ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரர் ஸ்ரீ திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்த தமிழ் தனியன் —
ஸ்ரீ திருமாலை ஆண்டான் அருளிச் செய்த சமஸ்க்ருத தனியன்
தமேவ மத்வா பரவா ஸூதேவம்
ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே–
ஸ்துதி அபிவாதனம் -தொழுது ஸ்தோதரம் பண்ணுவது
ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் என்கிறது
இத்தால் -குண அனுசந்தானமே பொழுது போக்காக இருக்க வேண்டுமே-
ராஜாவத் பூஜ்யராய்-ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திரு மகனாலும் பூஜிக்கத் தக்க அர்ஹனாய் இருக்கை-
ரெங்க ராஜ தானியில் கண் வளருபவராய் –
தம் -அந்த என்று சொல்லவே முடியம் படி வாசா மகோசர ஸுலப்ய பிரசித்தம்
ஈடே -ஆழ்வார் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்
செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்–பேராத சீர் அரங்கத்து ஐயன்-
காவேரி விராஜா சேயம்-வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -வாஸூ தேவோ ரெங்கேச-பிரத்யக்ஷம் பரமபதம் –
ஒவ் ஒன்றாக சொல்லி காட்டி -அடுத்து
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பிராணவார்த்தம் பிரகாசா –
இதம் பூர்ணம் –ஸர்வம் பூர்ணம் சகோம்
ஓம் பூர்ணமத: – பசுவாகிய அது பூர்ணமானது; பூர்ண மிதம் – கன்றாகிய இதுவும் பூர்ணமானது. பூர்ணாத் பூர்ண முதச்யதே – பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ண மாகிய கன்று உதித்துள்ளது. பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஸ்யதே- பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ணமாகிய கன்றை எடுத்தும் பூர்ணமாகிய பசு எஞ்சியுள்ளது. ஓ! இது எத்தகைய புதையல்! ஈடு இணையற்ற – அறியாமை இருளை நீக்க, என் எளிய உள்ளத் துதித்த இளங்கதிரோனனைய அற்புத அறிவுப் புதையல்!
பூர்ணம் -தேச, கால, வஸ்து என்கின்ற மூன்றினாலும் வரையறுக்கப்படாதது(அபரிச்சின்னம்)
பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி-ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் –முதல் அத்யாயம் ||
———————
மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-
திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்
மா மறையோராக இருந்தால் தான் திரு மண்டங்குடி என்பர் என்றுமாம்–ததீய வைபவம் அறிந்து அதில் நிஷ்டரானவர்
வண்டு திணர்த்த வயல் தென் அரங்கர் –
திரு மண்டங்குடி வண்டே- ஆழ்வார்-தொண்டர் அடிப் பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்–
வயலுள் இருந்தின சுரும்பினம்–இவர் நான்காம் பாசுரத்தில் –
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-
ஸூ தட -மஞ்சரி-சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாட ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்-
பூக்களில் கண் படுத்த வண்டுகள் எழுந்தன –பெரிய பெருமாள் தான் எழுந்தார்–
ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்–இன்றும் திரு மார்பில் பதக்கம் சேவை-
பராங்குச பதாம்புஜ பிருங்க ராஜன் -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள்
உதித்த ஊர்-
பின்புள்ளாரும் நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-
கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு–என்னும்படி அன்றிக்கே ஆந்தரமான
இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-
பகவத் கைங்கர்யம் கொண்டே திவ்ய பிரபத்தத்தின் பெயரானது இதன் தனிச் சிறப்பு-
வனமாலை ஸ்ரீ வைஜயந்தி அம்சம் -மாலையே வந்து பிறந்து பூ மாலைகளையும் பா மாலைகளையும் சமர்ப்பித்து அருளிய ஏற்றம்-
——-
திருமாலைக்கும் திருப்பள்ளி எழுச்சிக்கும் வாசிகள் —
1-பெரிய பெருமாள் ஆழ்வாரை அவன் ப்ரீதிக்கு உகப்பாக கைங்கர்யம் செய்ய வேண்டி இவரது
ஸ்வரூபத்தை -உணர்த்தி அருளினார் திரு மாலையில்
இவர் அவனுக்கு அடியார்க்கு ஆட்படுத்தி கைங்கர்யம் கொண்டருள வேண்டி அவனுக்கு
அவனுடைய ஸ்வரூபத்தை உணர்த்துகிறார் இதில்
2- இளைய புன் கவிதை -வாசிக கைங்கர்யம் அதில் –
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து -காயிக கைங்கர்யம் இதில்
3-எம்பிராற்கு இனியவாறே -பகவத் கைங்கர்யம் அதில்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாயே –
4-பெரிய பெருமாள் கிருஷி அதில் -அதன் பலன் இதில் -அதில் பிறந்த பாகம் பக்குவம் ஆனப்படி இதில்
5-தனக்கு அருளை பிரார்த்தித்தார் அதில் -நாளொக்கம் அருள -பர ஸம்ருத்தியை ஆஸாஸிக்கிறார் இதில்
பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும்
இருந்தாலும் நிகமத்தில்
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி-துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!-என்று
மர்மம் அறிந்து அருளிச் செய்கையாலே உணர்ந்தார்
உணர்ந்த அவனுக்கு இவரது சரம பர்வ நிஷ்டையைக் காட்டி
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை –என்று ததீய கைங்கர்யத்தில் இழிந்த துளஸீ தாஸரான அடியேனை
அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—என்று நிகமிக்கிறார்
கரிய கோலத் திரு உரு காண் என்று இவனே வலிய பின் தொடர்ந்து காட்டி அருளுவான்
—————–
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-
ஆதித்யன் தன் சொரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்–மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம் –
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்கள்
இந்திரன், குபேரன் என்னும் படியான பல தேவர்களும் ராஜாக்களும் தம் தம் பதவிகளில் நின்றும் தங்களுக்கு நழுவுதல் வாராமைக்கத்
தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான விரைவு மிகுதியாலே வந்து திரண்டு
“எம்பெருமான் திருப் பள்ளி யுணர்ந்தவாறே நம்மை முதலிலே நோக்க வேணும்” என்னுமாசையாலே
திருக் கண்ணோக்கான எதிர் திசையிலே வந்து நின்றார்கள்.
—————–
கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-
ஹம்ஸ அவதாரம் செய்து அருளிய நீர் திருப் பள்ளி உணர வேண்டாவோ இரண்டு அடையாளங்களை சொல்லி –
நில பூவும் முல்லை பூவும் விகாசித்தது -நீர்ப்பூ -நிலப்பூ இவனே அரங்கன் -இரண்டையும் சொல்லுகிறார் –-நீயும்- நில பூவும் நீர் பூவும்
உகந்து அருளின நிலங்களில் உள்ளவை எல்லாம் உத்தேசம்
ஸூர்யனுக்கே நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலப் பூவான முல்லைப்பூவும் விகஸித்து,
கீழ் காற்றானது அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துமா போலே வந்து வீசா நின்றது
இக்காற்று வீசினவாறே, புஷ்ப சயனத்திலே கிடந்துறங்கின ஹம்ஸ மிதுநங்களும்,
‘பொழுது விடிந்தது’ என்றறிந்து, இரவெல்லாம் தமது இறகுகளிற் படிந்திருந்த பனித் திவலைகளை
உதறிக் கொண்டு உறக்கம் விட்டெழுந்தன.
அன்னங்களை புருஷாகாரமாக காலைப் பிடித்து திருவடிகளில் சமாஸ்ரயணம் என்றபடி –
துணுக் என்று எழுந்து இருக்க அடுத்த சரித்திரம் –
ஆயிரம் காலம் தன்னை தானே ரஷித்த குற்றம் கணியாதே ஓடினாயே –
பிரதிபந்தகங்களை முடித்து கைங்கர்யம் கொண்டு அருளுபவன் அன்றோ நீ
முதலையானது யானையின் காலைச் சிறிது கவ்வின மாத்திரமே யல்லது விழுங்கவில்லையே.-
அப்படியிருக்க “விழுங்கிய முதலையின்” என்னலாமோ? எனின்;
பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் “ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது! விழுந்துவிட்டது!
என்பது போல் இதனைக் கொள்க.
கைங்கர்யம் செய்த உபகாரத்வம் நம்மது பெற்றுக் கொள்ளும் மஹா உபகாரம் அவனது –
அன்று காட்டிய அழகை ஆர்த்தி தீரும் படி–முதலை கண்டு கால் கொடுத்தால் தான் எழுந்து இருப்பீரோ-
————–
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –
குண திசை –முதல் பாட்டில் -இங்கு சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன
நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும் படி ஆதித்யன் உதித்தான் –
முளைத்து குண திசை
எழுந்த-சூழ் திசை எல்லாம்–
முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம்
முளைத்து –முதல் பாசுரம் -எழுந்த -இப்பாசுரம் சுடர் ஓளி சூழ்ந்து–ஞானம் வளர்ந்த தசை
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை –3-7-1-வளர்ந்து கொண்டு இருக்கும் ஒளி-
நித்யம் -அவிகாராய -வ்ருத்தி கிராசங்கள் இல்லை -மங்காது வளராது -கர்மாதீனமாக இல்லை –
அவன் தேஜஸ் பக்தர் கூட்டம் கண்டு கிருபீதீனமாக தேஜஸ் வளரும் என்றவாறு –
திரு கண் மலர்ந்தால் போதும்- திருக் கண் -சங்கல்பத்துக்கு பிரதி நிதி
உணர்ந்து அருள ஆகாதோ–எழுந்து அருள வேண்டாம் உணர்ந்தாலே போதுமே –
“ஆகாசப் பரப்பெல்லாம் முத்துப் பந்தல் விரித்தாற்போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து
இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய தீப்தியும் போய்த்து;
தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.”
கையும் திரு ஆழி உடன் அழகை சேவிக்க வேண்டும்-
சகஜ சத்ரு வான இந்த்ரிய பாரவச்யம் போக்க -கையும் திரு ஆழியும் ஆன அழகைக் காட்டி –
ஐய்யப்பாடு அறுக்கவும்
ஆதாரம் பெருக்கவும் –
விரோதி போக்கவும்
அனுபவிக்கவும் அழகே தான் –
கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை-
—————
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-
சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளி-விரோதி நிரசனம் பண்ணி-முன் இட்டு கொண்டு-
ஆஸ்ரித சம்ரஷணம்–ஆஸ்ரிதர்-மா முனி-
வந்து எதிர்ந்த தாடகை –மந்திரங்கள் கொள் மறை முனிவர் வேள்வியைக் காத்த –பராபிபவன சாமர்த்தியம் –
தேவர்களின் காரியமும் முனிவர்களின் காரியமுஞ்செய்தற்குப் படாதன பட்ட பெருமானே!
அது போல உம் அனுபவ விரோதிகளை போக்கி ,
அனுபவிப்பிக்க திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்-
பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியான -தாடகை தாடகாதிகள் –அருணோதயம் போலே இது அதுக்கு –
உத்திஷ்ட -நரசார்த்தூல – ரிஷிகள் திருப் பள்ளி எழுப்ப தான் எழுந்து அருளுவீரோ –
வாட்டிய-மாருதியால் சுடுவித்தான் -என்றுமாம்-
ஸீதாயா தேஜஸால் தக்தாம் -ஸூந்தர காண்டம் -கற்பு கனல் -ராம கோப பிரபீடிதாம் -முற்றுகை இட்டது பெருமாள் கோபம் –
வரி சிலை —ஏ வரி வெஞ்சிலை வலவா -தர்ச நீயாமான -ஆகர்ஷணா –
மேட்டு இள மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-
பகவத் குணம் அனுபவித்து முக்தர்கள் சாமகானம் செய்வது போலே இங்கே வண்டுகள் –
நேற்று மாலைப் பொழுதில் மது பானத்திற்காகத் தாமரை மலரினுள் புகுந்தவாறே–ஸூரியன் அஸ்தமிக்க, மலர் மூடிக் கொள்ள,
இரவெல்லாம் அதனுள்ளே கிடந்து வருந்தின வண்டுகள்-இப்பொழுது விடிந்தாவாறே பூக்கள் மலர,
ஆரவாரஞ்செய்து கொண்டு கிளம்பி ஓடிப் போயின என்றுமாம்.
உகந்து அருளின தேசங்களில் எல்லாமே உத்தேஸ்யம் அன்றோ
எறுமை சிறு வீடு மேய்வான் பறந்தன -திருப்பாவை -8-போல் இங்கும் அடையாளம் காட்டி அருளுகிறார்
உங்களுக்கு நான் செய்தபடி அழகிதியோ -என்று வினவி குசலப் பிரசன்னம் பண்ணி அருள வேண்டுமே –
அடியோங்களை ரஷிக்க எழுந்து அருள வேண்டும் -என்றவாறு
——————–
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5–
அரங்கத்தம்மான்-ஸ்வரூப நிரூபகம்-திவ்ய தேசம் பெயர் கிட்டே அவனை அனுபவிப்பர் –
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் -இப் பாசுரம் தனியாக –
அத்தனை நெருக்கம் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் அரங்கனுக்கும் –
செல்வ விபீடணனுக்கு வேறாக நல்லான்-
சேஷ அசனர் -விஷ்வக் சேனர் -விபீஷணனும் திருவடி-களும் சேர்ந்து சந்நிதி
பங்குனி உத்தரம் -திரு மண்டபம் -வானர முதலிகள் எல்லாரும் சிலா ரூபமாக –
திரு முளை -மண் எடுக்க-மிருத் ஸங்க்ரஹம் -விஷ்வக் சேனரும் ஹனுமானும் சேர்ந்து எழுந்து அருளுவார்கள்-
தாயார் சந்நிதி மரம் கீழ் எடுப்பார்கள்-
சரணாகதி -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்த திரு மண்டபம் ஸ்மர்த்தர்த்தமாக இன்றும் சேவை உண்டே
அவனை அடிமை கொண்டால் போலே எங்களையும் கைங்கர்யம் கொள்ள-எழுந்து அருள்வாய்
கீழ் பாட்டில் வயற் காடுகளில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது;
அவ்வளவே யல்ல; சோலை வாய்ப்பாலே பொழுது விடிந்ததும் அறியப் பெறாதே-பரம ஸுகமாகக் கிடந்துறங்கக் கடவ பறவைகளும்
போது வைகினபடி கண்டு உணர்ந்தமை இப்பாட்டில் கூறப்படுகின்றது.
சுரும்பினம் இருந்தின முன்பு -வயலுக்குள் இருந்த வண்டுகள் –களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் வண்டுகளுக்கும் இவற்றுக்கும் உள்ள வாசி
திரு விருத்தம் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி-நித்யர்கள் -பெருமாள் காலை-திருவடிகளையே பார்த்து இருப்பார்கள்-
இங்கு அமரர்கள் தேவர்கள் -தங்கள் நாற்காலி பார்த்து இருப்பார்கள்
விபீஷணனுக்கு பராதீனரக இருந்தது போல -எழுந்து அருள வேண்டும்-
ஆஸ்ரித பரதந்த்ரன் அன்றோ -எழுந்து இருந்தீர் பள்ளி கொள் என்றால் சொன்ன வண்ணம் செய்பவர் அன்றோ –
——————–
இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –
சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை
நாட்டினான் தெய்வம் எங்கும் அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்
அணியனார் செம் பொன் –திருமாலை -24- -மேரு பர்வதம் போன்ற கோவில்-
“[குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்]
‘தேவ ஸேநாபதி’ என்று முன்னே சொல்லுகையாலே
‘குமரன்’ என்று அவன் பேராய்,
‘தண்டம்’ என்று தண்டுக்குப் பேராய், இத்தால் ஸேநையும் வரக் கடவதிறே
அங்ஙனன்றியே,
தேவ ஜாதியாகையாலே ஷோடச வயஸ்காயிருப்பார்களிறே
இனி, தண்டம் என்கிறது அவ்வவர் ஆயுத பேதங்களை என்னவுமாம்” என்பது வியாக்யானம்.
ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-
——————-
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-
ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்-
கீதை 13 -18 அத்யாயம் விவரித்தது போல இங்கும்- மேல் பாட்டிலும் விவரிக்கிறார் –இவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
மாதவன் தமர் என்று -விதி வகை புகுந்தனர் -என்பதே நிரூபகம் -வாழ்ந்த இடம் கொண்டு இல்லையே –
இவர்கள் தங்கள் வாழ்ந்த இடம் கொண்டு செருக்கி இருப்பவர்கள் என்றவாறு
முனிவரும் மருதரும் யக்ஷர்களும் வந்து புகுகையில் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் அவர்களிடையே புகுந்து நெருக்கிப் தள்ளுகின்றனரென்க.
——————–
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –
ராஜா பார்க்க எலுமிச்சம் பழம் கொண்டு போவது போலே தேவர்கள் அருகம் புல்லை கொண்டு தேவர்கள் -உத்தேச்ய வஸ்துவை வணங்க –
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும் -இசை கேட்டு அருளுவது போல -வீணை ஏகாந்தம்
திருக் கண்ணை மலர்த்தி கடாக்ஷம் ஒன்றே போதுமே -சிபாரிசு பண்ணுகிறார் இவர்களுக்காக
ஸூரியனும் தனது மிக்க தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து கொண்டு உதயமானான்
இருளானது ஆகாசத்தின் நின்றும் நீங்கிப் போயிற்று -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –
——————
ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-
தேவர்களில் அந்தர விபாகம் சொல்லி அனைவருக்கும் சேவை சாதிக்க பாசுரம் அருளிச் செய்கிறார் –
கீழே இவர்களுக்காக சொல்லி கார்யகரம் இல்லையே
அடியேனுக்காக எழுந்து அருள வேணும் -நமக்கும் இவனுக்கும் தானே ஒழிக்க ஒழியாத நிருபாதிக சம்பந்தம்
அநாலோசித விசேஷ -அசேஷ லோக சரண்யன் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது -அழகை சேவை சாதித்து அருள வேண்டும்-
விமாந ஸஞ்சாரிகளான தேவர்களோடு மஹர்ஷிகளோடு யக்ஷ ஸித்த சாரண ரென்கிற தேவர்களோடு
கிந்நரர் கருடர்கள் என்கிற மங்களாசாஸநம் பண்ணுவாரோடு
இவர்களில் தலைவரான கந்தர்வர்களோடு வாசியற, சிறியார் பெரியார் என்னாதே படுகாடு கிடக்கின்றனர்.
திருப்பள்ளி யுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.
————-
கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-
பலன் பேர் சொல்லாமல்- முதல் ஆழ்வார்களும் திரு மழிசை திரு பாண் ஆழ்வாரும் இந்த ஐவரையும் சேர்த்து அமுதனார் –
இதில் தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்-என்று தனது ஸ்வரூபம் காட்டி அருளி மேல்
தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்
தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்
கீழ்க் கூறிய தேவரிஷி கந்தர்வாதிகள் அப்படி கிடக்கட்டும்
“கள்ளத் தேன் நானுந் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு” என்றபடி
தேவரீருடைய அத்தாணிச் சேவகன் என்று தோற்றும்படி பூக் குடலையும் தோளுமாக வந்து நிற்கிற
அடியேனை அங்கீகரித்தருளிப் பாகவதர் திருவடிகளிற் காட்டிக் கொடுப்பதற்காகத்
திருப்பள்ளி யுணர்ந்தருவேணுமென்று பிரார்த்தித்து இப் பிரபந்தத்தை தலை கட்டுகின்றனர்.
பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கரியம் என்கிற ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருளை
நன்கு உணர்ந்தவராதலால் தாம் பெற்ற திரு நாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை பிரார்த்திக்கின்றார்.
வெண்ணெய் உண்ட வாயன்-குருந்திடை கூறை பணியாய்–
கண்டாரை பிச்சேற்ற வல்ல இடை –அவர்கள் தம் தம் உடைகளை தாமே அணிந்து கொண்டு ஏறி வருகிறார்கள்-
சட்டு என்று உணர –பழைய விருத்தாந்தம் நினைவு படுத்துகிறார்-
கங்கையில் புனிதமான காவேரி -சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே
அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –புசிக்க எழுந்து அருளாய் –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –
பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –
மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே
தெண் திரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பது ஐந்தும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளி எழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர் கலவி தன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே
—————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.