Archive for the ‘நான் முகன் திரு அந்தாதி’ Category

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி தனியன்– ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்-

January 24, 2019

ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்

அவதாரிகை –
சர்வேச்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த
ஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூ க்தியான திவ்ய பிரபந்தத்தை
அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி -மனசே –
பக்தி சார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே
ஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –

வியாக்யானம் –
நாராயணன் படைத்தான் நான்முகனை –
ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா -என்றும்
நாராயணா பரஞ்சோதி -என்றும் –
நாரயனே ப்ரலீயந்தே -என்றும்
ஏக ஸ்திஷ்டதி விஸ்வாத்மாச ச நாராயண பிரபு -என்றும் –
சிருஷ்டி ஸ்திதி யந்த கரணீம்-என்று தொடங்கி -ஏக ஏவ ஜனார்த்தன -என்றும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமா நவ்யய பிரபு -என்றும்
அவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்
என் நாபி பத்மாதபவன் மகாத்மா பிரஜாபதி -என்றும்
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத் தருத்ரோ ஜாயதே
விருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
பரஹமணஸ் சாபிசம் பூதச்சிவ இத்ய வதார்யதாம்
என்று அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும்
சொல்லப்படும் வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்
ஆழ பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று
உபக்ரமித்து
இனி அறிந்தேன் -என்று தலைக் கட்டிலும்
நற்கிரிசை நாரணன் நீ-என்று இறே அருளிச் செய்தது –அத்தை ஆயிற்று-

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –
என்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது
சொல் சீரார் மொழி யாவது –
தமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே ஆர்ந்த மொழி என்னுதல்-
சீர் கலந்த சொல் -கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்

மொழி செப்பி –
ஏவம் விதமான நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை அனுசந்தித்து

வாழலாம் –
உஜ்ஜீவிக்கலாம்

நெஞ்சே –
மனசே நீ சககரிக்க வேணும்

மொய்பூ மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –
பிரபந்த வக்தாவான திரு மழிசை ஆழ்வார் திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது -என்னும்படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு
மொய் பூ –
செறிந்த பூ -அழகிய பூ –
பூ என்றும் அழகு என்று கொண்டு மிக்க அழகு என்னவுமாம்
மொய் பூ –
மழிசை க்கும் திருவடிகளுக்கும் விசேஷணம்
படிக்கும் அடிக்கும் விசேஷணம்
அவர் வாழி கேசனே என்றும்
மாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்
பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்
நீ ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம்-அவதாரிகை-பாசுர பிரவேசம்- தொகுப்பு -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி —

April 21, 2017

1-சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்-தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து-தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் -சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

2-ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்-ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –
இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-ப்ரஹ்மாதிகளுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள
நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் –என்கிறார்
தத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற
ஸ்லோகத்திற் படியே ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்-

3-ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும்-முட்டக் காண வல்லார் இல்லை-நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் –என்கிறார்-

4-சர்வேஸ்வரனோடு ஒக்க வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று-ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் –
பிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன் -என்கிறார் என்றுமாம் –

5-நானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங்கனே என்று எம்பெருமான் அருளிச் செய்ய-இத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து
திருவவதாரம் பண்ணி ரஷகன் ஆகையாலே -என்கிறார் -எனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இ றே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று எம்பெருமான்
அருளிச் செய்ய-ஜகத்து அவனுக்கு பிரகாரம் என்னும் -இடத்துக்கு உறுப்பாக-உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே-
சகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் -ஆகையாலே சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறார் -என்றுமாம் –

6-இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத-பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார்

7-அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க-
நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் –

8-நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க
உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் –

9-அவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில் அவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக மாட்டார் –
எம்பெருமானுக்கு சேஷ பூதர் என்கிறார் –
நாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் –

10-எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம்-ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்-

11-ஆனபின்பு எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

12-எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன-நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-ஆச்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் –

13-மோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள்-எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் –

14-இப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள் சொல்லுவதைக் கேட்டு-அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் –

15-இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில்-ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே அவ்யவதாநேந காணலாம் –என்கிறார் –

16-உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன -நான் எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷபாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் –என்கிறார்-

17-நம்மளவே அன்று –எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது-எம்பெருமானை ஆச்ரயிக்கும்படியை -என்கிறார்-

18-பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

19-எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷபாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

20-இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் –நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் –

21-ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார்

22-ஆனபின்பு சர்வ காரணமான நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –

23-அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில்-அவை எல்லா வற்றையும் எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்–

24-ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் –
நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன
யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து-அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்-

25-ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே-அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் –

26-இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று-அவன் படியை வெளியிடுகிறார்

27-எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு
இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ –என்கிறார்-

28-பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்-

29-ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே-தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார்
ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு தேஜோ ரூபமாய்- பேர் அழகாய் – இருக்கும் -என்கிறார் –

30-அப்பேர் அழகோடு –கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் தாமே -என்னை யடிமை கொண்டவன்என்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில்
புகாதபடி காப்பான் –அவ்வளவு அன்றிக்கே-நெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான்-
இனி திருப் பாற் கடலில் திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை –என்கிறார்-

31-எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன் எம்பெருமானே யான பின்பு-அபரிமித துக்க பாக்குகளான பூமியில்
உள்ளார் எல்லாரும் எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

32-அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே மண்டி நசித்துப் போருவார்கள் -ஆனபின்பு –
ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

33-தாம் கிருஷ்ண சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் –

34-என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் –

35-திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் 

36-எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே –அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம்
என்று பார்த்துத் திருக் குடந்தை தொடக்கமான-திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் –

37-எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே –என்கிறார் –
ஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-முதலிலே சகல பதார்த்தமும் அவனுடைய சங்கல்ப்பத்தாலே யுண்டாயுத்து என்கிறார் -ஆகவுமாம்-

38-மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் –
அதுவும் பண்ணினான் அவன் தானே –ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில் அந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் –

39-லோக வ்ருத்தாந்தம் ஆனபடியாகிறது என்று கை வாங்கி-தமக்குத் திருமலையையும்
அங்கு நின்று அருளுகிற திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்-

40-திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் -நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

41-எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்-நான் திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்-

42-நான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக திருமலையிலே சென்று நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள்
நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –
திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் –

43-பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன உபகரணங்களைக் கொண்டு
ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் –

44-ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் –

45-அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க பிராப்யம் திருமலை –என்கிறார் –

46-திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீயமாய் இருக்கிற திருமலையை-எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்-

47-திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி திருமலையை அனுபவிக்கிறார் –

48-ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து-பரம ப்ராப்யமான திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்-

49-பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய நாமங்களைச்-சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் –என்கிறார் –

50-சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –
எப்போதும் எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்-

51-அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் பரம பதத்திலும் இல்லை –என்கிறார் –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ –என்கிறார் ஆகவுமாம்-

52-எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்-

53-ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்-
நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

54-சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் –என்கிறார்-

55-இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து
-ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் -உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-

56-இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் –

57-அவனுடைய ச்வீகாரம் தான் புண்ய பலமாய் அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று –அவனுடைய விஷயீகார பஹிஷ்காரங்களே
புண்ய பாபங்கள் ஆகிறன-அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ச்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்-

58-அஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த எம்பெருமான் பக்கலிலே-தமக்குப் பிறந்த ச்நேஹத்தை அருளிச் செய்கிறார்-

59-தம்மளவில் இல்லாதபடி எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை –என்கிறார்-

60-இவர் தன்னை விடில் செய்வது என் என்று எம்பெருமான் அதி சங்கிக்க
விட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-

61-எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்-

62-எம்பெருமானே ரஷகனாக வல்லான் என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈச்வரர்களாக பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்-

63-நான் எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் –

64-அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை-உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

65-ஸ்மர்தவ்யனான எம்பெருமானுடைய நீர்மையாலே பரமபத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு அவ்வருகு வேண்டா என்கிறார்
அன்றிக்கே-பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய-ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்-

66-நான் எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன்-அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்-

67-நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை –பஹூ குணனான எம்பெருமானுடைய திரு நாமங்களை -ஏத்துகையே உத்தேச்யம்
-என்கிறார் –நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இ றே என்கிறார் ஆகவுமாம் -இங்கனே என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து-

68-யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ராஜ குலத்தை அருளிச் செய்கிறார் –

69-செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்
-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம்-பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே கிடிகோள்-

70-இஜ் ஜகத்துக்கு எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்-கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்-

71-எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை-அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-

72-ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் -இவ்வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் –

73-அவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று -வேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்-

74-தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
தான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் –என்கிறார் ஆகவுமாம்-

75-ஏவம்விதமான எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்-

76-லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-
அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –

77-என்னுடைய தோஷத்தையும் பாராதே எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு-என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் –

78-உமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால்-அநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ –என்கிறார் –
திரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க-நேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் –

79-எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து-பரமபதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் –என்கிறார்

80-லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது -இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் –

81-நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ-என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் –

82-ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் -இது போலே இருக்கும் நன்மை யுண்டோ –என்கிறார்-

83-ஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில் சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று -தரிக்க மாட்டாதே இருக்கும்
-சரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று- என்கிறார்-

84-ருத்ரனும் எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்-

85-சர்வ காலமும் ராம வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிமிது எனக்குத் தொழில் -என்கிறார் –
என் நெஞ்சிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் திரு நாமம் ஏத்தப் போரும் போது என்கிறார் ஆகவுமாம்-

86-நெஞ்சே நமக்கு ஒருவன் உளன் என்னும் இடத்தை அனுசந்தி -என்கிறார்-

87-நம் அளவிலே அன்று-ஈஸ்வரத்வேன அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே கூடின ஜகத்துக்கு எல்லாம் ரஷகன் அவனே –என்கிறார்
தம்மை ஒக்கும் அகிஞ்சனருக்கு அவன் நிர்வாஹகனாம் படி காட்டுகிறார் ஆகவுமாம் –

88-தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு சரீர விஸ்லேஷ தசையில் யம வச்யதை தொடக்கமான துக்கங்களைப் போக்கும் பெருமானை
ஆஸ்ரயிக்கும் அவர்கள் க்ருதார்த்தராவர் -ஷூத்ர சமயவாதிகள் உடைய வாழ்வு வ்யர்த்தம் -என்கிறார் –

89-எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் -இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் – ஆகவுமாம் –

90-பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்- பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-

91-தன் திருவடிகளை ஆஸ்ரயித்தார் ப்ரஹ்மா தொடக்கமானவர் எல்லாருக்கும் நிர்வாஹகர் -என்கிறார் –
எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் உபய விபூதியில் உள்ளாருக்கும் நிர்வாஹகராம் படியான
பெருமையை யுடையவர்கள் என்கிறார் -என்றாகவுமாம்-

92-கர்ப்பாவஸ்தையே தொடங்கிசர்வ காலத்திலும் ரஷித்துக் கொண்டு போருகையாலே சர்வேஸ்வரனை-நான் ஒரு நாளும் மறந்து அறியேன் -என்கிறார் –

93-சேதனராய் இருப்பார் -சர்வ சேஷியாய்-குணாதிகனான உன்னை விடத் துணியார் -என்கிறார் –

94-அத்யந்த ஹேயனே யாகிலும் என்னை விஷயீ கரித்து அருள வேணும் -என்னில் தண்ணியாரையும் -யதி வா ராவணஸ் வயம் -யுத்த -18-33-என்னும்படியாலே
வஸ்து ஸ்தியையை அழகிதாக அறியுமவர்கள் விஷயீ கரிப்பர் -என்கிறார்-

95-எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-

96-சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் –என்கிறார் –
சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே முடிக்கிறார்

மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் என்று
பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்-அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக
உபபாதித்துக் கொண்டு போந்து-அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -அவதாரிகை தொகுப்பு –பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

April 20, 2017

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி -அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

1-ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –

2-விசாரிக்கும் போது சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று சொல்வார்கள் –ஒருத்தனும் அவனுடைய பெருமையை பரிச்சேதிக்க அறியார்கள் –
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் எங்கும் ஆராயும் அர்த்தத்தின் உடைய-நிர்ணயமும் இவ்வளவே -எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

3-அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி-ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது-

4-தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் -சர்வ சப்த வாச்யன் ஆனவனை-எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை-தொகுத்து சொன்னேன் –

5-தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே-அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற இவ்வர்த்தம் தேவரே அறிந்து அருள வேணும் –

6-வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார்-

7-அகிஞ்சநனாக -எனக்கு உன்னை ஒழிய வேறு ஒரு அபாஸ்ரயம் இல்லை -பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும்-விடப் போகாது –

8-உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்–வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் –

9-வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு-தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் –

10-அவனுடைய ஸ்ப்ருஹணீயமான திரு மேனி-ச்வரூபதுக்கே மேல் ஓன்று இல்லை என்று இருக்கிற-நமக்குக் காண குறை உண்டோ -ப்ரஹ்மருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே-

11-சர்வேஸ்வரன் உடைய-திருநாமத்தை மாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குமின்கள்-என்று பர உபதேசம் செய்கிறார்

12-உன்னை மதியாதவர்களை– சதுர்வித யோநிகளிலும் போய்-விழும்படிக்கு ஈடாக நினைத்தாய்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் பற்றின பற்று-விடும்படிக்கு ஈடாக
சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு அன்றோ நினைத்தாய் –

13-மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் -நித்ய சூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் -நாராயணன் -சர்வேஸ்வரன் -என்கிறார் –

14-சர்வ ரக்ஷகனானவனுடைய திரு நாமங்களைப் பேசப்பெறாதே -இருக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்-அனர்த்தப் படுவார் என்றும்-பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

15-மார்கண்டேயனும் கரியே என்று காட்டி அருளுகிறார் –

16-ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆன பின்பு-நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என்–என்கிறார் –

17-ஞானாதிகனான ருத்ரனும் தன்னை-ஆஸ்ரயித்தவர்களுக்கு இவ்வர்த்தத்தை இறே சொல்லிற்று-என்கிறார்-

18-குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு-பற்றுகை சீரீயது- என்கிறார் –

19-பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு-எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார்-

20-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான-இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்-உன்னை ஒழிய ஜகத்துக்கு-ப்ருதுக் ஸ்திதியும்
ப்ருதுக் உபலம்பமும் இல்லை -உன் பிரசாதம் அடியாக-பெரும் பேறு மட்டுமே நிலை நிற்பது -என்கிறார் –

21-இப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது -நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –

22-ஸ்ரீ நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது -ஆஸ்ரயிக்க பாருங்கோள்–என்கிறார்-

23-அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூ க்ருதம் உண்டோ –
சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –

24-ஆஸ்ரிதர் உகந்த வண்ணத்தன்ஆச்ரித பக்ஷபாதி என்கிறார் –

25-ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார்

26-நான் தேவதாந்திர சமாஸ்ரயணம் பண்ணேன்-என்னும் இடத்துக்கு ஆள் பிடித்துத்-தொழுவித்துக் கொள்ளும் ருத்ரன் சாஷி -ஸ்ரமஹரமான வடிவை
உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும்

27-பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் –

28-பெருமாள் -வில் பிடித்த படியில்- பிரத்யஷமாக கண்டு அனுபவிப்பது போலே -ஈடுபட்டு அருளுகிறார்-

29-பெருமாள் -வில் பிடித்த படியில்- பிரத்யஷமாக கண்டு அனுபவிக்கும் ஈடுபாடு தொடர்கிறது இதிலும் –

30-என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு
திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ

31-நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-ருத்ராதிகளுக்கும் -இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்-அவனை அன்றோ பற்ற அடுப்பது –என்கிறார் –

32-ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார்-

33-அசாதாரணையான நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க-விரோதியைப் போக்குமவன்- என்கிறார் –

34-உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் –

35-பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
நீர்க்கரையைப் பற்றி கண் வளருகிறதும் ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-மங்களாசாசனம் பண்ணாத -லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ –என்கிறார்-

36–பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் -பல திவ்ய தேசங்களில்
கண் வளர்ந்து அருளுகிறதும்-தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில்ப புகுருகைகாக-என்கிறார் –

37-ஆதி நெடுமாலை விவரிக்கிறது –

38-தேவதாந்தரங்கள்-ஈச்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே-பண்ணும் அபிமானமும்-அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா
பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும்-அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும்

39-இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-திருக் கூடல் இழைப்பன் -என்கிறார் –

40-அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி-திருமலை-சொல்ல-ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்-என்கிறார் –

41-திருமலை யை உடைய நீ என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் -நான் திருமலையை அடைந்து காணல் உறுகின்றேன்-என்கிறார் –

42-பிரயோஜனாந்த பரரும் தங்கள் அதிகாரம் பெறுவது-இத் திருமலையிலே அவனை ஆஸ்ரயித்து-என்கிறார் –

43-சதுர் முகனும்-லலாட நேத்ரனும்-திருமலையில் ஒரு கால் ஆஸ்ரயித்து போம் அளவு அன்று -சமாராதான காலங்கள் தோறும்
சமாராதான-உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிப்பார்-என்கிறது –

44-அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

45-வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் –

46-திருமலையில் வர்த்திக்கும் குறவர்-வில் எடுத்தபடி எதிர்க்கும் திருமலையே அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று-

47-திருமலையில் வர்த்திக்கும் நித்ய சூரிகளைச் சொல்லுகிறது

48-திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே-இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்-

49-சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது-

50-உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்-

51-சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

52-என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான்-என் என்னில்-இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-

53-சக்கரவர்த்தி திருமகனை ஒழிய வேறு ஓன்று-சமாஸ்ரயணீ யமாக நினைத்து இரேன்

54-சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –

55-ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி-ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர்

56-காமனுக்கு உத்பாதகனுக்கு ஒருத்தரும்-உபமானம் இல்லாமைக்கு விசேஷஞ்ஞரோடு-அவிசேஷஞ்ஞரோடு வாசி இல்லாமை கண்டிகோளே-

57-அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகனானவனே -அனாயாசேன -நம்முடைய வலிய பிரதிபந்தங்களைப் போக்குவான்-
-ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –

58-என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-அத்தாலே எனக்கு உபகாரகனாய்-
என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறான்

59-அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும்

60-தேவர் திருவடிகளை காண்கையே ஸ்வ பாவமான என்னை-ஆரோ நமக்கு அகப்படுவார் என்று பார்க்கும் அதுவே-
ஸ்வ பாவமாக இருக்கிற நீ-காலம் எல்லாம் இப்படியேயாகப் பார்த்து அருள வேணும்

61-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்-தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது -அது தானும் இன்று-

62-ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீ ய பதி தானே-தங்களோடு ஒக்க கர்ப்ப வஸ்யராய்-கர்ப்ப வாஸம் பண்ணுகிறவர்களை
ஆஸ்ரயணீயராக தங்களோடு ஒத்த-அறிவு கேடராக எண்ணி இழக்கிறார்கள்

63-கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை -இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –

64-நமக்கு உத்பாதகனானவன் -ஸ்வாமியாய் வத்சலன் ஆகையாலே நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும்
திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே-இவ்வாத்மாவுக்கு உறுவது –

65-பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே-ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா-

66-கூரியர் ஆனவர்கள்-சார அசார விவேகஞ்ஞர்கள்- தேவதாந்தர பஜனம் பண்ணார்கள் இ றே-என்கை-

67– சர்வ ஸ்வாமியாய்-என் நாவுக்கு நிர்வாஹனாய்-ஜ்ஞான குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்-இருக்கிறவனை-ஏத்துகையே உத்தேச்யம்-

68-பகவத் பரிகரமே பலம் என்னும் இத்தை-ஸ்வ புருஷ ம்பி வீஷ்ய-என்கிற ஸ்லோகத்தின்-படியே விவரிக்கிறார்-

69-கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால்-குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக-லபித்தேன்
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும்-அத்தனையே –

70-வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி-எங்கனே என்னில்-நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ-பிரசித்தம் அன்றோ -என்கிறார் –

71-பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது-அறியாது இருந்த அளவேயோ -சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்-அறியப் போமோ -என்கிறார்-

72-நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும்-என்னச் சொல்லுகிறார்

73-அவன் என்றும் உண்டாக்கி வைத்த பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-என்கிறவர்களால் காணப் போகாது
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது- என்றுமாம்-

74-ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன –ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –
மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி –

75-நாக்கொண்டு மானிடம் பாடேன்–என்கிறார்-

76-ஸ்ருத்யாதிகளில் ஆப்த தமனமாகக் கேட்ட-மனுவும் என்றும் ஒதுவித்துப் போகிற நாலு வேதமும்-இவை எல்லாம்
ஆச்சர்யபூதன் சங்கல்ப்பத்தால் உண்டான உண்மை உடையவை -என்கிறார்-

77-வேறு ஒரு இடத்திலும் போகாதபடி -திரு உள்ளத்தாலே கொண்டு-என் பக்கலிலே மனஸை வைத்தான் –
ஆதலால் பாபம் என்று சொல்லப் படுகிறவை அடைய மாயும் –

78-அபிமத விஷயத்தில் ப்ராவண்யத்தை விளைத்தவனை-அநங்கன் ஆக்கினவன் -நெஞ்சும் கூட-ஸ்ரவண மாத்ரத்திலே பரவசமான படியைக் கண்டால் –
இவ்வஸ்துவை சாஷாத் கரித்து ப்ரணாமாதிகளைப்-பண்ணினார்க்கு எத்தனை நன்மை பிறவாது -என்கிறார்-

79-பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் பரமபதம்-என்று ஆசைப்பட்டு அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று
-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை -சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார்-

80-பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த-கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள் -என்கிறார்-

81-மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி-பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –
காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –

82-எல்லாரும் தன்னை ஆசைப்பட இருக்குமவன்-என்னை ஆசைப்பட்டு ஹிருதயத்திலே கலந்தான்-அழகாலே எல்லாரையும் அகப்படுத்தும் காமனுக்கும்-உத்பாதகன் ஆனான் –

83-இப்படி எல்லாம் ஆவது-தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு-எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யானாகக் கொடுக்கும்-என்கிறார்-

84-கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது -ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று -என்கிறார்-

85-எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க-இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த-

86-அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்-நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

87-தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்

88-இப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –

89-இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் -என்கிறது-

90-விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க வேண்டி-இருக்கப் பெற்றவர்கள்
-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்-

91-நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்கிறார்-

92-கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே- சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று-வ்யாமுக்தனானவனை-
என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க-நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் -என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

93-ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான-சம்பந்தத்தை யுடையவனே
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார்-

94-அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்-என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே
வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் -என்கிறார்-

95-ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-
ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-
ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி-இப்போது பரபக்தி யுக்தனானேன்- என்கிறார்-

96-இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம் என்று எனக்கு-கை வந்தது -இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன் -சர்வத்துக்கும் காரணன் நீ-
இதுக்கு முன்பு அறிந்தனவும்-இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம் நீ இட்ட வழக்கு- -நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-
அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ–இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது -என்கிறார்-

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -85-96–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

எம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் -மாற்று வேறு ஒன்றில் நெஞ்சு
செலுத்த ஒண்ணாதபடி -எம்பெருமான் என் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-

வானரக் கோன் — -வெள்ளி மலை பறித்த பெரு வீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்த வாலி –
கழி சினத்த வல்லாளன் -மிக்க கோபத்தை யுடைய -மிக்க வலிமை யுடைய -மதன் -மதத்தை -கொழுப்பை –

————————————————————————————-

ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார் 

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

உத்தமன் உளன் கண்டாய் -ரக்ஷிப்பதாலேயே சத்தை பெற்று இருக்கும் புருஷோத்தமன்
உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் -ஆஸ்ரிதர் மனசிலே நித்ய வாசம் பண்ணி அருளுபவர் காண் –
என்றும் உளன் கண்டாய் -எக்காலத்திலும் ரக்ஷிப்பதற்கு தீக்ஷை கொண்டு இருக்கிறான் காண் –
என்னொப்பார்க்கு தான் ஈசனாய் உளன் காண் இமை–என்னைப் போல் உபாய ஸூன்யராய் இருப்பாற்கடக்கும் தானே
நிர்வாஹகானாய் இருக்கிறான் என்பதை புத்தி பண்ணு –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் -என்றபடி கைம்முதல் இல்லாதார்க்கு கைமுதலும் அவனே
என்னொப்பார்க்கு–மற்றுள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்ளுகிறபடி –

————————————————————————–

சர்வ ரக்ஷகன் அவனே என்பதை மூதலிக்கிறார் —

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

இமயப் பெரு மலை போல்-அட்டுக் குவி சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும்-பெரிய மலை போலே அன்றோ இருந்தது
சமய விருந்துண்டார்-வழக்கமான ஆராதனையை உட் கொண்ட போது
-சமயங்கள்-கண்டான் –வைதிக மதங்களை பிரவர்த்திப்பித்தவன்
அவை காப்பான் -அவற்றை நிலைகுலையாத படி ரக்ஷித்து அருளி
கார்கண்டன் நான்முகனோடு-காப்பான் ஆர் – உண்டான் உலகோடு உயிர்-உண்டான் ஆர் -தனியாகவும்
-கார்கண்டன் நான்முகனோடு- உலகோடு உயிர்-உண்டான் ஆர் -என்று ஒரே வாக்யமாகவும் யோஜிக்கவுமாம் –
அன்று எல்லாரும் அறியாரோ-எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் –பெரிய திருமொழி -11 -6 -2 –
இந்த பாசுரம் கொண்டே ஆளவந்தார் -க ஸ்ரீ –தொடங்கி மூன்று ஸ்லோகங்கள் -அருளிச் செய்தார் –

—————————————————————————————-

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

உபாடாந்தரங்களை அனுஷ்ட்டிக்கும் ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் போல் அன்றிக்கே -ஸ்வரூப உசிதங்களான-திரு விளக்கு எரிக்கை
திருமாலை எடுக்கை போன்ற பிரவ்ருத்திகளையும் உபாய புத்தி இன்றிக்கே ஸ்வயம் புருஷார்த்த புத்தியுடன் அனுஷ்ட்டித்து
அவன் நிர்ஹேதுக கிருபை அன்றி பேற்றுக்கு உபாயம் இல்லை என்று அத்யவசித்து
-காம்பறத் தலை சிரைத்து அவன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்-
அகிஞ்சனராய் இருக்கும் நிவ்ருத்தி தர்ம நிஷ்டர் -இவர்களுக்கு தானே நேரில் சென்று அயர்வுகளை தீர்க்கும் எம்பெருமான்
திரு நாமங்களையே மகிழ்ந்து பாடி வாழ்வதே வாழ்வு
தீர்ப்பான் பெயர் பாடி -பாட பேதம் -வெண்டளை பிறழும் –பேர் பாடி ப்ராசீன பாடமே பொருந்தும்
பந்தனையாய் -பந்தம் உடையவர் -கால் கட்டுக்களை யுடையவர் என்றவாறு –
சிறு சமய பந்தனையார் -அல்ப மாயும் நியமங்கள் உடன் கூடிய தாயும் -சம்சார பந்தத்தத்துக்கு காரணமாயும் உள்ள உபாயாந்தரங்களை பற்றினவர் –

—————————————————————————————————

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

கலந்த வினை கெடுத்து--ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
-நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை ஆச்சார அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

—————————————————————————————————-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் பன் மலர்கள் திறந்து வைத்தாரே -பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட் செய்ய விரும்பி அப்படியே
பேறு பெற்றவர்கள் திருவேங்கடமுடையான் பக்கலிலே பல வகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்ப்பித்தவர்களே யாவர் –
பகவானை ஆராதித்தவர்கள் வின் ஆழ்வார் -என்றபடி
வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-மேல் திருந்து வாழ்வார் -எம்பெருமான் திரு உள்ளத்திலே
ஓடுகிற கருத்தை அறிந்து -பக்தி யுடையவர்களாய் -அந்த எம்பெருமானுக்கே அடிமைப் பட்டு இருப்பவர்களுக்கு அடிமை பட்டவர்கள் –
முன்பு சொல்லப் பட்டவர்களில் காட்டிலும் விலக்ஷணராக வாழ்வார்
பாகவத அங்கீ காரமே உத்க்ருஷ்டம் -என்றவாறு
திருந்த -பாடமே ஏற்கும் –திருந்து பாட பேதம் ஒவ்வாது –

——————————————————————————————–

எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயங்கள் என்று உறுதி கொண்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
உபய விபூதில் உள்ளார்க்கும் நிர்வாஹகராகும் படியான பெருமையை யுடையவர்கள் -என்கிறார் –

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

ஆடு அரவு ஆர்த்தார்க்கும் -ஆடரவத்தார்க்கும்–ஆடுகின்ற சர்ப்பங்களை ஆபரணமாக உடம்பில் கட்டிக் கொண்டு இருக்கும் சிவனுக்கும் –
தாருக வன முனிவர் தன்னை மதியாமல் இருக்க -அவர்கள் கர்வத்தை பங்கம் செய்யவும் -அவர்கள் மனைவிகளின் கற்பைப் பரிசோதிக்கவும்
ஒரு காமுகன் வடிவைக் கொண்டு பிஷாடணம் செய்து தன் மேல் காதல் கொண்ட முனி பத்தினிகள் கற்பு நிலையைக் கெடச் செய்ய
கோபம் கொண்ட முனிகள் அபிசார யாகம் செய்து ஹோமத்தீயில் இருந்து எழுந்த நாகங்கள் -பூதங்கள் மான் புலி முயலகன் வெண்டலை
-முதலவற்றை சிவனை கொல்ல ஏவ -சிவபெருமான் நாகங்களை ஆபரணங்களாகவும் -பூதங்களை கணங்களாகவும்
-மானைக் கையில் ஏந்தி புலி தோல் உடுத்து முயலகன் முதுகில் காலூன்றி
வெண்டலையைக் கையால் பற்றி சிரம் மேல் அணிந்து அவற்றை பயன் இல்லாதனவாகச் செய்தான் என்பர் –

——————————————————————————–

நான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு
வருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் –

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

ஆட்பட்டு இருப்பது அனைவருக்கும் இயற்க்கை அன்றோ -அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்
அபிமான துங்கன் செல்வனைப் போலே நானும் உனக்கு பழ வடியேன் –
மாணிக்கத்தின் ஒளி அழுக்கினால் மழுங்கி இருந்து ஒரு நாள் அளவில் அழுக்கு நீங்கி விளங்கினாலும் அவ்வொளி இயற்க்கை என்னத் தட்டில்லை —
இடையில் அடிமையை இழந்தால் -வயிறு எரிந்து -பொழுதே பல காலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் –என்றும் அன்று நான் பிறந்திலேன் -என்பர்
நிற்கும் இருந்தும் –எல்லா நிலைகளிலும் என்றபடி —நிற்கும் போதும் இருக்கும் போதும் நடக்கும் போதும் படுக்கும் போதும்
நாராயணா என்றால் உங்கள் தலையில் இடி விழுமோ -என்றானே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் –

—————————————————————————————–

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

ஆப்பு ஒழியவும் -சரீரங்கள் அழிந்து போய் இருந்தாலும்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே-பிரளய தசையில் இறகு ஒடிந்த பறவை போலே இருக்க கரண களேபரங்களை
இழந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் கொடுத்தமை சொல்லிற்று
கண்ணனே என்று இருப்பன் –எல்லாம் கண்ணனே என்று உறுதி கொண்டு இருப்பேன்
குணம் பரனே -திருக் குணங்களால் சிறந்த பெருமானே
மெய் தெளிந்தார் -உள்ளபடி ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் –
உன் சம்பந்தத்தையும் உன் அரிய பெரிய திருக் குணங்களையும் உணருமவர்கள்
காப்பு மறந்தறியேன்–எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும் நான் எம்பெருமானுக்கு
மங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் –

———————————————————————————————–

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-

வேறானார் நீறாக தெளிந்து –பகைவர்களாக துர்யோதனாதிகள் சாம்பலாய் ஒழிந்து போம் படியாக
-ஆஸ்ரித விரோதிகளை கொல்லுவது தர்மமே என்று தேறி
ஆஸ்ரித விரோதிகள் என்பதால் எம்பெருமான் தனக்கு விரோதிகள் என்று கொள்வான் அன்றோ –
கை காட்டிக்–பாண்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து –
களப்படுத்து -அந்த எதிரிகளை போர் களத்திலே கொன்று ஒழித்து -இவ்வகையாலே மண்ணின் பாரம் நீக்கி –
-பை தெளித்த-பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள் செய்ய வேண்டும் –
குற்றமே வடிவாக உள்ளவர்களை இகழ்ந்து ஒழிய வேண்டுமே அன்றி கைக் கொள்வது தகாது என்று திரு உள்ளம் பற்றலாகாது –
வேப்பிலை கைக்கும் என்றாலும் இத்தை கறியாகச் சமைத்து உட் கொள்ள வேணும் என்னும் விருப்புடையார்க்கு
அது கறி யாகும் அன்றோ -அப்படியே தெரிந்தவர்கள் என்னைக் கைக் கொள்ளுவார்கள் –
மெய் தெளிந்தார் என் செய்யார் –எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே
அடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ -அல்லது அவற்றில் திருக் கண் செலுத்தாமலோ
அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் –

—————————————————————————————-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

ஏன்றேன் அடிமை-அடிமையை ஏற்றுக் கொண்டேன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற இளைய பெருமாளை போலே உத்ஸாஹம் கொண்டு பாரித்தேன்
இழிந்தேன் பிறப்பு இடும்பை-சம்சார துக்கங்களில் நின்றும் நீங்கினேன்-தாபத்த்ரயத்தில் நின்றும் விட்டு நீங்கப் பெற்றேன்
ஆன்றேன் அமரர்க்கு அமராமை -ப்ரஹ்மாதி தேவர்கள் என் அருகில் நாட ஒண்ணாத படி ஞான பக்தாதிகளாலே நிரம்பினேன்
அவர்கள் கூசி அகல வேண்டும் படி பெரும் பதம் பெற்றேன் –
கடனாடும் மண்ணாடும் கை விட்டு–ஸ்வர்க்காதி லோகங்களையும் பூ லோகத்தையும் உபேக்ஷித்து –
பண்ணிய புண்யங்களுக்கு பலம் அனுபவித்தே தீர்க்க வேண்டும் பட்ட -கடனை தீர்ப்பது போலே
புண்ய பலன் அனுபவிக்கும் ஸ்வர்க்கத்தையும் -புண்ணியம் திரட்டும் இடமான பூ லோகத்தையும் வெறுத்து
மேலை-இடநாடு காண வினி–எல்லாவற்றுக்கும் மேல் பட்டுள்ளதாய் -அடியார் குழாங்களுக்குத் தகுதியான இடமுடைத்தான
திரு நாட்டை கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது –
ஆன்றேன்– – -திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்-
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே –வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் –

—————————————————————————————-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

எம்பெருமான் உன்னை – ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்-இனி அறிந்தேன்-இனி அறிந்தேன்-எம்பெருமானே உன்னை இப்போது
ருத்ரனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ –சகல ஜகத்துக்கும் காரண புதன் நீ –
கற்றவை நீ-இதற்கு முன்பு அறியப் பட்ட பொருள்கள் எல்லாம் நீ
கற்பவை நீ -இனி மேல் அறியப் படும் பொருள்களும் நீ
இனி அறிந்தேன்-என்பனவற்றை எல்லாம் அறிந்தேன்
நற்கிரிசை-நிர்ஹேதுக ரக்ஷணம் ஆகிய நல்ல வியாபாரத்தை யுடைய
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –நாராயணன் நீ -நன்றாகத் தெரிந்து கொண்டேன்
சகல பிரபஞ்சத்துக்கும் காரணனான நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி
சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும் அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து
அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார்
தேவதாந்த்ர பரத்வப்ரமத்தை தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப்பிரபந்தத்தின் முழு நோக்கு –

————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -73-84–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73–

அவன் வைத்த-பண்டைத் தானத்தின் பதி–அப்பெருமான் முன்பே சாதித்து வைத்த பரமபத மார்க்கம்
என்னத் தகுந்த சரம ஸ்லோகத்தை —பண்டத்தானத்தின் -நித்ய விபூதி
அவன் உபாயமாகும் இடத்து வேறு ஒரு உபாயத்தையும் எதிர்பாராமல் தானே பூரணமாய் இருந்து
கார்யம் தலைக் கட்ட வல்லனாகும் பெருமை -என்று பட்டர் அருளிச் செய்வாராம்
அவன் உண்ட போதும் உமிழ்ந்த போதும் நிரபேஷனாக செய்து அருளியததால் நிரபேஷத்வ உபாயத்வம் அறியாலாமே
நீல கண்டனும் நான் முகனும் பேர் ஆழியான் தன் பெருமை அறிவார்களா –
சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அவனையே உபாயமாக பற்றினவர்களுக்கே நித்ய விபூதி ஸூ லபமாகும் –

———————————————————————————————–

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

அஞ்சி வந்து அடி பணிந்த ஸூ முகனுக்கு அபயம் அளித்த வரலாற்றை அருளிச் செய்கிறார் –
தேவேந்திரன் சாரதி மாதலி புத்ரி-குணகேசி க்கு வரனாக -ஸூ முகன் – பிதாமகன் -ஆர்யகன் –தன் புத்ரனை
பெரிய திருவடி பஷித்து ஸூமுகனையும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக சொல்லி போந்ததை சொல்லி –பெரிய திருவடியையே
தோளிலே அடைக்கலமாக கொள்ளச் செய்து அருளினான் –
அடுத்த கடும் பகைஞ்ஞாற்கு ஆற்றேன் என்றோதி படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்தரவை
வல்லாளன் கைக் கொடுத்த மா மேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள் -பொய்கையார் -80 –
நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா
நெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –அடியேன் –நின்னடி
இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -4 -8 -4 –
ஆஸ்ரித விரோதிகளை க்ஷமிக்க மாட்டேன் -அடியார்களைக் கை விட்டேன் -இரண்டையும் காட்டி அருளிய செயல் அன்றோ-
-இதையே அவன் –தன்-வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனுக்கு என்கிறார்
பாய் திரை நீர்ப் பாழி--கடல் போன்ற குளிர்ந்த படுக்கை என்றும் திருப் பாற் கடல் என்றுமாம் –

—————————————————————————————————-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

மகிழாத -பெருமையாகக் கொண்டு மேனாணிப்பு கொள்ளாத என்றபடி
அரசன் -கனிகண்ணன்-வாக்கால் பாடல் பெறாத ஐதிக்யம் உண்டே-

——————————————————————————————

வைகுந்தச்-செல்வனார் சேவடி மேல் பாட்டு–நாக்கொண்டு மானிடம் பாடேன்–என்ற அத்யவசாயம் தமக்கு வந்த படி எங்கனே எண்ணில்
உலகில் உள்ள அனைத்து வாஸ்யங்கள் வாசகங்கள் எல்லாம் அவன் திவ்ய சங்கல்பத்தாலே என்று அருளிச் செய்கிறார் –

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பாட்டும் முறையும் –இயலும் இசையும்
படுகதையும் –பழைய சரித்ரங்களைக் கூற வந்த -இதிஹாசங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை அறிவிக்கும் புராணங்களும்
ஈட்டிய தீயும் -பஞ்சீ கரணத்தால் பல குணங்களும் தன்னிலே அமையும் படி சேர்க்கப் பட்ட அக்னியும் –
இரு விசும்பும் –பரந்த ஆகாசம் முதலான பஞ்ச பூதங்களும் –
-கேட்ட-மனுவும் -வேதங்களில் ஓதப்பட்ட மனு பகவான் அருளிச் செய்த தர்ம சாஸ்திரமும் –மனு சொல்வது எல்லாம் மருந்தாய் இருக்குமே -என்பர்
சுருதி மறை நான்கும் மாயன்-தனமாயையில் பட்டதற்பு-சங்கல்பத்தால் உண்டான தத்வங்களாகும் –

———————————————————————————————–

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

எனது குற்ற மிகுதியைக் கண்டு இகழாமல் -என்னுடைய ஸமஸ்த கருமங்களை உரு மாய்ந்து போம்படி
திரு உள்ளத்தை என் பக்கலில் வைத்து அருளினான் -என்கிறார்
கடல் வண்ணன்-தான் -தற்பென்னைத் தான் அறியா னேலும்-என்றது சர்வஞ்ஞன் தனது குற்றங்களை
அறிந்திலேன் -என்கிறார் –நைச்சியனுசந்தானம் பண்ணுகிறார்
எற் கொண்ட எவ்வினையும் -எற் கொண்ட-வெவ்வினையும் -பாட பேதங்கள் –வெவ்வினையும் மோனை இன்பத்துக்கு ஒக்கும் –

———————————————————————————–

எம்பெருமான் திருநாமத்தை யாதிருச்சிகமாக கேட்கப் பெற்ற பரமசிவன் விகாரம் அடைந்ததே வாசா மகோசரம்
என்றால் சாஷாத் கரிக்கப் பட்டவர்கள் படும் பாடு சொல்லக் கூடியதோ-

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78–

கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு என் செய்யுங்கோலோ -திருவாய் -6 -7 -3 -இங்கு ஈடு –
-என் செய்யுங்கோலோ –சொல்ல மாட்டாள் –தவிர மாட்டாள் –அழாது ஒழிய மாட்டாள் –எங்கனே படுகிறாளோ –
-நம்மையும் பிறரையும் விட்டு அவன் திரு நாமங்களை அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றோம்
-அவன் தன்னையே கண்டு அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றிலோமே
-அனுசந்தான வேளையில் போல் அன்று இறே கண்டால் பிறக்கும் விகாரங்கள் –
காமன் உடல்-கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த -வண்டலம்பும்-தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து
அங்கு-ஆர் அலங்கல் ஆனமையால் –ஆய்ந்தால் -மிகவும் அசைந்து போனமையை ஆராய்ந்து பார்த்தால் —கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல்-
உண்மை உணர்த்த -நீர் யாரை உபாசிக்கிறீர் -என்ற கேள்வி வியாஜத்தாலே-பகவான் நாமங்களை சிவபெருமானுக்கு உணர்த்த
–ஸ்மரித்த மாத்திரத்திலே -கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்றும் உள்ளம் எல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எல்லாம் கண்ண நீர் சோர-என்றபடி உள் குழைந்தான்-
ஆர் அலங்கல் ஆனமை–அலங்கல் மாலைக்கும் அசைவுக்கும் பெயர் -பூ மாலை போலே துவண்டு விழுந்தான் என்கை
ஆனமையால் -ஆல்-என்பதை ஆய்ந்து என்பதுடன் கூட்டி ஆய்ந்தால் -என்ற படி

————————————————————————————————

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

தம்-மெய்குந்த மாக விரும்புவரே–தங்கள் உடம்பை வியாதியாக எண்ணுவர் –
ஆதிப்பெருமானை அன்பினால் ஆய்ந்து கொண்டு -தங்களுடைய வாய்ந்த மனத்திலே அவனை இருத்த வேணும் என்னும்
விருப்பம் யுடையவர்கள் -தங்களுக்கு என்று இருப்பட்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை பெற்ற போது பெறுகிறோம்
என்று ஆறி இருக்கை அன்றிக்கே -கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ-என்று விரைந்தவராய்க் கொண்டு
-அதற்கு இடையூறாய் இருக்கிற இவ் உடல் என்று தொலையும் -என்று இருப்பார்கள் –
வடுக பாஷையில் –குந்தம் என்று வியாதிக்குப் பெயர் -என்பர் பூர்வர்கள் –

————————————————————————————————–

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

– உலகம்-பரந்து—பாடின வாடின கேட்டு –சிறந்த பாகவதர்கள் எங்கும் திரிந்து பாடின பாட்டுக்களையும் ஆடின ஆட்டங்களையும் கேட்டதனால் –
உலகம் உயர்ந்தோர் மாட்டே -சிறந்த பாகவதர்கள் -என்றபடி
படு நரகம்– வாசற் கதவு-வீடின–குரூரமான நரகங்கள் வாசல் கதவுகள் விட்டு ஒழிந்தன -நரகங்கள் புல் மூடிப்போனவே
ஆனபின்பு –
அறிவிலா மனுஷர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒலியும் அன்றே –
மேலொருநாள் வெள்ளம் பரக்க–முன்னொரு காலத்தில் பிரளய வெள்ளம் பரவின போது
உலகம் கரந்து காத்து அளித்த கண்ணன் -உலகங்களை எல்லாம் திரு வயிற்றிலே மறைத்து வைத்து
துன்பங்களைப் போக்கி ரஷித்த -கண்ணன் விரைந்து அடைமின் –

————————————————————————————————–

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

நீ -ஞானம் சக்திகளில் குறைவற்ற நீ
கற்ற மொழியாகிக் கலந்து -நான் கற்ற சொற்களுக்கு பொருளாக இருந்து கொண்டு -என்னோடு ஒரு நீராகக் கலந்து –
நற்றமிழை விதையாக வித்தி–இப்பிரபந்தத்தை பக்தியாகிய பயிருக்கு விதையாக விதைத்து
என்னுள்ளத்தை – விளைத்தாய்-என் இருதயத்தை விளையும் படி கிருஷி பண்ணினாய்
மனம் கதவு –என்றும் மனம் -காணலாம் என்றும்–மனமே எம்பெருமானை அடைய பிரதிபந்தகம் என்றும்-
-காண்பதற்கு உறுப்பாகும் என்றும் வெவேறு சமயங்களில் நினைத்து
குதையும் வினையாவி தீர்ந்தேன் -பிரமிப்பதையே தொழிலாகக் கொண்ட நெஞ்சைத் தவிர்ந்தேன் –
மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோஷயா -நெஞ்சினால் நினைக்க முடியாத ஞான சக்திகளை யுடையனான நீ
என் வாக்கில் வரும் சொற்களுக்கு பொருளாய் இருந்து கொண்டு என்னுடைய நெஞ்சம் ஆகிற நிலத்திலே
தமிழாகிற விதையை வித்தை பக்தியாகிற பயிர் செழித்து விளையும்படி செய்தாய் யாகையாலே
நிலைபெற்ற நெஞ்சுடையேன் ஆனேன் என்கிறார் –

—————————————————————————-

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-

விட்டு ஏத்த மாட்டாத வேந்து –நன்றாக ஸ்துதிக்க மாட்டாத இந்திரனும் –
என் உள்ளத்தோடு நீராக கலந்து கொண்ட நன்மைக்கு ஈடுண்டோ –

——————————————————————————————

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் 
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83–

ஆஸ்ரிதர் விஷயத்தில் எம்பெருமான் செய்து அருளும் உபகார பரம்பரைகளையும்- எத்தனை செய்தாலும்
திருப்தி அடையாமல் அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன்
வேந்தராய்-விஷ்ணுவின் அம்சம் இன்றி அரசராய் இருக்க முடியாதே –
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் –திருவாய் -4-4-8-
விண்ணவராய்-வருணாதி தேவர்களையும் இருப்பவன்
விண்ணாகி-ஸ்வர்க்காதி அனுபவங்களை அளிப்பவனும் அவனே
தண்ணளி –கிருபை -அருள் சேதுபவனுமாய் -/ மால் வண்ணன்-வியாமோஹமே வடிவு எடுத்தவன்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய்–எல்லா நன்மைகளும் செய்யும் -உறவினர் -தாய் மற்றும் எல்லாருமாய்
பின்னால் தான் கொடுக்கும்-இவ்வளவுக்கும் மேலே தன்னை முற்றூட்டாகக் கொடுத்து அருள்வான் –
தான் செய்யும் பிதிர்-இவை எம்பெருமான் செய்யும் அதிசயங்கள் –

———————————————————————————————

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பிதிரும் மனம் இலேன் -விஷயாந்தரங்களில் புகுந்து விகாரப்படும் நெஞ்சுடையேன் அல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடுஎதிர்வன்–ஞானத்தில் பரமசிவனொடு ஒத்து இருப்பான் -என்னலாமாயினும்
அவன் எனக்கு நேரான் –ஈஸ்வரோஹம் என்னும் -அந்த ருத்ரன் நித்ய தாசனான -என்னோடு ஒவ்வான்
-அதிரும்-கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –ஒலிக்கும் வீரக் கழலை அணிந்துள்ள ராஜாதி ராஜனான கண்ணபிரானையே
எந்நாளும் தொழும் படியாக ஆசைப்படுவதையே நித்ய கர்மயமாக ஏற்றுக் கொண்டு இருக்கிற அடியேன் –

——————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61-

எம்பெருமான் நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்ற பாக்யம் தன்னத்தே என்கிறார் –
மதுவை அளித்த எம்பெருமானை மனசில் கொண்டால் துக்கம் வாராது -அப்படி செய்ய வேண்டி இல்லாமல் தானே தம்மை விஷயீ கரித்தான் என்கிறார்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ்–இன்று ஒன்றி நின்று உலகை -சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –அது தானும் இன்று–என்பர் பெரியவாச்சான் பிள்ளை –இன்று பாடமே சிறந்தது –
ஏழ் -உலகை -ஒன்றி நின்று-ஆணைஓட்டினான்-சென்று -ஒன்றி நின்ற திரு-இன்று -எனக்கே தான்-எங்கும் தன் செங்கோல் செல்லும்படி
தனி யரசு செய்யும் திருமால் தானே எழுந்து அருளிப் பொருந்தி நெஞ்சில் வாழும் படியான செல்வம் இன்று எனக்கே வாய்த்தது என்றவாறு –

—————————————————————————–

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62–

திருமாலின் தேன் மிக்க திருத் துழாய் மாலையை அணிந்து கொள்ளப் பெற்றால் -ஸ்ரீ யபதியே சிறந்த தெய்வம் -என்று அறியலாகும் –
திருவிருந்த-மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடிப் பெறாமையாலே
திரு நின்ற பக்கம் திறவிது என்று -உணரப்பெற்றிலர்-என்ற கருத்தை உய்த்து உணர வேண்டும்
அபாங்க பூயாம் சோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்-பிராட்டி உடைய நிரம்பிய கடாக்ஷம் பட்ட வஸ்துவே பரப்ரஹ்மம் ஆனது -பட்டர் –
கரு நின்ற -கரு நின்றவர்களை -கர்ப்பப் பையில் தாங்கிப் பிறப்பது இறப்பது -இப்படிப் பட்டவர்களை
பரதெய்வம் என்று கற்றார் இடம் சொன்னால் முகம் சிதறப் புடைப்பார்கள் ஆதலால் அன்னவர்கள் இடம்
வாய் திறவாமல் கல்லார்க்கு உரைப்பாராம் -கல்லார் -கல்வி பயிலாத மூடர் –

——————————————————————————————-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-

தாரா கணப் போர்-நக்ஷத்ரங்களுடைய சுப அசுப நிமித்தமான சஞ்சாரத்தை
விரித்துரைத்த -ஜ்யோதிஸ் சாஸ்த்ர முகத்தால் வெளியிட்டு அருளினவனும்
வென்னாகத்துன்னை-பிரதிகூலருக்கு தீக்ஷணமான திருவனந்த ஆழ்வானுக்கு அந்தராத்மா ஆகிய உன்னை –
தெரித்து -அனுசந்தித்து –
எழுதி-வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்-பூசித்தும் போக்கினேன் போது–எதுக்கு எண்ணில்
தரித்து இருந்தேனாகவே–சத்தை பெறுவதற்காக -சாதன அனுஷ்டான ரூபமாக அல்ல –

———————————————————————————————–

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

தம் கால ஷேப க்ரமத்தை அருளிச் செய்தார் கீழ் இதில் பிறர் கால ஷேப க்ரமம் உபதேசிக்கிறார்
அவன் திருவடிகளில் புஷபங்களை பரிமாறி திரு நாமங்களை சொல்லி ஏத்தி இறைஞ்சுவதே வேண்டும் என்கிறார்
போதான விட்டிறைஞ்சி -ஏதேனும் பூ -புரிவதுவும் புகை பூவே -1 -6 -1 —

——————————————————————————–

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

எம்பெருமான் விஷயமாக இப்படிப்பட்ட சொல் மாலைகளை சிந்தித்து இருப்பதுவே நமக்கு உற்றது என்ற அத்யவசாயம் கொண்டேன் –
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் 9 -1 -7 –கண்டீர்கள் அந்தோ —-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே —
மாதவனை சொல்மாலைகள் கொண்டு யாதேனும் வல்லவா சிந்தித்து இருக்கிற தமக்கே வைகுந்தம் உண்டு -மற்றையோர்க்கு இல்லை –
மாதாயா--மாது -அழகுக்குப் பெயர் -தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார்
தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே-
மாதா -தாய் போலே அளிப்பவன் என்றுமாம் -/ மாலவனை-மாயவனை -பாட பேதம் –

———————————————————————————————

கீழே -யாதானும்-வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து-இல்லையோ சொல்லீர் இடம்–என்றதுமே எம்பருமான்
நம் இருப்பிடத்தை இவர் ஆசைப்படுவது என் -இவர் நெஞ்சு அன்றோ நமக்கு உத்தேச்யம் -என்று
இவர் திரு உள்ளத்தே புகுந்து அருள -அத்தை அருளிச் செய்கிறார் –

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66–

இதற்கு முன்னே சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -சகல வித கைங்கர்யங்களுக்கும் உரிய திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி
இன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம் எனது நெஞ்சையே தனக்கு இடமாக அமைத்துக் கொண்டான் ஆயிற்று –
இப்படி அவன் தானே வந்து விரும்பப் பெற்ற பாக்யத்தால் -அடியேன் நளிர் மதிச் சடையனாவது நான் முகக் கடவுளையோ
நெஞ்சில் கொள்ளவோ வாங்கவோ இனி பிராப்தி எது -எம்பெருமானை அண்டை கொண்ட மிடுக்கு எனக்கே அன்றோ
திடமாக வையேன்-பரம் பொருளாக மனத்தில் கொள்ள மாட்டேன் / வையேன் நான் ஆள் செய்யேன் –-பரதத்வம் இன்னது என்று
கண்டு அறியத்தக்க ஸூ ஷ்ம புத்தி யுடையேனான நான் அந்த தேவதாந்தரங்களுக்கு தொண்டு செய்யவும் மாட்டேன் —வை -கூர்மை -என்றவாறு –
இப்படி சொல்வதற்கு காரணம் – வலம் -திருமாலின் பரிக்ரஹமாய் இருக்கப் பெற்ற மிடுக்கே யாம் –

————————————————————————————-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67–

எம்பெருமானை ஸ்துதிப்பதே நன்மை -நல் குலம் தரும் என்று நான் விஸ்வஸித்து இருக்கிறேன் -இதற்கு விபரீதமாக
கெடுதலை விளைத்தலும் ஆனாலும் -எம்பெருமானை எத்தகையே உத்தேச்யம் –
வலமாக -குலமாக-அன்றிக்கே மாட்டாமை தானாக -இருந்தாலும் ஸ்வயம் புருஷார்த்தமாக எம்பெருமானை ஸ்துதிப்பேன் -என்கிறார் –
குலம் தரும் செல்வம் தந்திடும் –வலம் தரும் மற்றும் தந்திடும் –நாராயணா என்னும் நாமம் —

—————————————————————————————

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

ஸ்வ புருஷ மபீ வீஷ்யே பாச ஹஸ்தம் வததி யம-கில தஸ்ய கர்ண மூல –பரிஹர மது ஸூதன ப்ரபந்நான்
பிரபுரஹம் அந்நிய ந்ரூணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –3 -7 -14 –
அவன் தமர் எவ்வினையாராகிலும் எம் கோன் அவன் தமர் என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால் ஆராயப்பட்டு
அறியார் கண்டீர் -அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் -பொய்கையார் –
கெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்–நம்மாழ்வார்
மூவுலகு யுண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -நாவலிட்டுழி தருகின்றோம்
நமன் தமர் தலைகள் மீதே -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
ஏத்தியுன் சேவடி எண்ணி இருப்பாரைப் பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாமல் சோத்தம் நாம் அஞ்சுதம் என்று
தொடாமை நீ காத்தி போய்க் கண்ண புரத்துறை யம்மானே-திரு மங்கை ஆழ்வார் –
திறம்பேல்மின் கண்டீர் -ஞாபகப் பிசகினால் அந்த தூதர்கள் அதிகாரம் செலுத்தினால் அனர்த்தம் விளையும்
திருவடி தன் நாமம்-மறந்தும் புறம் தொழா மாந்தரை –திருவடி -அடி -அடிகள் –ஸ்வாமிக்கு வாசகம் –
தேவதாந்த்ர பற்று இல்லாமையே முக்கியம் -அந்நிய சேஷத்வம் ஒழிவதே பிரதானம் -தேவர்களுக்கு சேஷமான
புரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை சம்சாரிகளுக்கு சேஷமாக்குகை –
மாந்தரை-பாட பேதம் -தப்பாகும் வெண்டளை பிறழும்
ராஜ மஹிஷியிடம் காதல் கொள்ளாதே என்பதை ரகசியமாக சொல்லுவது போலே இங்கும்
காதில் சொல்ல வேணும் -பிறர் அறிந்தால் பொல்லாது ஆகுமே –

————————————————————————–

கீழே எம்பெருமான் திருநாம பாவானத்வம் அருளிச் செய்து இதில் அதன் போக்யத்தை அருளிச் செய்கிறார் –
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானைக் கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோம் –பெரிய திரு -11 -7 -2 –

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69-

புவிக்கும் புவி யதுவே கண்டீர் -பூமியில் உள்ளவர்க்கு எல்லாம் நிழல் ஒதுங்க இடம் ஆவதும் புண்டரீகாக்ஷன் திரு நாமமே –
கவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்–எம்பெருமானை யாதிருச்சிகமாகக் கிட்டப் பெற்றேன்
-நான் கிருஷி பண்ணி பெற்றேன் அல்லேன் -விதி வாய்த்தது
வேதார்த்த ரகஸ்ய சாரார்த்தமும் இதுவே
கவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை –மற்றவர்களை பாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் திருட வேண்டும் –
-இவனே ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -அன்றோ –

——————————————————————————————–

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

லோக பிரசித்தம் அன்றோ –
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து–தான் ஒருவனாகி—ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்–
தான் ஒருவனாகி—இரு நிலத்தைச்-சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்–மூன்று இடங்களிலும் அன்வயம் –
யானொருவன்- வறிகின்றேன் அல்லேன் –உலகம் எல்லாம் அறியும் -அன்றோ –

————————————————————————————————-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று-ஓதிய வாக்கதனை கல்லார்–சரம ஸ்லோகத்தையும்-அதன்-பொருளையும்
-அறியப் பெறாதவர்கள் -தத்வ ஞானம் பெறாதவர்கள் –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி –
-உபநிஷத் சாரம் -இதுவே -இத்தை அறியாதவர் -மெய்ஞ்ஞானம் இல்ல்லாத ஏதிலாராம் –சம்பந்தம் இல்லாதவர் -பகைவர் என்றபடி -த்விஷத-என்றபடி –
சேயன்–மிகப் பெரியன் –அணியன் -சிறியன்–அரியனாயும் எளியனாயும் இருப்பான் என்றவாறு –

———————————————————————————-

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

முத்தி மார்க்கம் தெரியாமல் சம்சாரத்தில் உழலும் ஆத்மாக்களுக்கு
இல்லறம் -என்னும்-சொல்லறம்--க்ருஹஸ்த விஹித தரமமாக -கர்மா யோகம் தஞ்சம் என்று சாஸ்திரம் சொல்வதும்
சொல் அல்ல -பிரமாணம் அல்ல
இல்லேல் துறவறம் இல் என்னும் சொல்லும் -அன்றிக்கே ஞான யோகம் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களை
சொல் அல்ல -பிரமாணம் அல்ல -ஞான யோகம் சன்யாசம் என்றும் துறவறம் எண்டும் சொல்லக் கடவது இ றே –
இல்லேல் அல்லற அறம் என்னும் சொல்லும் -பக்தி யோகம் -தேச வாசம் திரு நாம சங்கீர்த்தனம்
-இவை உபாயங்கள் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களும்
சொல் அல்ல -பிரமாணம் அல்ல –
-நல்லறம் ஆவனவும் -நல்ல தர்மங்களான திரு நாம சங்கீர்த்தநாதிகளும்
நால் வேத மாத்தவமும் –நான்கு வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்கள் எல்லாம் –
நாரணனே-ஆவது-ஸ்ரீ மன் நாராயணன் உடைய அனுக்ரஹத்தாலே பயன் அளிப்பன ஆகின்றன –
ஈதன்று என்பார் ஆர்-இவ்வுண்மையை மறுப்பார் யுண்டோ -அனைவராலும் அங்கீகரிக்கத் தக்கதே –
எந்த யோகத்தைப் பற்றினாலும் -முடிவில் அந்த அந்த யோகங்களினால் திரு உள்ளம் உகக்கும்
எம்பெருமானே பலன் பெறுவிக்க வல்லவன் -என்பதால் -அவன் திருவருளையே தஞ்சமாக கொள்ளுதல் ஏற்கும்
-இவ்வர்த்தம் சகல சாஸ்த்ர சித்தம்-சர்வ சம்மதம் -என்பதை –ஈதன்று என்பார் ஆர்–என்கிறார்

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -49-60–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

கீழே வானவரைக்காப்பான் மலை -என்றார் -அப்படி ரஷித்த ஒரு சேஷ்டிதத்தை அருளிச் செய்கிறார்
தலையாமைதான் ஒரு கை பற்றி -ஆமையான தான் இரு கை தலைப் பற்றி -என்றபடி
மேலே கொந்தளியாத படி மந்திரத்தின் உச்சியை ஒரு கையால் அமுக்கின படி –
இப்படி பரோபகாரமே போது போக்கானவன் திரு நாமங்களை வாயாராகி கூறுவதே வாய் பெற்ற பிரயோஜனம் –

————————————————————————

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

திரு கபிஸ்தலம் பள்ளி கொண்ட பெருமாளை மங்களா சாசனம் அருளிச் செய்கிறார்
காணியும் இல்லமும் கைப்பொருளும் ஈன்றோரும் பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் -சேணில் புவித்தலத்து இன்பமும்
-பொங்கு அரவம் ஏறிக் கவித்தலத்தில் கண் துயில்வோன் கால் –பிள்ளை பெருமாள் ஐயங்கார் -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
இந்த ஆற்றம் கரைக் கிடக்கும் கண்ணன் அருளிச் செய்த சரம ஸ்லோகமே நெஞ்சில் பதிந்து இருப்பதால் ஒரு வகைக் கெடுதலும் வராதே –

———————————————————————————————–

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

நிர்ஹேதுக கடாக்ஷ பூதனான எனக்கு ஒப்பார் உண்டோ -நீ அருளிச் செய்த மயர்வற மதி நலத்துக்கும் ஒப்பு உண்டோ –
சரம ஸ்லோகத்தின் படியே புறம்புள்ள உபாயங்களை ருசி வாசனைகளோடே விட்டு ஒழிந்து  உன்னையே பற்றி
நிர்ப்பரனாயும் நிர்ப்பயனாயும் உள்ளேனே
அநந்ய உபாயத்வ அத்யவசாயம் உடைய எனக்கு –ஸ்வ பிரயத்தனம் கொண்டு உன்னை
அடையப் பார்ர்க்கும் உலகோர் ஒப்பில்லை
சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டையில் நிற்கும் எனக்கு சேஷித்வ ரக்ஷகத்தில் நிற்கும் நீயும் ஒப்பில்லை
-அடிமைச் சுவடு அசாதாரணம் என்றவாறு
உன்னையே சகல புருஷார்த்தமாக கொண்டு உன் வடிவு அழகிலே ஈடுபட்ட
-நீ அருளிய மயர்வற மதி நலம் பெற்ற நான் விலஷணன் அன்றோ -என்றவாறு –

——————————————————————————————–

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

இவ்வுலகத்தோர் படியை விரித்து அருளிச் செய்கிறார்
பரம நீசர்கள் என்பதை -தக்கோர் -என்று இழிவு சிறப்பு -ஷேப யுக்தி -மஹா வியாபர்களாக நினைத்து இருக்கும் சம்சாரிகள்
-விலைக்காட்படுவர்-திருமந்திரத்தின் பொருளுக்கு எதிர்த்தடையாக வயிற்று பிழைப்புக்கு பிறர்க்கு அடிமை பட்டு
-காசுக்கும் கூறைக்கும் கற்றை நெல்லுக்கும் தங்களை விற்று இருப்பர்
விசாதி ஏற்று உண்பர்-தங்கள் வியாதி நோய் மட்டும் இன்றி பிறர் நோய் வியாதி தீர எருமைக்கடா தானம் செய்ய
அத்தை நாலு நாள் ஜீவனத்துக்கு என்று வேறே ஏற்பார்கள் -அவ்வழியால் அவர்கள் வியாதியையும் அனுபவிப்பார்கள் –
தலைக்காட் பலி திரிவர் –பிழைத்தால் பிரஜை தலை அறுத்துக் கொடுப்பதாக ஷூத்ர தேவதைகளுக்கு பிரார்த்தித்து
அப்படியே அறுத்துக் கொடுத்து ஒழிவர்-
அபிராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்-ப்ராப்த விஷய
ப்ரவணனுக்குச் சொல்ல வேண்டா இறே -ஸ்ரீ வசன பூஷணம்
இதற்கு மா முனிகள் -தாசி ஒருத்திக்கு நோய் விஞ்ச அவள் இடம் அன்பு கொண்டவன் தலை அறுத்து தர பிரார்த்தித்து
-நோய் தீர்ந்த வாறே அரிந்து கொடுத்த கதை உண்டே -முலைக் கால்–முலை வழியே
விடமுண்ட வேந்தனையே வேறாக -மற்றப் பேர் ஸ்துதிப்பதில் காட்டிலும் விலக்ஷணமாக
-வேறாக -பாட பேகம் ஒவ்வாது -தளை கெடுவதால் –

——————————————————————————————

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53-

கல்லாதவர் இலங்கை -கற்று உணர்ந்த மஹாநுபாவன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் துரத்தப்பட்டானே
–பொல்லாத-தேவரைத் -அமங்களுக்கு கொள்கலம் –ச்மாசானமே இருப்பிடம் –எலும்பு மாலை -விருபாக்ஷன் –
-கண் கொண்டு காணக்-அமங்களங்களை ஸஹித்துக் கொண்டாலும் ஸ்வ தந்திரமாக
கார்யம் செல்ல வல்லமை இல்லாதவர்கள் அன்றோ
திரு இல்லாத்-தேவரைத் தேறேல்மின் தேவு—ஸ்ரீ யபதித்தவம் இல்லாதவர்கள் -இவர்களைத் தெய்வங்களாக நினைக்க வேண்டாம்
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் -பேணிலும் வரம் தர மிடுக்கிலாத தேவரை -ஆணம் என்று
அடைந்து வாழும் மாதர்கள் -எம்மாதி பால் -பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்க கிற்றிரே –திருச் சந்த விருத்தம்

———————————————————————————

தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

சகல தெய்வங்களும் சகல பதார்த்தங்களும் எம்பெருமானுக்கு சேஷ பூதம் என்று
அறிய மாட்டாதார்கள் எவ்வளுவு கற்றாலும் பயன் இல்லையே
தேவராய் நிற்கும் அத்தேவும் -நெடுமால் —
அத்தேவரில்-மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் நெடுமால்
–யவராய்-நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்று அறியவாருடைய கல்வியே பயன் பெற்றதாம்
அனைத்துக்கும் அந்தர்யாமி அவன் அன்றோ -த்ரி மூர்த்தி அவதாரம் எடுத்ததும் திருமாலே
இப்படி பிரித்து பிரித்து சொல்லுவான் என் –சர்வம் அவனே என்ற
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் நிலையே கற்று உணர்ந்தார் நிலை என்றவாறு –

———————————————————————————————

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

தேவதாந்தர போஜனம் செய்து அல்ப அஸ்திர பயன்களை பெற்று போவார் மலிந்து உன்னை உணர்ந்து
ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பார் இல்லையே என்று வருந்தி அருளிச் செய்கிறார் –
அமரர் கடை -மனை வாசல் -நின்று கழல் தொழுகிறார்கள் –
கடை நின்ற அமரர் -தாழ்ந்த தெய்வங்கள் என்றுமாம் –
இடை நின்ற இன்பத்தராவார் -அல்ப அஸ்திரத்தவாதி -இன்பம் என்றது பிரமித்தவர்களின் கருத்தால்
இடை -சம்சார ஸூ கமும் இன்றி –நிரதிசய மோக்ஷ ஸூ கமும் இன்றிக்கே ஸ்வர்க்க ஸூ கத்தை யுடையவர் என்றவாறு –

——————————————————————————–

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56

அல்ப பலன் தருமவர்களே ஆகிலும் ரக்ஷிக்க வல்லவர்கள் இல்லை என்பதை பாணா ஸூர விருத்தாந்தத்தால் காட்டி அருளுகிறார்
அவர் இவர் என்று இல்லை -உயர்ந்தவர்கள் – தாழ்ந்தவர்கள் என்றவாறு
அநங்க வேள் தாதை -மன்மதன் -ப்ரத்யும்னனுக்கு ஜனகன் –
ருத்ர தாண்டவத்துக்கு பாணன் மத்தளம் தட்ட மகிழ்ந்து ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிலையும் வலிமை செல்வம் அருளி
-சபரிவாரனாய்க் கொண்டு வாசலில் காவலும் செய்தான் -பரிவாரங்களோடு தோற்றதால் —ஒருங்கு தோற்றான் -என்கிறார் –
திருப் பாற் கடலை உவரிக் கடல் என்றது -சமுத்திர சாம்யத்தைப் பற்ற –

—————————————————————————————-

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

அனைத்தும் அவன் இட்ட வழக்கு -புண்ய பாபங்கள் அனுக்ரஹம் இலக்கணவர்களை நல்வினை செய்வித்தும் –
நிக்ரஹம் இலக்கணவர்களை தீ வினை செய்வித்தும் –
நல் வினைகள் பயனாக தேவ யோனியில் பிறப்பித்தும் -தீ வினைகள் பயனாக அசுர யோனியில் பிறப்பித்தும்
-இரண்டின் பயனாக பூமியில் பிறப்பித்தும் -சங்கல்ப அதீனம் என்றவாறு
அவன் திருநாமங்களும் –என் நெஞ்சமானவர் –ஓன்று போலும் -நெஞ்சத்திலே சத்தை பெற்று இருப்பவர்
அன்றிக்கே கௌரவம் தோற்ற நெஞ்சினார் -என்னவுமாம்
வானவர் தானவர் தாரகை -பூமி -என்நெஞ்சம் -ஆகிய எல்லாம் பெரும் குருந்தம் சாய்த்தவனே -என்றவாறு –

————————————————————————

என் நெஞ்சமேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –

தன் நெஞ்சத்தில் அஞ்ஞானம் போக்கி அங்கே நிரந்தர வாசம் பண்ணி அருளும் ஆபத் ரக்ஷகன் –
பக்கல் அன்பு விளைந்தமையை அருளிச் செய்கிறார்
மண்ணளந்தான் -என்னெஞ்சு -மேயானை – மண்ணளந்த திருக் கோலத்துடன் நெஞ்சகத்தில் இருந்தமையையும் அருளிச் செய்கிறார்
இருள் நீக்கி -வினை எச்சம் அன்று -பெயர்ச் சொல் -இருளை நீக்குகின்றவன் என்றபடி -அத்தாலே எம்பிரான் -உபகாரகன் -ஆனான் –
இப்படிப்பட்டவனை நெஞ்சில் கொள்ளாத ருத்ரனுக்கும் ப்ரஹ்மஹத்தி தோஷம் தன் உகப்பாக செய்து அருளி
உகந்த எம்பெருமானுக்கு என் அன்பைக் செலுத்தினேன் என்கிறார் –

———————————————————————————

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

அன்பாவாய் -அன்பே வடிவானவன் -அளவற்ற அன்பு கொண்டவன் என்றபடி –
ஆரமுதமாவாய் அடியேனுக்கு-இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய்–தாய் தந்தை மக்கள் மனைவி மற்றும் அனைவராலும்
உண்டான ஆனந்தம் உன்னை அடைந்து பெற்றேன் –இப்படியெல்லாமும் ஆவதற்கு ஆதி ஸ்ரீ யபதி–
பொன் பாவை-கேள்வா கிளரொளி -பிராட்டியைக் கைப் பிடித்ததனால் பெற்ற தேஜஸ் ஸூ –அப்ரமேய ஜனகாத்மஜாயா
என் கேசவனே கேடின்றி-ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் –அடியேனான நான் ஆள்பட்டேன் -காத்து அருள்வாய் -என்கிறார் –

—————————————————————————

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60–

ஆட் பார்த்து உழி தருவாய்-நம்மைத் தேடிப்பிடிக்க அலைந்து திரிகின்றானே –ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
-ஞானானம் லப்தவா –பரமார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
நம் வலையில் சிக்குவார் என்று நீ திரிய -யாதிருச்சிகமாக சிக்கிக் கொண்ட என்னை விட்டு விடலாகாது -என்கிறார்
கண்டு கொள் என்றும் நின்-தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை –இப்போது உன் திருவடிகளையே நோக்கிக் கொண்டு
இருக்கும் நிலைமையை என்றுமே இருப்பதாக நீ கடாக்ஷித்து அருள வேணும்
கேட்பார்க்கு-அரும் பொருளாய் நின்ற–நீயே காட்டக் கண்டு -உன் திருவருளால் அறியும் அத்தனை –
வரங்கனே உன்னை-விரும்புவதே விள்ளேன் மனம்—இத்தை கண்டு கொள் –என்று கூட்டிப் பொருள் கொள்க –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -37-48–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37-

பஞ்ச பூதங்களும் -சந்த்ர ஸூ ர்யர்களும் -மேக மண்டலங்களும் -ஜீவ ராசியும் -எண் திசையும்
-ஆவரணங்களும் -அண்டம் எல்லாம் -எம்பெருமானுடைய விபூதிகள் -என்கிறார்
கொண்டல் பெயரும் -மேகங்களும் -சேதன வர்க்கமும் -/ மேகம் என்று பெயர் பெற்றவையும் -என்றுமாம்
அகைப்பு -எழுச்சி -முயற்சி -திரு உள்ளத்தில் சங்கல்பம் என்றபடி –

——————————————————————-

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38-

அகைப்பில் மனிசரை -உஜ்ஜீவிக்க மாட்டாத மனிசர்களை
ஆறு சமயம்-புகைத்தான் –நீசங்களான ஆறு மதங்களில் புகும்படி செய்தவனும் –
சாக்கியர் -உலுக்கியர் அக்ஷபாதர் ஷபணர் கபிலர் பதஞ்சலி -முதலானோரால் ப்ரவர்த்திக்கப் பட்ட அவைதிக மதங்கள்
-உகைக்குமேல் -உதாசீனாய் இருந்து விடும் பக்ஷத்தில் -உபேக்ஷித்தல் -தேவதாந்த்ரங்கள் இடத்தில் ஆவேசியாத பக்ஷத்தில்
அஹங்காரப்படுகிறவர்களை லோக வழக்கில் வாலாட்டும் என்பார்களே
எவ்வாறு செய்கையும் -தேவதாந்தரங்களுக்கு -ஹவிஸ் அளிப்பது அந்தர்யாமித்வம் உத்தேசித்து அன்றோ
அழைப்பு -தேவதைகளின் ஆஹ்வாநமும்
அவரவர் தமது தமது அறிவகை வகை அவரவர் இறையவர் என வடி யடையவர்கள் -அவரவர் இறையவர் குறைவலர்
இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே-திருவாயமொழி -பாசுரத்தில் அன்வய முகத்தால் -சொல்வதையே
வியதிரேக முகத்தில் சொல்லிஎம்பெருமான் ஆவேசியா விட்டால் ஒரு தெய்வமும் ஒரு பலனும் அளிக்க வல்லதாக மாட்டாது -என்கிறார் –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் உலகில்லை என்றே –4 -10 -6 –

———————————————————————–

உலகோர் எக்கேடு பெற்றாலும் பெறட்டும் -என்னுடைய பொழுது போக்கு நல்லதாக இருக்கப் பெற்றேன் -திருவேங்கடமுடையானை சேவிக்க வேணும் என்றும் திரு வேங்கடத்திலே நித்யவாஸம்
பண்ண வேணும் என்றும் ஆசைப்படா நின்றேன் -என்கிறார்

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-

கூடல் — கூடல் இழைத்தல்-கூடல் வளைத்தல்-கூடல் குறி –பெண்டிற்கே உரித்தாகையாலே ஆழ்வார் நாயகி
சமாதியில் அருளி செய்கிறார் என்பர் அழகிய மணவாள ஜீயர் –
வரண்டி வந்திழிய–திரட்டிக்  கொண்டு வந்து இழிய-வரண்டி–பாட பேதம்
மணிகளை கண்டு இவை கொள்ளி வட்டம் என்று அஸ்தானே பய சங்கை பண்ணுமா யானைகளும் -மலைப் பாம்புகளும்
-யானைகள் ஓடி மலைப் பாம்புகளின் வாயிலே விழும் படி என்றுமாம் –
யானை வெருவவும் அரவு ஒடுக்குகவும் -என்றும் யானை வருவி அரவின் வாயிலே ஒடுங்கவும் என்றுமாம் –

—————————————————————————-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

யாதிருச்சிகமான யுக்தி மாத்திரத்தாலே -மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கை யதுவே
-பரமபதமும் சித்தம் என்னும் படி பேறு பெற்றேன்
மாடி மாங்காயிட்டு அருளுவதே என்று அனுசந்தித்து ஈடுபட நின்றேன் –
வேதைகி சமய-மிதுனமே -நூலாளன்-நூலாட்டி -அசமதாதிகளால் பரம்பரையாக ஓதப்படும் நூல்களாலே
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாத ஸ்திரமாக உள்ள எம்பெருமான் திருவடிகளில் அகப்பட்டேன்
அவனை சாஸ்திரங்களில் நின்றும் பிரிக்க ஒண்ணாதா போலே அடியேனையும் அவன் திருவடிகளில் நின்றும் பிரிக்க முடியாதே
நான் அஸஹ்ருதயமாக சொன்ன சொல்லையும் சஹ்ருதயமாகக் கொண்டு மாடி மாங்காயிட்டு விஷயீ கரித்து
அருளியதால் அவன் திருவடிகளுக்கே அற்றுத் தீர்ந்தேன் –

—————————————————————————————-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

நீ திருவேங்கடமலையை விட்டு என் உள்ளத்தே வந்தாயாயேயாயினும் -நீ வருவதற்கு சாதனமான அந்த திரு மலையை
சேவிக்க காதல் கொண்டுள்ளேன் -நீ உகந்து வாழ்ந்த இடம் என்றே எனக்கும் உத்தேச்யம் -திருவோண திரு உத்சவத்தில்
மங்களா சாசன ஒலியும்-பேரொலி செய்து மாணிக்கங்களை உதிரும் அருவி ஒலியும் நிறைந்த திரு வேங்கடம் –
நான் உன்னை திருவேங்கடத்தில் சேவிக்க விரும்ப நீயோ அங்கு நின்றும் என் உள்ளத்தே வந்து உறைகின்றாயே -என்றுமாம் –

————————————————————————————-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42–

சென்னியோங்கு தண் திருவேங்கடத்தை சென்று வணங்குமின் என்று உபதேசிக்கிறார் –சேண் உயர் –மீமிசைச் சொல்
நீர்மையால் -பாபங்களை போக்குவதே அன்றோ ஸ்வபாவம் திரு வேங்கடத்துக்கு
வெம் கொடும் பாவங்கள் எல்லாம் வெந்திடச் செய்வதால் நல் மங்கலம் பொருந்தும் சீர் வேங்கடமலை யான தொன்று -புராணச் செய்யுள் –

——————————————————————————

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-

அந்தி தோறும் வந்து திருவந்திக் காப்பிடுவார்கள் -கங்குல் இரவுக்கு வாசகமாயினும் இங்கு அந்திப் பொழுதை குறிக்கும் –
நளிர் மதிச் சடையன் -சந்த்ர மௌலி -திங்கள் சடை ஏற வைத்தான் -என்கிறார்
குடை -சத்ர சமராதி உபகரணங்களும் உப லக்ஷணம்
புகுந்தார்கள் -புகுந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றவாறு
அணிவான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் –

————————————————————————————-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

கிளர் ஒளி இளமை கெடாமல் இருக்கப் பெற்ற குமரர்களே-தண்டு காலா வூன்றி வூன்றி தள்ளி நடக்கும் முதுமையில்
திருமலையை நினைக்கவும் முடியாதலால் -இப்பொழுதே திருமலைக்கே போவீர் -என்கிறார்
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க -தாமே யறிகிற்போம் நல் நெஞ்சே -பூ மேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை பாதமத்தாலே எண்ணினான் பண்பு –பொய்கையார் -45 –
ஆய்ந்த வருமறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண் —பேயார் -77
புராணங்களில் இல்லாமல் ஆழ்வார்கள் மட்டுமே சாஷாத் கரித்த விருத்தாந்தம் —

——————————————————————————————-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-

நித்ய ஸூரிகளுக்கும் திருமலை ப்ராப்யம் -ஆதாரத்துடன் திருவடித்த தாமரைகளில் புஷ்பங்களை சமர்ப்பித்து
பல்லாண்டு -ஜிதந்தே புண்டரீகாக்ஷம் -என்று சொல்லி படுகாடு கிடப்பர்–ஸ்தாவர பிரதிஷடையாக நித்ய வாசம் செய்து
நித்ய கைங்கர்யம் செய்வார் -என்றபடி -விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வெற்பு அன்றோ /
பரிந்து -அஸ்தானே பயசங்கை பண்ணி பரிந்து -/ வைப்பு நிதி போலே –

———————————————————————————-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியைச் செஞ்சுடர் நா வளைக்கும் திருமால் இரும் சோலையதே -பெரியாழ்வார் -4 -3 -2 –
சந்திரனைப் பிடித்து நந்தா விளக்காக -வைப்பதாக -ஆழ்வார் திருமலையில் இருப்பே சத்வ குணம் வளர்விக்குமே-என்பதாலும்
வாயும் திரை யுகளும்-2 -1 – போலே அனைத்தும் தம்மைப் போலவே பகவத் பிராவண்யராய் இருப்பாரே -என்றுமாம் –
ஆடுது மேல்ஆடு திரேல் -பாட பேதங்கள் –

—————————————————————————————–

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

அவனைப் போலே இங்கு உள்ள அனைத்தும் உத்தேச்யம் -யாளிகள் – சிங்கங்கள் -நவ ரத்தினங்கள் -புஷ்ப்ப வ்ருக்ஷங்கள்
-நவ மணிகள் கொழித்து கொண்டு வரும் அருவிகள் -காடுகள் -குரங்குகள் -வேடர்கள்
-இவை எல்லாம் யுடைத்தான திரு மலை மணி வண்ணனுடைய திருப்பதி –

—————————————————————————————–

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48-

அசுர ஜாதியால் வரும் துன்பங்களை தேவர்களுக்கு போக்கி அருளியது போலே ஆஸ்ரிதர் துன்பங்களை
தொலைத்து அருள எழுந்து அருளி இருப்பவன் திருவேங்கடத்தான் என்றவாறு –
விண்ணோர் மெய்மையால் -நித்ய ஸூ ரிகள் உண்மையான பக்தியால் -ஸுலப்யம் கண்டு அனுபவிக்க ஆஸ்ரயிப்பதும் இவனே –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -25-36–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

அவன் செய்து அருளும் கார்யங்கள் எல்லாம் ஆஸ்ரிதற்காகவே -ஸ்வயம் பிரயோஜனத்துக்கு அன்று -என்கிறார்

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-

வஜ்ரத்தை இளகுவித்து உண்பார்களாம் உடல் புஷ்ட்டி அடைய -மஹா பலி யுடைய அஹங்கார பிரயுக்தமான
வயிர வழக்கைப் போக்கி அருளினாய் -எல்லாம் ஆஸ்ரிதனான இந்திரனுக்காக் செய்தது அன்றோ -அனைத்தும் பரார்த்தமே –

————————————————————————-

அநந்ய பக்த்த்ய நிஷ்டையை அருளிச் செய்து -அடியேனுக்கு இந்நிலைமை நீடித்து இருக்கும் படி
கிருபை பண்ணி அருளிச் செய்ய வேணும் என்கிறார்

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்குமாறு–26-

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா வூழி வூழி த்வம் செய்தார் என்கிறபடியே
-சாதன அனுஷ்டான நிஷ்டன் – ஜடாதரனே சாக்ஷி –அவனே சடை புனைந்து உன்னை உபாசியா நிற்க
-நான் உன்னை ஒழிய ஒரு ஷூத்ர தேவதையைப் பணிவேனோ என்கை
–ஊசியின் பின் நூல் வரும் படி செய்ய -ஐதிக்யம் -வலது திருவடி பெரு விரலில் கண்ணில் -பெரும் ஊழி கனல் —
பக்தி சாரார் -என்றானே ருத்ரன் –இவையெல்லாம் திரு உள்ளம் பற்றி ருத்ரனே சாக்ஷி என்கிறார் –
சாக்கியம் கற்றோம் சமண் கற்றோம் சங்கரன் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் —விட்டு ஒழிந்து-
அநந்ய பிரயோஜன ஸ்ரீ வைஷ்ணவ நிஷ்டை பெற்று -அத்தை நிலையாக கொள்ள கடாக்ஷித்து அருள பிரார்த்திக்கிறார் –

————————————————————————

தம்முடைய அத்யாவச்யத்தையும் -அதுக்கு அடியையும் அருளிச் செய்கிறார் –

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-

இவனே காதலித்து தன் பேறாக வந்து சேர பெற்ற எனது நெஞ்சில் நித்ய வாசம் ஓன்று தவிர மற்று எதுவும் புருஷார்த்தம் இல்லை என்கிறார் –
ஸ்வயமாகவே திருவடிகள் வந்து சேவை சாதித்து அருளிய பின் வேறு ஒன்றும் ப்ராப்யம் இல்லை என்ற அத்யவசாயம் உண்டாயிற்று –
காண வல்ல எனக்கு -என்று பிரயோகிக்க வேண்டும் -இடத்தில் –யான் காண வல்லேற்கு-என்ற பிரயோகம் –

——————————————————————————–

இராமபிரானுடைய வீரச் செயல்களை அனுபவிக்கிறார் -உகப்பு -லீலையான வியாபாரம் –

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-

ஆழ்வார் அகக்கண்களுக்கு ஸ்பஷ்டமாக தோற்றி விளங்குவதால் –கட்டிய சேது இது -என்று கண் முன்னால் கண்டது போலே பேசுகிறார் –
அதே போலே ஸூ க்ரீவன் இடம் பஷபத்தித்துச் செய்து அருளின காரியமும் இப்போதே செய்து அருளியது போலே ஆழ்வாருக்குத் தோன்றுகிறது
வீழ்த்ததுவும் -பாட பேதம் -வெண் தளை பிறழும்
திரு சேது அணை காட்டியதும் வாலியை வதைத்ததும் இராவணனைக் கொன்றதுவும் அவலீலையாயச் செய்தவை என்கிறார் –

———————————————————————-

உகப்புருவம் தானே யொளியுருவம் தானே
மகப்புருவம் தானே மதிக்கில் –மிகப்புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-

எம்பெருமான் உடைய திவ்ய மங்கள விப்ரஹ வைலக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் –உகப்புருவன் தானே –
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே —
கர்மம் அடியாக இல்லாமல் இச்சா பரிக்ருஹீத திவ்ய மங்கள ரூபம் அன்றோ
ஒளி யுருவன் தானே -குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு –தேஜஸ் புஞ்சமே வடிவு கொண்டால் போலே
மகப்புருவன்–மகப்பு -மஹத்புதம் -அற்புத உருவம் என்றவாறு
கும்பகர்ணன் புருவங்கள் இடைவெளி ஒரு காதம் -புருவம் ஒன்றுக்கு ஓன்று –மிகப்புருவம் ஒசணையான் -யோசனை -யோஜனை என்றபடி

——————————————————————————————————

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

அவன் என்னை எய்தாமல் காப்பான்–சம்சாரம் ஆகிற நாடக சாலையில் பிரவேசிக்க ஒட்டாமல் காத்து அருள்வான் –
திருப் பாற் கடல் போன்ற உகந்து அருளின ஸ்தலங்களை விட்டு என் நெஞ்சில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் ஆகா நின்றான்
குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி துயில் கொள்ளும் அழகைக் காட்டி
என்னை ஆட்படுத்திக் கொண்ட எம்பெருமான் இங்கனம் செய்து அருளி வேறு எங்கும் பொருந்தப்படி இருக்கிறான்
நாடக சாலையில் பல வேஷம் பூண்டு கொண்டு வருவது போலே அநேக சரீரங்களை ஆத்மா பரிஹரித்து வருவதால்
சம்சாரத்தை அரங்கு என்கிறார் -பிறவி மா மாயக் கூத்து -திருவாய் மொழி -8-4-1-

——————————————————————————–

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

தாரகையுள்–இந்நிலை உலகில் உள்ளார் எல்லாரும் அறிய -எம்பெருமான் பெருமை நாடு நாற்றமும் நன்கு அறிந்ததாய் இருந்தும் –
அவனை ஏத்த மாட்டாத பாவிகள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்க உரியவர்கள் -என்கிறார்
அவன் பெருமை அறிந்து ஏத்தினால் உஜ்ஜீவனம்-இல்லையேல் மாறி மாறி பல பிறப்பும் அடைந்து கர்ப்பப் பைகளில்
அடையும் துன்பங்களை பேசப் புக்கால் மஹா பாரதம் ஆகுமே
தாராணியும் -பாட பேதம் –
விடு சாபம் -விடு -உபசர்க்கம் -சாபத்தை -என்றவாறு –

———————————————————————————-

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள-நம்மால் வியவஹிக்கப்படுகின்ற பதார்த்தங்கள் எல்லாம் அவன் சங்கல்ப அதீனம்
திரு வயிற்றின் உள்ள-சங்கல்பத்தில் சத்தை பெற்று இருக்கின்றன
உதைப்பளவு போது போக்கின்றி-ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் -எப்போதும் -கண் அமைப்பதும் கை நொடிப்பதும் உதைத்து என்றபடி
அடைமினோ -ஒரு நிமிஷ காலமும் தாமதியாமல் விரைந்தோடி சேர்மினோ என்றபடி
வதைப் பொருள்-தானே – அபார்த்தம் ஆகும்
சங்கல்ப மாத்திரத்தாலே சத்தையை விளைக்கும் எம்பருமான் குணங்களில் ஈடுபடாதவர்கள் அசத்துக்கள் ஆவார்
-குணத்துப் படாதவர் என்னாமல் படாதது -என்றது வெறுப்பினால் குட்டிச் சுவர் என்னுமா போலே
நீயும் அசத்தாகாமல் ஆய்ந்த குணத்தான் -சிறந்த திருக் கல்யாண குணங்களை யுடைய எம்பெருமான் -திருவடிகளை
ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

—————————————————————————————–

அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை
பிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப்பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-

கோப்பின்னும் ஆனான்-பின்னும் கோ வானான் -தன்னுடைய சேஷித்வத்தை நிலை நிறுத்திக் கொண்டான் –
குறிப்பு-–அடியாரைக் காத்து அருள வேணும் என்கிற திரு உள்ளத்தினால் –
ஈஸ்வரன் பண்ணி அருளிய ஆனைத் தொழில்கள் எல்லாம் தன்னுடைய சேஷித்வம் நிலை பெறவே -என்கிறார்
அரவு ஆட்டி -அரவாட்டி -காளியனை கடலில் விட்டு வாழும் படி -என்றும் வாட்டி -வலி அடக்கி என்றுமாம்
இது போன்ற விரோதி நிரசன சேஷ்டிதங்களைச் செய்து அருளி சேஷித்வம் -ஈஸ்வரத்வம் -நிலை படுத்திக் கொண்ட சர்வேஸ்வரன் என்றவாறு –

——————————————————————————————-

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

ஏத்த-குறிப்பு எனக்கு -ஸ்திதிக்க எனக்கு ஆசை / நன்மை பயக்க -குறிப்பு எனக்கு -இடைவிடாமல்
நித்ய அனுபவம் செய்வதால் உண்டாகும் பெருமை உண்டாக்கிக் கொள்ள எனக்கு குதூஹலம்
உகந்து அருளின ஸ்தலங்களில் வந்து எழுத்து அருளி என்ன அடிமைக் கொள்ள ஸூ லபனாய் இருக்கும்
எம்பருமான் திருவடிகளை மறந்திருக்க என்னால் முடியுமோ
உகந்து அருளின தேசங்களில் சென்று மங்களா சாசனம் பண்ணி இடைவிடாமல் அனுபவித்து ஆத்மாவுக்கு
நன்மை விளைவித்துக் கொள்ள ஆசை கொண்டு இருக்கிறேன்
எவ்வித கருமங்களும் துக்கங்களும் அணுகாத படி ரக்ஷித்து அருளும் எம்பெருமானுடைய திருவடிகளை
எவ்வாறு உபேக்ஷித்து இருக்கும் இருக்க முடியும் என்கிறார்
வெவ்வினை நோய் –பாட பேதம் –

———————————————————————————————

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

அர்ச்சாவதாரத்தில் ஒருபடிப்பட -நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் -செய்து ஒரு நாளும் சோதி வாய் திறந்து பேசாமல்
இருப்பான் என்று அறிந்து வைத்தும் -பிரேமத்தின் கனத்தால் -அர்ச்சாவதார சமாதியையும்
குலைத்து பரிமாறப் பாரிப்பார்களே ஆழ்வார்கள் –
கொடியார் மடக் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியால் அல்லல் தவிர்த்த அசைவோ -அன்றேல் இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே–திருவாய் -8-3-5-என்றும்
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசையத் தொடர்ந்து குற்றேவல் செய்து
தொல்லடிமை வழி வரும் தொண்டர்க்கு அருளித் தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் திருப் புளிங்குடி கிடந்தானே–9 -2-3-
இவரே -நடந்த கால்கள் நொந்தவோ –காவிரிக் கரைக் குடைந்தையுள் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசி வாழி கேசனே-என்கிறார்
அசைவு -அசவு -அயர்வு -பர்யாயம் /-கைரவிணி-புஷ்கரிணி பெயராலே திவ்ய தேசம் -குடும்பத்தோடு சேவை சாதித்து அருளுகிறார்
மா மயிலை மா வல்லிக்கேணியான் -என்றே ஆழ்வார்கள் ஈடுபடுவார்கள்

————————————————————————————

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

அணைப்பார் கருத்தானாவான்–அன்புடைய ஆஸ்ரிதர் நெஞ்சில் புகுந்தவன் ஆவதற்காகவே –
அவனுடையவர் அந்தரங்கம் புகுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டே திவ்ய தேசங்களில் சந்நிஹிதன் ஆகிறான்
போக்யாதிசயம் தோற்ற நாகத்தணை என்று மீண்டும் மீண்டும் அருளிச் செய்கிறார் –திருக்குடந்தை -திருவெஃகா -திரு எவ்வுள்ளூர் -தென் திருவரங்கம் -திருப்பேர்நகர் -அன்பில் -திரு பாற் கடல்-
இவையெல்லாம் சாதனம் -ஆஸ்ரிதர் திரு உள்ள கமலமே புருஷார்த்தம்
கல்லும் கனை கடலும் -வைகுந்த வானோடும் -புல் என்று ஒழிந்தன கொல்-ஏ பாவம் வெல்ல நெடியோன்
நிறம் கரியான் உள்ளம் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்தகம் -பெரிய திருவந்தாதி –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -1-12–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

திருமழிசைப் பிரான் திருவாய் மலர்ந்து அருளிய நான்முகன் திருவந்தாதி –
-மூன்றாவது ஆயிரம் இயற்பாவில் நான்காவது பிரபந்தம்
நாலாம் நான்காம் திருவந்தாதி என்னாமல் நான்முகன் திருவந்தாதி -என்றது
-அமலனாதி பிரான் கண்ணி நுண் சிறுத் தாம்பு போலே —முதல் குறிப்பு இலக்கண வகை –

எம்பெருமானுடைய அனுக்ரஹ விசேஷத்தாலே -மயர்வற மதி நலம் அருள பெற்று -திவ்யாத்மா ஸ்வரூபத்தையும் –
திருக் கல்யாண குணங்களையும் -திவ்ய மங்கள விக்ரஹத்தையும்-இவற்றை இடைவிடாமல் அனுபவிக்கும் பிராட்டிமார்களையும்
-இவர்கள் சேர்த்தியில் கிஞ்சித்க்கரிக்கும் ஸூ ரிகளையும் -இவற்றுக்கு ஏகாந்தமான பரமபதத்தையும் -லீலா விபூதி யோகத்தையும்
உள்ளபடியே சாஷாத்கரித்து அனுபவித்து மார்க்கண்டேயாதிகளைப் போலே நெடும் காலம் சம்சார மண்டலத்தில்
காலம் சென்றது அறியாதே எழுந்து அருளி இருந்து சேதனர் பலரும் ரஜஸ் தமஸ் குணங்களுக்கு வசப்பட்டு
-வசன ஆபாசங்களைக் கொண்டும் தேவதாந்த்ர வழிபாட்டால் வைதிக மார்க்கத்தில் நின்றும் விலகி குத்ருஷ்ட்டி மார்க்கம்
பேணி சம்சாரத்தையே வளர்த்திக் கொண்டு அநர்த்தப் படுகிற படியைக் கண்டு
பொறுக்க மாட்டாத பரம கிருபையினால் தேவதாந்த்ர பரத்வத்தை நிராகரித்து -ஸ்ரீ மன் நாராயண பாராம்யத்தை ஸ்தாபித்து
அனைவரும் பகவத் பிரவணராம் படி திருத்தி அருளுகிறார் இப்பிரபந்தத்தால் –

—————————————–

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –

—————————————

ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை அழுத்தமாக அருளிச் செய்கிறார் -இப்பிரபந்தம் தலைக் கட்டும் இடத்தும்
-இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -என்று தலைக் கட்டி
நடுவில் பல பாசுரங்களால் தேவதாந்த அபூர்த்தியையும் ஸ்ரீ மன் நாராயணனின் பூர்த்தியையும் அருளிச் செய்வதால்
பரத்வ ஸ்தாபனத்தில் நோக்காய் இருக்கும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

தான்முகமாய் -தானே முக்கியமாய் இருந்து –

நான்முகனை நாராயணன் படைத்தான்-
நாம ரூப அர்ஹம் இன்றி காரிய பொருள்கள் யாவும் தன்னிடமே லயம் அடைந்து -சதேவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -என்று இருக்க
தன் சங்கல்பத்தாலே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -சமஷ்டி பதார்த்தங்களை ஸ்ருஷ்டித்து -நான்முகனைக் கொண்டு வ்யஷ்டி பதார்த்தங்களை ஸ்ருஷ்டிக்க வேண்டி-
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை -என்கிறபடி திரு நாபீ கமலத்தில் நான்முகனை படைத்து அருளினான் –
பிரமன் வேதங்கள் கொண்டே ஸ்ருஷ்டி செய்ய வேண்டி இருப்பதாலும் -அந்த வேதங்கள் நான்கு வகைப் பட்டு இருப்பதாலும்
அவற்றை உச்சரிக்க நான்கு முகங்கள் கொண்டவன் என்பதாலும் நான்முகனை –என்கிறார் -பிரமனை -என்னாதே –
நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்— தானே தலைவனாய் நின்று சம்ஹாரக் கடவுள் சங்கரனைப் படைத்தான் –
புத்ரன் விநயம் அற்று வழி கெட நடந்தால் தந்தை அவனை விலங்கிட்டு வைப்பது போலே உலகோர் வழி கெட நடந்து
அநர்த்தம் விளைவித்துக் கொண்டால் கரண களேபரங்களை விநாசம் செய்து தீர வேண்டுவதால் சங்கரனைப் படைத்தான் –
நன்மை பயப்பதால் -சங்கரன் -என்கிறார் உருத்திரன் என்னாமல்
யான்முகமாய்-அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்-சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து-சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனே உத்பாதகன்
-இவனைத்தவிர பிறிது ஒன்றும் பர தெய்வமாக கொண்டாட வழி இல்லை என்ற ஆழ்ந்த பொருளை
கல் வெட்டும் செப்பு வெட்டுமா போலே பிரபந்ததீ கரித்து அறிவிக்கிறேன்
சம்சாரத்தின் பொல்லாங்கையும் நான் சொல்லுகிற அர்த்தத்தை அருமை பெருமைகளையும் ஆராய்ந்து
நெஞ்சில் நின்றும் நழுவி மங்கிப் போகாத படி உள்ளத்தே தேக்கிக் கொள்ளுங்கோள்-என்று துடை தட்டி உணர்த்துகிறார்
தொடங்கும் பொழுதே அறிவித்தேன் -என்று இறந்த காலத்தில் அருளிச் செய்தது –எம்பெருமான் -ஸத்ய சங்கல்பனாகையாலும் தன்னுடைய உறுதியாலும்
இப்பிரபந்தம் தலைக் கட்டி விட்டதாக நினைத்து அருளிச் செய்கிறார் -கால வழுவமைதி -என்பர் –
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே-தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் —
அவர்கள் சம்சாரத்தை வளர்ச்சி செய்து வைக்க நான் அன்றோ வேர் அறும் படியாக ஆழ் பொருளை அறிவிக்க முற்படுகிறேன் -காண்மின் -என்கிறார் –

————————————————————————————

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2–

தேருங்கால் தேவன் ஒருவனே என்று -ஆராயும் இடத்து பர தெய்வமாக உள்ளவன் ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே என்று
உரைப்பர்–வியாஸாதி மஹரிஷிகள் சொல்லுவார்
ஒரும்-பொருள் முடிவும் இத்தனையே –வேத வேதாந்தங்களில் ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம் –
எத்தவம் செய்தார்க்கும்-எப்படிப்பட்ட சாதன அனுஷ்டானங்களை பண்ணினவர்க்கும்
முடிவது ஆழியான் பால் அருள் –முடிவில் பலனை அளிப்பது எம்பெருமான் இடத்து உண்டாகும் கிருபையேயாம் –

மற்றவர்கள் அவனுக்கு அங்க பூதங்களே–அவனது பரத்வம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -இவற்றால்
அவன் பெருமையை அளவிட வல்லார் யாரும் இல்லை-தாமும் தம் பெருமை அறியார் -பெரிய திரு -5-2-1–என்பர் கலியனும்-
அவனே பெருமையில் சிறந்த பராத்பரன் -அவனது நிர்ஹேதுக கிருபையினாலேயே அவன் ப்ராப்யன் -என்றதாயிற்று –

—————————————————————————————-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

ஞாலத்-தொரு பொருளை -பூமியில் திருவவதரித்த விலக்ஷண புருஷன் –துணையற்ற காரண வஸ்து -என்றுமாம்
வானவர் தம் மெய்ப் பொருளை-நித்ய ஸூ ரிகளுக்கு பிரத்யக்ஷமாக அனுபவிக்காத தகுந்த வஸ்து வாயும்
அப்பில்-அரு பொருளை -சகலத்துக்கும் காரணமான முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜல தத்துவத்தில்
கண் வளரும் அறும் பொருளாய் இருக்கும் எம்பெருமானை -நன்மைப் புனல் பண்ணி-திருவாய் -7-5-4-

கீழே ஆரும் அறியார் அவன் பெருமை என்றார் –
தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இல்லாத பல பரப்பி திருப் பாற் கடலிலே சயனித்து இருக்கும் அழகிலே
நான் ஈடுபட்டு இருக்கும் வண்ணம் யார் ஈடுபடுவார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்கிறபடி அக்கிடை அழகில்
வியாமோஹித்து இருப்பவன் நான் ஒருவனே –
திருவரங்கம் பெரிய கோயிலிலே உபய காவேரீ மத்யத்திலே என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கிற படி
பரம போக்யமாயும் அத்யந்த ஸூலபமாயும் சந்நிதி பன்னி சேவை சாதிக்கும் அருளின் போக்யத்தையும் ஸுலப்யத்தையும் நான் ஒருவனே வாய் வெருவுவேன்
ஆலிலைத் தளிரில் அக்கடிகடனா சாமர்த்தியத்தை மெச்சுகிறவன் நான் ஒருவனே அன்றி வேறு ஒருவர் உண்டோ
நான் அறிந்த வாறு — விதம் ஆச்சர்யம் —ஆர் அறிவார் -என்று கீழோடே சேர்த்து ஏக வாக்யமாகவுமாம் –

——————————————————————————-

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே–சாம்யம் உடையவன் என்று பாமரர் என்றும் சொல்லும் சொல் அங்கீகரிக்கத் தக்கதோ -அல்லவே –
ஸ்ரீ மானுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தை ருத்ரன் சிரஸா வஹித்து புனிதனாயினவனை சமமாகச் சொல்வதோ –
அண்டர்கோன் -தேவர்க்கும் இடையாருக்கும் தலைவன் -தேவாதி தேவன் கோபால கிருஷ்ணன் என்றுமாம்
அஹம் க்ருத்ஸ் நஸ்ய -ஜகதா பிரபவ ப்ரளயஸ் ததா –மத்த பரதரம் நான்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –ஸ்ரீ கீதை -7-7-
அபாயவச நவ்ருத்தி -சர்வ சப்தங்களுக்கு -சர்வ அந்தர்யாமி -சர்வ சரீரி -பரமாத்மா வரையில் பர்யவசிக்குமே –

———————————————————————————

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-

வேறொருவர்-இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்-சொல்லானைச்-என்றத்தை விவரிக்கிறது -இப்பாட்டு –
அனைத்து உலகும் அனைத்து உயிரும் அமைத்து அளித்துத் துடைப்பது -நீ நினைத்த விளையாட்டு –
கருத்தரிய உயரிக்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் தனி நாயகன் நீ
வர பலம் -ஸுராஸுரர் நரர் கையில் -பாரில் சுடர் வானில் -பகல் இரவில் -உள் புறம்பில் -பெரு படையில் தான் சாகா இரணியன் தன்னை
பிரகலாதன் தர்க்கித்து உண்டு என்ற தூணில் நரஹரியாய் பொழுது புகு நேரம் தன்னில் நாடி உதித்து -உயர் வாசல் படி மீதேறி
-இரணியனைத் தொடை மிசைவைத் துகிரினாலே இரு பிளவாக்கினை யரியே எம்பிரானே-
யுகத்தில் -உகந்த காலத்திலே –
உயர்த்தி -என்பதனால் -ஸ்ருஷ்டி கர்த்ருத்வமும் –
உள் வாங்கி -சம்ஹார கர்த்ருத்வமும் –
நான்கும் அருவானாய் -ஸ்திதி கர்த்ருத்வமும் -கூறப்பட்டன –அரூபி -வடசொல் அரு –வானது
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளேயே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் -என்கிறபடியே
தேவாதி நான்கிலும் அந்தர்யாமியாய் இருந்து நிர்வாஹகானாய் இருக்கிறார் என்கிறதாயிற்று –

——————————————————————————————-

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்-என்கிறபடியே
மாதாந்தஸ்தரர்கள் பாழாக போனார்கள் என்று திரு உள்ளம் நொந்து வயிறு எரிந்து பேசும் பாசுரம் இது –

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6–

சப்த பங்கியை அங்கீ கரித்து -சத் -அஸத் -ஏகம் -அநேகம் -அநேகாந்தம் -ஒன்றுக்கு ஓன்று பொருந்தாமல்
தோற்றினத்தையே சொல்லும் ஜைனர் -அவிவிகேகிகளாய் ஒழிய
ஞாதா ஜேயம்-எல்லாம் க்ஷணிகம் -ஸ்திரனாய் இருப்பான் ஆத்மா இல்லை என்றும் -க்ஷணிக ஞான சந்ததியே ஆத்மா
-என்று பேய்க்கத்து-கத்தும் புத்தர்கள் பிராமண கதியை மறந்து ஒழிந்தனர்
படைக்கட்டும் பொருளில் ஒன்றான -அநீஸ்வரனான ருத்ரனை பர தெய்வம் உபபாதிக்கும் சைவ மத நிஷ்டர்கள் நீசர்கள்
ஆன் விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -பெரிய திருமொழி-11-7-9-
-விமுகராய் ஒழிந்தவர்கள் எல்லாம் மண்ணின் பாரமே
வெறியாய் -சர்வ கந்த -பரிமளம் வடிவெடுத்தவன் –

———————————————————————————————–

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

நன்றாக–நிச்சயமாக – அத்யாவசாயம் திடமாக உள்ளதே –சம்பந்தம் உணர்ந்து -நானும் உனக்கு பழ வடியேன்-
உனது திரு அருளுக்கு பரிபூர்ண பாத்ரனான பின்பு -என்னுடைய ஏற்றம் அறியாயோ
உன் அருளுக்கு நானே இலக்கு -என் பிரார்த்தனைக்கு நீயே இலக்கு -நீ தயநீயரைத் தேடி இரா நின்றாய்
-உன் தயையைத் தேடி நான் இரா நின்றேன் –
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்க்கும்
அஃதே புகல் -அமுதனார் -இத்தை ஒட்டியே அருளுகிறார்
நாராயணனே – உன்னை நிரூபிக்க வேண்டில் நாரங்களில் ஒருவனான என்னை கிட்டே நிரூபிக்க வேணும்
தம்மை நிரூபிக்க வேண்டில் பகவத் சேஷபூதரில் ஒருவனான -சேஷத்வத்தை இட்டே -அடியான் -என்று நிரூபிக்க வேண்டும் –
பரஸ்பர சாபேஷம் அன்றோ -சேஷியான உன்னை ஒழிய எனக்கு சத்தை இல்லை
-சேஷ பூதனான என்னை ஒழிய உனக்கு சத்தை இல்லை -என்றதாயிற்று –

————————————————————————————————-

விரோதி நிரசனமே ஸ்வாபாவிகமாக உள்ள எம்பெருமானை தவிர்த்து மற்று யாரும் துணை இல்லை என்று
திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் –

இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை--8-

விஷ்ணு தநுஸ்–விஷ்ணு -ரிஸீக முனிவர் இடம் கொடுக்க -அவன் தன் குமாரன் ஜமதக்கினி இடம் கொடுக்க
-அது பரசுராமன் இடம் வந்தது -இந்த விஷ்ணு தநுஸ் –ஈசனை வென்ற சிலை -அத்தைக் கொண்ட
செங்கண் மால் ஸ்ரீ ராமன் பரசுராமன் இடம் இருந்து –என்றவாறு
ஈசனை வென்ற செங்கண் மால் -பாணாசுரன் -விருத்தாந்தம் -என்று விசேஷணம் சிலைக்கு கொள்ளாமல் செங்கண் மாலுக்கு என்னவுமாம் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பேற்றுக்கு அவன் கையையே பார்த்து இருப்பார்கள் -சாதன அனுஷ்டானங்களை அல்ல –

———————————————————————————————

ப்ரஹ்மாதிகளும் தாங்கள் வெறுமையை முன்னிட்டு ஸ்ரீ மன் நாராயணனை ஆஸ்ரயித்து அபிமதம் பெறுவார்கள் –
துணையாகும் தெய்வம் இன்னது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாமே -என்கிறார் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

குறை கொண்டு –-நைச்ய அனுஸந்தானம் பண்ணிக் கொண்டு
மறை கொண்ட மந்திரத்தால் -புருஷ ஸூ க்தாதிகளால்
வாழ்த்தி -மங்களா சாசனம் பண்ணி

————————————————————————————-

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10-

ஆங்கு–இரண்டு நிர்வாகங்கள்
1-பரமபதத்தில் -ஏதத் சாம கானம் -என்று அறியாமல் ப்ரேமம் அடியாக கலங்கி –அஸ்தானே பயசங்கை-அங்கும் நம்மால் சேவிக்க முடியாதோ -என்று
இல்லாமல் நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்ற நாம் சேவிக்க எளியவன் -ப்ரஹ்மாதிகளுக்கு அரியவன் என்றவாறு –
அன்றிக்கே –2–கீழ் பாட்டில் உலகு அளந்த வ்ருத்தாந்தம் அருளிச் செய்ததால் –அவ்வவதார சமயத்திலே
திசை வாழி எழ -மங்களா சாசன கோலாஹலத்தை சொல்லி அஸ்தானே பயசங்கை என்னவுமாம் –

—————————————————————————————

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11–

மகுடம் -தலைக்கும் கிரீடத்துக்கும் –
என் தொல்லை மால் தன்னை–என்னிடத்தில் நெடு நாளாக வியாமோஹம் கொண்ட சர்வேஸ்வரனை
-ஆட்படுத்திக் கொள்ள அவசரம் பார்த்து இருப்பவன்
வழா-ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
பரோபதேசப் பாசுரம்-

—————————————————————————————-

ஆழ்வார்கள் போது போக்கு பலவகை –பரோபதேசமாகவும் -தம் திரு உள்ளத்துக்கும் -எம்பெருமானையே நோக்கி
அருளிச் செய்யும் பாசுரங்களாய் இருக்குமே -இது அவனை நோக்கி அருளிச் செய்யும் பாசுரம் –

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ–
மதியார்–நான்கின்–போய் – போய் வீழ-மதித்தாய் -உன்னைச் சிந்தியாதவர்கள் -வீடு பெறாமல் –தேவாதி நான்கு
யோனிகளிலே சென்று பல காலும் விழும்படியாக சங்கல்பித்தாய்
அன்றிக்கே —நான்கின் மதியார் போய் வீழ–மதித்தாய்-என்று கொண்டு –நான்கு வேதங்களைக் கொண்டு
உன்னைச் சிந்தியாதார் ஆஸூர யோனிகளில் விழும்படியாக சங்கல்பித்தாய் -என்றுமாம்
இரண்டும் போய் இரண்டின் வீடு -மதித்தாய் –ஒன்றை விட்டு ஓன்று போய்-முதலைக்கு சாப மோக்ஷமும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு மோக்ஷ சாம்ராஜ்யமும் -சங்கல்பித்தாய்
இந்த்ரத்யுத்மன்-அரசன் விஷ்ணு பூஜையில் ஆழ்ந்து அகஸ்தியர் வருவதை லக்ஷணம் பண்ணாமல் சாபம் பெற்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்
ஹூ ஹூ கந்தர்வன் தேவலாம் என்னும் முனிவர் நீரில் இருக்க காலைப் பற்றி இழுத்த சாபத்தால் முதலை ஆனான் –

————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்