Archive for the ‘திருச்சந்த விருத்தம்’ Category

திருச்சந்த விருத்தம் -41-50-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 25, 2013

41 பாட்டு –அவதாரிகை –
நீ உகந்தாரை -தத் சஜாதீயனாய் வந்து அவதரித்து ஸ்வரூப அநுரூபமாக ரஷிக்கும்
படியையும் விமுகரான சம்சாரிகளை சங்கல்பத்தாலே கர்ம அநுகூலமாக ரஷிக்கும்
படியையும் அநுசந்திக்கப் புக்கால் பரிச்சேதிக்க முடியாததாய் இருந்ததீ -என்கிறார் 

ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-

வியாக்யானம் –

ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் –
இடை ஜன்மத்திலே அவதரித்து நவ யௌவன ஸ்வபாவையான நப்பின்னை பிராட்டி உடைய
சுற்றுடைமையாலும் -பசுமையாலும் -செவ்வையாலும் -வேய் போலே
ஸ்பர்ஹணீ யமான திருத் தோள் உடன் சம்ச்லேஷித்தாய்
நித்ய மங்கள விக்ரஹத்தை கோப சஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்து
அத்யாதரத்தை பண்ணினாய் -ஆனை அன்று சென்று அடர்த்த -என்று கீழ்ப் பாட்டிலும்
இவ் வபதானத்தைச் சொல்லிற்று -இதுக்கும் அதுக்கும் வாசி என் என்னில் –
விரோதி நிரசனத்தில் நோக்குஅது -ஸூ ரி போக்யமான விக்ரஹத்தை கோப சஜாதீயமாக்கி
வந்து அவதரித்த படியைச் சொல்லுகிறது -இது -அநந்ய பிரயோஜனமான ஆஸ்ரிதர்கள்
உடைய ரஷணத்துக்கும் உப லஷணம்-

ஆய நின்னை  யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் –
உபரிதந லோகங்களில் உண்டான ப்ரஹ்மாதிகளிலும் -பூமியில் விசேஷஜ்ஞ்ஞரான
மனுஷ்யாதிகளிலும் சர்வ சக்தி உக்தனான உன்னை யார் ஆராய வல்லர் –
அப்ராக்ர்த விக்ரஹத்தை ப்ராக்ர்த்த சஜாதீயம் ஆக்கின இத்தை பரிச்சேதிக்க வல்லார்
ஒருவரும் இல்லை என்கை –
மாய –
ஆச்சர்ய சக்தி உக்தனே
மாய மாயை கொல் –
மம மாயா துரத்தயா -என்கிறபடி பிரகிருதி சம்பந்தத்தால் பிறந்த அக்ஞானத்தாலேயோ
அன்று இ றே -கிம் ஷேபே -மாயாவயு நம் ஜ்ஞானம் -என்கிறபடி மாயா சப்தம்
ஞான வாசி ஆகிறதே -அஞ்ஞானமும் ஞான விசேஷம் இ றே
அச்ப்ர்ஷ்ட கந்தனான தான் -அப்ராக்ர்தமாய் அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை
ப்ராக்ர்த்த சஜாதீயமாக்கி சஷூர் விஷயமாக்கின இத்தை அறியலாமோ –
அவாக்ய அநாதர -என்கிறபடியே ஸ்வயம் பூர்ணனானவான் ஒரு கோப ஸ்த்ரி உடைய
வடிவு அழகில் அத்யாதாரத்தை பண்ணின இத்தை தான் எவர் பரிச்சேதிக்க

அதன்றி
அந்த அவதார வைபவத்தை ஒழிய -சகல ஜகத் ஸ்ர்ஸ்டியாதிகளால் பண்ணின
உபகாரங்களை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கிறது மேல் –
நீ வகுத்தலும் –
சம்சாரிகள் உடைய இழவிலே -தயமான மனவாய் இருந்துள்ள நீ -உன்னை லபிக்கைக்கு
ஹேதுவான ஜ்ஞானம் உண்டாய் -நல் வழி போகைக்கு கரண களேபரங்களைக்
கொடுக்கச் செய்தேயும் -மஹதாதி விசேஷாந்தமான வகுப்பு -தத் கார்யமான
அண்டங்கள் ஆகிற வகுப்பு -அண்டாந்தர்கதமான சதுர்தச புவனாத்மகமான வகுப்பு –
தத் அந்தர்கத தேவாதிகள் ஆகிற வகுப்பு –
மாய –
நசிக்க
அந்த சரீரங்களைக் கொண்டு தம் தாம் ஹிதம் பார்க்க மாட்டாதே விஷயாந்தர
ப்ரவணராய் நசிப்பார்கள்
மாய மாக்கினாய்
அவ்வளவிலும் உபேஷியாதே இவற்றுக்கு இனி சம்சாரமே ஹிதம் என்று ஸ்வ சரீரமான
ப்ரக்ர்த் யாவஸ்தம் ஆக்கினாய்
உன் மாயம் முற்றும் மாயமே –
உன்னுடைய மானஸ வியாபாரரூபமான சங்கல்ப ஞானம் அடங்கலும்
ஆச்சர்ய அவஹமாக நின்றதீ –

———————————————————————————-

42-பாட்டு –அவதாரிகை

நீ வகுத்தலும் மாய மாயமாக்கினாய் -என்று ஸ்ர்ஷ்டி சம்ஹாரங்கள் சேர ப்ரஸ்துதம்
ஆகையால் -ஏக ஏவ ருத்ர சர்வோஹ்யே ஷ ருத்ர -என்று சுருதி பிரசித்தராய் இருப்பாரும்
உண்டாய் இருக்க -நம்மையே அபரிச்சின்ன ஸ்வபாவராகச் சொல்ல கடவீரோ என்று
பகவத் அபிப்ராயமாக –அந்த ருத்னனுக்கு வந்த ஆபத்தை அவதரித்து தாழ நின்று
அந்நிலையிலே போக்கின தேவரீருக்கு இது பரிஹரிக்கை பரமோ என்கிறார் –

வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீ ச பேசு கூசம் இன்றியே –42-

வியாக்யானம் –
வேறு இசைந்த செக்கர் மேனி-
வேறாக தன்னுடைய சம்ஹாரத்வதுக்கு சேர்ந்த க்ருத்தமான வேஷத்தை உடையவனே –
செக்கர் -சிவப்பு -சிவத்தல் -கோபித்தல் –
ஸ்ர்ஷ்டியாதி த்ரயத்துக்கும் தேவரீருக்கு தயை இ றே ஸ்வபாவம் –
நீறணிந்த புன் சடை-
பஸ்மோத் தூளித சர்வாங்கனாய் க்ர்பணமான ஜடையை உடையவனாய்
புன்மை -பொல்லாமை
இத்தால் -பிரயாச்சித்ததுக்கும் பாதகித்வத்துக்கும் ஏகாந்தமான லிங்கத்தை உடையவன் -என்கை
கீறு திங்கள் வைத்தவன் –
அந்த ஜடையிலே கலா மாத்ரமான சந்திரனை வைத்தவன் –
ஆக -சம்ஹர்த்வமே தொழில் என்றும் -சாஸ்திரவஸ்யதையை  ஸூசிப்பிக்கிற
ஜடாதிகளை உடையவன் என்றும் –
சந்திர தாரணத்தாலே போக ப்ரதானன் என்றும் சொலிற்று ஆய்த்து
சாஸ்திர வச்யனுக்கு இ றே இப்பாதகம் உண்டாவது

கை வைத்தவன் கபால மிசை –
கையில் வைத்த வலிய கபாலத்தாலே –
பாதகத்வ பிரகாசகமான கபால தாரணம் -பாதகம் போனால் அல்லது போகாத பிராபல்யத்தை
உடைத்தான கபாலம் என்றும் சொல்லிற்று ஆய்த்து
சாஸ்திர வச்யனுக்கு இ றே இப்பாதகம் உண்டாவது –
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை –
உன் திருமேனியிலே ஊறா நின்றுள்ள ரக்த ஜலத்தாலே நிறைத்த ஹேதுவை
பேசு –
உன்னுடைய ஈஸ்வரத்வமும் அவனுடைய -ஈசிதவ்யமும் ஒழிய வேறு ஹேது உண்டாகில்
அருளிச் செய்ய வேணும் -உன்னுடைய ரஷகத்வமும் அவனுடைய ரஷ்யத்வமும் ஒழிய ஹேது உண்டோ
இங்கே செங்குருதி -என்றும் -மேலே –அலங்கல் மார்வில் வாசநீர் கொடுத்தவன் –என்றும்
அருளிச் செய்யா நின்றார் இரண்டுக்கும் பேதம் என் என்னில் –
அப்ராக்ர்த்த சம்ஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கின மெய்ப்பாட்டைச் சொல்லுகிறது –
இங்கு -சர்வ கந்த -என்ற அப்ராக்ர்த்த சம்ஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆகிற்று என்று-தோற்றுகைகாக வந்த வைலஷண்யத்தை சொல்லுகிறது -அங்கு –
ஏறு சென்று அடர்த்த வீ ச பேசு கூசம் இன்றியே —
கூசம் இன்றியே-ஏறு சென்று அடர்த்த வீ ச பேசு-
ரிஷபங்களுடைய க்ரௌர்யத்தையும் தன் சௌகுமார்யத்தையும் பார்த்து கூசாதே
மேல் விழுந்து அடர்த்து உன் ஈச்வரத்வம் நிறம் பெறும்படி நின்றவனே எனக்கு அருளிச் செய்ய வேணும் –
சாஸ்திர வஸ்ய ஜன்மத்திலே பிறந்து ஏழு கோ ஹத்தியைப் பண்ணச் செய்தேயும்
ஈச்வரத்வம் நிறம் பெற நின்றாய் நீ -ருத்ரன் ஈச்வரத்தால் வந்த மேன்மை குலையாதே
நிற்கிற அளவிலே பாதகி யானான் -அப்பதகத்தை அவதரித்து தாழ நின்ற நிலையிலே
போக்கி அருளினாய்
இந் நெடுவாசியை தேவர்களே எதிரிகளாய் அழியப் புக்கால் தான் அழியுமோ
கூசமின்றியே பேசு என்னவுமாம்
அஹம்வோ பாந்தவோ ஜாத -என்று சிலருக்கு தேவரீர் உடைய மேன்மையை மறைத்து
பரிமாறுகிற படியை நினைத்து கூசாதே -ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்கிறபடியே
அவதாரத்தின் உடைய அப்ராக்ர்த்வத்தை உள்ளபடி அறிகிற எனக்கு அருளிச் செய்ய வேணும் என்கிறார்

———————————————————————————————
43 பாட்டு –அவதாரிகை-

ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கின வளவே யன்றிக்கே –க்ருஷ்ணனாய்  வந்து அவதரித்த
பூபாரமான கம்சனை சபரிகரமாக நிரசிக்கையாலும் -அந்த ருத்ராதிகளோடு
க்ரிமிகீடாதிகளோடு வாசியற ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலைகளிலும் திருவடிகளை
வைத்து உன் சேவை சேஷித்வத்தை பிரகாசிப்பித்தபடியாலும் ஜகத் காரண பூதன் நீயே
என்கிறார் -காலநேமி ஹதோயோ சௌ -என்று பூமி கம்சனை பூபாரமாகச் சொன்னாள் இறே

வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே –43

வியாக்யானம் –

வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து –
வெவ்விய சினத்தை உடைய குவலயாபீடத்தினுடைய வெளுத்த கொம்பை அநாயாசேந
முறித்து -வெவ்விய சினம் -அதி கோபம் -அதினுடைய சினமும் ஹிம்சா பரிகரமான
கொம்பும் பய ஹேதுவானபாதி கொம்பினுடைய வர்ணமும் பய ஹேதுவாய் இருக்கிறது
ஆய்த்து இவர்க்கு –
உருத்த மா கஞ்சனைக் கடிந்து –
அது கேட்டு க்ருத்தனாய் ப்ரக்ர்த்யா பலோத்தரனான கம்சனனுடைய நினைவைக் கடிந்து –
அவன் நினைத்த நினைவை அவன் தன்னோடே போக்கி

காலநேமிர் ஹதோயோ சௌ –
வஞ்சனத்து வந்த பேய்ச்சி யாவி –பாலுள் வாங்கினாய் –மண்ணளந்து கொண்ட காலனே –
என்று அந்வயம்
குவலயாபீடத்தை போலேயும் கம்சனை போலேயும் எதிரியாக தோன்றுகை
அன்றிக்கே –தாய் வடிவு கொண்டு -வஞ்சனையால் வந்த பூதனை உடைய ப்ராணனை
பாலோடு கூட வாங்கினாய் -அவளும் தாயாய் முலை கொடுக்க வந்தாள் -இவனும்
பிள்ளையாய் ஆதாரத்தோடு அம்முலைப் பாலை அமுது செய்தான் -துஷ் ப்ரக்ர்திகளுக்கு
நாசகரமான தர்மி ஸ்வபாவத்தால் அவள் நினைவு அவள் தன்னோடே போன வித்தனை –
முலை வழியே ப்ராணனை வாங்கின ஆச்சர்யத்தாலும் துர்வர்க்கத்துக்கு ஜ்ஞாததயா
அன்றிக்கே சத்தையா நாசகன் ஆகையாலும் சர்வாதிகன் நீயே என்கை –
ஸ்த்நயம் தத் விஷ சம்மிச்சம் ரஸ்ய மாஸீஜ் ஜகத் குரோ -என்னக்  கடவது இ றே

உருத்து -என்ற பாடமான போது
குவலயாபீட நிரசநத்தாலும் திரு உள்ளத்திலே சினம் மாறாமையைச் சொல்லிற்று
ஆக கடவது –
மண்ணளந்து கொண்ட காலனே –
பூ பாரமான கம்ச நிரசனம் அன்றிக்கே தன் சேஷித்வத்தை பிரகாசிப்பிக்கைகாக
ப்ரஹ்மாதி சகலஜந்துக்கள்  தலைகள் வாய்த்த திருவடிகளை உடையவனே
காலனே -என்று பிரதிகூலர்க்கு மர்த்யு யானவனே என்றுமாம் –
அஞ்சனத்து வண்ணனாய ஆதி தேவன் அல்லையே –
நீலதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகஉபாஸ்வரா -என்கிறபடியே விலஷண
விக்ரஹ உக்தனாய் ஜகத்துக்கு உத்பாதகனாய் அத்தாலே உஜ்வலன் ஆனவன்
அல்லையோ –ஜகத் காரணவத்தோபாதி அப்ராக்ர்த திவ்ய விக்ரஹ யோகமும்
சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம் என்கை –
————————————————————————————————–

44 பாட்டு -அவதாரிகை –

மண்ணளந்து கொண்ட காலனே -என்று முறை அறிவித்தபடியும்
அஞ்சன வண்ணன் -என்று முறை அறிந்தவர்கள் ஆஸ்ரயிக்கைக்கு சுபாஸ்ரயமான
வடிவும் ப்ரஸ்துதமாய் நின்றது கீழ்
க்ருத்யாதி  யுகங்களிலே சேதனர் சத்வாதி குண அநுகூலமாக ச்வேதாதி வர்ணங்களை
விரும்புகையாலே அந்த காள மேக நிபாஸ்யமான நிறத்தை யழிய மாறி அவர்களுக்கு
வர்ணங்களைக் கொண்டு அவ்வவ காலங்களிலே முகம் காட்டச் செய்தேயும்
சம்சாரிகள் காற்கடைக் கொள்ளுவதே -இது என்ன துர்வாசநா  பலம் -என்கிறார் –

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே –44

வியாக்யானம் –

பாலின் நீர்மை –
க்ர்த யுகத்தில் உள்ளார் சத்வ ப்ரசுரராய் வெளுப்பு உகக்குமவர்கள் ஆகையாலே
அவர்களுக்கு பால் போன்ற நிறைத்தைக் கொள்ளும் ஸ்வபாவம் –அதாகிறது நிறம் –
வளை வுருவாய்த் திகழ்ந்தான் -என்றும் -சங்க வண்ண மன்ன மேனி -என்றும் –
சொல்லுகிற ஸ்தானத்தில் பாலின் நீர்மை -என்றது -இவ் வெளுப்புக்கு ஆஸ்ரயம்
சர்வ ரச -என்கிற விஷயம் என்று தோற்றுகைக்காக –
செம்பொன் நீர்மை –
த்ரேதா யுகத்திலே வந்தால் -ருக்மாபம் -என்றும் –
கட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -என்றும் சொல்லுகிறபடியே
சிவந்த நிறத்தை கொள்ளும் -சேயன் என்றும் த்ரேதைக் கண் -என்கிற ஸ்தானத்திலே –
செம்பொன் நீர்மை -என்றது அந் நிறத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹம் மஹார்க்கம்
என்று தோற்றுகைக்காக –

பாசியின் பசும்புறம் போலும்  நீர்மை –
த்வாபர யுகத்திலே வந்தால் பாசியினுடைய புறத்தில் பசுமை போல ஸ்ரமஹரமான
திரு நிறத்தை உடையவனாய் –
பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை –
கலி யுகத்தில் வந்தால் எல்லா வடிவும் கொண்டாலும் அபிமுகீ கரிப்பர் இல்லாமையாலே
ஸ்வாபாவிகமான நீல நிறமாய் இருக்கும் –
நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் -என்னக் கடவது இ றே –
கலௌ ஜகத் பதிம் -அழகிய தடாகத்திலே வண்டுகள் நெருங்கப் படிந்து மது பாநத்தை
பண்ணி -அத்தால் வந்த ஹர்ஷத்தாலே சிறகு விரித்து வுலவா நின்றுள்ள நீலப்
பூவின் நிறம் போலே இருக்கிற நிறத்தை உடையவனாய் -இத்தால் ஸ்ரமஹரமாய்
செவ்வியை உடைத்தான நீலப் பூ என்கை –
பொற்பு-அழகு
விண்டல்-அலர்தல்
யென்றிவை நிறைந்த கால நான்குமாய் –
ஆஸ்ரித அர்த்தமாகக் கொள்ளும் அந் நிறங்கள் குறைவற்று இருந்துள்ள சதுர் யுகமாய் –
இந் நிறங்கள் நாலு யுகங்களிலும் குறைவற்று இருக்கை
மாலின் நீர்மை –
இப்படி இருக்கிற சர்வேஸ்வரனுடைய நீர்மையை -இஸ் சௌலப்யத்தை –
வையகம் மறைந்ததென்ன நீர்மையே –
பூமியில் உள்ளார் ஆஸ்ரயியாதே காற்கடைக் கொண்டது என்ன துர் வாசனையாலே தான்
மஞ்சா க்ரோசந்தி -என்னுமாபோலே தத் அந்தர்பூதரை சொல்லுகிறது –
மறைத்தது -என்கிறது -குண மாயா சமா வ்ர்த -என்னுமா போலே பகவத்
அனுக்ரஹத்தையும் அதிசயித்து இருப்பதே -அநாதி கால துர்வாசனை என்கை –

———————————————————————————

45 பாட்டு –அவதாரிகை –
பகவத் சௌலப்யத்தையும் அதிசயத்து இருந்துள்ள சம்சாரிகளுடைய துர்வாசனையால்
வந்த இழவைச் சொன்னார் கீழ் –
இதில் அவர்களில் அந்யதமனான எனக்கு தேவரீர் உடைய பரத்வ சௌலப்யங்களையும் –
ஆஸ்ரிதருக்கு எளியனாய் அநாஸ்ரிதருக்கு அரியனாய் இருக்கிற படியையும் காட்டி
என்னை அனந்யார்ஹம் ஆக்குவதே -இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் –

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45-

வியாக்யானம் –

மண்ணுளாய் கொல் –
அவாக்ய அநாதர -என்கிறபடியே பூரணரான தேவரீர் -சர்வ சமாஸ்ரயணீயர் ஆகைக்காக
-சாபேஷமாய் -அப்ராக்ர்தமாய் -அதீந்த்ரியமான விக்ரஹத்தை ப்ராக்ர்த சஜாதீயம்
ஆக்கிக் கொண்டு அவதரித்து சஷூர் விஷயமானாய் –
கொல் -என்று ஏகாஸ்ரயத்தில் விருத்த கருமங்கள் காண்கையாலே இது என்னாய்
இருக்கிறது என்கிறார் -அதாகிறது -ஸீதா வியோகத்தில் கலக்கமும் -ஒரு திரயக்குக்கு
மோஷ ப்ரதானமும் -ப்ர்ச்சாமி கிஞ்சந –
விண்ணுளாய் கொல் –
அஸ்பஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத பெருமையை
உடையையாய்
கொல் –
நித்ய ஸூரிகளுக்கும் நிர்வாஹகனாய் இருக்கையும் குஹ சபரீ சுக்ரீவாதிகளுக்கு
நிர்வாஹகனாய் இருக்கையும் ஆகிற இது என்னாய் இருக்கிறதோ என்கிறார் –

மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய் கொல் –
இப் பரத்வ சௌலப்யங்கள் ப்ரக்ர்தி ஸ்பர்சத்தால் வந்த விபரீத ஜ்ஞாநத்தை உடையராய்
பிரயோஜநாந்த பரரான சம்சாரிகள் மநோரதிக்கும் மநோரதத்துககும் அவ்வருகாம்படிஇருத்தி
என்ன மாயை –
என்ன மாயை -என்கிற இது இப்பாட்டின் முடிவிலே கிரியையாகக் கடவது –
நின்தமர் கண்ணுளாய் கொல்-
உன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனராய் இருப்பாருக்கு -பரித்ராணாய ஸாதுநாம் –
என்கிறபடியே உள்ளபடியை சாஷாத் கரிப்பியா நிற்றி –
சேயை கொல் –
ஆஸ்ரித விரோதிகளுக்கு உன்னை அறிய ஒண்ணாதே எதிரிட்டு முடிந்து போம் படி
தூரச்தனாய் இருப்புதி
விநாசாய ச துஷ்க்ர்தாம் -என்னக் கடவது இ றே
கொல் –
சம்பந்தம் சமாநமாய் இருக்க அநந்ய பிரயோஜனர் பக்கலிலும் தத் விரோதிகள் பக்கலிலும்
உண்டான இஸ் ஸ்வபாவங்கள் என்னாய் இருக்கிறதோ
இவ் விருத்த தர்ம ஆஸ்ரயமாகிற தேவரீருடைய பிரபாவம் பிரமாண சித்தம் ஆகையாலே
பொய் என்ன ஒண்ணாது -விருத்த ஸ்வபாவங்கள் ஆகையாலே மெய் என்ன ஒண்ணாது –
அநந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா –
அது எல்லாம் கிடக்க -திருவநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளின வடிவு அழகைக் காட்டி
தேவரீர் உடைய ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வபாவத்தையும் என்னுடைய அனன்யார்ஹ
சேஷத்வத்தையும் எனக்கு உணர்தினவனே –
பும்ஸ்த்வம் நயதீதி புண்ய -என்கிறபடியே இவருடைய ஸ்ரூபத்தையும்
பிரகாசிப்பிக்கைக்கு உபாயம் ஆனவனே
புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே —
தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி -விஷயாந்தர ருசி என்ன -சோரேண ,ஆத்ம
அபஹாரிணா -என்கிற ஆத்ம அபஹாரம் என்ன -இவ் வசுதங்களைத் தவிர்த்த பரம-பாவனனே
என்ன மாயை
இது என்ன ஆச்சர்யம்
என் திறத்தில் நீ செய்து அருளின இவை என்னால் பரிச்சேதிக்கலாய் இருந்தது இல்லை
என்கிறார் –

————————————————————————————————

46 பாட்டு –அவதாரிகை
அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -என்று ஸ்வரூபத்தை அறிவிக்கையாலே
சம்சாரத்திலே வந்து ஆவிர்பவித்தும் -அவதரித்ததும் -பெரிய திருவடி தோளிலே ஏறி
ஆஸ்ரிதர் இருந்த இடத்திலே சென்று ரஷித்த காலம் எல்லாம் இழந்தேன் –
இனி இழவாதபடி -விரோதி நிவர்த்தி பூர்வகமாக நான் உன்னைப் பெரும் விரகு
அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே –46

வியாக்யானம் –

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய் –
உன் திருமேனியின் ஸ்பர்சத்தால் தழைத்து குளிர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையை
உடையையாய் -ப்ரணதஜனங்கள் பக்கல் முகப்ப்ரதானத்தாலே அசைந்து வருகிற
திரு முடியை உடையையாய் –
சர்வேஸ்வர ஸ்பர்சம் இ றே -சேதனருக்கு அசங்கோசத்தக்கும் தாப சாந்திக்கும் ஹேது –
இத்தால் கண்ட போதே ருசி பிறக்கும்படியான ஒப்பனை அழகையும்
ஆபிமுக்யம் பண்ணினார் பக்கலில் முகப்ப்ரதானம் பண்ணும் நீர்மையும் சொல்லிற்று
தோடு –பூவிதழ்
கோடு பற்றி யாழி யேந்தி –
ஆஸ்ரிதர் விரோதிகளை த்வநியாலே மண் உண்ணும்படி பண்ணுகைக்கு
ஸ்ரீ பாஞ்சஜந்யதைப் பற்றி -கருதுமிடம் பொருது -என்னும்படி எதிரிகளை சென்று
அழிக்கைக்கு திருவாழியை ஏந்தி -ஆஸ்ரிதருக்கு முகம் கொடுக்கும் அளவு
அன்றிக்கே -அவர்கள விரோதிகளையும் அழியச் செய்யும் பரிகரங்களை உடையவன்
என்கை
யஞ்சிறைப் புள்ளூர்தியால் –
ஸ்பர்சத்தாலே அழகு பெற்ற திரு சிறகுகளை உடைய பெரிய திருவடியை நடத்தா நிற்றி –
அவனை மேற்கொண்டால் ஈஸ்வரனுக்கு அலங்காரமாய் இருக்கும்படியைச் சொல்லிற்று
ஆகவுமாம் -இத்தால் ஆஸ்ரிதர் இருந்த சம்சாரத்தில் ஆபத் தசைகளில் சென்று
முகம் காட்டி ரஷிக்கும் நீர்மையைச் சொல்லிற்று -இப்படி தன்னை தூளிதானம் பண்ணின
காலம் எல்லாம் இழந்தேன் என்கிறார் –ஆல்-என்று விஷாத அதிசய ஸூசகம்
நாடு பெற்ற நன்மை நண்மை யில்லை யேனும் –
இருந்ததே குடியாக காணலாம்படி திருவடியை மேற் கொண்டு சஞ்சரித்த இந் நன்மையை
நான் கிட்டப் பெற்றிலேன் ஆகிலும் –
நான் விமுகனான காலம் எல்லாம் இழநதாலும் -எனக்கு ருசி பிறந்த இன்றும் தேவரீர்
உள்ளீராய் இருக்க இழக்க வேணுமோ என்கை-

நாயினேன் வீடு பெற்று  –
நாயினேன் –
அநாதி காலம் திறந்து கிடந்த வாசல் எல்லாம் நுழைந்து சர்வராலும் பரிபூஹதனான நான்
உகந்து தொட்டாலும் எதிர்தலைக்கு அசுத்தியை விளைப்பிக்கும் நிஹீநதையை உடைய நான்
வீடு பெற்று –
இப்படி பட்டு இருந்துள்ள நான் உனக்கு ஸத்ர்சராய் இருந்துள்ள நித்ய ஸூரிகள் பேற்றைப் பெற்று
அகிஞ்சனான நான் பூரணனுடைய பேற்றைப் பெற்று
இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே —
இச் சரீரத்தினுடைய விமோசனத்தோ டே இனி ஒரு சரீர பரிக்ரஹம்
பண்ண வேண்டாதபடி சம்சாரத்தை அறுக்கும் விரகு அருளிச் செய்ய வேணும் –
சிறைக்கூடத்தில் இருக்கும் ராஜ குமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்பு
சிறையை வெட்டி விட்டால் போலே ப்ராப்தி முன்பாக விரோதியைப் போக்கும்
விரகு அருளிச் செய்ய வேணும் –

————————————————————————————————

47- பாட்டு –அவதாரிகை

பர வியூஹ விபவங்கள் அடங்க ஆஸ்ரயணீய ஸ்தலம் அன்றோ –
அதிலே ஓர் இடத்தைப் பற்றி ஆஸ்ரயித்து நம்மைப் பெற மாட்டீரோ என்ன –
அவ்விடங்கள் எல்லாம் நிலம் அல்ல –இனி எனக்கு பிரதிபத்தி பண்ணி
ஆஸ்ரயிக்க வல்லதோர் இடத்தை அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ  சொலே –47-

வியாக்யானம் –

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண –
காளமேகத்தோடு ஸதர்சமாய் ஆகர்ஷமான வடிவை உடையையாய் -அத்தை
ஆஸ்ரிதருக்கு ஸ்வம்மாக்கி வாய்த்த கிருஷ்ணனே -இத்தால்
கால விப்ர கர்ஷத்தால் எனக்கு ஆஸ்ரயிக்க விரகு இல்லை -என்கிறார் –
அந்த கால விபர கர்ஷமாகிற குற்றம் இன்றிக்கே நித்தியமாய் இருக்கிற பரமபதத்தில்
வடிவைப் பற்றி ஆச்ரயிக்க மாட்டீரோ -என்ன
விண்ணின் நாதனே –
அவ்வடிவை நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை ஒழிய
தேச விபர கர்ஷத்தாலே எனக்கு ஆஸ்ரயிக்க விரகு இல்லை -என்கை
நீரிடத்து அரவணைக் கிடத்தி –
தேச கால விபர கர்ஷன்கள் ஆகிற குற்றங்கள் இன்றிக்கே ஷீராப்தியிலே நித்ய
சந்நிஹிதர் அல்லோமோ என்ன –
அவ்விடமும் ஸ்வேத த்வீபவாசிகளுக்கு காதாசித்கமாக காணலாம் இத்தனை அல்லது
அஸ்மதாதிகளுக்கு வரவு ஒண்ணாது-

என்பர் –
இவ்வர்த்தம் வேதங்களும் ஜ்ஞானாதிகரான வைதிகர்களும் சொல்லக் கேட்டோம் இத்தனை –
அஜாயமாநோ  பஹூதா விஜாயதே -என்றும் -யாத்ரா வதீர்ண க்ருஷ்ணாக்ய பரப்ரஹ்ம நராக்ர்தி –
என்று க்ருஷ்ணாவதாரமும் கேட்டு போம் இத்தனை –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பச்யந்தி ஸூ ரயே -என்று பரம பதத்தில் இருப்பும் ஸ்ருதிகள்
சொல்லக் கேட்ட இத்தனை –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன -என்று ஷீராப்தியில் வாசமும்-ஜ்ஞானாதிகர் சொல்லக் கேட்ட வித்தனை
நீரிடத்து –கடல் இடத்து
அராவணை -அரவணை
அன்றியும் -அது ஒழியவும்
ஓர் இடத்தை அல்லை
ஓர் இடத்தில் வர்த்திகிறாய் இல்லை –சர்வகதன் -என்கை -இதுவும் –
மாம் உபாஸ்வ -என்றும் -மாமேவ விஜாநீஹி -என்றும் இத்யாதிகளிலே சுபாஸ்ரயமாக
உபாசனத்ரைவித்யத்தில் சொல்லப்பட்டது இறே

தஹர சாண்டில்ய வித்யை -வைஸ்வா நரோபகோசலாதி வித்யைகளிலே
ஆஸ்ரயணீய ஸ்தலங்களுக்கு எல்லை இல்லை இறே -அவையும் –
யமாத்மா நவேத -என்று பிரதிபத்தி விஷயம் அல்லாமையாலும் -த்ரைவர்ணிக
அதிகாரம் ஆகையாலும் நிலம் இல்லை
ஆதலால் –
பரமபதம் தேசத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும்
அவதாரம் காலத்தால் விபக்ர்ஷ்டம் ஆகையாலும் –
ஷீராப்தி அதிக்ர்த அதிகாரம் ஆகையாலும்
அந்தர்யாமித்வம் பிரதிபத்திக்கு அபூமி ஆகையாலும் -த்ரைவர்ணிக அதிகாரம் ஆகையாலும் –
நிலம் அல்ல –
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ  சொலே —
அயோக்யனான நான் -இதம் -என்று புத்தி பண்ணி ஆஸ்ரயிக்கலாம் படி ஆச்ரயணீய
ஸ்தலத்தை அருளிச் செய்ய வேணும் –

————————————————————————————————-

48 பாட்டு –அவதாரிகை –

ஆஸ்ரயணீய ஸ்தலங்களை சாமான்யேன பாரித்து வைத்தோம் ஆகில்
அவற்றில் ஒன்றைப் பற்றி ஆஸ்ரயிக்கும் ஆஸ்ரய  பூதருக்கு ஆஸ்ரயண
அநுகூலமாக பல ப்ரதராய் இருக்கும் அது ஒழிய – ஆஸ்ரயணீய ஸ்தலத்தை
விசேஷித்து சொல்லுகை நமக்கு பரமோ என்ன –
ஆஸ்ரிதர் நாஸ்ரிதர் விபாகம் அன்றிக்கே நின்ற நின்ற நிலைகளிலே பர ஹிதமே
செய்யும் ஸ்வபாவனான பின்பு என் அபேஷிதம் செய்கை உனக்கே பரம் அன்றோ -என்கிறார்

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-

வியாக்யானம் –

குன்றில் நின்று –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -என்கிறபடியே தாழ்ந்தாருக்கு முகம்
கொடுக்கைகாக சிலர் அபேஷியாது இருக்க திருமலையிலே நின்ற நிலை
வான் இருந்து –
அச்ப்ர்ஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு நித்ய அனுபவம் பண்ணுகைகாக
பரம பதத்திலே இருக்கிற பெரிய மேன்மையாய் உடையையாய் இருக்கச் செய்தே
யன்றோ திரு மலையில் வந்து நின்றது
நீள் கடல் கிடந்தது –
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடியே
அசங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிற்று

மண் ஓன்று சென்று –
இந்த்ரன் இழந்ததும் மகா பலி அபஹரிததும் த்ரை லோகத்து அளவாய் இருக்க
ப்ரஹ்ம லோக பர்யந்தமாக -ஒருத்தர் அபேஷியாது இருக்க எல்லார் தலைகளிலும் திருவடிகளை
வைத்திலையோ -பிரதான பூமியை அளந்து –
சென்று -என்று பத விஷேபமாய் அளந்து என்றபடி
பூமியிலே ஓர் ஓர் இடங்களிலே சென்று அவதரித்தது என்னவுமாம்
அ து  ஒன்றை உண்டு –
அந்த பிரதானமான பூமியை பிரளயம் கொள்ளப் புக அர்தித்வ நிரபேஷமாக
திரு வயிற்றிலே வைத்து ரஷித்தது இல்லையோ

அது ஓன்று இடந்து பன்றியாய் –
மஹா வராஹமாய் பிரளயம் கொண்ட பூமியை உத்தரித்து

நன்று சென்ற நாள் அவற்றுள் நல்லுயிர் படைத்து –
நன்றாகச் சென்ற நாள்களிலே மனுஷ்யர்களை ஸ்ர்ஷ்டித்து –நன்று சென்ற நாள் –என்று
மஹா வராஹ வேஷத்தைக் காணலாம் காலம் என்னுமத்தாலே வராஹ கல்பத்தைக்
கொண்டாடுகிறார் –நல்லுயிர் என்று சாஸ்திர அதிகாரத்தாலே ஸ்ரேஷ்டரான
மனுஷ்யர்களைச் சொல்லுகிறது -துர்லபோ மானுஷோ தேஹ -என்னக்  இ றே –
அவர்க்கன்று தேவமைத்தளித்த –
அம்  மனுஷ்யர்களுக்கு ரஜஸ் தமஸ் ஸூக்கள் மேலிட்டு பகவத் விமுகரான அன்று –
ஆஸ்ரயணீயராக தேவ ஜாதியை ஸ்ர்ஷ்டித்து அளித்த
ஆதி தேவன் அல்லையே
இப்படி நின்ற நின்ற நிலைகளில் பரஹிதங்களை ப்ரவர்த்திப்பிக்கிற ஜகத் காரண பூதனான
சர்வேஸ்வரன் அல்லையோ –
ஆராதகரான மனுஷ்யர்களையும் ஆராத்யரான தேவர்களையும் ஸ்ர்ஷ்டிக்கையாலே
ஜகத் காரண பூதனான நிரூபாதிக தேவன் ஆகையாலே சர்வ சமாஸ்ரயணீயன் அல்லையோ –
ஸஹஸ்ரசீர்ஷம் தேவம் -என்றும் -சாஷாத் தேவ புராணோ சௌ -என்றும் சொல்லக் கடவது இ றே –

———————————————————————————————————-

49 பாட்டு –அவதாரிகை –
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே -என்று இவருக்கு இவர் இருந்த
பூமியிலே சஷூர் விஷயமாய் -அவதாரங்களில் உண்டான நீர்மைகளும் இழக்க
வேண்டாதபடி –குண பூர்த்தியோடே கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற
ஸம்ர்தியைக் காட்ட கண்டு -அனுபவிக்கிறார்-

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-

வியாக்யானம் –

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி-
மயிர் முடியிலே உண்டான மாலையின் மேல் வண்டுகள் சஞ்சரிக்கும்படியான
ஒப்பனையாலே ஸ்ப்ர்ஹணீ ய வேஷை யான கூனி –
இத்தால் –சேதனனுடைய நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு
ஸ்ப்ர்ஹணீ யம் என்று கருத்து –
கூனி கூன் –
கீழ்ச் சொன்ன வடிவுக்கும் ஒப்பனைக்கும் சேராதே அவளுக்கு நிரூபகமாகப் போந்த கூனை
இத்தால் -ஸ்வரூப விரோதியாய் -தேவோஹம் மனுஷ்யோஹம் –என்று நிரூபகமாய்
ஸ்வரூபத்துக்கு அவத்யமுமாய் இருந்துள்ள அஹங்காரத்தை நினைக்கிறார்
உண்டை கொண்டு அரங்கவோட்டி-
லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித்
தெறித்து -அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-

உள் மகிழ்ந்த நாதனூர் –
ஆஸ்ரிதருக்கு அவத்யமான அஹங்காரத்தை அநாயாசேநப் போக்குகையாலே
ஹ்ர்ஷ்டனாய் -அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன்
வர்த்திக்கிற தேசம் -இத்தால் -ஆஸ்ரிதருடைய அவத்யங்களைப் போக்கி
உகப்பானும் தானே என்கை –
ஆக –சக்கரவத்தி திருமகனுடைய நீர்மையும் நம்பெருமாள் பக்கலிலே காணலாம்
என்கிறார் –
நண்டை உண்டு நாரை போர –
நண்டை விழுங்கின நாரை யானது விழுங்கின கனத்தாலே மலை பேர்ந்தால் போலே பேர
இத்தால் -பாதக பதார்த்தத்தின் உடைய கணம் சொல்லிற்று –
வாளை பாய –
அந் நாரைக்கு தன் மேலே நோக்கு என்று நினைத்து பயப்பட்டு வாளை யானது துள்ள –

நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் –
அதன் மிகுதியைக் கண்டு கெண்டை யானது பயத்தாலே பரப்பு மாற
பூத்த நீலத்தின் இருட்சியை அண்டை கொண்டு -அரணுக்கு உள்ளே வர்த்திப்பாரைப்
பயம் கெட்டு மேய்ந்து வர்த்திக்கிற தேசம் –
இத்தால் -சம்சாரிகளை நலிகிற அஹங்காரத்தைக் கண்டு பீதராய் –முமுஷுக்களாய்
உபாசநத்திலே இழிந்த சாதகரைக் கண்டு இவை இரண்டும் பய ஸ்தானம் என்று
சர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றி நிர்ப்பரராய் -ஸ்வரூப அநுரூபமான
பகவத் குண அநுபவமே யாத்ரையாய் வர்த்திக்கும் பிரபன்னரருக்கு ஸ்மா ரகமாய்
இருக்கிறது ஆய்த்து -கெண்டைகளினுடைய யாத்ரை -என்கை-
அம் தண் நீர் அரங்கமே –
அழகியதாய் -ஸ்ரமஹரமான ஜல சம்ர்தியை உடைத்தான கோயில்
தாபத்த்ரயாதூரருக்கு தாபஹரமான தேசம் என்கை –
நீலமே அண்டை கொண்டு -என்று ச்யாமமாய் ஸூகுமாரமான நீலத்தை
அண்டை கொண்டு என்கையாலே –
பெருமாளுடைய சௌந்தர்யமே அபாஸ்ரயமும்
அத்தை ஆஸ்ரயித்து இருப்பாருக்கு போக்யமும் அதுவே என்று கருத்து –
இப்பாட்டில் சொன்ன ஸ்வாபதேசங்கள் இவர்க்கு நிலம் இல்லாத போது
தேசத்தை ஆஸ்ரயித்து அனுபவிக்க இழிந்தவர்க்கு இப்பாட்டால் ஒரு பிரயோஜனம் இல்லை –

————————————————————————————————

50- பாட்டு –அவதாரிகை –
ஆந்தர விரோதத்தை போக்க வல்ல அவதார வைபவத்தையும் -பாதக பதார்த்த
சகாசத்திலே நிர்பயராய் வர்திக்கலாம்படி அபாஸ்ரயமான தேச வைபவத்தை
சொன்னார் -கீழில் பாட்டில் –
இதில் –பாஹ்ய விரோதத்தைப் போக்க வல்ல அவதார வைபவத்தையும்
சர்வ சமாஸ்ரயணீ யமான தேச வைபவத்தையும் – அருளிச் செய்கிறார் –

வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50

வியாக்யானம்-

வெண் திரைக் கரும் கடல் –
வெளுத்த திரைகளை உடைத்தான கரும் கடல் –
திரைக் கிளர்த்தியின் மிகுதி சொல்லிற்று –
சிவந்து வேவ-
கறுத்த கடலோடு வெளுத்த திரைகளோடு வாசியற அக்நியின் நிறமான சிவப்பே
நிறமாய் மறுகும்படி தக்தமான படி –
இத்தால் -ஆஸ்ரித ரஷணத்துக்கு வருணன் விரோதியாக அவனுக்கு இருப்பிடமான
கடலை அழியச் செய்தபடி
முன்னொரு நாள் திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர் –
இருபத்தெட்டாம் சதுர் யுகத்தில் மிக்க வலியை உடைய ஸ்ரீ சார்ங்கத்தை
சாப மாநய -என்கிறபடியே வாங்கி அம்புகளை ஏவின ஆண் பிள்ளை சேருமூர் –
உள் மகிழ்ந்த நாதனூர் -என்று ஆஸ்ரித ரஷணம் ஸ்வயம் பிரயோஜனமாக பண்ணும்
நீர்மையைச் சொல்லிற்று -கீழில் பாட்டில் –
இதில் -விரோதி நிரசன சக்தியைச் சொல்லுகிறது
இத்தால் -அவதாரத்துக்கு பிற் பாடரான ஆஸ்ரிதருக்கு ஸ்வ அநுபவ விரோதியான
சப்தாதிகளில் ப்ராவண்யத்தைப் போக்குகைக்காக கோயிலிலே நித்ய வாஸம்
பண்ணுகிறபடி -என்கை-
திண்மை என்றும் திறல் என்றும் வலியைச் சொல்லுகையாலே மிக்க வலிமை  என்றபடி

எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர் –
எட்டு திக்குகளிலும் உள்ள சமூஹங்கள் வந்து பெருமாளைத் திருவடி தொழுது
தீர்த்தமாடி -தங்கள் அபிமத விரோதியான சர்வ பாபங்களையும் போக்கும் சுத்தியை
உடைய நீரை உடைத்தாய் –
சர்வ சக்தி மயந்தாம சர்வ தீர்த்த மயம் சர -சர்வ புண்ய மயோ தேச -சர்வ தேவ மயோ ஹரி
என்னக் கடவது இ றே

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -31-40-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 23, 2013

31 பாட்டு –அவதாரிகை –

கீழில் பாட்டில் அவதாரங்களில் உண்டான ரஷகத்வத்தை அனுபவிக்கிறார் -இதில்
ஆஸ்ரயேண உன்முகர் ஆனவர்கள் திறத்தில் அவதார கார்யமான உபகார பரம்பரைகளை-அனுபவிக்கிறார் –

கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31

வியாக்யானம் –

கால நேமி காலனே
கால நேமி யாகிற அசுரனுக்கும் ம்ர்த்யு யானவனே –

காலநேமி ராவணனின் மாதூலன்
இத்தால் முமுஷுக்களாய் தேவரீரை ஆஸ்ரயிக்கையிலே உத்யுக்தர் ஆனவர்களுடைய
ஆஸ்ரயண விரோதி பாபங்களை -கால நேமியை நசிப்பித்தால்  போலே நசிப்பிக்குமவன் என்கை –
பிராட்டி பொறுப்பிக்க ஈஸ்வரன் பொறுக்குமாய் இருக்கச் செய்தேயும் -தம் அதுக்கு அஞ்சின படியாலே
கால நேமியை த்ருஷ்டாந்தீ கரிக்கிறார் இ றே
கணக்கிலாத கீர்த்தியாய் –
ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமாய் -எண்ணிறந்த சௌலப்யாதி கல்யாண குணங்களை உடையை என்னும்
குணவத்தா ப்ரதையை உடையவனே
குடந்தையன் -கோவலன் -என்று இந்த சௌலப்யாதிகள் பரத்வத்திலும் பிரசித்தம் இறே
அபார காருண்யம் -தொடங்கி சௌந்தர்யம ஹோததே -என்னக் கடவது இ றே

ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
ஆஸ்ரயித்தால் பண்ணும் உபகாரத்தை சொல்லுகிறது –
சப்த த்வீபவதியான பூமியை உண்டு -பூர்வ கல்ப அவஸாநத்திலே அத்வதீய பாலனான
ஆச்சர்ய சக்தியை நிரூபகமாக உடையவனே
பண்பு -இயல்வு
த்ரை லோகத்துக்கும் உப லஷணம்
இத்தால் ஸ்வா தந்த்ரமே நிரூபகமாய் போந்த சம்சாரியை சேஷத்வமே நிரூபகம் என்னும் படி
பண்ண வல்ல சக்தியை உடையவன் -என்கை -அதாகிறது –
த்விதா பஜ்யே யமப்யேயம் ந நமேயம் -என்று இருக்குமவனை -முஹூர்த்தம் அபிஜீவாவ-என்றும் -நின்னலால் இலேன் காண்  -என்றும் சொல்லும்படி பண்ணுகை

வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர-கடல் சுஷ்கத்ர்ண சமூஹம் போலே தக்தமாம்படி -வில் வளைத்தவனாய் -பிரதி பஷத்தை
வெல்லும் சினத்தை உடைய வீரனே -இத்தால் ஆஸ்ரிதருக்கு ஸுவ அனுபவ விரோதி-வர்க்கத்தை அநாயாசேந போக்குமவன் என்கை

இவன் சினம் வென்றதின் பின் தான் தீரும் –
வெல் சினத்த வீரன் -என்கிறார் அதனால்
நின் பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே
உன் திறத்தில் அநந்ய ப்ரயோஜனராய் -சாயாவா சத்வ மநு கச்சேத் -என்கிறபடியே
உன் பார்ச்வத்தை விடமாட்டாத பக்தர்கள் உடைய மனச்சு உன்னை ஒழிய வேறு
ப்ராப்ய ப்ராபகங்கள் உண்டு என்னும் நசை யறுக்க வல்ல மஹா பிரபாவத்தை
உடையவனே -இது என்ன ஆச்சர்யம் என்று வாக்ய சேஷம்
ஆஸ்ரித விஷயத்தில் கீழ் உக்தமான தன் படிகளை அனுசந்தித்தால் அது தன்னை
ஒழிய வேறு ஒன்றை அறியாதபடி பண்ணுமவன் என்கை –

————————————————————————————–

32 பாட்டு –அவதாரிகை –

ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணும் இடத்தில் சக்கரவர்த்தி திருமகன் செவ்வைப்
பூசலாலே ராஷசரை அழியச் செய்தால் போலே விரோதி வர்க்கத்தை போக்கவுமாம் –
மகாபலி பக்கலில் வாமனனாய் அர்த்தித்துச் சென்று வஞ்சித்து அழித்தால் போலே அழிக்கவுமாம் –
ஆஸ்ரித விரோதி நிரசநத்தில் ஸ்வபாவ நியதி இல்லை

குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே –32-

வியாக்யானம் –

குரக்கினப் படை கொடு –
வானர சமூஹமான சேனையைக் கொண்டு –
குரை கடலின் மீது போய் –
கடலின் கிளர்த்தியையும் கோஷத்தையும் கண்டு -இக்கடலை எங்கனே கடக்கக் கடவோம் –
என்று அந்த சேனை பயப்படும்படி கோஷத்தை உடைத்தான கடலை தூர்த்து அதன் மேல
போய் -இத்தால் பிரபல பதார்த்தங்களை ஷூத்ர பதார்த்தங்களைக் கொண்டு அழிக்க
வல்லவன் என்கை –
அரக்கர் அரங்க –
அவ் அவபதாநத்தைக் கண்டு -வர பல புஜ பலங்களால் நமக்கு எதிரி இல்லை என்று
இருக்கும் ராஷசர் -போக்கடி தேடி அஞ்சும்படியாக
வெஞ்சரம் துரந்த வாதி நீ -அரக்கல் -கரத்தல் -அரங்க என்று மெல் ஒற்றாய்க் கிடக்கிறது

வெஞ்சரம் துரந்த –
பாவக சங்காசை -என்கிறபடியே அக்நி ஸ்த்ர்சங்களான திருச்சரங்களை நடத்தின
ஆதி நீ –
இலங்கைக்கு அரணான சமுத்ரத்தை தூர்த்து -அரணை  அழித்து -ராஷசர்கள் உடைய
ஹ்ருதயத்தை அழித்து -திருச்சரங்களாலே உடல்களைத் துணித்துச் செய்த ஆனைத்
தொழில்களாலே வீரர்களில் பிரதானனான வீரன் நீ -என்கிறார்
ஆதி -சப்தம் பிரதானத்தைச் சொல்லுகிறது
இரக்க மண் கொடுத்தவருக்கு –
நீ அர்த்தியாகச் செல்ல பிரத்யாக்யாநம் பண்ணுதல் -சுக்ரனுடைய உபதேசம் கேட்டல்
செய்யாதே பூமியைத் தந்த மகாபலிக்கு
இரக்கம் ஒன்றும் இன்றியே –
பூமியிலே அவனுக்கு ஒரு பத ந்யாஸமும் சேஷியாதபடி
பரக்க வைத்து அளந்து கொண்ட –
சிறு காலைக் காட்டி -மூன்றடி இரந்து -இரண்டடியாலே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்ட
பற்ப நாபன் அல்லையே –
புஷ்பஹாச ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு -காடும் ஓடையும் அளந்து கொண்டவன் அல்லையோ –
1-திருவடிகளின் சௌகுமார்யமும் பார்த்திலை –
2-மகாபலி பக்கல் ஔதார் யமும் பார்த்திலை –
3-அர்திக்கிறவன் பிரயோஜநாந்த பரன் என்றும் பார்த்திலை -இந்த இந்தரனுடைய இரப்பையே பார்த்த இத்தனை இறே -இது என்ன ஆச்சர்யம் என்று வாக்ய சேஷம் –
——————————————————————————————-

33 பாட்டு –அவதாரிகை –
ஆஸ்ரித ரஷணத்தில் ஸ்வபாவ நியதி இல்லாதவோபாதி ஆஸ்ரயிப்பாருக்கும்
ஜாதி நியதி இல்லை என்கிறார் –

மின் நிறத்து எயிறு அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33

வியாக்யானம் –

மின் நிறத்து எயிறு அரக்கன் –
மின் போலே ஒளியை உடைத்தான எயிற்றோடு கூடின -ராஷசனான ராவணன் –
மின் நிறத்து எயிறு -என்றது புஜ பலத்தால் வந்த செருக்கு ஸூசகமாய் இருக்கிறது
அரக்கன் -என்கையாலே அத் தோள் வலி பர ஹிம்சைக்கே யாகை ஜாதி ஸ்வபாவமாய்
இருக்கை -சத் பிரகிருதிகள் உடைய தோள் வலி இறே சாத்விகருக்கு ஒதுங்க நிழலாய்
இருப்பது —
வீழ வெஞ்சரம் துரந்து
அவன் முடியும்படியாக -பாவக ஸங்காசங்களான சரங்களை ஏவி –
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய் –
அவன் தம்பிக்கு பிரசாதத்தைப் பண்ணி ராஜ்யத்தை கொடுத்த சீலத்தையை உடையவனே –
ராகவம் சரணம் கத -என்று அத்தையே கொண்டு ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அவன் தம்பி
என்று பாராதே –வத்யதாம் வத்யதாம் -என்று மஹா ராஜ ப்ரப்ர்திகள் வார்த்தையும் கேளாதே
-நத்யஜேயம் -என்றும் -ஏதத் வ்ரதம் மம -என்றும் -பிரசாதத்தைப் பண்ணி -ராஜ்ய ஸ்பர்ஹை
அவனுக்கு இன்றிக்கே இருக்க -தாஸ வச்சாவமா நி தா -என்று புறப்பட விட்டான் என்று
அந்தலங்கா ராஜ்யத்தைக் கொடுப்பதே -இது என்ன ஸ்வபாவம் -என்கிறது
பெற்றி -ஸ்வபாவம்
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ-
நல்ல நிறத்தையும் -இனிய பேச்சையும் உடையளாய் -தேவரீர் பக்கலிலே
அதி சபலையான நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே -இத்தால்
நப்பின்னை பிராட்டியாருடைய ரூப குணங்களும் ஆத்ம குணங்களும்
தேவரருக்கு போக்யமாய் இருக்குமா போலே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தேவரீருக்கு
போக்யனாய் இருக்கும்படியை சொல்லுகிறது
மன்னு சீர்ப் பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே —
நித்தியமான ஔ தார்யாதி குணங்களையும் -அந்தராதித்யே ஹிரண்மயே புருஷோ
த்ர்ச்யதே -என்றும் -ருக்மாபம் -என்றும் சொல்லுகிற ஸபர்ஹணீய விக்ரஹத்தை
உடையையாய் -யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ -என்கிறபடி
புண்டரீகாஷனாய் இருக்கிறவன் அல்லையோ –
இது என்ன ஆச்சர்யம் என்று வாக்ய சேஷம்
நிறம் -வடிவு
வண்ணம் -நிறம்
ஆக அவயவ சோபையும் -வர்ண சோபையும் சொல்லுகிறது
இத்தால் ஆதித்ய மண்டல மத்ய அவதாரத்தின் ஆத்ம குணங்களும் ரூப குணங்களும்
மஹிஷீ வர்க்கத்துக்கு போக்யமாய் இருக்குமா போலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
போக்ய பூதனாய் இருக்கிறபடியைச் சொல்லுகிறது –

——————————————————————————————-

34 பாட்டு –அவதாரிகை –
கீழில் பாட்டில் ருசி உடைய ஸ்ரீ விபீஷண  ஆழ்வானை ஜன்மத்தால் தாழ்வு
பார்க்காதே –விஷயீ கரிக்கும் சக்கரவர்த்தி திரு மகனுடைய நீர்மையை
அனுபவித்தார் –இதில் –
கார்ய காரணங்கள் என்ன –
பிரமாண ப்ரமேயங்கள் என்ன –
சகலமும் ஸுவாதீனமாம்படி இருக்கிற நீ -புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு
ருசி ஜனகனாய்க் கொண்டு -கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த இது -என்ன
ஆச்சர்யம் -என்கிறார் –

ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-

வியாக்யானம் –

ஆதி யாதி யாதி நீ –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்வதீயம் -என்கிறபடி யே த்ரிவித காரணமும்நீயே
எதுக்கு காரணம் ஆகிறது என் என்னில் -மஹதாதி விசேஷாந்தமான ப்ரகர்தி சிருஷ்டிக்கு –
பஹூஸ்யாம் -என்கிற சங்கல்ப்பத்தாலே காரண பூதன் –
ஓர் அண்டமாதி –
மஹதாத்யவஸ்தனான நீயே ஏக ரூபமான அண்ட ஜாதியுமாவுதி –
ஈத்ர்சாநாம் ததா -என்கிறபடியே அண்டங்கள் ஏக ரூபமாய் இ றே இருப்பது
ஏக வசனம் ஜாத் யபிப்ராயத்தாலே

அதாகிறது -அண்டத்தில் உத்பன்னமான ப்ரஹ்மாதி பீபீலிகாந்தமான சகல
பதார்த்தங்களையும் ஸ்ர்ஷ்டித்து -தத் அனுப்ரேவேசத்தாலே சகல
அந்தர்யாமியாய் நிற்கை
ஆதலால் சோதியாத சோதி நீ –
இப்படி சகல ஜகத் காரண பூதனாகையாலே பரீஷிக்க வேண்டாத உபாஸ்ய தேஜஸ்
தத்வம் -நீ –உபாஸ்யமான தேஜஸ் தத்வம் –
த்ரிவித மஹா பூதமோ -தேவதையோ -ஆதித்யனோ -வைச்வானர அக்நியோ
என்று சங்கித்து -சர்வ நிர்வாஹகமான தேஜஸ் தத்வமே உபாஸ்யம் என்று
நிர்ணயிக்க வேண்டாது இருக்கை

அதயதத பரோதி வோஜ்யோதி -என்றும் -ததேவ ஜ்யோதி சாஜ்யோதி -என்றும் –
நாராயண பரோஜ்யோதி -என்கிற தத்வம் அல்லையோ நீ –
அது உண்மையில் விளங்கினாய் –
அந்த தேஜஸ் தத்வம் நித்ய நிர்தோஷ ப்ரமாண சித்தம் ஆகையாலே –

இதர விஸ ஜாதீயனாய்க் கொண்டு விளங்கினவனே

வேதமாகி
வேதத்தினுடைய நித்ய நிர்தோஷத்துக்கு நிர்வாஹகனாய் -அதாவது
சம்ஹார வேளையில் திரு உள்ளத்தில் சம்ச்காரத்தாலே வைத்து
யோவை வேதாம்ச்ச ப்ரஹி ணோ தி தஸ்மை -என்கிறபடியே ஆதியிலே
வேதத்துக்கு அத்யாபன் ஆகை
வேள்வியாகி –
ததர்த்தமான யாகத்துக்கு நிர்வாஹகனாவனே -அதாவது –ஆராத்யனாகை –

விண்ணினோடு மண்ணுமாய் –
ஆராதன பலமான போக மோஷ பூமிகளுக்கு நிர்வாஹகனாகை
விண் -என்று பரமபதம்
மண் -என்று சதுர்தச புவனத்துக்கும் உப லஷணம்
யாகம் அந்யோந்ய வ்ருதங்களான போக மோஷங்கள் இரண்டுக்கும் சாதனம் ஆமோ
என்னில் –
ஜீவ பர யாதாம்ய ஞான பூர்வகமான யாகம் மோஷத்துக்கும்
கேவல யாகம் போகத்துக்கும் சாதனம் ஆகையாலே அவிருத்தம்
ஆதியாகி –
இது எல்லாம் ருசி உடையவனுக்கு அங்கம் இ றே -அந்த ருசி ஜநகனாய்க் கொண்டு
ஆயனாய மாயம் என்ன மாயமே –
அதீந்த்ரியிமான இவ் விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கிக் கொண்டு
ருசி இல்லாருக்கு ருசி ஜனகனாயக் கொண்டு
வந்து அவதரித்த இது என்ன ஆச்சர்யம் –
————————————————————————————————-

35 பாட்டு –அவதாரிகை –
அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கி ருசி ஜனகனாய்
கொண்டு அவதரித்த ஏற்றத்தை அனுபவித்தார் கீழில் பாட்டில் –
இதில் ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும் அடிக்கவும் விடவுமாம் படி ந்யாம்யனான
குணாதிக்யத்தை அனுசந்தித்து திரியவும் கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபடுகிறார் –

அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க  தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ எம் ஈசனே –35-

வியாக்யானம் –

யாழியார் தம்பிரானுமாகி –அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி -மிக்கது என்று அந்வயமாகக் கடவது -தமஸ் பரமோதாத சங்கு சக்ர கதாதர-என்கிறபடியே –
சர்வேஸ்வரத்வ ஸூசகமான திருவாழியை உடைய சர்வாதிகனுமாய் வைத்து
அம்பு உலாவு மீனுமாகி –
அம்பிலே வர்த்திக்கிற மத்ச்யமாய்
அப்பை அம்பு என்று மெலித்துக் கிடக்கிறது
முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -என்கிறபடியே
பிரளயார்ணவத்தில் நோவுபட்ட தேவர்களுடைய ஆபத்தை போக்குகைகாக தன்னிலமான நீரிலே
சஞ்சரிக்கக் கடவதான மத்ச்யமுமாய் –
சப்தத்தாலே -தேவ யோநி மனுஷ்ய யோநிகளிலே பண்ணின அவதாரங்களால்
பர்யவசியாத அனுக்ரஹ அதிசயத்தை சொல்லுகிறது

-ஆமையாகி
அமர்த்த மதன வேளையிலே மந்த்ர தாரண அர்த்தமாக கூர்மமாய் –
கூர்மம் பூதம் சர்ப்பந்தம் -என்கிறபடியே பிரளய வேளையில் கூர்ம விக்ரஹத்தை
சொல்லிற்று ஆகவுமாம்
மிக்கது –
ஷூ த்ர யோநி என்றும் -பாப யோநி என்றும் பாராதே கை கழிய அவதரித்து
அன்பு மிக்கு –
ஆபன்னராய் அவதாரங்களுக்கு நிமித்த பூதரான சேதனர் பக்கலில் உண்டான
சங்க அதிசயத்தால் வந்து அவதரித்த இத்தனை இறே
ஒரு கர்மம் பிரேரிக்க வாதல் -ஒரு கர்த்த பிரேரிக்க வாதல் அன்று இறே
மீனோடு ஏனமும் தானான் என்னில் தானாய சங்கு -என்னக் கடவது இறே

அன்றியும் –
அதுக்கு மேலே ஸூரி போக்யமான வடிவை ஜல சர சத்வ சஜாதீயம் ஆக்குவதே
என்று அதிலே ஈடுபட்டு ஆய்த்து இவர் தாம் இருப்பது
அதில் காட்டிலும் கிருஷ்ணாவதாரத்தில் குணாதிக்யம் தம்மை ஈடுபடுத்திய படியைச் சொல்லுகிறார் மேலே –
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் –
கொம்பு -போலேயும் அரவு போலேயும் –நுண்ணிய இடையை உடைய அசோதை
பிராட்டிக்கு பிள்ளையாய் -மத்ஸ்யாதி அவதாரங்களில் ரஷணத்தில் தன்
ஸ்வா தந்த்ர்யங்கள் குலைந்தது இல்லை -இதில் ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும்
அடிக்கவுமாம்படி ந்யாம்யனாய் வந்து அவதரித்த குணாதிக்யம் உண்டு இ றே
ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம் -என்கிற ஸ்வரூபமும் அழிந்தது இ றே இதில் –
அவதாரங்களில் ஸ்வரூபத்தை அழிய மாறின இத்தனை இ றே
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ-
அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படியான நீர்மையைக் காட்டி எங்களை
அனந்யார்ஹம் ஆக்கிக் கொண்டது என் செய்த படி –
பஹூ வசனத்தாலே மற்ற ஆழ்வார்களையும் கூட்டிக் கொள்கிறார்
எம் ஈசனே –
அறிந்தோம் –
எங்களுடைய இழவு பேறுகள் உன்னது என்னும்படியான சம்பந்த்தாலே –

————————————————————————————————

36 பாட்டு –அவதாரிகை –

கீழ் சொன்ன பரதந்த்ர்யத்தை அநுபாஷித்து அவ்வதாரங்களின் ஆச்சர்ய சேஷ்டிதங்களில்-ஈடுபடுகிறார் –

ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்
சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்
தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ –36

ஆடகம் -ஹாடகம் -ஆபரணம்

ஐய -சூஷ்மமான பிராணனை கிரஹிக்க வல்ல

வியாக்யானம்-

ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய் –
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் -என்றது தன்னையே
முக பேதத்தாலே அனுபவிக்கிறார் –
ஆடகத்த பூண் முலை –
பொன்னாலே செய்த ஹாரத்தாலே அலங்க்ர்தமான முலையை உடையவள் –
க்ருஷ்ணன் அமுது செய்யக் கடவன் -என்று முலையை ஒப்பித்துக் கொண்டு
நிற்கிறாள் ஆய்த்து அவள் -அந்த பிரேமத்தை அனுபவிக்கிறார் இ றே இவர் –
ஆயார் மாதர் பிள்ளையாய் -என்ற சாமாந்யத்தை –அசோதை ஆய்ச்சி பிள்ளையாய் -என்று விசேஷிக்கிறார் -சர்வ நியந்தாவானவன் ஓர் இடைச்சி -என் மகன் -என்று
நியமிக்கலாம்படி இருக்கிற ஆச்சர்யத்தில் நின்றும் கால் வாங்க மாட்டுகிறிலர் –

சாடு உதைத்து –
ஸ்தநயார்த்தியாய் திருவடிகளை நிமிர்த்து -சகடாசுரனை நிரசித்து –
தநம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்றும் –
கோலமாம் என் சென்னிக்கு -என்றும் -அநந்ய பிரயோஜநருக்கு ப்ராப்யமான
திருவடிகளை துஷ் பிரக்ர்திகளுக்கு -வாத சாதனம் ஆக்குவதே -என்கை –
ஓர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள் –
பிள்ளைகள் அனுங்க சஞ்சரிக்கும் புள்ளின் கருத்தை உடையளாய் -அபூர்வை
என்று சங்கித்து விலங்க ஒண்ணாதபடி க்ர்த்ரிமான ஜனநியான பேய்ப் பெண் –
ஓர் புள் என்று தப்ப ஒண்ணாதபடி அனுங்கப் பண்ணும் புள் என்றபடி –
வீட வைத்த வெய்ய கொங்கை –
ஜகஜ் ஜீவநமான உன் திறத்திலே தீங்கை விளைப்பாளாக திருப் பவளத்திலே
வைத்த க்ரூரமான முலையில் –
ஐய பால் அமுது செய்து –
ஸூஷ்மமான பிராணனைப் புக்கு க்ரஹிக்கவல்ல அதி ஸூஷ்மமான பாலை
அமுது செய்து –
அவள் தன்னுடைய க்ரௌர்யத்தையும் ஸ்தனத்தினுடைய க்ரௌர்யத்தையும்
விரித்துப் பேசுகிறார் ஆய்த்து -தம்முடைய பய அதிசயத்தாலே
ஐய -என்று சம்போதனம் ஆகவுமாம்
பூதனையை தாய் என்று மௌக்யத்தாலே அவள் முலையை அமுது செய்தான் –
பிரகாஸ சந்நிதியிலே தமஸ் போலே துஷ் பிரகிருதிகள் நசிக்கும் தரமி
ஸ்வபாவத்தாலே அத்தலை இத்தலை யான வித்தனை –
ஆடகக் கை மாதர் வாய் அமுது உண்டது என் கொலோ –
அப்பருவத்தில் -உன்னையும் ஒக்கலையில் கொண்டு -என்னுமா போலே

அவ் ஊரில் கன்னிகைகள் தங்கள் க்ரஹத்தில் கொண்டு போக யௌவன
தசையைப் பரிக்ரஹித்து விதக்தனாய் கலந்து அவர்கள் வாக் அம்ர்தத்தை உண்ட
இது என்னோ –
ஆடககைக் மாதர்
பொன்னாலே அலங்கரித்த கை வளையை உடைய பெண்கள் –
அவன் பிடிக்கும் கை என்றும் –
அவன் அணைக்கும் கொங்கை என்றும் -அலங்கரிக்கிறார்கள் ஆய்த்து

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி உன்னோடு தங்கள் கருத்தாயின
செய்து வரும் கன்னியரும் மகிழ-அவர்கள் வாய் அமுதம் உண்பானே
என் கொலோ -என்றது –
அவ்விஷத்துக்கு இவ் வாக் அம்ர்த்தம் பரிஹாராமோ
சர்வ தாரகனாய் வேறு தாரகாந்தரம் இன்றிகே இருக்கிற உனக்கு -ப்ரதிகூலர்
பிராணனும் -அனுகூலர் ப்ரேமமும் தாரகமாய் இருந்ததோ
பால்ய அவஸ்தையில் யுவாவாயும்
யுவாவான நீ பாலனாயும் இருந்த விது என்ன ஆச்சர்யமோ என்கிறார் –

——————————————————————————————-

37 பாட்டு –அவதாரிகை –
பின்பு க்ருஷ்ணாவதாரத்தில் விதக்த சேஷ்டிதங்களையும் -முக்த சேஷ்டிதங்களையும்
அனுபவிக்கிறவர் -மௌக்த்யத்தாலும் சௌலப்யத்தாலும் -வரையாதே எல்லாரையும்
தீண்டின படியாலும் க்ர்ஷ்ணாவதாரமான ஸத்ர்சமான வட தள சாயியையும்
ஸ்ரீ வராஹ வாமன ப்ராதுர்பாவங்களையும் க்ருஷ்ணாவதாரத்தொடு ஒக்க
அனுபவிக்கிறார் –

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-

வியாக்யானம் –

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து –
க்ருஷ்ணன் மேலே விழுகைக்கு உறுப்பாக பரப்பு மாறக் காய்ந்து ஓங்கி நின்ற விளாவான
அசுரனுடைய கனிகளை -கன்று விட்டு எறிந்து உதிர்த்து
எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து –
விளாவான அசுரனை அழியச் செய்து க்ருஷ்ணன் கிட்டின பின்பும் பேராதே நின்ற
பூங்குருந்தை ஊசி வேரோடே பறித்து விழ விட்டு –
இதுவும் அவன் மேலே விழுந்து புஷ்பாபசயம் பண்ணுகைக்கு உறுப்பாக பரப்பு மாறப்
பூத்து நின்றது ஆய்த்து –
இவை இரண்டாலும் அனுகூல வேஷராய் நலிய வந்த அசுரர்களை அழியச் செய்தபடி
சொல்லிற்று –

மா பிளந்த –
ப்ரதிகூலனாயே வாய்பாறி ஊரை அழிக்க வல்ல கேசியை அநாயேசேந இரு கூறாகப்
பிளந்து அவ்வாபத்தைப் போக்கினான்
கைத்தலத்த கண்ணன் என்பரால் –
ஓர் ஆயுதத்தால் அன்றிக்கே லீலையாக அழித்த திருக்கையை உடைய க்ருஷ்ணன்
என்று ஜ்ஞாநாதிகாரான வியாச பராசராதிகள் சொல்லா நிற்பர்கள்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின் பேய்ச்சி பாலை உண்டு
ஆய்ச்சி பாலை உண்டு -வெண்ணெய் உண்டு –
யசோதை பிராட்டியாருடைய பாலையையும் வெண்ணெயையும் அமுது செய்து –
இத்தால் -விஜி கத்ஸ -என்கிற தத்வத்துக்கு ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால்
அன்றிக்கே செல்லாது இருக்கிறபடியைச் சொல்லிற்று –
பேய்ச்சி பாலை உண்டு –
தாய் வடிவு கொண்டு விநாசிகையாய் வந்த பூதனையினுடைய முலையை அமுது செய்து –
அவ்வழியாலே அவளை முடித்து –
யசோதையினுடைய பாலோபாதி பூதனையினுடைய ப்ராணனும் தாரகமாய் இருக்கிற படி
பின் மண்ணை உண்டு –
க்ருஷ்ணனுடைய மௌக்த்யத்தை அனுபவித்த சமனந்தரம் தத் ஸத்ர்சமான வட தள
சாயினுடைய மௌக்த்யத்தை யனுபவிக்கிறார் –
கல்ப அவசாநத்திலே சிறிய திரு வயிற்றிலே ஜகத்தை அடைய அமுது செய்தால்
சாத்மியாது என்று அறியாதே மௌக்த்யம் இ றே வட தள சாயி உடைய மௌக்த்யம்
பண்டு ஓர் ஏனமாய வாமனா —
கல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து
அந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –
1-தன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்
2-வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்
க்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே
இவ்வதாரங்களை அனுபவிக்கிறார் –

——————————————————————————————

38- பாட்டு –அவதாரிகை
பரித்ராணாய சாதூநாம் விநாசாயச துஷ்க்ர்தாம் – என்கிறபடியே பிரதிகூலரை அழியச்
செய்தும் -அனுகூலரை உகப்பத்திம் செய்தருளின கிருஷ்ணா அவதார சேஷடிதங்களை-அனுபவிக்கிறார் –

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38-

வியாக்யானம் –

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து –
குவலயாபீடத்தை மதிப்பித்த படியாலே அம்மத ஜலம் உடம்பிலே வ்யாப்தமாய் அதி
ப்ரபலமாய் இருந்த அதின் கொம்பை முறித்து -இத்தால்
ஸ்வாபாவிகமான பலத்தாலும் மத பலத்தாலும் துர்ஜயமான குவலயாபீடத்தை
அநாயாசேந அழித்தான் என்கை –
கடம் -ஆனை மதம்
ஓர் பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே –
வாதாஹதாம் புவி ஷேப ஸ்பர்ச தக்தவிஹங்கம் -என்கிறபடியே
அதி பீஷணம் ஆகையாலே அத்விதீயமான பொய்கையிலே –
முதலை கிடந்த பொய்கையும் இதுக்கு ஸத்ர்சமன் அன்று என்கை –
விஷமே இவனுக்கு உபாதானம் என்னும்படி விஷ ப்ரசுரமான காளியனுடைய
பணங்களிலே வல்லார் ஆடினாப் போலே திருவடிகளை மாறி இட்டு அவ் வழியாலே
அவனைத் தமித்துப் போகவிட்டு -யமுனையை சர்வ உபஜீவ்யமாம்படி பண்ணி
உன்னுடைய நாதத்வத்தை பிரகாசிப்பித்தவனே

துஷ்டு வுர்முதிதாகோபாத்ர்ஷ்ட்வா சீத ஜலாம்நதீம் -என்னக் கடவது இ றே
இவ்வளவில் துஷ்க்ர்த் விநாசம் சொல்லி -மேல் சாது பரித்ராணாம் சொல்லுகிறது –
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண –
கையில் திருவாழி பொருந்தினால் போலே பொருந்தின குடத்தை உடையனாய்
ஜாதி ப்ரயுக்தமான கூத்தையாடி –மன்றிலே உன்னுடைய அழகை சர்வ ஸ்வதாநம்
பண்ணிணவனே -பிரயோஜநாந்தர  நிரபேஷமாக ஜல ஸ்தல விபாகம் அன்றிக்கே
வர்ஷிக்கும் மேக ஸ்வபாவனேகுடக் கூத்து ஆடின போதை காளமேக நிபாச்யமான
நிறத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்
தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப –
இப்படி ஷூத்ரரான இடையருடைய சேஷ்டிதத்திலே இழிந்தவன் -சர்வ சேஷியாய் –
அவாக்ய அநாதர -என்கிற பூரணன் கிடீர் என்கிறார்
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் வடத்தோடும் வனமாலை யோடும் கூடின
திரு மார்வை உடையவனே –
வடம் -தொடை –
மாலை -வனமாலை
காலநேமி காலனே —
ஆபன்னராய்த் திருவடிகளில் விழுந்த தேவர்களுக்கு விரோதியான காலநேமிக்கு
ம்ர்த்யு வானவனே
இத்தால் சர்வ அசாதாரணனாய் இருக்கச் செய்தேயும் தன் திருவடிகளில் தலை
சாய்ந்தாருக்கு விரோதிகளானார் தனக்கு சத்ரு என்கை –
——————————————————————————————

39 பாட்டு –அவதாரிகை
சாது பரித்ராணமும் துஷ் க்ர்த் விநாசமும் சொல்லிற்று கீழ்
இதில் –இவ்வளவு புகுர நிலாத இந்த்ராதி களுடைய விரோதிகளான ராஷச வர்க்கத்தை
அழியச் செய்து அவர்கள் குடி இருப்பைக் கொடுத்தபடியும் -அவ்விந்த்ரன் தான்
ஆஸ்ரிதரைக் குறித்து பிரதிகூலனான போது அவனை அழியச் செய்யாதே
முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும் நீர்மையை அனுபவிக்கிறார் –

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-

வியாக்யானம் –

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் –
துர்வாச சாபத்தாலே இந்த்ராதிகள் ஐஸ்வர்யத்தை இழந்து -சரணம் த்வாம் அநுப்ராப்தா –
என்கிறபடியே திருவடிகளில் சரணம் புகுர -கடல் கொண்டு முழுகும் மந்த்ரத்தைப்
பரிகரமாகக் கொண்டு சமுத்திர ஜலத்தில் அவர்கள் இழந்தவை அடங்கலும்
உத் பன்னநாம் படி கலக்கினாய் -ரத்நாகரம் -மத்ஸ்யாகரம்-என்று லோக பிரசித்தமாய்
இருந்துள்ள சமுத்ர ஸ்வபாவத்தை தவிர்ந்து ஸ்வர்க்கத்தில் உள்ள பதார்த்தங்களுக்கு
உத்பாதகம் ஆக்கினாய் –

ஏதத் கதம் கதய யன்மதிதஸ் த்வயா சௌ ஹித்வா ஸ்வ பாவ நியமம் ப்ரதிதம்
த்ரிலோக்யாம் -அச்வாப்சரோ விஷ ஸூ தாவிது பாரிஜாத லஷம்யாத்மநா
பரிணதோ ஜல திர்ப்ப பூல -என்னக் கடவது இ றே
பிரயோஜ நாந்தர பரன் என்று அவன் சிறுமை பாராதே -மோஷ பிரதனாய் இருக்கும்
தன் பெருமை பாராதே -ஈச்வரோஹம் – என்று இருக்குமவன் என்று அவன் பூர்வ வ்ருத்தம்
பாராதே -சரணம் என்று நின்றான் -என்றத்தையே பார்த்து ரஷித்து அருளினாய் –
அதன்றியும் –
இது தானே போருமாய்த்து -ஆஸ்ரிதர் உன்னை தஞ்சம் என்று விஸ்வசித்து
இருக்கைக்கு -அதுக்கு மேலே –
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –
கண்ட மலைகளைப் பிடுங்கி சமுத்திர ஜலத்தின் மேலே -பூமியிலே வரம்பு கட்டுமா
போலே -ப்லவங்கங்கள் காலாலே நடந்து போம்படி அணை கட்டி –
இது ஒரு அதிமானுஷமான ஆச்சர்யம் -அகாதமான சமுத்ரத்திலே மலை யமிழ்ந்தது
இல்லை -திரைக் கிளர்த்தியில் மண் கரையப் பெற்றதில்லை –
வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ –
கடலை அழகாக உடைத்தாய் -த்ரிகூட பர்வதத்திலே விச்வகர்மாவாலே சமைக்கப்
பட்டதாய் -கடக்க வரிதான மதிளாலே சூழப்பட்ட லங்கையின் அரணை –
யதாஸை கதமம் பஸி -என்கிறபடியே தார்மிகனை நிர்வாஹகனாக்கி தர்மமே
சஞ்சரிக்கும் படியைச் சொல்லிற்று –
இனி இந்த்ரன் தான் ஆஸ்ரிதருக்கு துஷ் க்ர்த்தானால் அவனை அழியச் செய்யாதே
முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும்படி சொல்லுகிறது
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே —
இடையர் க்ருஷ்ணனை அண்டை கொண்டு நம்முடைய மசுபங்கம் பண்ணினார்கள்
என்று சம்வர்த்த கணத்தை ஏவி வர்ஷிப்பிக்க -அவனை அழியச் செய்கை ப்ராப்தமாய்
இருக்க -ப்ராதிகூல்யத்தில் நியதன் அல்லாமையாலும் -ந  நமேயம் -என்கிறபடியே
திருவடிகளில் தலை சாயேன் என்கிற நியதி இல்லாமையாலும்

கோவர்த்தன கிரியை எடுத்து வர்ஷத்தால் வந்த அநர்த்தத்தை பரிஹரித்த
மஹா உதாரன் அல்லையோ -காளமேக நிபாஸ்யாமமாய் ஸ்ரமஹரமான
விக்ரஹத்தை சொல்லவுமாம் -ஒரு மேக சமூஹம் பாதக கோடியிலேயாய்
நிற்க ஒரு மேகத்தால் வந்த ஆபத்தை பரிஹரித்ததாப் போலே இருந்தது என்கை-

——————————————————————————————

40 பாட்டு –அவதாரிகை –
ஈஸ்வர அபிமாநிகளான தேவதைகள் உடைய ரஷண பிரகாரம் சொல்லிற்று கீழ் –
இப்பாட்டில் –அநந்ய பிரயோஜனரை ரஷிக்கும் இடத்தில் நித்ய ஸூரிகளுக்கு
மேல் எல்லையான பிராட்டிமாரோடே -சம்சாரிகளுக்கு கீழான திர்யக்குகள் உடன்
வாசியற -தன்னை ஒழியச் செல்லாமை ஒன்றுமே ஹேதுவாக விரோதி நிரசன
பூர்வகமாக ரஷிக்கும் ஆச்சர்யங்களை யநுபவிக்கிறார்

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம்  ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40

வியாக்யானம் –

ஆனை காத்து –
அநந்ய பிரயோஜநத்வம் ஒழிய இவ்வருகு ஜன்மாதிகளாலே ஒரு யோக்யதை இல்லாத
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்து —
இவ்வானை என்னாதே –ஆனை காத்து -என்கிறார் ஆய்த்து அவனுடிய ஆபத் பிரசித்தியாலும்
அவனை ரஷித்த ரஷண பிரகாரத்தின் பிரசித்தியாலும் –
கஜ ஆகர்ஷேதேதீரே -என்றும் -பரமாபதமாபன்ன -என்னும் படி இ றே அவனுடைய
ஆபத்து -அதந்த்ரி தசமூபதி ப்ரஹித ஹஸ்தம் -என்றும் -தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப -என்னக் கடவது இ றே
ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய் –
அதன்றி ஆயர் பிள்ளையாய் –
தேவரை தஞ்சம் என்று இருக்கைக்கு ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ரஷண ப்ரகாரமே
அமையும் -அதுக்கு மேலே இடைச் சாதிக்கு நியாமனாய் வந்து அவதரித்து கீழ்-
அசோதை ஆய்ச்சி பிள்ளையாய் -என்றதை வ்யாவர்த்திக்கிறது –
ஓர் ஆனை  கொன்று –
ஸ்ரீ வசுதேவர் தேவகிப் பிராட்டி -ந சமம் யுத்தம் இத்யாஹூ -என்கிற ஸ்ரீ மதுரையில்
பெண்களாக இவ் அநுகூல வர்க்கம் அடைய பயப்படும்படி -மதிப்பித்து கம்சன் நிறுத்திய
அத்வதீயமான குவலயாபீடத்தை அநாயாசேந கொன்று
ஸ்வா பாவிகமான பலமும் மத பலமுமாய் அத்வதீயமாய் இ றே இருப்பது –

கடம் கலந்த வன் கரி -என்றார்  இறே
அதன்றி ஆனை மேய்த்தி –
அதுக்கு மேலே அந்த ஜாதிக்கு உசிதமாகப் பசுக்களை ரஷியா நிற்றி –
விஜிகத்ச -விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய் -என்கிறபடியே
தன் அழகாலே வயிறு நிரம்பும்படி இ றே பசுக்களை ரஷித்தது
ஆ நெய் உண்டி  –
பசுக்களின் நெய்யை அமுது செய்யா நிற்றி
சத்யகாமனாய் -விஜிகத்சனாய் இருக்கிற நீ ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய தொரு
த்ரவ்யத்தை ஒழிய செல்லாமை யிலே இ றே அத்தை விரும்பி அமுது செய்தது –
யன்று குன்றம்  ஒன்றினால் ஆனை காத்து –
அதுக்கு மேலே இந்த்ரன் சம்வர்த்த கணம் -என்கிற மேக சமூஹத்தைக்
கொண்டு ஊரை அழியச் செய்கிற தசையில் -கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்து
பசுக்களை ரஷித்தது –ஆன் -பசு -கீழில் பாட்டிலும் இவ் வபதானம் சொல்லிற்று –
அதுக்கும் இதுக்கும் வாசி என் என்னில் –
ப்ராதிகூல்யத்தில் நியதன் இல்லாமையாலே இந்த்ரனை அழியச் செய்ய மாட்டாத
நீர்மையை சொல்லிற்று அங்கு -இங்கு -தன்னை ஒழிய செல்லாத பசுக்களை ரஷித்த
படியை சொல்லுகிறது –
மை யரிக்கண் மாதரார் திறத்து –
அஜ்ஞனத்தாலே அலங்க்ர்தமாய் செவ்வரி கருவரிகளோடே கூடின திருக் கண்களை
உடைய நப்பின்னைப் பிராட்டிகாக
முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயம்-
சம்ச்லேஷ அர்த்தமாக ஒப்பித்து நிற்கிற தசையிலே அவள் சந்நிதியிலே சென்று
ரிஷபங்கள் ஏழையும் அடர்த்த ஆச்சர்யம்
என்ன மாயமே —
முன்பு செய்த செயல்களுக்கும் அவ்வருகாய் ஒன்றாய் இருந்ததீ –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -21-30-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 21, 2013

21-பாடல்-அவதாரிகை –
சமுத்ர மதன வேளையில் ஆமையான நீர்மைக்கு மேல் -சகல வியாபாரங்களையும்
தேவரீரே செய்து அருளி -தேவர்கள் கடல் கடைந்தார்கள் -என்று தேவர்கள் தலையில்
ஏறிட்டு கொண்டாடினபடி -ராவணனை  அழியச் செய்து முதலிகள் தலையிலே விஜயத்தை
ஏறிட்டு கொண்டாடினாப் போலே இருந்தது -இவ் வாஸ்ரித பஷபாதத்தை வேறாக தெரிய
அருளிச் செய்ய வேணும் என்கிறார் -சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க இதொரு பஷபாதம்
இருந்தபடி என்ன என்று விஸ்மிதர் ஆகிறார்-

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21

வியாக்யானம் –

அரங்கனே –
அரங்கனே என்கிற இது விசேஷ்யம் யாகையாலே க்ரியை கூட அந்வயிகக் கடவது -தரங்க நீர் கலங்க –
அப்ரமேயோம ஹோததி -என்கிறபடியே அத்யகாதமான கடல் ஆகையாலே தன்னை-அனுபவிக்க இழிந்தாரைக் கரையிலே ஏறிட வல்ல திரைக் கிளர்தியை உடைத்தான-கடல் குளப்படி போலே கலங்க –
வன்று –
சகல தேவதைகளும் துர்வாச சாபத்தாலே நஷ்ட ஸ்ரீ காரராய் தங்கள் ஐஸ்வர்யத்துக்கு-தேவரீர் கை பார்த்து இருந்த வன்று –
குன்று சூழ் மரங்கள் தேய –
மந்த்ரத்தை சூழ்ந்த மரங்கள் வாஸூகி உடல் பட்டு தேய
மா நிலம் குலுங்க –
சமுத்திர கோஷத்தின் உடைய அதிசயத்தாலே அத்தோடு சேர்ந்த புஷ்கர தீபங்கள் ஆகிற-மஹா ப்ர்த்வி குலுங்க
மா சுணம் சுலாய் நெருங்க –
நெருங்க -மாசுணம் சுலாய் -வாசுகியை நெருக்கி சுற்ற
சுலாய் -சுலாவி -சுற்றி என்றபடி
ஸ்வ தேஜஸ்ஸாலே உபப்ர்ம்ஹிதமான படியாலே கூசாதே மந்த்ரத்தில் வாசுகியை நெருங்க சுற்றி-மந்தராத் ரோதிஷ்டாநாம் மதநே பூத் -என்று மந்த்ரத்துக்கு அதிஷ்டாநமும் தானே என்றும் –
தேஜஸா நாக ராஜாநாம் ததாப்யா யிதவான் ப்ரபு -என்று வாசுகிக்கு பல கரனும் தானே என்றும்-சொல்லக் கடவது இ றே –
நீ கடைந்த போது –
ததோ மதிது மாரப்ய -என்று தேவர்களுக்கு ஆரம்ப மாத்ரமேயாய் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடிந்தான் -என்கிறபடியே அக்கடலை தேவரீரே  கடைந்த போது
நின்ற சூரர் என் செய்தார் –
அதிபல பராக்ரமான தேவர்களும் அசூரர்களும் செய்தது என்-
அம்ருத மதன சாமர்த்தியத்தை தேவர்கள் பக்கலிலே ஏறிட்டு கொண்டாடுகைகாக அவர்கள்-செய்த கார்யம் என் -கூர்ம ரூபியாய் மந்த்ராத்ரிக்கு -அதிஷ்டாநம் ஆனார்களோ
உபர்யாக்ராந்த வாந்சைலம் ப்ர்ஹத்ரூபேண கேசவ -என்று மந்த்ரம் சலியாதபடி நோக்கினர்களோ-தேஜஸ்சாலே வாசுகிக்கு பல கரரானார்களோ-
பல போக்தாக்களாய் நின்ற இது ஹேதுவாக அவர்களையே கர்த்தாக்கள் ஆக்கின இத்தனை அன்றோ –
தேவதாந வயத்நே ந ப்ரசூதாம்ர்த மநதநே -என்று அம்ருத மதன வ்யாபாரம் அசூரர்களுக்கும்-ஒத்து இருக்க -அவர்களை கிலேச பாகிகளாக்கி -தேவர்களை அமர்த்த பாகிகளாக்கி-இதுவும் அதுக்கு மேலே ஒரு பஷபாதம் இறே
பிரயோஜநாந்த பரர் என்று பாராதே தேவர்கள் பக்கலில் பஷபாததுக்கு அடி
சரணம் த்வா அனுப்ராப்தா -என்று சரணம் என்ற அதிலே இறே
குரங்கை யாள் உகந்த வெந்தை –
கீழ் சொன்ன பஷபாததுக்கு த்ர்ஷ்டாந்தம் சொல்லுகிறது-.ராவணனை தேவரீரே அழியச் செய்து -பிரதிபஷத்தை வென்று தந்தாரார்களாக-ஸ்ரீ வானர வீரர்களை ஆதரித்தது போலே
எந்தை –
என்று நித்ய சூரிகளை அடிமை  கொள்ளும் ஏற்றத்தை உடையனாய் வைத்து
திர்யக்குகள் என்று இகழாதே அடிமை கொண்ட இத்தை தனது  பேறாக நினைத்து
இருக்கையாலே என்நாதனே என்கிறார் –
அரங்கனே கூறு தேற வேறிதே —
ஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக அர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்-இத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -கீழ்-
வ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது பெரிய பெருமாள் பக்கலிலே என்று கருத்து

——————————————————————————————

22 பாட்டு –அவதாரிகை –
பிரளய ஆபத்திலே வரையாதே எல்லாரையும் வட தள சாயியாய் சர்வ சக்தித்வம்
தோற்ற சிறு வயிற்றிலே வைத்து ரஷித்த தேவரீருக்கு -ஆஸ்ரித விஷயத்தில் வத்சலர் -என்னும் இது ஒரு ஏற்றமோ -என்கிறார் –

பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேருமார்ப பூமி நாதனே –22

வியாக்யானம்-

பண்டு இன்று மேலுமாய் –
பண்டு -சிருஷ்டி பூர்வ காலத்தை
இன்று -சிருஷ்டி காலத்தை
மேல் -பிரளய வேளையில்
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -என்கிறபடியே நாம ரூபங்களை இழந்து அசித விசேஷிதமாய்
சோச்ய தசாபன்னமான சகல ப-ஸ்ருஷ்டி வேளையில் கர்ம அநுரூபமாக ஸ்ருஷ்டித்து
தத் அநுரூபமாக ரஷித்தும் -பிரளயம் கொள்ளும் அளவில் வயிற்றிலே வைத்து நோக்கியும்
போருமவன் ஆகையாலே
ஆய் -என்றது ஆகையாலே என்று ஹேது கர்ப்பமாய் கிடக்கிறது
ஓர் பாலனாகி –
அத்விதீயமான முக்த சிசுவாய்
ஞாலம் ஏழும் உண்டு மண்டி –
சகல லோகங்களையும் தன் பேறாக விரும்பி அமுது செய்து சிறிய வயிற்றிலே சகல-லோகங்களையும் அடக்கின அகடிதகட நா சாமர்த்தியத்தால் தேவரீருடைய
ஐஸ்வர்யமான சக்தியைப் பிரகாசிப்பித்த படி இறே இது
ஆலிலைத் துயின்ற வாதி தேவனே-
ஒரு பவனான ஆலிலையிலே -ஜகத் காரண வஸ்து என்று தோற்றும்படி கண் வளர்ந்து அருளினவனே-
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் –
இப்படி பிரளயார்ணவத்திலே பரிவர் ஒன்றிக்கே தனியே கண் வளர்ந்து அருளுகிறவன்-சர்வாதிகன் கிடீர் என்கிறது இப்பாட்டில் சேஷமும் -செவ்வியாலே வண்டுகள் புக்குப் பருகும்-ஸ்ரமஹரமான திருத் துழாய் மாலையை உடையவனே –
கிண்டல் -கிளர்தலும் -கிழித்தலும்
இத்தால் -ஆதிராஜ்ய சூசுகமான திருத் துழாய் மாலையை உடையவன் -என்கை

கலந்த சீர்ப் புண்டரீகப் பாவை சேரு மார்பா –
ஸ்வரூப நிரூபக பூதை யாகையாலே நித்ய சம்ச்லேஷ ஸ்வபாவையாய்
தாமரைப்பூவை ஜன்ம பூமியாய்  உடையளாய் -நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய பிராட்டி-
அகலகில்லேன் இறையும் -என்று அவள் ஆதரிக்கும் திரு மார்பை உடையவனே
பூமி நாதனே –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு நாதன் ஆனவனே -இத்தால் –ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்கிறபடியே –
ஸ்ரீ பூமி சஹிதனான ஏற்றத்தை உடையவன் என்கை –இப்படி சர்வாதிகன் கிடீர் பிரளய
ஆர்ணவத்திலே ஒருவர் இல்லாதாரைப் போலே தனியே கண் வளர்ந்து அருளுகிறான் -என்கை
———————————————————————————————–

23 பாட்டு -அவதாரிகை –

பிரளய ஆபத்சகன் ஆகைக்கு வட தள சாயி யான அகடிதகடிநா சாமர்த்ய அளவு அன்றியே –
தேவரீர் உடைய அசாதாராண விக்ரஹத்தை -நாஸ் யர்த்ததநும் க்ர்த்வா சிம்ஹஸ் யார்த்தத நுந்ததா –
என்கிறபடியே ஏக தேகத்தை மனுஷ்ய சஜாதீயம் ஆக்கியும் -ஏக தேகத்தை திர்யக் சஜாதீயம் ஆக்கியும்
இப்படி யோநி த்வயத்தை ஏக விக்ரஹமாக்கி -அர்த்தித்வ நிரபேஷமாக பிதாவாலே புத்ரனுக்கு
பிறந்த ஆபத்தை தேவரீர் பொறுக்க மாட்டாமையாலே தூணிலே தோற்றின அகடிதகடநா
சாமர்த்யத்தை அனுசந்தித்து -இத்தை யாவர் பரிச்சேதித்து அறிய வல்லார் -என்கிறார் –

வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊனிறத்துகிர்த்தல மழுத்தினாய் உலாய சீர்
நானிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கி
பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன் அல்லையே –-23

வியாக்யானம் –

வால் நிறத்தோர் சீயமாய் –
புருஷோத்தமன் தன்னை அழிய மாறி சிம்ஹ சஜாதீயனானாப் போலே ஸ்வாபாவிகமான-நிறத்தையும் -மாறாடுவதே என்கிறார் –
வால் நிறம் -வெளுத்த நிறம் –
ஓர் சீயமாய் –
பஹூதா விஜாயதே -என்றும் -பஹூநி -என்றும் சொல்லுகிற
அசங்யாதமான அவதாரங்களிலே இங்கன் இருப்பது ஓன்று இலாமையாலே
அத்வதீயம் -என்கிறார்
அழகியான் தான் -என்கிறபடியே போக்யதையில் அத்வதீயத்தை சொல்லவுமாம்
சீயம் -சிங்கம் –
வளைந்த வாள் எயிற்றவன் –
வளைந்து ஒளியை உடைத்தான எயிற்றை உடைய ஹிரண்யன் -இத்தால் வர பலத்தில்-அந்தர்பவியாத ஆசூரமான புஜ பலத்தை சொன்னபடி –
ஊனிறத்துகிர்த்தல மழுத்தினாய் –
சரீரத்தில் மர்மத்திலே திரு உகிரை அழுத்தினவனே

உகிர் தலம்  அழுத்தினாய் என்று -அவன் வரத்திலே அந்தர்பவியாத வத சாதநத்தாலே-அநாயாசேந அழித்தபடி சொல்லிற்று ஆகிறது –
உலாய சீர் நால் நிறத்த வேத நாவர் –
சர்வ லோகப்ரசித்தமான ப்ராமாண்யத்தை உடைத்தாய் -உதாத்த அநுதாத்த –
ஸ்வரிதப்ரசயரூபமான நாலு வகைப்பட்ட ஸ்வரத்தை உடைய வேதத்தை நாவிலே உடையவர்கள் –
நிறம் -மேனி
இத்தால் -அநுமாநாதிகளாலே தத்வ ஹிதங்களை நிர்ணயிக்குமவர்கள் அன்றியே
வைதிகர் ஆஸ்ரயிக்கும் அவன் என்கை –
நல்ல யோகினால் வணங்கு –
பக்தி யோகத்தாலே ஆஸ்ரயிக்கும் அவர்கள் என்னுதல் –
விலஷணமான பிரதிபத்தியாலே ஆஸ்ரயிக்கும் அவர்கள் என்னுதல் —
யோகு -யோகம் -உபாயம் –
பால் நிறக் கடல் கிடந்த பத்ம நாபன் அல்லையே –
தேவரீர் திருமேனிக்கு பரபாக ரூபமான நிறத்தை உடைத்தான கடலிலே ஜகத்துக்கு-உத்பாதகன் என்று -தோற்றும் வடிவோடே கண் வளர்ந்து அருளுகிற பத்மநாபன் அல்லையோ
நல்ல யோகினால் -என்கையாலே –
வாக்யார்த்த ஜ்ஞானம் என்ன -சர்மா ஜ்ஞான சமுச்சயம் என்ன -இவற்றை மோஷ
சாதனம் என்கிற குத்ர்ஷ்டிகளில் வைதிகருக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்லுகிறது –
உலாய சீர் -என்று அதிகாரி விசேஷணம் ஆகவுமாம் –
உலாய சீர் -பத்ம நாபன் -என்று அந்வயிக்கவுமாம் -அப்போது –விதித –என்கிறபடியே-கல்யாண குண யுக்தனான ஜநகன் என்கிறது –
———————————————————————————————

24 பாட்டு –அவதாரிகை –
பரம பாவநனுமாய் -நிரதிசய போக்யனுமாய் -போக்தாக்களை காத்தூட்ட வல்ல
பரிகரத்தையும் உடைய தேவரீர் -ஆஸ்ரித ரஷணத்துக்கு அநுரூபமாக திவ்ய
விக்ரஹத்தை அழிய மாறி வந்து தோற்றின இவ் வேற்றத்தை
நித்யசூரிகள் அறிதல் –
பிராட்டி அறிதல் -ஒழிய
வேறு யார் அறிய வல்லார் என்று பின்னையும் அந்த நரசிம்ஹ வ்ருத்தாந்தத்தில் ஈடுபடுகிறார் –

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர்
மங்கை மன்னு வாழு மார்ப வாழி மேனி மாயனே –24

வியாக்யானம் –

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே –
குரு பாதகனான ருத்ரனுக்கும் சக்தியைப் பிறப்பிக்கும் அக் கங்கைக்கும் உத்பாதகனாய் –
சுத்தி உக்தருக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை உடைய என் நாதனே –
அச்ப்ர்ஷ்ட சம்சார தோஷரான நித்யருக்கும் முக்தருக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளை உடையவன் என்கை –
இப்போது –அண்ணல் -என்றது -இவ்வர்த்தத்தை தமக்கு நிர்ஹேதுகமாக பிரகாசிப்பித்த
உபகார ச்ம்ர்தியாலே என் நாதனே -என்கிறார் –

அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் –
அத திருவடிகளை அனுபவிக்க இழிந்தாருக்கு விரோதிகளை அழியச் செய்யும் திவ்ய
ஆயுதங்களை -எப்போது யாருக்கு என் வருகிறதோ என்று சர்வதா தரித்து நிற்குமவனே
தனக்கு தானே ஆபரணமான திருக்கையில் திருவாழி தொடக்கமான ஸ்ரீ பஞ்சாயுதங்களை
தரித்த இதுவும் திருவடிகளோபாதி தமக்கு போக்யமாய் இருக்கிறது ஆய்த்து

சிங்கமாய தேவ தேவ –
அத் திவ்யாயுதங்கள் அசத் சமமாம் படி வரம் கொண்ட ஹிரண்யனை நக ஆயுதமான
சிம்ஹமாய் அழியச் செய்த ஆஸ்ரித பஷபாதத்தாலே நித்ய சூரிகளை எழுதிக் கொண்டவனே –
திவ்ய மங்கள விக்ரஹத்தின் சுவடு அறியும் நித்ய சூரிகளுக்கு இறே அவ்வடிவையும் அழிய மாறி
ரஷித்த ஆஸ்ரித பஷபாதத்தின் எல்லை தெரிவது
தேனுலாவு மென் மலர் மங்கை மன்னு வாழு மார்ப –
செவ்வியையும் மென்மையையும் உடைத்தான தாமரையில் பிறப்பாலும் பருவத்தாலும்
நிரதிசய போக்யையான பிராட்டி நித்ய வாஸம் பண்ணி அனுபவிக்கும் திரு மார்பை உடையவனே –
இப்போது -அகலகில்லேன் -என்று சாமான்யம் அன்றிக்கே ஹிரண்யனை அழியச் செய்த வீரத்தாலே
பர்த்தாரம் பரிஷஸ்வஜே -என்கிறபடியே இவ்வடிவிலே பிராட்டி அத்ய ஆதாரம் பண்ணின
படியைச் சொல்லுகிறது –
இத்தால் -நித்ய சூரிகள் அளவும் அன்றிக்கே தலைநீர்ப் பாட்டில் அனுபவிக்கும் பிராட்டியும்
இவ் வாஸ்ரித பஷபாதத்துக்கு தோற்று இருக்கும்படியை சொல்லிற்று ஆய்த்து –
என்னடியார் அது செய்யார் -என்று இறே அவன் படி இருப்பது
வாழி மேனி மாயனே —
கடல் போலே ஸ்ரமஹரமான திருமேனியை உடைய ஆச்சர்ய பூதனே
ஹிரண்யனுக்கு அநபிபவநீயமான அவ்வடிவு தான் ஆஸ்ரிதருக்கு ஸ்ரமஹரமான படியைச் சொல்லுகிறது –

—————————————————————————————————-

25 பாட்டு –அவதாரிகை –

அநந்ய பிரயோஜனனான பிரகலாதனுடைய விரோதியைப் போக்கினபடியை
அநுபாஷித்துக் கொண்டு -அவனுடைய அளவு அன்றிக்கே -பிரயோஜனாந்தர  பரரான-இந்திரனுக்காக அர்த்தியாயும் -அவ்வளவும் புகுர நில்லாதே  விமுகரான சம்சாரிகளை-பிரளய ஆபத்தில் திரு வயிற்றில் வைத்து ரஷித்த இவ் வாபத் சஹத்வத்தை-அறிய வல்லார் யார் -என்கிறார் –

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-

வியாக்யானம் –

வரத்தினில் சிரத்தை மிக்க –
தனக்கு தந்த வரத்தில் -அத்ய ஆதரத்தைப் பண்ணி -வரப்ரதானனான ப்ரஹ்மாவுக்கு
உத்பாதகன் ஆனவனோடே விரோதித்து -அவனாலே உத்பன்னனான ப்ரஹ்மா தனக்கு
தந்த வரத்திலே இறே மிக்க சிரத்தையைப் பண்ணிற்று -கோயம் விஷ்ணு -என்றான் இ றே –
தன் வரத்துக்கு புறம்பான வடிவு கொள்ள வல்லை என்று உன்னை அறியாதே வரத்தையே
விஸ்வசித்து இருந்தவன் –
வாள் எயிற்று –
வாள் போலே இருக்கிற எயிற்றை உடையவன் -இத்தால் ஹிரண்யன் உடைய புஜ
பலத்தை சொல்லிற்று -வர பலத்துக்கு புறம்பான வடிவு கொண்டாப் போலே புஜ
பலத்தை அழிக்க வல்ல சர்வ சக்தி என்று அறிந்திலன் -உன்னை அறியாதே வர பல புஜ-பலங்களை விஸ்வசித்து இருந்த மதி கேடன்
மற்றவன் –
சத்ருவானவன் –
சம்பந்தம் ஒத்து இருக்க –மற்றவன் -என்கிறது -ஆஸ்ரித சத்ருவே தனக்கு சத்ரு என்னும் நினைவாலே
உரத்தினில் –
துர் மாம்சம் இருந்த விடத்தை கொட்டம் இடுவாரைப் போலே துர்மானம் கிடந்த மார்விலே
கரத்தை வைத்து –
அப்யேஷ ப்ர்ஷ்டே மம ஹச்த பத்மம் கரிஷ்யதி -என்று அக்ரூராதிகளுக்கு ஜீவன ஹேதுவாய்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று ப்ரணயிநிக்கு போக்யமாய் இருக்கும்
திருக் கையை துஷ் பிரக்ருதியான அவனுடைய திண்ணிய மார்விலே வைத்து –
உகிர் தலத்தை ஊன்றினாய் –
வர பலத்துக்கு புறம்பான வத சாதனமாய் அத்யந்தம் ஸூகுமாரமான உகிராலே
அநாயாசேந கொன்றாய்
தலம் -நிலமும் இதழும்
இரத்தி நீ-
ஹிரண்யனில் காட்டில் தத் சந்தாஜனான மஹாபலி பக்கல் ஔ தார்யம் குணம் என்பதொரு
குணம் உண்டாகையாலே அர்த்தித்வத்திலே இழிந்தாய்
இரத்தி நீ –
சர்வ சக்தியாய் அவாப்த சமஸ்த காமனான நீ
அலம் புரிந்த நெடும் தடக்கையாலே இரப்பதே –
ஹிரண்யனுக்காக உடம்பை அழிய மாறினாய்
பிரயோஜநாந்த பரனான இந்த்ரனுக்காக உனக்கு நிரூபகமான ஔ தார்யத்தை அன்று அழிய மாறிற்று –
இது என்ன பொய் –
உன்னது அல்லாத ஒன்றை அர்த்தித்தாய் ஆகிலே இ றே உன் அர்த்தித்வம் மெய்யாவது
தன்னது ஒன்றை தந்தான் ஆகில் இ றே மஹாபலி ஔ தார்யம் மெய்யாவது –
இது பொய் என்னாதே- இது என்ன பொய் -என்றது அர்தித்வ பலமான த்ரைவிக்ரம
அபதாநத்தை சுருதி ஓதா நின்றது -யத்ராம் புவின் யஸ்ய -என்று ஔதார்யத்துக்கு பலமாக
மஹாபலிக்கு இந்திர பதத்தை சொல்லா நின்றது -ஆக பிரமாணங்களாலே பொய் என்ன ஒண்ணாது-

தன்னத்தை அவனதாக்கிக் கொண்டு இரக்கையாலும் -மகாபலி அவனத்தை தன்னதாக்கிக்
கொடுக்கையாலும் மெய் என்ன ஒண்ணாது -ஆகையாலே –இது என்ன பொய் –என்கிறார்
யிரந்த மண் வயிற்றுளே கரத்தி –
அர்த்திதுப் பெற்ற பூமி என்று பிரளய ஆபத்திலே ஆபத்தே ஹேதுவாக திரு வயற்றிலே
ஒளித்து வைத்து ரஷித்து
யுன் கருத்தை யாவர் காண வல்லர் –
உன் நினைவை யாவர் காண வல்லர் –
அநந்ய பிரயோஜனனான பிரகலாதனோடு -பிரயோஜநாந்த பரனான இந்த்ரனோடு விமுகரான
சம்சாரிகளோடு வாசியற ரஷிக்கிற உன் நினைவை ஜ்ஞானாதிகர் ஆர் தான் அறிய வல்லார்
கண்ணனே —
கிருஷ்ணனாய்  வந்து அவதரித்து இடக்கையும் வலக்கையும் அறியாத இடையரையும்
பசுக்களையும் ரஷித்து உன்னை ஒழியச் செல்லாதபடி பண்ணி
அவர்களுக்கு நியாம்யனான நீயே அருளிச் செய்ய வேணும் என்று கருத்து –

——————————————————————————————-

26 பாட்டு –அவதாரிகை –

சர்வ நிர்வஹானான நீ ஸூரி போக்யமான வடிவை ஆஸ்ரித அர்த்தமாக தேவ
சஜாதீயம் ஆக்கியும் கோப சஜாதீயம் ஆக்கியும் அவதரித்துப் பண்ணின ஆச்சர்யங்களை
ஆர் அறிய வல்லார் என்கிறார் -வாமன அவதாரத்தோடே கிருஷ்ண அவதாரத்துக்கு
ஒரு வகையில் சாம்யம் சொல்லலாய் இருக்கை யாலே இரண்டு அவதாரத்தையும்
சேர்ந்து அனுசந்திக்கிறார் –

ஆணினோடு பெண்ணுமாகி அல்லாவோடு நல்லவாய்
ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப்
பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே –26-

வியாக்யானம் –

ஆணினோடு பெண்ணுமாகி –
ஜன்ய ஜனந பாவத்தாலே ஜகத்து விச்த்ர்த்தமாய் வேணும் என்று ஸ்த்ரீபும் விபாகத்தாலே
ஸ்ருஷ்டித்தும் -அந்யோந்யம் சம்பந்தித்தும் -சம்ஸ்ர்கிர்பித்தும் இப்படி அந்தர் ஆத்மதயா
நின்று -நிர்வாஹனாய் –
அல்லவோடு –
ஒன்றுக்கும் உடல் அன்றிக்கே இருக்கிற நபும்சக பதார்த்தத்துக்கு நிர்வாஹகனாய்
நல்லவாய்
இந்த விரகத்ரய விசிஷ்ட பதார்தங்களிலே விலஷண பதார்த்தங்களுக்கு நிர்வாஹகனாய்
வைலஷண்யம் ஆவது -புருஷார்த்த ருசி உண்டாகை

அவர்களுக்கு நிர்வாஹகன் ஆகை யாவது -ததாமிபுத்தி யோகாந்தம் -என்கிறபடியே
புருஷார்த்த சாதன பூதனாகை
ஊணோடு ஓசை யூறுமாகி –
புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு போக்யமான சப்தாதிகளுக்கு கர்ம அநுகூலமாக
நியாமகனாய் -ரச சப்த ஸ்பர்சமான -இவை மூன்றும் அஞ்சுக்கும் உப லஷணம் –
ஒன்றலாத மாயையாய் –
இவற்றினுள்ளே ஒன்றுக்கு காரணமான அளவு அன்றிக்கே -உக்தங்களோடு அனுக்தங்களோடு
வாசியற சர்வமுமாய்க் கொண்டு பரிணமிக்க வல்ல பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
மாயாந்து ப்ரக்ர்திம் வித்யாத் -என்னக் கடவது இ றே
மாயை -என்று ஆச்சர்ய வாசியாய் ஒன்றுக்கு நிர்வாஹகனாம் அளவு அன்றிக்கே
சகல பதார்த்தங்களையும் சேதனனுடைய கர்ம அநுகூலமாக நிர்வஹிக்க வல்ல
ஆச்சர்யத்தை உடையவன் என்னவுமாம் –

பூணி பேணு மாயனாகி –
இப்படி சங்கல்பத்தாலே சகலமும் நிர்வஹிக்கிற நீ ஆஸ்ரித பரித்ராணார்த்தமாக
அசாதாராண விக்ரஹத்தை கோப சஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்து -உன்னைப்
பேணாதே பசுக்களைப் பேணும் இடையனாகி –

பொய்யினோடு மெய்யுமாய் –
அவதரித்து ரஷிக்கும் போது அநாஸ்ரிதரான துர் யோநாதிகள் பக்கலிலே பொய்யையும்
ஆஸ்ரிதரான பாண்டவர்கள் பக்கலிலே மெய்யையும் உடையையாய்
காணி பேணு மாயையாய்
மகாபலியாலே அபஹ்ர்தமாய் பூமியைப் பேணி தன்னைப் பேணாதே ப்ரஹ்மசாரியாய்
கரந்து சென்ற கள்வனே –
மறைத்துக் கொண்டு சென்ற க்ர்த்ரிமனே
மறைத்துக் கொண்டு செல்கையாவது -ஐஸ்வர்யமான வைபவம் தோற்றாமே -பூமியை
மகாபலியதாக்கி அர்த்தியாய்ச் செல்லுகை
க்ர்த்ரிமன் ஆகையாவது -சுக்ரன் வார்த்தை செவிப்படாதபடி -அழகாலும் -சீலத்தாலும் –
மகாபலியை வசீகரித்து சிறு காலைக் காட்டி பெரிய காலால் அளந்து கொள்ளுகை
கரந்து சென்ற கள்வனே –
உன்னை யார் மதிக்க வல்லர் -என்று மேல் பாட்டோடே அந்வயம் –

——————————————————————————————–

27 பாட்டு –அவதாரிகை –

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27

வியாக்யானம் –

விண் கடந்த சோதியாய் –
விபுவான மூல ப்ரகர்தி உனக்குள்ளே யாம்படியான ஸ்வரூப வைபவத்தை உடைய ஸ்வயம்
பிரகாச வஸ்துவாய் –சுரர் அறி வரு நிலை விண் -என்று மூல பிரக்ர்தியை விண் என்ற சப்தத்தால்
சொல்லிற்று இ றே -இது தனக்கு அடி கார்கி வித்யையில் -ஆகாசே ஓதஞ்சப் ரோதஞ்ச –
என்கிறபடியே விபுத்வ சூஷ்மத்வங்களைச் சொல்லிற்று

பண் கடந்த தேச மேவு பாவ நாச நாதனே –
வேதத்தாலே பரிச்சேதிக்க ஒண்ணாத தேஜஸ்சையே ஸ்வரூபமாக உடையையாய் –
ஹேய பிரத்யநீகனான சர்வேஸ்வரனே
வேதம் ஸ்வர பிரதானம் ஆகையாலே தத்வாசி சப்தத்தாலே வேதத்தை சொல்லுகிறது
சேதன அசேதனங்களை வியாபித்து நிற்கச் செய்தேயும் -தத்கத தோஷ ரசம் அச்ப்ர்ஷ்டன் ஆகையாலும்
அசித் சம்சர்க்கத்தாலே சேதனனுக்கு வந்த தோஷத்தை போக்க வல்லன் ஆகையாலும்
ஹேய பிரத்யநீகன் என்கிறது

எண் கடந்த யோகினோடு –
அசங்க்யாதமான கல்யாண குணங்களோடு கூட –யோகு -யோகம் -அதாகிறது கல்யாண குண யோகம் –
பஸ்யமே யோகே ஐஸ்வரம் -என்று யோக சப்தத்தாலே குண யோகத்தை சொல்லிற்று இ றே
இரந்து சென்ற மாணியாய் –
இரப்பிலே தகண் ஏறினவன் என்று தோற்ற வாமன வேஷத்தைக் கொண்டு அர்த்தியாய்ச் சென்று –
மண் கடந்த வண்ணம் –
பூமியை அளந்து கொண்ட பிரகாரத்தை –
அதாகிறது -இந்தரனுக்கு மகாபலியாலே அபஹ்ர்தமான ராஜ்யத்தை வாங்கிக் கொடுக்க -என்கிற
வ்யாஜத்தாலே வசிஷ்ட சண்டாள விபாகம் அற சதுர்தச புவன அந்தர்கதமான சேதனர்
தலைகளிலும் திருவடிகளை வைக்க –
நின்னை –
சேதன அசேதன விலஷணமாய் -வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வரூப வைலஷண்ய
வைபவத்தை உடையையாய் -அதுக்கு மேலே குண ப்ரேரிதனாய்க் கொண்டு பூமியை
அளந்து கொண்ட உன்னை –
ஆர் மதிக்க வல்லரே –
பரிச்சேதிக்க வல்லார் ஆர்

வேதங்களாலே பரிச்சேதிக்கலாமோ –
ஜ்ஞாநாதிகரான வைதிகரால் தான் -பரிச்சேதிக்கலாமோ-
அம்மேன்மையை பரிச்சேதிக்கவோ –
அந் நீர்மையை பரிச்சேதிக்கவோ —
எத்தை யார் பரிச்சேதிக்க வல்லார் –
அதவா
விண் கடந்த சோதியாய் –
பரம பதத்துக்கு அவ்வருகாய் ஸ்வயம் பிரகாசமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை உடையையாய்
இத்தால் த்ரிபாத் விபூதியும் தனக்குள்ளே யாம்படியான ஸ்வரூபவைபவத்தை சொல்லுகிறது
விளங்கு ஞான மூர்த்தியாய்
ஞானம் விளங்குகிற மூர்த்தியை உடையையாய் -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக
உடைய ஜ்ஞானத்துக்கு பிரகாசமான திவ்ய விக்ரஹத்தை உடையையாய்
இந்த ஜ்ஞானம் ஷட் குணங்களுக்கும் உப லஷணம் –ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் –
என்னக் கடவது இ றே

பண் கடந்த தேசு பாவ நாச நாதனே –
சுருதியால் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனாய்
சம்சாரிகளுடைய தோஷத்தை போக்க வல்ல ஹேய பிரத்யநீகத்தை உடைய சர்வேஸ்வரனே
எண் கடவ யோகினோடு –
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ருயதே -என்கிறபடி அபரிச்சின்னமாய் -அசங்க்யாதமான-
ஆச்சர்ய சக்தி யோகத்தை உடையையாய் கொண்டு
மாணியாய் இரந்து சென்று –
அதீந்த்ரியமாய் அபரிச்சின்னமான திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிச்சின்னமாக்கி
மகாபலி உடைய சஷூர் விஷயமாக்கி அர்த்தியாய் சென்று –
மண் கடந்த வண்ணம் –
மூன்றடியை அர்த்தித்து -இரண்டு அடியாலே சகல லோகங்களையும் அளந்து கொள்ளுகையும்
சிறு காலைக் காட்டி பெரிய காலால் அளந்து கொள்ளுகையுமாகிற இப்ப்ரகாரத்தை உடைய
நின்னை
அபரிச்சின்னமான ஸ்வரூப வைபவத்தை உடையையாய்
அந்த ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசமான திவ்ய விக்ரஹ உக்தனாய்
வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தை வாஸஸ் ஸ்தானமாக உடையையாய்
உன்னுடைய ஆச்சர்ய சக்தி ப்ரேரிக்க -அத்தால் ப்ரேரிதனாய் வந்து -பூமியை அளந்து கொண்ட உன்னை
ஆர் மதிக்க வல்லரே –
இவற்றை ஒன்றை ஒருத்தராலே பரிச்சேதிக்கப் போமோ –

———————————————————————————————

28 பாட்டு –அவதாரிகை –
சங்கல்ப லேசத்தாலே அண்ட காரணமான ஜல சிருஷ்டி முதலான சகல ஸ்ர்ஷ்டியும் பண்ணக் கடவ நீ –
ஸ்ரஷ்டமான ஜகத்திலே ஆஸ்ரித ரஷ்ண அர்த்தமாக உன்னை அழிய மாறி அநேக
அவதாரங்களைப் பண்ணியும் -ஆஸ்ரித விரோதிகளான துர் வர்க்கத்தை திவ்ய
ஆயுதங்களாலே கை தொட்டு அழிக்கையும் ஆகிற இவ் வாச்சர்யங்களை ஒருவரும்
அறிய வல்லார் இல்லை என்கிறார் -ஒருத்தரும் நின்னது தன்மை இன்னதென்னெ வல்லரே –
என்கிற மேலில் பாட்டில் க்ரியை இதுக்கும் க்ரியை –

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-

வியாக்யானம் –

படைத்து பார் இடந்து –
பௌவ நீர் -படைத்து பார் இடந்து –என்று அந்வயமாகக் கடவது –
அபயேவ ஸ சர்வஜா தெவ் -என்கிறபடியே -அண்ட காரணமான -ஏகார்ணவத்தை
சங்கல்ப லேசத்தால் சிருஷ்டித்து -ஜகத் காரணமான அண்டத்தையும் -அண்டாதிபதியான ப்ரஹ்மாவையும்
சிருஷ்டித்து -ப்ரஹ்மாவாலே ஸ்ரஷ்டமான பிரளய ஆர்ணவத்திலே அந்தர்பூதையான
பூமியை -ஸூரி போக்யமான திவ்ய விக்ரஹத்தை வராஹ சஜாதீயமாக்கி அண்ட புத்தியிலே
புக்கு இடந்து எடுத்து -இது சங்கல்ப்பத்தாலே செய்ய முடியாதது ஓன்று அன்றே –
சம்சார பிரளய ஆபத்தில் நின்றும் எடுப்பவன் இவனே -என்று ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக இ றே
அளந்து –
அதுக்கு மேல் -மகாபலியாலே அபஹ்ர்தமான பூமியை -ஸ்ரீ வாமனனாய் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –
இதுவும் தன்னுடைமை பெறுகைக்கு தானே அர்த்தியாய் வருமவன் என்று ஆஸ்ரிதர்
விஸ்வசிக்கைகாக
அது உண்டு உமிழ்ந்து –
நைமித்திக பிரளயம் வர வட தள சாயியாய் -தன்னுடைய சிறிய வயிற்றில் த்ரிலோகத்தையும்
வைத்து ரஷித்து -உள்ளே இருந்து நோவு படாமல் -அவற்றை உமிழ்ந்து –

இதுவும் சங்கல்பத்தால் -அப்படி செய்ததும் சர்வ சக்தி என்றும் -உரு வழிந்த பதார்த்தங்களை
உண்டாக்குமவன் என்றும் –ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக -பௌவ நீர் படைத்து அடைத்து –
என்று இங்கேயும் அந்வயிக்கக் கடவது –
அண்ட காரணமான ஏகார்ணவத்தை சங்கல்ப லேசத்தால் ஸ்ர்ஷ்டித்த நீ அண்ட அந்தர்வர்த்திகளான
சமுத்ரங்களில் ஒரு சமுத்ரத்தை வருணனை சரண் புக்கு படை திரட்டியும் அடைத்து -இதுவும்
ப்ரணியி நி யுனுடைய விச்லேஷத்தில் தேவரீர் உடைய ஆற்றாமை பிரகாசிப்பித்த இத்தனை இ றே

முன் அதில் கிடந்த
ப்ரஹ்மாதிகள் ஆர்த்தரான தசையிலே தூரஸ்தராக ஒண்ணாது என்றும்
அபிமுகீ கரித்தாருக்கு அவதரித்து சுபாஸ்ர்யமம் ஆகைக்கும் திருப் பாற் கடலில்
கண் வளர்ந்து அருளி -ஜ்யோதீம் ஷி விஷ்ணு -என்கிறபடி சர்வருக்கும் சந்நிஹிதரான தேவரீர்
இப்படி செய்து அருளிற்று –ஆஸ்ரித ரஷணத்தில் சதோத்உக்தர் என்று தோற்றுகைக்காக இறே –
கடைந்த பெற்றியோய் –
துர்வாச சாபத்தால் தேவர்கள் இழந்த பதார்த்தங்கள் அடங்க கடலிலே உண்டாக்கிக் கொடுக்கைகாக
அக்கடலைக் கடைந்த மஹா பிரபாவத்தை உடையவனே –பெற்றி -ஸ்வபாவம் –
இதுவும் ஆஸ்ரிதர் இழவுகளை தானே வ்யாபரித்து தீர்க்கும் என்று தோற்றுகைகாக –
மிடைத்த மாலி –
கோபித்த மாலி
மாலிமான் விலங்கு –
பெரு மிடுகனான ஸூ மாலியான திர்யக்
திர்யக் ப்ரவர்தனான ஸூ மாலி -என்னவுமாம்-
காலனூர் புகப் படைக்கலம் விடுத்த –
அவர்களையும் அப்புறத்திலே புகும் படி ஆயுதத்தை ஏவினவன் -இத்தால் ஆஸ்ரித
விரோதிகளை அழியச் செய்யும் இடத்தில் சங்கல்பத்தால் அன்றிக்கே கை தொட்டு
ஆயுதத்தால் அழிக்குமவன் என்கிறது –
பல் படைத் தடக்கை மாயனே —
பின்பு விரோதி நிரசநத்து ஈடான அநேக ஆயுதங்களை உடைத்தாய்
அவ்வாயுதங்களுக்கு ஸத்ர்சமான சுற்றுடைதான திருக்கையை உடைய ஆச்சர்ய பூதனே –

——————————————————————————————

29 -பாட்டு –அவதாரிகை

கீழில் பாட்டில் -மநசைவ ஜகத் ஸ்ர்ஷ்டிம் -என்கிறபடியே சங்கல்ப லேசத்தாலே ஜகத் ஸ்ர்ஷ்டி
சம்ஹாரங்களைப் பண்ண வல்லவன் -ஆஸ்ரித அனுக்ரஹங்கத்தாலே எளிய கார்யங்களுக்கு
அநேக விக்ரஹ பரிக்கிரஹங்களைப் பண்ணி ரஷிக்கும் என்கிறது
இதில் –
இவ் வனுக்ரஹத்துக்கு ஹேது1- சர்வாதிகத்வத்தால் வந்த பூர்த்தியும்
2-ஸ்ரீயபதித்வத்தால் வந்த நீர்மையும் –
3-அவர்ஜநீயமான சம்பந்தமும் -என்றும் –
4-அனுக்ரஹ கார்யம் வியூக விபவாத்யவதாரங்கள் என்றும் சொல்லி —இப்படி பட்ட அனுக்ரஹம்-ஏவம்விதம் என்று பரிச்சேதிக்க ஒண்ணாது என்கிறார் –

பரத்திலும் பரத்தையாதி பௌவ நீர் அணைக் கிடந்தது
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி யாயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே –29

வியாக்யானம் –

பரத்திலும் பரத்தையாதி –
பர பராணாம் பரம -என்கிறபடியே த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகான
ஸ்வரூப வைலஷண்யம் உடையையாய் –
அநந்தரம் –உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது-என்கிற இது அந்விதமாக கடவது –
கீழ் சொன்ன ஸ்வரூப வைலஷண்யத்துக்கும் -அவ்வருகான உத்கர்ஷத்துக்கும் ஹேதுவாய்
இ றே ஸ்ரீ ய பதித்வம் இருப்பது –
உரத்திலும் –
சப்தத்தாலே -ஸ்வரூப அந்தர்பாவத்தையும் சமுச்சயிக்கிறது -அதுக்கே மேலே மகிஷி
வர்க்கத்தையும் வ்யாவர்த்திக்கிறது
ஒருத்தி –
அத்வதீயை -வடிவிணை இல்லா மலர் மகள் -அதாகிறது த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும்
ஸ்வாமிநியாய -சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் இருக்கை

தன்னை வைத்து
அகலகில்லேன் இறையும் -என்று மேல் விழக் கடவ இவள் தன்னை தான் -இறையும்
அகலகில்லேன் -என்று திரு மார்விலே வைத்து –
உகந்து –
துலய சீல வயோ வர்த்ததையாய் இருந்துள்ள அவளோடே சம்ச்லேஷ ரசங்களை
அனுபவிக்கிற நீ –
பௌவ நீர் அணைக் கிடந்த –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம் -பிராட்டி பக்கல் ப்ரீதிக்கு போக்குவீடாய் இ றே -இருப்பது
ஆர்த்த ரஷணத்துக்கு அநிருத்த ரூபியாய்க் கொண்டு -ஷீராப்தியிலே நீரே படுக்கையாகக்
கண் வளர்ந்து அருளி -தாபார்த்தோ ஜல சாயி நம் -என்கிறபடியே தாபார்த்தருக்கு
கொண்டு அபேஷா நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை -சொல்லுகிறது
இது சங்கர்ஷன பிரத்யும்ன வ்யூஹங்களுக்கும் உப லஷணம்
அதன்றியும் –
சம்சாரத்தில் அசித் கல்பமாய்க் கிடந்த சேதனருக்கு ரூப நாமங்களைக் கொடுத்தும்
சாஸ்திர ப்ரதா நாதிகளைப் பண்ணியும் -ப்ரஹ்மாதிகளுடைய ஆர்த்திகளைப்
பரிஹரித்தும் -இப்படி ரஷித்து ப[ஒந்த வ்யூஹ அவதாரங்களிலே தேவரீர் உடைய அனுக்ரஹம்
பர்யவசியாமையாலே -அதுக்கு மேலே –
நரத்திலும் பிறத்தி –
சர்வ கந்த -என்கிற நீ ப்ரஹ்மாதிகளுக்கும் குத்ஸா விஷயமான மனுஷ்ய யோநிகளிலே
தத் சஜாதீயனாய்க் கொண்டு ராம கிருஷ்ணாதி ரூபத்தாலே வந்து அவதரித்து -இது தேவ
யோநி யிலும் திர்யக் யோநியிலும் உண்டான அவதாரங்களுக்கும் உப லஷணம்

ஸூர நரதி ரச்சாமவதரன் -என்னக் கடவது இ றே
நாத –
இப்படி விஸத்ர்சமான தேவ யோநியிலே வந்து அவதரிக்க வேண்டுகிறது -இவற்றை
உடையவன் ஆகையாலே
ஞான மூர்த்தி யாயினாய் –
ஜ்ஞான ஸ்வரூபன் ஆயினாய் -இப்போது ஞாநாதிக்யம் சொல்லுகிறது -ரஷிகைக்கு
விரகு அறியுமவன் என்கைக்காக -ப்ராப்தி உண்டானாலும் விரகு அறியாத வன்று ரஷிக்க
போகாது இ றே -சாஸ்திர பிரதானம் என்ன -ஆசார்ய உபதேசம் என்ன -அழகு என்ன -சீலம் -என்னை
ஏவமாதிகளாலே ஆச்ரயண அநுகூலமான ருசியைப் பிறப்பிக்க வேண்டும்படி இ றே
சேதனனுடைய ப்ரக்ருதி பேதம் இருப்பது
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே –
வேதங்கள் என்ன –
ஜ்ஞாநாதிகரான வைதிகர் என்ன –
இவர்கள் ஒருத்தரும் உன்னுடைய அனுக்ரஹத்தினுடைய எல்லையை ஏவம் விதம்
என்று பரிச்சேதிக்க வல்லரோ –தன்னை அழிய  மாறி -பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளும்
சம்சாரிகளை -தன்னை அழிய மாறி ரஷிக்கிற அனுக்ரஹத்தை எவர் அறிய வல்லரே –

——————————————————————————————-
30 பாட்டு –அவதாரிகை

கீழில் பாட்டிலே நரத்தில் பிறத்தி -என்று மனுஷ்ய யோநியில் அவதாரங்கள்
ப்ரஸ்துதம் ஆகையாலும் -அதுக்கு கீழ் பாட்டிலே -அது உண்டு உமிழ்ந்து -என்று
வட தள சாயி அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலும் -வட தள சாயி உடைய
மௌக்த்யத்திலும் சக்தியிலும் -சக்கரவர்த்தி திருமகன் உடைய அவதாரத்தின்
மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யத்திலும் வீர ஸ்ரீ யிலும் ஈடுபடுகிறார் -இப்பாட்டில் –

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-

வியாக்யானம்

வானகமும் மண்ணகமும் –
ஸ்வர்க்க வாசிகளான இந்த்ராதி தேவர்களும் -அவர்களுக்கு போகய போக உபகரண
போக ஸ்தாநமான ஸ்வர்க்கம் தானும் –
பூமியில் உள்ள மனுஷ்யாதிகளும் -அவர்களுக்கு வாஸஸ்தானமான பூமியும் –
மஞ்சாக்ரோசந்தி -என்னுமா போலே தேச வாசி  சப்தத்தாலே -தைசிகரையும் சொல்லுகிறது
பிரளயத்தில் ஆபன்னர் ஆனார் தைசிகர் ஆகையாலே -இத்தால் –
பூமியில் உள்ளாருக்கு ஆராத்யராய் அவர்களுக்கு அபிமத பல ப்ரதருமான இந்த்ராதிகளோடே
ஆராதகரான மனுஷ்யாதிகளோடு வாசி யற பிரளய ஆபத்தில் வந்தால் எல்லாருக்கும்
ஒக்க ஈஸ்வர ஏக  ரஷ்ய பூதர் என்கிறது
வெற்பும் —
அந்த பூமிக்கு ஆதாரமாய் இருந்துள்ள சப்த குல பர்வதங்களும்
இத்தால் -ஆதாரமான குல பர்வதங்களோடே ஆதேயமான பூமியோடு வாசி யற
எல்லாவற்றுக்கும் தத் காலத்திலே ஈச்வரனே அதார்சம் என்கை
வெற்பு -என்று ஸ்தாவர ஜாதிக்கும் உப லஷணம்
ஏழ் கடல்களும் –
த்வீபங்களுக்கு பேதகமான சப்த சமுத்ரங்களும் -அத்தாலே -ஜலவாசி சத்வங்களையும் சொல்லுகிறது
ஆக
ஆராய்த்ரனா இந்த்ராதிகளோடே -ஆராதகரான மனுஷ்யர்களோடே -தாரகங்களான
பர்வதங்களோடு -தார்யையான பூமியோடு -சமுத்ரங்களோடு -ஜல சர தத்வங்களோடு –
வாசி யற எல்லாவற்றுக்கும் சர்வேஸ்வரனே ரஷகன் என்றது ஆய்த்து

போனகம் செய்து –
போனகம் செய்து -என்றது -ரஷகனுக்கு ரஷக தர்மம் பசியருக்கு சோறு போலே அபிமதமாய் இருக்கை -என்கை –
யஸ்ய ப்ரஹ்ம சஷத்ரஞ் சொபே பவத ஒதனம் -என்றும் -அத்தா சராசர க்ரஹணாத்
ஆலிலைத் துயின்ற –
அவ்வடிவுக்கு அளவாய் தன் சௌகுமார்யத்துக்கு சேர்ந்த ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளின –
புண்டரீகனே –
புண்டரீக அவயவனே –
செங்கனிவாய்ச் செங்கமலம் கண் பாதம் கை கமலம் -என்கிறபடியே திவ்ய அவயவங்கள் –
அப்போது அலர்ந்த செந்தாமரைக் கண்கள் போலே இருக்கையாலே புண்டரீக சப்த வாச்யன் என்கிறது –
த்ரை லோக்ய ரஷணத்தால் வந்த ப்ரீதி திரு வடிவிலே தோற்றி இருக்கிறபடி –

தேனகம் செய் –
உள்ளெல்லாம் வண்டுகளாலே மிடைந்து இருக்கும் என்னுதல் –
மதுவாலே பூரணமாய் இருக்கும் என்னுதல் –
தண்ணறு மலர்த் துழாய் –
ஸ்ரமஹரமாய் -பரிமளிதமாய்ச் செவ்வியை உடைத்தான திருத் துழாய்
நன் மாலையாய் –
அவயவ சோபையைக் காட்டில் ஆகர்ஷமாய் இருக்கும் மாலை -என்னுதல்
ரஷணத்துக்கு இட்ட தனி மாலை யாகையாலே விலஷணம் -என்னுதல்
ஆக –
சத்தா ப்ரயுக்தமான சக்தி யதிசயத்தையும் -அவயவ சோபையையும் -அலங்கார
சோபையையும் அனுபவிக்கிறார்
கூனகம் புகத்தெறித்த –
கூனி உடைய கூன் உள்ளே அடங்கும்படி யாகச் சுண்டு வில்லைத் தெறித்த
இத்தால் -அவதாரத்தில் மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யமும் ரஷகமாய் இருக்கும் என்கை –
ரஷக வஸ்துவானால் அதில் உள்ளது எல்லாம் ரஷகமாய் இ றே இருப்பது
கொற்ற வில்லி யல்லையே —
வில் பிடித்த போது -அக்கையையும் வில்லையும் கண்ட போதே ராவணாதிகள் குடல்
குழம்பும்படியான வீர ஸ்ரீ யைச் சொல்லுகிறது –
கொற்றம் -வென்றியும் -வலியும்
புண்டரீகனே -கொற்ற வில்லி அல்லையே என்று அவதார அந்தரமாய் இருக்கச் செய்தேயும்
தரம்யைக்யத்தாலே -பால்ய யவன அத்யவஸ்தா விசேஷங்கள் போலே தோன்றுகிறது  ஆய்த்து
இவர்க்கு -இப்பாட்டு தொடங்கி மேல் -மாயம் என்ன மாயம் -என்கிற பாட்டளவும் வர
அதுவே க்ரியையாகக் கடவது –

—————————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருச்சந்த விருத்தம் -11-20-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 19, 2013

பதினோராம் பாட்டு -அவதாரிகை –
நசந்ந சாஸ் சிவ ஏவ கேவல -ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே -என்று ப்ரஹ்மாதிகளுக்கும் காரணத்வம் சொல்லுகிறது இல்லையோ என்ன –
உன்னால் ஸ்ருஷ்டரான உன் பெருமையை ஓரோ பிரயோஜனங்களிலே பேச
ஷமரும் அன்றிக்கே இருக்கிற இவர்கள் ஆஸ்ரயணீயராக ப்ரசங்கம் என்
கீழ்ச் சொன்ன காரண வாக்யமும் அவ் வஸ்துவைப் பற்ற அந்ய பரம் என்கிறார் –

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –-11-

வியாக்யானம் –

சொல்லினால் தொடர்ச்சி நீ –
சப்தத்தாலே சித்தமான புருஷார்த்தத்திலே இழிந்தாருக்கு அதிலே உறவு பிறப்பிப்பாயும் நீ –
தொடர் -உறவு -அதாவது ப்ரத்யட்ஷ விஷயமான சப்தாதிகளே புருஷார்த்தம் என்று இருக்கும் சம்சாரிகளை
ஒழிய வேதாந்த முகத்தாலே வேதைக ஸமதி கம்யமான வஸ்துவை அறிந்து அவ்வஸ்துவைப்
பெற ஆசைப்பட்டவர்களுக்கும் உபக்ர்ம தசையிலே ருசி ஜநகன் -ப்ரஹ்மாதிகள் ப்ரப்த்ரான
ஜநகர் அல்லாமையாலே  ருசி ஜநகரும் அல்லர்

சொலப்படும் பொருளும் நீ –
ஸ்ருதி ச்ம்ர்தியாதிகளிலே ஆஸ்ரயணீயாராகத் தோற்றுகிற தேவதைகளுக்கு ஆத்மாவும் நீ –
ஏநமேகேவ தந்த்யக்நிம் -என்றும் -சதுர்  ஹோதா ரோ யத்ர சம்பதம் கச்சந்தி -என்றும் –
யேய ஜந்தி -என்றும் –

சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ –
வேதாதந்தத்தால் பரிச்சேதிகப் படாது என்று தோன்றுகிற தேஜஸ் சப்த வாச்யன் நீ
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் –
அவிஜ்ஞா தம் விஜாந தாம -என்றும் –
யஸ்யாமதம் தஸ்யமதம் -என்றும் –
பரஞ்சோதி ரூப சம்பத்ய -என்றும் –
நாராயண பரஞ்சோதி
இத்யாதிகளிலே உன் ஸ்வரூபாதிகள் அபரிச்சிந்நங்கள் என்றும் –
பரஞ்சோதி சப்த வாச்யன் நீ என்றும் சொல்லப்படா நின்றது இறே

சொல்லினால் படைக்க-
யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோ தி தஸ்மை -நீ கொடுத்த வேதத்தை த்ர்ஷ்டியாகக் கொண்டு-
ஜகத் சிருஷ்டி பண்ணுவாராக -ஸ பூரி திவ்யாஹரத்

நீ படைக்க வந்து தோன்றினார் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்கிறபடியே நீ ஸ்ருஷ்டிக்க உன் திரு நாபீ
கமலத்திலே வந்து தோன்றின ப்ரஹ்மா முதலான தேவர்கள் –

சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே —
உன் குணங்களை அறிந்து -பரக்க பேச மாட்டாமை அன்றியே ஒரோ பிரயோஜனங்களிலே
சங்ஷேபேண உன் குணங்களைப் பேசவும் மாட்டார்
பரதவ சாதகமான குணங்கள் -ஜகத் காரணத்வ சாதகமான குணங்கள் -ஆஸ்ரித அர்த்தமான குணங்கள்
இவற்றிலே ஒரோ கோடியைக்  கரை காண மாட்டார்கள் –

—————————————————————————————–

பன்னிரண்டாம் பாட்டு -அவதாரிகை –
ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி
அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர்
நினைக்க வல்லார் என்கிறார் –

உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –12-

வியாக்யானம்

உலகு தன்னை நீ படைத்தி
அசித்தை உபகரணமாக கொண்டு ப்ராக்ர்த சிருஷ்டியைப் பண்ணின நீ ப்ரஹ்மாதி
சகல தேவதா அந்தர்யமியாய்க் கொண்டு சகல பதார்த்தங்களையும் சிருஷ்டியா நிற்றி

உள் ஒடுக்கி வைத்தி –

நித்ய நைமித்திகாதி பிரளய ஆபத்துக்களிலே நாம ரூபங்களை இழந்த பதார்த்தங்களை
உன் திரு வயிற்றில் வைத்து ரஷியா நிற்றி –
இத்தால் -சகல பதார்த்த சிருஷ்டிக்கும் கர்த்தாவாய் -சகல சம்ஹாரங்களிலும் ரஷகனாய் இருக்கிறான் –
அடியிலே பஹூஸ்யாம் -என்கிற ஜகத் உபாதான காரண பூதன் என்றது ஆய்த்து

மீண்டு உலகு தன்னுளே பிறத்தி
ஜகத் ஏக காரணத்வத்தால் வந்த வைபவத்தின் நின்றும் மீட்டு உன்னாலே ஸ்ருஷ்டமான
உலகத்திலே சில ஷேத்ரஞ்ஞருக்கு புத்ரனே வந்து அவதரியா நிற்றி –
மீண்டு –
அது போராமே திரியட்டும் என்றுமாம் -சகல பதார்த்தங்களுக்கும் ஜனகனான நீ
உன்னாலே ஸ்ர்ஜயனாய் இருப்பான் ஒரு ஷேத்ரஞ்ஞனை ஜனகனாகக் கொண்டு ஜனிப்பதே –
பிரளய ஆபத்திலே சகல பதார்த்தங்களையும் உன் திரு வயிற்றில் வைத்து ரஷித்த நீ
ஒரு ஸ்த்ரி வயிற்றில் கர்ப பூதன் ஆவதே

ப்ரீத்யாத்வம் தாரயே சாநம் தாத்மயே நாகிலம் ஜகத் -என்னக் கடவது இறே

ஓர் இடத்தை அல்லையால் –
ஓர் ஸ்தலத்தாய் என்று நிர்ணயிக்க ஒண்ணாத வனாகையாலெ ஒரு கோடியிலே
சேர்த்து அறியப் போகிறது இல்லை -அதாகிறது உபாதான காரணத் வத்தாலே புரை
இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது –
அவதாரத்தில் சஜாதீய பாவத்தில் புரை இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது –
இது என்னபடி என்கிறார் –

உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி
ஜகத்து உனக்கு சரீரம் ஆகையாலே உன்னை பிரியாதே நிற்க -அசாதாராண விக்ரஹ
உக்தனாய் கொண்டு வ்யாவர்த்தனாய் இருத்தி -அதாகிறது -விமுகரான காலத்திலே
ஆத்மாவே நின்று சத்தியை நோக்கியும் -அபிமுகீ கரித்த வன்று சுபாஸ்ரயன் ஆகைக்கு
அசாதாராண விக்ரஹ உக்தனாய் இருக்கும் என்கை -ஆகையால் ஒரு வகையாலும் பரிச்சேதிக்க
ஒண்ணாமையாலே

உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –
ஆச்சர்யமான படிகளை உடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறிய வல்லார் ஆர் –

சூழல் -சூழ்ச்சி –
—————————————————————————————

பதிமூன்றாம் பாட்டு -அவதாரிகை –
இவ் வவதார ரஹஸ்யம் ஒருவருக்கும் அறிய ஒண்ணாதோ என்னில் –
கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர -உன் வைலஷண்யம் காணும்
அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –13-

வியாக்யானம் –

இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் –
அவதரித்து நிற்கிற நிலையில் -அஜஹத் ஸ்வபாவங்கள் என்ன -சௌலப்யாதிகள் என்ன –
இவற்றிலே ஒரு கோடியிலே உன்னை பரிச்சேதிக்க புக்கால் ஏவம்விதன் என்று சொல்லல் ஆவது இல்லை –
ஆதி அம் ஜோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த
இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் –

அஜாயமானோ பஹுதா விஜாயதே தச்ய தீரா பரிஜாநந்தி யோனீம் (Purushasuktham)
“Although birthless, He takes many births. Only the enlightened ones understand His incarnations well.”
தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -என்கிறபடியே அவதார ரஹச்ய ஞானம் உடையவர்களும்
மிதுனமே ஆஸ்ரயணீயம் -என்று சஜாதீயரில் வ்யாவர்தனான உன்னை உபதேசிப்பார்கள் –
நேரிதான இடையை உடைய நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்று சொல்லுவார்கள்

யாதுமிட்டு –என்று கீழோடு கூட்டின போது சுபாஸ்ரயத்தை ஓதுகிற பிரகரணங்களில்
அங்குஷ்டமாத்ரேபுருஷோமத்யாஆத்ம நிதிஷ்டதி (Katha Upanishad 2-1-12) –
The Being (Purusha) of the size of the thumb resides in the body.
அங்குஷ்ட மாதரம் என்றும் –

அக் நிர் மூர்த்தோ சக்ஷுசி சந்ரே சூர்யோ திஷஸ்ரோத்ரோவாக்விவ்ருதாக்ஷ வேதா
வாயுப் ப்ராணோ ஹ்ருதயம் விஸ்வமச்ய பத்ப்யாம் ப்ருதுவீ ஹ்யேஷ சர்வபூதாந்தராத்மா (Mundaka Upanishad 2-1-4)
“For Him the heaven is the head, the moon and the sun are the two eyes, the directions are the two ears,
the revealed Vedas are the speech, air is the vital force, the whole Universe is the heart
and the earth is His feet. He is the indwelling Self of all”

அக்நிர் மூர்த்தா சஷு ஷீ சந்த்ர சூர்யௌ -என்கிறபடியே

த்ரைலோக்ய சரீரன் என்றும் -இத்யாதிகளில் சொல்லுகிற சுபாஸ்ரயங்களை அடங்க விட்டு –

தேவேத்யே தேவதேஹேயம் மனுஷ்வத்யே ச மானுஷீ
விஷ்னோ தேவேனரூபாம் வை கரோத்யேஷாத்மனஸ்தனும் (Vishnu Puranam 1-9-145)
” When the Lord takes avataara as deva, She takes form of the devas,
when He takes the human form She takes that of the human.
She makes her physical form suited to the avataara of Vishnu”
மனுஷ்யத்வே சமாநுஷீ -என்று கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீளா வல்லபனே –
சுபாஸ்ரயமம் என்பார்கள் –

உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் –
உன் நிமித்தமாக ஆஸ்ரிதருக்கும் அநாஸ்ரிதருக்கும் உண்டான விவாதத்தை

அனுசந்திக்கும் பண்டிதர்கள் -அதாகிறது –
பேருமோர் ஆயிரம் பிற பல உடைய வெம்பெருமான் -என்றாய்த்து ஆஸ்ரிதர் உடைய அறிவு
பேருமோர் உருவம் உளதில்லை -என்றாய்த்து அநாஸ்ரிதர் உடைய அறிவு –
இந்த விவாதத்துக்கு அடி நீ என்று அறியுமவர்கள்

பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும் நின்னை –
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கச் செய்தே -சர்வ விஸ ஜாதீயமான வைலஷ்ண்யத்தை உடைய
விக்ரஹம் என்ன -அவதாரத்தில் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
திருநாமங்கள் என்ன -அவதரித்த தேசப் பிரபாவம் என்ன -அவதார விக்ரஹத்துக்கு
நிதானம் என்ன -இவற்றை உடையனான உன்னை –
அதவா –
அவதார சமாப்தியில் விச்ரம ஸ்தலமான வ்யூஹ விக்ரஹங்கள் என்ன -தத் தத் குண
சேஷ்டித வாசகங்கள் ஆன திருநாமங்கள் என்ன -ஆமோதாதி வ்யூஹ நிதானங்கள் என்ன –
இவற்றுகடியான பரத்வம் என்ன -இவற்றை உடைய உன்னை என்றுமாம்-

யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே —
நீர்மையால் நினைக்கில் அல்லது ஆர் நினைக்க வல்லர் -உன்னுடைய
நீர்மையினால் நீ அறிவிக்க அறியும் அத்தனை  ஒழிய வேறு அறிய வல்லார் ஆர் -அதாகிறது –
பஹூ நி மேவ்ய தீதாநி -என்று தொடங்கி –ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்று நீ
அறிவித்தாப் போலே அறிவிக்க அறியும் அத்தனை –

பஹூனீமே வ்யதீதாநி ஜன்மாநி தவ சார்ஜுன –
“Many births of Mine have passed O’ Arjuna, and so it is with you also” (Geetha- 4-5)

ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத்த:
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைனி மாமேதி சோர்ஜுன
(Geetha 4-9) “He who thus knows in truth My divine birth and actions,
does not get rebirth after leaving the body; he will come to Me, O’Arjuna”

———————————————————————————————

பதினான்காம் பாடு -அவதாரிகை –
நம் அவதார ரஹச்யம் நீர் அறிந்த படி என் என்னில் –
பிரயோஜனாந்த பரர்க்காக திர்யக் சஜாதீயனாய் வந்து அவதரித்த உன் குணங்களை
பரிச்சேதித்து  அறிய மாட்டேன் ஆகிலும் -அவ்வடிவு வேதைக சமதிகம்யம் என்று
அறிந்தேன் என்கிறார் –

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14

வியாக்யானம்

தூய்மை யோகமாயினாய் –
அசித் சம்சர்க்கத்தாலே அசுதனான சம்சாரிக்கு உன் கிருபையாலே அசித் சம்சர்க்கத்தை
அறுத்து -நித்ய சூரிகளோடு சேர்த்து உன்னை அனுபவிக்க வல்ல சுத்தி யோகத்தை
உடையவனே -சம்சாரி சுத்தி யோகத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே -இத்தால் –
சம்சார உத்தரணத்துக்கு உபாயமும் நீயே என்கை –
ஹேய ப்ரத்ய நீகன் ஆனவனே இ றே -சேதனருக்கு சம்சாரம் ஆகிற அசுதியைப் போக்க வல்லான்
துழாய் அலங்கல் மலையாய் –
சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே
திருத் துழாய் -நாதத்வ சிஹ்னம் ஆகையாலும் -போஹ்யத்வ சிஹ்னம் ஆகையாலும்
ப்ராப்ய பூதனும் நீயே என்கை
ஆமையாகி –
பிரயோஜநாந்தர பரரான தேவர்களுக்கு அமர்த மதனதுக்கு அனுகூலமான கூர்ம வேஷத்தை கொண்டு

ஆழ் கடல் துயின்ற –
அகாதமான கடலிலே மந்த்ரம் அமிழ்ந்தாத படி உன் முதுகிலே அது நின்ற சுழலக் கண் வளர்ந்து அருளினவனே –
ஷீரோத மத்யே த்வபவத் கூர்ம ரூபீ ஸ்வயம் ஹரி -என்னக்  கடவது இறே

ஷீரோத மத்யே பகவான் கூர்ம ரூபீ ஸ்வயம் ஹரி
மந்தராத்ரேரதிஷ்டானம் ப்ரமதோபூன்மஹாமனே (Vishnu Puraanam 1-9-88)
“In the center of the ocean of milk, Lord Hari who assumed the form of the divine turtle Koorma
became the support of the Mandara mountain (during the churning)”

வாதிதேவ –
ஜகத்துக்கு நீயே காரண பூதன் என்னும் இடத்தை பிரகாசிப்பித்தவனே
பிரயோஜநாந்த பரர் என்று பாராதே அவர்கள் ஆபத்துக்கு உன்னை அழிய மாறி
உதவுகை யாகிற இது உத்பாதகர்க்கு அல்லது கூடுமோ என்கை
நின் நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும் –
கூர்ம ரூபியான தேவரீர் உடைய குண சேஷ்டிதங்களை  ஏவம் விதம் என்று
பரிச்சேதித்து சொல்ல மாட்டேன் ஆகிலும் –
நின்னாமதேயம் -என்று
வாச்யமான குண சேஷ்டிதங்களை தத் வாசகமான சப்தத்தாலே லஷிக்கிறது –
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே —
நீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான
அதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன் –

யஷோந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே -என்றும்

சவித்ர் மண்டலமத்யே வரதீ நாராயணா -த்ர்த சங்கசக்ர -என்றும் சொல்லக் கடவது இறே

ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே ஹிரண்மயஸ்மஸ்ருர்
ஹிரண்யகேஸ ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸுவர்ண: தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணி (Chandogyam 1-6 and 7)
“The Person seen seated in the center of the sun, who is beautiful like gold,
who has a golden beard and golden hair, every part of whose body from the nail upward is golden.
That Person has two eyes that are like the lotus blossomed by the sunrays”

த்யேயஸ் ஸதா சவித்ர் மண்டலமத்யே வரதீ
நாராயணாயஸ் சஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட
கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடி
ஹரீ ஹிரண்மயவபுர் -த்ர்த சங்கசக்ர (Narasimha PuraaNam)
“Narayana who is in the center of the sun, seated on the lotus, adorned by beautiful armlets,
ear rings, crown and garland, who has a golden physical form,
who carries the conch and the discus, is to be meditated upon always”

——————————————————————————————-

பதினைந்தாம் பாட்டு -அவதாரிகை –
வேதைக சமதிகம்யமான ஸ்வ பாவத்தை உடைய நீ ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக
அவதார கந்தமான திருப்பாற்கடலிலே கண் வளர்ந்து அருளுகிறது பர தசை என்னலாம்படி
அங்கு நின்றும் ஆஸ்ரிதர் உகந்த ரூபத்தையே உனக்கு ரூபமாகக் கொண்டு வந்து அவதரித்த
உன்னுடைய நீர்மையை ஒருத்தரால் பரிச்சேதிக்க போமோ என்கிறார் –

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-

வியாக்யானம் –

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று –
சீஷாத் யங்கங்கள் யாறும் –

சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம்

அஷரங்களை உச்சரிக்க வேண்டியதை சீஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யாயங்களை பாகுபடுத்தி வியாகரணம் சொல்லும்
அர்த்த விவேகம் நிருக்தம் சொல்லும்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும்

அங்கியான வேதங்கள் நாலும் -ஆகிற இவற்றுக்கு பிரவர்தகனாய் நின்று
அவற்றுளே தங்குகின்ற தன்மையாய் –
சாங்கமான வேதங்களினுள்ளே ப்ரமேயமாய் வர்த்திக்கிற ஸ்வபாவங்களை உடையவனே –

ஆகி நின்று அவற்றுளே –
நிர்தோஷ பிரமாணமாய் நின்றவற்றுள் என்னவுமாம்

சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம்
ஸோஅஸ்னுதே ஸர்வான் காமாந்சஹ ப்ரஹ்மணோ விபஸ்ஸிதேதி
(Taittiriya Upanishad –Anandavalli-1-2)
“Brahman is Existence, Intelligence, Infinitude; he who realizes Him treasured in the cave
(of his heart) together with the Omniscient Brahman fulfills all wants (experiences all auspicious gunas)”

வேத ப்ரதிபாத்யமான ஸ்வபாவங்கள் ஆவன -சத்யம் ஞானம் -இத்யாதிகளில் சொன்ன சர்வாதிகத்வம் என்ன –

யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:
(Mundakopanishad 1-1-10)
“He Who is (totally) aware of all things and their nature, Whose very thought is of the nature of Knowledge”

யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் சொன்ன கல்யாண குணங்கள் என்ன –

யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ருயதே அபிவா
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
(Taittiriya- Narayana Sooktam 11)
“Narayana pervades both inside and outside of everything, whatever may be, whether seen or heard in this world.”

வ்யாப்ய நாராயணஸ்  ஸ்திதி -இத்யாதிகளில் சொன்ன உபய விபூதி நாதத்வம் என்ன –

மகாரஜதம்வாஸ -இத்யாதிகளில் சொன்ன விக்ரஹ யோகம் என்ன –
யாஷோந்தராதித்ய ஹிரண்மய புருஷ -இத்யாதிகளில் சொன்ன அவதாரங்கள் என்ன –

தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
திவீவ சக்ஷூராததம்
தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே
விஷ்ணோர்யத் பரமம் பதம் (Rg- Vishnu Sooktam)
“The eternal stars (Nitya suris) see always the supreme abode of Vishnu. That supreme abode is effulgent
like the sun in the skies, which illuminates everything and is like the eye of all the worlds.
In that supreme abode of Vishnu, the wise, the ever devoted and the ever wakeful eternal stars shine.”

தத் விஷ்ணோ பரமம் பதம் -இத்யாதிகளில் சொன்ன நித்ய விபூதி யோகம் என்ன –இவை

தடம் கடல் இத்யாதி –
வேதைக சமதிகம்யமாய் -ஸ்வபாவங்களைக் கேட்டே போகாதபடி திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளி இக் குணங்களை பிரகாசிப்பித்தவனே –
இடமுடைதான கடலிலே -உன்னுடைய ஸ்ப்ர்சத்தாலே விகசிதமான பணத்தின்
தலையிலே மதுபாநமத்தரைப் போலே சிவந்த திருக் கண்களை உடையவனான
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி -நிரவதிகமான
ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் உடையவனே

சங்க வண்ணம் அன்ன மேனி இத்யாதி –
ஷீரார்ணவசாயித்வம் பரத்தாசை என்னும்படி அங்கு நின்றும் க்ருத யுகத்திலே
சேதனர் விரும்புகைகாக சங்கம் போலே இருக்கிற திரு மேனியை உடையாய் அவதரித்து –
அதுக்கு மேலே த்ரேதா யுகத்தில் ஆஸ்ரித விரோதிகளான ராவணாதி கண்டகரை
நிரசிக்கைகாக ஷத்ரிய குலத்தில் வந்து அவதரித்து ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையில் தரித்தவன் அல்லையோ –
இப்படி காளமேக நிபாஸ்யாமமான திரு நிறத்தை அழிய மாறியும் –

அப்ரவீத் த்ரிதஸ ஸ்ரேஷ்டாந் ராமோ தர்மப்ருதாம் வர
ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தாசரதாத்மஜம்-(Ramayanam –Yuddhakaandam 117-11)
” Sri Rama, the foremost of those upholding the cause of righteousness replied
(as follows to the aforesaid jewels among the gods),” I account myself a human being ,
Rama the son of (Emperor) Dasaratha”.

ஆத்மாநாம் மாநுஷம் மநயே -என்று பரத்வத்தை அழிய மாறியும் ரஷித்த உன்னுடைய
நீர்மையை பரிச்சேதித்து அறியலாவார் ஆர் என்று வாக்ய சேஷம் –
—————————————————————————————————-

பதினாறாம் பாட்டு -அவதாரிகை –
திருப் பாற் கடலிலும் நின்று இப்படி தேவ மனுஷ்யாதிகளிலே அவதரித்து ரஷிக்கும்
அளவு அன்றிக்கே -ஸ்தாவர பர்யந்தமாக சதுர்வித ஸ்ருஷ்டியிலும் அவதரித்து உன்னை
சர்வ அனுபவ யோக்யன் ஆக்கினாலும் -பிரமாண கணங்கள் பரிச்சேதிக்க மாட்டாத படி
இறே உன்னுடைய அவதார வைலஷண்யம் இருப்பது என்கிறார் –

தலைக்கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன்  மாட்சியே —-16

வியாக்யானம் –

தலைக்கணத் துகள் குழம்பு சாதி –
தேவ கணம் என்ன -சூத்ர கணம் என்ன -நடு உண்டான மனுஷ்ய திர்யக்க்குகள் என்ன –
சதுர்வித சரீரங்களிலே –

குழம்பு சாதி –
தேவ கணம் புண்ய யோநியாய் -ஸ்தாவரங்கள் பாப யோநியாய் -மனுஷ்ய திர்யக்க்குகள்
இரண்டும் புண்ய பாப மிஸ்ர யோநிகள் யாகையாலே –குழம்பு சாதி என்கிறது –
திர்யக்குகளுக்கு மிஸ்ர யோநித்வம் ஆஹார நித்ராதிகளாலே மனுஷ்ய சாம்யம் உண்டாகையாலே
ஷூத்ர கணம் என்று -ஸ்தாவரத்துக்கு உப லஷணம்

துகள் –

-குற்றமும் புழுதியும்
சோதி தோற்றமாய் –
பரஞ்சோதி ரூப சம்பத்ய -என்கிற திவ்ய சமஸ்தானத்தை சதுர்வித ஜாதிகளிலும்
சஜாதீயமாக்கி அவதரித்து
ஸ்தாவர ஜாதியிலும் குப்ஜம்ரமாய் அவதரித்தான் இறே

நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும்
தேவாதிகளே யன்றியே ஸ்தாவரங்களும் உன்னை அனுபவிக்கும்படி வந்து -நின்றாலும் -அதாவது

உன்னை ஸ்பர்சித்த வாயு அவற்றை ஸ்பர்சிக்க ஸ்தாவரத்வ ஹேதுவான
பாபம் போகும் என்கை

நீடு இரும் கலை-இத்யாதி
நீ இப்படி தாழ நின்றாலும் பிரமாணங்கள் உன்னுடைய அவதார வைபவத்தை நெஞ்சாலும்
பரிச்சேதிக்க மாட்டாது –

நீடிரும் கலைக் கணங்கள் –
ஸ்வரூபேணவும் -ப்ரவாஹ ரூபேணவும் -நித்தியமான பரப்பை உடைத்தாய் இருந்துள்ள
சதுர்தச வித்யா ஸ்தானங்களும்
கலை -என்று வேதமும் அங்கமும் –
அங்காநி சதுரோ வேத -இத்யாதியிலே சதுர்தச ஸ்தானங்கள் சொல்லப் பட்டது இறே

அங்காநி சதுரோ வேதா மீமாம்ஸா நியாய விஸ்தர:
புராணம் தர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்யோ ஹேதாஸ் சதுர்தஸ (Vishnu Puranam 3-6-28)
The six divisions (limbs) of Vedas, the four Vedas, Meemaamsaa (which investigates Vedic rites and their uses) ,
Tarkashaastram (logic), Puraanaas, and Dharmashaastram (the Law books) which forms part of Smrithis,
are the fourteen Vidyaas. They are referred to as கலைக் கணங்கள்

சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
அபிதாந வ்ர்த்தியாலும் தாத்பர்ய வ்ர்த்தியாலும் ஒரோ அவதாரத்தை நெஞ்சாலும்
பரிச்சேதிக்க மாட்டாமையாலே
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன்  மாட்சியே —
பர்வத சமூஹங்கள் போலே அபேத்யமாய் அபரிச்சினமான உன்னுடைய அவதார
குண சரித்ரங்கள் என்ற வற்றாலே அறிவிக்கப்படும் வை லஷண்யம் உன் வை லஷண்யம்
மாட்சி -அழகு –
————————————————————————————————

பதினேழாம் பாட்டு-அவதாரிகை –
பரமபத நிலயனாய் இருந்து -நித்ய விபூதியை நிர்வஹித்து
வ்யூஹம் முதலாக ஸ்தாவர பர்யந்தமாக அவதரித்து லீலா விபூதியை நிர்வஹித்தும் –
போகிற இவை ஒரொன்றே பிரமாணங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்க-
அதுக்கே மேலே அர்ச்சாவதார ஸூலபனாய் -ஆஸ்ரிதருடைய இச்சாதீநனாய்
தன்னை நியமித்த இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறதோ என்று அதிலே வித்தராகிறார் –

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-

வியாக்யானம் –

ஏக மூர்த்தி
வாசுதேவோசி பூர்ண -என்கிறபடி ஞாநாதி ஷட் குண பூர்ணனாய் -நிஸ்தரங்க ஜலதி
போலே பரமபத நிலயத்திலே எழுந்து அருளி இருந்து -நித்ய சித்தரும் முக்தரும் அனுபவிக்க
இருக்கிற அத்விதீயமான மூர்த்தியை உடையாய் –
மூன்று மூர்த்தி –
அந்த ஷட் குணங்களில் இவ்விரண்டு குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு

ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணுகைக்காக சங்கர்ஷணாதி ரூபத்தாலே மூன்று மூர்த்தியாய்

நாலு மூர்த்தி –
பரா அவஸ்தையும் வ்யூஹங்களோடு எண்ணலாம் படி பரார்தமாய் இருக்கையாலே
அத்தையும் கூட்டி நாலு மூர்த்தி -என்கிறது –
அதவா –
வ்யூஹ கார்யமான ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயோகமாய் இருக்கிற பிரதான புருஷ
அவ்யக்த காலங்களைசரீரமாக உடையனாய் இருக்கறபடியை  சொல்லுகிறது என்னவுமாம் –
நன்மை சேர் போக மூர்த்தி –
அனுக்ரஹ ப்ராசுர்யமாகிற நன்மையை உடைத்தாய் -சம்சாரிகளுக்கு போக யோக்யமான மூர்த்தி –
அனுக்ரஹ ப்ராசுர்யமாவது -ஸ்வ அசாதாரணமாய் அப்ராப்ரக்ருதமான விக்ரஹத்தை –

தேவாதி சஜாதீயமாக்கிக் கொண்டு சம்சாரிகளுக்கு சஷூர் விஷயமாம் படி பண்ணுகை –
அதவா –
ஆமுஷ்மிகத்தில் நித்ய அனுபவத்தோடு சேர்ந்த நன்மையை உடைத்தாய் -ஐஹிகத்தில்
போக ரூபமாய் இருக்கும் மூர்த்தி என்னவுமாம் –
புண்ணியத்தின் மூர்த்தி –
அது தான் பாக்யாதிகருடைய புண்ய விபாகத்தில் பலிப்பதாய் இருக்கை –
பரித்ராணாயா ஸாதூநாம் -என்று பரம பக்தி உக்தருக்கு ஸ்வயம் பிரயோஜனமாய் -சித்த சாதன பரிக்ரஹ உக்தருக்கு சரணமாயும் -உபாசகருக்கு சுபாஸ்ரயமாயும் இ றே இருப்பது -மாநுஷீம் ததுமாச்ரிதம் பரம்பாவமஜா நந்த -என்று பாஹ்ய ஹீநராய் -அவதாரத்துக்கு இழவாளராக சொல்லா நின்றது இ றே –
எண்ணில் மூர்த்தியாய் –
இப்படி அசங்யாதமான விபவ ஜாதீயமான விக்ரஹத்தை உடையையாய் –
பஹுதா விஜாயதே -என்று ஸ்ருதி -பஹூ நி -என்று ஸ்வ வாக்யம் -சன்மம் பல பல -என்று அபி உக்தர் வாக்யம் –
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல் –
இப்படி அசங்யாதமான அவதாரங்களை பண்ணின இடத்திலும் தன் திரு உள்ளத்துக்கு ஏற
சம்சாரிகள் தன்னை வந்து கிட்டாமையாலே உபேஷித்து பரம பதத்தில் போக பிராப்த்மாய்
இருக்க   -ரஷணத்தில் ஆசையாலே திருப் பாற் கடலிலே சேர்ந்த நீர்மையை சொல்லுகிறது
நலம் கடலிலே நாக மூர்த்தி சயனமாய் கிடந்தது அவதார ஸ்தலங்கள் போலே சிரகாலாவதி
இன்றிக்கே பிரளய அவதியாக விரும்பி கண் வளர்ந்து அருளுகையாலே –நலம் கடல் -என்கிறது –
திருவனந்தாழ்வான் திருமேனி யாகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி –

மேலாக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –
அதுக்கு மேலே ஆஸ்ரிதர் தேவரீருக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்திலே ஸ்வ அசாதாராண
விக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தை பண்ணுகிற இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறது –
ச்ம்ர்த்தம் சங்கல்ப நா மயம் -என்றும் -யேய தாமம் ப்ரபத்யந்தே -என்றும் சொல்லுகிறபடி
ஆஸ்ரிதர் உனக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்தை இ றே ஸ்வ அசாதாராண
விக்ரஹத்தோபாதி விரும்புவது -தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் ஆனாய்
ஆதி தேவனே —
ஜகத்துக்கு எல்லாம் காரண பூதனான நீ கார்ய பூதனாய் இருப்பான் ஒரு சேதனனுடைய
இச்ச அதீநமாக உன்னைப் பண்ணுவதே -என்று கருத்து –
இவ்விருப்பத்துக்கடி -உடையவன் ஆகையாலே என்று ஹேதுவுமாம் –
————————————————————————————————–

பதினெட்டாம் பாட்டு -அவதாரிகை –
நாக மூர்த்தி சயனம் -என்றும் -தடம் கடல் பணைத் தலை செங்கண் நாகணைக் கிடந்த –
என்றும் அவதார கந்தமான ஷீராப்தி சயனம் ப்ரஸ்துதமானவாறே -திரு உள்ளம் அங்கே
தாழ்ந்து -அர்த்திதோ மாநுஷே லோகே -என்கிறபடியே அவதாரங்களில் உண்டான
அர்த்தித்வம் அன்றிகே இருக்க விசத்ர்ச தேசத்தில் வந்து கண் வளர்ந்து அருளிகிற தேவரீர் உடைய
வாசியை ஆரறிந்து ஆச்ரயித்து கார்யம் கொள்ள -என்கிறார் –

விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந்தழல்
விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப்
படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –18-

வியாக்யானம்-

விடத்த வயோராயிரம்
விஷத்தை உமிழா நின்றுள்ள ஆயிரம் வாயை உடையனாய்
ஈராயிரம் கண் வெந்தழல் விடுத்து –
இரண்டாயிரம் கண்ணாலும் வெவ்விய தழலைப் புறப்பட விட்டு
பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கிற திருவநந்த ஆழ்வானுக்கு ரோஷ கார்யமான
இந்த க்ரௌர்யம் உண்டாவான் என் என்னில் -துஷ்ப்ரக்ர்திகள் சஞ்சரிக்கிற தேசத்திலே
கண் வளர்ந்து அருளுகிற இவனுக்கு ஆராலே என்ன வருகிறதோ என்று அதி சங்கையாலே வந்தது-
அனுபவம் ராக கார்யமானவோபாதி பிரதிகூல ஸ்தலத்திலே த்வேஷமும் ராககார்யம் இறே
இத்தால் துஷ்ப்ர்க்ருதிகளுக்கு கணிசிக்க ஒண்ணாதபடி திருவநந்த ஆழ்வானால் ஸூ ரஷிதனாய்
கண் வளர்ந்தருள பெற்றோம் என்று த்ர்ப்தர் ஆகிறார்

விள்விலாத போகம் –
ஈஸ்வரன் அணைத்தால் ஒருவகையாலும் பிரிய ஒண்ணாத திரு உடம்பை உடையவனாய் –
அநந்த போகிநி -என்று திருவநந்த ஆழ்வானுடைய திருமேனியை போகம் என்னக் கடவது இ றே
இத்தால் ஆத்ம குணங்களால் ரஷகன் ஆனால் போலே ரூப குணங்களாலே போக
பூதனான படியைச் சொல்லுகிறது –

மிக்க சோதி –
இப்படி கிஞ்சித் கார பூதனாய் கொண்டு -உன்னை அனுபவிக்கையாலே வந்த நிரவதிக
தேஜசை உடையவனாய்
தொக்க சீர் தொடுத்து மேல் விதாநமாய
விதாநமான பணங்கள் பலவற்றிலே உண்டான மிக்க அழகை தொடுத்து
தொக்கு -திரட்சி
சீர் -அழகு –
இத்தால் ஸ்பர்சத்தால் வந்த அனுபவமே  அன்றிக்கே -தர்சநீயமாய் நாநா வர்ணமான
பணங்களின் அழகைச் சேர்த்து அனுபவித்துக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறபடியைச் சொல்லுகிறது
பௌவ நீர் அராவணைப் படுத்த பாயில் –
கடல் நீரில் அது உறுத்தாமைக்கு படுத்த திருவநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே –
பள்ளி கொள்வது என் கொல் –
கண் வளர்ந்து அருளுகிறது இது என்னோ
தங்கள் ஆபத்துக்கு உதவுகைக்கு ப்ரஹ்மாதிகள் அர்த்திக்க தான் செய்து அருளிற்றோ –
வேலை வண்ணனே —
வெள்ளைக் கடலிலே ஒரு நீலக் கடல் சாய்ந்தாப் போலே தேவரீருடைய பரபாக
ரசத்தை சிலர் அறிந்து அனுபவிகைகாக செய்து அருளிற்றோ
இப்பாட்டில் திருவநந்த ஆழ்வான் ஓட்டை அனுபவத்தை சொல்லிற்று
அடிமை செய்வார் இல்லாமை அன்று -சம்சாரிகள் இழவைப் பார்த்து பரார்தமாக
கண் வளர்ந்து அருளுகிறது என்று தோன்றுகைக்காக -அங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும் பொங்கார் அரவு -சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்-.நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையா அணி விளக்காம்-பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -பகவத் அனுபவம் மாறாமல் இருப்பதால் மிக்க சோதி என்கிறார்-

————————————————————————————————

19 th  பாட்டு -அவதாரிகை –
அர்த்தித்வ நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற இது என்ன நீர்மை என்றார் கீழ் -இங்கு
பண்ணின ஜகத் ரஷணங்களைக் கண்டு -நஹி பாலான சாமர்த்யம்ர்தே சர்வேச்வரம் ஹரிம் –
பாலன தர்மத்துக்கு வேறு சக்தர் இல்லாமையாலும் -ஜகத்துக்கு தேவரீர் அனந்யார்ஹ சேஷம்
ஆகையாலே ரஷிக்கும் இடத்தில் அர்தித்வம் மிகை யாகையாலும் -வந்து கண் வளர்ந்து அருளுகிற
இத்தனை என்று -அந்த ரஷணங்களைப் பேசி சாமான்ய த்ர்ஷ்டியால் சஹஜ சத்ருகளாய்
தோற்றுகிற பெரிய திருவடியும் திருவநந்த ஆழ்வானும் ஏக கண்டராய் தேவரீருக்கு பரியும்படியாகக்
கண் வளர்ந்து அருளுகிற இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-

வியாக்யானம்-

புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –
வேதத்தின் உடைய அபௌருஷேயத்வ சித்திக்காக ஸ்வ அசாதாராண விக்ரஹத்தை
திர்யக் சஜாதீயமாக்கிக் கொண்டு -ஹம்சாவதாரத்தைப் பண்ணி -தத்வ ஹிதங்களுக்கு
ஜ்ஞாபகமான நாலு வேதங்களையும் ஜகத்தில் அஞ்ஞான அந்தகாரம் நீங்கும்படி அருளிச் செய்தாய் –
மாநம் ப்ரதீப மிவ காருணி கோததாதி -என்னக் கடவது இறே
அதன்றியும் –
சஹஜ சத்ருவான அஞ்ஞானத்தை போக்கினதுக்கு போலே
புள்ளின் வாய் பிளந்து –
பஹாசுரன் வாயைக் கிழித்து -இத்தால்
பிரமாண ஞானத்தால் அஞ்ஞான  அந்தகாரம் போக்கினாப் போலே பஹாசூரனை நிரசித்து
ப்ரமேய பூதனான தன்னை தந்து ஆஸ்ரிதருக்கு பிராண பிரதிஷ்டை பண்ணின படியைச் சொல்லிற்று

புட் கொடி பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி –
தன் பக்கலிலே ஆர்த்தர் அடங்க வந்து கார்யம் கொள்ளும்படி பெரிய திருவடியை
ரஷண தர்மத்துக்கு த்வஜமாகப் பிடித்து -அவ்வளவும் அன்றிக்கே -ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே
வந்து உதவுகைக்கு அவனை வாகனமாகக் கொண்டு நடவா நின்று
மின் கொள் நேமியாய் –
திரு நிறத்துக்கு பகைத்தொடையாய் மின்னா நின்ற திரு வாழியை உடையவனே
இத்தால்
ரஷகத்வமே நிரூபகம் என்று தோற்றும் படி –
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -இருக்கிறபடியைச் சொல்லிற்று –
ஆதலால் –
நிருபாதிக ரஷகனாய்க் கொண்டு -புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் -என்று கீழோடு அந்வயம்
அது என் கொல் –
என்கிற இது பாட்டின் முடிவில் அந்வயம்

புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல்  காதலித்தது அது என் கொல் –
சாமான்ய த்ர்ஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு சஹஜ சத்ரு என்னலாம் படி இருக்கிற
திருவநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே இருவரும் கூடி விரும்பி அடிமை செய்யும்படி
கண் வளர்ந்து அருளுகிற இது என் கொலோ
சஹஜ சத்ரு என்று புத்தி பண்ணி இருக்கும் சம்சாரத்தில் இருவரையும் ஏக கண்டராக்கி
அடிமை கொண்ட இது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக அன்றோ என்று கருது –
அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான
நித்ய சூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி இறே –
———————————————————————————————–

20-பாட்டு -அவதாரிகை –
பிரயோஜநாந்த பரரான ப்ரஹ்மாதிகள் ஏத்த திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
இம் மேன்மை தானே நீர்மைக்கு எல்லை நிலமாய் இரா நின்றது –
…அமிர்த மதன வேளையிலே மந்தர தாரண அர்த்தமாக ஆமையான நீர்மை தானே மேன்மைக்கு
எல்லை நிலமாய் இரா நின்றது -இவைகளைப் பிரித்து என்னெஞ்சிலே பட வருளிச்
செய்ய வேணும் என்கிறார் –

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20

வியாக்யானம் –

கூசம் ஒன்றும் இன்றி –
மாயா குசலரான அஸூர ராஷசர் சஞ்சரிக்கும் தேசம் -ஆராலோ என் வருகிறதோ
என்று ஒரு கூச்சம் இன்றியே என்னுதல் -பிராட்டிமாருக்கும் அடுத்துப் பார்க்கப் பெறாத
ஸூகுமாரமான வடிவு துஷ் பிரக்ர்திகள் விஷ த்ர்ஷ்டிக்கு விஷயம்ஆகிறதோ என்று கூசாதே என்னுதல் –
அதவா –
கூசம் ஒன்றும் இன்றி கூறு தேற -என்று அந்வயித்து தன் படிகளைச் சொல்லுகைக்கு
அதிகாரிகள் இல்லை என்று அதிகாரி விரஹத்தால் கூசாதே என்றுமாம் -அதாவது
மேன்மையைச் சொல்லி துஷ்ப்ராப்யம் என்று அகலுதல்
நீர்மையைச் சொல்லி காற்கடைக் கொண்டு அகலுதல் என்கை
மா சுணம் படுத்து
நீர் உறுத்தாமே திரு வநந்த ஆழ்வானை விரித்து
வேலை நீர் பேச –
ஸ்வ சந்நிதானத்தாலே வந்த ப்ரீதியாலே கடல் கோஷியா நிற்க
நின்ற தேவர் –
ஜகத் ரஷண தர்மத்திலே வ்யவஸ்திதராய் நின்ற ப்ர்ஹ்மாதிகள் -பேச நின்ற சிவன் -என்னக் கடவது இ றே

வந்து பாட –
ஊர்த்வ லோகங்களிலும் நின்றும்  வந்து தம் தாமுடைய அபிமத சித்திக்காக ப்ரீதி ப்ரேரிதராய் ஏத்த
முன் கிடந்ததும் –
சிருஷ்டி காலமே தொடங்கி கண் வளர்ந்து அருளுகிற இதுவும்
சமுத்திர கோஷத்தோடு பிரயோஜநாந்த பரரான ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரத்தோடு
அநந்ய பிரயோஜனரான ஸ்வேத தீப வாசிகள் உடைய ஸ்தோத்ரத்தோடு வாசியற
முகம் கொடுத்து நிற்கிற இது என்ன சீலம் என்று கருத்து –
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –
பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்

கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி
ஏச வன்று நீ கிடந்தவாறு –
தேவதைகள் அடங்க சாபேஷராய் நின்ற வன்று -சர்வாதிகனான நீ –
உன் படி அறியாதார் -ஆமையானான் -என்று உன்னுடையாரை ஏசும்படி -மந்த்ரம்
முதுகிலே நின்று சுழலக் கண் வளர்ந்து அருளின பிரகாரம்
கூறு தேற வவேறிதே –
தெரியும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும் –
ஆமையானே நீர்மையிலே சர்வாதிகத்வமும் பிரகாசியா நின்றது
ப்ரஹ்மாதிகள் ஏத்த கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே நீர்மை பிரகாசியா நின்றது
இவற்றை பிரித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -என்று கருத்து –

கூசம் ஒன்றும் இன்றி -சிறிதும் கூசாதே
மா கணம் படுத்து -திருவநந்த ஆழ்வானை படுக்கையாக விரித்து
வேலை நீர் -சமுத்திர ஜலத்தில்
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும் -ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு அமைந்த ப்ரஹ்மாதி தேவர்களும்
வந்து பாடும் படி அநாதி காலமாக சயனித்து இருந்து அருளியதும் –

நின்ற -ஊர்த்வ லோகங்களிலே வர்த்திக்கிற –

முன் கிடந்ததும் -ஸ்ருஷ்டி காலம் தொடங்கி கண் வளர்ந்து அருளினதும்
அன்று -தேவர்களுக்கு கடல் கடைந்த அன்று –

அன்று -தேவர்கள் சாபேஷராய் நின்ற அன்று
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –

வாழும் -மந்த்ரத்தை சுமந்து நிற்பவனாய்

கேசவா -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு உத்பாதகன் ஆனவனே

நீ -சர்வாதிகனான நீ

வருண பாசங்கள் கிடக்கிற கடலில் வாழுகின்ற ஆமை என்னும் ஷூத்ர ஜந்துவாக அவதரித்து அருளிய கேசவனே
என்று ஏச நீ -கிடந்தவாறும் -அறிவிலிகள் ஏசும்படி கிடந்த படியும்
தேற கூறு -அடியேன் நன்கு தெரிந்து கோலும் படி அருளிச் செய்ய வேணும்
நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம் –
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது –
இவற்றை பிரித்து எனக்கு அருளிச் செய வேணும் –
எல்லா அவதாரங்களிலும் இரண்டும் கலந்து இருக்குமே
பாசம் நின்ற நீர் -இதற்க்கு பரம பதத்தை விட இந்த கடலே பரம போக்யம் என்று இருக்கை
எம்பெருமான் ஆசைப்படத் தக்க நீர்

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருச்சந்த விருத்தம் -அவதாரிகை /1-10 பாசுரங்கள் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 16, 2013

அவதாரிகை –
ஆழ்வார் திருமழிசைப் பிரான் ஆகிறார்

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் போலே ஆய்த்து பிறந்த படியும் வளர்ந்த படியும் –
யது குலத்தில் பிறந்து கோபால குலத்தில் வளர்ந்தாப் போலே
ரிஷி புத்ரராய்ப் பிறந்து -தாழ்ந்த குலத்திலே யாய்த்து வளர்ந்தது –
ஸ்ரீ கிருஷ்ணனாய் யது குலத்திலே பிறந்தாப் போலே அங்கே வளர்ந்து அருளினான் ஆகில்
ராமோவவதாரத்தோபாதி யாம் இத்தனை என்று பார்த்தருளி -இடையரும் இடைசிகளும் பசுக்களும் –
நம்மிலே ஒருத்தன் -என்னும் படி தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைக்காக வாய்த்து கோப
சஜாதீயனாய் வளர்ந்து அருளிற்று -அப்படியே ஆழ்வாரும் பகவத் அபிப்ராயத்தாலே
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைகாக தாழ்ந்த குலத்தில் வளர்ந்து அருளினார் ஆய்த்து

இவ் வாழ்வாருக்கு சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக -மயர்வற மதி நலம் அருளி
தன்னுடைய திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தையும் –
தத் ஆஸ்ரயமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களையும் –
உபயத்துக்கும் பிரகாசமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும் –
அதுக்கு அலங்காரமான கிரீடாதி பூஷண வர்க்கத்தையும் –
அதோடு விகல்ப்பிகலாம் படியான சங்கு சக்ர திவ்ய  ஆயுதங்களையும் –
இது அடங்க காட்டில் எறிந்த நிலா ஆகாமே அநுபவிக்கிற லஷ்மீ ப்ரப்ர்தி மஹிஷீ வர்க்கத்தையும்
அச் சேர்த்தியே தங்களுக்கு தாரகாதிகளாக உடையரான பரிஜன பரிபர்ஹத்தையும்
இப் போகத்துக்கு வர்த்தகமான பரமபததையும் சாஷாத் கரிப்பித்து
ப்ரகர்தி புருஷாத்மகமான லீலா விபூதியினுடைய ஸ்ர்ஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை
லீலையாய் உடையனாய் இருக்கிற படியும் காட்டிக் கொடுத்து -இப்படி உபய விபூதி
நாதனான எம்பெருமான் தன் பெருமையைக் காட்டிக் கொடுக்கையாலே -பகவத் அனுபவ ஏக போகராய்

நோ பஜனம் ஸ்மரந நிதம் சரீரம் -என்கிறபடியே சம்சார தோஷத்தை அனுசந்திக்க
இடம் இல்லாதபடி -ஈஸ்வரன் தம்மை அனுபவிக்கையாலே -மார்கண்டேயாதிகளைப்
போலே சிரகாலம் சம்சாரத்திலே எழுந்தருளிஇருந்த  இவர்
ப்ராப்தமுமாய் –ஸூலபமுமான விஷயத்தை சம்சாரிகள் இழக்கைக்கு ஹேது என் என்று
அவர்கள் பக்கல் கண் வைத்தார்

தாம் பகவத் விஷயத்திலே ப்ரவணராய் இருக்கிறாப் போலே
ரஜஸ் தமஸ்ஸு க்களால் பிறந்த அந்யதா ஞான விபரீத ஞானங்களாலே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் –
யுக கோடி சஹஸ்ரேஷு விஷ்ணும் ஆராத்ய பத்மபூஸ் புநஸ் த்ரைலோக்ய தாத்ர்வம்
ப்ராப்தவாநி தி சுஸ்ருமே -என்றும் –
வேதாமே பரமம் சஷூர் வேதாமே பரமம் தனம் -என்றும் –
மஹா தேவஸ் சர்வமேதே மஹாத்மா -என்றும் –
ஏக ஏவ ருத்ரச -என்றும் –
ஹிரண்ய கர்பஸ் சம வர்த்ததாக்ரே -என்று

இத்யாதி ப்ரசம்சா வாக்யங்களாலும் -தாமஸ புராணங்களாலும் பரதவ புத்தியைப் பண்ணி –
சேதனர் பகவத் விமுகராய் அனர்த்தப் படுகிறதை கண்டு –பர அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே
நிர்தோஷ பிரமாணங்களாலும் சம்யன் நியாயங்களாலும் -பாஹ்ய குத்ருஷ்டி நிரசன
பூர்வகமாக பகவத் பரதத்வத்தை உபதேசித்த இடத்திலும் -அவர்கள் அபி முகீ கரியாமையாலே
நாம் இவர்களைப் போல் அன்றியே -ஜகத் காரண பூதனாய் –பரமபத நிலயனான சர்வேஸ்வரனே
ப்ராப்யன் என்று அவன் ப்ரசாதத்தாலே அறியப்  பெற்றோம் –
இனி இவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே
அஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –
அவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை  யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –
இரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி
அர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய் -சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்
அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்துஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி –
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி -பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து
அவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று
தமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

————————————————————————————————

முதல் பாட்டு –
அவதாரிகை –
அண்டாகாரணமாய் -ஸ குணமான ப்ருத்வ்யாதி பூத பஞ்சகங்களுக்கு அந்தராத்மாவாய்
நிற்கிற நீயே ஜகத்துக்கு உபாதான காரணம் -இவ்வர்த்தம் வேதாந்த ப்ரமேயம் கை படாத
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது என்கிறார் –

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பத உரை
பூநிலாய -பூமியிலே வர்த்திக்கிற
ஐந்துமாய் -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் ஐந்துமாய்
புனல் கண் நின்ற -ஜலத்திலே வர்த்திக்கிற
நான்குமாய் -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் நான்குமாய்
தீநிலாய -அக்நியிலே வர்த்திக்கிற சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் மூன்றுமாய்
மூன்றுமாய் -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் மூன்றுமாய்
சிறந்த -சேதனருக்கு ஆதாரமாய் இருக்கும் பலத்தை உடைய
கால் நிலாய -வர்த்திக்கிற
இரண்டுமாய் -சப்த ஸ்பர்சங்கள் இரண்டுமாய்
மீநிலாயது -ஆகாசத்திலே வர்த்திக்கிற
ஒன்றுமாகி -சப்த குணம் ஒன்றுமாகி
வேறு வேறு தன்மையாய் -தேவாதிகளுக்கு அந்தராத்மாவாய்
நீ-சித் அசித் சரீரி
நிலாய வண்ணம் -கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்
நின்னை -சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னை
யார் நினைக்க வல்லீரே –நினைக்க வல்லார் யார்-

பொழிப்புரை:
பூமியின் குணங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்தும்,
நீரின் குணங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம் என்ற நான்கும்,
தீயின் குணங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம் என்ற மூன்றும்,
காற்றின் குணங்களான சப்தம், ஸ்பர்சம் என்ற இரண்டும்,
வானத்தின் குணமான சப்தம் என்ற ஒன்றும்,
ஆகிய எல்லா வகை குணங்களின் உள்ளிருந்து அவற்றின் பொதுத் தன்மையாய் நிற்கும்
உன்னை அறிய வல்லவர் யாரோ?

வியாக்யானம்-

பூநிலாயஐந்துமாய்
பூமியிலே வர்த்திக்கிற சப்தாதி குணங்கள் ஐந்துமாய்
பூதேப்யோண்டம் -என்றும்
கந்தவதீ ப்ரத்வீ -என்றும் –
தஸ்யா கந்தோ குணோ மதஸ் -என்றும்
ப்ர்த்வி குணம் கந்தமாய் இருக்க -சப்தாதிகள் ஐந்தும் அதுக்கு குணமாகச் சொல்லுவான்
என் என்னில்
சப்தாதிபிர் குணைர் ப்ரஹ்மன் சம்யுதான் யுத்தரோத்தரைஸ் -என்கிறபடியே
காரண குண அனுவர்த்தியாலே -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்களையும் கூட்டிச் சொல்கிறது –
புனல் கண் நின்ற நான்குமாய் –
அப்பிலே வர்த்திக்கிற சப்த ஸ்பர்ச ரூப ரசங்களுமாய்
சம்பவந்தித தோம்பாம்சி ரசாதாராணிதாநிது -என்கிறபடியே தத் குணம்
ரசமாய் இருக்க அதிலும் காரண குண அனுவர்த்தியாலே சப்த ரச ரூபங்களையும் கூட்டிச் சொல்லுகிறது

தீ நிலாய மூன்றுமாய்
ஜ்யோதி ருத்பத்ய தேவா யோஸ் தத் ரூபம் குண உச்யதே -என்கிறபடியே
அக்நி குணமான ரூபத்தோடே சப்த ஸ்பர்சங்களைக் கூட்டி –மூன்றுமாய் -என்கிறது –

சிறந்த கால் இரண்டுமாய் –
ஸ்வ சஞ்சாரத்தாலே சேதனர்க்கு ஆதாரமான பலத்தை உடைய வாயுவினுடைய குணம்
இரண்டுமாய் -பலவான் பகவசந் வாயுஸ் தஸ்ய ஸ்பர்சோ குணோ மதஸ் -என்கிறபடியே
வாயு குணமான ஸ்பர்சதோடே ஆகாச குணமான சப்தத்தையும் கூட்டிச் சொல்லுகிறது

மீநிலாயதொன்றுமாகி –
மீதிலே வர்த்திக்கிற சப்த குணம் ஒன்றுமாய் –
ஆகாசம் சப்த லஷணம் -என்கிற படியே ஆகாச குணம் ஒன்றையும் சொல்லுகிறது
உக்தமான பூத பஞ்சகங்களுக்கு காரணமான ஏற்றத்தாலும் ஸ்வ வ்யதிரிக்தங்களுக்கு
அவகாச பிரதானம் பண்ணும் ஏற்றத்தாலும் –மீது -என்று ஆகாசத்தைச் சொல்லுகிறது –

அண்ட காரணம் ப்ர்திவ்யாதி குணங்களாய் இருக்க -சப்தாதி குணங்களோடே ஸாமாநாதி கரித்தது
பரத்வ்யதிகளோபாதி தத் குணங்களும் ஸ்வாதீநமாய் இருக்கையாலே
பிருதிவி வாதி களோடு ஸாமாநாதி கரண்யம் சரீர ஆத்ம சம்பந்த நிபந்தனம்
குணங்களோடு ஸாமாநாதி கரண்யம் அவற்றின் உடைய சத்தாதிகள் ஸ்வாதீநமாய் இருக்கையாலே
அண்டத்துக்கு மஹத் அஹஙகாரங்களும் காரணமாய் இருக்க பூதங்கள் ஐந்தையும்
சொல்லுவான் என் என்னில் -தஸ்மா த்வாஸ் தஸ்மா தாத்மன ஆகாரஸ் சம்பூத -என்கிற
ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்கிறார் –
பூதோப்யோஸ்ண்டம் -என்று ரிஷிகள் சொல்லுகிற பஞ்சீ கரணத்தாலே –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம காரணம் ஆகையாலே சித் அந்தர்பூதமான புருஷ சமஷ்டியையும் நினைக்கிறது
இவ்வளவாக பரகத  ஸ்ருஷ்டி சொல்லிற்று ஆய்த்து

வேறு வேறு தன்மையாய்
அண்டாந்த வர்த்திகளாய் -ஒன்றுக்கு ஓன்று விலஷணமான தேவாதி பதார்த்தங்களுக்கும்
ஆத்மாவாய்
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் -ஏக ரூபமாய் இருக்க –வேறு வேறு -என்கிறது கர்மத்தால்
வந்த தேவாதி ரூபங்களைப் பற்ற

நீ நிலாய வண்ணம் –
சித் அசித் சரீரி யான நீ -கார்ய காரண வர்க்கத்தில் நிற்கிற பிரகாரம் -அதாகிறது
அசித் கதமான பரிணாமம் என்ன
சேதன கதமான அஞ்ஞான துக்காதிகள் என்ன
இவை உன் பக்கல் ஸ்பர்சியாதபடி நிற்கை

நின்னை
சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமான உன்னை
ஆர் நினைக்க வல்லர்

நினைக்க வல்லார் ஆர்
பரமாணுக்கள் உபாதான காரணம் என்னும் வைசேஷிகர் நினைக்கவோ
பிரதானம் உபாதான காரணம் -சித் அசித் சம்வர்க்கத்தாலே ஜகன் நிர்வாஹம் என்னும் சாங்க்யர் நினைக்கவோ
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்கவோ
சித் அசித் ஈஸ்வர தத்த த்ரயங்களும் ப்ரஹ்ம பரிணாமம் என்னும் பேத அபேதிகள் நினைக்கவோ
நிர்விசேஷ வஸ்து வ்யதிரிக்தங்கள் அபரமார்தம் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ
வேதாந்த பிரமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர் என்கிறார் –

————————————————————————————————-

இரண்டாம் பாட்டு -அவதாரிகை
சஹ யஜ்ஞ்ஞைஸ் பரஜாஸ் ஸ்ரஷ்ட்வா -என்கிறபடியே காரண பூதனான உன்னாலே
ஸ்ரேஷ்டமான சேதனருக்கு கர்ம யோகம் முதலாக பரம பக்தி பர்யந்தமான பகவத்
சமாராதநத்துக்கும் -சுபாஸ்ர்யம் ஆகைக்கும் –அந்த பரபக்தி உக்தருக்கு சர்வவித
போக்யம் ஆகைக்கும் கிருஷ்ணனாய் வந்து ரஷிக்கும் உன்னுடைய நீர்மையை யார் நினைக்க
வல்லர் -என்கிறார்-

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-

பொழிப்புரை:

ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களில் கூறப்பட்டுள்ள பல வஸ்துக்களைக் குறிப்பிட்டு
இந்த பாசுரம் அவற்றின் காரணகர்த்தா நாராயணனே என்று ஸ்தாபிக்கிறது .

ஆறு வகை நியமனங்களான (1) அத்யயனம் (2)அத்யாபனம் (3) யஜனம் (4) யாஜனம் (5) தானம் (6) பிரதிக்கிரஹம் ,
மற்றும் ஆறு வகை காலங்களான (1) வசந்தம் (2) கிரீஷ்மம் (3) வர்ஷம் (4) ஸரத் (5) ஹேமந்தம் (6) ஸிஸிரம் ,
மற்றும் ஆறுவகை யஞ்ஞங்களான (1) ஆக்ஞேயம் (2) அக்நீஷோமியம் (3) உபாம்சுஜாயம் (4) ஐந்த்ரம் ததி,
(5) ஐந்த்ரம் பய (6) ஐந்த்ரோஞ்ஞயம் என்றவாறு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள யாவையும் நீயாக இருக்கிறாய் .

ஐவகை ப்ரீதிவஸ்துக்களாக வேதங்களில் சொல்லப்பட்டுள்ள (1) தேவ (2) பித்ரு (3) பூத (4) மானுஷ்ய (5) பிரம்மம் ஆகியவைகளாயும் ,
மற்றும் மனித உடலினில் காணப்படும் ஐவகை வாயுக்களான (1) பிராண (2) அபான (3) வ்யான (4) உதான (5) சமான வாயுக்களாயும்
மற்றும் யாகங்களில் இருக்கவேண்டிய ஐவகை தீ ஜ்வாலைகளான (1) கார்ஹபத்யம் (2) ஆஹாவநீயம் (3) தக்ஷினாக்னி (4) ஸப்யம் (5) ஆவஸ்த்யம் என்ற இப் பொருள்களுக்கேல்லாம் உள்ளுறைபவனாக நீயே இருக்கின்றாய் .

சிறந்த குணங்களாக கூறப்பட்டுள்ள (1) இறையறிவு (2) விஷய வைராக்கியம் என்ற இரண்டையும் உன்னை அடையும்
உபாயமான (1) பர பக்தி (2) பரஞ்ஞான பக்தி (3) பரம பக்தி என்ற மூன்றையும் அளிப்பவனாக இருக்கிறாய் .

இந்த உபாயங்களின் முதல் படியை அடைய வேண்டுமென்பார் முதலில் பெறவேண்டிய ஏழு சாதனங்களான
(1) விவேகம், (2) விமோஹம் (3) அப்யாசம் (4) க்ரியா (5) கல்யாணம் (6) அனவசாதனம் (7) அனுத்தர்ஷம்
என்றவற்றையும் கற்ப்பிப்பவன் நீயே.

இவ்வாறு உன்னை அடைபவர்களுக்கு குனாதிசயங்களாக (1) ஞாநம் , (2) பலம், (3) ஐஸ்வர்யம், (4) வீர்யம் (5)சக்தி, (6) தேஜஸ்
ஆகியவைகளையும் இவர்களது பேற்றின் பிரதி பலன்களாக
(1 & 2)பாவபுண்ணிய மின்மை, (3)சாவின்மை (4) துக்கமின்மை (5) பசியின்மை (6) தாகமின்மை (7) வேட்கையின்மை (8) தோல்வியின்மை
ஆகியவற்றையும் நீயே அளிக்கின்றாய்.

இவ்வகை பேற்றை பெற முடியாத யாவர்க்கும் நீயே பொய்ஞ் ஞானமாகவும் மெய்ஞ் ஞானமாகவும் விதவிதமாக அருளுகிறாய்.

இவ்வாறு கண்டு, கேட்டு, உற்று முகர்ந்தது, உண்டு அறியப்படும் எல்லாவித ரசங்களாகவும் இருக்கும் மாயனே நீ!

வியாக்யானம்
ஆறும் -அத்யயநாதி ஷட் கர்மங்களும்

முதல் ஆறு அந்தணர்களின் ஆறு கர்மங்கள்
அத்யயனம் தானே ஓதுதல்
அத்யாபனம் -ஓதுவித்தல்
யஜனம்-தான் வேள்வி செய்தல்
யாஜனம் -வேள்வி செய்வித்தல்
தானம் -தான் கொடுப்பது
ப்ரதிக்ரஹம் -பிறர் கொடுப்பதை தான் வாங்கி கொள்வது .
ஆறும் -அத்யயநத்தால் ஜ்ஞாதவ்யமான கர்ம அனுஷ்டானத்துக்கு யோக்யமான வசந்தாதி ருதுக்கள் ஆறும்
ஆறுமாய் -அனுஷ்டேயமான ஆக்நேயாதி ஷட் யாகங்களும்

ஆக்நேயம் -அக்நி ஷோமேயம்-வுபாம்ஸு யாஜம் -ஐந்த்ரம் -இரண்டு ஐந்த்ராஞ்ஞம் –
இது சர்வ கர்மங்களுக்கும் உப லஷணம்
இவை ஆறு -என்றது -இவற்றோடு ஈஸ்வரனை சமாநாதிகரித்து –
அத்யயநாதிகளிலே -ததாமி புத்தியோதந்தம் -என்கிறபடியே சேதனரை மூட்டியும்
அவற்றுக்கு ஏக அங்கங்களான காலத்துக்கு நிர்வாஹனாகவும்
அனுஷ்டேய கர்மங்களுக்கு ஆராத்யானும் இருக்கையாலே சமாநாதிகரித்து சொல்லுகிறது

ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
கீழ் சொன்ன கர்மத்துக்கு அதிகார சம்பத்துக்கு உடலாய்
பிரதானமான பஞ்ச மஹா யஞ்ஞத்துக்கும் -பஞ்ச ஆஹூதிக்கும் ஆராத்யனாய் –
பஞ்ச அக்நிக்கும் அந்தராத்மாவாய் இருக்குமவன்
பஞ்ச மஹா யஞ்ஞம் ஆவது –

தேவ யஞ்ஞம் -பித்ரு யஞ்ஞாம் -பூத யஞ்ஞம் -மனுஷ்ய யஞ்ஞம் -ப்ரஹ்ம யஞ்ஞம் –என்கிறவை

பஞ்ச ஆஹூதிகள் -ஆவன ப்ராணாத்யாதி ஆஹூதிகள்-.பிராண அபான வ்யான வுதான சமான-
பஞ்ச அக்நிகள் ஆவன -கார்ஹ பத்யாஹவநீய தஷிண அக்நிகளும் சப்யாவசத்யங்களும்

-கார்கபத்யம் -ஆகவநீயம் –தஷிணாக்னி-சப்யம் -ஆவஸ்த்யம் –
ஏறு சீர் இரண்டும் –
தர்மேண பாபமப நுததி -என்னும்படியே -விஹித கர்ம அனுஷ்டானத்தாலே -மோஷ விரோதி பாபம் போனால்
இவன் பக்கலில் பிறக்கும் உபாசன ரூப பகவஜ்ஞ்ஞாநமும்
தத் கார்யமான இதர விஷய வைராக்யம் என்கிற இரண்டு -குணமும்
மாற்பால் மனம் சுழிக்கையும் -மங்கையர் தோள் கை விடுகையும்
மூன்றும் -உபாசன பலமான ஐஸ்வர்ய -கைவல்ய -பகவத் ப்ராப்திகள் –
அன்றிக்கே
ஜ்ஞான வைராக்ய சாத்யமான -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் மூன்றும் –
ஏழும்
உக்தமான கர்ம யோகாதி பரபக்தி பர்யந்தமான அளவுகளை பலிக்கக் கடவ மநோநை மல்யத்துக்கு
அடியான விவேகாதி சப்தகமும்
-அதாகிறது விவேக -விமோக -அப்யாச க்ரியா கல்யாணா நவசா தா நுத் தர்ஷங்கள்
அதாகிறது -மநோநை மல்ய ஹேதுவான விவேகாதி சப்தக உக்தமாகிய -க்ரியா சப்த
வாசியமான விஹித கர்ம அனுஷ்டானத்தாலே உபாசன நிஷ்பத்தியை சொல்லுகிறது

விவேகம் -கார்ய சுதி
விமோகம் -காமம் குரோதம் இல்லாமை
அப்யாசம்
க்ரியை
க்ல்யாணம்
அநவசதம் -சோக நிமித்தம் -மனஸை மழுங்காது இருப்பது
அனுதர்ஷம் -சந்தோஷத்தில் தலை கால் தெரியாமல் பொங்காது இருப்பது
எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மனசுக்கு இவை எல்லாம் தேவை

ஆறும்

உக்த பக்தி வர்த்தகமாய் ஸ்வயம் ப்ராப்யமான ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸூ க்கள் ஆறும்
எட்டுமாய் –
அபஹத பாப்மத்வாதி குணாஷ்டகமுமாய் -ஸ்வேன ரூபேண பி நிஷ்பத்யதே -என்கிறபடியே

அபகதபாப்மா -பாப சம்பந்தம் அற்று இருப்பவன்
விஜரக -கிழத் தன்மை அற்று நித்ய யுவாவாக இருப்பவன்
விம்ருத்யக -மரணம் அற்றவன்
விசோக -சோகம் அற்றவன் –
விஜிகத்சக -பசி அற்றவன்
அபிபாசாக -தாகம் அற்றவன் –
சத்ய காம
சத்ய சங்கல்ப
தம்மை தொழும் அடியாருக்கு தம்மையே ஒக்கும் அருள் தருவானே
இது ப்ராப்ய அந்தர்கதம் இறே

வேறு வேறு ஞாநமாகி
நிர்மல அந்தகரணர் அல்லாத பாக்ய ஹீநருக்கும் பாக்ய குத்ருஷ்டி ச்ம்ர்திகளுக்கும்ப்ரவர்தகனாய்-

வணங்கும் துறைகள் பல பல வாக்கி
கள்ள வேடத்தைக் கொண்டு புறம் புக்க வாறும்-
மெய்யினோடு பொய்யுமாய்
கீழ் சொன்ன முமுஷுக்களுக்கு மெய்யனாய்
பிரயோஜனாந்த பரரான ஷூத்ரர்களுக்கு பிரயோஜனங்களைக் கொடுத்து தான் அகல
நிற்கையாலே பொய்யனாய்

மெய்யர்க்கே மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புள் கொடி உடைய கோமான்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய்
பரமபத்தி உக்தராக இருப்பருக்கு சர்வவித போக்யமாய் இருப்பவன்

ஊறோடு ஓசை என்றது சப்தாதிகள் ஐந்துக்கும் உப லஷணம் –
உண்ணும் சோறு பருகும் நீர் -என்றும்

கண்டு கேட்டு வுற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் எம்பெருமான் ஆயிரே-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் -என்னக்  கடவது இறே

ஆய மாயனே

கோப சஜாதீயனாய் அவதரித்த ஆச்சர்ய பூதனே -அதாவது
தான் நின்ற நிலையிலே நின்று ஆஸ்ரிதருக்கு உபகரிக்கை அன்றிக்கே
திவ்ய மங்கள விக்ரஹத்தை சம்சாரி சஜாதீயம் ஆக்கி வந்து அவதரித்து
உபாசகருக்கு சுபாஸ்ரயமாய் –
ஸித்த உபாய பரிக்ரஹம் பண்ணினாருக்கு விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டு தானே போக்யமாய்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருக்கும் பரம பக்தி உக்தருக்கு
சர்வவித போக்யமும்
ஆனவன் என்கை
அவதாரம் தான் சாது பரித்ராணத்துக்கும் தர்ம ஸம்ஸ்தாபநத்துக்கும் ஆக விறே

——————————————————————————————————

மூன்றாம் பாட்டு -அவதாரிகை –
முதல் பாட்டில் சொன்ன ஜகத் காரணத்வ பிரயுக்தமான லீலா விபூதி யோகம் என்ன –
இரண்டாம் பாட்டில் சொன்ன உபாயத்துக்கு பலமான நித்ய விபூதி யோகம் என்ன –
ஆக இந்த உபய விபூதி யோகத்தை நிர்ஹேதுக க்ருபையால் தேவரீர் காட்ட
வருத்தமற நான் கண்டாப் போலே வேறு ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் இல்லை என்கிறார் –

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே –3-

பதம் பிரித்தது:
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவோடு ஆயுமாகி
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அந்தரத்தை அணைந்து நின்ற
ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர காண வல்லரே?

வியாக்யானம்-
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி –
ஆகாசாதி பூதங்கள் ஐந்தும் -ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும் -வாகாதி கர்ம
இந்த்ரியங்கள் ஐந்தும் ஆகி –

ஐந்தும் மூன்றும் –
ஆகாசாதி  பூதங்கள் ஐந்துக்கும் காரணமான தந் மாத்ரைகள் ஐந்தும்
ஒன்றுக்கு ஓன்று காரணமான அஹங்காரம் என்ன மஹான் என்ன சூஷ்ம மூல பிரகிருதி என்ன -இவை மூன்றும் –

ஒன்றுமாகி –
மன ஏவ -என்கிறபடியே உக்தமான சகல பதார்த்தங்களுக்கும் பந்த ஹேது வாகைக்கும்
மோஷ ஹேது வாகைக்கும் ஹேதுவான மனஸ் ஸூ மாய்

அல்லவற்றுள் ஆயமாய் –
இப்படி சதுர் விம்சதியாக விபக்தமான பிரக்ருதியிலே சம்ச்ர்ஷ்டரான ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாய்
அல்லவற்றுள் –
அசித் வ்யாவ்ர்த்தரான சேதனர் பக்கலிலே

நின்ற வாதி தேவனே –
ஸ்தூல சித் அசித் விசிஷ்டனாய் நின்றாப் போலே -இவை அழிந்த காலத்திலும்
சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு நின்ற காரண பூதன் ஆனவனே

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி –

இதுக்கு கீழே லீலா விபூதி யோகத்தை காட்டித் தந்த படியைச் சொன்னாராய் –
மேல் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் நித்ய விபூதி யோகத்தையும் காட்டித் தந்த படியைச் சொல்லுகிறார்
அப்ராக்ருதமாய் பஞ்ச சக்தி மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
தத் ஆஸ்ரயமான ஜ்ஞான இந்திரியங்கள் ஐந்தும்
கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்
என்கிற இவற்றுக்கு நிர்வாஹனாய்
இத்தால் திவ்ய விக்ரஹ யோகம் சொல்லிற்று

யந்தரத்து யணைந்து நின்று ஐந்தும் ஐந்துமாய –
சப்தாதி போக்யங்கள் ஐந்தும் -போக ஸ்தானம் என்ன போக உபகரணம் என்ன –
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்று இரண்டு கோடியும் முத்தரும் என்று அஞ்சு கோடியுமாய்

யந்தரத்து யணைந்து நின்று-
பரம வ்யோம -என்றும்
பரமாகாசம் -என்றும்
ஸ்ருதி பிரசித்தமான பரம பதத்தில் பொருந்தி நின்று -இப்படி உபய விபூதி உக்தனான

நின்னை யாவர் காண வல்லரே
ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் ஆர் –
மனுஷ்யரில் காட்டில் ஞாநாதிகரான தேவர்கள் காணவோ
உபய பாவ நிஷ்டர் என்னா ப்ரஹ்மாதிகள் காணவோ
ப்ரஹ்ம பாவ நிஷ்டர் என்னா சநகாதிகள் காணவோ –

——————————————————————————————

மூன்று முப்பத்தாறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி யாகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கமில் விளக்கமாய்
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ வெம் மீசனே –4

“மூன்று முப்பதாறினோடு “..33 ஹல் எழ்த்து “மூன்று முப்பது “/.16 அச்சு எழுத்துகள்
“ஆறினொடு ஒர் ஐந்தும் ஐந்தும் /”ஐந்து ள்ள கராதி பஞ்சாட்ஷரம் ..

Threesome (3) + a score of trios (12 * 3) + triplet of penta (5 *3 ) gives a total of 3+36+15=54.
This number represents the 54 alphabets of Sanskrit Language
which consists of 33 consonants 16 vowels and 5 special letters (which do not belong to the other categories).

மூன்று மூர்த்தி யாகி நின்று –
ரிக் யஜுர் சாம வேத -வேத த்ரயம் ஸ்வரூபமாய்

மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் –

த்வாதச அஷரீ பிரதிபாடனாய் -ஓம் நமோ பகவதே வாசுதேவ
தோன்று சோதி மூன்றுமாய்
இத்தை மூன்று தோன்று சோதியாய் -என்று கொண்டு –
மூன்று அஷரம் –பிரணவம் -அதில்
தோன்றும் ஜோதி

துளக்கமில் விளக்கமாய் –
அழிவு அற்ற விளக்காகிய -அ காரம் -ஓம்காரத்தில் திகழ்கின்ற ஜோதி மயன்
ஒம்காரோ பகவான் விஷ்ணு -சகலதுக்கும் காரண பூதன் -தனக்கு வேறு ஒரு
காரணம் அற்றவன் -அதனால்  துளக்கமில் விளக்கம் என்கிறார்

வெம் மீசனே-எனக்கு நிருபாதிக சேஷி யானவனே -என்று -எனது காரியங்களை
நீயே ஏறிட்டுக் கொண்டு
என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ -என்ன நீர்மை

———————————————————————————————-

ஐந்தாம் பாட்டு -அவதாரிகை-

ஜகத் ஏக காரணத்வத்தாலும் சகல ஆதாரனாய் இருக்கும் ஸ்வபாவத்தை திரள
அறியும் இத்தனை ஒழிய தேவரீர் காட்ட நான் கண்டால் போலே ஏவம்விதன்
என்று ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்கிறார்

நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –5-

பதவுரை:

நின்று-ஸ்தாவரமாயும் –
இயங்கும் ஜங்கமமாயுமிருக்கிற –
ஒன்று அலா ருக்கள் தோறும்-பலவகையான சரீரங்கள் தோறும் –
ஆவி ஆய்-ஆத்மாவாய் –
ஒன்றி உள் கலந்து நின்ற-பொருந்தி பரிஸமாப்ய வர்த்தியா நின்ற –
நின்ன தன்மை இன்னது என்று-உன்னுடைய ஸ்வபாவம் இத்தகையதென்று –
என்றும்-எக்காலத்திலும் –
யார்க்கும்-எப்படிப்பட்ட ஞானிகட்கும் –
எண் இறந்த ஆதியாய்= சிந்திக்க முடியாதிருக்கிற ஆதி காரண பூதனனான எம்பெருமானே! (நீ) –
அன்று -முற்காலத்திலே
நின் உந்திவாய்-உனது திருநாபியில் –
நான் முகன்-சதுர்முகப்ரஹ்மாவை –
பயந்த-படைத்த –
ஆதிதேவன் அல்லையே-முழு முதற் கடவுளல்லையோர். –

வியாக்யானம் –
நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும்
ஸ்தாவரமாய் நின்றும் -ஜங்கமமாய் சஞ்சரித்தும்
தம் தாமுடைய உஜ்ஜீவன பிரகாரங்களிலே ஒன்றுக்கும் உறுப்பு அன்றிக்கே இருக்கிற
சகல சரீரங்கள் தோறும்

ஆவியாய் ஒன்றி உள் கலந்து நின்ற –

ஆத்மாவாய் –எதிர்தலையில் ஹேயதையை பாராதே பொருந்தி -சமாப்ய உள் புகுந்து –
ஏக த்ரவ்யம் என்னும்படி கலந்து நிற்கிற

நின்ன தன்மை –
உன்னுடைய ஸ்வபாவம் -அதாகிறது தத்கத தோஷங்கள் தட்டாதே நிற்கையும்
விபுவான தான் இவற்றில் சமாப்ய வ்யாபரிக்கையும் ஆகிற இவ் வாச்சர்யம்

இன்னதென்று –

ஏவம் விதம் என்று -திருஷ்டாந்த முகத்தாலே உபபன்னம் என்று

என்றும் யார்க்கும் –
வர்த்தமான காலத்தோடு பவிஷ்ய காலத்தோடு வாசி யற அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும்

எண்ணிறந்த –
மநோ ரததுக்கும் அவ்வருகாய் நின்ற

வாதியாய் –
ப்ரதீதி வ்யவஹாரங்களிலே வந்தால் ப்ரதானன் ஆனவனே

சாஷாத் கரிக்கும் போது -நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்கிறபடியே விசேஷ்யமான தேவரீர்
பிரதானமாய் -சேதன அசேதனங்கள் விசேஷண மாத்ரமாய் இருக்கையும்
வ்யவஹாரத்தில் வந்தால் -வசசாம் வாச்யமுத்தமம் -என்கிறபடியே சப்த வாச்யங்களில் பிரதானனாய் நிற்கையும்

அன்று-நின்னுந்தி வாய்  நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –
இது கிடக்க -ஜகத் ஏக காரணனாய் நிற்கிற நிலை தான் ஒருவருக்கும் அறிய நிலமோ –
ஒன்றும் தேவில் -படியே தேவாதி சகல பதார்த்தங்களும் அழிந்து கிடந்த அன்று
உன்னுடைய திரு நாபீ கமலத்திலே -யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்கிறபடியே
ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்த ஜகத் ஏக காரணன் அல்லையோ
திரு நாபி கமல உத்பத்தியைப் பார்த்தால் ப்ராக்ர்தம் என்ன ஒண்ணாது
ஷேத்ரஞ்ஞனான ப்ரஹ்மாவுக்கு உத்பாதகம் ஆகையாலே அப்ராக்ருதம் என்ன ஒண்ணாது
இவ் வாச்சர்யத்தை ஏவம் விதம் என்று கர்மவச்யராய் பரிமித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகள் அறியவோ

நின்று இயங்கும் ஓன்று இல்லா உருக்கள் தோறும் –
வேதங்களும் மந்திர ரகஸ்யங்களும் இருக்க யாவர் காண வல்லரே
தேவரீர் எனக்கு காட்ட -அலகு அலகாக நான் கண்டது போலே ஒருவருக்கும் காண முடியாது என்கிறார்

———————————————————————————————-

ஆறாம் பாட்டு -அவதாரிகை –
சகல அந்தர்யாமித்வத்தால் வந்த சகல ஆதாரத்வம் சொல்லிற்றாய் நின்றது கீழ் –
லோகத்திலே ஒன்றுக்கு ஓன்று தாரகமாயும் தார்யமாயும் போருகிறது இல்லையோ என்று
பகவத் அபிப்ராயமாக
அந்த பதார்த்தங்களுக்கும் தேவரீரே தாரகம் என்று வேதாந்த பிரசித்தமான இவ்வர்த்தம்
தேவரீர் பக்கலிலே வ்யவஸ்திதம் அன்றோ
இஸ் சர்வ ஆதாரத்வமும் ஸ்வ சாமர்த்யத்தாலே வேறு ஒருவருக்கும் காண முடியாது என்கிறார் –

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே –6-

நாகம் ஏந்து மேரு வெற்பை–சாஸ்திரங்களின் படி சுவர்க்கத்தை மேரு பர்வதம் தாங்கி நிற்பதாக கூறப்படுகிறது. இந்த மேரு பர்வதத்தையும் …
நாகம் ஏந்து மண்ணினை–வடமொழியில் “நாஹா” என்பது யானையும் குறிக்குமாம். எனவே திக்கஜங்களால் தாங்கப்படுகின்ற இந்த பூமியையும் …
நாகம் ஏந்தும் ஆகம் ஆகி -திருவனதாழ்வானால் தரிக்கப்படும் திருமேனியை உடையவனே –
மற்றொரு நிர்வாஹம்
நாகமேந்தும் மாகம் ஆகி–மாகம் – பெரிய வீடு (அகம்) – கம் – சுகம் – அ கம் துக்கம் –
ந அகம் – தூக்கமற்ற -நாகமேந்தும் மாகம் – துக்கமற்ற வைகுந்தத்தையும் …
மாகம் ஏந்தும் வார்ப்புனல்–விண்ணிலிருந்து பாய்ந்து வரும் கங்கை நதியையும் …
மாகம் ஏந்தும் அல்குல்–விண்ணினால் தாங்கப்படும் மேகங்களையும் —
தீ ஓர்–வைச்வாராக்நியையும்
வாயு ஐந்தும்–ஐவகை காற்றுக்களையும் –பிராண அபான வியான உதான சமான –
அமைந்து காத்து–உருவாக்கி போஷித்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை–ஓராளாய் தாங்கி நிற்கும் உன் தன்மை..
நின்கணே இயன்றதே–உன் பக்கலிலேயே உள்ளது.

வியாக்யானம் –

நாகம் ஏந்து மேரு வெற்பை –
ஸ்வர்க்கத்தை தரிக்கிற மேரு வாகிற பர்வதத்தை -மேருவுக்கு ஸ்வர்க்க ஆதாரத்வம்
மேரு சிகரத்தில் தேஜோ த்வாரத்தாலே –

நாகம் ஏந்து மண்ணினை –
திக் கஜங்களால் தரிக்கப் படும் பூமி என்னுதல்
பாதாள கதனாய் இருந்துள்ள திருவநந்த வாழ்வானாலே தரிக்கப் படுகிற பூமி என்னுதல்

நாகம் ஏந்து மாகம் –
துக்க கந்த ரஹிதமான சுகத்தாலே பூரணமான பரம வ்யோமம்
ஏந்தல் –என்று தேங்கலாய் ஆநந்த நிர்பரமான தேசம் என்கை
நாகம் –என்றது துக்க கந்த ரஹிதமான  சுகத்துக்கு வாசகமாம் படி என் என்னில் –
கம் =சுகம் –அகம் =-துக்கம் நாகம் -துக்க ரஹிதம் இத்யர்த்தம் –
நாகமேந்தும் ஆக -திருவநந்த வாழ்வானாலே தரிக்கப்பட்ட திருமேனியை உடையவனே

இத்தால் கீழ் சொன்ன தாரக பதார்த்தங்களும் பகவதாஹித சக்திகமாய் கொண்டு தரிக்கின்றன என்றது ஆய்த்து

மாகம் ஏந்து வார் புனல் –
பரமபதம் என்ன -ஆகாசத்திலே தரிக்கப் படுகிற ப்ரவாஹ ரூபமான கங்கை என்ன இவையும் –

மாகம் ஏந்து மங்குல் –
ஆகாசம் தரிக்கிற மேகத்தையும்

தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்தும் –
வைஸ்வானர அக்நியையும் -பஞ்ச வ்ர்த்தி பிராணன் களையும் ரஷண தர்மத்திலே
சமைந்து நின்று ரஷித்து
ஒய் வாயு ஐந்து அமைந்து காத்தும் –-என்று பாடமான போது
தசதா விபக்தமான வாயுவைச் சொல்லுகிறது
மேகோ  தயஸ் ஸாகர சந்நிவ்ர்த்தி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
நிராலம்பனமான ஆகாசத்தில் சஞ்சரிக்கிற சகல பதார்த்தமும் ஈஸ்வர சங்கல்ப்பத்தாலே
சஞ்சரிப்பதாக சொல்லிற்று ஆய்த்து
யதாகாகச்தி தோ நித்யம் -இத்யாதி

ஏகம் ஏந்தி நின்ற நீர்மை –
ஒரு வஸ்து தரிக்கின்றது என்று ஸ்ருதி சொல்லுகிற ஸ்வபாவம்
நின் கணேயியன்றதே —
தேவரீர் பக்கலிலே வர்த்திக்கிறது
இயத்தல் -நடத்தலும் வளர்த்தலும்

யாவர் காண வல்லர் என்று கீழோடு அந்வயம்
இஸ் சர்வ ஆதாரத்வத்தை தேவரீர் காட்ட நான் கண்டாப் போலே வேறு காண வல்லார் ஆர் என்கிறார்

அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாளே அனைத்துக்கும் தாரகம்

—————————————————————————————-

ஏழாம் பாட்டு -அவதாரிகை –
நாம் ஜ்ஞானத்துக்கு விஷயமான பின்பு பரிச்சேதித்து அறிய மாட்டாது ஒழிகிறது
ஜ்ஞான சக்திகளின் குறை யன்றோ -யாவர் காண வல்லரே -என்கிறது என் என்ன –
தேவரீர் இதர சஜாதீயராய் அவதரித்து ரஷிக்கிற படியை ஜ்ஞானத்தாலும் சக்தியாலும்
அதிகனான ருத்ரனும் அறிய மாட்டான் -என்கிறார்

ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –7-

வியாக்யானம்
ஓன்று இரண்டு மூர்த்தியாய்
ப்ரதானமான ஒரு மூர்த்தியும் அப்ரதானமான இரண்டு மூர்த்தியுமாய்
ப்ரஹ்ம ருத்ராதிகளை சரீரமாகக் கொண்டு -அவர்களுக்கு நிர்வாஹனாய் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை இதர சஜாதீயமாக ஆக்கிக் கொண்டு அவதரித்து
பிரயோஜனாந்தர பரரோடு முமுஷுகளோடு வாசி யற சர்வ நிர்வாஹகனாய் –

முனியே நான்முகனே முக்கண் அப்பா –
உறக்கமோடு உணர்ச்சியாய் –
ஜ்ஞான அஞ்ஞானங்களுக்கு நிர்வாஹனாய் –
அநாதி மாயயா ஸூப்தச் -என்கிறபடியே உறங்கினார் கணக்காய் விழுகையாலே
உறக்கத்தை அஜ்ஞ்ஞானம் என்கிறது

அஞ்ஞானம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் சம்சயம் மறப்பு எல்லாம் உறக்கம் போலே தானே
இத்தால் மூன்றும் ஏகாத்மாதிஷ்டிதம் என்றும் -அநேகாத்மா திஷ்டிதம் என்றும் –
அந்யோந்யம் சமர் என்றும் அஜ்ஞ்ஞானத்துக்கும் -மத்யஸ்தன் ரஷகன் -ப்ரஹ்ம ருத்ராதிகள்
ரஷ்ய பூதர் என்கிற யாதாத்ம்யஜ்ஞானத்துக்கும் நிர்வாஹனாய் – என்கை

ஓன்று இரண்டு காலமாகி –
ஞான ஹேதுவான சத்வோத்தர காலத்துக்கும்
அந்யதா ஞான விபரீத ஜ்ஞானங்களுக்கு ஹேதுவான ரஜஸ் தமோத்ரிக்த கால
த்வ்யத்துக்கும் நிர்வாஹகனாய் -த்ரேதாயாம் ஜ்ஞானமுச்யதே -கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் -என்னக் கடவது இறே

வேலை ஞாலமாயினாய் –
கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகனாய் -யாதாவஜ்ஞானம் பிறந்தவர்களுக்கு
ஆவாஸஸ்தானமான கர்ம விபூதிக்கு நிர்வாஹகனாய்
அய்ந்து நவமஸ் தேஷாம் தீவபஸ் ஸாகர சம்வர்த்த -என்கிறபடியே
.

ஓன்று இரண்டு தீயுமாகி
ஆகவநீயம் -கார்தபத்யம் தஷிணாக்நி -என்ற மூன்று அக்நிகளுக்கும் நிர்வாஹகனாய்

ஆயனாய மாயனே –
கோபால சஜாதீயனாய் அவதரித்த

ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே
ருத்ரனும் துதிக்க வல்லவன் அல்லன் -என்கிறார்

—————————————————————————————–

எட்டாம் பாட்டு -அவதாரிகை
ருத்ரனுக்கும் மட்டும் அல்ல உபய விபூதியில் எவராலும் முடியாது என்கிறார்

ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே –8-

ஆதியான வானவர்க்கும்
ப்ரஹ்ம -தஷ பிரதாபதிகள் சப்த ரிஷிகள் த்வாதச ஆதித்யர்கள்
ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் இந்திரன் சதுர் தச மனுக்கள் ஸ்திதி கர்த்தாக்கள் ருத்ரன் அக்நி
யமன் -சம்ஹார கர்த்தாக்கள் இவர்களை இத்தால் சொல்லிற்று

அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர்
நித்ய சூரிகள்

அண்ட சப்த வாச்யமான லீலா விபூதிக்கு அப்புறத்தில் -பரம பதத்தில் -வர்த்திக்கிற
ஜகத் காரண பூதரான நித்ய சூரிகளுக்கும் -அஸ்த்ர பூஷணாத்யாய க்ரமத்தாலே
நித்ய சூரிகளை ஜகத் காரண பூதராக சொல்லக் கடவது இ றே
அதவா
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்திதேவ -என்றும்

யத்ரர்ஷயஸ் ப்ரதம ஜாயே புராணா -என்றும் சொல்லுகிற ஆதி தேவர்கள் என்றுமாம்

ஆதியான வாதி நீ –
அவர்களுக்கும் நிர்வாஹகனாய் –

இப்படி உபய விபூதியிலும் ப்ரதானரான இவர்கள் உடைய சத்தாதிகளுக்கு ஹேதுவான ப்ரதானன் நீ –
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி –
ஜகத்துக்கு கடவர்களாக ஏற்படுத்தி இருக்கும் மேல் உலகத்தவரின் முடிவு காலத்தை நீ அருளி செய்கிறாய்

இனிமேல் ஜகத்துக்கு நிர்வாஹகமான கால தத்வமும் தேவரீர் இட்ட வழக்கு என்கிறது –
ஜகத் ஸ்ர்ஷ்டியாதி கர்த்தாக்களாய் ஊர்த்தவ லோகங்களுக்கு அத்யஷராய் வர்த்திக்கிற
ப்ரஹ்மாதிகள் உடைய பதங்களுடைய அவ்வவ காலத்துக்கு நியாமகனாய்

நீ உரைத்தி – என்கிறது
சஹச்ர யுக பர்யந்தமஹர்யத் ப்ரஹ்மணோ விது -என்று இத்யாதிகளிலே நீ அருளிச் செய்து இருக்கையாலே
ஆதியான கால நின்னை
ஆதி காலம் ஆன நின்னை -என்று மாற்றி ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை

கார்ய ரூபமான ஜகத்தடைய சக்த்ய வஸ்த ப்ரபை போலே லீநமாய்
சதேவ சோம்யே தமக்ரே -என்கிறபடியே ஆதி காலத்துக்கு நிர்வாஹகனான உன்னை
யாவர் காண வல்லரே -என்கிறார்

தாம்தாம் சத்தாதிகள் தேவரீர் இட்ட வழக்காய் இருந்த பின்பு தேவரீரை
பரிச்சேதிக்க வல்லார் உண்டோ – -என்கிறார்

—————————————————————————————

ஒன்பதாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி அபரிச்சேத்ய வைபவன் ஆகையாலே பிரயோஜனாந்த பரரில் அக்ர கண்யனான
ருத்ரனனும் -வைதிக அக்ரேசரராய் -அநந்ய பிரயோஜனரான சாத்விக ஜனங்களும் உன்னையே
ஆஸ்ரயிக்கையாலே சர்வ சமாஸ்ரயணீ யானும் நீயே என்கிறார் —

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-

வியாக்யானம் –
தாதுலாவித்யாதி –
தாது மிக்க கொன்றை மாலை என்ன -நெருங்கி சிவந்த ஜடை என்ன -இவற்றை உடைய ருத்ரன்
கொன்றை மாலையைச் சொல்லுகையாலே -போக ப்ரதானன் என்றும் –
தீர்க்கத பாவாகையாலே செறிந்து ஸ்தான பாஹூள்யத்தாலே சிவந்து இருக்கிற ஜடையை
உடையான் ஆகையாலே -அந்த போகம் தான் சாதித்து லபித்தது என்றும் சொல்லுகிறது –
இத்தால் -போகமே புருஷார்த்தம் -அது தானே ஈஸ்வரனை ஆஸ்ரயித்து பெற வேணும் என்கிறது

நீதியால் வணங்கு பாத –
தேவரீரை ஐஸ்வர்ய விசிஷ்டனாக ஆஸ்ரயிக்க சொல்லுகிற வேதோக்த ப்ரகாரத்தாலே
அவன் உபாசிக்கிற திருவடிகளை உடையவனே

நின்மலா –
பிரயோஜனாந்தரங்களை அபேஷிக்கிறது -ஈஸ்வரோஹம் -என்று இருக்கிற துர்மானி
ஆஸ்ரயித்தான் என்று -இத் தோஷங்களை நினையாதே -நம் பக்கலிலே சாபேஷனாய்
வந்தான் என்கிற குணத்தையே நினைத்து -அநந்ய பிரயோஜநருக்கு முகம் கொடுக்குமா
போலே முகம் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே –
இப்படி விஷயீ கரித்து அவனுக்கு கொடுத்த ஐஸ்வர்யம் ஏது என்னில்
மஹா தேவஸ் சர்வ மேதே மஹாத்மா ஹூத் வாத்மானம் தேவ தேவோ பபூவ –
என்கிறபடியே தேவ தேவத்வத்தை கொடுத்தவனே –
இது பிரயோஜநாந்தர பரர் எல்லாருக்கும் உப லஷணம்

நிலாயா சீர் –
வர்த்திக்கிற குணங்கள் –
அதாகிறது ஞான சாதனமான அமாநித்வாத் யாத்மகுணங்களாலும்
உபாசன அங்கமான சம தமாதி குணங்களாலும் சம்பன்னராய் இருக்கை
அங்கன் அன்றியே –
நிலாய சீர் வேதம் -என்று வேத விசேஷணமாய் -நித்யத்வா -அபௌருஷேயத்வ
நிர் தோஷத்வங்களாலே  -காரண தோஷ பாதக ப்ரத்யயாதி தோஷ ரஹித கல்யாண
குணங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

வேத வாணர்
வேதங்களுக்கு நிர்வஹகர் என்னலாம் படி வேதார்த்தத்தை கரை கண்டவர்

கீத வேள்வி –
அந்த வேதார்த்த அனுஷ்டானமாய் சாம கான பிரதானமான யாகங்களிலே ப்ரவர்த்தர் ஆனவர்கள்
அதாவது -ஆத்ம யாதாம்ய ஞான பூர்வகமாக த்ரிவித பரித்யாக உக்தராய் பகவத் சமாராதான
புத்தியாலே அனுஷ்டிக்கும் யஞ்ஞங்கள்

நீதியான கேள்வியார் –க்ரமப்படி ஸ்ரவண மனனங்களை செய்பவர்கள் –
உக்தமான வேதார்த்த தாத்பர்யம் கைப்படுகைக்கும் தத் கார்யமான கர்ம யோகாத்யா
அனுஷ்டானங்களுக்கும் அடியான கேள்வியை உடையவர்கள் –
நீதியான கேள்வி யாகிறது -ப்ரீஷ்ய லோகான் -இத்யாதியில் சொல்லுகிறபடியே
நிர் வேதா வ்ர்த்தி பிறந்து ப்ரஹ்ம நிஷ்டரான ஆசார்யன் பக்கலில் உபசன்னராய்
ச்ரோதவ்யோ மந்தவ்ய -என்கிறபடியே சரவண மனனங்களை பண்ணுகை

நீதியால் வணங்குகின்ற நீர்மை –
நிதித்யாஸிதவ்ய -என்கிறபடியே கர்ம அங்கமான அநவரத பாவனை பண்ணுகைக்கு
உபாச்யனாய் நிற்கிற ஸ்வபாவம்

நின் கண் நின்றதே –
உன் பக்கலிலே வர்த்திக்கிறது இத்தனை –
அவதாரணத்தாலே வேறு ஆஸ்ரயணீயர் இல்லை -என்கிறார்

—————————————————————————————-

பத்தாம் பாட்டு -அவதாரிகை –
சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே –
காரணந்து த்யேய -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீயம்
என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரயணீயத்வமும் தேவரீருடையது
என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் –

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

வியாக்யானம் –
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் இத்யாதி –
த்ருஷ்டாந்த்தத்திலே அர்த்தத்தை சிஷித்து த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார்
தன்னுளே
-என்கிற இத்தால் -சரீர பூதசேதன அசேதனங்களும் -ஸ்ருஷ்டாத வியாபாரங்களும்
-ஸ்வரூப அந்தர்பூதம் என்கை –

திரைத்து எழும் தரங்கம் –
நிஸ்தரங்க ஜலதி யானது வாயுவாலே கிளர்ந்து எழுந்து எங்கும் ஒக்க சஞ்சரியா நின்றுள்ள
திரைகளை உடைத்தாகை –
த்ருஷ்டாந்திகத்திலே வாயு ஸ்தாநீய பகவத் சங்கல்பம் அடியாக ஸ்ருஷ்டி காலத்திலே
பிறந்த குண வைஷம்யம்

வெண் தடம் கடல் –
சஞ்சாரியான திரையையும் அசஞ்சாரியான வெண்மையும் உடைத்தான இடமுடைய கடல் –

இது மேலே –நிற்பவும் திரிபவும் -என்கிறதுக்கு திருஷ்டாந்தம்

தன்னுளே திரைத்து எழும் தடங்குகின்ற தன்மை போல் –
வாயு வசத்தாலே பரம்பின திரைகள் மற்றப்படி ஒன்றிலே ஓன்று திரைத்து எழுந்து
உப சம்ஹரிக்கிற ஸ்வபாவம் போலே -இத்தால் ஏக த்ரய பரிணாமத்தை சொல்லுகிறது அன்று –
கீழ்ப் பாட்டிலே உபாசனம் சொல்லிற்றாய் -இப்பாட்டில் உபாஸ்யமான ஜகத் உபாதான
காரணத்தை சொல்லுகிறது -அதாகிறது
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே காரணம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே
கார்யம் என்று வேதாந்த பிரசித்தமான அர்த்தம் -இது எத்தாலே அறிவது என்னில் –
ந கர்மா விபாகாத் -என்கிற ஸூத்ரத்தாலே
சதேவ -என்கிற அவிபாக ஸ்ருதியாலே -அக்காலத்தில் ஷேத்ரஞ்ஞர் இல்லாமையாலே
கர்மம் இல்லை என்று பூர்வ பஷித்து -ஞானவ் த்வா வஜ்ர வீச நீ சௌ –என்றும்
நித்யோ நித்யாநாம் -என்று ஷேத்ரஞ்ஞர்களுக்கும் தத் கர்ம ப்ரவாஹத்துக்கும் அநாதித்வம்
உண்டாகையாலே -அது அர்த்தம் அன்று என்று நிஷேதித்து -நாம ரூப விவேக பாவத்தாலே
சதேவ என்கிற அவதாரணம் உபபன்னம் என்றது இறே
திருஷ்டாந்தம் ஏக த்ரவ்ய முகத்தாலே சொன்னார் இவரே அன்று –

யதா சோம்யை கேந  ம்ர்த்பிண்டேந -என்று உபநிஷத்து
கடகமகுட கர்ணிகாதி பேதைஸ் -என்று ஸ்ரீ பராசுர பகவான்
இத்தை த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார்

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் –
உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பத்தியும் விநாசமுமாய் போருகிற ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தமும் –
ப்ரக்ர்த உபசம்ஹார வேளையிலே -தம ஏகி பவதி -என்கிறபடியே தேவரீர் பக்கலிலே
அடங்குகின்ற இந்த ஸ்வபாவம்

நின் கண் நின்றதே –
தேவரீர் பக்கலிலே உள்ளது ஓன்று -இவ் உபாதான காரணத்வம் வ்யக்த்யநதரத்தில் இல்லை என்கை
முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய தனியன் வியாக்யானம் –

April 10, 2013

ஸ்ரீ திருக் கச்சி நம்பி அருளிச் செய்த தனியன்

அவதாரிகை –
தருச்சந்தப்  பொழில் –
இதில் திருச்சந்த விருத்தம் செய்து அருளின திரு மழிசைப் பிரான் அவதார ஸ்தலமான
திருமழிசை வளம் பதியும் -ஒரு தேசமே என்று அதில் ஆழம் கால் படும்படி -சொல்லுகிறது –

தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் துயர் தீரத்
திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கு மண நாறும்
திருச்சந்ததுடன் மருவு திருமழிசை வளம் பதியே –

வியாக்யானம் –
தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் துயர் தீரத்
தரு –கல்பகத்தரு
சந்து -சந்தனம்
சந்தகப் பூ மலர் சோலை இ றே

இரண்டு சோலையாலும் சூழப் பட்ட –
தாரணி -பூமி
பொழில் தழுவி இருக்கிற பூமியில் உண்டான மனுஷ்யர் துக்கம் தீர
அவர்கள் பகவத் விஷயத்தை இழந்து இருக்கிற துக்கம் தீர –
அவர்கள் தான் போக்ய -போக உபகரண -போக ஸ்தானங்களை விரும்பி -பகவத் விமுகராய்த்து இருப்பது
அதுக்கு மேலே -அறியார் சமணர் அயர்த்தார் பௌத்தர் சிறியார் சிவப்பட்டார் -என்று இ றே
அவர்கள் அந்ய சேஷ பூதராய் அனர்த்தப் படுகிறது –
அவற்றை நிவர்ப்பித்து சத்வ வ்ருத்தர் ஆக்குகைகாக ஆய்த்து –திருச்சந்த விருத்தம்
என்கிற திவ்ய ப்ரபந்தம் செய்து அருளிற்று –

அதிலே
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்துண்டு -நும் முறுவினைத் துயருள் நீங்கி உய்மினோ -என்றும் –
நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ -என்றும் –
பகவத் பஜநத்தையும் -தேவதாந்தர அஞ்ஞான அசக்திகளையும் -காணில் -காந்தம் -வண்டு –
போறுகளிலே -ஸூவ்யக்தமாக தர்சிப்பித்தும் திருத்தி அருளிற்று –
திருச்சந்த விருத்தம் –
சந்தோ ரூபமான வ்ர்த்தம் -என்றபடி –
கலித்துறை -விருத்தம் -வெண்பா -என்றால் போலே சொல்லக் கடவது இறே
செய் திரு மழிசைப் பரன் வருமூர் –
ஏவம்வித பிரபந்த நிர்மாண கரராய் -திருமழிசைக்கு நாதரான ஆழ்வார் அவதரித்த ஊர்
இருக்கும்படி சொல்லுகிறது
செய் திரு மழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ்
ஆகரத்தில் சந்தநா தருக்களாலும் பரிமளிதமாய்
கோங்கு மண நாறும்
கோங்கு என்கிற வர்ஷத்தின் உடைய புஷ்ப பரிமளத்தையும் உடைத்தாய்
எல்லா வற்றாலும் மிக்க பரிமளத்தை  உடைத்தது ஆகையாலே
வேரி மாறாத பூ மேல் இருப்பாளாய் –
ஸ்ரீ என்ற திரு நாமத்தை உடையவளான
பெரிய பிராட்டியாருடன் பொருந்தி இருக்கும் திருமழிசை
திருச்சந்ததுடன் மருவு திருமழிசை வளம் பதியே –
இந்த புவியில் இது ஒரு தேசமே
கோங்கு -என்று பரிமளமாகவும்
வளம் -அழகும் சம்பத்தும்
ஆழ்வாராலே ஊரும் உத்தேச்யமாய் இருக்கிறது –

—————————————————————————————

ஸ்ரீ திருக் கச்சி நம்பி அருளிச் செய்த தனியன்

அவதாரிகை –
உலகும் மழிசையும் –
இதில் -திருமழிசை -மஹீஸார ஷேத்ரம் -என்று மஹத்தையை சொல்லுகிறது –

உலகும் மழிசையும் உள் உணர்ந்து தம்மில்
புலவர் புகழ் கோலால் தூக்க -உலகு தன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது –

வியாக்யானம் –
உலகும் மழிசையும்

லோகங்களையும் விலஷணமான திருமழிசையையும்
உள் உணர்ந்து
மகாத்ம்யங்களை மனசிலே மனனம் பண்ணி
தம்மில் புலவர்
பார்க்கவாதி மகர்ஷிகளானே மகா கவிகள்
புகழ் கோலால் தூக்க
இவற்றின் புகழை என்னுதல்
புகழ் கோலாலே என்னுதல்
தூக்க
துலைப்படுத்தி நிறுக்க
உலகு தன்னை வைத்தெடுத்த பக்கத்தும்
லோகத்தை வைத்தெடுத்த துலையைக் காட்டிலும்
மா நீர் மழிசையேவைத்தெடுத்த பக்கம் வலிது –
மிக்க ஜல ச்ம்ர்த்தியை உடைய மஹீஸார ஷேத்ரத்தை வைத்தெடுத்த துலையே
அதுலமாய் இருந்தது
அகஸ்த்ய துர்வாசாதிகள் இருந்த பக்கம் போலே ஆழ்வார் அவதார ஹேதுவான தேசமும்
தாழ்ந்து காட்டிற்று இறே
ஜகன் நாதன் இறே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிறது –
சிந்தயேத் ஸ ஜகந்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் சநாதனம் -என்னக் கடவது இறே
அத்தாலே வைத்தெடுத்த பக்கம் வலிதாய்த்து
தாத்ரா துலி தா லகு மஹீ -என்னக் கடவது இறே
மா நீர் மழிசை -தீர்த்தம் திருமண்ணுண்டான ஸ்தலம்
மழ சாடு கண்டீர் மருந்து -என்னக் கடவது இறே
பக்தியான பாசனமான பக்திஸார அவதரணத்துக்கு அநுகுணமாய் இருக்கும் தேசம் என்று
அந்த திவ்ய தேச வைபவம் சொல்லிற்றாய்த்து

துலயா மலவே நாபி நஸ்வர்கம் ந புநர்பவம்
பகவத் ஸங்கி ஸங்கஸ்ய மர்த்யாநாம் கிமுதா சிஷ-என்று இறே ததீய வைபவம் இருப்பது

—————————————————————————————————-

ஸ்ரீ கோயில்   கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் -சொல் தொடர் ஒற்றுமை–திருச் சந்த விருத்தம் —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 15, 2013

164-
பூநிலாய ஐந்துமாய் -1
தன்னுளே -10
உபாதான காரணத்வத்தை திருஷ்டாந்த சஹிதமாக சொல்லி அருளி –
ஸ்வ இதர சமஸ்த வஸ்துக்களிலும் விலஷணன் -ஐந்து மாய் என்றும் தத் தத்கத குணங்கள் என்றும்
ஒருமைப் படுத்திக் கூடுவது -சாமாநாதி கரண்யம் -சரீர ஆத்ம சம்பந்தம் –
அவற்றின் சத்தாதிகள் அவன் அதீனம் -இதை யார் நினைக்க வல்லர் –

பரமாணுக்களே -உபாதான காரணம் -என்னும் வைசேஷிகர் நினைக்க வல்லர் அல்லர்
பிரதானமே -உபாதான காரணம் -என்னும் -சாங்க்யர் நினைக்க வல்லர் அல்லர்
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்க வல்லர் அல்லர் –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயமும் பரஹம பரிணாமம் என்னும் பேத அபேத வாதிகள் நினைக்கவோ –
நிர்விசேஷ சிந் மாத்ரம் ப்ரஹ்மம் தத் வ்யதிகரங்கள் அபரமார்த்தங்கள் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ –
வேதாந்த ப்ரேமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது -என்கிறார் –

———————-

165-
ஊறோடு ஓசை -2
உண்ணும் சோறு பருகு நீர் -திருவாய்மொழி -6-7-1-
சேலேய் கண்ணியரும் -திருவாய் மொழி -5-1-8-
சப்தாதிகள் ஐந்துக்கும் உப லஷணம்-

————————————————————————————————-

166-
ஆதியாய -5-
நிற்கின்றது எல்லாம் நெடுமால் -நான்முகன் திருவந்தாதி -54
பிரதீதி வ்யவஹாரங்களிலே வந்தால் பிரதானவன் ஆனவனே சாஷாத் கரிக்கும் போது
நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்கிறபடி –
விசேஷ்யமான தேவரீர் பிரதானராய் சேதன அசேதனங்கள் விசேஷண மாத்ரமாய் இருக்கையும் -சப்த வாச்யங்களில் பிரதானனாய் நிற்கையும்
நிற்கின்ற -சமஸ்த வஸ்துக்களிலும் சேதன த்வாரா பிரவேசித்து -அவற்றுக்கு வஸ்துத்வ
நாம பாகத்வம் உண்டாகும் படி நிற்கிற நிலை -என்றவாறு –

————————————————————————————————–

167-
ஓன்று இரண்டு மூர்த்தியாய் -7
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி -திரு நெடும் தாண்டகம் -2-
ஓன்று பிரதானமான மூர்த்தியும் -அப்ராதமான இரண்டு மூர்த்தியும் -பிரம ருத்ராதிகளைக்
சரீரமாக கொண்டு -அவர்களுக்கு நிர்வாஹனான ஸ்ரீ மன் நாராயணன் –
ஒன்றாம் சோதி -ஒன்றே யாம் சோதி -உத்பாதகமாயும் சரீரியாயும் சேஷியாயும் இருக்கும் தேஜஸ் ஒன்றே
மற்ற இரண்டும் உபபாதமாயும் -சரீரமாயும் -சேஷமாயும் இருக்கும் -எங்கே கண்டோம் என்னில் –

ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் -என்று ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி –
ந பிரம்மா நேசான நேமே த்யாவா ப்ருத்வீ -என்று அசேதனமான ப்ருத்வ்யாதிகளோபாதி பிரம ருத்ராதிகளையும்
சம்ஹாரத்திலே கர்மீபவிக்கச் சொல்லுகையாலும் -ஸ ப்ரஹ்ம ஸ சிவ -இத்யாதிகளில்
இவர்களுடைய ஷேத்ரஜ்ஞத்வ சேஷத்வத்தை சொல்லுகையாலும் –
ஏஷ சர்வ பூதாந்தராத்மா என்று சர்வ சப்தத்தாலே க்ரோடீ க்ருதமான வ்யாப்ய பதார்த்தங்களிலே
அந்ய தமர் ஆகையாலும் -கார்யத்வமும் -ஷேத்ரஜ்ஞத்வமும் சேஷத்வமும் சரீரத்வமும் சம்ப்ரதிபன்னம் என்கை –

—————————————————————————————————–

168-
ஆதியான வானவர்க்கும்-8
ஏழு உலகின முதலாய வானோர் -<திருவாய்மொழி -1-5-1-
அஸ்த்ர பூஷணா தயா க்ரமத்தாலே நித்ய ஸூரிகளை ஜகத்துக்குக் காரண பூதராக சொல்லக் கடவது இ றே
அஸ்த்ர பூஷண அத்யாயத்திலே ஸ்ரீ கௌஸ்துபத்தாலே ஜீவ சமஷ்டியை தரிக்கும் என்றும் –
ஸ்ரீ வத்சத்தாலே பிரகிருதி ப்ராக்ருதங்களை தரிக்கும் என்றும்சொல்லா நின்றது இ றே

——————————————————-

169-

நிலாய  சீர் வேத வாணர்-9
மிக்க வேதியர் -கண்ணி நுண் சிறு தாம்பு -9
நிலாய சீர்-வர்த்திக்கிற குணங்கள் -அமாநித்வாத ஆத்ம குணங்களாலும் -உபாசன அங்கமான
சம தமாதி குணங்களாலும் -சம்பன்னராய் இருக்கை
அங்கன் இன்றிக்கே நிலாய சீர் வேத -என்று வேத விசேஷணமாய்
நித்யத்வ அபௌருஷேயத்வ நிர்த்தோஷத்வங்களாலே -காரண தோஷ பாதக பரய யாதி
தோஷ ரஹித கல்யாண குணங்களைச் சொல்லிற்றாகவுமாம்
மிக்கார் வேத விமலர் -என்ற ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்தி கேட்டு -மிக்க வேதியர்-என்கிறார் –
பகவத் ப்ராப்தியே புருஷார்தம் என்றும் -சரணாகதியே பரம சாதனம் என்றும் -வேதாந்த விஜ்ஞானத்தாலே
ஸூநிச்சிதராய் இருக்குமவர்கள் -அன்றிக்கே மிக்க வேதியர் வேதம்-என்று வேதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
சுடர் மிகு சுருதி-என்கிறபடியே பிரத்யஷாதி பிரமாணங்களில் அதிகமான வேத பிரமாணம் என்கிறபடியே

—————————————————–

170-

சொல்லினால் படைக்க நீ படைக்க-11
எப்பொருளும் படைக்க–நான்முகனைப் படைத்த -திருவாய்மொழி -2-2-4-
லோக ஸ்ரஷ்டாவான பிரமனும் நாரணனாலே படைக்கப் பட்டவன் –
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்ற ஸ்ருதி சாயையிலே இருவரும் அருளிய படி –

———————————————————

171

உலகு தன்னை நீ படைத்தி –உலகு தன்னுளே பிறத்தி -12
இருவர் அவர் முதலும் தானே இணைவனாம் -திருவாய் மொழி -2-8-1-
சகல பதார்த்தங்களுக்கும் ஜநகனான நீ -உன்னாலே ஸ்ருஜயனாய் இருப்பான் ஒரு ஷேத்ரஞ்ஞனை ஜனகனாக்கிக்
கொண்டு ஜநிப்பதே -என்று ஆழ்வார் விஸ்மிதர் ஆகிறார் –
இருவர் -இருவரான பிரம ருத்ராதிகளுக்கும் உத்பாதகன் நாரணனே என்றும் -கூறி
இணைவனாம் -அவர்களோடு சமமாக எண்ணலாம்படி விஷ்ணுவாய் அவதரித்த அவதார சௌலப்யம்
ஆக -பரத்வ சௌலப் யங்களை ஆழ்வார்கள்  அனுபவித்தபடி-
காரணத்வத்தாலே வந்த பரத்வமும் கார்யத்வத்தாலே வந்த அபரத்வமான நீர்மையும் இ றே- பராவர சப்தார்த்தம் –
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று பகவானை வேதாந்தம் பராவரன் -என்று இ றே கூறுவது –

—————————————————————

172-
பணத்தலை-15
பைந்நாகணை-திருப் பல்லாண்டு -9-
பகவானுடைய திரு மேனி ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடையவர் திரு வனந் தாழ்வான் –
பணத்தலை -என்ற இடத்தில் இவ்விஷயம் அஸ்புடம்
திருப் பல்லாண்டில் அதிஸ்புடம் ஆகிறது –

—————————————————————–

173
செங்கண் நாகணை -15
அழல் உமிழும் பூங்கார் அரவு-நான் முகன் திருவந்தாதி -10
சிகப்பு நிற காரணங்கள் பல -பகவத் களிப்பின் மிகுதியால் கண் சிவந்து இருக்கும் -திரு சந்த விருத்த கருத்து –
பரம பதத்தில் அஸ்த்தானே பய சங்கை ஏற்பட்டு அழல் உமிழும் கோபத்தாலே கண் சிவந்து
ஆங்கு -என்றது பரம பதத்தை நினைத்து இ றே -ஈட்டில் -1-10-1-வ்யக்தம் –

———————————————————————–

174-
ஏக மூர்த்தி -17
குன்றில் நின்று -48
விண் மீது இருப்பாய்-திரு வாய் மொழி -6-9-5-பர வ்யூஹ விபவ ஹாரத்த அர்ச்சா -திருமேனிகள் அனுபவம் -பஞ்ச பிரகாரங்கள்
பகல் ஓலக்கம் இருந்து -கறுப்பு உடுத்து சோதித்து கார்யம் மந்தரித்து
வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி -விண் மீது
என்கிற ஐந்திலும் காணலாம் -ஆச்சர்ய ஹ்ருதயம் ஸ்ரீ ஸூ க்தி

————————————————————————

175-
புள்ளின் மெய்ப் பகை-திருச்சந்த விருத்தம் -19
நாகப் பகைக் கொடியான் -திருப்பல்லாண்டு -8-
திருவடிக்கு சகஜ சத்ரு -சாதாரண திருஷ்டியில்
இருவரும் கூட விரும்பி கைங்கர்யம் செய்யும் -கண் வளர்ந்து அருளுகிறது என் கொலோ –
இருவரையும் ஏக கண்டராக்கி அடிமை கொண்ட இது சர்வ சக்தித்வம் பிரகாசிக்க –
அநாதியாக அஹங்காரத்தை விரும்பி போந்த சேதனனை சேஷ தைகதசரான
நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக்குவது இந்த சக்தி இ றே –
இத்தையே அஹம் -என்று சரம ஸ்லோகத்தில் அருளிச் செய்தான் –

—————————————————————-
176-
ஆமையான கேசவா-20
கேழல் ஒன்றாக இடந்த கேசவன்-திருவாய்மொழி-1-9-2-
கேசவா என்றது பிரமாதிகள் சரணம் புகுர -தத் ரக்ஷண அர்த்தமாக கூர்ம சஜாதியன் ஆகையாலே -மேன்மை அழியாதபடி –
கேழல் -கேசவன் -பிரசஸத கேசன் -அப்போதை திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலை –
கூர்ம வராக அவதாரங்களிலும் அஜகதசவ ஸ்வபாகனாகவே ஆழ்வார்கள் கூறுகிறார்கள் –
கீதையிலும் -அஜோபிசன் அவ் யயாத்மா பூதானம் ஈஸ்வரோபிசன் -என்றான் இ றே –

————————————————————————

177-
பண்டும் இன்றும் மேலும் -22
மனனக மலமற -திருவாய் மொழி -1-1-2-
இப்பாட் டுக்களில் கிரியா பதம் இல்லை –
பண்டும்- பூமி – நாதனே இப்படிப் பட்ட தேவரீருக்கு ஆஸ்ரித வத்சலர் என்னுமிது ஓர் ஏற்றமோ –
என்று வாக்ய சேஷம் கொள்ள -வேண்டும் -அன்றிக்கே -பகவான் ஆழ்வாருக்கு வட தள சயனத்தை
காட்டிக் கொடுக்க -அதிலே வித்தராய் வாய்ப் பேச்சு அற்று போனார் -என்னவுமாம்
மனனக  மலமற –இனன் எனதுயிர் -என்றும் கொள்ளலாம்
அன்றிக்கே
எனன் உயிர் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் ஆகவும் கொள்ளலாம் –

—————————————————————–

178-
வரத்தினில் சிரத்தை மிக்க -25
மதிள் இலங்கைக் கோ -திருவாய்மொழி -4-3-1-
பிரம்மா தனக்கு தந்த வரத்தினில் அத்யாதரத்தை பண்ணி -வர ப்ரதனான பிரம்மாவுக்கு
உத்பாதகனான அவனோடு விரோதித்து -தன் வரத்துக்கு புறம்பான வடிவு கொள்ள வல்லை –
என்று உன்னை அறியாதே வரத்தையே விஸ்வசித்து இருந்தவன் –
இம் மதிளும் ஊரும் உண்டே நமக்கு -என்று சர்வ ரஷகனான பெருமாளை மதிளை ரஷகம் என்று
இருந்து சக்கரவர்த்தி திருமகனை எதிரிட்டான் ஆயிற்று -இது இ றே தானே தனக்கு பண்ணிக் கொள்ளும்
-ரஷை -ஆக ஆசூர ராஷசர்கள் ரஷகரான பெருமாளை விட்டிட்டு அரஷகத்தை ரஷகமாக பிரமித்த படி –
இத்தன்மை உடையார் எல்லாரும் ஆசூர ராஷசர்களே –

————————————————————

179-
பௌ நீர் –கிடந்தது கடைந்த -28
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –வங்கக் கடல் கடைந்த-திருப்பாவை 2-30-
சமுத்திர சயன மதனங்களை அனுபவித்தபடி –

—————————————————————

180-
கூனகம் புகத்தெறித்த -30
கொண்டை கொண்ட கூன்–அரங்க ஒட்டி -49
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் -திருவாய்மொழி -1-5-5-
ஒருகால் நின்று உண்டை கொண்டு-பெரிய திருமொழி -10-6-2-
உள்ளங்கை நெல்லிக்கனியாக சாஷாத் கரித்த ஸ்ரீ வால்மீகி பகவானும் அறியாத
ஸ்ரீ ராம வ்ருத்தாந்தத்தை அறிந்த ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகள் -நிர்ஹேதுக கிருபையால்
மதிநலம் அருளப் பெற்ற படியால் -அபரிச்சின்ன ஞானம் ஆழ்வார்களுக்கு –
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக்  கொண்டேன் –
கூனி கூன் நிமிர்தவர்-பெருமாள் அஹங்கரிக்கும் ஜீவனுடைய அஹங்காரத்தை அழித்து
குனிய வைக்கிறார் -திருவரங்கம் பெரிய பெருமாள் -எனபது திருமழிசைப் பிரான் அனுபவம் –

————————————————————

181-
ஆதி ஆதி ஆதி நீ -34
வேர் முதல் வித்தாய் -திருவாய்மொழி -2-8-10-
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்வதீயம் -என்கிறபடி
த்ரிவித காரணமும் நீ -என்றவாறே –
வேர் -சஹ காரி காரணம் -முதல்-நிமித்த காரணம் -வித்து-உபாதான காரணம்
பரம வைதிக சித்தாந்தம் -இது-

——————————————————

182-
பாலின் நீர்மை -44
நிறம் வெளிது செய்து -மூன்றாம் திருவந்தாதி -56
நிகழ்ந்தாய் பால் பொன் -நான்முகன் திருவந்தாதி -24
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் -பெரிய திருமொழி -4-9-2-
திருமால் கரு நெடுமால் சேயன் -திரு நெடும் தாண்டகம் -3
யுக அநு குணமாக தனது காள மேக நிபஸ்யாமமான நிறத்தை அழிய மாறி -முகம் காட்டுகிறான் –
கலி யுகத்தில் தன் பக்கல் அபிமுகராய் ஒரு வர்ண விசேஷத்தில் ருசி பண்ணுவார் இல்லாமையாலே
ஸ்வாபாவிகமான வடிவு தன்னை கருநீல வர்ணனாய் இருக்கும் படி –

—————————————–
183
எழுந்து இருந்து பேசு -61
வகை யருளாய் -வந்தே-திருவாய்மொழி -3-2-4-
கண் வளர்ந்து அருளா நிற்க அருளிச் செய்ய ஒண்ணாது
எனது பயம் கெட எழுந்து இருந்து அருளிச் செய்ய வேணும்
எழுந்து இருக்கும் போதை சேஷ்டிதத்தாலும் -அருளிச் செய்யும் போதை ஸ்வரத்தாலும்
எனக்கு பயம் கெட வேணும்-என்கிறார் திரு மழிசைப் -பிரான்
சேரும் வகை அருள வேணும் -என்கிறார் நம் ஆழ்வார் –
அது செய்யும் இடத்து முகம் தோற்றாது  அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது
வந்து அவதரித்து உனது குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாதபடி வந்து
சேர்த்து அருள வேணும் என்கிறார் –
———————————————————-

184-
எம்மாதி -69
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -திருவாய்மொழி -3-2-1-
எம்மாதி என்பான் என் என்னில் -ஈஸ்வரன் ஜகத் சிருஷ்டியை பண்ணுகிறது முமுஷு
ஸிச ருஷையாலே யாகையாலே -அந்த ஸ்ருஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர்
பக்கலிலே என்று எம்மாதி என்கிறார் –
எம் முகில் வண்ணனே -ஸ்ருஷ்டி சர்வ சாதாரணம் ஆனாலும் இவர் தமக்காக என்று இருக்கிறார்
எங்கும் ஒக்க வர்ஷித்தாலும் -அது கொண்டு விளைத்துக் கொண்டவன் -எனக்காக -என்று
இருக்குமா போலே -எல்லாருக்கும் ஒக்க அவன் செய்தாலும் -கிருதஞ்ஞன் எனக்காக என்று
இருக்கும் இ றே –
ஸ்ருஷ்டி அவதாராதிகளைப்  போலே -ஸ்வார்தமாக என்று இறே ஞானாதிகர் அநு சந்திப்பது –
ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்தி

—————————————————-

185
நடந்த கால்கள் நொந்தவோ -61
தாளால் உலகம் அளந்த அசைவே கொல் -நான் முகன் திருவந்தாதி -35
அடியார் அல்லல் தவிர்ந்த அசைவோ -திருவாய் மொழி -8-3-5-
அர்ச்சா சமாதியிலே -அர்ச்சக பராதீன ஸ்வ வ்யாபாரங்களை உடையவனாய்
குளிர நோக்குதல் –வினவுதல் -திரு மேனி அசைதல் -எழுந்து உலாவுதல்
இன்றிக்கே இருக்கை -ஆழ்வார்கள் வயிறு பிடிக்கிறார்கள் -இவனுடைய அர்ச்சா சமாதி
என்று தெளியாதே  கலங்கி -பகவானுக்கு என் வந்ததோ -பலவாறு அபேஷிக்கிறார்கள் –
திருக்குடைந்தை -திருவல்லிக்கேணி -திருக்கோளூர் -திருப்புளிங்குடி -எழுந்து அருளிய
பெருமாளை இங்கனம் வேண்டியபடி –

——————————————————

186
எங்கள் செங்கண் மாலை -75
உள்ளமாக் கொள்ளோமே -பெரிய திருமொழி -11-7-6-
மற்று உள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்கிறார்கள் இப்படி –

————————————————————-

187
வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-81
கண்ணன் கழலிணை -திருவாய் மொழி -10-5-1-
இப்படி இருவரும் பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்கள் –

————————————————————–

188-
என்னாவி தான் இன்ப வீடு பெற்றதே -120
வீடு பெற்ற குருகூர் சடகோபன்-திரு வாய் மொழி -10-10-11-
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத நிரதிசய ஆனந்தமான கைங்கர்ய ரூப  மோஷத்தை
இப்படி அருளி இருவரும் தங்கள் பிரபந்தங்களைத் தலைக் கட்டின படி –

————————————————-

198
அங்கமாறும் வேதம் நான்கும் -15
அமரவோர் அங்கமாறும் வேதமோர் நான்கும் -திருமாலை -43–

———————————————–

199-
மற்றவன் -25
மாறாளன்-திருவாய்மொழி -4-8-1-

—————————————————

200
படைத்து அடைத்து அதில் கிடந்தது -28
படைத்து அடைத்து அதில் கிடந்தது –92

———————————————-
201-
ஏழை நெஞ்சமே-115
ஏழை நெஞ்சே -பெரிய திருமொழி -8-9-7-

—————————————————————-

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளி செயல் அரங்கம் -திரு சந்த விருத்த சாரம் ..

November 26, 2011

எட்டரைக்கு முடிக்க வேண்டும்-எட்டரவரை சொல்கிறேன் -நக சுவை .

பண்டிதன் -பாகவதம் ஸ்லோகம்-சுருக்கம் சொல்வதே
பிரம ஸ்தோத்ரம்-சுருக்கி -விதீர்ணம்-அஸ்து தே  –மூன்று எழுத்தில் –
வைஷ்ண வித் -வைஷ்ண விட்டு –
கிடந்தவாறு எழுந்து இரு/பை நாக பாயை சுருட்டி கொள்
இட்ட வழக்காக இருப்பான் அவன்-
சனக சந்தாதிகள் போல் பக்தி சாரரும் அந்தர்யாமி ஆழ்ந்து .
மானச புத்ரர் ஏழு பேர் ஸ்ருஷ்ட்டி பண்ணி –
பிரவர்த்தி தர்மத்தில் நிவ்ருத்தி-நிவ்ருத்தி தர்மத்தில் பிரவர்த்தி –
அவன் இடமே -அவன் நியமனம்-பக்குவம் அடைந்த-
துருவன்-சங்கு ச்பர்சத்தால் ஞானம் அடைந்தது போல் -மயர்வற மதி நலம் பெற்று .
உள் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்ட -சொன்னார்
என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தில் வைத்து ..-கரு இருந்த நாள் முதலா காப்பு
ஸூவ ரக்ஷணம்  பண்ணாமல் கர்பத்தில் இருக்கும் பொழுதே ரஷிக்கும் -அவனையே நினைந்து
வாசுதேவ சர்வம்-பகுனாம் ஜன்ம நாம் அந்தே -அறிந்த பிறவி
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின்பு மறந்திலேன்
சட வாயுகுவா-அவன் எங்கே -சமஸ்க்ருதம்-
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-அனைத்துக்குள்ளும் இருந்தாலும்
நாம் உணர வில்லை- சரீர ஆத்மா -விசிஷ்ட அத்வைதம்
பூநிலாய ஐந்தும் -ஆரம்பித்திலேயே -ஸ்ருஷ்ட்டி லயம் விவரிக்கிறார்
ஆகாசம்-சப்தம் /வாயு-சப்தம் ஸ்பர்சம்
தேஜஸ்-அக்னி-சப்தம் ஸ்பர்சம் –வேறு தன்மையாய் யார் நினைக்க வல்லரே .
அறிந்தேன் என்பவன் அறிய வில்லை-சொல்லினால் சொலப்படா  தோன்றுகின்ற ஜோதி நீ
அறிய வில்லை என்பவன் அறிந்தவன் ஆகிறான்
உள்ளம் கை நெல்லி கனி போல் காட்டி
பஞ்சி கரணம்-பிரக்ரீயை
இவற்றுள் எங்கும் பரந்து கரந்து உளன்
உறையில் இடாதவர் -பரத்வம் நிர்ணயம்
எதற்கும் இடம் கொடுக்காமல் ஆதிக்யம் உடன் எதிரேகம் முறையில்
பீஷ்மர்-நேராக கண்ணனை காட்டி பரத்வம் நிர்ணயிக்க –
சக தேவன்-ராஜ சூயை யாகம்-யார் கொலோ அகர பூஜைக்கு உரியார் -கண்ணன் அல்லால் ..
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசைனையும் தகுமோ
புஷ்ப மழை பொழிந்ததாம் சக தேவன் மேல் -அடித்து சொன்னதும்
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
ஆதி யான கால எந்தை யாவர் காண வல்லரே
பிரம்மாவே ஸ்தோத்ரம் பண்ண- கேசவ-
க -பிரம்மா தேவனால் பிரதிஷ்டை-காஞ்சி மகாத்மயம்

ஈசன்-இருவரும் உம் இடம் வந்து உண்டானவர்கள்

சாகா வரம் கேட்டான் முடியாது -சிருஷ்டிக்க பட்டவரால் கொல்ல கூடாது -ஹிரண்யன் பிரம்மா இடம்
தன்னையே சமர்ப்பித்து -சிவன்  ஈஸ்வரன் ஆனான் –
மார்வில் இருப்பவள் கடாஷம்- மார்பில் வியர்வை -சாபம் போக்கும் -கபாலி
அரக்கு பிச்சை -ஹர சாப ஹரன் –
சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம்-இனி அறிந்தேன் -ஸ்ரீமான் நாராயணன்
பூத பவ்ய பவத் பிரபு-முக் காலத்திலும் சர்வ ஸ்வாமி -ஆதி யான கால எந்தை
எங்கும் உளன் கண்ணன் -தேச கால வஸ்து -பரிச்சேதம் இல்லாதவன் –
எப்படி என்ற கேட்டவரை –
இதை ஒப்பு கொள்ளாத ஹிரண்யன் பட்ட பாடு படாதீர் -நம் பிள்ளை
கடி கமலத்து உள்ள இருந்தும் காண கில்லான்
-கடல் கரையில் குடிசை கட்டி கொண்டு இருப்பது போல் –
ஆரே அறிவர் அது நிற்க-கடலை கை இட்டு காட்டுவாரை போல்
சமுத்ரைவ காம்பீரம்-ஸ்வரூப ரூபா குண விபவ ஐஸ்வர்யம் ஆழம் காண முடியாதே -சர்வ சர்வ சிவா ஸ்தாணு -ஹிரண்ய கார்பன்-அதே அர்த்தம் -விஷ்ணு ஒருவனையே குறிக்கும் திரு நாமங்கள்
லீலா விபூதி இல்லாமல் அவனுக்கு சந்தோசம் இல்லை –அதனால் நீர்மையால்
தீர்த்தன்-உலகு அளந்த சேவடி-
திரு சித்ர கூடம்-சபா பதி-நிர்வாககர் -பிரத்யட்ஷம் –
வேத நூல் பயந்தவனே -புஸ்தகம் தொலைத்த முதல் குழந்தை பிரம்மா தான்
திக்கும் தேவாதிகளும் தெரியாமல் இருக்க –
நியதம்-பரம கிருபையால்-
சொல்லினால் சுருங்க நின் குணங்கள்- சொல்ல வல்லரே –
அவன் இடம் சேர்ந்ததால் குணம் நல்லதாய் ஆக்கும்
உலகு நின்னோடு அன்றி- யாவர் உள்ள வல்லரே
உலகு தன்னை நீ படைத்தீ -சிலந்து வலை கட்டுவது போல்
உள்ளொடுக்கி வைத்து மீண்டு —
வசுரேதா ..வாசு தேவ வாசுதேவ -வாசிதம் ஜகத் த்ரயம்-வியாபித்து
தான் படைத்த உலகில் மகன் ஒருவனுக்கு இல்லாத மா மாயன் வாசு தேவன்
வாசு பிரத வசுபிரத -தன்னை செல்வமாக-அவர்களுக்கு பெருமை இரண்டும்
நான் அன்றி நீ இல்லை நீ இன்றி நான் இல்லை கண்டாய்
ஓர் இடத்து இல்லையே எங்கும் உளன்
இங்கு உளன் அங்கு உளன் சொல்லாமல் எங்கும் உளன் என்றானே
தொட்ட தொட்ட இடம் தோறும் தோன்றானாகில் என் உயிரை நானே மாய்ப்பேன்
அன்னமாய் அன்று அரு மறை ஈந்தவன்
வேத நான்கும் ஓதினாய் புள்ளதாகி
புள்ளின் வாயை கீண்டாய்-பிர மேயம் காட்டி ரட்சித்து இங்கு ..
ஆனை காத்து ஆனை கொன்று-சென்று நின்று –
சக்கர ஆழ்வான் மெதுவாக வந்ததாம் அதனால் நின்றான்
புள் கொடி பிடித்த பின்பும் -புள்ளை ஊர்தி யாய்
புள்ளின் பகை கிடந்தது -சாமான்ய த்ருஷ்டியால் பார்த்தல் சத்ரு
கௌஸ்துபம்   – கருடன் பிரதி பிம்பம் -அதி சினேகா பாவ சங்கை -அஸ்தானே பயம்
விஷம் முறிக்க கருடன் வேண்டுமே -அதனால் இருக்கிறானாம் -இங்கும் ரஷன அர்த்தமாக
உத்தான சயனம்-அமுதனுக்கு தளிகை-திரு மழிசை ஆழ்வாருக்கு முதலில்
நியமனம் -பாரதந்த்ர்யம் காட்டி
துரோணர்-தர்மர் அச்வச்தாமா -கண்ணன் சொல்லியும் கேட்க வில்லை
நரகம் எட்டி பார்த்து போனான் -குஞ்சர சப்தம் காதில் விழாமல்
ஸ்ருது ஸ்மிர்த்தி மம வாக்கியம்
புண்யம் பாபம் பிரியம் அப்ரியம் தானே
அவாப்த சமஸ்த காமன்
திரு மழிசை பிரான் -ஆரா அமுத ஆழ்வார்
சுக துக்க பரந்தப -பைய துயின்ற பரமன்
-கௌவசல்யை -பெற்ற வயிற்றுக்கு பட்டம் கட்டுகிறார் விஸ்வாமித்ரர்
ஆரா அமுதே -இப்படியும் ஒரு திரு நாமம் உளதே -அபரியாம்ருதம்
நடந்த கால்கள் நொந்தவோ–பேசி வாழி கேசனே
நான் இருந்த முடுக்கு தெரு தேடி வந்தாயே-மாலா காரன்
கதே கதே சேது பந்தனம் -அடி போற்றி

வைதிக விமானம் -அமுதனுக்கு

பிரணவா காரம்-அகில புவன
இதி சர்வம் சமன்ஜய
நின்றது –அன்று வெக்கணை கிடந்தது
திரு விக்ரமன்-பரத்வம் காட்டி- பிரணவம் காட்டி
இருந்தது பாடகத்து நம சப்த -சௌலப்யம் பாண்டவ தூதன் -வேணி சம்காரம்
உபாய வைபவம் காட்டி- தூது போனவன் ஏற்றம்-
கழுத்தில் ஓலை கட்டி -இன்னார் தூதன் என்று நின்றான்
விடை தீர எவ்வுள் கிடக்கிறான் -அங்கு ஆசனம் இல்லை
மாம் ஏகம் சரணம் -பார்த்த சாரதி
அன்று கிடந்த-துயில் அமர்ந்த வித்து
யதோத்தகாரி – சொன்ன வண்ணம் செய்யும் பெருமாள்
அநந்ய போக்யத்வம் காட்டி கொண்டு இருக்கிறான்
உபேயம் காட்டி –
——————————-
ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ திரு மழிசைப்பிரான் —

August 26, 2010

ஸ்ரீ திரு சந்த விருத்தம்

சாம வேத கீதனாய சக்ர பாணி அல்லையே ?-14

சங்க வண்ணம் அன்ன மேனி சக்ர பாணி அல்லையே ?-15

மின் கொள் நேமியாய் ! -19

அம் கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் சிங்க மாய தேவ தேவ ! -24

படை கலம் விடுத்த பல் படைத் தடக் கை மாயனே ! -28

வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர ! -31

அரக்கர் அங்கர் அங்க வெஞ்சரம் துரந்த ஆதி நீ -32

அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின் அவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் ! -33

மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம் பிரானுமாகி மிக்கது அன்பு மிக்கு -35

முன் ஓர் நாள் திண் திரல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் உஊர் –சீர் அரங்கமே -50

சரங்களை துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் -51

இலைத் தலை சரம் துரந்து இலங்கை கட்டழித்தவன்  -54

அடர்த்து எறிந்த ஆழியான் -57

காலநேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை காலனோடு கூட விற் குனித்த விற் கை வீரனே ! -59

குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள் பந்தமான தேவர்கள் பரந்து  வானகம் உற -70

மரம் பொதச் சரந்துரந்து வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச் சரந்துரந்த உம்பர் ஆளி எம்பிரான் -73

அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே ? -76

கடைந்து பால் கடல் கிடந்து காலநேமியை கடிந்து உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்த மால் பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ -81

ஆழியான் தன் திறத்து ஓர் அன்பிலா அறிவிலா நாயினேன் என் திறத்தில் என்கொல் ? எம்பிரான் குறிப்பில் வைத்ததே -84

இரும்பரங்க  வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே ! -93

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க் கைய -97

பல்  படைத் தடக்கை மாயனே ! -104

கறுத்து எதிர்ந்த காலநேமி காலனோடு கூட அன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் -106-

———-

ஸ்ரீ நான்முகன் திரு வந்தாதி

இலை துணை மற்று என் நெஞ்சே ! ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் -8

மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற் கிரண்டும் போயிரண்டின் வீடு -12

வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேர் ஆழியால் மறைத்தார் -16

இது விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண் தார் இராவணனை வூன் ஒடுங்க வெய்தான் உகப்பு -28

எல்லாமாய் சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் -83

——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Thiru Chanda Vruttam-111-120-Shri PBA Swaami.-திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  

January 25, 2008

..111..”vaithu ninai valla aa pazlithavarkkum “=devareerai nindithu, sakthi vullavaraiyil abavaadangal sonna sisubalar polvarukkum..”maaru eil poru seythu “=oppillada yudam panni..”nina setram theeyil”=vunathu koba agniyil….”venthavarkkum”=vaali polvar..”vunai vanthu yeythal aahum yenbar”=vunnai kitti vujeevakilaam yentru maha rishikal solluvaarkal..”aadalaal yem maaya ,naayineyn seytha kutram, natramahavey koll ,gjaalam naadaney”….”yen adiyaar athu seyyaar,sevaareyl nantrey seythaar”-pola…avanathu vaadsalyathaal,”poruthu nalhu”yentru piraarthipathu abachaaram yentru..”naayineyn seytha kutram nattramahavey koll”yenkiraar..”kattrinam  meykkallum meykka petraan,kaaduvaazl saadhiyumaaha petraan,pattri vural edai aappum vunndaan paavikaall vungalukku etchu kolo”yentru aandaal vayiru erinthu pesum padi thooshthavarkallum praapthar aanaarkal..athai pola pradikoolanana adiyen seyum kutangallai bogyamaha kollanum yenkiraar..”ketpaar sevi sudu keezlmai vasavukaley vaiyum setpaal pazlam pahaivan sisubaalan ,thiruvadi thaadpaal adaintha thanmai arivaarey arinthumey”..vaithal=ellada solli thooshipathu..pazlithal=vullathai ezlivaha solli thooshipathu..

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்
தேவரீரை நிந்தித்து சக்தி உள்ளவரையில் அபவாதங்கள் சொன்ன சிசுபாளர் போல்வாருக்கும்
 மாறில் போர் செய்து
ஒப்பில்லா யுத்தம் பண்ணி
நின்ன செற்றத் தீயின்
உனது கோப அக்னியில்
வெந்தவர்க்கும்
வாலி போல்வார்
வந்து உனை எய்தலாகும் என்பர்
உன்னைக் கிட்டி உஜ்ஜீவிக்கலாம் என்று மக ரிஷிகள் சொல்லுவார்கள்
ஆதலால் எம்மாய நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் போலே
அவனது வாத்சல்யத்தால் பொறுத்து நல்கு -என்று பிரார்த்திப்பது அபசாரம் என்று நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள்-என்கிறார்
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்
காடுகள் சாதியாயும் ஆகப் பெற்றான் பற்றி உரல் இடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ
என்று ஆண்டாள் வயிறு எரிந்து பேசும் படி தூஷித்தவர்களும் ப்ராப்தரானார்கள்
அதே போலே பிரதிகூலனான அடியேன் செய்யும் குற்றங்களை போக்யமாக கொண்டு அருள வேணும் என்கிறார்
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளையே வையும் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரே அறிந்துமே
வைதல் -இல்லாததை சொல்லி தூஷிப்பது
பழித்தல் -உள்ளதை இல்லாததாக சொல்லி தூஷிப்பது

——————————————————————————-

..112….”vaallkal aahi naallkal sella”=namathu aayullai arukkum vaallkal pola thinangal kazliya..”noymai kuntri mooppu yeythimaallum naall athu aathalaal”…”vannangi vaazlthu yen nenjamey”…”aalathu nanmai aahum yentru”= emberumaanukkey aadpattu erupathu nanmai yentru..”nangu vunnarnthu “….”athu antriyum meellvu elaada boham nalha veynndum maala paadamey”..”minin nilai ela manueir aakkaikal”…naallaikku thozluvom yentru eraamal eppozluthey vannangi vaazlthanum..adimai seyvathu thaan purushaardam yentra ninaivudan..

வாள்களாக நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே –112-

வாள்களாக நாள்கள் செல்ல
நமது ஆயுளை அறுக்கும் வாள்கள் போலே திங்கள் கழிய
நோய்மை குன்றி மூப்பெய்தி மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே-ஆளதாகும் நன்மை
எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பது நன்மை என்று
என்று நன்கு உணர்ந்த தன்றியும் மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
நாளைக்கு தொழுவோம் என்று இராமல் இப்பொழுதே வணங்கி வாழ்த்த வேண்டும் -அடிமை செய்வது தானே புருஷார்த்தம் என்ற நினைவுடன்

—————————————————————————————-

..113..”salam  kaslantha sem sadai “=gangai neerodu koodina sivantha thalaiyudan..”karutha kanndan”…”ven thalai”=velutha kabaalathiley..”pulan kalanga”=sarva endariyangalum kalangumaaru..”vunnda paadahathan”=pitchai eduthu  jeevitha korabadahathan sivan…”van thuyar keda”…”alangal maarvil “=thiruthullay anninda marbiley..”vaasam neer”=divya parimallamana theerthathai..”koduthavan”…  “adutha  seer “=yentrum vittu neengaatha kalyaana gunnangal vudaiya..”nalam koll “=aanandamayamaana ….”maalai nannum vannam “=anuhum vazliyakira avanin thiruvadiyai …”yennu “=anusanthueru…”vaazli nenjamey”..

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே -113-

சலம் கலந்த செஞ்சடைக்
கங்கை நீரோடு கூடின சிவந்த தலையுடன்
கறுத்த கண்டன் வெண்டலைப்
வெளுத்த கபாலத்திலே
புலன் கலங்க
சர்வ இந்த்ரியங்களும் கலங்கு மாறு
வுண்ட பாதகத்தன்
பிச்சை எடுத்த ஜீவித கோர பாதகத்தன் -சிவன்
வன் துயர் கெட-அலங்கல் மார்பில்
திருத் துழாய் அணிந்த மார்பிலே
வாச நீர் கொடுத்தவன்
திவ்ய பரிமளமான  தீர்த்தத்தை கொடுத்தவன்
அடுத்த சீர்
என்றும் விட்டு நீங்காத கல்யாண குணங்கள் உடைய
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே
ஆனந்த மயமான மாலை அணுகும் வழி யாகிற அவனது திருவடிகளை அனுசந்தித்து வாழி நெஞ்சமே –

———————————————————————————-

..114..”yeenam aaya ettum neekki”=arivukku padaham villaikka valla -,avidyai,karumam,vasanai,rusi,prakrudi sambandam ,daaba trayam -aahiya ettaiyum pokki…”edam eintri”=samsara thukkangal yellaam pokki..”meethu poey”=arshiraathi maargathaal sentru..”vaanam aalla villai yeyl”=paramapadam anubavikka aasai konndu erunthaal..”vannangi vaazlthu yen nenjamey”=namaskarithu, thuthithu ..:gjanam aahi”=atma gjanam allipavanaayum..”gjaayiru aahi”=sooriyan pola endariya gjanathai allippavanum…ahaa erulum pura erulum pokkubavan..”gjana piraan-varaha moorthi–.”gljalam mutrum oer yeiru”=boomi muzluthum oru kottinaal..”yenam aay edantha moorthi”=varaha perumaanaay..”yenthai paadam yenniyey”..pralaya kadalil eruntha piraattiyai vutharathu arulinathu pola, namaiyum samsaara kadalil erunthu meettu arulanum yenkiraar..

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-

ஈனமாய எட்டும் நீக்கி
அறிவுக்கு பாதகம் விளைக்க வல்ல அவித்யா கர்மம் வாசனை ருசி பிரகிருதி சம்பந்தம் தாப த்ரயம் ஆகிய எட்டையும் போக்கி
ஏதமின்றி மீது போய்
சம்சாரிக்க துக்கங்கள் எல்லாம் போக்கி -அர்ச்சிராதி கதியிலே சென்று
வானமாள வல்லையேல்
பரமபதத்தை அனுபவிக்க ஆசை கொண்டு இருந்தால்
வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
நமஸ்கரித்து துதித்து
ஞானமாகி
ஆத்ம ஞானம் அளிப்பவனாயும்
நாயிறாகி
சூர்யன் போலே
ஞாலம் முற்றும் –எண்டறிய ஞானம் அளிப்பவனாயும்
ஆக அக இருளையும் புற இருளையும் போக்குபவனாயும்
ஓர் எயிற்றில் ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே
வராஹ மூர்த்தியாய் பூமி முழுவதையும் ஒரு கோட்டினிலே பிரளய கடலில் இருந்த பிராட்டியை உத்தரித்து அருளினது போலே
நம்மையும் சம்சார கடலில் இருந்தும் உத்தரித்து அருள வேணும் என்கிறார் –

——————————————————————————-

..115..”aththan aahi annai aahi aallum embiraanum aay”…”oththu ovvaatha pal pirappu ozlithu namai aadkollvaan”…”mukthanaar muhunthanaar  puhunthu nammull meyvinaar”…”yethinaal edar kadal kidathi ezlai nenjamey”….sarama sloham entha paasuram koorum.. ethaiyum “vaarthai aribavar” paasuramum mumushupadi  mudivil eduthu kaatti arulukiraar..nammull oru neeraaha porunthi,erukiraar mada nenjamey soha padaathey yenkiraar..

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

சரம ச்லோகார்த்தம் சொல்லும் பாசுரம்
இத்தையும் வார்த்தை அறிபவர் -பாசுரத்தையும் முமுஷுப்படி முடிவில் எடுத்துக் காட்டி அருளுகிறார்
நம்முள் ஒரு நீராகப் பொருந்தி இருக்கிறார் மட நெஞ்சமே சோகப் படாதே என்கிறார்

—————————————————————————–

..116..”maaru seytha vaall arakkan naall vulappa”=ethiritta, aaydapaanni yaana raavannanin vaazl naall mudiyum padi ..”antru elangai neeru seythu sentru kontru ventri konnda veeranaar”..”veru seythu tammull yennai vaithidaamaiyaal “=yennai andaranga boodanaha -verupaduthi vaikkamal-konndu arulinathaal..”naman koru seythu  konndy”=yamananavan avanidam erunthu pirithu…”erantha kutram”=naan seythu kazlitha papangal..”yenna vallaney”=nenjaalum-thanathu edathil erunthey-ninaikka sakthi atravan yenkiraar..

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -116-

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப
எதிரிட்ட ஆயுத பாணியான ராவணின் வாழ் நாள் முடியும் படி
அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால்
என்னை அந்தரங்க பூதனாய்-வேறு படுத்தி வைக்காமல் -கைக் கொண்டு அருளினதனால்
நமன் கூறு செய்து கொண்டு
யமனானவன் அவனிடம் இருந்து பிரித்து
இறந்த குற்றம் எண்ண வல்லனே
நான் செய்து கழித்த பாபங்கள் -நெஞ்சாலும் -தனது இடத்தில் இருந்தே நினைக்க சக்தி அற்றவன் என்கிறார்-

———————————————————————————-

..117..”atcham  noeyodu allal pal pirappu avaayam mooppu evai”..allal=mano vyaathi..avaayam mooppu=abaayamana kizla thanam..”vaitha sinthai vaitha aakkai”=evatrai anubavikka nenjaiyum vudalaiyum ..”maatri vaanil yetruvaan”=pokkadithu paramapadam serpavan..”atchudan ananda keerthu aadhi andam ellavan”..”nanju naaha annai  kidantha naadan veda geethaney”..

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -107-

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
அல்லல் -மநோ வ்யாப்தி
வைத்த சிந்தை வைத்த வாக்கை
இவற்றை அனுபவிக்க நெஞ்சையும் உடலையும்
மாற்றி வானில் ஏற்றுவான்
போக்கடித்து பரம பதம் சேர்ப்பவன்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன் நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே

——————————————————————————

..118..”sollinum”=vaakkilum..”thozlil kannum thodakku araatha anbinum”=kaayiha vyaabarangallilum,visedam atra anbilum,..”alli nan pahalinodu  aana maalai kaalai yum “=sarva kaalangallilum…”valli nall malar kizlathi naada”=padarntha senthaamarai poovil pirantha piraattikku naadaney..”pulli”=annainthu..” vullam veellvu elaathu”= nenjai oru nodi pozluthum vishedam ellaamal..”poonndu”=antha thiruvadikallaiyey mer konndu..”meendathillai”=nillaithu erukkum..sinthaiyaalum, sollaalum,seyhaiyinaalum  sarva kaalamum avanudan layithu erukkum ..

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே -118-

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
வாக்கிலும் -காயிக வியாபாரங்களிலும் விச்சேதம் அற்ற அன்பிலும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
சர்வ காலங்களிலும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
படர்ந்த செந்தாமரை பூவில் பிறந்த பிராட்டிக்கு நாதனாய்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே
அணைத்து நெஞ்சை ஒரு நொடி பொழுதும் விச்சேதம் இல்லாமல்
பூண்டுஅந்த திருவடிகளையே மேல் கொண்டு நிலைத்து இருக்கும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் சர்வ காலமும் அவனுடனே லயித்து இருக்க வேண்டும்

————————————————————————————

..119..”ponni soozl arangam meya poovai vanna maayaa keyll”..entha vinnappathai kettu arula venum..”yennathu aavi yennum val vinaiyin vull”=yennudaiya atma yennum valiya paapa raasiyiley..”kozlunthu ezlunthu vunna paadam yenna nintra”=(devareer vishayamaha anuraaham)kozlunthu killarnthu devarerin thiruvadi yenkintra..”onn sudar kozlu malar manna vanthu poonndu”=azlahiya sudar mikka pushpathiley ,sthiramaha vanthu padinthu,..”vaattam eintri yengum nintrathey”=kuraiyaamal, devareerin viboothikal ellavatrilum vyaabithu erunthathu….vadivazlahaalum, seelathaalum rusi piranthu padarnthathu…neruppiley thaamarai poothathu pola, yenathu valvinai yennum aavieil kozlunthu pola bagavath vishayam padarnthathu..

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க்  கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119–

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
இந்த விண்ணப்பத்தை கேட்டு அருள வேணும்
என்னதாவி என்னும் வல் வினையினுள்
என்னுடைய ஆத்மா என்னும் வலிய பாப ராசியிலே
கொழுந்து எழுந்து உன்ன பாதம் என்ன நின்ற -ஒண் சுடர்க்  கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே
தேவரீர் விஷயமாக அனுராகம் அழகிய சுடர் மிக்க புஷ்பத்திலே ஸ்திரமாக வந்து படிந்து-குறையாமல் தேவரீரின் விபூதிகள் எல்லாவற்றிலும் வியாபித்து இருந்தது
வடிவு அழகாலும் சீலத்தாலும் ருசி பிறந்து படர்ந்தது நெருப்பிலே தாமரை பூத்தாப் போலே-
என்னது வாழ்வினை என்னும் ஆவியில் கொழுந்து போலே பகவத் விஷயம் படர்ந்தது-

——————————————————————————————-

..120..”eyakku araatha pal pirappil”=thodarnthu varum pala piraviyilum..”yennai maatri eintru vanthu”=adiyenai maatra thiru vullam konndu eingey ezlunthu aruli..”vuyakoll meha vannan nanni”=vujeevika seybavanaana mkaala meha perumaall nerungi..”thannil aaya yennull”=thanodu avinaaboodamana yennulley…”mayakkinaan than mannu soodhi”=thanathu nithya jothi mayamana divya mangala vigrahathai samsleshipithaan..”aadalaal”=eppadi purai ara kalanthu aruliyathaal..”yen aavi thaan eyakku elaam aruthu “=yenathu atma vasthu,ontrodu ontraha ennainthu kidantha avidyaathikalai veru aruthu..”araada enbam veedu petrathey”=oru naallum mudiyaatha enbamaahiya motsha suhathai petrathu..andamil perinbamana kainkarya saamraajyam petrathai arulukiraar..parahada svekaaram  parimallikka arulukiraar..

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

இயக்கறாத பல் பிறப்பில்
தொடர்ந்து வரும் பல பிறவிகளிலும்
என்னை மாற்றி இன்று வந்து
அடியேனை மாற்ற திரு உள்ளம் கொண்டு இங்கேயே எழுந்து அருளி
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி
உஜ்ஜீவித்து அருளிச் செய்வானாக காள மேக பெருமாள் நெருங்கி
என்னிலாய தன்னுளே
தன்னுள்ளே அவின்னாபூதமான என்னுள்ளே
மயக்கினான் தன் மன்னு சோதி
தனது நித்ய ஜோதிமயமான திவ்ய மங்கள விக்ரகத்தை சம்ச்லேஷிப்பித்தான்
யாதலால்-
இப்படி புரை யறக் கலந்தது அருளியதால்
என்னாவி தான் இயக்கொலா மறுத்த
எனது ஆத்ம வஸ்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து கிடைந்த அவித்யாதிகளை வேறு அறுத்து-
ஆராத வின்ப வீடு பெற்றதே
ஒரு நாளும் முடியாத இன்பமாகிய மோட்ஷ சுகத்தை பெற்றது
அந்தமில் பேரின்ப மான கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றத்தை அருளிச் செய்கிறார் –
பரகத ச்வீகாரம் பரிமளிக்க அருளுகிறார்

——————————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்