Archive for the ‘நான்முகன் திரு அந்தாதி’ Category

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -73-84—-

February 1, 2015

அவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று –
வேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்-

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73-

சர்வ லோகத்தையும் யுண்பது உமிழ்வதாய் பிரதிகூல  நிரசனத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையவன் –
உபாயாந்தரங்களை யருளிச் செய்யாதே தன்னையே யுபாயமாகச் சொன்ன மஹா குணத்தை யறிய வல்லார் யார் –
கறுத்த கண்டத்தை யுடைய ரூத்ரனோடு கூடின எட்டுக் கண்களை யுடைய ப்ரஹ்மாவும் அறிய மாட்டான் –
அவன் இத்யாதி –
பண்டு ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தபடி தான் எழுந்து அருளி இருக்கும் தேசத்தையும் கூட -அதாகிறது –திரு நாடு -என்றுமாம்
பேராழியான்-
கையும் திரு ஆழியுமான ஸ்ரீ கிருஷ்ணன்
அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி –
அவன் பழையதாக வைத்த பிரதிஷ்டை இருக்கும் இடம் –அதாவது உத்தம -சரம -ஸ்லோகம் –

————————————————————————–

தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை  ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
தான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் -என்கிறார் ஆகவுமாம்-

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

குல சத்ருவாய் இருக்கிற பெரிய திருவடிக்கு ஆற்றாதே –
குளிர்ந்து இருந்துள்ள திருப்படுக்கையிலே எழுந்து அருளி இருக்கிற எம்பெருமான் தன்னையே இத்தசைக்கு அபாஸ்ரயம் என்று நினைத்து அடைந்து
அவனை அபாஸ்ரயமாகப் பெற்ற ப்ரீதியாலே ஒளியை யுடைத்தான ஸூமுகனான பாம்பை அங்கீ கரித்து-திரு மார்விற்கு ஆபரணமாக கொடுப்பதும் செய்து
ஸ்லாக்கியமான திரு நிறத்தை யுடையனாய் ஆச்சர்ய பூதனான அவனை அல்லது வேறு ஒருத்தரை என் நாவானது ஏத்தாது

பதிப் பகைஞற்கு
ஜ்ஞாதியாய்ப் பகைவன் ஆனவனுக்கு
பாய்திரை நீர்ப்பாழி
கடல் போலே பரந்த படுக்கை -என்றுமாம்
மதித்து
பெரிய திருவடி பக்கலிலே காட்டிக் கொடுக்கையே கார்யம் என்று அத்யவசித்து -என்றுமாம்
வல்லாகம் –
சத்ருவே யாகிலும் சரணம் என்றாற்கு நிர் பயமாய் இருக்கலான திரு யுடம்பிலே ஏற்றிய
வத்யதாம் -யுத்த -17-29-என்ற  மஹா ராஜரைக் கொண்டே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ரஷித்தால் போலே –
மா மேனி மாயவனை –
இவனை ரஷிக்கப் பெற்றோம் என்று பூரித்த திருவுடம்பை உடையனாய் –
ரஷண யுபாயத்தை யுணர்ந்த ஆச்சர்ய பூதனானவனை ஒழிய ஆஸ்ரிதர் ஆனவர்களைக் கை கழிய விட்டுக்-கடக்க நிற்கக் கடவ ருத்ராதிகளான வேறு ஒரு சூத்திர தேவதையை -என்னுடைய நாவானது புகழாது-

————————————————————————–

ஏவம்விதமான எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

நா இத்யாதி
என்னுடைய நாவாலே மனுஷ்யரைப் பாடேன்
நலமாக இத்யாதி –
நெருப்புப் போலே சிவந்த ஜடையை யுடைய ருத்ரன்-
துர்மானத்தைப் பொகட்டு தானே எழு ந்து அருளி இருக்கிற விடத்திலே சென்று
அங்குத்தை சௌகுமார்யத்துக்கு அனுரூபமான செவ்விய பூக்களை
என்றும் தன்னுடைய சர்வ சக்தியையும் கொண்டு அழகிதாக வைத்த திருவடிகளிலே பணி மாறிக் கொண்டு  –
மகிழாத -இத்யாதி
இத்தால் முன்புத்தையில் காட்டில் ஒரு வாசி பிறவாத பொலிவுடையனான ஸ்ரீ வைகுண்ட நாதனுக்குத் தகுதியான பாட்டை
பாடக் கடவனாகக் கொண்டு மானிடம் பாடேன் -இத் அந்வய-

————————————————————————–

லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான  அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பாட்டு -இத்யாதி –
பாட்டுக்களும் அவற்றுக்கு வ்யக்தமான ரூபமானவையும் –
இசையும் இயலும் என்னவுமாம் –
படுகதை இத்யாதி
உத் க்ரந்தமாகச் சொல்லும் கதைகளும் -அவற்றின் யுடைய பஹூ விதமான பொருள்களும்
பாட்டும் –
கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல்பொருளும்-
அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள் என்றுமாம் –
ஈட்டிய தீயும் இரு விசும்பும்
ஒன்றிலே எல்லாம் யுண்டாம்படி பஞ்சீ கரணத்தாலே  சேர்க்கப் பட்ட அக்னியும்
பரப்பை யுடைத்தான ஆகாசமும்-இவை அண்ட காரணமான பூத பஞ்சகங்களுக்கும் உபலஷிதையான தேவாதி கார்ய லஷணங்களுக்கும் உப லஷணம்-
கேட்ட மனுவும் –
ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் –
ஓதி வருகிற நாலு வேதங்களும்
மாயன் –
ஆச்சர்ய பூதனானவனுடைய
தன மாயையில் பட்ட தற்பு-
தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு –
தத்த்வார்த்தம் –

————————————————————————–

என்னுடைய தோஷத்தையும் பாராதே எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு-என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் –

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

தற்பு என்னை -இத்யாதி –
என்னுடைய தோஷத்தை உள்ளபடி நான் அறியேன் ஆகிலும்-பிராட்டி பக்கல் யுண்டான வ்யாமோஹ அதிசயத்தாலே பெரிதான கடலைக் கல்லைக் கொண்டு தூர்ப்பதும் செய்து
ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
எற்கொண்ட-இத்யாதி
என்னை விஷயீ கரித்து சமஸ்த துக்கங்களும் போம்படி என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான்-
ஏற்கொண்டு-என்ற பாடமான போது என்னைப் பற்றி நிற்கிற பாபங்கள் -என்றுமாம் –
எவ்வினையும் மாயுமால் கண்டு –
அவன் விஷயீ காரத்தைக் கண்டே பாபங்கள் எல்லாம் நசித்தன –
எவ்வினையும் மாயுமால் கண்டு இதி பாடம்
என்னுடைய உக்திகளை எல்லா சேஷ வ்ருத்திக்களுமாக அனுசந்தித்து –

————————————————————————–

உமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால்
அநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ -என்கிறார் –
திரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க
நேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் –

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

கண்டு இத்யாதி –
அவனை சாஷாத் கரித்துத் திருவடிகளிலே வணங்கினவர்களுக்கு என்னாமோ
அபிமத விஷயத்தை கடிப்பித்த காம சரீரத்தை தஹித்துப் பொகட்ட தபஸ்வியான ருத்ரனுக்கு-மஹிஷியான உமா தேவி முறை மாறாடி யுணர்த்த –
வண்டலம்பும் -இத்யாதி
வண்டுகளானவை  தேன் வெள்ளத்திலே  கிடந்து அலையும்படி இருக்கிற பூந்தாரை உடைத்தான-திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமான-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை யுடைய எம்பெருமான் திரு நாமங்களைக்
கேட்டிருந்து -அவற்றுக்கு உள்ளீடான குணங்களை அனுசந்தித்து அத்தாலே புஷ்கலான படியால்-முடிந்து வாடின பூ மாலை போலே பரவசனாய்த் துவண்டபடி கண்டான் -என்றுமாம் –

————————————————————————–

எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து-பரமபதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் -என்கிறார் 

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

ஆய்ந்து இத்யாதி –
சர்வேஸ்வரனை அனுசந்தித்து ச்நேஹத்தாலே பாங்கான ஹிருதயத்திலே இருத்த வல்லவர்கள் –
ஆதிப் பெருமானை –
உத்பாதகனான சர்வேஸ்வரனை –
ஏய்ந்த இத்யாதி –
இப்படி பிராப்ய ருசி பரிபூர்ணராய் இருக்கிற தாங்களும் ஆஸ்ரிதரான தங்களுக்கு என்றே கூறுபட்டு-அவனை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டம் காண்கையில் யுண்டான விரைத்தலாலே பண்டு-தேவோஹம் என்னும் படி தங்களோடு பிறிவற ச்நேஹித்து விட மாட்டாத உடம்பையும் வியாதியாக நினைப்பார் -என்கிறார்
குந்தமாக விரும்புவரே -நன்றாக நினையார் –
ஏய்ந்த -கூடி இருந்த
குந்தம் -வடுக பாஷையாலே வியாதி-
தம் வைகுந்தம் என்றது திருவடிகளிலே ஆஸ்ரயித்தவர்களேதாய்  இருக்கை என்று கருத்து –

————————————————————————–

லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது  -இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் –

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

விரைந்து இத்யாதி
ஈண்டென ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய லோகங்கள் ஆனவை பரந்து திரு நாமங்களை பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –

————————————————————————–

நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ-என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் –

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

கதவு இத்யாதி
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்கிறபடியே-விஷயாந்தர பிரவணமான போது அவனை-
காண்கைக்கு கதவு போலே தகைவாய் பிரதிபந்தகமாய் இருக்கும்
மனஸ் என்றும்-காண்கை எளிதோ என்றும் துக்கப் படுகிற பொல்லாத சிந்தையைத் தவிர்ந்தேன்
விதையாக இத்யாதி
வித்தாக நல்ல தமிழை வித்தி என்னுடைய ஹ்ருதயத்தை-நினைத்தது தலைக் கட்ட வல்ல ஞான சக்தியாதிகள் குறைவற்ற நீ விளையப் பண்ணினாய்
அப்யசித்த சொல்லாய்க் கொண்டு வந்து -நான் அறிந்த தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து-நல்ல தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து
நல்ல தமிழ் வித்தை யுண்டாக்கி என் ஹிருதயத்தை அழகிய கவி பாடுகைக்குப் பாங்காம் படி பண்ணினாய் –
எம்பெருமானைப் பெறுகைக்கு மனஸ் அவிரோதி என்றும் இதுவே பரிகரமாகக் காணலாமோ என்றும்-ஹ்ருதய துக்கம் எல்லாம் தீர்ந்தேன் -என்கிறார் –
குதை -அசைகை-
வினை -தொழில் –
ஆவி -என்று பிராண வாசி சப்தத்தாலே தத் ஆஸ்ரயமான மனசை லஷிக்கிறது
விதி -வித்து-

————————————————————————–

ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் -இது போலே இருக்கும் நன்மை யுண்டோ -என்கிறார்-

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-

கலந்தான் -இத்யாதி –
காமனுக்கும் கூட வழகுக்கு உத்பாதகனான எம்பெருமான் என்னுடைய ஹ்ருதயத்திலே கலந்தான் -இத்தோடு ஒக்கும் நன்மை யுண்டோ –
எனக்கு இத்தோடு ஒத்த நன்மை யுண்டோ -என்றுமாம் –
அலர்ந்த அலர்கள் -இத்யாதி
செவ்விப் பூக்களைக் கொண்டு ஆஸ்ரயித்து-வாயாலே ஸ்தோத்ரம் பண்ணக் கடவ ஈஸ்வர அபிமானிகளான சதுர்முகனும் ருத்ரனும் என்று  இவர்கள் வாய் விட்டு ஏத்த மாட்டாத –
வேந்து-
லோகப் பிரசித்தரான இவர்கள் முழு மிடறு செய்து பரி பூரணமாய் புகழ மாட்டாத படியான ராஜாவானவன் –

————————————————————————–

ஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில்  சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று -தரிக்க மாட்டாதே இருக்கும் -சரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார்-

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் த்ண்ணளியாய்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83-

வேந்தராய் -இத்யாதி –
ராஜாக்களாய்-தேவர்களாய் -ஸ்வர்க்காதிகளாய்-அனுக்ரஹமாய்-
தண்ணளியாய் –
அங்குள்ள ஸூகமுமாய் -என்றுமாம்
பந்துவான மனுஷ்யராய் மாதாவாய் ஸ்த்ரியாதி களான மற்றும் எல்லாமாய்
சார்ந்தவர் -இத்யாதி –
பிரபன்னராய்க்   கொண்டு தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு-ருணம் ப்ரவ்ருத்தம் இவமே -பார உத்தியோக -58-21-என்னும்படி
எல்லாமானாலும் பின்னையும் ஒன்றும் செய்யப் பெறாதானாய் தரிக்க பெறாதவனாய்
பிரதிகூல நிரசன  ஸ்வ பாவமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
சரீர அவசநத்திலே வாசா மகோசரமான போகத்தை புஜிக்கக் கொடுக்கும்
ஆஸ்ரித விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்யாதது என்று விவேகிக்க மாட்டாத படி-
பிச்சுத்தான் ஒரு வடிவு கொண்டால் போலே நெஞ்சாறல் பட்டு இருக்கும் படி சொல்லுகிறது
யா கதிர் யஜ்ஞ  சீலா நாம்  -ஆரண்ய -68-30-என்றபடி கார்யார்த்தமாக தம்மை அழிய மாறின பெரிய யுடையாருக்குச் செய்வது அறியாமல்
அர்வாசீ ந போகத்தோடே பரம பத போகத்தோடே சர்வத்தையும் கொடுத்தார் இ றே பெருமாள் –

————————————————————————–

ருத்ரனும் எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்-

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பிதிரும் மனம் இலேன் –
இரண்டு பட்ட மனசை யுடையேன் அல்லேன் –
பிரயோஜனாந்தரம் கொண்டு விடும் மனசை யுடையேன் அல்லேன் -என்றபடி –
பிஜ்ஞகன் இத்யாதி
ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்
அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –
ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணனை-என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72—

February 1, 2015

எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்-

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61-

மனக்கு இத்யாதி –
மனசுக்கு ஏதங்கள் சாரா -பிரதிகூல நிரசன  ஸ்வ பாவனான எம்பெருமானையே தனக்குத் தஞ்சமாக இச் சேதனன் இசையில்-நிர்ஹேதுகமாக  தானே வந்து விஷயீ கரிக்கும்  –
எம்பெருமானை பொதுவாக நினையாதே எனக்குத் தஞ்சம் என்று தான் இசையில் அவனுக்கு மநோ துக்கங்கள் வாராது -என்றுமாம் –
இங்கனே இருக்க எனக்கே என்று லபித்தது –
சகல லோகங்களையும் தன சாசனத்திலே நடத்துகிற எம்பெருமான் தானே வந்து மேல் விழுந்து விஷயீ கரித்த ஐஸ்வர்யம் எனக்கே தான் –
எனக்கே தான் இன்று ஒன்றி –
மநோ வ்ருத்திக்கு அடியாக  ஏகாஸ்ரயனாக நின்று லோகங்கள் ஏழையும் சாசனத்திலே நடத்துகிற சர்வேஸ்வரன் –

——————————————————————

எம்பெருமானே  ரஷகனாக வல்லான்  என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈச்வரர்களாக பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்-

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62-

திரு நின்ற -இத்யாதி
பெரிய பிராட்டியார் நின்ற பஷம் வலிது என்று அனுசந்தியார்-நஷ்ட ஸ்ரீ கரான தங்களோடு ஒக்க -கர்ம வச்யராய் -கர்ம வாசம் பண்ணி –
சம்சரிக்கிற வற்றை உத்க்ருஷ்டமாக அறிவு கேடரைப் பார்த்து உபதேசியா நிற்பர்கள்
திரு விருந்த -இத்யாதி –
பெரிய பிராட்டியார் எழுந்து அருளித் திரு மார்விலே இருக்கையாலே ஸ்ரீ தரனனானவன் யுடையதாய்-வண்டுகள் இதஸ்தத சஞ்சரியா நின்றுள்ள
ஸ்ரமஹரமான திருத் துழாய் மாலையைச் சூடித் தரித்து –

————————————————————————–

நான் எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் –

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-

தரித்து இருந்தேன் ஆகவே –
ஆகையாலே நான் தரித்து இருந்தேன் –
நஷத்த்ரங்களின் யுடைய ஸூப அஸூ ப நிமித்தமான பரஸ்பர சஞ்சாரத்தை  ஆஸ்ரிதர் பக்கல் யுண்டான-அனுக்ரஹ அதிசயத்தாலே ஜ்யோதிஸ் சாஸ்திர முகத்தாலே பரக்க அருளிச் செய்த-திரு வநந்த ஆழ்வானுக்கு அந்தராத்மாவான யுன்னை
போதாத் சங்கர்ஷண-அவன் மேல் கண் வளர்ந்து அருளுகிற உன்னை -என்றுமாம் –வென் நாகத்து   யுன்னை –
ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனை ஆஸ்ரித பஷபாதியான உன்னை –
தெரித்து -இத்யாதி –
அர்த்தத்தை நிர்ணயியா -அத்தை எழுதி வாசித்தும்-பிறர் சொல்லக் கேட்டும் திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கியும்-அதுவே ஸ்வ பாவமாம்படியும்
தத்தத் காலங்களிலே சமாராதானம் பண்ணியும் போது போக்கினேன்
தெரித்து -அனுசந்தித்து -என்றுமாம் –

————————————————————————–

அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை-உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

புஷ்பங்களை திருவடிகளிலே இட்டு ஏத்துங்கோள் –
கைக்கு எட்டிய பூக்களானவைகள் எல்லாவற்றையும் பணிமாறி நிர்மமரேத் திருவடிகளிலே விழுந்து புகழுங்கள் –
ஆஸ்ரயிப்பார்க்கு மேன்மேலே அபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் அழகை யுடையவனுமாய்  –
சர்வ காரணணுமாய்-எனக்கு நாதனுமாய் -ச்நேஹியுமாய் -ஆஸ்ரித வத்சலனுமாய் -நம்முடைய சம்சாரத்தைப் போக்கித் தரும் நாமங்களை யுடையனானவனைச் சொல்லுமதுவே உறுவது –
சொன்ன குணங்கள் திரு நாமத்தினுடைய அர்த்தம் என்கிறார் –
சொல்லானை -சப்த மாதரம் –

————————————————————————–

ஸ்மர்தவ்யனான எம்பெருமானுடைய நீர்மையாலே பரமபத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு அவ்வருகு வேண்டா என்கிறார்
அன்றிக்கே
பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய
ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்-

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

சூது இத்யாதி –
உறுவது என்னுடைய ஹ்ருதயத்திலே ஆராய்ந்தேன் –
சொல்மாலை இத்யாதி -அழகியனாய் ஸ்ரீ யபதியாய் ஆஸ்ரிதர் பக்கல்  வ்யாமுக்தனானவனை ஏதேனும் சொல் மாலைகளை வல்ல வாசித்து இருக்கிற
எனக்கு பரமபதத்தில்  இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –
மாதென்று அழகாய் –மாதாய என்றது அழகு என்றும் -அழகுக்கு ஆஸ்ரயம் என்றும்
இரண்டு இன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் -என்கை-
அன்றிக்கே
மாதாய மாதவனை என்றது -தாயைப் போலே பரிவான ஸ்ரீ யபதியை பக்த்யா விவசனாய்ப் பேச ஷமன் அன்றிக்கே-சொல் மாலையாலே ஏதேனும் வல்ல பரிசு சிந்தித்து இருக்கிற எனக்கு-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –
இதுவே வாய்ப்பு என்று நெஞ்சிலே அத்யவசித்தேன் என்கிறார் -என்றுமாம் –
சொன்மாலை –
தம்முடைய திருவந்தாதி
மாதாய –
மாதாவாய்
மாயவனை என்று பாடமாய்
ஆச்சர்ய குண  சேஷ்டிதங்களை உடையவன் -என்றுமாம்-

————————————————————————–

நான் எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன்
அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்-

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66-

இடம் இத்யாதி –
இப்போது எல்லாம் இடமாவது என்னுடைய ஹிருதயம்
தன்னோட்டை ஸ்பர்ச  ஸூகத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு-
திடம் இத்யாதி –
கலா மாத்ரமான சந்த்ரனைத் தலையிலே  யுடையனான ருத்ரனோடே கூட ப்ரஹ்மாவை ஒரு சரக்காக மதியேன்  –
வையேன் ஆட்செய்யேன் –
வையேன் என்று கூரியேன் என்றுமாம்
செய்யேன் வலம் –
அனுகூல வ்ருத்திகளும் செய்யேன்-

————————————————————————–

நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை -பஹூ குணனான எம்பெருமானுடைய திரு நாமங்களை ஏத்துகையே உத்தேச்யம் -என்கிறார் –
நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இ றே என்கிறார் ஆகவுமாம் –
இங்கனே  என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67-

வலம் இத்யாதி –
வலமாகிலும் ஆகிறது -பல ஹாநி யாகிலும் ஆகிறது
நாள் தோறும் ஆபிஜாத்யம் உண்டாகிலும் உண்டாகிறது –
அன்றியே குற்றமாயிடுக –
நலமாக நாரணனை -இத்யாதி –
சர்வேஸ்வரனாய் நாக்குக்குப் பதியாய் ஞான ஸ்வ ரூபனாய் குணங்களுக்கு ஆச்ரயமாய் இருக்கிறவனை ஏத்தும் பிரகாரம் –
அன்றிக்கே நாரணனை இத்யாதிக்கு
சர்வேஸ்வரனாய் என்னுடைய நாவுக்கு ப்ரவர்த்தகனாய் என்னை ரஷிக்கைக்கு உறுப்பான அறிவால் மிக்கு இருக்கிற ஸ்ரீ தரனை என்று பொருளாகவுமாம் –

————————————————————————–

யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ராஜ குலத்தை அருளிச் செய்கிறார்

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

திறம்பேல்- இத்யாதி –
சொல்லுகிற வார்த்தையைத் தப்பாதே கொள்ளுங்கோள்  –
ஸ்வாமி யுடைய திரு நாமத்தை ஒருகால் கற்றுப் பின்னை மறந்தார்களே யாகிலும்
இதர தேவதைகளை தொழாத மனுஷ்யர்களை பாபம் பண்ணினாரை தமிக்கக் கடவ யமன்
தன்னுடைய தூதரை அழைத்துச் செவியிலே  -வைஷ்ணவர்களைக் கண்டால் வணங்கி சாதுக்களாய் போருங்கள்-என்கிறான் –
செவியிலே சொல்லுகிறது தன் கோஷ்டியிலும் அகப்பட அவர்களிடையாட்டம் ராஜ தார ப்ராவண்ய நிஷேதம்  போலே சொல்லக் கடவன் அல்லாமையாலே
ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம  தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான்  ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம்  ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –
கூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி
சாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்
வத்தி -இருக்கிறபடி –
நமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி
புறம்  தொழா மாந்தர் -என்று –மது ஸூ தான பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி
பிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே  மறக்க்கவுமாம் –
பர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –

————————————————————————–

செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம்
பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே  கிடிகோள்-

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69-

இல்லாதன இட்டுச் சொல்ல வேண்டாதே பூரணமாக என் கவிக்குப் பிரதிபாத்யனானவனைப் பெற்றேன்-ஆராயில் வேதார்த்தமும் அத்தனையே-

————————————————————————–

இஜ் ஜகத்துக்கு எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்-கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்-

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

தான் இத்யாதி –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-பிரளயம்  கொண்ட பூமியை இடந்து  எடுக்கைக்காக
நீருக்கும் சே ற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன்
இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-

————————————————————————–

எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை
அறிவு  கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

சேயன் இத்யாதி –
எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –
ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்
ஆயன் துவரைக்கோன் –
நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
மாயன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று
அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி
அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே
அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று -இத்யாதி
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்
லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் –
மெய்யான ஞானம் இல்லை –

————————————————————————–

ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் –
இவ்வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் –

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

இல்லறம் -இத்யாதி
இல்லறம் -கார்ஹச்த்ய தர்மம்
இது கர்ம யோகத்துக்கு உப லஷணம்-
அன்றாகில் ஞான யோகம் ஸ்தானம் என்கிற சொல்லும் மற்றும் உபாயமாகச் சொல்லுகிறவையும் சொல்ல வல்ல
நல்லறம் -இத்யாதி
கர்ம யோகாத் யுபாயங்கள் எல்லாம் சர்வேஸ்வரனே யாம் இத்தனை –
இத்தை அன்று என்ன வல்லார் ஆர் –
அல்லறம் அல்லனவும் சொல் அல்ல –
மற்றும் இதிஹாச புராணங்களாலும் பகவத் சாஸ்த்ராதிகளாலும் சொல்லுகிற உபாயங்களுமாய்த் தலைக் கட்ட மாட்டாது –
நல்லறம் இத்யாதி
நிவ்ருத்தி தர்மமும் -ருகாதி பேதமான நாலுவகைப்பட்ட வேதத்தில் சொல்லுகிற மகத்தான பிரவ்ருத்தி தர்மமும்
நாரணனே யாவது –
அதில் சொல்லுகிற உபாய பாவம் உள்ளதும் ஆஸ்ரயிப்பாருக்கு எளியனான நாராயணனுக்கே என்று கருத்து –
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளாலும் இப்பொருளை அன்று என்ன முடியாது
அன்றிக்கே
வேதங்களோடு வேத வேத்யனோடு வைதிக புருஷர்களோடு அல்லாத ஆழ்வார்களோடு
வாசி அற எல்லாருக்கும் இவ்வர்த்தத்தில் ஐக கண்ட்யம் சொன்னபடி –
யமைவேஷ வ்ருணுதே தேந லப்ய-கட -1-2-23-என்றும்
நயாச இதி ப்ரஹ்ம–நயாச ஏவாத்ய ரேசயத்  -தைத் -2-62-77-என்கிறது முதலானவை அன்றோ வேத புருஷன் வார்த்தை –
லோகா நாம் த்வம் பரமோ தர்ம -யுத்த -120-15-என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -ஆரண்ய -37-13- என்றும்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -பார வன -71-123-என்றும்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -உத்தர -82-9- என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை -18-66- என்றும்
மாம் ப்ரபத் யஸ்வ-என்றும்
அறம் தானாய்த் திரிவாய் – பெரிய திருமொழி -6-3-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11-என்றும்
களை கண் நீயே -திருவாய் -5-8-8-என்றும்
இவை இ றே அவர்கள் வார்த்தை –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -49-60–

February 1, 2015

பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய     நாமங்களைச்-சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் -என்கிறார் –

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

மலை இத்யாதி
மலையை ஆமையின் மேலே வைத்து வாசூகியைக் கயிறாகச் சுற்றி
அந்த மலையினுடைய தலையை ஆமையான தான் ஒரு கையாலே பற்றி
தளும்பாமே கடலை யடையக் கடைந்த சர்வேஸ்வரனுடைய திருநாமம் –
கூறுவதே -இத்யாதி
சொல்லுவதே எல்லாருக்கும் சொல்லு-கூறப் பட்டது தகுதி யாது என்றபடி
கூறுவதே எல்லாருக்கும் கொள்ளப் படுவது என்னவுமாம்
அலையாமல்  பீறக் கடைந்த
பிறிகதிர் படாமே பயன்படும்படி நெகிழக் கடைந்த –
அம்ருத மதனம் சொன்னது -கடல் கடைந்தும் அவர்கள் அபேஷிதம் செய்யும் என்கை-

————————————————————————–

சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –
எப்போதும் எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

கூற்றம் இத்யாதி –
எனக்கு மிருத்யு பயம் இல்லாமைக்கும்
கொடிய பாபங்கள் என்னை விடுகைக்கும்
அனர்த்த பிரசங்கம் இல்லாமைக்கும்
காரணம் அறிந்தேன் –
தீ மாற்றம்
கொடிதான் சொற்கள் என்றுமாம் –
அது – காரணம்- ஏது என்னில் –
ஆற்றங்கரை -இத்யாதி
திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய
உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது –
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் –

————————————————————————–

அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் பரம பதத்திலும் இல்லை -என்கிறார் –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார் ஆகவுமாம்-

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

எனக்கு இத்யாதி
பகவத் ஏக போகனான என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை
எம்பெருமானும் தன் ஐச்வர்யத்துக்கு தானே ஒப்பாம் இத்தனை யல்லது
ஜ்ஞானத்துக்கு என்னோடு ஒவ்வான் –
புனக்காயா   -இத்யாதி
தன்னிலத்தில் நின்ற காயம் பூப் போல நிரதிசய போக்யமான திரு நிறத்தை யுடைய வுன்னை வேறு அறிவார் இல்லை –
என் மதி இத்யாதி
உன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது –

————————————————————————–

எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்-

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

விலை இத்யாதி
ஒரு வயிறு சோற்றுக்காக அடிமை புகுவர்
வியாதிகளை நீர் வார்ப்பித்துக் கொண்டு ஜீவித்துத் திரிவர்
தலை யறுத்துக் கொடுக்கக் கடவதாக ஆள்பட்டு தேவதைக்கு பலியாத் திரிவர்
தலை அறுப்புண்கைக்கு ஆளாய்  -அவர்கள் இட்டது வயிற்றுக்குப் போறாமை இரந்து திரிவர் என்றுமாம் –
பகவத் அனுபவத்துக்கு தக்கவர் இ றே இவர்கள் என்று உபாலம்ப உக்தி –
முலைக்கால் இத்யாதி
முலை வழியே விஷ பானத்தை பண்ணுவித்த பூதனையை முடித்த செயலாலே ஜகத்தை அடிமை கொண்டு இப்படி உபகாரகனான ராஜாவை விசேஷித்து ஏத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர் –
இப்படி அவிசேஷ ஜ்ஞாரானவர்கள் தன்னை ஆஸ்ரயிக்க தந்த வுடம்பைக் கொண்டு அந்ய பரராகையாலே பாப புக்குகள்-இருக்க மாட்டாதே இருந்து வைத்துத் தனிசு கொண்டு –கடன் பட்டு -உண்பாரோடு ஒப்பர் -என்றுமாம் –

————————————————————————–

ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிகஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்-
நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53

கல்லாதவர் இத்யாதி
தயா சத்யம் சௌசம் ச ராஷசானாம் ந வித்யதே -என்று அறிவு கேடர் எல்லாரும் திரண்ட இலங்கையைக் கட்டழித்த காகுத்தனை ஒழிய வேறு ஒரு தேவதையைத் தஞ்சமாக யுடையேன் அல்லேன்
பொல்லாத தேவரை –
காணிலும் உருப்பொலார்-திருச்சந்த விருத்தம் -69-என்கிறபடியே விரூப தேவதைகளை –
தேவர் அல்லாரை
அல்லாத தேவதைகளை -தேவதைகள் என்ன ஒண்ணாதவர் என்றுமாம் –
திருவில்லா இத்யாதி
அஸ்ரீகரான தேவதைகளை தேவதைகளாகத் தேறாதே கொள்ளுங்கோள்-

————————————————————————–

சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார்-

தேவராய் நிற்கும் அத்தேவும் அத தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

தேவர் -இத்யாதி –
தேவர்களே நிற்கின்ற வேண்டற்பாடும்-
அத்தேவதைகளில் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளாய் நிற்கிற பழையதான செயலும்
யாவரித்யாதி -எல்லாருமாய்க் கொண்டு
மற்றும் மனுஷ்யாதிகளுமாகக் கொண்டு   -நிற்கிற இது எல்லாம் சர்வேஸ்வரனுக்கு சேஷம் என்று அறியாதார் கற்கின்றது எல்லாம் வ்யர்த்தம் –

————————————————————————–

இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து -ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் -உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

கடை நின்று இத்யாதி –
இதர தேவதைகள் வாசலிலே நின்று அந்த தேவதைகள் காலை நாள் தோறும் தொழுது பரிமித ஸூகங்களைப் பெறுவர் –
புடை இத்யாதி –
பூமியைச் சூழ்ந்து இருந்துள்ள நீரோதம் போலே இருக்கிற திருமேனியை யுடைய சர்வேஸ்வரனே -உன்னைப் பேச வல்லார்கள் யார் –
இடை நின்ற இன்பம் –
நடு முறியும் ஸூகத்தை யுடைராவர் –
இடமுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற திரு மேனியையும்
அபரிச்சேத்யமான மஹிமாவையும் யுடைய சர்வேஸ்வரனே
சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை சத்த கீர்த்தனம் பண்ணி ஆஸ்ரயிக்க வல்லார் ஒருவரும் இல்லை என்றுமாம் –
அவர் என்றது
சர்வ கந்த ரஹிதராய்-ரஜ பிரக்ருதிகளாயும் தம பிரக்ருதிகளாயும் உள்ளவரை –

————————————————————————–

இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் –

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56

அவரிவர் இத்யாதி –
இன்னார் இனையார் என்று இல்லை -அழகுக்குக் காமனுக்கும் கூட உத்பாதகன் ஆனவனுக்கு ஒருவரும் எதிர் இல்லை -கண்டி கோளே-
உவர் இத்யாதி –
கடலில் விஷத்தை பஷித்த ருத்ரன் வாணனுக்கு பிரதிபஷத்தை வென்று தருகிறேன் என்று ஓரம் கொடுத்து-அந்த வாணன் சாஷியாக வருகே நிற்கவே-சபரிகரனாகத் தோற்றான் -அதிகம் மே நிரே விஷ்ணும் -பால -74-19-இதிவத்-

————————————————————————–

அவனுடைய ச்வீகாரம் தான் புண்ய பலமாய்   அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று -அவனுடைய விஷயீ கார பஹிஷ்காரங்களே புண்ய பாபங்கள் ஆகிறன-
அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ச்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்-

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

ஒருங்கு இத்யாதி –
சொல்லும் பஷத்தில் சேதனரோடு கூடி இருந்த புண்ய பாப ரூப கர்மங்கள் ஆவான் –பெரிய குருந்தத்தைச் சாய்த்தவனே .
ஒருங்கு இருக்கை யாவது பல வ்யாப்தமாய் இருக்கை -என்றுமாம் –
மருங்கு இருந்து இத்யாதி –
வேறு பட்டிருக்கிற தேவதைகள் -அசுரர்கள் -தாரகை தான் -நஷத்ரங்கள் தான் என் ஹ்ருதயம் தான் -இது எல்லாம் அவன் இட்ட வழக்கு -ததீனம் இல்லாதது ஒன்றும் இல்லை –
நெஞ்சுக்கு எம்பெருமானோடு யுண்டான ப்ராவண்யத்தைக் கண்டு -என் நெஞ்சமானவர் -என்கிறார் –
பெரும் குருந்தம் சாய்த்தவன் என்கிறது சொன்ன பொருளுக்கு சாதனமாக திருஷ்டாந்த உக்தி –
மருங்கு இருந்த வானவர் –
அப்ரசித்தமான தேவதைகள் -தாரகை தான் -தரணிதான் -என்னவுமாம் –

————————————————————————–

அஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த எம்பெருமான் பக்கலிலே-தமக்குப் பிறந்த ச்நேஹத்தை அருளிச் செய்கிறார்-

என்நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்நெஞ்சம்
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்தாய்
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு – 58-

என் நெஞ்சம் -இத்யாதி –
என் ஹிருதயத்திலே மேவி என் அஜ்ஞானத்தைப் போக்கி எனக்கு உபகாரனானவன் .
ராஜாக்கள் பயப்படப் பண்டு ஒரு நாள் பூமியை அளந்து கொண்டான் –
என் நெஞ்சம் மேயான் -இத்யாதி
என் நெஞ்சம் இருப்பிடமாக மேவினவனைத் தனக்கு ரஷகனாக நினைத்து இராத
ரிஷப வாஹனனுடைய கொடிதான பாபத்தைப் போக்கி அத்தாலே தான் உளனானவனுக்கு -ச்நேஹத்தை பண்ணினேன் –
மன்னஞ்ச-
அசூரனான மகா பலி போல்வார் அஞ்சும்படிக்கு ஈடாக -என்றுமாம் –

————————————————————————–

தம்மளவில் இல்லாதபடி எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை -என்கிறார்-

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

அன்பு இத்யாதி –
எனக்கு ச்நேஹித்து எனக்குப் பரம போக்யனானவனே-
சேஷ பூதனான எனக்கு உன் அனுபவ ஸூ கத்தை விளைத்தவனே –
இவற்றால் எனக்கு வந்த ஸூ கமும் ஆனவனே –
மற்றும் எல்லா பந்தமும் நீ யானவனே
இவை எல்லா வற்றுக்கும் அடியாக ஸ்ரீ யபதி யானவனே –
கிளரொளி -இத்யாதி
மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –
அனர்த்தப் படாமே நிர்வஹிக்கிற உனக்கு நான் அடிமை –
இவருடைய ச்நேஹத்தை கண்டு இவரிலும் காட்டில் ச்நேஹித்து இவருக்கு நிரதிசய போக்யனாய்
இவருக்கு தன்னுடைய அனுபவ ஸூ கத்தையும் கொடுத்து
இன்னமும் எல்லா ஸூ கத்தையும் கொடுக்க வேணும் என்று பிச்சேறின ஸ்ரீ யபதி படியை அனுசந்தித்து
நீ அங்கனே அபி நிவேசித்தாய் ஆகிலும் எனக்கு அவை எல்லாம் வேண்டா
என்னுடைய ஸ்வரூப அநு குணமாக நான் அடிமை செய்ய வமையும் -என்கிறார் –

————————————————————————–

இவர் தன்னை விடில் செய்வது என் என்று எம்பெருமான் அதி சங்கிக்க
விட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-

ஆள் -இத்யாதி
எனக்கு அடியார் ஆவார் யுண்டோ என்று இது வெள்ளாமை யாகத் தேடித் திரிகிறபடியை கண்டு உனக்கு அடியேனாக வேணும் என்று
உன் திருவடிகளையே பார்த்துத் திரிகிற என் ஸ்வ பாவத்தை திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
கேட்பார்க்கு -இத்யாதி
புக்கு அநு பவிக்கில் அநு பவிக்கும் இத்தனை போக்கி ஆராயப் புகில் அளவிட ஒண்ணாத வைலஷண்யத்தை யுடையையாய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே-
உன்னை விரும்பும் அத்தனை மனசை உன் பக்கல் நின்றும் வாங்கேன் -த்வாம்ருதஸ் யந்தி நி -ஸ்தோத்ர ரத்னம் -27-இதிவத்
கேட்பார் இத்யாதி
நிரதிசய பக்திமான்கள் அல்லீரோ
குறைவாளராக சொல்லுவான் என் என்று எம்பெருமான் அருளிச் செய்தானாக கொண்டு-துர்ஜ்ஞேயனாய் இருந்து வைத்து சர்வ ஸூலபனாய்க் கோயிலிலே கண் வளரா நிற்க-ப்ராக்ருத விஷயங்களில்  நின்றும் மனசை விடுகிறிலேன்
நான் உன்னை விரும்புகை என்று ஒரு பொருள் உண்டோ என்றும் சொல்லுவர் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -37-48–

February 1, 2015

எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே -என்கிறார் –
ஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-முதலிலே சகல பதார்த்தமும் அவனுடைய சங்கல்ப்பத்தாலே யுண்டாயுத்து என்கிறார் -ஆகவுமாம்-

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37-

வான் இத்யாதி –
ஆகாசமும் -சஞ்சரிக்கிற அக்னி -காற்று -பெரிய கடல் -மலைகள்
தாங்களே சஞ்சரியா நின்றுள்ள சந்திர  ஸூர்யர்களும் –
மேல் வர்த்தியா நின்றுள்ள மேகங்களும் -திக்கு எட்டும் –ஆவரணமும்-இப்படியான அண்டம்-ஸ்ரீ யபதியானவன் சங்கல்ப்பத்தாலே யுண்டாய்த்து-
அகைப்பு -என்று வாழ்ச்சியாய்-அதாவது –
திரு வுள்ளத்திலே உத்தியோக ரூபமான சங்கல்பம் -என்றபடி –

————————————————————————–

மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் –
அதுவும் பண்ணினான் அவன் தானே -ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில் அந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் –

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38-

அகைப்பில் -இத்யாதி
அளவில்லாத மனுஷ்யரை ஷட் சமயங்களைக் காட்டி தப்ப ஒண்ணாத படி யகப்படுத்தினான் -ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
உகைக்கும் இத்யாதி –
ரஷியாதே விடுமாகில் அங்கனே ஆஸ்ரயிக்கையும்-மற்றுள்ள அழைப்புகளும் அப்போது முடியும் –
ஆறு சமயம் புகைத்தான்
ஆறு சமயத்தாலும் மதி கெடுத்தான் என்றுமாம் –
அழைப்பு -ஆஹ்வானம் –

————————————————————————–

லோக வ்ருத்தாந்தம் ஆனபடியாகிறது என்று கை வாங்கி-தமக்குத் திருமலையையும்
அங்கு நின்று அருளுகிற திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண-
திருவேங்கடமுடையானைக் காண வேணும் என்று கூப்பிடா நிற்பன் –
இழைப்பன் திருக் கூடல் கூடமலைப்பேர் அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு
மலையிலே பெரிய அருவிகள் மாணிக்கங்களைக் கொண்டு இழிய-மின்னித்து என்று ஆனைகள் பயப்பட்டு -வரை எனப் பெயர் தருகிற பெரும் பாம்பின் வாயிலே புகும்படியான வெற்பைப் பிராபிக்க வென்று கூடல் இழையா நிற்பன் –
மாணிக்கத்தின் ஒளியை நெருப்பு என்று கருதி யானை வெருவும் –
மின்னாகக் கருதிப் பாம்புகள் புற்றிலே ஒடுங்கும் -என்னவுமாம் –
மழைப் பேரருவி -என்று பாடமான போது
நிரந்தர வர்ஷத்தாலே வெள்ளம் இட்டுப் பெருகுகிற திரு அருவிகள் ஆனவை என்று பொருளாகக் கடவது –

————————————————————————–

திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் -நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

யாத்ருச்சிகமாகத் திருமலை என்னும் காட்டில் ப்ரீதி பூர்வகமாகத் திருமலையை அனுசந்தித்தேனாய்க் க்ருதக்ருத்யனாய்ப் பிறருக்கும் மோஷ பிரதனானேன்
இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –
பரோபதேசம் தவிர்ந்து சாஸ்ரைக சமதி கம்யனாய்-ஸ்ரீ யபதி யுடைய  திருவடிகள் ஆகிற
வலையிலே அகப்பட்டு மற்று ஒன்றுக்கு உரித்தாய்த்திலேன் நான் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார்-

————————————————————————–

எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்-நான் திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

காணல் உறுகின்றேன் கல்லருவி –
காண வேண்டி இரா நின்றேன்-ஒலியை யுடைத்தான அருவிகளில் –
முத்துதிர
அருவிகளில் முத்துதிர என்றுமாம் -கல்லிலே யருவி முத்துதிர -என்றுமாம்
ஒண விழவில் ஒலி அதிர -பேணி வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய் திருவேங்கடம் அதனைச் சென்று –
திருவோணத் திரு நாளில் ஒலி முழங்க -எல்லாரும் ஆதரித்து உன்னைப் ப்ராபிக்கிற வேங்கடவனே -நீ என் ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் –
திருமலையைச் சென்று பேணி வரு வேங்கடவா -என் பக்கலிலே யாதரித்துக் கொண்டு வருகிறவனே-என்றுமாம் –
சென்று காணல் உறுகின்றேன் -என்று அந்வயம் –
இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே -அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –
சம்பத்தாவது திரு அருவிகளோடே கலந்து முத்துக்கள் சிதருகையும்-திருவேங்கடமுடையானுக்கு திருப் பல்லாண்டு பாடுவாரும் வேத பாராயணம் பண்ணுவாரும்- ஆடுவாரும் –

————————————————————————–

நான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக திருமலையிலே சென்று நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் -நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –
திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் –

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை நின்று –
அற வுயர்ந்து இருக்கிற திருமலையைச் சென்று விடாதே ஆஸ்ரயியுங்கோள் –
திருமலையை உத்தேசித்து வழி போக்கையும் -சென்றால் அடிமை செய்கையும் –
புருஷார்த்தம் -என்று கருத்து –
உயர்த்தி சொல்லிற்று -புருஷார்த்த லாபத்துக்கு முட்டச் செல்ல வேண்டாதே புறப்பட்ட வாறே தோற்றுகை-திருமலையைக் கண்டுகொண்டு அதுவே பாதேயமாகப் போகலாம் -என்றுமாம் –
வினை கெடுக்கும் நீர்மையால்என்றும் கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-
சகல துக்கங்களையும் கெடுக்கும் ஸ்வ பாவத்தாலே திரு நாபி கமலத்திலே பிறந்த சதுர்முகனும் த்ரி நேத்ரனும் திருவடிகளிலே-தாமரைப் பூவைக் கொண்டு நிரந்தரமாக ஆஸ்ரயியா நின்று அவ்விடத்திலே கிஞ்சித் கரித்து ஸ்தோத்ரம் பண்ணுவர்கள் –
திருவேங்கடமுடையானை பிரயோஜனாந்தரபரும் ஆஸ்ரியா நிற்பார்கள் –
அநந்ய பிரயோஜனரான நீங்கள் திருமலையை ஆஸ்ரயியுங்கள் என்கிறார் ஆகவுமாம் –

————————————————————————–

பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே  அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் –

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-

மங்குல் இத்யாதி –
மேக பதத்தளவும் உயர்ந்த சிகரங்களை யுடைத்தான-வடக்கில் திருமலையிலே நின்று அருளினவனை-ராத்ரியிலே காப்பிடுகைக்காக புகுந்தார்கள் சந்த்ரனை ஜடையிலே வைத்த ருத்ரனும்-திரு நாபி கமலத்திலே பிறந்த ப்ரஹ்மாவும்-
பக்தி பாரவச்யத்தாலே திரு முத்தின் குடை தொடக்கமான சமாராதன உபகரணங்களைக் கொண்டு
தத் சர்வம் தர்ம வீர்யேண  யதாவத் சப்ரச்பச்யாதி -பால -3-4-என்னும்படி திருமலையிலே-வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து சந்த்யா காலத்திலே ப்ரஹ்மாதிகள் பணி கண்டு அருளுகைக்கு-சத்ராத் யுபகரணங்களைக்  குடையாகப் பிடித்துக் கொண்டு
திரு வந்திக் காப்பு அணிகைக்குப்   புகா நிற்பார்கள் -என்கிறார் –
ஏறத் தாங்குவித்துக் கொண்டு –
ஏறத் தாங்குகிறது தாங்கள் கண்டு கொண்டு போகைக்காக-

————————————————————————–

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

கொண்டு -இத்யாதி –
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்க புக்கவாறே-எடுத்து மடியிலே வைத்த பிள்ளை வடிவாய்-இவன் -வத்யன்-வரம் கொடுக்கலாகாது என்று தோன்றும்படி அவன் தலைகளைத் திருவடிகளாலே அவனுக்குத் தெரியாதபடி
விளையாடுவாரைப் போலே வத்யமாய்ப் போம் என்று பண்டே எண்ணிப் பின்பு
போன ஆஸ்ரிதருக்கு ஹிதகாமனான குமரன் நிற்கிற திருச் சோலைகளை யுடைத்தான திரு மலையிலே கால் கடியார் எல்லாரும் விரைந்து போங்கோள்  என்கிறார் –

————————————————————————–

அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க  பிராப்யம் திருமலை -என்கிறார் –

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-

புரிந்து இத்யாதி
மனசை வழிப்படுத்தி புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -அழகிய திருவடிகளை ஆஸ்ரயித்து விடாதே நிற்க-வ்யக்தமாய் நின்றவனுடைய குளிர்ந்த திரு அருவிகளை யுடைய திருமலையே-திரு நாட்டில் உள்ளாருக்கும் சம்சாரிகளுக்கும் வைப்பு -பரம ப்ராப்யம் –

————————————————————————–

திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீ யமாய் இருக்கிற திருமலையை
எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி  கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

வைப்பன் -இத்யாதி –
பெரிய சந்த்ரனை அழகிய விளக்காக வைப்ப திருவேங்கடமுடையானுக்கு என்றே எப்போதும்-வாங்குகைக்குக் கை  நீட்டா நின்றுள்ள யானையை எங்கும் வேடு சூழ்ந்து கொள்ள அவர்களோடு எதிர்த்துக் குறவர் வில்லெடுக்கும் திரு மலையை
நாடு வளைத்து ஆடுதிரேல் நன்று –
நாட்டில் உள்ளார் சூழ்ந்து ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் நன்று –

————————————————————————–

திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி திருமலையை  அனுபவிக்கிறார் –

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

நன் மணி -இத்யாதி –
ச்ப்ருஹணீயமான நிறத்தை யுடையவனுடைய ஊர் -ஆளியும் -மிடுக்கை யுடைத்தான சிம்ஹமும் -பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -நாநா வர்ணமான மணி நீரோடு சஞ்சரித்து அருளுகிற காடும் வானரமும் வேடுமுடைய வேங்கடம்
திரு வருவிகள் பெருகப் புக்கால் இவை எல்லாவற்றையும் உடைத்தாய் இருக்கை-
நீருக்கு இறாய்த்து மரங்களிலே ஏறுகிற வானரமும் வேடரும் -என்றுமாம் –

————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து
பரம ப்ராப்யமான திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்-

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48-

வேங்கடமே -இத்யாதி
திருமலையையே அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் பரம ப்ராப்யமாகக் கொண்டு தொழுவதும்-சம்சாரிகளுடைய சரீரத்தில் யுண்டான துக்கங்களையும் துக்க ஹேதுவான பாபங்களையும் போக்குவதும் திருமலையே
வேங்கடமே -இத்யாதி
பிரதி கூலரான அசுரர்கள் படும்படியாகத் தன்னுடைய திருவாழி யாகிற ஆயுதத்தோடு தேவர்களை ரஷிக்கும்-அவனுடைய ஸ்தானம் திருமலை –
மெய்ம்மையால் –
பரம ப்ராப்யம் ஆகைக்காக –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -25-36–

February 1, 2015

ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே
அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் –

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-

வகையால் இத்யாதி –
நல்ல உபாயத்தாலே அவனை ஒரு சரக்காக மதியாதே பூமியை வாங்கிக் கொண்டாய்-
மற்று -இத்யாதி –
வெறும் இவ் வுபாயத்தாலே சித்திப்பது ஓன்று யுண்டோ –
அங்கன் அன்றிக்கே –
ஈச்வரனான எனக்கு ஏற்கப் போருமோ என்று நினையாதே அழகைக் காட்டி மஹாபலி மதியைக் கெடுத்து இருந்த அவ்விரகாலே-மண்ணை அளந்து கொண்டு இந்த்ரனுக்குக் கொடுத்தாய் -என்றுமாம்
வகையால் -இத்யாதி –
உபாயத்தாலே வைர போஜனனான மகாபலி நான் என்று அபிமானித்து இந்த்ரனோடே அவனுக்கு யுண்டான  சாத்ரவத்தை போக்கினாய் –
வயிரம் குழைத்து உண்கை என்று சாத்ரவமே ஜீவனமாய் இருக்கை-
மற்றும் வகையால் வருவது ஓன்று யுண்டோ என்று இறுதியில் அந்வயிப்பது –

————————————————————————–

இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று
அவன் படியை வெளியிடுகிறார்-

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்கு மாறு–26-

மற்று -இத்யாதி
இப்படி இருக்கிற உன்னை ஒழிய வேறு சிலரை ஆஸ்ரயணீயமாக யுடையேன் அல்லேன் -என்னும் இடத்துக்கு=ருத்ரன் சாஷி -என்கிறார்
எம்பெருமான் அழகிலே பிணிப்புண்ட ஆழ்வார் இப்படி யுன்னை யனுபவிக்க வல்லேனாம் படி பார்த்து அருள வேணும் என்கிறார் ஆகவுமாம் –
மற்று -இத்யாதி –
உன்னை ஒழிய வேறு தொழப் படுவாரை நானுடையேன் அல்லேன் என்னும் இப்பாசுரத்துக்கு-எல்லாரையும் கும்பீடு கொள்ளும் ருத்ரன் சாஷி –
எற்றைக்கும் -இத்யாதி
கடல் வண்ணா -கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனே
உன் அழகிலே பிணிப்பு யுண்டேன்-
நான் விடாதே யுன்னை அனுபவிக்க வல்லேனாம் படி பார்த்து அருள வேணும் –
கற்றைச் சடையான் –
அவனைத் தொழாமைக்கு நிபந்தனம் -அவன் தானும் சாதகனாய் ஜடையைத் தரிக்கையாலே -என்று கருத்து-

————————————————————————–

எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு
இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ -என்கிறார்-

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-

மாறன் –
நீர்மையாலே மாறுபட்டவன் –
அறிவு கேடர்காள்-ஆஸ்ரித வ்யாமுக்தனானவன் புகுந்து பவ்யமான நெஞ்சை யுடையவன் என்னும் இதுவும் ஒரு பேறாகக் கொள்வேனோ  –
-நீறாடி தான் காண மாட்டாத –
பேரளவு யுடையனான ருத்ரன் காண மாட்டாத –
தார் அகல சேவடியை யான் காண வல்லேற்கு –
தாரை யுடைத்தாய் அகன்று சிவந்து இருந்துள்ள திருவடியை
நான் காண வல்லேனான பின்பு
மால் தான் புகுந்த மட நெஞ்சம் –
அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு
கடல் வண்ணா –
நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது பேறாகக் கொள்வேனோ –
ஒரு லாபமோ -என்கிறார்
இது மாறன் புகுந்த மட நெஞ்சம் -மால் தான் புகுந்த மட நெஞ்சம் –
அதவா –
சர்வேஸ்வரன் தானே விரும்பிப் புகுந்த பவ்யமான நெஞ்சு –
ருத்ரன் காண மாட்டாத நிரதிசய போக்யமான திருவடிகளை நான் காண வல்லேன் -என்கிறது -பேறாகக் கொள்வனோ -என்றுமாம்
இதுவது என்றத்தை மாறி வைப்பது –
பேதைகாள் நீராடி தான் காண மாட்டாத தாரைகள சேவடியை காண வல்லேனான இதுக்கு-மற்று மாறன் புகுந்த மட நெஞ்சம் ஆனதுவும் பேறாகக் கொள்வேனோ -இத் அந்வயம்-

————————————————————————–

பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-

இது-இத்யாதி-
இலங்கை கட்டுக் குலையும்படியாகக் கட்டின சேது இது –
திர்யக்கான வாலியை வீழ்த்தது இது –
இது என்று ப்ரத்யஷ சாமா நாகாரமான ஸ்ரீ இராமாயண பிரசித்தியைச் சொல்லுகிறது –
இது -இத்யாதி –
வில் வளையும் காட்டில் இலங்கை அழியவும் குளிர்ந்த தாரை யுடையனான ராவணன் படும்படியாகவும் எய்தவனுடைய ப்ரீதியிது-
தண் தார் இராவணன் –
தேவர்களுக்கு வைபரீத்யம் பண்ணுகைக்கு மாலை இட்டவன்
உகப்பு -ஆஸ்ரித அர்த்த பிரவ்ருத்திகளே யுகப்பது-என்கிறார் –

————————————————————————–

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே-தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார்
ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு தேஜோ ரூபமாய் பேர் அழகாய் இருக்கும் -என்கிறார் –

உகப்புருவம் தானே யொளியுருவம் தானே
மகப்புருவம் தானே மதிக்கில் –மிகப்புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-

உகப்புருவன் -இத்யாதி –
தர்சணீயமான ரூபத்தை யுடையவன் தானே -எல்லாருக்கும் பிரியத்தைப் பண்ணுகிறவன் தானே -என்றுமாம் –
தீப்தேந ஸ்வேந தேஜஸா -என்கிறபடியே -அத்யுஜ்ஜ்வலமான வடிவை யுடையவன் தானே-ஆராயப் புகில் பரிச்சேதிக்க ஒண்ணாத வடிவை யுடையவன் தானே –
பரம பதத்தில் ஸூ ரி போக்யமான வடிவை யுடையவன் தானே -என்றுமாம் –
மிக -இத்யாதி –
விக்ருத வேஷன் ஆகையாலே மிக்கு இருந்துள்ள புருவங்கள் ஒன்றுக்கு ஓன்று யோஜனை அளவுடையனான-கும்ப கர்ணன் விழும்படிக்கு ஈடாக ஓர் அம்பாலே சீறிக் கொண்டு எய்தானவன் –

————————————————————————–

அப்பேர் அழகோடு -கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் தாமே -என்னை யடிமை கொண்டவன் -என்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் -அவ்வளவு அன்றிக்கே
நெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான்
இனி திருப் பாற் கடலில் திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை -என்கிறார்-

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

கோயிலிலே வந்து ஸூ லபனானவன் என்னை அடிமை கொண்டான் –
இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் .
திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –
அரங்கு –
சம்சாரம் ஆகிற நாடக சாலை –

————————————————————————–

எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன் எம்பெருமானே யான பின்பு-அபரிமித துக்க பாக்குகளான பூமியில் உள்ளார் எல்லாரும் எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

மேல் -இத்யாதி –
பண்டு ப்ரஹ்மா ருத்ரன் இட்ட சாபத்தை அவன் மகன் தான் ஒருவன் இங்கனே படவாகாது என்று-சர்வ சேஷியான தானே  இரங்கி துக்கத்தைப் போக்கினான் –
தரித்ரியிலே சர்வேஸ்வரன் ஏத்தாத ஹேயராய் யுள்ளீர்
ஜனிக்கும் கர்ப்பத்தினுடைய வாச்சர்யம் பேசில் பெரும் பரப்பு –
ப்ரஹ்மா தான் ருத்ரனை வழிய விட்ட சாபத்தை
பூமியிலே சர்வேஸ்வரனான நாராயணன் போக்கினான் –
அப்படி ருத்ராதிகளுக்கும் ரஷகனானவனை ஆஸ்ரயியாத பேய்காள்
உங்களுக்கு சம்சாரத்தில் பிறக்கும் ஆச்சர்யமான துரிதங்கள் பேசி முடிக்க ஒண்ணாது -என்கிறார் -என்றுமாம் –

————————————————————————–

அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே மண்டி நசித்துப் போருவார்கள் -ஆனபின்பு -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

கதை இத்யாதி –
சகல சப்தங்களின் யுடைய அர்த்தங்களும் அவன் சங்கல்பத்தாலே உண்டாய்த்தின -லோகத்தில் சொல்லப் படுகிற பதார்த்தங்கள் -என்றுமாம் –
உதைப்பளவு -இத்யாதி –
அரை ஷணமும் இவனை ஒழியச் செல்லாத படியாய்
உதை -நொடி –
வதை -இத்யாதி –
அவனுடைய குண விஷயம் அல்லாதன நிஷித்தங்கள்-
சேதனர் பர ஹிம்சை பண்ணுகிற இதுக்கு ஹேது அவனுடைய குண அனுசந்தானத்தைப் பண்ணாமை -என்றுமாம் –
அடைமினோ -இத்யாதி
ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனானவன் திருவைடிகளை அடையுங்கோள்   –
அன்றிக்கே –
சாஸ்த்ரங்க ளால் சொல்லப்பட்ட தேவ திர்யகாதிகளான ஆத்மாக்கள் எல்லாம் ஒரு ஷண காலமும் ஒழியாமே-எப்போதும் சத்தை பெற்றுச் செல்லுகிறது அவனுடைய சங்கல்ப்பத்தாலே –
இங்கனே இருக்கச் செய்தே விஷய ப்ரவணராய் நசிப்பான் என் என்னில் –
அவனுடைய ஆச்சர்ய குணங்களில் படாமை -ஆனபின்பு -கல்யாண குணகனானவன் திருவடிகளை அழகிதாக அனுசந்தியுங்கோள் -என்கிறார் –
வதை பொருள் தான் –
நசித்துப் போகிற வஸ்துக்கள் தான் –

————————————————————————–

தாம் கிருஷ்ண  சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் –

அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை
பிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப்பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-

திருவடிகளாலே சகடத்தை நிரசித்து
காளிய மர்த்தனம் பண்ணி
குவலயா பீடத்தைப் பிடித்து அதினுடைய கொம்பை அநாயாசேன பிடுங்கி
பூதநா ஸ்தந பானம் பண்ணி
அழகிய பவளம் போலே இருக்கிற அதரத்தையும் தோள்களையும் யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக வலிதான ஏறுகளின்   உடைய ககுத்தை  முறித்து
இச் செயல்களாலே ஜகத்துக்கு சேஷி யானவன்
குறிப்புக் கோப்பின்னும் ஆனான் –
ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தையும் புதுக்கினான் -என்கிறார்-

————————————————————————–

என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் –

குறிப்பு எனக்கு க் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

குறிப்பு -இத்யாதி –
சர்வ ஸூலபனாய்க் கொண்டு திருக் கோட்டியூரிலே மேவினவனை எனக்கு ஏத்த நினைவு -எனக்கு நினைவும் மென்மேல் என உஸ்ராயங்களும் யுண்டாக –
எனக்கவை வேணும் -என்றுமாம் –
வெறுப்பனோ -இத்யாதி –
தானே வந்து திருமலையிலே நின்று அருளினவனை –
சரீரத்தில் வியாதிகளும் அதுக்கு ஹேதுவான பாபங்களும் வாராதபடி தானே போக்கும் ஸ்வபாவனான அவனுடைய திருவடிகளை –
இப்படி ஸூலபனான அவன் திருவடிகளை விட்டு இருக்க வல்லேனோ -என்கிறார் –
அன்றிக்கே
குறிப்பு இத்யாதி –
என் நெஞ்சில் ஓடுகிறது எனக்கு இனிதாகத் திருக் கோட்டியூரிலே வந்து எழுந்து அருளி இருக்கிற நாயனாரையும்-திருவேங்கடமுடையானையும்  ஏத்துகை-
ஒருக்கால் விட்டுப் பிடித்தாலோ என்ன -வெவ்விய பாபங்களும் அதின் பலமான நோவுகளும் நலியாத படி சம்சாரத்தைக் கடத்தக் கடவதான அவன் திருவடிகளை விடுவேனோ –

————————————————————————–

திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு
இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இ றே பயப்படுகிறார் –

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே
நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம் பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை  அளந்த  ஆயாசமோ -என்கிறார் –
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்
நீளோதம்-பெரிய ஓதம் –

————————————————————————–

எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே –
அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம் என்று பார்த்துத் திருக் குடந்தை தொடக்கமான-திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் –

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

நாகத்தணை -இத்யாதி –
திருக் குடந்தை -திரு வெக்கா-திரு வெவ்வுள் -கோயில் -திருப்பேர் -அன்பில் -திருப்பாற் கடல் –
முதலான இடங்களிலே திரு அரவணை மேல் கண் வளர்ந்து அருளுகிறான் –
ஆதி நெடுமால் –
சர்வ காரணமாய் ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சன்
அணைப்பார் கருத்தனாவான் –
ஆஸ்ரிதர் கருத்திலே ஒழுகைக்காக –
அவர்கள் ஹிருதயத்தில் புகுகைக்கு -என்றுமாம் –
இளைப்பாகில் ஓர் இடத்திலே கிடக்க அமையும்
பல இடங்களிலே திரு அநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிறது -அவ்வவ தேசங்களிலே ஆஸ்ரயிப்பார்  யுடைய நெஞ்சிலே புகுகைக்கு அவசரம் பார்த்து -என்கிறார் –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -13-24–

February 1, 2015

மோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள்
எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் –

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-

வீடு இத்யாதி –
மோஷத்தை வருவிக்க வல்ல விரகு அறியாதே உடம்பை வருத்தப் பண்ணி கூடாம்படி முடித்து துக்கப் படுகிற உங்களுக்கு
மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும் வேதை க சமதி கம்யனுமாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-பிராப்யனுமாய் இருக்கிறானும் சர்வேஸ்வரன்-

————————————————————————–

இப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள்  சொல்லுவதைக் கேட்டு
அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் –

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

நாராயணன் -இத்யாதி –
சர்வ சேஷி -என்னை ஆளுகிறவன் சம்சாரத்தில் சேராதபடி என்னைக் காக்கும் ஸ்ரீ யபதி யானவன் தன்-திருநாமங்களை வாயாலே சொல்லுகைக்கு பாக்ய ஹீனராய்
அசந்நேவ-என்னும்படி அசத் ப்ராயராய் ஹேயரான சமயாதிகள்
வேறே சிலவற்றைச் சொல்லக் கேட்டு அவற்றை ஆசைப் பட்டு அத பதித்துப் போவார் அநேகர் –
ஆழ்வார்
அவற்றைக் கேட்டு-காலாழும் நெஞ்சழியும் என்று பகவத் விஷயத்தினுள் புக்கவர்கள் ஆழங்கால் படுமாப் போலே -ஈடுபடுவர் -என்றுமாம்
திருமால் தன் பேரான பேசப் பெறாத என்று விசேஷிக்கையாலே இவ்வர்த்தத்துக்கு இசையாத ஏகா யனனை நினைத்து அருளுகிறார் என்று -பட்டர் –பிணச் சமயர் என்கிறது -தேவதாந்திர பரரையும்-உபாயாந்தர பரரையும் -அபூர்வம் பல ப்ரதம் என்கிற குத்ருஷ்டிகள் ஆகவுமாம் –

————————————————————————–

இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில்
ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே  அவ்யவதாநேந காணலாம் -என்கிறார் –

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

பல தேவர் இத்யாதி –
ப்ரஹ்மாதிகள் ஏத்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய திருவடிகளை   புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு வணங்கி ஸ்துதிக்க வல்லராகில்
நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்
நீர்- விஷ ஜலம் -நீல கண்டன் -என்றபடி –

————————————————————————–

உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன –
நான் எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷபாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் -என்கிறார்-

நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

நிலை -இத்யாதி –
தரித்து இருக்கும் என்னுடைய ஹ்ருதயம்
பாரத சமரத்தின் அன்று தேவர்களுக்குத் தலைவனாய்
ராஜாவாய் இருக்கிற தாமே எதிரியாகவும்
பல ராஜாக்கள் யுத்தத்திலே படும்படியாகவும்
ஆதித்யன் மறையும்படியாகவும்
பூமியடைய மறையும்படியாகவும்
ரதாங்கத்தாலே மறைத்தவராலே-

————————————————————————–

நம்மளவே அன்று -எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது-எம்பெருமானை ஆச்ரயிக்கும்படியை -என்கிறார்-

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

ஆல்-இத்யாதி
ஆகம பிரசித்தமான வட விருஷத்தின் கீழே இருந்து தர்ம மார்க்கத்தை ஆப்தரான நாலு சிஷ்யர்களுக்குப் போன யுகத்தில் சொன்னான் –
பகவத் ஜ்ஞானம் அறிக்கைக்கு ஈடான தபஸ்சை யுடையவன் –
ஞாலம் -இத்யாதி –
ஆஸ்ரிதர் அபேஷிதங்களை முடித்துக் கொடுப்பதும் செய்து
அவர்கள் அபேஷிதங்களை அறிவிக்க அணித்தாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுவதும் செய்து
பூமியைத் திரு வயிற்றிலே வைத்து ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுவதும் செய்தவனைத் தான் ஆஸ்ரயிக்கும்படியை –
இத்தாலும் பகவத் பரத்வமே பிரசித்தம் -என்கிறார் –
நாலு சிஷ்யர்களுக்கு என்றது
அகஸ்த்யர் புலஸ்தியர் -தஷ -மார்க்கண்டேயர் களுக்கு -என்றபடி  –
மெய்த் தவத்தோன் -ருத்ரன் –

————————————————————————–

பகவத்  சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

மாறாய -இத்யாதி
எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை  இரண்டு கூறாக அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்    அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

————————————————————————–

எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்-ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷபாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-

ஆஸ்ரிதர் பக்கல் பஷபாதத்தாலே ஹிரண்யன் தபஸ் சைப்பண்ணி ப்ரஹ்மாவால் பெற்ற வரத்தை வ்யர்த்தம் ஆக்குவதும் செய்து
அவனுடைய ரஷண அர்த்தமாக திரு ஆழியைத்தரித்தவன் அல்லையோ  –
ஆனபின்பு ஆஸ்ரிதரான எங்களை யுகந்து சாம்சாரிக துரிதம் தட்டாமல் ரஷிப்பாயும் நீ –
காக்க வேணும் என்று நினைப்பாயும் நீ –
ரஷை தான் என்றுமாம் –
ஆஸ்ரயிப்பார் எல்லாருக்கும் ஸ்ரீ வைகுண்டத்தைக் கொடுப்பாயும் நீ-

————————————————————————–

இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் -நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் –

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-

நீயே இத்யாதி –
சகல லோகங்களும் உன்னாலே உண்டாக்கப் பட்டன –
அவற்றின் யுடைய ஸ்திதி உன்னாலே –
தபஸ் சாலே தேவர்கள் ஆனவர்களுக்கும் தேவனும் நீயே –
அத்யுஜ்ஜ்வலமான அக்னியும் குல பர்வதங்களும் திக்குகளும்
அண்டத்திலும் யுண்டான சந்திர ஸூர்யர்களும் ஆகிற இவையும் நீ இட்ட வழக்கு-

————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு--21-

இவை -இத்யாதி –
பெரிய வாயைத் திறந்து புறப்பட விட்ட எரி இவை –
பிலவாய்-பெரிய வாய் -என்றுமாம்
இவையா இத்யாதி –
வென்றது ஆச்சரியத்திலே
சீற்றத்தாலே எரிவட்டம் போலே இருக்கிற திருக் கண்கள் இவை –
மிகவும் ஜ்வலியா நிற்பதும் செய்து
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நரசிம்ஹத்தின் யுடைய மிக்க வழகியவை –
இவை இவை என்றது நரசிம்ஹம் வளர்ந்து தோற்றின அழகுகள் பாரீர் -என்றவாறு
சாஷாத் காரமான ஸ்வ அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லுகிறார் –
நரசிம்ஹத்தின் யுடைய அருமை சொல்லிற்றாகவுமாம் –

————————————————————————–

ஆனபின்பு சர்வ காரணமான நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார்

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-

அழகியான் இத்யாதி-
அழகியான் அவனே –
ஆர் என்னில் நரசிம்ஹாம் ஆனவனே
இவ்வாத்மா தன்னிலும் காட்டில் பழையனாய்-இதுக்கு ரஷண உபாயங்களை அறிந்து வைத்து இருக்கிறவனை ஆஸ்ரயிங்கள்-
குழவியாய் இத்யாதி –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஒரு சிறு பிள்ளையாய் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷித்து எல்லா லோகங்களுக்கும் காரணம் ஆனவனே
பிரளயத்திலே மங்கிப் போகிற ஆத்மாக்களை மத்ச்யமாய் ரஷித்து இதுக்குக் காரணம் ஆனவன் –
வடசய நாத்ய ஆச்சர்யங்களாலே காரணமாய் நின்றவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் ஆகவுமாம்-
குழவி -இத்யாதி –
சர்வேஸ்வரனான தான்   வட தள  சாயியாய் பிரளயகாலத்திலே இஜ் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷித்து -எல்லா லோகங்களுக்கும் காரணமாய் –
அவாந்தர பிரளய காலத்திலே மத்ச்யமாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளி சகல ஆத்மாக்களையும் ரஷிக்கைக்கு அடியாய்
அழகிய வடிவோடு நரசிம்ஹமமாய்   வந்து திருவவதாரம் பண்ணி அருளி -ஆஸ்ரித விரோதியான ஹிரண்யனைப் பிளந்து அருளி
இப்படி சகல ஆத்மாக்களோடும் பழகி இருக்கிறவன் திருவடிகளிலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார் ஆகவுமாம் –

————————————————————————–

அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில்
அவை எல்லா வற்றையும் எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்–

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

வித்தும் இட -இத்யாதி –
பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –
பிரதிபந்தகங்களைத் தானே போக்கி -ருசியைப் பிறப்பித்து -பக்தியை விளைப்பானான -எம்பெருமானுமாய்ப்
பழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது –
விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி வைத்த படியாலே யாத்ருச்சிகமாக ஸூ க்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –
மொய்த்து -இத்யாதி –
அவன் வடிவைக் காண வேணும் என்கிற அபேஷை   பிறக்கிற
பின்னோடே-திரண்டு எழுந்த கார் காலத்தில் மேகம் போலே கருத்து இருக்கிற நிறத்தை யுடைய சர்வேஸ்வரன் திரு மேனியை
நீர் கொண்டு எழுந்த காளமேகமானது காட்டும்
அன்றிக்கே –
சம்சாரம் ஆகிற பழம் புனத்திலே ஈர நெல் வித்தி -என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ
அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே முன்னின்று பிரப்பியா நிற்கும் -என்றுமாம் –

————————————————————————–

ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் –
நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன
யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய   சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து-அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

நிகழ்ந்தாய் -இத்யாதி
யுகம் தோறும் அவ்வோ காலங்களிலே சேதனர் உகந்த நாலு நிறத்தை உடையனாய்
இரண்டு பஷத்திலும் யுள்ள சேனையை முடியும்படி உபேஷித்தாய்-
மது கைடபர்களை இகழ்ந்தாய் -என்றுமாம் –
புகழ்ந்தாய்-இத்யாதி –
கொடிதான யுத்தத்திலே அர்ஜூனனை நீ தானே சேனாபதியாய் உன் திரு உள்ளத்தில் படியே யுத்தத்தைப் பண்ணும்படியாகப் புகழ்ந்தாய்  –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -1-12–

February 1, 2015

சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் –
சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

———————————————–

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

நான் முகனை நாராயணன் படைத்தான் -இத்யாதி
ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –
ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் -அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –
ஆழ்  பொருள்
மங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –
சிந்தாமல் -இத்யாதி
நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

————————————————————————–

ஸ்ருதி பிரக்ரியையால்  நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள்  கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –
இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-ப்ரஹ்மாதி களுக்கு   சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்
தத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற
ஸ்லோகத்திற் படியே ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்-

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-

தேரும் இத்யாதி –
நிரூபித்தால் ஈஸ்வரன் ஒருவனே என்று சொல்லா நிற்பார்கள் –
எத்தனையேனும் அளவுடையாரும் அவன் பெருமையை யுள்ளபடி அறியார்கள் –
ஆராயப் புக்கால் அர்த்தத்தின் உடைய நிர்ணயமும் இதுவே –
ஏழு ஏழு  படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும் எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-

————————————————————————–

ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும்
முட்டக் காண வல்லார் இல்லை -நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

பாலில் இத்யாதி –
ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-
சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-
ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –
சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து
ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –
ஞாலத்தொரு பொருளை -என்றது கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும்
ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே
அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை -என்றுமாம் –

————————————————————————–

சர்வேஸ்வரனோடு ஒக்க  வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று
ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் –
பிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன் -என்கிறார் என்றுமாம் –

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

ஆறு- இத்யாதி
திருவடிகளை விளக்கின கங்கா ஜலத்தைத் தலையிலே தரித்து சாதகனான ருத்ரன் ப்ரஹ்மா சர்வேஸ்வரன் உடன் ஒக்க ஈஸ்வரர்கள் என்னும் இதுவும் கொள்ளப் படுவதோ -அன்றிக்கே
ஜகத் ஐஸ்வர் யத்தை  கூறுடையர் என்னும் இவ்வர்த்தம் கொள்ள முடியுமோ என்றுமாம்
வேறு -இத்யாதி
ஆதித்ய சன்னிதியில்  நஷத்ரங்கள் யுண்டாய்-வைத்தே இல்லாதார் கணக்கானாப் போலே தன்னுடைய உயர்த்திக்கு ஈடாக சகல பதார்த்தங்களும் யுண்டாய்
வைத்தே இல்லாதார் கணக்காம் படி நிற்பதும் செய்து  தனக்கு பிரகாரமான சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி
இருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத்  திரளச் சொன்னேன்
எப்பொருட்கும் சொல்லானை –
அவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம்

————————————————————————–

நானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங்கனே என்று எம்பெருமான் அருளிச் செய்ய-இத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து திருவவதாரம் பண்ணி ரஷகன் ஆகையாலே -என்கிறார் –
எனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இ றே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று எம்பெருமான் அருளிச் செய்ய-ஜகத்து அவனுக்கு   பிரகாரம் என்னும் இடத்துக்கு உறுப்பாக-உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே-சகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் ஆகையாலே சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறார் -என்றுமாம் –

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-

தொகுத்த -இத்யாதி –
திரட்டின வரபலத்தை உடையனாய்-வரப்ரதாக்களான ப்ரஹ்மாதி களுக்கு தோலாது இருக்கிற ஹிரண்யன் யுடைய உடலை இரு  கூறு செய்து
வளைந்த திரு வுகிரோடு கூடின திருத் தோள்களை யுடையையாய்
ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சானவனே-
இதுக்கு கருத்து –
அவதாராதி களாலே பிரதிகூலரை நிரசித்து-ஜகத் ரஷகனானாய் –
இனி அந்த ரஷ்ய ஜந்துக்களிலே ஒருவன் ஈஸ்வரன் ஆக மாட்டான் -என்று
உகத்தில் -இத்யாதி –
ஒருக்கால் வந்து யுகம் தோறும் திருவவதாரம் பண்ணுதி –
சிருஷ்டி என்றுமாம் –
சிருஷ்டி காலத்திலே கார்யரூப ஜகத் பரிணதனான நீ என்றுமாம் –
உள் வாங்கி நீயே –
சம்ஹரிக்கிறாய் நீயே –
தன்னுடைச் சோதி ஏற எழுந்து அருளுகிற படி யாகவுமாம்
அரு நான்கும் ஆனாயறி-
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத் மகமான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே-
இத்தை புத்தி பண்ணு
தோலா தான் மார்வம் -என்றது பகவத் பரத்வம் பொறாதார் வத்யர் என்றும் படியைக் காட்டினார் –

———————————————————–

இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத
பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார் –

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6-

அறியார் -இத்யாதி –
சமணர் என்றும் அறியார்
பௌத்தரும் மதி கெட்டார்-
சொல்லப் புகில் எம்பெருமானுடைய ஈஸ்வரத்வம் அறிய அளவில்லாதார்
அவனுடைய விபூதி பூதனான சிவ சம்பந்தி களானார்கள்
வெறி -இத்யாதி –
சர்வ கந்த -என்னும்படி நிரதிசய போக்யனாய்-குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனாய் -அதுக்கு அளவன்றிக்கே -ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமுக்தனாய்
அதுக்கடியாக ஸ்ரீ ய பதியானவனை –ஏத்தாதார்  ஹேயரே -ஈனவரே   -ஆதலால் இப்போது-

————————————————————————–

அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க-
நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் –

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

இன்றாக -இத்யாதி –
இன்றாதல் நாளையாதல் சில காலம் கழிந்தாதல் உன்னுடைய கிருபை என் பக்கலிலே –
நன்றாக -இத்யாதி –
அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை
அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –
என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில் என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே
அப்படியே
நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்
நான் உன்னை அன்றி இலேன் -நீ என்னை அன்றி இலை-
இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று
நடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று  பேர்த்திடுகிறார்-
இங்கனே இருக்கை எனக்கு ஸ்வரூபம் -என்றுமாம் –

————————————————————————–

நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க
உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் –

இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை–8-

இலை துணை -இத்யாதி –
பகவத் விஷயத்திலே அபிமுகமான நெஞ்சே
பண்டு ருத்ரனைத் தான் வென்ற வில்லை ஸ்ரீ பரஸூராமாழ்வான் கையில் நின்றும் வாங்கின சர்வேஸ்வரன் –
செங்கண்-
தேவர்களுக்கு  வந்த  விரோதிகள் பக்கல் சீற்றத்தாலே சிவந்த திருக கண்களை யுடையனாகை-
சோர வித்யாதி –
ஒன்றுக்கு ஓன்று சேராதே கொத்தான பத்துத் தலையை யுடைய ராவணனதான
அப்ரவிஷ்டமான லங்கையைக் கிட்டி யழித்த கூரிய அம்பை யுடையவன் துணை யல்லது நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –

————————————————————————–

அவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில் அவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக  மாட்டார் –
எம்பெருமானுக்கு சேஷ பூதர் என்கிறார் –
நாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

குறை  இத்யாதி –
தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை தெரிவித்து சதுர் முகன் தன்னுடைய குண்டிகையில் தருவித்த தர்ம தேவதையான நீரை வார்த்து
வேதத்தில் ஸ்ரீபுருஷ ஸூ க்தாதிகளைக் கொண்டு ஸ்துதித்து
விஷ பாநத்தால் வந்த பாதகம் வாராது ஒழிய வேணும் என்று பாதகியான ருத்ரன் சிரஸ்ஸிலே ஏறும்படி கழுவினான்
சர்வேஸ்வரன் திருவடிகளை லோகத்தை அளந்து கொண்ட தசையிலே
அண்டத்தான் சேவடியை –
அண்டம் விம்ம வளர்ந்தவனுடைய திருவடிகளை -ப்ரஹ்மன்  கழுவினான் –

————————————————————————–

எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம்
ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்-

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10-

ஆங்கு ஆரவாரம் -இத்யாதி
லோகத்தை யளக்கிற தசையில் ஆரவாரத்தைக் கேட்டுத் தன் பரிவாலே பிரதி பஷத்தின் மேலே அழலை யுமிழ்வதும் செய்து
மேகம் போலே அழகிய சீலத்தை யுடையனான திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையவனுடைய
ஸ்ப்ருகஹணீயமான திரு மேனியை நாம் காண வல்லோம் அல்லோமோ –
மா மலரான் -இத்யாதி –
தாமரைப் பூவைப் பிறந்தகமாக யுடைய ப்ரஹ்மாவும் சாதகனான ருத்ரனும் வாழ்த்த மாட்டார்கள்
அன்றிகே
பூங்காரரவு –
தன் பரிவாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகள் மேலே விஷ அக்னியை உமிழா நிற்பானாய்-பரிவின் கார்யம் ஆகையாலே
அடிக் கழஞ்சு பெறும் படியாய்   இருக்கிற
அழகிய சீற்றத்தை யுடைய திரு வநந்த ஆழ்வான் -என்றுமாம் –

————————————————————————–

ஆனபின்பு எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11-

வாழ்த்துக -இத்யாதி
வாயாலே வாழ்த்துங்கோள் –
கண்ணாலே காணுங்கோள் –
செவியாலே கேளுங்கோள்-
அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்
சூழ்த்த -இத்யாதி
சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து
ஐஸ்வர்ய ஸூ சகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய்
இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி
வழா –
வழுவாதே
நழுவாதே -என்றபடி

————————————————————————–

எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன
நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-ஆச்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் –

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

மதித்தாய் -இத்யாதி
உன்னை நினையாதார் தேவாது சதுர்வித யோநிகளிலே போய் விழும்படி சங்கல்ப்பித்தாய் –
வேதத்தில் சொல்லுகிறபடியே உன்னை அறியாதார் நசிக்கும்படி மதித்தாய் -என்றுமாம் -அக்கோடியிலே உள்ளான் ஒருவனான சந்த்ரனை அல்ப அநு கூல்யத்தைக் கொண்டு ஷயத்தைப் போக்க வேணும் என்று கருதிப் போனாய் –
மடுவிலே பெரிய முதலையினுடைய வாயிலே அகப்பட்ட யானையை விடுவிக்கைக்காக திருவாழியை விடுக்கைக்கும்
இரண்டு இரண்டு சரீரத்தையும் விட்டு இரண்டும் முக்தமாம் படியும் நினைத்தாய் –
இரண்டும்  போய் இரண்டின் வீடு
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய் ஸூகிகளாம்படி -என்றுமாம்-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -85-96–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 23, 2013

எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க
இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த-

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-
பொழுது இத்யாதி
நாங்களும் எல்லா கார்யம் செய்து-பகவத் நாம சங்கீர்தனமும் பண்ணுகிறிலோமே-என்ன-எனக்கு ராம வ்ருத்தாந்தம் கிடக்க வேறு ஒன்றுக்கு-போது போராது
கழி சினத்த -இத்யாதி –
மிக்க சினத்தை உடையவனாய்-வானர ராஜாவான வாலி உடைய
செருக்கை வாட்டின-சக்கரவர்த்தி திருமகன் என் நெஞ்சிலே சந்நிஹிதன் –
மதன் -மதம் -செருக்கு -என்றபடி-

————————————————————–

அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்
நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

உளன் கண்டாய் நல்  நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

உளன் கண்டாய் –
பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்து வந்தாலும்-பரிஹரிக்க வல்லவன் உண்டு –
நல்  நெஞ்சே-
சர்வேஸ்வரன் உளன் என்று-உபபாதிக்கப் பாங்கான நெஞ்சே –
உத்தமன் என்றும் உளன் கண்டாய்
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு என்னொப்பார்க்கு ஈசன்-
அகிஞ்சனான எனக்கும்-என்னைப் போலே உபாய சூன்யர் ஆனவர்களுக்கும்
தனக்கு உபமானம் இன்றிக்கே உளனான-ஈஸ்வரன் உளன் –
இமை –
புத்தி பண்ணு -என்றபடி-

———————————————————————

தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்-

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

சமய விருந்து
சமயம் பண்ணின விருந்து
ஆர் காப்பார் –
இந்த்ரன் பாதகனே வர்ஷிக்கிற போது-எம்பெருமான் அன்றோ காத்தார்-இடையரோ –
சமய இத்யாதி –
வைதிக சமயத்தைக் கண்டானும்-அவற்றை ரஷிப்பானும்-நீல கண்டன் சதுர்முகன் முதலானவர்கள் துரிதங்களைப்-போக்குமவனும்-இவ்வாத்மாக்களையும் வயிற்றிலே எம்பெருமானை ஒழிய அற்று யார்-

————————————————————

இப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது
இவ்வாத்மா சரீரத்தைப் பொகட்டு-பிராணனைக் கொண்டு எம படராலே ப்ரேரிதமாகப் போம் போது
ஓடி அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்
ஆஸ்ரிதர் ஆனவர்களை-ஆள் இட்டு அந்தி தொழாதே தானே ஓடி-அவர்கள் தர்சனத்தால் வந்த அறிவு கேடு முதலான-துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திருநாமத்தை பிரியமுடன் சொல்லி -இவ்வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை
எம்பெருமானே நிர்வாஹகன் என்று இருக்குமவர்கள் வாழ்வார்-சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது-துக்க ஹேதுவான-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே
பந்தகமாய்-ஷூத்ரமான கர்மாத் யுபாய பேதங்களைப்-பற்றினார்க்கு ஒரு பிரயோஜனமும் இல்லை –

————————————————————————–

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுதாகது ஓன்று அறிந்தேன்
பழுதாகாத உபாயங்களில்-உத்க்ருஷ்டமான உபாயம்
பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை கண்டு இறைஞ்சி வாழ்வார்-
பாகவத சமாஸ்ரயணம் என்று இருந்தேன் –
கலந்த வினை கெடுத்து விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு
ஆத்மாவோடு அவிநாபூதமான பாபத்தைப் போக்கி-ஸ்ரீ வைகுண்டத்தில் வாசல் திறந்து -விண் திறந்து –
அங்கே அதி சம்ருத்தமான ஜ்ஞான பக்திகளை உடையராய்-பகவத் கைங்கர்யத்தில் தலைவரான-நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார்கள்
இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-

————————————————————————–

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க வேண்டி-இருக்கப் பெற்றவர்கள்-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்
எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ச்நேஹித்து-அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் –

————————————————————————–

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி –
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று-
தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்-அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்-என்று அந்வயம்
மால் வண்ணன் -கிருஷ்ணன்
தாள் தாமரை -தாளை உடைய தாமரை
ஆடு அரவத்தார்க்கும் -ஆடுகிற பாம்பை ஆபரணமாக உடைய
ருத்ரனுக்கும்
அமரர்கள் -நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்
ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்றபடி

————————————————————————–

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று
வ்யாமுக்தனானவனை-என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க
நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் –
என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

————————————————————————–

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

எம்பெருமானுடைய ரஷையை மறந்தறியேன்-கிருஷ்ணனே பிராப்ய ப்ராபகங்கள் என்று இருப்பன்
சர்வ ஆத்மாக்களும் கரண களேபரங்கள் இழந்தால்-அத்தை மீளவும் கொடுத்து
ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான
சம்பந்தத்தை யுடையவனே
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார்
ஆப்பு -பந்தமாய் அத்தால் கரண களேபரங்களை சொல்லுகிறது-

——————————————————–

அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்
என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே
வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் என்கிறார்-

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-
ஒன்றாய் வாழாதே வேறான துர் யோநாதிகள் பஸ்மாமாம்படி-பர ஹிம்சை என்று கலங்காதே-ஆஸ்ரித விரோதிகள் ஆகையாலே-திரு உள்ளம் தெளிந்து அணி வகுத்து
யுத்த களத்திலே கொண்டு விழ விட்டு-பின்னும் படுக்கையிலே சாய்ந்தவனே
பை தெளிந்த
எம்பெருமானோட்டை ஸ்பர்சத்தாலே குளிர்ந்த பணங்கள்-அவர்கள் தக்கவைவர்
நீ ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்
கறியாகக் கொள்ளுவோம் என்று அபிமானிக்க-வேம்பு கறியாகுமா போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –
கிமத்ர சித்ரந்தர் மஜ்ஞ-இதிவத்
சரணாகதி தர்மம் அறிந்தவர்கள் தோஷவானையும்-கைக் கொள்ளுவார்கள் -என்றபடி-

————————————————————————–

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

ஏன்றேன் அடிமை –
அடிமை என்றால் மருந்து போலே இராதே-அதிலே பொருந்தினேன்
இழிந்தேன் பிறப்பு இடும்பை –
அடிமைக்கு விரோதியாய் சாம்சாரிகமான-அஹங்காரம் மமகாரம் ஆகிற பர்வதத்தில் நின்றும் இழிந்தேன்
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன் கடனாடும்மண்ணாடும்
கை விட்டு மேலை இடநாடு காண வினி –
ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து
அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி
இப்போது பரபக்தி யுக்தனானேன் என்கிறார்-

————————————————————————–

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

இப்போது ஈசனுக்கும் நான்முகனுக்கும் தெய்வம்  என்று எனக்கு
கை வந்தது –
இப்போது நீ யானபடியே உன்னை அறிந்து இருந்தேன்
சர்வத்துக்கும் காரணன் நீ
இதுக்கு முன்பு அறிந்தனவும்
இனி மேல் அறியக் கடவ பதார்த்தங்களும் எல்லாம் நீ இட்ட வழக்கு
நற்கிரிசை –
நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-
அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
நன்கு அறிந்தேன் நான்
இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -73-84–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 23, 2013

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73-

இப்பாட்டையும் பட்டர் அருளிச் செய்தார்
ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த பேராழியான் தன் பெருமையை –
சகல லோகத்தையும் வயிற்றிலே வைத்து-வெளிநாடு காண உமிழ்ந்த பெரியவனுடைய
நைரபேஷ்யத்தை யார் அறிவர் –
இவனுடைய பெருமையை பரிச்சேதிக்க வல்லார் யார் என்றுமாம் –
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன்வைத்த பண்டைத் தானத்தின் பதி –
அவன் என்றும் உண்டாக்கி வைத்த பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-என்கிறவர்களால் காணப் போகாது
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது என்றுமாம்-

—————————————————————-

ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன -ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –
மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி –
ஸூ முகன் என்கிற சர்ப்பத்தை ஆமிஷமாகதிருவடி பாதாளத்தில் தேடிச் செல்லுகிற படியை அறிந்து -அதுவும் -கண் வளர்ந்து அருளுகிற திருப் பள்ளிக் கட்டிலை கட்டிக் கொண்டு கிடக்க-திருவடியும் ஸ்ரீ பாதம் தாங்குவார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல -இச் சர்ப்பத்தை திருவடி கையிலே காட்டிக் கொடுத்து
திருவடியை இட்டுப் பொறுப்பித்தது -இவனை அவன் கைக் கொள்ள பெருகையாலே இரண்டு அர்த்தமும் ஜீவித்தது-

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

பதிப்பகைஞற்கு ஆற்றாது –
சஹஜ சத்ருவான திருவடிக்கு அஞ்சி-அவர் பலம் பொறுக்க மாட்டாது
பாய் திரை நீர்ப் பாழி –
பரந்த திரையை உடைத்தான கடல் போலே-திருப் பள்ளிக் கட்டில் –
ஒரோ யுகத்தில் ஒரு இடங்களில் எல்லாம் பிறக்கக்-கூடுகையாலே திருப் பாற் கடல் தன்னிலே ஆகவுமாம் –
மதித்தடைந்த-
சரணாகதர் ஒரு தலையானால்-பிராட்டி திருவடி திரு அநந்த ஆழ்வான் ஆன அசாதாராண-பரிகரத்தை விட்டும்-ரஷிப்பான் ஒருவன் என்றும் நிச்சயித்து அடைந்த
வாளரவம் -தன்னை –
சரண்யன் அங்கீ கரிப்பதுக்கு முன்னே-அவனுடைய சீலவத்தையாலே தன் கார்யம் தலைக் கட்டிற்று-பிறந்த ஒளி – என்று-அந்தரிஷிகதஸ் ஸ்ரீ மான் -என்னும் படியே
-மதித்து –
நெஞ்சில் கொண்டு என்னும்படியாக-சரணாகதனாக நினைத்து
அவன் தன் வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனைஅல்லாது ஓன்று ஏத்தாது என் நா
திருவடி தானே பிரசன்னனாய்-தன் தோளில் தரிக்கும்படி பண்ணி-அத்தாலே நிறம் பெற்று க்ருதக்ருத்யனாய்-ஆச்சர்ய யுக்தனான ஈஸ்வரனை ஒழிய-வேறு ஒன்றை ஏத்தாது என் நா-
வேறு ஓன்று –என்றது -தேவதாந்தரங்கள் பக்கல் அநாதரம்-

—————————————————————-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

————————————————————————–

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

இப்படி புராணங்களில் பரக்கச் சொல்லப்பட்ட அர்த்தங்கள்
காரணமான அக்நி -வியாபகமான ஆகாசம்-
யத்வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -என்று
ஸ்ருத்யாதிகளில் ஆப்த தமனமாகக் கேட்ட-மனுவும் என்றும் ஒதுவித்துப் போகிற நாலு வேதமும்-இவை எல்லாம் ஆச்சர்யபூதன் சங்கல்ப்பத்தால் உண்டான உண்மை உடைய –
பாட்டு -அருளிச் செயல்
முறை -ஸ்ரீ மத் ராமாயணம்
படுகதை -மகா பாரதாதி புராணங்கள்
பல் பொருள்கள் -இவற்றால் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்கள்
தற்பு-சத்தை -உண்மையை உடைத்தது என்றபடி-

————————————————————————–

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

ஆழக் கடவ கல்லைக் கொண்டு-நீரிலே அணை கட்டினவன் –
எற் கொண்ட வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம்வைத்தான் எவ்வினையும் மாய்மால் கண்டு
நான் உரு மாயும்படி என்னை க்ரசித்த மகா பாபமும்-நசிக்கும்படி -வேறு ஒரு இடத்திலும் போகாதபடி -திரு உள்ளத்தாலே கொண்டு-என் பக்கலிலே மனஸை வைத்தான் –
ஆதலால் பாபம் என்று சொல்லப் படுகிறவை அடைய மாயும் –

————————————————————————–

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

கண்டு இத்யாதி –
அபிமத விஷயத்தில் ப்ராவண்யத்தை விளைத்தவனை-அநங்கன் ஆக்கினவன் -நெஞ்சும் கூட-ஸ்ரவண மாத்ரத்திலே பரவசமான படியைக் கண்டால் –
இவ்வஸ்துவை சாஷாத் கரித்து ப்ரணாமாதிகளைப்-பண்ணினார்க்கு எத்தனை நன்மை பிறவாது -என்கிறார்
தவத்தாற்கு –
தபச்சுக்கு பலம் ஒருத்தனுடைய ஹிம்சை யாம்படி-நெஞ்சு திண்ணியன் ஆனவனுக்கு
உமை உணர்த்த –
ப்ராசங்கிகமாக பகவத் குணங்களைக் கேட்டு-சிஷ்யாசார்ய க்ரமம் மாறாடி
அவள் வாயாலே தான் கேட்டு
வண்டு இத்யாதி –
மது வெள்ளத்தில் வண்டுகள் அலையா நின்ற-திருத் துழாய் மாலையையும்
ஆதிராஜ்ய சூசகமான முடியையும் உடைய-சர்வேஸ்வரன் திரு நாமங்களையே கேட்டு
நெஞ்சாலே அனுசந்தித்துக் கொண்டு இருந்து
ஆர் அலங்கல் ஆனமையால் –
அலங்கல் என்று அசைவாய்-பாரவச்யதையைச் சொன்ன படி

————————————————————————–

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

ஆய்ந்து -இத்யாதி
பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் பரமபதம்-என்று ஆசைப்பட்டு அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை –
சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார்
ஆய்ந்த இத்யாதி –
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனை பிரேமத்தாலே அனுசந்தித்திக் கொண்டு
இருத்துகைக்கு யோக்யமான நெஞ்சிலே வைக்க வல்லவர்கள்
ஏய்ந்த தம் மெய் –
ச்தூலோஹம் க்ருசோஹம் என்று-தானாக சொல்லலாம்படியான சரீரத்தை
குந்தமாக -நோயாக-

———————————————————–

பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த
கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள்

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

உலகம் -என்று உத்க்ருஷ்டரைச் சொல்லுகிறது
-பரந்து உலகம் பாடின வாடின கேட்டு படு நரகம் வீடின வாசற் கதவு –
பரந்து உத்க்ருஷ்டராய் ஆடினவர்கள் பாடின-திரு நாமங்களைக் கேட்ட
நரகத்து வாசல்களில் கதவு வாங்கிப் பொகட்டன-
அன்றிக்கே
நரகத்து வாசல்களிலே பிடிங்கிப் பொகட்ட கதவுகளை நாட்டி -முனியாது மூரித்தாள் கோமின் -என்னும்படி-விரைந்து அடையுங்கோள் -என்றுமாம்
கண்ணன் -என்றது கண்ணனை -என்றபடி
நரகம் பாழ்ந்தது
போக்குவரத்து இல்லாத படி கதவை அடையுங்கோள்-என்று இரண்டு தாத்பர்யம்-

————————————————————————–

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

கதவு இத்யாதி
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி
பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –
காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –
குதை இத்யாதி
தடுமாற்றமான தொழில்  தவிர்ந்தேன்
விதை இத்யாதி
தடுமாற்றம் தீருகைக்கு சொல்லுகிறது

————————————————————————–

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை நலந்தானும் –
எல்லாரும் தன்னை ஆசைப்பட இருக்குமவன்-என்னை ஆசைப்பட்டு ஹிருதயத்திலே கலந்தான்-அழகாலே எல்லாரையும் அகப்படுத்தும் காமனுக்கும்-உத்பாதகன் ஆனான் –
ஈது ஒப்பது உண்டே –
அவன் தான் காட்டக் கண்ட இதுக்கு-கதிர் பொறுக்கிக்கண்ட நலன்கள் சத்ருசமோ –
அலர்ந்து அலர்கள் இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்றுஇவர்கள் விட்டு ஏத்த மாட்டாத வேந்து –
செவ்விப் பூக்களை கொண்டு ஏத்துகிற ருத்ரனும் சதுர்முகனும்-வாய் விட்டு ஏத்த மாட்டாத-சர்வாதிகன் என் உள்ளத்தைக் கலந்தான் -அவ்வழகையும் மேன்மையும் உடையவன் என்கை-

———————————————————————–

-இத்தோடு ஒக்கும் அழகு உண்டோ என்று-அத்தை உபபாதித்துக் காட்டுகிறார் –

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83–

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் –
சிறியது பெரியது தின்னாதபடி நோக்கும் ராஜாக்களாய்
பூமியில் உள்ளாருக்கு வர்ஷத்தால் உபகரிக்கும் தேவர்களாய்
பூமியில் உள்ளார் பண்ணின பலம் அனுபவிக்கும் ஸ்வர்க்கமாய்
அங்கு இவர்களுக்கு பண்ணும் தண்ணளியாய்
இவர்களுக்கு சஜாதீயரான மனுஷ்யராய்
அழகாய் -என்னவுமாம்
சஹஸ்ரம் ஹி பிதுர் மாதா -என்னவுமாம்
அனுக்தமான எல்லாவுமாய்
சார்ந்தவர்க்குத் –
இப்படி எல்லாம் ஆவது-தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் –
எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யானாகக் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்
பின்னைச் செய்யுமது வ்யாவ்ருத்தம்
அவன் குமிழ் நீர் உண்டிட-இவன் குமிழ் நீர் உண்ண
காணும் அத்தனை
ஆற்றான் -த்ருப்தன் ஆகான்
பிதிர் -அதிசயம் -மிச்சம் என்றபடி-

——————————————————————

அவனோபாதி நானும் வ்யாவ்ருத்தன் என்கிறார் —

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பிதிரும் மனம் இலேன்-ஏக ரூபம் இன்றிக்கே இருக்கிற மனஸை உடையேன் அல்லேன்பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் –ஈஸ்வராத் ஜ்ஞானமன்விச்சேத்-என்கிற தேவனோடு ஒப்பான் –அவன் எனக்கு நேரான் -சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிறவன் எனக்கு ஒப்போ-அதிரும் கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழும் காதல்  பூண்டேன் தொழில் -த்வனியா நின்ற வீரக் கழலைதிருவடிகளிலே உடைய சர்வாதிகனான கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது -ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 23, 2013

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு –61

கேதம்– துக்கம் ஏதம் -பொல்லாங்கு
மனசுக்கு ஏதம் சாரா என்றுமாம்
தஞ்சமான செயலை செய்யுமவனை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில்
சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று
தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –
அது தானும் இன்று-

—————————————————————————————————————————————–

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62

-திரு நின்ற பக்கம்-
அபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே
இன்ன வஸ்து என்ன வேண்டா –
ஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்
அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –
திறவிது என்று ஓரார்
திறவிதாவது
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய்
வேறு ஒன்றால் அறியாதது –
ஒரு சேதனர் ஆகில் அறியலாம் என்கை –
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர்-
தங்களோடு ஒக்க கர்ப்ப வஸ்யராய்
கர்ப்ப வாஸம் பண்ணுகிறவர்களை
ஆஸ்ரய ணீ யராக தங்களோடு ஒத்த
அறிவு கேடருக்கு உபதேசிப்பார்கள் –
திருவிருந்த மார்பில் சிரீதரன் தண் வண்டுலவு தண்டுழாய் தார் தன்னைச் சூடித் தரித்து
மாம்பழம் உண்ணி ந்யாயத்தாலே
ஸ்ரீ சம்பந்தம் இல்லாதாரை ஸ்ரீ மான்களாகச்
சொல்லும்படி அன்றிக்கே
பெரிய பிராட்டியார் திரு மார்பில் எழுந்தருளி இருக்கையாலே
ஸ்ரீ தரன் என்று திரு நாமத்தை உடையவன் ஆனவனுடைய
மது வெள்ளத்தாலே வண்டுகள் திரியா நின்றுள்ள
செவ்வியை உடைய திருத் துழாயை
சூடிக் களைந்தன சூடும் -என்னும்படியே
தலையால் தரித்து திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீ ய பதி தானே-

—————————————————————————————————————————————–

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63

கீழிற் பாட்டில் இப்படி செய்திலர் என்று வெறுத்தார் லோகத்தை –
இதில் தமக்குள்ள ஏற்றம் சொல்லுகிறது –

தாரா கணப் போர் விரித்துரைத்த வென்னாகத்துன்னை-
நஷத்ர கணங்கள் உடைய சஞ்சாரத்தை
விஸ்த்ருதமாகச் சொன்ன
திரு வனந்த ஆழ்வானுக்கு
ஆத்மாவாய் இருந்துள்ள உன்னை
தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
அனுசந்தித்தும் லிகித்தும் வாசித்தும் ஸ்ரவணம் பண்ணியும்
நிர்மமனாய் வணங்கி
அது தானே யாத்ரையாய் ஆராதித்தும் காலம் போக்கினேன்
தரித்து இருந்தேனாகவே —
ஆகவே தரித்து இருந்தேன் –
தரித்து இருந்தேனாகவே –
தரித்து இருந்தேன் ஆகைக்காக
பூசித்துக் காலத்தைப் போக்கினேன் என்றுமாம்-

—————————————————————————————————————————————–

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏ ழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ
இன்ன புஷ்பம் என்ற நியதி இல்லை –
பூவானதை எல்லாவற்றையும் கொண்டு
திருவடிகளிலே சமர்ப்பித்து வணங்கி
ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்
பொன் மகரக் காதானை –
கை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி
ஸ்ப்ருஹணீ யனானவனை –
ஆதிப் பெருமானை –நாதானை நல்லானை நாரணனை-நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –
அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே
நமக்கு உத்பாதகனானவன் –
ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே
நாராயண சப்த வாச்யனாய்
நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும்
திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ்வாத்மாவுக்கு உறுவது –

—————————————————————————————————————————————–

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன்
உறுவதாவது என்னெஞ்சிலே மநோ ரதித்தேன்
சொன்மாலை -இத்யாதி
அழகு தான் வடிவு கொண்டாற் போலேயாய்
வ்யாமுக்தனாய் இருந்துள்ள
ஸ்ரீ ய பதியைச் சொல்லப்பட்ட பிரபந்தத்தை ஏதேனும் ஒருபடி
அனுசந்திக்கிற எனக்கு பரமபதத்தில்
இடம் இல்லையோ –
ஸ்ம்ருதி மாதரம் உடையாருக்கும்
பரமபதம் சித்தியாதோ என்கை –
ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே
பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்
மாதாய -அழகாய –மாது -அழகு-

—————————————————————————————————————————————–

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு பட நாகணை நெடிய மாற்கு
சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தானம்
என்னோடு சம்ச்லேஷிப்பதுக்கு முன்பு எல்லாம்
தன்னோடு சம்ச்லேஷத்தாலே விஸ்த்ருமான பணத்தை உடைய திரு வநந்த ஆழ்வான் –
இப்போது எல்லாம் என்னுடைய ஹிருதயம் –
திடமாக வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான் –
சந்த்ரனை தரித்தானாய் இருக்கிற ருத்ரனையும் –
திரு நாபீ கமலத்திலே உத்பன்னன் ஆகையாலே
அஜன் என்று இருக்கிற ப்ரஹ்மாவையும்
திருட பதார்த்தங்களாக நினையேன் –
வையேன் ஆட்செய்யேன் வலம் –
அதுக்கடி கூரியேனாய்
சார அசார விவேகஞ்ஞனாய் ஆகை
பிரதிபுத்தா ந சே வந்தே -என்று
கூரியர் ஆனவர்கள் தேவதாந்தர பஜனம்
பண்ணார்கள் இ றே-என்கை-
வலம் –
இதுக்கு எல்லாவற்றுக்கும் அடி
பகவத் பரிக்ரகமான பலம்
வையேன் -மனசிலே வையேன் -நினையேன் என்றும்
வையேனான நான் -கூரியனான நான் -என்றும் இரண்டு நிர்வாஹம் -கூர்மை -ஜ்ஞானக் கூர்மை-

—————————————————————————————————————————————–

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67

நலமாக நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச சீரணனை ஏத்தும் திறம் –
நன்றாக சர்வ ஸ்வாமியாய்
என் நாவுக்கு நிர்வாஹனாய்
ஜ்ஞான குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்
இருக்கிறவனை நன்றாக ஏத்தும் பிரகாரம் –
வலமாக மாட்டாமை தானாக வைகல் குலமாக குற்றம் தானாக
பலமாகவுமாம் –
ஆபிஜாத்யத்தை உண்டாக்கவுமாம் –
அதிலே தோஷத்தை உண்டாக்கவுமாம் –
இவை அன்று உத்தேச்யம்
அவனை ஏத்துகையே உத்தேச்யம்
சீரணன் -குணங்களை உடையவன்

—————————————————————————————————————————————–

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68

பகவத் பரிகரமே பலம் என்னும் இத்தை
ஸ்வ புருஷ ம்பி வீஷ்ய-என்கிற ஸ்லோகத்தின்
படியே விவரிக்கிறார்

திறம்பேல்மின் கண்டீர் –
திறம்பாதே கொள்ளுங்கோள் என்னும் போது
நாலுபத்தோலை மறுக்கவுமாம் –
திருவடி தன நாமம் மறந்தும் புறம் தொழா –
பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் –
தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது –
பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –
பர்தரந்தர பரிக்ரகம் இ றே அவனுக்கு ஆகாமைக்கு அடி
மாந்தரை –
மனுஷ்யரை –
-இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு –
அவர்களை நலிந்திலோம் என்று இருக்க ஒண்ணாது
பாச ஹஸ்தம் -என்கிற க்ரூர வேஷத்தைத் தவிர்ந்து
விநீத வேஷராய்
அஞ்சலி ப்ரணாமாதிகளை பண்ணிப் போரும்கோள்-என்கிறார் –
நமனும் –
சம இதி -என்று சொல்லப் படுகிறவனும்-ப்ரஹ்மாதிகள் உடன் சமமாக சொல்லப்படுமவன் –
தன் தூதுவரை
ஸ்வ புருஷம் -என்றபடி
செவிக்கு
கர்ண மூலே -என்றபடி
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று
நெஞ்சு பறை கொட்டுகிறது-

—————————————————————————————————————————————–

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69

பார்க்கில்-மறைப் பொருளும் அத்தனையே தான் –செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
-யம வஸ்யதையை தவிர்க்கும் அளவு அன்று
செவிக்கு இனியதுவும் புண்டரீகாஷனுடைய திருநாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் –
எனக்கு ஒருத்தனுக்குமேயோ
பூமியில் உள்ளாருக்கு எல்லாம் ஸ்தானம் திருநாமம்
கவிக்கும் நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்-
ஸ்துத்யனுக்கு ஒரு பூர்த்தி இன்றிக்கே
ஸ்தோதா நிரப்ப வேண்டும்படி யன்றிக்கே
கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால்
குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக
லபித்தேன் –
பார்க்கில் மறைப் பொருளும் அத்தனையே தான் –
யாத்ருச்சிகமாக அன்றிக்கே
ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும்
அத்தனையே –

—————————————————————————————————————————————–

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70

வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி
எங்கனே என்னில்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ
பிரசித்தம் அன்றோ -என்கிறார் –
– தான் ஒருவனாகித் –
வாமனனாய்
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் –
வாமனனாய் பரப்பான பூமியை
வியாபித்து தன் திருவடிக்குள்ளே அடங்கும்படி
இட்டுக் கொண்டு
அச் செயலாலே அத்விதீயனாய் –
தரணி இடந்து எடுத்து ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்
–பிரளயம் கொண்ட பூமியை
அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடும்படி
இடந்து எடுத்து
மகா வராக ரூபியாய் பெரிய பூமியை
திரு எய்ற்றில் ஏக தேசத்திலே தரித்ததும்
யானொருவன் இன்றா வறிகின்றேன் அல்லேன்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ –

—————————————————————————————————————————————–

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது
அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்
அறியப் போமோ -என்கிறார்
சேயன் மிகப் பெரியன் –
யதோவாசோ நிவர்த்தந்தே -என்று
வாக் மனஸ் ஸூ களுக்கு நிலமில்லாத படியாலே
ப்ரஹ்மாதிகளுக்கும் தூரச்தனாய் இருக்கும்
அணியன் சிறியன்-
சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் பிறந்து
அனுகூலர்க்கு அண்ணி யானாய் இருக்கும்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்
அண்ணி யனானமைக்கு உதாரஹனம்
இடையனாய்
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்
தேர் தட்டிலே நின்று
உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன்
நீ சோகிக்க வேண்டா –
என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான
தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று
நினைக்கும்படி சத்ருக்களாய்
தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்

—————————————————————————————————————————————–

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72

நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும்
என்னச் சொல்லுகிறார் –

இல்லறம் இல்லேல்-
கர்ம யோகம் அன்றாகில்
பிரவ்ருத்தி தர்மம் அன்றாகில் -என்னவுமாம்
துறவறம் இல் என்னும் சொல் –
நிவ்ருத்தி தர்மம் ஸ்தானம்  பிரமாணம் –
ஜ்ஞான யோகம் என்னவுமாம்
அறம் அல்லனவும் சொல்லல்ல –
அல்லாத தர்மங்களை விதிக்கிறவை
பிரமாணங்களும் அன்று
அல்லாத தர்மங்கள் என்கிறதும் கர்த்ருத்வ பலாபிசந்தி
ரஹீதமாக அனுஷ்டிக்கும் கர்மங்கள் அன்றிக்கே
இதிஹாச புராணங்களில் சொல்லுகிற
திருநாம சங்கீர்தநாதிகள் ஆகவுமாம்
சொல்லறம் அல்லன -என்று
பதச்சேதமான போது பிரமேய பரம்
இல் என்னும் சொல் -என்ற போது பிரமாண பரம் –
நல்லறம் ஆவனவும் -நாரணனே ஆவது
பலாபிசந்தி ரஹீதமான கர்மங்கள்
இதிஹாச புராணங்களில் சொல்லுகிற
திருநாம சங்கீர்தனங்கள்
நால் வேத மாத்தவமும் –
பூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம்
இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –
இதர தர்மங்களைச் சொல்லுகிறது பிரமாணங்கள் அன்று என்று நீர்
சொல்லுகிறது எத்தாலே என்னில்
அவை பல பிரதங்கள் ஆம்போது பகவத் பிரசாதம் வேணும் –
பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹகரிக்க வேண்டா
என்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்
ஈதன்று என்பார் ஆர் –
அல்லாதவை போல் அன்றிக்கே
உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்