Archive for the ‘திருப்பள்ளி எழுச்சி’ Category

திருப்பள்ளி எழுச்சி- 10-கடி மலர் கமலங்கள்-ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-

இந்த பிரபந்தம் நித்ய அனுசந்தானம் –  –
கைங்கர்யம் பண்ணி சேஷத்வம் சித்திக்க -மகிழ்ந்து ஆசை உடன் -அவனை பள்ளி உணர்த்தி-இது காறும்-
பள்ளி உணர்த்தி கடாக்ஷம் பெற வேண்டியவர்-
இதில்- தம் பெயர்க்கு ஏற்ற -அடியார்க்கு ஆட் படுத்த/
கோல மலர் பாவைக்கு  அன்பாகிய என் அன்பேயோ -தரமி-தர்மம் ஓன்று அன்பே ஆழ்வார் வடிவம்–
அது போல தொண்டர்  பொடியே இவர் -இவர் பிரார்த்தனை
அடுத்த பிர பந்தம்-அமலன் ஆதி பிரான்-அடுத்த ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் –அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் –
பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள்
வையம் தகளியா தொடங்கி  -தொல்லை பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே என்று பேசினவர்கள்-
பிரார்த்தித்த ஆழ்வார் இங்கு -அங்கு பயன் பெற்றதை சொல்கிறார்/

சூழ் புனல் அரங்கா -விளித்து அருளுகிறார்/
உபய காவேரி மத்யத்தில்-கடி-வாசனை /நன்றாக மலர்ந்தன என்கிறார் –
இங்கும்-கனை கடலில் கதிரவன் முளைத்ததை சொல்கிறார் -முதல் பாசுரம் போல-
துடி-உடுக்கை போல சிறிய மின் இடை மடவார்கள்/மின்னிடை மடவார்கள்- தீர்த்தமாடி வஸ்திரம் தரித்து ஏறினார்கள்
பலன் பேர் சொல்லாமல்- முதல் ஆழ்வார்களும்  திரு மழிசை திரு பாண் ஆழ்வாரும் இந்த ஐவரையும் சேர்த்து அமுதனார் –
சீரிய நான் மறை செம்பொருள்-சொல்லி அடுத்து திரு மழிசை ஆழ்வார்-

தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்/
அடையாளம்–சேஷருக்கு சூசுகம் சங்கு சக்கரம் பொலிந்து தோன்றிய தோள் சேஷிக்கு சூசுகம் /
அடியேனை-தாஸ்ய ரசம் கொண்டவன்-அளியல்- நம் பையல்-
அனைவரும் படு காடு கிடக்கிறார்கள் என்று சொல்லி-இதில் தனக்கு வேண்டியதை கேட்டார் /
கீழே -மக்களுக்கு பரத்வம் காட்டி அருள தேவதைகள் கூட்டம் சொல்லி –
இதில் தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

இதுவரை ப்ரஹ்மாதிகளும் படுகாடு கிடப்பதை அருளிச் செய்து
முதலாம் திரு உருவம் மூன்று என்பர்-ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் –நாபிகமலம் -பரத்வம் காட்டி –
நான் முகனை நாராயணன் படைத்தான் சுருதி ஸ்மிர்த்தி மம ஆக்ஜை-அதை வேதம் தமிழ் செய்த ஆழ்வார்கள்/
பரம சைவர்கள்-பசுபதி ஆகமம் -தமிழ் -ஓதுவார்கள் தான் 12000/ஸ்மார்த்தர்கள் வேதம் மட்டும்/
சங்கரர் -பௌதர்கள்  ஜைனர்கள் தலை விரித்து ஆடும் பொழுது அதை மாற்றி வேதம் வழி கொண்டு வந்தார் /
உபய வேதம் -வாய் கொண்டு மானிடம் கவி சொல்ல அல்லேன்-இதில் தன்னை பற்றி பேசுகிறார் –

ஸ்ரீ நஞ்சீயர்

நிகமத்தில்
உபக்ரமத்தில் -பிரயோஜன  பரர் போல அன்றிக்கே-தேவர்கள் ரிஷிகள் போல் அன்றியே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா-அமிர்தம்  வாங்கி போவார் அவர்கள்-தேஷாம் சதத யுக்தாம் –
நித்ய உக்தன் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கும் –
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள் //
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –

தாமரை அலர்ந்து மது வெள்ளம்-கோஷிக்கும் ஸ்வ பாவம் கடலுக்கு-
பெரிய பெருமாளை எழுப்ப முன் கதை- சிவிடக்கு என்று திருப் பள்ளி உணர கூறை பறித்த வ்ருத்தாந்தம்
வெண்ணெய் உண்ட வாயன்-குருந்திடை கூறை பணியாய்–
கண்டாரை பிச்சேற்ற வல்ல இடை –
அவர்கள் தம் தம் உடைகளை தாமே அணிந்து கொண்டு  ஏறி வருகிறார்கள்-சட்டு என்று உணர –
பழைய விருத்தாந்தம் நினைவு படுத்துகிறார்-
பெரிய பெருமாளே கிருஷ்ணன் நம் பெருமாள் சக்ர வர்த்தி திரு மகன் என்று பட்டரும் அருளி செய்வாரே –
ஸ்வாமி கத்யம் அருளியதும் ராமோ துர் நபிஷாயே -இரண்டாவது வார்த்தை பேச மாட்டான்-
சூழ் புனல் அரங்கா –
இங்கு முன்பு அரங்கத்தம்மா யமுனை விரஜை சரயு– மறப்பிக்கும் படி —
காவேரி-மன்னி கிடக்கிறீர்-கங்கையில் புனிதமாகிய காவேரி நடுவு பாட்டு/
கீழே சொன்ன யமுனை-கண்ணன் உகந்த – பூ லோக மண்டபம் -விரஜை
சரயு -ராமன் உகந்த -இந்த மூன்றும் வேண்டாம் என்று இங்கே வந்து மன்னிக் கிடக்கிறான் -காவேரியே நிரூபகம்
கங்கையில் புனிதமான காவேரி /சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே
அழகிய மணவாளன்-அரங்கா சொந்த பேர் இருவருக்கும் இல்லை -ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் –
விப்ர நாராயணன் விட்டு தொண்டர் அடிப் பொடி ஆனது போலே
நிரூபக தர்மம் -சூழ் புனல் அரங்கன்/

அங்குத்தைக்கு ஸ்பர்சம் ஆகும் படி ஒத்து -/கோவில் அரங்கனுக்கு நிரூபகம் போல கணித்திர-
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்
தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

—————————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

நிகமத்தில்
உபக்கிரமம் உப சம்காரம் சேர்ந்து இருக்கிறது –முதலும் முடிவும் —
அடியேன் செய்யும் விண்ணப்பம் தொடங்கி-திரு விருத்தம்-மெய் நின்று கேட்டு அருளாய்-
திரு மேனி-மெய்/வட தள- வேத சிரஸ் கமல மலராள் தனத்துள்ளான் தேவகி திரு வயிற்றில் சடகோபர் திருமேனி வாக்கு/-
எல்லாம் உள்ளான் -பலர் இப்படி பேசுவார்-மெய்-சத்யம்-இமையோர் தலைவா கேட்டு அருளாய்-
இனி இனி இருபது கால் மூன்று தடவை இதிலும் 17 தடவை திரு வாய் மொழியிலும் கேட்டார் –
வைராக்கியம் ஞான ஆதிக்யத்தால் பெற்றார்/
மாறன் விண்ணப்பம் செய்த -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஈன சொல் ஆகிலும் 99 சொல்லி-அடுத்து
மாறன் விண்ணப்பம் செய்த தொடையல் நூறும் வன் சேற்று அள்ளல் சேரார் என்றார் 100 பாசுரத்தில்/
நமக்கே பறை தருவான் தொடங்கி அங்கு-திரு ஆய்பாடியில்- 
அப் பறை கொண்ட வாற்றை முடித்தாள் ஆண்டாளும்-விஞ்சி நிற்கும் தன்மை /
2 பாசுரத்தில் பரமன் அடி பாடி 29 பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் 
இது போல் 3-27-/4 -26  -இதே போலே உண்டே
மேலையார் செய்வனகள் கேட்டியேல்-ஆண்டாள் அழகில் மயங்கி இருந்தான் கோஷ்ட்டி –
பராக்கு பார்த்து இருக்க -வேண்டுவன கேட்டியேல் என்று தொடை தட்டி சொல்கிறாள்

ஆளவந்தாரும்  /நாதாய முனி தொடங்கி ஆகாத -பகவத் பக்தி சிந்தவே நாதாய முநையே –
இறுதியில் பிதா மகம் நாத முனி -துவத் சரணார விந்த  அக்ருத்மா
நேர்மையான பக்தி படைத்தவர்-பிரேமா பிரகர்சா அவதி எல்லை ஆத்மா வந்தம் –என்னை பார்த்து மோட்ஷம் கொடுக்காதே –
ரெங்க நாத முனி-சத்யா பாமை சுருக்கி  பாமை சொல்வது போல நாத முனி/
என் நடத்தை தாழ்ந்தது -உயர்ந்தது ஆக இருந்தால் நாத முனி பார்க்க வேண்டாமா -இல்லை-
குரு பரம்பரை ஆச்சர்ய சம்பந்தம் தான் சொரூப சித்தி ஞானம் பக்தி வைராக்கியம் நிரம்பி இருந்த  
என்னையும் பார்க்காமல்-திரு வடி சம்பந்தம் என்பதால்/

கூரத் ஆழ்வான் வரதன் இடம் மோட்ஷம் பெற்றதும் ராமானுஜர் உத்தரீயம் தூக்கி போட்டு மகிழ்ந்தாரே
கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் தனக்கும் உண்டு என்று-இவரும்-

கடி மலர்
கதிரவன் -கடி மலர்கள் -உண்டு-இருந்தாலும்  ஏற்றம் உண்டு-
பாட்டுக்கு பாட்டுக்கு உண்டு உதிக்கும்  அடையாளம் போது வைகின படி சொன்னார் பாட்டு தோறும்
கதிரவன் மலர் உண்டே போது வைதிகன் படி அருளி —
உதய பர்வதம் அனுகினது முதல் பாசுரத்தில் //
ஆதித்யன் அணுக –ஆதித்யன் -தாமரை சேர்த்தி உண்டு இறே -கடி மலர் -மலர்ந்து –
கிட்டி வர வர விகசிக்குமா போலே -மது விரிந்து ஒழிகின -கொஞ்சம் மலர்ந்து -மொட்டித்த தசை மாறி மலர்ந்த தசை –
தேசாந்திரம் போன பிரஜை காணப் போகும் வீட்டார் நினைவால்- பிரதம கிரணம் பட போகிறது என்ற நினைவால் போலே
துவாரம் வழியே தேன் -மதுவிரிந்து ஒழிகின-கொஞ்சம் மலர ஆரம்பம் மொட்டித்த தசை மாறி —
உதய கிரியில் சேர்ந்து -த்ருஷ்டாந்தரம் தேசாந்தரம் இருந்து வரும் -கேட்டதும் முகம் கொஞ்சம் மலரும் –
வந்ததும் நன்றாக மலரும் -மொட்டித்த திசை மாறி மலர தொடங்கிற்று –நீர் பசை அருமானால் உலர்துவன் –
ஆச்சர்ய சம்பந்தம் தான் நீர் பசை-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-
ஆத்மா ஞான விகாசம் அவன் ஒருவனாலே தான்/அதுவும் ஆச்சர்ய சம்பந்தம் இருந்தால் தான் /
இதில் கடி மலர் கமலங்கள் மலர்ந்தன-இங்கு ஆதித்யனும் மேலே போனதால்/-
போது வைகின படி சொல்லிற்று

வாசம் செய் பூம் குழலாள் -அதன் மூலம் வந்த கந்தம் -கடி மலர்
கடி-நல்ல நாற்றம் வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை-அவள் வாசஸ்தலம் என்பதால் வாசம்/
இவனோ-
இதில் இவனோ -கதிரவன்-முன்பு இல்லை – -குலச பிரஸ்தானம் -வினவி அருளுவீர் தாரகம் இதுவே அவனுக்கு /
அவனை கடாஷி – வினவா விடில் உனக்கு ஸ்வரூப நாசம்-அவ ரக்ஷணம் தாது நாராயண சப்த வாக்கியம்-
நான் உன்னை அன்றி இல்லை நீ என்னை அன்றி இல்லை-இவர்கள் சத்தா தாராகம் –
இழக்கும் அளவு அல்ல  அன்றி உன்னுடைய சத்தா தாரகம் இழக்க புகா நிற்றீர்  அன்றோ -ரக்ஷணம் –
கடாக்ஷம் -ரக்ஷகம் -அதற்காக வினவி அருளீர் –

துடி இடை இத்யாதி
குருந்திடை கூறை  பணியாய் – தோழியும் நானும் தொழுதோம் —
அங்கும் சுரி குழல் பிழிந்து உதறி நீ உடுத்தினால் தான் சத்தை பெறுவாய்-
குணுங்கு வெண்ணெய்  நாற்றம் இன்றும் பெரிய பெருமாளுக்கு வீசும்–சிறையில் அகப் பட்டு இருகிறாய் –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அன்றோ
சூழ் புனல்/
நீர்மை நோக்கி அருள வென்னும் -சூழ் புனல் அரங்கா -நீரை பார்க்காமல் நீர்மையை பாராய்
நீர் சிறை த்தை கொண்டு கண் வளர்ந்து அருளலாமோ

திரு குழலுக்கும் திரு முடிக்கும் திருத் தோள்களுக்கும் -அளவான மாலை-நித்ய சூரிகள் தான் மாலை-
அவன் இடம் ஜகத் ஒதுங்கி இருப்பது போலே சாத்தின மாலை பொருந்தி இருக்கும் –
வெளியில் எடுத்தால் மணியக்காரர் அளவை விஞ்சும் -மதுரகவி தோட்டம்-
சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூணல் சாத்தி கொள்ளாத தாச நம்பி வம்சம்-
பெரிய பெருமாளுக்கு புஷ்ப மாலை இல்லை–உத்சவருக்கு மட்டுமே –
திரு ஆராதனம் பொங்கல் -இரண்டு மாலை உத்சவர் -உபய நாச்சியாருக்கும் மாலை
ஒரு திரு அரங்க மாளிகையார்- 48 வருஷம் இங்கு இருந்தவர் அவருக்கும் மாலை/-இப்படி ஐந்து/
பெரிய அவசரம்- 4  மாலைகளை களைந்து – சேனை முதலியார் கம்பம் அடி  ஆஞ்சேநேயர் சேனை முதலியார் ஜீயர்
திரு அரங்க மாளிகையார்-மாலை களைய மாட்டார்கள்

திரு அரங்க மாளிகையார் அதே மாலை/ஸ்ரீ அன்னம் போது நான்கு மாலையும் மணிய காரர்/
உள் மாலை வெளுப்பு உபய நாச்சியார் இரண்டு சர மாலை பெரிய பெருமாளுக்கு/
அரவணை போது களைந்து உள் வெள்ளை மாலை அர்ச்சகர்/ யானைக்கு ஓன்று நாச்சியார் மாலை பசுவுக்கும்/
நம் பெருமாள் மாலை திருவாசல் காப்பானுக்கு சந்நிதி வாசல் சரம்/
நான்கு வேளை மாறும்/
1000 வருஷம்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் செய்தது போல /

10 கொத்து பரிவாரமும் ஏற்பாடு செய்து ஸ்வாமி கைங்கர்யம்/
ஆழியும் சங்கையும் உடைய நங்கள் அடிகள்-சேஷித்வ ஸூ சகம்
-53- சந்நிதிகள் கொண்ட கோயில் நிர்வாகம்
இவர் உடைய அடியார் அடியார் இருக்கிற படி/அடியேன்-ஆத்மாவின் ஆர்ப்பு-ஆரவாரம்- துடைத்தால் மிஞ்சுவது இது தானே –
நிலை நிற்கும் தர்மம்– அடியேன் -ஆத்மாவின் ஆர்ப்பு ஆரவாரம் தொலைத்தால் மிஞ்சுவது அடிமைத் தானம் தானே –
சரக் வஸ்திரம் -ஆபரணம் -அனுரூபம் -சின் மய ஸூ பிரகாச அந்யோன்ய ருசி -தகுந்ததாக இருக்கும்
சேஷ புதனுக்கு திருப்படலை ஸூ சகம்
மண் வெட்டி கூடை உடன் இளைய பெருமாள் சேஷத்வம் அடையாளம் –
ஷத்ரியம் அடையாளம் வில் உடன் -பெருமாளுக்கு வெளியில் பஹு பிராணன் லஷ்மணன் –
லஷ்மி சம்பத் -அளியன் என்று அருளி-
கிருபை பண்ணி-சிநேகமும் தயையும் இந்த ஜந்துவை கிருபை பண்ண அடுக்கும்-
எல்லாம் அற்றான்  என்று திரு உள்ளம்  கொண்டு-என்று தயை காட்டி அருளி –
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை /
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –
அளியன் -ஸ் நேகம்– தயாபாத்ரம் –

மத பக்த பக்தேஷு பிரியம் அதிகம் /எல்லை நிலத்தினில் நிறுத்தினாய் -ரத்னம் பட்டது முத்து பட்டது என்னுமா போல/
ஆட் படுத்தாய்-கிடைப்பது துர் லபம் -ஆட் படுத்தி விட்டாய்-
முதல் நிலையும் அன்றியே இவ்வருகே சம்சாரி நிலையும் அன்றி சேஷத்வ எல்லை நிலத்தில் நிறுத்தினாய் –
ரத்னம் முத்து பட்டது -கிடைத்தது போலே -ஆட்படுத்தாய் –பிரார்த்தனை மட்டும் இல்லை -கிடைத்த தனம்
வேண்டியது கிட்டியதே இன்னும் ஏன் தபஸ்-பாம்பின் மேல் நீர் நடுவில் /
அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –
புசிக்க எழுந்து அருளாய் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் /
உமக்கு என்று கொண்டு அருள வேண்டும் யோக நித்தரை பலம் பெற்றதன் பின் பண்ண வேண்டுமா –
கோர மா தவம் செய்தனன் கொல்–சேஷித்வ சித்தி பெறவேண்டும்-
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –

மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே
தெண் திரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பது ஐந்தும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளி எழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர் கலவி தன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி- 9-ஏதமில் தண்ணுமை–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-

தேவர்களில் அந்தர விபாகம் சொல்லி அனைவருக்கும் சேவை சாதிக்க பாசுரம் அருளிச் செய்கிறார் –
சாம்யம்-திரு அனந்த புரம் நடமினோ நமர்கள் உள்ளீர் -ஆளவந்தார்- துவார த்ரயத்தாலே காட்டும் சாம்யம்-
நித்யர் திரு முடி-சேவித்தாலும் அகங்காரம் தோன்றாது — தேவர்கள் நாபி–சிருஷ்டிக்க பட்டோம் நாம் என்று காட்ட – 
நம் போல்வார் திருவடி-பார தந்த்ர்யம் காட்ட அர்த்த மண்டபம்-ஒற்றை பாறை -திரு அலகு இடுதல்-/ஆழ்வார்-உபதேசம் /

நாள் ஓலக்கம் அருள
பகல் ஓலக்கம்-ராஜ தர்பார்/-/
தண்ணுமை-சிரு பறை மத்தளி-ஒரு பக்கம் வாசிக்கும் மத்தளி இரண்டு பக்கம் வாசிக்கும் –
தபளா மத்தளம் தோல்கி//-யக்கம் ஒரு தந்தி – யாழ்-நிறைய தந்திகள்–இசை /முழவமோடு -முழக்கத்தோடு
கின்னரர் கருடர்கள்-கந்தர்வர்கள் அவர் என்று காட்டுகிறார்-
சுந்தரர்-எங்கு கேட்டானாம் ஆழ்வார் அவர் என்று காட்டுகிறார்-
இரவில் தபஸ் பண்ணும் மாதவர் /சாரணர்-சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பவர்
எல்லா கூட்டமும் வந்து ஓட்டத்தால் மயங்கி-
உன் கோவில் -சீரிய சிங்காசனத்தில் இருக்க/மங்கள வாத்தியங்கள் –

———————-

நஞ்சீயர்

எழுந்து இருக்கும் அழகு கண்டு திருவடி தொழவும் பகல் ஓலக்கம் காணவும் –
உகளித்து கொண்டு-மேலை தொண்டு உகளித்து -தம் தம்முடைய மங்கள வாத்ய பரிகரங்கள் கொண்டு –
உகளித்து-பெருகி வரும் காதல் உடன் -பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் பண்ண –வர
கீழே இவர்களுக்காக சொல்லி கார்யகரம் இல்லையே
அடியேனுக்காக எழுந்து அருள வேணும் -நமக்கும் இவனுக்கும் தானே இட்ட சம்பந்தம்

ஏதமில்
நிர்தோஷமாக மங்கள வாத்தியங்கள்-இவனுக்கே என்று–
வாய் நர ஸ்துதி பண்ணும் வாத்தியம் அவனுக்கு என்று இருப்பதால் ஏதம் இல்லாமை–தானே வாசிக்காதே  
எக்கம்-ஒரு தந்தரி-ஒவ் ஒன்றிலும் வகை  உண்டு-சர்வ ரட்ஷகர்-எழுந்து அருள வேண்டும்-
விசேஷங்கள் ஒவ் ஒன்றிலும் பல வகை உண்டே
அனைவரும் புகுந்து திருவடி சேவிக்க நெருக்கி உள்ளார்கள் –
அழகு ஓலக்கம்/உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி ஆகில்/
உட்கார்ந்த அழகை சேவிக்க -மட்டுமே பிரார்த்தனை /
தூவிரிய  மலர் உழக்கி– தூது விட்டார்-திரு மங்கை ஆழ்வார் மென்மை நாலு பாசுரம் மேல் தூது விட மாட்டார் ஆழ்வார்
மலையாள ஊட்டு போல/-ஒ மண் அளந்த தாளாளா வரை எடுத்த தாளாளா தன் குடைந்தை நகராளா–
சேஷ்டிதங்களை காட்ட வேண்டாம் -தாளையும் தோளையும் காட்ட சொல்லி  –
அது போல அமர்ந்ததே போதும் இங்கும்/

——————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

பகவத் அனுபவ ப்ரீதி கார்ய -பொங்கி வரும் அன்பு-நித்ய தானம் வஸ்து சொல்லி இங்கு நிருத்ய கானம்  உண்டு-
கீத வாத்யம் உடன் வந்தார்கள்/

யாழ் மீட்டி ஆரம்பம் -இசைக்கு முன் ஒட்டு
முழவம் பறை -போல -பெரும் மத்தளி
விலம்பித்து-துருத்து -ஹிந்துஸ்தான்-முதலில் யாழ் மீட்டு –
இசைக்கு முன்-முழவம்-பெரிய பறை/
ஏதமில் -அனைத்துக்கும் /
விடிவோரை வருவாராம் விடிந்த பின் வந்தாரும் உண்டு /
ஆதாரம் குறைந்தாலும் அனுக்ரகித்து அருள வேண்டும்//
மா தவர் பெரும் தபஸ் பண்ணும் ரிஷிகள்
சாரணர்-தேவ ஜாதி உலாவி கொண்டே இருப்பவர்கள்/
சாரணர் பேசி கொண்டதை கேட்டு திருவடி மகிழ்ந்தார்-அக்னி பிராட்டி சொல் படி-அன்று தான் நடந்த பிரயோஜனம் கிடைத்தது/
இன்று தான் இவர்கள் சஞ்சாரம் பிரயோஜனம் கிட்டிற்று வால்மிகி – பாகவத கைங்கர்யம் பெற்றார்கள் –
திருவடி திரு உள்ளம் கலங்கி பிராட்டி உள்ள அசோகவனம் தீ பிடிக்க வில்லை என்று சொல்லி –

பிரதம கடாஷம் நினைத்து நிற்கிறார்கள் /-சிறியார் பெரியார் வாசி இல்லாமல்-
நன் மணி வண்ணனூர் ஆழியும் -கானமும் வானரமும் வேடமும் உடை வேங்கடம் -திரு மழிசை ஆழ்வார்-
திரு மலை அப்பனும் பண்ணுகிறாரே அரங்கனே தேவரீரும் சேவை சாதிக்க வேண்டும் —
அநாலோசித விசேஷ -அசேஷ லோக சரண்யன் –இதில் வாசி உமக்கு–
அவன் வேடன் குரங்கு -நீரோ கிங்கரர் இத்யாதி -/
வேடன் வேடுவச்சி பட்ஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் ததி பாண்டன் தயிர் தாழி கூனி மாலா காரர் பிண விருந்து
வேண்டு அடிசில் இட்டவர்-அவர் மகன்-அவன் தம்பி ஆனை அரவம்-சுமுகன்-மறையாளன் -கோவிந்த ஸ்வாமி –
பெற்ற மைந்தன் மார்கண்டேயன் —அவர் 18 நாடன் பெரும் கூட்டம்-
சமம் -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது -அழகை சேவை சாதித்து அருள வேண்டும்-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி- -8-வம்பவிழ் வானவர்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

வைமுக்யம் தொலைந்து –ஆபிமுக்யம்பிறந்து -அவனை  -நோக்கி செல்வது /
வாயுறை= அருகம் புல்/ மா நிதி- சங்க பத்ம நிதி வந்து விஸ்வரூபம் -உபகரணங்கள் வந்து சேர்ந்தன –
வம்பு=-மணம் கபிலை=-காம தேனு /படி மெய்க்கலம்-சொல்லாத எல்லா உப கரணங்கள் எல்லாம் /
ஏற்ப்பன–தகுதியானவை – / ஆகவே திருப் பள்ளி உணரலாம் என்றுமாம்
தோன்றினான் இரவியும்–நாலாவது தடவை இரவியொளி சொல்கிறார்/
அம்பர தலம்-ஆகாச பரப்பு–பிராத காலம் சந்நிகிதம் ஆனது /
தகுதி படைத்தன காண்டற்கு -ஏற்ப்பன வாயின -திருப் பள்ளி உணர்ந்து  அருள -என்றுமாம்

————————–

நஞ்சீயர்

தேவரீர் திருவாராதன பிராத காலம் -சந்நிஹிதம் ஆயிற்று
பஞ்ச கால பராயனர்-கங்குலும் பகலும் /30 நாழிகை/ ப்ரஹ்ம முகூர்த்தம் 4-6 மணி ஹரி 7 தடவை –
பிராத சந்த்யா 5.5 மணிக்கு-
காணாமல் கோணாமல் கண்டு -ஸூ ர்ய உதயம் முன்னிட்டே சந்த்யா வந்தனம் –
காயத்ரி ஜபம் பண்ணி -சூர்ய உதயம் உபஸ்தானம் பண்ணும் பொழுது–
ப்ராத காலம் — சங்கவ காலம் –மத்யான காலம்– அபரான காலம்  சாயம்  காலம் //-6-8/…2.5 நாழிகை – –.சாயங்காலம்/
திரியாம இரவு-10 நாழிகை /அபிகமனம் -பகவானை நோக்கி செல்தல் ஆசை உடன்/
உபாதானம் -உபகரணங்களை சேகரித்தல்/ இச்சா திரு ஆராதனம்–/ஸ்வாத்யாயம்– வேத அத்யாயம் வேதம் போதித்தல்/–
யோகம்-கல்யாண குணங்களை த்யானித்து கூடி இருத்தல்-எம்பெருமானே த்யான நிலையில் இருந்து தூங்க பண்ணுவார்-
இத் பிரிவின் படி ஐந்தும் -/
அர்ச்சகர் முறை மாறுவதும் காலை திருவாராதனம் முடிந்த பின்பு இன்றும் திருவரங்கத்தில்

தினசரி-பூர்வ உத்தர தினசர்யா- எறும்பி அப்பா அருளி இருக்கிறார்-
ஆராதன அங்கமாக  நிதானமாக அர்க்யம் பாத்யம் ஆசமன்யம்–திரு ஒத்து ஆடை சமர்ப்பிக்க வேண்டும்-

ஸ்ரீ ரெங்கத்தில் குதிரை பசு மாடு ஒட்டகம் யானை-நான்கும் உண்டு விஸ்வரூபம் பொழுது//
புஷ்பம் சந்தனம் அருகம் புல்/பூண் சட்டி திரு மஞ்சனம் நடக்கும் இடத்திலே வெந்நீர் போட்டு சமர்ப்பிகிரார்கள் /
போக மண்டபம்-தண்  அம் தாமரை -வண்ண செஞ்சிறு–அளைந்து-பட்டர்-
இன்றும் மணிய காரர் தொட்டு பார்த்து தான்- அன்னம் – அமுது செய்வார்/
ரிஷிகள்-அநந்ய பிரயோஜனர் மடி தடவாத சோறு சுருள் நாறாத பூ/தூய மாலை /
அவனை அவனுக்காக -தன்னது என்று சமர்ப்பித்தால் கொள்ள மாட்டார்/
பிரயோஜனர் -அந்நிய பிரயோஜனர் -அநந்ய பிரயோஜனர் -மூன்று வகை உண்டே –
உபய பிரயோஜனர் -அவனைத் தவிர -அவனுக்கே என்று –ஆச்சார்யர்-என்னது என்று கொடுத்தால் கொள்ள மாட்டார்-
கொடுக்கில் கள்ளனாம்-திருடன்-அவரும் தன்னது என்று கொள்ள கூடாது — 
கொள்ளில் மிடியனாம்-தரித்திரன் –கொள் கொடை ஏற்பதில் இருவருக்கும்  சொரூபம் நிற்காது//

பொன் உலகம் ஆளீரோ புவனமும் ஆளீரோ/பழன  மீன் கவர்ந்து உண்ண தருவேன்-
ஆச்சார்யர் உகந்த வற்றை கொடுக்க வேண்டும்-சேர்ப்பார்களை பட்சிகள் ஆக்கி /மங்கள அர்த்தமாக பொருள்கள் நீட்ட /

திருப் பள்ளி உணர்ந்து கைங்கர்யம் கொண்டு அருள வேணும்

வம்பு-பரிமளம்/தீக் குறளை சென்று ஓதுவது இல்லை/வம்பு-சிறந்து இருக்கிற /
அருகம் புல்லை -வாயுறை-தேவர்கள்-ராஜ பார்க்க எலுமிச்சை பழம் போல/மங்கள அர்த்தம்
பொருள்கள் ரிஷிகள் கொண்டு வர/வானவர்- தேவ ஜாதி வம்பு -நித்ய யவ்வனம்-
வம்பவிழ் வானவர்-பரிமளம்-சுவர்க்கத்தில் வசிக்கும் –
ராஜா பார்க்க எலுமிச்சம் பழம் கொண்டு போவது போலே தேவர்கள் அருகம் புல்லை  கொண்டு தேவர்கள் -உத்தேச்ய வஸ்துவை வணங்க  –
தேவருக்கு அர்ஹமான சத்ருசமான உபகரணங்கள் –
மங்களார்த்தமாக ரிஷிகள் -அநந்ய  பிரயோஜனர் -அவசர பிரதீஷானராய் நிற்கிறார்கள் /

தும்புரு நாரதர்
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும்
சகஸ்ர கிரணங்களை கொண்டு -பந்தம்-ஆதித்யனும் வந்தான்-இருள் எல்லாம் அகல்கின்றது-
அகல போயிற்று-ஆகாசத்திலும் சஞ்சரிக்காமல் போனது /பாக்ய இருள் போனது உள் அஞ்ஞானம் போக்க –

————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

நித்ய யவ்வனர் -வம்பு தேவர்களுக்கு விசேஷணம்
பூ மலர் பதவிக்கு தக்க /மெலித்து -வழக்க -வழங்க -வல்லினம் மெல்லினம் –
நியமன பிரகாரம் நினைக்கிறது -பாரி ஜாதம் போன்ற புஷ்பம் /

புஷ்ப சமர்ப்பணம் திருமாலுக்கு உகந்த கைங்கர்யம் -காலை மாலை கமல மலர் இட்டு நீர்/
போதரிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போது அறிந்து கொண்டு வேங்கடவன் அடி இணைக்கே-/
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்–
எல்லா போதும் மட்டும் இல்லை ஒரு போதும் சமர்ப்பித்து இல்லை/
பெரிய திரு மலை நம்பி எம்பாரை பூவும் பூசனையும் தகுமோ பிச்சை உண்ணிக்கும் சிக்கு தலையனுக்கும் –
தகாது தகாது என்று சொல்லி எம்பார் திருந்தினாரே-

அலங்கார பிரியன் விஷ்ணு அபிஷேக பிரியன் தன் கையிலே கங்கை வைத்து கொண்டே/
நீராட வா என்று ஆழ்வார் கூப்பிட வேண்டும்/ப்ருகு மக ரிஷி சாபத்தால் புஷ்பம் பிரசாதம் இல்லை ருத்ரனுக்கு/
நேத்ர சேவை – வெள்ளி கிழமை மட்டுமே திரு மஞ்சனம்- பக்தர்களுக்கு சேவை-தோ மாலை சேவை தோள் களில் தொங்கும்-
பெரிய கேள்வி அப்பன்  சிறிய கேள்வி அப்பன் ஸ்வாமிகள் -ஜீயர் ஸ்வாமி -பூ குடலை -பொட்டு சுமக்கும் அதிகாரம் உண்டே –
இவர் கொடுக்க அர்ச்சகர் வாங்கி சமர்ப்பிப்பார் –பொட்டு சுமந்து -ஹனுமான் முத்தரை-பெரிய ஜீயர்- ராமானுஜர் முத்தரை-சின்ன ஜீயர் /
சுமந்து மா மலர் வானவர் வானவர் கோன் உடன் ..சமன் கொள்வீடு தரும் தடம் குன்றமே   /
புஷ்ப மண்டபம்-
நிதி-
சங்க பத்ம நிதி நவரத்னம்
மா நிதி-
பெரு மதிப்பு/-தானம் பண்ண -அலம் புரிந்த நெடும் தட கை -அமரர் வேந்தன்-நித்ய தானத்துக்கு தன ராசிகள்//
கபிலை
பார்க்கவும்– கோ தானத்துக்கும் பசு/ராமன்-கோ தானம் பண்ணின கதை—14- வருஷம் யாத்ரா தானம் பண்ண வேண்டுமே /
வைதரணி நதி கடக்க -பிரபன்னர்கள் இல்லாதவர்கள் -வால் பிடித்து ஆத்மா தாண்டும்/
அமானவனவன் கர ச்பர்சத்தால் விரஜை தாண்டுவான் பிர பன்னன்/
சொல்லி சொல்லாத உபகரணங்களும் கொண்டு வந்தார்கள்
கண்டு அருள திரு கண்ணாடி-வேதாத்மா -கருடன்-உக்கமும் தட்டொளியும் தந்து /
ஏற்பன
ஏற்புடையதாய் கொண்டு/ அநந்ய பிரயோஜனராய் கொண்டு-பக்தி மட்டும் எதிர் பார்கிறார் —
நல் முனிவர்
அவனையே மனனம் பண்ணி கொண்டு-அத் தலைக்கு நன்மையே நினைத்து கொண்டு-
நல் முனிவர் -முனிவர்களில் வியாவிருத்தி

தும்புரு நாரதர்
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும் -இசை கேட்டு அருளுவது போல -வீணை ஏகாந்தம்/
தாலேலோ-போல வீணை இசை/நாச்சியார் உத்சவம் போதும் வீணை  ஏகாந்தம் உண்டு/
காஸ் துணி திரு முக மண்டலம் அபய ஹஸ்தம் மட்டும் சேவை -வீணை ஏகாந்தம் பொழுது-தாஸ்ய ரசம்  ததும்பும் //
திருக் கண்ணை மலர்த்தி கடாக்ஷம் ஒன்றே போதுமே -சிபாரிசு பண்ணுகிறார் இவர்களுக்காக
கடாஷம் மட்டுமே கேட்டு -அது கிடைத்தால் எல்லாமே கிட்டுமே -அவற்றை கண்டு அருள காட்டுவாரை போல அருளுகிறார்/
சகஸ்ர கிரணங்களை கொண்டு -பந்தம்-ஆதித்யனும் வந்தான்-இருள் எல்லாம் அகல்கின்றது-
அகல போயிற்று-ஆகாசத்திலும் சஞ்சரிக்காமல் போனது /
இருள் பயணம் எழ -விளங்கிற்று -பாய் இருள் அகல -போயிற்று -முன்பு —
ஆகாசத்தில் சஞ்சரிக்காமல் நிஸ்சேஷமாக போனதே
பாக்ய இருள் போனது உள் அஞ்ஞானம் போக்க –
இருள் தரும் மா ஞாலத்தில் இருக்கிறோம்/அமலங்களாக விளிக்கும் .- நிஸ் சேஷமாக போக்கி அருளுவான் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி- 7-அந்தரத்து அமரர்கள் –ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் ஐந்தாம் பாசுரம் மட்டும் –
கைங்கர்யம் கொண்ட -ஸ்வரூப நிரூபகம் -அரங்கத்தம்மா –சொல்லாமல் -கைங்கர்யம் செய்ததால் -இதுவும் நிரூபகம் –
பங்குனி உத்தர மண்டபம் -இன்றும் விபீஷ ணாதிகள் -சரணாகதிக்காக அமைந்த மண்டபம் –
ராமானுஜர் இங்கே சேர்த்தியில் நமக்காக -அன்றோ –

எம்பெருமான் உன் கோயிலின் வாசல்-எனக்கு ஸ்வாமியான உன் கோவிலின் வாசலில் –
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
-இந்த்ரன் – ஐராவத யானை உடன்  –
மூன்றாவது வரியில் உள்ளதை முதலில் கொண்டு இந்திரன் பின் வரும் தேவர்கள் –
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
-மற்றைய தேவர்கள்-பரிவாரங்கள்- /-
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ-
சனகன் சன குமரன்  சனகாதி – மானச புத்ரர்கள்/
கந்தர்வர்கள்-சுந்தரர் நெருக்க சுந்தரமான பாட்டு பாடுவார்கள்-/
இயக்கரும்-
யஜ்ஜர்கள் / வித்யாரதர்கள் தள்ள  /
மகா தபச்விகள் ரிஷிகள்/மரு கணங்களின் மருத்துக்கள் கீழே சொல்லு இங்கு உப மருத்துக்கள் –
மயக்கம்-திருவடி தொழ வந்து -இடி பட்டு மயங்கினார்-
கல்யாண குணங்களில் ஈடுபட்டு மயங்காதவர்கள் அன்றோ இந்த ப்ரயோஜனாந்தர பரர்கள்
அந்தரம் பாரிடம் இல்லை-
அந்தரம்-ஆகாசம் பார்-பூமி-இடம் இல்லை/வரிசை ஆகாசம் வரை-33 கோடி என்பதால் /

ஸ்வாமி அவதாரம் பஜனை கோஷ்ட்டி நிறைந்து புறப்பட்ட இடமும் வந்து சேர்ந்த இடமும் இருப்பது போல  /
திரு அரங்க சந்நிதியும் நிறைந்து ஆகாசமும் நிறைந்தது/கடாஷித்து அருள வேண்டும்
கருவரங்கத்தில் உள்  கிடந்தேன்  கை தொழுதேன் /
ஜாயமான யம் பஸ்யேத் மது சூதன –சத்வ குணம் வந்து முமுஷு ஆவான் -கருவிலே திரு இல்லாதீர் /

நஞ்சீயர்
முதலில் சங்க்ரககமாக சொன்னதை விஸ்தரிகிறார்

இதிலும் மேல் பாசுரங்களாலும்/பக்ன அபிமானங்களால் வந்ததை சொல்கிறார்-
மேலே அடுத்த பாசுரத்தில் உபகரணங்கள் கொண்டு வந்தமை அருளிச் செய்வார்-

தேவர் ஞானம் பெற்று -புண்யம் செய்து சொர்க்கம் போனவர்கள்//கர்ம பலன் அனுபவிக்க-
ஐஸ் வர்யார்திகள் தான் இவர்கள் அசித் அனுபவம் ஆசை பட்டு/ தத்வம் மூன்று தானே/
சித் ஆசை கொண்டு கைவல்யம்/ பரமாத்மா தான் உயர்ந்தது என்று உணர்ந்து ஆசை கொண்டால்-பகவத் லாபார்திகள்
/
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தம் அனுபவம் -ஐச்வர்யார்திகள்/-அனுபவத்தில் உயர்வு தாழ்வு இருக்கலாம் /
நிலை உயர்ந்து இந்த்ரன் பட்டம்/இதனால் தான் ஆழ்வார்கள் இவர்களை உயர்த்தி பேசாமல் -பகவத் அனுபவம் இழந்து —
அகங்காரம் மிக்கு/வேதம் வேற சொர்க்கம் போக தூண்டும் வேத சாஸ்திரம் நம்பிக்கை வர அனுபவம் பெற்று திரும்பி வர /
திரும்ப இங்கு தான் வரணும் கர்ம பூமி இது தான்/
சாதனம் பண்ண முடியாத இடம் சொர்க்கம்/அப்படி அகங்கரிப்பவர்களே
பெரிய பெருமாளை சேவிக்க வந்த பின் நாம் வர வேண்டாமா-

எல்லோரும் ஈஸ்வர ஆதீனம் தான் என்று காட்ட
/
பிரம்மா முதல் பிபீலிகா எறும்பு வரை-பிள்ளை பெருமாள் ஐயங்கார் –
நான் முன்னே நன் முன்னே என்று வாயில் நுழைந்தார்கள் பிரி கதிர் படாமல்-
ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்/
அகங்காரம் தொலைந்து வந்தார்களா-புண்யம்-அனுபவத்தில் ஈடு பட வைக்கும்-
நான் பிரதானம்-புண்ய பலன் திரும்ப வைக்காது பதவி தக்க வைக்க வந்தார்கள்
/திருந்தி வந்தார்களா /இங்கேயே இருப்பார்களா /
தேஷாம் சதத யுக்தாநாம்-எப் பொழுதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டு இருப்பார்கள் பக்தர்கள்
/சேஷத்வம் பார தந்த்ர்யம் மிகுந்து /நம்மை ரஷிக்க -அவன் இருக்கிறான் என்ற மகா விசுவாசம் 
காலையில் மட்டும் சத்வ குணம் வந்து அபிமானம் குறைந்து/
வைராக்கியம் கொஞ்சம் வந்து அவனை பற்றி-புல்கு பற்று அற்றே-
ஆழ்வான் ஆண்டான் வார்த்தை  -நீர் ஒருவரே அதிகாரி அனைத்தையும் விட்டு விட்டே பற்ற வேண்டும் என்றால்/
கொஞ்சம் கைங்கர்யம் பண்ண சத்வ குணம் வளர-அபிமானம் பங்க -குறைந்து வந்தார்கள்/
மனமே தான் பந்தத்துக்கும் மோட்ஷத்துக்கும் கரணம் –
இருக்கிறார் உள்ளே என்று நம்பி அவனை கேட்டு-காரியம் பண்ண -நெருங்கிய தொடர்பு கிட்டும்/
அவன் நினைவு சாஸ்த்ரங்களில் பதித்து வைத்து இருக்கிறார்/
பெருமாளை நேராக சேவிப்பது மங்களா சாசனம் பண்ண தான் /
நம்பி செய்தால் நம்மை சரி படுத்தும் பொறுப்பை அவனே எடுத்து கொள்கிறான்/

ஜீவாத்மாவுக்கு எது நல்லதோ அதுவே தீமை-ஞாதுருத்வம் கொண்டு-சாஸ்திரம் படித்து நடந்து மோட்ஷம் போகலாம்/
நான் உசந்தவன் என்று நினைந்து அகங்காரம் கொண்டு ஐஸ்வர்யம் கைவல்யம்-
அணு சக்தி அழிவுக்கும் உயர்வுக்கும் போல/ஞானத்தாலே சேஷத்வ பார தந்த்ர்யம் புரிந்து கொண்டு இருந்தால்-
அம் கண் ஞால அரசர்கள்  பங்கமாய் வந்தது போல –
ஸ்த்ரீத்வம் என்கிற அபிமானம் தொலைந்து வந்தோம்-
என்கிறாள் —
இரும்பு போல் வலிய நெஞ்சம்-
காந்தச்தே புருஷோத்தமன் -கிட்டே போனதும் இழுத்து கொள்கிறான் அவன் இடம்/
ஆந்த்ரமான சேஷத்வம் பார தந்த்ர்யம் புரிய தான் இப்படி அருளுகிறார்-

ஸ்ரீ நஞ்சீயர்

கீழே ஸங்க்ரஹேன அருளிச் செய்ததை -விஸ்தரிக்கிறார் -ஆகாசப் பரப்பு முழுவதும் வந்தார்கள் –
திருப்பள்ளி உணர்ந்து அருளி கைங்கர்யம் கொள்ள வேணும் என்கிறார்
கீதை  13 -18 அத்யாயம் விவரித்தது போல இங்கும்/ மேல் பாட்டிலும் விவரிக்கிறார் –
இவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் /
சேஷத்வம் நிறம் பெற -உகக்க வேண்டும் உன் தன் திரு உள்ளம் உகக்க செய்து-
அதை கண்டு நாம் உகக்க அது தான் சேஷத்வம்  பூர்த்தி-
குருஷ்மமாம் அநு சரம்-ஏவி பணி கொள்/கொண்டால் தானே கைங்கர்யம் /

குண க்ருத தாஸ்யம் -முதல் நிலை -அடுத்து ஸ்வரூப ப்ரயுக்த  தாஸ்யம்//-
ஆழ்வார்கள் இந்த நிலை/சேவை சாதிக்க விடாமல் இருந்தாலும் எம் பிரான் /
கடியன் கொடியன் –ஆனாலும் அவன் பால் நெஞ்சம் செல்லும்/
ஆகாச அவகாசம் உள்ள அளவும் நிறைந்து  ச பரிகரராய் வந்து புகுந்தார்-திருப்பள்ளி உணர்ந்து அருளி —
அடிமை கொண்டு அருள வேண்டும்-
சேஷத்வம் நிறம் பெற ஏவிப் பணி கொள்ள வேண்டும் –கிரியதாம் இதை மாம் வத–
உம் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் —
கைங்கர்யம் பண்ணி -கொண்டு அவன் யூகிக்க -அத்தைக்கு கண்டு நாம் உகக்க  வேணுடுமே 
நீ குற்றேவேல் எங்களை கொள்ளாமல் போகாது-மடி படித்து /
தடுத்து வளைத்து பிரார்த்திக்கிறாள்- உரிமை நமக்கும் உண்டு –
பலாத் க்ருத்ய புந்தே- நிர்பந்தித்து கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும்/

நினைப்பு அறியா வேகத்தில் கொண்டு கொள்வான் /ருசி பிறந்த உடன் /
போஜனத்துக்கு பசி வேண்டுமே/பகவானை அனுபவிக்க ருசி/அதையும் அவன் வளர்த்து கொள்வான்-
பரி பக்குவம் ஆகும் வரை உழைக்கிறான் /அடிமை தெரிந்து கொள்வது ஞான திசை அடிமை செய்வது புருஷார்த்தம்
மூன்று நிலை /சேஷ  பூதன் நான்- முதல் 100 /எம்மா வீட்டு திறம்- தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள்ளும் -எழுதி வைத்து /
பண்ண  வேண்டியதை ஒழிவிலா காலம் அடிமை செய்ய மூன்றாவது நிலை கைங்கர்யம்  கொள்தல்/
சேஷத்வ ஞானம் -அறிந்து —அனுபவ ஜெனித ப்ரீதி உந்த கைங்கர்யமே புருஷார்த்தம் –
ஞான அனுகுணமாக நிஸ்கர்ஷம்  -அடுத்து கைங்கர்யம் பண்ணி பூர்த்தி அடைய வேண்டுமே –

அபிமானம் பக்ன-உடைந்து -பங்கமாய்-அடி சேர் முடியனராகி ..குரு நில மன்னர் முடி /
அரசர்கள் தாம் தொழ -முற்றத்தில் இருந்தவர்..பொடி சேர் துகளாய் -சிதைகிய பானையர் பிச்சை தாம் கொள்வர்/-
நீர் குமிழ் போல //அண்ணல் அடியவர் ஆமினோ/அரும் தவம்-சனகாதிகளும் -மானச புத்ரர்கள்/
கீழே அருளிச் செய்த தேவர்கள் ஒழிய அனுக்தமான அனைவரும் வந்தமை சொல்லிற்று
வஜ்ராயுதத்தால் 7 – 7- 49 கணங்கள் மருதுகள் பண்ணினானே /ஐராவதமும் /
ஆத்மாவால் கேட்டு மனனம் சிந்தித்து அர்த்த க்ரமம் படி மாற்றுவது போல இந்த்ரன் முதலில் சொல்லி/

திருப் பள்ளி உணர்ந்து அருளும் பொழுது அழகை காண
வித்யாதரர்கள் கந்தர்வர்கள் யக்ஜர்கள் -முற்  கோலி-இடம் இன்றி-நெருக்கு பட-நின்றார்கள்-மோகித்தார்கள்
த்வாரா பாலகர்கள் -இருக்க -சாந்தி நிலவு -தள்ளிக் கொண்டு இருக்க
சர்வ ஸ்வாமியான நீர் அடிமை கொள்ள திருப் பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

—————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

தேவ சேனன் வந்தது பார்த்தோம் -குமர தண்டம்
இதில் தலைவன்-இந்த்ரன் தன் வாகனம் உடன் ச பரிகரனாய்/
தேவ ஜாதியை ஜாக்கிரதையாக பார்க்க நியமிக்க பட்டவன்- 
தேர் இட்ட வகை செய்வானாய் -வளர்த்ததனால் பயன் பெற்றேன்-
மெய் காட்டு கொள்ள-தலை எண்ணி காட்டனும்- 33 கோடி பெயரையும் காட்டி /
மெய் -சரீரம் -நீர் கொடுத்த வேலை சரியாக பண்ணுகிறேன் என்பதை பார்த்துக் கொள்ளும்
எல்லாரும் போந்தாரோ போந்து எண்ணி  கொள்/பர தேவ்யா பாரமர்த்யம் –
பீஷாச்மாத் வாத பவ-வாயு இந்த்ரன் மிருத்யு ஆணை படி வேலை செய்பவர்/பர தேவதா பராமர்த்யாயம் –
இவர்களை பூ சூட்டி பண்ணுவதால் தான் பூர்வர்கள் மீண்டும் சேஷ பூதன் அவனுக்கே என்று சொல்ல/

இப் பாட்டுக்கு தாத்பர்யம் இந்த்ரன் வந்தமை முதலில் – சொல்வது தான் /
த்ரஷ்டவ்ய முதலில் சொல்லி கேட்டு மனனம் தியானம் வேதம் சொன்னாலும் அர்த்த  க்ரமத்தால் -இப்படி ஆமோ என்னில்
ஸ்ரோதவ்ய முதலில் சொல்லி த்ரஷ்டவ்யம் கடைசில் கொள்வது போலே –
தேவர்கள் மருத்துக்கள் முன்னமே சொன்னதால் இந்திரனை சொல்லி சொல்லாத அனைத்து தேவர்களும் வந்தார்கள் —
அர்த்த க்ரமத்தால் -கொள்வதற்கு உதாஹரணம் –
அக்னி ஆகிதார் ஆகிதாக்னி -ஆகித ஆக்னி-எப் பொழுதும்  ஹோமம் பண்ணி கொண்டு இருப்பவர் போல/
பிரணவம் சப்தத்தால் இருந்தாலும் ஆத்மா ஸ்வரூபம் சொன்னாலும் –அ காரம் முதலில்–தாத் பர்த்யம் ம காரத்துக்கு தான் —
அவனுக்கு சொல்ல வேண்டியது இல்லை –அசித்துக்கும் சொல்லி பயன் இல்லை/
உபதேசமே ஜீவாத்மாவுக்கு தான் தேர்  தட்டிலும் முன் அமர்ந்தான் –அர்த்தத்தால்  –
பரமாத்மா முக்யம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்-ராஜ புருஷன்-ராஜா சேவகன்-பிரதான்யம் -போல

அண்டம் ஆகாசம் -அந்தரத்து அமரர் இவர்கள்- -அந்தரம் அண்டம் ஆகாசம் பர்யாயம் –
கேசவன் தமர் அல்லர் இவர்கள் -இவர் உள்ள இடம் வைத்தே இவர்களை –
பகவத் பக்தர்களை -கைங்கர்யம் இட்டும் அவனை இட்டும் -நிரூபகம் –
மாதவன் தமர் என்று -விதி வகை புகுந்தனர் -என்பதே நிரூபகம் -வாழ்ந்த இடம் கொண்டு இல்லையே –
இவர்கள் தங்கள் வாழ்ந்த இடம் கொண்டு செருக்கி இருப்பவர்கள் என்றவாறு
இவர்களை வஸ்த்வய இடம் வைத்து -பிரபன்னர் அநந்ய பிரயோஜனர்களை -கேசவன் தமர் -போல –
நந்தகோபாலன் கோவில் காப்பான்- தொண்டர் அடி பொடி-மண்டம் குடியார் இல்லை-கேசவன் தமர்/
மாதவன் தமர் -விதி வகை புகுந்தனர்/பகவத் பக்தர்களுக்கு பக்தி கைங்கர்யம் கொண்டே பெயர்/
தேவர்கள்- தேவ பட்டணம் உசத்தி என்று அந்தரத்து அமரர்கள் வர்த்திக்கும் இடத்தை இட்டு சொல்லும் இத்தனை/
திரு வேங்கடமுடையான்-தேசத்து இட்டு சொல்வது போல ஸ்வாதந்த்ர்யம் அகங்காரம் இவர்களுக்கும் உண்டு என்பதால்/

அரும் தவ முனிவர்-
சப்த ரிஷிகள்/ மானச புத்ரர்கள்/ பிரம பாவனை மட்டுமே கொண்டவர்கள்/
கர்ம பாவனைக்கு வர வில்லை இவர்கள்/தேவர் உபய பாவனை வேலையும் பண்ணி கொண்டு/
இவர்கள்-அரும் தவ முனிவர்/கூட்டங்கள்- அமரர் கூட்டங்கள் முனிவர் கூட்டங்கள் மருதுகள் கூட்டங்கள் என்று கொள்ளலாம்/

பெரிய திரு மண்டபம் நுழைந்தார்கள் புகுந்தார்கள்-வந்தார்கள் இல்லை
வாசலில் -பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும் துன்னிட்டு புகல் அறிய –
சுந்தரம்-கந்தர்வர்- அழகாய் பாடுபவர்கள் -ஆகையால் சுந்தரர் –
வித்யாததரர் முன் கை வலி அதிகம் — யக்ஜர் மிருது ஸ்வ பாவம்  மயங்கி –
நெருக்கம் பட்டு மோகித்தார்கள்–இவர்கள் இங்கனம் பட வேண்டுமோ என்னில் திருவடி தொழ நசை–
உள் நெருக்கம் கண்டோம் –
புறம்பிலும் ஆகாசம் பூமி வித்யாசம் இன்றி–விவரமற- நெருக்கம்
வானத்திலும் உம்பரும் மண்ணின் கீழ் தானத்திலும்

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி–6-இரவியர் மணி நெடும்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

இரவியர்-நெடு மணி தேர்– சிறந்த பெரிய 12ஆதித்யர்கள் /
இறையவர்
-சம்சார நிர்வாககர் –விடை-ரிஷபம் 11ருத்ரர்கள் /
திரு நாங்கூர் திவ்ய தேசம் சுற்றி 11 ருத்ரர்/-
இவரோ-
கை காட்டுகிறார்-
மருவிய மயிலினன் அரு முகன்
– தேவ சேனாபதி /மயில் விட்டு விலகாமல்-இருக்கிறவர்-அடையாளம்-வேண்டுமே/
49 மருதர்  8 வசுக்கள் /
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்-
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்-சேனையும் வந்தது –
குமர தண்டம்–போக பிரதானர்கள் அன்றோ இவர்கள் -/பெரிய மலை போல/
சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை  /
நாட்டினான் தெய்வம் எங்கும் /அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் வியாக்யானம்

தேவ சேனாதிபதி உடன் ஜெகன் நிர்வாஹம் பண்ணும் இவர்கள் –
ச பரிகரமாக ஸூவ அபிமத சித்யர்த்தமாக இதற்காக நாட்டி வைத்துள்ளான்
ஒருவருக்கு ஒருவர் முற்கோலித்து- விலக்ஷணமான தேர்களுடன் வந்தார்கள்

தேவர் திரண்டு பரிச்சேதிக்க முடியாமல் மகா மேரு ஒத்து உள்ள கோயிலிலே
அநந்ய பிரயோஜனர்- பிரயோஜனாதி பரர் அனைவருக்கும்-சர்வருக்கும்  நிர்வாகராய்க் கொண்டு-

———————————-

ஸ்ரீ பெரியாச்சன் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம்

முற் கோலி கொண்டு வந்தார்கள் /
தேவரீர் பணிக்கு அடைத்த – ஆதித்யன்-கதிரவன்-தவிர மற்றும் சோம்பி இருக்கிற ஆதித்யர்களும் வந்த பின்பு-
முன்பே கதிரவன் குண திசை வந்ததை சொல்லி –
இங்கு சோம்பி கிடக்கும் இவர்கள் -இவர்களே வந்த பின்பு நீர் பள்ளி எழுந்து அருள வேண்டாமோ – /
ருத்ரன்-தமோ குணம்-அவர்களே வந்த பின்பு/
இறையவர்-
ஜகன் நிர்வாகர்- இறையவர்-பசு அகம் மேவ பசு பதி-
பசு-பிராயர் மக்களுக்கு அதி பதி இருக்க வேண்டும்  என்று
வரம் பிரார்த்தித்து கேட்டு பெற்றான்/ரோதநாத் அழுகிறார் குதிக்கிறார்
ருத்ரன் ஸ்தாணு சம்பு சிவா –எட்டு  தரம் அழுது எட்டு பேர் வாங்கி கொண்டார்-
பிரார்த்தனை கோடி காட்ட இறையவர் என்கிறார் ஆழ்வார் /
சர்வேஸ்வரன் போலே ஸ்வாபாவிகமாக இல்லையே இவன் –
அவர்கள் தேர் ரிஷபம் விட்டு  இறங்க–அவர்கள் இறங்கி  இழியவும் கூடும் –
இவன் மயில் உடனே கருவில் இருந்து வந்தால் போலே – தேவ சேனாபதி மயில் உடன் கூடவே இருப்பார்/
பாட்டும் ஆடலும் திரண்டு பரி சேதிக்க ஒண்ணாத படி-பிரதம கடாஷத்துக்கு /உணர்ந்து அருள –

தேர் பூண்ட குதிரை –
அன்றிக்கே
இவர்களுக்கு வாகனமாக வந்த குதிரை என்றுமாம் – /
குமர தண்டம்-
தேவ சேன பதி –
தண்டம்-
சேனை கூட்டம்//
அன்றிக்கே
குமாரகளாகிய கூட்டம்-என்றும் 16 வயசில் தேவர்கள் என்பதால்/
தண்டம்-ஆயுத பேதங்கள் உடன் என்றுமாம்/
நால்வர் இருவரோ  -வெள்ளமாய் கூட்டம் /-
அருவரை அனைய நின் கோயில் –
அணியனார் செம் பொன் –திருமாலை -24- -மேரு பர்வதம் போன்ற கோவில்-
அம்சன் பாகன்.த்வஷ்டா.விஷ்ணு அருணன்..பர்ஜன்யன்-அம்சம் பாகன் – –விவஸ்மான்-
பெயர்கள் உடன்  12 ஆதித்யர்கள்-விஷ்ணுபுராணம் /
பிரதம கடாக்ஷத்துக்காக நான் முற்பட நான் முற்பட என்று நெருங்கி உள்ளார்கள்

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி-4–மேட்டு இள மேதிகள்-ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

ராவணனை  முடித்த-குலம்-கும்பனோடு நிகும்பனும் பட்டான்–எங்கள் விரோதி முடித்து வேள்வியை காத்த –
எங்கள் ஆராதனை ஏற்று கொண்டு/
-மேதி-எறுமை-கிருஷ்ண கர ஸ்பர்சத்தால் பெருத்த
தளை<-பந்தம் விடும்  ஓடும் ஓசையும்,/
குழல் ஓசையும்/மணிகளின் ஓசையும் /பாட்டும் பக்க வாத்தியம் போல //திசை பரந்தன
எட்டு திக்குகளிலும் /வயலுள்-இரிந்தன சுரும்பினம்-
கழனிகளில் வண்டு கூட்டங்கள் ஆரவாரத்து ரீங்காரம் /
வரி சிலை
-சார்ங்கம்-/மா முனி-விஸ்வாமித்ரர் /
அவபிரதம்
-ஸ்நானம்-பூர்த்தி அடு-மிடுக்கு /எம் அரசே-அரங்கன் /

மேட்டு இள மேதிகள் -வளர்ந்த கிருஷ்ண கர ஸ்பர்சம் மூலம் வளர்ந்து -இளமை உடன் உள்ள எருமைகள்
தளை விடும் ஆயர்கள்-கட்டுக்களை அவிழ்த்து விட்டு -மாட்டுக் கொட்டில்களில்
வேயம் குழல் ஓசையும்
விடை மணி குரலும்-கழுத்துக்களில் கட்டிய மணி ஓசையும்
ஈட்டிய இசை -ஒலிகள் சேர்ந்து பாட்டும் பக்க வாத்யம் போலே
திசை பரந்தன
வயலுள் இரிந்தன சுரும்பினம் -கழனிகளில் வண்டுக்கூட்டங்கள் ஆரவாரித்து கிளம்ப -ரீங்காரம்
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-ராக்ஷஸ வர்க்கம் -மூல பலம் -அனைத்தும் அழித்து-
சார்ங்கம் பிடித்த அயோத்தி அம் அரசு -பிரதி நிதியாக உள்ள நம் பெருமாள் வானவர் ஏறு
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய -ஸ்நானம் -வேள்வி பூர்த்தி –
அடு திறல் அயோத்தி எம் அரசே!-மிடுக்குள்ள சாமர்த்தியம் -பராபிபவனை சாமர்த்தியம்
எம் அரசே -இங்கும் அரங்கத்து அம்மான் -ராமன் நமக்காக பள்ளி கொண்டு அருளி உள்ளான்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

ஸ்ரீ நஞ்சீயர் வியாக்யானம் –

சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளி-விரோதி நிரசனம் பண்ணி-முன் இட்டு கொண்டு-
ஆஸ்ரித சம்ரஷணம்–ஆஸ்ரிதர்-மா முனி- அது போல உம் அனுபவ விரோதிகளை போக்கி ,
அனுபவிப்பிக்க திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்-

மேடு -கொம்புகள் வளர்ந்து -இளமை பிராயம்–
மேடு -கொம்பு வளர ஆரம்பம் -நஞ்சீயர் / மேடாக வளர்ந்தன என்றுமாம்
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிகிறார்/கீர்த்தியில் பெருத்து மூர்த்தியில் சிரித்து எம்பார் போல்வார்/
பொழுது போக்க குழல் வூதுகிரார்கள் -கட்டுப்படாத மாடுகள் இல்லையே இவைகள் -ஆகவே ஊதுவது பொழுது போக்குக்காக
விரஜை-ரிஷப ஒலி எங்கும் ஒலித்ததாம்-ரிஷபங்கள் கொஞ்சமாக இருக்கும் குறுக்க வர அவை விலகும் —
இவை நகராமல் மேய்ந்து இருப்பதால் இவைகள் மணிகள் த்வணிக்காதே –
ஆகவே விடை மணி குரல் -பசுக்களின் நடுவில் ரிஷபங்கள்
விரஜா பூமியில் இந்த ஓசை எங்கும் பரந்த –
பாகவதம்-இதை கொண்டே-
கீசு கீசு-மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம்  -முப்போத்தும் கடைந்து ஈண்டிய வெண்ணெய்-
காசும் பிறப்பும் கல கல கை பேர்த்து ஒலி/-நிரஸ்தய–அமங்களம் எல்லா இடங்களிலும் -போக்கி -இந்த த்வனி
ஸ்ரீ வைகுண்டம் வர போனதாம் இந்த ஒலி /
அலருகிற கால புஷ்பங்களில்-அந்த அந்த காலத்தில் அலரும்-மதுவை பானம் பண்ணும் வண்டுகள் ரீங்காரம்
பெரிய  ஆழ்வார் செண்பக மல்லி இத்யாதி –அருளியது  போல//

இலங்கையர் இத்யாதி
துர் வர்க்கத்துக்கு புகலிடமாய்-இலங்கை-நிர்வாகனான இராவணன் குலத்தை ச பரிகரமாக மாய்த்த –
நல்லோர் ஓர் இருவர் இருந்தாலும் கேட்காத-நிரசித்த சார்ங்கம் –
பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
சமுத்திர ராஜன் பணிந்தான் -வில்லால் சேது -/ஸ்ரீ சார்ங்கத்தை உடையவராய் –
ப்ரஹ்மாதிகள் அபேக்ஷிதம் முடித்தோம் -செய்யப் பெற்றோமே -என்று –
மேனாணிப்பும் உடையராய் -அஹங்காரம் இங்கு இவன் இடம் இருக்க வேண்டுமே –செய்து முடித்து அகங்காரம் கொண்டு–
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியானை -தாடகை தாடகாதிகள் –
அருணோதயம் போலே இது அதுக்கு -சமாராதானம் -நீராடி -சத்ருக்கள் மண் உண்ணும் படி – திரு அயோத்தியை நிர்வகிப்பர் –
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்காக இங்கே வந்து திருக் கண் வளர்ந்து – பெரிய பெருமாள் ஸ்ரீ ராமராக அவதரித்து
இவற்றை செய்து முடித்து மீண்டும் சயனம் – தீபாத் உத்பன்ன பிரதி தீபம் -சர்வம் பூர்ணம் -அர்ச்சையே -அயோத்தியைக்
காட்டில் திருவரங்கம் உகந்து அருளி – அனைவருக்கும் என்றும் இங்கு தானே –
சர்வாதிகரான தேவரீர் உணர்ந்து அருளி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –

————————————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–எருமை சிறு வீடு  அன்றி பெரு வீடு–
பனி புல் மேய்தல் சிறு வீடு மேய்தல்-பால போகம்-
மேட்டு இள -பெரு வீடு-ஒளி திக்கு எட்டும் பரவிய பின் -பெரு வீடாக கொள்ள வேண்டும்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்- ஆயர்களின் குழல் ஓசை –
நாகுகளின் மேல் செருக்கி இருக்கும் விடை எருதிகளின் மணி ஓசையும் -மணி குரல்-
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்-இரிந்தன சுரும்பினம்-
மது பானம் பண்ண வண்டுகளும் கிளம்பி ஓசை எழுப்ப /
ஆர்பாட்டம் அதிக்ரமித்து எங்கும் செல்லா நின்றது
மதுரமா வண்டு பாட மா மயில் ஆட -அதே கருத்து- அங்கும் ராவண நிரசனம் உண்டே –
சர்வ ரஷகர்-விரோதி நிரசனர்-எழுந்து அருள வேண்டும்-
மா முனி–விஸ்வாமித்ரர்= -பரித்ராணாயா சாதூனாம் / வேள்வி காத்து -தர்ம சமஸ்தாபனம்
ராவணன் ஆதிகளை  நிரசனம்- மூன்று செய்து-

கற்று கறவை-இளம் கன்றே பால் கொடுக்கும் கிருஷ்ண ஸ்பர்சத்தாலே/
பெரு வீடு -நிதானமாக பராக்கு அற்று மேயும்
அவர்கள் குழல் ஊத்துவார்கள்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன் விலங்கல்
வேயின ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே -8-5-7- -விரக தாபம்-
விடை மணி ஓடும் ஆயன் விலங்கின ஓசையும் -ரிஷப கதி- மணி சேர்ப்பார்கள்/
இராப்பத்து -திருவாய் மொழி மண்டபம் -தொடங்கி மணல் மேடு தொட்டதும் ஓடுவது ரிஷப கதி –
மணி சேவிப்பார்கள் -வட்டமாக தட்டில் அடித்து போவார்கள்
இள மேதிகள் வாய்க்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே -3-8-6–
ஞானம் இல்லா பசு மாடுகளும் நாங்களும் எழுந்து வந்த பின்
சர்வஞ்ஞர் நீர் எழுந்து அருள வேண்டாமோ-
நீர்-ஆகார நித்திரை பயம் மைத்துனம் துல்யாணி -ஆகாரம்- நித்தரை -ஆண் பெண் கலவி –
மக்களுக்கும் மாக்களுக்கும் பொது  /ஞானம் ஹீணன் பசு/-ஞானத்தால் சக்தியால் வாசி –இல்லா விட்டால் பசு ப்ராயர்-
ஈட்டம் -கூட்டம் /இசை -எங்கும் பரந்தன/திரண்ட த்வனிகள் திக்குகள் எங்கும் விஸ்திருதமாயின –
வெளி நிலம் வயல் தடாகங்களில் -காலை வேளை மலர்ந்த புஷ்பங்களில் மது உண்டு வண்டுகள் ரீங்காரம்-
கால புஷ்பங்கள் —செங்கழு நீர் தாமரை புஷ்பம் அலர்ந்து-வண்டுகள் தேன் பருக ரீங்காரம்/
கார் திறள்-மேகம் -வண்டுகள் கூட்டம் என்று நினைத்து மயில்கள் ஆட/-
பகவத் குணம் அனுபவித்து முக்தர்கள் சாமகானம் செய்வது போலே இங்கே வண்டுகள் –
உகந்து அருளின எல்லாம் உத்தேசம்

இலங்கையர் இத்யாதி
ராவண சந்தானத்தை வாட்டி -வாட்டுகை -நிஸ் சேஷமாக முடிக்கை -கரியாக்குகை/
மாருதியால் சுடுவித்தான் -என்றுமாம்-
கரி ஆகுமோ என்னில்-
வீர பத்னி ஆகையால் விரோதித்தற்கு சொல்லுவது –
கிள்ளிக் களைந்தான் போலே -அநாயாசேனே என்று காட்ட வாட்டிய -வீர பத்னி வழி அன்றோ –
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி சேனை காவலர் ஆயிரம்-தலை அற்ற கபந்தம் ஆடும் –
ஆயிரம் -ஏழரை நாழிகை ஆடின -கணீர் -ஓசை -பெரிய யுத்தம் என்பர் மற்றோர் –
அங்குள் அக்ர தான் ஹந்யாம் -நரஸிம்ஹ அவதார நினைவு -பெருமாளே ஸூக்ரவன் இடம்
ஸீதாயா தேஜஸால் தக்தாம் -ஸூந்தர காண்டம் -கற்பு கனல் -ராம கோப பிரபீடிதாம் -முற்றுகை இட்டது பெருமாள் கோபம் –

தீப்த பாகவ ஸங்காசா –காஞ்சனா பூஷணை -பொன்னால் அலங்கரிக்கப் பட்ட ராம பானம் –
கரி ஆக்குமே
வாட்டிய -அழிக்கும் என்றும் -நேயம் அஸ்தி-/
கற்புக் கனல் -தேஜஸா தத்தாம்-ராமன் கோபத்தால் பீடிப்பட்டு முற்றுகை இட்டு –
வரி சிலை –
ஏ வரி வெஞ்சிலை வலவா -தர்ச நீயாமான -ஆகர்ஷணா –
ஸ்ரீ ராமாயணம்–காஞ்சனா பூஷணை- அம்பை கொண்டாட இங்கு கோதண்டம் கொண்டாடுகிறார்-
வானவர் ஏறே-
இந்திரனுக்கும் அமராவதி பட்டணம் கொடுத்து ஸ்வர்க்க லோகமும் கொடுத்த படி–வேத அபஹார குரு பாதக தைத்ய பீடா –
விபீஷணனுக்கு இலங்கை கொடுத்தால் போலே –
மா முனி –
முனி மனன சீலர் -கவி ரிஷி முனி என்னும் ஆழ்வார் –
கிராந்தி காலம் தாண்டிப் பார்க்கும் கவி –
ரிஷி மந்த்ர த்ரஷ்டா –
விச்வாமித்ரர்-ரக்ஷ பரம் பெருமாள் -சித்த உபாயம் பற்றியதால் மா முனி –
முன்னால் முனியாக இருந்தார் -தம் தம் கார்யங்களை தாம் மனனம் பண்ணி -முனிகள்-
ஸூ ரக்ஷண சான்வயம் ஒழிந்து –ஈஸ்வர பிரவ்ருத்தி தடுக்க ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி தானே ப்ரவர்த்தி –
நினைத்து இருந்து சிரமம் தீர்ந்தேன் -என்ற படி -ஏஹி பாஷ்ய சரீராணி –என்றவர்களும் மா முனி –
எங்கள் பக்கல் இருப்பது எல்லாம் குழைச் சரக்கு-
உன் அம்பு பார்த்தே இருந்தோம் என்றவர்கள் -அப்படி பட்டவர்களுக்கு மட்டுமா போவதாவது –
விச்வாமித்ரர் சொன்னது -நானும் முன்னால் எப்படியோ இருந்தேன் -விப்ர நாராயணன் நான் –
அடியேன் தொண்டர் அடிப் பொடி ஆனேனே -என்று காட்ட –
நான் மாறி அடியேன் ஆனால் போதுமே கைக்கொள்ள –
அத்வர த்ராணம் -யாகம் ரக்ஷித்து -அவபிரதம் ஸ்நானம் பண்ணி –
வந்து எதிர்ந்த தாடகை –மந்திரங்கள் கொள் மறை முனிவர் வேள்வியைக் காத்த –பராபிபவன சாமர்த்தியம் –
அடு திறல் —
அரசின் கடமை செய்து அருளினவனே -அயோத்தி அம் அரசே -கடமை செய்து முடித்தவன் –
தச வருஷம் சஹஸ்ராணி -தீர்த்தம் பிரசாதியாமல் -கோயிலில் பள்ளி கொண்டு அருளிய பலன் வேண்டாமோ –
கடாக்ஷித்து கைங்கர்யம் கொள்ள வேண்டுமே –
உத்திஷ்ட -நரசார்த்தூல – ரிஷிகள் திருப் பள்ளி எழுப்ப தான் எழுந்து அருளுவீரோ –
உங்களுக்கு நான் செய்தபடி அழகிதியோ -என்று வினவி குசலப் பிரசன்னம் பண்ணி அருள வேண்டுமே –
அடியோங்களை ரஷிக்க எழுந்து அருள வேண்டும் -என்றவாறு

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி -5–புலம்பின புட்களும்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 8, 2011

செய்யும் பசும் துளவ செந் தமிழில் மறை தமிழ் அருளிய -பரன் தாள் அன்றி ஆதரியாத மெய்யன்-
ராமானுஜர் சரணே கதி -அமுதனார் /
மறைத் தமிழ் மாலைகள் திருப்பள்ளி எழுச்சியும் -திருமாலையும் –
உத்திஷ்ட புருஷ கிரி-போல வேதார்தம் திரு பள்ளி எழுச்சி அருளியது போல இவரும் அருளி இருக்கிறார்/
திரு மாலை-வேதாந்த சாரம் -சரணாகதி – -38 பாசுரம்-மேம் பொருள் போக விட்டு -பாசுரத்தால் அருளினார்/

இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் -இப் பாசுரம் தனியாக –
அத்தனை நெருக்கம் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் அரங்கனுக்கும் –
அரங்கத்தம்மான் –
ஸ்வரூப நிரூபகம்-திவ்ய தேசம் பெயர் கிட்டே அவனை அனுபவிப்பர் –
பங்குனி உத்தரம் -திரு மண்டபம் -வானர முதலிகள் எல்லாரும் சிலா ரூபமாக –
சரணாகதி -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்த திரு மண்டபம் ஸ்மர்த்தர்த்தமாக இன்றும் சேவை உண்டே

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

தேவர்கள் வந்து நிற்க/பட்சி ஓசை கடல் ஓசை-சரித்ரம் சொல்லி -அது போல ரஷித்து அருள வேண்டும்/-
கைங்கர்யமே  ரக்ஷணம்/விபீஷணனுக்கு -ஆஸ்ரித சுலபன்–
தர்ம வர்மா திருச் சுற்று-திருவண் ஆழி பிரதக்ஷிணம் என்றும் சொல்வர் -இப்பொழுது சேவிக்க வில்லை –
கம்பி கதவு வழியாக விமானம் சேவிக்கிறோம் –
ஜ்யேஷ்டாபிஷேகம் -நம்பெருமாள் இங்கே எழுந்து அருளி திரு மஞ்சனம் –
சேஷ அசனர் -விஷ்வக் சேனர் -விபீஷணனும் திருவடி-களும் சேர்ந்து சந்நிதி/
திரு முளை -மண் எடுக்க-மிருத் ஸங்க்ரஹம் -விஷ்வக் சேனரும் ஹனுமானும் சேர்ந்து எழுந்து அருளுவார்கள்-
ஹனு பூஷா விபீஷணயோகோ ஸ்யாம் மோக்ஷம் உபேஷிய  -ரங்க  தனம் -ஆனந்தப் படுத்து கிறார்கள் பட்டர் –
தாயார் சந்நிதி மரம் கீழ் எடுப்பார்கள்/
திரு பள்ளி ஓடம் -மாசி தெப்ப உத்சவம் தேர் இல்லை-தை பங்குனி சித்திரை தேர் உண்டு /
செல்வ விபீடணனுக்கு வேறாக நல்லான்-

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்–கீழே இரண்டு பறவைகள் சப்தம் இது வேறே
போயிற்று கங்குல் புகுந்தது புலரி-பகல் பொழுது புகுந்தது
கலந்தது குண திசை கனை கடல் அரவம்-கிழக்கு சமுத்திர ஓசை எங்கும்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த-ஆனந்த ரீங்காரம் -சாம கானம் பூ லோக வைகுண்டம் -கதம்ப மாலை கலம்பகம்
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் -புஷ்பமாலை சமர்ப்பிக்க தேவர்கள் புகுந்தனர்
அம்மா-சர்வ ஸ்வாமி -இவர்களுக்காகவாவது திருப் பள்ளி உணர வேண்டும் -என்று பிரார்த்தனை
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தாச வ்ருத்தி -செய்த –
கொண்டு வந்து எழுந்த அருளிய பண்ணிய பெரிய கைங்கர்யம் /
முதல் முதல் பங்குனி ப்ரஹ்மோத்சவம் பண்ணிய கைங்கர்யமும் உண்டே –
சேஷ பீடம் முன்னமே -காவேரி வாய்ப்பும் இருக்க -சேர்த்தி உத்சவம் 9-நாள் – திரு மஞ்சனம் -அதில் உண்டா –
மூலவர் இருந்தமை அறிவோம்-ஸஹ பத்நயா விசாலாக்ஷி ஸ்லோகம் உண்டே –
அர்ச்சிக்க அன்றோ பெருமாள் இஷுவாகு குலத்தில் திரு அவதாரம் –இங்கு –
ஸ்ரீ ரெங்க விமானம் இருந்தது அறிவோம் –
உத்சவம் நடந்தால் உத்சவம் இருந்து இருக்க வேண்டுமே –
இஷுவாகு மன்னர் வம்சம் சோழர் -தர்ம வர்மா –
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்-
பூத்து இருக்கும் சோலைகளில் பறவைகள்-ஆரவாரம் செய்கின்றன கங்குல்
இரவு புலரி-பகல் பொழுது குண திசை-கிழக்கு திசை /
களி வண்டு மிழற்றிய-
வண்டுகளும் ரீங்கரிக்கிற -கதம்பம்-கலம்பகம்
அலங்கல் தொடையல்
-மாலை /அம்மா -சர்வ  ஸ்வாமி–
ஆதலில்- இதில் தான்- தேவர்களுக்கு ஆக செய்யலாமே -தாச விருத்தி-வழிபாடு /
பங்குனி பெரிய உத்சவம் முதலில் ஸ்ரீ ரெங்கத்தில் பண்ணிய கைங்கர்யம் /
சேஷ பீடம் வேற கீழே இருக்க காவேரி -மூல மூர்த்தி பிரஸ்தாபம் உண்டு/
நம் பெருமாளும் தாயாரும் -சக பத்ன்ய  விசாலாட்ஷி -பெரிய பெருமாளை –
நாராயணன்-ஜகன்னாதன்-அர்ச்சன்யனும் அவனே இங்கு/அவன் பெருமைக்கு தக்க பண்ண /
தர்ம வர்மாவும் இறைஞ்சி கேட்க -உத்சவம் நடந்தது என்பதால்-உத்சவரும் இருந்து இருக்க வேண்டும்

/சர்வான் தேவாஸ் நமச்க்ருது அயோத்யா மக்கள் ராமனுக்கு எல்லா கோவிலில் சென்று வழி பட்டார்கள்
விபவத்திலும் அர்ச்சை உண்டு
/புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோவில்-
ஆண்டாளும் கோபியாக அனுகரித்து-அருளி இருக்கிறாள்/துவஜ ஸ்தம்பமும் பண்ணி இருக்கலாம்/
பங்குனி உத்சவம் சேர்த்தியும் இருந்து இருக்கும்/
கோ செங்கணான் தொழுத கோவில் –மணி மாடம் -ஒரே சரித்ரம்- 1200 வருஷம் -இவனே இல்லை –
பெயர் வழி முறையாக வருமே /விபீஷணன் வழி பட்ட கோவில்-இங்கு ஆழ்வார்

அவதாரிகை-ஸ்ரீ நஞ்சீயர்- 
தேவஜாதிகள் கற்பக பூக்கள் கொண்டு வந்து -மந்திர புஷ்பம் -சொல்லி பரிமாறுவதற்கு அவசர ப்ரதீஷை-
அருள பாடு-ஸ்ரீ ரெங்கத்தில்-அருள பாடு விண்ணப்பம் செய்வார்-அரையர்-
திரு கரக கையேல்- திரு கோ மண்டலம்–சந்தனம் புஷ்பம் கொண்டு வருவார் நாயந்தே-
அது போல அருள பாடுவது என்று காத்து இருக்கிறார்/
தொண்டர் அடி பொடி அருள ஸ்வாமி ஏற்பாடு செய்து இன்று வரை நடந்து வருகிறது/
முதலி ஆண்டான் வம்சம் மணிய காரர்/தோளுக்கு  இனியான் 16 பேர் /திரு சிவிகை 32 பேர்-உபய நாச்சியார் கூட  /
ஓடி ஓடி பழகுவார் வெறும் தோளுக்கு இனியானை /ஆயக்காலே கிடையாது ஸ்ரீ ரெங்கத்தில் /
மின்சார விளக்கே இல்லை நெய் பந்தம் மட்டும் தான் /
அருளப் பாடு- எப்பொழுது என்று காலம் எதிர்பார்த்து -எதிர் பார்த்து நிற்கிறார்கள்-
ஜன்மாத்ரங்களில் தாழ்வு பாராத நீர் கண் விழித்து அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
ஜன்மாந்தரங்களில் வாசி பாராமல் கொள்கிறார்/இவருக்கு அப்புறம் திரு பாண் ஆழ்வாரையும் கொண்டாரே/

வியாக்யானம்-

சர்வரையும் அபிபவிக்க  கடவதான தமஸ் போனது-மயக்கம் கொடுக்கும்-வாசனை உடன் போயிற்று/
அந்த தமஸ் -இருளே தமஸ் –
சாத்விகம் -பகல்-வந்தது/ சம்சாரம் கழிந்து பகவத் அனுபவம் பகல் கண்டேன் நாரணனை கண்டேன் /
ப்ரஹ்ம முகூர்த்தம்–ஆராதனை காலம் வந்ததே என்று அன்றோ காலத்தை கொண்டாடுகிறார்கள் -மார்கழி திங்கள் இத்யாதி –
கீழை திக்கில் கோஷிக்கையே ஸ்வபாவம் சமுத்திர சப்தம்- எங்கும் வியாபித்தது–இரவில் சமுத்திர சப்தம் குறைந்து இருக்கும்/
ஊரெல்லாம் துஞ்சி-5-4- ..நீரெல்லாம் தேறி //

களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த-
மது பானம் உண்ட வண்டுகள்-
களி வண்டு மிழற்றிய மாலை-நானாவித புஷ்பங்கள்-ஏந்திக் கொண்டு-இடுப்பு கீழ் கூடாது/
தேவர்கள் அடைய சர்வ நாதனான உன் திருவடிகளில் /பர அவர ஈசர்-அஸ்மத் ஆதிகளுக்கும் –
இராவண அனுஜன்  என்று பார்க்காமல் ஸ்ரீ விபீஷணனால் -கொண்டாடப்பட்ட கோயிலிலே –
பர அவர ஈசனான தேவரீர்
அஸ்மாதாதி களுக்காக பள்ளி கொண்டு அருளினீர் —
அதவா-
அவனை அடிமை கொண்டால் போலே எங்களையும் கொள்ள வேண்டும் என்றுமாம் –
கைங்கர்யம் கொள்ள-எழுந்து அருள்வாய்

———————————–

ஸ்ரீ பெரிய  வாச்சான் பிள்ளை -அவதாரிகை–
சுரும்பினம் இருந்தின முன்பு -வயலுக்குள் இருந்த வண்டுகள் –
இதிலும் போது கழிந்து உணரும் -பஷிகளும் உணர்ந்தன –
பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் இதற்கும் உள்ள வாசி

வியாக்யானம்-

பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் இதற்கும்-
வயலில் உள்ளவை போல இன்றி நிலத்தில் உள்ளவைகளும் எழுந்தன -புலம்பின புட்களும் என்றாரே –
அந்த புள் இனங்கள் சொல்லும் பாசுரம்-/வண்டினம் முரலும் சோலை..
மேகம் வந்தது என்று பிரமித்து – மயில் இனம்   ஆலும் -கொண்டல் மீது அணவும் சோலை-
நிஜ மேகம் நாமும் வந்துடனுமே -சோலை குயிலனம் கூவும் சோலை -மயக்கம் இல்லாது இது ஓன்று தான் –
சோலை வாய்ப்பு பார்த்து இறங்கினார்-அண்டர் கோன் அமரும் சோலை —
எல்லா சமுத்திர நீரை உண்ட மேகம் போல பெரிய பெருமாள்//
புலம்பின புட்களும்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே சில பாட-சிலர் பக்க வாத்தியம் கொண்டல் -ஆட சிலர் கொண்டாட –
ஸ்தோத்ரம் பண்ணுகின்றன —ந்ருத்த கீதம்
ப்ரஹ்மாதிகள் போல இன்றி அநந்ய பிரயோஜனர் -பிரகலாதன் போல/
வைகவும் பள்ளி கொள்வதேன் என்கிறதாம்–
வாழ்த்தி அயர்வு எய்ததும் -ஆட்டம் மேவி -ஈட்டம் கண்டிட கூடுமேல்–
போயிற்று கங்குல்-
அகன்றது என்றார் முன்பு -போயிற்று கங்குல் /மொத்தமாக போனது -நிஸ் சேஷம் ஆனது தமஸ் போனால்
புலரி புலர்ந்தது
சத்வம் வருவது போல பகல் கண்டேன் –
கோஷம் மாத்ரம் இன்று எல்லா இடமும் பாவித்தது /

உறவு மக்களை பட்டினி போட்டு விருந்தாளி காலும் கலமும் -வெற்றிலை பாக்கு உடன் ஊட்டுவாரை போலே-
ஆழ்வார்—தேவர்களுக்கு-எழுப்பி-தன்னை அவர் பிள்ளை /
பகவத் கல்யாண குணம் விருந்தோம்பல்-இரண்டையும் சொல்கிறார்/
தேவர்கள் விருந்தாளிகள் –
ஆழ்வார் பெருமாள் அளியல்  நம் பையன் என்று சொல்லப்படுபவர் அன்றோ – குடும்பத்து பிள்ளை –
பெண் போலே அன்றோ —
தம் பதவி பிரம்சம் வாராமைக்கு-பதவி நிற்க- 
நன்றாய் செறிந்து வந்து -செறிந்த வண்டுகள் பருகும் தேன் உள்ள புஷ்ப மாலைகள் கொண்டு-
இவர்களுக்காகவாது முகம் கொடுத்து அருள வேண்டும்-
திரு விருத்தம் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி-நித்யர்கள் இங்கு-பெருமாள் காலை பார்த்து இருப்பார்கள்/
இங்கு தங்கள் நாற்காலி பார்த்து

அநந்ய பிரயோஜனர் நித்யர் மட்டும் இல்லையே
மாலா காரர்-இருக்கிறது கொடுத்து பதறி கைங்கர்யம்/குறும்பு அறுத்த நம்பி /
புஷ்ப கைங்கர்யம்-அகம் சிஷ்யச்ய தாசச்ய பிரஸாதம் கர்த்தும் அர்ஹதி -பரதன்-
ஆதலால் அம்மா –
ஆதலில் என் மாலை சாத்தாது போதும் என் ஆயன் அல்ல என்று சொல்லாதவர் -ஸ்வாமி- ஸ்வாமி தான்-
கடியன் கொடியன்–என்றாலும் அவன் என்றே இருப்பவர் அன்றோ -இவர் பாடல் தாலாட்டு போலே இருக்க  
இப்படி விண்ணப்பம் செய்த இவர் பேச்சு அருளிய சொல் இனிதாக இருக்க–தாலாட்டு போல-
பள்ளி கொள் என்று சொன்ன-அவன் தானே –
விபீஷணனே எழுப்பினால் தான் திரு பள்ளி உணர்வீரோ –
வழி பாடு செய்தல்-
திரு உள்ளம் அறிந்து கைங்கர்யம் பார தந்த்ர்யம் சித்திக்கும்-
அவர் உள்ளம் படி இங்கேயே எழுந்து அருள பண்ணி -பாரதந்தர்யம் – -/
இலைங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் –
இதுவும் ஒரு ஏற்றம் இறே-
எங்களைப் போன்ற நீசரை கை கொள்ளத் தானே இங்கு வந்தீர்/
இதுவும் -விபீஷணனுக்கு பராதீனரக இருந்தது போல -எழுந்து அருள வேண்டும்/
ஆஸ்ரித பரதந்த்ரன் அன்றோ -எழுந்து இருந்தீர் பள்ளி கொள் என்றால் சொன்ன வண்ணம் செய்பவர் அன்றோ –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருப்பள்ளி எழுச்சி–3-சுடர் ஒளி பரந்தன -ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 7, 2011

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

சங்கு சக்கரம் உண்டோ பெரிய பெருமாளுக்கு/காட்ட கண்டார் கையினார் -திரு பாண் ஆழ்வார்/
லாஞ்சனம் உண்டே திரு கரங்களில் ரேகைகள்//-
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்-

குண திசை –முதல் பாட்டில் -இங்கு சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன
எல்லா திக்குகள் எல்லாம்-கதிரவன் குண திசை முதலில்- துன்னிய -அருகில் நெருக்கி /
மதி-சந்தரன்–நட்ஷத்ரங்கள் தலைவன்-பசுத்தனன்-மங்கி/
பாய் இருள்-பாய்
-பரவிய /
வைகறை காற்று இங்கு-வண்  -வண்மை தனம்-மணம் காற்று மூலம் கொடுத்ததால்/
இதோ
என்று காட்டுகிறார்/
அடல்
-மிடுக்கு /திகழ்கிறார்–மற்ற ஒளி இருட்டாக்கி /
தட
-விசாலமான /

ஸ்ரீ நஞ்சீயர் வ்யாக்யானம்

நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும் படி ஆதித்யன் உதித்தான் –
கையும் திரு ஆழி உடன் அழகை சேவிக்க வேண்டும்/

தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -அமுது ஒரு பசும் கதிர்-
இரவுக்கு சக்கரவர்த்தி -சூர்யன் வந்ததும்- மஹா  ராஜர் தோன்றவும்  க்ருத்ரிமர் மறைய
இருட்டு விலக மதி ஒளி குறையும் /சந்தரன் ஒளிக்கு ஹேது இருட்டு தானே //
சந்திரனுக்கு ஒளி விகாச ஹேது இருள் தானே -பரவி இருக்க இதுவே காரணம்-
ராஜ்ய நாச -இருட்டு-ஒளி மிகுந்து வந்தான் ராமன்-வால்மீகி/–லோக காந்தஸ்வ காந்தஸ்வாத்

பசுமை உடைத்தான
நந்தன தரு-காவேரி-ஸ்நானம் பானம் /வீதி அலம்பி விட்டு/ஜனங்கள் பாபம் போக்கி மரங்கள் வளர்த்து-
கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை

பிரதி பட்ஷம் போக்க திரு ஆழி /விரோதி வர வில்லையே/
சகஜ சத்ரு வான இந்த்ரிய பாரவச்யம் போக்க -கையும் திரு ஆழியும் ஆன அழகைக் காட்டி -காற்று -மணம் -விஸ்வ ரூப-
சஹஜ சத்ருவான இந்திரிய பாரவஸ்யம் போக்கி –
பால் நாக்கு /துளசி தொட்டு /ஆழி ஒளி கண் /அழகன் ஊர் அரங்கம் அன்றே /
ஐய்யப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் –
விரோதி  போக்கவும் அனுபவிக்கவும் அழகே தான் //

————————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்

ஆதித்ய கிரணங்கள் எங்கும் பரந்தன/
நக்ஷத்ர   அதிபதியான சந்திரன் வைவர்ணம் -இழப்பு எப் பொழுதும் –
பசத்தனன்-
நாயகி பசலை நோய் கண்டால் போலே -சேவிக்க வாய்ப்பு இல்லையே -அதனால் எப்பொழுதும் வெளுத்த ஸ்வபாவம் –
வெளுத்த ஒளி இரவில்-பகலில் குளிர்த்தி போனது/ –
திகிரி அம் தடக்கையில் இருக்க இரவியும்-தாரகை மின் ஓளி சுருங்கினால் போலே ஆகுமே –

திரு சோலை பாளை மணம் முகர்ந்து விடி காற்று /
கீழ் திக்கில் முதலில்/ இதில் நேராக உதித்து
/
உதய கிரியில் இருந்து புறப்பட்டது முதலில் -இதில் நேராக உதித்தது –

புள்ளும் சிலம்பின காண் 6 பாசுரம்/வெள்ளி எழுந்தது வியாழன் உறங்கிற்று 13 -புள்ளும் சிலம்பின காண்-மறு படியும்-
அதே பறவையா-கூட்டை விட்டு -நாள் முழுவதும் பிரிந்து போவதால் கூட்டில் இருந்து-பேசிக் கொள்வதை
இங்கு பறவைகள் /எங்கு போகலாம்/ கீசு கீசு-7 பாசுரம்-பஷி நாதம்-
காலை எழுந்து இருந்து கரிய குருவி கணங்கள் சொல்லும் நாதமே உத்தேசம்-/
பஷி நாதம் அல்லது பிரபன்னனுக்கு உத்தேச்யம் இல்லையே/
ஜான சுருதி-ரைகுவர் கதை-பஷி பாஷை தெரிந்து /பஷி அனுப்பி வந்தீரோ/
பகல் கண்டேன் நாரணனை கண்டேன்/பறவை கணங்கள் சொல்லும்/
முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம் /
கேட்டு /மனனம் பண்ணி/இடையூறு இன்றி சிந்தித்து
/
சேவிக்கலாம் ஞானத்தின் நிலைகள் இவை சூர்யன் வளர்வது போல/
முளைத்து குண திசை/ எழுந்த-சூழ் திசை எல்லாம்/
முளைத்து எழுந்த திங்கள் தானே-பாசுரம்-
சூர்யன்-வெப்பம் கஷ்ட பட்டு பெற்ற ஞானம் போல /மயர்வற  மதி நல அருளிய ஞானம் உதாரணம்
திங்கள்/ரிஷிகள் ஞானம் சூர்ய துல்ய/ஆத்மாவால் சிரேஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசித்திதவ்ய –
கேட்டு மனனம் பண்ணி தியானத்தில் ஆழ்ந்து சாஷாத்காரம் – –
முளைத்து –முதல் பாசுரம் -எழுந்த -இப்பாசுரம் சுடர் ஓளி சூழ்ந்து–ஞானம் வளர்ந்த தசை

எல்லா திக்குகளிலும் ஆதித்ய தேஜஸ் எங்கும் பரந்தன
ரஸ்மி அநுசாரி அதிகரணம்-
சூர்ய கரணம் மேல் அர்சிராத்ரி மார்க்கம்/-சூர்ய கிரணம் அற்றே போகாதே -இரவிலும் -வெப்பம் உண்டு –
பனி மண்டலம் ரஸ்மி மறைக்கும் -இங்கு தெரியாது -வேறு தேசத்தில் தெரியுமே /
தேஜஸ் ராசி கூட்டம் சேர்த்து -தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
இருள் போல-அபூத உவமை தேஜஸ் கூட்டம் கற்றை சேர்த்தாலும் இருள் போலே அன்றோ உன் திருமேனி தேஜஸ் -/
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை –3-7-1-வளர்ந்து கொண்டு இருக்கும் ஒளி/-
நித்யம் -அவிகாராய -வ்ருத்தி கிராசங்கள் இல்லை -மங்காது வளராது -கர்மாதீனமாக இல்லை –
அவன் தேஜஸ் பக்தர் கூட்டம் கண்டு கிருபீதீனமாக  தேஜஸ்  வளரும் என்றவாறு – 
விகாசம் மங்குவது இல்லை கர்மாதீனமாக /க்ருபாதீனம் உண்டு/ஆங்கு மலராது குவியாது-
திரு கண் மலர்ந்தால் போதும்/ திருக் கண் -சங்கல்பத்துக்கு பிரதி நிதி
சூர்யன் போலே உதய கிரியில் உதித்து எல்லா திக்குகளின் சூழ்ந்து ஒளி பரப்ப உயர்வது போலே வேண்டாமே இங்கே
மத்ஸ்ய கமல லோசன– கண்ணாலே பார்த்து வளர்க்கும் சாமர்த்தியம் —
உணர்ந்து அருள ஆகாதோ–எழுந்து அருள வேண்டாம் உணர்ந்தாலே போதுமே –

நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி ஓடும் நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான்  –
திகிரி அம் தடக் கை -நேமி அம் கை உளது-அங்கு திருக்குறுங்குடி பாசுரம்
இவர் எழுந்து நின்றால் போலே வர்ண கலாப திவ்ய மங்கள விக்ரஹம்
நிம்பார்க்கர் வல்லாபாச்சார்யர் சைத்தன்யர் ஸ்வாமி நாராயணன் –
ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு மதங்கள்
ஜோதி சம்ப்ரதாயம் -உருவை ஒத்துக்க கொள்ளாமல்

நாராயண பரம் ஜோதி-பரம் ஜோதிர் உபஸம்பத்ய-அங்கு சென்றதும் சாம்யா  பத்தி -/
ஆகாசத்துக்கு பரி பாகம் நக்ஷத்ரம் ஒளி-
அந்தி காவலன் -ரஜநீசரன்-சந்தரன்–இரவில் சஞ்சாரம்–கருகினான் என்ற கருத்து- மறைந்தான்-/
அமுத கலைகள் வளர்ந்து தேய்ந்து -இலைகள் பறிக்க கூடாது அமா வாசை அன்று- விஷ்ணு புராணம்-
16 கல்யாண குணங்கள் -ராம சந்திரன்-என்றும் நிறைந்த -தினகரன் குல திவாகரன்-சூர்யன் இருட்டை போக்கும் திவாகரன்/-
சூர்யனுக்கு இருந்த சந்திர கலைகள் 16 கல்யாண குணங்கள்/

தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு–காமரு சீர் அவுணன் உள்ளத்து  -அவனையும் தாண்டி –
துர் அபிமானம்-சீர் -சேவை பெற்றதால் வந்த சீர்மை/எண் மதியும் கடந்து -சப்த ஆவரணம்-தாண்டி
பிரதிவி பஞ்ச பூதம் அகங்காரம் மகான்-/வேதம்-சந்தரன் மேல் கீழ் சூர்யன்-
மேலே தண்  மதியும் கதிரவனும் தவிர ஓடி -தாப த்ரயம்-பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
கொதித்த தலையில் வைத்த திருவடி சருகி-குளிர -சிசிரோபசாரம் பண்ணுகிறார்/பாசுரத்தால்.
மேலை தண் மதியம் -என்றதால் கீழை கதிரவன் என்று அர்த்தம் /
சர்வ பதார்த்தங்களையும் தரிக்க பண்ணும் திருவடிகளாய்-சத்தை ஏற்படுத்த -லோகத்தை தரிக்க பண்ண உணர வேண்டும்/
சந்திர காந்தன் அதீத பிரிய தர்சனம் ராமன் /அமலன் ஆதி -16 சீமா பூமிகள் காட்டினார்/
சகல கலா பரிபூர்ணராய் -பெரிய பெருமாள் இடம் உள்ள குணங்கள் தான் ஆராதனன் ராமன் பெற்றான்
நிஷ் களங்கம் இல்லாத சந்திரன்-சதி ஆஹ்லாத கரம் சந்திரன் -தாபா த்ரயங்கள் தீர்ந்து குளிர்ந்து –
சம்சார பயம் போக்கும் -துண்ட வெண் பிறையன் துயர் பிறையின் துயர் தீர்த்தவன்-இரண்டும்-
சந்திரனின் துயர்/ருத்ரனின் துயர் தீர்த்தவன் /சந்திர புஷ்கரணி-தீர்த்தவாரி கண்டு அருளுகிறார்-
தாரகையின் புறம் தடவி அப்பால் -மிக்கு -திரு நெடும் தாண்டகம் –
சந்த்ரகாந்தானாம்
திருவடித்தாமரை
திரு முக மண்டலம்
இரண்டுக்கும் இரண்டு பிரமாணங்கள் –

இந்த சந்திரனே -உணர்ந்து அருள வேண்டும்/
ஆகாசப் பராப்பு எல்லாம் முத்து பந்தல் -முப்பல் விரித்தால் போல முத்து பந்தல்- நஷத்ரங்கள்-
அமலங்களாக விளிக்கும் -குற்றம் நீங்கும் படி-
கடாக்ஷம் இல்லாமல் -சந்திரனும் பரிக்ரகங்களும்-நஷத்ரங்கள்- வேற்று உரு கொண்டன/
வியாபித்த இருள் நிரஸ்தமாயிற்று

பசுமை உடைத்தான
நந்தன தரு-காவேரி-ஸ்நானம் பானம் /வீதி அலம்பி விட்டு/ஜனங்கள் பாபம் போக்கி மரங்கள் வளர்த்து-
கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை
விடி காற்று வருகையும் – விடிவோரை காற்று எங்கும் வீச –
கூர்தல் -மிகுகை/
மன்றூடு  தென்றல் உலாம் மதிள் அரங்கம்—4-8-.பெரியாழ்வார் -இது அந்த தென்றல் இல்லை -தூங்க காற்று அது –
வைகறை மாருதம் –
விடிந்தமைக்கு அடையாளம் காட்டும் காற்று//

ஆதித்ய கிரணங்கள் மின் மினி போலே அன்றோ
ஆழி கொண்டு இரவி மறைத்தது /ஒளி மிக்க /கோடி சூர்யன் எரித்தால் போல ஆதித்ய கரணங்கள் மின் மினி போல
அடல் -மிடுக்கு தேஜஸ் உள்ள திகிரி/வெறும் புலத்தில் ஆலத்தி கழிக்கும் படி அழகு
அம் தடக் கை -கால சக்கரத்தை-நிர்வஹிக்கும் திரு ஆழி அடங்கும் படி விசாலம்
திருவாழி ஆழ்வானுக்கு இடம் பெறும்படி தடக்கை –
தரிசனம் கேட்டு துடிக்கும் ஆர்த்தர் உள்ள இடம்-அனுக்ரகிக்க வந்த –இந்த ஸ்ரீ ரங்கத்தில் –
முகம் கொடுக்க வந்த இடத்தில் கிடந்தது உறங்கலாமோ-
அத்திகிரி- அத் திகிரி– ஹஸ்திகிரி–

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி–2-கொழும் குடி முல்லையின்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 7, 2011

 

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

அடையாளம் சொல்லி-ஆண்டாள் பாகவதர்களை எழுப்புவது போல்/
செழிப்பான கொடி மாருதம் வருவதை கை காட்டுகிறார்-இதுவோ-
சொரியும் பனியால் நனைந்து -சிறகுகளை உதறி-அன்ன பறவை எழுந்தன /
தாமரை படுக்கையில் சயனித்து இருக்கும் அன்னம் ஆகாசப் பனியால் நனைந்து -வண்ண பரிபாகம் சேர்க்கை
ஹம்சா அவதாரம் செய்து அருளிய நீர் திருப் பள்ளி உணர வேண்டாவோ இரண்டு அடையாளங்களை சொல்லி –
துணுக் என்று எழுந்து இருக்க அடுத்த சரித்திரம் –
அடியார் துன்பம் -நோவு பட்ட யானை/போது புலர –  கீழ் காற்றும் வீச , 
புஷ்ப சாயிகள் அன்னம் பிரபோதனம் -ஆஸ்ரித வத்சலன் தேவரீர் திரு பள்ளி உணர வேண்டும்  –
அம் கண் -இரட்டை-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணும் –ஆஸ்ரித  கூக்குரல் திறக்க பண்ணும் /
பாபங்கள் மூட/ பிராட்டி புருஷ காரத்வம் திறக்க வைக்கும்/ செம் கண் சிறு சிறிதே எங்கள் மேல் விழியாவோ/
அது போல இங்கு- வாத்சல்யம் காட்டிய கஜேந்திர மோட்ஷம்-
பிறை எயிற்று பேழ் வாய் நரஸிம்ஹர் திருவாய் போலே அன்றோ இங்கும்
ஆயிரம் காலம் தன்னை தானே ரஷித்த குற்றம் கணியாதே ஓடினாயே /
ஆயிரம் ஜென்மங்களாக நானும் உன்னைக் கூப்பிட வில்லை-

ஸ்ரீ நஞ்சீயர் வியாக்யானம்

கீழ்க்காற்றும்
புஷ்ப்ப சாயி அன்னங்கள் உடைய ப்ரபோதனம் -இரண்டு அடையாளங்கள் –
ஆச்ரித வஸ்தலரானா தேவரீர் -வாரணம் துன்பம் ஒழித்த நாரணன் காரணன் -சுருக்கமாக சொல்லி
நம் குற்றங்கள் அவனை கண் வளர செய்கிறதே
கூக்குரல் திறக்கப் பண்ணும் -சிறு சிறிதே
பிராட்டி திறக்க வைக்க பாபங்கள் மூட வைக்க
இரட்டைகள் -செங்கண் சிறு சிறிதே / வாத்சல்யம் காட்டிய இடம் காட்டி -கஜேந்திரன் -1000-தன்னை ரஷித்த அஹங்காரம்
கொழுமை-முளைக்கும் காற்றுக்கும் பரிமளத்துக்கும்-
விடி காற்று -கிழக்கு திசை -சூழ்ந்து கொண்டு -உணர்த்துவாரை போலே முகங்களில் அலை ஏரியா நின்றது
குடத்தோடே நீர் கொட்டுவாராய் போலே பரிமளம்
காலைப் பிடித்து உணர்த்துவாரைப் போலே -சேஷத்வம் அறிந்த காற்று அன்றோ -வருடி கொடுத்தாலே எழுந்து
காற்று போலே கூசி பிடிக்க வேண்டிய மெல்லடி -பொய்யான வியாஜ்யம் தானே -எழுந்து இருக்க
அறிவிப்பே அமையும்
கொடியில் மலரும் முல்லைகள்-செவ்வி மலரின் பரிமளத்தை -கொழுமை
கொடிக்கும் முல்லைக்கும் —முகங்களில் அலை எரியா நின்றது –
பனி வாடை காற்றாக காலை பிடித்து உணர்த்தும் படி—
கிழக்கு திசை காற்று திருவடியில் விழுந்து -சேஷத்வ அனுரூபமாக -திருவடி கொள்ள தானே யோக்யதை/

தாமரை பூ  படுக்கை-பனியை மதியாமல்-படுக்கை  வாய்ப்பாலே உறங்கும் ஹம்ச மிதுனங்கள்-காலம் உணர்த்த உணர்ந்தன
பனி உருக — ஈன் பனி/அரு மறை பயந்த சஜாதீயர் –நீயும் எழுந்திராய் –
பனியால் நனைந்த சிறகுகளை உதறி—

விழுங்கிய-
பரம் ஆபத்து ஆபன்ன- நாகவர ஸ்ரீ மான் –
இலையார் மலர் பூம் பொய்கை –கொலையார் வேழம் நடுக்கு உற்று குலைய அதனுக்கு அருள் புரிந்து/
ஆனையின் துயரம் தீர புள்ளூர்ந்து -சென்று நின்று ஆழி தொட்டானை /
பிள துவாரம் போன்ற பெரிய பரப்பை உடைய -எயிற்றால் நெருக்கு உண்டு -மிகவும் நோவு பட்டு –
நாராயணா மணிவண்ணா -துதிக்கை முழுகும் படியான திசையால் கைமா துன்பம் கடிந்த பிரானே
ஆனைக்கு  அன்று அருளை ஈந்த -உபகார ஸ்ம்ருதியால் ஆழ்வார் — க்ருதஞ்ஞர்கள்-ஈடு படும் படி /
பூவின் செம்மை அழியாமல்-திருவடிகளில் இட்டு கொண்டு அடிமை கொண்ட மகோ உபாகரர்-
பொற்றாமரை அன்றோ துதிக்கையில் வைத்து இருந்தது —
கைங்கர்யம் செய்த உபகாரத்வம் நம்மது பெற்றுக் கொள்ளும் மஹா உபகாரம் அவனது –

முடித்து கொள்பவன் அவன் முதல் அடி வைத்தால் போதும் இடையூறுகள் கட்டாயம் –
வெறும் உடையவருக்கே விஷம் கொடுத்து ஆற்றில் அழுத்த இருக்கும் இடம்
கைங்கர்யம் பண்ண ஆசை கொள்ளுவதே வேண்டுவது
பிரதிபந்தகங்களை முடித்து கைங்கர்யம் கொண்டு அருளுவான்  –
ஆனையின் ஆயிரம் வருஷம் அஹங்காரம் நினைக்க முடியாத படி அன்றோ உபகாரகன் –
யானையின் அகங்காரம் தெரியாமல் குற்றமே குணமாக கொள்பவன்-
கொடுத்து கொள்ளாதே கொண்டதற்கு கை கூலி கொடுக்க வேண்டும்
அமுது செய்திட பெறில்  ஒன்றுக்கு நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் –
பிற்பாடரை ரட்ஷிக்க  கோவிலிலே இன்று-உணர்ந்து அருள வேண்டும்-அழகை சேவிக்க –
அன்று காட்டிய அழகை ஆர்த்தி தீரும் படி/முதலை கண்டு கால் கொடுத்தால் தான் எழுந்து இருப்பீரோ/

—————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

கீழ் காற்று முல்லையின் பரிமளத்தை முகந்து கொண்டு தாமரை பூவில் ஹம்ச மிதுனத்தை கிளப்பி விட்டன /
அன்னங்களை புருஷாகாரமாக காலைப் பிடித்து திருவடிகளில் சமாஸ்ரயணம் என்றபடி –
ஆகவே இரண்டையும் சேர்த்தே அருளிச் செய்கிறார் –
அரை குலைய தலை குலைய ஓடி வந்த தேவரீர் கண் வளர்ந்து அருளுகிறது என்-வெள்கி நிற்ப-

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
ச ஸ்ராத்தமான –வளப்பமானகொடியில் வளப்பமான புஷ்பம் அளைந்து -கொழு இரட்டை-
அவனுக்கு என்று இருப்பதாலே வந்த வளப்பம் —
சீரார் செந்நெல் கவிரி வீசும்-செழு நீர் திரு குடந்தை-சீர்மை ஆரா அமுதனுக்கு வீசுவதால்/ 
தாது  அல்லியும் அரும்பும்-கந்தல் இன்றி -கூசி பிடிக்கும் மெல் அடி- அரிய பரிமளம் மட்டுமே -வாங்கி கொண்டு-
தாது  அல்லியும் அரும்பும்-கந்தல் இன்றி-மூன்று அல் வழக்குகள் இல்லாமல் ஸமாச்ரயணம் –
புது மாதவி மீது அணவி -திரு வாய் மொழி 5-9-2-நாயகி பாவத்தில் சரணா கதி இதில் மட்டும் -திரு வல்ல வாழ் –
என்று கொள்  தோழி மீர் காள் எம்மை நீர் நலிந்தது என் செய்தீரோ-
பொன் திகள் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி தென்றல் மணம் கமழும் திரு வல்ல வாழ் நகருள் நின்ற பிரான்
அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே –
தென்றல் மாதவியை அணைந்து வீச -திருவடித் தாமரை பரிமளம் கொண்டு வந்து வீச பிரார்த்தனை அங்கு –
ரஜஸ் கொண்டு வர கூடாதோ -வாட்டம் தணிய வீசீரோ தாராயினும்-ஆண்டாள் -அது போல ஆழ்வார்//

கூருதல்– விஞ்சிற்று –

ஆதித்யனுக்கு நேரான உறவான தாமரை பூவின் விகாசம் அன்றே-
நில பூவும் முல்லை பூவும் விகாசித்தது
 // –
ஆதி சேஷன்-மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளான் – –
நீர்ப்பூ -நிலப்பூ இவனே அரங்கன் -இரண்டையும் சொல்லுகிறார் –-நீயும்- நில பூவும் நீர் பூவும்/
தாமரை கண்ணனை /கமல கண்ணன் என்  கண்ணில் உள்ளான்//ராம கமல பதராஸா –ராஜீவ லோசன
பிர்த்வி-கந்தம் வாயு-தொடு உணர்ச்சி தானே இதுவோ-
அந்தரங்கர் ராஜா இடம் பார்த்து அருளுவீர் என்பார் அது போல-காற்றை அறிமுகம் -ஸ்பர்ச இந்த்ர்ய க்ராக்யம்-

இதுவோ
என்கையால்-சதத கதித்வம்-தவிர்த்து வீசி கொண்டு இருக்கும் தன்மை தவிர்த்து –
கைங்கர்யம் செய்ய உருவம் வேண்டுமே –உருவத்தோடு வந்தது போலும்-

/விரக தாபத்தால் ராமன்-காற்று வீசி-பத்ம கேசர=தாது  -தாமரை தொட்டு கொண்டு வீசுகிறது-
கூடி இருக்கும் பொழுது சுகம்–பிரிந்த பொழுது சந்தரன் காற்று எல்லாம் நலியும்– 
பட்டு உடுக்கும் -தாமரை மலர்-அவள் வஸ்து கொண்டு என்னை நலிய வைக்கிறது/
உருவம் தாதுகள் கொண்டு நலிய வந்தது அங்கு -கேசரிக்கு கேசரத்தை கொண்டு வந்தது -தாதுக்கள் கேசரம் –
கேசரி யை -ராகவ சிம்மம் – எதிர்க்க கேசரம் -சீதா குழலை ஸ்பரிசித்து
சண்டை போட தாதுக்களை எடுத்துக் கொண்டு கஷ்டம் படுத்த அங்கு /
விலகி கொள்- மறைந்து வந்தது மரங்களின் இடைப் பட்டு -ஒய்வு எடுத்துகொண்டு சக்தி கொண்டு நலிகிறது /
சீதை மூச்சு காற்று  என்ற வேஷம் போட்டு கொண்டு வந்தது /
மனசை பரித்து கொண்டு போக்க-வந்தது -பொடி தூவி  மயக்கி-வாயு மநோ ஹரம் –
ஏற்கனவே மற்றவற்றைக் கொண்டு போனது இப்பொழுது மனத்தையும் பறிக்க –

பள்ளி கொள்-
அன்னம்-துயிலும் அன்னம் இல்லை –
உகந்து அருளின நிலங்களில் உள்ளவை எல்லாம் உத்தேசம்
நீராட போதுவீர்-கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று பாராமல்/
சிஷ்யரோ பிள்ளையோ கெளரவம்/மட கிளியை கை தொழுதாள்/நித்யர் பல உருவில் கைங்கர்யம்
அனந்தாழ்வான் கட்டு சாதம் எறும்பு /ஏதேனும் ஆவேனே /
நம்மில் சிறியார் இல்லை இங்கு என்று இருப்பார்களே/பெரிய திரு மலை நம்பி ஸ்வாமி இடம் அருளிய வார்த்தை/
இங்கு எல்லாரும் எல்லாம் நித்யர் முக்தர் -நான் மட்டுமே முமுஷு பக்தன் என்றபடி –

மலர் கொள் அன்னம் -ஒருமை -எழுந்தன -பன்மை
அன்னங்கள் ..எழுந்தன இல்லை அன்னம் எழுந்தன
அந்யோன்யம் ஒற்றுமை கண்டு அன்னம் –
பூம் படுக்கை தனி படுக்கை தனலோடு  ஒக்கும்-
மிதுனத்தில் -வெம் பள்ளி .மென் மலர் பள்ளி வெம் பள்ளியாலோ-ஆழ்வார் /
கயம் கொள் புன் தலை  களிறு  உந்து வெண் திறல் -கழல் மன்னர் பெரும் போரில்  -மயங்க
வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் -வந்திலன்-
இயங்கு மாருதம் நுண் பனி என்னும் தழல் முகந்து இள முலை மெல் –விலங்கில் என் ஆவியை-பரகால நாயகி /
சிறகுக்குள் பேடையை அணைத்து கொண்டு பெரிய திரு மொழி -8-5-8 முது இவ் வையகம் -பரசுராமனும் இங்கே வரவில்லை என்கிறார்-//
மைந்தனும் வாரானால் -ஒழுகு நுண் பனி ஒடுங்கிய பேடையை அடங்க அஞ்சிறை –கொள் தழுவி –இருள் -என்னை படுத்த  –
ஆண் பறவை சிறகு கொடுத்தது எனக்கு ஸவ்ரி பெருமாள் கொடுக்க வில்லையே –

நாடோடியான அன்னம் எழுந்தன -அன்னமாய் அன்று அரு மறை பயந்த நீர் அன்னம்-நீர் -விவேக முகராய் நூல் உரைத்து ,
தீர்த்தம் பால்/அளலில் ரதி இன்றி -சேற்றில்  கால் வைக்காமல்-நாத யாமுனா போல்வாரை –
அணங்கின் நடையை பின் சென்று-பெரிய பிராட்டி/புருஷ காரம் பண்ணுவார்கள்/
மானச பத்மத்தில் -அடியார்களின் மனசில் ஆச்சார்யர்கள் /

விழுங்கிய இத்யாதி
முதலையின் கையிலே யானை ஏற்பட்டாலோ நீர் ரஷிக்கலாவது
பசல்கள் கிணற்றின் அருகில் போயிற்று என்றால் விழுந்தது போலே -ஆதாரம்
வாயில் அகப்பட்டாலும் விழுங்கிய பீடித்த என்னால்
வெள் எயிறு –
சாணையில் இட்ட சஸ்திரம் -ஆமிஷம் இல்லாமையால் -மணலையே பஷித்து -சாணை தீட்டி கூர்மையான எயிறு
விடத்தினுக்கு அனுங்கிய
அழுந்திய பல்லில் இருந்து விஷம் –
ஐந்து முதலை ஜன்மன்களோ பல /கடித்த முதலை இல்லை —
விழுங்கிய –
பசல்கள் கிணற்றின் அருகு போனதால் கிணற்றில் விழுந்தன அகப் பட்டதும் விழுங்கிய ஆதரவு தோற்ற
சாணையில் இட்ட சஸ்த்ரம் போல பல்கள்/ — வெள் ளெயிறு உற-
அங்கு ஆமிஷம்-மாமிசம் – இல்லாததால் மண் தின்று சாணையில் இட்ட சஸ்த்ரம் போல/-
அதன் விடத்தினுக்கு அனுங்கி-அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த-
பெரும் துயர் போக்கினான் வேகத்துக்கு நமஸ்காரம்-பட்டர் //
சர்வேஸ்வரனை வந்து விழ பண்ணிய துயர்-உணர்ந்து ரட்ஷிக்க வேண்டும்-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி–1-கதிரவன் குண திசை –ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 7, 2011

 

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்தது ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

அரங்கத்துக்கு ஸ்வாமி சம்போதனம் — –பள்ளி எழுந்து அருளாயே-பாசுரம் தோறும் வருமே –

சூர்யம் கிழக்கு திக்கிலே உதய கிரி வந்து சேர்ந்தான்–
செறிந்து இருக்கிற இருள் வெளி ஏறி நீங்கி ஒழிந்தது
அழகிய காலை பொழுது வர – மா மலர் எல்லாம் விரிந்தது -பெரிய மலர்கள் விகசித்து -மது-தேன் ஒழுக ஈண்டி திரண்டு-
தெற்கு திசை நிறைந்து -ஆண் பெண் யானைகள் பிளிற–முரசு ஒலி–சமுத்திர கோஷம் போல/யஸ்ய அவதாரண ரூபாணி –

ஸ்ரீ நஞ்சீயர்

யஸ்ய அவதார ரூபாணி -வந்து சேவிக்க வந்து அபசாரம் பட்டு -அவசர பிரதீஷராய் காலம் எதிர் பார்த்து வந்துள்ளார்
-அபஸ்யந்த பரம் ரூபம் –அவதாரத்தில் அபசாரம் பட்டு -ஆராதகர் -அவசர பிரதீஷராக வந்து நின்றனர்-
ஸ்ரீ வைகுண்டம் காண பெறாத தேவர்கள் -அவதார சேவை தேடி-அர்ச்சை-ஆராதகர்கள்

— -ஆயிரம் கதிர் உடன் -திரு கமல பாதம் வந்து -ஆதித்யன் கிட்டே உதய கிரிக்கு பணி கொள்ள  வந்தது –
திருவடி -ஒவ் ஒரு சுற்றிலும் எழுந்து அருளி -திருக் கமல பாதம் வந்து –
ஸூ ர்யன் வரை வந்ததே -அழைத்து பணி கொள்ள

திருவடி -ஒவ் ஒரு சுற்று வீதியிலும் உண்டு சப்த பிரகாரங்கள் மட்டும் இல்லை ஆதித்யன் வரை செல்லுமே
அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க-கதிர் ஆயிரம் இரவி ஒத்த-நீள் முடியன் –
நடுவே கிடந்தது கண் வளர்வது என்-
மிக்க செஞ்சுயர் பரிதி சூடி-திரு வஸ்த்ரம்/சந்த்யா தீபம் கொண்டு வருவது போல–
கீழ் திக்கில் வர- கதிரவர்  அவர் அவர் கை நிறை காட்டினர் –

கன இருள் அகன்றது
மிக்க இருள் சமாசனமாக போனது
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் –நள் இருளாய் /நள் இருள் கண் என்னை உய்த்துடுமின் -ஆண்டாள்

அம் காலை பொழுது
அழகிய காலை பொழுது ஆராதனம் துவக்க —
ஆராதனர் ஆராதனை காலம் வந்தது என்று உத்தியோகிக்க -உதய பலமாக – –
ஆராதன உபகரண புஷ்பங்கள்-விகசிதமாய் தேன் ஒழுக /-எல்லாம் ஸ்வரூப அனுரூபமாக

வானவர் இத்யாதி
தம் தாம் உடைய பல சித்திக்கும், ஆபத் நிவ்ருத்திக்கும் -வேத அபகார குரு பாதக தைத்ய பீடா –
ஈண்டி-ஒருவருக்கு ஒருவர் முற்கோலித்து திரண்டனர் –
முதல் கடாஷம் பெற -அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன்–
அமலங்களாக விளிக்கும்–
கமல கண்ணன் என் கண்ணில் உளானே //ஒருவருக்கு ஒருவர் முற் கோலித்து–
அடியார்களை கண்டு கருணை வெள்ளம் பெருகும் உன் தாமரை கண்களில் இருந்து -மது இங்கு போலே –
ஏறும் வாகனங்களும் ஆண் பெண் யானை -முரசு ஒலி -கடல் கோஷம் போலே
அரங்கத்து அம்மான் -செங்கோல் உடைய திரு அரங்க செல்வம்
உபயவிபூதி நாயகத்வம் தோன்ற -அநந்ய கதி -அடியேனுக்காக திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்/
கீழே சொன்னது எல்லாம் -மற்று எல்லாம் த்யாஜ்யம் //

———————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

ஆதித்யன் தன் சொரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
தின கரன்-பெரிய பெருமாளுக்கு பெரிய விளக்கு -அவனை குசலம் பிரச்னம் பண்ண வேண்டாமோ–
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்/மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம்
/
நாட்டை எல்லாரையும் எழுப்ப சூர்யன் எழ – 
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ/
ராம திவாகரன் அச்சுத பானு – வெம்  கதிரோன் குலத்துக்கு விளக்கு –
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
பாஹ்யமான அந்த காரம் அவன் போக்க–ஆந்தர உள் இருட்டு போக்க -உணர்ந்து அருள வேண்டும்/
சமாரதனம் -உபகரணங்கள்- மலர ஆரம்பித்து விட்டது /மாலை நண்ணி காலை மாலை கமல மலர் இட்டு /
ஆராத்யர் -தேவரீர்  என்று தம் தாம் பரிகரங்கள் உடன் வந்தார்கள் /த்வத் தாச தாசீ கண–
தேவரீர் திருக்கண் மலர்ந்து விசேஷ கடாக்ஷம் பண்ணி அருள வேண்டும் –

இவர் -வகுத்த விஷயத்தில் -அர்சிஸ்-பகல்-சுக்ல பஷம்-உத்தராயணம்-சம்வச்தரம்-
அபிமானி தேவதைகள் ஊர் தாண்டி-சூர்ய சந்திர மின்னல்  இந்திர வருண சத்ய லோகம் மூல பிரகிருதி விரஜை //
முக்தனுக்கு -வைகுந்தம் தமர் எமர் என்று மாதவன் தமர் எமர் என்று/ நாரணன் தாமரை கண்டு உகந்து-
ஆதி வாகரர்கள் சம்சாரம் தாண்டி அழைத்து போவதால்-தம் தாம் பதம் நிலைக்க –விளக்கு உடையார் /
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-
கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்/
கீழ் திக்கில் உதய கிரியில் தோன்றி காலத்தை எதிர்பார்த்து -பீஷாஸ் வாயு -சூர்யன் அக்னி இந்திரன் ம்ருத்யு -ஐவரும்
வாயு சூர்யன் அக்னி இந்த்ரன் மிர்த்யு-பீஷாச்மா-பயந்து-எதிர் பார்த்து –
குன்றத்து இட்ட விளக்காக –
சோலை காவேரி-கரை-கண் வளர்ந்த படியையும் காண வந்தான்/
கிழக்கு மலையில் மேல் இருந்து பார்க்க சோலை காவேரி –தொடங்கி திருவடி தொடக்கமாக
அரைச் சிவந்த ஆடை திரு முடி சேவை க்ரமமாக சேவிக்கலாம்

கன இருள் அகன்றது
செறிந்த இருள் ஆதித்யன் வரவுக்கு தக்க படி குறைய வாங்கிற்று//
இருள் முழுவதும் பார் முழுவதும் வீற்று இருக்க வன்னியர் குறும்பு செய்யும் -திரு விருத்தம் -23-
மதிப்பனனா ராஜ ச பரிகாரமாய் வந்ததும் இருட்டும் பயணம் குறைய வாங்கிற்று- பின் நோக்கி சென்றது -/
பக்தி வளர வளர அஞ்ஞானம் போகும் -கன இருள்- -அர்த்த பஞ்சக அஞ்ஞானம் /
ஹரி-பாபங்கள் அபகரிப்பார்-சிற்றம் சிறு காலே -சமாராதனை யோக்கியமான காலம் -அருணோயதம்-போல ஆஞ்சநேயர் வர –
வாதாத்மஜம்-ராஷசர் ஹரி ஹரி-என்றதும்-குரங்கு-புஷ்பம்-பந்து சூர்யன்-என்பதால் முகம் மலர்ந்தன/
ஸ்மிதம் பண்ண -சித்ரம்–இடைவெளியில் தேன் கொட்ட -மா -பெரிய- ஒழுகின- ஒழிகி கொண்டே இருக்கும்/
இடைவெளி -சித்ரம் -மது ஒழுகின -கொட்டிண்டே இருக்கும் -மா மலர் -ஜாதிக்கு எல்லாம் உப லக்ஷணம்
மா மலர்- புஷ்ப ஜாதி எல்லாம் செண்பக –எண் வகை/ பந்து வெளியூர் வந்தவர் கண்டு மலருமா போலே –
செங்கழு நீர் ஆம்பல் கூம்பும்/பூ  சூடல் எப் பொழுது மலரும் பூவை சூட்டுகிறார்

வானவர் இத்யாதி
பதவி போக கூடாது என்று இதுவே யாத்ரையாக -திக்குகள் எங்கும்- எதிர் எதிர் என்று எல்லா திசைகளிலும்-
முற்பட்டார் முற்பட்டார் -ஓர் இருவராக திரண்டு-திக்குகள் எங்கும் -எதிர் திசை -என்பதால் –
தேவரீர் பரிகரம் என்றால் இங்கனம் இருக்க வேண்டாமோ –
பெரிய யானை திரள்களும் இனம் பிரியாத பெண் யானைகளும் ,-நீ காட்டில் இரு என்றால் கேட்காது- ஸ்ரீ ரெங்கம் இறே –
இனம் பிரியாத பிடிகள் அன்றோ-ஸ்ரீ ரெங்கம் -இ றே -ஸ்ரீ ஸ்தானம் அவளுக்கு ந்ருத்த ஸ்தானம் அன்றோ
பெண்ணாளும் பேணும் ஊர் அரங்கம் இறே ஸ்ரீ ரெங்க நாச்சியார் நாட்டிய ஸ்தலம் -அவனை களிப்பிக்கும் –
வாத்ய கோஷங்கள் -குழந்தைகளே எழுந்து விட்டன–அதிர்தலில்-குமுறும் ஓசை விழ ஒலி தொலை வில்லி மங்கலம்-
ஓசை கேட்டு கொண்டே பராங்குச நாயகி போக-அன்னைமீர் இனி உமக்கு ஆசை இல்லை —
வேத ஒலியும் விழா ஒலியும் –பிள்ளை பிடிகிறவர்கள் இருக்கு என்று சொல்லுமாம்/
பெரும் புறக் கடல் தேவரீர் உணர வேண்டாமா கடலொலி கேட்டு
உபய விபூதி நாதனான தேவரீர் -முகம் கொடுத்து அருளி அடிமை கொண்டு அருள வேண்டும்-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.