Archive for the ‘நான்முகன் திரு அந்தாதி’ Category

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 23, 2013

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு –61

பதவுரை

மதுசூதன் தன்னை–மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை
மனம் கேதம்–மன வருத்தங்கள்
சாரா–வந்து சேராவாம்
ஒன்றி நின்று–பொருந்தி நின்று
ஏழ் உலகை–ஸப்த லோகங்களிலும்
ஆணை ஒட்டினான்–(தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்
இன்று–இப்போது
தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்–தனக்கே ரக்ஷகனென்று ஒருவன் கொண்டால்
சென்று–(நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து
ஒன்றி நின்ற திரு–(என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது
எனக்கே தான்–என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.

கேதம்– துக்கம் ஏதம் -பொல்லாங்கு
மனசுக்கு ஏதம் சாரா என்றுமாம்
தஞ்சமான செயலை செய்யுமவனை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில்
சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று
தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –
அது தானும் இன்று-

—————————————————————————————–

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62–

பதவுரை

திரு இருந்த மார்வன்–பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே)
சிரீதரன் தன்–‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய
வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை–வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை
சூடி–தலைக்கு அலங்காரமாக அணிந்து
தரித்து–அதனால் ஸத்தை பெற்று,
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–‘பிராட்டி பொருந்தி யிருக்கப் பெற்ற வலப் பக்கத்தை யுடைய
வஸ்துவே பரதத்துவம்!‘ என்று துணிந்தறிய மாட்டாதவர்கள்.
கரு நின்ற–(தங்களைப் போலே) கர்ப்ப வாஸம் பண்ணிப் பிறக்கின்ற சிலரை
கல்லாக்கு உரைப்பர்–(பரதெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள்.

-திரு நின்ற பக்கம்-
அபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே
இன்ன வஸ்து என்ன வேண்டா –
ஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்
அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –

திறவிது என்று ஓரார்
திறவிதாவது
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய்
வேறு ஒன்றால் அறியாதது –
ஒரு சேதனர் ஆகில் அறியலாம் என்கை –
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர்-
தங்களோடு ஒக்க கர்ப்ப வஸ்யராய்
கர்ப்ப வாஸம் பண்ணுகிறவர்களை
ஆஸ்ரய ணீ யராக தங்களோடு ஒத்த
அறிவு கேடருக்கு உபதேசிப்பார்கள் –

திருவிருந்த மார்பில் சிரீதரன் தண் வண்டுலவு தண்டுழாய் தார் தன்னைச் சூடித் தரித்து
மாம்பழம் உண்ணி ந்யாயத்தாலே
ஸ்ரீ சம்பந்தம் இல்லாதாரை ஸ்ரீ மான்களாகச்
சொல்லும்படி அன்றிக்கே
பெரிய பிராட்டியார் திரு மார்பில் எழுந்தருளி இருக்கையாலே
ஸ்ரீ தரன் என்று திரு நாமத்தை உடையவன் ஆனவனுடைய
மது வெள்ளத்தாலே வண்டுகள் திரியா நின்றுள்ள
செவ்வியை உடைய திருத் துழாயை
சூடிக் களைந்தன சூடும் -என்னும்படியே
தலையால் தரித்து திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீ ய பதி தானே-

————————————————————————————

கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை –
இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63–

பதவுரை

தாராகணம்–நக்ஷத்ரகணங்களினுடைய
போர்–(சுபாசுப நிமித்தமான) ஸஞசாரத்தை
விரித்து உரைத்த–(ஜ்யோதிச்சாஸ்தர முகத்தாலே) விஸ்தாரமாக வெளியிட்டவனும்
வெம் நாகத்து உன்னை–(பிரதிகூலர்க்குத் தீக்ஷ்ணனுமான திருவனந் தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை
தெரித்து–அநுஸந்தித்தும்
எழுதி–எழுதியும்
வாசித்தும்–(எழுதினவற்றைப் படித்தும்)
கேட்டும்–(ஆங் காங்கு) ச்ரவணம் பண்ணியும்
வணங்கி–நமஸ்காரம்பண்ணியும்
வழிபட்டும்–உபசாரங்களைச் செய்தும்
பூசித்தும்–பூஜித்தும்
போது போக்கினேன்–காலத்தைக் கழத்துக் கொண்டிருக்கிறேன் (இப்படி செய்வது எதுக்காக வென்னில்)
தரித்திருந்தேன் ஆகவே–ஸத்தை பெறுவதற்காக.

தாரா கணப் போர் விரித்துரைத்த வென்னாகத்துன்னை-
நஷத்ர கணங்கள் உடைய சஞ்சாரத்தை
விஸ்த்ருதமாகச் சொன்ன
திரு வனந்த ஆழ்வானுக்கு
ஆத்மாவாய் இருந்துள்ள உன்னை
தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
அனுசந்தித்தும் லிகித்தும் வாசித்தும் ஸ்ரவணம் பண்ணியும்
நிர்மமனாய் வணங்கி
அது தானே யாத்ரையாய் ஆராதித்தும் காலம் போக்கினேன்
தரித்து இருந்தேனாகவே —
ஆகவே தரித்து இருந்தேன் –
தரித்து இருந்தேனாகவே –
தரித்து இருந்தேன் ஆகைக்காக
பூசித்துக் காலத்தைப் போக்கினேன் என்றுமாம்-

—————————————————————————————————————————————–

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏ ழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

பதவுரை

பொன் மகரம் காதானை–அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பெருமானை–பெருமை பொருந்தியவனும்
நாதனை–(அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை–(ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை–நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்
நம் ஏழ்பிறப்பு அறுக்கும் சொல்லானை–நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்க வல்ல திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேச்வரனைக் குறித்து
போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்–புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்
சொல்லுவதே–(அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே
சூது–நல்ல வாய்ப்பு

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ
இன்ன புஷ்பம் என்ற நியதி இல்லை –
பூவானதை எல்லாவற்றையும் கொண்டு
திருவடிகளிலே சமர்ப்பித்து வணங்கி
ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்
பொன் மகரக் காதானை –
கை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி
ஸ்ப்ருஹணீ யனானவனை –
ஆதிப் பெருமானை –நாதானை நல்லானை நாரணனை-
நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –

அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே
நமக்கு உத்பாதகனானவன் –
ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே
நாராயண சப்த வாச்யனாய்
நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும்
திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ்வாத்மாவுக்கு உறுவது –

———————————————————————–

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65

பதவுரை

மாது ஆய–அழகுதான் ஒரு வடிவகொண்டாற்போலே யிருப்பனும்
மாலவனை–(ஆச்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
மாதவனை–திருமாலைக் குறித்து
சொல் மாலை–இச்சொல் தொடைகளை (சொல்லி)
யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு–ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு
வைகுந்தத்து இடம் இல்லையோ சொல்லீர்–ஸ்ரீவைகுண்டத்தில் இடம் இல்லையோ?
சொல்லீர்–சொல்லுங்கள்
சூது ஆவது–இதுவே நமக்கு நல்லவாய்ப்பு என்று
என் நெஞ்சத்து எண்ணினேன்–என்மனத்தில் உறுதி கொண்டேன்.

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன்
உறுவதாவது என்னெஞ்சிலே மநோ ரதித்தேன்
சொன்மாலை -இத்யாதி
அழகு தான் வடிவு கொண்டாற் போலேயாய்
வ்யாமுக்தனாய் இருந்துள்ள
ஸ்ரீ ய பதியைச் சொல்லப்பட்ட பிரபந்தத்தை ஏதேனும் ஒருபடி
அனுசந்திக்கிற எனக்கு பரமபதத்தில்
இடம் இல்லையோ –
ஸ்ம்ருதி மாதரம் உடையாருக்கும்
பரமபதம் சித்தியாதோ என்கை –
ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே
பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்
மாதாய -அழகாய –மாது -அழகு-

—————————————————————————————————————————————–

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66

பதவுரை

பண்டு–என்னைத் திருத்திப் பணி கொள்வதற்கு முன்பு
படம் நாக அணை நெடிய மாற்கு–படங்களை யுடைய சேஷ சயனத்தில் பள்ளி கொண்டருள்பவனாயிருந்த ஸர்வேஸ்வரனுக்கு
இன்று–இப்போது முதலாக
எல்லாம்–மேலுள்ள காலமெல்லாம்
இடம் ஆவது–வாஸ ஸ்தானமாவது
என் நெஞ்சம்–எனது நெஞ்சமாகும்
மதி சூடி தன்னோடு–பிறைச் சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும்
அயனை–பிரமனையும்
திடம் ஆக–பரம் பொருளாக
வையேன்–மனத்திற்கொள்ள மாட்டேன்
வையேன் நான்–(தத்துவமின்னதென்று கண்டறியத்தக்க) ஸூக்ஷ்ம புத்தியுடையேனான நான்
ஆள் செய்யேன்–(அந்த தேவதாந்தரங்களுக்குத்) தொண்டு செய்யவும் மாட்டேன்
(இப்படி நான் சொல்லுவதற்குக் காரணமென்னவெனில்)
வலம்–(திருமாலின் பரிக்ஹமாயிருக்கப் பெற்ற) மிடுக்கேயாம்.

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு பட நாகணை நெடிய மாற்கு
சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம்
என்னோடு சம்ச்லேஷிப்பதுக்கு முன்பு எல்லாம்
தன்னோடு சம்ச்லேஷத்தாலே விஸ்த்ருமான பணத்தை உடைய திரு வநந்த ஆழ்வான் –
இப்போது எல்லாம் என்னுடைய ஹிருதயம் –
திடமாக வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான் –
சந்த்ரனை தரித்தானாய் இருக்கிற ருத்ரனையும் –
திரு நாபீ கமலத்திலே உத்பன்னன் ஆகையாலே
அஜன் என்று இருக்கிற ப்ரஹ்மாவையும்
திருட பதார்த்தங்களாக நினையேன் –
வையேன் ஆட்செய்யேன் வலம் –
அதுக்கடி கூரியேனாய்
சார அசார விவேகஞ்ஞனாய் ஆகை
பிரதிபுத்தா ந சே வந்தே -என்று
கூரியர் ஆனவர்கள் தேவதாந்தர பஜனம்
பண்ணார்கள் இ றே-என்கை-
வலம் –
இதுக்கு எல்லாவற்றுக்கும் அடி
பகவத் பரிக்ரகமான பலம்
வையேன் -மனசிலே வையேன் -நினையேன் என்றும்
வையேனான நான் -கூரியனான நான் -என்றும் இரண்டு நிர்வாஹம் -கூர்மை -ஜ்ஞானக் கூர்மை-

—————————————————————————————————————————————–

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச்
சீரணனை ஏத்தும் திறம்-67

பதவுரை

நாரணைனை–ஸ்ரீமந் நாராயணனாய்
நாபதியை–(என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
ஞானம் பெருமானை–அறிவிற்பெயரியவனாய்
வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்–எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த
வலம் ஆக–நன்மை தருவதாகிலுமாகுக
சீர்அணனை–நற் குணங்களை பொருந்தி யிருக்கப் பெற்றவனான ஸர்வேச்வரனை
மாட்டாமை தான் ஆக–நன்மை தர மாட்டாதாகிலுமாகுக,
குலம் ஆக–நற் குலத்தைத் தருவதாகிலுமாகுக
குற்றம் தான் ஆக–கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக (எத்துவதை நான் தவிரமாட்டேன்)

நலமாக நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச சீரணனை ஏத்தும் திறம் –
நன்றாக சர்வ ஸ்வாமியாய்
என் நாவுக்கு நிர்வாஹனாய்
ஜ்ஞான குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்
இருக்கிறவனை நன்றாக ஏத்தும் பிரகாரம் –
வலமாக மாட்டாமை தானாக வைகல் குலமாக குற்றம் தானாக
பலமாகவுமாம் –
ஆபிஜாத்யத்தை உண்டாக்கவுமாம் –
அதிலே தோஷத்தை உண்டாக்கவுமாம் –
இவை அன்று உத்தேச்யம்
அவனை ஏத்துகையே உத்தேச்யம்
சீரணன் -குணங்களை உடையவன்

——————————————————————————-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68

பதவுரை

நமனும்–யமனும்
தன் தூதுவரை–தனது சேவகர்களை
கூவி–அழைத்து
செவிக்கு–(அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)
திருவடி தன்–ஸர்வேச்வரனுடைய
நாமம்–திருநாமத்தை
மறந்தும்–மறந்தொழிந்தாலும்
புறம் தொழாமாந்தர்–தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்)
திறம்பேல் மின் கண்டீர்–(ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவறவேண்டா
இறைஞ்சி–வணங்கி
சாதுவர் ஆய் போதுமின்கள் என்றான்–(கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்களாய் வர்த்திக்க கடவீர்கள் என்று சொன்னான்.

பகவத் பரிகரமே பலம் என்னும் இத்தை
ஸ்வ புருஷ ம்பி வீஷ்ய-என்கிற ஸ்லோகத்தின்
படியே விவரிக்கிறார்

திறம்பேல்மின் கண்டீர் –
திறம்பாதே கொள்ளுங்கோள் என்னும் போது
நாலுபத்தோலை மறுக்கவுமாம் –
திருவடி தன நாமம் மறந்தும் புறம் தொழா –
பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் –
தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது –
பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –
பர்தரந்தர பரிக்ரகம் இ றே அவனுக்கு ஆகாமைக்கு அடி
மாந்தரை –
மனுஷ்யரை –
-இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு –
அவர்களை நலிந்திலோம் என்று இருக்க ஒண்ணாது
பாச ஹஸ்தம் -என்கிற க்ரூர வேஷத்தைத் தவிர்ந்து
விநீத வேஷராய்
அஞ்சலி ப்ரணாமாதிகளை பண்ணிப் போரும்கோள்-என்கிறார் –
நமனும் –
சம இதி -என்று சொல்லப் படுகிறவனும்-ப்ரஹ்மாதிகள் உடன் சமமாக சொல்லப்படுமவன் –
தன் தூதுவரை
ஸ்வ புருஷம் -என்றபடி
செவிக்கு
கர்ண மூலே -என்றபடி
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று
நெஞ்சு பறை கொட்டுகிறது-

—————————————————————————————————————————————–

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69–

பதவுரை

செவிக்கு இன்பம் ஆவதுவும்–கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு–பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே–(நிழல்பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத் திருநாமமே
கவிக்கு நிறை பொருள் ஆய் நின்றானே–பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை
நேர் பட்டேன்–தெய்வாதீனமாக அடையப் பெற்றேன்,
பார்க்கில்–ஆராய்ந்து பார்த்தால்
மறை பொருளும் அத்தனையே தான்–வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.

பார்க்கில்-மறைப் பொருளும் அத்தனையே தான் –செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
-யம வஸ்யதையை தவிர்க்கும் அளவு அன்று
செவிக்கு இனியதுவும் புண்டரீகாஷனுடைய திருநாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் –
எனக்கு ஒருத்தனுக்குமேயோ
பூமியில் உள்ளாருக்கு எல்லாம் ஸ்தானம் திருநாமம்
கவிக்கும் நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்-
ஸ்துத்யனுக்கு ஒரு பூர்த்தி இன்றிக்கே
ஸ்தோதா நிரப்ப வேண்டும்படி யன்றிக்கே
கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால்
குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக
லபித்தேன் –
பார்க்கில் மறைப் பொருளும் அத்தனையே தான் –
யாத்ருச்சிகமாக அன்றிக்கே
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும்
அத்தனையே –

—————————————————————————————————————————————–

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

பதவுரை

தான் ஒருவன் ஆகி–(விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேச்வரனாயிருந்து
சென்று–(மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று
ஆங்கு–அந்த மாவலியின் யாக பூமியிலே
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
அடிப்படுத்த–திருவடியினளவாக ஆக்கிக் கொண்ட (அளந்து கொண்ட)
சேய்–சிறு பிள்ளையானவன்
ஏன் ஒருவன் ஆய்–விலக்ஷண வராஹ ரூபியாய்
தரணி–பூமியை
இடந்து அடுத்து–(அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்து
எயிற்றில்–(தனது) கோரைப் பல்லின்மீது
தாங்கியது–தரித்தமையை
யான் ஒருவன்–நானொருவன் மாத்திரம்
இன்றா–இன்றாக
அறிகின்றேன் அல்லேன்–அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்)
லோக பிரசித்தம் அன்றோ –

வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி
எங்கனே என்னில்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ
பிரசித்தம் அன்றோ -என்கிறார் –
– தான் ஒருவனாகித் –
வாமனனாய்
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் –
வாமனனாய் பரப்பான பூமியை
வியாபித்து தன் திருவடிக்குள்ளே அடங்கும்படி
இட்டுக் கொண்டு
அச் செயலாலே அத்விதீயனாய் –
தரணி இடந்து எடுத்து ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்
–பிரளயம் கொண்ட பூமியை
அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடும்படி
இடந்து எடுத்து
மகா வராக ரூபியாய் பெரிய பூமியை
திரு எய்ற்றில் ஏக தேசத்திலே தரித்ததும்
யானொருவன் இன்றா வறிகின்றேன் அல்லேன்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ –

—————————————————————————————————————————————–

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71–

பதவுரை

சிறியன்–(ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு
அணியன்–ஸுலபனாயும்
மிக பெரியன்–(அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க் கொண்டு
சேயன்–எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக)
ஆயன் ஆய் நின்ற–இடைப்பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையை யுடையனாயும்
துவரை கோன் ஆய் நின்ற–த்வாரகாபுரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிருந்த
மாயன்–எம்பெருமான்
அன்று–(பாரத யுத்தம் நடந்த) அக் காலத்தில்
ஓதிய–(திருத் தேர்த் தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச் செய்த
வாக்கு அதனை–(சரம ச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை
கல்லார்–அதிகரிக்கப் பெறாதவர்கள்
மெய் ஞானம் இல்–தத்துவ வுணர்ச்சி யற்ற
ஏதிலர் ஆம்–பகவத் விரோதிகளாவர்.

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது
அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்
அறியப் போமோ -என்கிறார்
சேயன் மிகப் பெரியன் –
யதோவாசோ நிவர்த்தந்தே -என்று
வாக் மனஸ் ஸூ களுக்கு நிலமில்லாத படியாலே
ப்ரஹ்மாதிகளுக்கும் தூரச்தனாய் இருக்கும்
அணியன் சிறியன்-
சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் பிறந்து
அனுகூலர்க்கு அண்ணி யானாய் இருக்கும்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்
அண்ணி யனானமைக்கு உதாரஹனம்
இடையனாய்
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்
தேர் தட்டிலே நின்று
உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன்
நீ சோகிக்க வேண்டா –
என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான
தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று
நினைக்கும்படி சத்ருக்களாய்
தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்

—————————————————————————————————————————————–

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

பதவுரை

(முக்திமார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு)
இல்லறம் என்னும் சொல்லும்–க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்ம யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனன்றிக்கே,
துறவறம் என்னும் சொல்லும்–ஜ்ஞாந யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனுமன்றிக்கே
அல்லன அறம் என்னும் சொல்–(பக்தி யோகம் தேச வாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள்
தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
நல் அறம் ஆவனவும்–நல்ல தருமங்களாகிய திருநாம ஸங்கீர்த்தநாதிகளும்
நால் வேதம் மா தவமும்–நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம்
நாரணனே ஆவது–ஸ்ரீமந்நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பனவாகின்றன.
ஈது–இவ்வுண்மையை
அன்று என்பார் அது–மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத்தக்கது.

நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும்
என்னச் சொல்லுகிறார் –

இல்லறம் இல்லேல்-
கர்ம யோகம் அன்றாகில்
பிரவ்ருத்தி தர்மம் அன்றாகில் -என்னவுமாம்
துறவறம் இல் என்னும் சொல் –
நிவ்ருத்தி தர்மம் ஸ்தானம்  பிரமாணம் –
ஜ்ஞான யோகம் என்னவுமாம்
அறம் அல்லனவும் சொல்லல்ல –
அல்லாத தர்மங்களை விதிக்கிறவை
பிரமாணங்களும் அன்று
அல்லாத தர்மங்கள் என்கிறதும் கர்த்ருத்வ பலாபிசந்தி
ரஹீதமாக அனுஷ்டிக்கும் கர்மங்கள் அன்றிக்கே
இதிஹாச புராணங்களில் சொல்லுகிற
திருநாம சங்கீர்தநாதிகள் ஆகவுமாம்
சொல்லறம் அல்லன -என்று
பதச்சேதமான போது பிரமேய பரம்
இல் என்னும் சொல் -என்ற போது பிரமாண பரம் –
நல்லறம் ஆவனவும் -நாரணனே ஆவது
பலாபிசந்தி ரஹீதமான கர்மங்கள்
இதிஹாச புராணங்களில் சொல்லுகிற
திருநாம சங்கீர்தனங்கள்
நால் வேத மாத்தவமும் –
பூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம்
இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –
இதர தர்மங்களைச் சொல்லுகிறது பிரமாணங்கள் அன்று என்று நீர்
சொல்லுகிறது எத்தாலே என்னில்
அவை பல பிரதங்கள் ஆம்போது பகவத் பிரசாதம் வேணும் –
பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹகரிக்க வேண்டா
என்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்
ஈதன்று என்பார் ஆர் –
அல்லாதவை போல் அன்றிக்கே
உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -49-60–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 23, 2013

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

பதவுரை

மலை–மந்தர பர்வதத்தை
ஆமை மேல் வைத்து–கூர்ம ரூபியான தன் மேல் வைத்து
வாசுகியை–வாஸுகி நாகத்தை
சுற்றி–(கடை கயிறாகச்) சுற்றி
அலையாமல்–நீர் வெளியில் புரளாமல்
பீற–(அமுதம்) புறப்படும்படியாக
கடைந்த–(கடலைக்) கடைந்தருளின
பெருமான்–எம்பெருமானுடைய
ஆமை–கூர்ம ரூபியாகத் திருவவதரித்த தானே
ஒரு கை பற்றி–(மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி
திருநாமம்–திருநாமங்களை
கூறுவதே–வாய்விட்டுச் சொல்லுவதே
யாவர்க்கும்–அனைவர்க்கும்
கூற்று–வாய்ப் பேச்சாகக் கடவது

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
கூர்ம ரூபியான தன் மேலே-மலையை வைத்து-வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி –
ஆமையான தான் மேலே-கொந்தளியாத படிக்கு ஈடாக-மலையின் உச்சியை ஒரு கையாலே அமுக்கி –
அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று –
நிரம்பின நீர் புறம் பொசியாமலும்-அமிர்தம் படும்படி உள்ளுடையவும் கடைந்த
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது-

————————————————————————–

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

பதவுரை

கடல்–திருப்பாற் கடலிலே
கிடக்கும்–(பிரமன் முதலியோர்க்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு) திருக்கண் வளர்ந்தருள்கிற
மாயன்–ஆச்சரியபூதனாய்
ஆறு கரை–திருக் காவேரிக் கரையான கபிஸ்தலத்திலே
கிடக்கும்–திருக்கண் வளர்ந்தருள்கிற
கண்ணன்–எம்பெருமானுடைய
உரை–ஸ்ரீஸூக்தியாகிய சரமச்லோகம்
எனக்கு–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
கிடக்கும்–பதிந்திருக்கின்றது
(ஆனபின்பு)
கூற்றமும் சாரா–மிருத்யு பயம் அணுகாமலும்
கொடு வினையும் சாரா–கொடிய பாவங்கள் அணுகாமலும்
தீ மாற்றமும் சாரா வகை–கெட்ட விஷயங்களொன்றும் அணுகாமலுமிருக்கத் தக்க உபாயத்தை
அறிந்தேன்–அறிந்தவனானேன்.

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை யறிந்தேன் –
ம்ருத்யு அணையாமைக்கும் -ம்ருத்யு அணைகைக்கு ஹேதுவான மகா பாபம் அணையாமைக்கும்-அபவாதம் சேராமைக்கும்-உபாயம் அறிந்தேன் – –
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து ஆச்சர்ய பூதனை-அனந்தரம்
திருக் கபிஸ்தலத்திலே கண் வளர்ந்து அருளுகிற கிருஷ்ணன் –
உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச்  செய்த சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்
கூற்றம் -வர்ணாஸ்ரம தர்ம நிஷ்டரில் வ்யாவ்ருத்தி
கொடு வினை -த்ருஷ்ட அத்ருஷ்ட காம்ய பரரில் வ்யாவ்ருத்தி –
இவை இரண்டும் பிரபன்னனுக்கு இல்லை -என்றபடி
ஆயன் இத்யாதி –
அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு
அதாவது -தத் விஷய ஜ்ஞானம்
அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-

————————————————————————–

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

பதவுரை

புனம்–தன்னிலத்திலே வளர்கிற
காயா–காயாம்பூவினுடைய
வண்ணனே–நிறம் போன்ற நிறமுடைய பெருமானே!
எனக்கு–(உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்ர பூதனான) எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை)
எம்பெருமான்–ஸர்வேச்வரனாகிய நீயும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனே யன்றி
மற்று–எனக்கு ஒப்பாக வல்லையோ?
உன்னை பிறர் அறியார்–நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள்,
என் மதிக்கு–(உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு
விண் எல்லாம் விலை உண்டோ–மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ?

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே-
எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற எனக்கு-ஒருத்தர் எதிர் உண்டோ –
எம்பெருமான் தனக்காவான் தானே மற்று அல்லால் –
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு
ஒப்பு அன்று –
-புனக்காயா வண்ணனே யுன்னைப் பிறர் அறியார்
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீ-ரஷகன் அல்லை யாகிலும் விரும்பப்படும் உன்னை
அசலார் அறியார் –
என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை –
சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

———————————————————–

என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான்
என் என்னில்-இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

பதவுரை

தக்கோர்–அறிவு முதலியவற்றால் பெருமை பெருந்தியவராகத் தங்களை அபிமானித்திருக்கும் நீசர்கள்
விலைக்கு ஆள்படுவர்–ஜீவனத்திற்காகப் பிறர்க்கு அடிமைப் பட்டிருப்பர்கள்
விசாதி ஏற்று உண்பர்–(மிகுதி தானங்கள் வாங்கும் முகத்தால் பிறருடைய) வியாதிகளைத் தாம் வாங்கி அநுபவிப்பர்கள்
தலைக்கு ஆள்பலி திரிவர்–ஒருவன் தலைக்காகத் தம் தலைமை அறுப்பதாகச் சொல்லி நரபலியாகத் திரிவர்கள்
முலைக்கால்விடம் உண்ட வேந்தனையே–(பூதனையின்) முலையிடத் துண்டான விஷத்தை உட்கொண்ட பெருமானையே
வேறுஆ எத்தாதார்–விலக்ஷணமாகத் துதிக்கமாட்டாதவர்களாய்
கல்லாதவர்–அறிவு கெட்டவர்களாய்க் கொண்டு
கடம் உண்டார்–பாபங்களை யநுபவிப்பவர்களாயிரா நின்றார்கள்.

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர் தலைக்காட் பலி திரிவர் தக்கோர் –
ஈஸ்வர சேஷமாய்-அனன்யார்ஹமான வஸ்துவை வேறு சிலர்க்கு சேஷம் ஆக்கியும்
ஜீவனத்துக்காக பிறர் உடைய வியாதிகளை-நீர் வார்ப்பித்துக் கொண்டு
ஒருத்தன் பிழைத்தால் தலை யரிகிறேன் என்று-பிரார்த்தித்து பலி த்ரவ்யமாய்
திரிந்தும் அன்றோ படுகிறது
தக்கோர் -என்று ஷேபோக்தி
முலைக் கால் விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
இவர்கள் குறித்து செய்வது ஸ்வ விரோதியைப் போக்குமவனை ஏத்தாமை
கடமுண்டார் கல்லாதவர் –
தேத்வகம் புஞ்சதே பாபா -என்னும்படியேபாபத்தை புஜிக்கிறார்கள் –
அன்றிக்கே
கொடுக்க உடல் இன்றிக்கே இருக்க-தனிசு வாங்கி ஜீவிக்குமவர்கள் என்னவுமாம் –
கடமுண்டார்--கடன் பாபமாய் -அத்தை அனுபவித்தல்-

————————————————————————–

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53

பதவுரை

கல்லாதவர் இலங்கை–அறிவு கெட்ட ராக்ஷஸருடையதான இலங்கா புரியை
கட்டு அழித்த–அரணழித்த
காகுத்தன் அல்லால்–இராமபிரானை யல்லது
ஒரு தெய்வம்–வேறொரு தெய்வத்தை
யான் இலேன்–நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை–கண் கொண்டு காணக் கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை–(உண்மையில்) தெய்வத் தன்மை யற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை–பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும் வுள்ள சிலரை
தேவு–தெய்வங்களாக
தேறேல்மின்–நீங்கள் நினைக்க வேண்டா.

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –
கற்றான் ஒருத்தன் உளனாக-அவனைப் புறப்பட விட்ட ஜ்ஞான ஹீநருடையதான
சக்கரவர்த்தி திருமகனை ஒழிய வேறு ஓன்று-சமாஸ்ரயணீ யமாக நினைத்து இரேன் –
பாவோ நான்யத்ர கச்சதி -என்கிற திருவடியைப் போலே இவரும்
-பொல்லாத தேவரைத்
சுபாஸ்ரயமாக விருபாஷன் தொடக்கமானவரை-ஆஸ்ரயிக்கப் போமோ
தேவர் அல்லாரைத் –
அத்தை பொறுத்து ஆஸ்ரயித்தாலும் கட்டக்குடியன் அப்ராப்த ஸ்தலம் –
திரு இல்லாத் தேவரைத்
மோஷ பிரதானவன் ஸ்ரீ ய பதியன்றோ –
தேறேல்மின் தேவு –
ப்ராப்த ஸ்தலம் அல்லாமையே யன்று-ஆஸ்ரயித்தால் பிரயோஜனம் இல்லை என்கை –
தேறேல்மின் தேவு —
முகப்பிலே புத்திர பஸ்வாதிகளை தருமத்தைக் கண்டு-ஆஸ்ரயணீயராக புத்தி பண்ணாதே கொள்ளுங்கோள்

கட்டகுடியன் -ஆபாத தயா குடி போலே-தோற்றி வரி இறுக்க மாட்டாதவன்
எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை-
கட்டம் –கஷ்டமாய் தரித்திரன் என்றபடி
குடி போலே இருக்கையாலே எடுக்கவுமாம்
தரித்திரன் ஆகையாலே கழிக்கவுமாய் இருக்கும் அங்கு
இங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை
தேவு -அல்ப பல பரதன் என்றபடி

————————————————————————–

தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

பதவுரை

தேவர் ஆய் நிற்கும் அத்தேவும்–(அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும்,
முது புணர்ப்பும்–அநாதியான நிலைமையும்
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம்– மற்றும் மனிதர் முதலியனவாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும் (ஆகிய எல்லாம்)
அத் தேவரில்–அந்த தேவர்களுக்குள்ளே
மூவர் ஆய் நிற்கும்–த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற
நெடுமால் என்று ஓராதார்–ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந் துணர மாட்டாதவர்கள்
கற்கின்றது எல்லாம் கடை–பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது.

ஆதித்ய இந்த்ராதிகளுக்கு நடுவே நிற்கிற நிலையும்-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார -என்கிற-பிரதம அவதாரத்தையும்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும்-சேதன த்வாரா ப்ரவேசித்து
அவற்றுக்கு வஸ்துத்வ நாம் பாக்த்வம்-உண்டாம்படி நிற்கிற நிலையும்
சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –

————————————————————————–

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

பதவுரை

அமரர் கடை நின்று–(இவ்வுலகத்தவர்கள்) தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும்-நெடுங்காலம் வரையில்
கழல் தொழுது–(அவர்களுடைய) காலில் விழுந்து (பரம புருஷார்த்தம் பெற மாட்டாமல்)
இடை நின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்
குடை நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ் வுலகத்தைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
நின் அடியை–உனது திருவடிகளை
ஓத வல்லாரவர் ஆர்–அநுஸந்திக்க வல்லார் ஆரேனுமுண்டோ? (யாருமில்லையே!)

தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று சர்வேஸ்வரன்-பக்கல் பண்ணும் ப்ரணாமாதிகளை யவர்கள்-பக்கலிலே பண்ணும்
சம்சார சுகமும் இன்றிக்கே-நிரதிசயமான மோஷ சுகமும் இன்றிக்கே இறுக்க-ஸ்வர்க்க சுகத்தை உடையர் ஆனவர் –
ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி
ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் –

————————————————————————–

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56-

பதவுரை

அவர் இவர் என்று இல்லை–பெரியார் சிறியார் என்று ஒருவாசி யில்லை
அனங்கவேள் தாதைக்கு–காமனுக்குத் தந்தையான் கண்ண பிரானுக்கு
எவரும்–ஒருவரும்
எதிர் இல்லை கண்டீர்–எதிர் நிற்க வல்லாரில்லை காண்மின்
உவரிக் கடல் நஞ்சம் உண்டான்–கடலில் தோன்றின விஷத்தை உட் கொண்டவனான சிவன்
வாணற்கு–பாணாஸுரனுக்கு
கடன் என்று–‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி
உடன் நின்று–அவனோடு கூடவே யிருந்து
ஒருங்கு தோற்றான்– குடும்பத்தோடே தோற்று ஓடிப்போனான்.

அவரிவர் இத்யாதி –
காமனுக்கு உத்பாதகனுக்கு ஒருத்தரும்-உபமானம் இல்லாமைக்கு விசேஷஞ்ஞரோடு
அவிசேஷஞ்ஞரோடு வாசி இல்லாமை கண்டிகோளே
உவரி -இத்யாதி
ஒருத்தரும் இல்லை என்கிறது என் -ஒரு தேவர் இல்லையோ என்னில் –
அவரும் செய்தபடி இது அன்றோ என்கிறார் –
அம்ருத மதன காலத்தில் உண்டான விஷத்தை-கண்டத்திலே தரித்தானான ருத்ரனும்
தன்னை ஆஸ்ரயித்த வாணனுக்கு ஒலக்கத்தில்-ரஷிக்கிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி-அவன் தானே சாஷியாகத் தோற்றான் –
ஒருங்கு –
ஒருப்படிப்பட வாணனோடு தன்னோடு வாசி யற-
கடன் என்று கடவன் நிர்வாஹகன் -என்று

————————————————————————–

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

பதவுரை

பேசில்–உண்மை பேசப் புகுந்தால்
பெரு குருந்தம் சாய்த்தவனே–பெரிய குருந்தமரத்தை வேர் பறியத் தள்ளி முறித்த கண்ணபிரானே
ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்–உடன் நிற்கும் புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகன்,
மருங்கு இருந்த–ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)
வானவர் தாம்–தேவர்களும்
தானவர் தாம்–அசுரர்களும்
தாரகை தான்–இப் பூமியும் (ஆகிய இவையெல்லாம்)
என் நெஞ்சம் ஆனவர் தாம்–என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேச்வரனேயாம்
அல்லாத்து என்–அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது

அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகனானவனே –
குருந்தை அனாயாசேன ஒசித்தாற் போலே-நம்முடைய வலிய பிரதிபந்தங்களைப் போக்குவான்-
ஆசன்னரான தேவ-அசுர பூமி என் நெஞ்சகம் எல்லாம் அவனே -ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –

—————————————————————–

என் நெஞ்சமேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –

பதவுரை

என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே நித்ய வாஸம் செய்பவனும்
இருள் நீக்கி எம்பிரான்–(நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும்
முன் ஒருநாள்–முன்பொரு காலத்தில்
மன் அஞ்ச–மஹாபலி சக்ரவர்த்தி பயப்படும் படியாக
மண் அளந்தான்–பூமியை அளந்து கொண்டவனும்
என் நெஞ்சம் மேயானை–(அந்த திருக் கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை
இல்லா–நெஞ்சில் உடையனாகாத
விடை ஏற்றான்–ரிஷப வாஹநனான ருத்ரனுடைய
வெம் வினை–மஹா பாதகத்தை
தீர்த்து–தொலைத்து
ஆயானுக்கு–(அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு
அன்பு ஆக்கினேன்–என் அன்பைச் செலுத்தினேன்.

என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-
அத்தாலே எனக்கு உபகாரகனாய்-ஷத்ரிய ஜாதி எல்லாம் அஞ்சும்படிக்கு ஈடாக
பண்டு பூமியை அடைய தன் கால் கீழே இட்டுக் கொள்ளுவதும்-செய்து -பின்னையும்
என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறவனை
தன் நெஞ்சிலே கொள்ளாத ருஷப வாகனனுடைய-மகா பாபத்தைப் போக்கி
அத்தாலே தான் உளனான வனுக்கு-ச்நேஹத்தை உண்டாக்கினேன்-

————————————————————————–

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

பதவுரை

அன்பு ஆவாய்–(என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே!
ஆர் அமுதம் ஆவாய்–பரம போக்யனாயிருப்பவனே!
அடியேனுக்கு இன்பு ஆவாய்–(உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே!
என் கேசவனே–எம்பெருமானே!
கேடு இன்றி–ஒரு குறையுமில்லாமல்
ஆள்வாய்க்கு–ரக்ஷிக்க வல்லவுனுக்கு
எல்லாமும் நீ ஆவாய்–மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயே யாயிருப்பவனே!
பொன் பாவை கேள்வா–திருமகள் நாதனே!
கிளர் ஒளி–(அத் திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியையுடைய
நான் அடியேன்–நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன்
ஆள்–(அடியேனைக் காத்தருள்)

என் பக்கல் பிரேமத்தை உண்டாக்கி-நிரதிசய போக்யனுமாய்-எனக்கு ஸ்வ அனுபவத்தையும் தந்து-
அனுக்த்தமான போக்யங்களையும் தந்து
இவை எல்லாம் செய்கைக்கு அடியான பிராட்டிக்கு வல்லபனாய்
இவளோட்டை சம்ச்லேஷத்தால்-நிரதிசய ஔஜ்வல்யனாய்
பிரசச்த கேசனாய்-கைங்கர்ய அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே
என்னை அடிமை கொள்ளுகிற உனக்கு நான் அடிமை –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று-
அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று –
முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-

————————————————————————–

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-

பதவுரை

கேட்பார்க்கு–ஸ்வ யத்நத்தாலே கேட்டறிய விரும்புவர்களுக்கு
அரு பொருள் ஆய் நின்றி அரங்கனே–அறிய வொண்ணாத பரம் பொருளான அரங்க நாதனே!
ஆள் பார்த்து உழிதருவாய்–நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே!
நின் தாள் பார்த்து உழி தருவேன்–உனது திருவடிகளின் ஸேவைக்காக அலைந்து திரிகின்ற என்னுடைய
தன்மையை–இந்த ஸ்வபாவத்தை
என்றும்–என்றைக்கும் நிலைத்திருக்கும் படியாகக் கடாக்ஷித் தருள வேணும்
உன்னை விரும்புவதே–நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை
மனம்–நெஞ்சில்
விள்ளேன்–தவிராதவனா யிருக்கின்றேன்.

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின் தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை
தேவர் திருவடிகளை காண்கையே ஸ்வ பாவமான என்னை-ஆரோ நமக்கு அகப்படுவார் என்று பார்க்கும் அதுவே-
ஸ்வ பாவமாக இருக்கிற நீ-காலம் எல்லாம் இப்படியேயாகப் பார்த்து அருள வேணும் –
-கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற வரங்கனே-
நாயமாத்மா ப்ரவசநே நலப்ய நமேதே யான பஹூ நா ஸ்ருதேன் -என்னும்படியே
உன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே-ஸ்ரவணாதிகள் பண்ணுவார்க்கு அரியையாய்
நீயே காணக் காட்டக் காண்பார்க்கு எளியை யாகைக்காக-கோயிலிலே கண் வளருகிறவனே
உன்னை விரும்புவதே விள்ளேன் மனம் –
என்னுடைய மனசானது உன்னை விரும்புகைக்கு- –தவிராததாய் இருந்தது –
விரும்புகையை விடாது ஒழிகையை பார்த்து அருள வேணும் என்றுமாம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -37-48–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 22, 2013

ஆதி நெடுமாலை விவரிக்கிறது –

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37

பதவுரை

வான்–ஆகாசமும்
தீ–அக்நியும்
உலவு வளி–உலாவுகின்ற வாயுவும்
மா கடல்–பெரிய கடலும்
மா பொருப்பு–பெரிய குலபர்வதங்களும்
உலவு–திரிகின்ற
வெம் கதிர்தானும்–உஷ்ணகிரணனான ஸூர்யனும்
தண்மதியும்–குளிர்ந்த சந்திரனும்
மேல் நிலவு–மேலே நிலாவுகின்ற
கொண்டல்–மேகங்களும்
பெயரும்–சேதநவர்க்கமும்
திசை எட்டும்–எட்டுத் திசைகளும்
சூழ்ச்சியும்–ஆவரணங்களும்
அண்டம்–ஆகிய இவையெல்லாவற்றோடுங் கூடின அண்டமும்
திருமால்–ஸர்வேச்வரனுடைய
அகைப்பு–ஸங்கல்பத்தினாலாயது.

சூழ்ச்சியும் ஆவரணமும்
இவை எல்லாம் திருமால் அகைப்பு -எழுச்சி
ஸ்ரீ ய பதியினுடைய பிரயத்னம் – சங்கல்பம் -என்கை

————————————————————————–

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38

பதவுரை

அகைப்பு இல் மனிசரை–உஜ்ஜீவிக்க மாட்டாத மனிசர்களை
ஆறு சமயம்–(நீ சங்களான) ஆறு மதங்களில்
புகைத்தான்–புகும்படி செய்தவனும்
பொரு கடல் நீர் வண்ணன்–அலையெறிகின்ற கடல் நீர்போன்ற திருநிறத்தை யுடையவனுமான ஸர்வேச்வரன்
உகைக்கும் ஏல்–உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்
அப்போது–அப்போதே
எத் தேவர் வாலாட்டும்–எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்
எவ்வாறு செய்கையும்–எவ்விதமான (யஜ்ஞம் முதலிய) காரியங்களும்
அழைப்பு–(தேவதைகளின்) ஆஹ்வாகமும்
ஒழியும்–ஒழிந்து போய்விடும்

அகைப்பில் மனிசரை –
எழுச்சி இல்லாத மனிசரை –
அளவில்லாதவர்களை -என்கை
ஆறு சமயம் புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன்
சூத்திர பதார்த்தங்களை அகபபடுத்த புகைக்குமா போலே
பாஹ்ய சமயங்களைக் காட்டி-அகப்படுத்தினான் சர்வேஸ்வரன் –
உகைக்குமே எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் அழைப்பு -நெகிழ நிற்குமாகில் தேவதாந்தரங்கள்-
ஈச்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே
பண்ணும் அபிமானமும்
அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும்
அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும் –

————————————————————————–

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39

பதவுரை

திருவேங்கடத்தானை–திருவேங்கடமுடையானை
காண–கண்ணால் ஸேவிக்க
அழைப்பன்–வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன்
வரண்டி வந்து இழிய–திரட்டிக்கொண்டு வந்து இழிய (அச்சு ரத்னங்களின் ஒளியைக்கண்டு அக்நிஜ்வாலைகளாக ப்ரமித்து)
யானை–யானைகளானவை
வெருவி–பயப்பட்டு நிற்கவும்
அரவு–மலைப் பாம்புகளானவை
மழை–மழை போல் சொரிகின்ற
பேர் அருவி–பெரிய அருவிகளானவை
மணி–அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை
ஒடுங்கும்–(அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற
வெற்பு–திருமலையை
கூட–சென்று கூடவேணுமென்று
திருக்கூடல் இழைப்பன்–கூடலிழைக்கின்றேன்

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
போக மோஷத்துக்கோ என்னில் –காண –
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு
அரவு ஒடுங்கும் வெற்பு –மலையிலே பெரிய அருவிகள்
ரத்னங்களைக் கொண்டு வந்து இழிய-
ரத்ன தீப்தியை ஆனை அக்நி என்றும் சர்ப்பம் மின் என்றும்
பயப்பட்டு ஒதுங்கும் திருமலை–
அன்றிக்கே
நெருப்புக்கு பயப்பட்டு யானை-மலைப் பாம்பின் வாயிலே புக்கு ஒடுங்கும் -என்றுமாம் –
இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-இழைப்பன் திருக் கூடல் என்று அந்வயம்

————————————————————————–

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லிவருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘ என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை -அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –
வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்
நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று எது பற்றிற்று என்று-விசாரியா நின்றேன்
கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால்வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்

————————————————————————–

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41

பதவுரை

கல் அருவி–ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக
முத்து உதிர–முத்துக்கள் உதிரப் பெற்றதாய்,
ஒணம் விழவில்–திருவோணத்திருநாளில்
ஒலி அதிர–(திருப்பல்லாண்டு பாடுகை வேத்பாராயணம் செய்கை ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய்
பேணி வரு–(பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான
வேங்கடவா–திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடையவனே!
என் உள்ளம் புகுந்தாய்–நீ என் நெஞ்சிலே புகுந்துவிட்டாய் (நீ திருமலையைவிட்டு என்னுள்ளத்திலே வந்துவிட்டாலும்)
திருவேங்கடம் அதனை சென்று காணல் உறுகின்றேன்–நான் அத்திருமலையிற் சென்று ஸேவிக்க விருப்பங்கொண்டிருக்கிறேன்.

ஒலியை உடைய அருவிகளாலே முத்து உதிர –
திருவோண நஷத்ரம் ஆகிற மகா திவசத்திலே
அனுகூலர் உடைய மங்களா சாசனத்தாலே வந்த த்வனி
மிக பிராப்தயா வந்து ஆஸ்ரயிக்க படும் திருமலை யை உடைய
நீ என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் –
நான் திருமலையை அடைந்து காணல் உறுகின்றேன்

————————————————————————–

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42

பதவுரை

சேண் உயர் வேங்கடத்தை–மிகவும் ஓங்கின (சிகரத்தையுடைய) திருமலையை
சென்று வணங்குமின்–சென்று வணங்குங்கோள் (அத்திருமலையானது)
நீர்மையால்–தன் ஸ்வபாவத்தினால்
நின்று வினைகெடுக்கும்–பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும்
அங்கு–அத்திருமலையில்,
கடி கமலம் நான்முகனும்–பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும்
கண் மூன்றத்தானும்–முக்கண்ணனான சிவபிரானும்
என்றும்–எக்காலத்தும்
அடி–(எம்பெருமானது) திருவடிகளிலே
கமலம்–தாமரைப் புஷ்பங்களை
இட்டு–ஸமர்ப்பித்து
ஏத்தும்–துதித்துக்கொண்டிருப்பார்கள்.

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
சென்னி யோங்கு தண் திரு வேங்கடம் -என்னும்படியே-புறப்பட்டவாறே
கண்டு கிலேசம் தீரும் படியாக-ஆகாச அவகாசம் அடங்க விழுங்கும்படி
உயர்ந்த சிகரங்களை உடைய திருமலையை சென்று வணங்குங்கோள்
நீர்மை யால் நின்று வினை கெடுக்கும்–
விரோதியான பாபத்தை திருமலை-தன் ஸ்வபாவத்தாலே நசிப்பிக்கும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும் அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு
பிரயோஜனாந்த பரரும் தங்கள் அதிகாரம் பெறுவது-இத் திருமலையிலே அவனை ஆஸ்ரயித்து-திரு நாபி கமலத்திலே அவயவ தானேன பிறந்த
சதுர முகனும் லலாட நேத்ரனும்-அவன் திருவடிகளை
புஷ்ப்யாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்தது-

————————————————————-

சதுர்  முகனும்-லலாட நேத்ரனும்-திருமலையில் ஒரு கால் ஆஸ்ரயித்து போம் அளவு அன்று –
சமாராதான காலங்கள் தோறும் சமாராதான-உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிப்பார்-என்கிறது –

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43

பதவுரை

மங்குல் தோய் சென்னி–மேகமண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான
வடவேங் கடத்தானை–வட திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு
காப்பு அணிவான்–திருவந்திக் காப்பிடுவதற்காக
திங்கள் சடை ஏற வைத்தானும்–சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்
தாமரை மேலானும்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்
தாம்–ஆகிய இவர்கள்
குடை ஏற குவித்துக் கொண்டு–திருமுத்துக் குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு
கங்குல்–ஸந்த்யா காலந்தோறும்
புகுந்தார்கள்–திருமலைக்குச் செல்லுவர்கள்

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
மேக பதத்திலே செல்ல உயர்ந்த சிகரங்களை-உடைய திருமலையை உடையவனை –
காப்பணிவான் கங்குல் புகுந்தார்கள்-
திருவந்திக் காப்பெடுப்பான்-சமாராதான காலம் தோறும் புகுந்தார்கள் –
திங்கள் சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும் குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு
சந்த்ரனை சடையிலே தரித்த ருத்ரனும்-தாமரைப் பூவை ஜென்மமாக உடைய ப்ரஹ்மாவும்-
திரு முத்துக் கொடை முதலானவற்றைத் தரித்துக் கொண்டு கங்குல் புகுந்தார்கள் –

—————————————————————-

குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே -கால் நடை
ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-
அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டிவிட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசைகொண்டு செல்லுங்கோள்

எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே கால்நடை யாடும் போதே
ஆச்ரயித்துப் போருங்கோள்-

——————————————————-

வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –
என்கிறார் –

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45

பதவுரை

புண்டரீகம் பாதம்–திருவடித் தாமரைகளில்
புரிந்து–அன்பு பூண்டு
மலர் இட்டு–புஷ்பங்களைப் பணிமாறி
பரிந்து–மங்களாசாஸநம் பண்ணி
படுகாடு நிற்ப–வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால்பேராமல் நிற்கும்படியாக
எங்கும்–ஸகல ப்ரதேசங்களிலும்
தெரிந்து–விளங்கி
தான் ஓங்கி நிற்கின்றான்–குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளியிருக்கும் பெருமானுடையதாய்
தண் அருவி வேங்கடமே–குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே
வானோர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
மண்ணோர்க்கும்–நிலத் தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
வைப்பு–நிதியாயிருக்கும்.

நிரதிசய போக்யமான திருவடிகளிலே-ஆதரித்து புஷ்பாதிகளை இட்டு
ச்நேஹித்து படுகாடு கிடக்கும் படியாக-விசத தமமாக எங்கும் குறைவற்றவனுடைய
ஸ்ரமஹரமான திரு மலையே-உபய விபூதிக்கும் பிராப்யம்-

————————————————————————–

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

பதவுரை

மா மதியை–‘சிறந்த (இந்த) சந்திரனை
மணி விளக்கு ஆ–மங்கள தீபமாக
வைப்பன் என்று–(திருமுன்பே) வைக்கப்படவேன் என்றெண்ணி (அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக)
கை நீட்டும்–உயரத் தூக்கின கை தூக்கினபடியே யிருக்கிற
யானையை–ஒருயானையை (பிடிப்பதற்காக)
எப்பாடும்–நாற்புறமும்
வேடு வளைக்க–வேடர் சூழ்ந்து கொள்ள
குறவர்–(அங்குள்ள) குறவர்கள்
வில் எடுக்கும்–(அவ்யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக்கொண்டு போகுமிடமான
வேங்கடமே–திருமலையையே
நாடு–நாட்டிலுள்ளாரனைவரும்
வளைத்து–பிரதக்ஷிணம் பண்ணி
ஆடுதும் ஏல்–(மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம் பண்ணப் பெற்றால்
நன்று–நல்லது

சந்தரன் அணியனாய் இருக்கையாலே-சர்வேஸ்வரனுக்கு திரு நந்தா விளக்காக வைப்பன்-என்று ஒரு கால் நீட்டிக் கிடைக்காது ஒழிந்தால்
மீள அறியாதே -எப்போதும் கை நீட்டின படியே-அந்ய பரமாய் நிற்கிற யானையை
புறம்புள்ள வேடர் சூழ-
திருமலையில் வர்த்திக்கும் குறவர்-வில் எடுத்தபடி எதிர்க்கும் திருமலையே
அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று-

————————————————————————–

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

பதவுரை

ஆளியும்–யாளிகளும்
கோள் அரியும்–வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்–பொன்களும்
மணியும்–மாணிக்கங்களும்
முத்தமும்–முத்துக்களும்
பூ மரமும்–பூத்த மரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்–பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே கலந்து உருண்டு விழப்பெற்ற காடுகளும்
வானரமும்–குரங்குகளும்
வேடும்–வேடச்சாதியுமாகிற இவற்றை
உடை–உடையதான
வேங்கடம்–திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர்–நல்ல நீலரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ்தானமாம்

ஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திருமலையை ஊர் என்கிறது –
ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திரு அயோத்யையிலும்-காட்டை விரும்பினார் இ றே பெருமாள் –
அவர் விரும்பின காட்டை விரும்பிப் போகிற இளையபெருமாள்-அக்காட்டோபாதி இப்படை வீட்டையும் நினையும் கிடீர்-என்றார் இறே திருத் தாயார் –
ராமம் தசரதம் வித்தி-வத்யதாம் பத்யதாம் -என்று அறுவராதே-உங்கள் தமையனாரோபாதியாக உங்களையரையும் நினையும் கிடீர் –
மாம் வித்தி ஜனகாத்மஜம் -உங்கள் தமையனார் உகந்த பிராட்டியோபாதி என்னையும்
நினையும் கிடீர் என்கிறார் –
ஆளியும் இத்யாதி –
திருமலையில் வர்த்திக்கும் நித்ய சூரிகளைச் சொல்லுகிறது-

————————————————————————–

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48

பதவுரை

விண்ணோர்–நித்யஸூரிகளால்
மெய்ம்மையால்–உண்மையான பக்தியுடனே
தொழுவதுவும்—ஆச்ரயிக்கப்படுவதும்
வேங்கடமே–திருமலையே
வினை–பாவங்களையும்
மெய் நோய்–உடம்பைப் பற்றின நோய்களையும்
தீர்ப்பதுவும்–போக்கடிக்க வல்லதும்
வேங்கடமே–திருமலையே
தானவர் வீழ–அசுரர்கள் மாளும்படி
தன் ஆழிபடை தொட்டு–தனது சக்ராயுதத்தைப் பிடித்து
வானவரை–தேவர்களை
காப்பான்–காத்தருளுமெம் பெருமானுடைய
மலை–திருமலை
வேங்கடமே–திருவேங்கடமேயாம்

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே
இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் –
அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-பாபத்தைப் போக்குமதுவும் திருமலையே –
வேங்கடமே தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு வானவரைக் காப்பான் மலை –
அசூர ஜாதி தரைப் படும்படிக்கு ஈடாக-திரு ஆழியைப் பிடித்து தேவ ஜாதிக்கு
குடி இருப்பு கொடுத்தவனுக்கு ஊரும் திருமலையே-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -25-36–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 22, 2013

ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன  ஒரு செயல் இல்லை என்கிறார்

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-

பதவுரை

மதியாது–உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல்
வகையால்–நல்ல உபாயங்களாலே
மண் கொண்டாய்–(மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டாய்
மற்றும்-அதற்கு மேலும்,
வயிரம்–வயிரமாகிற ரத்னத்தை
வகையால்–ஔஷதாதி உபாயங்களாலே
குழைத்து–இளகச் செய்து
உண்ணும்–உண்பவனும்
தான் என்னும்–தனக்கு மேற்பட்ட பலிஷ்டா ஆருமில்லையென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான
மாவலி–மஹாபலியினுடைய
வயிரம் வழக்கு–சத்ருத்வமுறையை
ஒழித்தாய்–போக்கினாய்
வகையால்–இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே–உனக்கு ஸித்திப்பதொருபலன் உண்டோ? (எல்லாம் ஆச்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.

-வகையால் மதியாது மண் கொண்டாய்-மகா பலி உகக்கும் பிரகாரத்தாலே பூமியை அநாயாசேன கொண்டாய்-வகையால் வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும் வயிர வழக்கு ஒழித்தாய் மற்று -ஒரு உபாயத்தாலே வைரத்தை புஜித்து
அத்தாலே மிடுக்கனாக அபிமானித்து இருக்கிற மகா பலியை –
உடைய சாத்ரவ முறையைத் தவிர்ந்து-மகாபலி பக்கலில் நின்றும் ராஜ்ஜியம் மீட்டுக்
கொடுத்து உபகரித்தாய்
மற்றும் வகையால் வருவது ஓன்று உண்டே –
இவற்றால் உனக்கு பிரயோஜனம் ஆவது ஓன்று உண்டோ

————————————————————————–

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்குமாறு–26

பதவுரை

கடல் வண்ணா-கடல் போன்ற திருநிறமுடைய பெருமானை!
யான் தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை–அடியேனால் ஆச்ரயிக்கப்படும் தெய்வம் (நீதவிர) வேறு எதுவுமில்லையென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்–சேர்த்துக் கட்டின ஜடையை யுடையனான ருத்ரன்
கரி கண்டாய்–ஸாக்ஷிகாண்
யான்–இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை–உன்னை
எற்றைக்கும்–எந்நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு–ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டு கொள்–கடாக்ஷித்தருள வேணும்.

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை-கற்றைச் சடையான் கரிக்கண்டாய் –
நான் தேவதாந்திர சமாஸ்ரயணம் பண்ணேன்-என்னும் இடத்துக்கு ஆள் பிடித்துத்
தொழுவித்துக் கொள்ளும் ருத்ரன் சாஷி –
எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டுகொள் கிற்குமாறு –
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக
பார்த்து அருள வேணும் –

———————————————————

பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற
படியைப் பேசுகிறார் –

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாகக்  கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27

பதவுரை

பேதை காள்–மூடர்களை!,
மால்–எம்பெருமான்
தான் புகுந்த–தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்–(எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்–வேறொன்றை
பேறு ஆக–புருஷார்த்தமாக
கொள்வனோ–நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்–நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத–ஸேவிக்க முடியாததும்
தார்–புஷ்பங்களினால் அர்ச்சிக்கப்பட்டதும்
அகலம்–போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை–திருவடியை
யான் காண வல்லேற்கு–ஸேவிக்கும்படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது–இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.

மாறான் புகுந்த மட நெஞ்சம்-
ஈஸ்வரன் வ்யாமுக்தனாய் -மால் தான் -மாறான்-புகுரும்படி ருசியை உடைய நெஞ்சே –
-நீறாடி-தான் காண மாட்டாத தாரகல சேவடியை –
ருத்ரன் காண மாட்டாத-தாரையும் அகலத்தையும் உடைத்தான-திருவடிகளை
மற்றதுவும் பேறாகக்  கொள்வேனோ பேதைகாள் யான் காண வல்லேற்கு இது
காண வல்லேனான எனக்கு
இது ஒழிய வேறு ஒன்றை பேறாக கொள்வேனோ –
வேறு ஒன்றைப் பேறாக நினைத்து இருக்கும்-அறிவு கேடர்காள்

————————————————————————–

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28

பதவுரை

இலங்கை–லங்காபுரியானது
ஈடு அழிய–சீர்குலையும் படியாக
கட்டிய–(வானர சேனையைத் துணை கொண்டு) கட்டின
சேது–திருவணை
இது–இது காண்மின்,
விலங்கு–திர்யக் யோநியிற் பிறந்தவனான
வாலியை–வாலியை
வீழ்த்தது–முடித்தது
எய்தான்–அம்புகளைச் செலுத்தின இராமபிரானுடைய
இது–இப்போது நடந்த செயல் காண்மின்,
இலங்கை தான்–லங்காபுரியானது
ஒடுங்க–அழியும்படியாகவும்
வில் நுடங்க–சார்ங்கலில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க–(அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலையணிந்து கொண்டிருந்த
இராவணனுடைய உடல் ஒழியும்படியாகவும்
உகப்பு–விலையான வியாபாரம்
இது–இது காண்மின்

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இலங்கைக்கு மூலையடியே வழி போம்படியாக-கட்டிய திரு வணை இது –
கடல் அடைபட்ட போதே-இலங்கை அழிந்தது என்று-நினைக்கும்படியாக –
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் –
திர்யக்கான வாலியை முடித்ததுவும்
விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார்இராவணனை ஊன் ஒடுங்க எய்தான் –
இலங்கை நெருக்குண்ணவும்-ஸ்ரீ சார்ங்கம் வளையவும்-மதிப்பனான ராவணன் முதுகு கூனவும்
எய்தான் –இது அவன் உகப்பு —
அவன் லீலை-வாலியைக் கொன்ற ஜயமும்-ராவண வதமும்
புத்திஸ்தமான படியிலே இது என்கிறார் –
ஒரு முஷ்டியிலே நின்று எய்ய-நெஞ்சு அழியும்படி யாய் இ றே இருப்பது
இது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்
வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-

————————————————————————–

உகப்புருவம் தானே யொளியுருவம் தானே
மகப்புருவம் தானே மதிக்கில் –மிகப்புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29

பதவுரை

மிக–மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஓசனையான்–ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காதவழி நீளமிருக்கப் பெற்ற கும்பகாணன்
வீழ–ஒழியும்படியாக
அன்றிக் கொண்டு–சீறிக் கொண்டு
ஒரு கணையால்–ஒரு பாணத்தினால்
எய்தானவன்–அடித்து முடித்தவனான இராமபிரானை
மதிக்கில்–சிந்தித்தால்
உகப்பு உருவன் தானே–மநோஹரமான திருமேனியை யுடையவன் அவனே
ஒளி உருவன் தானே–தேஜோ மயமான திருமேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே–மிகவும் ஆச்சரியமான வடிவையுடையவனும் அவனே.

இச்சாக்ருஹீ தாபிமத -என்னும்படி-ஸ்வ வ்யதிரிக்தர்க்கும் பிராப்யமாய்
தனக்கும் அபிமதமாய் -ரஜஸ் தமஸ் மிஸ்ரம் இன்றிக்கே
நிஷ்க்ருஷ்ட சத்வம் ஆகையாலே-நிரவதிக தேஜோ ரூபமாய்
ரூபம் அந்யாத்தரேர் மஹத்-என்னும்படியான
ஆச்சர்யமான வடிவை உடையவனுமான-சக்கரவர்த்தி திருமகன் தானே
ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் யோசனை நீளம் உடைய-கும்பகர்ணன் பட்டு விழும்படி
சங்கல்பத்தால் அன்றிக்கே திருச் சரத்தாலே-தேவ கார்யம் செய்தானாகை அன்றிக்கே
தனக்கே வந்ததாக சீற்றத்தை ஏறிட்டுக் கொண்டு-எய்தான் –
மதிக்கில் இவனுடைய திரு மேனியை-ஒன்றால் பரிச்சேதிக்கப் போகாது என்கை –

————————————————————————–

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

பதவுரை

என்னை ஆளி–என்னை ஆட்கொண்டருள்பவனான
அரங்கத்து அவன்–ஸ்ரீரங்கநாதன்
என்னை–என்னை
அரங்கில்–ஸம்ஸாரமாகிற நாடகசாலையில்
எய்தாமல்–பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்–காத்தருள்வன்,
அவன்–அப்பெருமான்
என்னது–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
நின்றான் இருந்தான்–நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,
(ஆன பின்பு இனி)
அவன்–அப்பெருமான்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவு–அப்பெருமான்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவு அணையின் மேல்–சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே–பொருந்துவனோ? (பொருந்தமாட்டான்.)

அரங்கத்தவன் என்னை ஆளி –
பிறவி மா மாயக் கூத்து -என்று-சம்சாரம் ஆகிய நாடக சாலையில் என்னை ப்ரவேசியாமல்-காப்பார் ஆர் -பெருமாளே –
என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு
திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –

———————————————————-

நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்-
அவனை அன்றோ பற்ற அடுப்பது -என்கிறார் –

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

பதவுரை

மேல்–முன்பொருகால்
நான்முகன்–பிரமன்
அரனை–ருத்ரனைக் குறித்து
இட்ட–கொடுத்த
விடு சாபம்–சாபத்தை
தாரகையுள்–இந் நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
நாராயணன் தான்–எம்பெருமானே
ஒழித்தான்–போக்கி யருளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை–நித்ய ஸூரி நாதனான ஸ்ரீமந்நாராயணனை
ஏத்தாத–வாய் கொண்டு வாழ்த்த மாட்டாத
பேய்காள்–அறிவு கேடர்களே!
பிறக்கும் கரு–பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக்கூடிய)
மாயம்–ஆச்சரியமான துக்கங்களை
பேசில்–சொல்லப் புகுந்தால்
கதை–ஒரு மஹாபாரதம் போலே பரந்திருக்கும்.

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் –
பண்டு சதுர்முகன் ருத்ரனை-கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபித்த சாபத்தை
தரணியிலே எல்லாரும் அறிய சர்வேஸ்வரன் போக்கினான் –
வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள்-
ஒருத்தன் தலை அறுத்துப் பாதகியாக-ஒருத்தன் சோச்யனாக-
இருவருடைய வியசனத்தையும் போக்குவதும் செய்து –
நித்ய சூரிகளுக்கு பிராப்யன் ஆனவனை-ஏத்தாத அறிவு கேடர்காள் –
பிறக்கும் கரு மாயம் பேசில் கதை –
இவ்வறிவு கேடு கிடக்கப் பிறவிக்கு-அடியான கர்ப்ப ஸ்தானத்தில் உள்ள
ஆச்சர்யம் சொல்லப் புகில்-மகா பாரதம்

————————————————————————–

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

பதவுரை

கதை பொருள்தான்–(உலகத்தில்) உயவஹரிக்கப்டுகின்ற பொருள்கள் யாவும்
உதைப்பு அளவு போது போக்கு இன்றி–ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் (எப்போதும்)
கண்ணன்–எம்பெருமானுடைய
திரு வயிற்றின் உள்ள–ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன,
(அப்படிப்பட்ட எம்பெருமானுடைய)
வாய்ந்த குணத்து–திருக்கல்யாண குணங்களில்
படாதது–ஈடுபடாத வஸ்து
வதை பொருள் தான்–அபதார்த்தமே யாகும்,
(ஆகையாலே)
ஆய்ந்த குணத்தான்–சிறந்த திருக் குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி–திருவடிகளை
அடைமின்–ஆச்ரயியுங்கோள்

ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்-சர்வேஸ்வரனுடைய சங்கல்பத்தில் உள்ளன –
ஒரு நொடி மாதரம் போது போக்கு இன்றி-ஆச்சர்ய குணத்தில் அகப்படாதது பரஹிம்சை
ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயி யுங்கோள்

————————————————————–

அசாதாரணையான நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க
விரோதியைப் போக்குமவன் என்கிறார் –

அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை
பிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப்பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-

பதவுரை

(எம்பெருமான்)
குறிப்பு–(அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால்
அடி–திருவடியாலே
சகடம்–சகடாஸுரனை
சாடி–ஒழித்தும்
அரவு-காளிய நாகத்தை
ஆட்டி–வாலைப் பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை–குவலயாபீட மென்னும் யானையை
பிடித்து–பற்றிக்கொண்டு
பின்னைக்கா–நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஏறு–கொடிய ரிஷபங்களினுடைய
எருத்து–முசுப்பை
ஒசித்து–கொம்பை முறித்தொழித்தும்
பேய்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
முலை–முலையில் தடவியிருந்த
நஞ்சு–விஷத்தை
உண்டு–அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்
வடி பவளம் வாய் தோளி–அழகிய பவளம் போன்ற வாயையும் தோளையும் வுடையளான
இறுத்து–முறித்தொழித்தும்
பின்னும் கோ ஆனான்–தன்னுடைய சேக்ஷித்வத்தை நிலைநிறுத்திக் கொண்டான்.

திருவடிகளிலே சகடத்தை அழித்து-காளியனைத் துரத்தி
குவலயா பீடத்தை பிடித்து அதன் கொம்பை அனாயேசேன முறித்து
பூதனையை முடித்து
அழகிய பவளம் போன்று இருக்கிற அதரத்தையும்
அழகிய தோளையும் உடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
தன்னை யொக்க வலிய-வ்ருஷபங்களின் உடைய ககுத்தைப் போக்கி
ஸ்வாபாவிகமான சேஷித்வத்தை பின்னையும்
உதறிப் படுத்தான் திரு உள்ளத்தாலே

—————————————————————–

உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க
வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் –

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

பதவுரை

கோட்டியூர் மேயானை–திருக்கோட்டியூரில் நித்யவாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை–திருமலையில் நித்ய வாஸம்பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த–துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு ஆசை
நன்மை பயக்க–(எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு குதூஹலம்,
மெய் வினை–சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்–வியாதிகளும்
எய்தாமல்–வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான்–தானே அவற்றைப் போக்கியருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வெறுப்பனோ–மறந்திருப்பனோ.

திருக் கோட்டியூரிலே எனக்காக சந்நிஹிதன் ஆனவனை
ஏத்தக் கருத்து-சம்ச்லேஷத்தால் வந்த உத்கர்ஷம் பிறக்கக் கருத்து –
வந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று தள்ளுவேனோ
சரீரம் அடியாக வந்த வியாதியும்-வ்யாதிக்கு ஹேதுமான கர்மமும்
கிட்டாமல் மாற்றுமவன் திருவடிகளை மறப்பேனோ –

——————————————————————

-லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ -என்கிறார்-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பதவுரை

நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும்டையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய்திறந்து ஒன்று மருளிச்செய்வதில்லை
(இப்படியிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

தாளால் உலகம் அளந்த அசைவே  கொல்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும்
திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ –
உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-வாளா கிடந்தருளும்  வாய் திறவான்-ஏக ரூபமாய் கிடப்பதும் செய்து 
வார்த்தையும் பேசுகிறிலன்
நீளோதம்வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை-

நீர்க்கரையைப் பற்றி கண் வளருகிறதும் ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-

————————————————————

-பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் –

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

பதவுரை

நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
குடந்தை–திருக்குடந்தையிலும்
வெஃகா–திருவெஃகாவிலும்
திரு எவ்வுள்–திருவெவ்வுளுரிலும் (அப்படியே)
நாகத்து அணை–சேஷசயனத்தின் மீது
பால் கடல்–திருப்பாற்கடலிலும்
ஆதி நெடுமால்–ஜகத் காரண பூதனான ஸர்வேச்வரன்
நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
அரங்கம்–திருவரங்கத்திலும்
பேர்–திருப்பேர் நகரிலும்
அன்பில்–அன்பில் என்னுந் திருப்பதியிலும்
கிடக்கும்–பள்ளி கொண்டிருக்கின்றான்
(எதுக்காக வென்னில்)
அணைப்பார் கருத்தன் ஆவான்–அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக.

திருக் குடந்தையிலே திரு அநந்த ஆழ்வான் மேல்
கண் வளர்ந்து அருளுகிறதும்
கோயில் தொடக்கமான எல்லாத் திருப்பதிகளிலும்
திருப் பாற் கடலிலும்
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரன் தோள் தீண்டியாக
கண் வளர்ந்து அருளுகிறதும்
தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில்
புகுருகைகாக இப்படி அவசர ப்ரதீஷனாக வேண்டுவான்-
என் என்னில் -தான் ஆகையாலே-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -13-24–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 22, 2013

 

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-

பதவுரை

வீடு ஆக்கும் பெற்றி அறியாது–மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்
மெய்–சரீரத்தை
வருத்தி–(உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி
கூடு ஆக்கி–எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி
நின்று–இப்படி நெடுங்காலம் தவம் புரிந்தும்
உண்டு கொண்டு–(தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்மாக) புஜித்தும்
உழல்வீர்–திரிகின்றவர்களே!
வீடு ஆக்கும்–மோக்ஷத்தைத் தரக்கூடிய
மெய் பொருள்தான்–மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள் தான்–வேதங்களினால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும்
விண்ணவர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
நல் பொருள் தான்–போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன்–ஸ்ரீமந்நாராயணனே யாவன்.

வீடாக்கும் பெற்றி யறியாது–
மோஷத்தைப் தருவிக்கும் பிரகாரம் அறியாது
மெய் வருத்திக் கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர்-
சிரகாலம் உண்ணாதே நின்று–பின்பு ஜீவித்து-இப்படி அனுஷ்டிப்போம் என்று நெஞ்சிலே-கொண்டு உழல்வீர் –
கொன்று உழல்வீர் -என்னில்
உங்களை ஹிம்சித்து உழல்வீர் என்றுமாம் –
-வீடாக்கும் மெய்ப்பொருள் தான் –
மோஷத்தை உண்டாக்கும் அவயவஹீத சாதனம் –
வேத முதல் பொருள் தான்-
மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் –
விண்ணவர்க்கும் நற்பொருள் தான் –
நித்ய சூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் –
நாராயணன் –
சர்வேஸ்வரன் –

————————————————————————–

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

பதவுரை

நாராயணன்–நாராயணனென்றுந் திருநாம முடையவனும்
என்னை ஆளி–(விசேஷித்து) அடியேனை ஆட் கொள்பவனும்
நரகத்து சேராமல் காக்கும்–(அடியார்களை) நாகம்போக வொட்டாமல் காத்தருள்பவனுமான
திருமால் தன்–திருமாலினது
பேர் ஆன–திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத–ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கியமற்றவர்களான
பிணம்–ஜீவச் சவமென்னலாம் படியுள்ள பாஹ்ய குத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச–(அபார்த்தங்களைப்) பிதற்ற
கேட்டு-அவற்றைக் கேட்டு
பலர்–பல பேர்கள்
ஆசைப் பட்டு–தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி
ஆழ்வார்–அகோ கதியை யடைந்தொழிவர்

நாராயணன் என்னை யாளி-
அகில ஜகத் ஸ்வாமிந அஸ்மின் ஸ்வாமிந
நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்தன் பேரான பேசப் பெறாத
பிணச் சமையர் பேசக் கேட்டு  ஆசைப்பட்டு ஆழ்வார் பலர் –
பிராட்டிக்கு பிரியமாக ஆஸ்ரிதரை சம்சாரத்தில்-ப்ரவேசியாமல் காக்குமவன்-
இப்படி சர்வ ரக்ஷகனானவனுடைய  திரு நாமங்களைப் பேசப்
பெறாதே -ஜீவியா நிற்கச் செய்தே -ம்ருதப் ப்ராயராய் இருக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்
வேறே ஓர் அர்த்தம் உண்டு என்று சூழக் கேட்டு-அனர்த்தப் படுவார் சிலர் உண்டு என்றும்-
பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

————————————————————————–

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

பதவுரை

பல தேவர்–பல தேவர்கள்
ஏத்த–துதிக்கும்படியாக
படி–பூமியை
கடந்தான்–அளந்தவனான ஸர்வேச்வரனுடைய
பாதம்–திருவடிகளிலே
மலர்–புஷ்பங்களை
ஏற இட்டு–ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
வாழ்த்த வலர் ஆகில்–மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,
நீர் கண்டன் கண்ட நிலை–நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத்தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே–மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே
வரும் கண்டீர்–ஸித்திக்குங்கிடீர்

———

நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

பதவுரை

அந்நான்று–பாரத யுத்தம் நடந்த அக்காலத்து
தேவர் தலை மன்னர் தாமே–தேவாதி தேவனான தானே
மாற்று ஆக–எதிரியாயிருந்து கொண்டு
பல மன்னர்–பல அரசர்கள்
போர்–யுத்தக்களத்தில்
மாள–மடிந்து
வெம் கதிரோன்–ஸூர்யன்
மாய–(அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்
பொழில் மறைய–பூமண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே
என் நெஞ்சம்–எனது (சஞ்சமான) மனமானது
நிலை மன்னும்–சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.

பாண்டவ சத்ருக்கள் தனக்கு சத்ருக்களாகவும்-பல மன்னர் முடியும்படி யாகவும்
பீஷோ தேதி சூர்யா -என்று தன் ஆஞ்ஞையாலே
ஒரு முகூர்த்தம் தப்பாமல் உதிப்பது அஸ்தமிப்பது-ஆகிற ஆதித்யன் மறையவும் –
எதிரிகளுக்கு இவ்விடத்தல் அஸ்தமித்தது இல்லை என்று
குறை சொல்லப் போகாதபடி பூமி அடைய மறையவும் -ஆதித்யனை பிரகாசமான திரு ஆழியாலே மறைத்தார்-ஆனவராலே என்நெஞ்சம் ஸ்திதித்தது
நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய்-சத்ய காமஸ் சத்ய சங்கல்ப என்று ஒதப்படுகிற தாமே
தமக்குத் தகாதபடியான பொய்யாய்ச் செய்கையாலே-என்நெஞ்சு ஸ்திதித்தது-
ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு
நம்முடைய  சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை
நயாசோ நாம பகவதி – -இச் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப்பாட்டால் சொல்லுகிறது-

———————————————————

ஞானாதிகனான ருத்ரனும் தன்னை-ஆஸ்ரயித்தவர்களுக்கு இவ்வர்த்தத்தை இறே சொல்லிற்று-என்கிறார்

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

பதவுரை

மெய் தவத்தோன்–மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன்,
ஞாலம் அளந்தானை–உலகளந்தவனும்
ஆழிக் கிடந்தானை–க்ஷீராப்திசாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை–ஆலிலே மேல் கண் வளர்ந்தவனை
தான் வணங்கும் ஆறு–தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை–நல் வழியை
மேலை யுகத்து–முன் யுகத்திலே
ஆல நிழல்கீழ்–ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு–நான்கு மஹர்ஷிகளுக்கு
உரைத்தான் உபதேசித்தான்.

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன்-
பகவத் பஜனத்தில் அனுஷ்டிதமான
அனுஷ்டானத்தை உடைய ருத்ரன்-ஆல நிழலிலே அகஸ்த்யாதிகளுக்கு
தர்ம மார்க்கத்தைப் பண்டு சொன்னான் –
சொன்ன படி எங்கனே என்னில் –
-ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல் வளர்ந்தானைத தான் வணங்குமாறு –
அவதாரத்துக்கு அடியாக திருப் பாற் கடலிலே வந்து-கண் வளர்ந்து
சிறியார் பெரியார் என்ற வாசி வையாதே
எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வரையாதே-வைத்து வரையாதே எல்லாரையும் தன் வயிற்றிலே வைத்து-
பவனாய்  இருப்பதொரு ஆலிலையிலே கண் வளர்ந்து ரஷிக்குமவனை-தான் வணங்கும் பிரகாரத்தைச் சொன்னான்-

—————————————————————

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார்

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

பதவுரை

மாறு ஆய–எதிரிட்டு நின்ற
தானவனை–ஹிரண்யாஸுரனுடைய
மார்வு–மார்வை
வள் உகிரால்–கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக சீறிய–இரு பிளவாகப் பிளந்த
கோள் அரியை–பெரு மிடுக்கனான நரசிங்க மூர்த்தியை
வேறு ஆக–விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை–துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே–அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆச்ரயிதிருக்கும் சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார்
தவம் -ஸூ க்ருதம்-

——————————————————————

பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு
எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார்

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-

பதவுரை

தவம் செய்து–தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்–பிரமனிடத்து
பெற்ற–(ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை–வரங்களை
அவம் செய்த–பழுதாக்கின
ஆழியாய்–திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை–அடியோங்களை
உவந்து–திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே–காத்தருள்பவன் நீயே யன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே–காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீ யன்றோ,
எவ் உயிர்க்கும்–(உன்னை ஆச்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்–பரம பதத்தை
ஈப்பாயும்–அளிப்பவனும்
நீ அன்றே–நீ யன்றோ.

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த வாழியான் அன்றே –
தபசைப் பண்ணி ப்ரஹ்மாவின் பக்கலிலே ஹிரண்யாதிகள்-பெற்ற வரத்தை அழித்து
வரம் கொடுத்தவர்களுக்கும் குடி இருப்புக் கொடுத்த நீயே
உவந்து எம்மை காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்தமீப்பாயும் எவ் உயிர்க்கும் நீ
உன் பேறாக ரஷிப்பாய் நீ-ரஷணம் தான் நீ-புனராவ்ர்த்தி இல்லாத மோஷத்தை
எவ் உயிர்க்கும் ஈப்பாய் நீ-

————————————————————————–

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-

பதவுரை

உலகு எல்லாம் நீயே–உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்–உலகங்கள் ஸத்தை பெற்று நிற்பதும்
நின் அருளே–உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே–தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்–ஜவுலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து–ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை–ஆகிய இவை யெல்லாம்
நீயே–நீயே காண்.

நீயே யுலகெல்லாம்
உன்னை ஒழிய ஜகத்துக்கு-ப்ருதுக் ஸ்திதியும் ப்ருதுக் உபலம்பமும் இல்லை
நின்னருளே நிற்பனவும் –
உன் பிரசாதம் அடியாக-பெரும் பேறு நிலை நிற்பது –
நீயே தவத் தேவ தேவனும் –
சாதனா அனுஷ்டானம் பண்ணி-அதிகாரம் பெற்றவர்களுக்கும்
உன்னை ஒழிய ஸ்திதி இல்லை –
-நீயே எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து இரு சுடரும் ஆய இவை –
பிரித்து சொல்லுகிறது என்-
அக்நியும்
குல பர்வதங்களும்
எட்டுத் திக்கும்
அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான-இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்-

———————————————————

இப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது –
நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

பதவுரை

திறந்து–விரிந்து
எரி கான்ற–நெருப்பை உமிழ்ந்த
பிலம் வாய்–பாழி போன்ற பெரியவாய்
இவையா–இதுவோ!
எரி வட்டம்–கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள்–திருக் கண்கள்
இவையா–இவையோ!
எரி–அக்நி போலே
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–தோன்றின திருமேனியை யுடையனாய்
இமையோர் பெருமான்–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன்
அரி–நரசிங்க மூர்த்தியாய்
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–காட்டின
அழகு-அழகு
இவையா–என்ன விஷயம்!

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
அவாக்ய அநாதர -என்று தத்வம் இருக்கிற படி –
பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து-அக்நியை உமிழா நின்ற இவை –
அக்னியை உமிழா நின்று-பிலம் போலே இருக்கிற வாய் இவை –
இவையா வெரிவட்டக் கண்கள் –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -என்கிற கண்கள் –
கொள்ளி வட்டம் போலே இருக்கிற கண்கள்
-இவையா வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்-
அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-நித்ய சூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்
அன்றிக்கே
அக்நி கொடுக்கும் ஹவிசை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –
அரி பொங்கிக் காட்டும் அழகு –
நித்ய சூரிகள் பரிய இருக்குமவன்-ஆஸ்ரித அர்த்தமாக நரசிம்ஹமாய்ச்
சீறிக் காட்டின அழகு-

———————————————————–

ஸ்ரீ  நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது –

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-

பதவுரை

தான் ஏழ் உலகுக்கும் வித்து–தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்
தன்மையவன்–ஆச்ரயபூதனாய்
குழவி ஆய்–(பிரளய காலத்தில்) சிறு குழந்தையாய்க் கொண்டும்
மீன் ஆய்–(பின்பொருகால்) மத்ஸ்ய ரூபியாய்க் கொண்டும்
உயிர் அளிக்கும்–ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான
தானே–எம்பெருமான் தானே
தன்மைக்கும்–(ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்
அரி உருவன்–நரசிங்கவுருக் கொண்டவன்
தானே அழகியான்–அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே
பழகியான்–புராண புருஷனாகிய அப்பெருமானுடைய
தாளே–திருவடிகளையே
பணிமின்–ஆச்ரயியுங்கோள்
அழகியான் தானே அரி உருவன் தானே
ஆபத் சகனானவனே அழகியான் –
பழகியான் தாளே பணிமின் –

த்யஜிக்கிற சரீரத்திலும்-வர்த்திக்கிற சரீரத்திலும்-புதுயிகோளாய் இருந்துள்ள நீங்கள் –
உங்கள் கையில் உங்களைக் காட்டிக் கொடாதே-கால த்ரயத்திலும் சரீரங்களில் பிரவேசிகைக்கு நிதானத்தையும்-
அதுக்கு பரிகாரத்தையும் அறியுமவனைஆஸ்ரயிக்க பாருங்கோள்-
பிரகிருதி வாசி அறிந்து பழையனாய் பரிகரிக்கும் வைத்தியனை
வ்யாதிக்ரஸ்தர் பற்றுமா போலே

குழவியாய்த் தான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
கார்ய ஆகாரமான ஜகத்துக்கும்-தன்மாத்ரையான ஜகத்துக்கும்
தானே ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
எல்லா சேதன அசேதனங்களுக்கும்-இவற்றின் குணத்துக்கும் குணி
தன்மைக்கும்-தன் பக்கலிலே வைக்கும்-ச தேவ என்று சொல்லப் படுகிறவனே
தன்னை அழிய மாறி சேதனரை ரஷிக்கும்-த்ரிவித காரணமும் –
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-

—————————————————————

அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-
தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூ க்ருதம் உண்டோ –
சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பதவுரை

விடை அடர்த்த–(நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலியடக்கினவனும்
பத்தி உழவன்–(தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தியுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய
பழம் புனத்து–(ஸம்ஸாரமென்கிற) அநாதியான கேஷத்ரத்திலே
வித்தும் இட வேண்டும் கொலோ–(ஸ்வப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா)
(நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திருநாட்டுக்குச் செல்லுமாளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்)
மொய்த்து எழுந்த–திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன–காளமேகம் போன்ற
கரு மால்–கரிய திருமாலினது
திரு மேனி–திருமேனியை
நீர் வானம்–நீர்கொண்டெழுந்த மேகமானது
நிகழ்ந்து–எதிரே நின்று
காட்டும்–காண்பிக்கும்
(போலி கண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.)

வித்தும் இட வேண்டும் கொலோ –
வித்து என்று சொல்லுகிறது ஸூ க்ருதத்தை –
விடை யடர்த்த பத்தி யுழவன்
நப்பின்னை பிராட்டிக்கு உதவிற்று என்ற வ்யாஜமாய்-ஆஸ்ரிதர் உடைய பக்திக்கு கர்ஷகன் ஆனவனுடைய
பழம் புனத்து –
பழம் புனங்களில் விதைக்க வேண்டாதே-உதறி முளைக்குமா போலே யாத்ருச்சிக
ஈஸ்வரன் ஜகத் சிருஷ்டியைப் பண்ணுவது –
மொய்த்து எழுந்த கார்மேகம் அன்ன கருமால் திருமேனி நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –
ருசி பிறந்த பின்பு பிராப்தி அளவும் நாம் தரிக்கைக்கு-அவன் திருமேனிக்கு போலி உண்டு -என்கை
செறிந்து எழுந்த கார் காலத்தில் மேகம் போலே ச்யாமமான-திருமேனியை உடைய சர்வேஸ்வரனுடைய நிறத்தை-
நீர் கொண்டு எழுந்த கார் மேகம் காட்டும் –

————————————————————————–

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
அவ்வோ யுகங்களில் சேதனர்க்கு பிரியமான-வெண்மை தொடக்கமான நிறங்களை உகந்தாய் –இகழ்ந்தாய் இருவரையும் வீயப் –மது கைடபர்கள் முடிய
அன்றிக்கே
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த -என்னுமா போலே-பஷ த்வ்யத்தையும் முடித்த என்றுமாம் –புகழ்ந்தாய்சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய் மனப் போர் முடிக்கும் வகை –சினத போரை உடைய ஸ்வேத வாஹனான-அர்ஜுனன் சேனைக்கு நிர்வாஹகனாய்-தர்ம புத்திரன் முடி சூடவும்-த்ரௌபதி குழல் முடிக்கவும்-
துர்யோனாதிகள் முடியும்படியும்-நினைத்த போரை முடிக்க வல்லனாய்ப்-புகழ்ந்தாய்-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -1-12–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 21, 2013

திரு மழிசை ஆழ்வார் திரு அவதாரம்
விபவ சம்வச்தரம்
தை மாசம்
கிருஷ்ண பஷம் தசமி
குருவாரம்
மக நஷத்ரம் துலா லக்னம்
பார்க்கவ மகரிஷிக்கு திரு அவதாரம்
கனகாங்கி அப்சரச ஸ்திரீ தாயார்
வளர்த்தவர் ஹரிதாசர் -பத்ம வல்லி -பிறம்பு அறுத்து ஜீவிக்கும் குறவ ஜாதி
ஸ்ரீ சுதர்சன அம்ச பூதர்
ஸ்ரீ பக்தி சாரர் -மகிஷா சார புரதீசர் -பார்க்கவாத்மஜர் –திரு மழிசைப் பிரான் –
திரு ஆராதன பெருமாள் -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
சிஷ்யர் கணி கண்டன் -த்ருடவ்ரதர்
ஆசார்யர் பேயாழ்வார்
மங்களாசாசன திவ்ய தேசங்கள்–18-
கோயில் –திருமலை- பெருமாள் கோயில் –
யத்தோதகாரி -திருக் குடைந்தை -திருப்பேர் –
அன்பில் -கபிஸ்தலம் -திரு ஊரகம்
திருப் பாடகம் -திருக் குறுங்குடி -திரு வல்லிக் கேணி
திருக் கோட்டியூர்- திரு எவ்வுள்ளூர்- திருத் த்வாரகை
திருக் கூடல் -திருப் பாற் கடல் -ஸ்ரீ வைகுண்டம்

பிராஞ்ஞன் என்னும் சத்சூத்தரர் தனது பார்யை உடன் இவர் அமுத செய்த மிகுந்த பாலை
ஸ்வீகரித்து கிழத்தனம் விட்டு கணிகண்டனை -பாகவதோததமரை பெற்று எடுத்தார்கள்
க்ருஷ்ணானாம் வ்ரீஹீனாம் நகநிர் பிண்ணம் கிருஷ்ணா கூடாதஷிணா-வேத வாக்கியம் எடுத்துக் கொடுத்த விருத்தாந்தம் –
தனியன் –
மகாயாம் மகரே மாசி சக்ராம் சம்பார்க்க வோத்பவம்
மகீசார புராதீசம் பக்திசார மகாம் பஜே
சக்தி பஞ்சமயவிக்ரஹாத்மனே சுக்தி ஹார ஜித சித்த ஹாரிணே
முக்தி தாயக முராரி பாதயோர் பக்திசார முனையே நமோ நம-
அன்புடன் அந்தாதி தொண்ணூற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திரு மழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையின் மகத்து இங்கு உதித்தான் வாழியே
எழில் சந்த விருத்தம் நூற்று இருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லான் வாழியே
நன் புவியில் நாலாயிரத்து முநநூற்றான் வாழியே
நங்கள் பக்தி சாரர் இரு நல பதங்கள் வாழியே

————————————————————————–

ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்

அவதாரிகை –
சர்வேச்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த
ஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூ க்தியான திவ்ய பிரபந்தத்தை
அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி -மனசே
பக்தி சார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே
ஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –

வியாக்யானம் –
நாராயணன் படைத்தான் நான்முகனை –
ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா -என்றும்
நாராயணா பரஞ்சோதி -என்றும் –
நாரயனே ப்ரலீயந்தே -என்றும்
ஏகஸ்திஷ்டதி விச்வாத்மாச ச நாராயண பிரபு -என்றும் –
சிருஷ்டி ஸ்திதி யந்த கரணீம்-என்று தொடங்கி -ஏக ஏவ ஜனார்த்தன -என்றும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமா நவ்யய பிரபு -என்றும்
அவரவர்கள் சர்வேச்வரனாலே சம்ஹார்யர் என்றும்
என்நாபி பத்மாதபவன் மகாத்மா பிரஜாபதி -என்றும்
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத்த்ருத்ரோ ஜாயதே
விருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
பரஹமணஸ் சாபிசம் பூதச்சிவ இத்ய வதார்யதாம்
என்று அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும்
சொல்லப்படும் வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்
ஆழ பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று
உபக்ரமித்து
இனி அறிந்தேன் -என்று தலைக் கட்டிலும்
நற்கிரிசை நாரணன் நீ-என்று இ றே அருளிச் செய்தது –
அத்தை ஆயிற்று-

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –
என்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது
சொல் சீரார் மொழி யாவது –
தமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே ஆர்ந்த மொழி என்னுதல்-சீர் கலந்த சொல் -கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்
மொழி செப்பி -ஏவம்விதமான நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை அனுசந்தித்து
வாழலாம் -உஜ்ஜீவிக்கலாம்
நெஞ்சே -மனசே நீ சககரிக்க வேணும்
மொய்பூ மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –
பிரபந்த வக்தாவான திரு மழிசை ஆழ்வார் திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது -என்னும்படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு
மொய் பூ -செறிந்த பூ -அழகிய பூ –
பூ என்றும் அழகு என்று கொண்டு மிக்க அழகு என்னவுமாம்
மொய் பூ -மழிசை க்கும் திருவடிகளுக்கும் விசேஷணம்
படிக்கும் அடிக்கும் விசேஷணம்
அவர் வாழி கேசனே என்றும்
மாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்
பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்
நீ ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-

————————————————————————–

அவதாரிகை –
முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க
அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1

பதவுரை

நாராயணன்–பரமபுருஷனானவன்
நான்முகனை–பிரமனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
நான்முகனும்–அந்தப் பரமனும்
தான்–தானே
முகம் ஆய்–முக்கியனாயிருந்து
சங்கரனை–சிவனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
ஆழ் பொருளை–(ஆகவே, முழு முதற் கடவுள் ஸ்ரீமந் நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை
யான்–அடியேன்
முகம் ஆய்–முக்கியமாக
அந்தாதி மேல் இட்டு–இத்திருவந்தாதி மூலமாக
அறிவித்தேன்–உங்கட்கு அறிவிக்கத் தொடங்குகின்றேன்
நீர்–நீங்கள்
தேர்ந்து–ஆராய்ந்து
சிந்தாமல் கொள்மின்–(இவ்வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள்.

ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –

நான்முகனை நாராயணன் படைத்தான் –
சர்வேஸ்வரன் சிருஷ்டிக்கு உபகரணமாக
நாலு முகத்தை உடைய பிரம்மாவை சிருஷ்டித்தான்

நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்-
பின்பு பிரம்மாவும் தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –

யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை-
இப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு
இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்
ஆழ் பொருளை -என்று நசிக்கிற பொருளை -என்றுமாம் –
சம்சாரத்தின் உடைய தண்மையையும்
நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்

————————————————————————–

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2

பதவுரை

தேருங்கால்–“ஆராயுமிடத்து.
தேவன் ஒருவனே என்று–பரதெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந்நாராயணனொருவனே“ என்று
உரைப்பர்–(வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர்,
அவன் பெருமை–அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய பெருமையை
ஆரும் அறியார்–ஒருவரும் அறியமாட்டார்
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே–(வேத வேதாங்கங்களில்) ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம்
எத் தவம் செய்தார்க்கும் –(எப்படிப்பட்ட ஸாதநாநுஷ்டா நாங்களைப் பண்ணினவர்கட்கும்
முடிவது–முடிவில் பலனையளிப்பது
ஆழியான் பால் அருள்–எம்பெருமானிடத்து உண்டாகும் கிருபையேயாம்.

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர் –

தத்வம் ஜிஞ்ஞா சமாநாநாம் ஹேது பிஸ் சர்வதோ முகை
தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-என்னும்படியே
விசாரிக்கும் போது சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று சொல்வார்கள் –

ஆரும் அறியார் அவன் பெருமை-
ஒருத்தனும் அவனுடைய பெருமையை பரிச்சேதிக்க அறியார்கள் –

ஒரும்  பொருள் முடிவும் இத்தனையே
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் எங்கும் ஆராயும் அர்த்தத்தின் உடைய
நிர்ணயமும் இவ்வளவே –

எத்தவம் செய்தார்க்கும்  அருள் முடிவது ஆழியான் பால் –
எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

————————————————————————–

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3

பதவுரை

(எம்பெருமான்)
பாலில்–திருப்பாற்கடலில்
கிடந்ததுவும்–சயனித்தருளு மழகையும்
அரங்கம்–திருவரங்கம் பெரிய கோயிலில்
மேயதுவும்–பொருந்தி வாழ்வதையும்
பண்டு–முன்பொருகால்
ஆலில்–ஆலந்தளிரில்
துயின்றதுவும்–பள்ளி கொண்ட விதத்தையும்
ஆர் அறிவார்–யார் அறிய வல்லார்?
ஞாலத்து ஒரு பொருளை–இப் பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்
வானவர் தம் மெய் பொருளை–நித்ய ஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்
அப்பில் அரு பொருளை– (ஸலகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜலதத்வத்தினுள்
கண் வளரும் அரும்பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை
யான் அறிந்த ஆறு–அடியேன் அறிந்த விதம் என்ன!

பாலில் கிடந்ததுவும்
அவதாரத்துக்கு உறுப்பாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்ததுவும் –
பண்டு அரங்கம் எய்ததுவும் –
அபேஷிப்பார் இன்றிக்கே இருக்க
கோயிலிலே கண் வளர்ந்து அருளிற்றும் –
ஆலில் துயின்றதவும் ஆர் அறிவார் ஞாலப் பொருளை –
கார்ய ஆகாரம் எல்லாம் அழிந்து –
ச தேவ -என்று நிற்கிறவனை –
வானவர் தம் மெய்ப் பொருளை –
நித்ய சூரிகளுக்கு பிராப்யனாய் உள்ளவனை
அப்பில் அரு பொருளை –
அப ஏவ்ஸ ஸ்ர்ஜா தௌ-என்று
ஜல சிருஷ்டியைப் பண்ணி
அதிலே கண் வளர்ந்து அருளுகிறவனை
யான் அறிந்தவாறு –
அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது

————————————————————————–

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4

பதவுரை

ஆறு–கங்கா நதியை
சடை–தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான்–மறையச் செய்து தாங்கிக் கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கோன் தன்னோடும்–தேவாதி தேவனான ஸர்வேச்வரனோடு
கூறு உடையன் என்பதுவும்–ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல்
கொள்கைத்தே–அங்கீகரிக்கத் தகுந்த்தோ? (அல்ல)
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை–வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறு பெற்றிருப்பவனும்
எப்பொருட்கும் சொல்லானை–எந்தப் பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸாவ சப்த வாச்யனாய்) உள்ளவனுமான
எம்மானை–எம்பெருமானை
தொகுத்து சொன்னேன்–சுருங்கப் பேசினேனித்தனை.

கொள்கைத்து– கொள்கையை உடைத்து

தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் –
ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே
ஜடையிலே கங்கையை தரித்து
சாதகனான ருத்ரன்
சர்வ சேஷி யானவனோடு ஒக்க
சேஷித்வத்திலே கூறு உடையன் என்று
இதுவும் சேதனருக்கு புத்தி பண்ணப் படுமோ
-வேறொருவர் இல்லாமை நின்றானை-
அஹம் சர்வச்ய ஜகத பிரபவ
பிரளயச்த தா -மத்த பரதரம் நாந்யத் கிஞ்சித ஸ்த்தி தனஞ்சய
என்னும்படி நின்றவனை
எம்மானை-
எனக்கு ஸ்வாமி யானவனை
எப்பொருட்கும் சொல்லானை
சர்வ சப்த வாச்யன் ஆனவனை
எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை -என்றுமாம்
சொன்னேன் தொகுத்து
தொகுத்து சொன்னேன் –

————————————————————————–

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5

பதவுரை

தொகுத்த வரத்தன் ஆய்–(தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய்
தோலாதான்–ஒருவரிடத்திலும் தோல்வி யடையாதவனாயிருந்த இரணியனுடைய
மார்வம்–மார்பை
வகிர்த்த–இரு பிளவாகப் பிளந்தொழித்த
வளை உகிர்–வளைந்த நகங்களைக் கொண்ட
தோள்–திருக் கைகளை யுடைய
மாலே-ஸர்வேச்வரனே!,
நீ–நீ,
உகத்தில்–பிரளய காலத்தில்
உள் வாங்கி–(உலகங்களை யெல்லாம்) உபஸம்ஹரித்து உள்ளே யிட்டு வைத்து
ஒரு நான்று–(மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு மையத்தில்
உயர்த்தி–(அவ்வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச்செய்து
நீயே–இப்படிப்பட்ட நீயே
நான்கும்–(தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும்
அரு ஆனாய்–அந்தராத்மாவானாய்
அறி–இதனை அறிவாயாக.

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம் வகிர்த்த
திரட்டின வரத்தை உடையவன் ஆகையாலே
வரம் கொடுத்தவர்களுக்கும் தோலாத
ஹிரண்யன் உடைய மார்பை பிளந்து –
வளை உகிர் தோள்
வளைந்த உகிரையும் தோளையும் உடையையாய்
மாலே –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே வ்யாமுக்தன் ஆனவனே
-யுள் வாங்கி நீயே உகத்தில் ஒரு நான்று நீ உயர்த்தி-
ஜகத் அடைய சம்ஹரித்த நீயே
சிருஷ்டி காலத்தில் ஆதபகதம் -என்னும்படி நிற்கிறஆதபதகதம் வெய்யிலானது
எங்கும் ஒக்க வ்யாபிக்குமா போலே–அந்தராத்மாவாக  எங்கும் வ்யாபித்தான் -என்றபடி -நான்கிலும் அருவாய் நின்றாய் –
உயர்த்தி –என்று அவதரித்து என்னவுமாம்
அரு நான்கும் ஆனாய்
-தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே
அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற
நீயே அறி –
இவ்வர்த்தம் வேறு ஒருவர் அறிவார் இல்லை –
தேவரே அறிந்து அருள வேணும் என்கை-

—————————————————————-

வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார்

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6-

பதவுரை

சமணர்–ஜைநர்கள்
அறியார்–உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர்–பௌத்தர்கள்
அயர்த்தார்–பிரமித்தார்கள்
சிவப்பட்டார்–சைவ மதஸ்தர்கள்
சிறியார்–மிகவும் நீசராகி யொழிந்தனர்
செப்பில்–இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால்,
வெறி ஆய–பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும்
மாயவனை–ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும்
மால் அவனை–(அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும்
மாதவனை–திருமகள் கொழுநனுமான எம்பெருமானை
ஏத்தாதார்–(இவர்கள்) துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள்,
ஆதலால்–ஆகையினாலே
இன்று–இப்போது
ஈனவரே–(இவர்கள்) நீசர்களே யாவர்.

அறியார் சமணர் –
ச்யாதஸ் த்திஸ் யான்நாஸ்தி -என்று-அநேகாந்தமாகக் கொள்கையாலே
ஆர்ஹதர் தத்வம் உள்ளபடி அறியார் –
அயர்த்தார் பவுத்தர் -பிரதி சந்தானம் பண்ணுகைக்கு ஓர் அனுபவிதாவைக்
கொள்ளாமையாலும்-ஜ்ஞானத்தை ஷணிகமாகக் கொள்ளுகையாலும்
பௌத்தரும் தத்வ ஞானத்தில் அறிவு கெட்டு இருப்பர்கள்
சிவப் பட்டார் சிறியார்-
பிரமாணத்தை ஒருபடிக் கொண்டு-ப்ரமேயத்தை உள்ளபடி கொள்ளாமையாலே
ருத்ர சம்பந்திகள் ஆனவர்களும் எளியார் –
செப்பில் –
இவர்களைப் பேசில் –
வெறியாய மாயவனை மாலவனை மாதவனை
நிரதிசய போக்யனான
ஆச்சர்ய பூதனாய்
வ்யாமுக்தனாய்
ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரனை –
ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று –
அவர்கள் ஏத்தாமையாலே தண்ணியரே
ஹீநர் என்றும் அஹீநர் என்றும்
நான் பிரதிபாதிக்க வேணுமோ என்கிறார்-

———————————————————

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

பதவுரை

நாரணனே–நாராயணனே!,
இன்று ஆக–இன்றைக்காகவுமாம்
நாளையே ஆக–நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக–இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்–உன்னுடைய கிருபை
என் பாலதே–என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக–நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்–நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ–நீயும்
என்னை அன்றி இலை–என்னை யொழிய வேறொரு ரஷ்யனை உடையை யல்லை காண்.

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்- இன்றாகவுமாம்-நாளை ஆகவுமாம்-சிறிது காலம் கழித்தது ஆகவுமாம்-
கால விளம்பமே உன்னுடைய பிரசாதம் என் பக்கலிலே
-நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் –கால விளம்பம் என்று என் பக்கலில் என்றும்-சொல்லிற்று எத்தாலே என்னில்
அகிஞ்சநனாக சம்ப்ரதிபன்னனான-எனக்கு உன்னை ஒழிய வேறு ஒரு அபாஸ்ரயம் இல்லை –
நாரணனே நீ என்னை அன்றி இலை –
பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும்
விடப் போகாது –

—————————————————-

புகையில் உண்பன் என்று கொண்டு சொல்லி-உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்–வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் –
புகையில் தெரியாது

இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை–8-

பதவுரை

என் நெஞ்சே-எனது மனமே!
ஈசனை வென்ற–ருத்ரனை ஜயித்த
சிலை கொண்ட–வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா–பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்–கொத்துப் போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை–லங்காபுரியை
ஈடு அழித்த–சீர் கெடுத்த
கூர் அம்பன் அல்லால்–கூர்மை தாங்கிய அம்புகளை யுடையவனான இராம பிரானைத் தவிர்த்து
குறை–விரும்பத் தகுந்த
மற்ற துணை–வேறொரு துணைவன்
இலை–நமக்கு இல்லை.

ஆனாலும் புகையில் உண்பன்-நீ இத்தனை பொகட்டால் உண்பன்
இல்லாவிட்டால் பட்டினி -என்னுமா போலே-இலை துணை மற்று
சர்வேஸ்வரன் துணை என்கை அன்று சாத்யம் –
மற்று உள்ளார் துணை அன்று என்கை –
என்நெஞ்சே –
இவ்வர்த்தம் சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –
ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட ஈரந் தலையான்-இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை –
வேறு ஒருத்தர் துணை அல்ல என்றது-வேறு ஒருவர் பூர்ணர் இல்லாமையால் என்கிறது -ருத்ரனை வென்ற தனுஸ் ஸைப் பிடித்த-புண்டரீகாஷனான சர்வேஸ்வரன்
வந்து அவதரித்த இடத்திலும் –
ந நமேயம் என்று -கொத்துத் தலைவன் -என்னும்படி பத்து தலையை உடைய
ராவணனுடைய இலங்கையை மூலை அடியே-வழி போக்கின அம்பின் கூர்மையை உடைய-சக்கரவர்த்தி திருமகனை ஒழிய-தம்முடைய குறையில் வேறு ஒருவர் துணை இல்லை –
எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-அசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இருப்பர்கள் –
இவர்கள் சக்கரவர்த்தி திருமகன் உடைய அம்பின் கூர்மையை-தஞ்சமாக நினைத்து இருப்பர்கள் –

————————————————————————-

வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு
தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9

பதவுரை

பிரமதேவன்
குறை கொண்டு–நைச்யாநுஸந்தானம் செய்து கொண்டு
குண்டிகை நீர்–கமண்டல தீர்த்தத்தை
பெய்து–வார்த்து
மறை கொண்ட–வேதங்களிலுள்ள
மந்திரத்தால்–புருஷ ஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால்
வாழ்த்தி–மங்களாசாஸநம் பண்ணி
ஆங்கு–(எம்பெருமான் உலகளந்தருளின) அக் காலத்தில்
அண்டத்தான் சே அடியை–அந்த ஸர்வேச்வானுடைய திருவடிகளை
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற–விஷ கண்டனான ருத்ரனுடைய தலையில் (ஸ்ரீபாத தீர்த்தம்) விழும்டியாக
கழுவினான்–விளக்கினான்.

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
ஆகிஞ்சன்யாதிகளை முன்னிட்டு சதுர்முகனான தான் குண்டிகையிலே-தர்மத்தை ஜலமாக உண்டாக்கி
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி –
ஸ்ரீ புருஷ சூக்க்த்தாதிகளாலே-மங்களா சாசனம் பண்ணி
அண்டத்தான் சேவடியை ஆங்கு கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரன் திருவடிகளை-அக்காலத்திலே
நீல கண்டனுடைய சிரஸ் ஸிலே படும்படியாகக் கழுவினான் –
சாஹசிகரான பிரஜைகள்-வழியே வழியே வர வேணும் என்று
தீர்த்தத்தை மேலே தெளிப்பாரைப் போலே –

————————————————————————–

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10

பதவுரை

ஆங்கு–பரமபதத்திலே
ஆரவாரம் அது கேட்டு–(நித்ய முக்தர்களுடைய) ஸாம கான கோஷத்தைக் கேட்டு
(அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து)
அழல் உமிழும்–விஷாக்நியைக் கக்குகின்ற
காண–ஸேவிப்பதற்கு
வல்லம் அல்லமே–ஸாமர்த்திய முடையோ மல்லோமோ?
(நாம் ஸமர்த்தரேயாவோம்)
மா மலரான்–சிறந்த பூவிற் பிறந்த பிரமனும்
பூகார் அரவு அணையான்–அழகிய சீற்றத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
பொன் மேனி–அழகிய திருமேனியை
யாம்–அநந்ய பக்தரான நாம்
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடைய ருத்ரனும்
வாழ்த்து–(எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே–அஸமர்த்தர்களே.

ஆங்கு ஆரவாரமது கேட்டு-திசை வாழி எழ -என்னும்படி
திரு உலகு அளந்து அருளின போது உண்டான-வார்த்தை கேட்டு –
அழல் உமிழும் –
விடங்காலும் தீவாய் அரவணை -என்னும்படியே –
பூங்கார் அரவணையான் –
அழகிய சீற்றத்தை உடைய-திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடையவனுடைய –
சேஷி பக்கல் பரிவாலே வந்த சீற்றம் ஆகையாலே-ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிறபடி
பொன்மேனி யாம் காண வல்லமே யல்லமே –
அவனுடைய ஸ்ப்ருஹ ணீயமான திரு மேனி-ச்வரூபதுக்கே மேல் ஓன்று இல்லை என்று இருக்கிற-நமக்குக் காண குறை உண்டோ
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து
திரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தேன் என்றும்-
ஜடை தரையிலே தாழும்படிசாதனா அனுஷ்டானம் பண்ணினேன்-என்றும் ஸ்வ சக்தியில் குறைய நினையாத-
ப்ரஹ்மருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே

————————————————————————-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட
துழாய்–திருத்துழாய் மாலை
மன்னு–பொருந்தி யிருக்கப் பெற்ற
நீள் முடி–நீண்ட திருவபிஷேகத்தை யுடையனும்
என் தொல்லை மால் தன்னை–என்னிடத்தில் நெடு நாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேச்வரனை
வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
வண் கை கூப்பி மதித்து–அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி
மகுடம் தாழ்த்தி–தலையை வணக்கி
தண் மலரால்–குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
வணங்கு மின்கள்–ஆச்ரயியுங்கள்,
வாய்–(உங்களுடைய) வாய்
வாழ்த்துக–(அவனைத்) துதிக்கட்டும்,
கண்–கண்கள்
காண்க–(அவனையே) ஸேவிக்கட்டும்
செவி–காதுகள்
கேட்க–(அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.

வாழ்த்துக வாய் -இத்யாதி –
சர்வேஸ்வரனை வாழ்த்தக் கண்ட வாயும் -காணக் கண்ட கண்ணும் –
அவனுடைய குணங்களைக் கேட்க கேட்ட செவியும் -தம்தாமுக்கு வகுத்த தொழிலைச் செய்கை –
மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால்
அவன் திருவடிகளிலே வணங்கக் கண்ட தலையை ஆங்கே தாழ்த்தி-புஷ்பயாதி உபகரணங்களைக் கொண்டு
அவன் திருவடிகளிலே-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்-

சூழ்த்த இத்யாதி
வணங்குவித்துக் கொள்ளுகைக்கு லஷணம் சொல்லுகிறது –
சூழப் பட்ட திருத் துழாய் வர்த்தியா நின்று-ஆதிராஜ்ய சூசகமான முடியை உடைய சர்வேஸ்வரன் உடைய-
திருநாமத்தை மாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி
மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால் -புஷ்பயாதி உபகரணங்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே-
உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்-

————————————————————————–

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12

பதவுரை

மதியார்–உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில்–நால்வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ–சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்,
மதி–சந்திரனுடைய
கோள்–துன்பத்தை
விடுத்தாய்–போக்கி யருளினாய்
மடு–ஒரு மடுவிலே
கிடந்த–(சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த
மா முதலை–பெரிய முதலையினாலுண்டான
கோள்–(கஜேந்திராழ்வானது) துயரத்தை
விடுப்பான்–நீக்குவதற்காக
ஆழி–திருவாழியை
விடற்கு–(அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு
மதித்தாய்–நினைத்தருளினாய்
இரண்டும்–முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும்
போய்–ஒன்றையொன்று விட்டுப்போய்
இரண்டின்–அவ்விரண்டு ஜந்துக்களுக்கும்
வீடு-சாப மோக்ஷமும் மோக்ஷஸாம் ராஜ்யமும் உண்டாம்படி
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்.

மதித்தாய் போய்-நான்கின் மதியார் போய் வீழ மதித்தாய் –
வேதத்தாலும் எங்கும் புக்கு-உன்னை உணராதவர்கள் அதபதிக்கும்படியாக மதித்தாய் –
மதியார் நான்கில் போய் வீழ மதித்தாய் –
உன்னை மதியாதவர்களை
ஷிபாம்யஜஸ் ராமசுபாநா ஸூ ரீஷ்வே வையோ நி ஷூ -என்னும்படியே சதுர்வித யோநிகளிலும் போய்-விழும்படிக்கு ஈடாக நினைத்தாய்
மதி கோள் விடுத்தாய் –
சந்த்ரனுக்கு வ்யசனத்தைப் போக்கினவனே
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கு
பொய்கையிலே கிடந்த பயாவஹமான முதலை-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைப் பற்றின பற்று-விடும்படிக்கு ஈடாக
சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு நினைத்தாய் –
இரண்டும் போய் இரண்டின் வீடு மதித்தாய் –
பூர்வ ஆகாரங்களை விட்டு-முதலை -கந்தர்வனாய்-ஆனை திருவடிகளைப் பெறும்படிக்கு ஈடாகவும்-நினைத்தாய்-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளி செயல் அரங்கம் -நான்முகன் திரு அந்தாதி- சாரம் ..

December 10, 2011
நான் முகனை நாராயணன் படைத்தான்-
படைக்கும் தொழில் -அவனே -அறுதி இட்டு-
புருஷ சூக்தம்-விவரிக்குமே –
ஒன்றும் தேவும் –மற்றும் யாதும் இல்லா அன்று –vaccum
முதலில் அறிவித்த ஆழ்வார்கள்-
பரத்வ நிர்ணயம்- வாளை உறையில் இடாதவர் ..
-பொருள் இல்லாத -ஆழ்வார் சொல்லாம்
நாம் சொல்ல முடியாது -அவர்களையும் அருளி செயலையும் ஆச்சர்யர்களையும் பெற்றதால் –
அவதாரங்கள் கணக்கிலடங்காதவை –
பூர்ண ஸ்ரீ ராம கிருஷ்ணா அவதாரம்- ஸ்ரீ அயோதியை/ஸ்ரீ வட மதுரை –
ஆழ்வார்கள் -இங்கே அவதரித்து -அவனை காட்டி கொடுக்க
ஆச்சார்யர்கள் ஆழ்வார்களை காட்டி கொடுக்க
ஒன்பது அங்கம் 12 உப அங்கம்-108
அது போல் திவ்ய தேசங்கள்-பாதாதி கேச பர்யந்தம் இவை ..
திரு பாத கமலங்கள்-வான மா மலை/ திருக் குறுங்குடி  இரண்டும்
அடியேன் தொழ  வந்து அருளே -வானமா மலை பெருமாள் ஓடி வருவான்
திரு வயிறு -திரு குடந்தை
திரு மார்பு-திரு வேம்கடம்/திரு மால் இரும் சோலை -தென்னன் உயர் பொறுப்பும்
புஜம்-ஆழ்வார் திரு நகரி திரு ஆழி திருநகரி
கழுத்து பகுதி -தொண்டை மண்டலம்
ஹிருதயம்-ஸ்ரீ ரெங்கம்
திரு முக மண்டலம்-ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆழ் பொருள்-ஜகத் ஸ்ருஷ்ட்டி -சிந்தாமல் கொள்மின் –
நம் பூர்விக சொத்து -நித்ய விபூதி –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து -ஸ்ருஷ்ட்டி ஆரம்பிக்க
விளையாட்டு-அலகிலா விளையாட்டு –
அம் மலர் மேல் மன்னும் திசை முகனை தான் படைத்து -வாசுதேவ மந்த்ரம் உபதேசித்து –
சங்கு சக்கரம்-சூசகம்-
வலது இடது -ஸ்ரீ தேவி/பூமி தேவி
பிரத்யட்ஷமாக பூமி தேவி அருகில்- முதலில் சங்கு சேவை -காட்டி கொடுத்ததால்
ஆச்சார்யர்-ஆழ்வார்-பெருமாள்- படி –
பிரதம ஜீவாத்மா -நான் முகன்–அவனுக்குள் அந்தர்யாமியாக இருந்து –
ஒன்பது கலசம் -பிரணவாகார விமானம்- ஸ்ரீரெங்கம் -காட்ஷி தர-நான்முகன்-
பெரிய பெருமாளை பிரதம தர்சனம் செய்தவன் நான் முகன்- என்பதால் முதலில் சொல்லி ஆரம்பித்தார்
விஸ்வரூபம்-அனுகூலர் பிரதி கூலர் இருவருக்கும் காட்ட -திரு அடியில் யாரும் விழவில்லை-

அவையுள் ஆசனத்தை அஞ்சிடாமல் இட –

அவன் வளர சிம்காசனமும் வளர -மண்டமும் வளர –
சர்வ சக்தன் புரியாமல்-
சக்தனாக  பார்த்தாலும் திரு அடி கேட்க வில்லை –
வனமாலி கதி-
ஐந்து ஆயுதங்களும் ஆழ்வார்
சுதர்சன ஆழ்வார் மகம்-மகிசார புரி -திரு மழிசை ஆழ்வார்
சரீர  சுத்தியும் பிரம ஞானம் கொடுக்க
சொன்ன வண்ணம் செய்யும் பெருமாள்- திரு குடந்தை- திரு அரசு -இவருக்கு ..
குலசேகர ஆழ்வார் -திரு மன்னார் கோவிலில் திரு அரசு
தாளால்  உலகம் அசைந்த அசைவோ கொல் –வாய் திறவா –-சயனம் பெருமாள் மேல் ஈடுபாடு ..
நடந்த அசைவா -திரு விக்ரமன்-பெருமாள்-கிருஷ்ணன்-அர்ச்சை நடந்தார்களே
நடந்த கால்கள் நொந்தவோ –25 காரணம் திரு விக்ரமன் அவதாரம் –
என்னுடைய பாதத்தால் நானே அளந்து கொள்ளும் படி கேட்டானே –
திரு அடி தொட்டு அவனை கொடுக்க வைத்தால் உய்ந்து போவானே
தன் உருவம் அறியாமல்-
என்னுடைய பாதத்தால் நான் அளப்ப மூவடி —
இடந்த மெய் குலுங்கவோ-
தேவர் பிராட்டி மனுஷ்யர் மாடுகளுக்காக நடந்த நான்கு அவதாரங்கள்
எழுது இருந்து பேசி-வாழி கேசனே
பிரான் ஆனார் -அவன் ஆரா அமுத ஆழ்வான் ஆனான்
மன்னாத பெருமான்-ஆதி பெருமாள்
சத்ய வராக பெருமாள் திரு மெய்யம் ஆதி பெருமாள்
திரு அரங்கத்தில் வாசு தேவ பெருமாள் ஆதி –
முனியே நான்முகனே-அந்தர்யாமி-
அடித்து சொல்வார் திரு மங்கை -96 பாசுரங்கள்-பரத்வ நிர்ணயம்
திரு சந்த விருத்தம்-பூகோள சாஸ்திரம்
இனி அறிந்தேன் ஈசர்க்கும் நான்முகனுக்கும் ..தெய்வம்-
முக்தி நாராயண -சாள கிராம பெருமாள்-ஹிமா பர்வத ராஜன்-
பெண்ணை கொடுத்து உபகாரம் சிவன் இடம் கேட்டானாம் –
ஜீவன்முக்திக்கு வழி கேட்டான்- முதல் ஸ்ரீ வைஷ்ணவன் –சிவன்-பரம பாகதோத்தமன்.
ஆனந்த வனம்-காசிக்கு பெயர் –பார்வதி தேவி கட்டதும் ஸ்ரீ ராம திரு நாமம்-சொல்ல சொல்ல அருளினான் ..
திரு கங்கை தொட்டு கொண்டு -பேசி –நூபுர கங்கை-
பிரமன் இந்த ஒளி கேட்டு- திருஅடியில் திரு மஞ்சனம்
சதுர முகன் கையில் -சங்கரன் சடையில் தங்கி –கேசவ பாத தீர்த்தம்-பெற்று பரம பாகவதன் ஆனேன் –
கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே –
கலி யுகத்தில்-ஆழ்வார்கள் ஆச்சார்யர் அவதரித்து உய்ய வைப்பார்கள்
சங்கு சக்கர லாஞ்சனை கொண்டு உய்வார்கள்- வாரனாசி மகாத்ம்யத்தில் இது உண்டு ..
முக்தி நாத் -உயர்ந்த திவ்ய தேசம்-12  தேவ வருஷம் தவம் இருந்து கைங்கர்யம் பெற்றான் அரசன்
மாசி பௌர்ணமி சேவை சாதித்தார் முக்திநாதன்-
திரு அடி பக்கமிருந்து கைங்கர்யம் பெற ஆசை பட்டான்-
திரு மால் இரும் சோலை காட்டி கொடுத்தானாம்
கிருத மாலா நதி கரையில்- சப்த பர்வதம் மேல்
மலையத்வஜன் அவதாரம்- கைங்கர்யம் செய்தானாம் .
திரு குடந்தையில் அது போல் திரு மழிசை ஆழ்வார் கைங்கர்யம் –
இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான் முகற்க்கும் தெய்வம்-
ராவணன் ஆக்ஜை படி -நவ கரகம் தேவதைகள் செய்த பாவம் போதக பெருமாள் இடம் -கேட்க
பாகவத அபசாரம் போக்க சக்தன் இல்லை
பாத தூளி
ஆதி வாசுதேவ புரம்- படிக்கீழ் இருந்து பிராய சித்தம்-
பெரிய கோவில்
ஆர்யா பட்டாள் வாசல் கீழ் இன்றும் உண்டாம் அங்கும் ..
சிவனும் கேட்க -பக்தன் இராவணன் செய்த பாவத்தில் பங்கு உண்டே எனக்கும் –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பாத தீர்த்தம்-
ஈசான மூலையில்- இருக்க சொல்ல
காவேரி நதி அனைத்தும் ஸ்ரீ வைஷ்ணவ
கங்கையில் புனிதமாய காவேரி
திரு ஆனை கோவில் ஜல கண்டேச்வரர் –
இனி அறிந்தேன் காரணம் நீ -நற் கிரிசை நாரணன் நீ .
——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திரு அல்லிக் கேணி அனுபவம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 19, 2011

திரு அல்லிக் கேணியில் தானே–ப்ருந்தாரண்யா ஷேத்ரம் -துளசி வனம்-வேர் பற்றானா கோவில் —
திரு அரங்கமும் –திரு மலை -பெருமாள் கோவில் -ஸ்ரீ ராமன் -ஸ்ரீ நரசிம்கன் –
தேன் பால் கன்னல் நெய் சக்கரை அமுது -கலந்த அமுதம் போல் -எல்லாம் தன் உள்ளே கலந்து ஒழிந்தோம் —
ஆழ்வார் அருளியது போல் இங்கு ஐவரும் சேவை—
நின்றவாறும் கிடந்த வாறும் இருந்தவாறும்-நடந்த வாறும்-சேவிக்க –
நின்றது எந்தை  ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து -புளிங்குடி -கிடந்தது வரகுண இருந்து வைகுண்டம் நின்று –
தனி தனி திவ்ய தேசம்–இங்கோ வேம்கட கிருஷ்ணன் மன்னாதன் தெள்ளிய சிங்கனும் நின்று கிடந்தது இருந்து —

ஆச்சார்யராக  இவனே –அவதாரம் –
கேசவ சோமயாஜி-காந்தி மதி –சுவாமி ராமானுஜர் திருகுருங்குடி நம் ஆழ்வார் போல –மூன்று ஆழ்வார் மங்களா சாசனம் –
திரு மங்கை  பேய் திரு மழிசை-கைரவணி -அடியார்கள் தோஷம் போக்க ஐந்து தீர்த்தம் சேர்ந்தவை–
இந்திர சோம மீனா அக்நி விஷ்ணு -புடை சூழ –பிரம்மாண்ட புராணம் –
பரம சிவனார் நாரதர் இடம் சொல்லி-மீன்களே இல்லாத புஷ்கரணி-முத்களர் ரிஷி தபஸ் இருக்க -மீன்களை வெளி ஏற சொல்ல –
புஷ் கரணி பெயரே கொண்டு திவ்ய தேச திரு நாமம்–
சனத் குமரர் நாரதருக்கு உபதேசம்-ப்ருந்தாரண்யா ஷேத்ரம் ஐந்து மூர்த்திகள் உண்டு–
வேங்கட கிருஷ்ணன் மூல மூர்த்தி -சுமதி அரசன்-பார்த்த சாரதி உத்சவ மூர்த்தி-
திரு வேம்கடம் உடையானை -சாரதி வேஷத்தில் சேவிக்க ஆசை கொண்டான்-
தேர் கடாவிய கோலம்–அடியார் ஆசை-நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே —
கீதாசார்யன் திருக் கோலம் -ஆசை பட்ட படி-சேவை சாதிக்க –
ஆத்ரேயா முனிவர்- வேத வியாசர் இடம் தபஸ் செய்ய இடம் கேட்க்க -விக்ரகம் எழுந்து அருளி கொடுக்க
தான முத்தரை இடது திரு கை வலது திரு கையால் பாஞ்ச சன்யம் கொண்டு–
சுமதி அரசனின் ஆசையை ஆத்ரேயா முனிவர் மூலம் அருளி-
ருக்மிணி தாயார் உடன்-அநிருத்தன் பிரத்யும்னன் சாத்விகி பல ராமன் உடன் சேவை–
தேர் ஒட்டி பாஞ்ச சன்யம் -கொல்லா மா  கோல் கொலை செய்து- பாரத போர்-
வேற ஆயுதம் எடுக்காமல்-தொண்டைமான் சகரவர்த்திக்காக சேவை —
திரு மங்கை ஆழ்வார் -நமக்காகா சேவை–வைபவம் ஒருங்கே- இணைய பெற்ற திவ்ய தேசம்

கீதா பாஷ்யம் அருளினார் ஸ்வாமி ராமானுஜரும்

தேரே கற்ப கிரகம் போல் சேவை -ஆங்கு அவளை கை பிடித்த பெண்ணாளன்–ருக்மிணி பிராட்டி உடன் சேவை–
சாத்விகி தேர் ஒட்டி  இடது பக்கம்-வலது பக்கம் பிராட்டி அருகில் பல ராமன் -அனிருத்னன் பிரத்யும்னன்-குடும்ப சகிதம் சேவை–
கீதை-பாஞ்ச சன்யம் வலது கையால் ஊத முதல் அத்யாய அர்த்தம் —
இடது கையால் திரு அடி  காட்டி இறுதி அத்யாயம் அர்த்தம்–சோகப் படாதே-மாமேகம் சரணம் விரஜ காட்டுகிறான் –
சரம ஸ்லோக அர்த்தம்– இவனை மேற்பட வேற சொத்து இல்லை —
தனஜயன  சந்தன பூஷணம் தனம்–உத்சவரை சேவித்து -பீஷ்மர் துரோணர் விட்ட அம்பு மழை பொழிய –
அனைத்தையும் ஏற்று பொழிந்த திரு முக மண்டலம்–
ஸ்ரீ ராமன் கர தூஷணர் சீதை பிராட்டி ஆலிங்கனம் பண்ணி –
ருக்மிணி பிராட்டி ஆலிங்கனம் பண்ண வில்லை நம் இடம் கொண்ட காருண்யத்தால்

மன்னாதன் என்னை ஆள் உடை அப்பன்-வேத வல்லி தாயார் -பிரணய கலகம்-
பிராட்டி  ஸ்ரீ வைகுண்டம் இருந்து வந்து இங்கு ப்ருகு மக ரிஷி வளர்க்க –
தாத மன்னாத ஏவாயம் -என்னை ஆள் உடைய அப்பனை- தான் திரு கல்யாணம் சொல்லி –
அன்று முதல் இதே திரு நாமம் -மாசி துவாதசி திரு கல்யாணம் பங்குனி உதரம் சேர்த்தி-
அத்ரி ரிஷி -தெள்ளிய சிங்கரும் –
மனுமான் ரிஷி -ஸ்ரீ ராமர்
சப்த ரோமான ரிஷிக்கு தேவ பிரான்

——————————————-

வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கு மணி விளக்காம் –எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திரு வல்லிக் கேணியான் சென்று –மூன்றாம் திரு அந்தாதி -16–

சென்று சேர்ந்து இருக்கிறார் -பிராட்டி திரு மார்பில் இலங்கி இருக்கிறாள் –
சிகப்பு பவளம் வெண்  முத்து சேர்க்கும் கடல் கரை -மாலை பொழுதில் அந்தி விளக்கு இவை -மணி மணியாக விளக்கு-
எந்தை -என்னை ஆள் படுத்திக் கொண்டான்-

———————————-

சயனம்-ஆயாசமா -ஐம் தலை நாகத்தை அணியாக கொண்டு –
திரு விக்ரமன் -அளந்த ஆயாசமா -வாய் திறக்காமல்-
கொடியார் திரு புளிங்குடி -துயில் மேவி -அடியார் அல்லல் தவிர்த்த அசைவா ஆழ்வார்–வாய் திறவான் —
கடல் அலைகள் இடித்து ஆயாசம் சூடு தணிக்க சிசு உபசாரம் பண்ணுகிறதாம், –
மா மயிலை- மயிலாப்பூர் படை வீடு -ராஜஸ்தானம் அதற்கு அடங்கிய ஊர் திரு அல்லிக் கேணி–
சயனித்த மன்னாதனை பல்லாண்டு  அருளுகிறார் திரு மழிசை
இவரும் பல்லாண்டு அருளி – திரு மங்கை ஆழ்வாரும்-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தது அருளும் வாய் திறவான் –நீளோதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐம் தலை வாய் நாகத் தனை -நான் முகன் திரு அந்தாதி –35-

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரம் எரி செய்த
சிவன் உரு துயர்களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்
திரு வல்லிக் கேணியில் கண்டேனே—பெரிய திரு மொழி–2-3-1–

கோல் கையில் கொண்டான் –கொலை செய்ய வேண்டிய ஆயுதம் இல்லை சக்கரம் வில் கதை இல்லை–
வெள்ளை புரவி தேர் விசயன் -அர்ஜுனனுக்கு -கொல்லா மா கோல் -தேர் முன் நின்றவனை பல்லாண்டு அருளுகிறார் இதில்–
வில் விழா கஞ்சன் மல்லர் குவலயாபீடம் பாகன் அனைவரும் வீழும் படி –
திரி புர தகனம் இறுமாப்பு -கபாலம் ஒட்டி கொள்ள அவன் சாபம் தீர்த்து கொடுத்தான் –
பிண்டியார்  சாபம் தீர்த்த ஒருவனூர் -சிற்றவை-கைகேயி-ஸ்ரீ ராமனை சேவிக்கலாம் என்கிறார் இதே பாசுரத்தில்–

————————————-

வேதத்தை வேதத்தின் சுவை பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் கழற்றிக்
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை
யப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2–

சிறப்புடைய பெண்கள்-ஸ்திரீ பிரதானம் -மன்னாதன்-வேதமே பகவான் வேதத்தால் வழங்க படுபவனும் அவன் –
அதன் மூலம் அனுஷ்டித்து இருப்பவர் பலன் அடைவதும் அவன்–சனக சனத் குமாரர்கள்-முனிவர்–

வஞ்சனை செய்யத் தாய் வுருவாகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலை ஊடு உயிர் செக வுண்ட
நாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்
வியந்து துதி செய்யப் பெண் னுருவாகி
அம் சுவை யமுதம் அன்று அளித்தானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே –3–

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எம் தம்மோடு இன் வானிரை தளராமல்
எம்பெருமான் !அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே -4–

இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும்
இன்பன் நல் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர்பாவை நப்பின்னை
தனக்கு இறை மற்றை யோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி
வாய் வுரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே –5–

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன்
அணி இழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் எனத் தரியாது
எம் பெருமான் ! அருள் என்ன
சந்த மல் குழல் ஆளல கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத்
திரு வல்லிக் கேணிக்கண்டேனே –6-

பரதனும் தம்பி சத்ருக்னனும்
இலகுமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
இராவணான் தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழில் ஊடு
குயிலோடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியாத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே –7-

சக்கரவர்த்தி திரு மகனுக்கு பல்லாண்டு அருளுகிறார்-

————————————–

பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன்
வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளிய வாகிப் போத ஆங்கு அதனுக்கு
ஒன்றுமோர் பொறுப்பு இலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை  எயிற்று  அனல்   விழி  பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே –8–

ஆயிரம் திரு நாமம் சொல்லும் பிள்ளை-தன் சிறுவன்-நாராயணா ஓன்று தானே சொன்னான் –
ஓன்று சொன்னாலும் தன் பிள்ளை சொன்ன்னது ஆயிரம் என்கிறார் —
நாராயணா நாமம் இதற்க்கு -சமம் -சொன்ன விஷயம் பார்க்காமல் பிள்ளை என்று பார்க்காமல்-
பிள்ளையை -திரு மங்கை ஆழ்வார் தம் பிள்ளை என்று நாராயண நாமம் சொன்னதால்–
தெள்ளிய -கலக்கம் இன்றி-செவிக்கும் நம் கலக்கம் தீர்க்கும்–

—————————–

மீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான்
வேட்கை யினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக்
கறா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ளூர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
திரு வல்லிக் கேணிக் கண்டேனே –9–

கஜேந்திர வரதனுக்கு பல்லாண்டு அருளுகிறார்-

—————————————-

மன்னு தன் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நல் மயிலைத்
திரு வல்லிக் கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர் கலி கன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்
சுகம் இனிது ஆழ்வார் வான் உலகே –10–

கீதை உபதேசம் அருளிய பெருமாளை பல்லாண்டு அருளுகிறார்

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ திரு மழிசைப்பிரான் —

August 26, 2010

ஸ்ரீ திரு சந்த விருத்தம்

சாம வேத கீதனாய சக்ர பாணி அல்லையே ?-14

சங்க வண்ணம் அன்ன மேனி சக்ர பாணி அல்லையே ?-15

மின் கொள் நேமியாய் ! -19

அம் கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் சிங்க மாய தேவ தேவ ! -24

படை கலம் விடுத்த பல் படைத் தடக் கை மாயனே ! -28

வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர ! -31

அரக்கர் அங்கர் அங்க வெஞ்சரம் துரந்த ஆதி நீ -32

அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின் அவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் ! -33

மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம் பிரானுமாகி மிக்கது அன்பு மிக்கு -35

முன் ஓர் நாள் திண் திரல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் உஊர் –சீர் அரங்கமே -50

சரங்களை துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் -51

இலைத் தலை சரம் துரந்து இலங்கை கட்டழித்தவன்  -54

அடர்த்து எறிந்த ஆழியான் -57

காலநேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை காலனோடு கூட விற் குனித்த விற் கை வீரனே ! -59

குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள் பந்தமான தேவர்கள் பரந்து  வானகம் உற -70

மரம் பொதச் சரந்துரந்து வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச் சரந்துரந்த உம்பர் ஆளி எம்பிரான் -73

அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே ? -76

கடைந்து பால் கடல் கிடந்து காலநேமியை கடிந்து உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்த மால் பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ -81

ஆழியான் தன் திறத்து ஓர் அன்பிலா அறிவிலா நாயினேன் என் திறத்தில் என்கொல் ? எம்பிரான் குறிப்பில் வைத்ததே -84

இரும்பரங்க  வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே ! -93

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க் கைய -97

பல்  படைத் தடக்கை மாயனே ! -104

கறுத்து எதிர்ந்த காலநேமி காலனோடு கூட அன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் -106-

———-

ஸ்ரீ நான்முகன் திரு வந்தாதி

இலை துணை மற்று என் நெஞ்சே ! ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் -8

மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற் கிரண்டும் போயிரண்டின் வீடு -12

வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேர் ஆழியால் மறைத்தார் -16

இது விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண் தார் இராவணனை வூன் ஒடுங்க வெய்தான் உகப்பு -28

எல்லாமாய் சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் -83

——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-