Archive for the ‘-திரு வாய் மொழி நூற்று அந்தாதி’ Category

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -இரண்டாம் பத்து–

October 3, 2019

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து –11-

வாயும் -திருமால் –
அடியார் அனுபவிக்கலாம்படி அடியாரை கிட்டுகையே ஸ்வ பாவமாக யுடைய ஸ்ரீ யபதி யானவன் –
ஆய அறியாதவற்றோடு –
அசேதனங்கள் ஆகையால்- தம்முடைய துக்கத்தை ஆராய அறியாத வற்றை
செறிவாரை திணிந்து நோக்கும் –
ஆஸ்ரிதர்களை த்ருடமாக கடாஷித்து அருளுவார்-

இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது-அயர்ப்பிலன்-அலற்றுவன் – தழுவுவன்-வணங்குவன் -என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால் -ஷட் குண சாம்யத்தாலே தாமான தன்மை குலைந்து
ஸ்ரீ பிராட்டியான தன்மையைப் பஜித்து தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-
இங்கு ஸ்ரீ நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே
மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய் அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு
நாரை-அன்றில்-கடல்-வாடை-வானம்-மதி-இருள்-கழி-விளக்கு துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
ஸ்ரீ பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை வாயும் திருமாலால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————-

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் —-12-

ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே -அவதாரத்திலே அனுசந்தித்து பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –-அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே-கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்-அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்–இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்தை இதிஹாச புராண பிரக்ரியையாலே-பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை – திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————-

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு—13-

இதில் ஸ்ரீ எம்பெருமான் ஏக தத்வம் என்னும் படி சம்ஸ்லேஷிக்க-தத் அனுபவ சஹகாரி சாபேஷராய்
அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி பிரசாங்கிகமான பரோபதேசத்தை தலைக் கட்டின அநந்தரம்
கீழ்-தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த ஸ்ரீ எம்பெருமான் உடைய சம்ஸ்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு
எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி அளவிறந்து இருக்கிற படியையும்
அனுசந்தித்து தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே-துணைத் தேட்டமாய்
அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே
இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே-போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ
என்று பிரார்திக்கிற-ஊனில் வாழ் அர்த்தத்தை ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

—————————————————-

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —-14-

இதில் ததீயரையும் அவனையும் பிரிகையாலே மிகவும் தளர்ந்து தாய் பேச்சாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – எங்கனே என்னில் –
ஸ்ரீ எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான நித்ய சூரிகளையும் கூடப் பிரிகையாலே
தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற
பிரகாரத்தை கலந்து பிரிந்து மோஹங்கதையான ஸ்ரீ பிராட்டி உடைய விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து
அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை –
ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

————————————————–

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை—-15-

இதில் ஆடியாடியில் -விடாய் தீர அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
இவருடைய ஆர்த்தி தீரக் கலந்து-வாட்டமில் புகழ் ஸ்ரீ வாமனனாவன் –
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்
சடக்கென வந்து போக்கினால் போலே-
ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி
ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து-சம்ஸ்லேஷித்து அருளக் கண்டு
தம்மோட்டைக் கலவியாலே-அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –

—————————————————–

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—16-

இதில்-அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று அனுபவிக்கிற இவர்
அயோக்யன் என்று அகலில் செய்வது என் -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அதி சங்கை பண்ண –
இவர் சமாதானம் பண்ணி தேற்றின படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ஸ்லேஷித்த இவர் அல்லாவியுள் கலந்த -என்று
தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே-வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று அதி சங்கை பண்ணி அலமருகிற படியைக் கண்டு
இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி அவன் அதி சங்கையையும் தீர்த்து
அவனைத் தரிப்பிக்கிற -ஸ்ரீ வைகுண்ட மணி வண்ண -னில் அர்த்தத்தை-ஸ்ரீ வைகுந்தன் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் –

————————————————

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை—17-

இதில்-கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும் தம்முடைய சம்பந்தத்தாலே ஸ்ரீ பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ்-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும் சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்-விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே-பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான-அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை-கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

—————-

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு—-18-

இதில் மோஷ பிரதத்வத்தை உபதேசித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி ஸ்ரீ ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத்ரம் அன்றிக்கே
முக்த ப்ராப்யமான போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
எல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க
அவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள
ஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற அணைவது அரவணை மேல் அர்த்தத்தை
அணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார் என்கை-

———————–

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —19-

இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்
முதல்-நடுவு-இறுதி-இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
ஸ்ரீ பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்-சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம் எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
ஸ்ரீ தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும் என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை – எம்மா வீடும் வேண்டா –என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

———————-

கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி—-20-

இதில் சர்வ பிரகாரத்தாலும் ஸ்ரீ திருமலையை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்-எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று
இவர் த்வரிக்கப் புக்கவாறே-இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக-இங்கேயே-இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து-அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
ஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதி –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யான அவதாரிகை தொகுப்பு -முதல் பத்து

October 3, 2019

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—-1-

இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்-சர்வ ஸ்மாத் பரனாய் ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள ஸ்ரீ எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான ஸ்ரீ எம்பெருமானைப் பேசி ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து-உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-

——————————————————-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து——2-

இதில் தம்முடைய திரு உள்ளம் போலே-அனுபவத்துக்குத் துணையாய் திருந்தும்படி சம்சாரிகளைக் குறித்து பரோபதேசம் பண்ணுகிற
பாசுரத்தை அனுபவித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
கீழ் ஸ்ரீ எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர்-அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து-
ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று
பரோபதேச பிரவ்ருத்தராய்
பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும் பகவத் குண வை லஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு-பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை-வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை-

——————————————————

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை—3-

இதில் சௌலப்யத்தை யுபதேசித்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
சர்வ ஸ்மாத் பரனாய் அதீந்த்ரியன் ஆனவனை ஷூத்ரரான நாங்கள் கண்டு
பஜிக்கும் படி எங்கனே என்று வெருவுகிற சம்சாரிகளைக் குறித்து
பரனானவன் தானே அதீந்த்ரியமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு
இதர சஜாதீயனாய் சம்சாரிகளுக்கும் பஜீக்கலாம் படி
தன் கிருபையாலே ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஸூலபனான பின்பு பஜிக்கத் தட்டில்லை என்கிற
பத்துடை அடியவரில் -அர்த்தத்தை-பத்துடையோர்க்கு -என்று அருளிச் செய்கிறார் என்கை –

———————————————————

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்—4-

இதில் அபராத சஹத்வத்தை அறிவியுங்கோள் -என்று தூத ப்ரேஷணம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அவதார சௌலப்யத்தை யுபதேசித்து அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறர்க்கு உபதேசித்த இடத்தில்
அதில் அவர்கள் விமுகராய் இருக்கையாலே அவர்களை விட்டு
குண சாம்யத்தாலே ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தோடு போலியான ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரத்தை அனுசந்தித்து
தச் சரணங்களை திரிவித கரணங்களாலும் அனுபவிக்க பாரித்த இடத்தில்
அது முற்காலத்திலேயாய் தாம் பிற்பாடர் ஆகையாலே-பாரித்த படியே அனுபவிக்க பெறாமல் கலங்கின தசையில்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வரான-அத்தலைக்கு அறிவிக்க வேணும் என்று
கடகரை அர்த்தித்துச் சொல்லும் க்ரமத்தை-கலந்து பிரிவாற்றாளாய் தலை மகள் -என் அபராதத்தைப் பார்த்து பிரிந்து போனவருக்கு
கிங்கோப மூலம் மனுஜேந்திர புத்திர -என்னும்படி
தம் அபராத சஹத்வத்தையும் ஒரு கால் பார்க்க கடவது அன்றோ என்று சொல்லுங்கோள் என்று தன் உத்யானத்தில் வர்த்திக்ற பஷிகளை
தன் பிராண ரஷணத்துக்கு உறுப்பாக தூது விடுகிற பேச்சாலேசொல்லச் சொல்லுகிற -அஞ்சிறைய மட நாரையில் -அர்த்தத்தை
அஞ்சிறைய புட்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

—————————————————-

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—-5-

ஊடுருவ ஓர்ந்து -தீர்க்கமாக ஆராய்ந்து

இதில் சர்வ சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக சௌசீல்யத்தை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து -அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த
அநந்தரம்-அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து ஸூரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி
தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்- உம்முடைய பொல்லாமையைப் பாராதே நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று ஸ்ரீ த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி-தம்மை அவன் சேர்த்துக் கொள்ள
அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை-வளம் மிக்க -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————–

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

இதில் ஆஸ்ரயணத்தில் அருமை இல்லாமையை அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
சீலவானே யாகிலும்-ஸ்ரீ யபதியான பூர்ணனானவன் பெருமைக்கு ஈடாக
ஷூத்ரனாய்-ஷூத்ர உபகரணான இவனால் பச்சை இட்டு ஆஸ்ரயிக்கப் போகுமோ –
ஸ்ரீ யபதித்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் அங்கீ கரிக்கும் நீர்மைக்கு உடலாகையாலும்
பரிபூர்ணத்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கைக்கு உடலாகையாலும்
ஆஸ்ரியிப்பார்க்கு பத்ர புஷ்பாதிகளால் ஸ்வ ஆராதன் என்கிற
பரிவதில் ஈசனனில் அர்த்தத்தை -பரிவதில் ஈசன் படியை -இத்யாதியால் அருளிச் செய்கிறார் –

————————————————

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு –7-

இதில் ஆஸ்ரயண ரஸ்யதையை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும்
உள்ளது தேவையாய் இருக்கும் அன்று ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன
ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும் ரசிக்கும் விஷயம் ஆகையாலே
அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற
பிறவித் துயரில் -அர்த்தத்தை பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை—-8-

இதில் ருஜூக்களோடு குடிலரோடு வாசி அற ஆர்ஜவ குண யுக்தன் என்று அனுசந்தித்தஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – எங்கனே என்னில் –
ஆஸ்ரயணம் அத்யந்த சரசமாய் இருந்ததே யாகிலும் ஆஸ்ரயிக்கிறவர்கள் கரணத் த்ரயத்தாலும் செவ்வைக் கேடரான சம்சாரிகள் ஆகையாலே
பரிமாற்றத்தில் அருமை தட்டி இராதோ என்னில்-நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போலே
இவர்களுடைய செவ்வைக் கேடே தனக்கு செவ்வையாகும் படி இன்று ஆஸ்ரயிக்கிற இவர்கள் அளவிலும் செவ்வியனாய்
பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தன் என்கிற -ஓடும் புள்ளில் அர்த்தத்தை-ஓடு மனம் செய்கை-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

———————————————-

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவை யதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும் –9-

ஆற்ற -சாத்மிக்க சாத்மிக்க

இதில் ஸ்ரீ எம்பெருமான் உடைய சாத்ம்ய போக பிரதவத்தை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும்
ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்-தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும்
திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே
இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில்
அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன்-அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம்
எல்லாவற்றையும் இவன் ஒருவனுடனே சர்வ இந்த்ரியங்களாலும் சர்வ காத்ரங்களாலும் பொறுக்கப் பொறுக்க பரிமாறும் –
என்கிற-இவையும் அவை யில் அர்த்தத்தை இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

———————————————————-

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய் —10-

சர்வாங்க சம்ச்லேஷம் பண்ணுகைக்கு ஹேத்வாந்தரம் காணாமல் ‘
நிர்ஹேதுகமாகாதே -என்று நிர்வ்ருத்தர் ஆகிற படியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
எங்கனே என்னில்
இப்படி உகப்புடனே பண்ணும் சர்வாங்க சம்ச்லேஷம் ஆகிற இந்தப் பேற்றுக்குத் தகுதியாக
இவனாலே நேர்ந்து செய்யத் தக்கது உண்டோ -என்னில்
புத்தியாதி சகல பதார்த்தங்களுக்கும் நியாமகன் ஆகையாலே
அத்வேஷம் துடங்கி
பரிகணிநை நடுவாக
பரமபக்தி பர்யந்தமாக தானே விளைவித்து
வந்து
நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கும் ஸ்வபாவன் என்று அவனுடைய நிர்ஹேதுக உபகாரத்வத்தை அனுசந்தித்து
நிர்வ்ருத்தராகிற –பொருமா நீள் படையில் அர்த்தத்தை பெருமாழி சங்குடையோன் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில்– ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸனம் –

October 3, 2019

ஸ்ரீ திருவாய் மொழி -38-திவ்ய தேசங்கள் –

———-

1-ஸ்ரீ திருமாலிருஞ்சோலை

கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளியால் சோலை மலைக்கே தளர்வு அறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துமோ எம்முடி -20-

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -நடுவு அழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன் -21-

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-

————–

2-ஸ்ரீ திருவேங்கடம்

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே புகழ்———-23-

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர்மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்————-60-

—————

3-ஸ்ரீ திருக்குறுங்குடி

எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்———–45-

————

4-ஸ்ரீ கும்பகோணம்

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் ———–48-

——————

5-ஸ்ரீ திரு வல்ல வாழ்

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற————-49-

——————-

6-ஸ்ரீ திரு வண் வண்டூர்

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் ——————-51-

——————

7-ஸ்ரீ திருக் கோளூர்

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்———–57-

——————–

8-ஸ்ரீ திரு நாடு

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்————-58-

———————–

9-ஸ்ரீ திருவரங்கம்

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்———-62-

——————

10-ஸ்ரீ திரு தென் திருப்பேர்

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளியமால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார் ———-63-

———————

11-ஸ்ரீ திரு வாறன் விளை

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு —————70-

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் ———————–71-

—————–

12-ஸ்ரீ திருக் கடித்தானம்-

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து———-76

——————

13-ஸ்ரீ திருப் புளிங்குடி

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—————-82-

————-

14-ஸ்ரீ திரு நாவாய்-

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்————-88-

——————-

17-ஸ்ரீ திருக்கண்ணபுரம்

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் ——————90-

—————–

18-ஸ்ரீ திருவனந்த புரம்

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—————92-

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில்–நூறு திருவாய் மொழிகளின் பலன்களும் ஸ்ரீ ஆழ்வாருடைய திரு நாமங்களை

October 3, 2019

மாறன் சொல் வேராகவே விளையும் வீடு –1-
இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியடியாக
பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்த படி
அன்றிக்கே ஆழ்வார் திரு நாமம் அடியாகவே மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே –
மாறன் சொல் நேராகவே விளைய மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதியே ஸ்ரீ வைகுண்டம் -இது பிரதிக்ஷமாக காணலாமே –

நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் பண்புடனே பாடி யருள் பத்து–2-
சம்சாரிகள் வைமுக்கியம் பாராமல்-பரோபதேசம் பண்ணுகையாலே நித்யமுமாய்-நெடுகிப் போருகிற யசஸை யுடையவராய்-
தர்ச நீயமான-உதாரமான ஸ்ரீ திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்-தம் ஔதார்யத்தினாலே இந்த மகா பிருத்வியில்
உண்டானவர்கள் எல்லாரும் ஸ்ரீ பகவத் பஜனத்தாலே சத்தை பெற்று வாழும் படி -தம்முடைய கிருபா ஸ்வபாவத்திலே யாதல்
ஔதார்ய ஸ்வபாவத்திலே ஆதல்-பரப்பறப் பாடி அருளினது பத்துப் பாட்டாயிற்று

மாறன் தன இன் சொல்லால் போம் நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை–3-
அநாதி காலம் தீர்க்கமாய்ப் போந்த ஜன்மம் ஆகிற குரூரமான சிறை –
அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றத்தை அனுவிதாயானம் பண்ணின படி –

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம்—4-
ஸ்ரீ ஆழ்வார் இங்கே-இவ் விடத்திலே-கூப்பீடு கேட்கும் இடமான கடலிலே-
பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்று மலங்கியதும்-
மதி எல்லாம் உள் கலங்கின பக்தி பிரபாவம் –

தளர்வுற்று நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பரிந்து–5-
ஸ்வ விநாசம் ஆனாலும் ஸ்ரீ ஸ்வாமிக்கு அதிசயம் -ஆவஹராய் விஸ்லேஷிக்க ஸ்மரிக்கிறவரை-
தன் செல்லாமையைக் காட்டி ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
நெடுமாலே – மாலே மாயப் பெருமானே -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி –
அதாவது திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்றும் –
உண்டாய் உலகு ஏழும் முன்னமே –என்று துடங்கி -நெய்யூண் மருந்தோ மாயோனே -என்றும்
இப்படி சௌசீல்யாதிகளாலே வசீகரித்த படி -என்கை-
ஸ்ரீ திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி இவரையும் சேர விரும்பினான் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-

உரிமையுடன் ஓதி யருள் மாறன் -ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு —6-
ஆஸ்ரயணாதி பல பர்யந்தமாக அருளிச் உபதேசிக்கையாலே-இந்த லோகத்தில் அறிவிலிகள் ஆனவர்கள்-பிறவியை அகற்றுவித்தார் –
இஜ் ஜகத்தில் அஞ்ஞர் உடைய ஜன்ம சம்பந்தத்தை ஸுவ ஸூக்தியாலே நிவர்த்திப்பித்தார் –
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே – என்றத்தை பின் சென்ற படி –

அறவினியன் பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு ———–7-
நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று-நெஞ்சே சீக்ர கதியாகச் சென்று பற்று – முந்துற்ற நெஞ்சாய்-அங்கே  பற்றும் படி ஓடு-

செம்மை உரை செய்த மாறன் என ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை————–8-
ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் என்று அனுசந்திக்க -ஸ்வரூப அனுரூபமான சம்பத்தாய்
உள்ளவை எல்லாம் பொருந்தி சென்று ஒன்றி நின்ற திரு -என்னும்படி நிலை நிற்கும் –

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால் பொற்றாள் நம் சென்னி பொரும் —————9-
இப்படிப் பெறாப் பேறு பெற்று-அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை கேவலம் வாக்காலே வசிக்க
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் யுடைய ஸ்ப்ருஹணீயமான சரணங்கள்
நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –பொரு -என்று ஒப்பாய்-அத்தால் -சேரும் -என்றபடி
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொரும் -என்றத்தை அருளிச் செய்த படி –

மாறன் பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் ————–10-
இப்படி நிர்ஹேதுக வைபவத்திலே நிர்வ்ருத்தர் ஆகிறபடியை வெளியிட்ட ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
மூர்த்த்னா ப்ரண மாமி -என்னும்படி என் சிரஸ் சாந்து பஜித்திடுக –
திருக் குருகை பெருமாள் தன் திருத் தாள்கள் வாழியே-என்று என் வாக்கானது மங்களா சாசனம் பண்ணி விடுக-
இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலேதாம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே ஆழம் கால் பட்ட படியை அருளிச் செய்து அருளினார் –

மாறன் செறிவாரை நோக்கும் திணிந்து ————11-
அநந்ய பிரயோஜனராய்-அந்தரங்கமாக ஆஸ்ரயிக்கும் அவர்களை த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல் ஸ்ரீ பகவத் சம்ச்லேஷம் யுண்டாய் ஆநந்திக்கும் படி கடாஷித்து அருளுவர் –

மாறன் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன் ——————12-
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்-அவ்விடத்திலே அப்படியே அவர்கள் விஷயத்தில்
அந்தரங்கராய் கிட்டினவர்களை மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே ஆடு—————13-
வையத்து அடியவர்கள் அன்றிக்கே அனுபவத்துக்கு தேசிகராய் வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று
அபி நிவேசத்திலே ஊன்றின ஸ்ரீ ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே –
அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம்-அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே-

உரைக்க மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ —————-14-
தாம் தம் தசையைப் பேச மாட்டாமல்
பிறர் பேசும்படி மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார் ஸ்ரீ ஆழ்வார் –

சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை————-15-
ஸ்ரீ வானோர் தனித் தலைவன் -அந்தாமத்து அன்பு செய்யும் படியான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே
உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் -என்கிறபடியே
மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு
நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே அன்பை அடியிலே இட்டு வை-

நைகின்ற தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க வன்மை யடைந்தான் கேசவன்——16-
இப்படி என் விஸ்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற உன்னை தான் விடேன் என்று ஸ்ரீ ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி ஸ்தர்யத்தைப் பிராபித்தான் -பிரசக்த கேசவன் ஆனவன் –

வீசு புகழ் மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று நெஞ்சே அணை————–17-
சம்பந்த சம்பந்திகள் அளவும் ஸ்ரீ வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான வைபவத்தால் வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஸ்ரீ ஆழ்வார் உடைய-புஷ்பம் போன்ற திருவடிகளே நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம் உஜ்ஜீவிக்கைக்கு உசித உபாயம் என்று –
அவர்களிலே ஒருவனாய்-அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய் சௌமனஸ்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே வீசு புகழ் எம்மா வீடு—————–18-
ஏவம் வித உபதேஷ்டாவான ஸ்ரீ ஆழ்வார் உடைய புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளே –
பரமே வ்யோமன் -என்று விக்யாதமான யசஸ்சை உடைய சர்வ பிரகார விலஷண மோஷம் –
ஸ்ரீ ஆழ்வாருக்கு -செம்மா பாதம் -இறே எம்மா வீடு–பொசிந்து காட்டும் இங்கே –
இவருக்கு ஸ்ரீ மாறன் மலர் அடியே யாயிற்று-விபூதிஸ் சர்வம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் இறே-

நம்முடைய வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —————19-
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடி -தனியேன் வாழ் முதலே -என்கிற ஈஸ்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஸ்ரீ ஆழ்வாராய் இருக்கும் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று ஸ்ரீ ஆழ்வார் சேவையாலே சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

நீடு புகழ் மாறன் தாள் முன் செலுத்துவோம் எம்முடி——–20-
இப்படி பர அநர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகையாலே நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே -முன்பே நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே-நாம் முற்பாடராய் முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம்

திருமலையில் மூண்டு நின்ற மாறன்-அழகர் -வடிவழகைப் பற்றி முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான்-21-
க்ரீடாதி நூபுராந்தமாக -அனுபவித்த படி -படி கலனும் நடுவு உள்ளவையாய்-படியிலே உள்ள திரு அணிகலன்கள் -என்னுதல்
படிந்து ஸூகம் வடிவதானவை என்னுதல்
முடி கொண்டான் வெள்ளக் கால்களாய்- பின்பு பெரு வெள்ளமாய்-நட்டாறாய்ச் சுளித்து அரையாற்றுக்கு அடியானபடி –
பெரு வெள்ளம்–நடு ஆறு -அரை யாறு- சௌந்தர்ய சாகரம் – தரங்க -அலையில் தூக்கிப் போட்ட சித்தம்
இப்படி சௌந்தர்ய சாகர தடங்க தாடன தரள சித்த விருத்தியாய் -முற்றும் அனுபவித்தான் முன் –

அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்–கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து -22–
மாசுசா -என்று ஆஸ்ரிதர் உடைய சோக நிவர்தகனான ஸ்ரீ கிருஷ்ணன்
அந்த கரண சங்கோச நிபந்தனமாக வந்த துக்கத்தைப் போக்கிக் கொடுத்து அக் கரணங்களைக் கொண்டு
அனுபவிக்கும்படி திரு உள்ளத்தை ஒரு தலைக்கும் படி பண்ணினான் –

மிக்க நலம் சேர் மாறன் பூங்கழலை நெஞ்சே புகழ்———-23-
நிரவதிக பக்தி உக்தரான ஸ்ரீ ஆழ்வார் -பூவார் கழல்களிலே அடிமை செய்தாப் போலே மனசே நீயும் அபிராமமாய்
புஷ்பம் போலே ம்ருதுளமாய் இருக்கிற அவர் சரணங்களை ஸ்துத்திப் போரு-
மனசே நினை என்னாமல் ஸ்துதி – முடியானே காரணங்கள் போலே -அவர் விஷயத்திலே வாசகமான அடிமையைச் செய்யப் பார்
உத்தர வாக்யத்தில் பிரதிபாதிக்கிற கைங்கர்யம் தான் ததீய பர்யந்தமாய் யாயிற்று இருப்பது-

மகிழ் மாறன் எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் ———24-
நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே – என்று அவன் தந்த ஆத்மபலத்தாலே சத்தை உண்டானால் இறே
சம்ருதியை அபேஷிப்பது- மொய்ம்பு -மிடுக்கு
அவனுடைய உபய விபூதி நிர்வாஹகத்வத்தையும் அந்தர் வ்யாப்தியையும்
சர்வ கால வர்த்தித்வத்தையும் அருளிச் செய்கையாலே வ்யாப்த அனுசந்தான ரூப வாச கைங்கர்யம் –
ஸ்ரீ திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமானுக்கே இறே ஏற்றி இருப்பது
அத்தைப் பற்றி இறே அங்கே அடிமை செய்தான் -என்று இவர் அருளிச் செய்தது –

மாறன் பால் தேடரிய பத்தி நெஞ்சே செய்————-25-
இப்படி அஞ்ஞர் ஆனவர்களை நிந்தித்து அவர்களை அசத் கர்மங்களின் நின்றும் நிவர்த்திக்கப் பார்த்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே பெறற்கு அரியதான பக்தியை மனஸே பண்ணு-

எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான் பன்னு தமிழ் மாறன் பயின்று—————-26-
இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு -சேதனரோடு செறிந்து ஆராயப் படுமதான த்ரவிடத்தை நிரூபகமாக
யுடையரான ஸ்ரீ ஆழ்வார் – பண்ணிய தமிழ் -என்னும்படி பிரமாண சரமத்தை வெளி இட்டால் போலே
பிரமேய சரமமான அர்ச்சாவதாரம் எளிது என்று வெளி இட்டு அருளினார் -என்கை-

இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில் ஆளாகார் சன்மம் முடியா——–27-
வடிவு அழகிலும்-ஆயுத ஆபரணாதி ஒப்பனை அழகிலும்-தோற்று அடிமையாய் இருப்பவர்களுக்கு ஆளாகையே
ஸ்வரூபமாய் இருக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் -அடிமை ஆகாதார் -சன்ம ஷயம் பிறவாது
ஆகையால் ததீய சேஷத்வத்தின் எல்லை நிலத்திலே நிற்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயிக்கவே
ஜன்ம சம்சார பந்த நிவ்ருத்தி பூர்வகமாக மோஷ சித்தியாம் – என்றபடி –

கரணங்கள் ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப துன்னியதே மாறன் தன் சொல்—————–28-
கரணங்களின் விடாயை கரணியான தாம் ஒருவருமே யுடையவராய்
அவனை அனுபவிக்க-ஆர்த்தி அதிசயத்தை யுடைத்தான ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியான இத் திருவாய் மொழி
மிடைந்த சொல் -என்னும்படி சப்த நிபிடமாய் இருந்தது
துன்னுதல் -நெருக்கம் –

குருகூர் மன்னருளால் மாறும் சன்மம்—————-29-
ஸ்ரீ திரு நகரிக்கு நாதரான ஸ்ரீ ஆழ்வார் அருளாலே அந்ய சேஷத்வத்துக்கு அடியான ஜன்மம் கழியும்
கண்டு சன்மம் கழிக்க வேண்டிற்று ஸ்ரீ ஆழ்வாருக்கு –
இவர்களுக்கு சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்று ஸ்ரீ ஆழ்வார் அருளாலே பிறவிப் பெரும்கடல் சுவறிற்று
மாறுகை யாவது -ச வாசனமாகப் போகை-
இவையுமோர் பத்தேற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே -என்று
இறே இத் திருவாய் மொழிக்கு பல ஸ்ருதியும் –

ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர் நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்———30-
இப்படி அவன் கல்யாண குணங்களை ஸ்துதிக்கப் பெற்றேன் என்று அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை
லௌகிகராய் உள்ளவர்களே-நாத் தழும்பு ஏறும்படி ஸ்துதியுங்கோள்-அது தான் பல நாள் வேண்டா-ஒரு நாள் அமையும்
சத்ருத் சேவிக்க அமையும்-சர்வதா சரசமாய் இருக்கும்-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்னும் விஷயம் இறே

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம் பன்னியிவை மாறன் உரைப்பால் ———31-
இவற்றின் அல்ப அஸ்த்ர த்வாதி தோஷங்களை ஆராய்ந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடைய தாச்யமே சரசமாய் இருக்கும்-

காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் குருகூரில் வந்துதித்த கோ —————32-
இப்படி தேச காலங்களால் கை கழிந்து இருக்கிறது
தத் கால வர்திகளுக்கும் தத்ரஸ்தராய் ஆனவர்களுக்குமே இறே அனுபாவ்யமாய் இருப்பது -என்று அறியாமல் –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் -ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே சிதிலரானார் -ஸ்ரீ திரு அயோத்தியில் பிறப்பு ஸ்ரீ ராம பக்தியை ஜனிப்பிக்குமா போலே
ஸ்ரீ திரு நகரியில் பிறப்பும் பராபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் இறே-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் ராஜா என்றபடி –
இவ்விடம் அராஜாகமாய் ஆகாமைக்கு ஆயிற்று -ஸ்ரீ ஆழ்வார் அங்கு நின்றும் போந்து ஆவிர்பவித்தது –

கலந்த குணம் மாறன் வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் ————33-
சம்ஸ்லேஷித பிரணயித்வ குணத்தை -ஸ்ரீ ஆழ்வார் சத்தை பெற்று-யானும் எம்பிரானை ஏத்தினேன் யான் உய்வானே -என்று
இப்படி கீழ் வ்யசனம் தீர்ந்து ஸ்ரீ எம்பிரானை ஸ்தோத்ரம் பண்ணுகையால் -இந்த ஜகத்தில் உள்ளார் எல்லாரும் எல்லாம்
சத்தை பெற்று வாழ்ந்தார்கள் –வையம் மன்னி வீற்று இருந்து –என்று இறே பல சுருதி –
விஸ்வம் பரா புண்யவதீ-என்று ஸ்ரீ ஆழ்வார் கால் தரித்து இருக்கையாலே பூமி பாக்யவதியாகி வாழ்ந்தது ஆகவுமாம்-

மாறன் -காதல் பித்தேறி -எண்ணிடில் முன் போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு————34-
முன் கண்ட சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்த பதார்த்தங்களையும் அவனாகவே பிரதிபத்தி பண்ணி
வ்யாமோஹ அதிசயத்தாலே-அவற்றிலே அத்ய அபி நிவிஷ்டரானார்-

தோற்ற வந்து நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்-சென்ற துயர் மாறன் தீர்ந்து-35-
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான வைபவம் எல்லாம் பிரகாசிக்க இங்கே வந்து –
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரனை ஸ்ரீ ஆழ்வார் கண்டு – போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி-மிகவும் ஹ்ருஷ்டராய் -தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து ஸ்ரீ ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய் ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தம்முடைய பெருமையை தாமே பேசினார் -ஆயிற்று-

அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம்————36-
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று –
செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் –
செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற
ஸ்ரீ கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-

மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே தென் குருகூர் ஏறு———–37-
உணர்ந்த அநந்தரம் அவன் விக்ரஹத்தைக் கண்டு கிட்டி அனுபவிக்கைக்கு – பத்தும் பத்தாக அபேஷித்து
பஹூ பிரகாரமாக பிரயாசப் பட்டு -இப்படி திவா ராத்திரி விபாகம் அற சர்வ காலத்திலும் கூப்பீடோவாமல் இருந்தார் ஸ்ரீ ஆழ்வார் –
இனி ஸ்ரீ திரு நகரியில் ஸ்ரீ ஆழ்வார் பிரதான்யம் எங்கனே நடக்கக் கடவதோ என்று சங்கிக்கும் படியாய் இருக்கிறது –

மாறன் தாளை நெஞ்சே நம் தமக்குப் பேறாக நண்ணு ——————38-
தெளிய ஆராய்ந்தால் அத்தலைக்கு உறுப்பாகவே இருக்க வேணும் -ஸ்வார்த்தைக்கு உருப்பாகில் என் தனக்கும் வேண்டா –
என்று இப்படி அருளிச் செய்யும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை நெஞ்சே நமக்கு பிராப்யமாம்படி அடை
நமக்கு இந்த நிர்பந்தங்கள் ஒன்றும் வேண்டா ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்யம் என்று பிராபி-

மாறன் அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று————–39-
இப்படி ஸ்ரீ ஈஸ்வரனும் கூட கைவிட்ட சம்சாரிகளையும் அகப்பட விட மாட்டாமல்
ஸ்ரீ ஈச்வரனோடே மன்றாடும் ஆழ்வார் உடைய அருள் அந்தரங்கமான ரஷையாக நமக்கு ஓன்று உண்டு –
வேறு ஒரு ரஷகாந்தரம் தேட வேண்டா -தானே ரஷகமாய் இருக்கும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்னக் கடவது இறே –

யருள் மொய்ம் மகிழோன் தாள் தொழவே காதலிக்கும் என்னுடைய கை————-40-
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளுக்கு ஆட் சேர்த்து அருளுகையாலே
பகவத் கைங்கர்ய அதி சீதள அம்ருதமய தடாக அவகாகன
ஸூ பிரசன்ன ஆத்மா ஸ்வரூப காத்ர நிரதிசய ஸூகந்த விகசத் கேசர மால அலங்க்ருத
வஷஸ் ஸ்தலரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –
வகுளாபிராமம் ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா-என்று பஜிக்கையிலே பக்தி பண்ணா நின்றன
என்னுடைய ஹஸ்தங்கள் ஆனவை -தம் கரணங்கள் ஸ்ரீ குருகூர் நம்பி மொய் கழல்களிலே-காதலிக்கும் படியும் -என்கிறார் –
மானஸ வியாபாரத்தையும் ஸ்ரீ மா முனிகள் திருக்கரங்கள் ஆசைப்படுகின்றன –

மெய்யான பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை போற்றினனே மாறன் பொலிந்து —————41-
இரும்பைப் பொன் ஆக்குவது போலே-நித்ய சம்சாரிகளுக்கும் நித்ய சூரிகள் பேற்றை உபகரிக்கும்
ஸ்ரீ எம்பெருமான் உடைய நிர்ஹஹேதுக கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை
ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஸ்ரீ ஆழ்வார்

திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மன மாசு———–42-
ஒன்றும் தேவில் உபதேசத்தாலும் திருந்தாதே-ஒதுங்கி இருந்தவர்களைக் குறித்து-பரத்வ உபதேசம் பண்ணி திருத்தியும்
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும் வகை இல்லை தொண்டீர்-உழி பேர்த்திடும் கொன்றே -என்று-தேடி தடவிப் பிடித்து
பிரத்யா புரச்சரமாய்த் திருத்தியும் சொல்லுகிற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி-ஔஷதம் அடியாக மநோ மாலின்யம் நிவ்ருத்தமாம் –

மடலூர மாறன் ஒருமித்தான் உள் நடுங்கத் தான் பிறந்த ஊர் –43-
ஜகத் ஷோபம் பிறக்கும்படி இஜ் ஜகத்திலே மடலூர ஸ்ரீ ஆழ்வார் ஒருப்பட்டார்
தாம் அவதரித்த இவ் ஊரில் உள்ளார் இச்சாஹாச பிரவ்ருதியைக் கண்டு ஹ்ருதயம் கம்பிக்கும்படியாக
இப்படி உத்யோகித்த இது ஏதாய் விளைகிறதோ -என்று தாமும் அவ் ஊரில் அவதரித்தவர் ஆகையாலே இவரும் தளும்புகிறார்-

மாறன் திரு வுள்ளத்துச் சென்ற துயர் ஓதுவது இங்கு எங்கனயோ———–44-
ஆழ்வார் திரு உள்ளத்திலே அனுவர்த்தித்த துக்கம் அது தான் அவரே பேசி அல்லது அந்யருக்கு பேசி முடியாது இறே
அது தான் வாசோ மகோசரமாய் யாயிற்று இருப்பது-ஆகையால் பேசி முடியாததை எங்கனே பேசுவது என்று ஈடுபடுகிறார்-

உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன் கருதும் அவர்க்கு இன்பக் கடல்———–45-
அடி தொடங்கி முடி அளவும் அனுபவித்த பிரகாரத்தை-உரு வெளிப்பாடு என்கிற துறையிலே வைத்து அருளிச் செய்த
ஸ்ரீ நம்பி விஷயமாக எங்கனயோ -அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-அபிநிவேசத்துடன் அனுபவிப்பார்க்கு ஆனந்த சிந்துவாய் இருப்பார் –
சென்னி நீண் முடி யாதியாய வுலப்பில் அணி கலத்தன் கன்னல் பாலமுதாகி வந்து என்நெஞ்சம் கழியான்-என்று
ஸ்ரீ ஆழ்வார் தமக்கு அவ் வாகாரம் இனிதாய் இருக்குமா போலே
அவர் சம்பந்திகள் ஆனவர்களுக்கும் ஸ்ரீ ஆழ்வார் அப்படியே இருப்பார் –

மாறன் உரையதனை ஆய்ந்துரைப்பார் ஆட் செய்ய நோற்றார் ———-46-
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியானத்தை –
ஆய்ந்த தமிழ் மாலை யாயிரத்து இவையும் ஓர் பத்து என்று-இதன் வைபவத்தை ஆராய்ந்து அனுசந்திப்பார் –
ஸ்ரீ திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்னும்படி ஸ்ரீ ஆழ்வாருக்கு அடிமை செய்ய நோற்றார் ஆவார்

எழில் மாறன் சொல் வல்லார் அங்கு அமரர்க்கு ஆராவமுது——————47-
சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் ஆகிற ஆத்ம பூஷணத்தாலே அபிராமராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய
வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் –
அவ்விடத்தில்-அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற
ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்
ஸ்ரீ சிரீவர மங்கை மேய பத்துடன் வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே -என்றத்தை அருளிச் செய்தபடி –

ஆற்றாமை பேசி யலமந்தான் -மாசறு சீர் மாறன் எம்மான் ———–48-
இத்தசையிலும் உன்தாள் பிடித்தே செலக் காணே -என்றும் -களை கண் மற்றிலேன் -என்றும்-இவர்க்கு அடியில் இப்படி அத்யாவசியம் இருக்கும்படி
இவ்வளவான தசையிலும்-உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற
அத்யாவச்ய ஞானாதி குணங்களை யுடையரான ஸ்ரீ ஆழ்வார் தம்மை அடைந்து பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி-

மா நலத்தால் மாறன் சொலவு கற்பார் தங்களுக்கு பின் பிறக்க வேண்டா பிற————-49-
இத்தசையிலும் -அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்று இறே
இவர் அத்யாவசியம் குலையாது இருக்கும் படி -இப்படி விஸ்லேஷ வ்யசன உக்தராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தியான
இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லாருக்கு -ஜன்மம் பரிக்ரஹம் பண்ண வேண்டா
ஜென்மத்தை முடித்தே விடும்-திருவடிகளுக்கு அசலான ஜன்மம் எடுக்க வேண்டா -என்றாகவுமாம் –

சீர் மாறன் வாய்ந்த பதத்தே மனமே வைகு——————50-
தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று
அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார் உடைய -பரஸ்பர-சத்ருசமாய்-பொருந்தி இருக்கிற திருவடிகளிலே –
மனசே தங்கிப் போரு-அவருக்கு நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஆனாப் போலே உனக்கும்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்தம் என்று சென்று அங்கேயே தங்கிப் போரு-

கை கழிந்த காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் ——————-51-
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாதரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —
ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –

ஊடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு
அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி –
நல்குதல் -கொடுத்தல்–52-

தமிழ் மாறன் சொல் வல்லார் வானவர்க்கு வாய்த்த குரவர் —53-
சர்வ ஸூலபமான திராவிட பாஷைக்கு தேசிகரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய்மொழியை
அப்யசிக்க வல்லார் -அவனுடைய விபூதியை-ததீயத் ஆகாரண அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கு அவ் வநுபவ விஷயமான
இத் திருவாய்மொழியை இவர்கள் இங்கேயே இருந்து அனுசந்திக்கையாலே அவர்களுக்கு அனுரூபமான ஆதரணீயர் ஆவார் –

களித்துப் பேசும் பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் -54-
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவையுடை மால் வண்ணனை மலைக்கு நா யுடையேன் -என்கையாலே
சர்வ ஸ்மாத் பரனை வசீகரிக்கும் அங்குசமாய் யுள்ளவர் என்கிறதைப் பற்றச் சொல்கிறது –
ஸ்ரீ திரு நா வீறுடைய பிரான் தாசர் குமாரர் ஆகையாலே அடி அறிந்து ஸ்ரீ பராங்குசன் -என்கிறார் –
அமுத மென்மொழி யாகையாலும்- தேனே இன்னமுதே -என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்
தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது

மாறன்–துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் — நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்–55-
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே–குற்றம் அற்று-ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே ஸ்வாபாவிக பக்தியாலே –
நாள் தோறும் தாம் அவ் விஷயத்தில் த்ரிவித கரணத்தாலும் யுண்டான தம்முடைய-பிராவண்ய ஸ்வபாவத்தை எல்லாம் அருளிச் செய்தார்

மாறன் ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-
சீருக்கு ஊனம் ஆவது-ஸ்வாரத்தமாய் இருக்கை-அப்படி அன்றிக்கே-பர அனுபவ யோக்யமாய் இருக்கை -ஊனம் அற்று இருக்கை –
இப்படி நிரவத்யமான கல்யாண குணத்தை நெஞ்சே உண் – ஒவாத ஊணாக உண் -என்று ஸ்ரீ ஆழ்வார் அவன் குணங்களை
புஜிககுமா போலே நீயும் ஸ்ரீ ஆழ்வார் உடைய பக்த்யாதி குணங்களையே புக்தமாக புஜி-

மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-
இப்படி எல்லாரையும் வாழ்வித்து ஸ்ரீ வைத்த மா நிதியை நாடி நடந்து போம்
அவருக்கு ஸ்ரீ வைத்த மா நிதி அடியாய் இருக்கும்– நமக்கு வைத்த மா நிதி ஸ்ரீ ஆழ்வார் அடியாய் இருக்கும் –
கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் —என்று இறே
ஸ்ரீ ஆச்சார்யா ஹிருதயத்திலே ஸ்ரீ நாயானார் அருளிச் செய்தது –

தூது நல்கி விடும் மாறனையே நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-
விருப்பத்தோடு விடுகை – தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -என்று
ஐக ரஸ்யம் பற்றாசாக விடுகை -நித்யமான ஸ்ரீ திரு நாடு முதலான ஸ்தலங்களிலே ஆதாரத்தோடு தூது விடும் ஸ்ரீ ஆழ்வாரையே
நீங்கள் தூது விடுகை ஆகிற வருத்தம் இன்றிக்கே நீங்களே நடந்து போய் சேவியுங்கோள் –
ஸ்ரீ திருநாடு போலே நெடுகி இராதே-ஸ்ரீ திரு நாட்டில் ஸ்ரீ திரு நகரி கிட்டிற்றாய் இறே இருப்பது –
நீங்கள் புருஷகார நிரபேஷராக ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயிங்கோள் –

காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை ஒதிடவே யுய்யும் யுலகு—59-
அத்யபிநிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-
இத்தை அப்யசிக்கவே–ஜகத்து உஜ்ஜீவிக்கும்-ஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த -மகிழ் மாறன் –60-
திரு வேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார் உடைய
திருவடிகளே உனக்கு உபாயமாக ஸ்வீகரீ –
அகலகில்லேன் என்று பூர்வ வாக்கியம் அனுசந்தித்தார்-என்னும்படி
ச க்ரமமாக-சரண வரணம் பண்ணுகையாலே சாத்தின திரு மகிழ் மாலையும் சம்ருதம் ஆயிற்று –
சரண்யன்-தண் துழாய் விரை நாறு கண்ணியனாப் போலே
சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார்
அது சேஷித்வ உத்தியோகம்
இது சேஷத்வ உத்தியோகம்
அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே
இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்
நெஞ்சே-வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்-

இன் புகழ் சேர் மாறன் என -குன்றி விடுமே பவக் கங்குல் -61-
கேட்க்கைக்கு இனியதாய் ஸ்லாக்கியமான யஸஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –
இவ் உக்தி மாத்ரத்தாலே-சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்-இது நிச்சயம் -/குன்றுதல் -குறைதல்
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே
அவர் திரு நாமத்தைச் சொல்லவே-விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —

என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன் அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-
அழகியதான இத் திருவாய் மொழியை ஆதரித்து அனுசந்திக்க -உபாயாந்தரமான விஷயமான-மநோ மாலின்யம் நிவ்ருத்தமாய்
தத் ஏக உபாயத்வ அனுசந்தானத்தாலே மனஸ் ஸூத்தி பிறக்கும் -தொடங்கின கார்யம் தலைக் கட்டும் தனையும்
பற்றாது போலே இருந்தது இவள் ஆற்றாமை
இதுக்கு என் செய்வோம் -என்று அவர் ஆராயப் புக்கார்-இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்
ஸ்ரீ பாற்கடல் ஸ்ரீ அரங்கம் போலே –

சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் —63-
இத் திருவாய் மொழி முகேன தம் திரு உள்ளம் ஸ்ரீ திருப் பேரில் இருப்பிலே அபஹ்ருதமான படியை அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே தேவு மற்று அறியேன் -என்றவர்கள்-இப்படியான பெருமையை யுடைய தாங்கள் –
அவர் அடிமைத் திறத்து ஆழியார் -என்னும் அவர்களிலும் இவர்களே அகாத பகவத் பக்தி சிந்துவான
ஸ்ரீ நாத முனிகளைப் போல மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளை அறிய வல்லரான
அகாத ஜ்ஞான பிரேமங்களை யுடையார் –

மாறன் சொல் -பன்னுவரே நல்லது கற்பார் -64-
தாம் அனுபவத்துக்கு-போக்குவீட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை – ஆராய்ந்து அனுசந்திக்கும் அவர்களே
தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக விலஷண சப்தங்களை அப்யசிப்பார் ஆவார் —
தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே
எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-

வாய்ந்து உரைத்த மாறன் சொல் -பண்ணில் இனிதான தமிழ்ப் பா -65-
ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-
நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ
இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

நன்குருகிக் கூப்பிட்ட அண்ணலை நண்ணார் ஏழையர்–66-
பிரேம அனுகூலமான உருகலோடே கூப்பிட்ட சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்–
இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே ஸ்ரீ பகவத் அலாபத்தாலே
கூப்பிடுகிற ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-
இப்படி ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே-என்று வெறுக்கிறார் –

அவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-
நிரவதிக போக்யமான அந்த உத்தம அங்கத்திலே சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
விஷயத்திலே பொருந்தி இருக்குமவர்களுடைய பிரபல ப்ரதிபந்தகம் நசித்து நிச் சேஷமாகப் போம் –
மாறன் சொல் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து-என்ற பாடம் ஆன போது
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியை மனசிலே பொருந்தி
அனுசந்திக்குமவர்கள் பிரதிபந்தகம் நிச் சேஷமாகப் போம் -என்றபடி –

மாயன் வளம் உரைத்த மாறனை-நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-
இப்படி விசித்திர ஜகதாகாரனானவன் சம்பத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை –
நாம் கிட்டி அவர் திரு நாமங்களைச் சொல்லி வாழும் காலம் ஆக வற்றோ-அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –

கைம்மாறு இலாமை பகர் மாறன் -பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் -69-
இப்படி க்ருதஞ்ஞாரான ஸ்ரீ ஆழ்வார் பரிசர வர்த்திகளாம் படி கிட்டுவார்க்கு ஆனந்தம் யுண்டாம் –
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -என்கிற நிர்பந்தமும் வேண்டா
கேவலம் -கிட்டவே அமையும்-

கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு -70-
தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே
திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –
ஸ்ரீ ஆழ்வாரும் வேண்டா – நமக்கு உத்தேச்யம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே -அமையும்
அன்றிக்கே –
மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு-திருட அத்யாவசாய உக்தரான ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் –
மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார் -எல்லாருக்கும் குல தைவம் என்றாகவுமாம் —
அவன் விட்டாலும் அவள் விடாள் -அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் –

தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் -71-
இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற மகா ப்ருதிவியில் உள்ளவர்களே உங்களைப் போலே அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் நம்முடைய மனஸ்ஸூ — உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்
ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் மனஸ்ஸூ —

தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு -72-
ஆத்மாவிலும்-அதுக்கு அசலான ஆத்மீயங்களிலும் நசை அற்ற ஸ்ரீ ஆழ்வார்
அந்த ஸ்வபாவத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார்-

பயம் தீர்ந்த மாறன் வரி கழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார் -73-
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-பயமும்-பய நிவ்ருத்தியும் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் உடைய வரியை உடைத்தான
வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள் நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —
ஸ்ரீ ஆழ்வார் இப் பாசுரத்தாலே பயம் தீர்க்கையாலே இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே -சாராயேல் –மானிடவரைச் சார்ந்து மாய் -74-
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-நெஞ்சே –
ஆஸ்ரயியாது இருப்புதி யாகில் -பிரகிருதி வச்யரான மனுஷ்யரை ஆஸ்ரயித்து நசித்துப் போ –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம் உஜ்ஜீவன ஹேது -தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது-என்றது ஆயிற்று –

அழுது அலற்றி தூய புகழ் உற்ற –சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் -அற்ற பொழுதானது எல்லியாம்-75-
சௌந்தர்யாதிகளை-அனுபவிக்கப் பெறாமையாலே அழுது-அலற்றும் யசஸை யுடையரான ஸ்ரீ ஆழ்வாரை
நாம் அநந்ய பிரயோஜனராய் கிட்டி நின்று அனுபவிக்கும் காலம் பகலாய் இருக்கும் –
வகுள பூஷண பாஸ்கரர் -பராங்குச ஆதித்ய சந்நிதி -இறே
அவருடைய அனுபவ விச்சேத காலமானது சம்சாரம் ஆகிற காள ராத்ரியாம் –

மாறன் கண்டு இந் நிலையைச் சொன்னான் இருந்து–76-
ஸ்ரீ திருக் கடித் தானத்திலே தம்மை விஷயீ கரிக்க ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து இருக்க- அவ்விருப்பைக் கண்ட ஸ்ரீ ஆழ்வார் –
இங்குற்றை இருப்பு-தம்மை விடாய் கெட விஷயீ கரிக்கைக்காக என்றும்
இஸ் ஸ்வபாவத்தை பொருந்தி இருந்து-அருளிச் செய்தார் -என்கை
அவன் வரவாற்றாலே – மாயக் கூத்தனில் விடாய் தீர்ந்து- பொருந்தி இருந்து அருளிச் செய்தார் -என்கை-

இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர் கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு–77-
பெறாப் பேறு பெற்றானாய் இனியனாய் இருந்தபடிக் கண்டு அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார்
அவன் தம்முடனே வந்து கலந்தபடியை திரு உள்ளத்தாலே கண்டு அருளிச் செய்தார் –
கலக்கைக்கு அவன் கிருபையே உபாயம்-இத்தலையில் உள்ளது அனுமதி மாத்ரமே –

ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான் காரி மாறன் தன் கருத்து —78-
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஸ்ரீ எம்பெருமான் காட்ட அத்தை ஆராய்ந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
தன் திரு உள்ளக் கருத்தாலே – என்னுதல் –
இப்படி ஸ்வரூப வை லஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்யும்படி யாயிற்று
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்து – என்னுதல் –

திறமாக அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர் இந்நிலையை யோரு நெடிதா –79-
நிச்சயமாக அந்யருக்கு சேஷம் ஆகல் ஆகாது –
பிராப்த சேஷி யானவனுக்கே சேஷம் ஆகிற ஆத்ம ஸ்வரூபத்தின் நிஷ்டையை ஆராய்ந்து போருங்கோள் –
தீர்க்கமாக -என்னுதல் -தீர்க்கமாக விசாரி என்று தன் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் -ஆதல்-

எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது கொல்லை நிலமான நிலை கொண்டு –80-
பக்தர்கள் திறத்தில் அடிமை யாம் அளவு அன்றிக்கே அவ்வடிமையில்-சீமா பூமிதாம்படி அனுசந்தித்தார் ஸ்ரீ ஆழ்வார் –
அந்த பாகவத சேஷத்வம்-சீமாதிலங்கியான உத்தம புருஷார்த்தம் என்கிற-நிஷ்டையைக் கொண்டு
எல்லை நிலம் தானாக எண்ணினான்
இந்த பகவத் பிராப்தி பாகவத பிராப்தி சாபேஷமாய் இருக்கும்-
இந்த புருஷார்த்ததுக்கு மேல் எல்லை இல்லை -ஆகை இறே முழுதும் உறுமோ -என்றது –

திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-
தன்னை ஆஸ்ரயித்தவர்களை தனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும் ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –
எத்தனை அறிவில்லாதவர்கள் விஷயத்திலும் ஹிதத்தை தம்முடைய தீர்க்க தர்சிக்கும்-யசஸை உடையரான
ஸ்ரீ ஆழ்வார்-முற் காலத்திலே- இப்படி ஆத்மஹித தர்சியான இவரும் ஒருவரே -என்றபடி –

சீர் மாறன் தாளிணையே -உய்துனை என்று உள்ளமே ஓர்-82-
கைங்கர்ய சம்பத்தை -யுடையவர்-என்னுதல்-பக்த்யாதி குணங்களை யுடையவர்-என்னுதல் –
ஏவம் விதராண ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை -நாசத்தை விளைக்கும் துணை போல்-அன்றிக்கே-
உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று-மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –

அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் மாட்டி விடும் நம்மனத்து மை–83-
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் அருள் உண்டு – கிருபை -நம்முடைய அஞ்ஞானத்தை நிச்சேஷமாகப் போக்கும் –
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று பிற்காலிக்கிற கலக்கத்தை
சீல குண பிரகாசத்வத்தாலே சேஷியாதபடி நசிப்பிக்கும் –
சாமான்யமான அஞ்ஞானம் ஆகவுமாம்-

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் -மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர் -84-
யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு அப்படியே கண்டு ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் வெளி இட்டார்
இப்படி பகவத் விஷய பக்தியை உடைய ஸ்ரீ ஆழ்வார் திருநாமத்தை அனுசந்திக்கவே -விலஷணமான ஆத்ம வஸ்து –
உஜ்ஜீவிக்கும்

மாறன் அருள் -உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85-
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -என்னும்படியான ஸ்ரீ ஆழ்வார் கிருபையை -அனுசந்திக்கும் அவர்களுக்கு-
மனஸ்ஸூ- நீராய் உருகும் –இது ஒரு கிருபாதிக்யம் இருந்தபடியே என்று-ஹிருதயம் த்ரவ்ய பூதமாகும்
மாறன் உரை உன்னும் அவர்க்கு -என்ற பாடம் ஆன போது
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுசந்திக்கப் புக்கால்-இதுவும் ஒரு ஸ்ரீ ஸூக்தியே என்று மனஸ்ஸூ த்ரவ்ய பூதமாம் –
இவை ஒன்பதனோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே -என்றத்தை பின் சென்ற படி என்றாகவுமாம் –

அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-
அவனுடைய-இருத்தும் வியந்திலே-அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை-திரு உள்ளத்திலே பொருந்த –
அவன் தாழ நின்று பரிமாறின சீலாதி குணங்களிலே சிதில அந்த கரணராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி
என்னுடைய நா வானது-எவ்விடத்து-சொல்லாது இருப்பது –
எல்லா விடத்திலும்-நாவினால் நவிற்று –ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்னுதல் –
அன்றியே-என் நா சொல்லாது இருப்பது எங்கு -என்று பாடமாய் –
இதில்-ரசஞ்ஞனான என்னாலே-சொல்லப் படாது இருப்பது எத்தசையிலே எங்கனே-என்றது ஆகவுமாம் –
எல்லா தசையிலும் அனுசந்தியாது இருக்க ஒண்ணாது-என்றபடி –

மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்-87-
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் ஆனவை தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு
பிரதிபந்தங்களை தானே சேதித்துப் போகடும் – துடர் அறு சுடர் அடி -போலே –

அறப் பதறிச் -செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் மையலினால் செய்வது அறியாமல்—88–
மிகவும் த்வரித்து -ஸ்ரீ திருவடியைத் தூது போக விட்ட-அநந்தரம்-ஸ்ரீ பிராட்டி பதறினால் போலே –
அழகிய ஸ்ரீ திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஸ்ரீ ஆழ்வார் –
சௌந்தர்யத்தாலே அறிவு கலங்கி அத்தாலே பிராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே
விட்ட தூதர் வருவதற்கு முன்பே த்வரித்தார் –
இவர் பிரேம ஸ்வபாவம் இருந்த படி-என் -என்று-வித்தராய் – அருளிச் செய்கிறார் —

மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன மால் -89-
அதாவது-அவனி யுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்மின் தொண்டீர் –என்று உபக்ரமித்த ஸ்ரீ ஆழ்வார் அருள் –
அஞ்ஞானத்துக்கு பிரதிபடமாக என்னுடைய அஞ்ஞானம் நிவ்ருத்தமாகும் –
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்னக் கடவது இறே –
ஆ புகு மாலைக்கு அவனுடை அருள் பெறும் போது அரிதாயிற்று –
இங்கு-என் தன மால் மாறன் அருள் மாற்றாகப் போகும் -என்று நிச்சிதம் ஆயிற்று –

சீர் மாறன் தாரானோ நம்தமக்குத் தாள் –90-
இப்படி உபதேசிக்கைக்கு உடலான-ஜ்ஞான ப்ரேமாதிகளை யுடைய ஸ்ரீ ஆழ்வார் நம்முடைய ஸ்வரூப அனுகுணமாக
திருவடிகளை உபாய உபேயமாக உபகரித்து அருளாரோ -தம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று
முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு –
ஆகையால் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி –

மாறன் என ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-
ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க -மனக்கேதம் சாரா -என்னும்படி-துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே -92-
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –

மால் தெளிவிக்க தெளிந்த தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு -93-
ஸ்ரீ கிருஷ்ணன் தெளிவிக்கத் தெளிந்த-கலங்கினவனை தேற்றுமவன் இறே
சங்கா ஹேது இன்றிக்கே-கூட இருக்கச் செய்தே சங்கிக்க சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சமாதானம் பண்ண
சமாஹிதராய் அத்தாலே தமக்கு சத்ருசரான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அநந்ய கதிகளான எங்களுக்கு அபாஸ்ரயம்-

சோராமல் கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும் கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –
சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே -சேவித்து-ஹ்ருஷ்டமாம் -மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –
ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –

உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் ஆன புகழ் சேர் தன்னருள்–95-
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -பிராட்டி ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்
உலகத்தார் புகழும் புகழ்–அருள் கொண்டாடும்படியான அருள்-

இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் —96-
விதி பரதந்த்ரனாய்–சரைஸ்து சங்குலாம் க்ருத்வா –இத்யாதிப் படியே-ஸ்ரீ பிராட்டி திரு உள்ளக் கருத்தைப் பின் சென்று
செய்தாப் போலே இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும் ஸ்ரீ ஆழ்வார் உடைய-ஸ்ராவ்யமான சப்தங்கள்-
இவர் தம் தேஹத்தை ஒழிய கொடு போக வேணும்-என்றபடியே பர தந்த்ரனாய் நின்ற குண சுத்தியைப் பேசினபடி-என்கை –
விதி வகையே நடத்துமவனே உபதேச சத்பாத்ரம் என்ற-பாத்ர ஸூத்தி இறே-கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –
இசைவு பார்த்தே இருந்த சுத்தி என்று -அவ்விருத்தாந்தத்தை பேசினபடி-என்றுமாம்-

கை விடுவித்துக் கொண்ட -திண் திறல் மாறன் -நம் திரு –97-
கை விடுவித்துக் கொள்ளுகை யாவது -அவன் காலைக் கட்டி கை விடுவித்துக் கொண்டார்-என்றபடி –
அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –
சர்வ சக்தி-சரீரத்துடன் கொடு போக வேணும் என்று-கர க்ரஹணம் பண்ண
இவர் சரண க்ரஹணம் பண்ணி-விடுவித்துக் கொண்ட த்ருடமான சக்தியை யுடைய-
ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –

இடருற்று நின்றான் துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-
இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல் தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்
இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் -இது நிர்ஹேதுகமாகாதே -என்று அவன் விஷயீ காரத்திலே விக்ருதராய்
அத்தாலே வந்த சம்ருத்தமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வாரை -அந்த யசஸ் ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து -இடருற்று நின்றான்
ஸ்ரீ சர்வஞ்ஞனும் நிருத்தனாய் நிற்பதே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது –

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் -முடி மகிழ் சேர் ஞான முனி -99-
ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு
ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்
முடியுடை வானவரோடே கூடுகையாலே-முடியை யுடையராய் பிரபந்தம் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ ஆழ்வாரும்-அளக பந்தத்திலே வகுள பந்தத்தை யுடையராய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார் –
அவன் – மது விரி துழாய் மாதவன் –இவர் -முடி மகிழ் சேர் ஞான முனி-பர ஜ்ஞானத்தை உடைய பராங்குச முனியானவர் –
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் – எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து -நனியாம் பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே-இவரும்-நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
அன்றிக்கே – பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
அன்றிக்கே பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக
நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் -இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —
இத்தால்-அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகபன் -என்றத்தை நினைக்கிறது-

சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து
திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று
கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு
அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே
பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து
தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –

கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி-/இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம் /முடிந்த அவா என்றது பரமபக்தி
இவை ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் -என்று இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —
ஏவம்விதமான பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற
ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில்–நூறு திருவாய் மொழிகளின் சாரார்த்தம்

October 3, 2019

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில்-நூறு திருவாய் மொழிகளின் சாரார்த்தம்–

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –1-
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள் நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் –2-
வீடு செய்மின்-இறை யுன்னுமின் நீரே-என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும் படி இறே இவர் உபதேசிப்பது
அத்தை நினைத்து இறே நாடு -நலத்தால் அடைய -என்கிறது

பத்துடையோர்க்கு என்றும் பரன் எளியனாம் பிறப்பால் முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும் என்று உரைத்த-3-
பத்துடையோர் -நிதி யுடையோர் என்னுமா போலே
ஆசா லேசா மாதரத்தையே போரப் பொலிய எண்ணி இருக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே அருளிச் செய்கிறார்
அவதரித்த இடத்தே-பஷிக்கும்-ரஷஸ் ஸூக்கும் மோஷத்தைக் கொடுக்கும் –
வீடாம் தெளிவரும் நிலைமையது ஒழிவிலன் -என்றத்தைப் பின் சென்ற படி –

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர் என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச நலங்கி – நாயகனைத் தேடி மலங்கியது–4-
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் மடலாழி யம்மானை -என்றத்தை கடாஷித்த படி –
முதல் தூதுக்கு விஷயம் வ்யூஹம் இறே –

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று நீங்க நினை மாறனை–5-
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கள வேழ் வெண்ணெய் தொடு யுண்ட கள்வா என்பன்
அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை அடி ஒற்றின படி –
அகன்று அத்தலைக்கு அதிசயத்தை பண்ண எண்ணுகிற ஸ்ரீ ஆழ்வாரை-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன் ஓதி-6-
பரிபூர்ணன் ஆகையாலே இட்டது கொண்டு த்ருப்தனாம் ஸ்வ பாவத்துடனே அருளிச் செய்து –
பரிவதில் ஈசனை -என்று துடங்கி -புரிவதும் புகை பூவே – என்றத்தை பின் சென்ற படி –
அன்றிக்கே-பண்புடனே பேசி இன்று -அவனுடைய ஸ்வ ஆராததையைச் சொல்லி அல்லது
நிற்க மாட்டாத தன் ஸ்வ பாவத்தாலே சொல்லி -என்றாகவுமாம்-
அந்தரங்கமான சிநேகத்தோடு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும் திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன் பற்றும் அவர்க்கு என்று பகர்–7-
ஜன்ம சம்பந்தம் அற்று-நிரதிசய போக்யமான பரமாகாசத்திலே நிரதிசய ஆனந்தத்தை அனுபவிக்கும் படி
அனுக்ரஹிக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ யபதி யானவன் –
தருமவரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றத்தை அனுபாஷித்து அருளின படி –
மிகவும் சரசனாய் இருக்கும் ஆஸ்ரயிக்குமவர்களுக்கு என்று-
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்-தூய வமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே –
என்னுமத்தை அடி ஒற்றி அருளிச் செய்த படி
இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு–குணைர் விருருசேராம-என்னும்படி-நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று பகர்-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய ஒர்ந்தவன்–8-
சஞ்சலமாய்-நின்றவா நில்லா நெஞ்சும் – அதன் வழியே பின் செல்லும் வாக் காயங்களும்
ஒருமைப் பட்டு இருக்கை அன்றிக்கே செவ்வை கெட நடக்கும் குடிலரோடு கூடிக் கலந்து –
சர்வ ஸ்மாத் பரனானவன் அடிமை கொள்ளும்-நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்

ஈசன் உவந்து ஆற்ற அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப் பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின–9-
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஹ்ருஷ்டனாய் சாத்மிக்க சாத்மிக்க சர்வ அவயவங்களிலும்
சம்ஸ்லேஷிக்கும் ரசம் தன்னைப் பெற்று-பொறுக்க பொறுக்க உறுப்பு தோறும்
செறிப்பு தீரக் கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று –
அணையும் சுவை யாவது -அருகலில் அறுசுவை- ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் துடக்கமானாரோட்டை
கலவியில் ரசங்கள் எல்லாம் ‘ ஏக விஷயத்தில் உண்டாம்படி கலந்து -என்றத்தை நினைக்கிறது-

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து தருமாறு ஓர் ஏது-ஹேது- அற-திறமாகப் பார்த்துரை செய்-10-
ஸ்ரீ சர்வேஸ்வரன் எதிர் அம்பு கோக்கிற இந்த பூதலத்திலே சஷூர் விஷயமாம் படி வந்து
ஒரு ஹேது இன்றிக்கே நிர்ஹேதுகமாக பல ஸ்வரூபனான தன்னையே தருகிற பிரகாரத்தை –
பொரு மா நீள் படை என்று துடங்கி கரு மாணிக்கம் என் கண் உளதாகும் -என்றத்தை கடாஷித்து
நிர்ஹேதுக கிருபையை அல்ப அஞ்ஞராலே அவி சால்யமாம் படி ஸ்திரமாக தர்சித்து அந்த பிரகாரத்தை அருளிச் செய்தபடி –

ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுதார்-11-
ஆராத காதல் -என்னும்படி விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு-அசேதனங்கள் ஆகையாலே தம்முடைய
துக்கத்தை ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சம துக்கிகளாக அழுத ஸ்ரீ ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஸ்ரீ ஆழ்வார் –

திருமால் பரத்துவத்தை -நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து அற்றார்கள் யாவரவர் அடிக்கே –12-
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே
இதிஹாச புராண பிரக்ரியையாலே அதி ஸூலபமான அவதாரத்திலே பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம்படி நன்றாக அருளிச் செய்த
அன்றிக்கே –
ஸ்ரீ திருமால் பரத்வத்தை தாம் நண்ணி அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-
இப்படி அவதாரே பரத்வத்தை ஸூஸ்பஷ்டமாம் படி அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து பரத்வ ஸ்தாபகரான ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே –
அற்றுத் தீர்ந்து அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் -அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்-

வந்துள் கலந்த மாலினிமை யானது அனுபவித்தற்காம் துணையா -வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற-13-
நித்ய சம்சாரி என்று சங்கோசியாமல் சங்கோசம் அற ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து சர்வ ரசங்களும் உண்டாம்படி
அந்தரங்கமாகக் கலந்த கலவியின் இனிமையானது ச ஹிருதயமாக சம்ஸ்லேஷித்த சாரஸ்யம் ஆனது-ஏவம் வித ரஸ்யதையை
அனுபவிக்கைக்கு அடியார்கள் குழாம்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று அனுகூல சஹவாஸம் அபேஷிதமாய்
வையத்து அடியவர்கள் அன்றிக்கே அனுபவத்துக்கு தேசிகராய் வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று அபி நிவேசத்திலே ஊன்றி

அடியார் குழாங்களுடன் கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து-14-
ஸ்ரீ வைகுண்ட வாசிகளான நித்ய சூரிகள் அவர்கள் சங்கத்திலே சங்கதராய் -ஆனந்தத்தை அடையாத
அபூர்த்தியாலே-வாடி வாடும் -என்று மிகவும் வாடி –
முயல்கின்றேன் அவன் தன் மொய் கழற்கு அன்பை -என்று நிரவதிக சிநேக உக்தரான
ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி ப்ரயுக்த ஸூஹ்ருத்துக்கள்-
இவர் வ்யாமோஹத்தை ஸ்ரீ எம்பெருமானுக்கு நிரூபித்து-தன் முகேன இது தேவர் கிருபா சாத்தியம் -என்று
விஞ்ஞாபிக்கிற படியை-தன் திறத்திலே பரிவுடைய திருத் தாயார்-தன் ஸ்வ பாவத்தை அறிந்து பேசும்படியாக –
மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார்-

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன் வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம் தீர்ந்தார்–15-
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத் தேசத்திலும் அத் தேசிகர் இடத்திலும் உண்டான அதி ஸ்நேஹத்தாலே –
அடியார்கள் உண்டு -அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் -அவர்களோடு கூட ஸ்ரீ சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
சர்வ ஸ்மாத் பரனான தான் ஸ்ரீ பரம பதத்தின் நின்றும் பரமாபதமா பன்னரான-இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ஸ்லேஷித்த ஔதார்யத்தாலே -மலை போலே பெருத்து அவயவ சௌந்தர்யாதிகளையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமானது –

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன் செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க –16-
ஒரு நீராக கலந்த பின்பு சத்தை பெற்று சம்பன்னரான ஸ்ரீ ஆழ்வார் -அல்லாவி -என்று அகல நினைக்கிற நைச்சய அனுசந்தானத்தைக் கண்டு
இது என்னாக விளையக் கடவது -என்று ஸ்ரீ ஈஸ்வரன் விசாரித்து -அவன் சிதிலனாகிற பிரகாரத்தை தர்சித்து
இப்படி என் விஸ்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற உன்னை தான் விடேன் என்று ஸ்ரீ ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய –

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த–எம்பிரான் எம்மான் நாராயணனாலே–17-
ஜகத் காரண பூதனாய்-விரோதி நிரசனம் பண்ணுமவனாய் – பிரசஸ்த கேசவனான அவனாலே
மதீயர் தேசு அடைந்தார் என்று தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று – ஸ்ரீ கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும் லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே-அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் ஸ்ரீ வைஷ்ணத்வ சிஹ்னமாய்
திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து ஹ்ருஷ்டராய் அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்தார்-

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம் குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட–18-
எமர் -என்று தாம் அபிமாநிக்கும் படியாக தம்மோடு அன்வயம் உண்டாம்படி யானவர்கள்
வீடு முதலாம் -என்கிற மோஷ பிரதத்வாதி குணங்களையே உபாயாந்தர நிரபேஷமாக திருத்துகைக்கு பரிகரமாகக் கொண்டு
நித்ய சம்சாரிகளை நித்ய சூரிகளோடு கூட்ட-மிகவும் இணங்கி -மிகவும் பொருந்தி
அவர்கள் துர்க் கதியை சஹிக்க மாட்டாமல் அவர்களோடு இணக்குப் பார்வை போல் சஜாதீயராய் இணங்கி –

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த–19-
எவ்வகையாலும் வி லஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு-யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –
ஆய்ந்து–இவ்வர்த்தத்திலே பொருந்தி

வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும் -20-
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
ஸ்ரீ திருமால் இரும் சோலை மலைக்கே –
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற அநர்த்தம் இன்றிக்கே அவன் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்யும் –
தளர்வு – மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன் -அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப் பற்றி –
முடியும் அடியும் படி கலனும் முற்றும் அனுபவித்தான் முன்
ஸ்ரீ திருமலை ஆழ்வாரிலே மண்டி அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ மாலிரும் சோலை என்னும் மலையை உடைய மலையான ஸ்ரீ அழகர் திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய குணம் முதலாய் உள்ளவை எல்லாம் குமர் இருக்கும் படி அவர் திவ்ய விக்ரஹ சௌந்தர்யத்தை
அனுபாவ்ய விஷயமாகப் பற்றி -க்ரீடாதி நூபுராந்தமாக -அனுபவித்த படி –

முன்னம் அழகர் எழில் மூழ்கும் -குருகையர் கோன் இன்ன வளவென்ன கரணக் குறையின் கலக்கத்தை
ஸ்ரீ கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-
முந்துற முன்னம்-ஸ்வரூப குணாதிகளில் அகப்படாதே அழகர் உடைய ஸ்ரீ அழகிலே யாயிற்று அகப்பட்டது –
கரண சங்கோச நிபந்தனமாக வந்த துக்கத்தைப் போக்கிக் கொடுத்து அக் கரணங்களைக் கொண்டு
அனுபவிக்கும்படி திரு உள்ளத்தை ஒரு தலைக்கும் படி பண்ணினான் –
ஸ்ரீ பெரிய திருமலையில் நிலையைக் காட்டி சமாதானம் பண்ணினான் ஆயிற்று-

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர வேங்கடத்துப் பாரித்தார்–23-
அடிமையில் ஒன்றும் நழுவுதல் இன்றிக்கே-சர்வ வித கைங்கர்யங்களையும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு செய்ய வேணும் என்று
சென்னி ஓங்கு தண் ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளையும் செய்ய வேணும் என்று உத்சாஹித்தார் –

மகிழ் மாறன் எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய் அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் ———24-
சகல வஸ்துக்களும் தான் என்னும் படி பிரகாரமாக வர்த்திக்கிற பிரகாரியை காட்டிக் கொண்டு நிற்க –
வகுள தரரான ஆழ்வார் -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் ஸ்ரீ திரு வேங்கட முடையான் திருவடிகளிலே
அடிமை செய்ய இச்சித்து -அப்படி ஆசைப்பட்ட அவ் விஷயத்திலே என்கோ என்கோ -என்று வாசிகமாக அடிமை செய்தார்

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால் அன்பால் ஆட் செய்பவரை ஆதரித்தும் –
அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும்–25-
முன்-புகழும் நல் ஒருவனில் வாசிகமாக அடிமை செய்த அந்த ஹர்ஷத்தாலே –
பக்தியாலே கைங்கர்யம் பண்ணுமவர்களை-ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவார் -என்று ஆதரித்தும் –
பக்தி இல்லா பாவிகளான அஞ்ஞரை அநாதரித்து நிந்தித்து அநாதரித்த படி-

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய் துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு இந்நிலத்தில்
அர்ச்சாவதாரம் எளிது என்றான்–26-
பர பரானாம் பரம -என்று இதர விலஷணமான அழகிய ஸ்ரீ பரத்வமாய் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி
இறே ஸ்ரீ வ்யூஹம் இருப்பது-பிரத்யஷ அனுபவ யோக்யமான தூய்மையை யுடைய ஸ்ரீ விபவமாய் –
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு -இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –
ஸ்ரீ அர்ச்சாவதாரம் சமாஸ்ரயணத்துக்கு சஷூர் விஷயமுமாய் நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார்
ஸ்ரீ விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -ஸ்ரீ பெருமாள் அர்ச்சித்த ஸ்ரீ பெரிய பெருமாள்-ஏற்றம் –
அவரையே கடாக்ஷித்ததால் வந்த திருக்கண்களின் ஏற்றத்தால் -விசாலாட்சி

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம் தயலுண்டு நிற்கும் ததியர்க்கு -இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன்–27-
ஆஸ்ரித சங்க ஸ்வபாவனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளிலே-போக்யதையை அனுசந்தித்து ஸ்நேஹார்த்தரதா
யுக்தா சித்தராய் தன் நிஷ்டராய் இருக்கை
ஆயுத ஆபரணாதி ஒப்பனை அழகிலும்-தோற்று அடிமையாய் இருப்பவர்களுக்கு ஆளாகையே ஸ்வரூபமாய் இருக்கும் ஸ்ரீ ஆழ்வார்

கரணங்கள் ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப துன்னியதே மாறன் தன் சொல்—————–28-
பாகவத ஸ்வரூப நிரூபணத்துக்கு உடலாக பகவத் குணாதிகள் பிரஸ்துதம் ஆக -அத்தாலே
பக்தி அபிவிருத்தியாக -பாஹ்யாப்யந்தர சகல கரணங்களும்-
சர்வ பிரகாரங்களாலும் சேஷிகளாக அனுசந்திக்கப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு –
புருஷார்த்த காஷ்டையை கொலைக்கும் படியான அவன் இடத்திலே அவகாஹித்து
கரணங்களும் தாமும் தத் விஷயத்தில் பிரவணராய்-இந்த்ரிய வ்ருத்தி நியமம் இன்றிக்கே அவனை அனுபவிக்க
வேண்டும்படியான பெரிய விடாயை யுடையவையாய் -கரணங்களின் விடாயை கரணியான தாம் ஒருவருமே யுடையவராய்
அவனை அனுபவிக்க ஆசைப் பட-இப்படியே அவருடைய பிராவண்யம் இருக்கும்படி -என்கை

சோறு கூறைக்காக மன்னாத மானிடரை வாழ்த்துதலா -லென்னாகும் என்னுடனே மாதவனை ஏத்தும் எனும்–29-
சூத்திர பிரயோஜனதுக்காக ஷயிஷ்ணுக்களான
சூத்திர மனுஷ்யரைக் கவி பாடி ஸ்தோத்ரம் பண்ணுகையால் என்ன பிரயோஜனம் சித்திக்கும் –
திருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் ஒன்றுமே சித்தியாது -அனர்த்தமே சித்திக்கும் -என்றபடி –
ஸ்ரீ திருமாலவன் கவியான என்னோடு கூட –
என் ஸ்ரீ திருமாலான ஸ்ரீ யபதியை கவி சொல்ல வம்மின் என்று பரோபதேசம் பண்ணும்-

சன்மம் பல செய்து இவ் வுலகு அளிக்கும் நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் –30-
ஆஸ்ரித அர்த்தமாக அசங்க்யதமான அவதாரங்களைப் பண்ணி
விரோதிகளைப் போக்கி ஈரக் கையாலே தடவி ரஷிக்கும் நன்மை யுள்ளது ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கே இறே
சீர்ப் பரவப் பெற்ற நான் -என்றத்தை மால் குணத்தை நாடொறும் இம்மையிலே ஏத்தும் இன்பம் பெற்றேன்-என்கிறது –
இவ் விபூதியிலே ஸ்தோத்ரம் பண்ணுகையால் யுண்டான ஆனந்தத்தைப் பெற்றேன்
குறைவு முட்டுப் பரிவு இடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி
அம்ருத ஆனந்த மக்னரானவர் என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் அருளிச் செய்தது –

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம் பன்னியிவை மாறன் உரைப்பால் ———31-
இவற்றின் அல்ப அஸ்த்ர த்வாதி தோஷங்களை ஆராய்ந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடைய தாச்யமே சரசமாய் இருக்கும்-

காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்–32-
இவரும் தேச கால விப்ரக்ருஷ்டமான பர அவஸ்தய தத் அனுபவங்களை அப்போதே பெற வேணும் என்று
இவர் பூத காலத்தில் படிகளை அபேஷிக்கிறார் –
பர விஷய பக்தி ஏகதேசமாய்-விபவ பிராவண்யம் இறே விஞ்சி அருளிச் செய்தது –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் -ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே சிதிலர் ஆனார் –

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே ஓவாத காலத் துவாதிதனை -மேவிக் கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம்–33-
கீழில் திருவாய் மொழியில்-தேச காலாதித போக்ய வஸ்துவை அனுபவிக்கப் பெறாத
துக்கத்தால் வந்த சங்கோசம் எல்லாம் நிவ்ருத்தமாம்படி கால சக்கரத்தான் ஆகையாலே –
இவரோடு சேர்ந்து-அந்த கால உபாதியைக் கழித்து -கீழே அபேஷித்த அவதானங்களைக் காட்டி அருளி
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் என்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லனே -என்று இப்படி ஏக தத்வம் என்னலாம்படி-சம்ஸ்லேஷித பிரணயித்வ குணம்-

காதல் பித்தேறி -எண்ணிடில் முன் போலி முதலான பொருளை யவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு————34-
ஸ்ரீ ஆழ்வார் அபலையினுடைய அவஸ்தையை அடைந்து என் கொடியே பித்தே -என்னும்படி பக்தியாலே காதல் பித்தேறி
பித்தேறின ஆகாரத்தோடே தாம் நிரூபிக்க புகில்-மண்ணை இருந்து தொடங்கி
அயர்க்கும் அளவும் பிரதிபாதிக்கப் படுகிற
முன் கண்ட சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்த பதார்த்தங்களையும் அவனாகவே பிரதிபத்தி பண்ணி -என்கை –

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம்
தோற்ற வந்து நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்–35-
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் –
ஸ்ரீ ஆழ்வார் உடைய அத்யந்த வ்யாமோஹத்தை-
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான வைபவம் எல்லாம் பிரகாசிக்க இங்கே வந்து –
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கண்டு – போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி-மிகவும் ஹ்ருஷ்டராய் -தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்

அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு அறிவு பெற்றான் மாறன் சீலம்————36-
மண்ணை இருந்து துழாவியில் காட்டிலும்-அறிவு கலங்கி-அங்கு
காணவும்-கேட்கவும்-பேசவும் பின் செல்லவும்-ஷமையாய் இருந்தாள்-
இங்கு-குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்து மதி எல்லாம் உள் கலங்கி மயங்கி இறே கிடக்கிறது
நோய் தீர்ந்த பிரகாரத்தை -பேர் கேட்டு அறிவு பெற்றேன் -என்கிறது —

சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு சால வருந்தி
இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு இருந்தனனே–37-
பிரணயிநிகளோடு கலந்த சீலாதிக்யத்தை யுடைய ஸ்ரீ கிருஷ்ணன் திரு நாமத்தை
வண்டுவராதிபதி மன்னன் -என்று தோழி சொல்லக் கேட்டு மோஹம் தெளிந்து –
உணர்ந்த அநந்தரம் அவன் விக்ரஹத்தைக் கண்டு கிட்டி அனுபவிக்கைக்கு-பத்தும் பத்தாக அபேஷித்து
பஹூ பிரகாரமாக பிரயாசப் பட்டு-இப்படி திவா ராத்திரி விபாகம் அற
சர்வ காலத்திலும் கூப்பீடோவாமல் இருந்தார் ஸ்ரீ ஆழ்வார் –

என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால் என் தனக்கும் வேண்டா வெனு மாறன்–38-
ஸ்ரீ யபதியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய உகப்புக்கு புறத்தியான மாமை முதலான
உடைமையோடு உயிரோடு வாசி அற வேண்டா பர ப்ரீதி விஷயமாகவே இருக்கிற ஆகாரத்தை-
தெளிய ஆராய்ந்தால் அத்தலைக்கு உறுப்பாகவே இருக்க வேணும் -ஸ்வார்த்தைக்கு உருப்பாகில் என் தனக்கும் வேண்டா –

மிவ்வுயிர்கள் -தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன்–39-
பிரபல கர்மங்களாலே அசங்க்யாதமான துக்கத்தை மிகவும் அடைந்து பொறுக்கிற இவ்வாத்மாக்கள்
இவர்கள் அனர்த்தத்தை கண்டு ஆற்ற மாட்டாமல்-இவற்றின் கொடுமையை பல காலும் அருளிச் செய்து
கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே —என்று கூப்பிட்ட பின்பு-அடைந்தேன் உன் திருவடியை – என்னும்படி
சமாஹிதராய் சம்சாரிகள் நோவுக்கு நொந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால் அன்றி என யாரும் அறியவே -நன்றாக மூதலித்துப் பேசி–40-
தேவு ஒன்றும் இலை என- சர்வ ஸ்ரஷ்டாவான ஸ்ரீ சர்வேஸ்வரனை ஒழிய
கார்ய பூதரில் காரணத்வத்தால் வந்த புகரை உடையவர்கள் ஒருவரும் இல்லை என்று
எத்தனையேனும் கல்வி அறிவு இல்லாத ஸ்திரீ பாலரும் அறியும் படி
விரகத பூர்வகமாக-ஆஸ்ரயம் ருசிக்கும்படி அருளிச் செய்தவை -என்கை –
பரத்வ சங்கை தீர -இதுவே பரத்வத்தில் நாலாவது திருவாய்மொழி -மேலே பண்ண வேண்டாம் படி திருந்தினார்கள் –

பொய்யாகப் பேசும் புறனுரைக்கு -மெய்யான பேற்றை யுபகரித்த பேர் அருளின் தன்மைதனை போற்றினனே–41-
இவ் வழகைக் கண்டு இருக்கவும் தத் அனுகுணமான அக்ருத்ரும பிரேமம் இன்றிக்கே
க்ருத்ரிம பிரேமத்தாலே இவற்றைப் பேசி அனுபவிக்கிற படியை கண்டு
போட்கனாய் இருக்கிற மித்ர பாவத்தையே பார்த்து அந்த அஹ்ருத்யமான உக்திக்கு –
யதா ஞானம் உடையார் பேறும் சத்யமான பேற்றை உபகரித்த இப் பேற்றை ஸ்ரீ எம்பெருமான் உடைய நிர்ஹஹேதுக
கிருபா பிரவாஹத்தின் ஸ்வபாவத்தை ப்ரீதியாலே அருளிச் செய்தார் -ஸ்ரீ ஆழ்வார்

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர் மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி–42-
நித்ய சித்தர்–ஸ்வேததீப வாசிகள் முதலான ஸ்ரீ திருமால் அடியார்கள் எங்கும் திரண்ட சம்ருத்தி –
நித்ய சித்தருக்கும்-ஸ்வேத தீப வாசிகளுக்கும் சாமானராய்த் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றுமாம்-
தமர்கள் கூட்டம் நாளும் வாய்க்க நங்கட்கு -என்னும்படியாக-தம் கண்களாலே கண்டு
கண்டோம் கண்டோம் கண்டோம்-கண்ணுக்கு இனியன கண்டோம் -என்று ஹ்ருஷ்டராய் –
அந்த சம்ருத்திக்கு பொலிக பொலிக பொலிக -என்று மங்களா சாசனம் பண்ணினார்-

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால் ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்–43-
அத்யாகர்ஷகமான வடிவைக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன் தன் ஸ்வரூபத்துக்கு சேர தானே மேல் விழுந்து வந்து
அநுபவிப்பியாமையாலே -அபி நிவேசம் அதிசயிக்கையாலே – பழிக்கு அஞ்சாமல் -ஊரார் தாயார் தொடக்கமானவர்
இவள் மடலூர ஒருப்படுகிற தசையைக் கண்டு இது குடிப் பழியாய்த் தலைக் கட்டும் என்று நிஷேதிக்க
ஏவம் விதமான பழிக்கு பணையுமவள் ஆகையாலே அஞ்சாதே – அப் பழிச் சொல்லே தாரகமாக
ஜகத் ஷோபம் பிறக்கும்படி இஜ் ஜகத்திலே மடலூர ஸ்ரீ ஆழ்வார் ஒருப்பட்டார்

மடலூரவும் ஒண்ணாத படி கூரிருள் சேர் கங்குல் உடன் கூடி நின்று -பேராமல் தீது செய்ய–44-
ஆதித்யனும் அஸ்தமித்து பிரியம் சொல்லுவார் ஹிதம் சொல்லுவார் பழி சொல்லுவார் எல்லாரும் உறங்குகையாலும்
இருள் வந்து மூடுகையாலும் மடலூர்வதும் கூடாத படியாக -அதுக்கு மேலே அத்யந்த அந்தகாரத்தோடே ராத்ரியானது
கூட்டுப் படையோடு கூடி நின்று இட்ட அடி பேராமல்-தீது செய்ய -பொல்லாங்கை உண்டாக்க –

அழகு இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன் உரு வெளிப்பாடா வுரைத்த -45-
ருசி ஜனக லாவண்ய விபவமானது-உருவ வெளிப்பாடாய் -குண விக்ரஹ சௌந்தர்யாதிகளால் பூரணரான ஸ்ரீ நம்பி யுடைய
திவ்ய ஆயுத-திவ்ய ஆபரண-திவ்ய அவயவ சோபைகள் ஆனது அவை கண்டு உகக்கிற என் முன்னே பிரத்யஷமாகத் தோன்றா நின்றது –

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே உடனா வனுகரிக்கலுற்று திடமாக வாய்ந்து அவனாய்த்தான் பேசும்-46-
சர்வ நிர்வாஹகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை-பிரத்யஷ சாஷாத் காரம் பண்ணாமல் நொந்து –அவசன்னராய் —
ஸ்ரீ கோபிமார் ஸ்ரீ கிருஷ்ணனை அனுகரித்து தரித்த படியை ஆராய்ந்து தாமும் அனுகரித்து தரிப்பதாக
திரு உள்ளத்திலே உற்று -திருட அத்யாவச்ய யுக்தராய்-வாழ்ந்த வழுதி வள நாடன் -என்னும்படி-பாவ பந்தத்தோடு கிட்டி –
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-

நோற்ற நோன்பாதி யிலேன் உன் தனை விட்டாற்ற கில்லேன் பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்-47-
இத்தால்-மோஷ சாதனமாக-சாஸ்திர சித்தமான கர்மாதி உபாயங்களில் எனக்கு அந்வயம் இல்லை —
நோற்ற நோன்பிலேன் -என்கிற பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –
தாரகனுமாய்-போக்யனுமாய்-இருக்கிற உன்னை விட்டு-தரிக்க மாட்டு கிறிலேன்-
இவ் வாற்றாமை எனக்கு ஸ்வரூபம் இத்தனை —
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற தேவர் அடியிலே அருளின நிர்ஹேதுக கிருபையே –
மோஷ சாதனம் -என்னுமது எல்லாரும் அறியும்படி பறை அறைந்து சாற்றுகின்றேன் -என்கிறார் –

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை தாராமையாலே தளர்ந்து மிக -தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்–48-
ஏரார் கோலம் திகழக் கிடந்த ஸ்ரீ ஆராவமுதாழ்வார் -சில பரிமாற்றங்களை அபேஷிக்க-அப்போதே அது பெறாமையாலே –
முடியாத வபி நிவேசத்தோடே -தரியேன் இனி -என்றும் -உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்றும்–பேசினவை

திரு வல்ல வாழ் புகழ் போய் தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித் துன்புற்றுச் சொன்ன சொலவு-49-
அவ் ஊர் தன் அருகில் -தான் இளைத்து -வீழ்ந்து-உள்ளே புக்கு அனுபவிக்க பெறாமால்-ஊரின் புறச் சோலையிலே
பல ஹானியாலும்-அங்குத்தை போக்யதையாலும்-நகர சம்ப்ரமங்களாலும்-கால் நடை தாராமல் தளர்ந்து வீழ்ந்து –
அதுக்கு மேலே-தோழி மார் நிஷேத வசனங்களாலும் கலங்கி –
பகவத் அலாபத்தாலே மாறுபாடு உருவின துக்கத்தை யுடையராய் -அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள்-

சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர்–50-
உனக்கு அனுரூபமான கல்யாண குண அனுசந்தானத்தாலே த்ரவி பூதானாம் ஸ்வபாவ பிரகாரம் நிவ்ருத்தமாய் –
உன்னைக் கிட்டி-அனுபவிக்கும் படியாக ஸ்தைர்யத்தைச் செய்து அருள வேணும் –
தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று
அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார்-

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என் செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த காதலுடன் தூதுவிடும்–51-
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -என்றத்தை நினைக்கிறது
இரண்டாம் தூதுக்கு விஷயம் ஸ்ரீ விபவம் இறே
என் தசையைப் பஷ பாதம் உடையவர்களே தாழாமல் சொல்லும் என-அத்யார்த்தியை அனைவருக்கும் அறிவித்தவை
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாதரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்றுதன்னிலை போய்ப் பெண்ணிலையாய்த்-தான் தள்ளி –
அவனும்-உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன்–52-
மின்னிடை மடவார் உடன் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அங்குத்தையில் அந்ய பரதையாலே
ஆற்றாமைக்கு உதவ வராமல் ‘ மந்த கதியாய் வந்தான் என்று – அவன் தங்கள் இடத்தில் பண்ணும் அபி நிவேத்தை
அந்யதாகரித்து தங்கள் ஆற்றாமையாலே அவன் பதற்றத்தையும் அசத் கல்பம் ஆக்குகிற –
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் -என்றத்தை-கடாஷித்து அருளிச் செய்தபடி –
ஸ்ரீ குருகூர் சடகோபன் -என்கிற ஆகாரம் குலைந்து ஸ்ரீ கோபிமார் உடைய ஆகாரத்தை யுடையராய் அவனுக்கு
அவகாசம் அறும்படி ஊடும் படியையும்-கூத்த வப்பன் தன்னைக் குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை -என்னும்படி
கூடின படியையும் அருளிச் செய்கையாலே -உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன் -என்று
அருளிச் செய்த இதிலே கூடின முடியும் இவர்க்கு விவஷிதம்
மேலே-நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் -என்று இறே அருளிச் செய்யப் புகுகிறது –
அதுக்குச் சேர இங்கே கூட வேணும் இறே

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும்-53-
பும்ஸாம் சித்த திருஷ்டி அபஹாரியாய் -சாஷான் மன்மத மன்மதனான தன் சந்நிதியிலே
கிட்டோம் -என்றிருந்த தம்மை-ஸ்த்ரீத்வ அபிமானத்தைக் குலைத்து ஊடுகையைத் தவிர்த்து கூடப் பண்ணின படி -என்கை-
முன் நண்ணாதாராய் -கிட்டா தாராய் இருக்கிற நம்மை நல்ல வலத்தால் சேர்த்தோன் -என்று அந்வயம் ஆகவுமாம்
பூர்வ சத்ருக்களாய்-அவர்களை நின்று இலங்கு முடியனா -இத்யாதிப்படியே வென்றால் போலே நம்மை நல்ல வலத்தால் சேர்த்தது -என்றாகவுமாம்-
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலோம் -என்றும்
இப்படி இதுக்கு என்று சமைந்து இருந்து நிரவதிக ஸ்தோத்ரங்களால் ஸ்துதித்து அருளும் –
இப்படி சேராததைச் சேர்ப்பதே -என்று இவர் ஈடுபட இது ஓன்று கண்டோ நீர் ஆச்சர்யப் படுகிறீர்
லோகத்தில் பரஸ்பர விருத்தங்களாய் இருக்கிற விபூதியைச் சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படியைப் பாரீர் -என்று விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைக் காட்ட -விருத்த விபூதியன் என்று –

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் —54-
முந்துற குரவை முதலாகக் காட்டினது திருக் குரவையில் ஆரவாரத்தை அனுபவித்து தரிக்கைக்காக –
வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்த வ்ருத்தாந்தத்தை முந்துற முன்னம் காட்டாது ஒழிந்தது
பிறந்த வாற்றில் ஆழம் கால் பட்டு ஆறு மாசம் மோஹித்தால் போலே மோஹிப்பர் -என்று –
சர்வ காலத்திலும் ஸ்துதிக்கும் படியான-மனசைப் பெற்றேன் என்று ஹர்ஷ பாரவச்யத்தாலே கர்வித்துப் பேசும்

முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் -மன்னு முவப்பால் வந்த மால்-துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால்-
நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்–55-
முந்துற முன்னம்-பொய் நின்ற ஞானம் தொடங்கி–இவ்வளவும் அனுபவத்தில் அவஹாகித்த ஸ்ரீ ஆழ்வார் –
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும்–இணை அடிக்கே அன்பு சூட்டி-அன்பு பாலே போல் சீரில் பழுத்த படி –
இப்படி குண அனுபவத்தாலே தமக்கு–மாறும் நிகரும் இன்றி-நித்ய மத முதிதராய்-மால் ஏறி
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே–குற்றம் அற்று-ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே ஸ்வாபாவிக பக்தியாலே –
நாள் தோறும் தாம் அவ் விஷயத்தில் பிராவண்யத்தை உற்று இருக்கிற தம்முடைய ஸ்வபாவம் எல்லாம் அருளிச் செய்தார்

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால் சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல்–56-
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்து சத்தை பெற்று உஜ்ஜீவியாமல்-மிகவும் அவசன்னராய் —
தம் தசை தாம் பேச மாட்டாதே-திருத் தாயார் பேசும்படியாக தளர்ந்து
ஏறாளும் இறையோனில் அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்கள் அடையத் தாம் உத்யோகிக்க வேண்டினால் போல்
அன்றிக்கே-தன்னடையே அவை முற்கோலித்து- தம்மை கட்டடங்க விட்டகலும் படியை அருளிச் செய்தார் –

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான் கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் –57-
உண்ணும் சோறு-பருகும் நீர்-தின்னும் வெற்றிலை-எல்லாம் கண்ணன்-என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
அத்தைப் பின் சென்று அருளிச் செய்தபடி –
இவ் விபூதியிலே ஸ்ரீ திருக் கோளூரிலே நித்ய வாசம் பண்ணுகிற சௌந்தர்ய சீலாதிகளால்
ஆச்சர்ய பூதனான-வைத்திய மா நிதி பால் போம் ஸ்ரீ ஆழ்வார் –
இத்தால் வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து-அவனையும் வாழ்வித்து-தானும் வாழும்படி போனாள் என்றது ஆயிற்று –

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும்–58-
முதல் பாசுரத்தை முடியக் கடாஷித்து அருளிய படி -பஷ பாதமுடைய பஷி சமூஹங்களுக்கே தம்முடைய ரஷண அர்த்தமாக வுபகரித்து –
வண் சடகோபன் -ஆகையாலே-மோஷாதி புருஷார்த்தங்களை வழங்க வல்லராய் இருக்கை-
உபய விபூதியையும் உபஹார அர்த்தமாக உபகரித்து பிரிவால் உண்டான என்னுடைய பரிவை
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவியுங்கோள் -என்று-ஸ்ரீ திரு நாடு முதலா வது – மூன்றாம் தூதுக்கு விஷயம் பரத்வ த்வயம் -என்கையாலே
ஸ்ரீ திரு நாடும்-ஸ்ரீ நெஞ்சு நாடும்-விஷயம் -ஸ்ரீ பரத்வ-ஸ்ரீ அந்தர்யாமித்வ-விஷய தூது ப்ரேஷணமாய் இருக்கும் -இத் திருவாய் மொழி –

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத காதலுடன் கூப்பிட்ட–59-
அசேதனங்களோடு -சைதன்ய லேசம் யுடையாரோடு
பரம சேதனனோடு-வாசி அற கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்-நெஞ்சு அழியும்படியாக –
பாவைகளோடு – பஷிகளோடு – ரஷகனோடு வாசி அற-எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய் ஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் அந்தாமமான ஸ்ரீ பரமபதத்தில் இருப்புப் பொருந்தாத படியாகவும் -விண் மீது இருப்பு அரிதாம் படி –
அத்யபிநிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தி-

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன்–60-
சென்னி யோங்கு தண் திரு வேங்கடமுடையான் யுலகு தன்னை வாழ நின்ற நம்பி -என்று சொல்லுகிறபடியே
லோகமாக உஜ்ஜீவித்து வாழும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் நின்று அருளின ஸ்ரீ திரு மலையிலே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே –என்றதிலே நோக்கு-
திரு மா மகள் கேள்வா -என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டு-
ஸ்ரீ திரு வேங்கடத்தானானவன் பூவார் கழல்களான- நாண் மலர் அடித் தாமரையையே -என்று
இப்படி-அடியே தொடங்கி-அடியைத் தொடர்ந்த படி-தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக
ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார்-

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில் -எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான் -61-
இவ் வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே ஆந்த்ர சத்ருக்களாய் வர்த்திக்கிற
ஐந்து இந்த்ரியங்களோடே இருக்கப் பண்ணி -அசங்க்யாதமான ஐஸ்வர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-தமோபிபூதமானஇவ் விபூதியிலே
அஹம் அர்த்தமான ஆத்மாவை-அறிவு அழியப் பண்ணுமதான ஐந்து இந்த்ரியங்களும்
ஆத்மானுபந்தி என்னலாம் படி பொருந்தி இருக்கும்படி ஆக்கி துர்பலனான என்னை
அவற்றைக் கொண்டு விஷயங்களிலே தள்ளி பாதிக்கைக்கு கார்ய விசாரம் பண்ணா நின்றான்-அவன் மேலே பழி இட்ட படி

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர்–62-
திவா ராத்திரி விபாகம் அற-அரதி விஞ்சி மோஹத்தை பிராப்தையாக-தன் பெண் பிள்ளையின் இடத்தில் அத்தசையைக் கண்டு –
ஆர்த்தி ஹரதையிலே சிந்தித்துப் போருகிற அத்விதீயரான ஸ்ரீ பெரிய பெருமாளைப் பார்த்து –
இத்தசையில்-இவள்-இடையாட்டமாக -ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற ஸ்ரீ தேவர் ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது -த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்-அத்தலையில் நினைவே சாதனம் என்னும் அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே
திருத் தாயார் என்ற பேரை யுடையராய் தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் யுடைய-

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம் தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும்–63-
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திரு நாமங்களை பாட்டுத் தோறும் திருத் தாயார் சொல்லக் கேட்டு
கீழில் மோஹமானது விட்டுப் போன பின்பு -சென்று புகுவதாக ஒருப்பட- இவ் வதி பிரவ்ருதியை
தாய் மாறும் தோழி மாறும் தடஸ்தராய் உள்ளாறும் கண்டு இப்படி சாஹசத்தில் ஒருப்படுகை உக்தம் அன்று
என்று நிஷேதிக்க -திரு உள்ளம் தம்மை ஒழியவும்-முந்துற்ற நெஞ்சாய்- வீற்று இருந்த இவ்விஷயத்தில்
மாறுபாடு உருவ ஊன்றி நின்ற ஸ்வபாவத்தை நிஷேதிப்பாருக்கு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த–64-
ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் விஜய பரம்பரைகளான சர்வ சேஷ்டிதங்களையும் இவருக்கு விஷயமாம்படி காட்டி
ஏவம் விதமான இவற்றாலே ஹ்ருஷ்டராய் வாழும் என்று சொல்லி அவ்வாகாரங்களைக் காட்டிக் கொடு நிற்க –
பழையதாய் கழிந்த அந்த அபதானங்களை-பிரத்யஷமாக இன்று போல் அனுபவித்து –
தாம் அனுபவத்துக்கு-போக்குவீட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த–65-
ஸ்ரீ விபவ குண ஸ்வ பாவங்களை -அவை தான் ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாகையாலே-அவற்றின்
ஸ்வபாவத்தை உற்று உணர்ந்து அவற்றின் படியை மேல் எழ அன்றிக்கே அந்தரங்கமாக ஆராய்ந்து –
அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று-பூமியில் உண்டானவர்கள் உடைய
ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை – ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தி

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட-66-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின வேதப் பிரதிபாத்யமான குணங்களோடு கூடி
நன்றான அழகு மேன்மை யானவற்றை -மானஸ சாஷாத் காரத்தாலே கிட்டு அனுபவித்து பிரத்யஷ அனுபவம்
பண்ண வேணும் என்று இச்சித்து அந்த பிரேம அனுகூலமான உருகலோடே கூப்பிட்ட –

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த –67-
சபலைகளான-அபலைகள் யுடைய மனசை த்ரவிப்பிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்மயமான முகாம்புஜத்தில் நயன சௌந்தர்யம் -எங்கும் சூழ்ந்து-ஸ்ம்ருதி விஷயமாய்
தனித் தனியும் -ஒரு முகமாயும்-பாதகமாக இறே துக்கத்தை விளைப்பது –

மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த–68-
சரண்யனான யுனக்கு அஞ்ஞான அசக்திகள் ஆகிற தோஷம் இன்றிக்கே சர்வஞ்ஞதவாதி குணங்களும் உண்டாய் இருக்க
சரணாகதனான எனக்கு ஆகிஞ்சன்ய அனந்யகத்வம் ஆர்த்தியும் உண்டாகையாலே அதிகாரி மாந்த்யமும் இன்றிக்கே இருக்க
வைத்த இதில் பொருந்தாத என்னை-வைத்து நடத்திக் கொண்டு போருகிறதுக்கு ஹேது-
தன் விசித்திர ஜகதாகாரயதையைக் காட்ட -விபூதி விச்தாரத்தை அருளிச் செய்த —

என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும் என் தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்று கவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர்–69-
சம்சாரத்தில் பொருந்தாத என்னை -நீ – சம்சாரத்தில் பொருந்தாதாரை ஏற விடுகைக்கு சர்வ சக்தி உக்தனான நீ —
இருள் தரும் மா ஞாலமான-இவ் விபூதியிலே-பிரயோஜன நிரபேஷமாய் இருக்க-என்ன பிரயோஜனத்தைப் பற்ற வைத்தது -என்ன
ஸ்ரீ திருமாலான எனக்கு இனிதாகவும் ஸ்ரீ திருமால் அடியாரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனிதாகவும்
விலஷணமாய்- கவி யமுதம் -என்னலாம் படியான இனிய கவிகளைப் பாட வைத்தோம் என்ன –
இந்த யுபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லாமையை -அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய–70-
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவாய் மொழியை என்னைக் கொண்டு பாடுவித்த உபகாரகனை-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட ஸ்ரீ திருவாய் மொழி கேட்கைக்கு பங்கான இடம் -என்று
அத்ய ஆதாரத்தைப் பண்ணி வாழ்ந்து கொடு போருகிற ஸ்ரீ திரு வாறன் விளையில்
அன்றிக்கே-இந்திரையோடு அன்புற்று -என்று ஸ்ரீ பெரிய பிராட்டியார் இடத்தில் ஸ்நிக்தனாய் -என்றுமாம் –
இத்தால் -இன்பம் பயக்க -என்கிற முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்த படி –
ஏழையர் ஆவியில் துக்கம் எல்லாம் தீரக் கண்டு – தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார்-

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால் மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தானாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த–71-
கீழே-தன்மை தேவ பிரான் அறியும் -என்னும்படியான-தேவர்க்கும் தேவன் ஆனவன் ஸ்ரீ திவ்ய மஹிஷியோடு
நித்ய வாசம் பண்ணுகிற-ஸ்ரீ திரு வாறன் விளையிலே புக்குப் பாடி அடிமை செய்யப் பெறாமையாலே -என்னுதல் –
அன்றிக்கே-தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -மற்று அமரர் ஆட்செய்வார் -அப்பனே காணுமாறு அருளாய் –
என்று என்றே கலங்கி-என்று அவசன்னராய் -என்னுதல்-
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற ததீய பரதந்த்ரனாம் நிலையிலும்
சேத அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படியான நிலையிலும் அதி சங்கை பண்ண –
பூர்வ யுபகாரத்தை ஸ்மரிக்கும் படி -மலரடிப் போதுகள் எந்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன்பு அருளிய -என்று
உபகரித்ததை ஸ்ம்ருதி விஷயமாம் படி பிரகாசிப்பிக்க
அத்தை-தாள்களை எனக்கே தலைச் தலைச் சிறப்பத் தந்த பேருதவி என்று அனுசந்தித்து ப்ரீதராய் தெளிந்து-

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த–72-
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக ஆராய்ந்து விரும்பி வர்த்தித்துப் போரும் ஸ்ரீ சர்வேஸ்வரன் அறிய -என்னுதல்
இந்த விபூதியிலே-சிறிது அபேஷை யுண்டு என்று-நினைத்து இருக்கிறான் என்கிற சங்கையினால்
ஆத்மாவிலும்-அதுக்கு அசலான ஆத்மீயங்களிலும் நசை அற்ற ஸ்ரீ ஆழ்வார் அந்த ஸ்வபாவத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் –

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த–73-
நித்ய விபூதியிலே பணியா அமரரான நித்ய சூரிகள் நித்ய மங்களா சாசனம் பண்ண
அவர்கள் நடுவே வாழ்கிற ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சூழ்ந்து இருந்து ஏத்துவார் பலர் இருக்க
இச் சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணாதே-ஐஸ்வர்ய காமரும்-ஆத்மானுபவ காமருமாய் போருகையாலே
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வர் மற்று ஒருவரும் இல்லை -மங்களா சாசன ரூப கைங்கர்யம் கொண்டருள-
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -இங்கும்-அங்கும்-எங்கும்-நமக்கு பரிவர் உளர் எனப் பயம் தீர்ந்த-

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத் தானுகந்த–74-
வார்கடா வருவி -என்று தொடங்கி –கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் –என்னும் அளவும் சொன்ன
சௌர்ய வீர்யாதிகள் முதலான தன் சக்தி யோகத்தையும் -அசுரர் வன்கையர் வெம் கூற்றத்தை -என்னும் தன் மிடுக்கையையும் –
இப்படி அரணை யுதைத்தான ஊரில் இருப்பையும் அனுசந்தித்து-நிர்ப்பயராய்-அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் –

மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடாயாயது அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ் உற்ற–75-
சௌந்தர்ய-சீலாதிகளால்-ஆச்சர்யமான அவன்-விக்ரஹ சௌந்தர்யாதிகளை பிரத்யஷமாகக் காணப் பெறாமையாலே-
மிக்க விடாயை யுடையராய்-காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து பசை அற்று –
கீழில் விடாய் -எல்லாம் குளப்படி -என்னும்படி கடல் போலே அது அபி விருத்தமாய் –
பிறந்த விடாய் தீர வந்து கலவாமையாலே பாலரைப் போலே அழுது-அடைவு கெடக் கூப்பிடும் –

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்க–76-
ஆர்த்தி சமிக்கைக்கு மந்த கதியாய் வந்து அனுபவிக்க வேணும் என்று நினைத்து
அங்குற்றைக்கு அனுகூலர் ஆனவர்கள்-நித்ய வாசம் பண்ணும் ஸ்ரீ திருக் கடித் தானத்திலே
தம்மை விஷயீ கரிக்க ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து இருக்க- அவ்விருப்பைக் கண்ட ஸ்ரீ ஆழ்வார் –

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம் திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட–77-
ஸ்ரீ திருக் கடித் தானத்திலே இருந்த தான் இவர் இருந்த அளவும் மெல்ல வந்து -என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -என்று-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்ற ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்தைத் தான் கைக் கொண்டான் –
தனக்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆகையாலே நன்றாக இவர் விஷயத்திலே செய்து தன்னை முற்றூட்டாக அனுபவிக்கும் படி செய்து
நாம் ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய் இருப்புதோம் -இவர் நித்ய சம்சாரிகளுக்கு இவ்வருகாய் எண்ணி இருப்பார் என்ற
வாசி வையாமல்-ஒரு நீராகக் கலந்து -பெறாப் பேறு பெற்றானாய் இனியனாய் படியைக் கண்டு அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்–78-
கண்ணும் வாயும் துவர்ந்த-இவருடைய கண் நிறையும் வந்து சம்ஸ்லேஷித்த ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இருத்தும் வியந்தில் இருந்த சம்ஸ்லேஷம் -திருட ஸ்வபாவத்தை யுடைத்தாக வேணும் என்று எண்ணி
இவர் -சிறியேனுடைச் சிந்தையே -என்று அனுசந்தித்துப் போருகிற ஆத்மாவின் உடைய பெருமையானதைக் காட்டி அருள –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஆராய்ந்து பகவத் பிரகார தயா போக்யம் என்று அருளிச் செய்தார் –

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன் ஒரு மா கலவி யுரைப்பால் -திறமாக
அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர்–79-
நீல நிறத்தை யுடையவனாய்-ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில் அந்ய சேஷத்வம் இல்லாத
கன்யா அவஸ்தையை பஜித்த ஆழ்வார் -கரு மாணிக்க மலை -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி –
அத்விதீயமான விலஷணமான சம்ஸ்லேஷ லஷணங்களை தோழி பேச்சாலே கலவிக் குறிகளை அருளிச் செய்யப் புகுகையாலே –
நிச்சயமாக அந்யருக்கு சேஷம் ஆகல் ஆகாது – பிராப்த சேஷி யானவனுக்கே சேஷம் ஆகிற ஆத்ம ஸ்வரூபத்தின் நிஷ்டையை

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடுபடுமா நிலை யுடைய பத்தர் அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான்–80-
உத்துங்கத்வமான வடிவு அழகிலும்-தனி மா புகழே -என்கிற தீர்க்க சௌஹார்த்த குணத்திலும் ஈடுபட்டு இருக்கும் –
பக்தர்கள் திறத்தில் அடிமை யாம் அளவு அன்றிக்கே அவ்வடிமையில்-சீமா பூமிதாம்படி அனுசந்தித்தார் ஸ்ரீ ஆழ்வார் –
ஐஸ்வர்யம்-ஆத்ம பிராப்தி அளவாய் இருக்கும் –
ஆத்மா பிராப்தி-பகவத் பிராப்தி -அளவாய் இருக்கும் –
இந்த பகவத் பிராப்தி பாகவத பிராப்தி சாபேஷமாய் இருக்கும்-
இந்த புருஷார்த்ததுக்கு மேல் எல்லை இல்லை -ஆகை இறே முழுதும் உறுமோ -என்றது –

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால் அண்டினவர் என்றே யவரை விட்டு –
தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும்–81-
கையில் தனத்தை அழிய மாறிக் கொண்ட ஸ்திரீகள் கொண்ட -என்று அதில் ஔபாதிகதவம் தோற்றுகிறது-
தான் என்று கொண்ட பெண்டீரில் ப்ராதான்யம் தோற்றுகிறது –
கூடும் உற்றார் -என்ற பாடமான போது ஆகந்துகமாக வந்து கூடினவர்கள் -என்றாகிறது –
கர்ம ஔபாதிகமாக அடைந்தவர்கள் என்றே-ஔபாதிக பந்து வர்க்கங்களை விட்டு –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை தனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும் ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த –82-
அநாதி சித்தமான சம்பந்தத்தை யுடைய-சர்வ ஸ்மாத் பரனை –
அன்றிக்கே -கண்கள் சிவந்து -தொடங்கி -நடந்து வருகிற- ஸ்ரீ திரு மந்திர பிரதிபாத்யமான நவவித சம்பந்த யுக்தனான-
சர்வ ஸ்மாத் பரனை -என்றாகவுமாம்-
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே கண்டு-குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்றும்-வழி வருகின்ற அடியர் -என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர் -என்றும்-சொல்லும்படியான எனக்கு-எல்லா உறவின் காரியமும் வேணும் -என்கிறார் ஸ்ரீ ஆழ்வார்

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன் நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த–83-
ஓரா -ஓர்ந்து-அது வேணும் இது வேணும் என்று ஆராய்ந்து – நீர் அர்த்தித அவை உள்ளதெல்லாம் என்னுதல்
அன்றிக்கே-நீர் அர்த்திதவற்றை எல்லாம்-இன்னது உபகரிக்க வேணும் என்று நாம் நிரூபித்து -என்னுதல்
இப்படி பந்து க்ருத்யமாய் உள்ளவற்றை எல்லாம்-நாமே அர்த்திகளாய் செய்கிறோம் -சர்வ வித பந்துத்வமும் நடத்தும் படி
நான் ஸ்ரீ நாராயண சப்த வாச்யன் அன்றோ -என்று-அத்தாலே பெரிதான தன் சர்வ வித பந்துத்வத்தைக் காட்ட
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த–84-
அஸி தேஷணையான லஷ்மி-வஷஸ் ஸ்தலத்திலே நித்ய வாசம் பண்ணும்படியாக அத்தாலே ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-
அச் சேர்த்தியை காத்தூட்ட வல்ல ஸ்ரீ ஆழ்வார்கள் உடன் அனுபவிக்க எண்ணி –
இத்தால் – மையார் கரும் கண்ணி -என்று தொடங்கி-உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -என்று
முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி -யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு அப்படியே கண்டு ஹ்ருஷ்டரான -வெளி இட்டார்

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் –
பின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த–85-
இத்தசையில் எனக்குத் தாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சாஷாத் கரித்தது மானஸ ஞான விஷயம் என்று –
சஷூர் விஷயமாக அவனை தர்சிக்க எண்ணி அது லபியாமையாலே பும்ஸ்த்வம் குலைந்து ஸ்த்ரீத்வ பத்தியைப் பஜித்து-
இப்படி-ஸ்த்ரீத்வ பத்தியை பஜித்த-அநந்தரம்-அவனை பிரணய கதகத ஸ்வரத்தாலும் ரூபவத்தையாலும்-ஸ்மரிப்பிக்கும் அவற்றாலே-
விகூ ஜக்பிர்வி ஹங்க மை -என்னும்படியான பஷி சமூஹங்களாலும்-மேக சமூஹங்களாலும்-மிகவும் பாரவச்யத்தை அடைந்த

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த–86-
உன்னுடைய தாழ்ந்த செயல்களை அனுசந்தித்து என்னுடைய மனசானது த்ரவ்ய த்ரவ்யம் போல் உருகா நின்றது –
அதுக்கு மேலே-அபி நிவேசமும் மிக்குவாரா நின்றது என்று அருளிச் செய்து –கீழே-ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு
அந்த அனுவ்ருதமான வெறுப்போடு-அவனுடைய-இருத்தும் வியந்திலே-அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை-திரு உள்ளத்திலே பொருந்த அருளிச் செய்த-

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும்–87-
என்னுடைய பிரேமத்துக்கு ஹேது -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப அனுபந்தியாய் அனுரூபமான விக்ரஹ சௌந்தர்யம்-என்று –
அத்தசையில் அவன் சௌந்தர்யமே பற்றாசாக -ஆலம்பனமாக – அவ்விடத்தில் அவன் விஷயமாக
ஸ்ரீ திரு மூழிக் களத்து உறையும் அவன் விஷயமாக சர்வ திக்குகளிலும் உண்டான பஷி சமூஹத்தை
தம்முடைய பிராண ரஷக அர்த்தமாக தூத பரேஷணம் பண்ணும் ஸ்ரீ ஆழ்வார் -வடிவு அழகு பற்றாசாக பல பஷிகளைத் தூது விட்டார்
நம் பிழையும்-சிறந்த செல்வமும்-படைத்த பரப்பும்-தமரோட்டை வாசமும்
மறப்ப்பித்த
ஷமா-தீஷா-ஸாரஸ்ய சௌந்தர்யங்களை-யுணர்த்தும்
வ்யூஹ-விபவ-பரத்வத்வய-அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் -என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர் மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான்–88-
நம்முடைய துக்கத்தை போக்கி அருளும் என்று -வினை காரணம் -இடர் கார்யம் -ஸ்ரீ திரு மூழிக் களத்து யுறைவார்
விஷயமாக அவ் விடத்திலே விட்ட தூதர் -திரும்பி மீண்டு வந்து மறுமாற்றம் சொல்ல பற்றாத திரு உள்ளத்தாலே –
மிகவும் த்வரித்து -அழகிய ஸ்ரீ திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஸ்ரீ ஆழ்வார் –

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன் சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த–89-
மல்லடிமை -சம்ருத்தமான அடிமை –பரிபூரணமான கைங்கர்யம் -அது செய்யும் காலம் எப்போதோ என்று ஸ்ரீ சர்வேஸ்வரனை
நாளேல் அறியேன் -எனக்கு உள்ளன -என்று கேட்க -அவன்-மாலை நண்ணியிலே-மரணமானால் -என்று
நாள் அறுதி இட்டு அருளிச் செய்யும் அத்தனையும் பற்றாத-ஸ்வா பாவிகமான பக்தியாலே —
தமக்கு நடந்து செல்லுகிற-தரியாமையை – அலமாப்பை -ஆற்றாமையை அருளிச் செய்து-முன்னாடி தோற்றாமல்
அலமந்து நிலம் துழாவின ஸ்ரீ ஆழ்வார்

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில் சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து –
மேல் அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும்-90-
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் ஆத்மாவுடன் பொருந்தி இருக்கிற
சரீரத்தின் உடைய வியோக அனந்தரத்திலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே மிகவும் கிட்டிச் செய்வன் -என்னுதல்
அன்றிக்கே-உம்மைக் கிட்டி-மிகவும் செய்வன்-என்னுதல் – அங்கனும் அன்றிக்கே-அந்தக் கார்யத்திலே-மிகவும் உற்று -என்னுதல் —
ஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையான் -என்று அருளிச் செய்ய – தான் உகந்து –அவனைக் கொண்டு நாள் அவதி இட்டுக் கொண்ட
தாம்-ஹ்ருஷ்டராய் -நாள் அவதி இட்டுக் கொடுத்ததுக்கு மேலாக ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே வந்து அத்யா சன்னனாய் இருக்கிறவனை –
மேலான அவனை-ஐஸ்வர் யாதிகளும் – சீலாதி குணங்களும்-புற வெள்ளம் இடும்படியான ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நிலையில் –
ஆஸ்ரயிங்கோள் என்று-அனைவரையும் குறித்து அருளிச் செய்யும் ஜ்ஞானப் ப்ரேமாதி குணங்களை யுடைய–ஸ்ரீ ஆழ்வார்-

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் காள மேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும்–91-
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று
தன் திருவடிகளை உபாயமாக அடைந்தவர்களுக்கு தானே மார்க்க பந்துவாம் -சாம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படி-
சௌந்த்ர்ய அம்ருத வர்ஷியான ஸ்ரீ காளமேகத்தை வழிக்கு ரஷகமான கதி ஆக்கி -பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்று எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய ஸ்ரீ ஆழ்வார்

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல் தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான்–92-
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே – துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே படமுடை அரவில் பள்ளி பயின்ற
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தைதான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த–93-
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்- திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய்
இருக்கிற தேசத்தை -நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே -தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று பஹூ முகமாக சங்கிக்க-
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்—

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல் கண்டுரைத்த–94–
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான் சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –
இப்படி அருளிச் செய்த பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்-

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான்–95-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே-பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை -த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-
சங்க்ரஹமாக அருளிச் செய்து -பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த–96-
கரண களேபரைர்க் கடயிதும் தயமா நாம நா -என்றும்-அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்-அடியிலே எடுத்த படியால் –
அன்றிக்கே மயர்வற மதிநலம் அருளினான் -என்று-கேவல நிர்ஹேதுக கிருபையாலே
அஜஞாநாவஹமான சம்சாரத்தில் நின்றும் அடியிலே எடுத்த சர்வேஸ்வரன்-என்றாதல்
அதுவும் அன்றிக்கே-மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் -என்னும்படி
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகன்று-முடியாத படி எடுத்த-என்றாகவுமாம் —
அந்தாமத்து அன்பு செய்யும் அன்பாலே-இருள் தரும் மா ஞாலத்தில் ‘ஜன்மம் ஆகையாலே-இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து
ஜ்ஞானப் பிரசுரமான-தம் தேஹத்தை-வாஞ்சித்து-ஸ்ரீ திருவாய்ப் பாடியிலே வெண்ணெயை-ஆதரித்தால் போலே
ஜ்ஞான பரிமளம் விஞ்சின-சரம சரீரம் ஆகையாலே இவர் திரு மேனியை அவன் ஆதரிக்கப் புக்கான்-
பெரிய வானிலே இவர் அஜஞாநாவஹம்-என்று அநாதரிக்கிற-இச் சரீரத்துடனே கொண்டு போக
இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும் ஸ்ரீ ஆழ்வார்

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில் வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட–97-
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
பிறவி அஞ்சிறையிலே-ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –
இதன் தோஷ தர்சன பூர்வகமாக-அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டுஅரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்–98-
ஸ்ரீ யபதியானவன் தம் விஷயத்தில்-அத்யாதாரம் பண்ணுகிற படியைக் கண்டு -அன்று-அநாதி காலம்-துரத்யயமான பிரக்ருதியிலே
இட்டு வைத்து அகற்றி விடுவான் என் -இன்று நிர்ஹேதுகமாக-நிரவதிக வ்யாமோஹத்தை
சர்வஞ்ஞனாய் சர்வசக்தனாய் நிரஸ்த சமஸ்த ஹேயனான நீஅஞ்ஞனாய் அசக்தனாய் ஹேய சம்சர்க்க அர்ஹனாய் இருக்கிற
என் விஷயத்தில் இப்படிச் செய்வான் என் – இப்படி அநாதி அநாதர ஹேது சொல் என்று மடியைப் பிடித்து கேட்க
அவனும் சில ஹேது பரம்பரைகளை இவர் உத்தரத்துக்கு பிரத்யுத்தரமாக சொல்லிக் கொடு போர
இவர் தம் நா வீருடைமையாலே அவனை நிருத்தனாம்படி பண்ண -இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல்
தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்-இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் –

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்–99-
கீழ் இவரைச் சூழ்ந்து கொண்டு நிவ்ருத்தனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன் ஸ்ரீ பரம ஆகாசத்திலே தேஜக்ரச்சாச்வதே மதே -என்று
பூர்வ மார்க்கமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும் ஆதிவாஹிக சத்கார க்ரமத்தையும்மேல் ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய் சத்கரிக்கும் க்ரமத்தையும்
த்வாராத்ய ஷரர்சத்கரிக்கும் க்ரமத்தையும் திவ்ய அப்சரஸ் சத்கார க்ரமத்தையும் ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஆதரிக்கும் படியையும்
திவ்ய சூரி பரிஷத்தில் இருந்து ஆனந்த நிர்பரராய் அனுபவிக்கும் படியையும் காட்ட அதிலே ஆழம் கால் பட்டு-
அவன் காட்டின எல்லாவற்றையும் கட்டடங்க அடைவே அனுபவித்து-க்ருதார்த்தராய் -ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே
ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்-
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் – எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி தனியாகி நின்று தளர்ந்து -நனியாம் பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே-இவரும் நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய் அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-
பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய் அத்தை அப்போதே பெறாமல் மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்து-தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-
ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு வீடு திருத்தி -என்றும்-விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்-த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-
அன்றிக்கே பர பக்தி பர ஞான பரம பக்தி உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –
முதித பரிஷச்வஜே -என்னும்படி-என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தாத்பர்ய ரத்னாவளி -இரண்டாம் பத்து –ஸ்ரீ வேதாந்த தேசிகன்-

October 24, 2018

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

——————————

நித்ரா விச்சேதகத்வாத்/ நித்ராதி சேதகத்வாத்-2-1-1-
அரதி ஜன நதா -2-1-2-
அஜஸ்ரா சம் ஷோபாகத்வாத்–2-1-3-
அன்வேஷ்டும் பிரேரகத்வாத்-2-1-4
விலய விதாரணாத்–2-1-5-
கார்ஷிய தைனயாதி க்ருதவாத –2-1-6-
சித்த ஷேபாத்—2-1-7-
வி சம்ஞானி கரணாத்-2-1-8-
உப சம் ஷோபணாத்–2-1-9-
அவர்ஜனாப்யம்-2-1-10-
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சவ்ரே க்ஷண விரஹ தச துஸ் சஹத்வம் ஜகத–2-1-

நித்ரா விச்சேதகத்வாத்/ நித்ராதி சேதகத்வாத்–ஆயும் அமர் உலகும் நீயும் துஞ்சிலும் நீ துஞ்சாயால் / நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே

அரதி ஜனதா –சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்-ஒருக்காலும் தரியாதபடி ஸைதிலியத்தை உண்டாக்கி

அஜஸ்ரா சம் ஷோபாகத்வாத்–நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்கு தியால் –கடல் கம்பீரம் இழந்து –

அன்வேஷ்டும் பிரேரகத்வாத்–சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ரிஷ்டே மஹதோ மஹீயான் -கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
காணும் நீர் மலை ஆகாசம் எல்லாம் – ஷீராப்தி திருவேங்கடம் ஸ்ரீ வைகுண்டம் -என்று நினைத்தே துழாவுமே
விலய விதாரணாத்–தோழியரும் யாமும் போலே நீராய் நெகிழ்கின்ற வானமே

கார்ஷிய தைனயாதி க்ருதவாத –நாண் மதியே –மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்

சித்த ஷேபாத்—கணை இருளே -நீ நடுவே வேற்றோர் வகையிலே கொடிதாய் எனை யூழி மாற்றாண்மை நிற்றியோ –
மனதைக் கொண்டு போது போக்க ஒண்ணாத படி அபஹரிக்கையும் –

வி சம்ஞானி கரணாத்–மா நீர் கழியே -மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயேல்-ஒன்றும் தெரியாதபடி மதி மயக்கத்தை யுண்டாக்குகையாலும்

உப சம் ஷோபணாத்–நந்தா விளக்கமே காதல் மொய் மெல்லாவி யுள் யுலர்த்த

அவர்ஜனாப்யம்-அவர்ஜனம் -மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா -இனி எம்மை சோரேலே –
மறந்து பிழைக்க ஒண்ணாத படி விரோதி நிரசனாதி வசீகரண சேஷ்டிதங்களை யுடையவன் ஆகையாலும்

த்ருஷ்டாஸ் வாதஸ்ய சவ்ரே க்ஷண விரஹ தச துஸ் சஹத்வம் ஜகத-

——————

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் –2-2-1-
பவ துரித ஹரம்–2-2-2-
வாமனத்வே மஹாந்தம் -2-2-3-
நாபி பத்மோத்த விஸ்வம் –2-2-4-
தத் அநு குணா த்ரிஷம் –2-2-5-
கல்ப தல்பி க்ரிதாபிம் –2- 2–6-
சுப்தம் ந்யகுரோத பத்ரே–2-2-7-
ஜகத் -அவனை -த்யாம்–2-2-8-
ரக்ஷணாய அவதிர்ணாம்–2-2-9-
ருத்ராதி ஸ்துத்ய அயம் –2-2-10-
வ்யவ்ருணித லலித உத்துங்க பாவேந நாதம் –2-2-

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் –நம் கண்ணன் அல்லது இல்லையோர் கண்ணே -கண் -நிர்வாஹகன்

பவ துரித ஹரம்-மா பாவம் விட அரனுக்கு பிச்சை பெய்த கோபால கோளரி

வாமனத்வே மஹாந்தம் -மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட மால் தமிழ் மிக்குமோர் தேவும் உளதே-பரத்வம் -ஸுலப்யம் -வியாமோஹத்வம் –

நாபி பத்மோத்த விஸ்வம் -பத்ம யுத்த –
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவன் எம்பெருமான் -சத்வாரமாக சகலத்தையும் படைத்திட்டவன் -திவி கிரீடா- லீலா காரியமே
யதோ வா இமானி பூதாநி ஜாயந்தே – யேந ஜாதானி ஜீவந்தி –யத் பிரயந்த்ய அபிசம் விஷாந்தி — தத் விஞ்ஞானாஸ் அஸ்வ -தத் ப்ரஹமேதி

தத் அநு குணா த்ரிஷம் –தாக்கும் கோலத் தாமரை கண்ணன் எம்மான்
சத் ஏவ சோம்யம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் தத் ஐக்ஷித பஹுஸ்யாம் ப்ரஜாயேத —
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பவனா
ஏஷா அந்தராதித்ய ஹிரண்மயே புருஷோ த்ரிஷ்யதே தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக ஏவம் அஷிணி–
நிபேஷக்ணா -347-/ அரவிந்தாஷா -349-சுபேக்க்ஷணா -395-

கல்ப தல்பி க்ரிதாபிம் -அவர் எம் ஆழி யம் பள்ளியாரே / அகடிட கடின சாமர்த்தியம் -யாவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவரின்றி
தன் உள்ளே ஒடுங்க நின்ற உண்டும் உமிழ்ந்த -பவர் கொள் ஞான சுடர் வெள்ள மூர்த்தி
அசம்பாதகமாக தன்னுள்ளே வைக்கப்பட்ட சர்வ ஜகத்தை யுடையவனாய் – ஸ்வா பாவிக சர்வ ஞானத்தை யுடையவனாய்
ஷீரார்ணவ நிகேதனாய் வண் துவரப் பெருமானான சர்வேஸ்வரன் என்கிறார் –

சுப்தம் ந்யகுரோத பத்ரே—பள்ளி ஆலிலை யேல் உலகும் கொள்ளும் வள்ளல் /
அகடிட கடின சாமர்த்தியம்- உள்ளுள் ஆர் அறிவார் அவன் தன் கள்ள மாய மனக் கருத்தே –
சமுத்திர இவ காம்பீர தைர்யேன ஹிமவான் இவ —
ஸர்வேச்வரத்வ சின்ன பூத திவ்ய சேஷ்டிதங்களுக்கு ஒரு முடிவு உண்டோ என்கிறார் –
ஸர்வேச்வரத்வமான வட தள சயன ரூப சேஷ்டித்ததையை சொல்லிக் கொண்டு -மனக் கருத்தை யார் ஒருவர் என்று முடிக்கையாலே
மனக் கருத்து என்கிற சப்தம் தாதிஷ சேஷ்டித்த பரமாகை உசிதம் என்று கருத்து –
அத்யந்த ஆகாதமான அபரிச்சேதயமான ஒருவருக்கும் தெரியாதே இருந்த -தெரிந்ததும் ஆச்சர்யமாய் இருந்த
மனசாலே சங்கல்ப்பிக்கப் பட்ட சேஷ்டிதங்களை ஒருவரும் அறிய மாட்டார்

ஜகத் -அவனை -த்யாம்–மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும் இயல்வினரே -காப்பதில் எப்பொழுதும் சிந்தை செய்பவன் –

ரக்ஷணாய அவதிர்ணாம்-காக்கும் இயலளவினன் கண்ண பெருமான் –
பரித்ராணாயா சாதூனாம் -விநாசாய ச துஷ்க்ரியதாம் -சேர்க்கை செய்து ஆக்கினான் -சம்ஹாரம் செய்து ஸ்ருஷ்ட்டி
கீழே காப்பதையும் சொல்லி –
இவ்வளவால் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் செய்யும் பெருமான் ஒருவனே என்றும் இதனாலும் ஸர்வேஸ்வரத்வம் ஆனது
எல்லா அவதாரங்களிலும் சிறிதும் குன்றாத படியே உள்ளது என்றும்
கண்ணன் முதலான அவதாரங்கள் செய்வதும் திருமாலே என்றும் -தெளிவாக அருளப் பெற்றது

ருத்ராதி ஸ்துத்ய அயம் –வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே

வ்யவ்ருணித லலித உத்துங்க பாவேந நாதம் –ஸர்வேச்வரத்வம் -பரத்வம் –

———————–

சித்ர ஆஸ்வாத அனுபூதிம் –2-3-1-
பிரியம் உபக்ருத்ரிபி –2-3-2–
தாஸ்ய சாரஸ்ய ஹேதும் –2-3-3-
ஸ்வ ஆத்ம ந்யாஸ யர்ஹ க்ருத்யம் –2-3-4-
பஜத் அம்ருத ரசம் –2-3-5-
பக்த சித்தைக போக்யம் –2-3-6-
சர்வாக்ஷ ப்ரிணாமர்ஹம்–2-3-7-
ச படி பஹு பல சிநேகம்–2-3-8-
ஆஸ்வாத்ய ஷீலம்–2-3-9-
சபைபைஹ் சாத்யைஹ் ஸமேதம்–2-3-10-
நிர்விஷத் அநக அசேஷ நிர்வேஷாம் இஷாம் –2-3-

சித்ர ஆஸ்வாத அனுபூதிம் –பல பல விசித்திரமான ருசிகளின் அனுபவம் -தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்

பிரியம் உபக்ருத்ரிபி –பெற்ற தாயாய் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா –
சமமில்லா சர்வ சத்ரிஷ்ட ரஸத்தை அனுபவித்தவர் இப்பாட்டில் சமமில்லா சர்வ பிரிய ஜன சம்பந்த ரசத்தை அனுபவிக்கிறார்
அனைவருக்கும் அந்தர்யாமி அன்றோ

தாஸ்ய சாரஸ்ய ஹேதும் -அறியாக் காலத்துள்ளே-அறியா மா மாயத்து அடியேனை – அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாய் –
தத்த தாஸ்ய இச்சாம் அதவ் – -மகாபலியை வஞ்சித்த படியே அடியேனையும் வஞ்சித்து -இசைவித்து நின் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

ஸ்வ ஆத்ம ந்யாஸ யர்ஹ க்ருத்யம் -எனது ஆவி தந்து ஒழிந்தாய்–சேஷத்வ ஞானம் இல்லாமல் இருந்தாலே சத்தையே இருக்காதே —
அறிவித்து சத்தையையே உண்டாக்கினாயே –சேஷ சேஷி பாவம் -அறிவித்து நித்ய கைங்கர்யம் அபேக்ஷிக்கும் படி பண்ணி அருளினாய்
எனது ஆவி தந்து ஒழிந்தேன் -பர ந்யாஸம் / பெரு நல் உதவிக் கைம்மாறு –
ஆத்ம சமர்ப்பணம் செய்து ஆத்ம என்னுடையது அல்ல -அவனுடைய வஸ்துவை -அவன் கொடுத்திட்ட புத்தியால் –அவனே கொடுக்கும் படி செய்து –
அவனே ஸ்வீ கரித்துக் கொண்டான் என்று நினைக்க வேண்டும் -இது தான் செய்ய அடுப்பது
பாண்டே உனக்கு சேஷமாய் இருக்கிற ஆத்மாவை நீ கொண்டு அருளினாய் அத்தனை

பஜத் அம்ருத ரசம் -கணிவார் வீட்டு இன்பமே -என் கடல் படா அமுதே -சம்சார ஆர்ணவத்தில் இருந்து எடுத்து அளித்த தனியேன் வாழ் முதலே –
தொல்லை இன்பத்து இறுதி காண வைத்தானே –

பக்த சித்தைக போக்யம் -ஏக போக்யம் -தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாத அரு உயிரை அடியேன் அடைந்தேன் -முதல் முன்னமே –
பக்தர்கள் சித்தத்தில் ஒரே போகமாய்-வேறு ஒன்றும் -வேறு சமயத்தில் -இதற்கு முன் அனுபவித்தது -தோன்றாத படி அனுபவிக்கப் படுகிறவன்
ப்ராசீன துக்கம் அபி மே சுக அன்வய த்வத் பாதாரவிந்த பரிச்சார ரஸ ப்ரபாவகம் –
திண்மையான மதி -சோர்ந்தே போக்கால் கொடாச் சுடரை அடைந்தேன் / அரக்கியை மூக்கு அரிந்தது போலே சம்சார நிவ்ருத்தி -அருளினாய்

சர்வாக்ஷ ப்ரிணாமர்ஹம்–அஷ-இந்திரியங்கள் –பரம போக்யம்-சர்வ கரணங்களுக்கும் நிரவதிக போக்ய பூதன்
பவித்ரனே -கன்னலே -அமுதே -கார் முகிலே -பன்னலார் பயிலும் பரன் -யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே –என் கண்ணா –

ச படி பஹு பல சிநேகம் –குறிக் கொள் ஞானங்களால் –கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாலில் எய்தினன் யான் –
ச படி -உடனே என்றவாறு / பக்தி யோகத்தால் பல்லாயிர பிறப்பில் செய்த தபப் பயனை பிரபத்தி செய்விப்பித்து பிறவித துயர் கடிந்தானே

ஆஸ்வாத்ய ஷீலம்–செடியார் நோய்கள் கெட -பவித்ரன் அவனே -/
ஸுலப்யம் -ஸுசீல்யம் -வாத்சல்யம் -காருண்யம் -படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேன் –
குணைர் தாஸ்யம் உபாகத–

சபைபைஹ் சாத்யைஹ் ஸமேதம் — சபை -கூட்டம் / ஸாத்ய -நித்ய ஸூ ரிகள் –/ ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ –

———————————

ப்ரகலார்த்தே நரஸிம்ஹம்–2-4-1-
ஷபித விபத் உஷா வல்லபம் –2-4-2-
ஷிப்த லங்காம் –2-4-3-
ஷ்வேத ப்ரத்யர்த்தி கேடம்–2-4-4-
ஸ்ரம ஹர துளஸீ மாலினம் –2-4-5-
தைர்ய ஹேதும் –2-4-6-
த்ராணே தத்த வதனம் –2-4-7-
ஸ்வ ரிபு ஹதி க்ருதாஷ் வசனம் -2-4-8-
தீப்த ஹேதும்-2-4-9-
சத் ப்ரேஷ ரஷிதாரம்–2-4-10-

வியஸன நிரசன வியக்த க்ர்த்திம் ஜகத-வாட்டமில் புகழ் வாமனன் -2-4-

ப்ரகலார்த்தே நரஸிம்ஹம்–நாடி நாடி நரசிங்கா – என்று -வியக்த க்ர்த்திம்–
ஆடி ஆடி பாடிப் பாடி -அகம் கரைந்து -கண்ணீர் மல்கி –வாடி வாடும் –

ஷபித விபத் உஷா வல்லபம் -வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்—
வாணன் அசுரனுடைய மகளான உஷைக்கு வல்லபனான அநிருத்த ஆழ்வானுடைய ஆபத்தைப் போக்கினவன் –
அனுகூலர்களுக்கு சுலபாராக பிரசித்தமான நீர் -உம்மை காண நீர் இரக்கம் இலீரே –

ஷிப்த லங்காம்-அரக்கன் இலங்கை செற்றீர் / ராவணனை மட்டும் இல்லையே -ரக்ஷணத்தின் பாரிப்பு –பொல்லா அரக்கர்களை பூண்டோடு நிரசித்தாயே

ஷ்வேத ப்ரத்யர்த்தி கேடம்—ஷ்வேதம் -விஷம் –வலம் கொள் புள்ளுயர்த்தாய்
நாகாஸ்திரம் -இந்திரஜித் விட -பெரிய திருவடி போக்கிய விருத்தாந்தம் –
ஸ்ரீ கஜேந்திர மோக்ஷமும் / நரகாசுர வாதம் -இங்கு எல்லாம் கருட வாஹனத்துடனே வந்து அருளியதும் உண்டே
கருட த்வஜ அனு ஸ்மரணாத் விஷ வீர்யம் ப்ரஷாம்யதி
வெஞ்சிறைப் புள் உயர்த்தார்க்கு –வலம் கொள் புள் உயர்த்தது பிரதிபந்தக நிவ்ருத்திக்காகவே

ஸ்ரம ஹர துளஸீ மாலினம் –வந்து திவளும் தண்ணம் துழாய் கொடீர்
தைர்ய ஹேதும் –எனது அக உயிர்க்கு அமுதே -என்றும் / தகவுடையவன் என்றும் மிக விரும்பும் பிரான் என்றும்
அனுசந்தித்து உள்ளம் உக உருகி நின்று உள்ளுளே

த்ராணே தத்த வதனம் -வெள்ள நீராய் கிடந்தாய் என்னும் -/ வள்ளல் -தன்னையே தரும் –

ஸ்வ ரிபு ஹதி க்ருத ஆஸ்வாஸனம்–பிரதிபங்தக ங்களை சவாசனமாக போக்கி அனுகூலர்களை ஆஸ்வாஸம் செய்து அருளுபவர்
தன்னைக் கொல்ல நினைத்த கம்சனை கொன்று ஒழித்து இப்படியே ஆஸ்ரித விரோதிகளை போக்க வல்லவன் என்று அடியார்க்கு ஆஸ்வாச ஜனகம் ஆனவன் –
மிடுக்கனான கம்சனை அழியச் செய்து தன் நிமித்தமான பயத்தை தீர்த்து ஆச்வாஸனம் பண்ணி அருளினான்

தீப்த ஹேதும்–சுடர் வட்ட வாய் நிதி நேமியீர் -தீப்த ஹேதி ராஜன் –
எப்போதும் கையை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
ப்ரணத ரஷாயாம் விளம்பம் அஸஹன்னிவ சதா பஞ்சாயுதிம் ப்ஹருத் ச ந ஸ்ரீ ரெங்க நாயகா —

சத் ப்ரேஷ ரஷிதாரம்-பிரதிபந்தங்களையும் நீரே போக்கிக் கொண்டு –இந்தேனே வந்து ரஷித்து அருள வேண்டும் –
சாஸ்த்ராதி மூலமாய்ப் பெற்ற வாழ்வு -சத்துக்களது —

————————————–

ஸ்வ ப்ராப்ய சித்த காந்திம்
சுக தித தயிதம்
விஸ்ப்ருத துங்க மூர்த்திம்
ப்ரதி உன்மேஷ அதி போக்யம் –
நவ குண சரசம்
நைக பூஷாதி த்ரிஷ்யம்
ப்ரக்யாத ப்ரீதி அயம்
துரபி லப ரசம்
சத் குண ஆமோத ஹ்ருதயம்
விஸ்வ வ்யாவ்ருத்தி சித்தம்
வ்ரஜ யுவதி கணாக்யாத நித்ய அனவ புங்க்த —

ஸ்வ ப்ராப்ய சித்த காந்திம்–அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான்
விடாயர் மடுவிலே சேர்வது போலே சேர்ந்தான் –புணர்ச்சி மகிழ்தல் -அவனது நீராட்டம் தானே அடியவர்கள் உடன் ஸம்ஸ்லேஷிப்பது –

சுக தித தயிதம்–ஒரு இடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே–பிராட்டிக்கு மார்பகம் -பிரமனுக்கு நாபி கமலம் ஏக தேசம் மட்டும் கொடுத்து -முற்றூட்டாக என்னுள் கலந்தானே

விஸ்ப்ருத துங்க மூர்த்திம்–என்னுள் கலந்தவன் -திருநாமம் கேசவ நாராயணன் போலே –
சம்சாரிகள் அவனை இழந்து தவிப்பது போலே என்னை இழந்து விடாய்த்த இலவு தீர கலந்த பின்பு மின்னும் சுடர் மலை ஆனான்

ப்ரதி உன்மேஷ அதி போக்யம் -எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதுக்கு அப்பொழுது என் ஆராவமுதே –
உன்மேஷம் க்ஷணம் என்றும் பிரதி க்ஷணம் தோறும் ஆராவமுதம் என்றவாறு

நவ குண சரசம் –காரார் கரு முகில் போலே கலந்த என் அம்மான் -செம்பவள வாய்க்கு நேராகாதே –
கண் பாதம் கை இவற்றுக்கு கமலம் நேராகாதே –

நைக பூஷாதி த்ரிஷ்யம் -பரி பூர்ணன் –
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் -அரையில் தங்கிய பொன் வடமும்
தாள நன் மாதுளையின் பூவோடு பொன் மணியும் மோதிரமும் கிறியும் மங்கள ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும்
வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக எங்கள் குடிக்கு அரசே –பெரியாழ்வார் -1–6–10-
கிரீட மகுட சூடாவதாம்ச மகர குண்டல க்ரைவேயக ஹாரா கேயூர கடக ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப முக்தாதாம
உதர பந்தன பீதாம்பர காஞ்சீகுண நூபுராதி அபரிமித திவ்ய பூஷண –

ப்ரக்யாத ப்ரீதி அயம் -பள்ளி அமர்ந்ததுவும் -ஏறு ஏழு செற்றதுவும் –மராமரம் ஏழு எய்ததுவும் -தண் துழாய் பொன் முடியும் –
அனைத்து லீலைகளும் அவனது ப்ரீதி காரிதமே

துரபி லப ரசம் -சொல் முடிவு காணேன் -என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே /
ந வித்மோ ந விஜானிமோ யதைத் தனுஷி ஷியாத் -கேனோ உபநிஷத் /
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா ஸஹ -தைத்ரியம்
இப்படி தன் முடிவு ஓன்று இல்லாதவன் அன்றோ என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -இந்த சௌலப்யம் சொல்லும் அளவின்றி

சத் குண ஆமோத ஹ்ருதயம் -என்னாவி –என்னை நியமித்து அருளி / என் அம்மான் -ஸ்வாமி / என் கரு மாணிக்கச் சுடர் -ஸுலப்யம் /
எல்லை இல் சீர் -சுடர் -அமுது -விரை -சொல்லீர் –
அனைத்து புலன்களுக்கும் இங்கே அமுதம் உண்டே –

விஸ்வ வ்யாவ்ருத்தி சித்தம்
நைநம் வாச ஸ்த்ரீயம் ப்ருவன்-நைநம் அஸ்திரி புமான் ப்ருவன் -புமாம்சம் ந ப்ருவன் ந இனாம் -வதான் வதாதி கச்சன-அ இதி ப்ரஹ்ம –ரிக் வேத ஆரண்யம் –2–2-
இத்தையே ஆண் அல்லன் பெண் அல்லன் இத்யாதி -வேதம் தமிழ் செய்த மாறன்
ஸ்ரீ மத் பாகவதம் -8–3–24-

வ்ரஜ யுவதி கணாக்யாத நித்ய அனவ புங்க்த -நித்ய நிர்தோஷ கல்யாண திவ்ய தாமத்தில் பண்ணும் பிரமத்தை என் பக்கலிலே பண்ணிக் கொண்டு
சர்வ திவ்ய பூஷண ஆயுத பூஷிதனாய்
நிரதிசய ஸுந்தர்யாதி கல்யாண குண விசிஷ்டனாய் சுத்த ஜம்புநத பிரபமான திவ்ய ரூபத்தோடே வந்து என்னோடு கலந்து அருளினான் -என்கிறார்
ஸ்வாப்தி முதிதத்வம்-தன் ஆஸ்ரிதரோடு ஸம்ஸலேஷிக்கப் பெற்றால் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வபாவம் சொல்லும் திருவாய் மொழி –
கண்ணன் ஆசைப்பட்டே ஆயர் சிறுமிகள் உடன் கழிக்கிறான் -அவன் உகப்பு கண்டு உகக்குமவர்கள் –
அதே நிலைமை தானே இங்கு ஆழ்வாருக்கும் –

—————————————————

ஸ்வாப்தி முதிதத்வம்–தன் ஆஸ்ரிதர்களோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெற்று -நிரதிசயமாக ஆனந்திக்கும் ஸ்வ பாவம் -2-5-
அந்தாமத்து ஆண்டு செய்து -திருவாய்மொழி கல்யாண குணம்
விராஜ யுவதி கணாக்யாத நீத்யா அந்வபூங்க்த-விராஜா ஸ்த்ரீகளுடன் கூடி -கிருஷ்ணன் உபப்பைக் கண்டு உகந்தது போலே
இந்த திருவாய் மொழியிலே அவன் உகப்பைக் கண்டு ஆழ்வாரும் உகக்கிறார்

ஸ்வ ப்ராப்த்ய சித்தி காந்திம்
ஸூக திதி தயிதம்-
விஸ்புரத் துங்க மூர்த்திம்
ப்ரீதி உன்மேஷ அதி போக்யம்
நவகன ஸூ ரசம்
நைக பூஷாதி த்ரிஷ்யம்
ப்ரக்யாத ப்ரீதி ஈயம்
துர் அபிலப ரசம்
சத் குண ஆமோத ஹிருதயம்
விஸ்வ வ்யாவ்ருத்தி சித்ரம்
விராஜ யுவதி கணாக்யாத நீத்யா அந்வ பூங்க்த

ஸ்வ ப்ராப்த்ய சித்தி காந்திம்-2-5-1– விடையார் மடுவில் சேர்ந்தால் போலே ஆழ்வாருடன் கலந்தான் —
திவ்யாயுதங்களும் திவ்ய பூஷணங்களும் ஸ்வாபாவிகமாக அவன் உடன் சேருமா போலே ஆழ்வார் சேர்ந்தார் -ஆவி சேர் அம்மான் –
புணர்ச்சி மகிழாடல் துறையில் தம் உகப்பை நெருங்கிய தோழிக்கு அருளிச் செய்யும் முகமாக அருளிச் செய்கிறார்-

ஸூக திதி தயிதம்-2-5-2-
ஒரு இடம் ஓன்று இன்றியே என்னுள் கலந்தான் –
திருவுக்கு இடம் மார்பமே -அவனுக்கு கொப்பூழ் -போல இல்லையே ஆழ்வாருக்கு

விஸ்புரத் துங்க மூர்த்திம்- (2.5.3)–
மின்னும் சுடர் மலை அன்றோ அவன் -என்னுள் கலந்தவன் -என்ற விசேஷ திருநாமம் சூட்டுகிறார் இதில்

ப்ரீதி உன்மேஷ அதி போக்யம்- (2.5.4)
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே
ப்ரீதி உன்மேஷம் -எப்பொழுதும் வளர்ந்து கொண்டே போகும் அதி போக்யம்
பிரதி உன்மேஷம் -என்றும் கொண்டு -க்ஷணம் தோறும் அதி போக்யம் -என்றுமாம்

நவகன ஸூ ரசம் (2.5.5)-
காரார் கரு முகில் போல் என் அம்மான்
செம்பவள வாய்க்கு நேரா /கமலம் -கண் பாதம் கைக்கு நேரா
கார் முகில் கொட்டித்தீர்த்து வெளுக்கும் -இவனோ காரார் கார் முகில் எப்பொழுதும்

நைக பூஷாதி த்ரிஷ்யம் (2.5.6) |
ந ஏக-ஓன்று அல்ல-பல பலவே–ஆபரணங்கள் -பல பலவே பேர்களும் -பலபலவே சோதி வடிவுகளும் –
பலபலவே பண்புகளும் – அனைத்திலும் பரிபூர்ணன்

ப்ரக்யாத ப்ரீதி ஈயம் (2.5.7)
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திருவவதார சேஷ்டிதங்கள் அனைத்தும்-ஏறுகளை செற்றதுவும் –
மராமரங்கள் எய்ததுவும் அடியார் உகப்புக்காகவே

துர் அபிலப ரசம் (2.5.8)-
சொல் முடிவு காண முடியாத போரேறு -தண் துழாய் மாலையான் -என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே

சத் குண ஆமோத ஹிருதயம் (2.5.9)
எல்லையில் சீர் அம்மான் -ஸ்வாமித்வம் -எல்லையில் சீர் ஆவி -நியந்த்ருத்வம் –
எல்லையில் சீர் கரு மாணிக்கச் சுடர் -ஸுலப்யம் /எல்லையில் சீர் சுடர் தேஜஸ் /
எல்லையில் சீர் அமுது -வாக்குக்கும் /எல்லையில் சீர் விரை காந்தம் மூக்குக்கும் /
எல்லையில் சீர் ஆவி -மனதுக்கும் / எல்லையில் சீர் சொல்லீர் -காதுக்கும் –

விஸ்வ வ்யாவ்ருத்தி சித்ரம் (2.5.10)
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
ந பூத சங்க ஸமஸ்தானோ தேகோஸ்ய பரமாத்மனா –சாந்தி பர்வம் 206-60
பஞ்ச பூத பிராக்ருதி போலே இல்லாமல் அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் மயன்
நைநம் வாசா ஸ்த்ரீயம் ப்ரூவன் நைநம் அஸ்திரி புமான் ப்ரூவன் புமாம்ஸாம் ந ப்ரூவன்
ந ஏனாம் வதன் வதாதி கஷ்சன அ இதி ப்ரஹ்ம–ரிக் -ஆரண்யகம் – 2.2
அகாரம் என்ற சொல்லப்படுபவர் அன்றோ –
ச வை ந தேவா அசுரா மர்த்யா த்ரியஞ்ஞா ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஐந்தூ நாயம் குண கர்ம
ந சன் ந சாஸன் நிஷேத அசேஷ ஜயதாத் அசேஷா -ஸ்ரீமத் பாகவதம்-8-3-24-

——————————————

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

January 22, 2018

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் –26-ஸ்லோகங்கள் —
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -130-ஸ்லோகங்கள் சாரம் –

சாம வேதம் –1000-சாகைகள் / ரிக் வேதம் -21-சாகைகள் / யஜுர் வேதம் -100-சாகைகள் / அதர்வண வேதம் -1-

————————————————–

ஸ்ரீ யபதியாய்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக நாதனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய்
ஸர்வேஸ்வரனான
திரு வேங்கடமுடையான் திரு அவதாரமாகவும்
தத் திவ்ய கண்ட அவதாரமாகவும்
ஸூ ப்ரஸித்தராய்
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்ட -திரு வருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால் -என்கிறபடியே
பேர் அருளாளன் அருள் பெற்று –

காவலர் எங்கள் கிடாம்பிக் குலபதி அப்புளார் தம் தே மலர்ச்சேவடி சேர்ந்து பணிந்தவர்
தம் அருளால் நா வலரும் தென் வட மொழி நல் பொருள் பெற்று
விம்சத் யப்தே விஸ்ருத நாநா வித வித்ய த்ரிம்ச த்வாரம் ஸ்ராவித ஸாரீரக பாஷ்யம் –என்கிறபடியே
இருபது திரு நக்ஷத்ரத்திலே அதிகத ஸகல வித்யர் -என்றும்
முப்பது தரம் ஸ்ரீ பாஷ்யத்தை ஸச் சிஷ்யர்களுக்கு அருளினார் -என்றும்
ஸர்வ ஜனங்களாலே ஸ்லாக நீயராய்

ஸ்ரீ ரெங்கராஜ திவ்ய ஆஜ்ஜா லப்த வேதாந்த ஆச்சார்ய பதராய்
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே ஸர்வ தந்த்ர ஸ்வ தந்திரர் என்றும் திரு நாமத்தைப் பெற்றவராய்
கவி கதக குஞ்சர கண்டீரவர் என்று பிரதி திஸம் ப்ரக்யாத வைபவரான
சீராரும் தூப்புல் திரு வேங்கடமுடையான்

உயர்வற உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ யபதியால்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் அருளிச் செய்ததாய்
ஸர்வாதிகாரமாய்
ஸர்வ ஸாஸ்த்ர ஸங்க்ரஹ ரூபமாய்
முமுஷுக்களுக்கு அவசியம் உபாதேயமான திராவிட உபநிஷத்தான திருவாய் மொழியின் தாத்பர்யங்களை
மந்த மத்தியிலும் எளிதில் அறிந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும் படிக்கு

எம்பெருமானார் ஸம்ஸார அக்னி விதீபந வ்யபகத ப்ராணாத்ம ஸஞ்ஜீவனமான பரமாச்சார்ய வசன அம்ருதத்தை
பவ்ம ஸூ மநோ போக்யமாகச் செய்து அருளினால் போலே
அழகிய மணவாளன் –ஆழ்வார் –எம்பெருமானார் -நியமனப்படிக்கு
ஸஹ்ருதய ஹ்ருத யங்க மங்களான பத்யங்களாலே
த்ராமிட உபநிஷத் சாரம் -என்ற பெரு பிரபந்த ரத்நத்தை அருளிச் செய்தார் –

இதில்
ஸதக ஸங்கதிகளும்
ஸதக குணங்களும்
தத் உப பாதங்களான தசக குணங்களும்
மற்றும் உள்ள விசேஷ அர்த்தங்களும்
ஸம் ஷிப்தமாய் இருக்கும் –

இது தான் மஹா ரத்ன கர்ப்பமான மாணிக்கச் செப்பு போலவும் –
மஹா அர்த்த கர்ப்பிதமான திரு மந்த்ரம் போலவும்
கம்பீர
மதுரமாய்
ந அதி சங்ஷேப விஸ்தரம் – என்கிறபடியே
அநபேஷித விஸ்தரம் -அபேக்ஷித ஸங்கோசம் – முதலிய தோஷம் இன்றிக்கே
சார பூதமாய் இருக்கையாலே ஸாரம் -என்று பெரியோர்கள் கொண்டாடும்படியான ஒன்றாய்த்து –

———-

முதல் ஸ்லோகத்தாலே
வஸ்து நிர்தேச ரூப மங்களா ஸாஸனம் செய்து அருளா நின்று கொண்டு
திருவாய் மொழியின் ஸதக குணங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார் —

சேவா யோக்யோ அதி போக்யா ஸூபாஸ் உபகதனு சர்வ போக்ய அதிசய
ஸ்ரேயஸ் தத் ஹேதுதத பிரபதன சுலபோ அநிஷ்ட வித்வம்ச சீலன்
பக்த சந்த அனுவர்த்தி நிருபாதிக ஸூ ஹ்ருத் சதபத அவ்யயம் சஹாயா
ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷ கதா சடைர்மா –1–

1-சேவா யோக்யோ -ஸ்ரீ யபதியே சேவா யோக்கியன்
2-அதி போக்யா -ஒப்பார் மிக்கார் இல்லாத அதி போக்யன்
3-ஸூபாஸ் உபகதனு –ஸூ பாஸ்ர்ய திவ்ய மங்கள விக்ரஹம் உடையவன்
4-சர்வ போக்ய அதிசய –சர்வ போக வஸ்துக்களையும் பக்தர்களுக்காக யுடையவன்
5-ஸ்ரேயஸ் தத் ஹேதுதத -சகல புருஷார்த்தங்களும் அளித்து அருளுபவன்
6-பிரபதன சுலபோ –பிரபன்னர்களுக்கு சர்வ ஸூலபன்
7-அநிஷ்ட வித்வம்ச சீலன் -சர்வ சக்தன் -பிரதிபந்தங்களை நிரசித்து தன் பேறாக கலப்பவன்
8-பக்த சந்த அனுவர்த்தி -யாத்தொத்தகாரி -ஆஸ்ரித பாரதந்தர்யம் தனது ஸ்வா தந்திரம் அடியாக ஏறிட்டுக் கொள்பவன்
9-நிருபாதிக ஸூ ஹ்ருத் -சர்வருக்கும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தையிலும் நிருபாதிக ஸூஹ்ருத்
10-சதபத அவ்யயம் சஹாயா -அர்ச்சிராதி கதி மார்க்கம் பக்தர்களையும் பிரபன்னர்களையும் கூட்டிச் செல்பவன்

ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷா காதா சடைர்மா –
இப்படி பத்து அர்த்தங்களையும் உபநிஷத்துக்கள் படியே ஸ்ரீ சடகோபர் பத்து பத்தாலும் அருளிச் செய்கிறார் –

சேவ்யத்வாத் போக்யா பாவாத் சுப தனு விபாவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ்ரேயஸ் தத் ஹேது தானாத் ஸ்ரீ தவிவ சதய ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஹரத்வாத்
பக்த சந்த அனுவ்ருத்தேத் நிருபாதிக ஸூ ஹ்ருத் பாவத்தாத சத் பத அவ்யயம்
சஹாயாச்சா ஸ்வ சித்தே ஸ்வயமிக கரணாம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி –ஸ்ரீ த்ராமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –ஸ்லோகம் -8-

———————————–

இரண்டாம் ஸ்லோகத்தால்
ஸதக அர்த்தங்களை சங்கதி அருளிச் செய்கிறார் –

அத்யே பஸ்யன் உபாயம் ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன்
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –2-

அத்யே பஸ்யன் உபாயம் -ஒருவனே உபாயம்
ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே-அவனே பரம ப்ராப்யமும் ஆவான்
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே -சுபாஸ்ரய திருமேனி பற்றி
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பெற நமக்கு உபதேசம் மூன்றாவதில்
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன் -விஷயாந்தரங்கள் விஷம் கலந்த மது போல்வன
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –மேல் உள்ள ஐந்து முதல் பத்து வரை
அவனே அவனை பெற உபாயம் என்று சடகோப முனி அருளிச் செய்கிறார் –

பிராச்சே சேவா அனுகுனியாத் ப்ரபுமிக சடகே மாம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபுபதே போக்யதா விஸ்தாரன
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனவ் இதயவாதித் த்ரயே
அநந்ய ப்ராப்யாஸ் சதுர்த்தே சம்பவித்ததரை அபி அநந்ய உபாயஹ–தாத்பர்ய ரத்னாவளி -6-

தேவா ஸ்ரீமான் ஸ்வ சித்தே காரணாம் இதி வதன் ஏகம் அர்த்தம் ஸஹர் –இதுவே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரார்த்தமும் –

ஆக
இப்பிரபந்தத்துக்கு ப்ரதிபாத்யன் உபாயத்வே -உபேயத்வே -விசிஷ்டனான ஸ்ரீ யபதி
அதில்
முதல் பத்தில் சேவ்யத்வாத் உபாயத்வமும்
இரண்டாம் பத்தில் போக்யத்வாத் உபே யத்வமும்
மூன்றாம் பத்தில் இவ் உபாயத்வ உபேயத்வ யுக்த திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் –சொல்லப்படுகிறது –
நாலாம் பத்தில் உபேயத்வத்தை ஸ்தீகரிக்கிறது
மேல் ஆறு பத்துக்களும் உபாயத்வத்தை ஸ்தீகரிக்கின்றன-என்றதாய்த்து –

———————————-

ஸேவ்யத்வ ஸ்தாபகங்களாக முதல் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான
பத்து குணங்களையும் அடைவே ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

பரம் நிர் வைஷம்யம் சுலபம் அபராத ப்ரஸஹனம்
ஸூசீலம் ஸ்வ ஆராதனம் சரச பஜனம் ஸ்வார்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம் அநக விஸ்ரானன பரம்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே–3-

பரம் –பரத்வம் அனைத்திலும்
நிர் வைஷம்யம் -சமோஹம் ஸர்வேஷாம்
சுலபம் -பக்தர்களுக்கு ஸூலபன்
அபராத ப்ரஸஹனம் –அபராத சஹத்வம் உண்டே
ஸூசீலம் –எல்லையில்லா ஸீலவான் -நிகரில் புகழ் –
ஸ்வ ஆராதனம் சரசபஜனம்– ஆராதனத்துக்கு எளியவன் -ஸூ ஸூகம் கர்த்தும் பஜனமும்
ஸ்வார்ஜவ குணாம்–செம்மை -ஆர்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம்–தன்னையே தந்து அருளுவான்
அநக விஸ்ரானன பரம் –அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை கதானன்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே-

ஆதவ் இதம் பரத்வாத் அகில சமத்ய பக்த ஸுலப்ய பூம்னா
நிஸ் சேஷக சஹத்வாத் க்ருபணா சுகதநாத் சக்யா சம்ராதானத்வாத்
ஸ்வா துஸ் உபாசனத்வாத் ப்ரக்ருதிர் ருஜுதயா சாத்ம்ய போக்ய பிரதத்வாத்
அவ்யாஜோதரா பாவாத் அமானுத சடகே மாதவம் சேவானியம் –ரத்னாவளி -22-

1–பரத்வம்-உயர்வற –நிரதிசய கல்யாணமான சர்வத்துடன் கூடி இருக்கை /
சேதன அசேதன விலக்ஷண ஸ்வரூபம் / சர்வமும் இவன் அதீனம் / சரீராத்மா பாவம் –
2–நிர் வைஷம்யம் -வீடுமின் முற்றவும் –
3–பக்த ஸூலபன் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
4–அபராத சஹத்வம்
5—ஸுசீல்யம்
6—ஸூலப ஆராதனன்
7–ச ரஸ போக்ய பஜனம்
8—ஆர்ஜவம்
9–சாத்மிக போக பிரதன்-
10–அநக விஸ்ரானன பரம்

அவ்யாஜ உதார சீலத்தவம் -பதிக சாரம்

முதல் திருவாய் மொழியிலே
எம்பெருமான் ஸ்வரூப ரூப குண விபவாதிகளாலே ஸர்வ உத்க்ருஷ்டன் ஆகையால் ஸர்வ ஸ்மாத் பரன் -என்கிறார் –

இரண்டாம் திருவாய் மொழியிலே
பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை சம்சாரிகளுக்கும் உபதேசிக்கையாலே ஸர்வ சமன் என்று அருளிச் செய்தார்

மூன்றாம் திருவாய் மொழியிலே
அவன் தான் பக்த ஜனங்களால் கட்டுண்ணும் படி எளியனாய் இருப்பவன் ஒருவன் ஆகையால் சர்வ ஸூலபன் என்கிறார்

நான்காம் திருவாய் மொழியிலே
ஸர்வ த்ரஷ்டா ந கணயதி தேஷாமப க்ருதிம் -என்கிறபடியே அவன் தான் ஸர்வஞ்ஞனாய் இருந்து வைத்தும்
ஆஸ்ரித அபராதங்களைக் கணிசியாத ஒருவன் என்று கொண்டு அபராத சஹன் என்கிறார்

ஐந்தாம் திருவாய் மொழியில்
அயர்வரும் அமரரர்கள் அதிபதியான தன்னை சம்சாரிகளும் -வெண்ணெய் தொடுவுண்ட கள்வா -என்னிலும்
அது கொண்டு ஆபி முக்யம் பண்ணி
நிஷா தாநாம் நேதா கபி குல பதி காபி சபரீ குசேல குப்ஜா ஸா வ்ரஜ யுவதயோ மால்ய க்ருததி
அமீஷாம் நிம் நத்வம் வ்ருஷ கிரி பதேருந்நதி மபி ப்ரபூதைஸ் ஸ்ரோதோபி பிரசவம் அநு கம்பே சமயஸி -என்கிறபடி
தன அபார காருண்யத்தாலே தன் மேன்மை பாராதே அவர்களோடே ஒரு நீராகக் கலக்கும் ஸ்வ பாவனாய்
இருப்பான் ஒருவன் என்று கொண்டு நிரதிசய ஸுசீல்ய ஜலதி என்று அருளிச் செய்தார்

ஆறாம் திருவாய் மொழியில்
அவன் ஆராதனத்துக்கு என்று த்ரவ்யவ்யயம் தேஹ ஸ்ரமம் முதலியவை வேண்டாதபடி ஸூலபமான குஸூம ஸலீலாதிகளைக் கொண்டு பூஜிக்கிலும்
மாதங்க மானுஷாபீ ததா ந விசேஷ ஹேது -என்கிறபடி அதிகாரி நியமம் பாராதே -இது யோக்யம் இது அயோக்யம் என்று பாராதே
அண்வ ப்யு ஹ்ருதம் பக்தை ப்ரேம்ணா பூர்யேவ மே பவத் -என்று உகப்பவன் ஒருவன் ஆகையால் ஸ்வாராதன் என்று அருளிச் செய்தார்

ஏழாம் திருவாய் மொழியிலே
எம்பெருமான் வைப்பான் மருந்தாம் -1-7-2-என்று ஆஸ்ரிதற்கு சேமித்து வைக்கும் நிதி போலே தன்னை
இஷ்ட விநியோக அர்ஹனாக்கி வைப்பவன் ஒருவன் ஆகையால் அவனுடைய போஜனம் அம்ருத பானம் போலே
ச ரசமாய் இருக்கும் என்று கொண்டு ச ரஸ பஜனன் என்று அருளிச் செய்தார்

எட்டாம் திருவாய் மொழியில்
எம்பெருமான் ஆஸ்ரிதர் அபேக்ஷித்தபடி அடிமை கொண்டு அனுபாவ்யன் ஆவான் ஒருவன் என்று கொண்டு ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்

ஒன்பதாம் திருவாய் மொழியிலே
லஷ்மீ யசோதா கருடாதிகளில்பண்ணும் ஸம்ச்லேஷ பிரகாரங்கள் எல்லாவற்றையும் பண்ணி பூர்வ பூர்வ அனுபவம் சாத்மிக்க சாத்மிக்க –
மேல் மேல் என அனுபவிப்பான் ஒருவன் என்று கொண்டு சாத்ம்ய போக பிரதன் என்று அருளிச் செய்தார்

பத்தாம் திருவாய் மொழியிலே
அவன் தான் உபாய லாகவமும் உபேய கௌரவமும் பாத்ர அபகரஷமும் பாராதே ஸ்வாத்ம ப்ரதானம் பண்ணும்
ஸ்வ பாவன் என்று கொண்டு மஹா உதாரன் என்று அருளிச் செய்தார்

இப்படி
சர்வ ஸ்மாத் பரத்வாதிகளாலே எம்பெருமான் ஸேவ்யன் –
அத ஏவ மோக்ஷ உபாயம் என்று முதல் பத்திலே அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————

இனி காரணத்வம் அபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா –என்று சொன்ன சாரீரக ஸாஸ்த்ர அர்த்தத்தை
பிரதம த்விதீய தசகங்களாலே ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –

த்விகாப்யாம் த்வி அஷ்டாங்க்ரி துரதிகமன் இதிஸ்த புடித
யதாந்த்ய மீமாம்ச ஸ்ருதி சிகாரதத்வம் வ்யவர்ணுத
ததாதவ் காதாபிர் முனீர் அதி கவிம் சாபிரிக நா
க்ருதி சாரா க்ரஹாம் வ்யாதராதிக சமக்ரய க்ருபயா —-4

முதல் ஆறு பாசுரங்கள்-1-1-1-தொடங்கி -1-1–6- -சமன்வய அத்யாய அர்த்தங்கள் -ஜகத் காரணன் -சேதன அசேதன விலக்ஷணன் –
அகில ஹேய ப்ரத்யநீகன் -கல்யாணைக குண விசிஷ்டன் /அந்தர்யாமி -நியமனம் -ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் அதீனம் –
மேலே -1–1–7-தொடங்கி -1–1–9-மூன்றும் அவிரோத அத்யாயம் அர்த்தங்கள் –சரீராத்மா பாவம்
மேலே -1–2–1-தொடங்கி -1–2–9-ஒன்பதும் சாதனா அத்யாயம் அர்த்தங்கள்
மேலே -1-2–10-தொடங்கி -1–3–5-ஏழும் பல அத்யாயம் அர்த்தங்கள் –

ஜகத் காரணத்வம் -முதல் அத்யாய அர்த்தம்
தத் பாத்யத்வம் –இரண்டாம் அத்யாய அர்த்தம்
முமுஷு உபாஸ்யத்வம் -மூன்றாம் அத்யாய அர்த்தம்
முக்த ப்ராப்யத்வம் -நான்காம் அத்யாய அர்த்தம்
நான்கையும் காட்டி அருளி
முதல் திருவாய் மொழியில்
முதல் ஆறு பாட்டுக்கள் பிரதம அத்யாய அர்த்தங்கள்
மேல் ஐந்தும் த்விதீய அத்யாய அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் மொழியில்
ஒன்பது பாட்டுக்கள் த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் இரண்டும் சதுர்த்த அத்யாய அர்த்த ஸங்க்ரஹம்

அன்றிக்கே
முதல் திருவாய் மொழியில் பூர்வ த்விக அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் -ஒன்பது பாசுரங்கள் -த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் பட்டாலும்
மூன்றாம் திருவாய் மொழி -வணக்குடைத் தவ நெறி -1-3-5- பாட்டு அளவாக
சதுர்த்த அத்யாய அர்த்தங்கள் சங்க்ருஹீதம்

ரத்நா வளியிலும்
ஆதவ் சாரீரிக அர்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா-என்று அருளிச் செய்தது –

——————————

முதல் பத்துக்கும் இரண்டாம் பத்துக்கும் சங்கதி அருளிச் செய்கிறார் இதில் –

பரத்வாத்யை இதம் பரிசரணா சக்தோ குண கணைஹி
ப்ரபும் சேவா யோக்யம் பிரதம சதகே வீக்ஷ்ய வரதம்
தமேவ ஸ்வாத்யர்த ப்ரியமத ச போக்தும் வியவசிதோ
வரேண்யத்வம் தஸ்ய பிரதம வரணீயம் ப்ரதயத்தி –5–

பேரருளாளன் -அமரர்கள் அதிபதி இமையோர் தலைவன் -ஒருவனே பராத்பரன் –
அவனே பஜனீயத்துக்கு பிரதி சம்பந்தி -பரிசரண சக்தோ குண கணை பிரபு –
வரதம் பிரதம வரணீயம் இதி வியவஸ்திதோ தஸ்ய வரேண்யத்வம் ப்ரதயதி
சேவா யோக்கியன் பிரதம வரணீயன்-இரண்டுமே பேரருளாளனுக்கே பொருந்தும் –

இப்படி முதல் பத்தில் ஸர்வ ஸ்மாத் பரத்வாதி குண தசகத்தாலும் எம்பெருமான் ஸேவ்யன் என்று உபபாதித்து அருளி
அவனே மோக்ஷ உபாயம்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -1-1-1-என்று
தம் திரு உள்ளத்தை அநு சாஸித்து நின்றாராய் இருந்தது
மேல்
இப்படி ஸேவ்யத்வாத் உபாய பூதனான எம்பெருமான்
உபேயனுமாய் இருக்கும் என்று கொண்டு
தமக்கு நிரதிசய பிரியனான அவனை அனுபவிக்கக் கடவராய்
அதுக்கு உறுப்பாக அவனுடைய அதி போக்யத்வத்தை இரண்டாம் பத்தில் பிரகாசிப்பித்து அருளுகிறார் –

இங்கு வரதம் என்று அருளிச் செய்தது
வாரண வெற்பில் மழை முகில் போல் நின்ற –என்றும்
காலே ந கரி சைல கிருஷ்ண ஜலத -என்றும் அருளிச் செய்தபடி –
கரி கிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்ற பேர் அருளாளனை –

இதன் கருத்து என் என்னில் –
உடையவர் ஸ்ரீ பாதத்து முதலிகள் திருவாய் மொழியை அனுசந்தித்து
ஆழ்வார் எம்பெருமானார் எல்லாரையும் பாடினாராய் அருளிச் செய்தது -நம் பேர் அருளாளானைப் பாடிற்று இல்லையே -என்ன
உடையவரும் -முதல் பத்து முழுவதும் நம் பேர் அருளாளனை இறே பாடிற்று -என்ன
இது எங்கனே அறியல் ஆய்த்து -என்ன
முதல் அடியிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கையாலும்
மேல் பல இடங்களில் நித்ய ஸூரி நாயகத்வத்தையே அருளிச் செய்கையாலும் –
நம் பேர் அருளாளனே தேவ பிரான் ஆகையாலும் அறியலாய்த்து -என்ன –

தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-என்றும்
தென் குறுங்குடி நின்ற -1-10-9-என்றும் அருளிச் செய்தது இல்லையோ என்ன –
ஆகில் என் -நம் பேர் அருளாளனுக்கே வேங்கடாசல வாஸித்வம் திருக்குறுங்குடி வாஸத்வம் ஆகிற சம்பத்தைச் சொல்லுகிறது என்ன
அது என் -அவர்களுக்கே நித்ய ஸூரி நாயகத்வம் சொல்ல அடுக்காதோ -என்ன

நம் பேர் அருளாளன் ஸந்நிதியில் ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தாலே முதல் பத்து
பேர் அருளாளனையே பாடிற்று என்னும் இடம் ஸூ வியக்தம் அன்றோ –
திரு மார்பில் ஞான முத்திரை வைத்து எழுந்து அருளி இருக்கிறது –
முன்பு கலியன் மற்றை திவ்ய போலே இடது திருக்கை திரு மடியிலும் -வலது திருக்கை ஞான முத்ரையாகவும்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தை உகந்து அருளிப் பண்ணி வைக்க முயல
மூன்று தடவையும் இப்படியே ஆகி -ஆழ்வார் அங்கெ ஒருவர் இடம் ஆவேசித்து
இதை இங்கனேயே நம் பேர் அருளாளன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்க -என்ன
தம் திரு உள்ளத்துக்கு அனுசந்தானம் பண்ணும் படி மேல் உள்ளாறும் அறியலாம் படி –
இவ்வர்த்தம் திருமாலை ஆண்டான் அருளிச் செய்ய முதலிகள் போர விஸ்மிதர் ஆனார்கள் –

ஆக இப்படி அயர்வரும் அமரர்கள் அதிபதி என்று தொடங்கி
மணியை வானவர் கண்ணனை –1-10-11-என்னும் அளவாக பேர் அருளாளனையே பேசிற்று என்னும் இடம் ஸூ வ்யக்தம் –

——————————–

இதில் போக்யத்வ ஸ்தாபகங்களாக -இரண்டாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும்
ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –

த்வதீயே அதி கிலேச க்ஷண விரஹ முத்துங்க லலிதம்
மில்லத் சர்வஸ் வாதம் வியஸன சமனம் ஸ்வாப்தி முதிதம்
ஸ்வ வைமுக்யத் ரஸ்தம் ஸ்வ ஜன ஸூஹ்ருதம் முக்தி ரசதம்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம் சுபகச விதஸ்தம் நிரவிசத் –6-

முதல் பத்தால் ஆஸ்ரயணீயன்-மோக்ஷ உபாயம் அவனே /
இரண்டாம் பத்தால் -இவன் அனுபவ போக்யன் –பரம புருஷார்த்தம் அவனே

அதி கிலேச க்ஷண விரஹ –வாயும் திரை –
ஸர்வஸ் ஸ்மாத் பரன்-உத்துங்க லலிதம் -திண்ணன் வீடு –
சர்வ மதுர ரஸ ஊனில் வாழ்
ஆஸ்ரித வியஸன சமன ஸ்வபாவம் -ஆடி யாடி
ஸ்வ ஆஸ்ரித பிராப்தி ஸந்துஷ்டன் -ஆஸ்ரித சம்ச்லேஷ பிரியன் -அந்தாமத்து அன்பு
ஆஸ்ரித விரகம் அஸஹத்வம் -வைகுந்த
சம்பந்த சம்பந்திகளுக்கும் ஸூஹ்ருத் -கேசவன் தமர்
முக்த சாரஸ்யம் ததா –அணைவது அரவணை மேல்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம்-எம்மா வீடு
சுப நிலையன்-அதி போக்யன் -கிளர் ஒளி

முதல் திருவாய் மொழியில் -எம்பெருமான் தன்னைப் பிரிந்தாருக்கு நித்ரா விச்சேதாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
அவனுடைய க்ஷண மாத்ர விரஹமும் அத்யஸஹம் என்று கொண்டு அதி கிலேச க்ஷண விரஹன் -என்று அருளிச் செய்தார்

இரண்டாம் திருமொழியில் -எம்பெருமான் மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரித்து இருக்கச் செய்தேயும்
ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று கொண்டு
லலித உத்தங்கன் என்று அருளிச் செய்தார் –

மூன்றாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஸர்வ ரஸ சமாகாரம் போலே ரஸ்யனாய்க் கொண்டு தம்மோடு கலைக்கையாலே
அவன் தான் ஸமஸ்த மதுர பதார்த்தங்களினுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையவன் என்று கொண்டு
ஸர்வ ஆஸ்வாத ஆஸ்ரயன் -என்று அருளிச் செய்தார் –

நான்காம் திருவாய் மொழியிலே -ஆஸ்ரிதருடைய ஆபத்தில் வந்து முகம் காட்டி
வ்யஸநங்களைப் என்று கொண்டு வியசன சமனன் என்று அருளிச் செய்தார்

ஐந்தாம் திருவாய் மொழியில் –
யதா தாதம் தசரதம் யதா ஐஞ்ச பிதாமஹம்
ததா பவந்தம் ஆஸாத்ய ஹ்ருதயம் மே ப்ரஸீததி -என்கிறபடியே
தான் ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறில் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வ பாவன் என்று கொண்டு
ஸ்வ பிராப்தி ஸம் ப்ரீதிமான் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் திருவாய் மொழியில் எம்பெருமான் -வளவேழ் உலகில் போலே ஸ்வ அநர்ஹதா அநுசந்தானாதிகளாலே
ஆஸ்ரிதற்கு தன் பக்கல் வைமுக்யம் வருகிறதோ என்று வியாகுலனாய் இருக்குமவன் ஆகையாலே –
ஸ்வ விரஹ சகிதன் என்று அருளிச் செய்தார் –

ஏழாம் திருவாய் மொழியிலே -பெருமாளுக்கு ஸ்ரீ விபீஷணன் பக்கல் ஓரம்
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப்யேஷ யதா தவ –என்று ராவணன் அளவும் சென்றால் போலே
எம்பெருமான் ஆஸ்ரிதர் பக்கல் அபி நிவேசத்தால் தத் சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்து
அருளுமவன் ஆகையாலே ஸ்வ ஜன ஹிதன் -என்று அருளிச் செய்தார் –

எட்டாம் திருவாய் மொழியில் -எம்பெருமான் முக்தி தசையில் ரஸாவகனாய் இருக்கும் என்று கொண்டு
முக்தி ஸாரஸ்ய ஹேது என்று அருளிச் செய்தார் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் -உன் கைங்கர்யமே எனக்கு உத்தேச்யம் என்று கொண்டு
பரவா நஸ்மி காகுத்ஸத த்வயி வர்ஷ சதம் ஸ்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இத்யாதிகளைப் போலே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகையாலே
கைங்கர்ய உத்தேச்யன் என்று அருளிச் செய்தார்

பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தம்மோடு ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் பரிமாறி
அனுபவிக்கும் படி தர்ச நீயமான தெற்குத் திருமலையில் நின்று அருளுகையாலே
ஸூப ஸவித கிரி நிலையன் -என்று அருளிச் செய்கிறார்

இப்படி அத்ய அஸஹ்ய க்ஷண விரஹாதிகளாலே அத்யந்த போக்யனான எம்பெருமானை –
ஆழ்வார் அனுபவித்துத் தலைக் கட்டுகையாலே
போக்யத்வேன முக்த ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

—————————

இதில் கீழ் பத்துக்களோடு மேல் பத்துக்களின் சங்கதி அருளிச் செய்கிறார் –

உபாயத்வைகாந்தம் ப்ரதமமிஹ சேவ்யத்வமுதிதம்
ததாஸ் ச ப்ராப்யத்வ உபயிகமதி போக்யத்வ மவதத்
த்வயம் தத் ஸ்வாசாதாரணா தனு விசிஷ்டஸ்ய கணயன்
த்ருதீய விஸ்வேசம் ஸூபஸ் ஸூபக ரூபம் கதயதி–7–

உபாய உபேய விக்ரஹ ஸ்வரூபம் -அர்ச்சா ரூப ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -மூன்றாம் பத்தின் சாரம்

அந்நிய த்ருஸ ஸுந்தர்யம் –முடிச் சோதி
லோகைக நாதன் -தனுர் விஹித சர்க்கதி சுபகன் -முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -திருமேனியாலே ஸ்ருஷ்ட்டி
ஸ்வ இச்சா சேயாகரன்-ஒழிவில் காலம் கைங்கர்யம் கொள்ள அர்ச்சா திரு மேனி —
சர்வ சரீரி புகழ் நல் ஒருவன் –
மோஹன தனு -சுப சுபாக ரூபம் -மொய்ம் மாம் பூம் பொழில்
ஸுலப்யன்-செய்ய தாமரை
பயிலும் சுடர் ஒளி-பாகவத சேஷத்வம்
சதா த்ருஸ்யன்-முடியானே
சர்வ பாப நிவர்த்தகன் -சன்மம் பல பல

இப்படி
முதல் பத்தில் எம்பெருமான் ஒருவனே ஸேவ்யத்வாத் உபாயம் என்றும்
இரண்டாம் பத்திலே போக்யத்வாத் உபேயம் என்றும் அருளிச் செய்தார்
இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
அநிதர சாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே என்று கொண்டு எம்பெருமான்
ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டன் என்று மூன்றாம் பத்திலே அருளிச் செய்கிறார் என்கிறார் —

—————————————

இதில் உபாயத்வ உபேயத்வ யுக்த ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹவத் ஸ்தாபகங்களாக
மூன்றாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும்
அடைவே ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –

அநீத்ருக் ஸுந்தர்ய தனு விஹித சர்காதிஸ் உபகம்
ஸ்வ சேவார்த்தாகாரம் ப்ர குண வபுஷாம் மோஹன தனும்
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதி அதிசய வஹதனும்
சதா த்ருஸ்யம் ஸ்துதித்ய கீர்த்திமக விருத்தி க்ருதிமிக –8—

ஏவம் ஸுந்தர்ய பூம்நா தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத் நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
லபிஅர்ச்சா வைபவதாவத் குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
ஸ்துத்யத்வாத் பாபங்காத் ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே –தாத்பர்ய ரத்னாவளி –44-

அநீத்ருக் ஸுந்தர்யம் -ஸுந்தர்ய பூம்நா
தனு விஹித சர்காதிஸ் உபகம் -தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ சேவார்த்தாகாரம் –ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத்
ப்ர குண வபுஷாம் மோஹன தனும்–நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதிம்-லபிஅர்ச்சா வைபவதாவத்
அதிசய வஹதனும் – குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
சதா த்ருஸ்யம் மோஹன தனும் இக – ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே-

அநீத் ருக் ஸுந்தர்யம்
முதல் திருவாய் மொழியில்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-3-1-2- என்று
அவன் சவுந்தர்யத்துக்கு ஓர் உவமை சொல்லாவற்றாய் இல்லாமை கொண்டு
எம்பெருமான் அத்தியாச்சார்ய ஸுந்தர்ய யுக்தன் என்று அருளிச் செய்தார் –

இரண்டாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனியின் நின்றும்
ஜகத் ஸ்ருஷ்டி யாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
தநு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்யவான் –என்று அருளிச் செய்தார் –

மூன்றாம் திருவாய் மொழியிலே -அவதாரத்தில் பிற்பட்டாரும் இழக்க வேண்டாத படி –
ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் கிட்டி அனுபவிக்கலாம் படி அர்ச்சா ரூபனாய்
திருமலையில் எழுந்து அருளி இருக்குமவன் ஆகையாலே
ஸ்வ இச்சா சேவ்யாகாரன் -என்று அருளிச் செய்தார்

நான்காம் திருவாய் மொழியிலே -எம்பெருமான் பூத பவ்திகாதி ரூப சர்வ சித்த அசித் சரீரகன்
ஆகையால் சர்வ சரீரன் -என்று அருளிச் செய்தார்

ஐந்தாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன்னுடைய குண சேஷ்டிதங்களை அனுபவிப்பாரைத்
தன்னுடைய திரு மேனி காந்தியாலே பிச்சேற்றிப் பாடுவது ஆடுவதாக அக்ரமமாக ஹர்ஷ சேஷ்டிதங்களை
உடையராம் படி பண்ணுமவன் என்று கொண்டு
மோஹன விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் திருவாய் மொழியில்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —ஸ்ரீ முதல் திருவந்தாதி—44–என்கிறபடியே
எம்பெருமான் ஆஸ்ரிதர் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தைத் தனக்குத் திருமேனியாகக் கோலினால்
திரு மேனியாகக் கொள்ளுகை முதலாக ஆஸ்ரிதர் இட்ட வழக்காம் படி அத்யந்த ஸூ லபனாய் இருக்கும்
என்று கொண்டு அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தார்

ஏழாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனி சோபைக்குத் தோற்று அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
சர்வ உத்க்ருஷ்டராகப் பண்ணுமவன் ஆகையாலே அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய தாஸர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்று கொண்டு
அதி தாஸ்யாவஹ விக்ரஹன் – என்று அருளிச் செய்தார் –

எட்டாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன் கல்யாண குணங்களாலே மனஸ்ஸூ முதலான
சர்வ இந்திரியங்களை ஆகர்ஷிக்குமவன் என்று கொண்டு -நித்ய த்ருஸ்ய அங்கன் -என்று அருளிச் செய்தார் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஒருவனே ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு யோக்யன் என்றும்
அல்லாதார் அயோக்கியர்கள் என்றும் அருளிச் செய்கையாலே
ஸ்துத்ய விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –

பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன் என்று கொண்டு
அக சமந விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார்

இப்படி சித்ர சவுந்தர்யாத் வாதிகளாலே ஸூப ஸூபக விக்ரஹனாக எம்பெருமானை அனுபவித்துத் தலைக்கட்டுகையாலே
உபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
ஏத அத்ருஸ ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டனுக்கே என்று ப்ரதிபாதித்து அருளினார் என்றது ஆயிற்று –

—————————————–

இதில் கீழ்ப் பத்துக்களோடே மேல் பத்துக்கு சங்கதி அருளிச் செய்கிறார் –

ஸ்ரீய காந்தா அநந்தஸ் ஸூப தனு விசிஷ்ட பலமசவ்
பலா வாப்தேர் ஹேது ஸ்வயமிதி ச நிர்த்தார்ய சதகை
இதாநீம் புத்திஸ் தக்ரமத இஹ உக்த்யா முனி வர
பலத்தவம் தஸ்ய இவ த்ரடயதி ததன்யேஷு விமுக—-9—

ஸ்ரீ யபத்யே–ப்ராப்யம் என்று முதல் பத்திலும் –
உபேயம் பரம போக்யம் என்று இரண்டாம் பத்திலும்
ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விசிஷ்டன்- என்று மூன்றாம் பத்திலும்-
அருளிச் செய்த அனந்தரம் –
ஸ்ரீ யபதியே காந்தன்–அனந்தன் -சுப தனு விசிஷ்டன் -பல அவாப்த்தி ஹேது -பரம புருஷார்த்தம் என்று
நிர்த்தாரணம் பண்ணி அருளுகிறார் நான்காம் பத்தால் –

யமேவைஷ -இத்யாதிப்படியே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண கணனான ஸ்ரீ யபதி
ஸ்வ ப்ராப்தே -ஸ்வயம் ஏவ -சாதன பூதன் என்கிற அர்த்தத்தை அகண்டமான இத்திருவாய் மொழியிலே
உபபாதிப்பதாகக் கோலி
அதில் முதல் பத்தில் அவனுடைய உபாயத்வே உபயுக்தமான ஸேவ்யத்வத்தையும்
இரண்டாம் பத்தில் உபேயத்வே உப யுக்தமான போக்யத்வத்தையும்
மூன்றாம் பத்திலே இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும் திவ்ய மங்கள விக்ரஹனுக்கே உள்ளது என்று கொண்டு
அவனுடைய ஸூப ஸூப விக்ரஹத்வத்தையும் உப பாதித்து அருளி
மேல்
இரண்டாம் பத்தில் சொன்ன போக்யத்வம் புத்திஸ்தமானது கொண்டு பல த்வா பர பர்யாயமான
நிரதிசய போக்யத்வத்தை தத் அந்ய வைமுக்ய பூர்வகமாக த்ருடீ கரித்து அருளுகிறார் என்கிறார் –

முதல் பத்தில் சொன்ன உபாயத்வத்தை த்ருடீ கரியாமே
இரண்டாம் பத்தில் சொன்ன பலத்வத்தை த்ருடீ கரிக்கும் படி எங்கனே என்னில்
பிரதம ஸதக ப்ரதிபாத்ய உபாயத்வ அபேக்ஷையா இரண்டாம் பத்து ஸந்நிஹிதமாய் –
தத் ப்ரதிபாத்ய பலத்வமே புத்திஸ்தம் ஆகையாலே முந்துற பலத்வத்தை ஸ்த்ரீ கரித்து
ஐந்தாம் பத்து முதலாக மேல் உபாயத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகையாலே
விரோத கந்தம் இல்லை என்று திரு உள்ளம் —

———————————

ஸ்திர ஐஸ்வர்யம் துர்யே சஹஜ பஹு போக்யம் நிரவிசத்
மிதா ஸ்லிஷ்டம் கிலேசாவஹம் ஸஹித துல்யம் நிஜ ஜனம்
க்ருதார்த்தி குர்வந்தம் பிரணயி பிஷஜம் சத் பகு குணம்
ஸ்வ ஹேயஸ்வ அபேக்ஷ்யம் ஸ்வமத பல முகை ஸ்வாகதம் –10–

நான்காம் பத்தில்
1–ஸ்திர ஐஸ்வர்யம்
2- சஹஜ பஹு போக்யம்
3- ஆஸ்ரிதர்கள் உடன் நித்ய சம்ச்லேஷ ஸ்வ பாவன்
4- விஸ்லேஷ சமயங்களில் கிலேசாவஹம்
5-செய்த வேள்வியர் களுக்கு உண்ணும் சோறு இத்யாதி எல்லாமே ப்ராப்ய பூதன்
6- பிரணயிகளுக்கு மருத்துவனாய் நிற்கும் மா மணி வண்ணன்
7-ஸமஸ்த குண சாகரம்
8- பிரதிகூல வர்ஜனத்துக்கு ஸஹாயன்
9- சர்வ பல பிரதன்
10- நிரதிசய ஆனந்த மயன் –

நித்ய ஐஸ்வர்யம் து துர்யே சஹஜ பஹுள சத் போக்யம் அந்யோன்ய சக்தம்
கிலேசா பாதிஸ்வ துல்யம் ஸ்வ ஜன க்ருத க்ருதார்த்தி க்ரிதிம் ஸ்னேஹா வைத்யம்
சம் யுக்தம் சத் குண உகைஹா ஸ்வ ஜன பரிஹ்ருத அபேஷா மிஷ்டார்த்த ரூபம்
ஸ்ரேஷ்டாம் நிஸ் சேஷ போக்யதா மநுத சடாகே தேவதா ஸார்வ பவ்மன் –தாத்பர்ய ரத்னாவளி –58–

————————-

உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா
சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி நாதஸ்ய சரணம் –11-

உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ–முதல் பத்தாலே அவனே நிருபாதிக உபாயம்
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ–உபாயாந்தர தோஷங்களை காட்டி அருளி
அத்தை ஸ்திரீகரித்தார் மேல் உள்ள பத்துக்களாலே
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி –தாமரை திருவடிகளில் சரணாகதி
நாதஸ்ய சரணம் பத்மம் சரணாயதி–அந்த திருவடிகளே ப்ராப்யம் –

பிரச்யே சேவா அனுகுணயாத் பிரபுமிக சடகே மம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனோ இத்யவாதித் த்ரீயே
அநந்ய ப்ராப்யா சதுர்த்தே சம்பவதித்தரை அப்ய அநந்யாத் உபாய –ரத்னாவளி -6-

—————————————

தயா நிக்நம் பக்தைர் அக விமதனம் பிரேம ஜனகம்
ஜகத் ரஷா தீக்ஷம் ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம்
சரண்யம் தீனானாம் ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கனக்ர்த்தம் பஞ்சம சதே–12–

தயா நிக்நம் –தயா ஊற்று அவன்
பக்தைர் அக விமதனம் –பக்தர்களுக்கு பிறர் பாபங்களை போக்கும் சக்தி அளிப்பவன்
பிரேம ஜனகம் –தன் பால் ஆதாரம் பெறுக வைக்கும் அழகன்
ஜகத் ரஷா தீக்ஷம் –ரக்ஷணத்தில் தீக்ஷை -மம விரதம் என்பவன் அன்றோ
ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம் –நினைப்பவர் ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹத்தில்-ஆழங்கால் படும்படி விஷயமானவன்
சரண்யம் தீனானாம் -தீனர்களுக்கு புகலிடம்
ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம் –ப்ரீதி காரித கைங்கர்யங்களை கொடுத்து அருளுபவன்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கன க்ர்த்தம் பஞ்சம சதே–பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி -அர்ச்சையில் சரண் அடையச் செய்வித்து
இங்கேயே இப்பிறப்பே கைங்கர்ய ரசம் அளிப்பவன் –

இத்தம் காருண்யா நிக்னம் துரித ஹர ஜனம் பிரேம தீவ்ரம் துகானாம்
லோகாநாம் ரஷிதாரம் ஸ்மருதி விஷயம் அஹம் பாவனா கோசாரம் ச
தீனானாம் சச்சரண்யாம் ஸ்வ ரஸ க்ருத நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே
பிராப்தம் சக்தி ப்ரதம் ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும் –ரத்னாவளி –69-

————————————

அநாதி அந்த ஆனந்த ஸ்வ ரஸ கருணா கண்ட ஜெனித
ப்ரேனோ துர் வியாபார பிரபதன விபாகார்ஹ உதித
தம் ஆச்சார்யோ பஜனம் சிர விரஹித ஸ்வாத மகதன
ஸ்ப்ருஹ அசக்திம் சஷ்டே முனிர சரணோ யாதி சரணம் —13-

ஸ்வ பாவிக கிருபையை ஐந்தாம் பத்தில் அருளிச் செய்து இசைவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும்
அவன் ஸ்வ பாவத்தை ஆறாம் பத்தில் அருளிச் செய்கிறார் – சரணாகத ரஷாக வைபவம் அருளிச் செய்கிறார் –
ஆதி மத்திய அந்த ரஹிதன் / அநாதி / ருசி ஜனகன் / ஸ்வ ரஸ கருணா கந்த ஜனகன் /
சிர விரஹித ஸ்வாத மகதன ஸ்ப்ருஹ அசக்திம்-க்ஷண காலம் விரஹமும் ஸஹிக்க ஒட்டாமல் –
கிருபையால் ஆச்சார்யர்கள் இடம் நம்மை சேர்த்து அருளுகிறான்

———————————————–

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் வைரிக தாகம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ சபூதி த்வயமாகாத்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக –14-

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் –ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் தானே நம்மை சேர்த்துக் கொள்கிறான்
வைரிக தாகம்-அகடிதா கடிநா சாமர்த்தியம் -விருத்த விபூதி நாயகத்வம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம் -அதிமானுஷ சேஷ்டிதங்களை காட்டி
நம் அஹங்கார மமகாரங்களை போக்குவிக்கிறான்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ –தறியமும் திட விசுவாசமும் பிறப்பிக்கிறான்
சபூதி த்வயமாகாத் –உபய விபூதி நாதன்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக -பொருள் அல்லாத நம்மை சத்தை பிறப்பித்து அருளுகிறான்

இத்தம் சத்வார கம்யம் ஸ்வயம் இதம் அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்
கர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை விகதித விஜநம் ஸ்வான் விதஸ் தேய தக்க்ஷம்
த்ர்யத்தினாம் நிதானம் கடக வச மஹாபுதி யுகமம் சடாரி
வைக்க த்யாஸ்யாப்யன் அர்ஹம் பிரபதன சுலபம் பிராஹா ஷஷ்ட்யயே சரணம் –ரத்னாவளி –80-

————————————–

ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன
பல அலாபாத் கின்னஸ் த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே
அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –15-

ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன–ஆறு அங்கங்களுடன் கீழே ஆறு பத்துக்களிலும் பிரபதனம் செய்த ஆழ்வார்
பல அலாபாத் கின்னஸ் –பலம் உடனே கிட்டாததால் மனஸ் சிதிலம் அடைந்து
த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே -ஆஸ்ரிதர்களை
அனிஷ்டங்களிலே உழன்று இருக்க விடாத ஸ்வ பாவனாய் இருக்க
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –மஹா விச்வாஸம் கொண்டு தனக்கு முன் தோன்றி ஸம்ஸலேஷிக்க பிரார்த்திக்கிறார்
இதுவே சங்கதி ஏழாம் பத்துக்கு -ஸ்வா பாவிக அநிஷ்ட நிவாரகன் தானே –

——————————————–

சகன் சத்ய சங்கன் உப சமித கர்ஹா பிரகதயன்
ஸ்வ கோப்த்ருத்வம் குப்தி க்ரமம அகில ஐந்து பிரணயிதம்
ஸ்ரீதா க்ரந்தச்செத்தா ஸ்மரண விசதச்சித்ர விபவ
ஸ்துதவ் யஞ்சன் ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக –16-

ஸ்ரீதா க்ரந்தச்செத்தா–ஆஸ்ரிதர் கண்ண நீரைப் போக்கி -மானஸ சாஷாத்காரம் பண்ணி அருளி
ஸ்மரண விசதச்சித்ர விபவ -ஒப்பில்லாத விரிந்த ஐஸ்வர்யங்களை நினைவூட்டி
ஸ்துதவ் யஞ்சன்-ஸ்தோத்ரங்களிலே மூட்டி அருளி
ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக-ஸ்தோத்ரம் பண்ணுபவர்களின் சகல பிரதிபங்கங்களையும் போக்கி அருளி

ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும் பிரசாமிதா ஜன தாகர்ஹனாம் ஸ்பஷ்ட ரஷாம்
வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
ஸ்வீயா கிரந்த சித்தோதகம் ஸ்மரண ஸூ விசதம் விஸ்மயார்ஹத் விபூதிம்
ஸ்தோத்ர யுஞ்சநாத்மாக ஸ்துதி கிருத்தகஹரம் சப்தமே அநிஷ்டாசோராம் –ரத்னாவளி -91-

————————————–

அதனிஷ்டான் பும்ஸாம் ஸ்வயம் உப ஜிஹீர்ஷான் அபி விபு
தத் இச்சாம் பஹ்யேஷு பிரசமயிது காம க்ரமவசாத்
நிஜேச்சேச்ச சம்சித்த தெரிவித்த சித் அசித் வஸ்து விததி
ஸ்ரீ தேச்சா வைச்சித்ரீவச இதி வதத்யஷ் தமஸதே -17-

ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி-அனைத்தும் சகல த்ரிவித சேதன அசேதன -தனது சங்கல்ப அதீனமாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் இச்சா பேதங்கள் படி தன்னையே அமைத்துகே கொள்கிறான்

——————————————

த்ருக்க்ஷாயாம் த்ரஸ்ய பிரபுரகநீ நிஸ் சங்க சுலப
ஸ்வ விஸ்லேஷ காந்தா ஸ்ரீத விகித புஷ்கல்ய விபவா
அபேஷாஸ் சாபேஷா ஸ்வ விதரனாஸ் சஜ்ஜோ ஹ்ருதி ரத
ஸ்வ தாஸ்யம் தன் நிஷ்டாம் தத்வதிமபிஹ பிரகதயன் –18-

பக்தி சித்த அனுசாரி – தன்னையே வழங்கும் வள்ளல் /

சித்தம் ஸூரி த்ரிக்க்ஷூ த்ர்ஷி விஷயமாவைத் நிஸ் ப்ரஹைரேவ லப்யம்
ஸ்வாநாம் விஸ்லேஷ போக்யம் ஸ்ரீத விஹித சமக்ரத்வ பூதிம் சடாரி
ஸ்வ அபேஷாஸ் அவ்யபேஷம் ஸ்வ விதரண பரம் ஹ்ருத்கதம் ஸ்பஷ்டயந்தம்
தாஸ்யம் ஸ்வ தாஸ்ய நிஷ்டாம் ததவதிம் அபி சாப்யஸ்தமே ஸ்வ இஷ்டா வசம் –ரத்னாவளி –102-

தரிசன சாஷாத்காரம் -ஸ்வப்னம் பூலே / பக்த ஸுலபன் / பக்தர்களை உடையவர் ஆக்கி மகிழ்பவன் /
வியாஜ்ய மாத்திரம் தன்னையே தந்து அருளுபவர் /

————————————————

அபீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்
பிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா
நிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே
நிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –19-

நிருபாதிக ஸூ ஹ்ருத் / நித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம் /

இத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் சிதில சிந்தும் பதித்வாத்
சம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்
விஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய
லஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ்

சர்வ பந்து / கிருபாவான் / குண சாகரம் / ரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி/

—————————————————

அபாவ்யகோ பந்து சிர க்ருத தயா சீல ஜலாதி
ஸ்வ சம்பந்தாத் கோப்தா ஸ்வ குண கரிம ஸ்மராணா பர
அசக்யோ விஸ்மர்தும் கடக முக விசரம்ப விஷயான்
சமுஞ்ஞானி சித்தி உன்முகாஸ் ஸமய இச்சான வஸரம் -20-

சர்வவித நிருபாதிக பந்து / தயாளு / சீலக்கடல் / சர்வ அவஸ்தையிலும் சர்வ ரக்ஷகன் /
குணக்கடலுள் அழுந்த வைத்து தன்னுடன் சேர்ப்பிப்பவன் /கடகர்கள் மூலம் சேர்த்துக் கொள்பவன் /

—————————

உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-

———————————–

கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-

ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-

அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன் /

———————————-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே /
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே /
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –

இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-

ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-

திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் /கருணா சாகரம் /
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் /
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து /
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்

—————————————

புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-

வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் /
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்

சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-

—————————–

சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-

இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-

————————————

மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-

இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப்பிரபந்தம் அருளப்பண்ணினான்

———————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -உபோத் காதம் –ஸ்ரீ உ வே .மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிகள்–

December 12, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

ஸ்ரீ யபதி கல்யாண குணங்கள் ஒவ்வொரு திருவாய் மொழியிலும் —
10 ஸ்லோகங்கள் உபோத் காதம் –
100 ஸ்லோகங்கள் -திருவாய்மொழி
10 ஒவ்வொரு நூற்றுக்கும்
1-4-திருவாய்மொழிக்கு-அஞ்சிறைய மட நாராய் -இரண்டு ஸ்லோகங்கள்
4-9-திருவாய்மொழிக்கு -நண்ணாதார் முறுவலிப்ப – மூன்று ஸ்லோகங்கள்
4-7-திருவாய்மொழிக்கு சீல மில்லா சிறிய னேலும் – இரண்டு ஸ்லோகங்கள்
ஆக 114 ஸ்லோகங்கள்
6 ஸ்லோகங்கள் -உப சம்ஹாரம்
ஆக மொத்தம் — 130 ஸ்லோகங்கள்
————————
முதல் ஸ்லோகம் –
சாரஸ் சாரஸ் வதா நாம் சடரி புபணிதி -சாந்தி ஸூத்தாந்த சீமா
மாயா மாயா மி நீபி ஸ்வ குண விததி-பிரபந்த யந்தீம் தயந்தீ
பாரம் பாரம் பரீதோ பவ ஜல திபவந் மஜ்ஜ நா நாம் ஜனா நாம்
ப்ரத்யக் ப்ரத்யக்ஷ யேந்த பிரதி நியதரமா -சந்நிதானம் நிதானம் -1-

சடரி புபணிதி–ஸ்ரீ சடகோபன் -திரு வாய் மொழி -எப்படிப் பட்டது –
1-சாரஸ் சாரஸ் வதா நாம்-சரஸ்வதி -வாக் இந்த்ரியங்களால் வெளிப்படட வேதம் -நா-வில் நின்று மலரும் ஞானக் கலைகள் -சாரம் -சார தமம்-
சாரம் -சாரஸ்வதானாம் -சரஸ்வதி -வாக்கு -சாரஸ்வது -வேதம் -இதிஹாச புராணங்கள் –
2-சாந்தி ஸூ த்தாந்த சீமா -எல்லை நிலம் -அளவற்ற பெருமை -சாந்தி -மனஸ் கலக்கல் இல்லாத -ஸூ த்தாந்த -அந்தப்புரம் ஏகாந்தம் -ஸ்தானம்
-ஏகாந்த புத்தி -நம் சித்தாந்தம் ஸூத்தாந்த சித்தாந்தம் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -திரு மடப்பள்ளி சம்ப்ரதாயம் -பரிசுத்தம் ஏகாந்தம் கலக்கம் இல்லாத
மடப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையில் மன்னியதே –
3-ஆயாமம் -வளர்ச்சி மேலும் மேலும் ஸ்வ குண விததி -முக்குண மயம்-தொடர்ந்து -வளர்ந்து -வரும் மாயா -பிரகிருதி
பந்தயந்தீம் கட்டிப் போட வல்லது -பந்த ஹேது-முக்குணங்களுமே –மம மாயா துரத்யயா
தயந்தீ -விநாசம் பண்ணும் -குளகம் நீர் பருகுவது போலே -எடுத்து பானம் பண்ணுவது போலே எளிதாக நீக்கும்
4–பாரம் பாரம் பரீதோ பவ ஜல திபவ- ந் மஜ்ஜ நா நாம் ஜனா நாம்
பாரம் -அக்கரை-பாரம்பரீத -படிப்படியாக -பாவ -சம்சாரம் ஜலதி சாகரம் -மூழ்கிக் கொண்டே இருக்கும் ஜனங்கள்
படிப்படியாக -பாரம் பவ ஜல மக்னனானாம் ஜனானாம் பாரம் -சம்சார சாகரம் -முழுகும் ஜனங்கள் –பாரம் -அடையும் கரை –
5-ப்ரத்யக் ப்ரத்யக்ஷ யேந்த பிரதி நியதரமா -சந்நிதானம் நிதானம் –
ரமா சந்நிதானம் -பெரிய பிராட்டியார் -கூடவே –
மேலும் நியதமாக-எல்லா இடங்களிலும் -என்றவாறு
-இவன் அவள் இல்லா இடத்திலும் இருக்கலாமே -அத்தை நிவர்த்திக்க பிரதி நியதமாக -என்கிறார் –
நிதானம் -ஆதார ஆஸ்ரய புதன் –
ப்ரத்யக்ஷமாக காட்டி அருளி -நக -நமக்கு -ப்ரத்யக் ப்ரத்யக்ஷ-அந்தராட்டிஹ்மா அந்தராத்மாகாவும் காட்டி அருளுகிறார் என்றபடி

———————

ப்ரஜ்ஞாக்யே மந்த சைலே பிரதித குண ருசிம்-நேத்ர யன் சம்ப்ரதாயம்
தத் தல்லப்தி ப்ரசக்தைர நுபதி விபுதை ரர்த்திதோ வேங்கடேச
தல்பம் கல்பாந்த யூன சடஜித் உபநிஷத் துக்த்த சிந்தும் விமத் நன்
க்ரத் நாதி ஸ் வாது காதா லஹ ரித ச ச தீ -நிர்க்கதிம் ரத்ன ஜாதம் –2-

ப்ரஜ்ஞாக்யே மந்த சைலே -அவன் மந்தர பர்வதம் -இவர் சதாச்சார்யர் உபதேசம் கொண்டு -அசைக்க முடியாத
-அது ஜடம் –இது ப்ரஜ்ஞா -மந்த -மத்து -சைலம் மலை
பிரதித குண ருசிம்– ஸ்திரமான பிரசித்தமான -கல்யாண குணங்களை அனுபவிக்கும் ஊற்றம் கொண்ட கயிறு
நேத்ர யன் சம்ப்ரதாயம் -சம்ப்ரதாயம் படி பூர்வாச்சார்யர் வியாக்யானம் கொண்டு -உபதேச பரம்பரை -நேத்ரம் -கண் என்றும் கயிறு என்றும் –
தத் தல்லப்தி ப்ரசக்தைர நுபதி விபுதை -விபுதர்கள் பிரயோஜனாந்த பார்த்தார்கள் அர்த்திக்க அவன் -இவர் இடம் அனுபதி -அநந்ய பிரயோஜனர்கள் அர்த்திக்க
அர்த்திதோ வேங்கடேச-
தத் தல்லப்தி-அந்த அந்த பாசுரங்களில் உள்ள கல்யாண குணங்களை காட்டித் தர அர்த்திக்க –
தல்பம் கல்பாந்த யூன -கல்பங்கள் முடிவில் நித்ய யுவ -யுவா ஆறாம் வேற்றமை சேர்ந்து யூன
-தல்பம் படுக்கை -சேஷ -சுத்த விமலா மனசா -வேத மௌலி-வேதாந்தம் –
சடஜித் உபநிஷத் துக்த்த சிந்தும் விமத் நன் -திருவாய் மொழி பாற் கடல் -திராவிட உபநிஷத் -துக்த சிந்து -பாற் கடல் -விமத் நன் -கடைந்து
க்ரத் நாதி ஸ் வாது காதா லஹரிதசசதீ -க்ரத் நாதி-முகம் பார்த்து அனுபவிக்கும் படி
நிர்க்கதிம் ரத்ன ஜாதம் — ரத்ன குவியல் -ரத்நாகரம் சமுத்திரம் –
கல்யாண குணங்களே அமிர்தம் –ரத்ன குவியல் -ரத்னாகாரம் -சமுத்ரம் -நிர்க்கதம் -ஆயிரம் அலைகள் -கிரந்தாதி -கோத்து-
ரத்னாவளி -அருளிச் செய்கிறார் -ஸ்வாது -அத்யந்த போக்யம்-பிரசக்தயதி –

———————– ——————————————————————————-

பாஞ்சாலீ காத்ர சோ பாஹ்ருத ஹ்ருதய வதூ வர்க்க பும்பாவ நீதயா
பத்யவ் பத்மா சஹாயே பிரணயிநி பஜத -ப்ரேயஸீ பாரதந்தர்யம்
பக்தி ஸ் ருங்கார வ்ருத்தயா பரிணமிதி முநேர் பாவ பந்த ப்ரதிம்நா
யோகாத் ப்ராகுத்தரா வஸ்தி திரிஹ விரஹோ தேசிகா ஸ் த்ரதூதா –3-

பாஞ்சாலீ காத்ர சோ பாஹ்ருத ஹ்ருதய வதூ வர்க்க பும்பாவ நீதயா-திரௌபதி சரீர அழகு -அபகரிக்க பட்ட மற்ற பெண்கள்
-புருஷ பாவம் அடைய -வன பர்வம் வேத வியாசர் -பத்ம பத்ராக்ஷி -பிராகிருத பெண்ணை பார்த்தே இப்படி என்றால் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபகாரம்
பத்யவ் பத்மா சஹாயே பிரணயிநி பஜத -அநபாயினி -சஹா அயம் -பிரயணித்வம் -கோவை வாயாள்-சத்தை ஒவ் ஒருவருக்கு ஒருவர் –
ப்ரேயஸீ பாரதந்தர்யம் -சர்வ பிரகாரத்தாலும் அவன் அதீனம்-ஸ்ரீ மான் -விடாமல் சேர்ந்து இருக்கும் -ஸ்ரீ யபதி என்பதே அர்த்தம் என்பர்
-ப்ரீதிக்கு விஷயம் அவள் பாரதந்தர்யம் -அளவற்ற பாரதந்தர்யம்
பக்தி ஸ்ருங்கார வ்ருத்தயா பரிணமிதி முநேர் பாவ பந்த ப்ரதிம்நா-புருஷருக்கு -அதுக்கு மேலே -விரக்தருக்கு -ஞானாதிகர் வேறே
-எப்படி ஸ்த்ரீ பாவம் -சிருங்கார விருத்திகள் -முதல் ஸ்ரீ யப்படி-காமுகன் வார்த்தை என்று அஞ்சிறைய மட நாரை-1-4- கேட்டு விலகினான் —
ஆனந்த பரிவாஹ திருவாய் மொழி – – பாஹ்ய ஹானியால்-போனானே -தூது விட்டு திர்யக் காலிலே விழுந்து –
சிருங்காரம் -அபி நிவேசம் -பரிணமித்த பக்தி -நிரூபாதிக பதி-மற்றவர் அனைவரும் ஸ்த்ரீ பிராயர்கள் -அவனும் பிரணயித்தவமும் காட்டி
-உன் மணாளனை எம்முடன் நீராட்டு -அவளும் கூடவே இருக்க –
ப்ரதிம்நா-பாவ பந்த கனத்தால் –
யோகாத் ப்ராகுத்தரா வஸ்தி திரிஹ விரஹோ தேசிகாஸ் த்ரதூதா -யோகம் மானஸ அனுபவம்
-ஸ்வரூப ரூப குண விபூதிகள் பத்தும் பத்துமாக அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதி பரிவாஹம்-வியோகம் துக்கம் விரஹம் ஆற்றாமை
– யோகாத் -ப்ராக் உத்தர அவஸ்தா -முன்னும் பின்னும் பகவத் அனுபவம் இல்லை -ஏற்ற நோற்றேற்க்கு என்ன குறை
-வீற்று இருந்து -திருவாயமொழி -நித்ய விபூதி அனுபவம் இங்கேயே அனுபவித்து -சூழ் விசும்பு அணி முகில் அடுத்து அன்றோ இது
இருந்து இருக்க வேண்டும் -தீர்ப்பாரை யாமினி வருவது அறியாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –
பக்ஷிகளை கடகராக தூது விடுகிறார் -தேசிகாஸ் த்ரதூதா-

———————————————————————————————————–

பாஷா கீதி ப்ர சஸ்தா பகவதி வசநாத் -ராஜ வச்சோபசாராத்
சா சாகஸ்த்ய ப்ரா ஸூதாத் விதி பரி ஜக்ருஹே பூமிகா பேத யோக்யா
யத் தத் க்ருத்யம் ஸ்ருதீ நாம் முனி கண விஹிதை-சேதி ஹாசை புராணை
ஸ்தத்ரா சவ் சத்த்வ ஸீம் ந சடமத நமு நே -சம்ஹிதா ஸார்வ பவ்மீ -4-

பாஷா கீதி ப்ர சஸ்தா பகவதி வசநாத்
-பாஷா -திராவிட -நிஷிதா -நகர்த்தவ்ய -வைதிக பரிக்ரீருஹீதம் இல்லை -வசனம் இருந்தாலும்
-ப்ரசாஸ்தா -கொண்டாடப் படுவதாய் இருக்கும் -எதனால் பகவத் வசனமாக இருப்பதால் -ஸ்வரூப ரூப குண விஷயம் என்பதால்
பகவதி ஏழாம் வேற்றுமை உருபு கொண்டு -மத்ஸ்ய புராணம் வசனம் -தார்மிக ராஜா -நரகம் போக -பகவத் குணம் பேசிய ப்ராஹ்மணன் நாடு கடத்தினாயே –
-ராஜ வச்சோபசாராத்-ராஜாவைஉபசாரம் பண்ணுவது போலே பண்ணத் தக்கது -ராஜாதி ராஜ சர்வேஸ்வரன் அன்றோ
-தங்கள் தங்கள் பாஷையில் கொண்டாடுவது போலே
சா சாகஸ்த்ய ப்ரா ஸூதாத் –
சாக அகஸ்த்யா -உப லஷிதம் பெருமை உடைய –சமஸ்க்ருதம் அறிய பெற்றவர் -மதி நலம் அருள பெற்றவர்
-அகஸ்ய பாஷா வபுஷா சரீரம் போலே வேதத்துக்கு –
விதி பரி ஜக்ருஹே பூமிகா பேத யோக்யா
-பல பல வேஷங்கள் பூமிகா பேதம் -ரெங்கே தாமினி -தசாவதாரம் நாடகம் என்பர் தேசிகன் –
பக்தர் பிரபன்னர் ப்ரேமத்தால் தாய் மகள் தன் பேச்சு -ஆழ்வார் -இவை பேச யோக்கியமான தமிழ் என்றபடி -தெளியாத மறை நூல்கள் தெளிய –
யத் தத் க்ருத்யம்- ஸ்ருதீ நாம் முனி கண விஹிதை-சேதி ஹாசை புராணை
-வேதங்கள் இதிகாசம் புராணங்கள் இருக்க -இவை உத்க்ருஷ்டம் -தேவதா பரத்வம் சொல்லாமல் -சாத்விக புராணம் –
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்ரீ ராமாயணத்தில் இடைச் செருகல் என்பர்
-இவற்றை விட ஸ்ரேஷ்டம்- திருவாய் மொழி -சத்வ குணமே பூர்ணமாக இருப்பதால் –
ஸ்தத்ரா சவ் சத்த்வ ஸீம் ந சடமத நமு நே –
சடகோப முனி சத்வ குணம் ஸீம்னா-உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் –
சம்ஹிதா ஸார்வ பவ்மீ –
விச்சேதம் இல்லாமல் -தொடர்ந்து -அந்தாதி ரூபமாக அருளிச் செய்யப் பட்டதால் –

—————————————————————————————————–

ஆதவ் சாரீர கார்த்தக்ரமமிஹ விசதம் விம்ச திரவத்தி சாக்ரா
சங்ஷேபோ அசவ் விபாகம் பிரத்யதி சருசாம் சாரு பாடோ ப பன்னம்
சமயக்கீதாநுபந்தம் சகல மநுகதம் சாம சாகா சஹஸ்ரம்
சம்லஷ்யம் ஸாபி தே யைர் யஜுரபி தசகைர் பாத்ய தர்வார சைஸ்ஸா –5-

ஆதவ் சாரீர கார்த்தக்ரமமிஹ விசதம்-தொடக்கத்தில்
விம்ச திரவத்தி சாக்ரா -அக்ரா–சார்வே -கண்ணன் -அருள் -முனியே வரை ஆறு சதகங்கள் –விம்சதி -முதல் 11 பாசுரங்கள்
சித்த த்விகம் சர்வ ஜகத் காரணத்வம் -அடுத்த 10- வீடு மின் முற்றவும் -சாதிய த்விகம் விசத்தமாக
சாரீர -545 ஸூ த்ரங்கள்-4 அத்தியாயங்கள் –16 பாதங்கள் – -2 த்விகம் – சித்தம் சாத்தியம் -ராக பிராப்தமான சாத்தியம் –
முமுஷு மோக்ஷம் இச்சா பிராப்தம் பலம் -உபாயம் விதேயம் -அத்தை தான் சாஸ்திரம் விதிக்கும் -ப்ரஹ்மம் ஸ்வரூபாதிகள் சித்தம்
-ஸ்ம்ருதிகள் சமன்வய அதிகாரம் -சம்யக் அன்வயம் -வேதாந்த வாக்கியங்கள் ப்ரஹ்மத்திடமே அன்வயம் -முதலில் சொல்லி அடுத்து
-வேத வருத்தம் -கபிலர் -ஹிரண்யகர்ப யோக ஸ்ம்ருதிகள் போல்வன -பாஹ்ய குத்ருஷ்டிகள் வாதம் -வேதாந்த விரோதமானவற்றை மட்டும் நிராகரித்து –
-அவிரோதம் -நிரூபித்தவற்றை திருடிகரித்து –வேதாந்த சாஸ்திரம் -சர்வ சரீரி அந்தர்யாமி என்பதால் சாரீரா சாஸ்திரம் -சாதனா அத்யாயம் -பல அத்யாயம் –
அர்த்த க்ரமம்-ஸ்ருத்தி -வேதாந்த வாக்கியங்களை திரட்டி –அதிகரண சாராவளி -சிரேஷ்டா
-ஸ்திதி சம்ஹாரம் உப லக்ஷணம் -காரண பூதன் -1-1- இதில் -7 அதிகரணங்கள் – தேஹீ -1-2- சரீரமாக கொண்டவன்
-ஸமஸ்த சேதன அசேதனங்களையும் -தாரகன் நியாந்தா சேஷி -ஸ்வரூபம் சங்கல்பத்தாலும் –
பிரயோஜகத்வம் -சரீரத்வம் -ஜவ த்வாராவாகவும் -அவ்யஹிதமாகவும் -சரீரி -தானே ஸ்வரூபேண தரிக்கிறான்
-சர்வம் கல்விதம் இதம் ப்ரஹ்ம-இதி சாந்த உபஷித -காரண கார்யம் பேதம் நிரூபிக்க பட்டதும் -இங்கே சரீர ஆத்ம பாவம் -தஜ்ஜலான் இதி –
ஸூ நிஷ்டா -தானே தனக்கு ஆதாரம் -அடுத்து -1-3-
நிரவதி மஹிமா -1-4 -அசைக்க முடியாத -சாங்க்யர்களாலும்-
2-1-அபார்த்த பாதகம் -விரோதங்கள் அற்ற –
2-2- ஸ்ரீத ஆப்த -ஆஸ்ரிதர்களுக்கு ஆப்தம் –
சங்ஷேபோ அசவ் விபாகம் பிரத்யதி சருசாம் சாரு பாடோ ப பன்னம்
21 சாகைகள் ரிக் வேதம் –மந்த்ரம் 4 பாதங்கள் -சமமான அக்ஷரங்கள் -சாரு பாடம்-அழகிய -கீதா பிரதானம் சாம வேதத்துக்கு -சேஷ யஜுர் லக்ஷணம் –
21 பாசுரங்கள் இவற்றை காட்டும்
சமயக்கீதா நு பந்தம் சகல மநுகதம் சாம சாகா சஹஸ்ரம்
1000 பாசுரங்கள் -சாம சாகா சகஸ்ரம் –
மநு -மந்த்ரம் -சாந்தோக்யம் கொண்ட சாம வேதம் -ப்ரஹ்ம வித்யைகள் கொண்டது -இசையுடன் கூடிய திருவாய் மொழி
சம்லஷ்யம் ஸாபி தே யைர் யஜுரபி –
யஜுவ்ர் வேத லக்ஷணம் -ரிக் ஸ்துதி பிரதானம் -1300 ஸூ க்தங்கள் கொண்ட ரிக்வேதம் யோகத்தால் ஆராதிக்கும் தேவதைகளை ஸ்துதி பண்ணும்
-சாம வேதம் காண பிரதானம் -யகாதி அனுஷ்டானம் வேத பிரயோஜனம் -அக்னி ஹோத்ரம் தொடக்கமான யாகாதிகள் செய்வதே வேதாத்யயனம் செய்வதின் பலம்
-ஆத்மசமர்ப்பணம் நிரூபித்து திருவாய் மொழி யஜுவ்ர் வேத சாம்யம் -அபிதேயம் -சப்த சமுதாயார்த்தம் அபிதானம் –
தசகைர் பாத்ய தர்வார சைஸ்ஸா-
பாத்ய அதர்வா -அதர்வண -மிகுந்த ரசங்கள் கூடிய திருவாய் மொழி -8 சாகைகள் அதர்வண வேதத்தில் -அஷ்ட ரசங்கள் -சாந்தி ரஸா பிரதானம்
-ஸ்ருங்காரா தொடங்கி-நவ ரசம் -சாந்தி ரசம் அபிநயித்து காட்ட முடியாது அஷ்ட ரசம் என்பர் -பரத நாட்டியம் -ஒன்பதாவது சாந்தி சேர்த்து -சமதமாதிகள் சாந்தி –
வீரம் உத்ஸாகம் -பூரணமான திருவாய்மொழி-சாந்தி கிட்டும் –

————————————————————————————————-

விஷய சங்க்ரஹம் சாதிக்கிறார் -மேல் ஐந்து ஸ்லோகங்களால் –
முதல் நான்கு பத்துக்கள் -சாஸ்த்ரா பிரதிபாத்யர்த்தங்கள் –

ப்ராஸ்யே சேவா நு குண்யாத் ப்ரபு மிஹ சதிகே சமம்ஸ்தே முக்தேருபாயாம்
முக்த ப்ராப்யம் த்வ தீயே மு நிரநுபுபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வோ பாயாபா வவ் ஸூ ப ஸூ ப கத நோ நித்யா வா தீத்த்ருதீயே
அநந்ய ப்ராப்யஸ் சதுர்த்தே சம பவ திதரை ரப்ய நன்யாத் யுபாய –6-

ப்ராஸ்யே -சதகே-முதல் சதகத்தில்-
சேவா நு குண்யாத் ப்ரபு மிஹ -பிரபுவை -அசாதாரண சப்தம் -பிரபாவதி -சர்வ நியாந்தா -பல பிரதானம் -அஹம் சர்வ எஜ்ஜாம் பிரபு ரேவச –
சமம்ஸ்தே முக்தேருபாயாம் -அமம்ஸத்த -தெளிவாக அனுசந்தித்தார் -முக்தேர் உபாயம் -என்பதற்கு விதேயம் பிரபு -எது இல்லா விட்டால் எது உண்டாகாது அது விதேயம் –
ஹேது -சேவா அணுகுண்யாத் -சேவ்யத்வம் இருப்பதால் -சேவைக்கு உரியவனாய் இருப்பதால் –
பத்து குணங்கள் -பரத்வம் ஆசிரயணீத்வம் –போக்யத்வம் ஆர்ஜத்வம் சாத்மீக போக பிரத்வம் நிருபாதிக ஸுஹார்த்தம் இத்யாதி –
முக்த ப்ராப்யம் -அவனே முக்த பிராப்யம்
த்வ தீயே-இரண்டாம் சதகத்தில்
மு நிரநுபுபுதே -அணு சந்தானம் -அநு புபுதே தொடர்ந்து சிந்தனை பண்ணி
போக்யதா விஸ்தரேண-போக்யம் தானே ப்ராப்யம் -உபாயம் பண்ணி பய வஸ்துவை அடைவோம் –
ஹேது போக்யத்வம் -வாயும் திரை -வியதிரேகத்தால் நிரூபிக்கிறார் -முதலில் -க்ஷணம் காலமும் விட்டு பிரிய முடியாதே -சமான துக்கம் -லலித உத்துங்க பாவம் –
திண்ணன் வீடு -நம் கண்ணன் -பரத்வம் சொல்லி -நம் சொல்லி ஸுலப்யம் எல்லை -கோபால கோளரி –மூன்று அடிகள் பரத்வம் ஒரே சப்தம் எளிமை –
அடியார்களுக்கு கொடுப்பான் போக்யத்தை தேனும் பாலும் கன்னலும் ஓத்தே –ஆடி ஆடி -போகம் சாத்திமிக்க
-அந்தாமத்து -தனது பேறாக இதில் -ஊனில் வாழ் உயிர் ஆழ்வாருக்கு பேறு -அந்தாமத்து அன்பு இவனுக்கு புருஷார்த்தம் -அதிசங்கை பண்ண
மா ஸூ ச என்கிறார் ஆழ்வார் -வைகுந்த -உன்னை நான் பிடித்தேன் கோல் சிக்கெனவே -என்கிறார் –
சம்பந்திகள் அளவும் -கேசவன் தமர் –எமர்-இருவரும் இதனால் விரும்ப –
அணைவது -பரம பத முக்த ப்ராப்ய போகம் -தாய் தந்தை படுக்கையில் அஹம் ப்ரஹ்மாஸ்மி இங்கே போதராய்
-அகஸ்திய பாஷையில் கலந்து பேசி அனுபவித்து -தனக்கே யாக அதுவும் –
ப்ராப்யத்வோ பாயாபா வவ்
ஸூ ப ஸூ ப கத நோ நித்யா வா-அழகிய பாவானத்வம் திவ்ய மங்கள விக்ரஹமே
தீத்த்ருதீயே சதகம் -மூன்றாம் பத்தால்-திவ்ய மங்கள விக்ரஹத்தால் உபாயம் உபேயத்வம்
முடிச்சோதி –தொடங்கி -அருளிச் செய்தார் இத்தையே மூன்றாம் பத்தால்
அநந்ய ப்ராப்யஸ் -அவன் ஒருவனையே பற்ற -பரம பிராப்யம்
சதுர்த்தே -நாலாம் பத்தால் -மற்றவை அல்பம் அஸ்திரம்
ஒரு நாயகமாய் -தொடங்கி –
சம பவ து -இதரை ரப்ய நன்யாத் யுபாய -மேலே அவனை அநந்ய ப்ராபகம்-5-10 பத்தால் -அவனே அநந்ய உபாய பூதன் -என்று சாதித்து அருளுகிறார் –

—————————————————————————-

தேவ ஸ்ரீ மான் ஸ்வ சித்தே கரணமிவ வத ந்நேகமர்த்தம் ஸஹஸ்ரே
சேவ்யத் வாதீன் தசார்த்தான் ப்ருதஸிக சதகை ர்வக்தி தத் ஸ் தாப நார்த்தான்
ஐகை கஸ்யாத் பரத்வா திஷூ தசத குணே ஷ்வாய தந்தே ததா தே
தத் தத் காதா குணா நாம நு வித ததி தத் பஙக்த்ய பங்க்தி சங்க்யா-7-

ப்ராப்ய ப்ராபக ஐ க்யமே -பிரபந்த பிரதிபாத்ய குணம் -அனந்த வேதங்களுக்கும் த்வத் பிராபியே ஸூயமேவ உபாயா சுருதிகள் கோஷிக்குமே
தேவ ஸ்ரீ மான் -சகல ஜகத்தையும் நிரூபாதிக்க சேஷி -ஸ்ரீ மான் -தேவ -சாமான்ய -ஸ்ரீ மான் -விசேஷணம்
ஸ்வ சித்தே -தன்னை பலமாக அடைய
கரணமிவ -சாதனம் -உபகரணம் -தானே என்று
வத ந்நேகமர்த்தம் ஸஹஸ்ரே-ஒரே பொருளை அறிவித்து கொண்டு -வதன் ஏகம் அர்த்தம் –
சேவ்யத் வாதீன்- தசார்த்தான் –
ப்ருதஸிக சதகை ர்வக்தி தத் ஸ்தாபநார்த்தான் -ஸ்தாபனம் -ஸ்தாபிக்க வேண்டிய குணங்கள் -பத்தும்
சேவ்யத்வம் போக்யத்வம் திவ்ய மங்கள வி க்ரஹத்வம் -மற்றவை அல்பம் அஸ்திரம் —
பிராபத்தான ஸூ லபன் –அநிஷ்ட நிவ்ருத்தி –சிந்தா அனுவ்ருத்தி -இஷ்டா -நிருபாதிக்க பந்து -அர்ச்சிராதி போன்ற பத்தும்
இவற்றை விஸ்தீரத்து நூறு -பரத்வம் /ஆசிரயணீய சாமான்யன் ஸுலப்யம் அபராத சஹத்வம் -ஸுசீல்யம் -ஸூராத்யன்
-அதி போக்யத்வ ஆராதனத்வம் -ஆர்ஜவம் -சாத்திமிக்க போக பிரதத்வம் -உதார பாவன் –
க்ஷணம் விரக /இப்படி நூறு குணங்கள் காட்டி அருளி –
ஐகை கஸ்யாத்- பரத்வா திஷூ தசத குணேஷ்-பரத்வாதி தச குணங்களை
வாயதந்தே ததா தே -தத் தத் காதா குணா நாம
அநு வித ததி தத் பஙக்த்ய பங்க்தி சங்க்யா–1000 பாசுரங்களில் –
இவற்றை 1000 குணங்களாக வெளிப்படுத்தி –
நி ஸ் சீமா கல்யாண குணங்கள் / முழு நலம் -ஞானானந்த /அனந்த லீலை விஷயம் /சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் தன் ஆதீனம்
/விஸ்வரூபியாத் -கரந்து எங்கும் பரந்துளன் -/சர்வாத்மாபாவம் /ஸ்திர சுருதி சித்தன் -சுடர் மிகு சுருதி –
சர்வ வியாபி -பரத்வத்தை விஸ்தீரத்து -பரன் அடி மேல் குருகூர் சடகோபன் –

—————————————————————————————————–

சேவ்யத்வாத் போக்யபாவாத் ஸூ பத நு விபவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ் ரேயஸ் தத்தேதுதா நாத் ஸ் ரித விவிச தயா ஸ் வாஸ்ரித நிஷ்ட ஹ்ருத்த்வாத்
பக்தச்சந்தா நு வ்ருத்தே நிருபதிக ஸூ ஹ்ருத் பாவத சத் பதவ்யாம்
சாஹாயாச்ச ஸ்வ சித்தே ஸ்வயமிஹ கரணம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி–8-

சேவ்யத்வாத் -சேவா யோக்யத்வாத்
போக்யபாவாத் –
ஸூ பத நு விபவாத்-திவ்ய மங்கள விக்ரஹம்
சர்வ போக்யாதிகத்வாத்
ஸ் ரேயஸ் தத்தேதுதா நாத் -தத் ஹே து -தானே உபாயம் உபேயம்
ஸ் ரித விவிச தயா-ஆஸ்ரிதர் வசப்பட்டவன் ஆறாம் பத்து
ஸ் வாஸ்ரித நிஷ்ட ஹ்ருத்த்வாத் -ஆஸ்ரிதர் அநிஷ்டங்கள் அபகரிப்பவன் -ஏழாம் பத்து
பக்தச்சந்தா நு வ்ருத்தே ஆஸ்ரிதர் -விருப்பம் அனுகுணமாக தான் -தமர் உகந்த செயல்கள் -செய்பவன்
நிருபதிக ஸூ ஹ்ருத் பாவத -நிருபாதிக பந்து ஒருவனே
சத் பதவ்யாம் -சாஹாயாச்ச -அர்ச்சிராதி வழி துணை பெருமாள்
ஸ்வ சித்தே ஸ்வயமிஹ கரணம்-
ஸ்ரீ தர ப்ரத்யபாதி –நிரூபிக்கப் பட்டான்

———————————————————————————————————–

ப்ரூதே காதா சஹஸ்ரம் முரமதந குண ஸ் தோமா கர்பம் மு நீந்த்ர
ப்ரத்யே கஞ்சாத்ர காதா பிரதித விபு குணா ஸ் யஷ்ட மத்யக்ஷ யாம
தத்ரா சங்கீர்ண தத் தத்த சக குண சதா ஸ்தாபநவ் சித்ய யுக்தான்
ஐதம் பர்யா வருத்தாந கணித குணி தான் தத் குணா நுதக்ருணீ ம –9-

ப்ரூதே காதா சஹஸ்ரம் -அருளிச் செய்கிறார் ஆயிரம் பாசுரங்கள்
முரமதந குண ஸ் தோமா கர்பம் -முரன்-நிரசித்த முர மதன -ஸ்தாமம் சமுதாயம் -கல்யாண குணங்களை -தன்னுள் அடக்கி
மு நீந்த்ர–பகவத் குண -மனன சீல -சிரேஷ்ட
ப்ரத்யே கஞ்சாத்ர காதா
பிரதித விபு குணா ஸ் யஷ்ட மத்யக்ஷ யாம -பிரத்யக்ஷமாக நாம் தேசிகன் காண்கிறார் -கௌரார்த்த பஹு வசனம் -ஸ்பஷ்டமாக கண்டார் -சாஷாத் கரித்து
தத்ர அசங்கீர்ண தத் தத்த சக குண-அனுபவித்த குணங்களை -தசக குணங்கள் நூறு -பரத்வம் —அபராத சஹத்வம் போல்வன
-அசங்கீர்ணம் புனர் யுக்தி இல்லாமல் -தத்ர -இப்படி அனுபவித்த அவற்றை
சதா ஸ்தாபநவ் சித்ய யுக்தான் -ஸ்தாபிக்க ஓவசித்தம் யுக்தான் —
ஐதம் பர்யா வருத்தா ந -தன்னைத் தானே -காட்டி -வேறு ஒன்றை எதிர்பார்க்காமல் –
அகணித குணிதான்-எண்ணிக்கை இல்லாத -பெருமை ஒவ் ஒன்றுக்கும்
தத் குணா நுதக்ருணீ ம -வெளிப்படுத்தி அருளுகிறார் -உத்க்ரஹணம் -நாம் அனுபவிக்க –

———————————————————————————————-

இச்சா சாரத்ய சத்யாபித குண கமலா காந்த கீதான் த சித்ய
ச்சுத்தாந்தாசாரா ஸூ த்தை ரியம நக குண க்ரந்தி பந்தா நு பத்தா
தத்தாத் ருக்தாம் பர்ணீ தடகத சடஜித் த்ருஷ்ட சர்வீய சாகா
காதா தாத்பர்ய ரத்நா வலி சில பயோத் தாரிணீ தாரணீ யா -10-

இச்சா சாரத்ய சத்யாபித குண -இச்சையால் சாரத்யம் பண்ணிய -சத்யாபிதா குணங்கள் -அதனாலே -வெளிப்பட்ட
கமலா காந்த கீதான் த சித்ய -ஸ்ரீ கீதையில் -ஸ்ரீ யபதி -சரம ஸ்லோகத்தில் -மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் -இவரே சாக்ஷி —
ச்சுத்தாந்தாசாரா ஸூ த்தை-அந்தப்புர -பரமை ஏகாந்திகளுக்கு -சாத்திக் கொள்ள –
ரியம நக குண க்ரந்தி பந்தா நு பத்தா-இயம்-இந்த -அநக குணம் -ஹேயப்ரத்ய நீக-முகம் பார்த்து கோக்கப் பட்ட
தத்தாத் ருக்தாம்பர்ணீ தடகத -அவனுக்கு ஒத்த பெருமை -தாம்ரபரணீ தடம் -சேர்ந்த ஆழ்வார் -பொரு நல் -சங்கணி துறைவன் -வடகரை –
சடஜித் த்ருஷ்ட சர்வீய சாகா-சாஷாத் கரிக்கப் பட்ட -த்ருஷ்டா -விசுவாமித்திரர் காயத்ரி மந்த்ரம் கண்டால் போலே -ரிஷிகள் மந்த்ர த்ரஷ்டாக்கள்-
சர்வீய சாகை -அனைவரும் அதிகரிக்கும் படி —
காதா தாத்பர்ய ரத்நா வலி -தாத்பர்ய ரத்னங்களால் கோக்கப் பட்ட மாலை
அகில பயோத் தாரிணீ தாரணீ யா –சாத்திக் கொள்ள -நெஞ்சுக்கு உள்ளும் -கொண்டு –அகிலம் சம்சாரம் -தாண்டுவிக்க -உத்தாரணம்

——————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-6-

November 19, 2016

அவாப்த சமஸ்த காமனாய் -பரிபூர்ணனான -ஸ்ரீ யபதியாய் இருக்கிற ஈஸ்வரனை ஷூத்ரனும் ஷூத்ர உபகரணனுமாய் இருக்கிறவன்
ஆஸ்ரயிக்கைக்கு உபாயம் உண்டோ -என்னில்
இவன் இட்டது கொண்டு வயிறு நிறைய வேண்டும்படி குறை இல்லாமையாலே அந்த பூர்த்தியும் ஸ்வா ராததைக்கு உறுப்பு
ஸ்ரீ யபதித்வமும் தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் சீலாதிகளுக்கு அடியாகையாலே அதுவும் ஸ்வா ராததைக்கு உடலாகக் கடவது
வித்த அவ்யய ஆயாசங்கள் இல்லாமையாலும் -பிரத்யவாய பிரசங்கம் இல்லாமையாலும் – -த்ரவ்யாதி கார்யங்கள் யுடைய விசேஷநியதி இல்லாமையாலும்
த்வத் அங்க்ரி முத்திச்ய —யா க்ரியா-பத்ரம் புஷ்பம் -அந்ய பூர்ணாத் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஆஸ்ராயணம் ஸூகரம் என்கிறார் –

———————————————————————————————–

ஆஸ்ரயிப்பார்க்கு த்ரவ்ய நியதி இல்லை என்கிறார் –

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசனைப்
ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை
பரிவு என்று துக்கமாதல் -பஷபாதம் ஆதல் –
உபாசகனுக்கு துக்கேன ஆஸ்ரயிக்க வேண்டியிருக்குமதுவும் -ஆஸ்ரய ணீ யனுக்கு ஹீயம்-
குருவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே பஷபதித்து -லகுவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே நெகிழ்ந்து இருத்தல் செய்யுமதுவும் ஆஸ்ரயணீய வஸ்துவுக்கு ஹேயம்-
இவை இல்லாமையாலே ஹேய ப்ரத்ய நீகன்-என்கை-
ஹேய ப்ரத்ய நீகதை புக்க விடத்தே கல்யாண குணங்களும் புகக் கடவதாகையாலே இது அதுக்கும் உப லஷணம்
ஈசனை –
இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது –
இழவு பேறு தன்னதாம் படி இருக்கும் சம்பந்தத்தை யுடையவனை
ஆஸ்ரயணீயனும் ப்ராப்யனும் ஆகையிறே-உபய வாக்யத்திலும் நாராயண சப்த பிரயோகம் பண்ணிற்று
அல்லாதார் துராராதர் ஆகையாலே அநாஸ்ரயணீயர் –

பாடி –விரிவது மேவலுறுவீர்
சம்சாரான் முக்தராய் சமஸ்த கல்யாண குணாத்மகனை அனுபவிக்கையாலே -அவ்வனுபவத்துக்குப் போக்குவீடாக
எதத் சாம காயன் நாஸ்தே -என்கிறபடியே பாடி விஸ்ருதராகை யாகிற சம்பத்தை பெற வேண்டி இருப்பீர்
இந்த கனத்த பேற்றுக்குச் செய்ய வேண்டும் கிருஷி என் என்னில்
பிரிவகையின்றி
பிரிவாகிற வகை இன்றி
நினைந்து நைந்து -சூட்டு நன் மாலைகள் -என்கிறபடியே விலஷணர் ஆஸ்ரயிக்கும் அவனை நாம் ஆஸ்ரயிக்கை யாவது என் -என்று
அகலுகைக்கு ஒரு வகையிட்டுக் கொண்டு அகலாதே
நன்னீர்த்
ஒரு கந்தத்தாலும் உபஸ்கரியாத வெறும் நீர்
தூயப் –
அக்ரமாகப் பிரயோகித்து
-புரிவதும்
நீங்கள் அருள் கொடையாகக் கொடுக்குமதுவும்
புகை பூவே
அகில் புகை -கரு முகைப் பூ என்று விசேஷியாமையாலே ஏதேனும் புகையும் ஏதேனும் புஷ்பமும் அமையும்
இது ஸ்வாராததையைப் பற்றிச் சொல்லிற்று
இவனைப் பார்த்தால் -எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டும் -என்றும் -நாடாத மலர் நாடி –
தூய நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு -என்றும் சொல்லக் கடவது இ றே
அவனைப் பார்த்தால் -கள்ளார் துளாயும்-இத்யாதிகளில் சொல்லுகிற மாத்ரமே அமையும்
ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய வி நிவேதயத் -என்கிற விதியாலே தவிருகிறதும் -ப்ரேம பரவசனாய்ச் சென்று
பறிக்கிறவன் கையில் முள் பாயாமைக்காக என்று பட்டர் அருளிச் செய்வர்
ஸ்ரீ வராஹ புராணத்திலே ஸ்ரீ வராஹ நாயனாருக்கு முத்தக்காசை அமுதுபடியாக சொல்லிற்று –

———————————————————

த்ரவ்ய நியதி இல்லாமையே அன்று -அதிகாரி நியமும் இல்லை என்கிறார் –

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

மதுவார் தண்ணம் துழாயான் –
பூவே -என்றது கீழ் -மதுவார் -என்று தொடங்கிற்று இதில் -அந்தாதிக்கு சேரும்படி என் என்னில் –
பூவாகில் மதுவோடு கூடி இருக்கையாலே சேரும் -என்று சொல்லுவர் தமிழர் –
ஐஸ்வர்ய ஸூசகமாய் திருக் குழலின் ஸ்பர்சத்தாலே மதுஸ் யந்தியான திருத் துழாயை யுடையவன் –
சர்வேஸ்வரத்வ லஷணம் இது வி றே
ஐஸ்வர் யமும் போக்யதையும் இருக்கிற படி
-முது வேத முதல்வனுக்கு
இவ்வொப்பனை அழகை அனுபவித்து ஏத்தப் புக்கு ஷமர் அன்றிக்கே -இவ்விஷயத்தை பேசும் போது
அபௌரு ஷேயம் ஆகையாலே நித்தியமான வேதமே யாக வேண்டாவோ -என்கிறார் –
வேத முதல்வன் ஆகையாவது -சாஸ்திர யோநித்வாத் -என்கிறபடியே வேத பிரதிபாத்யன் என்கை
திருத் துழாய் மாலையாலே அலங்கருதன் என்கைக்கு மேல் இல்லை சர்வாதிகன் என்கைக்கு
அதுக்கு மேலே ஓன்று இ றே வேதைக சமதிகன்யன் என்னுமது

எதுவேது என் பணி என்னாது அதுவே
வேத முதல்வனுக்கு பணி எது -என் பணி ஏது-என்னாததுவே
நித்ய ஸூ ரிகள் அன்றோ அவனுக்கு சத்ருசர் -நாம் செய்யுமது ஏது -என்று கை வாங்காது ஒழிகை
அந்தரங்க வ்ருத்தியோடு பஹிரங்க வ்ருத்தியோடே வாசி இன்றிக்கே அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று இருக்கை என்னவுமாம்
ஆட்செய்யுமீடே
ஆட்செய்கைக்கு அதிகாரம் –

——————————————————–

கீழ் இரண்டு பாட்டிலும் சொன்ன குணங்களை அனுசந்தித்து -தாம் அதிகரித்த கார்யத்தை மறந்து அவன் பக்கல் தம்முடைய
மநோ வாக் காயங்கள் ப்ரவணமாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

ஈடும் யெடுப்புமிலீசன் –
ஜன்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டன் என்று ச்வீகரித்தல் -அபக்ருஷ்டன் என்று உபேஷித்தல் செய்யாத சர்வேஸ்வரன்
ஜாத்யாதிகள் பார்க்க விறகு இல்லையே
சம்பந்தம் சாதாரணம் ஆனபின்பு ஆரை விடுவது
மாடு விடாது என் மனனே
அவன் பரிசரத்தை விடுகிறது இல்லை என் மனஸ்சானது
பிரயோஜனத்தைப் பற்றிக் கிட்டிற்று ஆகில் இ றே பலத்து அளவிலே மீளுவது
நான் அதிகரித்த காரியத்துக்கு நெஞ்சு ஒழிகிறது இல்லை
உம்முடைய அஹ்ருதமான உக்தியே அமையாதோ எங்கள் ஹிததுக்கு என்ன
பாடும் என் நா அவன் பாடல்
என்னுடைய வாக்கானது அவனுடைய குண பிரதிபாதிதமான காதா விசேஷங்களைப் பாடா நின்றது
உம்முடைய ஹஸ்த முத்ரையே அமையாதோ எங்களுக்கு அர்த்த நிச்சயம் பண்ணுகைக்கு என்ன
ஆடும் என் அங்கம் அணங்கே
என்னுடைய சரீரமும் தைவாவிஷ்டரைப் போலே ஆடா நின்றது
தம்முடைய கரணங்கள் தனித் தனியே மேல் விழக் கண்ட ப்ரீதியாலே -என் மனன் -என் நா -என் அங்கம் -என்று உகக்கிறார் –

———————————————————————

கீழ்ச் சொன்ன ப்ராவண்யம் காதாசித்கம் அன்றிக்கே நித்யமாய்ச் செல்லா நின்றது என்கிறார் –

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினானே –1-6-4-

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழி படும்-
கீழ் அணங்கு என்றதுக்கு அர்த்தம் இங்கே தெரிவித்தார் இ றே
தைவாவிஷ்டரைப் போலே ஆடா நிற்கிற என் சரீரம் அவன் பக்கலிலே வணங்கி வழி படா நின்றது
வழி படுகையாவது -அதுவே யாத்ரையாகச் செல்லுகை-

ஈசன் பிணங்கி யமரர் பிதற்றும் –
அமரர் என்கிறது -நித்ய ஸூ ரிகளை -ஏக ரசர் ஆனவர்களை விபிரதிபத்தி உண்டோ என்னில்
தாம்தாம் அனுபவித்த குணங்களில் ஏற்றத்தை -நான் முந்துறச் சொல்ல -நான் முந்துறச் சொல்ல -என்று
ஒருவருக்கு ஒருவர் பிணங்கா நிற்பார்கள்
பிதற்றும் –
ஜ்வர சந்நிபரைப் போலே கூப்பிடா நிற்கை

குணங்கெழு கொள்கையினானே-ஈசன்
ரத்நாகரம் போலே ஏவம் விதமான குணங்கள் வந்து சேருகைக்கு ஆஸ்ரயமாய் உள்ளான் என்னுதல்-
இக்குணங்கள் வந்து கெழுமுகையை ஸ்வ பாவமாக யுடையான் என்னுதல்

பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினானே-ஈசனைக் கண்டு -அணங்கு என ஆடும் என் அங்கம்
-வணங்கி வழி படும்பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினான் கிடீர் என்கிறார் –
நித்ய ஸூ ரிகளுடைய யாத்ரையே தம்முடைய கரணங்களுக்கும் யாத்ரையாய் செல்லா நின்றது என்கிறார் –

——————————————————-

திரியவும் தாம் அதிகரித்த கார்யத்தே போந்து -அவன் அநந்ய பிரயோஜனருக்கு நிரதிசய போக்யனாம் என்கிறார் –

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
-விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

கொள்கை கொளாமை இலாதான்-
ஆஸ்ரிதரோடு பரிமாறும் இடத்தில் அவர்கள் பக்கல் தாரதம்யம் பாராதவன்
அதாவது -இவன் உத்க்ருஷ்டன் -அந்தரங்க வ்ருத்தியைக் கொள்வோம்
இவன் அபக்ருஷ்டன் -புறத் தொழிலைக் கொள்ளுவோம் -என்னுமவை இல்லாதவன் –
எள்கல் இராகம் இலாதான் –
அடிமை கொள்ளும் இடத்தில் வாசி இல்லையே யாகிலும் அவ்வாசியை நினைத்து இருக்குமோ -என்னில்
ராக த்வேஷ விபாகம் இன்றிக்கே எல்லார்க்கும் ஒக்க வத்சலனாய் இருக்கும்
ஆனால் இவன் தன்னைக் கிட்டினார் பக்கல் பார்க்குமது ஏது என்னில்
-விள்கை விள்ளாமை விரும்பி –
விள்கை -பிரயோஜநாந்தரங்களைக் கொண்டு விடுகை –
விள்ளாமை -அநந்ய பிரயோஜனனாகை
விரும்பி -ஆதரித்துப் பார்த்து
-உள் கலந்தார்க்கு ஓர் அமுதே-
அநந்ய பிரயோஜ நற்கு நிரதிசய போக்யனாய் இருக்கும் –

————————————————————–

நிரதிசய போக்யனான அவனை உபாயமாகப் பற்றி ப்ரயோஜ நாந்தரங்களை கொண்டு அகலுகிறவர்களை நிந்திக்கிறார்

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

அமுதம் அமரர்கட்கு ஈந்த –
சாவாமைக்கு பரிஹாரம் பண்ணித் தர அமையும் -என்று இருக்கிறவர்களுக்கு –
ஷூத்ரத்தை அபேஷித்தார்கள்-என்று இகழாதே கடலைக் கடைந்து அம்ருதத்தை கொடுத்த பரம உதாரன்
நிமிர் சுடராழி நெடுமால்
நால் தோள் அமுது -என்றும் -அமுது என்றும் தேன் என்றும் -தம்முடைய அம்ருதம் இருக்கிறபடி
மிக்க தேஜஸ்சை யுடைத்தான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
இவர்கள் அபேஷித்தத்தை தலைக் கட்டிக் கொடுத்த ப்ரீதியால் வந்த புகர்திரு வாழி யிலே தோற்றி இருக்கை-
பிரயோஜ நாந்தரமே யாகிலும் நம்மைக் கொண்டு பெறப் பெற்றோமே -என்று இவர்கள் பக்கல் வ்யாமோஹத்தை யுடையவன் என்னவுமாம்

அமுதிலும் ஆற்ற இனியன்
இவர்கள் போக்யம் என்று இருக்கிற அம்ருதத்தில் காட்டில் நிரதிசய போக்யன் ஆனவன்
வாசி அறிவார்கள் ஆகில் அவனையே கிடீர் பற்ற அடுப்பது என்கை -பிள்ளை திருவழுதி நாடு தாசர் வார்த்தை –
அற்ற இனியன்
மிகவும் இனியன்
நிமிர் திரை நீள் கடலானே
அவ்வம்ருதம் படும் கடலிலே கிடீர் அவன் சாய்ந்து அருளுகிறது
தன் வாசி அறியாதே இருப்பார்க்கும் எழுப்பிக் கடைவித்துக் கொள்ளலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவன்
நிமிர் திரை
அவனோட்டை ஸ்பர்சத்தாலே கொந்தளித்த திரை
நீள் கடல்
தாளும் தோளும் முடிகளும் -என்கிறபடியே அசங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு இடம் போந்து இருக்கை –

—————————————————–

அவன் போக்யதை நெஞ்சில் பட்டால் -பிராப்தி அளவும் செல்ல
சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்து காலத்தைப் போக்குங்கோள் என்கிறார்

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
சத யோஜன விச்தீர்ணமான கடல் -அகழ்-
அது மிகை என்னும்படி அரண் மிக்க ஊர் –
அவை மிகை என்னும்படி ராஷசன் ஆனவன் மிடுக்கு
-தோள்கள் தலை துணி செய்தான்
அகப்பட்டான் இ றே -என்று கொன்று விடாதே தோள்களைக் கழித்து -தலைகளை க்ரமத்தில் அறுத்து
அவன் இளைத்து நின்ற அளவிலே -நீ இளைத்தாய்-இன்று போய்ப் பின்னை வா -என்று போது போக்காகக் கொன்ற படி –
தாள்கள் தலையில் வணங்கி-
திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி
நாள் கடலைக் கழிமினே –
ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இ றே இருப்பது
திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது
அன்றிக்கே
சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் என்றுமாம்
நாழ் -குற்றம்

———————————————————-

சக்கரவர்த்தி திருமுகனை ஆஸ்ரயித்து விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே
ப்ராப்தி பிரதிபந்தகங்களை போக்கி நித்ய கைங்கர்யத்தை தரும் என்கிறார் –

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

கழிமின் தொண்டீர்காள்
பகவத் விஷயத்தில் நசையுடையீர் –
விஷயங்களில் ருசியைக் கழியுங்கோள்
கழித்துத் தொழுமின்
இந்த விஷயங்களில் ருசியைக் கழித்து அந்தச் சக்கரவர்த்தி திருமகனைத் தொழும்கோள்
கழித்து என்கிற அநு பாஷணத்தாலே-விஷய விரக்தி தானே பிரயோஜனமாக போரும் என்கை
கழிக்கை யாவது -இது பொல்லாது என்று இருக்கை
அவனைத் தொழுதால்
கரும்பு தின்னக் கூலி போலே தொழுகை தானே பிரயோஜனம் என்கை
வழி நின்ற வல்வினை மாள்வித்து –
ஸ்வயம் பிரயோஜனமான ஆஸ்ரயணத்துக்கு பலம் இருக்கிற படி –
இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ -என்னும் படி இருக்கிற பிரபல கர்மங்களை சவாசனமாகப் போக்கி
நடுவே நின்று பிராப்தியை விரோதிக்கிற கர்மம் என்னவுமாம்
அழிவின்றி யாக்கம் தருமே
அபுநாவ்ருத்தி லஷண மோஷமான-நிரவதிக சம்பத்தைத் தரும் -அதாவது -கைங்கர்யம் தரும் -இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை –

—————————————————————-

தன்னைப் பற்றின மாத்ரத்தில் இது எல்லாம் செய்து அருளக் கூடுமோ -என்னில்
-ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவள் அருகே இருந்து தருவிக்கும் என்கிறார் –

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –
தர்மத்தினுடைய பரம பிரயோசனமான திருமகளார் -என்றுமாம்
அத்விதீயனான வல்லபன்
ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்
ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் –
புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்குவர் –

——————————————————–

அவள் பொறுப்பிக்க பொறுக்கும் இடத்தில் விளம்பம் இல்லை -அரை ஷணத்தில் பொறுப்பர் -என்கிறார் –

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

தன்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத கொடிய பாபங்களைப் போக்கும் ஸ்வபாவர் –
நொடி நிறையும் அளவிடத்திலே ஷண மாத்ரத்திலே என்றபடி –
ப்ரதிபஷ நிரசன ஸ்வ பாவனான பெரிய திருவடியைக் கொடியாக எடுக்கையை ஸ்வபாவமாக யுடையவர் –
இன்று ஆஸ்ரயித்தவனையும் நித்ய ஆஸ்ரிதரோடு ஒக்க விஷயீ கரிக்கும் என்னும் இடத்துக்கு ஸூசகம் என்றுமாம் –
வடிவார் என்று தனியேயாய்-அழகிய வடிவை யுடையவர் என்றுமாம்
பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க வாயிற்று வினை போக்குவது –

——————————————————–

நிகமத்தில் -இத்திருவாய்மொழி கற்றார் பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையான சம்சாரத்தில் பிறவார் என்கிறார் —

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

தீதாவது -தன் மேன்மையைப் பார்த்து எழ நிற்கை
அவமாவது -ஆஸ்ரயிக்கிறவனுடைய சிறுமை பார்த்து கையிடுகை –
இன்றியுரைத்த -இரண்டு குற்றமும் இல்லாமையைச் சொன்ன –
ஏதமில் ஆயிரம் -லஷண ஹாநியால் வரும் குற்றம் இன்றிக்கே இருக்கை
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்
பிறவார் -பிறக்கை இ றே -மாத்ரு சுஸ்ருஷணம் அழகிது -என்னுமோ பாதி -பகவத் சமாஸ்ரயணம் எளிது என்று உபதேசிக்க வேண்டுகிறது
உபதேச நிரபேஷமாக ஜன்ம சம்பந்தம் அற்று பகவத் ஏக போகராகப் பெறுவார்
தீது அவம் ஏதம் -என்று கர்த்தாவுக்கும் -கவிக்கும் -பாட்டு உண்கிறவனுக்கும் உள்ள மூன்று குற்றத்தையும் சொல்லுகிறது -என்றும் சொல்லுவர் –

———————————————————–

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-7-

August 10, 2016

பிரவேசம்
சர்வ சேஷியாகையாலே வகுத்தவனாய் –ஸ்ரீ யபதி யாகையாலே சர்வாதிகனுமாய் -ஸூ லபனுமாய் -சமஸ்த கல்யாண குணாத் மகனாகையாலே
ஆஸ்ரிதற்கு முகம் கொடுக்கும் சீலனுமாய் -ஆனந்தவஹமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையனாகையாலே நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் –
ஏஷஹ்யேவாநந்தயாதி -என்கிறபடியே தன்னைக் கிட்டினாரை ஆனந்திப்பிக்கும் ஸ்வ பாவனான பஜியா நின்று வைத்து
பலாந்தரத்தை பிரார்த்திக்கிற வர்களை நிந்தித்து -பஜநீயனனவன் தான் வேண்டா -பஜனம் தான் அமையும் -என்று
ஆஸ்ரயனத்தின் உடைய ரச்யதையை அருளிச் செய்கிறார்
அச்ரத்ததாநா புருஷா தர்மஸ் யாச்ய பரந்தப அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு ஸம்சார வர்த்தமநி –
பிரத்யஷாவகமம் ந்ம்தர்யம் ஸூஸூகம் கர்த்துமவ்யயம்-

——————————————————————————

நிரதிசய போக்யனை ஆஸ்ரயித்து வைத்து -ஷூத்ர பிரயோஜனத்தை அபேஷிப்பதே-என்று கேவலரை நிந்தித்து
அவர்கள் சிறுமை பாராதே அவர்கள் அபேஷித்ததைக் கொடுப்பதே -என்று அவன் நீர்மையைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார்

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

பிறவித் துயர் அற-பிறவி என்கிற இது அஞ்சு விகாரங்களுக்கும் உப லஷணம் –
ஜரா மரண மோஷாயா-என்கிற இடத்தில் ஜன்மாதிகளும் கூடுகிறாப் போலே –
ஜன்ம ஜரா மரணாதி சாம்சாரிக துக்கம் அறுகைக்காக
ஞானத்துள் நின்ற –
ஆத்ம ஞான மாத்ரத்திலே நின்று -அதாகிறது சாஸ்திர ஜன்ய ஜ்ஞான மாத்ரத்திலே -என்றபடி –
சுடர் விளக்கம் என்று பலமாகச் சொல்லுகையாலே இங்கு ஜ்ஞான மாத்ரத்தையே சொல்லுகிறது –
எதோ உபாசனம் இ றே பலம்
துறவிச் சுடர் விளக்கம்
துறவி -துறக்கை -சரீர அவசானத்திலே
சுடர் விளக்கம் -ஜ்ஞான குண கமாய் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிற ஆத்மாவினுடைய அசங்குசித தசையை
தலைப் பெய்வார்
கிட்டுவார்
பிறவித் துயர் அற-ஞானத்துள் நின்று -என்று உபாசனம்
துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்கை பலம்
பிரகிருதி நிர்முக்த ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரிக்க வேண்டி இருப்பார் –

அறவனை
தார்மிகனை –
அநந்ய பிரயோஜனரோடு ஒக்க -பிரயோஜ நாந்தர பரரையும் அங்கீ கரித்து அவர்கள் அபேஷித்ததையும் கொடுப்பதே -என்ன தார்மிகனோ என்கிறார்
ஆழிப் படை அந்தணனை
கையும் திரு வாழி யையும் கண்டு அதில் கால் தாழாதே -ஆத்ம அனுபவ விரோதியைப் போக்குகைக்கு உறுப்பான
சுத்தி மாத்ரத்தையே உப ஜீவிப்பதே -என்கிறார்
அழுக்கு அறுக்கும் கூறிய உவளைப் போலேயும் -சாணிச் சாறைப் போலேயும் இ றே அவனை நினைத்து இருப்பது
அந்தணன் -என்று சுத்தி மாத்ரத்தையே நினைக்கிறது
கையும் திரு வாழி யுமான அழகைக் கண்டால் -இன்னார் என்று அறியேன் -என்று முன்னாடி தோற்றாதே இறே தாங்கள் இருப்பது
மறவியை இன்றி மனத்து வைப்பாரே
அவனுடைய போக்யதையும் கண்டு வைத்தும் தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே ஆஸ்ரியியா நிற்பர்களே
மறவியை -மறப்பை-இன்றி -மறப்பு இன்றிக்கே -மறவாதே
அவர்களுக்கும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பதே -என்ன தார்மிகனோ என்று கருத்து
ஒருவன் ஒரு தப்பைச் செய்தால் சம்வதிக்கையும் அரிதாய் இறே நிர்வாஹகனுக்கு இருப்பது –

———————————————————————————–

அநந்ய பிரயோஜனர் திறத்தில் அவன் இருக்கும் படியை ச் சொல்கிறார்

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

வைப்பாம் –
ப்ராப்யமான புருஷார்த்தமாம் –
நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கைக்கு யோக்யமாம் படி சேமித்து வைக்கும் நிதி போ லே -தன்னை ஆக்கி வைக்கும்
மருந்தாம் –
விரோதியைப் போக்கி போக்த்ருத்வ சக்தியைக் கொடுக்கும் -இத்தால் பிராபகத்வம் சொல்கிறது –
நிர்வாணம் பேஷஜம் -என்னக் கடவது இறே-இப்படி செய்வது ஆர்க்கு என்னில்
அடியாரை
பிரயோஜ நாந்தரத்தைக் கொண்டு அகலாதே-தானே பிரயோஜனமாய் இருக்குமவர்களுக்கு
வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
விஷயங்களில் மூட்டி -ஸ்வ விஸ்லேஷ ஜனகமான மஹா பாபத்தை பண்ணுவிக்கைக்கு சமர்த்தமான
ஸ்ரோத்ராதி இந்த்ரியங்களால் வசிக்கும் படி விட்டுக் கொடான் –
துப்பு -சாமர்த்தியம்
சங்காத் சஞ்சாயதே–இதயாரப்ய–புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்னக் கடவது இறே
அவன் -என்கிறது ஆரை என்னில் –
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து-
எல்லா இடத்திலும் உள்ள எல்லாரிலும் காட்டில் ஆனந்தத்தால் மேற்பட்டு
அப்பாலவன் –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி சத குணி தோத்தர க்ரமத்தாலே ப்ரஹ்ம ஆனந்தம் அளவும் சென்று -அத்தை மனுஷ்ய கோடியில் ஆக்கி
மேல் மேல் கற்ப்பித்துக் கொண்டு ஆனந்தத்தைப் பெருக்கினாலும்-பிரமாணங்களால் வாங்மனஸ் சங்களுக்கு நிலம் அன்று என்று
மீளும்படி அவ்வருகான ஆனந்தத்தை உடையவன்
எங்கள் ஆயர் கொழுந்தே
இப்படி சர்வாதிகனாய் வைத்து -ஆஸ்ரிதற்காக தாழ்வுக்கு எல்லையான இடையூரிலே வந்து பிறந்தவன்
ஆயர் கொழுந்தே
இடையர் ப்ரஹ்மாதிகள் கோடியில் என்னும்படி தாழ்வில் வந்தால் அவர்களுக்கு தலைவன் ஆனவன்
கோபால சஜாதீயனாய் வந்து அவதரித்து -தன் பக்கலிலே நியஸ்த பரரானவரை விஷயங்கள் நலியாமைக்கு அன்றோ

———————————————————————————-

எம்பெருமானைத் தமக்கு இனிதாக புஜியா நிற்கச் செய்தெ சாம்சாரிக சகல துக்கங்களும் போயிற்று என்கிறார் –
ஷூ த்ரமான பிரயோஜனத்துக்காக பற்றினேன் அல்லேன்
அவனைப் பரம பிரயோஜனத்துக்கு உபாயமாகப் பற்றினேன் அல்லேன் –
இனிய விஷயம் என்று அனுபவிக்க இழிந்தேன் -விரோதியானது தானே போகக் கண்டேன் -என்கிறார் –

ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

ஆயர் கொழுந்தாய்
ஆயர் வேராக-தான் கொழுந்தாய் -வேரிலே நோவு உண்டானால் கொழுந்து வாடுமா போலே -அவர்களுக்கு ஒரு நலிவு வரில் தன் முகம் வாடும் என்கை
காட்டிலே உடையார்க்கு அடி கொதித்தால் கிருஷ்ணன் முகம் இறே வாடுவது
அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை
வெண்ணெய் களவு காணப் புக்கு -அகப்பட்டு அவர்கள் எல்லாராலும் புடை உண்ணும் ஆச்சர்ய பூதனை
அவ் ஊரில் பரிவரில் வந்தால் தாயாரின் குறைந்தார் இல்லை என்கை –
மாயப்பிரானை
அவாப்த ஸமஸ்த காமனுக்கு களவு கண்டு ஜீவிக்க வேண்டி -களவிலே இழிந்து சத்ய சங்கல்பனாய் இருந்து வைத்து
அது தலைக் கட்ட மாட்டாதே வயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அவர்களால் அடியுண்டு போக்கடி அற்று நிற்கிற நிலை
பிரானை –
செய்தவை அடங்க உபகாரமாய் இருக்கை
என் மாணிக்கச் சோதியை
அவர்கள் நெருக்க நெருக்க சாணையிலே ஏறிட்டுக் கடைந்த மாணிக்கம் போலே புகர் மிக்குச் செல்கிற படி
என் –
அப்புகரை எனக்கு முற்றூட்டாக்கித் தந்தவனை
தூய வமுதைப்
அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் –
ப்ரஹ்மசர்யாதி நியதி உண்டு அதுக்கு -இருந்த படியிலே அனுபவிக்க அமையும் இதுக்கு
பருகிப் பருகி
ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது
என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே
பிரகிருதி சம்பந்த பிரயுக்தமான ஜென்மத்தாலே சஞ்சிதமான அஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கினேன்
அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-

————————————————————————-

தன் படியைக் காட்டி என்னை இசைவித்து -அயர்வறும் அமரர்களோடு கலக்குமா போலே என்னோடே கலந்த உபகாரகனை
நினைத்து விட உபாயம் உண்டோ -என்கிறார் –
முன்பு அயோக்கியன் என்று அகன்றவர் ஆகையால் இனி விட்டேன் என்கிறார் –

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-

மயர்வற
அஞ்ஞானம் சவாசனமாக போம்படி
என் மனத்தே மன்னினான் தன்னை
அஞ்ஞானம் பின்னாட்டாத படி என் ஹிருதயத்திலே வந்து புகுந்தான்
மன்னினான் தன்னை
இனி கந்தவ்ய பூமி இல்லை என்று ஸ்த்தாவர பிரதிஷ்டை போலே இருந்தான்-
-உயர்வினையே தரும்
ஞான விஸ்ரம்ப பக்திகளை மேன் மேல் எனத் தரும்
தந்து சமைந்தானாய் இருக்கிறிலன்
ஒண் சுடர்க் கற்றையை
உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே-உபகாரம் கொண்டானாய் இருக்கும்
கொள்கின்றவன் வடிவில் புகர் தன் வடிவிலே தோற்றி இருக்கை
ச சர்வா நர்த்தி நோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நந்தியச –
ஒண் சுடர்க் கற்றையை –
என்று தம்மை வசீகரித்த அழகைச் சொல்லிற்று ஆகவுமாம்-

அயர்வில் அமரர்கள்
பகவத் விஷயத்தில் விஸ்ம்ருதியும் இன்றிக்கே-விச்சேதமும் இன்றிக்கே இருப்பது ஒரு நாடாக உண்டாய் இருக்கக் கிடீர்
ஆள் இல்லாதாரைப் போலே என்னை விடாதே இருக்கிறது –

ஆதிக் கொழுந்தை
அவர்கள் சத்தாதிகளுக்கு -ஹேதுவாய் -பிரதானனுமாய் இருக்காய் –
என் இசைவினை
அப்படி இருக்கிறவன் என்னையும் அவர்களோடு ஒக்கப் பண்ணுகைக்கு இசைவும் தானாய் வந்து புகுந்தான்
என் சொல்லி யான் விடுவேனோ
என்ன கண் அழிவைச் சொல்லி -நான் கை வாங்குவது –
அஞ்ஞானம் அனுவர்த்தித்து விடவோ –
அஸந்நிஹிதன் என்று விடவோ –
அந்நிய பரன் என்று விடவோ –
நன்மைகளை பண்ணித் தந்திலன் என்று விடவோ –
பிரதியுபகாரம் கொள்ள இருந்தான் என்று விடவோ –
மேன்மை போராது என்று விடவோ –
இசைவுக்கு கிருஷி பண்ணினேன் நான் என்று விடவோ –
எத்தைச் சொல்லி விடுவது –

—————————————————————————–

தன்னை அறியாதே மிகவும் அந்நிய பரனாய் இருக்கிற என்னை தன் திருக் கண்களின் அழகாலே இடைப் பெண்களை
அகப்படுத்தினால் போலெ நிர்ஹேதுகமாக என்னை வசீகரித்தவனை விடுவேனோ என்கிறார் –

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

விடுவேனோ என் விளக்கை-
ஸ்வ விஷயமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி பண்ணி
தன்னுடைய கல்யாண குணங்களை பிரகாசிப்பித்தவனை விடுவேனோ
என் ஆவியை –
அசன்னேவ ச பவதி-என்கிறபடியே உரு மாய்ந்து போன என் ஆத்மாவை
நடுவே வந்து
விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து -நிர்ஹேதுகமாக என்னவுமாம்
வந்து
நான் இருந்த இடத்தே தானே வந்து
உய்யக் கொள்கின்ற
அஸத் கல்பனான என்னை -சந்தமேனன் ததோ விது-என்னப் பண்ணின படி
கொள்கின்ற
கொண்டு விட்டிலன்
மேன் மேல் எனக் கொள்ளா நிற்கிற அத்தனை
நாதனை
உய்யக் கொள்கைக்கு நிபந்தனம் சொல்லுகிறது
இழவு பேறு தன்னதான குடல் துடக்கைச் சொல்லுகிறது
இப்படி தன் பேறாக க்ருஷி பண்ணின இடம் உண்டோ -என்னில்
தொடுவே செய்து
வெண்ணெய் அவர்கள் கொடுக்கிலும் -வேண்டா என்று களவிலே இழிந்து -பிடி பட்டது கேட்டுத் திரண்டு -சிலு கிடுமதுக்காக வந்த
இள வாய்ச்சியர் –
புருஷர்களுக்கும் வ்ருத்தைகளுக்கும் ஒரு பயமும் இல்லை
இவனால் நெஞ்சாறல் பட்டவர்கள் -இவன் பிடிபட்டுக் கட்டுண்டான் என்றவாறே ப்ரீதிகளாய் காண வருவார்கள்
கண்ணினுள்ளே
மற்று இவர்களுக்கும் தெரியாத படி
விடவே செய்து விழிக்கும்
தூதாக விழிக்கும் -தூது செய் கண்கள் இ றே
விஷமமான சேஷ்டிதங்கள் என்னவுமாம்
விடர் உண்டு தூர்த்தர் -அவர்களுடைய செயலைச் செய்து என்றுமாம்
பிரானையே
அந்த நோக்காலே அவர்களை அநன்யார்ஹைகள் ஆக்கினால் போலே -என்னையும் அநந்யார்ஹன் ஆக்கின உபகாரகனை –

—————————————————————————————

அவன் தான் விடில் செய்வது என் -என்னில் -தன் நீர்மையாலே என்னைத் தோற்பித்தவனை நான் விட இசைவேனோ என்கிறார்

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னையான் ஒட்டுவேனோ –1-7-6-

பிரான்
நிலா தென்றல் போலே தன் படிகளை பரார்த்தமாக்கி வைக்குமவன்
இதினுடைய உபபாதனம் மேல்
பெரு நிலம் கீண்டவன்
ரஷ்ய வர்க்கம் பரப்புண்டு என்னக் கை விடானே-பிரளய ஆர்ணவத்திலே புக்கு பூமியைத் தன் பேறாக தன்னை அழிய மாறி எடுத்தால் போலே
-சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்ட என்னை எடுத்தவன்
பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
ஒப்பனையோடே யாயிற்று பிரளயத்தில் முழுகிற்று
நெருங்கத் தொடையுண்டு பரிமளத்தை உடைத்தாய் செவ்வி பெற்றுள்ள திருத் துழாய்
விரையை விராய் என்று நீட்டிக் கிடக்கிறது
அன்றிக்கே -மலர் விரவிய திருத் துழாய் என்னவுமாம்
வேய்ந்த முடியன்
சூழப்பட்ட திரு முடியை உடையவன்
ஏய்ந்த என்ற பாடமான போது-சேர்ந்த முடி
மராமரம் எய்த மாயவன்
ரக்ஷணத்திலே அதிசங்கை பண்ணினவனுக்கு மழு வேந்திக் கொடுத்தும் அவன் காரியத்தை முடியச் செய்யும் வியாமோஹ அதிசயத்தை உடையவன்
என்னுள் இரான் எனில்
இப்படி ஆஸ்ரிதர் தன் பக்கலிலே சேருகைக்கு க்ருஷி பண்ணுமவன் என் பக்கல் இரான் என்னில்
எனில் -என்கையாலே -விட சம்பாவனை இல்லை என்கை
பின்னையான் ஒட்டுவேனோ
பின்னை நான் இசைவேனோ
பின்னைநான் தொங்குவனோ -என்னும் ஆச்சான் –

————————————————————————————

எனக்கு இசைவு இன்றிக்கே இருக்க வருந்திச் சேர்த்துக் கொண்டவன் -நான் போவேன் என்னிலும் போக போட்டான் என்கிறார்

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
நான் இசைந்து என் ஹிருதயத்திலே இருத்துவேன் என்றிலேன்
இசைவு என்னாலே வந்ததாகில் அன்றோ விடுகை என்னாலே வந்ததாவது
இசைவு இன்றிக்கே இருக்கக் கிட்டின படி என் என்னில் –
தான் ஒட்டி வந்து
நிரபேஷனான தான் -உம்முடைய பக்கலிலே இருக்கை தவிரேன் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணி வந்து
அத்ய மே மரணம் வா அபி தரணம் ஸாகரஸ் யவா
என் தனி நெஞ்சை
எனக்கு பவ்யமாய் -தன்னாலும் திருத்த ஒண்ணாத படி ஸ் வ தந்திரமான நெஞ்சை
வஞ்சித்து
தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி மனஸ் ஸூ பிடிபட்ட பின்பு செய்வது என் என்னில்
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே எனக்கு த்யாஜ்யமான சரீரத்தை தனக்கு போக்யமாகப் பற்றி நின்று
விலக்காத தொரு சமயம் பெற்றவாறே என் ஆத்மாவோடு வந்து சம்ச்லேஷித்தான்
இயல் வான்
வியாமோஹத்தை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்
இப்படி உத்ஸஹிக்குமவன் என்னுதல்
ஓட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–
முன்பு த்வேஷம் பண்ணித் திரிந்த நாள் என்னை என் கை வசத்தே விட்டுத் திரிந்தான்
இப்போது இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவன்
பல தசையில் நான் நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் சம்வத்திக்குமோ –

—————————————————————————————

என்னை விடுவித்தான் ஆகிலும் தன் கல்யாண குணங்களில் அகப்பட்ட என் நெஞ்சை இனி விடுவிக்க சக்தன் அல்லன் என்கிறார் –

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

என்னை நெகிழ்க்கிலும்
என்னால் அன்றிக்கே -ஊன் ஒட்டி நின்று -என்றபடியே அத்தலையாலே கிட்டின என்னை நெகிழ்க ஒண்ணாது
அவ்வரிய செயலைச் செய்யினும் மயர்வற்ற என்னை பிரிக்கை அரிது -அச் செயலைச் செய்யிலும் என்னவுமாம்
என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத்
நெஞ்சே இயற்றுவா எம்மோடு நீ கூடி -என்றும் -தொழுது எழு என் மனனே -என்றும் சொல்லலாம் படி தன் பக்கலிலே
அவகாஹித்த விலக்ஷணமான என்னுடைய மனசை விடுவிக்க
தானும் கில்லான்
சர்வ சக்தனான தானும் சக்தன் அல்லன் -சர்வ சக்தியான தான் பண்ணி வைத்த வியவஸ்தை தன்னால் தான் அழிக்கப் போமோ
சர்வ சக்தித்வத்தோ பாதி சத்யா சங்கல்பத்துவமும் வியவஸ்த்தை
இனி
முன்பு செய்யலாம் -இனிச் செய்யப் போகாது -எத்தாலே என்னில்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை
நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக நித்ய ஸூ ரிகள் ஓலக்கம் இருக்க -அச் சேர்த்தி அழகிலே தோற்று அடிமை புக்க என் நெஞ்சை மீட்கப் போகாது என்கை
அந்தப்புர பரிகரத்தை ராஜாவாலும் அநாதரிக்க ஒண்ணாது
ஹர்யர்ஷ கண சந்நிதவ் -என்கிறபடியே நித்ய ஸூ ரிகள் முன்பு பண்ணின ப்ரதிஜ்ஜை முடிய நடத்த வேணும் என்கை
நப்பின்னை பிராட்டி உடைய நெடிதாய் பணைத்து இருந்துள்ள தோளோடு அணைகையாலே ஆனந்திக்கிற முதன்மை உடையவன்
பணை-என்று வேயாய் -பசுமைக்கும் சுற்று உடைமைக்கும் செவ்வைக்கும் மூங்கில் போலே இருக்கை என்னவுமாம்
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத்தேஜ
முன்னை யமரர்
பழைய அமரர் -யத் ரர்க்ஷய ப்ரதமஜா யே புராணா-என்கிற பழைமை உடையராகை
முழு முதலானே
அவர்களுடைய ஸ்வரூபாதிகள் எல்லாம் ஸ்வ அதீனமாய் இருக்கை –

————————————————————————————-

தாம் அவனோடு சம்ச்லேஷித்த படி பிரிக்க யோக்யம் அன்று -என்கிறார்

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

அமரர் முழு முதல் ஆகிய
நித்ய ஸூ ரிகளுக்கு ஸ்வரூபாதிகள் எல்லா வற்றுக்கும் தானே காரணமாகை
வாதியை –
லீலா விபூதியில் உள்ளாருக்கு புருஷார்த்த உபயோகியான கரண களேபரங்களை கொடுக்குமவனை
இவ்வருகு உள்ளார்க்கும் ஸூ ரிகளோபாதி பிராப்தி உண்டாய் இருக்க இச்சை இல்லாமையால் யோக்யதை பண்ணிக்க கொடுக்கும் அளவு இறே செய்யலாவது
அமரர்க்கு அமுதீந்த
அந்தக் கரணங்களைக் கொண்டு ஷூ த்ர பிரயோஜனங்களை அபேக்ஷிப்பார்க்கு அவற்றையும் செய்யுமவனை
ஆயர் கொழுந்தை
அனன்யா பிரயோஜனர்க்காக வந்து அவதரித்து ஸூலபனாய் தன்னைக் கொடுக்குமவனை
பரித்ராணாயா ஸாதூ நாம் இத்யாதி
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று
இப்படி உபய விபூதி உக்தனை கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து என் ஆத்மா ஏக த்ரவ்யம் என்னலாம் படி கலந்தது
இனி யகலுமோ
ப்ருதக் ஸ்திதி யுபலம்பம் இல்லாதபடி ஸ்வரூபம் ஸ்வரூப அனுரூபமாக சம்ச்லேஷித்தும் அகல பிரசங்கம் உண்டோ
பிரகார பிரகாரிகளுக்கு ஏகத்துவ புத்தி பிறந்தால் பிரிக்கப் போமோ
ஜாதி குணங்களை பிரிக்க ஒண்ணாதாப் போலே த்ரவ்யத்துக்கும் நித்ய தாதாஸ்ரயத்வம் உண்டாகையாலே பிரிக்க ஒண்ணாதாய் இறே இருப்பது

——————————————————————————

இப்படிப்பட்ட இவ்வனுபவத்தை கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் திருப்தன் ஆகிறிலேன்-என்கிறார் –

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–

அகலில் அகலும்
தன்னை ஆஸ்ரயித்து பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போகில்-தானும் இழவாளனாய்க் கொண்டு அகலும் –
ந நமேயம் என்கிறபடியே அகலில் யதி வா ராவண ஸ்வயம் என்கிற சாபலம் உள்ளே கிடக்க கண்ண நீரோடு கொல்லும் எனினுமாம்
அணுகில் அணுகும்
நாலடி வர நின்றாரை ஆக்யாஹி மம தத்வேன ராக்ஷஸா நாம் பலாபலம்-என்கிறபடியே அவர்கள் படியைப் பாராதே
இளைய பெருமாளோ பாதி தம் காரியத்துக்கு கடவராம் படி கூட்டிக் கொள்வன்
முதல் பாட்டில் அகலில் அகலும் என்கிற இடம் சொல்லிற்று -இரண்டாம் பாட்டில் அணுகில் அணுகும் என்கிற இடம் சொல்லிற்று
புகலும் அரியன்
பிரதி கூலர்க்கு கிட்டச் செய்தே அணுக அரியன்
துரியோதனன் அர்ஜுனனோபாதி கூடி வரச் செய்தே இஞ்சிப் பயிரில் தழை கூறு கொள்வாரைப் போலே தன்னை ஒழிந்தவற்றை கொண்டு போம்படி பண்ணும்

பொருவல்லன்
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்
பொரு என்று ஒப்பு -எதிராய் நேர் நிற்குமதுவாய்-அத்தாலே தடையைச் சொல்லிற்றாய் தலைக் கட்டுகிறது
யத்ர க்ருஷ்ணவ் ச கிருஷ்ணா ச சத்யபாமா ச பாமி நீ நாஸாபி மன்யுர் நயமவ் தத்தேச மபிஜக்மது
பிரஜைகளுக்கு புக ஒண்ணாத தசையில் சஞ்சயனுக்கு தடை இன்றிக்கே இருக்கை
எம்மான்
இஸ் ஸ்வ பாவங்களைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
நிகரில் அவன்
நீர்மைக்கு ஒப்பு இல்லாதவனுடைய
புகழ் பாடி இளைப்பிலம்
கல்யாண குணங்களை பாடி விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்
இளைக்கை யாகிறது விடுகை -அதாவது விச்சேதம்
பகலும் இரவும்
அனுபவ காலம் சாவாதியோ என்னில்-திவாராத்ரி விபாகம் அற காலம் எல்லாம் அனுபவித்தா லும் கூட ஷமன் ஆகிறிலேன்
படிந்து குடைந்தே
இவ்விஷயத்தில் அவகாஹனம் அளவு பட்டோ இருப்பது -என்னில்
படிந்து -கிட்டி -குடைந்து -எங்கும் புக்கு -அவகாஹித்து விட மாட்டு கிறிலேன்

————————————————————————————————-

நிகமத்தில் இது திருவாய் மொழி பகவத் அனுபவ விரோதியான பிரயோஜ நான்தர ருசிகளை உன்மூலிதம் ஆக்கும் என்கிறார் –

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை -அடைந்த தென் குருகூர் ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை யாயிரத்து இப்பத்து -உடைந்து நோய்களை யோடுவிக்குமே–1-7-11-

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
வண்டுகள் உள்ளே அவகாஹித்து மது பானம் பண்ணும் படி மது சமர்த்தியை உடைய திருத் துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை உடையவனை
இத்தால் நிரதிசய போக்ய பூதன் என்கிறது
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மதுவிலே அவ் வண்டுகள் படிந்தால் போலே யாயிற்று இவர் பகவத் குணங்களில் அவகாஹித்த படி
மிடைந்த சொல் தொடை
செறிந்த சொல் தொடையை உடைய
தனித் தனியே என்னைக் கொள் என்னைக் கொள்-என்று மேல் விழுந்த சொல் என்னவுமாம்
யாயிரத்து இப்பத்து -உடைந்து நோய்களை யோடுவிக்குமே
இப்பத்து தானே நோய்களை உடைந்தோடும் படி பண்ணும்
நோயாகிறது -ஷூ த்ர புருஷார்த்த ருசி
உடைந்து ஓடுகை-ஆஸ்ரயாந்தரங்களுக்கும் ஆகாதபடி உரு அழிகை –

—————————————————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-