Archive for the ‘திரு மாலை’ Category

திரு மாலை-40–திரு மறு மார்வ நின்னை–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 10, 2013

ஜன்மத்தால் வந்த தண்மை அன்றிக்கே
எத்தனையேனும் தண்ணிய வ்ர்த்தம் உடையாரும்
மேம்போருளில் -சொன்ன ஜ்ஞானத்திலே உண்டார் ஆகில்
அவர்களுக்கு அந்த கர்ம பலம் அனுபவிக்க வேண்டா –
என்கிறார் –

——————————————————————————————————————————————————————–

திரு மறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தராகில் மா நிலத்து உயிர் கள் எல்லாம்
வெருவறக் கொன்று சுட்டிட் டீட்டிய வினையரேனும்
அருவினைப் பயனது  உய்யார் அரங்க மா நகர் உளானே –

——————————————————————————————————————————————————————-

திரு மறு மார்வ –
திருவையும் மறுவையும்-மார்விலே உடையவனே –
ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரனே
ஸ்ரீ வத்ஸ வஷா -என்கிற இது சர்வேஸ்வர சிஹ்னம் இ றே
பிராட்டி திரு மார்பில் எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுசந்திக்கிறார் இ றே வாத்சல்யம் தோற்றுகைக்காக –
அலர்மேல் மங்கை உறை மார்பா -என்றும்
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்றும் இ றே
இவர்கள் வார்த்தை இருப்பது
இது தான்
மேம் பொருளில் -மறைத்த லஷ்மீ சம்பந்தத்தை
அதில் நிஷ்டை உடையவர்களுடைய வைபவம் சொல்லுகிற இடத்தில் வெளி இடுகிறார் –
உபாய உபேயங்கள் இரண்டுக்கும் அவள் சம்பந்தமே வேண்டும் என்ற இடம் தோற்றுகைக்காக –

நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து –
ஸ்ரீ ய பதியான உன்னை உபாயாந்தரங்கள் கலசாமல்
நெஞ்சிலே விளங்கும்படியா அத்யவசித்து
சமிதை பாதி சாவித்திரி பாதி யாக இவன் தலையிலும் சிறிது சகாயம் உண்டாகில்
அவனுடைய உபாயபாவம் திகழாதே மழுங்கும் என்கை –

ரஷிப்பிக்கைக்கு பிராட்டியும்
ரஷிக்கைக்கு ஈஸ்வரனும்
இப்படி அறிந்து துணிகைக்கு தானும் –
அறிவிக்கைக்கு ஆச்சார்யனும் ஒழிய
வேறு ஓன்று வேண்டாது இருக்கை –
வைத்து
என்று இம் மிதுனத்தின் உடைய பவ்யத்தையைச் சொல்லிற்று ஆகவுமாம் –

மருவிய மனத்தராகில் –
இவ்வம்சம் உபாய அத்யாவச்யதைச் சொல்லுகிறது –
பிரயோஜனாந்தரன்களை விட்டு
ஸ்ரீ ய பதியே பிரயோஜனம் என்று அத்ய்யவசித்து இருப்பார்கள் ஆகில்
ஆகில்
என்ற இது –
பிராபக விஷயமாகவுமாம்
பிராப்ய விஷயமாகவுமாம்
இத் துணிவு சேதனன் ஒருவனுக்கு கிட்டுவது அன்று என்னும் இடம் தோற்றுகைக்காக-

மா நிலத்து உயிர் கள் எல்லாம் வெருவறக் கொன்று –
ஒரு ஜந்துவை ஹிம்சிக்கும் போது ஜகத்தடைய
நடுங்கும்படி வாய்த்து நலிவது –
இத்தால் இவனுக்கு ஹிம்சையினுடைய ருசி சொன்னபடி –

சுட்டிட்டு-
சாஸ்த்ராதிகளால் நலியும் அளவு அன்றிக்கே
பிராணனோடே தக்த்தமாக்கி –

ஈட்டிய வினையரேனும் –
ஆம் மகா பாதகங்களை புருஷார்த்தம் ருசி உடையார் அவ்வவோ புருஷார்த்தங்களை ஆதரிக்குமா போலே ஆய்த்து
இவன் இவற்றை ஏறிட்டுக் கொள்ளுவது –
ஜ்ஞானம் பிறந்தவனுக்கு இது சம்பவியாமையாலே
பூர்வ வ்ருத்தத்தைச் சொல்லுகிறது –

ஏலும் –
ஜன்மாந்தர சஹாஸ்ரேஷூ -என்றும்
பஹூனா ஜன்ம நாமந்தே -என்றும் –
அநேக ஜன்ம சம்சித்தா -என்றும்
சொல்கிறபடியே இவனால் இவனுக்கு முன்பு செய்யக் கூடாது –
கூடிற்றே யாகிலும் –

அருவினைப் பயனது உய்யார் –
தாங்கள் தேடி ஜீவிக்கப் பெறார்கள் –
கடலுக்கு தொடுத்த அம்பை மருகாந்தரத்திலே விட்டாப் போலே
அசல் பிளந்து ஏறிடும் அத்தனை
த்விஷிந்த பாப க்ர்த்யாம் -என்னக் கடவது இ றே
அங்கன் இன்றியே
கர்ணன் விட்ட சர்ப்ப சிரச் போலே கிரீடத்தோடு போக்கும் -என்னுதல்
அங்கன் இன்றியே
பகதத்தன் விட்ட சக்தியை மார்பில் ஏற்றாப் போலே
தான் அனுபவித்தல் பொறுத்தேன் -என்னுதல் செய்யும் இத்தனை –
அவன் -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -ஏன்னா நிற்க
இவர்களுக்கு அனுபவிக்க விரகு உண்டோ –

அரங்க மா நகர் உளானே –
இவை எல்லாம் அவதார சமயங்களிலே அன்றோ என்ன
ஒண்ணாத படி அவதாரத்தில் பிற்பாடர்க்கு ஆக வன்றோ
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுவது –
இது தான் ஈஸ்வரன் ஆசைப் பட்டு போம் இத்தனை ஒழிய
இவ்வதிகாரிகளுக்கு சம்பவியாது
ப்ராமாதிகமான புண்யத்தையும் பாதகம் என்று இருக்கிறவர்கள் பாபத்தில் இழியவோ
மார்வில் இருந்து ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவள் தானே குறை சொன்னாலும்
என் அடியார் அது செய்யார் -செய்தாரேல் நன்று செய்தார் -என்னும் அவனும் என்னா
பாபங்களில் இழிவார்களா
வாய்க்கரையர் நினைக்கவும் நிலன் அன்று என்க

—————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-39 –அடிமையில் குடிமை யில்லா–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 10, 2013

மேல் ஆறு பாட்டும்
இந்த ஜ்ஞானம் உடையார் உடைய
ராஜகுலம் சொல்லுகிறது –
இவருடைய
பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்கு அடிமை —
இருக்கிறபடி –
ஜன்ம வ்ருத்த ஸ்வ பாவங்களால்
குறைய நின்றார்களே யாகிலும்
இவர்கள் இந்த ஜ்ஞானம் உடையவர்கள் ஆகில்
உத்தேச்யர் -என்கிறார் –
இப்பாட்டால் –
எத்தனையேனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தார்களே ஆகிலும்
இந்த ஜ்ஞானத்தில் நிஷ்டை உடையவர்கள் ஆகில்
திருத் துழாயோ பாதி ஈஸ்வரனுக்கு சிரஸா
வஹிக்கப் படுவர்
என்கிறார்

——————————————————————————————————————————————————–

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே

————————————————————————————————————————————————–

அடிமையில் குடிமை யில்லா –
கைங்கர்யம் நமக்கு கர்த்தவ்யம் என்று இருக்கும்
அவர்கள் அன்றிக்கே இருக்கை –
கைங்கர்யம் ஆகிறது -சஹஜம் –
அது ஒழியச் செல்லாது இருக்கை யாவது -பிராப்தம் –
அது இன்றிக்கே இருக்குமவர்கள் –

அயல் சதுப பேதிமாரில்
அடிமைக்கு அசலான
சதுர வேதிகளாய் இருப்பாரில் காட்டில் –
வேதத்யயனம் -பண்ணுகிறதுக்கு பிரயோஜனம்
ஈஸ்வரனை உள்ளபடி அறிகையும்
தன்னை உள்ளபடி அறிகையும் –
கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறிகையும் -ஆய்த்து –
அசல் ஆகையாவது –
இந்த ஜ்ஞானத்துக்கு உடலாக வேத அத்யயனம் பண்ணுகிறோம் என்று அறியாது இருக்கை –
அத்யயன பலம் அர்த்த ஜ்ஞானம் என்று அறியாதவர்கள்
சதுர வேதிகள் ஆனாலும் நிஷ் பிரயோஜனம் -என்கை –

விஷ்ணு பக்தி விஹீ நோயஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தன் நபவேத் தச்யோத்பத்திர் நிரூப்யதாம் –
என்னக் கடவது இ றே –
சர்வத்ர கலு த்ர்ச்யதே -இத்யாதி –

இனி இவர்களில் காட்டில் ஈஸ்வரனுக்கு உத்க்ர்ஷ்டரைச் சொல்லுகிறது மேல் –
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும் –
வேத விஹிதங்களை அனுஷ்டியாதும்
நிஷித்தங்களை அனுஷ்டித்தும்
போருகையாலே நிஹீன ஜன்மங்களில் பிறந்தவர்களே யாகிலும்
குக்கர் ஆகிறார்
சண்டாளரிலும் தண்ணியர் சிலர் –
பிறப்பரேலும் என்கிறது –
பகவத் ஞானத்துக்கு ஜன்மங்கள் உடைய உத்கர்ஷ அபகர்ஷங்களில் நியதி இல்லை –
சர்வத்ர கலு த்ர்ச்யதே -என்கிறபடியே
இந்த ஜன்மம் எல்லா ஜன்மங்களிலும் சம்பவிக்கும் -என்கை
வேத உப ப்ரஹ்மண அர்த்தமாக அவதரித்த
ஸ்ரீ ராமாயணத்திலே காட்டிலே திரிவார் சில வேடரையும்
வேடுவிச்சிகளையும்
குரங்குகளையும் ராஷசரையும்
மகா பாரதத்திலே விதுர தர்ம வ்யாதாதிகளையும்
பிசாசங்களையும்
இடையரும் இடைச்சிகளையும் கண்டோம் இ றே
பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – என்கிறபடியே–

நித்ய சூரிகளில் காட்டில் இங்கே வந்து ஈஸ்வரன்
ஆர்ஜித்தவர்கள் ஆகையாலே இவர் சீரியர் என்கை –
அல்லாத பொன்னில் காட்டில் வேதகப் பொன்னுக்கு ஏற்றம் உண்டு இ றே –

முடியினில் துளபம் வைத்தாய் –
திருத் துழாயோ பாதி சிரஸா வஹிக்கும் அவர்கள் என்கை –
திருத் துழாய் மாலை சர்வேஸ்வரத்துக்கு ஸூ சகம் ஆனாப் போலே
இவர்களால் உன்னுடைய ஈச்வரத்வம் நிறம் பெறும் என்னவுமாம் –

மொய் கழற்கு அன்பு செய்யும் –
ஐம்புலன் அகத்தடக்கி -என்கிறபடியே –

உன் உகப்புக்கு புறம்பானவற்றைப் பொகட்டு
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்று
திருவடிகளுக்கு பரியும் அதுவே யாத்ரையாய்
அத்தையே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் –

அடியரை –
கீழ் -உபேயத்தை சொல்லிற்றாய்
இது -உபாயத்தைச் சொல்லுகிறது –
சோம்பர் -என்கிற படியே
ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து
ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இன்றிக்கே இருக்குமவர்கள் –

அடியர் –
அடியில் உள்ளாருக்கும் திருவடிகளேயாய்
தாரகமும் திருவடிகளேயாய் இருக்கை –
நிழலும் அடி தாறும் ஆம் – என்னக் கடவது இ றே –

உகத்தி போலும் –
இப்படி இருக்கும் அவர்களை உகத்தி
இதுக்குப் புறம்பான சதுர வேதிகளைக் காட்டில்
இவர்களை இ றே தேவரீர் உகந்து இருப்பது –

போலும் –
திருத் துழாய் போலும்
முடியினில் துளவம் போல் அடியரை உகப்புதி –

அரங்க மா நகர் உளானே –
நிஹீன ஜன்மாக்களாய்
உனக்கு நல்லராய் இருப்பார்க்கு
முகம் கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது –
உத்க்ருஷ்டருக்கு முகம் கொடுக்கும் இடத்தில்
பரம பதத்திலே இருக்க அமையாதோ –

——————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-38—மேம்பொருள் போக விட்டு –பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 10, 2013

ஸ்ரீ மகா பாரதத்துக்கு சரம ஸ்லோகம் போலே யாய்த்து
இப்பிரபந்ததுக்கு இப்பாட்டு
மகா பாரதம் ஆகிறது –
மதிமந்தா நமாவித்ய யேனா சௌ சுருதி சாகராத்
ஜகத்தி தாய ஜனித்த மகா பாரத சந்த்ரமா -என்கிறபடியே –
சுருதி சாகர சந்தரமா வாய்த்து மகா பாரதம் –
சர்வேஸ்வரன் ஷீ ராப்தியைக் கடைந்து தேவர்களுக்கு அம்ர்தத்தைக் கொடுத்தான் –
ஸ்ரீ வேத வியாச பகவான் சுருதியைக் கடைந்து சர்வாஹ்லாத கரமான
மகா பாரதத்தை சம்சாரிகளுக்கு ஆத்மஉஜ்ஜீவன ஹேதுவாக கொடுத்தான் –
தேவர்களுக்கு ஈஸ்வரன் கொடுத்த அமர்த்தம் பந்தகம்
ஸ்ரீ வேத வியாச பகவான் சம்சாரிகளுக்கு கொடுத்த மகா பாரதம் சம்சார விமோசகம் இ றே –
அம மகா பாரதம் தான் கோது என்னும்படி உய்த்து ஸ்ரீ கீதை
அதில் சாரம் யாய்த்து சரம ஸ்லோகம்
இது சொல்லுகைக்காக -கீழ் அடங்கச் சொல்லிற்று –
இதந்தே நாதபஸ்காய -என்று தொடங்கி இந்த சரம ஸ்லோகத்தின் கௌ ரவத்தைச் சொல்லுகிறது மேல் –
அப்படியே
இப்பாட்டு அவதரிக்கைக்காக வாய்த்து இப்பிரபந்தம் அவதரித்தது –
இதுக்கு மேலே -இப்பிரபந்த செஷமும் இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தத்தில்
நிஷ்டராய் இருப்பார் உடைய ஏற்றம் சொல்லுகிறது –
ஆக
மகா பாரத சாரம் -சரம ஸ்லோகம் -ஆனால் போலே
இப்பிரபந்த சாரம் -இப்பாட்டு –

இது தான் த்வயத்தின் உடைய அர்த்தத்தைச் சொல்லுகிறது –
த்வயத்தில் பிராபகம் முன்னாய்-பிராப்யம் பின்னாய் -இருக்க
இதில் பிராப்யம் முன்னாய் -பிராபகம் பின்னாய் -இருப்பான் என் என்னில்
வ்யுத்பத்தி வேளையிலே பிராப்யம் முன்னாகவும் பிராபகம் பின்னாகவும் இருக்கக் கடவது இ றே
ஸ்வர்க்க காமோ ஜ்யோதிஷ்டோமேன யஜேத -என்று இ றே வ்யுத்பத்தி வேலை இருப்பது –
அனுஷ்டான வேளையிலே
ஜ்யோதிஷ்டமோம் அனுஷ்டான பூர்வகமாக இ றே ஸ்வர்க்க சித்தி
பிராபக நிஷ்டியால் இ றே பிராப்யம் சித்திக்கும்
அப்படியே
இப்பாட்டிட்டிலே வுயுத்பத்தி வேளையாய்
த்வயத்தில் அனுஷ்டான வேளையாய்
இருக்கிறது –
அதில் பூர்வபாகத்தளவிலே அனுசந்தித்தார் நம் ஆழ்வார் –
உத்தர பாகத்தை அனுசந்தித்தாள் ஆண்டாள்
அவ்விரண்டையும் சேர அனுசந்தித்தார் இவ் ஆழ்வாரே யாய்த்து-
இப்பாட்டுக்கு கீழ் பாட்டோடு சங்கதி என் என்னில் –
அளியல் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே -என்று
கிலாய்த்து வார்த்தை சொன்னவாறே
விஷயாந்தர பிராவண்ய கரமான சம்சாரத்தில்
வகுத்த புருஷார்த்தத்தை அபேஷிக்கையும்-
தத் சித்திக்கு நம் கை பார்த்து இருக்கையும் –
அதுக்கு மேலே விளம்பம் பெறாதே கிலாய்க்கையும்
ஆக
இவ்வளவு புகுர நிற்பாரை பெறுவோமே என்று
பெரிய பெருமாள் திரு உள்ளம் பிரசன்னமாய்
திரு உள்ளத்தில் ஹர்ஷம் அடங்கலும் திரு முகத்தில் தோற்றும் படியாய் இருக்க
தேவரீரைக் கிட்டி தேவரீர் பக்கலிலே ந்யச்த பரராய்
தம்தாமுடைய ஹிதத்தில் கை வாங்கி இருப்பாரைக் கண்டால்
இங்கனேயோ தேவரீர் திரு உள்ளம் இருப்பது என்று
பெரிய பெருமாள் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார் –
சரம ஸ்லோகம் பிராப்தியை விதிப்பதாய் இருக்கும் –
அதில் ருசி உடையாருடைய அனுசந்தானமாய் இருக்கும் -த்வயம் –
த்வய நிஷ்டர் பக்கலிலே ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை
சொல்லுகிறது -இப்பாட்டு –

————————————————————————————————————————————————————-

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

—————————————————————————————————————————————————————-

மேம்பொருள் –
இதுக்கு மூன்று படி நிர்வாஹம் –
மேல் எழுந்த பொருள் என்றும்
மேவின பொருள் என்றும்
மேம்பாட்டை விளைக்கும் பொருள் என்றும் –

மேல் எழுகையாவது –
கர்மம் அடியாக வந்தேறி யாய் –
பகவத் ஞானம் வந்தவாறே -மறந்து போமதாய் இருக்கை –
இத்தை போக்யதை என்று பார்த்து இழிந்தவனுக்கும்
ஆபாத ப்ரதீதியில் ஓன்று போல் தோற்றி
நிரூபித்தால் அனுபாவ்யமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே இருக்கை -என்றுமாம் –

மேவின பொருள் -என்றது –
துரத்யயா -என்கிறபடி சேதனனால் பிரிக்க ஒண்ணாத படியாய் இருக்கை –
தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று உடம்பை தானாக நினைத்து இருக்கும் படி இ றே
இத்தோட்டை பொருத்தம் இருப்பது –
அத்தைச் சொல்லிற்றாகவுமாம் –

மேம்பாட்டை விளைக்கை யாவது -மெய்ப்பாட்டை –
தன்னைப் பற்றினாரை-சர்வஜஞ் தமராக அபிமானித்து இருக்கும்படி பண்ணவற்றாய் இருக்கை –

பொருள் -என்று பதார்த்தம் -அதாகிறது -தேஹம் –
இது தான் தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களுக்கும் உப லஷணம்-

போக விட்டு –
வாசனையோடு விட்டு -என்கை –
சரீரிகளால் அவை துஷ்கரம் ஆகையாலே
பிரகிருதி பிராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்கிற ஞானத்தை உடையவனாகை-
அல்லது
புகுர விட்டான் இவன் ஆகில் இ றே இவனால் போக விடலாவது –

மமமாயா துரத்தயயா -என்கிறபடியே
ஈஸ்வரன் பந்தித்த பந்தத்தை இவனால் போக்க ஒண்ணாது இ றே –
அநாந்த்மன் யாத்ம புத்திர்யா – என்கிற ஸ்லோகத்தின் படியே
தேகத்தில் ஆத்ம புத்தியையும்
தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களில் மமதா புத்தியையும்
தேஹாதிரிக்தனான ஆத்மாவில் ஸ்வ தந்திர புத்தியையும்
தவிருகை –
அளவுடையரான சனகாதிகளுக்கும் செய்யலாவது இவ்வளவே
இரண்டு மரம் கூட நின்றால் ஒன்றை வெட்ட நினைத்தவன் ஒரு மரத்திலே கொத்தி
பெருங்காயத்தை விட அது பட்டு நிற்குமா போலே யாய்த்து
இப்பிரதி பத்தி மாத்ரத்திலே இதுவும் விடும் –
மெய்ம்மையை மிக உணர்ந்து –ஆம் பரிசு அறிந்து கொண்டு
என்று மேலும் ஞான பிரகரணம் ஆகையாலே
போகவிட்டு -என்று
பிரகரண பலத்தாலே ஜ்ஞானத்தைச் சொல்லிற்றாகக் கடவது —

மெய்ம்மையை மிக உணர்ந்து –
மெய் -என்கிறது ஆத்மாவை –
மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் –
சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற
சுருதி சாயையால் அருளிச் செய்கிறார் –
சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று
ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –
மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் -பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது –
கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே
ஆக
மெய்ம்மை -என்று -மெய்யான தன்மை -என்றபடி –

மிக உணர்ந்து –
தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –
தேகாதிரிக்தமாய் சுயமாய் இருக்கிஉம் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே
ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசெஷிகன் அளவன்றிக்கே –
ஸுவயம் பிரகாசனாய்
நித்யனாய்
ஜ்ஞான குணகனாய்
அணு வாய்
ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்
அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக
உணருகை –
அதாவது
ஆத்மாவை உள்ளபடி உணருகை –

ஆம்பரி சறிந்து கொண்டு-
பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து
மேலும்
ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் –
பின்மைஉ
ஆம் பரிசு ஆவது –
கைங்கர்யமே யாய்த்து –
ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –
ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ர்த்தி ஹேதுக்கள் தான் இருப்பது –
தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ர்த்தி ஹேதுவாகக் கடவது –
மனுஷ்டோஹம் -என்று அபிமானித்த -அன்னம் -வ்ர்த்தி ஹேதுவாகக் கடவது –
தேவோஹம் -என்று அபிமானித்த போது -அமர்த்தம் -வ்ர்த்தி ஹேதுவாகக் கடவது –
தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ர்த்தி ஹேதுவாகக் கடவது –
பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய்
ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால்
சஹஜ கைன்க்ஜர்யமே இ றே வ்ர்த்தி ஹெதுவாவது –

அறிந்து கொண்டு –
நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே
பிரகிருதி பிராக்ர்தங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் –
ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும்
பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும்
இ றே சேதனனுக்கு வேண்டுவது –
விடுவிக்கையும்
பற்றுவிக்கையும்
உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இ றே –
மேம் பொருள்
மெய்ம்மை
ஆம்பரிசு
என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க
தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் –
அர்த்த கௌரவத்தாலே –

ஐம்புலன் அகத்தடக்கிக் –
இந்த்ரியங்களை தன்னுள்ளே யாம்படி பண்ணி –
அதாவது
தன் வசத்தில் ஆம் படி பண்ணுகை –
மேம்பொருள் போக விட்டு -என்று
முதல் வார்த்தையிலே போய் இருக்க
ஐம்புலன் அகத்தடக்கி -என்கிறது -கீழ் சொன்ன கைங்கர்யத்திலே –
மமேதம் -என்கிற புத்தியைத் தவிருகை –
கைங்கர்யத்திலும் நியமிக்க வேண்டுவன சில உண்டு –
அவற்றை யாய்த்து இங்குச் சொல்கிறது –
தனக்கு இனிதாகப் பண்ணும் கைங்கர்யமும் அபுருஷார்த்தம்
தனக்கும் அவனுக்கும் இனிதாகப் பண்ணும் கைங்கர்யமும் அபுருஷார்த்தம் –
அவனுக்கே பிரயொஜனமாகப் பண்ணுவதே புருஷார்த்தம் –
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றும் –
ரமமாணவ நேத்ரய -என்றும் சொல்லக் கடவது இ றே –
ஆக
இவ்வளவால்
உத்தர கண்டார்த்தமான பிராப்யம் சொல்லிற்றாய்  விட்டது
மேம்பொருள் போக விட்டு -என்றும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்றும்
நமஸ் சப்தார்த்தம் சொல்லப் பட்டது
மெய்ம்மையை மிக உணர்ந்து -என்கிற இது -நாராயண பதத்தில் -நார -சப்தார்த்தம் சொல்லிற்றாய்
அந்த சேஷத்வத்துக்கு பிரதி சம்பந்தியை ஒழிய ஸ்திதி இல்லாமையாலே
சேஷித்வம் ஆர்த்தமாய் சொல்லிற்றாய்
ஆக -நாராயண -சப்தார்த்தம் சொல்லிற்றாய் -ஆய்த்து
உணர்ந்து -என்று கொண்டு ஜ்ஞாத்ர்வ பரமாகச் சொல்லுகையாலே
பிரணவார்த்தம் சொல்லிற்றாயிற்று

இப்பாட்டில் குறையும்
பூர்வார்த்தத்தில் சொல்லுகிற பிராபகத்தை சொல்லுகிறது –
காம்பறத் தலை சிரைத்து-
காம்பற –
உபாயாந்தரங்களில் தனக்கு உண்டான தொற்று அற –
தலை சிரைத்து –
தன் தலையில் உண்டான துரிதங்களைப் போக்கி –
தன் தலையில் உண்டான சாதனாந்தரங்களின் தொற்றை அறுத்து -என்றபடி –
தலை மயிர் ஆகிறது தான் அபிமான ஹேது இ றே
கோ முற்றவர் தண்டிக்கும் இடத்தில் தலையைச் சிரைக்கிறது
அபிமானத்தை போக்குகிற படி யாய்த்து
ஏகாந்தி யாகவும் சந்நியாசியையும் லபனம் பண்ணுகிறது
தன் அபிமானத்தை தானே போக்குகிற படி இ றே –
தண்ட முகத்தாலே அபிமானத்தை போக்குவதும் இம் முகத்தாலே-

ஸ்வ அபிமானத்தை போக்குவதும் இம் முகத்தாலே இ றே
ஆக
அஹங்கார கர்ப்பமான உபாயாந்தர பரித்யாகத்தைச் சொன்ன படி –
உபாயாந்தர பரித்யாக பூர்வககமாக இ றே சித்தோ உபாய பரிக்ரஹம் இருப்பது –
காம்பற தலை சிறிது -என்கிற இதுவும் அர்த்த கௌ ரவத்தாலே
மறைத்து அருளிச் செய்கிறார் –
இவரே அன்று
அர்த்த கௌரவத்தாலெ ஸ்ருதியும் -த்வா ஸூபர்ணா-இத்யாதிகளாலே அர்த்தங்களை மறைத்துச் சொல்லும்
அந்த ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்கிறபடி – –

உன் கடைத் தலை இருந்து –
உன் தலைக்கடை -என்றபடி –
சரனௌ-என்கிற ஸ்தானத்திலே -கடைத்தலை -என்கிறார் –
ஸ்வ நிகர்ஷத்தை அனுசந்தித்து திருவடிகளிலே கிட்டாமையாலும்
சம்சாரத்தின் தண்மையை அனுசந்தித்து புறம்பு போக மாட்டாமையாலும்
திரு வாசலைப் பற்றுகிறார் –
திருக் கண்ண மங்கை யாண்டான் -ஒரு சம்சாரி தன் வாசலைப் பற்றி
கிடந்ததொரு நாயை நலிந்தவனை வெட்டி தானும் குத்திக் கொண்ட படியை கண்டு
ஒரு தேகாத்ம அபிமானி அளவு இது வானால் பரம சேதனன்
யமாதிகள் கையில் நம்மை விட்டுக் கொடான் –
என்று திரு வாசலைப் பற்றிக் கிடந்தான் இ றே

இருந்து –
விஷயாந்தர பிராவண்யத்தால்
பரகு பரகு என்று திரிந்தவன் –
மரக்கலத்துக்கு நங்கூரம் அவிழ்த்து விட்டாப் போலே
அதஸோ பயங்கதோ பவதி -என்று
அபய ஸ்தானத்தைப் பற்றி நிர்ப்பயனாய் இருந்த படி –

வாழும் –
உபாயம் ஈச்வரனே யானால்
போகம் இ றே பின்பு உள்ளது –
இருந்து வாழும் -என்று
அவ்விருப்பு தானே வாழ்ச்சியான இருப்பு -என்றுமாம் –

சோம்பரை உகத்தி போலும் –
உன் பக்கலிலே ந்யச்த பரராய்
ஸ்வ ஹிதத்தில் சோம்பினவர்களைக் கண்டால்
உனக்கு திரு உள்ளம் இங்கனே உகந்தாகாதே இருப்பது –
வாழும் சோம்பர் -என்று
கெடும் சோம்பரை வ்யாவர்த்திக்கிறது -என்றுமாம் –
அதாகிறது
சாஸ்த்ரத்தில் நாஸ்திகராய் கர்த்தவ்யங்களை விடுகை அன்றிக்கே
ஆஸ்திக் யாதிரேகத்தாலே நிரபேஷ உபாயத்தை ஸ்வீகரித்து
பகவத் அனுபவமே யாத்ரையாய் ஸ்வ ஹிதத்தில் சோம்பி இருக்கை போலும்
நித்ய சூரிகளை உகக்குமா போலே சோம்பரை உகப்புதி –

சூழ் புனல் அரங்கத்தானே –
இது நீர் அறிந்தபடி என் என்னில் –
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது தானே அறிவிக்கிறது இல்லையோ
நீர் வாய்ப்பையும்
நிழல் வாய்ப்பையும்
பற்றக் கண் வளர்ந்து அருளுகிறார் என்று பேராய்
ஒரு சோம்பரைக் கிடைக்குமோ – என்னும் நசையாலே இ றே
தேவரீர் சோம்பாது கண் வளர்ந்து அருளுகிறது–
காம்பற தலை சிரைத்து -என்ற இடம்
உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமான உபாயாந்தர பரித்யாகத்தை
சொல்லுகிறது –
சூழ் புனல் அரங்கத்தானே –உன் கடைத்தலை -என்று
நாராயண சப்தார்த்தமான சீலாதிகளை நினைக்கிறது –

பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும்
நாராயண சப்தத்தில் அந்தர்பூதை யாகையாலும்
உன் -என்கிற இதிலே -லஷ்மீ சம்பந்தம் அனுசந்தேயம் –

கடைத்தலை -என்றது
சரனௌ -என்றபடி –

இருந்து வாழும் -என்ற கிரியா பதத்தில்
உபாயத்வ அத்யாவச்யதையும்
அது தான்
போக ரூபமாயும் இருக்கிற படியும் சொல்லிற்று –

சோம்பரை –
என்றது -பிரபத்யே -என்கிற உத்தமனால் ஆஷிப்தனான
அதிகாரியைச் சொல்லிற்று –

—————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-37–தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 9, 2013

இப்படி கூப்பிடச் செய்தேயும்
பெரிய பெருமாள் இரங்கி -மாசுச -என்னக் காணாமையாலே
தம்மை ஒழிய வேறு எனக்கு ஒரு பந்துக்கள் உண்டாய் இருக்கிறாரோ
பிரயோஜனாந்த பரனாய்
பந்தகமாய் இருந்துள்ள புருஷார்த்தத்தை அபெஷிக்கிறான் -என்று இருக்கிறாரோ
நம்முடையவன் என்று அங்கீ கரிக்க நான் பிழைப்பேன் ஆகில்
இத்தனையும் செய்யாதே ஆர்த்த த்வனி கேட்டு
கண் உறங்கும் படி
அம்மே –
இவர் திரு உள்ளம் இப்போது இங்கனே கொடியதாய் யாய்த்து ஆகாதே
என்று இன்னாதாகிறார் –

———————————————————————————————————————————————————-

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே –

—————————————————————————————————————————————————————

தெளிவிலாக் கலங்கல் –
ஊற்று மாறி தெளிகைக்கு அவகாசம் இல்லாத படி
மேல் மேலும் பெருகையாலே கலக்கம் மாறாது ஆயத்து
இவரைப் போலே யாய்த்து -ஆறும் –
பிராப்திக்கு முன்பு சொகத்தாலே கலங்கி இருப்
ஆறும் கோயிலுக்கு மேற்கு
பெரிய பெருமாளைக் காண புகா நின்றோம் என்னும் ஹர்ஷத்தாலே கலங்கி வரும் –
கிழக்கு பட்டால் பிரிந்து போகிற சோகத்தாலே கலங்கில் போகும்
கோயில் அருகு வழி போவாரில்
சேதன அசேதன விபாகம் இல்லை போலே காணும் -கலக்கத்துக்கு –

நீர் சூழ் –
அதனில் பெரிய அவா அறச் சூழ்ந்தாயே -என்று பெரிய பெருமாள் அளவில் இருக்குமாப் போல் ஆயத்து
ஆறும் கோயிலை விளாக்குலை கொண்டு இருக்கும் படி –
துக்தாப்தி -இத்யாதி
ரத்னாகரமான ஷீராப்தி -தகப்பனார்
தான் இவ்விடத்தில் ஜனனி –
சாஷாத் லஷ்மி மனப் பெண்
மணவாளப் பிள்ளை சர்வ லோக உத்தாரரான அழகிய மணவாள பெருமாள்
இதற்கு ஸத்ர்சமாக அங்கமணி செய்யலாவது ஏது என்று
விசாரித்துக் கொண்டு வருகிறாப் போலே ஆய்த்து
ஆறும் பெருகி மத்த கஜம் போலே பிசுகிப் பிற்காலித்து வருகிறபடி


திரு வரங்கத்துள் ஓங்கும்-ஒளி யுளார் –
ஆற்றுப் பெருக்கை நீக்கித் தரை கண்டு உள் புகுவது அரிதாமாப் போலே யாய்த்து
பெரிய பெருமாள் தேஜசை நீக்கிப் புகுவதுக்கு
ஆச்சர்யமான வடிவு அழகு காண அரிதாய் இருக்கிறபடி –
பரமபதத்தில் ஒளி பகல் விளக்கு என்னும் படி யாய்த்து
அந்தகாரத்தில் தீபம் போலே குறைவாளரான சம்சாரிகளுக்கு
உதவப் பெற்ற பின்பு ஒளி மிக்கு இருக்கிறபடி –

ஓங்கும் ஒளி –
நித்ய சூரிகள் நடுவே இருக்கிறபோது
ஆதித்யர்கள் நடுவே ஆதித்யன் இருக்குமா போலே யாய்த்து இருப்பது –
இங்கு ஆர்த்தர் மிக உண்டாகையாலே
தத் ரஷனம் பண்ணி ஒளியும் மிகா நிற்கும் இத்தனை –

ஒளி உளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார் –
அவதாரண்த்தாலே –
மாதா -பிதா என்று தொடங்கி –நாராயணா –என்கிற பொதுவில் அன்று
வ்யூஹ அவஸ்தையிலும் அன்று
விபவ அவஸ்தையிலும் அன்று
இனி எனக்கு தந்தையும் தாயும் ஆவார் பெரிய பெருமாளே -என்கிறார்
தம்மை ஒழிய வ்யக்த்யந்தரத்திலேயும் ஒருவர் உண்டு என்று ஆறி இருக்கிறீரோ-

சர்வேஷா மேவ லோகாநாம்-இத்யாதி
இஸ் ஸ்லோகம் தான்
தர்மபுத்ரர்கள் வனவாசம் பண்ணுகிற ஆபத் தசையிலே
கிருஷ்ணனும் சாத்யபாமை பிராட்டியும் எழுந்து அருள
அத்தைக் கேட்ட பராசராதி மக ரிஷிகள் வந்து மார்கண்டேய பகவானைக் கண்டு
பேர் ஒலக்கமாக இருக்க -தர்ம புத்திரன் இவ்வாபத்துக்கு ஆயாச ஹேதுவாக எனக்கு ஒரு நல்ல வார்த்தை
அருளிச் செய்ய வேணும் -என்று ரிஷிகளைக் கேட்க
அவர்கள் சொன்னவை அடங்க பூர்வ பஷித்து –
ஸ்ரீ மார்கண்டேய பகவான் எழுந்து அருளி இருந்து சொன்னதாய் இருக்கும் இஸ் ஸ்லோகம் –
பின்பு சீராம பிள்ளை உடைய ஆபத் தசையிலே பட்டர் அருளிச் செய்ததாய் இரூக்கும் –

தந்தையும் தாயும் ஆவார்
பிரியத்துக்கும் கடவார்
ஹிதத்துக்கும் கடவார்-

எளியதோர் அருளும் அன்றே என் திறத்து –
என் விஷயத்தில் மலையை எடுத்து ரஷிக்க வேணுமோ –
தம்மை ஒழிய வேறு ஒரு பிரயோஜனத்தை கணிசித்தேனாய்
அத்தை கொடுத்து விடுகிறோம் என்று ஆறி இருக்கிறாரோ
ஸ்ரீ விபீஷணாதிகள் ரஷணம் போலே
வில்லும் கோலும் எடுத்து ரஷிக்க வேண்டித் தான் இருக்கிறாரோ
குளிர ஒரு கடாஷம் கிடீர் என் இடத்தில் பண்ண வேண்டுவது –

எம்பிரானார் –
எனக்கு உபகாரகர் ஆனவர்
இன்னாதாகிற தசையிலும் உபகாரகர் என் என்னில்
செய்த அம்சத்தை இல்லை செய்யுமவர் அல்லாமையாலே அத்தை முன்னிடுகிறார் –
அடியிலே முறையை உணர்த்தி
அதுக்கே மேலே பிராப்ய பிராபகங்கள் தாமே என்னும் இடத்தை உணர்த்தி
இப்போதும் நம் கூப்பீடு கேட்க வந்து கோயிலிலே சந்நிஹிதராய்
இருக்கிற ஆகாரமும் உண்டு இ றே-

அளியல் நம் பையல் என்னார்
அளி -என்று தண்ணளி –
இவன் நமக்கு நல்லன்
நம்முடைய பையன்
என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய கேட்க வாய்த்து இவர் ஆசைப் படுகிறது
ஆழ்வீர் -எனுமது இவர்க்கு அசஹ்யம் ஆய்த்து –

சேஷ பூதரான நாம் இவ்வர்த்தங்களை நினைத்து இருக்க அமையாதோ
அவன் சொல்ல வேணுமோ -என்னில்
அது போராது-
சேஷி யானவனும் இதுக்கு மேல் எழுத்து இடும் அன்றோ சேஷத்வம் நிலை நின்றது ஆய்த்து –
மணக்கால் நம்பி -நம்மாணி – திரு மகிழ் மாலை மார்வனுக்கு திறம் -என்றார் இ றே –
பிள்ளைப் பிள்ளை யாழ்வான் தம்பி அப்பிள்ளை ஆழ்வான் வாயாலே
மாணி -என்னப் பெற்றான் என்றான் இ றே

அம்ம ஒ கொடியவாறே –
ஆர்த்த த்வனி கேட்டால் எழுந்திருக்க வேண்டாவோ –
ஆர்த்த த்வனி கேட்டும் இவர் கண் உறங்குவதே –
இவர் திரு உள்ளம் இங்கனே கொடிததாய் ஆகாதே
அம்மே இவர் ஸ்வ பாவம் இருந்தபடி என் –
என்கிறார்

———————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-36-மழைக்கன்று வரை முன் ஏந்தும்-பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 9, 2013

அயோக்யன் என்று அகலாதபடி தன நீர்மையைக் காட்டி சேர விட்டுக் கொண்டான்
என்றார் கீழில் பாட்டில் –
இதில் –
தம்முடைய அயோக்யதை கழிந்தவாறே
ப்ராப்யத்தில் த்வரை மிக்கு
யோக்யரைக் கொண்டு போய் அடிமை கொள்ளும் தேசத்து ஏறக் கொடு போக வேண்டி இருந்தார்
அது செய்யக் கண்டிலர்
அதுக்கடி இவரை அகலாமே சேர விடுக்கைக்கு தான் பட்ட பாடு அறியுமவன் ஆகையாலே
ஆமம் அற்றுப் பசி மிக வேணும் என்று பேசாது இருந்தான் –
விஷயங்கள் நடமாடும் தேசத்தில் இருந்து கிலேசப்பட்டே போம் இத்தனை ஆகாதே -என்று
பிராப்யத்தில் த்வரையாலும்
விரோதியில் அருசியாலுமாக
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருள அரிதாம்படியாகவும்
கேட்டார் எல்லாரும் நீராம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிடுகிறார் –

————————————————————————————————————————————————————

மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –

——————————————————————————————————————————————————————

மழைக்கு
மழை என்றாலும்
ஆனை என்றாலும்
வ்யவஸ்திதமாய் யாய்த்து இவர்கள் கோஷ்டி இருப்பது –
இப்போது கோவர்த்தன உத்தரணத்தைச் சொல்லுவான் என் என்னில் –
அவனைப் பற்றி தம் துக்க நிவ்ருத்தியை பண்ணிக் கொள்ள நினைத்தவர் ஆகையாலே –
அவனுடைய ஆபத் சகத்வத்தை அருளிச் செய்கிறார் –
பசித்தவர்கள் -சீமானே என் பசியைப் போக்க வேணும் -என்னுமா போலே
ஆபத்சகனே என் துக்க நிவ்ருத்தியைப் பண்ணித் தா -என்கிறார் –

அன்று –
கோ கோபி ஜன சங்குலம் அதீவர்த்தம் -என்கிறபடியே
கன்றுகளும் பசுக்களும் இடையரும் -நடுங்கின அன்று –
அன்றும் இன்றும் ஆய்த்து ஆபத்து –
அன்று கல் வர்ஷத்தில் அகப்பட்டாரை ரஷித்தால் போலே –
இன்று துக்க வர்ஷத்தில் அகப்பட்ட என்னை ரஷிக்க வேணும்-
கல் வர்ஷத்தில் நோவு பட வேணுமோ ரஷிக்கும் போது – –
துக்க வர்ஷத்தில் நோவு பட்டாரை ரஷிக்கல் ஆகாதோ –
ஒரு ஊராக நோவு பட்டிலோ ரஷிக்கலாவது –
அவ் ஊராக பட்ட நோவை ஒருவன் பட்டால் ரஷிக்கல் ஆகாதோ –
வரை –
இந்த்ரன் ஏவ
சம்வர்த்தக மேக கணம் வர்ஷிக்க உத்யோகித்த வாறே
திரு ஆழியை நியமிக்க அவசரம் இல்லாமையாலே
கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்து ரஷித்தான் ஆய்த்து
இத்தால் ‘
இன்னதை பரிகரமாகக் கொண்டு இன்னதை ரஷிக்க வேணும் -என்னும் நியதி இல்லை -என்கை –
என்னுடைய ரஷணத்துக்கு பரிகரம் உதவப் பார்த்து இருக்க வேணும் என்னும் குறை இல்லை -என்கை

முன்-
மழையில் பசுக்கள் நோவு படுவதற்கு முன்பே –
ஏற்கவே ரஷித்த படி
பகுதா சந்தத துக்க வர்ஷினி -என்கிறபடியே
துக்க வர்ஷத்தில் நோவு பட்டு
கூப்பிடவும்
பேசாது இருப்பதே –

ஏந்தும்-
ஏழு திரு நஷத்த்ரத்திலே மலையை எடுத்த இடத்தில்
ஒரு பூம்பந்தை எடுத்தால் போலே வருத்தம் அற்று இருந்தபடி –
ரஷண தர்மத்தில் உனக்கு வருத்தம் உண்டாய்த் தான் இழக்கிறேனோ –
சேஷ பூதர் -சூட்டு நன் மாலைகள் -ஏந்தினால் போலே ஆய்த்து –
சேஷி மலை ஏந்தின படி –

மைந்தனே –
மலையை அனாயாசேன எடுக்கைக்கு உடலான பெரு மிடுக்கை உடையவனே
மைந்தன் -என்று பாலனாய்
இத்தை ரஷிக்கப் பெற்ற பிரியத்தாலே இளகிப் பதித்தபடி -என்றுமாம் –
தாம்தாம் ஜீவனம் பெற்றவாறே இளகிப் பாதிக்கும் அத்தனை இ றே –
ஸ்வரூப அனுரூபமாக இ றே ஜீவனம் இருப்பது –
உன் பேற்றுக்கு நான் கூப்பிட வேண்டுவதே -என்கிறார் –

மதுரவாறே –
ரஷகன் அன்றியே பஷகன் ஆனாலும் விடலாயோ உன் வடிவு இருப்பது –

மதுரவாறே –
சமுத்ரம்- என்னாதே -ஆறு -என்பான் என் என்னில்
கடல் ஆனால் விநியோக யோக்கியம் அன்றிக்கே இருக்கும் –
இது விடாய்த்தார்க்கு
-குளித்தல்
முகத்திலே இட்டுக் கொள்ளுதல்
பானம் பண்ணுதல்
செய்யலாய் இருக்கும் –
விடாய் இல்லாத போது அழுக்கை கழற்றிக் கொள்ளலாய் இருக்கும் –

கடலானால் இவன் இருந்த இடத்திலே ஓடாது –
இது இவன் இருந்த இடத்தே வருகையாகலும்
கிண்ணகம் எடுத்தால் நடுவுள்ள அணைகளை முறித்துக் கொண்டு வரும் யாய்த்து –
நின்றார் நின்ற இடங்களிலே உஜ்ஜீவிக்கலாம் படி இ றே இருப்பது –
பரம பதத்தில் நின்று போந்து
இடைச் சேரியில் வந்து பிறந்தபடியை
நினைக்கிறார் –

இந்த்ரன் அடியாக மழையால் வந்த ஆபத்தைப் போக்கினாய் அன்று –
இன்று உமக்கு ஆபத்துக்கு அடி என் என்ன –
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு உழைக்கின்றேற்கு –
ஸ்திரீகள் உடைய நோக்காகிற வலையுள்ளே அகப்பட்டு நோவு படுகின்ற்றவன் அன்றோ நான் –
முக்தமான மானின் உடைய விழி போலே
அகவாயில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
அஹ்ர்த்யமாக
அநந்ய பிரயோஜனைகளைப் போலே
தங்கள் செல்லாமை தோற்ற நோக்குகிறவர்கள் உடைய
வலையிலே அகப்பட்டு துடிக்கிற என்னை –
உழை -மான்
வலை யாகிறது -அகப்படுத்திக் கொள்ள வற்றாய்
கால் வங்கிப் போக ஒண்ணாத படி பண்ணுமதாய் –
அது தன்னில் பிரயோஜனம் அன்றிக்கே இருக்கும் -அது இ றே
பகவத் விஷயத்தில் போகாமே
துவக்குகைக்கு வேண்டுவது உண்டாய்
அது தன்னிலே அந்வயம் இன்றிக்கே இருக்கை –
என்னை –
பசுக்களைப் போல் அன்றிக்கே
நோவுபடுவதும் செய்து
நோவு பட்டேன் -என்று அறிவதும் செய்து
ரஷக அபேஷை உடையவனாய்
ரஷகன் நீயே -என்று இருக்கிற
என்னை –

நோக்காது ஒழிவதே –
கல்லால் வந்த ஆபத்துக்கு கல்லாலே நோக்கினாய்
கண்ணால் வந்த ஆபத்துக்கு கண்ணாலே நோக்க வேண்டாவோ
என்னை ரஷிக்கைக்கு மலையை எடுக்க வேணுமோ –
குளிர நோக்கும் அத்தனை அன்றோ செய்ய வேண்டுவது –
நோக்க வேணும் -என்னாதே -நோக்காது ஒழிவதே -என்றது –
கிலாய்க்கிறார் -சம்பந்தத்தாலே –நீர்மையாலே -சீலத்தாலே –

இவர் இப்படி கிலாய்த்துச் சொன்ன பின்பும்
இவர் நாம் கிட்ட கொள்ள அயோக்யன் யென்ட்ருய் அகலக் கூடும் –
ஆமம் அறும் கிடீர் என்று பேசாதே கிடக்கிறார் –
வியாதி க்ரச்தமான பிரஜைகள் -வியாதி தலை சாய்ந்து
சோறு சோறு என்று
கூப்பிடப் புக்கால் த்வனி தானே தாய்க்கு உகக்குமா போலே
இவர் கூப்பீடு தன்னையே கேட்டுக் கொண்டு கிடந்தான் –
யுன்னை என்னே அழைக்கின்றேன் –
வேறு ஒரு கா புருஷன் வாசலிலா நான் கூப்பிடுகிறது –
ரஷ்யம் தேட்டமாய் இருக்கிற தேவரீரை
ரஷக அபேஷை உடையனாய்க் கொண்டு
கூப்பிடா நிற்க செவிப்படாது ஒழிகைக்கு
புறம்பு அந்ய பரதை என்ற ஜகத் வியாபாரமும் மதர்த்தம் அன்றோ –

நீர் அழைக்கும் காட்டில் அப்போதே உம்முடைய கார்யம் செய்ய வேண்டுகிற தேவை என் -என்ன
ஆதி மூர்த்தி-
உரு மாய்ந்து கிடந்த காலத்திலேயே அபெஷா நிரபேஷமாக
பகுச்யாம் -என்கிற சங்கல்ப்பத்தாலே இவற்றை உண்டாக்கின உனக்கு
இதனுடைய ரஷணம் பண்ணுகை பரம் அன்றோ –
பெற்றோருக்கு ரஷிக்கையும் பரம் அன்றோ –
எங்கேனும் இடறிலும் -அம்மே -என்ன பிராப்தி இல்லையோ –
என்னுடைய ரஷணத்துக்கு ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் தேடி
பலம் கிணறு கண் வாருகிறது என் –

அரங்க மா நகர் உளானே –
பரம பதத்தை விட்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது
என்னுடைய ரஷணம் பண்ண அல்லவாகில் -இக்கிடைக்கு வேறு ஒரு பிரயோஜனம் உண்டோ –

அரங்க மா நக்சர் உளானே -உன்னை என்னே அழைக்கின்றேன் –
நான் ஏதேனும் பரம பதத்துக்கு வந்து கூப்பிட்டேனோ
ருசி பிறப்பிக்க வந்து கிடக்கிற இடத்தில்
ருசி பிறந்தார் இழந்து போகவோ –
இவர் இப்படிக் கூப்பிட பெரிய பெருமாள் ஆறி இருப்பான் என் என்னில்
பரம பதத்தில் உள்ளார் போகத்தாலே கூப்பிட கேட்டு அறிவர்
சம்சாரிகள் விஷய லாபத்தாலே கூப்பிட கேட்டு அறிவர்
தாமுடைய கர்ஷி பலமான கூப்பீடு கேட்டு அறியாமையாலே
பேசாதே கிடந்தார்

———————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-35–தாவி அன்று உலகம் எல்லாம்-பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 9, 2013

இப்படி இவை கை வாங்கின வாறே
பெரிய பெருமாள் -இவரை இழந்தோம் ஆகாதே -என்று நொந்து
ஆழ்வீர்-நீர் அகல நினைத்ததற்கு ஹேது என் என்று கேட்டு அருள –
சர்வஞ்ஞரான தேவரீர் திரு முன்பே க்ர்த்ரிமங்களை சொல்ல உம்மைக் கிட்டி
அவத்யாவஹன் ஆகும் காட்டில்

என் சுவடு அறியாத சம்சாரிகளும் நானுமாய் இருக்கப் பார்த்தேன் -என்ன
நீர் கிட்டின பிரயோஜனம் அழகிது –
நாம் தோஷத்தில் அவிஞ்ஞாதா –
அவர்கள் குணங்களில் அவிஞ்ஞாதா –
அவர்கள் தோஷத்தில் சர்வஞ்ஞர் –
நாம் குணசர்வஞ்ஞர்
ஆகையால் நம் வாசல் சர்வாதிகாரம் -காணும் -என்ன
இது உக்தி மாத்ரமேயோ –
அனுஷ்டானமும் உண்டோ வென்ன –
பண்டே அடிபட்டுக் கிடக்கிறது காணும் என்று
த்ரிவிக்ரம அபதானத்தைக் காட்டிக் கொடுத்தான் –
த்ரிவிக்ரம அபதானம் கேட்டு அறியீரோ –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற
எல்லார் தலையிலும் நம் கால் பொருந்தின படி அறியீரோ -வென்று –
சீல ஆதிக்யத்தையும்
தன் செல்லாமையையும்
காட்டி -சமாதானம் பண்ண
சமாஹிதர் ஆகிறார் –

————————————————————————————————————————————————————-

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –

————————————————————————————————————————————————————-

தாவி –
உங்கள் தலையில் நான் கால் வைக்க புகா நின்றோம் என்னில் –
வாசனையாலே சம்வதியாதே ஆணை இடுவர்கள் இ றே –
திரு வாணை-நின் ஆணை -என்று சாத்விகர் திருவடிகளை லபிக்கைக்கு
மறுக்க ஒண்ணாத படி இடும் ஆணையை -திருவடிகளைக் கிட்டாமைக்கு இடுவர்கள் ஆய்த்து – இவர்கள் அறியாதபடி அநாயாசேன திருவடிகள் எல்லார் தலையிலும் படும்படி நடந்தான் –
தாவுதல்-கடத்தல்

அன்று –
மகாபலியால் அபஹ்ர்த்யமாய்
தம்முடைய சேஷித்வமும்-சம்சாரிகள் உடைய சேஷத்வமும்
அழிந்து கிடந்த அன்று –

உலகம் எல்லாம் –
மகா பலியாலே அபஹ்ர்த்யமான அளவு அன்றிக்கே
ப்ரஹ்ம லோக பர்யந்தமாக
சகல லோகங்களையும்
வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லார் தலையிலும்
திருவடிகள் வளர்ந்த படி
தலை விளாக் கொண்ட-
ரஷ்யத்தின் உடைய அளவு அல்ல வாய்த்து ரஷ்கனுடைய பாரிப்பு
அத்ய திஷ்டத்த சாங்குலம் -எண்ணக் கடவது இ றே –

வெந்தாய் –
அமரர் சென்னிப் பூவினை -என்று நித்ய சூரிகள் சிரஸா வஹிக்கும் திருவடிகளை
விமுகரான சம்சாரிகள் தலையில் வைகைக்கு ஹேது என் என்னில்
அவர்ஜநீய சம்பந்தம் -என்கிறார் –
தம் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே -எந்தாய் -என்கிறார் –
உறங்குகிற பிரஜையைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே அன்று தம் பேறாக வி றே ரஷித்தது –
அன்று அறியாத குறை தீர
அறிந்த இன்று -உபகார ச்ம்ர்தியாலே
எந்தாய் -என்கிறார்
சம்சாரிகள் அன்றும் அறிந்திலர் இன்றும் அறிந்திலர்
அவர்களுக்குமாக தாம் உகக்கிறார் இ றே –

சேவியேன் உன்னை அல்லால்-
‘இப்படிப் பட்ட நம்மை விட்டு புறம்பே போக நினைப்பான் என் என்ன
உம்முடைய நீர்மை அறியாதே நினைத்தேன் இத்தனை –
உன்னை விட்டு புறம்பே போகேன் -என்கிறார் –
உன்னை இழந்தால் நானும் பிறரும் இ றே உள்ளது –
இரண்டிலும் அன்வயிக்கப் பார்த்திலேன்
அவை இரண்டும் இ றே பிரணவத்திலும்
மத்திய பதத்திலும் சொல்லுகிறது –
சேஷத்வ வாசனையாலே புறம்பு போனாலும் சேவிக்கும் அத்தனை யாய்த்து இவர் –

இவை எத்தனை குளிக்கு நிற்கும் என்ன –
சிக்கென –
இது எல்லா குளிக்கும் நிற்கும்
யாவதாத்மாபவி
சர்வேச்வறனைக் குறித்து -மாசுச -என்கிறார் இவர்

செங்கண்மாலே
இது ஸ்வ பாவ கதனம் அன்று
தாத் காலின விசேஷணம்-இவர் சிக்கென -என்றவாறே

திரு உள்ளம் இவர் பக்கலிலே பிரசன்னமாய்
இவர் பக்கல் வ்யாமோஹம் உள் அடங்காமையாலே
கண் வழியே புறப்பட்டு பிரகாசிக்கிறபடி –

செங்கண் மாலே –
வ்யாமோஹத்தாலே குதறிச் சிவந்த கண்களை உடையவனே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து மகா ராஜர் -வத்யதாம் –
என்ற போது பெருமாள் திரு உள்ளம் அழிந்தால் போலே ஆய்த்து-
பின்பு திருவடி -அத ராம பிரசன்னாத்மா -என்று பெருமாள் உளரானால் போலே ஆய்த்து –
திருவடி -அவதாரத்தில் -மாசுச -என்றான்
இவர் -அர்ச்சாவதாரத்தில் -மாசுச -என்கிறார் –

செங்கண் மாலே –
ஏன் ஸ்வரூப லாபத்துக்கு முகம் வரும்படி வ்யாமுக்தரான
தேவரீரை ஒழிய புறம்பு எங்கே போவேன் –

அவ்வளவேயோ –
ஆவியே –
என் பிராணனை விட்டு புறம்பே போகவோ –
இவருக்கு ஒரு வாயு விசேஷம் அன்று பிராணன் –
என் திருமேகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் -என்கிறபடியே
ஒரு மிதுனம் காணும் இவருக்கு பிராணன் –

அமுதே –
தாரகம் மாத்ரமேயாய் இருக்கை அன்றிக்கே நிரதிசய போக்யமுமாய்
சாகாமல் காக்கும் மருந்தாய் இருக்குமவன் அல்லையோ –

அவ்வளவேயோ
என் தன ஆர் உயிர் அனைய –
என் ஆத்மா அன்றோ –
ஆத்மாவை விட்டு சரீரத்துக்கு புறம்பு ஒரு போக்கு உண்டோ –
எந்தாய் –
அயோக்யன் என்று அகலப் புக்க
என்னை நசியாதபடி மீட்ட என் சுவாமி அல்லையோ –

வத்சலனை விட்டு புறம்பே போகவோ –
பிராணனை விட்டு புறம்பே போகவோ –
போகய வஸ்துவை விட்டு புறம்பே போகவோ –
என்னை நல் வழி போக்கு வித்த என் சுவாமியை விட்டு புறம்பே போகவோ –
என்கிறார் –

வார்த்தைகள் அழகியதாய் இருந்தது
கீழே –
ஐயனே அரங்கனே -என்றும்
என்னை ஆளுடைய கோவே -என்றும்
அபுத்த்யா சொன்னவை போல் அன்றிறே-என்ன
பாவியேன் உன்னை அல்லால் –
உன்னை ஒழிய புறம்பு ஒருவரை நெஞ்சாலும் நினையேன் –

பாவியேன் -பாவியேனே –
பாப பிரசுரமான சம்சாரிகளை விட மாட்டாதே
எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த உனக்கு
அயோக்யன் என்று அகல நினைத்ததுக்கு ஹேது என் பாபமே இறே –

பாவியேன் –
குற்றம் காண மாட்டாத அளவேயோ
உபேஷித்த சம்சாரிகளையும் உபேஷிக்க மாட்டாத உன்னை
அகல நினைத்ததற்கு ஹேது
என் பாப ப்ராசுர்யமே அன்றோ –
என்னைக் கொண்டு அகன்று என் சத்தையை அழிக்கப் புக்க அளவேயோ –
எல்லார்க்கும் சத்தா ஹேதுவான உன்னையும்
உன்னை ஒழிந்த எல்லாருடைய சத்தையையும்
நசிப்பிக்கைக்கு கிடீர் நான் நினைத்தேன் –
என்கிறார் –

—————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-34-உள்ளத்தே உறையும் மாலை-பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 9, 2013

ஜ்ஞான ப்ரசர த்வாரமான -மனசிலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்
நம் குற்றங்களை நேராக அறியும் சர்வஞ்ஞனான -இவனை –
பொய்யனான நான் கிட்டி –
அவத்யத்தை விளைத்து
என்ன கார்யம் செய்தேன் -என்று லஜ்ஜித்து –
இதில் காட்டில்
நம் குற்றம் அறிகைக்கு ஜ்ஞானம் இன்றிக்கே இருக்கிற
சம்சாரிகளோடே  முடிந்து போகையே நன்று என்று
பெரிய பெருமாள் திருவடிகளிலே நசை அற்று
அகலுகிறார் –

——————————————————————————————————————————————————————–

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

——————————————————————————————————————————————————————–

உள்ளத்தே –
நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சிலே இருக்குமவன் ஆய்த்து-
புறம்பு உள்ளான் ஒருவன் ஆகில் இ றே
கண்ணால் கண்டத்துக்கு அவ்வருகு அறியான் என்று இருக்கலாவது –

உறையும் –
சதா சந்நிஹிதனாய் இருக்கை-
போக்குப் பகுதி உண்டாகில் இ றே போன போதாக
மூலை அடியே நடக்கலாவது –

மாலை –
சர்வாதிகனை –
ஆத்மாவும் உள்ளே வர்த்தியா நிற்கச் செய்தே
சர்வத்தையும் அறிய மாட்டான் –
ஆகாசம் வியாபியா நிற்கச் செய்தே வ்யாப்யத்தை குறித்து அதுக்கு நியந்த்ர்தை இல்லை –
இவன் -சர்வஞ்ஞனாய் சர்வ நியந்தாவாய் இருக்கும் –

யுள்ளுவார் உணர்வு-
நம் உள்ளே வர்த்தியா நின்றான் என்று
அனுசந்திக்கைக்கு ஈடான ஜ்ஞானம் இல்லை –

உணர்வு ஓன்று இல்லாக் –
ஆத்மஜ்ஞானம் உண்டாகில் இ றே பகவத் ஜ்ஞானம் உண்டாவது –

அதில் பிரதமத்தில் அறிய வேண்டும் ஆத்மா ஞானம் இல்லை
ஈஸ்வர விஷய ஜ்ஞானமும் இல்லை
தேக ஸ்வ பாவத்திலும் ஜ்ஞானம் இல்லை —

கள்ளத்தேன்-
ஜ்ஞான ஹீநன் என்று நாட்டார் அறியாமல்
பகட்டி மறைத்துப் போந்தேன்
எமக்கு ஒரு ஆத்மகுணம் இல்லை என்று சொல்லும் பொழுது
அவன் அந்தராத்மாவாய் அறிய வில்லை என்பன் –
அத்தாலே அவர்களும் இவனுக்கு ஆத்மா விஷய ஜ்ஞானமும்
பரமாத்மா விஷய ஜ்ஞானமும் உண்டு என்று நினைத்து இருக்கும் படியாக
அவர்களை மறைத்துப் போந்தேன்
அடியில் அநாத்ம குணம் உண்டாய் இருக்க இ றே
இல்லை எனபது
அக் களவுக்கு உன்னையும் பேரு நிலையாக நிறுத்திக்
களவு கண்டு போந்தேன்

-நான் உன் தொண்டாய்த் –
ஒரு நன்மையையும் இன்றிக்கே இருக்கிற நானும்
ஆத்மகுண பேதர் அதிகரிக்கும் உன்னுடைய அடிமையிலே
அந்வயியா நின்றேன் –
ஆர் செய்யக் கடவ அடிமையிலே ஆர் அன்வயிக்கிறார்

தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

சண்டாளன் வேத அத்யயனத்தில் அதிகரித்தால் நாட்டார் கர்ஹிப்பர்கள் என்றும்
ஸ்வாத்மாப்யானம் விகர்ஹதே -என்றும்
தானும் அருளா நிற்கும் இ றே –
அப்படியே படுகிறார் –

தொண்டுக்கே கோலம் பூண்டு –
உன்னைக் களவு கண்டு விடும் அளவு அன்றிக்கே
சாத்விகர் சிரஸா வஹிக்கும் படி
ரூப நாமங்களைத் தரித்துப் போந்தேன் –
பரப்பு மாறத் திரு நாமத்தை இடுவது –
ஸ்ரீ பஞ்சாயுதங்களைத் தரிப்பது
அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொல்லுவது –
உன் போக்யதையைச் சொல்லுவது –
யமாதிகள் தலையில் என் கால் என்பதாய்
நானும் ஒருவனாய் பரோபதேசம் பண்ணுவதாய்
எத்தனை செய்தேன் எத்தனை ஜல்ப்பித்தேன் –
என்கிறார் –

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று –
நினைவுக்கு வாய்த்தலையைப் பற்றி இருக்கையாலே
அனுசந்திப்பார் அனுசந்திக்கும் எல்லாவற்றையும்
கூட இருந்து அறுதி என்று –
ஏகோ ஹமஸ் மீதி சமன்ய சேத்வம் -இத்யாதி
சர்வஞ்ஞனாய் -சர்வ நியந்தாவாய் இருக்கிற நீ உடனே இருக்கவா
நான் இவ்வமணக் கூத்து எல்லாம் ஆடிற்று -என்கிறார் –

வெள்கிப் போய் –
தம்முடைய க்ர்த்ரிமத்தையும்
அவனுடைய சர்வஞ்ஞதையும் -சன்னிதியையும்
அனுசந்தித்து லஜ்ஜா விஷ்டர் ஆனார் –

போய் –
சந்நிதியில் லஜ்ஜித்துக் கவிழ் தலை இட்டு
நிற்க மாட்டாமையாலே கடக்கப் போந்தார் –
அவன் இல்லாத இடம் தேடித் போகிறார் இ றே இவர்
பாஹ்ய விஷயங்களில் லஜ்ஜித்தால் அங்கு நின்றும்
அது இல்லாத இடம் தேடி போருவாறே
அந்த வாசனையாலே போருகிராயாய்த்து இங்கும் –

என் உள்ளே –
இவ்வர்த்தத்தில் சம்சாரிகள் இவருக்கு கூட்டு அல்லர்
பெரிய பெருமாள் பக்கல் நின்று மக்னரராய் நின்றார் –
அவர் சன்னதி உண்டானாலும் அவர் இதுக்கு கூட்டு அல்லர்
இனி இவர் தன்னிலே சிரிக்கும் இத்தனை இ றே –
தம்முடைய அபஹாச்யதைக்கு தாமே சஹகாரியாம் இத்தனை இ றே –

விலவற சிரித்திட்டேனே –
விலாக்கள் ஒடியும்படி சிரித்தார் ஆய்த்து
அபஹாச்யதைக்கு அவதி உண்டானால் இ றே சிரிப்புக்கு அவதி உண்டாவது –
அகல நினைத்தவர் ஆகையாலே
தீப்பாய்வார் -வெற்றிலை தின்று பூ சூடி தீ பாயுமா போலே
சிரிக்கிறார் ஆய்த்து
அர்ஜுனன் இவ் விஷயத்தில் நசை கிடைக்கையாலே
சோகித்துக் கை வாங்கினான்
இவர் நசை அற நீங்குகிறார் ஆகையாலே சிரித்துக் கை வாங்குகிறார் —

—————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-33–மெய் எல்லாம் போகவிட்டு–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 8, 2013

இப்படி-
நன்மைகளும் இல்லை
தீமைகளாலும் குறைவில்லை
நான் இங்குத்தைக்கு ஆகாத ஒருவன் -என்கிறார்
அநந்தரம் –
மேல் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் சங்கதி என் என்னில்
மூர்கனேன் வந்து நின்றேன் -என்று
அந்த மௌர்க்யம் ஹ்ருதயத்தில் பட்டுச் சொல்லுகிறீரோ -என்னில் –
அதுவும் -பொய் -என்கிறார் –
ஆனால்
நம்மைக் கிட்டுகைக்கு ஒரு உபாயம் இல்லை யாகில்
மேல் போக்கு என்ன -என்று கேட்க
தேவரீர் திருவடிகளோட்டை சம்பந்தமும்
கிருபையும் ஒழிய
வேறு உண்டோ -என்று
சரம உபாயமான கிருபையை
வெளியிடுகிறார் –

————————————————————————————————————————————————————-

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே –

——————————————————————————————————————————————————————

மெய் எல்லாம் –
மெய் –
மெய் ஆகிறது –
பூத ஹிதமாய் -யதார்த்தமாய் –
இருக்கும் அர்த்தம் ஆய்த்து –
கீழ் சொன்ன நன்மைகள் எல்லாவற்றுக்கும் பிரதம சிலையாய் யாய்த்து சத்யம் தான் இருப்பது –
சத்யம் மூலம் இதம் சர்வம் -என்னக் கடவது இ றே –
ஜன்ம வ்ருத்தத்தால் குறைய நின்ற கைசிகன் –
பகவத் விஷயத்தில் அவகாஹித்தாரில் பொய் சொல்லக் கடவார் இல்லை காண் -என்று
தன்னை பஷிக்க நினைத்த ப்ரஹ்ம ராஷசனைக் குறித்து சொன்னான் இ றே –
பகவத் விஷயத்திலே நாலடி வர நிற்கையாலே –

எல்லாம் -போகவிட்டு-
இவை தான் பல வகையாய்த்து இருப்பது –
மனசால் நினைப்பதும் மெய்யாய்
அத்தோடு சேரச் சொல்லுவதும் மெய்யாய் –
செய்வதும் மெய்யாய் இருக்கை –
பந்துவாய் இருப்பான் ஒருவனுக்கு மெய்யைச் சொல்லி
புறம்பு உள்ளார்க்கு அசத்யனாயும் இருக்கக் கூடும் இ றே –
அதுவும் இல்லை –
இவை எல்லாம் நான் இருக்கிற நாட்டிலே நடை யாடாத படி
வாசனையோடு போக விட்டேன் -என்கிறார் –
தன்னோடு பரிமாறினார் பக்கலிலே மெய் இருக்குமாகில்
தன பக்கலிலே வந்து பொசிந்து விடக் கூடும் என்று
அவர்கள் பக்கலிலும் மெய் நடமாடாதபடி பண்ணினேன் -என்கிறார் –
சம்சாரிகள் அஞ்ஞர் ஆகையாலே பொய்யோடும் செல்லும்
மெய் கொண்டே நடக்க வேண்டும் தேவரீர் திருவடிகளில் இ றே அசத்தின் ஆய்த்து

நீர் இப்படி மெய்யை நேராக பொகடுகைக்கு வாசனை பண்ணிற்று எங்கே -என்ன –
விரி குழலாரில் பட்டு
உன் கோஷ்டிக்கு பொய் ஆகாதே போலே
இவர்கள் கோஷ்டிக்கு மெய் ஆகாதபடி –
சத்யனாய் இருக்கும் அவனுக்கு ஸ்திரீகளோடே

ஒரு ஷண காலமும் சம்சர்க்கம் அரிதாய்த்து இருப்பது –
விரி குழலாரில்
மயிர் முடித்து இருக்கில் -இது ஒரு மயிர் முடியே -மாலை சுற்றின விரகே -என்று அதிலே வித்தனாய் இருக்கும் –
விரித்து இருக்கில் -ஒசழக்காக மயிரை விரித்து பொகட்ட படியே -என்று அதிலே வித்தனாய் இருக்கும் –
என்னை உன் செய்கை நைவிக்கும் -என்று பகவத் விஷயத்தில் சாத்விகர் படும் எல்லாம் படும் ஆய்த்து –

பட்டு –
வலையிலே அகப்பட்ட சில பதார்த்தங்களைப் போலே தன்னாலே மீள ஒண்ணாத படி அகப்படுகை –
ஆச்சார்ய உபதேசத்தாலே வகுத்த விஷயத்திலே
பனியிரும் குழல்களை கண்ணாலே காணா நிற்க
நெஞ்சு ஸ்திரீகள் பக்கலிலே யாம்படி இ ரே அதில் அகப்பாடு இருப்பது –

பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட –
மெய்யைக் குட நீர் வழித்தால் போலே பொய்யைக் கூடு பூரித்தேன் –
பகவத் விஷய சம்சர்க்கம் பொய்யரை மெய்யர் ஆக்குமா போலே
இவ்விஷயம் சத்யரை அசத்யர் ஆக்கும்படி –

எல்லாம் –
மெய்யுக்குச் சொன்ன வைகல் எல்லாம் இதுக்கும் உண்டு இறே-
பொய் -என்று பேர் பெற்றவை எல்லாவற்றையும் தம்மோடு சேர்த்துக் கொண்டார் யாய்த்து –

பொதிந்து கொண்ட –
அவற்றில் ஒன்றும் சேராதபடி பொதிந்து கொண்டேன்
நாட்டார் தாம்தாம் அபிமத விஷயங்களுக்கு கார்த்திகைக்கு பொய் சொல்ல வேண்டினால்
அவர்களும் ஏன் பக்கலிலே வந்து கேட்டுப் போம் படி பொதிந்து கொண்டேன் –
எட்டுப் புரியும் கட்டினார் யாய்த்து –

போழ்கனேன் வந்து நின்றேன் –
என்னை சந்தித்தால் பொய்யன் அன்றோ –
அங்குத்தைக்கு ஆகாதவன் என்று மீள வி றே அடுப்பது –
தண்ணறையன் ஆகையாலே நிர்லஜ்ஜனனாய் வந்து கொடு நின்றேன் –

நின்றேன் –
சாதனா அனுஷ்டானம் பண்ணி பலத்துக்கு அவசர ப்ரதீஷராய் நிர்ப்பாரைப் போலே
வந்து நின்றேன் –
போழ்கனேனே –
போழ்க்கமை -பண்னறை-கதி சூன்யதை-

இப்படிப் பட்ட நீர் சமதமாத்யுபேதர் சேரும் நம் பக்கலிலே வருவான் -என்
விரி குழலார் பக்கல் போகீர் -என்ன –
ஐயனே –
என்னால் அழித்துக் கொள்ள ஒண்ணாத நிருபாதிக சம்பந்தம் அடியாக வந்தேன்
எத்தனையேனும் அநீதியில் கை வளர்ந்த பிரஜைகளுக்கும் மாதா பிதாக்கள் இருந்த இடத்தில்
பிறர் காணாதபடி புழக்கடையாலே வந்து புகுரலாம் படி இ றே பிராப்தி இருப்பது –

அரங்கனே –
நம்மை -நிருபாதிக பந்து -என்று அறிந்தது
சாஸ்திர வாசனையாலேயோ
ஆச்சார்ய உபதேசத்தாலேயோ -என்ன
அவைய்ற்றால் அன்று
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறபடியைக் கண்டு அறிந்தேன் –
நித்ய விபூதியில் இருக்கும் இருப்பை கால் கடைக் கொண்டு
அநபிதமான சம்சாரத்திலே
சம்சாரிகள் உடைய உஜ்ஜீவனமே பிரயோஜனமாக கண் வளர்ந்து அருளுகிற படியால் –

இஜ்ஜகங்களில் தேவரீர் திருவடிகளுக்கு ஆகாதர் இல்லை என்னும் இடத்தையும்
இக்கிடை தானே சூசிப்பிக்கிறது இல்லையோ –

நம் பக்கலிலே வந்து நீர் கொள்ளப் புகுகிற கார்யம் என் என்ன –
உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன்-
தேவரீர் கிருபையின் பக்கல் எனக்கு உண்டான ஆசையால் வந்தேன் –
தம்தாமை முடிய சூழ்த்துக் கொண்டவர்களுக்கும் தேவரீர் கிருபையில் நசை பண்ணலாம்படி இ றே தேவரீர் கிருபை இருப்பது –
ப்ரஹ்மாஸ்த்ரத்தாலே அழிய கொடு தேவரீர் உத்யோகித்த தசையிலும்
காகத்துக்கு திருவடிகளிலே புகுரலாம் படி இ றே தேவரீர் கிருபை இருப்பது –
வதார்ஹமபீ காகுத்ஸ்த கர்பயா பர்யபாலயத் -என்னக் கடவது இ றே –

உம்முடைய பக்கல் நன்மைகளும் இல்லாமையும் அறிந்து –
தீமைகள் உண்டு என்னும் இடமும்
சம்பந்தமும் அறிந்து நம் பக்கல் வந்தீர் அல்லீரோ –
அதிகாரிகளில் இப்படிப் பட்ட உம்மை யன்றோ நாம் தேடி இருக்கிறது –
இது தான் மெய்யோ -என்ன
பொய்யனேன் –
நிரூபித்த இடம் இதுவும் பொய்யாய் இருந்தது என்கிறார் –
ஸ்வதஸ் சர்வஞ்ஞரான தேவரீர் சன்னதியிலே ஓன்று சொல்லலாவது
என் பக்கல் உண்டோ -என்கிறார் –
பொய்யனேன் –
தீமைகள் என்னாலாவது இல்லை என்று சொன்ன இவ் வார்த்தைகள் –
அஹமசம் யப்னா மாலய -என்னும் வார்த்தை –
இவ் வதிகாரிக்கு தேவரீர் சந்நிதியிலே விலைச் செல்லும்
வார்த்தை என்று சொன்னேன் இத்தனை
என் தண்மை என் நெஞ்சில் பட்டு சொன்னேன் அல்லேன் –

பொய்யனேனே –
ஸ்வதஸ் சர்வஞ்ஞரான தேவரீர் இப் பொய் தன்னை மெய் என்று பிரமிக்கும்படி அன்றோ
நான் பொய் சொன்னபடி
கீழ்
ஆதாரம் பெருக வைத்த அழகன் -என்றும்
கண்ணினை களிக்குமாறு -என்றும்
பனியரும்புதிருமாலோ -என்றும்
உடல் எனக்கு உருகுமாலோ -என்றும்
சொன்ன பொய் மாலைகளை அனுசந்தித்து
பொய்யனேன் பொய்யனேனே —
என்கிறார்
மெய் கொண்டு பரிமாற வேண்டும் தேவரீர் திருவடிகளிலே
எத்தனை பொய் சொன்னேன் என்கிறார் –

—————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-32–ஆர்த்து வண்டு அலம்பும் சோலை—பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 8, 2013

நம் பக்கல் விமுகரான சம்சாரிகளுக்கும் கூட ஆகாத படி
வர்த்தித்த நீர் நம் பக்கலில் வந்த படி என் -என்ன
பிரதிபன்னகாரிகளாய் இருப்பார் செய்யும் அவற்றுக்கு ஒரு அடைவு உண்டோ
என் மௌர்க்யத்தாலே வந்தேன் –
என்கிறார்

—————————————————————————————————————————————————-

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே

———————————————————————————————————————————————————-

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை –
திருச் சோலையிலே மதுவைப் பானம் பண்ண இழிந்த வண்டுகள் ஆனவை
அபிநிவேசத்தாலே பரிச்சேதித்து இலிய அறியாதே இழிந்து
கழுத்தே கட்டளையாகப் பருகி
புக்க மது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
ஆர்த்துக் கொள்ளா நிற்கும் –
முக்தர் பகவத் அனுபவ ஜனித்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
சாம கானம் பண்ணுமா போலே
ஒரு தேச விசேஷத்திலே –
பகவத் அனுபவத்தாலே
முக்தருக்கு பிறக்கும் விகாசம்
திர்யக்குகளுக்கும் பிறக்கும் படி யாய்த்து
கோயிலின் போக்யதை இருப்பது
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நர்த்யந்தி கேசித் -என்று
மது வனத்தை அழித்த முதலிகள் ஹர்ஷத்துக்கு போக்குவீடு விட்டு
பாடுவார் ஆடுவார் ஒருவரை ஒருவர் சுமப்பார் ஒருவரை ஒருவர் பொகடுவார் ஆனார்கள் இ றே-
இவர் தம்முடைய சத்தை உண்டாகைக்கு கூப்பிடுகிறார் –
இவை பிரீதிக்கு போக்கு வீடாக கூப்பிடுகின்றன –

வண்டு அலம்பும் சோலை –
மது பானம் பண்ண இழிந்த வண்டுகள் மதுவின் மிகுதியாலே
பிரளயத்தில் அகப்பட்ட மார்கண்டேயனைப் போலேயும்
கிண்ணகத்தில் அகப்பட்ட திருச்சோலை போலேயும்
அலையா நிற்கும் யாய்த்து –

அணி திருவரங்கம் தன்னுள் –
சம்சாரத்துக்கு ஆபரணம் போலே யாய்த்து கோயில் இருப்பது
லீலா விபூதிக்கு நாயகன் ஒருவன் உண்டே ஆகிலும்
கோயிலிலே வந்து சந்நிஹிதன் இல்லாத போது
தாலி கட்டா ஸ்திரீகள் போலே ஆயத்து லீலா விபூதி இருப்பது –

சோலை அணி அரங்கம் –
சோலையை ஆபரணமாக உடைய கோயில் என்னவுமாம் –
கார்த்திரள் அனைய மேனிக் –
மது வெள்ளத்தைக் கண்டு கடல் என்று பிரமித்து
மேக சமூஹங்கள் கழுத்தே கட்டளையாகப் பருகி
நெகிழ்ந்து போக மாட்டாதே அவை உள்ளே புகுந்து சாய்ந்தால் போலே யாய்த்து
பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறபடி –
வடிவில் கறுப்பாலும்-குளிர்த்தியாலும் -பர உபகாரமே ஸ்வபாவமாய் இருக்கையாலும் –
தனக்கு என ஓன்று வையாமையாலும் –
மேகத்தை ஒருவருக்கு போலியாகச் சொல்லும்படி யாய்த்து இருப்பது –
தொக்க மேக பல் குழாங்கள் -என்று
வடிவுக்கு ஸ்மாரகமாக மேக சமூஹங்களைச் சொல்லக் கடவது இ றே –

கண்ணனே –
மேகத்தில் காட்டிலும் வ்யாவ்ர்த்தி சொல்லுகிறது –
கடக்க நின்று ஜலத்தை உபகரிக்குமது இ றே மேகங்கள் –
சஜாதீயனாய் வந்து கிட்டுத் தன்னை அன்றோ உபகரிப்பது –
பெரிய பெருமாளை கண்டதும் -யசோதை பிராட்டி வைத்த வெண்ணையைக் களவு கண்டு அமுது செய்து
மூலை அடியே திரிந்து வளர்ந்த செருக்கு தோற்றி யாய்த்து இருப்பது –
கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -என்னக் கடவது இ றே –
உன்னைக் காணும் மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா –
உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக
நீர் உபதேசித்து வைத்த
மார்க்கம் உண்டு -வழி -அதாகிறது -உபாயம் –
அவை யாகிறன –
கர்ம யோகம் –
தத் சாத்தியமான ஜ்ஞான யோகம்
உபயசாத்யமான பக்தி யோகம்
அவதார ரஹச்யம்
புருஷோத்தம வித்யை
அனுக்தமான திரு நாம சங்கீர்த்தனம்
புண்ய ஷேத்திர வாஸம்
இப்படி சேதன பேதத்தோபாதி போரும் இ றே உபாய பேதமும் –
இவற்றில் ஒன்றை அனுஷ்டிக்க மாட்டாமை அன்றிக்கே
ஒன்றையும் கூட அறிய மாட்டாதவன் ஆய்த்து –

மனிசரில் –
அறிவுக்கு அடைவு இல்லா திர்யக் யோனியுமாய் இழக்கவுமாம் இ றே
அறிவுக்கு யோக்யமான மனுஷ்ய ஜன்மத்தைப் பெற்றும் வைத்து இ றே இழக்கிறது –

துரிசனாய –
அவர்கள் தாங்கள் நித்ய சூரிகள் கோடியிலே யாம்படி
அவர்களுக்கும் த்யாஜ்யமான க்ரித்ரிமன் –
திர்யக் ஜென்மமாய் -அயோக்யன் -என்று ஆறி இருக்கிறேன் அல்லேன் –
மனுஷ்ய ஜன்மத்தால் உள்ள பிரயோஜனம் பெற்றிலேன் –
மானுஷ்யம் பிராப்ய –
உபய விலஷணன் ஆனேனே –
என்கிறார் –
இப்படி இருக்கிற நீர் என் பக்கலில் வருவான் என் என்ன –
மூர்க்கனேன் வந்து நின்றேன்-
என் தண்மை பாராதே மூர்க்கன் ஆகையாலே வந்து கொடு நின்றேன்
என் தண்மையும் அறிந்து
உன் வை லஷண்யத்தையும் அறிந்து வைத்து
அயோக்யன் -என்று அகல இ றே அடுப்பது –
அத்தைச் செய்யாதே வந்து கொடு நின்றேன்
தண்ணீர் குடிக்கிற ஊற்றிலே நஞ்சை இடுவாரைப் போலே
விலஷண போக்யமான விஷயத்தை கிட்டி அழித்தேன் என்கிறார் -துரிசு -களவு

கண்ணனே -என்றது அங்குத்தைக்கு ஆகாதார் இல்லை இ றே
அத்தையே பற்றி வந்து நின்றேன்
மூர்க்கனேன் மூர்க்கனேனே –
இது ஒரு மௌர்க்யமே என்கிறார்
வீப்சையால் இரண்டு தரம் அனுசந்தித்து
அத்தலைக்கு வந்த அவத்யத்தைப் பார்த்தும்
தம்முடைய தண்மையைப் பார்த்தும்
அருளிச் செய்கிறார் –

—————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திரு மாலை-31–தவத்துள்ளார் தம்மில் அல்லேன்–பெரியவாச்சான் பிள்ளை அருளிய -வியாக்யானம் –

December 8, 2013

சாஸ்த்ரீயமாய்-மோஷார்த்தமான விஷயங்களிலே
எனக்கு ஓர் அந்வயம் இல்லை என்றீர்
ஸ்வர்க்க பலார்த்தம் ஆதல்
விப்ரலம்பகத்ர்ஷ்ட பலார்த்தமாக வாதல் –
சத் கர்மாதிகளைப் பண்ணிப் போந்தீர் ஆகில்
அவற்றில் உபாயமாக்கி நன்மையில் மூட்டி விடுகிறோம் –
அவை தான் உண்டோ -என்ன –
அவை ஒன்றும் ஸ்வ பிராப்திக்கு பரிகரமாக தேவரீர் தந்த ஜென்மத்தை
விஷய பிரவணனாய்
ப்ரந்வேஷத் விநாச ஹேதுவாக்கத் தந்தீராகக் கொண்டேன் -என்கிறார் –

ஆனால்
கீழ் பாட்டோடு இதுக்கு சங்கதி என் என்னில்
பர ச்ம்ர்த்த்ய அசஹத்வமே அன்றிக்கே
விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பந்து ஜனங்களுக்கும்
அசல் ஆனேன் -என்கிறார் –

———————————————————————————————————————————————————

தவத்துள்ளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உளானே

———————————————————————————————————————————————————-

தவத்துள்ளார் தம்மில் அல்லேன் –
யஞ்ஞே நதாநேன தபஸா நாசகேன–என்று
தபசி மோஷார்த்தமாக விதித்தது இ றே –
முமுஷூக்களாய்-தபஸை அனுஷ்டித்தாரில் கூட்டாக பெறாமை அன்றிக்கே
ஸ்வர்க்காதி பிரயோஜன பரராய் தன்னையே பேணுவாரும் உண்டு –
அவர்களுக்கும் கூட்டாகப் பெற்றிலேன் –
இவை இத்தனையும் இன்றிலே ஒழிந்தால்
ஒரு தபஸை ஆரம்பித்து
அதிலே வைகல்யத்தாலே பிரசித்திகள் ஆனார் தங்களில் தான் கூடப் பெற்றேனோ –
ஆக
தபஸ் ஸ்பர்சம் உடையார்
ஒருவராலும் கூடப் பெற்றிலேன் -என்கிறார் –

தனம் படைத்தாரில் அல்லேன் –
அர்த்த லாபத்தையும் சாஸ்திர சாதனமாக சொல்லக் கடவது இ றே
விலஷண விஷயத்தில் அந்வயிக்கும் அன்று –
யஞ்ஞே நதா நேன -என்றும்
யஜ்ஞ்ஞோம் தபச்சைவ பாவநானி-என்றும்
தத்தானம் சாத்விகம் ச்ம்ர்த்தம் -என்றும் சொல்லக் கடவது இ றே –
யயாகயாசவி பஹ்வன்னம் ப்ராப்னுயாத் -என்றும்
சத்விஷயத்தில் அந்வயிக்கும் அன்று
த்ரவ்யார்ஜனத்துக்கு பிரகார நியதி இல்லை என்றும் சொல்லிற்று இ றே –
இம்முகத்தாலே த்ரவ்யார்ஜனம் பண்ணுவாரில் கூட்டல்லேன் –
திருமங்கை ஆழ்வார் போல் அனுஷ்டிப்பதும் செய்தார்கள் இ றே –
இவை இன்றிக்கே ஒழிந்தாலும்
யத்து பிரத்யுபா காரர்த்தம் பலமுத்திச் யவா புன -என்கிற ராஜச தானம் ஆதல் –
அசத்க்ர்த்ம வஜ்ஞ்ஞாதம் -என்கிற தாமஸ தானம் ஆதல் –
க்யாத்யர்த்ததான -தேனசாச்ம்யவ மானித -இவை உண்டோ என்னில்
அவை ஒன்றும் இல்லை என்கிறார் –

இவை இரண்டும் இருப்பவர் பந்துக்களுக்கு உறுப்பாய் இருப்பார்கள் இ றே –
அது இருந்தபடி என் என்னில் –
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் அல்லேன் –
உவர்ப்பு நீரை முகத்திலே ஏறிட்டுக் கொண்டால் அது கண் விழிக்க ஒண்ணாதபடி கரிக்குமா போலே
என்னை நேர் முகம் பார்க்க ஒண்ணாத படி யாய்த்து
நான் அவர்கள் திறத்தில் அவத்ய பூதனாய் வர்த்தித்த படி —
அவர்கள் என் முகத்தில் விழித்தால் அற்றைக்கு ஜீவிக்க
மாட்டாதபடி யாய்த்து
அவர்களுக்கு அவத்ய பூதனாய் வர்த்தித்த படி –
அவர்களுக்கு அபிரியமே பண்ணுகையாலே பிரயமாகவும் பெற்றிலேன் –
அவர்களுக்கு அஹிதமே பண்ணுகையாலே ஹிதைஷியாகவும் பெற்றிலேன் –
எனக்கும் அனர்த்தங்களை விளைத்துக் கொள்ளுகையாலே
தனக்குத் தான் என்னும் அளவும் பெற்றிலேன் –
அவர்களுக்கு அவத்ய பூதனாயே போனேன்-

பந்துக்களுக்கு ஆகாதவர்களும்
தம்தாமுக்கு அபிமதைகளான -ஸ்த்ரீகளுக்காக இருப்பார்களே –
அது இருந்தபடி என் என்னில் –
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன் –
அகவாயில் அனர்த்தங்களை மறைத்து
அதரத்தில் பழுப்பைக் காட்டி அகப்படுத்திக் கொள்ளுமவர்களாய் –
இவனும் உள் வாயின் தண்மை அறியான் –
தன்னோடு அவர்களுக்கு ஒரு பந்தம் இல்லாமை அறியான் -இவனும் அவ் அதரத்தில் பழுப்புக்கு அவ்வருகே போக மாட்டாதே அகப்படுவான் –
அகவாயில் அநாத்ம குணங்களை மறைக்கைக்கும்
புறம்பு உள்ளாரோடு இவனுக்கு உண்டான பற்றுகை அறுகைக்கும்
அதரத்தில் பழுப்பே யாய்த்து இவர்கள் உடைய பரிகரம் –
புறம்பு உள்ள பந்துக்களையும் விட்டு
பற்றினவர்களுக்கும் துர்ப்பரனாய் தலைக் கட்டினேன் –
அதாவது
அவர்கள் பக்கலிலும் அபகாரகனாய் போந்தவன் ஆகையாலே அவர்களுக்கும் இவனோடு சம்பந்தம்
அற வேணும் என்று இருக்கை –
துரிசன் -கள்ளன் –
நீசனான ராவணனுக்கு மாகாதகன் ஒருவன் என்று அவன் சொன்னாப் போலே
தண்மைக்கு எல்லையான ஸ்திரீகளுக்கும் ஆகாதே அவர்களாலே பஹிஷ்கரிக்கப் பட்ட நான் ஒருவன் -என்கிறார்

ஆனபின்பு
அவத்தமே பிறவி தந்தாய் –
தேவரீர் ஜென்மத்தை எனக்கு வ்யர்த்தமே தந்துஅருளி யவராய் பலித்தது –
தம்முடைய கர்மம் அடியாக வந்த அனர்த்
கர்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவர் ஆகையாலே செய்கிறார்
கர்மம் ஆவது ஈஸ்வர ஹ்ருதயத்திலே நிக்ரக ரூபேண நின்று பலிப்பது
சாகப பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஈஸ்வர அதீணமாம் படி யாய்த்து ஸ்வ ரூபம் இருப்பது
பொறுத்தோம் என்ன போமது ஓன்று
புத்தியோகம் தம் -என்றபடியே புத்தி பிரதானம் பண்ணி
நல் வழி போக்கும் இடத்தில் நிவாகரர் இல்லை
ஆக இப்படி உணர்ந்தவருக்கு சொல்லலாம் இ றே –
கிணற்றிலே விழுந்த பிரஜையைக் கண்டு தாய் அருகே இருந்தால் -தாய் தள்ளினாள் -யென்னக் கடவது இ றே

அரங்க மா நகர் உளானே –
கர்ம பரதந்த்ரராய்
விஷயாந்தர பிரவணராய் இருப்பாரை
அழகாலும் சீலத்தாலும் மீட்க்கைக்கு அன்றோ
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

——————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரியப்ராடியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .