Archive for the ‘திரு பல்லாண்டு’ Category

திருப்பல்லாண்டு -5-அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 4, 2013

அவதாரிகை –

முற்பட அநந்ய பிரயோஜனரை அழைத்தார்
கேவலரும் ஐஸ்வர்யார்த்திகளும் பிரயோஜனாந்த பரராய் இருக்கச் செய்தேயும்
கேவலருடைய துர்கதியைக் கண்டு முந்துற அழைத்தார் -இப்பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளை-அழைக்கிறார்-

அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி அசுரர் ராக்கதரை
யிண்டைக் குலத்தை யெடுத்துக் களைந்த விருடிகேசன் தனக்குத்
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -5-

அண்டக் குலத்துக்கு -அண்ட சமூஹத்துக்கு
அதிபதி யாகி -தலைவனாய்
அசுரர் ராக்கதரை -அஸூர ராஷசர்கள் உடைய
யிண்டைக் குலத்தை -நெருங்கின திரளை
யெடுத்து-சேரத் திரட்டி
களைந்த -நிர்மூலமாகப் போக்கின
விருடிகேசன் தனக்கு-இந்திரியங்களை தன் வசமாக நடத்துமவனுக்கு
தொண்டைக் குலத்தில் -அடிமை செய்யும் குலத்தில்
உள்ளீர் -உளரான நீங்கள்
வந்து
அடி -சர்வேஸ்வரன் திருவடிகளை
தொழுது
ஆயிரம் நாமம் -அவன் திருநாமங்கள் எல்லாம்
சொல்லி-வாயாரச் சொல்லி
பண்டைக் குலத்தை -பகவத் விமுகராய் இருந்த பழைய ஜாதியை
தவிர்ந்து-நான் எனது என்ற நினைவோடு விட்டு
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -அநேகம் ஆயிரம்  சம்வஸ்தரங்கள்
நித்தியமாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்

வியாக்யானம் –

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி –
தேவதைகள் உடைய ஐஸ்வர்யத்துக்கு எல்லாம் மேலான அண்டாதிபத்யம் இ றே
ஐஸ்வர்யத்துக்கு மேல் எல்லை-அந்த ப்ரஹ்மா ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கும் ப்ரகாரம் சொல்லுகிறது
அண்டாதி பதயே நம -என்று இ றே இப்பத ப்ராப்திக்கு சாதன மந்த்ரம் -அந்த அண்ட
ஐஸ்வர்ய விசிஷ்டனாய் இ றே சர்வேஸ்வரனை அனுசந்திப்பது -வ்யாஹ்ர நமநுஸ்மரன் -என்கிறபடியே இம் மந்த்ரத்தை சொல்லவும் -நெஞ்சாலே ஐஸ்வர்ய விசிஷ்டனாக
அனுசந்திகவும் மாய் இ றே ஆஸ்ரயண பிரகாரம் இருப்பது

அறவனை ஆழிப்படை அந்தணனை என்று ஸுத்தி குண யோகத்தை சொல்லுவாரைப் போலே-அண்டக் குலத்துக்கு அதிபதியான
ஆகாரமே யன்றோ இச் சப்தத்தில் உள்ளது -ஆஸ்ரயண பிரகாரம் தோற்ற இருந்தது
இல்லையே என்னில் -உதாரனாய் இருப்பான் ஒருவன் கையிலே எலுமிச்சம் பழம்
இருந்தால் -இது இருந்த அழகு என் -என்று சொன்ன அளவிலே -பாவஜ்ஞ்ஞனாய் இருக்குமவன் -கொள்ளலாகாதோ -என்று கருத்து அறிந்து கொடுக்கும் இ றே -அப்படியே
அண்டாதிபத்யத்தில் அபேஷை உண்டு என்று தங்கள் அபேஷையை ஆவிஷ்கரிக்கிறார்கள் –
இத்தால் பிரயோஜனாந்த பரரைக் குறித்து –உதாரா -என்னுமவனுடைய ஔ தார்யம் பிரகாசிக்கிறது
அண்டக் குலத்துக்கு
அண்டா நாந்து சஹாஸ்ராணாம் -என்று தொடங்கி -கோடி கோடி சதா நிஸ -என்று
அசங்க்யாதமான அண்டங்களுக்கு நிர்வாஹன் ஆகையாலே அபேக்ஷித்தார்  அபேஷித்த-அண்டங்களை கொடுக்கைக்கு உடைமையை சொல்லுகிறது
அதிபதியாகி –
உபய விபூதிக்கும் நிர்வாஹன் ஆகை
ஆகி –
ஆஸ்ரிதர் தன்னை அனுசந்தத்தித்த அளவிலே யாயிருக்கை –
ஐஸ்வர்யார்த்தி ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்தித்தால் அவ்வளவாய் இருக்கும்
கைவல்யார்த்தி அஸ்ப்ர்ஷ்ட சம்சார கந்தனாக அனுசந்தித்தால் அவ்வளவாய் இருக்கும்

அசுரர் இராக்கதரை
இப்பதத்துக்கு அசுரர்களாலே வேத அபஹார ஆபத்துக்களில் களை யறுத்துக் கொடுக்கையும்
ரஷகனுக்கு பரம் இ றே –ஆர்த்தன் -என்றும் அர்த்தார்த்தி -என்றும் -ஐஸ்வர்ய புருஷார்த்தம்
இரண்டு முகமாய் இ றே இருப்பது -அதில் அர்த்தார்தியை கீழே சொல்லி -இவ் வம்சத்தினாலே
ஆர்த்தனை சொல்லுகிறது -ஜன்ம ப்ரப்ர்த்தி பரா நர்த்தமே பண்ணிப் போருவது இரண்டு வர்க்கம் இ றே –

சம்பந்தம் ஒத்து இருக்க நிரசநத்திலே இழிகிறது ஆஸ்ரித விரோதிகள் என்று இ றே
இன்டைக் குலத்தை
மிகவும் நெருங்கின திரளை -இண்டர் -என்று சண்டாளர் –

இவர்களை சண்டாளர் என்று சொல்லுகிறது -நிஹீனர் என்னும் நினைவாலே
உத்க்ர்ஷத்துக்கு எல்லை -பர ச்ம்ர்த்தி ஏக பிரயோஜனாய் இருக்கை
நிகர்ஷத்துக்கு எல்லை -பர அனர்த்தமே யாத்ரையாய் இருக்கை
இவ் வாபத்துக்களிலே அஸூர சத்ரவே நம -என்று இ றே இவர்களுடைய
ஆசஸ்ரயண பிரகாரம் இருப்பது

எடுத்துக் களைந்த
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்னுமா போலே ஆஸ்ரிதர் பக்கல் அழல்
தட்டாதபடி நிரசிக்கை -களைந்த என்றால் போதாதோ எடுத்துக் களைந்த என்றது பொல்லா அரக்கன் போலே –
இலங்கை பாழாளாக -என்றதும் -விபீஷண பரிக்ரஹத்துக்கு ஒரு நோவு வராதபடி இ றே
விபீஷண க்ரஹத்துக்கு அழல் தட்டாதபடி இ றே லங்கா தஹனம் பண்ணிற்று திருவடியும்
இருடிகேசன் –
பிரயோஜனாந்த பரருக்கு ஐஸ்வர்யாதிகளில் கர்ம அனுகூலமாக ருசியைப் பிறப்பிக்கும் -தன் பக்கலிலே ந்யச்த பரராய் இருப்பவருக்கு ஸ்வரூப அநுரூபமாக ருசியைப் பிறப்பிக்கும் –
ஐஸ்வர்யார்த்தமாக அவன் பக்கலிலே கண் வைக்கும் போதே அவன் வடிவு அழகிலே உறைக்க வையும் கோள்
அவன் -மமேதம் -என்கிற அபிசந்தியைக் குலைத்து தன் பக்கலிலே ருசியைப் பிறப்பிக்கும்
அத்தாலே அபேஷித்த ஐஸ்வர்யத்தை விஸ்மரித்து அவன் தன்னையே பற்றலாம்

தனக்குத் தொண்டைக் குலத்தில் உள்ளீர் –
இப்படி ஐஸ்வர்யத்தில் ப்ரேமம் போய் பகவத் பிரேம யுக்தர் உடைய திரளிலே உளரான நீங்கள்
தொண்டைக்குலம் என்று தனியே ஒரு சந்தானம் போலே காணும்
தேஹமே ஸ்வரூபம் என்று இருப்பாருக்கும் -சேஷத்வமே ஸ்வரூபம் -என்று இருப்பாருக்கும்
இத்தனை வாசி உண்டு இ றே -இனி அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாருக்கு க்ர்த்த்யம் இன்னது என்கிறார் மேல்
வந்தடி தொழுது –
திருவடிகளே பிரயோஜனமாக வந்து -அநுகூல வ்ர்த்திகளைப் பண்ணி -ஐஸ்வர்யமே பிரயோஜனமாய்
விஷய அனுபவமே யாத்ரையாய் இருக்கும்படி பாரும் கோள்
ஆயிர நாமம் சொல்லி –
இரண்டு திருநாமத்தையே நிர்பந்திக்க வேண்டுவது -மமேதம் -என்று இருக்கும் அன்று இ றே
ததேவம் -என்கிற புத்தி பிறந்தால் பகவத் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திருநாமங்கள்
எல்லாம் போக்யமாய் இ றே இருப்பது -அவற்றை வாயாராச் சொல்லி –

பண்டைக் குலத்தை தவிர்ந்து
தொண்டைக் குலத்தை வந்து அன்வயித்தவாறே -மமேதம் -என்று இருந்த காலம் ஜன்மாந்தரமாய்
தோற்றும் இ றே -ஒரு ஜன்மத்தில் த்விஜன்மன் ஆகிறான் இ றே
ராஜர்ஷியான விஸ்வாமித்திரன் அந்த ஜன்மத்திலே ப்ரஹ்மர்ஷியானான் இ றே
அங்கு தபஸாலே வர்ண பேதம் பிறந்தது
இங்கு பகவத் ப்ரசாதத்தாலே ஸ்வரூப பேதம் பிறந்தது
உனக்கு நான் -என்ற அநந்தரம் -நான் எனக்கு -என்ற விது வ்யதிரேகமாய் தோன்றும் இ றே
பல்லாண்டு –
இப்படி அநந்ய  பிரயோஜனரான நீங்கள் மங்களா சாசனம் பண்ணும் கோள்
பிரயோஜனாந்த பரனாய் போந்தவன் நமக்கு ஆஸாசிக்கும் இத்தனை பரிவனாகப் பெற்றோமே
என்று அவன் குளிர நோக்கும் –
பல்லாயிரத்தாண்டு என்மினே-
பின்னை பல்லாயிரத்தாண்டு என்னும் கோள் –
அந்நோக்கு அழகு நித்திய ஸ்ரீ யாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்
உங்களுக்கு இம் மாத்ரத்தாலே ஸ்வரூபமும் -அத்தாலே ஈஸ்வரனுக்கு ச்ம்ர்த்தியும்
உண்டாகப் பெற்றால் ஆறி இருக்கிறது என் -சடக்கென மங்களா சாசனம் பண்ணும் கோள் என்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -4—ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 3, 2013

அவதாரிகை –

ஏடு இத்யாதி –
கீழே அநந்ய பிரயோஜனரை அழைத்தார் -அவர்கள் மங்களா சாசனத்துக்கு பிரத்யாசன்னர்
ஆகையாலே நீரிலே நீர் சேர்ந்தால் போலே சேர்ந்து இருக்கும் இ றே -அவ்வளவிலும்
பர்யாப்தி பிறவாமையாலே -ஈஸ்வரன் கை பார்த்து இருக்குமவர்கள் -என்னும் இவ்வளவைக்
கொண்டு ஆப்த ப்ராப்தி காமரையும் ஐஸ்வர்ய காமரையும் அழைக்க கோலி -அதில்
முந்துற ஆத்ம ப்ராப்தி காமரை அழைக்கிறார் -ஐஸ்வர்யத்தில் காட்டில் ஆத்ம ப்ராப்தி
உத்க்ர்ஷ்டம் என்றும் நினைவாலே அழைக்கிறார் அல்லர் -அந்த மோஷத்தை இவர் அநர்த்தம்
என்று இருக்கையாலே -இனி எத்தாலே முற்பட அழைகிறது என்னில் –
பகவத் சம்பந்தத்துக்கு உபகரணமான சரீர மோஷம் அணித்தாகையாலும் -அம் மோஷத்தை
ப்ராபித்தால் மீள ஒண்ணாமை யாலும் -ஐஸ்வர்ய காமனுக்கு காலாந்தரத்திலே யாகிலும்
பகவத் சம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும் -இவனுக்கு அந்த யோக்யதையும்
அழிகை யாகலும் துர்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்
பிரயோஜனாந்தர பரர் -மங்களா சாசனம் பண்ண வாரும் கோள் -என்றால் வருவார்களோ வென்னில்
பகவத் ப்ராப்தியில் உத்க்ர்ஷத்தையும் -அத்தைப் பற்ற கைவல்யத்தினுடைய நிகர்ஷத்தையும்
அறிவித்தால் -விட்டுப் பற்ற வேணும் -என்னும் ஆத்ம குணோ பேதரை இ றே இவர் அழைக்கிறது –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நரகமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -4-

ஏடு -பொல்லாங்கான
நிலத்தில் -மூல பிரக்ருதியிலே
இடுவதன் முன்னம் -சேர்ப்பதருக்கு முன்னே
வந்து
எங்கள் குழாம் -அநந்ய பிரயோஜனரான எங்கள் திரளிலே
புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் -கூட வேண்டும் என்ற நினைவு உடையவர்களாய் இருப்பீர் ஆயின்
வரம்பு ஒழி -வரம்பு ஒழிய
வந்து ஒல்லைக் கூடுமினோ -விரைவாக வந்து சேரும் கோள்
நாடு -நாட்டில் உள்ள அவிசேஷஜ்ஞரும்
நரகமும் -நகரத்தில் உள்ள விசேஷஜ்ஞரும்
நன்கு அறிய -நன்றாக அறியும் படி
நமோ நாராயணா என்று
பாடும் -பாடத்தக்க
மனமுடை-மனஸ் உண்டாம்படியான
பத்தர் உள்ளீர் -பிரேமத்தை உடையீர் ஆகில்
வந்து பல்லாண்டு கூறுமினே -வந்து பல்லாண்டு பாடும் கோள் என்கிறார்

வியாக்யானம் –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்
ஏடு என்பது பொல்லாங்கு -உங்களைப் பொல்லாங்கு நிலத்தில் இடுவதன் முன்னம் -என்று பிள்ளை அமுதனார் –
ஏடு -என்கிற சூஷ்ம சரீரத்தை -ஸ்தூல சரீரத்தை காட்டில் பிரதானமாய் -அதனுடைய
பிரயோஜனமாய் நிற்கையாலே -பாலில் ஏடு -என்னுமா போலே -சொல்லுகிறது
நிலத்தில் இடுவதன் முன்னம் –
ஸ்வ காரணமான மூல பிரக்ருதியிலே லயிப்பதற்கு முன்னே –
இது நிர்வஹித்து போரும்படி
ஏடு -என்று உடம்புக்கு பேராய் -ஸ்தூல சூஷ்ம ரூபமான சரீரம் ஸ்வ காரணமான
மூல பிரக்ருதியிலே லயிப்பதருக்கு முன் என்னவுமாம் –
இவ்வாக்யத்தால் அவர்கள் அநர்த்தத்தை கண்டு அழைக்கிறார் என்னும் இடம் தோற்ற இருக்கிறது இ றே

வந்து
ஸ்வதந்த்ரராய் இருப்பாருக்கு தம்மளவிலே வரும் இடத்தில் உண்டான தூரத்தை சொல்லுகிறது
எங்கள் குழாம் புகுந்து –
கேவலரும் ஒரு சமஷ்டியாய் இறே இருப்பது -அது ஸ்வதந்த்ரம் ஆகையாலே அந்யோன்யம்
சேர்த்தி அற்று இருக்கும் -ஒருத்தருடைய ச்ம்ர்த்தி ஒருத்தரதாய்  இ றே இத் திரள் இருப்பது –
பரஸ்பர நீஸ பாவை -என்னக் கடவது இ றே
இத்திரளில் புகுவாருக்கு எவ்வதிகாரம் வேணும் என்னில்
கூடும் மனம் உடையீர்கள் –
புகுருவோம் என்ற நினைவே வேண்டுவது
அவி லஷணமான புருஷார்தங்களுக்கு புரச் சரணங்கள் கனக்க வேண்டி இருக்க
அதில் விலஷணமான இத் திரளிலே புகுருகைக்கு புரச் சரணம் வேண்டாது இருப்பது என்
என்னில் -அவை அப்ராப்த புருஷார்த்தங்கள் ஆகையாலே புரச் சரணங்கள் அபேஷிதங்களாய் இருக்கிறன
இது ஸ்வரூப ப்ராப்தம் ஆகையாலே வேண்டா-உடையீர்கள்-
இந்த இச்சையால் வந்த பிரயோஜன அதிசயத்தாலே -வைஸ்ரவணன் -என்னுமா போலே
அருளிச் செய்கிறார் -கூட நினைப்பார்களுக்கு செய்ய வேண்டுவது முன்பு நின்ற சிறுமையை குலைத்து வர வேணும்
வரம்பு ஒழி வந்து
வரம்பு ஒழிய என்கிற இது வரம்பு ஒழி -என்று கிடக்கிறது

சர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனாய் -அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
அனுபவிக்க இட்டுப் பிறந்தவன் -ஜரா மரண மோஷாயா -என்று ஸ்வ அனுபவத்தளவிலே
ஒரு வரம்பை இட்டுக் கொண்டான் இ றே -அத்தை ஒழிந்து வாரும் கோள் -என்கிறார் –
ஒல்லைக் கூடுமினோ –
பற்றுகிற புருஷார்தத்தின் உடைய வை லஷண்யத்தை அனுசந்தித்தால் பதறிக் கொண்டு
வந்து விழ வேண்டாவோ –
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -என்றது சரீரத்தில் அஸ்தைர்யத்தை பற்ற –
இங்கு ஒல்லை -என்கிறது -பற்றுகிற விஷயத்தினுடைய வை லஷண்யத்தைப் பற்ற –
கூடும் மனம் உடையீர்கள்  -என்றும் –கூடுமினோ -என்றும் -அருளிச் செய்கிறார் இ றே
யோக்யதையைப் பற்ற –
அத்திரளில் நின்றும் -பிறிகதிர் பட்டார் சிலர் இவர்கள் என்றும் தோற்றும் இ றே

ஸ்வரூபம் வெளிச் செறித்தக்கால் -விளங்க நிற்றல் –
நாடு நகரமும் நன்கறிய –
இத்திரளிலே புகுருகைக்கு வேண்டுவன அருளிச் செய்தார் -இதுக்கு மேல் மங்களா சாசனத்துக்கு
வேண்டுவன அருளிச் செய்கிறார் –நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்
நன்கறிய –
நன்றாக அறிய –
பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக
விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்கறிய –
இந் நன்மையை அறிய என்றுமாம்
நாமோ நாராயணா என்று
இவ்வளவும் போராது -தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இ றே  நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ர்த்தி இ றே புருஷார்த்தம் ஆவது –
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
நினைத்து இருக்கும் அவ்வளவு போராது
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடுவோம் என்னும் நெஞ்சு உண்டாம் படியான பிரேமத்தை
உடையீர் ஆகில்
வந்து பல்லாண்டு கூருமினோ
வந்து திருப்பல்லாண்டு பாடும் கோள்
இத்திரளிலே புக வேணும் என்று இருப்பீர் -அத்தை செய்யும் கோள்
அவ்வளவு போராது -உங்களுடைய வ்ருத்தி விசேஷமும் பெற வேணும் என்று இருப்பீர்
திருப்பல்லாண்டு பாடும் கோள் -என்று க்ரியையை இரண்டாக்கி நிர்வஹிக்கவுமாம்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -3–வாழாட் பட்டு உள்ளீரேல்—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 2, 2013

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலே தாம் திருப்பல்லாண்டு பாடினார்
இனிமேல் தம்முடைய மங்களா சாசனத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிறபடியே -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்திகள்
மூவரையும் கூட்டிக் கொள்வாராக நினைத்து -அதில் மங்களா சாசனத்துக்கு பகவத் ப்ராப்தி காமர்-ப்ரத்யாசன்னர் ஆகையாலே அவர்களை அழைக்கிறார் -ஏகஸ் சாது ந புஞ்ஜீத -என்கிற-ந்யாயத்தாலே -இம் மங்களா சாசன ரசம் எல்லாரும் புஜிக்க வேணும் என்கிற நினைவாலே-அழைக்கிறார் என்றுமாம்
அவர்களோடே கூட மங்களா சாசனம் பண்ணுகை தமக்கு தாரகம் ஆகையாலும் என்றுமாம் –
அடியார்கள் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -என்றும் –
அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
கண்ணாலே காண்கையும் -அத் திரளிலே புகுருகையும் -இவை எல்லாம் உத்தேச்யமாய் இ றே இருப்பது-

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-

வாழ் ஆள்-கைங்கர்ய ரூபமான போகத்துக்கு
பட்டு -பொருந்தி
உள்ளீரேல்  -இருப்பீர்கள் ஆனால்
வந்து -விரைவாக வந்து
மண்ணும் -திரு முளைத் திரு நாளுக்குப் புழுதி மண் சுமக்கையும்
மணமும்  -அந்தக் கல்யாணத்துக்கு அபிமாநியாய் இருக்கையும்
கொண்மின் -நீங்கள் ச்வீகரியும் கோள்
கூழ் -சோற்றுக்காக
ஆள் பட்டு -அடிமை ஓலை எழுதிக் கொடுத்து
நின்றீர்களை -கண்ட இடம் எங்கும் நிற்கிற உங்களை
எங்கள் குழுவினில் -அநந்ய ப்ரயோஜனரான எங்கள் திரளிலே
புகுதல் ஓட்டோம் -சேர ஓட்டோம்
உங்கள் திரளுக்கு வாசி என் என்ன –
ஏழாட் காலும்-முன் ஏழ் பின் ஏழ் நடு ஏழ் ஆகிய இருப்பதொரு தலைமுறையிலும்
பழிப்பிலோம் -ப்ரயோஜன பரர் என்றும் -சாதனாந்த பரர் என்றும் -பழிக்கப் படாதவர்கள் என்ன
நாங்கள்
அது உங்கள் தொழில் கண்டு அறிய வேணும் என்ன
இராக்கதர் வாழ் -இராட்ஷசர் வர்த்திக்கிற
இலங்கை -இலங்கையானது
பாழாளாகப் -ஆள் பாழாம் படியாக
படை -யுத்தத்திலே
பொருதானுக்கு-அன்று எதிரிகள் அம்பு மார்விலே தைக்கும்படி பொருதவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே -இன்று இருந்து மங்களா சாசனம் பண்ணிப் போருவோம்
சிலர் நாங்கள் என்கிறார் –

வியாக்யானம்-

வாழ் ஆள் -என்று
நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது
வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –
அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இ றே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இ றே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க
சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –
என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இ றே இருப்பது –

பட்டு -என்பது-
உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற
சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-

நின்றீர்-
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு
பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இ றே ஸ்திதி உண்டாவது –

உள்ளீரேல்-
ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட
சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்
தேட்டமாய் இ றே இருப்பது –
இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து

அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று
சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு
கலந்துகொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது
மண்ணும் மணமும் கொண்மின் -என்கிறார் –
மண்ணுக்கும் மணத்துக்கும் உரியார் அந்தரங்கரான அடியார் இ றே
அடிமை விலையோலை எழுதும் பொழுதும் -மண்ணுக்கும் மணத்துக்கும் உரியனாக வேணும்
என்று இ றே எழுதுவது –
மண்ணாவது -ஸ்வாமிக்கு ஒரு மங்களம் உண்டானால் அங்குரார்ப் பணத்துக்கு புழுதி மண் சுமக்கை
அந்த ந்யாயத்தாலே இ றே நம் ஆழ்வார்களுக்கு அது க்ர்த்யம் ஆகிறது
மணமாவது -அந்த கல்யாணத்துக்கு தான் அபிமாநியாய் இருக்கை
இவ்விரண்டும் சர்வ கைங்கர்யத்துக்கும் உப லஷணம்
கொண்மின் -என்ற இடத்தால் -வாங்குமின் என்னாது கொள்மின் என்றது –
அடிமை செய்யுமிடத்தில் கிடந்தானை கண்டேறுகை-ஸ்வ தந்த்ரனாகை -யன்றிக்கே  சிலர் தரக் கொள்ள
வேணும் யென்கையும் -தருமவர்களும் -உங்களதான அடிமையை நீங்கள் ச்வீகரியும் கோள்
என்று சீரிதாகக் கொடுக்கக் கடவர்கள் யென்கையும் ஆகிற சாஸ்த்ரார்த்தையும் வெளியிடுகிறது

கூழ் ஆள் இத்யாதி-
இவர் அழைத்த வாசி அறியாதே பிரயோஜனாந்தபரர் அடையப் புகுர தொடங்கிற்று –
அவர்களை நிஷேதிக்கிறார் –கூழ் ஆள் -என்று சோற்றுக்காக யாரேனுக்கும் தன்னை
எழுதிக் கொடுக்கை -இது பிரயோஜனாந்த பரருக்கும் உப லஷணம் -தன்னை பகவத் தாஸ்ய
ஏக போகன் -என்னுமிடம் அறியாதே பிரயோஜனாந்தரங்களைக் குறித்து அவன் தன்னையே
ஆஸ்ரயிக்கிறார்கள் இ றே –
கூழ் ஆள் -என்று அநந்ய பிரயோஜனராய் இழிந்து பிரயோஜநாந்தரங்களை வேண்டிக் கொள்ளும்
இரு கரையரைச் சொல்லுகிறது -என்றுமாம் –
பட்டு -என்றது
அகப்பட்டேன்  -என்றபடி –
அதாவது பந்தகம் ஆகையாலே -ஸ்வரூப விரோதியாய் அனர்த்தததை பண்ணும் என்னுமத்தாலே சொல்லுகிறது –
நின்றீர்களை -பஹூ வசனத்தாலே -உள்ளீரேல் -என்று தேட வேண்டாதே பார்த்த பார்த்த
இடம் எங்கும் பிரயோஜனாந்த பரராய் இருக்கை

எங்கள் குழு -என்று
இத் திரளுக்கு உண்டான வ்யாவ்ர்த்தி தோற்ற அருளிச் செய்கிறார் –
தேகாத்ம அபிமாநிகள் -தேவதாந்திர ப்ரவணர் -இவ்விஷயம் தன்னிலே புகுந்து
பிரயோஜநாந்தரங்களை அபேஷிப்பார் -அநந்ய ப்ரயோஜனராய் சாதனாந்தரங்களிலே
அநந்ய பரராய் இருப்பார் ஆகிற திரள்கள் எல்லாவற்றிலும் வ்யாவர்த்தமாய் அன்றோ
எங்கள் திரள் இருப்பது என்கிறார் –
புகுதல் ஓட்டோம் –
ஆரே புகுவார் -என்று ப்ரார்த்திக்கிற இவர் -நிர்த்தயரைப் போலே புகுதல் ஒட்டோம்
என்பான் என் என்னில் -வசிஷ்டன் பரம தயாளன் ஆனாலும் சண்டாளனை அக்நி
கார்யத்திலே கூட்டிக் கொள்ளான் இ றே
இத்தால் அநந்ய பிரயோஜனருக்கு பிரயோஜன பரரோட்டை சஹ வாஸம் அசஹ்யமாய்
இருக்கும் என்றது ஆய்த்து
எங்கள் திரளில் காட்டிலும் உங்கள் திரளுக்கு வாசி என் என்னில் –
ஏழ் ஆள் காலும் பழிப்பிலோம் -என்கிறார்
ஏழ் ஆள் -என்று தமக்கு கீழே ஒரு மூன்றும் -மேலே ஒரு மூன்றும் -தாமுமாக ஏழு படியைச் சொல்லுகிறது
இஸ் சமுதாயத்தை பற்றி சாஸ்திரங்கள் சப்த சப்த ச சப்த -என்று இந்த ஏழையும்
இதுக்கு கீழே ஓர் ஏழையும் -இதுக்கு மேலே ஓர் ஏழையும் -ஆக இருப்பதொரு படி காலைச் சொல்லுகிறது

தசபூர்வாந்த சாபரா நாத்மா நஞ்சைக விம்சதிம் பங்க்திஞ்ச புநாதி -என்று முக பேதேன
சாஸ்திரம் சொல்லிற்று –
ஏழாட் காலும் -என்கிற சப்தம் இவ்வளவை நினைக்கிறது -இத்தால் ஒரு சந்தாநத்திலே
ஒருவன் அநந்ய பிரயோஜனன் ஆனால் அவனைப் பற்ற பகவத் பிரபாவம் சம்பந்தி
சம்பந்திகள் அளவும் செல்ல கீழும் மேலும் வெள்ளம் இடுகிறது
பழிப்பிலோம் –
விஷயாந்தர ப்ராவண்யம் என்ன -தேவதா ந்தர பஜனம் என்ன -இவை தூரதோ நிரச்தம்
ஆகையாலே பதர் கூட்டித் தூற்ற வேண்டா
இனி அநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருப்பாருக்கு பழிப்பு ஆவது
பிரயோஜனாந்தர பரதையும் சாதநாந்தர பரதையும் இ றே
அவற்றை உடையோம் அல்லோம் என்கிறார்
நாங்கள்
எங்கள் குழுவு -என்ற போதை செருக்குப் போலே பகவத் விஷயீ காரத்தால் வந்த செருக்கு
தோற்ற சொல்லுகிறார் –
உங்கள் ஸ்வரூபம் நீங்கள் சொன்ன அளவில் விஸ்வசித்து இருக்குமத்தனை யளவு
யடியோம் அல்லோம் -உங்கள் வ்ர்த்தி விசேஷத்தைக் கொண்டு உங்களை அறிய வேணும் என்ன –
அது நீங்கள் அறியும் புடை யல்ல -எங்கனே என்னில் -ஒரு கார்யப்பாடாக உள்ள அமங்களங்கள்
போக மங்களா சாசனம் பண்ணும்படி யாதல் -இல்லாத மங்களங்கள் உண்டாக வேணும் என்று
மங்களா சாசனம் பண்ணுதல் செய்யும் அளவு இ றே நீங்கள் அறிவது -முன்பு வ்ய்ர்த்தமாய்
கழிந்த செயலுக்கு இன்று இருந்து வயிறு பிடிக்கும் திரள் காண் எங்களது
இராக்கதர் வாழ் இலங்கை –
துர்வர்க்கம் களித்து வர்த்திக்கும் தேசம்
புறம்பே போய் பர ஹிம்சை பண்ணி -குளவிக் கூடு போலே திரண்டு -கடலையும்
மதிளையும் அரணாக்கி அமணக் கூத்தடிக்கும் தேசம் என்கை
இலங்கை தான் விபீஷண விதேயம்  இ றே -இலங்கை பாழ் ஆக என்னாதே –இலங்கை ஆள் பாழ் ஆக என்றது –
இனி ந நமேயம் என்ற ராவணனையும் அவனுடைய அதிக்ரமத்துக்கு துணையான ராஷசரையும்
அழியச் செய்து -ஸ்ம ஸா ந சத்ரு ஸீ பவேத் -என்று பிராட்டி அருளிச் செய்த படியே
அவ் ஊரை மூலையடியே போம் படி பண்ணினான்
படை பொருதானுக்கு –
இப்படி செய்தது ஈஸ்வரத் பெடாரான சங்கல்ப்பத்தால் அன்றிக்கே எதிரிகள் அம்பு மார்விலே
தைக்கும்படி பொருதவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே
அப்போதை கையும் வில்லுமாய் சீறிச் சிவந்து எதிரிகள் மேலே வியாபாரிக்கும் போதை
ஆகர்ஷகமான வடவு அழகுக்கு மங்களா சாசனம் பண்ணிப் போருவோம் சிலர் காண் நாங்கள் -என்கிறார்

ராகவார்த்தே பராக்ராந்தாந ப்ரானே குருதே தயாம் -என்கிறபடியே அக்காலத்தில்
முதலிகளுக்கு அம்புக்கு இறாய்க்கப் பணி போருகையாலே அக்காலத்திலே
மங்களா சாசனம் பண்ணுவாரைப் பெற்றது இல்லை -பிராட்டி பிரிந்த போதே நம்
குடி இருப்பு பெற்றோம் என்ற ப்ரீதியாலே பிரமாதிகள் அந்ய பரர் ஆனார்கள் –
அக்காலத்தில் மங்களா சாசானம் பண்ணப் பெறாத குறை தீர இன்று இருந்து
மங்களா சாசனம் பண்ணுவோம் சிலர் காண்  நாங்கள் -என்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு -1/2—பல்லாண்டு பல்லாண்டு/-அடியோமோடும் நின்னோடும்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

April 1, 2013

அவதாரிகை
சௌந்த்ர்யாதி கல்யாண குணோபேதமான விக்ரஹத்தோடே வகுத்த சேஷி யானவனை
கால அதீநமான தேசத்திலே காண்கையாலே -இத்தால் இவனுக்கு என்ன தீங்கு வருகிறதோ
என்று அதி சங்கை பண்ணி
அநாதிர் பகவான் காலோ ந அந்தோஸ் யத்விஜ வித்யதே –ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்கிறபடியே
கால தத்வம் உள்ளதனையும் இச் செவ்வி மாறாதே நித்யமாய்ச் செல்ல வேணும்
என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் –

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பல கோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா!  உன் சேவடி செவ்வி திரு காப்பு –

மல் -ஒருவராலும் அடங்காத சாணூர முஷ்டிகர் என்கிற மல்ல வர்க்கத்தை
ஆண்ட -நிரசித்த
திண் -திண்ணிய
தோள் -திருத் தோள்களை உடையனாய்
மணி -நீல ரத்னம் போன்ற
வண்ணா -வடிவு அழகை உடையவனே
பல்லாண்டு பல்லாண்டு -பல வர்ஷங்களிலும்
பல்லாயிரத் தண்டு -அநேக பிரம கல்பங்களிலும்
பல் கோடி நூறாயிரம் -இப்படி உண்டான காலம் எல்லாம்
உன் -உன்னுடைய
செவ் -சிவந்த
வடி -திருவடிகளின்
செவ்வி -அழகுக்கு
திருக்காப்பு -குறைவற்ற ரஷை உண்டாக வேண்டும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்-

வியாக்யானம்
பல்லாண்டு –
அல்லாத அவச்சேதகங்களை ஒழிய -ஆயுஸ் ஸு க்கு பர்யாயமான ஆண்டைக் கொண்டு
காலத்தை பெருக்குகிறார் –ஆயுஸை பிரார்திக்கிறவர் ஆகையாலே -யாமோஷதி மிசாயுஷ்மன் -என்று ஆயுஸை பிரார்த்தித்தார் இ றே பெரிய வுடையார்
வேத நூற் ப்ராயம் நூறு -என்று ஆயுஸ் பர்யாயமாக சொல்லிற்று இ றே வத்ஸரத்தை
இந்த பஹூ வசனத்துக்கு அசங்க்யாதத்வமே முக்யார்த்தம் ஆகையாலே அசங்க்யாதமான
வர்ஷங்கள் இவ்வழகோடே நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
பல்லாண்டு -என்கிற சப்தம் ஸ்வரூப வாசியுமாய் இருக்கிறது –
உத்க்ருஷ்டனாய் இருப்பான் ஒருவனை அபக்ருஷ்டனாய் இருப்பான் ஒருவன் கண்டால்
அவனுடைய உத்கர்ஷ அநுரூபமாய் சொல்லும் பாசுரம் ஆகையாலே
சர்வேஸ்வரனுடைய உத்கர்ஷத்துக்கு அவதி இல்லாமையாலும்
அவனைக் குறித்து தம்முடைய நிகர்ஷத்துக்கு அவதி இல்லாமையாலும் –
இந்த உத்கர்ஷ அபகர்ஷ ரூப வைஷம்யம் ஸ்வரூப ப்ரயுக்தம் ஆகையாலே
பல்லாண்டு என்கிற சப்தம் ஸ்வரூப வாசி யாகிறது -மேல் பண்ணுகிற மங்களா சாசனம்
ஸ்வரூப ப்ரயுக்தம் என்கைக்காக சொல்லிற்று –
ஜிதம் -என்றும் -நம -என்றும் -தோற்றோம் -என்றும் -போற்றி என்றும் -பல்லாண்டு -என்றும் -இவை பர்யாயம்
இச் சப்தங்களுக்கு அர்த்த பேதம் இல்லையோ என்னில் -ப்ரவர்த்தி நிமித்த பேதத்தால் வரும்
விசேஷம் உண்டானாலும் -விழுக்காட்டில் ஆத்ம ஸ்பர்சியாய் தலைகட்டுகையாலே
பர்யாயம் ஆகிறது –
ஜிதம் -என்று அவனாலே  தன் அபிமானம் போனபடியை இசைந்து அத்தலையில்  வெற்றிக்கு மேல்
எழுத்து இடுபவன் வ்யவஹாரம் -இத்தால் ஸ்வரூப பிரகாசதத்தால் அல்லாது அபிமானம்
போகாமையாலே இச் சப்தமும் விழுக்காட்டால் ஸ்வரூப வாசி யாகிறது
நம -என்று எனக்கு உரியன் அல்லேன் என்கிறபடி -இது நிவர்த்த ஸ்வ தந்த்ரனுடைய வியவஹாரம்
இதுவும் ஸ்வரூப பிரகாசத்தால் அல்லது கூடாமையாலே ஸ்வரூப ஸ்பர்சியாகிறது
தோற்றோம் -என்கிறது அத தலையில் வெற்றியே தனக்கு பிரயோஜனம் என்று இருக்குமவனுடைய வ்யவஹாரம்
அதுவும் அஹங்கார நிவ்ருத்தியிலே அல்லது சம்பவியாமையாலே ஸ்வரூபஸ்பர்சி  யாகிறது
போற்றி -என்று தன்னை பேணாதே அத்  தலையில் சம்ர்த்தியே பேணுமவன்  வ்யவஹாரம்
இது ஸ்வரூப அனுரூபம் இ றே
பல்லாண்டு -என்று தன்னைப் பாராதே அத தலையில் ச்ம்ரத்தியே நித்யமாக செல்ல வேணும்
என்று இருக்குமவன் வ்யவஹாரம்
ஆக இச் சப்தங்கள் ஸ்வரூபத்தையும் -ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியையும்
பிரகாசிப்பிக்கையாலே ஸ்வரூப அனுபந்தி யாகிறது
பல்லாண்டு –
மறித்து -பல்லாண்டு என்கிறது என் என்னில் -அகவாய்  அறியாதவனுக்கு தெரியாமையாலே
பல கால் சொல்ல வேண்டி இருக்கும் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் -எதிர் சூழல் புக்கு திரிகிறவனுக்கு
இரு கால் சொல்ல வேண்டா -இப் புநர் உக்திக்கு பொருள் என் என்னில் -அவனுடைய
சர்வஞ்ஞத்வத்தில் குறையால் அல்ல -ஒரு கால் சொன்னோம் -என்று ஆறி இருக்க மாட்டாத
தம்முடைய ஆதார அதிசயத்தாலும் -பலகால் சொல்லும் அத்தாலும் பர்யாப்தி பிறவாத
விஷய வைலஷண்யத்தாலும் அருளிச் செய்கிறார்
த்ர்ஷார்த்தனானவன் தண்ணீர் பெருமளவும் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே தம்முடைய
பயம் ஷமிக்கும் அளவும் பல்லாண்டு பல்லாண்டு -என்ன ப்ராப்தம் இ றே
பல்லாயிரத்தாண்டு
கீழில் பஹூ வசனத்தாலே வர்ஷங்களினுடைய அசங்க்யாத்வம் சொல்லி இருக்க இதுக்கு உதயம் இல்லையே என்னில் –
அவச் சேதகங்களுக்கு சங்க்யை இல்லாமையாலே காலாவச் சேதத்துக்கு தொகை இல்லை
ஆகையாலே அருளிச் செய்கிறார் -அவச் சேதகங்கள் ஆவன -சூர்யா பரிஸ் பந்தாதிகள்
அவச் சேத்யங்கள் ஆவன -ஷண  லவாதிகள் -வர்ஷத்துக்கு அவச் சேதகர் -தேவர்கள்
அத்தைப் பற்றிச் சொன்னார் கீழ் -பல வர்ஷத்துக்கு அவச்சேதகன் -ப்ரஹ்மா -அத்தை பற்ற-அருளிச் செய்கிறார் பல்லாயிரத்தாண்டு என்று
பல கோடி நூறாயிரம் என்று -ப்ரஹ்மாக்களுக்கு தொகை இல்லாமையாலே அருளிச் செய்கிறார் –
கால க்ர்த பரிணாமம் இல்லாத தேசத்தில் உள்ளாருக்கும் ஸ்வ சத்தை உள்ளளவும்
விஷய வைஷண்யத்தை பற்ற -அதி சங்கையும் மங்களா சாசனமும் நித்யமாக செல்லா நின்றது –
கால க்ர்த பரிணாமம் உள்ள தேசத்தில் இருக்கிறவருக்கு அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக்காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்
பண்ணச் சொல்ல வேணுமோ –
இப்படி மாறி மாறி பயத்தை விளைத்து -காலத்தை பெருக்கி -இதுவே தமக்கு யாத்ரையாக
செல்லப் புக்கவாறே -அவன் -இவருடைய பயத்தை பரிஹரிக்க வேணும் -என்று பார்த்து -புலி கிடந்த தூற்றுக்கு அஞ்சிக் காவல் தேடுவாரைப் போலே நீர் நமக்கு அஞ்சக் கடவீரோ -மல்ல வர்க்கத்தை நிரசித்த தோள் இருக்கிறபடி பாரீர் -என்று தோள் வலியைக் காட்டினான்-
ராவணா நுஜனைக் குறித்து மஹாராஜருக்கு பிறந்த பயத்தை போக்குகைகாக தன் மிடுக்கைக் காட்ட-அவர் பயம் சமிக்கக் காண்கையாலே -இவ் விஷயத்திலும் பலிக்கும் -என்று மிடுக்கைக் காட்ட
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்து -மஹாராஜர் பயத்தை தீர்த்த படி என் என்னில் –
பிசாஸான் தாநவான் யஷான் -கள்ளர் பள்ளிகள் வலையர் -என்னுமா போலே
ஹிம்சிகருடைய அவாந்தாபிதை இருக்கிறபடி -ப்ருதிவ் யாஞ சைவ ராஷசான் -இலங்கையில்
உள்ள ராஷசர் அளவு அன்றிக்கே பஞ்சாசத்கோடி விச்தீர்னையான பூமியில் உள்ள
ராஷசர் எல்லாம் எதிரிகள் ஆனாலும் -அங்குல்ய கரேண தாந ஹன்யாம் -ஆக
சத்ரு வர்க்கங்கள் எல்லாம் ஒரு கலத்திலே உண்டு எதிரிட்டாலும் இவற்றின் உடைய
நிரசனத்துக்கு அஸ்த்ர சஸ்த்ரங்கள் வேணுமோ -ஷூத்ர கிருமிகளை நிரசிக்குமோ பாதி
அங்குல்யக்ரத்தாலே நிரசிக்க வல்லோம் காணும் என்கிறார்
ஆனால் நம்மை நலிந்த பிரதிபஷம் நசியாதே கிடக்கிறது என் என்னில் -அழிப்போம் -என்னும்
இச்சை இல்லாமை -இச்சை உண்டானால் அழிக்கையில் அருமை இல்லை -அது தனக்கு அடி என் என்னில்
உயிரோடே தலை சாய்க்குமாகில் அழிக்கிறது என் -என்னும் இரக்கத்தாலே –
இவ்வார்த்தை ராம பாக்யத்தாலே மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேதுவாய்த்தது

மல்லாண்ட திண் தோள் –
மல்ல வர்க்கத்தை ஸ்வாதீனமாக பண்ணின திண்ணிய தோள் -பிற்பாடரான
கம்சாதிகளை அனாயாசேன கொல்லுகையாலே திண்ணிய தோள் என்கிறது –
மல் -என்று மிடுக்காய் -அத்தை அடிமை கொண்ட திண்ணிய தோள் என்கிறது ஆகவுமாம்
இம்மிடுக்கு இவர்க்கு பய ஹேது வாவான் என் என்னில் –
சூரனான புத்ரனைக் கண்டால் பெற்ற தாய் -இவன் மதியாதே யுத்தத்தில் புகும் –
என் வருகிறதோ என்று பயப்படுமா போலே பயப்படுவது யுக்தம்
மல்லரை அழியச் செய்த தோள் -என்று இவர் அறிந்தபடி என் என்னில் -காதில் தோடு வாங்கினாலும் -தோடிட்ட காது -என்று அறியுமா போலே

மணி வண்ணா
நீல மணி போலே இருக்கிற திரு நிறத்தை உடையவனே
அதி ரமணீயமாய் -அத்யுஜ்வலமாய் -அதி ஸூகுமாரமாய் -அதி ஸூலபமாய்
இருந்துள்ள வடிவைக் கொண்டு முரட்டு அசுரர்கள் உடைய சகாசத்திலே செல்லுவதே –
க்வ யௌவ நோன் முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி
க்வ வஜ்ர கடி நா போக சரீரோ யம்ம ஹாஸூர -என்று -வெண்ணெய் அமுது செய்து வளர்த்த
சிறு பிள்ளையை முரட்டு வடிவை உடைய மல்லரோடே ஒக்கப் போர விடுவதே –
ந ஸமம் யுத்தம் இத்யாஹூ -என்று கூப்பிட்டார்கள் இ றே ஸ்ரீ மதுரையில் பெண்கள்
சௌகுமார்யம் பய ஹேதுவாகிறது -சௌலப்யம் பய ஹேதுவோ -என்னில் –
அஸூர நிரசன அர்த்தமாக தேவதைகள் சரணாகதி பண்ணின மாதரத்தில்
ஸூலபனாய் அஸுரர்கள் அஸ்யத்திலே புகும் -என்று அத்தாலே பயப்படுகிறார்
ஆஸ்ரிதருக்கு தஞ்சமான சௌலப்யத்தையும் மிடுக்கையும் கண்டால் நீர் இங்கனே  அஞ்சக்-கடவரோ என்ன –
உன் செவ்வடி –
அது என்னால் வருகிறது அன்று -உன் வடிவின் வை லஷ்ண்யத்தாலே வருகிறது
நீ தான் உன்னைக் கண்ணாடிப் புறத்திலே கண்டால் ஸ்வதஸ் சர்வஞ்ஞானான நீயும்
கலங்கிப் பரிய வேண்டும்படி யன்றோ உன் வடிவு இருப்பது
செவ்வடி
செவ்விய அடி என்னுதல்
சிவந்த அடி என்னுதல்
குடில ஹ்ருதர்யர்க்கும் செவ்விதாகையும் -திருமேனிக்கு பரபாகமாகையும் இரண்டும்
இவர்க்கு பய ஸ்தானம் ஆகிறது இ றே -சேஷ பூதன் சேஷி வடிவைக் கண்டால்
திருவடிகள் -என்று இ றே வ்யவஹரிப்பது
ஆஸ்ரயண வேளையோடு-போக வேளையோடு -மங்களா சாசன வேளையோடு –
வாசி யற ஆஸ்ரியர் இழியும் துறை திருவடிகள் இ றே
செவ்வி
அரும்பினை அலரை -என்னுமா போலே நித்ய யௌவனமாய் இருக்கை
திருக்காப்பு
குறைவற்ற ரஷை
உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும்
பண்ணின ரஷை என்கை
ஒரு கிரியை இன்றிக்கே குறைந்து இருப்பான் என் என்னில்
தாழ்ந்தாரைக் குறித்து ரஷை உண்டாயிடுக என்றும்
சமரைக் குறித்தும் பரிச் சின்னமான உத்கர்ஷம் உடையாரைக் குறித்தும்
ரஷை உண்டாக வேணும் என்று சொல்லக் கடவது
தமக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான நிரவதிகமான உத்க்ர்ஷ அபக்ர்ஷத்தாலே
பாசுரம் இல்லாமையாலே குறைந்து கிடக்கிறது –
வேதாந்தத்தாலே நாட்டை அடைய வென்று இருக்கிற இவர் லஷணத்தில் விழ
கவி பாட மாட்டாமை யன்று இ றே
இன்னமும் இவ் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணினோம் என்று கை வாங்க ஒண்ணாத
அபர்யாப்திக்கு ஸூசகமாய் இருக்கிறது
ஸ்ரீமதே நாராயண நம அஸ்தி சொல்லாமல் போல் இங்கும்
எல்லாப் பாட்டுக்கும் இது தான் முக உரை போல் இருக்கிறது

மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம் -உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று அந்வயம்

தொலை வில்லி மங்கலம் தொழும் -தோற்றோம் மட நெஞ்சமே -போற்றி என்றே
கைகள் ஆரத் தொழுது சொன் மாலைகள் -இத்யாதியால் ஸ்வரூபம் சொல்லிற்று
அந்தி தொழும் சொல் -என்று பலம் சொல்லிற்று –
அடிக்கீழ் -பாத பற்பு தலை சேர்த்து -அடி போற்றி -அடி விடாத சம்ப்ரதாயம்
ஸ்ரீ
ஸ்ரீ ராமானுஜாய நம
போன்று மங்களாரத்தமாக அருளிய பாசுரம் -கிரியை இன்றி –
பாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் பிரகாசமாய் நாயக பாசுரம் போலே இது என்னவுமாம்-

————————————————————————–

அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் உன் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு

அடியோமோடும்-சேஷ பூதரான எங்களோடும்
நின்னோடும் -சேஷியான உன்னோடும்
பிரிவு இன்றி -பிரிவு இல்லாமல்
ஆயிரம் பல்லாண்டு-இந்த சம்பந்தம் நித்யமாக செல்ல வேணும்
வடிவாய் -ஆபரண பூஷிதையாய்
நின்-சர்வ சேஷியான உன்னுடைய
வல மார்பினில் – வல திரு மார்பிலே
வாழும் -பொருந்தி வர்த்திக்கிற
மங்கையும் -நித்ய யௌவன ஸ்வபாவையான பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும்
பல்லாண்டு-நித்யமாக செல்ல வேணும்
வடிவார்-வடிவை உடையவனாய்
சோதி -தேஜோ ராசியாய் இருக்கிற
வலத்து -உனது வலத் திருக்கையிலே
உறையும் -நித்ய வாஸம் பண்ணுபவனாய்
ஆழியும் -திரு வாழி ஆழ்வானும்
பல்லாண்டு-நித்தியமாய் செல்ல வேணும்
படை -ஆயுதமாய்
போர் -யுத்தத்திலே
புக்கு -புகுந்து
முழங்கும் -கோஷியா நின்றுள்ள
அப் பாஞ்ச சந்யமும் -அந்த பாஞ்ச ஜன்ய ஆழ்வானும்
பல்லாண்டு –நித்தியமாய் செல்ல வேணும்
என்கிறார்-

அவதாரிகை-

கீழ் விக்ரஹ யோகத்தையும் குண யோகத்தையும் குறித்து மங்களா சாசனம் பண்ணினார்-இதில் உபய விபூதி யோகத்தை குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்-

வியாக்யானம்
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு-அடியோமோடும்-
தம்மைப் பேணாதே மங்களா சாசனம் பண்ணுகிற இவர் தம்முடைய நித்யததையை பிரார்த்திப்பான்
என் என்னில் -ஒரு சாத்தியத்தைக் குறித்து சாதன அனுஷ்டானம் பண்ணுமவர்கள்
ஆயுராசாச்தே -என்று ஆயுஸை தத் அங்கமாக ப்ரார்த்தியா நின்றார்கள் இ றே –
அது போலே மங்களா சாசனத்துக்கு தாம் வேணும் -என்று தம்மையும் கூட்டிக் கொள்கிறார்
அத்தலைக்கு பரிகைக்கு  தாம் அல்லது இல்லாமையாலே -தாம் இல்லாத போது
அத்தலைக்கு அபாயம் சித்தம் என்று இருக்கிறார் இ றே

ஆனால் என்னோடும் என்னாதே
அடியோமோடும் -என்பான் என் என்னில் –
தேக ஆத்மா அபிமானி -தேகத்திலே ஆத்ம புத்தி பண்ணும் –
மாயாவாதி அஹங்காரத்தில் ஆத்மபுத்தி பண்ணும் அந்தக் கரணத்தில் ஆத்மபுத்தி பண்ணும்-
சாங்க்யன் -அஹமர்த்தம் ப்ரக்ருதேஸ் பரம் ஸ்வயம் ப்ரகாசம் ஸ்வ தந்த்ரம் -என்று இருக்கும்
கபிலர் -பிரகிருதி புருஷ விவேக ஞானம் ஏற்பட்டால் மோஷம் என்பர் -நிரீஸ்வர வாதம்
அங்கன் கலங்கினவர் அன்று இறே  இவர்
முறை அறியுமவர் ஆகையாலே –அடியோம் -என்றார்
கர்மோபாதிகமாக வந்த வவஸ்தைகள்  எல்லாம் மறைந்தாலும் மறையாத ஸ்வாபம் தாஸ்யம்-என்று இருக்குமவர் இ றே இவர் –
ஆனால் அடியோமோடும் -என்கிற பஹூ வசனத்துக்கு கருத்து என் என்னில் –
தான் தனியராய் நின்று மங்களா சாசனம் பண்ணுமத்தால் பர்யாப்தி பிறவாமையாலும்
அனைத்து ஆத்மாக்களுக்கும் சேஷத்வம் அவிசிஷ்டம் ஆகையாலும்
இப்பிரபத்தி அவர்களுக்கு இன்றிக்கே இருக்கச் செய்தேயும் ஸ்வ அபிப்ராயத்தாலே
அருளிச் செய்கிறார்

நின்னோடும்
வ்யாவ்ர்த்தமான சேஷித்வம் மங்களாவஹம் ஆகையாலே -சர்வரும் கூடிப் பரிந்தாலும்
போராத படியாய் இ றே இருபது
இத்தால் திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி மங்களா சாசனம் பண்ணுகிறார்

பிரிவு இன்றி
இரண்டு தலையும் நித்யமானவோபாதி -சம்பந்தமும் நித்தியமாய் இ றே இருப்பது
அதுவும் தம்முடைய மங்களா சாசனத்தாலே உண்டாவதாக நினைத்து இருக்கிறார்

ஆயிரம் பல்லாண்டு
கால தத்வம் உள்ள தனையும் இஸ் சம்பந்தம் நித்யமாய்ச் செல்ல வேணும் என்கிறார்

வடிவாய் இத்யாதி
உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும்
தன் கடாஷமே அமைந்து இருக்கும் இவள் -அகலகில்லேன் இறையும் -என்று நம்மை
பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அமங்களங்கள் உண்டோ -என் பயப் படுகிறீர் என்ன –
தேவரீரும் பிராட்டியுமான சேர்த்தி நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்
வடிவாய்-
வடிவு -என்று நிறமாய் -இவளோடே சேர்த்தியாலே திரு மேனிக்கு உண்டான புகரைச் சொல்கிறது
அப்ரமேயம் ஹிதத்தேஜோ ய்ஸ்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை
எனக்கு என்று இட்டுப் பிறந்த தத்வத்தோடு எதிரிட்டு வெல்ல நினைக்கிறாயோ- என்றான் இ றே மாரீசன்
ஸ்ரத்தயாதேவோ தேவத்வமஸ் நுதே -என்னக் கடவது இ றே
ஆனால் இவளாலே இவனுக்கு உத்கர்ஷம் ஆகில் அவனுடைய சேஷித்வம் குலையாதோ
என்னில் -மாணிக்கம் ஒளியாலே பெரு விலையனாம் காட்டில் மாணிகத்தின் உடைய ப்ரதான்யம்
அழியுமோ -பூ மணத்தால் பெரு விலையனாம் காட்டில் பூவுக்கு ப்ரதான்யம் அழியுமோ
வடிவாய்
ஸ்ரீ கௌஸ்து பாதிகள் போலே ஆபரண பூதையாய் -அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்
நின் வல மார்பினில்
சர்வாதிகனான உன்னுடைய வல மார்பினில் -சர்வ யஞ்ஞமயமாய் -யோகீ சிந்த்யமாய் இ றே-வடிவு இருப்பது
வல மார்பினில்
அணைக்கைக்கு அணித்தாய் இருக்கை
வாழ்கின்ற
மார்பில் இருப்பு தான் நித்தியமாய் போக ரூபமாய் இருக்கை
அம் மார்விலே இருக்கச் செய்தேயும் -இறையும் அகலகில்லேன்-என்று அதி சங்கை பண்ணும்படி
இ றே போக்யதை இருப்பது
மங்கையும்
யுவதிஸ்ஸ குமாரிணி -என்கிற பருவத்தை சொல்கிறது
யுவா குமாரா -என்று இவ் விரண்டு அவஸ்தையும் உண்டு அவனுக்கு
இவளுக்கு கௌமார அவஸ்தையால் வந்த மௌக்த்யமே உள்ளது –
யுவதியும் ஆகக் கடவள் -எங்கனே என்னில் -போக ஸ்ரோதச்சில் வந்தால் இவள்
தளர்த்திக்கு அவன் கை கொடுக்க வேண்டும்படி யான மௌக்த்யத்தை சொல்லுகிறது
மங்கையும் –
ச சப்தத்தாலே மகிஷ்யந்தரத்தை சொல்லுதல்
மங்கள ஆவஹையான இவளும் ஆசார்ஸ்யை என்னுதல்
பல்லாண்டு
கால தத்வம் உள்ள தனையும் இச் சேர்த்தி நித்யமாய்ச் செல்ல வேணும்
வடிவார் சோதி இத்யாதி –
இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி கல் மதிள் இட்டால் போலே இருக்கிற ஆழ்வார்களைப்-பாரீர் என்ன -அவர்களோட்டை சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களா சாசனம்-பண்ணுகிறார் –
வடிவார் சோதி –
காளமேக நிபச்யாமமான திருமேனி ஸ்வ தேஜஸ் ஸாலே வ்யாப்தமாம் படியாய் இருக்கை –
புருஷம் க்ருஷ்ண பிங்களம் -என்னும் படியாய் இ றே இருப்பது
தேஜோ ராசியாய் இருக்கும் வடிவை உடையவன் என்னவுமாம்
வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –
வலம் அருகே நித்யவாசம் பண்ணுமவனாய் -பிறருக்கு அநபி பவநீயனாய் இருக்கிற
ஆழ்வானோட்டை சேர்த்தி நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண
புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார் என்கை –
படை போர் இத்யாதி –
நம் கையை விடாதே த்வநியாலே எதிரிகளை யழிக்கும் இவனைப் பாரீர் என்ன –
படை போர் முழங்கும்
சேனையை உடையயுத்தத்திலே புக்கு முழங்கும் என்னுதல்
யுத்தத்திலே ஆயுதமாக புக்கு முழங்கும் என்னுதல்
முழங்கும் –
சகோஷொ தார்த்தராஷ்டாராணாம் ஹ்ருதயா நிவ்யதாரயத் -என்றும் –
யஸ்ய நாதேன தைத்யானாம் பலஹா நிரஜாயத-என்றும் பிரதிகூலர் மண் உண்ணும்படியும்
அனுகூலர் வாழும்படியாய் இ றே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி
என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக்  என்று பயப்படுகிறார்
அப் பாஞ்ச சன்னியமும் –
முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் –
அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்-

——————————-

இவ்விரண்டு பாட்டும் -திருமந்த்ரார்தமாய் இருக்கிறது
அடியோமோடும் –என்கிற இடத்தில் ப்ரணவார்த்தத்தை சொல்லிற்று
முதல் பாட்டில் பல்லாண்டு -என்ற பிரதம பதத்தால் நமஸ் சப்தார்தம் சொல்லிற்று
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்று அப்பாட்டில் விக்ரஹ யோகத்தையும் –
சௌர்ய வீர்யாதி குண யோகத்தையும் -இரண்டாம் பாட்டில் விபூதி யோகத்தையும்
சொல்லுகையால் நாராயண பதார்த்தம் சொல்லிற்று –
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்கையாலே சதுர்த்தியில் பிரார்த்திகிற அர்த்தத்தை-சொல்லிற்று ஆய்த்து-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

திருப்பல்லாண்டு -அவதாரிகை –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

March 30, 2013

பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் -என்றும்
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
சர்வ ஸ்வாமியாகவும் -சர்வ நியந்தாவாகவும் -சர்வேஸ்வரன் ஸ்வரூபத்தை
நிர்ணயித்து -சேதன ஸ்வரூபத்தை
பரவா நஸ்மி என்றும் –
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -என்றும் நிரூபித்து
இந்த ஸ்வரூப அநுரூபமான ஜ்ஞானமும்
ஜ்ஞான அநுரூபமான வ்ருத்தியும் -ப்ராப்தமாய் இருக்க
அய பிண்டதுக்கு -பழுக்க காய்ச்சின இரும்புக்கு -அக்நி சம்சர்க்கத்தால் வந்த தாதாம்யம் போலே சேதனர்
அசித் ப்ரத்யா சத்தியாலே -தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று அஹங்கரித்து
புத்ர மித்ராதிகள் பக்கலிலே மமதா புத்தியைப் பண்ணி
இப்படி ப்ரவாஹ ரூபேண அஹங்கார மமகாரங்களாலே சர்வேஸ்வர கதமான
ச்வாமித்வ நியந்த்ருத்வங்களை தங்கள் பக்கலிலே அத்யவசித்து
ச்வத ப்ராப்தமான பாரதந்த்ர்யத்தில் விமுகராய் -அத ஏவ சப்தாதி விஷயங்களில் ப்ரவணராய்
அத்தாலே வந்த ராக த்வேஷாதிகளாலே அபிபூதராய் படுகிற துக்க பரம்பரைகளை அனுசந்தித்து
நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் சாசநாஸ் சாஸ்திரம் -என்கிறபடியே
தத்வ ஹிதங்களை அறிந்து நல்வழி போகைக்கு உடலாக சாஸ்த்ரத்தை
ப்ரகாசிப்பித்து அருளினான்-

ஹர்த்துந்தமஸ் சதஸ தீச விவேக்தும் ஈசோமானம் ப்ரதீப மிவ காருணி கோ ததாதி –
என்னக் கடவது இ றே
இந்த சாஸ்திர ப்ரதானமும் வாஸனா தூஷிதம் ஆகையாலே அகிஞ்சித்கரமாக
ஓலைப் புறத்தில் செல்லாத தேசத்திலே எடுத்து விடும் ராஜாக்களைப் போலே
ராம கிருஷ்ண ரூபேண வந்து அவதரித்து -சாசநாச பிதுர் வசன நிர்தேசாத் பரத்வாஜசஸ்ய சாசநாத் என்று
பித்ரு வசன பரிபாலனாதிகளை ஆசரித்து அருளியும்
இளையபெருமாளை யிடுவித்து -வகுத்த விஷயத்தில் சேஷத்வ வ்ருத்தியே இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம்
என்னும் இடத்தை பிரகாசிபித்து அருளியும்
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று கொண்டு இவ்வ்ருத்திக்கு அடியான
பாரதந்த்ர்யத்தை ஸ்ரீ பரத ஆழ்வானை இட்டு பிரகாசிப்பித்தது அருளியும்
இப்பாரதந்த்ர்ய காஷ்டையை -கச்சதா மாதுல  குலம் -பரதேன நீதா -என்று கொண்டு
ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைக் கொண்டு பிரகாசிபித்து அருளியும்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அருளி தூத்ய சாரத்யங்களை ஆசரித்து அருளியும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட -என்று ஸ்ரேஷ்ட சமாசாரம் கர்த்தவ்யம் என்று உபதேசித்து அருளியும்
இப்படி பஹூ பிரகாரத்தாலே ஆத்மாக்களுடைய பாரதந்த்ர்யத்தை பிரகாசிப்பித்தது
அருளின இடத்திலும் –
பெரியவன் தாழ நின்று ஆசரித்த இம் மஹா குணத்திலே அவஜா நந்தி மாம் மூடா –
என்கிறபடியே அநீச்வரத்வம் ஆகிற தோஷத்தை ஆவிஷ்கரித்து கால் கடை கொள்ளுகையாலே
அவையும் கார்யகரம் ஆய்த்து இல்லை –

இனி நாம் பார்வை வைத்து மிருகம்  பிடிப்பாரைப் போலே சஜாதீய முகத்தாலே சேதனரை-வசீகரிக்க வேண்டும்
என்று பார்த்தருளி பெரியாழ்வாரை அவதரிப்பித்து அருளினான்
இவ்வாழ்வார் சஹஜ தாஸ்யத்தை உடையவர் ஆகையாலே பகவத் விஷயத்திலே
கிஞ்சித் கரித்து
கால ஷேபம் பண்ண வேண்டும் என்று பார்த்தருளி -அதுசெய்யும் இடத்தில்
அவன் உகந்தவையே கர்த்தவ்யம் -என்று அனுசந்தித்து அவதாரங்களை ஆராய்ந்த இடத்தில்
கம்சனுக்கு பணி செய்து போந்த மாலாகாரர் க்ரஹத்திலே எழுந்தருளி பூவை இரந்து
அவன் தான்
ப்ரசாத பரமௌநாதௌ மம கேஹ முபாகதௌ
தன்யோஹம் அரச்ச யிஷ்யாம் ஈத்யாஹ மால்யோப ஜீவன -என்று
உகந்து சூட்டச் சூடின படியை அனுசந்திகையாலே -இவ்விஷயத்துக்கு பூ இடுகை ஒழிய
வேறு கர்த்தவ்யம் இல்லை நமக்கு என்று திருநந்தவனம் செய்கையிலே உத்யோகித்தார் ஒருவர் இ றே

இன்னமும் மற்றைய ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு நெடு வாசி உண்டு
அவர்கள் தம் தாமுடைய ஸ்மர்த்திகளை எம்பெருமானாலே பெற நினைத்து இருப்பார்கள்
இவர் தம்மை அழிய மாறி வரும் பகவத்  ஸ்மர்த்தியையே தமக்கு புருஷார்த்தமாக
நினைத்து இருப்பர் -அவர்கள் ஈஸ்வரனை கடகாக பற்றி தம் தாமுடைய பய நிவ்ர்த்தியை பண்ணா நிற்பர்கள்
இவர் தாம் கடகராய்  நின்று -அவனுக்கு என் வருகிறதோ -என்று பயப்பட்டு அந்த
பய நிவ்ர்த்தியில் யத்னம் பண்ணா நிற்பர்-
இப்படி மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –
வேதம் என்ன -தத் உப ப்ரஹ்மணம் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன –
இவை போலே அதிக்ர்த அதிகாரமாய் இராது
சர்வ அதிகாரமான திருவாய்மொழியில் உண்டான அருமையும் இதுக்கு இல்லை
அரி அயன் அரன் என்னும் இவரை ஒன்ற நும் மனத்து வைத்து -என்றும்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -என்றும் உபக்ரமம் தொடங்கி உப சம்ஹாரத் தளவும்-செல்ல த்ரிமூர்த்தி சாம்யத்தை அருளிச் செய்கையாலே
மத்யே விரிஞ்சி கிரீசம் ப்ரதம அவதாரம் -என்று ரகு குல சஜாதீயனாகவும் யது குல
சஜாதீயனாகவும் அவதரித்தாப் போலே ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் வந்து அவதரிக்கையாலே
வந்த சாம்யம் என்று நிர்வஹிக்க வேண்டும் என்ற அருமை யாதல் –
நீராய் நிலனாய் -என்று தொடங்கி -சிவனாய் அயனாய் -என்று சேதன அசேதன வாசி
சப்தங்களோடு சமாநாதி கரிக்கையாலே சாமாநாதி கரண்யத்துக்கு நிபந்தனம் ஈச்வரனோடு
சேதன அசேதனங்களுக்கு உண்டான ப்ரதக் ஸ்திதி யுபலப்த்தி இல்லாத சம்பந்தம் என்றே
நிர்வஹிக்க வேண்டும் என்னும் அருமை யாதல் இல்லை -இப்பிரபந்தத்துக்கு

இன்னமும் மகாபாரதம் போலே பெரும் பரப்பாய் -இன்னது சொல்லிற்று -என்று நிர்ணயிக்க
ஒண்ணாது இருக்கும் குறை யும் இன்றிக்கே
பிரணவம் போலே சப்தம் அத்யல்பமாய் -சகல வேதார்தமும் அதுக்கு உள்ளே காண வேண்டி
அது தெரியாதே தேட வேண்டி வரும் அந்த குறையும் இன்றிக்கே
பன்னிரண்டு பாட்டாய் -ஐஸ்வர்ய கைவல்யங்களை நீக்கி உத்தம புருஷார்த்தமான
பகவத் கைங்கர்யத்தை ஸூக்ரஹமாக பிரதிபாதிக்கையாலே இதுக்கு நெடு வாசி உண்டு –
இன்னமும் இப்பிரபந்தம் தன்னை அதிகரித்தவன் கையில் பரத்வத்தை கைப்படுத்த
வல்ல சக்தியை உடைத்தாகையாலே வந்த ஏற்றமும் உண்டு
பரமாத்மனை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்று இ றே இதுக்கு பலம்
இப்பிரபந்தம் அவதரித்தபடி என் என்னில் –

ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜா தார்மிகன் ஆகையாலே புரோகிதரான
செல்வநம்பியை -புருஷார்த்த நிர்ணய பூர்வகமாக அத்ர்ஷ்ட ஸித்திக்கு விரகு என் -என்ன
தரமஜ்ஞ்சமய பிரமாணம் என்கிறபடியே -வித்வான்களை திரட்டி வேதார்த்த நிர்ணயத்தை பண்ணி
அவ்வழியாலே புருஷார்த்தத்தை பெற வேணும் -என்று சொல்ல -அவனும் அப்படியே
பஹூ த்ரவ்யத்தை வித்யா சுல்கமாக கட்டி வித்வாக்களை ஆஹ்வானம் பண்ணி செல்லுகிற அளவிலே
வட பெரும் கோயில் உடையான் ஆழ்வாரை விடுவித்து லோகத்திலே வேத தாத்பர்யத்தை
பிரகாசிப்பிக்கைகாக -நீர் போய் கிழியை அறுத்து கொண்டு வாரும் -என்று அருளிச் செய்ய –
அது வித்யா சுல்கமாக நிர்மித்தது ஓன்று அன்றோ
கையிலே கொட்டுத் தழும்பைக் காட்டி கிழியை அறுக்கலாமோ -என்ன
அது உமக்கு பரமோ -நாம் அன்றோ வேதார்த்த பிரதிபாதனத்துக்கு கடவோம் -என்று ஆழ்வாரை
நிர்பந்தித்து அருள -ஆழ்வரும் பாண்டிய வித்வத்  கோஷ்டியிலே எழுந்து அருளின அளவிலே

செல்வ நம்பியும் ராஜாவும் அப்யுத்தாந  ப்ரணாம பூர்வகமாக பஹூமானம் பண்ண –
அத்தைக் கண்ட வித்வான்கள் ராஜாவை அதிஷேபிக்க -அவ்வளவிலே செல்வ நம்பி
ஆழ்வாரை தெண்டன் இட்டு
வேதாதந்த தாத்பர்யமான புருஷார்த்தத்தை அருளிச் செய்யலாகாதோ என்ன -ஆழ்வாரும்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம்ப்ரபச்யதி -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் சர்வ அர்த்தங்களையும்
சாஷாத் கரித்தால் போலேயும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஸ்பர்ச்தத்தாலே த்ருவன்
சர்வஞ்ஞனாப் போலேயும் -பகவத் ப்ரசாதத்தாலே சகல வேதார்த்த அர்த்தங்களையும்
சாஷாத் கரித்து வேதாந்த தாத்பர்யமான அர்த்தத்தை பிரதிபாதித்து அருள -அதிஷேபித்த
வித்வான்களோடு அனுவர்த்தித்த ராஜாவோடு வாசி யற சர்வரும் விஸ்மிதராய் -அநந்தரம்
இவரை யானையிலே ஏற்றி -ராஜா சபரிகரனாய் சேவித்துக் கொண்டு -நகரி வலம் வருகிற மகா-உத்சவத்தை காண்கைக்காக -புத்ரர்களை ப்ரஹ்மரதம் பண்ணும் சமயத்தில் மாதா பிதாக்கள்
காண ஆதரித்து வருமா போலே -பிராட்டியோடே கூட சபரிகரனாய் கொண்டு -ஈஸ்வரன்
சந்நிஹிதனாக -தத்பரிகர பூதரான ப்ரஹ்மாதி தேவதைகளும் ஆகாசத்திலே
நெருங்கி நிற்கிற வித்தை சாஷாத் கரித்த ஆழ்வார் ஸ்வ ஸ்மர்த்தியைக் கண்டு
இறுமாவாதே -பகவத் ப்ரசாதத்தாலே நிரவதிக பக்தியை பெற்று -அவனுடைய
சர்வஞ்ஞத்வ -சர்வ சக்தித்வ -சர்வ ரஷகத்வாதிகளை -அனுசந்திப்பதற்கு முன்னே
முகப்பில் உண்டான –சௌந்தர்ய சௌகுமார்யங்களைக் கண்டு

கால அதீதமான தேசத்திலே இருக்கிற வஸ்து காலம் சாம்ராஜ்யம் பண்ணுகிற
தேசத்திலே சஷூர் விஷயமாவதே -இவ் வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ
என்னும் அதி சங்கையாலே -ஆனை மேல் கிடந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு
இந்த சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு தீங்கு வாராதே நித்யமாக செல்ல வேணும்
என்று திருப்பல்லாண்டு பாடுகிறார் –
அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே ஒன்றால் ஒரு குறை இன்றிக்கே சர்வ நியந்தாவுமான
ஈஸ்வரனைக் கண்டால் தம்முடைய மங்களங்களை ஆஸாசிக்கை அசந்கதம் அன்றோ என்னில் –
முகப்பிலே சஷூர் விஷயமான சௌந்தர்யாதிகளிலே -பகவத் பிரசாத லப்தமான
பக்தி பரவசராய் கொண்டு அழுந்தி -அவனுடைய சர்வ ரஷகத்வ சர்வ சக்தித்வத்தையும் -ஸ்வ ஸ்ம்ர்தியையும் மறைக்கையாலே -பகவத் ஸ்ம்ர்தியே தமக்கு ஸ்ம்ர்தியாகக் கொண்டு-மங்களா சாசனம் பண்ணுகை ஸங்கதம் –
பகவத் ப்ரேமம் தான் தத் ப்ராப்திக்கு ஹேதுவாதல் தத் அனுபவத்துக்கு பரிகரம் ஆதல்
ஆகை  ஒழிய அறிவுகேட்டை பண்ணும் என்னும் இடத்தில் ப்ரமாணம் என் என்னில் –

அது சிஷ்டாசார சித்தம் –
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண்யஸ் ச ஸாயம் ப்ராதஸ் சமாஹிதா
சர்வான் தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தே யசச்விந -என்று
திவாராத்ரி விபாகம் அற -தேவதைகளை ரஷித்து புகழ் படைத்தது போந்த சக்கரவர்த்தி திருமகனுடைய
சௌந்தர்யாதி குணங்களுக்கு ரஷகமாக அயோத்யாவாசி ஜனங்கள் பெருமாளால்
தங்களுக்கு வரும் ச்ம்ர்தியை மறந்து தேவதைகளின் காலில் விழுந்தார்கள் இ றே
பிராட்டியை திருமணம் புரிந்து மீண்டு எழுந்து அருளா நிற்க ஸ்ரீ பரசுராம ஆழ்வான்
வந்து தோன்றின அளவிலே -தாடக தாடகேயருடைய நிரசனங்களைக் கேட்டு இருக்கச்
செய்தேயும் அஞ்சி -ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தஸ் தம் ப்ராஹ்மணஸ் ச மஹா யசா –
பாலானாம் மம புத்ராணாம் அபயம் தாது மர்ஹசி -என்று சரணம் புக்கு -அவன் தோற்று மீண்டு போனான்
என்று கேட்ட பின்பு -புநர் ஜாதம் ததாமேந ஸூ தாநாத்மா நமேவச -என்கிறபடியே
தானும் பிள்ளைகளும் மறு பிறவி பிறந்ததாக நினைத்து இருந்தான் இ றே சக்கரவர்த்தியும் –

ஸ்ரீ கௌசல்யை யாறும்-யன் மங்களம் ஸூபர்ணச்ய விநதா கல்பயத் புரா –
அம்ர்த்தம் ப்ரார்த்தயா நஸ்ய தத்தே பவது மங்களம் -என்று
விஸ்வாமித்ர த்வத்ராணாதிகளால் வந்த ஆண் பிள்ளைத் தனத்தை விஸ்மரித்து
மங்களா சாசனம் பண்ணினாள் இ றே
ஸ்ரீ தண்ட காரண்ய வாஸி ஜனங்களும் -தேதம் ஸோமமி வோத்யந்தம த்ருஷ்ட்வா வைதர்ம சாரிணா-மங்களா நிப்ர யுஜ்ஞ்ஞானா ப்ரத்யக் ருஹ்ணந த்ருட வ்ரதா -என்று தங்கள் ஆபன நிவ்ருத்திக்கும்
அபிமத ஸித்திக்கும் இவரை ரஷகர் என்றே சாதன அனுஷ்டானம் பண்ணுகிறவர்கள்
இவர் சந்நிஹிதர் ஆனவாறே அவற்றை மறந்து -இவர் வடிவு அழகிலே துவக்குண்டு
மங்களா சாசனம் பண்ணினார்கள் இ றே
கர்ம ஸ்பர்சம் இன்றிக்கே தலை நீர்ப்பாட்டிலே இவர் ஏற்றம் எல்லாம் அறியும் பிராட்டி
இவர் அழகிலே தோற்று –
பதி சம மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அனுவராஜ மங்களா நய பிதத் யுஷி-என்று தொடங்கி -பூர்வாம் திசம் வஜ்ரதர -என்று திக்பாலர்களை இவருக்கு ரஷகராக அபேஷித்தாள் இ றே
இன்னமும் -ஜாதோசி தேவதே வேச சங்கு சக்ர கதாதர -திவ்யம் ரூபமிதம் தேவப்ரசாதே
நோப சம்ஹர -என்று -அயர்வறும் அமரர்கள் அதிபதி அவ்வடிவோடே வந்து -அவதரித்தான்
என்று இவனுடைய பெருமையை அறிந்து இருந்த தசையிலும் -கம்ஸ பயத்தாலே –
இவ்வடிவை உப சம்ஹரிக்க வேண்டும் -என்றார் இ றே ஸ்ரீ வசுதேவர்
உப சம்ஹர சர்வாத்மான் ரூபமே தச் சதுர்புஜம்
ஜாநாதுமா வதாரனதே கம்சோயம் திதி ஜந்ம -என்று சர்வாத்மா -என்று சர்வ அந்தர்யாமி -என்றும்
ஏதச் சதுர்புஜம் -என்று அவனுடைய அசாதார விக்ரஹம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
கம்ஸ பயத்தாலே -இவ்வடிவை உப சம்ஹரிக்க  வேணும் -என்றாள் இ றே தேவகிப் பிராட்டியும்

இவ்வர்த்தம் லோக பிரசித்தமும் -அநேக காலம் தபஸ் பண்ணி பெற்று ப்ரதமஜனாய்
அதி சுந்தரனான புத்திரன் அளவிலே ஒரு விரோதம் இன்றிகே இருக்கச் செய்தேயும்
செல்ல நின்றதும் வர நின்றதும் ப்ரேம அந்த்யத்தாலே பய ஹேதுவாக கடவது இ றே
மாதாவுக்கு –
தன்  கைக்கு அடங்காத விற்பிடி மாணிக்கத்தை பெற்றவன் அது ஷூர ஷிதமாய்
இருக்கச் செய்தேயும் -அதுக்கு என்ன விரோதம் வருகிறதோ என்று காற்று அசங்கிலும்
பயப்படா நிற்கும் இ றே -அல்ப தேஜஸ் ஸு க்களான சந்திர ஆதித்யர்கள் உடைய சன்னதியிலே-அச்சித்தான பாஷாணங்கள் உருகா நின்றன
பரஞ்யோதி ரூபசம்பத்ய -என்றும் பரம் ஜோதி நீ பரமாய் -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய சௌந்தர்ய யுக்தனாய் நிரவதிக தேஜோ ரூபமான எம்பெருமானைக் கண்டால்
பரம சேதனரான ஆழ்வார் கலங்க சொல்ல வேணுமோ -ஆகையாலே
ராவணாதி ராஷச துர் வர்க்க மயமாய் -காலம் சாம்ராஜ்யம் பண்ணுகிற தேசத்திலே –
இவ் விலஷண விஷயத்தை கண்டு அருளி -இவ் விஷயத்துக்கு எவ் வழியில்
தீங்கு வருகிறதோ -என்று பயப்பட்டு தத் பரிஹார அர்த்தமாக திருப் பல்லாண்டு பாடுகிறார்

ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை உள்ளபடி அறிந்து இருக்கிற இவர் -ரஷ்ய ரஷக
பாவத்தை மாறாடி பிரதிபத்தி பண்ணுகை விபரீத ஞானம் அன்றோ என்னில்
கர்ம நிபந்தனமான விபரீத ஞானம் ஆய்த்து த்யாஜ்யம் -விஷய வை லஷண்யம் அடியாக
வந்தது ஆகையாலே அவ்  வைலஷண்யம் உள்ள அளவும் அனுவர்த்திகையாலே
ஸ்வரூப ப்ராப்தமாக கடவது –
இன்னமும் சேஷ சேஷி பாவ ஜ்ஞான சமனந்தரம் சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை
சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் ஆகையாலே தத் விஷயமாக மங்களா சாசனம் பண்ணுகை
சைதன்ய க்ர்த்யம் -அந்த சேஷத்வ காஷ்டை யாவது தன்னை அழிய மாறியே யாகிலும்
ஸ்வாமிக்கு ச்ம்ர்த்தியை ஆசாசிக்கை இ றே
வேதாந்த தாத்பர்யம் இ றே இத் திருப் பல்லாண்டில் பிரதிபாதிகப் படுகிறது

இப்பிரபந்தத்திலே முன்னிரண்டு பாட்டாலே -தாம் மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே -மேல் மூன்று பாட்டாலே -3/4/5-மங்களா சாசனம்-பண்ணுகைக்கு
பகவத் சரணார்த்தி களையும் -3
கேவலரையும் -4
ஐஸ்வர்யார்த்திகளையும் -அழைக்கிறார்-5
அதுக்கு மேலே மூன்று பாட்டாலே –6/7/8-ஆஹூதர் ஆனவர்கள் -அழைக்கப் பட்டவர்கள் -இவரோடே சங்கதர் ஆகிறார்கள்
அதுக்கு மேலே மூன்று பாட்டாலே-9/10/11-அவர்களோடே திருப் பல்லாண்டு பாடி அருளுகிறார்-
மேலிற் பாட்டு-12-பல ச்ருதி

————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பல்லாண்டு தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

March 29, 2013

அவதாரிகை –
இந்த தனியன் திருப்பல்லாண்டு பாடுகைக்கு அடியான பெரியாழ்வார் வைபவத்தை
பெருக்க பேசி அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது –

——–

ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த -முதல் தனியன்

குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி –

————————————————————————–
குருமுகம் -ஆசார்ய முகத்தாலே
அநதீத்ய-அப்யசிக்காமலே
ப்ராஹ -உபன்யசித்தாரோ
வேதான் -வேதங்களை
அசேஷான் -சமஸ்தமாகிய
நர பதி -ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
பரிக்லிப்தம் -ஏற்படுத்தப்பட்ட
சுல்கம்-வித்யா சுல்கத்தை
ஆதாதுகாம -க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
ஸ்வசுரம் -மாமனாரும்
அமர -தேவதைகளால்
வந்த்யம் -ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
ரங்க நாதஸ்ய -ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
ஸாஷாத் -பிரத்யஷமாய்
த்விஜகுல -ப்ராஹ்மண வம்சத்துக்கு
திலகம் -அலங்கார பூதருமாகிய
தம் விஷ்ணு சித்தம் -அந்த பெரியாழ்வாரை
நமாமி -சேவிக்கிறேன்-

—————————————————————————————————————————————————-
வியாக்யானம் –
குருமுகம் அநதீத்ய –ஸ்வதஸ் சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனும் -சாந்தீபனேஸ் சக்ருத்
ப்ரோக்தம் ப்ரஹ்ம வித்யா சவிஸ்தரம் -என்னும்படி -சாந்தீபநிடத்திலே ஆய்த்து
சகல வேதங்களையும் அதிகரித்தது –
இவர் அங்கன் குருகுல வாஸம் பண்ணி -தந் முகேன -நலங்களாய நற் கலைகள் நாலையும் –அதிகரியாதே -புண்டரீகரைப் போலே துளபத் தொண்டிலே மண்டி –
ஸ்ரீ மாலா காரரைப் போலே சூட்டு நன் மாலைகள் தொடுத்து –
வட பெரும் கோயில் உடையானுக்கு சூட்டி அடிமை செய்து போந்தார் –
ஏவம் வித தாஸ்ய ரஸஞ்ஞரான இவர்-

நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம-என்று ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவாலே பரதத்வ நிர்ணய பூர்வகமாக-புருஷார்த்த லாபத்தை லபிக்கைக்காக அநேகமான அர்த்தத்தை வித்யா சுல்கத்தை கல்பித்து கல் தோரணத்திலே கட்டிவைக்க-இப்படி நிர்மிதமான அந்த தநத்தை வட பெரும் கோயில் உடையானுடைய ஆக்ஜையாலே
ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்கிற அபேஷை உடையராய் -வித்வித் கோஷ்டியிலே சென்று –
அசேஷான் -வேதான் -ப்ராஹ –
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி யறுத்தான் என்றதைச் சொல்லுகிறது –
இவருக்கு அப்போது -வேதப் பிரானாரான -பீதகவாடைப் பிரானார் தாமே -பிரம குருவாய் -போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து -நாவினுளானாய் -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளை-இவர் முகேன பேசுவித்தான் இ றே-எயிற்றிடை மண் கொண்ட எந்தையான -ஞானப் பிரான் ஆய்த்து இவரை ஞானக் கலைகளை-ஒதுவித்தது -ஆகையாலே நாட்டாருக்கு ஓதின இடம் ஒழிந்து ஓதாத விடம் தெரியாததாய்-இருக்கும் -இவருக்கு மயர்வற மதி நலம் அருளுகையாலே அசேஷ வேதங்களையும்-அருளிச் செய்யும்படி விசதமாய்த்து -அத்தாலே -வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த-விளக்கை விட்டு சித்தன் விரித்தன் -என்னும்படி -பரதத்வ ஸ்தாபனம் பண்ணி அந்த-வேத தாத்பர்யமான திருப்பல்லாண்டை -அங்கு ஆனை மேல் மங்கல வீதி வருகையாலே –
மங்களா சாசனமாக அருளிச் செய்தார் -வேதான் அசேஷான் –என்கிறதுக்கு உள்ளே இதுவும் அந்தர்ப்பூதம்-வேதைஸ் ச ஸர்வை ரஹ மேவ வேதய -என்னக் கடவது இ றே-
ஸ்வ ஸூரம் –
அநந்தரம் வித்வான்களை வென்று கிழி யறுத்து -அந்த தநத்தை ஸ்வாமி சன்னதியிலே
சமர்ப்பித்து -மீளவும் தம் துறையான துளவத் தொண்டிலே மூண்டு நடத்திக் கொண்டு போர -அக்காலத்திலே ஆண்டாள் இவர்க்கு திருமகளாய் திருத்துழாய் அடியிலே அவதரிக்க இவரும்-திருமகள் போலே வளர்த்துப் போர-அஞ்சு பிராயத்திலே திருவாய்ப்பாடியில் பஞ்ச லஷம் குடியில் பெண்களை அநுகரித்து
திருப்பாவை பாடி -அதுக்கு மேலே அவர் தொடுத்த துழாய் மலரை –
வியன் துழாய் கற்பென்று சூடும் கரும் குழல் மேல் -என்கிறபடியே
சூடிக் கொடுத்தவராய் -பின்பு ப்ராப்த யௌவனையாய் –
மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய் –
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் -என்றும் –
பண வாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் -என்றும் -சொல்லப்படுகிற-அழகிய மணவாள பெருமாளை பிரார்த்தித்து திருமணம் புணருகையாலே அவர்-அவர் மணவாளபிள்ளை யானார் –
மறை நான்கு முன்னோதிய பட்டனுக்கு இ றே -பட்டர் பிரான் கோதையைக் கொடுத்தது –
ஆகையால் ஔபசாரிகமாக அன்றிக்கே யதாவாக ரெங்கநாதனுக்கு பட்டநாதர் மாமனார் ஆனார்அத்தாலே அமர வந்த்யம் என்கிறது -அதாவது –
வடிவுடை வானோர் தலைவனான தம்மை அவர்கள் அடி வணங்கி ஏத்துமா போலே –
இவர் தம்மையும் அமரர் வந்திக்கும்படியான வரிசை கொடுத்தபடி -தம்மையே ஒக்க அருள் செய்வர் இ றே
பட்டநாதரான மாதரம் அன்றிக்கே தேவர்களாலும் ஸ்துதித்யராய் இருக்குமவர் என்கிறது
விரும்புவர் அமரர் மொய்த்து -என்னக் கடவது இ றே
அஸ்தானே பய சங்கிகள் ஆனவர்களையும் இவர் மங்களா சாசனம் பண்ணுமவர் ஆகையாலே-அவர்களும் இவர்க்கு ஸ்துதிய அபிவாதனந்களை பண்ணுவர்கள் –
பரஸ்பர நீச பாவை -என்னக் கடவது இ றே
இனி ரெங்கநாதனோடே சம்பந்திகைக்கு ஈடான பட்ட நாத குலத்தை சொல்லுகிறது-
த்விஜ குல திலகம் என்று -வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தர் ஆகையாலே –
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென்னரங்கத்தே -என்னும்படி கண்டு கொடுத்தார் -த்விஜ குல திலகர் ஆகையாவது -ப்ராஹ்மண குலத்துக்கு எல்லாம் முக்யராய் -சிரஸா வாஹ்யராய் -ஸ்ரேஷ்டராய் இருக்கை என்றபடி –
தம் விஷ்ணு சித்தம் –
அப்படி ஸ்ரேஷ்டராய் -விஷ்ணுவை எப்போதும் சித்தத்திலே உடையவர் ஆனவரை என்கிறது –
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்என்று
அடியிலே தமக்கு நிரூபகமாக ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இ றே –
விட்டு சித்தர் -என்கையாலே –
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த -என்று பெரியாழ்வார் திருமொழி அடியிலும்
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை -என்று முடிவிலும் அருளிச் செய்கையாலே-
இந்த திரு நாமத்தாலே அந்த பிரபந்த ப்ரவக்தா என்னுமதுவும் ஸூசிதம் –
அதுக்கும் தனியன் இதுவே இ றே –
அநந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன்னுள்ளே வந்து
வைகி வாழச் செய்தாய் எம்பிரான் -என்னும்படி
இவர் திரு உள்ளத்திலே அத்ய அபிநிவிஷ்டனாய் இருக்கும் ஆய்த்து –
விஷ்ணு சித்தம் -விஷ்ணு நாவ்ய பதேஷ்டவ்யராய் -இருக்கிற படி –
நின் கோயிலில் வாழும் வைட்டணவன் -என்றார் இ றே
அவனும் வைஷ்ணவ சம்பந்தத்தை அபேஷித்து கைப் பற்றினான் –
தம் விஷ்ணு சித்தம் நமாமி –
அந்த விஷ்ணு சித்தரை -கிழி யறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று -என்னும்படி
சேவிக்கிறேன் என்கிறது -நமஸ்காரமும் சேவையும் பர்யாயம் –
ஓம் நமோ விஷ்ணவே -என்னுமது விஷ்ணு சித்த விஷயத்திலே யாய்த்து –
விசேஷஞ்ஞர்க்கு பகவத் விஷயத்திலே அரை வயிறாய் -இங்கே இ றே எல்லாம்
பூரணமாவது -நம்பி விட்டு சித்தர் இ றே
இத்தால்
பிரதம பிரபந்த அனுசந்தான தசையில்–தத் வக்தாவான ஆழ்வாரை -தம் பூர்வம் அபிவாதயேத் -என்று பிரதமம் திருவடி-தொழும் படியை சொல்லிற்று ஆய்த்து-

————————————————————————–

இரண்டாம் தனியன் -மின்னார் தட மதிள் இத்யாதி –
அவதாரிகை –
இதில் ஸ்ரீ வில்லி புத்தூர் பட்டர்பிரானான பெரியாழ்வார் அவதரண ஸ்தலத்தை அனுசந்திப்பார்-திருவடிகளைத் தொழுகையால் உண்டான ப்ரீதியையும்-அவர் செயலைச் சொல்லுகையால் உண்டான விரோதி நிவர்த்தியாதிகளில் த்ருப்தியையும்
மனசோடே சொல்லி உலாவுகிறதாய் இருக்கிறது –

ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து-

மின் -மின்னுதல் -மணிகளால் ஒளி விடுதல்
ஆர் -நிறைந்த அதிகமான
தடம் -அகலப்பரப்பும் உயர்ந்து ஓங்குகையும் உள்ள
மதிள் -திரு மதிளாலே
சூழ் -வளைக்கப்பட்ட
வில்லி புத்தூர் என்று -ஸ்ரீ வில்லி புத்தூர் என்று
ஒரு கால் சொன்னார் -ஒரு தரம் உச்சரிதவருடைய
கழல் கமலம் -திருவடித் தாமரைகளை
சூடினோம் -விசேஷ புஷ்பமாக முடித்தோம்
முன்னாள் -புருஷார்த்தம் வெளியாக காலத்தில்
கிழி -பொருள் முடிப்பை
அறுத்தான் என்று -அறுத்து வெளி இட்டவர் என்று
உரைத்தோம் -சொல்லப் பெற்றோம்
ஆகையால்
கீழ்மை -நரகத்தில்
இனி -இனிமேல்
சேரும் -முன் போல் செல்லுகிற
வழி -மார்க்கத்தை
அறுத்தோம் -அறப் பண்ணினோம்
நெஞ்சே -மனசே
வந்து -சம்ஸார ரஹீதராய் வந்து

வியாக்யானம்

மின்னார் தட மதிள் சூழ் –
தேஜ பரசுரமான பெரிய மதிள்களால் சூழப் பட்ட வில்லி புத்தூர் -இத்தால்
செம்பொன் ஏய்ந்த மதிளாய் இருக்கை –
பிரதி கூலருக்கு கிட்ட ஒண்ணாத படியாய் -அனுகூலருக்கு கண்டு வாழும் படியாய் இருக்கை-
கல் மதிள் போல் அத்தலைக்கு அரணாய் -மங்களா சாசன பரரான பெரியாழ்வார் இருக்குமூரில் மதிள் இ றே -ஏவம்விதமான மதிளாலே சூழப்பட்ட

வில்லிபுத்தூர் என்று ஒருகால் சொன்னார் கழல் கமலம் சூடினோம் –
ஒருகால் ஆகிலும் ஸ்ரீ வில்லிபுத்தூரை உச்சரித்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய ஸ்ரீ பாத கமலங்களை-பைம் கமலத் தண் தெரியலாக -தலையிலே சூடினோம் –
கோவிந்தன் தன் அடியார்களாகி எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலவே -என்று இ றே ஆழ்வாரும் அருளிச் செய்தது –
ஸ்ரீ வில்லிபுத்தூர் தான் வட பெரும் கோயில் உடையானுக்கும் ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் நிரூபகமான தேசமாய்த்து –
வில்லிபுத்தூர் உறைவான் –
வில்லிபுத்தூர் பட்டர் பிரான் –
அன்ன வயல் புதுவை ஆண்டாள் –
கோதை பிறந்தவூர் -வில்லிபுத்தூர் -என்னக் கடவது இ றே
பிரணவம் போலே மூவரும் கூடலாய் இருக்கை

இப்படி உத்தேச்யமான ஊரை ஒருகால் அனுசந்திப்பார் எப்போதும் உத்தேச்யர் ஆகையாலே-அவர்கள் ஸ்ரீ பாதங்கள் சிரோ பூஷணமாக தார்யம் என்கிறது –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னுமா போலே –

பின்னை விரோதிகள் செய்தது என் என்னில் –
முன்னாள் கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் –
முன்னாள் கிழி யறுக்கை யாவது –
முற்காலத்திலே பாண்டியன் வித்யா சுல்கமாக கட்டின த்ரவ்ய கிழியை அங்கே  சென்று
வேதாந்தார்த்த முகேன -விஷ்ணுவே பரதத்வம் என்று விஷ்ணு சித்தரான தாம் வித்வஜ்
ஜனங்களை வென்று த்ரவ்யக் கிழியை யறுத்த ஆழ்வார் உடைய இந்த அத்யத்புத கர்மத்தை அனுசந்தித்தோம்
அத்தாலே
கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம் –
ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி -த்யக்த்வா தேஹம் -புநர்ஜன்ம நேதி
மாமேதி சோர்ஜுந -என்று
கிருஷ்ண விஷயத்தில் ஜன்ம கர்மங்கள் ஜன்ம சம்சார பந்தத்தை அறுக்குமா போலே
யாய்த்து விஷ்ணு சித்தர் ஜன்ம கர்மங்களும் –
இங்கும் ஸ்ரீ வில்லி புத்தூர் ஜன்மமும் கிழி யறுக்கை கர்மமுமாய் இருக்கும்
கீழ்மையினில் சேரும் வழி யறுக்கை யாவது –நிஹீன க்ர்த்யத்தாலே ப்ராபிக்கும் ப்ரதிபந்தகமான மார்க்கத்தை சேதித்தோம் -புற நெறிகளை கட்டு -அவைதிக மார்க்கத்தை அடைகை பாப பலம் இ றே –
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்று இவர் தாம் சந் மார்க்க வர்த்திகள் இ றே
அன்றிக்கே
கீழ்மையினில் சேரும் வழி -என்று
அத பதநத்திலே ப்ராப்தமான மார்க்கம் என்று அர்ச்சிராதி மார்க்கத்துக்கு கீழாய்
புநராவர்த்தி லஷண ஹேதுவான தூமாதி மார்க்க த்ரயத்தையும் நிரோதித்தோம் –

நெஞ்சமே வந்து
நெறி நின்ற நெஞ்சாய் -நீ அநுகூலிக்கை யாலே இந்த லாபத்தை லபித்தோம்
வந்து -இவ்வளவும் வந்து -ஆழ்வார் அளவும் வந்து -வில்லி புத்தூர் என்று ஒரு கால் சொன்னார் கழல் கமலம் சூடினோம்-

கீழ்மையினில் சேரும் வழி யறுத்தோம்-இதுவன்றோ நீ அநுகூலித்ததால் பெற்ற  பேறு -நீ என் வழி வருகையாலே-இவை எல்லாம் பெற்றோம் -இஷ்ட ப்ராப்தியோபாதி அநிஷ்ட நிவாரணமும் பலம் இறே
நெஞ்சமே வந்து- 
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் –
என்றால் போலே பெற்ற பேற்றைப் பேசி நெஞ்சோடு ஹர்ஷிக்கும் படியைச் சொல்கிறது
வில்லி புத்தூர் என்று ஒரு கால் சொன்னார் என்றது –
வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் -என்றும் –
மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -என்றும் –
பகவத் விஷயத்திலே தகப்பனாரும் மகளாரும் ஒரு கால் சொன்னால் போலே
பாகவத விஷயமாக ஒரு கால் சொன்னார் -என்றபடி-சம்பந்த அநுசந்தானம் ஸக்ர்த் என்றபடி

————————————

ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்

பாண்டியன் கொண்டாட -அவதாரிகை –
இதில் பிரபந்த வக்தவான பெரியாழ்வார் திருவடிகளில் உபாய ச்வீகாரத்தை -சொல்கிறது

பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று –

பாண்டியன் -ஸ்ரீ வல்லப தேவன் என்கிற பாண்டிய ராஜன்
கொண்டாட -மேன்மேல் ஏத்த
பட்டர்பிரான் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன்
வந்தான் என்று -எழுந்து அருளினான் என்று
ஈண்டிய -கூடின அநேகமான
சங்கம் எடுத்து -சங்குகளைக் கொண்டு
ஊத -அநேகர் சப்திக்க
வேண்டிய -அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய
வேதங்கள் -வேதார்தங்களை
ஓதி -தெரியச் சொல்லி
விரைந்து-தாமசியாமல்
கிழி -வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை
யறுத்தான் -அறுத்தவனுடைய
பாதங்கள் -திருவடிகளே
யாமுடைய -நாங்கள் ஆஸ்ரயமாக உடைய
பற்று -ஆதாரம் –
————————————————————-
வியாக்யானம் –
பாண்டியன் கொண்டாட –
தென்னன் கொண்டாடும் போலே -நமக்கு பரதத்வ நிர்ணயம் பண்ணித் தரும்படி
பட்டர்பிரான் வந்தான் என்று பாண்டியனான ஸ்ரீ வல்லப தேவன் சொல்லிக் கொண்டாட -அத்தசையிலே –

ஈண்டிய சங்கம் எடுத்து ஓத –
திரண்டு இருக்கிற வித்வத் சங்கமானது ஓரோர் பிரதேசங்களிலே ஓதிக் கிடக்கிற
ப்ரசம்சா பர வாக்யங்களை எடுத்து ப்ரஹ்ம ருத்ராதிகளை போரப் பொலிய சொல்லி
உபன்யசிக்க என்னுதல்-அன்றிக்கே
ஈண்டிய சங்கம் எடுத்து ஓத என்று-
ஜய சங்கங்கள் பலவற்றையும் வாயிலே மடுத்தூத என்னுதல் –
பூம் கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலி -என்னக் கடவது இ றே
எடுத்தூத -என்ற போது
சங்கத்தை எடுத்துவாயிலே ஊதி என்றபடி –
அடுத்தூத -என்ற போது
கிட்டி ஊத என்றபடி –
அதிஷேபித்த வித்வான்கள் வாய் அடைக்கும்படி –

வேண்டிய வேதங்கள் ஓதி –
சர்வே வேதா யத் பதமாம நந்தி –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய -என்கிறபடி
வேதங்கள் எல்லாவற்றாலும் ஆராதன பிரகாரத்தையும் ஆராய்த வஸ்துவையும்
சொல்லுகிறது என்று அறுதி இட்டு -பகவத் பரத்வத்தை சாதித்து -இனி தாழுகைக்கு
ஹேது என்று திருவடிகளில் தாழ்ந்த கிழியை த்வரித்து அறுத்தவருடைய –
த்ரவ்ய க்ரந்தியை யறுத்தவருடைய

பாதங்கள்
கிழி யறுத்த பட்டர்பிரான் பாதங்கள்

யாமுடைய பற்று –
பட்டர்பிரான் அடியேன் -என்னும்படி அவருக்கு சேஷ பூதராய் இருக்கிற நம்முடைய ரஷை
தகையான் சரணம் தமர்கட்கோர் பற்று -என்கிற பொதுவானவன் உடைய திருவடிகள் அன்று
அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
யாமுடைய பற்று
நம்முடைய அரண் -புகல் -உபாயம் -சரண்யம் -என்றபடி
யாமுடைய பற்று –
பற்றற்ற நம்முடைய பற்று –
பற்றிலார் பற்ற நின்றான் -என்னக் கடவது இ றே-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாண்டிய பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாத முனிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் -ஸ்ரீ பெரியாழ்வார் —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

December 16, 2012

1-திருப்பல்லாண்டு -வீற்று இருந்து போற்றி -திருவாய் மொழி 4-5-1-

2-பொலிக பொலிக -பொலிக -திருவாய் மொழி -5-2-1-பாகவத மங்களாசாசனம்
அடியோமோடும் -திருமங்கை -திரு ஆழி -திருப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு –

3-போக்ய அதிசயத்தாலே -தம் நா எச்சில் கூடாது என்றும் -முகத்தை மாற வைத்து அருளியவை
அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு –
அப் பெரியவாய கண்கள் -அமலனாதி பிரான் -8-
அது காலனே -திருவாய் மொழி -9-5-7-பாதக அதிசயத்தை பற்ற -காட்டேன் மின் உம் உரு
கண மயில் அவை கலந்து -திருவாய் மொழி 10-3-1-

4-பல்லாண்டு -நான்கு தடை சொல்லி -மனுஷ்ய -தேவ பிரம -பல பிரம்மாக்கள் -மங்களா சாசன
காலத்தைப் பெருக்கின படி அருளி
இது போலே அமலன் –என்னைத் தனக்காக்கின சுத்தி
விமலன் -என்னை தன் அடியார்க்கு ஆக்கின உத்தி
நிமலன் -பச்சை இடாதே இருக்க -என்னை திருத்திய சுத்தி
நின்மலன் -இவ்வளவும் தன் பேறாகவே செய்த சுத்தி –

5- வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் –
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் -திருவாய் மொழி -5-2-5-
ஒன்றும் தேவும் -கேட்டு சம்சாரம் திருந்தின படி –

6-பல்லாண்டு கூறுவனே -ஐச்வர்யார்த்தியை ஏக வசனமாக கூறி –
மங்கையைர்  –தையல் -திருவாய் மொழி -10-3-11-ஒருத்தி பசு மேய்க்கைக்கு
போகாமே மீட்க்கைக்காக அருளியது -அடிச்சியோம் -தொழுததை யோம் -என் ஆர் உயிர் -என் சொல் கொள் –
என்று சொன்ன பன்மைக்கும் ஒருமைக்கும் எல்லாம் சேரும் இறே

7-மன்னு குறுங்குடியாய் -பெரியாழ்வார் திரு மொழி -1-5-8-திருக்குருங்குடி -திருவெள்ளறை
திரு மால் இரும் சோலை திருக் கண்ணபுரம் -நான்கு திவ்ய தேசங்களையும் -ஒரு சேர அனுபவம்
தென்னானாய் –வடவானாய் -திரு நெடும் தாண்டகம் -10- திருமால் இரும் சோலை
திருவேங்கடம் திருவரங்கம் திருக்கண்ண புரம் –நான்கு திவ்ய தேசங்களையும் -ஒரு சேர அனுபவம் –
குணபால மதயானாய் -மன்னாரை -திருக் காட்டு மன்னர் கோவில் என்று உடையவர் அருளுவார்
நாத முனிகள் ஆள வந்தார் திரு அவதார ஸ்தலத்தில் உள்ள ஆதர அதிசயத்தாலே –

8-ஏலு மறைப் பொருளே -பெரியாழ்வார் திருமொழி -1-5-9
ஏலும் ஆடையும் அக்தே -4-3-5-
வேதத்துக்கும் வேத்யனுக்கும் உள்ள பொருத்தம்
வேதை ச சாவை அஹம் ஏவ வேத்யே -போலே –
வாசய வாசக ஐக்யம் -படிச்சோதி ஆடையோடும் -பல் கலனாய் நின் பைம் பொன் கடிச்சோதி
கலந்ததுவோ திருமாலே -3-1-1-

9-ஆங்கே வளர்ந்திட்டு -பெரியாழ்வார் திருமொழி 1-6-9-அத் தூணிலே  அடித்த இடம் தன்னிலே
அங்கே நின்று -திருவாய் மொழி -5-10-9-திருவிக்ரமன் –
கடக்க நாலடி போனால் -கிருத்ரிமம் பண்ணினான் என்று வழக்கு பேசலாம் இறே

10-உளம் தொட்டு -பெரியாழ்வார் திருமொழி -1-6-9-
உகிர்த் தலத்தை ஊன்றினாய் -திரு சந்த விருத்தம் -25-
உளம் தொட்டு -ஹிருதயம் பரிஷை செய்து –
இவன் நலிவு பிரகலாதனுக்கு தட்டாமையாலே செருக்கு வாடி அநு கூலிக்கவுமாம் –
கீழ் நாளைய அபராதத்தை நினைத்து அனுதபித்து இனி யாகிலும் அஞ்சலி செய்யாய் என்று உபதேசித்ததால் அநு கூலிக்கவுமாம் —
நாஸ்தி என்கிற இடத்தில் அஸ்தி  என்று தோன்றியபடியால் -அவன் வ்யாப்தியில் சத்பாவத்தை நினைத்து லஜ்ஜித்து அநு கூலிக்கவுமாம் —
உக்ரம் வீரம் என்று கொடிய வடிவைக் காண்கையாலே பீதியாலே அநு கூலிக்கவுமாம் —
ராவணன் வெறும் கை வீரன் ஆனது போல் தன் அசக்தியாலே அநு கூலிக்கவுமாம் —
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தலத்தை ஊன்றினாய் -என்று பாவ க்ரமம் தோன்றுகையாலே வ்யசன பரம்பரைகளாலே அநு கூலிக்கவுமாம் –
இன்னமும் இப்புடைகளாலே இன்னமும் அநு கூலிக்குமோ என்று பார்த்து இறே

11-துரும்பால் கிளறிய சக்கரக் கையனே -பெரியாழ்வார் திரு மொழி -1-8-7-
அரவணையாய் ஆயர் ஏறே -பெரியாழ்வார் திரு மொழி -2-2-1-
திருச் செய்ய நேமியான் -பெரிய திருவந்தாதி -63
கருதுமிடம் பொரும் திருவாழி -பவித்ரமும் ஆழி
சென்றால் குடையாம் போலே திரு அனந்தாழ்வானும் பள்ளிகொள்ள திருப்படுக்கை வடிவை கொள்வான்
சூர்பணகை நாஸிகா சேதனத்தை தெரிவிக்கும் பாசுரம் -கூரார்ந்த வாளால் அரிந்தாலும் சக்கர அம்சம் உண்டே

12-பொறை உடை மன்னர் -பெரியாழ்வார் திருமொழி -2-1-1-
இதை ஒழிந்த சர்வ ஸ்வமும் க்ரித்ரிமத்தாலே அபஹரித்து கொள்ளும் இத்தனை
ஆழி அம் கை யம்மான் -பெரிய திருவந்தாதி -82
கைகேயி வரத்தில் அகப்படாது விட்டது பெருமாள் திருக் கையிலே அறு காழி ஒன்றுமே யாகாதே –

13- திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை -பெரியாழ்வார் திருமொழி -2-1-2-
புகழ்ந்தாய் சினப்  போர் சுவேதனை -நான் முகன் திருவந்தாதி -24
அவாக்யநாதர -என்று இருக்கக் கடவ -அவன் அது அடைய அழிந்து  கல கல ஏத்தா நிற்கும் ஆயிற்று –

14-பண் பகர் வில்லி புத்தூர் பெரியாழ்வார் திருமொழி -2-7-10
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரம் -கலியன் -8-1-1-
உக்தி பிரதி உக்திகளும் -ஆதர அநாதர ரோகதிகளும் பண்ணிலே சேர்ந்தது போலே காணும்
உண்ண உடுக்க சொல்லும் வார்த்தைகளும் சாஸ்திரம் கற்ற வார்த்தைகள் போலே தெரியுமே –

15-ஓடி அகம் புக்கு -பெரியாழ்வார் திருமொழி -2-10-1-
கண்கள் நீர் மல்கி –புகுமூர் -திருவாய் மொழி -6-7-10
தம் ஜீவனத்தில் ஒன்றும் குறை இன்றி கொண்டால் எங்கள் ஜீவனத்தையும்
கொண்டு போக வேணுமோ -எனபது ஆய்ச்சியர் திரு உள்ளம் -அவனுக்கு ஜீவனம் இவர்களுடைய
வளையல்களும் துகில்களும் -இவர்கள் ஜீவனம் அவன் வடிவு இறே
ஒருவன் பகவத் குண வித்தனாயக் கண்ணும் கண்ணீருமாய் இருக்க -அவனை
கண்டு கொண்டு இருக்காதே யடுப்பது –
அழு நீர் துளும்ப வலமருகின்றன வாழி யாரோ -திரு விருத்தம் -2-
என்று சேதனர் ஆகில் மங்களா சாசனம் பண்ணக் கடவது –

16-பார்க் கடல் வண்ணா -பெரியாழ்வார் திருமொழி -3-3-7-பார்க் கடல் பாற் கடல் இரண்டும் பொருள் இங்கே
பார்க் கடல் வண்ணனுக்கே -நாச்சியார் திருமொழி -1-9-பார்க் கடல் ஒன்றுமே பொருள் பட பாடம் –

17-இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை -பெரியாழ்வார் திருமொழி -3-5-3-
குன்று குடையா –குணம் –திருப்பாவை 24
இந்திரன் தலையை அறுத்து பொகட வல்ல பரிகரம் உண்டாய் இருக்க -ஆழியைச் சொல்லி –
உண்பது கொண்ட நாம் உயிரையும் கொள்ள ஒண்ணாது என்று -அநு கூலனுக்கு வந்த
கலக்கம் ஆகையாலே தானே தெளிந்து விடுகிறான் -ரஷ்ய வர்க்கத்துக்கு நலிவு வாராமல்
மலையை எடுத்து கொண்ட நீர்மையை சொல்லி -அநு கூலனுக்கு பிராமாதிகமாக
புகுந்தது அன்றோ -அனந்தரத்தில் வந்து கோவிந்த அபிஷேகம் பண்ண அன்றோ புகுகிறான் –
பெரும் பசியாலே வந்த கோபத்தாலே வர்ஷித்தான் ஆகில் கை நொந்தவாறே விடுகிறான் –
ஆந்ரு சமசயத்தாலே -அந்த குணத்துக்கு போற்றி –

18-தம்முடை குட்டன்களை குதி பயிற்றும் -பெரியாழ்வார் திருமொழி -3-5-9 –
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி -நாச்சியார் திருமொழி -14-1-
தம் தாமுடைய குட்டிகளை -முதுகிலே கட்டிக் கொண்டு போய் -கொம்பிலே ஏற்றி இருந்து –
ஒரு கொம்பில் நின்றும் ஒரு கொம்பில் குதிக்கும் படியை -தான் முந்துற குதித்திக் காட்டி
அப்யசிப்பியா  நிற்கும் -அவற்றுக்கு தண்ணீர் பருகுகை அபேஷிதம் ஆனால் –
தான் அரைமட்டு நீரிலே இழிந்து -பின்னை கையைக் கட்டி குனிந்து நின்று –
தண்ணீர் பருக காட்டும் ஆயிற்று -தடம் பருகும் கரு முகில் -கலியன் -2-5-3-இ றே
ச யத் பிரமாணம் குருதே லோக சதத் அநு வர்த்ததே -காரயித்ருத்வம் இருக்கிற படி –

19-செங்கண் மால் -பெரியாழ்வார் திரு மொழி -3-8-4-
செய்ய —கண்ணன் -திருவாய் மொழி -4-5-2-
செங்கண் மால் தான் கொண்டு போனான் -யதா கப்யாசம் -புண்டரீகம் -என்கிறபடியே
ஸ்வாபாவிகமான சிகப்புக்கு மேலே -பக்க நோக்கம் அறியாமல் இவளைப் பார்த்து கொண்டு இருக்கும்
வ்யாமோகத்தாலும் சிவந்த திருக் கண்களை உடையவன் -அவளை ஒருபடியே
கடாஷித்துக் கொண்டு இருக்கையாலே -அவள் திரு மேனியின் சிகப்பு ஏறி
இவன் புண்டரீகாஷனாய் இருக்கும் -செய்யாள் திரு மார்பினில் சேர் திருமால் இறே –

20- நங்காய் -பெரியாழ்வார் திருமொழி 3-8-8-
தொழுது எழு -திருவாய் மொழி -1-1-1-
இப்பதிகத்தில் எங்குத்தைக்கும் முன்னிலை தொழுது எழு -அவன் துயரறு சுடரடி தொழுது எழு
என்கிற இது பத்துப் பாட்டிலும் அந்வயமாக கடவது போலே –

21-என்னாதன் தேவிக்கு -பெரியாழ்வார் திருமொழி -3-9-1
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -திருவாய்மொழி -4-5-8-
இன்று ஆஸ்ரயித்த நமக்கும் -நித்யசம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருக்கும் நமக்கும் –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -பூவின் மிசை நங்கைக்கும் -நித்ய சூரிகளுக்கும் அவ்வருகாய்
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யாய் இருக்கிற அவளுக்கும் இன்பனை –
இன்பனாய் இருக்கும் இடத்தில் முற்பாடு இங்கே யாய் பின்பாயிற்று அவளுக்கு
த்வயி கிஞ்சித் சமாபந்னே கிம் கார்யம் சீதயா மம -இ றே

22-பெரும் தேவீ கேட்டருளாய் -பெரியாழ்வார் திருமொழி -3-10-4
என் சிறுத் தேவி போய் -திருவாய் மொழி -6-7-5-
பெருமைக்கு தகுதியான தேவி -பெரும் தேவி -துல்ய சீல வயோ வ்ருத்தாம் –
தன் திருமால் என்று பெரும் தேவியைச் சொல்லுகையாலே சிறுத் தேவி என்று விசேஷிக்கிறாள்

23-அமரர் தம் கோனார் -பெரியாழ்வார் திருமொழி -4-2-4-இந்த்ரன்
திரு வல்ல வாழ் உறையும் கோனார் -திருவாய்மொழி -5-9-1-ஸ்ரீ மன் நாராயணன்-

24- தாமரை யாள் யாகிலும் சிதகுரைக்குமேல் -பெரியாழ்வார் திரு மொழி -4-9-2-
திருமாலே நெடியானே -பெருமாள் திருமொழி -4-9-
என் அடியார் அது செய்யார் -ஆஸ்ரித விஷயத்தில் அவன் இருக்கும் இருப்பு

25-தன்னடியார் திறம் –மன்னுடைய விபீடணருக்காய் -பெரியாழ்வார் திரு மொழி -4-9-2-
ஆமையாய் —சேமமுடை நாரதனார் –பெரியாழ்வார் திரு மொழி -4-9-5-
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -எல்லா பொருளும் விரித்தான் திருவாய் மொழி -4-5-5-
தன் அடியார் பூர்வரார்த்தத்திலே கூறப்பட்டதை மூதலிக்கிறார் உத்தரார்த்தத்திலே –
சிதகுரைக்கும் -என்றது மகாராஜர் கோடி
என் அடியார் அது செய்யார் -என்றது திருவடி இளைய பெருமாள் கோடி
இவை அனைத்தையும் பூர்வ பஷமாக்கி -குற்றம் உண்டு நான் கைக் கொள்ளக் கடவேன்
நன்று செய்தார் என்றார் இறே சரண்யரான பெருமாள் –
ஆமை என்று தொடங்கி நாரதர் என்று முடித்து ஹரி வம்ச 159 அத்யாயத்தில் கூறிய கதையை ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார்
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -என்றத்தை மூதலிக்கிறார் எல்லா பொருளும் விரித்தானை -என்று

26-செஞ்சொல் மறை -பெரியாழ்வார் திருமொழி -4-10-7-
இரும் தமிழ் நூல் புலவன் -கலியன் -1-7-10-
செஞ்சொல் பரன் -திருவாய் மொழி நூற்று அந்தாதி -97
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிற படியே செவ்விய சொல்லான
செவிக்கினிய செஞ்சொல் இறே திருவாய்மொழி –
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -திருவாய் மொழி -10-6-4-
இரும் தமிழ் நூல் -திருவாய் மொழி அதில் புலவன் -கலியன்

27- நாக்கு நின்னை யல்லால் அறியாது –நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று -பெரியாழ்வார் திருமொழி -5-1-1-
என் மனம் ஏத்தி யன்று ஆற்ற கில்லாது -இராமானுஜ நூற்றந்தாதி -89
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவினுக்கு ஆற்றேன் -என்று பீதனாகா நின்றேன் –

28-ஏதங்கள் ஆயின -பெரியாழ்வார் திருமொழி -5-2-8
அல் வழக்கு ஒன்றுமில்லா -திருப்பல்லாண்டு -11
தேகாத்ம அபிமானம் -ஸ்வா தந்த்ர்யம் -அந்ய சேஷத்வம் -ஸ்வ ரஷணம் -ஸ்வ பிரயோஜனம் –
பூர்வ ராகம் -உத்தர ராகம் -ப்ராபர்ப்தம் -போன்றவை குற்றங்கள் -ஏதம் -அல் வழக்கு
வழக்கு ஆவது மங்களாசாசனம் பண்ணுகை

29-நெய்க்குடம் -பெரியாழ்வார் திருமொழி -5-2-1- இதில் ஈஸ்வரன் இவருக்கு காப்பு
உறகல் உறகல் -பெரியாழ்வார் திருமொழி -5-2-8-இதில் இவர் அவனுக்கு காப்பு-

30-பரவைத் திரை பல மோத -பெரியாழ்வார் திருமொழி -5-2-10-இதில் கடலோசை
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் -திருவாய் மொழி -7-3-1-இதில் கருட குரகோஷம்

31-சக்ரபாணீ சாரங்க வில் சேவகனே -பெரியாழ்வார் திரு மொழி -5-4-4-
பூம்கொள் சங்கொலி -நாண் ஒழி -நாச்சியார் திருமொழி -9-9-
ஆழ்வானை ஏவியும் அம்பையும் ஏவியும் இறே முடிப்பது -தூரஸ்தரை நெட்டம்பாலே உருட்டும் –
கிட்டே நின்றவர்களை கையில் திரு ஆழியாலே கொல்லும்
பிரதி கூலருக்கு இரண்டும் பாதகம்
இவளுக்கு இரண்டும் தாரகம் ஆய்த்து
ருக்மிணி பிராட்டியை தரிப்பித்தது ஸ்ரீ பாஞ்ச ஜன்ய கோஷத்தாலே
ஸ்ரீ சார்ங்கத்தின் ஜ்யாகோஷம் ஜனக ராஜ திருமகளுக்கு தாரகம் ஆனது
ஆண்டாளுக்கு இரண்டுமே வேண்டும்படி ஆய்த்து -அவர்கள் அளவு அல்லது இவள் ஆற்றாமை –

32-அனந்தன் பாலும் ஐது நொய்தாக –என் மனம் தன்னுள்ளே வந்து வைகி -பெரியாழ்வார் திரு மொழி -5-4-8
ஈசன் வானவருக்கு –என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதி -திருவாய் மொழி -3-3-4-
பிரதம விவாஹத்துக்கு செங்கற் கீரை கட்டி கூப்பிடாமைக்கு சோறு வைப்பாரைப் போலே
த்வதீய விவாஹத்தில் இறே போக்கியம் -உள்ளது
பலிக்கு ஜீவனம் அங்கே -நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு-

33-சாயை போல பாட வல்லார் -பெரியாழ்வார் திருமொழி -5-4-11
நிச்சலும் விண்ணப்பம் -திருவாய் மொழி -1-9-11
வைகல் பாட -திருவாய்மொழி -5-7-11-
பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்களே -என்று அந்வயம்
எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய –நிச்சமும் நீள் கழல் சென்னி பொருமே -என்று அந்வயம்
வைகலும் வானோர்க்கு ஆரா அமுதே-என்று அந்வயம்
காலதத்வம் உள்ளதனையும் நித்ய சூரிகளுக்கு போக்ய பூதர் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளி செயல் அரங்கம் -திரு பல்லாண்டு சாரம் ..

November 21, 2011

திரு பல்லாண்டு

மங்களாசாசனம் -ஆசனம் மூடி போல்
நன்மை உண்டாக வேண்டும் என்று வேண்டுதல்-மங்கள ஆசாசனம்
கண்ணன் மறு அவதாரம் பெரிய வாச்சான் பிள்ளை -ஆவணி ரோகிணி திரு அவதாரம்
ஸ்ரீ நாத முனிகள் அருளிய தனியன்
குரு முகம் -ஆச்சார்யர் சிஷ்யர் பரம்பரை
தத்வ தர்சினி உபதேசம் முக்கியம்-கைங்கர்யம் செய்து பெற்று கொள்ள வேண்டும்
அசேஷான்-ஒன்றும் குறை இன்றி கற்றார்
பட்டன்-உபகாரன் –
முதல் குறி கொள் பொன் கிளி பெற்று கைங்கர்யம் பிரதானம்
சாது பரித்ராணம் பிரதானம் -அவன் அவதாரம்
ஒரு திரு மகள் போல் வளர்த்து -ஜனகன் குலசேகர் போல்
அமரர்களால் தொழ படும் பெரிய பெருமாளுக்கு மாமனார்
பூயோ பூயோ நம -வணங்குகிறோம்
பாண்டிய பட்டர் -அருளிய தனியன்
மின்னார் தட மதிள் சூழ்  வில்லி புத்தூர் ஒரு கால் சொன்னால் போதும்
திரு பல்லாண்டு தான் காவல் போல் மதிள் அவனுக்கு
கிளி அறுத்து சித்தாந்தம் அறுதி இட்டார்
கீழ்மை-நரகம்/சம்சாரம்
மனசை-நெஞ்சமே நல்லை நல்லை/ முன்புற்ற நெஞ்சே
பந்தம் மோஷம் பட மனசே காரணம்
ஆத்மானம் மனசால் உயர்த்தலாம் -சாஸ்திர வாக்கியம் -சரம உபாயம்-பாண்டியன் கொண்டாட -பட்டர் பிரான் வந்தான் என்று கொண்டாடினான்

விருது ஊதி–வேண்டிய வேதங்கள் ஓதி
ஈண்டிய சங்கம் எடுத்து ஓத -சங்கம்=வித்வான் கூட்டம்
ஆத்மா தத்வம் /ஹிரண்ய கர்ப்பம்-பூர்வ பஷம் என்று கொண்டு
அதற்க்கு மறுதலித்து வேண்டிய வேதம்-அவர் அவர்களுக்கு வேண்டிய வேதம்
அபேத சுருதி கொண்டே ஸ்வாமி-ஸ்ரீ பாஷ்யம் அருளியது போல்
சம்ப்ரதாயம் வேண்டிய வேதம் மட்டும் இல்லை
பேசின பேச்சுக்கு தானே கிளி இறங்கிற்று
பதிம் விச்வச்ய -அவனுக்கு அடிமை தாச பூதர் இயற்கையில்
முகப்பே கூவி பணி கொள்ள வேண்டும்
அவனை பிரிந்து தத்வம் ஏதும் இல்லை
சேஷ சேஷி அர்த்தம் -அவனுக்கு மங்களம் ஆசாசனம்/ அவனுக்கே அதிசயம் விளைவிப்பவன்
பர கத அதிசய ஆதேன உபாதேய -மேன்மை விளைவித்து கொண்டே இருக்க வேண்டும்
பாடி தான் மேன்மை வர வேண்டியது இல்லை -நம் கடமை
திரு பள்ளி எழுச்சி பாடுவது கடமை பெருமாள் தூங்காமலும் -ஸ்ரீ ராமாயணம்
உறங்குவான் போல் யோகு செய்தாலும் -இரவு முழுவதும் உத்சவம் நடந்தாலும்
திரு பள்ளி எழுச்சி
அவனுக்கு ஆனந்தம்- ஏற்படாதது ஏற்பட வைக்கிறோம் –
சிக்கனே செம் கண் மாலே -மலர்ந்த செம் கண் ஆழ்வாரை கொண்டதால்
கிருபை அடியாக விகாசம் விகாரம் கருணை பொலிந்து கொண்டே இருப்பவனுக்கு –

முயல்கின்றேன் அவன் தன மாய் கழல் க்கு அன்பையே-வர்த்த மானம்
பிரதி பாத்ய விஷயம்-பல்லாண்டு தெளிவாக பாசுரம் தோறும்
கரண களேபரம் தொடக்கம் கிருஷி கார்யம்
சாஸ்த்ரம்  கொடுத்து /அவதாரம் செய்து /அவஜானம் மாம் மூட
மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா
மானை கொண்டு மான் பிடிப்பது போல்
ஆனி சுவாதி
கற்று -பயன்-கைங்கர்யம்-உகப்பு -நித்யம் –
பிரசாத பரமம் நாதவ் -இரட்டை -மால்யோ-
மாமா கேதம் உபாததவ் -கிருகம் தேடி வந்தீர்களே
தந்யோ பாக்கியம் அர்ச்சை இஷ்யாமி
உகந்து கொண்டான்
எட்டு வித புஷ்பம் பிடிக்கும்
இதனால் சூடி கொடுத்த நாச்சியார்
வில் யாகம் வந்தவன் அலங்காரம் செய்து கொண்டு
வஸ்திரம்/நாறிய சாந்தம் /புஷ்பம் வரிசையாக
அழகன் அலங்காரன்   பாண்டியன் கருப்பு -எட்டு மாசம் -மழை காலம்

இரவுக்கு பகல்
அந்த லோகத்துக்கு இங்கு
ஞானி பாட -செல்வ நம்பி -கேட்டு
பர தேவதை பற்ற சோழ
யார் பர தேவதை சபை கூட்ட
வித்வான் ஆக இருந்து கைங்கர்யம் இல்லை என்றால்
பூ தொடுப்பதும் நான் தான் செய்கிறேன்-நின்றனர் இருந்தனர்
அனைத்தும் அவன் கொடுத்த சரீரம் கொண்டு அவனால் செய்கிறோம்
காரணம் து தேயதா -பொதுவான வாக்கியம்
மயங்காமல் அனைத்தும் போய் நாராயண அனுவாகம்
கோர்க்க பட்ட பஞ்ச சன்யம் போல் சங்கங்கள் ஊத அடுத்த அர்த்தம்
ஞானம் -அனுகூலம் -இது தானே ஆனந்தம் -தனித்து ஓன்று இல்லை
கோஷம் இட்டு -வர
குழந்தை ப்ரக்ம ரதம் வர காண வரும் தாய் தந்தை போல் வந்தார்கள்
கண்ணன் வேஷம் போட்டு பரிசு வாங்கிய குழந்தை போல்
அகங்காரம் இன்று -இறுமாந்து இராமல் தன்னை பாராமல் அவனை பார்த்து
பொங்கும் பரிவு -யானை மேல் மணி தாளம் கொண்டு

ஞானம் விட பிரேமம் அதிகம் கொண்டு -தன் கப்பிலே தட்டு மாறி
முதல் இரண்டு /அடுத்து மூன்று
இனியது தனி அருந்தேல்/அனைவரும் வாழ ஆசை கொண்டு
சேஷ வஸ்து -ராஜ்யச்ய அஹம் அஸ்ய – தெரியாமல் அசித் துல்யமாக இருக்கிறோம்
தங்கள் போல்வாரை மட்டும் இன்றி அனைவரையும் அழைக்கிறார்
பிரயோஜனாந்தர பரரையும்-ஆர்த்தன்-ஐஸ் வர்யார்த்தி
அபூர்வ ஐஸ் வர்யார்திலந்தவற்றை பெற புதிசாக
இந்திரிய சுகம் ஆசை -இந்திரியா ராமன் -ஆத்மா ராமன்-கைவல்யார்த்தி -ஜிக்ஜாசி
தோட்டம் போல் அனுபவித்து –
பகவத் லாபார்த்தி -ஞானி பக்தன்-மிகவும் பிடித்தவன் -மம ஆத்மா

மூவரையும் கூபிட்டு
அடைவிலே சேர்ந்து /கூட வந்தவர் உடன் பல்லாண்டு பாடுகிறார்
பலன் சொல்லி முடிக்கிறார்
நான்கு பல்லாண்டு தாம் மனுஷ்யர் தேவர் பிரம -நான்கு
மனுஷ்யர் தேவர் பிரம்மா பல பிரம்மா -நன்கு
வயிறு பிடிக்கிறார் -கதே ஜலே சேது பந்தம்
என்றோ நடந்த
மல் ஆண்ட திண் தோளை காட்ட
பய நிவர்தகங்களுக்கு பயம் பட்டார்
அஹம் வேதமி மகத்மனாம் -சொன்னவர்
தாடகை- பல்லாண்டு பாடுகிறார் விஸ்வாமித்ரர்
பரசுராமன்-கண்டு பயந்து பாலானாம் மம புத்ரானம் அபயம் -தசரதன்
ஏன் மங்களம் -கௌசல்யை
சீதை திக் பாலர்-காக்கட்டும்
சொரூபத்துக்கு அனுரூபம் இது தான்
தோளை பார்த்து -பல்லாண்டு

முப்பத்து மொவருக்கு முன் சென்று
திவ்ய ஆயுத திவ்ய ஆபரணம் பிராட்டி கண்டு பல்லாண்டு
சங்கம்- உள் வெளி வர்ணம் சேர்க்கை கண்டு பல்லாண்டு
திரு மந்த்ரம் அர்த்தம்
அடியோமோடும் சேஷத்வம்
பல்லாண்டு நம சப்தம்
ஜிதந்தே போற்றி தோற்றோம்
நாராயண -மல் ஆண்ட திண் தோள் மணி வண்ணா
உபய விபூதி நாதத்வம்
ஆய உன் சேவடி செய்ய திரு காப்பு
உண்டாகுக வினை சொல் இன்றி
பாடி முடித்த திருப்தி இல்லை

வரம்பு ஒழித்து கைவல்யார்த்தி
ஏடு-தாழ்ந்த மசான பூமி இடுவதன் முன்னம் வாங்கோ
ஏடு சரீரம்
பால் ஏடு தனித்து பிரித்த சூஷ்ம சரீரம்
மூன்று அர்த்தம்
அண்டம் உன் இடம் இருக்கே -அசுரர் ஒழிகின்ற -இழந்த செல்வம்
3 /6 /9 பகவத் லாபார்த்தி ஏழு படிகால் -குறை இன்றி அடிமை செய்து
4 /8 /11/சங்கு  சக்கர லாஞ்சனை- கண்ணன் இது இருந்தால் உள்ளே விட சொன்னான்
வளையல் மெட்டி போல் –
5 /7 /10 -கதி த்ரயம்- மொன்றுக்கும் அவனை பிரார்த்திக்க வேண்டும்
நாட்டினான் தெய்வம் எங்கும்
உபாசனம் பண்ணி இவன் திரு மேனி அழகாய் கண்டு வருவான்
அதனால் கேட்டதுஎல்லாம் கொடுக்கிறான்
கழுத்துக்கு பூண்
தாரகம்  போனகம் போஷகம் அனைத்தும் கொடுக்க
தோடு பிறர் பார்த்து பொறாமை பட
அதுவும் கொடுக்கிறான்
தந்து என்னை -வெள் உயிர் ஆக்க வல்ல
வரும் பொழுது உள்ள தன்மை மாறி

அல் வழக்கு ஒன்றும் இல்லா –
நானும் உனக்கு பல அடியேன்-சொல்லும் படி மாற்றினார்
எங்கேயோ திரிந்த கஷ்டம் மனசில் படாமல் வைப்பான்
அன்று ஈந்த கன்று -மேல் வைக்கும்
அக் குற்றம் -அவ இயல்பே ஆள் கொள்ளும்
திரு மந்த்ரம் அர்த்தம் முடித்து
அல்வழக்கு பலவும் தள்ளி
தேக ஆத்மா விவாகம் -முதலில்
ச்வாதந்த்ரம்  எண்ணம் முடித்து
தேவதந்த்ரம் பஜனம் தள்ளி
உபயான்தரம் சம்பந்தம் தள்ளி
அவன் ஒருவனே போக்கியம் பந்து பிராபோயம்
தன் உகப்புக்கு இன்றி -அவன் உகப்புக்கு
பிரார்தன யாம் சதுர்த்தி முதலில்
இந்த ஆய அவனுக்கு
பல்லாண்டு பாடும்நல் வழக்கு ஒன்றே கொண்டு
சூழ்ந்து இருந்து பாடுவது
பவித்ரன் அவன்
பரமேட்டி வைகுண்ட நாதன்
நீண்ட சார்ங்கம் பற்றி- விரும்பி பாடிய சொல்
இன்று கிடைத்த நாள் நல்லது
நமோ நாராயணா சொல்லி அங்கும் சூழ்ந்து இருந்து ஏத்த பெறுவார்
இங்கு நித்யம் இல்லை
அங்கு நித்யம்
சூழ்ந்து இருந்து ஏத்தி கைங்கர்யம் பண்ண பெறுவோம்
பெரிய வச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய ஆழ்வார் வைபவம் ..

November 14, 2011

ஸ்ரீ விஷ்ணு சித்தர்

ஆனி மாசம் ஸ்வாதி -வேயர் குலம்-
மாலா காரர் விருத்தாந்தம் கேட்டு-
 நாறிய சாந்தம் –திரு உடம்பில் பூசி கொண்ட பின்
குறுக்கு தெரு தேடி போய் -நின்று-திவ்ய மூர்த்திகளை சேவித்து
பிரசாத பரம நாதவ-பரத்வம் காட்டாமல் கிருபை வடிவு கொண்டு –
ஷீராப்தி- மதுரை- திரு ஆய் பாடி- மதுரை- தன் கிருக வாசல் வந்து
தன்யோஹம்-புஷ்பம் சமர்பித்து -உகந்த கைங்கர்யம் என்று அறிந்து
ஸ்ரீ வல்லப தேவன்- கருப்பு உடுத்து சோதித்து-
பகல் ஓலக்கம் இருந்து
கருப்பு உடுத்து சோதித்து
கார்யம் மந்தரித்து
வேட்டை ஆடுவது
ஆரமங்களில்  விளையாடும்
ராஜ நீதி -ஐந்தும்

நீதி சாஸ்த்ரம்-வருஷார்தம் அர்த்தம்  அஷ்டவ்-வ்ருஷ மாதம் உணவை சேவித்து
இராகா காலம்- பகலில் உழைத்து -வயசான பின்பு- வேண்டும் என்று இளம் வயசில் சேகரித்து
-பரத்வ ஹேது இக ஜன்ம நாசா- ஐகிகம்-இந்த லோகம் ஆமுஷ்யமிகம்-பாதார விந்தம் பெற -இந்த  ஜன்மத்தில் உழைத்து
சேர அகோ ராத்ரி ஆலோசனை  நடக்க -ஆத்மா காக்க -ஜன்மம் முழுவதும் தேட வேண்டும் –
கேட்டான் -அரசன்-பண்டிதன்- விவேகி-மகா பிரபு-இறுதி சொன்ன விஷயம் -நெஞ்சில் நிறைந்து
செல்வ நம்பி புரோகிதர்- திரு கோஷ்டியூர் அவதரித்தவர் -புரோகிதர்-நன்மை விஷயம் சொல்வார்
பரதத்வ நிர்ணயம் -செல்வ நம்பி பற்றி- அல் வழக்கு  ஒன்றும் இல்லா அபிமான துங்கன் -செல்வனை போல் –
பாகவத பாகவதர் அன்பில் மேல் ஆனாவர்
நளிர்ந்த சீலன் நயாசவன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம் கண் மால் திரு கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -பெரிய ஆழ்வார் திரு மொழி -4-4-8
சம்பன்னர்-பக்தி சம்பத்-லஷ்மி சம்பன்னர் கைங்கர்ய ஸ்ரீ போல் –
ஒருவர் செய்யும் கார்யம் இல்லை- வித்வான் பலரையும்-
பறை சாற்றி அழைத்து -அறிக்கை வெளி இட்டு –
உபன்யாச வியாக்யான ரூபத்தில் விளக்கம் கேட்டு
கனவில் எம்பெருமான் நியமிக்க
-கொத்து தழும்பு கொண்டு காட்டி பர தத்வம்- அது நம் கார்யம்-எழுந்து அருளும்
நிமித்த மாத்ரம்- மம பூர்வம் முடித்தேன் பாரத யுத்தம்
அஸ்ய மகிமானம் ரூபமேய திவ்ய தேஜஸ்
பாண்டியன் கொண்டாட –பட்டார் பிரான் வந்தான் என்று –விரைந்து கிளி அறுத்தான்
வேண்டிய வேதங்கள் ஓதி -யந்த்ரம் தந்த்ரம் மந்த்ரம்-
வேதஷ்ய சர்வை  ஹி அஹம் ஏவ வேத்ய -கீதை 15 -15
குரு முக -எய்ற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஒது வித்து என்னை –பணி செய்ய கொண்டான்
ஞான பிரான் ஆழ்வார்கள் அனைவருக்கும் ஞானப் பிரதானம் செய்து அருளினார்
எகைகா நாராயண ஆஸீத் ந பிரம ந சிவ
பர தத்வ நிர்ணயம் கிரந்தம் புச்தகமுண்டு -வாசிக்கிற மிராசு- பிரதிவார பயங்கர சந்நிதியில்
காஞ்சியில் மூன்று கருட சேவை உண்டு
வைகாசி /ஆனி கருடன் -இதற்க்கு நடக்கும் உத்சவம்
குழந்தை உத்சவம் காண வரும் தாய் தந்தை போல்- யானை வாகனம் இவருக்கு பெருமாள் கருட சேவை
சேவித்ததும்=திரு பல்லாண்டு- யானை மேல் உள்ள மணிகளை தாளம் ஆக கொண்டு பாட ஆரம்பித்தார்
மங்களா சாசானம்-
தன் அல்பம் மறந்து அவன் சொவ்குமார்யம் பார்த்து
பக்தி- கிருஷ்ணா அவதாரம் தொடங்கி-440 பாசுரங்கள்- விரிக்க பேசி
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை
பகவத் அனுபவத்தில் குறை இன்றி -ஆர்வத்து அளவு தான் ஆற்றி
பொங்கும் பரிவால் பெரிய ஆழ்வார்- அவன் இடம் பிரார்த்திக்காமல்-
குறை ஒன்றும் இல்லா கோவிந்தன்-நன்மை கேட்க்காமல்-அவனுக்கு பல்லாண்டு அருளி
பொன் கிளி -பிரகாரம் கோபுரம் மண்டபம் கைங்கர்யம் -செய்து புஷ்பம் கைங்கர்யம் செய்து கொண்டு
திரு மங்கை ஆழ்வார் போல்-
ஸ்ரீ ரெங்க ராஜ மகிஷி-கோதை -வாத்சல்ய சிந்து –
ஐந்து குடிக்கு ஒரு சந்ததி -விஞ்சி நிற்கும் -தன்மை- பிஞ்சாய் பழுத்தால்
அனந்யார்கா ராகவேணாம் பாஸ்கர   பிரபை போல்-
விட்டுபிரியாமல்  அனபகானீம்
சீதை ருக்மிணி நப்பின்னை விபவம் போல்- அர்ச்சையில் ஆண்டாள்
யக்ஜா பூமியில்-சீதை பிராட்டி
பெரி ஆழ்வார் நந்த வனம்-சூடி கொடுத்த சுடர் கொடி
தாழ் ஓன்று இல்லா மறை தாழ்ந்து அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையை
–சூடி கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் ராமா னுச மா முனியே -அமுதனார்
உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த தட முலைகள்- மானிடர்க்கு இன்றி
கோவிந்தனுக்கு அல்லா வாயில் போகா முலைகள்
பரகத ச்வீகாரம்
எற்றைக்கும்–உனக்கே நாம் ஆள் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று
இனி பிறவி யான் வேண்டேன்
ஆதலால் பிறவி வேண்டுன்
மறு பிறவி தவிர்த்து -பிரார்த்திக்க
இவளோ- பல கால்- எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
பகு ஜன்மம் அவன்- எண்ணின்ற யோனியுமாய் பிறக்க
செய்து கொண்டே இருக்கிறான்- வர்த்தமானம்
கேசவ நம்பி கால் பிடிப்பாள் என்றும் இப் பேரு எனக்கு அருள் கண்டாய்
வடிவு இணை இல்லா மலர் மகள் மற்று நில மகள் பிடிக்கும் மெல் அடியை பிடிக்க விரும்புகிறாள்
ஒழிவில் காலம் எல்லாம் உடனய்மன்னி -நித்ய கைங்கர்ய பிராப்ய   அபெஷை ஒன்றே
ராச கிரீடை- ஆனந்தம் தலை மண்டி போக -பிறிய -தரிக்க அனுகரித்தது போல்
இவளும் அனுகரித்து-பாகவதர் எழுப்பி -மங்களா சாசனம் பண்ணி
உன்னை அர்தித்து வந்தோம்- அப் பறை கொண்ட ஆற்றை-ஏறு இட்டு கொண்டு தரித்தாள்
அமுத மென் மொழியாள்-மேலும் பாசுரம் பெற்று உலகம் உஜ்ஜீவிக்க –
நாச்சியார் திரு மொழி- அருளி-மண் மதனை ஆச்ரயித்து
மறந்தும் புறம் தொழ -காம வேளை கழல் இணை பணிந்து
காமன் தம்பி சாமான்- சாம்பன் பிரத்யுமன் தம்பி
அஞ்ஞானத்தால் வருவது எல்லாம் அடி களைஞ்சுபோம்  -பிரேமை மிகுந்து வந்த அஞ்ஞானம்
அடுத்து கோபிகள்-சீத வாய் அமுது உண்ட -கோதை வாய் தமிழ் வல்லார் குறை வின்றி பரி பூர்ண அனுபவம் பெறுவார்
சிற்றில் இளைத்து -அந்ய பரர்-
கோழி அழைப்பதன் முன்னம்-ஜல கிரீடை -கோபிகள் செயல் அனுகரித்து
குறி பார்த்து கூடல் இளைத்து -கொள்ளும் ஆகில் கூடிடு கூடலே
கோதை பாடின பத்தும்-
குயில் பதிகம் அடுத்து-சேர்ப்பார் களை பஷிகள் ஆக்கி- ஞானம் அனுஷ்டானம்
விண்ணோர் பெருமானை சேர்விக்கும் வண்டுகள்
சொபனம் முகத்தால் முகம் காட்டி தரிபிக்க -வாரணம் ஆயிரம்
கண்ண பிரான்- யானை தளர் நடை நடவானோ வாரணம் நன்றாக ஊர்வது போல்
தன் ஆயிரம் பிள்ளைகள்
நாளை வதுவை-
ஏஷ நாராயண –ஆகாதோ மதுரா புரிம்-
வார்த்தை யாட இந்த்ரன் உள் இட்ட தேவர் குழாம் எல்லாம்
அந்தரி- துர்க்கை-சூட்ட
நால் திசை தீர்த்தம்- வைதிகர் வேதம் கோஷித்து
ராஜா ஹோமம்-பொறி முகந்து அட்ட
-அச்சுதன் கை மேல இவள் கை -பிராட்டி ஒவ்தார்யம் மேம் பட்டது
லகு தர ராமஸ்ய கோஷ்டி
தாள் பற்றி அம்மி மிதிக்க
ஆனை மேல மஞ்சனம் ஆட்ட கனா -கடைசியில்- கொண்டல் வண்ணன்-ரெங்க மன்னார் வன் துவராபதி மன்னன்
இரு புரி ஊட்டிய விபவம் அர்ச்சை இரண்டும் -இவளுக்கு
சங்கம்-கேட்டு தரித்தாள்
மேகம் தூது-ஆச்சர்யர்களே -மேகம்
வர்ஷிக்க -புஷ்பம் குயில் கிளம்பி ஆரவாரம் -திரு மால் இரும் சோலை இந்திர கோபங்கள்
போர்கோலம் செய்து எங்குற்றான் கிலேசம் மிக
சீதை ருக்மிணி பிராட்டி போல்-பொங்கோதம் சூழ்ந்த –செம் கோல உடைய திரு அரங்க செல்வனார்
கண்ணன் என்னும் கரும் தெய்வம்
மன்னுமதுரை தொடக்கமாக துவரை- துணிந்து கொண்டு விட -பிரார்த்திக்க
கோவர்த்தனம் உய்த்து இடுமின் –
விபவம் அவை ஸ்ரீ ரெங்கன் அர்ச்சை சுலபன்-திரு அருள் பெருக பிரார்த்திக்க
தந்த பல்லக்கு அனுப்பி திரு முகம் அனுப்ப -செல்வ நம்பி வல்லப தேவன்  துணையாக
பக்த வாத்சல்ய நிதியே -நித்ய யுக்தாய மங்களம்
சேர்தியை நித்யமாக அனுபவிக்கிறோம்
ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திரு பல்லாண்டு- பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியை -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 4, 2011
பல்லாண்டு என்று பவித்திரனைப் பர மேட்டியை சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12
கோஷ்டியில் சேராத சம்சாரிகள்-
திரு பல்லாண்டு சொல்லி அவர்களுக்கும் பலன் கிட்டும் என்கிறார் இதில் –
பிரேமா பரவசராய் பல்லாண்டு பாடுகிறார்
அநந்ய பிரயோஜனராய் -நீர் நீரோடு சேர
தம் போல் இருப்பார்
ஐஸ் வர்யம் கைவல்யம்- அதற்கும் இவன் இடம் கேட்டதால் சேர்த்து கொண்டார்
பகவத் பிரசாதத்தால் வருவர் என்று நம்பி அழைத்தார்
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் இந்த பிர பந்தம் சொல்லி மங்களா சாசானம் செய்ய பலன் அருளுகிறார் இதில்
பர மேட்டி-பரம பதத்தில் இருப்பவன்
வில்லாண்டான்-ஆளுபவன்-
சொன்ன நாளே நல்ல நாள் -விடிந்த நாள்-
நமோ நாராயணா திரு மந்த்ரம் சொல்லி சூழ்ந்து இருந்து பல்லாண்டு
பவித்ரனை-சுத்த சுத்தன்-இயற்கையாலே
சாஸ்வதம் சிவம் அச்சுதம் என்ன கடவரே
இவன் சம்பந்தம் பெற்று அசுத்தி போய் சுத்தி பெற்றவர் பலர்
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால்
–கரை கண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏற கழுவினான்-சிவன் சிவனானான்
சங்கரன் சடையினில் தங்கி -தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல்-சது முகன் கையில்-
காலை நீட்டி காலை கழுவி தலையில் தங்கி யார் பரமாத்மா –
குண்டிகை தீர்த்தமே கங்கை நீர்
வைதிகர் அனைவரும் ஒத்து கொண்ட விஷயம்

 

பர மேட்டி-பரம பதத்தில் இருப்பவன்
வில்லாண்டான்-ஆளுபவன்-
சொன்ன நாளே நல்ல நாள் -விடிந்த நாள்-
நமோ நாராயணா திரு மந்த்ரம் சொல்லி சூழ்ந்து இருந்து பல்லாண்டு
பவித்ரனை-சுத்த சுத்தன்-இயற்கையாலே
சாஸ்வதம் சிவம் அச்சுதம் என்ன கடவரே
இவன் சம்பந்தம் பெற்று அசுத்தி போய் சுத்தி பெற்றவர் பலர்
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால்
–கரை கண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏற கழுவினான்-சிவன் சிவனானான்
சங்கரன் சடையினில் தங்கி -தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல்-சது முகன் கையில்-
காலை நீட்டி காலை கழுவி தலையில் தங்கி யார் பரமாத்மா –
குண்டிகை தீர்த்தமே கங்கை நீர்
வைதிகர் அனைவரும் ஒத்து கொண்ட விஷயம்
பர மேட்டி-பரம பதத்தில் இருப்பவன்
வில்லாண்டான்-ஆளுபவன்-
சொன்ன நாளே நல்ல நாள் -விடிந்த நாள்-
நமோ நாராயணா திரு மந்த்ரம் சொல்லி சூழ்ந்து இருந்து பல்லாண்டு
பவித்ரனை-சுத்த சுத்தன்-இயற்கையாலே
சாஸ்வதம் சிவம் அச்சுதம் என்ன கடவரே
இவன் சம்பந்தம் பெற்று அசுத்தி போய் சுத்தி பெற்றவர் பலர்
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால்
–கரை கண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏற கழுவினான்-சிவன் சிவனானான்
சங்கரன் சடையினில் தங்கி -தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல்-சது முகன் கையில்-
காலை நீட்டி காலை கழுவி தலையில் தங்கி யார் பரமாத்மா –
குண்டிகை தீர்த்தமே கங்கை நீர்
வைதிகர் அனைவரும் ஒத்து கொண்ட விஷயம்
விப்ரருக்கு கோத்ரம்-பிர பன்ன ஜன கூடஸ்தர்- பராங்குச பரகால எதிராஜர்

பரம வைதிகர் பூர்வர் என்பர்
தீண்டினது அனைவரையும் கிருஷ்ணனும் உலகு அளந்தான் கள்வா தீர்த்தன்-வசன பிரத்யட்ஷம் காட்டி
திண்ணன் வீடு உயர்ஒன்றும் -பரத்வம்-கள்வா என்று வசனம் காட்டி தீர்த்தன் என்று பிரத் யட்ஷம் காட்டி -பாசு பதம்-பூம் தாமம்
அவையே- அந்த புஷ்பத்தையே தலையில் பார்த்தானே சிவன் முடி மேல் தானே கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த
பைம் துழாயான் பெருமை –பேச கிடந்ததே -தீர்த்தவாரி-தீர்த்தன் அவன் வாரியில் இறங்குவதால் தீர்த்தமே பவித்ரம் ஆகும் –
பரம பாவனத்வம்- தன சம்பந்தத்தால் அசுத்தி சுத்தி ஆக்குவான்
சேதனா அசேதன வியாபித்தாலும் அவற்றின் தோஷம் கிட்டாமல் -மாறுதல் அசித் -உண்டே ஷட் வித பாவம் -சொரூப விகாரம்
ஞானம் ஏற்றம் ஸ்வாப  விவாகம் -இவை அவனுக்கு வராது –
அடுத்து நித்ய சம்சாரிகளை நித்யர் ஆக்கும் -சாம்யா பத்தி -ஒரு கோர்வை ஆக்கும் பவித்ரன்
அன்பன் தன்னை- இன்னாருக்கு சொல்லாமால் அனைவருக்கும் அன்பன் -அனைவருக்கும் சுத்தி
ஆனின் மேய ஐந்தும் நீ –பால் சாணம் மூத்ரம் நெய் பஞ்ச கவ்யம்- அதற்கும் சுத்தி கொடுப்பான்
மான்களானாம் மங்களம் பவித்ரங்களுக்கும் எல்லாம் பவித்ரம் –
பவித்ரங்களுக்கும் பவித்ரம் அவன் -நேரே ஆசார்யன் என்கிறது பெரிய திருமந்தரம் உபதேசித்தவர்
உபாதியால் இன்றி இயற்கையாலே பவித்ரம்
பரமே ஸ்தானம் இருக்கும் பர மேட்டி
வில்லாண்டான் – அனைவரையும் மகிஷி பூஷண ஆயுதங்களுக்கும் பரி ஜனங்களுக்கும் உப லஷணம்
கிரீட கடக்க -நூபுராதயு அபரிமித திவ்ய பூஷண
அங்கு உள்ளாரை இட்டு நிரூபிக்கவண்டும் படி சம்பந்தம் கொண்டவன்
-அகஸ்ய ப்ராதா போல் அயன் மலை அடைவது கருமமே -புள்ளரையன் கோவில் போல்
உலகு அளந்து பொழுது திரு அடி ஆண்டு- குசை தாங்கி பிடித்து ஆண்டான் -அது போல் வில்லாண்டான்
சார்ங்கம் உதைத்த சர மழை-மதம் பிடித்த யானை ஆளுவது போல் சார்ங்கம் என்பதே பிரசித்தி

வான் உயரம் வரை இருக்கும் -வில்லை பிடித்து –
இத்தால் -உப்கிரம உபசமகாரம் -ஆரம்பம் முடிவு இரண்டிலும் காட்டும்
மல்லாண்ட திண தோள் மணி வண்ணா -முதல் பாசுரம்-
கொன்றவன் எம்பெருமான்-
இங்கு விரோதி போக்கி பரமேட்டி பவித்ரன்
மாவாய் பிளந்து விரோதி நிரசன சீலன்
ஐஸ் வர்யார்த்தி விரோதி போக்கி அதே குணம்
மணி வண்ணா -கருட பச்சைக்கும் உப லஷணம்
பர மேட்டி -இரண்டாம் பாசுரத்தில் உபய விபூதி சொன்னது போல்
வில்லி புத்தூர் விட்டு சித்தன் சொல் -இத்தால் ஆழ்வார் அவர் முகத்தல் அருளுகிறார்
அனைவருக்கும் யோக்யதை உண்டு என்று காட்ட -அர்த்தம் நிலை நாடுகிறார்
மங்களா சாசனத்தில் தனக்கு உள்ள ஆர்வம் காட்டவும் அருளுகிறார்
அங்கு தோன்றதியதால் பிரசித்தம் ஆன படியால் திவ்ய தேசமும் சொல்லி கொள்கிறார்
பிரேமா அதிசயம்
விஷ்ணுசித்தன் ஆழ்வார் விடவும் தான் விட மாட்டாமல்
கோவில் கொண்ட கோவலன்
நெஞ்சமே நீள் நகராக
விச்வச்ய ஆயதனம் மகத்
தன பேறாகா பேராமல் இருந்து
ஏகாந்தமாக காலத்தை கொண்டாடி -கிடைக்காதது கிடைத்ததே
என்னது விட்டு எல்லாம் உனக்கு என்று இருக்கும் இருப்பு
நவிலுகை சொல்லுகை இடைவிடாமல்
மேமேதம் தவிர்ந்து நமோ நாராயண
மங்களா சாசனம் யோக்யதை சொல்கிறது
அங்கும் பல்லாண்டு -ந காலம் -காலம் ஆட்சி செய்ய வில்லையே
இங்கு சொல்வதால் அங்கும் சொல்கிறார்
அலகில் பொலிந்த-திசை பத்தாயோ அருவாயோ- எண்ணிக்கை இல்லாத –
அரு -ரூபம் இல்லை -முக்தர்களை சொல்கிறார்
சொரூபத்தால் எங்கும் வியாபித்து நாமோ உடம்பில் வியாபித்து இருக்கிறோம்
இருப்பது ஒரு இடத்தில ஞானத்தால் வியாப்தி
இங்கு இருந்து பாடுவதால் திசை பத்து
முக்தன்- அரு-சம்சாரம் நினைக்கும் பொழுது பத்து திசை தானே நினைப்பான் –
அதுவும் அவன் விபூதி என்று நினைப்பான்
அது போல் இங்கும் வியாக்யானம்
யாவதாத்மா -உள்ள அளவும் பல்லாண்டு சொல்ல அருளுகிறார்
இங்கு வர்திகிரவர்ட் ஆகையால் சொல்கிறார்
பரமாத்மானை -மேம்பட்டவனை

ஒப்பார் மிக்கார் இல்லாதவன்
மங்களாசாசனம் பண்ணி ஏற்றம் வர வேண்டாதவன்
சொரூபம் நிலைக்க நாம் பண்ண வேண்டும்
சுத்தி சுத்தி -விஸ்வ ரூபம் கண்டதும் -சுத்தி சுத்தி நமஸ்காரம்
முன்பே நில்லா ஒருவரே அனுபவித்து அதிலே ஈடு பட்டு -முறுவல்
பிறகு வாளி-பின் அழகில் ஈடு பட்டு
கால் வாங்க ஒண்ணாத அழகில் தோற்று – சூழ்ந்து சூழ்ந்து
சுழி ஆறு பட -மங்களா சாசனத்தில் மூட்டும்
பவித்ரனை -பர மேட்டியை –உரைப்பார் நமோ நமோ -பல்லாண்டு ஏத்துவர் என்று அன்வயம்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .