்று கீழோடே அந்வயம்

இத்தால்
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன்
விரோதியைப் போக்கி அனுபவிப்பிக்க சக்தனாய் இருக்க
விளம்பிக்கையாலே இவ்வாழ்வாருக்கு
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகித் தோற்றுகையாலே
ஆர்த்தி பிறந்தமை சொல்லிற்று ஆயிற்று

தளப் பெரும் இத்யாதியாலே
1-பரிஸூத்தமான இவருடைய அந்தர் விகாஸத்தையும் (வெளுப்பு)
(அதரத்துக்கு அந்தர் தந்தபந்தி-செங்கல் பொடிக்கூறை வெண் பல் தவத்தவர்போல் )
2-ராகோத்தரமான வாக் விகாஸத்தையும் (சிகப்பு-பக்தியின் நிறம் )
3-நிரதிசயையான பக்தி அபி விருத்தியையும் காட்டுகிறது
(முலை வளர்ந்து கொண்டே இருக்குமே -அவா -காதல் நீண்டு கொண்டே போகுமே )

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே
அவதரித்து ஸூலபனானான் -என்றவாறே நாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார்
அங்கே இருந்து இழக்கை யன்றிக்கே
இங்கே வந்து கிட்டச் செய்தே பெறா விட்டவாறே அவசன்னரானார்
அவ்வவஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்தது
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ஸம்பந்தம் யுண்டாய் இருக்க
போக யோக்யமான இருளிலே வந்து உதவக் காணாமையாலே
இருள் பாதகமாக நின்றது என்று சொல்லா நின்றாள் என்று
அவள் பாசுரத்தைத் திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்
ஊழியான ராத்ரி யானவை
அளக்க அரியத்தை அளந்து கொண்டவன் திருவடிகளாலும் அளக்கப் போகிறது இல்லை
அளக்கலாமாகில் வந்து தோற்றானோ
அளக்க வரிதாகையை ஸ்வ பாவமாக யுடையதான

ஊழி யங்கங்குல்
ஊழி யாகிற ஆகாரமே காணும் நிரூபகமாய் இருக்கிறது
ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாதோ என்ன

அந் தண் அம் துழாய்க்குஉளப் பெரும் காதலின் நீளிய வாயுள
அதனில் பெரிய என் அவா -10-10-10-
பெரியத்தில் பெரியது என்னும் அத்தனை
பகவத் தத்துவத்தையும் விளாக்குலை கொண்டது இறே இவ்வவா
பகவத் ஆனந்தத்தைப் பரிச்சேதிக்கப் பார்த்து அவை பட்டது படும் அத்தனை யாயிற்று
இவற்றைப் பரிச்சேதிக்கப் புக்காலும்
நேதி நேதி -ப்ரஹதாரண்யம் என்கிறபடியே
இது அன்று இது அன்று என்னும் அத்தனை போக்கி இப்படி என்று
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது

அம் தண் துழாய் யுண்டு -அவன் தோளில் இட்ட மாலை
அதுக்கு என்னுள்ளத்தில் யுண்டான சர்வாதிகத்வத்தையும்
விளாக்குலை கொள்ள வற்றாது காதலிலும் பெருத்து இருப்பனவாயுள்ளன

ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும்
அவன் எல்லைக்குப் புறம்பே இருந்து நோவு படுகிறேனோ
கடல் சூழ்ந்து இருப்பதாய் வளப்பத்தை யுடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை யுடையவன்
ரஷ்ய வர்க்கத்துக்குக் களையான மதுவை நிரசித்தவன்
சம்பந்தம் இல்லாமையே
விரோதி நிரசன சீலன் அல்லாமையோ நான் இங்கனே படுகிறது

வல்வினையேன்
இவன் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுகைக்கு ஓரடி இல்லை
அத்தலை இத்தலையாய் அவன் படக்கடவதை இவள் படா நின்றாள்
இதுக்கடி இவள் வடிவு அழகில் ஏதேனும் குறை யுண்டோ
மத பாபம் ஏவ -என்கிறாள்
இவள் படுகிற

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

போக்கினவள் -என்றும் இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுமதே கார்யமாய் இரா நின்றாள்

வல்வினையேன்
வலியதான வெவ்வினையால் இறே
நான் இவள் அவஸாதத்தைக் காணவும் கேட்கவுமாயிற்று
தன் அழகில் ஈடுபடுத்தி அவனை இங்கனே கூப்பிடப் பண்ண வல்லவள் தான்
இப்படிக் கூப்பிடா நின்றாள் என்கிறாள்

தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
தளவு என்று முல்லை
அதில் பெருத்த அரும்பு போன்ற தந்த பங்க்தியாய் உத் பவித்த
நீண்ட வெண் மின்னல் போன்ற புன்சிரிப்புள்ளவள்
சிவந்த திருவதரத்தை யுடையவன்
அவனுடைய ஸந்தாபத்தைத் தீர்க்கவும் ஆசா பூர்த்தியைச் செய்யவும் வல்ல
முலைகளை யுள்ளவள் என்னும் என்றத்தோடே
இதுக்கு அந்வயம் –

—————

அவதாரிகை

இப்படி பார்ஸ்வஸ்தரும் ஈடுபடும்படியான இவருடைய ஆர்த்தியைக் கண்ட
பரிவரானவர்கள்
ஈஸ்வரனுடைய அநந்ய ஸாத்யத்வத்தை அறியாதே
அவனை லபிக்கைக்கு உபாயமான பக்த்யாதிகள் பூர்ணம் அன்றியே இருக்க
நடக்கிற த்வரையானது என்னாய் இருக்கிறது என்று சொல்லுகிற பாசுரத்தை

(ஈஸ்வரனுடைய அநந்ய சாத்யத்வம் இரக்கமே உபாயம்
இவளுக்கு சாதனம் இல்லையே-முலை இத்யாதி -பக்த்யாதிகள் என்று பார்ஸ்த்வத்தார்
அவன் ஸ்ரீ வைகுண்டம் விரக்தி யடைந்து திருவேங்கடம் வந்தது
மயர்வற மதிநலம் அருளினதை அறியாமல் பேசுகிறார்கள் என்றபடி )

தலைவி ஈடுபாடு கண்ட தோழி
அறத்தோடு நின்று யுறைக்கக் கேட்ட செவிலி
பேதைப் பருவத்தாளான இவளுக்குத் தலைவன் இடம் வினாவும்படியான புணர்ச்சி யறிவு
வந்தவாறு என்னாய் இருந்தது என்று சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-

பாசுரம் -60-முலையோ முழு முற்றும் போந்தில –
தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –
அறுக்கும் வினையாயின -9-8-

பதவுரை

முலையோ–ஸதனங்களோ வென்னில்
முழு முற்றும் போந்தில–மிக முழுவதும் தோன்றினவில்லை;
மொய் பூ குழல்–அடர்ந்த மென்மையான தலை மயிர்கள்
குறிய–(முடிகூடாமல்) குட்டையாய் யுள்ளன;
கலையோ–ஆடையோ வென்னில்
அரை இல்லை–இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை;
நாவோ–நாக்கோவென்னில்
குழறும்–(திருத்தமாக வார்த்தை சொல்ல மாட்டாமல்) குதலைச்சொல் பேசுகின்றது.
கண்–கண்களோ வென்னில்
கடல் மண் எல்லாம் விலையோ என–கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப் பொருளோ வென்று சொல்லும்படி
மிளிரும்–(ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன;
பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம்.–‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ?
என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை
இவள் பரமே–(இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?.

வியாக்யானம்

முலையோ முழு முற்றும் போந்தில
யவ்வன ஸூ சகமான முலைகளானாவை மிகவும் முழுக்கத் தோற்றிற்றன இல்லை
முழு முற்றும் என்று மீமிசையாய் மிகுதியைக் காட்டுகிறது

மொய் பூம் குழல் குறிய
செறிந்த பூவை யுடைத்தான குழல்
பூக்களைச் செறியச் சொருகும் அளவு ஒழிய
முடி கூடின வில்லை

கலையோ அரையில்லை
பரிவட்டமானது அறையில் பொருந்த வுடுக்கும் அளவன்று

நாவோ குழறும்
நாவானது வார்த்தையைத் திருந்தச் சொல்லாது

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
கடல் சூழ்ந்த பூமியும்
மற்றும் யுள்ள லோகங்களும் இவற்றுக்குத் தகுதியோ
என்னும் படி கண்கள் மிளிரா நிற்கும்

இவள் பரமே
இப்படிப் பேதைப் பருவத்தை யுடையளான இவளுக்குத்
தலைவருமதே (கை வருமோ என்றபடி –

நாயகனை வசீகரித்து
முலை அழகாலே யாதல்
மயிர் முடி அழகாலே யாதல்
உடை அழகாலே யாதல்
உக்தி சாதுர்யத்தால் யாதல்
ஸா பிப்ராயமாக கடைக் கணிக்கும் பார்வையின் வைஷம்யத்தாலே யாதலாய் இருக்க

(இந்த நான்கும் நாயகனை வசீகரிக்காது போல்
கண் பார்வையாலும் அவனை வசீகரிக்காதே
இவர் பார்வையில் சமத்துவம் தான் தெரியும்
வை ஷம்யம் இல்லையே )

முலையும் அரும்பாதே
குழலும் முடி கூடாதே
பரிவட்டமும் செவ்வனே உடுக்க அறியாதே
சொல்லும் மழலையாய்
கண்ணும் ஒதுக்கிப் பாராமல் செவ்வே நோக்கும்படியான இந்தப் பேதைக்கு
இப்படித் தலைவன் இடம் வினாவுதல் யுண்டானவாறு என் கொல்
என்று அதிசயப்பட்டாள் ஆயிற்று

பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே
ஸ்வாமியானவனுடைய மலையோ திருவேங்கடம் என்று சந்தை சொல்வாரைப் போலே
பலகாலும் அப்யஸிக்கிற பாசுரம் இவள் தலையிலே கிடப்பது ஒன்றே என்றாள் ஆயிற்று

இத்தால்

பரிவரானவர்கள் –
பகவத் பிராப்தி சாதனங்களான பக்த்யாதிகள் இன்றியே இருக்க
இவ்வாழ்வார் அவனுடைய தேசத்தைப் பிராபிக்கத் த்வரிக்கிறது என்னோ என்று
பரிவாலே கலங்கி உரைத்தார்களாய் இருக்கிறது

முலையானது
போக உபகரணமான பக்திக்கு ஸூசகமாகையாலே –
அந்த பக்தியானது
பிராப்தி சாதனமான பரமபக்தியாம்படி பரிணமித்தது இல்லை என்றபடி

குழல் குறிய -என்று
முடி அழகில்லை என்றபடியாலே
நமஸ் யந்தஸ் ச -கீதை -9-14-என்கிறபடியே
தலையாலே வசீகரிக்கிற பிராணாமம் இல்லை என்றபடி

உடை அழகில்லை என்கையாலே
பந்த பரிகரஸ் தஸ்ய -ஹர்யஷ்டகம் -என்னுமா போலே
யதந்தச்ச த்ருட வ்ரதா -கீதை -9-14-என்று சொல்லுகிற நிரந்தர கீர்த்தமாம் இல்லை என்றபடி

(ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:
நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே-கீதை-9-14-

த்ருடவ்ரதா:-திடவிரதத்துடன்,
ஸததம் கீர்தயந்த: ச-இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும்,
யதந்த: ச-முயற்சி புரிவோராகவும்,
நமஸ்யந்த: ச-என்னைப் பக்தியால் வணங்குவோராய்,
நித்யயுக்தா: பக்த்யா உபாஸதே-நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால்
வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது;
எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை
பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்தியயோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள் )

மிளிரும் கண் -என்கையாலே
ஸ்வரூபாதி ஸமஸ்த அர்த்த அவகாஹியான ஸ்வாபாவிக ஞானம் ஒழிய
ஒதுக்கிப் பார்க்கும் த்யான ரூப ஞானம் இல்லை என்றபடி

இவள் பரமே -என்கையாலே
கேவலமான ஸ்வரூப பாரதந்தர்யம் யுடையாருக்கு
சாதனம் இல்லாமல்
த்வரையைத் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமோ என்று
வ்யதிரேகம் சொன்னபடி

பெருமான் மலை -இத்யாதியாலே
அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய் -3-3-1-என்கிறபடியே
அவன் எழுந்து அருளி நிற்கிற (இருக்கிற) திருமலையே போகஸ்த்தானம் என்றதாயிற்று
(கைங்கர்ய ஸ்தானம் என்றவாறு )

—–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தளப் பெரு நீண் முறுவல் செய்ய வாய தடமுலை வளப்பெரு நாடன் மது ஸூதனன் என்றாளே
ப்ராப்த யவ்வனையாய் -பருவம் நிரம்பின பின்பு இது சொல்லக் கேட்க வேணுமோ
அடியே பிடித்தும் இவளுக்கு இதுவே யன்றோ யாத்திரை என்கிறாள்

வியாக்யானம்

வியாக்யானம்

முலையோ முழு முற்றும் போந்தில
இவை எல்லாம் பருவம் நிரம்பினவாறே பிராப்தம்
முலைகள் சமைய வளர்ந்தவில்லை என்னும் அளவல்ல
முலை எழும் எல்லை இன்னவிடம் என்று கொண்டைக்கோல் நாட்டிற்றும் இல்லை

மொய் பூம் குழல் குறிய
செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்களை அவன் பேணி சூழி யஞ்சுற்றினால்
இவள் வினை கேட்டாலே குலைத்தால் அவன் அதுக்குக் காலைப் பிடிக்கும் அளவல்ல

கலையோ அரையில்லை
தாய்மார் உடுத்தினால் அது அப்படியே இருக்குமதுக்கு அவ்வருகு தான்
திரஸ்கரிக்கும் இது இன்னவிடம் என்று அறியும் விவேகம் தான் நெஞ்சில் நடையாடிற்று இல்லை

நாவோ குழறும்
சொல் தெளிவு யுண்டாய்ப் பொருள் யுடைத்தான சப்தங்களைச் சொல்லி
அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்டு ஐயர் ஆய்ச்சி என்று சிலவற்றைக் கற்ப்பிப்பார்கள் இறே
அவர்கள் தெளிந்த சொல் தான் குற்றமாம் படி இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும் இறே

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
இத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க
எல்லா அவயவங்களுடைய நிரம்பாமையைச் சொல்லி
இவற்றினுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாய் இராதோ என்று

இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம் –

முலையோ முழு முற்றும் போந்தில
முழு முற்றும் –
எவ்வளவும் முலையைச் சொல்லுவேனோ எவ்வளவும் உத் பவித்தது இல்லை

மொய் பூம் குழல் குறிய
செறிந்த குழலுக்கு வாரிப்பூ முடிக்க உரியள்ன் அல்லள்

கலையோ அரையில்லை
கலை -பரிவட்டம்
அரையில் பரிவட்டம் நிற்கும்படி உடுக்க அறியாள்

நாவோ குழறும்
நாக்கால் குழறு மதான மழலைச் சொல்லே

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
இவள் முழித்தலுக்குக் கடல்கள் எல்லாம் சூழ்ந்த மண் விலையாமோ
என்னும்படியான கண் பார்வையள்-

இவள் பரமே பெருமான்மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –
என்னை யாளும் யவன் மலையோ திருவேங்கடமே என்பதாய்
அப்போது சொல்லும் வாக்யமாவிது

இவள் பரமே
இவளுக்குத் தக்கதோ

இத்தால்
அவளுக்கு அவனில் அதி ப்ரணதையும்
பிரிவில் அத்யாவசன்னதையும்
ஒவ்த் பத்திகம் என்றதாயிற்று
இதுக்கு வல் வினையேன் என்று
நொந்து கொள்வான் என் என்று இவள் தாயைத் தேற்றுகிறாள் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த சங்கல்ப ஸூர்யோதயம்– நாடகம் —

April 7, 2022

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

சுவாமி தேசிகனின் ஸங்கல்ப சூரியோதயம் என்னும் ஸம்ஸ்க்ருத நாடகத்தில்,
யோகம் புரிவதற்கு சரியான இடத்தை தேடி விவேக மஹாராஜன் தன் ஸாரதியான தர்கனுடன் செல்கிறார்.
அப்பொழுது இருவரும் அயோத்தி மாநகரை அடைந்தனர்.
“எம்பெருமானின் அவதாரத்தினால், பாபமெல்லாம் போய் சுத்தமான ஸாகேத தேசத்தை (அயோத்திக்கு மற்றோரு பெயர்)
மஹாராஜர் காணலாம். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அயோத்தியே இந்த அயோத்திமாநகரம்.
இங்கு வெள்ளமிடும் ஸரயூநதியே விரஜை நதியாகும். அங்கே சாஸ்த்ர விதிப்படி பசுக்கள் கட்ட யூபஸ்தம்பங்கள் இருந்தன.
அவை ஸ்ரீராமன் யாகத்திற் சேர்ந்தவையாகும். ரகுபதியான எம்பெருமான் தான் ஸ்வதந்ரமாய் எதையும் செய்யலாமாகையாலே,
தன் அவதாரத்தை பூர்த்திசெய்து கொண்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் போது,
அயோத்தியில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
அப்பேற்பட்ட இந்த தேசம் ஸம்சாரத் துயரினை நீக்கி ஸ்ரீவைகுண்டம் அளிக்கும் மோக்ஷ தேசமாகும்.” என்று
அயோத்தியின் பெருமையை ஸாரதி விவேக மஹாராஜாவிடம் விளக்கினான்.

அப்பொழுது விவேகன் எங்கும் பார்த்த படி
“அயோத்தியில் உத்யானங்களில்(மாடங்களில்) கிளிக்கூட்டங்கள் மூன்று வேதங்களையும் ஓதுகின்றன.
பண்டைய தர்மானுஷ்டானங்கள் இதனின்று நன்றாக தெரிகிறது. மேலும் ஜனங்களின் “ராம்” என்ற கோஷத்துடன் கூடியபடி
அயோத்தி மாநகரம், ரகுவம்சத்து அரசர்கள் நாட்டிய சிறந்த யூபஸ்தம்பங்களாலும் நேர்த்தியாக விளங்குகின்றது.” என்று கூறினான்.
மேலும் அயோத்தியை ரசித்த படி, விவேகன் மகிழ்ச்சியும், மயிர் சிலிர்ப்புடன் ,
“இந்த்ரியங்கள் (புலன்கள்) என்ற முகங்களினால், பயங்கரமான மனமென்னும் அரக்கனை,
யோகிகளின் நல்லது எது கேட்டது எது என்று பார்த்து அறியும் விவேகமென்னும் அம்புகளின் திரள்களால், அழிப்பவனும்,
தயரதன் மகனாகவும் , தயையே வடிவாக உள்ள ஜானகிதேவியாருடன் இருக்கும் அந்தத் திருமாலான ராமன்,
நல்லாருக்கு அபயம்(அடைக்கலம்) அளிப்பானாக.” என்று ஆவலுடன் கைகூப்பிக் கொண்டான்.

மேலும் “வேறொரு புகல் இல்லாதவர்களை தானே முன்னின்று காப்பதாகிற விரதத்தினால், மேன் மேலும் வளருகிற
புகழையுடையவன் ராமன். இந்திரன் தன் மனம் போனபடி செய்த காரியத்தால், கோபத்தை அடைந்தவரும்,
சாபத்தையே ஆயுதமாகவுடைய கௌதம முனிவரின் மனைவியான அஹல்யையினுடைய கல்லாயிருக்கும்
கெட்ட தசையை போக்கடிக்கும் திருவடித்தாமரைகளின் தூள்களையுடைய சிறந்த அந்த ராமபிரானை வணங்குகிறேன்.
“ஸ்ரீராமனுக்கு எனது வந்தனம்.” என்று விவேகன் வார்த்தை மூலம் சுவாமி தேசிகன் அயோத்தியை மங்களாசாஸனம் செய்கிறார்.

———————-

வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதனகதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||–சங்கல்ப சூர்யோதயம்-

வேதம் முழங்கும் தன் திருநாவில் நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால் சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதாஸ் த்ரயீமுகரைர் முகை
வர தனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபி ஜனஸ்ய வஶம் வதம்
மதன கதனைர் ந க்லிஶ்யந்தே யதீஶ்வர ஸம்ஶ்ரயா: ||–யதிராஜ சப்ததி–45-

எம்பெருமானார் தரிசனத்தை அவலம்பித்தவர்கள் விஷய வைராக்யம் உள்ளவர்களாகப் பார்க்கக் படுகிறார்கள் -என்கிறார் –
அனாதையான வேதங்களை சதா உருச் சொல்லிக் கொண்டு இருக்கும் நான்முகனும் நாவிலே மனைவியை கொண்டுள்ளான் –
சிவனுடைய இடது புறமே பெண்ணாய் விட்டது –
பரதத்வமான எம்பெருமானும் கோபியர்கள் வசமாய் விட்டான்
ஆனால் எம்பெருமானார் திருவடிகளை பற்றினவர்கள் காமனால் பீடிக்கப் படுவதில்லை –
பரம விரக்தர்களாய் இருப்பார்களே –

————-

பத்து காட்சிகள் கொண்ட நாடகம்
சம்சாரத்தில் மாறி மாறி பிறந்து உழன்று உள்ளவர்கள் அத்தை விடுத்து மோக்ஷம் பெறுவதை உணர்த்துவதே
இதன் மையக் கருத்தாகும்–
இரண்டு கதா பாத்திரங்கள் – -விவேகன் என்றும் மஹா மோகன் என்றும் இரண்டு அரசர்கள் –
ஜீவாத்மாக்களைக் காத்து மோக்ஷம் பெற்றுத்தருவதை குறிக் கோளாக விவேகனும் பரிவாரங்களும் இருக்க
சம்சாரத்தில் மூழ்கும்படி செய்வதையே குறிக் கோளாக மஹா மோகனும் அவனது பரிவாரங்களும் இருக்கும்

கதா பாத்திரங்கள் –
விவேக அணி
விவேகன் -அரசன் -நல்லது தீயது பிரித்து அறியக் கூடிய ஞானம்
ஸூ மதி –விவேகனின் மனைவி
சமன் தமன் ஸ்வாத்யாயன் தோஷ -விவேகனின் மந்திரிகள்
விவசாயன் -விவேகனின் சேனாதிபதி -ஜீவாத்மாக்கள் முயற்சி
தர்க்கன் -விவேகனின் தேரோட்டி
ஸம்ஸ்காரன் -விவேகனின் சில்பி
அநுபவன் -ஸம்ஸ்காரனின் தந்தை
ஸங்கல்பன்/ விஷ்ணு பக்தி –பகவானுடைய பரிவா ரங்கள்-
சித்தாந்தி -ஆச்சார்யர் -பகவத் ராமானுஜர்
வாதம் -சிஷ்யன் -ஸ்வாமி தேசிகன்
நாரதன் -தும்புரு -மைத்ரி -கருணை -முதிதா –ஸூ மதியின் தோழிகள்
ஷாந்தி விரக்தி ஜூகுப்ஸை திதிஷை துஷ்டி–ஸூ மதியின் பணிப்பெண்கள் –

மஹா மோஹன் அணியினர் –
மஹா மோஹன்–அரசன் -அஞ்ஞானம் மற்றும் மயக்கம் உண்டாக்குபவன்
துர்மதி -மஹா மோகனின் மனைவி
காமன் க்ரோதன் -படைத்தளபதிகள் –
ராகன் த்வேஷன் டம்பன் லோபன் தரப்பன் -கர்வன் -ஸ்தம்பம் -மந்திரிகள் -சிலரை சிஷ்யர்கள் என்றும் கூறுவர்
சம்வ்ருத்தி சத்யன் -தூதுவன்
வசந்தன் -காமனின் நண்பன்
அபி நிவேசன் -பொருளாதாரன்
திருஷ்ணை ஆசை லோபனின் மனைவி
குஹனை -வஞ்சனை -டம்பனின் மனைவி
அஸூயை பொறாமை -தர்ப்பனின் மனைவி
துர்வாசன் -அபிநிவேசனின் மனைவி
விக்னன் ஒற்றன்
மனன் மத்சரன் -ஆலோசகர்கள்
ஸ்ருங்காரன் -காமனின் சிஷ்யன்
ப்ரமன்-நண்பன் –

——-

413. சத்ருக்னாய நமஹ: (Shathrughnaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை –
இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)ராமாவதாரத்தின் மூலம் ஸ்ரீராமன்
நமக்கு உணர்த்தும் வேதாந்த தத்துவத்தை சுவாமி வேதாந்த தேசிகன்,
சங்கல்ப சூரியோதயம் என்னும் காவியத்தில் தெரிவிக்கிறார்:

“தர்ப்போதக்ர தசேந்த்ரியானன மனோ நக்தஞ்சராதிஷ்டிதே
தேஹேஸ்மின் பவஸிந்துனா பரிகதே தீனாம் தசாம் ஆஸ்தித:
அத்யத்வே ஹநுமத் ஸமேன குருணா ப்ரக்யாபிதார்த்த புமான்
லங்காருத்த விதேஹ ராஜ தனயா ந்யாயேன லாலப்யதே”

ராமன் தான் பரமாத்மா.
மகாலட்சுமியின் அம்சமான சீதாதேவி பிறவிப் பிணியில் சுழலும் ஜீவாத்மாவின் பாத்திரத்தை ஏறிட்டுக்கொள்கிறாள்.
கடல்சூழ்ந்த இலங்கையே பிறவிப் பெருங்கடல். அசோக வனமே நம் உடல்.
சீதை என்னும் ஜீவாத்மாவை ராமன் என்னும் பரமாத்மாவிடம் இருந்து பிரித்து,
பிறவிப் பிணியாகிய இலங்கையில் உடலாகிய அசோகவனத்தில் ராவணன் சிறைவைத்துள்ளான்.
இந்த ராவணன்தான் நம் மனமும் பத்து இந்திரியங்களும்
மனதுக்குப் பத்து இந்திரியங்கள் தலைபோன்றவை.
மெய், வாய், கண், மூக்கு, செவி, நாக்கு, கை, கால், மலத்துவாரம், ஜலத்துவாரம் ஆகிய பத்து இந்திரியங்களோடு
கூடிய மனமே பத்து தலைகொண்ட ராவணன் ஆவான்.
இந்த மனமும் புலன்களும் சேர்ந்து தான் ஜீவாத்மாவைப் பிறவித்துயரில் அழுத்தி
இறைவனை அடையவிடாமல் தடுக்கின்றன. இந்த மனம், புலன்களை மூன்று குணங்கள் பாதிக்கின்றன.

சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகியவையே அந்த மூன்று குணங்கள்.
சத்துவ குணமே சாந்தமான விபீஷணன். ரஜோகுணம் தான் காமம், கோபம் நிறைந்த சூர்ப்பணகை.
தமோ குணம் தான் சோம்பலில் ஆழ்ந்த கும்பகர்ணன். ராவணன் என்னும் மனமும் புலன்களும் விபீஷணனாகிய
சத்துவ குணத்தை விரட்டிவிட்டு, சூர்ப்பணகை கும்பகர்ணனாகிய ரஜோகுணம், தமோகுணம் ஆகியவற்றைத்
தன்னுடன் வைத்துக்கொள்வதாலே, ஜீவாத்மாவாகிய சீதை மேலும் துன்புறுகிறது.

இந்நிலையில், பரமாத்மாவாகிய ராமனை அடைய வேண்டும் என்று ஜீவாத்மாவாகிய சீதை தவிக்கும்போது,
பரமாத்மாவான ராமன், ஆஞ்ஜநேயரை அனுப்பி வைக்கிறார். அந்த ஆஞ்ஜநேயர் தான் குரு,
ஆசார்யன். இறைவன் எல்லாச் சமயங்களிலும் நேராக வருவதில்லை, குருவை அனுப்பிவைத்து,
குருவருளின் மூலம் திருவருள் நமக்குக் கிட்டும்படிச் செய்கிறான்.
ஆஞ்ஜநேயர் சீதையைக் கண்டுபிடித்து, ராமாயணம் பாடியது போல்,
ஆசார்யன் ஜீவாத்மாவுக்கு இறைவனின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறார்.

ஆஞ்ஜநேயர், ராமனின் முத்திரை மோதிரத்தைச் சீதைக்கு வழங்கியது போல்,
ஆசார்யன் சீடனாகிய ஜீவாத்மாவுக்கு இறைவனின் சங்கு சக்கர முத்திரைகளைத் தோளில் பொறிக்கிறார்.
நிறைவாக, அனுமன் இலங்கையை எரித்தது போல், பிறவிப் பிணியையே எரிக்கிறார் ஆசார்யன்.
அதன்பின் ராமனைத் தன் தோளில் சுமந்தபடி இலங்கைக்கு அனுமன் அழைத்து வந்ததுபோல்,
நம்மைக் காக்கும் பொருட்டு இறையருளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறார் ஆசார்யன்.

அனுமனின் துணையோடு ராமன் இலங்கையில் உள்ள மொத்த அரக்கர்களையும் அழித்தது போல்,
ஆசார்யன் துணையோடு இறைவன் ஞானம் என்னும் அம்பை எய்து நமது மொத்தப் பாபங்களையும் அழித்து விடுகிறான்.
அனுமன் சீதா-ராமர்களை இணைத்து வைத்தது போல், ஆசார்யன் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்து வைக்கிறார்.

இதே கருத்தை ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தின் ஸாத்வத ஸம்ஹிதையில் உள்ளது.

“தசேந்த்ரியானனம் கோரம் யோ மனோ ரஜனீசரம்
விவேக சர ஜாலேன சமம் நயதி யோகினாம்”-என்ற ஸ்லோகம் தெரிவிக்கிறது.

இப்படி ஆத்மாவுக்கு எதிரிகளாக இருக்கும் பாபங்களையும், தறிகெட்டு ஓடும் புலன்களையும்
ஞானம் என்னும் அம்பால் வீழ்த்தி வெல்வதால், ஸ்ரீராமன் ‘சத்ருக்ன:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘சத்ரு’ என்றால் எதிரி. ‘சத்ருக்ன:’ என்றால் எதிரிகளை அழிப்பவர்.
தறிகெட்டு ஓடும் மனம், புலன்கள் மற்றும் பாபங்களாகிய எதிரிகளை அழிப்பதால் ராமன் ‘சத்ருக்ன:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 413-வது திருநாமம்.
[ராமனின் தம்பிக்கு சத்ருக்னன் என்ற திருப்பெயர் இருப்பதற்கான காரணம் வேறு, அதை இத்துடன் குழப்பிக் கொள்ளலாகாது.]
“சத்ருக் னாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் அனைத்துப் பாபங்களையும் ஸ்ரீராமன் போக்கி அருள்வான்.

—————

ராகவ ஸிம்ஹனையும் அவன் தலைநகராக அரசாண்ட அயோத்தியையும்,
சுவாமி தேசிகன் ஸங்கல்ப சூர்யோதயத்தில் போற்றிய வழியில் நாமும் போற்றி துதிப்போம்.
சுவாமி தேசிகனின் ஸங்கல்ப சூரியோதயம் என்னும் ஸம்ஸ்க்ருத நாடகத்தில்,
யோகம் புரிவதற்கு சரியான இடத்தை தேடி விவேக மஹாராஜன் தன் ஸாரதியான தர்கனுடன் செல்கிறார்.
அப்பொழுது இருவரும் அயோத்தி மாநகரை அடைந்தனர்.

“எம்பெருமானின் அவதாரத்தினால், பாபமெல்லாம் போய் சுத்தமான ஸாகேத தேசத்தை
(அயோத்திக்கு மற்றோரு பெயர்) மஹாராஜர் காணலாம்.
ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அயோத்தியே இந்த அயோத்தி மாநகரம். இங்கு வெள்ளமிடும் ஸரயூநதியே விரஜை நதியாகும்.
அங்கே சாஸ்த்ர விதிப்படி பசுக்கள் கட்ட யூபஸ்தம்பங்கள் இருந்தன. அவை ஸ்ரீராமன் யாகத்திற் சேர்ந்தவையாகும்.
ரகுபதியான எம்பெருமான் தான் ஸ்வதந்ரமாய் எதையும் செய்யலாமாகையாலே, தன் அவதாரத்தை பூர்த்தி செய்து கொண்டு
ஸ்ரீவைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் போது, அயோத்தியில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
அப்பேற்பட்ட இந்த தேசம் ஸம்சாரத் துயரினை நீக்கி ஸ்ரீவைகுண்டம் அளிக்கும் மோக்ஷ தேசமாகும்.” என்று
அயோத்தியின் பெருமையை ஸாரதி விவேக மஹாராஜாவிடம் விளக்கினான்.

அப்பொழுது விவேகன் எங்கும் பார்த்த படி
“அயோத்தியில் உத்யானங்களில்(மாடங்களில்) கிளிக்கூட்டங்கள் மூன்று வேதங்களையும் ஓதுகின்றன.
பண்டைய தர்மானுஷ்டானங்கள் இதனின்று நன்றாக தெரிகிறது.
மேலும் ஜனங்களின் “ராம்” என்ற கோஷத்துடன் கூடியபடி அயோத்தி மாநகரம்,
ரகு வம்சத்து அரசர்கள் நாட்டிய சிறந்த யூபஸ்தம்பங்களாலும் நேர்த்தியாக விளங்குகின்றது.” என்று கூறினான்.

மேலும் அயோத்தியை ரசித்த படி, விவேகன் மகிழ்ச்சியும், மயிர் சிலிர்ப்புடன் ,
“இந்த்ரியங்கள் (புலன்கள்) என்ற முகங்களினால், பயங்கரமான மனமென்னும் அரக்கனை,
யோகிகளின் நல்லது எது கேட்டது எது என்று பார்த்து அறியும் விவேகமென்னும் அம்புகளின் திரள்களால், அழிப்பவனும்,
தயரதன் மகனாகவும் , தயையே வடிவாக உள்ள ஜானகிதேவியாருடன் இருக்கும் அந்தத் திருமாலான ராமன்,
நல்லாருக்கு அபயம்(அடைக்கலம்) அளிப்பானாக.” என்று ஆவலுடன் கைகூப்பிக் கொண்டான்.

மேலும் “வேறொரு புகல் இல்லாதவர்களை தானே முன்னின்று காப்பதாகிற விரதத்தினால்,
மேன் மேலும் வளருகிற புகழையுடையவன் ராமன்.
இந்திரன் தன் மனம் போனபடி செய்த காரியத்தால், கோபத்தை அடைந்தவரும், சாபத்தையே ஆயுதமாகவுடைய
கௌதம முனிவரின் மனைவியான அஹல்யையினுடைய கல்லாயிருக்கும் கெட்ட தசையை போக்கடிக்கும்
திருவடித்தாமரைகளின் தூள்களையுடைய சிறந்த அந்த ராமபிரானை வணங்குகிறேன்.
“ஸ்ரீராமனுக்கு எனது வந்தனம்.” என்று விவேகன் வார்த்தை மூலம் சுவாமி தேசிகன் அயோத்தியை மங்களாசாஸனம் செய்கிறார்.

————————

வித்ராஸி நீ விபூதவைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜனைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரே ஸமஜ நிஷ்ட யதாத்ம நேதி -சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

ப்ரஹ்மதேவன் ஆராதனத்துக்கு உபயோகித்த மணி –
இதன் நாதத்தாலே அசுரர்கள் பயந்து ஓடச் செய்ததே –
அவதாரமே நம் ஸ்வாமி -என்றவாறு
திரு ஆராதனத்துக்கு திருமலையில் கை மணி இதனாலே தான் சேவிக்க மாட்டார்கள் –

இவர் முப்பது தடவை ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதை
த்ரிம் ஸத்வாரம் ஸ்ராவித சாரீரக பாஷ்யா -ஸ்லோகம் சங்கல்ப ஸூர்யோதயத்தில் அருளிச் செய்துள்ளார்

திரு ஆராதனத்துக்கு திருமலையில் கை மணி இதனாலே தான் சேவிக்க மாட்டார்கள் –
இவர் முப்பது தடவை ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதை
த்ரிம் ஸத்வாரம் ஸ்ராவித சாரீரக பாஷ்யா -ஸ்லோகம் சங்கல்ப ஸூர்யோதயத்தில் அருளிச் செய்துள்ளார்

——-

வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதன கதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||

வேதம் முழங்கும் தன் திருநாவில்
நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ
கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால்
சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

இவ்வாறு மூன்று பெரும் தெய்வங்களே மன்மதனிடம் ஆட்பட்டிருக்கும்போது,
சாதாரணர்கள் என்ன ஆவார்கள் என்று இங்கே போட்ட விடுகதைக்கு இன்னொரு நூலில் விடை தருகிறார் கவிஞர்.
வேதாந்த தேசிகன் தன் முதன்மை குரு, ராமானுஜரின் பெயரில் எழுதிய இன்னொரு நூல், யதிராஜ சப்ததி.
இதில் ராமானுஜரைப் பற்றி எழுபத்தி நான்கு பாக்கள் உள்ளன.
இந்த நூலில் இதே கவிதையைக் கொடுத்து, கடைசி வரியை மட்டும் மாற்றி விடுகிறார்

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்
மதன கதனை ந க்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா-

நான் முகன் நான்கு முகங்களாலும் சரஸ்வதியை பார்த்துக் கொண்டே உள்ளான்
சிவனின் இடப் பகுதி முழுவதும் பெண்ணாகவே உள்ளது –
ஸ்ரீ கிருஷ்ணனும் கோபிகள் வசம் -ஆனால் யதிராஜரை அடைந்தவர்கள் இது
போன்ற காம வலைகளில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் –

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
ஆத்ய -சிருஷ்டியில் முதல் -வேதா -நான் முகன்–வேதஸாம் பிதாமக –
தூண் பிதாமகி-ஸ்தம்பம் -பிள்ளை -அவர் பிள்ளை கணக்கற்ற நான் முகன் –
அண்டங்கள் பல பல —
த்ரயீ -வேதங்கள் -எண்ணிக்கை இல்லை -ருக் யஜுவ்ர் சாம -மூன்று வகை –
முன்பு யுகங்களில் ஒரே வேதம் -கலிக்காக நான்காக பிரித்து
அதர்வணம் -ருக்கில் சேரும் -என்பர் -வஸிஷ்டர் ராமர்
பட்டாபிஷேகம் அதர்வண வேதம் கொண்டு –
முகரை-இடை விடாமல் -வாசனையே உபாத்தியாயர் -வாய் வெருவுதல் –
வெருவாதாள் வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
வேதங்களை வாய் விடாமல் சொல்லி —வஹதி மஹி ளாம்-வகிக்கிறாள் -சரஸ்வதி
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே –
அழகிய -ஸ்ரேஷ்டமான -பகுதியில் -இடது பாகத்தில் -மாறு பட்டு விளங்கும் -சிவனுக்கு -உமை ஒரு பாகன் –
விவர்த்த வாதம் -பரிணாமம் -வாதிகள் -உபாதான காரியம் இரண்டும் சத்யம் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் விவர்த்தம்
ஸ்வரூப பரிணாமம் -உபாதி பரிணாமம் -நாம் சரீர பரிணாம வாதிகள் –
வியாவர்த்தகன் -வி யா வர்த்தகம் -வேறு பட்டது -முரட்டு ஆன் சரீர பாகத்தி இருந்து வேறு பட்ட அழகிய இடப் பாகம்
வர வர முனி -அழகிய மணவாள முனி –
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்-பர தத்வம் -சர்வ நியாந்தா -அவன் கூட கோபி ஜனங்கள் வசப்பட்டு -நியாமகன்
முன்பு சொன்னவர்கள் அபர தத்வங்கள் -நஹீ நிந்தா நியாயம் -எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லாத பலனைக் காட்டி அருளுகிறார் –
அமர்யாதா -துர்மானி -அநாத ஸ்தோத்ர ரத்னம் -53 -கூரத் ஆழ்வான் சொல்ல மாட்டார் -ஆளவந்தார் எம்பெருமானார் திருவடி
சம்பந்தம் இல்லை சொன்னார் நான் சொல்ல மாட்டேன் என்பாராம் -அழகர் கேட்டு ஆனந்தம் அடைந்தார் –
மதன கதனை ந க்லிச்யந்தே–மன்மதன் -மூலம் கிலேசம் அடைய முடியாதே
யதீஸ்வர சம்ஸ்ரயா–ஸ்ரீ ஸூ க்திகள் -பயின்று -கடாக்ஷ உபதேசங்களால் –
யத்ர யத்ர யதீஸ்வர ஸம்ஸரய–தத்ர தத்ர இது இல்லை என்றவாறு –

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

யதி என்பது துறவியைக் குறிக்கும். யதிகளின் அரசனாக ராமானுஜரைக் குறிப்பிடுகிறார்.
ராமானுஜரை அண்டியவர்கள் காமம் என்னும் சிற்றின்பத்துக்கு அடிமையாவதில்லை என்பது கருத்து.

இதில் சில சொல் விளையாட்டுக்களையும் கவி உள்நுழைத்து இருக்கிறார்.
ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

ஸங்கல்பஸூர்யோத ஐந்தாவது அங்கத்தில் அஸூயா தேவி யென்பவள் வந்து கூறுகிற வார்த்தையை
ஆசிரியர் அழகாக எடுத்து இயம்பியுள்ளார்.
விவேக சக்ரவர்த்திக்கு மஹா மோஹ மஹாராஜன் பகைவன்; இவனுடைய மனைவிக்கு துர்மதி யென்று பெயர்;
அவளுடைய தோழி தான் அஸுயை யென்பவள். அவள் கூறுகின்றாள் –
*மயி தத்தாவதாநாயாம் விச்வதோஷாபஹாரிணா, ந சக்ய மீச்வரேணாபி நிரவத்யேந வர்த்திதும்* என்று.

(இதன் பொருள்) {‘அஸூயை யென்கிற) நான் உஷாராக இருந்தேனாகில்
ஒன்றான ஸர்வாஶ்வரனாலும் குற்றங்களிலிருந்து தப்பிப் பிழைக்க முடியாது என்பதாம்.

இதற்கு மேல் “நிரவதி குணக்ராமே ராமே” என்று தொடங்கி
அருமையான் ஶ்லோகமொன்று அந்த அஸூயா தேவியினால் சொல்லப்பட்டுள்ளது:

(அதன் கருத்து) குற்‍றம் என்பது லவலேசமும் காணமுடியாமலும்,
அநந்த கல்யாண குண ஸமூஹமே வடிவெடுத்துமிருந்த ஸ்ரீராமபிரானிடத்திலும் நாளைக்கும் பலவகைக் குற்‍றங்களைக்
கூசாமல் கூறி வருகின்ற இவ்வுலகத்தவர், மற்‍றையோரிடத்தில் எப்படி வெறுமனே யிருப்பார்கள்?
குணக் கடலான எம்பெருமானே படுகிறபாடு அதுவானால் ஏதோ ஒன்றிரண்டு குணங்களையும்
பல்லாயிரக் கணக்கான குற்‍றங்களையுமுடைய மற்‍றையோர் எப்பாடு படவேண்டும்! – என்பதாம்.

———–

ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்
“கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகாரம் ஸரஸ்வதீம் ! யஸ்ய நித்யம் ப்ரசம்ஸந்தி ஸந்தஸ்ஸௌபரபவேதின:” என்று பாடியிருக்கிறீரே !

திருவேங்கடமுடையான் தயா விஷயத்திலும் “அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்” என்று இப்படித் துதிக்க ஆசையைக் காட்டினார்.
ஆளவந்தார் சதுஸ்லோகியும் இப்படி அபிஷ்டவமாக அமைந்ததென்பதை “அபிஷ்டௌதிஸ்துத்யாம்” என்று
அதை வர்ணித்ததால் காட்டினார். எந்த ரீதியான வாக்கு வேணும்? ஸமாஸங்கள் நிறைந்த ஓஜஸ்,
அக்ஷரடம்பரம் (தடபுடல்) என்னும் கௌடரீதி வேணுமா? மாதுர்ய சௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சாலிரீதி வேணுமா?
தோஷலேசங்களாலும் ஸ்பர்சிக்கப் படாததும் ஸமக்ரகுண கும்பிதமும் வீணையின் ஸ்வரத்தின் ஸௌபாக்யத்தை யுடையதும்
(விபஞ்சீஸ்வர ஸௌபாக்யையான) வைதர்பரீதி வேணுமா? உமக்கு எல்லாம் பிடிக்கும் என்று நீரே

வேண்டிய வாக்கைக் கேளும். அம்மா! கௌடரீதி வேண்டாம். ஸமக்ரகுணா பேதமான வைதர்ப்பரீதியையும்,
மாதுர்ய ஸௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சால ரீதியையும் அளிக்க வேணும்.

————

‘ப்ரவ்ரஜ்யாதியுதா பரத்ர புருஷேபாதிர்வதீம் பிப்ருதீ பக்தி:ஸா’ என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்
பக்தியை ஸந்யாஸம் முதலிய துறவி குணங்களோடு கூடியதாய பரபுருஷனிடத்தில்
பதிவ்ரதா நிஷ்டையை உடையதாயும் வர்ணித்தார். அதிலுள்ள வேடிக்கைகளும் கவனிக்கத்தக்கன.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு மாலை-45–வள வெழும் தவள மாட–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 5, 2022

விசேஷ உணவுகளை யுண்டு மதம் பிடித்துக் கொழுத்திருந்த குவலயாபீடமென்னும்
கம்ஸனது யானையை ஒழித்தருளினாற்போலே
தம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் போக்கினபடியை அருளிச் செய்து
பெரிய பெருமாளுடைய ப்ரீதியே தமக்கு ப்ரயோஜன மென்று முடிக்கிறார் .

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே

பதவுரை

வளம் எழும் தவளம் மாடம் –அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களையுடைய
மா மதுரைநகரம் தன்னுள் –பெருமை தங்கிய வடமதுரையில்
கவளம் மால் யானை கொன்ற–கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலைசெய்தருளின
கண்ணனை-ஸ்ரீ க்ருஷ்ணனாகிய
அரங்கம் மாலை –கோயிலிலே (கண்வளரும்) எம்பெருமானைக் குறித்து
துளபம் தொண்டு ஆய–திருத்துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும்
தொல் சீர்–இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான
தொண்டரடிப் பொடி–தொண்டரடிப்பொடியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்–திருமாலையாகிய இத்திருமொழி
இளைய புன் கவிதை ஏலும்–மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும்
எம்பிராற்கு–பெரிய பெருமாளுக்கு
இனிதே ஆறே–பரம போக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.)

விளக்க உரை

கவளம் என்று யானையுணவுக்குப் பெர்.
“களவமால்யானை” என்றும் பாடமுண்டு.
அப்போது கலப: என்னும் வடசொல் களவமெனத்திரிந்ததாம்
ஒரு பருவத்தில் பெருத்த யானை யென்றபடி.

இளைய புன் என்பவை -சப்தத்தில்
இளமையையும் கவித்வத்தில் குற்றத்தையும் கூறும்.

எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பிய வையாயினும்,
எனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரிய பெருமாளுக்கு
இது ஆராவமுதமாயிருக்கு மென்கிறார்.

“இப் பிரபந்தம் கற்றார்க்குப் பலஞ்சொல்லா தொழிந்தது-
இவ்வுகப்புத்தானே அவர்களுக்குப் பலமாகையாலே” என்ற வ்யாக்யாந ஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

அடிவரவு:-
காவல் பச்சை வேதம்
மொய்த்த பெண்டிர் மறம் புலை வெறுப்பு மற்றும் நாட்டினான் ஒரு நமனும் எறி வண்டு மெய்
சூது விரும்பி இனிது குட பாய் பணி பேசு கங்கை வெள்ளம் குளித்து போது
குரங்கு உம்பரால் ஊர் மனம் தவமார்த்து
மெய்யுள்ளம் தாவி மழை தெளி மேம்பொருள்
அடிமை திரு வான் பழுதில் அமரப் பெண் வளவெழும் கதிர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-44 –பெண்ணுலாம் சடையினானும்–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 5, 2022

கீழ்பாட்டுக்களில் கூறிய பாகவத வைபவம் நன்கு ஸம்விக்கக் கூடியதென்பதை ஸ்தாபிப்பதற்காக
ஸ்ரீகஜேந்த்ராழ்வானுடைய சரிதத்தை அநுஸந்தித்துக் காட்டுகின்றார்;
சிவன் பிரமன் முதலாயினோர் தாங்கள் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்று நெடுங்காலம்
தவம் புரிந்தும் அவர்கட்கு அப்பேறு கிடையாமையாலே வெள்கி நிற்க்கும்படியாயிற்று;
கஜேந்த்ராழ்வான் மநுஷ்யஜாதியுமல்ல; மிகவும் நீசமான திர்யக்ஜாதி.
அப்படியிருந்தும் எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு எளிதில் பாத்திரமாய்விட்டது.
ஆகையாலே ஜாதியின் சிறப்பு உபயோகமற்றது என்கிற அர்த்தம் இப்பாட்டில் அர்த்தாத் ஸூசிதம்.

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே

பதவுரை

பெண் உலாம் சடையினானும்–கங்காநதி உலாவுகின்ற சடையையுடையனான சிவனும்
பிரமனும்–நான் முகக்கடவுளும்
உன்னைக் காண்பான்–உன்னைக் காண்பதற்காக
எண் இலா ஊழி ஊழி–எண்ண முடியாத நெடுங்காலமாக
தவம் செய்தார்–தவம் புரிந்தவர்களாய் (அவ்வளவிலும் காணப் பெறாமையாலே)
வெள்கி நிற்ப–வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருக்க
அன்று–அக்காலத்திலே
ஆனைக்கு–(முதலைவாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக
வந்து–(மடுவின் கரையில்) எழுந்தருளி
விண் உளார் வியப்ப அருளை ஈந்த –நித்யஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரம க்ருபையைச் செய்தருளிய
கண்ணறாய்–(என்னிடத்து அருள் செய்யாமையாலே) தயவில்லாதவனே!
உன்னை–உன்னை
களை கணா–தஞ்சமாக
கருதும் ஆறு என்னோ–நினைக்கலாகுமோ?

விளக்க உரை

வெள்கிநிற்ப-
தங்களுடைய சிரமம் வீணாய் ஒழிந்தமையை நினைத்து வெட்கப்பட்டுத் தலைகுனிந்து
தரையைக்கீறி நிற்கையில் என்கை.
அன்றியே,
வெள்கிநிற்ப-
வெட்கப்பட்டு நிற்கும்படியாக என்றுமுரைக்கலாம்.
ஒரு தபஸ்ஸும் செய்யாத ஒரு யானைக்கு அருளையீந்த்து பிரமனுக்கும் சிவனுக்கும் லஜ்ஜாஹேதுவாக ஆமன்றோ.

அவர்களுக்கு வெட்கமாவது-
ஐயோ! முதலையின் வாயிலே அகப்படாமல் தபஸ்ஸிலே இழிந்து என்ன காரியஞ்செய்தோம்! என்றுபடும் லஜ்ஜை.
அப்படி அவர்கள் லஜ்ஜைப்படும்படியாகவும் விண்ணுவார் ஆச்சரியப்படும்படியாகவும் வந்து என்க.

வியப்ப –
பரஹ்மாதிகள் நெடுங்காலமாக எதிர்பாராநிற்க அவர்களையும் எங்களையும் அநாதரித்து
ஒரு திர்யக்ஜந்துவின் காற்கடையிலே அரைகுலையத்தலைகுலைய ஓடிப்போய்விழுவதே! என்று
நித்யஸுரிகள் வியப்ப கண்ணறாய் ஸ்ரீ கண்ணறை யென்பதன் விளி.

“உன்னையென்னோ களைகணாக் கருதுமாறே”
ஆஸ்ரித பக்ஷபாதியான உன்னை ஜகத்துக்குப் பொதுவான ரக்ஷகனென்று
சொல்லுமவர்கள் மதிகேடரென்றுகிறார்
(தேவாநாம் தாநவா நாஞ்ச ஸாமாந்ய மதிதைவதம்’ என்கிற பந்தம் கிடக்க
சிலர்க்காகச் சிலரை அழிக்கிற இவனை ஸர்வரக்ஷகனென்று நினைக்கலாமோ?” என்பது
வ்யாக்யாநஸுக்தி.

களைகண்-ரக்ஷகம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-43–அமர ஓர் அங்கம் ஆறும் –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

April 4, 2022

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே

பதவுரை

அரங்கமா நகருளானே!-;
ஓர் அங்கம் ஆறும்–(வேதத்தின்) விலக்ஷணமான ஆறு அங்கங்களையும்
ஓர் வேதம் நான்கும்–நான்கு வேதங்களையும்
அமர ஓதி–நெஞ்சில் பதியும்படி அதிகரித்து
தமர்களில் தலைவர் ஆய–பாகவதர்களுக்குள்ளே முதன்மையான
சாதி அந்தணர்களேனும்–ப்ராஹ்மண ஜாதீயர்களாயினும் (அவர்கள்
நுமர்களை–தேவரீருடைய ஜந்மத்தைப்
பழிப்பர் ஆகில்–(அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில்
நொடிப்பது ஓர் அளவில்–ஒரு நிமிஷகாலத்துக்குள்ளே
அவர்கள் தாம்–அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம்
ஆங்கே–அப்போதே
புலையர் –சண்டாளராவர்கள்
(போலும்-வாக்யாலங்காரம்.)

விளக்க உரை

ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்று வேதங்கள் நான்கு;
சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு;
இவற்றை யெல்லாம் கண்டபாடம் பண்ணி அவற்றின் பொருள்களையும் அறிந்து,
அவ்வறிவுக்குப் பலனாக பகவத் கைங்கர்யத்தில் முதன்மையாக ஊன்றியிருக்கும்
சிறந்த அந்தணர்களா யிருந்தபோதிலும் அவர்கள்,
கீழ்க்கூறிய யோக்யதைகளெல்லாமில்லாமல் கேவலம் பகவத்தைங்கர்ய மொன்று மாத்திரமுடைய
ஒரு ஸ்ரீவைஷ்ணவரை (அதாவது சண்டாளஜாதியிலே பிறந்தவரை)
அந்தப் பிறவியைப் பற்றி இகழ்வாக நினைத்து தூஷிப்பார்களானால்
தூஷிக்குமவர்கள் தாங்களே ப்ராஹ்மண்யம் கெட்டுக் கர்மசண்டாளராயப் போவர்கள்.

இப்படிப் போவது ஜந்மாந்தரத்திலோ வென்னில்; அன்று தூஷித்த அந்த க்ஷணத்திலேயே சண்டாளராயொழிவர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.