Archive for the ‘திரு எழு கூற்று இருக்கை’ Category

ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ உ . வே . ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய வியாக்யானங்கள் —

December 5, 2022

ஸ்ரீ மன் நாதமுனிகள் வகுத்து அருளினை அடைவிலே
மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் எட்டாவது பிரபந்தமாக அமைந்தது இது –

——————-

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன்

—————–

அவதாரிகை –

வென்றியே வேண்டி வீழ் பொருட்க்கு இரங்கி வேற் கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் -என்றும்
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்து ஆழ்ந்தேன் -என்றும்
தாமே அருளிச் செய்தபடி
விஷய பிரவணராய் திரிந்து கொண்டு இருந்த இவ்வாழ்வார்

தம்மை எம்பெருமான் திருத்திப் பணி கொள்ளத் திரு உள்ளம் பற்றி விஷயங்களில் ஆழ்ந்து திரிகிற இவரை
சாஸ்த்ரங்களைக் காட்டித் திருத்த முடியாது –
நம் அழகைக் காட்டியே மீட்க வேணும் என்று கொண்டு தன் அழகைக் காட்டிக் கொடுக்க

ஆழ்வாரும் அதைக் கண்டு ஈடுபட்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது -அடியேன் நான் பின்னும்
உன் சேவடி அன்றி நயவேன் -என்னும்படி அவகாஹித்தார் –

இவர் இப்படி தன் பக்கல் அவகாஹிக்கக் கண்ட எம்பெருமான் –
இப்போது இவருக்கு நம் இடத்து உண்டான பற்று
மற்ற விஷயங்களை போல் அல்லாமல் சம்பந்த உணர்ச்சியை முன்னிட்டுப் பிறந்ததாக வேணும் –
இல்லையேல் இப்பற்று இவருக்கு நிலை நிற்காது ஒழியினும் ஒழியும் என்று எண்ணி

எல்லா பொருள்களையும் விளக்குவதான திரு மந்திரத்தையும்
தனது ஸுசீல்யம் முதலிய திருக் குணங்களையும் திரு மந்த்ரார்த்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களையும்
ஆழ்வாருக்கு காட்டிக் கொடுக்க –

அவரும் வாடினேன் -வாடி -என்று தொடங்கி
எம்பெருமான் உகந்து அருளின இடமே பரம ப்ராப்யம் என்று அனுபவித்தார் –

இங்கனம் அனுபவித்த ஆழ்வாருக்கு இவ்வனுபவம் நித்யமாய்ச் செல்லுகைக்காக
இவரைத் திரு நாட்டில் கொண்டு போக வேணும்
எனக் கருதிய எம்பெருமான் இவர்க்கு ஜிஹாசை பிறக்கும்படி அதனுடைய தண்மையை அறிவிக்க

அறிந்தவர் அஞ்சி நடுங்கி -மாற்றம் உள -என்னும் திரு மொழியிலே –
இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போல் -என்றும் –
வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போலே -என்றும்
தமது அச்சத்துக்கு பலவற்றை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிக் கதறினார் –

இப்படி இவர் கதறிக் கதறி –
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -என்றும்
அந்தோ அருளாய் அடியேற்கு உன் அருளே -என்றும் -சொல்லி வேண்டின இடத்தும்
சிறு குழந்தைகள் பசி பசி என்று கதறி அழுதாலும்
அஜீரணம் முதலியவை கழிந்து உண்மையான பசி உண்டாம் அளவும்
சோறிடாத தாயைப் போலே எம்பெருமான் –
இவருக்கு முற்ற முதிர்ந்த பரம பக்தி பிறக்கும் அளவும் நாம் முகம் காட்டுவோம் அல்லோம்-
என்று உதாசீனனாய் இருக்க –

ஒரு க்ஷணமும் அவனைப் பிரிந்து இருக்க மாட்டாத ஆழ்வார் மிகுந்த தாஹம் கொண்டவர்கள்
நீரிலே விழுந்து -நீரைக் குடிப்பதும்
நீரை வாரி மேல் இறைத்துக் கொள்வதும் செய்யுமா போலே அவ்வெம்பெருமானை
வாயாலே பேசியும் –
தலையாலே வணங்கியும் –
நெஞ்சால் நினைத்தும் -தரிக்கப் பார்த்தார் –
திருக் குறும் தாண்டகம் என்னும் திவ்ய பிரபந்தத்தில் –

தாஹம் அளவற்றதாய் இருக்க சிறிது குடித்த தண்ணீர் திருப்தியை உண்டு பண்ணாமல்
மேலும் விஞ்சிய விடாயை பிறப்பிக்குமா போலே
இவர் திருக் குறும் தாண்டகத்திலே அனுபவித்த அனுபவம்
பழைய அபி நிவேசத்தை கிளப்பி பெரிய ஆர்த்தியை உண்டாக்கவே –
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையோ –என்று
ஆர்த்தராய் சரணம் புகுகிறார் –
இத் திரு வெழு கூற்று இருக்கை -என்னும் பிரபந்தத்தில் –

——————————————————–

ஆசு கவி –
அருமைப் பட்டு சொற்களை சேர்த்து மஹாப் பிரயாசமாகப் பாடுகை இன்றிக்கே –
பல நிபந்தனைகள் உடன் கூடிய பாடல்களையும் -விரைவில் பரவசமாக பாடுதல்-

மதுரகவி –
சொற்சுவை பொருள்சுவை விளங்க பல வகை அலங்காரம் பொலிய பாடுவது

விஸ்தார கவி –
கலி வெண்பா முதலியவற்றால் விஸ்தரித்து பாடுவது

சித்திர கவி –
சக்ர பந்தம் -பத்ம பந்தம் -முரஜ பந்தம் -நாக பந்தம் -ரத பந்தம் –

எழு கூற்று –
முதல் கூறு மூன்று அறைகள்
இரண்டாம் கூறு ஐந்து அறைகள்
மூன்றாம் கூறு ஏழு அறைகள்
நான்காம் கூறு ஒன்பது அறைகள்
ஐந்தாம் கூறு 11 அறைகள்
ஆறாம் கூறு 13 அறைகள்
ஏழாம் கூறு 13 அறைகள் –

இதே போலே மேலும் கீழும் இரண்டு பாகங்கள் கொண்டதே –

அர்த்த சக்தியாலும்
சப்த சக்தியாலும் நினைப்பூட்டும் சொற்கள் கொண்டு நிறைக்க வேணுமே

ஒரு பேர் உந்தி இருமலர்த் தவசில் -இரு -இரண்டு பெருமை என்ற பொருள்களில் –

ஒன்றிய -அஞ்சிறை -நால் வாய் -இரு நீர் -ஓன்று -ஆறு பொதி –போன்ற இடங்கள் போலே
அர்த்த சப்த சக்தியாலும் காட்டலாம் –

எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றை விசதமாக அனுபவித்து –
அவ்வனுபவம் உள் அடங்காமல் வழிந்து புறப்பட்ட ஸ்ரீ ஸூ க்திகளிலே –
இது போன்றவை அமைந்தவை –

ஸ்ரீ வால்மீகி பகவான் -வாயினின்றும் வெளி வந்த
மா நிஷாத ப்ரதிஷ்டாம் -நான் முகன் பிரசாதத்தால் லக்ஷணம் குறை இன்றி அமைந்தால் போலே –
இதுவும் ஸ்வ பிரயத்தன பூர்வகமான பிரபந்தம் இல்லாமல்
ஸ்ரீ யபதி திருவருளால் அவதரித்த பிரபந்தம் -என்றால் சொல்ல வேண்டாவே –

—————————————–——

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,

மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,

முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபெ ¡தி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,

குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே.

—————

ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை,

 

பதவுரை

ஒரு

விலக்ஷணமாய்
பேர்

பெருமை பொருந்திய
உந்தி

திருநாபியிலுண்டான
இரு

பெரிதான
மலர்

(தாமரைப்) பூவாகிற
தவிசில்

ஆஸனத்தின் மீது
ஒருமுறை

ஒருகால்
அயனை

பிரமனை
ஈன்றனை

படைத்தருளினாய்

***- உலகங்களடங்கலும் பிரளயங் கொண்டபின் மீண்டும் உலகங்களைப் படைக்க எம்பெருமான் தனது திரு நாபிக் கமலத்தில் நான்முகக் கடவுளை படைத்து அவனுக்கு வேதங்களை பழையபடியே ஓதுவித்து அப் பிரமனைக் கொண்டு முன்போலவே எல்லா வுலகங்களையும் எடைப்பதாக நூல்கள் கூறும். “உய்ய வுலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை“ என்றார் பெரியாழ்வார்.

உத்பத்திக்கு ஹேதுவான நீயே ரக்ஷணமும் பண்ண வேண்டாவோ? என்கைக்காக ஆழ்வார் முதலிலே இதனை அருளிச் செய்தாரென்க. தவிசு – ஆசனம்.

———

கீழ் வாக்கியத்தில் உலகங்களைப் படைத்தமை சொன்னார், படைத்த உலகத்திற்குத் தீங்கு சேருங்காலத்தில் படாதனபட்டு ரக்ஷிக்கிறபடியைச் சொல்லுகிறார் இதில். குளவிக் கூடுபோலே ராக்ஷ்ஸர்களுக்குக் கூடாகிய இலங்கயை நீறுபடுத்தினபடியைச் சொல்லுகிறார்.

ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை,

பதவுரை

ஒரு முறை

ஸ்ரீராமனாய் அவதரித்த ஒரு காலத்தில்,
இரு சுடர்

சந்திர ஸூர்யர்கள்
மீதினில் இயங்கா

(அச்சத்தினால்) மேலே ஸஞ்சரிக்க வொண்ணாததும்
மும் மதிள்

நீர்க் கோட்டை, மலைக் கோட்டை வனக் கோட்டை என்கிற மூன்று துர்க்கங்களை யுடையதுமான
இலங்கை

லங்கா புரியை
இரு கால் வளைய

இரண்டு நுனியும்
ஒரு சிலை

ஒப்பற்ற சார்ங்க வில்லில்
ஒன்றிய ஈர் எயிறு

பொருந்தியதும் இரண்டு பற்களை யுடையதும்
அழல் வாய்

நெருப்பைக் கக்குகிற வாயை யுடையதுமான
வாளியின்

அம்பினால்
அட்டனை

நீறாக்கினாய்

தேவதைகள் அனைவரும் இராவணனுக்கு அஞ்சி நடுங்கி மறைந்து வாழ்ந்தனராதலால் ஸூர்ய சந்திரர்களும் இலங்கையின் மேலே ஸஞ்சரிக்க மாட்டார்களாம் ஆகவே, இருசுடர் மீதினிலியங்காத இலங்கையாயிற்று.

“பகலவன் மீதியங்காத இலங்கை“ என்றார் பெரிய திருமொழியிலும்.

இருசுடர் –இரண்டு சுடர்ப்பொருள்கள், அவையாவன சந்திர ஸூர்யர்கள்

மீதினில் – இலங்கையின்மீது, இயங்குதல் – ஸஞ்சாரம் செய்தல். இவ் விசேஷணத்தால், இராவணன் தேவர்களனைவர்க்கும் மிருத்யுவாயிருந்தானென்பது விளங்கும்.

மும்மதிள் – மலையரண் நீரரண் காட்டரண் என்னும் முக்கோட்டைகளை யுடையதாம் இலங்கை. இராவணனுடைய ஒப்புயர்வற்ற செல்வத்தைக்கண்டு அனுமானும் அளவற்ற ஆச்சரியமடைந்தானென்பர் வான்மீகி முனிவர்.

இப்படிப்பட்ட இலங்கையை வாளியின் அட்டனை என்று அந்வயம்

வாளியாவது அம்பு. அஃது எப்படிப்பட்டதெனில் அதன் கொடுமை தோற்ற மூன்று விசேஷணங்களிடுகிறார். இருகால் வளைய ஒரு சிலை யொன்றியதும், ஈரெயிற்றதும், அழல்வாயதுமாம் அவ்வாளி.

ஸ்ரீ சார்ங்கமென்னும் இராமபிரானதுவில் இரண்டு கோடியும் வளைந்து நிற்குமென்றது இயல்பு நவிற்சி, ஸ்வபாவோக்தி. அந்த சார்ங்கத்திலே தொடுக்கப்பட்டதாம்.

ஈரெயிறு – ஈர்கின்ற எயிற்றையுடையது என்றுமாம். ஈர்தல் – கொல்லுதல் அட்டனை – முன்னிலை யொருமை வினைமுற்று. அடுதல் – தஹித்தல்.

—————-

அம்பாலே காரியம்கொண்டபடியை அருளிச்செய்தார் கீழ், அழகாலே காரியம்கொண்டபடியை அருளிச்செய்கிறார் இதில்.

மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

 

பதவுரை

ஒரு முறை

ஒருகாலத்தில்
முப்புரி நூலொடு

யஜ்ஞோபவீதத்தோடு கூட
மான் உரி

க்ருஷ்ணாஜிநமும்
இலங்கு

விளங்கா நின்ற
மார்வினின்

திருமார்பையுடைய
இருபிறப்பு ஒரு மாண்ஆகி

ஒருப்ராஹ்மண ப்ரஹ்மசாரியாகி

(மாவிலியிடம் சென்று)

நானிலம்

பூமியிலே
மூ அடி

மூன்றடி நிலத்தை
வேண்டி

யாசித்து
ஈர் அடி

இரண்டு திருவடிகளாலே
மூ உலகு

மூன்று லோகங்களை
அளந்தனை

அளந்துகொண்டாய்

இந்திரனுடைய குறையை நீக்கவேண்டி எம்பெருமான் குறிய மாணுருவாகி மாவலிபக்கல் சென்று மூவடி வேண்டிப் பெற்று உலகங்களையெல்லாம் அளந்து மாவலியைப் பாதாளத்தில் அழுத்தின வரலாறு ப்ரஸித்தமேயாம்.

நானிலம் – நான்காகிய நிலங்களையுடையதெனப் பூமிக்குக் காரணப்பெயர், நால்வகை நிலங்களாவன – முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்பன. காடும் காடுசார்ந்த இடமும் முல்லையாம், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியாம், நாடும் நாடுசார்ந்த இடமும் மருதமாம், கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தலாம், மற்றொன்றாகிய பாலைநிலம் பிராணிஸஞ்சாரத்திற்கு உரியதன்றென்று இங்கே விலக்கப்பட்டது. அது நீரும் நிழலுமில்லாத கொடு நிலம். பாலைக்குத் தனியே நிலமில்லையென்பதும், நால்வகை நிலங்களும் தத்தம் தன்மை கெட்ட விடத்தே பாலையாமென்பதும் சில ஆசிரியர் கொள்கை.

முப்புரிநூல் –ப்ரஹ்மசாரிகள் பூணும் யஜ்ஞோபவீதம் மூன்று புரியை யுடையதாம். (அதாவது – மூன்று வடமுடையதாம்) மானுரி – அந்தப்பூணுநூலில் க்ருஷ்ணாஜினத்தை முடிந்து அணிதல் மரபு. “மான் கொண்ட தோல் மார்பின் மாணியாய்“ என்றார் பெரிய திருமொழியிலும். இருபிறப்பு – ‘த்விஜ‘ என்றும், ‘த்விஜந்மா என்றும், த்விஜாதி என்றும் வடமொழியில் பார்ப்பனர் வழங்கப்படுவர். “ஜந்மநா ஜாயதே சூத்ர, கர்மணா ஜாயதே த்விஜ“ (யோனிபிற்பிறப்பது ஒரு பிறவி, பிறகு வேத மோதுதல் முதலிய கருமங்களால் பிறப்பது இரண்டாம் பிறவி) என்று சொல்லப்பட்டுள்ளமை காண்க.

ஈரடி மூவுலகளந்தனை – நிலவுலகத்தையும் அதற்குக் கீழ்ப்பட்ட பாதாள லோகத்தையும் ஒரு திருவடியாலும் மேலுலகத்தை மற்றொரு திருவடியாலும் ஆக ஈரடியாலே மூவுலகளந்தானென்க

————

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை

ஒரு நாள்

ஒரு காலத்தில்
கால் திசை நடுங்க

எங்குமுள்ள ஜனங்களும் நடுங்கும்படியாக (மஹத்தான கோபவேசத்தை ஏறிட்டுக்கொண்டு)
நால் வாய்

தொங்குகின்ற வாயையும்
மும்மதம்

மூவிடங்களில் மத நீர்ப் பெருக்கையும்
இரு செவி

இரண்டு காதுகளையும் உடைய
அம் சிறை பறவை ஏறி

அழகிய சிறகையுடைய பெரிய திருவடியின்மீது ஏறிக் கொண்டு
இரு நீர் மடுவுள்

ஆழமான நீரை யுடைய மடுவின் (கரையிலே எழுந்தருளி)
ஒரு தனி வேழத்து

பரம விலக்ஷணனான கஜேந்திராழ்வானுடைய
அரந்தையை

துக்கத்தை
தீர்த்தனை

நீக்கி யருளினாய்

***- எம்பெருமானை ஆராதிப்பதற்காகத் தாமரைப் பூப் பறிக்கப் போன பொய்கையின் கண் முதலைவாயிலகப்பட்ட ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய கூக்குரலைக்கேட்டு எம்பெருமான் ஸ்ரீ வைகுண்டத்தினின்று கருடாரூடனாய் ஓடிவந்து முதலையைக் கொன்று ஆனையைக் காத்தருளின கதை உலகப் பிரஸித்தம்.

கஜேந்திரன் ‘ஆதிமூலமே!‘ என்று பெருமிடறுசெய்து கூவினைக் கேட்டவுடனே ஸ்ரீவைகுண்ட நிலையனான எம்பெருமான் திடுக்கிட்டு, பிராட்டிமாரையும் கையுதறி அரைகுலையத் தலைகுலையப் பெரிய திருவடியின்மீதேறி மநோ வேகத்தினும் மிக்க வேகமாக ஓடிவந்த விசையைக் கண்டவர்களெல்லாரும் இன்ன செய்தியென்றறியாமல் ‘இன்று ஏதோ பிரளயம் விளையப்போகிறது‘ என்று அஞ்சி நடுங்கினரென்கிறார் நால்திசை நடுங்க என்பதனால்.

அம்சிறை-களுடன் எம்பெருமானது திருவுள்ளத்தை யறிந்து வெகுவேகந் தோன்றச் சிறகை துறைந்து கொண்டு வந்தமை பற்றி அஞ்சிறை என்று அந்தச் சிறகைப் பாராட்டிக் கூறுகின்றரென்க.

நால்வாய் – நாலுதல் – தொங்குதல், யானைக்கு வாய் தொங்குதல் இயல்பு. மும்மதம் – இரண்டு கன்னங்களிலும் குறியிலும் ஆக மூவிடங்களில் யானைக்கு மதப்புனல் சோரும். இருசெவி – இரு என்று பெருமையைச் சொல்லிற்றாய், பெரிய காதுகளையுடையது என்றுமாம். யானைக்கு வாய்தொங்குதலும் மத நீர் பெருகுதலும் காதுகள் பெரிதாயிருத்தலும் அதிசயமாக விஸயமன்றே,

இதைச்சொல்லி வருணிப்பதற்கு ப்ரயோஜனம் என்னெனில் – ஒரு குழந்தை கிணற்றில் விழுந்து போக, அதனையெடுத்துக் கரையிலேபோட்டவர்கள் “அந்தொ! இதொரு கையழகும் இதொரு தலையழகும் இதொரு முகவழகும் என்னே!“ என்று சொல்லி மாய்ந்து போவார்களன்றோ, அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின் அதனுடைய வாயும் செவியும் முதலிய அவயவங்களின் அழகிலே ஆழ்ந்து கரைந்தமைதோற்ற அந்த பகவத் ஸமாதியாலே ஆழ்வார் ஆனையை வருணிக்கின்றாரென்க.

இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதை அனுபவிக்கத்தக்கது. – “நால்வாய் மும்மதத் திருசேவி… என்றாற் போலே சொல்லுவதுக்குக் கருத்டிதன்னென்னில், ப்ரஜை கிணற்றிலே விழுந்தால் ‘காதுங் கண்டவாளியும் காலும் தலையும் வடிவும் இருந்தபடி காண்!? என்பாரைப் போலே இடர்ப்பட்ட இதினுடைய அவயங்கள் அவனுக்கு ஆகர்ஷகமாம்படியாலே சொல்லுகிறது“ என்ற ஸ்ரீஸூக்தி காண்க.

ஒரு தனி வேழம் – பகவத்பக்தியில் ஒப்பற்ற கஜராஜன். அரந்தை – துன்பம்

———–

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி , அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,

பதவுரை

முத் தீ

மூவகை அக்நிகளையும்
நால் மறை

நால்வகை வேதங்களையும்
ஐவகை வேள்வி

ஐவகை யஜ்ஞங்களையும்
அறு தொழில்

ஆறு வகைக் கருமங்களையும் உடையரான
அந்தணர் வணங்கும் தன்மையை

ப்ராஹ்மணர்களால் வணங்கப்படுந் தன்மையை உடையனாயிரா நின்றாய்

முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை த்ரேதாக்நிகளாம். நான் மறைகளாவன – ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன. இவை வேத வ்யாஸரால் பிரிக்கப்பட்ட பிரிவின் பெயர்களாதலால், அதற்கு முன்னிருந்த தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் என்ற நான்கும் என்று கொள்ளுதல் தகும்.

ஐவகை வேள்வி –ப்ரஹ்மயஜ்ஞம் தேவயஜ்ஞம் பித்ருயஜ்ஞம் மநுஷ்யயஜ்ஞம் என்பன பஞ்சமஹாயஜ்ஞங்கள். ப்ரஹ்மயஜ்ஞமாவது – “ப்ரஹ்மயஜ்ஞப்ரசநம்“ என்று தினப்படியாக வேதத்தில் ஒவ்வொரு ப்ரச்நம் ஓதுவது. வேயஜ்ஞமாவது அக்நிஹோத்ரம்செய்வது பூதயஜ்ஞமென்பது பிராணிகட்குப்பலியிடுவது. பித்ருயஜ்ஞமென்பது பித்ருக்களை உத்தேசித்துத் தர்ப்பணம் விடுவது. மநுஷ்யயஜ்ஞமென்பது விருந்தாளிகளுக்கு உணவு முதலியன கொடுப்பது.

அறு தொழில் – தான் வேதமோதுதல், பிற்களுக்கு ஓதுவித்தல், தான் யாகஞ் செய்தல், பிறர்க்கு யாகஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம் வாங்கிக் கொள்ளுதல் என்பன ஆறு கருமங்களாம். ஆக. த்ரேதாக்நிகளையும் நான்கு வேதங்களையும் பஞ்ச மஹா யஜ்ஞங்களையும் ஷட்கருமங்களையும் நிரூபகங்களாகவுடைய வேதியர்களாலே ஸேவிக்கப்படுபவன் எம்பெருமான் என்றதாயிற்று

———–

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை,

பதவுரை

ஐம்புலன்

பஞ்சேந்திரியங்களை
அகத்தினுள் செறுத்து

(வெளியில் பட்டி மேயவொண்ணாதபடி) உள்ளேயடக்கி
நான்கு உடன் அடக்கி

உண்ணுதல், உறங்குதல், அஞ்சுதல், விஷய போகஞ்செய்தல் என்கிற நான்கையுங் கூட இல்லை செய்து
முக் குணத்து

ஸத்வம், ரஜஸ் தமஸ் என்கிற மூன்று குணங்களில்
இரண்டு அவை

ரஜஸ்ஸையும் தமஸ்ஸையும்
அகற்றி

விலக்கி
ஒன்றினில்

ஸத்வ குண மொன்றிலேயே
ஒன்றி நின்று

பொருந்தி யிருந்து
ஆங்கு

அப்படிப்பட்ட நிலைமையின் பலனாக
இரு பிறப்பு அறுப்போர்

நீண்ட ஸம்ஸார துக்கத்தை நீக்கிக் கொள்ள வல்ல மகான்களாலே
அறியும் தன்மையை

அறியத்தக்க ஸ்வபாவத்தை உடையையா யிராநின்றாய்.

ஜிதேந்திரியர்களாய் ஸாத்விகர்களான யோகிகளால் யோகமுறைமையில் ஸாக்ஷாத்கரிக்கத்தக்கவன் எம்பெருமான் என்கிறது. ஐம்புலன்களாவன – மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சேந்திரியங்கள், இவற்றை அகத்தினுள் செறுத்தலாவது – சப்தாதி விஷயங்களில் மூட்டாமல் அந்த ரங்கனான பகவானிடத்திலே மூட்டுகை.

நான்கு உடனடக்கி –“ஆஹா நித்ரா பய மைதுநாநி ஸாமாந்ய மேதத் பசுபிர் நராணாம்“ என்றபடி உணவு உட்கொள்ளுதல், கண்ணுறங்குதல், எந்த வேளையில் என்ன தீங்கு நேரிடுமோவென்று பயப்பட்டுக்கொண்டிருத்தல், விஷய போகங்களை யநுபவித்தல் என்கிற இந்நான்கும் நாற்கால் விலங்குகட்கும் பொதுவாகையாலே இவற்றைத் தள்ளி ஞானத்தையே கடைபிடித்து என்றதாயிற்று.

முக்குணத்து இரண்டவை அகற்றி – ஸ்தவகுணமென்றும் ரஜோகுணமென்றும் தமோகுணமென்றும் சொல்லப்படுகிற மூன்று குணங்களில் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் அந்யதாஜ்ஞான விபரீதஜ்ஞானங்களுக்குக் காரணமாதலால் அவற்றையொழித்து, தத்துவ ஞானத்துக்குக் காரணமாகிய ஸத்வகுணத்தைடையராகி என்றபடி.

ஆக இந்திரியங்களைப்பட்டி மேயாமலடக்கி, ஆஹார நித்ரா பய மைதுநங்களை விலக்கி ஸத்வகுண நிஷ்டராயிருந்து யோகுபுரிந்து அந்த யோகத்தின் பலனாக ஸம்ஸாரப் படுகுழியைப் புல் மூடச்செய்து நற்கதி நண்ணுகின்ற மஹா யோகிகளால் அறியக்கூடிய ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையவன் எம்பெருமான் என்றதாயிற்று

நான்குடனடக்கி என்பதற்கு – மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்ற நான்கையும் அடக்கி என்றும், பொய் சொல்லுதல் கோட்சொல்லுதல் கடுஞ்சொல் சொல்லுதல் பயனற்ற சொல் சொல்லுதல் என்ற நான்கு துர்பாஷணங்களையும் விலக்கி என்றும் பொருள் கொள்ளுதலும் ஒக்கும்.

இரு பிறப்பு என்றது – இருமை பெருமையாய் அநாதியாகையாலே நீண்டதாயுள்ள ஸம்ஸாரம் என்றபடி. அன்றியே, புண்யபாவங்களாகிற இருகருமங்களாலே வரும் ஸம்ஸாரம் என்றுமாம் தன்மையை – “தன்மையன்“ என்பன் முன்னிலை.

————–

முக் கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறு பொதி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

 

பதவுரை

முக்கண்

மூன்று கண்களையும்
நால் தோள்

நான்கு தோள்களையும்
ஐவாய் அரவோடு

ஐந்து வாயையுமுடைய பாம்பையும்
ஆறு பொதி சடையோன்

ஜடையையும் உடையனான ருத்ரனுக்கு
அறிவு அரு

அறியக் கூடாத
தன்மை

ஸ்வபாவத்தை யுடையனாயிருக்கையாகிற
பெருமையுள்

பெருமையிலே
நின்றனை

இரா நின்றாய்

எவ்வளவு மேன்மையுடையரா யிருந்தாலும் ஸ்வப்ரயத்நத்தாலே எம்பெருமனைக் கண்டுவிட வேணுமென்று முயன்றால் அவர்கட்கு பகவத் விஷயம் அறியக்கூடியதல்ல என்று சாஸ்த்ரங்கள் கூறும் பரமசிவன் “நாம் முக்கண்ணுடையோம், அரவம் பூண்டபெருமையுடையோம், கங்கைநீர் தரித்த வலிமையுடையோம்“ என்று மேனாணித்திருந்தாலும் “பெண்ணுவாஞ் சடையினானும் பிரமனு முன்னைக் காண்பான் எண்ணிலா வூழியூழித் தவஞ்செய்தார் வெள்கி நிற்ப“ (திருமாலை) என்றபடி அவனுக்கு பகவானுடைய ஸாக்ஷாத்காரம் வாய்க்கவில்லை.

ஐவாயரவோடு – ஒரு காலத்தில் சிவபிரான் தன்னை மதியாத தாருக வனத்து முனிவர்களுடைய கருவத்தைப் பங்கஞ்செய்யவும் அவர்களது மனைவிமார்களின் கற்புநிலையைப் பரிசோதிக்கவும் கருதித் தான் ஒரு விடனாக வடிவங்கொண்டு அவரில்லந்தோறும் டிசன்று பிக்ஷாடநஞ் செய்து, தன்னை நோக்கிக் காதல் கொண்ட அம்முனி பத்நிகளின் கற்புநிலையைக் கெடச் செய்ய, அதுகண்டு பொறாமற் கோபம் மூண்ட அம்முனிவர்கள் அபிசாரயாகமொன்று செய்து அவ்வோமத்தீயினின்று எழுந்த நாகங்கள், பூதங்கள், மான், புலி, முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக்கொண்டு வரும்படி ஏவ, சிவபெருமான். தன்மேற்பொங்கிவந்த நாகங்களை ஆபரணங்களாகவும் பூதங்களைத் தனது கணங்களாகவுங் கொண்டு மானைக் கையிலேந்திப் புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகனை முதுகிற் காலாலூன்றி வெண்டலையைக் கையாற் பற்றி சிரமே லணிந்து இங்ஙனமே அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டனன்  என்ற வரலாறு உணர்க. “நாகாபரணன்“ என்று சிவபிரானுக்கு ஒரு பெர் வழங்கிவருதலும் இவ்வரலாறு பற்றியேயென்க.

ஆறுபொதி சடையோன் என்றவிடத்து அறியவேண்டிய கதை. எம்பெருமான் உலகளந்த காலத்தில் மேலே ஸத்யலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன்கைக்கமண்டல தீர்த்தத்தாற் கழுவி விளக்க அந்த ஸ்ரீபாத தீர்த்தமாகப் பெருகித் தேவலோகத்திலிருந்த ஆகாச கங்கையை, ஸூர்யகுலத்துப் பகீரத சக்ரவர்த்தி கபிலமுனிவனது கண்ணின் கோபத்திற்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனது மூதாதையான ஸகரபுத்ரர் அறுபதினாயிரவரை நற்கதிபெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலம் தவஞ்செய்து மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொண்டு வருகையில், அவனது வேண்டுகோளாலும் சிவபிரான் தான் புனிதனாக வேண்டிய அபிநிவேத்தாலும் அந்நதியை முடியின்மேலேற்றுச் சிறிது சிறிதாகப் பூமியில் விட்டனன் என்பதாம்.

ஆக இவ்வகைகளாலே பெருமிடுக்கையுடையனாக ப்ரஸித்தனான சிவபிரானாலும் ஸ்வப்ரயத்நத்தாலே அறிய வொண்ணாத ஸ்வரூப ஸ்வபாவங்களையுடையனாயிருப்பன் எம்பெருமான் என்றதாயிற்று.

தன்மைப் பெருமையுள் நின்றனை என்றது இப்படிப்பட்ட (சிவனாலுமறியப் போகாத தன்மையுடையனாயிருக்கையாகிற) பெருமை பெருந்தியவன் என்றவாறு நின்றனை – முன்னிலை பெருமை வினைமுற்று.

————-

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

பதவுரை

ஏழ் உலகு

உலகங்களையெல்லாம்
எயிற்றினில் கொண்டனை

(ஸ்ரீவராஹமாகிக் கோட்டில் எடுத்துக் கொண்டாய்,
கூறிய அறு சுவை பயனும் ஆயின

ஆறுவகை ரஸங்களாகிற ப்ரயோஜநமும் நீயே யாயிரா நின்றாய்
அம் கையுள்

அழகிய திருக்கையில்
சுடர் விடும் ஐ படை

ஒளிவிடா நின்ற பஞ்சாயுதங்களும்
அமர்ந்தனை

பொருந்தப் பெற்றாய்
சுந்தரம் நால் தோள்

அழகிய நான்கு திருத் தோள்களையுடையனாய்
முந்நீர் வண்ண

கடல் போன்ற வுடிவையுமுடைனான எம்பெருமானே!
நின் ஈர் அடி

உனது உபய பாதங்களை ஆழ்ந்த அன்புடன்
ஒன்றிய மனத்தால்

ஆழ்ந்த அன்புடன்
ஒருமதி முகத்து மங்கையர் இருவரும்

விலக்ஷணனான சந்திரன் போன்ற திரு முகத்தை யுடைய திருமடந்தை மண்மடந்தையிருவரும்
மலர் அன அம் கையின்

மலர்போல் ஸுகுமாரமான (தங்களது) அழகிய கைகளாலே
முப்பொழுதும்

எப்போதும்
வருட

பிடிக்க
அறி துயில் அமர்ந்தனை

(ஆநந்தமாக) யோக நித்திரையில் எழுந்தருளி யிராநின்றாய்

 

(ஏழுலகு இத்யாதி.) ஹிரண்யகசிபுவின் உடன் பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச்சென்ற போது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மஹா வராஹரூபியாகத் திருவ்வதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது நோட்டினாற் குத்திக் கொன்று பாதாள லோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற் குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின்ன் என்ற வரலாறு இதில் அடங்கியது.

இப்பொழுது நடக்கிற ச்வேத வராஹ கல்பத்துக்கு முந்தின பாத்மகல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளய ஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலே யெடுக்க நினைத்து ஸ்ரீவரஹாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தன்னென்ற வரலாறும் உண்டு. அதுவும் இங்கு அது ஸந்திக்கப்பட்டதாகலாம்.

ஏழுலகு என்றவிடத்துள்ள ஏழ் என்னுஞ் சொல் ஏழான எண்ணைக் குறிக்காமல் “ஸகலமான“ என்னும் பொருளைக் குறிக்கு மென்க. பூமண்டலம் முழுவதையும் என்றபடி. அன்றியே, ஸப்தத்வீபங் (ஏழு தீவு) களையுடைய பூமண்டலம் என்னவுமாம். அவையாவன – நாவலந்தீவு, இறலித்தீவு, குசையின்தீவு, கிரவுஞ்சதீவு, சான்மலித்தீவு, தெங்கின்தீவு, புட்கரத்தீவு என ஏழாம்.

கூறிய அறுசுவைப் பயனுமாயின – உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு என அறுசுவாயாம். இவை நிரம்பிய உணவு போலே பரம போக்யன் எம்பெருமான் என்றவாறு. “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணன்“ என்று கொண்டிருப்பார்க்கு அநுபவ விஷயமாம் இது. “அச்சுவைக் கட்டி யென்கோ அறுசுவையடிசிலென்கோ“ என்றார் நம்மாழ்வாரும்.

முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் மூவகை நீரையும் உடையது கடல். கடல்வண்ணனே! என்றபடி.

(நன் ஈரடி…அமர்ந்தனை) வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி என்றும் “***“ (பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம்) என்றும் சொல்லுகிறபடியே – திங்கள்போல் முகத்தரான திருமடந்தை மணமடந்தை யிருவரும் தமது குஸும ஸுகுமாரமான திருக் கைகளாலே திருவடிகளைப் பிடிக்க, ஆனந்தமாக யோக நித்திரை செய்தருள பவனே! என்கை.

மலரன – மலரன்ன, மலர் போன்ற, அறிதுயில் – உறங்குவான் போல் யோகுசெய்யுந் துயில் அமர்ந்தனை – முன்னிலை வினைமுற்று.

———–

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயி னை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை,

பதவுரை

நெறிமுறை

சாஸ்திர முறைப்படியே யுள்ள
நால்வகை வருணமும் ஆயினை

நான்கு ஜாதிகளின் மரியாதைக்கும் நிர்வாஹகனாயிராநின்றாய்
மே தரும் ஐ பெரு பூதமும் நீயே

ஆன்மாக்கள் பொருந்தத் தக்க பஞ்ச மஹா பூதங்களுக்கும் ப்ரவர்த்தகனாயிரா நின்றாய்
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்

வண்டுகள் (மது பானத்திற்காக வந்து மொய்ந்து) ரீங்காரம் செய்யப்பெற்ற கூந்தலை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
ஏழ் விடை

ஏழு ரிஷபங்களையும்
அடங்க செற்றினை அறு வகை சமயமும் அறிவு அரு

வலியடக்கி நெரித்தாய், பாஹ்ய குத்ருஷ்டி மதஸ்தர்களாலே அறிந்துகொள்ளக்கூடாத
நிலையினை

நிலைமையை யுடையனாயிராநின்றாய்,
ஐம்பால் ஓதியை

மென்மை குளிர்த்தி நறுமணம் கருமை நெடுமை என்னும் ஐந்து லக்ஷணங்களமைந்த கூந்தலையுடையளான பிராட்டியை
ஆகத்து இருத்தினை

திருமார்பிலே தரித்துக் கொண்டிராநின்றாய்,
அறம் முதல் நான்கு அவை ஆய்

தருமம் முதலிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுப்பவனாய்
மூன்று மூர்த்தி ஆய்

த்ரிமூர்த்தி ஸ்வரூபியான் ஸுக துக்கங்களிரண்டுக்கும் நிர்வாஹகனாய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை

தான் ஒருவனாயிருந்தும் பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து நின்றாய்

நெறிமுறை… ஆயினை – பிராமணர் க்ஷத்ரியர் வைச்யர் சூத்நர் என வருணங்கள் நான்கு. விராட் புருஷனான எம்பெருமானுடைய திருமுகத்தினின்றும் பிராமணனும், புஜத்தினின்று க்ஷத்ரியனும், துடையினின்று வைசியனும், திருவடியினின்று சூத்ரனும் உண்டானதாக வேதங்கள் கூறுகின்றமையால் நால்வகை வருணமும் எம்பெருமான்றானேயாயினன். அன்றி, அந்தந்த ஜாதிகட்கு உரிய கருமங்களை சாஸ்திரமுகத்தாலே விதித்து அந்தந்த வருணங்களின் மரியாதை வழுவாமல் நடத்திக்கொண்டு போகிறவன் நீ என்றதாகவுமாம். இங்ஙனன்றியும், வர்ணாச்ரம வொழுக்கங்கள் வழுவாமல் இருக்கிற அவ்வவர்களாலே யதாயோக்யமாக ஆராதிக்கப்படுகின்றாய் என்றதாகவுமாம்.

வருணம் – வர்ணமென்ற வடசொல் விகாரம். முற்காலத்தில் ஒரு வரம்பிலே நின்று விவாஹாதிகள் நடந்து வந்தபோது உடல் நிறத்தைக் கொண்டே இன்னான் பிராமணன், இன்னான் க்ஷத்ரியன் என்றிப்டி அறியக்கூடிய நிலைமையிலிருந்தமையால் நிறமென்னும் பொருளதான வர்ண சப்தத்தையிட்டு ஜாதியை வ்யவஹரித்து வந்தனராம்.

மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே – நிலம் நீர் தீ கால் விசும்பு என்கிற பஞ்ச மஹா பூதங்களும் நீயிட்ட வழக்கு என்றபடி. மேதகும் என்றது – ஆத்மாக்கள் பொருந்தி வர்த்திப்பதற்குத் தகுதியான என்றபடி சரீரமற்ற ஆத்மாஸுக துக்காதிகளை அநுபவிக்க இயலாதாகையாலே ஆத்மாக்கள் விஷயாநுபவத்திலே மேவுவதற்குத் தகுதியாகவுள்ளவை பஞ்ச பூதங்களாம். ஆத்மாக்கள் புகும் சரீரங்கள் பஞ்சபூதமயங்களிறே. அவரவர்களுடைய கருமங்களுக்குத் தகுதியாக உண்டாகிற பாஞ்ச பௌதிக சரீரங்களுக்கு அந்தராத்மாளாயிரா நின்றாய் என்றதாகவுமாம்.

அறுபது முரலுங் கூந்தலை யுடையவள் என்னும் பொருளில்… கூந்தல் என்றது அன்மொழித்டிதாகை. செற்றினை – முன்னிலை யொருமை வினைமுற்று.

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை – சாக்யர், உலூக்யர், பௌத்தர், சார்வாகர், பாசுபதர், காணாதர் என்றிப்படி சொல்லப்படுகிற புறமதத்தவர்களாலே அறியக்கூடாத ஸ்வரூப ரூப குணவிபூதிகளையுடைய என்றபடி. எம்பெருமானுடைய நிர்ஹேதுக கிருபையைப்பெற்ற ஆழ்வார் போல்வர்க்கு அவை தெரியுமேயன்றி மற்றையோர்க்குத் தெரிய விரகில்லையிறே.

ஐம்பாலோதியை ஆகத் திருத்தினை – ஓதி யென்று கூந்தலுக்குப் பெயர். கூந்தலின் பான்மை ஐவகையதாம். மிருதுவாயிருத்தல், குளிர்ந்திருத்தல், நறுமணம் மிக்கிருத்தல், கறுத்திருத்தல், நீண்டிருத்தல் ஆகிய இவை உத்தமகேச லக்ஷணங்களாம். அத்தகைய சிறந்த கூந்தலையுடையளான திருமாமகளைத் திருமார்பிலே கொண்டுள்ளாய் என்றவாறு.

ஐம்பாலோதி – என்றவிதுவும் அன்மொழித்டிதாகை.

அறமுதல் நான்சுகையாய் –தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் நான்கு புருஷார்த்தங்களையும் அர்த்திகட்கு அளிப்பவன் என்கை.

மூர்த்தி மூன்றாய் – படைப்புத் தொழிலை நடத்துகைக்காக நான்முகனை ஆவேசித்தும் ஸம்ஹாரத்தொழிலை நடத்துகைக்காகச் சிவபிரானை ஆவேசித்தும் ரக்ஷணத் தொழிலை நடத்துகைக்குத் தனான தன்மையிலே இருந்தும் ஆகவிப்படி மூவுரு வினனாய் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தாவாயிரா நின்றாய் என்கை.

இருவகைப் பயனாய் – சேதநர் செய்யுங் கருமங்களுக்கெல்லாம் ஸுகமாவது துக்கமாவது பயனாகத்தேறும். கருமம் வாயிலாக அந்த ஸுக துக்கங்களுக்கு ப்ரயோஜகன் நீ என்கை.

ஒன்றாய் விரிந்து நின்றனை – ஸூக்ஷ்ம சிதசித்விசிஷ்ட ப்ரஹ்மமான தானே ஸ்தூல சிதசித்விசிஷ்ட ப்ரஹ்மமாகக் காணப்படுகின்றமையைக் கூறியவாறு.

மாயா வாமனனே மது ஸூ தா நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாயத்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்ற வாறு இவை என்ன நியாயங்களே –

ஆக, இவ்வளவில் எழுகூற்றிருக்கை என்றதன் இலக்கணப்படி தொடுக்க வேண்டிய சொல் மாலைகள் முற்றுப்பெற்றன.

———-

இனிமேலுள்ள சில அடிகள் ஸ்தோத்ர ஸமாபநம்.

“ஒரு பேருந்தி“ என்று தொடங்கி “ஒன்றாய் விரிந்து நின்றனை“ என்னுமளவும், எம்பெருமான் ஆச்ரிதர்களைக் காத்தருள்வதற்காகச்செய்த செயல்களையும் மற்றும் அவனுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களையும் பரக்கப் பேசி மேற்கூறிய திருக்குணங்களெல்லாம் செவ்வனே விளங்கத் திருக்குடந்தையில் கிடக்கிற கிடையிலே ஈடுபட்டு அங்கே சரணாதி பண்ணித் தலைக்கட்டுகிறார்.

குன்றா மதுமலர்ச் சோலை வண் கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே. (2)

பதவுரை

குன்றா மது

குன்றாத (நிறைந்த) தேனையுடைய
மலர்சோலை

பூக்கள் நிறைந்த சோலைகளை யுடையதும்
வண் கொடி படப்பை

வெற்றிலைத் தோட்டங்களை யுடையதும்
வரு புணல்

எப்போதும் பெருகுகின்ற தீர்த்தத்தை யுடைய
பொன்னி

கோவேரியானது
மா மணி

சிறந்த ரத்னங்களை
அலைக்கும்

அலையெறிந்து கொழக்கப்பெற்றதும்
செந்நெல் ஒன் கழனி

செந்நெற் பயிர்களாலே அழகிய கழனிகளை யுடையதும்
திகழ் வனம் உடுத்த

விளங்குகின்ற வனங்களை நாற்புறங்களிலுமுடையதும்
கற்போர் புரி செய்

வித்வான்களுடைய நகரமாகச் செய்யப்பெற்றதும்
கனகம் மாளிகை நிமிர்

பொன்மயமான மாளிகைகளின்றும் மேல்முகமாய் ஓங்குகின்ற
கொடி

த்வஜங்களானவை
விசும்பில்

ஆகாயத்திலுள்ள
இள பிறை

பாலசந்திரனை
துவக்கும்

ஸ்பர்சிக்கப்பெற்றதும்
செல்வம் மல்கு

செல்வம் நிறைந்ததுமான
தென் திருகுடந்தை

தென் திருக்குடந்தையிலே
அந்தணர்

பிராமணர்கள்
மந்திரம் மொழியுடன் வணங்க

வேதவாக்குகளைச் சொல்லிக் கொண்டு வண“கும்படியாக
ஆடு அரவு அமளியில்

படமெடுத்தாடுகிற ஆதிசேஷனாகிற சயனத்தில்
அறி துயில் அமர்ந்த

யோக நித்திரை செய்வதில் ஆஸக்தனான
பரம

ஸர்வேச்வரனே!
வரும் இடர் அகல

இந்த ஸம்ஸாரத்தில் நேரக்கூடிய துக்கங்களை நீங்க
நின் அடி இணை பணிவன்

உன்னுடைய உபயபாதங்களை ஆச்ரயிக்கின்றேன்
வினை

ஸம்ஸாரத்துன்பங்களை
மாற்று

போக்கி யருளவேணும்

திருக்குடந்தையின் நீர்வளம் நிலவளம் முதலியவற்றைச் சில விசேஷணங்களால் சிறப்பித்துக் கூறுகின்றார். எப்போதும் வற்றாத தேன் வெள்ளங்களையுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்ததும், பல பல ரத்னங்களைக் கொழித்துக்கொண்டு வருகிற காவிரி நீர் பாயப்பெற்றதும், அக்காவியின் நீர்வளத்தாலே செந் நெற்பயிர்கள் நன்றாக விளையப்பெற்ற கழனிகள் கண்ட விடமெங்கும் ஓங்கப் பெற்றதும், வித்வான்கள் வாழப்ப்பெற்றதும், சந்திரமண்டலம் வரையில் நீண்டு விளங்குகின்ற கனக மாளிகைகள் திகழப்பெற்றதும், பல்வகைச் செல்வமும் நிறையப் பெற்றதுமான திருக்குடந்தையிலே அந்தணர்கள் புருஷஸூக்தம் முதலிய வேதவாக்கியங்களை அநுஸந்திதுக்கொண்டு வந்து பணியும்படியாக சேஷசயனத்திலே திருக்கண் வளாந்தருளும் நெடுமாலே! எனது தாபமெல்லாம் தீரும்படி உன்றன் திருவடியிணைகளைப் பணிகின்றேன். இனியாகிலும் எனது ஸம்ஸார தாபங்கள் அருள் புரியவேணும் என்று ஆர்த்தராய்ச் சரணம் புகுந்து தலைக்கட்டினராயிற்று.

கற்போர் புரி செய் என்றவிடத்து இரண்டு வகையான பாடமும் அதற்கு ஏற்ப அர்த்த பேதமும் உண்டு, – புரி செய் என்பது ஒரு பாடம், புரிசை என்பது மற்றொரு பாடம்.

“வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி“ என்ற பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாகப் புரி செய் என்ற பாடம் கொள்ளத்தக்கது, புரி என்ற வடசொல் நகரமெனப் பொருள்படும், கற்போர்களுடைய (வித்வான்களுடைய புரியாகச் செய்யப்பட்ட தென்க. மற்றொரு சிறிய வியாக்கியானத்திலே “தொழில் ஓரப்படா நின்றுள்ள மதிள்களையு முடையதாய்“ என்ற ஸ்ரீஸூக்திக்குத் தகுதியாக புரிசை என்ற பாடம் கொள்ளத்தக்கது.

“கற்பு ஓர் புரிசை“ என்று பிரித்து, நல்ல வேலைப்பாடுகளையுடைய திருமதில்களை யுடைத்தான என்று கொள்க. புரிசை என்ற ஒரு பாடத்திலேயே இரண்டு வகைப் பொருள்களையும் பொருந்தவிடலாமென்பாரு முளர் நிற்க.

கனக மாளிகைகளினின்றும் நிமிர்ந்த கொடியானது விசும்பி விளம்பிறையைத் துவக்குமென்ற அதிசயோக்தியினால் அவ்விடத்துத் திருமாளிகைகளின் ஓக்கம் தெரிவிக்கப்பட்டதாகும்.

ஆடு அரவு – எம்பெருமான் எப்போதும் தன்னோடு அணைந்திருக்கப் பெற்றதனால் மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் படமெடுத்தாடுவன் திருவனந்தாழ்வான். அமளி – படுகை. அறிதுயில் –ஜாகரணத்தோடு கூடிய நித்ரை, அதாவது யோக நித்ரை* உறங்குவான்போல் யோகு செய்யும் பெருமானிறே.

ஆக இப்பிரபந்தத்தால் – தம்முடைய ஆர்த்தி யெல்லாந் தோற்றத் திருவடிகளிலே தீர்க்க சரணாகதி பண்ணியும் இன்னும் இவரைக்கொண்டு சில திவ்யப்பந்தங்களை வெளியிடுவித்து உலகத்தை வாழ்விக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமான் இவ்வாழ்வார்க்கு வந்து முகங்காட்டா தொழியவே, இனி மடலூரைப் புகுகிறார் என்று – மேல் திருமடல் பிரபந்தத்தோடே இதற்கு ஸங்கதி கண்டு கொள்க.

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி பெறாமல் இருப்பதை-
ஆழ்வார் அனுசந்திப்பதாக ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கலியனும் ஸ்ரீ அமுதனும்–ஸ்ரீ திரு ஏழு கூற்று இருக்கை வியாக்யானம் —

July 12, 2022

ஸ்ரீ சார்ங்க பாணி -மூலவரையும் உத்சவரையும் சொல்வார்கள்
வில்லே அடையாளம் சாப லதா -சபலம் மனஸ் -தோஷம்
கொடி போன்ற வில் -சார்ங்க பாணி உன்னைக்கொண்டாட
தோஷமே உன்னிடம் இருந்தால் குணமாகும்
விஷமே அம்ருதம் ஆனதே
அவன் இடம் சேர நமது தோஷங்களைப் போக்கி அருளுவான்

இயல்வாகவே ஸ்ரீ கலியன் அமுதன் இடம் ஆழ்ந்து -சாரங்கம் அம்சமே இவர்
முதல் மங்களா சாசனம்
திருமணம் கொல்லையில் -வயலாலி மணவாளன் -அரசன் -அரச மரத்தில் மந்த்ர அரசை ஆலி நாட்டு அரசனுக்கு -வாடினேன் வாடி ஆரம்பித்து
ஆவியே -குடந்தையே தொழுது அடுத்த
ஆறு அங்கம் கூட அவதரித்தவர் -ஆறு பிரபந்தங்களிலும்
திரு நெடும் தாண்டகம் -நிகமனத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை அடி நாயன் நினைந்திட்டேனே
உபக்ரமம் உபஸம்ஹாரம் -அப்பியாசம் -எங்கும் அமுதன் தானே

பெரிய திருமொழியில் -களைப்பு ஏற்படும் பொழுது -அமுதன் காட்சி கொடுத்து -இதுவே அவருக்கு coffee
பத்ரிகாஸ்ரமம்
சள கிராமம் அடை நெஞ்சே
திரு நீர்மலை
திருவாலி திருநகரி -ஓ மண் அளந்த -என் தனக்கு துணையாளன்
நாச்சியார் கோயில் -குடந்தைக்கிடந்தானை நறையூரில் கண்டேனே
திருச்சேறை
தேர் அழுந்தூர்
திரு நாகை-

நான்காம் பதிகம் மட்டுமே இல்லை

கோயிலே ஐஸ்வர்யம் பிரசித்தம் -குடந்தையில் சவுந்தர்யம் பிரசித்தம் -நஞ்சீயர் நம்பிள்ளை-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -25-பாசுரங்கள் மங்களாசாசனம்

சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-

சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

ஊரான் குடந்தை யுத்தமன் — தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-

குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ ! துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ ! !–3-6-8-

தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7-

கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே-6-8-9-

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி —நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-

குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

பேரானைக் குடந்தை பெருமானை –காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5-

தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் –அச்சோ ஒருவர் அழகியவா –9-2-2-

யமரர் தம் கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6-

கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால் இங்கே போதுங்கொலோ –10-10-8-

குடந்தை மேவிச் சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4-

உம்மை யுய்யக் கொண்ட கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே–11-6-9-

உலகம் கொண்ட கோவினைக் குடந்தைமேய குருமணித்திரளை–என் சொல்லிப் புகழ்வர் தாமே.-திருக்குறுந்தாண்டகம் – 6-

தூவி சேரன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை பாவியேன் பாவியாது பாவியேனாயினேனே.–திருக்குறுந்தாண்டகம் – 14-

தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர்ப் பாடி யாடக் கேட்டு –நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே. திருநெடுந்தாண்டகம் – 17-

பேர்ப் பாடித் தண் குடந்தை நகரும் பாடி பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –திருநெடுந்தாண்டகம் – 19-

தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே. –திருநெடுந்தாண்டகம் – 29-

நின்னடியிணை பணிவன் வருமிடரகல மாற்றோ வினையே–பொன்னித் தடங்கொண்ட தாமரை சூழும் மலர்ந்த
தண் பூங்குடந்தை –பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே.–திருவெழுகூற்றிருக்கை

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –பெரிய திருமடல் – 114

———–

மூன்று முறை திருநெடும் தாண்டகத்தில்
தண் குடந்தை பாடி -வெப்பம் தவிர்க்க தண்மை –
ஆஸ்ரிதர் இடம் முறை அறிய ஸம்ஸ்லேஷித்த இடம்
தனக்கு ஆக்கின திரு அமுதை திருமழிசைப் பிரானுக்கு கொடுத்து -கலத்தது உண்ட -இதுவே தண்மை
மூன்று முறை -தாப த்ரயங்கள் உண்டே – ஆதி ஆத்மீகம் ஆதி பவ்திகம் -ஆதி தெய்விகம் –

ஸ்ரீ பாஷ்யம் -திருவடியிலே சேவை குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்
தாபத் த்ரய அம்ருதத்வாய -ஸஹ ஏவ அறியப்படுபவன் -அவனை அறிய வேண்டும்

24 திவ்ய பிரபந்தங்களிலே ஒரு திவ்ய பிரபந்தம் முழுவதுமே ஆரா மதனுக்கு -பக்கம் நோக்கு அறியாத பரகாலன்
பாட்டுப்பிச்சன் அரங்கன் -மடல் அவனுக்கே மதிள் உனக்கு
அதில் மற்ற திவ்ய தேசங்களையும் பாடி
அக் குறை தீர்க்கவே திரு எழு கூற்று இருக்கை

அமலனாதி பிரான் -திருவேங்கடத்துக்கும் உண்டே
திருமாலை -மதுரையும் உண்டே
திருப்பள்ளி எழுச்சி -திரு அயோத்யா

———–

ஏழு அடுக்குகள் -இருப்பிடம் -தேர்
ஆழ்வார் எழுவர் மங்களா ஸாஸனம்
வேதம் -கிருஷ்ண யஜுர் -ஸூர்ய நாராயணன் -தேவர்கள் பார்த்து பொங்கும் பரிவு -விழாமல் இருக்க தேர் அமைக்க
பா அணி -ஸப்த சந்தஸ்ஸூ க்கள் -சொல்லால் தேர்
காயத்ரி ஜெகதீ -தேர் சக்கரம்
உஷ்ணிக் பிரஷ்டுப் -இரண்டு தேர் கட்டைகள் bambar
அனுஷ்டுப் பந்தி -இரண்டு குதிரைகள்
ப்ருஹத் தேர் மேடை
சாந்தோரஹம் -தேரில் சஞ்சரிக்கிறான்

கல் தேர் -கர்பக்ருஹம் -குதிரையும் யானையும் கட்டப்பட்ட தேர் -சாகா யானை போல் ஸம்ஹிதா குதிரை போல் -வேதத்தில் உண்டே

மரத் தேர் -சித்திரத் தேர்

சொல் தேர் இது
ஆசு கவி மதுர கவி விஸ்தார கவி சித்ர கவி -நாலு கவி

ஸம்ஸார துக்கம் -பாரமாய் பழ வினை பற்று அறுக்க ஆராவமுதன் இடம் சரணாகதி

சார்ங்க அம்சம் -சார்ங்க பாணி
நம்மாழ்வார் -ஆராவமுதே -சரணாகதி பண்ணிக் காட்டி அருளினாரே

தேர் தட்டில் தானே சரம ஸ்லோக உபதேசம் -அதனாலும் -தேரில் உள்ள பெருமாள் திருவடிகளைப் பற்றுகிறார்

சொல் தேரில் அமர்த்தி சரணாகதி -ரத பந்தனம்

46 வரிகள்
36 வரிகள் தேர் போன்று
10 வரிகள் அமுதனைப்பற்றி -தசாவதாரம் அமுதன்
ப்ருஹதீ பா வகையில் -36 உண்டே

3-5-7-9-11-13-13-பெட்டிகள் ஏழிலும்

அமுதனின் 18 குணங்களும் உண்டே இதில் -18- அத்யாயம் –சரண்யத்வம்

18 குணங்கள் விவரணம், அதிலும் ஸர்வ போக்யத்வம் , தன் திருமேனி அழகை தானே பருக விழைந்து உத்தான சயனம் -பின்னழகு ரசித்து பின் முன் அழகை ரசிக்க,ஆராவமுதே

1-காரணந்து த்யேய -ஆதி மூலம் -ஒரு பேர் உந்தி –அயனை ஈன்றனை

2- விரோதி நிரஸனம் -தோட்டம் வைத்தவன் தண்ணீர் விடுவான் -இலங்கை செற்ற பெருமாள்

3-ஆஸ்ரித ரக்ஷணம் -ஒரு மாணாகி –அளந்தாயே

4-ஆபத் ஸஹத்வம் -தொழும் காதல் வேழத்தை –மடுவில் –

5-பல பிரதன் -முத்தீ -கர்ம ஞான பக்தி யோக -உபாயாந்தர பரர்களுக்கும் பலன் தருபவன் நீயே –

6-பரத்வம் -ஆறு பொதி சடையோன் -அறிய முடியாத -ஈஸ்வரோஹம் -அதுவும் அவனது இன்னருளே
சின் முத்திரை -கட்டை விரலை தானாக கீழே இறக்க முடியாதே -மற்ற விரலை கீழே தானாக தள்ளி

7-ஏழு உலகு எயிற்றிலே கொண்டாயே -ஸம்ஸார உத்தாரகத்வம் -ஸுசீல்யம் ஸுலப்யம்

8-இனிமை -போக்யத்வம்-ஹிதம் சொல்லும் பொழுதும் பிரியமாக -ஆறு சுவைப் பயனும் நீயே
பஞ்சாயுதங்களும் அமுதனும் -சுடர் விடும் ஐம்படை

மூலவர் உத்சவர் பின் அழகைப்பார்த்தி மயங்கி படுக்க -கிடந்தவாறு எழுந்து -சாக்கி -முன் அழகை
ஆராவமுத ஆழ்வான் -யாருக்கு சொல்லாமல் -தனக்கும்
9-சர்வ போக்யத்வம் உண்டே

ஆபத்தைப் போக்கும் அழகு -ஐம்படை ஏந்தி ரஷிக்கத் தயாராக உள்ளான் –

வில் இருக்கும் அம்பு இருக்காதே
பாபங்களை நோக்கி புறப்பட்டு திரும்பாமல் இருக்கிறதாம்

10-ஸர்வ பல ப்ரதத்வம் –நான்கு தோள் முந்நீர் வண்ணா -நான்கு புருஷார்த்தங்கள்-maal இதனாலே அவன் பெயர் -திரு மால்

11- ஸ்ரீ யபத்வம் -வருட -யோக நித்திரை -அறி துயில் அமர்ந்தனை

12- ஸூலப ஆராதனை -வர்ணாஸ்ரம கர்ம அனுஷ்டானம் திரு ஆராதனமாகக் கொண்டாயே

13- சர்வ சரீரீ -ஐம் பெரும் பூதமும் நீயே –ஆத்மா சரீரம் -அந்தர்யாமி -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்

14- தடைகளைத் தகர்த்து -ஏழு விடை செற்றாயே –

15-ஸாஸ்த்ர யோநித்வாத் –சாஸ்திரம் ஆச்சார்ய முகமாகவே கற்க -மறை -ஆறு வகை சமயமும் அறிய முடியாத நிலை

16-வேதாந்த தத்வ சிந்த்தாம் -மஹா லஷ்மி – ஐம்பால் ஓதி திருவை ஆகத்து இருத்தி –

17- சித் அசித் விசிஷ்டா -ஏகமேவ அத்விதீயம்

18- ஸுலப்யம் -சீரார் செந்நெல் கவரி வீசும் -செல்வம் மல்கும் திருக் குடந்தை –ஞானம் பக்தி வைராக்யம்

தென் -அழகான
வைதிக விமானம்
வேத கோஷம் ஒலிக்கும்
ஆடு அரவு -அமுதம் அனுபவித்து ஆடிக்கொண்டே இருக்கும் பரமன்
சிவனும் பல வடிவங்களில் -மதியத்தில் இவனே -ஸ்பஷ்டம் பரத்வமும் ஸுலபயமும்
நின் அடி இணை பணிவேன் வரும் இடர் -வந்து கொண்டே இருக்குமே -அகல -பாற்று –
உன்னையே அனுபவிக்கும் படி அருள வேணும் –

————-

 

எழுவர் -மங்களா சாசனம்
நாலாயிரம் நாத முனிகளுக்கு அளிக்க உதவிய ஆழ்வான்
அகஸ்தியர் -ஏழு கடல் நீரைப்பருகி -ஆசமனம் -சாரமாக அமுதம் –
தாயார் இடம் -குடம் -தானே தாயார் -குட முனிவர் –

பெண் ரஹஸ்யம் வைக்க மாட்டாமல் குட மூக்கு -கும்ப கோணம் -குடந்தை –
அனைத்து மொழிகள் வார்த்தைக்குள் ஆராவமுதமே தானே சாரம் –
தேவர்களும் அறியாத -சமஸ்க்ருதம் கூட அறிய மாட்டாமல்

ஆரா அமுதே -ஆழ்வார் ஈடுபட்டு -ரஹஸ்யம் வெளி வந்ததே –
அருளிச் செயல்களையும் வெளியிட்ட வைபவம் -13-ஆழ்வார் -இவர் தானே –
ஆராவமுத ஆழ்வார் ஆதரித்த பேறுகளை -மா முனிகள் –

பூதம் பேய்
பெருமை
பிணி தீர்க்கம்
அடியார் வசம்
வாத்சல்யம்

திரு மங்கை -சார்ங்கம் அம்சம் -வில் பிடித்த இவன் இடம் அபி நிவேசம் இருக்கச் சொல்ல வேண்டுமோ
ஆவியே –குடந்தையே தொழுது -தொடங்கி –
தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயன் நினைந்திட்டேனே
ஆறு பிரபந்தங்களிலும் மங்களா சாசனம் –
ஆரா இன்னமுத்தை
குடந்தை -அச்சோ ஒருவர் அழகிய வா

அமுதன் புத்துணர்ச்சி கொடுத்து பெரிய திருமொழி முழுவதும்
திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் மதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

ஆண்டாள்
ஆராவமுதனின் சூடிக் களைந்த மாலை -குடந்தை கிடந்த குடமாடி –ஆசைப்பட்டாள் –
கோதாஸ்தவம் -ஆசு கவி -அமுதன் இவளுக்கு -சாரங்க பாணிக்கு துல்ய
கமலை -அமுதனாம் அரங்கனுக்கு மேலை இட்டாள் வாழியே –

பெரியாழ்வார் –பிள்ளைத் தமிழ் -ஆண் குழந்தை -பத்து பருவங்கள் -சப்பாணி -நான்காவது —
ஒன்பதாவது மாதம் உட்கார்ந்து கை கொட்டும்
நான்கு நிலா –
வாசப்படி -படித்தால் மேலே ஏறலாம் -ரேழி -நடை பாதை -கூடம் -சத்சங்கம் -மநம் பக்குவம் -பூஜ -முற்றம்
தூணிலா –முற்றத்து –
வா நிலா அம்புலி வா என்று -நிலா -இங்கு நிலவுகின்ற அம்புலி
நீ நிலா -நீ நின்று சப்பாணி

நம்மாழ்வார் -ஆராவமுதே -அளவு மீறினால் அமுதமும் நஞ்சு இல்லையே இங்கு
கும்பேஸ்வரர் -பின் இருந்து -பின் அழகை பார்க்கவே
ச ஏகதா பவதி -பல வடிவங்கள் -சுற்றி பல ஈஸ்வர கோயில்களில் பருகிக் கொண்டு –

யாருக்கு ஆராவமுதே -சொல்லாமல்
இன்னார் இனையார் இல்லாமல் தனக்கும் கூட -ஆராவமுதன் –

கருடனாக தானே இருந்து -உபய நாச்சியாரும் தானாகவே -ஆதி சேஷனாக இருந்து
உத்சவர் கையில் சார்ங்கம் -மூலவர் திரு நாமம் சாரங்க பாணி
த்யான ஸ்லோகம் -வந்தே சயான போகே சார்ங்க பாணி –
ஆராவமுதன் முன் அழகை பார்க்க எழுந்து இருந்து எட்டிப் பார்த்தான் -திரு மழிசை பிரான் வியாஜ்யமாக –
தானே ஆழ்ந்து ஆழ்வான் திரு நாமம் பெற்றான் -இது இரண்டாவது காரணம்
கீழே நாலாயிரம் அருளியதால் ஆழ்வார் பார்த்தோம்
நெல்லும் கவரி வீசும்படி -உடலும் உருகும் படி
ஏரார் -அழகு குடி கொண்டு கிடந்தாய் –
ஐஸ்வர்யம் கோயிலில் பிரசித்தம் இங்கு சவ்ந்தர்யம் மாதுர்யம் அழகு பிரசித்தம்

வேறே ஒருவர் மூலம் மோக்ஷம் காலனைக் கொண்டு மோதிரம் கொள்ளுவது போல்
பேறு தராமல்
உலகம் -உண்ட -தாயார் உடன்
ராஜ கோபாலனாக வந்து அருள –
சூழ் விசும்பில் -குடந்தை எம் கோவலன் குடி அடியாருக்கே
ஸ்ரீ வித்யா ராஜகோபாலனாக –

திரு மழிசை பிரான் -மூன்றாவது காரணம் -இவரால் –
அமுது செய்த போனகம் விரும்பி அமுது செய்தானே
நடந்த கால்கள் –வாழி -கேசனே –
உத்தான சயனம் -பக்த பராதீனன்
ஆழ்வாரின் வார்த்தையில் ஆழ்ந்து -இது நான்காவது காரணம்
கோ நிலாவ -நந்தன் மகிழ கொட்டாய்

பேயாழ்வார்
சேர்ந்த திருமால் –30-கடல் -குடந்தை -வேங்கடம் -நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு
வாய்ந்த மறை பாடகம் ஆதி சேஷன் திருத்துழாய் –ஒன்பது இடங்கள்
மனசுக்கு வருவது புருஷார்த்தம் -திவ்ய தேசம் -transit places -அங்குத்தை வாசம் சாதனம் இங்குத்தை வாசம் சாதகம்
வாத்சல்யம் காட்டி அருளி –
அத்தி வரதர் உணர்த்தும் தத்வம் -அந்த களேபர -பாசி பிடித்த அனந்த சிராஸ் –
தூய வைகுண்டம் போல் கர்ப்ப க்ருஹம் -வெளி வந்து-உணர்த்தி விட்டு மறைகிறார்

பூதத்தாழ்வார்
எங்கள் திருமால் -செங்கண் -புண்டரீகாக்ஷத்வம் -மைத்தடம் கண்ணினாய் –
இருவருக்கும் பார்த்து கொண்டே இருப்பதால் விளைந்த விகாரம்
நெடு மால் -திரு மார்பா -திருவடி ரேகைகளாலே பரம் பொருள் ஆகிறான் –
இமையோர் தலைமகன் -எங்கள் பெருமான் -அவற்றை விட்டு
பொங்கு அரவணை மேல் குடமூக்கில் கோயிலாகக் கொண்டு –

பாரம்யம் கலியன் -பெருமையைப் பாடி அருளி
நதார்த்தி சமநம் -அடி பணிந்த அணியார் துயர் ஆர்த்தி போக்கு ஆண்டாள்
தஸ்யா பிதா ஸுசீல்யம் -வடக்கு பிரகாரம் தூணிலா முற்றம் -ஆண்டாள் சந்நிதி
மாதுர்யம் நம்மாழ்வார்
பக்தேஷு விதேயம் -ஆஸ்ரித பரதந்த்ரன்
மஹத் பூதவ் -வாத்சல்யம் -ஸுலப்யம் -accessibility -நாம் பற்றும் படி கோயில் கொண்டு
நீராக கலப்பது ஸுசீல்யம் -பெரியாழ்வார் காட்டி அருளி –
இப்படி பிரதானம் ஏழும்-நதிகள் -சுரங்கள் ஏழு காண்டம் -ஏழு நாட்கள் -ஸப்த பிரகாரம் -ஸப்த கிரி போல்

பெருமை
பக்தர் பிணி தீர்க்கும் கோதை பாட
அருமை எளிமை
ஆராவமுதாய இனிப்பதாய்
அடியார் வசம்
வாத்சல்யம்
திரு உடனே நாம் பற்றும் படி நின்ற வாற்றை இயம்பினாரே -இப்படி ஏழும்

————

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன் –

எம்பெருமானுக்கு திரு மதிள் போல் அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள்
செய்து அருளின ஆழ்வாருடைய திரு நாமங்கள்
பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது இதில் –

பிரத்யசேஷ குரவஸ் ஸ்துத்யா-என்னக் கடவது இறே –
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லாருக்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்-

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலரானவர் வாழி

வாழி கலிகன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் —
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையராய் –
அது வாழும் படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல்-
அங்கே வாழுகிறவர் என்னுதல்

வாழியரோ–மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -என்று
ஆழ்வாரையும்
அவர் திருக் கையிலே வேலையையும் ஒருகாலே ஆசாசித்த படி –

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே வாள் வலியால் மந்திரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே –
கைப் பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்திலே இறே மந்திரப் பொருள் கைக் கொண்டது –
மந்திரத்தைப் பற்றி இறே மந்திரம் கொண்டது

மங்கையர் கோன்-
மங்கையர் மன்னன் இறே

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியை யுடையவர்

அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -என்று
தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே

சுடர்மான வேல் –
தேஜோ ரூபமான மான வேல் –
பெரிய வேல்
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

வாழியரோ –
இத்தால் ஆழ்வாரோ பாதி
ஆயுதமும் ஆசாஸ்யம் என்றபடி –
நின் கையில் வேல் போற்றி என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல் ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும் –
இதன் விஜயத்தை வேண்டுகிறது —ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

————————————————————————–

அவதாரிகை -1-
சம்சார ஸ்வபாவ அனுசந்தானத்தாலே மிக அவசன்னரான ஆழ்வார்
அவற்றின் பரிகாரமாக
அவனைக் கைகளால் தொழுது
மனசாலே நினைத்து
வாயாலே பேசி திருவடிகளிலே விழுந்தார் –

இங்கனே கிடந்தது நோவு பட உமக்கு அபேஷிதம் என் என்ன
பகவத் விரோதியாகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கித் தர வேணும் -என்றார்

அத்தை நம்மால் செய்யல் ஆவாதே என்ன

உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
சர்வ சமாஸ்ரயநீயன் ஆகவும்
ஆபத் சகன் ஆகவும்  இருக்கிற நீயே
என்னுடைய சம்சாரத்தைக் கழித்து அருளா விடில்
என்னால் கழித்துக் கொள்ளப் போகாதே -என்று
திருவடிகளிலே விழுந்து தம் தசையை அறிவிக்கிறவராய் -இருக்கிறது –

அவதாரிகை -2-
முதலிலே கரண களேபர விதுரமாய்
அவிஜ்ஞ்ஞேய ஸ்வரூபமாய்
அசித் கல்பமாய் இருக்கிற இவற்றை -அர்த்தித்வாதி நிரபேஷமாக
உன்னுடைய நிரவதிக தயையாலே உண்டாக்கின நீயே அருளிக் கடாஷியாயகில்
அமூநி புவநாநி பாவித்தும் நாலம்-ஸ்தோத்ர ரத்னம் -10–
முதலிலே இவை யுண்டாகவே மாட்டாது
சத்தையே தொடங்கி உன்னதீனமான பின்பு உன்னை ஒழிய இவற்றுக்கு ஒரு பிரவ்ருத்தி நிவ்ருத்தி கூடாது
என்னும் இடம் சொல்லவும் வேணுமோ

இது இல்லாத வன்று உண்டாக்கின நீயே இதுக்கு ஒரு போக்கடி பார்க்கை ஒழிய
நான் ஓன்று செய்து உன்னைப் பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ-

சரணா மறை பயந்த -தாமரை யானோடு
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம் -அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு –முதல் திரு -60-என்றபடி

ஜ்ஞானாதிகனான சதுர முகனோடே கூட உத்பத்தி விநாசாதிகளுக்கு கர்மீ பவிக்கிற சகல சேதனர்க்கும்
ரஷை என்று பெற்ற பெற்றவை எல்லாம்
நம் மேல் வினை கடிவான் என்றபடி

ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக கையிலே திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உபகாரகனான அவன் பார்க்கில் பார்க்கும் இத்தனை அல்லது
வேறு கடல் சூழ்ந்த பூமியில் உள்ள சேதனர் தங்களுக்கு ரஷை தாங்கள் அன்றியார்கள்

அவனை ஒழிய இவை அறியாது ஒழிய வேண்டுகிறது என் என்னில் –
நைவ கிஞ்சித் -ஜிதந்தே -1-6-இத்யாதி –
உனக்கு-பரோஷமாய் இருப்பது ஓன்று இல்லை
எத்தனை யேனும் ஜ்ஞானாதிகரராய் இருப்பாருக்கும் நீ கண்ணுக்கு விஷயம் ஆகாய்
உனக்கு கை புகராதது ஒன்றும் இல்லை –
எத்தனை யேனும் அதிசய ஜ்ஞானாதிகர்க்கும் நீ கை புகுந்தாய் இராய்-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன வென்றால்
ஒருவனுக்கு கண்ணும் தோற்றாதே
காலும் கடை தாராதே இருப்பது

ஒருவனுக்குக் கண்ணும் தோற்றி
காலும் கடை தருவது

இப்படி இருந்தால் யார் வழி காட்டிக் கொடு போவார்கள்
நான் அஜ்ஞனாய் அசக்தனாய் இருந்தேன் -நீ சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தாய்
இங்கனே இருந்த பின்பு நீ என் கார்யம் செய்து தலைக் கட்டும் இத்தனை போக்கி
நான் என் கார்யம் செய்து தலைக் கட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார்-

நீ தந்த ஜ்ஞானம் கொண்டு அறியப் பார்த்தாலும்
அறிந்த படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தி எனக்கு யுண்டோ –

ஆழ்வாருக்கு முதலிலே செப்பேட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
திரு மந்த்ரத்தையும்
அதில் அர்த்தத்துக்கு எல்லை நிலமாகக் கோயில்களையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
க்ருதக்ருத்யராய் –
சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஒக்க மறந்தார்

ஆழ்வாரைப் பார்த்து எம்பெருமான் -நீர் இருக்கிறது சம்சாரத்தில் கிடீர் -என்று அருளிச் செய்ய –
அதன் கொடுமையை அனுசந்தித்து ஆற்றாமையாலே
மநோ வாக் காயங்களாலே எம்பெருமானை அனுபவித்து ஆற்றப் பார்த்தார்

அது பண்டையிலும் இரட்டையாய் மிகவும் ஆற்றாமையாலே எம்பெருமானுடைய சரண்யதவத்தைப் பேசிக் கொண்டு
அதுக்கு எல்லை நிலமான திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வார் திருவடிகளையே
எத்தசைக்கும் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் உபாயமாக பற்றி முடிக்கிறார் –

சித்திர கவி வகைகள்
சக்ரபந்தம் -பத்ம பந்தம் -நாக பந்தம் -ரதபந்தம்

————————————————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு  மானுரியிலங்கு மார்வினன் இரு  பிறப் பொரு மாணாகி
ஒரு முறை  ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து
நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி  ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழு உலகு எயிற்றினில்  கொண்டனை
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின்னீரடி யொன்றிய மனத்தால்
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே
அறுபத முரலும்   கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

தனிப்பாடல் –
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருத்துந்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே

————————————————————————–

வியாக்யானம் -1-

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்  ஒரு முறையானை ஈன்றனை –

ஒரு பேர் உந்தி
வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களுக்கும்
அத்விதீய காரணமாக
பரப்புடைய திரு நாபியிலே

இரு மலர்த் தவிசில்
அப் பரப்பு அடங்கலும் கண் செறி இட்டால் போலே
பெரிய திகழ்கிற மலராகிய ஆசனத்திலே

ஒரு முறையானை ஈன்றனை
ஒரு கால் விசஜாதிய ஜன்மாவான சதுர் முகனை உண்டாக்கினான்-

ஒரு கால் என்றாலும்
ப்ரவாஹ ரூபேண நித்தியமாய் இருக்கும் இறே-நா வேஷஸே-ஸ்தோத்ர ரத்னம் -10-

ஒரு பேர் உந்தி —
ஜகத்தை பிரளயம் கொண்ட காலத்திலே
நிர்ஹேதுக கிருபையாலே
இவற்றின் உடைய சத்தையை உண்டாக்கினவனே
பிரதான ஆதியாய் திரு நாபி

இரு மலர்த் தவிசில்-   –
பெரிய இதழ்களை உடைய தாமரையிலே

ஒரு முறையானை ஈன்றனை –
இவற்றின் உடைய சத்தாதிகளை உண்டாக்கின உனக்கே
பரம் அன்றோ எல்லாரையும் ரஷிக்கிறது

நீ உண்டாக்கின இவற்றின் பிறப்பை அறுக்க உனக்கு அரிதோ   —

————————————————————————–

வியாக்யானம் -2-

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –

நாம ரூப விபாஹா அனர்கமாய் இருக்கிற இத்தை
விபதமமாக்கி
சூஷ்ம ரூபேண அவஸ்தைகளைப் பிறப்பித்து
மஹானாக்கி
அஹங்காரமாக்கி-
தன் மாத்ரைகள் ஆக்கி –
பூதங்கள் ஆக்கி –
பௌதிகமான வர்ண சிருஷ்டி யளவும் வரப் பண்ணி

பின்னை அவ்வருகு உண்டான தேவாதி காயங்களை -அடங்கலும் அவன் முகத்தாலே பண்ணுவதாக
முதலிலே சதுர் முகனை யுண்டாக்கினான் ஆயிற்று

முன்பு உள்ளவை எல்லாம் தானே கை தொட்டுச் செய்து
பின்பு சதுர் முகனை அதிஷ்டித்து நின்று செய்வானாகப் பார்த்தான் –

முன்பு அசித்தைக் கொண்டு கார்யம் கொண்டதோடு பாதி
இவனைக் கொண்டு கார்யம் கொள்ளப் பார்த்ததோடு
வாசி அற்று இருக்கிறதாயிற்று இவனுக்கு –

பாரதந்த்ர்யத்தில் வந்தால் இவனுக்கும் அசித் சாம்யம் உண்டு –
சேதனரான வாசியால் பெறுகிற ஏற்றம் கார்யத்துக்கு
கடவான் அவனே என்று அறுதி இட்டு இருக்கை யாயிற்று

————————————————————————–

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

வியாக்யானம் -1–
தான் உண்டாக்கின பயிருக்குக் களை பறிப்பானும் தானே யானால் போலே
ஸ்ருஷ்டமான ஜகத்தை அழிவு செய்யும் ராஷசரை நிரசிப்பானும் தானே —

ஒரு முறை -ஒரு பர்யாயம்

இரு சுடர் -சந்த்ராதித்யர்கள்

மீதினிலியங்கா -மேலே சஞ்சரிக்கப் பயப்படும்படியாய் –

மும் மதிளிலங்கை-கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற
மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும் படியான ராஷசர்
குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –

இரு கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-
இரண்டு கோடியும் வளைந்து நிற்கும் பிரதானமான ஸ்ரீ சார்ங்கத்திலே பொருந்தி –
இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் -நெருப்பை உமிழா நின்றுள்ள சரத்தாலே கட்டுப் பொகட்டாய்-

வாளியில் அட்டனை -ப்ரஹ்ம சிருஷ்டியைப் போல் அன்றியே –
பத்தும் பத்தாக அம்பால் எதிர்த்துப்-பிராட்டியினுடைய சம்ஸ்லேஷ விரோதியைப் போக்கினால் போலே
என்னுடைய விரோதிகளையும் போக்க வேண்டும் என்று கருத்து-

—————————————

வியாக்யானம் -2-
பிரிவுக்கு ஹேது பூதனான ராவணனை அழியச் செய்தாள் பிராட்டியோ -நீ யன்றோ –

ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய்
காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை
வில்லினுடைய கோடி த்வயமும் வளையும் படி
அத்விதீயமான ஸ்ரீ சார்ங்கத்திலே பூட்டப்பட்டு -இரண்டு எயிற்றையும் யுடைத்தாய்
தொடுக்கும் போது அம்பாய் எதிரிகள் மேலே தைக்கும் போது நெருப்பாய்த் தைக்கும் அம்பாலே முடித்தாய்-

அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் –நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய
முன் ஒரு நாள் தன வில் அங்கை வைத்தான் சரண் -முதல் திரு -59-என்றபடி-

இவ் வாத்மாவுக்கு ஸ்வதஸ் சித்தம் அல்ல –
அய பிண்டத்தையும் அக்னியையும் சேர்த்து வைத்தால் போலே
அன்யோன்ய சம்யோகத்தாலே
அதினுடைய பரமாணுக்கள் ஸூஷ்ம ரூபேண அசித்தில் வந்து சங்க்ரமிக்கை யினாலே யாதல்-அன்றிக்கே –
அதனுடைய குணத்தை பஜிக்கையினாலே யாதல் –
அதினுடைய ஔஜ்வல்யத்தையும் வர்ணத்தையும் உடைத்தாய் இருக்குமா போலே
நித்தியமான ஆத்ம வஸ்து அநாதியாய் உள்ள அசித் சம்யோகத்தாலே
அந்த அசித்திலே அஹம் அபிமானத்தைப் பண்ணும்படி பலிக்கிற-அவித்யா கர்ம வாசனா ருசிகள் –
அவை யடியாக பரிக்ரஹித்த சரீரத்தைப் பற்றி வரக் கடவதான ஆதி வ்யாதி நிஷித்த அனுஷ்டானம்-

இப்படி கார்யமாயும் அடி காண ஒண்ணாதபடி கிடக்கிறவை-
புதுப் புடவையை அழுக்கு கழற்றுமா போலே-க்ரமத்தாலே போகை அன்றிக்கே
ஒரு காலே சவாசநமாகப் போக்க வேண்டில்

நுடங்கிடையை இத்யாதி –
அதுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
பிரபல பிரதிபந்தகங்களை வருத்தம் அறப் போக்க வல்லவனைப் பற்ற வடுக்கும் –

நுடங்கிடையை –
கண்டாருக்கு என்னாய் விளையக் கடவதோ -என்று
அஞ்ச வேண்டும் படியான சௌகுமார்யத்தை யுடைத்தான இடையை
யுடையவளைக் கிடீர் பிரித்து வைத்தது -என்கை-

முன்பு இலங்கையிலே கொடு புக்குச் சிறை வைத்த ராவணன் மிடுக்கு அழியும் படியாக –
மேகத்திலே மின்னினால் போலே அழகிய திருக் கையிலே ஸ்ரீ சார்ங்கத்தை வைத்தவன் –
எதிரிகளை அழியச் செய்கைக்கு ஒரு வியாபாரம் வேண்டா –
கையிலே வில்லை வைக்க அமையும் –

அழகிய திருக் கையிலே வில்லைப் பிடித்தவன் உபாயம் என்னுதல் –
அவனை உபாயமாகப் பற்றுங்கோள்-என்று விதியாதல் –

நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் -என்றதுக்கு கருத்து என் என்னில்
ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை என்னது என்று இருக்கை யாவது –
பிராட்டியைப் பிரித்த ராவணனோடு ஒக்கும் என்கை –
தன்னைப் பற்றினார்க்கு அவள் விரோதியைப் போக்கினாப் போலே விரோதியைப் போக்கிக் கொடுக்கும் என்கை –
அவளோடு ஒத்த பிராப்தியும் அவன் பக்கல் இவனுக்கு உண்டு என்கையும்
அவனைப் பற்றுவார் அவள் முன்னாகப் பற்றுவார் என்கையும் –

ஒரு பேருந்தி இரு மலர்த் தவிசில்ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா-மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் –

இல்லாததை யுண்டாக்கின உனக்கு உள்ளதுக்கு
ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ என்கையும்

பிராட்டியோட்டைக் கலவிக்கு விரோதியான ராவணனை அழியச் செய்த உனக்கு
என்னுடைய பிரதிபந்தகம் போக்குகை அரிதோ என்கையும்

வாளியில் அட்டனை-
ப்ரஹ்ம சிருஷ்டி போலே சங்கல்ப்பத்தாலே செய்கை அன்றிக்கே
நேர் கொடு நேரே பூசலில் நின்று அழியச் செய்தாய் –

————————————————————————–

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

வியாக்யானம் -1-
அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –

மூவடி நானிலம் வேண்டி -நாலுவகைப் பட்ட பூமியிலே -மலை காடு நிலம் கடல் -என்கிற -மூவடியை வேண்டி –

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் –
ஒரு காளமேகத்தில் மின்னலை ஏறிட்டால் போலே-
திரு யஜ்ஞோபவீதமும் -அத்தோடு கூடின க்ருஷ்ணாஜிநமும் விளங்கா நின்ற திரு மார்பை யுடையையாய் –

இரு பிறப் பொரு மாணாகி-த்வ்ஜனுமாய் -ஒப்பில்லாத ஸ்ரீ வாமனனுமாய்
தானே இன்னும் ஒரு கால் இவ்வடிவு கொள்ள வேணும் என்னிலும் இப்படி வாயாத வடிவுடையையாய்

ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-ஒருகால் இரண்டு அடியாலே மூன்று லோகத்தையும் அளந்து கொண்டாய்-

இத்தால்-
இந்தரனுக்கு ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தால் போலே
என்னுடைய சேஷத்வத்தையும் மீட்டுத் தந்து அருள வேணும்-என்கிறார் –

தேவர்கள் சென்று இரந்தார்கட்கு இடர் நீக்கிய -கோட்டங்கை வாமனனாய் -திருவாய்மொழி -7-5-6–என்று
உன்னை இரந்தார்கட்கு நீயும் இரந்து அவர்கள் அபேஷிதம் பார்க்கும் அவன் அல்லையோ –

இசையாதார் தலைகளிலே வைத்த திருவடிகளை இசைந்த என் தலையிலே வைக்கல் ஆகாதோ-

பிரயோஜனாந்தர பரனுடைய இழவு தீர்த்த உனக்கு அநந்ய பிரயோஜனான என்னுடைய இழவு தீர்க்கலாகாதோ

இந்த்ரன் கழஞ்சு மண் அன்றோ இழந்தது -நான் என்னையும் உன்னையும் அன்றோ இழந்தது –

————————————————————————–

வியாக்யானம் -2-
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

பிரயோஜனாந்தர பரர்களான இந்த்ராதிகளுடைய கார்யம் செய்த நீ
உன்னையே பிரயோஜனமாக நினைத்து இருக்கிற என் கார்யம் செய்யலாகாதோ –

மூவடி நானிலம் வேண்டி-ஈரடியாலே பூமியை அளந்து
ஓரடிக்கு அவனை சிறையிட்டு வைக்க நினைத்து மூன்றடியை இரந்தான் ஆயிற்று –

நெய்தல் மருதம் முல்லை குறிஞ்சி என்றால் போலே சொல்லுகிற
அன்னலும் துன்னலுமான பூமியை அர்த்தித்தது –
இந்நாலிலும் ருஷீஷாம்சமாக கழித்தது பாலை நிலம் என்றும் சொல்லுவார்கள் –
இவருக்கு அபிமதம் நாலு என்னும் இடம் தோற்றி இருந்தது இறே

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி-
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-
மேகத்திலே-மின்னினால் போலே சாத்தின யஜ்ஞோபவீதமும்
கிருஷ்ணாஜிநமும் விளங்கா நின்றுள்ள திரு மார்பை யுடையையாய்
உப நயனம் பண்ணின புதுமை தோற்றும் படி இருப்பாயுமாய் –

இந்த்ரனுடைய அர்த்தித்வம் தலைக் கட்டுகைக்காக இட்ட போதோடு இடாத போதோடு வாசி அற-
முகம் மலர்ந்து போம்படி இறபபிலே தகண் ஏறின வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து-
ஒரு கால் த்ரை லோகத்தையும் ஈரடியால் அளந்து கொண்டாய்

ஆசையில்லாதார் தலை மேலேயும் வைக்கும் திருவடிகளை ஆசையுடைய என் தலை மேலேயும் வைக்கலாகாதோ-

இந்த்ரனைப் போலே கழஞ்சு மண் பெறுதல் –
மகா பலியைப் போலே ஔதார்யம் கொண்டாடுதல் செய்ய இருக்கிறேனோ நான் –
உன்னைப் பெற வேணும் என்று அன்றோ நான் அர்த்தித்திக்கிறது-

உன்னை வைத்து வேறு ஒன்றை இரந்தார்க்கோ நீ இரப்பாளனாகக் கார்யம் செய்வது –
உன்னையே இரந்தார் கார்யம் செய்யலாகாதோ –

மதீய மூர்த்தா நமலங்கரிஷ்யதி கதா –ஸ்தோத்ர ரத்னம் -31-என்று இறே நான் இருக்கிறது-

——————————————————————–

நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

வியாக்யானம் -1-
பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்கயோ அபேஷிதம் செய்தது என்னில்
அன்று
ஆபத்தும் விசுவாசமும் என்கிறது அல்பம் உண்டானால்
தான் தண்ணியரான திர்யக்குகளுக்கும் அபேஷிதம் செய்யும் என்கிறது-

நாற்றிசை நடுங்க-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபத்தை நினைத்து கலங்கின கலக்கத்தைக் கண்டு-
ஜகத்துக்கு என்ன மிறுக்குப் புகுகிறதோ -என்று அறியாதே நடுங்க –

அஞ்சிறைப் பறவை ஏறி –
மிக்க அழகையும் வேகத்தையும் உடைத்தான சிறகை யுடைத்தான பெரிய திருவடி மேல் ஏறி-

நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-
நாலா நின்ற வாயையும் மூன்று மதத்தையும் இரண்டு செவியையும் யுடைத்தாய்
வேறு துணை இன்றிக்கே தன் மிடுக்கு அற்று நின்ற ஆனையினுடைய மகா துக்கத்தை

அரந்தை -துக்கம் –

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-அத்தசையிலே வேற்று நிலமாய்
பெரிய நீர் வெள்ளமான மடுவிலே தீர்த்தாய்
முதலையின் வாயில் நின்றும் ஆனையை மீட்டால் போலே
சம்சாரம் கொண்ட என்னையும் மீட்க வேண்டும் -என்கிறார்-

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே தயோர்த் வந்தவ சமம் யுத்தம்
திவ்யம் வர்ஷ சஹச்ரகம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று

ஆனைக்கு முதலை ஓன்று
எனக்கு முதலை ஐந்து

அது மிடுக்கான யானை
நான் துர்பலன் -என்கிறார்

——————————————————–

வியாக்யானம் -2-
பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்காக உன்னை அழிய மாறிக் கார்யம் செய்த அளவேயோ –
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்தவன் அன்றோ –

நாற்றிசை நடுங்க-அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-
ஜகத் ஸ்ருஷ்டியாதிகளுக்கும் சங்கல்பத்ததுக்கு அவ் வருகு யுண்டு என்று அறியாமையாலே
ஜகத் உபசம்ஹாரத்துக்கும் அவ்வருகாய் இருந்ததீ-

இது ஒரு சீற்றம் இருந்த படி என் -என்று இருந்ததே குடியாக எல்லாரும் அஞ்சும்படியாக
மேருவுக்கு இனிய மேகம் போலே -அழகிய சிறகை யுடைய பெரிய திருவடி திருத் தோளிலே ஏறி-
பெரிய வேகத்தோடு

நாலா நின்றுள்ள வாயை யுடைத்தாய்
மூன்று வகைப் பட்ட மதத்தை யுடைத்தாய் -இரண்டு கன்னங்கள் குறி –
இரண்டு செவியை யுடைத்தாய்-வேறு துணை இன்றிக்கே
அத்விதீயமாய் இருக்கிற யானையுடைய துக்கத்தை

அத் தசையிலே வேற்று நிலமாய் மிக்க வெள்ளத்தை யுடைத்தான மடுவிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்து போக்கினாய்

க்ரஹம் சக்ரேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றபடி
மடுவிலே போய்ப் புக்கு ஆனையையும் முதலையுமாக அணைத்துக் கொண்டு போந்து கரையிலே ஏறி
ஆனைக்கு நலிவு வாராத படி திரு ஆழியாலே முதலையைக் கிழித்து பொகட்டான் ஆயிற்று –

ராஜ புத்ரனோடு வினை யுண்ட கைக் கூட்டனுக்கும் பால் திரளை இடக் கடவது காண்-என்று
பட்டர் அருளிச் செய்யும் படி –

நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-என்றால் போலே
சொல்லுவதுக்கு கருத்து யாது என்னில்
பிரஜை கிணற்றில் விழுந்தால் –
காதும் கண்ட வாளியும்-காலும் தலையும் -வடிவும் இருக்கும் படி காண் -என்பாரைப் போலே
இடர்ப்பட்ட இதனுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகம் ஆன படியாலே சொல்லுகிறது –

வேழத் அரந்தையை – –
எளியராய் இருப்பார் நோவு பட்டால் போல் அன்று இறே இதனுடைய நோவுபாடு –

பரமா பதமா பன்ன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து விழ வேண்டும் படி கரை கண்ட ஆபத்து ஆயிற்று –

இவ் வாபத்துக்கு அவதி என் என்னில் –
மநஸா சிந்தயத் வாயால் கூப்பிடுமதோவிற்று-வாயால் கூப்பிடவும் இயலாத படி –

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-
அங்கு காலம் அளவிட்டு இருக்கும் -முதலை ஓன்று -தான் ஆனை –
இங்கோ என்றால் -காலம் அநாதி -இந்த்ரியங்கள் ஐந்து -நானோ துர்ப்பலன் –
ஆனால் வாசி பார்த்துத் தர வேண்டாவோ –

காலைக் கதுவிடுகின்ற -கயலொடு வாளை விரவி -நாச் திரு -3-5-
ஆந்தராளர் குடியிலே பிறந்து ஈஸ்வரன் மர்மஜ்ஞையாய் இருப்பாள் ஒருத்தி வார்த்தை
ஒரு நீர்ப் புழு நலியப் பொறுக்க மாட்டாதவன் –
இரண்டு கிடாய் காலைப் பற்றி நலிகிறது என்கிறாள் –

————————————————————————–

முத் தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-

வியாக்யானம் -1-
உபாயாந்தர நிஷ்டருக்கும் அவற்றை நடத்திக் கொடுப்புதி இறே –
யோகோ யோக விதாம் நேதா -என்கிறபடியே –

முத் தீ –
மூன்று பிள்ளை பெறுவாரைப் போலே –
கார்ஹாபத்ய ஆஹவ நீய -தஷிண அக்னிகளையும் –

நான்மறை –
ருக் யஜூஸ் சாம அதர்வணங்களையும் யுடையராய் –

ஐ வகை வேள்வி-
தேவ யஜ்ந -பித்ரு யஜ்ஞோ -பூத யஜ்ஞோ-மனுஷ்ய யஜ்ஞோ-ப்ரஹ்ம யஜ்ஞ–என்னும்
பஞ்ச மகா யஜ்ஞங்களையும்

இத்தால் கர்ம யோகம் சொல்லிற்று

அறு தொழில் -யஜனம் -யாஜனம் -அத்யயனம் -அத்யாபனம் -தானம் -ப்ரதிக்ரஹம் -என்கிற
ஷட் கர்மங்களை யுடையரான

அந்தணர் வணங்கும் தன்மையை-
அநந்ய பிரயோஜனரான ப்ராஹ்மணராலே ஆஸ்ரயிக்கப் படும் ஸ்வபாவத்தை யுடையையாய் –

———————————–

வியாக்யானம் -2-
வர்ணங்களில் உத்க்ருஷ்ட வர்ணமாய் நல் வழி போகக் கடவதாய் இருக்கும் ப்ராஹ்மண ஜாதிக்கு அடைய-
ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படியைச் சொல்கிறது

முத் தீ-
மூன்று பிள்ளையைப் பெற்ற தாயைப் போலே
ஆஹவ நீய கார்ஹ பத்ய தஷிணாக்னி என்கிற அக்னி த்ரயமும்

நான் மறை –
நாலு வகைப் பட்ட வேதங்களும்

ஐ வகை வேள்வி-பஞ்ச மகா யஜ்ஞமும்

அறு தொழில்-
அத்யயனம் பண்ணுகை -பண்ணுவிக்கை-யஜிக்கை -யஜிப்பிக்கை -தானம் பண்ணுகை கொள்ளுகை-என்றால்
போலே சொல்லுகிற இவற்றைத் தொழிலாக யுடையரான

அந்தணர் வணங்கும் தன்மையை-
ப்ராஹ்மாணருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்லிற்று

————————————————————————–

ஐம் புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக் குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –

வியாக்யானம் -1-
கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து-
சஷூராதி இந்த்ரியங்களை சப்தாதி விஷயங்களிலே போகாமே உள்ளே அடக்கி

நான்குடன் அடக்கி-
மநோ
புத்தி
சித்த
அஹங்காரங்களையும்-செறுத்து

ஆஹார
நித்ரா
பயம்
ஐதுனங்கள் -உடல் உறவு -இவற்றைத் தவிர்த்து என்றுமாம் –

முக் குணத்து இரண்டவை அகற்றி-
குணத் த்ரயங்களில் ரஜஸ் தமஸ் ஸூக்களை த்யஜித்து

ஒன்றினில் ஒன்றி நின்று-சத்வம் ஒன்றினிலே பொருந்தி நின்று –

ஆங்கு-
அந்த யோகத்திலே

இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-
புண்ய பாப ரூபமான கர்மங்களாலே வரும் சம்சாரத்தை அறுக்கும்-
உபாசகராலே அறியப்படும் ஸ்வ பாவத்தை யுடையையாய்

இப்படி இருந்த யோகத்தாலே அனுபவிக்கை யாவது –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வானுடைய மிடுக்குள்ள தசையோடு ஒக்கும் அத்தனை
ஆன பின்பு அவனையே உபாயமாகப் பற்றிப் பிழைக்க வேணும் –

————————————————————————–

வியாக்யானம் -2-
இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது-

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து-
ஸ்ரோத்ராதிகளை விஷயங்களிலே போகாத படி நியமித்து-

நான்குடன் அடக்கி-
நித்ய அநித்திய வஸ்து விவேகம் –
சமதமதாதி சாதனா சம்பத்து –
இஹாமுத்ர பலபோக விராகம்
முமுஷூத்வம் -என்றால் போலே-சொல்லுகிற சாதன சதுஷ்டத்தையும் யுடையராய்

அன்றிக்கே
ஆஹாராதிகளைத் தவிர்த்து என்றுமாம் –

முக் குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில்-ஒன்றி நின்று-
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களில் வைத்துக் கொண்டு ரஜஸ் தமஸ் ஸூக்களை கழித்து
நிஷ்க்ருஷ்ட சத்வத்தை யுடையராய்க் கொண்டு நின்று

ஆங்கு-
அந்த யோகத்தாலே –

இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –
புண்ய பாப ரூப கர்மங்கள் அடியான சம்சாரிக துக்கத்தை-அறுத்துக் கொள்ள வேணும் என்று இருப்பார்
அறியும் ஸ்வ பாவத்தை யுடையனாய் இருக்கும் –

சாதநாந்தர பரிக்ரஹம் பண்ணினார் உன்னைப் பெற்றுப் போகா நிற்க –
உன்னையே சாதனமாக பரிக்ரஹித்த நான்
உன்னைப் பெறாதே போவதே –

————————————————————————–

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-

வியாக்யானம் -1-
தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும்
ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் –
அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது –

முக்கண் நால் தோள் –
மூன்று கண்களையும் -நான்கு தோள்களையும் யுடையவன் ஆகையாலே -பஹூ பரிகரனாய்

ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் –
ஐந்து வாயை யுடைய பாம்பையும் கங்கையையும்
ஏக தேசத்திலே அடக்கின ஜடையை யுடையவன் ஆகையாலே-அதிக சக்தனாய் இருந்துள்ள ருத்ரனும்

அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
இப்பிடார் கொண்டு அறிய ஒண்ணாத
ஸ்வ பாவமாக இருக்கிற பெருமையை யுடையையாய் நின்றாய்

ஆகையாலே பெரிய கிழாயான ருத்ராதிகள் நிலை இதுவானால்
ஷூத்ரரான எங்களுக்கு பெற விரகு யுண்டோ-
நீயே விஷயீ கரிக்கும் அத்தனை என்று கருத்து-

————————————————————————–

வியாக்யானம் -2-
அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்-
அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது –

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
லலாட நேத்ரனாய் -சர்வேஸ்வரன் நாலு தோளும் தானுமாய் இருந்தான் என்று –
தானும் நாலு தோளும் யுடையவனாய்
ஐந்து வாயை யுடைய அரவை யுடையவனாய்
கங்கையை அடக்கின ஜடையை யுடையவனான ருத்ரன்
தன் உயர்த்தி எல்லாம் கொண்டு அறியப் பார்த்தாலும் அறிய ஒண்ணாத ஸ்வபாவம் ஆகிற-
பெருமையை யுடையையாய் நின்றாய் –

கிழாயர் படுகிறது -இதுவானால்
நான் உன்னை அறிக்கை என்று ஒரு பொருள் யுண்டோ-

————————————————————————–

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-

வியாக்யானம் -1-
ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே
சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –

மகா வராஹமாய் பிரளயம் கொண்ட ஏழு உலகத்தையும் திரு எயிற்றினிலே வைத்து அருளினாய் –

இத்தால்
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே
பவார்ணவம் கொண்ட என்னையும் எடுத்து அருள வேணும் -என்கிறார் –

———————————————————–

வியாக்யானம் -2-
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்
பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த லோகங்களை
மகா வராஹமாய் புக்கு இடந்து எடுத்து
திரு எயிற்றினில் ஏக தேசத்தில்
ஒரு நீல மணி அழுத்தினால் போலே கிடக்கும்படி வைத்தாய் –

சம்சார பிரளயம் கொண்ட என்னையா எடுக்கலாகாது –

————————————————————————–

கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-

வியாக்யானம் -1-
மனுஷ்யருக்குப் போக்யமான ஷட் ரச ரூபமான பிரயோஜனம் ஆனாய்

என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

——————————————————

வியாக்யானம் -2-
சாஸ்த்ரங்களால் ஷட் ரசங்களுடைய பிரயோஜனமாய் இருந்து வைத்து-
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

————————————————————————–

சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

வியாக்யானம் -1-
தம்முடைய போக்யமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

சுடர் விடும் ஐம்படை அங்கியுள் அமர்ந்தனை-
மிகவும் விளங்கா நின்றுள்ள பஞ்சாயுதங்களையும்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய் இருந்துள்ள திருக் கைகளினுள்ளே
ஆபரணம் போலே அமரும்படி தரித்தாய்

சுந்தர நால் தோள்-
அழகை வகுத்தால் போலே நாலு தோள்களையும் யுடையையாய்

முந்நீர் வண்ண-
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே

——————————————————————-

வியாக்யானம் -2-
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை-

மிகவும் பிரகாசத்தை யுடைத்தாய் இருக்கிற திவுய ஆயுதங்களை
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகிய திருக் கையிலே தரிப்பாய்

சுந்தர நால் தோள்-
தனக்குத் தானே அழகை விளைப்பதான நாலு திருத் தோள்களை யுடையையாய்

முந்நீர் வண்ண–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே –

————————————————————————–

நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –

வியாக்யானம் -1-
தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –

நின்னீரடி யொன்றிய மனத்தால்-
அநந்ய போக ரசராய்

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்-
கல்மஷம் கழற்றின பூர்ண சந்தரனைப் போலே
தாம்தாம் போகத்தை கொட சொல்லா நின்ற திரு முகத்தை யுடையவராய் –

மங்கையர்-
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்றும்
யுவதிச்ச குமாரிணீம் என்றும்-தங்கள் பருவத்தாலே பிச்சேற்ற வல்ல பிராட்டிமார் இருவரும்

மலரன அங்கையின்-
புஷ்பத்தை த்ருஷ்டாந்திக்க ஒண்ணாத மென்மையை யுடையையான திருக் கைகளாலே

முப்பொழுதும் வருட –
சர்வகாலமும் வருட

அறிதுயில்-
ஆஸ்ரீ த சம்ரஷண பிரகாரத்தை அனுசந்திக்கை

அமர்ந்தனை –
வீசு வில்லிட்டு எழுப்பினாலும் எழுப்பப் போகாது –

—————————————————————-

வியாக்யானம் -2-

நின்னீரடி யொன்றிய மனத்தால்-
தேவரீர் திருவடிகளிலே ஒருமைப் பட்ட நெஞ்சை யுடையவராய்

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் –
சந்தரனைப் போலே தர்ச நீயமாய் குளிர்ந்த திரு முகத்தை யுடைத்தாய் இருக்கிற-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –

மலரன அங்கையின் –
பூ தொட்டால் போலே இருக்கிற மிருதுவான திருக் கைகளாலே

முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –
திருவடிகளை வருட –
ஜகத் ரஷண ரூபமான யோக நித்ரையிலே ஒருப்பட்டு இருந்தாய்-

எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

————————————————————————–

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-

வியாக்யானம் -1-
முன்பு அனுசந்தித்த படியே ரஷித்த ரஷண பிரகாரம் சொல்லுகிறது —

நெறி முறை-
சாஸ்திர மரியாதை தப்பாத படி

நால் வகை வருணமும் ஆயினை-
சாதுர் வர்ண்யமும் நீ இட்ட வழக்கு –
ஆத்மாக்களுக்கு வர்ணங்களைக் கொடுத்ததும்
அவர்களுடைய அனுஷ்டானத்துக்கு ஆராத்யனாய் இருப்பானும் அவன் இறே

அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா-ஸ்ரீ கீதை -9-24- என்றும்
வர்ணாஸ்ரம ஆசாரவத புருஷேண பர –புமான் விஷ்ணுர் ஆராத்யே பந்தா
நான்யச் தத் தோஷகாரகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டும் -ஸ்ரீ கீதை -4-13-என்றும் -சொல்லக் கடவது இறே –

(அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே–ஸ்ரீ கீதை -9-24

ஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும்,
போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்!
து தே மாம்-ஆனால் என்னை அவர்கள்
தத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர்,
அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.

நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்;
என்னை மனிதர் உள்ளபடி அறியார்;
ஆதலால் நழுவி வீழ்வார்)

(சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்–ஸ்ரீ கீதை -4-13

குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது,
தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும்,
அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்.
செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.)

மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-
ஆத்மாக்களுடைய தேக ஆரம்பங்களான மகா பூதங்களும் நீயே

மேதகு-
மேவித்தக்கு இருக்கும்

மேவுகை யாவது
தேவ அஹம் மனுஷ்ய அஹம் என்கிறபடியே பொருந்தி இருக்கை
அதாவது
யாதேனும் ஒரு ஆக்கையிலே புக்கு –திருவிருத்தம் -95-அங்கே தக்கிருக்கை –
அதாவது
கர்மத்துக்கு அனுகூலமாய் இருக்கை

இத்தால்
சத்தாதிகள் நீ இட்ட வழக்கான பின்பு
உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ என்கை –

————————————————————–

வியாக்யானம் -2-
சாஸ்திர முறை தப்பாத படி முறையிலே நடக்கிற நாலு வகைப் பட்ட வர்ணங்களும்
நீ இட்ட வழக்காய் இருக்கிறது
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் நீ இட்ட வழக்கு
சத்தாதிகளும் உன் அதீனமான பின்பு உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ –

————————————————————————–

அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –

சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –

அறுபத முரலும் கூந்தல் காரணம்-
வண்டுகள் தேனைப் பருகி முரலா நின்றுள்ள திருக் குழலை யுடையவள் ஆகையாலே-
போக்ய பூதையான நப்பின்னை பிராட்டியின் பொருட்டு

ஏழ் விடை யடங்கச் செற்றனை –
ஏழு எருத்தையும் ஊனப் படாத படி நெரித்தாய் –

இத்தால்-
நப்பின்னை பிராட்டி யுடைய சம்ஸ்லேஷத்துக்கு விரோதிகளைப் போக்கினால் போலே-
என்னுடைய விரோதிகளையும் போக்கித் தந்து அருள வேணும் -என்று கருத்து –

————————————————————————–

வியாக்யானம் -2-
அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை-

ஆறு காலை யுடைத்தாய்-
மது பான அர்த்தமாக படிந்த வண்டுகள் மது பானமத்தாய்க் கொண்டு
ஆளத்தி வையா-மயிர் முடியை யுடைய நப்பின்னை பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்துக்கு
பிரதி பந்தகமான ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்தாய்

என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் –

————————————————————————–

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-

வியாக்யானம் -1-
அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-

————————————————————————–

வியாக்யானம் -2-
ஆறு வகைப் பட்ட பாஹ்ய சமயங்களால் அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையையே இருந்தாய் –
சார்வாகர் -பௌத்தர்-சமணர் -நையாயிக வைசேஷிகர் -சாஙக்யர் பாசுபதர் –

————————————————————————–

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –

வியாக்யானம் -1-
ஐந்து லஷணம் உடைய திருக் குழல் கற்றையை யுடைய
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தாய் –

மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

——————————————————————

வியாக்யானம் -2-
அஞ்சு லஷணத்தை யுடைத்தான மயிர் முடியை யுடையாளாய் –
சுருண்டு பளபளத்து -நறுமணம் அடர்த்தி மென்மை –
ந கச்சித் ந அபராத்யதி என்னும்
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-

————————————————————————–

அற முதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-

வியாக்யானம் -1-
தர்மார்த்த சகல புருஷார்த்த பிரதனுமாய் –
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகனாய் –
ஸூக துக்கங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகனாய்
சர்வமும் ஸ்வ பிரகாரமாக இருக்கச் செய்தே -அவற்றோடு ஓட்டற்று நின்றாய்

இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –

————————————————————————–

வியாக்யானம் -2-
தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற புருஷார்த்த சதுஷ்ட்யங்களுமாய்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே ஸ்வ ரூபேண நின்று -அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று

ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ஸ சம்ஜஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு புராணம்
என்னலாம் படி நிற்பானாய்

சுக துக்கங்களுக்கு நியாமகனாய்

காரண அவஸ்தையிலே சத் சப்த வச்யனாய்

சிருஷ்டி காலத்தில் வந்தவாறே
பஹூஸ்யாம் என்கிறபடியே –
விஸ்த்ருதனாய் நிற்கிறாயும் நீ

————————————————————————–

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–

வியாக்யானம் -1-
குன்றாமது மலர் -என்று மேலுக்கு
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

குன்றா மது மலர்ச் சோலை-
குன்றாத மது வெள்ளத்தை யுடைத்தான பூஞ்சோலை –
ஆராவமுத ஆழ்வாருடைய கடாஷம் ஆகிற அமுத வெள்ளத்தாலே வளருகிற
சோலை யாகையாலே நித்ய வசந்தமாகச் செல்லுகிறது –

வண் கொடிப் படப்பை-
அழகிய கொடிக்கால்களையும் நீர் நிலத்தையும் யுடைய

வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும் செந்நெல் ஒண் கழனித் திகழ் வன முடுத்த –
பெருகி வாரா நின்ற
திருப் பொன்னி மஹார்க்கமான ரத்னங்களைக் கொழித்து ஏற வருகிற

இத்தால்
விளைகிற சென்நெல்லையும் யுடைத்தாயாகையாலே அழகிய கழனியையும் யுடைத்தாய்
விளங்கா நின்ற அழகிய வனங்களாலும் சூழப் பெற்ற

கற்போர் புரிசை –
வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி

கனக மாளிகை-
பொன்னாலே செய்யப் பட்ட மாளிகை

நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்-
அதில் நிமிரா நின்றுள்ள கொடிகள் சந்த்ரனைச் சென்று துவக்கும் –

செல்வம் மல்கு தென் திருக் குடந்தை-
நிரதிசயமான சம்பத்தையும் போக்யதையும் யுடைய திருக் குடந்தையிலே

அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க-
அநந்ய பிரயோஜனரான பிராமணர் ரஹச்யமான ஸூக்த்தங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க

ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம-
தன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிக்கப் பட்ட
பணங்களை யுடைய திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையில்
ஜகத் ரஷணத்துக்காக உணர்ந்து கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே சர்வேஸ்வரன் ஆனவனே

ஆடரவு-
திரு வநந்த வாழ்வான் உடைய உஸ்வாச நிஸ்வாசங்களாலே
தூங்கு தொட்டிலைப் போலே என்னவுமாம் –

————————————————

வியாக்யானம் -2-
குன்றாத மதுவையும் மலரையும் யுடைத்தான சோலையையும் யுடைத்தாய்
அழகிய கொடிகளை யுடைத்தான தோட்டங்களையும் யுடைத்தாய்
மாறாத ஜல சம்ருத்தியையும் யுடைத்தான பொன்னி பாய்ந்து ரத்னங்களைக் கொழித்து ஏறிடா நிற்பதாய்
அழகிய சென்நெல்லையும் யுடைத்தான கழனிகளை யுடைத்தாய்
திகழா நின்றுள்ள வனத்தை சுற்றிலே யுடைத்தாய் –
தொழில் ஓரப்படா நின்றுள்ள மதிளையும் யுடைத்தாய்
பொன்னாலே செய்யப் பட்ட மாளிகைகளிலே நட்ட கொடிகளானவை ஆகாசத்தில்
சஞ்சரிக்கிற சந்த்ரனை துவக்கினாலும் சுற்றிடா நிற்பதாய்
நிரவதிக சம்பத்தையும் போக்யதையும் யுடைத்தான திருக் குடந்தையிலே
பிராமணர் வேத ஸூக்த்தங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க
உன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வநந்த வாழ்வான் ஆகிற
படுக்கையிலே ஜகத் ரஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகனே —

————————————————————————–

நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

வியாக்யானம் -1-
உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –
இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும்
சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –

————————————————————————–

வியாக்யானம் -2-
என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ வே வேங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

April 30, 2022

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

494-499ஆம்பக்கங்களிலுள்ளது.
https://www.tamilvu.org/node/154572?linkid=118853

——–

ஒரு தனித் திகிரியி னிரு விசும்பொழுக்கத்
தொருஞான்றொரு பகலொடியா வுழப்பிற்

(இருவிசும்பொழுக்கத்து) பெருமையை யுடைய ஆகாச வீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொரு கணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்

பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மத நால்வாய்க் கரியுரிமுக்கட்
செம்மல்

(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தை யெல்லையாக வுடைய நிலத்தின்
கண் ணுயர் திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு

(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாத பாகனையுடைய தேரின் மீதே

(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினை யுடைய பெரிய கையினையும், பெருகாது சிறுகாது
தம்மி லொத்த புழையொடு கூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப் போலச் சிவந்து,

இருகணு மிமையாத் தேவர்க
ளொருபோழ்தகலா தொரு வழிப்பட நின்
றிருகையுங் கூப்பி முப்போதினுமிறைஞ்ச
நான்முக முதல்வனினசைஇய நல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்

முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த

முக்கோற்பகவர்முறைமுறைபிறழா
விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்

முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்

நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா

பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணககோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்

வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே.

இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது.
இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும்,
பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க.
பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது.
ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க.

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொரு
நெறிப்பட விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய,
நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய
கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற மூன்றுபாலுந் தம்மாலாய
பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப, விரண்டுபக்கமு மின்போன்றதொரு
மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு மொருகூறுபாடெய்த
விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்மாறுபாட்டைக்கெடுத்து
மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந் தங்கப்பட்ட
சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு
நல்வினை தீவினை யென்னு மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை
யித்தன்மைத்தென நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர்
சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்
பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு,
உலகின்கண்ணுள்ள இனியவுயிர்க ளஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த
நமன்றிக்கி லெழுந்த கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டது
விளங்கும்படிக் குத்தர கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத்
தேனையொழுக்கு நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய
மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து, பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய
ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு, பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது
திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும்,
அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற திருப்பவளத்தினைத் திறந்து,
வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக,
ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை
கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச் சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு
முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரிய
செயலொடு முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரிய
பிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே ! ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே !
அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத்
திருவுளமகிழ்ந் தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக்
கருணை புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.

ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி.

பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது.

பிணர் – சற்சரைவடிவு.

செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு.

நசைஇய – விரும்பப்பட்டன.

முழுநலம் – பேரானந்தம்.

தெற்றென – தெளிய.

பிறழாது – மாறாடாது.

ஒருங்கு – ஒக்க.

ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை.

முற்குணம் – சாத்துவிககுணம்.

நாலாங்கடவுள் – இந்திரன்.

அமைத்த – விதித்த.

இறும்பூது – ஆச்சரியம்.

உளர்தல் – குடைதல்.

அவிழ்த்தல் – ஒழுக்குதல்.

நலம் – ஆனந்தம்.

நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.

உறுபொருளைந்துடன் என்பது
“மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் – தொக்கியலு,
மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை.
எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடை
யூர்தியின் முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழுகடற்புவனத்
தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல் மூவுலகமுமளந்தவனிரு
செவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும் பிணிதவிர்த்தருள் ஞானபூரண!
நாவீற!
குருகாபுரிவரோதய!
எதிராசனையாண்ட விருசரணாம்புயத் தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற்
கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே
எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான் பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–மூன்றாவது–சொல்லணியியலுரை—பகுதி-2 -சித்திரகவி.–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

சித்திரகவி.

270.வல்லினமெல்லினமிடையினப்பாட்டே
நிரோட்டியமோட்டியமோட்டியநிரோட்டிய
மக்கரச்சுதகமதன்வருத்தனையே
வக்கிரவுத்திவினாவுத்தரமே
சக்கரபெந்தம்பதுமபெந்த
முரசபெந்தநாகபெந்த
மிரதபெந்தமாலைமாற்றே
கரந்துறைசெய்யுட்காதைகரப்பே
பிரிந்தெதிர்செய்யுட்பிறிதுபடுபாட்டே
சருப்பதோபத்திரங்கூடசதுர்த்தங்
கோமூத்திரிசுழிகுளந்திரிபங்கி
யெழுகூற்றிருக்கையொடிருபானுறும்
பழிதீர்மடக்குடைச்சித்திரப்பாவே.
(எ-ன்) இன்னுமம்மடக்கலங்காரங்களுட்படுவனவாஞ் சில மிறைக்கவி களுணர்த்துதனுதலிற்று.
மிறைக்கவியெனினுஞ் சித்திரப்பா வெனினு மொக்கும்.

(இ-ள்) வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாகச் சொன்ன விருபத்தாறும் முன்சொல்லிப்போந்த
சொல்லொடு மெழுத்தோடுங்கூடிய குற்றமற்ற சொல்லணியினுண் மடக்கின்பாற்படுஞ் சித்திரகவியா மென்றவாறு.

இதனுட் பாட்டென்பதனை மூன்றிடத்துங்கூட்டுக. எண்ணும்மை தொக்கு எண்ணேகார மிடையிட்டு வந்தன ; என்னை?
“எண்ணேகார மிடையிட்டுக்கொளினு, மெண்ணுக்குறித்தியலுமென்மனார்புலவர்” என்பதாகலின்.
இருபானாறும் என்னு மும்மை எச்சவும்மையாதலால் மாத்திரைச்சுருக்கமும், மாத்திரைவருத்தனையும்,
ஒற்றுப்பெயர்த்தலும், திரிபதாதியும், சதுரங்கபெந்தமும், கடகபெந்தமும் என்னு மித்தன்மை யனவெல்லா முரைத்துக்கொள்க

வல்லினப்பாட்டு

271.அவற்றுள்,
வல்லினமுழு துறல்வல்லினப்பாட்டே.
(எ-ன்) வைத்தமுறையானே வல்லினப்பாட்டாமா றுணர்-ற்று.

(இ-ள்) வல்லினவெழுத்தாறும்வந்து ஒழிந்தவினமிரண்டும் வாராதேபாடுவது வல்லினப்பாட்டா மென்றவாறு.

பொற்றொடிகற்சட்டகத்தைப்போக்கிப்புறத்திறுத்த
கற்புறத்தற்காட்சிக்கதிகொடுத்த–சிற்றடிப்போ
துச்சிப்பதிக்கத்தாகூற்றச்சுறுத்தாது
கச்சிப்பதிக்கத்தாகை. (767)

இதனுள் வல்லினவெழுத்தாறும்வந்து பிறவினவெழுத்துக்கள் வாராதது கண்டுகொள்க.

(இ-ள்) திருக்கச்சிப்பதிக்குக் கத்தனே ! என்னை யமன்வந் தச்ச முறுத்தாது, நீ பொன்னினாற்செய்த
தொடியினையுடையாள்கற்படிவத்தைப் போக்கி யவளைவிட்டுப் புறமாறினகற்பு மீட்டு மவளிடத்தெய்தவும்
பண்டைச்சரீரத்தினதழகெய்தவுங்கூட்டுஞ் சாபவிமோசனத்தைக் கொடுத்த சிறிய திருவடிகளாகிய
தாமரைப்போதை யென்சென்னியிலே சூடத் தருவாயாக, அதனோடும், அஞ்சாதேயென்னும் அபயத்தமுந் தருவாயாக வென்றவாறு.

அச்சமுறுத்தாது என்பது அச்சுறுத்தாதெனத் தொகுக்கும் வழித்தொகுத்தலென்னும்விகாரத்தானின்றது ;
“குணமாலையையச்சுறுத்த” வென்பதுபோலக் கொள்க. துறை – கடவுள்வணக்கம்.

மெல்லினப்பாட்டு

272.மெல்லினமுழுதுறன்மெல்லினப்பாட்டே.
(எ-ன்) மெல்லினப்பாட்டாமாறுணர்–ற்று.

(இ-ள்) மெல்லினவெழுத்தாறும்வரப்பாடுவது மெல்லினப்பாட்டா மென்றவாறு.

மனமேநினைஞானமன்னாமைமீன
மனமேனமெங்ஙனெனினங்ஙன்–முனமானா
னேமிமான்மாமானினிநீண்மனமான
நேமிமானன்னாமநீ. (768)
இது மெல்லினமாறினாலும்வந்த மெல்லினப்பாட்டு.

(இ-ள்) மனனே ! மீனமும் அன்னமும் ஆமையும் ஏனமும் எப்படியேயிருக்குமென்னி லப்படியே முன்னந் திருவவதாரமானவன்,
பூமிதேவியாகிய மான்போலும்விழியையுடையாளுக்குந் திருமகளாகிய பெண்ணுக்கும் அவர்கள்மனமெப்படி யப்படியான
ஞானமன்னன், சக்கரத்தையுடையான், அவனது நல்ல திருநாமங்களை யிடைவிடாது நீ நினைப்பாயாக வென்றவாறு.
எனவே அந்நினைவே யான்மலாபத்தைத் தருமென்பது கருத்து. துறை – இதுவுமது.

இடையினப்பாட்டு

273.இடையினமுழுதுறலிடையினப்பாட்டே.
(எ-ன்) இடையினப்பாட்டாமாறுணர்–ற்று.

(இ-ள்) இடையினமாறும்வரத்தொடுப்ப திடையினப்பாட்டா மென்றவாறு.

வேயாலலையால்வில்வேளாலயலவரால்
யாயாலுயிர்வாழ்வார்யாவரே–யோய்விலராய்
வாழ்வாருயிர்வழியேவாழ்வாரருளாள
ராழ்வாரருளிலரேயால். (769)
இஃது இடையினமாறும்வந்தபாட்டு.

(இ-ள்) ஒழிவில்லாதவாழ்வினையுடையார், உயிரின்கண்ணே நீங்காதுவாழும் வாழ்வினையுடையார்,
கிருபையை யாட்சியாகவுடையார், அவர்யாரெனில்? ஆழ்வாரென்னுந் திருநாமத்தையுடையார்
(எமக்குத்தாரு மார்புந் தரவேணுமென்னுங்) கிருபையிலர் ; ஆனபடியாலே தோழீ ! வேய்ங்குழல்முதலாகிய
பகைகளாற் புமான்களையெய்தாது தனியிருந்தவரு ளுயிர்வாழ்வா ரொருவருமில்லை யென்றவாறு.

முன்னிலை யெஞ்சிற்று. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல்.

நிரோட்டியம்

274.இதழ்குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்.
(எ-ன்) வைத்தமுறையானே நிரோட்டியமாமா றுணர்-ற்று.

(இ-ள்) அதரமு மதரமுங் குவியாதுங் கூடாதும் நடப்பது நிரோட்டியமா மென்றவாறு. உம்மை யிரண்டிடத்துந் தொக்கன.

நாதனரங்கநகர்நாராயணனறைசேர்
சீதநளினத்தினிற்சிறந்த–காதற்
கனிநானிலக்கிழத்திகட்கினியகாந்தித்
தனிநாயகன்றாள்சரண். (770)
இது நிரோட்டியம்.

இதனுள் நறைசேர்சீதநளினத்தினிற்சிறந்தகாதற்கனி – திருமகள். நானிலக்கிழத்தி – பூமிதேவி.
கட்கினியகாந்தி – கண்ணிற்கு விருப்பத்தைத்தரு மழகு. துறை – கடவுள்வணக்கம்.

ஓட்டியம்

275.இதழ்குவிந்தியைந்தியல்வதுவேயோட்டியம்.
(எ-ன்) வைத்தமுறையானே யோட்டியமாமா றுணர்–ற்று.

(இ-ள்) அதரமுமதரமுங் குவிந்துங் கூடியு நடப்பதுவே யோட்டியமா மென்றவாறு.

குருகுகுருகுகுருகொடுகூடு
குருகுகுருகூருளுறுகோ. (771)
இஃது இதழ்குவிந்தவோட்டியம்.

(இ-ள்) மனனே ! சங்க சங்கொடுங் குருகென்றபறவைகள் குருகுகளோடுந் திரண்டியங்குங் குருகாபுரியுட்கோவை நினை யென்றவாறு.

மூன்றாமுருபின்மே லும்மை தொக்கு விரிந்தன. ஓடு இடைநிலைத்தீபகம். கோவை என்னு மிரண்டாவது இறுதியிற் றொக்கது.
உறு என்றது நினையென்றாயிற்று. மனனேயென்னு மெழுவாயுருபு முன்னிலையெச்சமாயிற்று.
பா – குறள்வெண்பா. துறை – கடவுள்வணக்கம்.

பம்மும்பம்மும்பம்முமம்மம்மமைமாமை
பம்முமம்மமும்மேமம்பாம். (772)
இஃது இதழியைந்தவோட்டியம்.

(இ-ள்) மை பம்மும் – (வலவனே யுனதுதேரைப்பின்னிட்டு விரைந்த) மேகம்,
(இதன்முன்சென்று தேர்வரும்வழிமேல்விழி வைத்த இல்லறக்கிழத்தியிருந்த நகரின்கட்) படியும்.
பம்மும்பம்மும் – அதனால், வான்மீன்கணங்களும் மறையும் ; இருள்செய்யும் என்றபடி.
(அங்ஙன மிருள்செய்யுமிடத்து) அம்மம்ம – ஐயோ ! ஐயோ ! மாமைபம்முமம்மமும்மேமம்பாம் – அழகியமுலை பசலைதழைவதாம் என்றவாறு.

எனவே என் சத்தியவசனமென்னாமென்பது பயனிலை. அடுக்கு அவலப்பொருணிலைக்கண்வந்தன.
பகுதி – பொருள்வயிற் பிரிதல். துறை – வலவனொடுகூறல். பா – இதுவுமது.

குருகுமடுவூடுகுழுமுகுருகூரு
ளொருபெருமானோவாமையூறு–முருகொழுகு
பூமாதுவாழும்புவிமாதுமேவுமொரு
கோமானுவா*வோதுகோ. (773)
இஃ திருவகையோட்டியமும்வந்த வோட்டியம்.

இதன்பொரு ளுரையிற்கொள்க. அவன்றிருவடிகளேகதியென்பது பயனிலை.
* உவா – நிறைவு.
துறை – கடவுள்வணக்கம்.

ஓட்டியநிரோட்டியம்

276.இருமையுமொன்றினுளிருவகைத்தாயுறும்
பெருமிதமோட்டியநிரோட்டியமெனப்பெறும்.
(எ-ன்) இதுவு மவ்வோட்டியநிரோட்டியங்கட் கோர் சிறப்பு விதிகூறுகின்றது.

(இ-ள்) ஓட்டியம், நிரோட்டியமென்னு மிரண்டுதன்மையு மொரு செய்யுளகத்தா யிரண்டுகூறுபாட்டானடை பெறுதலுறும்
பெருமையுடையது ஓட்டியநீரோட்டியமெனப் பெயர்பெறு மென்றவாறு. இரண்டுகூறு பாட்டானென்னுமவை மேற்காட்டுதும்.

மதிமடவார்வேலைவேய்மாரவேள்சோலை
பதிகுயிலோடேவன்பகைகூர்–விதியுங்
குறிதோநாகூராகுறிதுளவக்கோதை
முறிகூயருளேமுற. (714)
இஃது ஓட்டியமும் நிரோட்டியமும் முறைதடுமாறாது முறையே வந்தஓட்டியநிரோட்டியம்.

இதனுள், குறிதோ – ஓரொன்று குறியதுன்பத்தைச்செய்வதோ வென்க. ஓகாரம் எதிர்மறை. முறி – தளிர்.
ஒழிந்தபொரு ளுரையிற்கொள்க. திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – துயரறிவுறுத்தல்.

வதுவையொருபோதுவழுவாதுவாழும்
புதுவைவருமாதுருவம்பூணு–முதுமைபெறு
நாதனரங்கனையேநன்றறிந்தார்க்கேயடியேன்
றாதனெனநெஞ்சேதரி. (775)
இது முன்னடியிரண்டு மோட்டியமும் பின்னடியிரண்டு நிரோட்டியமு மாகவந்தவோட்டியநிரோட்டியம்.
இவ்விரண்டுதாரணமு மிங்ஙன மிரண்டு கூறுபாட்டான்வந்த வோட்டியநிரோட்டியம். இதன் பொருளுரையிற்கொள்க.
திணை – பாடாண். துறை – சமயவணக்கம். உறுமென்ற விதப்பினானே நிரோட்டியவோட்டியமுமுள. அவை வருமாறு :-

கற்றைச்சடையார்கயிலைக்கிரிகளைந்தான்
செற்றைக்கரங்கள்சிரங்கணிறைந்–தற்றழிய
வேவேவுமெவ்வுளுறுமேமமுறுபூமாது
கோவேமுழுதுமுறுகோ. (776)
இது முதலீரடியுந் தனிச்சொல்லும் நிரோட்டியமும் பின்னிரண்டடியு மோட்டியமுமாகவந்தநிரோட்டியவோட்டியம்.
இவற்றின் வேறுபாடு களெல்லாம் வந்தவழிக் கண்டுகொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

அக்கரச்சுதகம்

277.ஒருபொருள்பயந்தவொருதொடர்மொழியாய்
வருவதையோரெழுத்தாய்க்குறைவகுப்பிற்
சுருங்குபுபலபொருடோன்றுவதாய
வருங்கவியக்கரச்சுதகமாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே யக்கரச்சுதகமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைத் தருவதொருதொடர்மொழியாய்த் தொன்று தொட்டுவருவதைப் புவலனா லொரோ
வெழுத்தாகக்குறைத்துக்கூறுங் கூறுபாட்டாற் றொடர்ச்சொ லீரெழுத்துப்பதமு மோரெழுத்துப்பதமு மாகச் சுருக்கமெய்திப்
பலபொருடோன்றுவதாய அரியகவி அக்கரச் சுதகமாமென்றவாறு. சுதகம் – அழிவு.

ஒளிகொண்டபுத்தூருறைகோதைதீந்தேன்
றுளிகொண்டபூந்துளபத்தோன்றலாற்கீந்த
தளிகொண்டதையணிந்ததன்றதனைப்பற்றல்
களிவண்டிமிர்தேங்கமழ்வாசிகைசிகைகை. (777)
இஃது அக்கரச்சுதகம்.

(இ-ள்) கீர்த்தியைக் கைக்கொண்ட வில்லிபுத்தூருறையுங் கோதை சூடிக்கொடுத்தா ளினிய தேன்றுளிக்குஞ் செய்கையைக்
கைக்கொண்ட பூவோடுகூடிய துளவமாலிகையையுடைய பெரியோனுக் களித்ததுவு மதனைச் சூடியதும்
அதனைப் பற்றியதும் புலவீர்காள் ! கூறுங்காலத்துத் தேனையுண்டு களித்தலையுடைய
வண்டுக ளாரவாரிக்கும் வாசிகை சிகை கையா மென்றவாறு.

வாசிகை – மாலை. சிகை – திருக்குழற்கற்றை. கை – திருக்கை. இதனு ளவ்வாறுநின்ற கூறுபாடு கண்டுகொள்க.
திணை – பாடாண். துறை – வள்ளிவாழ்த்து.

அக்கரவருத்தனை

278.ஒருதொடர்மொழியீற்றோரெழுத்தினைப்பிரித்
தொருபொருடாவைத்தோரொன்றாக
மிக்கபல்பொருடாமேல்வைப்பனவே
யக்கரவருத்தனையாகுமென்ப.
(எ-ன்) வைத்தமுறையானே யக்கரவருத்தனையாமா றுணர்ற்று.

(இ-ள்) ஒருபொருடருவதொருதொடர்மொழியீற்றின் ஓரெழுத்தினைப் பிரித்துப் பிறிதொருபொருடரவைத் ததன்மேல்
ஒரோவெழுத்தாகப் பலபொருடோன்றவைப்பது அக்கரவருத்தனை யென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

எந்தைதிருத்தாளெழுகங்கையீறுமா
விந்தமலராட்கிசைந்தவீறினுக்கு–முந்தெழுத்துஞ்
சித்தசனன்வாண்முதலுஞ்சேயிழையாய்சேர்த்தக்கா
லத்தமெழிலோலைப்பூவாம். (778)

இஃது அக்கரவருத்தனை. அப்படி யிதனுட்சேர்க்கும்படி யெப்படி யென்னில், எம்முடைய சுவாமியாகிய
ஸ்ரீமந்நாராயணன் றிருவடிகளிலெழுந்த கங்கையென்றதொடர் மொழியீற்றினின்ற ககரவைகாரத்தைப் பிரித்துக்
கையெனக்கொண்டு, அரவிந்தமலராட்கிசைந்த வீறென்பதனைத் தகையென்றாக்கி, அதற்குமுதலெழுத்தாகிய
தகரத்தைப்பிரித்துச்சேர்த்துத் தகையென்றாக்கி, சித்தசனன்-காமன் ;
அவனுடைய வாளாகிய கேதகையென்றதிற் ககரவேகாரத்தைப் பிரித்துச்சேர்த்துக் கேதகையென்றாக்கி
அத்தம், எழில், ஓலைப்பூ என முடிக்க. வீறு – அழகு. அதனைத் தகையெனக் கூட்டினமையுங் காண்க

வக்கிரவுத்தி

279.வெளிப்படைவிளியினும்வினாவினுமெய்ம்மை
யொளித்துமற்றொன்றினையுரைப்புழிமறித்து
நிரைத்தபன்மொழிதொறுமிசைதிரிநிலைத்தா
யுரைப்பதுதானேவக்கிரவுத்தி.
(எ-ன்) வைத்தமுறையானே வக்கிரவுத்தியாமா றுணர்-ற்று.

(இ-ள்) வெளிப்படையாகவிளிக்குமிடத்தும் வினாவுமிடத்தும் முன்னின்ற பொருண்மையை மறைத்துப் பிறிதொன்றாக
வெதிர்மொழி கொடுத்தவிடத்து மீட்டுந் தெளிவிப்பனவாய்நிரைத்த தொடர்மொழி தோறும்
அம்முன்னின்றவ ரிரட்டுற விசைதிரிநிலைத்தாயுரைப்பதே வக்கிரவுத்தியா மென்றவாறு.

வெளிப்படை யீரிடத்துங் கூட்டுக. இரட்டுற – சிலேடையாக. முன்னிலையோ ரெச்சமாக விரித்துரைக்கப்பட்டது.

ஏற்றமுறுமோதிமத்தாவென்றேன்விண்ணோர்க்
கின்னமுதன்றளித்தவன்பேரென்றான்வெற்பிற்
றோற்றமுறுமெகினவாகனத்தாவென்றேன்
றொன்மறையோன்பெயரென்றான்சுரந்துவிண்ணோர்
போற்றவருமன்னவாகனத்தாவென்றேன்
புரந்தரனார்பெயரென்றான்பொன்னேயென்னே
மாற்றமுறப்பகர்ந்தமகிழ்மாறற்கென்றன்
மையலுரைத்தெவ்வாறுமருவுவேனே.
இது வக்கிரவுத்தி.

(இ-ள்) பொன்னையொப்பாய் ! நமதுவீதியி லுலாப்போந்த மகிழ்மாறரைத் தொழுத யான், ஒருதலைபற்றிய
காதலாலே யேறுதற்குண்டான வோதிமத்தையுடையவனேயென்றேன் ;
அப்பொழுது மலையை மத்தாகவுடையவ னெனும்பெய ரென்பெயரன்று, திருப்பாற் கடலைக் கடைந்து இனிய வமிர்தத்தைத்
தேவர்களுண்ணும்படிக்குக் கொடுத்த திருமால்பெய ரென்றான். மீட்டும் வெள்ளிமலைபோன்று பிரகாசிக்கு மெகினவாகனத்தாவென்றேன் ;
அப்பொழுது அதற்கு மிமவானிடத்துப்பிறந்த அன்னம்போலுநடையையுடைய வுமையை வாமபாகத்திலுடைய சிவனது
அத்த னென்னும்பெயர் பழைய மறையையுடைய பிதாமகன்பெய ரென்றான்.
மீட்டும், சுரந்துவிண்ணோர் போற்றவருமன்னவாகனத்தாவென்றேன்; அதற்குந் திரண்டு தேவர்கள்போற்று மன்னவனே !
மேகத்தையுடையவனே யென்னு மிருபெயரும் புரந்தரனதுபெய ரென்றான் ; ஆகையா லென்னே?
யான் கொண்ட மையலை யவனொடுகூறி யவன்றிருமார்பைத் தழுவுவ தெவ்வா றென்றவாறு.

பொன்னேயென்றது தோழியை. திணை – பெண்பாற்கூற்றுப் பெருந்திணை. துறை – மெலிவொடுகூறல்.

அஞ்சக்கரனோவென்றேன்சங்
கரனாமென்றான்றனியாழி
மிஞ்சத்தரித்ததிருத்தேர்வெய்
யவனோவென்றேன்வெயிலென்றான்
செஞ்சொற்பரிதிவலம்பயில்விண்
டோவென்றேன்பொற்சிலம்பென்றான்
வஞ்சர்க்கிரங்காவரங்கனுக்கென்
மாலெப்படியேமொழிவேனே. (780)
இதுவுமது.

(இ-ள்) அழகிய சக்கரத்தையுடையானோவென்றேன் ; அப்பொழுது அஞ்சக்கரங்களையுடையவ னுருத்திரனா மென்றான்.
ஒப்பற்ற திருவாழியை வலது கையிற் றரித்தவனுமாய்த் திருமகளைச் சிந்திக்கிறவனுமாய்த்
திருமகளாற் சிந்திக்கப்பட்ட விருப்பத்தையுடையானோ வென்றேன் ; அப்பொழுது மது வெயிலோனென்றான்.
மீளவுஞ் செம்மையொடுகூடிய கீர்த்தியையுடைய பரிதியை வலதுகையிற்றரித்த விண்டுவோவென்றேன்;
அதற்கும் அது பொற்சிலம்பென்றான்; ஆகையால் வஞ்சத்தையுடையோரிடத்துக் கருணைசெய்யாத்
திருவரங்கேசனுக் கியான்கொண்ட காதலை யெப்படியேகூறுவே னென்றவாறு.

துறை – இதுவுமது. முன்னது வெளிப்படைவிளியினும் பின்னது வெளிப்படைவினாவினும் அடைவே வந்தவாறு காண்க.

வினாவுத்தரம்

280.துதித்திடுமொருபொருட்டொடர்ச்சொலைப்பிரித்து
மதிப்படவினாயவகைக்கெதிர்மொழியாய்
விதிப்படவுரைப்பதுவினாவுத்தரமே.
(எ-ன்) வைத்தமுறையானே வினாவுத்தரமாமா றுணர்-ற்று.

(இ-ள்) உலகம் புகழ்வதா மொருபொருளைக் காட்டு மொரு தொடர்மொழியினைப் பிரித்துப் பிரித்த பதந்தொறு
மனத்துட்கொள ஒருவர் வெளிப்படையாகவினாய பலவேறுவகைத்தாங்கூறுபாட்டிற்கு முன்னின்றவன்
மாற்றமில்லாதமுறையொடு மெதிர்மொழியாவுரைப்பது வினாவுத்தரமா மென்றவாறு.

வண்டுளபத்தான்றுயிலும்வாழ்வேதுதெள்ளமுதம்
பண்டுகடைநாட்டறியாய்ப்பற்றியதென்–முண்டமுனி
போசனமாய்க்கொண்டதெவன்போதிலானுக்குவந்த
வாசனமதென்னரவிந்தம். (781)
இது வினாவுத்தரம்.

இதனுள், போதிலான் – பிரமன். அவனாசனமென் னரவிந்தம் என உலகந்து திப்பனவாய ஒருபொருடருமொழியை
அரவு+இந்து+அம் எனப் பிரித்து, துளபத்தான்றுயிலும்வாழ்வு அரவு, அமுதம் பண்டுகடைநாட் டறியாய்ப்பற்றியது இந்து,
முண்டமுனிபோசனமாய்க்கொண்டது அம் என முறையே நிறுத்தி, போதிலானுக் குவந்த வாசனமதென் னரவிந்தமென்னச்
செவ்வனம்விரியாது அருமை தோன்ற விரித்துக்காட்டியது காண்க.
இது வாகைத்திணையுட் புலமைவென்றி.

சக்கரபெந்தம்

281.சக்கரத்துட்டடுமாறுதறானே
சக்கரபெந்தமெனச்சாற்றினரே.
(எ-ன்) வைத்தமுறையானே சக்கரபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) சக்கரத்தினுள் அக்கரந் தடுமாறப் பெந்திப்பது தானே சக்கரபெந்தமெனச் சாற்றினர் பெரியோ ரென்றவாறு.
பெந்தம் – சம்பந்தம்.

282.அதுவே,
நாலிருமூன்றிருநாலெனநாட்டுஞ்
சார்பினிலார்புனைதன்மையவாகும்.
(எ-ன்) இதுவும் சக்கரத்தினது கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அக் கூறப்பட்ட சக்கரம், நரலார் ஆறார் எட்டாரெனப் புனையப்பட்ட தன்மைகளை யுடையவா மென்றவாறு.

சக்கரமென்பது தேரினதுருள். ஆர் என்பது அதனதகத்துச் செறிக்கப்பட்ட கதிர். புனைதல் – செய்தமைத்தல்.

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா (782)
இது நாலாரச்சக்கரம்.

இதனுள், நடுவு வா வென்னு மெழுத்து நின்று எட்டாகியும், நாலார்மேலும் நாலு னகாரம்நின்று எட்டாகியும்,
சூட்டின்மேனின்ற எழுத்துப் பன்னிரண்டினுள் நாலுதிக்கினுநின்ற மகரஆகார மிரண்டும் வகர ஆகார மிரண்டும்
ஆக நாலும் எட்டாகியுந் தடுமாறி ஆக எ-ம் 32 எழுத்தாகி, சிந்தடிநான்கான்வந்த வஞ்சிவிருத்த மமைந்தவாறு காண்க.

(இ-ள்) வானாதியாய பஞ்சபூதமானவனே! தேவர்கள்விரும்பும் மனுகுலமானவனே!
பெருமையையுடைய வாமனரூபமானவனே! விசும்பினிடத்து மேகம்போலுநிற மாக்கஞ்செய்தவா ! என்றவாறு.
எனவே யென்னைக் காப்பாயாக வென்பது கருத்து. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க–வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது. (783)
இதுவும் நாலாரச்சக்கரம்.

இதனுள், நடுவு தகரநின்று அதனைச்சூழ்ந்த குறட்டின்மேல் திருமலையென்னும்பெயர் நின்று ஆர் நாலினும்
நாலுநாலாகப் பதினாறெழுத்து நின்று சூட்டினமே லிருபத்தெட்டெழுத்து நின்று
ஆக எழுத்து நாற்பத்தொன்பதும் ஐம்பத்தஞ்சாக மாறாடின.
அவை மாறாடினவகை :- நடுவு தகரம் இரண்டாகவும்,
சூட்டின்மையங்களில் முதன்மையத்தில் து மூன்றாகவும்,
ஒழிந்தமையத்தில் தே பூக மூன்றும் ஆறாகவும் மாறாடினவாறு காண்க.

(இ-ள்) தேவா – சகலதேவன்மாருக்குந் தேவனே ! மோகூரா திருமோகூரானே !
திதமகிபா – உண்மைப்பொருளானமகிபனே !
மாமோக – பெரியபிராட்டியைமோகிக்கப்பட்டவனே ! பிராட்டியால் மோகிக்கப்பட்டவனே! எனினுமாம். என்னை?
“தடுமாறு தொழிற் பெயர்க் கிரண்டு மூன்றுங், கடிவரை யிலவே பொருள்வயி னான” என்பதனா னறிக.
பூவாளி ஓஒ பொருதலைக்க – காமன் மிகவும் பாணங்களாற் பொருது அறிவினதுநிலையைக் குலைக்க அதனோடும்.
ஓவாது – ஒழிவின்றியே. துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு – காமனது வெற்றிமுரசான கடலே துன்பமதெனும்
பூமடந்தைபோல்வாளுக்கு அவற்றினோடும்,
வெங்கனலாவானேன்விது – குளிர்ந்தசந்திரனும் வெம்மையைச்செய்யுந் தழலாவானே னென்றவாறு.

பூவாளி – பூவைப்பாணமாகவுடைய காமன். இதனைப் பெந்திக்குமாறு :- இடதுபக்கத்துச்சூட்டின்மையத்துத்
தேவாவென்றெடுத்து மோகவென முடித்து, வலமாக அதற்கடுத்தசூட்டின்மையத்துப் பூவாளியென் றெடுத்து
ஓவாது என்று முடித்து இறுதிநின்ற துவ்வென்பது முதலாகச் சூட்டின்வலமேறி விதுவென முடிக்க.

இதனுள், ஓஒ வென்னு மோகார வளபெடை சிறப்பின்வந்தது. என்னை?
“தெளிவினேயுஞ்சிறப்பினோவு, மளபினெடுத்தவிசையவென்ப” என்பதனா னறிக.
“இசைகெடின்…. குறியே” என்பதனால் இரண்டு மாத்திரையான ஓகாரம் செய்யுட்கண் ணோசைசிதைந்தவிடத்து
மூன்று மாத்திரையாய் நீண்ட குறிக்குத் தனக்கினமாகிய குற்றெழுத்தினொடு நின்றதல்லது இரண்டெழுத்தல்லவென்ப தறிக.
திணை – பெண்பாற் கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

மாதவனேதென்னரங்கேசமான்மருளாகமிகு
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே. (784)
இஃது ஆறாரச்சக்கரம்.

இதனுள், நடுவு கே யென்னுமெழுத்து நின்று அதனைச்சூழ்ந்த குறட்டில் ஆறக்கரம்நின்று சூட்டிற் பதினெட்டெழுத்து நின்று
குறட்டுக்குஞ் சூட்டுக்கு நடு ஆராறில் ஆர்தோறும் ஏழெழுத்துநின்று ஏழெழுத்தில் நடுவெழுத்தாறும்
தென்குருகூர் என்னும் பேராகநின்று ஆக அறை அறுபத்தேழில் எழுத் தறுபத்தேழும் ஒற்றுள்பட ஒன்பதெழுத்து
மாறாடினமுறையாலேறி எழுபத்தாறாக நேரசைக்கலித்துறை நின்றவாறு காண்க.

நடுவிற் கே மூன்றாகவும், முதற்சூட்டின்மையத்து வே மூன்றாகவும், ஒழிந்தசூட்டின்மையத்துநின்ற
மா கு பொ மே வா ஐந்தும் ஒரோவொன்று இவ்விரண்டாகவும் நின்றன. இதனைப் பெந்திக்குமாறு :-
இடதுபாகத் திரண்டாஞ்சூட்டின்மையத்து மாதவனே யென்றெடுத்து நேரே மிகு என முடித்து,
அதற்கடுத்த மூன்றாஞ்சூட்டின் மையத்துப் போதன் என எடுத்து மே யென நேரே முடித்து,
நாலாஞ் சூட்டின்மையத்து வாதிதமாகுதற்கென எடுத்து, பொதுவே என முடித்து,
முடித்த வே நாலாமடிக்கு முதலெழுத்தாகப் பின்னும் மேதகவேயென அதனின்முடிக்க.

(இ-ள்) திருமகள்காந்தனே ! அழகிய அரங்கேசனே ! மேகம் போன்ற திருமேனியனே !
பெரிய பிரமனு மவன்முதலாங் கடவுளரு மன்பினோடுந்தொழுங் கேசவனே ! சகலான்மாக்களுக்கும் பொதுநின்றவனே !
என் றுன்னைநினைந்து மிகவுங்குழைவார்க் கிதயதாமரை யகத்தோனே ; வேதமுதல்வனே ;
நின்னைக்குறித்து நமாநம என்னா நின்றேன் ; அதற்குத்தகுவதாகவென்னாருயி ரின்னும் பொல்லாங்கை விளைக்கப்பட்ட
செனனத்தை யிவ்வுலகத்தெய்தாது இன்பமெய்துதற்கு என்னைக் காப்பாயாக வென்றவாறு.

போதனும் என்னு மும்மை எச்சவும்மை. இதனுள், இரண்டாமடியீறு தொடங்கி யொழிந்தன மாட்டுறுப்பாக நிகழ்ந்தன.
துறை -கடவுள்வணக்கம்.

தண்மதிநிகர்வதயங்கியவதனம்
பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்
மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா
மாறன்றுடரிமலைதன்மின்போன்றொளிர்
தண்ணென்பொற்சுனைமன்னியமாமல
ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே. (785)
இஃது எட்டாரச்சக்கரம்.

இதனுள், நடுவு தகரம் நின்று சூழ்ந்தகுறட்டில் வடமலையப்பன் என்னும் பெயர் நின்று
ஆர்மேல் நாற்பத்தெட்டெழுத்தாய்ச் சூட்டின் மேன் முப்பத்திரண்டாய்நின்றவாறு காண்க.
நடுநின்ற தகரம் நாலெழுத்தாய் முதற்சூட்டின்மையந்தொடங்கிநின்ற த பொ ம மா ம் ர் டா ர் எட்டும் பதினாறாய்,
குறட்டில் வடமலையப்பன் என்னும் எட்டும் பதினாறாய், பத்தொன்பதெழுத்து மாறாடி அறை எண்பத்தொன்பதினின்ற
எண்பத்தொன்பதுக்கு நூற்றெட்டெழுத்தால் ஆறடி நிலைமண்டிலவாசிரி யப்பாவாய் முற்றியது.

இதனுள், நிடதப்புரைவரைநிகர் – நிடதமாகியவுயர்ந்தமலையை யொத்த. மலைதன் – மலைதன்னில்.
மின்போன்றொளிர் – மின்னைப் போன் றொளிராநின்ற. தண்ணென்பொற்சுனை – குளிர்ந்த பொன்னோடு கூடிய சுனை.
மன்னியமாமலர் – நிலைபெற்ற நீலோற்பலம்போல்வ.
அம் மடவார்மையுண்டாட்டமர்கண் – அழகியமடவார் மையெழுதப்பட்டுக் களிப்போடுகூடிய கண்கள். உண்டாட்டு – களிப்பு.
நண்பனே ! பத்தரல்லாத தாமதத்தினைவிரும்புவோர்க் கெட்டா மாறன் றுடரிவெற்பிடந் தன்னி லெனக் கூட்டுக.
நண்பனே யென்னு முன்னிலை எச்சம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

சேடுறுதட்பச்சீரிமகிரிக்கைவிலின்
போர்பொருவீரபுராரிசெற்றத்தடர்த்
தின்பமதுறவமரியலருணிருதனேர்
முன்புமேத்தமராரிம்பர்நம்பாலுறு
சேர்மழைபோனிறத்திருவுறைமுதல்வன்
தாரிணைத்தாளெதிர்தாளுற்றுன்னெஞ்சே. (786)
இதுவும் எட்டாரச்சக்கரம்.

இதனுள், நடுவு ரி என்னு மெழுத்துநிற்க, குறட்டிற் சீராமராமசெயம்என்னும் ராமதோத்திரநின்று,
ஆர்மேற் குறட்டுடன் அஞ்சா மறையில்நின்றும் வலமாக,தருமமேகைதரும் என்னும் பழமொழி நின்று,
ஆர்மேல் நாற்பத்தெட்டெழுத்தாய்ச் சூட்டின்மேன் முப்பத்திரண்டெழுத்தாய் முதலடியின் முதலெழுத்தாகிய சே அஞ்சாமடிக்கு
முதலெழுத்தாய் ஆறாமடிக்கு நெஞ்சேயென்ன முடிந்தமொழிக்கீறாய் மூன்றெழுத்தாயவாறுங் காண்க.
இதனைப் பேந்திக்குமாறு :- தன் முன்னர்ச் சூட்டுமையத்துநின்றுஞ் சேடுறு என நோரோட்டிக் கைவிலின்
என அஞ்சாமாரின் முடித்து, வலமாக இரண்டாமார்தொடங்கி நாலாமார்வரைக்கும் லுறு என முடித்து,
மீட்டும் முதலடியிற் சே என்றவெழுத்தை யெடுத்துச் சேர்மழைதொடங்கி நெஞ்சேயெனச் சூட்டின் வலமாகச்சுற்றி முடிக்க.

(இ-ள்) நெஞ்சே – நெஞ்சமே ! சேடுறு…. விலின் – பெருமை யெய்துங் குளிர்ந்த சீர்பொருந்திய
விமவானென்னுங் கிரியைக் கைவில்லாக்கி அதனால், போர்…. அடர்த்து – திரிபுராதிகளுடன் போரைப் பொரும்
வீரத்தையுடைய புராரியென்னுஞ் சிவன் கைலையை யெடுத்தலைத்ததனாற் கோபித்து விரலையூன்றி மதுகையையழிப்ப வீடுபட்டு.
இன்பமது…. முன்பும் அவன் பாடிய பாட்டினுக்குருகி மீள வின்பமுறும்படி சமர்க்கு வேண்டு மாயுதமுதலிய வியல்பினை
யெல்லா மடர்த்த சிவன் றான்கொடுப்பவெய்திய மழைபோனிறநிருதன் சமர்க்கு நேர்பட்ட முதனாளுங்
கும்பகருணன்முதலியோர் பட்டபின்னும். எதிர்தாளுற்று – அவனெதிர்தரத் தானும் போர்க் கெதிரு முயற்சியையுற்று.
இம்பரேத்தமர் – இவ்வுலகின்கண்ணே யாவரு மேத்துந் தனதுபோரால். ஆர் – அவனதுயிரையுண்ணும்.
திருவுறை…… தாள் – திருமகள் விட்டுநீங்காத முதல்வனது தாமரைப்பூப் போன்ற இரண்டு திருவடிகளையும்.
உறுநம்பால் – மிக்க விருப்பத்தால். உன் – சேர். நினை – தியானத்தாற் கூடுவாயாக என்றவாறு.

இங்ஙனந் தியானிக்க வீடேறலா மென்பது பயன். அவனுயிரை என்பது சொல்லெச்சம்.
முன்பும் என்னும் உம்மை யெச்சமாதலாற் பின்னுமென்ப தாயிற்று. அமரால் மூன்றாவது தொக்குநின்று விரிந்தது.
ஆர் உண்ணும் என வினைத்தொகைவாய்பாடு செய்யுமென்னும் பெயரெச்சவாய்பாடாக விரிந்து
தன்னெச்சமான திருவுறைமுதல்வனென்னும் பெயர்கொண்டு முற்றியது. திணை – பாடாண். துறை – கடவுள் வணக்கம்.

பதுமபெந்தம்

283.எண்ணிரண்டிதழாய்க்கோணிருநான்கின்
கண்ணுறநடுவணப்பொகுட்டதுகாட்டிப்
பண்ணமைப்பதுவும்பதுமபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே பதுமபெந்தமாமாறுணர்-ற்று.

(இ-ள்) ஒரு தாமரையை எட்டுக்கோணினு மிவ்விரண்டாகப் பதினாறிதழெழுதி நடுவே
யொரு பொகுட்டினையுங் காண்பதாக்கிச் செய்தமைப்பதும் பதுமபெந்தமா மென்றவாறு.
உம்மையான் மகாபதும பெந்தமு மொன்றுள.

மாறாமாலாலேமாறாமா
மாறாமாவேளேமாறாமா
மாறாமாகோவாமாறாமா
மாறாமாவாதேமாறாமா. (787)
இது பதுமபெந்தம்.

(இ-ள்) முதலடியீற்று மா – திருவன்னாள். மாறாமாலால் – நீங்காத மாலால். ஏமாறா – வருந்தும்படிக்கு.
(இரண்டாமடி) மாறாமாவேளேமாறாமாம் – மாயோன் றரப்பட்ட கரிய வேளம்பு மாற்றமாமாம்.
மூன்றாமடியில் மகரவொற்றைப்பிரித்து, ஆறாமா – ஆறுபோலவாம் ஐயோ என்றாக்கி,
(மூன்றாமடியி லிறுதியில் மா என்னும் எழுத்தைப்போட்டு) கோவாமாறா என்பதனைக் கூட்டி, கண்ணீர்தீராது
ஐயோவெனச் சேர்த்து, மூன்றாமடியினின்ற மாவை நாலாமடியின் முதன்மாவொடுங்கூட்டி,
மாமாறா என்றாக்கி, பெரிய மாறனே ; என்க.
மாவாதேமாறாமா – வண்டுகள் தேனையுண்ணவரும் தேன்றுளும்புந் தரமத்தனே யென்றவாறு.

பெரியமாறனே ! திருவன்னாள்வருந்தும்படிக்குக் கரிய வேளம்பு மாற்றமாகாநின்றன ; கண்ணீர் தீறாது ;
ஐயோ ! இனி எங்ஙனமுய்யு மென்னும் பயனிலைகூட்டி முடிக்க. மகாபதுமபெந்தம் வந்தவழிக் கண்டு கொள்க.
திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

இனிப் பதுமபெந்தத்தினுள் நடுவிற்பொகுட்டினின்ற மா என்ற எழுத்தொன்றும் எட்டெழுத்தாகவும்,
அதனைச்சூழ்ந்த நாற்கோணங்களினின்ற எட்டெழுத்தும் பதினாறாகவும்,
இடையிற்கோணாலினுநின்ற எழுத்தெட்டுந் திரிந்து மாறாடாதுநிற்கவும் பாடினவாறு காண்க.

முரசபெந்தம்

284.எழுதியவரிநாலினுண்முதலீறன
பழுதறமந்திரிச்செலவாய்ப்படர்ந்தய
லொழுகியுங்கீழ்மேற்றனதீற்றுற்றபின்
னறைதொறுமேனையவடைவேபாதியின்
முறைதடுமாறுதன்முரசபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே முரசபெந்தமாமாறுணர்-ற்று.

(இ-ள்) நாலடியான்வரு மொருசெய்யுளை நாலுவரியாக வெழுதி
அவற்றுண் முதலடியுமீற்றடியுமாகியவிரண்டின்முதலடி கீழ்முன்றுவரியினும் மந்திரிச்செலவாகச் சென்று
நாலாமடியி லஞ்சாமறையி லேறி யந்தவார் மேனோக்கி மீள வப்படியே முதலடியீற்றின்முற்றியும்,
இறுதிவரியும் மந்திரிச்செலவாய் மேனோக்கி நாலாமடியுற் றஞ்சாமறையிலேறி யந்தவார் கீழ்நோக்கி
யவ்வண்ணமே யிறுதியடியீற்றின் முற்றியும்,
ஏனையிரண்டனுள் இரண்டாமடி முற்பாதியினின்றுங் கீழ் வலமாக மூன்றாமடியின்முதலே முற்றியும்,
மூன்றாமடி யிரண்டாமடிப்பிற்பாதியினின்றுழிநின்றுங் கீழிடமாக மூன்றாமடி யிறுதியின்முற்றியும்,
இரண்டடியும் முத லீறென்னும் முறைதடுமாறப் பாடுவது முரச பெந்தமா மென்றவாறு.

இங்ஙனம் மேல்வருஞ் செய்யுளை எழுதிக் கண்டுகொள்வது.

போதவானதுவாதரா
மாதவாதணவாதநா
நாதவாணதவாரவா
வேதவானதுவாரகா. (788)
இது முரசபெந்தம்.

(இ-ள்) போத – ஞானவானே ! வானதுவாதரா – வானவராதரிக்கப் பட்டவனே ! மாதவா – திருமகள்காந்தனே !
(மூன்றாமடி முதலீறாக) நா தணவாத நாத – நாவைவிட்டுநீங்காத வென் னாதனே !
வாண- உலகினைக் காக்கப்பட்டவனே! தவாரவா – அழிவில்லாத அராவையுடையவனே !
வான வேத துவாரகா – (எனப் பாடமாற்றுக) பரமபதமிடமாக நின்றும் பூமியில் வருதற்குப் பெருமையை
யுடைய வேதத்தை வாயிலாகவுடையவனே ! என்னைக் காப்பாயாக வென்றவாறு. துறை – கடவுள் வாழ்த்து.

நாகபெந்தம்

285.வரியரவிரண்டாய்வால்வயிறிரண்டாய்த்
தெரிமூலைநான்காய்ச்சிறந்துமும்மூன்றுட
னிலைபெறுமொருபானிருபானிறீஇத்
தலையிரண்டெழுத்தாய்ச்சார்தரச்சந்தியிற்
கவினுறுத்தெழுத்துக்கலந்துறுப்பாக
நவிலிருபாவேநாகபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே நாகபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) வரியையுடையபாம்புக ளிரண்டாக, அவற்றிற்கு வாலிரண்டாக வயிறிரண்டாகத் தோன்றப்பட்ட
மூலைக ணான்காகச் சிறப்பெய்தி, வாலிரண்டி னிலைபெறுமெழுத் தொன்பதுடன்,
வயிறிரண்டி லெழுத்துப் பத்தாய், மூலைநான்கி லெழுத் திருபதாய்த் தலையிரண்டி லெழுத் திரண்டாய்ப் பொருந்த நிறுத்தி,
சந்திகளில் அழகுதருவனவா மெழுத்துக்க ளிரண்டிற்குங் கூடிநிற்பனவா முறுப்பாகப் புலவனாலுரைக்கப்படு
மிரண்டுபாவென்பது தானே நாகபெந்தமா மென்றவாறு.

நிறுத்தியென்பது மத்திமதீபம். மும்மூன் றொருபானிருபானென்பன நிரனிறை.
புலவனா லென்பது எச்சம். தெரிமூலை – தோன்றப்பட்ட மூலை.

மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை
யாறனளிமேயவன்னமே–யேறுத்
தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன்
னெமர்யாயெமையாளிறை. (789)

அறமுமறமமைந்தவன்பென்பதுவும்
பெறனன்னலமதுண்மைபேரா–துறுபாற்கோர்
மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே
யேனமெமையாளியை. (790)
(இ-ள்) மாறனென்றுஞ் சடகோபனென்றுந் திருநாமத்தையுடையான்,
வளவிய குருகூரின்கண்வாழும் பொருநையாற்றையுடையவன்,
கிருபையோடு கூடிய அன்னத்தையேறு முத்தமன்,
நாவினால் திருமகளையுடைய பெரிய சரதனாம் மாயோன் றிருவடிகளைப்பாடும் பாவினையுடைய மன்னன்,
எம்மனோர்க்கு மாதா, எம்மையாளு மிறைவ னென்றவாறு. எனவே, யமனு மெம்மிடத்து வாரான் ;
எமக்குச் செனனமு மில்லை, சித்திப்பதும் முத்தியேயா மென்பது பயன்.

அறத்தினது பகுதியு மறத்தினாலமைவெய்திய அன்பென்று கூறப்படுவதும் நமக்குண்டாதலும்
நல்ல பேரின்பத்தையெய்துவ துண்மை யாக வது நம்மைவிட்டு நீங்கா தவற்றையுறும்பகுதிக்கு ஒப்பற்ற பெரிய மனனே !
காளமேகத்தினது அழகிய நிறமேவிய திருமாலை, ஏனமாக வடிவெடுத்தவனை,
எம்மையாளப்பட்டவனை நினைப்பாயாக வென்றவாறு.

ஆக வெண்பா விரண்டினால்
எழுத்து நூற்றொருபத்தெட்டும் அறை தொண்ணூற்றாறனுண் மாறாடி யடங்கினவாறு கண்டுகொள்க.
திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம்.

இரதபெந்தம்

286.தேரெனமந்திரிச்செலவெனச்செய்யுளை
யேர்தரவடக்குவதிரதபெந்தம்
(எ-ன்) வைத்தமுறையானே இரதபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) சதுரங்கவறையுட் டேர்செல்வது எனவும், மந்திரி செல்வதெனவு மொருசெய்யுட்குண்டான
வெழுத்துக்களைத் தேரின தறைக்குநடுவே ஒரு திருநாமமாதல் ஒரு பழமொழியாத லழகுபெற்று நிற்க
விரதத்திலே பெந்திப்பது இரதபெந்தமா மென்றவாறு.

சதுரங்கவறையினுளென்பது சொல்லெச்சம். செய்யுளையென்பதாகு பெயர்.
அறைக்கு நடுவே திருநாமமாதல் பழமொழியாத னிற்க வென்பது ஏர்தர என்பதே ஞாபகமாக விரிந்தது.

நாராராராயநயனயணாவிண்ண்
ணாராமணாயனிலமாயவா–சீராய
நன்காநமநமநன்காநமநம
மன்காமன்றாதாய்நம. (791)
இஃது இரதபெந்தம்.

(இ-ள்) நாரார் – அன்பினையுடையார். ஆராய் அ நயன் – ஆராயப் பட்ட அந்தப் பேரின்பத்தினிடத்து.
அயணா – வியாபரிக்கப்பட்டவனே! விண் – ஆகாயமும். ஆராம் – மிகுந்த செலமும். மண் – நிலமும். ஆய் – ஆகி.
அனிலம் – காற்றும். ஆயவா – ஆனவனே ! சீராய – பொலிவினையுடைய நந்தகோபாலனே!
நன்காநமநம – நன்மையையுடையவனே ! உன்னை நமக்கரிக்கிறேன். நன்காநமநம – முன்னைப்போல வுரைக்க.
மன்காமன் – மகளி ராடவர்க் கரசனாகிய மன்மதன். தாதாய் – தந்தையே !
நம – உன்னை மீளவு மென தான்மாவைக் காத்தற்பொருட்டு நமக்கரிக்கிறே னென்றவாறு.

நார் – அன்பு. அ சுட்டு. நயன் – சுகம். அயணம் – வியாபாரம். ஆம் – செலம்.
மண்ணாய் என்பது மணாய் என இடைகுறைந்துவந்தது. ஆயவா – ஆனவனே. நன்கு – நன்மை. மன் – அரசன்.
தாதை என்னும் ஐகாரவீறு விளிக்கண் ஆயாயிற்று. நமநம நமநம என்பது இசைநிறையசைநிலை.
விண்ண் என்னு மொற்றளபெடை, வெண்பாவினது செப்பலோசைசிதைந்தவழி யோசையை நிறைத்தற்பொருட்டு வந்தது.
என்னை? “குன்றுமே லொற்றளபுங் கொள்” என்பதனா லறிக.
இதனுள் நடுவும் இருபக்கமும்நாராயணாயநமவென நின்றவாறு காண்க. துறை – கடவுள்வணக்கம்.

மாயவனேவேதமதியேவயநாக
பாயவனேதேநளினபாதாபராபரா
தூயவனேகாரணாபூரணாதோணிலமா
னாயகனேசீராகநாராயணாயநம. (792)
இதுவும் இரதபெந்தம்.

சீர் – திருமகள். தோள்நிலமான் – தோளிலிருக்கும் பூமிதேவி.
இதனுள், நடுவே நாராயணாயநமவென்னுந் திருநாமம் நின்றவாறு காண்க.

மாலைமாற்று

287.ஒருசெயுண்முதலீ றுரைக்கினுமஃதாய்
வருவதைமாலைமாற்றெனமொழிப.
(எ-ன்) வைத்தமுறையானே மாலைமாற்றாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபாட்டையீறுமுதலாக வாசிக்கினு மப்பாட்டேயாகி வருவதனை மாலைமாற்றென்னுஞ்
சித்திரக்கவியென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

லாமனாமானமா
பூமனாவானவா
வானவானாமபூ
மானமானாமவா (793)
இது மாலைமாற்று.

(இ-ள்) வாமனா – வாமனனேயென்று.
வானவாவானவானாம – தேவர்களால் விரும்பிச்சொல்லுவதாய பெரியதிருநாமத்தை யுடையவனே !
மான மா பூ – பெருமையையுடைய திருமகளுக்கும் பூமிதேவிக்கும். பூமானமனா – பூமானாகியமன்னனே !
மானாம – மாலாகிய திருநாமத்தை யுடையவனே! வா – என்முன்னேவந்துதோன்றுவா யென்றவாறு.

இஃ திரண்டுவிகற்பத்தான்வந்த வஞ்சித்துறை. துறை – இதுவுமது.

கரந்துறைசெய்யுள்

288.முதலொருசெய்யுண்முடித்ததனீற்றிற்
பதமதனிறுதியிற்பயிலெழுத்துத்தொடுத்
திடையிடையிட்டெதிரேறாய்முதலய
லடைதரப்பிறிதொருசெய்யுள்கரந்தங்
குறைவதுகரந்துறைசெய்யுளென்றுரைபெறும்.
(எ-ன்) வைத்தமுறையானே கரந்துறைசெய்யுளாமாறுணர்-ற்று.

(இ-ள்) முதலே யொருசெய்யுளை எழுதிமுடித்து, முடித்த விறுதிமொழியினீற்றெழுத்துத்தொடங்கி,
எதிரேறாக இடையிடையோரெழுத்தாக இடையிட்டு முதன்மொழிமுதலெழுத் தயலடைய முடிக்கப் பிறிதோர்
செய்யுளாக வதனகத்துக் கரந்துறைவது கரந்துறை செய்யுளென் றுரைக்கப்பெறு மென்றவாறு.

போர்வைவாயூராரலரளிபொருகாம
நீர்மையாழ்வாரயலணைதருமிக
வேர்தவாவாழ்தலாமயில்கைமுருகுகு
தார்தராமூதாமணிதகவுருவமும். (794)
இது கரந்துறைசெய்யுள்.

(இ-ள்) ஆரலரளி என்பதை அளியாரலரென மாற்றி, வண்டுக ளாரவாரிக்கப்பட்ட பூவாளியால் என்க.
பொருகாம – பொரவந்த காமனே ! நீர்மையாழ்வார் – நற்குணத்தையுடைய ஆழ்வார்.
மயில்கை – எமது மயில்போலுஞ்சாயலையுடையாள்கையில்.
மூதாவுருவமுமணிதக வாழ்தலாம் – பெருமையையுடையவா முருவங்களு மழகினது பெருமை யெய்த உயிர்வாழ்தலாம்படிக்கு.
ஏர்தவா முருகுகு தார்தரா – அழகு கெடாத தேனொழுகும் வகுளமாலிகையைத் தந்து.
வாயூர் – (ஊர்வாய் என மாறுக) எமதுபதியிடத்து. அயலணைதருமிக – அய லெம்மோடு மிக நட்புச்செய்யாநின்றாராதலால்.
போர்வை – உனதுபோரை யொழிவாயாக வென்றவாறு. இது மாட்டுறுப்பு. அப்படி யிதனுட் கரந்த செய்யுள் :-

முருகணிதாரார்
குருகையிலாழ்வார்
கருணையவாயார்
மருளிலராவார். என்பதாம். (37)
காதைகரப்பு

289.காதைகரப்பதுகாதைகரப்பே.
(எ-ன்) வைத்தமுறையானே காதைகரப்பாமாறுணர்-ற்று.

(இ-ள்) புலவராற்குறிக்கப்பட்ட செய்யுளுட் பிறிதொருசெய்யுட் குக்கூடுவதானவெழுத்துக்கள்புகுதாதே
தாங்குறித்த பழையசெய்யுட் கரந் தெழுத்துப் பிறக்கிக்கொள்ளலாம்படி பாடுவது
காதைகரப்பா மென்றவாறு.

கொல்யானைமூலமெனக்கூப்பிடமுன்காத்தானை
யெல்லாவுயிர்க்குமுயிரெனலாம்–புல்லாணித்
தோடார்நறுந்துளபத்தோண்மாலைக்கைதொழுதா
னாடானொருநாணமன். (795)
இது காதைகரப்பு.

இதனுட்போந்தசெய்யுள், “கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி, யெல்லா வுயிருந்தொழும்” என்பது.
இதனைப் பழம்பாட்டெனவே மேலன நவமாமென்றுணர்க. இவற்றை மாறாடுவாரு முளர்.

பிரிந்தெதிர்செய்யுள்

290.பிரிந்தெதிர்வனவேபிரிந்தெதிர்செய்யுள்.
(எ-ன்) வைத்தமுறையானே பிரிந்தெதிர்செய்யுளாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருசெய்யுள் முதலேமுடிந்தா லச்செய்யுளீற்றெழுத்துத் தொடங்கி யெதிரேறாகநடந்து
வேறோர்செய்யுளாக நிகழ்தல் பிரிந்தெதிர் செய்யுளா மென்றவாறு.

நீரநாகமா
தாரமாகமே
வாரமாகமா
ணாரணாககா. (786)
இது பிரிந்தெதிர்செய்யுள். இதனுள், பிரிந்தெதிர்செய்யுளாவது :-

காகணாரணா
மாகமாரவா
மேகமாரதா
மாகநாரநீ.
என்பதாம்.
இவற்றுள், முதலேநடந்தசெய்யுளின்பொருள் :- நீரநாக – நற்குணத்தனே ! அனந்தசயனத்தனே !
மா தாரமாக – திருமகளைப் பாரியாக. மேவாரமாக – பொருந்து மாரங்கிடக்கு மார்பனே !
மாணாரணாக – பெருமையையுடைய வேதசொரூபனே ! கா – என்னைக் காப்பாயாக வென்றவாறு.

எதிரேற்றின்பொருள்:-
மாகமாரவாம் – துறக்கத்துள்ளார்பெருக விரும்பும். நார – நற்குணத்தையுடையவனே !
மேகமாக – மேகத்தைப் போலுந் திருமேனியையுடையவனே ! மாரதா – சத்துருக்களை வெல்லு முழுத்தவீரனே !
நாரணா – நாராயணனென்னுந் திருநாமத்தனே ! நீ கண் – நினது சொருபரூபகுணவிபூதிகளை மயக்கமறவறிதற்கு
நீயே யெமக்கு ஞானக்கண்ணானதால். கா – எம்மைக் காப்பாயாக வென்றவாறு.

இவையிரண்டும் வஞ்சித்துறை. துறை – கடவுள்வாழ்த்து. அநுலோமப்பிரதிலோமமென்பது மிது.

பிறிதுபடுபாட்டு

291.பிறிதொன்றாதல்பிறிதுபடுபாட்டே.
(எ-ன்) முறையே பிறிதுபடுபாட்டாமா றுணர்-ற்-று.

(இ-ள்) பிறிதுபடுபாட்டென்பது ஒருசெய்யுளைத் தொடையு மடியும் வேறுபடவுரைத்தாலுஞ் சொல்லும் பொருளும்
வேறுபடாமற் பிறிதொருசெய்யுளாய் முடிவது என்றவாறு.

பார்மகளைத்தோயும்புயத்தாய்பதுமநறுந்
தார்மகளைநீங்காத்தகைசான்றவாகத்தா
யாரியனேயாரணத்தந்தியனேவாரி
வாரியுணாகணைமன்னா. (797)
இது பிறிதுபடுபாட்டு.

இது முதலே யொருவிகற்பத்தின்னிசைவெண்பா பின்னர்க் கலி விருத்தமாகநிகழ்ந்தவாறு காண்க.
தார் – பூ. ஆரியன் – பரமாசாரியன். வாரி – கடல். வாரி – மிகுதி.

சருப்பதோபத்திரம்

292.இருதிறத்தெழுதலுமெண்ணான்கெழுத்துடை
யொருசெய்யுளெண்ணெண்ணரங்கினுளொருங்கமைந்
தீரிருமுகத்தினுமாலைமாற்றாய்ச்
சார்தருமாறியுஞ்சருப்பதோபத்திரம்.
(எ-ன்) வைத்தமுறையானே சருப்பதோபத்திரமாமா றுணர்-ற்று.

(இ-ள்) எவ்வெட்டெழுத்தோரடியாய் நான்கடியாய்வரு மெண்ணான்கெழுத்து டையதொருசெய்யுளை
யறுபத்துநாலறையினி லிரண்டு கூறுபாட்டானெழுதவவற்றுண் முழுதுமடங்கி
நாலுமுகத்தினு முதல் முதலாகியு மீறு முதலாகியு மாலைமாற்றாகிவருமது சருப்பதோபத்திரமா மென்றவாறு.

இரண்டுகூறுபாடாவது நான்கடியும் மேனின்று கீழிழியவுங் கீழ் நின்று மேலேறவும் எழுதுவதாம்.
இது மாட்டுறுப்புப்பொருள்கோள்.

தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா. (798)
இது சருப்பதோபத்திரம். இதனகத் தவ்வாறுநிகழ்ந்தமை கண்டு கொள்க.

(இ-ள்) தே மா பூ – தேனும் வண்டும் பொருந்திய பூவினிடத்து. மாமா – பெரிய திருமகளும்.
பூமாதேமாது – பூமிதேவியுமாகிய அழகு பொருந்தின மாதர்கள்.
ஆகாவாவாகா – (வா ஆகா வாகா எனப் பாட மாற்ற) வந்து தங்கு மார்பினையும் புயத்தினையு முடையவனே !
தாமா – துளவமாலிகையையுடையவனே !
பூகாவாலாலா – பூமியையெடுக்கப் பட்ட பிரளயத்தின்மே லாலிலையிற் றுயிலப்பட்டவனே!
பூமாவாலா – பொலிவினொடுங்கூடிய மிகுந்த பாலத்தன்மையோனே !
நீலா வாமா – நீலநிறத்தினனே ! வாமனரூபமானவனே !

மூன்றாமடியிலிறுதி வாகா நாலாமடியின் முந்தவந்த நீ என்னுமவற்றொடுங்கூட்டி,
நீ வா கா வெனச் சேர்த்து, நீ வந் தென்னைக் காப்பாயாக வென்றவாறு.

இதனுள், ஏமம் ஏம் என நின்றது. உம்மை வேற்றுமை பண்பு என்பன முதலிய தொகைகளும் ஒருமை பன்மை
மயக்க வழுவமைதியும் வந்து மாட்டுறுப்பாகப் பொருளுரைத்தவாறு காண்க.
ஆல் – பிரளயம். வா – வந்து. மாது – மாதர்கள். பூ – தாமரை. பூ – பொலிவு.

கூடசதுர்த்தம்

293.பாடலினாலாம்பதம்பொறிவரியிடைக்
கூடமுற்றதுவேகூடசதுர்த்தம்.
(எ-ன்) கூடசதுர்த்தமாமாறுணர் – ற்று.

(இ-ள்) நாலடியாய வொருசெய்யுளி னாலாம்பதம் ஏனைய மூன்று பதத்தையு மேனின்று கீழுங் கீழ்நின்று
மேலுமாக எழுதிமுடித்த வரிமூன்றி னிடைவரியின் மறைந்துநிற்பது கூடசதுர்த்தமா மென்றவாறு.

நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா. (799)
இது கூடசதுர்த்தம். இதனை யவ்வா றெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) நாதா மானதா – சுவாமியே ! என்மனத்திலுள்ளானே !
தூயதாருளா ணீதா னாவா – பவித்திரம்பொருந்தின தாமரையிலுள்ளாளாக, நீயாக என்னுடைய நாவிலேவந் துறைவீராக.
அதுவுமின்றி, சீராமனாமனா – சக்கரவர்த்திதிருமகனாகிய மன்னனே ! சீமான் – அழகுடையவனே!
ஆதரவிராமா – சகலரும்விரும்பு மிராமனே ! வாமனா சீதரா போதா – போதத்திலுள்ளானே !
வாமனனே ! சீதரனே ! தாதா தாணீ – உனது திருவடிகளைத் தருவாயாக வென்றவாறு.

துறை – இரண்டுங் கடவுள்வாழ்த்து.

கோமூத்திரி

294.கோமூத்திரநடைபெறல்கோமூத்திரி.
(எ-ன்) வைத்தமுறையானே கோமூத்திரியாமா றுணர்-ற்று.

(இ-ள்) நடைபெறுஞ் சேவினதுமூத்திரவொழுக்கம்போன்று நடப்பி னது கோமூத்திரியா மென்றவாறு.

அஃதாவது
ஒருசெய்யுளை இரண்டுவரியாக வெழுதி
மேலுங் கீழு மொன்றிடைவிட்டு வாசிக்கவு மச்செய்யுளாய் நடத்தல்.

மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா. (800)
இது கோமூத்திரி. இதனை யவ்வாறெழுதிக் கண்டு கொள்க.

(இ-ள்) மாயாமாயா – அழியாத மாயையையுடையவனே ! நாதா – சுவாமியே ! மாவா – திருமகளையுடையவனே !
வேயாநாதா – வேய்ங்குழலிலுண்டாக்குங் கானத்தையுடையவனே ! கோதாவேதா – பசுவைக் காத்தளித்த வேதசொரூபனே !
காயாகாயா – காயாம்பூப் போலுந் திருமேனியையுடையவனே ! போதா – ஞானத்தையுடையவனே !
பேதாபேதா – பேதமும் அபேதமுமானவனே! பாயாமீதா – பரந்த பிரளயத்தின் மேலானவனே !
காவா – என்னைக் காக்க வருவாயாக வென்றவாறு. பா – கலிவிருத்தம். துறை – கடவுள்வாழ்த்து.

சுழிகுளம்

295.தெழித்தெழுநீர்குளத்தினுட்செறிந்ததைக்கொடு
சுழித்தடங்குவபோன்றடங்குதல்சுழிகுளம்.
(எ-ன்) சுழிகுளமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஆரவாரித்தெழாநின்ற புனல் குளத்தினுட் டனதிடத் தடைந்ததியாதொன் றதனைக் கைக்கொண்டு
சுற்றி யுள்ளேயடங்குவது போலச் சுற்றிப் பாவினகத்துப் பொருளைக்கொண்டடங்குதல் சுழிகுளமா மென்றவாறு.

சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான. (801)
இது சுழிகுளம். இஃ தவ்வாறாத லெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) தாளவொத்துக்குப்பொருந்தக் கூத்தாடாநின்றவனே ! உண்மையான காவற்றொழிலை யுனதாகக் கைக்கொண்டவனே !
தயிரைத் தாகித்துண்ட கண்டத்தையுடையவனே ! கிளர்ந்தகானத்தையுடையவனே !
நீயே கதி, காப்பாயாக வென்றவாறு. பா – வஞ்சித்துறை. துறை – இதுவுமது.

திரிபங்கி

296.நனியொருபாவாய்நடந்ததுதானே
தனிதனிமூன்றாஞ்சால்புறுபொருண்மையிற்
பகுப்பநிற்பதுதிரிபங்கியதாகும்.
(எ-ன்) திரிபங்கியாமா றுணர்-ற்று.

(இ-ள்) முதலே மிக்கதொருபாவாய்நடந்தவதுதானே பின்னர்க் குறைவுடைத்தாய்
மூன்றுபாலா மொழுக்கமுறும்படி பொருளினது தன்மையிற் பகுத்துக்காட்டநிற்பது திரிபங்கியென்பதா மென்றவாறு.

வாரிதிபார்மன்மதன்பூசல்பார்வெய்யமாமதிபா
ரூரலர்பாரன்னையிங்கேசல்பாருய்யுமாறிலைபார்
சோர்குழல்பார்பொன்னிறஞ்சேர்தல்பார்துய்யமான்மயல்பார்
நாரணனேதென்னரங்கேசனேதெய்வநாயகனே. (802)
இது திரிபங்கி. இதனை மூன்றாகப் பகுத்த பா வருமாறு :-

வாரிதிபார் மன்மதன்பூசல்பார் வெய்யமாமதிபார்
ஊரலர்பார் அன்னையிங்கேசல்பார் உய்யுமாறிலைபார்
சோர்குழல்பார் பொன்னிறஞ்சேர்தல்பார துய்யமான்மயல்பார்
நாரணனே. (1) தென்னரங்கேசனே. (2) தெய்வநாயகனே. (3)

எழுகூற்றிருக்கை

297.ஒன்றுமுதலாவோரேழீறாச்
சென்றவெண்ணீரேழ்நிலந்தொறுந்திரிதர
வெண்ணுவதொன்றாமெழுகூற்றிருக்கை.
(எ-ன்) இறுதிநின்ற வெழுகூற்றிருக்கையாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்தெண்ணப்பட்ட ஒன்றென்னுமெண்ணொன்றுமுதலாக வோரேழீறாக நிகழ்ந்த
வெண்களைப் பதினாலுநிலந்தொறு மீளவெண்ணுவதொன்றாகு மெழுகூற்றிருக்கை யென்றவாறு.
செய்யுளகத்தென்பது சொல்லெச்சம்.

298.அவைதாம்,
இரதபெந்தத்தினிலிடையறையிரண்டாய்ச்
சரதமதுறநடைசார்தருபான்மையி
னொன்றுபன்னான்காயொருபன்னிரண்டாய்
நின்றயலேனவுநிலந்தொறுமுபயங்
குன்றுவதாய்த்தொகைகூடியொன்றிலிறும்.
(எ-ன்) இதுவு மதற் கோர் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்) அங்ஙன மெண்ணப்படு மெண்கடா மிரதத்திற் பெந்திக்கு மிடத்துமையத்திற்பத்தி யிரண்டுபத்தியாய்க் கீறி
வலமே யிடமே நடத்தலைத்தரும்பகுதியில் மையத்திலொன்று பன்னான்காகவு மதனயலிரு பத்தியி லிரண்டும்
பன்னிரண்டாகவும் ஒழிந்த மூன்றுமுதலிய வெண்ணும் பத்திதோறு மிரண்டுகுறைந் தேழென்னுந்தொகைபொருந்தி
முதலேநின்ற வொன்றில்வந்துமுடியு மென்றவாறு.

அயலென்பதனை முன்னும் பின்னுங் கூட்டுக. இரதபெந்தம் – தேரிலே எழுதிக் கூட்டுதல்.

299.இரட்டுறமொழிதலோடீறுதிரிந்தெண்
டிரட்டவும்பெறூஉந்தெரியுங்காலை.
(எ-ன்) இதுவு மவ்வெண்ணிற் கோர் ஒழிபுகூறுகின்றது. இரட்டுறல் – சிலேடை. ஈறுதிரிதல் – ஈற்றெழுத்து வேறொன்றாதல்.

ஒருதனித்திகிரியினிருவிசும்பொழுக்கத்
தொருஞான்றொருபகலொடியாவுழப்பிற்
பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மதநால்வாய்க்கரியுரிமுக்கட்
செம்மலினிருகணுமிமையாத்தேவர்க
ளொருபோழ்தகலாதொருவழிப்படநின்
றிருகையுங்கூப்பிமுப்போதினுமிறைஞ்ச
நான்முகமுதல்வனினசைஇயநல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்
முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த
முக்கோற்பகவர்முறைமுறைபிறழா

விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வௌவுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்
முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்
பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணசுகோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்
வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே. (803)
இஃது, எழுகூற்றிருக்கை.

(இ-ள்)
(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தையெல்லையாக வுடையநிலத்தின்கண் ணுயர்
திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு
(இருவிசும்பொழுக்கத்து) பெருமையையுடைய ஆகாசவீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொருகணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்
(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாதபாகனையுடைய தேரின்மீதே
(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினையுடைய பெரிய கையினையும்,
பெருகாது சிறுகாது தம்மி லொத்த புழையொடுகூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப்போலச் சிவந்து,

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொருநெறிப்பட
விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய, நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல
விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற
மூன்றுபாலுந் தம்மாலாய பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப,
விரண்டுபக்கமு மின்போன்றதொரு மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு
மொருகூறுபாடெய்த விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்
மாறுபாட்டைக்கெடுத்து மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந்
தங்கப்பட்ட சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு நல்வினை தீவினை யென்னு
மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை யித்தன்மைத்தென
நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர் சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண
மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற
வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு, உலகின்கண்ணுள்ள
இனியவுயிர்களஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த நமன்றிக்கி லெழுந்த
கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டதுவிளங்கும்படிக் குத்தர
கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத் தேனையொழுக்கு
நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து,
பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு,
பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய
மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும், அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற
திருப்பவளத்தினைத் திறந்து, வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்
பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக, ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா
நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச்
சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரியசெயலொடு
முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரியபிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே !
ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே ! அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத் திருவுளமகிழ்ந்
தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக் கருணை
புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.
ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி. பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது. பிணர் – சற்சரைவடிவு.
செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு. நசைஇய – விரும்பப்பட்டன. முழுநலம் – பேரானந்தம்.
தெற்றென – தெளிய. பிறழாது – மாறாடாது. ஒருங்கு – ஒக்க. ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை. முற்குணம் – சாத்துவிககுணம். நாலாங்கடவுள் – இந்திரன். அமைத்த – விதித்த.
இறும்பூது – ஆச்சரியம். உளர்தல் – குடைதல். அவிழ்த்தல் – ஒழுக்குதல். நலம் – ஆனந்தம்.
நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.
உறுபொருளைந்துடன் என்பது “மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் –
தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை. எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடையூர்தியின்
முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழு
கடற்புவனத் தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல்
மூவுலகமுமளந்தவனிருசெவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும்
பிணிதவிர்த்தருள் ஞானபூரண! நாவீற! குருகாபுரிவரோதய! எதிராசனையாண்ட விருசரணாம்புயத்
தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற் கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான்பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

திலகநுதலாய்திலங்குறியென்னேவ
லலகெண்பொருட்பதத்திற்காதி–நிலவெழுத்தின்
புள்ளிபிரித்தாற்பொருணிலைமைத்தாமென்பார்
தெள்ளியநூல்கற்றோர்தெளிந்து. (805)
இது மாத்திரைப்பெருக்கம்.

இவற்றுள் (முன்னையது) * மாத்திரைச்சுருக்கமென்பது,
ஒரு பொருள் பயந்து நிற்கு மொருசொல்லாயினும் பலபொருள்பயந்து நிற்குந் தொடர்ச்
சொல்லாயினு முதலெழுத் தொருமாத்திரைகுறையப் பிறிதொரு பொருள்பயப்பதாயும் பலபொருள்
பயப்பதாயும் பாடுவது. அவ்வாறு அதனுள் வந்ததாவது : ஆயுதங்களுக்குச் சாதிப்பேர் ஏதிகள்,
அவற்றை எதிகளெனப் புள்ளியிட்டு, மாத்திரைகுறைய இருடிகள் பெயராய் எதிகளென நின்றவாறு காண்க.

மாத்திரைப்பெருக்கமாவது
முன்புபோலவருஞ்சொற்களுள் முதலெழுத் தொருமாத்திரையேறப் பிறிது பொருள் பயப்பது.
அவ்வாறு இதனுள் வந்ததாவது :- எண்ணென்பது எள்ளும், இதனைக் கருதென்னும் ஏவற்பொருளும்,
கெணிதமும் என்னும் மூன்றுபொருள்பயக்கும் பதத்தின் முதலெழுத்தாய எகரத்தை
யொருமாத்திரை பெருக்க ஏண் என்ன நிலையுடைமைப்பொருளைக் காட்டினவாறு காண்க.

*உம்மையான் விதந்தோதிய மாத்திரைச்சுருக்க முதலிய ஆறுக்கும்
இந்நூன் மூலப்பிரதியொன்றின்மட்டும் மூலசூத்திரங்கள் காணப்படுகின்றன.
அவையாவன :-

“மாத்திரைசுருங்கமறுபொருளுணர்த்துரை
மாத்திரைச்சுருக்கமெனவகுத்தனரே” (49)

“மாத்திரைபெருகமறுபொருளுணர்த்துரை
மாத்திரைப்பெருக்கமெனவகுத்தனரே” (50)

“ஒற்றினைப்பிரிக்கமற்றொருபொருளுணர்த்து
லொற்றுப்பெயர்த்தலென்றுரையுணர்த்தும்” (51)

“மூன்றெழுத்தொருமொழிமுதலீறிடையீ
றான்றபொருள்பிறவாந்திரிபதாதி” (52)

“சதுரங்கவறையிற்சதிர்பெறவமைப்பது
சதுரங்கபெந்தமென்றறைதருந்தன்மைய” (53)

“பெருவகன்றறையிற்பெந்திப்பதுவுங்
கருதுகிற்கடகபெந்தமாகும்” (54)
என்பனவாம

முந்துதனித்தன்மைமொழியையொடுபுணர்ந்திட்
டந்தமுதல்புள்ளியழிந்தக்காற்–செந்தேன்
வழிந்தமகிழ்த்தார்மாறன்வண்புலவீர்சொல்லி
யொழிந்தவற்றின்பேராயுறும். (806)
இதுவும் மாத்திரைப்பெருக்கம்.

இதனுள், தனித்தன்மையென்பது யான், அதனை என் எனத் திரித்து, அதனை யிரண்டாவதனைப் புணர்த்து,
எனையென்றாக்கிப் புள்ளியை யழிக்க ஏனையெனச் சொல்லியொழிந்தனவாயபொருளைக் காட்டினவாறு காண்க.
திணை….. துறை…..

ஓராழிவையத்து தயம்புரிந்து தினம்
பேராவிருடுணிக்கும்பெற்றியா–ரீராறு
தேசுற்றநாமஞ்சிறந்தோர்பரிதியொடு
மாசற்றெழுமாதவர். (807)
இஃது ஒற்றுப்பெயர்த்தல்.

இதனுள், மாதவர் என்றுநின்றது மகரவொற்றைப் பெயர்க்க ஆதவர் என நின்றவாறு காண்க.
முதலே நின்றமொழியின் முதலெழுத்தி லொற்றைப் பெயர்த்தலால் ஒற்றுப்பெயர்த்தலாயிற்று.
இதனுள் ஓராழி வையம் – ஒப்பற்ற சமுத்திரஞ் சூழ்ந்த பூமி எனவும், ஒற்றைவண்டி பூண்ட தேர் எனவும்,
பேராவிருடுணித்தல் – தன்னைநினைந்த அடியாரிடத்து எடுத்தசெனனந் தோறும்விட்டுநீங்காத அகவிருளையறுத்தல் எனவும்,
உலகத்தைவிட்டுநீங்காத அந்தகாரத்தையோட்டுதல் எனவும், ஈராறுநாமம் – கேசவாதி துவாதசநாமம் எனவும்,
தாதுருமுதலிய துவாதசாதித்தியநாமமெனவும், பரிதியொடும்-சக்கரத்தோடும் எனவும் விளக்கத்தோடும் எனவும்,
மாசற்று ஆசற்று எனவும் சிலேடைவாய் பாட்டான் வந்தன. திணை…… துறை…….

முந்தமாயன்பதியாய்முற்றியபேர்மூன்றெழுத்தில்
வந்தமுதலீறிசையாய்மற்றிடையீ–றந்தச்
சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய்
வதரிவரிதரியாமாம். (808)
இது திரிபதாதி. இதனுள் வதரியென்பது திருப்பதி.
அதனை முதலு மீறும் வரியாக்கி இடையு மீறுந் தரியாக்கி அவ்வாறாதல் கண்டு கொள்க.

எந்தையிராமற்கிமையோர்சரண்புகுத
முந்தநகரிமுதலெழுத்தில்லாநகரி
யுந்துதிரட்கிள்ளையிடையொற்றிலாக்கிள்ளைகடேர்
சிந்தமுழுதுமிழந்தான்றெசமுகனே. (809)
இஃது அக்கரச்சுதகத்தி லோர்பேதம்.

மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யான்தவபோதனுமாயாய்ந்தகோ–மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனொன்
றாதயமாவன்புலமாய. (810)
இது சதுரங்கபெந்தம். இதனுள் நாலுபக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும்
நடுவி னாலறையிலும்மாதவன் என்னுந் திருநாமம் நின்றவாறு கண்டுகொள்க.

(இ-ள்) ஒன்றாத யமா – சருவான்மாக்களோடும் பொருந்தாத நமனே ! மானவனா – மனுகுலங்காவலனாக.
மேவலாமாறன் – நங்கை யார்க்குங் காரியார்க்கும் புத்திரமோகந்தீரப் புத்திரனாம் மாறனென்னும் பிள்ளைத்திருநாமத்தையுடையவன்.
நித்தமாமாலை – அழிவில்லாத பெரிய பிராட்டியாருடன்கூடிய பெரியோனை. ஆன – தன்னிடத் தாக்கம்பெற்ற.
தவபோதனுமா – மெய்த்தவத்தினொடுங்கூடி ஞானவானுமாகி. ஆய்ந்த கோ – அவனேபரத்துவமென்றுதெளிந்த தெரிசனராசன்.
மானவடி – பெருமையையுடைய திருவடிகளை நாதனின்மேல் – எனது நாவினிடத்தும் அதற்குமேலான சிரத்தினிடத்தும்.
நன்கலன்பூண் – நல்ல ஆபரணமாகப் பூண்ட. என்முனநீவந்தெவன் – என்முன்னேவந்து நீ சாதிப்ப தெதுதான்? ஒன்றுமில்லை.
வன்புலமாய – என்னிடம் நீவருதற் கெளிய இடமன்று, வலியஇடமாகப்பட்டன ;
ஆதலா லுனக்கு வரப்போகா தென்றறிந்துகொள் என்றவாறு. மேல்-இடம்பற்றிய ஆகுபெயர்.
திணை – வாகை. துறை – அறிவன்வாகை.

கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே–நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி. (811)
இது கடகபெந்தம். நெடுவீடு – பரமபதம். திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம்.

நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராகியிணையில்லா–தாகநிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான். (812)
இதுவும் கடகபெந்தம்.
ஆக மாத்திரைச்சுருக்கமுதற் கடகபெந்த மீறாகச் சித்திரகவி யாறு மடைவே காண்க.
திணை -…… துறை – சமயவணக்கம்.

சித்திரகவி முற்றும்.

சொல்லணியியலுரை முற்றும்

——-

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருஎழுகூற்றிருக்கை (சித்திரக்கவி வடிவம்) – மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றியது

April 27, 2022

ஸ்ரீ திருஎழுகூற்றிருக்கை (சித்திரக்கவி வடிவம்) – மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றியது

ஸ்ரீ திருஎழுகூற்றிருக்கை
இலக்கணம்:-
எழுகூற்றிருக்கை என்பது சித்திரக் கவிகளுள் ஒருவகை. இஃது இரத பந்தத்தில் (தேர் உருவில்) அமைக்கப்பெறும்.
தேரின் உருவம் போன்று கட்டங்கள் அமைத்து அவற்றில் எண் முறையை
ஒன்று முதல் ஏழுவரை குறைந்தும் கூடியும் வருமாறு வைத்துப் பாடுவது எழு கூற்றிருக்கை.
எழு+ கூறு+ இருக்கை எனப்பிரிந்து நின்று பொருள் தரும்.

கோதி லேழறை யாக்கிக் குறு மக்கண்
முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும்
பெற்றியால் வழு வாமை யொன்று
முதலாக வேழீ றாய்முறை யானே
இயம்புவ தெழுகூற் றிருக்கை யாகும் – முத்துவீரியம் 1123

பூரியே முரையாக்கி குறுமக்கண் முன்னின்று
புக்கு போந்துங்கேளியும்
புகழின்வழு வாமையா லொன்றுமுத லேழிறுதி
புகலெழு கூற்றிருக்கை- பிரபந்ததீபிகை – 30

எழு கூற்றிருக்கை ஏழு அறை கீறிக்
குறுமக்கள் முன்னர்க் குறுகியும் மறுகியும்
விளையாடும் பெற்றி விளம்புதல் என்ப- பிரபந்த தீபம் – 20

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் என்னும் அருட்பெருஞ்சோதித் தனிப்பெரும்
கருணையரின் திருவருட் பெரும் புகழை திரு எழுகூற்றிருக்கை என்னும் சித்திரக் கவியான் விதந்தோதுதல் இப்பனுவலின் நோக்கம்.

திருஎழுகூற்றிருக்கை

காப்பு
தொழுதெழுந்தேன் துய்யமலர்ப் பொற்பாதம் சீரார்
எழுகூற்றிருக்கைதனைப் பாட – முழுமுதல்வர்
மெய்வழிதெய் வத்தருளார் வான்கருணை தான்வையம்
உய்ந்திடநற் காப்பாகும் காண்.

நூல்
நிலைமண்டில ஆசிரியப்பா

ஒருதனி முதல்வ! மெய்வழி அருள்தரும்
ஒருதிரு இறையே! இருவினை தீர்க்கும்
ஒருபெருந் தகையே! திருவடி சரணம்
ஒருதிரு வுருவாய் இருபத முளரிகள்
திருவுள மிரங்கி முத்தி வழங்கும் ⁠(5)

திருவுயர் புவியில் அருள்நடம் புரிய
இகபர மிரண்டின் செல்வம் ஒருங்குற
ஓர்எழில் மறைநா உயிர்உடல் இரண்டும்
முப்பதிச் சோபனம் நாற்பதம் பெறவே
முத்தா பங்கள் தீர்ந்திட இரண்டாம் ⁠(10)

மறுபிறப் பெய்தினம் மலரடி ஒன்றி
குருவருள் பெறவே ஒருமெய் வழியில்
இருங்குணப் பழமையர் மூவா முதல்வர்
நாற்கா ரணரெனும் ஐவகைப் பொறுப்பினர்
நாற்கவி ராஜர் முத்தமிழ் வித்தகர் ⁠(15)

வையகம் வானகம் இரண்டும் ஈடிலா
ஒருபெரும் தவத்துறை ஓங்கு சிறப்பினர்
ஒருங்கெமைக் கூட்டி இரண்டறக் கலந்து
முச்சுடர் காட்டி நாற்கரம் அருளி
ஐம்மணிப் பொதிகை ஆற்றினில் இருத்தி ⁠(20)

ஐம்புலன் அடக்கும் ஆற்றலும் அருளி
நாற்சிற குடைய பிரணவப் பட்சி
ஆசனத் திருத்தி அழகிய மும்மணி
இருள்மனத் தொளிசெய் ஒருபெருங் கருணையே
ஒன்றே குலமென உரம்பெற நிறுவி ⁠(25)

இரண்டிலை இறைவர் எனவே உறுதிசெய்
முக்குண இயல்பில் சத்துவம் ஓங்க
நான்மறை தெளிய ஐந்திரம் சிறக்க
அறுபுரிக் கோட்டை ஏழ்நிலை மாடம்
அங்கதில் ஏற்றி அறுபுரி நூலை ⁠(30)

அணிவித் தைங்கரர் நால்வாய்த் தகையர்
முப்பழம் மோதகம் திருமுனர் படைக்க
இருகரம் அருளினீர் ஏழையேன் ஒருவன்
ஒன்றினேன் உயர்திரு இருமலர்ப் பதத்தில்
உடல்பொருள் ஆவி மூன்றும் சாற்றி ⁠(35)

அறம்பொருள் இன்பம் வீடெனும் நான்குற
ஐவண நாதர் ஆறங்கம் தெளிவித்(து)|r}}
ஏழ்வகை அமானிதம் என்னென விளக்கி
அறுவகை வேகம் அதுபின் னடையவே
ஐவழி தீங்கில் செல்லா திருத்தி ⁠(40)

நாற்கரம் தந்துமுத் தோடம் விலகிட
இருவழி யன்று ஒருவழி மெய்வழி
என்றுநன் குணர்த்தி அருள்தரும் தெய்வமே
ஒன்றாய்க் காண்பது காட்சி என்று
நன்றாய்த் தெளிவது நன்னிலை ஏற்றம் ⁠(45)

இரண்டிலை ஏகன்அ னேகன் என்பதை
மன்பதை மாந்தர் அறிந்து முப்பாலுக்(கு)|r}}
அப்பால் ஆக்கிய அருட்பெருஞ் சோதி
நால்வகை வருண மேல்வகை அனந்தர்
ஐவகை நுகர்வில் அழுந்தா துய்ய ⁠(50)

அறுவகைக் குற்றம் அகன்ற மாண்பினர்
செம்புலத் தாழ்க ஐம்புல நுகர்வு
நானிலம் தன்னின் மேனிலம் சாலை
மூவகைப் பண்பில் முதலது சத்துவம்
அத்தகு சத்துவத்(து) தாழ்ந்திட எங்கோன் ⁠(55)

இரண்டெனும் வாசியில் ஏகும் தரம்தெரி
ஒருபெரும் மெய்வழி உய்வழி செப்பினர்
ஓருயிர்க் கலையே உய்கதி நிலையே
சீருயர் தவத்தோர் தங்கிரு தயமே
முந்நீர் ஆழ்ந்த மகிதல மிசைவரு ⁠(60)

நாற்பத மேஅருள் நாதநா தாந்தா
அஞ்சேல் என்றெமக் கடைக்கலம் அருளி
நால்வரு ணத்தின் மேல்வரு ணத்தோன்
என்றெனை ஆக்கிய இன்னுயிர்த் துணையே
மும்மலம் கருகு முறையருள் முதல்வா ⁠(65)

இருநிதிக் கரசே எனைஒரு பொருளென
ஏன்றமெய்த் தயவே எம்பெரு மானே
ஆன்றசற் குருவே அளக்கரும் புகழோய்
ஒருகற் பகமே உயர்நிலை ஏற்றி
இருயிங் கெனவே எளியனை யமர்த்தி ⁠(70)

முத்தமிழ்க் கடலுள் மூழ்கிடச் செய்த
அத்தனே நான்மறைக் கரசே போற்றி
முப்பா டியற்றி முதுகலை பயிற்றி
செப்பரும் தவத்துறை திறமருள் இறையே
தங்கமா கிடுநெறி தனிலிரு வென்ற ⁠(75)

துங்கமா மணியே தொல்புவிச் செல்வமே
எங்கெவர்க் கும்ஓர் இணையிலாத் துணையே
சங்கத் தமிழே தனிச்சீ தனமே
ஒருதனித் தலைமை உதயமே! இதயமே!
இருமை வகைதரு திரிமூர்த் தியரே ⁠(80)

பெருமை தருகும் சீரடி ஈரடி
ஓரடி யாலே உலகளந் தோயே
சேரடி என்றெனைச் சேர்த்தணைத் தாயே!
ஒரடி என்றெனை ஈரியல் பறிவால்
ஒருமை வகைபுரி ஓங்கிடு தவத்தமர் ⁠(85)

ஒருவரே மெய்வழி தெய்வமே வாழிய! ⁠(86)

குறிப்பு:-

இருவினை : பிறப்பு, இறப்பு (நல்வினை, தீவினை யன்று)
பதம் : திருவடி
முளரி : தாமரை
முத்தி : மோட்சம்
முத்தீ : ஆகவனீயம், தட்சிணாக்கினியம், காருகபத்தியம்
சோபனம் : அழகு, வாழ்த்து
முத்தாபம் : ரோகத்தரித்திரியம், ஜெகமிருக அபாயபயம், திண்டாடும் இறுதியின் நாள் துன்பம்
நாற்காரணம் : தூங்காமை, கல்வி, துணிவுடைமை, நீங்காநிலம்
நாற்கவி : ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்
முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
முச்சுடர் : சூரியன், சந்திரன், அக்கினி
ஐம்மணிப்பொதிகை : பஞ்சாட்சரம்
மும்மணி : சூக்குமதேகம்
முக்குணம் : சத்துவம், ராஜஸம், தாமஸம்
ஐந்திரம் : நித்தியம் பெறும் யோகம்
முப்பழம் : மா, பலா, வாழை
ஏழ்வகை அமானிதம் : காலம், நியதி, கலை, வித்தை, ராகம், புருஷன், சுத்தமாயை(என்னும் வித்தியாதத்துவங்கள்)
அறுவகை வேகம் : சரகதி, சர்ப்பகதி, மயூரகதி, இடிகதி, மின்கதி, மனோகதி (கதி = வேகம்)
ஐவழி : ஐம்பொறிகளால் உணரப்படும் உணர்வுகள்(கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிதல்)
முத்தோஷம் : நினைவால் செய்வது தோஷம்; சொல்லால் வருவது குற்றம்; செய்கையால் வருவது பாவம்
அறுவகைக் குற்றம் : காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம்
மூவகைப் பண்பு : சத்துவம், ராஜஸம், தாமஸம்
முந்நீர் : ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்(கடல் எனவும் பொருள் பெறும்)
மகிதலம் : உலகு
நாற்பதம் : சாலோகம்,சாமீபம், சாரூபம்,சாயுச்சியம்
மும்மலம் : ஆணவம், கன்மம், மாயை
இருமை : இம்மை, மறுமை
முப்பாடு : மனம், மொழி, மெய்களால் பாடுபடுதல்
தூயது : தங்கம்

திருஎழுகூற்றிருக்கை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!

——————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நக்கீர தேவ நாயனார் -ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கை

April 27, 2022

பதிக வரலாறு :
எழுகூற்றிருக்கை – ஏழு கூறுகளது இருக்கையாகிய பாட்டு. இருக்கை – இருப்பிடம்.
ஏழு கூறுகள், ஒன்று முதல் ஏழு முடிய உள்ள எண்கள் ஒரு முறை கூடியும், குறைந்தும் வர,
எண்ணலங்காரம் அமையப் பாடுவதால் அமையும்.

அம்முறையாவது:
1) 1,2,1.
(2) 1,2,3,2,1
(3) 1,2,3,4,3,2,1,
(4) 1,2,3,4,5,4,3,2,1,
(5) 1,2,3,4, 5,6,5,4,3,2,1,
(6) 1,2,3,4,5,6,7,6,5,4,3,2,1.

ஏழு கூறு வருதல் வேண்டும் என்பதற்காக ஆளுவதாகச் சொல்லப்பட்ட அந்த முறையை
மீட்டும் ஒருமுறை சொல்லிப் பாட்டை முடிப்பார்கள். இப்பாட்டு அகவற்பாவாகவே வரும்,
இது, `மிறைக் கவி` எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும்.
அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர்.
அதனால் இது `மிறைக் கவி` எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும்.
அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர்.
அதனால், இது `இரத பந்தம்` என்றும் சொல்லப்படும்.

சித்திர கவியை `அருளாளரல்லது பிறர் பாடலாகாது` எனத் தொல்காப்பிச் செய்யுளியல் உரையில்
ஆத்திரையன் பேராசிரியனார் கூறுவர்.
திருஞானசம்பந்தர் அருளிச் செய்த சித்திரக் கவிப்பாடல்களுள் திரு எழுகூற்றிருக்கையும் ஒன்று.1 என்பது அறியத்தக்கது.
இதனுள் சில சொற்கள் பொருளால் எண்ணுப் பெயராய் இல்லாவிடினும் சொல்லால் எண்ணுப் பெயராய் எண்ணலங் காரத்தை நிரப்பும்,
எண்ணலங்காரமும் முரண் தொடையுள் அடங்கும்.

ஒருடம் பீருரு வாயினை ஒன்றுபுரிந்
தொன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடருஞ் சென்னி மீமிசை
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை:
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டும் நீக்கி
ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழிதோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை

நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை
நூன்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா திருவர்
மூவுல குழன்று நாற்றிசை ஊழிதர

ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க

இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
ஏழில் இன்னரம் பிசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்
விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை
ஆல நீழல் அன்றிருந் தறநெறி
நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்

தாதை ஒருடல் திருவடி வாயினை
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்
நாற்றோள் நலனே நந்திபிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால்

சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதம் சென்னியிற் பரவுவன் பணிந்தே

பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ
றணிந்தால வாயில் அமர்ந்தாய் தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து

—————–

குறிப்புரை

அடி-1)
ஒருடம்பு ஈருரு வாயினை ஒன்று புரிந்து
ஓன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை

ஒன்று புரிந்து – வீடு பேற்றினை விரும்பி. (உயிர்கள் அடைய வேண்டும் என்று கொன்றை சூடினை என்க.)
கொன்றைப் பிரணவ வடிவினது ஆதலால், பிரணவத்தின் பொருள் தானே என்பதை உயிர்கள் உணர்ந்து
வீடடையவே அம்மாலையை அடையாள மாலையாகச் சிவன் சூடியுள்ளான்` என்றபடி.

(அடி-2)
ஓன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை
ஒன்றின் – `ஓரு காம்பிலே ஐந்து இதழ்` என்க.
ஈர் இதழ் – குளிர்ந்த இதழ்

(அடி-5)
இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை:
இரு கோடு – இரண்டு முனை.

(அடி-7) `
மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை
மூவெயிலது அரண்` என்க.
முரண், நாற்றிசையிலும் செல்லும் முரண், முரண் – வலிமை.
அரண் பாதுகாத்தல். `முரணுடைய அரண்` என்க.

(அடி-8)
ஆற்ற முன்னெறி பயந்தனை
ஆற்ற – மிகவும், ஆற்றப் பயத்தல் – முற்ற விளக்குதல்.
முன் நெறி முதல் நெறி “முன்னெறியாகிய, முதல்வன்
முக்கணன் தன்னெறி“ 2 என அப்பரும் அருளிச் செய்தார்.
“முன்னெறி“ என்பது ஓசை வகையில் `முந்நெறி` என்பதனோடு ஒத்து,
`மூன்று` என்னும் எண்ணலங் காரமாய் நின்றது.
இவ்வாறு மேலும் வருவனவற்றை அறிந்து கொள்க.

(அடி-9)
செறிய இரண்டும் நீக்கி
இரண்டு – விருப்பு வெறுப்புக்கள்

(அடி-10)
ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை
ஒன்று, திருவருள்.
உறுதி – நல்ல துணை.

(அடி-11,12) `
அந்நெறி ஒன்று
மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு
அந்நெறி ஒன்றையே மனத்துள் வைத்து` என்க.
இரண்டு நினைவு – ஐயம்

(அடி – 13)
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
முன் ஏழாவது விரிக்க

(அடி -14)
நான்கென ஊழிதோற்றினை
ஊழி – யுகம். `ஊழி நான்கு எனத் தோற் றினை` (படைத்தனை) என்க.

(அடி-15)
சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை
சொல்லும் – சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற.
அசைத்து – உறுப்புக்களில் கட்டி.
அசைந்தனை – ஆடினை

(அடி -16)
நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை
மேல் முகம் உச்சி முகம்.
கபாலம் – தலை ஓடு.

(அடி-17)
நூன்முக முப்புரி மார்பில்
நூல் முகப் புரி` என்க.
தோளில் ஏந்திய அங்கத்தை மார்பில் ஏந்தியதாகக் கூறினார்.

(அடி-18)
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
இருவர், அயனும், மாலும். அங்கம் எலும்புக் கூடு.
இது `கங்காளம்` எனப்படும்.

(அடி-19) `
ஒருவ நின் ஆதி காணா திருவர்
ஒருவனாகிய நினது` என்க.
“ஆதி“ என்றதனானே அந்தமும் கொள்க.
ஐ – அழகு. இஃது `ஐந்து` என்பதுபோல நின்றது.

(அடி-22)
ஆறுநின் சடையது ஐந்து நின் நிலையது
ஆறு – யாறு; கங்கை. இதுவும் எண்ணுப் பெயர் போல நின்றது,
ஐந்து நிலைகளாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

(அடி-23)
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
வாய்மொழி, வேதம்.

(அடி-24)
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
இரண்டு – இரண்டு வகை. `
`குழை“ என்பது பொதுப்பட, `காதணி` என்னும் பொருட்டாய் நின்றது.

(அடி-26)
இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி
இரு – பெரிய. இதுவும் எண்ணுப் பெயர்போல வந்தது

(அடி -28)
அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை
உறுதி, அறம் முதலிய பொருள்கள்.
ஆறில் அமுதம் – அறுசுவையில் உணவு.

(அடி -31)
ஐந்தில் விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை
ஐந்து – ஐந்து வகையான இசைக் கருவிகள். (தோல், துளை, நரம்பு, கஞ்சம், மிடறு.)
கொட்டு – வாச்சியம்.
உம்மை, எச்சப் பொருட்டு. `எல்லா வாச்சியங்களையும் இறைவன் உடையவன்` என்றபடி,

(அடி-34)
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
முந்நீர் – கடல். `முந்நீரில் நின்ற` என்க.
சூர் மா – சூரபதுமனாகிய மாமரம்.

(அடி-35)
கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்
இருவரை – பெரிய மலை; கிரௌஞ்சம்.

(அடி – 36)
மிடல் வடிவம் – விசுவ ரூபம். மிடல் வலிமை,

(அடி-37,38) `
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
தருமம் கூறுவை` என இயையும்.

(அடி – 38,39) `
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
நால்வகை இலக்கணங்களையும், அவற்றையுடைய இலக்கியங்களையும் மொழிந்தனை` என்க.
நால் வகை இலக்கணமாவன `எழுத்து, சொல்,பொருள், செய்யுள்` என்பன பற்றியவை,
அணியிலக்கணம் வடநூற் கொள்கை.

(அடி-41)
ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
நெறிமையில் நெறியாம் வகையில்.

(அடி-42)
ஏழின் ஓசை இராவணன் பாடத்
ஏழ் இன் ஓசை` என்க.
ஓசை – இசை.

(அடி-43)
தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை
தாழ்வு – இரக்கம்.
“அவன்தலை“ என்பதில் தலை ஏழன் உருபு.
அளி- அருள்,

(அடி-44)
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
ஆறிய – தணிந்த. சிந்தையனை, “சிந்தை“ என்றது. ஆகுபெயர்.

(அடி – 45)
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித் தேரொடு திசைசெல விடுத்தோன்
ஐங்கதி குதிரைகளின் ஓட்டத்தின் வகை.
`ஐங்கதியொடு தேர் திசை செலவிடுத்தோன்` பிரமன்.

(அடி- 46,47)
நாற்றோள் நலனே நந்தி பிங் கிருடியென்
றேற்ற பூதம் மூன்றுடன் பாட
அவனுக்கு முகம் நான்காயினும் தோளும் நான்கே.
நலன். இங்குத் திறமை. `அதனைப் பாட` என்க.
நந்தி பிங்கிருடி – நந்தி கணத்ததாகிய பிங்கிருடி. “
பூதம் மூன்று“ என்றதனால், தண்டி, குண்டோதரன் இவர் கொள்ளப்பட்டனர்,

(அடி-48)
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
கண் – பக்கம்.
மொந்தை, ஒருவகை வாச்சியம்.
ஒரு கணம் – ஒப்பற்ற கணங்கள்.
மட்டு விரி – தேனோடு மலரும்

(அடி -50)
நட்டம் ஆடிய நம்ப அதனால்
“அதனால்“ என்றது, கூறிவந்தவை அனைத்தை யும் தொகுத்துக் குறித்தது.
ஆகையால் இப்பாட்டினை,
`நம்ப, நீ ஓர் உடம்பு ஈருருவாயினை;
கொன்றை சூடினை;….அளி பொருந்தினை,
அதனால், சிறியேன் சொன்ன வாசகம் வறிதெனக் கொள்ளா யாதல் வேண்டும்;

(அதன் பொருட்டு)
அண்ணலாகிய நின் பாதம் சென்னி யிற் பணிந்து பரவுவன்` என இயைத்து முடிக்கற் பாற்று.

(அடி-52)
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து
வறிது – பொருளற்றது.
வெளி – நறுமணம். `
சிவபெருமான் ஊழியிறுதியில் வீணை வாசித்திருப்பன்` என்பதை,
`பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்,
இருங்கடல்மூடியிறக்கும்; இறந்தான் களேபரமும்,
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே`*
என்னும் அப்பர் திருமொழியால் அறிக.
முக்காலத்தும் நிகழற் பாலதனை, “பாடிய“ என இறந்த காலத்தில் வைத்துக் கூறினார்.

திருஎழுகூற்றிருக்கை முற்றிற்று.

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான சாரங்கள் —

April 23, 2022

ஸ்ரீ ஆராவமுதன் இடம் சரணாகதிக்கு ஸ்ரீ நம்மாழ்வார் போல் இவரும்
சம்சார துக்கம் போக்கவே
ஆறு அங்கம் கூற அவதரித்தவர் அன்றோ –

20- குணங்களை காட்டி சரண்

1-ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி
2-விரோதி நிரஸனம்
3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை
4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை
5-ஸர்வ பல பிரதத்வம்
6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை
7-சர்வ ரக்ஷகத்வம்
8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை
9-ஆயுதங்கள் தரித்து
10-புருஷகாரம்
11-சாமான்ய ரஷணம் சொல்லுகிறது –
12-சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –
13-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-
14-ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –
15-ஆராதனைக்கு எளியவன்
16-சரீர சரீரீ பாவம் –
17-பிரதிபந்தகம் போக்கி
18-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
19–சர்வ அந்தர்யாமி
மேன்மைகள்-இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –
20-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்
ஸ்ரீ நம்மாழ்வார் போல்

————-

ஸ்ரீ திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் மதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

————–

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன் –

எம்பெருமானுக்கு திரு மதிள் போல் அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள்
செய்து அருளின ஆழ்வாருடைய திரு நாமங்கள்
பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது இதில் –

பிரத்யசேஷ குரவஸ் ஸ்துத்யா-என்னக் கடவது இறே –
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லாருக்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்-

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலரானவர் வாழி

வாழி கலிகன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் —
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையராய் –
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல்-
அங்கே வாழுகிறவர் என்னுதல்

வாழியரோ–மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -என்று
ஆழ்வாரையும்
அவர் திருக்கையிலே வேலையையும் ஒருகாலே ஆசாசித்த படி –

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே வாள் வலியால் மந்திரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே –
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்திலே இறே மந்திரப் பொருள் கைக் கொண்டது –
மந்திரத்தைப் பற்றி இறே மந்திரம் கொண்டது

மங்கையர் கோன்-
மங்கையர் மன்னன் இறே

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியை யுடையவர்

அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -என்று
தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே

சுடர்மான வேல் –
தேஜோ ரூபமான மான வேல் –
பெரிய வேல்
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

வாழியரோ –
இத்தால் ஆழ்வாரோ பாதி
ஆயுதமும் ஆசாஸ்யம் என்றபடி –

நின் கையில் வேல் போற்றி என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல் ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும் –
இதன் விஜயத்தை வேண்டுகிறது —ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

————————————————————————–

அவதாரிகை -1-
சம்சார ஸ்வபாவ அனுசந்தானத்தாலே மிக அவசன்னரான ஆழ்வார்
அவற்றின் பரிகாரமாக
அவனை கைகளால் தொழுது
மனசாலே நினைத்து
வாயாலே பேசி திருவடிகளிலே விழுந்தார் –

இங்கனே கிடந்தது நோவு பட உமக்கு அபேஷிதம் என் என்ன
பகவத் விரோதியாகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கித் தர வேணும் -என்றார்

அத்தை நம்மால் செய்யல் ஆவாதே என்ன

உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
சர்வ சமாஸ்ரயநீயன் ஆகவும்
ஆபத் சகன் ஆகவும்  இருக்கிற நீயே
என்னுடைய சம்சாரத்தை கழித்து அருளா விடில்
என்னால் கழித்துக் கொள்ளப் போகாதே -என்று
திருவடிகளிலே விழுந்து தம் தசையை அறிவிக்கிறவராய் -இருக்கிறது –

அவதாரிகை -2-
முதலிலே கரண களேபர விதுரமாய்
அவிஜ்ஞ்ஞேய ஸ்வரூபமாய்
அசித் கல்பமாய் இருக்கிற இவற்றை –

அர்த்தித்வாதி நிரபேஷமாக
உன்னுடைய நிரவதிக தயையாலே உண்டாக்கின நீயே அருளிக் கடாஷியாயகில்
அமூநி புவநாநி பாவித்தும் நாலம்-ஸ்தோத்ர ரத்னம் -10–
முதலிலே இவை யுண்டாகவே மாட்டாது
சத்தையே தொடங்கி உன்னதீனமான பின்பு
உன்னை ஒழிய இவற்றுக்கு ஒரு பிரவ்ருத்தி நிவ்ருத்தி கூடாது
என்னும் இடம் சொல்லவும் வேணுமோ

இது இல்லாத வன்று உண்டாக்கின நீயே
இதுக்கு ஒரு போக்கடி பார்க்கை ஒழிய
நான் ஓன்று செய்து உன்னைப் பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ-

சரணா மறை பயந்த -தாமரை யானோடு
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம் -அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு –முதல் திரு -60-என்றபடி

ஜ்ஞானாதிகனான சதுர முகனோடே கூட உத்பத்தி விநாசாதிகளுக்கு கர்மீ பவிக்கிற சகல சேதனர்க்கும்
ரஷை என்று பெற்ற பெற்றவை எல்லாம்
நம் மேல் வினை கடிவான் என்றபடி
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக கையிலே திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உபகாரகனான அவன் பார்க்கில் பார்க்கும் இத்தனை அல்லது
வேறு கடல் சூழ்ந்த பூமியில் உள்ள சேதனர் தங்களுக்கு ரஷை தாங்கள் அன்றியார்கள்

அவனை ஒழிய இவை அறியாது ஒழிய வேண்டுகிறது என் என்னில் –
நைவ கிஞ்சித் -ஜிதந்தே -1-6-இத்யாதி –
உனக்கு-பரோஷமாய் இருப்பது ஓன்று இல்லை
எத்தனை யேனும் ஜ்ஞானாதிகரராய் இருப்பாருக்கும் நீ கண்ணுக்கு விஷயம் ஆகாய்
உனக்கு கை புகராதது ஒன்றும் இல்லை –
எத்தனை யேனும் அதிசய ஜ்ஞானாதிகர்க்கும் நீ கை புகுந்தாய் இராய்-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன வென்றால்
ஒருவனுக்கு கண்ணும் தோற்றாதே
காலும் நடை தாராதே இருப்பது

ஒருவனுக்குக் கண்ணும் தோற்றி
காலும் நடை தருவது

இப்படி இருந்தால் யார் வழி காட்டிக் கொடு போவார்கள்

நான் அஜ்ஞனாய் அசக்தனாய் இருந்தேன் -நீ சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தாய்
இங்கனே இருந்த பின்பு நீ என் கார்யம் செய்து தலைக் கட்டும் இத்தனை போக்கி
நான் என் கார்யம் செய்து தலைக் கட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார்-

நீ தந்த ஜ்ஞானம் கொண்டு அறியப் பார்த்தாலும்
அறிந்த படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தி எனக்கு யுண்டோ –

ஆழ்வாருக்கு முதலிலே செப்பேட்டைக் கையிலே கொடுத்து
நிதியைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
திரு மந்த்ரத்தையும்
அதில் அர்த்தத்துக்கு எல்லை நிலமாகக் கோயில்களையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
க்ருதக்ருத்யராய் –
சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஒக்க மறந்தார்

ஆழ்வாரைப் பார்த்து எம்பெருமான் –
நீர் இருக்கிறது சம்சாரத்தில் கிடீர் -என்று அருளிச் செய்ய –
அதன் கொடுமையை அனுசந்தித்து ஆற்றாமையாலே
மநோ வாக் காயங்களாலே எம்பெருமானை அனுபவித்து ஆற்றப் பார்த்தார்

அது பண்டையிலும் இரட்டையாய்
மிகவும் ஆற்றாமையாலே
எம்பெருமானுடைய சரண்யதவத்தைப் பேசிக் கொண்டு
அதுக்கு எல்லை நிலமான திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வார் திருவடிகளையே
எத்தசைக்கும்
இஷ்ட பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும் உபாயமாக பற்றி முடிக்கிறார் –

சித்திர கவி வகைகள்
சக்ரபந்தம் -பத்ம பந்தம் -நாக பந்தம் -ரதபந்தம்

————————————————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு  மானுரியிலங்கு மார்வினன் இரு  பிறப் பொரு மாணாகி
ஒரு முறை  ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து
நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி  ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை 
ஏழு உலகு எயிற்றினில்  கொண்டனை 
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை 
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை 
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின்னீரடி யொன்றிய மனத்தால்
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை 
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே
அறுபத முரலும்   கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

தனிப்பாடல் –
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருத்துந்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே

————————————————————————–

1- ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –

———–

2-விரோதி நிரஸனம்

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

தான் உண்டாக்கின பயிருக்குக் களை பறிப்பானும் தானே யானால் போலே
ஸ்ருஷ்டமான ஜகத்தை அழிவு செய்யும் ராஷசரை நிரசிப்பானும் தானே —

இல்லாததை யுண்டாக்கின உனக்கு உள்ளதுக்கு
ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ என்கையும்

பிராட்டியோட்டைக் கலவிக்கு விரோதியான ராவணனை அழியச் செய்த உனக்கு
என்னுடைய பிரதிபந்தகம் போக்குகை அரிதோ என்கையும்

ப்ரஹ்ம சிருஷ்டி போலே சங்கல்ப்பத்தாலே செய்கை அன்றிக்கே
நேர் கொடு நேரே பூசலில் நின்று அழியச் செய்தாய் –

————-

3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

—————-

4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை

நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்கயோ அபேஷிதம் செய்தது என்னில்
அன்று
ஆபத்தும் விசுவாசமும் என்கிறது அல்பம் உண்டானால்
தான் தண்ணியரான திர்யக்குகளுக்கும் அபேஷிதம் செய்யும் என்கிறது-

பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்காக உன்னை அழிய மாறிக் கார்யம் செய்த அளவேயோ –
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்தவன் அன்றோ –

————-

5-ஸர்வ பல பிரதத்வம்

முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-

உபாயாந்தர நிஷ்டருக்கும் அவற்றை நடத்திக் கொடுப்புதி இறே –
யோகோ யோகவிதாம் நேதா -என்கிறபடியே –

வர்ணங்களில் உத்க்ருஷ்ட வர்ணமாய் நல்வழி போகக் கடவதாய் இருக்கும்
ப்ராஹ்மண ஜாதிக்கு அடைய-
ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படியைச் சொல்கிறது

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –

கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –
இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது-

——————–

6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-

தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும்
ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் –
அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது –

அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்-
அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது –

—————

7-சர்வ ரக்ஷகத்வம்

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-

ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே
சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்

————

8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை

கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-

மனுஷ்யருக்குப் போக்யமான ஷட் ரச ரூபமான பிரயோஜனம் ஆனாய்
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

சாஸ்த்ரங்களால் ஷட் ரசங்களுடைய பிரயோஜனமாய் இருந்து வைத்து-
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

———–

9-ஆயுதங்கள் தரித்து

சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

தம்முடைய போக்யமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
மிகவும் பிரகாசத்தை யுடைத்தாய் இருக்கிற திவுய ஆயுதங்களை
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகிய திருக் கையிலே தரிப்பாய்

——————

சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

10-சர்வ பல பிரதத்வம்

——————

11-புருஷகாரம்

நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –

தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –
எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

————

12-சாமான்ய ரஷணம் சொல்லுகிறது –

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-

முன்பு அனுசந்தித்த படியே ரஷித்த ரஷண பிரகாரம் சொல்லுகிறது —

சாஸ்திர முறை தப்பாத படி முறையிலே நடக்கிற நாலு வகைப் பட்ட வர்ணங்களும்
நீ இட்ட வழக்காய் இருக்கிறது
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் நீ இட்ட வழக்கு
சத்தாதிகளும் உன் அதீனமான பின்பு உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ –

—————-

13-சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –

அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –

சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –
என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் –

——————-

14-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-

————-

15-ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –

மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –
ந கச்சித் ந அபராத்யதி என்னும்
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-

————–

16-ஆராதனைக்கு எளியவன்
17-சரீர சரீரீ பாவம் –
18-பிரதிபந்தகம் போக்கி
19-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
20-ஸ்ரீ யபதித்தவம்
21-சர்வ அந்தர்யாமி
22- மேன்மைகள்-இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –

அற முதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-
தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற புருஷார்த்த சதுஷ்ட்யங்களுமாய்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே ஸ்வ ரூபேண நின்று -அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று

ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ஸ சம்ஜஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு புராணம்
என்னலாம் படி நிற்பானாய்
சுக துக்கங்களுக்கு நியாமகனாய்
காரண அவஸ்தையிலே சத் சப்த வச்யனாய்
சிருஷ்டி காலத்தில் வந்தவாறே
பஹூஸ்யாம் என்கிறபடியே –
விஸ்த்ருதனாய் நிற்கிறாயும் நீ

———–

23-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –

இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும்
சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –

என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

—————

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் இயற்றிய ஸ்ரீ திருவெழுகூற்றிருக்கை–

March 17, 2021

எழுவர் -மங்களா சாசனம்
நாலாயிரம் நாத முனிகளுக்கு அளிக்க உதவிய ஆழ்வான்
அகஸ்தியர் -ஏழு கடல் நீரைப்பருகி -ஆசமனம் -சாரமாக அமுதம் -தாயார் இடம் -குடம் -தானே தாயார் -குட முனிவர் –
பெண் ரஹஸ்யம் வைக்க மாட்டாமல் குட மூக்கு -கும்ப கோணம் -குடந்தை –
அனைத்து மொழிகள் வார்த்தைக்குள் ஆராவமுதமே தானே சாரம் -தேவர்களும் அறியாத -சமஸ்க்ருதம் கூட அறிய மாட்டாமல்
ஆரா அமுதே -ஆழ்வார் ஈடுபட்டு -ரஹஸ்யம் வெளி வந்ததே –
அருளிச் செயல்களையும் வெளியிட்ட வைபவம் -13-ஆழ்வார் -இவர் தானே –
ஆராவமுத ஆழ்வார் ஆதரித்த பேறுகளை -மா முனிகள் –

பூதம் பேய்
பெருமை
பிணி தீர்க்கம்
அடியார் வசம்
வாத்சல்யம்

திரு மங்கை -சார்ங்கம் அம்சம் -வில் பிடித்த இவன் இடம் அபி நிவேசம் இருக்கச் சொல்ல வேண்டுமோ
ஆவியே –குடந்தையே தொழுது -தொடங்கி –
தன குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயன் நினைந்திட்டேனே
ஆறு பிரபந்தங்களிலும் மங்களா சாசனம் –
ஆரா இன்னமுத்தை
குடந்தை -அச்சோ ஒருவர் அழகிய வா

அமுதன் புத்துணர்ச்சி கொடுத்து பெரிய திருமொழி முழுவதும்
திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் அமுதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

ஆண்டாள்
ஆராவமுதனின் சூடிக் களைந்த மாலை -குடந்தை கிடந்த குடமாடி –ஆசைப்பட்டாள் –
கோதாஸ்தவம் -ஆசு கவி -அமுதன் இவளுக்கு -சாரங்க பாணிக்கு துல்ய
கமலை -அமுதனாம் அரங்கனுக்கு மேலை இட்டாள் வாழியே –

பெரியாழ்வார் –பிள்ளைத்தமிழ் -ஆண் குழந்தை -பத்து பருவங்கள் -சப்பாணி -நான்காவது —
ஒன்பதாவது மாதம் உட்கார்ந்து கை கொட்டும்
நான்கு நிலா –
வாசப்படி -படித்தால் மேலே ஏறலாம் -ரேழி -நடை பாதை -கூடம் -சத்சங்கம் -மநம் பக்குவம் -பூஜ -முற்றம்
தூணிலா –முற்றத்து –
வா நிலா அம்புலி வா என்று -நிலா -இங்கு நிலவுகின்ற அம்புலி
நீ நிலா -நீ நின்று சப்பாணி

நம்மாழ்வார் -ஆராவமுதே -அளவு மீறினால் அமுதமும் நஞ்சு இல்லையே இங்கு
கும்பேஸ்வரர் -பின் இருந்து -பின் அழகை பார்க்கவே
ச ஏகதா பவதி -பல வடிவங்கள் -சுற்றி பல ஈஸ்வர கோயில்களில் பருகிக் கொண்டு –
யாருக்கு ஆராவமுதே -சொல்லாமல்
இன்னார் இனையார் இல்லாமல் தனக்கும் கூட -ஆராவமுதன் –
கருடனாக தானே இருந்து -உபய நாச்சியாரும் தானாகவே -ஆதி சேஷனாக இருந்து
உத்சவர் கையில் சார்ங்கம் -மூலவர் திரு நாமம் சாரங்க பாணி
த்யான ஸ்லோகம் -வந்தே சயான போகே சார்ங்க பாணி –
ஆராவமுதன் முன் அழகை பார்க்க எழுந்து இருந்து எட்டிப் பார்த்தான் -திரு மழிசை பிரான் வியாஜ்யமாக –
தானே ஆழ்ந்து ஆழ்வான் திரு நாமம் பெற்றான் -இது இரண்டாவது காரணம்
கீழே நாலாயிரம் அருளியதால் ஆழ்வார் பார்த்தோம்
நெல்லும் கவரி வீசும்படி -உடலும் உருகும் படி
ஏரார் -அழகு குடி கொண்டு கிடந்தாய் –
ஐஸ்வர்யம் கோயிலில் பிரசித்தம் இங்கு சவ்ந்தர்யம் மாதுர்யம் அழகு பிரசித்தம்

வேறே ஒருவர் மூலம் மோக்ஷம் காலனைக் கொண்டு மோதிரம் கொள்ளுவது போல்
பேறு தராமல்
உலகம் -உண்ட -தாயார் உடன்
ராஜ கோபாலனாக வந்து அருள –
சூழ் விசும்பில் -குடந்தை எம் கோவலன் குடி அடியாருக்கே
ஸ்ரீ வித்யா ராஜகோபாலனாக –

திரு மழிசை பிரான் -மூன்றாவது காரணம் -இவரால் –
அமுது செய்த பானகம் விரும்பி அமுது செய்தானே
நடந்த கால்கள் –வாழி -கேசனே –
உத்தான சயனம் -பக்த பராதீனன்
ஆழ்வாரின் வார்த்தையில் ஆழ்ந்து -இது நான்காவது காரணம்
கோ நிலாவ -நந்தன் மகிழ கொட்டாய்

பேயாழ்வார்
சேர்ந்த திருமால் –30-கடல் -குடந்தை -வேங்கடம் -நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு
வாய்ந்த மறை பாடகம் ஆதி சேஷன் திருத்துழாய் –ஒன்பது இடங்கள்
மனசுக்கு வருவது புருஷார்த்தம் -திவ்ய தேசம் -transit places -அங்குத்தை வாசம் சாதனம் இங்குத்தை வாசம் சாதகம்
வாத்சல்யம் காட்டி அருளி –
அத்தி வரதர் உணர்த்தும் தத்வம் -அந்த களேபர -பாசி பிடித்த அனந்த சிராஸ் –
தூய வைகுண்டம் போல் கர்ப்ப க்ருஹம் -வெளி வந்து-உணர்த்தி விட்டு மறைகிறார்

பூதத்தாழ்வார்
எங்கள் திருமால் -செங்கண் -புண்டரீகாக்ஷத்வம் -மைத்தடம் கண்ணினாய் –
இருவருக்கும் பார்த்து கொண்டே இருப்பதால் விளைந்த விகாரம்
நெடு மால் -திரு மார்பா -திருவடி ரேகைகளாலே பரம் பொருள் ஆகிறான் –
இமையோர் தலைமகன் -எங்கள் பெருமான் -அவற்றை விட்டு
பொங்கு அரவணை மேல் குடமூக்கில் கோயிலாகக் கொண்டு –

பாரம்யம் கலியன் -பெருமையை பாடி அருளி
நதார்த்தி சமநம் -அடி பணிந்த அணியார் துயர் ஆர்த்தி போக்கு ஆண்டாள்
தஸ்யா பிதா ஸுசீல்யம் -வடக்கு பிரகாரம் தூணிலா முற்றம் -ஆண்டாள் சந்நிதி
மாதுர்யம் நம்மாழ்வார்
பக்தேஷு விதேயம் -ஆஸ்ரித பரதந்த்ரன்
மஹத் பூதவ் -வாத்சல்யம் -ஸுலப்யம் -accessibility -நாம் பற்றும் படி கோயில் கொண்டு
நீராக கலப்பது ஸுசீல்யம் -பெரியாழ்வார் காட்டி அருளி –
இப்படி பிரதானம் ஏழும்-நதிகள் -சுரங்கள் ஏழு காண்டம் -ஏழு நாட்கள் -ஸப்த பிரகாரம் -ஸப்த கிரி போல்

பெருமை
பக்தர் பிணி தீர்க்கும் கோதை பாட
அருமை எளிமை
ஆராவமுதாய இனிப்பதாய்
அடியார் வசம்
வாத்சல்யம்
திரு உடனே நாம் பற்றும் படி நின்ற வாற்றை இயம்பினாரே -இப்படி ஏழும்

————

எழு ஏழு
கூற்று
இருக்கை
ஏழு கூறுகள் சொற்கள்
அடுக்குகள்
பேர் இன்பத்தால் எழுந்த வார்த்தைகள்
அவன் எழுந்து அருளும் சொல் தேர்
தேர் தட்டில் இருந்து அருளிய சரணாகதி நினைவூட்ட

ஒரே திவ்ய தேசம் பிரபந்தம்
திருமாலையில் வட மதுரை உண்டே
திருப்பள்ளி எழுச்சியில் அயோத்யா உண்டே
கல் தேர் கர்ப்ப க்ரஹம்
மரத்தேர்
சொல் தேர்
ரத பந்தன கவி
ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் மங்களா சாசனம்
வேதம் -ஏழு சந்தஸ்ஸூக்கள்
காயத்ரி ஜகதி சக்கரம்
உஷ்ணு
அனுஷ்ட்ப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் தட்டு

சம்சார துக்கம் போக்கவே
ஆறு அங்கம் கூற அவதரித்தவர் அன்றோ -ஆராவமுதன் இடம் சரணாகதிக்கு நம்மாழ்வார் போல் இவரும்

18 குணங்களை காட்டி சரண்

1- ப்ரம்மா ஸ்ருஷ்ட்டி
2-விரோதி நிரஸனம்
3-ஆஸ்ரித ரக்ஷணம் -மூவடி —அளந்தனை
4-ஆபத் சகத்வம் -நால் திசை –மடுவில் தீர்த்தனை
5-ஸர்வ பல பிரதத்வம்
6-தேவர்களாலும் அறிய முடியாத பெருமை
7-சர்வ ரக்ஷகத்வம்
8-சர்வ போக்யத்வம் -ஆறு சுவை
9-ஆயுதங்கள் தரித்து
10-சர்வ பல பிரதத்வம்
11-புருஷகாரம்
12-ஆராதனைக்கு எளியவன்
13-சரீர சரீரீ பாவம் –
14-பிரதிபந்தகம் போக்கி
15-சாஸ்திரம் ஒன்றாலே அறிந்து கொள்ளும் படி உள்ளவன்
16-ஸ்ரீ யபதித்தவம்
17-சர்வ அந்தர்யாமி
17 மேன்மைகள்
18-ஸுலப்யம் -செல்வம் மல்கு திருக்குடந்தை ஆராவமுதன்
வரும் இடர் அகல சரணாகதி
நம்மாழ்வார் போல்

——————

திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் இயற்றிய திருவெழுகூற்றிருக்கை

ஒருகுணக் கடலே! இருவினை இருள்தனை
நிலந்தரம் செய்யும் ஒருபேர் ஒளியே!
அடைந்திடும் அடியவர்க்கு ஒருதனிப் புகலே!
உடையவர் தந்தம் ஈரடி மலரே!
மூவெழுத்து உணர்ந்தோர் முடியினில் அணியே!
இருநிலந் தனிலே ஒன்றாம் திங்கள்,
ஒன்றிய விண்மீன் தன்னில் தோன்றும்
இருப்பிறப் பினரே! மூவாத் தொண்டரே!
நானிலத் தாரியர் முக்கோல் பகவர்
நன்மொழி யின்படி இருவராய் வந்தே
ஓர்மலை தன்னில் ஒருதனித் தோட்டம்
இருவராய் அமைத்த குரவரே! முக்குணம்
கடந்த அந்நான்மறை வேதியன் அஞ்சல்
அளிக்கவே, நால்திசை தொழுந்திரு மலையினில்
மேவி, முக்காலும் அண்ணல் ஈரடி
ஒன்றிலே, ஒன்றிய மனத்துடன் மலர்த்தொடை
சூட்டி, இருமுப் பொழுதும் கடமையில்
ஊன்றிய சீர் ஆண் பிள்ளையே! நான்மறை
வேதியன் ஐநிலை அறுகுணன், ஐந்தாம்
மறையும் நாலா யிரமும், புகழும்
முப்பதப் பொருள்தன், இருகண் நோக்கின்
ஓரிலக்காகி, அவன்தனக்கு ஓருயர்
மாமனும் ஆகி, ஈரிதழ்க் கோவையால்
தனியனும் பெற்ற தனிப்பெரும் சீலரே!
மூவகை வாக்கியம் ஒருங்கவிட்டு அருளி,
நான்மறை மயர்வினை முழுவதும் நீக்கி,
ஐவகை அர்த்தமும் ஆறொடு பேறும்,
ஏழுலகினுக்கும் தெளிவாய் உரைத்தே,
அறுமதச் செடிதனை அடியுடன் அறுத்தே,
ஐந்து சடங்கொடு நானிலத் தார்க்கெலாம்,
மூன்று இரகசியப் பொருளையும் காட்டி,
நாரணன் ஈரடி சேர்த்திடும் ஆரியர்,
தாள்களில் ஒன்றிய உளந்தன்னாலே,
மதுர கவிகளின் தாசனென்று ஒருபேர்
பெற்ற செல்வரே! ஒன்றாய் இரண்டாய்
மூன்றாய் நான்காய் ஐந்து பூதமாய்,
ஆறாய் ஆகியும் ஆக்கியும் ஆளும்
ஏழு மலையின் நாயகன் முகத்தில்
தழும்பினை ஆற்றிய பத்தியின் ஆறே!
ஐம்புலன் கிரிசை யாவையும், நால்தோள்
நாதனின் தாளிணை சேர்த்த செம்மலே!
முத்தமிழ் இருநூல் ஒருத்தியின் தாளைப்
போற்றிடும் திருமலை அனந்தாழ் வானே!
வித்தகர் உம்மடி எந்தம்
சித்தம் திகழ்ந்திட நித்தம் நலமே!

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் வேங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஆழ்வார்கள் போற்றிய ஸ்ரீ ஆராவமுத ஆழ்வான் -ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ வே வேங்கடேஷ் ஸ்வாமிகள்–

February 2, 2021

எழுவர் -மங்களா சாசனம்
நாலாயிரம் நாத முனிகளுக்கு அளிக்க உதவிய ஆழ்வான்
அகஸ்தியர் -ஏழு கடல் நீரைப்பருகி -ஆசமனம் -சாரமாக அமுதம் –
தாயார் இடம் -குடம் -தானே தாயார் -குட முனிவர் –

பெண் ரஹஸ்யம் வைக்க மாட்டாமல் குட மூக்கு -கும்ப கோணம் -குடந்தை –
அனைத்து மொழிகள் வார்த்தைக்குள் ஆராவமுதமே தானே சாரம் –
தேவர்களும் அறியாத -சமஸ்க்ருதம் கூட அறிய மாட்டாமல்

ஆரா அமுதே -ஆழ்வார் ஈடுபட்டு -ரஹஸ்யம் வெளி வந்ததே –
அருளிச் செயல்களையும் வெளியிட்ட வைபவம் -13-ஆழ்வார் -இவர் தானே –
ஆராவமுத ஆழ்வார் ஆதரித்த பேறுகளை -மா முனிகள் –

பூதம் பேய்
பெருமை
பிணி தீர்க்கம்
அடியார் வசம்
வாத்சல்யம்

திரு மங்கை -சார்ங்கம் அம்சம் -வில் பிடித்த இவன் இடம் அபி நிவேசம் இருக்கச் சொல்ல வேண்டுமோ
ஆவியே –குடந்தையே தொழுது -தொடங்கி –
தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயன் நினைந்திட்டேனே
ஆறு பிரபந்தங்களிலும் மங்களா சாசனம் –
ஆரா இன்னமுத்தை
குடந்தை -அச்சோ ஒருவர் அழகிய வா

அமுதன் புத்துணர்ச்சி கொடுத்து பெரிய திருமொழி முழுவதும்
திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் மதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

ஆண்டாள்
ஆராவமுதனின் சூடிக் களைந்த மாலை -குடந்தை கிடந்த குடமாடி –ஆசைப்பட்டாள் –
கோதாஸ்தவம் -ஆசு கவி -அமுதன் இவளுக்கு -சாரங்க பாணிக்கு துல்ய
கமலை -அமுதனாம் அரங்கனுக்கு மேலை இட்டாள் வாழியே –

பெரியாழ்வார் –பிள்ளைத்தமிழ் -ஆண் குழந்தை -பத்து பருவங்கள் -சப்பாணி -நான்காவது —
ஒன்பதாவது மாதம் உட்கார்ந்து கை கொட்டும்
நான்கு நிலா –
வாசப்படி -படித்தால் மேலே ஏறலாம் -ரேழி -நடை பாதை -கூடம் -சத்சங்கம் -மநம் பக்குவம் -பூஜ -முற்றம்
தூணிலா –முற்றத்து –
வா நிலா அம்புலி வா என்று -நிலா -இங்கு நிலவுகின்ற அம்புலி
நீ நிலா -நீ நின்று சப்பாணி

நம்மாழ்வார் -ஆராவமுதே -அளவு மீறினால் அமுதமும் நஞ்சு இல்லையே இங்கு
கும்பேஸ்வரர் -பின் இருந்து -பின் அழகை பார்க்கவே
ச ஏகதா பவதி -பல வடிவங்கள் -சுற்றி பல ஈஸ்வர கோயில்களில் பருகிக் கொண்டு –

யாருக்கு ஆராவமுதே -சொல்லாமல்
இன்னார் இனையார் இல்லாமல் தனக்கும் கூட -ஆராவமுதன் –

கருடனாக தானே இருந்து -உபய நாச்சியாரும் தானாகவே -ஆதி சேஷனாக இருந்து
உத்சவர் கையில் சார்ங்கம் -மூலவர் திரு நாமம் சாரங்க பாணி
த்யான ஸ்லோகம் -வந்தே சயான போகே சார்ங்க பாணி –
ஆராவமுதன் முன் அழகை பார்க்க எழுந்து இருந்து எட்டிப் பார்த்தான் -திரு மழிசை பிரான் வியாஜ்யமாக –
தானே ஆழ்ந்து ஆழ்வான் திரு நாமம் பெற்றான் -இது இரண்டாவது காரணம்
கீழே நாலாயிரம் அருளியதால் ஆழ்வார் பார்த்தோம்
நெல்லும் கவரி வீசும்படி -உடலும் உருகும் படி
ஏரார் -அழகு குடி கொண்டு கிடந்தாய் –
ஐஸ்வர்யம் கோயிலில் பிரசித்தம் இங்கு சவ்ந்தர்யம் மாதுர்யம் அழகு பிரசித்தம்

வேறே ஒருவர் மூலம் மோக்ஷம் காலனைக் கொண்டு மோதிரம் கொள்ளுவது போல்
பேறு தராமல்
உலகம் -உண்ட -தாயார் உடன்
ராஜ கோபாலனாக வந்து அருள –
சூழ் விசும்பில் -குடந்தை எம் கோவலன் குடி அடியாருக்கே
ஸ்ரீ வித்யா ராஜகோபாலனாக –

திரு மழிசை பிரான் -மூன்றாவது காரணம் -இவரால் –
அமுது செய்த பானகம் விரும்பி அமுது செய்தானே
நடந்த கால்கள் –வாழி -கேசனே –
உத்தான சயனம் -பக்த பராதீனன்
ஆழ்வாரின் வார்த்தையில் ஆழ்ந்து -இது நான்காவது காரணம்
கோ நிலாவ -நந்தன் மகிழ கொட்டாய்

பேயாழ்வார்
சேர்ந்த திருமால் –30-கடல் -குடந்தை -வேங்கடம் -நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு
வாய்ந்த மறை பாடகம் ஆதி சேஷன் திருத்துழாய் –ஒன்பது இடங்கள்
மனசுக்கு வருவது புருஷார்த்தம் -திவ்ய தேசம் -transit places -அங்குத்தை வாசம் சாதனம் இங்குத்தை வாசம் சாதகம்
வாத்சல்யம் காட்டி அருளி –
அத்தி வரதர் உணர்த்தும் தத்வம் -அந்த களேபர -பாசி பிடித்த அனந்த சிராஸ் –
தூய வைகுண்டம் போல் கர்ப்ப க்ருஹம் -வெளி வந்து-உணர்த்தி விட்டு மறைகிறார்

பூதத்தாழ்வார்
எங்கள் திருமால் -செங்கண் -புண்டரீகாக்ஷத்வம் -மைத்தடம் கண்ணினாய் –
இருவருக்கும் பார்த்து கொண்டே இருப்பதால் விளைந்த விகாரம்
நெடு மால் -திரு மார்பா -திருவடி ரேகைகளாலே பரம் பொருள் ஆகிறான் –
இமையோர் தலைமகன் -எங்கள் பெருமான் -அவற்றை விட்டு
பொங்கு அரவணை மேல் குடமூக்கில் கோயிலாகக் கொண்டு –

பாரம்யம் கலியன் -பெருமையை பாடி அருளி
நதார்த்தி சமநம் -அடி பணிந்த அணியார் துயர் ஆர்த்தி போக்கு ஆண்டாள்
தஸ்யா பிதா ஸுசீல்யம் -வடக்கு பிரகாரம் தூணிலா முற்றம் -ஆண்டாள் சந்நிதி
மாதுர்யம் நம்மாழ்வார்
பக்தேஷு விதேயம் -ஆஸ்ரித பரதந்த்ரன்
மஹத் பூதவ் -வாத்சல்யம் -ஸுலப்யம் -accessibility -நாம் பற்றும் படி கோயில் கொண்டு
நீராக கலப்பது ஸுசீல்யம் -பெரியாழ்வார் காட்டி அருளி –
இப்படி பிரதானம் ஏழும்-நதிகள் -சுரங்கள் ஏழு காண்டம் -ஏழு நாட்கள் -ஸப்த பிரகாரம் -ஸப்த கிரி போல்

பெருமை
பக்தர் பிணி தீர்க்கும் கோதை பாட
அருமை எளிமை
ஆராவமுதாய இனிப்பதாய்
அடியார் வசம்
வாத்சல்யம்
திரு உடனே நாம் பற்றும் படி நின்ற வாற்றை இயம்பினாரே -இப்படி ஏழும்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ வே வேங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவெழு கூற்றிருக்கை -ஸ்ரீ உ . வே . P.B.A ஸ்வாமிகள் வியாக்யானங்கள் —

July 29, 2016

ஸ்ரீ மன் நாதமுனிகள் வகுத்து அருளினை அடைவிலே
மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் எட்டாவது பிரபந்தமாக அமைந்தது இது –

——————-

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன்

—————–

அவதாரிகை –

வென்றியே வேண்டி வீழ் பொருட்க்கு இரங்கி வேற் கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் -என்றும்
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்து ஆழ்ந்தேன் -என்றும்
தாமே அருளிச் செய்தபடி
விஷய பிரவணராய் திரிந்து கொண்டு இருந்த இவ்வாழ்வார்

தம்மை எம்பெருமான் திருத்திப் பணி கொள்ளத் திரு உள்ளம் பற்றி விஷயங்களில் ஆழ்ந்து திரிகிற இவரை
சாஸ்த்ரங்களைக் காட்டித் திருத்த முடியாது –
நம் அழகைக் காட்டியே மீட்க வேணும் என்று கொண்டு தன் அழகைக் காட்டிக் கொடுக்க

ஆழ்வாரும் அதைக் கண்டு ஈடுபட்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது -அடியேன் நான் பின்னும்
உன் சேவடி அன்றி நயவேன் -என்னும்படி அவகாஹித்தார் –

இவர் இப்படி தன் பக்கல் அவகாஹிக்கக் கண்ட எம்பெருமான் –
இப்போது இவருக்கு நம் இடத்து உண்டான பற்று
மற்ற விஷயங்களை போல் அல்லாமல் சம்பந்த உணர்ச்சியை முன்னிட்டுப் பிறந்ததாக வேணும் –
இல்லையேல் இப்பற்று இவருக்கு நிலை நிற்காது ஒழியினும் ஒழியும் என்று எண்ணி

எல்லா பொருள்களையும் விளக்குவதான திரு மந்திரத்தையும்
தனது ஸுசீல்யம் முதலிய திருக் குணங்களையும் திரு மந்த்ரார்த்துக்கு எல்லை நிலமான திவ்ய தேசங்களையும்
ஆழ்வாருக்கு காட்டிக் கொடுக்க –

அவரும் வாடினேன் -வாடி -என்று தொடங்கி
எம்பெருமான் உகந்து அருளின இடமே பரம ப்ராப்யம் என்று அனுபவித்தார் –

இங்கனம் அனுபவித்த ஆழ்வாருக்கு இவ்வனுபவம் நித்யமாய்ச் செல்லுகைக்காக
இவரைத் திரு நாட்டில் கொண்டு போக வேணும்
எனக் கருதிய எம்பெருமான் இவர்க்கு ஜிஹாசை பிறக்கும்படி அதனுடைய தண்மையை அறிவிக்க

அறிந்தவர் அஞ்சி நடுங்கி -மாற்றம் உள -என்னும் திரு மொழியிலே –
இரு பாடு எரி கொள்ளியின் உள் எறும்பே போல் -என்றும்
பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போல் -என்றும் –
வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போலே -என்றும்
தமது அச்சத்துக்கு பலவற்றை த்ருஷ்டாந்தமாகச் சொல்லிக் கதறினார் –

இப்படி இவர் கதறிக் கதறி –
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -என்றும்
அந்தோ அருளாய் அடியேற்கு உன் அருளே -என்றும் -சொல்லி வேண்டின இடத்தும்
சிறு குழந்தைகள் பசி பசி என்று கதறி அழுதாலும்
அஜீரணம் முதலியவை கழிந்து உண்மையான பசி உண்டாம் அளவும்
சோறிடாத தாயைப் போலே எம்பெருமான் –
இவருக்கு முற்ற முதிர்ந்த பரம பக்தி பிறக்கும் அளவும் நாம் முகம் காட்டுவோம் அல்லோம்-
என்று உதாசீனனாய் இருக்க –

ஒரு க்ஷணமும் அவனைப் பிரிந்து இருக்க மாட்டாத ஆழ்வார் மிகுந்த தாஹம் கொண்டவர்கள்
நீரிலே விழுந்து -நீரைக் குடிப்பதும்
நீரை வாரி மேல் இறைத்துக் கொள்வதும் செய்யுமா போலே அவ்வெம்பெருமானை
வாயாலே பேசியும் –
தலையாலே வணங்கியும் –
நெஞ்சால் நினைத்தும் -தரிக்கப் பார்த்தார் –
திருக் குறும் தாண்டகம் என்னும் திவ்ய பிரபந்தத்தில் –

தாஹம் அளவற்றதாய் இருக்க சிறிது குடித்த தண்ணீர் திருப்தியை உண்டு பண்ணாமல்
மேலும் விஞ்சிய விடாயை பிறப்பிக்குமா போலே
இவர் திருக் குறும் தாண்டகத்திலே அனுபவித்த அனுபவம்
பழைய அபி நிவேசத்தை கிளப்பி பெரிய ஆர்த்தியை உண்டாக்கவே –
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையோ –என்று
ஆர்த்தராய் சரணம் புகுகிறார் –
இத் திரு வெழு கூற்று இருக்கை -என்னும் பிரபந்தத்தில் –

——————————————————–

ஆசு கவி –
அருமைப் பட்டு சொற்களை சேர்த்து மஹாப் பிரயாசமாகப் பாடுகை இன்றிக்கே –
பல நிபந்தனைகள் உடன் கூடிய பாடல்களையும் -விரைவில் பரவசமாக பாடுதல்-

மதுரகவி –
சொற்சுவை பொருள்சுவை விளங்க பல வகை அலங்காரம் பொலிய பாடுவது

விஸ்தார கவி –
கலி வெண்பா முதலியவற்றால் விஸ்தரித்து பாடுவது

சித்திர கவி –
சக்ர பந்தம் -பத்ம பந்தம் -முரஜ பந்தம் -நாக பந்தம் -ரத பந்தம் –

எழு கூற்று –
முதல் கூறு மூன்று அறைகள்
இரண்டாம் கூறு ஐந்து அறைகள்
மூன்றாம் கூறு ஏழு அறைகள்
நான்காம் கூறு ஒன்பது அறைகள்
ஐந்தாம் கூறு 11 அறைகள்
ஆறாம் கூறு 13 அறைகள்
ஏழாம் கூறு 13 அறைகள் –

இதே போலே மேலும் கீழும் இரண்டு பாகங்கள் கொண்டதே –

அர்த்த சக்தியாலும்
சப்த சக்தியாலும் நினைப்பூட்டும் சொற்கள் கொண்டு நிறைக்க வேணுமே

ஒரு பேர் உந்தி இருமலர்த் தவசில் -இரு -இரண்டு பெருமை என்ற பொருள்களில் –

ஒன்றிய -அஞ்சிறை -நால் வாய் -இரு நீர் -ஓன்று -ஆறு பொதி –போன்ற இடங்கள் போலே
அர்த்த சப்த சக்தியாலும் காட்டலாம் –

எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றை விசதமாக அனுபவித்து –
அவ்வனுபவம் உள் அடங்காமல் வழிந்து புறப்பட்ட ஸ்ரீ ஸூ க்திகளிலே –
இது போன்றவை அமைந்தவை –

ஸ்ரீ வால்மீகி பகவான் -வாயினின்றும் வெளி வந்த
மா நிஷாத ப்ரதிஷ்டாம் -நான் முகன் பிரசாதத்தால் லக்ஷணம் குறை இன்றி அமைந்தால் போலே –
இதுவும் ஸ்வ பிரயத்தன பூர்வகமான பிரபந்தம் இல்லாமல்
ஸ்ரீ யபதி திருவருளால் அவதரித்த பிரபந்தம் -என்றால் சொல்ல வேண்டாவே –

—————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்  ஒரு முறை யானை ஈன்றனை -தவிச்சு-ஆசனம் –

விலக்ஷணமாய் பெருமை பொருந்திய திரு நாபியில் உண்டான பெரிதான தாமரைப் பூ வாகிற-
ஆசனத்தின் மீது ஒரு கால் பிரமனை படைத்து அருளினாய் –

உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை -பெரியாழ்வார்

உத்பத்திக்கு ஹேதுவான நீயே ரஷித்து அருள வேணும் -என்கைக்காக
முதலிலே இத்தை அருளிச் செய்கிறார் –

—————————–

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

ஸ்ரீ ராமனாய் அவதரித்த காலத்தில் –
சந்த்ர ஸூரியர் அச்சத்தால் மேலே சஞ்சரிக்க ஒண்ணாதததும் –

பகலவன் மீதி யங்காத இலங்கை -பெரிய திருமொழி -5-8-7- –

நீர் மலை வன துர்க்கங்கள் ஆகிற அரண்களை உடையதுமான இலங்கா புரியை
இரண்டு நுனியும் வளைந்த ஒப்பற்ற சார்ங்க வில்லில் பொருந்தியதும்
இரண்டு பற்களை உடையதும்
நெருப்பை கக்குகிற வாயை உடையதுமான அம்பினால் நீராக்கினாய் –

ஈர்கின்ற எயிற்றை உடையது என்றுமாம் –

——————————————————————-

ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி-
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

மாவலியிடம் சென்று மூன்று அடி நிலத்தை யாசித்து –

நானிலம் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் –பூமியிலே
யஜ்ஜோபவீதத்தோடே கூட கிருஷ்ணா ஜினமும் விளங்கா நின்ற திரு மார்பை உடைய

இரு பிறப்பு ஒரு மாண் ஆகி – ஒரு ப்ராஹ்மண ப்ரஹ்மச்சாரியாகி

மான் கொண்ட தோல் மார்பின் மாலையாய் -பெரிய திருமொழி –

த்விஜ -ஜன்மனா ஜாயதே -சூத்ர கர்மணா ஜாயதே த்விஜ –
முதலில் யோனியில் பிறந்து –
வேதம் ஓத இரண்டாம் பிறப்பு

ஒரு காலத்தில் இரண்டு திருவடிகளாலே மூன்று லோகங்களையும் அளந்து கொண்டாயே
கீழே அம்பால் செய்த கார்யம் அருளிச் செய்து
இதில் அழகால் செய்த கார்யம் அருளிச் செய்கிறார் –

பாலை நிலம் -பிராணிகள் சஞ்சரியாத நிலம் –
நான்கு வகை தன்மை இல்லாததே பாலை என்பதால் அத்தை சொல்ல வில்லை –

————————————————–

ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி
நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

கருடாரூடனாய் -வந்து அருளினான்
நாலுவாய் தொங்குதல் -மும்மதம் -இரு செவி –
இது ஒரு கால் அழகே
கை அழகே
தலை அழகே என்று
தாய் குழந்தையை -அழகில் ஆழ்ந்து அவன் அருளிச் செய்ததை ஆழ்வார் அருளிச் செய்கிறார்

பிரஜை கிணற்றில் விழுந்தால் –
காதும் கண்ட வாளியும்-காலும் தலையும் -வடிவும் இருக்கும் படி காண் -என்பாரைப் போலே
இடர்ப்பட்ட இதனுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகம் ஆனபடியாலே சொல்லுகிறது –

ஒரு தனி வேழம் –
தொழும் காதல் களிறு அன்றோ ஒப்பற்ற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்

அரந்தை- துன்பம் –

———————————————————————–

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-முத்தீ நான்மறை ஐவகை வேள்வி
அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-

நான்குடன் -அடக்கி –
உண்ணுதல் உறங்குதல் அஞ்சுதல் விஷய போகம் செய்தல் போன்றவை அடங்க இல்லை செய்து –

ஆஹார நித்ரா பய மாய்த்து நா நி சாமான்ய மேதத் பசுபிர் நராணாம் —

இரு பிறப்பு அறுப்போர் –
நீண்ட சம்சார துக்கத்தை நீக்கிக் கொள்ள வல்ல மகான்களாலே

————————————————————–

ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-
நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின்-
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை-

நாம் முக்கண் உடையோம் -அரவம் பூண்ட பெருமை உடையோம் நாகாபரணன் —
கங்கை நீர் தரித்த வலிமை உடையோம் -என்று மேனாணித்து இருந்தாலும்

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்வார் வெள்கி நிற்ப –

தன்மை பெருமையுள் நின்றானை –
சிவனாலும் அறியப் போகாத தன்மையை உடையனாய் இருக்கிற பெருமை பொருந்தியவன்

நின்றனை –
முன்னிலை ஒருமை வினை முற்று –

அச்சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ –
பரம போக்யன் –

அறு சுவைப் பயனும் ஆயின –

வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி –

பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் –

உறங்குவான் போல் யோகு செய்யும் துயில் –

அமர்ந்தாய்
முன்னிலை வினை முற்று –

———————————————————

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் -முப்பொழுதும் வருட
அறிதுயில் அமர்ந்தனை-
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-
அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-

ஐம்பால் ஓதியை -மென்மை குளிர்ந்து நறு மணம் கருமை நெடுமை –
ஐந்து லக்ஷணங்கள் உடைய கூந்தலை உடைய பிராட்டியை

அறுபதம் -ஷட்பதம் -வண்டு

ஒன்றாய் விரித்து நின்றனை-
ஸூ ஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் –

மாயா வாமனனே மது ஸூ தா நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாயத்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்ற வாறு இவை என்ன நியாயங்களே –

————————————————————————–

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி
மா மணி யலைக்கும் செந்நெல் ஒண் கழனித் திகழ் வன முடுத்த
கற்போர் புரி செய் கனக மாளிகை-நிமிர் கொடி –
விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம-
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

திகழ் வன முடுத்த கற்போர் புரி –
விளங்கும் வனங்களை நான்கு புறங்களிலும் உடையதும் –
வித்வான்கள் உடைய நகரமாகச் செய்யப் பெற்றதும் –

புரி செய் -புரிசை பாட பேதம் –
வித்வான்கள் படுகாடு கிடைக்கும் நகரி என்றவாறு –

புரிசை –
மதிள்களை உடைத்ததாய் என்றபடி –

கனக மாளிகை-நிமிர் கொடி –
பொன் மயமான மாளிகைகளின் நின்றும் மேல் முகமாக ஓங்கும் த்வஜங்கள் –

ஒரு பேர் உந்தி -தொடங்கி-ஒன்றாய் விரித்து நின்றனை -என்னும் அளவும் –
ஆஸ்ரிதர்களை ரஷித்து அருளும் ஸ்வரூப ஸ்வ பாவங்களை பரக்கத் பேசி
இந்த திருக்குணங்கள் செவ்வனே விளங்க திருக் குடந்தையில் கிடக்கிற கிடையிலே ஈடுபட்டு அங்கே-
சம்சார தாபங்களை தீறும்படி அருள் புரிய வேணும் என்று ஆர்த்தராய் சரணாகதி பண்ணித் தலைக் கட்டுகிறார் –

தம்முடைய ஆர்த்தி எல்லாம் தோற்ற திருவடிகளில் தீர்க்க சரணாகதி பண்ணியும் –
இன்னும் இவரைக் கொண்டு
திவ்ய பிரபந்தங்களை வெளியிடுவித்து நம்மை வாழ்விக்க
திரு உள்ளம் பற்றி திரு முகம் காட்டாது ஒழியவே-இவர் மடலூரப் பெற்று
நாம் சிறிய திருமடல் பெரிய திரு மடல் பெறப் பெற்றோமே -என்று சங்கதி –

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி பெறாமல் இருப்பதை-
ஆழ்வார் அனுசந்திப்பதாக ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்