Archive for the ‘திரு வேங்கடம் உடையான்’ Category

ஸ்ரீ சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய ஸ்ரீ திருப்பதி ஏழுமலை வெண்பா–

January 7, 2022

ஸ்ரீ திருப்பதி ஏழுமலை வெண்பா என்னும் இந்நூல் சிறுமணவூர் முனிசாமி முதலியாரால் இயற்றப்பட்டு,
சென்னை சூளையில் இருந்த அவரது சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் 1908ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

இந் நூலின் முகப்பில் கீழ்க் கண்ட இரு கட்டளைக் கலித்துறை பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
இப் பாடல்கள் எந்நூலைச் சார்ந்தது என்பது தெரியவில்லை.

கட்டளைக் கலித்துறை

சங்குண்டு சக்கரத் தானுண்டு பாதத் தாமரை முன்
தங்கென்று காட்டுந் தடங்கையுண் டன்புந் தயவுமுண்டு
இங்கென்று மங்கென்று முழலாமல் வேங்கடத் தையன்முன்னே
பங்குண் டெனக்கண்டு பணிவார்க் கெலாமுண்டு பாக்கியமே.

பூவிற் றிருத்துளாய் தீர்த்தமுண் டள்ளிப் புசிப்பதற்கு
நாவிற் றுதிக்க அஷ்டாட் சரமுண்டு நனவெழுந்தால்
சேவிற்க திருமலை மேலே நாராயணன் சேவையுண்டு
கோவிந்த நாமந் துணையுண்டு நெஞ்சே நமக்கே துங்குறைவிலையே.

இந்நூலில் காப்புப் பாடலாக ஒரு வெண்பா பாடலும்,
நூலைச் சார்ந்த பாடல்களாக 111 பாடல்களும் அமைந்துள்ளன.
நூலின் முதல் 68 பாடல்கள் ‘யேழு மலையே’ என முடிந்துள்ளன.

நேரிசை வெண்பா

பொருப்பா மனேகமலை பூமியெலாத் தோற்றிடினுந்
திருப்பதியைப் போலாமோ தேடுங்கால் – விருப்பமுடன்
புண்ணியத்தைச் செய்திருந்தாற் போய் மனமே நீ தொழுது
பண்ணவினை போக்கி கொளப் பார்.

நூல்

பூவிற் பெரியமலை பொன்னுலகோர் தேடுமலை
பாவிற் கிளகிப் பழுக்குமலை – மேவிய சீர்
நீதித் தழைக்குமலை நிலவுலக மத்தனைக்கும்
ஆதிமலை யேழு மலையே. 1

திருமா துலாவுமலை தேவர்குழாஞ் சூழுமலை
பெருமான் கிருபைப் பெருக்குமலை – தருமஞ்
செழிக்குமலை யன்பர் செய்தவினை யெல்லா
மொழிக்குமலை யேழு மலையே. 2

சொல்லற் கரியமலை சுரர்முனிவர் தேவர்முதற்
பல்லுயிர்க ளெல்லாம் பணியுமலை – எல்லை
யெங்கும்பிர காசமலை யெல்லாஞ்செய் வானோர்கள்
தங்குமலை யேழு மலையே. 3

பூத்தமலர் வாசம் பொருந்துமலை வானோர்கள்
காத்திருந்து நித்தங் கருதுமலை – கீர்த்தி
பரந்தமலை யன்பர் பழவினையைப் போக்கச்
சிறந்தமலை யேழு மலையே. 4

தொண்ட ரகத்திற் றுளுக்குமலை தூய்மையிலா
வண்டர்க் கிடுக்கண் வளர்க்குமலை – பண்டாம்
யுகந்தோ ரிருந்தமலை யூழ்வினையை மாற்றத்
தகுந்தமலை யேழு மலையே. 5

கோகனக மாது குலாவுமலை கோடியிலா
ஆகமங்க ளெல்லா மளக்குமலை – யோக
சித்த ரிருக்குமலை செல்வமலை சித்தஜனை
பெற்றமலை யேழு மலையே. 6

உள்ள வுலகெல்லா மோரடியாக் கண்டமலை
வெள்ளை மனத்தில் விளக்குமலை – கள்ளமிலா
ஞானமலை மோனமலை ஞானத் தபோதனருக்
கானமலை யேழு மலையே. 7

காண்டற் கரியமலை கௌரவரார் காய்ந்த
பாண்டவருக் கெல்லாம் பலித்தமலை – நீண்ட
உலகை யளந்தமலை யூடுருவி யெங்கு
மிலகுமலை யேழு மலையே. 8

செல்வ மளிக்குமலை சேணுலகங் காட்டுமலை
நல்லவருக் கெல்லாமே நல்குமலை – பொல்லா
மூர்க்கர் செருக்கை முறிக்குமலை யபயங்
கார்க்குமலை யேழு மலையே. 9

இட்டார்க் கிரங்குமலை யேதேது கேட்டாலுங்
கிட்டே நெருக்குங் கிருபைமலை – துட்டர்
குலத்தைப் பிரிந்தமலை கோவிந்தா வென்பாரைக்
கலந்தமலை யேழு மலையே. 10

வாழைக் கமுகு வளர்ந்தமலை ஞானக்
கோழைப் படாமுனிவர் கூடுமலை – ஊழை
யதற்றுமலை யன்ப ரகத்துமலை சர்வ
சுதத்துமலை யேழு மலையே. 11

பூவனங்க ளெங்கும் பூர்க்குமலை பூமலிந்த
காவனங்கள் சுற்றுங் கனிந்தமலை – தாவி
யருவி கலந்தமலை யன்பரகத்தறிவி
லிருந்தமலை யேழு மலையே. 12

குன்ற மெடுத்தமலை கோதண்டந் தாங்குமலை
அன்றரக்கர் கூட்ட மழித்தமலை – நின்று
வணங்குவார் தன்குலத்தை வாழ்த்துமலை மேலோர்க்
கிணங்குமலை யேழு மலையே, 13

கஞ்சமலர் வாவிமலை காரிருண்ட சோலைமலை
கொஞ்சுங் கிளிமயிலுங் கூவுமலை – மிஞ்சும்
கீதவொலி நாதங் கேட்குமலை சர்வஜெக
நாதமலை யேழு மலையே. 14

தப்பை முழங்குமலை தாதர்குழாஞ் சூழுமலை
யெப்போதுங் கற்பூர மேந்துமலை – கப்பணங்கள்
சரஞ்சரமாய் வந்து செலுத்துமலை மாந்தர்
நிறைந்தமலை யேழு மலையே. 15

இரும்பென்ன நெஞ்ச மிளகாத வஞ்சகரைக்
கரும்பாய் நசுக்கிக் கசக்குமலை – பெரும்பால்
அன்பாகக் கோயிலைவிட் டகலா மலையார்க்கு
மின்பமலை யேழு மலையே. 16

துளசி மணக்குமலை தூய்மனத்தா ரேறுமலை
களஞ்சியத்தி லேநிதியங் கட்டுமலை – யுளந்தான்
நொந்தார் முகத்தை நோக்குமலை செல்வந்
தந்தமலை யேழு மலையே. 17

கோவிந்தா வென்றபெருங் கோட்டம் ஜொலிக்குமலை
தாவிப் பணிந்தடியார் தங்குமலை – மேவி
என்னேரஞ் சூடமிலகுமலை யேனையோர்க்
கன்னைமலை யேழு மலையே. 18

கோபந் தணிந்து குளிர்ந்தமலை சர்வ
சாபவினை யாவுஞ் சதைக்குமலை – பாப
மெல்லா மகற்றுமலை யெல்லாச் சுகமளிக்க
வல்லமலை யேழு மலையே. 19

குங்குமமுங் களபக் குழம்பும் மிகத்திமிர்ந்த
மங்கையர்கள் வாசம் மணக்குமலை – யெங்கும்
கேசவா மாதவா கோவிந்தா வென்றிறைஞ்சி
பேசுமலை யேழு மலையே. 20

நாற்றிசையி லுள்ளோரும் நாடித் தினந்தொடர்ந்து
போற்றிப் பொருள்பணிதி போடுமலை கீர்த்தி
சிறந்தமலை தொண்டர்களாற் செய்தபிழை யெல்லா
மறந்தமலை யேழு மலையே. 21

எட்டெழுத்தா யஞ்செழுத்தா யிருமூன்று ஆறெழுத்தாய்
துட்டர் வணங்குபல தோற்றமுமாய் – மட்டில்
ஏகப் பொருளா யெழுந்தமலை யட்டாங்க
யோகமலை யேழு மலையே. 22

காலைக் கதிரோனுங் கங்குலிலே சந்திரனும்
வேலைக் குளித்துவலஞ் செய்யுமலை – மேலாம்
உம்பர் முனிவோ ருயர்மா தவத்தரெலாம்
நம்புமலை யேழு மலையே. 23

அன்பர்களை வாவென் றழைக்குமலை யன்புடையா
ரின்புற்ற தெல்லா மீயுமலை – துன்பந்
துடைக்குமலை வானோர் துதிக்குமலை வேதியனைப்
படைக்குமலை யேழு மலையே. 24

நித்த மொருக்கால் நினைப்பார் நினைப்பிலெழும்
சித்தியென்ப தெல்லாஞ் செறிக்குமலை – அத்தி
மூலமென்ற போதே முளைத்தமலை மூர்க்கர்குல
காலமலை யேழு மலையே. 25

கூறுமொழிக் கெல்லாங் கோவிந்தா வென்றிறைஞ்சிப்
பேரைக் குறித்தெவரும் பேசுமலை – சீருடைய
அன்ன முகந்தோனும் ஆடுமயிற் சேவகனும்
மன்னுமலை யேழு மலையே. 26

புவிராஜர் முப்போதும் போற்றுமலை பொய்யறியா
தவராஜ ரெப்போதுந் தங்குமலை – கவிராஜர்
பாடுமலை பாட்டில் பதித்தவர மெல்லாங்
கூடுமலை யேழு மலையே. 27

திக்குவே றில்லையெனத் திருவடியிற் சார்ந்தாரை
யக்கரையாய் வாவென் றழைக்குமலை – மிக்க
கருணை மலிந்தமலை கருதும்போ தேயுதவுந்
தருணமலை யேழு மலையே. 28

ஊழ்வினையோ ரானாலு மோடிப் பணிந்தக்காற்
றாழ்வெல்லாம் நீக்கித் தணிக்குமலை – வாழ்வென்ற
அகத்துச் சுகபோக மியாவுங் கொடுக்குமதி
மகத்துமலை யேழு மலையே. 29

மாடேறும் பிஞ்ஞகனும் மயிலேறும் பெருமாளும்
ஏடேறும் வாணிக் கினியானும் – வீடேறு
முத்தரொடு சித்தர்களும் மூவிரண்டு லோகமெலாம்
நத்துமலை யேழு மலையே. 30

ஜெனகாதி மாமுனிவோர் சேருமலை வானுலகத்
தினமாதி யெல்லா மிருக்குமலை – மனுநீதி
யோங்குமலை யுள்ளன்பா லோங்குமடி யார்குடும்பந்
தாங்குமலை யேழு மலையே. 31

பொன்மகளை மார்பினிடம் பூண்டமலை யன்பர்கடம்
மின்பப் படிக்கெல்லா மீயுமலை – தொன்மறையும்
சொல்லுமலை வேதச் சோதிமலை யாயிரத்தெட்
டெல்லைமலை யேழு மலையே. 32

சீதமலர் நாற்றஞ் செழித்தமலை யன்பருக்குப்
பாதமலர் வீடாய்ப் பலித்தமலை – மாதவர்கள்
சூழ்ந்தமலை மீனினமுஞ் சூரியனுஞ் சந்திரனுந்
தாழ்ந்தமலை யேழு மலையே. 33

பூமகளுஞ் சண்முகத்தைப் பூத்தவளும் வேதனுடை
நாமகளுஞ் சூழ்ந்து நயந்தமலை – தாமமணி
இந்திரனோ டட்டத் திசையாரும் வந்துதொழ
முந்துமலை யேழு மலையே. 34

செம்மான் றருமகளைச் சேர்ந்தசிவ சண்முகனுக்
கம்மானாய்த் தோன்றியவா னந்தமலை – பெம்மான்
மோகப் பசுங்கொடிக்கு மூத்தமலை யட்டசுக
போகமலை யேழு மலையே. 35

அஞ்ஞான மாமிருளை யகலத் துரத்திபர
மெஞ்ஞான வீட்டின்ப மீயுமலை – எஞ்ஞான்றும்
பன்னுமடி யார்மிடியைப் பற்றறவே நீக்குபசும்
பொன்னுமலை யேழு மலையே. 36

தொல்லைப் பிறவிதுயர் தூற்றுமலை துரியநிலத்
தெல்லைச் சுகமடியார்க் கீயுமலை – பல்லுயிருங்
கார்க்குமலை பக்திநெறி காப்பார் மனம்போலப்
பார்க்குமலை யேழு மலையே. 37

ஆறாத புண்புரைக ளாற்றுமருந் தானமலை
தீராத் துயரனைத்துந் தீர்க்குமலை – மாறாத
பொன்னுலக வாழ்விற் பொருத்துமலை பொன்னுலகோர்
பன்னுமலை யேழு மலையே. 38

ஈரமிலா நெஞ்சத்தாற் கிடுக்கண் ணியற்றுமலை
ஓரஞ்சொல் வார்குடும்ப மொழிக்குமலை – ஆரமலர்
சாற்றித் தொழுவார் சஞ்சலங்க ளப்போதே
மாற்றுமலை யேழு மலையே. 39

அறமென்ப தில்லா வழுக்கடைந்த கள்வர்கடம்
முறமெல்லாம் போக்கி யொடுக்குமலை – மறவாமல்
சிந்திப்பார் நோக்கமெலாஞ் சீரோங்கச் செய்யுமதி
விந்தைமலை யேழு மலையே. 40

பார்மீது வாழ்ந்துபிறர் பசியறியார் செல்வாக்கை
நீர்மே லெழுத்ததுபோல் நீற்றுமலை – யார்மீதும்
நீங்காக் கருணைமலை நீடுலக மண்டாண்ட
விந்தைமலை யேழு மலையே. 41

அண்டமெலா முந்தியிலே ஆவென்று காட்டுமலை
பண்டையுக மெத்தனையோ பார்த்தமலை – தொண்டர்
உள்ளமெனுங் கோயிலின்கண் ணோங்குமலை வைகுண்ட
வள்ளல்மலை யேழு மலையே. 42

மெய்த்தவஞ்சேர் ஞானியெலா மேவுமலை மெய்யுடனே
கைத்தவங்க ளில்லாரைக் கடியுமலை – எத்தலமும்
கொண்டாடிப் போற்றுமலை கோவிந்தா வென்றேத்து
மண்டர்மலை யேழு மலையே. 43

ஆதிசிவ னால்வரம்பெற் றகிலம் மிகநெரித்த
காதகரை யெல்லாங் கண்டித்தமலை – சோதனையில்
பத்தருக்கு முன்னிருந்து பாதுகாத் தாண்டபர
முத்திமலை யேழு மலையே. 44

அடியேன் றுயர்படுமா வாபத்துக் காலமெலாங்
கொடியபிணி நீக்கிக் கொடுத்தமலை – படியிலிப்போ
கொத்தடிமை கொண்டென் குடும்பத்தைக் கார்க்கமனம்
வைத்தமலை யேழு மலையே. 45

வேண்டித் தொழவறியா விளையாட்டுக் காலமெல்லாம்
ஆண்டதுணைத் தாதா வானமலை – தூண்டும்
குருவாகி யென்னறிவிற் குடியாகி நல்லறிவைத்
தருகுமலை யேழு மலையே. 46

மிடியைத் துலைத்துநிதி மென்மே லளித்தடியார்க்
கடிமைப் புரியவருள் செய்தமலை – கொடிய
ஊழ்வினையால் வந்தபிணி யொட்டுத் துடைத்தென்னை
வாழ்த்துமலை யேழு மலையே. 47

தஞ்சந் தஞ்சமெனத் தாள்பூட்டி வந்தவரை
யஞ்சலஞ்ச லென்றா தரிக்குமலை – கொஞ்ச
நேரத்தி லேமனனோய் நீக்கியே காத்தருளும்
பாரமலை யேழு மலையே. 48

அரிவோம் நமோநா ராயணா வென்பாருக்
குரியவர மெல்லாங் கொழிக்குமலை – பிரியமுடன்
யென்றுமஷ்ட லட்சுமியு மீஸ்வரியுஞ் சரஸ்வதியும்
நின்றமலை யேழு மலையே. 49

என்னா லுரைப்பதினி யென்னறிவே னுள்ளதெலா
முன்னா லறியா தொன்றுளதோ – பன்னாளும்
காத்ததுபோ லின்னுமெனைக் காத்தருள வென்கனவிற்
பூர்த்தமலை யேழு மலையே. 50

மாசி யிறங்குமலை மழைக்கால்க ளோடுமலை
தேசிகனார் மகிமை தெரியுமலை – வாசமலர்
மணக்குமலை யுண்டிதுகை மலைமலையாய் வந்தாலுங்
கணக்குமலை யேழு மலையே. 51

சொன்னத் துகையிலொரு செம்பு குறைந்தாலுங்
கன்னத்தி லேயடித்து கட்டவைக்கும் – அன்னவரை
திருப்ப நடத்துமலை தஞ்சமென்ற பேர்மேல்
விருப்பமலை யேழு மலையே. 52

கட்டுந் துகையிலொரு காசு குறைந்தாலும்
வட்டியுட னேதிரும்ப வாங்குமலை – எட்டுத்
திசையாரை யெல்லாந் திரளா யழைக்குமதி
வசியமலை யேழு மலையே. 53

பொன்வயிர பூஷணத்தைப் போடுவதாய் மலைக்குவந்த
பின்னால் துகைகொடுத்த பேய்மனதை – முன்னால்
உழைத்தபிணி யெல்லா முண்டாக்கி யட்சணமே
யழைத்தமலை யேழு மலையே. 54

மன்னரொடு மந்திரிமார் மகத்தாதி யானாலுஞ்
சொன்னபடி வாங்குஞ் சூட்சமலை – எந்நேரம்
தங்கங் குவியுமலை தஞ்சமென்றார் மேலாசை
பொங்குமலை யேழு மலையே. 55

நாமந் துலங்குமலை நாற்றிசையுங் கோவிந்த
நேமம் பெரியோர் நிறைந்தமலை – க்ஷேமம்
ஈயுமலை யடியா ரிடுக்கமெலாந் தீரவருட்
செய்யுமலை யேழு மலையே. 56

சங்கீத மேளஞ் சதாகோட்டஞ் செய்யுமலை
யெங்குங்கோ விந்தமய மெய்துமலை – மங்கையர்கள்
திரளா யுலாவுமலை தெய்வ மகத்துவமே
நிறைந்தமலை யேழு மலையே. 57

வடக்குமலை யென்று வழங்குமலை தென்கீழ்க்
குடதிசையோ ரெல்லாருங் கூடுமலை – யடக்கமதில்
இருந்தாரை யெல்லா மிழுக்குமலை நோய்க்கு
மருந்துமலை யேழு மலையே. 58

நிஜமா யிராப்போலே நெடுங்கதிரைத் தான் மறைத்து
விஜயனுக்கு வெற்றி விளைத்தமலை – புஜபலத்தை
நம்பி யெளியோர்மேல் நாப்புழுக்குந் துட்டருக்கு
வம்புமலை யேழு மலையே. 59

முத்திக்கு வித்தாய் முளைத்தமலை மூவுலகும்
பத்திபுரி வோர்க்குப் பலிக்குமலை – சித்தியெலாம்
மெய்யாய் விளங்குமலை மெய்யறியாப் பொய்யருக்கு
பொய்யுமலை யேழு மலையே. 60

எட்டெழுத்தாய் லோகமெலா மெங்கும் நிறைந்தமலை
துட்டருக்குத் தோற்றாத் தூரமலை – இட்டமுள
அன்ப ருளத்தி லமர்ந்தமலை யன்புடையார்க்
கின்பமலை யேழு மலையே. 61

அவ்வவ் வுலகோ ராசாரம் போல் குறிப்பு
வெவ்வே றுருவாய் விரிந்தமலை – எவ்வுயிரும்
தானாய் விளங்குமலை தாய்க்கும் பெரியதா
யானமலை யேழு மலையே. 62

வேலை வளைந்தமலை விரிகதிரும் சந்திரனைச்
சோலையிலே காட்டுஞ் சொகுசுமலை – ஆலிலைமேல்
சற்றே துயின்றளவில் சர்வவுல கத்தனையும்
பெற்றமலை யேழு மலையே. 63

மீனினங்க ளாமிருபத் தேழும் நவக்கிரகந்
தானுங் குலவித் தழுவுமலை – வானுலகிற்
றேடரிய தேவர்களும் தெய்வசபை மாதர்விளை
யாடுமலை யேழு மலையே. 64

தெய்வ மிருக்குமலை தெய்வீக மோங்குமலை
மெய்தவஞ்சேர் புங்கவர்கண் மேவுமலை – கைதவத்தை
பூண்டார்கள் சூழுமலை பூதலத்தி லேழைகுடி
யாண்டமலை யேழு மலையே. 65

எழுநிலமு மேழு மலையாய் வளர்ந்தமலை
பழுதருபொன் னாடாய்ப் படர்ந்தமலை – தழும்பேற
துதித்தார் மனத்தகத்திற் றேற்றுமலை யான்றோர்
மதித்தமலை யேழு மலையே. 66

வேதக் கொடிமுடியாய் விளங்குமலை வேதத்தின்
பாதமுத லுலகாய்ப் படர்ந்தமலை – சீதமலர்
பூணுமலை யன்பர்கள்செய் பூசைப் பலனளவே
காணுமலை யேழு மலையே. 67

பச்சைமலை பச்சைப் பவளமலை பல்லுலகும்
மொய்ச்சமலை லக்ஷ்மீ மோகமலை – யச்சமெலாம்
தீர்க்குமலை தீவினையைத் தினகரனார் முன்பனிபோல்
பேர்க்குமலை யேழு மலையே. 68

நீங்கா வுடற்பிணியை நீக்கவழி காணாமல்
வேங்கடவா யுன்னடியை வேண்டினேன் – பாங்குபெற
முற்போ தெனைக்காத்த முறைபோல் மனமிரங்கித்
தற்போதும் நீகருணை தா. 69

நாசியின் மேல் வந்தபிணி நாசப் படுத்தியுனைப்
பேசுமடி யார்புகழைப் பேசவருள் – தேசிகனே
என்போல மானிடர்முன் னேகமன மஞ்சுகிறே
னுன்பாதம் நம்பியு மீதுண்டோ. 70

பண்டிதரார்க் கற்றதெலாம்பார்த்துப் பார்த்தென்பிணியை
கண்டிக்க வாகாமல் கைவிட்டார் – எண்டிசையும்
தாவித் தொழும்பெரிய தாதாவே நீயிரங்கிப்
பாவியெனை யாதரிக்கப் பார். 71

முக்காலு முன்னடியை மெய்யாக நம்பினவ
னெக்கால முமறக்கே னுண்மையிது – தற்காலம்
அஞ்சும் படிக்கென்னை யாட்டுகிற வூழ்வினையைத்
துஞ்சும் படிச்செய் துணை. 72

ஊழ்வினையைத் தாங்காம லுள்ளுருகி நோவதிலும்
பாழ்கிணற்றில் வீழ்ந்தாலும் பண்பென்றே – தாழ்வடைந்த
என்முகத்தைப் பாராம லெங்ஙனமோ நீயிருந்தா
லுன்னைவிடப் பின்னா ருரை. 73

எள்ளுக்கு ளெண்ணையைப்போ லெங்கும் நிறைந்துளதாய்
தெள்ளுமறை யெல்லாந் திடமுரைக்க – உள்ளமதில்
என்னேர முன்றா ளிறைஞ்சுமெனைக் காராட்டாற்
பின்னாரோ தெய்வமினிப் பேசு. 74

காணுமிட மெல்லாமுன் காப்பென்றே பிரகலாதன்
தூணு மிடத்துந் துதிக்குங்கால் – ஆணவஞ்சேர்
இரணியனைத் தீர்த்ததுபோ லென்பிணியை மாற்றிதரத்
தருணமிது தற்காத் தருள். 75

பழையவடி யாரிருந்த பக்திவயி ராக்கியம்போல்
தொழவறியா வேழைமுறை தள்ளாதே – நிழலறியா
புழுப்போல் துடித்துனது பொன்னடிக்குத் தஞ்சமென்றே
னழுக்கறவே செய்வா யருள். 76

உள்ளமுட னேயெனது வூழ்வினையும் நீயறிவாய்
கள்ளனே யானாலுங் கடனுனக்கே – எள்ளளவு
உன்கருணை யென்மே லுதிக்குமே யாமாகில்
பொன்னாகு மென்னுடைய பொந்தி. 77

வயர்நிறைந்தாற் பானை வாய்மூடா னென்றசரீர்
தயவற் றளித்த தழகாமோ – நயமலிந்த
குணமுடையா தொண்டர் குலமுழுதுங் காக்கும்
மனமுடையாய் கேளென் மனு. 78

மனுவென்ப தென்னுடைய மாபிணியைத் தீர்த்துத்
தினமுன் றிருவடியைத் தொழுதேத்த – அனவரதம்
புத்தி யெனக்களிப்பாய் புகழ்மலிந்த வேங்கடவா
மற்றதைவேண் டாதென் மதி. 79

அன்ன மளித்தா யகமளித்தா யாடைபணி
பொன்னும் புகழு மிகவளித்தாய் – என்னுடம்பில்
பிணியளித்தால் – மற்றதெலாம் பாவிப்ப தெங்கேநீ
துணையிருந்து என்னேய் துலை. 80

செல்வ மகளைத் திருமார்பி லேதரித்து
வல்ல புகழ்படைத்த வேங்கடவா – தொல்லையினால்
நொந்துவந்து உன்னடியை நோக்கிச் சரணமென்றால்
எந்தவினை நிற்கும் எதிர். 81

புண்ணும் புரையுடனே பேய்பிடித்த நெஞ்சுக்கு
கண்ணுந் திரையாமா கலியுகத்தி – லென்பிழைப்பு
சொன்னால் நகையாகும் சுவாமிதிரு வேங்கடவா
என்னென் றுரைப்பே னிது. 82

தொண்டை முதுகு துடைநாசி மேல்விரணங்
கொண்டு மெலியுங் குறையெதுவோ – கண்டறிந்து
காத்தருள வேணுமையா கடவுளே – வேங்கடவா
யார்க்குரைப்பேன் சொல்வா யறி. 83

அரியுஞ் சிவனு மகிலபுவ னம்படைக்கும்
பெரியவிதி யும்முருகப் பெம்மானும் – பிரிவாகும்
அறுசமய தேவதையு மாயிரத்தெட் டண்டமெலாம்
நிறைந்ததுநீ தானே ஹரி. 84

பொய்வழியாற் சேகரித்த பொருளின்வினி யோகமெலாம்
மெய்வழியிற் சேர்க்காமல் மெய்குலைந்தேன் – உய்யும்வழி
காட்டிக் கொடுப்பதுஉன் கடமைதிரு வேங்கடவா
நாட்டினில் வேறேது நதி. 85

உன்னைப் பணிந்தார்க்கு வூழேது தாழ்வேது
பின்னை கிரகப் பிரட்டேது – பன்னலமும்
கூடுமென்றே கீதையெலாங் கூவுதலால் வேங்கடவா
தேடினே னென்மதியைத் தேற்று. 86

கள்ளக் கலிமதியால் காலமெலாம் நாயடியேன்
உள்ளத்தை யுன்பா லொடுக்காமற் – பள்ளத்தில்
வீழ்ந்தகஜம் போலே விம்முகிறேன் வேங்கடவா
தாழ்வகல நீகருணை தா. 87

ஆசைப் பெருக்கா லறிவுகெட்டு நின்புகழைப்
பேசாத தாலல்லோ பாழானேன் – தேசத்தார்
முன்செல்ல வென்றால் மெலியுதையோ வேங்கடவா
என்செய்வே னென்னோ யெடு. 88

உலகபோ கத்திற் குரித்தான காலமதில்
தலைவிதிதா நிப்படியுந் தானுண்டோ – நிலமனைத்தும்
பாதத்தி னாலளந்த பாரமலை வேங்கடவா
சோதித்து நீதா சுகம். 89

பாழும் பிரமனவன் படித்தபடிப் பென்னாவோ
ஊழை யொருக்காலே யூட்டுவனா – ஆழிதுயில்
கொண்டப்போ துந்திவழி கோகனத்தில் வந்தவனை
தண்டித் தெனைக்காத் தருள். 90

உன்மகிமை கேட்க வுளநடுங்கு தாகையினால்
யின்னுமுனை மறக்க வெண்ணுவனோ – மன்னர்முதல்
அஞ்சிப் பணியுமெந்த னாண்டவனே வேங்கடவா
கொஞ்சங் கருணை கொடு. 91

பூவி லயனைப் பெற்றெடுத்த தாதாநீ
பாவியென் றென்னைப்பா ராட்டாதே – தேவியொடு
சொற்பனத்தில் வந்த சொந்தம்போற் சோதித்து
அற்பவினை தீர்த்தா தரி. 92

என்கொடுமை யத்தனையு மெழுதப் பொழுதுண்டோ
உன்னடிமை யென்றே யுரைப்பதலால் – பின்னொன்றும்
பேசவறி யேனுலகிற் பெரியமலை வேங்கடவா
தாசரைப்போ லென்னையுமே தற்கார். 93

தற்கார்க்க வேணுமென்று தஞ்ச மபயமென்று
முக்கால் வலமாகி முன்னின்றேன் – மிக்காக
என்னபிழை செய்தாலு மெல்லாம் பொறுத்தருளி
ஜென்மவினை தீரவருட் செய். 94

ஆணதிலும் பெண்ணதிலு மடியேனைப் போல்கொடியோர்
காணவரி தென்றேநீ கண்டாலும் – வீணாக
தள்ளாதே யென்னபயந் தங்கமலை வேங்கடவா
கொள்ளாதே யென்மீது கோபம். 95

உந்தனுக்குக் கோப முண்டானா லுன்னெதிரே
வந்து தணிக்கவழி யார்க்காகும் – சந்ததமும்
சேய்பிழைக ளெத்தனைதான் செய்தாலு மீன்றெடுத்த
தாய்பொறுக்க வல்லோ தகும். 96

இத்தனைநாள் நினைக்கவிலை யென்றெண்ணி யுன்மனதில்
வைத்து வருமம் வளர்த்தாதே – மெத்தவுநான்
நொந்தேன் மெலிந்தே னோக்கிவந்தேன் கோவிந்தா
சந்ததமு முன்றாள் சரண். 97

கோவிந்த நாமம் கோருமடி யாருக்குப்
பாவந் துலையும் பதங்கிடைக்கும் – ஆவலெலாம்
கைக்கூடும் பிணியகலும் காளையிளந் தேகம்போல்
மெய்க்கூடும் மெய்யா மிது. 98

அலமேலு மங்கைக்கு ஆசைமண வாளா
உலகமிரண் டேழுக்கு மொருதகப்பா – நிலமதனில்
என்குறைக ளெல்லா மிணையடியி லொப்புவித்தேன்
பன்னலமுங் கூடவருட் பண். 99

குற்றங் குறைபலவாக் கோடிபிழை செய்தாலும்
முற்றும் பொறுத்து முகங்கொடுத்து – சற்றேநீ
கருணை பொழிந்தென் கருமப் பிணிநீக்கி
பொருளும் புகழும் பொழி. 100

ஆண்டுக் கொருக்கா லடியேன் திருமலையை
வேண்டித் தொழவரமும் வேண்டுமெனக் – காண்டவனே
செய்தொழிலும் சீவனமும் சீராய் செழித்துதினம்
கைதவமு மோங்கிவரக் கார். 101

துளபமணி மார்பா துவாரகையில் வாழ்முகுந்தா
களபமுலை யலர்மேற் கண்ணாளா – வளமலிந்த
வடக்குமலை கோவிந்தா வடிமைநெடு நாட்பட்ட
யிடுக்கமெடுத் தே யெரி. 102

வாத வலியும் வளர்மெகப் புண்புரையும்
சீத விரணத்தின் சங்கடமும் – ஆதவனை
கண்டபனி போலே கடிகையிலே மாற்றியுந்தன்
தொண்டாந் தொழிலெனக்குத் தா. 103

வைப்பா சூனியமா வல்லதுமுன் னூழ்வினையா
இப்பிறப்பி லேதேனுஞ் செய்தேனா – எப்போதான்
துலையுமிது வேங்கடவா தூரரியக் கூடலையே
யலையுகின்ற வேழைநெஞ்சை யாற்று. 104

பெற்ற அப்பா பெரியப்பா என்விதிக்கு
மற்றாரைப் போயடுத்து மல்லிடுவேன் – கற்றதெல்லாம்
சொல்லி யபயமிட்டுச் சூழ்ந்தேனே யுன்மனது
கல்லா யிருந்தாலுங் கரை. 105

உண்டு உடுத்தி யுலகத்தாற் போற்சுகத்தை
கண்டு களிக்காமற் காலமெலாம் – பண்டைவினை
பட்டு மெலியவா பெற்றெடுத்தாய் வேங்கடவா
கெட்டதெலாம் போதுமினிக் கார். 106

முன்னால் முறைபேசி முகமறைந்த தட்சணமே
பின்னால் கெடுநினைக்கும் பேயர்களை – யுன்னுடைய
சக்கரத்தி னாற்சிதைத்து சத்துருவைப் பாழாக்கி
துக்கமறச் செய்வாய் துணை. 107

வஞ்ச நெஞ்சத் தீயரெலாம் வந்துவந்து என்பிழைப்பை
கொஞ்சமுள வறிந்து கொண்டவுடன் – அஞ்சாமல்
மோசக் கருத்தால் முறைபிறழும் பாவிகளை
நாசப் படுத்தமுயல் நாதா. 108

தேடவைத்தாய் நின்னடியைத் தேடுந் திறமைதந்து
பாடவைத்தா யுள்ளந் தனிற்பதிந்து – ஆடலெலாம்
தீரவைத்தாய் பிணிமுதலாய் தீர்த்து சகலசுகம்
சேரவைத்தா யுன்றன் செயல். 109

ஆத்திரத்தி னாலே யடியே னுரைத்ததெலாம்
தோத்திரமாய்க் கொண்டு துணைபுரிந்து – பாத்திரமாய்
என்பிணியெல் லாங்களைந்து ஏழைகுடி காப்பாற்ற
லுன்கடமை யீதொன்றே யுண்மை. 110

அறிவில்லாச் சேயுரைத்த ஆசைவெண்பா நூற்றிபத்தும்
பொருளல்ல வானாலும் பூண்டருளித் – தெருளுடைய
முத்த ருரைத்தபழ மெய்த்துதிபோ லாதரித்து
பத்தியெனக் குதயம் பண். 111

ஏழுமலை வெண்பா முற்றுப்பெற்றது

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் -ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி -ஸ்ரீ வேங்கடேச மங்களம் —

January 2, 2022

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி,
ஸ்வாமி ஸ்ரீ இராமானுசரின் மறு அவதாரம் என்று வைணவர்களால் போற்றப்படுகின்ற ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆணைப்படி
ஸ்ரீ திருமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் ஸ்ரீ காஞ்சிபுரத்தைச் சேர்ந்த
ஸ்ரீ ஹஸ்தி கிரி அண்ணா -ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமியால் இயற்றப்பட்டது.

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களம் (14 பாடல்கள்) ஆகிய
நான்கு பகுதிகளை உள்ளடக்கியதே “ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்” ஆகும்.

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர்ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாநஹிகம்–1-

உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்த தரை லோக்யம் மங்களம் குரு –2-

மாதஸ் ஸூதாபல லதே மஹ நீய சீல வஷோ விஹார ரஸிகே ந்ருஹரேரஜஸ்ரம்
ஷீராம் புராஸி தநயே ஸ்ரித கல்ப வல்லி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ தயிதே தவ ஸூ ப்ரபாதம்–3-

தவ ஸுப்ரபா4தமரவிந்த3 லோசநே
ப4வது ப்ரஸந்நமுக2 சந்த்3ரமண்ட3லே |
விதி4 ஶஂகரேந்த்3ர வநிதாபி4ரர்சிதே
வ்ருஶ ஶைலநாத2 த3யிதே த3யாநிதே4 ‖ 4 ‖

அத்ர்யாதி3 ஸப்த ருஷயஸ்ஸமுபாஸ்ய ஸந்த்4யாம்
ஆகாஶ ஸிந்து4 கமலாநி மநோஹராணி |
ஆதா3ய பாத3யுக3 மர்சயிதும் ப்ரபந்நாஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 5 ‖

பஂசாநநாப்3ஜ ப4வ ஷண்முக2 வாஸவாத்3யாஃ
த்ரைவிக்ரமாதி3 சரிதம் விபு3தா4ஃ ஸ்துவந்தி |
பா4ஷாபதிஃ பட2தி வாஸர ஶுத்3தி4 மாராத்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 6 ‖

ஈஶத்-ப்ரபு2ல்ல ஸரஸீருஹ நாரிகேல்த3
பூக3த்3ருமாதி3 ஸுமநோஹர பாலிகாநாம் |
ஆவாதி மந்த3மநிலஃ ஸஹதி3வ்ய க3ந்தை4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 7 ‖

உந்மீல்யநேத்ர யுக3முத்தம பஂஜரஸ்தா2ஃ
பாத்ராவஸிஷ்ட கத3லீ ப2ல பாயஸாநி |
பு4க்த்வாஃ ஸலீல மத2கேல்தி3 ஶுகாஃ பட2ந்தி
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 8 ‖

தந்த்ரீ ப்ரகர்ஷ மது4ர ஸ்வநயா விபஂச்யா
கா3யத்யநந்த சரிதம் தவ நாரதோ3பி |
பா4ஷா ஸமக்3ர மஸத்-க்ருதசாரு ரம்யம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 9 ‖

ப்4ருங்கா3வல்தீ3 ச மகரந்த3 ரஸாநு வித்3த4
ஜு2ஂகாரகீ3த நிநதை3ஃ ஸஹஸேவநாய |
நிர்யாத்யுபாந்த ஸரஸீ கமலோத3ரேப்4யஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 1௦ ‖

யோஷாக3ணேந வரத3த்4நி விமத்2யமாநே
க்4ஷாலயேஷு த3தி4மந்த2ந தீவ்ரக்4ஷாஃ |
ரோஷாத்கலிம் வித3த4தே ககுப4ஶ்ச கும்பா4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 11 ‖

பத்3மேஶமித்ர ஶதபத்ர க3தால்தி3வர்கா3ஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய நிஜாங்க3லக்ஷ்ம்யாஃ |
பே4ரீ நிநாத3மிவ பி4ப்4ரதி தீவ்ரநாத3ம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 12 ‖

ஶ்ரீமந்நபீ4ஷ்ட வரதா3கி2ல லோக ப3ந்தோ4
ஶ்ரீ ஶ்ரீநிவாஸ ஜக3தே3க த3யைக ஸிந்தோ4 |
ஶ்ரீ தே3வதா க்3ருஹ பு4ஜாந்தர தி3வ்யமூர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 13 ‖

ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ நிர்மலாங்கா3ஃ
ஶ்ரேயார்தி2நோ ஹரவிரிஂசி ஸநந்த3நாத்3யாஃ |
த்3வாரே வஸந்தி வரநேத்ர ஹதோத்த மாங்கா3ஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 14 ‖

ஶ்ரீ ஶேஷஶைல க3ருடா3சல வேஂகடாத்3ரி
நாராயணாத்3ரி வ்ருஷபா4த்3ரி வ்ருஷாத்3ரி முக்2யாம் |
ஆக்2யாம் த்வதீ3ய வஸதே ரநிஶம் வத3ந்தி
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 15 ‖

ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்ருஶாநுத4ர்ம
ரக்ஷோம்பு3நாத2 பவமாந த4நாதி4 நாதா2ஃ |
ப3த்3தா4ஂஜலி ப்ரவிலஸந்நிஜ ஶீர்ஷதே3ஶாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 16 ‖

தா4டீஷு தே விஹக3ராஜ ம்ருகா3தி4ராஜ
நாகா3தி4ராஜ கஜ3ராஜ ஹயாதி4ராஜாஃ |
ஸ்வஸ்வாதி4கார மஹிமாதி4க மர்த2யந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 17 ‖

ஸூர்யேந்து3 பௌ4ம பு3த4வாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பா4நுகேது தி3விஶத்-பரிஶத்-ப்ரதா4நாஃ |
த்வத்3தா3ஸதா3ஸ சரமாவதி4 தா3ஸதா3ஸாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 18 ‖

தத்-பாத3தூ4ல்தி3 ப4ரித ஸ்பு2ரிதோத்தமாங்கா3ஃ
ஸ்வர்கா3பவர்க3 நிரபேக்ஷ நிஜாந்தரங்கா3ஃ |
கல்பாக3மா கலநயாகுலதாம் லப4ந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 19 ‖

த்வத்3கோ3புராக்3ர ஶிக2ராணி நிரீக்ஷமாணாஃ
ஸ்வர்கா3பவர்க3 பத3வீம் பரமாம் ஶ்ரயந்தஃ |
மர்த்யா மநுஷ்ய பு4வநே மதிமாஶ்ரயந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 2௦ ‖

ஶ்ரீ பூ4மிநாயக த3யாதி3 கு3ணாம்ருதாப்3தே3
தே3வாதி3தே3வ ஜக3தே3க ஶரண்யமூர்தே |
ஶ்ரீமந்நநந்த க3ருடா3தி3பி4 ரர்சிதாங்கே4
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 21 ‖

ஶ்ரீ பத்3மநாப4 புருஷோத்தம வாஸுதே3வ
வைகுண்ட2 மாத4வ ஜநார்த4ந சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ந ஶரணாக3த பாரிஜாத
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 22 ‖

கந்த3ர்ப த3ர்ப ஹர ஸுந்த3ர தி3வ்ய மூர்தே
காந்தா குசாம்பு3ருஹ குட்மல லோலத்3ருஷ்டே |
கல்யாண நிர்மல கு3ணாகர தி3வ்யகீர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 23 ‖

மீநாக்ருதே கமட2கோல ந்ருஸிம்ஹ வர்ணிந்
ஸ்வாமிந் பரஶ்வத2 தபோத4ந ராமசந்த்3ர |
ஶேஷாம்ஶராம யது3நந்த3ந கல்கிரூப
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 24 ‖

ஏலாலவங்க3 க்4நஸார ஸுக3ந்தி4 தீர்த2ம்
தி3வ்யம் வியத்ஸரிது ஹேமக்4டேஷு பூர்ணம் |
த்4ருத்வாத்3ய வைதி3க ஶிகா2மணயஃ ப்ரஹ்ருஷ்டாஃ
திஷ்ட2ந்தி வேஂகடபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 25 ‖

பா4ஸ்வாநுதே3தி விகசாநி ஸரோருஹாணி
ஸம்பூரயந்தி நிநதை3ஃ ககுபோ4 விஹங்கா3ஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தி2த மங்க3ல்தா3ஸ்தே
தா4மாஶ்ரயந்தி தவ வேஂகட ஸுப்ரபா4தம் ‖ 26 ‖

ப்3ரஹ்மாத3யா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸந்தஸ்ஸநந்த3ந முகா2ஸ்த்வத2 யோகி3வர்யாஃ |
தா4மாந்திகே தவ ஹி மங்க3ல்த3 வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 27 ‖

லக்ஶ்மீநிவாஸ நிரவத்3ய கு3ணைக ஸிந்தோ4
ஸம்ஸாரஸாக3ர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதா3ந்த வேத்3ய நிஜவைப4வ ப4க்த போ4க்3ய
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 28 ‖

இத்த2ம் வ்ருஷாசலபதேரிஹ ஸுப்ரபா4தம்
யே மாநவாஃ ப்ரதிதி3நம் படி2தும் ப்ரவ்ருத்தாஃ |
தேஷாம் ப்ரபா4த ஸமயே ஸ்ம்ருதிரங்க3பா4ஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த2 ஸுலபா4ம் பரமாம் ப்ரஸூதே ‖ 29 ‖

———-

வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–1-

எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–2-

போர்புரிந்து மதுகைடைர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–3-

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–4-

தொலைவிடத்தும் பலவிடத்தும் கழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு றின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–5-

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்–6-

நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல் வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–7-

நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்–8-

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து உம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்.
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்-9-

வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்–10-

தனதனங்கள் நிமர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்–11

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்–12-

வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய்–13-

மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோனேரி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–14-

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர் காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–15-

அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்
நின் திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்–16-

திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பும் (உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்–17-

சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–18-

நின் முக்தி விழையால் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–19-

எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்தி பெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்–20-

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்–21-

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்–22-

திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–23-

24. மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–24-

ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–25-

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்–26-

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்–27-

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய்–28-

விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–29-

———-

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர்ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாநஹிகம்–1-

வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–1-

உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்த தரை லோக்யம் மங்களம் குரு –2-

எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–2-

மாதஸ் ஸூதாபல லதே மஹ நீய சீல வஷோ விஹார ரஸிகே ந்ருஹரேரஜஸ்ரம்
ஷீராம் புராஸி தநயே ஸ்ரித கல்ப வல்லி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ தயிதே தவ ஸூ ப்ரபாதம்–3-

போர்புரிந்து மதுகைடைர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–3-

தவ ஸுப்ரபா4தமரவிந்த3 லோசநே
ப4வது ப்ரஸந்நமுக2 சந்த்3ரமண்ட3லே |
விதி4 ஶஂகரேந்த்3ர வநிதாபி4ரர்சிதே
வ்ருஶ ஶைலநாத2 த3யிதே த3யாநிதே4 ‖ 4 ‖

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–4-

அத்ர்யாதி3 ஸப்த ருஷயஸ்ஸமுபாஸ்ய ஸந்த்4யாம்
ஆகாஶ ஸிந்து4 கமலாநி மநோஹராணி |
ஆதா3ய பாத3யுக3 மர்சயிதும் ப்ரபந்நாஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 5 ‖

தொலைவிடத்தும் பலவிடத்தும் கழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு றின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–5-

பஂசாநநாப்3ஜ ப4வ ஷண்முக2 வாஸவாத்3யாஃ
த்ரைவிக்ரமாதி3 சரிதம் விபு3தா4ஃ ஸ்துவந்தி |
பா4ஷாபதிஃ பட2தி வாஸர ஶுத்3தி4 மாராத்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 6 ‖

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்–6-

ஈஶத்-ப்ரபு2ல்ல ஸரஸீருஹ நாரிகேல்த3
பூக3த்3ருமாதி3 ஸுமநோஹர பாலிகாநாம் |
ஆவாதி மந்த3மநிலஃ ஸஹதி3வ்ய க3ந்தை4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 7 ‖

நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல் வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–7-

உந்மீல்யநேத்ர யுக3முத்தம பஂஜரஸ்தா2ஃ
பாத்ராவஸிஷ்ட கத3லீ ப2ல பாயஸாநி |
பு4க்த்வாஃ ஸலீல மத2கேல்தி3 ஶுகாஃ பட2ந்தி
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 8 ‖

நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மது4ர ஸ்வநயா விபஂச்யா
கா3யத்யநந்த சரிதம் தவ நாரதோ3பி |
பா4ஷா ஸமக்3ர மஸத்-க்ருதசாரு ரம்யம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 9 ‖

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து உம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்.
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்-9-

ப்4ருங்கா3வல்தீ3 ச மகரந்த3 ரஸாநு வித்3த4
ஜு2ஂகாரகீ3த நிநதை3ஃ ஸஹஸேவநாய |
நிர்யாத்யுபாந்த ஸரஸீ கமலோத3ரேப்4யஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 1௦ ‖

வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்–10-

யோஷாக3ணேந வரத3த்4நி விமத்2யமாநே
க்4ஷாலயேஷு த3தி4மந்த2ந தீவ்ரக்4ஷாஃ |
ரோஷாத்கலிம் வித3த4தே ககுப4ஶ்ச கும்பா4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 11 ‖

தனதனங்கள் நிமர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்–11

பத்3மேஶமித்ர ஶதபத்ர க3தால்தி3வர்கா3ஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய நிஜாங்க3லக்ஷ்ம்யாஃ |
பே4ரீ நிநாத3மிவ பி4ப்4ரதி தீவ்ரநாத3ம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 12 ‖

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்–12-

ஶ்ரீமந்நபீ4ஷ்ட வரதா3கி2ல லோக ப3ந்தோ4
ஶ்ரீ ஶ்ரீநிவாஸ ஜக3தே3க த3யைக ஸிந்தோ4 |
ஶ்ரீ தே3வதா க்3ருஹ பு4ஜாந்தர தி3வ்யமூர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 13 ‖

வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய்–13-

ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ நிர்மலாங்கா3ஃ
ஶ்ரேயார்தி2நோ ஹரவிரிஂசி ஸநந்த3நாத்3யாஃ |
த்3வாரே வஸந்தி வரநேத்ர ஹதோத்த மாங்கா3ஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 14 ‖

மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோனேரி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–14-

ஶ்ரீ ஶேஷஶைல க3ருடா3சல வேஂகடாத்3ரி
நாராயணாத்3ரி வ்ருஷபா4த்3ரி வ்ருஷாத்3ரி முக்2யாம் |
ஆக்2யாம் த்வதீ3ய வஸதே ரநிஶம் வத3ந்தி
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 15 ‖

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர் காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–15-

ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்ருஶாநுத4ர்ம
ரக்ஷோம்பு3நாத2 பவமாந த4நாதி4 நாதா2ஃ |
ப3த்3தா4ஂஜலி ப்ரவிலஸந்நிஜ ஶீர்ஷதே3ஶாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 16 ‖

அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்
நின் திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்–16-

தா4டீஷு தே விஹக3ராஜ ம்ருகா3தி4ராஜ
நாகா3தி4ராஜ கஜ3ராஜ ஹயாதி4ராஜாஃ |
ஸ்வஸ்வாதி4கார மஹிமாதி4க மர்த2யந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 17 ‖

திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பும் (உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்–17-

ஸூர்யேந்து3 பௌ4ம பு3த4வாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பா4நுகேது தி3விஶத்-பரிஶத்-ப்ரதா4நாஃ |
த்வத்3தா3ஸதா3ஸ சரமாவதி4 தா3ஸதா3ஸாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 18 ‖

சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–18-

தத்-பாத3தூ4ல்தி3 ப4ரித ஸ்பு2ரிதோத்தமாங்கா3ஃ
ஸ்வர்கா3பவர்க3 நிரபேக்ஷ நிஜாந்தரங்கா3ஃ |
கல்பாக3மா கலநயாகுலதாம் லப4ந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 19 ‖

நின் முக்தி விழையால் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–19-

த்வத்3கோ3புராக்3ர ஶிக2ராணி நிரீக்ஷமாணாஃ
ஸ்வர்கா3பவர்க3 பத3வீம் பரமாம் ஶ்ரயந்தஃ |
மர்த்யா மநுஷ்ய பு4வநே மதிமாஶ்ரயந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 2௦ ‖

எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்தி பெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்–20-

ஶ்ரீ பூ4மிநாயக த3யாதி3 கு3ணாம்ருதாப்3தே3
தே3வாதி3தே3வ ஜக3தே3க ஶரண்யமூர்தே |
ஶ்ரீமந்நநந்த க3ருடா3தி3பி4 ரர்சிதாங்கே4
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 21 ‖

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்–21-

ஶ்ரீ பத்3மநாப4 புருஷோத்தம வாஸுதே3வ
வைகுண்ட2 மாத4வ ஜநார்த4ந சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ந ஶரணாக3த பாரிஜாத
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 22 ‖

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்–22-

கந்த3ர்ப த3ர்ப ஹர ஸுந்த3ர தி3வ்ய மூர்தே
காந்தா குசாம்பு3ருஹ குட்மல லோலத்3ருஷ்டே |
கல்யாண நிர்மல கு3ணாகர தி3வ்யகீர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 23 ‖

திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–23-

மீநாக்ருதே கமட2கோல ந்ருஸிம்ஹ வர்ணிந்
ஸ்வாமிந் பரஶ்வத2 தபோத4ந ராமசந்த்3ர |
ஶேஷாம்ஶராம யது3நந்த3ந கல்கிரூப
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 24 ‖

மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–

ஏலாலவங்க3 க்4நஸார ஸுக3ந்தி4 தீர்த2ம்
தி3வ்யம் வியத்ஸரிது ஹேமக்4டேஷு பூர்ணம் |
த்4ருத்வாத்3ய வைதி3க ஶிகா2மணயஃ ப்ரஹ்ருஷ்டாஃ
திஷ்ட2ந்தி வேஂகடபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 25 ‖

ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–25-

பா4ஸ்வாநுதே3தி விகசாநி ஸரோருஹாணி
ஸம்பூரயந்தி நிநதை3ஃ ககுபோ4 விஹங்கா3ஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தி2த மங்க3ல்தா3ஸ்தே
தா4மாஶ்ரயந்தி தவ வேஂகட ஸுப்ரபா4தம் ‖ 26 ‖

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்–26-

ப்3ரஹ்மாத3யா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸந்தஸ்ஸநந்த3ந முகா2ஸ்த்வத2 யோகி3வர்யாஃ |
தா4மாந்திகே தவ ஹி மங்க3ல்த3 வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 27 ‖

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்–27-

லக்ஶ்மீநிவாஸ நிரவத்3ய கு3ணைக ஸிந்தோ4
ஸம்ஸாரஸாக3ர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதா3ந்த வேத்3ய நிஜவைப4வ ப4க்த போ4க்3ய
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 28 ‖

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய்–28-

இத்தம் வ்ருஷாசலபதேரிஹ ஸுப்ரபா4தம்
யே மாநவாஃ ப்ரதிதி3நம் படி2தும் ப்ரவ்ருத்தாஃ |
தேஷாம் ப்ரபா4த ஸமயே ஸ்ம்ருதிரங்க3பா4ஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த2 ஸுலபா4ம் பரமாம் ப்ரஸூதே ‖ 29 ‖

விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–29-

——–

ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்ரம்

கமலா குச சூசுக குங்குமதோ
நியதாருணிதாதுலநீலதநோ ।
கமலாயதலோசந லோகபதே
விஜயீப⁴வ வேங்கடஶைலபதே ॥ 1 ॥

ஸசதுர்முக²ஷண்முக²பஞ்சமுக²
ப்ரமுகா²கி²லதை³வதமௌளிமணே ।
ஶரணாக³தவத்ஸல ஸாரநிதே⁴
பரிபாலய மாம் வ்ருஷஶைலபதே ॥ 2 ॥

அதிவேலதயா தவ து³ர்விஷஹை-
ரநுவேலக்ருதைரபராத⁴ஶதை꞉ ।
ப⁴ரிதம் த்வரிதம் வ்ருஷஶைலபதே
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே ॥ 3 ॥

அதி⁴வேங்கடஶைலமுதா³ரமதே-
-ர்ஜநதாபி⁴மதாதி⁴கதா³நரதாத் ।
பரதே³வதயா க³தி³தாந்நிக³மை꞉
கமலாத³யிதாந்ந பரம் கலயே ॥ 4 ॥

கலவேணுரவாவஶகோ³பவதூ⁴-
-ஶதகோடிவ்ருதாத்ஸ்மரகோடிஸமாத் ।
ப்ரதிவல்லவிகாபி⁴மதாத்ஸுக²தா³த்
வஸுதே³வஸுதாந்ந பரம் கலயே ॥ 5 ॥

அபி⁴ராமகு³ணாகர தா³ஶரதே²
ஜக³தே³கத⁴நுர்த⁴ர தீ⁴ரமதே ।
ரகு⁴நாயக ராம ரமேஶ விபோ⁴
வரதோ³ ப⁴வ தே³வ த³யாஜலதே⁴ ॥ 6 ॥

அவநீதநயா கமநீயகரம்
ரஜநீகரசாருமுகா²ம்பு³ருஹம் ।
ரஜநீசரராஜதமோமிஹிரம்
மஹநீயமஹம் ரகு⁴ராமமயே ॥ 7 ॥

ஸுமுக²ம் ஸுஹ்ருத³ம் ஸுலப⁴ம் ஸுக²த³ம்
ஸ்வநுஜம் ச ஸுகாயமமோக⁴ஶரம் ।
அபஹாய ரகூ⁴த்³வஹமந்யமஹம்
ந கத²ஞ்சந கஞ்சந ஜாது ப⁴ஜே ॥ 8 ॥

விநா வேங்கடேஶம் ந நாதோ² ந நாத²꞉
ஸதா³ வேங்கடேஶம் ஸ்மராமி ஸ்மராமி ।
ஹரே வேங்கடேஶ ப்ரஸீத³ ப்ரஸீத³
ப்ரியம் வேங்கடேஶ ப்ரயச்ச² ப்ரயச்ச² ॥ 9 ॥

அஹம் தூ³ரதஸ்தே பதா³ம்போ⁴ஜயுக்³ம-
-ப்ரணாமேச்ச²யா(ஆ)க³த்ய ஸேவாம் கரோமி ।
ஸக்ருத்ஸேவயா நித்யஸேவாப²லம் த்வம்
ப்ரயச்ச² ப்ரயச்ச² ப்ரபோ⁴ வேங்கடேஶ ॥ 10 ॥

அஜ்ஞாநிநா மயா தோ³ஷாநஶேஷாந்விஹிதாந் ஹரே ।
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் ஶேஷஶைலஶிகா²மணே ॥ 11 ॥

இதி ஶ்ரீவேங்கடேஶ ஸ்தோத்ரம் ।

———-

ஸ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம்புஜேந
ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந
ஸௌம்யோபயந்த்ரு முநிநா மம தர்ஷிதௌ தே
ஸ்ரீவேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே–(ஸ்லோகம் 15)

தனது அளவிலாக் கருணையினால் மணவாள மாமுனிகள் காட்டி அருளிய ஸ்ரீ வேங்கடேசனின்
பாதாரவிந்தத்தில் நான் சரணம் அடைகிறேன்.
பரம சாத்விகர்கள் தமது தூய ஹ்ருதயத்தினால் மாமுனிகளை வணங்குகின்றனர்.
அப்படிப்பட்ட மாமுனிகள் எம்பெருமானுடைய இந்தத் திருப்பாதங்கள் தான் சம்சாரத்திலிருந்து
நம்மை உயர்த்தி பரமபதத்தில் வைக்கும் எனக் காட்டியருளினார்.

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இதி ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

——–

ஸ்ரீ வேங்கடேச மங்களம் :

ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்தி நாம்
ஸ்ரீ வேங்கட நிவாஸாய ஸ்ரீ நிவாஸாய மங்களம் –1-

லஷ்மீ ஸ விப்ரமாலோக ஸூப்ரூ விப்ரம சஷுஷே
சஷுஷே ஸர்வ லோகாநாம் வேங்கடேசாய மங்களம் –2-

ஸ்ரீ வெங்கடாத்ரி ஸ்ருங்காக்க்ர மங்களா பரணங்கரயே
மங்களாநாம் நிவாஸாய வேங்கடேசாய மங்களம் –3-

ஸர்வா வயவ ஸுந்தர்ய ஸம்பதா ஸர்வ சேத ஸாம்
ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம் –4-

நித்யா நிரவத்யாய ஸத்யா நந்த சிதாத்மநே
ஸர்வ அந்தராத்மநே ஸ்ரீ மத் வேங்கடேசாய மங்களம் –5-

ஸ்வதஸ் ஸர்வ விதே ஸர்வ ஸக்தயே ஸர்வ சேஷிணே
ஸூலபாய ஸூஸீலாய வேங்கடேசாய மங்களம் –6-

பரஸ்மை ப்ரஹ்மணே பூர்ண காமாய பரமாத்மநே
ப்ரயுஜ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம் –7-

ஆகால தத்வம் ஆஸ்ராந்தம் ஆத்மநாம் அநு பஸ்யதாம்
அத்ருப் யம் ருத ரூபாய வேங்கடேசாய மங்களம் –8-

ப்ராயஸ் ஸ்வ சரணவ் பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா
க்ருபயா திசதே ஸ்ரீ மத் வேங்கடேசாய மங்களம் –9-

தயாம்ருத தரங்கிண்யாஸ் தரங்கை ரிவ ஸீதலை
அபாங்கை சிஞ்சதே விஸ்வம் வேங்கடேசாய மங்களம் –10-

ஸ்ரக் பூஷாம் பரஹேதீ நாம் ஸூ ஷமாவஹ மூர்த்தயே
ஸர்வார்த்தி சமநா யாஸ்து வேங்கடேசாய மங்களம் –11-

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணீ தடே
ரமயா ரம மாணாய வேங்கடேசாய மங்களம் –12-

ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸி நே
ஸர்வ லோக நிவாஸாய ஸ்ரீ நிவாஸாய மங்களம் –13-

எல்லா மங்களங்களும் சர்வ வ்யாபகனான திருவேங்கடமுடையானிடம் மேம்படட்டும்,
அப்படிப்பட்ட அவன் திருமார்பில் ஸ்ரீமஹா லக்ஷ்மி குடி கொண்டிருப்பாள்,
மேலும் அவனே என்றென்றும் மணவாள மாமுனிகளின் ஹ்ருதயத்தில் தங்கி யிருக்கிறான்.

மங்களா ஸாஸன பரைர் மதாசார்ய புரோகமை
ஸர்வைஸ் ச பூர்வைர் ஆச்சார்யை ஸத் க்ருதா யாஸ்து மங்களம் –14

புண்யம் ஸ்லோகம் யஜமாநாய க்ருண்வதீ –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம் –ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம் –ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகம்–ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம்–

January 1, 2022

ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்

ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே!! நிராபாஸாய தீமஹி!! தந்நோ ஸ்ரீநிவாஸஹ் : ப்ரசோதயாத்!

———

ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம்

ஓம் ஶ்ரீ வேஂகடேஶாய நமஃ
ஓம் ஶ்ரீநிவாஸாய நமஃ
ஓம் லக்ஷ்மிபதயே நமஃ
ஓம் அநாநுயாய நமஃ
ஓம் அம்ருதாம்ஶநே நமஃ
ஓம் மாத4வாய நமஃ
ஓம் க்ருஷ்ணாய நமஃ
ஓம் ஶ்ரீஹரயே நமஃ
ஓம் ஜ்ஞாநபஂஜராய நமஃ || 9 ||

ஓம் ஶ்ரீவத்ஸ வக்ஷஸே நமஃ
ஓம் ஜக3த்3வந்த்3யாய நமஃ
ஓம் கோ3விந்தா3ய நமஃ
ஓம் ஶாஶ்வதாய நமஃ
ஓம் ப்ரப4வே நமஃ
ஓம் ஶேஶாத்3ரிநிலாயாய நமஃ
ஓம் தே3வாய நமஃ
ஓம் கேஶவாய நமஃ
ஓம் மது4ஸூத3நாய நமஃ || 18 ||

ஓம் அம்ருதாய நமஃ
ஓம் விஷ்ணவே நமஃ
ஓம் அச்யுதாய நமஃ
ஓம் பத்3மிநீப்ரியாய நமஃ
ஓம் ஸர்வேஶாய நமஃ
ஓம் கோ3பாலாய நமஃ
ஓம் புருஷோத்தமாய நமஃ
ஓம் கோ3பீஶ்வராய நமஃ
ஓம் பரஂஜ்யோதிஷே நமஃ || 27 ||

ஓம் வ்தெகுண்ட2 பதயே நமஃ
ஓம் அவ்யயாய நமஃ
ஓம் ஸுதா4தநவே நமஃ
ஓம் யாத3 வேந்த்3ராய நமஃ
ஓம் நித்ய யௌவநரூபவதே நமஃ
ஓம் நிரஂஜநாய நமஃ
ஓம் விராபா4ஸாய நமஃ
ஓம் நித்ய த்ருப்த்தாய நமஃ
ஓம் த4ராபதயே நமஃ || 36 ||

ஓம் ஸுரபதயே நமஃ
ஓம் நிர்மலாய நமஃ
ஓம் தே3வபூஜிதாய நமஃ
ஓம் சதுர்பு4ஜாய நமஃ
ஓம் சக்ரத4ராய நமஃ
ஓம் சதுர்வேதா3த்மகாய நமஃ
ஓம் த்ரிதா4ம்நே நமஃ
ஓம் த்ரிகு3ணாஶ்ரயாய நமஃ
ஓம் நிர்விகல்பாய நமஃ || 45 ||

ஓம் நிஷ்களஂகாய நமஃ
ஓம் நிராந்தகாய நமஃ
ஓம் ஆர்தலோகாப4யப்ரதா3ய நமஃ
ஓம் நிருப்ரத3வாய நமஃ
ஓம் நிர்கு3ணாய நமஃ
ஓம் க3தா3த4ராய நமஃ
ஓம் ஶார்ஞ்ஙபாணயே நமஃ
ஓம் நந்த3கிநீ நமஃ
ஓம் ஶங்க3தா3ரகாய நமஃ || 54 ||

ஓம் அநேகமூர்தயே நமஃ
ஓம் அவ்யக்தாய நமஃ
ஓம் கடிஹஸ்தாய நமஃ
ஓம் வரப்ரதா3ய நமஃ
ஓம் அநேகாத்மநே நமஃ
ஓம் தீ3நப3ந்த4வே நமஃ
ஓம் ஜக3த்3வ்யாபிநே நமஃ
ஓம் ஆகாஶராஜவரதா3ய நமஃ
ஓம் யோகி3ஹ்ருத்பத்3ஶமந்தி3ராய நமஃ || 63 ||

ஓம் தா3மோத3ராய நமஃ
ஓம் ஜக3த்பாலாய நமஃ
ஓம் பாபக்4நாய நமஃ
ஓம் ப4க்தவத்ஸலாய நமஃ
ஓம் த்ரிவிக்ரமாய நமஃ
ஓம் ஶிம்ஶுமாராய நமஃ
ஓம் ஜடாமகுட ஶோபி4தாய நமஃ
ஓம் ஶங்க3 மத்3யோல்ல ஸந்மஂஜு கிஂகிண்யாட்4ய நமஃ
ஓம் காருண்ட3காய நமஃ || 72 ||

ஓம் நீலமோக4ஶ்யாம தநவே நமஃ
ஓம் பி3ல்வபத்த்ரார்சந ப்ரியாய நமஃ
ஓம் ஜக3த்கர்த்ரே நமஃ
ஓம் ஜக3த்ஸாக்ஷிணே நமஃ
ஓம் ஜக3த்பதயே நமஃ
ஓம் சிந்திதார்த4 ப்ரதா3யகாய நமஃ
ஓம் ஜிஷ்ணவே நமஃ
ஓம் தா3ஶார்ஹாய நமஃ
ஓம் த3ஶரூபவதே நமஃ || 81 ||

ஓம் தே3வகீ நந்த3நாய நமஃ
ஓம் ஶௌரயே நமஃ
ஓம் ஹயரீவாய நமஃ
ஓம் ஜநார்த4நாய நமஃ
ஓம் கந்யாஶ்ரணதாரேஜ்யாய நமஃ
ஓம் பீதாம்ப3ரத4ராய நமஃ
ஓம் அநகா4ய நமஃ
ஓம் வநமாலிநே நமஃ
ஓம் பத்3மநாபா4ய நமஃ || 90 ||

ஓம் ம்ருக3யாஸக்த மாநஸாய நமஃ
ஓம் அஶ்வரூடா4ய நமஃ
ஓம் க2ட்3க3தா4ரிணே நமஃ
ஓம் த4நார்ஜந ஸமுத்ஸுகாய நமஃ
ஓம் க4நதாரல ஸந்மத்4யகஸ்தூரீ திலகோஜ்ஜ்வலாய நமஃ
ஓம் ஸச்சிதாநந்த3ரூபாய நமஃ
ஓம் ஜக3ந்மங்கள3 தா3யகாய நமஃ
ஓம் யஜ்ஞபோ4க்ரே நமஃ
ஓம் சிந்மயாய நமஃ || 99 ||

ஓம் பரமேஶ்வராய நமஃ
ஓம் பரமார்த4ப்ரதா3யகாய நமஃ
ஓம் ஶாந்தாய நமஃ
ஓம் ஶ்ரீமதே நமஃ
ஓம் தோ3ர்த3ண்ட3 விக்ரமாய நமஃ
ஓம் பரப்3ரஹ்மணே நமஃ
ஓம் ஶ்ரீவிப4வே நமஃ
ஓம் ஜக3தீ3ஶ்வராய நமஃ
ஓம் ஆலிவேலு மங்கா3 ஸஹித வேஂகடேஶ்வராய நமஃ || 108 ||

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம் ||

————–

ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம்

அஸ்ய ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
ப்³ரஹ்மா ருஷி꞉
அநுஷ்டுப் ச²ந்த³꞉
ஶ்ரீ வேங்கடேஶ்வரோ தே³வதா இஷ்டார்தே² விநியோக³꞉ ।

நாராயணோ ஜக³ந்நாதோ² வாரிஜாஸநவந்தி³த꞉ ।
ஸ்வாமிபுஷ்கரிணீவாஸீ ஶங்க²சக்ரக³தா³த⁴ர꞉ ॥ 1 ॥

பீதாம்ப³ரத⁴ரோ தே³வோ க³ருடா³ஸநஶோபி⁴த꞉ ।
கந்த³ர்பகோடிலாவண்ய꞉ கமலாயதலோசந꞉ ॥ 2 ॥

இந்தி³ராபதிகோ³விந்த³꞉ சந்த்³ரஸூர்யப்ரபா⁴கர꞉ ।
விஶ்வாத்மா விஶ்வலோகேஶோ ஜய ஶ்ரீவேங்கடேஶ்வர꞉ ॥ 3 ॥

ஏதத்³த்³வாத³ஶநாமாநி த்ரிஸந்த்⁴யம் ய꞉ படே²ந்நர꞉ ।
தா³ரித்³ர்யது³꞉க²நிர்முக்தோ த⁴நதா⁴ந்யஸம்ருத்³தி⁴மாந் ॥ 4 ॥

ஜநவஶ்யம் ராஜவஶ்யம் ஸர்வகாமார்த²ஸித்³தி⁴த³ம் ।
தி³வ்யதேஜ꞉ ஸமாப்நோதி தீ³ர்க⁴மாயுஶ்ச விந்த³தி ॥ 5 ॥

க்³ரஹரோகா³தி³நாஶம் ச காமிதார்த²ப²லப்ரத³ம் ।
இஹ ஜந்மநி ஸௌக்²யம் ச விஷ்ணுஸாயுஜ்யமாப்நுயாத் ॥ 6 ॥

இதி ப்³ரஹ்மாண்ட³புராணே ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ ஶ்ரீ வேங்கடேஶத்³வாத³ஶநாமஸ்தோத்ரம் ।

1-நாராயணோ
2-ஜக³ந்நாதோ²
3-வாரிஜாஸநவந்தி³த꞉ ।
4-ஸ்வாமி புஷ்கரிணீ வாஸீ
5-ஶங்க²சக்ரக³தா³த⁴ர꞉பீதாம்ப³ரத⁴ரோ தே³வோ
6-க³ருடா³ஸநஶோபி⁴த꞉ ।
7-கந்த³ர்ப கோடி லாவண்ய꞉
8-கமலாயதலோசந꞉ ॥ 2 ॥
9–இந்தி³ராபதிகோ³விந்த³꞉
10-சந்த்³ரஸூர்யப்ரபா⁴கர꞉ ।
11-விஶ்வாத்மா
12-விஶ்வலோகேஶோ
ஜய ஶ்ரீவேங்கடேஶ்வர꞉

———————

ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகம்

திருமலையில் உறையும் எம்பெருமான் தன்னை நாடி வருவோருக்கு எல்லா மங்களங்களையும்
இனிதே வழங்கி ரட்சிக்கும் வரப்பிரசாதி.
ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகத்தை எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்து நலம் பெறலாம்.

இது சர்வ மங்களங்களை அருள்வதோடு, சகல துக்கங்களையும் போக்கும் வல்லமை படைத்தது.

ஸ்ரீக்ஷோண்யோ ரமணீ யுகம் ஸுரமணி புத்ரோபி வாணீ பதி:
பௌத்ரச் சந்த்ர சிரோமணி: பணிபதி: சய்யா ஸுரா: ஸேவகா:
தார்க்ஷ்யோ யஸ்யரதோ மஹச்ச பவனம் ப்ரஹ்மாண்டமாத்ய: புமான்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

ஸ்ரீதேவி-பூதேவி ஆகிய இரு அழகிய மனைவியரைக் கொண்ட பெருமாளே,
சரஸ்வதியின் நாயகனான பிரம்மதேவனைப் புத்திரனாக அடைந்தவரே,
சந்திரனை தலையில் சூடிய ருத்ரனைப் பேரனாகப் பெற்றவரே,
ஆதிசேஷனே படுக்கையாக, தேவர்களே வேலைக்காரர்களாகப் பணிபுரிய,
கருடனை வாகனமாகக் கொண்டவரே,
இந்த அண்ட சராசரத்தையே வீடாகக் கொண்டிருப்பவரே,
ஆதி புருஷனே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———

யத் தேஜோரவிகோடி கோடி கிராணான் திக்க்ருத்ய ஜேஜீயதே
யஸ்ய ஸ்ரீவதனாம் புஜஸ்யஸுஷமா ராகேந்து கோடீரபி:
ஸௌந்தர்யம் ச மனோ பவானபி பஹூன் காந்திச்ச காதம்பினீம்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ர ரமண: குர்யாத்தரிர் மங்களம்.

கோடி கோடி சூரியர்களின் பேரொளியையும் விஞ்சிய தேஜஸ் கொண்ட பெருமாளே,
கோடி கோடி சந்திரன்களின் பிரகாசத்தையும் மங்கச் செய்யும் ஒளிவீசும் திருமுகம் கொண்டவரே,
கோடி கோடி மன்மதர்களின் பேரழகையும் குன்றச் செய்யும் எழில் மிகுந்தவரே,
மேகக் கூட்டங்களையும் மீறி நிர்மலமாய் விளங்கும் பரந்த ஆகாயத்தையும் விட பிரமாண்டமானவரே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———

நானா ரத்ன கிரீட குண்டல முகைர் பூஷா கணைர் பூஷித:
ஸ்ரீமத் கௌஸ்து பரத்ன பவ்ய ஹ்ருதய: ஸ்ரீவத்ஸ ஸல்லாஞ்சன:
வித்யுத் வர்ண ஸுவர்ண வஸ்த்ர ருசிரோ ய: சங்க சக்ராதிபி:
ஸ்ரீமத் வேங்கட பூதேந்த்ர ரமண: குர்யாத்தரிர் மங்களம்.

பலவித ரத்னங்களால் தயாரிக்கப்பட்ட கிரீடம், குண்டலம் முதலான ஆபரணங்களுடன் கம்பீரமாக
அலங்கரிக்கப்பட்டிருக்கும் பெருமாளே,
கௌஸ்துப ரத்தினம் எனப்படும் விலை மதிப்பில்லா ரத்தின ஆபரணத்தை மார்பில் அணிந்து
பேரெழில் பரமனாகக் காட்சியளிப்பவரே,
ஸ்ரீவத்ஸம் என்னும் மச்சத்தால் மிகைப்பட்ட அழகுடன் திகழ்பவரே,
கொடி மின்னலோ என்று வியக்க வைக்கும் வண்ணம் பிரகாசம் மிகுந்த தங்கப் பட்டாடை யில் ஜொலிப்பவரே,
சங்கு சக்கரம் முதலிய ஆயுதங்களைத் தரித்து வீரப் பேரழகுடன் ஒளிர்பவரே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————-

யத் பாலேம் ருக்னாபி சாரு திலகோ நேத்ரேப்ஜ த்ராயதே
கஸ்தூரீ கண ஸார கேஸரமிலச் ஸ்ரீகந்த ஸாரோத்ரவை:
கந்தைர் லிப்த தனு: ஸுகந்த ஸுமனோ மாலாதரோய: ப்ரபு:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

கஸ்தூரி திலகத்தினை நெற்றியில் அணிந்து அதனால் பிரகாசமாகத் துலங்கும் பெருமாளே,
தாமரை இதழ்களோ கண்கள் என்று வியக்க வைக்கும் மென்மையான பார்வை கொண்டவரே,
கஸ்தூரி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த மிகுந்த நறுமணமிக்க சந்தனம் பூசப்பட்ட
சுகந்த சரீரத்தைக் கொண்டவரே,
நல்ல வாசனையுள்ள மலர் மாலைகளைத் தரித்து அம்மலர்களுக்கே பெருமை தேடித் தரும் பிரபுவே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———–

ஏதத் திவ்ய பதம்மமாஸ்திபுவி தத் ஸம்பச்யதே த்யாதராத்
பக்த்தேப்யஸ் ஸ்வ கரேண தர்சயதி யத் த்ருஷ்ட்யாதி ஸௌக்யம் கத:
ஏதத் பக்திமதாமியானபி பவாம்போதிர்ன தீதிஸ்ப்ருசன்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

பூமி மீது பதிந்திருக்கும் தங்களது திருவடிகளைப் பார்க்குமாறு, தங்களது திருக்கரத்தால் சுட்டிக் காட்டும் பெருமாளே,
அந்தத் திருவடிகளை சரணடை யும் பக்தர்களுக்கு பரம சௌக்கியத்தையும், பேரானந்தத்தையும் அருளும் பெருமாளே,
அந்த பாத சரண நிழலையே அடைக்கலமாகக் கொண்ட பக்தர்களுக்கு அவர்களுடைய சம்சார சாகர மானது,
முழங்காலளவில் ஓடும் ஒரு நதி போல தான் என்பதையும் இந்த சமிக்ஞை மூலம் விளக்கும் பரம்பொருளே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————-

ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா
ஸௌவர்ணாலய மண்டிதோ விதி முகைர் பர்ஹிர்முகை: ஸேவித:
ய: சத்ரூன் ஹனயன்னி ஜானவதி சஸ்ரீபூவராஹாத்மக:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

ஸ்வாமி புஷ்கரிணி என்னும் குளக்கரையில் நிரந்தரமாக வாசம் செய்யும் பெருமாளே,
பிரம்மா முதலான தேவர்களால் சேவிக்கப்படும், தங்க மயமான அலங்காரம் கொண்ட கோயிலைக் கொண்டவரே,
சத்ருக்களை அடியோடு நாசம் செய்து, தன்னைச் சார்ந்தவர்களை எந்தத் துன்பமும் அணுகாதபடி காக்கும் பரந்தாமா,
யக்ஞவராஹ மூர்த்தியாக விளங்கும் பெருமாளே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————–

யோ ப்ரஹ்மாதி ஸுரான் முனீச்ச மனுஜான் ப்ரஹ்மோதஸவாயாகதான்
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட மனாபபூவ பஹுசஸ்தைரர்சிதஸ் ஸம்ஸ்துத:
தேப்யோ ய: ப்ரதத த்வரான் பஹுவிதான் லக்ஷ்மீ நிவாஸோ விபு:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

பிரம்மோற்சவத்திற்காக வந்திருக்கும் பிரம்மன் முதலான தேவர்களையும், மஹரிஷிகளையும்,
மனிதர்களையும் கண்டு மிகப் பேரானந்தம் கொள்ளும் பெருமாளே,
அவர்களது அர்ச்சனை யாலும், துதியாலும் மிகுந்த சந்தோஷம் அடையும் பெருமாளே,
அவர்கள் அனைவருக்கும் அவர்கள் வேண்டும் வரங்களை எல்லாம் அருளி
அவர்களை மகிழ்விக்கும் பெருமாளே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————

யோ தேவோ புவிவர்த்ததே கலியுகே வைகுண்டலோகஸ்திதோ
பக்தானாம் பரிபாலனாய ஸததம் காருண்யவாராம் நிதி:
ஸ்ரீசேஷாக்யமஹீத்ரமஸ்தகமணிர் பக்தைக சிந்தாமணி:
ஸ்ரீமத்வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

இந்தக் கலியுகத்தில் பக்தர்களைக் காப்பதற்காக வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்திருக்கும் பெருமாளே,
பக்தர்கள் அனைவருக்கும் கருணைக் கடலாகத் திகழ்பவரே,
ஸ்ரீசேஷம் என்னும் மலையின் சிகரத்தில் மணி போலப் பிரகாசிக்கும் பேரொளியே,
பக்தர்களுக்கு சிந்தாமணி போல் விளங்கும் ஒளி வழிகாட்டியே, வேங்கடாசலபதியான ஹரியே,
எனக்கு மங்களம் அருள்வீராக.

——–

சேஷாத்ரி ப்ரபு மங்களாஷ்டகமிதம் துஷ்டேன யஸ்யேசிது:
ப்ரீத்யர்த்தம் ரசிதும் சமேச சரண த்வந்த்வைகநிஷ்டாவதா
வைவாஹ்யாதி ஸுபக்ரியாஸுபடிதம் யை: ஸாதுதேஷாமபி
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

இது சேஷாத்ரிநாதனுடைய மங்களாஷ்டகம்.
பகவான் ஸ்ரீநிவாஸனுடைய சரண கமலங்களை சரணடைந்து அவற்றின் மீதே மிகுந்த பற்றும்,
சந்தோஷமும் கொண்ட ஸ்ரீவாதிராஜயதியால், ஸ்ரீநிவாஸனை குதூகலப்படுத்த இயற்றப்பட்டது.

திருமணம் முதலான மங்கள விசேஷ நிகழ்ச்சிகளில் இந்த மங்களாஷ்டகம் படிக்கப்பட்டால்,
அதைப் படிப்பவருக்கும், கேட்பவர் அனைவருக்கும் வேங்கடாசலபதியான ஹரி,
எல்லா மங்களங் களையும் குறைவின்றி அருள்வார்.

———-

ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம்

ஹநுமான் அஞ்ஜநாஸூநு: வாயுபுத்ரோ மஹாப3ல: |
ராமேஷ்ட: பா2ல்கு3ந-ஸக2: பிங்கா3க்ஷோsமிதவிக்ரம: ||
உத3தி4க்ரமண: சைவ ஸீதாசோக விநாஶசன: |
லக்ஷ்மண: ப்ராணததா தஶக்3ரீவஸ்ய த3ர்பஹா ||

ஏவம் த்வாஶ நாமாநி ராமதூதஸ்ய: படேத் |
ஸ்வாபகாலே ப்ரபோ3தே4ச நிர்ப4யோ விஜயீ பவேத்

1-ஹநுமான்
2-அஞ்ஜநா ஸூநு:
3-வாயு புத்ரோ
4-மஹாப3ல: |
5-ராமேஷ்ட:
6-பா2ல்கு3ந-ஸக2:
7-பிங்கா3க்ஷோs
8-மிதவிக்ரம: ||
9-உத3தி4க்ரமண: சைவ
10-ஸீதாசோக விநாஶசன: |
11-லக்ஷ்மண: ப்ராணததா
12-தஶக்3ரீவஸ்ய த3ர்பஹா ||

—–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அருளிச் செயல்களில் -ஸ்ரீ கோவிந்தனும் -ஸ்ரீ கோவர்த்தன உத்தரணமும்–ஸ்ரீ உலகு அளந்த உத்தமனும் –

September 7, 2020

ஸ்ரீ கோவிந்தன்
கவாம் ரஷித்த
கோ பூமி ஸ்ரீ வராகன்
கோ ஸ்துதி ஏற்றுக் கொண்டு
கோ வேதம் -அவற்றால் அறியப்படுபவன்
கோ அசையும் அசையா சராசரங்கள் தனது வசம்
ஸ்ரீ மத்ஸ்ய -பூமி -வேதம் ரஷித்தவன்
ஸ்ரீ கூர்ம -மலை பூமி கோ
ஸ்ரீ வராஹ -பூமி இடந்து
ஸ்ரீ நரஸிம்ஹ =பிரகலாதன் ஸ்துதி
ஸ்ரீ வாமனன் பூமி அளந்து
ஸ்ரீ பரசுராமன் பூமியில் உள்ள தீயர்களை அழித்து
ஸ்ரீ ராமன் பூமி ஆண்டு
ஸ்ரீ பலராமன் வளைத்து திருத்தி -யமுனை தீரம்
ஸ்ரீ கண்ணன்
ஸ்ரீ கல்கி கோ பூமி தர்மம் காத்து
தச அவதாரங்களும் பொருந்தும்

————–

மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே-பெரியாழ்வார் -2-3-7-

மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?-திருவாய் -–3-2-9-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழு கொக்கும் நின்றே–5-10-5-

மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ ——ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி—41-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய்-48-

இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே –ஸ்ரீ திரு விருத்தம் – -61 –

ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான்-பெரிய திருவந்தாதி–52-

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

உள்ள உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ உலகளந்த மூர்த்தி உரை –76-

மறப்பெல்லாம் ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை–திருவெழு கூற்றிருக்கை-

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்-ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்-சிறிய திருமடல்-

————————————-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-பெரிய திருமொழி -11-8-10-

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–-திருவாய் –7-4-11-

—————–

மத்த மா மலை தாங்கிய மைந்தனை உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே–-பெரியாழ்வார் -1-1-8-

என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி
நின் முகம் கண் உளவாகில் இனி இங்கே நோக்கிப் போ -1-4-1-

ஒரு வேழத்தின் கரும் கன்று போல் தெள் புழுதி யாடி திருவிக்ரமன் -1-7-9-

குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் -1-9-1-

வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 7-

காது தாழப் பெருக்கி குண நன்றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்-2-3-4-

மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே-2-3-7-

கோவிந்தன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-6 –

கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 11-

தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்-2-10-4-

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று மூவடி தா என்று இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7-

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்–3-3-8-

யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்தவள்–3-3-10-

எக்கம் மத்தளி தாழ் பீலிக் குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி–3-4-1-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு–3-4-4-

ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற–3-4-10-

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளரும் அடங்கப்
பொட்ட துற்று மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை–3-5-1-
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை-3-5-2-
ஆழிக்கை எந்தை எடுத்த மலை–3-5-3-
அமரர் பிரான் கொண்டு நின்ற மலை-3-5-4-
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை-3-5-5-
செப்பாடு உடைய திருமால் அவன் தன் செம்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள்காம்பாகக் கொடுத்து கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 6-
படங்கள் பலவும் உடை பாம்பரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல்
தடம் கை விரல் ஐந்து மலர வைத்து தாமோதரன் தாங்கு தடவரை தான்-3-5-7-
நாராயணன் முன் முகம் காத்த மலை–கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-8-
தாமோதரன் தாங்கு தடவரை தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9-
கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல வடிவேறு திரு உகிர் நொந்தும்
இல மணிவண்ணன் மலையும் —கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-10-

இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது–3-6-2-
வானிளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர்
கோனிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடூதின போது-3-6-3-
சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர்ப்புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது -3-6-8-
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை-3-6-11-

கோவிந்தனோடு இவளை சங்கை ஆகி என் உள்ளம் நாள் தோறும் தட்டுளுப்பா கின்றதே – 3-7 3- –

ஒண் நிறத் தாமரை செம்கண் உலகு அளந்தான் என் மகளைப்
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8 9-

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச் செய்தான் மலை–4-2-4-

கோவலர் கோவிந்தனை குற மாதர்கள் பண் குறிஞ்சி
பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே – 4-3-4-

திருக் கோட்டியூர் குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4-4-8 –
குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்-4-4-9-

கௌதத்துவம் உடைக் கோவிந்தனோடு
கூடி யாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே-4-5-8 —

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 6-5 –

உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட-4-9-8-

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்–4-10-9-

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே–5-1-8-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 4-11 –

—————

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –3-
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமானே –17-
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி -24-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா – 27-
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –28-
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா –29-

—————

கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–நாச்சியார் திரு மொழி-1-3-

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்–2-9-

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய–5-10-
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி–5-11-

குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே–10-7-

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால் நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்–11-5-

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-

கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா–12-4-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்-12-9-

கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8-

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்-13-9-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே–14-2-

———————

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை–பெருமாள் திருமொழி-1-4-

குழகனே !என் தன் கோமள பிள்ளாய் கோவிந்தா !–7-7-

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா–7-9-

—————

வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–39-

அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்–105-

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்–109-

————

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய் –திருமாலை -35-

———–

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன்–அமலன் –2-

————–

காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே—-பெரிய திருமொழி-1-3-4-

கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

குறளாய்ச் சென்று மா வலியை ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-6-

கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே —2-3-4-

நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப் படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் விண்டானை -2-5-9-

வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் மாலின மொழி யாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-2-

இவர் கொல் தெரிக்க மாட்டேன் வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மா வலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்று இவர் யார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே-2-8-2-

மஞ்சுயர் மா மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து -2-8-4-

இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி-2-9-7-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து-3-1-5-

அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம்–3-1-8-

அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்-3-2-4-

மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்-3-2-8-

ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-

மழை காப்பான் உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-6-

ஒ மண்ணளந்த தாளாளா ! தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த
தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம்–3-10-5-

காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்–3-10-8-

அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்-4-2-3-

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்-4-2-6-

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானை-4-3-4-

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-4-4-7-

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்–4-6-2-

குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3-

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்ற்றது இதுவே காணும் இந்தளூரீரே-4-9-3-

பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்-4-10-1-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்-4-10-7-

அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்–5-1-1-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்-5-1-2-

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்–5-1-4-

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து–5-1-7-

கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் -5-2-4-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே–5-3-9-

பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்–5-4-3-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும் தானாய பெருமானை–5-6-3-

பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து–6-6-5-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-

மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே–6-9-4-

தாடாளன் இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-

குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான்–6-10-5-

குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை–7-6-4-

பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே-7-7-5-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்–7-8-6-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்–8-6-9-

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்-8-10-8-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்-9-1-5-

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்-9-4-2-

நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-3-

பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்-9-8-3-

தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்–9-9-5-

ஆநிரைக்கு அழிவன்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்-9-10-7-

திருமால் விரி நீருலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-4-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான்–10-6-5-

கூவாய் பூங்குயிலே குளிர் மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே -10-10-3-

கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான்–11-1-1-

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்–11-2-1-

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே –11-4-5-

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —11-5-9-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-11-8-10-

—————

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை–திருக் குறும் தாண்டகம் –6-

தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மையல்லால் எழுமையும் துணை யிலோமே–9-

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு ஈயுமால் எம்பிரானார்க்கு–16-

———-

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–திரு நெடும் தாண்டகம்–5–

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்–15-

பாராளன் பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட பேராளன்–20-

சென்றுலகம் மூன்றினையும் திரிந்து–28-

குன்றெடுத்த தோளினானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

————–

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!-1-5-5-

வெற்பை ஒன்று எடுத்து, ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர், கற்பன் வைகலே.–1-8-4-

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே–1-10-1-

உலகு ஏழும் ஓர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-

மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா! இனி எம்மைச் சோரேலே–2-1-10-

ஏத்த ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தனை –2-2-11-

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11

தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக் கண் குன்றம்;
கோது அவம் இல் என் கன்னற் கட்டி எம்மான் என் கோவிந்தனே–2-7-3-

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி –2-7-4-

எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரி விக்கிரமனையே–2-7-6-

திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளிப்
பரவிப் பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவித்தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே!–2-7-7-

வாமனன்,என் மரகத வண்ணன், தாமரைக் கண்ணினன்,
காமனைப் பயந்தாய்! என்று என்று உன் கழல் பாடியே பணிந்து-2-7-8-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்–2-8-7-

வன் மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்,-3-2-2-

மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?–3-2-9-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்–3-3-11-

மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்–3-5-3-

ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே–3-8-2-

மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி –3-8-5-

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! -3-8-9-

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!–4-3-7-

மண்ணை இருந்து துழாவி,‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;-4-4-1-

கோமள வான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன வென்னும் –4-4-5-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;-4-4-6-

உருவுடை வண்ணங்கள் காணில்,‘உலகு அளந்தான்’என்று துள்ளும்;-4-4-8-

குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?–4-5-7-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன் பகலும் நான் இருந்து, ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே–4-7-2-

குறிய மாண் உருவாகி, கொடுங்கோளால் நிலங் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறை யிலமே–4-8-6-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–4-10-3-

செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூர தனுள்
குறிய மாண் உரு வாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே–4-10-10-

சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே–5-9-6-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழு கொக்கும் நின்றே–5-10-5-

அடியை மூன்றை இரந்த வாறும் அங்கே நின் றாழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்-5-10-9-

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே–6-3-8-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன்–6-3-11-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்–6-4-1-

அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே-6-4-6-

மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

திசை ஞாலம் தாவி அளந்ததும் நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங் கண் நீர் மல்க நிற்குமே–6-5-3-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

மாடுடை வையம் அளந்த மணாளற்கு–6-6-4-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு-6-6-9-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே–6-9-2-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!-6-9-3-

பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்!-6-9-6-

தாவி வையம் கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ–6-9-9-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன மினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

ஓர் குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன் னமுதோ!–7-1-7-

‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;-7-2-8-

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்டவாறே–7-4-1-

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே–7-4-10-

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!–7-6-1-

குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப் பூத் தண் துழாய் முடி யாய்–7-6-3-

குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே–7-7-5-

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்–7-8-1-

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன் விளை
மா கந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ?–7-10-2-

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மது சூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக் கண்டு கை தொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வியைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த பேருயிரேயோ !–8-1-5-

மாயம் தன்னால் மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு–8-2-9-

அடியார் அல்லல் தவிர்த்த வசவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

என்றே என்னை உன் ஏரார் கோலத் திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட் செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே—8-3-8-

பெரிய மூ வுலகும் நிறையப் பேரு ருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்-8-4-4-

உன் வையம் தாய மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-8-5-7-

கொண்மின் இடர் கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே–8-6-7-

அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவி யிருப்பது என் னெஞ்சகம்-8-6-10-

பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1-

உறுமோ பாவியேனுக்கு இவ் வுலக மூன்றுமுடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3-

நீ யொரு நாள் படிக் களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக் கணியாய்-9-2-2-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்-9-3-2-

மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3–

குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே–9-8-7-

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்–9-9-2-

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்–10-1-5-

குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6-

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்-10-2-7-

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி-10-3-4-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்-10-6-7-

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-10-9-8-

————–

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே -ஸ்ரீ முதல் திருவந்தாதி -3-

சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மாவடிவின் நீ யளந்த மண் —9-

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம் தாயவனை அல்லது தாந்தொழா–11-
தொழாதார் தலையிலும் இருந்து தொழு வித்துக் கொள்ளும் திருவடிகள் –

உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –14-

அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பும் அளந்தது என்பர் -17-

மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச் செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று-20–

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண் மாற்கு–21-

மலையால் குடை கவித்து-27-

தரணி தனதாகத் தானே— நீ மண்ணிரந்து கொண்ட வகை –36-

எடுத்தது குன்றம்–39-

பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது ——50-

வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம் –76-

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமா மிடர் –77-

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் ஆரங்கை தோய வடுத்து –79-

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து–83-

பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார் உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை அடிக்களவு போந்த படி –84-

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –86-

நின்றுலகம் தாய நெடுமாலும்–98-

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

————–

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி-5-

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

மண்ணிரந்து காத்தனை பல்லுயிரும் காவலனே -10-

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-

தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம் காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை மாணியாய் கொண்டிலையே மண்–89-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க-98-

அறை கழல சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய் மாவலியை மண் கொண்டான் மால் –99-

————

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி–4—

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன் படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன்–5-

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண்ணளந்த பாதமும் மற்றவையே–9-

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே–20-

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்–34-

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ் சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ ———41-

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா–47-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய்–48-

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி மருதம் சாய்த்தான்-51-

சென்று குறளுருவாய் முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-

தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

————

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–நான்முகன் திருவந்தாதி -9-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்-15-

ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல் வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-35-

———

உலகு அளந்த மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு -ஸ்ரீ திரு விருத்தம்-35-

குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -38-

மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒருத்து வான் நிமிர்ந்த-42-

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து–58-

இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் -64-

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67-

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்-68-

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-69-

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-74-

ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்
பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –

பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85-

ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91-

———–

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக மூ வுலகு அளந்த சேவடியோயே -ஸ்ரீ திருவாசிரியம் ––1–

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழி பட -5-

————-

பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு -ஸ்ரீ பெரிய திருவந்தாதி –8-

சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா-16-

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான் திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

அடியால் படிகடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன் படைத்தான் என்பரால்-42-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான்–52-

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

———–

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்-ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்-சிறிய திருமடல்-

பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக பேராமல் தாங்கிக் கடைந்தான்-

————

தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்—ஸ்ரீ பெரிய திருமடல்——-5-

மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –

—————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவேங்கடத்தானும்-ஸ்ரீ கண்ணபிரான்/ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் / ஸ்ரீ உலகு அளந்த உத்தமன் / ஸ்ரீ வராஹன் /ஸ்ரீ நரஸிம்ஹன் /ஸ்ரீ ஆலிலை பாலகன் – – -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்–

January 27, 2018

ஸ்ரீ திரு மலை மேல்-அருளிச் செயல்களில் 206 பாசுரங்கள்–

ஸ்ரீ பொய்கையார் -10..
ஸ்ரீ பூதத்தார் -. 11..
ஸ்ரீ பேயார்- 19..
ஸ்ரீ திருமழிசைப் பிரான் 16–
ஸ்ரீ நம்மாழ்வார் -48 –
ஸ்ரீ பெரியாழ்வார் -7–
ஸ்ரீ ஆண்டாள் -16—
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் – 11–
ஸ்ரீ திருப்பாணாழ்வார் 2–
ஸ்ரீ திருமங்கையாழ்வார் -66 –

76- 106-ஸ்ரீ ராமானுச நூற்று அந்தாதி –ஸ்ரீ அமுதனார் சாவித்திரி காயத்ரி  மந்த்ரம் போல் இவை

ஆக மொத்தம் -206 பாசுரங்கள் –

—————————————-

ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு –

ஸ்ரீ பொய்கையார்–
வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்–37-/
எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச  கிடந்ததுவும் நீரோத மா  கடலே நின்றதுவும் வேம்கடமே-39-

ஸ்ரீ பேய் ஆழ்வார்-
வேம்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூல் கடலும் நுண் னுலா  தாமரை மேல் பால் பட்டு
இருந்தார் மனமும்  இடமாக கொண்டான் குந்து ஒசித்த கோபாலகன்–32-
வேம்கடமே மேல் நாள் விளம் கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு  –68-
வேம்கடமே மேல் நாள் குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று–71-
வேம்கடத்து மன்னும் –குடம் நயந்த  கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே  நாத் தன்னால் உள்ள நலம்–73
வேம்கடமே மேல் ஒரு நாள் தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு–89-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் —
வேம்கடமே தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு வானவரை காப்பான் மலை–நான்முகன்–48-

ஸ்ரீ நம் ஆழ்வார்-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பனே 1-8-3-
தலை பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால் அலை பூண் உண்ணும் அவ் அல்லல் எல்ல்லாம் அகல
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டு கொண்டு நிலை பெற்றேன் என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே 3-2-10
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திரு வேம்கடத்து
ஆயன் நாள் மலராம் அடி  தாமரை வாய் உள்ளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே 3-3-9-
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

ஸ்ரீ பெரியாழ்வார்-
ஒ குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா ! வேத பொருளே ! என் வேம்கடவா ! வித்தகனே ! இங்கே போதராயே  2-9-6-
கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-
சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !– 5-4-1–

ஸ்ரீ ஆண்டாள்-
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
புள்ளினை  வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடம் அடை நெஞ்சமே–1-8-1
பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்
என்று எண்ணி நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலை திரு வேம்கடம் அடை நெஞ்சமே –1-8-2-
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கை தொழும் இணை தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே-1-8-3-
உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-
மானேய்  மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆன் எழ விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே! திரு வேம்கட மா மலை மேய கோனே! என் மனம் குடி கொண்டு இருந்தாயே 1-10-7-
வேம்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே 1-10-8-
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேம்கட மலை மேல்
மேவிய வேத நல் விளக்கை–4-3-8-
வாம் பரி யுக மன்னர் தம் உயர் செக ஐவர்கட்க்கு   அரசு அளித்த காம்பினார் திரு வேம்கட பொருப்ப! –5-3-4-
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை எழும் அடர்த்து ஆயர் அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மை கொலோ?அறியேன் நான்
நின்ற பிரானே! நீள் கடல் வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையில் தேனா   முன் கை வளை கவர்ந்தாயே 10-9-2-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்   கடி பொழில் சூழ் கண புரத்து  என் கனியே என்றும்  
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் வட திரு வேம்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்– துணை முலை மேல் துளி சோர சோர் கின்றாளே–திரு நெடும் தாண்டகத்தில்-16

———————————-

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன் – பாசுரங்களின் தொகுப்பு –

ஸ்ரீ பொய்கையார்-
வேம்கடமே மேல் ஒரு நாள் மான் மாய வெய்தான் வரை—82-

ஸ்ரீ பூதத் ஆழ்வார்-
சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால் கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும் வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே–25

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் —
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து ராமனாய் மிடைந்த வேழ்  மரங்களும் அடங்க வெய்து வேம்கடம்-திருச்சந்த -81–

ஸ்ரீ நம் ஆழ்வார்-
எந்தாய் தண்  திரு வேம்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மரா மரம் பைம் தாள் எழ உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழா யினாய்  அமுதே உன்னை என் உள்ளே குழைத்த எம் மைந்தா வானேறே இனி எங்கு போகின்றதே 2-6-9-
ஆவா  என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4-
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

ஸ்ரீ பெரியாழ்வார்-
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா — 2-6-9-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்க சரம் செல உய்த்தாய்!
விண்ணோர் தொழும் வேம்கட மா மலை மேய அண்ணா! அடியேன் இடரை களையாயே  1-10-1-
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக் கொடி புள் திரித்தாய்!
விலங்கல் குடுமித் திரு வேம்கடம் மேய அலங்கல் துலாபா முடியாய்! அருளாயே 1-10-2-
வேம்கடத்து அறவன் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-2-
வேம்கடம் மேவி நின்று அருள் அம் கண் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-5-
வேம்கடமலை கோவில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே  2-1-8-
வேம்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-9-

———————————

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன் -பாசுரங்களின் தொகுப்பு

ஸ்ரீ பொய்கையார்-
வழி நின்று நின்னை தொழுவார் வழுவா மொழி நின்ற மூர்தியரே யாவர் பழுது ஒன்றும்
வாராத வண்ணம் விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திரு வேங்கடமே–76-

ஸ்ரீ பூதத் ஆழ்வார்-
வேம்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள் மாவாய் பிளந்த மகன்-28-

ஸ்ரீ பேய் ஆழ்வார்-
உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண்ணோடு ஓங்கக் கொடு உயரும் வீம் கருவி வேம்கடத்தான் மண்ணோடு ஓங்க தான் அளந்தமன்-40–

ஸ்ரீ நம் ஆழ்வார்
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்  சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே 3-3-11
என்னாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேம்கடத்தானே மெய் நான் எய்தி என்னாள் உன் அடிக் கண் அடியேன் மேவுவதே 6-10-6

ஸ்ரீ பெரியாழ்வார்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ  ! 1-8-9-

ஸ்ரீ ஆண்டாள்-
மாவலியை நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள் உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய 
புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5-
குறளாய் நிலம் ஈர் அடியாலே விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-
வேம்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே—2-1-1-
வட மலையை வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்ந்த
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே 5-6-7-
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தாள் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேம்கடத்தானை நான் சென்று நாடி நறை யூரில் கண்டேனே 6-8-1-

————————————————–

இவனே ஸ்ரீ வராஹன் –

ஸ்ரீ பேய் ஆழ்வார்-
வேம்கடமே மேல் ஒரு நாள் மண் கோட்டு கொண்டான் மலை–45-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் ஓன்று சென்று அது  ஒன்றை உண்டு அது ஓன்று இடந்து பன்றியாய்–திருச்சந்த -48-

———————————–

இவனே ஸ்ரீ நரஸிம்ஹன்-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5-
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேணார் திரு வேம்கட மா மலை மேய கோணா கணையாய்! குறிக் கொள் எனை நீயே–1-10-5-
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-

———————————

இவனே ஸ்ரீ ஆலிலை பாலகன் –

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
எண் திசைகளும் எழ உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆல் இல்லை பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள எயற்றோடு திண் திறல் அரியாயவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே -1-8-6
நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு ஏராலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்!
சீரார் திரு வேம்கட மா மலை மேய ஆரா அமுதே!அடியேற்கு அருளாயே 1-10-3-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-1-வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து-

March 15, 2015

அவதாரிகை –
பகவத் விஷயத்தை அனுபவித்துக் கொண்டு போகச் செய்தே ஆனந்தம் தலை மண்டிக் கொண்டு
இப்படிப்பட்ட அனுபவம் எல்லாருக்கும் இல்லையே இருக்க –
நமக்கு மாதரம் கிடைக்க வேண்டிய காரணம் யாது -என்று ஆராய்ந்து –
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்றபடி
பேற்றுக்கும் இழவுக்கும் நெஞ்சு தான் முதலடி என்று துணிந்து
இப்படிப் பட்ட நெஞ்சானது தீய விஷயங்களில் செல்லாது
ஸ்வரூப ப்ராப்தமான பகவத் விஷயத்தில் சென்று சேர்ந்ததே என்று உவந்து
அந்த நெஞ்சைக் கொண்டாடுதல் நம் ஆழ்வார்கட்கு உள்ளது ஓன்று –

நம் ஆழ்வாரும் திருவாய் மொழியிலே –
நெஞ்சமே நல்லை நல்லை -உன்னைப் பெற்றால் என் செய்யோம் -இனி என்ன குறைவினம் -என்றும்
ஊனில் வாழ் உயிரே-நல்லை போ உன்னைப் பெற்று -வானுளார் பெருமான் மதிசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –
என்று அடிக்கடி நெஞ்சைக் கொண்டாடுவர் –
அப்படியே இவ்வாழ்வார் தாமும் இத் திரு மொழியில் ஒவ்வொரு பாட்டிலும் தமது திரு உள்ளத்தை விளித்து
திருவேங்கடமுடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே-என்று சொல்லி உகக்கிறார்-

நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டருளே -என்றும்
இனி நான் உன்னை என்றும் விடேனே -என்றும் பகவத் விஷயத்தில் நான் ஈடுப்படும்படியாக
அவன் திறத்து அடிமைத் தொழில் பூண்டது நீ  அன்றோ நெஞ்சமே -என்று
ஒருகால் சொன்னது போல் ஒன்பதின் கால் சொல்லி நெஞ்சைப் புகழ்கின்றார் –
தம்மில் காட்டில் நெஞ்சை வேறுபடுத்திச் சொல்லுவது கவி மரபு -நெஞ்சைத் தூது விடுவதாகவும் சொல்லுவார்கள் இறே
நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போது போக்குவதற்கு இவ்விருள் தரும் மா ஞாலத்தில் வேறு யாரும் உடன்படாமல்
உண்டியே உடையே உகந்து ஓடுகிறவர்களாய்  இருப்பதால் உசாத் துணையாவது நெஞ்சைத் தவிர
வேறு இல்லாமையாலே அந்த நெஞ்சை நோக்கித் தானே வார்த்தை சொல்ல வேண்டும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்று நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார்
ஆகையாலே நெஞ்சை விளித்து வார்த்தை சொல்லுவது எனபது பக்தர்களுக்கு ஒரு நல் போது போக்காக அமைந்ததாம்
நெஞ்சு பிரிந்து போயிற்றதாகச் சொல்லுவதும் இப்படியே
ஆக -இத் திருமொழியால் தமது நெஞ்சைப் புகழ்ந்து பேசும் முகத்தால் திரு வேங்கடமுடையானை அனுபவித்து இனியராகிறார் –

————————————————

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

என் நெஞ்சமே -நீ வானவர் தங்கள் சிந்தை போலே திரு வேங்கடமுடையானுக்கு இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே-என்று உகந்து பேசுகிறார் –
இவ் விருள் தரும் மா ஞாலத்திலே பிறந்த என்னுடைய நெஞ்சாக நீ இருந்தும் இந்த மண்ணோருடைய நெஞ்சு
எப்படி துர் விஷயங்களையே சிந்தை செய்கிறதோ –
அப்படி நீ விஷயாந்தரங்களைச் சிந்தியாமல் ஒரு நாளும் சம்சார நாற்றமே கண்டு அறியாத நித்ய ஸூரிகளின் நெஞ்சு போலே
திரு வேங்கடமுடையான் திறத்திலே அடிமைத் தொழில் ஏற்றுக் கொண்டாயே –
உன்னுடைய பாக்யமே பாக்கியம் -என்றவாறு –

அந்த திருவேங்கடமுடையான் எப்படிப் பட்டவன் என்னில்-
மாதவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை-மிக்க அதிர்ஷ்ட சாலிகளான
மனிசர் யுண்டு -பொய்கையார் -பூதத்தார் -பேயார்-புகழ் மழிசை ஐயன் -அருள் மாறன்-சேரலர் கோன் -துய்ய பட்டநாதன் –
அன்பர் தாள் தூளி- நற் பாணன் –
அவர்கள் திரு உள்ளத்திலே பரம போக்யமாய்ப் பொருந்தி இருந்து நித்ய வாசம் பண்ணுமவன் –
அநந்ய பிரயோஜனரான பக்தர்களுடைய நெஞ்சை விட்டு பிரியமாட்டாத பெருமாள் -என்கை-

இன்னமும் எப்படிப் பட்டவன் என் என்னில் –
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி -திருமலையில் உள்ள
வேடர் குறவர் முதலானோர் தாங்கள் சமையல் செய்து கொள்வதற்கு அகில் மரங்களை வெட்டி இட்டுத் தீயை யுண்டாக்குவார்கள் –
அதன் புகையானது திருமலை எங்கும் பரவி கம கம என்று பரிமளித்துக் கொண்டு இருக்கும்
அப்படிப்பட்ட ஸூகந்தமான திருமலையிலே எழுந்து அருளி இருப்பவன் –
கானவர் இடு  காரகில் -என்ற இடத்து –
அதி பரி சயாத வஞ்ஜா சந்தத கம நாத நாதரோ பவதி -மலயே பில்ல புரந்த்ரீ சந்தன தருகாஷ்ட மிந்தனம் குருதே -என்ற
பண்டித ராஜனுடைய ஸூபாஷிதம் ஸ்மரிக்கத் தகும்
அதிக பரிசயம் செய்தால் அவமானம் யுண்டாகும் -அடிக்கடி வீட்டுக்குச் சென்றால் அலஷியம் யுண்டாகும் –
பொதிக மலையில் குறத்திகள் சந்தனக் கட்டைகளை சமையலுக்கு விறகாக உபயோகப் படுத்த காண்கிறோம் இறே
கானவரட்கு கார் அகில் எளிய சரக்காய் இருப்பதால் அவர்கள் அவற்றை இட்டுச் சமைப்பார்கள் –
அவர்கள் ஸ்வ அர்த்தமாக செய்து கொண்ட அக்காரியமும் பரார்த்தமாகித்
திருமலையிலே பரிமளிதமாகி செய்கின்றது என்கிறார் ஆயிற்று
நாற்றத் துழாய் முடி நாராயணனுக்கும் நறு நாற்றமூட்டுகிற படி-

மேவி -இது வினை எச்சம் அன்று -மேவியவன் என்னும் பொருள்தான பெயர்ச் சொல் –
இ -பெயர் விகுதி -நாடோடி -பிறை சூடி -குதிரை யோட்டி போலே –
மாண் குறளான அந்தணர்க்கு -தன்னுடையதான பூமியைப் பெறுதற்கு தான் யாசகனாய் வந்து நின்ற பெருமானுடைய குறை தீர –
நெஞ்சமே நீ அவனுடைய வஸ்துவாக அமையப் பெற்றாயே
வாமன பிராமணனாக வந்ததால் அந்தணர்க்கு-எனப்பட்டது
அன்றியே -அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் -திருக் குறள் -30-
அழகிய தண்மை யுடையவன் -மகா தர்மிஷ்டன் –
முதல் அடியில் இனிது  வந்து  -இனிது உவந்து -என்றும் பிரிக்கலாம் –
வானவர்கள் தம் சிந்தையில் உறைவது போலே மாதவமானார் தங்களுடைய சிந்தையிலும்
அமர்ந்து உறைகின்றான் -என்றும் பொருள் சொல்லலாம் ஆயினும் –
என் நெஞ்சே நீ வானவர் தங்கள் சிந்தை போலே திரு வேங்கடமுடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே -என்று
அன்வயித்து பொருள் கொள்ளுதல் சிறக்கும் –
இனிது உவந்து -என்பதை இரண்டாம்   அடியிலோ  ஈற்று அடியிலோ  அன்வயித்து கொள்ளலாம் –

மாதவமானவர் தங்கள் சிந்தை யிலே இனிது  வந்து  அமர்ந்து உறைகின்ற வெந்தை-என்றும்
இனிது வந்து அடிமைத் தொழில் பூண்டாயே -என்றும் அன்வயிக்கலாம்
மானவர் -மனுஷ்யர்
மாண் குறளாய-பாடம் எதுகைக்குச் சேராது -பிராசீன பாடமும் அன்று  –

————————————————————-

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

நெஞ்கமே -திருமலை அப்பனுடைய திருக் குணங்களின் வாசி அறிந்து நீ அவன் திரத்திலே அடிமைத் தொழில் பூண்டாயே –
நாம் பந்துக்கள் என்றும் தாயாதிகள் என்றும் சில ஆபாச பந்துக்களைக் கற்பித்துக் கொண்டு அவர்களுக்கு நன்மை செய்வதும்
சிலர் சத்ருக்கள் என்று கொண்டு அவர்கட்கு தீமை செய்வதுமாக இருக்கின்றோமே –
இப்படி அல்ல எம்பெருமானுடைய ஸ்வ பாவம் –
அவன் எப்படிப் பட்டவன் என்றால் -உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் –தேவா நாம் தான வாநஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்று
எல்லார் திறத்திலும் வாசி அற்ற அன்புடையவனாகச் சொல்லப் படுபவன் –
இன்னமும் எப்படிப் பட்டவன் -என்றால்  -உகந்தவர் தம்மை மண் மிசைப் பிறவியே கெடுப்பான் -தன்னை யார் உகக்கின்றார்களோ
அவர்களை சம்சாரத்தில் நின்றும் களைந்து எடுத்து நித்ய ஸூரிகள் உடைய திரளிலே நிறுத்துமவன்-
அது கண்டு அடிமைத் தொழில் பூண்டாயே -என்று அன்வயம்
இப்படிப் பட்ட எம்பெருமானுடைய ஸ்வ பாவத்தைக் கண்டறிந்து –
அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தம் -என்று கொண்டாயே -என்கை –

உகந்தவர் தம்மை -என்கிறதுக்கு -தன்னிடத்தில் எவர் ப்ரீதி பண்ணுகிறார்களோ அவர்களை -என்றும் –
எம்பெருமான் தான் எவர்கள்  இடத்தில் ப்ரீதி வைக்கிறானோ அவர்களை -என்றும் கொள்ளலாம் –
அவனுக்கு பஷபாதித்வம் வந்திடும் என்று நினைக்க வேண்டா
ப்ரியதம ஏவஹி வரணீயோ பவதி -என்று ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்தபடி -தன் பக்கல் அன்பு  செய்வாரையே தான் உகப்பான் –
என்னுடைய நெஞ்சம் என்று கௌரவ வார்த்தை
குறத்திகளும் வண்டுகளும் குறிஞ்சி முதலிய பண்களை பாடும் திருமலை
குறிஞ்சி என்றும் மருள் என்றும் பண்களின் பெயர்
அன்றிக்கே மருள் -அடை மொழியாக்கி -மதி மயக்கம் பண்ணும் குறிஞ்சி என்ற பண் என்னவுமாம்-

அறவன் –
தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு
தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற பரம தார்மிகன் -பெரிய வாச்சான் பிள்ளை –

———————————————————

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏந்தி உகந்து உகந்து தொண்டரோங்கள் பாடியாட -என்றபடி
அப்படிப் பட்ட தொண்டர்களையும் அவர்கள் சம்பந்தம் உடையார்களையும் பரம பதத்தில் கொண்டு சேர்கிற
மகா குணம் கண்டு அடிமை பூண்டாய்-

இண்டை கொண்டு -என்னாமல்-இண்டை யாயின கொண்டு -என்றது
சுத்த பாவத்துடன் கொள்ளும் ஏதாவது புஷ்பம் என்றபடி
செண்பக மல்லிகை யோடு செங்கழுநீர் இருவாட்சி என்பன வேண்டாம் –
பூ மாலை என்று பேர் பெற்றவற்றைக்  கொண்டு -பெரிய வாச்சான் பிள்ளை
பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகை இன்றி  நன்னீர் தூய  புரிவதுவும் புகை பூவே  -திருவாய் -1-6-1-
அகில் புகையோ கருமுகைப்  பூ  வேண்டாம் -ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் அமையும்
செதுகை இட்டு புகைக்கலாம் -கண்டகாலிப் பூவும் சூட்டலாம்  -பட்டர்

ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய வி நிவேதயேத்-
கையில் முள் பாயுமே என்பதால் சாஸ்திரம் -தயையால் -நிஷேதித்தது  –
அத்யந்த பக்தி யுக்தாநாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரமம்-பக்தி எல்லை கடந்தால் நூல் வரம்பில்லை –

ஜீவித காலத்திலும் பின்பும் சம்பந்தி சம்பந்திகளுக்கும் புருஷார்த்த சித்தி யுண்டு
வண்டுகள் வாழும் சோலை வாய்ப்பு கொண்ட திரு வேங்கட மலையையும் பரமபதத்தையும் ஆண்டு வரும்
உபய விபூதி நிர்வாஹகனுக்கு அடிமைத் தொழில் பூண்டாய்

———————————————————

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-

பாவியாது -அலை பாயாமல் திண்ணிய அத்யவசாயம் கொண்டாய் -பாவிதல் -ஆராய்தல் –
திருவவதரித்து இங்கே அடிமை கொண்டு -அவ்வளவில் திருப்தி பெறாமல் -பரம பதத்தில் கொண்டு போய் அருளி
மேலும் கைங்கர்யம் கொள்பவன் -கோபால கிருஷ்ணன்
கோவி நாயகன் -கோபிகளுக்கு நாதன்
அவனே திருவேங்கடமுடையான் –
கொண்டல் உந்து உயர் வேங்கட மலை -மேகங்களை சென்று தள்ளும்படி அவ்வளவும் வளர்ந்த சிகரங்களை யுடைய திருவேங்கடம் –
வானவர் ஆவியாய் இருப்பார் -வானவர் -ஞானி என்று கொண்டு -ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்றவாறே –

—————————————————————–

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-5-

போதி -அரச மரம் -புத்தர்கள் தேவதை இருப்பிடம் -கிளையும் கப்புமாக வளர்ந்ததால் பொங்கு போதி
பிண்டி -அசோக மரம் -ஜைனர்கள் தேவதை இருப்பிடம் -நோன்பியர் -அமணர்
வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் -தானவர் அசுரர்கள் என்றும் ஸ்தானவர்-இவ்விலகத்தார் என்றும்
அங்கண்-புண்டரீகாஷன் என்றபடி –

——————————————————–

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

துவரியாடை -காஷாயம்
மட்டையர் -மொட்டைத் தலையர் -தலையில் பூச்சி வந்து ஜீவா ஹிம்சை யாகக் கூடாது என்பதால்
மேல் விழுந்து சோறுகளை தின்று பெரும் கூட்டமாக இருந்து -உண்டியே உகந்து ஊன் மல்கி மோடு பருத்து
இப்படி இன்றி திருவேங்கடமுடையானுக்கு அடிமை பூண்டு வாழப் பெற்றாயே-

கண்ணார் விசும்பிடை அமரர் -விசாலமான பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு தலைவன்
கவரி மான்கள் கூட்டமாகச் சேர்ந்து இருக்கிற திருமலை-வேங்கடம் கோயில் கொண்ட அமரர் நாயகனுக்கு அடிமை பூண்டாயே-

————————————————————–

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-7-

தருக்கு -யுக்திவாதம் -சாஸ்த்ரங்களுக்கு இணங்காத உக்தி வாதங்களால் மத ஸ்தாபனம்  செய்வர்
தருக்கினால் சமண்  செய்பவர்
பெரும் சோறு உண்ணுவர் -வேகு சோறு உண்ணுவர்
அலக்கண் -துன்பம்
வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு -வைதிகர்கள் வணங்கும்படி சூர்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருப்பவன் –
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ -முப்போதும் அனுசந்திக்கிறோம் இறே-

———————————————————

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

சேயன் அணியன் சிறியன் பெரியன் -சம்சாரிகள் வார்த்தை
பர வாசுதேவன் -எட்டா நிலத்தில் இருப்பவன் -தூரஸ்தன் -என்றும்
அர்ச்சாவதாரன் சமீபம் -அலஷ்யம் தோற்ற பேசுவர்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதார சௌலப்யம் அறியாமல்
வியூஹ அந்தர்யாமியும் நெஞ்சுக்கு எட்டாதவன் -எப்படி உபாசிப்பது
என்று எல்லாம் பேசுவர்
இப்படி அவன் குணங்களை எல்லாம் இகழ்ந்து பேசுவர்
மத யானை கும்ப ஸ்தலத்திலும் மூங்கில்களிலும் முத்துக்கள் உண்டாகுமே -வேய்கள் நின்று வெண்  முத்தமே சொரி வேங்கடம்
வெண் தரளங்கள் வேய் விண்டுதிர் வேங்கட மா மலை என்றார் கீழ் திரு மொழியிலும்
அந்த முத்துக்கள் ஒளி வழி காட்ட அப்பன் இங்கே வந்து புகுந்தான்
ஆயர் நாயகன் -கிருஷ்ணனே திருவேங்கடமுடையான் –

——————————————————

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காணகிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-9-

கூடியாடி உரைத்ததையே யுரைத்தாய் -தனது நெஞ்சின் பூர்வ அவஸ்தையை சொன்னபடி –
நேற்று வரை எப்படிபோது போக்கித் திரிந்தாய்  இன்று எப்படி ஆனாய் -ஆச்சர்யம் தோன்ற அருளிச் செய்கிறார் –

பக்திக்கு போக்கு வீடாக பாடியும் ஆடியும் -பலரும் பணிந்து ஏத்தி அவ்வளவிலும் காண முடியாதவனை –
பிரமன் சிவன் இந்த்ரன் போன்றார் மேவித் தொழும் திருவேங்கடமுடையான் திறத்திலே அடிமை பூண்டாயே-

காணகிலா -காணகிலார் -பாட பேதம்
காணகிலா -திருவேங்கடமுடையானுக்கும் -ப்ரஹ்மாதிகளுக்கும் விசேஷணம்
ஆடு தாமரையோன் -வெற்றியை யுடைய ப்ரஹ்மன்-உலகைப் படைக்க வல்ல சமர்த்தன் –
வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு -ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு வவதரித்து ஆடின விடாய் தீர  திருமலையில் வந்து நிற்பவன்
பண்டு ஆடின சுவடு இந்த நிலைமையிலும் தோற்றா நிற்கும்
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் -வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும் -அனுசந்தான சேர்த்தி அழகு திரு நெடும் தாண்டகம் –

———————————————————————–

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி  இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

மின்னு மா முகில் மேவு
பெருமாளும் பிராட்டியும் கூடி வாழும் வாழ்ச்சியை சூசிப்பிக்கிறது
மதுகைடபர்களை அழித்து அன்னமாய் -ஹம்ச ரூபியாய் -ப்ரஹ்மனுக்கு உபதேசித்து அருளினவனான
திரு வேங்கடமுடையான் விஷயமான
இப்பத்தையும் ஓத வல்லார் பரமபதத்தை இருப்பிடமாக கொள்ளப் பெறுவார்கள் –
கன்னி -அழிவு இல்லாமை

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-10-கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன்-

March 14, 2015

அவதாரிகை –
கீழ்த் திருமொழியில் –
தம்முடைய வெறுமையைச் சொல்லி சரணம் புகுந்து –
அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் -அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் -என்று பலகாலும் பிரார்த்தித்தார் –
அஹங்காரம் மமகாரம் முதலிய விரோதிகள் கழிந்து பரபக்தி பெருகினால் அன்றோ கைங்கர்யம் பெறலாவது-
அதற்காக அஹங்கார மமகாரம் முதலிய விரோதிகளை போக்கி அருள வேணும் என்றும்
பக்தி சம்பத்தை தந்து அருள வேணும் -என்றும் பிரார்த்திக்கிறார் இதில் –

எம்பெருமானாரும் சரணாகதி கத்யத்தில் -த்வத் பாதார விந்த யுகளம் சரணமஹம் ப்ரபத்யே -என்று சரணம் புகுந்த பின்பு
ஸ்தூல சூஷ்ம ரூபமான பிரகிருதியைக் கழித்து தர வேணும் என்றும்
பரபக்தி முதலியவற்றை பிறப்பிக்க வேணும் என்றும் பிரார்த்தித்தது இங்கு அனுசந்திக்கத் தகும் –

————————————————————–

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே–1-10-1–

மிகப் பெரிய கடலையே அகழாக யுடைத்தான இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய திண்மை பொருந்திய
சரீரம் இரு பிளவாக பிளவுருமபடியாக அவன் மீது அம்புகளைப் பிரயோகித்தவனே என்று
ஸ்ரீ ராம பிரானாக விளிக்கின்றார் திரு வேங்கடமுடையானை –
அவனும் இவனும் ஒருவனே என்கிற ஒற்றுமை நயம் தோற்றுதற்க்காக -என்கை –
இராவணனால் குடியிருப்பு இழந்து கிடந்த தேவர்கள் எல்லாரும் களித்து வந்து தொழும் படியான
திருவேங்கட மலையிலே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானே –
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு பெரும் துக்கம் என்று உணர்ந்த என்னுடைய இவ் இடரை போக்கி அருளாய் -என்கிறார் –
கண்ணார் கடல் -வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கும்படியான அழகிய கடல் -என்றும் உரைக்கலாம் –

———————————————————-

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-

புற்றானது என்றைக்கும் துஷ்ட சர்ப்பங்கள் மாறாதே யுறையும் இடமாக இருப்பது போலே
இலங்கையானது இராவணனுக்கு முன்பும் குடியிருந்து வந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு வந்ததால்
அவர்களையும் தொலைத்த படி சொல்லுகிறது இப்பாட்டில் –
மாலி யானவன் முதலில் பெரிய திருவடியை கதையால் அடித்து துரட்ட -பிறகு
பெருமாள் அளவற்ற சீற்றம் கொண்டு பெரிய திருவடி மேலே ஏறிக் கொண்டு போர்க்களத்திலே எழுந்து அருளி
திருவாழியை பிரயோகித்து ஒழித்தான் –
இலங்கைப் பதிக்கென்று இறையாய -என்றும் பாட பேதம் –

குலம் மாள -என்னாமல் குலம் கெட்டவர் மாள -என்றதனால் பல அரக்கர்கள் மூளைக்கு ஒருவராய்ச் சிதறி ஓடினார்கள்
என்பதும் பலர் மாண்டு ஒழிந்தனர் என்பதும் விளங்கும் –
விலங்கல் குடுமி –
சேணுயர் வேங்கடம் -என்றால் போலே திருமலையின் உயர்த்தியைச்  சொல்லுகிறது இந்த விசேஷணம்-
வானத்தின் மீது சஞ்சரிக்கின்ற ஸூர்ய சந்த்ரர்கள்  விலகிப் போக வேண்டும்படியான சிகரத்தை யுடைய திருமலை -என்கை –
விலங்கல் என்று மலைக்குப் பேர் யுண்டாகையாலே-குடுமி -சிகரத்தை யுடைய –
திருவேங்கடம் விலங்கல்   -திருவேங்கட மலையிலே என்றும் உரைக்கலாம் ஆயினும் அது சிறவாது
அலங்கல் துளப முடியாய் அருளாய் –
ஆர்த்தர்களை ரஷிப்பதற்கு என்று  தனி மாலை இட்டு இருக்கிற உனக்கு என்னுடைய
விரோதிகளைப் போக்குகை ஒரு பெரிய கார்யம் அன்று -அருள் செய்ய வேணும் அத்தனை -என்கை –

—————————————————–

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

மற்ற  பேர்களை ரஷிக்க நான் சக்தன் ஆயினும் பாவிகளில் தலைவரான உம்மை ரஷித்தல் எனக்கு எளிது அன்றே –
இஃது அருமையான கார்யம் ஆயிற்றே -என்று எம்பெருமான் திரு உள்ளமாக
பிரளய காலத்தில் கடல் சூழ்ந்த உலகங்களை எல்லாம் திரு வயிற்றிலே வைத்து இட்டு
இளையதொரு  ஆலந்தளிரின் மேலே திருக் கண் வளர்ந்து அருளின அகடிதகடநா  சமர்த்தனான உனக்கு அரிதான காரியமும் யுண்டோ –
எல்லாம் எளிதே காண் என்பாரே போலே வடதள சாயி விருத்தாந்தத்தை ப்ரஸ்தாவிக்கிறார்-
அந்த சக்தி விசேஷம் எல்லாம் தோற்ற திருமலையிலே சேவை சாதிக்கின்ற என் ஆராவமுதமே அருள் புரியாய் -என்கிறார் –

————————————————-

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

திருமலையில் எழுந்து அருளி இருக்கிற இருப்பில் பரத்வ சௌலப்யங்கள் இரண்டும் ஒருங்கே
விளங்குகின்றன என்ன வேண்டி -இரண்டுக்கும் பிரகாசமான இரண்டு சேஷ்டிதங்களை முன்னடிகளில் கூறுகின்றார் –
திரு வாய்ப்பாடியிலே ஆய்ச்சிகள் உறிகளின் மேலே சேமித்து வைத்த நெய் முதலிய கவ்யங்களை
அமுது செய்தாய் என்று சொன்ன முகத்தால் சௌலப்ய குணத்தையும்
குறளாகி மாவலி இடத்துச் சென்று நீரேற்று பெற்று ஈரடியாலே உலகு அளந்தாய் என்று
சொன்ன முகத்தாலே பரத்வத்தையும் பேசினார் ஆயிற்று –

திரு வேங்கடமலை பூ மண்டலத்திலே உள்ளதாகையாலே நம் போன்ற  மனிசர்கள் சென்று சேவிப்பதற்கு பாங்காய் இருப்பது போலே
விண் தோய் சிகரத் திரு வேங்கடம் ஆகையாலே நித்ய ஸூரிகளும் வந்து சேவிப்பதற்கு பாங்காய் இருக்கும் –
ஆனதுபற்றியே -மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் வைப்பு -என்று திருமழிசைப் பிரானும் –
மந்திபாய் வடவேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்று திருப்பாண் ஆழ்வாரும் அருளிச் செய்தது –
நித்ய ஸூரிகள் பரத்வத்திலே சர்வ காலமும் பழகினவர்கள் ஆகையாலே சௌலப்யத்தை காண விரும்பி வருவார்கள்
மனிசர்கள் பரத்வத்தை காண விரும்பிச் செல்வர்கள் –
இரண்டு குணங்களும் அங்கே குறையற்றவை என்று இப்பாசுரத்தினால் காட்டினார் ஆயிற்று –

திருவேங்கடம் மேய அண்டா -என்ற விளியும் இங்கே பொருத்தமாக அமைந்தது –
அன்டன் -என்று இடையனுக்கும் தேவனுக்கும் பெயர்
உறி மேல் நறு நெய்  அமுதாக யுண்ட அண்டா -என்று யோஜித்து-இடையனே -என்னுதல் –
குறளாய் ஈரடியாலே நிலம் கொண்ட அண்டா -என்று யோஜித்து -தேவனே -பரம புருஷனே என்னுதல் –
இரண்டு யோஜனையாலும் பரத்வ சௌலப்யங்கள் விளியிலும் விளங்கின படி –

————————————————–

தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-

பக்தர்களின் சத்ருக்களின் இடத்தில் சீற்றமும் பக்தர்கள் இடத்தில் வாத்சல்யமும் விளங்க
திரு வேங்கட திருமலையில் சேவை சாதிக்கிற படியை பேசுகிறார் –
தூணின் உள்ளே நரசிம்ஹமாய்த் தோன்றி இரணியன் யுடலைப் பிளந்து எறிந்து
சிறுக்கனான  ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு அருள் செய்தாப் போலே அடியேனுக்கும் அருள் செய்ய வேணும் என்கிறார்-

தூணூடு அரியாய் வந்து தோன்றி என்னும் அளவே போதுமாய் இருக்க தூணாயதநூடு-என்று
தூணாய் இருக்கிற வஸ்துவின் யுள்ளே என்று சொல்லுகைக்கு கருத்து என் என்னில்
முன்பே நரசிம்ஹத்தை உள்ளே அடக்கி வைத்து கட்டின கம்பம் இது -என்று சொல்ல ஒண்ணாத படி
வெறும் தூணான அதனுள்ளே என்பதாம் –
அரி-சிங்கம்-பேணா அவுணன் -சர்வேஸ்வரனை மதியாத இரணியன் என்றும் –
பாகவத சிகாமணியான ப்ரஹ்லாத ஆழ்வானை மதியாத இரணியன் என்றுமாம்

சேண்-அகலம் -ஆகாசம் உயர்ச்சி -தூரம் -நீளம் –
கோள் நாகணையாய்-கோள் -மிடுக்கு -திரு வநந்த ஆழ்வானுக்கு மிடுக்காவது –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் -என்றபடி
பலவகை அடிமைகளுக்கும் உரிய வடிவங்களைக் கொள்ளுதற்கு பாங்கான சக்தி –
குறிக்  கோள் -ஓர் அடியானும் உளன் என்று திரு உள்ளத்திலே வைத்து இரு -என்றபடி
திரு வநந்த ஆழ்வானைப் போலே என்னையும் அத்தாணிச் செவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ளாய்-எனபது உள்ளுறை –

———————————————–

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

கீழ் ஐந்து பாட்டும் பிரார்த்தனையாய்ச் சென்றது
இனி மேல் பாட்டுக்கள் பிரார்த்தனை ஒருவாறு தலைக் கட்டின படியைச் சொல்லுவதாக செல்லுகிறது –
அடியேன் இடரைக் களையாயே -என்றும்
அடியேற்கு அருளாயே -என்றும் –
அடியேனுக்கு அருள் புரியாயே -என்றும் –
குறிக்கோள் எனை நீயே -என்றும்
பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திருவேங்கடமுடையான் -அடியார்களைத் தேடித் திரிகிற நான் இங்கனே பிரார்த்திக்கிற
உம்மை உபேஷித்து இருப்பேனோ -என்று சொல்லி ஆழ்வார் திரு உள்ளத்திலே வந்து புகுந்தான் –
இதனை அறிந்த ஆழ்வார் இனிதாக அனுபவிக்கிறார் –
எம்பெருமான் வந்து தனது நெஞ்சிலே புகுந்தவாறே தாம் சம்சாரத்தில் நின்றும் விலகி விட்டதாகவே நினைத்துப் பேசுகிறார் –

மன்னா -என்றது மனிசப் பிறவிக்கு  அடை மொழி –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் -என்றபடி மின்னலைக் காட்டிலும் அஸ்திரமான இந்த மானிடப் பிறவியில் நின்றும்
என்னை நீக்கித் தன்னையே ஒக்க அருள் செய்யும் எம்பெருமான் என் நெஞ்சிலே வந்து புகுந்து நிற்கிறான் காண்மின் -என்கிறார் –
தன்னாக்கி -தன்னைப் போலே என்னையும் மலர்ந்த ஜ்ஞாநாந்தங்களை யுடையவனாக்கி என்றாவது –
தனக்கு சேஷமாக்கி என்றாவது – யுரைக்கலாம்
மின்னார் முகில் சேர் -பெருமாளும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்திக்கு யுவமை இட்ட படி –

————————————

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-

அண்ணா அடியேன் இடரைக் களையாயே-என்று முதல் பாட்டிலே தாம் பிரார்த்தித்த படியே
தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது
முன்பு நப்பின்னை பிராட்டியின் கலவிக்கு விரோதிகளாய் இருந்த ஏழு ரிஷபங்களை வலி அடக்கினது போலே
இருக்கையாலே அதனைப் பேசி இனியராகிறார் –
மானினுடைய நோக்குப் போன்ற நோக்கை யுடையளான நப்பின்னைப் பிராட்டியை மணந்து கொள்வதற்காக அவளுடைய தந்தையின்
கட்டளைப் படி ஏழு ரிஷபங்களையும் கொன்று ஒழித்த பெரு மிடுக்கனே –
அன்று அவளுக்கு எவ்வளவு  போக்யமாய் இருந்தாயோ எனக்கும் அவ்வளவு போக்யமாய் இருப்பவனே –
திரு வேங்கடமுடையானே -அந்த நப்பின்னைப் பிராட்டியையும் கூட்டிக் கொண்டு
என் மனத்தே வந்து குடி கொண்டு இருக்கின்றாயே -இப்படியும் ஒரு திருவருள்   உண்டோ என்கிறார் ஆயிற்று –
எதிர் வந்த ஆனேழ் விடைகளை-மானேய் மட நோக்கி திறத்து -செற்ற அணி வரைத் தோளா-என்று அந்வயம்-

————————————————-

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-

இப்படி என் நெஞ்சில் நப்பின்னை பிராட்டி யோடும் கூட வந்து புகுந்தானான பின்பு இவன் திருவடிகளில்
கைங்கர்யம் பண்ணுகை ஒழிய வேறு ஒன்றும் நான் அறியேன் -என்கிறார்-

எம்பெருமான் சிலருக்குச் சேயன் -சிலருக்கு அணியன் –
சேயன் என்றால் தூரத்தில் இருப்பவன் -அணியன் என்றால் சமீபத்தில் இருப்பவன் -என்கை-
தன்னை உகவாதாருக்கு அவன் எட்டாதவன் -தன்னை உகந்தாருக்கு அவன் கையாளாய் இருப்பவன் –
துரியோதனர் திறத்திலும் பாண்டவர் திறத்திலும் இதனைக் காணலாம் –
சிறிது பக்தி யுடையாருக்கும் அவன் அணியன் என்பதை என்னைக் கொண்டு அறியலாம் என்பவர் போலே –
என் சிந்தையுள் நின்ற மாயன் -என்கிறார்
என்னுடைய ஹிருதயத்திலே வந்து நித்ய வாசம் பண்ணுகிற ஆச்சர்ய சீலன் அணியன் எனபது சொல்ல வேணுமோ என்கை –

மணி வாள் ஒளி வெண்டரளங்கள் வேய் விண்டுதிர்-எனபது திருவேங்கட திருமலைக்கு விசேஷணம்
யானைகளின்  கும்ப ஸ்தலத்திலும் மூங்கில்களிலும் முத்துக்களும் மணிகளும் யுண்டாவதாக நூல்கள் கூறும் –
வேய்களானவை விண்டு விரிந்து வாள்-ஒளி-பொருந்திய மணிகளையும்
ஒளியும் வெண்ணிறமும் பொருந்திய தரளங்களையும் -முத்துக்களையும் –
உதிர்க்கும் இடமான திருமலையிலே எழுந்து அருளி இருக்கிற சர்வ ஸூலபனுடைய திருவடிகளைத் தவிர வேறு ஒன்றும் அறியேன் –
தரளம் -முத்து வடசொல் –

———————————————

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார்
வந்து என் மனம் புகுந்து மன்னி நின்றாய் -என்று ஒரே வாக்யமாக சொல்லி விடலாம் ஆயினும்
தம்முடைய ஆனந்தம் நன்கு விளங்குமாறு
வந்தாய் –என் மனம் புகுந்தாய் –மன்னி நின்றாய் -என்று தனித் தனி வாக்யமாக நீட்டி நீட்டி யுரைக்கின்றார் –

வந்தாய் –
பரமபதம் -திருப் பாற் கடல் முதலான அசாதாரணமான ஸ்தலங்களை விட்டு இவ்விடம் வந்தாய்
என் மனம் புகுந்தாய் –
வந்த இடத்திலும் ஜ்ஞாந அனுஷ்டானங்களில்  சிறந்த யோகிகளின் மனத்தை தேடி ஓடாமல்
நாயினேனுடைய மனத்தை தேடிப்பிடித்து வந்து புகுந்தாய் –
மன்னி நின்றாய் –
இனிய இடங்களில் நாம் சுகமாய் இருப்பதை விட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப்பட்டு கிடப்பான் என் -என்று
வெறுத்து நெஞ்சை விட்டு நீங்கப் பாராமல் -இதனில் சிறந்த ஸ்தானம் வேறு ஓன்று நமக்கு இல்லை –
என்று கொண்டு என் நெஞ்சிலே ஸ்திரப் பிரதிஷ்டையாக இருந்து விட்டாய் –
அப்ராக்ருதனான நீ   மிகவும் ஹேயமான என் நெஞ்சிலே வந்து புகுந்ததனாலே 
உன்னுடைய தேஜஸ்ஸூக்கு எள்ளளவும் குறை இல்லை
முன்னிலும் தேஜஸ்ஸூ விஞ்சுகின்றது என்பார் -நந்தாத கொழும் சுடரே -என விளிக்கின்றார் –
நந்துதல் -கெடுதல் –நந்தாத  -கெடாத
சிந்தா மணியே –
காம தேனு கல்ப வருஷம் முதலானவை  போலே நினைத்த மாத்ரத்திலே அபீஷ்டங்களை எல்லாம் தரக்கூடிய
ஒரு மணிக்கு சிந்தா மணி என்று பெயர்
அது போலே சர்வ அபீஷ்டங்களையும் அளிப்பவனே -என்றபடி
இப்படிப் பட்ட உன்னை இனி நான் ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரிய மாட்டேன் என்று
தமக்கு பரபக்தி வாய்ந்த படியைப் பேசினார் ஆயிற்று –

—————————————–

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-

திரு மலையிலே வில்லும் கையுமான  வேடர்கள் நிறைந்து கிடப்பதாக வருணிப்பதன் கருத்து யாது என்னில்
ஆழ்வார் மங்களா சாசன பரர் ஆகையாலே தம்மைப் போன்ற மங்களா சாசன பரர்கள் திருமலையிலே பலர் உளர் என்றபடி
பரமபதத்திலும் நித்ய ஸூரிகள் அஸ்தானே பயத்தைச் சங்கித்து பரியும் போது
திருமலையிலே ஸ்ரீ குஹப் பெருமாள் போன்ற வேடர்கள் அஸூர ராஷச மயமான இந்நிலத்திலே எந்த வேளையில் யாரால் என்ன தீங்கு
எம்பெருமானுக்கு நேர்ந்து விடுமோ என்று அதி சங்கை பண்ணி எப்போதும் ஏறிட்ட கையும் வில்லுமாய்
இருப்பார்கள் ஆகையாலே அதனை உவந்து ஆழ்வார் அருளிச் செய்கிறார்
பெரியாழ்வார் மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா என்று எம்பெருமானுடைய
அளவிறந்த சக்தி விசேஷத்தை அறிந்து சொல்லச் செய்தேயும்
அதி  சங்கையின் மிகுதியாலே பல்லாண்டு பல்லாண்டு என்றால் போலே
இவரும் மல்லார் திரள் தோள் மணி வண்ணன் என்று அறிந்து வைத்தும் அதி சந்கையினால்
மங்களா சாசனத்தில் நிஷ்டை யுடையராய் இருப்பார் எனபது இப்பாட்டால் அறியத் தக்கது
இப்பாட்டில் ஆழ்வார் பல்லாண்டு பாடுவதாக இல்லையே என்று நினைக்க வேண்டா
மங்களா சாசன பரர்கள் திரு மலையிலே உள்ளார் -என்று சொல்லுவதும் பல்லாண்டு பாடுகையில் அந்வயிக்கும்
திருவேங்கடமுடையானை திரு மங்கை ஆழ்வார் கவி பாடின இப்பாசுரங்களை ஓத வல்லவர்கள் நித்ய ஸூரிகளைப் போலே
நித்ய கைங்கர்யம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவார்கள் என்று இத்
திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலை கட்டுகிறார் –

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-9-தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் —

March 14, 2015

அவதாரிகை –
கீழ்த் திரு மொழியிலே பாசுரம் தோறும்
திருவேங்கடம் அடை நெஞ்சமே –திருவேங்கடம் அடை நெஞ்சமே -என்று சொல்லி
திருமலையை ஆஸ்ரயிக்குமாறு தம் திரு உள்ளத்தைத் தூண்டினார் -அதுவும் அப்படியே இசைய –
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்றால் போலே இருவரும் கூடி
திரு வேங்கடமுடையானை அனுபவிக்கத் திருமலையிலே வந்து புகுந்தார் –
சர்வ ஸ்வாமி யாய் -சர்வ வித பந்துவான திருமால் -இங்கே நித்ய வாசம் செய்து அருளுகிற படியாலே
நம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் இங்கே பெறலாம் என்று மிகுந்த பாரிப்புடனே வந்தார் ஆழ்வார் –
இப்படி  வந்த ஆழ்வாரை -எதிர் கொண்டு அழைத்தல் -அணைத்தல் -மதுரமான ஒரு வார்த்தை சொல்லுதல் –
குசல பிரச்னம் பண்ணுதல் -கைங்கர்யத்திலே ஏவுதல் -ஒன்றும் செய்திலன் திருமலை அப்பன் –
அதனால் ஆழ்வார் மிகவும் திரு உள்ளம் நொந்து -சர்வஜ்ஞனாய்  -சர்வ சக்தனாய் -நமக்கு வகுத்த நாதனாய் –
பிராட்டியை ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாதவனாய்
இருக்கும் இப் பெருமான் இப்போது நம்மை உபேஷிப்பதற்கு காரணம் நம்முடைய கனத்த பாபங்களேயாக வேணும் –
மஹா பாபியான இவனை நாம் கடாஷிக்கலாகது என்று திரு உள்ளம் பற்றி இருக்கிறான் போலும் என்று நிச்சயித்து
அப் பெருமான் திரு உள்ளத்தில் இரக்கம் பிறக்கும்படி பாசுரம் பேசுகிறார் –

பந்துக்கள் அல்லாதாரைப் பந்துக்களாக நினைத்தும் -போக்கியம் அல்லாத விஷயங்களை போக்யமாகக் கொண்டும்
ஜீவ ஹிம்சைகளை அளவற பண்ணியும் – இன்னமும் பல்வகைப் பாபங்களைச் செய்தும் காலம் கழித்தேன் ஆகிலும் இப்போது
உன்னை விட்டுத் தரிக்க மாட்டாத அன்பு பிறந்ததனால் அனுதாபத்துடன் இவ்விடம் வந்து சேர்ந்தேன் –
இனி நீ என்னை என்னுடைய முன்னைத் தீ வினைகளைப் பார்த்து கைவிடல் ஆகாது –
நீயோ  சர்வ ரஷகன் -நானோ அநாதன் -அநந்ய கதி –
என் குற்றங்களைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டியும் -அகலகில்லேன் இறையும்-என்று திரு மார்பிலே உறையா நின்றாள் –
ஆனபின்பு என் அபராதங்களைப் பொறுத்து அருளி அடியேனைக் கைக் கொண்டு அருள வேணும் என்று
பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு திரு வடிகளிலே புகுந்து சரணம் புகுகிறார் –
ஒன்பதாம் பாட்டிலே -மாயனே எங்கள் மாதவனே -என்று பிராட்டி சம்பந்தம் பிரஸ்துதமாய் இருக்கையாலே
புருஷகாரம் முன்னாகச் சரணம் சரணம் புகுகிறார் எனபது விளங்கும் இறே-

—————————————————–

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாய்த் தாய்  தந்தையும் அவரே
யினி யாவரே -திருவாய் -5-1-8- என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -திருவாய் -7-8-1-என்கிறபடியே
உன்னையே சகல வித பந்துக்களாகக் கொள்ள வேண்டு இருக்க
அது செய்யாதே தாயே -என்றும் தந்தையே என்றும் -தாரமே என்றும் -கிளையே என்றும் -மக்களே என்றும்
ஆபாசமான புத்ரமித்ராதிகள் இடத்திலே ஆசை வைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன் –
அவர்களுக்கு என்னை ரஷிக்க சக்தி யுண்டாகில் அன்றோ அவர்களால் நான் வாழ்வேன் –
உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக் கெட்டேன்-
இப்படி ஆபாச பந்துக்களை நம்பின படியால் அன்றோ நமக்கு கஷ்டங்கள் நேர்ந்தன –
நிருபாதிக பந்துவான எம்பெருமானைப் பற்றினோம்  ஆகில்  ஒரு குறையும் இராதே என்று இன்று நல்ல புத்தி உண்டாயிற்று
பரம போக்யமான திருமலையிலே வந்து நிற்கிற நிலையிலே ஈடுபட்டு திருவடிகளிலே விழுகின்றேன்
அடியேனுடைய முன்னைத் தீ வினைகளைக் கணிசியாமல் -சராணாக தன் என்பதையே குறிக் கொண்டு
பரம கிருபையுடன் அடிமை கொண்டு அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று

நாயேன் -நாய் போலே நீசன் என்று நைச்ய அனுசந்தானம் பண்ணுகிற படி இவ்விடத்தில்
பெரியவாச்சான் பிள்ளை -அருளிச் செயல் –
நான் செய்து கொண்ட படியைப் பார்த்தால் பிறர்க்கும் ஆகேன் -தேவர்க்கும் ஆகேன் –
புறம்பே போகில் கல்லை விட்டு எறிவார்கள் -உள்ளே புகுரில் தொட்டனவும் தீண்டினவும் பொகட வேண்டி வரும் –
ராஜபுத்ரர்கள்  -நாய்களையே மேல் விழுந்து விரும்புமா போலே
ராஜாதி ராஜனான நீயும் என் மேல் விழுந்து விரும்ப வேணும் -எனபது உள்ளுறை –

———————————————————-

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

ஆபாச பந்துக்களை உற்ற உறவினராக நினைத்து இருந்த  குற்றத்தை பொறுத்து அருள வேணும் என்று
சரணம் புகுந்தார் கீழ்ப் பாட்டில்
போக்யம் அல்லாத துர்விஷயங்களை போக்யம் என்று கொண்டு இருந்த குற்றங்களைப் பொறுத்து அருள வேணும் –
என்று சரணம் புகுகிறார் இதில் –
நெஞ்சு நஞ்சாய் இருக்கச் செய்தேயும் வெளி நோக்கை வெகு அழகாகச் செய்து ஆண் பிள்ளைகளை
ஆகர்ஷிக்கின்ற பெண்களின் கண் வலையிலே அகப்பட்டு
அந்த மாதர்களை ஆதரிப்பதே பரம பிரயோஜனம் என்று கொண்டு
அதற்காக எத்தனை பாவங்கள் செய்யலாமோ அத்தனை பாவமும்  செய்து தீர்த்தேன் –
உள்ள நரகங்கள் போராது-இன்னமும் பல நரகங்களைப் படைக்க வேணும் என்னும்படி
எண்ணிறந்த பாவங்களைச் செய்தேன் –
போக்யம் அல்லாத விஷயங்களிலே பிரமித்து ஈடுபட்டு அனர்த்தங்களை விளைத்துக் கொண்டோமே -என்று
அனுதாபம் தோன்றியதனால்
பரம போக்யமான விஷயத்திலே ஈடுபட்டு நன்மை பெறுவோம் என்று நல் மதி யுண்டாகி
போக்யதைக்கு எல்லை நிலமாக உள்ள திருமலையிலே எழுந்து அருளி இருக்கும் இருப்பிலே வந்து சரணம் புகுந்தேன் –
பழைய குற்றங்களைக் காணாது அடியேனை அடிமை கொண்டு அருள வேணும் -என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று
நாநா வித நரகம்
சேதன வர்க்கங்களுக்கு தொகை இல்லாதா போலே ஏற்கனவே படைக்கப் பட்ட நரகங்களுக்ளும் தொகை இல்லை
அவை எல்லாம் என் ஒருவனுக்கே போராது என்னும்படி பாவங்களை செய்தேன்
ஈஸ்வரனுக்கு ஜகன் நிர்வாஹம் நடக்க வேண்டில் வேறு சில நரகங்கள் சிருஷ்டிக்க வேணும் -பெரிய வாச்சான் பிள்ளை –

என் ஆனாய் –
தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மதயானாய் -திரு நெடும் தாண்டகம்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -திருவாய்மொழி
ஒப்புமை –
1- அபூர்வ வஸ்து -அப்பொழுதைக்கு அப்பொழுது   ஆராவமுதம்
2- திருவடிகளைப் பற்றியே அடைய வேண்டும்
3-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -பக்தியை தானே தந்து அருளுவான் –
யானையும் தன்னைக் கட்ட கயிற்றை தானே தரும்
4-நீராட்டிய உடனே அழுக்கைப் போட்டு கொள்வது போலே பொய் நின்ற ஞானத்தில் நம் போல்வார்
திரு உள்ளத்தில் சேர முயன்று கொண்டே இருப்பவன் -வாத்சல்யத்தாலே
5-பெண் யானை கொண்டே யானையை பிடிப்பார் இவனுக்கும் உருஷகாரம் வேண்டுமே
6-பாகன் அனுமதியால் -வேதம் வல்லர்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பதிந்து -இவனுக்கும் –
7-யானையின் பாஷை யானை பாகனுக்கே தெரியும் -திருக் கச்சி நம்பி ஆறு வார்த்தை பேரருளாளன்
8- நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் பாகன் இட்ட வழக்கு
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா -உன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் –
கிடந்தவாறு எழுந்திருந்து  பேசு வாழி கேசனே  -திரு மழிசை ஆழ்வாருக்கு விதேயன்
9- யானைக்கு கை நீளம் -இவனுக்கும் அலம் புரிந்த நெடும் தடக்கை யுண்டே
10 -சேஷித்த பிரசாதம் பல கோடி ஜீவர்களுக்கு -யானை யுண்ட சேஷம் பல எறும்புகளுக்கு
11- இறந்த பின்பு உதவும் -தன்னுடைச்சோதி எழுந்து அருளிய பின்பும் இதிஹாச புராண த்வாரா உதவுவான்
12- யானைக்கு ஒரு கையே -இவனுக்கும் கொடுக்கும்  கை மட்டுமே கொள்ளும் கை இல்லை –
13-பாகனுக்கு ஜீவனம் சம்பாதித்திக் கொடுக்கும் -அர்ச்சகர் பரிசாரகர்கள் ஜீவனம் தந்து அருளுகிறான்

————————————————

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-3-

ஜீவ ஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்து அருள வேணும் -என்று சரணம் புகுகிறார்
குறிக்கோள் ஆவது நம்பிக்கை
தேஹத்தில் காட்டிலும் வேறான ஆத்மா யுண்டு என்றும்
தெய்வம் யுண்டு என்றும்
சாஸ்திரம் யுண்டு என்றும்
புண்ய பாபங்கள் யுண்டு என்றும்
பாப பலன்களை அனுபவிக்க நரகங்கள் யுண்டு என்றும்
இவை ஒன்றிலும் நம்பிக்கை இல்லாமல் எல்லை இல்லாத ஜீவ ராசிகளை கொலை செய்தேன்
உகந்த பெண்களை  திருப்தி செய்ய பொருளீட்ட வழி மறித்து பிராணிகளைக் கொன்றேன் ஆகிலும்
பின்னை கூடி இருந்து குலாவும் பொழுது தேஹி என்று கவளம் இரந்தவர்களுக்கு ஒரு நாள் ஆகிலும் ஐயம் இட்டது இல்லை
இடா விடினும் இப்பொழுது கையில் இல்லை மற்று வேறு போது வந்தால் பார்ப்போம் போன்ற வார்த்தைகளை கூட சொல்ல வில்லை
இந்த பாவியிடம் இரந்தோமே என்று அவர்கள் நெஞ்சு புண்படும்படி திரச்காரமான வார்த்தைகளைச் சொல்லி விரட்டினேன் –
சரணம் புகுந்ததால் குளிர நோக்கி  அருள வேண்டும்
இன்று வந்தடைந்தேன் என்னாதே அன்றே வந்தடைதேன் -என்றது
அநுதாபம் பிறந்தாதால்-பிராயச் சித்தம் பண்ணி யாதல் வருகை அன்றிக்கே
கொன்ற கை கழுவாதே -உதிரக் கை கழுவாதே வந்து சரணம் புகுந்தேன் -பெரிய வாச்சான் பிள்ளை –

—————————————————

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-4-

———————————————–

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5-

———————————————-

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-

செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றமிகு யுடல் -என்றபடி புண்கள் நிறைந்து கிடக்கும் இது –
இப்படிப்பட்ட சரீரத்திலே அகப்பட்டுத் துவண்டு போனேன் –
இனி ஒரு சரீரத்தையும் பரிஹரிக்க வல்ல சக்தி இல்லாமையாலே ஜன்மாந்தரத்துக்கு அஞ்சி
உன் திருவடிவாரத்தில் வந்து விழுந்தேன் -அடிமை கொண்டு அருள வேணும் -என்றார் ஆயிற்று –

——————————————————–

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-

கிளர் ஒளி எளிமை கெடுவதன் முன்னம் -என்றும்
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயசே சதா -என்றும்
இளம்பிராயத்திலே நல்லதுகளைக் கற்கும்படி சொல்லி இருப்பதற்கு எதிர்தட்டாக பல தப்புக் கார்யங்களைச் செய்து விட்டேன் —
பிறகு யௌவனம் வந்து முகம் காட்டினவாறே -எந்த வஸ்துவைக் கண்டாலும் –
இது அவளுக்காகும் இது அவளுக்காகும் என்று பல வற்றையும் மாதர்க்காகத் தேடித் திரிந்து அலைந்து சதிர்கேடன் ஆனேன் –
போன காலம் எல்லாம் பழுதே போனாலும் இனியாகிலும் பிராப்த விஷயத்திலே தொண்டு பூண்டு அமுதம் உண்ண பெறலாம் என்று
திருவடிகளிலே வந்து சேர்ந்தேன் -ஆட்கொண்டு அருள வேணும் -என்றார் ஆயிற்று –
முதல் அடியை இரண்டு வாக்யமாகவும் உரைக்கலாம்
பாலகனாய் தெரியேன் -சில நாள் மிக்க இளம் பருவமாய் யுக்த ஆயுக்தங்கள் அறியாதே கிடந்தேன் –
பல தீமைகள் செய்துமிட்டேன் -சிறிது அறிவு யுண்டான பின்பு தோன்றினபடி பல தீமைகள் செய்து திரிந்தேன் –
அரியே -ஹரி என்னும் வடசொல் -பாபங்களை ஹரிப்பவனே -என்றும்
சிங்கம் போலே ஒருவராலும் அடர்க்க ஒண்ணாதவனே  -என்றுமாம் –

—————————————————————

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-

நோற்கையாவது -சங்கல்பிக்கை –
பல பிறவிகளை சங்கல்பிக்கை யாவது -பல பிறவிகள் யுண்டாகும்படி கருமங்களை செய்தலாம் –
இப்படி பல பிறவிகளும் பிறந்து கொண்டே வரச் செய்தே -யாத்ருச்சிக ஸூ க்ருத விசேஷத்தாலே உன்னைக் காண வேண்டும்
என்னும் ஆசை பிறந்தது இப்பிறவியிலே
அதனால் இதற்கு கீழ் நாம் நின்ற நிலை மிகவும் பொல்லாது என்று நெஞ்சிலே பட்டது –
இதுவரையில் நடந்த வற்றையும் இனி நடக்கப் போகிற வற்றையும் நினைத்து சஹிக்க மாட்டாமல்
உன் திருவடிகளை வந்து பணிந்தேன் -அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் என்றார் ஆயிற்று —
உன்னைக் காண்பதோர் ஆசையினால் பல் பிறவி நோற்றேன் –இப்பிறப்பே ஏற்றேன் என்று அந்வயித்து
உன்னை சேவிக்க வேணும் என்று பல பிறவிகளில் நோன்பி நோற்றேன் –
இதுவரையிலே உன்னுடைய சேவை கிடைக்கப் பெற்றிலேன்   – இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது –
கீழ்க் கழிந்த காலம் எல்லாம் வீணாப் போயிற்றே என்று இடர் உற்றேன் -என்றும் யுரைப்பார்
இதிலும் முன்னம் யுரைத்த பொருளே சிறக்கும் –

———————————————————–

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-

உன்னுடைய சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு வெகுதூரம் ஓடிப் போன எனக்கு
ஓர் இடத்திலும் ஒரு வகையான ஆதாரமும் இல்லை –
ஆத்மாவுக்கு ஞானமும் ஆனந்தமும் நிரூபகமே யாயினும் என் வரையிலே பாபமே நிரூபகமாம் படி
பாபங்களையே செய்து பாபிஷ்டன் ஆனேன் –
உன்னைப் பெறுதற்கு உறுப்பான உபாய விஷயத்தில் எள் அளவும் ஞானம் இல்லை –
நீயோ இப்படிப்பட்ட குறைவாளரையும் ரஷிக்க வல்ல ஆச்சர்ய சக்தியுக்தனாய் இரா நின்றாய் –
உனது குளிர்ந்த திரு உள்ளத்திலே என்னைப் போன்றவர்களுடைய அபராதங்களினாலே ஒரு கால் சீற்றம் பிறந்தாலும்
பொறுப்பித்து ரஷிக்க வல்ல பெரிய பிராட்டியாரும் -அகலகில்லேன் இறையும் என்று திரு மார்பிலே உறையா நின்றாள் –
இப்படி இருக்கும் இருப்பிலே நான் வந்து சரணம் புகுந்தேனான பின்பு இனி நான் இழப்பது யுண்டோ –
பற்றிலார் பற்ற நின்றானே -என்றபடி -ஆதாரம் அற்றவர்களுக்கு ஆதாரமாய் நிற்கக் கூடிய நீயே
அடியேனை ஆட்கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

பாவமே செய்து பாவியேன் ஆனேன்
பாவமே செய்து -என்றாவது -பாவியேன் ஆனேன் -என்றாவது இரண்டத்து ஒன்றைச் சொன்னால் போராதோ
பாவமே செய்து பாவியானேன் என்பான் என் என்னில் –
பாவம் செய்து புண்யாத்மாவாக ஆவதுண்டு -புண்யம் செய்து பாபிஷ்டானாக ஆவதும் யுண்டு –
தசரத சக்ரவர்த்தி அசத்ய வசனம் ஆகிற பாவத்துக்கு அஞ்சி சொன்ன வண்ணம் செய்கை யாகிற புண்ணியத்தைப் பண்ணி வைத்தும்
சாஷாத் வடிவெடுத்து வந்த புண்யமான ஸ்ரீ ராம பிரானை இழந்து ஆபாச தர்மத்தில் நிலை நின்றான்
என்கிற காரணத்தினால் அவனுடைய புண்யம் பாவமே யாயிற்று -பரமபத ப்ராப்திக்கு அனர்ஹனாய் விட்டான் இறே
சேட் பால்  பழம் பகைவன் சிசுபாலன் என்று பாபிகளில் முதல்வனான சிசுபாலனும் உள்ளதனையும் பாவமே செய்து போந்தாலும்
முடிவில் நல்ல பேறு பெற்றான் ஆதலால் அவனுடைய பாப்பம் எல்லாம் புண்யமாகவே போயிற்று –
ஆக இப்படி பாபம் செய்து புண்யசாலி யாவதும் -புண்யம் செய்து பாபிஷ்டன் ஆவதும் -யுண்டாயினும்
நான் பாவமே செய்து பாவியானேன் -அதாவது -தசரதனைப் போலே புண்யம் செய்து பாவியானேன் அல்லேன் –
சிசுபாலனைப் போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனும் அல்லேன்
செய்ததும் பாவம் -ஆனதும் பாபிஷ்டன் -என்கை-

முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் ஏல் அசை சொற்கள்
மாதவன் -பிராட்டியை முன்னிட்டு சரணம் புகுகிறார் -மா -பிராட்டிக்கு -தவன் -நாயகன் என்றபடி-

—————————————————

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே -என்றபடி
ஏழு உலகத்தவருக்கும் கண் போன்றவனும் –
உயிர் போன்றவனும் -ஆன-திருவேங்கட முடையானைக் குறித்து
திருமங்கை மன்னன் அருளிச் செய்த -இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்கு
பாவங்கள்   எல்லாம் பறந்து போம் என்று இத் திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் ஆயிற்று  –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-8-கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் —

March 14, 2015

கீழ்த் திரு மொழியில்
மின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய -என்றும்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் -என்றும்
கனைத்த தீயும் கல்லுமலா வில்லுடை வேடருமாய் -என்றும்
சிங்க வேழ் குன்றத்தின்  நில வெம்மையை அனுசந்தித்துப் பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
ஆழ்வீர்-தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா -என்றும்
சென்று காண்டற்கு அரிய கோயில் -என்றும்
சொல்லிக் கொண்டு சிங்க வேள் குன்றத்தில் ஏன் துவளுகிறீர்-
தெழிகுரலருவித் திரு வேங்கடம்  –
சிந்து பூ மகிழும் திருவேங்கடம் –
தெண்ணிறைச்  சுனை நீர்த் திருவேங்கடம் –
மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாழ்வரே-என்றும்
நெஞ்சு குளிரப் பேசும்படியான-திருவேங்கட மா மலையிலே நாம் அனைவருக்கும் எளிதாக சேவை சாதிக்கிறோம் –
அங்கே வந்து தொழுது ஆனந்தம் அடைவீர் என்று அருளிச் செய்ய -அங்கே பொய் அனுபவிக்கத் தொடங்குகிறார்
இத் திரு மொழியும் மேல் உள்ள மூன்று திரு மொழிகளும் ஆக நாற்பது பாசுரங்கள் திருவேங்கட  மலை விஷயமானவை
தமிழ் பாஷை நடையாடும் இடத்துக்கு எல்லையாய் இருக்கும் இறே இத்திருமலை –

———————————————————

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே—–1-8-1-

விபவ அவதாரத்தில் விரோதி நிரசன வல்லனாய் இருந்தது போலே அர்ச்சையிலும் நம் விரோதிகளை நிரசிக்க வல்ல சமர்த்தன்
கோவலன் கோபாலன் –
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட
சாதாரணமான சங்குகள் -சங்க நிதி பத்ம நிதி என்னவுமாம்
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாகபர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
திருப் பாற் கடல் நாதனே -கண்ண பிரான் -அவனே -திருவேங்கடமுடையான் என்கிறார்
புராணர்-பழையவர்
பரம போக்யமான திருமலை -அங்கே சென்று சேர் நெஞ்சே என்கிறார்-

—————————————————————–

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

பூதனையை முடித்த தொட்டில் பருவம் -உட்காரவும் நிற்கவும் மாட்டாத சயனம் -பாற் கடல் -திருவரங்கம் –
அதற்கு மேல் நிற்கக் கற்ற நிலை -திருவேங்கடம் திரு மலையிலே காணத் தக்கது –
அவன் பெருகும் இடம் -இது முன் நின்ற நிலையில் அபிவிருத்தி
தரையிலே காலூன்றி நிற்கும் நிலை
தொட்டில் பிள்ளை பேய் உயிர் யுண்ட பின்பு நிற்கக் கற்றது திருமலை யிலே-என்று கருத்து-

அது எப்படிப் பட்டது -நாள் தோறும் தெள்ளியார் வந்து வணங்கும் படி
தெள்ளியார் –வேறு பலன்களை விரும்பாத ஸ்வரூப தெளிவை யுடைய பரமை காந்திகள் –

எவ்விதமாக த்யானிப்பர்
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலு நீர்மை –
கிருத யுகம் -வெளுத்த நிற
த்வாபர யுகம் -ஸ்யாமமான  நிறம்
அப்படி அவர்கள் வந்து வணங்குவதற்கு இடமான திருமலையை அடை நெஞ்சே -என்கிறார் –

———————————————————————–

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

சயனித்து அருளும்படியையும் நின்று அருளும்படியையும் கீழ்ப் பாட்டில் அனுசந்தித்தார்
நடந்து அருளும்படியை இப்பாட்டில் அனுசந்திக்கிறார் –

நள கூபரன் மணிக்ரீவன் -குபேர புத்ரர்கள் -நாரதர் சாபத்தால் –
ஒருங்கொத்த விணை மருதம் உன்னிய வந்தவரை -பொய்ம்மாய மருதான வசுரரை -பெரியாழ்வார் –
மருத மரங்கள் இற்று விழும்படி நடை கற்றவனும்
அப்போது தன் மேல் சிறிதும் தோஷம் தட்டாமல் தான் குறை ஒன்றும் இன்றிக்கே விளங்கியவனும்
திரு வாழியைக் கையிலே யுடையவனும்
எப்போதும் நித்ய ஸூரிகள் வந்து தொழப் பெற்ற திருவடித் தாமரைகளை யுடையவனும்
இந்த்ரன் பசிக்கோபம் கொண்டு மழை பெய்வித்த காலத்திலே ஆ நிரைகளின் துன்பத்தை ஒரு நொடிப் பொழுதிலே
போக்குவதற்காக கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி நின்றவனுமான
பெருமானுடைய திருவேங்கட மலையை நெஞ்சமே -அடைந்திடு -என்றார் ஆயிற்று –

————————————————————

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-

கை செய்திட்டு -கையும் அணியும் வகுத்து
பாண்டவர்களுக்காக பாரத யுத்தம் நடத்தி வெற்றி  பெற்றவனும் –
இப்படி ஆஸ்ரிதர்களுக்காக கார்யம் செய்யப் பெற்றதனால் திரு மேனி மிக விளங்கப் பெற்றவனும் –
இடைச்சிகளோடே ராச க்ரீடை என்கிற குரவைக் கூத்தை ஆடினவனும்
தன்னை துதிப்பவர்களின் நெஞ்சை விட்டு பிரியாதே இருப்பவனும் –
திரு விட வெந்தை திவ்ய தேசத்தில் இனிதாக எழுந்து அருளி இருப்பவனும்
ஆகிய எம்பெருமானுடைய -பல பல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூம் சோலைகளாலும் சூழப் பட்ட
திரு வேங்கட திரு மலையைச் சென்று சேர் மனமே –

ராசக்ரீடை -குரவைக் கூத்து
அங்கநா மங்கநா மந்தரே மாதவ -மாதவம் மாதவஞ் சாந்தரே  ணாங்கநா-பல உரு எடுத்து கை கோத்து  ஆடும் கூத்து –

——————————————————————–

வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5-

வேண்டினார்க்கு வேண்டியபடி தானம் செய்கிற அசூர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய
யாக பூமியில் வாமன பிரமச்சாரியாய்   சென்று கை நீட்டி  மூவடி மண் தா என்று இரந்தவனும்
ஸூ க்ரீவனுக்கு நம்பிக்கை யுண்டாக்குவதற்காக சப்த சால வ்ருஷங்களை துளை படுத்தின  மகா பலம் யுடையவனும் –
ஆஸ்ரித ரஷண அர்த்தமாக திவ்ய ஆயுதங்களைத் தரிப்பதற்கான பல திருக் கைகளை யுடையவனும்
திருக் கச்சி மா நகரில் அஷ்ட புஜகரம் என்கிற திவ்ய தேசத்தில் அஷ்ட புஜனாக சேவை சாதிப்பவனும்
இமய மலையிலே திருப் பிரிதி என்னும் திருப்பதியிலே எழுந்து அருளி இருப்பவனும்
திருமால் இரும் சோலையிலே வந்து நிற்பவனும் –
முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் யுடைய துன்பத்தை தொலைத்தவனுமான
பெருமானுடைய திருவேங்கட திருமலையைச் சென்று சேர் மனமே

———————————————————————————

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

உலகங்கள் எல்லாம் பிரளயத்திலே அழுந்திப் போகாத படி அவற்றைத் தன் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
ஓர் ஆலந்தளிரிலே பள்ளி கொண்டவனும்
சந்த்ரனுக்கு நேர்ந்த ஷய ரோகத்தை போக்கி அருளினவனும்
அழகியான் தானே அரி வுருவன் தானே -என்கிறபடியே அழகிய  கோரப் பற்கள்  கூடிய மஹா பலசாலியான
ஸ்ரீ நரசிம்ஹமாய்த் திரு வவதரித்து
தன் வலியோடு  ஒத்த வலியுடைய ஹிரண்யன் யுடைய மார்விலே திரு நகங்களை ஊன்றி
அவன் உடலைப் பிளந்தவனுமான பெருமான் யுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே
நம் சித்தாந்தத்தில் திக்குகள் தனியே இல்லை
திக்குகளை திரு வயிற்றிலே பெய்ததாகச் சொன்னது அவ்விடங்களில் யுள்ள பொருள்களை சொன்னபடி –

———————————————————————————

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-7-

சகல லோகங்களும் தான் இட்ட வழக்காய் யுள்ளவன் என்றபடி
சஹஸ்ர நாமங்களால் துதிக்கப் படுபவன்
கருமங்களுக்கு வசப்படாதவன்
தன் பெருமை எல்லாம் தோற்ற எழுந்து அருளி இருக்கும் திருவேங்கடம்
அஃது எப்படிப் பட்டது என்னில்
ஆகாசத்தில் நின்றும் மழை பெய்யவும் பனி பெய்யவும் பெற்றது
மேகங்கள் வந்து படியும்படியான ஓங்கின உயர்த்தியை யுடைய சோலைகளாலே சூழப் பட்டது
அந்த திருமலையை சென்று சேர் நெஞ்சே –

—————————————————————————

அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே—1-8-8-

நீள் இதணம் -உயர்ந்த பரண்கள்
பஞ்ச பூத ஸ்வரூபி யானவன் -நித்ய ஸூரிகள் தலைவன் -அலர்மேல் மங்கை துணைவன் –
எழுந்தி அருளி இருக்கும் திருமலையை சென்று சேர்
குறத்திகள் மலைகளிலே வாசம் செய்பவர்கள்
பட்டி மேய ஒண்ணாத படி உயர்ந்த பரண்களில் இருந்து நிலம் காப்பார்கள் -ஸ்வபாவ உக்தி யாக அருளிச் செய்கிறார் –

————————————————————————–

பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-

பேசுமின் திரு எட்டு எழுத்து -என்று பரோபதேசம் செய்து அருளுகிறார்
திரு அஷ்டாஷர திரு மந்த்ரத்தை அனுசந்தித்து
ஒரு கால் அனுசந்தித்து ஓயாமல் அநவரதம் பேசிக் கொண்டு இருப்பவர்களை உஜ்ஜீவிக்கச் செய்து
அவர்களுக்கு சம்சார சம்பந்தத்தைப் போக்கி திரு நாட்டிலே சம்சார சாம்ராஜ்யம்   அளிக்கும்  பெருமாள் எழுந்து அருளி இருக்கும்
இடத்தை முமுஷூக்களே நீங்கள் எல்லோரும் சென்று சேருங்கோள்-

திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே -திரு விருத்தம் -59
திரு நாமம் எட்டு எழுத்தும் பேசுமின் –
சொல்லி நின்று பின்னரும் பேசுவார் தம்மை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் பேசுமின் –
பேசும் இன் என்று பிரித்து -எல்லாருக்கும் பேச உரியதாய் இனியதான -என்று பிரித்து தம் மனசுக்கு சொல்வதாக கொள்வர்
வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி-

ஒரு அதிகாரி சம்பத்தி வேண்டா இறே-பெற்ற தாய் பேர் சொல்லுவார்க்கு –
அப்படியே இடர் வந்த போது எல்லாரும் ஒக்க சொல்லிக் கொடு போரக் கடவதான இனிய
திரு நாமமான எட்டு எழுத்தையும் சொல்லி நின்று –
முமுஷூக்கள் அனைவரும் சொல்லும் அதிகாரம் யுண்டே
அம் நாராயணாய  என்று -சிலரை சொல்லச் சொல்வது ஸ்திரீ சூத்ரர்கள் கூட சொல்ல அதிகாரம் யுண்டே
நமோ நாராயணாய மந்திர சேஷமும் வேத வாக்யமே
சர்வ தரமான் -கீதோ உபநிஷத்தும் வேத வாக்கியம்
நானும் சொன்னேன் நமரும் யுரைமின் நமோ நாரணமே -திருமங்கை ஆழ்வார்
பெரியாழ்வாரும் -4/11 திருப்பல்லாண்டில் நமோ நாரணா என்று அருளிச் செய்கிறார்-

கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –
ஆறாயிரப்படி -எம்பெருமான் திரு வடிகளை பெற நினைப்பார் திரு மந்த்ரத்தை சொல்லுங்கோள் -சாஷாத் மூல மந்த்ரமே
திரு அஷ்டாஷரம்-சகல பலப்ரதம் என்னும் இடம் குலம் தரும் என்கிற பாட்டிலே வ்யக்தம் -தேசிகன்
ஏக தேச  கீர்த்தனமும் பூர்ண கீர்த்தன பர்யாயம்-என்று இறே விளங்கும் –

திரு அஷ்டாஷரம் பற்ற நெஞ்சு கனிந்து இருக்கை ஒன்றே காரணம் –
ஏகாஷரம்-பிரணவ பரம்
த்விபதாம் -நமோ நாராயணாய -மந்திர சேஷம் –
ஷட்பதம் -த்வய பரம்
இவை மூன்றும் தேவர்கள் கந்தர்வர்கள் மனுஷ்யர்கள் பசுக்கள் -பசு ப்ராயர்கள் -அறிவிலிகள் அனைவருக்கும்
உஜ்ஜீவிக்கைக்கு உரியர் -வேத புருஷன்-

அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலைப் பாடும் தென் திரு மால் இரும் சோலையே
நின் திரு எட்டு எழுத்தையும் கற்று -என்றும்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் -என்றும் அருளிச் செயல்களில் யுண்டே-

பிரணவார்த்ததுக்கு எல்லோரும் அதிகாரிகள் -இடறினவன் அம்மே என்னுமா போலே இது சொல்லுகைக்கு
எல்லாரும் யோக்யர் -பிராயச்சித்த அபேஷை
ஆக இது தான் சர்வாதிகாரம் -என்றது ஆயிற்று – இல்லை -பரந்தபடி
இது -என்றது திரு அஷ்டாஷரமே
இதன் அர்த்தம் அனந்யார்ஹ சேஷத்வம் –

ரஹஸ்ய த்ரய சாரம் -சாஸ்த்ரீய நியமன அதிகாரம் –
இவனுக்கு இங்கு இருந்த நாள் பண்ணலாம் கைங்கர்யம் அஞ்சு யுண்டு -அவையாவன –
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்துப் பிரவர்த்திப்பிதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் அருளிச் செயலைக் கேட்டு பிரவர்த்திப்பித்தல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் -உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கு அமுதுபடி  சாத்துப்படி
திரு விளக்கு திரு மாலைகளை யுண்டாக்குதல் –
அதுக்கு யோக்யதை இல்லையாகில் த்வயத்தின் யுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுதல் –
அதுக்கு யோக்யதை இல்லை யாகில் என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுடைய
அபிமானத்திலே ஒதுங்கி வர்த்தித்தல் செய்யலாம் –

பகவன் மந்த்ரங்கள் தான் அநேகங்கள் -அவை தான் வ்யாபகங்கள் என்றும் அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம் –
அவ்யாபகங்களில் வ்யாபகங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் -இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு திரு மந்த்ரம் பிரதானம் –
இத்தை வேதங்களும் -ரிஷிகளும் -ஆழ்வார்களும் -ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் –
நாரணா -நாராயணா -நாராயணாய -நமோ நாராயணாய -பலவாறு இருந்தாலும் திரு அஷ்டாஷரத்திலே தான் நோக்கு
இத்தையே பெரியவாச்சான் பிள்ளையும் நிகமனப்படியில் அருளிச் செய்கிறார்
நாயனாரும் -மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும் படி சர்வரும் அதிகாரிகள்
இங்கே மர்ம ஸ்பர்சி  என்றது திரு மந்த்ரத்தையே-

திரு மந்த்ரத்துக்கு -சப்த சக்தியால் கார்யகரத்வமும் -அர்த்த சக்தியினால் கார்யகரத்வமும் யுண்டு
சப்த சக்தியால் கார்யம் கொள்வது தான் த்ரை வர்ண மாத்திர அதிகாரம்
அர்த்த சக்தியால் -சர்வாதிகாரம் –

ஓம் -அகாரம் -உகாரம் -மகராம் -ஆழ்வார் உடையவர் மா முனிகள் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் -என்னவுமாம் –

—————————————————————–

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே-1-8-10-

யௌவன பருவத்துக்குத் தகுதியாக சிறந்த நிறத்தை யுடைய கயல்கள் ஆனவை ஒன்றோடு ஓன்று களித்து
விளையாடப் பெற்ற சுனைகளை யுடைய திரு வேங்கட திரு மலையிலே நித்ய வாசம் பண்ணி அருள்கின்ற
பெருமானைக் குறித்து திருமங்கை மன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச் செய்த
இச் சொல் மாலையைத் தரித்து சொல்ல வல்லவர்கள்
இவ்விபூதியில் உள்ளளவும் ராஜாதி ராஜர்களாக விளங்கி பின்னை நித்ய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவார்கள்
என்று பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

சங்கை இன்றி
இத் திரு மொழிக்கு இவ்வளவு வைபவம் யுண்டோ என்ற சந்தேஹம் இன்றி பூர்ண விசுவாசத்துடன்  ஓத வல்லவர்கள் –
சங்கை இன்றி வானுலகு ஆள்வார்கள் என்றுமாம் —
தத்த்யம் வட சொல்லே  தஞ்சம் அதாகவே -உண்மையாகவே ஏற்றும் பொருள் கொள்ளலாம் –
வித்யா -என்ற  வடசொல் விஞ்சை போலே தத்த்யம் தஞ்சம் ஆகுமே –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி-2 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

October 6, 2011

சப்ரேமா பீதி கமலாகர பள்ளவாப்யாம்

சம்வாஹனே பி சபதிக்லமமாததா நைவ்
காந்தா வவாக் மனச கோசர சொவ்குமார்யாவ்
ஸ்ரீ வேங்கடேச சரணவ் சரணம் பிர பத்யே –7
சாஸ்திரம்/சிச்ஜ்டாசாரம்/பிர பதயே -மனசில் உறுதி பாடு
உப அயதே சமீபத்தில் அழைத்து செல்லுவது-பலத்துக்கு அருகில் -உபாயம்
பல பிரத்வம் வேறு-பலம் கொடுப்பவன் பகவான் ஒருவனே
சித்த உபாயம் –நம் முயற்சி இன்றி -சித்தமாக இருக்கிறான் -உபாயமும் பிராப்யமும் அவன் திரு அடிகள்
மாம் ஏகம்-என் ஒருவனையே பற்ற அவன் சொல்ல திரு அடிகளை பற்றுகிறோம்  -இதுவே அனுஷ்டானம்
ஈஸ்வரேனே கை விட்டாலும் திண் கழலாக இவை கொடுக்கும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஏக சிந்தனையாய்
வந்து உன் அடி இணை அடைந்தேன் –
துத் சரனாரவிந்தே -துத் பாதாரவிந்த -அ
டி இணை வந்து அடைந்தேன் -அடி கீழ் அமர்ந்து
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்
லோக விக்ராந்தவ் சரணவ் சரணம்

அவன் திரு உள்ளம் படி அனுஷ்டானம்
காலில் விழ சொல்ல மாட்டான்
மித்திரன் போல் கை பிடி நண்பன் என்று பிராட்டி அருளியது போல்
பிரிந்த தசையிலும் உபதேசிகிறாள் -அரச மரியாதை -பெருமாள் திரு உள்ளம் அறிந்து உபதேசம்
அழைக்கின்ற அடி நாயேன் -உள்ளம் குழையும்-ஆழ்வார்
கோவில் மகா ஜனம் பட்டரை-லகு சம்ப்ரோஷனம் ஐதீகம்   திரு அடி பிடிக்க கூட யோக்யதை இல்லை
மாம் ஏகம்-திரு மார்பை காட்டி கண்ணன் சொல்கிறான்
பிரார்த்தனா மதி சரணாகதி —
குழந்தை தாய் முலையில் வாய் வைப்பது போல் திரு அடி பற்றி சரண்

சந்தரன் -சசாங்கம்-கருப்பு திட்டு முயல் வடிவில்-சச =முயல்-இதனால் அடையாளம்
களங்கம் தீர பத்து விரல்களில் கைங்கர்யம் -நிஷ் களங்கமாக –
திரு வேம்கடம்-மதி தவழ குடுமி மால் இரும் சோலை –
வைப்பன் மணி விளக்காம் மா மதியை-பூர்ண சந்த்ரனை-ஆகாசத்தில் மதி –
இங்கு மா மதி -மாலுக்கு என்று எப் பொழுதும் கை நீட்டும் யானை
வேடர்கள் இவற்றை பார்த்து -வில் எடுக்கும் மலை வேம்கடம்
பகர் அல்லை பகல் செய்-இரவை பகல் ஆக்கும் –
திருஅடி  நிச்சலும் பிடித்து விட பிராட்டி ஆசை –
சொரூபம் பார்த்து ஆசை –
குணம் பார்த்து அச்சம் -இரண்டும்
சேஷத்வம் பார்த்து -அவனுக்கு பெருமை சேர்க்க – பரகத அதிசய ஆதன –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பேசி செய்து நினைத்து –பயம் நீங்கும் –
இதனால் -நடந்த கால்கள் நொந்தவோ-பேசி வாழி கேசனே –கூசி பிடிக்கும் மெல் அடிகள் –
பாரதந்த்ர்யம்
திரு கைகளால் பிடித்தால் கன்னி சிவக்குமே அச்சம்-ஆசை வென்று-பிடிக்க –
சிகப்பே நம் சம்சாரம் கழித்து கொடுக்கும்
ச பிரேம பீதி-கமலா கர பல்லவம்-முகிழ் கொழுந்து போன்ற திரு கைகள் –காந்தி-ஈர்க்கும்
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் இருக்கும் சொவ்குமார்யம் –

ரஷகன்-பார்த்து எழுப்ப -சொவ்குமார்யம் பார்த்து – அம கண் மா ஞாலம் கடாஷம் கேட்ட பின்பு ஆண்டாள்
மாரி மலை –இங்கனே போந்து அருளி–போற்றி அருளுகிறாள் அடுத்து —
வந்த திருஅடிகள் நொந்தனவோ அது போல்
அங்கும் இங்கும் வானவர் -உன்னை வேலை வாங்க -வருவார் செல்வார் –
சங்கு சுமந்து -மற்று அடியேன் உளன் ஆழ்வார்
சொரூப ரூபகுணம் வகை –மார்த்வம் சொவ்குமார்யம் இரண்டிலும் –
உள்ளத்திலும் உடம்பிலும் –விட்டு கொடுக்க மாட்டான்
சரண் அடைந்த நீசனான என்னையும் கொள்வான் -மறை முக அர்த்தம் –
பிரிந்து பல ஜன்மம் இருக்கிறோமே -கோடி காட்டினால் புரிந்து கொள்வான்
பிரிந்து கடினமாக ஆகுமே திரு அடியும் திரு உள்ளமும்
திரு ஆபரணம் பிராட்டிக்கு எங்கு சாத்தலாம் என்று தோழிமார் பார்த்தாலே கன்னி போகும் திரு மேனி சீதை பிராட்டிக்கு
நடந்து போனாலே பொன் துகள்கள் சிந்தி கொண்டே போகுமாம்
அவள் பெருமாளை தொட்டால் சிவக்கும் படியான மெல் அடிகள்
திரு காட்கரை -மருவிய மாயன்-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர்–ஆர் உயிர் பட்டது என் ஆர் உயிர் பட்டது –
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்
தெளிந்த என் சிந்தை -காய்சின வேந்தே -கூப்பிடு தூரம் –
ராமானுஜர் கேட்டு வியந்த ஐதீகம் –கூவுதல் வருவுதல் செய்யாயே அடியேன் பிடிக்க
பூமி பாலன் திரு அடிகளை தாயார் பிடித்து விட –
கொடு வினையேனும் மெல் அடியை பிடிக்க கூப்பாடு போடா கூடாதா -ஆழ்வார் கேட்கிறார்

திரு காட்கரையில் கொடுக்கிறேன் என்றான்-
வந்தான்-ஆழ்வாரை அமர சொன்னான்
நம் ஆசை ஆணை
முகம் கன்னி போக கூடாது என்று அமர
திருஅடி பற்றி விட
பாரதந்த்ர்யம் நினைவு வர -அவனுக்கு பிடித்த படி இருக்க வேண்டுமே
அடிமை  தனம் விட அவன் திருஉள்ளம் படி நடப்பதே முக்கியம்
அடுத்த காலை நீட்ட -மலர்ந்த திரு கண்கள்-கப்யாசம் புண்டரீக அஷணீ–
தேவரீர் சொத்து -அடியேனால் அடியேன் ஆத்மா சமர்பிக்க -அதுவும் உன் சொத்தே
பதக்கம் எடுத்து நாமே சமர்ப்பித்தது போல் –
இப்படி என்ன பண்ணுவது என்ற படி-தோள் களை ஆர தழுவி -அகவிலை செய்தனை —
சம்சாரம் கண்டு பயந்து பரந்யாசம் அதுவும் அவனது செய்ய வேண்டாம் எத்தை கொண்டு சமர்பித்து –
உணர்வினுள்ளே இருதினினே அதுவும் அவனது இன் அருளே —

அதுபோல் பிராட்டியும் பிரீதி பீதி இரண்டும் கொண்டு –த
யிர் கடையோசை நட்டுவாங்கம் கொண்டு கண்ணன் தாண்டவம் ஆட –
கீசு கீசு என்று -மத்தினால் ஓசை -கேட்டே -ஆடி ஆடி-சிவந்த திரு அடிகள் பிராட்டி திரு கைகளால் ஆசுவாச படத்த –
பட்டர்–பெருமாள் பிராட்டி  பெருமை மாறி மாறி  பேசுவது போல்–

தளிர் புரையும் திரு அடி என் தலை மேல் –
மின் உரு பொன் உரு பின் உரு -மூன்று தத்வமும் அவன் தானே ஆழ்வாரை கொண்டதும்
சருகாக இருந்த திரு அடி தளிர் விட -பக்த ஸ்பர்சத்தால் -புஷ்ப ஹாச மலர்ந்த திருஅடிகள்–
அபிலோசன உற்று நோக்கினாலே முத்தரை குத்தினால் போல் -சந்தனம் பூசி கொண்ட கண்ணனை பார்த்த
மதுரை பெண்களின் வேல் விழி கயல் விழி  மான் விழி திரு மார்பில் பதிந்தது போல்  —
கோபால  சூடா மணி –அழியாமல் சாந்தணி தோள் சதுரன் மலை– மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
கொடுத்த பரிசு மாறாமல் இருந்தான் –

———-

லஷ்மி மஹீ தத் அநுரூப நிஜ அனுபாவ
நீளாதி திவ்ய மகிஷீ கர பல்லவ நாம்
ஆருன்ய சங்கர மனத  கில சாந்த்ர ராகவ்
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே -8
மூன்று தேவிமாரை பற்றி இதில் அருளுகிறார்

மகா லஷ்மி மஹீ பூமி தேவி- நீளா தேவி -திரு மகள் மண் மகள் ஆய மகள்-சிகப்பு பச்சை ஊதா நிறம்
மூவரிந்தளிர் போன்ற திரு கைகள் -ஆருன்ய சிகப்பு -அருணோதயம் –
மகர சங்கராந்தி-சங்கரமணம் -ஒன்றுடன் ஓன்று சேர்ந்து –
இதன் சிகப்பு வீசி-கரு நீல திரு அடிகள் -சிகப்பு தொற்றி கொண்டு மாற சாந்த்ர ராகவ்-சிகப்பு ஏறி-
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் —
மதம் கொண்டு சிகப்ப-ஐஸ்வர்யா செருக்கால் குதறி சிவக்க -ராகம்-அடியார் பற்றுவார் என்ற ஆசை உடன் –

கரிய வாகி புடை பெயர்ந்து  மிளிர்ந்து –நேர் எதிர் -கருப்பு திரு மேனி கண் சிவந்து இவருக்கு
அவளுக்கு சிவந்த திரு மேனி கரிய திரு கண்கள் –எதனால்-நடந்தது –
அது போல்–கண்களால்பார்க்க இவன் திரு மேனியில் ஏற இவன் சிவந்த கண்களால் பார்க்க அவள் திரு மேனி சிவப்பு –
அதற்க்கு இது இதற்க்கு அது –மாறுதலும் நித்யம்-அபிமத அநுரூப தாம்பத்யம் –

திரு மகள் மண் மகள் ஆயர்மதா மகள் என்று இவர் மூவர் —
கூந்தல் மலர் மங்கைக்கும்  மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் —
வார்த்தை பார்த்து -மங்கை மடந்தை கொழுந்து -பெதும்பை பேர் இளம் பெண் மங்கை-பருவ நிலைகள்-

பின்னை கொல் நில மா  மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் —
ஆழ்வாருக்கு ஒப்பு சொல்லு -கடி மா மலர் உடன் உள்ள சாம்யம்
அவளும் நின் ஆகத்து –இவளை சொல்லு-சாம்யம்-சொல்ல இவளுக்கு ஏற்றம்-
பூ மேல் இருக்கும் திரு -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் —

நடுவாக வீற்று இருக்கும் நாரணன் -ஸ்ரீ ரெங்க நேதா-தலைவன்-திரு அடி சிவக்க –
மௌலி சக்கரவர்த்தி கிரீட ரத்ன ஒளியாலா –அடியார் திரு உள்ளம் ஆசனமாக அமர்ந்ததாலா
ஆசையால் சிவந்த திரு உள்ளம்–கமலா கரேப்யே -மூன்றும் பட்டர் அருளியது போல் —

————

நித்யான மத்விதி ஸிவாதி கிரீட கோடி
பிரத்யுப்த தீபத நவ ரத்ன மஹா ப்ரரோஹை
நீராஜ நாவிதி முத்தார முபாத தானவ்
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே -9
நித்யானவதி விதி பிரம்மா சிவன் இந்த்ரன் -போல்வார் கிரீடம் பட -ரத்னம் -தனுஷ்கோடி-ஒளி- கிரீட நுனி-ரத்ன கல்

கிரீடம் /மகுட /சூடவதம்சே மும் முடிக்கு பேர் அரசு–ஆதி ராஜ்ய ஜல்பிதா -பிதற்றுகிரதாம்-
யார் தலையில் உட்கார்ந்து இருக்கிறேனோ அவன் தான் ஜகத்துக்கு அதிபதி என்று சொல்லி கொண்டு—

நீல கரு மேக சியாமளன் போல் உதய கிரிக்கு மேல் சூர்யன் போல் கிரீடம் -கோள் சொல்லி கொடுக்கும் அவனை —
எளியவன் வேஷம் போட்டு தேவாதி ராஜன் ஹஸ்த கிரிக்கு வர -கிரீடம் பராத் பரன் காட்டி கொடுக்கும் —
முத்து குடை தங்க குடை ரத்ன மேல் மூடி இருக்கும் -அபிமான பங்கமாய் சங்கம் இருப்பார் போல்-

ஒளி மலர-திரு அடியில் பட்டு வளருமாம்-திரு அடிக்கு ஹாரத்தி காட்டுமாம் இந்த ஒளியால்-நீராஞ்சனம்-ஹாரத்தி-
வைகாசி விசாகம் தீர்த்தவாரி-ஆழ்வாரே இறங்கி-
மனோ ரதம் நிறைவேற்றுவார் நீராஞ்சனம் சேவித்து பெறலாம் -200  தேங்காய் மூடி விளக்காக இருக்கும் —
ஆழ்வார் மட்டும் குளிர்ந்து-பைம் கமலா தன் தெரியல்-ஆழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும்-

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட கண் எச்சில் படாமல் ஹாரத்தி-திரு அந்தி காப்பு-திரு வெள்ளறை காப்பு இட்டார் பெரியாழ்வார்-
உபாதா தானவ்-ஏற்று கொள்ளும் திரு அடிகள் -மனு குல அரசர் -இஷ்வாகு திலீபன் தசரதன் பெருமாள்-பரம்பரை திரு ஆராதனம்
கிரீடம் -ராமனுக்கு சூட்டி பட்டாபிஷேகம்–நவ ரத்ன ஒளி பெரிய பெருமாள் திரு அடியில் காணலாம் இன்றும்-
அது போல் இவன் நின்று பெற்றார் அடியரோர்க்கு அகலாமோ –கிடந்ததோர் கிடந்த அழகுக்கு ஹாரத்தி

பெண் மீன் உருவம் பதிந்து இருக்குமாம்-கண் கிரீடத்தில் இருப்பது
அடுத்து அருளுகிறார்
உள் திருஅடி சேவை கிடைப்பது துர் லபம்
திரு கோளூரில் ஜன்னல் வழியாக சேவிக்கலாம்

————–

விஷ்ணோ பதே பரம இத்யுதித பிரசம்சவ்

யவ் மத்வ உத்ஸ இதி போகய தயாப் யுபாத் தவ
பூயஸ்ததேதி தவ பாணி தல பிரதிஷ்டவ்
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே -10

யாரும் பார்க்க முடியாத பரம பதம்-மாக வைகுந்தம் தெளி விசும்பு திரு நாடு-காண்பதற்கு
என் மகம் ஏக எண்ணும் ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள உகிரால் பிளந்தான் உறை
மா வைகுந்தம் காண மனம் ஏக எண்ணும் –

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்-

புண்ணில் புலி பெய்தால் போல் திரு அடியில் மது தாரை பொழியும் என்பர்–
அதை எங்கும் தேடி போக வேண்டாம் -இங்கே அழுந்த இருக்க திரு கை காட்டி காட்டுகிறான்

எந்த திரு அடிகளில் உயர்ந்த வேதாந்த புகழும் -மது பெருகும்-போக்யதை உள்ள திரு அடி-அனுபவ தக்க –
பெருமை இனிமை இரண்டும் உண்டு–பரம போக்கியம் –ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –
இங்கேயே இருகிறதே வலது திரு கைகளால் காட்டுகிறேர் -சரணம்-பிராப்யம் –
அனுபவிக்க தான் திரு அடி -உபாயமாக நாம் ஆக்கி கொண்டோம் -கரு முகை மாலையை சும்மாடு போல் உபயோகித்தோம் —
அனுபவிக்க கொடுத்ததை -விதி அற்று உபாயமாக ஆக்கி கொண்டோம்.-

———–

அடுத்து பார்தந்தன் தேர் முன் நின்று அருளியதை அபிநயம் காட்டி கொண்டு இருகிறீர்
பார்த்தாய தத் சத்ருச சாரதினா த்வயைவ
யவ் தர்சிதவ் ஸ்வ சரணவ் சரணம் வ்ரஜேதி
பூயோபி மக்யமிஹா தெவ் கர தர்சி தெவ் தே
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே –11
ஏற்ற சாரதி-பிடித்த -தேர் பாகன்-மாம் ஏகம் சரணம் விரஜ -என்று அருளியதை-
காலில் விழுந்தவரையும் கை பிடிக்கும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-மறு படியும் திரு கைகளால் காட்ட பட்டன –
வலது திரு கையால் காட்டி கொண்டு இருகிறாய் –ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-
சுட்டி காட்டுகிறாய் இது தான் என்று –தொட்டு காட்டுகிறார் –மாம்–மற்றவை விட்டு தன்னை

திரு மேனியில் எது -அதில் திரு அடி காட்டி மற்றவை விட்டு காட்டுகிறார்
சத்ருச சாரதி இவர் தான் -பார்த்த சாரதி-பார்த்தன் தன் தேரை ஊன்றான் –
தாழ்ந்த தஞ்சயனுக்கு -கர்மம் அறியாத -ஆகி-பஷ பாதமாக ஆகி –
மணி தின் தேர் உஊர்ந்தவன் -நர நாராயணனே அருஜுனன் கண்ணன்–ஆச்சர்ய சிஷ்ய பாவம் மாறி இருந்தார்கள்–
கருணனுக்கு பிடிக்காத சாரதி சத்யன்
சாமான்ய விசேஷ நியாயம்-மாம்-திரு அடி -காட்டி கொண்டு-
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் இடம் திரு அடி காட்டி கொண்டு இருக்கிறான் 

———————-

மன மூர்த்னி காளிய பனே விகடாட வீஷூ

ஸ்ரீ வேங்கடாத்ரி சிகரே சிரசி ஸ்ருதிநாம்
சித்தே பயனன்ய மனஸாம் சம மாஹி தவ தே
ஸ்ரீ வேம்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே –12
சௌசீல்யம் -கூராளும்–தனி உடம்பன்-விஸ்வ ரூபத்தில் அனைத்தையும் காட்டி
உயர்வு தாழ்வு இன்றி ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -உயர்வு தாழ்வு பாராமல் -அனைவருக்கும்-சேவை சாதிகிறாய்–

பரம பக்தர் பர வேதாந்தி பரம பாமரன்-அனைவர் தலையிலும் -லோக விக்ராந்த  சரணவ் –
உலகம் அளந்த பொன் அடி-
தாள் பரப்பி மண தாவிய ஈசன் இவனே–தாவி அன்று உலகம் எல்லாம் தளவிலா கொண்ட எந்தாய் –

ஆவியே அமுதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார்

நீசன் விலகி போக -வெள்கி போய் விலவர சிரித்திட்டேனே-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உறைகின்ற —
கோவர்த்தன கிரி கீழும் அனைவரும் பண்டித பாமர விவேகம் அற–
மன் மூர்த்னி- என் தலையில்– நீசன்-வேதாந்தம் மேலும் விளங்கி –
ஆனால் அவனோ தளிர் புரையும் திரு அடி ஆழ்வார் தலையை தீண்டிய பின்பு –
அவன் வைக்கும் இடம் ஏற்றம் பெறுகிறது-பண்பும் அவன் சம்பந்தம் பெற்று நல்ல பண்பாகும் .. 
அடியேன் தலையில்/காளிங்கன் பாம்பின் தலையில்/தொல் கானம்-அடர்ந்த காட்டில்/

ஸ்ரீ வேம்கடாத்ரி சிகரம்/சுருதி தலை வேதாந்தம் தலையில்-அநந்ய மனச படைத்தவர் அவனையே அவனுக்காகா நினைப்பவர் –
இங்கு எல்லாம் திரு அடி வைத்தவன் ஆறு இடங்கள்-துவய சப்தம் ஆறு என்பதால் –
என் தலை தொடக்கி அநந்ய சித்தம் -நீச நிலை தொடக்கி உயர்ந்த இடம் வரை-

கூரத் ஆழ்வான் -வரதராஜ ஸ்தவத்தில் அருளியது போல் –வேழ மலை மேல் இருப்பதா –  –
பக்தர் ஹிருதயம்/வேத சிரஸ் /கமலா தாமரை மேல் /நம் ஆழ்வார் திரு உள்ளத்திலா –
மந்த ஸ்மிதம்-ரோம ஹர்ஷம் வேழ மலை அழகால்-புது பொலிவால் –ராச கிரீடை கோபிகள் பூமி பார்த்து கேட்டார்கள் —
முதல் அடி பூ-கவிழ்த்து அலர்த்தி –ஒரு திருஅடி கீழும் ஓன்று மேலும் –

சௌசீல்யம்-அனைவரையும் சமம் –வாத மா மகன் மர்கடம்- விலங்கு மற்று ஓர் சாதி உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
திரு கண்ண புரம் திரு நறையூர் இரண்டுக்கும் நூறு பாசுரம் திரு அரங்கம் மட்டுமே ஒரே ஐம்பது பாசுரம் அருளி
திரு மங்கை ஆழ்வார் அத்வதீயம் திரு அரங்கம் காட்டி-வேருவாதால் வாய் வேறுவி வேம்கடமே வேங்கடமே என்கின்ற –
வாயு குமாரன்-மனிதன் மற்று ஓர் ஜாதி மர்கடம் சொல்லி-செருக்கு உள்ள குரங்கு என்பதால் வாய் குமரன் சொன்னார்
முலையோ முழு முற்றும் பொந்தில -கலையோ அறை இல்லை நாவோ குளறும் மிளிரும் கண்   –
கடல் வண்ணன் என்றோ விலையோ-சிறு பிராயம் அனைவரையும் சமமாக பார்க்கும் —
சைதன்யம் இருந்தும் தப்பு பண்ணி-இரு கால் மாடு போல்-அதனால் காளிங்கன் தேவலை —
ஸ்ரீ பாஷ்யம் கேட்டு தரை தட்டி இது போன்று புரிந்து கொண்டேன் சொன்ன ஐதீகம்-
அடுத்து வெம் கானம்-காலின்கனுக்கு சில அறிவு உண்டே -அதனால்-வெப்பம் குற்றம் இல்லை-
அடுத்து உயர்ந்த வேம்கடம்-உசத்தி- வேதாந்தம் முடியில்-திரு வேம்கடம் உயர்ந்தது என்று சொல்லியதால் —
அடுத்து அநந்ய மனச-சிஷ்ட பரிக்ரகம் பூர்வர் அனுஷ்டானம் வேண்டுமே -சகஸ்ர நாமம் ஏற்றம் –
வேதாந்தம்-பீஷ்மர் அறிந்த தர்மம்/வியாசர் -போல் இங்கும் அநந்ய மனஸ் ஏற்றம்

ஆழ்வார் திரு உள்ளம்-என் உச்சி உளானே–வந்து என் உச்சி உளானே–
முதலில் திரு வேம்கடம் வந்து-நின்று இருந்தால் கிளம்ப போகிறான்-மாரி மாறாத தன் அம் மலை-
தாமர பரணி நதி ஓடும்-கருணை வர்ஷம்–கமல கண்ணன் என் கண்ணின் உளான்–
திரு முடி தர்சனம் அங்கு தான்-பொலிந்து நின்ற பிரான் ஆழ்வார் திரு முடி மேல்-ஆதி  பிரான் -நின்ற பெருமான்-
இருவரையும் மங்களாசாசனம் ஆழ்வார் பண்ணி கொண்டு –பட்டயம் வாசிப்பார்கள் உமக்காக தந்தோம்–  

கொண்ட கோவலன் விஷ்ணு சித்தன் மனத்தில் –பருபதத்து  கயல் பதித்த பாண்டியன் -மீன கொடி நாட்டியது போல்-
மலை கேட்காமல் மன்னன் வைத்தது போல்–காளியின் உச்சியில் நடனம் –பூத்த நீள் கடம்பேறி –
அவன் திரு அடி பட்டதும் பசக் பசக் பசுமை பெற்றதாம் -குரவை கூத்து குட கூத்து ராச கிரீடை –
பல வித நடனம்-போர் களமாக நிருத்தம் செய்தான் -காலால் காளியன் தலையில் மிதித்தது முதலா

பரல் கல் மேல் புளிதி சோர பெருமாள் நடந்தான் –மெல் அடி –
ஆழி அம் கையானை அம்மானை-அம்மனை தொடர்ந்து ஏத்தாமல் –ஆழ்வார் –
ராமானுஜர் அந்த இடத்தில் பக்கம் இருந்து தலையால் திரு அடி தாங்கி இருக்காமல் போனோமே

வியன் காண மரத்தின் நீழல்-கல் ஆணை மேல் துயில கற்றாயே காகுத்தா
காடு நடந்த பொன் அடி
கண்ணன் ஐந்து வயசில் மாடு மேய்க்க போனானே
குடையும் செருப்பும் கொடாமே காதில் திரி இட்டு தாமோதரனை –பசு மாடு தூசி படித்த குழல்-
பொன் தடுவுவது போல் -ப்ருந்தாவனந்த பண்டிதன்
நமக்கு நாதன் உடையவராக ஆக்குமே செடி கொடிகள் –வெம் கானம் போக்கினேனே
வேம்கட திரு மலை-க்ரீடாத்ரி விளையாட்டு மலை-ஸ்ரீ வைகுண்டமே ஆனந்த நிலைய விமானம் -ஸ்வாமி புஷ்கரணி
வேம்கடத்து உச்சியில் கண்டு போய்-முதலில் திருஅடி பதிந்த இடம் சேவிக்க வேண்டும்

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.