Archive for the ‘திரு வேங்கடம் உடையான்’ Category

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 20, 2011

 திரு ஆடிப் பூரம்– -எமக்காக அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் –திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே –
14 பாசுரங்கள்-திரு வேம்கடம் உடையானுக்கு அருளி இருக்கிறாள் –
திரு துழாய் -புஷ்ப கைங்கர்யம்-கேசவ பிரிய=துளசி –மாநிடவர்க்கு  என்று பேசு படில் வாழ கில்லேன்-
கண்ணனுக்கே ஆம் அது காமம்–மல்லி நாடு ஆண்ட மட மயில்–
மெல் இயலாள் வேயர் பயந்த விளக்கு ஆயர் குல விளக்கு அடைந்தாள்–
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழ –பிராட்டி திருவடி காட்டி- திரு இட எந்தை –
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே–செல்வன் சொல்லுக்கு அஞ்சான்  -ஈன சொல் ஆயினும் ஆக –
யேனதுருவாய் இடந்த பிரான் –திரு பாவை- ராம கிருஷ்ண  திரு விக்ரமன் -விபவம் உண்டு-திவ்ய தேசம் இல்லை-
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் படி–கிள்ளி களைந்தான்–நரசிம்கன் என்று -ரசிகர் சொல்வார்கள்–

கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் !
தெண்ணீர் பாய் வேம்கடத்து என் திரு மலும் போந்தானே ?
கண்ணீர்கள் முலை குவட்டில் துளி சோர சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இது தமக்கோர் பெருமையே 8-1

மா முத்த நிதி சொரியும் மாமுகில்காள்! வேம்கடத்து
சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் வார்த்தை என்னே !
காமத் தீ உள் புகுந்து கதுவ பட்டு இடை கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்கை நான் இருப்பேனே–8-2

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை  எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடு அழிய போயின வால்
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் ! வேம்கடத்து
தன்னாக திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னாகத்து இளம் கொங்கை விரும்பித் தாம் நாள் தோறும்
பொன்னாகம் புல்குதற்க்கு என் புரிவுடைமை செப்புமினே–8-4

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்கள் வேம்கடத்து
தேன் கொண்ட மலர் சிதற திரண்டு ஏறி பொழி வீர்காள் !
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே -8-5

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில் காள் மாவலியை
நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள்
உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய  புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள்! வேம்கடத்து
செம் கண் மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மெல் கும்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்று உரையீரே –8-7

கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள்! வேம்கடத்து
போர் காலத்து எழுந்து அருளி பொருத வனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே–8-8

கொடியையே மாலையாக கட்டினாரே-மாலுக்கு -நாயகன்-அழகிய மணவாளன்-
ஒரு மகள் தன்னை உடையேன் திரு மகள் போல் வளர்த்தேன் செம் கண் மால் கொண்டு போனார் —
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே –கேசவ நம்பியை கால் பிடிக்க  -கற்பக கோடி-குல நந்தன –
எனக்கே தன்னை தந்த கற்பகம் -அவாக்யன்  அநாதரன்-ஒரு வார்த்தை கேளுன்கொள் மேகங்காள்—
தரிக்க போதும் ஒரு வார்த்தை–அனுபவிக்க நிறைய வேண்டும்–
மற்று எக்காலத்திலும் யாது   ஒன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விழுங்கும் அக்கார கனி —
என் உள் மன்னில்- -திரு மாலை ஆண்டான்-ஒரு தடவை வந்தால் ஆழ்வார் நிர்பந்திக்க மாட்டார்- -எம்பெருமானார் நிர்வாகம்–
எக்காலத்து எந்தையாய் என் உள் மன்னில் எக் காலத்திலும் -மற்று யாது ஒன்றும் -கூடினத்தை தவிர -வேண்டேன்-
ஒரு நாள் அவன் பட்ட பாடுக்கு -சீதை பிரிந்து -இன்று இவள் படுகிறாள்- கார் காலம்- சீரிய சிங்கம்–போர் காலம்-தோலாத தனி வீரன்-
ராமனை நினைந்தே அருளுகிறாள்–பேர் சொல்லி-நாம சங்கீர்த்தனம் சொல்லி -தரிக்க வழி தெரிந்து -சொல்லி இன்னும் தூண்டி விட –
ரட்ஷிக்காமல் பெயரை கெடுத்து கொண்டானே -இதுவே நீர் காலத்து எருக்கு இலை-தளர்ந்து ஒட்டி கொண்டு இருக்குமா போல–
விரக தாபம்-சருகாய் உலர்ந்து நாம சங்கீர்த்தனம் முதல் மழை–

மத யானை போல் எழுந்த மா முகில்காள்! வேம்கடத்தை
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே!
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9

 9 பாசுரம்-உயிர் ஆன பாசுரம்- யானை போன்ற மேகங்கள்–வேம்கடத்தான் ஆனந்தம்-
முக்தர் அங்கு பெரும் ஆனந்தம் இங்கு கிடைக்கும்–அசேதனம் -பெற்று போகுமாம் இங்கு–
அஹம் அன்னம் அஹம் அன்னம் –பத்தி-கதியாக -இருப்பிடம்–பிரம  உத்சவம் சேவித்து கிளம்பாமல் அங்கே இருப்பது போல–
மாசி வைகாசி ஆழ்வார்க்கு –பங்குனி சித்தரை பொலிந்து நின்ற பிரானுக்கு/
ஸ்ரீ ரெங்கத்தில் மாசி பங்குனி சித்தரை வைகாசி நான்கும்-மாசி மட்டும் தேர் இல்லை துவஜாராகோனும் இல்லை–
மேகம் பெற்ற பாக்கியம் நான் இழந்தேனே–பதியாக இருப்பீர்காள் -இல்லை- வாழ்வீர்காள்–இருக்கையே வாழ்வு —
தொழுது எழு– தொழுகையே எழுவது– ஆத்மா உஜ்ஜீவனம் கீழே விழும் பொழுது தானே–பாம்பணையான்-திரு வேம்கடத்தில் —
அந்தரங்கமாக ஒரே படுக்கை நினைவு வர–திரு கல்யாணம் பண்ணி கொள்கிறேன் என்று சொன்னானே –என்னே – 
சொன்ன விஷயம்  சொல்ல வில்லை–மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-வாசல் காப்பான் இடம்-
உம் ஸ்வாமி என் காலில் விழுந்த நாள் உண்டு–அது போல அந்தரங்கம்–இரண்டு ஆற்றுக்கு நடுவே இருக்கும் இருப்பு –
நல்லார் பலர் வாழும் நளிர் அரங்கம்–கதி-என்றும் தேவர் தானவர் அனைவருக்கும் நித்ய கதி-

தான் தான் கதி என்பதை கருதாமல்–என்னை விட்டானே–வதை செய்தானே–சேவை சாதிக்காமல் இருப்பதே வதை–
மீன் -ஜலம் விட்டால் வாழ்வு இல்லை போல -என் சினம் தீர்வன் நானே -ஆழ்வார்–கோபம் காட்டி தீர்த்து கொள்வேன்-அரையர்–
காலால் எட்டி உதைந்து கையால் அடிப்பது போல- ஆனந்தம் கொடுக்குமே -எம்பார் சொல்ல –முகம் திருப்பி–
துடிப்புடன் வருபவனை பார்க்காமல் இருப்பதே–வையகத்தார் மதியாரே-நம்ப மாட்டார்கள்-முதல் அர்த்தம்–
இனி மேல் மதிக்க தொடங்குவார்கள்–பிரி நிலை ஏ காரம்—அடுத்து -ஆழ்வார்கள் சொல்வதை மதித்து -ஏ காரம்-சொன்னது–
மழுங்காத -தொழும் காதல் — சுடர் ஜோதி மறை யாதே- போல காரணமே என்று அழைக்க மதி சக்கரம் நல வலத்தையாய்–
உண்டே -கேள்வி இல்லை- மறையும் -பிரி நிலை ஏ காரம்–மறையாமல் காத்தாய்–அது போல் இங்கும் –
மதிக்காமல் இருந்தால் நல்லது என்ற எண்ணம் ஆண்டாளுக்கு –பிரகிருதி சொரூபம்-தம் தம் அழிந்தாலும்
அத் தலைக்கு வரும் அவத்யம் பரிதவிக்கும் குடி- குறை வர விட மாட்டார்களே –விஞ்சி நிற்கும் தன்மை–பர்தா கேட்டவன் என்று நானே தேடி தருவேனோ–
ஞானம் பக்தி வைராக்கியம்- சொத்து பெற்ற -கிருஷ்ண பக்தி-ஐந்து குடிக்கு ஓர் சந்ததி இவள் தானே

நாகத்தின் அணையானை நன் நுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேம்கட கோன்  விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே  8-10–பல சுருதி சொல்லி தலை கட்டுகிறார்–

அவயவசோபை–நயந்து ஆசை கொண்டு–நாகத்தின் அனையான்–துடிப்பு உண்டு–அவனுக்கும் சேர்வதற்கு–
அறிவிக்கை ஒன்றே வேண்டுவது –படுக்கை தலை சாய்த்து இருகின்றான் நம் வரவை எதிர் பார்த்து -எழுந்தும் படுத்தும் –
திரு வேம்கடம் உடையான்- அரங்கன்–ரட்ஷிக்க அனுமதியே வேண்டும் -சத்யசங்கல்ப்பன்–நாரையை-
திரு கண்ண புரம் புக்கு–கீழே அணி அழுந்தூர் ஆ மருவி அப்பன்-இடம்
தூது  விட்டார்  திரு  நெடும்  தாண்டகம்
— வந்தவர்  தான்  தூது  விட்டார் – ஹனுமான் – அங்கே  மேகமும்  பதியாக  கொண்டு  இருந்தன  அதை  தான்  தூது  விட்டாள் —
திரு  வேம்கடத்தில்  நின்று  தூது   விடுவார்  யார்  என்று  தோதாக  இறங்கி  நித்ய  வாசம்  பண்ணுகிறான் —
மேகத்தை  வேம்கட  கோன்  விடு  தூதை —கொக்கு  நாரை  அங்கு  உயரமாக  போய்  இருக்காது  -உயரம்  இருவரும் —
திரு  அரங்கத்துக்கு  மேகம்  அனுப்ப  கூடாதே –அவசர  பிரதீஷனாக  இருக்கிறான் –பர்தா  மனைவி — சொல்லி  –
பெரியாழ்வார்  வயிற்றில்     பிறப்பை  நினைந்து  –ஜனன  பவன  -சமுத்ரம் – பெருமை  குறையாமல் – புக்ககம்  பெருமை  வளர்த்து  –
பரம  பதம்  பெருமை  சேர்கிறாய் –பட்டர் –போகத்தில்  வழுவாத  -கிருஷ்ண  அனுபவம் –ஒன்றும்  குறையாத  -அனைத்து  சேஷ்டிதங்கள் – நெஞ்சகம்  பால்  சுவர்  வழி  எழுதி  கொண்டேன் — அது  இது  உது  எல்லாம் — அடைய  பீஜம்  -புதுவையர்   கோன்  கோதை —
ஆகத்து  வைத்து  பாடுபவர்த்கள் — நெஞ்சில்  வைத்து  சொல்பவர்கள் —
ஆண்டாள்   பட்ட  பாட்டை மனசில்  வைத்து  -நிலையில்  -அடியார்  ஆகுவர் –நினைத்த பொழுதே இவள் போல தூது விடாமல் அனுபவிக்க பெறுவார்

பாடும் குயில்காள் ! ஈது என்ன பாடல்? நல வேம்கட
நாடார் நமக்கு ஒரு  ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருள கொடி வுடையார் வந்து அருள் செய்து
கூடுவர்  ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே–10-5-

அவனுக்கு நன்மை–இங்கு வந்ததால்–குயில்களை தான் குறை சொல்கிறாள் அவனை விட்டே கொடுக்க மாட்டாள்-
ஸ்ரீ வில்லி புத்தூர் வர காலம் பார்த்து இருக்கிறான்–சினை ஆறு பட்டால்போல –பெருக்காறு வரும் முன் —
வாழ்வு தந்தால்-இந்த்ரியங்களால் அவனை அனுபவிக்க -குயில்  பாடுவதை கேட்க்க காது இல்லையே –ஆடுகின்ற அசையும் –
கருட கொடு–வெற்றி –சூசுகம்–கருடனை பற்றி சொல்வது -இவள் இடம் கொண்டு சேர்க்க —
எப் பொழுதும்-சந்தோஷமாக இருக்கும் நித்யர்–எப் பொழுதும் துக்கம் சம்சாரிகள்- இரண்டும் வேண்டுமா —
யானை வரும் முன்னே -அவன் வருவதை– வந்து அருள் செய்ய வேண்டும்–அவனே வர வேண்டும் பர கத ச்வீகாரம்–
உகந்து வந்து அருளுவான் –ஆளவந்தார்- சிசுபாலனுக்கும் மோட்ஷம்–நமக்கும் –ஆசை ருசி உடன் பற்றினால் தான் மோட்ஷம் இனிக்கும்
இங்கு வைத்தால் இங்கு தாங்க மாட்டார்கள் என்று கொண்டு போனார்– ஐதீகம் பெரிய தேவ பிள்ளை- பட்டர் சிஷ்யர்-
வைத்து கொண்டே இருக்க கிழக்கே போக நஞ்சீயர் அகத்தில் உள்ளோர் பிழைத்தார்கள் –இங்கு இருந்து என் தலையே உருட்டலமே என்றார் பட்டர்

மழையே! மழையே! மண் புறம் பூசி உள்ளே நின்று
மெழுகுகூற்றினால் போல் ஊற்று நல் வேம்கடத்துள் நின்ற
அழகப்  பிரானார் தம்மை  என் நெஞ்சத்து அகப்பட
தழுவி நின்று என்னை தகைத்து கொண்டு ஊற்றவும் வல்லையே —10-8–

பெரிய திருமலை நம்பி இதையும் அடுத்த பாசுரமும் அநு சந்தித்து கண்ணும் கண்ணீருமாய் விச்தராய் இருப்பாராம்–
மண் குடம் போல சரீரம் இருக்கிறது –உள்ளே ஆத்மா கொண்டு போனான்- நெருப்பு அளித்தால் போல் அவன் அழகு–
ம்மை நெஞ்சத்து அகப்படை-கண்ணை திறந்தால்-தழுவு கொள்ளும் படி–கணையாழி- விரல்-கை -தோள்- ராமன்-கண்டு
சீதை பிராட்டி  ஆலிங்கனம் பண்ணி மகிழ்ந்தாள் போல -நெருக்கி–தகைத்து  கொண்டு–சேர்ந்து அனுபவிக்க-
உஷை-அநிருத்திரன் -சேர்த்து வைத்தால் போல மழையே சேர்த்து வை
மழையே மழையே– கேட்க்காது என்று இரண்டு தடவை கூப்பிடுகிறாள்

———————————–

1-3-/4-2-/-8- பதிகத்தில் -10-பாசுரங்கள் /–10-5-/ -10–8-/-14 / பாசுரங்கள்

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-

இவனே ஸ்ரீ உலகளந்த பெருமான்
மாவலியை நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள் உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய 
புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

திரு பல்லாண்டு –உண்டோ திரு பல்லாண்டுக்கு ஒப்பு–
வேதத்துக்கு ஒம் போல உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் தான் மங்களம் ஆதலால் –முதலிலும் முடிவிலும்–
இதன் விபரணமே மற்றவை எல்லாம்–தன்னை பார்க்காமல் அவனையே பார்த்து–
7 பாசுரங்கள்  திரு வேம்கடம் உடையான் மேல் அருளி இருக்கிறார்–
சீத கடலுள் அமுது அன்ன தேவகி பதிகம்–அவயவம் எல்லாம் அனுபவிக்க -பாத கமலங்கள் வந்து காணீரே-
தவழ்ந்த கண்ணன் -யசோதை பாவனை- அம்மம் ஊட்ட –
கண்ணன் வெண்ணெயோ பெண்ணையோ தானே எடுத்து கொள்வான் பிறர் ஊட்ட கொள்ளான் –

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பறந்து எங்கும்
எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கட வாணன்  உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலி ! கடிதோடிவா 1-4-3-

தீர்த்தம் ஆடவும் கூப்பிட வேண்டும்–புளிதி அளைந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன்–
நப்பின்னை கானில் சிரிக்கும் -வா -என்பாள் யசோதை –அம்புலி காட்டி ஊட்டுகிறாள் —
நின் முகம் கண் உளவாகில் நோக்கி போ–கண் படைத்த பயன்–பார்த்த பின் போக முடியாதே —
தோகை கீதாசார்யன்-நடு பாகம் முக்கியம்-1 -10 வயசு வரை-அனைவரும் அனுபவிக்கும் பருவம் —
கை தலம் நோவாமே ஓடி வா–அவன் திரு முகம் ஒப்பு சொல்ல உன்னால் முடியாது–பிரயத்னம் எவ்வளவு செய்தாலும் முடியாது —
சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது–தேஜஸ் பதார்த்தங்கள் எல்லாம் அவன் திரு மேனியில் ஏக தேசம் கடன் வாங்கி-
ரசம் கந்தம் எல்லாமும் இப்படியே –பரம் ஜோதி –ஆஸ்ரித சேஷ்டிதங்கள் கொண்டவன்–வித்தகன்–
வேங்கட வாழ் நன் -வாணன் -நல்ல வாழ்வு-அனைவரையும் அவனை கூப்பிட இவன் உன்னை கூப்பிடுகிறான்
அவாக்யன்  அனாதரக –அவாத சமஸ்த காமன் –
நசிகேதஸ் -யமன் -இடம் கேட்டு-பரம பதம்-நலம் இல்லாதோர் நாடு–கால தத்வ்பம் இல்லை–சாம கான கோஷம்–

மோரைக் கண்டால் புருஷர்களையும் வயசான பெண் போல– ரஷணம் இவனே என்று இருக்கும் இளம் பெண்கள் போல–
ஆயர் சிறிமியறோம்– செல்வ ஸ்ரிமீர்கள்– சிறுவராக இருப்பதே செல்வம்–நெய் உண்ணோம் பால் உண்ணோம்-குடியோம் இல்லை–
எப்படி என்று பார்த்ததே இல்லை கண்ணன் பிறந்த பின்பு–ஏரார் இடைநோவ -கண்ணன் விட்டு பிறவாத இடை சீரார் வளை போல –
சங்கு தங்கு முன்கை நங்கை-பிரியாமலே இருப்பதால்–

————

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ  ! 1-8-9

தாடாளன்-ஓங்கி உலகு அளந்த உத்தமன்-நமுசி-பிள்ளை- பாணாசுரனும் பிள்ளை என்பர்–
மின்னு முடியன்–வேத அபகார குரு பாதக தைத்ய பீடா -பிரமன் ருத்ரன் இந்த்ரன் -ஆபத்துகள் போக்கி-இடர் கெடுத்த திருவாளன் –
ரமா பத்தி-நான்முகன் குறை கொண்டு குண்டிகை நீர் பேய்தான்-ஸ்ரீ பாத தீர்த்தம்–தானே பரத்வன்- முன்னும் முடி- இதனால்–
நிவந்த  நீள் முடியன்–அளந்த திருவடிக்கு பல்லாண்டு இல்லை –
சர்வாதிகன் என்பதால் திரு முடி–ஆதி ராஜ்ஜியம் அகில புவனானாம்–

———————

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற
மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா 2-6-9

கோல் கொண்டு  வா பதிகம்–திவத்திலும் பசு நிரை மெய்ப்பு உவத்தி -கன்று மேய்த்து உகந்த காளை–
கன்றுகளுக்கு நீர் குடிக்க குனிந்து கற்று கொடுப்பானாம்-மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா-
திரு வடி மதித்த  ஐஸ்வர்யம்–மின் இலங்கு பூண்-ஆபரணன் -அணிந்த விபீஷணன் நம்பி —
ராம பக்தி ப்ரேமம் கைங்கர்யம்-பூரணன்-நம்பி –

—————————-

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டை கிழித்து காம்புதுகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்! நீள் திரு வேம்கடத்து எந்தாய் !
பச்சைத்த மனகத்தொடு பாதிரி பூ சூட்ட வாராய் 2-7-3-

————–

போதார் கண்டாய் இங்கே போதார் கண்டாய்
போதரேன் என்னாதே போதார் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார்
ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோது காலம் உடை குட்டனே! ஒ
குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா !
வேத பொருளே ! என் வேம்கடவா !
வித்தகனே ! இங்கே போதராயே  2-9-6-

———-

கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-

—————–

சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு
தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !
என்னையும் என் உடைமையும் உன் சக்கர பொறி ஒற்றி கொண்டு
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திரு குறிப்பே ? 5-4-1-

———————————————-

1-4-3-/1-8-9/2-6-9/2-7-3/ 2-9-6/ 3-3-4/5-4-1–ஆக ஏழு பாசுரங்கள் –

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ  ! 1-8-9-

————

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன்
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா — 2-6-9-

—————–

ஸ்ரீ கண்ணபிரான் இவன்
ஒ குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா ! வேத பொருளே ! என் வேம்கடவா ! வித்தகனே ! இங்கே போதராயே  2-9-6-
கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-
சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !– 5-4-1–

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்-ஸ்ரீ குலசேகரர் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

ஸ்ரீ குலசேகர பெருமாள்– ஸ்ரீ ராமன் பெயரை கொண்டார்-ஸ்ரீ ராமனுக்கே என்று இருந்தவர்—-
பெரிய பெருமாள்- கைங்கர்ய பாரிப்பு- ஒழிவில் காலம் எல்லாம் -ஏதேனும்  ஆவேனே —
நாம் சேற்றில் ஒரு கால் ஆற்றில் ஒரு கால்–குட பாம்பில் கை இட்டவர்–

ஞானம் கனிந்த நலம் கொண்ட பக்தி–ஸ்ரீ ராமாயணம் கேட்டு உதவிக்கு சேனைகளை கொண்டு போனார்–கர தூஷணர் விருத்தாந்தம் —
தோலாத தனி வீரர் தொழுத கோவில் -சீதை பிராட்டி ஆலிங்கனம் -சேர்த்தி சேவை காட்டி –வென்றான் சொல்லி மீட்டாரே —
ஸ்ரீ அனந்தாழ்வான் திரு முக் குளத்தில் மஞ்சள் கிழங்கு தேடினது போல–அவன் மேல் ஆசை– இதர விஷயத்தில் வைராக்கியம்–
அடியார் ஈட்டம் கண்டிட கூடுமேல்-அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை–
யதிவா ராவணச்யம் – ராவணனே வந்தாலும் கூட்டி வா என்றானே சுக்ரீவன்–மேல் விழுந்து ரட்ஷிப்பான் –
தேவர்கள் குரங்கு தன்மை அடைந்தார்கள்–அவனுக்கு கைங்கர்யம் பண்ண —
ருசி வளர்க்க இந்த ஷத்ரிய மனுஷ பிறவி மாற்றி ஏதேனும் ஆவதற்கு பாரித்தார்–
உரி அடி உத்சவம்-பட்டர் வித்வான் கோஷ்ட்டி விட்டு இடையர் உடன் சேர்ந்து அனுபவித்தார்–கிருஷ்ணா அனுக்ரகம் தான் எனக்கு முக்கியம்–
பகவத் சம்பந்தம் இருப்பதே சிறந்த ஜன்மம்–பிறப்பால் இல்லை-ப்ரக்ம ஞானமே வேண்டும்–
அணைய- ஊர  புனைய–ஆசை பட்டவர்–திரு அனந்தாழ்வான் அணைந்து -நித்யர் இதற்கே பாம்பு ஜன்மம்–ஊர்ந்து
புனைந்த கண்ணியாக ஆசை பட்டார்களே -அசித் ஆக இருக்கலாம்–அவனுக்கு என்று இருப்பதே குறிக் கொள் —
அடியும் பொடியும் பட–காழியன் கதம்பம் -சுகர் உத்தவர்-யமுனை தீரத்தில் பூத்த நீள் கதம்பு ஏறி-இந்த மரமாக பிறக்க ஆசை–
காமரு சீர் அவுணன்–மா பலியை கொண்டாடுகிறார்-வாமனனை நேராக பார்க்க பெற்றானே–திருவடி பட–போடி-சரண ரேணு-
ராச கிரீடை பொழுதும் கோபிமார்கள் உடன் -பர்வத பவனங்களில் பிறக்க ஆசை பட்டார்களே–
தவ தாஸ்ய ரசம் தெரிந்த அடியார்களின் வீட்டில் புழுவாக பிறக்க ஆசை–எதேனுமாக ஜனிக்க பெறுகிற —
சொல்லி சொல்லி பார்த்து அதுவும் நீயே -முடிவு செய்து கொள்–
உயர்ந்த பிறவி எடுத்த ஷத்ர்ய ராஜா -சொன்னால் தானே புரியும் என்று இவரை இப்படி அருள வைத்தார்–

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு    ஏழ்    வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து  
கோனேரி வாழும் குருகாய்   பிறப்பேனே– 4-1

கோனேரி வாழும் குருகு-நாரை-சுவாமி புஷ்கரணி -விரஜை போல்–கோன்=சுவாமி –புஷ்கரினிகளுக்கு ஸ்வாமினி –தலைவி–
அவனுக்கு புஷ்கரணி– தீர்த்தம் ஆடுபவரை சுவாமி ஆக்கும் –ஊன் ஏறு செல்வம் -மாம்சம் ஏறும் உடல் பிறவி வேண்டாம்–
புஜ பலம் ஷத்ரியன்-வேண்டாம்–தேகம்-பேருக்கும் -வளரும்- சரீரம்-இளைக்கும் சுருங்கி கொண்டே வரும்–ஒரு படி பட இருக்காது–
யான் வேண்டேன்–யான் சொன்னது–பட்ட பாடு எனக்கு தெரியும்–ஷத்ரியன்-யான்-உசத்தி தெரியும் படி- நாவினால் நவிற்று —
வாயால் தான் மனசு சகாயம் இன்றி –நாக்கு மட்டும் சொல்லி –ஆண் -ரிஷபங்கள்– வென்றான் நப்பின்னைக்கு —
நம் விரோதிகளையும் முடித்து ஆட் கொள்வான்–கூன் வளைந்த -சங்கம்–விநயம்-அடிமை திறம் தெரிந்து கொண்டு–இடத்தான் வேம்கடத்தான்-
தனியாக இடம் சொன்னது–அத்வீதியம்—வல கை ஆழி திரு மார்பில் இருக்கும் மாதுக்கு பல்லாண்டு–
கோனேரி வாழும் குருகு– இருக்கும் இல்லை– இருப்பதே வாழ்வு–

அடுத்து சொர்க்க அனுபவமும் வேண்டாம்-தொழுது எழு -தொழுதாலே எழுந்து விடலாம்–
சிறகு முளைத்து பறக்குமே தோன்ற–பிறவி வேண்டாம் என்று ஆரம்பித்து குருகாய் பிறப்பேனே –
நாலாவது வரியில்–குலசேகர ஆழ்வார் ராஜ்ய பிறவி வேண்டாம்-கைங்கர்ய-சரீரமே நான் நினைக்க கூடாது தேக ஆத்மா விவேகம்..
நானே சரீரம் -ஜீவாத்மா ஆகிய நான் பகவானுக்கு சரீரம் சொல்லலாம்அடுத்து மீன்-சிறகு இல்லையே -பிறவி வளர்த்தல்  இறப்பு எல்லாம் இங்கு தானே —
சொர்க்கமும் வேண்டாம் –தலை குப்புற தள்ள -இன்று இல்லை புண்ணியம் தீர்ந்ததும் -ஆனாத செல்வம்-இளமை –தன்னை சூழ-வேண்டாம் என்று
சொன்னாலும் சூழ்ந்து கொள்ளும் -ஐஸ்வர்யம் வைராக்கியம் இன்றி கொஞ்சம் ஆசை -கொள் என்று பெரும் செல்வம்–
வந்தாய் போல் வாராதாய் வாராதாய் போல் வருவானே –இவனும் கொள் என்று மூடும் இவை என்ன உலகு இயற்க்கை–வைராக்கியம் வேண்டும் —
திருவடி விலகாமல்–வானை ஆளும் செல்வமும் மண்ணகமும் வேண்டாம்–குற்றம் சொல்ல வில்லை ஈஸ்வரன் படித்தவை-
எனக்கு வேண்டாம் சொரூபத்துக்கு விருத்தம் -என்கிறார்

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை  திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே — 4-2

-தேன் ஓடும் —சுனையில் மீன் –விதி என்கிறார் – பிறவி கூட வேண்டாம் -அடுத்த பிறவியில் கிட்டும் என்று விதித்தாலே போரும்
சுனையில் தண்ணீர் வற்றினால்-மீன் -பொன் வட்டில் பிடித்து புக பெறுவேன் ஆவேனே –படிக்கம்–கைங்கர பரராக–தூய பேரு நீர் யமுனை–
அதர அம்ர்தம்  பெற்ற தூய்மை–பின் இட்ட -பிரமனுக்கு  பின் /சடையும் பின்-/வைகுண்ட வாசல் வழியாக போகிறோம்–
இந்த பாசுரம் தான்- வைகுண்ட நீள் வாசல் பெயரை கொடுத்தது –பணிக்கு போகிறார் உள்ளே புக விட என்பார்கள்–

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3

ஒண் பவள வேலை வுலவு  தண் பாற் கடலுள்
கண் துயிலும்  மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே– 4-4

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
நம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே 4-5

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன்  ஆவேனே 4-6

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே 4-7

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய  பெரு  வேள்வி குறை முடிப்பான் மறை யானான்  
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே 4-8

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே 4-10

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன்  இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி 
கொன் நவிலும்  கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11

திரு பாற் கடல் போக ஆசை–வேலை-சமுத்ரம்-பவளம் கொண்டு போடும்–கண் துயிலும் மாயோன்–ஆயோன்–
காண்பதற்கு –நாயனம் ஒத்து ஊதுவது ஆலத்தி வைத்தல் போதல் சுருதி போட்டி போல –
வண்டுகள்–ஆழ்வார் பாட –செண்பகமாய் நிற்க ஆசை–ச்தாவரமாய் நிற்கவும் அமையும்–முன் குருகு மீன் சொல்லி–
செண்பகம்–வாசனை உடன் தலையில் வைத்து கொள்வார்- தம்பகம்-கள்ளி செடி போல –தவம் உடைவேன்–
ம்ப மத யானை -மேல் ராஜா போல -இவர் உண்மையாவே ராஜா–இது  வேண்டேன்–எம்பெருமான் ஈசன்–
ஸ்ரீ ரெங்க நாத மம நாத அரங்கம் ஆளி என் ஆளி போல–அகில ஜகத் சுவாமி அசமத் சுவாமி—
வெந்நீருக்கு விறகு உபயோகிப்பார்களே -மாற்றி-போர் குவடு- உச்சி -ஒரு பகுதி ஆனால் -நித்யம் ஆக இருக்கலாமே –
மேனகை போல்வார் -ஆடல் பாடல் ஆதரியாமல்—வண்டினங்கள் பாட்டு வேண்டும்–அதை போன்ற பொற் குவடி–
எதை போல அத்வீதியம்–சிகரம் ஆகி இருந்தால் ஏறுவார் பாத ஸ்பர்சம் கிட்டாதே– கானாறு ஆகலாம் என்றார் அடுத்து —
வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் போல்- வேண்டாம்–கோன் போல வீட்டரு இருந்து கொண்டாடும் செல்வம் வேண்டாம் —
அருவி ஓடி வரும் -நிலத்தில் இருக்கும் காட்டு ஆறு–வெள்ளம் வடிந்தால் நின்று போகும் –திரு வாடி பட்டு கிளம்புவார்களே –
வழியாகவே இருந்து விட்டால் அடியார் பாதம் கிட்டுமே –அதை பாரித்தார் –வெறி ஆர்ந்த -மணம் -வழியாக ஆக வேண்டும்–
செடியாய –படியாய் கிடந்தது உன் பவள வாய் பார்த்து இருக்க வேண்டும்–பாபம்-சம்சாரம்- திரு மாலே -புருஷகாரம் உண்டே–
நெடியானே-நினைமின் நெடியானே–நினைவு நீண்ட காலம் வைத்து கொள்வான்–என் அடியார் அது செய்யார்–செய்தாலும் நன்றே செய்தார் –
சேர்ப்பித்தார் கூட  வந்தாலும் பிரிக்க முடியாது —
பிரயோஜனாந்த அநந்ய அனைவரும் கிடந்தது -படியாக- அசித் போல பர தந்த்ரர்–
உன் ஆனந்தம் பட்ட உடன் சிரிக்கவும் வேண்டும் –இரண்டையும் கேட்கிறார்
செம் பவள வாயான்–நித்யன்-எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும்–ஆவேனே–
அனந்தாழ்வான்-திரு வேம்கடம் உடையானாக இருந்து –எது என்று எனக்கும் அவனுக்கும்  பக்தர்களுக்கும்
தெரியாமல் ரகஸ்யமாக இருக்கட்டும்– தெரிவது முக்கியம் இல்லை –அனுபவமே முக்கியம் –பல சுருதி சொல்லி தலை கட்டுகிறார்–
எடுத்து ஆளும் படி-பாங்காய பக்தர்கள்– கஷ்டம் இன்றி கைங்கர்யம் பெறுவார்கள் –பிராப்ய பிரதானம் ஸ்ரீமன் நாராயணனே –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குலசேகர பெருமாள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்-ஸ்ரீ திரு மழிசை–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

திரு மழிசை- மகீசார ஷேத்ரம்–மகி=பூ மண்டலம்–அதில் சாரமான இடம்–புலவர் புகழ் கோலால் தூக்க-ஆழ்வார் பிறப்பால்-வந்த ஏற்றம்–
அயோநிஜர் முதல் ஆழ்வார்கள் பூவில் தோன்றி– திரு மழிசை-பிறந்தது பிராமண குலம்- வளர்த்தோ –பங்கய செல்வி  வளர்த்த தாயார்-
திரு  வாளன்-வளர்த்த தந்தை- -பிரம்பு அறுத்து ஜீவனம் பண்ணினவர்கள்-ஒரு பிறவியில் இரு பிறவி ஆனார் கண்ணன் போல-
தாய் தந்தையர் இருவர்–சயனித்த பெருமாள் மேல் மிகவும் ஈடுபாடு இவருக்கு–
திரு குடந்தை–கனி கண்ணன்-சிஷ்யன்–திரு வெக்கா -யதோத்தகாரி-சொன்ன வண்ணம் செய்த பெருமாள்–
வாய் கொண்டு மானிடம் பாடேன்-என் நாவின்கவி ஒருவருக்கும் கொடுக்கிலேன்-நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே —
சில மானிடத்தை புயலே என கவி போற்றி செய்யேன் கனி கண்ணன் போகின்றான்—நாகணை பாயை சுருட்டி கொள்–
எவ்வாறு நடந்தாய் எம் ராமாவோ-ராமன்-சீதை-லஷ்மணன்-பிரணவம் கால் கொண்டு நடந்தால் போல அங்கு–
இங்கு ம காரம் சிஷ்யன் முதலில் ஆசார்யன் உ நடுவில் அடுத்து அ காரம்  —
பிரணவத்தின் பிரதி போல –ஓரிக்கை- ஓர் இரவு இருக்கை–இன்றும் தை மகம் உத்சவம்-

பை நாக பாயை விரித்து கொள்–ஆதரவு/ பாசம் கொண்டு சொன்ன வண்ணம் செய்த பெருமாள்–
த்வாபர யுகத்தில் அவதாரம்- நம் புவியில் -4700 இருந்தான் வாழியே–எழில் சந்த விருத்தம் 120 /நான் முகன் திரு அந்தாதி 96/
திரு குடந்தை-பெரும் புலியூர் அடிகள் சத் காரம் பண்ணி–பிரதட்ஷனம் கர்பிணி பெண் போல மெதுவாக செல்ல வேண்டும் குணம் நினைந்து கொண்டு–
ஆரா அமுத பெருமாள்-இவர் பிரதட்ஷனம் பண்ணும் பொழுது பக்கம் நோக்கி பார்க்க–ஆரா  அமுத ஆழ்வான்–
திரு மழிசை பிரான் தையில் மகத்தில் இங்கு உதித்தான் வாழியே -சக்கரம் அம்சம்–உறையில் இடாதவர்–நாவை–
உபாசனம்  பண்ண வேண்டியதை  யாரை என்பதை முதல் ஆழ்வார்கள் சொல்ல அதில் களை அறுக்கிறார் –

இவர்–20 பாசுரங்கள்-
சிவ வாக்யர் என்ற பெயர் உடன் இருந்தார் சங்கரம் சாக்கியம் எல்லாம் கற்று இங்கு வந்தார்–
தம்பு செட்டி  தெரு பக்கம் பவள கார தெருவில் வேணு கோபாலன் சந்நிதியில் அர்ச்சை ரூபத்தில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்தார்

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண்
ஓன்று சென்று அது  ஒன்றை உண்டு அது ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவன் அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே–திருச்சந்த -48

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்திருந்து   தேன் பொருந்து பூம் பொழில் தழை  கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே—60

நிற்பதுவும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நல் பெரும் திரை கடலுள் நானிலாதா முன் எல்லாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே–65

நிற்பதுவும்-வெற்பகத்து நிற்பதும் என் நெஞ்சு உள்ளே -முதல் பைத்தியம் பிராட்டி இடம் -திரு மால்- முடி சோதியாய் –திரு மாலே கட்டு உரையே–
திருவே மாலா — மாலே திருவா–திரு குடந்தை சாரங்க பாணி- கோமள வல்லி தாயார்- சாரங்க பாணி தளர் நடை நடவானோ–சக்கர பாணி அல்லையே –
ராம சுவாமி திரு கோவில்- அவனும் அவளும் சேர்த்தி உத்சவம்-  திரு கோலம் மாற்றி சாத்தி- சேவிக்கணும் —
கல்லும் கணை கடலும் வைகுண்ட மா நாடும் புள் என்று ஒழிந்தன கொள்—அன்று நன் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்-
ஞான பிறவி-நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சு உள்ளே -இளம் கோவில் கை விடேல்—திரு மலை-ஓர் -அத்வீதியமான –
கானமும் வானரரும் வேடம் உடை  –வேம்கடம்-சொவ்சீல்யத்தில் அத்வீதியம்–திரு மால் இரும் சோலை கள்ளருக்கு- போலி சொல்ல முடியாது –
நல் பெரிய -அவனை கொண்டதால்- திரை-அலை-ஆயாசம் தீர திருவடி வருட–நாம் சேவிக்க தாபம் தீர்க்கும் —
திருவடி தீண்டும்- -மன்னாத பெருமாள்-நீள் ஓதம்-வந்து அலைக்கும் மா மயிலை மா வல்லி கேணியான்–
நான்கு -அற்புதன் -ஆச்சர்ய சேஷ்டிதங்கள் உடையவன்– இவரையும் அருளி பாட வைத்தானே– அனந்த சயனன்- சர்வேஸ்வரன் —
ஆதி பூதன் -ஜகத் காரணன் -முழு முதல் கடவுள்–மாதவன்-பிராட்டிக்கு சுவாமி –இதனாலே மற்றவை–
தாளும் தோளும் சமன் இலாத பல பரப்பி- -மூன்று துவார சேவை-நித்யர் தேவர் அடியவர் சேவை என்பதால் சர்வேஸ்வரன்–
பரத்வம் காட்ட நான் அங்கு போக -போக்யதை காட்ட அங்கு போக வந்து சேர்ந்தான்-சுலபன் என்று போக அவனும் வந்தான் —
இன்று தன் நின்றான் இருந்தான் கிடந்தான் உகந்து –முன்பு நிர்பந்தம் நின்றது இருந்தது  சயநித்தது —
இப் பொழுது தான் பலன் பெற்றான் –சேர்தியால்–அந்தாமத்து அன்பு செய்து -ஆரம் உள -ஆழ்வார்

கடைந்து பால் கடல் கிடந்து  கால  நேமியை கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து ராமனாய்
மிடைந்த வேழ்  மரங்களும் அடங்க வெய்து வேம்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-திருச்சந்த -81-

அடைந்தாலே உய்யலாம்– நாளும் நாளும் அடைந்து –தனக்கு தானே வீடு கட்டி கொண்டான்- கோது  கழித்து தான் அமிர்தமாக கிடந்தான்–
இனி யாராவது வருவார் களா என்று  பார்த்து கொண்டு கிடக்கிறான்–கால நேமி கொன்றான்–தன் தனக்கு-தம்பி தனக்கு-
கடை குறைத்தல்-வாலிக்கும் உதவினான் –எம்பியை உம்பிமார்கள் இகழ் வரேல் தடுத்தி-வெற்று அரசு எம்பி எய்தி வீட்டு அரசு எனக்கு ஈந்தான்-
உதவி–ராம பாணத்தால் கிட்டியதே–தம்பி தனக்கே –தன் தனக்கே உதவ வந்த –மால்-அவன் பாதம் அடைந்து உய்ய வேண்டும்–

குறிப்பு எனக்கு கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ ?
வேம்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்—நான்முகன்-34-

அகிஞ்சனர் நிதி-ஸ்ரீநிவாசன் தயை–நிரஞ்சன ஹேயம் குற்றம் அற்ற தயை-அனுகம்பா–தயா சதகம் -தான் கடத்தும் தன்மையான்-ஸ்வாபம்–
மெய் வினை- சரீரத்தால்-சம்சாரம் கடத்தும் தாள்–தானே பண்ணுவான்–கேட்க்காமலே –தண்ணீர் குளிர்வதும் அக்னி சுடுவதும் போல இவனுக்கு ஸ்வாபம் இது —
மாதவ பெருமாள் கோட்டியூரில்– ஆசை உடையார்க்கு எல்லாம்ஆரியர்கள் கூறும் என்று  ..பேசி வரம்பு அறித்தார் பின்–மேயான்- நித்ய வாசம்-ஏத்துவது –
நன்மை பயக்க -ஆத்மாவுக்கு உஜ்ஜீவனம்–ஆத்மா தாஸ்யம் -ஹரி சுவாமி -சேஷத்வம் மறக்காமல்-மேல் விழுந்து -மெய் வினை-கர்ம-ஜன்ம-
மெய் வினை நோய்- வினையால் நோய் ஏற்படுவதுமே சத்யம்–சரீரத்தால் வந்த நோய்–வியாதி -பிறப்பு-அனைத்தும் தொலையும் –
தங்கள் தங்கட்கு நல்லனே செய்வார் ..அது சுமந்தார்கட்கே– வேம் கடன்கள் மெய் மேல் வினை முற்றவும்–பாபங்கள் எரிக்க படும்–
இதில் நன்மை பயக்க–அங்கு மெய் மேல் வினை முற்றவும் –இனி பிறவி இல்லை–வந்த சீதேவியை காலால் உதைப்பெனோ–வெறுப்பனோ

அழைப்பன் திரு வேம்கடத்தானை காண
இழைப்பன்  திரு கூடல் கூட மழை பேர்
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை
வெருவி அரவோடு ஓங்கும் வெற்பு–39

மணிகள்-ரத்னங்கள்-அருவி கொண்டு வர -வரன்றி-பேர் அருவி- அரித்து கொண்டு வர-பாம்பு மின்னல் யானை-நெருப்பு- பயம்–
இதை பார்த்து ஓட-இயற்க்கை அழகை அனுபவிகிறார்–மதம் பிடித்து ஓட-அரவு வாய் குகை போல யானை ஒடுங்கிற்றாம்-
மலை பெருமை காட்ட -கறிய மா –பெரிய மாசுணம் பெயர-திரு பிதிரி -மேகம் பார்த்து யானை என்று நினைந்து பாம்புகள் மலை போல நகர -ஜோஷி மட்-
அழைப்பன்-தர்சனத்துக்கு -வாய் வெருவி அவன் காது கேட்கும் படி-மோட்ஷம்  வேண்டாம்–கண்ணே உன்னை காண —
அதற்க்கு காட்சிக்கு கண்ணாக நீயே இருக்க வேண்டும்- கண் -வழி-உபாயம் உபேயம் அவனே–பாவியே என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே–
முன் சேவித்தால் ஹ்ருதய முடிச்சுகள் போகும் பாபங்கள் எரிக்க படும்–தாமரை அலர்ந்து குவிந்து-திரு முகம் -உன் பேச்சு கேட்பதே வேணும்–
அவன் திரு முகம் மலர்தலே மோட்ஷம்–கோவிந்த நாமம் சொல்லி அழைப்பன்-காணும் வரை-கூடிடு கூடலே-போல பார்ப்பேன்–

வெற்பு என்று வேம்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற
நூல் வலையில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டு இருந்தேன் காண்–40

அதுவும் அவனது அருளே- வெற்பு என்று –மலைகள் பெயரை சொல்ல-மனசு சகாயம் இன்றி-ஏனோ தானோ என்று–வீடு கொடுத்தானே–
மலை அப்பன் அவன் ஒருவன் தானே -எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெற்றது போல–
திரு மால் இரும் சோலை என்றேன்–திரு மால் வந்து புகுந்தான்- கெடும் இடையாரவன எல்லாம் கேசவா என்ன–நின்று நினைகின்றேன்–

ஈஸ்வரி ஜகத்துக்கு -தாய்-ஜகத்துக்கு-நியமன சாமர்த்தியமும் உண்டு—-ஜகன் மாதரம் வந்தே–சங்கல்பத்தால் திருத்த முடியும் சக்தி கொண்டவள்–
ஜகத்தில் அவனையும் -சேர்த்தால் விஷ்ணுவும்- அவன் சொல் படி கெடப்பான்-கற்கின்ற நூல் வலையில் பட்டு இருக்கும் நூலாடி கேள்வன்-
ஸ்ரீ வல்லபன்–அவள் கால் வலையில் படு கிடக்கிறான்-விசேஷ அர்த்தம்-நியமனத்தால் இல்லை-அவனே ஈஸ்வரன்–வல்லபன்-
அழகால்-புருவ நெறிப்பே   பிரமாணம்–உறை மார்பன்–அனுசூயை-சீதை-  ராமனின் குணம் பிரிக்க முடியாதே –
குண கிருத தாஸ்யம்–சொரூப கிருத தாஸ்யம்–நித்ய வாசம் இருந்து பொறுமை வளர்கிறாள்-பத்ம அலன்க்ருதம் பாணி பல்லவம் யுகம்-
மொட்டு விட்ட -திரு கைகள்-பத்ம ஆசனம்-அமர்ந்த அழகையும் திரு கைகள் அழகையும் காட்டி வளர்கிறாள் —
ஸ்ரியம்-வாட்சல்யாதி குணங்களை கிளப்பி விட்டு-குனோஜ்வலாம் பகவதீம்-இவளுக்கும் உண்டே–பகவதீம் ஸ்ரீயம் தேவீம்-கத்யம்–
ஆறு கல்யாண குணங்கள் ஞான பல ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ்–துல்யம்–அவள் குணங்களை கிளப்பி விட நம் இடம் காட்ட வேற உதவி வேண்டாம்-
இவளை கண்ட உடன் அவனுக்கு பிரசவிக்கும்–ச்வாதந்த்ர்யம் சாம்பல் போல பூசி இருக்கும் -இதை விலக்க அவள்–
தலை சாயும் ச்வாதந்த்ரம்-தலை எடுக்கும் கல்யாண குணங்கள்–நின்று நினைகின்றேன்-சஞ்சல மனசு–
குணத்தில் பொறாமை பட்டு உயர்த்தி கொள்ள வேண்டும் –இந்த்ரியங்கள் கொண்டு அவனை அடைய உபயோகிக்க வேண்டும்–
கற்கின்ற நூல் –கால் வலையில்- பட்டு இருந்தேன்–கற்கின்ற நூல் -வேதம் இதிகாசம் புராணம்-வலை ரட்ஷிக்கும்–அகப் படுத்தி கொள்ளும் நம்மை–
இதில் பட்டு இருந்த நூல் ஆட்டி- ஸ்ரீ தேவி நாச்சியார்–இவளுக்கு பரிகாரம் தான் சரஸ்வதி- சம்சாரி யில் ஒருத்தி –
நவராத்திரி 9 நாள் உத்சவம் ஸ்ரீ தேவிக்கு தான்//விஷ்ணு பத்னி–ஈஸ்வரி-நியமிகிறவள்–நூலாட்டி கேள்வனார்–இவர் வலையில் பட்டு இருக்க வேண்டும்–
வேதம் வேதாந்தம்–நூலாட்டி-மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு–சாரம்–நாராயணன் கேசவன் சொல்லாமல் மாதவன்-அவளின் சுவாமி என்பதால்–
இதனால் இந்த பாசுரத்துடன் துவய அர்த்தம் சேர்த்து அனுசந்திப்பது என்று வியாக்யானம்–அவனுக்கு இருப்பதால் பிரித்து பேசாது -அதனால் –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ் உலகத்துக்கு எவ் –நின் புகழின்–மாது வாழ் மார்பினை–உடனே சொன்னார்–ஸ்ரிய பத்தி திருவடி பிடித்து பெற்றேன்

கானல் உறுகின்றேன் கல் லருவி   முத்துதிர  
ஒண விழவில் ஒலி அதிர பேணி 
வரு வேம்கடவா ! என் உள்ளம் புகுந்தாய் 
திரு வேம்கடம் அதனை சென்று  –41-

காணல் உறுகின்றேன்-..-அங்கு போய்–கல் அருவி -பட்டு ஓடி வருகிறது– முத்து உத்திர– விழ ஒழி– பல்லாண்டு பாட நிறைய–
பேணி ஆசை உடன் நாடி வருகின்றார் –நீ வந்து ஏன் உள்ளம் வந்தாய்–இங்கு இருந்து தானே வந்தாய்–அதனால் சென்று காணல் உறுகின்றேன்–
வேட்டகத்தை விரும்பி பிள்ளையும் புக்ககத்தை பெண் விரும்புவது போல–ஆசை மாறாமல் இருக்கும்–உள்ளத்தில் -பாபத்துக்கு உற்பத்தி-
அங்கு வேம்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்– கல் அருவி முத்து -இங்கு ரத்தமும் சீழும்/அங்கு ஒண் விழாவின் ஒலி- திரு வோண திரு விழவு —
இங்கு நான் வைத்து கொண்டு இருக்கிறேன்– அங்கு பேணி வரும் வேங்கடவன் இங்கு வந்தவனை ஏன் வந்தாய் என்றுவிலக்கும்-என் உள்ளத்தில் –
வாத்சல்யம்-ஒரே குணம்–அங்கு ஸ்வாமித்வம் பரத்வம் காரணத்வம் போன்ற பல–நான் திரு வேம்கடம் விட்டு வர முடியாது

சென்று வணன்குமினோ சென் உயர் வேம்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் –என்றும்
கடி கமல நான் முகனும் கண் மூன்றத்தானும்
அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு–42-

அடி கமலம் இட்டு -அநிஷ்டம் போகும்–இஷ்டம் கிட்டும்-பிரமன்/முக் கண்ணான்–இரவில் தேவர் பூஜை/
பத்ரியில்- தீபாவளி- சித்தரை அஷய கிருத்திகை வரை தேவர்கள் பூஜை–நாரதர்-அர்ச்சகர் -ஏழு பேர் உண்டு கற்ப கிருகத்தில் —
குபேரன் கருத்மான் பத்ரி விசால்  உத்தவர்   நாரதர்  மேல் நர நாராயணன்வடக்கு திக்குக்கு அதிபதி -குபேரன்-காசாளர்-அகண்ட தீபம் –
திரு கதவு திறந்த பின் எரிந்து கொண்டு இருக்கிறது–சுமந்து மா மலர் நீர் சுடர் தீபம் கொண்டு அமர்ந்து வானவர் வானவர் கோன் உடன்–
ரஷைதிக தீஷை-கங்கணம்-கட்டி கொண்டு–சேன் உயர் வேங்கடம்–ஆகாசம் அளவு உயர்ந்து-இருக்கும் இடத்திலே கை கூப்பலாமே–
நீர்மையால்-நின்று வினை கெடுக்கும்–வேங்கடத்தில் நின்றுநம் வினை கெடுக்கும்–வந்கடத்தில் நாம் நின்றாள் வினை கெடுக்கும் –
நீங்காமல் நிற்கும் வினை கெடுக்கும்-கர்ம விட்டு பிரியாதே–நீர்மை-ச்வாபம்–நாம் பிரார்த்திக்காமல்-உன் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி–
சவாசனமாக போக்கி-அநிஷ்டம் போக்கி–கடி கமலா நான்முகன்–தாமரை மணத்தில்-இருந்து திரு வடி தாமரை யில் பரிமளம்-
சர்வ ரச சர்வ கந்த பார்த்து ஏத்த வந்தான்–ஸு பாஸ்ர்யமான திரு மேனி தான் கந்தம் ரசம்-ஒளி-தேஜஸ்- அனைத்துக்கும் இருப்பிடம்–
கடி கமலம் விட்டு–கண் மூன்றத்தான்–ஆரோக்கியம் பாஸ்கரன்-ஞானம் சங்கரன்–பிரதிநிதி மூன்றாவது  கண்–
இவனும் ஞானம் பெற்றது திரு வேம்கடத்தான் இடம்–முடவன் எழுந்து ஓடி குருடன் பார்க்க ஊமை பேச–இவர்களும் மோட்ஷம்-பெறுவான் என்பதே சப்ரதாயம்–
கர்ம ஆதீனம் பட்டே தீர்க்கணும்புஷ்ப மண்டபம்–அனந்தாழ்வான் தோட்டம்-திரு வேங்கடம் உடையவன் இரண்டு தடவை எழுந்து அருளி-
அப் பிரதட்ஷினமாக ஒரு தடவை-/கடப்பாறை–பச்சை கற்பூரம்  சாத்தி கொண்டு-பெருமை

மங்குல் தோய் சென்னி வட வேம்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் -திங்கள்
சடை ஏற  வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏற தாங்கு வித்துக் கொண்டு—43-

நித்யம் வந்து சேவிக்கிறார்கள் –சந்திர சேகரனும்—தாமரை மேலானும்–குடைகுவித்து கொண்டு– சத்திரம் சாமரம் கொண்டு —
ரட்ஷகனே வந்து சேவிக்க-வந்ததை சொல்கிறது–மேகங்கள் தோய்ந்து இருக்கும் சிகரம்–கங்குல்-இரவு–முதல் அர்த்தம்–
சாயம் கால பொழுதில்–நித்ய அனுசந்தானம்–அந்த வேளையில்– காப்பணிவான்–கப்பை அணிவிக்க– ஆராதனம் -பண்ணும் பொழுது –
காப்பு-பல்லாண்டு-மங்களா சாசனம்// திரு வந்தி காப்பு அணிவான்-ஹாரத்தி–பாசுரத்தின் மர்மம் அறிந்து வியாக்யானம்–கற்பூர நீராஞ்சனம்–
நெய் திரி –அக்னி தெய்வம்-என் ஒளியால் அவன் சேவை என்று நினைப்பதால் இதை சேவிக்க வில்லை ஸ்ரீ வைஷ்ணவர்கள்–
கும்ப ஹாரத்தி-ஜெய விஜயீ பவ–இதுவே மங்களா சாசனம்-

கொண்டு குடம் கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேம்கட மலைக்கே
போம் குமரர் உள்ளீர் ! புரிந்து–44-

குமரர் -இந்த்ரியங்கள் கட்டு படுத்தி-கிழார் ஒளி இளமை கேடுவதன் முன்-திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின்–
செல்ல பிள்ளை–விஸ்வ ரூபமே மெதுவாக–காலம் வீண் ஆவதற்கு முன்-சீக்கிரம்-ராவணன் தபஸ்-
சிறிய குழந்தை எம்பெருமான் பரமன் மடியில் இருந்து -தலையை கீறி-எண்ணி சிரித்தாராம்-எங்கும் –
உன் உடைய விக்கிரமம்–ஒன்றுஒளியாமல் எல்லாம்-எழுத்தி கொண்டேன்
தண்ட அரக்கன் -தண்டிக்க பட வேண்டிய அரக்கன்- -பண்டு-வரம் கேட்க்கும் காலத்தில்-எண்ணி போம்-எண்ணி விட்டுமறைந்தான் —
அவன் நிற்கும் இடம் திரு வேம்கடம்–இந்த சரித்ரம் முதல் ஆழ்வார்களும் அருளி இருக்கிறார்களாம்–
வயசு ஆவதற்கு முன்-மகா ஞானி குழந்தை போல் –பரம ஆத்மா ஞானம் உடையவர்கள் போக –ஆமே அமரர்க்கு அரிய –
பாதமத்தால் எண்ணினான் பண்பு பொய்கை ஆழ்வார் /வாய்ந்த குழவியாய் மூன்று ஏழு எண்ணினான்-பேய் ஆழ்வார்

புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம்
பரிந்து படு காடு நிற்ப –தெரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேம்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு–45-

வானோர்க்கும்-நித்யர் மண்ணோர்க்கும் வைப்பு- நிதி- –வைத்த மா நிதி–திரு வடியில் தேன் கொட்ட அதை நிறுத்த புரிந்து மலர் இட்டு –
பல்லாண்டு  பாடி—பிரதி பலன் எதிர் பார்க்காமல்–பர துக்கம் சகியாமல் இருப்பதே ஸ்ரீ வைஷ்ணவர் லஷணம்–வேர் அற்ற மரம் போல விழுந்தான்-
செய்த உதவிக்கு வேற ஒன்றும் கொடுக்க முடியாதே-லவ குசர் ஸ்ரீ ராமாயணம் பாட ரிஷிகள் ஆசீர்வாதம்-தபஸ் வலிமை-
வேதத்துக்கு ஓம் போல உள்ளத்துக்கு எல்லாம் மங்களம் திரு பல்லாண்டு–எங்கும் தெரிந்து ஓங்கி நிற்கின்றான்–
மலை போல அவன்-அரு பட்ட மரம் போல் நாம்- தன் அருவி வேம்கடம்

வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று
எப் பொழுதும் கை நீட்டும் யானையை –எப்பாடும்
வேடு வளைக்க குறவர் வில் எடுக்கும் வேம்கடமே
நாடுவளைத் தாடுது மேல் நன்று–46-

நாம சங்கீர்த்தனம்–தலை கீழாக ஆடி–யானை கை நீட்டி ஓடி-சந்த்ரனை விளக்காக வைக்க-பிடிக்க –
மா மதி மலையில் இருந்து கை கீட்டி- சேன் உயர் வேம்கடம்–மால்-பைத்தியம்–அவனால் ஆனைக்கு–எப் பொழுதும் நீட்டி கொண்டு–
ஆசையின் பாரிப்பால்–வேடர்  யானை பிடிக்க–நால் புறமும் சூழ்ந்து ரஜோ தமஸ் குணம் கொண்டு–வில் எடுக்கும் குறவர்–
ரட்ஷிக்க-எப்படி- ஒரே ஜாதி தானே–வேடு வளைக்க குறவர் வில் எடுக்க–வெளி வேடர் -திரு வேம்கடத்து குறவர்–மாற்றி–
கைங்கர்யம் பண்ணும் பொழுது ரஜோ தமஸ் குணம் இருந்தாலும் ரட்ஷிக்க தான் வருவார்–எப் பிறப்பு-
கைங்கர்யம் பண்ணனும் இல்லை கைங்கர்யம் பண்ணுபவரை ரட்ஷிக்க வேண்டும்–
சம்சார நோக்கு இன்றி இருப்பார் கைங்கர்யம் பண்ணுபவர் –அறிவு இல்லா யானையும் குறவரும் போல –

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோள் அரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் –பன் மணி
நீரோடு பொருது உருளும் கானமும் வானரமும்
வேடும் உடை வேம்கடம்–47-

ச சதுர முக ஷன் முக பஞ்ச முக பிர  முக அகில  தைவிக  மௌலி   மனே– சிரோ பூஷணம் –
சரணா கத வட்சல சார  நிதி பாலயமாம்-ரட்ஷிக்க வேண்டும்- -குற்றமே குணமாக கொள்பவன்  -இவன்–
எற்றே தன் கன்றின் வழு வை காதலிப்பது –வட்ச-கன்று குட்டி –சார தமம்–ரட்ஷனம்-கோ பாலன்- கோ ரட்ஷிகிரவன்-
விரிஷா  சைலம் வராக கிரி கருடாத்ரி க்ரீடாத்ரி-விளை யாடும் இடம்– அஞ்சனாத்ரி–யசோதை பாவனையில் அருளிய பெரி ஆழ்வார் திரு மொழி-
கிருஷ்ண அனுபவம் -ஆழ வைக்கும்–சீத கடலுள் அமுது-அன்ன -21 பாசுரம்-மூக்கு/ விரல்கள் இருந்தவாறு காணீரே –கண் எச்சில் வராதோ-
பேதை குழவி–பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலம்-அவன் பேதை குழவி நாம் அழும் குழவி–இனிமை என்ன என்று பார்க்க–
உள் கை தளம் திருவடி சிவக்க- சேவிக்கும் கிரீடம் ரத்னம் ஒளி பட்டு –செய்யாள் வருடி -பராங்குச நாயகி திரு உள்ளம்-பகவத் காமம் ராகம் ஆசை-
சிவப்பு ஏறி-வி ராகம்-வைராக்கியம்–மாகம் மாநிலம் முழுவதும் வந்து இறைஞ்சும் மலர் அடி–அடியார் கோஷ்டியில் நானும் ஒருவன்–அனைவருக்குமாக நிற்கிறான்–
வேடர்களுக்கு முன் பார்த்தோம்–யானை குரங்கு–கூட்டம் கூட்டம் ஆக வரும்–குரங்குகள் மலையை நூக்க –
தேர் ஓட்டம்-அடியார் ஈட்டம் காணிட கூடுமேல் அது தானும் கண் பயன் ஆவதே -பறவை பறக்கும் பொழுதும் கூட்ட மாக –
குரு பரம்பரை—நல மணி வண்ணனூர்-ஸ்வாபம் வர்ணம்-முந்தானையில் முடிந்து கொள்ளும் படி சுலபன்–வசம்-வந்தால்- கொண்டாட்டம்-
சேர்ந்தால் ரட்ச்கனம் தொலைத்தால் தாங்க முடியாது–காண வாராய்-கூப்பிட வைக்கும்–நல்ல-விசெஷனம்–
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தான்-நல்ல அரக்கன்-விபீஷணன் உண்டே–சாதாரண மணி ரத்னம் ஊரில் உள்ள மணிகள்-
நமச்காரத்துக்கே வசம் இவன்–வைரத்தை வைரத்தாலே அறுக்க -கரடு முரடு-கடினம்-அந்த கடினம் இல்லை-இவன் நீர் பண்டமாக உருகிகிறான் —
ருக்மிணி-எழுதி அனுப்ப சந்தேசம் ஏழு ஸ்லோகம்–பிராமணரை-வைய ருக்மிணியையும் -நான் நினைக்கும் பொழுதே உருக –
அவள் உம்மையும் அனுப்பி இதையும் கொடுத்து குல தேவி பூஜைக்கு வருவேன்–மடுத்து ஊதிய சங்கொலி கொடு வந்தாய் என்று தெரிய –
மாலே மணி வண்ணா –ஒளி  மணி வண்ணன் என்கோ–ஊர்-காடும் மலையும்-ரட்ஷிக்க ஆள் இருப்பதால்–
ஆளும் சிங்கமும் பொன்னும் மணி பூ மரமும் உண்டு–சுமத்ரை- நடக்கிற ராமனை பார்க்காதே-கைங்கர்ய ஹானி–
ராமம் தசரதம் வித்தி-மாம் வித்தி ஜெனகாத் ஜனி அயோத்யாம் கானகம் வித்தி–ஸ்தாவரங்கள் திர்யக்-எல்லாம் –
நித்யர்கள் வந்து கைங்கர்யம் பண்ண-மறைத்து கொண்டு–இவை பண்ணும் கைங்கர்யம்-நித்யர் பண்ணும் கைங்கர்யத்துக்கு ஒப்பு-
சாண்டிலி-கருடன் கதை-விஸ்வாமித்ரர் குரு தட்சிணை 800குதிரை-தேட -சிறகு எறிந்த கதை —
அனந்தாழ்வான் கட்டு பிரசாதம்-எறும்பு-நித்யர்-எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே –விண்ணுளாரிலும் சீரியர்–

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேம்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் –வேம்கடமே
தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு
வானவரை காப்பான் மலை–48-

ஆழி படை தொட்டு- ரட்ஷிகிறான்-மெய்ம்மையால்-விகல்பம்-தர்க்கம்-பொய்மையால்-எது–வணங்கும் பொழுது –
கைங்கர்யம் செய்வதற்கு வணங்குவது மெய்மை–வணங்கி மோட்ஷம் கேட்பது பொய்மை- நித்யர் இங்கு வந்து பிராப்யமாக
கைங்கர்யம் செய்வது மெய்மை–வானவர்களை காக்க ஆழி படை தொட்டால் போதும் -பிரயோக சக்கரம்- திரு கண்ண புரம்–
சென்று நின்று ஆழி தொட்டானை-சுழற்றி பண்ண வேண்டியது இல்லை கரும் இடம் பொருத்தும்–கை நின்ற சக்கரத்தன்–
வேங்கடமே-மூன்று தடவை-பொலிக பொலிக பொலிக போல–பல்லாண்டு பல்லாண்டு பல் ஆயிரத்தாண்டு–தத்வ ரகஸ்ய மண்டப த்ரயம் போல–

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேம்கடத்தான்
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள்– மேல் திருந்தி  
வாழ்வார் வரு மதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்–90-

பாகவத -அடியார்க்கு அடியார் வைபவம்-18 பாசுரம்-இதில் சொல்லி-வேறாக ஏத்தி  இருப்பாரை-
அடியார்களை -வெல்லுமே மற்று அவரை சார்த்தி இருப்பார் தவம்–கேசவ பக்தியோ-பக்தர் பக்தர் பற்றுவதே வேண்டும்
இது கிட்டா விடில் கேசவ பக்தி-ஸ்வாமி அருளுவார் கீறிய கோளரியை சார்த்தி இருப்பார்-பெரி ஆழ்வாரை போல்வார்–
அந்தி அம் போதிலரி உருவாய்- வில்லி புத்தூர் –வல்ல பரிசு-ஆண்டாள் போல/தாயாய்  தந்தையாய் கண்ணன் ஆழ்வார்/
அன்னையாய் அத்தனை சடகோபன் –மதுர கவி ஆழ்வார் –
அருள் பெறுவார் அடியார் –அடியார் தம் அடியினேர்க்கு–கண்ணன் கழலினை  முன் அருளி– ப்ரீதி அதிகம்–
மேல் விழுந்து பகத் பக்தரை ஆதரிப்பான்–வரும் மதி–அவன் திரு உள்ளம் பார்த்தே–தாழ்வு-சேஷம்-அடிமை தனம்–
அடியார் அபிமானத்தில் ஒதுங்கின அடியார்கள்–வீற்று இருந்து  விண் ஆழ -இங்கும் அங்கும் அரசர்–
அடியார்களுக்கு பல் மலர் வைத்து மேல் வாழ்வு பெறலாம்–இங்கும் கைங்கர்யம் அங்கும் கைங்கர்யம்–நித்யர் கொண்டாடுவார்கள்-
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன்–பசு மனுஷன் பட்ஷி-அடியான் நிழலில் ஒதுங்கி மோட்ஷம்–வாசி இல்லை–அவர்கள் ஏற்றத்தால் என்பதால் –

—————————————

திருச்சந்த–48–60–65–81–/நான்முகன்–34–39–40–41–42–43–44–45–46–47–48–90-/-ஆக -20-பாசுரங்கள் –

இவனே ஸ்ரீ வராஹன்
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் ஓன்று சென்று அது  ஒன்றை உண்டு அது ஓன்று இடந்து பன்றியாய்–திருச்சந்த -48-

இவனே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து ராமனாய் மிடைந்த வேழ்  மரங்களும் அடங்க வெய்து வேம்கடம்-திருச்சந்த -81–

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
வேம்கடமே தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு வானவரை காப்பான் மலை–நான்முகன்–48

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ பேய் ஆழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

துலா -சத்யம் -ஐப்பசி-மயூர புரி-மயிலை-மகாந்தர் -ஸ்ரீ நந்தகம் அம்சம்–
அடையார் கமலத்து -பஞ்ச ஆயுத அம்சம் சுவாமி ராமானுஜர்-
17 பாசுரங்கள்–

மால்  பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூல் பால் மனம் வைக்க நொய்விதாம் நால் பால்
வேதத்தான் வேம்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து—14

இதர விஷய வைராக்கியம்–அவன் பால் மனம் வைத்து -வேத வேதாங்கள் –இந்த்ரியங்கள் பயம்-ஆழ்வார்கள் நிறைய உபதேசிகிரார்கள்–
விண்ணோர் பெருவானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன்–கருடன்-சுமுகன்–ஐவர் திசை திசை வலித்து எத்து கின்றனர்–
ஐவரால் குமை தீர்த்தி–அளவில்லா சிற்று  இன்பம் ஒழிந்தேன்–பகவத் கார்ய ப்ரீத்தி கார்ய கைங்கர்யம்–
பண்ணின் மொழியார் பைய நடமின் எண்ணா முன்-விண்ணும்  மலையும் வேதமும் ஆகி நின்றான் நறையூர் சென்று சேர்மினே –
கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்கள் ஆசன பத்மத்தில் அழுந்திய திரு வடிகள் அஞ்சேல் என்ற திரு கைகள் மந்த ஸ்மிதம் கொண்டு சொல்லவும் –
பிறந்தான் என்று அறிந்தும் பிறக்க வேண்டுமா –பிராப்தம் ஆன அழகு இது –நித்யம்

கண்ணன் என்னும் கரும் தெய்வம் –கரியான் ஒரு காளை வந்து –வெள்ளி வளை கை பற்ற -அழகன்-அலங்காரன் –
செல்வர் நாகரிகர்-அச்சோ ஒருவர் அழகியவா -மங்கையர் தோளை கை விட -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -கண் அழகை காட்டி திருதினாரே —
மாய வன் சேற்று அள்ளல் அழுந்தார்-மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை–போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கன்–ஐயப்பாடு அறுத்து -ஓம் நமோ  நாராயணஆய  -முன் சொல்லி–
வீடு முன் முற்றவும் வீடு செய்து -புல்கு பற்று அற்றே –அறுத்து புல்க  வேண்டும் —

இங்கு மால் பால் மனம் சுழிப்ப முதலில் –பெருமை காட்டி–கை விட வைக்கிறார் ஆழ்வார்–
ஆழ்வான் ஆண்டான் சம்வாதம்-சவாசனமாக விட்டே பற்ற வேண்டும் என்றால் நீர் ஒருவரே அதிகாரி–
கொஞ்சம் விட்டு பற்றினால் அவன் பலத்தால் மீதி எல்லாம் விடலாம்–வேதம் எளிதாகும்–பகவத் விஷயம் புரியும்–
வேதத்தால் ஓத பட்டவன்-ஓலை புரத்திலே மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்க வேம்கடத்தான்-பெரியவன் வேதம் சொல்வதால்–
எளியவன்-இங்கு சேவை-பண்டரி புரம் பெருமாளை தொட்டு சேவிக்கலாம்–குற்றம் தோஷம் ஏறாது- விண்ணோர் முடி தோயும் பாதத்தான் —
பாதம் பணிந்து -கண் முன் தெரிகிறதே -விதிக்க மதம்- உருவ வழிபாடு -சித்த ஆலம்பன சௌகர்யம்-உளன் இரு தகைமை உடன்-
உருவம் அருவம்-ஒழிவிலன் பரந்தே–உருவினன் அருவினன்-ஆகாசம் -விச்வமே அவன்-

சிறந்த என் சிந்தையும் செம் கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி வுள்ளும் உறைந்ததும்
வேம்கடமும் வெக்காவும் வேளுக்கை பாடியுமே
தாம் கடவார் தன் துழாயார்–26-

சிறந்த என் சிந்தையும் –சிறப்பு இல்லா மல் இருந்தது அவன் உள் புகுந்ததும்– முன்பு இருந்த இடங்கள்–
செம் கண் அரவு-கரு மணியை கோமளத்தை -நாகம் அனந்தன் சர்ப்பம்-பல தலை பாம்பு- வாசுகி ஒரு தலை பாம்பு–
ஆரவாரம் அது கேட்டு அல்ல உமிழும்-உறகல் உறகல் -பொங்கும் பரிவு- பகவானை அனுபவித்து சிவந்த /கைங்கர்யம்
சென்றால் குடையாம்-இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மர வடியாம்–புல்கும் அணையாம் பூம் பட்டாம் ..விளக்காம்- பண்ணி சிவந்த கண்கள்-
திரு அரங்கேசர் வெண் கொற்ற குடை இருக்கு -பட்டர் -நிறைந்த சீர் கச்சி வுள்ளும்–எல்லா திவ்ய தேசங்களும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி-கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான்-

இமையோர் தலைவா -இதுவும் அவனுக்கு தான்–நிறைந்த -பல திவ்ய தேசங்கள் கொண்ட கச்சி–நீள் கச்சி–பக்தன் முதலில் சொல்லி
அரவு-நித்யர் அடுத்து –நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-ஆழ்வார்–ஞாலத்தார் தமக்கும்  வானதவருக்கும் பெருமான் —
இங்கு தான் ஆதரவு-பிரதம பரிகிரதுக்கு செம்  கண் சீரை வைப்பாரை போல–வேங்கடமும் வெக்காவும் கிடந்தது –
சொன்ன வண்ணம் செய்த பிரான்-வேளுக்கை-  தண் துழாய் –பிரணவாகார விமானம்- ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ ரங்கத்திலே–பார்க்கலாம் போல

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேம்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பு  வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி
இறை பாடியாய இவை–30

அனுமானம் பிரத்யட்ஷம்–விளக்கு திரி என்னே- சந்தரன் சூர்யன்  நாமும்  சுத்தி வருவோம்–
ஆகாச தாமரை -அனுமானம்- ஒவ் ஒன்றும் மற்று ஒன்றால் அடி படும் -இது போலவேதம் பாதிக்காது –
சுடர் மிகு சுருதி–வாய்ந்த மறை என்கிறார் இதனால்-

பாற்கடலும் வேம்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூல் கடலும் நுண் னுலா  தாமரை மேல் பால் பட்டு
இருந்தார் மனமும்  இடமாக கொண்டான்
குந்து ஒசித்த கோபாலகன்–32

சதுர்முக ஷன்முக  பஞ்ச  முக பிரமுக   அகில தெய்வத  மௌலி மணி -ரத்னம்-தரிக்க  -வணக்குடை தவ நெறி கொண்டவன்–
சரணா கத வத்சல சார நிதி–பரி பாலயமாம் –விருஷ சைல பதி- அனாலோசித அசேஷ விசேஷ லோக சரண்யன்–
கரியான் ஒரு காளை வந்து -கண்ணன் என்னும் கரும் தெய்வம் -முடி சோதியாய் உன் முக சோதி அலர்ந்ததுவோ —
சுட்டு உரைத்த நன் பொன் நின் திரு மேனி ஒளி ஒவ்வாது –ஆசன பத்மம் தோற்று அவனை தூக்கி கொண்டு–
வந்து இறைஞ்சும் மலர் அடி- அம் கண் மா ஞாலத்து அரசர் சங்க இருப்பார் போல் –திரு வடி சிவக்க–
தெய்வங்கள் சேவிக்க ரத்னம் சிவப்பு- செய்யாள் திரு கை பட்டு- பராங்குசர் காதலால் சிவந்து –எல்லாம் ஏறி சிவந்தன —
நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம்- இங்கு  உஜ்வலம் -நிகரில் புகழாய்-குருந்த மரம்- ஒசித்தவன் -கோ பாலகன்–
நூல் கடல்-சுருதி சாகரம்–நுண் நூல தாமரை -ஹிருதய கமலம்-பத்ம கோச பிரதீகாசம்-அதோ முகம்-தலை கீழே வைத்தால் போல–
யோகிகள் மனசில்-இருக்கிறான்-இடமாக கொண்டவன்–ஐந்து நிலையம் இதில் -பனி விசும்பு -பரன் திரு பாற் கடல்–
குரும்பு ஒசித்தவன்-விபவம் -பாட்டு கேட்க்கும் இடம் -சாம கானம்–கூப்பீடு கேட்க்கும் இடம்-வரம் கொடுத்து தவித்தவர் குரல் கொடுக்க- —
குதித்த இடம் -அவதாரம்–வளைத்த இடம் -நான்கு யானைகள்- அர்ச்சை -ஊட்டும் இடம் -இரா மேடம் ஊட்டுவாரை போல -அந்தர்யாமி–ஸ்ரீ வசன பூஷணம்-
ஐந்தும் வகுத்த இடமே- ஆச்சார்யர் திருவடியே தான்–விண் மீது இருப்பாய் –எங்கும் மறைந்து உறைவாய் –பனி தோய்ந்த விசும்பு
பெய்கிற பனி இல்லை-குளிர்ந்த -தாப த்ரயங்கள் இன்றி இருக்கும் தெளி  விசும்பு–நூல் கடல்- சுருதி சாகரம்–பெரும் புற கடல்- குண கடல் அவன் –

இறையாய் நிலனாகி எண் திசையும் தானாய்
மறையாய் மறை பொருளாய் வானாய் பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளன்கொலி நீர் வேம்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்–39-

ஜகதாகாரன்-எல்லாமாகவும் இருந்தது தனக்கு என்று–சுவாமி -இறை-நிலனாகி-அந்தர்யாமி-வானத்தில் உள்ளாரை செலுத்துபவன்-
சொத்தை அடைய சுவாமி ஆகி நிற்கிறான்–ஒன்றும் இல்லை-ஸ்ரீனிவாச சாஸ்த்ரி-இந்திய தேசம் விட்டால் ஆங்கிலேயருக்கு ஒன்றுமே இல்லை-
அது போல ஆழ்வாரை அடைய தான் இப்படி எல்லாமுமாகி இருக்கிறான்–நிலனாகி- அந்தர்யாமி-இரா மடம் ஊட்ட-உள்ளே பதி கிடந்தது சத்தை நோக்கி கொண்டு–
ஆட்சியில் தொடர்ச்சி நன்று–விலக்கினாலும்-அவதரித்து -காட்டி- அடைய -வத்சலையான மாதாவை போல —
மண் தின்ன விட்டு பிள்ளை பேகணியாத தாய் பிரதி ஒவ்ஷதம் இடுமா போல–அம்பரமும் –திசைகள் எட்டும்–பவ நீர் உடை ஆடையாக சுற்றி-
பாற் அகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்வி  திசைகளும் தோளா அண்டம் திரு முடியாக -ஜகதாகாரன்–எங்கும் போக விடாமல் எண் திசையாய்–
யாதானும் பற்றி நீங்கும் விரதம்-கொண்டு விலகுவோம் என்று சூழ்ந்து-மறையாய்-நல்லது தீயது -சாசனாது சாஸ்திரம்-பகுத்து அறிவு

உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண்ணோடு ஓங்கக் கொடு உயரும் வீம் கருவி வேம்கடத்தான்
மண்ணோடு ஓங்க தான் அளந்தமன்-40-

கதா புனா–மதியம் மூர்தன அலங்க்ருஷ்யதே–படிகளவாக பாத பங்கயமே -தலைக்கு அணியாய்–விலக்கவில்லை-
உளன் கண்டாய் நல நெஞ்சே –தன் சொத்தை அடைய -அகவையில் அனைத்து கொண்டும் தாயை போல–
எவ் உயர்க்கும் தாய்-திரு வடியால் தலை தீண்டி–திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தாய்-
பாண்டியன் மீன் கொடி நாட்டினது போல- -கேட்க்காமல் இருக்கும் பொழுதே நாட்டினான்- விலக்கவும் இல்லை –அதுவே காரணமாக

புரிந்து மத வேழம் மா பிடியோடு ஊடி
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேம்கடமே மேல் ஒரு நாள்
மண் கோட்டு கொண்டான் மலை–45-

மண் கோட்டு கொண்டான் மலை-ஆதி வராக பெருமாள்– ஊடல் கோபத்துடன்-மத வேழம் -கோட்டு கொண்டு குத்த முத்து உதிர்கிறதாம்-
கூடி -பிரிந்து-மறுபடியும் கூடி-அப்புளை  வியாக்யானம்- களிப்பால்-செருக்கால்-பரிதி பிம்பம் பார்த்து -பழிங்கு கல்லில் பார்த்து -பொருது-
பாசி தூர்த்து கிடந்த பாற் மகட்கு —நில மடந்தை –கோட்டு இடை கொண்ட எந்தாய் –நீல வரை இரண்டு பிறை —
ஞான பிரானை அல்லது இல்லை நான் கண்ட நல்லதுவே–வராக ஷேத்ரம் இது–போனகம் எல்லாம் முதலில் வராக பெருமாளுக்கு தானே–
பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை  ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–அங்கு உள்ள எல்லாம் ஆழ்வாருக்கு உத்தேசம்–
பூமி பிராட்டி-நப்பின்னை/வராக பெருமாள் பற்ற ஆண்டாள்-பூமிபிராட்டி-மண் கொண்டான்-ஆதரவு அதில்

தெளிந்த சிலா தலத்தின் மேல் இருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய 
வெண் மதியம்  தா வென்னும் வேம்கடமே மேல் ஒரு நாள்
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு–58-

புத்தி சாதுர்யத்தால்-மதி-மண் கொண்டு உகந்தானே-வாமனன்–கடுவன்-ஆண் குரங்கு மந்தி -பெண் குரங்கு–
யானை அணில் குரங்கு-பகவத் கைங்கர்யம்–ஸ்படிக கல் மேல் இருந்து –என்ன சொல்வாய் செய்து தருவோம் என்று பார்க்க–
பார்வை இரண்டும்–சந்தரன் -விளங்கிய வெண் மதியம் தா -கேட்டதாம்–தெளிவே இல்லை-சிலா தலம்–சந்திரனுக்கு மேல் முகடு இருக்கிறதாம் —
அதனால் மேல் பக்கம் பார்க்கும் பொழுது வெளுத்து இருக்குமாம்–கீழ் பக்கம் தான் அழுக்கு இருக்கும்–

அலர்மேல் மங்கை தாயார் திரு மார்பில் இருந்து கேட்கிறாள்– யாரோ கேட்டு பல பண்ணினேன்– உனக்கு பண்ண வேண்டும்–
கண் பார்வைக்கு பார்த்து இருக்க –பராத்பரன்-பிரனியத்வம்-தளும்ப-தன் பெண்மை-அவனையே எதிர் பார்த்து அவன் ஆனந்தம் ஒன்றே நோக்கி-
தாயார் கீழே பார்த்து தெளிந்த ஜீவாத்மா பற்றி நினைகிராளாம்-கை பிடித்து தூக்க-அவளுக்கு என்று -பிள்ளையை மேல் தூக்கி விட–
தாயாருக்கு தோஷம் கண்ணில் படாது–தோஷமே இல்லை தூக்கி விட சொல்கிறாள்–குரங்கால் முடியாது -இவனோ சர்வ சக்தன்–
ஒரு காலத்தில் இரந்து கூட சொத்தை கொண்டானே- -அதை நினைவு கூறுகிறாள்–மூவடி மண்ணை -முகம் பார்க்க கண்ணாடி கேட்டது–
தன் பிரதி பலிப்பு–உம்மை சொத்தை சேர்க்க தான் படுகிறாள்–நித்ய அனபாயிநீம்  நிரவத்யாம் அசரண்யா சரணாம்–
பிரியாமல் இருப்பது நம்மை வாழ்விக்க தான்–புருஷகாரம் -பிரணத பார தந்த்ரம் இரண்டையும் காட்ட இந்த பாசுரம் –
சீதை ராமன்-கோதாவரி நதியில்- போட்டி –அஸ்மின் மயா சார்த்தம்-சிலா பாறை மேல் -புன்னகை பார்த்து -இன்றே பார்த்தேன் —
அதை கேட்க்க முடியவில்லை -ராமன் வருந்த -இங்கு இறையும் அகலகில்லேன் என்று சேர்ந்தே இருந்து ரட்ஷிகிரார்கள்–

பண்டெல்லாம் வேம்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூம் கடிகை
இளம் குமரன் தன் விண்ணகர்–61-

பண்டு–முன்பு –இன்று என் மனசில் வந்து விட்டான்–அது எல்லாம் பழம் கதை–வைகுந்தம் பாற்கடல் வேம்கடம் –
இருப்பிடமாக-கடிகை தடம் குன்றின் இருந்த அக்கார கனி-கடிகாசலம்- ஒரு நாழிகை பொழுதில்  இங்கு நின்றால்  அனைத்து பாபங்கள் எரிக்க படும் —
வண்மை படைத்த பூம்  கடிகை–நரசிம்கர்-அனுபவம் ஆசை தோன்ற -ரட்ஷகமும் போக்யமும் சேர்ந்த -யுவ குமரர்–
விண்ணகர்- திரு விண்ணகரும்–தனக்கு விண்ணகரமான கீழ் சொன்னவை என்றும் கொண்டு–பண்டு என்றதால் இன்று ஆழ்வார் மனம் வந்தமை தோற்ற —
காழி சீராம விண்ணகரம்  /பரமேஸ்வர  விண்ணகரம் –அரி மேய விண்ணகரம்– நந்தி புர விண்ணகரம் –இளம் குமரன் என்பதால் திரு விண்ணகரம் –
திரு வில்லா தேவன்-ஒப்பிலாத -தன் ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்–காளை பருவத்தில் ஒப்பு இல்லை என்று சொல்வதே இங்கு ஆழ்வாருக்கு நோக்கு

விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேம்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடம் கை நீர் ஏற்றான் தாழ்வு–62

தன் குடம் கை-குவிந்த கையால்-நீர் ஏற்றான்-தாழ்வு பார்க்க இந்த திவ்ய தேசங்கள்—தாழ விட்டு கொண்ட தன்மை—
திரு விண்ணகரம்-வெக்கா வெக்கா சேது -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்- வேகவதியில் அணை- மருவி- வெக்ணை -மருவி-வெக்கா—
விசேஷணம்-விரி திரை நீர் வேம்கடம்– -இட்டதால் இந்த பாசுரம் திரு வேம்கடத்துக்கு –மண்ணகம்-பூ மண்டலத்தில் சிறப்பு பெற்ற வேளுக்கை-
ஆள் அரியாக சேவை- நரசிம்க வகுபு   ஸ்ரீமான்- அழகியான் தானே அரி உருவம் தானே–அடுத்து  தென் திரு குடந்தை —
தேனார் திரு அரங்கம்–தென் கோட்டியூர்- கோஷ்டி புரம்-எம்பெருமானார் திரு நாமம் பெற்ற திவ்ய தேசம்–
ராமானுஜ-காயத்ரி-சாவித்திரி பிரபன்னர்களுக்கு -ராமானுச நூற்று அந்தாதி- சாதுர்யமான நான்கு எழுத்துகள்-இவை-கூரத் ஆழ்வான் –
மோஷம் ஒன்றுக்கே ஹேது–வாமன மூர்த்தி சௌசீல்யம்  காடும் இந்த திவ்ய தேசங்கள் என்று அருளுகிறார்–
பின்னானாரும் வணங்கும் சோதி – -தேங்கிய மடுக்கள் போல -அர்ச்சை -ஆவரண ஜலம்-போல பரத்வம்–ஸ்ரீவைகுண்டம்–
திரு பாற்கடல்-வியூகம்–அந்தர்யாமி-பூ கத ஜலம்–அந்தர்வாகினி சரஸ்வதி போல–விபவம்-காட்டாறு போல–தீர்த்தம் பிரசாதித்து போன அவதாரங்கள்–
மண்ணை கைவிட மாட்டான்– சொவ்சீல்யத்தால்- நம்மை விட மாட்டான்

தாழ் சடையும் நீள் முடியும் ஒள  மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பின் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து–63-

சங்கர நாராயண உருவம்-அந்த குணத்தை திரு வேங்கடம் உடையான் இடம் காணலாம்– முன்பு வாமனன் காட்டிய சௌசீல்யம்
மற்ற கோவிலில் காட்டியது போல–தாழ் சடை முடி-நீள் முடி/தபஸ் பண்ணுபவன்/ தபஸ் பலன் கொடுப்பவன்–ஈச்வரேச்வரன்-சுவாமி–
மழு சக்கரம்—மழு சங்கம் இல்லை- வல கை தானே சக்கரம்–வல பகுதி பிரதானம்–ஒரு பால் உலகு அளந்த மாயவனாம் மற்றை
ஒரு பால் உமையவளாம்-காரை கால் அம்மையார்–மற்றை–அப் பிரதானம்–ஒண் மழு பிருகு முனிவரை பிள்ளையாரை வெட்டித்து–  
சக்கரம் அடியவரை ரட்ஷித்தாம்/ பொன் நாண்- சுந்தர ராஜன்-இடது காதில் ஒற்றை தோடு தொங்கும் கரு நீலமோ கரு பச்சை யாகவோ-எல்லா ராஜன்-
அரவு -ருத்ரன் இடம்–தோன்றுமால்- ஆச்சர்யம்–பேரனான சிவனுக்கு தன் உடம்பில் பாதி கொடுத்தானே -என்ன சௌசீல்யம்-சூழும் திரண்டு அருவி–
சங்கர நாராயண -சாதக சித்த உருவம்–அந்த சௌசீல்ய குணம் இங்கு காணலாம் என்கிறார்- வானத்துக்கும் வேடருக்கும் காட்டு வாசிகளுக்கும் காட்டுகிறானே-

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் என பேர்ந்து  – கார்த்த 
களம் கனிக்கு கை நீட்டும் வேம்கடமே மேல் நாள்
விளம் கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு  –68-

வரிசையாக ஆறு பாசுரங்கள்அருளி இருக்கிறார்–விலங்குகளுக்கும் அனுக்ரகம் பண்ணி இருக்கிறான் —
மலையில் மிருகங்கள் இருக்குமே–விளாம் பழம்-வச்த அசுரன்-குஞ்சித பாதனாக கன்று எரிந்து -கன்று குணிலா எரிந்து கழல் போற்றி–
பார்த்த கடுவன்-நிழலை பார்த்து -வேறு குரங்கு என்று நினைத்து -களா காய்க்கு கை நீட்டும்–இதன் பக்கம் உள்ளது தான் –
நிழல் பார்த்து கை நீட்டு கேட்கிறதாம்–நப்பாசை-சபலம்-அறியாத்தனம்-கண்ணன் -இது போல- விளாம் பழம் கொள்ள கன்று குட்டி வைத்து எறிந்தானே–

வெற்பு என்று வேம்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் மல் பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும்–69-

நாயகி பாவம் போல் இருக்கும் -இல்லை என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை– இது தான் முன்னோடி–வாசனை தான் இது–
தாய் பேச்சு போல் பாடுகிறாள்–சூடுகிறாள்-வியன் துழாய் மாலை–திரு பாற் கடலில் நீராட போகிறாள்-
பாடும்-சூடும்-புகும்-தாய் பாசுரம் போல்–முன்னும் பின்னும் இல்லை என்று –உபதேசமாக அருளுகிறார் என்கிறார்–

புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மதத் தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேம்கடவனையே
கண்டு வணங்கும் களிறு–70-

களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி
ஒளிறு மருப்பு ஓசி கையாளி பிளிறு
விழ கொன்று நின்று அதிரும் வேம்கடமே மேல் நாள்
குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று–71-

குன்றின் ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளை யாடும் தீம் கழை  போய் –வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேம்கடமே மேலை
இளம் குமரர் கோமான் இடம்–72

இடம்  வலம் ஏழ் பூண்ட   இரவி தேர் ஒட்டி 
வட முக வேம்கடத்து மன்னும் –குடம் நயந்த 
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே 
நாத் தன்னால் உள்ள நலம்–73

சார்ந்த கடு தேய்ப்ப தடாவிய கோட்டு உச்சிவாய்
ஊர்ந்து இயங்கும் வெண் மதி யின் ஒண் முயலை– சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திரு மலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொறுப்பு–75

முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்து உழுசால் பைம் தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேயம் கழை   போய் விண் திறக்கும் வேம்கடமே மேல் ஒரு நாள்
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு–89-

———————————————

14 -26–30 –32—40–45—58–61–68–69-70-71-72-73-74–75–89—ஆக -17-பாசுரங்கள்

இவனே ஸ்ரீ உலகளந்த உத்தமன்
வேம்கடத்தான் மண்ணோடு ஓங்க தான் அளந்தமன்-40-

இவனே ஸ்ரீ வராஹன்
வேம்கடமே மேல் ஒரு நாள் மண் கோட்டு கொண்டான் மலை–45-

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
வேம்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூல் கடலும் நுண் னுலா  தாமரை மேல் பால் பட்டு
இருந்தார் மனமும்  இடமாக கொண்டான் குந்து ஒசித்த கோபாலகன்–32-
வேம்கடமே மேல் நாள் விளம் கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு  –68-
வேம்கடமே மேல் நாள் குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று–71-
வேம்கடத்து மன்னும் –குடம் நயந்த  கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே  நாத் தன்னால் உள்ள நலம்–73
வேம்கடமே மேல் ஒரு நாள் தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு–89-

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்- ஸ்ரீ பூதத் ஆழ்வார் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

வேத வேதாந்த  வேதார்த்த ஸங்க்ரஹம் –திரு வேங்கடம் உடையான் இடம் ஆசை கொண்டு ஸ்வாமி  ஸ்ரீ ராமானுஜர் அருளியது –
முழங்கால் முறித்தான் -காலை வைத்து நடக்காமல்-முதலில்-பெரிய திரு மலை நம்பி-ஸ்ரீ மத்  ராமாயணம் அருளி–
மாதவனே கண் உற நிற்கிலும் –வந்து தோன்றிய அப் பொழுதே நண்ணரும் ஞானம் தலை கொண்டு நாரணர்க்கு ஆக்கினரே –
தீர்த்த கைங்கர்யம் ஆகாச கங்கையில் -நித்யம் கீழே வந்து ஸ்ரீ ராமாயணம் கொடுத்து அருளி-
படி கொண்ட கீர்த்தி  ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்  குடி கொண்ட கோவில் —
அசேஷ ..சித் அசித் வஸ்து சேஷினே  சேஷி -சேஷ சாயினி-.நிர்மல அனந்த கல்யாண நிதி –
திரு வேங்கடம் உடையானே அரங்கன்–பட்டர் கோஷ்ட்டியில்- திரு வேங்கடம்–கருவிலே திரு விலாதீர்–
திரு மங்கை ஆழ்வார்-வெருவாதாள் வாய் விரவி  வேங்கடமே வேங்கடமே என்கின்றாள் -தாய் பாசுரம்-பட்டர்-
பெண் சொன்னதை சரியாக தாயார் -கேட்க வில்லை அரங்கமே அரங்கமே என்று கேட்டதை தப்பாக சொன்னாள் என்றாராம்–
இருவரும் ஒன்றே அறியும் -என்றாராம்-இதே போல் — 9 பாசுரங்கள்- ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சர்யர் ஸ்வாமி  அருளி —

சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே விண்ணவர் தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து–25-

வந்தித்தவனை வழி நின்ற வைம் பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் உந்திப்
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி அமரர் வாழும் பதி–26-

பதி அமைத்து நாடி பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே  போன்றதே
மால் தேடி ஓடும் மனம்–27–பதி- திருப் பதி என்று கொண்டு-

கீழ் நின்ற படியை அனுசந்தித்தார் நன்றாக இருந்து நாடி

மனத்துள்ளான் வேம்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள்
மாவாய் பிளந்த மகன்–28

அன்னையாய் அத்தனாய்-அவனே நாதன்-வெங்கடேசன் விநா நாதன் இல்லை வேங்கடமே நாதன்- அநாதை யாரும் இல்லை–
அபராத சகஸ்ர பாஜனம் பதிதம் பீம-அகதிம் -சரணாகதிம் க்ருபயா கேவலம் ஆத்மா சாத் குரு- வழி அற்று கதறுதல் -அழகர்-
ஸ்ரீ ராமானுஜர் பின் பிறந்தார் சொல்ல கூடாது -கதிக்கு பதறி—வெம் கானமும் கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன்–
விநா வேங்கடேசம்  நநாதோ நநாதோ-சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி – –கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை- –
விட்டு விடாத தாய் தந்தை-ஷேம கிருஷி பலம்–பத்தி உழவன்–ஏத்தும் பொழுது உண்டே–பட்டரை வைய சால்வை போத்தி–
இதற்க்கு எனக்கு பொழுது இல்லை-குணம் சொல்லவே பொழுது இல்லை-சு தோஷ சொல்ல முடியவில்லையே-அதை பண்ணினவனுக்கு சம்பாவனை– 

ஹரே வெங்கடேச பிரசீத பிரசீத -எந்தன் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பி -இட வகை கொண்டு –
சிந்தனைக்கு இனியாய் வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என்  சிந்தைனைக்கு இனியாய்-
பிரியம் வெங்கடேச பிரயச்ச பிரயச்ச –

பர வியூக விபவ அர்ச்சை-மனத்து உள்ளான்-அந்தர்யாமி- மற்றவை சாதனம்-இது தான் சாத்தியம்-தபஸ் இருந்து இதை பெற்றானாம் –
நெருப்புக்குள் காஞ்சி– கடலில்-ஷ்ராபதி   நாதன்– மலையில் திருவேம்கடத்தான்- ஆகாசத்தில் பரம பத நாதன்-தேவாதி தேவன்-
பரன்-புரோ ஹித -நல்லதையே -நினைக்கிறவன் –இருந்த திரு கோலம்-விண் மீது இருப்பாய் -பகல் ஓலக்கம் இருந்து -பாட்டு கேட்க்கும் இடம் —
ராஜ நீதி-தர்பார்- காரியம் மந்திரித்து -ஆலோசனை–ஏகாந்தம்-திரு பார் கடல் நாதன்-கூப்பீடு கேட்க்கும் இடம்–கருப்பு உடுத்து சோதித்து —
அந்தர்யாமி-கடவுள்-கடந்து உள்ளே இருகிறவன்- -உள்ளுவார் உள்ளத்தில் எல்லாம் உடன் இருந்து அறிதி வெள்கி போய் –விலவர சிரித்திட்டேனே–
நினைவின் ஊற்று வாய் இருக்கிறானே–நினைவும் அவன் ஆதீனம்-இருந்தும் இல்லை சொல்லவும் அனுமதிக்கிறான்–
வேட்டை ஆடி-விபவம்-சிசுபாலன் ராவணன் மீனோடு -கல்கியும் ஆனான்–ஆராமமங்களில் விளை யாடும் –
அர்ச்சை–சீரார் திருவேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் –பாரோர் போற்றும் பதரி  வட மதுரை- விண் மீது இருப்பாய் –மலர் மேல் நிற்ப்பாய் –
தேவாதி தேவன்-மா கடலான் -மாவாய் பிளந்த மகன் -வேங்கடத்து உள்ளான்–மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்து உள்ளான்-மனத்து உள்ளான் —
வாசுதேவ சங்கர்ஷன பிரத்யும்ன அனிருத்னன்–அம்பச்ய பாரே-புவனச்ய மத்யே -நாகசா ச்ப்ருஷ்டே –
ஸ்ரீ ரெங்கம் -பஷ பாதி–நினைப்பரிய–விசேஷணம்-சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று சயனித்தானே–
பரம சுலபன்–கிடந்த தோர் கிடை அழகு–மாவாய் பிளந்த -நடந்த -நின்றது -வேங்கடம்- இருந்தது -தேவாதி தேவன்-
கிடந்தது அரங்கம் மா கடல் /நின்றான் இருந்தான்  கிடந்தான் நடந்தான்-நீர்மலை– இப் படி எல்லா படியிலும் இருந்து –
தபஸ் பண்ணி-மனத்துள்ளான்–புளிங்குடி கிடந்தது-காய்ச்சின வேந்தன் – வர குண மங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று -கள்ள பிரான்- –
தெளிந்த என் சிந்தை–நின்றது எந்தை  ஊரகத்து இருந்தது  எந்தை பாடகத்து  அன்று வெக்கனை கிடந்தது அன்று நான் பிறந்திலேன் –
ஞான ஜன்மம் – பிறந்த பின் மறந்திலேன்  நின்றதும்  இருந்ததும் கிடந்ததும் -என் நெஞ்சுள்ளே —
பெரிய பெருமாள் கிடக்க நம் பெருமாள் நிற்க உபய நாச்சியார்கள் இருக்க பெரிய திருவடியும் இருந்து சேவை–

நள்ளி- அலவன்-பள்ளி கமலத்துஇடை பட்ட பகுவாய்  -திரு நறையூர்-கண் சிவந்து- பூ துகள் சேர்ந்து- கண் சோர்ந்து -நள்ளி ஊடும் நறையூரே–
நினைப்பரிய நீள் அரங்கம்-நாச்சியார் பெருமையால்- -இனிது இறைத்த -பனி அரும்பு -உடல் எனக்கு உருகுமாலோ-அரவின் அணை மிசை மேய மாயனார்–
குட திசை முடியை வைத்து –சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி–கரு மணியை கோமளத்தை–மாயோனை மண தூணை பற்றி நின்று–
கேசி அசுரனை முடித்தான்-பூதனை தொடக்கம் கேசி வரை- சத்ரு சேஷம் வைக்காதவன் கண்ணன்–
சத்யம் சத்யம் புனஸ் சத்யம்–வேதாது சாஸ்திரம் பரம் நாஸ்தி -சாசனம் விதிக்கும்-ந தெய்வம் கேசவாதி பரம்–
திரு குருங்குடி-நம் பாடுவான்-கைசிக ஏகாதசி மகாத்மயம்-எக் காலத்திலும் எந்தையாய் திரு வேங்கடம் உடையவன்-கற்பூர படி ஏற்றம் சேவை திரு அரங்கத்தில்-
அரையரும்  சேர்ந்து  ஆட-கைசிக  உத்சவம்-பச்சை கற்பூரம் வாரி வீசுவார்கள்–விஜயரேங்கர் சொக்க நாதர்–சேவிக்க வந்து கிடைக்காமல்
ஒரு வருஷம் அங்கேயே இருந்து சேவித்தாராம்யுகாதி பண்டிகை ஸ்ரீ ரெங்கத்தில் நடக்கும் சிறப்பாக–

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல்  அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்து பல் கால் பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேம்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை–33

துணிந்தது சிந்தை–துணிந்தது வாய்–அங்கம் பணிந்தன -மூன்றினாலும் –துழாய் அலங்கல் அணிந்தவன்–மனசு போக துணிய–
சொரூப நிரூபகம் -துழாய் மாலை- வன மாலை-ஸ்ரீ யபதி–பூ மகளார் தனி கேள்வன் -ஸ்ரீ நிவாசன்-ரிக் வேதம் ஸ்ரிம் பீடச்த கச்ச –
அவளுக்கு பீடம் என்பதே இவன் பெயர்–கோவிந்தா சொல்லி கொண்டே மலை ஏற ஸ்வாமி பணித்தார்–
திரு வடி பட்ட துழாயை முகர்வதே மூக்கு படைத்த பயன்-குலசேகரர் முகுந்த மாலை—நாற்ற துழாய் முடி நாராயணன்–ஆண்டாள்-
அம் தண்  துழாய் கமழ்தல்- குட்ட நாட்டு திரு புலியூர் மாய பிரான்–பராங்குச நாயகி நிலை தோழி தாயார் இடம் சொல்ல-
அவன் அங்கத்தில் துழாய் அலங்கல்–வேய்-மூங்கில் சேர்ந்த தாள் வரை -பள்ள தாக்கு- விறல் வேங்கடவன்-மிடுக்கு பலம் உள்ளவன்–
அழகால் -பிறந்த பலம்–சேவை பண்ணிய பின் கட்டி போடுகிறானே-ஏ வகாரம்–அவனை தவிர எங்கும் இல்லை–
திறங்கள்- குணங்கள்–சொரூப நிரூபக தர்மம்–லஷணம் சொல்லும் குணங்கள்–அடிப்படை அடையாளங்கள் –நிரூபித சொரூப விசேஷணங்கள்–

-ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் முதல் வகை ப க வ ஆன்-அடிப்படை-இதம் துவம் இத்தம் -இது இனியது மெருகு ஊட்டுவது
சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம –நிருபிக்க பட்ட பொருளின் விசேஷணங்கள்- வாத்சல்யம் சௌசீல்யம் சௌலப்யம் ஸ்வாமித்வம் —
வாய் திறங்கள் சொல்லும் வகை- திறங்கள் பன்மை- அலர்மேல் மங்கை உறை மார்பன்-அடிப்படை–
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய்  என்னை ஆள்வானே போல்வன –தனி மா தெய்வம்-
ஏ வகாரம் மூன்றிலும் சேர்த்து கொண்டு வாயும் மனமும் அங்கமும் அவனை தவிர வேறு ஒன்றையும் பேசாமல் நினைக்காமல் வணங்காமல்-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்-நாராயணனே நமக்கே பறை தருவான்- மாம் ஏவ -மற்றை எல்லாம் ஓட்டை ஓடத்துடன் ஒழுகல் ஓடம் போல–
ஒப்பார் மிக்கார் இல்லாதவன் அவன் ஒருவனே –அவன் இடம் அவனையே கேட்டு பேரனும்- கதி திரைய மூலத்வம் அவன்–

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர் தல தனரு குஞ்சாரார் அளவரிய
வேதத்தான் வேம்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று—45

அளவரிய வேதத்தான் அவன்–ஆனந்தம்-அளக்க-ஆசிஷ்டன்-யவனம்-அசன சீலத்வம்-மனுஷ்ய ஆனந்தம்–ஆசீர்வதனபாத்திர பூதத்வம்  –
அளியல் நம் பையல் என்ன அம்மாவோ கொடியவாறே —தேவ இந்திர பிருகஸ்பதி நான்முகன்-சொல்லி -சொல்ல முடியாமல் இறங்க-
அளப்பரிய வேதத்தான்-அனந்தன்-கால தேச வஸ்து பரிச்சேத ரகிதன்–மனன் உணர் அளவிலான் பொறி உணர் அவை இலன்–
வேதத்தால்-என்றும் -அளவரிய வேதத்தால் என்றும் -அவனை சொல்லி வேதத்துக்கு பெருமை-சாஸ்திர யோநித்வாத்–
அனுமானமோ பிரத்யட்ஷ்த்தாலோ சொல்ல முடியாதவன்–வேம்கடத்தான்-இறங்கி நமக்கு சேவை-எளிமை–
யாதுமோர் நிலைமை என அறிவரிய அறிவு எளிய எம்பெருமான்–நம்மால்
தோஷம்-வ்யாப்யகத தோஷம் கிட்டாது–விண்ணோர் முடி தோயும் பாதத்தான்-என்பதால்–

உளது என்று இறுமாந்து போகாமல்-உண்டு இல்லை என்று தளர்தல் அதன் அருகிலும் சாரார் –இறுமாப்பு தான் குற்றம்-
கவலையும் இல்லை -ஐஸ்வர்யம் பற்றி முதல்//–அவனை அடைந்தவர்கள் உண்டு என்று இறுமாப்பு கொண்டு–
விச்லேஷத்தில் தளர்ந்து கொண்டு-இருக்க வேண்டும்–அபிமானம் வேண்டும்–அவனை பற்றி-
அபிமான துங்கன் செல்வனை போல -அபிமான பங்கம் -ஆண்டாள் இரண்டும் வேண்டும்–

அவனை பெற்றவருக்கு எல்லாம் புல் தானே- கண்ணன்-ருக்மிணி –அஷ்ட பூஜை கரத்தான் -அனைத்து கொண்டு- என் இடம் ஒன்றும் இல்லை/
அடியார் இடமும் ஒன்றும் இல்லை–அடைய வேண்டியது இனி ஒன்றும் இல்லை- அவாத சமஸ்த காமன்–என்னையே பெற்ற பின்
வேறு ஒன்றும் எதிர் பார்க்க மாட்டார்கள்–ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் கரு நாய் கவர்ந்த காலர் பெரு நாடு காண –
இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்—தாமே கொள்வர்- ராஜாவாக இருக்கும் பொழுது பரிசை தான் கையால் தொடாமல் ஆள் இட்டு வாங்கினான்-
பிச்சை கொள்ள ஆள் கொண்டு வாங்க முடியாதே -பெரு நாடு -ஊர் எல்லாம் பார்க்கும் படி – கருப்பு நாய்-இரவில் தான் போகிறான்-
கரு உண்ட நாய்-வெளுப்பு நாய் இருந்தால் தெரிந்து இருக்கும் -திரு நாரணன் தாள் பெற காலம் பெற சிந்தித்து இருமினோ–
தனம் மதியம் தவம் பாத பங்கஜம்-ஆளவந்தார்-பீமன்-ஹனுமான் வாலை நகற்ற முடியவில்லை தோஷம் இன்றி பெருமாள் உம் இடம் இருப்பதால்–
அல்ப அஸ்திரம் விட்டு விட்டு அவனை பற்ற– மின் நின் நிலையில மன் உயிர் ஆக்கைகள்–மின்னல் -ஐந்து வினாடி-சொல்லலாம்-
உயிர் பிரியும் நாள் சொல்ல முடியாதே -வாழ்ந்தார்கள்  வாழ்ந்து மொக் குழில்-நீர் குமிழி- புறம்  சுவர் ஓட்டை மாடம் புரளும் பொழுது அறிய மாட்டீர் —
எடுக்க எடுக்க குறையும் இந்த ஐஸ்வர்யம்–அவனை கொடுக்க கொடுக்க வளரும்–

பயின்றது அரங்கம் திருகோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேம்கடமே பன்னாள் பயின்றது
அணி திகழும் அஓலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக் கை மால்–46

தபஸ் பண்ணின இடம்-மணி திகழும்-அழகு/மாலே மணிவண்ணா -நீர் ஓட்டம் தெரியும்–வண் தடக் கை ஒவ்தார்யம்-
மால்-வியாமோகம்–அழகை கொடுக்கிறான் எனக்கு–கொடுக்க தபஸ் பண்ணுகிறான்-பயின்றது -அப்யாசம்–பண்ணினான்-
எங்கு எல்லாம்–திரு அரங்கம்-சயனித்து -திரு கோட்டியூர்- இங்கும்-  போறாது தாயார் சொல்ல -அப்புறம் திரு வேங்கடம்–
ஒரே இடத்தில் நின்று பண்ணினால் பலன் இல்லை தாயார் சொல்ல -திரு நீர் மலை- நின்றது இருந்தது கிடந்தது நடந்தது எல்லாம் இருக்கும் நீர் மலை—
சொன்னது நான்கு- அனைத்துக்கும் உப லஷணம்–மணி திகழும் மால் -இங்கு மாலே மணி வண்ணா -அப்யாசம் —
கோட்டிபுரம்-தேவர்கள் சேர்ந்த இடம்-கண்ணன் அவதரிக்க- வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்-
கூடி ஆலோசனை -மூல காரணம் இங்கு தானே– மாதவ பெருமாள்- பல நாள் பயின்றானாம்–முதல் ஜன்மாவில் பக்தி இல்லை- –
பக்குவம் ஆவதற்கு–சரணமாகும் தனது தாள் அடைந்தவர்க்கு எல்லாம்-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–மாறி மாறி பல பிறப்பும் பிறந்து —

நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிறியாது
பூம் கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேம்கடமே யாம் விரும்பும் வெற்பு–53

நெறியார் -வழியில் இருப்பவர்கள் குழல் கற்றை—சின்ன மலை என்று எண்ணி–பூம் கொடிகள் வளர -குன்று-அந்த நிலை வேண்டும்–
நெறியாய் கிடக்கும் -அனைய ஊற -பெரு மக்களும் ஆதரிப்பார்கள்–
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் –அனந்தாழ்வான் கட்டு பிரசாதம் எறும்பு -எந்த நித்யரோ என்று மீண்டும் ஏறி விட்டாரே–

வெற்பு என்று இரும் சோலை வேம்கடம் என்று இவ் இரண்டும்
நிற்ப்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்
திளம் கோயில் கை விடேல் என்று -54

தயா சதகம் -தயாம்போதி கருணை கடல் ஸ்ரீநிவாசன்–அதில் இருந்து ஓடும் தயை –பெரிய ஏரியில்  இருந்து வரும் –தாப த்ர்யத்தால்–
மடைகள் போல குரு பரம்பரை -மாதா பிதா யுவதி–குல பதி வகுளாபிராமம்-குளிர்ந்தவர்-சம்பந்தத்தால்
அணி புதுவை -தண்  தெரியல் பட்டர் பிரான்-குளிர்ந்த -வாசுதேவன் கதை கேட்டாலும் தாப த்ரயம் போகுமே-நிர்பயம்-மதகில் தீர்த்தம் —
லஷ்மி நாதன் -கடல்-ஜலதி மேகம் ஆழ்வார்-நாத முனிகள் மலையில் பொழிய- அறிவி-உய்யக் கொண்டார் மணக்கால்  நம்பி காட்டாறு-ஆளவந்தார்-
ஐந்து ஆச்சார்யர்–ஆறுகள்- ராமானுஜர் -ஏரி- 74மதகுகள் மூலம் நமக்கு -சிம்காசனாபதிகள்–ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் என்ற நெல்-
பரவாசுதேவனே சர்வம்-எங்கும் உளன் கண்ணன் என்று சொல்ல தான்–உப்பு கரிப்பு மாற்றி -ச்வாதந்த்ர்யம்-செருக்கு —
வைகாசி விசாகம் ஐந்தாம் நாள் ஒன்பது கருட சேவை தந்த குரிசில் மதுரகவி ஆழ்வார் ஹம்ச வாகனம் ஆழ்வார்–
நடை அழகு அனுஷ்டானம்-ஜலம்-ஷீரம் பிரித்து கொடுப்பார்–

பாலாலயம் –இளம் கோயில்–சக்தியை குடத்தில் ஆவாகனம் பண்ணி–பால ஆலயம்–ஆழ்வார் திரு உள்ளம் மகா ஆலயம்–
திரு வேம்கடம் போல்வன இளம் கோயில்–தென்னன் உயர் பொற்பும் -வட வேம்கடமும் -இரண்டும் முலை போல -பரம ஸ்வாமி-
சுந்தர தோள் உடையான்–உளம் கோயில்- உள்ளம் ஆகிய கோயில்- ஹிருதயம் ஆயதனம் மகத்–உள்ளினேன்–கேட்க்காமலே வந்தாய்–
வந்த பின் தடுக்காமல்-இருந்தார்-இளம் கோயில் கை விடாதே–திரு மால் இரும் சோலை மலையே- போன்ற திவ்ய தேசங்களில் —
இவன் சரீரம் ஏக தேசங்களில் பண்ணும்  –ஊழி முதல்வன் ஒரு மா நொடி பொழுதும் பிரியான்-
திரு மால் இரும் சோலை மலையே திரு  பாற் கடலே என் தலையே –இரண்டையும் சேர்த்தால் தான் ஆழ்வார் தலை–
துர்யோதனன்-விதுரன் -பீஷ்ம துரோணர் மாம் ஒருத்தனையும் விட்டாய் கிம் அர்த்தம் புண்டரீகாட்ஷா –
திரு மால் வைகுந்தமே தண் திரு வேம்கடமே என் உடலே–பணிவின் பூர்தியால் ஆழ்வார்-
ஆழ்வாரின் சரீரம் கூட ஒரு மா நொடியும் விடான்-த்யாஜ்ய தேக வியாமோகம்–அழுக்கு உடம்பும்–மங்க ஒட்டு உம் மா மாயை– 

ஞானம் பக்தி வைராக்கியம்மூன்றும் விளைந்த சரீரம் என்று — -ஞானியை விக்ரகத்தோடு ஆதரிக்கும் வேர் சூடுவார் மண்ணோடு கொள்வார்  போல –
அருள் தருவான் அமைகின்றான் அது நமதுவிதி வகையே–அங்குத்தை வாசம் சாதனம் ..இங்குத்தை வாசம் சாத்தியம்–
திரு கடி தானம்-சாத்திய -க்ருதக்ஜா கந்தம் தாய பத்தியில்- செய் நன்றி -ஏறி வந்த ஏணி உதையாமல்- திரு கடி தானமும் என் சிந்தையும் —
அங்கு நின்று இங்கு வந்தானே -தபசும் பலமும் -கல்லும் கனை கடலும் வைகுண்ட வா நாடும் புல் என்று ஒழிந்தன கோல்–
பனி கடலில்பள்ளி கோளை  பழக விட்டு  –மன கடலில் வாழ வந்தே மாய மணாளா நம்பி -தனி கடலே   தனி சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே–வாத்சல்யம்–விச்வச்ய ஆயதனம் மகத்–
அரவிந்த பாவையினோடும் தானும்  அரவத்  அமளி யினோடும்  அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை—-நெஞ்சினொடும் புள்ளை கடாகின்ற ஓசை-

போதரிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டு ஏத்தும் போது உள்ளம் போது
மணி வேம்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேம்கடவன் பேர் ஆய்ந்து–72-

குரங்குகளுக்கு –சுனை புக்கு-குளித்து -புஷ்பங்களை -முக் கரணங்களால்-எத்துகின்றனவாம்–வாதத்மஜம்–
காலையில் ராஷசிகள் பார்த்து ஹரி- சொல்ல-வால்மீகி- பாகவத சரத்தை எப்படி வந்தது–பிரம முகூர்த்தம் அறிந்து -வானரங்கள் எழுந்து –
ஸ்வாமி புஷ்கரணி ரமயா –மோதே-அலர்மேல் மங்கை தாயார் உடன் சேர்த்தியில்-ஆனந்தம் -மோத-பிரமோத- —
ஆங்கு- இடத்துக்கு சொல்–மொட்டு விட்டு /நேற்று அலர்ந்தவை விட்டு/ அப் பொழுதே அலர்ந்த புஷ்பம்//
அந்த இடத்திலே- முதலை இருக்காதே திவ்ய தேசம்- ஆங்கு இருக்கிற புஷ்பம்-இது-திரு வேம்கட சம்பந்தம் உண்டே–
மனசால் நினைந்து கையால் புஷ்பம் பாரித்து வாயால் பாடி- உள்ளமே -போது-நினைப்பாய் வேம்கடவன் பேர் ஆய்ந்து -திரு நாமம் சொல்லி/
அணி வேம்கடம்- ஜகத்துக்கு ரத்ன ஹாரம் வேங்கடவனுக்குபோது அணி- புஷ்பம் ஆபரணமாக -இது செய்தாலும் வானரம் போல் தான்

பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று
இருகண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேம்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை–75

நீல மேக சியாமளன்–ஆண் யானை பெண் யானை ஊடல்–பிடிக்கு கோபம்–சமாதானம் -மத வேழம் -உந்து மத களிற்றன்–
முன் நின்று–திரும்ப- இதுவும் திரும்பி முன் நின்று–கெஞ்சும் கண் காட்டி கொண்டு–
தத் இங்கித பராதீனம் பிராட்டி புருவ நெறிப்பை  எதிர் பார்த்து அவன் இருப்பது போல–இது தான் பிரமாணம் –ஆச்சார்யர் முன் சிஷ்யன் நிற்கிறார் போல–
மட்டை அடி பிரணய கலகம் உத்சவம் –உலகம் ஏத்தும் தென் ஆனாய்–நான்கு யானைகள்–இரு-இரண்டு கண் -இள மூங்கில் –முற்றின மூங்கில் இல்லை–
வாங்கி-பறித்து உடைத்து இல்லை–புஷ்பம் பறிப்பது போல–அருகு இருந்த தேன்–கோபத்தால் பசை அற்று வறண்டு இருக்கும் -தேன் கலந்து –நீட்டும் —
வாயில் பிழிந்து கரும்பு ரசமும் தேன் ரசமும் சேர்ந்து கொடுக்கிறதாம் -பெரும் தமிழர் அல்லேன்- முன் பாசுரம்-கற்பனை சக்தியால் சொல்லி காட்டுகிறார்–
ராமாநுச முனி வேழம்-வலி மிக்க சீயம்–ஞான பக்தி வைராக்கியம்-மூன்று மத ஜலம்– பெண் யானை- சிஷ்யர்கள்–இரு கண் —
துவய மகா மந்த்ரம்–திரு மந்த்ரம் சரம ஸ்லோகம் -வாங்கி–நீட்டும்- புரியும் படி உபதேசித்தார்–பங்குனி உத்தரம் ஊடலும் கத்ய த்ரயமும் சேர்த்து அருளுகிறார்

——————————-

25-26-27-28-33-45-46-53-54-72-75-ஆக -11-பாசுரங்கள்

சக்ரவர்த்தி திருமகன் இவன் ஒரு பாசுரம் –
சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால் கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும் வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே–25-

உலகு அளந்த உத்தமனே இவன் -ஒரு பாசுரம்
வேம்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள் மாவாய் பிளந்த மகன்-28

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூதத் ஆழ்வார்  திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்- ஸ்ரீ பொய்கையார்- -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 19, 2011

ஸ்ரீ திரு மலை மேல்  206 பாசுரங்கள்- /202 சொல்வார்–திவ்ய தேசம் பாசுரமா- நினைவு-
ஸ்ரீநிவாசன்- உறை மார்பன் போன்ற பல உண்டு-எங்கும் ஸ்ரீநிவாசன்- இருக்காது அலர்மேல் மங்கை உறை மார்பன் –
திவ்ய தேசம் வைத்தே பாசுரங்கள் உண்டு -ஒன்றும் விடாமல் விரிவாக ஆழமாக பார்ப்போம்—
அவதாரங்கள் நேராக உண்டு–விபவ அனுபவம்-திரு கண்ண மங்கை- பக்தராவி- -அரங்க மா நகர் அமர்ந்தானே –அர்ச்சை –
கோல வில்லி ராமன்–வீர ராகவன்–திவ்ய தேசம் மூலமே அனுபவிக்கிறோம் விபவங்களையும் –
-பசு போல அர்ச்சை– பால் போல விபவம்- காட்டி கொடுத்த நன்றி என்பதால் திவ்ய தேசம்–அதனால் ஏற்றம்–
இதை பகவான் கண்ணோட்டம் பார்த்தாலும்-நம்மை கை கொள்ள தானே இவன் வந்தான்- அவதாரம் பொழுது சிலரை கை கொண்டான்- இழவு தான் அதிகம்-
கீதை கேட்ட அர்ஜுனனே சரண் அடைய வில்லை -கரிஷ்யே வசனம் தவ -சந்தேகம் போனதுஎன்றான்  -சண்டை போட தான்  ஒத்து கொண்டான் —
அர்ச்சையில் இருந்து தவம் இருக்கிறான் நம்மை சேர்த்து கொள்ள –ஆதாரம் அவுனுக்கும் நமக்கும்–ஈர சொல்-

ஈர் இருபதாம்=40 சோழம்  ஈர் ஒன்பது =18  பாண்டிய /22 தொண்டை/ 13 மலையாளம் 2 நடு நாடு திரு பதிகள் 12 வட நாடு தெளி விசும்பு திரு நாடு –
அரங்க நகரே பூலோக ஸ்ரீ வைகுண்டம் –அடியார்கள் வாழ -அரங்க நகர் வாழ –மணவாள மா முனிகள் வாழ -ஆச்சார்யர்கள் வாழ்வதே இதற்க்கு பலன்–
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழனும் -கொண்டு கூட்டு பொருள்–வேருக்கு தண்ணீர் போல அரங்க நகர் வாழனும் –வேர் பற்றான திவ்ய தேசம்–
எல்லா திவ்ய தேசங்களும் -கோழியும் கூடலும் – ஒரே சொல் இருந்தாலும் –அதே ஏற்றம் தான்–அவர்பெருமை அளவு பட்டது இல்லை-
வாசாம் அகோசரம் -மொழியை கடக்கும் பெரும் புகழ்-பாட முடியாமல் உருக வைத்தான் —
கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலர்-காவேரி போல கண்ண நீர் இட்டு -பாசுர அர்த்தம் பெற்றால்–நின்றவனே கிடந்தான்-அரையர் ஐதீகம்–
ஒழிவில் காலம் -உத்தர வாக்கியம் -அகலகில்லேன் -பூர்வ வாக்கியம்-துவயம் -அகலகில்லேன்-இதற்க்கு நிகர் வேற ஒன்றும் இல்லை–
ஆழ்வார் 48/52 பாசுரங்கள்–பொய்கை ஆழ்வார் பாசுரங்கள் 10 பாசுரங்கள்-

எழுவார் விடை கொள்வார்  ஈன் துழாயானை
வழு வா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினை சுடரை நந்துவிக்கும் வேம்கடமே வானோர்
மனச் சுடரை தூண்டும் மலை————-26-

ஐஸ்வர்ய அனுபவம் கைவல்ய அனுபவம் பகவத் அனுபவம்–சுத்த சத்வ மயம் பெருமாளின் பிரசாதம்–
கண்ணார் கடல் போல் -திரு வெள்ள குளத்துள் அண்ணா -ஸ்வேத புரம்-அண்ணன் பெருமாள் -திரு வேங்கடம் உடையானுக்கு —
ஆத்மா -சித் -அசித் -ஈஸ்வர  மூன்று தத்வம்கள்–தனி கோல் செலுத்தும் -இலன் அலது உடையனது நிலன் இடை விசும்பிடை உண்டு-
உம் உயிர் வீடு உடையானை- வீட்டையும் உயரையும் வுடையவன்– ஜீவாத்மாவும் சரீரமும் உடையவன்–
அசித் உயரந்தது என்று கொண்டால் அசித் அனுபவம்- புலன்கள் அனுபவம்-ஐஸ்வர்ய அனுபவம்–
ஜீவாத்மா தான் உயர்ந்தது என்பவன்-கைவல்ய அனுபவம்–ஈச்வரனே உயர்ந்தவன் என்று தெரிந்தவன் பகவத் அனுபவம் பெறுவான்–
மூன்றையும் வேண்டுபவர் அவன் இடமே போகுவார்- போற்றி என்று எழுவர் பொருள் பெற்றதும்-மந்தி பாய் வேம்கட மா மலை போல-நாமும் வேவ் வேற
பொருளுக்கு திரு மலைக்கு போகவது போல்–உடல் இன்பம் வேண்டும் உன் இன்பம் வேண்டாம் என் இன்பம் வேண்டும் அதை நீயே கொடுக்க வேண்டும் -என்பவர்
விடை கொள்வார்-கைவல்யார்திகள்–வழுவது-நழுவுதல் இன்றி -பக்தி மார்க்கம்-வைகல்- நித்யம் -அவனையே அவன் இடம் கேட்பது–
நான்கு வகை-கீதை ஆர்தன் அர்த்தார்த்தி பிரித்து -இருந்த ஐஸ்வர்யம் இழந்து கேட்பவன் புதிதாக -அல்லது இந்த சொர்க்க லோகம் இரண்டும் கேட்பவர்/
ஞானி தான் நித்ய யுக்தன்-பிரிவது இல்லை-கூடவே இருப்பவன்-வழுவா வகை நினைந்து வைகல்  தொழுவான்–
வினை சுடரை-நந்து விக்கும் -அழிக்கும்–வேம்=எரிக்க படும் கடன்கள் -=எரிக்க படும் -இதே அர்த்தம் சமஸ்க்ருதத்திலும்–
வானோர் மனச் சுடரை தூண்டும்-நித்யரின்-சாம கானம்-பட்டர்-திரு நெடும் தாண்டகம் அருளியதும்-ஸ்ரீ வைகுண்டம் அருள-
இதே திரு கோலம் இல்லையில் கிழித்து கொண்டு வருவேன்–வைத்த அஞ்சேல் என்ற திரு கைகளும் கவித்த முடியும் ஆசன பத்மத்தில்
அழுந்திய திருவடிகளும்-வானவர் வானவர் கோன் உடன்சிந்து பூ மகிழும் -வானவர் சாந்தி செய்ய நின்றான் – -மனச் சுடரை தூண்டினான் திரு வேம்கடத்தில் – 
அங்கு பகல் விளக்கு போல் இருந்தது -தெளி விசும்பு திரு நாடு விட்டு வந்ததும் -சௌலப்யம் தயை எல்லாம் அனுபவிக்க–தூண்டி விடுகிறான்-
அவன் இடன் அவனையே கேட்டு -வினைகள் அனைத்தையும் தொலைத்து நித்யர் அனுபவம் மேல் கொடுப்பான் தயா சதகம்-தயை-பாட்டு உடை தலைவன்-
கிருபை-அருள் கருணை-இரக்கம்-பிரபத்யே வணங்கிகிறேன் மலையை–ஸ்ரீனிவாச அநுகம்பா–கம்பனம் -நடுக்கம்-நம் கஷ்டம் பார்த்து நடுங்குகிறான்  –
அவிகாராய தத்வம் –ஒரு மலை ஏழு நாள் கையில் நின்றது கோவர்த்தன மலை -இங்கு ஏழு மலை என்றும் -குன்றம் ஏந்தி குளிர் மலை காத்தவன்–
இங்கு மலைகள் அவனை தூக்கிக் கொண்டு -பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை -ஒன்றுமே தொழ-வினைகள் -கொழுத்த படும் –
சத்யம் சத்யம் -கடிகாசலம்-கடிகை தடம் -அக்கார கனி-மிக்கார் வேத விமலர் விழுங்கும்- மிக்கானை -கடிகை–நாழிகை
அசலம்-அசையாதது -ஊழி கால பாபம் தொலையும் ஒரு நாழிகை அசையாமல் அங்கு இருந்தால் –
கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம்-அது போல் வேம்கடம் -விளக்க ஸ்ரீநிவாசன்-அவள் இருப்பதால்-
இச்சு சார -கரும்பு போல அவன்-கண்ணு போல கண்ணன்-பிறந்தவாறும் வளர்ந்தவாரும் கீதை அருளியதும் ஒவ் ஒரு கண் –
பிழிந்து சாறு போல தயை–அதை கட்டி  ஆக்கி -கல்கண்டு-திரு மலை-என்றும் அனுபவிக்க-ஊழி தோறும் அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம் —

37-40 பாசுரங்களும்-வரிசையாக-

வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திண் திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேம் கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர்–37

வெண் சங்கம் ஊதிய வாய்-மால்-உகந்த ஊர்- ஆஸ்ரயிக்கும் இடம்–உபாயாந்தரங்கள்-வகை-விட்டு விட்டு-அவனை கொண்டே அவனை அடைய
ஞான யோகம்-அவிச்சினமாக இடை விடாமல் இருத்தி-சொரூபத்துக்கும் ஏற்காது யோக்யதையும் இல்லை–அ
வன் திருவடிகளே வழி என்ற ஞானம் உடையவர்கள்- யானை மேல் ஏற யானையே தூக்கி கொள்ள வைக்க சொல்வது போல–
வகை–சாதனா அந்தரம் விட்டவர்கள் –பிரயோஜனான்தரம் துரந்தவர்கள் என்றும்  –அவனாலே அவனை அடைதல்–
மற்றவர்களால் அவனையோ அவன் இடம் வேற ஒன்றையும் அடையாமல்—திசை திசையின்-எல்லா திக்குகள் இருந்தும் —
நித்யம் பாரித்து இருக்க வேண்டும்–பெரிய திரு நாளுக்கு வந்து அடையுமா போல வந்து -சேர்ந்து –
அக்ரூர ஞானம் திரு வேம்கட யாத்ரை அர்ச்சிராதி மார்க்கம் -ஞான தரிசன பிராப்தி போலே இம் மூன்றும் – பாரித்து கொண்டு இருக்க வேண்டும்–
நலம் அந்தமில் நாடு புகுவீர்–அழகார் விரசை தன்னில் குளித்து அமானவனால் ஒளி கொண்ட சோதி பெற்று –
இதன் உயர்வு நினைந்து இங்கு உள்ள குற்றம் நீங்க -பாரித்து கொண்டே இருக்க வேண்டும் -விபவத்துக்கு பிரதி நிதி தானே அர்ச்சை-
தோடு இட்ட காது போல தழும்பு தெரியும் -சகடம் உதைத்த திருவடி–சார்ங்கம் வில் பட்ட சொர சொரப்பு–சங்கம் ஒலி கேட்டதுமே மாய்ந்தார்கள்–
கழுத்தில் ஓலை கட்டி தூது நடந்தானே திரௌபதி விரித்த குழலை காண சகியாமல்–பாண்டவ தூதன் பெரிய திருமேனி–
கழல் மன்னர் சூழ -எழல் உற்று -சேவித்த உடனே எழுந்தானே-மீண்டே இருந்து-திச்சோததனை அழல விளித்தானே அச்சோ அச்சோ —
நிமித்த மாத்ரமே அர்ஜுனா நீ சண்டை போட்டால் போதும்-வெண் சங்கம் ஊதிய மால்–பித்து -ஆஸ்ரித வியாமோகம் -கொண்டவன்
ஆத்மாநாம் சாரதிம்-சர்வ லோக சாஷி-அர்ஜுனன் ரதியாக வைத்து இவன் சாரதியாக அனைவரும் பார்க்கும் படியாக-அவன் கால் தான் மேல் படும் படியாக  இருந்தானே

ஊரும் வரியரவம் ஒண் குறவர் மால் யானை
பேர் வெறிந்த பெரு மணியை கார் உடைய
மின் என்று புற்றடையும் வேம்கடமே மேல் அசுரர்
எம் என்னும்  மாலது  இடம்–38–

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா  கடலே நின்றதுவும் வேம்கடமே
பேரோத வண்ணர் பெரிது–39

பெருவில் பகழி குறவர் கை செந்தீ
வெருவி புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழ கண்டு அஞ்சும்  வேம்கடமே மேல் அசுரர்
கோன் வீழ கண்டு உகந்தான் குன்று–40

ஸ்ரீ ரெங்க   மங்கள நிதிம்  கருணா நிவாசம் -அனைத்து மங்களங்களுக்கும் இருப்பிடம் ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்–
நீர் உண்ட மேகம்–ஈர்க்கும் பார்க்கும் பொழுதே–மேக வண்ணன் முகில் வண்ணன் ஸ்வாபம் -வாரி கொடுப்பவன் —
மேகம் படியும் மலை குகடு–திரு மால் இரும்சோலை திரு கடிகை  மலை திரு வேங்கடம் -அழகு ஒவ்தார்யம்–மலை சம்பந்தத்தால் ஏற்றம்–
சகல ஜலதீ பான -சீதள காள மேகம்-ஆதிசேஷன் மலை மேல் சயனித்தான்–பட்டர்–அச்சோ ஒருவர் அழகிய வா —
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரி ஜாதம்-யானை மலை-வேழ  மலை-அத் திகிரி–ஆறு வார்த்தை கொடுத்தானே —
அஹம் ஏவ பரம் தத்வம்–நெஞ்சை தட்டி –கண்ட வாற்றால் தனதே உலகு என்று நின்றான்–
ஸ்ரிசம் நமாமி   சிரசா யது சைல தீபம் – யது சைலத்தில் ஏற்றி வைத்த தீபம்—

உணர்வார் யார் உன் பெருமை ஊழி தோறு ஊழி 
உணர்வார் ஆர் உன்  உருவம் தன்னை உணர்வார் யார்
விண்ணகத்தாய்! மண்ணகத் தாய் ! வேம்கடத்தாய்! நால் வேதம்
பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்–68

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-முன் பாசுரத்தில் சொல்லி –
தாமரை பூ சூர்யன்-நதி-போல- கடல்-ஞான விகாசம் ஏற்பட அவன் அருளையே நோக்கும்—அறிந்து முடிக்க முடியாது என்கிறார் இதில்–
தனக்கும் தான் தன்மை அறிவு அரியான்– -அறிய முடியாது என்றே அறிய முடியும் —
திரு மேனியே அறிய முடியாது –அஹம் வேத்மி ராமம் சத்ய பராக்கிரமம் -விஸ்வாமித்ரர் –

வழி நின்று நின்னை தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்தியரே யாவர் பழுது ஒன்றும்
வாராத வண்ணம் விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திரு வேங்கடமே–76

அவிச்சின்னம் -இடை யூறு இன்றி நினைவு -சினேகா பூர்வ அணு த்யானம்-பக்தி-சரவணம் மனனம் இடைவீடு இன்று நினைந்து தர்சன சமானாகாரம்-
அங்கு தான் கண்ணை திறந்து சேவை- வழி நின்று -நின்னை தொழுவார்–மூர்த்தி ஆகி விடுவார்–இயல்பு தன்னை அடைவார் -ஸ்வேன ரூபேண அபிநிஷ்பதையே  –சொரூப ஆவிர்பாவம் அடைகிறான்- மூர்த்தியர்- அபகத பாப்மா-பாபம் தீண்டாமல்- விஜரக–மூப்பு  இன்றி–விமிருத்யு -அழிவு இன்றி
விசோக – -அபி பாதக  -தண்ணீர் தாகம் இன்றி -விஜிசித்தாக –பசி இல்லை சத்ய காம  -சத்ய சங்கல்ப போன்ற எட்டு கல்யாண குணங்களும் எப் பொழுதும் உண்டு-
கௌஸ்துபம்-போல ஜீவாத்மா-ரத்னம் சேரை நீக்கி தானே ஒளி விடுமா போல -அணை திறந்தால் தண்ணீர் தானே ஓடி வருவது போல —
வழுவா வழி- வேதம் சொன்ன படி–திரு வேங்கடம் மலையே விண் கொடுக்கும்-
எம்பார்-திரு வேங்கடத்தானே கொடுப்பான் திருவேங்கடம் கொடுக்கும் சொல்லவும் வேண்டுமோ–கைமுதிக நியாயம் –
பக்தி நேராக கொடுக்காது இது அசித் –இதனால் அவன் திரு உள்ளம் உகந்து கொடுக்கிறான்-அது போல திரு மலையில் இருந்தால் அவன் உகந்து கொடுக்கிறான் —

வேம்கடமும் விண்ணகரும்  வெக்காவும் அக்காத
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் -நான் கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்–77

இடர்கள் எல்லாம் தொலையும்–அவன் நின்றான் இருந்தான் கிடந்தான் என்று நினைத்தால் நாம் கிடந்தது இருந்து பண்ணும் பாபங்கள் விலகும் /
வேங்கடத்தில் – நின்றான் விண்ணகரத்தில் -ஒப்பிலி அப்பன்-ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்–மிகு நரும் இலனே-இங்கும் நிற்கிறானே
பரம பதம் சொல்கிறார்–நடுவாக வீற்று இருக்கும் நாரணன்–
ஐந்து விண்ணகரம் காழி சீராம  விண்ணகரம் நந்தி புர விண்ணகரம்  அரிமேயவிண்ணகரம்  பரமேஸ்வர விண்ணகரம்-இருந்தானே-
வெக்காவில் கிடக்கிறான் பூம் கோவலூரில்  நடந்தான் -என்றால் -சுலபமாக சொல்ல மாட்டோம்-நெடு மர கலம் கரை சேர்ந்தால் போல-
நிதி கிடைத்தால் போல–மன சகாயம் இன்றி வாயாலே சொன்னாலே போதும் –இடர் கெடும்-
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே – நாவினால் நவிற்று-திரு மால் இரும் சோலை என்றேன் என்ன –
பரப்பு மாறாத பூம் கிடங்கு-தனி விசேஷணம்- ஆழ்வாரை ஈடு படுத்திய திவ்ய தேசம் என்று –

படியாரும் வாழ் கண்ணார் பாரசி நால் பைம் பூம்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேம்கடமே மேல் ஒரு நாள்
மான் மாய வெய்தான் வரை—82-

உளன் கண்டாய் நல நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஊர்–99-

————————————

26-37–38-39-40-68-76–77–82-99-ஆக -10-பாசுரங்கள்

ஸ்ரீ கண்ணனே இவன் -என்று இரண்டு பாசுரங்கள்
வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்–37-/
எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச  கிடந்ததுவும் நீரோத மா  கடலே நின்றதுவும் வேம்கடமே-39-

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன் -ஒரு பாசுரம்
மண்ணளந்த சீரான் திரு வேங்கடமே–76

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன் ஒரு பாசுரம் –
வேம்கடமே மேல் ஒரு நாள் மான் மாய வெய்தான் வரை—82-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பொய்கை ஆழ்வார்  திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.