Archive for the ‘நாச்சியார் திருமொழி’ Category

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயல்களில் –திவ்ய நாமங்கள்-

July 20, 2018

அம்மான்
அமுதம் உண்டாய்
அரி
அரி முகன்
அரும் கலம்
அநங்க தேவன்
அச்சுதன்
அழக பிரான் .
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் –
அன்று உலகம் அளந்தான்-
அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் –
அண்ணாந்து இருக்கவே அவளைக் கைப் பிடித்த பெண்ணாளன் –
அல்லல் விளைத்த பெருமான் –
அளி நன்குடைய திருமால்

ஆற்றல் அனந்தல் உடையாய்
ஆலின் இலையாய்
ஆரா அமுதம்
ஆழி மழை கண்ணா  
ஆயர் கொழந்து
ஆயர்பாடி அணி விளக்கு
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-
ஆயன்
ஆழியம் செல்வன்-
ஆழியும் சங்கும் ஒண் தாண்டும் தங்கிய கையவன் –
ஆலின் இலைப் பெருமான்-
ஆயர்பாடிக் கவர்ந்துண்ணும் காரேறு –

இலங்கை அழித்தாய்
இலங்கை அழ்த்த பிரான்
இறைவா
இருடிகேசன்
ஈசன் .

எம்பெருமான்
எம் ஆதியாய்
எங்கள் அமுது
எம் அழகனார் –
என் தத்துவன்-
எம்மானார் –

ஏறு திருவுடையான் –
ஏலாப் பொய்கள் உரைப்பான் –

உம்பர் கோமான் –
உலகம் அளந்தாய் –
உதரம் யுடையாய் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்

ஊழி முதல்வன் –
ஊழியான் –
ஊற்றமுடையாய்

ஓங்கி உலகளந்த உத்தமன் – – –
ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்
ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன் –

கா மகான்
காயா வண்ணன்
கடல் வண்ணன்
கடல் பள்ளியாய்
கள்ள மாதவன் —
கமல வாணன்–
கமல வண்ணன்-
கண் அழகர் .
கன்று குணிலா எறிந்தாய்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்
கப்பம் தவிர்க்கும் கலி
கரிய பிரான்
கரு மாணிக்கம்
கரு மா முகில்
கருட கொடி உடையான் –
கருளக் குடியுடைப் புண்ணியன்
கண்ணபிரான் –
கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி –

காய்ச்சின மா களிறு அன்னான் –
கார்க் கடல் வண்ணன் –

குடமாடு கூத்தன்
குடந்தைக் கிடந்தான் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
குல விளக்கு
குன்று குடையாய் எடுத்தாய்
குறும்பன்
குழல் அழகர்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல எம் கோ –
குறும்பு செய்வானோர் மகன் –
குடந்தைக் கிடந்த குடமாடி –
குணுங்கு நாறிக் குட்டேறு

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் –
கூத்தனார்

கேசவன்
கேசவ நம்பி

கொடிய கடிய திருமால்
கொழந்து
கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் –
கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் –

கோமகன் –
கோளரி மாதவன்
கோலால் நிரை மேய்த்தவன்
கோலம் கரிய பிரான்
கோமள ஆயர் கொழுந்து
கோவிந்தா
கோவர்தனன் –

சகடம் உதைத்தாய் –
சங்கொடு சக்கரத்தான்-
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் —
சரமாரி தொடுத்த தலைவன் –
சங்க மா கடல் கடைந்தான் –

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் –

சுடர் –
சுந்தரன் –
சுந்தர தோளுடையான்-

சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரன் –

சீரிய சிங்கம் –
ஸ்ரீ தரன்

செங்கண் மால் —
செம்மை யுடைய திருமால் –
செப்பம் யுடையாய் –
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமால் –
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
சோலை மலைப் பெருமான்-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

தருமம் அறியாக் குறும்பன்
தத்துவன்–

தாமோதரன்
தாமரைக் கண்ணன் –
தாடாளன் –

த்வராபதி எம்பெருமான்
த்வாராபதி காவலன்

திறல் யுடையாய் –
திரு –
திருமால்-
திருமால் இருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான்
திரு மால் இரும் சோலை நம்பி –
திருவரங்கச் செல்வனார் –
திரு விக்ரமன் –
திரி விக்ரமன் –
திருமங்கை தங்கிய சீர் மார்வர் –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் –

துழாய் முடி மால்
துவரைப் பிரான்-

தென் இலங்கைக் கோமான் –
தென் இலங்கை செற்றாய் –

தேவாதி தேவன்
தேச முன் அளந்தவன்
தேசுடைய தேவர்
தேவனார் வள்ளல்
தேவகி மா மகன்

பத்ம நாபன்
பங்கயக் கண்ணன் –
பெரியாய் –
பக்த விலோசனன் –
பச்சை பசும் தேவர்-
பந்தார் விரலி உன் மைத்துனன்
பட்டி மேய்ந்தோர் காரேறு
பலதேவர்கோர் கீழ்க் கன்று

பாம்பணையான் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்
பாலகன் –
பாழி யம் தோளுடைப் பற்ப நாபன்
பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் –

பிள்ளாய் –

புள் அரையன் –
புள்ளின் வாய் கீண்டான் –
புள் வாய் பிளந்தான் –
புண்ணியன் –
புராணன்-
புருவம் வட்டம் அழகிய பொருத்தமிலி
புறம் போல் உள்ளும் கரியான் –
பருந்தாள் களிற்று அருள் செய்த பரமன்

பூப்புனைக் கண்ணிப் புனிதன் –
பூ மகன் –
பூவை பூ வண்ணன் –

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் –
பொருத்தமுடையவன் –
பொல்லா குறளுரு –
பொருத்தமுடைய நம்பி –

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –

பீதக வாடை யுடையான் –
பெரியாய்-
பெரும் தாளுடைய பிரான்

மகான்
மால்
மாயன் –
மா மாயன் –
மா வாயைப் பிளந்தான் –
மா மஹன்-
மா மத யானை யுதைத்தவன் —
மாதவன் –
மதிள் அரங்கர்-
மது ஸூதனன்
மலர் மார்பன் –
மணவாளர் –
மணி வண்ணன் –
மருதம் முறிய நடை கற்றவன் –
மருப்பினை ஒசித்தவன்–
மல்லரை மாட்டியவன்-
மால் இரும் சோலை மணாளனார் –
மனத்துக்கு இனியான் –
முகில் வண்ணன்
மசுமையிலீ —
மன்னிய மாதவன் –
மதுரைப்பதிக் கொற்றவன் –
மா மணி வண்ணன்
மணி முடி மைந்தன் –
மதுரையார் மன்னன் –
மைத்துனன் நம்பி மதுசூதனன் –
மா வலியை நிலம் கொண்டான் –
மாணியுருவாய் யுலகளந்த மாயன் –
மாலாய்ப் பிறந்த நம்பி –
மாலே செய்யும் மணாளன் –

நாராயணன் –
நாராயணன் மூர்த்தி –
நாகணையான் –
நாரண நம்பி –
நாற்றத் துழாய் முடி நாராயணன்
நந்த கோபன் குமரன் –
நந்த கோபன் மகன் –
நரன் –
நெடுமால் –
நீர் வண்ணன் –
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் –
நம்மையுடைய நாராயணன் நம்பி –
நலம் கொண்ட நாரணன் –
நல் வேங்கட நாடர் –
நாகணை மிசை நம் பரர்-
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் –

யமுனைத் துறைவன் –
யசோதை இளம் சிங்கம் –
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து

வாய் அழகர் –
வட மதுரை மைந்தன் –
வட மதுரையார் மன்னன் –
வாஸூ தேவன் –
வேங்கடவன் –
வேங்கட வாணன் –
வைகுந்தன் –
வல்லான் –
வாமனன் –
வேட்டை ஆடி வருவான் –
விமலன் –
வித்தகன் –
வில்லிபுத்தூர் உறைவான் –
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தன் –
வள்ளுகிரால் இரணியனை உடல் கிடந்தான் –
வேங்கடத்துச் செங்கண்மால் –
வேங்கடக்கோன் –
வேத முதல்வர் –
வெற்றிக் கருளக் கொடியான் –
வில்லி புதுவை நகர் நம்பி –
வினைதை சிறுவன் மேலாப்பின் கீழ் வருவான் –
வீதியார வருவான் –
வெளிய சங்கு ஓன்று யுடையான்-
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
வேட்டையாடி வருவான்

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆண்டாளும்-திருப்பாவை ஜீயர் – கோயில் அண்ணனும் –

June 13, 2017

திருப்பாவை -த்வய பூர்வார்த்தம் -திருப்பாவை ஜீயர் / நாச்சியார் திருமொழி -த்வய உத்தரார்த்தம் -கைங்கர்ய பரம் -கோயில் அண்ணன்-

1-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்கள் –ஸ்வாமி திருவவதாரம் ஆனபின்பே பராத்பரன் நிழலில் நிம்மதியாக கண் வளர்ந்து அருளுவான்
2-மா முத்த நிதி சொரியும் மா முகில்காள்நவ நிதி சொரிந்த ராமானுஜ முனி -முத்து போன்ற ஆசார்யர்களை ஸ்தாபித்தவர்-
சித்த சாத்விகர்கள் முத்தாக சொல்லப் படுவார்கள்
2-அளியத்த மேகங்காள்தாய்க்கும் மானுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்குமே இவை உள்ளது
3-மின்னாகத்து எழுகின்ற மேகங்காள் -மின் போன்ற யஜ்ஞ சூத்ரம் விளங்கும் =-இலங்கிய மின்னூல் முன்னூல் வாழியே –
காஷாயம் காட்சி தருவதையும் மின் எழுகின்ற -என்னலாம்
4-வான் கொண்டு கிளர்ந்து எழுந்த  மா முகில்காள்-வான் –அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் பரமபதம் கரச்தம் என்றவரே –
5-சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த  மா முகில்காள்-யாதவ பிரகாசர் -கபடம் தீர்த்து ஜலம் -தீர்த்த கைங்கர்யம் சாலக் கிணறு
6-சங்கமா கடல் கடைந்தான் தண் முகில்காள் –மறைப்பால் -மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பராங்குச பாத பக்தம்
7-மதயானை போல் எழுத  மா முகில்காள்–முனி வேழம்
8-கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் –ஆழ்வார்கள் அனைவரும் –

A-முனி ஸ்துதி விஷயததா -இந்திர ஸ்துதி விஷயததா –
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப் பட்ட மழை வந்து ஏழு நாள் பெய்து -கோவிந்த பட்டாபிஷேகம்
லோக சாரங்க முனிவர் -முநீந்த்ரர் வந்து ஸ்துதி செய்த சாம்யம்
B-காளீந் தீர சீசாய -யமுனை கரையிலே வாசம் செய்வதில் ஆசை கொண்டவன் -விரஜா தீரம் சரயு தீரம் -காவேரி தீரத்தில் ஆழ்வார் குடில் உண்டே
C-ரங்க வாச உத்சாகத்வாத் -ரங்கம் கூத்தாடும் இடம் -கூத்தாட வல்ல எம் கோவே -அண்டர் கோன் அரங்கன் –மற்று ஒன்றினைக் காணாவே
D-அமல விமல வாக்தா நத-அத்யந்த நிர்மலன் -அமோக வாக்குகளை அருளினவர் அமலன் விமலன் நிமலன் நிர்மலன் -அருளினவர்
E-வாஹ்ய பாவாத் -வஹிக்கப் படுபவர்கள்- பறவை ஏறும் பரம் புருடன் –உரியில் உள்ள வெண்ணெய் கொள்ள பிள்ளைகளால் வஹிப்பப் பட்டவன் –
F-முனி ஏறித் தனி புகுந்து -பாட்டினால் கண்டு வாழும் பாணர்
G-கீதோ தஞ்சத் ப்ரதத்வாத் -கீதா சாஸ்திரம் -நம் பாடுவான் போலே இசையால் பாடி அருளி
H-வடதள சயன ப்ராஜ்ய கவ்யோப போக ப்ராவண்யாத் -பாலகன் என்று பரிபவம் செய்யேல் -வெண்ணெய் உண்ண அபி நிவேசம் கொண்டவன்
ஆல மா -கொண்டல் வண்ணன் -பாசுரங்கள் அருளி -இப்படி எட்டு சாம்யங்கள்-கார் முகில்களுக்கும் –ஆழ்வார்களும் உண்டே —
கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் –ஆழ்வார்கள் அனைவரும் அருளிச் செய்தவை கொண்டே நம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸூத்ரங்களை ஒருங்க விட்டு அருளுகிறார் –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் – பதினான்காவது திருமொழி —

September 18, 2015

அவதாரிகை –

பிராப்ய பிராபகங்களை நிஷ்கரித்து
-நாராயணனே நமக்கே பறை தருவான் என்று அடியிலேயே -அருளி
நடுவிலே பாகவதர்களை சிறப்பாக அனுபவித்து
இறுதியில் –-கறைவைகளில் பிராபகத்தையும் சிற்றம் சிறுகாலையில் -பிராப்யத்தையும் அறுதியிட்டு -என்றபடி –
அந்த பிராப்யத்தை அப்போதே லபிக்கப் பெறாமையாலே கண்ணாஞ்சுழலையிட்டு காமன் காலிலே விழுந்து –
அநந்தரம் சிற்றில் இழைத்து
பனிநீராடி
கூடல் இழைத்து
குயில் வார்த்தை கேட்டு
சாஷாத் கரிக்க வேணும் என்னும் ஆசை பிறந்து -அப்போதே கிடையாமையாலே –ஸ்வப்ன அனுபவத்தாலே தரித்து
அது தான் விசதமாய் இராமையாலே அவ்வனுபவத்துக்கு தேசிகரான ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானை வார்த்தை கேட்டு
மேக தர்சனத்தாலே நொந்து -அம்மேகங்களை வார்த்தை கேட்டு -ராமாவதாரத்துக்கு அங்கு நின்றும் வந்த திருவடி தன்னையே
தூது விட்டால் போலே அம்மேகங்கள் தன்னையே தூதுவிட்டு
அவ்வர்ஷாவில் பதார்த்தங்கள் அவனுக்கு ஸ்மாரகமாய் பாதிக்க ஒருப்பட்டத்தைச் சொல்லி
அவை தான் முருக நின்று நலிந்தமை சொல்லி
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பிலும் அவன் ந த்யஜேயம் என்று அருளிச் செய்த வார்த்தையிலும் அதிசங்கை பண்ணி-
குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –-10-4-
அவன் வார்த்தை பொய்யானாலும் பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு நமக்குத் தப்பாது பலிக்கும் என்று அத்யவசித்து -10-10-
அவன் படியாலும் இழக்க வேண்டாம் என்று தெளிந்து-வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை நல்ல பரிசு வருவிப்பரேல்
அது காண்டுமே 11-10- பின்னையும் இழவோடே தலைக் கட்டி –சாதிப்பார் யார் இனியே -11-10-
அதுவும் பலியாமையாலே தானே போக ஒருப்பட்டு
தனக்குக் கால் நடை தாராத படி பல ஹானி மிக்கு கால் நடை தருவாரை
என்னை அத்தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள்-என்றும்
அது மாட்டிகோள் ஆகில் அவனோடு ஸ்பர்சம் உள்ள ஒரு பதார்த்தத்தைக் கொடு வந்து என்னை ஸ்பரசிப்பித்து ஆச்வசிப்பியுங்கோள்–
என்றும் நின்றது கீழ் –

முதல் தன்னிலே -அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் குடியிலே பிறக்கச் செய்தேயும்
தானே நோற்றுப் பெற வேண்டும் படி இறே இவளுக்கு பிறந்த விடாய்-
இப்படிப் பட்ட விடாயை உடையளாய்-இவள் தான் பிராப்ய பிராபகங்கள் அவனே தான் என்னுமிடம் நிஷ்கர்ஷித்து
அநந்தரம் பெற்று அல்லது நிற்க ஒண்ணாத படி யாய்த்து பிறந்த தசை –

இவ்வளவு ஆற்றாமை பிறக்கச் செய்தேயும் அவ்வருகில் பேறு சாத்மிக்கும் போது இன்னம் இதுக்கு அவ்வருகே ஒரு பாகம் பிறக்க வேணுமே –
ஆமத்தில் சோறு போலே ஆக ஒண்ணாது –பரமபக்தி பர்யந்தமாக பிறப்பித்து முகம் காட்ட வேணும் -என்று அவன் தாழ்க்க
அநந்தரம் ஆற்றாமை கரை புரண்டு -பெறில் ஜீவித்தும் பெறா விடில் முடியும் படியாய்
நிர்பந்தித்தாகிலும் பெற வேண்டும் படியாய் –என் அவா அறச் சூழ்ந்தாயே –என்கிற படி வந்து முகம் காட்டி விஷயீ கரிக்க
பிறந்த விடாயும் அதுக்கு அனுரூபமாக பெற்ற பேறும்
ஓர் ஆஸ்ரயத்தில் இட்டு பேச ஒண்ணாத படி அளவிறந்து இருக்கையாலே
கண்டீரே -என்று கேட்கிறவர்கள் பாசுரத்தாலும் -கண்டோம் -என்று உத்தரம் சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும்
தனக்குப் பிறந்த விடாயையும் பெற்ற பேற்றையும் அன்யாபதேசத்தாலே தலைக் கட்டுகிறாள் –

இங்குப் பிறந்த பக்தியில் சாதனா வ்யபதேசத்தைத் தவிர்த்த இத்தனை போக்கி ஆசையையும் குறைக்க ஒண்ணாதே
ஆசை குறைந்ததாகில் முதலிலே பிராபக ச்வீகாரம் தான் பிறவாதே
இனி இதினுடைய அருமையாலே செய்து தலைக்கட்ட அரிது என்னுமதைப் பற்றவும் ஸ்வரூப ஜ்ஞானம் உடையவனுக்கு
ஸ்வரூபத்துக்கு அநனரூபம் என்னுமதைப் பற்றவும் தவிர்த்தது அத்தனை போக்கி
வஸ்துவினுடைய குணாதிக்தையும் தவிர்த்தது அன்றே –
சமஸ்த கல்யாண குணாத் மகமாய் இருந்துள்ள விஷயமே உபாயம் ஆகிறது
அக்குணங்கள் தான் பிராப்யம் ஆகையும் தவிராதே –
சோஸ்நுதே -என்கிறபடியே -அவ்வருகு போனாலும் அனுபாவ்யம் ஆகிறது இக் குணங்களே இ றே-

பிறந்த பக்தியும் -அந்த பக்திக்கு அனுரூபமாகப் பெற்ற பேறும் ஓர் ஆஸ்ரயத்தில் கிடக்கும் அளவு அல்லாமையாலே
கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது
திருவாய்ப்பாடி விருத்தாந்தத்தைச் சொல்லுகையாலே -அன்யாபதேசமாகையும் தவிராதே
ஆனாலும் விட்டு சித்தன் கோதை சொல் -என்கிறதும் தவிர்க்க ஒண்ணாதே

———————————————————–

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-

விண்ணாட்டவர் மூதுவர் -திருவிருத்தம் -2-என்று சொல்லுகிறவர்கள் நியமிக்க
-வானிளவரசு-பெரியாழ்வார் -3-6-3–அவர்களால் நியாம்யனாய் –
அவர் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21-தங்கள் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாம் படி
போது போக்கி இருக்கிற அளவிலே
திருவாய்ப்பாடியிலே வெண்ணெய் திரளா நின்றது -என்றும் நப்பின்னை பிராட்டி பிராப்த யௌவனை யானாள் என்றும் -கேட்டு
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே –இங்கே வந்து திருவவதரித்து -பிருந்தா வனத்திலே ஸ்வரைசஞ்சாரம் பண்ணி
-அத்தாலே தன்னிறம் பெற்றுத் திரிகிற படி –

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
பரம பதத்தில் கட்டுண்டு இருப்பரோபாதி யாய் -கட்டுண்ட காளையாய் –
ஸ்வைர சஞ்சாரம் பண்ணுவது திருவவதரித்து போந்த இடத்தே யாய்த்து
வானிளவரசு என்கிறபடியே திரு வநந்த ஆழ்வான் மடியிலும் ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழிலும் -பெரிய திருவடியின் சிறகின் கீழிலும் யாய்த்து இத்தத்வம் வளருவது என்றாய்த்து பட்டர் அருளிச் செய்வது – –
ஆனை கருப்பம் தோட்டத்தைப் புக்கால் திரியுமா போலே யாய்த்து இவனும் ஊரை மூலையடியே திரியும் படி
பரம பதத்தில் நூல் பிடித்து பரிமாறுவது போல் அன்றிக்கே
வெண்ணெய் களவு போய்த்து பெண்கள் களவு போய்த்து-என்னும்படியாக வாய்த்து மரியாதைகளை அழித்துக் கொண்டு திரியும்படி
ஓர் காரேறு –
அபிமத லாபத்தினால் அத்விதீயனாய்
தன்னிறம் பெற்று
மேணானித்து இருக்கும் இருப்பு –
பரம பதத்தில் உடம்பு வெளுத்து போலே காணும் இருப்பது
பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –
வாசனை இருக்கிறபடி -திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி
பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வ நே த்ரய –பால -1-31–என்கிறபடியே இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி
அந்வயித்து அவர்களுடைய சம்ச்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே
கிருஷ்ணன் தீம்பாலே ஏறுண்ட பெண்கள் நெஞ்சில் மறத்தை தன் இன் சொல்லாலே பரிஹரித்து
ராமேணாஸ் வாசிதா கோப்யோ ஹரிணா ஹ்ருத சேதச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20–என்கிறபடியே –
அவர்களை ஆச்வசிப்பித்துப் பொருந்த விடுகையாலே இவனளவில் பவ்யனாய்த்து இருப்பது –
இவன் தானே அவன் நினைவின் படியே திரியுமவனாய் -ஓர் அளவில் நியமிக்கவும் கடவனாய் யாய்த்து இருப்பது
பலதேவன் என்னும் தன் நம்பியோடப் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் -1-7-5-என்னக் கடவது இ றே-
இவன் தான் ஓரடி பிற்பட வி றே பாம்பின் வாயிலே விழுந்தது –

இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இச் சேதனன் முக்தனானால் பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டு
ஏதத் சாமகாயன் நாஸ்தே –என்று சாம கானம் பண்ணுமா போலே அவன் தான் இங்கே வந்து திருவவதரித்து
இப்பரிமாற்றத்தைப் பெறுகையாலே வந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு பண்ணும் வியாபாரம் இருக்கிற படி
கீழே ஏறு -என்று ஜாதி உசிதமாக பண்ணும் வியாபாரம் இருக்கிறபடி
அவாக்ய அநாதர-தத்வம் இட்டீறிட்டு-என்னும் படி இருப்பதே என்று சிறியாத்தான் போர வித்தராய் இருக்கும் -என்று அருளிச் செய்வர்
விளையாடி –
அச் செருக்குக்கு போக்குவிட்டுப் பண்ணும் லீலையைச் சொல்லுகிறது -இது தானே இ றே பிரயோஜனம்
இங்கே போத –
அங்கே போனாலும் பெறவரிய பரிமாற்றத்தை அவன் இங்கே பரிமாறக் காணப் பெற்றார் உண்டோ –

கண்டவர்கள் பாசுரமாய் இருக்கிறது மேல் –
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
யுவாககளானவர் அபிமத விஷயத்திலும் கடகரை விரும்பி இருக்குமா போலே இவனும் பசுக்களை யாய்த்து விரும்புவது
ஆகள் போக விட்டு குழலூத வேணுமே
நீ தாழ்த்தது என் என்று மாதா பிதாக்கள் கேட்டால் பசுக்களின் பின்னே போனேன் என்று சொல்லலாம் படி தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கும் இறே அவை –
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே -திருவாய் -6-2-2-
இட்டமான பசுக்களை –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -செங்கனிவாய் எங்கள் ஆயர்தேவே –திருவாய் -10-3-10-என்கிறபடியே பரம பதத்தில்
காட்டிலும் பசுக்களை மேய்க்குமத்தை யாய்த்து விரும்பி இருப்பது
அவ்விருப்பிலும் -வாய் வெருவிக் கிடப்பதுவும் கனாக் காண்பதுவும் இப்பசுக்களை வாய்த்து –
இனிது மறித்து –
இருவராக கலந்து பரிமாறா நின்றால்-எதிர்த்தலையினுடைய நாம க்ரஹணம் பண்ணினால் அது ப்ரீதியாய் இருக்குமா போலே யாய்த்து
இவற்றின் பேரைச் சொல்லி அழைத்தால் அவற்றுக்கு பிரியமாய் இருக்கும் படி
லோகத்தில் சேதனர் அசங்கேய ரராய் இருக்கச் செய்தேயும் எல்லாருடையவும் நாம ரூப வியாகரணம் பண்ணுமா போலே-
நீரூட்டி
அவற்றுக்குத் தண்ணீர் பருகுகை அபேஷிதமானால் தான் அரை மட்ட நீரிலே இழிந்து பின்னே கையைக் கட்டிக் குனிந்து நின்று தண்ணீர்
–பருகிக் காட்டுமாய்த்து –இவன் பின்னை அவையும் கூடக் குடிக்கும்
தடம் பருகு கரு முகில் -பெரிய திருமொழி -2-5-3–இவன் கரு முகில் இ றே
ச யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே -ஸ்ரீ கீதை -3-21—காரயித்ருத்வம் இருக்கிற படி
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16—தடாகத்திலே ஒரு மேகம் படிந்தால் போலே இ றே இருப்பது –

விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அபிமத சித்தியாலே தன் மேன்மை பாராதே -திருக் குழல் பேணாதே ஸ்வரை சஞ்சாரம் பண்ணா நிற்கும் –
அவை மேய்த்துத் தண்ணீரும் பருகுகையாலே பின்னைத் தனக்கு ஒரு கர்த்தவ்யம்சம் இல்லையே
நிரபேஷனுக்கு இ றே லீலையில் அந்வயம் உள்ளது -இந்த லீலை தானே இ றே பிரயோஜனம் –
விருந்தாவனத்தே கண்டோமே
ஸ்ரீ வைகுண்டத்திலே கண்டால் போலவே இருப்பது ஓன்று இ றே திருவாய்ப்பாடியிலே காணும் காட்சி –
செருக்கராய் இருக்கும் ராஜாக்கள் போகத்துக்கு ஏகாந்த மான ஸ்தலங்களிலே மாளிகை சமைத்து அபிமத விஷயங்களும்
தாங்களுமாய் புஜித்தால் போலே இருப்பது ஓன்று இறே ஸ்ரீ பிருந்தா வனத்தில் பரிமாற்றம் –

—————————————————————————————

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
நான் ஜீவியாத படியாக -அழியும் படியாக -வருந்தும் படியாக பிரிவை விளைத்து
பிரியேன் -பிரியில் ஆற்றேன் என்று சொல்லி வைத்து இ றே பிரிவது –
இன்னம் ஒரு கால் காணலாமோ என்னும் ஆசையினால் ஜீவிக்கவும் வேண்டி முடியவும் பெறாதே நோவு படுகிற படி –
என்னை
பிரிவே எருவாகப் பணைக்கைக்கு தான் என்று இருந்தானோ என்னையும்
ஆயர்பாடிக் கவர்ந்துண்ணும்
பட்டி மேயும்படி தன்னைச் சொல்கிறது
அகங்களிலே சிறை செய்து வைத்து அவற்றையே யாய்த்து விரும்பி அமுது செய்வது-
தன்னை ஆசைப் பட்டாரை உபேஷித்துப் போந்தான்
இப்போது ஆசைப் பட்டு இறே நோவு படுகிறது

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
முடை நாற்றம் அனுபவிக்க வேணும் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –
தீஷிதம் –
திரு மேனியிலே பூசின வெண்ணெயும் போர்த்த உறுப்புத் தோலும் யஜமான வேஷம் தோற்றும்படியாக இருக்கும் படி
வ்ரத சம்பன்னம் –
ரிஷி சொன்ன வளவன்றிக்கே -அவன் ஒரு பட்டினி விடச் சொல்லுமாகில் இரண்டு பட்டினி விடுவர்
வராஜி ந்தரம் –
நல்ல பரியட்டங்கள் சாத்துமது அன்றிக்கே வராஜி நதரராய் மான் தோலை அறிந்து -இருப்பார்
ஸூசிம்
ஒருவரையும் ஸ்பர்சிக்காலாகாது
பிராட்டி ஒருத்தியையும் செய்யலாவது இல்லை இ றே -என்றால் அவர் தன்னை ஸ்பர்சிக்கிலும்-அடுத்தடுத்து முழுகா நிற்பார்
தீஷிதம் வ்ரத சம்பன்னம் வராஜி ந்தரம் ஸூ சிம் -குரங்க ஸ்ருங்க பாணிம் ச பச்யந்தீ த்வாம் பஜாம்யஹம் -அயோத்யா -16-23- (மான் கொம்பு வைத்து உடம்பை சொரிந்து கொள்ள கையால் பண்ண கூடாதே )
இதற்கு எதிர் தட்டு இறே –கறையினார் துவருடுக்கை -கடையாவின் கழி கோல் கைச் சறையினார் தளிர் நிறத்தால் குறைவிலமே — திருவாய் -4-8-4-
அவன் விரும்பாத ப்ரஹ்மசாரி நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
இப்படியே குணுங்கு நாற்றமாய்த்து இவள் உகப்பது –
குட்டேற்றை
அபிமத லாபத்தாலே மேணானித்து இருக்கும் படி
கோவர்த்தனனை
பெண்களை வெறும் தரையாக்கி -பசுக்களை அபிவ்ருத்தமாக்கும்- ஓன்று நூறாயிரம் ஆக்கும்-

கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை-
தன்னேராயிரம் பிள்ளைகளோடு -பெரியாழ்வார் -3-1-1-
மின்னும் மேகமும் சேர்ந்தால் போலே யாய்த்து ச்யாமமான திரு மேனிக்கு பரபாகமாய் உஜ்ஜ்வலமான வனமாலை அசைந்து வரும்படியாக –
மாலையிடுவான் -மாலா காரர் -இவனுக்கு பவ்யனாய்த்து இ றே இருப்பது
கர்ப்ப தாசர் -என்னுமா போலே -தானும் மாலா காரர் மகள் இ றே -தான் இட்ட மாலையையும் சாத்திக் கொண்டு விளையாடுமே

மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–
இம்மாலையிட்டால் விக்ருதராய் இருக்கும் திரு ஆய்ப்பாடியிலே காண்கை அன்றிக்கே -கண்ட பெண்கள் மயங்கி விழுவார்கள் –
ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணி விளையாடக் கண்டோம் –

—————————————————————————

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே--14-3-

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
பெண்கள் பக்கல் வ்யாமோஹம் தானே ஒரு வடிவு கொண்டால் போலே யாய்த்து இருப்பது –
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் –சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ் சிதேதி -தை ஆ -1-1-என்னுமா போலே
தர்மியை தர்மமாக சொன்ன இடங்கள் உண்டே –மாலே மணி வண்ணா- போலே
நம்பியை –
இது ஒரு பல ஷண மாத்ரமாய் –ஒரு குணமாய் -சொல்லிச் சொல்லாத குணங்களால் பூர்ணனாய் இருக்கை
மாலே செய்யும் –
தேன தே தம நுவ்ரதா–தேனதே தம் அநு வ்ரதா-என்னுமா போலே தன்னுடைய வ்யாமோஹத்தைக் காட்டி யாய்த்து இத்தலைக்கு வ்யாமோஹத்தை விளைப்பித்தது
மணாளனை
தன்னுடைய செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தான் அவன் போலே காணும் –

ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால்
இது எல்லாம் எங்கிலும் பெற்றாய் என்று கேட்டால்
மற்று உண்டோ நான் புறம்பு அறிவேனோ -என்னும்
மெய் சொல்லுகை தேட்டமாகில் ராமாவதாரத்திலே போக அமையாதோ-( –
பொய் நம்பி– புள்ளுவம்--இவன் அன்றோ )
ப்ரியவாதீ ச பூதா நாம் சத்யா வாதி ச ராகவ -அயோத்யா -2-32-என்னக் கடவது இ றே –
கண்டபடியே உரைக்கையும் மெய்யாகும் என்னக் கடவது இ றே
உபாயமாய் பூத ஹிதமுமாய் இருக்கும்
இரண்டு வார்த்தை சொல்லாமையாலே அப்போதே மெய்யாய் இருக்கும் -பெருமாள் வார்த்தை-இவன் வார்த்தை விழுக்காட்டில் மெய்யாய் இருக்கும் –பொய் போலே தோற்றினாலும் நன்மையே விளைப்பதால் கார்ய காலத்தில் மெய்யாய் இருக்கும்
ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் இ றே ஆஸ்ரிதர்க்குத் தஞ்சம்-
ஏக ரூபனாய்-இரண்டு வார்த்தை சொல்லாதே -ஆஸ்ரித ரஷணம் பண்ணும் அவன்
தன்னை அழிய மாறி பொய் சொல்லி ரஷிக்கும் இவன்
பகலை இரவாக்குவது -ஆயுதம் எடேன் என்று சொல்லி ஆயுதம் எடுப்பது
எதிரிகள் மர்மங்களைக் காட்டிக் கொடுப்பதாய் இ றே ரஷிப்பது
பொய்கள் உரைப்பானை
ஓன்று போலே இருப்பது -நூறாயிரம் பொய்கள் யாய்த்து சொல்லுவது -இவன் பொய் தேட்டமாய் இ றே -இங்கே போதக் கண்டீரே -என்கிறது –

மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலே பரந்த வெய்யிலை நோக்குகைக்காக வினதை சிறுவன் -என்றபடி – -அவன் தனக்கும் சேஷபூதன்-என்பது தோற்ற –
என் தான் ஆண்டாள் அருளிச் செய்வர் –நஞ்சீயர் -வித்தராய் – சிறகாலே கவித்து தனது தாயாரை -கத்ருவானவள் வெய்யிலிலே வைத்த போது
நோக்கி அருளினார் பெரிய திருவடி -என்பதை உள்ளத்தே கொண்டு வினதை சிறுவன் -பத பிரயோகம் என்று வித்தராவார் என்றபடி
அவனுக்கு குடையிடுவான் இவளுக்கு பவ்யனாய் இ றே இருப்பது –கர்ப்ப தாசர் –என்னுமா போலே –

மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே-
பெரிய உடையார் மேல் வெயிலே படாத படி சம்பாதி மறைத்தால் போலே இவனையும் பெரிய திருவடி சிறகின் கீழே நின்று விளையாடக் கண்டோம் –

———————————————————————————

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-

கார்த்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
மேகத்திலே ஸ்ரமஹரமான தாமரை பூத்தால் போலே யாய்த்து திருக் கண்கள் இருப்பது –
வடிவு தானே ஆகர்ஷகமாய் இருக்கச் செய்தே -அதுக்கு மேலே அவயவ சோபையும் ஸுந்தர்யும்– துவக்க வற்று
மேக ஸ்யாம் என்னும் படி இ றே வடிவு லாவண்யம் -தான் இருப்பது –
கைகேயி வயிற்றிலே பிறந்த தாபம் ஆறும் கிடீர் குளிர்ந்த வடிவிலே விளிக்கப் பெற்றேனாகில் -என்றான் இ றே ஸ்ரீ பரத ஆழ்வான்
திருக் கண்கள் ஆகிற பாசத்திலே அகப்படுத்தி –
கமலக் கண் என்னும் –
விகாசம் செவ்வி குளிர்த்தி பரிமளம் தொடக்க மானவற்றை உடைத்தாய்
அகவாயில் அனுக்ரஹத்துக்கு பிரகாசத்தைப் பண்ணுமதுவுமாய் யாய்த்து திருக்கண்கள் —
நெடும் கயிறு –
போன விடம் எங்கும் போய்த் தப்பாத படி அகப்படுத்த வற்றாய்த்து இருப்பது –
தப்பாத படி வளைத்து -குளிர நோக்கி என்னை அனந்யார்ஹை யாம்படி பண்ணி –

ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
என்கார்யம் என் புத்தி அதீநம் இல்லாத படி என்னைத் தன் பக்கலிலே இழுத்துக் கொண்டு -இதுவே லீலையாய் இருக்கும் நிரபேஷன்-
வடிவு அழகைக் காட்டி திருக் கண்களால் நோக்கிக் கொண்டு இ றே இவன் திரிவது
என்னைக் கண் அழகாலே துவக்கி நான் அது அது என்று வாய் வெருவும்படி பண்ணி
இது தானே தனக்குப் போது போக்காக கொண்டு நிரபேஷனாய் இரா நின்றான் –

போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
முத்துச் சட்டை இட்டால் போலே குரு வெயர்ப்பு அரும்பி –/புகரை உடைத்தான யானைக் கன்று போலே யாய்த்து/ வேர்த்து நின்று விளையாடும் போது இருப்பது –
குப்பாயம் -சட்டை (கபாயம் இதனாலே )

வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
முதலிலே வேர்க்கக் கடவது இன்றிக்கே இருக்கும் பரமபதத்திலும் இன்றிக்கே-
தாய் தமப்பனுக்கு அஞ்சி வேர்க்கவும் மாட்டாதே -பிரபுவாய் மாலையிட்டு இருக்கும் -திருவாய்ப்பாடியிலும்
-ராஜ குமாரனாய் அன்றோ அங்கு இருக்கும் -அங்கே காண்கை அன்றிக்கே -ஸ்ரீ பிருந்தா வனத்திலே காணப் பெற்றோம் –

————————————————————————————-

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
மாதவன் என் மணியினை-
ஸ்ரீ தேவியை தனக்கு என உடையவன் ஆகையால் பரம ரசிகன் -தன்னுடைய ரசிகத்வம் -எனக்கு முடிந்து ஆளலாம் படி பவ்யனாய் இருக்கிறவனை –
வலையில் பிழைத்த பன்றி போல்
முதலில் அகப்படாதத்தை அகப்படுத்தலாம் –அகப்பட்டுத் தப்பினத்தை பின்னை அகப்படுத்தப் போகாது இ றே –
ஆசைக்கு அகப்படாது ஒழிந்தால் பின்னை அகப்படுத்த பரிகரம் இல்லை
எட்டினோடு இரண்டு என்னும் கயிறு -திருச் சந்த -83-பக்தியாகிய வலையில் அகப்படுபவன் -பரம பக்தியாக வளர்க்க அகப்படாமல் இருப்பானே

ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ-
தன் பக்கல் உள்ளது ஒன்றும் தாராதே
இத்தலையில் உள்ளது எல்லாம் தன்னது -என்று இருப்பான் ஒருவன் –

பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
திருப் பீதாம்பரமானது தாழ்ந்து அலைந்து வர
பெருத்துக் கறுத்து அகவாயில் உள்ளது அடங்கலும் நீராலே நிறைந்து இருப்பதொரு மேகக் கன்று போலே –

வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே –
அம்மேகமானது ஆகாசப் பரப்பு அடங்கலும் தனக்கு இடமாக்கிக் கொண்டு வருமா போலே யாய்த்து
வீதி எல்லாம் தனக்கு இடமாகப் பண்ணிக் கொண்டு வரும்படி
பஸ்சாத் கவாம் கோப ஸூ தை பரீதோ வேணுஸ்வா நந்தி தா விசவ சேதா-
சம்பூர்ய வீதிம் சவிலாச மாயாத் -கோபாலபால குலதைவதம் ந-கிருஷ்ண கர்ணாம்ருதம் -ஸ்ரீ .உ. வே .பிரதி வாதி பயங்கரம் அண்ணரப்பா அருளிச் செய்தது-
ஊர் ஒப்பாக காணும் இடத்தில் அன்றிக்கே –நமக்கே யான இடத்திலே காணப் பெற்றோம் –

————————————————————————————-

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
ஆன்ரு சம்சயம் இருக்கும் படி முதலிலே வ்யுத்புத்தி பண்ணி அறியான் –
ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41–
நீர் வரவிட்ட ஆளின் வாயிலே கேட்ட வார்த்தை அன்றே -அதுக்கு முன்னம் தம்முடைய வாயாலே அருளிச் செய்ய என் செவியாலே கேட்ட தன்றோ-
இருவருமாகக் கலந்து ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவிலே -நீர் விரும்பி இருப்பது என் -என்று கேட்க –
பிறர் நோவு படக் கண்டால் பொறுக்க மாட்டோம் -அதுவே காண் நாம் விரும்பி இருப்பது -என்றார்
இருவரும் ஒன்றை நினைத்துக் கிடக்கிறார்கள்
இக்கலவிக்கு பிரிவு வரில் செய்வது என் -என்று கேட்டாள் அவள் –
நம்மைப் பிரிந்து நோவு பட விடோம் காண் நாம் -என்று அருளிச் செய்தாரானார் அவர் –
இரக்கமே சிறந்த குணம் என்று மயா ஸ்ருத -என்னால் கேட்க்கப் பட்டது -இது சரவண மாத்ரமாய் போம் அத்தனையோ
அனுஷ்டான பர்யந்தமாகப் போகக் கடவது அன்றோ -என்று கேளீர் –
குறும்பனை –
துஷ்டன் -இடையன் –
ராஜ புத்ரர்கள் ஆக வேண்டாவோ ஆன்ரு சம்சயம் உடையராய் இருக்கும் போது –

தன் கைச் சார்ங்கமதுவே போல்-புருவம் வட்ட மழகிய
புறம்பு ஒப்பு இல்லை
கையிலே வில் இருந்தால் -முகத்தில் இருக்கக் கடவது -கையிலே இருந்ததீ-என்னும் படி இருக்கும்
புருவத்தைக் கண்டால் -முகத்தில் இருக்கக் கடவதோ -வில் கையிலே அன்றோ இருப்பது -என்னும்படியாயிருக்கும்
சர்வதா சாத்ருச்யம் இருக்கிற படி –

பொருத்த மிலியைக் கண்டீரே-
இவ் வழகு உண்டானால் பிரயோஜனம் என் –
உகந்தார் பக்கல் ரசம் தொங்கிலும் தொங்கான்
வெளியிலே புருவ வட்டம் அழகியதாய் இருக்கை ஒழிய உள்ளே அன்பு இல்லாமையாலே பொருத்தம் இலி-என்கிறாள்
கண்டீரே –
அவன் நம்மோடு பொருந்திற்று இலன் என்னா-நமக்கு அவன் பக்கல் ஆசை அற்று இராதே
தன்னோடு பொருந்தாமை காண வாய்த்து இவள் ஆசைப்படுகிறது –

வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்விரியும் கதிரே போல்வானை-
கண்டார் கண் குளிரும் படி -இருண்ட வடிவை உடைத்தாய்
யௌவனத்தால் வந்த புகராடுகையாலே முகம் செய்தாய்
உதய பர்வதத்திலே தோற்றுகிற ஆதித்யனைப் போலே இருக்கிறவனை
முகம் செய்து -தேஜஸ் ஸூ ஒரு முகமாய் இருக்கை –உருவு கரிதாய்- முகம் செய்தாய் -இரண்டு விசேஷணமும் கதிருக்கு விசேஷணங்கள்
ததாச நவரம் ப்ராப்ய வ்யதீ பயத ராகவ -ஸ்வ ஏவ பிரபா மேரு முதயே விமலோ ரவி -அயோத்யா -3-36–என்றபடி
திரு அபிஷேகத்துக்கு ஈடாக ஒப்புவித்து சிம்ஹா சனத்திலே எழுந்து அருளி இருக்கிற சமயம் ஆகையாலே
எல்லாரோடும் நப்பிளித்து இன் சொல்லைச் சொல்லி தண்ணளி யோடு இருந்தபடி
இத்தால் —ரூப சாம்யமும் மட்டும் இன்றி சௌலப்ய குண –சாம்யமும் சொல்லிற்று –
தத்ர கோவிந்த மாஸீ நம் பிரசன்னாதித்ய வர்ச்சசம் –என்கிறபடியே

விருந்தாவனத்தே கண்டோமே —
திருவாய்ப்பாடியிலே மத்யாஹ் நத்தில் ஆதித்யனைப் போலே யாய்த்து இருப்பது -காண ஒண்ணாத படி கண்ணைக் கூச வைக்குமே
பெண்களுக்கு கண் குளிரக் காட்சி அளிக்கும் ஸ்ரீ பிருந்தா வனத்திலே கண்டோமே

——————————————————————————-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே--14-7-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
பொருத்தமிலி -எனபது நாட்டில் பொருந்தார் அளவில் நிற்குமது அன்றோ –
உள்ளுக்கும் வெளிக்கும் பொருத்தம் இல்லாத மற்றவர்களுக்கே பொருந்தும்
உள்ளும் வெளியும் ஒருபடிப் பட்டு இருக்கும் இவனுக்கு அல்ல என்றபடி
நம்பியை
பொருத்தத்திலும் ஒரு குறை சொல்லலாமோ அவனை
புறம் போல் உள்ளும் கரியானை
ஏக ரூபனாய் இருப்பான் ஒருவனாய்த்து
சக்கரவர்த்தி திரு மகனைப் போலே அகவாய் ஒருபடியாய் புறவாய் ஒருபடியாய் இருப்பவன் அல்லன் –
உள்ளே இரக்கம் கொண்டு வெளுத்த ஸ்வ பாவனை வெளியிலே கறுத்த திரு மேனி அன்றோ பெருமாளுக்கு –

கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
புறம்பும் உள்ளும் இருக்கிறபடி
கலக்கிற சமயத்தில் பிரியேன் பிரியில் தரியேன் என்று சொல்லி வைக்கும் இ றே நெஞ்சாலே பிரிவை நினைத்து இருக்கச் செய்தேயும்
அத்தை இவள் மெய் என்று அத்யவசித்து இருக்கச் செய்தேயும் இவள் நினைவைத் தப்பிக் கொடு நிற்கும்
அக்கரு மா முகிலை
நினைவைத் தப்பினான் என்று விட ஒண்ணாத படி இருக்குமாய்த்து வடிவு அழகு –

அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
அர்த்தித்வத்தை விளைப்பதே
ஸ்ப்ருஹணீ யமாய் இருந்துள்ள தாரா கணங்களாலே மிகவும் நிறைந்து உள்ள ஆகாசம் போலே –
சேதனர் பிரயோஜன அர்த்தமாக நவக்ரஹங்களையும் அபேஷிக்கையாலே-அர்த்தித்வத்தை விளைப்பதாய் -என்கிறது

விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–
தேச பதார்த்தங்களினுடைய திரள் போலே யாய்த்து தன்னோடு ஒத்த தரத்தை உடைய தோழன் மாருடன் நடுவே வரும்படி
விருத்தம் -என்றது பிருந்தம் என்றபடியாய் மனுஷ்ய சமூஹத்தை சொன்னபடி –தன்னேராயிரம் பிள்ளைகள் -பெரியாழ்வார் -3-1-1-
அன்றியே -ஆரப்பருகும் வானம் போல் -என்ற பாடமான போது -மிக்க விருப்பத்தை யுடையராய்க் கொண்டு
மனுஷ்யர்களுடைய திரளாலே அபி நிவிஷ்டமாய்க் கொண்டு பார்க்கப் படா நின்றுள்ள மேகம் போலே என்றாகிறது –
ந ததர்ப்ப சமாயாந்தம் பஸ்யமா நோ நராதிப-அயோத்யா -3-30-என்னக் கடவது இ றே –
விருந்தாவனத்தே கண்டோமே—
அத்திரளின் நடுவே சோலை பார்ப்பாரைப் போலே காண்கை அன்றிக்கே ஏகாந்தமாகக் காணப் பெற்றோம் –
பெண்களுக்கு தனி இருப்பான ஸ்ரீ பிருந்தா வனத்திலே கண்டோமே –

—————————————————————————–

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
கடல் போலே ச்யாமமான திரு மேனிக்கு பரபாகமான வெண்மையை உடையதாய்
ஒப்பு இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையனாய் இருக்கிறவன் –
கையிலோர் சங்குடை மைந்நிறக் கடல் -பெரிய திரு -7-10-2-என்னக் கடவது இ றே
திருப் பீதாம்பரமும் சிவப்பாலே திரு மேனிக்கு பரபாகமாய் இருக்கும் இ றே

அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
அகவாயில் தண்ணளி மிக்கு இருக்கும்
அதுக்கு நிபந்தனம் பிராட்டியோட்டை வாசனம்
பாஞ்ச ஜன்யத்தோடு சொல்லில் கண் எச்சில் படும் என்று பிரித்து அனுபவிக்கிறாள் –
கூராழி வெண் சங்கு ஏந்தி -திருவாய் -6-9-1- என்றும்
சங்கு சக்கரங்கள் -திருவாய் -7-2-1-எனபது போலே சேர்த்து சொல்லாமல் பிரித்து அனுபவிக்கிறாள் –

களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மதுபான மத்தமான வண்டுகள் பரம்பினால் போலே பரிமளிதமாய் -தர்ச நீயமாய் இருக்கிற
திருக் குழல்கள் ஆனவை திருத் தோள்களில் நின்று அலைய –

மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —
திருக் குழலைப் பேணியிருக்கும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே ஸ்ரீ பிருந்தா வனத்திலே காணப் பெற்றோம்
அங்கே யசோதைப் பிராட்டி கண்ணனுடைய திருக் குழலை வாரிப் பின்னி பூச்சூட்டி முடித்து இருப்பாளே
இங்கே தானே திருக் குழல்கள் தோள்களிலே வண்டுகள் போலே ஒளி வீசி அலையும் –

——————————————————————————–

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும்
சிறிதிடம் தானே கை தொட்டு சிருஷ்டித்து
இவ்வருக்கு உண்டானவற்றை சிருஷ்டி என்று சதுர்முகன் தொடக்கமான பிரஜாபதிகளை உண்டாக்கின –
ஸ்ரமஹரமாய் இவ்வருகு கார்ய வர்க்கத்து எல்லாம் காரணமாக போகும் பரப்பை யுடைத்தாய்
செவ்விப் பூவை உடைத்தான திரு வுந்தியிலே ப்ரஹ்மாவுக்கு இருப்பிடத்தை பண்ணிக் கொடுத்து
இது தானே தனக்கு பிரயோஜனமாகக் கொண்டு லீலா ரசம் அனுபவிக்கிற –

விமலன் தன்னைக் கண்டீரே
இது ஒழிய பிரயோஜ நாந்த பரதையை கணிசியாமல் வந்த ஸூ த்தி –
படை -என்கிற ஏக வசனம் தனியே என்கிறது
அயன் தன்னைத் தந்த –பாடமான போது இவ்வருகு உண்டான கார்ய வர்க்கத்தை அடைய நீ உண்டாக்கு -என்று சதுர்முகனைத் தந்த
என்றாகப் பெரில் அழகிது -என்று போர விரும்பி அருளிச் செய்வர் -நம்பிள்ளை –
தத்ர ஸூப்தஸ்ய தே வஸ்ய நாபௌ பத்ம மபூன் மஹத்-தஸ்மின் பதமே மஹா பாக வேத வேதாங்க பாரக
ப்ரஹ்ம உத்பன்னஸ் ச தே நோகத பிரஜா ஸ்ருஜ மஹா மதே-ஸ்ரீ நரசிம்ஹ புராணம் –
அதன் தன்னைத் தந்த -பாட பேதம் –

சிருஷ்டித்து விட்டோமாகில் மேல் உள்ளது தானே செய்து கொள்ளுகிறன வென்று விடுகை யன்றிக்கே தானே கை தொட்டு-வன்னியம் அறுத்து கொடுக்கும் படி சொல்கிறது
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவானை
பையல்கள் கிடந்த தூறுகள் எல்லாம் புக்கு தேடி
தேனுகன்
குவலயா பீடம்
பகா ஸூ ரன் –இவர்களடைய -ஏகோத்யோகத்திலே –உடன் மடிய-நிரஸ்தர் போலே இருக்க வாய்த்து அழியச் செய்தது –

விருந்தாவனத்தே கண்டோமே —
பர்த்தாரம் -என்கிற படியே
அணைக்கைக்கு ஏகாந்தமான இடத்திலே காணப் பெற்றோம் –

————————————————————————————–

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

நிகமத்தில்
பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப்
பருத்து பெரிய காலை உடைத்தாய்
சரீரம் பெருத்ததனையும் பாடாற்ற அரிதாய் இருக்கும் இ றே
அப்படிப்பட்ட ஆனையானது-தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு
முதலையின் வாயில் அகப்பட்டு இடர்ப்பட -அதனுடைய  ஆர்த்த த்வனி செவிப்பட்ட அநந்தரம்
ஆயுத ஆபரணங்களை அக்ரமாகத் தரித்துக் கொண்டு மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து அதுபட்ட புண் ஆறும் படி
முகம் கொடுத்து ரஷகத்வத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவர் இல்லாதபடி இருக்கிறவனை-(ஆனையின் நெஞ்சு இடம் தீர்த்த –தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -ஆ –கத்தினால் அகார ரக்ஷகன் ஆதி மூலமே -நாராயணா மணி வண்ணா நாகணையாய் –ஆ ஆ என்று கத்திற்று -ஆர்த்த த்வனி ஒன்றுமே போதுமே – முதலை முதலை -சொன்னாலும் முதலே ஆதி மூலமே -என்று கூப்பிட்டால் போலவே -த்வாராய நம–ஆரோகதா -வாகனம் ஓடும் பொழுதே ஓடி -இறக்கையை தொங்கி போனானே – பாதம் பாராமசு -வேது கூட  கொடுத்தானே –பரமன் –ஆர்த்த ரக்ஷணத்தில் ஓத்தார் மிக்கார் இல்லாதவன் -)
பரமபத ஆபன்நோ மநஸா அசிந்தயத் ஹரிம் ச து நாகவர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47–என்னுமா போலே-(இவனுக்கு வந்த ஆபத்து -எம்பார் -பிரகலாதன் திரௌபதி கஜேந்திரன் மூன்றும் -எம்பார் -அதனாலே பரமா பாதம் ஆபன்ன)-
இதினுடைய விடாயடைய தனக்கு பூர்வ ஷணத்தில் உண்டான படியும்
அதின் இடரைப் பரிஹரித்தால் போலே தன்னிடரைப் பரிஹரித்த படியும் சொல்லுகிறது -(கைம்மா துன்பம் கடிந்த பிரானே -அம்மா அடியேன் வேண்டுவது இதே -ஐந்து முதலைகள் / சம்சார சாகரம் -/ அநாதி -)

பாரின் மேல் -விருந்தா வனத்தே கண்டமை –
ஸ்ரீ வைகுண்டத்தில் அன்றிக்கே பூமியிலேயாய்
அது தன்னிலும் திருவாய்ப்பாடியில் அன்றிக்கே
ஸ்ரீ பிருந்தா வனத்தே கண்டமை -(இவளுக்கும் சூடிக் கொடுத்த மாலையை மாலுக்கு சூடும் படி அருள் புரிந்தான் )

விட்டு சித்தன் கோதை சொல்-
காட்சிக்கு கைம்முதல் இருந்தபடி –
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10- என்று முன்னனே அருளிச் செய்தாள் அன்றோ –

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்-
இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன -தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்
பரம பிராப்யமாய் -நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை -உடையவன் திருவடிகளிலே
உனக்கே நாம் ஆட்  செய்வோம் என்று
பிரியாது என்றும் இருப்பரே–
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே
என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்
தாள் -என்கையாலே பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் – பதிமூன்றாவது திருமொழி —

September 17, 2015

அவதாரிகை –

இவள் தசையை அனுசந்தித்தார்க்கு -கால் நடந்து போகலாம் படி இராது இ றே –
வருந்திப் போனார்களே யாகிலும் இவளை ஒரு கட்டணத்திலே -strechcharil-கிடக்கலாம்படி பண்ணிக் கொடு போகவும் வேணுமே –
என் தசையை அறிந்து பரிஹரிக்கப் பார்த்திகோள் ஆகில் அங்கே ஸ்பர்சம் உள்ளது ஒன்றைக் கொடு வந்து என்னை ஸ்பர்சிப்பித்து-
என் சத்தையை நோக்கப் பாருங்கோள் -என்கிறாள் –

நீ தான் மெய்யே நோவு பட்டாயோ-இப்படி நோவு படக் கடவதோ -உன் குடியை நோக்க வேண்டாவோ –
அவனுக்கு வரும் பழியை பரிஹரிக்க வேண்டாவோ -என்ன
நீங்கள் ஓர் பிரயோஜனத்துக்காகச் சொல்லும் வார்த்தை -என் தசைக்குச் சேரும் வார்த்தை ஓன்று அல்ல-
என்னை உண்டாக்க வேணும் என்னும் நினைவு உங்களுக்கு உண்டாகில் அவன் பக்கல் உள்ளதொன்றைக் கொடு வந்து
என்னை ஸ்பர்சிப்பித்து நோக்கப் பாருங்கோள் -என்கிறாள் –

————————————————————————–

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே –13-1-

கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கிருஷ்ணன் என்றால் தன்னை உகப்பார்க்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும் என்று இ றே பிரசித்தி –
இப்போது அது தவிர்ந்து –மனுஷ்யத்வே பரத்வமே சித்தித்து விட்டது
கிருஷ்ணன் என்றால் நாம் நினைத்து இருந்தவை எல்லாம் போய் -தான் பிறரைக் கும்பிடு கொள்ளத் தொடங்கினான்-
பிரணயித்வம் போயிற்றே –
நம்மைப் பெறுகைக்கு தான் நம் வாசலிலே அவசர ப்ரதீஷனாய் துவளுகை எல்லாம் போய் -முகம் தோற்றாமே நின்று-
வயிறு வளர்த்து போவாரோபாதி யானான்
கால் தரையிலே பாவாத படி நின்று முகத்தை மாற வைத்து ஹவிஸ்ஸை கொண்டு போம் தேவதைகளோ பாதி யானான்
கிருஷ்ணன் என்றால் உகப்பாருக்கு பவ்யன் என்று சொல்லுவது ஒரு சப்த மாத்ரமாய் -முன்புத்தை  நிலையே -(பரத்வமே )அர்த்தமாய் விட்டது
ஸ்வரூபம் மாறாடினால் -ஆஸ்ரித பார தந்தர்யம்  -ஸ்வ பாவமும் -கருமை நிறமும் மாறாடினால் ஆகாதோ
இந்நிறம் எப்போதும் ஒக்க படுகுலை அடிக்குமது தவிருகிறது இல்லை
கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது -புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்
இவன் பவ்யன் என்னுமது வடயஷ பிரசித்தி போலே -ஆல மரத்தில் பிசாசு -போலே யாய்த்து-
உகப்பார்க்கு எளியன் என்னுமது விக்ருதியாய் -வெளி வேஷமாய் -பிரக்ருதிவத் பாவித்தே விட்டான் –
இயற்கைத் தன்மை போலே நடித்துக் காட்டி விட்டான் –

காட்சிப் பழகிக் கிடப்பேனை-
முன்பு கண்ட காட்சியை ஸ்மரித்து-அது கைம்முதலாக ஜீவித்துக் கிடப்போம் என்றால் அதுவும் ஒண்ணாத படி அவ் வழி புல் எழுந்து போய்த்து-
கிடப்பேனை-
கிடந்த கிடையிலே பாடோடிக் கிடந்தாள் ஆகாதே –புரள முடியாத படி -ஒரு பக்கமாகவே படுத்துக் கிடக்கும் என்னை –
என்று அகளங்க நாட்டாழ்வான் வார்த்தை -என்று அருளிச் செய்வர்
இப்போது அவனை அணைக்க வல்ல இவளுக்குத் தேட்டம் -இடம் வலம் கொள்ளுகை யாய்த்து –
யேது ராமஸ்ய ஸூ ஹ்ருதஸ் சர்வே தே மூட சேதச-சோக பாரேண சாக்ராந்தா சயனம் ந ஜஹூஸ்ததா-அயோத்யா -41-20-என்று
சக்கரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் –ஸ்ரீ கௌசல்யார் மங்களா சாசனம் பண்ணி விட்டார் -அவ்வளவு இன்றிக்கே
பத்தொன்பதாம் பாஷையாய்த்து தோழன்மார் படி
ராமஸ்ய ஸூ ஹ்ருதஸ்-அந்தரங்கர் -நல்ல நெஞ்சுடையார் –
தாய் தமப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உட்புக்கவர்கள் இ றே-தோழன்மார் ஆகிறான்
தங்களைப் பேணாதே அவனுக்கு நன்மை எண்ணிப் போந்தவர்கள்
சர்வே தே –
ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே
மூட சேதச –
ஸூ ஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்து இருந்து காலைக் கட்டி மீளாது ஒழிவான் என் என்னில் – அறிவு கலந்தால் செய்ய்மத்தை
நெஞ்சில் வெளிச்சிறப்பு இல்லாத போதும் செய்யப் போகாது இ றே
அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தா –
மலை அமுக்கினால் போலே சோகம் அமுக்கா நிற்கச் செய்வது என் –
சயனம் ந ஜஹூஸ்ததா-
படுக்கையை விட்டு எழுந்தார்கள் ஆகில் மீட்டுக் கொடு புகுந்த வாசி அன்றோ
தாம் தாமே படுக்கையில் கிடந்தது போந்தவர்கள் அன்றே
இவர்கள் வார்த்தையை ராமன் தட்ட மாட்டான் -திரும்பிக் கொண்டு வந்தது போலே ஆகுமே -அதனால் எழுந்து இருக்க வில்லை -என்றபடி
சோக வசத்தால் ஸ்வ ஸ்வ வசம் இல்லாதபடி கிடந்தார்கள் -என்றபடி –

புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே
புறம் நின்று -வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்
என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –இதுவே அகம் –-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய
மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே
என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே
எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே
அழகு சொல்லாதே –
இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே-
அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி
இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் -மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மை
பேசாதே
இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று -காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி –
நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன
உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ –
முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இ றே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இ றே
சாந்தீபிநி சிஷ்யனை இ றே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்
பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே பிரிந்த போ து கண்ணன் பெருமானே இருந்தான் -என்றபடி –

பெருமாள் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே-
அவனுக்கு நம்மை ஒழியச் செல்வதானாலும் நமக்கு அவனை ஒழியச் செல்லாதே –
நம் சத்தை அவன் அதீநம்
நம் சத்தை நோக்க வேணுமே –போகத்துக் காகில் இ றே அவர் வேண்டுவது
சத்தை நோக்குகைக்கு அங்குத்தை சம்பந்தம் உள்ளது ஓன்று அமையுமே
அத்தைக் கொண்டு வந்து என்னை ஆச்வசிப்பியுங்கோள்
அவன் தான் இத்தனை போது பசுக்களையும் விட்டுக் கொண்டு போகா நிற்குமே
பிறரை நலிகைக்காக தான் காட்டுக்குப் போகைக்கு உடைத்தோல் உடுத்து இ றே போவது
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல் கைச் சறையினார் -திருவாய் -4-8-4-என்கிறபடியே திருப் பீதாம்பரத்தை இட்டு வைத்துப் போம்
அந்த திருப் பீதாம்பரத்தைக் கொண்டு என் வாட்டம் தணிய வீசுங்கள் -என்கிறாள்

அரையில் பீதக வண்ண வாடை கொண்டு –
மேலிட்ட உத்தரியமானால் ஆகாதோ -என்று நஞ்சீயர் கேட்க –ஸ்வேத கந்த லுப்தை -போலே காண்-என்று அருளிச் செய்தாராம் –

என்னை வாட்டம் தணிய வீசீரே-
என்னையும் அவனையும் சேர்த்து போகத்தில் நிறுத்துங்கோள் என்றால் -அது இப்போது உங்களால் செய்யப் போகாது இ றே
ஆனாலும் வாட்டத்தை அகஞ்சுரிப்படுத்தலாமே -அத்தைச் செய்யப் பாருங்கோள் –
அவனுடைய திருப் பீதாம்பரத்தைக் கொடு வந்து என் மேலே பொகட்டு என் சத்தையை நோக்கப் பாருங்கோள் –

————————————————————————-

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்ந்தானாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே--13-2-

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
பாலாலிலையில் –
கதம் ந்வயம் ஸி ஸூ ஸ் ஸே தே லோகே நாசம் உபாகதே–சாதாயாம் வடவ்ருஷச்ய பல்லவே -பார -ஆர -188-94- என்கிற படியே-
-பால் பாயும் பருவத்தை உடைத்தான இளம் தளிரிலே-
ஆலிலை மேலோர் இளந்தளிரில் கண் வளர்ந்த ஈசன் -பெரிய திரு -2-10-1-என்னக் கடவது இ றே
துயில் கொண்ட –
யசோதை பிராட்டியுடைய தொட்டிலிலே ரஷகம் உண்டான இடத்திலே கண் வளர்ந்து அருளுமா போலே கண் வளர்ந்து அருளினான் ஆய்த்து
சப்ரமாதமான ஸ்தலத்திலே -ஆலிலையிலே
பரமன் –
அகடிதகட நா சாமர்த்தியத்தில் வந்தால் -யசோதாஸ்தநந்யமும் ஒப்பன்று -வடதள சாயிக்கு –
பாலனதனதுருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் -ஆலன்று வேலை நீருள்ளதோ
விண்ணதோ மண்ணதோ -முதல் திரு -69–திரு வவதரித்த போதே அனுகூலர் அஞ்சும் படி —
கண்ணனும் இவனது அகடிதகட நா சாமர்த்தியத்துக்கு ஒப்பல்லவே
வலைப்பட்டு இருந்தேனை –
பெரியாழ்வார் மகள் இ றே -பரிவர் இல்லாத இடத்தில் சாய்ந்தான் என்று அதிலே நெஞ்சை வைத்து இருக்கையாலே
கால் வாங்கிப் போக மாட்டாதே சிறைப் பட்டு இருந்தேனை –

வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
வேலைக் கொண்டு -உடலில் பாய்ந்த வேலின் மேலே என்றுமாம் –
ஸ்வ பிரயோஜன பரராய் இருப்பார்க்கு சொல்லுமா போலே சிலவற்றைச் சொல்லாதே
வேலால் துன்னம் பெய்தால் போல் -என்னுதல்
வேல் உள்ளே கிடக்க துன்னம் பெய்தால் போல் என்னுதல் –
புண்ணிலே புளியைப் பிரவேசிப்பித்தால் -எரியும் அத்தனை இ றே -இதாகிறது புண்ணைப் பெருப்பிக்கும் அத்தனை இ றே –
எனக்கு ஓடுகிற தசை அறியாதே உங்களுக்கு பிரதிபந்தங்களைச் சொல்லாதே –

கோலால் நிரை மேய்ந்தானாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
அவனுக்கு என் வருகிறதோ -என்று அஞ்சின எனக்கு அவனுக்கு ரஷை உள்ள அளவும் சொல்லி பரிஹரிக்க வேண்டாவோ
அவன் தானே ரஷகனான செயலைச் சொல்லி அன்றோ என்னை பரிஹரிப்பது
ஷத்ரியனாய்ப் பிறந்து கையிலே வில்லைப் பிடித்து ரிஷிகளை நோக்கும் அவனைப் போல் அல்ல
கோலை கொண்டு பசுக்களையும் ரஷிக்கும் சுலபன் அன்றோ –
குடந்தைக் கிடந்த குடமாடி–
சீரார் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே ஆரார் எனச் சொல்லி யாடும் -சிறிய திருமடல் -என்கிறபடியே
அவன் தன வடிவு அழகை எல்லாரும் அனுபவிக்கலாம் படி-சர்வ ஸ்வ தானம் பண்ணி குடமாடின ஆயாசம்-
தீர திருக் குடந்தையிலே வந்து சாய்ந்தான் ஆய்த்து –

நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே–
பசுமை மிக்கு இருந்த திருத் துழாயைக் கொண்டு –இதுக்குப் பசுமை யாவது -அநந்ய பிரயோஜனர் இடுமதாகை -அதாவது பெரியாழ்வார் இடுகை –
வாயாலே மங்களா சாசனம் பண்ண கையாலே இடுகை இ றே
மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூம் துளவின் வாசம் -பெரிய திருமொழி -11-1-9-இ றே
தொண்டர் –சீர்த்தொண்டர் –மிக்க சீர்த் தொண்டர்
தொண்டர் ஆகிறார் -கூழாட் பட்டவர்கள்
சீர்த் தொண்டர் ஆகிறார் -உபாசகர்
மிக்க சீர்த் தொண்டர் ஆகிறார் -பெரியாழ்வார் போல்வார்
பிரயோஜனாந்த பரர் இடுவது –தேஹி மே–ததாமி தே -என்கிற பாவ தோஷத்தாலே பொறி எழுந்து வெந்து கிடக்கும்
நெறி மென் குழல் மேல் சூட்டீரே–
நெறித்து மிருதுவான குழல் -என்னுதல்
அன்றிக்கே -பேணாக் குழல் என்னுதல் –

————————————————-

கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே —13-3-

கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
கஞ்சைக் காய்ந்த-வில் விழா என்று -ஒரு வியாஜத்தை இட்டு அழைத்து தப்பு விளைந்தது என்று மாதுலனாய் கண்ண நீர் விழவிட்டு
இழவு கொண்டாடி இருப்பானாக கம்சன் கோல -அவன் தன்னோடு போம்படி பண்ணினான்
கரு வில்லி –
ஆண் பிள்ளை அன்றியே பெண் பிறந்தாரை நலிகைக்கு வில் போலே இருக்கிற புருவத்தை உடையவன்
வில் விழாவுக்கு வில் கொண்டு வர வேண்டுமே
கடைக் கண்ணி என்னும் –
முழுக்கப் பார்ப்பது அந்ய பரரை இ றே –
சோலையைப் பார்ப்பாரை போலே யாய்த்து அநந்ய பரரைப் பார்ப்பது -பெருமிதமும் இனிமையும் தோன்ற கடைக் கண்ணால் –
தாத்ருச்ய கலு முக்த கண்டம பரான் பஸ்யந்தி ந ச்வீக்ருதான் –என்னக் கடவது இ றே
கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால் –
புருவத்தை வில்லாகவும் கண்ணை அம்பாகவும் சொல்லக் கடவதே இருக்கும் இ றே
சிறைக் கோலால்-
சிறகை உடைய கோலால் -கழி சிறை –அம்பு -துஷ்டன் -சிறகை உடைய கழி -சாடு -வரும் போது தெரியாது
-பட்டுக் கொடு நிற்கக் காணும் அத்தனை –கண் கண்டு இறாய்க்க ஒண்ணாத படி இருக்கை
நோக்குகிறோம் -என்ற முழு கண் நோக்கிலே இ றே கண்ணுக்கு எட்டாத படி போகலாவது
இவனோ கடைக் கண்ணால் அன்றோ சிறை கொண்டான் –

நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
நெஞ்சூடுருவ வேவுண்டு –
தோல் புரையே போமது அல்ல
நெஞ்சிலே பட்டு அவ்வருகே போய்த்து
நிலையும் தளர்ந்து
ஏவுண்டதின் ஏற்றம் எவ்வளவு போரும் என்னில் நாலடி போய் விழுகை அன்றிக்கே நின்ற நிலையிலே விழும்படியாய்த்து-
அவனுடைய நோக்குவித்யை இருப்பது
சத்வித்யா நிஷ்டர் -தஹர வித்யா நிஷ்டர் என்னுமா போலே அவனுடைய நோக்குவித்யா நிஷ்டர் இ றே இவர்கள் –
நைவேனை-
சந்தி பந்தங்கள் -எலும்பு மூட்டுக்கள் குலைந்து சிதிலையாய் கிடக்கிற என்னை –

அஞ்சேல் என்னான் –
தன் முகமான அம்பு தைத்த உறைப்பு –தான் அறிந்தால் -அஞ்சாதே கொள்-என்று வந்து அணைக்க வேண்டாவோ
தன் முகத்தில் உள்ள கண் -தன்னால் -சாடு
அவன் ஒருவன் –
தன் கையில் அம்பு பட்டவன் படுகிற நோவு கண்டு பொறுக்க மாட்டாதே –சஞ்ஜாத பாஷ்ப —கிஷ்கிந்தா -24-24- என்று கண்ண நீர் விழ விட்டானும் ஒருவன்
இது தானே போது போக்காக இருக்கிற இவனும் ஒருவன்

அவன் மார்வணிந்த வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே —
ஒரு மாலை பெற வேணும் என்று அல்ல இவளுக்கு நிர்பந்தம் -அவனும் மால் தானே
அவன் மார்விலே ஆசைப்பட்டு இட்ட மாலை வேணும் என்றதாய்த்து
வஞ்சியாதே தருமாகில் –
நீங்கள் சென்று அறிவிக்கக் கொள்ள -தன்னுடைய ஸ்மிதத்தாலும் வீஷணத்தாலும்-நீங்கள் சென்ற கார்யத்தை மறப்பித்து வஞ்சியாதே தருமாகில்
உங்களையும் என்னைப் படுத்திற்று படுத்தாதே தருமாகில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே —-
புண் பட்ட விடத்தே பரிஹரிக்க வேணும் இ றே
நெஞ்சூடுருவ வேவுண்டு இ றே கிடக்கிறது
அவன் தன்னுடனே பரிமாற நினைத்து ஆசைப் பட்டது எல்லாம் மாலையில் இட்டுச் சொன்ன படி என் தான்
மாலையில் இட்டு -பாசுரமாக சொல் மாலை இட்டு சம்ச்லேஷத்தை மறைத்து -என்றுமாம் –

——————————————————————————

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே--13-4-

ஆரே யுலகத் தாற்றுவார் –
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருப்பார்க்குத் தான் -ஸ்ரீ சீதா பிராட்டியால் தான் என்னை -ஆற்றப் போமோ –
ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா–சுந்தர -19-4-என்றும்
ஏதத் வ்ரதம் மம-என்றும்
அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ் யே-யுத்த -5-93-என்றும் சொல்லுகிறபடிகளை அறிந்து இருக்குமவள் ஆகையால் தரித்து இருந்தாள்
ஆசாலேசம் உடையாரை ஒரு நாளும் விடேன் -என்றும்
அவர்களை விட வேண்டிற்றாகில் நான் உளேன் ஆகேன் –என்றும் இ றே அவர் சொல்லி வைப்பது
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்–ஆரண்ய -10-19-என்று இருக்குமவர் இ றே
லஷ்மணச்ய ச தீமத-அவர் தம்முடைய சொல்லாலே -மாயா மிருகத்தின் பின்னே -அது மாயை என்று அறியாதே
பிடிக்க ஒருப்பட்ட போதும் -இது மாயா மிருகம் என்று சொல்லும் படி அவ்வளவிலும் தெளிந்து இருக்கும்
இளைய பெருமாள் படியை அறிந்து இருக்கையாலும்
நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ-என்று அவர் தலையாலே சுமக்கும் படி -கொண்டாடும்படி -வல்லபையாய்ப் போந்தவள் ஆகையாலே
ஷோப ஹேதுக்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் ஷூபிதை யாய்த்து இலள்-சத்தா நாசம் பிறக்கும் அளவாய் இருக்கச் செய்தேயும்
தரித்து இருந்தாள் -கங்கேவ ஜல தாகமே -நிரந்தரமாக வர்ஷதாரை விழா நிற்கச் செய்தேயும் கங்கை தெளிந்து இருக்குமா போலே –

ஆயர் பாடி கவர்ந்துண்ணும்-காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ராமாவதாரத்தில் குண ஜ்ஞானத்தால் தரித்து இருந்தால் போலே இருக்கப் போமோ -கிருஷ்ணனுடைய தீம்பிலே புண் பட்டவர்களுக்கு
பஞ்ச லஷம் குடி உண்டு இ றே திருவாய்ப்பாடி
அஞ்சு லஷம் குடியில் பெண்கள் பக்கல் பண்ணும் வ்யாமோஹத்தை எல்லாம் ஒரு மடை செய்து ஒருத்தி பக்கலிலே பண்ணினால் பிழைக்கப் போமோ –
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை-
அவன் கண்ணற்று துகைத்துப் பரிமாற –
அத்தாலே சந்தி பந்தங்கள் குலைந்து -இனி ஒரு அவயவி யாக்கிக் காண ஒண்ணாது -என்னும் படி மங்கிக் கிடக்கிற என்னை –

ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே–
இவளுடைய விசல்ய கரணியும் சந்தான கரணியும் இருக்கிறபடி -சஞ்சீவி மலை மூலிகைகள்
-மார்பில் பட்ட அம்புகளை எடுக்கவும் அதனால் பட்ட புண்களை ஆற்றவும்
ஆராவமுதம் அனையான் -கண்ணன் –விசல்ய கரணி -அவன் வாயில் ஊறிய நீர் -சந்தான கரணி இவளுக்கு
மார்வில் கொணர்ந்து புரட்டீர் -என்றது எல்லாம் பெற்றதில்லை யாகிலும் -பல அவயவ சம்பந்தம் கொண்ட மாலை அன்றோ –
அவனுடைய ஒரோ அவயவத்தில் உள்ளதைக் கொடு வந்தாகிலும் –
புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே–
இது சருகாய்ப் போகாமே -அந்நீரைக் கொடு வந்து தெளித்து பருகும் படி பண்ணி
உமிழ் நீர் மருந்தாகத் தீரும் காணும் என் நோய்
அவ்யவதா நேன என் தசைக்கு அவனைக் கொடு வர வேணும் இ றே –
அது செய்ய ஒண்ணாத பின்பு இத்தாலே என் இளைப்பப் பரிஹரித்துக் கொண்டு நிற்கப் பாருங்கோள்
வாய் மருந்திட்டு தீர்க்க வேண்டும் நோய் இ றே இது –

———————————————————————————

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால்
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற
குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே –13-5-

எனக்கே கூறாய் இருக்குமது கிடையாதாகில் -வெறும் தரையிலே போகிறவற்றையாகிலும் கொடு வந்து ஆச்வசிக்கப் பாருங்கோள் -என்கிறாள்
அழிலும் தொழிலும் உருக்காட்டான் –
ஏதேனும் ஒன்றை பிரயோகிக்கிலும் உருக் காட்டு கிறிலன்-
ப்ரஹ்மாஸ்த்ர பிரயோகம் பண்ணிலும் உருக் காட்டு கிறிலன் –
அழிலும் –
கண்ணநீர் விழுந்த அளவிலும் தன்னைக் காட்டுகிறிலன்-
தொழிலும் –
அதுக்கு அவ்வருகே ஒரு நிலை நின்றாலும் தன்னைக் காட்டுகிறிலன் –
தொழிலும் உருக்காட்டான் –
தொழுதார்க்கு ஸ்வம்மோ தான் இவ்வஸ்து –
பக்தா நாம் -என்று இருக்கிற வடிவைக் காட்டுகிறிலன் –
அவனுடைய ஆத்மாபஹாரம் இருக்கிற படி
சோரேண ஆத்மா அபஹாரிணா – பார உத் -42-35- என்னக் கடவது இ றே-
பக்தி பிரபத்திகள் இரண்டுக்கும் வாசி அறுத்தார்களும்
விக்ரஹமே உத்தேச்யம் என்னும் இடத்தை வெளியிட்டார்களும் ஆழ்வார்கள் இ றே
இப்பக்தி தான் கர்த்தவ்யமாய் –சாதனா புத்த்யா பண்ணுகை அன்றிக்கே தன்னடையே தவிர ஒண்ணாததாய் வரும் அது என்றும்
விக்ரஹத்துக்கு அவ்வருகு தேட்டம் அன்று என்று அறியும் படி பண்ணினார்கள் இவர்கள் இ றே
ஆகையால் இ றே காமினிகள் பாசுரத்தை ஆசைப்பட்டு அம்முகத்தாலே அனுபவிக்கிறது
அழிலும் தொழிலும் -பக்தி பிரபத்திகள் என்றபடி –

மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் என்று இருக்கும் இவளுக்கு சொல்ல வேண்டா வி றே –

அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்-
பிள்ளைகாள் பிறர் படி அறியாது ஒழிகிறார்  வேணுமாகில் தன படி -திருமேனியை -தன்மையை -அறியாமை இல்லையே –
நம்மைப் பிரிந்தார் தரிக்க மாட்டார்கள் -என்று கடுக வந்து அணைத்துக் கொண்டு நிற்க வேண்டாவோ இவனுக்கு –
அவன் ஒருவன் –
ராமாவதாரத்தில் வ்யாவ்ருத்தி மூன்றாம் பாட்டில் சொல்லிற்று
கிருஷ்ணாவதாரம் தன்னையும் வ்யாவ்ருத்திக்கிறது காணும் இப்போது
கண்ணன் என்னும் கரும் தெய்வம் -என்கையாலே ஒரு உக்தி மாத்ரமாய் —முதன்மையே பரத்வமே யாய்த்து நிலை நின்று போருவது-

தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால்
தழுவி –
தனக்கு பிரிவால் உண்டான விடாய் எல்லாம் மாறும் படி சர்வாங்க சம்ச்லேஷத்தைப் பண்ணி
ஸூ காடம் பரிஷச்வஜே -ஸ்ரீ விஷ்ணு -5-18-2-என்கிறபடியே அக்ரூரனைக் கண்டது இல்லை என்று சொல்லும் படி தழுவிக் கொண்டானே
முழுசி –
அத்தை விடா -அந்த அணைப்புக்கு பின் ஓர் அவயவத்திலே நின்று சுழி சுழிக்குமாய்த்து –
மூக்காலே உச்சி மோந்து கேச பாசத்திலே அகப்பட்டு மீள முடியாமல் இருக்க ஆசைப்படுகிறாள்
புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று
இது விட்டு புறம்பு போகமாட்டாமையாலே சூழச் சூழ
வந்து
அங்கு வாரா நிற்கும்
போகானால்
இது தனக்கு போக்கு விட்டு அல்லது தரிக்க ஒண்ணாமை யாலே புறப்பட்டு போகா நிற்கும்
இதுவாய்த்து சம்ச்லேஷ க்ரமம் இருக்கும் படி -இப்படி செய்கிறிலன் -என்னுதல்
அன்றிக்கே -உருவு வெளிப்பாட்டாலே நலிந்து விட்டுப் போகிறிலன் என்னுதல்-

தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற
தழைகளும் தொங்கலும் ததும்பி -பெரியாழ்வார் -3-4-1-என்கிற பாட்டின் படியே யாய்த்து வந்து தோற்றும் போது இருப்பது
தழை -பீலி
பசுக்கள் வரும் போது முற் குழையிலே வரப் பெராதே கடைக் குழை இலே யாய்த்து வருவது =-பின்னே -என்றபடி
பகலில் பசுக்களின் பின்னே போன விடாய் எல்லாம் தீரும் படி -சோலை செய்து கொண்டாய்த்து வருவது
பெரும் குளம் கலங்கினால் போலே காணும்
அத்தனை போதும் பெண்கள் படும் அலமாப்பு காண்கைக்காக-நெடுமால்
ஒரு தாய் தமப்பனுக்கு பிறக்கையாலே-அவர்கள் சொல்லிற்றுச் செய்யப் போனேன்-
பிரியேன் பிரியில் தரியேன் -என்று
இவர்கள் தானே சென்று அணைக்க வேண்டும் படி தனது வ்யாமோஹம் எல்லாம் குழலின் த்வநியிலே தோற்றும் படி யாய்த்து குழலூதுவது –

குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே –
இது தன்னையும் புதைத்து விட வேண்டும்படி போலே காணும் இவளுக்கு -புதைத்து -குறைவாக -விரலாலே மூடி-
அந்நீரைக் கொடு வந்து தடவி என் இளைப்பை நீக்கி கொடு நிற்கப் பாருங்கோள் –

—————————————————————————–

நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த வடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே –12-6-

நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும்
லோகத்தில் மரியாதை எல்லாம் குலைந்து யாய்த்து கிடப்பது -அதுக்கு மேலே ஓன்று பத்தாய்க் குலைந்தாய்த்து இவனைத் தோற்றி
அதுவெல்லாம் நிலை நின்றதாம் கிடீர் இவ்வளவிலே வந்து என் முகத்தில் விழிக்கப் பெறில்
நந்த கோபன் மகன் என்னும்
அவன் வயிற்றில் இவன் ஒருவன் எங்கனே வந்து தோற்றின படி
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய் -என்று அவர்கள் பேற்றுக்கு பரிகரமாக நினைத்து இருப்பதும் இவரையே
நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருள் கண் என்னை உய்த்திடுமின் -12-3–என்று
ஆற்றாமை கரை புரண்டால் பொகடச் சொல்வதும் அவர் வாசலிலே
ஸ்ரீ நந்தகோபரும் சிறியாத்தான் போலே பரம தார்மிகராய் இ றே இருப்பது –

கொடிய –
அவ்வளவு அல்ல -ஸ்வ கார்ய பரன் -கண்ணன் மீது வெறுப்பு அவன் பெற்றோர் மீதும் ஏறிப் பாய்கிறது
கடிய –
பிறர் நோவு அறியான்
திருமாலால்-
பெற்றவர்களும் அங்கனே யாய் –அஞ்ச உரப்பாள் ஆணாட விட்டிட்டி இருக்கும் -3-9-
-வளர்ந்தவர்களும் இங்கனே யானால் –பெற்ற தாய் வேம்பெயாக வளர்த்தாளே-13-7- நாம் இவனை வெறுக்கிறது என்
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டானே -பெரிய திருமொழி -8-10-1—பெரிய பிராட்டியாரும்
கொடுமையும் கடுமையும் மிக்கவனாக வளர்த்தாளே என்றபடி –
இழவேயாய் போருகிற பிரகரணம் ஆகையாலே -பேற்றுக்கு பரிகரமாகச் சொல்லுமவற்றை எல்லாம் இழவுக்கு பரிகரமாகச் சொல்லுகிறாள்
அருளாத திருமாலார்க்கு -என்னக் கடவது இ றே-நம்மாழ்வாரும் பெரிய பிராட்டியாரை வெறுத்தாரே –
இதுக்கு –அருளாமைக்கு -புருஷகாரமாக அனுசந்திக்கிறார் -என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி –
பிள்ளானை இதுக்கு கருத்து என் என்று நான் –நஞ்சீயர் -கேட்டேன் –
இப்படி நம்மை நலிகைக்கு குருகுல வாசம் பண்ணிற்று அவளோடு அன்றோ –என்று பணித்தார் –
இத்தை பட்டருக்கு விண்ணப்பம் செய்தேன்
பேற்றுக்கு அடி அவள் என்று இருந்தால் -இழவுக்கும் அடி அவள் அவள் என்று வெறுத்து வார்த்தை சொல்ல தட்டுண்டோ என்றார் என்று
நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –

குளப்புக் கூறு கொளப்பட்டு-
கீழே காரேறு உழக்க உழக்குண்டு--13-4- என்றது இ றே-
புறம்பு போக்கில்லாமையாலே துகைத்த இடம் தன்னிலே துகைக்கும் அத்தனை யாய்த்து –
இவளுக்கும் வேறு புகல் இல்லை -அந்த காளைக்கும் துகைக்க வேறு ஆள் இல்லை என்றபடி –

புடையும் பெயரகில்லேன் –
இப்போது இவளுக்கு அவனைக் காண்கை அன்றாய்த்து தேட்டம் –
தான் இடம் வலம் கொள்ளலாய்த்து —
நான் –
நைவ தம்சான் ந மசகான் –-அவனும் புடை பெயரு கிறிலன் என்று சொன்னார் உண்டாகில் இவள் நோவு படாள் போலே-
ராமன் போலே அன்றே –கண்ணன் அப்படி நோவு படாத சுணை கேடன் அன்றோ
அது செய்யாத போட்கனாய்த்து இவன் -நம்மை இப்படி நோவு படுத்தி வைத்து இன்னமும் சிலரை நோவு படுத்தப் போகா நிற்குமாய்த்து –

போட்கன் மிதித்த வடிப்பாட்டில் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே –
அங்கு போகிற இடத்தில் அவர்களை வசீகரிக்கும் போது இப்பொடி கொண்டு கார்யம் இல்லை இ றே அவனுக்கு –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ –2-4-என்றபடி அம்மான் பொடியே போதுமே
நான் சொல்லுகிறவற்றைச் செய்யுங்கோள் –பொடி படத் தீரும் –
அவ்வடிப் பாட்டில் பொடியைக் கொணர்ந்து பூசப் பாருங்கோள் -அவனது ஒரு வழியாய் இருக்கும் இறே –பெண்கள் இருக்கும்
இடம் தேடி துன்புறுத்துவதே அவன் வழி
இவளுக்கும் அது தானே இ றே வழி -அவன் அடிச் சுவட்டில் பொடியைத் தேடித் போகும் வழி இவளது –

போகா யுயிர் என்னுடம்பையே —
சஸ்திர விஷாதிகள் தாரகம் ஆவதே இவ்வுடம்புக்கு
அன்யார்த்தமாக நோக்கி இருக்க வேண்டுவார்க்கும் தாம்தாம் முடிய விரகுண்டோ நினைத்த படியே
விஷச்ய தாதா-சுந்த -28-16–இவ்வளவிலே விஷத்தைத் தந்து நோக்குவான் ஒரு உதாரனைக் கிடையாதே –
சச்த்ரச்ய வா -சஸ்த்ரம் தருவாரைப் பெற்றதாகில் தான் பொல்லாதோ –
அசோகா வனத்தில் சீதா பிராட்டி விஷமோ சச்த்ரமோ தருவார் இல்லை என்று குறிப்பட்டது போலே -இவளும் படுகிறாள் இங்கே –
ஜிஜீவிஷேயம் யாவத் பிரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியச்ய -சுந்தர 36-30-பெருமாள் என்னை மீட்கச் செய்யும் முயற்சியை
கேள்விப்படும் வரையில் உயர் வாழ்வேன் என்றாளே

————————————————————————————-

வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே
குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே –13-7-

ந ஜீவேயம் ஷணம் அபி -என்று மேல் விழுந்து வந்து அணைந்திலன் ஆகிலும் எனக்கு பரபுத்யதீனமாக வாகிலும்
அவனை அணையப் பெறில் அமையும் -ஆனபின்பு அத்தைச் செய்யுங்கோள் என்கிறாள்
வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து-
தன்
தன் ஆஜ்ஞ்ஞையாலே சர்வத்தையும் கீழ்ப்படுத்தி விஜய த்வஜம் எடுத்து இ றே இருப்பது –
அம்மரியாதை –தன் ஸ்வா தந்த்ர்யமும் என்னுடைய பாரதந்த்ர்யமும் -குலைய வன்று கார்யம் பார்க்கிறது –
தன்னுடைய ஆஸ்ரிய பாரதந்த்ர்யமோ பிரணயித்வமோ தோற்றும்படி கார்யம் செய்வது இல்லை -என்றபடி –
ஈஸ்வர ஆஜ்ஞை தான் நின்ற அளவும் வர நடக்கிறது இ றே -அன்புக்கு உரியவளாய் இருந்தாலும் தன்னையும் கட்டுப்படுத்துமே
அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கோர் பெண்பால் பொருளோ எனும் இகழ்வோ
இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ –திருவிருத்தம் -33–என்ற பராங்குச நாயகியும் அருளிச் செய்தாள் அன்றோ
பீஷாஸ்மாத் வாத பவதே -என்றும் —மேகோதயஸ் சாகர சந்நிவிருத்தி -என்றும் சொல்லுகிறபடியே-
தன் ஆஜ்ஞை தான் ஒருவரால் அதிக்கிரமிக்க ஒண்ணாத படி இ றே நடத்துவது –
மீ மீ தாடா வுலகத்து-
தன் மேன்மைக்கு மேலே போகக் கடவது அன்றிக்கே இருக்கிற லோகத்திலே
மீது -என்று மேல் –
கருளக் கொடியான் தன் மேன்மைக்கு மேலே ஓன்று இல்லாத லோகத்திலே -முதல் மீது -மேன்மையை குறிக்கும் -அடுத்த மீது -மேல் என்றபடி –

வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே
பிரயோஜன நிரபேஷமாக பிறருக்கு அனர்த்தத்தை
விளைப்பார் உண்டாகாதே
வெற்றே வெறிதே வீப்சையால் –பர அனர்த்தமேயோ இதுக்கு -மற்றும் ஏதேனும் பிரயோஜனம் உண்டோ
நந்த கோபன் மகன் என்னும் -பெற்ற தகப்பனை வெறுத்தாள் கீழ்ப் பாட்டில்
இங்கு பெற்ற தாயாரை வெறுக்கிறாள் -அவனை வெறுக்கிறது என் -அவனுக்கு ரஷ்ய வர்க்கம் பரப்புண்டே -பசுக்களை நோக்க வேணும் இ றே அவனுக்கு
ரஷணத்தில்-அந்ய பரனே அவன் -நம்மே பாதி யன்றே அவனும் -கூடி இருந்த போது இவனைத் திருந்தாமல் விட்டது போலே – –
அவனை நோக்குகையே பணியாய் இருக்கும் இவளைச் சொல்லீர்
இவள் அவனைக் கட்டுவது -அடிப்பதாக -அவனும் அழுவது முலை உண்பதாக புக்கவாறே இவள் பெற்றவள் ஆகாதே என்று இருந்தோம்
இப்போதைச் செயலைப் பார்த்தவாறே வளர்த்துக் கொள்ளி யாகாதே -செவிலித் தாய் –என்று தெளிவாகத் தெரிகிறதே -என்று தோற்றி இரா நின்றதே
வேம்பே யாக
வேம்பும் கரும்புமாக வளர்க்கை அன்றிக்கே வெறும் வேம்பேயாக வளர்த்தாள்
அவன் வேம்பானது வளர்த்த பொல்லாங்கு என்று இருக்கிறாள் -அவனை இன்னாதாகிறது என் -இவள் அன்றோ இப்படி வளர்த்தாள் –

அவன் வாராது ஒழிகிறான்–இழவு உன்னது -நடுவே பெற்ற தாயை இன்னாதாகிறது என்-என்ன
குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு-
என் பக்கல் தான் குற்றம் உண்டோ –
அவன் வேம்பானால் –வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது -பெரிய திருமொழி -11-8–7- என்று இருக்கும் முலை-
அவரைப் பிராயம் தொடங்கி துவரைப் பிரானை ஆதரித்து எழுந்த என் தட முலை –-1-7–என்றும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- முலை அன்றோ
அநசூயை பிராட்டியைப் பார்த்து -ஸ்திரீக்கு பரதேவதை பர்த்தாவே கிடீர் –என்ன
அது கொடு கார்யம் என் -பெருமாள் குணவான்களாய்க் கெட்டேன்-
நமக்கு அவர் பக்கல் உண்டான நிருபாதிக ச்நேஹம் சோபாதிகமாய்த் தொடரா நின்றது இ றே
குணங்களை வ்யதிரேகித்து-அந்த தர்மியை பிரதிபத்தி பண்ண ஒண்ணாமை யாலே –
ஸ்வரூப க்ருத பக்தியை அருளிச் செய்தால் இ றே –
க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க வற்றோ இம்முலை
இதுவே குற்றம் அற்ற முலை -என்றது
குமரன் –
இம்முலைக்குத் தக்க பருவத்தை உடையவன் –
கோலப் பணைத் தோளோடு–
நெஞ்சாய்த்துப் பொய்யாய் இருப்பது –
தோளுக்கு குற்றம் இல்லை
அணைத்தே நிற்க வேண்டும்படியாய் இருக்கும்
பிரிந்து இருக்கும் போதும் -இவளோடு கை செய்து வைத்த படி -கையாலே அணைத்து -அலங்கரித்து என்றுமாம் –
-இப்போதும் கோலப் பணைத் தோள்-என்னும் படி இ றே –

அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே –
அத் தோளோடு அற்றதாயிற்று இம்முலைகள்-
இங்கே குடி இருப்பாய் -அங்கே க்ருத சங்கேதமாய் யாய்த்து இருப்பது இவை –
என்னைக் கூடாதே அங்கே அற்ற குறை தீரும் படி -அதைப் பிரிந்து இருப்பதுள்ள குறை தீர -என்னும் படி –
அணைய வமுக்கிக் கட்டீரே —
அணைய என்றால் அவன் தான் இறாய்க்கும் போலே காணும்-
அணைய -பின்பு அமுக்கி -நிர்பந்தம் பண்ணி என்ற படி
உஷையையும் அநிருத்தனையும் கூட விலங்கிட்டால் போலே அத் தோளையும் இம்முலைகளையும் கூட விலங்கிட்டு வைப்பாரைக் கிடையாதோ
ஆனவளவும் இ றே மீட்கப் பார்ப்பது -சத்தா ஹானி பிறக்கும் அளவில் பின்னிச் சேர்க்கை பித்ராதிகள் தங்களுக்கு பரமாய் இருக்கும் இ றே
பிரிந்தால் உயிர் துரப்பாள் தசை என்று அறிந்த பின்பு சேர்த்து வைப்பது தாய் தந்தையர் பொறுப்பு அன்றோ –அணைய அமுக்கிக் கட்ட குறை இல்லை-

—————————————————-

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8-

உள்ளே உருகி நைவேனை –
அகவாயில் ஓட்டம் அறியாமே தான் இருக்கிறானோ
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிவான் அன்றோ
ஆறுகளும் குளங்களும் நிரம்பினால் மிக்க நீராய்த்து வழிந்து போவது -அப்படியே செயலாலும் சொல்லாலும் அறியலாய்-விசும்பலாய் – அகவாய் சைதில்யம் பேச்சுக்கு நிலம் இல்லை

உளளோ இலளோ என்னாத-
பிரணியத்வம் குடி போனால்- நீர்மையும் குடி போக வேணுமோ -(ப்ரீதி / அன்பு -தகப்பன் பிள்ளை / தாய் பிள்ளை / கணவன் -மனைவி / நாயகன் நாயகி அன்பு -வேறு வேறு நிலை அன்றோ / நீர்மை -எளிமை -ஸ்வ பாவம் அன்றோ ஸுலப்யம் )

கொள்ளை கொள்ளிக் குறும்பனை –
என் பக்கல் தயை பண்ணத் தவிர்ந்தால் என்னிடை யாட்டம் ஆராயாது ஒழிந்தால் ஆகாதோ-
என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ண வேணுமோ -(கொள்ளை கொள்ளி -குறும்பன் -இரண்டு விசேஷணங்கள் )

குறும்பனை
ஸ்ரீ நந்த கோபன் தம்முடைய விஷயத்திலே குறும்படித்து மூலையடியே திரிகைக்கு ஒரு பிள்ளை பெற்று விட்டானாய்த்து –

கோவர்த்தநனைக்
பெண்களை வெறும் தரையாக்கும் -பசுக்களை ஓன்று நூறாயிரம் ஆக்கும்

கண்டக்கால்-
அவன் பசுக்களின் பின்னே கை கழியப் போகையாலே-காண்கை தான் அரிது -வருந்திக் காணப் பெற்றதாகில் -(சிறு காலே ஒறுப்படுத்தி -பசு  மேய்க்க சென்று -எல்லியம் போதாக வருவான் )

கொள்ளும் பயன் ஓன்று இல்லாத -கொங்கை தன்னைக்-
அவன் பசுக்களின் பின்னே போகையாலே இம்முலைகளைக் கொண்டு கொள்ளுவது ஒரு பிரயோஜனம் இல்லை யாய்த்து

கொங்கை தன்னைக் கிழங்கோடும்
விவேகமுடையராய் இருப்பார்-இதுக்கு ஓர் ஆஸ்ரயமாய் இருப்பதொரு – வேர்முதல் கொங்கைக்கு கிழங்கு –என்று
சொல்லப் படுவது இவளுடைய ஆத்ம வஸ்துவையே யாகும் –
அதுவே நித்யம் -அழியாத தொன்று என்று இருப்பார்கள் இ றே
பிடித்து ஏறிய முடியாத அத்தை எறிவேன் என்று சொல்லும் படி அன்றோ இவளது ஆற்றாமை
ஸ்வாபதேசத்தில் கொங்கை -பக்தி -அதுவே பரமாத்மாவுக்கு போக்யமானது –
அச்சேத்யம் அதாஹ்யம் -என்று சொல்லுகிற-(வெட்டவோ எரிக்கவோ உலர்த்தவோ நினைக்கவோ முடியாது என்பான் ஸ்ரீ கீதையில் ) அது தன்னோடு பறித்து எறியப் பார்க்கிறாள் –

அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–
அவன் மார்விலே கிடக்கிலும் தன்னைப் படித்திற்றுப் படுத்தும் அவனையும் என்று இவற்றை
உபேஷித்து-பறித்து எறியும் போதும் விழும் தரை அவன் மார்வாக வேணும்
என் அழலைத் தீர்வேனே
அவன் தானே விரும்பி வந்து அணைக்கும் போது இ றே போகத்துக்கு உடலாவது-
இப்போது ஓடுகிற கிலேசத்தைத் தவிர்க்கலாம் இ றே –

———————————————————————————–

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-

கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு -என்கிறது என்
அது தனக்கு ஆஸ்ரயமாய் இருப்பதோர் ஆத்மவஸ்து உண்டானால் அதுக்கு அவ்வருகே போய் பெறலாவதோர் அனுபவம் உண்டே –
அந்தர்யாமியை அனுபவிக்கலாகாதோ
அத்தைப் பெறப் பார்த்தாலோ என்ன
பெற்ற இவ்வுடம்போடே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நான் அத்தை விட்டு அவ்வருகே போய் சாதன அனுஷ்டானம் பண்ணவோ –

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
சமைய வளர்ந்து -ஷம காலத்தில் பிரஜைகள் சோறு சோறு என்று அலைக்குமா போலே
எனக்கு அடைத்த விஷயத்தைக் காட்டு காட்டு என்று நெருக்குகிற இவற்றின் இடரானது தீரும்படி –
இவற்றினுடைய இடர் தீர்ந்ததாவது -கோவிந்தனுக்கு ஆனாலாய்த்து
அல்லாத போது இவளுக்கு நெஞ்சடையாம்- -சாடு -அத்தனை
கோவிந்தற்கு -பாதகமே -நெஞ்சடைப்பதே –
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்காக என்ன ஒண்ணாது
பசுக்களின் பின்னே திரியும் அவனுக்காகவே வேணும்
ஓர் குற்றேவல்
முலை எழுந்தவளுடைய குற்றேவல் இ றே –
தம்தாமுக்கு அடைத்த கரணங்களைக் கொண்டு பண்ணும் கைங்கர்யம் இ றே தானே குற்றேவல் –

இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
காத்ரைஸ் சோகாபி கர்சிதை –சம்ஸ் ப்ருசேயம் -என்னுமா போலே இவ்வுடம்போடே அணைய ஆசைப் பட்டு பெறாதே
இனி அவ்வருகே போய்
ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி பெரும் பேறாகிறது-பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸ் ஸூ பண்ணுவாரோ பாதி -என்று இருக்கிறாள்
பரம பதனை அனுபவிப்பது இது போலே என்று இருக்கிறாள் –

செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும்
அணைக்கப் புக்கால் இறாயாத மார்வாய்த்து –
அம்மார்வோடே சேர்த்து அணைக்கை யாய்த்து பேறாவது
அது செய்திலனே யாகிலும்
ஏலும் -நடைபெறாது என்ற சங்கை தொனிக்கும்

ஒரு நான்று- மெய்ம்மை சொல்லி
என்றும் ஒக்கப் பொய்யே சொல்ல வேணும் என்னும் நிர்பந்தம் உண்டோ
ஒரு நாள் மெய் சொன்னால் ஆகாதோ –ஏலாப் பொய்கள் உரைப்பானை –14-3-என்பாள் மேலே –
இப்போது பொய் சொல்லுகை யாவது -அருகே இருக்கச் செய்தே பிரிய நினைக்கை
அகவாய் அங்கனே செல்லா நிற்க -நின்னைப் பிரியேன் -பிரியிலும் ஆற்றேன் -என்றால் போலே சொல்லுகை –

முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–
நேர் கொடு நேர் முகம் பார்த்து -எனக்கு உன் பக்கல் ஆதரம் போராது-உன்னை உபேஷித்தேன் -நீ போ -என்று
நம் போக்கை அனுமதி பண்ணுமாகில்-அது மிகவும் நன்று

சேர்த்தானேல் நன்று —-விடை தான் தருமேல் மிக நன்று -தன்  மார்வோடே அணையும் படி சம்ச்லேஷித்தான் ஆகில் நன்று -அழகிது
நீ வேண்டா போ என்று முகத்தைப் பார்த்து அனுமதி பண்ணி விடுமாகில் மிகவும் நன்று
கலக்க வேணும் என்று ஆசைப் பட்டால் பின்னையும் இருந்து நோவு பட்டு சம்ச்லேஷத்தை ஆசைப் படுக்கைக்கு உடல் இ றே
நீ வேண்டாம் என்றால் முடிந்து பிழைக்கலாமே
பிராட்டி உடைய இரண்டாம் பிரிவு போலே இருப்பது ஓன்று இ றே இது -கேவல துக்கமேயாய் முடிவுக்கு ஹேதுவாயிற்றே
வண்ணான் சொன்னான் என்று கர்ப்பிணியாய் பிரிந்த பிரிவு -மறுபடியும் சேர இடம் இல்லாத படி யாயிற்றே

—————————————————————————————

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே--13-10-

அல்லல் விளைத்த பெருமானை –
பஹவோ ந்ருப கல்யாண குணகணா புத்ரச்ய சந்தி தே--அயோத்யா -2-26-என்று திரு அயோ த்யை ராம குணங்களிலே கையடியுண்டு -ஈடுபட்டு –
மற்று ஓன்று அறியாது இருக்குமா போலே யாய்த்து
திரு வாய்ப்பாடியில் உள்ளார் கிருஷ்ணன் தீம்பிலே கையடி யுண்டார்களாய் இருக்கும் படி
ஊரை மூலையடியே நடந்து -வெண்ணெய் பெண்கள் இவை களவு போய்த்து-என்றும்
பாலும் பதின் குடம் கண்டிலேன் –பெரிய திரு -10-7-2-என்று சொல்லும் படி பெரிய ஆரவாரத்தைப் பண்ணி யாய்த்து வார்த்திப்பது –

ஆயர்பாடிக்கு அணி விளக்கை
இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊராக இருண்டாய்த்து கிடப்பது
ராம குணங்கள் வேம்பாய்
இவன் தீம்புகள் கரும்பாய் -பிரகாசத்தையும் பண்ண யாய்த்து திரிவது

வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
இவளுடைய விருப்பத்தில் ஊற்றமாய்த்துச் சொல்லித் தலைக் கட்டப் பார்க்கிறது
இவ்வளவான பிராவண்ய அதிசயத்துக்கு எல்லாம் வாய்த்தலை பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து-

வில்லைத் தொலைத்த புருவத்தாள்
தன்னோடு சாம்யம் கொண்டாடி இருக்குமவை எல்லாம் அழிக்கும் படி யாய்த்து அவயவ சோபை இருக்கும் படி
வில் தான் ஒப்பாக போராத படியான புருவத்தை உடையவள்

வேட்கை யுற்று மிக விரும்பும் சொல்லைத்-
அபி நிவேசமானது விஞ்சி
அது தான் –என்னளவன்றால் யானுடைய அன்பு –இரண்டாம் திரு -100-என்கிறபடியே
ஆஸ்ரயத்தின் அளவில்லாத படி அபி நிவேசத்தை உடைய வாளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தை
பகவத் அனுபவம் வழிந்து புறப்பட்ட சொல் -என்று தோற்றும் படி இருக்கை –

துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–1
இவன் இப்போதாக இவளுடைய விருப்பத்தை சம்பாதிக்க வென்றால் செய்யப் போகாதே –
அப்படி பாவ பந்தம் உடையவளாய்ச் சொன்ன அவளுடைய பாசுரத்தைச் சொல்ல அமையும்
சம்சாரம் ஆகிற துக்க சாகரத்திலே
மிருதுவாய் இருப்பதொரு கொழுந்தை அக்னியில் இட்டால் போலே துவண்டு நோவு படாதே
இவள் பட்ட கிலேசமே கிலேசமாக
இவள் பாசுர மாத்ரத்தைச் சொன்னவர்கள் வால் ஆசைப் பட்ட பொருள் பெறுவார்கள் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -பன்னிரண்டாவது திருமொழி —

September 15, 2015

அவதாரிகை –

மேல் சொல்லி என் –
பகவத் விச்லேஷத்தால் நொந்து -இவள் தனக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இரண்டாய் -இவ்விரண்டிலும் தான் அதிசங்கை பண்ணி —
அத்தலையாலே பேறு -என்று அறுதியிட்டு -அது பார்த்து இருக்க ஒண்ணாது -அத்தலையில் ஸ்வாதந்த்ர்யத்தாலே –
ஆனாலும் கேவலம் ஸ்வா தந்த்ர்யமே அன்றிக்கே -ஆஸ்ரித பாரதந்த்ர்யம் என்றும் ஓன்று உண்டு அவனுக்கு –
ஆனபின்பு பெரியாழ்வார் அளவிலும் அவனுக்கு அந்த ஸ்வா தந்த்ர்யம் ஜீவியாது –
அவர் சம்பந்தம் கொண்டு நமக்குப் பெறுகைக்கு ஒரு தட்டில்லை -என்று அத்யவசித்து இருந்த இவள்
பின்னையும் -அவன் தான் குணாதிகனுமாய்-சவிபூதிகனுமாய் இருப்பான் ஒருவன் ஆகையாலே
ஆஸ்ரீதவிஷயத்தில் தன ஸ்வா தந்த்ர்யம் நடத்துகையாவது இவற்றை இழைக்கை
இவற்றை இழக்க கார்யம் செய்யான் -இனித் தான் அவன் ஸ்வா தந்த்ர்யம் நமக்குப் பேற்றுக்கு உடல் அத்தனை போக்கி இழவுக்கு உடலோ –
கார்யம் செய்வானாக நினைத்த போது அவனுக்கு நிவாரகர் இல்லை அத்தனை அன்றோ –என்று
அத்தையும் பெரியாழ்வார் வயிற்றில் பிறப்போபாதி பேற்றுக்கு உடலாக அத்யவசித்தாள்-
விடுகைக்கு ஹேதுவான ஸ்வா தந்த்ர்யம் தானே -அவஸ்தா பேதத்தாலே பற்றுகைக்கு உடலாகத் தோற்ற பற்றினாள் -என்றவாறு –
இப்படி அத்யவசித்து இருக்கச் செய்தேயும் -அவன் சடக்கென வந்து தன் ஆற்றாமை பரிஹரிக்க கண்டிலள் –
ஆனாலும் அவன் வரும் அளவும் க்ரம பிராப்தி பார்த்து ஆறி இருக்க வல்ல பிரகிருதி அன்றே –
கடுக பெற்றுக் கொடு நிற்க வேண்டும்படி இ றே இவளுடைய த்வரை-
தன் ஸ்வரூபத்தோடு சேர்ந்த செயலாகிறது அவன் வரப் பார்த்து இருக்கையே-அவ்வளவு அல்லவே இவளுக்கு இப்போது ஓடுகிறது –
ஸ்வரூப ஹானி வரப் பொறுத்ததே -தன் ஸ்வரூபத்தோடு சேராதாகிலும்-அத்தை பொறுத்து அவன் முகத்திலே விழிக்க வேணும் –என்று பார்த்து
அதுக்கு கால் நடை தாராத படி பலஹானி மிக்கது -இனி தன் தசையை அனுசந்தித்தார்க்கு ஈச்வரனோபாதியும்-
பெரியாழ்வாரோ பாதியும் தன் கார்யம் செய்ய வேண்டும் என்றாய்த்து தான் நினைத்து இருப்பது
தனக்குக் கால் நடை தாராதாய்த்து -அவன் தன் தசை அறிந்து வந்து முகம் காட்டுவான் ஒருவன் அன்றிக்கே இருந்தான்-
இனி தன் கண் வட்டத்தில் நின்று தன் தசையை அறிந்து கால் நடை தருவார்க்கு தன் கார்யம் செய்கை பரம் இ றே
அவன் வர்த்திக்கையாலே ப்ராப்யமான தேச பரிசரத்தில் என்னைக் கொடு பொய் நீங்கள் பொகடப் பாருங்கோள் -என்கிறாள் —

———————————————————————————–

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

அத்தலையாலே பேறு என்று அறுதியிட்டால் அவன் வரும் அளவும் க்ரம பிராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண்-
நீ இங்கனே பதறலாகாது காண் -என்ன
என் தசையை அறியாதே சில சொல்லுகிற உங்களுக்கும் எனக்கு வார்த்தை சொல்ல பிராப்தி இல்லை —
உங்கள் வார்த்தையைச் செவி தாழ்த்துக் கேட்கைக்கும் எனக்கு பிராப்தி இல்லை என்கிறாள் –

மற்று –
வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –
மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-
இருந்தீர்கட்கு அறியலாகா –
ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு-நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-
எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –
பக்த்யா சாஸ்த்ராத் வேதமி ஜனார்த்தனம் -உத்த -68-5- சஞ்சயன் வார்த்தை -என்னக் கடவது இ றே
மாயம் ந சேவே -இத்யாதி –
சாஸ்த்ரத்தில் வாசனை உனக்கும் எனக்கும் ஒக்கும் -புத்தி யோகத்திலும் எனக்கு குறையில்லை
இங்கனே இருக்கச் செய்தே உனக்கு அர்த்தம் உள்ளபடி பிரகாசியா நின்றது -எனக்கு நீ சொல்ல கேட்க வேண்டி இரா நின்றது -இதுக்கடி என் -என்ன
நான் வஞ்சன பரன் அல்லேன் –சல தர்மங்கள் அனுஷ்டித்து அறியேன் -ஸூ த்த ஸ்வ பாவனாய் இருப்பவன்
நீ கற்ற வரியடைவு கொண்டு அறிய விரும்புதி -நான் அங்கன் இன்றிக்கே பக்தி சஹக்ருத சாஸ்திரம் கொண்டு அறிய இருப்பவன் –
சித்தாஞ்சனம் இட்டு பதார்த்த தர்சனம் பண்ணுவாரைப் போலே காண் என் படி –என்றான் இ றே –

மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு –
ப்ரஹ்மசாரி எம்பெருமானை ஆசைப் பட்டேன் ஆகில் தான் ஆறி இரேனோ-
மாதவன் விஷயமான அன்பு -என்னுதல் –
மாதவன் ஆகிற அன்பு -என்னுதல்
அன்பு -என்றும் -அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தோன்றாதே   –அன்பு தான் என்னலாய்த்து இருப்பது
தேந தே தமநுவ்ரதா-அயோத்யா -17-16- என்கிறபடியே தான் முந்துற இத்தலையிலே அன்பைப் பண்ணி –
பின்னை யாய்த்து இத்தலையில் அன்பை விளைத்தது –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -திருவாய் -10-10-7-என்னுமா போலே -சர்வ பிரகாரத்தாலும் விலஷணமான
விஷயத்தை இ றே இவள் தான் ஆசைப் பட்டது –
அப்படிப் பட்ட வைலஷண்யம் உள்ளது  ஸ்ரீ யபதிக்கு இ றே -அவன் பக்கலிலே யாய்த்து இவள் அன்பைப் பண்ணிற்று –
அன்பு தன்னை உற்று –
அவனைக் கிட்டி -என்னுதல்
அவன் விஷயமான பக்தியை மாறுபாடுருவ உடையேனாய் -என்னுதல்
நிறந்தானூடு புக்கு -எனதாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற –திருவாய் -5-10-1-என்னுமா போலே
இருந்தேனுக்கு –
இப்படி அவனை ஒழிய செல்லாமை உண்டானால் அவன் இருந்த இடத்தில் சென்று கிட்ட இ றே அடுப்பது –
அதுக்கு கால்நடை தாராத படி இருக்கிற எனக்கு –

உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
உரைப்பது எல்லாம் –
அங்கே சென்று கிட்ட ஆசை உடைய எனக்கு -நான் சென்று சேராமைக்கு உறுப்பாகச் சொல்லும் வார்த்தை எல்லாம்
மற்று –உரைப்பது எல்லாம்
அவனோடு கிட்டாமைக்குச் சொல்லும் வார்த்தை எல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை-
என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றினபடி சொல்லுகைக்கு பரிகரம் இல்லை
எனக்குக் கேட்கைக்கு பரிகரம் இல்லை
ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை
செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை
செவிடரோடு ஊமையர் வார்த்தை என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்

உனக்கு ஓடுகிற தசை ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்று சொல்லுவான் என் -உனக்கு இத் தசையை விளைத்தவன்
தனக்குத் தெரியாதோ -என்ன –தாய் செல்லாமை அறியாதவனோ கலந்தார் செல்லாமை அறியப் புகுகிறான்
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
அநந்த வ்ரதம் -அனந்தனை குறித்து -வ்ரதம் அளவற்ற வ்ரதம் -அனுஷ்டித்து பின்னைப் பிள்ளை முகத்தில் விழிக்க வேண்டும்
என்று கிலேசப் பட்டு பெற்று பின்னை -போக விட்டு இழந்து இருந்தாள் ஆய்த்து–
போய்ப்பேர்த்து –
இவள் இரக்கத்தாலே இழவு பொறுக்க மாட்டாமே கண்ணும் கண்ண நீருமாய் இருந்தாள்
அவன் முலைச் சுவடி அறியாமையாலே கால் தாழவும் மாட்டாதே போனான் –
பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
வேறு ஒருதாய் க்ரஹத்திலே வளர்ந்தான் ஆய்த்து
பெற்றவள் இழவுடன் இருக்க -அவளுக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி தாயானமையில் ஒரு வாசி தோற்றாத படி யாய்த்து வளர்ந்தது
அவள் தானும்-திருவிலேன் ஒ ன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே–பெருமாள் திருமொழி -7-5-என்றாள்-இறே
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-பெருமாள் திருமொழி -7-8 என்னக் கடவது இ றே –

பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாரை நலிகையே அவனுக்கு சத்தா பிரயுக்தமாய்த்து
தாய் முலை –பெருமாள் திரு-6-4-இத்யாதி -இது இ றே -ஊடினார் வார்த்தை
முலை கொடுத்து அல்லது தரியாதாள் ஆய்த்து-
தனக்கு ஜீவன ஹேதுவாய் தான் வந்து முலை உண்ணாமையாலே-முலைக் கண் நெறித்து அவள் இருக்க
தன் மௌக்த்யம் தோற்ற தனக்கு விநாசத்தைப் பலிக்குமதான விஷத்தை உண்டு -அத்தாலே
பாவ பந்தம் உடையாருக்கும் பாவ தோஷம் உடையாருக்கும் வாசி அறியாதான் ஒருவன் காண் இவன் -என்று கண்டார் இகழும்படி நின்றான்
நம்பி
சாலப் பூர்ணன் ஆய்த்து –

மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–
தன் உடம்போடு அனைய வேணும் என்னும் ஆசை உடைய நான் இருக்க
இத்தனை போது புறப்பட்டு முரட்டு மல்லரோடே அணைகைக்கு போகா நிற்கும்
மல்லரானவர்கள் மல் பொருகைக்கு யுத்த பூமியிலே சென்று கிட்டும் காட்டில் தான் யுத்த பூமியில் சென்று கிட்டுமாய்த்து
அவன் மல்லர் உடம்போடு அணைவதற்கு முன்னே இடையிலே நான் சென்று கிட்டிக் கொள்ளும் படி
என்னை மதுரையின் பரிசரத்திலே கொடு போய் பொகடுங்கோள்
மல் பொருந்தா மல் களம் –அவர்கள் கிட்டுவதற்கு முன்னே என்னுதல்
என்னிடத்தில் பொருந்தாமல் மல்லர் யுத்த பூமியை அடைந்தவன் என்னுதல் –

————————————————————————————-

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்--12-2-

எல்லாம் செய்தாலும் இப்படி துணிந்து முடுக்க நிற்குமது அவனுக்கு அவத்யாவஹம் –
நீ அவனுக்கு அவத்யத்தை விளைக்கக் கடவையோ
உன்னுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்க வேண்டாவோ -என்ன –

நாணி யினியோர் கருமம் இல்லை –
நாணி நான் என்னுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்குகிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –
நாணுகை யாவது லஜ்ஜிக்கை இ றே-
லஜ்ஜித்து மீள வேண்டுவது -இன்னமும் சில நாள் இருந்து அவ்வஸ்துவை லபிக்க வேணும் என்று இருப்பார்க்கே –
லஜ்ஜை போகையாவது முடிகை இ றே –
இனி -முடியும் அளவானாலும் ஜீவித்து இருப்பார் செய்யுமது செய்யப் போமோ –
சத்தை கிடக்கில் இ றே லஜ்ஜை நோக்குவது
சத்தை அழியா நிற்கச் செய்தே நோக்குவது ஒரு லஜ்ஜை உண்டோ
தர்மியை அனுபந்தித்தித்றே லஜ்ஜை இருப்பது
தரமி லோபம் பிறக்கும் அளவானால் இனி நோக்குகை என்ற ஒரு பொருள் உண்டோ-
இனி -இவள் தான் ஆம் அளவும் நோக்கிப் பார்த்தாள் போலே காணும் –

இனி ஒரு கார்யம் இல்லை என்கைக்கு இப்போது உனக்கு வந்தது என் என்ன
நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்-
இது தான் பிறர் அறியாமைக்கே தான் பரிஹரிக்கப் பார்க்கிறது –
இது அறியாதார் சிலர் உண்டாய் பரிஹரிக்க வேணுமே
இவள் தான் முந்துற அறியாமே பரிஹரித்து அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து
அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து -இப்படி போரா நிற்கச் செய்தே ஓர் அசல் அறிந்து-
மற்ற வாசல் அறிந்து -அவ்வளவில் அடங்காதே அவ் ஊரில் உள்ளவர்கள் அறிந்து
அது தான் புற வெள்ளம் இட்டு அவ் வழியாலே எங்கு உள்ளார்களும் அறிந்தார்கள் ஆய்த்து-
அறிந்து ஒழிந்தார் –
இவள் தான் திருக் கோட்டியூர் நம்பியை போலே -பகவத் விஷயம் ஒருவரால் அறியலாகாது
என்று மறைத்துக் கொடு போருமவள் ஒருத்தி போலே காணும்
நம்பி தாம் ஒரு திண்ணையிலே ஒருவரும் அறியாத படி பகவத் குண அனுசந்தானம் பண்ணி இருப்பர்-
எம்பெருமானார் எழுந்து அருளி -நம்பி மடம் எது -என்று கொண்டு தெண்டன் இட்ட வாறே
அங்குள்ளார் -எம்பெருமானார் நம் திருக் கோட்டியூர் நம்பி அகத்தை நோக்கி தண்டன் இடா நின்றார்
என்ற பின்பு இ றே நம்பியுடைய பிரபாவம் அங்கு உள்ளார் அறிந்தது-
ஆழ்வானும் ஆண்டானும் ஓர் ஆறு மாசம் சேவித்து இருந்த சந்நிவேசத்தைக் போரும் போது ஒரு வார்த்தை
கேட்டுப் போருவார்கள்
ஆழ்வான் ஒரு விசை ஆறு மாசம் சேவித்து நின்று போரப் புகா நிற்கச் செய்தே ஆழ்வானை-நம்மாழ்வார்
அடியேன் உள்ளான் –என்றபடி கண்டாயே -என்று பணித்தாராம்
அடியேன் க்ருதார்த்தன் ஆனேன் -என்று போந்தானாம்
என்னுள்ளான் என்ற அஹம் அர்த்தத்தை நிச்சயிக்கிற இடத்தில் அடியேன் -என்று
சேஷத்வத்தை நிரூபகமாகச் சொல்லுகிறது இ றே
ஜ்ஞானானந்த லஷணமுமாய்-ஜ்ஞான குண கமுமாய் -அசித் வ்யாவருத்தமுமாய் இருக்கும் என்னும் இடத்தை
மூன்றாம் பதத்தாலே நிரூபியா நிற்கச் செய்தே
முன்பே பாட க்ரமத்தாலே சேஷத்வத்தை இட்டு சொல்ல வேண்டும் படி இ றே சேஷத்வம் ஸ்வ ஸ்வரூபமாய் அற்ற படி –

நீ கை வாங்கினாய் என்னா-உன் இடையாட்டத்தில் நாங்கள் கை வாங்கப் பாரோமே –
ஆந்தனையும் ஹிதம் சொல்லி நோக்கத் தேடுவுதோம் இ றே-எங்களுக்கு உன் பக்கல் உண்டான நசையாலே -என்ன
என்னை மெய்யே நோக்கப் பாறிகோள் ஆகில் -தன்னுடைமை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவனை
என் கண்ணுக்கு இலக்காகப் பாருங்கோள் –
பாணியாது என்னை மருந்து செய்து -பண்டு பண்டாக்க யுறுதிராகில்-
பாணித்தல் -காலம் தாழ்த்தல் –காதல் நோயைத் தீர்க்கப் பரிஹாரம் செய்தல்
தாழாதே எனக்கு வேண்டும் பரிஹாரம் பண்ணி –
பண்டு பண்டாக்க யுறுதிராகில்-
பண்டு -சம்ச்லேஷ நிலை
பண்டு பண்டு -முந்திய நாயகனைப் பற்றி அறியாத நிலை
சம்ச்லேஷத்துக்கு முன்புத்தை பூர்த்தி எனக்கு உண்டாக்கப் பார்த்தி கோளாகில்-
கலக்கப் புக்கவன்று தொடங்கி-மெலிவுக்கு இ றே கிருஷி பண்ணிற்று –

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
மாணியுருவாய் –
உண்டு என்று இட்ட போதொடு -இல்லை என்று தள்ளிக் கதவடைத்த போதொடு
வாசி அற முகம் மலர்ந்து போம்படி இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையவனாய்
யுலகளந்த மாயனைக் காணில் –
த்ரை லோகத்தையும் அளந்து கொண்ட ஆச்சர்ய பூதனைக் காணில் –
குண ஜ்ஞானத்தால் ஜீவித்து இருக்கும் அவஸ்தை இல்லை என்கிறது
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருக்கும் -8-3- நிலை தாண்டிற்றே
தலை மறியும்-
தொடருகிற பாம்பை திரிய விடுவிக்குமா போலே -பிரிவாற்றாமையால் வந்த நோய் தீரும்

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் –
உங்கள் ஆணையே -உங்கள் மேல் ஆணை என்றபடி
நீர் என்னை நோக்க வேண்டில் -என்னுதல்
நான் தெரிந்து இருந்து உங்களுடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் பண்ணும் படியாக என்னை நோக்கப் பார்க்கில் -என்னுதல்

ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்-
அவன் தீம்புக்கு பெற்ற தாய் -பெரு நிலை -துணை -நிற்கும் ஊரிலே-என்னைக் கொண்டு பொய் போகடப் பாருங்கோள்-
அங்கனம் தீமை செய்வார்களோ நம்பீ-ஆயர் மட மக்களை –பெரிய திருமொழி -10-7-11-என்று இ றே அவள் சொல்லுவது
தீமையால் பூரணன் என்றவாறு நம்பீ –என்கிறாள்
இத்தை இ றே அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -3-9- என்கிறது –
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் -பெரிய திருமொழி -4-7-8- என்னுமவள் சந்நிதியிலே –
படிறு பல செய்து பாடி எங்கும் திரியாமே –என் பிள்ளையைப் போக்கினேன் —என்று அவன் தீம்பு செய்யப் பெறாததுக்கு வயிறு பிடிக்கிறாள் இ றே –

அஞ்ச உரைப்பாள் அசோதை –
இவன் தீம்பிலே புண்பட்ட பெண்கள் -இவன் தான் தோன்றி அல்லனே -இவனுக்கு ஒரு தாய் உண்டே –
அவளுக்கு அறிவிப்போம் -என்று முறைப்படச் சென்றால் அஞ்சும் படி பொடியாள் –
அவன் தீம்பிலே சதசாகமாக பணைக்கும் படி யாக வைத்துப் பொடிவது –
சிரித்துக் கொண்டு –அங்கனம் தீமைகள் செய்வார்களோ நம்பீ –என்னும்
இவன் இங்கிதஜ்ஞனாய் –இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்ய விழிக்கும்-பிரான் -திருவாய் -1-7-5-என்கிறபடியே
அப்போதே அவ்விடம் தன்னிலே நின்றவர்களும் தானும் அறிந்ததாக சில தூர்த்த க்ருத்யங்களைப் பண்ணும் –
ஆணாட விட்டிட்டு இருக்கும்
அவனை ஆணாட்டம் அடிக்க விட்டு -ஆனந்த நிர்பரையாய் இருக்கும் –
என் மகனுக்குத் தோற்று சிலர் வந்து முறைப்பட பெறுவதே -என்று பெறாப் பெரு பெற்றவளாய் -க்ருதார்த்தையாய் இருக்கும் –

————————————————————————

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி  போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3-

இவளும் நம்மோபாதி பெண் பிறந்தாள் ஒருத்தி அன்றோ -இவளை விடை –
தமப்பனாய் -நியமிக்கைக்கு சக்தனாய் இருக்கச் செய்தே நியமியாதே இருக்கிற
ஸ்ரீ நந்தகோபன் வாசலிலே கொடு பொய் பொகடுங்கோள் -என்கிறாள் –

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் –
பழி விளைந்தால் பழி பரிஹரிக்கை பணி யுடைத்து நீங்கள் தான் பழி
பரிஹரியாமல் இருக்க வல்லவர்கள் அல்லி கோள்
இனி அதுவும் பிறக்கக் கொள்ள பின்னை நின்று மிறுக்குப் படாதே -ஏற்கவே பரிஹரிக்கப் பாருங்கோள் –
எனக்கு விளம்பம் பொறுக்கலாய் தாழ்க்கிறேன் அல்லேன் –
உங்களைப் பார்த்து கால் தாழ்க்கிறேன் அத்தனை -அது தான் இனிச் செய்யப் போகாது -ஆனபின்பு ஏற்கவே பரிஹரிக்கப் பாருங்கோள் –

தனி வழி  போயினாள் என்னும் சொல்லு வந்த பின்னைப் பழி காப்பரிது
கடகரை ஒழிய தனியே புறப்பட்டு போகைக்கு மேற்பட பழி இல்லை
தாய் தமப்பன் உறவு முறையார் என்கிற இவர்களை விட்டுத் தனி வழியே போயினாள் –
நாயகன் பின்னே போகையும் அன்றிக்கே தானே தனியே போயினாள் -என்கிற இந்தச் சொல்லு நாட்டிலே வார்த்தை யானால்
பின்னை பரிஹரிக்கப் போகாது
வயோ அச்யா ஹ்யதி வர்த்ததே -யூத -5-5- என்னக் கடவது இ றே –
மேலும் இப் பேற்றை யன்றோ பெற இருக்கிறது -என்று வரும் நாளை நினைத்து ஆறி இருக்கப் போகாது –
முன்பு இழந்ததும் இப்பேற்றை யாகாதே -என்று வெறுக்க வேணும் –
இது தான் பழி என்று புத்தி பண்ணிப் பரிஹரிக்கவும் வேணும் என்று இருந்தாய் ஆகில்
முதலிலே இது பிறவாதபடி-க்ரம ப்ராப்தி பார்த்து பொறுத்து எங்களுக்காக இருந்தாலோ என்ன –

மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்-
ஒரு தாய் தமப்பனைப் பார்த்து ஆறி இருக்கலாம் படியோ அவனுடைய சௌந்தர்ய சீலாதிகள் வந்து நலிகிற படி –
நானும் ஆந்தனையும் பாரா நின்றேன் -அவன் உரு வெளிப்படடிலேயே முற்பாடனாகா நின்றான்
காசித் சாவசதஸ் யாந்தே ஸ்தித்வா த்ருஷ்ட்வா பஹிர்குரும்-தன்மயத்வேன கோவிந்தம் தத்யௌ மீலித லோசநா-
தச்சித்த விமல ஆஹ்லாத ஷீண புண்ய சயா ததா -தாதா ப்ராப்தி மஹா துக்க விலீ நாசேஷ பாதகா –
சிந்த யந்தி ஜகத் ஸூ தீம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்-நிருச்ச்வா சத்யா முக்திம் கதாநய கோப கன்யகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-20–22-
இந்த இடத்துக்கு பட்டர் அருளிச் செய்யும் படி -திருவாய்ப்பாடியிலே -கிருஷ்ண சம்ச்லேஷத்தில் இவளைப் போலே
புதியார் இல்லை –என்று -அதாவது -குரு தர்சனம் பண்ண வல்லள் ஆனாளே
தாய் தந்தையரைப் பார்க்க அவளால் முடிந்ததால் கண்ணனை நோக்கி ஓடுவதற்கு தடையாக வாயிற்றே –
யயௌ காசித் ப்ரேமாந்தா தத் பார்ச்வம விலம்பிதம்-ஸ்ரீ விஷ்ணு -5-13-19–என்கிறது இ றே
ஒருத்தி போனாள் என்கிறது -வழி காட்டினார் ஆர் என்றால் பிரேமத்தால் நெஞ்சு இருண்டது –
அந்த இருட்சி வழி காட்டப் போனாள் –
இவளை நோக்கும் போது சிந்தயந்தி புதியவளே -குரவ கிம் கரிஷ்யந்தி -இத்யாதி -ஸ்ரீ விஷ்ணு -5-18-22-
என்றபடி பெரியவர்களை உதறிச் சென்ற ஆய்ச்சியின் நிலையிலே நின்று ஆண்டாள் பேசுகிறாள்
தூ வலம் புரி யுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே கோவலர் சிறுமியர்
இளம் கொங்கை குதுகலிப்ப உடலுள் அவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து -பெரியாழ்வார் -3-6-1-என்றபடி
பலவகைப் பட்ட அரண்களிலே பெண்களை கொடு புக்கு கட்டிக் கொடு கிடந்தார்கள்
உறவுமுறையார் இட்ட அரணையும் கடந்து -காத்துக் கிடக்கிறவர்களையும் உறக்கிச் செவியிலே வார்த்தை
சொல்ல வல்லதொரு தூது போனான் –
குழலோசை செவிப்பட அநந்தரம் முலைகள் உணர்ந்து -பெண்களை எழுப்பி -குழலோசை வந்தது
நாம் போதும் கொல்-என்ன –அவர்கள் -காத்துக் கிடக்கிறவர்கள் உணரும் கிடாய் -என்ன
ஆனால் நீங்கள் அவர்கள் உறங்கினால் வாருங்கோள் -நாங்கள் முன்னே போகிறோம் -என்றன –
குதுகலிப்ப -என்று இவற்றை சேதன சமாதியாலே சொல்லும் போது அங்கனம் ஆக வேணும் இ றே
இளம் கொங்கை -சொல் கேளா பிரஜைகள் யாய்த்து
காவலும் கடந்து -ஷூத்ர பாஷாணங்கள் கிடக்க மேலே நீர் போமா போலே -நீர் வெள்ளமானால் மலை மேலும் ஓடும்
அப்படியே இட்ட அணையை ஒன்றாக நினையாமைக்கு ஹேது -கௌதூஹலத்தின் மிகுதி இ றே –
அப்படியே தாய் தமப்பனை நாக்கு வளைக்கப் பண்ணின வடிவு அழகு இருக்கிறபடி
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற-

கொந்தளமாக்கிப் பரக்கழித்துக்
கொந்தளமாக்கி -சிலுசிடுகை –
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக்-சண்டையிட்டு பழி விளைத்து –
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற –
ஸ்ரீ நந்தகோபர் தம்முடைய ராஜ்யத்தில் வன்னியம் அடிக்கைக்காக நோன்பு நோற்றுப் பிள்ளை பெற்றாராய்
அது கண்டி கோளே-அவன் இவனை நியமியாதே இருக்கிறபடி
நந்த கோபாலன் கடைத் தலைக்கே –
நந்த கோபாலன் கடைத்தலை -என்றால் பிரசித்தம் இ றே –
பட்டர் அருளிச் செய்வர் என்று -இவனால் புண்பட்ட பெண்கள் அடைய கட்டணங்களும்-stretcher -கையும் பசும் துவலுமாய்த்து-அவர் வாசல்
விஷம் தீர்ப்பார் வாசல் போலே -பசும் துவல் -வைவர்ண்யம்-

நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்-
நடுவான இருளிலே கொடு பொய் பொகடுங்கோள் -நீங்கள் வெளியிலே கொடு போய்ப் பொகட்டு-
அவன் பித்ராதிகளுக்கு லஜ்ஜித்து புறப்பட்டு மாட்டாது இராமே -வெளிச்சத்தில் கொண்டு பொகட்டால் லஜ்ஜிக்குமே –
இருளிலே கொடு பொய் பொகடுங்கோள் -இருள் அன்ன மா மேனியாகையாலே-பெரிய திருவந்தாதி -26-
தன நிறத்தோடு விகல்ப்பிக்கலாம் –-இருளிலே புறப்பட்டு அவனை அணைக்கலாம் படி –
மகனைப் பெற்ற நந்த கோபாலன் –
இவனைப் பெறுகைக்கு நோன்பு நோற்றவன் இ றே –
தாம் பண்ணின துஷ்கர்ம பலம் தானே அனுபவிக்கும் படி அவன் வாசலிலே பொகடுங்கோள்
அங்கே பொகடச் செய்தே பின்னையும் உங்களுக்கு பழி வராதே கொல்லுங்கோள் –
வெளியிலே கொடு பொய் பொகட்டு –வெளிச்சத்தில் அவன் உறவு முறையாருக்கு லஜ்ஜித்து புறப்பட மாட்டாதே இருக்கும் –
அவ்வளவிலே நான் முடிவன் -பின்னையும் உங்களுக்கு பழி வாராதபடி பாருங்கோள் –
எனக்கே நள்ளிருட் கண் என்னை யுய்த்திடுமின்–

————————————————————————

அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்--12-4-

அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று–
முலைகளினுடைய-சங்கல்ப வாக்கியம் இருக்கிற படி -பூ வேளைக் காரரைப் போலே யாய்த்து முலைகளின் படி –
அரசரின் தலையிலே பூக்களுக்கு ஊறு நேர்ந்தாலும் தங்களை அழித்து கொள்வார்களாம் –
ராஜாக்களின் தலையில் பூ மாறில் குத்திக் கொள்வார் சிலர் உண்டு –
அப்படியே கையில் திரு வாழி ஒழிந்த அன்று அவன் தான் வரிலும் வேண்டேன் –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படி -அழகிய கையிலே கல்பக தரு பணைத்துப் பூத்தால் போலே யாய்த்து கையில் திருவாழி இருப்பது
வெறும் புறத்திலே கொல்ல வற்றாய்த்து திருக் கை தான் -அதுக்கு மேலே திரு ஆழியையும் தரித்தான்
பிரதிகூலரைக் கை கழியப் போய்க் கொல்லும்-அனுகூலரை கை மேலே இருந்து கொல்லும்
கருதிமிடம் பொருது –கைந்நின்ற சக்கரத்தன்–திருவாய் -10-6-8=-

செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்-கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் –
சிவந்த கச்சைக் கொண்டு கண்ணை மறைத்தாய்த்து முலைகள் -கண் -முலைக் காம்பு
பெரு மானிடவரும்-புருஷத்தமன் அன்றோ – உண்டு போல் காணும்
மாநுஷீம் தநும் ஆஸ்ரிதம் பரம் பாவம் -ஸ்ரீ கீதை -9-11- என்னக் கடவது இ றே –
காணில் நாணும் –
சமைய வளர்ந்த முலைகளானவை-உள்ளே குடிபுகும் –
ஸ்வா நி காத்ராணி லஜ்ஜயா-ஒருவருக்கு ஒருவர் அம்பேற்றுப் பெறப் படுகிற ராஜ்ஜியம்
பெருமாள் சொல்லக் கேட்டு லஜ்ஜையால் உடல் குன்றினால் போலே
இவர்கள் -ஸ்ரீ பரத ஆழ்வான் இளைய பெருமாள் -கையிலே படுகிற பாடு இது -அயோத்யா அரசு –
பரதனைக் கொல்லுவன் குத்துவன் என்றால் போலே இளைய பெருமாள் முனிதல் தீர சில வார்த்தை சொல்ல
பெருமாள் பல படிகளாலும் மாற்றிப் பார்த்தார் -பின்னையும் மீண்டிலர்
பாடமித்யேவ வஹ்யாதி -என்று
அதுவோ பிள்ளைக்கு ராஜ்ய ஸ்ரத்தை ஓடுகிறது -பிள்ளாய் நீ அத்தை தவிர் -என்று நான் சொன்னவாறே
தலைச் சுமையோபாதி பொகட்டுக் போகிறான் -என்றவாறே இளைய பெருமாளைக் கண்டுவிட்டதில்லை –
காத்ரை சோகாபி கர்சிதை –என்கிறபடியே ஒன்றைக் கொண்டே அணைய வேணும் -பிராட்டி திருவடிக்கு காட்டினால் போலே
ஸ்ரீ ராம பிரானையே அணைய ஆசைப் பட்டது போலே
அல்லாதார் செய்த படி செய்ய -இச் சிறு பிரஜைகள் கண்ணிலே கண்ண நீரைப் பாரி கோள் -என்னுமா போலே
இவை நோக்கிக் காணீர் –
அவனை நினைத்து இவை வீங்கின படி பாரி கோள் –கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் –

கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
பசுக்களின் பின்னே போய்த் தீம்பிலே கை வளரும் கிருஷ்ணனுக்கு அல்லது –
வழியே போய் வழி வந்து ஏக தார வ்ரதனாய் இருக்கும் சக்ரவர்த்தி திருமகனுக்கு வழி போகாது –
மம து அஸ்வா நிவ்ருதச்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மநி–அயோத்யா -69-1-
அஸ்வம் ஹ்ருதயம் அறிக்கைக்கு ஸூ மந்தரன் -தன்னைத் தான் மதித்த படியால் –மம -என்கிறான்
து -இற்றைக்கு முன்பின் இன்றிக்கே இன்றைக்கே உள்ளதொரு விசேஷமாய்த்து இது
அஸ்வா –என் கருத்திலே நடந்து போனவை
நிவ்ருதச்ய -பெருமாளை எழுந்து அருளிவித்து கொடு போகிற போது போய்த்தின
ந ப்ராவர்த்தந்த வர்த்மநி– வழி செய்து கிடக்கிற பெரு வழியை விட்டு காடு பாயத் தொடங்கிற்றன

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்-
அடிச்சுவடு உருவெளிப்பாடாய் -மானஸ அனுபவ மாத்ரமாய் -அனுபவிக்கலாம் இங்குத்தை சம்ருத்தியை விட்டு
அடிச் சுவட்டை கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள் –
தூய பெரு நீர் யமுனை – இ றே
தானும் அவனுமாய் ஜலக்ரீடை பண்ணி விளையாடக் காணும் நினைவு –

————————————————————————————–

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-

நோவு அறிந்து அதுக்கு ஈடாக பரிஹாரம் பண்ண வேணும் இ றே -என்று அதிலே துக்கப் படத் தொடங்கினார்கள்-
உறவுமுறையார் என்னா -உங்களுக்கு என் நோவு அறியப் போகாது -என்கிறாள் –

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது –
இந்நோவு விளைத்தவனுக்கும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாது
இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்காடும் இளம் தெய்வம் அன்று இது -திருவாய் -4-6-2- என்னக் கடவது இ றே –
யஸ்யா மதம் தஸ்ய மதம் –கேன -2-3-என்றதுக்குள்ளே புக்கான் இ றே அவனும்
தாம் தம் பெருமை அறியார் -பெரிய திரு மொழி -5-2-1- -தன்னைப் பரிச்சேதித்தால் இறே என் நோயைப் பரிச்சேதிக்கலாவது

எந்நோய்-
ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்த -ராம விரஹத்தாலே -அத்தைக் காணா-அவன் அருகு நின்ற –
-மந்தரை -கைகேயிக்கு -மோஹிக்க ஒண்ணாது இ றே
அஸ்ய ராஜ குலச்யாத்ய த்வத் அதீனம் ஹி ஜீவிதம் –அயோத்யா -87-8-
பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான் –இனி நீ நோக்கும் இத்தனை இ றே எங்களை -என்கிறார்கள் அல்லர்
உன் முகத்தில் பயிர்ப்பைக் கண்டு போனவர் உன்னை இழக்க மாட்டாமையாலே மீள்வர் -என்னும் இது
பற்றாசாக இ றே நாங்கள் நாங்கள் ஜீவித்து இருப்பது
புத்ர வ்யாதிர் ந தே கச்சித் -நின்றால் போலே ரசவாதிகள் போமா போலே மோஹித்துக் கொண்டு நிற்கக் கண்டார்கள்
பிள்ளாய் உனக்கு ஓடுகிற நோய் என் என்று கேட்கிறார்கள் -கௌசல்யாதிகளும் உட்பட –
ராம விரஹம் சர்வ சாதாரணமாய்த்து-தங்களுக்கும் உண்டாய் இருக்க
உனக்கு ஓடுகிற தசை என் என்று கேட்கும் படி யாய்த்து இவன் மோஹித்த சடக்கு
தங்கள் அளவில் ஆகில் இ றே இவனுக்கும் அதுவே என்று நினைத்து இருக்கலாவது – –
அபிவ்ருஷா -அயோத்யா -59-4-என்னுமா போலே மரங்களும் வாடா நிற்க –இவனைக் கேட்க வேண்டாம் இ றே
ஒரு வ்யக்திகதமான விசேஷம் உண்டானால் அந்த வ்யக்தி தன்னையே கேட்டு அறிய வேணும் இ றே
எந்நோய் –
தெய்வ நந்நோய்-திரு விருத்தம் -53- -என்னுமா போலே இவள் தனக்கும் ஆதர விஷயமாய்
உத்தேச்யமாய் இருக்கிறது காணும் இந்நோய் தான் –

அம்மனைமீர் துழிதிப் படாதே-
பெற்ற பிராப்தி கொண்டு அறிவோம் என்றால் அறியப் போமோ
உங்களுக்கும் இப்போதாகப் பாகம் பிறந்தது -முன்பு பாலைகளாய் அன்றோ –
பிராப்யத் த்வரையாலே துடித்தவர்கள் தானே
துக்கப் படாதே –துழதி -துக்கம் –
இது நீங்கள் அறிந்த வகையாலே பரிஹரிக்கப் பார்த்தி கோளாகில்-உங்களுக்கு துக்கமே சேஷித்து விடுவது –
நீ கை வாங்கினாய் என்னா நாங்களும் கை வாங்க மாட்டோமே –
நாங்கள் உன்னை இழக்க மாட்டோமே
நீ பரிகாரமாக நினைத்து இருந்தது என் -என் -கேள் என்று சொல்லுகிறாள் –

கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்-
கரும் கடல் போலே -ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய் இருப்பான் ஒருவன் உண்டு
நோவுக்கு நிதானைத்தைச் சொல்லி சொல்கிறாள் ஆயத்து
பரிஹாரத்தை இவர்கள் தாங்களும் அடியே பிடித்து இவள் தன பக்கலிலே கேட்டறிய வேண்டும்படி யாய்த்து கலங்கின படி –
ஒருவன் –
நீங்களும் பரிஹாரத்தில் இழியும் அத்தனை போக்கி உங்களுக்கு அடி ஆராயப் போகாதாய்த்து –
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்-
யோகம் -ஔஷத பிரயோகம்
கைக் கண்டு இருந்து இ றே இவள் தான் சொல்கிறது –
இவள் முன்பு சொல்லிப் போரும் வார்த்தைகளில் ஓன்று இ றே இப்போது சொல்லுகிற பரிகாரமும் என்ன ஒண்ணாது
கைக்கண்ட உபாயம் என்றுமாம் –யோகம் -உபாயம் –
கௌந்தேய பிரதி ஜா நீ ஹி -இவ்வர்த்தத்தில் நம்மைப் பார்த்து இருக்க வேண்டியதில்லை காண்
நீ பிரதிஜ்ஞை பண்ணு
பிரதிஜ்ஞாம் குரு –ஸ்ரீ கீதா -பாஷ்யம் 9-3- என்கிறபடியே
மே-நம்மை அறியாயோ நீ-
ந மே பக்த ப்ரணச்யதி -நம்மைப் பற்றினார்க்கு ஒரு காலமும் அநர்த்தம் வாராது காண்-
அக்னி நா சிஞ்சேத்-நெருப்பாலே நனைக்கக் கடவன் என்றால் போலே அசங்கதம்-

ஆரே துயர் உழுந்தார் -துன்புற்றார் ஆண்டையார் -காரே மலிந்த கரும் கடலை-நேரே கடைந்தானை
காரணனை நீரணை மேல் பள்ளி அடைந்தானை நாளும் அடைந்து -மூன்றாம் திரு -27-
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் -அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிற பாப பலங்கள் அனுபவித்தார்
உண்டு என்று கேட்டறிவார் உண்டோ
துயர் உ ழுந்தாரில்-– துன்புற்றார் உண்டோ -துன்ப்ற்றார் யாரோ –பாபங்களைப் பண்ணி வைத்து-
நம்மை ஆச்ரயித்து பின்னும் பல அனுபவம் பண்ணினார் உண்டு என்று கேட்டு அறிவார் உண்டோ –
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரில் முன்பு கை வந்தபடி திரிந்தார்களே யாகிலும் அவன் திருவடிகளிலே-
தலை சாய்ந்த வாறே இவை தானே சவாசனமாக கழிந்து நிற்றல் –
நாட்டிலுள்ள பாபம் எல்லாம் சும்மெனாதே கைவிட்டோடி தூறுகள் பாய்ந்தனவே –பெரியாழ்வார் -5-4-3-
அன்றிக்கே -உகவாதவர் மேலே ஏறிடுதல் அன்றியே தன மேலே ஏறிட்டுக் கொள்ளுதல் செய்யும் அத்தனை
உரஸா ப்ரதிஜக்ராஹ -பகதத்தன் அம்பை தான் ஏறிட்டுக் கொண்டது போலே –
என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் அவன் வார்த்தை பழுதாகாதே –

நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
இங்கே இருந்து எனக்குப் பரியாதே
அவனுக்கு பரியலாம் தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள்-
முதலிலே தொடங்கி -கடம்பிலே ஏறினதுமே -பயாவஹமாய் இருப்பது ஒன்றாய்த்து
முதலிலே விஜ ஜாலம் தாரகமாக முளைத்து வளர்ந்தது இ றே
ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு சென்று காளியனைக் கிளப்பி –
அவன் கிளம்பின வாறே அவன் தலை இலக்காகப் பாயலாம் படி கடம்பிலே உயர ஏறினான் ஆய்த்து
பாட்கிற போதே காளியன் தலை காலாகப் பாய்ந்தான்

போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–
இதுக்கு பட்டர் அருளிச் செய்ய நான்-நம்பிள்ளை – கேட்டேன் -என்று அருளிச் செய்வர்-
காளியன் தலையிலே கிருஷ்ணன் பாய்ந்தான் -என்று கேட்டார் கேட்ட இடங்களிலே ஆழ விழுந்ததாய்த்து
பொய்கை அளவும் கால் நடை தந்து போய் புக வல்லார் இல்லையாய்த்து இ றே
அனந்தாழ்வான் எம்பெருமானாரைக் காண வேணும் என்று வாரா நிற்கச் செய்தே -வடகரை
அளவிலே வந்தவாறே -திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று சில ஏகாங்கிகள் தலைகளையும் சிரித்து ஏறினார்கள்
அவர்களைக் கண்டு -அனந்தாழ்வான் உடன் வந்த ஸ்ரீ நம்பி குஹ தாசர் -மரத்திலே ஏறி விழுவதாக
ஏறினாராய்-தெளிந்து ஏறின நீ சாவ மாட்டாய் காண் போந்திழி -என்றானாம் –
பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–
இங்கே தெளிவாக இருந்து கிலேசப்படாதே
மோஹித்து கிடக்கலாம் தேசத்திலே பொகடுங்கோள் –

———————————————————————–

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
கார் காலத்திலே குளிர்ந்த முகிலும்
கருவிளைப்பூவும்
காயா மலரும் –
மேகத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லப் புக்கவள் -ஒன்றும் போராமையாலே பலவற்றிலேயும் கதிர் பொறுக்குகிறாள் –
(சமுதாய சோபை சொல்லி அடுத்து )அவயவ சோபைக்கு-கமலப் பூவையும் சொல்கிறாள் –

ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு –
பற்றி இழா நின்றன –
என் சொல்லி என்னில் –

இருடீகேசன் பக்கல் போகே யென்று
லஷ்மணே ந கதாம் கதிம் -என்கிறபடியே –
கரணங்கள் உடையவன் பக்கலிலே போனால் அவற்றின் பின்னே போகை இ றே உள்ளது
யச்யாத்மா சரீரம் -அன்றோ –கரணாதி பாதிப -என்னக்  கடவது இ றே
பரம சேஷியைக் கண்டால் பின்னை த்வார சேஷிகள்-
ஹ்ருஷீகம் -இந்த்ரியங்கள் -அவற்றுக்குத் தலைவன்- ஹ்ருஷீ கேசன் என்றபடி அளவில் நில்லாது இ றே அவை –

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து-
நானே சென்று முறை கெடப் பற்றினேன் ஆகாமே பாருங்கோள்
என் செல்லாமை பரிஹரிக்கைக்கா அன்றிக்கே அவன் செல்லாமை பரிஹரிக்க போனேனாம் படி பண்ணப் பாருங்கோள் –
வேர்த்து –
பசுக்களைக் கொண்டு போனால் காதம் இரு காதம் அவ்வருகே கை கழிய விட்டு
அங்கே ரிஷிகளுடைய ஆஸ்ரமங்களிலே சேமம் -தளிகை -வேண்டிவிட்டு -அவர்கள் க்ரியா பிரதானராய் இருந்த வாறே
பத்நீ சாலைகளிலே வேண்டிப் போக விடும்
அவர்கள் சேமம் கொடுத்து விட்டால் அதின் வடிவு வரவு –பார்த்து திருமேனி எங்கும் வேர்த்துப் பசித்து தடுமாறி –
இதனால் வேண்டி அடிசில் ஆய்த்து
விரும்பி இட்ட சோறு –
பிரயோஜ நாந்தரர் இடும் அவற்றை குழியிலே கால் கழுவினாரோ பாதி யாகவாய்த்து கொள்வது –
பித்ருக்கள் நிமித்தமாக வரிக்கப் பட்டது போலே இல்லாமல் -தானும் விதி ப்ரேரிதனாகக் கொள்ளும் என்றபடி
பெரியாழ்வார் பெண் பிள்ளை இடுமது போலே –இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-நான் ஓன்று
நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -9-7–என்னுமா போலே
பெரியாழ்வார் மகளாய் இழந்து இராதே ஒரு பட்டை சோற்றை கொண்டு போயாகிலும் கிட்டுவோம் -என்கிறாள்-

நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –
பத்தம் -சமைத்த சோறு —விலோசனம் -பார்வை-
(பிரசாதம் எதிர் பார்த்து இருக்கும் -என்றே சப்தார்த்தம் )
சோறு பார்த்து இருந்த இடமாய்த்து-
சோறு பார்த்து இருக்கும் இடத்திலே -என்றபடி

—————————————————————————————————

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-

உனக்கு இஸ் ஸ்வபாவ அந்யதாபாவம் எத்தாலே தீரக் கடவது என்ன -அது இன்னது என்கிறாள்
அவன் வெற்றி மாலையிட்டு நிற்கிற இடத்திலே என்னைக் கொடு பொய் பொகடுங்கோள் என்கிறாள்

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
வண்ணம் திரிவும்-நிறத்தினுடைய அந்யதா பாவமும்
மனம் குழைவும்-லாப அலாபங்களுக்கு இடையக் கடவதல்லாத நெஞ்சினுடைய நெகிழ்ச்சியும்
மானமிலாமையும்-எல்லா அளவிலும் உண்டான ஸ்த்ரீத்வ அபிமானம் வாசனையோடு குடிபோகையும்
வாய் வெளுப்பும்-போக்யத் த்ரவ்யங்களைக் குறைக்கையினாலே வாயிலே உண்டான வெளுப்பும் –வாய்ப்புறம் வெளுத்து -நாச் திரு -1-8-

உண்ணல் உறாமையும் உள் மெலிவும் –
வேறு ஒன்றும் தாரகமாய் இருப்பது இல்லாமையினாலே சரீரத்தில் பிறந்த பல ஹானியும்
இவை எல்லா வற்றுக்கும் அடியான ஜ்ஞான சங்கடமும் -உள் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது -ஜ்ஞான சங்கோசம் –

ஓத வண்ணன் என்பான் ஒருவன்-
இவை எல்லாம் இப்படிப் பண்ணி வேறு படுத்தின வடிவு அழகு இருக்கிறபடி –
ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையான் ஒருவன்
ஒருவன் -இதர சஜாதீயன் –என்றுமாம் –

தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும்
அவன் தான் இதர விசஜாதீயனாய் இருக்குமா போலே –
அம்மாலையின் படியும்
அத்தைக் கொடு வந்து ஸ்பர்சிக்க இது தணியும் –

பிலம்பன் தன்னை பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்-
கன்றுகள் மேய்க்கும் பிரதேசத்தில் -ஆல மரத்தின் அடியிலே –ப்ரலம்பா ஸூ ரன் கட்டழிந்து -சந்தி பந்தங்கள் குலைந்து
சிதிலனாம் படியாக நம்பி மூத்த பிரான் வென்ற பாண்டீர வடத்திலே கொடு பொய் பொகடப் பாருங்கோள் –
இளைய பெருமாள் இந்த்ரஜித் வதம் பண்ண -அந்த வெற்றி பெருமாளானதாப் போலே யாய்த்து இங்கும்
நம்பி மூத்த பிரானுடைய வெற்றியும் கிருஷ்ணனதாய் இருந்தது இ றே –
அவன் வீர அபிஷேகமும் விஜய அபிஷேகமும் பண்ணி மாலையிடும் போது–(வெற்றி வாகை சூடும் பொழுது )அவன் தனியே நில்லாமே
நானும் ஒக்க நின்று மாலையிடும்படியாக என்னை அங்கே கொடு பொய் பொகடுங்கோள்-

———————————————————————————————

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-

கெடுவாய் நீ இங்கனே கிடந்தது படா நிற்கிறது என் –
பசுக்களை மேய்க்கை நித்ய ஸூ ரிகளுக்கு ஓலக்கம் கொடுத்தது என்னலாம் படி கன்றுகளின் பின்னே
அவற்றினுடைய ரஷணத்துக்காக திரிவான் ஒரு பாலனுமாய்-
ஓர் ஊரிலே தங்குகையும் அன்றிக்கே -பசுக்களுக்கு நீரும் புல்லும் உள்ள விடத்தே தங்குவான் ஒருத்தனுமாய்-
எளியராய் இருப்பார் செய்வித்தை செய்து -எளிய த்ரவ்யங்களைப் புசித்து -இப்படி திரிவான் ஒருவன் காண்-
அவனைப் பெறுகைக்கோ நீ இப்படி படுகிறது -என்ன –

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
வானிளவரசாய்-பெரியாழ்வார் -3-6-3- இருக்குமவன் –திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –திருவாய் -10-3-10-என்கிறபடியே-(தெய்வத்தை காட்டிலும் ஐந்தாம் வேற்றுமை -அதை விட / இரண்டாம் வேற்றுமை அங்கேயும் -டியோ டியோ -சொல்லி -பசு மேய்க்கும் மந்த்ரம் என்பான் -ஹாவு ஹாவு சொல்வது போலே )
பசுக்களை மேய்க்கையை உகந்தான்
அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத கன்றுகளை மேய்க்கையையே மிகவும் பெறாப் பேறு பெற்றானாக
நினைத்து இருந்தான் –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16-
இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டைத் தேடி
அங்கு தங்கும்படியான ஜன்மமும் ஆகப் பெற்றான் –

பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
வெண்ணெயைத் தனக்கு தாரகமாகக் கொண்டு -அது தானும் நேர் கொடு நேர் கிடையாமே- களவு கண்டு புஜிக்கபுக்கு-
அதுவும் தலைக் கட்டாமே- ஓர் அபலை கையிலே அகப்பட்டு-
அவள் வர விழுத்து -ஒன்றோடு கட்டக் கண்டு-(ஏங்கி அழுது -உரால் மூச்சு விட்டாலும் இவன் விடான் -ஏங்குவதே குரலுக்கும் இவனுக்கும் வாசி )
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேதுவான -தான் பிரதிகிரியை பண்ண மாட்டாதே நின்றான் –
சக்கரவர்த்தி திருமகன் காடேறப் போனவிடத்திலே பிதாவாலே உபேஷிக்கப் பட்டான் என்று உகவாதார்க்குச் சொல்லலாய் –
இருப்பதொரு உண்டு உண்டு இ றே அதுவும் இல்லையாய்த்து இவனுக்கு
பாவிகாள்
மகா பாவத்தை பண்ணினி கோளே
உங்களுக்கு எச்சுக் கொலோ –
உங்களுக்கு குணமே குற்றமாகைக்கு நீங்கள் சிசூபாலன் பிறந்த முஹூர்த்தத்திலேயோ பிறந்தது-
எங்கள் வர்க்கத்தில் உள்ளார் –எத்திறம் -திருவாய் -1-3-1–என்னுமது உங்களுக்கு ஏச்சுக்கு உடலாவதே -(குணங்களுக்கு உன்னால் பெருமை -லோக விபரீதம் –மாடு மேய்க்க தான் லாயக்கு வசவும் உண்டே -அதே நீ செய்தால் கொண்டாட்டம் தானே -)

கற்றன பேசி வசவு உணாதே –
நீங்கள் உங்களுக்கு பிரதிபந்தங்களைச் சொல்லி என் வாயாலே தக்கன கேளாதே

காலிகளுய்ய மழை தடுத்த கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–
பண்ணின உபகாரம் அறியாத பசுக்களும் தத் ப்ராப்யருமான இடையரும் உஜ்ஜீவிக்கும் படியாக மழையால் வந்த நலிவை
பரிஹரிக்கைகாக மலையை எடுத்து பிடித்துக் கொண்டு நின்றான் ஆய்த்து
தன்னைப் பேணாதே பர ரஷணம் பண்ணும் இதுவே யாத்ரையாய் இருப்பான் ஒருவன் –
தலைக்காவலாக வைத்த இந்த்ரன் தானே பாதகனாக -அவனால் வந்த நலிவை பரிஹரிக்கைக்காக
ரஷணத்துக்கு-பரிகரமாகக் கொண்டு அவன் கோவர்த்தனத்தை தரித்து கொண்டு நின்றான்
அவன் தனியே நில்லாமே நானும் ஒரு தலை தாங்கும் படி என்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்

————————————————————————————————

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை  இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்-

இவள் விரஹத்தாலே தரிப்பற்று நோவு படுகிற சமயத்திலே -வளர்த்த கிளியானது முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தை
இவளுக்கு சாத்மியாதே தசையிலே சொல்லிக் கொண்டு அங்கே இங்கே திரியத் தொடங்கிற்று
இது தான் ச்வைரமாக சஞ்சரிக்கும் போது அன்றோ நம்மை நலிகிறது -என்று பார்த்து கூட்டிலே பிடித்து அடைத்தாள்-(கண்ணன் நாமமே குழறிக் கொல்ல கூட்டில் அடைக்க கோவிந்தா என்றதே )
அங்கே இருந்து கோவிந்தா கோவிந்தா என்னத் தொடங்கிற்று –
கோவிந்தா கோவிந்தா –
நாராயணாதி நாமங்களும் உண்டு இ றே –
இவள் தான் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று கற்பித்து வைக்கும் இ றே
அது மர்மம் அறிந்து உயிர் நிலையிலே நலியா நின்றது –
இவன் தான் பசுக்களை விட்டுக் கொண்டு தன்னைப் பேணாதே அவற்றினுடைய ரஷணத்துக்காக அவற்றின் பின்னே போம்
தனிமையிலே யாய்த்து -கோவிந்தன் -பசுக்களை அடைபவன் -இவள் தான் நெஞ்சு உருகிக் கிடப்பது –
இப்போது அந்த மர்மம் அறிந்து சொல்லா நின்றதாய்த்து –

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
இது சோற்றுச் செருக்காலே இ றே இப்படிச் சொல்லுகிறது -அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இ றே அவள் நினைவு –
விண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்
பாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது
அவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது
கிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –

நாட்டில் தலைப் பழி எய்தி
நாட்டிலே தலையான பழியை பிராபித்து -நாட்டார்க்கு துக்க நிவர்த்தகமாய் நமக்கு தாரகமான(-திரு நாமம் ) -இவளுக்கு மோஹ ஹேது வாகா நின்றது
இது என்னாய்த் தலைக் கட்ட கடவதோ -என்று நாட்டிலே தலையாய் இருப்பதொரு பழியை பிராபித்து –

உங்கள் நன்மை  இழந்து தலையிடாதே-
அவன் தானே வரும் அளவும் பார்த்து இருந்து இலள்-இவள் தானே போவதாக ஒருப்பட்டாள்-என்று உங்கள் நன்மையை இழந்து கவிழ தலை இடாதே
முகம் நோக்க முடியாதபடி லஜ்ஜையால் தலை கவிழ்ந்து கிடப்பதைக் சொல்கிறது –

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–
நெற்றிகள் உயர்ந்து தோன்றா நின்றுள்ள மாடங்களால் சூழ்ந்து தோன்றா நின்றுள்ள ஸ்ரீ மத் த்வாரகையிலே கொடு போய் பொகடுங்கோள்-
பதினாறாயிரத்து ஒரு மாளிகையாக எடுத்து -என்னை அதிலே வைத்து அவன் அவர்களோடு ஒக்க அனுபவிக்கலாம் படியாக-
என்னை அங்கே கொடு போய் பொகடுங்கோள்

———————————————————————————–

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-

மன்னு மதுரை -பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –வண் துவாராபதி தன்னளவும்
அவ்வளவு போலே பூமி உள்ளது –
அவன் உகந்து அருளின தேசங்களே பூமி –வாசஸ் ஸ்தவயமான தேசம் – என்று இருக்கிறாள் போலும்-

தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்
மதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இ றே
தன்னை உறவுமுறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி
தாழ் குழலாள் துணிந்த துணிவை-
தன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
ஸ்ரீ மத்   த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்

புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் – பதினொன்றாவது திருமொழி —

September 14, 2015

அவதாரிகை –

அவர் இரண்டு வார்த்தை சொல்லார் என்றும் -அது தான் தப்பிற்று ஆகிலும் தப்பாத ஓன்று உண்டு –
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பானது -நம்மை பலத்தோடு சந்திப்பித்து அல்லது விடாது என்று அத்யவசித்து இருக்கச் செய்தேயும்
-அவன் தான் வந்து உதவக் கண்டிலள் –
அர்ஜூனன் கையில் அம்புகளால் உளைய ஏவுண்டு சரதல்ப்பத்தில் கிடந்த ஸ்ரீ பீஷ்மரைப் போலே
சமாராக பதார்த்தங்களால் போர நோவு பட்டுக் கிடக்கிற தசையைக் கண்டு –
இவளுக்கு ஓடுகிறது இன்னது என்று அறிய வேண்டும் -என்று தாய்மார் -தோழிமார் -அந்ய பரைகளாய்-இருப்பார் அடையப் புகுந்து திரண்டு கிடக்க –அவர்களைப் பார்த்து
நான் அத்யவசித்து இருந்த படி கண்டி கோளே-
என் தசை இருந்தபடி கண்டி கோளே
இவ்வளவிலே அவன் வந்து உதவின படி கண்டி கோளே
அவன் ஸ்வ பாவம் இருந்தபடி கண்டி கோளே –என்று இன்னாதாய்
பின்னையும் தன் திறத்தில் பெண்களில் சிலருக்கு -ஸ்ரீ ருக்மிணி பிராட்டிக்கு உதவினவன் நமக்கு உதவாது ஒழிகிறான் அல்லன்
-என்று வருந்தி ஒருபடி தரித்தாளாய்த் தலைக் கட்டுகிறாள் –

———————————————————————-

தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே--11-1-

இவ் வவசாதத்தில் வந்து நீர் உதவாது ஒழிந்தது என் -என்று கேட்டால்
இன்னத்தாலே என்று தமக்கு மறுமாற்றமாக சொல்லலாவது ஓன்று உண்டு என்று நினைத்து இருக்கிறாரோ கேளி கோள்-
என் உகப்பில் குறை உண்டாயோ -வளை இழந்து அவன் வளையை ஆசைப்படுகை -என் உகப்பு –
தம் உகப்பில் குறை உண்டாயோ -தம் உகப்பு -என் வளையைக் கைக் கொள்ளுகை
தம்முடைய ரஷணத்தில் குறை உண்டாயோ -கோயிலிலே சேருகையே ரஷணம்-
என்னுடைய ரஷ்ய ரஷண பாவத்தில் குறை உண்டாயோ -முகத்தை நோக்காரால்-என்று இருக்கை-
எத்தாலே நான் உதவிற்றிலன் -என்று சொல்ல இருக்கிறார்
தம் கையில் குறை இல்லை
என் கையில் குறை இல்லை
இனி என் சொல்லுவதாக இருக்கிறார் –
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாம் நினைத்தது செய்து தலைக் கட்டும் இத்தனை யன்றோ -என்று சொல்ல நினைத்து
இருக்குமதுவும் வார்த்தை அல்ல –
பரம பிரணயி அன்றோ-
பர தந்த்ரராய் இருப்பார் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது நிர்பந்திக்கக் கடவர்களோ என்று நினைத்து
இருக்குமத்தும் வார்த்தை யல்ல
எனது ஆற்றாமையை அறிவாரே
நம் கையில் உள்ளது ஒன்றும் கொடோம் –பிறர் கையில் உள்ளது கொள்ளக் கடவோம் -என்று நினைத்து
இருக்குமதுவும் வார்த்தை யல்ல
வன்மையுடையார் செய்தபடி கண்டிருக்கும் அத்தனை அன்றோ மென்மையுடையார் என்று நினைத்து இருக்கக் கடவர் அல்லர்
உம்முடைய கையில் வளை நீர் கொடாது ஒழிகிறது என் என்று கேட்டால் -நான் உகந்து இருக்கையாலே -என்று சொல்ல
நினைத்து இருக்கிறாரோ -அது பின்னை பிறர்க்கு இல்லையோ
கையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமான அழகை போலே காணும் இவள் தானும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு கிடக்கிறது –
நாமும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு -கிடப்பது இத்தை அன்றோ என்று சொல்ல இ றே அவரும் நினைத்து இருப்பது
அது தமக்காகக் கண்டதோ —ந தே ரூபம் நா யுதா நி —பக்தாநாம் -என்று அன்றோ இருப்பது
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ-யாமுகக்கும் என் கையில் சங்கமும் -என்று சேர்த்து
தாம் உகந்தது நம் கையில் கிடக்கும் அத்தனை
பிறர் உகந்ததும் நம் கையில் கிடக்கும் இத்தனை
நாம் உகந்ததும் கொடோம் -பிறர் உகந்ததும் கொடோம் -என்று நினைத்து இருக்குமது அழகோ
உகந்தார் உகந்தது பெறுதல் -உடையார் உடையது பெறுதல் செய்ய வேண்டாவோ
உகந்தார் உகந்தது பெறும் போது-தன் கையில் உள்ளவை என் கையில் வர வேணும்
உடையார் உடையது பெறில் என் கையிலவை என் கையில் கிடக்க வேணும்
இரண்டும் சம்ச்லேஷத்தை ஒழியக் கூடாது இ றே
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்று ஒரு சங்கு பெற ஆசைப் பட்ட என்னை
தான் கொண்ட சரி வளைகள்-8-5-என்று ஒரு ஜாதியாக இழக்கும் படி பண்ணுவதே
ஈஸ்வர ஜாதி -என்ற ஒரு ஜாதி உண்டாகில் இ றே தம் கையில் வளையோடு சஜாதீயம் உண்டு என்று சொல்லலாவது –
தம் கையில் வளை ஆபரணமாகத் தோற்றுகையாலே-அவன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் ஆபரணமாக தோற்றுகிறது
அத்தனை அல்லது ஆயுதமாகத் தோற்றுகிறது இல்லை காணும் இவளுக்கு
நாரீணாம் உத்தமையாய் வளை இட்டால் போலே அவன் புருஷோமத்வத்துக்கும் வளை இட்டான் என்று இருக்கிறாள் யாய்த்து –

ஏந்திழையீர்
ஏந்தப் பட்ட இழையை உடையீர் -தரிக்கப் பட்ட ஆபரணத்தை உடையீர்
பிரளயத்திலும் தப்பிக் கிடப்பாரைப் போலே நீங்கள் எங்கே தப்பிக் கிடத்தி கோள்
மயூரச்ய வநே நூநம் ரஷசா ந ஹ்ருதா ப்ரியா -கிஷ்கிந்தா -1-40-என்று இருவராய் இருப்பாரை எல்லாம் பிரித்தான் என்று
இருந்தார் இ றே பெருமாள் -அப்படியே வளை கையில் தொங்கினார் ஒருவரும் இல்லை என்று இருந்தாள் போலே காணும்
நீங்கள் தப்பிக் கிடந்தபடி எங்கனே -என்கிறாள்
அவனோடு கலந்து பிரிந்த படியால் ப்ராதேசிகம் ஆகமாட்டாது என்று தோற்றி இருந்தது ஆய்த்து –
ஆபரணம் இழந்தார் வழக்கு ஆபரணம் பூண்டு இருந்தார் பக்கலிலே கேட்கும் அத்தனை இ றே
குறையாளர் வழக்கு குறைவற்றார் பக்கலிலே இ றே கேட்பது
யுவாக்கள் வழக்கு சன்யாசிகள் பக்கலிலே அன்றே கேட்பது -யுவாக்கள் பக்கலிலே இறே கேட்பதுவும்
நீயும் சில நாள் வைத்துக் கொண்டு இரு -என்பார் பக்கல் அன்றே கேட்பது
ஆண்களோ பாதி இ றே இவளுக்கு ஓடுகிற தசை அறியாமைக்கு இவர்களும் –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
இவர்களை விடீர்
நம் தசையை அறிவான் ஒருவனாய் வைத்து அவனுக்கு உடம்பு கொடுக்கிறவனைச் சொல்லீர் -ஆதி சேஷனை –
விச்லேஷத்தால் வரும் வ்யசனம் அறியான் இத்தனை போக்கி சம்ச்லேஷ ரசம் அறியான் இல்லையே –
சம்ச்லேஷம் தான் நித்தியமாய் இருக்கச் செய்தேயும் பிரிந்தார் படுமது படுமவன் யாய்த்து
இப்படிப் பட்டவன் தான் அவனுக்கு முகம் கொடுக்கக் கடவனோ
என்னை ஒழிய அவன் போகத்தில் அனுபவிக்கப் புக்கால் –போகம் -சர்ப்ப சரீரம் -அனுபவம் -போகியான தான் உடம்பு கொடுக்கக் கடவனோ
பெரியாழ்வாரோ பாதியாக வி றே நினைத்து இருப்பது
தான் வெறுத்து இருக்க பிறந்தகத்து உற்றார் புக்ககத்து உற்றாரோடு கை வைத்தால் சொல்லுமா போலே சொல்லுகிறாள் இ றே
தங்கள் தேவரை என்றாள் இ றே
பிதுர் நிதேசம் நியமேன க்ருத்வா -சுந்தர -28-84–இவ்விடத்தில் வார்த்தையை சொல்லிக் கொள்வது –

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
நொந்தாரை ஐயோ என்று தண்ணளி பண்ண வேண்டி இருக்க எதிர் விழிக்க ஒண்ணாத படி நெருப்பை உமிழ்ந்தால் போலே இரா நின்றதாய்த்து
அவர் தமக்கும் இவனோடு ஒரு குருகுல வாசம் பண்ண வேண்டி இருந்தது வெட்டிமைக்கு
அன்றிக்கே
தான் படுக்கையிலே சாயப் புக்கால் விரோதி போக்குகைக்கு வேறு ஒரு ஆயுதம் தேட வேண்டாத படி இருப்பான் ஒருவன் ஆய்த்து
உகவாதார்க்கு வந்து கிட்ட ஒண்ணாத படியாய் இருக்கை
கிட்டினார் உண்டாகில் –வாய்த்த மதுகைடவரும் வயிறுருகி மாண்டார் –மூன்றாம் திரு -66-என்று முடிந்து போம் படி இருக்குமவன் -என்னுதல்
சேரும்
அவர் படி விசஜாதீயமாய் இரா நின்றது
இருவருக்கு படுத்த படுக்கையில் தனியே சாய வல்லவராவதே
திருவரங்கர்
ஆர்த்த ரஷணம் பண்ணப் போந்தவர்
அத்தை மறந்து
படுக்கை வாய்ப்புக் கொண்டாடி -சாய்ந்து கிடந்தது -உறங்கா நின்றார்
இவ்வளவில் பரம பதத்தில் இருந்தார் என்று தான் ஆறி இருக்கிறேனோ –

ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–
-கெட்டேன்
முகத்து நோக்காரால்
பிரிந்தால் கழற்ற வேண்டுவது பிரணயித்வம் அன்றோ
கண் நோக்கமும் தவிர வேணுமோ -கண்ணால் நோக்குவதையும் கருணையையும் விட வேணுமோ
அம்மனே அம்மனே
பிரிந்து ஆற்றாத சமயத்திலே -அனுசந்தித்தால் நா நீர் வரும்படி இருக்குமவர்
புலி சர்ப்பம் என்றாள் போலே நினைக்கவும் பயாவஹமாம் படி யாவதே
இவர் படி இருந்தபடி என்
இவர் ஸ்வ பாவம் போய் வேறுபட்ட படி என்
ப்ராப்த பலோ ஹி பீஷ்ம -சாந்தி -46-139-என்று முடியும் அளவில் முகத்திலே விழிக்கலாவதும் ஆண்களுக்காய்க் கொள்ளீர் –

———————————————————————-

எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே–11-2-

எழில் உடைய அம்மனை மீர் –
ஆபரணம் இழந்தார் வழக்கு ஆபரணம் பூண்டாரை கேட்கும் –ஏந்திழையீர் -என்றாளே முன் பாசுரத்தில் -அத்தனை என்றால் போலே எழில் இழந்தார் எழில் இழவாதரைக் கேட்கும் அத்தனை இறே-எழில் உடைய -என்கிறாள்
அம்மனைமீர் –
எழில் உண்டாக்கி காட்ட வேண்டுமவர்களுக்கு இ றே -எழில் இழந்தமை சொல்லுகிறது -தனது தசை இருந்தபடி
சௌமித்ரே சோபதே பம்பா -கிஷ்கிந்தா -1-3 என்னுமா போலே

என்னரங்கத்து இன்னமுதர்
என் –
தேவ ஜாதிக்கு பொதுவான அமிர்தம் போலே அன்று
இவளுக்கு ஸ்வம்மான அமிர்தம் ஆய்த்து
அரங்கத்து –
இது ஸ்வர்க்கத்திலே இருக்கும் அமிர்தம் அன்று
இன்னமுதர் –
சரீரத்துக்கு ஸ்தர்யத்தைப் பண்ணிக் கொடுக்கும் அமுதம் அன்று
உயிருக்கு உறுதியைப் பண்ணிக் கொடுக்கும் ஆனந்தாம்ருதம் இது –

குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் –
கண் அழகர்-கண்ணாலே பருகும் அமிர்தம்
குழல் அழகர்-அம்புக்கு நேர் நிற்க ஒண்ணாதாப் போலே நோக்குக்கு நேர் நிற்க ஒண்ணாமே திருக் குழலிலே ஒதுங்கினாள்
வாய் அழகர்-அது -திருக் குழலின் அலையானது -வாய்கரையிலே போய் வீசிற்று -கரை போலே இருக்கும் வாயிலே -என்றவாறே
கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -அதுக்குத் தோற்றுத் திருவடிகளிலே விழப் புக்கவாறே நடுவே வயிறு பிடியாய்த்துக் காணும்
நடுவே வழி பறித்தது திரு நாபீ கமலம்
காமிநீ இ றே -ஸ்வரூப குணங்களிலே ஈடுபடாமல் திரு மேனி அழகிலே ஈடுபடுகிறாள்

எம்மானார் –
ஜிதந்தே -என்னுமா போலே ஸ்வா பாவிகமான சேஷித்வத்துக்குத் தோற்றுச் சொல்லும் வார்த்தை அல்ல
இப்படி அழகு குவியலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவர் –

என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே-
எழில் கொண்டார் என்று அவர்க்கு இத்தை எங்கனே நாம் குற்றமாகச் சொல்லும்படி
பிரணயித்வத்தில் ஏதேனும் தப்ப நின்றாராகில் அன்றோ நம்மால் அவர்க்கு குற்றம் சொல்லலாவது
ஏக கண்டரானவர்க்கு -நம்மோடு ஒத்த மனத்தராய் -நாம் என்ன குற்றம் சொல்லுவது
அவர் பிரிந்தாலும் கழலாத படி திண்ணிய வளை தேடி இட்டோம் ஆனோம் நாம்
அவர் இதினுடைய நாமத்தையே மெய்யாக்கினார்
விச்லேஷத்திலும் தொங்கும் வளையை தேடி இட்டோம் ஆனோம் நாம் -அவர் ஒரு ஷணமும் தொங்காத படி ஆக்கினார்
 -என்ற அழகு பாரீர்
இது அங்கும் ஏறப் பற்றது இல்லை
அவர் கையில் வளை கழன்றதாகில் இவள் கையில் வளை தொங்கும் இ றே
அவர்க்கும் இச் செல்லாமை உண்டு என்று அறிந்தால் இவர் கையில் வளை கழலாதாயத்து –
சலிக்கிற படி
நீ ஒருத்தியே இழந்ததாகச் சொல்லுகிறது என் -இங்கனே யன்றோ எல்லாரும் இருப்பது -என்ன
என்னை ஒழிய ஆரேனும் வளை இழந்தார் உண்டோ -என்கிறாள் –என்னுடைய கழல் வளையையே -என்ற ஏவகாரத்தால்

——————————————————————————

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-

உன் பக்கல் உகப்பாலே அன்றோ அவன் உன் கையில் வளை கொண்டது என்ன –
-தம்முடைய ஐஸ்வர்யத்திலே ஒரு குறை உண்டாய் -அது பூரிக்க வேண்டி –
இது ஒழியச் செல்லாமை -இடர்ப்பட்டு -இது பெற்ற பின்னை- அது தீர்ந்தாராய் இருந்தாரோ-
என்னை இடர் விளைக்காகாச் செய்தார் இத்தனை அன்றோ -என்று வெறுக்கிறாள் 

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் –
ஓதம் கிளர்ந்த கடலை வெளியாக உடைய பூமியும்
மரியாதையில் ஒன்றும் குறைந்து இல்லை இ றே அங்கு
பூமிக்கு மேலே விஞ்சி வாரா நிற்கச் செய்தேயும்- கரை ஏற மாட்டாதே கிடக்கிறது இ றே கடல்
விண்ணுலகும்
ஒரு மரியாதை இல்லாத த்ரிபாத் விபூதியும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற –
உபய விபூதியிலும் ஒரு குறை பிறவாமே நிர்வஹித்துக் கொண்டு போருகிற-
அழிந்த வன்று தன மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்-
உண்டாக்கின வன்று தன் நிலையிலே நிறுத்தியும் -நடத்தியும் –
இவ் விபூதியை நித்ய சம்ச்லேஷத்தாலே சத்தியைக் கொடுத்து நோக்கும் அவ் விபூதியை –
வெம்பெருமான்-
என்னை ஒரு மூன்றாம் விபூதியாக ஆளா நின்றான் –
சப்தாதிகளாலே களிக்கும் படி பண்ணி வைத்தான் இவ்விபூதியை
தன்னை அனுபவித்துக் களிக்கும் படி பண்ணி வைத்தான் அவ் விபூதியை
நான் இங்கு உள்ளாருக்கும் கூட்டன்றிக்கே -அங்கு உள்ளாருக்கும் கூட்டன்றிக்கே
நடுவே நோவுப்படும்படி பண்ணி வைத்தான் என்னை ஒருத்தியையுமே –
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
தம்முடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் -ஸ்வ சங்கல்பத்தினாலே நடத்துமது போராது என்று கோயிலிலே வந்து சாய்ந்தவர்
-பெரிய பெருமாளோ பின்னை உபய விபூதியையும் ஆள்கிறார் -என்னில்
அல்ல –
அவர் இட்டதோர் ஏவல் ஆள் -பெரிய பெருமாளும் அல்லர் காண் -செங்கோல் தானே ஆள்கின்றது –செங்கோல் -ஆஜ்ஞை

எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே —
தமக்கு ஒரு குறை உண்டாய் -என் கையில் வளை ஒழியச் செல்லாமை குறைப்பட்டு அவ்விடர் தீருகைக்காக கொண்டாரோ-
எனக்கு கிலேசத்தை விளைக்கைக்காக செய்தார் அத்தனை அன்றோ
கழலாத படி திண்ணியதாக இட்ட வளையையும் கொண்டார் -கீழ்ப் பாட்டில் சொன்னபடியே –கோல் வளையையும் கொண்டார் -இங்கே –

——————————————————————————————

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே—11-4-

அல்லாதார் எல்லாரும் வளையிட்டு இருக்கச் செய்தே கையில் வளை கொண்டது உன் பக்கலிலே உகப்பாலே அன்றோ –
அது ஹர்ஷ ஹேது அத்தனை அல்லது சோக ஹேதுவாக வற்றோ என்ன
ஓம் -உகப்பு ஒன்றிலேயாய்-மற்றையதில் இன்றிக்கே யாகாதே இருப்பது -என்கிறாள் –
தாம் விரும்பி இருக்கும் வளை -என்று –
அது கொண்டாகிலும் -எங்கள் சத்தையை நோக்கிக் கொண்டு கிடக்க வேண்டும் என்று இருந்தோம்-
அது ஒழிய தம் சத்தை நோக்க அரிதாய் -அதிலே விருப்பத்தைப் பண்ணி அத்தைக் கொண்டாராய் இருக்குமாகில்
எங்கள் சத்தை கிடக்க வேணும் என்று கண் வட்டத்தே இத் தெருவே யாகிலும் ஒரு கால் போகாரோ –

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்-பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற-
மச்சுக்களாலே அலங்க்ருதமான மாடங்களையும்-
அரணாகப் போரும்படியான மதிளையும் உடைத்தான கோயிலிலே வந்து
தம் உடைமை பெறுகைக்காக தாம் அர்த்திகளாய்க் கண் வளர்ந்து அருளுகிறவர்-
மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்-பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
மாடம் எடுக்கவும் மாளிகைகள் எடுக்கவும் கற்றார் இத்தனை போக்கி ஒரு காலும் பிரணயிதவத்தில் புதியது கண்டிலர் காணும்
வாமனனார் –
சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய்த் உத்தர வேதியில் நின்ற ப்ரஹ்மசாரியை இ றே -பெரியாழ்வார் -1-9-6-இவள் தான் ஆசைப் படுகிறது
பச்சைப் பசும் தேவர் –
அழைத்து அனுபவித்திலர் -என்னா-விட ஒண்ணாத படியாய் இருக்கை -வடிவு அழகு-மேகச்யாம்-அயோத்யா -83-8-
கைகேயி வயிற்றில் பிறப்பால் வந்த தாபம் ஆறும் கிடீர் –
அவ் வழகிய வடிவிலே விழிக்கப் பெற்றேன் ஆகில் -என்றான் இ றே ஸ்ரீ பரத ஆழ்வான்-
அன்றிக்கே
கலப்பற்ற பரம் தேவதை -என்றுமாம் –அங்கு வைத்து இங்கு பிறந்த –திருவாய் -3-5-5-என்னக் கடவது இறே-
தேவர்
த்யோதநாதி குண யோகத்தை உடையவர் –
தாம் பண்டு நீர் ஏற்ற
கொள்வன் நான் மாவலி –திருவாய் -3-8-9-என்று அது பெற்று அன்று தரியாதானாய்-
ஒண்டாரை நீரங்கை தோய நிமிர்ந்திலை -முதல் திரு -79-என்கிறபடியே
உதக பூர்வகமாகக் கொண்ட-

பிச்சைக் குறையாகி –
மகா பலி பக்கல் பெற்றுக் குறை உண்டாய்
அது என் கையால் பெற வேணும் என்னும் இச்சையாலே
என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் –
அம் மண்ணோ பாதி இச்சையும் என் வளையில் உடையராகில் -என்றுமாம்
தாம் இரந்த மண்ணில் வீறும்-என் கையில் வளையில் வீறும் தாம் சொல்லக் கேட்டு இருக்கும் அத்தனை இ றே நாம்
தாம் இரந்த பூமியாருக்கு ஆபரணமாக வற்று -இடப்பட்ட வளையின் மேல் –
ஸ்ரீ யபதியாய் கொடுத்து வளர்ந்த கையை உடையவராய் இருக்கிறவர் தாம் கழஞ்சு மண் பெறுகைக்கு தம்மை இரப்பாளராக்கி
அதில் பண்ணின விருப்பம் என் பக்கலிலே பண்ணி இருந்தாராகில்
என் கையில் வளையாலே குறை தீர வேணும் என்னும் இச்சை உண்டாகில்
என் கையில் வளையாலே குறை நிரப்ப வேணும் என்னும் இச்சை உண்டாகில்
இத்தெருவே போதாரே—
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு-4-5- -என்கிறபடியே எங்கள் தெருவில் எழுந்து அருளாதோ பின்னை –
அசுரனுடைய யஜ்ஞ வாடத்தில் நடந்த நடையை இத்தெருவில் நடந்தால் ஆகாதோ –
என் கண் வட்டத்தில் நடந்தால் ஆகாதோ
தன உடைமை அல்லாததைக் கொடுத்து ஔதார்யம் கொண்டு இருக்கிறவனைப் போலே இருப்பேனோ நான்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் -என்று இருக்குமவள் அன்றோ நான்-
கொண்டானை யல்லால் கொடுத்தானை யார் பழிப்பர்
தன்னது அல்லாதவற்றைக் கொடுத்தவனை குறை சொல்லுவார் இல்லை
தனக்குக் கொடுத்தவனுக்கு அபகாரத்தைப் பண்ணுவதே -இவன் தன்னில் க்ருதக்னர் இல்லை -என்னா நிற்பார்கள்
தன்னது அல்லாதவற்றைக் கொடுத்தவனை அன்றோ நெல்லிலே வைத்துத் தெரிக்க வேண்டுவது -என்கிறார் –
என்னது -என்று இருந்த வன்று -அவனுக்கு -என்று கொடுக்க பிராப்தம்
பிரமித்த அன்றாய்க் கொடுக்க பிராப்தி உள்ளது
உணர்த்தி உண்டானவாறே –அதவா கிந்நு சமர்ப்பயாமி தே-என்னா நின்றார்களே இ றே
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் அவனுடைய ஸ்வரூப குணங்களோ பாதி அங்கே தோற்றக் கடவதாய்த்து இது
அவனுடைய ப்ராப்யத்வத்தில் ஏக தேசமாய் அந்வயிக்கும் அத்தனை
ஆத்ம யாதாம்ய ஜ்ஞானம் முன்னாக பற்றினால் அனுபவ சமயத்திலும் ஆத்ம யாதாம்ய ஜ்ஞானம் முன்னாக வி றே அனுபவிப்பது
-யதோபாசனம் பலம் ஆகையாலே

——————————————————————————————

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
கண் எச்சில் வாராமைக்காக கரி பூசுகிறார் ஆதல் –
அழகிலே விஜாதீயது ஆகையாலே -அழகிது -என்னில் -நாட்டில் அழகோடு ஒக்க நினைக்கக் கூடும் என்று –பொல்லா -என்கிறார் ஆதல் –
உலகிலே நடையாடாத அழகு என்பதால் –
குறளுருவாய் –
கோடியைக் காணி யாக்கினால் போலே
பெரிய வடிவு அழகை எல்லாம் இவ் வடிவிலே அமைத்து அனுபவிக்கலாம் படி அடக்கின படி –
கோடி த்ரவ்யத்தால் ஒரு மாணிக்கம் வாங்கி மார்பில் இட்டு அனுபவிக்கலாம்படி அன்றோ இந்த மாணி உருவம்
பொற் கையால்நீர் ஏற்று
அழகிய கையில் நீர் ஏற்று
அவனுக்கு பொற் கலத்திலே பிஷை யாய்த்தே -மகா பலி பெற்ற பாக்யமே -பொற் கலத்தில் பிஷை இடப் பெறுவது என்றவாறு –

எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்-
பர ஸ்வா பஹாரத்துக்கு -அடி இடுகிறபடி –
தொடங்குகிற படி -அடியால் அளந்த படி -சாடு
கைப்பொருளும் எய்துவான் ஒத்தும் உளன் -என்றபடி
ஒன்றைக் கொள்ளப் புக்கான் ஆகில் கொடுத்தவர்களுக்கு பாதாளமே கதியாம் படி இ றே கொள்ளுவது
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்தவன் -பெரியாழ்வார் -4-9-7-இ றே
தனக்கு இரப்பிட்டவர்களை குழியிலே தள்ளி ஹ்ருஷ்டனாமவன் இ றே
இவன் இல்லாதோம் கைப் பொருளும் எய்துவான் போல் இருப்பது வியப்பு அல்லவே
எம்பெருமான் –
அச் செயலாலே என்னை அனந்யார்ஹை ஆக்கினவன்
மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் –பெருமாள் திரு -9-4-2-
என்கிற படியே அச் செயலிலே காணும் இவள் ஈடுபட்டது –

நல்லார்கள் வாழும் நளிரரங்கம்
அநந்ய பிரயோஜனர் வர்த்திக்கும் தேசம்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ்-திருவரங்கம் என்பதுவே -பெரியாழ்வார் -4-8-2-என்னக் கடவது இ றே
அத்தேசம் வாஸம் தானே வாழ்ச்சி –
வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் –8-9-என்னக் கடவது இ றே –
நளிர் அரங்கம்
நளிர் -குளிர்த்தி -ஸ்ரமஹரமாய் -தாப த்ரயங்களும் தட்டாத தேசம்
நாகணையான்-
அனந்த சாயி
என்னை ஒழியவும் படுக்கை பொருந்துவதே –

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே-
இல்லாதோம்
அகப்படுகையிலே பாக்கியம் இல்லாத என் கையில் -என்னுதல்
மகா பலியைப் போலே தம் அபேஷிதம் பூரணமாக கொடுக்கைக்கு இல்லாத -என்னுதல்
தம்மை ஒழிய துணை இல்லாத -என்னுதல்
கைப்பொருளும் –
கைம் முதலும்
எய்துவான் ஒத்து உளனே-
இத்தைக் கைக் கொள்ளுவான் போலே இரா நின்றான் –

நளிரரங்கம்-
இத்தேசத்தில் வர்த்திக்கிறவன் கிடீர் ஸ்திரீ காதுகர் செய்வுத்தைச் செய்கிறான்
ஒரோ பிரதேசங்களிலே ஸூக்ருதிகள் அடங்கலும் வர்த்திக்கும் தேசமாய் இருக்கும்
நல்லார்கள் –
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அனைவரும் மண்டி இருக்கும் தேசம்
அற்ற பற்றார் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே -திருச் சந்த -52-
சாதனா அனுஷ்டானம் பண்ணி வர்த்திக்கை அன்றிக்கே
பல அனுபவம் பண்ணி வர்த்திக்கும் தேசமாய்த்து
பிராப்ய வஸ்து ஸூலபமாய் நித்ய சந்நிதி பண்ணுகையாலே அனுபவமாய்ச் செல்லா நிற்கும்
அத்தேசத்தில் வாசத்தை ஆசைப் பட்டாருக்கு அனுபவம் ஒழிய உண்டோ
பரமபதம் வரில் செய்வது என் என்று நடுங்குபவர்கள் போலே காணும் அத தேசத்தில் வர்த்திக்கிறவர்கள்-
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -என்னும் படியே-

பட்டரை முதுகிலே புண்ணாலே நொந்து கிடக்கச் செய்தே அருள் பாடிட்டு -பெருமாள் -வாராய் -அஞ்சினாயோ -என்று கேட்டருள –
நாயந்தே -எனக்குச் செய்து தந்து அருளாத தரம் இல்லை -இங்கே இருக்கச் செய்தேயும் பரமபதம் என் சிறுமுறிப்படி செல்லும் படி
பண்ணி அருளிற்று -ஓலை எழுதி பரமபதம் வழங்கும் படி என்றவாறு –
அதில் ஒரு குறையும் இல்லை –
இங்கே குளிர்ந்த முகத்தையும் -திரு நாமத் தழும்பையும் – முறுவலையும் இழக்க வென்றால் அடியேன் அஞ்சேனோ -என்றார் –

ஆளவந்தார் திருமகனார் சொட்டை நம்பி -ஓர் அளவிலே திருக் கோட்டியூர் நம்பியை நெகிழ ஒரு வார்த்தை சொன்னாராய்-
நீ கடக்க வர்த்தி -என்று அருளிச் செய்ய –
அவரும் படை வீட்டில் ராஜ சேவை பண்ணி திரிந்தாராய்
பின்பு இவருடைய சரம சமயத்திலே இவருடைய அத்யவசாயம் அறிய வேணும் என்று -நீ நினைத்து கிடக்கிறது என் -என்று கேட்டார்களாய்-
ஆளவந்தார் ஸ்ரீ பாத சம்பந்தம் பரமபத பிராப்தி பண்ணித் தந்து அல்லது விடாது –
அங்கே போனால் ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் நம் பெருமாள் திரு முக மண்டல போல்
குளிர்ந்து இருந்தது அல்லையாகில் முறிச்சுக் கொண்டு வருவதாக நினைத்து இருந்தேன் -என்றாராம்
ந ச புனராவர்த்ததே-என்கிற மரியாதை இடறிப் போர வேணுமே -என்றாராம் –

நளிர் அரங்கம்
தாபத்ரயம் ஆறுகைக்கு-பரம பதம் தேடித் போக வேண்டாம்
நாகணையான்
பிராப்ய வஸ்துவை அனுபவிக்கும் போது படுக்கையிலே கண்டு அனுபவிககைலாய் இருக்கை —கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -23-
இல்லாதோம் கைப்பொருளும்
வேணுமாகில்-அவன் பக்கல் உள்ளது கொள்ள பிராப்தம்
தன்னது -என்று இருக்கிற என்னை சர்வ ஸ்வா பகாரம் பண்ணுகிறது ஏதுக்காக
தம்மை ஒழிய ஆஸ்ரயம் இல்லாத எங்களுடைய கைப்பொருளும் உண்டு –உடம்பு -அது போலே காணும் சேஷித்தது
இல்லாதோம் -என்னா நிற்கச் செய்தே –கைப்பொருள் -என்பான் என் என்னில் -அவன் விரும்பி இருக்கும் வழியாலே-
எய்துவான் ஒத்து உளனே –
தம் உடம்பை பிராப்யம் என்று நினைத்து இருப்பார் அது பெறுகைக்கு படும் பாடு அத்தனையும்
தாம் என்னுடம்பை பிராப்யம் என்று அது பெறுகைக்கு படா நின்றார் -தம் தாமுக்கு இல்லாதது பெற்றால் போலே –

——————————————————————————————

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் –
கைம்முதல் உள்ளவையும் –வளை நிறம் போன்ற அனைத்தையும் -முன்னே கொண்டார்
காவிரிநீர் செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்-
அசேதனமான ஜலமும் கூட ரஷ்ய வர்க்கத்தை ரஷிக்கும் தேசமாய்த்து –
தாம் பரம சேதனர்
தேசம் அது
அத்தேச வாசத்துக்கும் என்னை சர்வ ஸ்வஹரணம் பண்ணுகைக்கும்-தமக்கு என்ன சேர்த்தி உண்டு –

எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –
ஒரு வேடுவிச்சி குரங்கு இடைச்சி –சபரி சுக்ரீவன் யசோதை -இவர்களுக்கு ஸூ லபனாய் நின்று –
இங்கு அந்தராத்மாவாய் நின்ற நிலை சொல்ல வில்லை -மேலே ஆர்க்கும் எய்தாது என்று இருப்பதால்
அதற்கு பிரதி கோடியாக சௌலப்யம் காட்டி அருளியதையே சொல்லும்

ஆர்க்கும் எய்தாது –
எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரே ஆகிலும் -ஸ்வ யத்னத்தால் பிராபிக்க நினைப்பார்க்கு துஷ் ப்ராபராய்-
யாரும் ஓர் நிலையன் என அறிவரிய எம்பெருமான் -திருவாய் -1-3-4-

நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–
வேதைக சமதி கம்யராய் -ஸ்ரீ கீதை -15-15-நின்றார்
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு –பெரியாழ்வார் திருமொழி -4-3-11-என்னக் கடவது இ றே
ஆத்மாத்மீயங்கள் இரண்டையும் கொண்டார் –

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார்
இவளுக்கு முலைப்பாலோடே கூடப் புகுந்தது இ றே -முலைப் பால் உண்ணும் குழந்தை பருவத்திலே -பகவத் சம்பந்தம்
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய –அயோத்யா -40-5-போலே -பிறக்கிற போதே வளை இழந்து கொண்டே போலே காணும் பிறந்தது –
இத்தனையும் சொல்லத் தகும் படி யோக்ய வஸ்து வி றே
பால்யாத் ப்ரப்ருத்தி ஸூ ஸ் நிகத -அன்வயத்திலே தரித்து வ்யதிரேகத்திலே தரியாமை-இவளுக்கு சத்தா பிரயுக்தமாய்த்து –

காவேரி செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்-
சாதனம் சாத்யத்தொடு தோள் தீண்டியாய் வ்யபிசாரியாத தேசத்திலே வர்த்திக்கிறவர்
சாதனா அனுஷ்டானம் பண்ணி பலம் விபலித்தல் -பிரபல கர்ம பிரதிருத்தமாய் நிற்றல் செய்கை அன்றிக்கே கைப்புகுந்து வர்த்திக்கிற தேசம்
விளையுமதிலே விளைவிக்குமது வவ்வால் நாற்றியாக வந்து விழா நிற்குமாய்த்து
உபாய ச்வீகாரம் பண்ணுகிறவனும் -ச்வீகாரமும் கிடக்கச் செய்தே தானே உபாயமாக வேண்டுகிறது –
பலத்தோடு வ்யபிசரியாத ஓன்று உபாயமாக வேண்டுகை இ றே
உபாய புத்தி பண்ணுகிற இவன் பக்கல் உபாய பாவம் கிடையாதே
பலத்துக்கு பூர்வ ஷண வர்த்திகளான வற்றுக்கு எல்லாம் உபாய பாவம் இல்லையே
கரண சரீர அந்தர்கதம் ஆனதிலே இ றே உபாய பாவம் கிடப்பது
அவ்வூரில் சம்பந்தத்தைச் சொல்லி வாழ்கிறவர்-திருவரங்க செல்வனார்
காவேரி நீர் செய்புரள ஓடுகிறது இத்தனையும் உணர்த்தி நிற்கிறது –

எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –
எப்பொருட்கும் நின்று –
ஒரு குரங்கு -வேடுவிச்சி இடைச்சி இவர்களுக்கும் ஸூ லபனாய் நின்று-
ஸூ க்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19—ஸூ க்ரீவம் நாதம் இச்சதி –கிஷ்கிந்தா 4-18- என்கிறபடியே-
தாம் சொல்லுகை அன்றிக்கே அருகே நின்றாரும் கூட சொல்லலாம் படி தம்மை அமைத்து வைக்கை-
லோக நாத புரா பூத்வா -லோக நாதனான இது மகா ராஜர் பக்கலில் பார தந்த்ர்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின படி
இப் பார தந்த்ர்யம் குணம் ஆகைக்கு வேண்டும் ஸ்வா தந்த்ர்யமே யாய்த்து உள்ளது-
எளியவன் தாழ நின்றால் அது குணம் ஆகாது இ றே
இச்சதி –
எல்லாரும் தம்தாமுக்கு இல்லாததை ஆசைப்படும் அத்தனை இ றே
அநாதன் இ றே இவன்
இடைச்சிக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி நின்றும்
வேடுவிச்சிக்கு கிட்டி அசாதாரணர் பண்ணும் பரிசர்யைகள் பண்ணலாம் படி நின்றும் போரும்படியும்
ஒரு நாள் எம்பெருமானார் பரத்வமே பிடித்து சௌலப்யத்து அளவும் செல்ல உபபாதித்து அருள -அத்தைக் கேட்டு எம்பார்
கண்ணும் கண்ணநீருமாய் வித்தராய் இருக்க
அவரைப் பார்த்தருளி அவனுடைய சௌலப்யத்தை சொன்னவாறே நாட்டார் -இத்தனை எளியவனோ -என்று கை விட்டுப் போனார்கள் –
பாக்ய ஹானியாலே –அறப் பெரியவன் இப்படி எளியவன் ஆவதே -என்று நெருங்குகைக்கு உடலாய்த்து உமக்கு ஒருவர்க்கும் –
என்று அருளிச் செய்து அருளினாராம்
வானரேந்தச்ய பிரசாதம் அபி காங்ஷதே-கிஷ்கிந்தா -4-21-
ஏதத் வ்ரதம் மம- ந த்யஜேயம் கதஞ்சன -என்றதுக்கு
இருவரும் சரணாகத பரித்ராணம் பண்ணுகிறார்கள் -என்று பட்டர்
இவர் –ஸூ க்ரீவம் சரணம் கத -என்றார்
அவன் -ராகவம் சரணம் கத -என்றான்
இனி யாரை யார் விட
விபீஷணனை சவீ கரிக்கை யாவது -பெருமாளை அவன் கையிலே காட்டிக் கொடுக்கை என்று இருக்கிறார் அவர்
அவர் முதிர நிற்க நமக்கு உடல் என்று இருக்கிறார் ஆய்த்து இவர்
நாம் முன்பே பிரதிஜ்ஞை பண்ணினோம் -இனி அத்தை தலைக் கட்டும் அத்தனை இ றே என்கிறார் இவர்
ஆர்க்கும் எய்தாது
எத்தனையேனும் அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரியனாய் இருக்கும்
பெண்ணுலாம் சடையினானும் -திருமாலை –44
ஆர்க்கும் எய்தாது
சர்வாந்தராத்மாவாய் நின்று எய்தான் என்றுமாம்
நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–
வேதார்த்தம் -வேத பிரதிபாத்யன்
ஓலைப் புறத்தில் கேட்டுப் போரும் வஸ்து கண்ணுக்கு இலக்காய் வந்து கிட்டி
இட்டீட்டுக் கொள்ளும் உடம்பைக் கொண்டு தன்னை புஜிக்குமவர்கள் ஸ்வரூபங்களை  விட்டு திரு மேனியை விரும்புமா போலே
தானும் ததீய விஷயத்தில் ஸ்வரூபாதிகளை விட்டு உடம்பை யாய்த்து விரும்புவது
இருவரும் உடம்பை யாய்த்து விரும்புவது

திருமாலை ஆண்டான் -பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யாஜ்யம் என்று கேட்டுப் போரா நிற்கச் செய்தேயும்
இத்தை விட வேண்டி இருக்கிறது இல்லை
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாம் என்று ஆதரியா நின்றேன் -என்றாராம் –

மெய்ப்பொருள் – ஆத்மா/ கைப்பொருள்- ஆத்மீயம்

———————————————————————
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7-

உண்ணாது-
ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்கிறபடியே பார்த்து பரிந்தூட்டுமவள் போனால் -இனி யார் அவரைப் பரிந்தூட்ட –
மா மலர் மங்கை மணம் உண்டு இருந்தான் இ றே
அவள் போனால் இவனுக்கு ஊண் இல்லை இ றே –
உறங்காது –
அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே -கண் உறக்கம் அற்று ஊண் உறக்கம் அற்று
ஸூ க்ரீவம் சரணம் கத –என்று கண்ட காபேயர் கால்களிலே விழுந்து
ஒலி கடலை யூடறுத்து-
ஓதம் கிளர்ந்த கடலை ஊடறுத்து-கூறு அறுத்து அடைத்து –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-30-என்று
ராஷசனுக்கு சிஷ்யராய்ப் புக்கு -அவன் சொல்லக் கடலை சரணம் புக்கு –
பெண்ணாக்கை யாப்புண்டு –
பிராட்டி வடிவிலே பத்தராய்-ஒரு பெண் கொடியாலே கட்டுண்டு –
ஆக்கை -சரீரம்-கொடி இரண்டு பொருளும்
தாமுற்றபேதெல்லாம்-
தாம் பட்ட எளிமை எல்லாம் பண்ணாதே
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார் எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–
திருடமாய் ஓங்கி இருப்பதான மதிளாலே சூழப் பட்ட திருவரங்கத் திருப்பதியிலே வாசமாகிற செல்வத்தை உடையவர் —

தைர்யேண ஹிமவா நிவ -பால -1-17-என்னக் கடவ தமக்கு தைர்யம் இல்லாமையை எண்ணாதே
தம்முடைய நன்மைகளையே எண்ணுவரே-
நம்மைப் பிரிந்தார்- நோன்பு நோற்பது -காமன் காலிலே விழுவது -கூடல் இழைப்பது-இத்யாதிகளைச் செய்யா நிற்பார் –
என்று தம்முடைய வீறுகளை எண்ணா நிற்பார் –

உண்ணாது –
தேக யாத்ரை தான் பேணினாரோ-
தமக்கு உள்ளது பிறர்க்கு ஆக்குகைக்கு குற்றமோ
ஆக்கை ஆப்புண்டு –
உடம்பாராய்ந்து -அதுக்கு
தாமுற்ற –
வசிஷ்டர் சிஷ்யன் பட்ட படி பார்த்தால் அறிவு நுழையாத பெண் பிறந்தார்க்கு எத்தனை பட வேணும்
தம்பிக்கு அன்றோ சொல்லுவது அபிமதாலாபம் –
தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ பாவன மாருதம் -கிஷ்கிந்தா -1-115–
எண்ணாதே –
ஊரும் மதிளுமாய் வாழப் புக்கால் பட்டது மறப்பார்களோ
திருவரங்கச் செல்வனார்
ஐஸ்வர்ய செருக்கு இ றே

—————————————————————————

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

தாம் உற்ற பேது எல்லாம் எண்ணாதே தம்முடைய நன்மைகளையே எண்ணுவர் -என்று நீ இங்கனே இன்னாதாகக் கடவையோ
இழந்தவை மறந்து வருந்தியாகிலும் குண ஜ்ஞானத்தாலே தரித்து இருக்க வேண்டாவோ -என்ன
நானும் மறந்து தரிக்கலாமோ என்று பார்த்து பாரா நின்றேன் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை –என்கிறாள்

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் –
பூமியானது பிரளயம் கொண்டு நீர்ச் செழும்பு ஏறிக் கிடந்ததாய்த்து -பாசி ஏறிக் கிடந்ததாய்த்து
இது தான் இதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டி உடம்பில் ஏறின அழுக்காய் இருக்கும் இறே -இது அவளுக்கு பிரகாரம் ஆகையாலே
ரசிகராய் இருப்பார் பிரணயிநிகள் உடம்பு அழுக்கு ஏறி இருக்க தங்கள் உடம்பு பேணிக் குளித்திரார்கள் இ றே
அப்படியே ஸ்ரீ பூமிப் பிராட்டி உடம்பு அழுக்கு ஏறின வாறே தானும் நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டான் யாய்த்து
பண்டு ஒரு நாள் –சம்ச்லேஷித்த -அன்றும் ஒரு நாள் -விச்லேஷித்த -இன்றும் ஒரு நாளே தான் –

மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை –அழுக்கு உடம்பு -திரு விருத்தம் -1–என்று சொல்லுமவர்கள்
உடம்பு அளவிலும் அன்றிக்கே தேஹாத்மா அபிமானம் பண்ணி உடம்பையே விரும்பி இருக்குமவர்கள் உடம்புக்கும் அவ்வருகே
யாம்படி ஆக்கினான் -முமுஷூக்கள் படியும் அளவு அன்றிக்கே சம்சாரிகளிலும் காட்டிலும் தாழ்வாய் -என்றபடி –
உடம்பு அழுக்கு ஏறிற்று என்று லஜ்ஜிக்க வேண்டாத ஜென்மத்தை யாய்த்து ஏறிட்டுக் கொண்டது –
மானமிலா-
அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் –ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றும் சொல்லும் அளவு அன்றிக்கே
தாரக த்ரவ்யங்களும் வேறுபட்டு -அஜ்ஜாதிக்கு அடைத்தவையே – தாரகமுமாய் -ஸ்வ பாவமுமாய் யாம்படியாக வாய்த்து அவற்றோடு தன்னை சஜாதீயம் ஆக்கின படி
முத்தக்காசை -கோரைக் கிழங்கை -அமுது செய்யும் படி இ றே தாழ விட்ட படி –
மாயா மிருகத்தைக் கண்டு -அல்லாத மிருகங்கள் மோந்து பார்த்து வெருவி ஓடின-விறே –
அப்படி அன்றிக்கே
சஜாதீயங்கள் மோந்து பார்த்தாலும் -நம்மினம் -என்று மருவும்படி யாய்த்து –
மானமிலா –
-ஈஸ்வர அபிமானம் வாசனையோடு போனபடி
பன்றியாம் தேசுடை தேவர்
ஆஸ்ரீத அர்த்தமாக தன்னை அழிய மாறுகையாலே வந்த தேஜஸ் ஸூ
தனக்கு வேண்டு உருக் கொண்டு –திருவாய் மொழி -6-4-7-என்கிறபடியே இச்சா க்ருஹீதமான வடிவாகையாலே எறித்து இருக்கும் இ றே ரஷகத்வம் –

திருவரங்கச் செல்வனார்
அவ்வதாரத்துக்கு உதவினோம் இல்லை என்கிற இழவு தீரும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவர்
அடிமை கொள்ளுவதற்க்காக-என்றே பள்ளி கொண்டு அருளுகிறான்
செல்வனார் பேசி இருப்பனகள்-
செல்வர் சொல்லுக்கு அஞ்சாரே
விபூதி விஷயமாகவும்
ஆஸ்ரிதர் விஷயமாகவும்
சொல்லி இருக்குமவை –சரம ஸ்லோகங்கள் -என்னுதல்
அன்றிக்கே
நின்னைப் பிரியேன் -பிரியிலும் ஆற்றேன் -என்றால் போலே கூடி இருந்த போது சொன்னவை என்னுதல்
பேர்க்கவும் பேராதே –
இவற்றை மறந்து பிழைக்க வென்று பார்த்தால் -நெஞ்சில் நின்று பேர்க்கவும் பேருகிறது இல்லை
தாமுற்ற பேதம் எல்லாம் எண்ணாதே
தம்முடைய நன்மைகளையே எண்ணி -அவர் நம்மை மறந்தாலும்
கொடிய வென் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –திருவாய் -6-4-7-என்னும் படியே நம்மால் மறந்து பிழைக்கப் போருகிறது இல்லை -என்கிறாள் –

————————————————————————————

கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–11-9-

ஆறு பாட்டுக்களாலே என் உடைமையைக் கைக் கொண்டான் என்றாள்-
பெண்ணாக்கி ஆப்புண்டு தான் படுமவற்றை பாராதே பிறர் படுமவற்றையே பாரா நின்றான் என்றாள் ஏழாம் பாட்டில்
முந்திய பாட்டில் -நான் அவனை மறக்க வென்று புக்க இடத்தில் –எனக்கு அவன் குண சேஷ்டிதங்கள் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றன என்றாள்
ருக்மிணி பிராட்டியுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி -அவளுக்கு உதவின படியை அனுசந்தித்து
இவளுக்கு உதவின இது பெண் பிறந்தார் எல்லாருக்குமாக உதவின படி அன்றோ -என்று அவ் வழியாலே தரிக்கிறாள்
அர்ஜுனனுக்கு சொன்ன வார்த்தையை நாம் எல்லாம் விஸ்வசித்து இருக்குமா போலே
சர்வ சாதாரணராய் இருப்பார் ஒருவனைக் குறித்து சொன்ன வார்த்தை அவரோட்டை -அவனோட்டை யார்க்கு எல்லாம் பொது வி றே –

கண்ணாலம் கோடித்து –
முன்பு நெடு நாள் தேடிற்று எல்லாம் -தோழிப் பொங்கலிலே நேரந்தான் ஆய்த்து-தோழர்களுக்கு வைக்கும் விருந்தில் –
கன்னி தன்னைக் கைபிடிப்பான்
புதுப் பூ மோக்க வேணும் என்னும் ஆசைப் படுமா போலே
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் –
நாம் ஆத்மாபஹாரத்தை பண்ணி இருக்குமா போலே சர்வேஸ்வரனுடைய உடைமையை தன்னது என்று புத்தி பண்ணி திருட சித்தனாய் இருந்தான் ஆய்த்து –
திண்ணார்ந்து இருந்து -திண்மை உடையவனாய்
தேசு அழிந்து  திண்ணார்ந்து இருக்கவே –
மணவாளப் பிள்ளையாய் இறுமாந்து பதர்க்கதிர் போலே கவிழ்ந்து பார்க்க மாட்டாதே இருந்த படி
கண்ணன் கை பிடித்த பின்பு நிலைமை மாறிற்றே –

அண்ணாந்து இருக்கவே –
தன தேஜஸ் எல்லாம் அழிந்து -கிருஷ்ணனாலே பரிபூதனாய் -ஒரு திக்கிலும் பார்க்க மாட்டாதே -இவ்விருப்பிலே இருந்தான் ஆய்த்து –
ஆங்கு அவளைக் கை பிடித்த-
முன்புள்ள சடங்குகள் அவன் செய்தானாகில் புநரபி அனுஷ்டிக்க வேணுமோ -என்று
தான் பாணிக்ரஹணம் பண்ணினான் ஆய்த்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–
அவள் ஒருத்திக்குச் செய்தது அன்றே –
அஜ்ஜாதிக்காகச் செய்த செயல் இ றே
பேணுமூர் –அவன் விரும்பி வர்த்திக்கும் தேசம்
பேரும் அரங்கமே -அவ் ஊரின் பேரும் பெரிய பிராட்டியாருக்கு ந்ருத்த ஸ்தானம் –
அவனும் பெண் ஆளன் ஊரும் அரங்கம்-பெண்களுக்கு எல்லாம் பொது என்றபடி –

——————————————————————————-

செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-

நிகமத்தில் –
செம்மை யுடைய திருவரங்கர் –
மநோ வாக் காயங்கள் மூன்றும் மூன்று படியாய் இருப்பாரை ஒருங்க விடுகைக்கு -தாம் மநோ வாக் காயங்கள் மூன்றும் ஒருபடிப் பட்டு இருக்குமவர் –
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் -ஸ்ரீ கீதை -5-29-என்கிறபடியே -சோபனமான ஹ்ருதயத்தை உடையராய் இருப்பார்
குற்றம் செய்தாரையும் விட மாட்டாதே –ந த்யேஜ்யம்-என்று வார்த்தை சொல்லுமவர்
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாக்கிக் கொண்டு கோயிலிலே சாய்ந்து அருளினார் –

தாம் பணித்த-
நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப் பட்டவர் தாம் அருளிச் செய்த –

மெய்ம்மைப் பெரு வார்த்தை –
யதார்த்தமுமாய் –-மெய்மை –சீரியதுமாய் —பெரு —ஸூ லபமுமான –வார்த்தை என்பதால் -மூன்றும் சேர்ந்த வார்த்தை யாய்த்து -அதாவது –
உன் கார்யத்துக்குனான் உளேன் -நீ ஒன்றுக்கும் கரையாதே -உன் சர்வ பரத்தையும் என் தலையிலே சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு -என்று
திருத் தேர் தட்டிலே அருளிச் செய்த வார்த்தை
பிள்ளை அர்ஜுனனுக்கு அன்றோ சொல்லிற்று இவர்க்கு என் என்னில் அவன் சர்வ சமனாகையாலே-
என் கார்யம் என்னால் செய்ய ஒண்ணாது -என்று இருப்பார் எல்லாருக்குமாக அடியிலே சொன்ன வார்த்தை இ றே
ஆகையாலே இவர் கேட்டிருக்கக் குறை இல்லை –

விட்டு சித்தர் கேட்டிருப்பார்
அவ்வார்த்தையை கேட்ட பின்பு
உபாயத்வேன விலங்கின துரும்பு நறுக்கி அறியார்
பிராப்யத்வேன வேண்டிற்று எல்லாம் செய்வர் –
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
நாட்டு வார்த்தை –
நீ ஆர்க்கு நல்லை என்றால்-நல்லார்க்கு நல்லான் -என்ற ஒரு வழக்குச் சொல் உண்டு –
நல்லாருக்கு தீயார் உண்டோ என்றும் உண்டு
இவை இரண்டும்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —
தாமே இத்தை அந்யதா கரிக்கப் புக்கால்
இங்கனே செய்யக் கடவது அல்ல -என்று தம்மை நியமிக்க வல்லார் உண்டோ
உண்டானால் தான் செய்வது என்
உம்மை உகந்தவளை நீரும் உகக்க வேணும் -என்று கட்டி அடித்து உகப்பிக்கவோ –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -பத்தாவது திருமொழி —

September 13, 2015

அவதாரிகை –

கீழ்த் திருமொழியில் தனது ஜீவனத்தில் உண்டான நசையாலே புறம்பே சிலவற்றின் காலிலே விழுந்தாள்-
எனக்கோர் சரண் சாற்றுமினே -9-5-என்றாள்-முன்பு மேகங்களின் காலில் விழுந்தாள்
அது கார்யகரமாகப் பெற்றது இல்லை
அவன் தான் வந்து முகம் காட்டுதல் -அவன் வரவுக்கு ஸூசகமாய் இருப்பன சில உண்டாதல் செய்யப் பெற்று
அத்தாலே தரிக்க வேண்டும்படி ஆற்றாமை கரை புரண்டது
இவளைத் தரிப்பிக்கைக்கு உடலாய் இருப்பது ஓன்று அன்றிக்கே அவன் வரவு குறித்துப் போன பருவமும் வந்தது
அப்பருவதுக்கு அடைத்த பதார்த்தங்களும் ஒரு முகம் செய்து -அவனுடைய திரு மேனிக்கும் திவ்ய அவயவங்களுக்கும்
அவயவ சோபைக்கும் -பேச்சுக்கும் ஸ்மாரகமாய்க் கொண்டு -எடுப்பும் சாய்ப்புமாய் மேல் விழுந்து நலிய –
அவற்றாலே நலிவு பட்டு ஜீவிக்கை என்ற ஒரு பொருள் இன்றிக்கே இருந்தது
இவற்றின் ஒருமைப்பாடு இருந்த படியால் நமக்கு இனி நாம் ஜீவிக்கைக்கு முதலாக நினைத்து இருப்பது -இரண்டு
அவன் -ந த்யஜேயம்–யுத்த -18-3-என்றும் –ஏதத் வ்ரதம் மம -யுத்த -18-33-என்றும்
-நமே மோகம் வாசோ பவேத் –பார -உத்த -70-48-என்றும் சொல்லும் வார்த்தைகளும்
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பும் யாய்த்து –
அவன் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு ஜீவிக்க நினைத்து இருந்தாலும் ஸ்வ தந்த்ரனை இவை கொண்டு வளைக்க ஒண்ணாது இ றே
அவன் ஒரோ வ்யக்திகளை உபேஷித்தால்-அதுக்கு நிவாரகர் இல்லை இ றே -ஸ்வ தந்த்ரன் ஆகையாலே
இனி அது தப்பிற்று ஆகிலும் தப்பாது என்று இருக்கலாவது பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு –
அது தானும் தமக்கு பலிக்க புகா நின்றதோ -அதுக்குத் தான் விஷய பூதர் நாம் அல்லோமோ -என்று அதிலேயும்
அதி சங்கை பண்ணி -பின்னையும்
அல்லாதவை எல்லாம் தப்பிற்று யாகிலும் பெரியாழ்வார் உடன் உண்டான சம்பந்தம் தப்பாது –
அவன் ஸ்வ தந்த்ரத்தையும் மாற்றி நம்மையும் அவன் திருவடிகளில் சேர்த்து அல்லது விடாது -என்று
அத்யவசித்து -அத்தாலே தரித்தாளாய்த் தலைக் கட்டுகிறது –
அவன் ந த்யேஜ்யம் -என்றாலும் –ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட -என்பர் வேணும் இ றே
பட்டர் வாணவதரையனை காண எழுந்து அருளி -ஸ்ரீ தேவி மங்க லத்திலே இருக்கச் செய்தே –
அங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் சம்ப்ரமம் கண்டு அருளிச் செய்த வார்த்தை
பெருமாள் இருக்க உம்மிடத்தே ஈடுபடக் காரணம் என்ன என்ற கேட்டான் எம்பெருமானை பெற அவன் அடியாரே கடவர் —
ஆழ்வான் சம்பந்தத்தாலே -என்னைப் பற்றுகிறார்கள் என்று அருளிச் செய்தாரே –

——————————————————————————————-

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-

கார்க்கோடல் பூக்காள் –
கார் காலத்தில் கோடல் பூக்காள் பூத்த பூக்களே -என்னுதல்
கார் -பெருமை -பெருத்த கோடல் பூக்காள் – என்னுதல்
அன்றிக்கே -அவை தான் நாநா வர்ணமாய் இருக்கும் இ றே -அத்தாலே கறுத்த நிறத்தை உடைத்தன என்னுதல் –
கால பரமான போது -அவன் குறித்துப் போன காலத்துக்கு ஸ்மாரகமாகா நின்றன -என்றாகிறது –
மற்றைப் போது -அவன் வடிவுக்கு ஸ்மாரகமாக நலிகிற படியாகிறது
கார்க்கோடல் பூக்காள் –போர விடுத்து
-முதலிலே தன்னோடு கலந்து பிரியக் கடவனாக நினைத்த அளவிலே தன்னை நலியக் கடவதாக-
இப்பதார்த்தங்களை அவன் அடியிலே சிருஷ்டித்து விட்டான் என்று இருக்கிறாள்
ஜகத் சிருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷம் -என்று இருக்கை தவிர்ந்து -தன்னை நலிகைக்கு உடலாக உண்டாக்கினான் என்று இருக்கிறாள்
ஒரு விஷயத்தை பிரிந்து நோவு படுவார்க்கு இத்தனை பதார்த்தங்கள் பகையாவதே –
பிராட்டியை பிரிந்த அநந்தரம்-ராஷச ஜாதியாக பகையானால் போலே
மூல பலத்தின் அன்று ராஷச ஜாதியாக சூழப் போந்தால் போலே பார்த்த பார்த்த இடம் எங்கும் இவையேயாய்க் கிடவா நின்றன
விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே -என்ற இடத்தில் வாயு ப்ரேரிதமாக கொண்டாகிலும் சஞ்சரிக்கைக்கு யோக்யதை யுண்டு இறே மேகங்களுக்கு –
அங்கன் கால் வாங்க மாட்டாதே நிற்கிறவற்றுக்கு வார்த்தை சொல்லுகிறாள் இ றே கலங்கின படியாலே
பூக்காள்
உங்களுடைய ஸ்வாபாவிகமான மென்மையைப் பொகட்டு ஓர் அபலையை நலிகைக்கு இவ்வன்மையை எரித்துக் கொண்டு வருவதே –

கார்க்கடல் வண்ணன் –
கறுத்த நிறத்தை யுதைத்தான கடல் போன்ற நிறத்தை யுடையவன்
இதர பதார்த்தங்களினுடைய சத்பாவம் ஸ்வ இச்சாதீனமாய் இருக்குமா போலே இவ்விக்ரஹ பரிக்ரஹமும்
ஸ்வ இச்சாதீனமாய் இருக்கும் இ றே
இவ்விக்ரஹத்தை ஏறிட்டுக் கொண்டதும் தன்னை நலிகைக்கு என்று இருக்கிறாள்

எம்மேல் –
கலக்கையும் கூட மிகையாம்படி -ஆஸ்ரயமும் கூட இன்றிக்கே இருக்கிற என் மேல்
உம்மைப்-
நலிகைக்கு ஏகாந்தமான நிறத்தை ஏறிட்டுக் கொண்டு வந்து நிற்கிற உங்களை
விரஹத்தால் முன்பு தொட்டார் மேல் தோஷமாம் படி சென்று அற்று இருக்கிற என் மேல் –
உம்மை
மென்மை இன்றிக்கே வன்மை உடையாரையும் முடிக்க வல்ல உங்களை
நிர்ஜீவ சரீரத்திலேயும் உயிரைக் கொடுத்து நலிய வல்லவை என்று இருக்கிறாள் –
அவன் நிறத்தைக் காட்டி உயிரை உண்டு பண்ணி நலியவற்றவை -என்றபடி –

போர்க் கோலம் செய்து –
இந்த்ரஜித் வதத்துக்கு இளைய பெருமாளை பெருமாள் அலங்கரித்து புறப்பட விட்டால் போலே
தன்னை முடிக்கைக்கு இவற்றை ஒப்பித்துப் போர விட்டான் என்று இ றே இருக்கிறாள்
அங்கு பிரணயிநியைப் பிரித்தாரை முடிக்கைக்காக புறப்பட விட்டான் -சக்கரவர்த்தி திரு மகன்
இங்கு பிரணயிநியை முடிக்கைக்கு கிருஷ்ணன் தனது தீம்பாலே இவற்றை வர விட்டான் என்றாய்த்து நினைத்து இருக்கிறது
செய்து –
இவற்றுக்கு நிறம் கொடுத்தான் அவன் இ றே
கிருஷ்ண ஏவ ஹிலோகா நாம் உத்பத்திரபி சாப்யய -பார -சபா -38-23-

போர விடுத்து அவன்
இவற்றுக்கு த்வரை போராது என்று பார்த்து -நீங்கள் போங்கோள் -என்று அவன் தானே பின்னே நின்று
த்வரிப்பிக்கிறான் என்று இ றே இருக்கிறாள்
ராஜாக்கள் எதிரிகள் அரண் அழியா விட்டால் தாங்கள் முகம் தோற்றாமே நின்று
தங்களுக்கு அசாதாரண சிஹ்னமான சத்ர சாமராதிகளை போக விடுமா போலே
இவற்றுக்குத் தன நிறத்தைக் கொடுத்து போக விட்டான் அவன் என்று இ றே இருக்கிறாள்
நம்மை நலிகைக்கு உடலாக இவற்றை உண்டாக்கினான் அன்றாகில் நம் கண் வட்டம் ஒழிய நிறுத்தவுமாமே-

எங்குற்றான்-
தேன நாதேன ந மஹதா நிர்ஜகாம ஹரீச்வர -பால -1-68-
மஹா ராஜ ருடைய மிடற்று ஓசையின் தசைப்பைக் கேட்டு முன்பு போலே கோழைத் தனமாய் இருந்ததில்லை
ஓரடி இவனுக்கு உண்டாக வேணும் நமக்கு இரை போருமாகில் பார்ப்போம் -என்று புறப்பட்டான் இ றே
அப்படியே இவற்றினுடைய உத்தியோகம் இருந்த படியையும் பாதகத்வம் இருந்தபடியும் கண்டோமுக்கு
இவற்றின் அளவல்ல -அவன் பின்னே வந்து நின்றான் -என்று எங்குற்றான் -என்கிறாள்
தன்னை முடிக்க நிற்கிற இவற்றை -எங்குற்றான் -என்கிறது என் என்னில்
இவை முடிக்கை தவிராதாகில் அவ்வடிவை ஒரு கால் கண்டு முடியலாம் என்னும் அத்தாலே
நம் அபிமதமும் பெற்றோமாகில் பெறுகிறோம்
அவன் நினைவும் தலைக் கட்டிற்று ஆகிறது
இவளுக்கு அபிமதம் அவன் வடிவைக் காண்கை-அவனுக்கு அபிமதம் இவளை முடிக்கை
எங்குற்றான் என்றாள் இங்குற்றான் என்று அவற்றுக்கு மறுமாற்றம் சொல்ல வேண்டும்படி இ றே தன அவஸ்தை தான்
ஷிப்ரம் ராமாய சம்சத்வம் –ஆரண்ய -49-32-
அவற்றுக்கு –கோதாவரிக்கு -அபிமானியான தேவதா முகத்தாலே யாகிலும் வார்த்தை சொல்லுகைக்கு யோக்யதை உண்டு இறே அங்கு
அதுவும் இல்லை இ றே இவற்றுக்கு
இவை ஒரு வார்த்தை சொல்லக் கேட்டிலள்
இவை ஒரு வார்த்தை சொல்ல மாட்டா என்று அறியாதே
அவன் வாராமையாலே இ றே இவை பேசாதே நிற்கிறது -என்று பார்த்து

ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது –
என்கிறாள் –
அவனோ வந்திலன் –
அவன் விபூதியோ நமக்கு பகையாய்த்து
வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிப்போம் என்றால் போத யந்த பரஸ்பரம் –பண்ணுகைக்கும் ஆள் இல்லை யாய்த்து
இனி நாம் ஆர் வாசலிலே கூப்பிடுவோம்
அவன் நமக்கு பாதகனான அன்றும் அவன் விபூதி ஓர் அகத்தடியாராய் நம் கருத்திலே நிற்கும் என்று இருந்தோம்
அதுவும் அவன் கருத்திலே நின்ற பின்பு நாம் இனி யார் வாசலிலே கூப்பிடுவோம் –

அணி துழாய்த் தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–
அவனும் அவன் விபூதியும் ஒரு மிடறானால்-நானும் என் விபூதியும் ஒரு மிடறாகப் பெற்றேனோ
அதுவும் -அவன் திருமேனியில் சாத்தின திருத் துழாய் மாலை என்றவாறே உடை குலைப் படா நின்றது
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்னக் கடவது இறே
அதுவும் இப்போது பந்தகமாய்விட்டது அத்தனை –
நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் –
நெஞ்சு எனக்கு இல்லாவிட்டால் நானோ தான் எனக்கு உளனாய் இருக்கிறேன்
நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தேக பரிக்ரஹத்துக்கு அடியான கர்மம் பண்ணினேன் நானே அன்றோ –
அந்தோ –
அவன் இல்லை யாய்த்து
அவன் விபூதி இல்லை யாய்த்து
தான் இல்லை யாய்த்து -ஸ்த்ரீத்வ ஸ்வரூபம் இல்லையே
தன் விபூதி இல்லை யாய்த்து
இத்தசை கண்டு இரங்கி கிருபை பண்ணுகைக்கு புறம்பு ஒருவரும் இல்லை யாய்த்து
தன் தசைக்கு தானே இரங்கி ஐயோ என்கிறாள் –

———————————————————————————————

மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-

திருஷ்டி விஷம் போலே கோடல் பூக்கள் பாதகமாய்ப் புக்கவாறே -அவற்றுக்கு இறாய்த்து கண்ணை மேலே வைத்தாள்-
அங்கே மேல் தோன்றிப் பூக்களாகக் கிடந்தது –
அவற்றை நோக்கி
மேல் தோன்றி பூக்காள் -என்கிறாள் –
அதுக்குத் தப்பினாரையும் அழிக்கக் கடவோம் -என்று அதுக்கு ஒரு பேரும் பெற்று நீங்கள் மேலே புக்கு நிற்பதே –
பஹூச்யாம் -என்றும் -அவன் அநேகங்களை சிருஷ்டிக்கும் என்று கேட்டிருந்தோம்
நாட்டில் கோடல் பூக்களும் இல்லையோ-
தேவாதி பேதங்கள் உண்டாகும் படி அன்றோ சிருஷ்டிப்பது

மேல் உலகங்களின் மீது போய்-
அண்டங்களையும் ஆவரண சப்தகத்தையும் கடந்து மேலே போய்-அவ்யக்தம்  அஷரம் தம –என்றால் போலே
சொல்லுகிறவற்றுக்கும் மேலே போய் –

மேல் தோன்றும் சோதி –
அத்யர்க்கா நலதீப்தம் தத் ஸ்தானம் -என்று சொல்லும்படியாய் இருக்கிற பரம பதத்திலே
தமஸ பரமோ தாத -யுத்த -114-15-என்றும் தமஸ பரஸ்தாத் -என்கிறபடியே –

வேத முதல்வர் வலம் கையின் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது
வேதைக -சமதிகம்யராய் இருக்கிறவருடைய
வலத் திருக்கையின் மேல் தோன்றுகிற திரு வாழியின் வெவ்விய சுடர் போல் சுடாதே
இவ்வருகு உண்டான ஆதித்யாதி களுடைய தேஜசைக் காட்டிலும் இந்த்ராதிகளுடைய தேஜஸ் ஸூ விஞ்சி இருக்கும்
அதில் காட்டில் ப்ரஹ்மாதி களுடைய தேஜஸ் ஸூ விஞ்சி இருக்கும்
அதில் காரணத்வ பிரயுக்தமாய் வருவதாகையாலே மூல பிரக்ருதியினுடைய தேஜஸ் ஸூ விஞ்சி இருக்கும்
அது தான் தமஸ் ஸூ என்னும் படி பரமபதத்தில் புகர் அதுக்கு பிரகாசத்தைப் பண்ணும்
திவ்ய மங்கள விக்ரஹம் அதுக்கு பிரகாசத்தைப் பண்ணும்
அதுக்கு மேலே இ றே திரு வாழி ஆழ்வான் உடைய தேஜஸ் ஸூ
எம்மை ஆழியின் வெஞ்சுடர் போல் சுடாது
மஹா நசாதிகளிலே-மடப்பள்ளி போன்ற இடங்களில்  – அக்னிக்கும் தூமத்துக்கும் சாஹசர்யத்தைக் கண்டு பின்னை இ றே பர்வதத்தில் அநுமிப்பது
அப்படியே இங்கு உள்ளவற்றுக்கும் அவ் விபூதியில் உள்ளவற்றை திருஷ்டாந்தமாகச் சொல்லும் படி யாய்த்து
அவ்விடம் ஆண்டாளுக்கு விதேயமான படி
இவ்விடம் மேடாய் அவ்விடம் பள்ளமாய்த் தோற்றின படி –
பிரசித்தத்திலே இ றே வ்யாப்தி க்ரஹிப்பது-
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று முற்பட நித்ய விபூதியைச் சொல்லி பின்னை –இலனது என்று
மூன்றாம் பாட்டிலே இ றே லீலா விபூதியை அனுசந்தானம் பண்ணிற்று
சுடாது எம்மை
அவன் உகவாதாரை இ றே முடிப்பது -நீ உகந்தாரை முடியா நின்றாய்
அருளார் திருச்சக்கரம் -திருவிருத்தம் –33- என்றும் –அருளாழி -திருவாய் -1-4-6- என்றும் இ றே உகப்பாருக்கு அருளைப் பொழிவது-

மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –
1-இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே
என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்
பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மானபடியாலே சொல்லுகிறாள் என்று —கைவல்ய கோஷ்டியில் –
மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-
பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்
2-கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –எம்பார் அருளிச் செய்யும் படி
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே
-என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
நாம் ரஹச்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இ றே
-சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இ றே
சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இ றே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-
3-அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி -ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இ றே –
அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –மாற்றோலைப் பட்டோம் என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிசூபாலாதிகள் திரளில் வைத்தாலும் அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே-
அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –

———————————————————————————————

கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே–10-3-

மேலில் கண்ணை மாற்றி  பக்கத்திலே கண்ணை வைத்தாள் –
அங்கே செடியிலே கோவை படர்ந்து பழுத்துக் கிடந்தது -அத்தைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள்
கார்க்கோடல் நிறத்துக்கு ஸ்மாரகமாய் நலிந்தது —
மேல் தோன்றி திரு வாழிக்கு ஸ்மாரகமாய் நலிந்தது –
கோவைப் பழம் திரு அதரத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறது ஆய்த்து-(தொண்டை அம் கனி -கோவைக் கனி -போன்ற திரு அதரம் -கோவைச் செவ்வாய் -)
கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை
கொடியாகையாலே -இவளும் வேயர் தங்கள் குலக்கொடி அன்றோ -சாபத்ன்யத்தாலே நலிந்தால் போலே இரா நின்றது
மணாட்டி -எம்பெருமானை இட்டு சொல்கிறாள்
அன்றிக்கே மணம் உடைமையாலும் என்றுமாம்
அது இங்கு உண்டோ பின்னை என்னில் -உபமேயத்தைப் பற்றச் சொல்கிறது
உபமேயமான திருப்பவளச் செவ்வாயுக்கு மணம் உண்டே
சர்வ கந்த -என்கிற வஸ்துவை இ றே உபமேயமாகச் சொல்கிறது
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ என்று கேட்கவும் செய்தாளே
நீ –
கோடலும் –மேல் தோன்றியும்- அமையாதோ
ஒரு தூற்றிலே -புதரிலே -கிடந்தது – நலிகைக்கு என்று பழுப்பதே
உன்
பெண்ணான உனக்கு முன்னம் நலிவு இல்லையே
தன்னைத் தானே நலிந்து கொள்ள வேணும் என்னுமது இல்லை இ றே அதுக்கு
தன்னைத் தான் அறிந்ததாகில் பிறருக்கு நலிவு பண்ணக் கடவோம் அல்லோம் -என்று கண் வட்டத்தின் நின்றும்
கடக்க நிற்க வேண்டாவோ என்று இருக்கிறாள்
கொழும் கனி கொண்டு –
அதுக்கு செவ்வி உண்டாய் இருக்கும் இ றே
எம்மை
இப்பாரிப்புக்கு எல்லாம் இங்கே விஷயம் உண்டோ –

ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும்
தோல் புரையே நலிந்து விடுகை அன்றிக்கே உயிர் நிலையிலே நலியா நின்றது
கோடலும் மேல் தோன்றியும் அலைத்த  ஆவியை நீ என் செய்யத் தொலைக்கிறாய்
தொலைவியேல்-என்கிறதுக்கு -நான் தொலைகிறது உண்டோ என்ன -அதுக்கு வாயில்லையே -அசேதனத்வாத் –என்னுதல்
-பாதகத்வம் உண்டாகையாலே -என்னுதல்
அது அவனுடைய பவளச் செவ்வாயாகவே நினைத்து கூறுகிறாள் –வாய் அழகர் தம்மை அஞ்சுதும்-
கலக்கப் புக்காலும் அஞ்சி நான் கண் செம்பளித்த படியே கான் இருப்பது
முன்பு அஞ்சிக் காண் அதுக்கு இருப்பது -அஞ்சுதும் -என்றால் நீ அஞ்ச வேண்டா காண் –மாஸூ ச-என்று அஞ்சாதே என்று
என் கண் வட்டத்தின் நின்றும் கடக்க நிற்க வி றே அடுப்பது -அது செய்தது இல்லை

பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே–
இத்தைக் கால் கட்டும்படி அவன் ஸ்வபாவம் அந்யதாகரித்தது-என்னைத் தோற்றிக் கிடீர்
பெரியாழ்வாரும் சர்வேஸ்வரனுமாய் ரஹசயங்கள் உண்டாய் போருகிற காலங்களில் இவை எல்லாம் இல்லை கிடீர்-
அந்த பரிமாற்றம் குலைந்தது நான் பிறந்தததால் அன்றோ என்றபடி –
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே–
பெரியாழ்வார் காலத்தில் இரண்டு வார்த்தை சொல்ல ஒண்ணாதாய்த்து அவனுக்கு –
அதாவது இரண்டு வார்த்தை சொல்லில் அவரைக் கிடையாதே -ஆகையால் ஒரு வார்த்தையே யாய்த்து அவர் காலத்தில் உள்ளது
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்று-(துரியோதனன் விஷயமாக -மா முனிகள் வியாக்யானம் -அங்கு -2-6-4–எம்பெருமான் விஷயமாகவும் சொல்லலாம் என்பதே பெரியவாச்சான் பிள்ளை அபிப்ராயம் ) ஐயரை இடுவித்து கவி பாடுவித்திக் கொண்டது அத்தனை இறே
நடுவே -ஜீவிக்கிலும் ஜீவிக்கிறாள் -முடியிலும் முடிகிறாள் நாம் வேண்டிற்றுச் சொன்னால் -என்று இருக்கலாவது எனக்கு இ றே
பாவியேன் தோன்றி –
சங்கே மத்பாக்யே சங்ஷயாத்-சுந்தர -26-11–என்றும்
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் -என்றும் –மத்பாபமேவ -என்னுமா போலே சொல்லுகிறாள்
பாம்பணையார்க்கும்-
இவனும் இரண்டு வார்த்தை சொல்லுவானாய்ச் சொன்னான் அல்லன் -நடுவே பள்ளித் தோழமை பலித்தது-
ஒன்றாக படித்த நட்பு -படுக்கை நட்பு
அதுவே அன்றிக்கே ஒதிற்றும் -வாசித்ததும் பேசியதும் -அத்யயனம் பண்ணிற்றும் -அவதாரங்களில் –ஒரு கிடையிலே இ றே (ஓதிற்றும் ஒரு கிடையிலே இ றே என்றது   சாடு -படுக்கை வார்த்தை நம்பத் தக்கது இல்லை என்றபடி )
பாம்பணையார்க்கும் –
தம் உடம்போடு அணைய வேணும் என்று ஆசைப் பட்டாருக்கு உடம்பு கொடுத்து போருமவர்க்கு
தம் பாம்பு போலே –
அவனோடு உண்டான ரோஷம் திரு வனந்த வாழ்வான் அளவும் செல்ல அசலிட்டு -தனது படுக்கையாய் இருக்கச் செய்தேயும் தம் பாம்பு என்று
அவனோடு சேர்த்து சொல்கிறாள் -இப்போகத்தாலே -பாம்பின் உடம்பு இன்பம் -இ றே நம்மை மறந்து தரிக்க வல்லனாய்த்து என்னுமத்தாலே
பிறரைக் கெடுக்க நினைத்தால் சேர்த்து சொல்லுவது அவனோடு யாய்த்து –
பாஞ்ச சன்னியத்தை பற்ப நாபனோடும் வாய்ந்த பெறும் சுற்றம் -7-10–என்று ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானை அவனோடு சேர்த்து
சொன்னால் போலே -இவனையும் அவனோடு சேர்த்து சொல்கிறாள்
தன்னோடு உறவு அறுக்கை இறே அவனைக் கெடுக்கையாவது -அவன் ஸ்வரூபத்தை அழிக்கிறாள்-
படுக்கை தன்னதே –
தனக்கு விஷயமாக விட்டத்தையும் -படுக்கைப் பற்று -ஸ்த்ரீ தனம் -என்று இ றே சொல்லுவது -பெரியாழ்வாரை அவனோடு சேர்த்து
தங்கள் தேவர் -சொன்னால் போலே இ றே இவனையும் அவனோடு சேர்த்து சொல்லுகையாவது-
நாவும் இரண்டு உளவாய்த்து-
இரண்டு நாவுண்டால் -பிறக்கும் கார்யம் பிறக்கையாலே-நாவும் இரண்டுளவாய்த்து -என்கிறாள்
இரண்டு நா உடையார்க்கு அல்லது இரண்டு வார்த்தை சொல்ல ஒண்ணாது என்று இருக்கிறாள்
ராமோ த்விர் நாபிபாஷதே -என்றும்
ந மே மோகம் வசோ பவேத் -என்றவை எல்லாம் தமக்கு அன்றாய் விட்டது -நின்னைப் பிரியேன் பிரியில் ஆற்றேன்-என்று சொல்லி வைத்து
பிரிந்தது தனக்கு இ றே
இப்போதும் அவை எல்லாம் ஒரு வார்த்தையாய் இரா நின்றது இறே நாட்டார்க்கு
நாணிலே யேனுக்கே-
அவன் ஸ்வரூபம் அந்யதாபிவிக்கும் காட்டில் என் ஸ்வரூபம் அந்யதாபவிக்க வேணுமோ –
அவன் ரஷகத்வத்தில் சிறிதும் குறைய நிற்கும் காட்டில் -அத்தை மறைக்கை அன்றிக்கே ஜீவிக்கைக்கு உறுப்பாக
அவன் குண ஹானியை விளைக்கும் படி லஜ்ஜா ஸூந்யையாக வேணுமோ நான்
தம்மைப் பேணாதே அத்தலைக்கு வரும் அவத்யத்தை பரிஹரித்து அவனைப் பேணும் பெரியாழ்வார் வயிற்றில்
பிறப்புக்கும் இதுக்கும் என்ன சேர்த்தி உண்டு –

———————————————————————————————————-

முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-

கோவைப் பழமானது திரு வதரத்துக்கு ஸ்மாரகமாய் பாதகமாய் புக்கவாறே
அதுக்கு அவ்வருகாக கண்ணை வைத்தாள் -அங்கே முல்லையானது நன்றாகப் பூத்துக் கிடந்தது
உள்ளே வெண் பல் இலகு சுடரிலகு -திருவாய் -8-8-1–என்னக் கடவது இ றே
அது ஸ்மிதத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி சொல்லுகிறது
முல்லைப் பிராட்டி –
வழி பறிக்குமவனைக் கண்டால் ஸ்துதித்து பிரான் என்னுமா போலே —
ஒரு கோவையிலே -கோவைப் பழத்திலே –கொள்ளையர் கூட்டத்திலே–கோடல் பூ மேல் தோன்றி பூ -கோவைக் கொடி -கூட்டம் –
அகப்பட்டு தப்பி உள்ளே புகுந்தாரையும் நலியக் கடவையோ
அக்கோவையைத் தப்பினோம் இ றே என்று இருந்தோம்
திரியவும் நீ புகுந்து நலியா நிற்பதே
நொந்தாரை ஐயோ என்கை அன்றிக்கே நலிகைக்கு ஒரு கொடியாய் இருந்தாய் நீயும் –

நீ யுன் முறுவல்கள் கொண்டு
உன் பூவில் விகாசத்தைக் கொண்டு
எம்மை
முன்பே முடிந்தாரை முடிக்கத் தேடுவார்களோ –

அல்லல் விளைவியேல் –
திரு அதரத்துக்கு உள்ளான திரு முத்து நிரைக்கு ஸ்மாரகமாய் –வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண் பல் விலகு -திருவாய் -8-8-1-என்றபடி
இது நலிகிற நலிவு பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே –அல்லல் -என்கிறாள் யாய்த்து –
அவனுடைய ஸ்மிதத்தை ஸ்மரிப்பித்து என்னைத் தடுமாறப் பண்ணாதே கொள் –

ஆழி நங்காய் –
மேலே கடலை சொல்லுகிறதொரு பாட்டு -10-9-உண்டாகையாலே முல்லை தன்னையே சொல்லுகிறது –
காம்பீர்யத்தாலும் நிறைவுடைமையாலும் இரந்தார் கார்யம் செய்ய வேண்டாவோ –
வட்டமாகப் பூத்த பூக்களும் மதுவுமாய் சந்நிவேசம் தானே பிரியமாய் இருக்கும் இ றே –

உன் அடைக்கலம்
அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா -யுத்த -18-28-என்னக் கடவது இ றே
சாத்ரவம் மாறாதே செல்லச் செய்தேயும் -சரணம் -என்கிற உக்தி உண்டாய் -அது செவிப்பட்டால் சேதன அசேதன விபாகம் அற
இரங்க வேண்டி இருக்கும் தன வாசனையாலே சொல்லுகிறாள் –

கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —
வரம்பு அழிந்த செயலை உடையவள் -மரியாதை தப்பி நின்றவள் இ றே
பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு பெருமாளைப் பற்ற பிராப்தமாய் இருக்க -அவளோடு மலைந்து பெறப் பார்த்தவளை –
இவளே இ றே இவனோட்டை அனுபவத்துக்கு தண்ணீர் துரும்பு -என்று அவள் மேலே விழுந்தாள் யாய்த்து –
மூக்கரிந்த –
தமக்கு அனந்யார்ஹராய் இருப்பாரோடு உண்டான சம்ச்லேஷத்துக்கு விரோதிகளாய் வருவாரை அழியச் செய்யுமவர் கிடீர்
குமரனார் –
நோவு பட்டவள் —தருனௌ ரூப சம்பன்னௌ–ஆரண்ய -19-14-என்று கூப்பிடும்படியான பருவம் படைத்தவர் –
தான் பட்ட பரிபவத்தை முறைப்பட சென்றவள் இ றே –தருனௌ -என்கிறாள்
அப்பருவத்திலே துவக்கு பட்ட படியாலே -தான் பட்ட நலிவை சம்போக மத்யத்தில் பிறந்த போக சிஹ்னத்தோ பாதியாக
நினைத்து இருந்தாள் யாய்த்து –இல்லையாகில் பருவத்தை பேசக் கூடாது இ றே –
சொல்லும் பொய்யானால் –
ஆஸீத சம்ச்லேஷ விரோதிகளை போக்கும் இடத்தில் அர்த்த க்ரியா கார்யமாம் படி பண்ணித் தலைக் கட்டுமவர்
இங்கு உக்தியையும் தலைக் கட்டு கிறிலர்-
தம்மை ஆஸ்ரயித்தவர்கள் விரோதியைப் போக்கக் கடவ அவர் தம்மையும் -அப்போது நியமிக்க மாட்டு கிறிலர் –
அவ்வார்த்தை பொய்யாம் என்று பொய்யானால் -என்கிறாள் அல்லள்
அதுக்கு விஷயம் நாமாகையாலே தப்பிலும் தப்பும் என்கிறாள் –
நானும் பிறந்தமை பொய்யன்றே-
இது வ்யபிசரித்தாலும் வ்ய்பிசரியாது என்று நாம் நினைத்து இருந்தது பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பே இ றே
அதுக்கும் இலக்கு நாம் ஆனபின்பு இனி அது தான் நமக்கு கார்யகரமாய்ப் புகா நின்றதோ
பெரியாழ்வாரோட்டை சம்பந்தம் பகவல் லாபத்தோடு நம்மை சந்திப்பித்து விடும் என்று இருந்தோம்
இனி அதுவும் தப்பிற்று இ றே
பொய்யன்றே -என்றது பொய்யாம் இ றே -என்கை
பூதார்த்ததோடு-பவிஷ்யத்ரத்ததோடு வாசி என் இப்போது கார்யகரம் ஆகா விட்டால்

———————————————————————————————————-

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-

முல்லைப் பூவானது கண்ணுக்கு இலக்காய் நின்று பாதகமாய் புக்கவாறே அங்கு நின்றும் முகத்தை மாற வைத்து கண்ணைப் புதைத்தாள்-
செவி புதைக்க அறியாமையாலே அகப்பட்டாள்
பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்-
சம்ச்லேஷ சமயத்திலும் உங்கள் பாட்டுக் கேட்டு அறிவுதோம் இ றே-
இன்று தொடங்கி பாடுகிறி கோள் அன்றே
என்றும் ஒக்கப் பாடிப் போரா நிற்கச் செய்தே -செவி வழியே நெருப்பைச் சொரிந்தால் போலே –
இற்றைக்கு உதவ இது ஒரு பாட்டை எங்கே தேடினி கோள் –
பாடும் குயில்காள் –
ந து ராஷச சேஷ்டித-ஆரண்ய -17-24–என்கைக்கு ஒருவரையும் பெற்றிலோமீ –
ஈது என்ன பாடல்
இக்காலத்திலே பாடுவதே
இப்பாட்டைப் பாடுவதே
இரண்டருகும் நெருப்புப் பற்றி எரியா நிற்கச் செய்து நடுவே இருந்து சாந்து பூசுவாரைப் போலே இருந்து பாட்டுக் கேட்கும் தசையோ என் தசை
நெருப்பு கிடந்த இடத்தே சுடுமா போலே அவற்றினுடைய ஆஸ்ரயத்தையும் அழிக்கும் என்று இருக்கிறாள்
கெடுவிகாள் உங்களுக்கு செவி இல்லையோ –
நல்வேங்கட நாடர்-
ஆற்றுப் பெருக்கில் முன்னே சினை யாறு படுமா போலே அவன் வரவுக்கு உறுப்பான நல குறிகள் உண்டாய் இரா நின்றன-அது பலித்தால் வந்து பாடப் பாரி கோள்-நல்வேங்கட நாடர்-ஆசீதருக்கு அருமைப் பட வேண்டாத படி வந்து நிற்கிறவர் யாய்த்து-பரமபதம் கலவிருக்கையாய் இருக்க அத்தை விட்டு திருமலையிலே வந்து முகம் காட்டினார்-
ஸ்ரீ வில்லி புத்தூரிலே போலே இருந்தது பயணம் –
நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்–
உங்கள் பாட்டுக் கேட்கைக்கு செவி உண்டானால் வந்து பாடுங்கோள்-
இப்போது இவள் கரணங்கள் ஸ்வ ஸ்வ விஷயங்களை கிரஹிக்க மாட்டாதே இ றே கிடக்கிறது
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு -பெரிய திருமொழி -7-5-9=-என்கிறபடியே
வந்து பாடுமின்
இபொழுது உங்கள் சந்நிதி எனக்கு அசஹ்யமாய் இரா நின்றது –போங்கோள்-என்றபடி
உங்கள் சந்நிதி அபேஷிதமாய் இருப்பதும் ஒரு போது உண்டு இ றே -அப்போது வந்து பாடுங்கோள் –

ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே —
தாம் வருவதற்கு முன்னே -தம் வரவுக்கு ஸூ சகமான பரிகரத்தை உடையவர் –
அலாபத்தாலே துடிக்கைக்கு என்று ஒரு விபூதியைக் கண்டு விட்டால் போலே –வாயும் திரை யுகளும் -திருவாய் 2-1- போலே
லீலா விபூதி முழுவதும் தம்மைப் போலே அவனை பிரிந்து துடிப்பதாக ஆண்டாள் நினைக்கிறாள்
லாபத்தில் களிக்கைக்கு ஒரு விபூதி –ஆடும் -களித்து-சஞ்சரித்து – இருக்கும் -விபூதியைக் கண்டு விட்டார்
விடாயர் இருந்த விடத்தே சாய் கரத்தைக் கொடு வந்து சாய்ப்பாரைப் போலே ஆசைப் பட்டார் இருந்த இடத்தே
கொடு வந்து சாய்க்கும் பரிகரத்தை உடையவர் –
வந்து அருள் செய்து கூடுவர் ஆயிடில் –
கூட வேணும் என்று இருக்கிறவோபாதி-இங்கனேயும் ஒரு நியதி வேண்டுமாய்த்து இவளுக்கு –
தான் அவன் இருந்த இடத்தே சென்று தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்து பெரும் பெறு காலன் கொண்டு மோதிரம்
இடுமோபாதியாக நினைத்து இருப்பது —அத்தலையால் வந்து கூடவும் வேணும் –தன் ஆற்றாமை தோற்றவும் வந்து கூடவும் வேணும்
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19-என்ன வேண்டும்படி இருக்கும் என் வழியாலே பேறாகை யன்றிக்கே
ததாமி புத்தி யோகம் -ஸ்ரீ கீதை -10-10-என்னும் அவன் வழியாலே பேறாக வேணும்
சிஸூ பாலனும் எம்பெருமானைப் பெற்றான் இ றே என்றார்களாய்  ஆளவந்தார் கோஷ்டியிலே –
அவன் பெற்றதைப் பேறாகச் சொல்ல ஒண்ணாது
ருசி முன்னாக பெரும் பேறாய்த்து பேறாவது
இவன் இருக்கில் நாடு அழியும் என்று கொற்றவன் வாசலுக்கு உள்ளே சுழற்றி எறிந்தான் அத்தனை காண்-என்றாராம்
பெரிய தேவப்பிள்ளை என்று பட்டர் ஸ்ரீ பாதத்திலே வர்த்திப்பான் ஒருவன் உண்டு
அவன் அகத்தில் உள்ளார் எல்லாரையும் அடர்த்து வார்த்தை சொல்லிக் கொண்டு போரும்
அவன் கிழக்கே கார்யம் உண்டாய் போன அளவிலே -நஞ்சீயர் -அவன் போன படியாலே அகத்தில் உள்ளவர் சில நாளைக்கு பிழைத்தார்களே -என்றாராம்
அத்தைக் கேட்டருளி -நம்மோடு ஒரு சம்பந்தத்தை சொல்லி நாட்டை ஹிம்சிக்குமாகில் நம்மைத் தேய்த்து தின்றாகிலும் இங்கே கிடக்கை அழகியது அன்றோ –
ப்ரீதி காரிதமாக அசேஷ அவஸ்தைகளும் உசிதமான கைங்கர்யத்தைப் பெறும் அன்று இ றே-இது பேறாவது-
அவனே உபாயம் என்று அத்யவசித்து -சரணம் புகச் செய்தேயும் -பரம பக்தி பர்யந்தமாக பிரார்த்தித்தார் இ றே
கைங்கர்யம் ரசிக்கைக்காக -எம்பெருமானார் கத்யத்தில்
பர பக்தி தொடங்கி-பரம பக்தி பர்யந்தமாக -நடுவு பிறக்கிறவை அடைய பிராப்ய அந்தர்கதம் ஆகிறது இ றே இவர்க்கு
ஓர் அதிகாரிக்கு உபாயத்தில் தலையடியாய் இருக்கும் -உபாசகனுக்கு –
ஓர் அதிகாரிக்கு ப்ராப்யத்தில் உபக்ரமமாய் இருக்கும்
கூவி –பிரபன்னனுக்கு –
உங்கள் பாட்டுக் கேட்கை அபேஷிதமாய் இருப்பதொரு பொது உண்டு இ றே -அப்போது அழைத்துக் கேட்கிறோம்
பாட்டுக்கள் –
சிஷா பலத்தால் உள்ளவையும் -நீங்கள் கைவந்து பாடுமது வெல்லாம் செவி தாழ்த்துக் கேட்டுத் தருகிறோம் –

———————————————————————————————————-

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன்
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–10-6-

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
கணமாய்-நினைத்த கார்யம் செய்து தலைக் கட்டும் தனையும் அளவுடையி கோளாய் இருக்கிற நீங்கள்
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே -10-2-என்று
அன்று அனுகூலமாய் இருப்பதொரு திரளிலே போய்ப் புக வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு –
பிரதிகூலமான திரள் -கார்க்கோடல் -மேல் தோன்றி -கோவை முல்லை குயில்கள் மயில்கள் -இவை கிடந்த வெள்ளம் என்-
நின்றாடு காண மயில் போல் நிறமுடைய நெடுமாலுக்கு-பெரியாழ்வார் -4-8-9- ஸ்மாரகமாய் நலிகிறபடி –
கண்ணபிரான் திருக் கோலம் போன்று –
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்கை மயில் தழைப் பீலி சூடி -பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணரப் பெய்து -பெருமாள் திருமொழி -6-9–
என்னும் படி இருக்கும் கிருஷ்ணனுடைய ஒப்பனை போலே இருந்ததீ-

அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன்
கண்ணுக்கு அழகியதாய்
பரதத்திலே எழுதி அறியாமையாலே ஒருவர் ஆடி அறியாதே கிடக்கும் கூத்துக்கள் எல்லா வற்றையும் ஆடி
ஆடுகின்றீர்க்கு
ஒரு கால் ஆடிற்றாய்த் தலைக் கட்டுகை அன்றிக்கே இருக்கை
அடி வீழ்கின்றேன்
இக் கூத்து மாற வேணும் என்று உங்கள் காலிலே விழுகிறேன்

நாங்கள் உன் காலில் விழுமத்தனை போக்கி கூத்தை மாற வேணும் என்று எங்கள் காலிலே நீ விழக் கடவதாக
சொல்லக் கடவதோ -இதுவும் ஒரு வார்த்தையே -என்று அவற்றுக்குக் கருத்தாக –
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–
செய்யலாவது உண்டோ –
எல்லாருக்கும் அவனைப் பின் செல்ல வேணுமே
தம்மைக் கிட்டினாரைத் தரிப்பிக்க கடவர்
நமக்கு சோகத்தை உண்டாக்கி உங்கள் காலிலே விழும்படி பண்ணினால் இனி நம்மால் செய்யலாவது உண்டோ –
தம்மோட்டை ஸ்பரசத்தாலே விகசிதமான பணங்களை உடையவனாய்
நித்ய அனுபவத்தாலே களித்து வர்த்திக்கிற திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடையவர்
தம் உடம்போடு அணைய ஆசைப் பட்டாருக்கு உடம்பு கொடுக்குமவர் –
பற்பல காலமும் பள்ளி கொள் மண வாளர் –
அவர் அநாதி காலம் கூடிப் பண்ணின கிருஷி பலம் அன்றோ நானுங்கள் காலைப் பிடிக்கிறது
மணவாளர் -என்கையாலே –பெரிய பெருமாள் போலே காணும் இவளை இப்பாடு படுத்தினார் –
நம்மை வைத்த பரிசிது காண்மினே–
கலக்க என்ற ஒரு பேரை இட்டு தாம் வந்து என் காலை முற்படப் பிடித்து -பின்னைப் பேர நின்று –
இப்போது நான் உங்கள் காலைப் பிடிக்கும் படி அவர் பண்ணி விட்டால் நம்மால் செய்யலாவது உண்டோ —
உங்களுக்கும் கால் தர வேண்டி
எனக்கும் கால் பிடிக்க வேண்டும் படி அன்றோ அவர் பண்ணிவிட்டது
இப்புத்தி இல்லையாகில் இவற்றின் கால் பிடியாளே-
அவற்றுக்கும் கால் கொடுக்க வேண்டுகிறது இ றே பார தந்த்ரியத்தாலே
நித்யாபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -77-என்னக் கடவது இ றே
இங்கன் அன்றாகில் கால் கொடுக்க முறை உள்ளது ஒருவனுக்கே இ றே
இவன் தன்னை இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆக்கி வைத்தால் பின்னை அவர்கள் வேண்டினபடி விநியோகம் கொள்ளும் அத்தனை இ றே –
அம்மணி ஆழ்வான் -ஒருவனுக்கு ஹிதத்தைச் சொல்லி அவன் காலிலே தண்டனாகக் கிடைக்குமாம்
நாம் ஒருவனை வைஷ்ணவன் என்று அன்றோ ஆதரிக்கிறது -நம் நெஞ்சு அறிந்த வைஷ்ணவன் அன்றோ இவன் -என்று
அத்தை நஞ்சீயர் கேட்டருளி-அது அவன் செய்தானே யாகிலும் சிஷ்யனுக்கு அநர்த்தம் என்றாராம் –
இவன் தண்டன் இடாத வன்றாக அவன் இன்னாதாகத் தொடங்கும் இ றே அவிவேகியாகையாலே –
அது என் –இவன் விவேகியாய் யன்றோ தன்னை அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹம் ஆக்குகிறது –
அவனுடைய விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என் நமக்கு -என்று தன்னை அங்கே நிவேதித்து அன்றோ வைப்பது
-என்றானாம் திருக் குருகைப் பிரான் பிள்ளான் –
மடக்கிளியை கை கூப்பி வணங்கினாளே-திரு நெடும் தாண்டகம் –14-என்னா நின்றது இ றே –
அஹங்காரம் இல்லாததது என்று அறிந்து -திருமங்கை ஆழ்வார் வணங்கினாரே –
பிள்ளை திரு நறையூர் அரையர் பட்டர் சில வார்த்தை அருளிச் செய்யக் கேட்டு -இற்றைக்கு முன்பு ஒரு ஆசார்யர் பக்கலிலும்
இவை கேட்டு அறியோம் -என்றாராய்-
பிள்ளாய் -முன்பு இவ்வார்த்தை சொன்னார் உண்டு காணும் –ஒரு திர்யக்கைத் திரு நாமத்தைக் கற்பித்து பின்னை
அதின் வாயிலே கேட்டு அதின் காலிலே விழுந்தாரும் உண்டு காணும் -என்று அருளிச் செய்தாராம் –

———————————————————————————————

நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே--10-7-

நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள்
தங்கள் காலிலே விழும்படி இவ் வெளிமை பட்டாள் என்று அறிந்தவாறே –அடி வீழ்கின்றேன் -என்றாளே-என்று-
நாம் நினைத்த கார்யம் செய்து தலைக் கட்டுகைக்கு ஒரு குறை இல்லை -என்று வடிவைக் காட்டுவது -ஆடுவது- ஆனவளவன்றிக்கே
மயில்கள் தோகையையும் விரிக்கத் தொடங்கின –
நடமாடி அத்தால் வந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக தோகையை விரிக்கின்ற மா மயில்காள்
என்னை நலிய உங்கள் உடம்பில் கிடக்கிற பாதக வெள்ளம் என் -அவனது திருமேனியை நினைவுபடுத்தும் அம்சங்கள் தோகையில் வெள்ளம் இட்டு அன்றோ கிடக்கின்றன –

உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்-
கண் உடையவர்களுக்கு நல்ல காட்சி இ றே
ராமம் மே அனுகதா திருஷ்டி அந்யாபி ந நிவர்த்ததே-ந த்வா பஸ்யாமி கௌசல்யே-சாது மா பாணி நா ச்ப்ருச—அயோத்யா -42-43-
கடல் கொண்ட வஸ்து இனி மீளப் புகுகிறதோ
மே –
அக்கடலில் இலியாது இருக்க மாட்டாதார்க்கு ஏறப் போமோ
அந்யாபி ந நிவர்த்ததே –
அவரைக் காணப் பெறா விட்டால் அவரைப் பெற்ற சௌபாக்யம் உடைய உன்னைக் காண்கைக்கு நல்ல காலம் இறே -இவ்வளவிலும் மீளுகிறது இல்லை
ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
பெருமாள் முகத்தில் விழிக்கப் பெறாதே –
கைகேயி முகத்திலே விழித்ததால் வந்த தாபம் எல்லாம் ஆறும் படி உன்னைக் காண வேணும் என்று ஆசைப் படா நின்றேன் -அது செய்யப் பெறுகிறிலேன்-
சாது மா பாணி நா ச்ப்ருச-
இந்த்ரியங்கள் தான் நித்ய அதீந்த்ர்ய வஸ்துக்கள் ஆகையாலே கார்யகல்ப்யம் இறே –
ரூப க்ரஹண அபாவத்தாலே சஷூர் இந்த்ரியம் குடி போய்த்தது என்று இருந்தேன்
த்வக் இந்திரியம் கிடந்ததோ இல்லையோ என்று ஸ்பர்சித்து பார்க்க வல்லையோ
சாது ச்ப்ருச –
கைகேயியோடே க்ருத சங்கேதனாய் பெருமாளை காடேறப் போக விட்டான் -அவர் கை கழியப் போனார் -இனி மீளார்
என்று அறிந்தவாறே பொய்யே கூத்தடிக்கிறான் என்று இராதே
இவனுக்கு இது சம்சர்க்கத்தாலே வந்தது -ஐயோ என் செய்வான் பாவி அகப்பட்டான் -என்னும் நெஞ்சோடும் கூட என்னை ஸ்பர்சிக்க வல்லையே
நானோர் முதலிலேன் –
அவன் கூட இருந்தால் போலே காணும் இவளுக்கு கண் உள்ளது -விஷயத்தை உண்டாக்கினால் பிரயோஜனம் இல்லை
கண் உண்டாய்க் காண வேணுமே —சஷூர் தேவா நாம் -உத்தமர்த்த்யா நாம் —என்னக் கடவது இ றே –
கண்ணாவான் விண்ணோர் க்கும் மண்ணோர்க்கும் அவனே –

குடமாடு கூத்தன் –
அவன் தன் ஸ்வரூபத்தை அந்யதாபாவிப்பித்து காணுங்கோள்-
என் ஸ்வரூபத்தை அந்யதாபாவிப்பித்ததுமன்றியிலே தன்னை எல்லாரும் கண்டு அனுபவிக்கும் படி குடக் கூத்தாடினான்
கண்களையும் உண்டாக்கி விஷயத்தையும் காட்டினான்
தான் கூட நிற்கையாலே கண் உண்டாம் இ றே
திவ்ய சஷூஸ்சையும் கொடுத்து வைச்வரூப்யத்தையும் காட்டினால் போலே
தன் அங்க பங்கிகளை எல்லாரும் கண்டு அனுபவிக்கும் படி பண்ணினவன் –
கோவிந்தன் கோமிறை செய்து –
பசுக்களுக்கும் இடையருக்கும் கூட ஸூலபனானவன் –
ஸ்வ தந்த்ரன் பண்ணும் மிறுக்கைப் பண்ணி -கோக்கள் பண்ணக் கடவ மிறுக்குகளைப் பண்ணி –

எம்மை யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே–
என்னுடையான தனத்தைக் கொண்டான் என்னுதல்-என்னுடைமையும் தனத்தையும் கொண்டான் என்னுதல்
என்னை சர்வ ஸ்வாபகாரம் பண்ணினான் என்னுதல்
உங்களுக்கு இனி ஓன்று போதுமே –
அவன் அல்லாத உங்களுக்கு என் முன்னே ஆடி நாளிகை போருமோ –
இனி –
அவன் குடக் கூத்தாடுவதற்கு முன்னே ஆடினி கோளாகில் அன்றோ பிரயோஜனம் உள்ளது –
சைதன்யம் நடையாடினால் பின் ஆடக் கடவதோ
பெண்ணின் வருத்தம் அறியாத -அவனில் காட்டிலும் உங்களுக்கு ஒரு வாசி வேண்டாவோ
பிறர் நலிந்தாரையும் நலியக் கடவி கோளோ –

————————————————————————————————-

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

கண்ணால் கண்ட பதார்த்தங்களை எல்லாம் பாதகமாக்கி -பின்னையும் விடாதே -மேகங்கள் நின்று வர்ஷிக்கப் புக்கதாய்க் கொள்ளீர் –
திருமலை நம்பி இவ்விரண்டு பாட்டையும் ஆதரித்து போருவராய் -அவ்வழியாலே-நம்முடையவர்கள் எல்லாரும் ஆதரித்துப் போருவார்கள்
இப்பாட்டையும் மேலில் பாட்டையும் அனுசந்தித்து -கண்ணும் கண்ணீருமாய் ஒரு வார்த்தையும் சொல்லாதே வித்தராய் இருப்பாராம்
மழையே மழையே
இவ் வீப்சைக்கு கருத்து -மேகங்கள் தூரப் போம் -அவற்றுக்குச் செவிப்படும்படி கூப்பிடுகிறாள் –

மண் புறம் பேசி உள்ளாய் நின்ற மெழுகூற்றினால் போல் ஊற்று –
மண்ணைப் புறம்பே பேசி மெழுகி உள்ளில் மொழுக்கை வெதுப்பி ஊற்றுமா போலே ஊற்றும் –
உடம்பிலே அணைந்து அகவாய் குடிபோம்படி பண்ணுமவராய்த்து-

நல் வேங்கடத்துள் நின்ற-
உங்களுக்குச் சென்று கூடிக் கொள்ளலாம் படி அணித்தாக நிற்கிறவர் –

அழகப பிரானார் தம்மை –
என்ன இப்பாடு படுத்துகைக்கு ஈடான பரிகரத்தை உடையவர் –

யென்னெஞ்சகத்து அகப்பட தழுவ நின்று –
நெஞ்சிலே பிரகாசித்து -அணைக்கக் கோலி கையை நீட்டி அகப்படக் காணாமையாலே நோவு படுகை அன்றிக்கே-
நெஞ்சிலே பிரதி பாசிக்கும் படியே நான் அணைக்கும் படி பண்ணி -உஷையும் அநிருத்தனையும் கூட விலங்கிட்டு வைத்தால் போலே –

என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே-
என்னை நெருக்கிக் கொண்டு
அப்போது இது தான் தேட்டமாய் இருக்கும் இ றே
அவனைக் கூட்டி வைத்து ஊற்றுவாயாக -என்றபடி –

——————————————————————————————

கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–10-9-

அநந்தரம்-கடலானது ஓதம் கிளரத் தொடங்கிற்று –
கடலே கடலே –
இங்கே இரட்டிக்கிறது என் என்னில் -இவள் ஒரு கால் வார்த்தை சொன்னால் –அது கேளாதே கோஷியா நிற்கும் ஆய்த்து-
அதன் த்வனி அபிபூதமாய் மேலே கேட்கும் படி கூப்பிடுமாய்த்து —

யுன்னைக் கடைந்து கலக்குறுத்து-
நீ தான் என் செய்தாய் -தூசித் தலையிலே படை அறுப்பாரைப் போலே உன்னை அன்றோ நெருக்கிக் கடைந்து கலங்கப் பண்ணிற்று –
படுக்கை என்று பாராதே யன்றோ யன்றோ நெருக்கிற்று
இடம் கொடுத்தார் நெஞ்சிலே கல்லை இட்டு நெருக்கி சாறு பெறுத்து மவன் அன்றோ –

உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு-
உன்னைப் படுக்கையாகக் கொண்டு
உன்னோடு அணைந்து
பின்னையும் உன்னை நெருக்கிக் கடைந்து
பசை அறப் பண்ணினவன் அன்றோ –
அவன் இரந்தார் காரியமோ செய்தது –

என்னையும்- உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற
இவனையும் அணைத்து யாய்த்து அகவாயில் பசை அறுத்தது

மாயற்கு –
இப்படி நெருக்கினான் என்று பின்னையும் விட ஒண்ணாது இருக்கை –கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –-திருவாய் -5-3-5-

என் நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–
நீ பட்டது எல்லாம் படா நின்றேன் காண் நானும்
போவது -வருவது கண் உறங்காது ஒழிவது-கூப்பிடுவது -விட மாட்டாதே ஒழிவதாய்-படா நின்றது இ றே
இவளும் நிற்பது இருப்பதாய் விழுவது எழுவதாய் அரதியாய் இ றே படுகிறது –
நீ அங்கே சென்று அறிவிக்கையில் உண்டான அருமையே –
பின்னை நம்மாள் -சிபார்சு செய்ய -திரு வநந்த ஆழ்வான் -அங்கே உண்டு
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு –5-10-11-என்று இ றே இருப்பது –

————————————————————————————————–

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

தோழியானவள் இவள் தன்னிலும் காட்டிலும் இழவு பட்டு -இவள் தனக்கு பேற்றுக்கு உடலாக நினைத்து இருப்பது இரண்டை
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பையும்
அவன் -அனுகூல்யம் உடையாரை விடேன் -என்ற வார்த்தையும் யாய்த்து –
அது தன்னிலும் அதி சங்கை பண்ணா நின்றாள் –
இவள் ஜீவித்தாளாய்த் தலைக் கட்டுகைக்கு ஒரு வழியும் கண்டிலோம் -எவ்வழியாலே இவளை தரிப்பிப்போம் -என்று இருந்தாள்
அவளைப் பார்த்து -நீ அஞ்ச வேண்டா காண் -நமக்கு ஜீவிக்கைக்கு ஒரு விரகு கண்டேன் -என்கிறாள் –

நல்ல வென் தோழீ –
என்னிலும் என் இழவுக்கு நொந்து இருப்பாய் நீயே இ றே
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
அநந்த சாயியாய் -ஸ்ரீ யபதியுமாய் -உயர்ந்தார் ஒருத்தரை இருக்கிறவரை
அதி ஷூத்ரராய் இருக்கிற நம்மால்-செய்யலாவது உண்டோ –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சரணம் புக ஒருப்பட்டவர்
அதுக்கு உறுப்பாக –அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்
தன் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தவை தன்னை யும் இழவுக்கு உடலாகச் சொல்லி கை வாங்கும் படி காணும் கண்ணாஞ்சுழலை இட்ட படி –

நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
நாகணை மிசை-
அநந்த சாயியாய் இருக்கைக்கு மேற்பட இல்லை இ றே ஒருவனுக்கு ஏற்றத்துக்கு
நம்பரர் –
அநந்ய பரமான வாக்யங்களாலே பிரசித்தமான பரத்வத்தை உடையவர்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரம் ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர –இத்யாதிகளில் -படியே
செல்வர் –
ஸ்ரீ யபதிகள்
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய் -2-8-1-
ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்கிறபடியே ஆகையாலே
பெரியர் –
நமக்கும் அவனுக்கும் பர்வத பரம அணுக்களோட்டை வாசி போரும்
சிறு மானிடவர் –
தேவ யோநியிலே பிறந்து சிறிது அணைய நிற்கையும்  அன்றிக்கே
ப்ராஜ்ஞராய் அவனோடு அணைய நிற்கவும் அன்றிக்கே
அதி ஷூத்ரரான மனுஷ்யர்
நாம் செய்வது என்
முன்பே ஒரு வார்த்தை சொல்லி வைத்தார் என்பதையே கொண்டு நம்மாலே அவரை வளைக்கப் போமோ-

ஆனால் நாம் இழந்தே போம் அத்தனையோ -என்ன -நமக்கு இழக்க வேண்டா காண்
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-பரதேன மஹா பாஹோ லஷ்மணேன யவீயஸா -யுத்த -41-4-என்றவனுக்குச் சொல்ல வேண்டுவதும் ஒரு விஷயம் உண்டு காண்
நீ பின்னையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தது என் என்ன
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–
சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று
ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து –விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8–
அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்
சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது
சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இ றே இந்நாள் வரை கிடந்தது
தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து
பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்
பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –
வல்ல பரிசு வருவிப்பரேல்
ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்
ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப்பண்ணவுமாம்-வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து
திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம்
திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க வுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டுபதிகம்
வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆ ரை  மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இ றே
அன்றிக்கே
நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்
வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி
அது காண்டுமே
அவ வழியாலே பெறக் கடவோம்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்குவைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே
அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஒன்பதாவது திருமொழி —

September 11, 2015

அவதாரிகை –

பிராணா நாம்பி சந்தேஹோ மம ஸ்யாத்--சுந்தர -39-22-என்னும் தசையாய்த்து -கீழ் -நின்றது –
அத்தசை தன்னை அங்குச் சென்று அறிவைக்கு ஆள் பெற்றது இ றே -அங்கு
அங்கன் போய் அறிவிக்கைக்கும் ஒருவரும் இன்றிக்கே -போய் அறிவிக்க வேணும் -என்று சொன்ன மேகங்களும் போகாதே
-நின்ற இடத்திலே நின்று வர்ஷித்தன –
அத்தாலே அக்காலத்துக்கு அடைத்த பதார்த்தங்கள் அடங்கலும் அரும்பிற்று
அலர உபக்ரமிப்பனவும் -கழிய அலர்வனவுமாய்-அவை தான் செவ்வி பெற்று –திருமேனிக்கும் அவயவ சோபைக்கும்
ஸ்மாரகமாகக் கொண்டு -கண்டது அடங்கலும் பாதகம் ஆகிறதாய்-சில பாதிக்கைக்கு ஒருப்பட்ட படி யாய்த்து இத் திருமொழி
அது தான் போய் முறுகி பிராணன்கள் கொண்டு ஜீவிக்க அரிதாம் படியான அளவாய்த்து மேலில் -பத்தாம் –திருமொழி
ஆக -இரண்டும் கூட -இன்னுயிர்ச் சேவலினுடைய -திருவாய்மொழி -9-5-அவஸ்தையாய்ச் செல்லுகிறது –

—————————————————————-

சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ–9-1-

திருமலையைக் கண்ணாலே கண்டாகிலும் தரிப்போம் என்றால் அதுவும் கூட அரிதாம்படி யாவதே –
நம் தசை இருந்த படி -என் என்கிறாள் –
அவன் நாட்டில் குன்றும் கொடியவோ ஒன்றும் தோன்றா -என்பார்கள் இ றே
அவன் தன்னைக் காணப் பெறாவிடில் நாட்டில் மலைகளும் தோன்றாது ஒழிய வேணுமோ -என்னா நிற்பார்கள் ஆயத்து –
அவன் வடிவுக்கு போலியான திருமலையைக் கண்டாகிலும் தரிப்போம் என்று பார்த்தால் அதுவும் அரிதாம் படி யாவதே
இந்திர கோபங்கள் மறைக்கையாலே –

சிந்துரச் செம்பொடிப் போல்-
சிந்துரம் -சாதி லிங்கம் —செம்மை
ஒரு மத்த கஜம் போலே யாய்த்து திருமலை –
அது சிந்துரிதமானாப் போலே இரா நின்றதாய்த்து இவை வந்து பரம்பின போது –
மத்த கஜத்துக்கு துவரூட்டினால் போல் இரா நின்றதாய்த்து –சிந்துரம் -சிவப்பு நிறம் -செம் -அழகு
சிந்துரம் இலங்கத் தன் திரு நெற்றி மேல் -பெரியாழ்வார் -3-4-6-

திரு மால் இருஞ்சோலை எங்கும்
ஜகத் எல்லாம் -என்றபடி
ஜகத்தாவது -கண்ணுக்கு விஷயமாய் இருப்பது ஓன்று இ றே
இவள் கண்ணுக்கு விஷயம் திருமலையை ஒழிய இல்லை யாய்த்து –

இந்திர கோபங்களே –
பிரகாரம் வானரீக்ருதம்-யுத்த -41-99–என்னப் பெற்றது இல்லை -இலங்கை அடங்க ராஷசரேயாய் இருக்குமா போலே யாய்த்து –

எழுந்தும் பரந்திட்டனவால்-
ஏஷை வாசம் –சதே லங்காம் -யுத்த 26–20/22-என்னுமா போலே
பூமியிலே தோன்றுவன சிலவும் -ஆகாசத்திலே எழும்புவன சிலவும் -நாலடியிட்டு மேலே விழுந்தால் போலே இருப்பன
சிலவுமாய் இரா நின்றன வாய்த்து –இந்திர கோபங்கள் எம்பெருமான் கனிவாய் ஒப்பான் சிந்தும் புறவில் –பெரியாழ்வார் -4-2-9-என்கிறபடியே
திரு வதரத்தில் பழுப்புக்கு ஸ்மாரகமாய் நின்றது யாய்த்து –

மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
ஒருவர் பக்கலிலே ஓன்று கொள்ளப் புக்கால் பின்பு அவர்களுக்கு ஒன்றும் தொங்காத படி கொள்வான் ஒருவன் யாய்த்து
மந்திர பர்வத்தைக் கொடு வந்து -கடலின் நடு நெஞ்சிலே நட்டு நெருக்கி -தானே அகவாயில் உள்ளது காட்டிக் கொடுக்கும் படி கடைந்தாய்த்து வாங்கிற்று –
மந்திர மூட வாத -இத்யாதி
ஒருவரால் கலக்க ஒண்ணாத பெரிய தத்வங்களையும் கலக்கி அவர்கள் பக்கல் உள்ளது கொள்வான் ஒருவன்
ஸ்த்ரீத்வ அபிமானத்தாலே -நம்மை வந்து மேலிட்டு அழிக்கை யாவது என் -என்று இருந்தாள் போலே காணும் இவள் தானும் –

மதுரக் கொழுஞ்சாறு கொண்ட-
தான் கொண்ட பிரயோஜனத்தைக் குறித்து –
அல்லாதார் கொண்ட பிரயோஜனமாக நினைத்த உப்புச் சாறு கடலில் ஜலத்தோபாதி இ றே –
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்டவனாய்த்து –பெரிய திருமொழி -6-1-2–

சுந்தரத் தோளுடையான் –
நெருக்கினானே யாகிலும் கை விட ஒண்ணாதாய் யாய்த்து தோள் அழகு இருப்பது

சுழலையில் நின்றுய்தும் கொலோ–
அவன் நம்மைத் தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளப் பார்த்த சுழலை யாய்த்து இம்மேக சிருஷ்டி –
அத்தைத் தப்பி உஜ்ஜீவிக்க வல்லோம் ஆவோமோ –
மேகோதா யஸ் சாகர சந்நிவ்ருத்தி -என்னக் கடவது இ றே -எல்லாம் அவனது விசித்ரமான மாயைகள் தானே –
ஒரு மஹா பாஹூ நம்மை அகப்படுத்துக்கைக்கு பார்த்து வைத்த வலையைத் தப்பி நாம் உஜ்ஜ்ஜீவிக்கை என்று ஒரு பொருள் உண்டோ
இனி முடிந்தே போம் அத்தனையே அன்றோ –
சுழலை -சூழ் வலை –

———————————————————————————————————————-

போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே–9-2-

போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
களிறுகள் களிக்கும் ஊராய்த்து —பிடியே யாய்த்து உறாவுகிறது-அவன் களித்து இருக்க நான் பிரிந்து துன்புறுவது போலே
ஆனைகள் திருமலையிலே கரை பொருது திரியா நிற்குமாய்த்து
அழகியதாகப் பூத்த பர்யந்தங்களிலே -தாழ் வரைகளிலே

தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற-
அழகிதாகப் பூத்த முல்லைக் கொடியானது சம்போகத்தினுடைய உபோத்காதத்தில் அவனுடைய மந்த ஸ்மிதத்துக்கு ஸ்மாரகமாக நின்றதாய்த்து –
விஜாதீயராய் நம்மை நலியப் பெற்றோமோ –பெண் கொடியான என்னை முல்லைக் கொடி நலியலாமா –

கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
சினை கொண்ட படாக்களானவை எங்கும் ஒக்க முட்டாக்கிடப் பூத்துக் கிடந்த போது
சம்ச்லேஷம் போய் உன்மச்தக ரசமாய் -பின்னை ஒரு தலையில் பேற்றுக்கு விட்டுச் சிரிக்குமதுக்கு ஸ்மாரகமாகா நின்றது யாய்த்து –

ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே–
நாம் அவன் தோளில் இட்ட மாலையை ஆசைப் பட்டு -அது விளைத்த மஹா பாரதத்தை யாருக்குச் சொல்லுவோம்
தோழி
தோழி தான் இவளுக்கு முன்னே மோஹித்துக் கிடந்தாள்-
இவள் இழவுக்கு இவளுக்கு முன்பே தரைப் பட்டாள் யாய்த்து அவள்
எம்மில் முன் அவனுக்கு மாய்வராலோ-–திருவாய் மொழி -9-9-5-என்னுமா போலே
‘லாப அலாபங்கள் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கையாலே நீ எனக்கு முன்னே நோவு படா நின்றாய்
என் ஆற்றாமையை உனக்குச் சொல்லி தரிக்கப் பெறுகிறிலேன்-
இனி இது கொடு கார்யம் இன்றிக்கே புறம்பே அந்ய பரராய் இருக்கிறவர்களுக்கு சொல்லவோ நான் –

———————————————————————————————————————

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –9-3-

கருவிளை யொண் மலர்காள்–கருவிளையினுடைய அழகிய மலர்காள்
கருவிளை -காக்கணம் –

காயா மலர்காள் திருமால் உரு வொளி காட்டுகின்றீர் –
பெரிய பிராட்டியாரும் அவனுமாய் கலந்து இருந்த போது தன்னிறம் பெற்று இருக்கும் போதை புகரைக் காட்டா நின்றி கோள்

யெனக்குய் வழக்கொன்று உரையீர்
என்றும் அவன் ஆளாய் அவன் கார்யமே செய்து தலைக் கட்டப் பார்க்கும் அத்தனையோ
நானும் அவனுமாய் இருவரானால் நொந்தாரை ஐயோ -என்ன வேண்டாவோ –
சர்வேஸ்வரன் கருத்தை பின் செல்ல வேண்டாவோ -எல்லாருக்கும் என்று இரா நின்றன வாய்த்து அவை –
நஞ்சீயர் ஸூ ந்தர பாண்டிய தேவரைக் கண்டிரா நிற்கச் செய்தே –குணைர் தசரத உபம -அயோத்யா -1-9-என்கிற இடத்துக்கு
பிறந்து படைத்த குணங்களும் ஸ்வா பாவிக குணங்களும் எல்லாம் கூடினாலும் -மார் -அரை -மாட்டே யாய்-
சக்கரவர்த்தி திருமகன் -என்னப் போரும் அத்தனை என்று அருளிச் செய்ய
அத்தைக் கேட்டு -பரம புருஷனுக்கு ஒருவன் வயிற்றில் பிறந்து ஓர் ஏற்றம் உண்டாக வேணுமோ
அவன் பிறக்கை யாலே அக்குடி தனக்கும் ஏற்றமாம் அத்தனை அன்றோ என்றானாம்
நாம் போன சமாதி இவன் அறிந்திலன் என்று பார்த்து -அது எல்லாம் கிடக்க பரம புருஷன் என்னும் படி என் தான் என்றாராம்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம் -யுத்த -120-11–என்று அருளிச் செய்த பெருமாள் திரு உள்ளத்தின் படி தசரத உபம -என்று
உபமானத்தைக் காட்டிலும் உபமேயம் மட்டமாய் இருக்கும் என்பதை ஒட்டி அருளிச் செய்த படி
சௌசீல்யம் அன்றிக்கே பரம புருஷத்வம் உண்டோ
தசரதன் பிள்ளை யானதால் நற்குணங்கள் பெற்றார்
பிராட்டியாலும் நிறம் பெற்றார் பெருமாள்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பிரசங்கித்த வாறே -விபீஷணனோ அழகிதாகச் செய்தான் -ஆபத் சமயத்தில் பிராதாவை விட்டுப் போந்தானே -என்றானாம்
எல்லா வற்றையும் விட்டுக் கொடுக்க ஒண்ணாது என்று
பிதாவும் ஜ்யேஷ்டனான பிராதாவும் சேரப் போந்த வன்று பிராதாவை அனுவர்த்திக்கக் கடவன்
பிதாவோடு அவன் விரோதித்த வன்று ஜ்யேஷ்டன் என்று பாராதே பிதாவை அனுவர்த்திக்கக் கடவன் -என்று அருளிச் செய்தாராம் –
சர்வேஷா மேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ –லோகத்துக்கு உள்ளே அந்தர்பூதன் இ றே ராவணனும்
இதே ரீதியிலே இந்த பூக்களும் சர்வேஸ்வரன் கருத்தை பின் செல்கின்றன –

உய வழக்கு
முடிக்கும் வழக்கயோ நீங்கள் கற்றது
உஜ்ஜீவிக்கும் வழக்கு சொன்னால் ஆகாதோ
நீ அஞ்சாதே கொள் -நாங்கள் மறைய நிற்கிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ
பூப் போலே வந்து புலி யானி கோளீ-
ஓன்று உரையீர் –
இவையே சைதன்யம் பெற்று ஒரு வார்த்தை சொன்னால் அது கேட்டு பின்பு அவற்றைக் கொண்டு தரிக்க வேண்டும் தசை காணும் இவளுக்கு

திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
பிரணயி இல்லாதான் ஒருவன் அல்லன்
ஒரு நத்தத்தில் பிறவாதான் ஒருவன் அல்லன்
ஒரூரிலே பிறந்து வளர்ந்தார் வந்தியிடார்கள் இ றே -பிறர் துன்புரும்படி சண்டையிட மாட்டார்களே
திரு விளையாடு திண் தோள்
பெரிய பிராட்டியாருக்கு லீலார்த்தமாக சேண் குன்று சமைத்தால் போலே யாய்த்து திருத் தோள்கள் இருப்பது
திருமால் இரும் சோலை நம்பி-
ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு ஸூ லபனானவன்
இனக்குறவர் புதியது உண்ணும் எழில் மாலிரும் சோலை எந்தாய் -பெரியாழ்வார் -5-3-3-
அதுக்கு உள்ளே உண்டு இ றே சீலமும்
நம்பி –
சொல்லிச் சொல்லாத குணங்களால் பூரணன் ஆயத்து –

வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –
தாம் இருந்த இடத்தில் நாங்கள் சென்றோம் ஆகில் எங்களை நலிய பிராப்தம்
நாங்கள் இருந்த இருப்பிலே தாமே வந்து எங்களுடைய உயிர் நிலை அறிந்து -வளையை அறிந்து
வந்தி பற்றும்
எங்கள் இசைவு இன்றிக்கே இருக்க -எங்கள் வளை கைக் கொள்ளுகைக்கு வழக்கு உண்டோ
தாம் விரும்பின வளை என்று நாங்கள் இத்தைக் கொண்டு தரிப்போமானால் இத்தையும் கைக் கொள்ளுகைக்கு வழக்கு உண்டோ
வழக்கு உள்ள இடத்தில் அன்றோ கைக் கூலி கொள்ளுவது -கைக்கூலி -கையில் வளையை -கையில் உள்ள பொருளை –
ஆனபின்பு எனக்கு ஜீவிக்கைக்கு ஒரு விரகு சொல்லி கோளே
இல் புகுந்து –வரி வளை வந்தி பற்றும் -வழக்குளது -என்று அந்வயம்

————————————————————————————————————–

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —9-4-

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்-வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்-ஐம் பெரும் பாதகர்காள்
பரந்த பொழிலிலே வர்த்திக்கிற குயில்காள் உங்களுக்கு சோலை நோக்கித் தருவார் யார் –
ஏக தேச வாசித்வமே ஹேதுவாக பாதகமாகா நின்றி கோளீ
காதாசித்கமாக பழுத்த காளாப் பழங்கள் நலிகிற படி
அழகிய நிறத்தை உடைய பூவைகாள்
பஞ்ச மஹா பாதகரைப் போலே யாய்த்து நலிகிறது –
ப்ரஹ்மஹத்தி-ஸூ ரா பானம் -ச்வர்ணஸ் தேயம் முதலானவை சாஸ்த்ரங்களில் சொல்லும் பஞ்ச மஹா பாதகங்கள்

அணி மால் இரும் சோலை நின்ற எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —
பாதகனானவன் வடிவைக் கொண்டு ரஷகரான நீங்கள் என் செய்ய நலிகிறி கோள்
சேஷ சேஷிகள் ஆனால் சேஷ பூதர் தங்களில் ஒரு மிடறாய் நின்று பிழைக்க வேண்டாவோ
திருமலையில் நிற்கிற நிலையைக் காட்டி என்னை அனந்யார்ஹை ஆக்கினவனுடைய நிறத்தை நீங்கள் என் செய்ய ஏறிட்டுக் கொண்டி கோள் –

பரம சேதனனோடு-சைதன்யம் மாதரம் உடையரோடு அசேதனங்களோடு வாசியற எல்லாரும் ஒக்க பாதகரானால் எங்கனே பிழைக்கும் படி
பிரிந்தார் ஒருவனாய் பாதகர் பலர் உண்டானால் எங்கனே பிழைக்கும் படி
கலந்தார் பாதகர் ஆகை அன்றிக்கே -அவ்வளவிலே அவன் பிரிந்த சமயத்திலே முகம் காட்டி ஆச்வாசத்தைப் பண்ணக் கடவ நீங்கள்
பாதகரானால் எங்கனே பிழைக்கும் படி
பிரிந்தார் ஒருவனாய் பாதக கோடி பலவானாலும் பிழைக்கப் போமோ
நலியா நிற்கிறவன் நிறத்தை ரஷகரான நீங்கள் என் செய்ய ஏறிட்டுக் கொண்டி கோள்
அவன் நிறத்தை தரப் புக்கால் -எங்களுக்கு இந்நிறம் வேண்டா -என்ன வேண்டாவோ

——————————————————————————————-

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே–9-5-

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
ஓங்கின மலரை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட திருமால் இரும் சோலையில் நின்ற –
ஒருவரால் சென்று பிரவேசிக்க அரியதாய் இருக்கை –
ந கோத்தமம் புஷ்பித மாசசாத -சுந்தர -28-17-
ஆற்றாமை கரை புரண்டால் தீப்பாய ஒருப்படுமா போலே
நேமான் புஷ்ப பலத்ருமான் –என்னும்படி யாய் இ றே இவளுக்கு இருக்கிறது
ராஷசீ தர்சனத்தோ பாதி கொடிதாய் இரா நின்றதாயிற்று இவளுக்கு இவற்றினுடைய தர்சனமும்

செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்
துங்க மலர்ப் பொழில்கள் ஆகிற இன் நெருப்பைக் கடந்து புக வேணும் காணும் அனுபவிக்க
அகவாயில் நீர்மை அடங்கலும் தெரியுமாய்த்து கண்ணில் தண்ணளி யிலே

மலர் மேல் தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள்
நெருப்பில் கால் பொருந்துமா போலே இருக்கிறது இ றே இவளுக்கு
குறைவற்றார் குறைவாளர் குறை தீர்க்க வேண்டாவோ
தொகு –
அதின் கீழில் நீர் திரும் மேனிக்கு ஸ்மாரகமாகா நின்றது

சுனையில்தங்கு செந்தாமரைகாள்
அதில் பூத்த பூக்கள் திவ்ய அவயவாதிகளுக்கு ஸ்மாரகமாகா நின்றன –

எனக்கோர் சரண் சாற்றுமினே–
தர்மபுத்திரன் பீஷ்மத்ரோணாதிகள் பக்கலிலே சென்று -உங்களை நான் கொல்லும் விரகு நீங்களே சொல்ல வேணும் என்றால் போலே
பாதிக்க ஒருப்பட்டு நிற்கிற இவற்றைப் பார்த்து நான் உங்களை தப்பி ஜீவிப்பதற்கு ஒரு விரகு சொல்ல வல்லி கோளே -என்று கேட்கிறாள் –
சிகண்டியை முன்னே நிறுத்துவது -வில்லைப் பொகடுகிறோம்-கொன்று கொள்-என்றால் போலே ஒரு விரகு சொல்ல வல்லி கோளே
அஸ்வத்தாமா ஹத -என்றது துரோணன் வில்லை போகட காரணம்-
நாங்கள் இல்லாதவிடம் இன்ன இடம் அங்கே போய் நீ ஜீவி -என்று ஒரு புகல் சொல்ல வல்லி கோளே –
இவை தனக்கு ஒரு புகல் சொல்ல வேண்டும் படி காணும் இவள் தான் புகல் அற்ற படி –

——————————————————————————————-

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
சோலையிலே பரிமளம் தன்னுடைய -கந்தவதியான பூமாதேவி -ஆண்டாளுடைய -நாற்றத்தோடு கூடினால் போலே காணும் பூர்ணம் ஆவது
குறைவற்றாரை வசீகரிக்கும் போது வெண்ணெயாலே வசீகரிக்க வேணும் போலே காணும்

நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
இடைச்சிகள் பிரார்த்திப்பது வெண்ணெய் யாய் இருக்கும் இ றே
வாய் நேர்ந்து
க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்யம் -15-7–என்னுமா போலே இரா நின்றதாய்த்து இத்தலைக்கு
நினைவில் மட்டும் போதாது வாயாலும் சொல்லி வைத்தேன் -என்றபடி –

நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
பெண் பிள்ளை பிரார்த்தித்து வைத்தாள்
கொடுத்தாளாகச் சொல்லக் கேட்டிலோம்
பிரார்த்தித்த வற்றை இறுக்கை அச்சந்தான ஜாதர்க்கு பரம் இ றே -என்று தாம் அமுது செய்வித்து அருளினாராம்
அந்யத் பூர்ணாதபாம் கும்பாத அன்யாத் பாதாவ நே ஜனாத் -என்கிற வஸ்துவுக்கு நூறு தடா நிறைந்த -என்று இங்கனே
போரச் சொல்லுவான் என் -என்று நான்-நம்பிள்ளை – ஜீயரைக் கேட்டேன்
திருவாய்ப்பாடியிலே ஐஸ்வர் யத்துக்கு இது எல்லாம் கூடினாலும் ஒரு பூர்ணகும்ப ஸ்தாநீயம் -என்று அருளிச் செய்தார் -என்று அருளிச் செய்வர் –
பூர்வார்த்த நிஷ்டர்க்கு இட்ட வாடி மாற்றி இட பிராப்தி இல்லை
உத்த்ரார்த்த நிஷ்டர்க்கு -அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-25–என்கிறபடியே இருக்க வேணும் –
பூர்வார்த்தத்தை அனுசந்தித்தால் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று பிராட்டி இருந்தால் போலே இருக்க வேணும்
உத்த்ரார்த்தை அனுசந்தித்தால் இளைய பெருமாளைப் போலே கண்ணுறங்க அவசரம் இல்லை –

ஏறு திருவுடையான் –
நாள் செல்ல நாள் செல்ல ஏறி வருகிற சம்பத்தை உடையவன்
நிரபேஷனாகையாலே இவன் இடுகிற த்ரவ்யத்தில் தாரதம்யம் பாரானாய்த்து

இன்று வந்து இவை கொள்ளும் கொலோ –
இது ஒரு வாங மாத்ரமாய்ப் போகாமே -இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி சவீ கரிக்க வல்லனேயோ-
அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில் சாயம் சமயத்திலே நின்று நான் ராமன் இவள் மைதிலி இவன் லஷ்மணன் என்று
நின்றால் போலே இவைற்றை சுவீகரிக்க வல்லனேயோ

ஏறு திருவுடையான் –
ஆரூட ஸ்ரீ -இத்தையே ஸ்ரீ கூரத் தாழ்வான் ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவத்தில் அருளிச் செய்தார்
வங்கி புரத்து நம்பி ஸ்ரீ பாதத்திலே யாய்த்து சிறியாத்தான் ஆஸ்ரயித்தது-போசள ராஜ்யத்தில் நின்றும் வந்த நாளிலே
ராஜ கேசரியிலே ஆச்சான் நடந்து இருந்தானாய் காண வேணும் என்று அங்கே சென்று கண்டு இருக்கும் அளவிலே
நம்பி எனக்கு இங்கனே பனிக்கக் கேட்டேன்
பாஹ்ய சமயங்களில் உள்ளாறும் ஒரு வஸ்துவைக் கொண்டு அது தனக்கு ஜ்ஞானாதிக்யத்தையும் உண்டாக்கி கொள்ளா நின்றார்கள்
அவர்களில் காட்டிலும் வைதிக சமயமான நமக்கு ஏற்றம் -ஸ்ரீ யபதி ஆஸ்ரயநீயன் என்று பற்றுகிற இது காண்-என்று பணித்தானாம் –
நம்பியின் தந்தையும் குமாரரும் ஆச்சி எனப் பெயர் பெற்றவர் -பெரிய திருமுடி அடைவு
ஆகையால் இ றே நாம் இரண்டு இடத்திலும் அவள் முன்னாக த்வயத்தை அனுசந்திக்கிறது
ஜகத் காரண்த்வாதிகளைக் கொள்ளப் புக்கால் ஒரூருக்கு ஒருத்தன் ஸ்ரஷ்டாவாக இருக்கும் -காரணம் து த்யேய-
ஸ்ரீ யப்பதித்வம் தான் ஆஸ்ரயாந்தரத்தில் கிடப்பது ஓன்று அன்றே -திருவில்லா தேவரை தேறல் மின் தேவு —

———————————————————————————————–

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே –9-7-

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்
இன்று வந்து -இன்று உவந்து –
நான் பிரார்த்திக்கிற இன்று வந்து உவந்து –என் இரப்பு மாறாமைக்கு ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே
தனக்கு இது ஒழியச் செல்லாமை உடையானாய்க் கொண்டு உவந்து அமுது செய்திடப் பெறில்
இத்தனையும் –
நூறு தடாவில் வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்காராவடிசிலையும்-
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்ம் பொட்டத் துற்று -பெரியாழ்வார் -3-5-1-
அமுது செய்திடப் பெறில்
இதுவே இவளுக்கு பேறு
பின்னையும் அவனுக்குக் கொடுக்கும் அத்தனை –
அவன் அமுது செய்தால் கொள்ளும் பிரயோஜனம் என் என்னில்
நான் ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
இது எனக்கு பிரயோஜனம் –
நான் –
பிராப்ய த்வரையாலே கைங்கர்யம் செய்யத் துடிக்கும் நான்
அவன் ஆசைப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிற நான்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து –
நூறு தடாவுக்கும் நூறாயிரம் தடாவாகக் கொடுத்து
பின்னும் ஆளும் செய்வன் –
அவன் உகந்து கொடுக்கிற நான் ஆசைப் பட்டத்தை விடுவேனோ

தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே –பின்னும் ஆளும் செய்வன் –
வேறு ஓன்று பெறுமதில் காட்டிலும் அடிமை செய்யும் இத்தனை யாகாதே தான் அவன் விரும்பி இருப்பது –
புதியது ஓன்று பெறுமதில் காட்டிலும் -பழையதாய் இழந்தது பெற்றால் அன்றோ அவன் உகப்பது
ஆளும் செய்வன்
வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3-1-என்று தமப்பனார் பாரித்து இருக்குமதே காணும் -இவளும் ஆசைப் படுகிறது
-தென்றல் மணம் கமழும்
அவன் பக்கல் குறை இல்லை இ றே
அத்தேச வாசம் தட்டாதாகில் அவன் உபகரிக்கையிலே ஒருப்பட்டான் -தென்றல் பாதகம் ஆகையாலே தட்டாதாகில் என்கிறது
அது தலைக் கட்டுமாகில்
அடியேன் மனத்தே வந்து நேர் படிலே–பின்னும் ஆளும் செய்வன் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம் என்று மநோ ரதித்து இருந்தபடியே வந்து கிட்டப் பெறில் பின்னும் ஆளும் செய்வன்
அடியேன் –
புதியது ஒன்றைப் பிரார்த்திக்கிறேனோ –

——————————————————————————————–

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு பொது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-வி றே பண்ணிக் கொண்டு இருப்பது –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
-வ்யாஹரேத் வைஷ்ணவ புமான் -வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –
என்னுமா போலே யாய்த்து
கரிய குருவிக் கணங்கள்-
வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –
மாலின் வரவு சொல்லி –
அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி
மருள் இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ
கிந்நு ஸ்யாச் சித்த மஓஹோ அயம் -சீதா பிராட்டி பட்டது எல்லாம் ஆண்டாளும் படுகிறாள் –

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே —
எல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்
பதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்
ப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன்
அவன் வார்த்தை சொல்லா நின்றன –

மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
இது மெய்யாக வற்றோ –

———————————————————————————————–

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில்
கோங்கு அலரா நின்றுள்ள பொழிலை உடைத்தான திருமால் இரும் சோலையிலே

கொன்றைகள் மேல் தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்-
தாமச புருஷர்கள் புகுரும் தேசம் அன்று –
சாத்விகர் இது கொண்டு கார்யம் கொள்ளார்கள்-
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவத் அர்ஹமான வஸ்து -இங்கனே இழந்து இருந்து கிலேசப் படுவதே –
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- என்றும் மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-
அவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் சம்சாரிகளுக்கும் பயன்படாமல் வீணாக போவதே –

பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ —
இரண்டாவது அவதாரத்தில் பிராட்டிமார்க்கு உதவினது தனக்கு ஒருத்திக்குமே வேண்டும்படி யாய்த்து இவள் தசை
சிஸூ பாலன் ஸ்வயம் வரார்த்தமாக ஒருப்பட்ட சமயத்தில் புறச் சோலையிலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானது கோஷமானது-வந்து செவிப்பட்டு தரிப்பித்தது-ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை
ராவணன் மாயா சிரசைக் காட்டின போது ஸ்ரீ சார்ங்கத்தின் ஜய கோஷமானது வந்து செவிப்பட்டு தரிப்பித்தது ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை
இரண்டு அவதாரத்தில் உள்ளவையும் மடுத்து ஒலிக்க வேண்டும் படி யாய்த்து இவள் விடாய்-
அவர்கள் அளவல்ல வாய்த்து இவள் ஆற்றாமை –

———————————————————————————————–

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்துக்கு போம் ஸ்திரீகள் தனம் கொண்டு போம் போலே யாய்த்து
தடங்கள் பொருது –
ஒரு மத்த கஜம் கரை பொருது வருமா போலே
சிலம்பாறுடை –
பரமபததுக்கு விரஜை போலே யாய்த்து திருமலைக்கு -திருச் சிலம்பாறு

சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –
சுந்தரனை -சர்வாங்க ஸூ ந்தரனை யாய்த்து கவி பாடிற்று
சுரும்பார் குழல் கோதை-
தன்னுடைய ஏகாங்க சௌந்தர்யத்தாலே -இவை அடையக் குமிழ் நீர் உண்ணும் படி பண்ண வல்லவள் யாய்த்து இப்பாடு பட்டாள்
தொகுத்து உரைத்த –
ரத்னங்களைச் சேரத் திரட்டினால் போலே கல்யாண குணங்களை சேர்த்துச் சொன்ன
செந்தமிழ்
செவ்வியதமிழ் -பாவ பந்தம் வழிந்து சொல்லாய்ப் புறப்பட்ட இத்தனை –
திருமாலடி சேர்வர்களே –
பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்று யாய்த்து இவள் ஆசைப் பட்டது -அப் பேறு பெறுவார்கள்
அஹம் சிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம -ஸ்ரீ வராஹ புராணம் -ஜ்ஞாதயங்கள் அடங்கக் கேட்டதும் உம்மோடே-
தாஸீ ச -பெரிய பிராட்டியாரும் நீரும் சேர இருந்து -இன்னத்தை எடு -இன்னத்தை வை – என்றால் அப்படியே செய்ய உரியேன்
பக்தா ச –
உம்முடைய அடியாரோடு கூடிக் கவி பாட உரியேன்
ஒரு வ்யக்திக்கே இப்படி அநேக ஆகாரமாக பிரிய ஒண்ணுமோ -இப்படிக் கூடுமோ -என்னில்
புருஷோத்தம –
நீர் புருஷோத்தமர் –
நீர் எவ்வளவு அழிக்க வல்லீர் அவ்வளவும் அழியும் அத்தனை யன்றோ எதிர் தலை –
ஆறு பெருகி ஓடா நின்றால்– வாய்த்தலைகளாலும்-கை வாய்க்கால்களாலும் பிரியுண்டு போகா நின்றாலும்
கடலில் புகும் அம்சம் குறைவற்றுப் புகும் இ றே -அப்படியே எல்லா வகையாலும் அனுபவியா நின்றாலும்
அபிநிவேசம் குறையாது இருக்குமாய்த்து இவர்க்கு —

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -எட்டாவது திருமொழி —

September 11, 2015

அவதாரிகை –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வார்த்தை கேட்டாள் –
இவனை வார்த்தை கேட்டவாறே பாவனா பிரகர்ஷத்தாலே அவன் அளவும் செல்லும் இ றே
நித்ய ததாஸ்ரயத்வ தச் சேஷத்வங்கள் உண்டாகையாலே தர்மியை ஒழிய தர்ம மாத்ரத்துக்கு பிரித்து ஸ்தித்யுபலம்பாதிகள் இல்லையே –
பிரகார மாத்ரமாய் -இருப்பு காட்சி பிரித்து இல்லை யன்றோ –
இவனை வார்த்தை கேட்டாள் –மேகங்களானவை வாரா முழங்கிற்று
கார்க்கோடு பற்றியான் கை -முதல் திரு -27-என்று இங்கனேயும் ஒரு சேர்த்தி உண்டு இ றே -காரின் ஸ்வ பாவத்தை உடைத்தான சங்கம் –
கார்காலத்தில் வரவைக் குறித்துப் போனான்
அக்காலம் வந்தவாறே அவன் வடிவுக்கு போலியான மேகங்கள் வரத் தோன்றின
அவன் தானும் கூட வந்தானாகக் கொண்டு பிரமித்தாள்
அவையேயாய் -அவன் தன்னைக் கண்டிலள் -அவற்றைப் பார்த்து வார்த்தை கேட்டு அவை மறு மாற்றம் சொல்லக் காணாமையாலே நோவு பட்டு
மீளவும் –ஏக தேச வாசிச்வத்தாலே உங்களுக்கும் அவனுக்கும் ஒரு சேர்த்தி உண்டு இ றே
ஆனபின்பு என் தசையை அங்கே சென்று அறிவிக்க வேணும் என்று அவற்றைத் தூதாக விடுகிறாள்
ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டால் போலே அர்ச்சாவதாரத்தில் இவை வார்த்தை சொல்ல மாட்டா என்று
அறிய மாட்டாதே கலங்கி —காமார்த்தா ஹி பிரகிருதி கிருபணாஸ் சேதன அசேதன ஏஷூ-மேக தூதம் -1-5-இவற்றைத் தூதாக விடுகிறாள்-
அர்ச்சாவதாரத்தில் காட்சிக்கு மேற்பட வார்த்தை சொல்லுதல் பரிமாறுதல் செய்கை இல்லை
அவதாரத்தில் இது உள்ளது -என்னும் தெளிவும் இல்லை -இனி காமமாவது தான் பக்தி -அதாவது
அந்வயத்தில் தரிக்கையும் வ்யதிரேகத்தில் தரியாமையும் இ றே
இவை இரண்டும் உள்ளது பிராட்டிமார்க்கு ஆகையாலே ஆழ்வார்களும் பிராட்டிமார் பாசுரத்தாலே தங்கள் ஆசையைப் பேசக் கடவராய் இருப்பர்கள் –
அது இருக்கிறபடி யாய்த்து –பள்ளமடையாய் இயல்பாகவே இருந்தது இங்கு –

—————————————————————————————–

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-
ஆகாச அவகாசம் அடங்கலும் வெளியடையும்படி நீலமாய்
இருப்பதொரு மேற்கட்டி கட்டினால் போலே யாய்த்து இருக்கிறது –
மேகங்கள் வந்து பறம்பின போது நாயகனும் தானுமாக வெளி ஓலக்கம் இருக்கைக்கு வெளியிலே ஒரு ஈத்தொற்றி
கட்டிற்றாக வாய்த்து நினைத்து இருக்கிறாள் -உபய விபூதியும் இருவருக்கும் சேஷமாய் இ றே இருப்பது
ஜகத் சிருஷ்டிக்கு பிரயோஜனம் இது வென்று இருந்தாள் யாய்த்து
மேகங்காள் –
திருவடி ஒருவனுக்கே வார்த்தை சொன்னால் போலே சொல்ல வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே இவளுக்கு
சேயமாசாதி தா மயா-சுந்தர -30-3–என்று குறைப்பட்டு இருக்குமவையும் அன்றே இவை
மயா -எல்லாரும் காண வேணும் என்று தேடுகிற விஷயம் நான் ஒருவனுமே காண்பதே -என்றான் இ றே
யாம் கபீ நாம் சகஸ்ராணி இ றே
ராஜாக்கள் வரும் இடத்துக்கு ஜலக்ரீடைக்கு பரிகரமான -மேகம் -என்கிற ஜாதி முன்னே வரக் கடவதாய் இருக்கும் இ றே –
அவனோடு ஜலக்ரீடை பண்ணி அவன் நனைக்க நனைந்த உடம்போடு வந்தன -என்று இருந்தாள்

தெண்ணீர் பாய் வேங்கடத்து –
தெளிந்த அருவிகள் ஒழுக்கு அறாதே பாய்கிற திருமலையிலே –
அவன் இருக்கிற தேசத்தில் உள்ளவை எல்லாம் தெளிந்து இருக்கும் இ றே
உபதத்தோதகா நத்ய பலவலாநி சராம்சி ச -அயோத்யா -59-5-என்று இ றே இவ்விடம் கிடக்கிறது
என் திரு மாலும் போந்தானே-
அக்ர தஸ்தே கமிஷ்யாமி –அயோத்யா -27-6-என்று அவள் முன் நடக்க காணும் வந்தது
என் திருமால் -என்று தன்னோடு சேர்த்து சொல்லுகிறாள் இ றே
போந்தானே -என்றால் -ஓம் போந்தான் என்ன வல்லார்க்கு இ றே வாய் உள்ளது
அவை பேசாதே இருந்தன
அசேதனம் ஆகையாலே வார்த்தை சொல்ல மாட்டா என்று அறிய மாட்டாதே
அவன் வாராமையால் இ றே இவை இவை பேசாது இருக்கின்றன என்று
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
கண்ணா நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -சுத்தர -33-4-என்று வேறு சிலர் சொல்ல வேண்டாதே தானே சொல்லு கிறாள்
கிமர்த்தம்
ஆர் குடி வேர் பறியத் தான் இக்கண்கள் சோக ஸ்ரு  பிரவகிக்கிறது -அன்றிக்கே
பிராட்டியைக் கண்ட பின்பு இங்கு படை யற்று ஆரைச் சேதனராகக் கொண்டு தான் என்னுதல்

முலைக் குவட்டில் துளி சோர
மேகங்கள் நித்ய வாஸம் பண்ணுகையாலே இ றே அவன் திருமலையை விடாது ஒழிகிறது
திருமலையை தன் உடம்பில் படைத்துக் காட்டுகிறாள்
மேகங்கள் வர்ஷித்தவாறே அருவிகள் சிதறி வந்து சிகரங்களிலே விழுந்தால் போலே யாய்த்து கண்ண நீர்கள் முலைக் குவட்டிலே விழுகிறபடி-
துளியும் சோர- நானும் சோருகிறேன்-என்கிறாள் அல்லள்-
அக்னி கணங்கள் பட்டால் போலே துளி சோர தானும் சோருகிறாள் அத்தனை
அதுவே ஹேதுவாக சோருகிற என்னை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே —
எல்லா அவஸ்தையிலும் –தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்கிறபடியே அத்தலையாலே பேறாக நினைத்து இருக்கும் அதுவே ஸ்த்ரீத்வம் ஆவது
அத்தை அழியா நின்றான் ஆய்த்து –
நானயோர்வித்யதே பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-85-என்னக் கடவது இ றே
அன்றியே ஸ்த்ரீத்வ பும்ச்வத்வங்கள் இரண்டும் தங்கள் பக்கலிலே பர்யவசிதம் என்று போலே காணும் இருப்பது
மானிடவர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -என்று இ றே இவள் படி
வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகரத்த -ஸ்ரீ வரதராஜ சத்வம் -63-என்று இ றே அவன் படி
இப்படி இருக்கை இ றே ஸ்த்ரீத்வ பும்ச்த்வங்களுக்கு எல்லை யாவது
பெண்ணீர்மை ஈடழிக்கை யாவது என் என்றால் –போந்தானே -என்று இவள் வார்த்தை கேட்க இருக்கை-
தன் பேற்றுக்கு தான் பிரவர்த்திக்க வேண்டும் படி இருக்கை
தமக்கோர் பெருமையே –
ஸ்ரீ யபதித்வத்தால் வந்த உத்கர்ஷத்தை உடையராய் இருக்கிற தமக்கு
அவளோடு அனந்யராய் இருப்பார் நோவு பட முகம் கொடுத்திலர்-என்றால் அத்தால் வரும் அவத்யம் தம்மது அன்றோ
அவள் அவயவ கோடியில் உள்ளார் நோவு பட விட்டு இருந்தான் என்றால் அத்தால் வரும் ஸ்வரூப ஹானி தம்மதன்றோ
தமக்கு வரும் ஸ்வரூப ஹானி வேறு சிலரோ பரிஹரிப்பார்
தமக்கே பரிஹரிக்கை பரம் அன்றோ
அன்றிக்கே –யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிறபடியே
தனக்கு ஏற்றமாம் படி இருக்கிற பெரியாழ்வார் திரு மகள் தம்மை ஆசைப் பட்டு பேராதே நோவு படா நின்றாள் என்றால்
இது தமக்கு போருமோ -நோவு படாத படி பரிஹரிக்க வேண்டாவோ -என்னுதல் –

———————————————————————————————————

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் –
என்னைத் தோற்றி ஒரு ஔதார்யம் படைக்க வேண்டாவோ உங்களுக்கு
பரானுக்ரஹமே சீலமாய் இருக்குமவர்கள் அன்றோ நீங்கள் –
பெரு விலையனான முத்துக்களையும் பொன்னையும் சொரியுமாய்த்து -அதாவது
பிறர் இரக்க கொடுக்கை யன்றிக்கே தன் ஆஸ்ரயம் கொண்டு தரிக்க மாட்டாமல் கொடுப்பாரைப் போலே யாய்த்து கொடுப்பது
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே –
மா முகில்காள்
பிறர் இரக்க கொடுத்தல் பிரத்யுபகாரம் கொள்ளக் கொடுத்தல் செய்கை அன்றிக்கே தன் பேறாக கொடுக்குமவை என்கை-
இப்படிக் கொடுக்கப் பெறாத அன்று உடம்பு வெளுக்குமவர்கள் அன்றோ நீங்கள்
வேங்கடத்துச்-
ஏக தேச வாசித்வத்தால் உங்களுக்கு தெரியாமை இல்லை இ றே
சாமத் தின் நிறம் கொண்ட-
அவ்வளவு இன்றிக்கே வடிவிலேயும் போலி யுண்டே இ றே உங்களுக்கு
தாளாளன் –
இவற்றுக்கு இன்றிக்கே அவனுக்கு உண்டான ஏற்றம்
பிறருக்காக கண்ட உடம்பை தனக்கு என்று இருக்குமவன் ஆயத்து
பக்தாநாம் –என்று இருக்கிற உடம்பை தனக்கு என்று இருக்கிறவன் –
இவ்வடிவு படைத்த நாமோ சென்று அணைவோம்-இதில் அபேஷை உடையார் வேணுமாகில் தாங்களே வருகிறார்கள் -என்று
எழ வாங்கி இருக்குமவன்
வார்த்தை என்னே –
இங்கே வாராராகிலும் -இழவு தமக்கு என்று இருந்தாராகில் வார்த்தை சொல்லி விடாமை இல்லை இ றே
என்னே
நாம் முற்பாடராய் உதவப் பெற்றிலோம் -என்ற லஜ்ஜையாலே
நீங்கள் அவள் செய்தது என் என்று அறிந்து வாருங்கோள் என்னுதல்
அன்றிக்கே – நஜீ வேயம் ஷணம் அபி -என்னுதல்
அங்கன் இருப்பார் உண்டாவதாக நாம் அறிந்திலோமே என்னுதல்
துஷ்யந்தனுடையவும் சகுந்தலையுடையவும் கதையைச் சொல்லிக் கொள்வது -ஒன்றும் சொல்லாமை இ றே
ஒரு வார்த்தை கொண்டு தரித்து இருக்கலாமோ இவளுக்கு -என்னில் -ஒரு வார்த்தை கேட்கில்
ஸ்திதோச்மி-ஸ்ரீ கீதை -18-73-என்று இருக்கலாம் இ றே
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய் –4-7-3–என்றாவது கேட்க ஆசைப் பட்டார் அன்றோ-
வார்த்தை என்னே -என்ற இடத்தில் இன்னது என்று சொல்லக் கேட்டிலள்
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டு
கேவல அக்னியோபாதி இது என்று நினைத்து இருக்கிறானோ
கேவல அக்னியில் காட்டில் நரக அக்னிக்கு எத்தனை வாசி உண்டு -அவ்வோபாதியும் போராதே அந்தர அக்னிக்கு இது
உள் புகுந்து
புறம்பு உள்ளதடங்க தஹித்து தாஹ்ய பாவத்தாலே உள்ளே விழுந்ததாய்த்து
பாவ பந்தமடியாக வந்ததாகையாலே உள்ளேயாய் இருக்கும் இ றே
கதுவப் பட்டு –
வெந்த இடமே விறகாக எரியா நின்றதாய்த்து
இடைக் கங்குல் ஏமத்தோர்
ராத்ரியில் நாடு யாமத்தில் -என்னுதல்
அன்றிக்கே –ஏமத்தில் -ரஷை உள்ள இடத்தில் இருந்து அனுபவிக்க வேணும் என்று பாரித்து இருந்தாள்-அவன் வந்திலன்
ஏமம் -காவலும் சாபமும் –கட்டழகும் வலியும்-புகுந்து ஆச்வசிப்பார் இல்லாத இடத்திலே அகப்பட்டாள்
ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே–
இந்த பாதக பதார்த்தத்துக்கு தம்மோபாதி சக்தி போதாது என்று இருக்கிறாரோ
பாம்போ பாவன மாருதம் -என்று தாமும் கால் வாசி அறியாரோ
அவன் கால் ஆசைப் பட்டு இருக்கும் நான் இக்காலாலே துகை உண்ணக் கடவேனோ
இங்கு –
இது வரும் என்று அறிந்து இருந்தால் என்னைத் தன் கால் கீழ் இட்டுக் கொள்ள வேண்டாவோ
தாமும் நானுமாக இருந்தால் அன்றோ இது வாய் மடிந்து போவது -காற்று பலம் இழந்து போவது என்றபடி
நான் இலக்காய்-
சர்வ சாதாரணமான வஸ்துவுக்கு -காதலுக்கு -நான் ஒருத்தியும் இலக்காவதே
தம்முடைய கர ஸ்பர்சத்தாலே ஜீவித்து இருக்குமது தவிர்ந்து அதுக்கு போலியான இது வந்து ஸ்பர்சிக்க
இன்னம் நான் ஜீவிப்பேன் என்று இருக்கிறாரோ
தம் கை பார்த்து இருக்கிற நான் இக்காலாலே அமுக்குண்ணக் கடவேனோ
அணி மிகு தாமரைக் கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய்-திருவாய் -10-3-5-
தான் இலக்காய் -பெருமாள் இத் தென்றலுக்கு இலக்காக லாமே ஒழிய நான் இலக்காகவோ
பத்ம சௌகந்தி கவஹம் -கலம்பகம் சூடுவாரைப் போலே –சிவம் -இதின் தனை நன்மை யுடையவர் ஒருவரும் இல்லை
இதுக்கு நன்மை என் என்னில் –சோக விநாசனம் -நம்மைச் சித்ர வதம் பண்ணாது -அழித்தே விடும்
சோகம் மறுவதலிடாதபடி பண்ணும் போலே இரா நின்றது
தன்யா -தனம் உடையார் இருப்பார் ஷாமத்துக்கு அஞ்சார்கள் இ றே
சேவந்தே -அஞ்சாமை அன்றிக்கே இத்தை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் தேடா நிற்பார்கள்
பாம்போ பாவன மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே -அக்னி குண்டத்தில் நெருப்பு போலே மிகவும் கொளுத்துவதாகும்
இலக்காய் -ஏக லஷ்யமாய்
நான் -என்னையும் தாமாக நினைத்து இருந்தாரோ
ஒரு கால் காணில் செய்வது என் என்று இருக்கிற நான்
இருப்பேனே -என்னை ஒழியவும் தமக்கு ஜீவிக்கலாம் என்று இருக்கிறாரோ -இரேன் -இ றே என்றபடி
கால் காணில் -சாடு –

———————————————————————————–

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
ஒரு உபாதியாலே பெற்றவை –
ஸ்வா பாவிகமானவை எல்லாம் போய்த்தன
பாஹ்ய பரிகரங்களும் ஆந்திர பரிகரங்களும் போய்த்தன என்கிறாள்
புறம்புள்ள ஆபரணமும் –ஒளி வண்ணம் வளைகள் -உள்ளுள்ள ஆபரணமும் –சிந்தை உறக்கங்கள் -போய்த்தன என்கிறாள்
மெய்யில் ஆபரணமும் -மெய்யான ஆத்மாவில் உள்ள உறக்கமும் -சிந்தையும்
பொய்யில் ஆபரணமும் -சரீரத்தில் ஆபரணம் ஒளி வண்ணன் வளையல்கள் -இருக்கிறபடி
அவனோடு கலந்து பெற்ற புகர்-அதுக்கு ஆஸ்ரயமான நிறம்
கழற்றிப் பூணும் ஆபரணமும் -வளையல்கள் –கழற்றாதே கிடக்கும் ஆபரணமும் நித்ரையோடே கூட
இவை எல்லாம் –
மற்றும் பலவும் -அவனுடைய உபய விபூதியில் பரப்போபாதியும் போரும் காணும் இவையும்
ஒளி வண்ணம் வளை
இவை மெய்யே விட்டுப் போய்த்தன -சரீரத்தில் இருந்து உண்மையாகவே விட்டு நீங்கின
உறக்கம் தானே கண்ணற்றுப் போய்த்தது-கண்ணற்று -கருணை இல்லாமல்
இவை இப்படி போகைக்கு அடி என் என்னில் –
எளிமையால் –
நான் எளிமை பட்டு இருக்கையாலே போய்த்தன -என்னுதல் -புல்லியார் இ றே ஆபன்னரைக் கை விடுவார்
என் எளிமையாலே -என்னுதல்
தம்தாமுடைய புன்மையாலே என்னுதல்
இட்டு –
புரிந்து பாராதே சில அசேதனங்களை பொகடுமா போலே பொகட்டு
ஒளி வண்ணம் வளை என்கிற இவை நாம் இவளுடனே கையும் மெய்யும் தீண்டிப் பரிமாறின -என்னுமது இன்றிக்கே போயின
உறக்கம் தானே -நாம் கண் கலந்து பரிமாறினோம் என்னுமது இன்றிக்கே பொகட்டுப் போய்த்து -ஆகிலும் போகிறது கண்ணற்றுப் போய்த்து
ஈடழிய
அவன் பிரிகிற போது பிரிவை உணர்த்தி வரும் தனையும் தரிக்கும் படி ஸ்மிதம் பண்ணி அனைத்து தன் செல்லாம தோற்ற வி றே போய்த்து
இவை அங்கன் இன்றிக்கே –சைதில்யம் உபயாந்யாஸூ--ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-18-29-என்கிறபடியே சடக்கென பிரிந்து கொடு நின்றன –
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
இத்தசையில் குண ஜ்ஞானத்தாலே தரித்தல் -குண கீர்த்தனத்தாலே தரித்தல் செய்யலாம் என்று இருக்கிறாரோ
குளிரருவி வேங்கடம்
இத்தாபம் அத்தேசத்தை நினைக்கத் தீரும் காணும் -சகல தாபங்களையும் ஆற்ற வல்ல தேசமாய்த்து
என் –
இப்போது வந்திலன் ஆகிலும் முன்பு தன்னை எனக்காக்கி வைத்தவற்றை முந்துற முன்னம் தவிர்க்க ஒண்ணாது இ றே
கோவிந்தன்
சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இ றே
குணம் பாடி –
-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது
பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –
ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே
அளியத்த மேகங்காள் –
நீங்கள் முன்னம் அவனைப் போலே யாகாது ஒழியப் பெற்றேன்
அவன் பொகட்டுப் போன சமயத்தில் முகம் காட்டுவதே நீங்கள் –
ஆவி காத்து இருப்பேனே—
பிராண நாதன் நானோ
தன்னை அனுபவிக்கும் அது ஒழிய பிராண ரஷணமும் எனக்குப் பணியோ
ஆனைப் பண்ணைக் குதிரை சுமக்க வற்றோ -ஆனைக்கு உரிய அலங்காரங்கள் கட்டுக்கள் இவற்றை குதிரை சுமக்குமா
ஒரு சர்வ சக்தி தொழிலை என்னாலே செய்யலாமோ –

———————————————————————————-

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே –8-4-

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
அவனைப் பிரிந்து இருக்கிற சமயத்தில் மறக்க ஒட்டாதே -அவன் வடிவுக்கு போலியான உங்கள் வடிவைக் காட்டி
அவனை ஸ்மரிப்பிக்கிற நீங்கள் -வல்லி கோளாகில் நானும் அவனும் சேரும்படி காரியம் பாரிகோள்-
நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா-தைத் நா -11
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் -திரு விருத்தம் -29
ஆகத்து எழுகின்ற -என்றுமாம் –மின் நாகத்து எழுகின்ற -என்றுமாம் –நாகத்து -ஆகாயத்தில் –ஆகாயம் -ஆகம் என்று கடைக்குறை
மேகங்களானவை தம்மில் உரசினவாறே நடுவே எழுவது ஓன்று இ றே மின்னாவது
மின்னானது ஆகத்திலே எழுகிற மேகங்கள் என்னுதல்-
மின்னானது ஆகாசத்தில் தோற்றும்படி எழுகிற மேகங்கள் என்னுதல்
தன் வடிவில் இருட்சிக்கு கை விளக்கு பிடித்துக் காட்டுவாரைப் போலே மின்னிக் கொண்டு சஞ்சரியா நின்றன வாய்த்து
மேகங்காள்
நடுவே பெரிய உடையார் வந்து தோற்றினால் போலே இருந்ததீ-அவனைப் பிரிந்து நோவு படுகிற சமயத்தில் நீங்கள் வந்து தோற்றின படியும்
வேங்கடத்து
கடல் கடக்கவும் விரோதி போக்கவும் வேண்டாவே உங்களுக்கு
கலங்கா பெரு நகரத்து ஏறப் போக சொல்லுகிறேனும் அன்றே –

தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
அணைந்து அல்லது தரிக்க ஒண்ணாத வடிவு படைத்தார்க்கு
பிராட்டி -அகலகில்லேன் இறையும் -என்று விரும்பி நித்ய வாசம் பண்ணும் வீறுடைய மார்வு படைத்தவர்க்கு
தான் உள்ளாகைக்கும்-தன் சத்தை பெறுகைக்காகவும்-பிராட்டி நித்ய வாசம் பண்ணும் மார்வு படைத்தவர்க்கு
அளவுடையார் இருப்பார் அணைந்து அல்லது தரியாத உடம்பை புதியராய் ஆசைப் பட்டவர்களை போக விட்டால்
ஆற்றப் போமோ -என்று சொல்லுங்கோள்
எனக்கு புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேன் அன்றே
பிரணயகதை இன்று இருந்து சிலர் ஓதுவிக்க வேண்டாவே தமக்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித்
பிராட்டி முலை எழுந்தால் போலேயோ நான் முலை எழுந்த படி
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –என்று ஆறி இருக்கலாம் படியோ நான் முலை எழுந்த படி –
இளம் கொங்கை
சொற்கேளா பிரஜைகளைப் போலே யாய்த்து முலைகளின் படி
விஷயத்தை காட்டுகிறது -என்றால் ஆறி இருக்க மாட்டாதவை
என் கொங்கை கிளர்ந்து குமைத்து -5-7–என்னக் கடவது இ றே
இளம் கொங்கை விரும்பித் தாம்
காத்ரைஸ் சோகாபி கர்சிதை சம்ச்ப்ருசேயம்-சுந்தர -40-3-என்னுமா போலே ஒருவர் பட்டினி விட ஒருவர் ஜீவிக்குமா போலே ஆக ஒண்ணாது
விடாய்த்த இக் கரணங்களால் நான் அணையும் படி பண்ணு
நாடோறும்
காலம் தோறும் -காலம் எல்லாம் -ஆசைப் படுகிற போதே காலம் எல்லாம் அனுபவிக்க வேணும் என்று
ஆசைப்படும்படி இருக்கிறது காணும் விஷயம் தான்
தாம் விரும்பி -எம்பெருமான் விரும்பி என்றுமாம்

தன்னாகத் திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு பொன்னகம்-உண்டு வீறுடைய ஆகம்-என்னாகத் திளம் கொங்கை தாம் விரும்பி நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே-
நினைவாலே தரிக்க வல்லவள் அல்லள் ஆயத்து இவள் –
என் புரிவுடைமை –
தாமும் நானுமாய் கலந்து இருந்த போது-தம் புரிவுடைமை இ றே கேட்டுப் போந்தது
ஒரு தலையில் ஆசையே யாய்த்து கேட்டுப் போந்தது
இப்போது மற்றைப் படியேயாய்-நான் விரும்புகிற படியைச் சொல்லுங்கோள்
ரஷ்ய ரஷக பாவம் மாறாடிற்று என்று சொல்லுங்கோள்
தம் ஸ்வரூபமும் என் ஸ்வரூபமும் அழிந்தது என்று சொல்லுங்கோள்
தான் நினைத்து பெறுமதுவும் ஸ்வரூப ஹானி -என்றுபோலே காணும் இவள் தான் நினைத்து இருப்பது
செப்புமினே
தம்தாமுக்கு இல்லாதவை கேட்டு அறிய வேணும் இ றே
நந்தலையில் குறை தீர அறிவித்து போருங்கோள்
தேசிகாஸ் தத்ர தூதா –-தாத்பர்ய ரத்னாவளி -3-புருஷகார பூதர்களான ஆசார்யர்களைக் குறிக்கும் –

———————————————————————————-

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள்
தங்களுக்கு வாசஸ் ஸ்தானம் அறும்படி வந்து தோற்றா நின்றன
நம் குடியிருக்கு என்று பரிஹரிக்க அறிகிறனவில்லை-
அபரிச்சின்னமாய் இருக்கும் ஆகாசம் -ஆகாசம் -என்று இ றே பிரசித்தி –
அத்தை பிரதம பரிஸ்பந்தத்தாலே க்ரசித்துக் கொண்டு பின்னையும் அதின் அளவு அல்லாத படியாக கிளரா நின்றது யாய்த்து –
இவற்றின் ஒருமைப் பாடு இருக்கிறபடி
இவ்வளவு அன்று என்று தோற்றா நின்றன வாய்த்து –

வேங்கடத்துத் தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறப் பொழிவீர் காள்
நல்லத்தை அழிக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –
நானும் அவனும் சேரும்படி கார்யம் பாரிகோள் வல்லி கோளாகில் –
நீங்கள் எல்லாம் கூடித் திரண்டு பெரிய கிளர்த்தியோடே பூக்கள் அழிய கார்யம் பார்க்கிறிகோள் இத்தனை இ றே
இத்தால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு
ஒரு மாலை -கோதை -அவனோடு சேரும் வழி உண்டாகில் பாரிகோள் –
விடாய்த்தார் நாக்கு நனைக்கப் போரும் என்னுமா போலே –ஒரு மாலை -என்கிறாள்
தேன் மிக்கு இருந்துள்ள மலர்களானவை சிதறும்படி திரண்டு ஏறி வர்ஷிக்கிற நீங்கள்
என் விரோதியை நீங்கள் போக்கின இத்தால் -நான் அவனோடு சேர்ந்தேன் ஆனேனோ –
நேமான் புஷ்ப பலத்ருமான் -சுந்தர -16-25-என்று இ றே இவளுக்கு இருக்கிறது
உனக்கு நாங்கள் செய்ய வேண்டுவது என் என்றால் போல் இருந்தன –

ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தசைந்து கூரிதான உகிராலே-
தமப்பன் பகையாக மகனுடைய –எங்கும் உளன் கண்ணன் -திருவாய் -2-2-9-பிரதிஜ்ஞா சம காலத்திலேயே வந்து தோற்றி –
அவன் விரோதியைப் போக்கினவன் –
தமப்பனில் அண்ணியார் இல்லை இ றே -இப்படி இருக்க -அவனில் அண்ணி யனாய் உதவினவன் –
பிறர் பகையானாலும் உதவுமவன் தான் பகையானால் உதவ லாகாதோ -என்று சொல்லுகிறாள் என்று சொல்லுங்கோள் –
தன்னைப் பேணாதே வந்து விரோதியைப் போக்குமவன் -தன்னைப் பேணாதே வரச் சொல்லுகிறேன் அன்றே
தன்னைப் பேண நான் பிழைப்பேனே-என் பருவத்திலே ஒரு ஆணுக்கு உதவினவன் எனக்கு உதவலாகாதோ -என்று
சொன்னேன் என்று சொல்லுங்கோள்
ஊன் கொண்ட வள்ளுகிரால்-
ஆசீத விரோதிகளை தானே கை தொடானாய் போக்கு மவன்
இரணியனை -யுடலிடந்தான்-
விரோதியைப் போக்கவும் தன்னை அழிய மாறவும் வேணும் என்று சொல்லுகிறேன் அல்லேன்
தன் உடைமை தான் பெறுவாள் என்று நினைக்க அமையும்

தான் கொண்ட சரி வளைகள்
கழலுகிற வளையல்கள்
சரி என்னும் ஆபரணமும் வளையல்கள் என்னும் ஆபரணமும் என்னுமாம்
அவன் வந்தாலும் தொங்காது போலே காணும்
தருமாகில் சாற்றுமினே–
தாராது ஒழிகையே-ஸ்வ பாவம் என்று இருக்கிறாள்
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாராது ஒழியிலும் ஒழிவர் இ றே-ஆனாலும் நமக்கு நசை அறாது இ றே

சாற்றுமினே
அவன் தரிலும் தருகிறான்
தவிரிலும் தவிருகிறான்
நீங்கள் அறிவித்துப் போருங்கோள்-

————————————————————————————————————–

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–8-6-

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள்
குளிர்ந்த தண்ணீரைச் சேர்த்து -ஏலக் குழம்பு ஏலக் குழம்பு என்று திரிவாரைப் போலே திரியா நின்றன வாய்த்து
தண் முகில்காள் –
நீங்கள் வர்ஷிக்கிற ஜலம் வேணுமோ -உங்கள் வடிவே அமையாதோ –

மாவலியை நிலம் கொண்டான் வேங்கடத்தே –
பிறருக்காக தன்னை இரபபாளன் ஆக்கினவன் வர்த்திக்கிற தேசத்திலே வர்த்திக்கிற உங்களுக்கு
என் இரப்புக்கு கார்யம் செய்ய வேண்டாவோ
அசுரன் பக்கலிலே உங்களைப் போகச் சொல்லுகிறேன் அன்றே
உடையவன் பக்கலிலே உங்களைப் போகச் சொல்லுகிறேன் அத்தனை அன்றோ –நம்மை உடைய நாராயணன் அன்றோ

நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
பரந்து-சாய்கரத்தை உயர வைத்து தண்ணீர் வார்ப்பாரைப் போலே -காணவே விடாய் கெடும்படி உயர ஏறி வர்ஷிக்கிறி கோள் இ றே
அவன் வர்த்திக்கிற தேசத்தில் வர்த்தித்து அவனோடு உங்களுக்கு ஒரு சம்பந்தம் உண்டானால் அவன் ஸ்வ பாவம் உண்டாக வேண்டாவோ

உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து
உலங்கு -என்பது -பெரும் நுளம்பு –பெரும் கொசு
அவை விளாம் பழத்திலே மொய்த்தவாறே அதின் ரசம் எல்லாம் குடி போமாய்த்து
அப்படியே என் உடம்போடு அணைந்து அகவாயைக்குடி போக்கினான் யாய்த்து –

என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–
என்னை சர்வஸ் வஹரணம் பண்ணின
நாரணற்கு –
தம் உடம்பில் அழுக்கு போக்யமாய் இருக்குமவர்க்கு –
என் நடலை நோய் செப்புமினே—
தம் வாத்சல்யத்துக்கும் என் ஆற்றாமைக்கும் என்ன சேர்த்தி யுண்டு என்று சொல்லுங்கோள்-
என் நடலை நோய்
தமக்கும் இந் நடலை நோய் யுண்டாகில் அறிவிக்க இரார் இ றே
நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்ப் படுகிற என் ஆற்றாமையை அறிவியுங்கோள்
அறிவிக்க வேண்டியது ஒன்றே வேண்டுவது –வாய் வார்த்தையால் தண்ணீர் பந்தல் வையுங்கோள் –

——————————————————————————————

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே–8-7-

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் –
கீழ்க் கிடந்த சங்குகள் மேல் ஏறிக் கொழிக்கும் படி அபரிச்சின்னமான கடலைக் கடைந்தவன் –
தன்னை அர்த்தித்தாருக்கு தன்னை வருத்தி கடலைக் கடைந்து அவர்கள் பிரயோஜனத்தை கொடுக்குமவன்
வர்த்திக்கிற தேசத்தில் அன்றோ நீங்களும் வர்த்திக்கிறது –
தண் முகில்காள் –
கடல் கடைந்த போது உண்டான ஆயாசத்தால் வந்த ஸ்ரமம் ஆறும் படி குளிர்ந்த வடிவைக் காட்டி வர்த்திக்கிறன வாய்த்து –
தன்னையே பிரயோஜனமாக வேணும் என்று இருப்பார்க்காக வந்து நிற்கிற தேசமாய்த்து –
-கடல் கடைந்து -அநந்தரம்–வேங்கடத்து செங்கண் மால் ஆனவன்
அவன் தான் வாராது இருக்க இவள் இப்பாடு படுகிறது என்-என்று இருக்கிறிகோள் ஆகில் –
செங்கண் மால் –
அங்கே சென்றவாறே காண்கிறிகோள் இறே –அநித்ரஸ் சத்தம் ராம –
சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்-
திருவடிகளிலே விழுந்து விண்ணப்பம் செய்யுங்கோள்
விண்ணப்பம் செய்யும் பாசுரம் என் என்னில்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் –
என்று சொல்லுங்கோள் தம் வரவை விஸ்வசித்து உத்யோகித்துக் கொண்டு இருக்கிறேன் –
அது சபிரயோஜனமாம் படி பண்ணுவாராகில் தரிக்கலாம் -என்று சொல்லுங்கோள்
முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தாருக்குத் தெரியாது இ றே –
நாம் சென்றாலும் இனி ஜீவிக்க மாட்டாள் என்று இருக்கிலும் இருப்பார் இ றே -அக்குறை தீர அறிவித்துப் போங்கோள்-
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
வெறும் புறத்திலே கொண்டு ஆற்ற ஒண்ணாத முலைகளை -அதுக்கு மேலே கும்குமத்தாலும் அலங்கரித்தாள் ஆயத்து
குழம்பு –
இவை சென்று அறிவித்து நசை அற்றால் இ றே அவை பொறி எழுவது -செருக்கனாய் ஸ்வ தந்த்ரனாய் இருக்கையாலே
-இன்ன போது வரும் என்று அறுதி இட ஒண்ணாதே
இப்போது வந்தான் இப்போது வந்தான் -என்று அலங்கரித்த படியே இருக்க வேணும் இ றே இத்தலை பர தந்திர வஸ்து வாகையாலே
குழம்பு அழியப் புகுந்து –
முன்னாடி தோற்றாதே இ றே வந்து புகுவது
ஒரு நாள் தங்கு மேல்
ஒரு நாள் தங்கு மாகில் போருமோ பின்னை இப்பாரிப்புக்கு எல்லாம் என்னில்
என்னாவி தங்கும்
போகத்துக்குப் போராது
பிராண ரஷணத்துக்கு போரும்
ஒருநாள் தங்கு மேல் என்னாவி தங்கும்
குண ஜ்ஞானத்தாலே தரியாலோ என்று இருக்க ஒண்ணாது -அணையுமாகில் தரிக்கலாம்
கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே -8-3- நிலையையும் தாண்டி விட்டாள்-

—————————————————————————————————————-

கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே –8-8-

கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள்
அவன் வரவு குறித்துப் போன காலத்திலே தோற்றினவர்கள் அன்றோ நீங்கள்
தனக்கு அடைத்த காலத்தில் தோற்றுகிறவை யாகையாலே தன் நிறம் பெற்று தோற்றி உதவுவுமா போலே யாய்த்து –
இவனும் முன்பு எல்லாம் தோற்றாதே -ஆஸ்ரிதர் நலிவு படும் அளவு ஆனவாறே வந்து தோற்றி –

வேங்கடத்துப் போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார்
அவர்கள் விரோதிகளைப் போக்கி உதவி தான் நிறம் பெரும் படியும்

பேர் சொல்லி-
இந்த தசையில் திரு நாம சங்கீர்த்தனத்தாலே தரிக்கலாம் என்று இருந்தோம் –
அது தானே சைதில்ய ஹேதுவாக நின்றது –

நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
கோடையிலே பாலற வுலர்ந்த எருக்கிலையிலே மழைத் துளி பட்டவாறே அற்று விழுமா போலே யாய்த்து –
விரஹத்தாலே நொந்து இருக்கிற சமயத்திலே திரு நாம சங்கீர்த்தனத்தைப் பண்ண
அது தானே சைதில்ய ஹேதுவாக இற்று இற்று விழுகிறபடி

வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே —
ஓட ஒழுகிச் செல்லுகிற காலத்து –நீண்டு செல்லும் காலத்தில் –
என்றும் ஒருபடிப் பட்டு இருக்க வேணுமோ இதிலும் -வார்த்தை அருளுவதிலும் –
வாசா தர்ம மவாப் நுஹி -என்று ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ
அங்கு தூதர்க்குச் சொன்ன வார்த்தை இ றே
இங்கும் இவற்றுக்கு இ றே சொல்லுகிறது –

—————————————————————————————————————-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் –
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்
மா முகில்காள்
ஒரு விபூதியாக அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்
வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே-அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள் –
சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –முக்தரைப் போலே அன்றிக்கே -நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இ றே வாழ்வாகச் சொல்லுகிறது
கீழே முமுஷுக்களில் வ்யாவ்ருத்தி சொல்லி இங்கே முக்தர்களில் வ்யாவ்ருத்தி சொல்கிறது
இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே –நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இ றே
பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் –புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -6-9-8-என்றும்
இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் –பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்

பாம்பணையான் வார்த்தை என்னே-
படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் -வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு -அந்தரங்கர்க்கு தெரியும் இ றே

கதி என்றும் தானாவான் –
தேவாநாம் தானவாநாஞ்ச சாமான்ய மதிதைவதம் -சர்வதா சரணத்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ -ஜிதந்தே -2-என்கிறபடியே
அல்லேன் என்றும் ஆவேன் என்றும் சொல்லும் இவனைப் போல் -ஜீவனைப் போல் அன்றிக்கே
என்றும் ஒக்க ஒருபடிப் பட்டே இருக்குமவன் யாய்த்து அவன்
ஆள் பார்த்து உழி தருவாய் -நான்முகன் -60-என்கிறபடியே

கருதாது ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல்
தனக்கு வருகிற ஸ்வரூப ஹானியை புத்தி பண்ணாது
ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும் கொடியை தரையில் இட்டு வைக்கையாவது -வதைக்கை இ றே
ந ச சீதா த்வயா ஹீ நா —அயோத்யா -53-31–பகவத் விச்லேஷமும் பர்யாயம் காணும் –

வையகத்தார் மதியாரே–
அத்தலையிலே சத்பாவத்தாலே இத்தலையில் சத்தை என்னுமது போய்த்தே
ஒரு கால் முடிந்தார்க்கு இரு கால் முடிய வேண்டாவே
இனி நாட்டார் தம்மை ரஷகர் என்று விரும்பார்கள் என்று சொல்லுங்கோள் –
தம்தாம் அழிந்தாலும் அத்தலைக்கு வரும் அவத்யம் பரிஹரிக்கும் குடி அன்றோ –

———————————————————————————————

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-

நாகத்தின் அணையானை நன்னுதலாள்
நீங்கள் செய்து அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
அத்தலையில் ஒரு குறையும் இல்லை
நம் வரவுக்கு உறுப்பாக படுக்கை படுத்து சாய்ந்து கிடந்தான்-வேங்கடக் கோன் என்கையாலே
நன்னுதலாள்
அப்படுக்கையிலே துகைத்து ஏறத் தகும் அவயவ சோபை உடையவள்

நயந்து உரை செய்-
ஆசைப் பட்டுச் சொன்ன விண்ணப்பம்

மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டது
இங்கே திருமலையிலே மேகங்களை தூதாக விடா நின்றாள்
இதுவே வாசி
அங்கு நின்று வந்தாரையே விடுகை இரண்டு இடத்திலும் ஒக்கும்
அவ்வதாரத்தில் பிற்  பாடர்க்கு இழக்க வேண்டாத படி -திருமலையிலே வந்து தூது விடுவார் ஆரோ என்று
அவசரம் பார்த்து இரா நின்றான் யாய்த்து –

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்ஆகத்து வைத்துரைப்பார்
பகவத் போகத்தில் ஒன்றும் தப்பாத படி எல்லா வகையாலும் அனுபவித்த பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பாய்த்து இவ்வாசைக்கு ஊற்று
விபவம் உண்டான வன்று தொடக்கி போகத்தில் அன்வயித்தவர் இ றே பெரியாழ்வார்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – என்று தொடங்கி அனுபவித்தவர் இ றே

இது அப்யசிக்கைக்கு எவ்வளவு அதிகாரம் வேணும் எனில்
ஆகத்து வைத்து உரைப்பாரவர்-
ஒருத்தி ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு படும் பாடு என் என்று அனுசந்தித்து சொல்ல வல்லவர்கள் –

அவர் அடியார் ஆகுவரே–
மேகங்களை தூது விட வேண்டாதே –
இவள் தான் மேகங்களை தூது விட்டதுவே ஹேதுவாக
இவள் ஆசைப் பட்ட கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்
சேஷத்வம் த்யாஜ்யம் -என்று இ றே புறம்பு உள்ளார் நினைத்து இருப்பது
சேஷத்வம் புருஷார்த்தம் என்று கேட்கலாவது இவ் வாழ்வார்கள் பக்கலிலே இ றே
அபிமத விஷயத்தில் தாஸ்யம் போகமாய் இருக்கும் இ றே
இதர விஷயங்களில் சேஷத்வம் இ றே கழிகிறது வகுத்த விஷயத்தில் சேஷத்வம் உத்தேச்யமாகக் கடவது
அந்ய சேஷத்வமாய்த்து தவிர்க்கிறது –

————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஏழாம் திருமொழி —

September 10, 2015

அவதாரிகை –

ஆண்டாளுடைய பாக்யம் இருந்தபடி -புதியதொரு குரங்கைப் பார்த்து –கதமூரூ கதம் பாஹூ-சுந்தர -35-4-என்னாதே
தேசிகரைக் கேட்கப் பெற்றாள் இ றே-
ஒரு ஸ்வப்ன அனுபவத்தை சொன்ன அளவன்றிக்கே சம்ச்லேஷமும் வ்ருத்தமாய்த்துப் போலே-
இல்லையாகில் –வாகம்ருதம் இருக்கும் படி என் -என்று கேட்கக் கூடாது இ றே –
ஸ்வப்ன அனுபவம் ஆகையாலே மின்மினி பறந்தால் போலே இருக்கும் அத்தனை அல்லது நெஞ்சில் பட்டிராது –
சம்ச்லேஷத்தில் உபக்ரமத்திலே தான் இழந்தாள்-
தனக்கு அமைத்த அம்சத்தை ஸ்ரீ பாஞ்சஜன்யத்தைக் கேட்கிறாள் –
அவனைக் கேட்பான் என் என்னில்
-1-திரை வளைத்தால் அதுக்குள்ளே வர்த்திக்கும் கூனர் குறளரைப் போலே அவனைக் கை விடாதே அந்தரங்கனாய் இருக்கையாலும்
2-தாங்கள் அனுபவிக்கும் துறையிலே இழிந்து அனுபவிக்கும் நிலயனாய் இருக்கையாலும்
3-தங்களைப் போலே காதாசித்கம் அன்றிக்கே நித்ய சம்ச்லேஷம் பண்ணி வர்த்திக்கும் ஒருவனாகையாலும்
4-இனி வினை யுண்டானால் திருவாழி யாழ்வான் திருக் கையை விட்டுப் போய் வியாபாரிக்கும்
கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -திருவாய் -10-6-8–இவன் வினை முடுக முடுக திருப் பவளத்திலே அணையும் அத்தனை
5-இனி உகவாத கம்சாதிகள் காணாமைக்கு இ றே –உபசம்ஹர -என்றது
6- உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூடவே இருக்கும் இ றே
வாய்க்கரையிலே போய் இருந்து ஆர்ப்பரவம் பண்ணி அவார்ப்பரத்திலேயே எதிரிகள் கெடும்படி இருப்பானுமாய்-இவனை உகவாத கம்சாதிகள் காணாத படி
உபசம்ஹர சர்வாத்மன் ரூபமே தச்சதுர்புஜம் ஜானாது மா அவதாரம் தி கம்சோசயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-11-
என்றால் அப்போதே கை கரந்து நிற்பானுமாய்  -உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூட வாய் இருக்கும் இ றே
7- இவர்கள் தான் ச்யாமமான திருமேனியை அனுபவித்தால் அதுக்கு பரபாகமான வெண்மையை உடையவன்-ஆகையாலே சேர அனுசந்திக்க வேண்டி இருக்கும் இ றே
இவன் தான் அதிக வளனுமாய் இருக்கும் இ றே –தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ -11-1–என்றும்
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்றும் –
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் -திருப்பாவை -26-என்றும்-
இவள் தான் பாவித்து இருப்பதும் இத்தை இ றே
8- இனி இவன் வார்த்தை கேட்டால் அவன் வார்த்தை கேட்டால் போலே இனியதாயும் இருக்கும் இ றே –

———————————————————————————————————

கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே –7-1-

அத்தை நித்ய அனுபவம் பண்ணுகையாலே உனக்குத் தெரியும் இ றே –
அவனுடைய வாக் அம்ருதம் இருக்கும் படி என் -நீ சொல்ல வல்லையே -என்று அவனைக் கேட்கிறாள் ஆய்த்து –
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-
எறிச்சு வெட்டியதாய் இருக்கும் கற்பூர நாற்றம் -பிரகாசிக்கையும் உறைப்பும் உண்டே
ஆறிக் குளிர்ந்து நிலை நின்று இருக்கும் கமலப் பூவினுடைய நாற்றம்
இரண்டுமேயாய் இராது இ றே
சர்வ கந்த -என்கிற வஸ்து வாகையாலே -எல்லாம் அனுபவ விஷயமாய் இருக்கச் செய்தே- ஒன்றை இரண்டை- கேட்கிறாள் அத்தனை -யாய்த்து
எல்லாம் -நீச்சு நீரும் நிலை நீரும் போலே அனைத்தும் உண்டே
இதில் உனக்குத் தான் ஏதேனும் தெரிந்து இருக்குமாகில் நீ தான் சொல்ல வல்லையே -என்கிறாள்
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ-
அத்தைத் தப்பி உள்ளே இழிந்தால் அனுபவிக்கும் படி கேட்கிறாள் –
சர்வ கந்த -என்கிற இது போலே –சர்வ ரச -என்கிற இது விகல்ப விஷயமாய் இருக்கிறது இல்லை போலே காணும்-
தேன் போலே கன்னல் போலே போலே இருக்குமோ என்று விகல்ப்பித்து கேட்க மாட்டுகிறிலள்-ஆய்த்து –
வாய்ப்புக்கு நீராய் ஆழம் காலாய் இருக்கையாலே –வாய்ச்சுவையாய் திகைக்க வைக்கையாலே இரண்டாவதை கேட்க மாட்டாதவள் ஆனாள்
வாயிலே புகுகிற ரசம் -சாடு
திருப் பவளச் செவ்வாய் –
கண்ணுக்கு இலக்கான போதே பிடித்து அவ்வருகு ஒன்றில் இழிய ஒட்டுகிறது இல்லை யாய்த்து –
சர்வ இந்த்ரியங்களுக்கும் விஷயம் உண்டாய் இருக்கிறபடி –
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்-
அளவுடையார் இழிந்து ஆழம் கால் படும் துறை யாய்த்து
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள் உண்டாய் இருக்கையாலே -எல்லா இந்த்ரியங்களுக்கும் இரை போடுவது அன்றோ இது –
பர்த்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய –30-40-என்கிறபடியே குவலயா பீடத்தை தள்ளின அநந்தரம் அணைத்து அனுபவிக்கும் யாய்த்து
வாய்ச் சுவையும் நாற்றமும் –
அனுபவ சமயத்திலே நாற்றம் முற்பட்டதே யாகிலும் அநு பாஷிக்கிற இடத்தில் ரசம் முற்பட்டு கந்தம் பிற்பட்டு இருக்கிறது காணும் –
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே —
அந ஸூ யவே--ஸ்ரீ கீதை -9-1-என்னும் விளம்பமும் இல்லை
ந ச மாம் யோ அப்ய ஸூ யதி -ஸ்ரீ கீதை -18-67-என்ன வேண்டா வி றே இவளுக்கு
அடியானாகையாலே நியமித்து கேட்கலாமே
அவனுக்கு சேஷ பூதனாகையாலே இவளுக்கும் அடியானாய் இருக்கும் இ றே –
பர்த்ரு பார்யைகள் இருவருக்கும் பொதுவாய் இ றே தாச தாசிகள் இருப்பது
ஆழி –
உன் அளவுடமை போலே இருக்க வேண்டாவோ பரிமாற்றம் -கடல் போன்ற விசாலமான மனப்பரப்பைச் சொல்லுதல்
அன்றிக்கே பிறப்பைச் சொல்லுதல் -கடலிலே பிறந்தவன் என்றுமாம்
கடல் அனைத்துக்கும் தாரகமானால் போலே என்னையும் நீ பதில் சொல்லி தரிக்கப் பண்ண வேணும்
வெண் சங்கே –
உன் நிறத்தில் வெண்மை நெஞ்சிலே பட்டால் போலே உன் வார்த்தையும் நெஞ்சிலே படும்படி சொல்ல வேணும்
வெண் சங்கே
கைவிடாதே அனுபவியா நிற்கச் செய்தே உடம்பு வெளுக்கும் படி இ றே இவனுடைய ஆற்றாமை
நீ எனது ஆற்றாமையையும் அறிவாயே அதனால் பதில் சொல்ல வேணும் –

——————————————————————————————————–

கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –7-2-

உகவாதாரை அழியச் செய்யுமா போலே உகப்பாரை வாழ்விக்க வேணும் -காண்-
நீ பிறந்து வளர்ந்தால் போலே இருக்க வேணும் காண் உன் கார்யங்களும்
பிறப்பும் வளர்ப்பும் பிறருக்காவே அன்றோ -கார்யங்களும் பரார்த்தமாக வேண்டுமே –
கடலிலே பிறந்தது -பிரளயத்தில் அனைத்து  ஜீவ ராசிகளுக்கும் தாரகம் ஆனது போலே உபகரிக்க வேணும்
அவன் தோஷம் காணாமல் வளர்ந்தால் போலே எங்கள் குற்றம் காணாமல் உபகரிக்க வேணும்
பகவானைக் கருதாத பாஞ்ச சன்னியன் உடலிலே வளர்ந்தாயே
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து –
கடலிலே பிறந்து அகவாயில் உள்ளது த்வேஷமேயாய் அசூரனுடைய உடலுக்கு உள்ளே வளர்ந்ததை நினையாதே
போய் ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறித் –
பின்னைப்போய்- கால சேஷமான ஜகத்துக்கு நிர்வாஹகனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய கைத்தலத்திலே குடியேறி
ஊழியான் -கால நிர்வாஹகன்-
தீய வசுரர் நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –
அவன் படி அடங்க உண்டாய் இருந்ததீ உனக்கும் –
அவன் யது குலத்திலே பிறந்து சத்ருவான கம்சனுக்கு உள்ளாய் இறை இறுத்து இருக்கிற திருவாய்ப்பாடியிலே வளர்ந்து
காலயவன ஜராசந்தாதிகளுக்காக போய் ஸ்ரீ த்வாரகையை படை வீடாகச் செய்து அங்கே குடியேறி
பின்னை துரியோத நாதிகளை மண் உண்ணும் படி வந்து இப்படி செய்தான் இ றே அவனும்
நீயும் –சகோஷாதாரத்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாணி வ்யதாரயத்-ஸ்ரீ கீதை -1-19-
யஸ்ய நாதேன தைத்யா நாம் பலஹாநி ரஜாயாத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-29–
நல் சங்கே –
இரு கரையர்களாய் இருப்பார் உனக்கு ஒப்பாவார்களோ
குற்றத்தையும் குணத்தையும் கணக்கிட்டு செய்யுமவர்கள் உனக்கு ஒப்பாக மாட்டார்கள் இ றே
கர்ம அநு குணமாக ஸ்ருஷ்டிக்குமவன் இ றே அவன் –

நஞ்சீயர் சந்நியசித்து அருளின காலத்திலேயே அனந்தாழ்வான் கண்டு முன்புத்தை ஐஸ்வர்யம் அறியுமவன் ஆகையாலே
ஒரு பூவைச் சூடி வெற்றிலையும் தின்று சந்தனத்தைப் பூசி போரா நிற்கச் செய்தே
எம்பெருமானே ரஷகன் என்று இருந்தால் பரம பதத்தில் நின்றும் இழியத் தள்ளுவர்களோ -இங்கனே செய்யத் தகாது -என்று போர வெறுத்தவாறே
கூட நின்றவர்களும் -இங்கனே செய்வதே -என்று வெறுத்தார்களாய்-இவர் தாம் செய்வது என் -என்று விட்டு
திருமந்த்ரத்தில் பிறந்து -என்று முக்கால் சொல்லி -மூன்று பதங்களின் பொருளையும் அறியும்படி -மூன்று முறை சொல்லி-
திரு மந்த்ரத்திலே பிறந்து -த்வயத்திலே வளர்ந்து -த்வயைக நிஷ்டனாம் படியாய் தலைக் கட்டுவது உன் கார்யம் -என்று பிரசாதித்தான்
திரு மந்த்ரத்திலே சொல்லுகிறபடியே ஸ்வரூப ஜ்ஞானம் உண்டாய்
த்வயத்திலே சொல்லுகிறபடியே உபாய பரிக்ரஹம் உண்டாக வேணும் -என்று பிரசாதித்தான்
கிருஹஸ்தாச்ரமம் விட்டு சன்யாச்ரமம் கொள்வது புதிய பிறப்பு அல்ல
திரு மந்திர ஞானம் வந்து ஸ்ரீ வைஷ்ணவனாய் பிறக்கும் பிறப்பே புதிய பிறப்பாகும் என்றபடி –

——————————————————————————————————–

தட வரையின் மீத சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே —7-3-

தட வரையின் மீத சரற் கால சந்திரன்
உதய கிரியின் மேலே சரத் காலத்திலேயே எல்லா கலைகளும் நிரம்பின பூர்ண சந்தரன் வந்து தோன்றினால் போலே
தட வரைத் தோள் -பெரியாழ்வார் -5-4-4-இ றே-
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும் வடமதுரையார் மன்னன் –வாசுதேவன் கையில் குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே —
இடை உவாவில்- உவா -பௌர்ணமியில் –இடை- நடு-சதுர்தசிக்கும் பிரதமைக்கும் நடு என்றபடி-உன் ஐஸ்வர்யம் இருந்த படி என் –
வடமதுரையார் மன்னன் -மேன்மை -வஸூ தேவன் -நீர்மை -கையில் -வடிவு அழகு –பசும் கூட்டு
ஸ்ரீ மதுரையில் உள்ளாருக்கு நிர்வாஹகனாய் -ஸ்ரீ வஸூ தேவர் திருமகனாய் இருக்கிறவனுடைய திருக்கையிலே
ஒரு காலமும் பிரியாத படியாக குடியேறி
உன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி எல்லாம் தோற்றும் படி யாய் இருந்தாய்
கோலப் பெரும் சங்கே
உன் அழகுக்கு மேலே அவனுக்கும் உன்னாலே அழகாம் படி இருந்ததீ உன்னேற்றம்
எல்லா பாட்டுக்களுக்கும் கிரியை- சொல்லாழி வெண் சங்கே –என்னவுமாம்
பாட்டுத் தோறும் கொண்டாட்டம் ஆதல் -என்னவுமாம் –

——————————————————————————————————–

சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே–7-4-

சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
செருக்கராய் இருக்குமவர்கள் கையிலே குளிரிக் குடம் -பனி நீர்க் குப்பி -பிடித்துக் கொண்டு இருக்குமா போலே
தாமோதரன் கையில் –
அவனைக் கண்டால் வயிற்றில் தழும்பாலே-ஒரு தாயாருக்கு பவ்யனாய் வளர்ந்தான் -என்று தெரியுமா போலே
உன்னைக் கண்டால் இவனும் பவ்யன் என்று தோற்றும்படி இருக்க வேண்டாவோ –
அந்தரம் ஓன்று இன்றி ஏறி
அவன் விரும்பி இருப்பார் பலரும் உண்டு இ றே -அவர்களைப் போலே –
கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -திருவாய்மொழி -10-6-8-ஒரு விச்சேதம் இன்றிக்கே
ஒருத்தருக்கு ஓர் ஆபத்து வந்தவாறே கை விட்டுப் போவாரைப் போல் அன்றிக்கே
அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும் –
உம்மைப் பிரிந்து ஆற்ற மாட்டார் பலருண்டு -என்று திருச் செவியில் சொல்லுகிறாப் போலே இருக்கிறது
அவன் செவியிலே ரஹச்யத்தை சொல்லுவான் போலே இருக்கை
கொள்ளுகை -கொடுக்கை
வலம் புரியே -அல்லாதவை எல்லாம் இடத்திலே புரிந்து -நீ வலத்திலே புரிந்தால் போலே
கார்யத்திலும் வேறு பட்டு இருக்க வேணும் காணும்
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே–
தான் நினைத்த போது வர்ஷிப்பித்து -அல்லாத போது தவிர்ந்து போருகையாலே ஐஸ்வர்யம் உள்ளது –
இந்தரனுக்கு என்றாய்த்து இவர்கள் இருப்பது -இடைச்சிகள் ஆகையாலே
இந்தரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவு –பெரியாழ்வார் -2-3-4-என்னக் கடவது இ றே
அன்றிக்கே -பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே –
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே-பெரியாழ்வார் -4-3-11-இந்திர ப்ராணாதி சப்தங்களும்
பகவத் வாசகங்கள் என்னும் வாசனையாலே -சொல்லிற்றாதல் -இந்திர பிரணாதிகரணம் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-1-11-
அவனுடைய ஸ்வா தந்த்ர்ய லஷ்மி உன்னுடைய பார தந்த்ர்ய லஷ்மிக்கு போறாதே இருந்ததீ
ஒருவன் அனுகூலித்த வாறே அழியும் அது -ஸ்வா தந்த்ர்யம் – இ றே
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று நிலை நின்றதாய்த்து இது
சர்வாத்மநா பர்யநுநீயமாநோ யதா ந சௌமித்ரி ருபைதி யோகம் -யுத்த -131-93-என்று
ஒருபடியாலும் முடி சூடேன் என்றவரை இ றே லஷ்மி சம்பன்னர் என்றது
பூர்வஜஸ் யா நுயாத்ரார்த்தே த்ரும சீரைரலங்குருத-சுந்தர -33-28-
பெருமாள் முடி தவிர்ந்தார் –இளைய பெருமாள் வகுத்த முடி சூடினார் –

——————————————————————————————————–

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே-–7-5-

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை- இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
உன்னோடு சஜாதீய பதார்த்தங்களை இட்டு எண்ணுவார் இன்றிக்கே இருக்க நீ ஒருவன் வாழ்ந்த படி என் –
ஒரு தேசத்திலே உன்னோடு சேர வர்த்திக்கிறவர்களை
அவர்கள் ஸ்வரூபம் ஆதல் -பிரகாரம் ஆதல்-என்று எண்ணக் கடவார் இல்லை காண் –
மன்னாகி நின்ற –
ராஜாதி ராஜஸ் சர்வேஷாம் விஷ்ணுர் பார -ஆஸ்வ -43-13- -என்கிறபடியே நிர்வாஹகனாய் நின்ற
மதுசூதன் –
இது தான் ஒரு நாமம் மாத்ரமாய் இராதே ஆசீதருக்கு களை யறுத்துக் கொடுக்குமவனாய்த்து
வாய் அமுதம்-
அவனுடைய வாக் அம்ருதத்தை
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே-
நாங்கள் அனுபவிக்கும் அத்தை -எங்கள் அனுபவத்தை- காதாசித்கமாக்கி நித்ய அனுபவம் பண்ணா நின்றாய்
பாஞ்ச சன்னியமே
பிறப்பு என்று ஓன்று இல்லை யாகாதே –
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து உன்னைக் கால் கட்டா நின்றேன்
நீயோ அசுரன் வயிற்றிலே பிறந்து நித்ய அனுபவம் பண்ணா நின்றாய் –

——————————————————————————————————–

போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே —7-6-

போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே
ஆயிரம் காதம் ஐந்நூற்று காதம் போய்
சரகூறலிலே முழுகித் திரியாதே
அசூராவேசத்தாலே பேராதே நிர்விவரமாய் நின்ற மருதுகள் இரண்டின் நடுவே அவகாசம் கண்டு போய்
பின்னை அவை முறிந்து உரலோடு இழுப்புண்டு வர
அதன் த்வநியைக் கேட்டு புரிந்து பார்த்துக் கொண்டு இருந்த
மௌக்யத்தை உடையனாய் இருக்கிறவன் கையிலே
ஏறிக் குடி கொண்டு-
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே-உபசம்ஹர -என்று சிலர் இரக்க-
நாம் மறைந்து நாலு நாள் நிற்கையால் இ றே இப்பிரமாதம் புகுந்தது என்று
இனி ஒருநாளும் பிரிய ஒண்ணாது என்று திருக் கையை விடாதே வர்த்திக்கிறான் ஆய்த்து
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே —
அறத் தூரமாய் -அதி பாவனமாய் நின்ற –பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன –உத்தர -82-9-என்றும்
சேய்த்தீர்த்தமாய் நின்ற என்றது செங்கண் மாலுக்கும் வாய்த் தீர்த்தத்துக்கும் விசேஷணம்-பெரிய தீர்த்தம் -தூர தீர்த்தம்
புண்யா நாம் அபி புண்யோ அசௌ-வனபர்வ தீர்த்த யாத்ரை–88-26- -என்றும்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி -திருவாய் -2-8-6–என்றும் சொல்லுகிறபடியே நின்ற
செங்கண் மால் தன்னுடைய
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் –
கடலில் அமுதம் படும் துறையில் இழியுமா போலே
முகப்பிலே -வாய்க்கரையிலே நின்று தீர்த்தமாடுகிறாய் இ றே
முன்னதாக முகத்திலே –சாடு
வலம் புரியே –
அனுபவத்தில் ஏற்றம் போலே
சந்நிவேசமும் இப்படி இருக்க வேணுமோ —

——————————————————————————————————–

செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய
அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே–7-7-

செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய
செந்தாமரையில் அப்போது அலர்ந்த செவ்வி மலர் மேலே அன்னம் படிந்து மது பானம் பண்ணுமா போலே
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -தை ப்ருகு -10-6-என்று கொண்டு
அன்னம் சப்தம் ஹம்சம் -என்றுமாம்
வாத்சல்ய பிரகாசகமான திருக் கண்களையும்-
தாபம் அடைய ஆறும்படி குளிர்ந்த வடிவையும் யுடைய ஸ்ரீ வஸூ தேவர் திருமகனுடைய
அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும் சங்கரையா உன் செல்வம் சால அழகியதே–
அழகிய திருக்கையிலே ஏறி –
உணவுக்கு ஈடாக இடம் வலம் கொள்ளும்
பரப்பு மாறத் தாமரை பூத்தால் போலே திவ்ய அவயவங்களும்
அக்கமலத்து இலை போலும் திருமேனி –திருவாய் -9-7-3-என்கிறபடியே அதில் பச்சை இலை போலே திருமேனியும்
அங்கே மது பான அர்த்தமாக இழிந்த அன்னம் போலே திருமேனிக்கு பரபாகமான வெண்மையை உடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமாய் இருந்தபடி
சங்கரையா –
ததோ வானர ராஜேன-என்னுமா போலே
பெருமாள் மகா ராஜரை முடி சூட்டுவதற்கு முன்னே – வானர ராஜேன -என்றான் இ றே ரிஷி
ஜடாயுவையும் கழுகு அரசனாக –க்ருத்ர ராஜ்யம் பரித்யஜ்ய -ஆரண்ய -68-23
விடலாம் ராஜ்யத்தையோ அவர் விட்டது –பித்ருபைதாமஹம் மஹத்
இஷ்வாகு முதலான ராஜாக்கள் ஆண்டு போந்த ராஜ்யத்தை நாம் பொகட்டு போந்த அளவும் அன்று இ றே
அவர் நமக்காக விட்ட கழுகு ராஜ்யம் என்கிறார் பெருமாள்
வானர ராஜர் கழுகு அரசர் போலே சங்கரையா என்று அவனுடன் உள்ள நெருக்கத்தால் ஆண்டாள் விளிக்கிறாள் –அரையன் -அரசன்-
பகவத் பிரத்யாசத்தியத்தாலே சஜாதீயர் அடங்கலும் உன் காலிலே வந்து துவளும் படி அன்றோ உன் ஐஸ்வர்யம் –
சஜாதீயர் -திருப் பவளத்தை அனுபவிக்கும் பெண்கள்
உன் செல்வம் சால அழகியதே –
இந்த்ரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே -7-4-என்ற அளவன்றிக்கே இருந்ததீ உன் ஐஸ்வர்யம் –

——————————————————————————————————–

உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே—7-8-

உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்-கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
நீ உண்ணும் படி சொல்லவா
உறங்கும் படி சொல்லவா
வாயது கையதான ஐஸ்வர்யம் அன்றோ உன்னது
சேஷபூதர் ஆனார் எல்லாருக்கும் பொதுவானதன்றிக்கே-அடி சூடும் அரசு அல்லவே – வாக் அமிர்தத்தை யாய்த்து புஜிக்கிறது
வாயாலே ஊட்ட உண்டு –
ஸ்ரமஹரமான வடிவைக் கடைக் கணித்துக் கொண்டு கையிலே யாய்த்துச் சாய்வது
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் -பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே–
அவ்  வாக் அமிர்தமும் வடிவுமே ஜீவனமாய் இருக்கிற பெண் பிறந்தார் அடங்கலும் கை எடுத்து கூப்பிடா நின்றார்கள் கிடாய்
திருவாய்ப் பாடியில் உள்ளாறும் ஸ்ரீ மதுரையில் உள்ளாறும் திரண்டு கூப்பிடா நின்றார்கள் கிடாய் –
பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே–
பகவத் விஷயத்திலே இழிந்து நீர்மை உடையராய் இருப்பார் செய்வது அல்ல நீ செய்கிறது
பகவத் பிரத்யாசத்தி உடையாரில் -நமக்கு -என்று தனி அனுபவிப்பார் இல்லை காண்
பாஞ்சசன்னியமே
இது பிறப்புக்குச் சேரும் அத்தனை
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் -என்றும்
போதுவீர் போதுமினோ -என்றும் இ றே தமப்பனார் படியும் தம் படியும்–கூடு அனுபவித்து குளிர்ந்த பேர்கள் அன்றோ நாம் –
இந்த பெருமை உனக்கு இல்லையே -என்கிறாள் –

—————————————————————————————————-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
எத்தனை பேரை வாய்க்காவல் இட்டால் தான் உனக்கு வயிறு வளர்க்கலாவது
பதினாறாமாயிரம் பேர் இது அனுபவிப்பதாக அவசரம் பார்த்து இருக்க –
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்-
நீ ஒருவனுமே மேல் விழுந்து புஜித்தால்
சர்வ சாதாரணமான அமிர்தத்தை நீ ஒருவனுமே புஜித்தால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–
இவன் நம் கோஷ்டிக்கு புறம்பு என்றால் நீ மண்ணை மணலை மோக்கும் அத்தனை இ றே –
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்–திருப் பல்லாண்டு -3-என்றால் நீ செய்வது என்
சாது கோட்டியுள் கொள்ளப் படுவார் -பெரியாழ்வார் -3-6-11-என்னுமவர்கள் இ றே
செல்வப் பெரும் சங்கே –
உன் ஐஸ்வர்ய செருக்கு இ றே விளைவது அறியாதே ஒழிகிறது-
அவன் ஐஸ்வர்யத்துக்கும் அடியான எங்கள் ஐஸ்வர்யத்துக்கும் மேலாய் இருந்ததீ உன் நிலை

—————————————————————————————————-

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே-–7-10-

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும் வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கேட்டாள்
தன்னோடு உண்டான உறவு அறுத்து அவனோடு சேர்த்து விடுகிறாள்
அநந்ய கதிகளான எங்கள் ஜீவனத்தை கைக் கொண்டாயாகில்
மற்றும் இத்துறையில் இழிந்தவர்களுடைய ஜீவனத்தையும் நீயே கொள்
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்றாள்-என்றால்-தகாதோ பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ -பெறும் -என்னும் புகழ் யாய்த்து
அனுசந்தித்துக் கொண்டு சொல்ல வல்லார்கள்
அவரும் அணுக்கரே—
அவர்களும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சிறு பாறு என்ன உரியர் ஆவார்
நாய்ச்சியாரைப் போலே அவரும் அண்ணியர் ஆவார்
ஒண் புதுவை ஏய்ந்த புகழ் -விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –
வாய்ந்த பெறும் சுற்றம் -கிட்டின பேருறவு
ஆய்கை -சோதிக்கை மனசாலே ஆராய்கை-அனுசந்தித்து -என்றபடி-

—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .