Archive for the ‘பெரியவாச்சான் பிள்ளை’ Category

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் –கூடாரை வெல்லும் சீர்–

January 10, 2023

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————–

அவதாரிகை –

நோற்றால்
அவன் பக்கல் பெறக் கடவ பேறு
சொல்லுகிறார்கள் –

(கீழே சம்யா பத்தி -உபகரணங்கள் பிரார்த்தனை
சா யுஜ்யம் -யுக -சேர்ந்து இருந்து கல்யாண குண அனுபவம் இதில்-
கூடி இருந்து குளிர்ந்து மகிழ்ந்து சாயுஜ்யம் -ஸம்மானம் பிரார்த்தனை
ஆக இரண்டு பட்டாலும்
சாம்யா பத்தியும்
குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது -)

பெண்காள் நம்மோடு ஓத்தான் ஒருவன் ஈஸ்வரன் உண்டாகில் இறே
நம் பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த சங்கு உண்டாவது –
இனி தான் சங்கங்கள் பல வேணும் என்றி கோள்-
ஒன்றைத் தேடினோம் ஆகிலும் அத்தோடு ஒத்த பல சங்குகள் கிடையாதே –

1-நம் பாஞ்ச சன்னியத்தையும்
2-புள்ளரையன் கோயிலில்  வெள்ளை விளி சங்கையையும்
3-ஆநிரை இனம் மீளப் பசு மேய்க்கும் போது குறிக்கும் சங்கையும் கொள்ளுங்கோள் –

பறை என்றீர்கள்
ஆகில் நாம் உலகு அளந்த போது
ஜாம்பவான் நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு –
அத்தை தரலாய்த்து –

பெரும் பறை என்றி கோளாகில்
நாம் லங்கையை அழித்த போது
நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு அத்தை தரலாய்த்து –

சாலப் பெரும் பறை -என்றி கோளாகில் –
அற விஞ்சின பறையாவது
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்கக் குடமாடுகிற போது –
நம் அரையில் கட்டி ஆடிற்று ஒரு பறை உண்டு அத்தைக் கொள்ளுங்கோள் –

பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்கு பெரியாழ்வார் உண்டு –
அவரைப் போலே உங்களுக்கும் நமக்கும் சேரக் காப்பிடுகை அன்றிக்கே
உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையும் கொண்டு போங்கோள்

கோல விளக்குக்கு
உபய பிரகாசகையான நப்பின்னை நின்றாள் இறே

கொடிக்கு
கருளக்   கொடி ஒன்றுடையீர் (பெரிய திருமொழி -10-8 )என்று
நீங்கள் சொல்லும் பெரிய திருவடியை கொண்டு போரி கோளே

விதானத்துக்கு அன்றோ நாம் மதுரையில் நின்றும் இவ் வூருக்கு வருகிற போது
நம் மேல் மழைத் துளி படாத படி தொடுத்து
மேல் விதானமாய் வந்த நம் அநந்தனைக் கொண்டு போங்கோள் –

உங்களுக்கு செய்ய வேண்டியது இத்தனையே என்றான்

மார்கழி நீராடக் போம் போதைக்கு வேண்டுமவை இவை –
நோற்ற அனந்தரம் நாங்கள் உன் பக்கல் பெறக் கடவ இன்னம் சில
சத்கார விசேஷங்கள் உண்டு –
இவற்றிலும் அவை அந்தரங்கமாக இருப்பன சில
அவையும் நாங்கள் பெறுவோமாக ஆக வேணும் என்று வேண்டிக் கொள்கிறார்கள் –

ஸ்ரீ வைகுண்டம் -நித்ய விபூதி- ஸ்வயம் வியக்தம்-ஸ்வயம் பிரகாசம் –
தத் விஷ்ணோ பரமம் பதம் – -ஸ்திரம் அநந்தம் ஆனந்த மயம் –
ஸ்வேந ரூபேண ஸ்வரூப ஆவிர்பாவம் -அபஹத பாப்மா இத்யாதி அஷ்ட குணங்களில் சாம்யம் –

மரம் சரீரம்-இரண்டு பறவைகள் -சமானம் வ்ருக்ஷம் -ஞான ஆனந்தத்தால் சாம்யம் –
ஓன்று கர்ம அனுபவம் புஜித்து மழுங்கி -ஓன்று அகர்ம வஸ்யனாய் ஆனந்தமே வடிவு
அனுபவம் பொது -சாம்யம் இல்லையே இங்கு –
அங்கு தான் ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –

கூடி இருந்து அனைத்துக் கல்யாண குணங்களை – அனுபவித்து குளிரலாம் –
ஸாயுஜ்யம் -ஸ யோகம் -கூடி -ஸமான பாவனை -ஆனந்த அனுபவம் –
நோன்புக்கு உண்டான சம்மானங்களைப் பிரார்த்திக்கிறாள் இதில் –
ப்ரஹ்மம் வேறே ஜீவர்கள் வேறே -ஸஹ -கூடவே என்றாலே -தர்சனம் பேவ ஏவச –
ஐக்யா பத்தி இல்லையே -கூடினதாகவே இருக்குமே –

பாஷாண கல்பம் இல்லையே -அநிஷ்ட நிவ்ருத்தி மட்டும் போராதே -இஷ்ட பிராப்தியும் உண்டே –
கூடிற்றாகில் நல் உறைப்பு -அது அதுவே -அவர் அவராக நான் நானாக –
சேஷி ஸ்வாமி சர்வ நியாந்தா சர்வ தார்யமாய் அவன் -சேஷமாய் சொத்தாய் நியமிக்கப்பட்டு தாங்கப்பட்டு நாம் –
தானும் யானும் எல்லாம் தானாய் கலந்து ஒழிந்தோம் -தேனும் பாலும் அமுதமும் கன்னலும் போல்
கூடி இருந்து –அந்தமில் பேர் இன்பத்தோடு அடியாரோடு இருந்தமை –

கீழில்-
தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று –
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –

(அங்கே தான் நாம் நாமாக ஸ்வரூப ஆவிர்பாவம் -மூடிய அழுக்கு நீங்கப் பட்டு –
புண்ய பாப விதூய -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -ஸ்வேந ரூபேண -இயற்கை ஸ்வரூபம் அடைகிறோம் –
வி குண்டம் குறைவே இல்லாமல் அன்றோ அங்கு – –அர்ச்சிராதி –12 -லோகங்கள் தாண்டி –
விரஜா நீராடி ஸூஷ்ம சரீரம் போக்கி -ஸ்வரூப ஆவிர்பாவம் -சுத்த ஸத்வ திரு மேனி பெற்று -ப்ரஹ்ம அலங்காரம் -)

நேற்று சாம்யா பத்தி மோக்ஷம்-அஷ்ட குண சாம்யம் -உபகரண பிரார்த்தனை –
இன்று சாயுஜ்யம் மோக்ஷம்-ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா – கூடி இருந்து -தமிழ் படுத்தி இங்கு
பக்தைர்ஸ் பாகவத ஸஹ -அனுபவம்-நோன்புக்கு ஸம்மானம் )

(நெய் உண்ணோம் -விரதம் ஆரம்பிக்க -இங்கு முடியும் பொழுது அனைத்தும் வேண்டுமே)

கீழில்-
தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று -(ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே )
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –

(விரஜையில் நீராடி அமானவன் கர ஸ்பர்சம் சதா மாலா ஹஸ்தா -இத்யாதி அலங்காரம் உண்டே)

தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்கிறபடியே
கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறுதியிட்டு
பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் உத்தேசியமான புருஷார்த்த ஸித்திக்கும்
அனுகுண அலங்காரம் அவனே பண்ண வேணும் என்கிறது –

நோற்றால் பெறக் கடவ பேறு சொல்கிறது –
இத்தால்
ப்ரஹ்ம அலங்கார ரேனோலங்குர்வந்தி-
என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாதாயத்தாம் என்கிறது

இப் பாட்டில்
நோற்றால் -அவன் பக்கல் பெருமவற்றைச்
சொல்கிறார்கள்

—————————

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

கூடாரை வெல்லும் –
ஆந்தனையும் பார்த்தால் –
ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை –
அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –

சீர் –
எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே –
வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் –
அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –
சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே-
அம்புவாய் -மருந்தூட்ட தீர்க்கலாம்
நீர் கொன்றாப் போலே இதுக்கு பரிகாரம் இல்லை –

பெண்காள் –
நம்மை எளிவரும் இயல்வினன் என்று
அழகிதாக வறிந்து கொண்டி கோள்
எங்கனே –
அபேக்ஷித்தது தருகிறோம் என்கிற அளவைக் கொண்டு
நம்மையும் நம்முடைய சர்வஸ் வத்தையும் உங்களதாக்கிக் கொண்டு
உங்களை வெல்ல இருந்த நம்மைத் தோற்பித்துக் கொண்டி கோள்
எங்கனே
ஜெய அபஜெயங்கள் நாம் நினைத்த படி இன்றிக்கே இருந்ததீ -என்ன

கூடாரை வெல்லும் சீர்
கூடும் என்பாரை வெல்லும் அத்தனை போக்கி
கூடுவோம் என்பாரை வெல்லலாமோ உன்னால்

கூடாரை வெல்லும்
பரசு ராமன் இருபத்தொரு படி கால் ஷத்ரியரை வென்ற உனக்கு
ஒரு ஷத்ரிய புத்ரன் எதிரோ -என்று பெருமாளை வெல்ல நினைத்து வந்து
தன் கையில் வில்லை அவர் கையிலே கொடுத்து
நான் ப்ராஹ்மணன் என்று நமஸ்கரித்துப் போந்தான் –
வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் இவராய்த்து தோற்பது –

ராவணன் இந்த்ராதிகளை வென்ற எனக்கு ஒரு மனுஷ்யன் எதிரோ என்று இருக்க –
திருவடியை இட்டும்
அங்கதனை இட்டும் பின்பு
வில் பொகட்ட அளவில் -இன்று போய் நாளை வா -என்னும் இத்தனையும் சொன்ன இடத்தில் –
வணங்கலில் அரக்கனான பின்பு (9-8 )
ஆந்தனையும் பார்த்தோம் -என் செய்வோம் என்றாய்த்துக் கொன்றது

(வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன்   தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ்  சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-5-)

பின்பு வில்லை எடுத்திலன் ஆகில் பெருமாளை வென்றானாய் விடும் –
லோகம் பண்ணின பாக்யத்தாலே பின்பு வில் எடுத்தான்
பெருமாள் அவனுக்குத் தோற்க்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலர் –

கூடாரை வெல்லும் சீர்
ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட ஈரைந்து தலையான் —-என்று
ஒரு படியாலும் கூடேன் என்று அவனை இறே வென்றது –

கூடுவேன் என்ற விபீஷணனுக்கு வில்வெட்டி இறே செய்தது –
(வில்வெட்டி இறே செய்தது-அவன் சொன்னது எல்லாம் கேட்டான் )
ஸூக்ரீவ வசனம் ஹனுமான் வசனம் -என்று கூடினாருடைய
குற்றேவல் கொண்டு அபிஷேக பிரதானமும் பிராண ஹரணமும் பண்ணும் படி இறே தோற்ற படி –

அர்ஜுனனோடு உறவு பண்ணுவோம் -கிருஷ்ணன் காலிலே வணங்கோம் என்ற
துரியோதனனை வெல்ல வல்லனானான் –

நீ சொல்லிற்றுச் செய்வேன் என்ற பாண்டவர்களுக்கு –
எல்லிப் பகல் என்னாது எப்போதும் ( பெரிய திருவந்தாதி 19 )-சர்வ காலமும்
தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணித் திரிந்தான்

(சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-)

வெல்லும் சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தால் –
கூடுவாரை சீலத்தாலே வெல்லும் –
கூடாதாரை ஸுர்யத்தாலே வெல்லும்

சீர்
ஸுர்யம் அம்புக்கு இலக்காகும் —
சீலம் அழகுக்கு இலக்காகும் –
(ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்களோ அறியேன் )

ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம் கொலோ ?அறியேன்
ஆழி அம் கண்ண பிரான் திரு கண்கள் கொலோ ? அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
தோழியர் காள் அன்னைமீர் ! என் செய்கேன் துயராட்டியேனே–7-7-1

அம்புக்கு இலக்கானார்க்கு மருந்து இட்டு ஆற்றலாம்
சீலமும்
அழகும் நின்று ஈரா நிற்கும்

ஈர்கின்ற கண்கள் -(திருவாய் -8-1 )
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ -(திருவாய் -10-3-1 )

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

அம்பு தோல் புரையே போம் –
அழகு உயிர்க் கொலை யாக்கும்

வெல்லும் சீர்
ஸ்வரூப அனுசந்தானம் பண்ணி வாரோம் -என்று இருப்பார்
ப்ரதிஞ்ஜையை அழித்து வர பண்ணிக் கொள்ளவற்றாய் –
ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தாலே வாசல் விட்டுப் புறப்படோம் என்று
இருப்பாருடைய அபிமானத்தை முறித்து
தன் வாசலிலே வரப் பண்ணின குணம் –
தேஹாத்ம அபிமானிகளை தலை சாய்ப்பிக்கச் சொல்ல வேணுமோ

நலமுடையவன் என்னா-
தொழுது எழு -என்றார் இறே குணங்களுடைய எடுப்புக் கண்டு

வெல்லும் சீர்
அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும் –
சர்வஞ்ஞரை எத்திறம் என்னப் பண்ணும்

கூடாரை வெல்லும் –
தங்கள் பட்ட இடரை அறிவித்து அத்தலையை தோற்பிக்க நினைத்தார்கள்
அவன் தன் தோல்வியைக் காட்டி அவர்களைத் தோற்பித்த படியைச் சொல்லுகிறது
எங்களைத் தோற்பித்த நீ யாரை வெல்ல மாட்டாய் -என்கிறார்கள்
அதாவது –
நாங்கள் வந்து -உன்  முன்னே  நின்று -வார்த்தை சொல்லும்படி -பண்ணினாயே
ஆந்தனையும் பார்த்தால் –
ந நமேயம்(வணங்கலில் அரக்கன் )-என்று கூடாரை வெல்லும் அத்தனை –
கூடினால் தான் தோற்கும் அத்தனை

சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தாலே –
கூடுவாரை சீலத்தாலே வெல்லும் –
கூடாதாரை ஸூ வீர்யத்தாலே வெல்லும் –
அழகுக்கும் அம்புக்கும் இலக்காகும்(சூர்ப்பணகை ராவணன் )

அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும்
சர்வஞ்ஞரை – எத்திறம் -என்னப் பண்ணும்(மூவாறு மாசம் மோஹித்தார் ஆழ்வார் )
சத்யேந லோகான் ஜயதி-இத்யாதி வத்

(சத்தியமே பேசி உலகங்கள் வென்று -ஜடாயு மோக்ஷம் இதனாலே -மனித பாவனையால் –
தீனர்களை தானம் அருளி -குருக்களை அனுகூலம் பண்ணி- சத்ருக்களை வீரத்தால் -வெல்லுமவன் )

அம்பு வாய் மருந்தூட்டித் தீர்க்கலாம் –
இதுக்கு பரிஹாரம் இல்லை -நீர் கொன்றால் போலே
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து(9-6) -என்னக் கடவது இறே

(நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-)

சத்ருக்களை வில்லைக் காட்டிக் கொல்லும் அத்தனை –

ச சால சாபம் ச முமோச வீர -என்று
வில் பிடித்த பிடியைக் கண்டு வில்லை ராவணன் பொகட்டான்
பின்னை வில் எடாதே ஒழிந்தான் ஆகில் பெருமாளை வென்றே போகலாயிற்று
வில் கை வீரன் பெருமாள் –
வெறும் கை வீரன் ராவணன் என்றான் வால்மீகி  ருஷி(அஞ்சலிம் பரமாம் முத்ரை )

தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷன்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

விஜிதாத்மா -நான்கு திருக் கல்யாண குணங்கள் காட்டும் கண்ணாடி–விஜிதாத்மா -சங்கரர் -அனைவரையும் வென்றார்
பக்தர்களால் ஜெயிக்கப் பட்டவர் பட்டர் -தோற்கடிக்கப் பட்டவர் – விதேயாத்மா -சேர்த்து -அவிதேயாத்மா -யாருக்கும் கீழ் படாதவர்
வினை கொடுத்து வினை வாங்குவார் போலே அகாரம் சேர்க்க வேண்டாமே-தன்னுடைய அடியவர் சொன்னபடி விதேயர்
சத் கீர்த்தி-இத்தையே கீர்த்தியாக கொண்டவன்–கூடாதார் சத்ருக்கள் மட்டும் இல்லை
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஆண்டாள் விரோதிகள் அனைவரையும் வியாக்யானம்-அஞ்சிறையும் மட நாராய் தூது விட வந்து அருளி –
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்–வளம் மிக்க மால் பெருமை மன் உயிரின் தண்மை–உளமுற்று -தளர்வுற்று நீங்க நினைத்த -மாறனை
பாங்குடனே சேர்த்தான் மகிழ்ந்து -கூடாரை வெல்லும் சீர் –
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் -சௌசீல்யம் தெரியுமா -கேட்டானாம் மகதோ மந்தைச்ய நீர் சம்ச்லேஷ –
புரை அறக் கலந்து நாடு புகழும் பரிசு -நாம் பெரும் சம்மானம்
இன்னம் அங்கே நட நம்பி–எற்றுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய்
மட்டை அடி -மின்னிடை மடவார் -நம் ஆழ்வார் -உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் பந்தும் கழலும் தந்து போகு நம்பி
போகு நம்பி -உன் தாமரைக் கண்ணும் செய்ய வாயும் –ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோம்
மின்னிடையார் சேர் கண்ணன் –தான் தள்ளி உன்னுடனே கூடன் என்று –குலசேகரர் ஆழ்வார் -வாசுதேவ உன் வரவு பார்த்தே –
நீ உகக்கும் -கண்ணினாரும் அல்லோம் ஒழி –என் சினம் தீர்வன் நானே-கோபிகள் -பிரணய ரோஷம்
காதில் கடிப்பிட்டு –எதுக்கு இது இது என் இது என்னோ–கதவின் புறமே வந்து நின்றீர் -திருமங்கை ஆழ்வார்
நிச்சலும் என் தீமைகள் செய்வாய்–அல்லல் விளைத்த பெருமானை–குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற நந்த கோபாலன்
விநயம் காட்டி சேர்த்துக் கொள்வான் –

——————–

கோவிந்தா –
கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத
மாத்ரத்திலே ரஷித்த படி –

கோவிந்தா
கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில்
கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ

கோவிந்தா
பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே-
ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-

இட்டமான பசுக்களை –
நாலிரண்டு நாள் தீம்பிலே வளர்ந்து நடந்து பெண்களோடு கலந்து வந்தால்
மாதா பிதாக்கள் தாழ்த்து வந்தது என் என்றால்
பசு மேய்க்கப் போனேன் என்று கண்ணழிவு சொல்லலாம் படி ஒதுங்க நிழலாய் இருக்கை –

காமுகராய் இருப்பார் உகந்த விஷயங்களில் காட்டிலும் கடகரை இறே உகப்பது-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -(திருவாய் -10-3-10 )
கன்று மேய்த்து இனிது உகந்த –
காலி மேய்க்க வல்லாய் -(திருவாய் -6-2 )
கன்று மேய்த்து விளையாட வல்லானை -(பெரிய திருமொழி -2-5 )

சாமான்ய ரக்ஷணமும் –
விசேஷ ரக்ஷணமும் –

தன் வாயாலே பறித்து மேய்வாருடைய -(பசு-உபாயாந்தர பரர் )ரக்ஷணமும் –
தான் பறித்துக் கொடுப்பாருடைய (கன்று -பிரபன்னர் )ரக்ஷணமும்

கோவிந்தா
சேரோம் என்னும் அத்யாவசியம் இல்லாத திர்யக்குகளோடும் பொருந்தும் படியான
நீர்மையை யுடையவன் –

கோவிந்தா –
பசுக்களுக்கும் தோற்குமவனே
கூடுவோம் என்னும் அபி சந்தி இல்லாதாரையும் (தடுக்காதவரை -அத்வேஷம் மாத்ரம் )ரஷித்த படி –

(இது முதல் மூன்று பாசுரங்களில் கோவிந்தா -ஸ்ரீ ரெங்கத்திலும் தேர் இழுக்கும் பொழுதும் கோவிந்தா என்றே சொல்லுவோம் அன்றோ)

————-

வுன் தன்னைப் பாடிப் –
ஹிரண்யாய நம -என்கை தவிர்ந்து
வகுத்த உன்னுடைய பேரை
ஸுயம் பிரயோஜனமாகச் சொல்லப் பெறுவதே -என்கை –
கோபீ ஜன வல்லபனான உன்னை பாடுகையே எங்களுக்கு பிரயோஜனம் போரும் -என்னவுமாம் –

உன் தன்னைப் பாடி
ஹிரண்ய புரம் போலே இவன் பேர் சொல்ல ஓட்டுவார் இல்லை போலே காணும் பண்டு –
அநந்தரத்திலே இவர்கள் கோபிப்பார்கள் என்று தவிர்ந்த இழவு எல்லாம்
சந்நிதியில் பாடப் பெறுகையாலே தீரப் பெற்றது –

உன் தன்னைப் பாடி
வகுத்த உன்னுடைய பேரை ஸ்வயம் பிரயோஜனமாகப் பாடப் பெறுகையாலே –
வாயினால் பாடி( 5 )-என்று உபக்ரமித்தபடி
நா படைத்த பிரயோஜனம் கொள்ளப் பெற்றோம்

உன்னைப் பாடி என்னாதே
உன் தன்னைப் பாடி என்கிறது
அத் தலை இத் தலை யாவதே –
உன் பணியை நாங்கள் ஏறிட்டுக் கொள்வதே

கோவிந்தா உன் தன்னைப் பாடி
கோவிந்தன் குழல் கொடூதின போது -என்று நீ பாடும் போது –
கேயத் தீங்குழல் ஊதிற்றும்-என்னும் படி
பெண்கள் புணர்ப்பை குழலிலே இட்டுப் பாடி –
எங்களை தோற்ப்பிக்கை அன்றிக்கே
எங்கள் வாசல்களில் பாடி ஆவி காத்து இராதே (நாச்சியார் -8-3 )
உன் வாசலிலே வந்து கோவிந்தா என்று பாடும் படி ஆவதே

வுன் தன்னைப் பாடிப்
விலக்கினது பெற்ற படி –
ஹிரண்யாய என்கை தவிர்ந்து (ஓம் நமோ நாராயணாய என்று )உன்னைச் சொல்லப் பெறுவதே என்கை –

பாடி யுன் தன்னை
பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் உன்னைப்
பாடுகையே பிரயோஜனம் என்றுமாம்

சீர்
சீலவத்தையின் மிகுதியே என்னவுமாம்(கல்யாண குணங்களையே சீர் என்கிறது _

————–

பறை கொண்டு –
பிராப்யத்திலே
பிரபாக வ்யவஹாரம் –
ஊருக்கு -பறை -என்கிறது -தங்களுக்கு பிராப்யம்-

பறை கொண்டு
பாடிப் பறை கொண்டு என்று அடியில் சொன்ன படியே
ஊரார் இசைந்த பறையைக் கொண்டு –
ப்ராப்யத்தில் ப்ராபக வியவஹாரம் பண்ணுகிறார்கள் ஆற்றாமையால் -ஊருக்கு இறே
தங்களுக்கு ப்ராப்யம் இறே

(பாடுவதே இவர்களுக்கு ப்ராப்யம்
இத்தை உபாயமாக த்வனிக்க ஊராருக்காகப் பாடுகிறார்கள் இப்படி )

பறை கொண்டு
ப்ராப்யத்தில் ப்ராபக வ்யவஹாரம் -ஊருக்குப் பறை என்கிறது(பாடுவதே பறை -ஸ்வயம் பிரயோஜனம் -பாடிப் பறை உபாயம் சப்தம் )

————

யாம் பெரும் சம்மானம் –
தோளில் மாலையை வாங்கி இடுகை -இவருக்கு பெறாப் பேறு -என்கை
பெருமாள் தோளில் மாலையை வாங்கி இட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்
பட்டரும் பணிக்கும்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும்படி கொண்டாடுகை –

யாம்
தேவகீ புத்ர ரத்னமான உன் வாசி அறிந்து பற்றி உன்னை ஆச்ரயித்தார்க்கு
பேறு தப்பாது என்கிற வ்யவசாயம் யுடைய நாங்கள்

பெறும் ஸம்மானம்
வெறும் ஊரார் காரியமே யாக ஒண்ணாது –
எங்களுடைய அபிமதமும் பெற வேணும்

யாம் பெறும் ஸம்மானம்
பெருமாள் பிராட்டிக்கு பண்ணின ஸம்மானம் போலே –
ஆத்வாரம் தொடர்ந்து ஏத்தின பிராட்டிக்கு தன் தோளில் மாலையை வாங்கி
இட்டு
காலைப் பிடித்து நில் என்று போன ஸத்காரம் இறே
இவர்களுக்குப் பண்ணப் புகுகிறது

அவள் இவர் திருவடிகளைப் பிடிப்பது கைப் பிடித்த முறையால் –
இவர் அவள் காலைப் பிடிப்பது பிரணயித்தவத்தாலே

அவளுக்குச் சொல்லும் ஏற்றம் எல்லாம் ஸ்வரூப நிபந்தனம்-
இவனுக்கு சொல்லும் ஏற்றம் எல்லாம் பிரணயித்தவ நிபந்தனம்

அவனுடைய வியாபாரம் வைதம் –
இது ராக பிராப்தம் –
ஸ்வயம் ப்ரவ்ருத்தனாம் இடத்தில் விதி விஷயம் ஆக மாட்டாதே
அவ் விடத்தில் விதி நுழையுமாகில் போக மாட்டாதே

வெளித் திரு முற்றத்திலே -பிரசாதம் அவ்வளவில் வர
யாம் பெறும் ஸம்மானம் வந்தது என்பர் பட்டர்

யாம் பெரும் சம்மானம்
தங்கள் பேறு-
இவ்வளவில் வெளித் திரு முற்றத்தில் நின்றும் பிரசாதம் கொண்டு ஒருவன் வர
இது யாம் பெறு சம்மானம் வந்தது -என்று பட்டர் அருளிச் செய்தார்

பதி சம்மாநிதா சீதா -என்று தோளில் மாலையை வாங்கியிட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்
பட்டர் -பிரணயித்வத்தாலே காலைப் பிடித்து நில் என்றார் என்பர்
தாம் ஸ்ரீரிதி த்வதுப சம்ஸ்ரயணாந் நிராஹூ (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று கொடுத்தால் தட்டென் என்கை

யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சார்வ ஜநீநம் ஏதத்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-29-)

யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது
சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே
ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள்
உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும் தேவரீரை அன்றோ திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் )

(சுமந்திரன் செய்தி சொல்ல பெருமாள் பிராட்டிக்கு சம்மாநம் செய்து அருளிச் சென்றதுக்கு இரண்டு நிர்வாஹங்கள்)

யாம் பெறு சம்மானம்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும் படி அவள் கொண்டாடும்படி சொல்கிறது –

—————-

நாடு புகழும் பரிசினால் –
ஒருவன் கொடுக்கும்படியே
சிலர் பெறும்படியே-
என்று நாட்டார் கொண்டாட வேணும் –

நாடு புகழும் பரிசினால்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட அவமானம் மறக்கும் படியாக
ஒருவன் கொடுத்த படியே –
சிலர் பெறும் படியே என்று
நாட்டார் கொண்டாடும்படியாக வேணும் –
பாரோர் புகழ (1 )என்னும் படியே தலைக் கட்ட வேணும் —

கிருஷ்ணனும் சத்யபாமை பிராட்டியும் அர்ஜுனனும் திரௌபதியுமாக கால் மேல் கால் ஏறிட்டு கொண்டு இருக்க
சஞ்சயன் திருவாசலிலே வந்தான் என்று அறிவிக்க –
கிருஷ்ணன் அருளிச் செய்கிறான் -நம்முடைய இருப்புக் கண்டால் உகப்பானும் உகவாதார் மண் உண்ணும் படி
இவ் விருப்பைச் சொல்ல வல்லானும் ஒருவன் புகுர விடுங்கோள் என்ன
அவனும் புகுந்து -கண்டு -அப்படியே போய் –
துரியோதனனுக்கு கெடுவாய் –
அவர்கள் இருப்பு கண்டேனுக்கு உன் கார்யம் கெட்டது கிடாய் என்றான் இறே –

சுக சாரணர்கள் சென்று ராவணனுக்கு அவருடைய ஓலக்கத்தில் மதிப்பும்
அவருடைய வீரப்பாடும் கண்டோமுக்கு உனக்கு ஒரு குடி இருப்பு
தேடிக் கொள்ள வேண்டி இருந்தது –
ஊற்று மாறாதே நித்தியமாய் நடக்கிற ஐஸ்வர்யத்தை யுடையராய் உனக்கு வரம் தந்து
உன் கையாலே தகர்ப்புண்ணும் அவர்களை போல் அன்றிக்கே
உனக்கு முடி தந்தார்க்கும் முடி கொடுத்த ராஜா உன் தம்பிக்கு
லங்கையைக் கொடுத்தான் -வானரங்களும் ஆர்த்துக் கொண்டது –என்று சொன்னார்கள் இறே –

இப்படி தன்னை ஆஸ்ரயித்தாரை நாடு புகழும் படி இறே வாழ்விப்பது –
வாழ்வர் வாழ்வு எய்து ஞாலம் புகழ (திருவாய் -3-3-11 )-என்கிறபடியே –

நாடு புகழ என்று
யசஸ் பரராய்ச் சொல்லுகிறார்கள் அன்று –
புகழ்ந்து நாட்டார் உஜ்ஜீவிக்கை ஸ்வ லாபமாக நினைக்கையாலே
ஸூத்ரனை ஒளித்து வேண்டிப் பெறுமது இறே லோகம் இகழ்வது –
சர்வ ஸமாஸ்ரயணீயன் தானே
மேல் விழுந்து சத்கார பூர்வகமாகக் கொடுக்கிறது ஆகையால் புகழும் இறே

நாடு புகழும் பரிசினால்
பாரோர் புகழ -1-என்னும்படியே -ஒருவர் கொடுக்கும்படியே –
சிலர் பெறும்படியே-என்று கொண்டாட வேணும் –
சஞ்சயனும் ஸூக சாரணர்களும் இவனுடைய ஆஸ்ரித பக்ஷபாதத்தை புகழ்ந்து பேசினால் போலே

(சஞ்சயன் அர்ஜுனனும் திரௌபதியும் கண்ணனும் சத்யபாமையும் சேர்ந்து இருந்த பொழுது உள்ளே வரவிட்டு
ஆஸ்ரித பக்ஷ பாதி-அஸூயை இல்லாத சஞ்சயன் -யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ
யத்ர பார்தோ தனுர்-தர: தத்ர ஷ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம

சுக சாரணர்கள் ராவண தூதர்கள் -கண்டு உன்னால் வெல்ல முடியாது -என்று சொன்னார்கள் அன்றோ
விரோதிகளும் புகழும் படி ஆஸ்ரித பக்ஷ பாதம்)

——————

நன்றாகச் –
இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பெருமாளும் பிராட்டியும் கூட இருந்து
திருவடிக்கு பூட்டினாப் போலே பூண வேணும் –
சிலரை இட்டு ஒப்பிக்கை அன்றிக்கே
தானும் பிராட்டியும் கூட இருந்து ஒப்பித்த தன்னேற்றம் –
ஆபரணத்தைப் பூண்டு அவன் வரவு பார்த்து இராது ஒழிகை -என்றுமாம்

நன்றாக
இவனை ஒழிந்தாரைப் பாட வேண்டிப் பெறுமது பரிமித பலமாகையாலே –
படி வைக்க யுண்பார் பாடே பிச்சை புக்கு உண்ணும் மாத்ரம் –
காலன் கொண்ட பொன்னிட்டு ஆபரணம் பண்ணிப் பூண்பார் மாத்ரம் –
நாடும் புகழும் அளவன்றிக்கே அவன் தானும் சத்தை பெற்று நாமும் சத்தை பெற வேணும் –
இவர்களை ஒப்புவிக்கை அவனுக்கு ஸ்வரூபம் –
அவன் ஒப்பிக்க இசைகை இவர்களுக்கு ஸ்வரூபம் –

நன்றாக
இந்திரன் வரக் காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுத்து அருள –
திருக் கையிலே பிடித்துக் கொண்டு இருந்து
பெருமாளை ஒரு கண்ணாலும் திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க –
பெருமாள் பிராட்டி திரு உள்ளத்தில் ஓடுகிறதை அறிந்து
அடியார் தரம் அறிந்து கொண்டாடும் வீறுடைமைக்கு பர்யவசான பூமியான நீ கொடு என்ன
திருவடியை ஒப்புவித்தால் போலே
கிருஷ்ணன் நப்பின்னை பிராட்டியை விடுவித்து ஒப்பிக்கை யாய்த்து
நன்றாக ஒப்பிக்கை யாவது –

இவர்கள் நோக்குதியேல் என்னப் பண்ணிற்று ஒரு பூர்ண கடாக்ஷம் உண்டு இறே –
அப் பார்வை பட்ட இடம் இருக்கும் படியை மேலே சொல்லுகிறார்கள் –

நன்றாகச்
நாடு சிரிக்கும் படி –
காலன் கொண்ட பொன்னையிட்டு ஆபரணம் பூண்கை அன்றிக்கே
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் யஸ்ய துஷ்டாசி பாமிநி-என்று இந்திரன்
வரக் காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுக்க
அத்தை ஒரு கையிலே பிடித்து பெருமாளை ஒரு கண்ணாலும்
இத்தை இவனுக்குக் கொடுப்பது என்று திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க
பெருமாள் அத்தை அறிந்து அருளி –
ஆஸ்ரிதரை அறிவாய் நீ யன்றோ கொடுக்கலாகாதோ என்று அருளிச் செய்யக் கொடுத்தால் போலே
இருவரும் கூடிக் கொடுக்கும் ஆபரணம் -என்கை –

நன்றாக
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -(கௌஷீகிதி )என்று
விரஜைக்கு அக்கரைப் பட்டாரை-எம்பெருமான் தன்னை ஒப்பிப்பாரை இட்டு ஒப்பிக்கக் கடவது
இங்கு அங்கன் இன்றிக்கே தானும் பிராட்டியும் கூட ஒப்பித்த தன்னேற்றம் சொல்லுகிறது

(பஞ்ச சதான் அப்சரஸ் சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சனம் ஹஸ்தா
சதம் சூர்ணம் ஹஸ்தா சதம் வாசோ ஹஸ்தா )

நன்றாக
ஆபரணத்தைப் பூண்டு அவர் வரவு பார்த்து இராது ஒழிகை என்றுமாம் –

——————

சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்
பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று
இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி
மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –

சூடகமே
அணி மிகு தாமரைக் கையை (பெரிய திருமொழி கள்வன் கொல் )-என்று
தன் கையை இவர்கள் ஆசைப் படுமா போலே –
இவர்கள் ஆபரணம் பூண்ட கையை
அவன் மார்பிலும் தோளிலும் தலையிலும் வைத்துக் கொள்ள இறே அவனும் ஆசைப்படுவது –
அக் கைக்கு இடக் கடவ ஆபரணம் சூடகம் –
வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –
அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –
(பாணி கிரஹணம் முதல் அன்றோ )

சூடகமே
வெள்ளி வளைக் கைப் பற்ற -என்கிறபடியே
அநன்யார்ஹைகளாகப் பிடித்த கைகளிலே இறே முதல் ஆபரணம் பூட்டுவது
அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய் -என்னுமா போலே
அவன் சொல்லி மார்விலும் தலையிலும் வைத்துக் கொள்ளூம் கைக்கு இடும் சூடகம்
தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா -இத்யாதி வைத்த -முந்துறக் காணும் இடம்
முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்
கைத்தலம் பற்ற –

(கை -தோள் —-பாடகமே –ஆரோகணம் அவரோகணம் இல்லாமல்
கைத்தலம் பற்ற கானாக்கண்டேன்
வெள்ளி வளைக் கைப்பற்ற அநந்யார்ஹத்வம் பாணிக்ரஹணம் -சூடகம் -முதல் ஆபரணம்)

கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்-தன் மட மானினைப் போத என்று
வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ?

————-

தோள் வளையே –
அந்த ஸ்பர்சத்தாலே
அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –

தோள் வளையே
கையைப் பிடித்த அனந்தரம் –
அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் –
அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே

வேய் இரும் தடம் தோளினார் (திருவாய் – 6-2 )-என்று
சுந்தரத் தோளுடையான்-தோற்கும் படி தோள் படைத்த தோளுக்கு இடம் ஆபரணம்
வேய் மரு தோளிணை (திருவாய்-10-3-1 )-மெலியும் காலத்தில் இறே வளை பொறாது ஒழிவது –
இப்போது அணைக்கிற காலம் இறே

தோள் வளையே
அத்தலையில் ஸ்பர்சம் அணைக்க வேண்டி இருக்கையாலே
அணைத்த தோளுக்குத் தோள் வளையும் -என்கை

—————–

தோடே –
பொற்றோடு பெய்து -என்று
பண்டே தோடு இட்டாலும்
அவன் இட்டாப் போலே இராது இறே –

தோடே
தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே –
அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் –
இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த
சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –

கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று
அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே
இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது –

தோடே
பொற்றோடு பெய்து -என்று
பண்டே தோடிட்டாலும் இவன் இட்டால் போலே இராதே

தோடே
அணைத்தாலும் உறுத்துமவை -ப்ரியாவதம் ஸோத்பல –
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்னுமா போலே

நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்*
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்-
கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்*
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே

————–

செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம் –

செவிப் பூவே
அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம்

செவிப் பூவே
ஆக்ராணம்-பண்ணும் இடம் -(மேல் காதுக்கு -மேல் தோன்றிப்பூ ஆழ்வார் )
கண்ணாகவுமாம்

————–

பாடகமே –
அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –

பாடகம்
அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்

பாடகமே
அணைத்தால் துவண்டு விழுமிடம் –
அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்

———

சூடகமே இத்யாதி
1-பிடித்த கைக்கும் –
2-அணைத்த தோள்களுக்கும்
3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்
4-ஸ்பர்சத்துக்கும்
5-தோற்று விழும் துறைக்கும்

சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற —
திருக்கையால் தாள் பற்ற –

கையைக்
காலைப் பிடித்து இறே
நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

——–

என்றனைய பல்கலனும்-
பருப்பருத்தன சில சொன்னோம் இத்தனை –
நீ அறியும் அவை எல்லாம் என்கை –
பல பலவே யாபரணம் இறே –

என்றனைய பல் கலனும்
இவ்வளவிலே இருந்தது எண்ணுமது அன்றே –
பருப் பெருத்தன சிலவற்றைச் சொன்னோம் –
நீ அறியுமவை எல்லாம் என்கிறார்கள்-
பல பலவே ஆபரணம் -என்னக் கடவது இறே அவன் தனக்கு உட்பட –

என்றனைய பல்கலனும்
பருப் பெருத்தன சில சொன்ன இத்தனை -நீ அறியுமவை எல்லாம் என்கை –
பல பலவே ஆபரணம் இத்யாதி –இத்தசையிலே எண்ணப் போமோ –

பல பலவே யாபரணம் பேரும் பல பலவே,
பல பலவே சோதி வடிவு பண்பெண்ணில்,
பல பல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்,
பல பலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ-2-5-6-

————–

யாம் அணிவோம் –
வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள்
பூண்போம் -என்கிறார்கள்
அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -என்கை-

யாம் அணிவோம் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று –
பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –

இவ் வெல்லை வரும் வளவு இறே மலரிட்டு நாம் முடியோம் என்றது –
நாம் முடியோம் என்றால் பூட்ட மாட்டான்
அணிவோம் என்றால் பூட்டாது இருக்க மாட்டான் —
அவன் அலங்கரிக்கைக்கு இவர்கள் அனுமதியே அமையும்

யாம் அணிவோம்
ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒப்பிக்கக் கணிசிக்கிறார்கள் –

நாடு புகழும் பரிசினால் –யாம் அணிவோம்
நிறை புகழ் ஆய்ச்சியர் –(நாச்சியார் 4-11 )
அணி இழை யாய்ச்சியார் (திருவாய் 9-10-11 )-என்கிற இரண்டும் பெற வேணும் –

யாம் அணிவோம்
மலரிட்டு நாம் முடியோம் -2-என்ற இவர்கள் அனுமதி பண்ண அமையும் என்கை

————

ஆடை யுடுப்போம்-
பண்டு உடுத்தார்களோ -என்னில்
அவன் உடுத்து உடாதது உடை அன்று இறே என்று இருப்பது –
அவன் திருப் பரியட்டம் இவர்கள் அறையிலே யாம்படி கூறை
மாற வேணும் -என்றுமாம் –
நோன்பை முடிக்கையாலே நல்ல பரிவட்டம் உடுக்க -என்றுமாம் –
உடுத்துக் களைந்த -என்னுமவர்கள் இறே இவர்கள்
ஸ்வேத கந்த உக்தமாய் அவன் உடுத்து முசிந்த ஆடை -என்றுமாம் –

அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து –
அதுக்கு மேலே பாற்சோறு மூடும்படியாக நெய் பெய்து –
இத்தால்
பகவத் சம்பந்தமுள்ள திருவாய்ப்பாடியிலே
சம்ருத்தி எல்லாம் பிரியமாய் இருக்கும்படி –

ஆடை யுடுப்போம்
புனை இழைகள் அணிவும் என்றால் ஆடையுடையும் என்று அடைவு -(திருவாய் 8-9 )
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுங்கும் (பெரியாழ்வார் -3-9 )-என்றால்
பின்னை கூறை யுடுக்கை இறே அடைவு –

நாடு புகழும் பரிசினால் –ஆடை யுடுப்போம் –
கூறை யுடுக்கும் –அயர்க்கும்-(பெரியாழ்வார் -3-9 )-என்று
வசை சொல்லாத படி அரையிலே தொங்கும் படி உடுக்கை

கோவிந்தா உன் தன்னைப் பாடி –ஆடை யுடுப்போம் –
இவன் தூர வாசியான போது கோவிந்தன் -என்று புடவை பெறுகிறவள்
இவன் சந்நிதியில் சொன்னால் புடவை பெறக் கேட்க வேணுமோ

ஆடை யுடுப்போம்
முன்பு உடாதே இருந்து இப்போது உடுப்போம் என்கிறார்கள் அன்று –
அவன் உடுத்த உடுத்தும் இறே -உடையாவது –
இவர்கள் யுடுக்க உபக்ரமிக்க உடுத்தபடி பொல்லாது என்று
அவன் அழிக்கை இறே நன்றாக யுடுக்கை யாவது

நன்றாக –ஆடை யுடுப்போம்
அரையில் பீதக வண்ண வாடை கொண்டு(நாச்சியார் -13-1) -என்கிறபடியே
அவனைப் போலே வெளுப்போடே வாங்கி உடுத்தது அன்றிக்கே
உடுத்து முசித்து வேர்ப்பு மணத்தோடு கூடின கூறை மாறாடப் பட்ட உடையாய் இருக்கை

அணிவோம் –உடுப்போம்
பிரிந்து இருக்கில் இறே வரி
வளையால் குறைவிலமே–(திருவாய் -4-8 )
மேகலையால் குறைவிலமே -என்ன வேண்டுவது

பல் கலனும் யாம் அணிவோம் ஆடை யுடுப்போம்
எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும்(திருவாய் 4-3 ) -என்னக் கடவது இறே

அதன் பின்னே
பீதக வாடை யுடுத்தால் -கலத்தது உண்ணும் அத்தனை இறே

அதன் பின்னே
புறம்பே ஒன்றைப் பற்றினால்
அவையும் இல்லை –
அவனையும் கிடையாது –
அவனைப் பற்றினார்க்கு சர்வ லாபமும் உண்டு –

ஆடையுடுப்போம்
பண்டு உடார்களோ என்னில் —

கோவிந்தா உன்தன்னைப் பாடி ஆடை யுடுப்போம்
ஒருத்திக்குப் புடவை கொடுத்தது இவர்களுக்குச் செய்யச் சொல்ல வேணுமோ –
அவன் உடுத்துக் கொடுத்தது உடை -உடுத்துக் கொடுக்காத உடை அன்று என்கை
அதாவது கூறை மாறுகை -மாறாடுகை
புனை இழைகள் அணியும் ஆடையுடையும் புதுக்கணிப்பும் நினையும் நீர்மையதன்று இத்யாதி –
அப்பன் திருவருள் மூழ்கினள்-என்கிறபடியே –

புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மை யதன்று இவட் கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-குட்ட நாட்டுத் திருப்புலியூர் அப்பனோட்டை சம்பந்தமே இவளுக்கு புதுக்கணிப்பு

அவனோட்டை சம்பந்தமே இவர்கள் நன்மைக்கு எல்லாம் அடி என்கை
புதுக் கணிப்பும் –
அவன் உகப்பு ஒழிய தங்கள் உகப்பு பொகட்ட படி
நோன்பு முடிக்கையாலே நல்ல புரியட்டம் உடுக்க என்றுமாம்
உடுத்துக் களைந்த  நின் பீதகவாடை -என்னுமவர்கள் இறே

—————

முழங்கை வழி வாரக்
நம்பி திரு வழுதி வளநாடு தாசர் -நெய் படாதோ -என்ன
கிருஷ்ண சன்னதியாலே த்ருப்தைகளாய் இருந்தவர்களுக்கு
சோறு வாயில் தொங்கில் அன்றோ
நெய் வாயில் தொங்குவது -என்று பட்டர் அருளிச் செய்தார் –

வ்யதிரேகத்தில் நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்று
சொன்னவர்கள் இன்று ஆசைப் படுகிறார்கள் –

பாற் சோறு மூட நெய் பெய்து
நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்கிற விரதங்கள் ஸமாப்பித்து –
இவர்கள் வ்ரதத்துக்காகத் தவிர்ந்து இவர்கள் தவிருகையாலே
அவன் தவிர்ந்து ஊரில் நெய்க்கும் பாலுக்கும் போக்கில்லையே –

நெய் பெருமையாலும்
பால் பெருமையாலும் நீரிலே யாக்காதே
பாலில் யாக்கி
நெய்யை நிரம்ப விட்டு
நெய்யிடையிலே
சோறு உண்டோ என்று தடவி எடுக்க வேண்டும் படி இருக்கை

முழங்கை வழி வார
கிருஷ்ணன் சந்நிதியில் திருப்தைகளாய் இருக்கிறவர்களுக்கு
உள்ளுத் தொங்குகிறது அன்றே -கை வழியே வழிய

(அலங்காராசனத்துக்குப் பின் போஜ்யாசனம் தானே)

அதன் பின்னே பாற்சோறு-மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்(ஓங்கு பெரும் செந்நெல் கீழ் )
பகவத் சம்பந்தம் உண்டான திருவாய்ப்பாடியிலே ஸம்ருத்திகள் எல்லாம் இவளுக்கு பிரியமாய் இருக்கிறபடி-
நம்பி திருவழுதி வளநாடு தாசர் -நெய் வாயில் படாதோ என்ன
ஓரவல் (ஓர் அவில் -ஒரே அரிசி மணியாவது )வாயில் தொங்கில் அன்றோ நெய் வாயில் படுவது -என்று பட்டர் அருளிச் செய்தார்
கிருஷ்ண சந்நிதியாலே த்ருபத்தைகளாய் இருக்கிறார்கள்
பால் தொங்கில் அன்றோ நெய் தொங்குவது
நெய் யுண்ணோம் பாலுண்ணோம் -2-என்றது தனியாகை –

(எழ பிரார்த்தனை – கடாக்ஷம் பிரார்த்தனை – நடை அழகைப் பிரார்த்தகித்து மங்களா சாசனம் பண்ணி
அவன் இடம் அவனையே பிரார்த்தித்து -நோன்புக்கு உபகரணங்களை பிரார்த்தித்து -கீழ் எல்லாம்
இங்கு தானே அவன் சந்நிதி கிட்டிற்று)

————-

கூடி இருந்து –
பிரிந்து பட்ட கிலேசம் தீரக்
கூடி தொட்டுக் கொண்டு இருக்கையே பிரயோஜனம் –
புஜிக்கை பிரயோஜனம் அன்று –

கூடி இருந்து
பசி கெட யுண்கிறார்கள் அன்றே –
எல்லாரும் கூட தொட்டுக் கொண்டே இருக்கை இறே உத்தேச்யம் –

கூடி –
பிரிந்த பட்ட வியாசனம் எல்லாம் தீரக் கூடி –
எனை நாள் வந்து கூடுவன்-(திருவாய் -10-10 )என்ற இழவும் தீர்ந்த படி

இருந்து
வாசல்கள் தோறும் அலமந்து எழுப்பிக் கொண்டு திரிந்த கிலேசம்
எல்லாம் தீர இருந்து –

————-

குளிர்ந்து –
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் குளிரும்படி –
நம்பெருமாள் திருநாள் -என்று ஒரு பேரை இட்டு
ஸ்ரீ வைஷ்ணவர்களைத் திரட்டிக் காணுமா போலே
ஒருவருக்கு ஒருவர் போக்கியம் இறே
ஸ்ருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது —

குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் வவ்வல் இடும்படி குளிர்ந்து –

கோவிந்தா உன் தன்னைப் பாடி கூடி இருந்து குளிர்ந்து
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து –
காமத் தீயுள் புகுந்து கதுவா நிற்க இராதே –
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தனோடு சாம்யாபன்னைகளாய் இருக்கை –

ஆக இரண்டு பட்டாலும்
சாம்யா பத்தியும்
குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது –

விராஜா ஸ்நானத்தில் உத்யுக்தனாய் போருமவனுக்கு
காளங்கள்-வலம் புரிகள் தூர்ய கோஷம் –(பெரியாழ்வார் -4-4 )
ஆண்மின்கள் வானகம்-(திருவாய்-10-9 )என்கிற மங்களா சாசனம் –
நிறை குட விளக்கம் –
கொடி அணி நெடு மதிள்-என்னும் படி கட்டின கொடியும் மேல் கட்டியுமாய்
ஆதி வாஹிகர் தொடக்கமான வர்கள் சத்கரிக்கப் போய்
விராஜா ஸ்நாநம் பண்ணின அனந்தரம்
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒப்பிக்கக் கடவராய் இருக்கும்
திவ்ய அப்சரஸ் ஸூக்கள் பல ஹஸ்தைகளுமாய்
வாசோ ஹஸ்தைகளுமாய் வந்து
ப்ரஹ்ம அலங்காரம் பண்ணி ஸ்ரீ வைகுண்ட நாதனோடு கூட ஸூரிகளோடே சேர்ந்து இருந்து
சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே நிரதிசய போக்யமாய் –

உண்ணும் சோறு -என்று சொல்லப் பட்ட போக்கிய விஷயத்தை –
பாலே போல் சீர் என்கிற குணங்களோடு
கை கழியப் போருகிற ஸ்நேஹத்தோடே புஜித்துக் களிக்கக் கடவ பரிமாற்றத்தை
ஒரு முகத்தால் ஸூசிப்பிக்கிறார்கள் –

முக்தரானவர்களுக்கு இஸ் ஸத்காரமும்
இவ் வனுபவமும் சித்திக்கிறது –
கோவிந்தன் தன் தனக்கு குடி குடியார் என்று இறே -(திருவாய் -10-9-8 )

கோவிந்தா உன் தன்னைப் பாடி
தேஹாந்த்ரே தேசாந்தரே பெறக் கடவ பேற்றை எங்களுக்கு
நீ சம்மானமாகப் பண்ணித் தர வேணும் என்று
சாம்யா புத்தியையும்
குண அனுபவத்தையும் அபேக்ஷித்தார்களாய் இருக்கிறது

திருவடி -திருவனந்த ஆழ்வான் -திவ்ய ஆயுத ஆழ்வார்கள் தொடக்கமான ஸூரி வர்க்கம்
திவ்ய மஹிஷிகள்
முமுஷுக்கள்
அசாதாரணமான நாடு ஈஸ்வரன் தானே எல்லாரும் சம்மானம் பண்ணும் படியான விஷயம்
முமுஷுவாய் முக்தனாம் என்கிற ஸ்ருதி யர்த்தம் ஸூசிதமாகிறது-

கூடி இருந்து குளிர்ந்து –பல் கலனும் யாம் அணிவோம்
பிரிந்த போது பர்யட்டங்களையும் ஆபரணங்களையும் கட்டி எங்கேனும் பொகட்டு
ராக்ஷஸிகள் நடுவு இருக்கிற எனக்கு என் செய்ய என்று
இருந்த பிராட்டியை போலே இருந்தார்கள் இவர்கள் –

ஸ்நாநமும் வஸ்த்ரங்களும் ஆபரணங்களும் பரதனை ஒழிய நமக்கு என் என்று இருந்த
பெருமாளை போலே இருந்தான் கிருஷ்ணன் –

நீராட்டம் அமைத்து குளிக்க அழைத்தாலும் வராதே
நப்பின்னை காணில் சிரிக்கும் என்றாலும் இசையாதே
குளியாது இருந்தமை அவர்களும் அறிகையால் இறே –
உன் தன் மணாளனை எம்மை நீராட்டு என்றது இவர்கள் (20)

இவர்களோடு கூடின பின்பு
விசோதித ஜடராய் (ஜடை முடி ஷவரம் பண்ணி)
ஸ்நாநம் பண்ணி
சித்ரமால்யா நுலேபநராய்
மஹார்ஹ வசனமும் யுடுத்து விளங்கி நின்றால் போலே

இவனும்
இவர்களோடு கூடிக் குளித்து
ஒப்பித்து விளங்க வேண்டுகையாலே
கூடி இருந்து இப்படிச் செய்யக் கடவோம் என்கிறார்கள்

கூட்டரவாக வேணும் நன்னாள் இறே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இறே

நன்றாகக் கூடி இருந்து குளிர்ந்து
இனி விஸ் லேக்ஷம் கலசாமல் கூடி

நல்ல நாளிலே வருகிற கூட்டரவாக வேணும் நன்னாள் இறே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இறே

உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து
வாய் பாட
உடம்பு கூட
நெஞ்சு குளிர
கூடி –குளிர்ந்து
குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –

(நீரிலே தோயாதே–உபாயாந்தரங்களிலே இழியாதே
நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் -ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும் )

கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-
தனியே புஜிக்கக் கடவது அன்று –
உண்கை உத்தேச்யம் அன்று-
பிரிந்து பட்ட கிலேசம் தீரத் தீர கூடித் தொட்டுக் கொண்டு இருக்கை பிரயோஜனம்
நம்பெருமாள் திரு நாள் என்று ஒரு பேரை இட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை யடையத் திரட்டிக் காணுமா போலே
ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா-
அஹம் அன்னம் -இத்யாதிப் படியே ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை

(உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனே)

குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சங்கள் வவ்வலிடும்படி –

—————————————–

கூடாரை வெல்லும் சீர் –
கரண களேபர பிரதானம் –
முதலாக சாங்க சாஸ்திர பிரதானம் பண்ணின விடத்திலும்
ந நமேயம் என்று இருப்பாரை
தன்னுடைய சௌர்யாதி குணங்களாலும்
சீலாதி குணங்களாலும் வெல்லும் இத்தனை –

வில் பிடியைக் காட்டி ராவணனை ஜெயித்தான் –
இது பிரதம யுத்தத்திலே இவனும் அதுக்கு எதிர்பார்த்து போந்தவன் தோலாமை இல்லை இறே
ஆனால் மறுபடியும் யுத்தமுண்டான படி எங்கனே என்னில்
பெருமாளுடைய நிரதிசய சௌர்யத்தை
பிரகாசிப்பிக்கைக்காக மறுபடியும் யுத்தம் பண்ணினான் இத்தனை
என்று நம்முடைய ஆச்சார்யர் அருளிச் செய்வர் –

தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய
வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்

இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்
சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –
கோவிந்தா –
சர்வ சுலபன் ஆனவனே –

வுன்தன்னைப் பாடிப் –
சர்வ ஸ்மாத் பரனாய்
சர்வ சுலபனான உன்னை
த்வத் அனுபவ ஜனித ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி –

பறை கொண்டு –
புருஷார்த்தத்தை லபித்து –

யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக-
நாடு ஸ்வ அபிப்ராயத்தால் கொண்டாடும் பிரகாரத்தாலே
உன் பக்கல் கை பார்த்து இருக்கும் நாங்கள்
லபிக்கிற பஹூமானம்
உன் பக்கல் நன்றாக யாம் பெரும் சம்மானம் -என்றுமாம் –

சூடகமே –
காப்பே

தோள் வளையே –
திரு இலச்சினையே

தோடு –
திரு மந்த்ரமே

செவிப்பூவே
த்வயமே

பாடகமே
சரம ஸ்லோகமே

இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் –
பகவத் சம்பந்த த்யோதகங்களாய் -இருப்பன

இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான
பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே –
திருமந்த்ரத்தை சொல்லுகிறது –

செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான
த்வயத்தை சொல்லுகிறது –

பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான
சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –

இம் மூன்று ரகஸ்யங்களாலும்
ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –

திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு
பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்
ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –

என்று அனைய
என்று சொல்லப் படுகிற

பல் கலனும்
ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே-
ஆகையால் -பல் கலனும் -என்கிறார்கள் –

யாம் அணிவோம்
உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம்
இன்று அணியக் கடவோம்
பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இறே பலிப்பது –
பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இறே –

ஆடை உடுப்போம்
சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்

அதன் பின்னே –
அதுக்கு மேலே

பால் சோறு
கைங்கர்யம் ஆனது

மூட நெய் பெய்து
மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –

கூடி இருந்து குளிர்ந்து –
போக்தாவான உன்னோடு
போக்யரான நாம்
சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இது வன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்-

—————-

ஆழ்வார் கோஷ்டி என்று சேவிக்கிறோம்–அஹம் அன்னம் -இந்த பாசுரம்–விரஜா ஸ்நானம்
ஆண்மின்கள் வானகம் மங்களா சாசனம்–ஆதிவாகார் சத்கரிக்க–சதம் ஹச்தாகா அலங்கரிக்க ஒப்பிக்கும் படி-ப்ரஹ்ம அலங்காரம்
சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே-நிரதிசய போக்கியம் அனுபவிக்க
அஹம் அன்னம்–அந்நாதா அன்னம் புஜிக்க–அஹம் அன்னம் புஜிக்கிறவனை சாப்பிடுகிறேன் —மூன்றாலும் சொல்லி –
பாலே போல் சீர் -கை கழிய போகிற சிநேகம்–முகத்தாலே சூசிபபிகிறார்கள்-இதில் சாம்யாபத்தி என்றும் கீழே குணா அனுபவம் என்றும் சொல்லாலாம்
கோவிந்தன் தன குடி அடியார் -தனக்கு முடி உடை வானவர் எதிர் கொல்ல–கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உன் தன்னை பாடி–தேசாந்தரே தேகாந்தரே இல்லாமல்–இங்கே இந்த தேசத்தில்–சூரி வர்க்கம் திவ்ய மகிஷி பரமபதம்
முமுஷு முக்தன் சூசகம்–கூடி இருந்து பாலகனும்–ஆடை உடுப்போம் சேர்த்து
கூடி இல்லாத காலத்தில் ஆடை ஆபரணம் பால் சோறு வேண்டாம்–பிரிந்த போது -சீதை பரியட்டம் ஆபரணங்கள் எங்கேயேனும் பொகட்டு-கிஷ்கிந்தை
ராஷசிகள் நடுவில் இவை எதற்கு–பிராட்டி சேர்த்த பின்பு சர்வாலங்கார பூஷிதை
பரதனை கிட்டிய பின்பே ஸ்நானம் வஸ்த்ரம் அலங்காரம் பெருமாள் போலே கிரிஷ்ணனும் -கோபிகள் -சேர்ந்த பின்பு
கைகேயி புத்ரம் பாரதம் –
பரத ஆழ்வான் கூடின பின்பு ஜடை களைந்து ஸ்நானம் மாலை சந்தானம் வஸ்த்ரம் உடுத்து-இவனும் கூடி குளித்து ஒப்பித்து
கூடி இருந்து பல் கலனும் யாம் அணிவோம் கண்ணனையும் சேர்த்து–கூடி இருந்து ஆடை உடுப்போம்
கூடி இருந்து பால் சோறு நெய் பேர்ந்து–விச்லேஷம் இல்லாத நல கூட்டம்
வாய் பாட -முக்கரணங்களும் அவன் இடம்-குளிர்ந்து -நீர் வண்ணன் மார்பிலே தோய வேண்டும்-

சூடகமே —காப்பே
தோள் வளையே —திரு இலச்சினையே
தோடு —திரு மந்த்ரமே
செவிப்பூவே–த்வயமே
பாடகமே–சரம ஸ்லோகமே
இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் —பகவத் சம்பந்தத்யோதகங்களாய் -இருப்பன
இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே -திருமந்த்ரத்தை சொல்லுகிறது –
செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான த்வயத்தை சொல்லுகிறது –
பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான-சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –
இம் மூன்று ரகச்யங்களாலும்-ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞானபரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு-பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ச்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்–ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –
என்று அனைய–என்று சொல்லப் படுகிற–பல்கலனும்-ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இ றே-
ஆகையால் -பல்கலனும் -என்கிறார்கள் –
யாம் அணிவோம்
உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம்-இன்று அணியக் கடவோம்
பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இ றே பலிப்பது –
பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இ றே –
ஆடை உடுப்போம்–சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்
அதன் பின்னே —அதுக்கு மேலே
பால் சோறு-கைங்கர்யம் ஆனது
மூட நெய் பெய்து–மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –
கூடி இருந்து குளிர்ந்து –போக்தாவான உன்னோடு-போக்யரான நாம்-சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இதுவன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்

சூடகமே -கையில் தோள் வளையே -தோடு -செவிப்பூவே பாடகமே–ஐந்து ஆபரணங்கள் பஞ்ச சம்ஸ்காரம்
திரு ஆபரணங்கள் ஆத்மாவை அலங்கரிக்க
தாப -எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டம் -தீயில் -அக்னியில் காட்டிலும் அக்னியில் காட்டிய -பொலிகின்ற செஞ்சுடர் –கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட செய்கின்றோம் -திரு இலச்சினை–தோள் வளையே -திரு இலச்சினை–கங்கணம் கட்டி -சூடகம்–
பட்டம் சூடகம் ஆவன -பூட்டும் ஆத்மபூஷணங்கள்-பரகுரு -சம்சார நிவர்தகமான திரு மந்த்ரம் உபதேசித்த-உத்தாராக ஆசார்யர் –
சிந்தனாசார்யர் அவரகுறு –பட்டம் கட்டி -பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்து பெரியாழ்வார் –
புண்டர -தோடு செவிப்பூ இரண்டு காதுக்கு குரு பரம்பரை ரகஸ்ய த்ரயம் –அர்த்தங்கள் —பாடகமே -காலுக்கு முகுந்த மாலை ஹரே கச்சான்க்ரி–சீரார் வேம்கடமே -ஆலயம் –
அனைய பல்கலனும் யாம் அணிவோம் -ஐந்து மட்டும் இல்லை

சாம்யாபத்தில் கீழ் பாசுரத்தில்–குண அனுபவம் இங்கே–ஆண்மின்கள் வானகம்-வலம்புரிகள் கலந்து எங்கும் இசைத்தன
சங்கு -திருச்சின்னம்–விரஜா ஸ்நானம் -கோஷம்–மங்களா சாசனம்
ஆதி வாஹிகர் சத்கரிக்க–ஒப்பிக்க கடவர் அலங்காரம்–சதம் அஞ்சன ஹஸ்தா ஆபரணம் ஹஸ்தா–வஸ்த்ரம் சந்தனம் வாசனாதி திரவியம்
கூடிஇருந்து குளிர்ந்து –

சீர் -ஸ்வாமி ஸ்வரூபம் ரூபம் குண விபூதிகள்
வடுக நம்பி போலவும்–வாழி எதிராசன் -மா முனிகள் போலேயும்–உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்–உன் தன மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்

கூடியிருந்து குளிர்மாலை -சாற்றி அருளுகிறாள்
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவையும் தன்னோடு கூடுவது இல்லை யான் –
நூலின் நேர் இடையார் திறத்து நிற்கும் ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லையான் –
மாறனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினாரோடும் கூடுவது இல்லையான் –
உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலம் தன்னொடும் கூடுவது இல்லையான் –
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரோடும் கூடுவது இல்லையான் –
கூடத்தகாதவர்களை ஸ்ரீ குலசேகர ஆழ்வார்
கூடத் தகுந்தவர்களை -மறம் திகழு –தொல் நெறிக் கண் நின்ற தொண்டர் –
நினைந்து உருகி யேத்துமவர்கள்
அணி யரங்கத்து திரு முற்றத்து அடியவர்கள்
மால்கொள் சிந்தையராய் –அழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் –
ஒருகாலும் பிரிகிலேனஎன்று இருக்குமவர்கள்
பழுதே பல காலும் போயின -அஞ்சி அழுது இருக்குமவர்கள்
த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிகர்கள்
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலிகள்
வரவரமுனி ப்ருத்யைரச்து மே நித்ய யோக -நித்ய குதூகுல சாலிகள்
மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே தீண்டுமவர்கள்
நித்ய அனுபவ யோக்யர்கள்
இன்னும் அங்கே நட நம்பி -புள்ளுவம் பேசாதே போகு நம்பி
கூடோம் என்று ஊடினவர்கள்
அக்கொடிய நிலை எல்லாம் தொலைந்து எப்போதும் கூடுவோம் என்று கூடி இருந்து குளிர்வோம்
கூடி இருந்து கண் வளர்ந்து போது போக்காமல் குளிர்ந்து-

——————————————————————————————————–

27. பாலேபோல் சீர் :

தே மதுர பாலே போல் சீர் தன்னால் தன் பால்
நமவெனலார் தாம் தோற்ப தன் குணம் காட்டி
சமன் கொள் நல் வீடு செய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .

கீழ் பாசுரத்தில் நோன்புக்கு உபகரணமாக
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோலா விளக்கே
கொடியே
விதானமே
என்று தன்னதேயான
பாஞ்சஜன்யம்
பேரிகை
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
நப்பின்னை
கருடன்
ஆதிசேஷன்
ஆன கேட்டவை அனைத்தும்
நதே ரூபம் நசாகாரம் நஆயுதாநி . . . பக்கத்தானாம் துவாம் பிரகசாஸசே என்பதாக கொடுத்தாகி விட்டது.
அது ஸாரூப மோக்ஷம் என்றால்,
மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் இங்கனே போந்தருளி என்று ஸாலோக , ஸாமீப்ய மோக்ஷத்தைப் பெற்றாள்.
இப்போது இந்த பாசுரத்தில், நோன்பு நோற்றதற்கான சன்மானம் என்ற பெயரில் ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.

பேற்றுக்கு வேண்டியது விலக்காமையும், இரப்பும் என்ற கணக்கில் -2 ஆம் பாட்டில் நெய் உண்ணோம், பாலுண்ணோம்,
மலரிட்டு நாம் முடியோம் என்று தாங்கள் விலகினதை இப்போது இந்த பாட்டில்
சூடகமே, தோள்வளையே, தோடே , செவிப்பூவே என்று பல்கலனும் யாம் அணிவோம் .
அத்தை நீ கொடுக்கும் போது விலக்க மாட்டோம் என்பதான அப்பிரதிசேஷத்தை சூசிப்பிக்கிறாள்.

சரணாகதி கத்யமும் கோத கீதையும் :
பகவத் விஷயத்தில் செய்யப் போகிற சரணாகதி பலிக்க வேண்டி முதலில் புருஷகார பிரபத்தி.
அடுத்து பகவத் குணாநுசந்தானம்.
அடுத்து அவனுடைய பூஷணங்கள்.
அதை அடுத்து பத்னி பரிவாரங்கள் பற்றி அநுசந்தித்து
ஶ்ரீமந் நாராயண! துவத் பாதரவிந்த சரணமஹம் பிரபத்யே என்று சரணாகதியை அநுட்டித்தார்.

இதுவரை துவய பூர்வகண்டார்த்த அநுசந்தானமாயித்து.

மேலே கீதா ஸ்லோகங்கள் மூன்றை உதாகரித்து ஸ்லோக த்ரியோஜித, ஸ்தான த்ரியோஜித ஞானமாகிற –
பரபக்தி, பரஞான, பரமபக்தியைக் கொடு என்கிறார் ஸ்வாமி எம்பெருமானார்.
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும், விஸ்லேஷத்தில் தரியாமையும் பரபக்தி. ஆர்த்தி தலை எடுத்து
வழியல்லா வழியிலாவது அவனை அடைய நினைப்பது , தர்சன ஸமாகார ஸாட்சாத்கரம் இரண்டும் பரஞானம்.
பிரியாதே கூடி அநுபவிக்ககை பரமபக்தி.
பகவத் குணானுப கைங்கரயத்துக்கு பசி போலே இந்த பரபக்தி, பரஞான, பரம்பக்தி.

ஆண்டாள்
இந்த பாசுரத்தில் சொல்லப்பட்ட பாலே போல் சீர்குணங்களை அனுபவிக்க வேண்டிய அவளுடைய அவாதான் பசி. அத்தால்
அவனை
வாயினால் பாட , மனத்தினால் சிந்திக்க,
முகில் வண்ணன் பேர்பாட,
மனத்துக்கினியானைப் பாட
என்ற இவையே பரபக்தி, பரஞான, பரமபக்தியாய் பசி வளர வளர பகவத் குணானுபவம் சிறக்கும் படியாய்
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிது – என்று
பரம பதத்தில் பெரும் களிப்பாய் கூடி இருந்து குளிர்வதையே ஆண்டாளும்
பால் சோறு மூடநெய் பெய்து கூடி இருந்து குளிர்ந்து என்கிறாள் .

இங்கு முழங்கை வழி வார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் ,
அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு
இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.
பாலே போல் சீரை அனுபவிக்க முதல் நிலை பசி பர பக்தி. அது இன்னும் அதிகமாக அதிகமாக
பரஞான பரம பக்தியாக பழுக்கிறது. அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக
பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.

—————————————————————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருமடல்-பகுதி -2- -ஸ்ரீ உ . வே . ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய வியாக்யானங்கள் —

December 6, 2022

மால் விடையின் ———92
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன்தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலை வாய்த் ————93
தன்னுடைய நா வொழியாதுஆடும் தனி மணியின்
இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே ———–94
கொன்னவிலும் எக்கில் கொடிதே நெடிதாகும்
என்னிதனைக் காக்குமா சொல்லீர்-

பதவுரை

மால் விடையின்

(பசுவின்மேல்) வியாமோஹங்கொண்ட வ்ருஷபங்களினுடைய
துன்னு பிடர் எருத்து

பெருத்த பிடரியிலுள்ள முசுப்பிலே
தூக்குண்டு

தூக்கப்பட்டு
கன்னியர் கண் மிளிர

சிறுப்பெண்களின் கண் களிக்கும்படி
வன் தொடரால் கட்டுண்டு

வலிதான கயிற்றாலே கட்டப்பட்டு
மாலை வாய்

ஸாயம் ஸந்தியா காலத்தில்
இன் இசை ஓசையும் வந்து

இனிதான இசையின் ஒலியும் வந்து
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்

தனது நாக்கு ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கப் பறெற சிறந்த மணியினுடைய
என் செவி தனக்கே

என்னுடைய காதுக்கு மாத்திரம்
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்

கொலை செய்ய வல்ல வேலைக் காட்டிலும் கடூரமாகி நெடுகா நின்றது
இதனை காக்கும் ஆ என்

இந்த ஆபத்திற்குத் தப்பிப் பிழைக்கும் வழி என்ன?
சொல்லீர்

(ஏதாவது உபாயம் உண்டாகில்) சொல்லுங்கள்.

“மன்னு மருந்தறிவீரில்லையே?” என்றதும் “நல்லமருந்துண்டு“ என்று விடையளிக்க வல்லாருடைய வார்த்தை காதில் விழவேணுமென்று பாரித்திருந்த பரகால நாயகியின் காதிலே ஊராமாடுகளின் மணியோசை வந்து விழுந்தது, அதற்கு வருந்திப் பேசுகின்றாள்.

செவிக்கு இனிதாகக் கேட்கத்தக்க விடைமணிக்குரலும் என் காதுக்குக் கடூரமாயிராநின்றது, இந்த்த் துன்பமெல்லாம் நீங்கி நான் வாழும் வகை ஏதேனுமுண்டோ? சொல்லீர் என்கிறாள்.

மாட்டின் கழுத்தில் தொங்கும் மணியை மூன்றடிகளாலே கூறுகின்றாள். நாகின்மேலே பித்தங்கொண்டு காமித்து வருகின்ற காளையின் புறங்கழுத்திலுள்ள முசுப்பின்மேலே மநோஹரமாகக் கட்டப்பட்டு ஸாயங்காலத்தில் இடைவிடாது சப்தித்துக் கொண்டே யிருக்கிற மணியின் ஓசையும் வந்து செவிப்பட்டு, செவியிலே சூலத்தைப் பாய்ச்சினாற்போலே ஹிம்ஸை பண்ணா நின்றது.

அவ்வோசை ஓய்ந்தபாடில்லை, நெடுகிச் செல்கின்றதே! என்கிறாள. கடலோசை குழலோசை முதலியனபோல விடைமணி யோசையும் விரஹிகளுக்கு உத்தீபகமாதல் அறிக.

எஃகு – ஆயுதப் பொதுப்பெயர், சூலத்துக்குச் சிறப்புப்பெயருமாம். ஈட்டியையும் சொல்லும்.

———

இது விளைத்த ——–95
மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் மா மதி கோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் ——–96
சின்ன நறும் பூந்திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலையிட்டணை கட்டி ——-97
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து——-98
தென்னுலக மேற்றுவித்த சேவகனை –

பதவுரை

இது விளைத்த மன்ன்ன்

(தென்றல் முதலானவை பாதகமாம்படி) இப்படிப்பட்ட நிலைமையை உண்டு பண்ணின மஹாநுபா பாவனாய்,
நறு துழாய் வாழ் மார்பன்

மணம்மிக்க திருத்துழாய் மாலை விளங்குகின்ற திருமார்பை யுடையனாய்,
முன்னம் மாமதி கோள் விடுத்த முகில் வண்ணன்

முன்னொருகால் சந்திரனுடைய துன்பத்தைப் போக்கின காளமேக வண்ணனாய்,
காயாவின் சின்ன நறு பூ திகழ் வண்ணன்

“காயா” என்னும் செடியிலுண்டான சிறிய மணம் மிக்க பூப்போல் விளங்குகின்ற நிறத்தை யுடையனாய்,
வண்ணம் போல் அன்ன கடலை

தன்னுடைய வர்ணம் போன்ற வர்ணத்தையுடைய கடலிலே
மலைஇட்டு

மலைகளைக் கொண்டெறிந்து
அணை கட்டி

ஸேதுவைக்கட்டி (இலங்கைக்கெழுந்தருளி)
மா மண்டு வெம் சமத்து

சதுரங்கபலம் நிறைந்த கொடிய போர்க்களத்தில்
மன்னன் இராவணனை

ராக்ஷஸ ராஜனான ராவணனுடைய
பொன் முடிவுகள் பத்தும் புரள

அழகிய பத்துத்தலைகளும் (பூமியில் விழுந்து) புரளும்படியாக
சரம் துரந்து

அம்புகளைப் பிரயோகித்து
தென் உலகம் ஏற்றவித்த சேவகனை

(அவ்விராவணனை) யமலோகமடைவித்த மஹா சூரகனாய்.

***- ஆகக் கீழ்வரையில், தானநுபவிக்கும் கஷ்டங்களைச் சொல்லி முடித்தாள்,

இக்கஷ்டங்களை விளைவித்த மஹாநுபாவன் இன்னானென்பதை நான் அறியாமையில்லை, நன்கு அறிவேன், அடிபணிந்தாரை ரக்ஷிப்பதற்கென்றே மார்பில் தனிமாலையிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லி உலகங்களை வஞசிப்பவனாம் அவன்,

“சந்திரனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தொலைத்தேன், அப்படி உங்களுடைய துன்பத்தையும் தொலைத்தொழிப்பேன் வாருங்கள்“ என்று மயக்கி அழைப்பவன அவன்.

“காளமேகம் போலும் காபாமலர்போலும் என் வடிவு விளங்குகின்ற அழகைக்கண்டு களியுங்கள்“ என்றுமெனி நிறத்தைக்காட்டி வலைப்படுத்திக் கொள்பவன் அவன்,

ஒரு ஸீதாப் பிராட்டிக்காகவும் எப்படி யெப்படியோ உருமாறிப் படர்படுகள் பட்டுஅதிகமாநுஷமான காரியங்கள் செய்தவனாக்கும் நான், என்னை யடுப்பார்க்கு ஒரு குறையுமுறாது என்று சொல்லி அகப்படுத்திக்கொள்பவன் அவன்,

பல திருப்பதிகளிலே தனது பெருமையைக் காட்டிக்கொண்டு மேனாணித்திருப்பவன் அவன், அவன் படிகளெல்லாம் நான்கறிவேன் நான்,

அவனுள்ள திருப்பதிகள்தொறும் நுழைந்து புறப்பட்டு என் மனவருத்தங்களை இனி நான் சொல்லிக்கொள்ளப் போகிறேன், ஆதரித்து உஜ்ஜீவப்பித்தானாகில் பிழைத்துப் போகிறான், இல்லையாகில் என் வாய்க்கு இரையாகி அவன் படப்போகிற பாடுகளைப் பாருங்கள் – என்கிறாள் மேல்.

முன்னம் மாமதிகோள்கிவிடுத்த – சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கியருளினவன் இன்று எனக்கு க்ஷணத்தை விளைக்கலானது என்னோ என்று இரங்குகின்றாளாகவுமாம்.

“இப்போது கீடீர் அவன் ஆபந்நரானாரை நோக்கத் தவிர்ந்தது“ என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும்,

“மதியுகுத்த இன்னிலாவின் கதிரும் என்றனக்கே வெய்தாகும்“ என்று கீழே அருளிச்செய்தபடி என்னை எரிக்கின்ற சந்திரனுக்கு நேர்ந்த ஆபத்தைப்போக்கி என்னை நன்றாகத் தப்பிக்குமாறு அந்த சந்திரனுக்கு நியமித்த மஹாநுபாவன் என்றதாகவுமாம்.

மா மண்டு வெஞ்சமத்து – மா என்று யானையையும் குதிரையையும் சொல்லும், ரதம், கஜம், துரகம், பதாதி எனச் சேனையுறுப்புக்ள நான்காதலால் மற்ற இரண்டு உறுப்புகட்கு உபலக்ஷணமென்க

மண்டுல் – நெருங்கியிருத்தல் சேவகனை – சேவகமாவது வீரம், அதனையுடையவன் சேவன். “செருவிலே அரக்கர்கோனைச் பெற்ற நம் சேவகனார்“ என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்.

“இது விளைத்த மன்ன்ன்“ என்று தொடங்கி, “தென்னறையூர்“ மன்னு மணிமாடக்கோயில் மணாளனைக் கன்னவில் தோள்காளையை“ என்கிற வரையில் எம்பெருமானுடைய விபவாவதார வைபவங்கள் அர்ச்சாவதார வைபவ“கள் முதலியன விரிவாகக் கூறப்படுகின்றன.

மார்பன். முகில்வண்ணன், சேவகனை, வீரனை, கூத்தனை என்கிற இவ்விசேஷணங்கள் எல்லாம் மேலே கன்னவில் தோள் காளையை என்ற விடத்தில் அந்வயித்து முடியும்.

———–

ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் ——99
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனைப்
பின்னோர் அரியுருவமாகி யெரி விழித்துக் ——100
கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக்குஞ்சி பற்றி வர வீரத்துத் ——-101
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த —–102
மின்னிலங்கு மாழிப் படைத் தடக்கை வீரனை

பதவுரை

ஆயிரம் கண் மன்னவன் வானமும்

ஆயிரங்கண்ணனான இந்திரனுடைய ஸ்வர்க்கலோகத்தையும்
வானவர் தம் பொன் உலகும்

(மற்றுமுள்ள) தேவதைகளின் திவ்ய லோகங்களையும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை

தனது புஜபலத்தாலே தன் வசமாக்கிக் கொண்ட ஹிரண்யா ஸுரனை
பின்

சிறிது காலம் பொறுத்து
ஓர் அரி உருவம் ஆதி

ஒரு நரசிங்கமூர்த்தியாக அவதரித்து
ஏரி விழித்து

நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து,
கொல் நலிலும் வெம் சமத்து கொல்லாதே

கொடிய போர்க்களதிலே (பகைவரைக்கொல்லுங்கணக்கிலே சடக்கெனக்) கொன்றுவிடாதே
வல்லாளன்

மஹாபலசாலியான அவ்வசுரனுடைய
மணி மன்னு குஞ்சிபற்றி வர ஈர்த்து

மணிமயமான கிரீடம் பொருந்திய தலைமயிலைப் பிடித்துக் கிட்ட இழுத்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி

(அவனைத்) தனது திருவடிகளின் மீது படுக்கவைத்துக் கொண்டு
அவனுடைய பொன் அகலம்

அவனது அழகிய மார்பை
வள்  உதிரால் போழ்ந்து

கூர்மையான நகங்களாலே பிளந்து
புகழ் படைத்த

(ஆச்ரிதனான ப்ரஹ்லாதனை ரக்ஷித்தானென்கிற) கீர்த்தியைப் பெற்றவனாய்
மின் இலங்கும் ஆழிபடை தட கை வீரனை

மின்போல் விளங்குகின்ற சுக்கராயுத்த்தைத் தடக்கையிலே உடைய மஹாவீரனாய்

***- தானவன் –அரசன், வடசொல். கொன்னவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே – தூணில் நின்றும் தோன்றியனவுடனே திருகண்ணாலே அவனைக் கொளுத்திவிடலாம்,

“ஆச்ரிதனான ப்ரஹ்லாத்தன் விஷயத்திலே பல்லாயிரங் கொடுமைகள் புரிந்த இப்பாவியை இப்படி ஒரு நொடிப்பொழுதிலே கொன்றுவிடக் கூடாது, சித்திரவதைப் பண்ணிவிடவேணும்” என்று தான் மேல்கிடாத்திப் போழ்ந்தானாயிற்று.

தன்னுடைய தாள்மேல் கிடாத்தி வள்ளுகிரால் போழ்ந்து – தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி இரணியன் வரம்பெற்றிருந்தானாதலால் அந்த வரம் பழுதுபடாதபடி அவனைப் பிடித்து வாசற்படியில் தன் மடி மீது வைத்துக்கொண்டு அந்திப் பொழுதில் திருக்கை யுகிர்களாலே பிளந்தருளினன்.

———

மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104

,பதவுரை

மன்னு இ அகல் இடத்தை

எல்லாரும் பொருந்தி யிருக்கின்ற விசாலமான இப்பூமியை
மா முது நீர் விழுங்க

மஹா ஸமுத்ரம் விழுங்கிவிட
பின்னம்

அதற்கு பிறகு
ஓர் எனம் ஆய் புர்கு

ஒரு திவ்யவராஹமாய் (கடலினுள்ளே) பிரவேசித்து
வளை மருப்பின்

வளைந்த கோட்டினுடைய
கொல் நவிலும் கூர் நுதி மேல்

(பகவரைக்) கொல்ல வல்ல கூர்மையான நுனியின் மீது
வைத்து எடுத்து கூத்தனை

(அந்தப்பூமியை) வைத்துக் கொணர்ந்த அழகிய சேஷ்டித்த்தையுடையனாய்

***- வைத்தெடுத்த கூத்தனை –பூமியைக் கோட்டின் நுனியில் வைத்துக்கொண்டு எழுந்தருளும் போது அக மகிழ்ச்சி தோற்றக் கூத்தாடிக் கொண்டே யெழுக்கருளின்  போலும்.

மஹா வராஹ ரூபாயாய் -புண்ணியம் தெய்வதமும் சேர் பூ லோகத்தை புல் பாய் போலே சுருட்டிக் கொண்டே பாதாளம்
நண்ணி இரண்யாட்ச்சனை பின் தொடர்ந்தே ஏகி நலமுடனே யாதி வராகத் தேவாகி-மண்ணுலகம் அனைத்தும்
இடந்து எடுத்தோர் கோட்டில் வைத்து வர வவன் மறிக்க வதைத்துத் தேவர் எண்ண உலகீர் எழும் படியப் பண்ணா
இறைவா நாராயணனே எம்பிரானே-என்பர் பின்னோரும்
இப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முந்திய பாத்ம கல்பம்
வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்க–முது நீர் -சகல பதார்த்தங்களும் முற்பட்டு புராதானமாய் யுள்ள நீர்
அப ஏவ சசர்ஜாதவ்–நன்மைப் புனல் பண்ணி நான் முகனைப் பண்ணி –
வைத்து எடுத்த கூத்தனை -அக்காலத்தில்  மகிழ்ச்சி தோற்ற கூத்தாடினான் -என்பதை கண்டார்கள் ஆழ்வார்கள்

———-

மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னு மிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் ——-105
தன்னினுடனே சுழல மலைத் திரிந்தாங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய ———106
மன்னும் துயர் கடிந்த வள்ளலை –

பதவுரை

மன்னும் வடமலையை

அழுத்தமாக நாட்டப்பட்ட மந்தரகிரியை
மத்து ஆக

மத்தாகக்கொண்டு
மாசுணத்தால்

(வாசுகி யென்னும்) பாம்பினால் (சுற்றி)
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் தன்னினுடனே சுழல மலை திரித்து

விளங்குகின்ற சந்திர ஸூர்யர்களும் ஆகாசமும், ப்ரகாசிக்கின்ற (மற்றும் பல) தேஜ பதார்த்தங்களும் தன்னோடு சுழலும்படி அந்த மந்தர மலையைச் சுழற்றி (கடலைக்கடைந்து)
வானவரை இன் அமுதம் ஊட்டி

தேவர்களுக்கு இனிய அமிருத்த்தை உண்ணக் கொடுத்து
அவருடைய

அத் தேவர்களுடைய
மன்னும் துயர் கடிந்த

நெடுநாளைய துக்கத்தைப் போக்கடித்த
வள்ளலை

பரம உதாரனாய்

***- மாசுணம் என்று பாம்புக்கும் பெரிய பாம்புக்கும் பெயர்.

கடலைக்கடைய மந்தரமலையைச் சுற்றின போது அது சுழன்ற விசையின் மிகுதியினால் இரு குடர் விண் முதலிய ஸகல பதார்த்தங்களும் கூடவே சுழன்வனபோலத் தோற்றினமைபற்றி “மின்னுமிருசுடரும் தன்னினுடனே சுழல மலைதிரித்து“ என்றார்.

மந்த்ர மலை சுழன்ற பொழுது அந்த சுழற்சியின் விசையின் மிகுதியால் சகல பதார்த்தங்களும் சுழல்வன
போலத் தோன்றினமை–மின்னு மிருசுடரும் – -தன்னினுடனே சுழல மலைத் திரித்து –
அவருடைய –மன்னும் துயர் கடிந்த வள்ளலை–துர்வாச முனிவர் சாபத்தால் தேவர்களுக்கு நேர்ந்து இருந்த வறுமையைப் போக்கின-என்றவாறு –

————-

மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –

பதவுரை

மற்று அன்றியும்

தவிரவும்
தன் உருவம் ஆகும் அறியாமல்

தனது ஸ்வரூபத்தை யாரும் தெரிந்து கொள்ள வொண்ணாதபடி.
தான் ஓர் மன்னும்

பரமபுருஷனான தான் ஒரு திவ்யமான வாமந வேஷங்கொண்ட பிரமசாரியாகி
மா வலி தன்

மஹா பலியினுடைய தான
பொன் இயலும் வேள்விக் கண் புக்கிருந்து

ஸவர்ணதானஞ் செய்யும் யாக பூமியிலே எழுந்தருளி
போர் வேந்தர் மன்னை

போர் செய்யவல்ல மிடுந்தையுடைய அரசர்களில் தலைவனான அந்த மாவலியை
மனம் கொள்ள வஞ்சித்து

(இப்பிரமசாரி யாசிப்பதற்காகவே வந்தானென்று) நம்பும்படியாக மயக்கி
நெஞ்சு உருக்கி

(நடையழகு சொல்லழகு முதலியவற்றால) அவனது நெஞ்சை உருக்கி
மன்னா

மஹாப்ரபுவே!
என்னுடைய பாத்த்தால் யான் அளப்ப

என் காலடியால் நாளே அளந்து கொள்ளும்படி
மூ அடி மண் தருக என்று

மூவடி நிலம் கொடு என்று
வாய் திறப்ப

வாய் திறந்து கேட்க,
அவனும்

(அதுகேட்ட) அந்த மாவலியும்
என்னால் தரப்பட்டது என்றலும்

அப்படியே என்னால் மூவடி நிலம் கொடுக்கப்பட்டது என்று சொல்ல
அத்துணைக் கண்

அந்த க்ஷணத்திலேயே
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ

விளங்குகின்ற மணிமகுடம் ஆகாசத்தே போய் அளாவ,
மேல் எடுத்த

உயரத்தூக்கியருளின
பொன் ஆர் களை கழல் கால்

பொன்கள் நிறைந்து சப்திக்கின்ற வீரத்தண்டை யணிந்த திருவடி
ஏழ் உலகும் போய் கடந்து

மேலுலகங்களெல்லாவற்றையும் தாண்டி
அங்கு ஒன்னா அசுரர் துளங்க

அந்தயாக பூமியிலுள்ள (நமுசி முதலிய) பகையசுரர்கள் துன்பப்படும்படி
செல நீட்டி

(மேலே) நெடுகவியாபிக்கச் செய்து
மா வலியை வஞ்சித்து

(இவ்வகையாலே) மஹாபலியை வஞ்சித்து
மன்னும் இ அகல் இடத்தை

நித்யமாய் விசாலமான இப்பூ மண்டலத்தை
தன் உலகம் ஆக்குவித்த தாளானை

தன்னுடைய லோகமாகவே ஆக்கிக்கொடுத்த திருவடிகளை யுடையனாய்

அத்துணைக்கண் – துணை –அளவு, அவ்வளவில் என்றபடி.

———-

தாமரை மேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன் மலையைப் ——-113
பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையைத்
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை —–114
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல்
அன்னம் துயிலும் அணி நீர் வயலாலி ——–115
என்னுடைய வின்னமுதை எவ்வுள் பெரு மலையைக்
கன்னி மதில் சூழ் கணமங்கைக் கற்பகத்தை ——116
மின்னை யிரு சுடரை வெள்ளறையுள் கல்லறை மேல்
பொன்னை மரகதத்தைப் புட்குழி எம் போரேற்றை ——117
மன்னு மரங்கத் தெம் மா மணியை-

பதவுரை

தாமரை மேல் மின் இடையாள் நாயகனை

தாமரைப்பூவில் பிறந்தவளும் மின் போன்ற இடையை யுடையளுமான பிராட்டிக்கு நாயகனாய்
விண்ணகருள் பொன் மலையை

திருவிண்ணகரிலே பொன்மலை போல் விளங்குமவனாய்
பொன்னி மணி கொழிக்கும் பூ குடந்தை போர் விடையை

காவேரி நதியானது ரத்னங்களைக் கொண்டு தள்ளுமிடமான அழகிய திருக்குடந்தையிலே யெழுந்தருளியிருக்கிற

யுத்த ஸந்நத்தமான காளை போலச் செருக்குடையனாய்

தென் நன் குறுங்குடியுள் செம்பவளம் குன்றினை

தென் திசையிலுள்ள விலக்ஷணமான திருக்குறுங்குடியிலே சிவந்த பவழமலைபோல விளங்குமவனாய்,
தண் சேறை மன்னிய வள்ளலை

குளிர்ந்த திருச்சேறையிலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற பரம உதாரனாய்,
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வல் ஆலி என்னுடைய இன் அமுதை

சிறந்த தாமரைப் பூக்களின் மேலே அன்னப்பறவைகள் உறங்கப் பெற்ற அழகிய நீர் நிறைந்த வயல்களை யுடைத்தான திருவாலியிலே எனக்குப் பரம போக்யனாக ஸேவை ஸாதிப்பவனாய்.
எவ்வுள் பெருமலையை

திருவெவ்வுளுரில் பெரிய தொரு மலை சாய்ந்தாற் போலே சாய்ந்தருள்பவனாய்
கன்னி மதில் சூழ் கணமங்கை கற்பகத்தை

சாச்வதமான மதில்களாலே சூழப்பட்ட திருக்கண்ண மங்கையில் கல்பவ்ருக்ஷம்போல் எழுந்தருளியிருப்பவனாய்
மின்னை

மின்போல் விளங்குகின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய்
இரு சுடரை

ஸூர்ய சந்திர்ர்களோ என்னும்படியான திருவாழி திருச்சங்குகளை யுடையனாய்
வெள்ளறையுள்

திருவெள்ளறையிலே
கல் அறை மேல்

கருங்கல் மயமான ஸந்நிதி யினுள்ளே
பொன்னை

பொன் போல் விளங்குமவனாய்
மரதகத்தை

மரதகப்பச்சை போன்ற வடிவை யுடையனாய்
புட்குழி எம் போர் எற்றை

திருப்புட் குழியிலே எழுந்தருளி யிருக்கிற அஸ்மத்ஸ்வாமியான ஸமரபுங்கவனாய்,
அரங்கத்துமன்னும்

திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிறவனாய்
எம் மா மணியை

நாம் கையாளக்கூடிய நீல மணி போன்றவனாய்

ஆகக் கீழே சில விசேஷணங்களால் விபவாவதார சரித்திரங்களிற் சிலவற்றைப் பேசி இனி அர்ச்சாவதாரங்களிலுஞ் சிலவற்றை அநுசந்திக்க விரும்பித்  திருவிண்ணகரிலே வாய்வைக்கிறார்.

பல திருப்பதிகளையும் பற்றி அருளிச் செய்துகொண்டு போகிற இக்கண்ணிகளில் “கோயில் திருமலைபெருமாள் கோயில்“ என்னும் அநாதி வ்யவஹாரத்திற்கு ஏற்ப, “மன்னுமரங்கத்தெம் மாமணியை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும்

“மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை“ என்ற வளவில் ஒரு பகுதியாகவும்,

“வெஃகாவிலுன்னிய யோகத்துறக்கத்தை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும்,

அதற்குமேல் வினைமுற்று வருமளவில் ஒரு பகுதியாகவும் பிரித்துக்கொண்டு உரையிடுகின்றோம்.

விண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி. “தன்னொப்பாரில்லப்பன்“ என்று நம்மாழ்வார்ருளிச் செயல் “ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலா வென்னப்பா!“ (திருக்கண்ணப்புரத்துப் பாசுரத்தில்) என்றார் இத்திருமங்கையாழ்வாரும். உப்பிலியப்பன் என்கிற வ்யவஹாரம் ஸ்தர புராணத்தையடி யொற்றிய தென்பர்.

குடந்தை – குடமூக்கு என்றும் கும்பகோணமென்றும் வழங்கப்படும் தலம்

குறுங்குடி – குறிகியவனான வரமநனது க்ஷேத்ரமாதலால் குறுங்குடியெனத் திருநாம்மாயிற்றென்பர். இத்தலத்தெம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகார்ர் பக்கலிலே சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்“ என்கையாலே வைஷ்ணவ நம்பியென்று திரநாமம் பெற்றனன். நம்மாழ்வார் திருவ்வதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தத்து நம்பியே.

சேறை – பஞ்சஸார க்ஷேத்ரமென வழங்கப்படும்.

ஆலி –எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனஞ் செய்துகொண்ட திவ்யதேசமானது பற்றித் திருவாலியென வழங்கப்படுமென்பர், ஆலிங்கனம் என்பதன் ஏகதேசம் நாம்மாயிற்று.

எவ்வுள் –எம்பெருமான் சாலிஹோத்ர மஹாமுனிக்கு ப்ரத்யக்ஷமாகி “வாஸம் பண்ணுவதற்குத் தருதியான உள் எவ்வுள்? என வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளுரென்று திருநாம்மாயிற்றென்ப கிம்க்ருஹம் எனபர் வடமொழியில்

கண மங்கை – கண்ணமங்கை யென்பதன் தொகுத்தல்

மின்னை இருசுடரை –மின்னல்போலவும் சந்திர ஸூரியர்கள் போலவும் பளபளவென்று விளங்குபவன் என்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்

மின் என்று மின்னற் கொடிபோன்ற பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய், இருசுடர் என்று ஸூர்ய சந்திரர்களுக்கொப்பான திருவாழி திருச்சங்குகளைச் சொல்லிற்றாய் இம்மூவரின் சேரத்தியைச் சொல்லுகிறதாக அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவுள்ளம்

“அங்கு நிற்கிறபடி யெங்ஙனே யென்னில், பெரிய பிராட்டியாரோடும் இரண்டருகுஞ் சேர்ந்த ஆழ்வார்களோடுமாயிற்று நிற்பது“ என்ற ஸ்ரீஸூக்தி காண்க.

வெள்ளறை – வெண்மையான பாறைகளாலியன்ற மலை, (அறை –பாறை) இது வடமொழியில் ச்வேதாத்ரி எனப்படும்.

புட்குழி – புள் ஜடாயுவென்னும் பெரியவுடையார் அவரைக் குழியிலிட்டு ஸம்ஸ்பரித்தவிடமென்று சொல்லுதல பற்றிப் புட்குழி யென்று திருநாமமாயிற்றென்பர், போரேறு – ஸமரபுங்கவன் என்று வடமொழித் திருநாமம் ஸமர – யுத்தத்தில் புங்கவ – காலை போலச் செருக்கி யுத்தம் நடத்துபவர்.

அரங்கம் – எம்பெருமான் ரதியை அடைந்த இடம், ரதியானது ஆசைப்பெருக்கம். அதனை யடைந்து (ஆசையுடன்) வாழுமிடம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் ஸூர்யமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்திலும் இனிய தென்று திருமால் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமான தென்பதுபற்றி ‘ரங்கம்‘ என்று அவ்விமாநத்திற்குப் பெயர். அதுவே லக்ஷணையால் திவ்ய தேசத்திற்குத் திருநாமமாயிற்று. தானியாகுபெயர்.

இனி, ரங்கமென்று கூத்தாடு மிடத்துக்கும் பெயராதலால், திரு அரங்கம் –பெரிய பிராட்டியார் ஆநந்தமுள்ளடங்காமல் நிருந்தஞ் செய்யுமிடம் என்றும் மற்றும் பலவகையாகவங் கொள்ளலாம்.

————

வல்ல வாழ்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியைத் ——–118
தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119
மன்னும் கடன்மலை மாயவனை வானவர்தம்
சென்னி மணிச் சுடரைத் தண் கால் திறல் வலியைத் ——–120
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை யரியை யருமறையை——-121
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னு மிடை கழி எம்மாயவனைப் பேயலறப் ——-122
பின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல் வாய்
அன்னம் இரை தேரழுந்தூர் எழுஞ்சுடரைத்——-123
தென் தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத் தெம் வித்தகனை —–124

பதவுரை

வல்லவாழ்

திருவல்லவாழிலே எழுந்தருளியிருக்கிற
பின்னை மணாளனை

நப்பின்னை நாயகனாய்
பேரில் பிறப்பு இலியை

திருப்பேர் நகரிலெழுந்தருளியிருக்கிற நித்யஹித்தனாய்
தொல் நீர் கடல் கிடந்த

என்று மழியாத நீரையுடைய கடலிலே பள்ளிகொள்பவனாய்
தோளா மணி சுடரை

துளைவிடாத ரத்னம்போலே ஜ்வலிப்பவனாய்
என் மனத்து மாலை

என்மேல் வ்யாமோஹ்முடையனாகி எனது நெஞ்சை விட்டுப்பிரியாதவனாய்
இடவெந்தை ஈசனை

திருவிடவெந்தையிலெழுந்தருளியிருக்கிற ஸர்வேவரனாய்
கடல் மல்லை மன்னும் மாயவனை

திருக்கடலமல்லையிலே நித்யவாஸம் செய்யும் ஆச்சரியானாய்
வானவர் தம் சென்னி மணி சுடரை

நித்ய ஸூரிகளுடைய சிரோபூஷணமாக விளங்குமவனாய்
தண்கால் திறல் வலியை

திருத்தண்காலில் எழுந்தருளியிருக்கிற மஹா பலசாலியாய்
தன்னை பிறர் அறியா த்த்துவத்தை

(தனது திருவருளுக்கு விஷயமாகாத) பிறர் அறிந்துகொள்ள முடியாத ஸ்வரூபத்தை யுடையனாய்
முத்தினை

முத்துப்போன்றவனாய்
அன்னத்தை

ஹம்ஸாவதாரஞ் செய்தவனாய்
மீனை

மத்ஸ்யாவதாரஞ் செய்தவனாய்
அரியை

நரஸிம்ஹாவதாரஞ் செய்தவனாய் (அல்லது) ஹயக்ரீ வாவதாரஞ் செய்தவனாய்
அருமறையை

ஸகல விதயாஸ்வருபியாய்
முன இ உலகு உண்ட முர்த்தியை

முன்னொருகால் இவ்வுலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து நோக்கின ஸ்வாமியாய்
கோவலூர் இடைகழி மன்னும் எம்மாயவனை

திருக்கோவலூரடை கழியில் நித்யவாஸம் பண்ணுகிற எங்கள் திருமாலாய்
பேய் அலற முலை உண்ட பிள்ளையை

பூதனையானவள் கதறும்படியாக அவளது முலையை உண்ட பிள்ளையாய்
அன்னம்

ஹம்ஸங்களானவை
அள்ளல் வாய்

சேற்று நிலங்களில்
இரை ரே அழுந்தூர்

இரைதேடும்படியான திருவழுந்துரில்
எழும் சுடரை

விளங்கும் சோதியாய்
தென் தில்லை சித்தரை கூடத்து என் செலவனை

தென் திசையிலுள்ள தில்லைத் திருச்சித்திர கூடத்தில் (எழுந்தளியிருக்கிற) எனது செல்வனாய்
மழை

மேகங்களானவ
மின்னி

பளபளவென்று மின்னிக் கொண்டு
தவழும்

சிகரங்களில் ஸஞ்சரிக்கப்பெற்ற
வேங்கடத்து

திருவேங்கட மலையில் (எழுந்தருளியிருக்கிற)
எம் பித்தகனை

நமக்கு ஆச்சர்யகரமான குண சேஷ்டிதங்களை யுடையனாய்.

***- வல்லவாழ் – மலைகாட்டுத் திருப்பதிகள் பதின்முன்றனுள் ஒன்று, நம்மாழ்வாராலும் மங்களாசாஸனஞ் செய்யப்பெற்ற தலம். இதனைத் திருவல்லாய் என்று மலையாளர் வழங்குகின்றனர். வல்லவாழ்ப் பின்னை மணாளனை – நப்பின்னைப் பிராட்டியை மணம்புரிவதற்குக் கொண்ட கோலத்துடன் திருவல்லவாழில் இவ்வாழ்வார்க்கு ஸேவைஸாதித்தன்ன் போலும்.

பேர் –திருப்பேர்நகர், அப்பக்குடத்தான் ஸந்நிதி. பேரில் பிறப்பிலியே – அடியவர்களுக்காகப் பலபல பிறவிகள் பிறந்திருந்தும் இதுவரை ஒரு பிறப்பும் பிறவாதவன்போலும் இனிமேல்தான் பிறந்து காரியஞ் செய்யப் பாரிப்பவன்போலும் ஸேவைஸாதிக்கிறபடி.

தோளாமணிச்சுடரை – தோளுதலாவது துளைத்தல், துளைத்தல் செய்யாத மணி யென்றது – அநுபவித்து பழகிப் போகாமல் புதிதான ரத்னம் என்றபடி. (துளைவிட்டிருந்தால் நூல்கோத்து அணிந்து கொள்ளுவர்கள்) “அநாலித்தம் ரத்நம்“ என்று வடநூலாரும் சொல்லுவர்கள்.

இடவெந்தை இத்தலத்திலெழுந்தருளியுள்ள வாஹப்பெருமாள் தமது தேவியை இடப்பக்கத்திற் கொண்டிருத்தலால் இத்தவத்திற்கு திருவிடந்தை யென்று திருநாமமாயிற்று.

தன்கால் இது ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு ஸமீபத்திலுள்ளது. திருத்தாங்கல் என்று ஸாமாந்யர் வ்யவஹிப்பர்கள். தன்கால் என்பதற்குக் குளிர்ந்த காற்று என்று பொருள், சீதவாதபுர மென்பர்.

திறல்வலி –எதிரிகளை அடக்கவல்ல பெருமிடுக்கன்.

தன்னைப் பிறரறியாத் த்த்துவத்தை – தனான தன்மையைத் தானே நிர்ஹேதுக்ருபையால் காட்டி ஆழ்வார் போல்வர்க்கு அறிவிக்கலாம்தனை யொழிய மற்றையார்க்கு ஸ்வப்ரயத்நத்தால் அறிய வொண்ணாதபடி.

முத்தினை – முத்துப்பொலே தாபஹரனானவனை

அன்னத்தை மீனை அரியை

ஹரி என்னும் வடசொல்லுக்குப் பதினைந்து அர்த்தங்களுண்டு, *********** பிரகிருத்த்தில் குதிரை சிங்கம் என்கிற இரண்டு பொருள்கள் கொள்ளலாம். குதிரையென்று கொண்டால் ஹயக்ரீவாவதாரஞ் செய்தபடியைச் சொல்லிற்றாகிறது. சிங்கமென்று கொண்டால் நரசிங்காவதாரஞ் சொல்லிற்றாகிறது. ஹம்ஸாவதாரம் மத்ஸ்யாவதாரம் ஹயக்ரீவாவதாரம் என்ற மூன்றாவதாரங்களும் வித்யொப தேசத்திற்காகச் செய்தருளினவையாம்.

அருமறையை – ஸகல வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுவன் என்ற கருத்து.

கோவலூர் – மாயவனை – கோபாலன் எனப்படுகிற ஆயனார் எழுந்தருளியிருக்கும் திவ்ய தேசமானதுபற்றி இதற்குத் திருக்கோவலூரென்று திருநாமமாயிற்று. வடமொழியில் இது கோபாலபுரம் எனப்படும். “பாவருந்தமிழற் பேர்பெறு பனுவந் பாவலர் பாதிகாளிரவின், மூவரு நெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி பாடின தலம் இது.

இடைகழி – தேஹளீ என்று வடமொழியிற் கூறப்படும். “வாசற்கடை கழியாவுள்புகா காம்ரூபங்கோவல் இடைகழிய பற்றியினி நீயுந்திருமகளும் நின்றாயால்“ என்ற பொய்கையாழ்வார் பாசுரம் நோக்குக.

அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூர் – “சேறு கண்டு இறாய்க்கக்கடவ அன்னங்களும் சேற்றைக்கண்டு இறாயாதே மேல் விழுந்து ஸஞ்சரிக்கும்படியான போக்யதை யுடைய திருவழுந்தூரிலே நித்யவாஸம் பண்ணுகிற நிரவதிக தேஜோரூபனை“ என்ற அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீஸூக்தி காண்க.

அழுந்தூர் – தனது தபோபலத்தால் விமானத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சரிக்குந் தன்மையனான உபரி வஸுவென்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த விவாதத்தில் பஷபாதமாகத் தீர்ப்புச் சொன்னமையால் ரிஷிகளால் சபிக்கப்பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர் அழுத்தப்பெற்ற இடமானதுபற்றி இதற்கு அழுந்தூரென்று பெயர் வந்த்தென்பர், தேரழுந்தூர் எனவும் வழங்குவர் பிரகிருத்த்தில் மூலத்திலுள்ள தேர் என்னுஞ் சொல் ரதத்தைச் சொல்வதல்ல, தேர்தலாவது தேடுதல் புள்ளுப்பிள்ளைக் கிரைதேடு மழுந்தூரென்க.

தென் தில்லைச் சித்திரகூடம் – சித்தரகூடம் – விசித்திரமான சிகரங்களையுடையது, இது ஸ்ரீராமபிரான் வநவாஸஞ் செய்தபொழுது அவ்வெம்பெருமானது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்த்தொருமலை, அதனைப்போலவே இத்தலமும் எம்பெருமான் திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருப்பதென்பதுபற்றி அப்பெயரை இதற்கும் இடப்பட்ட தென்பர். இங்கு உத்ஸவ மூர்த்தி இராமபிரான் வனவாஸஞ் செய்கையில் சித்திரகூட பர்வத்த்தில் வீற்றிருந்த வண்ணமாக எழுந்தருளியிருக்கின்றனர். மூலமூர்த்தி க்ஷீராப்தி நாதன் போலச் சயனத் திருக்கோலமாகிச் சிவபிரானது நடனத்தைப் பார்த்து ஆமோதித்துக் கொண்டிருக்கின்றனர். இது தில்லை மரங்களடர்ந்த காடாயிருந்தனால் தில்லை திருச்சித்திர கூடமென வழங்கப்படும். இது எம்பெருமான் தேவர்களும் முனிவர்களுஞ் சூழக் கொலுவிற்றிருந்த ஸபை.

வேங்கடம் – தன்னையடைந்தவர்களது பாவமனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடமெனப் பெயர் பெற்றது வடசொல், வேம் – பாவம், கடம் – எரித்தல் எனப்பொருள் காண்க.

“அத்திருமலைக்குச் சீரார் வேங்கடாசலமெனும் பேர், வைத்தனாதுவேதென்னில் – வேமெனவழங்கெழுந்தே, கொத்துறுபவத்தைக்கூறும்  கடவெனக் கூறிரண்டாஞ், சுத்தவக்கரம் கொளுத்தப்படுமெனச் சொல்வர் மேலோர“ என்றும்

“வெங்கொடும்பவங்களெல்லாம் வெந்திரடச்செய்வதால் நல் மங்கலம் பொருந்துஞ்சீர் வேங்கடலையான தென்று“ என்றுமுள்ள புராணச் செய்யுள்கள் காண்க.

அன்றி, வேம் என்பது அழிவின்மை. கடம் என்பது ஐச்வர்யம், அழிவில்லாத ஐச்வரியங்களைத் தன்னையடைந்தார்க்குத் தருதலால் வேங்கடமெனப்பெயர் கொண்ட தென்றலுமுண்டு.

————

மன்னனை மாலிருஞ்சோலை மணாளனைக்
கொன்னவிலும் ஆழிப் படையானைக் கோட்டியூர் —-125
அன்ன வுருவில் அரியைத் திரு மெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை —-126
மன்னு மதிட் கச்சி வேளுக்கை யாளரியை
மன்னிய பாடகத் தெம் மைந்தனை -வெக்காவில்—127
உன்னிய யோகத் துறக்கத்தை-

பதவுரை

மன்ன்னை

ஸர்வேச்வரனாய்
மாலிருஞ்சோலை

திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியிருக்கிற மணவாளப் பிள்ளையாய்
கொல் நவிலும் ஆழிபடையானை

பகைவரைக் கொல்ல வல்ல திருவாழியை ஆயுதமாகவுடையனாய்
கோட்டியூர்

திருக்கோடியூரில்
அன்ன உருவின் அரியை

அப்படிப்பட்ட (விலக்ஷணமான) திருமேனியையுடைய நரஸிம்ஹ மூர்த்தியாய்
திரு மெய்யத்து

திருமெய்யமலையில்
இன் அமுதம் வெள்ளத்தை

இனிதான அம்ருத ப்ரவாஹம் போல் பரம போக்யனாய்
இந்தளூர்

திருவிந்தளூரில்
அந்தணனை

பரமகாருணிகனாய்
மன்னு மதிள்

பொருந்திய மதிகள்களையுடைய
கச்சி

காஞ்சிநகரத்தில்
வேளுக்கை ஆனரியை

வேளுக்கை யென்கிற தலத்திலுள்ள ஆளழகிய சிங்கராய்
பாடகத்து மன்னிய எம்மைந்தனை

திருப்பாடகத்தில் நித்யவாஸம் பண்ணுகிற எமது யுவரவாய்,
வெஃகாவில்

திருவெஃகாவில்
உன்னியயோகத்து உறக்கத்தை

ஜாகரூகனாகவே யோகநித்ரை செய்பவனாய்

மாலிருஞ்சோலை “ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையிதே“ என்றபடி மிகப்பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் மாலிருஞ்சோலை யென்று திருநாமம் உயர்ந்து பரந்தசோலைகளையுடைய மலை. வந்திரி எனப்படும்.

கோட்டியூர் – ஹிரண்யாஸுரன் மூவுலகத்தையும் ஆட்சி செய்த காலத்தில் தேவர்கள் அய்வஸுரனை யொழிப்பதற்கு உபாயத்தை ஆலோசிப்பதற்கு ஏற்றதாய் அஸுரர்களின் உபத்ரவமில்லாதான இடத்தைத் தேடுகையில் கதம்ப முனிவரது சாபத்தால் ‘துஷ்டர் ஒருவரும் வரக்கூடாது‘ என்று ஏற்பட்டிருந்த இந்த க்ஷேத்ரம் அவர்கள் கூட்டமாக இருந்து ஆலோசிப்பதற்கு ஏற்ற இடமாயிருந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு கோஷ்டீபுரம் என்று வடமொழியில் திருநாமம், அதுவே கோட்டியூரெனத் தமிழில் வழங்குகிறது.

அன்னவுருவினரியை – “வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர் நாதனை நரசிங்களை“ என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்காண்க. தெக்காழ்வாரைக் குறித்தபடி.

திரு மெய்யம் – ஸத்ய தேவதைகள் திருமாலை நோக்கித் தவஞ்செய்த தலமானது பற்றி இத்திருமலை ஸத்யகிரி யென்றும் எம்பெருமான் ஸத்யகிரிநாரென்றும் பெயர் பெறுவர். ஸத்யகிரியென்ற அச்சொல்லை திருமெய்யமலை யென்றும், அத்திருப்பதி திருமெய்ய மென்றும் வழங்கப்பெறும்

இந்தளூர் – சந்திரன் தனது சாபம் நீங்கப்பெற்ற தலமாதலால் திருவிந்தளூரென்று திருநாமமாயிற்றென்பர். இந்துபுர் எனப்படும். ஸுகந்தவநம் என்றொரு திருநாமமும் வழங்குகின்றது.

அந்தணனை – “அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்“ (திருக்குறள்) என்றபடி அழகிய தன்மையையுடையவனென்று பொருளாய், பரமகாருணிகனென்றதாம். “அறவனை ஆழிப்படை அந்தண்னை“ என்றார் நம்மாழ்வாரும்.

வேளுக்கை – காஞ்சீபுரத்திலுள்ள திருப்பதிகளில் ஒன்று “வேள்இருக்கை“ என்பது மருவிற்றுப்போலும் வேள் – ஆசை, எம்பெருமான் தனது ஆசையினாலே வந்திருக்கும் தலம் என்றவாறாம் இத்திவ்ய தேசத்தைப்பற்றி ஸ்ரீவேதாந்த தேசிகன் அருளிச்செய்த காமஸிகாஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தில் “காமாத் அதிவஸந் ஜீயாத் கச்சித் அற்புத கேஸா“ என்றமையால் வேளுக்கை யென்பதற்கு இங்ஙனே பொருளாமென்று தோன்றுகிறது. காமாஸிகா என்பதன் அர்த்தமும் இதுவேயாம். காமேந ஆஸிகா – தன் ஆசையினாலே இருக்குமிடம். ஆளரியை – ஆளழகிய சிங்கர்ஸந்திதி என்று வ்யவஹரிக்கப்படும்.

பாடகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள பாண்டவ தூதர் ஸந்நிதி. “பாடுஅகம்“ என்ற பிரிக்க பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்கை. கண்ணன் பாண்டவதூதனாய்த் துரியோதனைனிடஞ் சென்றபொழுது துர்யோதன்ன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகப்பெரிய நீலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அநேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து

அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேமூடி அதன் மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல அங்ஙனமே ஸ்ரீக்ருஷ்ணன் அதன்மேல் ஏறின மாத்திரத்திலே மூங்கிற் பிளப்புகள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கி பிலவறையிற் செல்லுமளவில்,

அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துப் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர். அப்போது கொண்ட விச்வரூபத் திருக்கோலத்திற்கு ஸ்மாரகமாகப் பெரிய திருமேனியோடே ஸேவை ஸாதிக்குமிடம் பாடகம்.

பாடு-பெருமை. (“அரவுநின் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரியமேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தேன்“ என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தில் அநுஸந்திக்கப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவை ஸாதிக்குமாறு காண்க.

வெஃகா – கச்சியில் ஸ்ரீ யதோத்தகாரி ஸந்நிதி. இவ்வெம்பெருமான் பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுக்கும்பொருட்டு அதற்கு அணையாகக் குறுக்கில் பள்ளிக்கொண்டருளினவனாதலால், அப்பிரானுக்கு, வடமொழியில் “வேகாஸேது“ என்று பெயர். அது தமிழில் “வேகவணை“ என்று மொழிபெயர்ந்து, அது பின் (நாகவணை யென்பது நாகணையென விகாரப்படுதல் போல) வேகணை என விகாரப்பட்டு, அது பின்னர் வெஃகணை“ எனத்திரிந்து, தானியாகுபெராய்த் தலத்தைக் குறித்து, அதுபின்பு வெஃகா என மருவி வழங்கிற்றென நுண்ணிதின் உணர்க.

———

ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத் தெம் மானேற்றை ——128
என்னை மனம் கவர்ந்த வீசனை வானவர் தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை ———-129
அன்னவனை யாதனூர் ஆண்டளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் ——130
மன்னு நான் மறை நான்கும் ஆனானைப் புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் ———131
மன்னு மணி மாடக் கோயில் மணாளனை
நன்னீர்த் தலைச் சங்க நாண் மதியை நான் வணங்கும் ——–132
கண்ணனைக் கண்ணபுரத் தானைத் தென்னறையூர்
மன்னு மணிமாடக் கோயில் மணாளனைக் ——–133
கன்னவில் தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் ——–134
தன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்——135
தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்
கொன்னவிலும் வேல் வேந்தர் கூட்டகத்தும் நாட்டகத்தும்—–136
தன்னிலை எல்லாம் அறிவிப்பன்

பதவுரை

ஊரகத்துள் அன்னவனை

திருவூரகத்தில் விலக்ஷணனாய்
அட்ட புயகரத்து எம்மான் எற்றை

அட்டபுயகரதலத்திலுள்ள அஸ்மத் ஸ்வாமி சிகா மணியாய்
என்னை மனம் கவர்ந்த ஈசனை

எனது நெஞ்சைக் கொள்ளைகொண்ட தலைவனாய்
வானவர் தம் முன்னவனை

தேவாதிராஜனாய்
மூழிக்களந்து விளக்கினை

திருமூழிக்களத்தில் விளங்குபவனாய்
அன்னவனை

இப்படிப்பட்டவனென்று சொல்ல முடியாதவனாய்
ஆதனூர்

திருவாதனூரில்
ஆண்டு அளக்கும் ஐயனை

ஸகல காங்களுக்கும் நிர்வாஹகனான ஸ்வாமியாய்
நென்னலை இன்றினை நாளையை

நேற்று இன்று நாளை என்னும் முக்காலத்துக்கும் ப்ரவர்த்தகனாய்
நீர்மலை மேல் மன்னும்

திருநீர்மலையிலெழுந்தருளியிருக்கிற
மறை நான்கும் ஆனானை

சதுர்வேத ஸ்வரூபியாய்
புல்லாணி

திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற
தென்னன் தமிழை வடமொழியை

உபயவேத ப்ரதிபாதயனாய்
நாங்கூரில்

திருநாங்கூரில்
மணிமாடக்கோயில் மன்னு மணாளனை

மணிமாடக் கோயிலில் நித்ய வாஸம் பண்ணுகிற மணவாளப் பிள்ளையாய்
நல் நீர் தலைச் சங்கம் நாண்மதியை

நல்ல நீர்சூழ்ந்த தலைச்சங்க நாட்டிலுள்ள நாண் மதியப் பெருமாளாய்
நான் வணங்கும் கண்ணனை

நான் வணங்கத்தக்க கண்ணனாய்
கண்ணபுரத்தானை

திருக்கண்ணபுரத் துறைவானாய்
தென் நறையூர்மணி மாடக்கோயில் மன்னுமணுள்னை

திருநறையூர் மணிமாடமென்று ப்ரஸித்தமான ஸந்நிதியில் எழுந்தருளியிருக்கிற மணவாளனாய்
கல் நவில் தோள் காளையை

மலையென்று சொல்லத்தக்க தோள்களையுடைய யுவாவாயுள்ள ஸர்வேச்வரனை
ஆங்கு கண்டு கை தொழுது

அவ்வவ்விடங்களில் கண்டு ஸேவித்து
என் நிலைமை எல்லாம் அறிவித்தால்

எனது அவஸ்தைகளையெல்லாம் விண்ணப்பஞ்செய்து கொண்டால் (அதுகேட்டு)
எம்பெருமான்

அப்பெருமான்
தன் அருளும் ஆக மும் தாரான்ஏல்

தனது திருவருளையும் திருமார்பையும் எனக்குத் தக்க தருவானாகில்
தன்னை

அவ்வெம்பெருமானை
நான்

(அவனது செயல்களையெல்லாமறிந்த) நான்
மின் இடையார் சேரியிலும்

ஸ்த்ரீகள் இருக்கும் திரள்களிலும்
வேதியர்கள் வாழ்வு இடத்தும்

வைதிகர்கள் வாழுமிடங்களிலும்
தன் அடியார்முன்பும்

அவனது பக்தர்கள் முன்னிலையிலும்
தரணி முழுதும் ஆளும் கொல் நலிலும் வேல்வேந்தர் கூட்டத்தும்

பூ மண்டலம் முழுவதையும் ஆள்கின்றவராயும் கொடிய படைகளை யுடையவராயுமிருக்கிற அரசர்களுடைய ஸபைகளிலும்
நாடு அநத்து

மற்றுமு தேசமெங்கும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன்

அவன் படிகளை யெல்லாம் பிரகாசப்படுத்தி விடுவேன்.

ஊரகம் – பெரியகாஞ்சிபுரத்திலுள்ள உலகளந்த பெருமாள் ஸந்நிதி. இத்தலத்தில் திருமாள் உரகருபியாய் ஸேவை சாதிப்பதுபற்றி இத்திருப்பதிக்கு ஊரகம் என்று திருநாமமென்பர், உரகம் – பாம்பு வடசொல்.

அட்டபுயகரம் –இத்தலத் தெம்பெருமானுக்கு எட்டுத் திருக்கைகள் உள்ளது பற்றி அஷ்டபுஜன் என்று திருநாமமாய் அவன் எழுந்தருளியிருக்கின்ற கரம் – க்ருஹம் ஆதல்பற்றி அட்டபயக்ரமென வழங்கப்படும் அட்டபுயவகரம் என்பதன் மரூஉ வென்பாருமுளர்.

என்னை மனங்கவர்ந்த வீசனை வானவர்தம் முன்னவனை – வானவர்தம் முன்னவனென்று தேவாதிராஜனான பேரருளானப் பெருமாளைச் சொல்லுகிறதென்றும், “என்னை மணங்கவர்ந்த வீசனை“ என்கிற விசேஷணம் இவ்வர்த்தத்தை ஸ்திரப்படுத்துகின்றதென்றும் பெரியோர் கூறுவர். திருமங்கையாழ்வாருடைய மனத்தைக் பேரருளாளன் கவர்ந்தானென்னுமிடம் இவரது. பைவத்திலே காணத்தக்கது. கனவிலே காட்சிதந்து வேகவதியில் நிதியைக் காட்டித் துயர் தீர்த்த வரலாறு.

மூழிக்களம் – மலைகாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று, நம்மாழ்வாராலும் போற்றப்பெற்ற தலம் “மூழிக்களத்து வளத்தனை“ என்றும் பாடமுண்டாம், வளமானது ஸம்பத்து, ஸம்பத் ஸ்வரூபனை யென்றபடி – ஆதனூர் – ஆதன் ஊர் காமதேநுவுக்குப் பிரத்யக்ஷமான கலமாதல்பற்றி வந்த திருநாம மென்பர் ஆ-பசு.

ஆண்டு அளக்கும்ஐயனை –ஆண்டு வருஷம் இது காலத்துக்கெல்லாம் உபலக்ஷணம் ஸகல காலங்களையும் பரிச்சோதிக்க ஸ்வாமி என்றப. காலசக்ரநிர்வாஹகனென்கை. நென்னல் – நேற்றுக் கழிந்தநாள், இறந்த காலத்துக்கெல்லாம் உபலக்ஷணம். “ஆண்டளக்குமையன்“ என்றதை விவரிக்கின்றார் மூன்று விசேஷணங்களாலே, பூத வர்த்தமான பவிஷ்யத் காலங்களுக் குநிர்வாஹக்னென்றவாறு.

நீர்மலை – நீரானது அரண் போலச் சூழப்பெற்ற மலையானது பற்றித் திருநீர்மலை யெனப்படும்.

புல்லணை யென்பதன் மருஉ, ஸீதையைத் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லும் பொருட்டு ஸ்ரீராமபிரான் வாநரஸேனையுடனே புறப்பட்டுச்சென்று தென்கடற்கரையை யடைந்து கடல்கடக்க உபாயஞ் சொல்ல வேண்டுமென்று அக்கடலரசனான வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பத்தில் பிராயோபவேசமாகக் கிடந்த ஸ்தரமாதலால் புல்லனை யெனப்பட்டது. தர்ப்பசயா க்ஷேத்ரமெனவும் படும்.

தலைச்சங்க நாண்மதியை –சிறந்த சங்கத்தை யேந்திய நாண்மதியப் பெருமானுடைய தலமாதல்பற்றித் தலைச்சங்க நாண்மதியமென்று திவ்யதேசத்தின் திருநாமம்.

கன்னவில் தோள்களியை – கீழே “இதுவிளைத்த மன்னன்“ என்று தொடங்கி இவ்வளவும் எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளைப் பற்றிப் பேசினாராயிற்று. கீழே இரண்டாம் வேற்றுமையாக வந்த அடைமொழிகளெல்லாம் இங்கு அந்வயித்து முடிந்தன.

இப்படிப்பட்ட எம்பெருமானை ஆங்காங்குச் சென்று ஸேவித்து “ஸ்வாமிந்! இப்படிதானா என்னைக் கைவிடுவது? விரஹம்தின்றவுடம்பைப்பாரீர்“ என்று என் அவஸ்தையை விண்ணப்பஞ்செய்வேன்,

அதுகேட்டு திருவுள்ள மிரங்கித் திருமார்போடே என்னை அணைத்துக்கொள்ளாவிடில் மாதர்களும் வைதிகர்களும் பக்தர்களும் அரசர்களும் திரண்டுகிடக்குமிடங்கள் தோறும் புகுந்து அவனது ஸமாசாரங்களை யெல்லாம் பலரறிய விளம்பரப்படுத்துவேனென்றாயிற்று.

ஆண்டாள் ஆய்ச்சிமார்போன்ற பெண்ணரசிகளும், பெரியாழ்வார் வ்யாஸர் பராசர்ர்போன்ற வைதிகர்களும், இளையபெருமாள் ப்ரஹ்லாதன்போன்ற பக்தர்களும், குலசேகரப் பெருமான் தொண்டைமான் சக்கரவர்த்தி போன்ற அரசர்களும் இவனுடைய பெருமேன்மைகளைச் சொல்லிக்கொண்டு ப்ரமித்துக் கிடப்பர்களே,

அங்கங்கெல்லாம் நான் சென்று அவனைப்போன்ற நிர்க்குணன் இவ்வுலகில் எங்குமில்லை“ என்று பறையடித்து எல்லாரும் அவனைக் கைவிடும்படி பண்ணி விடுகிறேன் பாருங்களென்கிறார்.

“லோகமடங்கத் திரண்டவிடங்களிலே சென்று “ஸேச்வரம் ஜகத்து“ என்று ப்ரமித்திருக்கிறவர்களை “நிரீச்வரம் ஜகத்து“ என்றிருக்கும்படி பண்ணுகிறேன்“ என்ற வியாக்கியான ஸூக்தியுங் காண்க.

————

தான் முன நாள்
மின்னிடை யாய்ச்சியர் தம் சேரிக் களவின் கண்——-137
துன்னு படல் திறந்து புக்குத் தயிர் வெண்ணெய்
தன் வயிறார விழுங்கக் கொழும் கயற்கண்———138
மன்னு மடவோர்கள் பற்றியோர் வான் கையிற்றால்
பின்னு முரலோடு கட்டுண்ட பெற்றிமையும்——–139

பதவுரை

முனம் நாள்

முற்காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்)
மின் இடை ஆச்சியர் தம் சேரி

மின்போல் நுண்ணியஇடையையுடைய இடைச்சிகளின் சேரியிலே
தன்னு படல் திறந்து

நெருக்கமாகக் கட்டிவைத்த படலைத்திறந்து
களவின்கண் புக்கு

திருட்டுத்தனமாகப் புகுந்து
தயிர் வெண்ணெய்

தயிரையும் வெண்ணெயையும்
தன் வயிறு ஆர தான் விழுங்க

தனது வயிறு நிறையும்படி வாரியமுதுசெய்த வளவில்
கொழு கயல் கண்மன்னு மடவோர்கள்

நல்ல கயல்மீன் போன்ற கண்களையுடைய அவ்வாயர் மாதர்
பற்றி

பிடித்துக்கொண்டு
ஓர் வான் கயிற்றால்

ஒரு குறுங்கயிற்றால்
உரலோடு

உரலோடே பிணைத்து (க்கட்டிவிட)
கட்டுண்ட பெற்றிமையும்

(கட்டையவிழ்த்துக் கொள்ளமாட்டாமல்) கட்டுண்டு கிடந்தன்மை யென்ன.

என்னினைவைத் தலைக்கட்டாவிடில் அவனுடைய ஸமாசாரங்களையெல்லாம் தெருவிலே எடுத்து விடுகிறேனென்று கீழ்ப் பிரதிஜ்ஞை பண்ணினபடியே சில ஸமாசாரங்களை யெடுத்துவிடத் தொடங்குகிறாள் பரகாலநாயகி –

“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியுமாகப்பெற்றான், பற்றியுரலிடையாப்புமுண்டான் பாவிகாளுங்களுக்கு எச்சுக்கொலோ? நற்றெனபேசி வசவுணாதே“ என்று – எம்பெருமானுடைய சரிதைகளை இழிவாகக் கூறி ஏசுமவர்களை வாய்புடைக்கவேண்டிய இவ்வாழ்வார் தாமே ஏசத்தொடங்குவது ப்ரணயரோஷத்தின் பரம காஷ்டையாகும்.

“ஏசியே யாயினும் ஈனதுழாய் மாயனையெ பேசியே போக்காய் பிழை“ என்பாருமுண்டே. குணகீர்த்தனங்களில் இதுவும் ஒரு ப்ரகாரமேயாகும்.

இவ்வாழ்வார்தாமே பெரிய திருமொழியில் பதினோராம்பத்தில் மானமருமென்னோக்கி என்னுந் திருமொழியில், இரண்டு பிராட்டிகளின் தன்மையை எக்காலத்தில் அடைந்து முன்னடிகளால் இகழ்ந்துரைப்பதும் பின்னடிகளால் புகழ்ந்துரைப்பதுமாக அநுபவித்த்தும் அறியத்தக்கது.

(தான்முனநாள் இத்யாதி) இடைச்சிகளின் சேரியில் பிரவேசித்து, படல்மூடியிருந்த மனைகளிலே திருட்டுத்தனமாகப் படலைத் திறந்துகொண்டு புகுந்து தயிரையும் வெண்ணெயையும் வயிறு நிறைய விழிக்கினவளவிலே அவ்வாயர் மாதர்கண்டு பிடித்துக்கொண்டு உரலோடே இணைத்துக் கயிற்றாலே கட்டிப்போட்டு வைக்க ஒன்றுஞ் செய்யமாட்டாமல் அழுது ஏங்கிக் கிடந்தானே, இது என்றைக்கோ நடந்த காரியமென்று நான் விட்டுவிடுவேனோ? இவ்வழிதொழிலை இன்று எல்லாருமறிந்து “கள்ளப்பையலோ இவன்“ என்று அவமதிக்கும்படி செய்து விடுகிறேன் பாருங்கள் – என்கிறாள்.

பெற்றிமையும், தெற்றெனவும் சென்றதுவும் என்கிற இவையெல்லாம் மேலே “மற்றிவை தான் உன்னி யுலவா“ என்றவிடத்தில் அந்வயித்து முடிவுபெறும். இப்படிப்பட்ட இவனுடைய இழிதொழில்கள் சொல்லி முடிக்கப் போகாதவை என்றவாறு.

“தன் வயிறார“ என்றவிடத்து “திருமங்கையாழ்வாரைப் போலே பரார்த்தமாகக் கனவு காண்கிறதன்று“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்தி காண்க.

வான்கயிறு என்றது எதிர்மறையில் கனையினால் குறுங்கயிறு என்று பொருள்படும்.  கண்ணி நுண் சிறுத்தாம்பினாவிறே கட்டுண்டது.

—————

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின் கண்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை——–140
முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்

பதவுரை

ஆயர் விழவின் கண்

இடையர்கள் (இந்திரனுக்குச் செய்த) ஆராதனையில்
துன்னு சகடத்தால் புக்க பெரு சோற்றை

பலபல வண்டிகளால் கொண்டுசேர்த்த பெருஞ்சோற்றை
அன்னது ஓர் பூதம் ஆய்

வருணிக்க முடியாத வொருபெரும் பூகவடிவு கொண்டு
முன் இருந்து

கண் முன்னேயிருந்து கொண்டு
முற்ற

துளிகூட மிச்சமாகாதபடி
தான்

தானொருவனாகவே
தூற்றிய

உட்கொண்ட
தெற்றௌவும்

வெட்கக்கேடென்ன.

 

இன்னு சகடத்தால்புக்க – சிலர் தலை மேலே சுமந்துகொண்டு போய்க்கொட்டின சோறன்று பல்லாயிரம் வண்டிகளில் ஏற்றிக் கொண்டுபோய்ப் பெரிய மலைபோலே கொட்டிவைத்த பெருஞ்சோறு, இவற்றையெல்லாம் ஒரு திரை வளைத்துக்கொண்டாவது உண்டானோ? இல்லை,

முன்னிருந்து உண்டான அதிலே சிறிது சோறு மிச்சமாமபடி உண்டானோ? இல்லை, முற்றத்துற்றினால், உற்றாருறவினர்க்கும் சிறிது கொடுத்து உண்டானோ? அதுவுமில்லை, முற்றவும் தானே துற்றினான்,

இப்படி வயிறுதாரித்தனம் விளங்கச் செய்த செயலுக்குச் சிரிது வெட்கமாவது பட்டானோ? அதுவுமல்லை. இப்படிப்பட்ட வெட்கக்கேடான செய்தியைத் தெருவேறச் சொல்லிக்கொண்டுபோய் “வயிறுதாரிப் பையலோ இவன்“ என்று எல்லாரும் அமைதிக்கும்படி செய்துவிடுகிறேன். பாருங்கள் என்கிறாள்.

————–

மன்னர் பெரும் சவையுள் வாழ வேந்தர் தூதனாய்—–141
தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும்

பதவுரை

முனம் நாள்

முன்னொரு காலத்தில்
வாழ்வேந்தர் தூதன் ஆய்

பாண்டவர்களுக்குத் தூதனாய்
தன்னை இகழ்ந்து உரைப்ப

(கண்டாரங்கலும்) இழிவாகச் சொல்லும்படியாக
மன்னர் பெருசவையுள் சென்றதும்

(துரியோதனாதி) அரசர்களுடைய பெரிய சபையிலே சென்றதென்ன

கண்ணபிரான், பாண்டவர்களையும் துர்யோதநாதிகளையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதனாதியரிடம் தூது சென்ற வரலாறு ப்ரஸித்தமேயாம்

“கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலங் கூறிடுவான், தூதனாய் மன்னவனாய் சொல்லுண்டான்“ என்கிற இவ்விழிதொழிலை நாடறியச் சொல்லி “ஒரு வேலைக்காரப் பையவோ இவன்“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் என்கிறாள்.

————

மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப—-142
கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி
என்னிவன் என்னப் படுகின்ற ஈடறவும்————–143

பதவுரை

மங்கையர் தம் கண் களிப்ப

(இடைப்) பெண்களின் கண்களிக்கும்படி
மன்னு பறை கறங்க

(அரையிலே) கட்டிக்கொண்ட பறை ஒலிக்க
கொல்சவிலும் கூத்தன் ஆய்

(பெண்களைக்) கொலை செய்கின்ற கூத்தையாடுபவனாய்
போத்தும்

மேன்மேலும்
குடம் ஆடி

குடங்களை யெடுத்து ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்

“இப்படியும் கூத்தாடுவானொருவனுண்டோ!“ என்னும்படி பெற்ற சீர்கேடென்ன

கண்ணபிரான் அரையிலே பறையைக் கட்டிக்கொண்டு குடக்கூத்தாடுவது சாதி வழக்கத்தை அநுஸரித்த ஒரு காரியம்.

அந்தணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகம் செய்வதுபோல இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடுவார்கள்.

கண்ணபிரானும் சாதிமெய்ப்பாட்டுக்காக “குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே“ என்றபடி அடிக்கடி குடக்கூத்தாடுவது வழக்கம்.

தலையிலே அடுக்குக்குடமிருக்க. இரு தோள்களிலும் இரு குடங்களிருக்க, இருக்கையிலுங் குடங்களை ஏந்தி ஆகாயத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து இது என்பர்.

இதனைப் பதினோராடலிலொன்றென்றும் அறுவகைக் கூத்திவொன்றென்றும் கூறி, “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலதனுக் கடைக்குப வைந்துறுப் பாய்ந்து“ என்று மேற்கோளுங் காட்டினர் சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார்.

இவன் சில பெண்களைப் பிச்சேற்றுவதற்காகக் கூத்தாடினபடியைப் பலருமறியப்பேசி, “கூத்தாடிப் பையலோ இவன்!“ என்று எல்லாரும் அவமதிக்கும்படி செய்துவிடுகிறேன் பாருங்கள் என்றானாயிற்று.

ஈடறவு – சீர்கேடு, ஈடு- பெருமை, அஃது இல்லாமை – அற்பத்தனம் வீடறவும் என்று பிரித்து கூத்தனின்றும் மீளாமை என்று சிலர் சொல்வது எலாது.

————-

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் –

பதவுரை

தென் இலங்கை யாட்டி

தென்னிலங்கைக்கு அரசியும்
அரக்கர் குலம் பாவை

ராக்ஷஸ குலத்தில் தோன்றிய புதுமை போன்றவளும்
மன்ன்ன் இராவணன் தன் நல் தங்கை

பிரபுவாகிய ராவணனது அன்புக்குரி தங்கையானவளும்
வாள் எயிறு

வாள் போன்றபற்களையுடையளும்
துன்னு சுடு சினத்து

எப்போதும் (எதிரிகளைச்) சுடக்கடவதான் கோபத்தை யுடையளுமான
சூர்ப்பணகா

சூர்பணகை யென்பவள்
புலர்ந்து எழுந்த காமத்தால்

அதிகமாக வுண்டான காம நோயினால்
பொன் நிறம் கொண்டு

வைவர்ணிய மடைந்து
சோர்வு எய்தி

பரவசப்பட்டு (தளர்ந்து)
தன்னை நயந்தானை

தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை
தான் முனிந்து

தான் சீறி
மூக்கு அரிந்து

மூக்கையறுத்து
மன்னிய திண்ணெனவும்

இதையே ஒரு ப்ரதிஷ்டையாகநினைத்துக கொண்டிருப்பதென்ன.

ஸ்ரீ பெரிய திருமடல்-பகுதி -1- -ஸ்ரீ உ . வே . ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய வியாக்யானங்கள் —

December 6, 2022

கைகேயியின் சொற்படி நடக்கவேண்டியவனான தசரத சக்ரவர்த்தி இராமபிரானை அழைத்து வாஸஞ் செல்லுமாறு நியமிக்க அந்த நியமனத்தைச் சிரமேற்கொண்ட இராமபிரான் வனத்திற்குப் புறப்படுங்காலத்தில் ஸிதாதேவியிடஞ் சென்று இச்செய்தியைத்  தெரிவித்து ‘நான் போய் வருகிறேன், வருமளவும் நீ மாமனார்க்கும் மாமியார்க்கும் ஒரு குறைவுமின்றிப் பணிவிடை செய்துகொண்டிரு என்று சொல்லுங்கால் தன்னை நிறுத்திப் போவதாகச் சொன்ன வார்த்தையைக் கேட்ட

பிராட்டி மிகவும் கோபித்து ‘என்தகப்பனால் உம்மை ஒரு ஆண்பிள்ளையாக எண்ணி என்னை உமக்குக் கொடுத்தார் ஒரு பெண்டாட்டியை கூட கூட்டிக்கொண்டுபோய்க் காப்பாற்றி ஆளத்தக்க வல்லமையற்றவர் நிர் என்பதை அப்போது அவர் அறிந்திலர் இப்போது அவர்இச்செய்தியை கேட்டால் உம்மை நன்றாக வெகுமானிப்பார் ஒரு பெண்பிள்ளை ஆணுடை யுடுத்துவந்து நம் பெண்ணைக் கைக்கொண்டு போய்ந்துக்காண் என்று நினைப்பர் என்று ரோக்ஷந்தாற்ற வார்த்தை சொல்லி

தன்னையுங் கூட்டிக்கொண்டு போகவேணுமென்று நிர்பந்தித்து காட்டு வழிகளின் கொடுமையையுங் கணிசியாமல் காமஸித்தயையே தலையாகக்கொண்டு போகவில்லையா? இது மடலூர்தல்லவா? என்கிறார்.

தாத என்ற வடசொல் தாதையெனத் திரிந்தது. வலங்கொண்டு – (பலம்) என்ற வடசொல் வலமெனத்திரிந்தது. மனவலிவைச் சொல்லுகிறது. கொண்ட காரியத்தைக் குறையறத் தலைக்கட்டியே விடும்படியான அத்யவஸாயம்.

மன்னும் வளகாடு –மன்னும் –குலக்ரம்மாகத் தனக்கு ப்ராப்தமான என்றுமாம். மாதிரங்கள் –மாதிரம் என்று ஆகாயத்துக்கும் திசைக்கும் பூமிக்கும் மற்றும் பலவற்றுக்கும் வாசகம் “விண்டேர் திரிந்து“ என்று பாடம் வழங்கிவந்தாலும் வெண்டேர் என்றே உள்ளது பிரயோகங்களும் அப்படியே. வடமொழியில் ம்ருகத்ருஷ்ணா என்று சொல்லப்படுகிற கானல் தமிழில் வெண்டேர் என்றும் பேய்த்தேர் என்றும் சொல்லப்படும்.

வெளிப்பட்டு –செடி மரம் முதலியவை இருந்தால் வெய்யிலுக்கு அவற்றின் நிழலில் ஒதுங்கலாமே, அப்படி ஒன்றுமில்லாமல் பார்த்த பார்த்த விடமெல்லாம் வெளி நிலமாயிருக்கை.

கல்நிறைந்து – வழிமுழுவதும் க்றகள் நிரம்பியிருக்கும். தீய்ந்து எனினும் தீந்து எனினும் ஒக்கும். மருகாந்தாரங்களிற் கண்ட விடமெங்கும் தீப்பற்றி எரிந்துகிடக்குமாய்த்து.

கழை –மூங்கில். வெய்யிலின் மிகுதியினால் மூங்கில்கள் வெடித்துக்கிடக்கும் கால்சுழன்று எங்கும் சூறாவளியாய்க்கிடக்கும்.

சூறாவளி – சுழல் காற்று, மனிதரைத்தூக்கி யெறியுங்காற்று.

திரைவயிற்றுப்பேய் –ஜநஸஞ்சாரமுள்ள காடாயிருந்தால் அங்குள்ள பேய்களுக்கு எதாவது உணவு கிடைக்கும் வயிறும் நிரம்பியிருக்கும் நிர்ஜநமான காடாகையாலே பேய்கள் உணவின்றிச் சுருங்கி மடிந்த வயிற்றையுடைடயனவாயிருக்கும்.

திரிந்துலவா – உலவுதலாவதும் ஒழிதலும், திரிந்துலவா என்றது திரிந்து மாளாத என்றபடியாய் எப்போதும் பேய்களே திரிந்துகொண்டிருக்கிறகாடு என்னவுமாம்.

வைதேவி – ஸீதைக்கு வடமொழியில் வைதேஹீ என்று பெயர். விதேஹராஜனான ஜநகனது மகள் என்றபடி. அணங்கு – தெய்வப்பெண் “சூருமணங்கும் தெய்வப்பெண்ணே“ என்பது நிகண்டு.

—————

பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் ———52
கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு ——53
அன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்
கன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் ——–54
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே –

பதவுரை

பின்னும்

அது தவிரவும்
கரு நெடு கண்செம் வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல்

கறுத்து நீண்ட கண்களையும் சிவந்த வாயையும் மான் போன்ற நோக்கையும் மின்போல் ஸூக்ஷம்மான இடையையும் உடையவளாய்
வேகவதி என்று உரைக்கும் கன்னி

வேகவதியென்று சொல்லப்படுபவளான ஒரு பெண்பிள்ளை
தன் இன் உயிர் ஆம் காதலனை காணாது

தனது இனிய உயிர்போன்ற கணவனைத்தான் காண வொட்டாமல்
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக

தனது தமையன்(தடுத்துத்) தன்னைக் கொண்டுபோக
அங்கு

அவ்வவஸ்தையிலே
அன்னவனை

அந்தத் தமையனை
நோக்காது

லக்ஷியம் பண்ணாமல்
தான் சென்று

தான் பலாத்காரமாகப் புறப்பட்டுப்போய்
வாள் அமருள்

பெரிய போர்க்களத்திலே
கல் நவில் தோள் காளையை

மலைபோல் திண்ணிய தேர்களையுடையவனும் காளை போல் செருக்குற்றிருப்பவனுமான தனது காதலனை
அழித்து உரப்பி

இழிவான சொற்களைச் சொல்லி அதட்டி
கை பிடித்து

பாணிக்ரஹணம் செய்து கொண்டு
மீண்டும் போய்

அங்கிருந்து ஸ்வஸதாநந்திலே போய்ச் சேர்ந்து
பொன் நவிலும் ஆகம்

(அக்காதலனுடைய) பொன் போன்ற மார்பிலே
புணர்ந்திலளே

அணையப்பெற்றாளில்லையோ?

வேகவதி என்பாளொரு தெய்வமாதின் சரிதையை எடுத்துக் காட்டுகிறார்.

இதில் சிறிய திருடலிற் சொல்லப்பட்ட வாஸவதத்தையின் சரித்திரத்துக்கு மூலமாகிய புராணம் இன்னதென்றுதெரியாதுபோலவே இவ்வேகதியின் சரிதைக்கு மூலமான புராணமும் இன்னதென்று தெரியவில்லை.

தமிழ்நாடுகளில் ப்ரஸித்தமான பெருங்கதை என்ற தொகுதியில் உதயணன் சரித்திரப் பகுதியில் இத்தெய்வமாதுகளின் வரலாறு ஒருவிதமாக எழுதப்பட்டுள்ளது.

வடமொழியிலும் கதாஸரித்ஸாகரம் என்ற கதைப்புத்தகத்தில் இவர்களின் சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது.

பிற்காலத்தவர்கள் எழுதிய அப்புத்தகங்களை ஆழ்வார் –ஸ்ரீஸூக்திகட்கு மூலமாகச் சொல்ல வொண்ணாது. கதைப்போக்கிலும் வேறுபாடு உள்ளதுபோலும். ஆகையாலே இக்கதையை இங்கு விரித்துறைக்க விரும்புகின்றிலோம்.

அழகிற் சிறந்த வேகவதி என்னுமோர் தேவகன்னிகை தனது கணவன் முகத்திலே விழிக்க வொண்ணாதபடி தன்னைத் தனது தமையன் தடைசெய்து இழுத்துக்கொண்டுபோக அவள் அவனை லக்ஷியம் பண்ணாமல் திரஸ்கரித்து உதறித் தள்ளிவிட்டுத் தனது காதலன் ஒரு போர்க்களத்திலே யுத்தம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிந்து அங்கே போய் இப்படிதானா என்னை நீ கைவிட்டுத் திரிவது என்று தார்க்காணித்து அந்தப் போர்க்களத்திலே பலருமறிய அவன் கையைப் பிடித்திழுத்துத் தன்னூர்க்குக் கொண்டு சென்று இஷ்டமான போகங்களை அநுபவித்து வாழ்ந்தாள் – என்பதாக இவ்விடத்தில் கதை ஏற்படுகிறது.

இதன் விரிவை வல்லார் வாய்க்கேட்டுணர்க. முன் தோன்றல் முன்னே பிறந்தவன்.

———–

சூழ் கடலுள் —-59
பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் ——-60
தன்னுடைய பாவை யுலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியால் தன்னுடைய ——–61
இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் ——-62
என்னை யிது விளைத்த ஈரிரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டு போய் ——63
கன்னி தன் பால் வைக்க மற்று அவனோடு எத்தனையோர்
மன்னிய பேரின்பம் எய்தினாள் –

பதவுரை

சூழ் கடலுள்

பரந்த கடலினுள்ளே
பொன் நகரம் செற்ற

ஹிரண்யாஸுரனுடைய நகரங்களை அழித்தவனான
புரந்தரனோடு ஏர் ஒக்கும்

தேவேந்திரனோடு ஒத்த செல்வ முடையனான
மன்னவன்

ராஜாதி ராஜனாயும்
அவுணர்க்கு வாள் வேந்தன்

அசுரர்களுக்குள் பிரஸித்தனான தலைவனாயு மிருந்த

வாணன் தன்னுடைய பாவை பாணாஸுரனுடையமகளாய்

உலகத்து தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியாள்

எவ்வுலகத்திலும் தன்னோடு டொத்தமாதர்கள் இல்லையென்னும்படி அழகிற சிறந்தவளான உஷை யென்பவள்
தன்னுடைய இன் உயிர் தோழியால்

தனது ப்ராண ஸகியான சித்திரலேகை யென்பவளைக் கொண்டு
ஈன் துழாய் மன்னுமணிவரை தோள் மாயவன்

போத்தியமான திருத்துழாய் மாலையணிந்த ரத்ன பர்வதம் போன்ற திருத்தோள்களையுடைய ஆச்சரிய பூதனும்
பாவியேன் என்னை இது விளைத்த ஈர் இரண்டுமால் வரைதோள் மன்னவன்

பாவியான என்னை இப்பாடு படுத்துகின்ற பெரியமலைபோன்ற நான்கு புஜங்களையுடைய ராஜாதி ராஜனுமான
எம்பெருமான் தன்

கண்ணபிரானுடைய
காதலனை

அன்புக்கு உரியவனான (பௌத்திரனான) அநிருத் தாழ்வானை
மாயத்தால் கொண்டுபோய் கன்னிதன்பால் வைக்க

(யோக வித்தைக்கு உரிய மாயத்தினால் எடுத்துக் கொண்டுவந்து தன்னிடத்தில் சேர்க்கப்பெற்று
மற்றவனோடு

அந்த அநிருத்தனோடே
எத்தனை ஓர் மன்னிய பேர் இன்பம் எய்தினாள்

பலவிதமாய் ஒப்பற்ற அமர்ந்த பெரிய ஸுகத்தை அநுபவித்தாள்.

பலிச்சக்கரவர்த்தியின் ஸந்தியிற்பிறந்தவனான பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியதாக கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசை பற்றியவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்ரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து,

அவள் மூலமாய் அந்தப் புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருநத்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுதற்று உபாயஞ் செய்யவேண்டும் என்று அத்தோழியை வேண்ட,

அவள் தன் யோகவித்தை மஹிமையினால் த்வாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்த புரத்திலேவிட உஷை அவனோடு போகங்களை அநுபவித்து வந்தாள் என்கிற கதை அறியத்தக்கது (இதற்குமேல் நடந்த வரலாறு வாணனை தோள் துணிந்த வரலாற்றில் காணத்தக்கது).

பொன்னகரம் செற்ற –ஹிரண்யாஸுரனுக்குத் தமிழில் பொன் என்று பெயர் வழங்குதலால் பொன்னகரம் என்று அவ்வஸுரனுடைய பட்டணங்களைச் சொல்லுகிறது. புரந்தர என்ற வடசொல் (பகைவருடைய) பட்டணங்களை அழிப்படவன என்று பொருள்பட்டு இந்திரனுக்குப் பெயராயிற்று.

உஷையின் வரலாறு சொல்லப்புகுந்து அவ்வரலாற்றில் அநிருத்தனைப்பற்றி கண்ணபிரானுடைய ப்ரஸ்தாவம் வருதலால் தனது வயிற்றெரிச்சல் தோன்ற விசேஷணமிடுகிறாள் பரகாலநாயகி.

அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துக் கொண்டிருந்தும் என்னை அநுபவிக்க வொட்டாமல் இப்படி மடலெடுக்கும்படி பண்ணின மஹாநுபாவன் என்கிறாளாயிற்று.

கன்னிதன்பால் – தெய்வப் பெண்ணாகிய தன்னிடத்திலே என்கை.

மன்னிய பேரின்ப மெய்தினாள் – உஷை அநுபவித்து சிற்றின்பமேயாயினும் அதனில் மேற்பட்ட ஆநந்தமில்லை யென்று அவள் நினைத்திருந்தது கொண்டு மன்னியபேரின்ப மென்றார்.

—————

மற்றிவை தான் ———-64
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
மன்னு மலை யரையன் பொற்பாவை வாணிலா ———65
மின்னு மணி முறுவல் செவ்வாய் யுமை என்னும்
அன்ன நடைய வணங்கு நுடங்கிடை சேர் —————66
பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்த அகலத்
தன்னுடைய கூழைச் சடாமாரம் தான் தரித்து ஆங்கு ——-67
அன்ன வரும் தவத்தினூடு போய் ஆயிரம் தோள்
மன்னு கர தலங்கள் மட்டிடித்து மாதிரங்கள் ———68
மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்
பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப ——–69
மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும் ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே —–71
பன்னி யுரைக்கும் கால் பாரதமாம்-

பதவுரை

ஏழைகள்

அவிவேகிகளை!
மற்று இவை தான் என்னாலே கேட்டீரே

இன்னும் இப்படிப்பட்ட உதாஹரணங்களை கேட்க விருக்கிறீர்களோ?
என் உரைக்கேன்

(உங்களுக்கு) எவ்வளவு சொல்லுவேன்? (இன்னும் ஒரு உதாஹரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்)
மன்னு மலை அரையன் பொன்பாவை

(சலிப்பிக்க வொண்ணாமல்) நிலைநின்ற பர்வதராஜனான ஹிமவானுடைய சிறந்த பெண்ணாய்
வாள் நிலா மின்னு மணி முறுவல் செம் வாய்

ஒளிபொருந்திய நிலாப்போல் விளங்குகின்ற அழகிய புன்னகையையுடைய சிவந்த அதரத்தையுடையளாய்
உமை என்னும்

உமா என்னும் பெயரையுடையளாய்
அன்னம் நடையை அணங்கு

அன்ன நடையை யுடையளான (பார்வதி யென்கிற) தெய்வப் பெண்ணானவள்
தன்னுடையகூழை

தனது மயிர் முடியை
சடாபாரம் தான் தரித்து

தானே ஜடா மண்டலமாக்கித் தரித்துக்கொண்டு
நுடங்கு இடைசேர்பொன் உடம்பு வாட

துவண்ட இடையோடு சேர்ந்த அழகிய உடம்பு வாடவும்
புலன் ஐந்தும் நொந்து அகல

இந்திரியங்கள் ஐந்தும் வருந்தி நீங்கவும்

அன்ன அரு தவத்தின் ஊடு போய் (என்னபேறு பெற்றாளென்றால்)

ஆயிரம் தோள் மன்னுகாதலங்கள் மட்டித்து

(சிவன் தனது) ஆயிரம் புஜங்கள் பொருந்திய கைகளை (த்திசைகளிலே) வியாபிக்கச் செய்து,
மாதிரங்கள் மின்னி எரி வீச

திக்குகள் மின்னி நெருப்புப் பொறி கிளம்பும்படியாக
மேல் எடுத்த

மேற்புறமாகத் தூக்கின
கழல் சூழ் கால்

வீரக்கழலணிந்த ஒரு பாதமானது
பொன் உலகம் ஏழும் கடந்து

மேலுலகங்களை யெல்லாம் அதிக்கிரமித்து
உம்பர் மேல் சிலும்ப

மேலே மேலே ப்ரஸரிக்கும் படியாக (ஒற்றைக்காலை உயரத்தூக்கி)
மன்னு குலம் வரையும் மாருதமும் தாரகையும் தன்னினுடைனே சுழல

ஸ்திரமாக நிற்கிற குல பர்வதங்களும் காற்றும் நக்ஷத்திரங்களும தன்னோடு கூடவே சுழன்றுவர
சுழன்று ஆடும்

தான் சுழன்று நர்த்தனஞ் செய்பவனும்
கொல் நவிலும் மூ இலை வேல்

கொலைத்தொழில் புரிகின்ற மூன்று இலைகளை யுடைதான சூலத்தை யுடையவனும்
கூத்தன்

கூத்தாடியென்று ப்ரஸித்தனுமான
அன்னவன் தன்

அப்படிப்பட்ட சிவபிரானுடைய
பொன் அகலம் சென்று அணைந்திலளே

அழகிய மார்பைக்கிட்டி ஆலங்கனம் செய்து கொள்வில்லையா?
பன்னி உரைக்குங் கால்

(இப்படிப்பட்ட உதாஹரணங்களை இன்னும்) விஸ்தரித்துச் சொல்லுகிற பக்ஷத்தில்
பாரதம் ஆம்

ஒரு மஹாபாரத மாய்தலைக்கட்டும்.

நாண்மட மச்சங்களைத் தவிர்த்து அதிப்ரவ்ருத்திபண்ணி நாயகனைப் புணர்ந்தவர்கள் ஒருவரிருவரல்லர், பல்லாயிரம் பேர்களுண்டு, இங்கே சில மாதர்களை எடுத்துக் காட்டினேன். இன்னும் எத்தனை பேர்களை நான் காட்டுவது. இவ்வளவு உதாஹரணங்கள் போராதா? ஆயினும் இன்னும் ஒரு பெரியாள் மடலூர்ந்தபடியைச் சொல்லி முடிக்கிறேன். கேளுங்கள் – என்று பரமசிவனைப் பெறுதற்குப் பார்வதி தவம் புரிந்தபடியைப் பேசுகிறாள்.

தக்ஷப்ரஜாபதி யென்பவர்க்குப் பெண்ணாகப் பிறந்து, ஸதீ என்ற பெயரோடிருந்தாள் பார்வதி. அந்த தக்ஷப்ரஜாபதயானவர் ஒரு கால் ஓரிடத்தில் வேள்விக்குச் செல்ல அப்போது அங்கேயிருந்த தேவர்களும் மஹர்ஷிகளுமெல்லாரும் சடக்கென எழுந்து கௌரவிக்க, பிரமனும் சிவனும் எழுந்திராமல் இருந்தபடியே யிருக்க தக்ஷன் பிரமனை லோக்குருவென்று நமஸ்கரித்துவிட்டுத் தனது கௌரவம் தோற்றச் சிவன் எழுந்திருந்து வணங்கவில்லை யென்று சீற்றங்கொண்டு

“இந்த ருத்ரன் எனக்கு மாப்பிள்ளையானபோதே எனக்கு சிஷ்யனாயிருந்து வைத்து என்னை கண்டவாறே ஆசாரியனைக் கண்டாற்போல் கௌரவித்து வழிபடவேண்டியிருக்க இப்படி எழுந்திராதே இருக்கிறான்ன்றோ, இவனில்மிக்க கொடும்பாவி உலகிலுண்டோ? இப்படிப்பட்ட மூடனுக்கு அநியாயமாய் அருமந்த பெண்ணைக் கொடுத்து கெட்டேனே“ என்று பலவாறாக நிந்தித்து

‘தேயஜ்ஞத்தில் இப்பாவிக்கு ஹவிர்ப்பாகம் கிடைக்காமற் போகக்கடவது‘ என்று சாபமும் – கூறிவிட்டு மஹா கோபத்துடனே எழுந்து தன்னிருப்பிடம் போய்ச்சேர்ந்து, பிறகு நேடுநாளைக்கப்பால் அந்த தக்ஷன் ப்ருஹஷ்பதிஸவமென்றொரு யாகம் பண்ணத் தொடங்கின செய்தியை மகளாகிய ஸதி (பார்வதி) கேள்விப்பட்டுத்

தந்தையின் வேள்வி வைபவங்களை நாமுங்கண்டுவருவோம் என்று ஆவல்கொண்டு புறப்பட சிவபிரான் பழைய பகையை நினைத்து அங்கே நீ போகக்கூடாது என்று தடுத்தும் குதூஹலாதிசயத்தாலே அவள் விரைந்து புறப்பட்டுத் தந்தையினது இல்லம்செல்ல

அங்கே இவளைக்கண்டு தந்தை நல்வரவு கூறுதல் யோக்க்ஷேமம் வினவுதல் ஒன்றுஞ்செய்யாமல் பாங்முகமா யிருக்க மிருப்பையும் ருத்ரபாகமில்லாமல் வேள்வி நடைபெறுவதையுங்கண்டு வருத்தமும் சீற்றமுங்கொண்டு ‘இந்த மஹாபாபியான தக்ஷனிடத்தில் நின்று முண்டான இந்த என் சரீரம் இனி முடிநது போவதே நன்று என்று அறுதியிட்டுத்

தனது யோகபலத்தாலே அக்நியை உண்டாக்கி அதுதன்னிலே சரீரத்தைவிட்டொழிந்தாள். பிறகு மலையரசனாகிய ஹிமவானுக்குப் பெண்ணாய்ப் பிறந்து (பர்வத புத்ரீ என்னுங் காரணத்தால்) பார்வதி யென்று யெர் பெற்று அப்பிறப்பிலும் அந்தப் பரமசிவனையே கணவனாகப் பெறவேணுமென்று ஆசைகொண்டு கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பயனாக அங்ஙனமே மனோரதம் நிறைவேறி மகிழ்ந்தாளென்பது இங்கே அறியத்தக்கது.

மற்றொரு  மையத்திலும் பார்வதி தவம் புரிந்ததுண்டு முன்னொரு காலத்திற் கைலாஸ மலையிலே சிவபிரானும் தானும் ஏகாஸநத்தில் நெருக்கமாக வீற்றிருந்தபொழுது ப்ருங்கி யென்னும் மாமுனி சிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்யவிரும்பி ஒரு வண்டு வடிவமெடுத்து அந்த ஆஸனத்தை இடையிலே துளைத்துக்கொண்டு அதன் வழியாய் நுழைந்து சென்று அம்பிகையை விட்டுச் சிவனைமாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்ய,

அது கண்ட பார்வதீதேவி தன் பதியைநோக்கி முனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ் செய்யாமைக்கு காரணம் என்ன? என்று கேட்க

அதற்குச் சிவன் இம்மை மறுமைகளில் இஷ்டஸித்தி பெற விரும்புமவர்கள் உன்னை வழிபடுவார்கள், முத்திபெற விரும்புமவர்கள் என்னை வழிபடுவார்கள் இது நூல் துணிபு என்று சொல்ல

அதுகேட்ட பார்வதி இறைவன் வடிவத்தப் பிரிந்து தனியே யிருந்த்தனாலன்றோ எனக்கு இவ்விழிவு நேர்ந்தது என்று வருந்தி தான் சிவ்பிரானைவிட்டுப் பிரியாதிருக்குமாறு கருதி புண்ணியக்ஷேத்திரமான கேதாரத்திற்சென்று தவம் புரிந்து வரம் பெற்று அப்பிரானது வடிவத்திலே வாமபாகத்தைத் தனது இடமாக அடைந்து அவ்வடிவிலேயே தான் ஒற்றுமைப்பட்டு நின்றனள் என்று சைவபுராணங்களிற் சொல்லிப்போரும் கதையுமுண்டு.

முன்னே கூறிய தவமே இங்கு விவக்ஷிதம்.

மலையரையன் – அரையன் என்றது அரசனென்றபடி. பர்வதராஜன் என்கை. (உமை யென்னும்) பார்வதிக்கு உமா என்றும் ஒரு வடமொழிப் பெயருண்டு. அவள் தவம் புரிந்த காலத்து ஆஹாரமே யில்லாமையாலே பொன்னுடம்பு வாடப்பெற்றாள், அந்தந்த இந்திரியங்களுக்கு வேண்டிய விஷயங்களில் அவை பட்டிமேய வொண்ணாதபடி. காவலிற் புலனை வைத்துத் தவம் புரிந்தபடியாலே அந்த இந்திரியங்கள் ‘எத்தனை நாளைக்கு நாம் இவள்பால் பட்டினி கிடப்பது என வருந்தி அகனறனவாம்.

கூழை – கூந்தலுக்குப் பெயர் “முள்ளெயிறேய்ந்தில் கூழை முடிகொடா“ என்ற பெரிய திருமொழியுங் காண்க. தவநிலைக்கு தகுதியாகக் கூந்தலைச் சடையக்கின ளென்க.

(அன்ன அருந்தவத்தினூடு போய்) அவள் அநுஷ்டித்த தபஸ்ஸு ஸாமாந்யமல்ல. கோரமான தவஞ் செய்தன்ன் என்கிறது. ஊடுபோய் என்றது அந்த்த் தவத்தை முற்றமுடிய நடத்தி என்றபடி. “அருந்தவத்தினூடு போய் அன்னவன்றன் பொன்னகலஞ் சென்றாங் கணந்திலளே“ என்று அந்வயிப்பது.

ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து“ என்று தொடங்கித்“ தன்னினுடனே சுழலச் சுழன்றாடும்“ என்னுமளவும் சிவபிரானது நடனத்தின் சிறப்பு வர்ணிக்கப்படுகிறது. அப்படி அற்புதமான நாட்டியஞ் செய்ய வல்ல சிவபிரானது ஸம் ச்லேக்ஷத்தைப் பெற்றாளன்றோ என்கிறது. சிவன் கூத்தாடும் வகைகள் பல பலவுள்ளன. திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களில் அவற்றைக் கண்டுகொள்க.

இங்கே சொல்லப்படுகிற நாட்டியவகை – ஆயிரங் திசைகளில் வியாபிக்கச் செய்து ஒற்றைக்காலால் நின்றுகொண்டு மற்றொருகாலை மேலேதூக்கி, பம்பரம்போல் சுழற்றி ஆடினவகையாம்.

“தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க் கண்களாயிரத்தாய், தாள் களாயிரத்தாய் பேர்களாயிராத்தாய்“ என்று எம்பெருமானைச் சொல்வதுபோல சைவபுராணங்களில் சிவனைப்பற்றியும் சொல்லியிந்தலால் “ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து“ எனப்பட்டது.

தெய்வத் தன்மைக்குரிய சக்தி விசேஷத்தினால், வேண்டியபோது வேண்டியபடி வடிவுகொள்ள வல்லமைப் யுள்ளமைபற்றி ஒருநர்த்தன விசேஷத்தில் இங்ஙனே ஆயிரந்தோள் மன்னுகதலங்கள் கொண்டு ஆடினனாகவுங்கொள்க.

ஒருகால் தன்னுடைய நடனத்தைக்கண்டு அதற்குத் தகுதியாகத் தனது இரண்டு கைகளால் மத்தளங் கொட்டின பாணாஸுரனுக்கு உவந்து ஆயிரங்கைகள் உண்டாம்படி வரமளித்தன்னாகச் சொல்லப்பட்ட சிவபிரானுக்கு இஃது அருமையன்றென்ப. மட்டித்து –மட்டித்தலாவது மண்டலாகாரமாக வியாபிக்கச் செய்தல்.

மாதிரங்கள் மின்னி எரிவீச –“ஒருருவம் பொன்னுருவ மொன்று செந்தீ ஒன்றுமாகடலுருவம்“ என்றபடி சிவனது உருவம் செந்தீ யுருவமாதலால் அன்னவன் தனது காலை மேலே தூக்கிச் சுழன்று ஆடும்போது திசைகளெல்லாம் நெருப்புப்பற்றி யெரிவன்னபோல் காணப்படுமென்க. சூழ்கழற்கால் கழல் சூழ்ந்த கால் வீரத்தண்டை அணிந்த கால் என்றபடி.

பொன்னுலக மேழுங்கடந்து என்றது –கூத்தாடும்போது சிவனுடைய கால் நெடுந்தூரம் வளர்ந்து சென்றமையைச் சொன்னவாறு. உம்பர் மேல் மேன் மேலும்

(மன்னு குலவரையும் இத்யாதி) நாமெல்லாம் தட்டாமாலையோடும்போது அருகிலுள்ள செடிகொடி முதலியனவும் கூடவே சுழல்வதாகக் காணப்படுமன்றோ. சிவபிரான் பெரியவுருக்கொண்டு சூழன்றாடும்போது பெருப்பெருத்த பாதார்த்தங்களெல்லாம் உடன் சுழல்வனபோற் காணப்படுமாற்றிக.

இப்படியாக கூத்தாடின சூலபாணியும் பஸ்மதாரியுமான சிவனது மார்போடே அணையப்பெறுதற்காகப் பார்வதி தவம்புரிந்தபடியை மஹாபாரத்தில் பரக்கக் காண்மின் என்று தலைக்கட்டிற்றாயிற்று.

————

பாவியேற்கு
என்னுறு நோய் யானுரைப்பக் கேண்மின் -இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடார் மணி வரை மேல் பூத்தது போல் —-75
மின்னி யொளி படைப்ப வீணாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண் முடியும் ——-76
துன்னு வெயில் விரித்த சூளா மணி யிமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே ——–78
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் ———–80
பொன்னியலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி யுகுத்த ———–81
இந்நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத் தான் என்கொலோ ——–82

பதவுரை

பாவியேற்கு என்று உறு நோய்

பாவியாகிய எனக்கு நேர்ந்த நோயை
யான் உரைப்ப கேண்மின்

நானே சொல்லக் கேளுங்கள் (என்னவென்றால்)
இரு பொழில் சூழ்

விசாலமான சோலைகள் சூழப்பெற்றதும்
மறையோர் மன்னும்

வைதிகர்கள் வாழப்பெற்றதுமான
திரு நறையூர்

திருநறையூரில்
மா மலைபோல பொன் இயலும் மாடம் கவாடம் கடந்து புக்கு

பெரிய மலைபோன்றதும் ஸ்வரண மயமுமான ஸந்நிதியின் திருக் காப்பை நீக்கிச் சென்று
என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்

எனது கண்கள் களிக்கும்படி உற்றுப்பார்த்தேன்
நோக்குதலும்

பார்த்தவளவில்
மன்ன்ன்

(அங்குள்ள) எம்பெருமானுடைய
திரு மார்பும்

பிராட்டியுறையும் மார்வும்
வாயும்

(புன் முறுவல் நிறைந்த) அதரமும்
அடி இணையும்

உபய பாதங்களும்
பன்னு கரதலமும்

கொண்டாடத் தக்க திருக்கைகளும்
கண்களும்

திருக்கண்களும்
ஓர் மணிவரைமேல் பொன் இயல் பங்கயத்தின் காடுபூத்த்துபோல் மின்னி ஒளிபடைப்ப

ஒரு நீலரத்ந பர்வத்த்தின் மேல் பொன் மயமான தாமரைக் காடு புஷ்பித்தாற்போல் பளபளத்த ஒளியை வீச,
வீழ்நாணும்

விரும்பத்தக்க திருவரை நாணும்
தோள் வளையும்

தோள் வளைகளும்
மன்னிண குண்டலமும்

பொருத்தமான திருக்குண்டலங்களும்
ஆரமும்

திருமார்பில் ஹாரமும்
நீள் முடியும்

பெரிய திருவபிஷேகமும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப

மிக்க தேஜஸ்ஸை வெளிவிடுகின்ற முடியிற் பதித்த ரத்னமும் ப்ரகாசிக்க
மன்னு மாதகக்குன்றின் மருங்கே

எல்லார்க்கும் ஆச்ரயமான மரகதமலை யென்னும்படியான எம்பெருமான் பக்கத்திலே
ஓர் இன் இள வஞ்சி கொடி ஒன்று நின்றது

விலக்ஷணமாய் போக்யமாய் இளைசா யிருப்பதொரு வஞ்சிக்கொடி யென்னும் படியான பிராட்டி நின்றாள்.
அன்னம் ஆய்

(நடையில்) ஹம்ஸத்தை யொத்தும்
மான் ஆய்

(நோக்கில்) மானையொத்தும்
அணி மயில் ஆய்

(கூந்தலில்) அழகிய மயிலை யொத்தும்
இடை மின் ஆய்

இடையழகில மின்னலை யொத்தும்
இள இரண்டு வேய் ஆய்

(தோளில்) இளைதான இரண்டு மூங்கில்களையொத்தும்
இணை செப்பு ஆய்

(ஸ்தநத்தில்) இரண்டு கலசங்களை யொத்தும்
முன் ஆய் தொண்டை ஆய்

முன்னே தோற்றுகிற (அதரத்தில்) கொவ்வைக் கனியை யொத்தும்.
குலம் கொண்டை இரண்டு ஆய்

(கண்ணில்) சிறந்த இரண்டு கெண்டை மீன்களை யொத்தும்
அன்ன

அப்படிப்பட்டிருந்த
திரு உருவம்

திவ்ய மங்கள விக்ரஹம் (பிராட்டி)
நின்றது அறியாது

(பக்கத்தில்) நிற்கும் படியை அறியாதே (எம்பெருமான் மாத்திரமே யுளனென்று ஸேவிக்கப் புகுந்த)
என்னுடைய நெஞ்சும்

எனது நெஞ்சும்
அறிவும்

(அந்த நெஞ்சின் தருமமாகிய) அறிவும்
இனம் வளையும்

சிறந்த கைவளையும்
பொன் இயலும் மேகலையும்

ஸ்வர்ண மயமான மேகலையும்
ஒழிய போந்தேற்கு

(எல்லாம்) விட்டு நீங்கப்பெற்ற எனக்கு (இதற்குமேலும் ஹிம்ஸையாம்படி)
மன்னு மறி கடலும் ஆர்க்கும்

சலியாததும் மடிந்து அலையெறிவதுமான கடலும் கோஷம் செய்யா நின்றது
மதி உகுத்த இன் நிலாவின் கதிகும்

சந்திரன் வெளியிடுகின்ற இனிய நிலாவின் ஒளியும்
என் தனக்கே

எனக்கு மாத்திரம்
வெய்து ஆகும்

தீக்ஷ்ணமாயிரா நின்றது,
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொல்

நிலாவின் ஸ்வபாவமாகிய குளிர்த்தி தவிர்ந்து இப்படி வெப்பமாம்படி எம்பெருமான்றான் ஏதாவது செய்துவிட்டானோ.

இங்ஙனே ஊரிலுள்ள பெண்களின் சரித்திரங்களை எடுத்துரைப்பதனால் எனக்கு என்ன பயனாம்? அந்த வம்புக் கதைகளையெல்லாம் விரித்துரைப்பதற்கோ நான் பெண் பிறந்தது. அது கிடக்கட்டும், நான் பட்டபாடு நாடறியச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று திருநறையூ ரெம்பெருமான் ஸ்ந்நிதியிலே ஸேவிக்கப்புகுந்த தான் பட்டப்பாட்டைப் பேசத் தொடங்குகின்றாள் பரகால நாயகி.

பாவியேற் கென்னுறு நோய் என்று இங்ஙனே அந்வயித்துப் பொருள் கொள்வதிற் காட்டிலு ம் ‘பன்னியுரைக்குங்காற் பாரதமாம் பாவியேற்கு“ என்று கீழோடே அந்வயிப்பது பூருவர்களின் வியாக்கியானங்களுக்கு நன்கு பொருந்தும்.

************     (நெஞ்சினுள்ளே துக்கம் அதிகரித்தால் வாய் விட்டுக் கதறினால்தான் தீரும்.) என்று சொல்லியுள்ளபடி – தனது வருத்த்தை ஒருவாறு தணித்துக்கொள்ள வேண்டி வாய்விட்டுக் கதறுகின்றாளென்க.

யானுற்ற நோயை யான் சொல்லுகிறேன் கேளுங்கள் நான் திருநறையூரெம்பெருமானை ஸேவிக்கச்சென்று ஸந்நிதியுள்ளே புகுந்து பார்த்தேன், பார்த்தவுடனே அவ்வெம்பெருமானுடைய திருமார்வு திருவதரம் திருவடி திருக்கை திருக்கண் ஆகிய இவ்வவயவங்கள் நீலகிரிமேல் தாமரைக்காடு பூத்தாற்போல் பொலிந்தன.

திருவரைநாண் திருத்தோள்வளை திருமகர குண்டலம் ஹாரம் திருவபிஷேகம் அதனுச்சியிற்பதித்த மணி ஆகிய இவை பளபளவென்று ப்ரகாசித்தன, அவ்வெம்பெருமான் பக்கத்திலே அன்னம்போன்ற நடையழகும் மான்போன்ற நோக்கழகும் மயில்போன்ற கூந்தலகும் மின்போல் நுண்ணிய இடையழகும் வேய்ப்போன்ற தோளழகும் செப்புப்போன்ற முலையழகும் கோவைபோன்ற வாயழகும் கெண்டைபோன்ற கண்ணழகுமுடையளான பெரிய பிராட்டியார் இளவஞ்சிக்கொடி போலே நின்றதையுங் கண்டேன்.

கண்டதும் அறிவு போயிற்று பலவிகாரங்களுண்டாயின. இப்படி வருத்தபடாநின்ற எனக்குக் கடலோசை தானும் வந்து மேன்மேலும் ஹிம்ஸையைப்பண்ணா நின்றது. எல்லார்க்கும் இனிதான நிலா எனக்குத் தீ வீசுகின்றது குளிர்ச்சியையே இயல்வாகவுடைய நிலாவும் இப்படி கடும்படியான காரணம் என்னோ, அறியேன் – என்றாளாயிற்று.

திருநறையூர்ப் பொன்னியலுமாடம் – நாச்சியார் கோவிலுக்குத் திருநறையூர் மணிமாடம் என்று ப்ரஸித்தியுள்ளது. “திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே“ என்றார் பெரிய திருமொழியில், “தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணளனை“ என்பர் இத்திருமடலிலும். கவாடம் – கதவு, வடசொல்.

பன்னு கரதலம் – ‘இப்படிமொரு கரதலமுண்டோ‘ என்று வாய்வெருவப்பண்ணும் கை காரதலம் – வடசொல். ஓர் மணிவரைமேல் பொன்னியல் பங்கயத்தின் காடு பூத்த்துபோல் – எம்பெருமானது திருமேனி நீலரத்ந பர்வதமாகவும் திருக்கண் முதலியன தாமரைக் காடாகவும் ரூபிக்கப்பட்டன.

அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனாதலால் திருமார்பும் தாமரை யாக விளங்கக் குறையில்லை. பங்கயம் – பங்கஜம். ஒளிப்படைப்ப – ஒளியை யுண்டாக்க. வீணாணும் – வீழ் – நாண் – வீணான், வீரசோழிய மென்னும் இலக்கண நூலில் (சந்திப்படலம் – 18) “நவ்வரின் முன்னழிந்து பின் மிக்க ணவ்வாம் என்றது காண்க. வீழ்தல் –விரும்பப்படுதல். ஆரம் – ஹாரம்.

(“துன்னுவெயில்விரித்த சூடாமணி இமைப்ப“) சூடாமணியிமைப்ப என்றவிடத்து உம்மைத் தொகையாகவும் உவமைத்தொகையாகவுங் கொள்ளலாம், உம்மைத் தொகையாகக் கொள்ளும்போது, சூடாமணியாவது திருவபிஷேகத்தின் நுனியிற்பதித்த ரத்னம், அதுவும்  விளங்க – என்றதாகிறது. உவமத்தொகையாகக் கொள்ளும்போது,சூடாமணியாவது தேவலோகத்துச் சிறந்த்தொரு மாணிக்கம், அதுபோலே விணாணும். நீண்முடியும் விளங்க – என்றதாகிறது. சூடாமணி எனினும் சூளாமணி யெனினும் ஒக்கும். இமைத்தல் – ஒளிசெய்தல்.

மன்னுமரதகக் குன்றின் மருங்கே – எம்பெருமான்றன்னையெ ஸாக்ஷாத் மரகத பர்வதமாகக் கூறினது முற்றுவமை. அப்படியே, பிராட்டியை இளவஞ்சிக் கொடியாகக் கூறினதும் முற்றுவமை. இதனை வடநூலார் ரூபகாதிசயோக்தி யென்பர். ஒரு மலையினருகே ஒரு பொற்கொடி நிற்கக்கண்டேனென்று சமத்காரமாக அருளிச்செய்தபடி. மாதர்க்கு இளவஞ்சிக்கொடி ஒப்புச்சொல்லுதல் கவிமரபு.

அன்னமாய் மானாய்.  என்றவிடங்களிலும் உபமேயங்களான நடை நோக்கு முதலியன மறைக்கப்பட்டன. மயில் கூந்தற்செறிவுக்கும் சாயலுக்கும் உவமையாம். பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் மூங்கிலைத் தோள்களுக்கு உபமானமாக்குவது. செப்பு பொற்கலசம். தொண்டை – கோவைக்கனி.

அன்ன திருவுருவம் நின்றதறியாதே – “ப்ரஹ்மசாரி நாராயணன் மாத்திரமே யுள்ளான், கண்டு வந்தவிடுவோம் என்று கருதிச் சென்றேன். பக்கத்தில் ஒரு பிராட்டி யெழுந்தருளியிருப்பது தெரியாமற் போயிற்று. தெரிந்திருந்தால் உட்புகுந்தே யிருக்கமாட்டேன், அந்தோ! தெரியாமற்சென்று பட்டபாடு இது! என்கிறாள்போலும்.

நெஞ்சு போயிற்று, அறிவு போயிற்று, வளை கழன்றொழிந்தது, மேகலை நெகிழ்ந்தொழிந்தது. இபப்டிப்பட்ட பரிதாப நிலைமையில் கடல்தானும் தனது கோஷத்தைச் செய்து கொலை செய்யா நின்றது.

(தன்னுடைய தன்மை தவிரத்தா னென்கொலோ?) “சீதோபவ ஹநூமதா“ என்ன நெருப்புக் குளிருமாபோலே “நிலாச்சுடுக“ என்று நினைப்பிட்டதோ? இதுக்குக் காரணம் என்? என்கிறாள்“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி காண்க. சந்திரனுக்குத் தன்னுடைய தன்மையாகிய குளிர்த்தி மாறி வெப்பமுண்டாவதற்கு என்ன காரணம்?

—————-

தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அலைந்து
மன்னி இவ் யுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் ——-83
இந்நிலம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரிக் கூட்டகத்துப் ———84
பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர் வாளாம் என் செய்கேன் ——–85

பதவுரை

தென்னன் பொதியில்

தென் திசைக்கு தலைவனான பாண்டிய ராஜனது மலையமலையிலுள்ள
செமு சந்திரன் தா துஅளைந்து

அழகிய சந்தந மரத்தின் பூந்தாதுகளை அளைந்து கொண்டு
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்

நித்யமான இந்த லோகத்திலுள்ளவர்கள் மனம் மகிழும்படி வந்து உலவுகின்ற
இன் இள பூ தென்றலும்

போக்யமாய் அழகான இளந்தென்றற் காற்றும்
எனக்கே எரி வீசும்

எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது
முன்னிய பெண்ணை மேல்

முன்னே காணப்படுகிற பனை மரத்தில்
முள் முளரி கூடு அகத்து

முள்ளையுடைய தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட கூட்டிலே
பின்னும்அவ் அன்றில் பெடை வாய் சிறு குரலும்

வாயலகு கோத்துக் கொண்டிருக்கிற அன்றிற் பேடையின் வாயிலுண்டான சிறிய குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாள் ஆம்

எனது நெஞ்சை அறுக்கின்ற வொரு வாளாக இராநின்றது.
என் செய்கேன்

(தப்பிப் பிழைக்க) என்ன உபாயஞ் செய்வேன்?

எனக்கு ஹிம்ஸையை உண்டு பண்ணுவன கடலோசையும் நிலாவுமேயல்ல, தென்றல் முதலிய மற்றும் பல பொருள்களும் ஹிம்ஸிக்கின்றன என்கிறாள்.

தெற்குத்திசைக்குத் தலைவனாய் மலயத் வஜனென்று பெயருடையவனான பாண்டியராஜனது பொதிய மலையிலுள்ள திவ்யமான சந்தனமரத்தற் பூத்தாதுகளிற் படிந்து அவற்றின் பரிமளத்தைக் கொய்து கொண்டு நாடெங்கும் வந்து வீசி அனைவரையும் மகிழ்விக்கின்ற தென்றற் காற்று எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது,

இந்நிலைமையிலே அன்றிற் பேடையின் இன்குரலும் செவிப்பட்டுப் பரமஹிம்ஸையாகின்றது என்கிறாள்.

(என் செய்கேன்) –கீழே “தென்ன்ன் பொதியில் செழுஞ் சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார்“ என்று தொடங்கி“ இன்னிளவாடை தடவத் தாங் கண்துயிலும் பொன்ன்னையார் பின்னும் திருவுறுக.“ என்று சொல்லியுள்ளபடி –

விரஹ காலத்தில் ஹிம்ஸகங்களான இந்த வஸ்துக்களை லக்ஷியம் பண்ணாமல் இவற்றைப் பரமபோக்யமாகக் கொள்ளுகிற சில பெண்களாகப் பிறவா தொழிந்தேனே! இவற்றுக்கு நலிவுபடும் பெண்ணாக பிறந்தேனே! என்செய்வேன் என்கிறாள்.

————

கன்னவில் தோள் காமன் கறுப்புச் சிலை வளையக்
கொன்னவிலும் பூம் கணைகள் கோத்துப் பொத வணைந்து ——86
தன்னுடைய தோள் கழிய வாங்கித் தமியேன் மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக வெய்கின்றான் ———–87
பின்னிதனைக் காப்பீர் தான் இல்லையே-

பதவுரை

கல் நவில் தோள் காமன்

மலைபோல் (திண்ணிய) தோள்களை யுடையனான மன்மதன்
கரும்பு சிலை வளைய

(தனது) கருப்பு வில்லை வளைத்து
கொல் நவிலும் பூ கணைகள் கோத்து

(அந்த வில்லில்) கொலை செய்ய வல்ல புஷ்ப பாணங்களைத் தொடுத்து
பொத அணைந்து

(அந்த வில்லை மார்பிலே) அழுந்த அணைத்துக்கொண்டு)
தன்னுடைய தோள் கழிய வாங்கி

தனது தோள் வரையில் நீள இழுத்து
என்னுடைய நெஞ்சே இலக்கு ஆக தமியேன் மேல் எயகின்றான்

எனது நெஞ்சையே குறியாகக் கொண்டு துணையற்ற என்மீது (அந்த அம்புகளைப் பிரயோகிக்கின்றான்.
பின் இதனை காப்பீர்தான் இல்லையே

இப்போது இந்த ஆபத்தில் நின்றும் என்னைத் தப்புவிக்க வல்லீரில்லையே!

***- கீழ்ச் சொன்ன கடலோசை முதலியவற்றுக்கு ஒருவாறு தப்பிப் பிழைத்தாலும் பிழைக்கலாம், இனி ஜீவிக்க வழியில்லை யென்னும்படியாக மன்மதன் தனது பாணங்களைச் செலுத்தி வருத்துந்திறம் வாசாமகோசரம் என்கிறாள். மஹாபலசாலியான மன்மதனும் தனது கருப்புவில்லை வளைத்து என்னை இலக்காகக் கொண்டு புஷ்ப பாணங்களைப் பிரயோகிக்கின்றானே, நான் இதற்குத் தப்பிப் பிழைக்கும்படி செய்வாராருமில்லையே. என்கிறாள்.

கன்னவில் தோள் காமன் – ஒருகால் பரமசிவனுடைய கோபாக்கிநிக்கு இலக்காகி நெற்றிக் கண்ணால் தஹிக்கப்பட்டு உடலிழந்து அநங்கன் என்று பேர்பெற்றவனான மன்மதனுக்கு உடம்பு இல்லை யாயிருக்க, “கன்னவில் தோள் காமன்“ என்றும் “தன்னுடைய தோள் கழியவாங்கி“ என்றும் அருளிச் செய்வது சேருமோ எனின்,

அநங்கன் செய்கிற காரியத்தைப் பார்த்தால், திண்ணிய உடம்புடையானும் இவ்வளவு காரியம் செய்ய வல்லவனல்லன்“ என்னும்படியாகப் பெரிய கொலைத் தொழிலாயிருப்பதனால் அவனுக்கு வலிதான வுடம்பு இருந்தே தீரவேணுமென்று காமிகள் கருதுவதுண்டாதலால் இப்பரகால நாயகியும் அந்த ஸமாதியாலே சொல்லுகின்றாளென்க.

மன்மதனுக்குக் கரும்பை வில்லாகவும் ஐவகைப் புஷ்பங்களை அம்பாகவும் அந்த அம்புகளை வில்லிலே தொடுத்துப் பிரயோகிக்கின்றானாகவும் நூல்கள் கூறுகின்றமை காண்க.

கரும்பு –சிலை, கரும்புச்சிலை, பூங்கணைகள் – முல்லை, அசோகம், நீலம், மா, முளரி என்ற ஐந்து மலர்கள் மன்மத பஞ்ச பாணங்களெனப்படும். மத்தம், தீரம், சந்தாபம் வசீகரணம், மோகனம் என்கிற ஐவகைச் செயல்களைப் பஞ்ச பாணமாகச் சொல்லுவர் ஒரு சாரார்.

———

—————————————————————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ உ . வே . ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய வியாக்யானங்கள் —

December 5, 2022

ஸ்ரீ மன் நாதமுனிகள் வகுத்து அருளினை அடைவிலே
மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் எட்டாவது பிரபந்தமாக அமைந்தது இது –

——————-

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன்

—————–

அவதாரிகை –

வென்றியே வேண்டி வீழ் பொருட்க்கு இரங்கி வேற் கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் -என்றும்
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்து ஆழ்ந்தேன் -என்றும்
தாமே அருளிச் செய்தபடி
விஷய பிரவணராய் திரிந்து கொண்டு இருந்த இவ்வாழ்வார்

தம்மை எம்பெருமான் திருத்திப் பணி கொள்ளத் திரு உள்ளம் பற்றி விஷயங்களில் ஆழ்ந்து திரிகிற இவரை
சாஸ்த்ரங்களைக் காட்டித் திருத்த முடியாது –
நம் அழகைக் காட்டியே மீட்க வேணும் என்று கொண்டு தன் அழகைக் காட்டிக் கொடுக்க

ஆழ்வாரும் அதைக் கண்டு ஈடுபட்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது -அடியேன் நான் பின்னும்
உன் சேவடி அன்றி நயவேன் -என்னும்படி அவகாஹித்தார் –

இவர் இப்படி தன் பக்கல் அவகாஹிக்கக் கண்ட எம்பெருமான் –
இப்போது இவருக்கு நம் இடத்து உண்டான பற்று
மற்ற விஷயங்களை போல் அல்லாமல் சம்பந்த உணர்ச்சியை முன்னிட்டுப் பிறந்ததாக வேணும் –
இல்லையேல் இப்பற்று இவருக்கு நிலை நிற்காது ஒழியினும் ஒழியும் என்று எண்ணி

எல்லா பொருள்களையும் விளக்குவதான திரு மந்திரத்தையும்
தனது ஸுசீல்யம் முதலிய திருக் குணங்களையும் திரு மந்த்ரார்த்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களையும்
ஆழ்வாருக்கு காட்டிக் கொடுக்க –

அவரும் வாடினேன் -வாடி -என்று தொடங்கி
எம்பெருமான் உகந்து அருளின இடமே பரம ப்ராப்யம் என்று அனுபவித்தார் –

இங்கனம் அனுபவித்த ஆழ்வாருக்கு இவ்வனுபவம் நித்யமாய்ச் செல்லுகைக்காக
இவரைத் திரு நாட்டில் கொண்டு போக வேணும்
எனக் கருதிய எம்பெருமான் இவர்க்கு ஜிஹாசை பிறக்கும்படி அதனுடைய தண்மையை அறிவிக்க

அறிந்தவர் அஞ்சி நடுங்கி -மாற்றம் உள -என்னும் திரு மொழியிலே –
இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போல் -என்றும் –
வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போலே -என்றும்
தமது அச்சத்துக்கு பலவற்றை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிக் கதறினார் –

இப்படி இவர் கதறிக் கதறி –
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -என்றும்
அந்தோ அருளாய் அடியேற்கு உன் அருளே -என்றும் -சொல்லி வேண்டின இடத்தும்
சிறு குழந்தைகள் பசி பசி என்று கதறி அழுதாலும்
அஜீரணம் முதலியவை கழிந்து உண்மையான பசி உண்டாம் அளவும்
சோறிடாத தாயைப் போலே எம்பெருமான் –
இவருக்கு முற்ற முதிர்ந்த பரம பக்தி பிறக்கும் அளவும் நாம் முகம் காட்டுவோம் அல்லோம்-
என்று உதாசீனனாய் இருக்க –

ஒரு க்ஷணமும் அவனைப் பிரிந்து இருக்க மாட்டாத ஆழ்வார் மிகுந்த தாஹம் கொண்டவர்கள்
நீரிலே விழுந்து -நீரைக் குடிப்பதும்
நீரை வாரி மேல் இறைத்துக் கொள்வதும் செய்யுமா போலே அவ்வெம்பெருமானை
வாயாலே பேசியும் –
தலையாலே வணங்கியும் –
நெஞ்சால் நினைத்தும் -தரிக்கப் பார்த்தார் –
திருக் குறும் தாண்டகம் என்னும் திவ்ய பிரபந்தத்தில் –

தாஹம் அளவற்றதாய் இருக்க சிறிது குடித்த தண்ணீர் திருப்தியை உண்டு பண்ணாமல்
மேலும் விஞ்சிய விடாயை பிறப்பிக்குமா போலே
இவர் திருக் குறும் தாண்டகத்திலே அனுபவித்த அனுபவம்
பழைய அபி நிவேசத்தை கிளப்பி பெரிய ஆர்த்தியை உண்டாக்கவே –
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையோ –என்று
ஆர்த்தராய் சரணம் புகுகிறார் –
இத் திரு வெழு கூற்று இருக்கை -என்னும் பிரபந்தத்தில் –

——————————————————–

ஆசு கவி –
அருமைப் பட்டு சொற்களை சேர்த்து மஹாப் பிரயாசமாகப் பாடுகை இன்றிக்கே –
பல நிபந்தனைகள் உடன் கூடிய பாடல்களையும் -விரைவில் பரவசமாக பாடுதல்-

மதுரகவி –
சொற்சுவை பொருள்சுவை விளங்க பல வகை அலங்காரம் பொலிய பாடுவது

விஸ்தார கவி –
கலி வெண்பா முதலியவற்றால் விஸ்தரித்து பாடுவது

சித்திர கவி –
சக்ர பந்தம் -பத்ம பந்தம் -முரஜ பந்தம் -நாக பந்தம் -ரத பந்தம் –

எழு கூற்று –
முதல் கூறு மூன்று அறைகள்
இரண்டாம் கூறு ஐந்து அறைகள்
மூன்றாம் கூறு ஏழு அறைகள்
நான்காம் கூறு ஒன்பது அறைகள்
ஐந்தாம் கூறு 11 அறைகள்
ஆறாம் கூறு 13 அறைகள்
ஏழாம் கூறு 13 அறைகள் –

இதே போலே மேலும் கீழும் இரண்டு பாகங்கள் கொண்டதே –

அர்த்த சக்தியாலும்
சப்த சக்தியாலும் நினைப்பூட்டும் சொற்கள் கொண்டு நிறைக்க வேணுமே

ஒரு பேர் உந்தி இருமலர்த் தவசில் -இரு -இரண்டு பெருமை என்ற பொருள்களில் –

ஒன்றிய -அஞ்சிறை -நால் வாய் -இரு நீர் -ஓன்று -ஆறு பொதி –போன்ற இடங்கள் போலே
அர்த்த சப்த சக்தியாலும் காட்டலாம் –

எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றை விசதமாக அனுபவித்து –
அவ்வனுபவம் உள் அடங்காமல் வழிந்து புறப்பட்ட ஸ்ரீ ஸூ க்திகளிலே –
இது போன்றவை அமைந்தவை –

ஸ்ரீ வால்மீகி பகவான் -வாயினின்றும் வெளி வந்த
மா நிஷாத ப்ரதிஷ்டாம் -நான் முகன் பிரசாதத்தால் லக்ஷணம் குறை இன்றி அமைந்தால் போலே –
இதுவும் ஸ்வ பிரயத்தன பூர்வகமான பிரபந்தம் இல்லாமல்
ஸ்ரீ யபதி திருவருளால் அவதரித்த பிரபந்தம் -என்றால் சொல்ல வேண்டாவே –

—————————————–——

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,

மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,

முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபெ ¡தி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,

குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே.

—————

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

 

பதவுரை

ஒரு

விலக்ஷணமாய்
பேர்

பெருமை பொருந்திய
உந்தி

திருநாபியிலுண்டான
இரு

பெரிதான
மலர்

(தாமரைப்) பூவாகிற
தவிசில்

ஆஸனத்தின் மீது
ஒருமுறை

ஒருகால்
அயனை

பிரமனை
ஈன்றனை

படைத்தருளினாய்

***- உலகங்களடங்கலும் பிரளயங் கொண்டபின் மீண்டும் உலகங்களைப் படைக்க எம்பெருமான் தனது திரு நாபிக் கமலத்தில் நான்முகக் கடவுளை படைத்து அவனுக்கு வேதங்களை பழையபடியே ஓதுவித்து அப் பிரமனைக் கொண்டு முன்போலவே எல்லா வுலகங்களையும் எடைப்பதாக நூல்கள் கூறும். “உய்ய வுலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை“ என்றார் பெரியாழ்வார்.

உத்பத்திக்கு ஹேதுவான நீயே ரக்ஷணமும் பண்ண வேண்டாவோ? என்கைக்காக ஆழ்வார் முதலிலே இதனை அருளிச் செய்தாரென்க. தவிசு – ஆசனம்.

———

கீழ் வாக்கியத்தில் உலகங்களைப் படைத்தமை சொன்னார், படைத்த உலகத்திற்குத் தீங்கு சேருங்காலத்தில் படாதனபட்டு ரக்ஷிக்கிறபடியைச் சொல்லுகிறார் இதில். குளவிக் கூடுபோலே ராக்ஷ்ஸர்களுக்குக் கூடாகிய இலங்கயை நீறுபடுத்தினபடியைச் சொல்லுகிறார்.

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,

பதவுரை

ஒரு முறை

ஸ்ரீராமனாய் அவதரித்த ஒரு காலத்தில்,
இரு சுடர்

சந்திர ஸூர்யர்கள்
மீதினில் இயங்கா

(அச்சத்தினால்) மேலே ஸஞ்சரிக்க வொண்ணாததும்
மும் மதிள்

நீர்க் கோட்டை, மலைக் கோட்டை வனக் கோட்டை என்கிற மூன்று துர்க்கங்களை யுடையதுமான
இலங்கை

லங்கா புரியை
இரு கால் வளைய

இரண்டு நுனியும்
ஒரு சிலை

ஒப்பற்ற சார்ங்க வில்லில்
ஒன்றிய ஈர் எயிறு

பொருந்தியதும் இரண்டு பற்களை யுடையதும்
அழல் வாய்

நெருப்பைக் கக்குகிற வாயை யுடையதுமான
வாளியின்

அம்பினால்
அட்டனை

நீறாக்கினாய்

தேவதைகள் அனைவரும் இராவணனுக்கு அஞ்சி நடுங்கி மறைந்து வாழ்ந்தனராதலால் ஸூர்ய சந்திரர்களும் இலங்கையின் மேலே ஸஞ்சரிக்க மாட்டார்களாம் ஆகவே, இருசுடர் மீதினிலியங்காத இலங்கையாயிற்று.

“பகலவன் மீதியங்காத இலங்கை“ என்றார் பெரிய திருமொழியிலும்.

இருசுடர் –இரண்டு சுடர்ப்பொருள்கள், அவையாவன சந்திர ஸூர்யர்கள்

மீதினில் – இலங்கையின்மீது, இயங்குதல் – ஸஞ்சாரம் செய்தல். இவ் விசேஷணத்தால், இராவணன் தேவர்களனைவர்க்கும் மிருத்யுவாயிருந்தானென்பது விளங்கும்.

மும்மதிள் – மலையரண் நீரரண் காட்டரண் என்னும் முக்கோட்டைகளை யுடையதாம் இலங்கை. இராவணனுடைய ஒப்புயர்வற்ற செல்வத்தைக்கண்டு அனுமானும் அளவற்ற ஆச்சரியமடைந்தானென்பர் வான்மீகி முனிவர்.

இப்படிப்பட்ட இலங்கையை வாளியின் அட்டனை என்று அந்வயம்

வாளியாவது அம்பு. அஃது எப்படிப்பட்டதெனில் அதன் கொடுமை தோற்ற மூன்று விசேஷணங்களிடுகிறார். இருகால் வளைய ஒரு சிலை யொன்றியதும், ஈரெயிற்றதும், அழல்வாயதுமாம் அவ்வாளி.

ஸ்ரீ சார்ங்கமென்னும் இராமபிரானதுவில் இரண்டு கோடியும் வளைந்து நிற்குமென்றது இயல்பு நவிற்சி, ஸ்வபாவோக்தி. அந்த சார்ங்கத்திலே தொடுக்கப்பட்டதாம்.

ஈரெயிறு – ஈர்கின்ற எயிற்றையுடையது என்றுமாம். ஈர்தல் – கொல்லுதல் அட்டனை – முன்னிலை யொருமை வினைமுற்று. அடுதல் – தஹித்தல்.

—————-

அம்பாலே காரியம்கொண்டபடியை அருளிச்செய்தார் கீழ், அழகாலே காரியம்கொண்டபடியை அருளிச்செய்கிறார் இதில்.

மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

 

பதவுரை

ஒரு முறை

ஒருகாலத்தில்
முப்புரி நூலொடு

யஜ்ஞோபவீதத்தோடு கூட
மான் உரி

க்ருஷ்ணாஜிநமும்
இலங்கு

விளங்கா நின்ற
மார்வினின்

திருமார்பையுடைய
இருபிறப்பு ஒரு மாண்ஆகி

ஒருப்ராஹ்மண ப்ரஹ்மசாரியாகி

(மாவிலியிடம் சென்று)

நானிலம்

பூமியிலே
மூ அடி

மூன்றடி நிலத்தை
வேண்டி

யாசித்து
ஈர் அடி

இரண்டு திருவடிகளாலே
மூ உலகு

மூன்று லோகங்களை
அளந்தனை

அளந்துகொண்டாய்

இந்திரனுடைய குறையை நீக்கவேண்டி எம்பெருமான் குறிய மாணுருவாகி மாவலிபக்கல் சென்று மூவடி வேண்டிப் பெற்று உலகங்களையெல்லாம் அளந்து மாவலியைப் பாதாளத்தில் அழுத்தின வரலாறு ப்ரஸித்தமேயாம்.

நானிலம் – நான்காகிய நிலங்களையுடையதெனப் பூமிக்குக் காரணப்பெயர், நால்வகை நிலங்களாவன – முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்பன. காடும் காடுசார்ந்த இடமும் முல்லையாம், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியாம், நாடும் நாடுசார்ந்த இடமும் மருதமாம், கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தலாம், மற்றொன்றாகிய பாலைநிலம் பிராணிஸஞ்சாரத்திற்கு உரியதன்றென்று இங்கே விலக்கப்பட்டது. அது நீரும் நிழலுமில்லாத கொடு நிலம். பாலைக்குத் தனியே நிலமில்லையென்பதும், நால்வகை நிலங்களும் தத்தம் தன்மை கெட்ட விடத்தே பாலையாமென்பதும் சில ஆசிரியர் கொள்கை.

முப்புரிநூல் –ப்ரஹ்மசாரிகள் பூணும் யஜ்ஞோபவீதம் மூன்று புரியை யுடையதாம். (அதாவது – மூன்று வடமுடையதாம்) மானுரி – அந்தப்பூணுநூலில் க்ருஷ்ணாஜினத்தை முடிந்து அணிதல் மரபு. “மான் கொண்ட தோல் மார்பின் மாணியாய்“ என்றார் பெரிய திருமொழியிலும். இருபிறப்பு – ‘த்விஜ‘ என்றும், ‘த்விஜந்மா என்றும், த்விஜாதி என்றும் வடமொழியில் பார்ப்பனர் வழங்கப்படுவர். “ஜந்மநா ஜாயதே சூத்ர, கர்மணா ஜாயதே த்விஜ“ (யோனிபிற்பிறப்பது ஒரு பிறவி, பிறகு வேத மோதுதல் முதலிய கருமங்களால் பிறப்பது இரண்டாம் பிறவி) என்று சொல்லப்பட்டுள்ளமை காண்க.

ஈரடி மூவுலகளந்தனை – நிலவுலகத்தையும் அதற்குக் கீழ்ப்பட்ட பாதாள லோகத்தையும் ஒரு திருவடியாலும் மேலுலகத்தை மற்றொரு திருவடியாலும் ஆக ஈரடியாலே மூவுலகளந்தானென்க

————

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை

ஒரு நாள்

ஒரு காலத்தில்
கால் திசை நடுங்க

எங்குமுள்ள ஜனங்களும் நடுங்கும்படியாக (மஹத்தான கோபவேசத்தை ஏறிட்டுக்கொண்டு)
நால் வாய்

தொங்குகின்ற வாயையும்
மும்மதம்

மூவிடங்களில் மத நீர்ப் பெருக்கையும்
இரு செவி

இரண்டு காதுகளையும் உடைய
அம் சிறை பறவை ஏறி

அழகிய சிறகையுடைய பெரிய திருவடியின்மீது ஏறிக் கொண்டு
இரு நீர் மடுவுள்

ஆழமான நீரை யுடைய மடுவின் (கரையிலே எழுந்தருளி)
ஒரு தனி வேழத்து

பரம விலக்ஷணனான கஜேந்திராழ்வானுடைய
அரந்தையை

துக்கத்தை
தீர்த்தனை

நீக்கி யருளினாய்

***- எம்பெருமானை ஆராதிப்பதற்காகத் தாமரைப் பூப் பறிக்கப் போன பொய்கையின் கண் முதலைவாயிலகப்பட்ட ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய கூக்குரலைக்கேட்டு எம்பெருமான் ஸ்ரீ வைகுண்டத்தினின்று கருடாரூடனாய் ஓடிவந்து முதலையைக் கொன்று ஆனையைக் காத்தருளின கதை உலகப் பிரஸித்தம்.

கஜேந்திரன் ‘ஆதிமூலமே!‘ என்று பெருமிடறுசெய்து கூவினைக் கேட்டவுடனே ஸ்ரீவைகுண்ட நிலையனான எம்பெருமான் திடுக்கிட்டு, பிராட்டிமாரையும் கையுதறி அரைகுலையத் தலைகுலையப் பெரிய திருவடியின்மீதேறி மநோ வேகத்தினும் மிக்க வேகமாக ஓடிவந்த விசையைக் கண்டவர்களெல்லாரும் இன்ன செய்தியென்றறியாமல் ‘இன்று ஏதோ பிரளயம் விளையப்போகிறது‘ என்று அஞ்சி நடுங்கினரென்கிறார் நால்திசை நடுங்க என்பதனால்.

அம்சிறை-களுடன் எம்பெருமானது திருவுள்ளத்தை யறிந்து வெகுவேகந் தோன்றச் சிறகை துறைந்து கொண்டு வந்தமை பற்றி அஞ்சிறை என்று அந்தச் சிறகைப் பாராட்டிக் கூறுகின்றரென்க.

நால்வாய் – நாலுதல் – தொங்குதல், யானைக்கு வாய் தொங்குதல் இயல்பு. மும்மதம் – இரண்டு கன்னங்களிலும் குறியிலும் ஆக மூவிடங்களில் யானைக்கு மதப்புனல் சோரும். இருசெவி – இரு என்று பெருமையைச் சொல்லிற்றாய், பெரிய காதுகளையுடையது என்றுமாம். யானைக்கு வாய்தொங்குதலும் மத நீர் பெருகுதலும் காதுகள் பெரிதாயிருத்தலும் அதிசயமாக விஸயமன்றே,

இதைச்சொல்லி வருணிப்பதற்கு ப்ரயோஜனம் என்னெனில் – ஒரு குழந்தை கிணற்றில் விழுந்து போக, அதனையெடுத்துக் கரையிலேபோட்டவர்கள் “அந்தொ! இதொரு கையழகும் இதொரு தலையழகும் இதொரு முகவழகும் என்னே!“ என்று சொல்லி மாய்ந்து போவார்களன்றோ, அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின் அதனுடைய வாயும் செவியும் முதலிய அவயவங்களின் அழகிலே ஆழ்ந்து கரைந்தமைதோற்ற அந்த பகவத் ஸமாதியாலே ஆழ்வார் ஆனையை வருணிக்கின்றாரென்க.

இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதை அனுபவிக்கத்தக்கது. – “நால்வாய் மும்மதத் திருசேவி… என்றாற் போலே சொல்லுவதுக்குக் கருத்டிதன்னென்னில், ப்ரஜை கிணற்றிலே விழுந்தால் ‘காதுங் கண்டவாளியும் காலும் தலையும் வடிவும் இருந்தபடி காண்!? என்பாரைப் போலே இடர்ப்பட்ட இதினுடைய அவயங்கள் அவனுக்கு ஆகர்ஷகமாம்படியாலே சொல்லுகிறது“ என்ற ஸ்ரீஸூக்தி காண்க.

ஒரு தனி வேழம் – பகவத்பக்தியில் ஒப்பற்ற கஜராஜன். அரந்தை – துன்பம்

———–

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,

பதவுரை

முத் தீ

மூவகை அக்நிகளையும்
நால் மறை

நால்வகை வேதங்களையும்
ஐவகை வேள்வி

ஐவகை யஜ்ஞங்களையும்
அறு தொழில்

ஆறு வகைக் கருமங்களையும் உடையரான
அந்தணர் வணங்கும் தன்மையை

ப்ராஹ்மணர்களால் வணங்கப்படுந் தன்மையை உடையனாயிரா நின்றாய்

முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை த்ரேதாக்நிகளாம். நான் மறைகளாவன – ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. இவை வேத வ்யாஸரால் பிரிக்கப்பட்ட பிரிவின் பெயர்களாதலால், அதற்கு முன்னிருந்த தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் என்ற நான்கும் என்று கொள்ளுதல் தகும்.

ஐவகை வேள்வி –ப்ரஹ்மயஜ்ஞம் தேவயஜ்ஞம் பித்ருயஜ்ஞம் மநுஷ்யயஜ்ஞம் என்பன பஞ்சமஹாயஜ்ஞங்கள். ப்ரஹ்மயஜ்ஞமாவது – “ப்ரஹ்மயஜ்ஞப்ரசநம்“ என்று தினப்படியாக வேதத்தில் ஒவ்வொரு ப்ரச்நம் ஓதுவது. வேயஜ்ஞமாவது அக்நிஹோத்ரம்செய்வது பூதயஜ்ஞமென்பது பிராணிகட்குப்பலியிடுவது. பித்ருயஜ்ஞமென்பது பித்ருக்களை உத்தேசித்துத் தர்ப்பணம் விடுவது. மநுஷ்யயஜ்ஞமென்பது விருந்தாளிகளுக்கு உணவு முதலியன கொடுப்பது.

அறு தொழில் – தான் வேதமோதுதல், பிற்களுக்கு ஓதுவித்தல், தான் யாகஞ் செய்தல், பிறர்க்கு யாகஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம் வாங்கிக் கொள்ளுதல் என்பன ஆறு கருமங்களாம். ஆக. த்ரேதாக்நிகளையும் நான்கு வேதங்களையும் பஞ்ச மஹா யஜ்ஞங்களையும் ஷட்கருமங்களையும் நிரூபகங்களாகவுடைய வேதியர்களாலே ஸேவிக்கப்படுபவன் எம்பெருமான் என்றதாயிற்று

———–

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,

பதவுரை

ஐம்புலன்

பஞ்சேந்திரியங்களை
அகத்தினுள் செறுத்து

(வெளியில் பட்டி மேயவொண்ணாதபடி) உள்ளேயடக்கி
நான்கு உடன் அடக்கி

உண்ணுதல், உறங்குதல், அஞ்சுதல், விஷய போகஞ்செய்தல் என்கிற நான்கையுங் கூட இல்லை செய்து
முக் குணத்து

ஸத்வம், ரஜஸ் தமஸ் என்கிற மூன்று குணங்களில்
இரண்டு அவை

ரஜஸ்ஸையும் தமஸ்ஸையும்
அகற்றி

விலக்கி
ஒன்றினில்

ஸத்வ குண மொன்றிலேயே
ஒன்றி நின்று

பொருந்தி யிருந்து
ஆங்கு

அப்படிப்பட்ட நிலைமையின் பலனாக
இரு பிறப்பு அறுப்போர்

நீண்ட ஸம்ஸார துக்கத்தை நீக்கிக் கொள்ள வல்ல மகான்களாலே
அறியும் தன்மையை

அறியத்தக்க ஸ்வபாவத்தை உடையையா யிராநின்றாய்.

ஜிதேந்திரியர்களாய் ஸாத்விகர்களான யோகிகளால் யோகமுறைமையில் ஸாக்ஷாத்கரிக்கத்தக்கவன் எம்பெருமான் என்கிறது. ஐம்புலன்களாவன – மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சேந்திரியங்கள், இவற்றை அகத்தினுள் செறுத்தலாவது – சப்தாதி விஷயங்களில் மூட்டாமல் அந்த ரங்கனான பகவானிடத்திலே மூட்டுகை.

நான்கு உடனடக்கி –“ஆஹா நித்ரா பய மைதுநாநி ஸாமாந்ய மேதத் பசுபிர் நராணாம்“ என்றபடி உணவு உட்கொள்ளுதல், கண்ணுறங்குதல், எந்த வேளையில் என்ன தீங்கு நேரிடுமோவென்று பயப்பட்டுக்கொண்டிருத்தல், விஷய போகங்களை யநுபவித்தல் என்கிற இந்நான்கும் நாற்கால் விலங்குகட்கும் பொதுவாகையாலே இவற்றைத் தள்ளி ஞானத்தையே கடைபிடித்து என்றதாயிற்று.

முக்குணத்து இரண்டவை அகற்றி – ஸ்தவகுணமென்றும் ரஜோகுணமென்றும் தமோகுணமென்றும் சொல்லப்படுகிற மூன்று குணங்களில் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் அந்யதாஜ்ஞான விபரீதஜ்ஞானங்களுக்குக் காரணமாதலால் அவற்றையொழித்து, தத்துவ ஞானத்துக்குக் காரணமாகிய ஸத்வகுணத்தைடையராகி என்றபடி.

ஆக இந்திரியங்களைப்பட்டி மேயாமலடக்கி, ஆஹார நித்ரா பய மைதுநங்களை விலக்கி ஸத்வகுண நிஷ்டராயிருந்து யோகுபுரிந்து அந்த யோகத்தின் பலனாக ஸம்ஸாரப் படுகுழியைப் புல் மூடச்செய்து நற்கதி நண்ணுகின்ற மஹா யோகிகளால் அறியக்கூடிய ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையவன் எம்பெருமான் என்றதாயிற்று

நான்குடனடக்கி என்பதற்கு – மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்ற நான்கையும் அடக்கி என்றும், பொய் சொல்லுதல் கோட்சொல்லுதல் கடுஞ்சொல் சொல்லுதல் பயனற்ற சொல் சொல்லுதல் என்ற நான்கு துர்பாஷணங்களையும் விலக்கி என்றும் பொருள் கொள்ளுதலும் ஒக்கும்.

இரு பிறப்பு என்றது – இருமை பெருமையாய் அநாதியாகையாலே நீண்டதாயுள்ள ஸம்ஸாரம் என்றபடி. அன்றியே, புண்யபாவங்களாகிற இருகருமங்களாலே வரும் ஸம்ஸாரம் என்றுமாம் தன்மையை – “தன்மையன்“ என்பன் முன்னிலை.

————–

முக் கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறு பொதி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

 

பதவுரை

முக்கண்

மூன்று கண்களையும்
நால் தோள்

நான்கு தோள்களையும்
ஐவாய் அரவோடு

ஐந்து வாயையுமுடைய பாம்பையும்
ஆறு பொதி சடையோன்

ஜடையையும் உடையனான ருத்ரனுக்கு
அறிவு அரு

அறியக் கூடாத
தன்மை

ஸ்வபாவத்தை யுடையனாயிருக்கையாகிற
பெருமையுள்

பெருமையிலே
நின்றனை

இரா நின்றாய்

எவ்வளவு மேன்மையுடையரா யிருந்தாலும் ஸ்வப்ரயத்நத்தாலே எம்பெருமனைக் கண்டுவிட வேணுமென்று முயன்றால் அவர்கட்கு பகவத் விஷயம் அறியக்கூடியதல்ல என்று சாஸ்த்ரங்கள் கூறும் பரமசிவன் “நாம் முக்கண்ணுடையோம், அரவம் பூண்டபெருமையுடையோம், கங்கைநீர் தரித்த வலிமையுடையோம்“ என்று மேனாணித்திருந்தாலும் “பெண்ணுவாஞ் சடையினானும் பிரமனு முன்னைக் காண்பான் எண்ணிலா வூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப“ (திருமாலை) என்றபடி அவனுக்கு பகவானுடைய ஸாக்ஷாத்காரம் வாய்க்கவில்லை.

ஐவாயரவோடு – ஒரு காலத்தில் சிவபிரான் தன்னை மதியாத தாருக வனத்து முனிவர்களுடைய கருவத்தைப் பங்கஞ்செய்யவும் அவர்களது மனைவிமார்களின் கற்புநிலையைப் பரிசோதிக்கவும் கருதித் தான் ஒரு விடனாக வடிவங்கொண்டு அவரில்லந்தோறும் டிசன்று பிக்ஷாடநஞ் செய்து, தன்னை நோக்கிக் காதல் கொண்ட அம்முனி பத்நிகளின் கற்புநிலையைக் கெடச் செய்ய, அதுகண்டு பொறாமற் கோபம் மூண்ட அம்முனிவர்கள் அபிசாரயாகமொன்று செய்து அவ்வோமத்தீயினின்று எழுந்த நாகங்கள், பூதங்கள், மான், புலி, முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக்கொண்டு வரும்படி ஏவ, சிவபெருமான். தன்மேற்பொங்கிவந்த நாகங்களை ஆபரணங்களாகவும் பூதங்களைத் தனது கணங்களாகவுங் கொண்டு மானைக் கையிலேந்திப் புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகனை முதுகிற் காலாலூன்றி வெண்டலையைக் கையாற் பற்றி சிரமே லணிந்து இங்ஙனமே அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டனன்  என்ற வரலாறு உணர்க. “நாகாபரணன்“ என்று சிவபிரானுக்கு ஒரு பெர் வழங்கிவருதலும் இவ்வரலாறு பற்றியேயென்க.

ஆறுபொதி சடையோன் என்றவிடத்து அறியவேண்டிய கதை. எம்பெருமான் உலகளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன்கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாச கங்கையை, ஸூர்யகுலத்துப் பகீரத சக்ரவர்த்தி கபிலமுனிவனது கண்ணின் கோபத்திற்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனது மூதாதையான ஸகரபுத்ரர் அறுபதினாயிரவரை நற்கதிபெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலம் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொண்டு வருகையில், அவனது வேண்டுகோளாலும் சிவபிரான் தான் புனிதனாக வேண்டிய அபிநிவேத்தாலும் அந்நதியை முடியின்மேலேற்றுச் சிறிது சிறிதாகப் பூமியில் விட்டனன் என்பதாம்.

ஆக இவ்வகைகளாலே பெருமிடுக்கையுடையனாக ப்ரஸித்தனான சிவபிரானாலும் ஸ்வப்ரயத்நத்தாலே அறிய வொண்ணாத ஸ்வரூப ஸ்வபாவங்களையுடையனாயிருப்பன் எம்பெருமான் என்றதாயிற்று.

தன்மைப் பெருமையுள் நின்றனை என்றது இப்படிப்பட்ட (சிவனாலுமறியப் போகாத தன்மையுடையனாயிருக்கையாகிற) பெருமை பெருந்தியவன் என்றவாறு நின்றனை – முன்னிலை பெருமை வினைமுற்று.

————-

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

பதவுரை

ஏழ் உலகு

உலகங்களையெல்லாம்
எயிற்றினில் கொண்டனை

(ஸ்ரீவராஹமாகிக் கோட்டில் எடுத்துக் கொண்டாய்,
கூறிய அறு சுவை பயனும் ஆயின

ஆறுவகை ரஸங்களாகிற ப்ரயோஜநமும் நீயே யாயிரா நின்றாய்
அம் கையுள்

அழகிய திருக்கையில்
சுடர் விடும் ஐ படை

ஒளிவிடா நின்ற பஞ்சாயுதங்களும்
அமர்ந்தனை

பொருந்தப் பெற்றாய்
சுந்தரம் நால் தோள்

அழகிய நான்கு திருத் தோள்களையுடையனாய்
முந்நீர் வண்ண

கடல் போன்ற வுடிவையுமுடைனான எம்பெருமானே!
நின் ஈர் அடி

உனது உபய பாதங்களை ஆழ்ந்த அன்புடன்
ஒன்றிய மனத்தால்

ஆழ்ந்த அன்புடன்
ஒருமதி முகத்து மங்கையர் இருவரும்

விலக்ஷணனான சந்திரன் போன்ற திரு முகத்தை யுடைய திருமடந்தை மண்மடந்தையிருவரும்
மலர் அன அம் கையின்

மலர்போல் ஸுகுமாரமான (தங்களது) அழகிய கைகளாலே
முப்பொழுதும்

எப்போதும்
வருட

பிடிக்க
அறி துயில் அமர்ந்தனை

(ஆநந்தமாக) யோக நித்திரையில் எழுந்தருளி யிராநின்றாய்

 

(ஏழுலகு இத்யாதி.) ஹிரண்யகசிபுவின் உடன் பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச்சென்ற போது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மஹா வராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது நோட்டினாற் குத்திக் கொன்று பாதாள லோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற் குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின்ன் என்ற வரலாறு இதில் அடங்கியது.

இப்பொழுது நடக்கிற ச்வேத வராஹ கல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளய ஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து ஸ்ரீவரஹாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தன்னென்ற வரலாறும் உண்டு. அதுவும் இங்கு அது ஸந்திக்கப்பட்டதாகலாம்.

ஏழுலகு என்றவிடத்துள்ள ஏழ் என்னுஞ் சொல் ஏழான எண்ணைக் குறிக்காமல் “ஸகலமான“ என்னும் பொருளைக் குறிக்கு மென்க. பூமண்டலம் முழுவதையும் என்றபடி. அன்றியே, ஸப்தத்வீபங் (ஏழு தீவு) களையுடைய பூமண்டலம் என்னவுமாம். அவையாவன – நாவலந்தீவு, இறலித்தீவு, குசையின்தீவு, கிரவுஞ்சதீவு, சான்மலித்தீவு, தெங்கின்தீவு, புட்கரத்தீவு என ஏழாம்.

கூறிய அறுசுவைப் பயனுமாயின – உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு என அறுசுவாயாம். இவை நிரம்பிய உணவு போலே பரம போக்யன் எம்பெருமான் என்றவாறு. “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணன்“ என்று கொண்டிருப்பார்க்கு அநுபவ விஷயமாம் இது. “அச்சுவைக் கட்டி யென்கோ அறுசுவையடிசிலென்கோ“ என்றார் நம்மாழ்வாரும்.

முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் மூவகை நீரையும் உடையது கடல். கடல்வண்ணனே! என்றபடி.

(நன் ஈரடி…அமர்ந்தனை) வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி என்றும் “***“ (பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம்) என்றும் சொல்லுகிறபடியே – திங்கள்போல் முகத்தரான திருமடந்தை மணமடந்தை யிருவரும் தமது குஸும ஸுகுமாரமான திருக் கைகளாலே திருவடிகளைப் பிடிக்க, ஆனந்தமாக யோக நித்திரை செய்தருள பவனே! என்கை.

மலரன – மலரன்ன, மலர் போன்ற, அறிதுயில் – உறங்குவான் போல் யோகுசெய்யுந் துயில் அமர்ந்தனை – முன்னிலை வினைமுற்று.

———–

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,

பதவுரை

நெறிமுறை

சாஸ்திர முறைப்படியே யுள்ள
நால்வகை வருணமும் ஆயினை

நான்கு ஜாதிகளின் மரியாதைக்கும் நிர்வாஹகனாயிராநின்றாய்
மே தரும் ஐ பெரு பூதமும் நீயே

ஆன்மாக்கள் பொருந்தத் தக்க பஞ்ச மஹா பூதங்களுக்கும் ப்ரவர்த்தகனாயிரா நின்றாய்
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்

வண்டுகள் (மது பானத்திற்காக வந்து மொய்ந்து) ரீங்காரம் செய்யப்பெற்ற கூந்தலை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
ஏழ் விடை

ஏழு ரிஷபங்களையும்
அடங்க செற்றினை அறு வகை சமயமும் அறிவு அரு

வலியடக்கி நெரித்தாய், பாஹ்ய குத்ருஷ்டி மதஸ்தர்களாலே அறிந்துகொள்ளக்கூடாத
நிலையினை

நிலைமையை யுடையனாயிராநின்றாய்,
ஐம்பால் ஓதியை

மென்மை குளிர்த்தி நறுமணம் கருமை நெடுமை என்னும் ஐந்து லக்ஷணங்களமைந்த கூந்தலையுடையளான பிராட்டியை
ஆகத்து இருத்தினை

திருமார்பிலே தரித்துக் கொண்டிராநின்றாய்,
அறம் முதல் நான்கு அவை ஆய்

தருமம் முதலிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுப்பவனாய்
மூன்று மூர்த்தி ஆய்

த்ரிமூர்த்தி ஸ்வரூபியான் ஸுக துக்கங்களிரண்டுக்கும் நிர்வாஹகனாய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை

தான் ஒருவனாயிருந்தும் பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து நின்றாய்

நெறிமுறை… ஆயினை – பிராமணர் க்ஷத்ரியர் வைச்யர் சூத்நர் என வருணங்கள் நான்கு. விராட் புருஷனான எம்பெருமானுடைய திருமுகத்தினின்றும் பிராமணனும், புஜத்தினின்று க்ஷத்ரியனும், துடையினின்று வைசியனும், திருவடியினின்று சூத்ரனும் உண்டானதாக வேதங்கள் கூறுகின்றமையால் நால்வகை வருணமும் எம்பெருமான்றானேயாயினன். அன்றி, அந்தந்த ஜாதிகட்கு உரிய கருமங்களை சாஸ்திரமுகத்தாலே விதித்து அந்தந்த வருணங்களின் மரியாதை வழுவாமல் நடத்திக்கொண்டு போகிறவன் நீ என்றதாகவுமாம். இங்ஙனன்றியும், வர்ணாச்ரம வொழுக்கங்கள் வழுவாமல் இருக்கிற அவ்வவர்களாலே யதாயோக்யமாக ஆராதிக்கப்படுகின்றாய் என்றதாகவுமாம்.

வருணம் – வர்ணமென்ற வடசொல் விகாரம். முற்காலத்தில் ஒரு வரம்பிலே நின்று விவாஹாதிகள் நடந்து வந்தபோது உடல் நிறத்தைக் கொண்டே இன்னான் பிராமணன், இன்னான் க்ஷத்ரியன் என்றிப்டி அறியக்கூடிய நிலைமையிலிருந்தமையால் நிறமென்னும் பொருளதான வர்ண சப்தத்தையிட்டு ஜாதியை வ்யவஹரித்து வந்தனராம்.

மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே – நிலம் நீர் தீ கால் விசும்பு என்கிற பஞ்ச மஹா பூதங்களும் நீயிட்ட வழக்கு என்றபடி. மேதகும் என்றது – ஆத்மாக்கள் பொருந்தி வர்த்திப்பதற்குத் தகுதியான என்றபடி சரீரமற்ற ஆத்மாஸுக துக்காதிகளை அநுபவிக்க இயலாதாகையாலே ஆத்மாக்கள் விஷயாநுபவத்திலே மேவுவதற்குத் தகுதியாகவுள்ளவை பஞ்ச பூதங்களாம். ஆத்மாக்கள் புகும் சரீரங்கள் பஞ்சபூதமயங்களிறே. அவரவர்களுடைய கருமங்களுக்குத் தகுதியாக உண்டாகிற பாஞ்ச பௌதிக சரீரங்களுக்கு அந்தராத்மாளாயிரா நின்றாய் என்றதாகவுமாம்.

அறுபது முரலுங் கூந்தலை யுடையவள் என்னும் பொருளில்… கூந்தல் என்றது அன்மொழித்டிதாகை. செற்றினை – முன்னிலை யொருமை வினைமுற்று.

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை – சாக்யர், உலூக்யர், பௌத்தர், சார்வாகர், பாசுபதர், காணாதர் என்றிப்படி சொல்லப்படுகிற புறமதத்தவர்களாலே அறியக்கூடாத ஸ்வரூப ரூப குணவிபூதிகளையுடைய என்றபடி. எம்பெருமானுடைய நிர்ஹேதுக கிருபையைப்பெற்ற ஆழ்வார் போல்வர்க்கு அவை தெரியுமேயன்றி மற்றையோர்க்குத் தெரிய விரகில்லையிறே.

ஐம்பாலோதியை ஆகத் திருத்தினை – ஓதி யென்று கூந்தலுக்குப் பெயர். கூந்தலின் பான்மை ஐவகையதாம். மிருதுவாயிருத்தல், குளிர்ந்திருத்தல், நறுமணம் மிக்கிருத்தல், கறுத்திருத்தல், நீண்டிருத்தல் ஆகிய இவை உத்தமகேச லக்ஷணங்களாம். அத்தகைய சிறந்த கூந்தலையுடையளான திருமாமகளைத் திருமார்பிலே கொண்டுள்ளாய் என்றவாறு.

ஐம்பாலோதி – என்றவிதுவும் அன்மொழித்டிதாகை.

அறமுதல் நான்சுகையாய் –தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் நான்கு புருஷார்த்தங்களையும் அர்த்திகட்கு அளிப்பவன் என்கை.

மூர்த்தி மூன்றாய் – படைப்புத் தொழிலை நடத்துகைக்காக நான்முகனை ஆவேசித்தும் ஸம்ஹாரத்தொழிலை நடத்துகைக்காகச் சிவபிரானை ஆவேசித்தும் ரக்ஷணத் தொழிலை நடத்துகைக்குத் தனான தன்மையிலே இருந்தும் ஆகவிப்படி மூவுரு வினனாய் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாயிரா நின்றாய் என்கை.

இருவகைப் பயனாய் – சேதநர் செய்யுங் கருமங்களுக்கெல்லாம் ஸுகமாவது துக்கமாவது பயனாகத்தேறும். கருமம் வாயிலாக அந்த ஸுக துக்கங்களுக்கு ப்ரயோஜகன் நீ என்கை.

ஒன்றாய் விரிந்து நின்றனை – ஸூக்ஷ்ம சிதசித்விசிஷ்ட ப்ரஹ்மமான தானே ஸ்தூல சிதசித்விசிஷ்ட ப்ரஹ்மமாகக் காணப்படுகின்றமையைக் கூறியவாறு.

மாயா வாமனனே மது ஸூ தா நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாயத்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்ற வாறு இவை என்ன நியாயங்களே –

ஆக, இவ்வளவில் எழுகூற்றிருக்கை என்றதன் இலக்கணப்படி தொடுக்க வேண்டிய சொல் மாலைகள் முற்றுப்பெற்றன.

———-

இனிமேலுள்ள சில அடிகள் ஸ்தோத்ர ஸமாபநம்.

“ஒரு பேருந்தி“ என்று தொடங்கி “ஒன்றாய் விரிந்து நின்றனை“ என்னுமளவும், எம்பெருமான் ஆச்ரிதர்களைக் காத்தருள்வதற்காகச்செய்த செயல்களையும் மற்றும் அவனுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களையும் பரக்கப் பேசி மேற்கூறிய திருக்குணங்களெல்லாம் செவ்வனே விளங்கத் திருக்குடந்தையில் கிடக்கிற கிடையிலே ஈடுபட்டு அங்கே சரணாதி பண்ணித் தலைக்கட்டுகிறார்.

குன்றா மதுமலர்ச் சோலை வண் கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே. (2)

பதவுரை

குன்றா மது

குன்றாத (நிறைந்த) தேனையுடைய
மலர்சோலை

பூக்கள் நிறைந்த சோலைகளை யுடையதும்
வண் கொடி படப்பை

வெற்றிலைத் தோட்டங்களை யுடையதும்
வரு புணல்

எப்போதும் பெருகுகின்ற தீர்த்தத்தை யுடைய
பொன்னி

கோவேரியானது
மா மணி

சிறந்த ரத்னங்களை
அலைக்கும்

அலையெறிந்து கொழக்கப்பெற்றதும்
செந்நெல் ஒன் கழனி

செந்நெற் பயிர்களாலே அழகிய கழனிகளை யுடையதும்
திகழ் வனம் உடுத்த

விளங்குகின்ற வனங்களை நாற்புறங்களிலுமுடையதும்
கற்போர் புரி செய்

வித்வான்களுடைய நகரமாகச் செய்யப்பெற்றதும்
கனகம் மாளிகை நிமிர்

பொன்மயமான மாளிகைகளின்றும் மேல்முகமாய் ஓங்குகின்ற
கொடி

த்வஜங்களானவை
விசும்பில்

ஆகாயத்திலுள்ள
இள பிறை

பாலசந்திரனை
துவக்கும்

ஸ்பர்சிக்கப்பெற்றதும்
செல்வம் மல்கு

செல்வம் நிறைந்ததுமான
தென் திருகுடந்தை

தென் திருக்குடந்தையிலே
அந்தணர்

பிராமணர்கள்
மந்திரம் மொழியுடன் வணங்க

வேதவாக்குகளைச் சொல்லிக் கொண்டு வண“கும்படியாக
ஆடு அரவு அமளியில்

படமெடுத்தாடுகிற ஆதிசேஷனாகிற சயனத்தில்
அறி துயில் அமர்ந்த

யோக நித்திரை செய்வதில் ஆஸக்தனான
பரம

ஸர்வேச்வரனே!
வரும் இடர் அகல

இந்த ஸம்ஸாரத்தில் நேரக்கூடிய துக்கங்களை நீங்க
நின் அடி இணை பணிவன்

உன்னுடைய உபயபாதங்களை ஆச்ரயிக்கின்றேன்
வினை

ஸம்ஸாரத்துன்பங்களை
மாற்று

போக்கி யருளவேணும்

திருக்குடந்தையின் நீர்வளம் நிலவளம் முதலியவற்றைச் சில விசேஷணங்களால் சிறப்பித்துக் கூறுகின்றார். எப்போதும் வற்றாத தேன் வெள்ளங்களையுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்ததும், பல பல ரத்னங்களைக் கொழித்துக்கொண்டு வருகிற காவிரி நீர் பாயப்பெற்றதும், அக்காவியின் நீர்வளத்தாலே செந் நெற்பயிர்கள் நன்றாக விளையப்பெற்ற கழனிகள் கண்ட விடமெங்கும் ஓங்கப் பெற்றதும், வித்வான்கள் வாழப்ப்பெற்றதும், சந்திரமண்டலம் வரையில் நீண்டு விளங்குகின்ற கனக மாளிகைகள் திகழப்பெற்றதும், பல்வகைச் செல்வமும் நிறையப் பெற்றதுமான திருக்குடந்தையிலே அந்தணர்கள் புருஷஸூக்தம் முதலிய வேதவாக்கியங்களை அநுஸந்திதுக்கொண்டு வந்து பணியும்படியாக சேஷசயனத்திலே திருக்கண் வளாந்தருளும் நெடுமாலே! எனது தாபமெல்லாம் தீரும்படி உன்றன் திருவடியிணைகளைப் பணிகின்றேன். இனியாகிலும் எனது ஸம்ஸார தாபங்கள் அருள் புரியவேணும் என்று ஆர்த்தராய்ச் சரணம் புகுந்து தலைக்கட்டினராயிற்று.

கற்போர் புரி செய் என்றவிடத்து இரண்டு வகையான பாடமும் அதற்கு ஏற்ப அர்த்த பேதமும் உண்டு, – புரி செய் என்பது ஒரு பாடம், புரிசை என்பது மற்றொரு பாடம்.

“வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாகப் புரி செய் என்ற பாடம் கொள்ளத்தக்கது, புரி என்ற வடசொல் நகரமெனப் பொருள்படும், கற்போர்களுடைய (வித்வான்களுடைய புரியாகச் செய்யப்பட்ட தென்க. மற்றொரு சிறிய வியாக்கியானத்திலே “தொழில் ஓரப்படா நின்றுள்ள மதிள்களையு முடையதாய்“ என்ற ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாக புரிசை என்ற பாடம் கொள்ளத்தக்கது.

“கற்பு ஓர் புரிசை“ என்று பிரித்து, நல்ல வேலைப்பாடுகளையுடைய திருமதில்களை யுடைத்தான என்று கொள்க. புரிசை என்ற ஒரு பாடத்திலேயே இரண்டு வகைப் பொருள்களையும் பொருந்தவிடலாமென்பாரு முளர் நிற்க.

கனக மாளிகைகளினின்றும் நிமிர்ந்த கொடியானது விசும்பி விளம்பிறையைத் துவக்குமென்ற அதிசயோக்தியினால் அவ்விடத்துத் திருமாளிகைகளின் ஓக்கம் தெரிவிக்கப்பட்டதாகும்.

ஆடு அரவு – எம்பெருமான் எப்போதும் தன்னோடு அணைந்திருக்கப் பெற்றதனால் மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் படமெடுத்தாடுவன் திருவனந்தாழ்வான். அமளி – படுகை. அறிதுயில் –ஜாகரணத்தோடு கூடிய நித்ரை, அதாவது யோக நித்ரை* உறங்குவான்போல் யோகு செய்யும் பெருமானிறே.

ஆக இப்பிரபந்தத்தால் – தம்முடைய ஆர்த்தி யெல்லாந் தோற்றத் திருவடிகளிலே தீர்க்க சரணாகதி பண்ணியும் இன்னும் இவரைக்கொண்டு சில திவ்யப்பந்தங்களை வெளியிடுவித்து உலகத்தை வாழ்விக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமான் இவ்வாழ்வார்க்கு வந்து முகங்காட்டா தொழியவே, இனி மடலூரைப் புகுகிறார் என்று – மேல் திருமடல் பிரபந்தத்தோடே இதற்கு ஸங்கதி கண்டு கொள்க.

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி பெறாமல் இருப்பதை-
ஆழ்வார் அனுசந்திப்பதாக ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை ) அறியாதார்—25-29–

November 29, 2022

ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற  பகுதி

இருபத்தி ஐந்து முதல் முப்பதினான்கு வரை பத்து பாசுரங்கள் –
இவ்வளவு நன்மைகள் பெருமாள் செய்தும், ஆழ்வார், தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்றும்,
எல்லா கெட்ட குணங்களும் உள்ளனவே என்றும் சொல்லி, பெருமாளிடம் இருந்து விலகப் பார்க்கிறார்.

—————-

(‘மெய்யெற்கே மெய்யனாகும்’-15-)–26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள
சந்தேகங்களை திருஅரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான்.

(“சூதனாய் கள்வனாய்“-16-)–ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்பு வெள்ளம் பெருக வைத்தான்.
தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு
அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான்

(விரும்பி நின்று) பல காலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து
கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான்

(‘இனித்திரை திவலை மோத “)நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து,
அதைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான்.

(குடதிசை முடியை வைத்து‘) திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும்,
அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான்.

(“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“) திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம்
பகவத் அனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான்.

(“பணிவினால் மனம் அது ஒன்றி“) வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே
நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும்,
நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான்.

(பேசிற்றே பேசல் அல்லால்) சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து
ஆழ்வாரை வாழ முடியாதபடிச் செய்தது.

(கங்கையில் புனிதமாய) சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று
ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சராணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான்.

(வெள்ளநீர் பரந்து பாயும்) இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3),
தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14),
மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற
முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.

இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று
ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி.
இதனை நம் சம்பிரதாயத்தில் நைச்சானுசந்தானம் என்று கூறுவார்கள்.
மோக்ஷம்
எல்லா ஜீவாத்மாக்களுக்கும் தம் தம் கர்மாக்களை ஒழித்து பரமாத்மாவை அடைவதையே குறிக்கோளாக் கொண்டு
தினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இறைவனை அடைவதே முக்தி என்றும் மோட்சம் என்றும் கூறுகிறோம்.
அதை அடைவதற்கு சிலவழிகள் பற்றி சுருக்கமாக,

கர்ம யோகம் (தவம் போன்ற நடவடிக்கைகள், சாஸ்திரம் நமக்கு விதிக்கும் கடமைகள்)
ஞான யோகம் (அறிவு மூலம் பரமாத்மாவை பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்வது)
பக்தி யோகம் (பரமாத்மாவின் மேல் தூய்மையான அன்பு செலுத்துதல் )

இவற்றில் எதன் மூலமும் மோக்ஷம் அடையலாம் என்று கண்ணன் பகவத் கீதையில் சொன்ன
மூன்று ஸ்லோகங்களை இப்பொழுது காண்போம்.
முதலில், ஜனகன் முதலானோர் கர்மயோகத்தின் மூலம் மோக்ஷம் அடைந்தான் என்று கூறுகிறார் (3.20).
கர்மயோகத்தைவிட அதில் உள்ள ஞான பாகமே முக்கியம் என்றும்,
எல்லா கர்மங்களும், எல்லா சாதனங்களும் ஞானத்திலேயே முடிவு பெறுவதாக கண்ணன் சொல்கிறார். (4.33).
ஒரு பயனையும் எதிர்பாராத பக்தியினாலேயே தன்னை உண்மையாக அறியவும், பார்க்கவும், உட்புகவும் முடியும்
என்று கண்ணன் கூறுகிறார். (11.54).
இப்படி, மூன்று யோகங்களும் தனித்தனியே மோக்ஷத்தை அளிக்க வல்லன என்பதே ஆகும்.

மேலும் மூன்று யோகங்களில் ஒவ்வொன்றிலும் மற்ற இரண்டும் கலந்தே உள்ளன என்றும்
இந்த மூன்று யோகங்களிலும் ஒன்று பிரதானமான சாதனமாகவும்,
மற்ற இரண்டும் ஆதரவு சாதனங்களாவும் இருக்கும் என்றும் நம் ஆச்சார்யர்கள் கூறுவர்.

அப்படி இரண்டினை ஆதரவாக கொண்டு கொண்டு மூன்றாவதை சாதனமாக்கி மோக்ஷத்தை
அடைந்தவர்களுக்கு உதாரணங்களை பார்ப்போம்.
ஜனகர், ஞான யோகத்தையும், பக்தி யோகத்தையும் கொண்டு கர்ம யோகத்தை சாதனமாக்கி சாதித்தவர்.
ஜடபரதர், கர்ம யோகத்தையும், பக்தி யோகத்தையும் ஆதாரமாகக் கொண்டு ஞான யோகத்தை சாதனமாகக் கொண்டவர்.
பிரஹ்லாதன், கர்ம, ஞான யோகங்களை ஆதாரமாகக் கொண்டு பக்தி யோகத்தின் மூலம் மோக்ஷம் அடைந்தவர்.
இப்படி இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியாக மோக்ஷம் அளிக்க வல்லன.

கர்ம யோகம் மூலம் தொடங்கிய சில காலத்திலே ஞான யோகம் ஏற்படக் கூடியது.
ஞான யோகம் தொடங்கியவுடன் உணர்வது பரபக்தி.
கர்மயோகம் செய்வதால் உண்டாகும் பலன்கள் என்றும் வீணாவதில்லை.
அதாவது, ஒரு ஜீவாத்மா, கர்ம யோகம் செய்து, அது முடிவதற்கு முன்பே மரணம் அடைந்து விட்டால்,
அந்த கர்மயோகத்தின் பலன்கள், அந்த ஜீவாத்மாவை அதன் அடுத்த பிறவியில் வந்து அடையும்.
பொதுவாக, கர்ம, ஞான யோகங்கள் தொடங்கிய பின்னர் ஒரு ஜீவாத்மா பக்தி யோகம் அடைவது என்பது சாத்தியமாகிறது.

பக்தி யோகம் நமக்கு பிறக்காமல் இருப்பதற்கு தடையாக உள்ள விரோதிகள் நாம் செய்த பாவங்களே ஆகும்.
பற்பல பிறவிகளில் நாம் செய்த கர்ம, ஞான யோகங்கள், நம் பாவங்களை நீக்கி, நம்மை,
கண்ணனிடம் பக்தி உடையவர்கள் ஆக்கி, நாம் பக்தி யோகம் செய்ய உதவுகின்றன என்று நம் சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன.

நாம், நான்கு யுகங்கள் உள்ளன என்றும்,
அவை கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் என்றும் பார்த்து உள்ளோம்.
கர்ம, ஞான, பக்தி யோகங்களை பின்பற்ற வேண்டிய திறமைகளும், அவகாசமும், ஆயுளும், சூழ்நிலைகளும்
முதல் மூன்று யுகங்களுக்கு அதிகம் என்றும், கலியுகத்தில் அது கடினம் என்றும் சொல்வதை கேட்டு இருக்கிறோம்.
அதனால், நமக்காகவே, சரணாகதி என்ற மோக்ஷம் செல்லும் வழி உள்ளது என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளலாம்.

அவன் மூலம், அவனை மட்டுமே அடைவது என்பது சரணாகதி என்று சுருக்கமாக கொள்ளலாம்.
அவன் திருவடிகளே சரணம் என்று வேறு எந்த வித உபாயமும் இன்றி அவனை அடைவது;
அப்படி அவனை அடைந்தபின், அவனை தவிர வேறு எதுவும் அவனிடம் வேண்டுவதில்லை என்பதே இதன் உட்கருத்து.
இவ்வாறு வேண்டுபவர்களை பகவத்லாபார்த்தி என்று கூறுவார்கள்.
இவ்வுலக இன்பங்களை வேண்டுபவர்கள் ஐஸ்வர்யார்த்தி என்றும்,
இவ்வுலக இன்பத்தைத்தாண்டி, பரமாத்மாவிடம் செல்லாமல் கைவல்யம் என்ற விருப்பத்தை வேண்டுபவர்கள் கைவல்யார்த்தி.

மோக்ஷம் என்பதை விரும்பாமல், கைவல்யம் என்பதை விரும்பும் சில ஜீவாத்மாக்கள் உள்ளன என்று நாம் பார்த்து உள்ளோம்.
அப்படி கைவல்யத்தை வேண்டுபவர்களுக்கு இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியே சாதனமாக கூடும் என்று
ஆளவந்தார் என்ற ஆச்சார்யர் அருளிச்செய்து உள்ளார்.

பரமாத்மா கைவல்யார்த்திகளுக்கும் அவனை வந்து அடைய, இறுதிவரை அந்த ஜீவாத்மாவிற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறார்.
தன்னுடைய இறுதி மூச்சின் போது, ஒரு கைவல்யார்த்திக்கு பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பு ஏற்பட்டால்,
பரமாத்மா அந்த கைவல்யார்த்திக்கு மோக்ஷத்தை அளித்து விடுவார்.
இத்தனையும் அருளி செய்தவர் ஆளவந்தார் என்ற ஆச்சார்யர்.

வராக சரமச் ஸ்லோகத்தில் “நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை
ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல்
ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்” என்று சொல்வதில்
இருந்து எந்த வழியில் சென்றாலும் இறுதி மூச்சின் போது அவனை நினைக்கவேண்டும் என்றும்,
நாமாக நினைக்கலாம், அல்லது அவன் நமக்காக நினைக்கிறான் என்றும் கொள்ளலாம்.

இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று
ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி.
இந்த பகுதியில் ஆழ்வார் நாத்திகம் பேசுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால்,
ஆழ்வார் ஒரு நிலையை கடந்து மற்றொரு உயர்ந்த நிலையை பற்றி நமக்கு சொல்கிறார் என்றே எடுத்துகொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஆழ்வார் கர்ம, ஞான பக்தி யோகங்கள் தன்னிடம் இல்லை என்றும்,
முக்கரணங்களால் தான் அர்ச்சித்தது இல்லை என்றும் சொல்வது
எம்பெருமான் எல்லாம் தெரிந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அவன் செயல், சர்வ சுதந்திரமாக செயல்படுபவர் என்றும்
எல்லாவற்றையும் முழுவதுமாக மனதில் கொண்டு, தான் அவனின் அடிமை என்றும்,
தன்னால் ஒன்றும் தனியாக இயங்க முடியாது என்றும், தன் முயற்சியால் ஒன்றும் நடக்கக்கூடாது என்றும்,
அவனே தனக்கு எல்லாம் அருள வேண்டும் என்ற ஒரு உயர்ந்த நிலையை மனதில் கொண்டு
இந்த பகுதியில் உள்ள 10 பாசுரங்களை பாடுகிறார் என்று கொள்ள வேண்டும். ,

————————-

அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை)
ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை,
திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும்

சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால்,
மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க,
அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம் போதெல்லாம் போது கொண்டு ( 26).

மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யா விட்டாலும்,
பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை,
விலங்குகளைக்கொண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில்,
குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல்,
ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ,
அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம் குரங்குகள் மலையை நூக்க (27).

குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு
சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா
என்று எம்பெருமான் கேட்டதாகவும்,
அடுத்த பாசுரமான, போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும்,
அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27) பாடலில், கை கால் போன்றவற்றைக் கொண்டு
சேவை செய்து இருக்கிறீர்களா என்றும்,
உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து இருக்கிறீர்களா என்பதை தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.

————-

குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை,
ஒளித்திட்டேன் என் கண் இல்லை, நின் கணும் பத்தன் அல்லேன்,
களிப்பது என் கொண்டு நம்பீ, கடல் வண்ணா, கதறுகின்றேன்,
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய், அரங்க மா நகருளானே (திருமாலை 25)

ஆழ்வார், பிராம்மணன் என்ற குலத்தில் பிறந்திருந்தும்,
அது கர்மயோகம் செய்வதற்கு தரும் தகுதிகளை தான் இழந்துவிட்டதாகவும்,
தனக்கு ஆத்ம ஞானம் இல்லை என்றும்,
தான் பரமாத்மாவிடம் உண்மையான பக்தி உடையவன் இல்லை என்றும்
அதனால், தான் மகிழ்வதற்கு ஒரு காரணமும் இல்லையே என்று கதறுகிறார்.
அரங்கன் தனக்குத் தகுதி முதல் தொடங்கி எல்லாவற்றையும் அருள வேண்டும் என்று இந்த பாசுரத்தில் வேண்டுகிறார்.

இதற்கு முன் உள்ள பத்து பாசுரங்களில் எம்பெருமான் தனக்கு செய்த பேருதவிகளை சொன்னார்.
சென்ற பாசுரத்தில், தனக்குள்ள பக்தி கள்ளத் தனமானது என்றார்.
இந்த உடலோடு சம்பந்தம் நீங்கி, பரமபதம் அடைந்து நித்யமும் அவனை அனுபவிக்க தனக்கு ஒரு சாதனமும் இல்லை,
அதனால் இந்த பகவத்விஷயத்தை இழந்து விடுவோமோ என்று ஆழ்வார் தவிக்கிறார்.

இதைக் கண்ட பெரியபெருமாள், பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர் இவர்கள் பின்பற்ற வேண்டிய
கர்ம, ஞான பக்தி வழிமுறைகள் சாஸ்திரங்களில் உள்ளன என்றும்,
மற்றவர்கள், விலங்குகள் எல்லாவற்றிக்கும் வழிமுறைகளான சரணாகதி, திருநாம சங்கீர்த்தனம்
போன்றவைகளும் உள்ளனவே என்றும் ஆழ்வாரிடம் கூறுகிறார்.
இந்த உபாயங்களை பின்பற்ற தனக்கு தகுதி தொடங்கி ஒன்றும் இல்லை என்றும்
தம்மிடம் கர்ம, ஞான பக்தி யோகங்களில் எதுவும் இல்லை என்றும் இந்த பாடலில் ஆழ்வார் கூறுகிறார்.

இதற்கு முன் பாசுரங்களில் தனக்கு பக்தி மற்றும் ஞானம் இருப்பதாக ஆழ்வார் சொன்னது,
எம்பெருமானை இந்த உலகில் அவனை அனுபவிக்க அவன் அருளியவையே தவிர,
அவை பரமபதம் சென்று அவனை அனுபவிக்கவல்ல சாதனம் அல்ல என்றும் கூறுகிறார்.

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை
குளித்து-ப்ராஹ்மணனாக பிறந்தவன் மூன்று விதமான குளியல் செய்யவேண்டும் என்றும் ,
மூன்று அக்னிகளை வளர்க்க வேண்டும், என்றும் வேதசாஸ்திரங்கள் சொல்லும் எதையும் பிறந்த நாளில் இருந்து
தாம் செய்ததில்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.

மூன்று விதமான குளியல் என்பது, தினமும் மூன்று வேளைகளில் செய்யும் ஸ்னானம்,
கிரஹண காலங்களில் செய்யும் ஸ்னானம்,
மற்றும் பிராயச்சித்தம் செய்யும் முன் செய்ய வேண்டிய ஸ்னானம் ஆகும்.
இந்த மூன்று விதமான ஸ்னானங்களில் ஒன்றை செய்து மற்றதை செய்யாமல் இருக்க முடியாது.
இவை அனைத்தும் பலவித கர்மங்களை செய்வதற்கான தகுதியை கொடுக்கும். (கர்ம யோகத்திற்கான தகுதி).
ஆழ்வார் சாஸ்திரங்கள் சொல்லும் கர்மங்களை பின்பற்றுவது ஒருபுறம் இருக்க அவைகளுக்கு உண்டான தகுதியை கொடுக்கும்
குளிப்பது போன்ற செயல்களை பின்பற்றுவதே ஒரு அரியதான செயலாக உள்ளது என்கிறார்.
ஸ்னானம் போன்று உயரிய சொற்களை சொல்வதற்கும் தகுதி இல்லை என்பதை தெரிவிக்கவே
ஸ்னானம் என்று சொல்லாமல் குளித்து என்று ஆழ்வார் சொல்கிறார்.

மூன்று அனலை ஓம்பும்
சாஸ்திரம் மூன்று அக்னிகளை ஆராதிக்க வேண்டும் என்று சொல்கின்றது.
இங்கும் ஆழ்வார் அக்னி என்ற உயர்ந்த வார்த்தையை கூறாமல், அனல் என்ற சாதாரணமான வார்த்தையை கையாள்கிறார்.
இப்படி ஆழ்வார் அனல், குளித்து என்று சாதாரண நடைமுறை வார்தைகளை சொல்வது,
அவர் தூய்மையான வார்த்தைகள் கூட அறிந்தவர் அல்லர் என்பதை எம்பெருமானுக்கு தெரிவிக்கவே ஆகும்.

ஒரு அனலை ஆராதிப்பதே அரிது ஏனெனில், போதும் என்ற நிலை எதற்கு கிடையாதோ அதற்கு அனல் என்று அர்த்தம்.
அதாவது எவ்வளவு ஆராதித்தாலும் போதாது, மேலும் மேலும் ஆராதிக்க வேண்டும் என்ற தன்மை உள்ள
ஒரு அனலை ஆராதிப்பதே அரிது என்று ஆழ்வார் சொல்கிறார்.
அதுவும் மூன்று அனல்களை ஒரு அந்தணன் ஆராதிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்வதை பின்பற்றுவது
மிக கடினம் என்பது ஆழ்வார் வார்த்தைகளால் தெரிகிறது. குழந்தைக்கு சோறும் நீரும் கட்டிக்கொண்டு
செல்லும் தாயை போல் அந்தணன் அனலை ஆராதிக்க உமியும் சமித்தும் (தீயில் இட குச்சிகள்)
சுமந்து கொண்டு எப்பொழுதும் திரிய வேண்டி உள்ளது என்கிறார்.

குறிகொள் அந்தணமை
உச்சரிக்கும் மந்திரத்தின் பலன் கிடைக்க மிகவும் ஜாக்கிரதையாக செயல் படுத்தவேண்டியது
அந்தண்மை என்ற ப்ராஹ்மண்யம். இதில்
மந்திரங்களை உச்சரிப்பதில் தவறு செய்வது,
மந்திரங்களை சொல்லும்போது செய்யும் செயல்களில் தவறு செய்வது,
பயன்படுத்தும் பொருள்களில் அளவு மற்றும் குணத்தில் உள்ள குறை,
செய்ய வேண்டிய காலத்தில் உண்டான மாற்றத்தினால் ஏற்படும் குறை,
ஆராதிக்கப்படும் தேவதையை மாற்றுவதால் உண்டான குறை
என்று ஏதாவது ஒன்றில் குறை ஏற்பட்டாலும் மந்திரத்தின் பலன் கிடைக்காமல் போகும்.
இது அஞ்சலி செய்தால் மன்னிப்பது போன்று எளிமையான ஒன்று அல்ல என்பதால்
இதனை பின்பற்றுவதும் ஆழ்வாருக்கு சிரமம் என்று அவர் கூறுவது தெரியவரும்.

தன்னை ஒளித்திட்டேன்
அப்படிப்பட்ட ப்ராஹ்மண்யம் தன்னிடம் இல்லை என்பதை ஒளித்திட்டேன் என்று கூறும் ஆழ்வார்,
இவரால் அந்த சமூகத்தில் உள்ள மற்றவர்க்கும் அவப்பெயர் உண்டாகும்படி தான் இருப்பதாகவும் கூறுகிறார்.
இதனால் ஆழ்வார் பெரியபெருமாளுக்கு தெரிவிக்கும் விஷயம் , கர்மயோகத்திற்கு தகுதியான ப்ராஹ்மண்யமே தன்னிடம் இல்லை,
அதனால் கர்மயோகம் என்பது தன்னிடம் ஏற்பட வழியே இல்லை என்பதே ஆகும்.

என் கண் இல்லை
கர்ம யோகம் ஏற்பட வழி இல்லை என்றால், ஞான யோகத்திற்கு முயற்சி செய்யலாமே என்று
பரமாத்மா -பெரியபெருமாள் ஆழ்வாரிடம் வினவிய போது, ஞான யோகத்திற்கு தகுதியான, தன்னை (ஜீவாத்மா / ஆத்மாவை)
பற்றிய உண்மையான அறிவு தன்னிடம் இல்லை என்பதை என்கண் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
தன்னிடம் ஞான யோகத்திற்கு தகுதி இல்லை என்பதால், தன்னிடம் ஞான யோகத்திற்கான வழியும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.

கர்மயோகம் இல்லை என்ற போதே அதனால் ஏற்படக்கூடிய ஞான யோகம் கிடையாது என்று ஆகிவிட்ட பிறகும்
ஆழ்வார் ஏன் மீண்டும் தனியாக ஞான யோகம் ‘என்கண் இல்லை‘ என்று சொல்ல வேண்டும் என்று
கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை உரையாசிரியர் கூறுகிறார்.
சென்ற பிறவியில் கர்மயோகம் செய்து அதனால் ஏற்படக்கூடிய ஞானயோகம் பிறப்பதற்கு முன்னால்
மரணம் ஏற்பட்டு அதனால் அடுத்த பிறவியின் ஆரம்பத்திலேயே ஞானயோகம் ஏற்பட்டு இருக்கலாம்
என்ற ஒரு சாத்திய கூற்றினையையும் ஆழ்வார் மறுக்கிறார்.

நின் கணும் பத்தன் அல்லேன்
கர்மயோகம், மற்றும் ஞானயோகம் இவற்றிற்கு தகுதி இல்லை என்றால் பக்தியோகம் செய்வது தானே
என்று பெரியபெருமாள் கேட்டபோது அதற்கு தகுதியான பரமாத்மாவின் மேல் அன்பு தனக்கு சிறிது கூட இல்லை
என்பதை நின் கணும் பக்தன் இல்லை என்று சொல்லி பக்தியோகத்திற்கும் வழி இல்லை என்று கூறுகிறார்.

முன்பு போல், கர்மயோகம் மற்றும் ஞான யோகம் இவை இரண்டும் இல்லை என்றால் அவற்றினால் ஏற்படும்
பக்தியோகம் இல்லை என்று தனியாக சொல்ல வேண்டுமோ எனில்,
பற்பல பிறவிகளில் கர்ம, ஞான யோகங்களை செய்தவர்களுக்கு, பக்தியோக ஆரம்ப விரோதிகளான
பாவங்கள் நீங்கப்பட்டு கண்ணனிடம் பக்தி உடையவர்கள் ஆவார்கள் என்று
நம் சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன என்பதை முன்பு பார்த்தோம். ஆழ்வார் அதுவும் தனக்கு இல்லை என்கிறார்.

இந்த மூன்று யோகங்களுமே தனித்தனியாக மோக்ஷம் அளிக்க வல்லனவாகையால்,
ஆழ்வார் இந்த மூன்றுக்கும் தேவையான தகுதிகளே தன்னிடம் இல்லை என்பதை தனி தனியாக கூறி உள்ளார்.

மற்றவர்கள் கர்ம, ஞான பக்தி யோகங்கள் பற்றி
“குளித்து மூன்று அனலை ஓம்பும், குறிகொள் அந்தணமை தன்னை, ஒளித்திட்டேன் என் கண் இல்லை,
நின் கணும் பத்தன் அல்லேன் ” என்ற இந்த முதல் இரண்டு வரிகளால் தொண்டரடிப்பொடி ஆழ்வார்
தனக்கு கர்ம, ஞான பக்தி மார்க்கங்களில் ஒரு சிறிது தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்.
இனி மற்ற ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

சுவாமி நம்மாழ்வார், “நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன் ” (திருவாய்மொழி 5.7.1) என்பது
கர்மயோகமும், ஞான யோகமும் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக தெரிகிறது.

“கறவைகள் பின் சென்று” என்ற திருப்பாவை (28) பாசுரத்தில் ஆண்டாள்
“அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்” என்று சொல்வதை,
‘அறிவு இல்லாத”, “அறிவு ஒன்று இல்லாத ” மற்றும் “அறிவு ஒன்றும் இல்லாத” என்ற பிரித்து
கர்ம,ஞான மற்றும் பக்தி மார்க்கங்கள் ஒன்றும் தனக்கு இல்லை என்பதை சுருக்கமாக சொல்லி உள்ளார்.

ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் தன்னுடைய ஸ்தோத்திர ரத்தினம் என்ற நூலில் (22) ஸ்லோகத்தில்
‘ந தர்ம நிஷ்டோஸ்மி, நசாத்மவேதி, ந பக்திமான்” என்று சொல்வதின் மூலம்
‘கர்மயோகத்தில் நிலை நின்றவன் இல்லேன், ஆத்ம ஞானமும் உடையவன் இல்லேன்,
உன்னுடைய திருவடித்தாமரைகளில் சிறிதும் பக்தி உடையவன் இல்லேன்’ என்று சொல்லி,
ஒரு சாதனமும் இல்லை, உன்னுடைய திருவடித் தாமரைகளே சாதனம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

சரணாகதிக்கு தன்னிடம் ஒரு சாதனமும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னது போலவே
தன்னிடம் கைமுதல் ஒன்றும் இல்லை அல்லது ஆகிஞ்சன்யம் என்ற வைஷ்ணவ தத்துவத்தை விளக்குகிறார்.

களிப்பது என் கொண்டு
சரணாகதிக்கு தன்னிடம் ஒரு சாதனமும் இல்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னதற்கு பெரியபெருமாள்,
அறிவாளிகள் செய்வதுபோல், ஒரு சாதனமும் இல்லை என்ற வெறுமையை, ஆகிஞ்சன்யத்தை, சொல்வதும் மிகவும் அரிது,
அப்படி ஆழ்வார் சொன்னபடியால், தம்மை அடைவதில் ஒன்றும் குறை இல்லையே என்று சொன்னார்.

அதற்கு ஆழ்வார், தன்னிடம் கர்ம, ஞான பக்தி யோகங்கள், இல்லையே என்ற வருத்தமும் இல்லை,
கீதையில் (18.66) ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ ‘ என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனையே பற்றும்படி
சொன்னதற்கும் தன்னிடம் உள்ள ஆகிஞ்சன்யமும் ஒரு அனுதாபமும் இல்லாத ஒன்றாக இருப்பதால்,
தான் எதை கொண்டு ஆனந்தப்படுவது என்று கலங்குகிறார்.

நம்பீ
அப்படியானால் ஆழ்வாரை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பெரியபெருமாள் உரைத்தபோது,
ஆழ்வார், தன்னிடம் ஒன்றும் இல்லை என்றாலும், அவனிடம் எல்லா கல்யாண குணங்களும் இருக்கின்றன என்றும்
அவற்றைக்கொண்டு தனக்கு பேற்றை அருளலாமே என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்குலத்தில் என்று சொன்ன பிறகு,
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என்று ஆண்டாள் திருப்பாவை (28) பாசுரத்தில் சொன்னாற்போல்,
எம்பெருமானின் குண பூர்த்தியை, நம்பீ என்று தன்னுடைய வெறுமையை சொன்னபின் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார்.

கடல்வண்ணா
அவனுடைய உயர்ந்த, சீலம் போன்ற குணநலன்கள் தேவையில்லை என்றும்
அவனுடைய வடிவழகே தனக்கு பரமபதம் அளிக்க போதும் என்பதை கடல்வண்ணா என்பதால் ஆழ்வார் தெரிவிக்கின்றார்.

கம்பராமாயணம் யுத்த காண்டம், (6718) பாடலில்,
“கருணையங்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி ” என்று சொல்லி, ஒரு கடலோடு மற்றொரு கடல் போட்டி போட்டு
சாய்ந்தாற்போல் பெரியபெருமாள் சயனித்து இருப்பது என்கிறார்.
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன், (15), என்றும்
ஆதரம் பெருக வைத்த அழகன் (16) என்றும் பாடிய ஆழ்வார் தனக்கு சரணாகதி அளிக்கும் பெரிய பெருமாளுக்கு
வடிவழகும் குணங்களும் குறைவின்றி இருப்பதால் தான் இழக்க வேண்டியது இல்லை என்பதை சொல்வதாக பொருள்.

கதறுகின்றேன்
ஆழ்வார் இந்த கதறுகின்றேன் என்பதன் மூலம் பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்

தன்னிடம் கர்ம ஞான பக்தி மார்கங்களுக்கு தேவையான தகுதிகள் இல்லாது இருப்பதும்,
பெரியபெருமாளுக்கு குணங்களும், வடிவழகும் நிறைந்து இருப்பது தெரிந்தும்,
கர்ம ஞான பக்தி யோகங்களில் நின்றவர்கள் தங்களுக்கு பலன் கிடைக்காத போது
கதறுகின்ற மாதிரி கேட்பவர்கள் காதுகளுக்கு கர்ணகொடூரமாக சப்தம் செய்வதாகவும்,
சிறிய பக்தி செய்பவர்களுக்குக்கூட கருணை காட்டும் எம்பெருமான் ஆழ்வாருக்கு கருணை காட்ட வில்லையே என்று
பெரியபெருமாளுக்கு அவப்பெயர் அல்லது தாழ்வு வருமாறு செய்து விட்டதாகவும்,
தான் எம்பெருமானுக்கு பல்லாண்டு மட்டுமே பாடி இருக்க வேண்டும் என்றும் பல கருத்துக்களை
இந்த கதறுகின்றேன் என்பதன் மூலம் தெரிவிக்கின்றார்.

அளித்து எனக்கு அருள் செய் கண்டாய்
ஆழ்வார் பெரியபெருமாளிடம், தனக்கு அவரிடம் அனுதாபம் முதல் எல்லாம் பிறக்க அருள் செய்யவேண்டும் என்பதை
‘அளித்து‘ என்பதால் தெரிவிக்கின்றார்.
அதற்கான கருணை அவனிடம் இருப்பதால் அவன் அருள் பொழிய வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

அரங்க மா நகருளானே
தான் ஏன் ஆழ்வாருக்கு, தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என்று பெரியபெருமாள் கேட்டதற்கு,
குறையற்றவர்களை மட்டும் அருள்வது என்று இருந்தால் அவன் பரமபதத்தில், முக்தர்களையும் நித்யர்களையும்
அருள் செய்து கொண்டு அங்கேயே இருந்து இருக்கலாம்,
திருவரங்கத்திற்கு வந்து சயனித்து இருக்கும் கிடையழகையும், சீல குணங்களையும் காட்டுவது,
தன் போன்றவர்களுக்கு அருள் பாலிக்கவே என்று சொல்லி, ஆழ்வார் இந்த பாசுரத்தை நிறைவு செய்கிறார்.

———-

ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை,
திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதைப் பார்த்தோம்.

ப்ராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்களுக்கான கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால்,
மற்றவர்கள் செய்யக் கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரிய பெருமாள் கேட்க,
அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம்.

பூக்களைக் கொண்டு அவனை அலங்கரிப்பது, வாக்கினால் அவனுடைய ஸ்தோத்திரங்களைச் சொல்வது,
மனதினால் அவனை நினைப்பது என்று இந்த பாடலில் சொல்வது மூன்றும்,
எம்பெருமான் கேட்ட அர்ச்சனை, துதி ஆகும்.

போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்,
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே,
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே. திருமாலை 26

எல்லாக் காலங்களிலும் பூக்களை கொண்டு, அவனுடைய அழகிய திருவடிகளில் சமர்பிக்க சக்தி அற்று இருப்பதாகவும்,
குற்றமற்ற வார்த்தைகளைக் கொண்டு அவனின் நற்குணங்களை சொல்ல முடியாதவனாக இருப்பதாகவும்,
உண்மையான காதலினால் அவன் மீது வரும் அன்பை தன் நெஞ்சத்தில் சேர்க்கவில்லை என்றும் ஆழ்வார் சொல்லி,
தன்னுடைய ஒரு அவயத்தாலும் (உறுப்பினாலும்) திருவரங்கனை அனுபவிக்கவில்லை என்பதால்,
தான் ஏன் பிறந்தேன் என்று கதறுகிறார்.

இங்கு பூதத்தாழ்வார் பாடிய
“போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த,
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது,
மணிவேங்கடவன் மலரடிக்கே செல்ல,
அணிவேங்கடவன் பேர் ஆய்ந்து. (இரண்டாம் திருவந்தாதி 72) பாசுரத்தை நினைவில் கொள்ளலாம்.

திருமலையில் உள்ள குரங்குகள், திருவேங்கடமுடையானுக்கு அதிகாலையில். முக்கரணங்களாலும் சேவை செய்கின்றன என்றும்
பூக்களை பறித்து சமர்பிக்கின்றன என்றும் ஆழ்வார் பாடுகிறார். பேர் ஆய்ந்து என்பது வாயினால் திருநாமங்களை சொல்வது.
ஏத்தும் போது,உள்ளம் என்பது மனத்தினால் ஸ்தோத்திரம் செய்வதை சொல்வது.
போது அரிந்து கொண்டு என்பது பூக்களை கைகளால் பறித்துக்கொண்டு வருவதை சொல்வது.

போதெல்லாம் போது கொண்டு
எல்லா காலத்திலும் சிவந்த பூக்களைக் கொண்டு பொன் போன்ற அவனுடைய திருவடிகளை அலங்கரிப்பதே சரியான ஒன்று,
அப்படி செய்வதில் தனக்கு ஊற்றம் இல்லை என்றும் அதற்கான சக்தியும் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.
அவனைத் தவிர மற்ற விஷயங்களில் சக்தியும் ஊக்கமும் உள்ளன என்று கூறுவதாக கொள்ளலாம்.
முன்பு சொன்னது போல் விஷ்ணு தர்மத்தில், எந்த நாக்கு விஷ்ணுவின் பெயரை சொல்கிறதோ அதுவே நாக்கு
எந்த உடல் விஷ்ணுவைப் பணிகிறதோ அதுவே உடல், மற்றதெல்லாம் வீண் என்று சொன்னதை நினைவில் கொள்ளலாம்.

இந்த சொற்தொடரில்,
முதல் போது, என்பது காலத்தையும்,
இரண்டாவது போது என்பது பூக்களையும் குறிக்கின்றது.

போதெல்லாம் உன் பொன்னடி புனைய மாட்டேன்
எல்லா காலத்திலும் செய்ய முடியவில்லை, எப்போதாவது ஓரிரு முறை செய்ய முடியும் என்ற கருத்து இல்லை.
எந்த காலத்திலும் (ஒரு முறை கூட) அர்ச்சிக்க முடியாதவனாக, சக்தி இல்லாவதவனாக உள்ளேன் என்றே
ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.

ஹரி என்று இரண்டு எழுத்துகளை ஒரு முறை சொன்னாலே மோக்ஷம் செல்ல வேண்டிய அனைத்துக் காரியங்கள்
செய்யப்பட்டன என்று விஷ்ணு தர்மத்தில் (70.84) சொல்லப்பட்டது.
கோவிந்தா என்று ஒருமுறை நினைத்தால், நூற்றுக்கணக்கானப் பிறவிகளில் செய்த பாவக்கூட்டத்தை
நெருப்பு பஞ்சுமூட்டையை எரிப்பது போல் எரித்து விடுகிறான்.
ஒரு தடவை சரணம் அடைந்தவன் பொருட்டும், அவனுக்கு அடியேன் ஆகிறேன் என்று சொல்பவன் பொருட்டும்
அவர்களுக்கு முழுவதும் அபயமளிக்கிறேன் என்றும் அதுவே தன்னுடைய விரதம் எனறும்
இராமபிரான்(இராமாயணம், யுத்த காண்டம், 18-33) சொன்னதை நினைவில் கொள்ளவேண்டும்.

இப்படி, ஒரு காலத்தில்-ஒரு முறை அவனிடம் ஈடுபாடு கொண்டாலே, பலன் கொடுக்கவல்ல பெருமை உடையவன் அவன்.
அப்படிப்பட்டவனை ஒரு காலத்திலும் அர்ச்சிக்க சக்தி இல்லாவதன் ஆகிவிட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.

பூக்களைக் கொண்டு சேவை செய்தவர்கள்
எம்பெருமானுக்கு பூக்களைக் கொண்டு செய்கின்ற சேவை, அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, ஏனென்றால்
விஷ்ணு அலங்காரப்ரியன், சிவன் அபிஷேகப்ரியன். கைங்கர்யத்தில் தவறு நிகழ வாய்ப்பு மிக குறைவாக உள்ளது.
அதனை செய்வது எளிதாகிறது. நம் சம்பிரதாயத்தில், இந்த கைங்கர்யத்தைப் பலர் செய்து உள்ளனர்.

பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனம் அமைத்து மலர்கள் பயிரிட்டு அவற்றை கொண்டு
வடபத்ரசாயிக்கு தொண்டு செய்து வந்தார் என்பது வரலாறு.
அதே நந்தவனத்தில் தான் ஆண்டாளையும் கண்டெடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்.
பெரியாழ்வார் ‘ஆனிரை மேய்க்க‘ என்று யசோதை நிலையில் இருந்து எம்பெருமானுக்கு பலவிதமான
மலர்களை சூட்டி அழகு பார்த்ததை, பெரியாழ்வார் திருமொழியில் (2.7) அனுபவித்து பாடி உள்ளார்.

ஆண்டாள், திருமாலுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆனாள்.
தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனதினால் சிந்திக்க (திருப்பாவை 5) என்பதால்,
எம்பெருமானை முக்கரணங்களால் அர்ச்சிக்க வேண்டும் என்பதை எளிதாக எடுத்து சொன்னவர்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்து வந்தார் என்பதும்,
திருமங்கையாழ்வார் கோவிலுக்கு திருமதில் கட்டும்போது இந்த நந்தவனத்தை விட்டு
அதற்கு ஒரு தடையும் வராமல் காட்டினார் என்பதும் வரலாறு.

கண்ணன், கம்சனை அழிப்பதற்கு முன், மாலாக்காரன் என்ற அடியவன் கண்ணனுக்கு சிறந்த பூ மாலைகளை சூட்டி
அழகு பார்த்து அனுப்பி வைத்தான் என்பது பாகவதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஸ்வாமி ராமானுஜரின் எண்ணத்திற்கு ஏற்ப திருமலையில் நந்தவனம் உருவாக்கி, அங்கே பூக்கும் பூக்களைக் கொண்டு
ஏழுமலையானுக்கு பல ஆண்டுகள் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் அனந்தாழ்வான் என்னும் ஆச்சாரியர்.
அவர் உபயோகித்த கடப்பாரை இன்றும், திருமலையில் காட்சிக்கு உள்ளது.

நம்மாழ்வார் புஷ்ப கைங்கர்யத்தைப் பற்றி பாடிய ‘மாலை நண்ணி தொழுது எழுமினோ‘ என்று பாடிய
திருக்கண்ணபுர பாசுரங்களையும் (9.10) இங்கே நினைவில் கொள்ளலாம்.
காலை மாலை கமல மலர் இட்டு என்றும்,
கள் அவிழும் மலர் இட்டு என்றும்,
விண்டு வாடா மலர் இட்டு என்றும்,
தேனை (உடைய) வாடா மலர் இட்டு என்றும், பாடியதை நாமும் அனுபவிக்கலாம்.

தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்
இப்படி உடம்பினால் செய்யும் கைங்கர்யங்கள் செய்யாமல், மற்ற உலக விஷயங்களில் ஈடுபட்டாலும்,
குற்றமற்ற வாக்கினைக் கொண்டு எம்பெருமானின் திவ்ய குணங்களை சொல்வதே போதுமானது என்று
பெரியபெருமாள் சொல்லிய போது, ஆழ்வார் தன்னுடய வார்த்தைகள் குற்றமற்றவைகளாக இருந்த போதிலும்,
அவை அழகானவைகளாக இருந்த போதிலும், எம்பெருமானுடைய திருக்குணங்களை பேச இயலாதவனாக
இருக்கிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார் விஷ்ணு தர்மத்தில் கூறியபடி எம்பெருமானை பற்றி பேச வேண்டிய நாக்கு,
மற்ற விஷயங்களை பேசும் போது நறுக்கு தெரித்தாற்போல் உள்ளது என்றும்
எம்பெருமான் விஷயத்தில் அதனால் இயலவில்லை என்றும் கூறுகிறார்.

காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்
உடம்பினாலும் வாக்கினாலும் சேவை செய்ய முடியாவிட்டாலும், நெஞ்சத்தைக் கொண்டு எம்பெருமானிடம்
அன்பு செல்லுத்தலாமே, என்று பெரியபெருமாள் வினவிய போது,
ஆழ்வார், இந்த விஷயத்தில், காதலால் வரும் அன்பு வரவில்லை என்று கூறுகிறார்.
விஷயங்கள் சேரும் போது, காமம் வருகிறது என்றும், காமத்தினால் கோபம் வருகிறது என்றும்
பகவத் கீதை (2.62) சொன்னபடி,
ஆழ்வார் தான் இதுவரை அனுபவித்த காதலும் உண்மையானது அல்ல என்றும்,
அவர்களின் பொருள்களை கவர்வதற்கே அப்படி செய்ததாகவும் சொல்கிறார்.

இங்கு உரையாசிரியர், ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னத்தின் -62வது ஸ்லோகத்தை எடுத்து கொள்கிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன்,
தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன்,
பொறாமையின் பிறப்பிடம்,
எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிட வேண்டிய கர்வத்தை உடையவன்,
காமத்துக்கு வசப்பட்டவன்,
ஏமாற்றுபவன்,
க்ரூரமான செயல்களில் ஈடு பட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கி யுள்ளவன்.
நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக் கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்? என்று கூறுகிறார்.

அடுத்து, விஷ்ணு புராணத்தில் (3.7.30) இருந்து,
எவன் ஒருவன் கெட்டபுத்தியுடன், தன் உயிர் நண்பனுக்கும், சொந்தங்களுக்கும், மனைவிக்கும், பிள்ளைகளுக்கும்,
தாய் தந்தையருக்கும், வேலைக்காரர்களுக்கும் கெடுதல் நினைத்து, அவர்களின் செல்வங்களை கவர நினைக்கிறானோ
அவன் தன்னுடைய பக்தன் இல்லை என்று எம்பெருமான் சொல்வது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அது தன்னாலே, ஏதிலேன்
மனம், வாக்கு, உடல் என்ற இந்த முக்கரணங்களாலும் அவனிடம் ஈடுபாடு கொண்டு பயன் பெரும் பெரியவர்கள்
போல் இல்லாமல் தன்னால், ஒரு கரணத்தால் கூட ஈடுபாடு கொள்ள முடியாதவானாக,
ஓன்றும் இல்லாதவனாக, இருப்பதாக ஆழ்வார் கூறுகிறார்.

ஏதிலேன் அரங்கற்கு
இங்கு மறுபடியும், ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னத்தின் 18 வது பாடலை எடுத்துக் கொண்டு
எம்பெருமான் எப்படி தன்னுடைய முக்கரணங்களால் அடியவர்கள் இடத்தில உண்மையாக உள்ளான் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்.

ஶ்லோகம் 18 –
ஆளவந்தார் இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார்,
இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

இயற்கையாகவே எம்பெருமான் எல்லா கல்யாண குணங்களின் கடலாக இருப்பவன் என்பதை,
கீழ்கண்டவாறு ஒரு பட்டியல் இடுகிறார்.
நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன்.
உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தில் சொல்வது, இப்படி கஷ்டப்பட்டு சாஸ்திரங்களை படித்து தெரிய வேண்டாதபடி,
நேரடியாகவே சுலபமாக தெரிந்துகொள்ள சயன திருக்கோலத்தில், பள்ளி கொண்டுள்ள திருவரங்கன் இருக்கிறான் என்கிறார்.
இப்படிப்பட்ட பெரிய பெருமாளுக்கு ஒரு கரணத்தினால் கூட அர்ச்சனம் ஏதும் செய்யாமல்,
ஒன்றும் இல்லாதவன் ஆகிவிட்டேன் என்று புலம்புகிறார்.

எல்லே
எம்பெருமான் தன்னை அவனிடம் சேர்க்காததற்கு தன்னுடைய எந்த ஒரு குற்றமும் காரணம் இல்லை என்றும்,
தான் செய்த பாவங்களே காரணம் என்றும் இந்த ஒரு ‘எல்லே‘ என்ற வார்த்தையினால் ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார், தான் அருகில் இல்லாததாலோ, தான் தகாதவராய் இருப்பதாலோ,
தான் எம்பெருமானிடம் உள்ளவற்றை குறைகளாகப் பார்ப்பதாலோ, எம்பெருமானை இழக்கவில்லை என்றும்,
தன்னுடைய பாவங்களால் தான் இழந்தோம் என்றும் சொல்கிறார்.
எம்பெருமான், குற்றத்தை பாராமல் அதையே குணமாக கொள்ளும் இனியவன் என்பதையே காரணமாகச் சொல்கிறார்.
மேலும், எம்பெருமான் மிக விரும்பும் கௌஸ்துபமணி போல் உள்ள இந்த ஆத்மா வீணானதே என்று வருந்துகிறார்.
பெரியதிருமொழி (3.7.6), “அரங்கத்து உறையும் இன் துணைவன் ” என்ற பாசுரம் மேற்கோளாக சொல்லப்படுகிறது.
அப்படிப்பட்ட இனிமையான துணைவனை விட்டு வெகுதூரம் போய்விட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
பால் மருந்தாகவும், அதுவே அனுபவிக்க கூடிய ஒரு பொருளுமாக இருப்பது போல் அழகுடன் கூடிய,
மோக்ஷத்தை அளிக்கவல்ல எம்பெருமானை இழந்தோமே என்று கதறுகிறார்.

என் செய்வான் தோன்றினேனே
விஷ்ணு தத்வத்தில் சொன்னபடி, எம்பெருமான் தமக்கு அளித்த கை, உடல், மனம் போன்றவற்றை
அவருக்குப் பயன் படுத்தாமல், வீணடித்த தாம் ஏன் தான் பிறந்தோமோ என்பதை, ஆழ்வார் தோன்றினோமோ என்று கூறுகிறார்.
தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம்.
அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், பிறருக்கு நன்மை செய்யாமல், தீயவை புரியவே என்று
ஆழ்வார் தான் பிறந்ததும் தீங்கு விளைவிப்பதாகி விட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.

————

ஆழ்வார் தன்னுடைய வர்ணாசிரம தர்மத்திற்கு தகுந்த, கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான
தகுதி கூட இல்லை, என்று இந்த பகுதியின் முதல் பாடலிலும்,
இரண்டாம் பாடலில், தான் எந்த மனிதன் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்வதில்லை என்றும்
இப்போது மூன்றாம் பாடலில் குரங்குகள், அணில்கள் போன்ற மிருகங்கள் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும்,
நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல, ஆழ்வார் எதுவும் செய்தது இல்லை என்று நைச்சானுசந்தானத்தை தொடர்கிறார்.

குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி,
தரங்கநீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலம் போலேன்,
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே திருமாலை 27

வானர வீரர்கள், இராம கைங்கர்யத்தில் ஈடுபடவேண்டும் என்ற காரணத்தினால்,
மலைகளை தள்ளிக் கொண்டு வருவது போலவும், தண்ணீரிலே மூழ்கி, பின்னர் கரையில் உள்ள மணலில் புரண்டு ஓடி,
அலைகளுடன் பொங்கும்படியான கடலை, தூர்ப்பதில் ஈடுபட்ட கபடம் அற்ற அணில்களைப் போலவும்,
தான் இல்லை என்றும்,
மரங்களைப் போல் கடினமான மனதை உடையவனாய், வஞ்சனையில் ஈடுபட்டுள்ளவனாய்
எல்லாவித கைங்கர்யங்களுக்கும் தகுதி வாய்ந்த, பெருமை உடைய, தான் திருவரங்கனுக்கு
நெஞ்சார அடிமை செய்யாமல், அனர்த்தப்பட்டு நிற்கிறேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.

சென்ற இரண்டு பாசுரங்களில் சொல்லியது போல், மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற் செயல்களையும்
ஆழ்வார் செய்யா விட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை,
விலங்குகளைக் கொண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில்,
குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல்,
ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரிய பெருமாள் வினவ,
அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம்.

குரங்குகள் மலையை நூக்க
குரங்குகள் என்று பன்மையில் சொல்லி, மலை என்று ஒருமையில் சொன்னது,
எண்ணிக்கையில் குரங்குகள் அதிகம் என்றும், மலைகள் குறைவாகவும் இருப்பது என்றும்
ஒரு மலையை பல குரங்குகள் தள்ளிக் கொண்டு வருகின்றன என்றும் தெரிகிறது.
ஒவ்வொரு வானர வீரரும் ஒரு மலையை ஒரு சிறு கல் போல் தூக்கும் சக்தி உடையவர் என்றாலும்,
மலைகள் குறைவாக இருப்பதால் இராம கைங்கர்யம் செய்யும் ஆசையால் பல குரங்குகள் ஒரு மலையை தொட்டு வருகின்றன
என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.
மேலும், விலங்குகளுக்கு இத்தகைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை வருமா என்று கேட்டுக் கொண்டு,
சேவையை ஏற்றுக் கொள்ளும் ஸ்வாமியான ஸ்ரீ ராமபிரான், பொருத்தமான ஸ்வாமி ஆனதாலும்,
அவர் வில்லும் கையுமாக நிற்கும் நிலையைக் கண்டவுடன், ஞானம் உள்ளவர், இல்லாதவர் என்ற வித்யாசம் இல்லாமல்
சிறு துரும்பு போன்றவைகளும் கூட கைங்கர்யம் செய்யும் என்று சொல்கிறார்.

மலையை நூக்க
மலையை கடலில் போட என்று சொல்லாமல், நூக்க என்ற சொல்லால், மலையை தள்ளிக் கொண்டு வருவது என்று சொல்வது,
முதலில் வரும் மலையை தள்ளிக்கொண்டு வரும் வானரக் கூட்டத்தில் இருந்து அடுத்த வானரக் கூட்டம் மலையை பெற்றுக் கொண்டு
அப்படியே அடுத்து வரும் வானரக் கூட்டத்திற்கு கொடுக்க, இப்படி மலையை யாரும் தூக்காமல் கை மாறி மாறி,
கடலில் தள்ளி விட்டன என்று கருத்து.

குளித்து
இராமாயணம், யுத்தகாண்டத்தில் (5.9) இராமர், சீதையை நினைத்து தன் உடல் மிகவும் கொதித்து உள்ளதாகவும்,
தான் அப்படியே சமுத்திரத்தில் சிறிது நேரம் இருந்தால், அந்த ஜுவலிக்கின்ற காமாக்னியானது
ஜலத்தில் கூட கஷ்டப்பட்டே தகிக்கும் என்றும், நீரெல்லாம் வற்றி விடும் என்றும் கூறுகிறார்.
எம்பெருமான் சீதா பிராட்டியின் பிரிவால் வாடுவதை பார்த்த வானர வீரர்கள் எல்லோரும் ராம கைங்கர்யத்தில் ஈடுபட்டு,
மிகவும் வேகமாக கடலில் அணைக்கட்டுவதை காட்டுகிறது என்று உரையாசிரியர் சொல்கிறார்.

குளித்து …. அணிலம் போலேன்
இங்கு ஆழ்வார் முதலில் அணிலின் பார்வையில் இருந்து ஒரு சில கருத்துக்களைச் சொல்கிறார்.

குரங்குகள் மலைகளை தள்ளிக்கொண்டு போவதை பார்த்து, எம்பெருமான் பிராட்டியை சீக்கிரம் அடைய வேண்டும்
என்ற எண்ணத்திற்கு, அந்த வேகம் போதாது என்று எண்ணின.
மலைகளை கடலில் வெறுமே போட்டுவிட்டால், பாலம் கட்டி முடியாது, அவைகளை பூச வேண்டும், ஒரு குரங்கும் அதை செய்யவில்லை;
மலைகளை பூச மணல் வேண்டும், அதையும் மலைகளுக்கு நடுவே போட வேண்டும், அவற்றை இந்த குரங்குகள் செய்ய வில்லை.
அதனால், அணில்கள் கடலில் மூழ்கி, கரையில் புரண்டு தன்னுடைய உடல்களில் மணலை ஒட்டி
மீண்டும் கடலில் உள்ள அந்த மலைகளுக்கு இடையே மீண்டும் கடலில் குளித்தன.

(குளித்து)
இவ்வாறு அணில்கள் கடலில் உள்ள மலைகளை பூசுவதாக நினைத்தன.
இப்படி அடிக்கடி கடலில் முழுவதால் அந்த தண்ணீரை கடலில் இருந்து எடுத்து கொண்டு போக முடியும்,
அதனால் கடல் தண்ணீரும் சீக்கிரத்தில் வற்றி விடும் என்று அணை கட்டும் இராம கைங்கர்யத்தில் அணில்கள் ஈடுபட்டன.
இவை எவ்வளவு சிறியவை, இதனால் அணை கட்டி முடிக்க முடியாது என்று எல்லாம் அணில் நினைக்காமல்,
இராம கைங்கர்யத்தில் ஈடுபடுவதிலேயே குறியாக இருந்தன.
குரங்குகளால் பூச முடியாமல் போன, ராம காரியத்தை, நம்மால் செய்ய முடிகிறதே என்ற கர்வத்துடன்
அணில்கள் ஓடி ஓடி சேவை புரிந்தன என்பதை ஆழ்வார் ‘தாம்‘ என்ற வார்த்தையால் சொல்கிறார்.
தாம் என்பதற்கு
சிறிய மேனி என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

தண்ணீரில் இவ்வாறு மணலை உதிர்த்து விட்டு, மீண்டும் குளித்து, பின் அதிக மணலை தன்னுடைய உடம்பில்
ஓட்டும் என்ற தவறான நம்பிகையால், கடற்கரையில் வெகு தூரம் சென்று உருண்டு,
பிரண்டு மீண்டும் கடலுக்கு சென்றன.

(புரண்டிட்டோடி )
அப்பொழுது அதனை கவனித்த வானரங்கள் ஏன் இவ்வளவு வேகம் என்று கேட்டதற்கு,
இராமபிரான் துக்கமாக உள்ளார், மத்திய உணவு இலங்கையின் வடக்கு வாசலில் தான்,
அதற்குத்தான் இந்த வேகம் என்று சொல்லி, வானரங்களுக்கு வேகம் போதவில்லையே என்று குறைபட்டுக் கொண்டன.
இராம காரியத்தில் உள்ள விருப்பத்தால், தம்மால் இந்த காரியத்தை செய்து முடிக்க முடியமா என்று யோசிக்காமல்,
அணில்கள் அந்த சேவையை தொடர்ந்தன.
அலைகளால் பொங்குகின்ற கடலை அடைப்பதற்கு இந்த சிறிய அணில்கள் முயற்சி செய்தன.

(தரங்க நீரை அடைக்கல்)
தாங்கள் தான் மேஸ்திரிகள் போல் இருந்து கடலை அடைகின்றோம் என்றும்,
தங்களுக்கு உதவியாக வானரங்கள் மலையை கொண்டு கடலில் கொட்டுகின்றன என்றும் அணில்கள் நினைக்க தொடங்கின.

(உற்ற)
அணில்கள் இந்த காரியத்தை கைங்கர்யமாக செய்கின்றவே தவிர, ஒரு பலனையும் எதிர்பார்க்கவில்லை

(சலம் இலா அணிலம் )
அணில்கள் செய்யும் காரியங்கள் சிறிதளவும் கடலை அடைக்க உதவி இல்லாமல் இருக்கும் போது
அது எப்படி எம்பெருமான் கைங்கர்யமாக கருதப்படுகிறது என்றால்,
அவைகளின் எண்ணத்தில் உள்ள சுத்தத் தன்மையே போதுமானது என்று ஆழ்வார் சொல்கிறார்.
எண்ணம், எம்பெருமான் விரைவில் கடலைகடந்து இலங்காபுரியை அடையவேண்டும் என்பதே.

சலமிலா என்பதை, சலனம் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு,
ஆழ்வார், மனிதர்கள் போல், சாஸ்திரங்களால் வசப்படாமல், கைங்கர்யம் செய்ய கை கால்கள் கூட இல்லாமல்,
குளித்து, ஓடி, புரண்டு, என்று பல செயல்கள் செய்யும் இந்த தாழ்ந்த விலங்குகளிடம் உள்ள
நல்ல எண்ணங்கள் கூட தன்னிடம் இல்லை என்பதை, சென்ற பாசுரத்தாலும் (குளித்து மூன்று) இந்த பாசுரத்தாலும் சொல்கிறார்.

எல்லா விருப்பங்களும், என்றும் நிறைவேற பெற்று இருக்கும், எம்பெருமானுக்கு ஜீவாத்மாக்களிடம் இருந்து
எதிர்பார்ப்பது இந்த நல்ல எண்ணம் ஒன்றைத்தான். பூர்ணனான எம்பெருமானுக்கு பூர்ணமில்லாத
ஜீவாத்மாக்களால் ஒன்றும் செய்து விட முடியாது தான்.
அதற்காக அற்ப ஞானமும், அற்ப சக்தியும் உள்ள தான் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்குவது
பாக்கியம் இல்லாதவன் செய்வது.
பூர்ணனான எம்பெருமானுக்கு ஒரு சிறிது காரியம் செய்தாலும், மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வான் என்று
எந்த பிரதிபலனையும் கருதாமல் அவனுக்கு தொண்டு செய்பவர் ஒரு சிலரே.
அப்படி செய்யும் அணிலுக்கு உள்ள ஈடுபாடு தனக்கு இல்லையே என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார்.

அணை கட்டியதை பற்றிய சில பாசுரங்கள் :
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்,
தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 1.5.1)

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்து,
கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று,
தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ,
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. திருமங்கையாழ்வார், (பெரிய திருமொழி, 8.6.4)

மலையதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே ! (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி, 8.8)

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலைகட்டி மறு
கரையை அதனால் ஏறி எரி நெடு வேல் அர்க்கரோடு இலங்கை வேந்தன்
இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி 10.7)

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்ய,
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் ( தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை 11)

மரங்கள்போல் வலிய நெஞ்சம்
இரும்பு போல் வலிய நெஞ்சம் என்று 17 வது பாசுரத்தில் பாடிய ஆழ்வார்,
இங்கு மரங்கள் போல் வலிய நெஞ்சம் என்று பாடுகிறார்.
இரும்பினை தீயில் இட்டு தனக்கு வேண்டிய வடிவத்திற்கு மாற்ற முடியும்,
ஆனால் மரத்தினை தீயில் இட்டால் சாம்பல் ஆகிவிடும் என்று காரணத்தால் ஆழ்வார் தனது நெஞ்சினை மரத்திற்கு ஒப்பிடுகிறார்.

சலமிலா மரங்கள் போல் என்று ஒரு அர்த்தமும் சொல்லப்படுகிறது.
மரத்தை ஆயுதத்தால் அசைத்து விடலாம் என்றும்,
ஆழ்வார் தன் நெஞ்சம் அதை விட வலியது, எதனாலும் அசைக்க முடியாது என்று கொள்ளலாம்.

வஞ்சனேன்
இப்படி கடினமான நெஞ்சம் இருக்கும் போது, பார்க்கிறவர்கள் இவன் நெஞ்சம் எம்பெருமானை நினைத்து
இப்படி உருகுகிறதே என்று நினைக்கும்படி நடிக்க வல்லவனாக தான் இருப்பதாக ஆழ்வார் சொல்கிறார்.
உலகில் உள்ள மற்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, எம்பெருமானிடத்தில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல்,
ஆனால் பார்ப்பவர்கள் இவனைப்போல் உண்டோ என்று மயங்கும்படி உட்கருத்தை மறைத்து வாழ்கிறேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
இறை இறை உருகும் வண்ணம் என்று 17வது பாசுரத்தில் சொன்னது இப்படி வேஷம் போட்டது என்று ஆழ்வார் சொல்கிறார்.

நெஞ்சு தன்னால்
அணில்கள் தங்களுடைய நல்லெண்ணத்தாலே கைங்கர்யம் செய்தது போல், அவர் கொடுத்த நெஞ்சத்தை வைத்து,
அருகே இருக்கும் அவரிடம் கொஞ்சமாவது ஈடுபாடு கொண்டு இருக்கலாம் என்று ஆழ்வார் இங்கே சொல்கிறார்.

அரகங்கனார்க்கு ஆட்செய்யாதே
ஆட்செய்தல் என்றால் அது முழுமையாக பரிபூர்ணமாக செய்வதாகும், மேலே சொன்னது போல், கொஞ்சம் ஈடுபாடு இருந்தால்,
அது ஆட்செய்தல் என்று ஆகாது.
அணில்களின் நல்ல எண்ணத்தையே கைங்கர்யமாக திருவுள்ளம் கொள்ளும் எம்பெருமானைக் கருத்தில் கொண்டால்
அவன் அந்த கொஞ்சத்தையே முழுமையாகக் கொள்வான் என்று ஆழ்வார் சொல்கிறார்.

அளியத்தேன்
இராமாயணத்தில் (அயோத்யா காண்டம் 31-25), சீதையும், இராமனும் மலை சரிவுகளில்
ரம்யமாக பயணம் செய்யும் போதும் மற்றும், அவர்கள் உறங்கும் போதும், முழித்துக்கொண்டு இருக்கும் போதும்
அவர்களுக்குத் தேவையான எல்லாவித சேவைகளையும் செய்வேன் சென்று லக்ஷ்மணன் கூறியது போல்,
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வடிவில்லா அடிமை செய்ய வேண்டியதற்காக பிறந்த ஆத்மா அல்லவோ,
என்று ஆழ்வார் தன்னுடைய ஆத்மாவை எண்ணி அது வீணாகிவிட்டதே என்று கவலைப் படுகிறார்.

அயர்க்கின்றேனே
இப்படி தன்னுடைய ஆத்மா வீணாகி விட்டதே என்பதற்கான காரணம், தான் எம்பெருமானை மறந்ததுதான் என்றும்,
தகுதி இல்லாதால் அல்ல என்றும் சொல்கிறார்.
திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் (6.2.2),
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியின் மனத்தால், இறந்தேன் சொல்வதை இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

——–

உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி,
செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்,
நம் பரமாயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா,
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே.– திருமாலை –28

பிரம்மா போன்ற தேவர்களால் கூட, இப்படிப்பட்டது என்று அளவிட்டு அறியமுடியாதபடி,
தேஜோ மயமான பரம பதத்தில் உள்ள எம்பெருமான், கஜேந்திரன் என்ற யானைக்காக,
சிவந்த மாமிசத்தைச் சாப்பிட்டு வாழும்படியான முதலை மேல், கோபித்துக் கொண்டு வந்து அருளினான்.
இப்படி தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், நம்மை காப்பாற்றிக்கொள்ள நமக்கு என்ன பாரம் ?
நாய் போல் இருக்கும் நம்மிடத்தில் உள்ள குறைகளை கருத்தில் கொள்ளாமல், இருக்கும் நம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல்,
எதற்காக தான் பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தும் பாடல்.

குரங்குகள், அணில்கள் சிறு கைங்கர்யங்கள் செய்த போது, அவைகளிடம் இருந்த நல்ல எண்ணம் கூட தங்களிடம் இல்லையாகில்,
கஜேந்திர ஆழ்வான் என்ற யானை பொய்கையில் இறங்கிய போது, அதன் காலை, முதலை பிடித்துக்கொண்டதால்,
தளர்வுற்று, எம்பெருமானை தன்னை காப்பாற்றுபவனாக நினைத்தது போல் தாங்கள் நினைத்தது உண்டா என்று
எம்பெருமான் கேட்டதற்கு சென்ற பாசுரங்களில் சொல்லியது போல், இங்கும் அது தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.

திருமாலையில் ஒரு சில பாசுரங்களில் திருவரங்கன் திருநாமம் நேரடியாக வருவது இல்லை,
அது போல் அமைந்த ஒரு பாசுரம் இது.

ஆழ்வார், கஜேந்திர மோக்ஷம் என்ற இந்த நிகழ்வை கீழ்கண்டவாறு பிரித்துப் பார்த்து
எம்பெருமானின் பெருமையை விளக்குகிறார்.

உதவி செய்த எம்பெருமான் எப்படிப்பட்டவர்
உயர்ந்த பரமபதத்தில் இருப்பவர்; யாராலும் அறிய முடியாதவர்;
எவருக்கும் உதவி செய்தே ஆக வேண்டும் என்ற எந்த நிர்பந்தம் எதுவும் இல்லாதவர்.
நித்ய ஸூரிகளால் ஆராதிக்கப்பட்டு வருபவர்

உதவி பெற்ற கஜேந்திரன் என்ற யானைக்கும், உதவி செய்தவருக்கும் உள்ள சம்பந்தம்
ஸ்ரீதேவி தாயாருக்கோ, பூமி பிராட்டிக்கோ, அனந்தாழ்வாருக்கோ, விஷ்வக்ஸேனருக்கோ, கருடனுக்கோ இருக்கும்
சம்பந்தம் போல் இந்த யானைக்கு எம்பெருமானிடம் எந்தவிதமான நேரடி சம்பந்தமும் கிடையாது

உதவி பெற்றவரின் எதிரியின் (முதலையின்) பலம் -திறமை
இராவணன், ஹிரண்யகசிபு, சிசுபாலன் போன்ற பலமான எதிரி இல்லை, முதலையை வெறும் நீர்ப்புழு என்கிறார்.

உதவி செய்த எம்பெருமான் இந்த தருணத்தில் எப்படி இருந்தார்
எப்பொழுதும் சாந்தமாக இருக்கும் எம்பெருமான், கோபத்தை தன் மேல் ஏற்றிக் கொண்டு வந்தார்

உதவி எங்கே செய்யப்பட்டது
பரமபதத்தில் இருந்து, அதாவது இருந்த இடத்தில இருந்தே சக்கரத்தாழ்வாரை அனுப்பி உதவி செய்து இருக்கலாம்;
ஆனால், எம்பெருமான் மடுக்கரைக்கு நேரடியாகச் சென்று உதவி செய்து உள்ளார்.

உதவி ஏன் அப்படி, அப்பொழுது செய்யப்பட்டது
எம்பெருமானிடம் தனக்கு உள்ள சம்பந்தத்தை ஒப்புக்கொள்ளும் தன்மை உடைய,
தன்னை தன்னால் காத்துக்கொள்ள முடியாது என்ற உண்மையை உணர்ந்த,
ஆபத்தில் அல்லது அபாயத்தில் உள்ள தம் அடியவர்களை காப்பதில் உள்ள அவசரம், அன்பு,
அவர்களுக்கு காட்டும் பாரபட்சம், அவர்களுக்கு தரிசனம் கொடுப்பதில் உள்ள பிரியம்.
இந்த கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி மற்ற ஆழ்வார்கள் பாடல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

உம்பரால் அறியலாகா ஒளியுளார்
உம்பர் என்று சொன்னது சத்திய லோகம் முதலிய மேல் உலகங்களில் வாழும் பிரம்மன் போன்ற தேவர்களை குறிக்கும்.

அறியலாகா என்பது
மிகுந்த ஞானம் பெற்ற பிரம்மன் சிவன் போன்றவர்களும் அறிய முடியாதது என்று சொல்கிறது.
பகவத் கீதை (16.14), ‘நானே ஈஸ்வரன், நானே எல்லா போகத்தையும் அடைபவன், இயற்கையாகவே சித்தனாக இருப்பவன்,
இயற்கையிலேயே பலவான் ஆகவும், சுகத்தை அனுபவிப்பவனாகவும் இருப்பவன் நானே” என்று சொல்கிறபடி,
தானே ஈஸ்வரன் என்ற நினைப்பிலுள்ள பிரம்மன், சிவன் போன்றவர்களும் அடைய முடியாததாக மட்டும் இல்லாமல்,
அறிய முடியாததாகவும் உள்ளது பரமபதம் என்று உரையாசிரியர் சொல்கிறார்.
அதற்கு அவர்கள் தங்களுக்கு அதிகமான ஞானம் இருந்தாலும், தங்களால் செய்ய முடியாது எதுவும் இல்லை என்ற
ஆணவத்துடன் இருக்கிறார்கள் என்பதும்,
ஆணவத்துடன் உள்ளவர்களுக்கு பரமபதம் இடம் இல்லை என்பதுமே காரணம் என்றும் உரையாசிரியர் சொல்கிறார்.

அடுத்து விஷ்ணு புராணம் 1.9.55ல்
பிரம்மா, தேவர்களாலும், முனிவர்களாலும், சங்கரனாலும், தன்னாலும்
யாதொன்றை அறிய முடியாத இருக்குமோ அதுவே பரமேஸ்வரனான விஷ்ணுவின் பரமபதம்
என்று சொல்வது எடுத்துக் காட்டப்படுகிறது.

ஒளியுளார் என்று சொன்னதில்
உள்ள ஒளி என்பது பரமபதத்தையும் ஒளியுளார் என்பது அங்கு நித்யவாஸம் செய்யும் எம்பெருமானை குறிக்கும்.
சந்தோபநிஷத் (3.13.7)ல், பரமபதத்தில், எம்பெருமானால் படைக்கப்பட்டவை மற்றும் அவரின் படைப்புகளால் படைக்கப்பட்டவை
என்ற எல்லாவற்றிக்கும் மேலாக உள்ளதும், தனக்கு மேற்பட்டது ஒன்று இல்லாததுமான இடத்தில் இருந்து ஒளிவிடும் பரஞ்சோதி என்றது,
ஒளி என்ற சொல்லுக்கு மேற்கோளாக சொல்லப்படுகிறது.

மஹாபாரதத்தில் ஆரண்ய-வன பர்வத்தில், (136.18.23),
மஹாத்மாவான அந்த விஷ்ணுவின் இடம், சூர்யன், அக்னி இவைகளில் ஒளியை விட மிக அதிகமானதும்,
அந்த ஒளியின் தேஜஸால், தேவர்களும், அசுரர்களும் கூட அதைக் காண முடியாததாக உள்ளது என்றும்,
அங்கு போனால் மறுபடி இந்த உலகிற்கு திரும்புவதில்லை என்றும் சொல்கிறது.

ஒளியுளார் , என்றது
மூன்றாம் திருவந்தாதியில் (51) சொன்ன கலங்காப் பெருநகரம் என்று சொல்லப்பட்ட பரமபதத்தில்,
நித்ய ஸூரிகளை அனுபவித்துக்கொண்டு இருப்பவன், சம்சாரத்தில், துன்புற்று இருக்கின்ற
ஒரு அடியானை காப்பாற்றுவதற்காக வந்தார்.

ஆனைக்காகி
இப்படி எல்லை இல்லாத மேன்மை உடையவர், அரைகுலைய, தலைகுலைய (அவசரமாக) காரியம் செய்ய வந்தது,
பிராட்டி, திருவடி, திருவனந்தாழ்வான், போன்ற உயர்ந்தவர்களுக்காகவோ என்று பார்த்தால்,
அது இல்லை என்றும், ஒரு விலங்கிற்காக இப்பாட்டு பட்டார் என்கிறார்.
உதவின எம்பெருமானின் உயர்வையும், துன்புற்ற யானையின் தாழ்வையும் ஒப்பிட்டால்,
மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் தெரியும் என்பது கருத்து.

ஒரு அடியானை காப்பாற்ற வேண்டும் என்றால், எம்பெருமான் தன்னுடைய மேன்மையையோ,
அடியானின் தாழ்ச்சியையோ பார்ப்பது இல்லை.
அவர்களுடைய ஆபத்தையும், அவர்களுக்கு தன்னிடம் உள்ள ஒழிக்க முடியாத சம்பந்தத்தையும் மட்டுமே
பார்க்கிறான் என்பது இந்த கஜேந்திர வரலாற்றில் இருந்து தெரிய வரும்.

செம்புலால் உண்டு வாழும் முதலை மேல்
அடியவரின் தாழ்ச்சியைப் பார்க்காவிட்டாலும், அவன் எதிரியையாவது யார் என்று பார்த்தால்,
அது தன்னை விட தாழ்வான மீன்களை உணவாக கொண்டு
‘வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல ‘ (திருவாய்மொழி 4.5.1) என்கிறபடி,
எல்லா உலகங்களையும் ஆழ்கின்ற எம்பெருமானை போல தனக்கு நிறைவு வந்துவிட்டதாக நினைக்கும்
ஒரு நீர்ப்புழுவை எதிர்த்து அல்லவோ வந்தார் என்கிறார்.

விஷ்ணுபுராணம் (1.9.35)ல் பிரம்மன் சொல்வதாவது,
தேவர்களுக்கு துன்பம் வந்தபோது, மேலானவர்களுக்கும் கீழானவர்களுக்கும் என்று எல்லோருக்கும் ஈஸ்வரனாகவும்,
அசுரர்களுக்கு சத்ருவாகவும் இருக்கும் எம்பெருமான் விஷ்ணுவை சரண் அடையுங்கள் என்பதாகும்.
பிரம்மன் தனக்கும் மற்ற தேவர்களுக்கும் அசுரர்களாலும் அரக்கர்களாலும் துன்பம் வரும் போது,
அந்த துன்பங்களைப் போக்க வேறு புகல் இடம் இல்லாமல், எம்பெருமானை சரண் அடைந்தபோது,
அவர், ஹிரண்யகசிபு, இராவணன் போன்ற வலிமை மிகுந்த அரக்கர்களோடு போரிட்டு அவர்களை
அழியச்செய்தான் என்றால் அதில் ஆச்சர்யம் இல்லை.
ஒரு ஆனை கூப்பிட்டதால், ஒரு முதலைமேல் கோபம் கொண்டு மிகத் தாழ்மையான அதனை ஒரு எதிரியாக
கருதிக் கொண்டு அவசரமாக ஓடி வந்தது ஆச்சரியமே என்று உரை ஆசிரியர் சொல்கிறார்.

சீறி
எம்பெருமான் எப்போதும் சாந்தமானவர்.
இதை தன் விஷயமாக இருந்தால் எம்பெருமான் சாந்தம் உடையவராக இருப்பர்
என்று இராமாயணம், அயோத்தியா காண்டம், 1-10ல் சொல்லப் படுகிறது.
ராமாயணம், ஆரண்ய காண்டம், (34-24)ல்,
இராமன், அரக்கர்களைக் கொல்வதற்காக கடும் கோபத்தை வரவழைத்துக் கொண்டார் என்றும்,
அப்படி கோபம் கொண்டவர், பிரளயத்தில் வரும் கோபாக்னியைப் போல் காண வொண்ணாதவராக இருந்தார் என்றும் சொல்கிறது.
தன் இயல்பான சாந்தியை மாற்றிக்கொண்டு, தன்னிடம் இல்லாத கோபத்தை வரவழைத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு, இராமாயணம் யுத்த காண்டத்தில், (59-136)ல்
இராவணனால் காயப்படுத்தப்பட்ட வானரர்களில் சிறந்தவரான ஹநுமானை பார்த்தபோது,
இராமன் கோபத்திற்கு வசப்பட்டான் என்று கூறுகிறது.
அதாவது
அடியார்களிடத்தில் யாராவது அபசாரத்தைக் கண்டால்,
எம்பெருமான் கோபத்திற்கு வசப்பட்டு விடுவான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி கோபத்திற்கு வசப்படும் போது, எதிரி எவ்வளவு தாழ்ந்தவன் என்பதை பார்க்க முடியாது என்பது
உண்மை என்பதால் இதில் ஆச்சர்யம் இல்லை என்று உரையாசிரியர் தெரிவிக்கிறார்.

கொடியவாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்று உண்டு என்று திருமங்கையாழ்வார்
தன் பெரிய திருமொழியில் (5.8.3) சொன்ன இந்த பெருங்குணத்தை தங்களுக்கு தஞ்சமாக கொண்டார்கள்.

வந்தார்
இருந்த இடத்தில இருந்து சங்கல்பத்தால் எதிரியை அழிக்கக்கூடிய சக்தியை பெற்ற எம்பெருமான்
அவசரம் அவசரமாக மடுக்கரைக்கு ஓடி வந்தது, ஆச்சர்யமே என்று ஆழ்வார் சொல்கிறார்.
உலகத்தை அழிப்பதாக இருந்தால், இருந்த இடத்தில இருந்து சங்கல்பித்து அழிக்கலாம்,
ஆனால் அடியவர் ஒருவரின் துயரை துடைக்க, தான் நேரடியாக வந்து தன் கையாலேயே அழிக்காத போது,
அவன் சீற்றம் – கோபம் தணியாது என்பது கருத்து.
அன்றைக்கு யானைக்கு ஓடி வந்து உதவியது தனக்கே உதவியது போல் ஆழ்வாருக்கு இருந்தது.

முதலையின் வாயில் தானே அகப்பட்டது போல், திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 5.8.3ல்
கொடியவாய் விலங்கு, என்று சொன்னதும் இன்னொரு மேற்கோள் ஆகும்.
திருமங்கை ஆழ்வாருக்கு வலிக்காவிட்டால், அவர் கொடிய வாய் விலங்கு என்று பாடி இருக்க மாட்டார்.
அதே போல் தான் தொண்டரடிபொடி ஆழ்வாரும் எம்பெருமான் யானைக்கு உதவியது தனக்கே உதவியது போல் பாடி உள்ளார்.
அதாவது
அடியார்களில் ஒருவருக்கு உதவியது தமக்கு உதவியது போல் என்று எண்ணிக் கொள்ளாவிட்டால்
அது வைஷ்ணவம் ஆகாது என்பது இதில் இருந்து வரும் கருத்து.
எம்பெருமான் ஆற்றங்கரைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை, இருந்தாலும் அவன் வந்தான்.
அதேபோல், அவனிடம் சரண் அடைந்தவர்க்கு துயரம் என்றால் நிச்சயம் வருவான்.

நம் பரமாயது உண்டே
மேலே சொன்னவை, எம்பெருமானுக்கு அடியார்களிடத்தில் எப்பொழுதும் அதீத பிரியமும், கருணையும் இருப்பதும்
அவன் அவர்களுக்காக ஒரு தலை பட்சமாகவும் நடப்பான் என்பதும் புரியும்.
அப்படி நம்மை காப்பாற்ற அவன் இருக்கும்போது நாம் ஏன் நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்று ஆழ்வார் கேட்பதாக
இந்த தலைப்பில் உள்ள வார்த்தைகள் அமைந்துள்ளன.

மேலும் உரையாசிரியர், எம்பெருமானின் சிறப்பை கீழ்கண்டவாறு எடுத்து சொல்கிறார்.

எம்பெருமான் தன்னுடைய மேன்மையை பார்ப்பவனாகவோ
அடியார்களின் சிறுமையைப் பார்ப்பவனாகவோ
நம்முடைய பாவங்களின் அதிகமான அளவைக் கண்டு, இன்னும் கொஞ்சம் துன்பத்தை அனுபவிக்கட்டும் என்று
கால தாமதம் செய்வதனாகவோ இருந்தால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும்
அவன் அப்படி இல்லை என்றும் கூறுவது தான் இந்த ‘நம் பரமாயது உண்டே“.

நாய்களோம்
ஆழ்வார் நம்முடைய தாழ்வான நிலையை பார்க்கையில், கஜேந்திரன் என்ற அந்த யானை மிக உயர்ந்த இடத்தில,
அதாவது, சனகர் போன்ற ரிஷிகள் ஸ்தானத்தில் வைக்கும்படி அல்லவோ இருக்கிறது என்கிறார்.
திறந்து கிடைக்கும் வீட்டில் நுழைந்தாலும் விரட்டி அடிக்கும் நாயின் நிலையில் நாம் இருக்கிறோம் என்கிறார்.
நாயின் உரிமையாளன் தொட்டாலும் உடனே குளித்து தன்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று
நினைக்கும் அளவில், நாம், நாயை போன்ற தாழ்வை உடைய நீசர்கள் என்பது கருத்து.

சிறுமை ஓரா எம்பிராற்கு
நாம் எவ்வளவு தாழ்வான நிலையில் இருந்தாலும் நம்முடைய தாழ்ச்சியை பார்க்க கண் இல்லாதவன் என்று
எம்பெருமானை ஆழ்வார் கூறுகிறார்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அவிஞ்ஞாதா சஹஸ்ராம்ஸு என்ற இரண்டு திருநாமங்கள் வருகின்றன.
அவைகளுக்கு அர்த்தம் சொல்லும் போது,
அடியார்களின் குற்றங்களை காண முடியாத அவிஞ்ஞாதாவாக இருக்கிறான் என்றும்
குணங்களை ஆயிரம் மடங்காக்கி எடுத்து கொள்ளும் சஹஸ்ராம்ஸுவாக இருக்கிறான் என்றும் சொல்வார்கள்.

இதையே சற்று மாற்றி அடியார்களின் குற்றங்களை காண முடியாத அவிஞ்ஞாதாவாக இருக்கிறான் என்றும்
அந்த குற்றங்களையே குணங்களாக மாற்றி, அதையும் ஆயிரம் மடங்காக்கி எடுத்து கொள்ளும்
சஹஸ்ராம்ஸுவாக இருக்கிறான் என்றும் சொல்வதுண்டு.
எல்லாம் அறிந்தவன் என்று அறியப்படும் எம்பெருமானை எதற்காக தோஷங்களை அறியாதவன் என்று
ஆழ்வார் சொல்கிறார் என்று கேட்டு கொண்டு,
முண்டகோபநிஷத் (1-1-10) சொல்வதை முதலில் சொல்லி உரையாசிரியர் கீழ்கண்ட விளக்கம் தருகிறார்.
எந்த பரம புருஷன் எல்லா பொருள்களுடைய ஸ்வரூபத்தையும், குணத்தையும் (ஸ்வாபம்) அறிகிறானோ,
எவனுடைய சங்கல்பம் ஞானமயமாக இருக்கிறாதோ என்று சொல்வதன் மூலம்,
பரம்பொருள் எல்லாவற்றையும் அறிகிறான் என்பதே முண்டகோபநிஷத் 1.1.10ல் சொல்லப்பட்டது.
எம்பெருமான் அடியவர்களின் தோஷங்களை கண்டு கொண்டு, அவற்றை பொறுத்து உதவி செய்வபனாக
தன்னை நினையாமல், தோஷங்களை காண கண்ணிட்டு அவற்றை பாராமலோ,
அவற்றை நன்மைகளாக – குணமாகக் கொண்டோ அருள் பாலிக்கிறான் என்று பொருள்.

எம்பிராற்கு
எம்பிராற்கு என்பதை தனியாக எடுத்துக் கொண்டு விளக்கத்தை காண்போம்.
இப்படி நம் குற்றத்தை கண்டுகொள்ளாமல், ஆபத்தையே காரணமாகக் கொண்டு நம்மை காப்பது என்று
நமக்காக வகுத்த எம்பெருமான் என்பதை எம்பிராற்கு என்று சொல்கிறார்.
எம் என்பது தன் ஸ்வரூபத்திற்கு தகுந்த ஸ்வாமியாக இருப்பதையும்,
பிராற்கு என்பது உதவி செய்பவன் என்றும் கொள்ளலாம்.

ஆட் செய்யாதே
இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்வது அல்லவோ தகுந்தது.
நம்முடைய காரியத்தை எம்பெருமான் தன்னுடைய பொறுப்பாக ஏற்றுக்கொண்ட பின்னர்,
நாம் நம்முடைய சரீரம், உடம்பின் உறுப்புகள் (இந்திரியங்கள்) நமக்கு என்று விதிக்கப்பட்ட பகவத் கைங்கர்யத்திற்கு
உட்படுத்துவது அல்லவோ தகுந்த செயல். அப்படி செய்யாமல், இருக்கிறேனே என்று ஆழ்வார் வருந்துகிறார்.

என் செய்வான் தோன்றினேனே
இங்கு, ஆழ்வார், பயனற்ற பிறப்பை உடையவன் ஆனேன் என்று சொல்கிறார்.
பிறவி எடுத்த பயன் எம்பெருமானுக்கு தொண்டு செய்வதே, ஆனால், தான் அதை செய்யாமல்,
தன்னுடைய பிறப்பு வீணானதே என்று சொல்கிறார்.

இதற்கு மேற்கோளாக,
“லக்ஷ்மணன் வனவாசத்திற்கே பிறந்தவன் என்றும், இராமனுக்கு சேவை செய்யவே பிறந்தவன்” என்றும்,
லட்சுமணனுக்கு சுமித்ராதேவி சொன்ன வார்த்தைகள் (இராமாயணம் அயோத்திய காண்டம் 40.5) சொல்லப்படுகின்றன.

அதே போல் (இராமாயணம் அயோத்திய காண்டம் 31.25) லக்ஷ்மணன் இராமனிடம்
“தேவரீர் உறங்கும் போதும், விழித்திருக்கும் போதும் தங்களுக்கு எல்லாவிதமான தொண்டுகளும் செய்வேன்” என்று
சொன்னவற்றை ஆழ்வார் நினைவு படுத்தி, அப்படி லக்ஷ்மணனைப்போல் எம்பெருமானுக்கு சேவை செய்ய
ஆசை கொண்டு இருந்தால் பிறந்தேன் என்று சொல்லலாம்.
தம்முடைய பிறப்பு உயிர் இல்லாத, அறிவு இல்லாத ஜடபொருட்கள் போல் ஆனதால், தோன்றினேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

முன் பாடலில் சொன்ன மாதிரி, தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம்,
அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், எம்பெருமானுக்கு சேவை செய்யாமல்
வீணாகி விட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.

———–

பாசுரம் 29
ஊரிலேன் காணி யில்லை உறவு மற்றொருவர் இல்லை,
பாரில் நின் பாத மூலம் பற்று இலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன்,
ஆர் உளர் களை கண் அம்மா அரங்கமா நகரு ளானே. (29)

ஆனைக்கு துன்பம் வந்தபோது, அது தனக்கு உதவுவதற்காக எம்பெருமானைப் பற்றி நினைத்த நினைப்பு ஆழ்வாருக்கு இல்லையாகில்,
எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்களாவது உண்டா என்று எம்பெருமான் வினவ,
அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கும் பாசுரம்.

சாளக்ராமம், அயோத்தி, திருவரங்கம் போன்ற திவ்யதேசங்களில் பிறப்பு, திருப்பல்லாண்டு பாடுதல் போன்ற
கைங்கர்யம் செய்யும் காணியாட்சி இருந்தால், எம்பெருமான் அவர்களை ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால்,
அது போல் உண்டா என்று எம்பெருமான் கேட்க,
அவை இல்லை என்று ஆழ்வார் இந்த பாடலில் மறுக்கிறார்.

எம்பெருமான் நித்ய வாஸம் செய்யும் திருத்தலங்களில் பிறக்கவோ, வாசம் செய்யவோ இல்லை;
அவைகளில் கைங்கர்யம் செய்யும் பாக்கியமும் தனக்கு இல்லை; அந்த திவ்யதேசங்களில் உறவுக்காரர்கள் இல்லை;
வேறு எவரையும் தெரியாது; இந்த பூமியில், புகல் அற்றவர்களுக்கு தஞ்சமான எம்பெருமானின் திருவடிகளையும் சரணாகதியாக பற்றவில்லை;
எல்லோருக்கும் தலைவனானவனே, கார்மேகம் போன்ற நிறம் உடையவனே, எனது கண்ணனே, உன்னை கதறி கூப்பிடுகிறேன்,
உன்னைத் தவிர வேறு யார் என்னுடைய குறையை தீர்க்க உள்ளார் என்பது பாடலின் பதவுரை ஆகும்.

ஊரிலேன்
இங்கு ஊர் என்று குறிப்பிடுவது, சாதாரண ஊர் இல்லை; சாளக்ராமம், அயோத்தி, திருவரங்கம் போன்ற
எம்பெருமான் நித்யவாஸம் செய்யும் திவ்யதேசங்கள் ஆகும்.
இதற்கு பின் வரும் வார்த்தைகளில் ஆழ்வார் சொல்லும் காரணமே இது சாதாரணமான ஊர் இல்லை என்பதை தெரிவிக்கும்.
ஆழ்வார் தான் பிறந்த மற்றும் வசிக்கும் ஊர் மோக்ஷ உபாயம் தருவதாக இல்லை என்று சொல்கிறார்.
எல்லா ஊர்களும் மோக்ஷம் தரும் என்றால் எல்லா மக்களும் மோக்ஷம் அடைவார்கள்.
அதற்கு எந்த விதமான ஆதாரங்களும் (பிரமாணங்கள்) இல்லை.

ஆனால் திவ்யதேசங்களுக்கு அந்த சிறப்பு உள்ளது என்பது,
வால்மீகி இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில், (1.20) இராமபிரானிடத்தில் “நாங்கள் உங்கள் பிரதேசத்தில் வசிப்பவர்கள்
என்பதால் உங்களால் பாதுகாக்கப்படுவதற்கு நாங்கள் தகுதியானவர்கள். நீங்கள் நகரத்தில் வாழ்ந்தாலும் சரி, காட்டில் வாழ்ந்தாலும் சரி,
நீங்கள் மக்களுக்கு எஜமானன், எங்கள் அரசன்” என்று தண்டகாரண்ய முனிவர்கள் சொல்வது.
உத்திர காண்டத்தில், (109.22) அயோத்தியில், ஒரு உயிரும் காணப்படவில்லை, எல்லா உயிர்களும் இராமனை பின் தொடர்ந்தனர்
என்று குறிப்பிடப்பட்டு உள்ளதும் இது போலவே;
கருட புராணம், 11 ஸ்லோகத்தில், இந்த தேசம், மிக புனிதமானதாகவும், மனிதர்களை நற்கதிக்கு அழைத்து சொல்வதாகவும்
அவர்களுடைய எல்லா இஷ்டங்களையும் நிறைவேற்றி தருவதாகவும் உள்ளது என்று கூறுவதும்
எம்பெருமான் நித்யவாஸம் செய்யும் திவ்யதேசங்கள் மோக்ஷ உபாயம் என்று நிரூபிக்கின்றன.

மேலும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடலான கற்பார் ராமபிரானை அல்லால் என்ற பதிகத்தில், முதல் (7.5.1) பாசுரத்தில்,
“புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே, நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும், நற்பாலுக்கு உய்த்தனன்” என்று
சொல்லி அயோத்தியில் வாழும் அத்தனை ஜீவராசிகளையும் வைகுந்தத்திற்கு அழைத்து சென்றதாக சொல்கிறது.
அதே போல், குலசேகராழ்வார் தனது பெருமாள் திருமொழியில், (10.10) “அன்று சராசரங்களை வைகுந்தத் தேற்றி” என்று
ராமபிரான் அயோத்தியில் உள்ள அனைத்தையும் வைகுந்தத்திற்கு அழைத்து சென்றதை பாடி உள்ளார்.
ஆக, திவ்யதேச வாசம் மோக்ஷம் கொடுக்கும் என்பது திண்ணம். ஆகையால் இங்கு ஊர் என்று சொன்னது திவ்யதேசமே.

காணி யில்லை
திவ்யதேசங்களில் பிறக்கவில்லை என்றாலும் அங்கு பல்லாண்டு பாடுதல், நந்தவனம் கட்டி, திருமாலை தொடுத்து
எம்பெருமானுக்கு சமர்ப்பித்தல் போன்ற கைங்கர்யங்கள் செய்வதற்காக உரிமை நிலமாக, காணியாட்சி நிலங்கள் பெற்றதுண்டோ;
தானமாகவோ அல்லது சொந்தமாக வாங்கியோ சில சிறு நிலங்கள் திவ்ய தேசங்களில் உள்ளனவோ;
அதன் பொருட்டு திவ்யதேசம் சென்று எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்தது உண்டோ என்று
திவ்யதேச சம்பந்தம் பற்றி எம்பெருமான் வினவ
அதற்கும் தன்னை உய்விக்க வழி இல்லை என்ற கருத்தில், காணி இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

உறவு மற்றொருவர் இல்லை
ஊரும் இல்லை, காணியும் இல்லை என்றால், உறவு மனிதர்களாவது ஒரு திவ்யதேசத்தில் இருக்கிறார்களா
அல்லது திவ்யதேசத்தில் உள்ளவர்களுடன் மந்திரம் சொல்லி கொடுத்தல் அல்லது கேட்டு கொள்ளுதல் அல்லது
பெண் கொடுத்தல், பெண் கொள்ளுதல் மூலம் உண்டான தொடர்போ இருந்தால்,
அது கொண்டு எம்பெருமான் ஆழ்வாரை ரக்ஷிக்கலாம் என்று சொல்ல, ஆழ்வார் அவைகளும் இல்லை என்கிறார்.
உறவு இல்லை என்பதால், நெருங்கிய உறவினர்கள் இல்லை என்றும், மற்றொருவர் இல்லை என்பதால்,
தூரத்து உறவினர்களோ, நண்பர்களோ, பார்த்து பேசிய நபர்களோ திவ்யதேசங்களில் தமக்கு இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.

பாரில்
அப்படியானால் எங்கு வசிக்கிறீர்கள் என்று எம்பெருமான் கேட்க, எல்லையற்ற துன்பங்கள் கொடுக்கும்,
ஒருவர் உண்ணும் உணவை எழுவர் பறித்துக் கொள்ளும் கொடுமையுடன், ஒருவர் உடையை எழுவர் கவர்ந்து
கொள்ளும் இந்த பூமியில் வசிக்கிறேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
மூன்றாம் திருவந்தாதியில்(51), பரமபதத்தை பேய்ஆழ்வார், கலங்கா பெருநகர் என்று வர்ணிக்கிறார்.
காமம், க்ரோதம் போன்ற கலக்கங்கள் இல்லாத பெரு நகரம் என்றும் அங்கு கவலையே இல்லாமல் இருக்கலாம் என்றும்
அவர் பரமபதத்தைப் பற்றிச் சொல்கிறார்.
ஆக பரமபதத்தை தவிர அத்தனை இடங்களும், மனிதர்களை கலங்கும்படி செய்யும் ஊர் ஆகும் என்பது ஆழ்வார் சொல்லும் கருத்து.

நின் பாத மூலம் பற்று இலேன்
வேறு கதி அற்றவர்களுக்கும் துணையாய் இருக்கும் எம்பெருமானின் திருவடிகளுக்கும் தனக்கும்
எவ்வகையிலும் தொடர்பு இல்லை என்கிறார்.
இங்கே உரையாசிரியர் ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் (38-33) இருந்து காகாசுரன் சரித்திரம் சொல்லப் படுகிறது.
காகாசுரன் தந்தையாலும், தாயாலும், மஹரிஷிகளாலும் தேவர்களாலும் கைவிடப்பட்ட போது, மூன்று உலகங்களையும் சுற்றி திரிந்து
பிறகு ராமபிரானையே சரண் அடைந்தான். அபச்சாரம் செய்து பிரம்மாஸ்திரத்திற்கு இலக்கான காகாசுரனுக்கும்
சரணாகதி அளித்த எம்பெருமானின் திருவடிகளுக்கு ஆகாதவன் ஆகிவிட்டதாக ஆழ்வார் சொல்கிறார்.
இப்படி எல்லா வழிகளிலும் நன்மை இல்லாத வகையில் ஆழ்வார் இருப்பதால், எம்பெருமானின் திருவுள்ளமும் அவரை
பெறும் பேற்றை ஆழ்வார் இழந்து விட்டதாக நினைக்க அதற்கு பதில் கூறும் வகையில் அடுத்த பதம் உள்ளது.

பரமமூர்த்தி
ஆழ்வார் தன்னை ரக்ஷித்துக் கொள்ள தன்னிடம் ஒரு உபாயமும் இல்லை என்று சொல்லி, ஆனால் எம்பெருமானிடம்
ஏராளமாக உபாயங்கள் இருக்கிறன என்றும் கூறுகிறார்.
பரம என்றால், அனைவரிலும் உயர்ந்தவராக உள்ளவர் என்று பொருள். மூர்த்தி என்றால் விக்ரஹம்.
அனைவர்க்கும் ஸ்வாமியாக (தலைவராக) எம்பெருமானே உள்ளார் என்று கூறி, அவனுக்கு அடியவனான ஆழ்வாரை ரக்ஷித்தால் தானே,
அவன் அனைவரையும் காக்கும் பரமமூர்த்தி என்று அறியப்படுவார் என்றும், மேலும், அடியவர்களை ஏற்றுக் கொள்ளா விட்டால்,
அவனுடைய தலைமை மாண்புக்கு ஒரு குறை வந்து விடுமோ என்ற கேள்வியையும்
எம்பெருமான் முன் ஆழ்வார் வைப்பதாக உரை ஆசிரியர் சொல்கிறார்.
அதற்கு எம்பெருமான் அடியவர்களும் தாங்கள் எம்பெருமானுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் என்பதை
உணர வேண்டாமா என்று பதில் உரைக்க,
ஆழ்வார், அடியவர்கள் தாங்கள் எம்பெருமானுக்கு அடிமை என்பதை மறந்து இருந்த காலத்திலும்,
பிரளய காலத்தில் ஒரு பொருளாக இவர்களை தன்னுள் அடக்கி வைத்து இருந்ததையும் யாராலும் மாற்ற முடியாது என்றதாலும்,
எம்பெருமான், இவர்களிடம் தான் அறிந்த உறவு முறை காரணமாக இவர்களை திருத்தி இவர்களுடன் உள்ள உறவு முறையை
உணர வைப்பான் என்ற கருத்தை முன் வைக்கின்றார்.

காரொளி வண்ணனே
எம்பெருமான் ஆழ்வாரின் வார்த்தைகளை கேட்டு, அவரிடமே அவர் சித்தி பெற என்ன வழி என்று எம்பெருமான் திருவுள்ளமாக,
அதற்கு ஆழ்வார் எம்பெருமானின் அழகே வழி என்கிறார்.
திருமாலை 16ம் பாசுரத்தில், ‘ஆதரம் பெருக வைத்த அழகன்‘ சொன்னபடி முதலில் ஒரு அடியவனுக்கு ஆர்வத்தை உண்டாக்கி,
ஆர்வம் பிறந்த பின் அவனை அடைய வழியாகவும் இருப்பது அவன் அழகு என்கிறார்.
அந்த வடிவழகு அவனிடம் இருக்கும் போது தான் கைங்கர்யசித்தி பெற குறையில்லை என்கிறார்.

கண்ணனே
அப்படிப்பட்ட அழகு எட்டா கனியாக பரமபதத்தில் இருக்காமல், ஆழ்வார் போன்ற அடியவர்களுக்காக பல அவதாரங்கள் எடுத்து,
தன்னுடைய எளிமை, நீர்மை போன்ற நற்குணங்களை காட்டிக்கொண்டு இருக்கும் பரம மூர்த்தி என்று ஆழ்வார் கூறுகிறார்.
காரொளி வண்ணன் ஆகையால், அடியவர்களுக்கு ஆர்வம் தொடங்குவது முதலாக,
உபாயம் வரை எல்லாமாக இருக்கும் எளிய கண்ணன் என்கிறார்.
மேலும், ஆழ்வார் எம்பெருமானை தங்களுடைய ஸ்வரூபத்திற்கு தகுந்தவராகவும் உள்ளார் என்று கூறி,
எளிமை நீர்மை போன்ற கல்யாண குணங்களுடன், வடிவழகும் சேர்ந்து இருப்பதால் ஆழ்வாரின் கைங்கர்ய சித்திக்கு
ஒரு குறையும் இல்லை என்கிறார்.
என் கண்ணனே என்றும் ஒரு பாடம் உண்டு. இரண்டிற்கும் அர்த்தத்தில் பெரிய வேறுபாடு இல்லை.

கதறுகின்றேன்
எம்பெருமானுடைய இந்த பெருமைகளை எண்ணி பக்தி முதலிய மற்ற சாதனங்களை பின்பற்றியவர்கள் அவர்களுக்கு
பலன் கிடைக்க தாமதம் ஆகும் போது எப்படி கதறி எம்பெருமானை கூப்பிடுவார்களோ
அது போல் தானும் கதறி கூப்பிடுவதாக ஆழ்வார் கூறுகிறார்.

ஆர் உளர் களைகண்
ஆழ்வார், தாம் இப்படி கதறி கூப்பிடும்போது, எம்பெருமான் ரக்ஷிக்காமல் காலம் தாழ்த்துவது,
வேறு யாராவது ஆழ்வாரை ரக்ஷிப்பார் என்று எம்பெருமான் நினைப்பதாலா, ஒன்றும் இல்லாத ஆழ்வார் தான்
தன்னை ரக்ஷித்துக்கொள்ள முடியுமா, தன்னிடம் ஒன்றும் இல்லை என்பதை தன்னைவிட அறிந்தவர் யாரும் இல்லாதபோது,
அவர்கள் தாம் வந்து ஆழ்வாரை காப்பாற்ற முடியாமா என்று பலவாறாக ஆழ்வார் கேட்பது ஆர் உளர் களைகண் என்பதில் விளக்கப்படுகிறது.

அம்மா
எம்பெருமானின் உடமைப் பொருள் அழிந்தால் அது அவருக்குத் தானே நஷ்டம் என்று ஆழ்வார் கலங்கி,அம்மா என்கிறார்.

அரங்கமா நகர் உளானே
உடையவனாக எம்பெருமான் தனக்கு அருகில் இல்லாமல் இருந்தாலாவது தான் கதறி அழாமல் இருக்கலாம்,
ஆனால் அவன் அருகிலேயே, இந்த பூவுலகத்தில் எம்பெருமானை பெற வேண்டும் என்ற ஆசையோடு
யாராவது வருவார்களா என்று திருவரங்கத்தில் (கோவிலில்) காத்துகொண்டு இருக்கும் போது,
தான் எப்படி கதறி அழாமல் இருக்க முடியும் என்று ஆழ்வார் வினவுகிறார்.

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் –விதி -பத பிரயோகங்கள் —

September 30, 2022

விதி –
1-கோட்ப்பாடு –
2-முறைமை –
3-பாபங்கள் –
4-பாக்யம் –
5-இறை அருள் –
6-புண்யம் -ஸூஹ்ருதம்
7-கட்டளை –
8-கைங்கர்யம் –
9-திண்ணம் உறுதிப்பாடு –
10-ஆக்குதல் –
இப்படி பத்து அர்த்தங்கள் உண்டே

——————–

    விதி (15)
1-விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் - 
2-மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே - 
3-வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்-பால் - 
4-மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல - 
5-விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை - 
6-தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி
-எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே - 
7-கூட்டும் விதி என்று கூடும்-கொலோ தென் குருகை_பிரான் -
8-அவரவர் விதி வழி அடைய நின்றனரே - 
9-விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே -
10-நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே - 
11-மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர் - 
12-எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் - 
13-அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே - 
14-விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -
15-விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் - 
--------------
விதியே (2) 
16-இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே -
17-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே - 
---------
விதி-கொலோ (1)
18-முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன் -
---------------
    விதிக்கிற்றியே (3)
19-வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கர கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே -
20-வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே -
21-துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே - 
---------------

விதியில்
22-மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர் - 
-------------
    விதியின் (1)
23-விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே -
----------
விதியினமே (1)
24-முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே - 
-----------
விதியினால் (1)
25-விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள் -
--------
விதியினை (1)
26-விதியினை கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே - 
--------------

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்—நாச்சியார் திருமொழி -3-2-

விதியின்மையால் அது மாட்டோம் –
அது பொல்லாதோ -அழகியது ஓன்று அன்றோ –
ஆகிலும் எங்கள் பாக்ய ஹானியாலே அது மாட்டு கிறிலோம் -என்கிறார்கள் –

விதி இன்மையால் அது மாட்டோம்-என்று –
அது -என்றார்கள் இறே-அவன் நினைவைத் தாங்கள் அறிந்தமை தோற்ற

———-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— பெருமாள் திருமொழி –4-2-

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே—
கீழ்ச் சொன்ன குருகாய் பிறக்கில் அதுக்கு சிறகு உண்டாகையாலே ஸ்ரீ திருமலையில் அல்லனாய்
கழியப் பறக்கைக்கு யோக்யதை யுண்டு இறே
அப்படியும் ஓன்று அன்றியே
உத்பத்தி ஸ்திதி லயங்களுக்கு ஸ்ரீ திருமலையிலேயாய் மீனாய்ப் பிறப்பேன் -என்கிறார் –

பிறக்கும் விதியுடையேன் ஆவேனே –
இப்போது மீனாய் பிறக்கவும் வேண்டா
ஒரு ஸூஹ்ருதத்தாலே அந்த ஜன்மம் மேல் வரும் என்று திண்மை பெறவும் அமையும் என்கிறார் —

—————

வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே—-திருமாலை —8—-

விதியில் சாக்கியர்கள் –
பகவத் உத்கர்ஷத்தை அறிந்து
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி
அனுபவிக்கைக்கு ஈடான பாக்கியம் இல்லாதவர் -பௌத்தர்

————-

மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-

நான் நெடுநாள் தன பக்கல் வைமுக்யம் பண்ணிப் போந்த இடத்தில்
என்னைக் கிட்ட மாட்டாதே நின்றான்

எனக்கு அத்வேஷம் பிறந்த அளவிலே
மேல் விழுந்து விஷயீ கரித்தான்-

இவை இரண்டும் என் பக்கலிலே கண்டேன் –

விதியிலா வென்னை –
அவனுடைய சீலம் இதுவாய் இருக்க –
விஷயாந்தர பிரவணனாய்
பகவத் விஷய விமூகனாய்ப் போந்த பாக்ய ஹீனன் என்று
முன்பு இழந்த இழவுக்கு வெறுக்கிறார் –

பழுதே பல பகலும் போயின -என்று
பெற்ற பேற்றில் காட்டில் இழந்த இழவே மேல் படி இறே
இவ்விஷயத்தில் கை வந்தார் படி இருப்பது
நிந்திதஸ் ஸ்வ ஸேல்லோகே ஸ்வாத்மாப்யேனம் விகர்ஹதே -என்னக் கடவது இறே –

——————-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –17-

வாக் வியாபாரம் புறம்பே யானாலும் -காயிக வியாபாரங்களில்
நம் பக்கல் பண்ணிற்றது ஏதும் உண்டோ என்ன –
விதியிலேன்-
விதிர்வித் -என்கிறபடியே
காயிக வியாபாரத்தைச் சொல்லுகிறது –

உன்னை உத்தேசித்து உன் பக்கல் அனுகூலமாக இதுக்கு முன்பு கையால் ஒன்றும் செய்திலேன் –
சாஜிஹ்வா யாஹரிம் ஸ் தௌ தி -என்கிறவதுவும்
யௌதத் பூஜா கரௌ கரௌ -என்கிறவதுவும் –

புறம்பே தப்பிற்றாகிலும் -நெஞ்சாலே தான் நினைத்தாரோ -வென்ன –
மதி யொன்று இல்லை –
உன் வாசி அறியாது ஒழிந்தால்
நீ ஒருவன் உண்டு என்ற அறிவும் கூட இல்லை –

——————–

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–ஸ்ரீ பெரிய திருவந்தாதி –84-

பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்
பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

—————-

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே —ஸ்ரீ ராமாநுச நூற்றந்தாதி –29 –

ஸ்ரீ எம்பெருமானார் திவ்ய குணங்களை உள்ளபடி அறிந்து இருக்கும் அவர்கள் திரள்களை
என் கண்கள் களிக்கும்படி கூட்டக் கடவ -ஸூஹ்ருதம் இன்று கூடுமோ-என்கிறார் –

விதி-ஸூஹ்ருதம்-இவர் தமக்கு பேற்றுக்கு அடியான -ஸூஹ்ருதமாக நினைத்து இருப்பது அத்தலையில் கிருபையை இறே-
தம்மாலும் ஸ்ரீ எம்பெருமானாராலுமே விலக்க இயலாமையின் கிருபையை விதி என்றார் –
கூட்டும் விதி -என்பதனால்-அதன் விளைவு தவிர்க்க ஒண்ணாதது என்பது புலனாகிறது
ஸ்ரீ நம் ஆழ்வாரும் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய் மொழி -5 1-1 – -என்று தவிர்க்க-இயலாமையை –
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே -என்று விளக்கி காட்டி-இருப்பது இங்கு உணரத் தக்கது –

——————

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –ஸ்ரீ திருவாய் மொழி –1-1-5-

அவரவர் விதி வழி யடைய நின்றனரே-விதித்த மார்க்கத்தில் பலம் பெற அந்தர்யாமியாக நின்று அருளி –
அவ்வவ ஆஸ்ரயணீயர் தந்தாமுடைய ஆகமாதிகளிலே விதித்து வைத்த பிரகாரங்களிலே அடையும்படியாக நம் இறையவர் அந்தராத்மாவாக நின்றார்
அன்றிக்கே
சர்வேஸ்வரன் காம நாதிகாரத்தில்–ஸ்ரீ கீதை 7 அதிகாரம்- அருளிச் செய்தபடியே -அவர்கள் அடையும்படியாக -என்னுதல் –
காமத்தால் இழுக்கப் பட்ட ஞானம் -சரீரமாக பல தேவதைகள் -அவர்கள் மேல் உறுதியான நம்பிக்கை நான் தான் பண்ணிக் கொடுக்கிறேன் என்கிறான்
திரிபுரா தேவியார் ராமானுஜர் காட்டிய –ஐதிகம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
சர்வேஸ்வரன் இரா மடம் ஊட்டுவாரைப் போலே முகம் தோற்றாதே அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய்-
இவர்களும் பல பிரதான சக்தர் ஆகிறார்கள் இத்தனை –
அவனை ஒழிந்த அன்று இவர்கள் ஆஸ்ரயிக்கவும் மாட்டார்கள் -அவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் -என்கிறார்
ஐயன் பாழியில் ஆனை போருக்கு உரித்ததாம் அன்று ஆயிற்று -அவ்வோ தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளது –
சாஸ்தா ஸ்தானம் ஐயனார் கோயிலில் உள்ள யானை போலே –

————-

மதுசூ தனைஅன்றி மற்றுஇலேன்என்று
எத்தாலும் கருமம் இன்றித்
துதிசூழ்ந்த பாடல்கள் பாடி ஆடநின்று
ஊழிஊழி தொறும்
எதிர்சூழல் புக்கு,எனைத் தோர்பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தால்எனக்கேல் அம்மான்
திரிவிக் கிரமனையே.–2-7-6-

‘‘எனைத்தோர் பிறப்பும் எதிர்சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்’ அதாவது,
‘எதிர் சூழல் புக்கு ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமாறு போன்று,
இவர் பிறந்த பிறவிதோறும் தானும் எதிரே பிறந்து வந்தான்’ என்கிறார் என்றபடி.
இவர் கர்மமடியாகப் பிறக்க, அவன் அநுக்கிரகத்தாலே பிறந்து வந்தான் இத்தனை.
‘சூழல்’ என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது.
‘விதி’ என்றது, பகவானுடைய கிருபையை.

‘பகவானுடைய கிருபையை விதி என்பான் என்?’ என்னில்,
இறைவனுக்குத் தப்ப ஒண்ணாதது ஆகையாலே. அதாவது,
நாம் நினைத்தவற்றைத் தலைகட்ட ஒட்டாத கர்மம் போன்று, ஈஸ்வரன் நினைத்த காரியங்களையும் கிருபைக்குப் பரதந்திரனாய்த் தலைக்கட்டமாட்டானாகையாலே என்றபடி.
‘தங்களிலும் திருவருளே மிகுந்து இரட்சித்துக்கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்;
கொலை செய்தற்குத் தக்கதான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்ணழிவு செய்யுமவர்’ என்பர் ஸ்ரீவால்மீகி பகவான்.
எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – சர்வேஸ்வரனாய் இருந்தும், ஸ்ரீவாமனனாய் வந்து அவதரித்து,
மூன்று அடியாலே மூன்று உலகங்களையும் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்டு,
எல்லாரோடும் பொருந்தின சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி என்னை அங்கீகரிப்பதற்கு ஒரு விதி சூழ்ந்தது.
‘அம்மான் திரிவிக்கிரமனை எனக்கே அருள்கள் செய்ய எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது’ என்க.
———–

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தனைக்
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?–4-5-7-

சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் –
சொன்மாலைகள் நன்று சூட்டும் படியான பாக்கியத்தை பிராபிக்க (அடையப் )பெற்றோம்.
பரத்துவத்தில் குணங்கள் உளவாம் தன்மை-ஸத்பாவம் – மாத்திரமே உள்ளது,
அவதரித்த இடத்தே அன்றோ அவை பிரகாசிப்பன?
‘இப்படி விஷயம் பூர்ணமானால் (நிறைவுற்றிருந்தால் )‘பேச ஒண்ணாது’ என்று மீளுகை அன்றிக்கே,
இந்நிலையிலே விளாக்குலை கொண்டு பேசும்படியானேன்,’ என்பார், ‘நன்று சூட்டும்’ என்கிறார்.

இவர் இப்போது ‘விதி’ என்கிறது,
பகவானுடைய கிருபையை.
தமக்குப் பலிக்கையாலும்,
அவனுக்குத் தவிர ஒண்ணாதாகையாலும், ‘விதி’ என்கிறார்.
‘விதி சூழ்ந்ததால்’-திருவாய்.-2. 7 : 6. என்றாரே யன்றோ முன்னரும்?

—————-

கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

விதிவாய்க்கின்று – பகவானுடைய கிருபை கரை புரளப் பெருகா நின்றால் நம்மாற் செய்யலாவது உண்டோ?
‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
“கேசவன் தமர்” என்னும் திருவாய்மொழிக்கு இப்பால் எல்லாம் இவர், ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
கிருபையை ‘விதி’ என்பதற்கு அடி, அவனால் தப்ப ஒண்ணாதபடி இருக்கையாலே.
வாய்க்கின்று – பகவானுடைய கிருபை ஈஸ்வரனுடைய ஸ்வாதந்திரியமாகிய கரை புரளப் பெருகி வந்து கிட்டுமிடத்தில்.
காப்பார் ஆர் – இதனைத் தடை செய்வார் ஆவார் உளரோ?
இரண்டு சேதநராலும் தடை செய்யப்போகாது என்பார் ‘காப்பது எது?’ என்னாமல், ‘காப்பார் ஆர்?’ என்கிறார்.
பரதந்திரனான இவனாலும் தகைய ஒண்ணாது, ஸ்வதந்திரனான அவனாலும் தகைய ஒண்ணாது;
பலத்தை அநுபவிக்கிற இவனாலும் தகைய ஒண்ணாது, பலத்தைக் கொடுக்கிற அவனாலும் தகைய ஒண்ணாது என்றபடி.
அன்றிக்கே, காப்பார் ஆர் என்பதற்கு, கிருபை உண்டாவதற்குக் காரணமான பிராட்டி காக்கவோ?
கிருபைக்குப் பரதந்திரப்பட்டவனான நீ காக்கவோ?
கிருபைக்குப் பாத்திரமான நான் காக்கவோ? என்று பொருள் கோடலுமாம்.
“மித்ர பாவேந” என்கிற ஸ்லோகத்திலே எம்பார்,
‘சர்வஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வ சக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச் செய்வர்.
ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப் போந்த குற்றங்களிலே மறதி,
ஞானம் பிறந்த பின்பு தன்னை அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விட வேண்டி வருமளவிலே அசக்தி.
இப்படி இருக்கைக்குக் காரணம், இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.-
‘இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு’ என்றது நாராயண பதத்தால் கூறப் படுகின்ற சம்பந்தத்தைத் திருவுள்ளம் பற்றி.

———

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கைதலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும்என் மேலானே.–5-1-7-

எம் மா பாவியார்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் – எல்லா வழியாலும் மஹா பாவத்தைப் பண்ணினவர்கள் பக்கலிலும்
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் தடை இல்லை கண்டீர்.
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் ‘கரையிலே நின்றோம்’ என்னத் தப்ப விரகு இல்லை.

————-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அது செய்யும் இடத்தில் நான் சொன்னபடி செய்தானாக வேண்டி இரா நின்றான் –
அது நமது விதி வகையே -என்பதற்கு
அது நமது புண்ணியத்திற்கு தகுதியாக அன்றோ -என்று முன்னைய பெரியோர்கள் நிர்வஹிப்பர்கள் –
இதனை எம்பெருமானார் கேட்டருளி
இத் திருவாய் மொழியிலே மேல் ஓடுகிற அர்த்தத்தோடு சேராது
நாம் விதித்த படியே செய்வானாக இருந்தான் -என்கிறார் -என்று அருளிச் செய்வர் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதச்த தே-அயோத்யா -31-25
பரவாநச்மி காகுத்ச த்வயி வர்ஷசதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -அயோத்யா -15-7-
என்கிறபடியே-இவன் சொன்னபடியே செய்யா நின்றான் –
நமது சொல் வகையே -என்னாமல்-நமது விதி வகையே -என்பான் என் என்னில்
விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்
தான் ஸ்வதந்த்ரனாய் நினைத்த படி செய்கைக்கு
தன் பக்கல் குறைவற்றாலும் -புருஷார்த்தமாக பிராட்டியும் இருக்க –
இத் தலையில் இச்சை ஒழிய கொடு போகானே அவன் –
புருடோத்தமன் ஆண்மையில் குறை வரும்படி செய்யானே –
நமது விதி வகையே –
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா
த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா
ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்
ததா அனுஜாநத்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் -42
சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி
விண்ணப்பம் செய்யப் பட்டதோ
அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-

————-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறாகா இக்கருமங்கள் என்நெஞ்சே –10-6-3-

சர்வ சக்தன் கூட்டிச் செல்வது தானே என்றால் -தன் இஷ்ட்டப்படி செய்பவன் அல்லையே
இப்படி செய் அப்படி செய் என்று ஆழ்வார் விதிக்க செய்வதிலே ஆசை கொண்டவன் அன்றோ திருவாட்டாற்று எம்பெருமான்
அதனால் -விதி வகையே -என்கிறார் இங்கும் முதல் பாட்டில் போலே
சேதன லாபம் ஈஸ்வரனுக்கே ஆதலால் அவன் விரைவது தானே பிராப்தம் -சபலமாகக் கூடியதும் அது தானே -சாஸ்த்ரார்த்தம்

————-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –
கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று
இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்
பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக
புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

திருவாசல் முதலிகளால்
பரமபதம் புகுவது தங்கள் பாக்கியம்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
தலை விதியே சாமான்ய அர்த்தம்
விதி பாக்கியம்
அதுக்கும்
அது நமது விதி வகையே
பாக்ய அனுகுணமாக
விதி வகை புகுந்தனர்
மண்ணவர் ஆகி வைத்து விண்ணவர் ஆவதே

————-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று —
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று
வேறு சிலர் –இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது-நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து வேறு பயனைக் கருதாதவராய் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்
விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
கீழே -வைகுந்தம்புகுவது -என்றார் –
இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புன்யத்தைக் காட்டுகிறது –

————–

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைப்
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர்  உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே—பெரிய திருமொழி -11-4-9-

அறுக்கும் விதியே –ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக
நடை கற்ற தெள்ளியவன்-நம்முடைய பாபத்தை ச வாசனமாக போக்கும்-இது நிச்சிதம் –

————

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

முன்னம் நோற்ற விதி கொலோ –
ஒக்கப் பிறந்து வளர்ந்தோம், பின்பு இது சாதிக்கக் கண்டிலோம்.
ஆதலால், முன்னரே செய்துவைத்த புண்ணியத்தின் பலமோ இது!
“புண்ணியமானது, விதி என்றும் விதானம் என்றும் சொல்லப்படுமன்றோ” என்னக் கடவதன்றோ.
இவளாலே செய்யப்பட்ட தர்மத்துக்கு இத்தனை பலம் கனக்க உண்டாகமாட்டாது;
இது சித்த தர்ம பலமாக வேணும்;
ஆகையால், முகில் வண்ணன் மாயம் கொலோ –
பிடாத்தை விழவிட்டு வடிவினைக் காட்டினானோ? —
பிடாம் -பச்சை வடம் -வஸ்த்ரம் -முகில் நகர்ந்து சந்தரன் காண்பது போலே –
இத் தலையாலே சாதித்தது ஓர் அசேதனமான கிரியைக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாமையாலே
‘முன்னம் நோற்ற விதி கொலோ?’ என்று ஐயப்பட்டாள்.
இப்படி முன்பு ஒருவடிவில் பலிக்கக் காணாமையாலே ‘முகில் வண்ணன் மாயம் கொலோ?’ என்று இங்கே ஐயப்படுகிறாள்.

————

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –நாச்சியார் திருமொழி –1-1-

அக்கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகை காண வேணும் என்று ஆசைப் படுகிற என்னை
அவனுடனே சேர்த்து விட வல்லையே-
அவனோ அண்ணியனாய் வந்து நின்றான்-
எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே-

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

—————

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடு இனவானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

இந்தரனுக்கு என்று இடையர் எடுத்த எழில் உடைத்தான விழவிலே
முன்பு செய்து போரும் படியிலே மந்த்ரோக்தமான படியே பண்ணுகிற
அநுஷ்டான ரூபமான பூஜையை பெறாமையாலே

—————

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே-திருக்குறும் தாண்டகம் -1–

விதியினை
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும்
என் கருமத்தாலும்
தவிர்க்க ஒண்ணாத கிருபை –

விதி வாய்க்கின்று காப்பார் யார்
விதி சூழ்ந்ததால்
இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

————————–

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–திருக்குறும் தாண்டகம் -18-

விதியில் காண்பர்-
சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –
மெய்ம்மையே காண்கிற்பாரே –
என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –
அதவா –
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –
அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

————

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் நீரலீரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதியெலாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-

அனுபவித்தாலும் மாளாத பாபம் –
விதி பாக்கியம் -பிரிந்து வருந்தாதே கூடி இருந்து களித்து
விதி -சாஸ்திர விதி -சாஸ்திர விதி படி மணந்து பிரியாமல் இருக்கிறீர்கள்
கந்தர்வ விவாஹம் போல் கூடி பிரிவாற்றாமை எய்தி தவிக்கின்றேன்
பெருமாள் பிராட்டியை பிரிந்து கடலும் மழையும் அரித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே
ராஜ்ய தாரங்களை இழந்து கிடந்த மகா ராஜரைக் கண்டு அவர் குறையை தீர்த்த பின்பு இ றே
தம் இழவில் நெஞ்சு சென்றது
அங்கன் இன்றிக்கே இப்போது இவை குறைவற்று இருக்கிற இது தான் இவள் பாக்யமாய் இருக்கும் இ றே –
பாக்கியம் அர்த்தத்தில்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
சாஸ்திர முறைப்படி க்ருஹஸ் ஆஸ்ரமம் விவஷிதம்
இடர் இல்லாதபோகம் இடரில்போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள் -திருவாய் மொழி -6-1-4-
சம்சார பந்த தாபம் தட்டாத பகவத் அனுபவம் விவஷிதம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள் -திருவாய் மொழி -6-8-10
பாதாரவிந்தத்தில் பொருந்தியது விவஷிதம்
தடம் புனல்வாய் இரை தேர்ந்து மிக வின்பம் பட மேவும் மென்னடைய அன்னங்காள் -திருவாய் மொழி -9-5-10-
சதாச்சார்யர் இடம் அர்த்தங்களை பெற்று ஆனந்தம்
நல் குடிச் சீர்மையில் அன்னங்காள் -திரு விருத்தம் ஆபிஜாத்யம் விவஷிதம்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்–

September 28, 2022

ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்த வ்யாக்யானத்தை எழுதி முடிக்க, திருவாய்மொழிக்கான அவருடைய வ்யாக்யானமே
ஈடு முப்பத்தியாராயிரப்படி என்று பிரபலமாக வழங்கப்படுகிறது.
நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை, ஈயுண்ணி மாதவப் பெருமாளின் வழித் தோன்றல்களுக்கு கற்பிக்கும் பொருட்டு
அந்த வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் தருமாறு பணித்தார்.

“ஈதல்” என்ற தமிழ் சொல்லுக்கு தர்மம் என்று பொருள்.
“உண்ணுதல்” என்றால் சாப்பிடுவது.
ஈயுண்ணி என்பதன் பொருள் பிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உணவளித்த பின்பே தாம் உண்பவர் என்பதாகும்,

ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை தம்முடைய மகனான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு உபதேசித்தார்.
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அவற்றைத் தம்முடைய அன்பிற்கு பாத்திரமான சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆசார்யரிடமிருந்து
சிஷ்யர் என்ற முறையில் இவை உபதேசிக்கப்பட்டு வந்தது.
நாலூர் பிள்ளையின் அன்பிற்கு பாத்திரமான சிஷ்யரும் மகனும் நாலூராச்சான் பிள்ளையாவார்.
நாலூராச்சான் பிள்ளை நாலூர் பிள்ளையின் திருவடித் தாமரைகளின் கீழ்மர்ந்து ஈடு முப்பத்தாறாயிரப்படியைக் கற்றார்.
நாலூராச்சன் பிள்ளைக்கு இருந்த பல சிஷ்யர்களில் திருவாய்மொழிப் பிள்ளையும் ஒருவர்.
நாலூர் பிள்ளையும் நாலூராச்சான் பிள்ளையும் தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்யும் பொருட்டு காஞ்சிபுரம் செல்லும் பொழுது,
எம்பெருமானே நாலூராச்சான் பிள்ளையை திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஈடு வ்யாக்யானம் போதிக்குமாறு பணித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் மற்றோரும் ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளையிடம் பயின்று
அதனை ஈட்டுப் பெருக்கர் (ஈட்டு வியாக்கியானத்தை வளர்ப்பவர்) என்று கொண்டாடப்படும் மணவாள மாமுனிகளுக்கு கற்பித்தார்.
இவ்வாறாக ஈடு வ்யாக்யானம் மணவாள மாமுனிகளை அடையும் என்று அறிந்திருந்ததனாலேயே,
ஸ்ரீ நம்பிள்ளை அதனை ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்குக் கொடுத்தார்.

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –

அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-என்னக் கடவது இறே-

(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )

ஈயுண்ணி மாதவப் பெருமாள் தனியன்

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பன்னம் பதவார்யம் அஹம்பஜே ||

ஈயுண்ணி பத்மனபாப் பெருமாள் தனியன்

மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

நாலூர் பிள்ளை தனியன்

சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட பிரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

நாலுராச்சான் பிள்ளை தனியன்

நமோஸ்து தேவராஜாய சதுர்க்கிராம நிவாஸினே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணஸாலினே ||

—————-

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்

சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயேகரோத் |

யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ்வயம்குரும் ||

பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து பகவத் சரணாரவிந்த ப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி ,
தத் சித் யர்த்தமாக சரம பர்வமான எம்பெருமானார் அபிமானத் திலே ஒதுங்கி , தத் விஷய ப்ரபத்தி நிஷ்டையை யுடையவனாயிருக்க வேணும் .

பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத் யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க ,
அத்தை விட்டு , அதில் லகுவான சரம பர்வ விஷயத்தில் ப்ரபத்தியை பேற்றுக்குடலாக அவலம்பிக்கும்படி எங்ஙனேயென்னில்;

1 ”யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரோ ஜந: | ஸயத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே” என்கிற கணக்கிலே
ஞாநாதிகரான நம் பூர்வாசார்யர்கள் யாதொன்றை யநுஷ்டித்தார்கள், யாதொன்றை யதநுப்ரமாணமாக அங்கீகரித்தார்கள்,
அவையிரண்டு மிறே பின்புள்ள அஸ்மதாதிகளுக்கு க்ராஹ்யங்கள்

1 பகவத்கீதா அத்யா 3 ஶ்லோ 21 யத் யதா சரதி ஶ்ரேஷ்ட:

எல்லா ஶாஸ்த்ரங்களையும் அறிந்தவனென்றும் அநுஷ்டான ஸம்பந்நனென்றும் ப்ரஸித்தனான மனுஷ்யன்
யத்யதாசரதி — எந்தபடி யநுஷ்டிக்கிறான் ,
தத்ததேவ – அந்த அந்த படிகளையே ,
இதரோஜந: — பூர்ணஜ்ஞாநமில்லாதவனும் ,
ஆசரதி – அநுஷ்டிக்கிறான் ,
ச: — அந்த ஶ்ரேஷ்ட மநுஷ்யன் ,
யத் ப்ரமாணம் – ( இப்படி யநுஷ்டிக்கப்படுமவைகளை ) எவ்வளவாக வறுதியிட்டு ,
குருதே — அநுஷ்டிக்கிறானோ ,
தத் -– அத்தை அவ்வளவென்றே நினைத்து ,
லோக: — ஊர்ணஜ்ஞாநமில்லாத மனுஷ்யனும் ,
அநுவர்த்ததே -– அந்த ஶ்ரேஷ்டனை பின் சென்று அநுஷ்டிக்கிறான்.

2 “கர்ம ஞானஞ்ச பக்தி: ப்ரபதந மிதிச ப்ராப்ய சித்யர்த்த மேதானாலோச்யாலோச்ய ஹேதூந் புநரிஹ சுதராந் தோஷ த்ருஷ்டிம் விதாய | கர்தும் சக்தான பூர்வே யதிவர சரண த்வந்த்வ மூர்தாபி யுக்தாஸ்தத் காருண்யாபிமாநாத் ததநுச குரவோ

2 பூர்வாசார்ய ஸூக்தி ( கர்மஜ்ஞாநஞ்சேதி ) கர்மஜ்ஞாநஞ்ச பக்தி: ப்ரபதநமிதிச -– கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளென்கிற ,
ஹேதூந் –- உபாய சதுஷ்டயத்தையும் ,
ப்ராப்ய -– அடைந்து , அதாவது பகவத் ப்ராப்திக்கு ஸாதநங்கள் என்று அறிந்து ,
புந: — திரும்பவும் ,
ஏதாந் -– இந்த உபாயங்களை ,
ஸித்யர்த்தம் –- பேற்றுக்குடலாமோவென்று ,
ஆலோச்யாலோச்ய –- உணர்ந்து உணர்ந்து பார்த்து ,
இஹ -– இந்த உபாயங்களில் ,
சுதராம் – மிகவும் ,
தோஷத்ருஷ்டிம் –- தோஷ தர்ஸநத்தை ,
விதாய —- செய்து( அதாவது கர்ம,ஜ்ஞாந,பக்திகளநுஷ்டிக்க வஸ்யங்களென்பதற்கு மேலே ,
இவை பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தங்களென்கிற தோஷம் ப்ரதாநமாயிருக்கிற தென்றும் ;
ப்ரபத் யுபாயம் மஹா விஸ்வாஸ ரூபமா யிருக்கைக்கு மேலே நிரங்குசமான ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமிதற்கு நியதமாயிருக்கிறதென்றும் ;
( நன்றாக அறுதியிட்டு என்கை ) ,
கர்தும் – இவற்றையநுஷ்டிக்கைக்கு ,

முக்திமாப்தா மஹாப்தா: || என்று கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாய சதுஷ்டயத்தையும் பேற்றுக் குடலாக பற்றலாமோ
என்று உணர்ந்துணர்ந்து பார்த்த விடத்தில் ஸ்வரூப விருத்தத்வதுஸ்ஸகத்வ விஸ்வாஸபூயஸ்த்வாதி தோஷங்கள் காண்கை யாலே
இவைகளெல்லாம் அரும் தேவைகளாய் இருந்ததென்று பரித்யஜித்து எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்களும் பின்புள்ள ஆசார்யர்களும் தாங்கள் ஜ்ஞாநாதிகருமாய் ப்ரமாணிக அபக்ரேசருமா யிருக்கையாலே
பரம காருணிகராய் ப்ரபந்ந ஜந கூடஸ்தரான வெம்பெருமானாருடைய திருவடிகள் ஸம்பந்தத்தையும் திருமுடிகள் ஸம்பந்தத்தையும் பெற்றுடையராய்
எம்பெருமானாருடைய காருண்ய ப்ரவாஹ ஜநிதமான வபிமாநத்தாலே பேறு பெற்றார்களிறே

பூர்வர்களுடைய வநுஷ்டாநத்தை பிடித்து நடத்தும்போது அது ப்ரமாண புரஸ்ஸரமாகா விடில் நிரஸ்த கோடியில் அந்தர்பவிதாயோவென்னில் ;

திராதிறே , 1 விதயஶ்ச வைதிகாஸ் தவதீய கம்பீரா மனோனு சாரிண: “ என்றதிறே .

1 ஸ்தோத்ர ரத்நம் – ஶ்லோ 20 ( வ்யதயஶ்ச வைதிகா இதி ) வைதிகா:

விதயஶ்ச – இதம் குரு இதம் மாகார்ஷீ: என்று ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் ,
த்வதீய கம்பீர மனோனுசாரிண: – அநந்யப்ரயோஜநாராயாஶ்ர யித்தவர்களுடைய கம்பீரமான மநஸ்ஸை பின் செல்லா நின்றன ,
மநஸ்ஸுக்கு காம்பீர்யமாவது , ஷுத்ரமான ஐஶ்வர்யாதிகளில் கால் தாழாதே அநந்ய ப்ரயோஜநமாகை ,
“ நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் “ என்னும்படி பகவத் விஷயத்தில் அபவகாஹியாதார்க்கிறே
வைதிகமான “ நிதித்யாஸிதவ்ய: “ – என்கிற விதி வேண்டுவது .

இதுக்கு மேலே முக்தகண்டமாக ப்ரமாண முண்டாகில் முக்யமன்றோ ? வென்னில் ; அது தானுமுண்டு ; எங்ஙனேயென்னில் ,

ஸ்ரீஶாஸ்த்ரத்திலே பெரிய பிராட்டியைக் குறித்து , ஈஶ்வரன் தன்னுடைய வவதார வைபவத்தைச் சொல்லு கிறவிடத்திலே

2 “ ஸம்யக் உக்தம் த்வயா விஷ்ணோ ஜந்மநாந்த வைபவம் | த்வதாசார்யா வவதாரத்வ ப்ரகாரம்பிமேவத ||

2 ( ஸம்யக் உக்தமிதி ) – ஹே விஷ்ணோ – ஸர்வாந்தர்யாமியாயிருக்கு மவரே ,
த்வயா – தேவரீராலே ,
தவ ஜந்மநாம் – தேவரீரதான அவதாரங்க ளினுடைய ,
வைபவம் – ப்ரபாவமானது ,
ஸம்ய குக்தம் – நன்றாக சொல்லப்பட்டது ,
த்வதாசார்யா வதாரத்வ ப்ரகாரம்பி – இனி தேவரீ ருடைய வாசார்ய ரூபமான வவதார விசேஷத்தினுடைய ப்ரகாரத்தையும் ,
மே – எனக்கு ,
வத – அருளிச் செய்யவேணும் , என்று
பிராட்டி பெருமாளை நோக்கி விண்ணப்பம் செய்தாரென்கை .

1 தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் “ என்றும் “ மேலையார் செய்வன கள் “ என்றும் சிஷ்ட்டாசாரமே ப்ரபல ப்ரமாணமாகச் சொல்லக் காண்கையாலே , ப்ரமாண சித்தமாயிருக்கும் . இவர்கள் அநுஷ்டாந ப்ரமாணானு குணமாயல்ல

ந ஶக்தா — ஸமர்த்தர்களாகாமல் ,
மஹாப்தா: — ஜ்ஞாநாதிகராயும் ப்ரமாணிகாக்ரேசரருமாயுமிருக்கிற ,
பூர்வே குரவ: — நம் பூர்வாசார்யர்கள் ,
யதிவர சரணத்வந்த்வ மூர்தாபியுக்தாஸ்ஸந்த: — எம்பெருமானாருடைய திருவடி ஸம்பந்தத்தாலும் திருமுடி ஸம்பந்தத்தாலும் ஸமஸ்த ஶிஷ்ட ஜநபூஜ்ய ராய்க்கொண்டு ,
தத்காருண்யாபிமானாத் – அந்த வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலுண்டான வபிமானத்தாலே ,
ததநுச – அந்த வாசார்யர்களை ( அதாவது தங்களை என்ற படி ) பின் சென்றவர்களோடு கூட ,
முக்திமாப்தா: — பேற்று பெற்றார்கள் .
——————–

3 த்வயாசார்யாவதாரஸ்து கிமர்தம் க்ரியதே ப்ரபோ |

க்ருதஸ்யாப்வயதாரஸ்ய பலம் வா கிமவாப்ஸ்யஸி ||

3 ( த்வயாசார்யாவதாரஸ்த்விதி ) – ஹே ப்ரபோ – ஓ ஸ்வாமீ
ஆசார்யாவதாரஸ் து – ஆசார்ய ரூப அவதாரமானது ,
( இவ் விடத்தில் து – என்கிற அவ்யம் பரத்வ , வ்யூஹ விபவாதிகளைக் காட்டிலும்
ஆசார்யாவதாரத்துக் குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது )
த்வயா – தேவரீராலே ,
கிமர்தம் க்ரியதே – எந்த ப்ரயோஜநத்துக்காக செய்யப் படுகிறது ,
க்ருத்ஸ்யாப் யவதாரஸ்ய – அப்படி செய்யப்பட்ட வந்த வவதார விசேஷத்துக்கு ,
கிம்வாபலம் – எந்த பலன் தான் ,
அவாப்ஸ்யஸி – அடையப் போகிறீர் .

4 இதி ப்ருஷ்டோ மஹாலக்ஷ்ம்யா பகவாந் புருஷோத்தம: |

குருரூபாவதாரஸ்ய மஹாத்ம்யம் வக்துமுத்யத: ||

4 ( இதி ப்ருஷ்ட இதி ) – பகவான் புருஷோத்தம: — ஷாட்குண்ய பரி பூர்ணனாயும் ,
நித்யஸூரி நிர்வாஹகனாயும் இருந்துள்ள எம்பெருமான் ,
மஹா லக்ஷ்ம்யா –- பெரிய பிராட்டியாராலே ,
இதி ப்ருஷ்டஸன் –- இந்த ப்ரகார மாக கேட்கப்பட்டவராய்க் கொண்டு ,
குருரூ பாவ்தாரஸ்ய –- ஆசார்ய ரூப மான அவதாரத்தினுடைய ,
வைபவம் –- வைபவத்தை ,
வக்தும் – சொல்லுகைக்கு ,
உத்யத: — ( ஆபூதிதிஶேஷத: ) யத்நித்தவரானார் .
மஹாத்ம்யம் வக்துமுத்யத

————–

ஸ்ரீபகவாந் | 1 ஸாது ப்ருஷ்ட்டஸ் ்வயா தேவீ ஸாராம்ஸார வித்தமே | ஸ்ருணு வக்ஷயே மதாசார்ய , ஜந்மநோ வைபவம் தவ ||

1 ( ஸாது ப்ருஷ்ட்ட இதி ) சார வித்தமே -– சாரஜ்ஞர்களில் ஶ்ரேஷ்ட்டை யான ,
ஹே தேவி -– ஸர்வ ஸமாஶ்ரயணீயையானவளே ,
ஸாது — ஶ்லாக்யமாய் இருந்துள்ள ,
ஸாராம்ஸ: — ஸார பூதமான விஷயம்,
ப்ருஷ்ட: — கேட்கப் பட்டது ,
மதாசார்ய ஜந்மந: — என்னால் செய்யப்பட்ட தான ஆசார்யாவதாரத்தினுடைய ,
வைபவம் -– மஹாத்ம்ய விஶேஷத்தை,
தவ – உனக்கு ,
வக்ஷ்யே -– சொல்லுகிறேன் ,
ஶ்ருணு – கேளாய் , என்று பெருமாள் அருளிச்செய்தாரென்கை .

2 ஸம்ஸார ஸாகரே மக்நாந், சேதநாநுஜ்ஜிஹீர்ஷயா | ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானீ சேதிஹாஸா: ப்ரதர்ஸிதா: | தேந மார்கேண கே நாபி முக்திர் லப்தா ந பூதலே ||

2 ( ஸம்ஸார ஸாகர இதி ) ஸம்ஸார ஸாகரே –- ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ,
மக்நாந் –- முழுகிக் கிடக்கிற ,
சேதநாந் –– பத்த சேதநரை ,
உஜ்ஜி ஹீர்ஷயா -– கரையேத்த வேணுமென்கிற விச்சையினாலே ,
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணாநி இதிஹாஸஸ்ச –- அபௌருஷேயமாய் நித்ய நிர்தோஷமாய் , ஸ்வத: ப்ரமாணங்களான ருகாதி வேதங்களும்
ததுபப்ருஹ்மணங்களான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களும் ,
ப்ரதர்ஶிதா: — விஸதமாக வெளியிடப்பட்டது
( இத்தனையும் செய்த போதிலும் )
தேந மார்கேண – கீழ்ச் சொன்ன ஶ்ருத்யாதி மார்க்கத்தாலே
பூதலே -– லீலா விபூதியில் ,
கேநாபி – ஒருத்தனாலேயும் ,
முக்தி: — பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷமானது ,
ந லப்தா – அடையப் படவில்லை .

3 ததோ விபவரூபேண ஜந்மாநி ஸுபஹுநிமே || ஜாதாநிதேவி மோக்ஷஆர்த்த கோபி ந பவத் ||

3 ( ததோ விபவரூபேணேதி ) – இப்படி மத் ஆஜ்ஞா ரூபங்களான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளால் நாம் நினைத்தபடி நடவாத பின்பு ,
விபவ ரூபேண – ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே ,
ஸுபஹுநி -– அநேகங்களான ,
ஜந்மாநி – அவதாரங்களானவை ,
மே -– சேதநோஜ்ஜீவநார்தியான எனக்கு ,
ஜாதாநி –- என்னுடைய இச்சையினாலே உண்டாய்த்தன , ஹே தேவி -– சேதநோஜ் ஜீவநத்தில் எனக்கு முற்பாடளாய் ஸந்தோஷிக்கும் அவளே ,
தத்ராபி -– அப்படி யவதாரங்கள் செய்தவிடத்திலும் ,
( “ அவஜாநந்தி மாம் மூடாம் மாநுஷீம் தநுமாஸ்ரிதம் “ என்கிறபடியே , ஸஜாதீயத்வேந ஸுலபனாய் அவதரித்த
விவ்வளவே ஹேதுவாக சேதநர்கள் நம்மை யவமதி செய்கையாலே ) ,
கோபி — ஒருத்தனாவது , மோக்ஷஆர்த்தி — மோக்ஷஆபேக்ஷஐ யுடையவனாக , ந பவது — ஆகவில்லை .

————-

1 வேதாந்தே விவிதோபாய பக்த்யாத்யா விஹிதா மயா |

தேஷ்வப்யக்தாஸ்யாத் மாநஸ்ஸம்ஸரந்தி புந:புந: ||

1 ( வேதாந்தே விவிதோபாய இதி ) “ படாதன பட்டு “ என்கிறபடியே நாம் , எவ்வளவு பட்டது மன்னிக்கே ) ,
மயா — என்னாலே ,
வேதாந்தே — ப்ரஹ்ம ப்ரதிபாதந பரமான வேதாந்த ஶாஸ்த்ரங்களிலே ,
பக்த்யாத்யா: — பக்தி யோகம் முதலான ,
விவிதோபாயா: — அநேக விதமான உபாயங்கள் ,
விஹிதா: — விதிக்கப்பட்டவை ,
( இப்படி விதித்த விடத்திலும் ) ,
ஆத்மாந: — பத்த சேதநர்கள் ,
தேஷ்வபி — அந்த பக்த்யாத யுபாயங்களை யனுஷ்டிக்கும் விஷயத்திலும் ,
அஶக்தாஸ் ஸந்த: — ஶக்தி யில்லாதவர்களாய்க் கொண்டு ,
புந:புந: — அடிக்கடி ,
ஸம் ஸரந்தி — ஜன்ம மரணாதி க்லேஶ பாஹிகளாய்க் கொண்டு திரிகிறார்கள் .

2 ஏவம் பஹுவிதோபாயேஷ் வநிஷ்பந்ந பலேஷ் வஹம் |
ஸதாசார்ய ஸ்வரூபேண ஜநித்வா ஸர்வ சேதநாந் |
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ கமிஷ்யா மீத்வ சிந்தயம் ||

2 ( ஏவம் பஹுவிதோபாயேஷ்விதி ) ஏவம் — இந்த ப்ரகாரமாக ,
பஹுவிதோபாயேஷு — சேதநோஜ்ஜீவனார்த்தமாக நாம் செய்த வுபாயங்க ளெல்லாம் ,
அநிஷ்பந்ந பலேஷுஸத்ஸு — நிஷ்பலங்களாய்ச் சென்றவளவில் ,
அஹம் — ஸர்வஜ்ஞனான நான் ,
ஸதாசார்ய ஸ்வரூபேண — ஜ்ஞாநமநுஷ்டாநமிவை நன்றாகவே யுடையனான வாசார்யனாய் ,
ஜநித்வா — அவதரித்து ,
ஸர்வ சேதநாந் — எல்லா சேதநர்க ளையும் ,
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ — வாரிப் பிடியாக பிடித்துக் கொண்டே ,
கமிஷ்யாமீதி — நலமந்தமில்லதோர் நாடு புகுவோமென்று ,
அசிந்தயம் — எண்ணினேன் .

3 ஏவம் சந்சிந்த்ய பத்மாக்ஷஇ குருரூபேணவைபுரா |

அவதீர்ணோ ஜநாந் காம்ஸ்சித்ஜநாந் பவாதப்யுத்தரம் மே ||

3 ( ஏவம் ஸந்சிந்த்யேதி ) ஏ பத்மாஷீ — தாமரைப் பூப்போன்ற திருக் கண்களை யுடையவளாய் ,
ரமே — நமக்கு ஆனந்தவஹையாயும் ஸ்வயமாநம் நிர்பரையுமாயிருக்குமவளே ,
ஏவம் ஸந்சிந்த்ய — இந்த ப்ரகாரமாக வெண்ணி ,
புரா — முற்காலத்திலே ,
குரு ரூபேண — தத்தாத்ரேயாதி ரூபியாய் ,
அவதீர்ண: — அவதரித்தவனாய்க் கொண்டு ,
காம்ஸசித்ஜநாந் — சில பத்த சேதநர்கள் ,
பவாத் — ஜன்ம மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் நின்றும்
அப்யுத்தரம் — கரை யேத்தினேன் .

4 இத: பரம்சாபி கரிஷ்யதே | மயா யதா புராதேவி ஜநி: க்ருதா ததா| குரு ஸ்வரூபேண நிமக்நசேதநாந் ஸமுத்தரிஷ்யாமி நிஜப்ரபாவத: 

4 ( இத:பரமிதி ) ஹே தேவி — நமக்கு அபிமதமாயும் அநுரூபமாயும் இருந்துள்ள விக்ரஹ குணங்களும் ஆத்ம குணங்களுமுடையவளே ,
புரா — முன்பு ,
மயா — என்னாலே ,
ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
யதா க்ருதா — எவ்விதமாக செய்யப் பட்டதோ ,
ததா — அவ் விதமாகவே ,
இத:பரஞ்சாபி — இனிமேலும் ,
கரிஷ்யதே — செய்யப்படப் போகிறது ,
குரு ஸ்வரூபேண — அப்படி செய்யப்பட்ட வந்த வவதாரத்தில் நாம் ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
நிமக்ந சேதநாந் — ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிக் கிடக்கிற பத்த சேதநர்களை ,
நிஜ ப்ரபாவத: — ஆசார் யாபிமான ரூபமான நம்முடைய ப்ரபாவத் தாலே ,
ஸமுத்தரிஷ்யாமி — “ ந ச புநராவர்த்ததே “ என்னும்படி கரை யேத்தப் போகிறேன் .

——————-

1க்ஷ்மீ: ||

1 ( லக்ஷ்மீ: )( இப்படி எம்பெருமானார் அருளிச்செய்த வார்த்தை களைக் கேட்டு ) பிராட்டி மீளவும் சொல்லுகிறார் .

2 கஸ்மிந் குலே பவாந் விஷ்ணோ கரிஷ்யதி. குரோர்ஜநிம் | கஸ்மிந் யுகேவதீர்ணஸ்த்வம் பவிஷ்யஸி வத

ப்ரபோ: ||

2 ( கஸ்மிந் குல இதி ) ஹே விஷ்ணோ — ஸர்வ வ்யாபியான ஸ்வாமீ ,
பவாந் — தேவரீர் ,
குரோர் ஜநிம் — ஆசார்ய ரூபமான விலக்ஷண அவதாரத்தை
கஸ்மிந் குலே — எந்த திரு வம்ஸத்திலே ,
கரிஷ்யதி — செய்யப் போகிறது ,
ஹே ப்ரபோ — ஸர்வ நியந்தாவான ஓ ஸ்வாமீ ,
த்வம் — தேவரீர் ,
கஸ்மிந் யுகே — எந்த யுகத்திலே தான் ,
அவதீர்ணோ பவிஷ்யஸி -அவதரிக்கப் போகிறீர் ?
வத — ( இவ் வர்த்தத்தை “ தான் யஹம் வேத ஸர்வாணி “ என்கிறபடியே , தேவரீர் தானே யறிந்திருப்பதால் )
தேவரீரே அருளிச் செய்ய வேணுமென்று பிராட்டி விண்ணப்பம் செய்தாரென்கை .

3 ஶ்ரீபகவான் || 4 அஹமாசார்ய ரூபேண பவிஷ்யாமி யுகே யுகே ||

3 ( ஶ்ரீபகவான் ) இப்படி விண்ணப்பம் செய்த பிராட்டியை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்கிறார் .

4 தத்ராபி யோகிநாம் பும்ஸாம் குலே மஹதி ஜந்ம மே ||

( அஹமிதி ) ஹே தேவி — நிரவதிக தேஜஸ்ஸை யுடையவளான பிராட்டி
( இந்த பதம் மேலில் ஶ்லோகத்திலிருந்து இவ் விடத்திற்கு ஆகர்ஷிக்கப் படுகிறது ) ,
அஹம் — ஸர்வ ஜ்ஞனான நான் ,
ஆசார்ய ரூபேண — ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
யுகே யுகே — யுகங்கள் தோறும் ,
பவிஷ்யாமி — அவதரிக்கப் போகிறேன் ,
தத்ராபி — அப்படி யவதரிக்கு மிடத்திலும் ,
யோகிநாம் பும்ஸாம் — பரம யோகிகளாயிருக்கிற மஹா புருஷர்க ளுடைய ,
மஹதி — ஸர்வ ஶ்லாக்யமாயிருந்துள்ள ,
குலே — திருவம்ஸத்திலே ,
மே — எனக்கு ,
ஜந்ம — அவதாரமானது ,
பவிஷ்யதி — உண்டாகப் போகிறது

1 விஶிஷ்யமே தேவிகலௌ யுகே குரோர்ஜநிர்பவித்ரீ கலு ஸத்குலே ரமே | த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் பவிஷ் யதி ஸா ஹி புஜிஷ்ய பூயஸீ ||

1 ( விஶிஷ்ய மே தேவீதி )
ஹே ரமே தேவி — நிரதிஶய ஆநந்த யுக்தையாய்க் கொண்டு நமக்கு பட்ட மஹிஷியாயிருக்குமவளே ,
கலௌ யுகேது — கலி யுகத்திலேயோ வென்றால் ,
( இவ் விடத்தில் பூர்வத்தில் காட்டிலும் விசேஷம் சொல்ல வேண்டுகையாலே ,
து — என்கிற அவ்யயம் அத்யாஹரிக்கப்பட்டது )
ஸத் குலே — ஒரு விலக்ஷணமான திரு வம்ஶத்திலே
மே — எனக்கு ,
விஶிஷ்ய — பூர்வ அவதாரங்களைக் காட்டில் விலக்ஷணமாக ,
குரோர்ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
பவித்ரீகலு — உண்டாகப் போகிறது

( இவ்விடத்தில் கலு என்கிற அவ்யயமிருப்பதால் இவ்வர்த்தம் ப்ரமாண ப்ரதிபந்நமென்று சொல்லுகிறது ) , ஸா — அந்த அவதாரமானது

( “ அடையார் கமலத்தலர் மகள் கேள்வன் “ என்கிற பாசுரத்தின் படியே ,
மனோ புத்தி , ஞாநங்களுக்கும் , ஸாத்விக தாமஸ ரூபத் விவிதாஹங்காரங்களுக்கும் அபிமாநிகரான பஞ்சாயுதாழ்வார் ,
தம் நினைவைப் பின் சென்று தாமதிகரித்த கார்யத்துக்கு ஸஹகரிக்கையாலே ) ,
புஜிஷ்ய பூயஸீ ஸதி — அபரிமிதமான சிஷ்ய ஸம்பத்தை யுடைத்தானதாய்க் கொண்டு ,
த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் — “ காஷாயசோபி “என்கிற ஶ்லோகத்தின்படியே ,
த்ரிதண்டமென்ன , காஷாய வஸ்த்ர மென்ன , த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களென்ன இவைகளையுடையது ,
பவிஷ்யதி — ஆகக் கடவது .
இது சத்ரந்த பதமா இவ்வர்த்தம் காட்டுகிறது ,
இவ்விடத்தில் , ஹி என்கிற அந்வயம் இருப்பதால் , இவ் வர்த்தத்தினு டைய ப்ரஸித்தி சொல்லப்படுகிறது .

2 ஸர்வோபாய தரித்ராணாம் சேதநாநாம் வராநநே | மமாபிமாநாத் ஸர்வேஷாம் முக்தி: குருஸரீரிண:

2 ( ஸர்வோபாய தரித்ராணாமிதி ) ஹே வராநநே ஸர்வோத்க்ருஷ்டமான திருமுக மண்டலத்தை உடைய பிராட்டி ,
ஸர்வோபாய தரித்ராணாம் — கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாயங்களென்கிற கைமுதலற்றவராயிருக்கிற ,
ஸர்வேஷாம் சேதநாநாம் — ஶ்ரீ வசநபூஷணத்திலருளிச் செய்த படியே , அஜ்ஞரும் ஞாநாதிகரும் பக்தி விவசருமான எல்லா சேதநர்களுக் கும் ,
( இவ்விடத்தில் பக்தி விவசரென்பது , ஆசார்ய ப்ரேமாதிஸயத்தாலே ஸிதில கரணராய்
ஆந்ரு ஶம்ஸத்தாலே பரார்த்தமாகவாவது , ஒன்றையும் அடவு படவநுஷ்டிக்க க்ஷமரல்லாதவரை ) ,
குரு ஸரீரிண: — பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்கிறபடியே , ஆசார்யரூபியாய் இருக்கிற,
மம — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்தி: — மோக்ஷ மானது ,
( பவிஷ்யதி ந ஶம்ஶய: ) நிஶ் ஶம்ஶயமாக உண்டாகக் கடவது
( இந்த பதங்கள் , மேல் சொல்லப்போகிற
மத்க்ருதோ யோபிமாநஸ் ஸ்யாத் , என்கிற ஶ்லோகத்திலிருந்து
ஆகர்ஷிக்கப்படுகிறது . )

1 மத்பக்தாஜ்ஞாந பூர்ணாயே பவிஷ்யந்தி கலௌ யுகே |
த்ரிதண்டிந அபிமாநாந் மே தே ஸர்வே குருரூபிண: |
முக்தி பாஜோ பவிஷ்யந்தி ஸத்யே நாஹம் ப்ரவீமிதே ||

1 ( மத் பக்தா இதி ) கலௌ யுகே — கலியும் கெடும் என்னும்படியான பெருமை பெற்று வந்த கலியுகத்திலேயே — யாதொருத்தர் ,
ஜ்ஞாந பூர்ணாஸ்ஸந்த — அர்த்த பஞ்சக ஜ்ஞாந பூர்த்தியுடையவர்களாய்க் கொண்டு,
( ஜ்ஞாநத்துக்கு பூர்த்தியாவது , “ எல்லாம் வகுத்த விடமே என்றிருக்கக் கடவன் “ என்கிற
ஸ்ரீ ஸூக்திபடியே யெல்லாமாசார்ய விஷயமாக வறுதியிடுகை ) ,
மத் பக்தா பவிஷ்யந்தி — ஆசார்யரூபியான வென்னிடத்தில் நிரதிஶய பக்தி யுடையவர்களாகிறார்களோ ,
தே ஸர்வே — அப்படிப்பட்டவர்களெல்லாரும்,
த்ரிதண்டிந: — த்ரிதண்டதாரியாயும் ,
குரு ரூபிண: — ஆசார்ய ரூபியாயுமிருக்கிற ,
மே — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்திபாஜோ பவிஷ்யந்தி — பேற்று பெற்றவர்களாகப் போகிறார்கள்
( இவ்வர்த்தத்தை ) ,
அஹம் —நான் ,
தே — உனக்கு ,
ஸத்யேந — ஸபத பூர்வமாக ,
ப்ரவீமி — சொல்லுகிறேன் .

2 மத் க்ருதோ யோபிமாநஸ்யாதாசார்யத்வே ஸுபாநநே |

யேவ முக்திதோ தேவி பவிஷ்யதி ந ஶம்ஶய: ||

2 ( மத்க்ருதோ யோபிமாநஸ்ஸ்யாத் இதி ) ஹே ஸுபாநநே — ஸர்வருக்கும் மங்களாவஹமான திருமுக மண்டலத்தை யுடையவர்களாயும் ,
தேவி — நம்முடைய விபூத்யைஶ்வர்யத்துக்கு ஸஹ தர்மசாரிணியாயுமிருக்கும் பிராட்டி ,
ஆசார்யத்வே — ஆசார்ய கார்யமான வுபதேச விஷயத்திலே
மத்க்ருத இதி — ( பின்புள்ளார் உபதேசத்தாலும் , அது க்ருபா மாத்ர ப்ரஸந்ந ரான ) நம்மால்
செய்யப்பட்டதென்று நாம் நினைத்திருக்கையாகிற ,
யோபிமாநஸ் ஸ்யாத் — யாதோரபிமாந விசேஷமுண்டோ ,
ஸயேவ — அதுவே தான் ,
முக்தி த: — ( உபதேசம் செய்யுமவர்களுடைய ஜ்ஞாநாநுஷ் டான பூர்த்தியைப் பாராமல் ) மோக் ஷப்ரதமாக ,
பவிஷ்யதி — ஆகப் போகிறது ,
ந ஶம்ஶய: — இது விஷயத்தில் ஸந்தேஹமில்லை .

3 குரு ரூபஸ்ய மே நாம்நா ஸமயோ விஜயீ பவேத் ||

3 ( குரு ரூபஸ்யேதி ) ஸமய: — ( அப்படிப்பட்ட வாசார்ய ரூபாவதாரத்தில் நம்மால் உத்தரிக்கப்பட்ட ) விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தமானது ,
குரு ரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — என்னுடைய ,
நாம்நா — திரு நாமத்தாலே ,
விஜயீ பவேத் — “ இடங்கொள் ஸமயத்தையெல்லா மெடுத்துக் களைவன போலே நடந்தும் , பரந்தும் , குனித்தும் நாடகம் செய்கின்றனவே “ என்கிறபடியே
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தை களிலும் ஸர்வோத்க்ருஷ்டமாக , அபிவ்ருத்தி யடையக் கடவது ;
இவ் விடத்தில் என்னுடைய திரு நாமத்தாலே யென்னது ,
இராமாநுஜ , என்கிற திருநாமத்தாலே யென்றாய் , இத்தால் , இராமாநுஜ ஸித்தாந்தம் -( எம்பெருமானார் தரிசநம் ) என்று ஜய ஶீலமாகக் கடவதென்கை .

————-

1 மத்காலாதநு பத்மாக்ஷஈ ஸமயோ லோபமேஷ்யதி ||

1 ( மத்காலாதந் விதி ) ஹே பத்மாஷீ — தாமரை போன்ற திருக் கண் அழகை யுடைய பிராட்டி ,
ஸமய: — அப்படி வ்ருத்தி யடைந்து வருகிற பரம வைதிக ஸித்தாந்தமானது ,
மத்காலாதநு — நம்முடையதான வந்த வாசார்யாவதாரத்துக்குப் பின்பு ,
( இவ்விடத்தில் “ பூத்வா பூயோ வர வர முநிர்போகிநாம் ஸார்வபௌம: “ என்கிற வபியுக்தோக்திப்படியே ,
யதிவர புநரவதாரமான பெரிய ஜீயர் காலத்துக்கும் பின்பு , என்று கொள்ள வேணும்)லோபமேஷ்யதி — ஸங்கோசத்தை யடையப் போகிறது .

2 குரு ரூபஸ்ய மே ஶக்திம் தத்ரதத்ர நிதாயவை |

ஸமயம் ஸங்க்ரஹீஷ்யாமி நாதிலுப்தோ யதா பவேத் ||

2 ( குருரூபஸ்ய மே ஶக்தி மிதி ) — ( இவ்வர்த்தத்தை நாம் முன்னமே யறிந்து ) குருரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — நம்முடையே ,
ஶக்திம் — திவ்ய ஶக்தியை ,
தத்ர தத்ர — ( நமக்கு வுத்தேஶ்யமாயிருக்கிற ) அந்த அந்த ஸ்தலங்களிலே ,
நிதாய — அர்ச்சா ரூபமாக ப்ரதிஷ்டிப்பித்து ,
ஸமயம் — லோபிக்கப்போகிற ஸித்தாந்தத்தை ,
யதா — எந்த ப்ரகாரமாக ,
நாதிலுப்தோ பவேத் — மிகவும் லோபத்தை யடையாமலிருக்குமோ ,
ததா — அந்த ப்ரகாரமாக ,
ஸங்க்ரஹீஷ்யாமி — சேரப் பிடிக்கப் போகிறோம் .

3 மமாசார்யாவதாரேது ஏஷாம் பக்திர்பவிஷ்யதி | தேஷாமேவ பவேந் முக்திர் நாந்யேஷாம் ஸுலபா பவேத் ||

3 ( மமாசார்யாவதாரேத் இதி ) யேஷாம்து — யவர்களுக்கானால் ,
மம — என்னுடையதான ,
ஆசார்யாவதாரே — ஆசார்ய ரூபமான வவதார விசேஷத்திலே ,
பக்தி: — ஸ்நேஹ பூர்வகமாய் , இடைவிடாத நினைவு ,
பவிஷ்யதி — உண்டாகக் கடவதோ ,
தேஷாமேவ — அவர்களுக்குத்தானே ,
முக்தி: — பகவத்ப்ராப்தியாவது ,
ஸுலபா — சுகமாக லபிக்குமது ,
பவேத் — ஆகக் கடவது ,
அந்யேஷாம் — அந்த வாசார்ய பக்தி யில்லாதவர்களுக்கு ,
ஸுலபா ந பவேத் — சுலபமாக மாட்டாது .

1 அஸ்மிந்நர்தேஹி விஸ்வாஸஸ்ர்வேஷாம் ந ஜநிஷ்யதி |

மத்கடாக்ஷஓ பவேத்யஸ்மிந் மைய்யேவ ப்ரவணோஹிய: | தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ்தோயம் பவிஷ்யதி ந ஶம்ஸய: ||

1 ( அஸ்மிந்நர்த இதி ) அஸ்மிந் அர்த்தே — “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்னுமிவ்வர்த்தத்திலே ,
விஶ்வாஸ: — இது தான் பரமார்த்தம் என்கிற நினைவு ,
ஸர்வேஷாம் — எல்லாருக்கும் ,
ந ஜநிஷ்யதி: — உண்டாகப்போகிறதில்லை என்பது நிச்சயம் ;
( ஆனால் பின்னை யுஜ்ஜீவிக்கும் விறகேதென்னில் )
யஸமிந் — எந்த சேதநந் விஷயத்திலே ,
மத் கடாக்ஷ: — ஆசார்ய ரூபியாயிருக்கிற வென்னுடைய கடாக்ஷமானது ,
பவேத் — உண்டாகக் கடவதோ ,
ய: — எந்த சேதநன் தான் ,
மய்யேவ — என்னிடத்தலேயே,
ப்ரவண: — நெஞ்சிரக்கமுடையனாயிருப்பனோ ,
தஸ்ய தஸ்ய — அந்த வந்த வதிகாரிக்கு ,
ஹ்ருதிஸ்த: — நெஞ்சில் நிலை நின்றதாக ,
அயம் -– இந்த பாவ விசேஷமானது
( அதாவது “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்கிற நினைவென்கை ) ,
பவிஷ்யதி -– உண்டாகப்போகிறது,
ந ஶம்ஶய: — இவ்வர்த்தத்தில் ஶம்ஶயமில்லை ,
ஹி – இவ்வர்த்தம் ஸுப்ரசித்தம் .

என்றிப்படி ப்ரபல ப்ரமாணங்களை எம்பெருமான் தானே யருளிச்செய்து வைக்கையாலே ,
முக்த கண்டமாக முக்ய ப்ரமாணங்களும் இவ்வர்த் தத்தில் குறைவரக் காண்கின்றன .
இவை யெல்லாவற்றையும் முன் கொண்டு , இந்த ப்ரமாண ப்ரதிபாத்யமான வர்த்தங்களைத் தெளிய வறிந்து ,
நம்மாசார்யக ளனைவரும் தந்நிஷ்டராய் ,
தங்களைப் பற்றினார்க்கும் , இத்தையே யோக்யதாநுகுணமாக உபதேசித்துப் போந்தார்கள் .
இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்றும் ,
த்ரிதண்டதாரியா யாசார்ய ரூபேண தானே அவதரிப்பனென்றும் , ஈஶ்வரனருளிச்செய்கையாலே
மற்றுமவனருளிச்செய்த வர்த்தங்க ளெல்லாம் எம்பெருமானாரிடத்திலே யாயிற்று நிலை நின்றிருப்பது ;
ஆகையால் ஆசார்யத்வ பூர்த்தி யுள்ளதும் அபவரிடத்திலேயேயிறே ,
அவர் அபிமானமே நமக்கெல்லா முத்தாரகமென்று. ஶம்ஶய விபர்யமற நம் பூர்வாசார்யர்களும் அறுதியிட்டார்களிறே ;
ஆகையாலே நம் பூர்வாசார்யார்களநுஷ்டாநமே நமக்கெல்லாம் ப்ரமாணமென்பது
“ தர்மஜ்ஞ ஸமய “ – ஸமயமென்னும் ப்ரபல ப்ரமாணப்ரதிபந்நமென் றும் , சொல்லிற்றாயிற்று .

—————-

இனி சரம பர்வமான எம் பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி
“ தேவுமற்றறியேன் “ என்னுமதிகாரிக்கு , பக்தி ப்ரபத்திகளிரண்டும் பயாவஹமாயிருக்கும் . எங்ஙனேயென்னில் ;
பக்தி தான் ஸ்வ யத்ந ஸாத்யமாகையாலும் , பகவத் பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ ப்ர வ்ருத்தி விரோதியாகையாலும் ,
ஸ்வ ஸ்வாதந்த்ரிய ரூபமான வஹங்காரத்தை விளைவித்து பாரதந்த்ரிய ஸ்வரூபமான வாத்ம சத்தையை யழிக்குமென்று பயம் பிறக்குமிறே ;
பாரதந்த்ரிய ஸ்வரூபத்துக்கு அனு குணமாய் பகவத் விஷய விஸ்வாச ரூபமான ப்ரபத்யுபாயமும்
1 “ பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே “ என்கிறபடியே
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய் நிரங்குச ஸ்வதந்த்ரனான வெம்பெருமான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தாலே
மீளவும் ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்னென்று பயப்படப்பண்ணும் .
இப்படி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யமான பக்த் யுபாயமும் , ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸாத்யமான ப்ரபத்யுபாயமும் , பய ஜநகமாகையாலே
சரம பர்வநிஷ்டனுக்கு நெஞ்சில் தங்காது ;

1 ( பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே ) ஹே ரங்க நிதே -– “ நிதயேர்த்திநாம் “ என்னுமாப் போலே
அர்த்திகளுக்கு நிதியாய்க் கொண்டு கோயிலிலே கண்வளர்ந்திருக்குமவரே ,
ஜந்து: — சேதநநாநவன்,
த்வயைவ –- உன்னாலே தான் ,
பவ மோக்ஷணயோ: — பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் விஷயமாக ,
க்ரியதே -– செய்யப்படுகிறான் ;
“ இல்லவல் லருள் நல்வினைகள் ” என்னும் மாசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்திப் படியே புண்ய பாப ரூப கர்மங்களடியாக ஸம்ஸரிப்பித்தும் ;
இப்படிப்பட்ட விந்த சேதநர்களுடைய துக்கதர்ஶந மாத்ரத்தாலே நிர் ஹேதுகமாக கடாஷித்து நிரதிசய ஆனந்த ரூப
ஸ்வ ப்ராப்தி பர்யந்தமாக விவர்களை யுஜ்ஜீவிப்பித்தும் போருகிற வீஶ்வரனுடைய செயல்களைக் கண்டால் ,
இத்தனையுமவனே செய்தமை , இவனுக்கு விசதமாக ப்ரகாசிக்குமென்னதாயிற்று ;
இதற்கு மேல் சொல்ல வேண்டுமவையாய் வருகிற வைஷம்ய நைர்க்ருண்ய தோஷ பரிஹாரங்கள் ஸ்ரீபாஷ்யாதிகளிலே கண்டு கொள்வது .

ஆகையாலிறே , இவ் வதிகாரிக்கு பக்தி ப்ரபத்திக ளுபாயமன்னென்றும் ,
எம்பெருமானாருடைய வபிமாநமே யுத்தாரகமென்றும் ,
நம் பூர்வாசார்யர்க ளறுதியிட்டதும் . (ப்ரயாண காலே ) இத்யாதி , —
அதாவது பக்தி ப்ரபத்திகள் உபாயமல்லாமையாலே , நிர் ஹேதுகமாக கடாஷித்து பவ்யனாக்கி கொண்டு போறும்
பரமகாருணிகராய் ஸதாசார்யரான வெம்பெருமானார் , இவன் நம்முடையவனென்று அபிமாநித்திருக்கும் அந்தவபிமாநமே ,
இவனுக்கு ஸம்சாரோத்தாரக மென்றபடி
ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்று , ஸ்தோத்ரத்தின் முடிவிலே பரமாசார்யரான ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே .

இனி இந்த வாசார்யாபிமாநந்தான் ஸ்வேதரோபாயங்களுக்கு அங்கமோ ! ஸ்வதந்த்ரோபாயமோ ! வென்னில் ,
உபயமுமாயிருக் கும் ; எங்ஙனேயென்னில் ,
மஹா விஸ்வாச ரூபையான ப்ரபத்தியானது , கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற உபாயாந்தரங்களுக்கு விச்சேதா பாதக
பாபஹரத்வேந தத்வர்த்தகமான வங்கமுமாய் ,
1 “ ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரி ப்ராரப்தஸ்யாபி பூயஸீ “ என்கிறபடியே ,
1 ப்ரபந்ந பாரிஜாதே –- பலோதய பத்ததௌ — ஶ்லோ 178
( ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ ) – இதற்கு பூர்வார்தம் ,

“ உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாக நாஸிநி “ என்று . இவ்விடத்தில்
பக்தியென்கிறது பற்றின விஷயந்தன்னில் அவ்யபிசாரிணியான சேவையை .
இதுதான் , உபாய விஷயத்திலாம்போது தந்நிஷ்டா விஶேஷத்தைச் சொல்லுகிறது ;
உபாயபக்தி: — ஸாங்கமான பக்த்யுபாயத்தில் அவ்யபி சாரிணியான நிஷ்டையானது ,
ப்ராரப்த வ்யதிரிக்தாஹ நாஸினீ – ப்ராரப்த கர்ம வ்யதிரிக்தங்களான பூர்வோத்தராகங்களை நஸிப்பித்துவிடும்;
பூயஸீ -– பாமரு மூவுலகத்தில் படியான பரமார்த்தரிடத்தி லதிசயித்திருக்கிற ,
ஸா -– ஸாத்ய பக்திஸ்து –
“ தஸ்மாந்யாஸமேஷாந் “ என்று
வேதாந்தங் களிலே ப்ரஸித்தமாயும் உபேயாந்தர பூதமாயுமிருக்கிற ப்ரபத்யுபாயமோ வென்னில் ,
ப்ராரப்தஸ்யாபி – கர்ம ஜ்ஞாந ஸஹ க்ருதையான பக்த்யுபாயத் தாலும் கூட அவிநாஸ்யமாயிருந்துள்ள ப்ராரப்த கர்மத்துக்கும் ,
ஹம்த்ரி – நாசகமாயிருக்கும் ;
து –- என்கிற அவ்யயம் பக்த்யுபாயத்தில் காட்டில் , இப்ரத்யுபாயத்துக்குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது ;

இவ்விடத்தில் ஆர்த்த ப்ரபந்நர் விவஷிதராகையாலே ,அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்திக்கு ஸ்வதந்த்ரோபாயமு மாயிருக்குமாப் போலே ;
இதுவும் ஸ்வேதரோபாயங்களுக்கு உபதேஷ்ட்ருத்வ ப்ரவர்த்தகத் வாதிகளாலே , அங்கமுமாய் ,

“ 1 தேவமிவாசார்ய துபாஸீத “ ,

1 ஸ்ருதி ( தேவமிவேதி ) ஆசார்யம் – ஆசார்யனை , தேவமிவ -– ( எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே
என்மாத்ரமாகிலுமவர்களை யாராதித்து நல் வழி போங்கோளென்று சொல்லுகிற
“ சச பூஜ்யோ யதாஹ்யஹம் “ என்கிற உபப்ரும்மணத்தின்படியே
மனிசர்க்குத்தேவர் போலத் தேவர்க்கும் தேவனான வெம்பெருமானைப்போலே ,
உபாஸீத – உபாஸநம் ஸ்யாத்ரு வாநுஸ்ம்ருதி: “ என்கிற அத்யர்த்த ப்ரேமத்தோடே யநுவர்த்திக்கக் கடவன் .

2 “ ஆசார்யான் புருஷோ வேதா “ ,

2 ஸ்ருதி ( ஆசார்யவாநிதி ) –-
ஆசார்யவான் – ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ண னான வாசார்யனை யுடையனாயிருக்கிற ,
புருஷ: — முமுஷு வான புருஷன் ,
வேத -– அர்த்த பஞ்சகங்களை யலகலகாக வறியக் கடவன் .

3 “ உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் “

3 ப்ரபந்ந பாரிஜாதே –
குரூபாஸநபத்ததௌ – ஶ்லோ 18 ( உபாயோபேய பாவேநேதி ) – தமேவ -– அப்படிப்பட்ட ஆசார்யனையே ,
உபாயோபேய பாவேந — உபாயோபேயங்களிரண்டும் அவனே என்கிற நினைவோடே ,
சரணம் –- ரக்ஷகனாக ,
வ்ரஜேத் –- புத்தி பண்ணக் கடவன் .

என்று இத்யாதி களில் சொல்லுகிறபடியே
இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் தனக்கு மேலற்ற ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்கும் .
பக்தி ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்க ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமானாப் போலே
இந்த வாசார்யாபி மாநமாகிற சரம ப்ரபத்தியும் , ஸ்வதந்த்ரோபாயமாய் வந்தது ;
பக்திக்கந்தர்யாமி விஷயம் ,
ப்ரபத்திக்கச் சாந்வதாரம் விஷயம் ,
சரம ப்ரபத்திக்கு பகவதவதாரமான வெம்பெரு மானார் விஷயம் .
ப்ராக்ருத விக்ரஹ யுக்தரா யெழுந்தருளியிருக்கை யாலே ,அவர்களுக்குண்டான அவ்வார்த்தி விஶேஷத்தையே
ப்ராரப்த கர்ம:பல மாகக் கொண்டு ஈஶ்வரன் அந்த கர்மங்களை வஸிப்பிக்குமென்னபடி ;

“ ததப்ராப்தி மஹாது:கவிலீநாஶேஷ பாதகா “ என்று
சிந்தயந்திக்கு பகவத் ப்ராப்தி , நினைத்தபோதே கிடைக்க வில்லை யென்னும் ஆற்றாமையாகிற
மஹாது:காநுபவத்தாலே ஸமஸ்த பாபங்களும் வுருமாய்ந்து போயிற்றே என்று சொல்லிற்றே

ஸஜாதீய புத்தி பண்ணலாம்படி யிருந்ததேயாகிலும் ,
எம்பெருமானா ரிடத்திலே எம்பெருமான் ஸ்வரூபேண நின்று விஶேஷாதிஷ்டாநம் பண்ணுகையாலும் ,
இவ்வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்கையாலும் ,
பகவதவதாரம் எம்பெருமானார் என்கிற வம்ஸத்தில் ஶம்ஶயமில்லை .

——————–

1 ததுக்தம் பாஞ்சராத்ரே பகவதா ஸேநேஸம் ப்ரதி ;

1 ( ததுக்தமிதி ) – த
த் -– கீழ்ச்சொன்ன பகவதவதார மெம்பெருமானாரென் கிற விவ்வர்த்தம் ,
பாஞ்சராத்ரே –- ஸ்ரீபாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் ,
பகவதா -– ஈஶ்வரனாலே ,
ஸேநேஸம் ப்ரதி -– ஸேனை முதலியாரைக் குறித்து ,
உக்தம் – அருளிச்செய்யப்பட்டது .

2 மம ஸ்வரூபம் ஸர்வஸ்மாத் பரஸ்ய ஜகதீசிது: || ஷட்விதம் பரிபூர்ணந்த த்ஸேநேச பரிபட்யதே ||

2 எங்ஙனேயென்னில்
( மமஸ்வரூபமிதி ) –ஹே ஸேநேஸ –- வாரீர் ஸேனை முதலியாரே ,
ஸர்வஸ்மாத் பரஸ்ய -– ஸர்வ ஸ்வாமியாகவும் ,
ஜகதீசிது: — ஸர்வ நியந்தாவாகவுமிருக்கிற ,
மம -– என்னுடைய ,

தத் –-ஸகல வேதாந்தங்களிலும் ப்ரஸித்தமான ,
ஸ்வரூபம் -– அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ விஶிஷ்ட ஸ்திதியானது ,
பரிபூர்ணம் –- “ இதம் பூர்ணமத:பூர்ணம் “ என்கிறபடியே ஜ்ஞாநபலைஶ்வர்யாதி கல்யாணகுண புஷ்கலமாயும் ,
ஷட்விதம் –- ஆறு ப்ரகாரமுடைத்தானதாயும் ,
பரிபட்யதே — ஶாஸ்த்ரங்களிலெங்கும் ப்ரதிபாதிக்கப்படுகிறது .

3 பரத்வ , வ்யூஹ , விபவமந் தர்யாமித்வ மே வ ச | அர்ச்சா சார்யாவதாரௌ த்வௌ ஷாட்வித் யம் மே ப்ரகீர்த்திதம் ||

3 ( பரத்வேதி ) -– அந்த ஷட்விதமான ஸ்வரூபமெப்படிப்பட்டதென்ன ,
பரத்வ வ்யூஹ விபவம் –- பரத்வமென்றும் , வ்யூஹமென்றும் , விபவ மென்றும் ,
அந்தர்யாமித்வமேவச – அந்தர்யாமித்வமென்றும் ;
( இவ்விடத் தில் , ஏவ—ச—என்கிற அவ்யவங்களிரண்டும் , வாக்யாலங்காரமாகக் கொள்வது )
அர்ச்சாசார்யாவதாரௌத்வௌ | — “ ஸர்வம் பூர்ணம் ச ஹோம் “ என்கிறபடியே
ஸமஸ்த கல்யாண குண புஷ்கலமாகையாலே ப்ரபத்திக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரம் ,
இப்படிப்பட்ட ஸித்தோபாயத்துக்கு பஹிர்பூதமன்றியே
தத்சரமாவதியான –- ஆசார்யரூபாவதாரம் , என்கிற விவையிரண்டுமென்றும் ,
மே -– என்னுடையதான ,
ஷாட்வித்யம் –- ஆறு ப்ரகாரமானது ,
ப்ரகீர்த்திதம் — ஶாஸ்த்ரங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டது .

—————-

1 பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத்ஸுலபோ ஹ்யுத்தரோத்தர: | தேஷ்வாசார்யாவதரணே காருண்யம் பரிபூரிதம் ||

1 ( பூர்வஸ்மாதபீ இதி ) –
பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத் -– பரத்வம் முதல் முன்முன்னானவைகள் காட்டில் ,
உத்தரோத்தர: — பின்பின்னான வவதாரம்,
ஸுலப: — ஒன்றைக் காட்டிலுமொன்றாஶ்ரிதற்கு ஸுலபமாயிருக்கும் ,
தேஷு – அவைகளில் வைத்துக் கொண்டு ,
ஆசார்யாவதரணே -– ஸர்வ ஸுலபமான ஆசார்யாவதாரத்திலே ,
காருண்யம் – ஆஶ்ரித ஸம் ரக்ஷணமே, ஸ்வபாவமாயிருக்கைக்கு ஈடான க்ருபையானது ,
பரிபூரிதம் –- வடிவிலே தொடைக் கொள்ளலாம்படி புஷ்கலமாயிருக்கும்

2 ஜ்ஞாநாதி குணதஸ் தத்ர விஶேஷா திஷ்டிதிர் பவேத் |
ஆசநந்த்வாத் தயாளுத்வாத் ஜ்ஞாநித்வாத் குரு பாவத: |
சரமஸ்ய வதாரஸ்ய குருரூபஸ்ய மே ஸதா ||

2 ( ஜ்ஞாநாதிகுணத இதி )
குருரூபஸ்ய –- ஆசார்ய ரூபத்தை யுடைத்தா யிருக்கிற ,
சரமஸ்யாவதாரஸ்ய –- கடைசி அவதாரமானது ,
ஆசந்த்வாத் –- “ நடமினோ தமர்களுள்ளீர் “ என்கிறபடியே சென்று ஸேவிக்க வேண்டியதான வர்ச்சாவதாரம் போலன்றிக்கே
“ பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து “ என்று ஆஶ்ரிதரிருக்குமிடம் தேடி வந்து கிட்டியிருப்பதாலும் ,
தயா ளுத்வாத் -– கர்மாநுகுணமாக விவனை ஸம்ஸ்கரிக்கவும் விடும் ஸ்வதந்த்ர மான தயை போலன்றிக்கே
ஸர்வ ப்ரகாரத்தாலு மிவனை யுஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிஶய தயையை யுடைத்தாயிருக்கையாலும் ,
ஜ்ஞாநித்வாத் – “ ஜ்ஞாநீத்வாத்மயிவ மே மதம் “ என்கிறபடியே
நமக்கு தாரகமானதாயிருக் கையாலும் ,
குருபாவத: — அஜ்ஞாந நிவர்த்தகனென்கிறதே ஸ்வரூபமா யிருக்கையாலும் ,
தத்ர – அந்த அவதாரத்தில் ,
ஜ்ஞாநாதிகுணத: — ஜ்ஞாந பலைஶ்வர்யாதி குணங்களையுடைத்தான முந்தின வவதார பஞ்சகத்திற் காட்டில் ,
மே – என்னுடைய ,
விஶேஷாதிஷ்டிதி: — விஶேஷாதிஷ்டான மானது ,
ஸதா –- எப்போதும் ,
பவேத் –- உண்டாயிருக்கக் கடவது .

3 ப்ராப்யத்வ ப்ராபகத்வே த்வேஸ்வநிஷ்டே ந குணௌ மதௌ | தஸ்மாந்மத்பாதயுகளம் ஶரண்யம் மோக்ஷகாமிநாம் ||

3 ( ப்ராப்யத்வ ப்ராபகத்வே இதி ) –
(அந்தவவதாரத்தில்) ப்ராப்யத்வ ப்ராப கத்வே த்வே –- உபாயத்வம் – உபேயத்வம் ஆகிற விவையிரண்டும் ,
ஸ்வ நிஷ்டே -– நமக்கு ஸ்வரூபமாகவேயிருக்கும் ;
குணௌ – நமக்கவை குணங்களாக ,
நமதௌ – எண்ணப் பட்டதன்று ,
தஸ்மாத் -– ஆன படியாலே,

என்று பகவான் தானே யருளிச் செய்தாரிறே -இத்தாலும் , எம்பெரு மானார் திருவடிகளே ஸம்ஸாரோத்தரணோபாயம் .
இனி ஸ்வதந்த்ர னாயிருப்பானொரு மஹா ப்ரபுவைக் கண்டு கார்யம் கொள்ளுமவன்
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொள்ளுமளவில் அவன் இனியனாய் இவன் கார்யம் செய்கைக்கும்
ஸ்வதந்த்ரனாய் சீறி யுதறி யுபேஷிக்கைக்கும் மஉடலாயிருக்கும் ;
அந்த ப்ரபு தன்னையே காலைப் பிடித்துக் கொள்ளுமளவில் ,அவன் தயா பரவசனாய் , உதறமாட்டா மல் , கார்யம் செய்து விடுமோபாதி ,
சரணஸ்தாநீயரான வெம்பெருமானாரை பற்றினால் , அவன் பரம தயாளுவாய் இவன் கார்யம் செய்யுமிடத்தில் ஸம்ஸயமில்லையிறே .

———————

1 “ லோகே ச பாதபதநம் பாணிஸங்க்ரஹணாதபி | தயா ஹேதுதயா த்ருஷ்டுமித்யுக்தம் சரணாவிதி “ என்றும் ;

1 ( லோகே ச பாதபதநமிதி ) லோகே ச -– இருள் தரு மா ஞாலமாகையாலே சரணாகத ஸம்ரக்ஷணம் பரம தர்மமென்றறுதி யிடமாட்டாத இந்த விபூதி யிலும் கூட ,
பாத பதநம் -– காலைப் பிடித்துக்கொள்ளுமது ,
பாணி ஸங்க்ர ஹணாதபி -– கையைப் பிடித்துக்கொள்ளுமதிலும்காட்டில் ,
தயா ஹேது தயா -– க்ருபை யுண்டாகுகைக்கு காரணமாக ,
த்ருஷ்டமிதி -– காணப்பட்ட தென்று ,
சரணாவிதி –- ( மந்த்ர ரத்நத்தில் ) “ சரணௌ “ என்று ( திருவடி களைப் பற்றும்படி ) ,
உக்தம் –- சொல்லப்பட்டது .

2 “ அநதிக்ரமணீயம்ஹி சரண க்ரஹணம் “ என்றும் , சொல்லுகிற படியே , சரணக்ரஹண மமோகோபாயமிறே |

2 ( அநதிக்ரமணீயமிதி )
சரணக்ரஹணம் – அஜ்ஞன் முதல் ஸர்வஜ்ஞன் வரையிலுள்ள யெல்லார்க்கும் காலைப் பிடித்துக் கொள்கையென்றால் ,
அநதிக்ரமணீயம்ஹி – அதிக்ரமிக்கக்கூடாத தாய் இருக்குமிறே ;

பட்டர் திருவணையாடி மீண்டெழுந்தருளுகிறபோது பாதிரி என்கிற கிராமத்திலே ஒரு வேடவனகத்திலே ஓர் இரவு தங்கின வளவிலே பிறந்த ( முசலின் விஷயமான ) வார்த்தையை இவ்விடத்திலநுஸந்திப்பது ; இத்தால் திருவடிகளைப் பற்றுமது அமோகோபாயமென்னதாயித்து .

நம்பெருமாள் , பெரிய திருவோலக்கமாக வெழுந்தருளியிருக்க , திருவடி தொழ வந்தவர்கள் , எம்பெருமானாரை நோக்கி தண்டனிட, தத்காலவர்த்தியான ராஜா , எம்பெருமானாரை தண்டனிட்டு , எல்லாரும் பெருமாளை விட்டு உம்மையே தண்டனிடா நின்னார்கள்

இதுக்கு இப்பொருளருளிச்செய்ய வேணுமென்ன ,
உம்முடைய பக்கலிலே சிலர் கார்யம் கொள்ள வந்தால் அவர்களில் , ஒருவன் உடுவரைக் கொண்டு வந்தான் ,
ஒருவன் உம்முடைய பாதுகையைப் பிடித்து நின்றான் , இதிலே யாருக்கு நீர் முந்துற கார்யம் செய்வீர் ! என்ன ;
காலைப் பிடித்தவனிடத்திலே ப்ரீதி விளையுமென்ன ,
அப்ப டியே நாம் நம்பெருமாளுக்கு திருவடிகளாயிருப்போம்
, அதனால் நம்மைப் பத்தினார்க்கு கார்யாம்ஶத்திலொரு குறையுமின்றியிலே யமோகமாகப் பலிக்குமென்றருளிச் செய்தார் .
உத்தாரகமான வெம் பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தம் தேவதாந்தர , மந்த்ராந்தர தோஷ ஸ்பர்ஶத்தாலே கலங்கி
குலையாமல் ஸத்தையுடன் கிடைக் கப்பெறில் , ஸ்வரூபாலங்காரமான தத்வஜ்ஞாநமும் , அநந்யபக்தி யும் , அந்யவைராக்யமும் இல்லாவிடிலும் ,
மேலந்த ஸம்பந்தத் தாலே யுண்டாக்கிக் கொள்ளலாம் ;
ம்ருதஸஞ்சீவினியான வெம் பெருமானாரோட்டை ஸம்பந்தம் நிஷித்தாநுஷ்டாநாந்வயலேஸத் தாலே யவன் கைவிடும்படி குலைந்தால் ,
அநர்தமே விளைந்து , அத்தால் ஜ்ஞாநாதிகள் சிலதுண்டானாப்போலே தோற்றிற்றாகிலும் , ப்ரயோஜநமில்லையாம் .
ஸதாசார்யரான எம்பெருமானாரோடு ஸம்பந்தமற்ற ஜ்ஞாநாதிகளுமிவனுக்கு , அவத்யகரமாய் தலைக்கட் டும் ;

அவத்யகரமாகையாவது , பகவந்நிக்ரஹத்தை விளைத்து யாவ தாத்மபாவி நரகத்திலே தள்ளிவிடுமென்றபடி , எம்பெருமானாரோ டுண்டான ஸம்பந்தம் ஸ்வரூபவிகாஸஹேது , ததபாவம் ஸ்வரூப விநாஶஹேது , என்று வங்கீபுரத்து நம்பி வார்த்தை .

1 “ மையாசார்யாவதாரேது யஸ்ய பக்திர் ந வித்யதே , தஸ்யாத்ம நாசஸ்ஸேநேஸ பவிஷ்யதி ந ஶம்ஸய: “ என்று எம்பெருமான் தானேயருளிச்செய்தானிறே .

1 விஶ்வக்ஸேந ஸம்ஹிதாயாம் — ( மய்யாசார்யாவதாரேத்விதி )
ஹே ஸேநேஸ -– வாரீர் ஸேனை முதலியாரே ,
ஆசார்யாவதாரே –- ஆசார்ய ரூபியாயவதரித்திருக்கிற ,
மயி -– என்னிடத்தில் ,
யஸ்யது –- எவனுக்கானால் ,
பக்தி: — அத்யந்த ஸ்நேஹத்தோடு ,
மோக்ஷகாமிநாம் முமுஷுக்களுக்கு ,
மத்பாதயுகளம் — அப்படி யாசார்ய ரூபியாயிருக்கிற நம் திருவடிகளிரண்டுமே ,
சரண்யம் — ரக்ஷகமாகக் கடவது .

1 “ ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாஶ்ரீபதிர் மாமாத்ருத்ய மஹாபல ப்ரசவிதா ஜாதோஹி ரங்கேஸ்வர: |
தத் த்ருஷ்ட்வா மயி ரங்கநாதரமணீ ஸ்ரீரங்கநாயக்யஹோ ஸ்ரீராமாநுஜ பாதபாகயமிதி ப்ராசீகச ஸ்வாந்தயாம் “
என்று இறே நம்பிள்ளை யருளிச் செய்யும்படி ; அதாவது
எம்பெருமானாருடைய திருவடிகளில் ஸம்பந்தமுடையவனன்றோ வென்று பெரிய பெருமாள் , என்னை யாதரித்து
“ அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை “ யாகிற மஹா: பலத்தைத் தருவாராக ஒருப்பட்டார் ;
அத்தைப் பெருமாளுக்கு பத்நியா யினிய விஷயமாயிருக்கிற ஸ்ரீரங்கநாச்சியார் கண்டு ,
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுண்டான பின்பு தத் ஶத்ருஶமாகக் கொடுக்கலாவ திதுவன்று , வேறு தகுதியா யிருப்பதொரு பலம் கொடுக்க வேணும் என்று , நினைத்துக் காணாமையாலே ,
தம்முடைய நிர்ஹேதுகமான க்ருபையை , என் பக்கலிலேயொரு மடையாக வெளியிட்டாள் ;
இதென்ன வாச்சர்ய மென்று கண்டருளினாரென்றபடி ,
இத்தால் எம்பெருமானாரோடு ஸம்பந்தமுண்டாகவே , பிராட்டியும் எம் பெருமானு மொருவர்க் கொருவர் பரிந்து மேல் விழுவார்களென்று மர்த்தம் சொல்லப்பட்டது,
நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் பரம காருணிகரான வெம்பெருமானார் இவன் நம்முடையவன் , என்றபிமாநிக் குமபிமாநமே
ஸம்ஸாரோத் தாரகமென்று கூடிய தாஸ்யருசியானது ,
ந வித்யதே -– இல்லாமல் போகிறதோ ,
தஸ்ய –- அந்த சேதநநுக்கு ,
ஆத்மநாஶ: — ( ஶேஷத்வமில்லாத போது ஸ்வரூப மில்லை “ யாகையாலே ) ஸ்வரூபநாஶமானது ,
பவிஷ்யதி -– உண்டாகக் கடவது ;
ந ஶம்ஶய: — ( இவ்வர்த்தத்தில் ப்ரமாணங்கள் சுருக்கமறக் காண் கையாலே ) ஸந்தேஹமில்லை .
1 ( ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ரேதி ) -– இதுதான் ப்ரமாணிகாக்ரேசரரான நம்பிள்ளை யருளிச்செய்த ஶ்லோகமா யிருக்கும் ;
ஶ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாத் –- ஸ்ரீமத் –- ஸ்ரீவைஷ்ணவஸம்பத்தை யுடையராய் ,
அன்றிக்கே பகவதநுபவகைங்கர்யரூபமாகிற நிலைநின்ற ஸம்பத்தையுடையராய் ,
அஜ்ஞநுமன் றிக்கே நமக்கபேஷிதமான ப்ராப்யத்தை தருகைக்கீடான ஜ்ஞாநாதி ஸம்பத்தையுடையரா யென்றுமருளிச் செய்வர் ;

லக்ஷ்மண தேஶிகேந்த்ர – ஆசார்ய குல ஶிகாமணியான வெம்பெருமானாருடைய
( இவ்விடத்தில் “ லக்ஷ்மண ” என்கிற பதம் அவதாரத்தினுடைய ஊத்தக் காலைக் காட்டுகிறது ) ,
சரணத்வந்த் வாஶ்ரயாத் – இரண்டு திருவடி களை யாஶ்ரயித்த பலத்தாலே
( மந்த்ர ரத்ந்த்தில் “ சரணௌ “ என்கிற பதத்துக்குச் சொன்ன வர்த்தங்களெல்லா மிவ்விடத்துக்கு சேரும் ),
ஸ்ரீபதி: — ஸ்ரீய:பதியான ,
ரங்கேஶ்வர: — பெரியபெருமாளானவர் ,
மாம் — ( ஸ்வப்ந முகேன தம்முடைய திருவடிகளிரண்டுமே உபாயோபேயங்களென்று
எம்பெருமானார் தாமே காட்டிக் கொடுக்கும்படியான பாக்யமுடைய ) அடியேனை ,
ஆத்ருத்ய – விஶேஷ கடாக்ஷம் செய்தருளி ,
மஹா:பல ப்ரசவிதா – நித்ய கைங்கர்யமாகிற பரம புருஷார்த்தத்தைத் தருவாராக
( ப்ரதம பருவநிஷ்டருக்கு கொடுப்பது ஃபலம் , இவர்க்கு கொடுப்பது மஹாபலம் , அதாவது , அடியார்க்காள்படுத்துகை ) ,
ஜாதோஹி – ஒருப் பட்டாறிறே ,
தத் – அப்படிப்பட்ட பெரியபெருமாளுடைய திருவுள்ளக் கருத்தை ,
த்ருஷ்ட்வா – கடாஷித்தருளி ,
ரங்கநாத ரமணீ –( ஶம்ஶ்லேஷ தஸையிலீஶ்வரனையும் , விஶ்லேஷதஸையில் சேதநநையும் திருத்தி
சேதநரக்ஷணமே யாத்ரையா யிருக்கையாலே ) பெரியபெருமாளுக்கு ஆனந்தாவஹையாயிருக்கிற ஸ்ரீரங்கநாயகீ –-
பெரியகோயில் ஐஶ்வர்யத்துக்கெல்லாம் கடவுளான ஸ்ரீரங்கநாயகியாரானவர் ,
அயம் –- இந்த நம்பிள்ளை ,
ஸ்ரீராமாநுஜ பாத பாக் இதி –- பெரியபெருமாள் தாமே விரும்பி உபய விபூத்யைஶ்வர்யத்தையும் கொடுக்கும் படியான
ஜ்ஞாநாதி குணஸம்பத்தையுடைய வெம்பெருமானார் திருவடிகளை யாஶ்ரயித்தவ னென்று ,
மயி –- அடியேனிடத்தில் ,
ஸ்வாம் – தனக்கஸாதாரணமா யிருக்கிற ,
தயாம் – “ பாபாநாம் வா ஸுபாநாம் வா “ என்கிறபடியே , அஜ்ஞ , விஶேஷஜ்ஞ விபாகமறவெல்லாரும் வாழும்படியான நிர்ஹேதுக க்ருபையை ,
ப்ராசீகசத் – பரிபூர்ணமாக வெளியிட்டாள் ;
அஹோ – “ என்னைப் புவியிலொரு பொருளாக்கி “ இத்யாதியில்படியே ,
எம்பெருமானார் செய்தருளின விவ்வுபகாரம் ஆச்சர்ய கரமாயிருக்கிறதென்கிறார் .

சாரார்த சதுஷ்டய விவரணத்தில் அம்மங்கி யம்மாளுக்கு , எங்களாழ் வான் தாமுமருளிச் செய்தாறிறே .

ஸோமாஸியாண்டானும் ,

1 பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்ருத்தி ஸாத்யாயா பக்தே: ஸ்வாதந்த்ர்யரூபாஹங்கார

1 ஸோமாஸியாண்டானருளிச் செய்த சரமோபாய விவரணத்திலே. (பகவத் ப்ரவருத்தி விரோதி இத்யாதி ) –
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி -–ஸ்வாமியாய் ஜநகத்வாத் பகவந்தமுபேத்ய – தத் சரணார விந்தயுகள
சரணாகதேரபி நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா பீதிஹேது
ஸ்வதந்த்ரனானவன் ஸ்வயமாய் பரதந்த்ரனாயிருக்கிறவிவனைப் பெற நினைக்கையாகிற
பகவதி ப்ரவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமாயிருந்துள்ள , ஸ்வப்ரவ்ருத்தி
ஸாத்யாயா: — ஸ்வ யத்ந ரூப ப்ரவ்ருத்தி விஶேஷத்தாலே ஸாதிக்கப்படுமதான,
பக்தே: — கர்ம ஜ்ஞாந ஸஹக்ருதையான பக்தி யோகத்திற்கு ,
ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகத்வாத் — ஸ்வாதந்த்ர ரூபாஹங் கார ஜநகத்வமுண்டாயிருகையாலும் ,
( அதாவது , ஸ்ரீபாஷ்யத்திலறுதி யிட்டபடியே விவேக விமோதிகளாகிற நியமங்களையுடையனாய் ,
வர்ணா ஶ்ரம விஹிதக ர்மங்களைத் தானநுஷ்டித்த பின்பு “ த்ருவாநுஸ்ம்ருதி “ யென்கிற பக்தியோகத்தை
நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கை யாலே , இதில் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபமான வஹங்காரம் பிறக்குமென்ன படி )

( இவ்விடத்தில் ப்ராஸங்கிகமாக சில அர்த்தவிஶேஷங்கள் சொல்லப்படுகி றது ; அதாவது ,
“ ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவித்து “ என்கிற படியே ,
பக்தி யோகமானது நழுவும் போது ,
“ ஏவம் நியம யுக்தஸ் யாஶ்ரம விஹித கர்மாநுஷ்டாநேநைவ வித்யா நிஷ்பத்திரித் யுக்தம் பவதி “ என்று
அந்த பக்தி யோகத்துக்கு ஸாதகங்களாக வறுதியிடப்பட்ட விவேக விமோ காதிகளும் ,
தத் ஸாத்யையான பக்தி யோகத்தோடு , ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகமென்று ,
இந்த சரமாதிகாரிக்கு த்யாஜ்யமாய்விடுமோ வென்னில் , ஆகாது ;
“ இவன் தானிவைதன்னை நேராக வி