Archive for the ‘திருச்சந்த விருத்தம்’ Category

ஸ்ரீ திருமழிசைப் பிரான் சாத்தி அருளிய திவ்ய நாமங்கள்–

March 9, 2019

ஆதி அந்தம் இல்லவன்
ஆதி பூதம்
ஆதி தேவன்
ஆலிலை துயின்ற ஆதி தேவன்
ஆதி பெருமான்
ஆக்கை கொடுத்து ஆழ்த்த கோன்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்
அத்தன்
ஆயன்
ஆழியான்
ஆளும் எம்பிரான்
ஆமையான கேசவன்
ஆய்ச்சி பிள்ளை
அஞ்சனத்த வண்ணன்
அனந்தன் மேலே கிடந்த எம் புண்ணியன்
அனந்த சயனன்
அன்பாவாய் ஆராவமுதவமாய் அடியேனுக்கு என்பாவாய் எல்லாம் நீ யாவாய் பொன் பாவை கேள்வா
அண்ணல்
அரங்கன்
அணியன்
அரங்க வாணன்
அற்புதன்
அரி உருவான்
அச்யுதன்
அழகியான்

போக மூர்த்தி
பூமி நாதன்
சக்ரபாணி
தேவ தேவன்
ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
ஏக மூர்த்தி
இலங்கை கட்டழித்தவன்
இலங்கை கட்டளித்த காகுஸ்தன்
எம் ஈசன்
இமையோர் பெருமான்
என் கண்ணன்
என் நெஞ்சம் மேய் என் இருள் நீக்கி எம்பிரான்
என்றும் திரு இருந்த மார்பன்
எந்தை
எட்டு எழுத்து
ஞான மூர்த்தி
ஞானப் பிரான்

காரணனன்
கடல் கிடந்த கண்ணன்
கடல் கிடைக்கும் மாயன்
கள்வன்
கண்ணன்
கார் செறித்த கண்டன்
கற்பவை நீ
கரும்பு இருந்த கட்டி
கரு கலந்த காள மேகன்
கவிக்கு நிறை பொருள்
கேசன்
கற்றவை நீ
கேட்ப்பார்க்கு யரும் பொருளாய் நின்ற அரங்கன்
கூத்தன்
கொண்டல் வண்ணன்
கோவலன்
கண்ணபிரான்

மாதவன்
மால்
மாயன்
மது ஸூ தன்
மலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி தலையாமை தான் ஒரு கைப்பற்றி அலையாமல் பீற்றக் கடைந்த பெருமான்
மங்கை மன்னு வாழ் மார்பன்
மண்ணளந்தான்
மண் அளந்து கொண்ட காலன்
மாயன்
மாய வாமனன்
மேக வண்ணன்
மெய்ப்பொருள்
மிகப்பெரியவன்
மூன்று மூர்த்தி
முகுந்தனார்
முத்தனார்

நாதன்
நற்கிரிசை நாரணன்
நின்மலன்
நாலு மூர்த்தி
நாக மூர்த்தி சயனமாய்
நாகணைகே கிடந்த நாதன்
நல்லான்
நாராயணன்
நாங்கள் கண்ணன்
நெடுமால்
நீள் முடியின்
ஒளி உருவன் ஒருவனாகி தாரணி இடர்ந்து எடுத்தவன்

பாலன்
பாம்பின் அணையான்
பத்ம நாபன்
பங்கயகே கண்ணன்
பாவை சேரும் மார்பன்
பாவ நாச நாதன்
பிறப்பு அறுக்கும் சொல்லான்
பொன் மகரக் காதன்
பூவை வண்ணன்
புண்ணியத்தின் மூர்த்தி
புண்டரீகன்
புனிதன்

சாம வேதி கீதன்
சார்ங்க பாணி
சீர் அண்ணன்
செம் கண் மால்
சேயன்
சிங்கமாய தேவ தேவன்
ஸ்ரீதரன்
ஸ்ரீ யன்
தம்பிரான்
தன் ஓப்பான் தான்
திரு வேங்கடத்தான்
திரு இருந்த மார்பன்
தோன்று ஜோதி

துவரைக் கோன்
உத்தமன்
உகப் புருவான்
உலகம் உண்டு உமிழ்ந்த பேர் ஆழியான்
வானரக் கோன் வாலி மதன் அழித்த வில்லாளன்
வள்ளலார்
வைகுண்டச் செல்வனார்
வீரன்
வேதன்
வேத முதல் பொருள்
வேத கீதன்
வேலை வண்ணன்
வெள்ளம் பரக்க கரந்து உலகம் காத்து அழித்த கண்ணன்
வேங்கடத்து மேயான்
வில் கை வீரன்
வில்லி ராமன்
விண் கடந்த ஜோதி
விண்ணவர்க்கு நற் பொருள்
விண்ணின் நாதன்

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப் பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருச்சந்த விருத்தம் -அவதாரிகை / பாசுர பிரவேஸ -தொகுப்பு –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

April 17, 2017

ஆழ்வார் திருமழிசைப் பிரான் ஆகிறார்-ஆழ்வாரும் பகவத் அபிப்ராயத்தாலே
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைகாக தாழ்ந்த குலத்தில் வளர்ந்து அருளினார் ஆய்த்து-
இவ் வாழ்வாருக்கு சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக –மயர்வற மதி நலம் அருளி – உபய விபூதி
நாதனான எம்பெருமான் தன் பெருமையைக் காட்டிக் கொடுக்கையாலே -பகவத் அனுபவ ஏக போகராய்-
சிரகாலம் சம்சாரத்திலே எழுந்தருளிஇருந்த இவர்
ப்ராப்தமுமாய் -ஸூலபமுமான விஷயத்தை சம்சாரிகள் இழக்கைக்கு ஹேது என் என்று
அவர்கள் பக்கல் கண் வைத்தார்-பர அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே-பாஹ்ய குத்ருஷ்டி நிரசன
பூர்வகமாக பகவத் பரதத்வத்தை உபதேசித்த இடத்திலும் -அவர்கள் அபி முகீ கரியாமையாலே
நாம் இவர்களைப் போல் அன்றியே -ஜகத் காரண பூதனாய் -பரமபத நிலயனான சர்வேஸ்வரனே
ப்ராப்யன் என்று அவன் ப்ரசாதத்தாலே அறியப் பெற்றோம் -ஜகத் காரண பூதனாய் -பரமபத நிலயனான சர்வேஸ்வரனே
ப்ராப்யன் என்று அவன் ப்ரசாதத்தாலே அறியப் பெற்றோம் –
இனி இவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பர வியூகங்கள் தேச விப்ரக்ர்ஷ்டத்வத்தாலே-அஸ்மத்தாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆக மாட்டாது –
அவதாரங்கள் கால விப்ரக்ர்ஷ்டதை யாகையாலே ஆஸ்ரயணீயங்கள் ஆக மாட்டாது –
இரண்டுக்கும் தூரஸ்தரான பாஹ்ய ஹீநருக்கும் இழக்க வேண்டாதபடி-அர்ச்சக பராதீநனாய் -சர்வ அபராத சஹனாய்
-சர்வ அபேஷித ப்ரதனாய் -வர்த்திக்கும்-அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அனுசந்தித்து
-ஆகிஞ்சன்யத்தை அதிகாரமாக்கி
-ப்ரபத்தியை அதிகாரி விசேஷணமாய் ஆக்கி
-பகவத் கிருபையை நிரபேஷ உபாயம் என்று அத்யவசித்து
அவனை ஆஸ்ரயித்து -அவன் கிருபை பண்ணி முகம் காட்ட
இவ்விஷயத்தை லபிக்கப் பெற்றேன் என்று-தமக்கு பிறந்த லாபத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –
—————————–
1–அண்ட காரணமாய் -ஸ குணமான ப்ருத்வ்யாதி பூத பஞ்சகங்களுக்கு அந்தராத்மாவாய்-நிற்கிற நீயே ஜகத்துக்கு உபாதான காரணம்
-இவ்வர்த்தம் வேதாந்த ப்ரமேயம் கை படாத-பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது என்கிறார் –

2-காரண பூதனான உன்னாலே-ஸ்ரேஷ்டமான சேதனருக்கு கர்ம யோகம் முதலாக பரம பக்தி பர்யந்தமான பகவத்-சமாராதநத்துக்கும் -சுபாஸ்ர்யம் ஆகைக்கும்
-அந்த பரபக்தி உக்தருக்கு சர்வவித-போக்யம் ஆகைக்கும் கிருஷ்ணனாய் வந்து ரஷிக்கும் உன்னுடைய நீர்மையை யார் நினைக்க-வல்லர் -என்கிறார்-

3-முதல் பாட்டில் சொன்ன ஜகத் காரணத்வ பிரயுக்தமான லீலா விபூதி யோகம் என்ன -இரண்டாம் பாட்டில் சொன்ன உபாயத்துக்கு பலமான நித்ய விபூதி யோகம் என்ன –
ஆக இந்த உபய விபூதி யோகத்தை நிர்ஹேதுக க்ருபையால் தேவரீர் காட்ட-வருத்தமற நான் கண்டாப் போலே- வேறு ஸ்வ சாமர்த்யத்தால் காண வல்லார் இல்லை என்கிறார் –

4-பிரணவத்தில் திகழ்கின்ற ஜோதி மயன்-சகலதுக்கும் காரண பூதன் -தனக்கு வேறு ஒரு-காரணம் அற்றவன் -அதனால் துளக்கமில் விளக்கம் –
எனக்கு நிருபாதிக சேஷி யானவனே -என் தன் ஆவியுள் புகுந்தது என் கொலோ -என்ன நீர்மை-என்கிறார்-

5-ஜகத் ஏக காரணத்வத்தாலும் சகல ஆதாரனாய் இருக்கும் ஸ்வபாவத்தை திரள-அறியும் இத்தனை ஒழிய தேவரீர் காட்ட
நான் கண்டால் போலே ஏவம்விதன்-என்று ஒருவருக்கும் அறிய ஒண்ணாது என்கிறார்-

6-சகல அந்தர்யாமித்வத்தால் வந்த சகல ஆதாரத்வம் சொல்லிற்றாய் நின்றது கீழ் -அந்த பதார்த்தங்களுக்கும் தேவரீரே தாரகம் என்று வேதாந்த பிரசித்தமான இவ்வர்த்தம்
தேவரீர் பக்கலிலே வ்யவச்திதம் அன்றோ-இஸ் சர்வ ஆதாரத்வமும் ஸ்வ சாமர்த்யத்தாலே வேறு ஒருவருக்கும் காண முடியாது என்கிறார் –

7-நாம் ஜ்ஞானத்துக்கு விஷயமான பின்பு பரிச்சேதித்து அறிய மாட்டாது ஒழிகிறது-ஜ்ஞான சக்திகளின் குறை யன்றோ -யாவர் காண வல்லரே -என்கிறது என் என்ன –
தேவரீர் இதர சஜாதீயராய் அவதரித்து ரஷிக்கிற படியை ஜ்ஞானத்தாலும் சக்தியாலும்-அதிகனான ருத்ரனும் அறிய மாட்டான் -என்கிறார்-

8-ருத்ரனுக்கும் மட்டும் அல்ல உபய விபூதியில் எவராலும் முடியாது என்கிறார்-

9-இப்படி அபரிச்சேத்ய வைபவன் ஆகையாலே பிரயோஜனாந்த பரரில் அக்ர கண்யனான-ருத்ரனனும் -வைதிக அக்ரேசரராய் -அநந்ய பிரயோஜனரான
சாத்விக ஜனங்களும் உன்னையே-ஆஸ்ரயிக்கையாலே சர்வ சமாஸ்ரயணீ யானும் நீயே என்கிறார் —

10-சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே -காரணந்து த்யேய -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீயம்
என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரயணீயத்வமும் தேவரீருடையது-என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் –
முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –

11-நசந்ந சாஸ் சிவ ஏவ கேவல -ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே -என்று ப்ரஹ்மாதிகளுக்கும் காரணத்வம் சொல்லுகிறது இல்லையோ என்ன –
உன்னால் ஸ்ருஷ்டரான உன் பெருமையை ஓரோ பிரயோஜனங்களிலே பேச-ஷமரும் அன்றிக்கே இருக்கிற இவர்கள் ஆஸ்ரயணீயராக ப்ரசங்கம் என்
கீழ்ச் சொன்ன காரண வாக்யமும் அவ் வஸ்துவைப் பற்ற அந்ய பரம் என்கிறார் –

12-ஜகத் காரண பூதனாய் -ஸ்ருஷ்டியாதி முகத்தால் ரஷிக்கும் அளவே அன்றி-அசாதாராண விக்ரஹ உக்தனாய் அவதரித்து
ரஷிக்கும் உன் படியை லோகத்திலே ஆர்-நினைக்க வல்லார் என்கிறார் –

13-இவ் வவதார ரஹஸ்யம் ஒருவருக்கும் அறிய ஒண்ணாதோ என்னில் -கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த நீ காட்டித்தர
-உன் வைலஷண்யம் காணும்-அது ஒழிய ஸ்வ சாமர்த்யத்தாலே காண முடியாது என்கிறார் –

14-நம் அவதார ரஹச்யம் நீர் அறிந்த படி என் என்னில் -பிரயோஜனாந்த பரர்க்காக திர்யக் சஜாதீயனாய் வந்து அவதரித்த உன் குணங்களை
பரிச்சேதித்து அறிய மாட்டேன் ஆகிலும் -அவ்வடிவு வேதைக சமதிகம்யம் என்று-அறிந்தேன் என்கிறார் –

15-வேதைக சமதிகம்யமான ஸ்வ பாவத்தை உடைய நீ ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக-அவதார கந்தமான திருப்பாற்கடலிலே கண் வளர்ந்து அருளுகிறது பர தசை என்னலாம்படி
அங்கு நின்றும் ஆஸ்ரிதர் உகந்த ரூபத்தையே உனக்கு ரூபமாகக் கொண்டு வந்து அவதரித்த-உன்னுடைய நீர்மையை ஒருத்தரால் பரிச்சேதிக்க போமோ என்கிறார் –

16-திருப் பாற் கடலிலும் நின்று இப்படி தேவ மனுஷ்யாதிகளிலே அவதரித்து ரஷிக்கும்-அளவு அன்றிக்கே -ஸ்தாவர பர்யந்தமாக சதுர்வித ஸ்ருஷ்டியிலும் அவதரித்து உன்னை
சர்வ அனுபவ யோக்யன் ஆக்கினாலும் -பிரமாண கணங்கள் பரிச்சேதிக்க மாட்டாத படி-இறே உன்னுடைய அவதார வைலஷண்யம் இருப்பது என்கிறார் –

17-பரமபத நிலயனாய் இருந்து -நித்ய விபூதியை நிர்வஹித்து-வ்யூஹம் முதலாக ஸ்தாவர பர்யந்தமாக அவதரித்துலீலா விபூதியை நிர்வஹித்தும் –
போகிற இவை ஒரொன்றே பிரமாணங்களால் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்க-அதுக்கே மேலே அர்ச்சாவதார ஸூலபனாய் -ஆஸ்ரிதருடைய இச்சாதீநனாய்
தன்னை நியமித்த இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறதோ என்று அதிலே வித்தராகிறார் –

18-நாக மூர்த்தி சயனம் -என்றும் -தடம் கடல் பணைத் தலை செங்கண் நாகணைக் கிடந்த -என்றும் அவதார கந்தமான ஷீராப்தி சயனம் ப்ரஸ்துதமானவாறே –
திரு உள்ளம் அங்கே தாழ்ந்து -அர்த்திதோ மாநுஷே லோகே -என்கிறபடியே அவதாரங்களில் உண்டான-அர்த்தித்வம் அன்றிகே இருக்க விசத்ர்ச தேசத்தில்
வந்து கண் வளர்ந்து அருளிகிற தேவரீர் உடைய வாசியை ஆரறிந்து ஆச்ரயித்து கார்யம் கொள்ள -என்கிறார் –

19-அர்த்தித்வ நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற இது என்ன நீர்மை என்றார் கீழ் -இங்கு-பண்ணின ஜகத் ரஷணங்களைக் கண்டு –
நஹி பாலான சாமர்த்யம்ர்தே சர்வேச்வரம் ஹரிம் -பாலன தர்மத்துக்கு வேறு சக்தர் இல்லாமையாலும் -ஜகத்துக்கு தேவரீர் அனந்யார்ஹ சேஷம்
ஆகையாலே ரஷிக்கும் இடத்தில் அர்தித்வம் மிகை யாகையாலும் -வந்து கண் வளர்ந்து அருளுகிற-இத்தனை என்று -அந்த ரஷணங்களைப் பேசி
சாமான்ய த்ர்ஷ்டியால் சஹஜ சத்ருகளாய்-தோற்றுகிற பெரிய திருவடியும் திருவநந்த ஆழ்வானும் ஏக கண்டராய் தேவரீருக்கு பரியும்படியாகக்
கண் வளர்ந்து அருளுகிற இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –

20-பிரயோஜநாந்த பரரான ப்ரஹ்மாதிகள் ஏத்த திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற-இம் மேன்மை தானே நீர்மைக்கு எல்லை நிலமாய் இரா நின்றது
அமிர்த மதன வேளையிலே மந்தர தாரண அர்த்தமாக ஆமையான நீர்மை தானே மேன்மைக்கு-எல்லை நிலமாய் இரா நின்றது –
இவைகளைப் பிரித்து என்னெஞ்சிலே பட வருளிச் செய்ய வேணும் என்கிறார் –

21-சமுத்ர மதன வேளையில் ஆமையான நீர்மைக்கு மேல் -சகல வியாபாரங்களையும்-தேவரீரே செய்து அருளி -தேவர்கள் கடல் கடைந்தார்கள் -என்று தேவர்கள் தலையில்
ஏறிட்டு கொண்டாடினபடி -ராவணனை அழியச் செய்து முதலிகள் தலையிலே விஜயத்தை-ஏறிட்டு கொண்டாடினாப் போலே இருந்தது -இவ் வாஸ்ரித பஷபாதத்தை
வேறாக தெரிய அருளிச் செய்ய வேணும் என்கிறார் -சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க இதொரு பஷபாதம்-இருந்தபடி என்ன என்று விஸ்மிதர் ஆகிறார்-

22-பிரளய ஆபத்திலே வரையாதே எல்லாரையும் வட தள சாயியாய் சர்வ சக்தித்வம்
தோற்ற சிறு வயிற்றிலே வைத்து ரஷித்த தேவரீருக்கு -ஆஸ்ரித விஷயத்தில் வத்சலர் -என்னும் இது ஒரு ஏற்றமோ –என்கிறார் –

23-பிரளய ஆபத்சகன் ஆகைக்கு வட தள சாயி யான அகடிதகடிநா சாமர்த்ய அளவு அன்றியே -தேவரீர் உடைய அசாதாராண விக்ரஹத்தை
நாஸ் யர்த்ததநும் க்ர்த்வா சிம்ஹஸ் யார்த்தத நுந்ததா -என்கிறபடியே ஏக தேகத்தை மனுஷ்ய சஜாதீயம் ஆக்கியும் -ஏக தேகத்தை திர்யக் சஜாதீயம் ஆக்கியும்
இப்படி யோநி த்வயத்தை ஏக விக்ரஹமாக்கி -அர்த்தித்வ நிரபேஷமாக பிதாவாலே புத்ரனுக்கு-பிறந்த ஆபத்தை தேவரீர் பொறுக்க மாட்டாமையாலே
தூணிலே தோற்றின அகடிதகடநா சாமர்த்யத்தை அனுசந்தித்து -இத்தை யாவர் பரிச்சேதித்து அறிய வல்லார் -என்கிறார் –

24-பரம பாவநனுமாய் -நிரதிசய போக்யனுமாய் -போக்தாக்களை காத்தூட்ட வல்ல-பரிகரத்தையும் உடைய தேவரீர் -ஆஸ்ரித ரஷணத்துக்கு அநுரூபமாக
திவ்ய-விக்ரஹத்தை அழிய மாறி வந்து தோற்றின இவ் வேற்றத்தை-நித்யசூரிகள் அறிதல் -பிராட்டி அறிதல் -ஒழிய
-வேறு யார் அறிய வல்லார் என்று பின்னையும் அந்த நரசிம்ஹ வ்ருத்தாந்தத்தில் ஈடுபடுகிறார் –

25-அநந்ய பிரயோஜனனான பிரகலாதனுடைய விரோதியைப் போக்கினபடியை-அநுபாஷித்துக் கொண்டு -அவனுடைய அளவு அன்றிக்கே –
பிரயோஜனாந்தர பரரான-இந்திரனுக்காக அர்த்தியாயும் -அவ்வளவும் புகுர நில்லாதே விமுகரான சம்சாரிகளை-பிரளய ஆபத்தில்
திரு வயிற்றில் வைத்து ரஷித்த இவ் வாபத் சஹத்வத்தை-அறிய வல்லார் யார் –என்கிறார் –

26-சர்வ நிர்வஹானான நீ ஸூரி போக்யமான வடிவை ஆஸ்ரித அர்த்தமாக தேவ சஜாதீயம் ஆக்கியும் கோப சஜாதீயம் ஆக்கியும் அவதரித்துப் பண்ணின
ஆச்சர்யங்களை ஆர் அறிய வல்லார் என்கிறார் -வாமன அவதாரத்தோடே கிருஷ்ண அவதாரத்துக்கு-ஒரு வகையில்
சாம்யம் சொல்லலாய் இருக்கையாலே அனுசந்திக்கிறார் –

27-அபரிச்சின்னமான ஸ்வரூப வைபவத்தை உடையையாய்-அந்த ஸ்வரூபத்துக்கும்-ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசமான திவ்ய விக்ரஹ உக்தனாய்
வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத பரமபதத்தை வாஸஸ் ஸ்தானமாக உடையையாய்-உன்னுடைய ஆச்சர்ய சக்தி ப்ரேரிக்க – வந்து
பூமியை அளந்து கொண்ட உன்னை-இவற்றை ஒன்றை ஒருத்தராலே பரிச்சேதிக்கப் போமோ –

28-சங்கல்ப லேசத்தாலே அண்ட காரணமான ஜல சிருஷ்டி முதலான சகல ஸ்ர்ஷ்டியும் பண்ணக் கடவ நீ -ஸ்ரஷ்டமான ஜகத்திலே ஆஸ்ரித ரஷ்ண அர்த்தமாக
உன்னை அழிய மாறி அநேக அவதாரங்களைப் பண்ணியும் -ஆஸ்ரித விரோதிகளான துர் வர்க்கத்தை திவ்ய ஆயுதங்களாலே கை தொட்டு அழிக்கையும் ஆகிற
இவ் வாச்சர்யங்களை ஒருவரும் அறிய வல்லார் இல்லை என்கிறார் –ஒருத்தரும் நின்னது தன்மை இன்னதென்னெ வல்லரே -என்கிற மேலில் பாட்டில் க்ரியை இதுக்கும் க்ரியை –

29-கீழில் பாட்டில் -மநசைவ ஜகத் ஸ்ர்ஷ்டிம் -என்கிறபடியே சங்கல்ப லேசத்தாலே ஜகத் ஸ்ர்ஷ்டி-சம்ஹாரங்களைப் பண்ண வல்லவன் -ஆஸ்ரித அனுக்ரஹங்கத்தாலே
எளிய கார்யங்களுக்கு அநேக விக்ரஹ பரிக்கிரஹங்களைப் பண்ணி ரஷிக்கும் என்கிறது–இதில் -இவ் வனுக்ரஹத்துக்கு ஹேது-1– சர்வாதிகத்வத்தால் வந்த பூர்த்தியும்
2-ஸ்ரீயபதித்வத்தால் வந்த நீர்மையும் -3-அவர்ஜநீயமான சம்பந்தமும் -என்றும் -4-அனுக்ரஹ கார்யம் வியூக விபவாத்யவதாரங்கள் என்றும் சொல்லி –
இப்படி பட்ட அனுக்ரஹம் ஏவம்விதம் என்று பரிச்சேதிக்க ஒண்ணாது என்கிறார் –

30-கீழில் பாட்டிலே நரத்தில் பிறத்தி -என்று மனுஷ்ய யோநியில் அவதாரங்கள்-ப்ரஸ்துதம் ஆகையாலும் -அதுக்கு கீழ் பாட்டிலே -அது உண்டு உமிழ்ந்து -என்று
வட தள சாயி அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலும் -வட தள சாயி உடைய-மௌக்த்யத்திலும் சக்தியிலும் -சக்கரவர்த்தி திருமகன் உடைய அவதாரத்தின்
மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யத்திலும் வீரஸ்ரீ யிலும் ஈடுபடுகிறார் -இப்பாட்டில் –

31-கீழில் பாட்டில் அவதாரங்களில் உண்டான ரஷகத்வத்தை அனுபவிக்கிறார் இதில்-
ஆஸ்ரயேண உன்முகர் ஆனவர்கள் திறத்தில் அவதார கார்யமான உபகார பரம்பரைகளை-அனுபவிக்கிறார் –

32-ஆஸ்ரித விரோதி நிரசனம் பண்ணும் இடத்தில் சக்கரவர்த்தி திருமகன் செவ்வைப்-பூசலாலே ராஷசரை அழியச் செய்தால் போலே விரோதி வர்க்கத்தை போக்கவுமாம் –
மகாபலி பக்கலில் வாமனனாய் அர்த்தித்துச் சென்று வஞ்சித்து அழித்தால் போலே அழிக்கவுமாம் –ஆஸ்ரித விரோதி நிரசநத்தில் ஸ்வபாவ நியதி இல்லை-

33-ஆஸ்ரித ரஷணத்தில் ஸ்வபாவ நியதி இல்லாதவோபாதி ஆஸ்ரயிப்பாருக்கும்-ஜாதி நியதி இல்லை என்கிறார் –

34-கீழில் பாட்டில் ருசி உடைய ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஜன்மத்தால் தாழ்வு-பார்க்காதே -விஷயீ கரிக்கும் சக்கரவர்த்தி திரு மகனுடைய நீர்மையை
அனுபவித்தார் -இதில் -கார்ய காரணங்கள் என்ன -பிரமாண ப்ரமேயங்கள் என்ன -சகலமும் ஸுவாதீனமாம்படி இருக்கிற நீ -புருஷார்த்த ருசி இல்லாதாருக்கு
ருசி ஜனகனாய்க் கொண்டு -கோப சஜாதீயனாய் வந்து அவதரித்த இது -என்ன-ஆச்சர்யம் -என்கிறார் –

35-அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை கோபால சஜாதீயமாக்கி ருசி ஜனகனாய்-கொண்டு அவதரித்த ஏற்றத்தை அனுபவித்தார் கீழில் பாட்டில் –
இதில் ஒரு கோப ஸ்திரீக்கு கட்டவும் அடிக்கவும் விடவுமாம் படி ந்யாம்யனான-குணாதிக்யத்தை அனுசந்தித்து திரியவும் கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபடுகிறார் –

36-கீழ் சொன்ன பரதந்த்ர்யத்தை அநுபாஷித்து அவ்வதாரங்களின் ஆச்சர்ய சேஷ்டிதங்களில்-ஈடுபடுகிறார் –

37-பின்பு க்ருஷ்ணாவதாரத்தில் விதக்த சேஷ்டிதங்களையும் -முக்த சேஷ்டிதங்களையும்-அனுபவிக்கிறவர் -மௌக்த்யத்தாலும் சௌலப்யத்தாலும் -வரையாதே எல்லாரையும்
தீண்டின படியாலும் க்ருஷ்ணாவதாரமான ஸத்ர்சமான வட தள சாயியையும்-ஸ்ரீ வராஹ வாமன ப்ராதுர்பாவங்களையும் க்ருஷ்ணாவதாரத்தொடு ஒக்க-அனுபவிக்கிறார் –

38-பரித்ராணாய சாதூநாம் விநாசாயச துஷ்க்ர்தாம் – என்கிறபடியே பிரதிகூலரை அழியச்செய்தும்-
அனுகூலரை உகப்பத்திம் செய்தருளின கிருஷ்ணாவதார சேஷடிதங்களை-அனுபவிக்கிறார் –

39-சாது பரித்ராணமும் துஷ்க்ர்த் விநாசமும் சொல்லிற்று கீழ்-இதில் -இவ்வளவு புகுர நிலாத இந்த்ராதிகளுடைய விரோதிகளான ராஷச வர்க்கத்தை அழியச் செய்து
அவர்கள் குடி இருப்பைக் கொடுத்தபடியும் -அவ்விந்த்ரன் தான் ஆஸ்ரிதரைக் குறித்து பிரதிகூலனான போது
அவனை அழியச் செய்யாதே முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும் நீர்மையை அனுபவிக்கிறார் –

40-ஈஸ்வர அபிமாநிகளான தேவதைகள் உடைய ரஷண பிரகாரம் சொல்லிற்று கீழ் -இப்பாட்டில் -அநந்ய பிரயோஜனரை ரஷிக்கும் இடத்தில்
நித்ய ஸூரிகளுக்கு மேல் எல்லையான பிராட்டிமாரோடே -சம்சாரிகளுக்கு கீழான திர்யக்குகள் உடன் வாசியற –
தன்னை ஒழியச் செல்லாமை ஒன்றுமே ஹேதுவாக விரோதி நிரசன பூர்வகமாக ரஷிக்கும் ஆச்சர்யங்களை யநுபவிக்கிறார் –

41-நீ உகந்தாரை -தத் சஜாதீயனாய் வந்து அவதரித்து ஸ்வரூப அநுரூபமாக ரஷிக்கும்-படியையும் விமுகரான சம்சாரிகளை சங்கல்பத்தாலே
கர்ம அநுகூலமாக ரஷிக்கும் படியையும் அநுசந்திக்கப் புக்கால் பரிச்சேதிக்க முடியாததாய் இருந்ததீ -என்கிறார் –

42-நீ வகுத்தலும் மாய மாயமாக்கினாய் -என்று ஸ்ர்ஷ்டி சம்ஹாரங்கள் சேர ப்ரஸ்துதம்-ஆகையால் -ஏக ஏவ ருத்ர சர்வோஹ்யே ஷ ருத்ர -என்று
சுருதி பிரசித்தராய் இருப்பாரும் உண்டாய் இருக்க -நம்மையே அபரிச்சின்ன ஸ்வபாவராகச் சொல்ல கடவீரோ என்று-பகவத் அபிப்ராயமாக –
அந்த ருத்ரனனுக்கு வந்த ஆபத்தை அவதரித்து தாழ நின்று அந்நிலையிலே போக்கின தேவரீருக்கு இது பரிஹரிக்கை பரமோ என்கிறார் –

43-ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கின வளவே யன்றிக்கே -க்ருஷ்ணனாய் வந்து அவதரித்த-பூபாரமான கம்சனை சபரிகரமாக நிரசிக்கையாலும் –
அந்த ருத்ராதிகளோடு க்ரிமிகீடாதிகளோடு வாசியற ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலைகளிலும் திருவடிகளை-வைத்து உன் சேவை சேஷித்வத்தை
பிரகாசிப்பித்தபடியாலும் ஜகத் காரண பூதன் நீயே என்கிறார் -காலநேமி ஹதோயோ சௌ -என்று பூமி கம்சனை பூபாரமாகச் சொன்னாள் இறே-

44-மண்ணளந்து கொண்ட காலனே -என்று முறை அறிவித்தபடியும்-அஞ்சன வண்ணன் -என்று முறை அறிந்தவர்கள் ஆஸ்ரயிக்கைக்கு சுபாஸ்ரயமான
வடிவும் ப்ரஸ்துதமாய் நின்றது கீழ்-க்ருத்யாதி யுகங்களிலே சேதனர் சத்வாதி குண அநுகூலமாக ச்வேதாதி வர்ணங்களை-விரும்புகையாலே
அந்த காள மேக நிபாஸ்யமான நிறத்தை யழிய மாறி அவர்களுக்கு வர்ணங்களைக் கொண்டு அவ்வவ காலங்களிலே முகம் காட்டச் செய்தேயும்
சம்சாரிகள் காற்கடைக் கொள்ளுவதே -இது என்ன துர்வாசநா பலம் -என்கிறார் –

45-பகவத் சௌலப்யத்தையும் அதிசயத்து இருந்துள்ள சம்சாரிகளுடைய துர்வாசனையால்-வந்த இழவைச் சொன்னார் கீழ் -இதில் அவர்களில் அந்யதமனான
எனக்கு தேவரீர் உடைய பரத்வ சௌலப்யங்களையும் -ஆஸ்ரிதருக்கு எளியனாய் அநாஸ்ரிதருக்கு அரியனாய் இருக்கிற படியையும் காட்டி
என்னை அனந்யார்ஹம் ஆக்குவதே -இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் –

46-அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -என்று ஸ்வரூபத்தை அறிவிக்கையாலே-சம்சாரத்திலே வந்து ஆவிர்பவித்தும் -அவதரித்ததும் –
பெரிய திருவடி தோளிலே ஏறி ஆஸ்ரிதர் இருந்த இடத்திலே சென்று ரஷித்த காலம் எல்லாம் இழந்தேன் –
இனி இழவாதபடி -விரோதி நிவர்த்தி பூர்வகமாக நான் உன்னைப் பெரும் விரகு அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

47-பர வியூஹ விபவங்கள் அடங்க ஆஸ்ரயணீய ஸ்தலம் அன்றோ -அதிலே ஓர் இடத்தைப் பற்றி ஆஸ்ரயித்து நம்மைப் பெற மாட்டீரோ என்ன –
அவ்விடங்கள் எல்லாம் நிலம் அல்ல -இனி எனக்கு பிரதிபத்தி பண்ணி-ஆஸ்ரயிக்க வல்லதோர் இடத்தை அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

48-ஆஸ்ரயணீய ஸ்தலங்களை சாமான்யேன பாரித்து வைத்தோம் ஆகில்-அவற்றில் ஒன்றைப் பற்றி ஆஸ்ரயிக்கும் ஆஸ்ரய பூதருக்கு ஆஸ்ரயண
அநுகூலமாக பல ப்ரதராய் இருக்கும் அது ஒழிய – ஆஸ்ரயணீய ஸ்தலத்தை-விசேஷித்து சொல்லுகை நமக்கு பரமோ என்ன –ஆஸ்ரிதர் நாஸ்ரிதர்
விபாகம் அன்றிக்கே நின்ற நின்ற நிலைகளிலே பர ஹிதமே-செய்யும் ஸ்வபாவனான பின்பு என் அபேஷிதம் செய்கை உனக்கே பரம் அன்றோ –என்கிறார்-

49-சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே -என்று இவருக்கு இவர் இருந்த-பூமியிலே சஷூர் விஷயமாய் –அவதாரங்களில் உண்டான
நீர்மைகளும் இழக்க வேண்டாதபடி -குண பூர்த்தியோடே கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸம்ர்தியைக் காட்ட கண்டு -அனுபவிக்கிறார்-

50-ஆந்தர விரோதத்தை போக்க வல்ல அவதார வைபவத்தையும் -பாதக பதார்த்த சகாசத்திலே நிர்பயராய் வர்திக்கலாம்படி அபாஸ்ரயமான தேச வைபவத்தை
சொன்னார்-கீழில் பாட்டில் -இதில்-பாஹ்ய விரோதத்தைப் போக்கவல்ல அவதார வைபவத்தையும்-சர்வ சமாஸ்ரயணீயமான தேச வைபவத்தையும் அருளிச் செய்கிறார் –

51-உபயபாவ நிஷ்டனான ப்ரஹ்மாவானவன் தன் அதிகாரத்துக்கு வரும் விரோதிகளை-பரிஹரிகைக்கு -ப்ரஹ்ம பாவனைக்கும் -பலமான மோஷத்துக்குமாக-
சதுர்தச புவன ஸ்ரஷ்டா என்றும் நாலு வேதங்களையும் ஒருக்காலே உச்சரிகைக்கு ஈடான நான்கு முகத்தை உடையன் அஜன் –

52-ராமாவதாரதுக்கு பிற்பாடர்க்கு கோயிலிலே வந்து உதவினபடி சொல்லிற்று -கீழ் மூன்று பாட்டாலே-இனி -இரண்டு பாட்டாலே கருஷ்ணாவதாரதுக்கு பிறபாடர்க்கு
உதவும்படி சொல்லுகிறது -அநந்தரம் கீழில் பாட்டோடு சங்கதி என் என்னில் -சதுர்தச புவநாத் யஷனாய் ஜ்ஞானாதிகனான ப்ரஹ்மாவுக்கு ஆஸ்ரயணீ யமான
அளவு அன்றிக்கே -அநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருந்துள்ளவர்களுக்கு-அனுபவ ஸ்தானம் கோயில் -என்கிறார் –

53-அநிருத்த ஆழ்வானுடைய அபிமத விரோதியாய் -ப்ரபலமான பாண ப்ரமுக வர்க்கத்தை-போக்கினாப் போலே -இன்று ஆஸ்ரிதருடைய
போக விரோதியைப் போக்குகைக்கு அந்த க்ருஷ்ணன் நித்ய வாஸம் பண்ணும் தேசம் கோயில் -என்கிறார் –

54-சம்சாரத்தில் தன பக்கல் ருசி இல்லாதாருக்கு ருசி ஜநகனாகைக்கும்-ருசி பிறந்தாருக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்கும்-
ஆஸ்ரிதரை அஹங்கார ரஹீதமாக அடிமை கொள்ளுகைக்கும் உரியவன் -என்கை-

55-இப்படி ஆஸ்ரித அர்த்தமாக கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை காட்டி -லஷ்மீ பூமி நீளா -நாயகனாய் இருந்து வைத்து
எனக்கு மறக்க ஒண்ணாதபடி என்னை அங்கீ கரித்து அருளினான் -என்கிறார் -இவ்வாறு 7 பாசுரங்களில் திருவரங்க அர்ச்சா மூர்த்தியை அனுபவிக்கிறார் –

56-இனி மேல் ஆறு பாட்டாலேதிருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் -இதில் -முதல் பாட்டில் –
ஆஸ்ரித விரோதியான ராவணனை அழியச் செய்த சக்ரவர்த்தி திருமகன் பின்புள்ளாரான -அநந்ய பிரயோஜனருக்கு ஸ்வ ப்ராப்தி-
விரோதிகளைப் போக்கி அநுகூல வ்ர்த்தி கொள்ளுகைகாக திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற-படியை அனுபவிக்கிறார் –

57-ப்ராப்தி விரோதியைப் போக்கி அநுகூல வ்ர்த்தி கொள்ளும் அளவு அன்றிக்கே-நித்ய அநபாயிநியான பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச் சுவரான ராவணனை-
அழியச் செய்தாப் போலே –பிற்பாடரான ஆஸ்ரிதருக்கு அநுபவ-விரோதிகளைப் போக்குகைகாகத் திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை-அநுபவிக்கிறார் –

58-ஆஸ்ரித அர்த்தமாக யமளார்ஜுநங்கள் தொடக்கமான பிரதிகூல வர்க்கத்தைப்-போக்கின நீ -அக்காலத்துக்கு பிற்பாடருக்கு உதவுகைக்காக
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே வந்து கண் வளர்ந்து அருளினாய் அல்லையோ –என்கிறார்-

59-பண்டு ஆஸ்ரித விரோதிகளைப் போக்கின மிடுக்கனாய் வைத்து-அழகாலும் சீலத்தாலும் ஆஸ்ரிதரை எழுதிக் கொள்ளுகைகாக அவதரித்த கிருஷ்ணன் –
பிற்பாடருடைய இழவு தீர சர்வ பிரகாரத்தாலும் புஷ்கலமான திருக் குடந்தையிலே-கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் –

60-உகந்து அருளின நிலங்கள் ஆஸ்ரயணீய ஸ்தலம்-போக ஸ்தானம் ஒரு தேச விசேஷம் என்று இராதே-நிலையார நின்றான் -என்று நிலை யழகிலே
துவக்குண்பார்க்கு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளியும் இப்படி செய்து அருளிற்று-போக்தாக்களான ஆஸ்ரிதர் பக்கலிலே உள்ள வ்யாமோஹம் இறே -என்கிறார்-

61-இப்படி போக ஸ்தானம் ஆகையாலே ஆராவமுத ஆழ்வார் திருவடிகளில் தாம்-அனுபவிக்க இழிந்த இடத்தில் -வாய் திறத்தல் -அணைத்தல் -செய்யாதே –
ஒரு படியே கண் வளர்ந்து அருளக் காண்கையாலே -ஸூகுமாரமான இவ்வடிவைக் கொண்டு த்ரைவிக்ரமாதி சேஷ்டிதங்களைப்-பண்ணுகையாலே -திருமேனி
நொந்து கண் வளர்ந்து அருளுகிறாராக-தம்முடைய பரிவாலே அதிசங்கித்து-என் பயம் கெடும்படி ஒன்றை நிர்ணயித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் -என்கிறார்
இது ஒழிய -ப்ராங்ந்யாயத்தாலே -அர்ச்சாவதார சங்கல்பம் என்ன ஒண்ணாது இறே -இவர்க்கு –

62-திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின இதுக்கு ஹேது நிச்சயிக்க மாட்டாதே பீதர்-ஆனவருக்கு –ஹிரண்யனை அழியச் செய்த வீரத்தோடே
திருக் குறுங்குடியிலே நின்று அருளின படியை காட்டக் கண்டு தரித்து -நம்பி உடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து
முரட்டு ஹிரண்யனை -அழியச் செய்தாய் என்பது உன்னையே என்று விஸ்மிதர் ஆகிறார் –

63-தேவரீர் சௌகுமார்யத்தை பாராதே ஸ்ரீ ப்ரஹலாதன் பக்கல் வாத்சல்யத்தால் ப்ரேரிதராய்-ஹிரண்யனை அழியச் செய்யலாம் -விமுகரான சம்சாரிகளுடைய
ஆபிமுக்யத்தை அபேஷித்து-உன் மேன்மையைப் பாராதே -கோயில்களிலே நிற்பது -இருப்பது -கிடப்பது -ஆகிற இது-என்ன நீர்மை என்று ஈடுபடுகிறார் –

64-கீழ்ச் சொன்ன நீர்மையை உடையவன் -எனக்கு ருசி ஜனகன் ஆகைக்காக-திரு ஊரகம் தொடக்கமான திருப்பதிகளில் வர்த்தித்து –
ருசி பிறந்த பின்பு என் பக்கல் அதி வ்யாமோஹத்தைப் பண்ணுகையாலே-கீழ்ச் சொன்ன நீர்மை பலித்தது என் பக்கலில் -என்கிறார் –

65-தம் திறத்தில் ஈஸ்வரன் பண்ணின உபகாரமானது தம் திரு உள்ளத்தில் நின்றும் போராமையாலே-பின்னும் அதிலே கால் தாழ்ந்து –திருமலையில் நிலையும்
பரம பதத்தில் இருப்பும் -ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளின இதுவும் எனக்குத் தன் திருவடிகளில் ருசி-பிறவாத காலம் இறே –என்கிறார்-

66-பகவத் விஷயம் ஸூலபமாய் இருக்க-சம்ஸாரம் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதம் என்னும் இடம் ப்ரத்யஷ சித்தமாய் இருக்க -பகவத் சமாஸ்ரயணம்
அபுநாவ்ர்த்தி லஷணமான மோஷ ப்ராப்தமாய் இருக்க –சம்சாரிகள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணாது இருக்கிற ஹேது என்னோ -என்று விஸ்மிதர்-ஆகிறார் –

67-சம்சாரிகள் தங்களுக்கு ஹிதம் அறிந்திலரே ஆகிலும் -இதில் ருசி பிறந்த வன்று இத்தை இழக்க ஒண்ணாது என்று பார்த்து -இவர்கள் துர்கதியைக் கண்டு
-பரோபதேச ப்ரவ்ர்த்தர் ஆகிறார் -மேல் ஏழு பாட்டாலே -இதில் முதல் பாடு –அர்ச்சிராதி கதியிலே போய் -நிலை நின்ற புருஷார்த்தத்தை லபிக்க வேண்டி இருப்பீர் –
ப்ராப்யமும் ப்ராபகமும் ஆன பகவத் விஷயத்தை ஆஸ்ரயித்து-உங்கள் விரோதியைப் போக்கி-உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

68-சம்சாரிகள் குணத்ரய ப்ரசுரர் ஆகையாலே குண அநுகூலமாக ராஜச தாமச-தேவதைகளை ஆசரயித்து உஜ்ஜீவிக்கப் பார்க்கிறவர்களை நிஷேதியா நின்று கொண்டு –
ஆத்ம உஜ்ஜீவநத்தில் ருசியை உடையராய் -சாத்விகர் ஆனவர்கள் சர்வாதிகனை-ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க பாரும் கோள் -என்கிறார்-

69-எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை -என்கிறது என்-தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தால் உஜ்ஜீவிக்க ஒண்ணாமை என் என்ன –அந்த தேவதாந்தர சமாஸ்ரயணம் துஷ்கரம்
அத்தைப் பெற்றாலும் அபிமத பிரதானத்தில் அவர்கள் அசக்தர்-ஆனபின்பு ஜகத் காரண பூதனான யாஸ்ரயித்து சம்சார துரிதத்தை அறுத்துக் கொள்ள-வல்லிகோள் -என்கிறார் –

70-வரம் தரும் மிடுக்கு இலாத தேவர் -என்று அவர்களுக்கு சக்தி வைகல்யம்-சொல்லுவான் என் -அவர்களை ஆஸ்ரயித்து தங்கள் அபிமதம் பெற்றார் இல்லையோ
என்ன –ருத்ரனை ஆஸ்ரயித்து அவனுக்கு அந்தரங்கனாய்ப் போந்த பாணன்-பட்ட பாடும் -ருத்ரன் கலங்கிய படியும் தேவர்களே அறியும் அத்தனை இறே -என்கிறார்-

71-பாணனை ரஷிக்க கடவேன் என்று பிரதிக்ஜை பண்ணி ஸபரிகரனாய் கொண்டு-ரஷணத்தில் உத்யோகித்து எதிர் தலையில் அவனைக் காட்டிக் கொடுத்து தப்பி-
போன படியாலும் -ஒருவன் ஆஸ்ரிதனுக்கு உதவின படி என் -என்று லஜ்ஜித்து-க்ர்ஷ்ணன் கிருபை பண்ணி அவன் சத்தியை நோக்கின படியாலும்
அவன் ரஷகன் அல்ல என்னும் இடமும்-க்ருஷ்ணனே ரஷகன் என்னும் இடமும்-ப்ரத்யஷம் அன்றோ -இவ்வர்த்தத்தை ஒருவர் சொல்ல வேண்டி இருந்ததோ –என்கிறார் –

72-ருத்ரன் லோகத்திலே மோஷ ப்ரதன் என்று ஆச்ரயிப்பாரும்-ஆகமாதிகளிலே பரத்வத்தை பிரதிபாதித்தும் அன்றோ போகிறது என்னில்-நிர்தோஷ ஸ்ருதியில்
அவனை ஷேத்ரஞ்ஞனாகச் சொல்லுகையாலே லோக-பிரசித்தி வடயஷி பிரசித்தி போலே அயதார்தம் -ஆகமாதிகள் விப்ரலம்பக வாக்யவத்-அயதார்த்தம் -என்கிறார்

73-ஸ்ரீயபதியே ஆஸ்ரயணீயன்-ப்ரஹ்ம ருத்ராதிகள் ஷேத்ரஞ்ஞர் ஆகையாலே அநாஸ்ரணீயர் -என்றதாய் நின்றது கீழ் -இதில் -அந்த ஸ்ரீயபதி தான் தாழ்ந்தாருக்கு
முகம் கொடுக்கைகாக மனுஷ்ய சஜாதீயனாய் தன்னை தாழ விட்டுக் கொண்டு நின்ற நிலையிலே-ப்ரஹ்ம ருத்ரர்கள் உடைய அதிகாரத்தில் நின்றாருக்கு
மோஷ ப்ரதன் என்று கொண்டு –தேவதாந்தரங்களுக்கும் சர்வேஸ்வரனுக்கும் உண்டான நெடுவாசியை அருளிச் செய்கிறார் –

74-ஆஸ்ரயணீயனுடைய பிரசாதமே மோஷ சாதனம் ஆகில் -முமுஷுவான இவ் வதிகாரிக்கு-பிரசாதகமான கர்த்தவ்யம் ஏது என்னில் ஸ்ரீ வாமனனுடைய திருவடிகளில்
தலை சாய்த்தல் -ஷீராப்தி நாதனுடைய சீலத்துக்கு வாசகமான திரு நாமத்தை வாயாலே சொல்லுதல் செய்யவே-புருஷார்த்த சித்தி உண்டு -என்கிறார் –

75-இப்படி அவனை ஆஸ்ரயித்து -அவனுடைய கடாஷத்தாலே பிரதிபந்தக நிரசன-பூர்வகமாக அவனைப் பெறுகை ஒழிய -உபாயாந்தரஙககளிலே இழிந்து
ஆஸ்ரயிப்பாருடைய அருமையை அருளிச் செய்கிறார் -மேல் ஏழு பாட்டுக்களாலே -இதில் முதல் பாட்டில் -கர்ம யோகமே தொடங்கி
-பரம பக்தி பர்யந்தமாக -சாதிக்குமவர்களுடைய துஷ்கரதையை அருளிச் செய்கிறார் –

76-த்ரவ்ய அர்ஜநாதி க்லேசம் என்ன -பர ஹிம்சாதி துரிதம் என்ன -இவற்றை உடைத்தாய் –இந்த்ரிய வ்யாபார ரூபமான கர்ம யோகத்தில் காட்டில் –
இந்த்ரியோபாதி ரூபமான ஜ்ஞான யோகத்தில் பிரதமத்தில் இழியுமவர்கள் உடைய-துஷ்கரதையை அருளிச் செய்கிறார்

77-கர்ம ஜ்ஞானன்களை சஹ காரமாகக் கொண்டு ப்ரவர்த்தமான பக்தியாலே-பகவத் லாபத்தை சொல்லிற்று -கீழ் -சர்வ அந்தர்யாமியாய் -ஜகத் காரணபூதனான
சர்வேஸ்வரனை அஷ்டாங்க ப்ரணாமம் முன்னாக -திரு மந்த்ரத்தை கொண்டு பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கிறார் –
இப்பாட்டு முதலாக இதிஹாச புராண ப்ரக்ரியையாலே பகவத் பஜனத்தை அருளிச் செய்கிறார் –

78-உபாசனதுக்கு சுபாஸ்ரயம் வேண்டாவோ என்ன -கார்ய ரூபமான ஜகத்தில் ஆஸ்ரித அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற ஷீராப்தி நாதனை சுபாஸ்ரயமாகப்
பற்றி மந்திர ரஹஅச்யத்தாலே முறை யறிந்து -ஆஸ்ரயித்து -இடைவிடாதே பிரேமத்துடன் இருக்குமவர்கள்-பரமபதத்தி ஆளுகை நிச்சயம் -என்கிறார் –

79-ஸ்வேத த்வீப வாசிகளை ஒழிந்த சம்சாரிகளுக்கு அது நிலமோ என்ன -அவதார கந்தமான ஷீராப்தியில் நின்றும் தன் மேன்மை பாராதே-தச ப்ராதுர்பாவத்தை
பண்ணி சுலபனானவன் திருவடிகளிலே-அவதார ரஹச்ய ஜ்ஞானம் அடியான பக்தியை உடையவர்களுக்கு அல்லது-முக்தராக விரகு உண்டோ –என்கிறார்-

80-அவதார ரஹச்ய ஞானம் அடியான ப்ரேமம் மோஷ சாதனம் என்றது கீழ் -இதில் அவதார விசேஷமான க்ர்ஷ்ணனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தை
அநுவதித்து -அவன் திருவடிகளில் ஆசை உடையார்க்கு அல்லது நித்ய ஸூரிகளோடு-ஒரு கோவையாய் அநுபவிக்கைக்கு விரகு இல்லை –என்கிறார் –

81-வ்யூஹ விபவங்கள் -தேச கல -விபகர்ஷத்தாலே நிலம் அன்று என்ன வேண்டாதபடி-பிற்பாடர் இழவாமைக்கு -திருமலையிலே வந்து நின்று அருளினான் 
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகப் பாரும் கோள் என்று உபதேசத்தை-தலைக்கட்டுகிறார் –

82-இதுக்கு முன்பு பரோபதேசம் பண்ணினாராய் -மேல்-ஈஸ்வரனைக் குறித்து -தேவரீர் திருவடிகளிலே ப்ரேம உக்தர் நித்ய ஸூகிகள் -என்கிறார்
இதுக்கு அடி -பிறருக்கு சாதகமாக தான் உபதேசித்த பக்தி -தமக்கு ஸ்வயம் பிரயோஜனம்-யாகையாலே -தமக்கு ரசித்த படியைப் பேசுகிறார்
இப்பரபக்தி தான் -சாதகனுக்கு உபாயத்தின் மேல் எல்லையாய்-பிரபன்னனுக்கு ப்ராப்யத்திலே முதல் எல்லையாய் -இருக்கும் இறே
இதில் முதல் பாட்டில் –மனுஷ்யத்வே பரத்வத்தையும் -அவதார கந்தமான ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையையும் -அனுசந்தித்து
தேவரீர் திருவடிகளில் ப்ரவணர் ஆனவர்களுக்கு சர்வ தேசத்திலும் ஸூகமேயாம் –என்கிறார்-

83-அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே துக்க ப்ரசுரமான இஸ் சம்சாரத்தில் சுகம்-உண்டாகக் கூடுமோ -என்னில்-ப்ராப்தி தசையில் சுகமும் –
சம்சாரத்தே இருந்து வைத்து தேவரீர் திருவடிகளிலே விச்சேதம் இல்லாத ப்ரேமத்தால்-பிறக்கும் சுகத்துக்கு போராது -என்கிறார் –

84-வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே -என்று கீழ் ப்ரஸ்துதமான பக்தி-தம் பக்கல் காணாமையாலும் -தம்மை பிரக்ர்தியோடே இருக்கக் காண்கையாலும் –
ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலும் -அவன் நினைவாலே பேறாகையாலும் –என்திறத்தில் -என் நாதன் தன் திருவடிகளில் பரம பக்தி உக்தனாம்படி
பண்ண நினைத்து இருக்கிறானோ – நித்ய சம்சாரியாகப் போக நினைத்து இருக்கிறானோ -திரு உள்ளத்தில் நினைத்து இருக்கிறது என்னோ -என்கிறார் –

85-என்னை இப் பிரக்ர்தியோடே வைத்த போதே தேவரீர் நினைவு இன்னது என்று அறிகிலேன் –முந்துற முன்னம் உன் ப்ரசாதத்தாலே
திருவடிகளில் பிறந்த ருசியை மாற்றி -இதர விஷய பரவணன் ஆக்காது ஒழிய வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

86-உம்மை நம் பக்கலில் நின்றும் அகற்றி ப்ரகர்தி வஸ்யர் ஆக்குவோமாக நம் பக்கலிலே-அதிசங்கை பண்ணுவான் என் -என்ன -விரோதி நிரசன
சமர்த்தனான நீ -என் ப்ரகர்தி சம்பந்தத்தை யறுத்து-என் நினைவைத் தலைக் கட்டாது ஒழிந்தால்-அதிசங்கை பண்ணாதே செய்வது என் –என்கிறார் –

87-செய்ய பாதம் நாளும் உள்ளினால் -என்று நீயே எனக்கு அபாஸ்ரயம் என்கையாலே-நம்மை ஒழியவும் எனக்கு வேறு ஒரு பற்று இல்லையோ என்ன –
அபாஸ்ரயமாக சம்பாவனை உள்ள ப்ரஹ்ம ருத்ரர்கள் ஸ்வ அதிகார ஸித்திக்கு-தேவரீர் கை பார்த்து இருக்கும்படியாய் இழிந்த பின்பு -சர்வாதிகரான
தேவரீரை ஒழிய வேறு ஒரு பற்றை உடையேன் அல்லேன் என்று-தம்முடைய அதிகாரத்துக்கு அபேஷிதமான அநந்ய கதித்வ க்யாபநம் பண்ணுகிறார் மேல் –

88-ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அதிகாரம் ஈச்வரனாலே என்றார் கீழே -இதில் –அவர்கள் தங்கள் ஆபநநிவ்ருத்திக்கு தேவரீர் கை பார்த்து
இருக்கும்படி பரம உதாரரான தேவரீரை ஒழிய வேறு ஒருவரை தேவதையாக மதிப்பேனோ -என்கிறார் –

89-ப்ரஹ்மாதிகளையும் மேன்மை குலையாதபடி நின்று ரஷித்த அளவு அன்றிக்கே -க்ருஷ்ணாஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ் ச பாண்டவ -என்கிறபடியே
பாண்டவர்களுக்கு தூத்ய சாரத்யந்களைப் பண்ணி-தாழ நின்று-சத்ய சங்கல்பனாய்க் கொண்டு-விரோதி வர்க்கத்தை அழியச் செய்து
ராஜ்யத்தை கொடுத்த -உன்னை ஒழிய வேறு ஒரு தெய்வம் உண்டு என்று-நான் நினைத்து இருப்பேனோ –என்கிறார் –

90-உன்னை ஒழிந்தார் ஒருவரை ஆஸ்ரயணீயர் என்று இரேன் என்று தம்முடைய-அநந்ய கதித்வம் சொன்னார் கீழ் -இப்பாட்டில் -ஆஸ்ரயணீயர் தேவரீரே ஆனாலும்
தேவரீரை லபிக்கைக்கு-தேவரீர் திருவடிகளை ஒழிய-என் பக்கல் உபாயம் என்று சொல்லல் ஆவது இல்லை என்று-தம்முடைய ஆகிஞ்சன்யத்தை அருளிச் செய்கிறார் –

91-சாஸ்திரபலம் ப்ரயோக்த்ரி -என்று பேறு உம்மதானால் உம்முடைய விரோதி நிவ்ர்திக்கு-நீரே கடவர் ஆக வேண்டாவோ -நின்னிலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்றிலேன் –
என்கிறது எத்தாலே என்ன -ப்ராங் ந்யாயத்தாலே -அது என் என்னில் -அசோகவ நிகையிலே இருந்த பிராட்டி தேவரீரை லபிக்கைக்கு ராஷச வதத்தாலே
அவள் யத்னம் பண்ணும் அன்று அன்றோ நான் என்னுடைய விரோதியை போக்குகைக்கு யத்னம்-பண்ணுவது -ஆனபின்பு-
அநந்ய கதியாய்-அகிஞ்சனான என்னை-ஸ்வ ரஷணத்தில் மூட்டி அகற்றாது ஒழிய வேணும் -என்கிறார் –

92-நின்னை என்னுள் நீக்கல் -என்றீர்-நாம் உம்மை அகலாது ஒழிகைக்கு நம் அளவிலே நீர் செய்தது என்ன-நாம் உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன -நிருபாதிக
சரண்யரான தேவரீர் திருவடிகளிலே ப்ரவணனான என்னை-உன்னுடைய கார்யம் எனக்கு பரம் -நீ பயப்பட வேண்டாம் -என்று-பயம் தீர –மாசுச -என்ன வேணும் –என்கிறார் –

93-அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே -என்று பயம் கெட -மாசுசா -என்ன-வேணும் என்றீர் கீழ்-இவ்வளவே அமையுமே என்ன –உபாயாந்தரங்களைக் காட்டி
என்னை அகற்றாது ஒழிக்கைகாக சொன்ன வார்த்தை யன்றோ யது-தேவரீர் உடைய நிரதிசய போக்யதைக் கண்டு அனுபவிக்கிற ஆசைப்படுகிற எனக்கு விஷயாந்தர
நிவ்ர்த்தி பூர்வகமாக -தேவரீரையே நான் அனுபவிக்கும்படி-என் பக்கலிலே இரங்கி யருள வேணும் என்று பெரிய பெருமாள் திருவடிகளில்-அனுபவத்தை அபேஷிக்கிறார் –

94-த்வத் அநுபவ விரோதிகளைப் போக்கவும் -அதுக்கு அநுகூலங்கள் ஆனவற்றை உண்டாக்கவும் -அநுபவம் தன்னை அவிச்சின்னமாக்கவும் வேணும் என்று
அபேஷிக்க ப்ராப்தமாய் இருக்க-இரங்கு -என்று-இவ்வளவு அபேஷிக்க அமையோமோ -என்ன-உனக்கு பிரகாரமாய் இருக்குமது ஒழிய ஸ்வ தந்த்ரமாய்
இருப்பதொரு பதார்த்தம்-இல்லாமையாலே என் அபிமத ஸித்திக்கு உன் இரக்கமே யமையும் -என்கிறார் –

95-எம்பிரானும் நீ யிராமனே -என்று நினைத்தாருக்கு நினைத்ததை கொடுக்க வல்ல சக்தனுமாய்-ஸ்வ தந்த்ரனனுமான சக்கரவர்த்தி திருமகனே உபாயம் என்றார் -கீழ் –
இதில் -உபாயத்தில் தமக்கு உண்டான அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் -பாஹ்ய விஷய ருசியைத் தவிர்த்து-உன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
கைங்கர்யத்தை பிரார்த்திக்கும்படி-புகுர நிறுத்தின நீ -என்னை உபேஷித்து விஷயாந்தர ப்ரவணனாம் படி கை விட்டாலும்-
உன்னை ஒழிய வேறொரு கதி இல்லை என்று-தம்முடைய அத்யவசாயத்தை யருளிச் செய்கிறார் –

96-தம்முடைய வ்யசாயத்தை அருளிச் செய்தார் கீழ் பாட்டில் -இதில் -அஞ்சேல் என்ன வேண்டுமே -என்றும் இரங்கு அரங்க வாணனே -என்றும்
பல படியாக அபேஷியா நின்றீர் -உம்முடைய ப்ராப்யத்தை நிர்ணயித்து சொல்லீர் –என்ன-நான் சம்சாரத்தை அறுத்து நின் திருவடிகளில்
பொருந்தும்படியாக பிரசாதத்தைப்-பண்ணி யருள வேணும் என்று தம்முடைய ப்ராப்யத்தை பிரார்த்திக்கிறார்-

97-வரம் செய் புண்டரீகனே –என்னா நின்றீர் -நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய பக்கல் ஒரு முதல் வேண்டாவோ -என்ன
திரு மார்பிலே பிராட்டி எழுந்து அருளி இருக்க -திருக் கையிலே திவ்ய ஆயுதங்கள் இருக்க-ஒரு முதல் வேணுமோ
அங்கனம் ஒரு நிர்பந்தம் தேவரீருக்கு உண்டாகில்-என் விரோதியைப் போக்கி-உன்னைக் கிட்டி அடிமை செய்கைக்கு
ஹேதுவாய் இருப்பதோர் உபாயத்தை தேவரீரே தந்து அருள வேணும் என்கிறார்-

98-நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய தலையிலே ஒரு முதல் வேணுமே-என்னை நீயே தர வேணும் என்னக் கடவீரோ -என்று பகவத் அபிப்ராயமாக
புருஷார்த்த ருசியாலே வந்த ப்ராதிகூல்ய நிவ்ர்த்தியும் புருஷார்த்த ருசியுமே-ஆலம்பநமாக நான் சம்சார துரிதத்தை தப்பும்படி நீயே பண்ணியருளவேணும் -என்கிறார் –

99-புருஷார்த்த ருசி பிறந்த பின்பு -அத்தாலே வந்த பிரதிகூல்ய நிவ்ர்த்தியை உம்முடைய-பக்கல் முதலாக சொல்லா நின்றீர் -அநாதி காலம் நரக ஹேதுவாகப் பண்ணின
ப்ராதிகூல்யங்களுக்கு போக்கடியாக-நீர் நினைந்து இருந்தது என் -என்ன -நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்ற
உன்-திருவடிகளில் ந்யச்த பரனான இது ஒழிய வேறு போக்கடி உண்டோ -ஆனபின்பு-கீழ் சொன்ன கர்மம் அடியாக வருகிற யம வச்யதையை தவிர்த்து –
எனக்கு உன் திருவடிகளிலே அவிச்சின்னமான போகத்தை தந்து அருள வேணும் -என்கிறார்-

100-இப்படி அவிச்சின்னமான அனுபவத்துக்கு பரபக்தி உக்தனாக ஆக வேண்டாவோ என்ன –அப்பர பக்தியைத் தந்தருள வேணும் -என்கிறார் –

101-நீர் நம்மை ப்ரார்த்திக்கிற பரபக்தி -விஷயாந்தரங்களின் நின்றும் நிவ்ர்த்தமான-இந்திரியங்களைக் கொண்டு -நம்மை அநவரத பாவனை பண்ணும் அத்தாலே
சாத்தியம் அன்றோ -என்ன -அங்கனே யாகில் ஜிதேந்த்ரியனாய் கொண்டு அநவரத பாவனை பண்ணுவேனாக-தேவரீர் திரு உள்ளமாக வேணும் -என்கிறார்-

102-விச்சேத ப்ரசங்கம் இல்லாத அநவரத பாவனைக்கு சரீர சம்பந்தம் அற வேணும் காண் -என்ன–எனக்கு ருசி உண்டாய் இருக்க –
தேவரீர் சர்வ சக்தியாய் இருக்க -அனுவர்த்திக்கிற இந்த அசித் சம்சர்க்கத்தை தேவரீர் அறுத்து தந்து அருளும் அளவும்-நான் தரித்து இருக்கும்படி
-இன்னபடி செய்கிறோம் என்று -ஒரு வார்த்தை யாகிலும்-அருளிச் செய்ய வேணும் -என்கிறார்-

103-அசித் சம்பந்தம் தேக அவஸானத்திலே போக்குகிறோம் -நீர் பதறுகிறது என் -என்ன -அங்கனே ஆகில் –தேவரீர் உடைய-மேன்மைக்கும்-நீர்மைக்கும்-
வடிவு அழகுக்கும்-வாசகமான திரு நாமங்களை நான் இடைவிடாது மனநம் பண்ணிப் பேசுகைக்கு-ஒருப்ரகாரம் அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –

104-யத் கரோஷியதச் நாஸி -என்றும் -த்ரவ்ய யஞ்ஞாஸ் தபோ யஞ்ஞா -என்றும்-இத்யாதி கர்மத்தாலே -விரோதி பாபத்தை போக்கி –
சததம் கீர்த்த யந்த -என்கிறபடியே -நம்மை அனுபவிக்கும் வழி சொல்லி வைத்திலோமோ -உரை செய் -என்கிறது என் -என்ன –
நீ ப்ரதிபந்த நிரசன சமர்த்தனாய் இருக்க-நான் கர்மத்தாலே விரோதியைப் போக்க எனபது ஓன்று உண்டோ-
நீயே என் விரோதியைப் போக்கி -உன்னை நான் மேல் விழுந்து -இடைவிடாதே-அனுபவிக்கும்படி பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –

105-நான் சொன்ன உபாயங்களில் இழியாது ஒழிகைக்கும்-நான் செய்த படி காண்கை ஒழிய போகத்திலே த்வரிக்கையும்-ஹேது என் என்ன –
பிராட்டி புருஷகாரமாக -குணாதிகரான தேவரீர் விஷயீ காரத்தையே-தஞ்சம் என்று இருக்குமவன் ஆகையாலே-
உபாயாந்தர அபேஷை இல்லை –தேவரீர் வடிவு அழகில் அந்வயமே போகத்தில் த்வரிக்கைக்கு அடி -என்கிறார் –

106-நின்ன வண்ணம் அல்லதில்லை -என்று தாம் வடிவு அழகிலே துவக்குண்டபடி சொன்னார் கீழ் –இதில் -தேவரீர் உடைய ஆபத் சகத்துவத்துக்கு
அல்லது நான் நெகிழிலும் என்னெஞ்சு வேறு ஒன்றில் ஸ்நேஹியாது என்கிறார் –

107-கீழ் இரண்டு பாட்டாலும் -தமக்கும் தம் உடைய திரு உள்ளத்துக்கும் உண்டான பகவத் பிரேமத்துக்கு அடியான-வடிவு அழகையும்-ஆபத் சகத்வத்தையும்
பேசினார் -இதில் –அந்த சங்க விரோதியான பிரபல ப்ரதிபந்தங்களை பிரபலமான அசுரர்களை அழியச் செய்தாப்-போலே போக்கின உன் திருவடிகளுக்கு அல்லது-வேறு ஒரு விஷயத்தில் நான் சங்கம் பண்ணேன் என்கிறார்

108-நின் புகழ்க்கலால் ஒரு நேசம் இல்லை நெஞ்சம் -என்றும் -நின் கழற் கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் -என்றும் -சொல்லக் கடவது இ றே
இதுக்கு விஷயமாக நம்மைக் கிட்டி அநுபவிக்கப் பார்த்தாலோ என்ன -போக மோஷ சுகங்களை அனுபவிக்கப் பெற்றாலும்
உன்னை ப்ராபிக்க வேணும் என்னும் ஆசை ஒழிய-மற்று ஒன்றை விரும்பேன் -என்கிறார் –

109-கீழ்-நம் பக்கல் உமக்கு உண்டாகச் சொன்ன ஆசை -ஸ்வ யத்னத்தாலே அநவரத பாவனை-பண்ணியும் -சததம் கீர்த்தனம் பண்ணியும் பெறுவார் உடைய ஆசை போல் இருந்ததீ –
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டும் -என்றும் -திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவனே -என்றும் தொடங்கி-நின் நின் பெயர் உருக்கலந்து ஒழிவிலாது
உரைக்குமாறு உரை செயே -என்றும் -கூடும் ஆசை யல்லதொன்று கொள்வேனோ -என்றும்-பேசினீரே என்ன –உன்னுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் என்னைப் ப்ரேரிக்க
காலஷேப அர்த்தமாக பேசி நின்ற இத்தனை -அது தானும் வேதங்களும் -வைதிக புருஷர்களும் பேசிப் போரக் காண்கையாலே-பேசினேன் இத்தனை -என்கிறார்-

110-தத்விப்ராசோ விபந்யவ -என்கிறபடியே -அஸ்பர்ஷ்ட சம்சார கந்தரும் -தேவர்களும் -முநிக் கணங்களும் -ஏத்திப் போந்த விஷயத்தை -நித்ய சம்சாரியாப் போந்த நான் ஏத்தக்
கடவேன் அல்லேன் -தான் செல்லாமையால் புகழ்ந்தான் என்று திரு உள்ளம் பற்றி-பொறுத்தருள வேணும் என்று -கீழ்-ஏத்தினேன் -என்றதற்கு ஷாபணம் பண்ணுகிறார் –

111-தம்முடைய தண்மையை அனுசந்தித்து –பொறுத்து நல்க வேணும் -என்றார் -கீழ் பாட்டில் -இதில் -பகவத் ப்ரபாவத்தை அனுசந்தித்து கால ஷேப அர்த்தமாக
பண்ணின அநுகூல வ்ர்த்தியால் வந்த குற்றத்தையும் -ப்ராமாதிகமாக செய்த குற்றத்தையும் -குணமாக கொள்ள வேணும் –என்கிறார் –

112-கீழ் இரண்டு பாட்டாலே -இத்தலையில் குற்றத்தை பொறுக்க வேணும் என்று ஷாபணம்-பண்ணி -அக் குற்றங்களை குணமாக கொள்ள வேணும் என்றார் -இப்பாட்டில்-
-திரு உள்ளத்தை குறித்து -ஆயுஸூ எனக்கு இன்ன போது முடியும் என்று தெரியாது -அவன் திருவடிகளில் வணங்கி வாழ்த்தி கால ஷேபம் பண்ணப் பார் –என்கிறார் –

113-மீள்விலாத போகம் நல்க வேண்டுமே -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்ய போகமே-பாரதந்த்ர்யத்தினுடைய எல்லையிலே பெறுமதாய் இருக்க -தத் விருத்தமான
துர்மாநாதிகளாலே அபஹதராய் இருந்த நமக்கு அந்த பேறு-பெருகை கூடுமோ -என்ன -திரு உள்ளத்தைக் குறித்து-துர்மாநத்தாலே ப்ரஹ்ம சிரஸை யறுத்த
ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவனே நமக்கு பாரதந்த்ர்ய விரோதியான துர்மாநத்தைப் போக்கிப் பேற்றைத் தரும்-
நீ அவனை உபாயம் என்று புத்தி பண்ணி இரு –என்கிறார் –

114-இப்படியானால் நமக்கு கர்த்தயம் என் -என்ன -ஜ்ஞான ப்ரதானமே தொடங்கி-பரமபத ப்ராப்தி பர்யந்தமாக-நம் பேற்றுக்கு உபாயம்-நஷ்டோத்தரணம் பண்ணின
ஸ்ரீவராஹ நாயனார் திருவடிகளே என்று நினைத்து-சரீர அவசாநத்து அளவும்-காலஷேப அர்த்தமாக-அவனை வாழ்த்தப் பார் -என்கிறார் –

115-அவன் -அவாக்ய அநாதர என்கிறபடியே ஸ்வயம் நிரபேஷன் -நாம் அநேக ஜன்மங்களுக்கு அடியான கர்மங்களைப் பண்ணி வைத்தோம் –
அவன் திருவடிகளே உபாயம் -என்று நினைத்த மாத்ரத்தில் நம்மை ரஷித்து அருள-கூடுமோ என்று -சோகித்த திரு உள்ளத்தைக் குறித்து –
சர்வவித பந்துவுமாய் -சகல விரோதிகளையும் போக்கி -தன்னைத் தருவானாக-ஏறிட்டுக் கொண்டான் -நீ இனி சோகிக்க வேண்டாம் என்று –
திரு உள்ளத்தைக் குறித்து -மாசுச -என்கிறார்

116-மேலுள்ள ஜன்ம பரம்பரைகளுக்கு அடியான கர்மத்தைப் போக்கி அடிமை கொள்ளுவானாக-ஏறிட்டு கொண்டான் -என்றார் -கீழ்-இதில் –
நரக ஹேதுவான பாபத்தைப் பண்ணி-நான் அத்தாலே யம வச்யராய் அன்றோ இருக்கிறது என்று திரு உள்ளத்தைக் குறித்து-நமக்கு தஞ்சமான
சக்கரவத்தி திருமகனார் -தம்மோடே நம்மைக் கூட்டிக் கொண்ட பின்பு -யமனால் நாம் செய்த குற்றம் ஆராய முடியுமோ –என்கிறார்-

117-யம வஸ்யதா ஹேதுவான கர்மங்கள் போனாலும் -தேக ஆரம்பகமாய் இருந்துள்ள-ப்ராரப்த கர்மம் கிடந்தது இல்லையோ -என்ன -அந்த பிராரப்த கர்மாவையும்
-தத் ஆச்ரயமான தேகத்தையும் போக்கி -பரம பதத்தில் கொண்டு போவான் ஆன பின்பு நம் பேற்றுக்கு ஒரு குறை இல்லை-என்கிறார் –
பூர்வாஹகம் ஆகிறது-தேக பரம்பரைக்கு ஹேதுவாகவும் -நரக ஹேதுவாயும் -ப்ராரப்தமாய் -அநுபவ விநாச்யமாயும் -மூன்று வகைப்பட்டதாய்த்து இருப்பது –
அதில் -உபாசகனுக்கு -பிராரப்த கர்மம் ஒழிந்தவை நஷ்டமாகக் கடவது -பிராரப்த கர்மம் அநுபவ விநாச்யமாகக் கடவது –
பிரபன்னனுக்கு -பகவத் ப்ரசாதத்தாலே த்ரிவித கர்மங்களும் அநுபவிக்க வேண்டியது இல்லை –

118-வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி -என்று பிராரப்த கர்ம அவஸாநமான விரோதி நிவ்ர்த்திக்கும்-மீள்விலாத போகம் நல்க வேண்டும் -என்றும் –
நம்மை ஆட்கொள்வான் -என்றும் -வானில் ஏற்றுவான் -என்றும் –சொன்ன ப்ராப்ய ஸித்திக்கும்-ஈச்வரனே கடவான் என்று திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்தார் -கீழ்ப் பாட்டில் -ஈஸ்வரனை நோக்கி -தம்முடைய திரு உள்ளத்துக்கு உண்டான ப்ராப்ய ருசியை-ஆவிஷ்கரிக்கிறார் -இதில்

119-கரணதுக்கும் க்ர்தர் பாவம் பிறக்கும்படியாக உமக்கு நம் பக்கல் பிறந்த அபிநிவேசம்-சம்சாரத்தில் கண்டு அறியாத ஒன்றாய் இருந்தது -இவ் வபிநிவேசதுக்கு
அடி என் -என்று – பெரிய பெருமாள் கேட்டருளஉம்முடைய வடிவு அழகையும் சீலத்தையும் காட்டி -தேவரீர் பண்ணின க்ர்ஷி பலித்த பலம் அன்றோ -என்கிறார் –

120-உன்னபாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு -என்று வடிவு அழகிலே வந்த ஆதரத்துக்கு அவ் வடிவே விஷயமான படியை
சொன்னார் -கீழ்-இதில் -கிடந்தானை கண்டேறுமா போலே தாமே அவ் விக்ரஹத்தை பற்றுகை அன்றிக்கே-நிர்ஹேதுகமாக-பெரிய பெருமாள்
தம்முடைய விக்ரஹத்தை என்னுள்ளே பிரியாதபடி வைக்கையாலே-விரோதி வர்க்கத்தை அடையப் போக்கி -அபுநா வ்ர்த்தி லஷணமாய்
நிரதிசய ஆநந்த ரூபமான-கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று -என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தியோடே தலைக் கட்டுகிறார் –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவை — தூ மணி மாடத்து – — வியாக்யானம் .தொகுப்பு –

August 16, 2015

அவதாரிகை –

கிருஷ்ணன் வந்த போது வருகிறான் -என்று–தன் போக்கையே அநாதரித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-அதாவது-ஸ்வரூபத்தை உணர்ந்து வந்து அனுபவிக்கையும் அவன் கார்யம் இ றே–தத்தர்சம் -என்று இருப்பாள் ஒருத்தி -என்கை
உபாய அத்யாவச்ய நிஷ்டரான -அதிகாரியை எழுப்புகிறார்கள்
அவனுடைய பற்றுதலே உத்தாரகம் -அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் அவத்யகரம்-

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

வியாக்யானம் –
தூ மணி மாடத்து –
துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத–நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் –
சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும்–அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி–போந்து இருக்கை –
அப்ராக்ருதமாய் பஞ்ச உபநிஷத்மயமான திவ்ய மங்கள விக்ரஹத்திலே-

விரக தாபம் தீர சுபாஸ்ரயமாக அனுசந்திக்க-ஹிதாம்சம் -ஸ்ரீ வைஷ்ணவ கிரக யாத்ரையே -ஆசார்யன் திரு மாளிகை நினைத்தாலே போதுமே
பூர்வ தினசரி மா முனிகள் —ஸ்ரீ ரெங்கசாயி சேவிக்க புறப்பட -அனுஷ்டானம் எல்லாம் சொல்லி-துவளில் மா மணி மாடம் எடுத்து கழிக்க வேண்டாம்–துவள் இல் இது தூய்மை மணி தோஷம் பிரசங்கம் பண்ணி இல்லை என்பதை விட –
திரு மேனி பாங்காக இருக்கா ஜுரம் இல்லையே வாந்தி பேதம் இல்லையே கேட்பது போலே-
பகவான் மாடம் அது பாகவதர் மாடம் இது முக்தர் துவள் இருந்து கழிந்தது நித்யர் ஸ்வத் ஸித்தம் தூய்மை-பரமாத்மா அபகதபாத்மாதிகள் – சத்ய காமம் சத்ய சங்கல்பம் -அவனுக்கு மட்டுமே அபகத பாபமா பாப சம்பந்தம் இல்லாமல்
கர்மத்தால் ஜீவாத்மாவுக்கு உண்டு பிராக பாவம் -குடம் பண்ணின -எத்தனை நாள் இல்லாமல் இருந்தது -அநாதி ஆரம்ப காலம் முன்பு இல்லாமல்
பிரத்யம்சா பாவம் போலே -குடம் உடைக்க -த்வம்சம் ஆன பின்பு -ஆதி உண்டு -அந்தம் இல்லை
ஜீவாத்மாவுக்கு கர்மத்தால் பிராகேவ அபாவம் ஆரம்பத்திலே தோஷம் இல்லை ஜீவாத்மா கல்யாண குணங்கள்
ஹேய பிரத்யபடநீயன் ரத்னங்கள் -அப்படி – கழித்த ரத்னங்கள் கொண்டு போய் காணும் தொலைவில்லி மங்கலம் அனுப்பி
ஆழ்வார் திரு நகரி -சம்ப்ரோட்ஷனம் சதாபிஷேகம் சுவாமி சால்வை வாங்கி போக கழித்த சால்வையே கொண்டு கோஷ்டிக்கு வர –
அந்தபுரம் கழித்தது கொண்டே ராஜாக்கள் தங்கள் மாளிகை அடியார்க்கு ஆட்படுத்த விமலன் –

சுற்றும் விளக்கெரியத் –
மாணிக்கத்தின் ஒளியாலே பகல் விளக்கு பட்டிருக்கச் செய்தே–மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது –
சுற்றும் விளக்கெரியத் —
கிருஷ்ணன் வந்தால் தன் கையைப் பிடித்து உலாவும் இடம் அடைய–படுக்கையும் விளக்கும் ஆக்கி வைத்தபடி –
புறம்பு நிற்கிறவர்களுக்கு உள்ளே விளக்கு எரிந்தது–தெரிகிறபடி எங்கனே என்னில்
மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க–உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நிற்கும்-
சர்வதோ முகமாக ஜ்ஞான தீபம் பிரகாசிக்க-விளக்கு -ஞானம் ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் -மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு -இவள் உடைய ஞானம் உலகு அனைத்தைக்கும் விளக்கு போலே என்றவாறு –
சுற்றும் -வேத அங்கங்கள்

தூபம் கமழத் –
புகை காண ஒண்ணாதே பரிமளம் வெள்ளமிட—சீருற்ற அகிற்புகை -இத்யாதியில் சொல்லுகிறபடியே
எங்களுக்கு அசஹ்யமான பரிமளம் உனக்கு சஹ்யமான படி எங்கனே -என்கை-
ஞானம் பரிமளிக்க–ஞானம் பரிமளிக்கையாவது–அனுஷ்டான சேஷமாய் இருக்கை-

துயில் அணை மேல் கண் வளரும் –
கிருஷ்ண விரஹத்தையும் ஆற்றவற்றான படுக்கையிலே உறங்குகிற–எங்களுக்கு மென்மலர்ப்பள்ளி-வெம்பள்ளியாய் இருக்க-உனக்கு படுக்கை பொருந்தி கண் உறங்குவதே !-
நித்ராப்ரதமான சயனத்திலே கண் வளருகிற–அதாவது ஸ்வ பிரயத்ன சாமான்ய நிவ்ருத்தி பூர்வகமான-பகவத் ஏக உபாய அத்யவச்யத்தாலே நிஷ்டனாய் இருக்கை —
இளைய பெருமாள் போலே நாங்கள்-ஊர்மிளை தூங்கி கொண்டே காலம் போக்கினாளாம் புராணம் -அவன் தூக்கமிவளுக்கு கொடுத்து போனான்
பேறு தப்பாது துணிந்து இருக்கிறாள் அபிமத லாபம் அவனால்
தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் -ஞானம் அனுஷ்டானம் வைராக்கியம் நிறைந்தவள்
சேஷத்வம் -அடியேன் உள்ளான்–ஞான ஆனந்தங்கள் நிரூபகம் இல்லை அடிமை தன்மையே–கண் வளரும் உறங்கும் சொல்லாமல் கௌரவ வார்த்தை
பரிபாஷை–பட்டர் தொண்டனூர் நம்பி -பகவன் திருவடி அடைந்தார் சொல்லாமல்–திருநாட்டுக்கு நடந்தார் -எழுந்து அருளினார்
எச்சான் அனந்தாழ்வான் தொண்டனூர் நம்பி மூவரும்–தமிழ் வழங்கும் பிரதேசம்
நெடுமாற்கு அடிமை கேள் அருளிச் செய்தார் எம்பெருமானார்–வானவர் நாடு -அடியரொடு இருந்தமை —நம்பி ஏறு திரு உடையார் தாசர் விஷயமாகவும்-தூ மணி மாடம் -ஆச்சார்யர் திரு மேனி –சுற்றும் விளக்கு -ஞான பிரகாசம் –தூபம் -திருமந்திரம் -பகவத் விஷய வாசனை கமழும் 

மாமன் மகளே –
ஸ்வாமி நியாயும்–தோழி யாயும்–அனுபவித்தது ஒழிய–பிரகிருதி சம்பந்தத்தாலும் ஆண்டாள் அனுபவிக்கிறாள் –
மாமன் மகளே -என்று–இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத உறவு சொல்லுகிறாள்–திருவாய்ப் பாடியிலே ஒரு பிரகிருதி சம்பந்தம் தனக்கு
உஜ்ஜீவனம் என்று இருக்கிறாள் ––பகவத் சம்பந்தங்களுக்கு எல்லாம் அடிக் கழஞ்சு பெற்று இருக்கிறபடி-
தேக சம்பந்தம் -மாமான் மகள் —தேக சம்பந்தம் உத்தேச்யமா த்யாஜ்யமா–அத்வைதிகள் சந்நியாசி -ஒன்றாலே மோஷம்
ஆபத் சன்யாசம் காஷாயம் மேலே தூக்கி போடுவார்களாம்–அனந்தராம தீஷிதர் கடைசியில் வாங்கிக் கொண்டார்–விட்டே மோஷம்-
பிதரம் பந்தும் குரு தாரான் –சர்வ தர்மாந்த பரித்யஜ்ய —ஆமுஷ்மாக பிரதானர் ஆசார்யர் விட சொல்ல வில்லை
பந்துக்களைக் கண்டால் சர்ப்பத்தைக் கண்டால் போலேவும்–ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களைக் கண்டால் போலேயும் -உத்தேச்ய பூதர்
ஸ்ரீ வைஷ்ணவர் அல்லாத பந்துக்கள் த்யாஜ்யர்–கைங்கர்யம் சகாயம் பண்ணுபவரை விட கூடாதே
-மதுரைப்பதி நாடி நம் தெருவே வந்திட்டு -மாமான் மகளே -மாமீர் -மாலா காரார் –
மாமன் மகளே -ஆத்ம பந்து -அநு கூல சம்பந்தம் -கொண்ட பெண்டிர் -நம்மாழ்வார் –
மாமன் -சதாசார்யர் -மகள் -அந்தரங்க சிஷ்யர் -மணி மாடம் -நவ வித சம்பந்தம் அறிந்து

அடியேன் குடிசை ஆசார்யர் திரு மாளிகை – கட்டடம் வைத்து பேர் இல்லை வ்யக்தி வைத்தே பெயர் – இடைச் சேரி –
சுமந்த்ரர் அந்தபுர த்வாரம் கடந்து -அழகில் கண் வைக்காமல் பொன்னியல் மாடக் கவாடம் கடந்து புக்கு -திருமழிசை ஆழ்வார்
மாட மாளிகை சூழ் மதுரைபதியில் நாடி –நம் தெருவில் –கூடுமாகில் – உகந்து அருளின தேசம் தோறும் தெருவும் குடில் உண்டே
மாலாகாரர் உண்டே -குறுக்குத் தெரு ஆண்டாளுக்கு உறவு தொழில் முறை சிநேகம் அது தான் நம் தெரு
வைஷ்ணவ ஸ்ரீநிவாசன் சாத்தாதா கைங்கர்யம் -ஸ்ரீரெங்கம் -ஆசார்ய பூதர் – எங்க தெருவில் -சாத்தாதா வீதி இன்றும் அங்கே உண்டு
சாத்தாணி தெரு tp koyil தெரு -நம் தெரு -போலே பிரசாத பரமௌ தண்ணளி உண்டே -ஆச்ராயம் அதுவாகையாலே நாதத்வம் கழிக்க ஒண்ணாத படி எம்பெருமானார் -சன்யாசம் -முதலி ஆண்டான் தவிர விட்டேன்
காலை -அனந்த சரஸ் -கழுத்து அளவில் நின்று அனைத்தையும் விட்டேன் கத்தி சந்யச்யம் மயா-கத்துவார் பிரகடனம்
நஞ்சீயர் -முதலிலே -சந்நியாசி -வாங்கிக் கொண்டார் -நான்கு இழை-பூணல் —பட்டர் திருவடி -ப்ரஹ்ம ரதம் தோளில் எழப் பண்ணி போக
வயசில் பெரியவர் -ஞானி -சந்நியாசி -நிச்சயம் பாரித்து–கைங்கர்யம் தடையாக இருந்தால் த்ரி தண்டம் உடைத்து
சன்யாசத்துக்கு சன்யாசம் வாங்கி கொள்வேன் -கூரத் ஆழ்வான் தேசிகன் -பிள்ளை லோகாச்சார்யர் சன்யாசம்–வாங்கி கொள்ள வில்லை
பிரமச்சாரியாகவே ஒண்ணான வானமா மலை ஜீயர் சன்யாசம் வாங்கி கொண்டார் –
ஆழ்வான் -எம்பெருமானார் தேக பந்துத்வமில்லாமல் போனதே அழுவாராம் –
பாவை தங்கை– ஆண்டான் மருமகன் –தம்பி எம்பார் –செல்லப் பிள்ளையோ மைந்தன்–வடுக நம்பி சிஷ்யன் -சந்நியாசி–எதி சொல்லலாமோ
ஆழ்வார் திருநகர் -வண்ணான் காரி மாறா சடகோபா கூப்பிட சன்யாசம் வாங்கி பாழாக போனேன்-ஆழ்வார் திருநாமம் இட்டு பிள்ளைகளை பெற வில்லையே -என்றார்
எம்பெருமானார் பேரை இட்டு அழைக்க பிள்ளை இல்லை என்று அழுதாராம்
அதனால் தான் மாறன் ஸ்ரீ பாதத்தை ஸ்ரீ ராமானுஜன் பெயரை இட்டு அழைக்கிறோம் -அங்கு மட்டும்-மாமன் என்றும் அம்மான் என்றும் இரண்டும் பர்யாயம் ஆகையாலே-ஸ்வாமியான எம்பெருமானாலே புத்ரத்வேன அபிமதராய் அனந்யார்ஹரான பாகவதரே

கோதாக்ரஜர் -கோயில் அண்ணன் – 1-கோதற்ற பாடல் திருப்பாவை பாடின கோதை தங்கை –2- வாதுக்கு நல்ல ஆண்டான் மருமகன் -3–தம்பி எம்பார் -4–தீதற்ற ஞானச் செல்லப் பிள்ளையோ   மைந்தன் -ஏதுக்கு இராமானுஜனை யதி என்று இயம்புவது –காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்த பாசுரம் -யதுகிரி நாச்சியார் கல்யாணி தாயார் -மருமகள் -/இவர் எதிராஜ சம்பத் குமார் -செல்லப் பிள்ளை செல்வப் பிள்ளை – எதிராஜரை பெற்ற செல்வம் அன்றோ -திருக் குருகைப் பிரான் பிள்ளான் –அபிமான புத்திரர் -ஆறாயிரப்படி -/ அப்பனுக்கு சங்கு ஆழி அளித்ததால் -திருவேங்கடமுடையானும் பிள்ளை-ஆத்ம பந்துக்கள் -உத்தேச்யம் அன்றோ

மணிக்கதவம் தாள் திறவாய் –
நீங்களே திறந்து கொண்டு புகுரும் கோள் என்ன ––மாணிக்கங்களின் ஒளியினாலே–தாள் தெரிகிறது இல்லை–நீயே திறவாய் -என்கிறார்கள் –
த்வத் அனுபவ விரோதியான தேஹாத்மாக்கள் இரண்டிலும் உண்டான மமகாரத்தைப் தவிர்ப்பாய் -என்றபடி
அன்றிக்கே
த்வத் அனுபவவிரோதியான பகவத் சௌந்தர்யத்திலும் பகவத் பக்தியிலும் மமகாரத்தைத் தவிர்ப்பியாய் என்கிறார்கள் —தேசிகரே திறக்க வேண்டும் புருஷகாரம் இல்லாமல் போக மாட்டார்-நீர் ஸ்படிக மண்டபம் வாசி இல்லாமல் துரி யோதனன் நடந்த கதை த்ரௌபதி சிரித்தால் போலே கிண்டல் பண்ண கூடாதே
மணி கதவு -ஞானம் -தாள் திறவாய் -கர்ம பந்த தேகம் விட்டு கௌஸ்துபம் போன்ற ஆத்மாவை பற்றுகை –

அவர்கள் அழையா நிற்க நீ பேசாதே கிடக்கிறது என்-என்று தாயார் கேட்க–புறம்பு நின்றவர்கள் அது கேட்டவாறே-
மாமீர் அவளை எழுப்பீரோ -என்கிறார்கள் ––மாமீர் ––அவளுடைய திருத்தாயார் என்று–அவள் உறவாலே சொல்லுகிறார்கள் –
இவ்வதிகாரிக்கு ஜனகையாய் இருக்கிற–அநந்ய உபாயத்வ ஞானம் ஆகிற -திருத் தாயார் ––அவர்கள் இப்படி அழைக்க நீ பேசாதே கிடப்பதே -என்ன —
மாமீர் -சம்பந்திகளும் உத்தேச்யம்–அம்மங்கா -அம்மான் நங்கை–அத்தான் நங்கை அத்தங்கா–அத்தை அன்பர் அத்திம்பேர்
தொண்டர் தொண்டர் —-அன்னையும் அத்தனையும் என்று அடியோமுக்கு இர்ங்கிற்று இலள்–கள்வன் கொல் வெள்ளி வளை கை பற்றி –
கைங்கர்ய பரையாக உட்கார்ந்து இருக்க தாயார் ஸ்தானத்தில் நினைத்து வீட்டு அகன்றாள்–எம்முடைய ஆர்த்திக்கு இரங்காமல்
சிவிக்கிட்டு உன் மகள் உறவு அறுக்க–தசரதர்–உங்கள் அப்பா -சொன்னது போலே

பின்னையும் உணரக் காணாமையாலே -சிவிட்கென்று ––உன் மகள் தான் ஊமையோ என்கிறார்கள் வ்யவஹார யோக்யை அன்றோ -என்கிறார்கள்
மறுமாற்றம் சொல்ல வல்லள் அல்லளோ-என்றபடி – இவளைப்பேச ஒட்டாதே வாயை மூடினார் உண்டோ -என்று பாவார்த்தம் –ஊமைக்கும் கேட்டு வந்து திறக்கலாம்–அதுக்கு மேலே செவியில் துளை இல்லையோ –
எங்கள் வார்த்தையை கேளாதபடி அந்ய பரையோ –நம் பேச்சு கேளாதபடி அங்கே ஆரவாரம் உண்டோ என்று பாவார்த்தம்–வனந்தலோ-–நெடும் காலம் கிருஷ்ண அனுபவம் பண்ணி–படுக்கையில் சாய்ந்தது இப்போதோ –
தனித் தனியே வாக்யாதி இந்திரியங்கள் பகவத் விஷயத்தில் ப்ரவணங்கள் ஆகையாலே ஒரு கார்யத்திலும் சக்தி அல்லள் -என்றுமாம் –
ஆசார்ய .உபதேசம் பெற்ற சிஷ்யர் தன்னை பழிச் சொற்களுக்கு ஊமையாகவும் மற்றவர்கள் தோஷம் பார்க்காத குருடாகவும் –
அனந்தல் பேர் உறக்கம் -இறுமாந்து ஆசார்யாராய் விடாமல் மகா விசுவாசத்துடன் -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் முன்னிட்டு

ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ –
ஏமம் -எனபது காவல் –-திருமந்தரம் உபதேசம் பெற்று-
–எழுந்திராமைக்கு காவலிட்டார் உண்டோ ––நெடும் காலம் உறங்கும்படி மந்த்ரவாதம் பண்ணினார் உண்டோ –
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ ––என்று–அம்மான்பொடி தூவினார் உண்டோ -என்கை-
காவல் இடப் பட்டாளோ – மகா நித்தரை உண்டாம்படி மந்திர வாதம் பண்ணப் பட்டாளோ –ஸ்வ பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய விரோதி யாகையாலே இதில் அந்வயியாதபடி தடுத்து வைத்தார்கள் உண்டோ
அதாவது -மனஸ் தடுத்தோ -என்றபடி – உபாய வைலஷண்யம் பிரவ்ருத்யந்தரத்தில் அந்வயியாதபடி மோஹிப்பித்ததோ -என்றபடி –
எங்களை உறங்காமல் செய்த அவன் திருமுக உணராமல் மந்த்ரம் போட்டார் யார்-அம்மான் பொடி பிரசித்தம்–மயங்கி மாமா மாமா பின்னே போகுமே

அவள் உணரும்படி திருநாமங்களைச் சொல்லுங்கோள் -என்று -திருத் தாயார் சொல்ல
நாங்கள் சொன்ன திரு நாமங்கள் அநேகம் அன்றோ -என்கிறார்கள் –
அவை தான் எவை என்ன -சொல்லுகிறார்கள் –
–மாமாயன் ––ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே–அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டவன் –அத்யந்த சுலபன்-பெரிய இடையன் -ஆயன் அல்ல பெரும் தெய்வம் .-
மாதவன் ––அதுக்கடியான ஸ்ரீ ய பதி–அந்த சௌலப்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்–
வைகுந்தன் ––இந்த சௌலப்யம் குணமாகைக்கு ஈடான பரத்வம் உடையவன் –
ஸ்ரீ ய பதித்வத்தால் வந்த மேன்மைக்கு தகுதியான–தேச விசேஷத்தை உடையவன்–அப் பெரிய மேன்மையை உடைய ஸ்ரீ ய பதியானவன் கிடீர்-
ஆண்களையும் அடிமை கொண்ட நாட்டுக்காகாக கையாள் நமக்கு கையாளா பெண்களுக்கு எளியனானவன் -என்கை-
-மேன்மைக்கு அடியான திரு நாமங்களும்–நீர்மைக்கு அடியான திரு நாமங்களும்
இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ ய பதித்வத்துக்கு வாசகமான–திரு நாமங்களுமாக—-பேர் ஆயிரம் உடையீர் பேர் கண்டீர் .
ஒரு ஸ்ரீ சஹச்ர நாமத்துக்கு போரும் திருநாமங்களை சொல்லிற்று -என்கிறார்கள்–நாமம் பல நவின்று –மாமீர் அவளை எழுப்பீரோ–என்று அந்வயம் ஆகவுமாம்
மா மாயன் -ஆசார்யர் என்றுமாம் -.இரும்பைப் பொன் ஆக்குமா போலே நம்மை சேஷத்வ ஞானம் பெறச் செய்து அவனிடம் சேர்ப்பார்கள் .
மாதவன் -மகா தபசிகள் பிரபத்தி என்னும் மகா தபசி உபதேசித்து பரம புருஷார்த்தமான ப்ரீதி காரித கைங்கர்யம் நித்ய விபூதியிலே பெறச் செய்பவர்கள் –
ஸ்வார்த்த பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய விரோதி ––பரார்த்த பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய பலமாயும்-
-உபாய அனுகூலமாயும் இருக்கும் என்று அறிவித்து–அவளை –உபாய அத்யாவசாய நிஷ்டரை -எழுப்பீரோ -என்று அந்வயம்-

மணிக்கதவம் தாள் திறவாய்
நவ ரத்னங்கள் போலே கிரந்தங்கள் அருளியும்
அவற்றின் அர்த்த விசேஷங்கள் நமக்கும் கூட நிலமாம்படி அருளிச் செய்கையும்-

-நம சப்த அர்த்தம் -ஆத்மத்ரான உண்முக -நம பதம் சொல்லி நீ உன்னை ரஷிக்க முடியாதே-அகண்ட நமஸ் பிரியாத நம -உபாயம் -அஞ்சலி பக்தாஞ்சலி – சகண்ட நமஸ் – ந மம -எனக்கு நான் அல்லேன் -ததார்தம் சதுர்த்தி பாரார்த்த்யம் சம் – மமகாரம் – இருப்பதற்கு பிரயோஜனம் -அவனுக்கே என்று
நாராயணாயாபிரார்த்தனையா சதுர்த்தி -ஏவிப் பணி– கொள்ள வழுவிலா அடிமை
அடியேனை அவன் அனுபவிக்கிறார் போக்தா -போக்கியம் -நாராயணாய நம -மத்திய மேன நமஸ்-ஸ்வரூபம் கதி கம்யம் – சிஷிக்கப்பட்டது –
விலைப்பால் -தனக்கு தான் தேடும் நன்மை தாய் பால் -ஏற்றது பிராப்யம் -காசு கொடுக்க வேண்டாமே -ஈச்வரனே ரஷகன்
பெரிய நம்பி சம்பந்தம் கூரத் ஆழ்வான் திருக் குமாரர்கள் திருக் கல்யாணம் – ஸ்வரூபத்தில் உணர்த்தி -பிரணவம்
உபாயத்தில் உறுதி -நமஸ் கண் வளரும் பேறு தப்பாது துணிந்து நாராயணாய பலத்தில் துடிப்பு -என்று என்று நாமம் பரவும் -பேற்றுக்கு த்வரிக்கை

மாமான் மகளே -தாயார் பாசுரம் – தோழி தலைவி மூன்று நிலை – பிரணவம் சம்பந்த ஞானம் தோழி பாசுரம்-நமஸ் உபாயம் உறுதி தாயார் – பேற்றுக்கு த்வரிக்கை தலை மகள் பலன்களில் பதட்டம்

மாமான் அம்மான் -ஸ்வாமி வாசகம்-எம்பெருமானால் பிள்ளையாக பாவிக்கப் பெற்ற அனன்யார்ஹரான பாகவதரே-
மணிக் கதவம் தாள் திறவாய்-தேக ஆத்மாக்கள் இரண்டிலும் உண்டாய் உனது அனுபவத்துக்கு விரோதியான மமகாரத்தை நீக்க வேணும் என்றபடி-

 

திருப்பாவை ஸ்வாபதேசம் -ஸ்ரீ ஒன்னான  வானமா மா மலை ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள் –பகவத் விஷயத்தில் உத்யுக்தரானவர்களோடு போர அவகாஹித்தரோடு வாசி அற உத்தேச்யர் என்னும் இடம் சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம -என்னும் படி சொல்லுகிறது –
அனந்தரம் –நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –
கோதுகலமுடைய பாவாய் -என்று சர்வராலும் கொண்டாடும்படியாய் இருக்கையாலே –அஸ்மத் சர்வ குருப்யோ என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது –
மாமான் மகளே-என்கையாலே ஓளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான
ஸ்ரீ மத் ராமாநுஜாயா –என்னும் அர்த்தம் சொல்லுகிறது -இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயாம் –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்கையாலே சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கு கௌரவராய் இருக்கும்- ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

கோவலர் தம் பொற் கொடி -என்கையாலே -ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதி உக்தரான -ஸ்ரீ நாதமுனி வம்ச உக்தராய் –ஸ்ரீ மத் யா முன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நற் செல்வன் தங்காய்-என்கையாலே திருக் கும நாத்தியார் பருவம் நிரம்பின பின்பு சேற்றில் படியாய் கிடந்து அனுசரணம் பண்ணியும்
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்கையாலும் –ஸ்ரீ ராம மிஸ்ராய நம என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
போதரிக் கண்ணினாய் -பங்கயக் கண்ணானைப் பாட -என்கையாலே -ஸ்ரீ புண்டரீகாஷா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நா உடையாய் என்கையாலே தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே ஸ்ரீ மன் நாத முனயே -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
எல்லே இளங்கிளியே -என்கையாலே -சுக முகா தம்ருதத்ரவஸம்யுத்தம் -என்னும் படி திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப்பவளத்தில்-
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் மொழி பாட்டோடும் கவி யமுதமாய் திருவாய் மொழி பிரவஹிக்க -அத்தாலே
அணி மழலைக் கிளி மொழியானை -அநு சரிக்கையாலே –ஸ்ரீ மதே சடகோபாய நம –என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

திரு மழிசை ஆழ்வாரை -மாமன் மகளே -என்கிறது -அது எங்கனே என்னில் –
தாத்ரா துலிதா லகுர் மஹீ -என்றும் -உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம் வலிது-என்னும்படி
மஹீ சார க்ஷேத்ரமான திரு மழிசையில் -பார்க்கவோ தீர்க்க சத்ரேண வா ஸூ தேவம் ஸநாதனம் அபி பூஜ்ய யதா நியாயம் –என்கிறபடியே
ஸ்ரீ ஜெகந்நாதனை உத்தேசித்து யஜித்துக் கொண்டு இருக்கிற காலத்தில் -பார்க்கவனுடைய பத்னி கர்ப்பிணியாய் திரு மழிசைப் பிரானை திரு வயிறு வாய்த்ததாலே -பார்க்க விலோக ஜநநீ-என்னும்படியான பிராட்டியோடே உடன் பிறந்த பார்க்க புத்திரர் ஆகையாலும்
காட்டில் வேங்கடம் இத்யாதி கூடுமாகில் நீ கூடிடு கூடிலே-என்கிறபடியே -அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண இழைப்பன் திருக் கூடல் கூட -என்று ஸ்த்ரீத்வ பாவனையாகப் பேசுகையாலும் –

பெரும் புலியூர் -திருக்  கதம்பானூர் அருகில் -கல்யாணபுரம் -அக்ரஹாரம் அருகில் -கிடந்த வண்ணமே காட்டிய இடம் -மணிக்கதவம் தாள் திறவாய் -பொருந்தும் –
வேதம் -மறந்தார் -ப்ரஹ்ம வித்து மேல் பட்ட அபசாரம் -நெல்லை பிளந்து காட்டி -கிருஷ்ணானாம் வ்ருஹீ நாம் -சொல்ல -மாமீர் அவளை எழுப்பீரோ -மறந்த வேதம்
ஊமையோ 3000 வருஷம் த்யானத்தில் இருந்தாரே –
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய-என்கிற ஞான தீப பிரகாசத்தை -என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை-என்றும்
ஞானமாகி நாயிறாகி-என்று பேசுகையாலும் –ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் -என்றும்
அடிச்சகடம் சாடி இத்யாதி வடிப்ப வளவாய்ப் பின்னை தோளிக்காய் வல் ஏற்று எருத்து இறுத்து -என்றும் –
ஆயனாகி ஆயர் மங்கை வேயர் தோள் விரும்பினாய் -என்றும்
பின்னை கேள்வ நின்னோடும் பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கேல் என்றும்
ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் நப்பின்னை பிராட்டி புருஷகார வைபவத்தையும் சொல்லி
இதில் மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றதை –மாதவனை -என்றும் –வைகுந்தச் செல்வனார் என்றும் -பேசுகையாலே –
மாமன் மகளே என்கிறது திரு மழிசை பிரானை -என்றபடி -பார்க்கவனும் பார்க்கவியும் பிருகுவுக்கு கியாதீயின் இடத்திலே ஸஹோதரராக சம்பவிக்கையாலும் – லோக மாதாவுடன் பிறந்தவன் லோகத்துக்கு மாமனாக தட்டில்லை இ றே-அந்த பார்க்கவ புத்ரன் ஆகையால் இவரை மாமன் மகள் என்னைக் குறை இல்லை –
அன்றிக்கே யசோதைப் பிராட்டிக்கு பின் பிறந்த ஸ்ரீ கும்பர் குமாரத்தியான நப்பின்னை பிராட்டி தரத்தை யுடையார் ஒருவர் ஆகையால் மாமன் மகள் என்று சொல்லுகிறது ஆகவுமாம்

மனத்து உள்ளான் -தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள் மாவாய் பிளந்த மகன் -பேய் ஆழ்வார்
மாவாய் பிளந்தான் மல்லரை மாட்டிய தேவாதி தேவன் -ஆண்டாள்
திருமழிசை பிரான்
மாமான் -பேய் ஆழ்வார் மகா மகான்
மகான் பேய்
பூதம் சரசா -மகான் சப்தம் பட்டர்
பேய் மழை பேய் காற்று பெரிய அர்த்தம்
மகதாஹ்வய
தமிழ் தலைவன்
மாமான் மகள் பேய் ஆழ்வார் சிஷ்யர்
எழுப்பு -சமயங்கள் சாக்கியம் கற்றோம்
ஊமையோ -வேதம் வாயால் சொல்லாமல் கருப்பு நெல்லை
செவிடு -பெரும் புலியூர் அக்ர தாம்பூலம் கொடுக்க
உள் கிடந்த வண்ணமே பொசிந்து
சோம்பல் வாழும் சோம்பர்
தரித்து இருந்தேன்
பொழுது போக்கி வணங்கி –
மந்திர உபதேசம் -இவர் ஒருவருக்கு ஸ்பஷ்டம்
மா மாயன் ஆயனாகி -மாயம் முற்றம் மாயமே
கணி கண்டன் -பெரியவரை இளையவராக்கி
மாதவன் -திரு இல்லா தேவரை தேறேல்மின்
வைகுந்தன் -வைகுண்ட செல்வனார் சேவடி மேல் பாடினேன்
நீணிலாத முற்றம்
தூய்மை ஞானம் நாராயணனை அன்றி
களை பிடுங்கி
உபய விபூதி உக்தன்
நாரணர்க்கு
ஸ்ரீ ய பதி -திரு மகள் கேள்வன்
ஞானம் கொண்டு எல்லா சமயமும் அறிந்து
நெற்றி கண் காலால் கண் தூபம் கமழ்ந்த சரித்ரம்
துயில் அணை கிடந்த திருக் கோலம் ஈடுபட்டார்
திரு வெக்கா
திருக் குடந்தை
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு
நாகத்தணை –பாற் கடல் கிடக்கும் ஆதி நெடு மால் 8 திவ்ய தேசம்

திரு மழிசைப் பிரானுக்கும் ஆண்டாளுக்கும் தேக பந்து தேட்டம்--சாஷாத் திருமகள் -லஷ்மி இந்திரா பார்கவி லோக ஜனனி –
ப்ருகு புத்ரி பார்கவி —அவரும் பார்கவர் -தேக சம்பந்தம்–ஜாதி பேச்சு உன் மைத்துனன் பேர் பாட -போலே
உத்தான சயனம் -அசைவில் உலகம் பரவக் கிடந்தார் -நம் ஆழ்வார் காட்டி அருளி —அசைந்து கொடுத்தாரே -வாழி கேசனே –
பைந்நாகப் பாய் சுருட்டு உத்சவம் -இன்றும் உண்டே —ஓர் இரவு இருக்கை ஒரிருக்கை -திரும்பி வந்த அடையாளம் இன்றும் காணும்படி சயனம்
மாமான் மகளே மகா தேவன் மகா மகான் மாமான் பெருமாள் நம்பெருமாள் –
நாகணைத்தனை குடந்தை –ஆதி நெடுமால் –
ஆசார்யர் -துயில் அணை மேல் கண் வளரும் -படுக்கை ஸ்தானம் சாஸ்திரங்கள் –
நஞ்சீயர் பட்டருக்கு படுக்கை போட்டு சுருட்டும் கைங்கர்யம் கண்ணீர் தென் படுமாம் –
சமன்வயம் ஸ்ருதி ஸ்ருதி -பாசுரம் பாசுரம் -ஆனந்த அனுபவம் அவளை மாமீர் எழுப்பீரோ
பேய் ஆழ்வார் சந்தித்து -ஆசார்யர் -பேர் அருளால் – மாயா மதம் தன்னை மாய்த்து ஓதித்த மதிக்கடலே -கட்டியம்

உள் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே சடங்கர் வாய் அடங்கிட -உபய விபூதி வண்ணன் காட்டி அருள
சங்கும் சக்கரமும் –எங்கும் கண்டு அறியாத சேவை உடனே நாங்கள் பிரான் தோன்று அருளினான்
மந்தரப் பட்டாளோ -காதில் மந்த்ரம் -பேய் ஆழ்வார் இடம் –
மா மாயன் -மாயம் என்ன மாயமே -ஆயன் –மாயம் முற்றும் மாயமே –
மாதவன் திருவில்லா தேவரை -தேறேல்மின் தேவு –கல்லாத இலங்கை கட்டழித்த காகுத்தன் -பாசுரம் –
வைகுந்த செல்வனார் சேவடிமேல் பாடினேன் -என்று என்று –

திருநாமம் மாலை–சாற்றி அருளுகிறாள் –
நாமம் பலவும் நவின்று –மா மாயன் -மாதவன் -வைகுந்தன் என்று யன்றே-லோகநாத மாதவ பக்தவத்சல -மா மாயன் மாதவன் வைகுந்தன் –
மாயன்-சங்கல்பம் -மமமாயா துரத்யயா-அன்திது உது என்னலாவன அல்ல உன் செய்கை என்னை நைவிக்குமே –
எம்பெருமான் பரமாகவும் ஆச்சார்யர்கள் பரமாகவும்
இராமானுசன் செய்யும் அற்புதமே -மகா தபஸ் ஸி-மாதவன் -ஆச்சார்யன் அனுமதி இன்றி திருநாடு தாரான் -வைகுந்தன்

———————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருச்சந்த விருத்தம் -111-120-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

May 8, 2013

111-பாட்டு –

அவதாரிகை –

தம்முடைய தண்மையை அனுசந்தித்து -பொறுத்து நல்க வேணும் -என்றார் -கீழ் பாட்டில் –

இதில் –
பகவத் ப்ரபாவத்தை அனுசந்தித்து கால ஷேப அர்த்தமாக பண்ணின அநுகூல
வ்ர்த்தியால் வந்த குற்றத்தையும் –
ப்ராமாதிகமாக செய்த குற்றத்தையும் –
குணமாக கொள்ள வேணும் -என்கிறார் –

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-

பதவுரை

நின்னை வைது

தேவரீரை நிந்தித்து
வல்லஆ பழித்தவர்க்கும்

சக்தியுள்ளவரைக்கும் அபவாதங்களை சொன்ன சிசுபாலாதிகளுக்கும்
மாறு இல்போர் செய்து

ஒப்பில்லாத யுத்தம்பண்ணி
நின்ன செற்றும்

தேவரீருடைய
தீயில்

கோபாக்நியில்
வெந்தவர்க்கும்

வெந்துபோன வாலி முதலானோர்க்கும்
உனைவந்து எய்தல் ஆகும் என்பர்

தேவரீரைக் கிட்ட உஜ்ஜீவிக்கப்பெறலாகுமென்று (மஹரிஷிகள்) சொல்லாநின்றனர்;
ஆதலால்

ஆகையாலே
எம் மாய!

எம்பெருமானை!
ஞானம் நாதனை

ஸர்வலோக ஸம்ரக்ஷகனே!
நாயினேன்

அடியேன் பண்ணின
செய்த குற்றம்

குற்றங்களை
நற்றம் ஆகவே கொள்

குணமாகவே கொள்ளல் வேண்டும்.

வியாக்யானம் –

வைது நின்னை –
ஸ்தவ்ய ஸ்தவ ப்ரிய-என்று புகழப் படும் உன்னை
பருஷிக்கைக்கு விஷயம் ஆக்கி –
பருஷம் தான் என் -என்னில் –
அபிஷிக்த ஷத்ரியன் அன்றிக்கே அவர்களுக்கு பெண் கொடுத்து –
பெண் குடியான வம்சத்தில் பிறந்தான் என்றும் –
இடைக்கையும்  வலக்கையும்  அறியாத இடைக் குலத்தில் பிறந்தான் -என்றும்
ஆய்த்து பருஷிப்பது

வல்லவா பழித்தவர்க்கும்-
அவ்வவர்களுக்கு அவத்யமான தூத்ய சாரத்ய நவநீத சௌர்யாதிகளை
வ்ர்த்த ஹாநியாக பழித்து

பழி -குற்றம்

வல்லவா பழிக்கை யாவது –
உள்ள சக்தி எல்லாம் பகவன் நிந்தையிலே ஆக்குகை –

மாறில் போர் செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் –
எதிர் இல்லாத யுத்தத்தை பண்ணி -உன் கோப அக்நியாலே தக்தர் ஆனவர்களுக்கும் –
மஹா ராஜரோடே வாலி பண்ணின யுத்தத்தை யாய்த்து இவர் –மாறிலாத போர் –என்கிறது –
அவர்கள் ஆகிறார் –சிசுபாலனும்  வாலியும் முதலானவர்கள் –

வந்துனை எய்தலாகும் என்பர் –
சர்வாதிகனான உன்னை வந்து ப்ராபிக்கலாம் என்று ரிஷிகள் சொல்லா நின்றார்கள் –

பகவச் சக்ரேண வ்யாபாதிதஸ் தத் ஸ்மரணாத் தக்தா கிலக சஞ்ச யோ பகவந்த
முபநீதஸ் தஸ்மின் நேவலயமுபயயௌ -என்று
சிசுபால மோஷத்தை சொன்னான் ஸ்ரீ பராசர பகவான் –

ராம பாணா ஹத -ஷிப்ர மா வஹத் பரமாங்கதம் -என்று
வாலி உடைய பகவத் ப்ராப்தியை சொன்னான் ஸ்ரீ வால்மீகி பகவான் –

ஆதலால் –
உன்னை நிந்தித்தாருக்கும் எதிரிட்டாருக்கும் அகப்பட குண ப்ரபாவத்தாலே
உன்னைப் பெறலாம் என்று மஹ ரிஷிகள் சொல்லுகையாலே

எம்மாய –
ஆஸ்ரிதர் உடைய அபராதங்களைப் பொறுக்கைக்கு அடியான
தயா காங்ஷாத் யாச்சர்ய குணங்களை எனக்கு பிரகாசிப்பித்தவனே

நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் –
அநந்ய கதியாய் உன் கை பார்த்து இருக்கிற நான் –
ப்ராமாதிகமாகச் செய்த குற்றத்தையும் -குணமாகக் கொள்ள வேணும் –

ஞால நாதனே –
ஜகத்துக்கு நிருபாதிக சேஷி யானவனே
ஞான அஞ்ஞான விபாகம் இன்றிக்கே
இருந்ததே குடியாக
இஜ் ஜகத்தை உடையவன் என்று
குற்றத்தை குணமாக கொண்டு அருளுகைக்கு ஹேது சொல்லுகிறது –

——————————————————————————————

112-பாட்டு –

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலே -இத்தலையில் குற்றத்தை பொறுக்க வேணும் என்று ஷாபணம்
பண்ணி -அக் குற்றங்களை குணமாக கொள்ள வேணும் என்றார் –
இப்பாட்டில் –
திரு உள்ளத்தை குறித்து -ஆயுஸூ எனக்கு இன்ன போது முடியும் என்று தெரியாது –

அவன் திருவடிகளில் வணங்கி வாழ்த்தி கால ஷேபம் பண்ணப் பார் -என்கிறார்

வாள்களாக நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே -112-

பதவுரை

நாள்கள்

தினங்களானவை
வாள்கள் ஆகி செல்ல

(நமது ஆயுளை அறுக்கும்) வாள்கள்போன்று கழிய
நோய்மை

பலவகை வியாதிகளாலே
குன்றி

உடல் பலக்குறைபட்டு
மூப்பு எய்தி

கிழத்தனமும் வந்து சேர்ந்து
மாளும் நாள் அது

மரணமடைவதோர் நாள் நெருங்கிவிட்டது;
ஆதலால்

ம்ருத்யுகாலம் குறுகிவிட்டபடியால்
என் நெஞ்சமே

எனது மனமே!
ஆனது நன்மை ஆகும் என்று

எம்பெருமானுக்கு ஆட்பட்டிருப்பதே நன்மையென்று
நன்கு உணர்ந்து

த்ருடமான அத்யவஸாயங்கொண்டு
வணங்கி வாழ்த்து

(அவ்வெம்பெருமானைத்) தொழுது ஏத்துவாயாகா;
அது அன்றியும்

அதற்கு மேலே
மால பாதமே

அப்பெருமானுடைய திருவடிகளே
மீள்வு இலாத போகம்

மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகத்தை
நல்க வேண்டும்

அளிக்கக்கடவது

 

வியாக்யானம் –

வாள்களாக நாள்கள் செல்ல –
ஆயுஸை ஈரும் வாள் போலே நாள்கள் கழிய –
தேஹாத்ம அபிமாநிகள் -தேஹத்தில் விருப்பத்தாலே ஆயுஸு போகா நின்றது என்று
அஞ்சா நிற்பர்கள் -சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதும் -என்கிறபடியே
பகவத் சமாஸ்ரயணத்துக்கு கண்ட காலம் வ்யர்த்தமாய் போகா நின்றது என்று
மோஷ ருசி உடையார் வெறுப்பர்கள் –
ஆச்ரயித்தவர்கள் பகவத் அனுபவத்துக்கு கண்ட காலம் வ்யர்த்தமாய் போகா நின்றது என்று  வெறுப்பர்கள் –

நோய்மை குன்றி மூப்பெய்தி –
யௌவன அவஸ்தையில் உண்டாக கடவ வலி -ரோகாதிகளாலே குன்றி –
பல ஹாநியே ப்ரக்ர்தியாய் மூப்பை ப்ராபித்து –
பால்யத்தில் ஜ்ஞானம் குறைந்து இருக்கும் –
வார்த்தகத்தில் சக்தி குறைந்து இருக்கும் –
இரண்டும் உண்டான யௌவன அவஸ்தையில் -ரோகாத் யுபாதிகளினாலே
ஜ்ஞான சக்திகள் குறைந்து இருக்கும் –
இவை யாய்த்து உள்ள ஆயுஸில் வரும் ப்ரத் யூஹங்கள்

மாளும் நாளது –
மாளும் அந்த திவசம் ஆய்த்து -முடியும் நாள் ஆய்த்து ப்ராப்தமாய் நிற்கிறது -என்கை

அதவா –
மாளும் -முடியும்
நாளது-ஆயுஸின் ஸ்வபாவம் என்றுமாம்

ஆதலால் வணங்கி வாழ்த்து –
ஆயுஸூ அஸ்திரம் ஆகையாலும் –
உள்ள ஆயுஸுக்கு ப்ரத்யூஹங்கள் பலவும் உண்டாகையாலும்
நாளைச் செய்கிறோம் -என்று இருக்குமதன்று –
உள்ள போதே தலை படைத்த பிரயோஜனம் பெறத் திருவடிகளிலே வணங்கி
ஸாஜிஹ் வாயாஹரிம் ஸ் தௌதி -என்கிறபடியே
வாய் படைத்த பிரயோஜனம் பெற வாழ்த்தப் பார் -என்றுமாம் –

என்னெஞ்சமே –
எனக்கு பவ்யமான நெஞ்சமே –
உன்னுடைய கார்யமான ச்ம்ர்திக்கு நான் சொல்ல வேண்டா வி றே -என்கிறார் –
நின் புகழ் க்கல்லால் -நேசமில்லை நெஞ்சமே -என்று தம்மிலும் பகவத் ப்ரவணமாய்
இறே தம்முடைய திரு உள்ளம் இருப்பது –

ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்து –
த்யாயன்ஸ்து வன்னமச்யம்ச்ச -என்று பகவத் ப்ராப்திக்கு இவற்றை சாதனமாக
சொல்லா நின்ற பின்பு அதுக்கு ஆனாலோ என்ன –

மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே –
சர்வாதிகனான சர்வேஸ்வரன் திருவடிகள் நமக்கு -நச புநர் ஆவர்த்ததே -என்கிறபடியே
யாவதாத்மா பாவியான கைங்கர்ய போகத்தை தர வேணும்

நீ வணங்கி வாழ்த்தப் பார்
நம இத்யே வவரதிந -என்றும் –
தத் விப்ராசோ விபந்யவ -என்று
இவை ப்ராப்ய அந்தர் பூதமாய் இறே இருப்பது
நீ இத்தை செய்யப்பார் -என்று கருத்து –

————————————————————————–

113-பாட்டு –

அவதாரிகை –

மீள்விலாத போகம் நல்க வேண்டுமே -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்ய போகமே
பாரதந்த்ர்யத்தினுடைய எல்லையிலே பெறுமதாய் இருக்க –
தத் விருத்தமான துர்மாநாதிகளாலே அபஹதராய் இருந்த நமக்கு அந்த பேறு
பெருகை கூடுமோ -என்ன –

திரு உள்ளத்தைக் குறித்து
துர்மாநத்தாலே ப்ரஹ்ம சிரஸை யறுத்த ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவனே
நமக்கு பாரதந்த்ர்ய விரோதியான துர்மாநத்தைப் போக்கிப் பேற்றைத் தரும்
நீ அவனை  உபாயம் என்று புத்தி பண்ணி இரு -என்கிறார் –

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே -113-

பதவுரை

நெஞ்சமே!

என்மனமே
வாழி

உனக்குப் பல்லாண்டு, (நான் சொல்வதைக் குறிக்கோள்
சலம் கலந்த செம்சடை

கங்கை நீரோடு வடின சிவந்த ஜடையையுடைவனும்
கறுத்த கண்டன்

(விஷத்தினால்) கறுத்த கழுத்தையுடையனும்
புலன் கலங்க

ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு
வெண்தலை

வெளுத்துப்போன கபாலத்திலே
உண்ட

பிச்சைவாங்கியுண்டு ஜீவித்த
பாதகத்தான்

கோரமாதகியுள்ள சிவபிரானுடைய
வன்துயர்கெட்

வலிதான துக்கம் தீரும்படி
அலங்கல்

திருத்துழாய் மாலையையணிந்த
மார்வில்

திருமார்பினின்றும்
வாசம் நீர்

திவ்யபரிமளமான தீர்த்தத்தை
கொடுத்தவன்

அவனுக்கு ப்ரஸாதித்தருளி
அடுத்த சீர்

என்றும்விட்டு நீங்காத திருக்கல்யாண குணங்களையுடைய
நலம்கொள் மாலை

ஆநந்தமயனான எம்பெருமானை
கண்ணும் வண்ணம்

அணுகும் வழியாகிற அவனது திருவருளையே
எண்ணு

அநுஸந்தித்து

வியாக்யானம் –

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் –
கங்கா ஜலத்தை சாகல்யேந  தன்னுள்ளே அடக்கினதாய் -சிவந்த சடையையும் -ஷீராப்தி
சமுத்திதமான விஷத்தாலே கறுத்த கண்டத்தையும் உடைய ருத்ரன் –

கங்கா தரத்வமும் -நீல கண்டத்வமும் -இவனுடைய சக்திக்கு ஸூசகமாய் இருக்கிறது –

சிவந்த ஜடை என்கையாலே -இந்த சக்தி சாதித்துப் பெற்றது என்கைக்கு ஸூ சகம் –

இப்போது இவனுடைய சக்தி சொல்லுகிறது என் -என்னில் –
குரு பாதக ஹேதுவாய் இருந்துள்ள இந்த துர்மாநத்துக்கு அடி இந்த சக்தி என்கைக்காக –

சத் பிரக்ர்திகளுக்கு உண்டான சக்தி சாத்விகருக்கு நிழல் ஆமாப் போலே
துர்மாநிகளுக்கு உண்டானது பிறர்க்கும் பாதகமாய் இறே இருப்பது –

வெண்டலை-
முடை யடர்த்த சிரம் ஏந்தி -என்கிறபடியே -ப்ரஹ்ம சிரஸை அறுத்த நாள் தொடங்கி
சிரகாலம் தரித்துக் கொண்டு -திரிகையாலே -ரக்தாதி ஸ்பர்சங்கள் போய் –
அஸ்தி மாத்ரம் ஆகையாலே –வெளுத்த சிர கபாலத்திலே-

புலன் கலங்க வுண்ட –
பூர்வ காலத்தில் -தன்னுடைய சக்தியையும் –
லோகம் அடங்க ஆஸ்ரயிக்கும் படியான ஐஸ்வர்யத்தையும் அனுசந்தித்து –
பின்பு பாதகியாய் -சிர கபாலத்திலே ஜீவிக்கும்படியான ஸ்வரூப ஹாநியையும்
அனுசந்தித்து -சர்வேந்த்ரியங்களும் ஷூ பிதமாம்படி -அதிலே ஜீவித்து திரிந்தவன்-

பாதகத்தன் வன் துயர் கெட –
பிதாவுமாய் -லோக குருவுமாய் இருந்துள்ள அவன் தலையை அறுக்கையாலே
வந்த பாதகத்தவனுடைய வலிய துக்கம் கெட –வன் துயர் -என்கிறது –
பிராயச்சித்த பரிஹாரம் ஆதல் –
அனுபவ விநாச்யம் ஆதல்-அன்றிக்கே ஒரு சர்வ சக்தி போக்க வேண்டும்படி இருக்கையாலே-

அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் –
திருமாலை உடைத்தான திரு மார்வில் -பரிமளிதமான நீராலே அக் கபாலத்தை நிறைத்தவன் –

அலங்கல் மார்வு -என்றது -பிரயோஜநாந்த பரரோடு -அநந்ய பிரயோஜநாரோடு வாசியற –
ஆபத்தே ,முதலாக ரஷிக்கைக்கு இட்ட தனி மாலை என்று தோற்றுகைக்காக –

வாச நீர் -என்றது அது தான் -சர்வ கந்த -என்கிற விக்ரஹத்திலே உத்பன்னமான ஜலம் ஆகையாலே –

முன்பு ஊரு செங்குருதி என்றது -பரிக்கிரஹித்த விக்ரஹத்தின் உடைய சஜாதீய பாவத்தின் உடைய-மெய்ப்பாடு தோற்றுகைகாக

அடுத்த சீர் நலம் கொள் மாலை –
ஸ்வரூப அநு பந்தியான கல்யாண குணங்களால் வந்த வைலஷண்யத்தை உடைய சர்வேஸ்வரனை

நண்ணும் வண்ணம் எண்ணு –
இப்படி துர்மாநியானவனுடைய பாதகத்தைப் போக்கினவன் –
அநந்ய பிரயோஜனரான நம்முடைய துர்மாநாதிகளைப் போக்குவிக்கக் குறை இல்லை –
நீ அவனை ப்ராபிக்கும் பிரகாரம் அவன் இரக்கமே என்று புத்தி பண்ணி இரு

அதாகிறது –
அவனை நம் தலையாலே ப்ராபிக்க விரகு இல்லை –
அவன் தானே இரங்கி தன்னைத் தந்து அருள வேணும் என்று வ்யவஸ்திதனாய் இருக்கை

வாழி நெஞ்சமே
நெஞ்சமே வாழி

நெஞ்சமே -உனக்கு இந்த வ்யவசாயம் ஒருபடிப்பட உண்டாயிடுக-

—————————————————————————–

114-பாட்டு –

வதாரிகை –

இப்படியானால் நமக்கு கர்த்தயம் என் -என்ன –
ஜ்ஞான ப்ரதானமே தொடங்கி
பரமபத ப்ராப்தி பர்யந்தமாக
நம் பேற்றுக்கு உபாயம்
நஷ்டோத்தரணம் பண்ணின ஸ்ரீவராஹ நாயனார் திருவடிகளே என்று நினைத்து
சரீர அவசாநத்து அளவும்
காலஷேப அர்த்தமாக
அவனை வாழ்த்தப் பார் –
என்கிறார்

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-

பதவுரை

என் நெஞ்சமே

எனது மனமே
ஈனம் ஆய

(அறிவுக்குக்) குறைவை விளைக்கவல்ல
எட்டும்

அவித்யை. கருமம், வாஸகா, ருசி, பிரகிருதி ஸம்பந்தம், தாப த்ரயம் ஆகிய எட்டையும்
நீக்கி

போக்கி
ஏதம் இன்றி

ஸம்ஸார துக்கங்களெல்லாம் போய்
மீது போய்

(அர்சிராதி மார்க்கத்தாலே லீலா விபூதிக்கு) மேலே சென்று
வானம்

பரமபதத்தை
ஆளவில்லை நூல்

அநுபவிக்க வேண்டியிருந்தாயாகில்
ஞானம் ஆகி

ஆத்மஞானத்தை யளிப்பவனாயும்
ஞாயிறு ஆகி

ஸூரியனைப்போலே இந்திய ஞானத்தை அளிப்பவனாயும்
ஏனம் மூர்த்திஆய்

மஹா வராஹமூர்த்தியாய்
ஞாலம் முற்றும்

பூமி முழுவதையும்
ஓர் எயிறு

ஒரு கோட்டினாலே
இடந்த

அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து ரக்ஷித்த
எந்தை

எம்பெருமானது
பாதம்

திருவடிகளை
எண்ணி

சிந்தித்து
வணங்கி

நமஸ்கரித்து
வாழ்த்து

துதிக்கக்கடவை

வியாக்யானம் –

ஈனமாய எட்டும் நீக்கி-
சேதனர்க்கு குறையான அவித்யாதிகள் ஐந்தையும்
சரீர சம்பந்த பிரயுக்தமான தாபத் த்ரயங்களையும் நீக்கி
இவை இவனுக்கு ஜ்ஞான சங்கோசம் என்கையாலே –ஈனம் -என்கிறது –

ஏதமின்றி –
சம்சாரிகமான சகல துக்க ஹேதுவான அவித்யாதிகள் போகையாலே –
தத் கார்யமான துக்கங்களும் போம் இறே

ஏதம் -துன்பு

மீது -போய் -வானமாள வல்லையேல் –
துக்க சம்பந்தம் உள்ள லீலா விபூதிக்கு மேலே –
அர்ச்ச்சிராதி மார்க்கத்திலே போய் -பரமபதத்தில் -ஸஸ்வராட்பவதி -என்கிறபடியே
குறைவற்ற இருப்பை வேண்டி இருந்தாய் ஆகில் –

வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே –
உன் வழியே என்னைக் கொண்டு போகை அன்றிக்கே –
பகவத் அனுபவத்துக்கு சஹகாரியான நெஞ்சே –
கால ஷேப அர்த்தமாக அவன் திருவடிகளிலே வணங்கி வாழ்த்தப் பார் –
வணங்கி வாழ்த்துகை காலஷேபம் ஆகில் -கீழ்ச் சொன்ன பேற்றுக்கு முதல் என்ன -இன்னது என்கிறது -மேல் –

ஞானமாகி நாயிறாகி –
ஆந்தரமான அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குகைக்கு பிரகாசகமான ஜ்ஞானமாய் –
பாஹ்ய பதார்த்த ப்ரகாசகனான ஆதித்யனாய் –

இத்தால் –
ஆத்ம ஜ்ஞான ஹேதுவுமாய் -ஐந்த்ரியக ஜ்ஞான ஹேதுவுமாய் -என்றது ஆய்த்து –

பாஹ்ய விஷயங்களை உள்ளபடி அறிந்தால் ஆய்த்து விடலாவது –

ஆத்மவிஷயத்தை உள்ளபடி அறிந்தால் ஆய்த்து புருஷார்த்த ருசி உண்டாவது

ஆக –ஜ்ஞான ப்ரதனும் சர்வேஸ்வரன் -என்கை –

ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில் ஏனமாய் இடந்த மூர்த்தி –
மஹா வராஹமாய் -பூமியை அடங்க அத்விதீயமான எயிற்றாலே யிடந்த விலஷண
விக்ரஹ உக்தன் –

மூர்த்தி -என்று ஸூரி போக்யமான பூர்ண ஷாட் குண்ய விக்ரஹத்தை உடையவனைச்-சொல்லுகிறது –

அவ்வடிவை உடையவன் கிடீர் ! தன்னை அழிய மாறி நஷ்டோத்தரணம் பண்ணினான் என்று கருத்து

யெந்தை –
அந் நீர்மையை காட்டி -என்னை எழுதிக் கொண்டவன் -என்னுதல்
அவ்வடிவை உடையவன் தன்னை அழிய மாறுகுகைக்கு அடி -இத்தை உடையவன்
ஆகையாலே -என்னுதல்

பாதம் எண்ணியே –
அவன் திருவடிகளையே உபாயமாக அனுசந்தித்து –
மஹா வராஹமாய் -பிரளய ஆர்ணவத்தின் நின்றும் பூமியை உத்தரித்தாப் போலே
சம்சார ஆர்ணவத்தின் நின்றும் நம்மை உத்தரிக்கும் என்று அத்யவசித்து
வணங்கி வாழ்த்தி -என்கிறார்-

ஈனமாய எட்டு நீக்கி -ஏதமின்றி -மீது போய் -வானமாள வல்லையேல் -ஞாலமாகி
நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் ஏனமாய் இடந்த மூர்த்தி -எந்தை -பாதம் எண்ணியே
வாழ்த்தி வணங்கு என் நெஞ்சமே -என்று அந்வயம்

—————————————————————————–

115-பாட்டு –

அவதாரிகை –

அவன் -அவாக்ய அநாதர என்கிறபடியே ஸ்வயம் நிரபேஷன் –
நாம் அநேக ஜன்மங்களுக்கு அடியான கர்மங்களைப் பண்ணி வைத்தோம் –
அவன் திருவடிகளே உபாயம் -என்று நினைத்த மாத்ரத்தில் நம்மை ரஷித்து அருள
கூடுமோ என்று -சோகித்த திரு உள்ளத்தைக் குறித்து –
சர்வவித பந்துவுமாய் -சகல விரோதிகளையும் போக்கி -தன்னைத் தருவானாக
ஏறிட்டுக் கொண்டான் -நீ இனி சோகிக்க வேண்டாம் என்று –
திரு உள்ளத்தைக் குறித்து -மாசுச -என்கிறார் –

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

பதவுரை

முத்தனார்

ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவரும்
முகுந்தனார்

மோக்ஷபூமியை அளிப்பவருமான பெருயாமன்;
ஒத்து ஒவ்வாத  பல் பிறப்பு ஒழித்து

ஞானமுடைமையால் ஒத்தும் யோநிபேதத்தால் ஒவ்வாமலுமிருக்கிற பலவகைப்பட்ட பிறவிகளைப்போக்கி
நம்மை ஆட்கொள்வாள்

நம்மை அடிமை கொள்வதற்காக
அத்தன் ஆகி

பிதாவாயும்
அன்னை ஆகி

மாதாவயும்
ஆளும் எம்பிரானும் ஆய்

அடிமைகொள்ளும் ஸ்வாமியாயும்
நம்முன்

நம்மிடத்திலே
புகுந்து மேவினார்

புகுந்து ஒரு நீராகப் பொருந்தினார்; (ஆனபின்பு)
ஏழை நெஞ்சமே

மதிகெட்ட மனமே
எத்தினால்

எதுக்காக
இடர் கடல்

துக்கஸாகரத்திலே
கிடத்தி

அழுந்திக் கிடக்கிறாய்.

வியாக்யானம் –

அத்தனாகி –
ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய் –

அன்னையாகி-
பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய் –
ஓருபிதா செய்யும் உபகாரத்தை மாதா செய்ய மாட்டாள் –
மாதா செய்யும் உபகாரத்தை பிதா செய்ய மாட்டான் –
இரண்டு வகைப் பட்ட உபகாரத்தையும் தானே செய்ய வல்லவனாய் இருக்கை –
சர்வேஷமேவா  லோகாநாம் பிதர  மாதர  ச மாதவ -என்றும் –
உலக்குக்கோர் முத்தைத்  தாய் தந்தை -என்றும் சொல்லக் கடவது இறே

அதவா –
அத்தனாகி அன்னையாகி –
ஜ்ஞானத்து உத்பாதகனுமாய் –
உத்பன்ன ஜ்ஞானத்துக்கு வர்த்தகனுமாய் –
இருக்குமவன் -என்னவுமாம் –
க்ரியான் ப்ரஹ்ம மத பிதா -என்று ஜ்ஞான உத்பாதகனை பிதா வென்று சொல்லக் கடவது இறே

இவ்வளவால் -கீழ்ப் பாட்டில் –ஜ்ஞானமாகி –என்றத்தை விவரிக்கிறது –

யாளும் எம்பிரானுமாய் –
அடிமை கொள்ளக் கடவ என் ஸ்வாமியாய் –
உக்தமான ஜ்ஞான கார்யமாகக் கொண்டு –
கைங்கர்ய ருசி பிறந்தால் -அடிமை கொள்ளுகைக்கு ஸ்வாமி யுமாய் -என்கை –
இவை தான் சர்வவித பந்துவுமாய் இருக்கிற படிக்கு உப லஷணம் –

மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூஹ்ர்த் கதிர் நாராயணா -என்றும் –

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கா சென்னுடை வாழ் நாள் -என்றும்
சொல்லக் கடவது இறே

இவ்வளவால் -கீழ்ப் பாட்டில் –ஜ்ஞானமாகி -என்றத்தை விவரிக்கிறது – கடவது இறே-

ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து –
ஒன்றுக்கு ஓன்று நெடுவாசிப் பட்டு –
இப்படி அசங்யாதமான ஜன்மத்தைத் தவிர்த்து-
ஆத்ம ஸ்வரூபம் ஏகமாய் இருக்க –

ஒருத்தனுக்கு ஒருத்தன் உடைய ஜன்மம் ப்ராப்யமாயும்
அவன் தனக்கே ஒருவனுடைய ஜன்மம் த்யாஜ்யமாயும் இறே இருப்பது –

அதவா –
ஓர் ஓர் ஆகாரத்திலே ஒத்தும் -ஓர் ஓர் ஆகாரத்திலே வைஷம்யப்பட்டும் இருக்கும்
ஜன்மங்கள் என்றுமாம் –

ஜ்ஞானக ஆகாரதயா -கர்மத்தாலே தேவ  திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபத்தாலே
விஷமமாயும் இருக்கை –

மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை -என்னக் கடவது இறே-

நம்மை ஆட்கொள்வான் –
நித்ய சம்சாரிகளாய் போந்த நம்மை -நித்ய ஸூரிகளைக்  கொள்ளும் அடிமை கொள்ளுகைக்காக –
ஜன்மங்கள் தோறும் உடன்கேடாய் போந்ததாகையாலே திரு உள்ளத்தைக் கூட்டி –நம்மை -என்கிறார் –

முத்தனார் –
அஸ்பஷ்ட சம்சார கந்தரானவர்

முத்தர் -என்று ப்ரத்வம்ஸா பாவத்தைச் சொல்லுகிறது அன்று –
தன்னுடைய ஹேய பிரத்யநீகை ஸ்வாபாவிகம் ஆகையாலே ப்ராக பாவத்தைச் சொல்லுகிறது –

முகுந்தனார் –
முக்தி பூமி ப்ரதானவர் -இத்தால் நித்யர் வ்யாவ்ர்த்தியைச் சொல்லுகிறது

ஆக –
இரண்டாலும் -விரோதி நிவ்ர்த்தி ஹேதுவான -ஜ்ஞான சக்தியாதி பூர்த்தியையும்
மோஷ ப்ரதத்துவதுக்கு அடியான ஔதார்யத்தையும் -சொல்லிற்று ஆய்த்து

புகுந்து நம்முள் மேவினார் –
ஷிபாமி -என்கிறபடிய த்யாக  விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –
ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –

நம்முடைய தண்மை பாராதே –
தம்முடைய பெருமை பாராதே –
சர்வ பரத்தையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக புகுந்து பொருந்தினார் -என்கிறார்

எத்தினால் இடர் கடல் கிடத்தி –
நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஜ்ஞராயோ -அவன் அஜ்ஞனாயோ –
ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –
கார்யம் செய்து கொள்ளுகைக்கு நாம் ப்ராப்தராயோ -அவன் அப்ராப்தனாயோ –
தன் மேன்மை பாராதே தாழ நின்று -உபகரிக்குமவனாய் இருக்க –
துக்க சாகரத்திலே கிடக்கிறது எத்தினாலே –

ஏழை நெஞ்சமே –
பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே –
ஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்
நம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை –

ஏழையர் -அறிவிலோர்

முக்தனார் முகுந்தனார் -ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் –
அத்தனாகி அன்னையாகி – யாளும் எம்பிரானுமாய் -நம்முள் புகுந்து மேவினார் –
ஏழை நெஞ்சமே -எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று அந்வயம் –

————————————————————————————–

116-பாட்டு –

அவதாரிகை –

மேலுள்ள ஜன்ம பரம்பரைகளுக்கு அடியான கர்மத்தைப் போக்கி அடிமை கொள்ளுவானாக
ஏறிட்டு கொண்டான் -என்றார் -கீழ்

இதில் –
நரக ஹேதுவான பாபத்தைப் பண்ணி
நான் அத்தாலே யம வச்யராய் அன்றோ இருக்கிறது என்று திரு உள்ளத்தைக் குறித்து
நமக்கு தஞ்சமான சக்கரவத்தி திருமகனார் -தம்மோடே நம்மைக் கூட்டிக் கொண்ட பின்பு –
யமனால் நாம் செய்த குற்றம் ஆராய முடியுமோ -என்கிறார்-

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -116-

பதவுரை

மாறு செய்த

எதிரிட்ட
வாள் அரசர்கள்

ஆயுதபாணியான இராவணனுடைய
நாள் உவப்ப

வாழ்நாள் முடியும்படியாக
அன்று

முற்காலத்து
இலங்கை

லங்காபுரியை
சென்று

அடைந்து
நீறு செய்து

நீறாக்கி
கொன்று

அவனைக் கொன்று
வெற்றி கெணண்ட

ஜயம்பெற்ற
வீரனார்

மஹாவீரரான பெருமாள்
என்னை

அடியேனை
தம்முள் வேறு  செய்து வைத்திடாமையால்

தம்மில் வேறுபடுத்தி வைக்காமையினால் (என்னை அந்தரங்க பூதனாகக் கொண்டருளினபடியால் ) (இனி)
நமன்

யமனானவன்
கூறுசெய்து கொண்டு

(என்னை அம்பெருமானிடத்தினின்றும்) பிரித்து
இறந்த குற்றம்

நான் செய்து கழித்த பாவங்களை
என்ன வல்லனே

நெஞ்சாலும் நினைக்கக் கடவனோ.

வியாக்யானம் –

மாறு செய்த –
எதிரிட்டு கொண்ட –
ரிபூணா ம்பி வத்சல -என்று இருக்கிற விஷயத்தை இ றே எதிரிட்டுக் கொண்டது –
தபியோபாதி அனுகூலித்துப் பிழைத்துப் போகலாய் இருக்க –
துஷ் பிரக்ர்தியாகையாலே கிடீர் -எதிரிட்டுக் கொண்டது –

வாளரக்கர் -நாள் உலப்ப –
வாலியைக் கொன்று அவ்வரசிலே மஹாராஜரை அபிஷேகம் பண்ணின படியை
கேட்டிருக்கச் செய்தே இ றே எதிரிட்டது –
ருத்ரன் பக்கலிலே பெற்ற வாளையும் –
ப்ரஹ்மா தனக்கு கொடுத்த வயசையும்
தனக்கு பலமாக விஸ்வசித்து இருக்கையாலே -நம் கையிலே வாள் இருக்க ஒருவராலும்
ஜெயிக்க ஒண்ணாது -வரத்தால் வந்த ஆயுஸு உண்டாய் இருக்க ஒருவராலும் கொல்ல
ஒண்ணாது -என்று இருந்தான் ஆய்த்து

வாளரக்கர் -நாள் உலப்ப –
ராவணனுடைய அந்த வாளையும் ஆயுஸையும் முடிகைக்காக

யாதொன்றை தனக்கு பலமாக விஸ்வசித்து இருந்தான் -அத்தை யாய்த்து யழித்தது

உலப்பு -முடிவு

உலப்பிலானே -என்றும்
உலப்பில் கீர்த்தி யம்மானே -என்றும் சொல்லக் கடவது இறே-

அன்று –
சுரி குழல் கனி வாய்த் திருவினை பிரித்த கொடுமையில் கடுவிசை யரக்கன் -என்கிறபடியே
அவன் ப்ராதிகூல்யத்தில் கை வளர்ந்தவன்று –
பர ஹிம்சை பண்ணின அளவன்றியே
தேவதைகள் குடி இருப்பை அழித்த அளவன்றியே
நயஷ்டவ்யம் நதாதவ்யம் நஹோதவ்யம் -என்கிறபடியே ஈஸ்வர அஜ்ஞாதி லங்கநம்
பண்ணின அளவன்றிக்கே –
ஜகஜ் ஜீவநமான மிதுனத்தை கடலுக்கு அக்கரையும் இக்கரையும் யாம்படி பண்ணின
ப்ராதிகூல்யம் இ றே-

இலங்கை நீறு செய்து –
இப்படிச் செய்யச் செய்தேயும் -அனுகூலிக்குமாகில் இவனை வ்யர்த்தமே அழியச் செய்கிறது-என் –

என்று பார்த்தருளி -இலங்கையை பஸ்மம் ஆக்கி-

சென்று –
அவ்வளவிலும் அனுகூலியாமையாலே
ரிஷ்யமுகத்தில் நின்றும் கடல் கரையில் சென்று –
இலங்கைக்கு அரணான கடலை அணை செய்து –
இலங்கைக்கு சென்று அடை மதிள் படுத்தி-

கொன்று –
அவ்வளவிலும் -ந நமேயம் -என்கிற பிரதிஜ்ஞை குலையாமையாலே ஸபரிகரமாக
ராவணனைக் கொன்று –

வென்றி கொன்ற வீரனார் –
அவனை ஜெயித்து வீர ஸ்ரீ உடன் நின்றவர் –
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் –
இவன் நமக்கு புறம்பாய் இருப்பான் ஒருவன் என்று தம்முடைய திரு உள்ளத்திலே என்னை நினையாமையாலே –

வேறு செய்து -என்கிறது –
நாம் பண்ணின கர்மத்துக்கு கர்த்தாவும் -போக்தாவும் நாமே என்று இருக்கை

என்னை -என்று
அவன் திருவடிகளிலே பர ந்யாசம் பண்ணின என்னை -என்றபடி –
எனக்கு எதிரிகள் ஆனவர்கள் தமக்கு எதிரிகளாம் படி
தமக்கு அந்தரங்கன் ஆக்கி வைக்கையாலே -என்கை-

நமன்  கூறு செய்து கொண்டு –
செய்தார் செய்த குற்றங்களை ஆராயக் கடவ யமன் -என்னை விபஜித் கொண்டு –
ஆண் பிள்ளையான -சக்கரவர்த்தி திருமகனார் -தம்மோடு கூட்டிக் கொள்ள -யமனாலே-பிரிக்க லாமோ –

இப்பாட்டு –சக்கரவர்த்தி திருமகனைச் சொல்லுகிறது-

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்று சொல்லுகிறபடியே –
யம வச்யமான ஸ்தாவர ஜங்கமங்களை இருந்தபடியே விஷயீ கரித்து –

பரம பதத்துக்கு-ஏறக் கொண்டு போன ஏற்றத்தை நினைத்து –

கூறு செய்கை -பிரிக்கை –

இறந்த குற்றம் எண்ண வல்லனே
செய்து கழிந்த பாபத்தை எண்ண வல்லனோ –
கீழ்க் கழிந்த பாபமாவது -அநுதாப தசையையும் -பிராயசித்த தசையையும் கழித்து –
நரக அனுபவம் பண்ணியே கழிக்க வேண்டுமவை -என்கை

எண்ண வல்லனே -என்றது -பாபம் பண்ணினான் என்று தனி க்ரஹத்திலே இருந்து நினைக்கவும் சக்தன் அல்லன் -என்றபடி –

——————————————————————————————

117 பாட்டு –

அவதாரிகை –

யம வஸ்யதா ஹேதுவான கர்மங்கள் போனாலும் -தேக ஆரம்பகமாய் இருந்துள்ள
ப்ராரப்த கர்மம் கிடந்தது இல்லையோ -என்ன –

அந்த பிராரப்த கர்மாவையும் -தத் ஆச்ரயமான தேகத்தையும் போக்கி –
பரம பதத்தில் கொண்டு போவான் ஆன பின்பு நம் பேற்றுக்கு ஒரு குறை இல்லை
என்கிறார் –

பூர்வாஹகம் ஆகிறது
தேக பரம்பரைக்கு ஹேதுவாகவும் –
நரக ஹேதுவாயும் -ப்ராரப்தமாய் -அநுபவ விநாச்யமாயும் -மூன்று வகைப்பட்டதாய்த்து இருப்பது –

அதில் -உபாசகனுக்கு -பிராரப்த கர்மம் ஒழிந்தவை நஷ்டமாகக் கடவது –
பிராரப்த கர்மம் அநுபவ விநாச்யமாகக் கடவது –
பிரபன்னனுக்கு -பகவத் ப்ரசாதத்தாலே த்ரிவித கர்மங்களும் அநுபவிக்க வேண்டியது இல்லை –

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -107-

பதவுரை

அச்சம்

பயமென்ன
நோயோடு அல்லலி

வியாதியோடு கூடின மகோ வியாதியென்ன
அவாயம் மூப்பு

அபாயங்களுக்கு இடமான கிழத்தனமென்ன
பல் பிறப்பு

பலவகைப் பிறப்புகளென்ன
இவை

ஆகிய இவற்றையும்
வைத்த சிந்தை

இவற்றை யனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும்
வைத்த ஆக்கை

கீழ்சொன்னவற்றுக்கு ஆச்ரமாகக் கண்ட சரீரத்தையும்
மாற்றி

போக்கடித்து
வானில்

(நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்ப்பவன் (ஆரென்னில்)
அச்சுதன்

அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும்
அனந்த கீர்த்தி

எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும்
ஆதி அந்தம் இல்லவன்

முதலும் முடிவும் மில்லாதவனும்
நஞ்சு நாக அணை கிடந்த நாதனை

(விரோதிகள்மீது) விஷத்தை உமிழ்கின்ற ஆசிதேஷனாகிற சயனத்திலே கிடந்தருளும் ஸ்வாமியும்
வேத கீதம்

வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டதுமான பெருமானாம்

வியாக்யானம் –

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை-
பயம் -வியாதி அத்தோடு கூடின ஆதி ஜரை -அநேக ஜன்மம் ஆகிற இவை –

பயமாவது ஆதிகளிலே ஒன்றாய் இருக்க -பிரதமத்திலே எடுத்தது -ஆதி வ்யாதிகள்
எல்லார்க்கும் சாதாரணமாய் இருக்கையாலே –

அதாகிறது -ஆகாமியான துக்கத்துக்கு ஹேதுவான லிங்க தர்சநத்தாலே வரும் மானச துக்கம் –
பயமாகிறது -அது சர்வ துக்க சாதாரணம் இறே

வியாதி யாகிறது –சிரோரோகாதிகள்

ஆதி யாகிறது –
காம க்ரோதாதிகள்

நோயோடு அல்லல் என்றது -இரண்டும் ஆத்யாத்மிகம் ஆகையாலே
அது தான் -ஆதி பௌதிகத்துக்கும் ஆதி தைவிகத்துக்கும் உப லஷணம்
பிராரப்த கர்மாக்களை -அநேக ஜன்மம் சம்பாவனையாலே –பல் பிறப்பு -என்கிறது

ஆய இவை -என்கிறது –
சந்நிஹிதங்களான அனுபவங்களைச் சொல்லுகிறது-

வைத்த சிந்தை –
உக்தமான இவற்றை யனுசந்திக்கிற மனசையும்

வைத்த வாக்கை-
அந்த வாக்குக்கு ஆச்ரயமான சரீரத்தையும்

மாற்றி –

ஆக –
பிராரப்த கர்ம பலமான ஆதி வ்யாதிகளையும் –
அவற்றை அனுபவிக்கிற கரணங்களையும்
சர்வத்துக்கும் ஆச்ரயமான தேக சம்பந்தத்தையும் –
இவற்றை அடங்க தவிர்த்து –

வானில் ஏற்றுவான்-
நோ பஜநம் ஸ்மரான் நிதம் சரீரம் -என்கிறபடியே இவற்றை ஸ்மரிக்கைக்கும்
அவசரம் இல்லாதா பரம பதத்தே ஏறப் பண்ண வல்லவன் –

இஸ் ஸ்வபாவத்தை உடையவன் ஆர் என்ன –

அச்சுதன் –திருவடிகளை ஆஸ்ரயித்தாரை -ஒரு நாளும் -ஒரு படியாலும் -நழுவ விடாதவன் –

அனந்த கீர்த்தி –
இப்படி ஆஸ்ரித ரஷணம் பண்ணுகையால் உண்டான அபரிச்சேத்யமான
குண பிரதையை உடையவன் –

ஆதி யந்தம் இல்லவன் –
ஆதியந்த ரஹீதன் -அதாகிறது –
ஆஸ்ரித விஷயத்தில் செய்ய நினைத்து இருக்குமவற்றுக்கும் முதலும்  முடிவும்
இன்றிக்கே இருக்கை

நச்ச நாகணைக் கிடந்த நாதன் –
ஆஸ்ரிதரை ஒருக்காலும் பிரிய மாட்டாத சர்வ ஸ்வாமி
ப்ரதிகூலர் பக்கல் நஞ்சை உமிழ்வானுமாய்
ஜாதி பிரயுக்தமான -மென்மை குளிர்ந்து நாற்றங்களை உடையனுமான
திருவநந்த வாழ்வான் ஆகிற படுக்கையில் கண் வளர்ந்து அருளுகிறவன் –

நாதன் –
தாழ நின்று உபகரிக்கைக்கும்
ஆஸ்ரிதரை பிரியமாட்டாமைக்கும்
ஹேது உடையவன் ஆகையாலே

வேத கீதனே –
அச்யுதனாகவும் –
வகுத்த ஸ்வாமி யாகவும்
நாராயண அனுவாஹத்தில் பிரசித்தமானவன் –
சாஸ்வதம் சிவம் அச்யுதம் நாராயணம் -என்னக் கடவது இறே –

————————————————————————————-

118-பாட்டு -அவதாரிகை –

வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி -என்று பிராரப்த கர்ம அவஸாநமான விரோதி நிவ்ர்த்திக்கும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் -என்றும் –
நம்மை ஆட்கொள்வான் -என்றும் –
வானில் ஏற்றுவான் -என்றும் -சொன்ன ப்ராப்ய ஸித்திக்கும்
ஈச்வரனே கடவான் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்தார் -கீழ்ப் பாட்டில் –

ஈஸ்வரனை நோக்கி -தம்முடைய திரு உள்ளத்துக்கு உண்டான ப்ராப்ய ருசியை
ஆவிஷ்கரிக்கிறார் -இதில் –

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே -118-

பதவுரை

வல்லி நாள் மலர் கிழத்திநாத!

படர்ந்த செவ்வித் தாமரைப்பூவிலே பிறந்த பிராட்டிக்கு நாதனே!
உள்ளம்

எனது நெஞ்சானது
சொல்லினும்

வாக்கிலும்
தொழில் கணும்

காயிகவ்யபாரங்களிலும்
தொடக்கு அறாத அன்பினும்

பிச்சேதமற்ற அன்பிலும் (ஒருபடிப்பட்டு)
அல்லினோடு ஆன மாலையும்

ராத்ரியோடு கூடின ஸாயம்ஸக் த்யையிலும்
நல் பகவினோடு ஆன காலையும்

நல்ல அஹஸ்ஸோடு கூடிய ப்ராதஸ் ஸந்த்யையிலும் (ஆக ஸர்வகாலங்களிலும்)
பாதம் பொதினை

உன்னுடைய திருவடித் தாமரையை
புல்லி

அனைத்து
விளைவு இலாது

(ஒரு நொடிப்பொழுதும்) விச்சேதமில்லாமல்
பூண்டு

அத்திருவடிகளையே மேற்கொண்டு
மீண்டதில்லை

நிலைத்து நிற்கின்றது.

வியாக்யானம் –

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும் –
வாசிகமான ஸ்துதி -கீர்த்தநாதிகளும் -கயிகமான ப்ரதஷிண அஞ்சலியாதிகளும் –
மானசமான ப்ரேமமும் –

ஆக -மநோ வாக் காயிக வ்யாபாரங்களுக்கு -பகவத் -விஷயமே விஷயமாகை
தொடக்கறா அன்பாகிறது –
விஷயாந்தர ஸ்பர்சம் இல்லாத ப்ரேமம் –

அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும் –
தமோ அபிபூதி யோடும் -விஷயாந்தர ப்ராவண்யத்தோடும் -செல்லக் கடவ ராத்ரியும் –
தேக யாத்ரா  சேஷமாக போது போக்கக் கடவ அஹஸ்ஸூம் –
ராத்ரியோடே கூடின ஸாயம் சந்தையும் –
அஹஸ் ஸோ டே கூடின ப்ராதஸ் சந்தையும் –
கரண த்ரயங்களும் ஏக விஷயமானாப் போலே –
சர்வ காலத்துக்கும் விஷயம் அதுவே யாகை –

நன் பகல் -என்றதை எல்லா காலத்துக்கும் கூட்டி –நன்றான -இரவும் -நன்றான பகலும் –நன்றான சந்தையும் என்கிறார் –

பகவத் விஷயத்தோடே செல்லுகையாலே –

அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத போத போதினைப்
படர்ந்த செவ்வித் தாமரைப் பூவை பிறப்பகமாக உடையவள் ஆகையாலே –
சௌகந்தய சௌகுமார்யாதிகளாலே அதிகையான பிராட்டி தான் –
அகலகில்லேன் -என்று மேல் விழும் சர்வாதிகனே –

அல்லி போலேயாய் செவ்வித் தாமரைப் பூவைப் பிறப்பகமாக உடையவள் -என்றுமாம் –

இத்தால் –
இவர் திரு உள்ளத்துக்கு ஒரு மிதுனமே ப்ராப்யம் -என்றது ஆய்த்து

பாத போதினைப் புல்லி-
உன் திருவடிகள் ஆகிற தாமரைப் பூவைப் பற்றி –
ஸ்ரீ ய பதியான -உன் திருவடித் தாமரைகளை –

மநோ -வாக்-காயங்களாலே -சர்வ காலமும் -பற்றி -என்றபடி –

புல்லல் -புனைதல்

யுள்ளம் வீள்விலாது பூண்டு –
என் மனஸ் ஒருக்காலமும் விச்சேதம் இல்லாதபடி அதி ப்ரவணமாய்
மீண்டதில்லையே –

இருவரும் சேர்ந்த சேர்த்தி அழகிலே -அனுபவிக்க இழிந்து –
அதில் பர்யாப்தி பிறவாமையாலே –
குணாந்தரங்களிலும் மீண்டதில்லை –

——————————————————————————————–

119-பாட்டு –

அவதாரிகை –

கரணத்துக்கும் க்ர்தர் பாவம் பிறக்கும்படியாக உமக்கு நம் பக்கல் பிறந்த அபிநிவேசம்
சம்சாரத்தில் கண்டு அறியாத ஒன்றாய் இருந்தது -இவ் வபிநிவேசத்துக்கு அடி என் -என்று –
பெரிய பெருமாள் கேட்டருள –

உம்முடைய வடிவு அழகையும் சீலத்தையும் காட்டி –
தேவரீர் பண்ணின க்ர்ஷி பலித்த பலம் அன்றோ -என்கிறார் –

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க்  கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119-

பதவுரை

அரங்கம்

திருவரங்கத்திலே
பொன்னிசூழ்

காவிரிசூழ்ந்த
மேய

நித்யவாஸம் செய்தருள்கிற
பூவை வண்ண

காயம்பூப்போன்ற திருமேனியையுடைய
மாய!

ஆச்சர்யபூதரான பெரிய பெருமானே!
கேள்

(இவ்விண்ணப்பத்தைக்) கேட்டருள வேணும்;
என்னது

என்னுடையது
ஆவி என்னும்

ஆத்மா என்கிற
வல்வினையினுள்

வலிய பாபராசியிலே
கொழுந்து எழுந்து உள்ள

(தேவரீர் விஷயமான அநுராகமாகிற) கொழுந்து கிளர்ந்து  உள்ள தேவரீருடைய
பாதழ் என்ன நின்று

திருவடியென்கிற
ஒண்சுடர் கொழுமலர்

அழகிய சுடர்மிக்க புஷ்பத்திலே
மன்னவந்து பூண்டு

ஸ்திரமாக வந்து படிந்து
எங்கும்

தேவரீருடைய விபூதிகள் எல்லாவற்றிலும்
வாட்டம் இன்றி நின்றது.

குறையாமல் வியாபியா நின்றது

வியாக்யானம் –

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண –
காவேரி சூழ்ந்த கோயிலிலே மத்தர்தமாக நித்யவாசம் பண்ணுகிற பூவை வண்ணனே –
கோயிலுக்கு ஒரு தோள் மாலை இட்டால் போலே அலங்க்ர்தமாய்த்து திருப் பொன்னி –
பரம பதத்தில் நித்யவாசம் -அஸ்ப்ர்ஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளை அனுபவிப்பிக்கைக்கு –
ஷீராப்தியில் நித்யவாசம் -ஸ்வேத தீப வாசிகளை காதாசித்தமாக அனுபவிப்பிக்கைக்கு —
கோயிலிலே நித்யவாசம் பாபராசியான எனக்கு -தேவரீர் பக்கலிலே ருசி பிறப்பித்து
அனுபவிப்பிக்கைக்கு –
நிறத்தாலும் -சௌகுமார்யத்தாலும் பூவைபூவாக ஒப்பாகச் சொல்லும்படியாக ஆகர்ஷமான
வடிவு உடையவன் -என்கை

மாய –
இப்படி வேறு ஒரு வ்யக்தியில் காண ஒண்ணாத ஆச்சர்யமான சீலத்தையும்
சௌலப்யத்தையும் உடையவனே

கேள் –
உன்னுடைய அழகாலும்  சீலத்தாலும் -எனக்கு பிறந்த ருசி விசேஷத்தை கேட்டு
அருள வேணும் –

உபகரித்த தேவரீர் விஸ்மரித்தாலும் -உபகார ஸ்ம்ர்தியை உடைய என் பக்கலிலே
கேட்டு அருளீர் -என்கிறார் –

என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து –
என்னுடைய ஆத்மாவென்று பேராய் -பாப ராசியான அதின் பக்கலிலே -உன்னைக் குறித்து
ஸ்ரத்தையானது உதித்து –

கர்ம யோகத்தாலே விரோதி பாபம் போனால் பிறக்க கடவ ஸ்ரத்தை –

பாப ப்ரசுரான தசையிலும் -தோன்றும்படி இறே தேவரீருடைய சௌந்தர்யத்தின் ஏற்றம் -இருப்பது –
ஸ்வ ஸ்வரூபத்தை ஜ்ஞான ஆநந்த லஷணமாக நினைத்து இருக்கை அன்றிக்கே –
பாப வச்யராக வாய்த்து இவர் நினைத்து இருப்பது –

உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க்  கொழு மலர் –
உன்னுடைய திவ்ய விக்ரஹம் என்று வேதாந்தங்களிலே தேஜோ மயமாயும்
கொழுவி மலர் போல் ஸூகுமாரமாகவும் சொல்லப் படுகிற படியே –
கீழ்ப் பிறந்த ஸ்ரத்தைக்கு -தேஜோ மயமாய் -யுவா குமாரா -என்கிற பருவத்தை
உடைத்தாய் -அத்யந்த ஸூகுமாரமான வடிவே விஷயம் -என்கை –

பாதம் -என்று சேஷபூதன் வ்யவஹாரம் இருக்கிற படி

மன்ன வந்து பூண்டு –
பிரியாதபடி வந்து பூண்டு –

பூண்கை யாகிறது -வ்யக்த் யந்தரங்களிலும் அந்வயியாது ஒழிகை –

வாட்டமின்றி எங்கும் நின்றதே –
ஷூத்ர விஷய வாசனையால் சலிப்பிக்க ஒண்ணாத படி உன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எனக்கு ப்ராப்தமாய் நின்றது –
அவ விக்ரஹம் தான் ஷாட் குண்ய விக்ரஹம் என்னும்படி குண பிரகாசகம்
என்கையாலே குணங்களிலே மூட்டிற்று –
அக்குணங்கள் தான் ஸ்வ ஆஸ்ரயமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் மூட்டிற்று –
அஸ் ஸ்வரூபம் தான் ஸ்வ ந்யாம்யமான விபூதியிலே மூட்டிற்று –

ஆக –
என்னுடைய ஆதரத்துக்கு உள்ளே
ஸ்வரூப ரூப குண விபூதிகள் -எல்லாம்
அந்தர்பூதமாய்த்து -என்கை —

——————————————————————————

120-பாட்டு –அவதாரிகை –

உன்னபாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு
என்று வடிவு அழகிலே வந்த ஆதரத்துக்கு அவ் வடிவே விஷயமான படியை
சொன்னார் -கீழ்-

இதில் –
கிடந்தானை கண்டேறுமா போலே தாமே அவ் விக்ரஹத்தை பற்றுகை அன்றிக்கே
நிர்ஹேதுகமாக
பெரிய பெருமாள்
தம்முடைய விக்ரஹத்தை என்னுள்ளே பிரியாதபடி வைக்கையாலே
விரோதி வர்க்கத்தை அடையப் போக்கி –
அபுநா வ்ர்த்தி லஷணமாய்
நிரதிசய ஆநந்த ரூபமான
கைங்கர்யத்தைப் பெற்றேன் என்று –
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று உபகார ஸ்ம்ர்தியோடே  தலைக் கட்டுகிறார் –

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

பதவுரை

உயக்கொள்

(நம்போல்வாரை) உஜ்ஜீவிக்கச் செய்பவனான
மேகவண்ணன்

காளமேக நிபச்யாமனான பெருமான்
இன்று

இன்றைக்கு (நிர்ஹேதகமாக)
இயக்கு அறாத பல் பிறப்பில்

தொடர்ச்சிமாறாமல் நெடுகச் செல்லும்படியான பலவகைப் பிறப்புகளினின்றும்
என்னை

அடியேனை
மாற்றி

மாற்றுகைக்குத் திருவுள்ளம் பற்றி
வந்து நண்ணி

இங்கேயெழுந்தருளி நெருங்கி
தன்னில் ஆய என்னுள்

தன்னோடு அவிகாபூதமான என்னுள்ளே
தன்

தன்னுடைய
மன்னுசோதி

நித்ய ஜ்யோதிர்மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை
மயக்கினான்

ஸம்ச்லேஷிப்பித்தான்!
ஆதலால்

இப்படி புரையாறக் கலந்தருளுகையாலே
என் ஆவி தான்

எனது ஆத்ம வஸ்துவானது
இயக்கு எல்லாம் அறுத்து

ஒன்றோடொன்று  இணைந்து கிடந்த அவித்யாதிகளை வேரறுத்து
அறாத இன்பம் வீடு:

ஒருநாளும் முடியாத இன்பமாகிய மோக்ஷஸுகத்தை
பெற்றது

பெற்றாதயிற்று

வியாக்யானம்-

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி-
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்கிறபடியே விச்சேதியாதே
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஆத்மகமான பல வகைப் பட ஜன்மங்களில் நின்றும் –
அஞ்ஞனாய் -நித்ய சம்சாரியாய் போந்த என்னை மாற்ற நினைத்து –

இயக்க யறாமை யாவது -ஒரு தேகத்துக்கு ஆரம்பகமான கர்மத்தை அனுபவிக்க இழிந்து –
அநேக தேக ஆரம்பகமான கர்மங்களைப் பண்ணுகையாலே
தேக பரம்பரைக்கு விச்சேதம் இன்றி செல்லுகை –

இயக்கு -நடையாட்டம் –

இயக்கல் -என்று வல் ஒற்றாய் கிடக்கிறது –

மாற்ற நினைப்பதை –மாற்றி -என்பான் என் என்னில் –
உயிர் முதலாய் முற்றுமாய் -என்றாப் போலே –

இன்று வந்துதுயக் கொண் மேக வண்ணன் நண்ணி –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து
தன பக்கலிலே பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தரும்
காளமேக நிபச்யாமானவன் –
எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க
இன்று நிரஹேதுக கிருபையினால்
நான் இருந்த இடத்தே வந்து கிட்டி –

நண்ணுதல் -அணைதல்

நச்சு நாகணைக் கிடந்தான் -என்றும் –

பொன்னி சூழ் அரங்கமேயபூவை வண்ணா -என்றும் –
சொல்லிப் போந்தவர் ஆகையாலே -இங்கும் உய்யக் கொள் மேக வண்ணன் என்று
பெரிய பெருமாள் திருமேனியைத் தமக்கு உஜ்ஜீவன ஹேது-என்கிறார்-

என்னிலாய தன்னுளே –
அஹம் புத்தி சப்தங்கள் தன்னளவிலே பர்வசிக்கும்படி –
தனக்கு  பிரகாரமான என்னுடைய ஹ்ர்த்யத்திலே –
தத்வமஸி -என்று -உபதேசித்து -அஹம் ப்ரஹ்மாசி -என்று அனுசந்தித்துப் போந்த
அர்த்தம் இ றே இவர் இங்கு அருளிச் செய்கிறார் –

இந்த சரீர ஆத்ம சம்பந்தம் இங்கே சொல்லுகிறது -தன்  பேறாக உபகரித்த விதுக்குக் ஹேதுவாக

மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான –
திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –

மயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –

ஆதலால் –
இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே

என்னாவி தான் –
தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –

இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி
சம்பந்தங்களை யறுத்து –

இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –
தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்

அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான
கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -101-110-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

May 5, 2013

101-பாட்டு –

அவதாரிகை –

நீர் நம்மை ப்ரார்த்திக்கிற பரபக்தி -விஷயாந்தரங்களின் நின்றும் நிவ்ர்த்தமான
இந்திரியங்களைக் கொண்டு -நம்மை அநவரத பாவனை பண்ணும் அத்தாலே
சாத்தியம் அன்றோ -என்ன –

அங்கனே யாகில் ஜிதேந்த்ரியனாய் கொண்டு அநவரத பாவனை பண்ணுவேனாக
தேவரீர் திரு உள்ளமாக வேணும் -என்கிறார்-

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-

பதவுரை

ஏமம் நீர் நிறத்து

மஹாஜலமான கடல்போன்ற நிறத்தையுடைய
அம்மா !

ஸ்வாமி!
இரந்து உரைப்பது உண்டு

(தேவரீரை) யாசித்துச் சொல்லும் வார்த்தையொன்றுண்டு
வாழி

பல்லாண்டு பல்லாண்டு;
மன்னு சீர்வரம் தரும் திருக்குறிப்பில்

(சேதநர்க்குச் ) சிறந்த வரங்களையருள்வதே இயல்வான (தேவரீருடைய) திருவுள்ளத்தில்
வைத்தது ஆகில்

அடியேனுக்கு ஏதாவது வரங்கொடுக்க நினைவுண்டாகில் (இந்த வரம் கொடுக்க வேணும்.)
பரந்த

கண்ட விடங்களில் அலைந்து திரிகிற
சிந்தை

எனது நெஞ்சானது
ஒன்றி நின்று

(தேவர் விஷயத்திலேயே) ஸ்திரமாயிருந்துகொண்டு
நின்ன

தேவரீருடைய
பாதபங்கயம்

திருவடித்தாமரைகளை
நிரந்தரம்

இடைவிடாமல்
நினைப்பது ஆக

தியானித்திருக்கும்படியாக
நீ நினைக்க வேண்டும்

தேவரீர் திருவுள்ள மிரங்க வேணும்.

வியாக்யானம்-

இரந்து உரைப்பது உண்டு –
சிரஸா யாச தஸ் தஸ்ய -என்கிறபடியே –

திருவடிகளிலே பக்த அபிமாநனாய்க் கொண்டு-விழுந்து –

தலையாலே தேவரீரை இரந்து விண்ணப்பம் செய்யப் புகுகிறதொரு கார்யம் உண்டு –

வகுத்த விஷயத்திலே ஸ்வரூப ப்ரயுக்தமான அநவரத பாவனையையே அர்த்திக்கிறார்-

ஆகையாலே -இப்படி கூசிச் சொல்லுகிறது என் என்னில் –
தம்முடைய பூர்வ வ்ர்த்தத்தைப் பார்த்தும் –
தத்துவத்தினுடைய உத்துங்கதையை பார்த்தும்  அருளிச் செய்கிறார்

பூர்வ வ்ர்த்தத்தை பார்த்தால் கிட்டக் கூச வேணும் –
கிட்டினாலும் உத்துங்கதையைப் பார்த்தால் அநாதிக்கிறானோ என்று கூச வேணும்

வாழி –
அவன் முகம் பார்க்கைக்காக மங்களா சாசனம் பண்ணுகிறார் என்னுதல் –
அநவரத பாவநைக்கு விஷயமான அவன் அழகை அனுசந்தித்து
மங்களா சாசனம் பண்ணுகிறார் என்னுதல் –

ஏம நீர் நிறத்த மா –
அப்ரமேயோ மஹோ ததி -என்கிறபடியே

அபரிச்சின்னமான கடல் போலே இருக்கிற-திரு நிறத்தை உடைய நிருபாதிக பந்துவே –

ஏமம் -உறவு

ஸநோ பந்து -என்றும் –
அஹம்வோ பாந்தவ ஜாத -என்றும் சொல்லக் கடவது இறே

இத்தால்-
1-இரந்து அல்லாது நிற்க ஒண்ணாத படியையும் –

2-மங்களா சாசனம் பண்ணி அல்லாது நிற்க ஒண்ணாத படியான வடிவு அழகையும் –

3-ப்ராப்தியையும் -சொல்லுகிறது –

வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப் –
இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அநுரூபமான நன்மைகளை –
அபேஷித்தார் அபேஷித்த வரங்களை தந்து அல்லது நிற்க மாட்டாத
திரு உள்ளத்திலே வைத்ததாகில்

சீர் -நன்மை -அதாகிறது -கைங்கர்ய சாம்ராஜ்யம்
இந்த கைங்கர்யத்துக்கு அடியாய் இருந்துள்ள அநவரத பாவனையை அபேஷிக்கிறார் மேல் –

பரந்த சிந்தை ஒன்றி நின்று-
சப்தாதி விஷயங்களில் போந்த என்னுடைய மனஸ் –
மற்று ஒன்றில் போகாதே –
உன் பக்கலிலே ஒன்றி நின்று –

நின்ன பாத பங்கயம் –
ப்ராப்தமுமாய் –
நிரதிசய போக்யமும்
ஆகையாலே -ஆகர்ஷகமுமான உன் திருவடிகளை
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே –
அம் மனஸ் நிரந்தரமாக நினைக்க வற்றாம்படி நீ திரு உள்ளமாக வேணும் –

என் நினைவும் -என் செயலும் -அகிஞ்சித்கரம்

உன் நினைவுக்கே பல வ்யாப்தி உள்ளது -என்கை

———————————————————————————–

102-பாட்டு –

அவதாரிகை –

விச்சேத ப்ரசங்கம் இல்லாத அநவரத பாவனைக்கு சரீர சம்பந்தம் அற வேணும் காண் -என்ன–

எனக்கு ருசி உண்டாய் இருக்க –
தேவரீர் சர்வ சக்தியாய் இருக்க –
அனுவர்த்திக்கிற இந்த அசித் சம்சர்க்கத்தை தேவரீர் அறுத்து தந்து அருளும் அளவும்-

நான் தரித்து இருக்கும்படி -இன்னபடி செய்கிறோம் என்று

ஒரு வார்த்தை யாகிலும்-அருளிச் செய்ய வேணும் -என்கிறார்-

விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ தெழிக்கும் நீர்
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால்
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே -102-

பதவுரை

தெழிக்கும் நீர்

கொந்தளிக்கின்ற கடலிலே
பள்ளி

சயனங்கொண்டிருக்கிற
மாய

ஸர்வேச்வரனே!
பன்றி ஆய

மஹாவராஹமாகக் திருவவதரித்த
வென்றி வீர

ஜயசீலனான வீரனே!
துள்ளும் நீர்

துள்ளின கடலிலே
குன்றினால்

மலைகளைக் கொண்டு
உள்ளு வேனது

(அத்திருவடிகளையே தஞ்சமாக) அநுஸந்தித்திருக்கிற என்னுடைய
ஊனம் நோய்

சரீர சம்பந்தமான நோய்களை
வரம்பு செய்த

அணைகட்டின
தோன்றல்

ஸ்வாமியே!
யிலவு இலாத காதலால்

நீக்கமில்லாத அன்பினால்
விளங்கு பாத போதில் வைத்து

(உனது) விளங்குகின்ற பாதாரலிங்கத்திலே (நெஞ்சை) வைத்து
ஒழிக்கும் ஆ

ஒழிக்கும் வழிகளில்
ஒன்று

ஒருவழியை
சொல்லிவிடு

அருளிச் செய்க

வியாக்யானம்-

விள்விலாத காதலால் –
பிரயோஜனாந்தரன்களைப் பற்றி நெகிழாத –

அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு -திருவடிகளில் பண்ணின பிரேமத்தாலே –

விள்கை விள்ளாமை விரும்பி -என்னக் கடவது இறே

விளங்கு பாத போதில் வைத்து –
அந்த பிரேமத்தால் உஜ்வலமான திருவடித் தாமரைகளிலே நெஞ்சை வைத்து –
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரிதர் உடைய சந்நிதியிலே அலரும் அது இறே திருவடித்-தாமரைகள் –

இத்தால் –
நான் பிரயோஜனாந்த பரனாய் -அசித் சம்பந்தம் அனுவர்த்திக்கிறதோ –
தேவரீர் ஆஸ்ரித வத்ஸலர் அல்லாமே அனுவர்த்திக்கிறதோ -என்கை –

உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ-
அத்  திருவடிகளை தஞ்சம் என்று நினைத்து இருக்கிற எனக்கு –

ஊனத்தை விளைக்கும்-சரீர சம்பந்தம் ஆகிற நோயை போக்க நினைத்து இருக்கிற விரகு

ஊனமாகிறது –
ஸ்வ ஸ்வரூப விஷயமான ஜ்ஞான சங்கோசமும் –
பகவத் ஜ்ஞான சங்கோசமும் –
பகவத் அனுபவ சங்கோசமும் –

இவற்றை விளைக்கும் அது இறே தேக சம்பந்தம் –

சரீரம் -என்றும் -வியாதி -என்றும் -பர்யாயம் இ றே

இத்தால் –
வேறு ஒன்றைத் தஞ்சம் என்று இழக்கிறேனோ –
சரீரத்தில் ஆதாரம் உண்டாய் இழக்கிறேனோ –

தெழிக்கும் நீர் பள்ளி மாய-
தேவரீரோட்டை ஸ்பர்சத்தாலே -கோஷிக்கிற கடலிலே –
ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக –
கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்யமான
சௌலப்யாதி திருக்குண உக்தனே

தெழிக்கை -முழங்குகை

பன்றியாய வென்றி மாய –
விஸத்ர்சமான சம்சாரத்திலே ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக கண் வளர்ந்து
அருளுகிற இவ்வளவே அன்றிக்கே –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமாய் பாதாள கதையான
பூமியை எடுத்து ஹிரண்யாஷனை வென்ற வீரத்தை உடையவனே

குன்றினால் துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் –
தன்னில் கிடக்கும் பதார்த்தங்களை கரையிலே பொகடும் திரைக் கிளர்த்தியை உடைய-
கடலிலே அழுந்தக் கடவ மலைகளைக் கொண்டு அணை செய்த சக்கரவர்த்தி திருமகனே –

தோன்றல் -அரசன்
பரமபத நிலயனான தேவரீர் -ஆஸ்ரித அர்த்தமாக -சம்சாரத்தில் வந்து –
சுலபராயும் -தேவரீரை அழிய மாறி நஷ்டோத்தரணம் பண்ணியும் –
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்தும் –
அதி மாநுஷ சேஷ்டிதங்களைப் பண்ணியும் –
இப்படி நீர்மையாலும் -சக்தியாலும் -குறைவற்ற தேவரீருக்கு
என் சரீர சம்பந்தத்தை அறுக்கைக்கு என் கையில் பொருள் உண்டோ -என்கை

ஓன்று சொல்லிடே –
இரண்டு தலையிலும் குறைவற்ற பின்பு இது அனுவர்த்திக்கிறது -நீ நினையாமை – இறே
தேவரீர் நினைக்கும் அளவும் தரிக்கும்படி -இன்னளவிலே  செய்கிறோம் –என்று
ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –

தெழிக்கும் நீர் பள்ளி மாய -பன்றியாய வென்றி வீர குன்றினால் -துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல்
விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து உள்ளுவேனதுஊன நோய் ஒழிக்கும் ஓன்று சொல்லிடே-என்று அந்வயம்-

———————————————————————————

103 பாட்டு –

அவதாரிகை –
அசித் சம்பந்தம் தேக அவஸானத்திலே போக்குகிறோம் -நீர் பதறுகிறது என் -என்ன –

அங்கனே ஆகில் –தேவரீர் உடைய
மேன்மைக்கும்
நீர்மைக்கும்
வடிவு அழகுக்கும்
வாசகமான திரு நாமங்களை நான் இடைவிடாது மனநம் பண்ணிப் பேசுகைக்கு
ஒருப்ரகாரம் அருளிச் செய்ய வேணும் -என்கிறார்

திருக்கலந்து சேரு  மார்ப தேவ தேவ  தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே -103-

பதவுரை

திரு கலந்து சேரும்

பெரிய பிராட்டியார்  நித்யஸம்ச்லேஷம் பண்ணி வாழப்பெற்ற
மார்பு

திருமார்பையுடையனே!
தேவர் தேவர் தேவனே

ப்ரஹ்மாதிகளிற் காட்டிலும் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் தலைவனே!
இருக்கு கலந்த வேதம் நீதி ஆகி நின்ற

(பலவகைப்பட்ட) ருக்குக்கன் சேர்ந்திருக்கிற வேதங்களால் பிரதி பாதிக்கப்படுகையை ஸ்வபாவமாகவுடையனான
நின் மலா

பரிசுத்தனே
கரு கலந்த

பொன்னோடு  சேர்ந்த
காளமேகம் மேனி

காளமேகம்போன்ற திருமேனியையுடைய
ஆய

கண்ணபிரானே!
நின் பெயர்

உன் திருநாமஙக்ளை
ஒழிவு இலாது

நிரந்தரமாக
உரு கலந்து  உரைக்கும் ஆறு

திவ்யமங்களவிக்ரஹத்தோடு சேர்ந்து அநுஸந்திக்கும் வகையை
உரைசெய்

அருளிச் செய்யவேணும்.

வியாக்யானம்-

திருக்கலந்து சேரு  மார்ப –
பிராட்டி தேவரீர் உடன் சம்ச்லேஷித்து -அந்த சம்ச்லேஷத்தில் அதி சங்கித்து –
அகலகில்லேன் இறையும் -என்று நித்ய வாஸம் பண்ணுகிற திரு மார்பை  உடையவனே –
பக்தரோடு முக்தரோடு நித்யரோடு -வாசியற -ஈஸ்வரீம் சர்வ பூதாநாம் -என்கிறபடியே
சர்வருக்கும் அபாஸ்ரய பூதை யான பிராட்டி -தான் நித்ய சாபேஷை யாம் படி யன்றோ
தேவரீர் உடைய பெருமை –

தேவ தேவ  தேவனே  –
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே
ப்ரஹ்மாதிகளுக்கு மோஷ ருசி பிறந்தவன்று -ப்ராப்யரான நித்ய ஸூரிகளுக்கு
நித்ய அனுபாவ்யனாய்க் கொண்டு நிர்வாஹகன் ஆனவனே –

தேவரீரும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்தியிலே -எடுத்துக் கை நீட்டுகையே -யாத்ரையாய்
இருக்கும் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் -என்கை-

இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா –
ரிக் ப்ரசுரமான வேதத்தால் பிரதிபாதிக்கையையே ஸ்வபாவமாக உடையையாய் நின்ற
ஹேய ப்ரத்யநீகனே –

நீதி -ஒழுக்கம் -அதாகிறது -ஸ்வபாவம் –
ஹரீச்சதே லஷ்மீச்சபத்ன்யௌ -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய -என்றும்
அபஹதபாப்மா -என்றும் -இத்யாதி வாக்யங்களாலே –
1-ஸ்ரீ ய பதித்வம் -என்ன
2-ஸூ ரி போக்யதை -என்ன –
3-ஹேய ப்ரத்யநீகை -என்ன –
இப்படிகளாலே வேதைக ஸமதிகம்யன் -என்கை-

கருக்கலந்த காள மேக மேனி யாய –
பொன் போலே புகர்த்துக் கறுத்து மேகம் போலே இருக்கிற திருமேனியை உடைய க்ர்ஷ்ணனே –

கரு -பொன்
நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லேகவபாஸ் வரா -என்றும்
அஜாயமாநோ பஹூதா விஜாயதே -என்றும் –
விக்ரஹத்தையும்
அவதார சௌலப்யத்தையும் சொல்லிற்று இறே
நவமாஸ த்ர்தம் கர்ப்பம் -என்னுமா போலே -நீரை உள்ளே உடைய காள மேகம் என்னவுமாம் –

கரு -கர்ப்பம்

இத்தால் –
தாபஹரமாய்
ஆகர்ஷமுமான
வடிவோடே க்ர்ஷ்ணனாய் வந்து அவதரித்து
ஆஸ்ரிதருக்கு சுலபன் ஆனவன் -என்கை –

நின் பெயர் உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –
ஸ்ரீ ய பதி-அயர்வறும் அமரர்கள் அதிபதி -ஹேயப் ப்ரத்யநீகன் -விலஷண விக்ரஹ உக்தன் –
ஆஸ்ரித சுலபன் -என்று
நிர்தோஷ பிரமாண ப்ரதிபாத்யனான உன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை
வடிவு அழகோடே -இடைவிடாதே நான் பேசுகைக்கு வழியை அருளிச் செய்ய வேணும் –

———————————————————————————————

104-பாட்டு-

அவதாரிகை –

யத் கரோஷியதச் நாஸி -என்றும் –
த்ரவ்ய யஞ்ஞாஸ் தபோ யஞ்ஞா -என்றும்
இத்யாதி கர்மத்தாலே -விரோதி பாபத்தை போக்கி –
சததம் கீர்த்த யந்த -என்கிறபடியே –
நம்மை அனுபவிக்கும் வழி சொல்லி வைத்திலோமோ –
உரை செய் -என்கிறது என் -என்ன –

நீ ப்ரதிபந்த நிரசன சமர்த்தனாய் இருக்க
நான் கர்மத்தாலே விரோதியைப் போக்க எனபது ஓன்று உண்டோ

நீயே என் விரோதியைப் போக்கி -உன்னை நான் மேல் விழுந்து -இடைவிடாதே
அனுபவிக்கும்படி பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –

கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன்  சிரமவை
இடந்து கூறு செய்த  பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்றி யங்கு போது நின்ன பொற் கழல்
தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே -104-

பதவுரை

கடு

க்ரூரனான
கவந்தன்

கபந்ததென்ன
வக்கரன்

தந்தவக்த்ரனென்ன
கரன்

கரனென்ன
முரன்  சிறை அவை

முரனென்ன (இவர்களுடைய தலைகளை
இடந்து கூறு செய்த

சிந்நபிந்நமாக்கினவனும்
பல்படை தடகை

பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான
மாயனே

பெருமானே!
கிடந்து இருந்து நின்று இயங்குபோதும்

படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும்
நின்ன

தேவரீருடைய
பொன்கழல்

அழகிய திருவடிகளையே
தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி

இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை
நலக் வேண்டும்

தந்தருளவேணும்.

 

வியாக்யானம்-

கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன்  சிரமவை-
அற வெட்டியனான கவந்தன் -தந்தவக்ரன் -கரன் -முரன் -இவர்களுடைய தலைகளை –
அல்லாதார் காட்டில் கபந்தனுக்கு வெட்டிமை யாவது
பிராட்டியை பிரிந்து கடலும் மலையும் விசும்பும் தேடுகிற தசையிலே
எதிர் அம்பு கோக்க வந்த வெட்டிமையை நினைந்து வெறுக்கிறார் –

இடந்து கூறு செய்த  –
அவர்கள் தலை மண்டையை இடந்து சரீரங்களை -சிந்நம் பிந்நம் சரைர் த் தக்த்தம் –
என்கிறபடியே சகலமாக்கினவனே –

அசூர ராஷசர்களைப் யழியச் செய்தாப் போலே
என்னுடைய பாப ரூபமானப்ரதிபந்தகங்களை யழியச் செய்ய வேணும் -என்கை

பல் படைத் தடக்கை மாயனே –
அவர்களை அழியச் செய்கைக்கும் -பலவகைப் பட்ட ஆயுதங்களை
ஆஸ்ரிதரைக் குளிரத் தடவ கடவ திருக் கையிலே
தரித்த ஆச்சர்ய சக்தி உக்தனே

ஒன்றே பிரதிகூலருக்கு பாதகமாய் -அது தானே அனுகூலருக்கு ரஷகமுமாய் இருக்கை
ஆச்சர்யம் இறே –
என்னுடைய விரோதியைப் போக்குகைக்கு திவ்ய ஆயுதங்கள் வேண்டா
இரங்க வமையும் -என்கை

அப்யேஷ ப்ர்ஷ்டே மம ஹஸ்த பத்மம் கரிஷ்யதி ஸ்ரீ மத நந்த மூர்த்தி -என்றும் –

அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்றும்
ஆஸ்ரிதரை உஜ்ஜீவிப்பிக்கும் கை இறே

தடம் -குளிர்த்தி
ஆனாலும் உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன –

கிடந்து இருந்து நின்றி யங்கு போதும் –
ஆஸீ நா வசயா நவா திஷ்டந்தோ யத்ர குத்ரவா -என்கிறபடியே
கிடந்தும் -இருந்தும் நின்றும் சஞ்சரித்தும் -இப்படிகளாலே தேக யாத்ரை நடக்கும் போதும்

நின்ன பொற் கழல் –
வகுத்த சேஷியான தேவரீர் உடைய ஸ்பர்ஹணீயமான திருவடிகளை
தேக யாத்ரா சேஷமான காலமும் விட ஒண்ணாத திருவடிகள் -என்கை

தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே –
மேல் விழுந்து -இடை விடாத படியான ஸ்வபாவத்தை எனக்கு பண்ணித் தந்து
அருள வேணும் –

தொடர்ச்சி -செறிவு

இத்தால் –
அனுபவ விரோதிகளை தேவரீரே போக்கவும்
சர்வ காலமும் ஸ்பர்ஹ்ணீயமான தேவரீர் திருவடிகளை இடை விடாதே அனுபவிப்பேனாகவும்
பண்ணித் தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

——————————————————————————————-

105-பாட்டு –

அவதாரிகை –

நான் சொன்ன உபாயங்களில் இழியாது ஒழிகைக்கும்
நான் செய்த படி காண்கை ஒழிய போகத்திலே த்வரிக்கையும்
ஹேது என் என்ன –

பிராட்டி புருஷகாரமாக –
குணாதிகரான தேவரீர் விஷயீ காரத்தையே
தஞ்சம் என்று இருக்குமவன் ஆகையாலே
உபாயாந்தர அபேஷை இல்லை –
தேவரீர் வடிவு அழகில் அந்வயமே போகத்தில் த்வரிக்கைக்கு அடி -என்கிறார் –

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே -105-

பதவுரை

மண்ணை உண்டு

பூமியைப் பிரளயகாலத்திலே திருவயிற்றில் வைத்து நோக்கியும்
பின் உமிழ்ந்து

பிரளயம் கழிந்த பிறகு வெளிப்படுத்தியும்
இரந்துகொண்டு

(மஹாபலியிடத்தில்) பிக்ஷையேற்றுப் பெற்று
அளந்து

அளந்துகொண்டும்.
மண் கண்ணுள் அல்லது இல்லை என்று

‘இவ்வுலகமானது நமது கடாக்ஷத்தாலன்றி ஸத்தை பெற்றிருக்கமாட்டாது’ என்று திருவுள்ளம்பற்றி
வென்று

(அவ்வுலக முழுவதையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்டும் போந்த
காலம் ஆயினும்

ஸர்வகால நிர்வாஹகனே!
பண்ணை வென்ற இன்சொல் மங்கை

பண்களைத் திரஸ்கரித்த இனிமையான பேச்சையுடைய பிராட்டியினுடைய
கொங்கை

திருமுலைத்தடத்திலே
தங்கு

பிரியாது வாழ்கிற
பங்கயக்கண்ண

புண்டரீகாக்ஷனே!
நின்ன வண்ணம் அல்லது

உன் வடிவழகுதவிர
எண்ணும் வண்ணம் இல்லை

தியானிக்கக்கூடிய வடிவு மற்றொன்றுமில்லை.

 

வியாக்யானம் –

மண்ணை உண்டு உமிழ்ந்து
பிரளய ஆபத்தில் -அபேஷியாது இருக்க -ஆபத்தே முதலாக -வரையாதே
இஜ் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷித்து –
உள் இருந்து நோவு படாதபடி ஸ்ர்ஷ்டி காலத்திலேயே உமிழ்ந்து

இத்தால் –
தன் பக்கல் விமுகரான அளவிலும் வத்ஸலன் -என்கை –

பின்னிரந்து கொண்டு அளந்து  –
ஸ்ர்ஷ்டமான பின்பு -அஜ் ஜகத்தை மஹாபலி அபஹரிக்க -அவன் பக்கலிலே
அர்த்தியாய் சென்று –இரந்து -இந்தரனுக்கு த்ரை லோக்ய சாம்ராஜ்யத்தை கொடுத்து
அவ்வளவுக்கு மேலே சதுர்தச புவநத்தில் உண்டான சகல சேதனர் தலையிலும்
உன் திருவடிகளை வைத்து

இத்தால் –
விமுகரான அளவிலும் -சீலவானுமாய் சுலபனுமாய் இருக்குமவன் -என்கை –
தன்னை அழிய மாறி தாழ நிற்கை இறே –சீலம்
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கை இ றே –சௌலப்யம் –

மண் கண்ணுள் அல்லது இல்லை என்று –
விமுகரான சம்சாரிகளைக் குறித்து இப்படி செய்து அருளுகைக்கு அடி என் -என்னில் –
இஜ் ஜகத்துக்கு நம் கடாஷம் ஒழிய வேறு ஸ்திதி இல்லை என்று –

வென்ற காலமாயினாய் –
சகல பதார்த்தங்களும் தன் கையிலே அகப்படும்படி –
சகல பரிணாமத்துக்கும் நிர்வாஹகமான காலத்துக்கும் நிர்வாஹகன் ஆனவனே –

இத்தால் –
ஸ்ர்ஷ்டியாதிகளுக்கு கர்மீபவித்தும்
அந்ய சேஷத்வத்தால் முறை யழிந்தும் –
இப்படி கால வச்யரான சேதனருக்கு -தேவரீர் அல்லது காலத்தை ஜெயிக்க விரகு இல்லை -என்கை
காலம் ஸபச தே யத்ர நகாலஸ் தத்ர வை ப்ரபு -என்னக் கடவது இறே

மண் கண்ணுள் அல்லதில்லை என்று -கீழே அன்வயிக்க்கவுமாம்
அப் பஷத்தில்-மகாபலி- பிரளயம் ஆகிய விரோதிகளை உன் பேறாக வென்ற -என்கை

பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண ! –
மதுரா மதுரா லாபா -என்கிற பேச்சையும் பருவத்தையும் உடைய திரு முலைத் தடத்தையே-

அபாஸ்ரயமாக உடைய புண்டரீகாஷனே

இத்தால்-
பருவத்தாலும் -பேச்சாலும் -அவயவ சோபையாலும் -விலஷணமான பிராட்டிக்கு
வல்லபன் ஆகையாலே -பூர்வ வ்ர்த்தத்தை விஸ்மரித்து -என் பக்கலிலே
கீழ்ச் சொன்ன ஆபத் சகத்வாதி குணப் ப்ரேரிதமான விசேஷ கடாஷத்தைப் பண்ணினவன் -என்கை –

நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே –
தேவரீரை இடைவிடாதே யநுபவிக்க வேணும் என்கிற மநோரத பிரகாரத்துக்கு
ஹேது -உன் வடிவு அழகு அல்லது வேறு ஓன்று இல்லை-

உன்னுடைய விசேஷ கடாஷத்துக்கு அடியான வாத்ஸல்யாதி குணங்கள்
ஒழிய உன் வடிவு அழகே எனக்கு இம் மநோ ரதத்துக்கு ஹேது என்கை-

———————————————————————————–

106 -பாட்டு

அவதாரிகை

நின்ன வண்ணம் அல்லதில்லை -என்று தாம் வடிவு அழகிலே துவக்குண்டபடி சொன்னார் கீழ் –

இதில் –தேவரீர் உடைய ஆபத் சகத்துவத்துக்கு அல்லது நான் நெகிழிலும்
என்னெஞ்சு வேறு ஒன்றில் ஸ்நேஹியாது என்கிறார் –

கறுத்து எதிர்ந்த  கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே -106-

பதவுரை

அன்று

முன்னொரு காலத்து
கறுத்து எதிர்ந்த காலநேமி

கோபித்து எதிரியிட்ட காலநேமியானவன்
காலனோடு கூட

யமலோகம் போய்ச்சேரும்படியாக
அறுந்த

அவன் தலையை அறுத்த
ஆழிசங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்

பஞ்சாயுதாழ்வார்களை
ஏந்தினாய்

திருக்கையிலே அணிந்து கொண்டிருக்கும் பெருமானே!
தொறு கலந்த ஊனம் அஃது

பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை
அன்று ஒழிக்க

அப்போதே போக்குவதற்காக
முன்

எல்லாருடையவும் கண்முன்னே
குன்றம் பொருத்த நீ

கோவர்ததனமலையை (குடையாகத்) தூக்கினெயேடுத்த தேவரீருடைய
புகழ்க்கு அலால்

திருக்குணங்களுக்குத் தவிர (மற்றெவ்விஷயத்திலும்)
நெஞ்சம்

எனது நெஞ்சுக்கு
ஓர் கேசம் இல்லை

சிறிதும் ப்ரதியில்லை.

வியாக்யானம் –

கறுத்து எதிர்ந்த  கால நேமி காலனோடு கூட-
க்ருத்தனாய் எதிரிட்ட கால நேமியாகிற அசுரன் ம்ர்த்யுவோடே கூடும்படி –
இந்த்ராதிகள் உடைய ஐஸ்வர்யத்தையும் -அவர்கள் பக்கல் ஈஸ்வரன் அனுக்ரஹத்தையும்
பொறாதே க்ருத்தனாய் ஆய்த்து –

ஸூ ஹ்ர்தம் சர்வ பூதாநாம் -என்கிற விஷயத்தில் கிடீர் க்ருத்தன் ஆய்த்து
ஸநோ பந்து -அஹம்வோ பாந்தவோ ஜாத -என்கிறபடியே நிருபாதிக பந்துவின்
பக்கலிலே இறே கோபித்தது

ஓர் அஞ்சலியால் நீராக கலக்கும் விஷயத்தில் துஷ்ப்ரக்ர்தி யாகையாலே
எதிரம்பு கோத்து நசித்தான் -என்கை

அனுகூலித்தாரை உன்னோடு கூட்டுகையும்
பிரதிகூலித்தாரை யமனொடு கூட்டுகையும்
இறே தேவரீருக்கு ஸ்வபாவம்  –

அன்று –
கால நேமி யாலே இந்த்ராதிகளுக்கு ஆபத்து வந்த அன்று

அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் –
ஸ பரிகரனான கால நேமியை தலை அறுத்த திரு வாழி தொடக்கமான
ஸ்ரீ பஞ்சாயுதங்களைத் தரித்தவனே -திருவாழி யாலே அவன் தலை அறுப்புண்ட பின்னும்

தேவர்களுக்கு எவராலே என்ன விரோதம் வருகிறதோ -என்று –
கை கழலா நேமியான் -என்கிற படியே திவ்ய ஆயுத தரனாய் இருக்கிறபடி –

தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க –
இந்த்ராதிகளுக்கு அசுரனால் வந்த ஆபத்தை போக்கின்படி சொல்லிற்று  -கீழ்
இந்த்ரனால் பசுக்களுக்கும் இடையர்களுக்கும் வந்த ஆபத்தை போக்கின்படி சொல்லுகிறது -மேல்

பசுக்களுக்கு அநுபவ விநாச்யமான ஆபத்தை போக்குகைக்காக
அசுரர்களால் வந்த ஆபத்துக்கு ரஷ்யனான இந்த்ரனால் வந்த ஆபத்து ஆகையாலே
அநுபவித்தே அறும் ஆய்த்து

அன்று –
கோகோ பீஜ ந சங்குல மதீ வார்த்தம் -என்கிற தசையிலே-

தொறு  -பசு

குன்ற முன் பொறுத்த நின் புகழ்க்கலால் –
கோவர்த்தநத்தை தரித்து ரஷித்த உன் கல்யாண குணத்துக்கு அல்லது
இந்த்ரன் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸ்திதன் அல்லாமையாலே -அழியச் செய்யும்
திவ்ய ஆயுதங்கள் உண்டாய் இருக்க -தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தை மலையை எடுத்து
நோக்கினான் -என்கை

முன் -என்கிறது -ஒருத்தருக்கு நோவு வருவதருக்கு முன்னம் என்கை

வரை முன் ஏந்தும் -என்று அவன் அநாயாசேந தரிக்கச் செய்தேயும் –
அவன் சௌகுமார்யத்தை அனுசந்தித்து –பொறுத்த -என்கிறார் இவர் –

ஓர் நேசம் இல்லை நெஞ்சமே –
வ்யக்த்யந்தரத்தில் ஆதல் –
குணாந்த்ரத்தில் ஆதல் –
எனக்கு ப்ராவண்யம் சம்பவிக்கிலும் என் மனசுக்கு ப்ராவண்ய லேசம் இல்லை

ஆக –
ப்ரயோஜநாந்த பரரான இந்த்ராதிகள் உடைய ஆபத்தை ஆயுதத்தாலே அழித்தும்
ஸ்வ அபிமாநத்துக்கு உள்ளே கிடக்கிற பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை
மலையை எடுத்து ரஷித்தும்
இப்படியால் வந்த உன் ஆபத் சகத்வத்துக்கு அல்லது
என் நெஞ்சுக்கு வேறு ஒரு ஸ்நேஹம் இல்லை என்றது ஆய்த்து

————————————————————————————-

107-பாட்டு –

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலும் –
தமக்கும் தம் உடைய திரு உள்ளத்துக்கும் உண்டான பகவத் பிரேமத்துக்கு அடியான
வடிவு அழகையும்
ஆபத் சகத்வத்தையும்
பேசினார் –

இதில் –
அந்த சங்க விரோதியான பிரபல ப்ரதிபந்தங்களை பிரபலமான அசுரர்களை அழியச் செய்தாப்
போலே போக்கின உன் திருவடிகளுக்கு அல்லது
வேறு ஒரு விஷயத்தில் நான் சங்கம் பண்ணேன் என்கிறார் –

காய்சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

பதவுரை

எம் ஈசனே

எம்பெருமானே!
காய் சினந்த காசிமன்னன்

மஹா கோபியான காசிராஜாவும்
வக்கரன்

(ருக்மினி விவாஹ காலத்தில் வந்து போர் செய்த) தந்தவக்த்ரனும்
பவுண்டிரன்

பௌண்ட்ரக வாஸுதேவனும்
மா சினந்த மாலி

அதிகோபிஷ்டனான மாலியும்
மா கமாலி

மஹானான ஸுலிமாலியும்
கேசி

(குதிரை வடிவங்கொண்டு கொல்ல வந்த) கேசியும்
தேனுகன்

தேநுகாஸுரனும்
நாசம் உற்று வீழ

துக்கத்தையநுபவித்து மாண்டு போம்படியாக
நாள் கவர்ந்த

(அவர்களுடைய) வாழ்நாளை முடித்த
நின்

தேவரீருடைய
கழற்கு அலால்

திருவடிகளுக்குத் தவிர
எத்திறந்தும்

வேறு எவ்விஷயத்திலும்
நேச பாசம்

ஆசாபாசத்தை
வைத்திடேன்

வைக்கமாட்டேன்

வியாக்யானம் –

காய்சினத்த காசி மன்னன் –
காயும் சினத்தைஉடைய காசி ராஜன் –
சாத்விகரைக் கொன்று அல்லது விடாதே கோபத்தை உடையவன் -என்கை –

காய்தல்-கொல்லல்

அப்படி இருக்கும் தந்த –வக்கிரன் பவுண்டிரன்
ஈச்வரோஹம் -என்று இருக்கும் பௌண்ட்ரக -வாசுதேவன்-

மாசினத்த மாலி-
பெரிய சினத்தை உடைய மாலி

மான் சுமாலி –
மஹானான ஸூ மாலி
சினத்தை உடையவனுமாய் பத்ராகாரனுமாய் இருக்குமவன் -என்கை

கேசி –
ஸ்வர்க்க வாசிகளான தேவதைகளுக்கும் பாதகனான கேசி –

தேனுகன் –
க்ர்ஷ்ணனை அனுவர்த்திக்கும் இடையருக்கும் பசுக்களுக்கும் பயங்கரனான தேனுகன் –

இவ் வசுர வர்க்கத்தின் க்ரௌர்யத்தை பேசிற்று -தம்முடைய பிரதிபந்தங்களை-க்ரௌர்யம் தோற்றுகைக்காக

நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –
துக்கத்தை அனுபவித்து ம்ர்தராய் விழும்படி ஆயுஸை வாங்கின

நாசம் -துக்கம்

வீழ்தல் -என்று விடுதலாய் -பிராணனை விடும்படி என்னவுமாம்

இத்தால் –
ஆ ஸ்ரீ த விரோதிகளை ஸ்வ சத்ருக்களைப் போலே கண்ணற்று க்ரூரமாக வகுத்தபடி

நின் கழற்கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் –
விரோதி நிரசன சீலனான உன் திருவடிகளில் அல்லது
பக்தியாகிற கயிற்றை எவ் விஷயத்திலும் வையேன் –

பந்தகம் என்கையாலே பக்தியை கயிறு என்கிறது

எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -என்னக் கடவது இறே

எம் ஈசனே –
என்  நாதனே

விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும்
தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு விரோதியான பாபங்களையும் போக்கி
இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை

—————————————————————————————-

108-பாட்டு –

அவதாரிகை –

நின் புகழ்க்கலால் ஒரு நேசம் இல்லை நெஞ்சம் -என்றும் –
நின் கழற் கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் -என்றும் -சொல்லக் கடவது இறே
இதுக்கு விஷயமாக நம்மைக் கிட்டி அநுபவிக்கப் பார்த்தாலோ என்ன –

போக மோஷ சுகங்களை அனுபவிக்கப் பெற்றாலும்
உன்னை ப்ராபிக்க வேணும் என்னும் ஆசை ஒழிய
மற்று ஒன்றை விரும்பேன் -என்கிறார் –

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே -108-

பதவுரை

கேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன்

அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன
கெடும் வரத்து அரன்

எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு     பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய)
நாடினோடு கூட

நாடுகளோடு கூட
கூடும் ஆசை அல்லது

எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர
நாட்டம் ஆயிரத்தன் நாடு

ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும்
கண்ணீரும்

அடையப்பெறுவதாயிருந்தாலும்
வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்

மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும்
ஒன்று குறிப்பில் கொள்வனோ

மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ.

வியாக்யானம் –

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன் –
கேடில் சீர் வரத்தனாய -அயன் -கெடும் வரத்தனாய அரன் –
அழிவில்லாத சம்பத்தை உடையனாம்படி பகவத் பிரசாதத்தை உடையனாய் இருக்கிற ப்ரஹ்மா
சர்வத்துக்கும் தன்னாலே உப சம்ஹாரம் ஆம்படி பகவத் ப்ரசாதம் பெற்ற ருத்ரன் –

அதவா –
அழிவில்லாத சம்பத்தை உடையவனாய் -வர ப்ரதாந ஷமனான ருத்ரனும் என்றுமாம் –

நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும் –
இவர்களுடைய நாட்டோடே கூட ஸஹஸ்ராஷனுடைய நாட்டையும் பெற்றாலும் –

நாட்டம் -கண்

நாடு -என்று நாட்டில் உள்ள விஷயங்களை நினைக்கிறது –

அதாகிறது -ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய மூவகைப்பட்ட ஐஸ்வர்யத்தை நான் ஒருத்தனும் பெற்றாலும் –
இவ் ஐஸ்வர்யம் மூன்றுக்கும் ஏகாஸ்ரயத்தில் சம்பாவனை இல்லை இறே -கூடாதது கூடினாலும்-

வீடதான போகமெய்தி –
அதுக்கு மேலே
பரம புருஷார்த்த லஷணமான போகத்தை ப்ராபித்து

மோஷம் ஆகிறது –
சம்சார நிவ்ர்த்தி மாத்ரம் ஆதல் –
ஒரு தேச விசேஷ ப்ராப்தி யாதல் -அன்று –
கைங்கர்ய போகம் என்கை-

வீற்று இருந்த போதிலும் –
கைங்கர்ய உபகரணங்கள் குறைவற்று இருந்த போதிலும் -என்னுதல்
நிரதிசய ஆனந்த நிர்பரனாய் இருந்த போதிலும் -என்னுதல்
கைங்கர்ய உபகரண சம்பத்தி சங்கல்ப மாத்ரத்திலே உண்டாமது இறே
போக மோஷங்கள் ஏக ஆஸ்ரயத்தில் சம்பவிக்கிலும்-

கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே –
உன்னைக் கூட வேணும் என்னும் யாசை யல்லது வேறு ஒன்றை நெஞ்சால் விரும்புவனோ-

தர்மார்த்தகாமை கிந்தஸ்ய முக்திஸ் தஸ்ய கரேஸ்திதா
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ்ஸ் திராத்வயி -என்றும் –

விஞ்ஞானம் யதிதம் ப்ராப்தம் -என்று இ றே
பகவத் ஜ்ஞான பக்திகள் ரசித்தவர்கள் உடைய வார்த்தை –

———————————————————————————-

109-பாட்டு

அவதாரிகை –

கீழ்-நம் பக்கல் உமக்கு உண்டாகச் சொன்ன ஆசை -ஸ்வ யத்னத்தாலே அநவரத பாவனை
பண்ணியும் -சததம் கீர்த்தனம் பண்ணியும் பெறுவார் உடைய ஆசை போல் இருந்ததீ –

நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டும் -என்றும் –
திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவனே -என்றும் தொடங்கி
நின் நின் பெயர் உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே -என்றும் –
கூடும் ஆசை யல்லதொன்று கொள்வேனோ -என்றும்
பேசினீரே என்ன –

உன்னுடைய ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் என்னைப் ப்ரேரிக்க
காலஷேப அர்த்தமாக பேசி நின்ற இத்தனை –
அது தானும் வேதங்களும் -வைதிக புருஷர்களும் பேசிப் போரக் காண்கையாலே
பேசினேன் இத்தனை -என்கிறார்

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே  பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் –109-

பதவுரை

சுருங்குவாரை இன்றியே

சுருங்கச்செய்வதற்கு ஹேதுவான கருமமம் முதலியவை ஒன்றுமில்லாமலே
சுருங்கினாய்

(ஸ்ரீவாமனாகச்) சுருங்கின பெருமானே!
சுருங்கியும் பெருக்கு வாரை இன்றியே

அப்படிக் குறுகினபின்னும் பெருகச் செய்வதற்கு ஹேதுவான கருமம் முதலியவை ஒன்றுமில்லாமல்
பெருக்கம் எய்து

(த்ரிவிக்ரமனாகத்) திருவளர்த்தி
பெற்றியோய்

பெற்ற பெருமானே
செருக்குவார்கள்

அஹங்காரிகளாய்த் திரிந்த மஹாபலி போல்வாருடைய
தீ குணங்கள்

அஹங்கார மமகாரங்களாகிற தீயகுணங்களை
தீர்த்த

தொலைத்தருளின

தேவதேவன்! தேவாதிதேவனே!

என்று

இவ்வாறு பல ஸம்போதகங்களையிட்டு
இருக்குவாய் முனி கணங்கள் ஏந்த

வேதமோதும் வாயையுடையரான  மஹரிஷிகளின் திரள் துதிக்க (அதைக்கண்டு)
யானும் ஏத்தினேன்

அடியேனும் துதித்தனித்தனை.

வியாக்யானம் –

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் –
ஒரு கர்மத்தாலே ஒரு காலத்திலே-ஒரு கர்த்தாவால் உண்டாம் ஹ்ராஸம் இன்றிக்கே
ஆஸ்ரித அனுக்ரஹம் ப்ரேரிக்க
இச்சையாலே
வாமனன் ஆனாய் –
சேதனர் கர்ம பேதத்தாலும் க்ர்தர் பேதத்தாலும் க்ரிமி கீடங்களாகா நின்றார்கள் இறே-

கலி காலமும் சேதனரை அங்குஷ்ட மாதரம் ஆக்கா நின்றது இறே

சங்கா ப்ரேவேச சமயத்தில் அந்ய பாரதந்த்ர்யத்தால் திருவடி ஹ்ர்ஸ்வ பூதனான் இறே

சுருங்கியும் —அப்படியே சிறுகி இருக்கச் செய்தேயும்-

பெருக்குவாரை இன்றியே  பெருக்கமெய்து பெற்றியோய் –
பூர்வோக்தமான வ்ர்த்தி ஹேதுக்கள் இன்றிக்கே இருக்க பெருக்கம் எய்தும் ஸ்வபாவனே

பெற்றி -இயல்வு

இத்தால் -அர்த்தித்வத்துக்கு ஏகாந்தமான வாமன வேஷத்தைக் கொண்டு
கையிலே நீர் விழுந்த சமநந்தரத்திலே செய்தது யாய்த்து –

ப்ரீதி பிரகர்ஷத்தாலே வளர்ந்து –
சதுர்தச புவனங்களில் உண்டான சகல சேதனர் தலையிலும் -வரையாதே –
திருவடிகளை வைக்கையாலே –
ஆஸ்ரிதர் அர்த்தமாக வ்ர்த்தி ஹ்ராஸா திகள் இவனுக்கு ஸ்வாபாவிகம் -என்கை

செருக்குவார்கள் –
இந்த்ராதிகளை நலிந்து -த்ரை லோக்யத்தை அபஹரித்து –
நயஷ்டவ்யம் நதாதவ்யம் -என்று ஈஸ்வர ஆஞ்ஞையை அதிலங்கித்து
இப்படி செய்தோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே செருத்தி வர்த்திக்கிற மகாபலி போல்வார் உடைய

தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற நாசகரமான ஸ்வபாவத்தை தன்னுடைய அர்த்தித்வத்தால்-தவிர்த்து –

இந்த்ராதிகளுக்கு குடி இருப்பை கொடுத்த சர்வேஸ்வரனே

என்று இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த –
இப்பாசுரத்தாலே
த்ரை விக்ரம அபதாநத்தைப் பற்றி வேத ஸ்தலங்களும்
வைதிகரான முனி சமூஹங்களும்
விசக்ரமே ப்ர்திவீ மேஷ ஏதாம் -என்றும் –
த்ரிர்த் தேவ ப்ர்திவீ மேஷ ஏதாம் -என்றும் –
இத்யாதி வேதங்களும் –
சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ் தை ததா மநுஷ் யைர்க்கநேச கேசரை ஸ்துத
இத்யாதிகளாலே சௌந காதிகளும்
ஏத்தக் கண்டவாறே

யானும் ஏத்தினேன்

தேவரீர் உடைய சௌலப்யத்தையும் -விரோதி நிரசன சீலத்தையும் பேசி
கால ஷேபம் பண்ணி யல்லது நிற்க மாட்டாமையாலே
யானும் ஏத்தினேன் இத்தனை
இது ஒழிய ஒரு சாதனா புத்த்யா ஏத்தினேன் அல்லேன் -என்கை-

————————————————————————————

110 பாட்டு –

அவதாரிகை –

தத்விப்ராசோ விபந்யவ -என்கிறபடியே -அஸ்பர்ஷ்ட சம்சார கந்தரும் -தேவர்களும் –
முநிக் கணங்களும் -ஏத்திப் போந்த விஷயத்தை –நித்ய சம்சாரியாப் போந்த நான் ஏத்தக்
கடவேன் அல்லேன் -தான் செல்லாமையால் புகழ்ந்தான் என்று திரு உள்ளம் பற்றி
பொறுத்தருள வேணும் என்று –
கீழ்-ஏத்தினேன் -என்றதற்கு ஷாபணம் பண்ணுகிறார் –

தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே -110-

பதவுரை

கரும்பு உலாவு

வண்டுகள் உலாவப்பெற்ற
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய
மாய!

ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே!
நாயினேன்

நீசனான அடியேன்
தூயனாயும்

பரிசுத்தனாகவோ
அன்றியும்

பரிசுத்தனல்லாதவனாகவோ
நின்னை

தேவரீரை
வணங்கி

ஸேவித்து
வேலை நீர்  பாயலோடு

திருப்பாற்கடலாகிற படுக்கை யோடுங்கூட
பக்தர் சித்தர்

பக்தர்களுடைய ஹ்ருதயத்திலே
மேய

குடியிருக்கின்ற
வேலைவண்ணனே!

கடல்வண்ணனே!
வாழ்த்தும் இது எலாம்

துதிப்பதாகிற இதனையெல்லாம்
நீயும்

(ஸர்வஸஹிஷ்ணுவான) தேவரீரும்
நின் குறிப்பினில் பொறுத்து

திருவுள்ளத்திலே க்ஷமித்திருள்
நல்கு

அநுக்ரஹம் செய்ய வேணும்.

வியாக்யானம்-

தூயனாயும் அன்றியும் –
ஷேத்ரஜ்ஞஸ் யேச்வர ஜ்ஞாநாத் விசுத்தி பரமா மதா -என்கிறபடியே தேவரீர் உடைய
பாவநத்தை அனுசந்தித்து நான் யோக்யன் என்று பரிமாறியும் –
ஆகர்ஷமான தேவரீர் உடைய வடிவைக் கண்டு மேல் விழுந்து நான் நித்ய சம்சாரி
என்று புத்தி பண்ணாதே பரிமாறியும் –

அதவா-

நஹிஜ்ஞாநேநஸ த்ர்சம் பவித்ர மிஹ வித்யதே -என்கிறபடியே
ஸ்வரூப ஜ்ஞானத்தாலே சுத்தன் என்று பரிமாறியும்

அந்த ஸ்வரூபத்துக்கு அஹங்கார மமகாரங்களால்  பிறந்த அசுத்தியையும் புத்தி பண்ணாதே
பரிமாறியும் போந்தேன் என்றுமாம் –

சுரும்பு உலாய தண் துழாய மாய –
தம் தண்மையையும் -அத்தலையில் வை லஷண்யத்தையும் பாராதே
யோக்யன் என்று பிரமிக்கைக்கு ஹேது சொல்லுகிறது –

வண்டுகள் அபிநிவேசிக்கும் திருத் துழாயாலே அலங்க்ர்தமாய் ஆச்சர்யமான
குண சேஷ்டிதங்களை வுடையவனே –

திர்யக்குகளுக்கும் ஸ்பர்ஹை பண்ண வேண்டும்படி இறே போக்யதை இருப்பது –
ஒப்பனை அழகும் குண சேஷ்டிதங்களும் ஆய்த்து இவரை மேல் விழப் பண்ணிற்று

நின்னை –
சர்வாதிகனாய் -பரம பாவநனாய் -ஸூ ரி போக்யனாய் -இருக்கிற உன்னை –

நாயினேன் –
உன்னுடைய உத்கர்ஷத்துக்கு அவதி இல்லாப் போலே –
என்னுடைய நிகர்ஷத்துக்கு அவதி இல்லை -என்கிறார் –

நாயினேன் –
திறந்த வாசல் எல்லாம் நுழைந்து –
நுழைந்த வாசல் எல்லா வற்றிலும் பரி பூதனாய் –
தேவரீர் உகந்து தொடிலும் அன்குத்தைக்கு அவத்யம் விளையும்படி
ஸ்வரூபத்தை உடைய நான் –

வணங்கி வாழ்த்துமீதெலாம் –
ஒன்றைச் செய்து அதற்க்கு ஷாமணம் பண்ணுகிறேனோ –
திருவடிகளில் தலையார வணங்கி -வாயார வாழ்த்திப் -போருகிற ஈதெல்லாம் –

நீயும் –
நானும் பிரேமத்தால் தவிர மாட்டுகிறிலேன்
க்ஷமையை ஸ்வ பாவமாக உடைய நீயும் பொறுக்க வேணும்

நின் குறிப்பினில் பொறுத்து நல்கு –
காக -சிசுபாலாதிகள் உடைய அபராதத்தை திரு உள்ளத்திலே பொறுத்தால் போலே-
என் அபராதத்தையும் திரு உள்ளத்தாலே  பொறுத்து –
அவ்வளவு அன்றிக்கே –
இவன் பராதி கூல்யத்தில் வ்யவஸ்திதன் அல்லன் என்று ப்ரசாதத்தைப் பண்ணி
அருள வேணும்

வேலை நீர் பாயலோடு பத்தர் சித்தர் மேய வேலை வண்ணனே –
இது தம்மைப் பெறுகைக்கு ஹேது அருளிச் செய்கிறார்

திருப் பாற் கடலிலே படுக்கையோடே -அக்கடல் செவ்வே நின்றாப் போல்
ஸ்ரமஹரமான வடிவோடே -ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் சகல தாபங்களும்
போம்படி நித்ய வாஸம் பண்ணும் ஸ்வபாவனே –

ஆஸ்ரிதர் உடைய ஹ்ர்தயத்தில் புகுரக் கணிசித்து -திருப் பாற் கடலிலே
அவசரப் ப்ரதீஷனாய் வந்து கண் வளர்ந்து அருளி –
ஆசாலேசம் உடையாருடைய ஹ்ர்தயத்தில் ஸ்ரமஹரமாகப் புகுருமவன் ஆகையாலே
என்னைப் பொறுத்து நல்க வேணும் -என்கிறார் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -91-100-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

May 4, 2013

91-பாட்டு-

அவதாரிகை

சாஸ்திர பலம் ப்ரயோக்த்ரி -என்று பேறு உம்மதானால் உம்முடைய விரோதி நிவ்ர்திக்கு
நீரே கடவர் ஆக வேண்டாவோ –நின்னிலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்றிலேன் –
என்கிறது எத்தாலே என்ன -ப்ராங் ந்யாயத்தாலே -அது என் என்னில் –
அசோகவ நிகையிலே இருந்த பிராட்டி  தேவரீரை லபிக்கைக்கு ராஷச வதத்தாலே
அவள் யத்னம் பண்ணும் அன்று அன்றோ நான் என்னுடைய விரோதியை போக்குகைக்கு யத்னம்
பண்ணுவது -ஆனபின்பு
அநந்ய கதியாய்
அகிஞ்சனான என்னை
ஸ்வ ரஷணத்தில் மூட்டி அகற்றாது ஒழிய வேணும் -என்கிறார் –

பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே -91-

பதவுரை

பண் உலாவும் மென்மொழி

(குறிஞ்சி காந்தாரம் காமரம் முதலிய) ராகங்கள் விளங்குகின்ற இனிய பேச்சை யுடையவளும்
படை தடம்கணாள் பொருட்டு

வாள் போன்று பெரிய கண்களையுடையவளுமான பிராட்டிக்காக
எண் இலா அரக்கரை

கணக்கிலாத ராக்ஷஸரை
நெருப்பினால்

அம்புகளின் தீயினால்
நெருக்கினாய்

தொலைத்தருளினவனே!
கண் அலால்

(எனக்கு நீ) நிர்வாஹகனேயொழிய
ஓர் கண் இலேன்

வேறொரு நிர்வாஹகனே காணுடையேனல்லேன்;
கலந்த சுற்றும்மற்று இலேன்

நெஞ்சு பொருந்தின உறவும் வேறில்லை;
எண் இலாத மாய!

அநந்தமான ஆச்சரிய சக்தியையுடையவனே!
நின்னை

உன்னை
என்றும்

எக்காலத்திலும்
என்னுள் நீக்கல்

என்னைவிட்டுப் ப்ரிக்கவே கூடாது.

வியாக்யானம் –

பண்ணுலாவு மென் மொழி –
பண்ணோடு சேர்ந்த ம்ர்துவான பேச்சை உடையவள்
மதுரா மதுரா லாபா கிமாஹ மம பாமி நீ -என்று சக்ரவர்த்தி திருமகன் வாய்
புலத்தும்படியான வார்த்தைப்பாடு உடையவள் -என்கை
பண்ணை வென்ற இன்சொல் மங்கை -என்றவள் இறே

படைத் தடம் கணாள் பொருட்டு –
வாள் போல் ஒளியையும் இடமும் உடைத்தான திருக் கண்களை உடைய ஸ்ரீ ஜனக ராஜன்
திருமகள் பொருட்டு –
நஜீவேயம் ஷணம்பிவி நாதா மஸி தேஷணம் -என்று அவர் வ்யதிரேகத்தில் தரிக்க
மாட்டாத கண்கள் இறே

ஆக -எதிர்தலையை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் பேச்சு அழகையும் கண் அழகையும்
உடையவள் -என்கை
தம்முடைய வெறுமையை சொல்ல இழிந்தவர் பிராட்டி உடைய ஏற்றங்களை சொல்லுகிறது –
நிஷ்க்ர்ஷ்டமான இவ்வாத்ம ஸ்வரூபம் –
பிராட்டியோபாதியும்
ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதியும்
விலஷணம் என்கைக்காக-

ஜ்ஞானம் பிறந்த பின்பு -பிராட்டி அசோகவநிகையில் இருந்தால் போலே
அசஹ்யமாக  இ றே சேதனனுக்கு சரீர வாசம்

எண்ணிலா வரக்கரை –
அவளைப் போலே விரோதிகள் அசந்க்யதராக வேணுமோ -அஞ்ஞன் ஆனால் ஆகாதோ

நெருப்பினால் நெருக்கினாய் கண் –

சர அக்நியால் அழியச் செய்த நீ -எனக்கு நிர்வாஹகன் என்னுதல் –

எதா ராகவ நிர்முக்தச்சர -என்கிறபடியே சரஸ்தா நீயனான திருவடியை இட்டு
இலங்கையை தஹித்து -ராஷசரை கண் கலங்கும்படி பண்ணின நீ
எனக்கு நிர்வாஹகன் என்னுதல் –

இத்தால் –என்னுடைய விரோதி வர்க்கத்தையும்
பஸ்மமாக பண்ண வேணும் என்கை-

அலாலோர் கண் இலேன் –
லோகாநாம் த்வம் பரோ தர்ம -என்கிற தேவரீரை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன் –
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சம் -என்கிறார் –
நத்வா குர்மி தசக்ரவ பச்ம  -என்று

பிராட்டிக்கு சக்தி உண்டாய் இருக்க ப்ராப்தி இல்லாதே-தவிர்ந்தாள் –

எனக்கு சக்தியும் இல்லை என்கிறார்

கலந்த சுற்றம் மற்றிலேன் –
நெஞ்சுக்கு பொருந்தின பந்து வர்க்கத்தை வேறு உடையேன் அல்லேன் –
உத்பாதகரான மாதா பிதாக்கள் தைவம் ரஷிக்கிறது என்று காட்டில் விட்டுப் போனார்கள்-

வளர்த்தவர்களை -பிதரம் மாதரம் தாரான் -என்கிறபடியே நான் விட்டேன் –
ப்ராதா பர்த்தா ச பந்துச்ச பிதாச மம ராகவ -என்கிறபடியே சர்வ பந்தும் தேவரீரே என்கிறார் –

பிராட்டிக்கு தனி இருப்பிலே திருவடி வந்து முகம் காட்டினார்
அப்படியே இருப்பதொரு  குளிர்ந்த  விழியும் தேவரீரை ஒழிய எனக்கு இல்லை என்கிறார்-

ஜனக குலத்தில் பிறந்த ஆபி சாத்தியம் உண்டு அவளுக்கு-

குலங்களாய வீரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்றீர் இ றே நீர் என்ன
எண்ணிலாத மாய –
அசங்யேயமான ஆச்சர்ய சக்தியை உடையவன் அல்லையோ –

இத்தால் –
நிஹீந ஜன்மாவாய்
சாஸ்திர அதிகாரியுமாயும் அன்றிக்கே இருந்துள்ள
பஷிக்கு மோஷம் கொடுத்த சக்தி யன்றோ தேவரீருடைய சக்தி –என்கை

ராவணன் குறி யழியாதே இருக்க -இக்கரையில் அவன் தம்பிக்கு லங்கா ராஜ்யத்துக்கு அபிஷேகம்
பண்ணிற்று அவன் ஜன்மம் பார்த்தோ -அபிஜ்ஞோ ராஜ தர்மாணாம் -என்கிறபடியே
அவன் ஜ்ஞானாதிகன் அன்றோ என்ன –

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றிற்று ஜ்ஞான அஜ்ஞானங்களில் உள்மானம்-புறமானம் பார்த்தோ

நின்னை என்னுள் நீக்கல் –
சர்வ சக்தியாய் இருந்துள்ள உன்னை –
அகிஞ்சனனாய் இருந்துள்ள என் பக்கலில் நின்றும்
ஷூத்ரமான உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றாது ஒழிய வேணும்

என்றுமே -நான் கலங்கின வன்றும் என்னை விடாது ஒழிய வேணும் –

——————————————————————————————

92 -பாட்டு

அவதாரிகை –

நின்னை என்னுள் நீக்கல் -என்றீர்
நாம் உம்மை அகலாது ஒழிகைக்கு நம் அளவிலே நீர் செய்தது என்ன
நாம் உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன –

நிருபாதிக சரண்யரான தேவரீர் திருவடிகளிலே ப்ரவணனான என்னை
உன்னுடைய கார்யம் எனக்கு பரம் -நீ பயப்பட  வேண்டாம் -என்று
பயம் தீர -மாசுச -என்ன வேணும் -என்கிறார் –

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே –92-

பதவுரை

வேலை நீர்

ஜலதத்துவமாகிய கடலை
படைத்து

(முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும்
அடைத்து

(ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்;
அதில் கிடந்து

(தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும்
முன்

முன்னொருகாலத்திலே
கநைடபுது

(தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்)
ஏழ்விடை குலங்கள்

நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும்
அடர்ந்து

கொழுப்படக்கி
வென்றிவேல் மண்மாதரர்

ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
கடி கலந்த

பரிமளம் மிக்க திருத்தோளோடே
புணர்ந்த

ஸம்ச்லேஷித்த
காலி ஆய

கோபாலகிருஷ்ணனே!
நின் தனக்கு

உன் பக்கலிலே
அடைக்கலம் புகுந்த என்னை

சரணம் புகுந்த என்னை நோக்கி
அஞ்சல் என்ன வேண்டும்

“பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும்.

வியாக்யானம்-

விடைக்குலம் -இத்யாதி –

முன் வேலை நீர் படைத்து -அதில் கிடந்து -கடைந்து -அடைத்து –
விடைக் குலங்கள் ஏழு அடர்த்து -வென்றி வேல் கண் மாதரார் –
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாய் -நின்றனக்கடைக்கலம் புகுந்த என்னை
அஞ்சல் என்ன வேண்டும் -என்று அந்வயம்

முன் வேலை நீர் படைத்தது –
அப ஏவஸஸர்ஜா தௌ -என்கிறபடியே -ஏகார்ணவ ஸ்ர்ஷ்டியைப் பண்ணி

வேலை நீர் -என்றது எல்லையான கடல் -என்னுதல்
திரைக் கிளர்தியை உடைய கடல் -என்னுதல்

வேலை -என்று எல்லையும் -திரையும் –

நீர் -என்று -கடல் –

அதில் கிடந்து –
அதிலே கிடந்து

ஸ்ரஷ்டமான ஜகத்திலே சேதனருக்கு ஆஸ்ரயண ருசி பிறந்தவன்று சரண்யரான நாம்
தூரஸ்தர் ஆக ஒண்ணாது என்று ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி

கடைந்து –
அக்கிடை பலித்து தேவர்கள் ஐஸ்வர்யத்தை இழக்க
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் சமஸ்தா தேவதா கணா -என்கிறபடி சரணம் புக
அவர்கள் இழந்தவற்றை –கடலைக் கடைந்து -அக்கடலிலே உண்டாக்கிக் கொடுத்தவன் -என்கை

அடைத்து –
அந்த தேவதைகளை குடி இருப்பு அழியும்படி அதிக்ரமத்திலே நடந்த ராவணாதி
கண்டக நிரசன அர்த்தமாக -தசரதாத் மஜனாய் வந்து அவதரித்து லவணார்ணவத்தை யடைத்து –

விடைக்குலம் -இத்யாதி –
ப்ரஹ்மாதிகளுக்கு சரண்யனாய் அவர்கள் ஆபத்திலே உதவின வளவு அன்றிக்கே
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைக்காக கோப சஜாதீயனாய் வந்து அவதரித்து
ரஷித்த படி சொல்லுகிறது மேல்

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து –
விடை ஏழு அடர்த்து -என்னுதல்
விடைக்குலம் -அடர்த்து என்னுதல் செய்யாதே இப்படி சொல்லுகிறது –
சாதூர் வர்ண்யம் மயா ஸ்ர்ஷ்டம் -என்கிறபடியே  கோப ஜாதியிலும் வர்ண பேதம் உண்டாகையாலே
நாநா ஸ்வபாவங்களான விடை ஏழையும் மூட்டியாக நெரித்து

குலம் -வர்ணம்

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும்  பிறந்திலேன் -என்றார் இறே

வென்றி வேற் கண் மாதரார் கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா-
ஜிதந்தே புண்டரீகாஷ -என்றும் –

தூது செய் கண்கள் -என்றும் -என்கிறபடியே
சர்வரையும் கண்களாலே தோற்பிக்கும் –

தேவரீரையும் தோற்பிக்க வல்ல நோக்கை உடைய நப்பின்னை பிராட்டி உடைய
பரிமிளிதமான தோளை அநுபவித்து -அவளுக்கு பிரியமாக ரஷகாபேஷை உடைய
பசுக்கள் உடைய ரஷணமே பிரயோஜனமாய் இருக்குமவனே –

சர்வ கந்த -என்கிற அவன் திருமேனியையும் பரிமிளிதமாக்கும் தோள் -என்கை

யுவதிச்ச குமாரிணீ -என்கிறபடி ஸ்வ ஸத்ர்சமான பருவத்தை உடையவள் ஆகையாலே
செவ்வியை உடைய தோள் -என்னவுமாம்

வென்றி வேல் கண் –
வென்றியை விளைக்கும் வேல் போலே நோக்கை உடைய கண் –

கடி -என்று செவ்வியும் நாற்றமும் –

நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை –
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் –
முமுஷு ர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும் –
ஜகத்காரண வஸ்து சரண்யன் என்னும் இடம் சுருதி ஸித்தம்
சரணம் த்வா அநு ப்ராப்தா -என்றும் –
லோகாநாம் த்வம் பரோ தர்ம -என்றும்
வியூஹ விபவங்களில் சரண்யதை ஆப்த வாக்ய ஸித்தம்

அங்கன் இன்றிக்கே
மாமேகம் சரணம் வ்ரஜ –
தேவரீர் திருவடிகளிலே ப்ரவணனான என்னை

என்னை –
அநந்ய சரண்யனான என்னை

அடைக்கலம் புகுருகையாவது -என்  கார்யம் தேவரீர்க்கே  பரம் என்று இருக்கை
தவை வாஸ் மிஹி பர -என்னக் கடவது இறே

யஞ்சல் என்ன வேண்டுமே-
தேவரீர் பெருமையும்
என் சிறுமையும்
இடைச் சுவரான விரோதியின் கநத்தையும் பார்த்து
நான் அஞ்சாத படி -மாசுச -என்று ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்

மாமேகம் சரணம் வ்ரஜ -என்ற தேவரீருக்கு
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கை அரிதோ –

—————————————————————————————-

93 பாட்டு –

அவதாரிகை –

அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே -என்று பயம் கெட –மாசுசா -என்ன
வேணும் என்றீர் கீழ்-
இவ்வளவே  அமையுமே என்ன –

உபாயாந்தரங்களைக் காட்டி என்னை அகற்றாது ஒழிக்கைகாக சொன்ன வார்த்தை யன்றோ யது
தேவரீர் உடைய நிரதிசய போக்யதைக் கண்டு அனுபவிக்கிற ஆசைப்படுகிற எனக்கு
விஷயாந்தர நிவ்ர்த்தி பூர்வகமாக -தேவரீரையே நான் அனுபவிக்கும்படி
என் பக்கலிலே இரங்கி யருள வேணும் என்று பெரிய பெருமாள் திருவடிகளில்
அனுபவத்தை அபேஷிக்கிறார் –

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-

பதவுரை

கரும்பு இருந்த கட்டியே

கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே!
கடல் கிடந்த கண்ணனே

திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே!
இரும்பு

இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள்
அரங்க

அழியும்படி
வெம்சரம்

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

பிரயோகித்த
வில்

ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே!
இராமனே

இராமபிரானே!
அரங்கம் வாணனே

கோயிலில் வாழ்பவனே
கரும்பு

வண்டுகளானவை
அரங்கு

படிந்திருக்கபெற்ற
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய்
துதைத்து

நெருங்கி
அலர்ந்த

விசுஸித்திருக்கப்பெற்ற
பாதமே

(உனது) திருவடிகளையே
விரும்பி நின்று

ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு
இறைஞ்சு வேற்கு

தொழுகின்ற அடியேன் பக்கல்
இரங்கு

க்ருபைபண்ணியருள்.

வியாக்யானம்-

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே –
வண்டு படிந்த ஸ்ரமஹரமான திருத் துழாய் தாரானது அலர்ந்து வருகிற திருவடிகளையே –

இத்தால் –
திருத் துழாயோட்டை சம்பந்தத்தாலே சர்வாதிக வஸ்து என்னும் இடத்தையும்
திருவடிகளோட்டை சேர்த்தியாலே திருத் துழாய்க்கு செவ்வியும் விகாசமும் உண்டாகையாலே-

திருவடிகளோடே சேர்ந்தாருக்கு செவ்வியும் விகாசமும் உண்டாகும் என்னும் இடத்தையும் –
திருத் துழாயாலே அலங்க்ர்தமாய் இருக்கையாலே நிரதிசய போக்யம் என்னும் இடத்தையும் சொல்லிற்று –

விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு-இரங்கு –
அனுபவ ருசி பிறந்து அனுபவிக்கையிலே இழிந்த எனக்கு இரங்கு –

இவன் நாசகரமான விஷயாந்தரங்களில் நின்றும் மீளுவான் –
நிரதிசய போக்யமான தம்மை அனுபவிப்பான் -என்று க்ர்பை பண்ணி அருள  வேணும் –

தேவரீருக்கு ஒரு இரக்கம் மாதரம் -அது இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவனம்
ஆனபின்பு இத்தனையும் செய்து அருள வேணும்

அரங்க வாணனே –
கோயிலுக்கு நிர்வாஹகனாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே –
தம் தாம் பக்கலிலே முதல் இன்றிக்கே இருக்க -அனுபவத்திலே இழிந்தவர்களுக்கு
தேவரீர் அழகாலே -விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து –
தேவரீர் பக்கலில் ஆதரத்தை பிறப்பித்து –
அனுபவிக்கைக்காக  அன்றோ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறது –

போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வாய்த்த அழகன் –
என்னக் கடவது இறே

கரும்பு இருந்த கட்டியே –
இவருக்கு ருசி பிறப்பித்த உபாத்யாயரைச்   சொல்லுகிறது –

கோதுண்டாதல் -கழிக்கும் அம்சம் உண்டாதல் இன்றிக்கே
சர்வதோ முகமாய் சாரஸ் யத்தை உடைத்தாய் –
பாக விசேஷத்தால் வந்த சாரஸ்யம் யன்றிக்கே –
ஸ்வா பாவிகமான சாரஸ்யத்தை உடைத்தாய் இருப்பது ஒரு கன்னல் போலே
நிரதிசய போக்யன் ஆனவனே

கடல் கிடந்த கண்ணனே
பெரிய பெருமாள் உடைய கந்தத்தைச் சொல்லுகிறது –

திருப்பாற் கடலிலே அபேஷா நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற சௌலப்யத்தை
உடையவனே -ப்ரஹ்மாவுக்கு ஷீராப்தி நாதன் உகந்து அருளின படியாலே
அங்குத்தை சௌலப்யமும் வடிவழகும் பெரிய பெருமாள் பக்கலிலே பிரத்யபிஜ்ஜை-பண்ணலாம்படி இறே இருப்பது –

இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே –
எதிரிகள் சரீரத்திலே அழுந்தும்படி -தீப்த பாவக சங்காசமான அம்புகளை விட்ட
வில்லை உடைய தசரதாத் மஜனே –

இத்தால் –
நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே

சக்ரவர்த்தி திருமகனுடைய-வீரமும் அபிராமதையும் -பெரிய பெருமாள் பக்கலிலே அனுபவிக்கலாய் இருக்கை –

மேகச்யாயமம் மஹா பாஹூம் சர்வ சத்வ மநோ ஹரம் -என்னக் கடவது இறே

1-ப்ராப்தராய் –

2–சந்நிஹிதராய் –

3–நிரதிசய போக்ய பூதராய்-

4- -விரோதி நிரசன சீலராய் -தேவரீர் இருக்க –

5-இத்தலையில் ருசி உண்டாய் இருக்க –
நான் இழக்க வேண்டுகிறது என் –இரங்கி யருள வேணும் என்கை –

கரும்பு இருந்த கட்டியே -கடல் கிடந்த கண்ணனே -இரும்பரங்க வெஞ்சரம் துரந்த
வில்லி ராமனே -அரங்க வாணனே -சுரும்பரங்கு தண் துழாய் துதைத்து அலர்ந்த
பாதமே விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு -என்று அந்வயம்-

————————————————————————————-

94 -பாட்டு –

அவதாரிகை –

த்வத் அநுபவ விரோதிகளைப் போக்கவும் –
அதுக்கு அநுகூலங்கள் ஆனவற்றை உண்டாக்கவும் –
அநுபவம் தன்னை அவிச்சின்னமாக்கவும் வேணும் என்று அபேஷிக்க ப்ராப்தமாய் இருக்க
இரங்கு -என்று
இவ்வளவு அபேஷிக்க அமையோமோ -என்ன

உனக்கு பிரகாரமாய் இருக்குமது ஒழிய ஸ்வ தந்த்ரமாய் இருப்பதொரு பதார்த்தம்
இல்லாமையாலே என் அபிமத ஸித்திக்கு உன் இரக்கமே யமையும் –என்கிறார் –

ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –94-

பதவுரை

இராமனே

இராமபிரானே!
ஊனில் மேய ஆவி நீ

சரீரத்திலே பொருந்தியிருக்கின்ற பிராணன் நீயிட்ட வழக்கு
உற்றமோடு உணர்ச்சி நீ

ஜ்ஞாநமும் அஜ்ஞானமும் நீ விட்ட வழக்கு.
ஆனில் மேய ஐந்தும் நீ

பசுக்களிடத்து உண்டான பஞ்சகவ்யமும் நீ;
அவற்றுள் நின்ற தூய்மை நீ

அப்பஞ்ச கவ்யங்களுக்குள்ள பரிசுத்தியும் நீ ஸங்கல்பித்தது;
வானினோடு மண்ணும் நீ

நித்ய விபூதி லீலா விபூதியென்ற உபய விபூதியும் நீயிட்ட வழக்கும்
வளம் கடல் பயனும் நீ

அழகிய ஸமுத்திரத்திலுண்டான (அம்ருதம் ரத்னம் முலான) பிரயோஜனங்களும் நீ;
யானும் நீ

அடியேனு“ உன் அதீகன்;
அது அன்றி

இப்படி பலவாறு பிரித்துச் சொல்வதல்லாமல்
எம்பிரானும் நீ

ஸர்வேச்வரனும் நீ காண்.

வியாக்யானம்-

உறக்கமோடு உணர்ச்சி நீ -வளம் கடல் பயனும் நீ-ஆனில்  மேய ஐந்தும் நீ-
யவற்றின் நின்ற தூய்மை நீ -ஊனின் மேய வாவி நீ-வானினொடு மண்ணும் நீ-
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –என்று அந்வயம்

உறக்கமோடு உணர்ச்சி நீ-
தமோ குண அனுபவத்தால் வந்த நித்ரையும் –சத்வ குண கார்யமான
உணர்த்தியும் உன் ஆதீனம் –

இத்தால்-
சேதனருக்கு விஷயப்ராவண்ய ஹேதுவான அஞ்ஞானமும் –
பகவத் ப்ராவண்ய ஹேதுவான ஜ்ஞானமும் -நீ இட்ட வழக்கு -என்கை
அநாதி மாயயா ஸூ ப்த -என்று அஞ்ஞானத்தை நித்ரையாக சொல்லக் கடவது இறே

வளம் கடல் பயனும் நீ-
கண்டார்க்கு ஆகர்ஷமான கடலிலே அம்ர்தமும் ரத்நாதிகளும் உன் சங்கல்ப அதீனம்-

இது பிரயோஜனாந்தரங்களுக்கும் உப லஷணம் –

இத்தால் -உன் ப்ராவண்யத்துக்கு விரோதியாய் -அஞ்ஞான கார்யமான பந்தக
பதார்த்தங்கள் எல்லாம் நீ இட்ட வழக்கு -என்கை

ஆனில்  மேய ஐந்தும் நீ-
பசுக்களில் சுத்திகரமாய் சொல்லுகிற பஞ்சகவ்யமும் உன் அதீனம்

யவற்றின் நின்ற தூய்மை நீ –
அந்த பஞ்சகவ்யங்களுக்கு உண்டான சுத்தியும் உன் சங்கல்ப அதீனம்

பரம  பாவநரான தேவேரோட்டை ப்ரத்யா சத்தி இறே பதார்த்தங்களுக்கு சுத்தி ஹேது
கோ ப்ராஹ்மணர்க்கு பகவத் சமநராதன உபகரணங்கள் ஆகையால் இறே சுத்தி ஹேதுத்வம் –

ப்ரஹ்மணா நாம் கவாஞ்சைவ குலமே கந்த் விதாக்ர்தம்
அந்யத்ர மந்த்ராஸ் திஷ்டந்தி ஹவீரன் யத்ர திஷ்டதி -என்னக் கடவது இறே

கர்மத்துக்கு சுத்தி ஹேதுத்வம் பகவத் சமாராதானம் ஆகையாலே –
ஜ்ஞானத்துக்கு சுத்தி ஹேதுத்வம் பகவத் விஷயம் ஆகையாலே
ஷேத்ரஞ்ஞஸ் யே ச்வர ஜ்ஞாநாத் விசுத்தி பரமாமதா -என்னக் கடவது இறே

பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ -என்றும் –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே –என்றும் –

இத்தால் அநாதி காலம் விஷயாந்தர ப்ராவண்யத்தால் வந்த அசுத்தி பரிஹாரமான
பாவந பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு -என்கை

ஊனின் மேய வாவி நீ-
சரீரத்தில் தாரகமாக வர்த்திக்கிற பஞ்ச வ்ர்த்தி ப்ராணனும் நீ இட்ட வழக்கு –

இத்தால் –
சரீர ஸ்திதியும் சரீர விநியோகமும் நீ இட்ட வழக்கு என்கை

வானினொடு மண்ணும் நீ-
நிராலம்பனமான ஆகாசத்தில் வாய்வாதிகள் சஞ்சரிக்கிறதும்
நீரிலே கிடக்கிற பூமி கரையாதே சகல ஆதார பூதை யாகிறதும் உன்னாலே –

அதவா –
பந்தகமான சம்சாரமும்
முக்த ப்ராப்யமான நித்ய விபூதியும்
நீ இட்ட வழக்கு -என்றுமாம்

யானும் நீ –
பக்தனான நானும் உனக்கு பிரகார பூதன் –

இத்தால் –
எனக்கு ருசி இல்லாத வன்றும் -ததாமி புத்தி யோகந்தம் -என்கிறபடியே
என்னுடைய ருசி நீ இட்ட வழக்கு

யதன்றி –
அது ஒழிய

எம்பிரானும் நீ யிராமனே-
நினைத்தாருக்கு நினைத்ததை கொடுக்க வல்ல என்கைக்கு உதாஹரணம் சொல்லுகிறது
சக்கரவர்த்தி திருமகனரான  நீயே அகிஞ்சனரான எங்களுக்கு ஸ்வாமி

அபி வ்ர்ஷா பரிம்லாநா -என்கிறபடியே ஸ்தாவர பர்யந்தமாக
அழகாலும் சீலத்தாலும் பிரிந்து தரிக்க மாட்டாதபடி பண்ணின நீயே எங்களுக்கு
நிர்வாஹகன்

அலமத்ய ஹி புக்தேந பரமார்த்தை ர லஞ்சன
தாபச்யாமி நிர்யாந்தம் ராமம் ராஜ்யே  பிரதிஷ்டிதம் -என்றும் –

புற் பா முதலா இத்யாதி –

யாகாதிர் யஜ்ஞ சீலாநாம் -என்று ஒரு பஷிக்கு மோஷம் கொடுத்தவனே
எங்களுக்கு நிர்வாஹகன் –

அன்று சராசரங்களை வைகுந்தத்து எற்றினவனே எங்களுக்கு நிர்வாஹகன் –

————————————————————————————–

95 பாட்டு –

அவதாரிகை –

எம்பிரானும் நீ யிராமனே -என்று நினைத்தாருக்கு நினைத்ததை கொடுக்க வல்ல சக்தனுமாய்
ஸ்வ தந்த்ரனனுமான சக்கரவர்த்தி திருமகனே உபாயம் என்றார் -கீழ் –

இதில் –உபாயத்தில் தமக்கு உண்டான அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் –

பாஹ்ய விஷய ருசியைத் தவிர்த்து
உன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
கைங்கர்யத்தை பிரார்த்திக்கும்படி
புகுர நிறுத்தின நீ -என்னை உபேஷித்து விஷயாந்தர ப்ரவணனாம் படி கை விட்டாலும்
உன்னை ஒழிய வேறொரு கதி இல்லை என்று
தம்முடைய அத்யவசாயத்தை யருளிச் செய்கிறார் –

அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை
துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ
விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும்
கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே -95-

பதவுரை

எம் அண்ணலே!

எம்பெருமானே!
அடக்க அரு

அடக்க முடியாத
ஐந்து புலன்கள்

பஞ்சேந்திரியங்களை
அடக்கி

பட்டிமேயாதபடி நியமித்து
ஆசை அரும் அவை

விஷயந்தரப் பற்றுக்களை
துடக்கு அறுத்து வந்து

ஸவாஸகமாகத் தொல்லைத்து விட்டு வந்து
நின் தொழில் கண்

உன் கைங்கரியத்திலே
நின்ற

நிஷ்டனாயிருக்கிற
என்னை

அடையேனே

நீ

இவ்வளவு ஆளாக்கின நீ

விட கருதி

உபேக்ஷிக்கத் திருவள்ளம்பற்றி
மெய் செயாது

என் உஜ்ஜீவநார்த்தமான க்ருஷியை மெய்யாக நடத்தாமல்
மிக்க ஓர் ஆசை ஆக்கிலும்

விஷயாந்தரப்ராவண்யத்தை அதிகரிப்பித்தாலும்
கடல் கிடந்த நின் அலால்

க்ஷீரஸாகர சாயியான உன்னையல்லது
ஓர் கண் இலேன்

வேறொரு ஸ்வாமியையுடைய னல்லேன்.

வியாக்யானம் –

அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி –
ஆச்சார்ய உபதேசத்தாலும் சாஸ்திர வாசனையாலும் இந்த்ரியங்களை நியமிக்க
இழிந்தால் நியமிக்க வரிய ச்ரோத்ராதிகள் ஐந்தையும் -ஆகர்ஷமான
தன் வடிவைக் காட்டி -விஷயங்களில் போகாதபடி மீட்டு -அவற்றுக்கு தானே விஷயமாம்படி நியமித்து –

ஈஸ்வரன் வடிவழகைக் காட்டி மீட்டான் என்கைக்கு இங்கே சப்தம் உண்டோ -என்னில் –

கீழே –புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறி இலேன் -என்றவர் ஆகையாலே
இங்குச் சொன்ன இந்த்ரிய நியமனம் ஈச்வரனாலே என்னும் இடம் அர்த்தாத் சித்தம்

தபோ பங்கம் பண்ண வந்த ஊர்வசியை மாத்ர்புத்தியால் நமஸ்கரித்து நின்ற அர்ஜுனனும் –
தச்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் -என்னும்படி இறே
இந்திரிய நியமன அருமை இருப்பது

ஆசையாமாவை துடக்கறுத்து –
அவ்வடிவிலே பாவநத்வத்தாலே விஷயங்களில் ருசியை  வாசனையை தவிர்த்து
விஷயாந்தர ருசிக்கடி பாபமே இறே

வந்து உன் தொழில் கண் நின்ற என்னை –
புருஷார்த்தின் மேல் எல்லையில் வந்து-உன் திருவடிகளிலே கைங்கர்யத்தை அர்த்தித்து நின்ற என்னை –

நீ விடக் கருதி –
இந்த்ரிய ஜெயமே தொடங்கி -இவ்வளவும் புகுர நிறுத்தின நீ –
உபேஷிப்பாயாக நினைத்து

மெய் செயாது
ஆரம்பித்த கார்யத்தை முடிய நடத்தாதே –

மெய் செய்யாது ஒழிகையாவது -ஆத்ம உஜ்ஜீவனத்தை ஆரம்பித்து-தத் விபரீதமாக ஆசரிக்கும் மித்யா வியாபாரம் –

அந்யதா சங்கல்ப்யா ந்ய தாசரதீ தி மித்யா சாரஸ் ஸ உச்யதே -என்னக் கடவது இறே –

மிக்கோராசை யாக்கிலும் –
விஷயாந்தரங்களில் ருசியைப் பிறப்பித்தாய் ஆகிலும் –
ஸ்வ விஷயத்தில்  கர்ஷி பண்ணினவன் -சப்தாதி விஷயங்களில் ருசிக்கு
உத்பாதகனாகக் கூடாது -அப்படிக் கூடினாலும் –

கடல் கிடந்த நின்னலலார் ஓர் கண் இலேன் –
நான் அபேஷியாது இருக்க -என்னுடைய ஹித அர்த்தமாக
த்ரிபாத் விபூதியில் இருப்பை விட்டு –
சம்சார விஸத்ர்சமான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற உன்னை ஒழிய-வேறு ஒரு நிர்வாஹகரை உடையேன் அல்லேன்

எம் அண்ணலே –
அபேஷா நிரபேஷமாக என்னுடைய ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு அடி
என்னுடைய நிருபாதிக ஸ்வாமி யாகையாலே -என்கிறார்
உபேஷித்தாலும் விட மாட்டாமைக்கடி நிருபாதிக ஸ்வாமித்வம்

அண்ணல்-ஸ்வாமி

———————————————————————————–

96 -பாட்டு

அவதாரிகை –

தம்முடைய வ்யசாயத்தை அருளிச் செய்தார் கீழ் பாட்டில் –

இதில் -அஞ்சேல் என்ன வேண்டுமே -என்றும்

இரங்கு அரங்க வாணனே -என்றும்
பல படியாக அபேஷியா  நின்றீர் –

உம்முடைய ப்ராப்யத்தை நிர்ணயித்து சொல்லீர் -என்ன

நான் சம்சாரத்தை அறுத்து நின் திருவடிகளில் பொருந்தும்படியாக பிரசாதத்தைப்
பண்ணி யருள வேணும் என்று தம்முடைய ப்ராப்யத்தை பிரார்த்திக்கிறார்

வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே–96-

பதவுரை

வரம்பு இலாத மாய

அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே
மாய!

ஆச்சரியசக்தியுக்தனே!
வையம் எழும்

ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி)
மெய்ம்மையே

மெய்யாகவே
வரம்பு இல் ஊழி

பலபல கற்பகங்கள் வரையிலும்
ஏத்திலும்

தோத்திரம் பண்ணினாலும்
வரம்பு இலாத கீர்த்தியாய்

எல்லைகாண முடியாத புகழையுடையோனே!
புண்டரீகனே

புண்டரீகாக்ஷனே! (அடியேன்)
வரம்பு இலாயா

முடிவில்லாமல் நேரக்கூடியவனான
பல் பிறப்பு

பற்பல ஜன்மங்களை
அறுத்து

இன்றோடு முடித்துவிட்டு
நின் கழல் வந்து

உனது திருவடிகளைக் கிட்டி
பொருந்தும் ஆ

அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி
திருந்த

நன்றாக
நீ வரம் செய்

அநுக்ரஹித்தருள வேணும்

வியாக்யானம்-

வரம்பிலாத மாயமாயா –
அளவிறந்த ஸ்வரூபத்தையும் அளவிறந்த மஹதாதி பரிணாமங்களையும்
உடைத்தான ப்ர்க்ர்தி தத்தவத்தை -ஸ்வ அதீனமாக உடையவனே –

மாயை -ப்ரக்ர்தி

அநந்தஸ்யந தச்யாந்தம் சங்க்யா நாம் வாபி வித்யதே -என்னக் கடவது இறே

இத்தால் –பந்தகமான ப்ரகர்தி நீ இட்ட வழக்கு என்கை

மாயம் -ஆச்சர்யம்

இத்தால் -கீழ் சொன்ன ப்ரக்ர்தியில் பக்தராய் -தன்நிவ்ர்த்தி அர்த்தமாக தேவரீரை
ஆஸ்ரயித்த சேதனருக்கு தத் சம்பந்தத்தை அறுத்து கொடுக்கைக்கு அடியான
ஜ்ஞான சக்தியாதி குணங்களை உடையவனே -என்கை

வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய் –
சப்த லோகங்களும் ஸ்தோத்தாக்களாக –
தம்தாமுடைய சேஷத்வத்தை உணர்ந்து –
ஸ்வரூப அநுரூபமாக அநந்ய பரராய் கொண்டு –
அசந்க்யாதமான கல்பங்கள் எல்லாம் ஏத்தினாலும் எல்லை காண ஒண்ணாத ரஷகத்வ-ப்ரதையை உடையவனே –

இத்தால் –அசித் சம்சர்க்கத்தை அறுத்து -திருவடிகளோடே சேர்த்து ரஷித்து போந்த
ரஷகத்வ ப்ரதையை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை-

வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா வக்தும் ஸமேதைரபி சர்வ லோகை
சதுர்முகா யுர்யதி கோடிவக்த்ர

வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து-
நம்மைப் புகழாதே அபேஷிதத்தை சொல்லீர் -என்ன
அசந்யேயமான பல வகைப்பட்ட பிறப்பை யறுத்து

பல வகை -யாவது தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள்
அசந்க்யாதம் ஆவது -ஒரு ஜாதியில் பிறக்கும் ஜன்மத்துக்கும் தொகை யற்று இருக்கை

காலம் -அநாதி
ஆத்மா-நித்யன்
பண்ணி வைக்க வல்ல கர்மங்களுக்கு அவதி யில்லாமையாலே
கர்ம அநு குணமாகப் பிறக்கஇருக்கிற பிறவிக்குத் தொகை இல்லை
ஜன்மங்களை யறுத்து

வந்து நின் கழல் பொருந்துமாறு –
அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே வந்து –
ஸூரி போக்யமான திருவடிகளில்
சாயாவா சத்வம் அநு கச்சேத் -என்கிறபடி -ப்ரதக் ஸ்தித்யநர்ஹமாக -பொருந்தும்படியாக-

திருந்த –
நோபஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே திருவடிகளுக்கு புறம்பானவற்றை
ஸ்மரியாதே -கைங்கர்ய சுகமே சுகமாம் படி

நீ வரம் செய் –
என்னுடைய உஜ்ஜீவன அர்த்தமாக -ஆள் பார்த்து உழி தருகிற நீ –
பிரசாதத்தை பண்ணி யருள வேணும்

புண்டரீகனே-புண்டரீக அவயவனே
புண்டரீகாஷனே
திருக்கண்களே ப்ரசுரமாய் இருக்கையாலே –புண்டரீகன் -என்கிறார்
விஜ்ஞானம் யஜ்ஞம் தநுதே -என்னக் கடவது இறே

இத்தால் -பிரசாதத்தை பண்ணுகை யாவது -ஒரு விசேஷ கடாஷம் என்கிறார்

———————————————————————————

97-பாட்டு –

அவதாரிகை –

வரம் செய் புண்டரீகனே –என்னா நின்றீர் –
நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய பக்கல் ஒரு முதல் வேண்டாவோ -என்ன

திரு மார்பிலே பிராட்டி எழுந்து அருளி இருக்க –
திருக் கையிலே திவ்ய ஆயுதங்கள் இருக்க
ஒரு முதல் வேணுமோ

அங்கனம் ஒரு நிர்பந்தம் தேவரீருக்கு உண்டாகில்
என் விரோதியைப் போக்கி
உன்னைக் கிட்டி அடிமை செய்கைக்கு
ஹேதுவாய் இருப்பதோர் உபாயத்தை தேவரீரே தந்து அருள வேணும் என்கிறார்

அகிஞ்சனனாய்
தேவரீர் கை பார்த்து இருக்கிற எனக்கு
ப்ராப்யமான கைங்கர்யத்தோடு
தத் உபாயத்தோடு
வாசியற தேவரீரே தந்து அருள வேணும் எத்தனை யன்றோ -என்கிறார் –

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே !
ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே –97-

பதவுரை

வெய்ய ஆழி

(எதிரிகள்மேல்) தீக்ஷ்ணமான திருவாழியையும்
சங்கு தண்டு வில்லும் வாளும்

திருசங்கையும் கதையையும் ஸ்ரீசார்ங்கத்தையும் நந்தகவாளையும்
சேரும் மார்ப

நித்யவானம் பண்ணுகிற திருமார்பையுடைவனே!
நாதனே

ஸர்வஸ்வாமியே!
ஐயில் ஆய ஆக்கை நோய்

சிலேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரமாகிய வியாதியை
ஏந்து சீர் கைய!

தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே
செய்யபோதில் மாது

செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி
அறுத்து வந்து

தொலைத்து வந்து
நின் அடைந்து

உன்னை அடைந்து
உய்வது ஓர் உபாயம்

நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபாயத்தை
எனக்கு

அடியேனுக்கு
நீ நல்கவேண்டும்

அருள வேணும்.

வியாக்யானம் –

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க் கைய ! –
காணவே எதிரிகள் தறைப் படும்படியான ஸ்ரீ பஞ்சாயுதங்களும் -அவர் தம் வாத்ஸல்யத்தாலே-திருக்கையிலே ஏந்தினவனே –

வெறும் புலத்திலே ஆலத்தி வழிக்கும்படி இருக்கிற கையிலே திவ்ய ஆயுதங்களை
ஏந்தினவனே -என்றுமாம் –

திவ்ய ஆயுதங்களை ஏந்திய படியாயே இருக்கிறது -தேவரீருக்கு ஒரு விரோதி உண்டாயோ –

என் விரோதியை போக்குகைக்கு அன்றோ -என்கை-
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -என்னக் கடவது இறே

செய்ய போதில் மாது சேரு மார்பா !-
சிவந்த தாமரைப் பூவை பிறந்தகமாக உடையாளாய் இருக்கையாலே ஸூகுமாரியாய்
திரு மேனிக்கு பரபாக ரூபத்தாலே ஆபரண பூதையான பிராட்டி –

அகலகில்லேன் இறையும் -என்று சொல்லப்படும் திரு மார்பை உடையவனே –

இத்தால்
ஆஸ்ரயண விரோதி பாபத்தை பொறுப்பிக்கைக்கு பிராட்டி சந்நிதி உண்டாய் இருக்க –
மாத்ர்பித்ர் சந்நிதியிலே நோவு படுவாரைப் போலே -சரீர சம்பந்தத்தாலே நோவு படுவேனோ -என்கை

நாதனே !-
சர்வ ஸ்வாமி யானவனே –

இத்தால் -இவள் புருஷகாரம் ஆகாதே -கையில் பரிகாரமும் இல்லாது ஒழிந்த அன்று-தான் ஆருடைமை நோவு படுகிறது

இப்படி இருக்க புருஷார்த்த ஸித்திக்கு என் தலையிலும் ஒரு உபாயம் வேணும் என்று-

தேவரீருக்கு ஒரு நிர்பந்தம் உண்டாகில் அத்தை தேவரீரே தந்து அருள வேணும் என்கிறார் -மேல்

ஐயிலாய வாக்கை நோய் அறுத்து –
ச்லேஷ்மத்தை பிரக்ர்தியாக உடைய சரீரமாகிற நோயை அறுத்து –
தேஹாத்ம அபிமானிகளுக்கு ப்ரார்த்த நீயமான சரீரம் ஜ்ஞானம் பிறந்தால் வ்யாதியாய்-இறே இருப்பது –
ஏய்ந்த தம் மெய்குந்தமாக விரும்புவர் -என்னக் கடவது இறே

வந்து நின்னடைந்து –
ஒரு தேச விசேஷத்திலே வந்து
நிரதிசய போக்யனான உன்னை ப்ராபித்து

உய்வதோர் உபாயம் –
அடிமை செய்து -உஜ்ஜீவிப்பதொரு வழியை
நீ எனக்கு நல்க வேண்டுமே –
1-ஸ்ரீ ய பதியாய் –
2-திவ்ய ஆயுத உபேதனாய் –
3-எனக்கு இல்லாதவை எல்லாம் தரக் கடவ-நீயே –
4-எல்லாவற்றுக்கும் உன் கையை எதிர்பார்த்து இருக்கிற எனக்கு-தந்தருள வேணும் –

நல்குதல்-கொடுத்தல் –அதாகிறது தருதல் –

————————————————————————————-

98-பாட்டு –

அவதாரிகை –

நம்முடைய விசேஷ கடாஷத்துக்கு உம்முடைய தலையிலே ஒரு முதல் வேணுமே
என்னை நீயே தர வேணும் என்னக் கடவீரோ -என்று பகவத் அபிப்ராயமாக
புருஷார்த்த ருசியாலே வந்த ப்ராதிகூல்ய நிவ்ர்த்தியும் புருஷார்த்த ருசியுமே
ஆலம்பந மாக நான் சம்சார துரிதத்தை தப்பும்படி நீயே பண்ணியருளவேணும் -என்கிறார் –

மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98-

பதவுரை

மாய!

ஆச்சரிய சக்தி யுக்தனான பெருமானே!
மறம் துறந்து

கோபத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி

கன்னங்சுவடுகளைத் தவிர்த்து
ஐம்புலன்கள் ஆசையும் துறந்து

பஞ்சேந்த்ரியங்களினுடைய விஷயாந்தரப் பற்றையும் ஒழித்து
நின் கண்

உன் பக்கலில்
ஆசையே தொடர்ந்து நின்ற காயினேன்

பக்தியே மேன்மேலும் பெருகி வரப்பெற்ற அடியேன்
பிறந்து இறந்து

பிறப்பது இறப்பதுமான விகாரங்களையடைந்து கொண்டு
பேர் இடர் கழிக்கண் நின்றும்

மஹாதுக்க மண்டலான ஸம்ஸுரத்தில் நின்றும்
நீக்கும் ஆ

நீங்கும் பிரகாரத்தையும்
மற்று

அதற்கு மேற்பட்டுப் பரமாநந்த மடையும் பிரகாரத்தையும்
எனக்கு

அடியேனுக்கு
மறந்திடாது

மறவாமல்
கல்க வேண்டும்

அருளவேணும்

வியாக்யானம் –

மறம் துறந்து –
மறம் ஆகிறது -கோபம்
அதின் எல்லை -பர ஸ்ம்ர்ரத்தி பொறாது ஒழிகையும் -பர அநர்த்த சிந்தையும் -அத்தை விட்டு

வஞ்சம் மாற்றி –
க்ர்த்ரிமத்தை தவிர்த்து -அதாகிறது –
அனுகூலனாய்த் தோற்றி பிரதிகூலனாய் தலைக் கட்டுகை  –

வஞ்சம் -பொய்

ஐம் புலன்கள் ஆசையும் துறந்து –
இந்திரியங்களுக்கு இதர விஷயங்களில் உண்டான-யும்- ச-உம்மைத் தொகை –

இதில் கீழ் சொன்ன கோப க்ர்த்ரிமங்களுக்கு ஹேதுவான விஷயாந்தர சங்கத்தையும் விட்டு-

அவை தான் புருஷார்த்த ருசி பிறந்தாருக்கு அசம்பாவிதங்கள்-

நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற –
உன் பக்கல் ஆசையையே ஆதரித்து நின்ற -அதாவது பகவத் ப்ரேமம் வேணும் என்று இருக்கிற ஆதரம்

தொடர்வு -உறவு

நாயினேன் –
பிரதிகூல்ய நிவர்த்தியும் புருஷார்த்த ருசியும் ஒழிய -புருஷார்த்த சித்திக்கு
முதல் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற அநந்ய கதி
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா –
பிறப்பது சாவதான மகா துக்க சக்கரத்தின் நின்றும் நீங்கும் படி –

பிறந்து -என்கிற இது ஷட்பாவ விகாரத்துக்கும் உப லஷணம்

இறந்து -என்கிற இது நரகாதிகளுக்கும் உப லஷணம்

மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே –
சம்சாரத்தில் நான் பட்ட துக்கத்தையும்
என்னுடைய பூர்வ வ்ர்த்தத்தையும்
தேவரீருடைய ஸ்வா தந்த்ர்யத்தையும்
பார்த்து விஸ்மரியாதே –
அபேஷா மாத்ரத்தையும் சம்பந்தத்தையும் பார்த்து –
விரோதி நிரசனத்திலே அசக்தனான எனக்கு -தன்நிவ்ர்த்தி பூர்வகமாக
புருஷார்த்தத்தை தந்து அருள வேணும் –

மற்று -என்கிறது விரோதி நிவ்ர்த்தி சமநந்தரத்தில் லபிக்குமது ஆகையாலே

மாய –
மமமாயா -என்கிறபடியே
சம்சார சக்கரத்தை அறுத்து -நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்க வல்ல ஆச்சர்ய சக்தி உக்தனே-

————————————————————————————-

99-பாட்டு –

அவதாரிகை

புருஷார்த்த ருசி பிறந்த பின்பு -அத்தாலே வந்த பிரதிகூல்ய நிவ்ர்த்தியை உம்முடைய-பக்கல் முதலாக சொல்லா நின்றீர் –
அநாதி காலம் நரக ஹேதுவாகப் பண்ணின ப்ராதிகூல்யங்களுக்கு போக்கடியாக
நீர் நினைந்து இருந்தது என் -என்ன –

நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்ற

உன்-திருவடிகளில் ந்யச்த பரனான இது ஒழிய வேறு போக்கடி உண்டோ –

ஆனபின்பு
கீழ் சொன்ன கர்மம் அடியாக வருகிற யம வச்யதையை தவிர்த்து –
எனக்கு உன் திருவடிகளிலே அவிச்சின்னமான போகத்தை தந்து அருள வேணும் -என்கிறார்-

காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-

பதவுரை

பூவை வண்ணனே

காயாம்பூப்போன்ற நிறமுடையவனே!
பின்னைகேள்வ!

!  நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனே
(யமகிங்கர ரானவர்கள்)

நான் செய் வல்வினை காட்டி

நான் செய்த பிரபலமான பாவங்களை எனக்கு ஞாபகப்படுத்தி
பயன் தனில்

அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில்
மனம் தனை

எனது மநஸ்ஸை
நாட்டி வைத்து

துணியும்படி செய்வித்த
நல்ல அல்ல

அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை
செய்ய எண்ணினார்

செய்ய நினைத்திருக்கிறார்கள்
என கேட்டது அன்றி

என்று நான் கேட்டிருக்கிற படியாகையாமைக்காக
உன்னது ஆவி

என்னுடைய ஆத்மாவை
நின்னொடும் பூட்டிவைத்த என்னை

உன் பக்கலில் ஸமர்ப்பித்து நீர்ப்பரனாயிருக்கி என்னை

வியாக்யானம் –

காட்டி நான் செய் வல் வினைப் –
நான் செய்த பிரபலமான பாபங்களை எமபடர் எனக்கு காட்டி –
வாசிகமாயும் மானசமாயும் உள்ள பாபங்களை ஒழிய —

செய்தவையே நரக ப்ரவேசம்-பண்ணி அனுபவிக்கும் படி பிரபல பாபங்களை –

இத்தால் -இவர்கள் என்னை நலிகிறார்கள் என்று நான் நினையாதபடி பண்ணுமவர்கள் என்கை –

பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து –
இந்த பாப பலம் நமக்கு இவ்வளவும் அனுபவிக்க ப்ராப்தம் என்று
பலத்திலேயும் என் மனசைப் பூட்டி வைத்து

நல்ல வல்ல செய்ய எண்ணினார் –
கொடிய செயல்களை செய்ய எண்ணினார்

இவனுக்கு முதலிலே பண்ணின பாபத்தை அறிவித்து
இப்பாப பலம் நாம் இவ்வளவும் அனுபவிக்க வேணும் ஆகாதே -என்று நெஞ்சைப் பிறப்பித்து-

பின்னை யாய்த்து குரூரமான செயல்களை அவர்கள் செய்ய நினைப்பது –

எனக் கேட்டதன்றி –
என்று கேட்டுப் போந்தவற்றை அகற்றி –
இப்படி சாஸ்த்ரத்தில் கேட்டுப் போந்த எம வச்யதையை தவிர்த்து –

என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை-
நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆகையாலே வந்த நீர்மையை உடைய க்ர்ஷ்ணனே –
பாப ப்ரசுரனாய் அகிஞ்சனான என்னுடைய ஆத்மாவை உன் பக்கலிலே சமர்ப்பித்த என்னை –
காலியாய நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை -என்றதை ஸ்மரிப்பிக்கிறார் –

பூட்டி வைக்கை யாவது
நீ விடக் கருதி -மெய் செய்யாது மிக்கோர் யாசை யாக்கிலும் –நின் அலாலோர் கண் அலேன்–என்றதை ஸ்மரிப்பிக்கிறார் –

நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே –
பூவை பூ போல் நிறத்தையும் சௌகுமார்யத்தையும் உடைய வடிவு உடையவனே
நின் பக்கல் நின்றும் அகற்றாது ஒழிய வேணும் –
புஷ்பஹாச சுகுமாரமான வடிவழகை சர்வ காலமும் விச்சேதியாதே அனுபவிக்கும்படி-பண்ணி யருள வேணும் –

பின்னை கேள்வ -என்னதாவி நின்னொடும் பூட்டி வைத்த வென்னை -காட்டி நான் செய்-வல்வினை பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து -நல்ல வல்ல செய்ய எண்ணினார் -எனக் கேட்டதன்றி -பூவை வண்ணனே -நின்னுள் நீக்கல் -என்று அந்வயம் –

—————————————————————————————–

100-பாட்டு

அவதாரிகை –

இப்படி அவிச்சின்னமான அனுபவத்துக்கு பரபக்தி உக்தனாக ஆக வேண்டாவோ என்ன –
அப்பர பக்தியைத் தந்தருள வேணும் -என்கிறார் –

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த  ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-

பதவுரை

பெறற்கு அரிய மாயனே

(ஒருவர்க்கும் ஸ்வயத்தக்கதாலே பெறுவதற்கு முடியாத எம்பெருமானே!
பிறப்பினோடு பேர் இடர் கழிக்கன் நின்றும்

பிறப்பு முதலிய பெருப்பெருத்த துக்கங்களை நினைக்கின்ற ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கும் அஃது

நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள்
இறப்ப வைத்த

மறந்தொழிந்த
ஞான நீசரை

ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை
கரை கொடு

ஏற்றம் ஆ

கரையிலே கொண்டு சேர்க்கும்படியாக

பெறற்கு அரிய

துர்லபமான
சின்ன பாதம் பத்தி ஆன

உன் திருவடிகளில் பக்தியாகிற
பாசனம்

மரக்கல (ஓட) த்தை
எனக்கு நல்க வேண்டும்

அடியேனுக்கு அருளவேணும்.

வியாக்யானம் –

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது இறப்ப வைத்த-
ஜன்மத்தோடே கூடின தாபத்ரய ரூபேண மஹா துக்கத்தை விளைக்கக் கடவதான
சம்சார சக்கரத்தில் நின்றும் நீங்குகைக்கு உறுப்பான தத்வ ஹிதங்களை மறைத்து வைத்தவர்கள்-
தத்வ ஹிதங்களை -அஃது -என்றது சுருதி ப்ரசித்தி யாலே

அதாவது -ஸ்வர்க்க -தத் சாதனங்களை வேதார்தம் என்று இருக்கை –

வேதவா தரதா  பார்த்த நான்ய தஸ்தீ திவா தி ந -என்று இ றே அவர்கள் நிர்ணயம்

இறக்கையாவது-நசிக்கை
அதாகிறது -ணச் -அதர்சநே -என்கிறபடியே மறைக்கை –

ஞான நீசரைக் –
சர்வஞ்ஞாராக தங்களை  அபிமானித்து இருக்கும் நீசரை –
யாரும் வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டு நீசர் -என்றவர்கள் கேவல நீசர்
இவர்கள் ஜ்ஞான நீசர்

கரைக்கொடு ஏற்றமா –
இவர்களை கரையிலே கொண்டு ஏற்று கைக்கு உபாயமாக
சோத்வந பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிறபடியே
சம்சாரத்துக்கு கரையாவது பகவத் விஷயம் இ றே –

அத்தை லபிக்கைக்கு உபாயமாக-வேதாந்தந்களிலே சொல்லி வைத்த

பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம் –
பெருதருக்கு அரிய உன் திருவடிகளை விஷயமாக உடைத்தான பரம பக்தி யாகிற
பாஜனத்தை-ப்ராப்யன் ஆனவனை காட்டில் தத் விஷய பக்தி துர்லபம் இறே

யா ப்ரீதி ரவிவேகா நாம் -என்றும் –
முக்திஸ் தஸ்ய க்ரேஸ்திதா -என்றும் –
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ் ஸ்திராத்வயி -என்றும் சொல்லக் கடவது இறே

பாசனம் -மரக்கலம்

அத்தாலே தனத்தை லஷிக்கிறது -தனமாய தானே கைகூடும் -என்னக் கடவது இறே

யாமேவை ஷவ்ர்ணு தேதே நலப்யே -என்றும் –

ஹ்ர்தாம நீ ஷா மனஸா பிக்ல்ப்த -என்றும் –
வேதாந்தங்கள் உன் திருவடிகளைப் பெறுகைக்கு சாதனமான பக்தியை உபதேசித்து-வைத்தது இறே -அந்த பக்தியை –

பெறற்கு அரிய மாயனே –
உன் கேவல க்ருபை ஒழிய வேறு ஒரு வழியாலே உன்னைப் பெற இருப்பார்க்கு இருப்பார்க்கு-சித்தியாத ஆச்சர்ய பூதனே –
லோகத்திலே சாத்யங்களுக்கு  எல்லாம் சாதனம் உண்டாய் இருக்க அநந்ய சாத்யனான-ஆச்சர்ய பூதனே

எனக்கு நல்க வேண்டுமே –
பெற வேண்டுமவை எல்லாவற்றுக்கும் உன் கிருபையை  அல்லாது அறியாத எனக்கு-அந்த பக்தியை தேவரீர் தந்து அருள வேணும்
பிரயோஜநாந்த பரருக்கு மோஷ ருசியைப் பிறப்பித்து -தத் சாதனமான பக்தியைக்
கொடுத்தருளக் கடவ தேவரீர் –
அநந்ய ப்ரயோஜனனாய் –
அநந்ய சாதனனாய் –
இருந்துள்ள எனக்கு த்வத் அனுபவ பரிகரமான அந்த பக்தியை தந்து அருளுகை
தேவரீருக்கு அபிமதம் அன்றோ -அத்தை தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -81-90-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

May 3, 2013

81 பாட்டு –அவதாரிகை –

வ்யூஹ விபவங்கள் -தேச கல -விபகர்ஷத்தாலே நிலம் அன்று என்ன வேண்டாதபடி
பிற்பாடர் இழவாமைக்கு –
திருமலையிலே வந்து நின்று அருளினான் –
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகப் பாரும் கோள் என்று உபதேசத்தை
தலைக்கட்டுகிறார் –

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-

பதவுரை

கடைந்த

(கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட
பால் கடல்

திருப்பாற்கடலிலே
கிடந்து

கண்வளர்ந்தருளியும்
காலநேமியை

காலநேமியென்னுமசுரனை
கடிந்து

ஒழித்தருளியும்
உடைந்த

நடுங்கிக் கிடந்த

வாலி தந்தனுக்கு வாலியின் தம்பியான சுக்ரீவனுக்கு

உதவ

உபகாரம் செய்ய
இராமன் ஆய் வந்து

இராமபிரானாய் வந்து தோன்றி
மிடத்தை

ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த
ஏழ் மரங்களும்

ஸப்தஸால வ்ருக்ஷங்களையும்
அடங்க

ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும்
எய்து

பாணத்தாலே துளைபடுத்தி
வேங்கடம் அடைந்த

திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான
மால

எம்பெருமானுடைய
பாதமே

திருவடிகளையே
நாளும்

நாள்தோறும்
அடைந்து

ஆச்ரயித்து
உய்ம்மின்

உஜ்ஜிவியுங்கள்

வியாக்யானம் –

கடைந்த பாற்கடல் கிடந்து-
துர்வாச சாபத்தாலே இந்த்ராதிகளுக்கு வந்த ஆபத்தை கடலைக் கடைந்து பரிஹரித்து –
இன்னம் ஆபத்துக்களிலே ப்ரஹ்மாதிகள் வந்து அபேஷிக்கலாம் படி அதிலே கண் வளர்ந்து -அருளி –

கால நேமியைக் கடிந்து
அத் தேவதைகளை புஜ பலத்தாலே நலிந்த காலநேமி யாகிற அசுரனை வென்று –

கடத்தல் -வெற்றி

உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய் –
வாலியாலே உடைந்த தம்பி தனக்கு –
தன் தம்பி
ப்ரஹ்மாதிகள் அளவு அல்லாத திர்யக்குகளுடைய ரஷணத்துக்காக சக்ரவர்த்தி
திருமகனாய் வந்து அவதரித்து –
தேவதாந்தர ஸ்பர்சத்தாலே ஸ்வரூபம் அறிந்த வாலிக்கு –
ராம பாணா சைஷிப்த மாவஹத் பரமாங்கதிம் -என்கிறபடியே
ச்வஹஸ் தவதத்தாலே மோஷ ப்ரதன் ஆகைக்காக தசரதாத்மஜனாய் வந்து

உடைதல்-அழிதல்

அதவா
தனக்கு துஷ் ப்ராபமான ரிச்யமுகத்திலே பகையான மஹாராஜர் இருக்கையாலே
பகை மீளப் பெறாத நாம் என்ன ராஜ்யம் பண்ணுகிறோம் -என்று நெஞ்சு அழிந்த வாலியாலே
மஹாராஜருக்கு பிறந்த ஆபத்தை தீர்க்கைக்காக வந்து என்றுமாம் –

உடைந்த வாலி தந்தனுக்கு –
தம்பி தனக்கு -மவ்வுக்கு -ன -ஆதேசமாய் தம்பி -என்றதை -தன் -என்று கடைக் குறைத்தலாய்க் கிடக்கிறது -என்று ஒரு தமிழன்-

மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து –
ஆபத்திலே ரஷிக்க வர கண்டு -ரஷணத்திலே அதி சங்கை பண்ணின மஹாராஜர்
விஸ்வசிக்கைகாக -இலக்கு குறிக்க ஒண்ணாதபடி மிடைந்து நிற்கிற மராமரங்கள் ஏழையும்
அநுக்தமான கிரி ரஸாதலங்கள் ஏழையும் அடங்கத் துளைத்து
வாலி -ஸ்வ பரிஷை பண்ணுவது ஒரு மராமரத்தளவிலேயாய் இருக்க –
மஹாராஜர் உடைய அதி சங்கையை சவாசனமாக போக்குகைக்காக
ஏழு என்ற பேர் பெற்றது அடைய எய்தார் ஆய்த்து

வேங்கடம் அடைந்து மால பாதமே யடைந்து –
பிரயோஜனாந்த பரருக்கு முகம் கொடுத்த சீலமும் –
அவதாரத்தில் தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த சீலமும் –
பிற்பாடானவர்கள் இழவாமைக்கு திரு மலையில் ஆஸ்ரயித்து நிற்கிற வ்யாமுகன்
திருவடிகளை அநந்ய ப்ரயோஜனராய் ஆஸ்ரயித்து நாளும் உய்மினோ

நாளும் -அடைந்து உய்மின் என்றுமாம் –
கைங்கர்யம் என்றும் உஜ்ஜீவனம் என்றும் பர்யாயம்
சுடரடி தொழுது எழு -என்னக் கடவது இறே

ஆஸ்ரிதருக்கு திருவேங்கடமுடையான் திருவடிகளே ஆஸ்ரயணீய  ஸ்தலம்

திருவேங்கடமுடையானுக்கு ஆஸ்ரயணீய  ஸ்தலம் திருமலை –

—————————————————————————

82 பாட்டு –அவதாரிகை –

இதுக்கு முன்பு பரோபதேசம் பண்ணினாராய் -மேல்-
ஈஸ்வரனைக் குறித்து –
தேவரீர் திருவடிகளிலே ப்ரேம உக்தர் நித்ய ஸூகிகள் -என்கிறார்
இதுக்கு அடி –

பிறருக்கு சாதகமாக தான் உபதேசித்த பக்தி -தமக்கு ஸ்வயம் பிரயோஜனம்-யாகையாலே -தமக்கு ரசித்த படியைப் பேசுகிறார் –
இப்பரபக்தி தான் -சாதகனுக்கு உபாயத்தின் மேல் எல்லையாய்
பிரபன்னனுக்கு ப்ராப்யத்திலே முதல் எல்லையாய் -இருக்கும் இறே

இதில் முதல் பாட்டில் –
மனுஷ்யத்வே பரத்வத்தையும் –
அவதார கந்தமான ஷீராப்தியிலே  கண் வளர்ந்து அருளுகிற நீர்மையையும் -அனுசந்தித்து
தேவரீர் திருவடிகளில் ப்ரவணர் ஆனவர்களுக்கு சர்வ தேசத்திலும் ஸூகமேயாம் -என்கிறார்-

எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து  உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம்  இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –82-

பதவுரை

எத்திறத்தும் ஒத்து நின்று

எந்த ஜாதியில் அவதரித்தாலும் ஸஜாதீயன் என்ற காரணத்தால் சேதநா சேதநங்களோடு ஒத்திருக்கச் செய்தேயும்
உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்

(குணவிசேஷத்தால்) மேன்மேலுமுயர்ந்த ப்ரபாவத்தையுடையோனே!
மூத்திறத்து மூரி நீர்

திருப்பாற்கடலிலே
அரா அணை துயின்ற

சேஷசயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற
நின்

தேவரீர் விஷயத்திலே
பத்து உறுத்த சிந்தையோடு நின்று

பக்தி அழுந்தின நெஞ்சோடு கூடியிருந்து
பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம்

விஷயாந்தரப் பற்றுக்களை விட்டவர்கட்கு ஸர்வவித ஸுகமும்
இங்கும்

இவ்வுலகத்திலும்
அங்கம்

அவ்வுலகத்திலும்

எங்கும் மற்றெவ்வுலகத்திலும்

ஆகும்

எளிதாம்.
பாட்டு

பின்பிறக்கவைத்தனன் கொல்.

வியாக்யானம் –

எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் –
தேவ ஜாதியிலும் -மனுஷ்ய ஜாதியிலும் -திர்யக் ஜாதியிலும் -ஸ்தாவர ஜாதியிலும் -சஜாதீயனாய் அவதரித்து –

அஜ் ஜாதியில் காட்டில் அஜஹத் ஸ்வபாவன் ஆகையாலே-வந்த உத்கர்ஷத்தையும் –
ஸ உஸ்ரே யாந்பவதி ஜாயமாந -என்கிறபடியே குணாதிக்யத்தால் வந்த உத்கர்ஷத்தையும்-ஸ்வபாவமாக உடையவனே –

பெற்றி -இயல்வு

திறம்-திரள்
ப்ரஹ்ம ருத்ர மத்யம அவதாரத்தோடு
மத்ஸ்ய அவதாரத்தோடு -வாசியற சஜாதீய பாவத்தில் புரை யறுகையும்
அதி மாநுஷ சேஷ்டிதங்களாலே -சர்வாதிகத்வம் தோற்றுகையும்
தூத்ய சாரத்யங்களால் குணாதிக்யம் தோற்றி இருக்கையும்-

முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற –
அவதாரத்தில் சொன்ன மேன்மைக்கும் நீர்மைக்கும் ஊற்றாய் –
மூன்று வகைப்பட்ட நீரை உடைத்தான -கடலை இடமாகக் கொண்டு –
அந் நீர் உறுத்தாமைக்கு திரு வநந்த வாழ்வானை படுக்கையாகக் கொண்டு மேலே கண்
வளர்ந்து அருளின –

முத்திறது நீர் –
ஆற்று நீர் -ஊற்று நீர் -வர்ஷ ஜலம் -இவை

மூரி -இடம் –

நின் பத்து  உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு –
உன் திருவடிகளிலே பக்தி மிக்க மநோ ரதத்தோடு நின்று –
இதர விஷயத்தில் சங்கை விட்டவர்களுக்கு

பத்து -என்று பக்தி

உறுதல் -அழுந்துதல் -அதாவது -மிகுதி
ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக அவதரித்த அவதாரத்தின்
மேன்மையையும் நீர்மையையும்
அதுக்கு ஊற்றான  ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையையும் அனுசந்தித்து –
பர பக்தி உக்தராய் –
அப்பகதி பாரவச்யத்தாலே இதர விஷயங்களில் வைராக்யத்தை உடையவர்களாய்
இருக்குமவர்கள் -என்கை

எத்திறத்தும் இன்பம்  இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே —
சரீரத்தோடே இருக்கும் இருப்பிலும் –
பரம பதத்தில் இருக்கும் இருப்பிலும் –
உத்க்ரமண தசையிலும் –
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற அவஸ்தா விசேஷங்களிலும் –
ஸூ கமேயாய் இருக்கும் –

எத்திறத்தும் இன்பமான சர்வேஸ்வரனான -உன்னுடைய –
ஸ்வரூப ரூப குண விபூதிகளை அநுபவித்து
பிரகார பேதங்களிலும் த்வத் அநுபவத்தால் வந்த ஸூ கமே யல்லது இல்லை
விஷயாந்தர ப்ராவண்யாம் எங்கனம்  யாகிலும் துக்கமே யானவோபாதி
பகவத் பராவண்யம் எங்கனம்  யாகிலும் ஸூகமேயாய் இருக்கும் -என்கை –

——————————————————————————

83 -பாட்டு –அவதாரிகை –

அநந்த க்லேச பாஜனம் -என்கிறபடியே துக்க ப்ரசுரமான இஸ் சம்சாரத்தில் சுகம்
உண்டாகக் கூடுமோ -என்னில்
ப்ராப்தி தசையில் சுகமும் –
சம்சாரத்தே இருந்து வைத்து தேவரீர் திருவடிகளிலே விச்சேதம் இல்லாத ப்ரேமத்தால்
பிறக்கும் சுகத்துக்கு போராது -என்கிறார் –

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே -83-

பதவுரை

மட்டு உணவு

தேன் நித்யாயிருக்கபெற்ற
தண்

குளிர்ந்த
துழாய்

திருத்துழாயினால் தொடுக்கப்பட்ட
அலங்கலாய்

திருமாலையை அணிந்துள்ளவனே!
புலன் கழல் விட்டு

(உன்னுடைய) விலக்ஷணமான திருவடிகளை (இந்நிலத்திலேயே அநுபவிப்பதை) விட்டு
விண்ணில் ஏறி

பரமபதத்திற் சென்று
வீழ்வு இலாத போகம் கண்ணிலும்

அழிவில்லாதொரு போகத்தை அடையப்பெற்றாலும். (அது கிடக்கட்டும்)

(இந்நிலத்தில் இருந்துகொண்டே)

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால்

பத்து என்கிற பக்தியாகிற பாசத்தினாலே
மனம் தனை

மநஸ்ஸை
கட்டி

கட்டுப்படுத்தி
வீடு இலாது

விச்சேதமில்லாபடி
வைத்த

அமைக்கப்பட்ட
காதல்

ப்ரேமத்தினாலுண்டாகக் கூடிய
இன்பம் ஆகுமே

ஆநந்தத்தை ஒக்குமோ அப்பரமபதாநுபவம்!

வியாக்யானம் –

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய்-
தேன் மாறாத செவ்வித் திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே
இத்தால் -திருத் துழாய் யோட்டை சம்பந்தத்தால் -சர்வாதிக வஸ்து -என்னும் இடமும் –
உபய விபூதி நிர்வாஹணத்துக்கு இட்ட தனி மாலை என்னும் இடமும் –
ஒப்பனை யழகும் -சொல்லிற்று ஆய்த்து

புலன் கழல்விட்டு வீள்விலாத போகம் –
தர்சநீயகமாய் -நித்ய சூரிகளுக்கு சதா தர்சநீயமான தேவரீர் திருவடிகளை விட்டு
வேறு போக்கில்லாத போகத்தை

புலன் கழல் -புலப்படும் திருவடிகளை

விண்ணில் நண்ணி ஏறினும்-
பரமபதத்தில் ஏறிக் கிட்டினும்

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால்-திருஅஷ்டாஷரம் -த்வயம் –
எட்டும் இரண்டும் கூட்டு –பத்தாய் -அத்தை பக்தி -என்கிறது
பகவத் பக்தியிலே தமக்கு உள்ள கௌரவாதி அதிசயத்தாலே மறைத்துச் சொல்லுகிறார் –

கயிறு -என்று பந்தகம் என்றபடி –

மனம் தனைக்கட்டி –
சர்வ இந்திரியங்களுக்கும் ப்ரதானமான மனசை விஷயாந்தரங்களில் போகாதபடி
பந்தித்து –

வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே-
விச்சேதம் இல்லாதபடி தேவரீர் திருவடிகளிலே வைத்த  ப்ரேமம்
சுகத்துக்கு சாதனமாய் இருக்கை யன்றிக்கே
தானே சுகமாய் இருக்கும் –

———————————————————————————

84 -பாட்டு –அவதாரிகை –

வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே -என்று கீழ் ப்ரஸ்துதமான பக்தி-
தம் பக்கல் காணாமையாலும் –
தம்மை பிரக்ர்தியோடே இருக்கக் காண்கையாலும் –
ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலும் –
அவன் நினைவாலே பேறாகையாலும் –
என்திறத்தில் -என் நாதன் தன் திருவடிகளில் பரம பக்தி உக்தனாம்படி பண்ண நினைத்து இருக்கிறானோ –
நித்ய சம்சாரியாகப் போக நினைத்து இருக்கிறானோ –
திரு உள்ளத்தில் நினைத்து இருக்கிறது என்னோ -என்கிறார் –

பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு
அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் யாழியான்
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே -84-

பதவுரை

ஆழியான்

சக்ரஹஸ்தனான எம்பெருமான்
பின் பிறந்த வைத்தனன் கொல்

நான் இன்னும் சில பிறவிகள் பிறக்கும்படியாகத் திருவுளம் பற்றி யிருக்கிறானோ!
அன்றி

அல்லது
தன் கழற்கு

தன் திருவடிகளிலே
நின்று

நிலைத்துநின்று
அன்பு உறைக்க வைத்து

(எனக்கு) அன்பு ஊர்ஜிதமாம்படியாக ஸங்கல்பித்து
அந்நாள் அறிந்தனன் சொல்

பரமபதத்திலே சென்று அநுபவிக்குமொரு நாளைத்திருவுள்ளம் பற்றியிருக்கிறானோ!
தன் திறந்து

தன் விஷயத்திலே
ஓர் அன்பு இலா

சிறிதும் அன்பு இல்லாதவனும்
அறிவு இலாத

விவேகமில்லாதவனும்
நாயினேன்

நீசனுமாகிய
என் திறத்தில்

என் விஷயத்திலே
எம்பிரான்

எம்பெருமான்
குறிப்பில் வைத்தது

திருவுள்ளம்பற்றி விருப்பதானது
என் சொல்

எதுவோ (அறியேன்)

வியாக்யானம் –

பின் பிறக்க வைத்தனன் கொல் –
இந்த சரீர அவசாநத்துக்கு மேலே -இன்னமும் சில சரீர பரிக்ரஹம் பண்ணும்படியாக
என்னை நினைத்து இருக்கிறானோ –

அன்றிக்கே –
பின்பு இறக்க வைத்தனன் கொல் –
தன் பக்கலில் ஜ்ஞானம் பிறந்த பின்பும் தன்னை விஸ்மரித்து நசிக்க நினைத்து இருக்கிறானோ –

நித்தியமான ஆத்மாவுக்கு பகவத் ஜ்ஞான லாப அலாபங்கள் இறே
சத் அசத் பாவ ஹேதுக்கள்
அசத் ப்ரஹ்மேதி வேதே சேத் -அசந்நேவஸபவதி –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத ஸந்தமே நந்ததோ விதுரிதி -என்னக் கடவது இறே
அன்றி –
அன்றிக்கே-

நின்று தன் கழற்கு அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல்-
விச்சேதம் இல்லாதபடி தன் திருவடிகளிலே அன்பை உறைக்க வைத்து
அனுபவிக்கும் நாள் எனக்கு உண்டாகும்படி நினைத்து இருக்கிறானோ –

அன்பு உறைக்கை யாவது -பரம பக்தி உக்தனாகை –

வைத்து அனுபவிக்கும் நாள் -என்கிறது -ஒரு தேச விசேஷத்தில் அனுபவத்தை –

இத்தால் –
இச் சேதனனுக்கு ஜன்மமும் விஸ்ம்ர்தியும் விநாசமும் -பக்தி இல்லாமை –
உஜ்ஜீவனம் -பரம பக்தி உக்தனாகை -என்றது ஆய்த்து –

ஜன்மம் ஆகிறது -விஷயாந்தர ப்ராவண்ய ஹேது –
விஸ்ம்ர்தி ஆகிறது -விஷயாந்தர ப்ராவண்ய கார்யம் ஆகையாலே
ஆத்மாவுக்கு உபயமும் விநாசம் இ றே

ஆழியான் திறத்து –
சர்வாதிகனான தன்னிடையாட்டத்து –

ஓர் அன்பிலா அறிவிலாத நாயினேன் –
அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே ப்ரேம கந்தம் இன்றிக்கே –
அதுக்கடியான ஜ்ஞான லேசமும் இன்றிக்கே
ஹேயனான நான் –
ப்ரேம கந்தம் இன்றிக்கே -அது இல்லை என்கிற அறிவும் இல்லாத -என்றுமாம் –

நாயினேன் -என்கிறது
திறந்து கிடந்த வாசல்கள் தோறும் நுழைந்து திரிகையும்
எல்லாராலும் பரிபூதனாகையும் –
உகந்து தொட்டாருக்கும் ஸ்நானம் பண்ண வேண்டும்படி அமேத்ய பதார்தமாகையும் –

என் திறத்தில் –
சம்சாரிகளைப் போலே விமுகன் ஆதல்
முக்தரைப் போலே ப்ரவணன் ஆதல் –
அன்றிக்கே இருக்கிற என்னிடையாட்டத்தில்

எம்பிரான் குறிப்பில் வைத்தது என் கொல் –
என் நாதன் திரு உள்ளத்தில் கொண்டிருக்கிறது என்னோ
பிறந்த பின் மறந்திலேன் -என்கிற ஜ்ஞாநத்தையும்
நடந்த கால்கள் நொந்தவோ -என்கிற பிரேமத்தையும்
உபாயம் -என்று இருக்கிலர்
ஈஸ்வரன் நினைவே தனக்கு உபாயம் -என்று இருக்கிறார் –

வரம் தரும் திருக் குறிப்பில் வைத்தாகில் -என்று
சாமான்யேன உபாயமாக சொல்லுவதும் அதுவே –
தமக்கு உபாயமாக விசேஷித்து சொல்லுவதும் அதுவே –

இப்பாட்டால்-
என்னுடைய பூர்வ வர்த்தத்தை பார்த்து உபேஷிக்க நினைத்து இருக்கிறானோ –
இத்தலையில் விநாசம் தன் இழவாம் படியான குடல் துவக்கை நினைத்து
உஜ்ஜீவிப்பிக்க நினைத்து இருக்கிறானோ -என்றது ஆய்த்து –

——————————————————————————————

85 -பாட்டு அவதாரிகை –

என்னை இப் பிரக்ர்தியோடே வைத்த  போதே தேவரீர் நினைவு இன்னது என்று அறிகிலேன் –
முந்துற முன்னம் உன் ப்ரசாதத்தாலே திருவடிகளில் பிறந்த ருசியை மாற்றி –
இதர விஷய பரவணன் ஆக்காது ஒழிய வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-

பதவுரை

நஞ்சு அரா அணை

(ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே
கிடந்த

திருக்கண் வளர்ந்தருள்கிற
நாத

ஸ்வேச்வரனே!
பாத போதினில்

(உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே
வைத்த

(இப்போது) வைக்கப்பட்டுள்ள
சிந்தை

மகஸ்ஸை
வாங்குவித்து

அதில் நின்றும் திருப்பி
நீங்குவிக்க

வேறு விஷயங்களில் போக்க
நீ

ஸ்வதந்த்ரனான நீ
இனம்

இன்னமும்
மெய்த்தன்

மெய்யாகவே
வல்லை ஆதல்

ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை
அறிந்தனன்

அறிந்திருக்கிறேன்
மாயனே!

ஆச்சரியசக்தியுக்தனே!
என்னை

அடியேனை
நின் மாயமே உய்ந்து

உன்னுடைய மாயச்செயலையே கடத்தி
மயக்கினில்

ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து)
மயக்கல்

மயக்கவேண்டா

வியாக்யானம் –

நச்சராவணைக் கிடந்த நாத –
உகவாதாருக்கு கிட்ட ஒண்ணாதபடி விஷத்தை உமிழுகிற திருவநந்த வாழ்வான் மேல்
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனே –
நீ உகந்தாரை நித்ய கைங்கர்யம் கொள்ளும் ஸ்வ தந்த்ரன் -என்றபடி –

பாத போதினில் வைத்த சிந்தை –
உன் திருவடிகள் ஆகிற செவ்விப் பூவிலே வ்யவஸ்திதமான மனஸை –
ப்ராப்தமுமாய் -நிரதிசய போக்யமுமாய் இருந்துள்ள திருவடிகளிலே பொருந்தின
மனஸை -என்கை

வாங்குவித்து –
திருவடிகளில் நின்றும் மீளும்படி பண்ணி –
நிவேசிதாத்மாகதமன்யதிச்சதி -என்று மனசையும் விமுகமாம்படி பண்ணி –

நீங்குவிக்க நீ யினம் மெய்த்தன் வல்லை –
நெடும்காலம் அகன்று போராமே -இன்னும் அகலும்படி -பண்ண வல்ல -சர்வ சக்தியான நீ –

மெய்யே வல்லை –யாதலால் அறிந்தனன் –
ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம்
ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று
அறிந்து கொண்டேன் –

நின் மாயமே உய்த்து நின் மயக்கினில் மயக்கல்
உமக்கு செய்ய வேண்டியது என் என்ன –
மமமாயா -என்கிறபடியே தேவரீர் இட்ட வழக்கான பிரக்ர்தியோடே
நித்ய சம்ஸ்ரஷ்டனாம்படி பண்ணி –
உனக்கு பரிகரமான சப்தாதி விஷயங்களில் மூட்டி –
என்னை அறிவு கெடுக்க பாராது ஒழிய வேணும் –

சேதனரை அறிவு கெடுக்குமாவை யாகையாலே -மயக்கு-என்று சப்தாதி விஷயங்களைச்-சொல்லுகிறது –

என்னை –
உன் பக்கலிலே ந்யஸ்த பரனாய் -உன் கை பார்த்து இருக்கிற என்னை –

மாயனே —
நம்மை ஒழியச் செல்லாதாரை சப்தாதி விஷயங்களிலே மூட்டி அறிவு கெடுப்புதோமோ-
ஸ்வதந்த்ரை யன்றோ நாம் அங்கன் செய்வது என்ன –
ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடையவனே –

உபமாநம சேஷாணாம் ஸாதூநாம் -என்கிறபடியே ப்ரஹ்லாதனை எதிர் அம்பு கோக்க
பண்ண வல்லை –

பிராதிகூல்யத்தில் வ்யவஸ்திதனான சிசுபாலனுக்கு சாயுஜ்ய ப்ரதனாகவும் வல்லை –

இதுவன்றோ தேவரீர் உடைய ஸ்வாதந்த்ர்யம் -என்கிறார் –

———————————————————————————–

86 -பாட்டு –

அவதாரிகை –

உம்மை நம் பக்கலில் நின்றும் அகற்றி ப்ரகர்தி வஸ்யர் ஆக்குவோமாக நம் பக்கலிலே
அதிசங்கை  பண்ணுவான் என் -என்ன –
விரோதி நிரசன சமர்த்தனான நீ -என் ப்ரகர்தி சம்பந்தத்தை யறுத்து
என் நினைவைத் தலைக் கட்டாது ஒழிந்தால்
அதிசங்கை பண்ணாதே செய்வது என் -என்கிறார்

சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –86-

பதவுரை

சாடு நாடு பாதனே

சகடாஸுரனை உதைத்தொழித்த திருவடியையுடையவனே!
சலம் கலந்த பொய்கை வாய்

(விஷமே அதிகமாகி அத்துடன் சிறிது) ஜலமும் கலந்திருக்கப்பெற்ற ஒரு மடுவிலே
ஆடு அரவின்

(செருக்கினால் படமெடுத்து) ஆடிக்கொண்டிருந்த காளியநாகத்தினுடைய
வன்பிடர்

வலியதான பிடரியிலே
நடம் பயின்ற

நர்த்தனம் செய்த
நாதனே!

ஸ்வாமியே
கோடு நீடு கைய

ஸ்ரீபாஞ்சஜந்யத்தினால்  நித்ராஸங்க்குதாமன திருக்கையையுடையவனே!
கண்ணனே

கண்ணபிரானே!
செய்ய பாதம்

(உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை
நாளும்

நாள்தோறும்
உன்னினால்

அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது
மெய்

மெய்யாகவே
வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல்

(அடியேனை) முத்தனாக்காதது ஏனோ!

வியாக்யானம் –

சாடு சாடு பாதனே –
சகடாசுரன் முடியும்படி திருவடிகளை நிமிர்த்தவனே –
அனுகூலர்க்கு உத்தேச்யமான திருவடிகளை யாய்த்து ப்ரதிகூலர்க்கு நாசகரம் ஆய்த்து –
இது இறே வஸ்து ஸ்வபாவம் -விடமும் அமுதமுமாய் -என்னக் கடவது இறே

இத்தால்-விரோதி நிரசநத்தில் உனக்கு வருத்தம் உண்டாய்த் தான் இழக்கிறேனோ -என்கை –

சலங்கலந்த பொய்கைவாய் –
விஷமே ப்ரசுரமாய் -அத்தோடே யமுநா ஜலமும் மிச்ரமாய் இருந்துள்ள பொய்கையிலே –

தஸ்யாச்வாஸ மஹா பீமம் விஷான் நிஸ்ஸ்ர் தவாரிணம்
ஹ்ர்தம் காளிய நாகஸ்ய தத்ர் சேதி விபீஷணம் -என்னக் கடவது இறே

ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற –
அப்பொய்கையிலே வர்த்திக்கிற காளியனுடைய திண்ணிய பிடரியிலே நின்று
சஞ்சரிக்கிற சஞ்சாரம் வல்லார் ஆடினாப் போலே இருக்கை

ஆடரவு -என்று க்ரோதத்தாலே ஆடுகிற அரவு என்றுமாம்

ஆடல்-என்று நடையாட்டமும் -கூத்தும்

நாதனே –வகுத்த ஸ்வாமி யானவனே
விரோதி நிரசனம் உகப்பாகைக்கு அடியான சம்பந்தத்தைச் சொல்லுகிறது –

இத்தால் –
1-என் விரோதியை போக்குக்கைக்கு உகப்பு இல்லாமையாலே இழக்கிறேனோ –
2-சம்பந்தம் இல்லாமல் இழக்கிறேனோ -என்கை

பகவத் சமாஸ்ரயணத்துக்கும் அனுபவத்துக்கும் -ஆன ஸ்ர்ஷ்டமான சரீரத்திலே
அஹங்கார லேசம் உண்டானால் அது நிரஸநீயம் என்று தோற்றுகைக்காக
சகடாசூர நிரசநத்தை அருளிச் செய்தார் –

தனக்கு போக்யமான ஆத்மாவுக்கு விஷ ஸம்ஸர்க்கம் போலே நிரஸநீயம்
தேக சம்பந்தம் என்று தோற்றுகைக்காக காளியமர்த்தனத்தை அருளிச் செய்தார்-

அநுகூலமாக வைத்தது ஓன்று இறே சகடம்
உபஜீவ்யமாய் இருப்பது ஓன்று இறே யமுனா ஜலம்

கோடு நீடு கைய –
சர்வ காலமும் திருக் கைக்கு நிரூபகம் என்னும்படி -அத்தை பிரியாத -ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை-உடையவனே –
1-என் விரோதியைப் போக்குகைக்கு உன் கையில் பரிகரம் இல்லாமல் இழக்கிறேனோ
2-என் கையில் பரிகரம் உண்டாய் இழக்கிறேனோ -என்கை

செய்ய பாத நாளும் உள்ளினால் –
உன் திருமேனிக்கு பரபாகமாய் -ஆகர்ஷமான திருவடிகளை -சர்வகாலமும்
அபாஸ்ரயமாக அனுசந்தித்தால்-
இத்தால் -நான் அந்ய பரனாய்த் தான் இழக்கிறேனோ -என்கை

வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் –
இப்படி சக்தனாய் இருக்க
ப்ரகர்தி சம்பந்தம் அற்று
திருவடிகளைப் பெறுமவனாக
மெய் செய்யாது ஒழிகிற பிரகாரம் என்னோ

மெய் செய்கை யாவது -விஷயீ கார மாத்ரத்திலே –
முடியாதது என் எனக்கேல் இனி -என்னப் பண்ணுதல்
ஜ்ஞான லாபத்தாலே -யாவர் நிகர் அகல் வானத்தே -என்னப் பண்ணுதல்
செய்யும் இவ்வளவுகளாலே வந்த ஆஸ்வாசம் ஒழிய தேக சம்பந்தத்தை அறுக்கையும்
நித்ய ஸூரிகள் பரிமாற்றத்தைப் பண்ணித் -தருகையும்

கண்ணனே —
சம்சாரிகளுக்கு இச்சையே தொடங்கி பரமபக்தி பர்யந்தமாக
எல்லா அவஸ்தைகளையும் உண்டாக்கி
முக்தர் ஆக்குகைக்கு அன்றோ அவதாரத்துக்கு பலம்
அனுபாவ்யமாய் இருப்பதொரு கர்ம சேஷம் உண்டாயோ அவதரித்தது –

ஆக –
நீர் நம் பக்கலிலே அதி சங்கை பண்ணுகைக்கு ஹேது என் என்ன –
நீ சக்தனாய் வைத்து –
என் அபிமதம் செய்யாமைக்கு ஹேதுவைச் சொல்லல் ஆகாதோ
நான் அதி சங்கை பண்ணினதுக்கு ஹேது சொல்லும்படி -என்கிறார் –

—————————————————————————–

87 -பாட்டு –

அவதாரிகை –

செய்ய பாதம் நாளும் உள்ளினால் -என்று நீயே எனக்கு அபாஸ்ரயம் என்கையாலே
நம்மை ஒழியவும் எனக்கு வேறு ஒரு பற்று இல்லையோ என்ன –
அபாஸ்ரயமாக சம்பாவனை உள்ள ப்ரஹ்ம ருத்ரர்கள் ஸ்வ அதிகார ஸித்திக்கு
தேவரீர் கை பார்த்து இருக்கும்படியாய் இழிந்த பின்பு –
சர்வாதிகரான தேவரீரை ஒழிய வேறு ஒரு பற்றை உடையேன் அல்லேன் என்று
தம்முடைய அதிகாரத்துக்கு அபேஷிதமான அநந்ய கதித்வ க்யாபநம் பண்ணுகிறார் மேல் –

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –87-

பதவுரை

நெற்றிபெற்ற கண்ணன்

நெற்றியிலே கண்ணைப் பெற்றவனான சிவனும்:
விண்ணின் நாதன்

தேவேந்திரனும்
போதின் மேல் நல் தவத்து நாதன்

தாமரைப்பூவிலே பிறந்த நல்ல தபாஸனான நான்முகக் கடவுளும்
மற்றும் உள்ள வானவர்

மற்றுமுண்டான பல தேவதைகளும்
கற்ற வெற்றியால்

தாங்கள் தாங்கள் அப்பயணித்துள்ள முறைமைக் கிணங்க
வணங்குபாத!

வந்து வணங்கப்பெற்ற திருவடிகளை யுடையவனே!
நாத!

நாயகனே!
வேத!

வேதப்ரதிபாத்யனே!
உரைக்கில்

(என் அத்யவஸாயத்தைச்) சொல்லப்புக்கால் (சொல்லுகிறேன் கேளாய்.)
நின் பற்று அலால்

உன்னையே ஆச்ரயமாகக் கொண்டிருப்பது தவிர
மற்றது ஓர் பற்று

வேறொர் ஆச்ரயத்தை
உற்றிலேன்

நான் நெஞ்சாலும் ஸ்பர்சிக்கவில்லை.

வியாக்யானம் –

நெற்றி பெற்ற கண்ணன் –
நெற்றியிலே கண்ணை உடைய ருத்ரன் –
தன்னுடைய சக்தி அதிசயத்துக்கு பிரகாசகம் ஆகையாலே லலாட நேத்ரத்தை
தனக்கு பேறாக நினைக்கிறான் ஆய்த்து –

விண்ணின் நாதனோடு போதின் மேல் -நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகரான இந்த்ரனோடே
திரு நாபி கமலத்தை பிறப்பாகவும் ஸ்தாநமாகவும் உடையனாய்
துஷ்கரமான தபச்சாலே சதுர் தச புவன ஸ்ர்ஷ்டாவுமாய்
அதுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவோடே
ஹவிர்பாகபுக்குக்களான சகல தேவதைகள் –
சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான தேவர்களோடும் இந்த்ரனோடும் கூட
ப்ரஹ்ம ருத்ரர்களைச் சொல்லிற்று -அவர்களோபாதி இவர்களும்
ஷேத்ரஞ்ஞர் என்று தோற்றுகைக்காக-

கற்ற பெற்றியால் வணங்கு பாத –
தாம்தாம் கற்ற பிரகாரங்களாலே ஆஸ்ரயிக்கும் திருவடிகளை உடையவனே –

கற்ற பிரகாரங்கள் என்கையாலும் –
ஆஸ்ரயணைத் சொல்லுகையாலும் -இவர்களுடைய சாஸ்த்ரவச்யதையும்
ஜ்ஞான சக்திகளுடைய வைஷம்யங்களையும் -சொல்லுகிறது –

நாத வேத –
நாதனாக -வேத ப்ரதிபாத்யனானவனே –
தேவர்களுடைய ஆஸ்ரயணத்துக்கு அடியான சம்பந்தத்தை சொல்லுகிறது –

தமீச்வராணாம் ப்ரதமம் மகேஸ்வரம் -என்றும் –
பதிம் விச்வச்ய -என்னக் கடவது இறே

நின் பற்று அலாலோர் பற்று மற்றது உற்றிலேன் –
உன் திருவடிகளை அபாஸ்ரயமாக இருக்கும் அது ஒழிய எனக்கு வேறு ஒரு
அபாஸ்ரய ஸ்பர்சம் இல்லை –

உறுதல் -தீண்டுதல்

உரைக்கிலே –
தேவதாந்தர ஸ்பர்சம் இல்லை என்று சொல்லுகையும் எனக்கு அவத்யம் -என்கை –

————————————————————————————-

88-பாட்டு –

அவதாரிகை –

ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய  அதிகாரம் ஈச்வரனாலே என்றார் கீழே –
இதில் –
அவர்கள் தங்கள் ஆபநநிவ்ருத்திக்கு தேவரீர் கை பார்த்து இருக்கும்படி பரம
உதாரரான தேவரீரை ஒழிய வேறு ஒருவரை தேவதையாக மதிப்பேனோ –என்கிறார் –

வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள்  எயிற்று அரவு அளாய்
அள்ளலாய் கடைந்த வன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை யன்றி மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே –88-

பதவுரை

வெள்ளை வேலை

வெண்கடலாகிய திருப்பாற்கடலிலே
வெற்பு

மந்தரமலையை
நாட்டி

நட்டு
வேள் எயிறு அரர்

வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை
அளாய்

(கடைகயிறாகச்) சுற்றி
அள்ளல் ஆ

அலைகள் செறியும்படி
கடைந்தஅன்று

(கடலைக்) கடைந்தருளின காலத்தில்
அருவரைக்கு

தாங்க முடியாததான அம்மலைக்கு
ஓர் ஆமை நெய்

(தாரகமான) ஒரு ஆமையாகி
வானவர்களுக்கு

தேவதைகளுக்கு
உள்ள நோய்கள் தீர் மருந்து

ஏற்பட்டிருந்த நோய்களைத் தீர்க்கவல்ல மருந்தாகிய அம்ருதத்தை
அளித்த

(கடலிற் கடைந்தெடுத்து) அருளின
எம் வள்ளலாரை

உதாரனான எம்பெருமானை
அன்றி

யன்றி
மற்று ஓர் தெய்வம்

வேறொரு தேவதையை
நான் மதிப்பவனே

நான் (ஒருபொருளாக) மதிப்பனோ!

வியாக்யானம் –

வெள்ளை வேலை வெற்பு நாட்டி-
வெளுத்த கடலிலே மந்த்ர பர்வதத்தை நாட்டி –
காளமேக நிபாச்யம்னானதான் -ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளும் போதை
அந்த பரப்பாக ரசம் அநந்ய பிரயோஜனருக்கு அனுபாவ்யமாய் இருக்க –
அத்தை குலைத்து -ப்ரயோஜநாந்த பரருக்காக –
அக்கடலிலே கொடு புக்கு மந்த்ரத்தை நாட்டி –

வெள்  எயிற்று அரவு அளாய் –
வெளுத்த தந்த பந்தியைக் காட்டுகிற வாஸூகியை அதிலே சுற்றி –
தன்னை மந்த்ர பர்வதத்திலே சுற்றி வலிக்கப் புக்க வளவிலே
தன பல ஹாநி தோற்ற பல் காட்டுகிற வாசுகிக்கு
பல சாதநத்தை பண்ணி அந்த மந்த்ரத்திலே சுற்றி –

தேஜஸா நாக ராஜாநம் ததாப்யாயி தவான் ப்ரபு -என்னக் கடவது இறே

எயிறு -பல்லு

அரவு -பாம்பு –அளாய் -அளவி -சுற்றி –

அள்ளலாய் கடைந்த வன்று –
அப்ரமேயோ மஹோ ததி -என்கிறபடியே அம்ம ஹார்ணவத்தை –
கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி -என்னும்படி திரைகள் எதிரே வந்து செறியும்படி-கடைந்த வன்று –

அள்ளல் -செறிவு

அன்று -என்கிறது –

ஈஸ்வர அபிமாநிகளான சகல தேவதைகளும் தங்கள் ஆபன்நிவ்ர்த்திக்கு-

அவன் கை பார்த்து இருந்தவன்று -என்கை –

அருவரைக்கு ஓர் ஆமையாய் –
அம்மந்த்ரம் ஆழம்கால் படாமே தன்  முதுகில் நின்று சுழலும்படி
அத்வதீயமான ஆமையாய் தரித்து –
அஜ் ஜாதியிலே அந்யதமனாய் என்றுமாம் –

ஷீரோத மத்யே பகவான் கூர்மரூபீ ஸ்வயம் ஹரி
மந்த்ரத்ரோ திஷ்டாநாம் ப்ரமதோ பூந் மஹா முநே -என்னக் கடவது இறே

உள்ள நோய்கள் –
1-ஈச்வரோஹம் -என்று இருக்கிறவர்களுக்கு -2-ஒரு ப்ராஹ்மண சாப மாத்ரத்தாலே
தன்னையும் தன் விபூதியையும் அ ஸ்ரீ ப்ரவேசிக்கையும்
3-அத்தாலே சத்வம் குடி போகையும்
4-அத்தாலே ஜ்ஞான ஹாநியும் -பல ஹாநியும்
5-அந்த பல ஹாநியாலே வந்த அஸூர பரிபவமும் –
6-இவற்றால் வந்த துக்க பரம்பரைகளும் நோய்கள் இறே

தீர் மருந்து வானவர்க்கு அளித்த –
இவர்கள் துரிதங்கள் போக -அம்ர்தத்தையும் பிராட்டி உடைய விசேஷ கடாஷத்தையும் கொடுத்து –
அமர்த்த ப்ரதானத்தாலே பலத்தையும் –
பிராட்டி உடைய விசேஷ கடாஷத்தாலே ஐஸ்வர்யத்தையும்
கொடுத்தான் என்கை

பீதேம்ர்தேச பலி பிர்தேவைர்த் தைத்ய சமூஸ் ததா
வத்யமா நாததோ தேவா ஹரி வஷஸ் தலஸ் தயா
லஷ்ம்யா மைத்ரே யஸ ஹஸ பராந் நிர்வ்ர்த்தி மாகதா -என்னக் கடவது இறே

எம் வள்ளலாரை யன்றி மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே —
உதாராஸ் சர்வ ஏவைத -என்கிற ஔ தார்யத்தை எனக்கு பிரகாசிப்பித்தவனை  ஒழிய
அநந்ய பிரயோஜனனாய்
அநந்ய சரண்யனனாய்
இருந்துள்ள நான் வேறு ஒரு தெய்வத்தை ஆஸ்ரயணீயமாக நினைப்பேனோ –

———————————————————————————–

89-பாட்டு –அவதாரிகை –

ப்ரஹ்மாதிகளையும் மேன்மை குலையாதபடி நின்று ரஷித்த அளவு அன்றிக்கே –
க்ருஷ்ணாஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ் ச பாண்டவ -என்கிறபடியே
பாண்டவர்களுக்கு தூத்ய சாரத்யந்களைப் பண்ணி
தாழ நின்று
சத்ய சங்கல்பனாய்க் கொண்டு
விரோதி வர்க்கத்தை அழியச் செய்து
ராஜ்யத்தை கொடுத்த –உன்னை ஒழிய வேறு ஒரு தெய்வம் உண்டு என்று
நான் நினைத்து இருப்பேனோ -என்கிறார் –

பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

பதவுரை

முன்

முற்காலத்தில்
பார் மிகுந்த பரம்

பூமியிலே அதிமாகவுண்டான சுமையாகிய துஷ்டவர்க்கத்தை
ஒழிச்சுவான்

ஒழிப்பதற்காக
அருச்சுனன்  தேர் மிகுத்து

அர்ஜுனனுடைய தேரை நன்றாக நடத்தி
மாயம்

(பகலை இரவாக்குகை முதலான) ஆச்சரியச் செயல்களை
ஆக்கி நின்று

உண்டாக்கி
கொன்று

(எதிரிகளைக்) கொன்று
வெள்ளிசேர் மாரதர்க்கு

ஐயம்பெறுவதாக நினைத்திருந்த மஹாரதர்களான துர்யோதநாதிகளுக்கு
வான் கொடுத்து

வீரஸ்வர்க்கத்தைக் கொடுத்து
வையம்

பூமண்டலத்தை
ஐவர் பாலது ஆம்

பஞ்சபாண்டவர்களுடையதாக அக்குவித்த
சீர் மிகுந்த

புகழ் மிகுந்த
நின் அலால்

உன்னைத்தவிர
ஓர் தெய்வம்

மற்றொரு தெய்வத்தை
நான் மதிப்பனே

நான் ஆதரிப்பேனோ!

வியாக்யானம் –

பார் மிகுத்த பாரம் –
சர்வம் சஹையான பூமி தன்னால் பொறுக்க ஒண்ணாது என்று சொன்ன மிக்க பாரத்தை –
காலநேமி ஹதோயோ சௌ -என்று தொடங்கி
ததான் ஏச மகா வீர்யா ந்ர்பாணம் பவநே ஷூ தே
சமுத் பன்னா துராத்மாந ஸ்தான்ந சங்க்யாது முத்ஸஹே –

முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து-
தான் முற்பாடனாய் -அத்தை தவிர்ப்பிக்கைகாக அர்ஜுநனுடைய தேரை பார்த்த பார்த்த-இடம் எல்லாம் நடத்தி
அர்ஜுனனுக்கு தான் முற்பாடன் ஆகையாவது –
விஸ்ர்ஜய ஸ சரஞ்சாபம் -என்று இறாய்த்த அர்ஜுனனை -கரிஷ்யே வசனம் தவ -என்னப்-பண்ணுகையும்
யுத்த மத்யத்தில் -விஜய பரிகரங்களில் உத்கர்ஷ்ட பரிகரம் தேர் என்று எதிரிகள்
மதிக்கும்படி தேரை நடத்துகையும்
ஆயுதம் எடுக்க கடவது அன்றாக பிரதிக்ஜை பண்ணுகையாலே சாரத்ய வேஷத்திலே
அதிகரித்து தேரைக் கொண்டே விஜய வ்யாபாரங்கள் அடைய பண்ணினான் -ஆய்த்து –

மாயமாக்கி –
ஆச்சர்யங்களை உண்டாக்கி –
அதாவது –
பகலை இரவாக்கியும்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுக்கையும் –
ஆஸ்ரித அர்த்தமாக
கால வ்யவஸ்தையையும் -தன் ஸ்வபாவ வ்யவஸ்தையையும் அழித்தான் -என்கை

நின்று கொன்று –
அர்ஜுனன் செய்தான் என்னும்படி
முகம் தோற்றாமே  நின்று
எதிரிகளைக் கொன்று –

வென்றி சேர் மாரதர்க்கு வான் கொடுத்து –
நாம் யுத்தோ ந்முகரான வன்று விஜயமும் நம்மது
அத்தாலே பூமியும் நம்மதாகக் கடவது என்று இருந்த
மகா ரதர்களான துரியோநாதிகள் என்ன –
அவர்களுக்கு துணையாய் வந்த த்ரோணாதிகள் என்ன –
இவர்களுக்கு வீர ஸ்வர்க்கத்தைக் கொடுத்து —
அவர்களக்கு ஒரு பத ந்யாசமும் கொடோம் -சாகல்யேந எங்களதாக  வேணும் -என்று
இருந்த பூமியை பாண்டவர்கள் பக்கலிலே யாம்படி புகழை மிகுத்த உன்னை ஒழிய

சீர் -புகழ்
பாண்டவர்கள் விஜயீகளாய் பூமியை சாகல்யேந லபித்தார்கள் என்னும்படி புகழ் மிகுத்த
என்னுதல்
ஆஸ்ரித பஷபாதி என்னும் தன் புகழை மிகுத்தான் என்னுதல்

ஓர் தெய்வம் நான் மதிப்பனே —
ஆஸ்ரித பஷ பாதன் என்று அறிந்த நான்
வேறு ஒரு தெய்வத்தை ஆஸ்ரயணீயமாக நினைப்பேனோ –

————————————————————————————-

90-பாட்டு –

அவதாரிகை –

உன்னை ஒழிந்தார் ஒருவரை ஆஸ்ரயணீயர் என்று இரேன் என்று தம்முடைய
அநந்ய கதித்வம் சொன்னார் கீழ் –

இப்பாட்டில் –
ஆஸ்ரயணீயர் தேவரீரே ஆனாலும்
தேவரீரை லபிக்கைக்கு
தேவரீர் திருவடிகளை ஒழிய
என் பக்கல் உபாயம் என்று சொல்லல் ஆவது இல்லை என்று
தம்முடைய
ஆகிஞ்சன்யத்தை அருளிச் செய்கிறார் –

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –90-

பதவுரை

புனித

பரிசுத்தமான
எம் ஈசனே

எம்பெருமானே!
குலங்கள் ஆய ஈர் இரண்டில்

(ப்ராஹங்மணாதி) நான்கு வர்ணங்களுக்குள்

ஒன்றிலும்  ஒரு வர்ணத்திலும்

பிறந்திலேன்

நான் பிறக்கவில்லை
கலங்கள் ஆய நல்கலைகள் காலிலும்

(சேதநர்க்கு) நன்மையைக் காட்டுவதான நல்ல நான்கு வேதங்களிலும்
நவின்றிலேன்

பயிற்சி செய்யவில்லை;
புலன்கள் ஐந்தும்

பஞ்சேந்திரியங்களையும்
வென்றிலேன்

ஜயிக்கவில்லை.
பொறியிலேன்

பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு)
நின்

உன்னுடைய
இலங்கு பாதம் அன்றி

ஒளிமிக்க திருவடிகளைத் தவிர
மற்று ஓர் பற்று இலேன்

வேறொரு ஆச்ரயத்தை யுடையேனல்லேன்

வியாக்யானம் –

குலங்களாய இத்யாதி –
இப்பாட்டு –பொறியிலேன் என்கிற பதம் தொடங்கி
கீழ் நோக்கி காரண பரம்பரையாலும்
பாட க்ரமத்தாலே கார்ய பரம்பரையாலும்
இரண்டு முகமாக நிர்வஹித்து போரும்

நம்மை லபிக்கைக்கு உம்முடைய பக்கல் உள்ளது என் என்ன –
சம்சார பீஜமான சப்தாதி விஷயங்களிலே அகப்பட்டு நின்றேன் -இது இ றே என் பக்கல் உள்ளது –

பொறி-என்று சப்தாதி விஷயங்களைச் சொல்லுகிறது
நாற்றத்தை காட்டி அகப்படுத்திக் கொள்ளுமதாகையாலும்
அகப்பட்டால் பின்பு புறப்பட விரகு அற்று இருக்கையாலும் –
விநாசததோடே தலைக்கட்டுகையாலும்

சப்தாதி விஷயங்களே புருஷார்த்தம் என்று சாதன அனுஷ்டானம்  பண்ணுகிற
சம்சாரத்தில் இது அகப்படத்தகாது என்று அறிந்த நீர் அவ் விஷயங்களிலே இந்த்ரியங்கள்
போகாமே நோக்க மாட்டிற்று இலரோ -என்ன

புலன்கள் ஐந்தும் வென்றிலேன் -இந்த்ரியங்கள் ஸ்வ வசத்தில் என்னைக் கொடு போக
அவை இட்ட வழக்காய் திரிந்தேன் இத்தனை போக்கி
அவற்றிலே ஓர் இந்த்ரியத்தை நியமிக்க ஷமனாய்த்து இலேன்

இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம்மந -என்னக் கடவது இறே
தர்மேண பாபமப நுததி -என்றும் –
சாந்தோ தாந்தோ உபரத -என்று
இத்யாதிகளாலே வேதங்கள் இந்திரிய ஜெயத்துக்கு வழி சொல்லா நின்றன
அவ் வேதங்களில் இழிய மாட்டிற்று இலீரோ -என்ன

நலங்களாய நற் கலைகள் நாவிலும் நவின்றிலேன்
நலங்களாய கலைகள்,ஆவது -த்ரை குண்ய விஷயா  வேதா -என்கிறபடியே
சேதனருடைய குண அநுகூலமாக நிற்கின்ற நிலைகளிலே நல வழி போக்கும்படி
மாதா பித்ர்சதங்களில் காட்டிலும் வச்தல தரங்கள் ஆகை –

நற் கலைகள் ஆவது -மோஷ தத் சாதனங்களிலே நோக்கை -உடைத்தாகை
இப்படிப் பட்ட நாலு வேதங்களிலும் இசிலிக்கப் பெற்றிலேன் –

நவிலுதல்-பயிலுதல்

கலை -வேதம் –

பிரதமத்தில் அத்யயனம் பண்ணினார்க்கு இறே தத் பலமான அனுஷ்டானம் –
அது இறே இந்த்ரிய ஜெயத்துக்கு சாதனம் –

ஆக -இப்படி இந்த்ரிய ஜெயத்தில் நான் தூரஸ்தன் ஆகை
இந்த இந்த்ரிய ஜெயத்துக்கு பிரதம சாதனமான அத்யயநாதிகளில் இலியாது ஒழிவான்
ஏன் என்னில் –

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
உபேஷையாலே  இழியாது ஒழிந்தேன் அல்லேன்
அயோக்யனாகையாலே இழியப் பெற்றிலேன்
அத்யயநம் த்ரை வர்ணிக அதிகாரம் இறே
சதுர்த்த வர்ணத்தில் ஜநித்தவனுக்கும் பாகயஞ்ஞாத் யதிகாரம் உண்டு
த்ரை வர்ணிக சுச்ருஷணத்திலே அதிகாரம் உண்டு-அத்தாலே விரோதி பாபம்
போகையாலே இந்த்ரிய ஜெயத்துக்கு சாதனம் ஆகலாம் –
அந் நாலு வர்ணத்திலும் பிறப்பப் பெற்றிலேன்

இவ் உத்கர்ஷ்ட வர்ணத்திலே ரிஷி புத்ரராய் திரு வவதரித்த இவர் நாலு வர்ணத்தில்
பிறந்திலேன் என்பான் என் என்னில் –
யது குலத்திலே அவதரித்த க்ர்ஷ்ணன் வளர்ந்து அருளின கோப குலத்தை தனக்கு
குலமாக நினைந்து இருந்தால் போலே –
இவரும் வளர்ந்து அருளினபடியை நினைந்து அருளிச் செய்கிறார் –

கோபாலோ யாதவம் வம்சம் மக்நமாப்யுத்த ரிஷ்யதி என்று
அவதரித்த குலம் கோப குலம் -ரஷ்ய குலம் யது குலமாய் சொல்லா நின்றது இறே

சபிதா யஸ்து போஷக -எண்ணக் கடவது இறே

அதவா
நாலு வர்ணத்திலும் எனக்கு அந்வயம் இல்லாதபடியாலே த்ரை வர்ணிக விஹிதமான
அத்யயநத்துக்கு அயோக்யன் ஆனேன் –

அத்யயநம் பண்ணப் பெறாமையாலே வேதார்த்த ஜ்ஞானம் இல்லையாய்
அதன் பலமான வேதார்த்த அனுஷ்டானம் இல்லையாய் இந்த்ரிய ஜெயம் பண்ணப் பெற்றிலேன்

அஜிதேந்த்ரியன் ஆகையாலே விஷயங்களின் கையில் அகப்பட்டு நின்றேன் என்கிறார் -என்னவுமாம்

சம்சார பீஜமான விஷயாந்தர பராவண்யம் ஒழிய உம்முடைய பக்கல் ஒரு முதல் இல்லை யாகில்
உமக்கு உஜ்ஜீவன ஹேதுவாக நீர் நினைத்து இருந்தது என் என்ன –

புனித –
விஷயாந்தர ப்ராவண்யத்தால் அசுத்தராய் -தாம்தாம் பக்கல் சுத்தி ஹேது இன்றிக்கே இருக்கும்
குறைவாளரையும் ஸ்வ ஸ்பர்சத்தாலே சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன் அல்லையோ

அதாவது –
உத்கர்ஷ்ட ஜன்மம் என்ன –
வேத ஸ்பர்சம் என்ன
வேதார்த்த அனுஷ்டானம் என்ன –
இவற்றினுடைய ஸ்தானத்திலே பகவத் அனுக்ரஹம் நின்று
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து தருகை

நின்னிலங்கு பாதமஅன்றி மற்று ஓர் பற்றிலேன் –
இருட்டு மிக்கதனையும் விளக்கு ஒளி வீறு பெறுமாபோலே
குறைவாளர்க்கு முகம் கொடுக்கையாலே விலங்கா நின்றுள்ள திருவடிகளை ஒழிய
வேறு ஜீவன உபாயத்தை உடையேன் அல்லேன்

எம் மீசனே
வேறு முதல் இன்றிக்கே அகதிகளான எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -71-80-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 30, 2013

71 -பாட்டு –

அவதாரிகை –

பாணனை ரஷிக்க கடவேன் என்று பிரதிக்ஜை பண்ணி ஸபரிகரனாய் கொண்டு
ரஷணத்தில் உத்யோகித்து எதிர் தலையில் அவனைக் காட்டிக் கொடுத்து தப்பி
போன படியாலும் -ஒருவன் ஆஸ்ரிதனுக்கு உதவின படி என் -என்று லஜ்ஜித்து
க்ர்ஷ்ணன் கிருபை பண்ணி அவன் சத்தியை நோக்கின படியாலும்
அவன் ரஷகன் அல்ல என்னும் இடமும்
க்ருஷ்ணனே ரஷகன் என்னும் இடமும்
ப்ரத்யஷம் அன்றோ -இவ்வர்த்தத்தை ஒருவர் சொல்ல வேண்டி இருந்ததோ -என்கிறார் –

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே -71-

பதவுரை

வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால்

(மகரந்தத்திற்காக) வண்டுகள் உலாவப்பெற்ற பூமாலையை அணிந்திருந்த உஷையின் நிமித்தமாக
வெகுண்டு

கோபங்கொண்டு
இண்ட

செறித்துவந்த
வாணன்

பாணாகரனுடைய
ஈர் ஐ நூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணித்தநாள்

கழித்தபோது
முண்டன் நீறன்

மொட்டைத்தலையனாய் நீறு பூசினவனான ருத்திரனும்
மக்கள்

அவனுடைய குமாரர்களும்
வெப்பு

ஜ்வரதேவதையும்
மோடி

பிடாரியும்
அங்கி

அக்நி தேவதையும் (மற்றுமுள்ளவர்களும்)
ஓடிட

(பாணாசுரனை வஞ்சித்துவிட்டு. தங்களுயிரைக் காத்துக் கொள்ள) ஓடிப்போன வளவிலே
கண்டு

பார்த்து
நாணி

(இந்த முதுகுகாட்டிப் பயல்களோடு போர் செய்யவா நாம் வந்தோமென்று) வெட்கப்பட்டு
வாணனுக்கு

பாணாகரன் விஷயத்தில்
இரங்கினான்

கிருபைபண்ணினவன்
எம்மாயனே

ஆச்சரிய சக்தியுக்தனான எம்பெருமானேயாவன். (‘எம் ஆயனே’ என்று பிரிக்கவுமாம். ஆயன் கண்ணபிரான்.)

வியாக்யானம் –

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் –
வண்டு மாறாத மாலையாலே அலங்க்ர்தையான உஷை நிமித்தமாக –
ஸ்வப்ன த்ர்ஷ்டனான அநிருத்தனை சித்ரலேகை கொண்டு வரக் கூடும் என்று
அவள் வரவு பார்த்து செவ்விப் பூவாலே ஒப்பித்து இருந்தபடியைச் சொல்கிறது

வெகுண்டு இண்ட வாணன் –
எதிர்தலை சர்வேஸ்வரன் என்று பாராதே யுத்த க்ருத்தனாய் மேல் விழுந்த பாணன்

வெகுளி -கோபம்

இண்டல் -நெருங்குதல்

பிதரம் மாதரம் தாரான் -என்று ரக்த ஸ்பர்சங்களை விட்டுப் பற்ற வேண்டும் விஷயத்தில்
உஷை நிமித்தமாக பகைக்கிறான் இ றே துஷ் ப்ரக்ர்தை யாகை யாலே
காந்தர்வ பஷத்தாலே சம்ச்லேஷம் பிறந்த பின்பு க்ர்ஷ்ணன் உடன் சம்பந்தி யாய்க் கொண்டு
ப்ரீதமாக ப்ராப்தமாய் இருக்க -தன பாஹூ பலத்தாலே வந்த துர்மாநத்தாலே
சீறி அந்தரப்பட்டான் என்கை

ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள் –
இவன் எதிர் இடுகைக்கு ஹேது பஹூ பலம் ஆகையாலே பஹூ வனத்தை சேதித்த வன்று –

முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிட கண்டு நாணி –
ரஷிக்கிறேன் என்று பிரதிக்ஜை பண்ணினவன் செய்தது என் என்னில் –
பாணனை க்ருஷ்ணன் கையிலே காட்டிக் கொடுத்து ப்ரதானனான தன்னோடு
பரிகரத்தோடு வாசியற முது காட்டி ஓடின இத்தனை –

முண்டன் நீறன் –
முண்டிதனாய் பச்மச்சன்ன சரீரமான ருத்ரன் -இத்தால்-
க்ருஷ்ணனைக் குறித்து தன் அபிமத சித்தியைக் குறித்து சாதகனான அவன்
தன்னளவும் பாராதே -எதிர் தலையும் பாராதே -சாதக வேஷத்தோடு துர்மானம்
கொண்டாடின படி –
தேவ சேநாதிபதியான சுப்ரஹமண்யன் முதலான புத்ரர்கள்
ஜ்வரம் மோடி -பிடரி -49 அக்நிக்கும் கூடஸ்தனான அக்நி இவர்களோடு
தன்னோடு வாசியற முதுகிட்டு போகக் கண்டு லஜ்ஜித்து

மோடி -காளிகள் என்றுமாம்

லஜ்ஜிக்கையாவது -யுத்தோன் முகனாய் தான் படுதல் -எதிர் தலையை ஜயித்தல்
செய்ய ப்ராப்தமாய் இருக்க முதுகிடுகையாலே தரம் போராத இவற்றின் மேலே
யாகாதே நாம் சீறிற்று என்று லஜ்ஜிக்கை
அரி  பிராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய -என்கிறபடியே ஆஸ்ரிதனை ப்ராணாவதியாக
ரஷிக்க ப்ராப்தமாய் இருக்க -ஒருவன் ஆஸ்ரிதனுக்கு உதவின படி என் -என்று
லஜ்ஜித்து என்னவுமாம்

வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –
இப்படிப்பட்ட ருத்ரனை தனக்கு தஞ்சமாக நினைத்து இருக்கையாலே
தய நீயனான பாணனுக்கு -ஆபத்தே ஹேதுவாக க்ர்பை பண்ணி -இரண்டு தோள்களைக்
கொடுத்து ரஷித்தான் -என் ஆயனான க்ருஷ்ணன் அல்லனோ –

இத்தால்
தேவதாந்தரங்கள் ரஷகர் ஆனாலும் ஆபத்துக்கு உதவாதவர்கள்
ஈஸ்வரன் முனிந்த தசையிலும் ஆபத்சகன் என்றது ஆய்த்து
கர்பயா பர்ய பாலயத் –

———————————————————————————–

72-பாட்டு –

அவதாரிகை-

ருத்ரன் லோகத்திலே மோஷ ப்ரதன் என்று ஆச்ரயிப்பாரும்
ஆகமாதிகளிலே பரத்வத்தை பிரதிபாதித்தும் அன்றோ போகிறது என்னில்
நிர்தோஷ ஸ்ருதியில் அவனை ஷேத்ரஞ்ஞனாகச் சொல்லுகையாலே லோக
பிரசித்தி வடயஷி பிரசித்தி போலே அயதார்தம் -ஆகமாதிகள் விப்ரலம்பக வாக்யவத்-அயதார்த்தம் -என்கிறார் –

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72-

பதவுரை

போதில் மங்கை

பூமகளான லக்ஷிமியும்
பூதலம் கிழத்தி

பூமிப்பிராட்டியும்
தேவி

தேவிமாராவர்;
அன்றியும்

மேலும்
போது தங்குநான் முகன்

பூவிலே பொருந்திருப்பவனான பிரமன்
அவன் மகன்

பேரனாயிரா நின்றான்;
என்று

இவ்வண்ணமாக
வேதம்நூல்

வேத சாஸ்த்ரம்
ஓதுகின்றது

உரைப்பதானது
உண்மை

ஸத்யம்
மகன்

புத்திரனாயிரா நின்றான்;
சொலில்

மேலும் சொல்லப்புக்கால்
மாது தங்கு கூறன்

ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய்
ஏறு அது ஊர்தி

எருதை வாஹனமாக வுடையனான சிவன்
மற்று

இங்ஙனன்றிக்கே
அல்லது

இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை)
உரைக்கில்

(சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில்
இல்லை

அது அஸத்யம்

வியாக்யானம்-

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி-
தாமரையில் பிறப்பை உடைய பிராட்டியும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் மகிஷிகள் –
ஹ்ரீச்சதே லஷ்மீச்சபத்ன்யௌ -என்றும் -பத்மேஸ்திதாம் பத்ம வர்ணாம் -என்றும்
சொல்லக் கடவது இறே

அன்றியே –
ஸ்ரீ ய பதித்வமே போரும் சர்வாதிகன் சர்வ சமாஸ்ரயணீயன் என்கைக்கு –
ஸ்ரீ ய பதித்வத்துக்கு மேல் எல்லை இல்லை இறே

யன்றியும் –
அதுக்கு மேலும் –

போது தங்கு நான்முகன்  மகன்-
திரு நாபீ கமலத்திலே பிறக்கையாலே -கமலாஸநனான சதுர்முகன் புத்திரன்

அஜச்ய நா பாவத் யே கமர்ப்பிதம் யஸ்மின் நிதம் விச்வம் புவன மதிச் ரிதம்
ஸ ப்ரஜாபதி ரேக புஷ்கர பர்னேஸம பவத் -என்னக் கடவது இறே

அவன் மகன் சொல்லில் மாது தங்கு கூறன் ஏறு அது ஊர்தி –
ஏக ஏவ ருத்ர சர்வோஹ் ஏஷ ருத்ர -என்கிற ப்ரசம்சா வாக்யங்களையும்
ஆகமாதி தந்த்ரங்களையும் ஒழிய -அவன் ஸ்வரூபத்தை உள்ளபடியே –
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய -இத்யாதி நிர்தோஷ சுருதி ப்ரக்ரியையாலே
சொல்லப் பார்க்கில் அவன் ப்ரஹ்ம புத்ரன் –

மாது தங்கு கூறன் -என்கிறது
ப்ரஹ்மாவினுடைய மானஸ ஸ்ர்ஷ்டி ஒழிய யோஷித் புருஷ சம்யோகத்தாலே
பிறக்கும் ஸ்ர்ஷ்டிக்கு ப்ரதம கண்யன் என்று இவனுடைய ஷேத்ரஞ்ஞத்வம்
தோற்றுகைக்காக

ப்ருகுடீ குடிலா தஸ்ய லலாடாத் க்ரோத தீபிதாத்
சமுத்பன்னஸ் ததா ருத்ரோ மத்யாஹ் நார்க்க சம ப்ரப
அர்த்த நாரீ நரவபு பிரசண்டோதி சரீர வான் -என்று
ப்ரஹ்மாவினுடைய ஸ்ர்ஷ்டி பிரகரணத்திலே சொல்லக் கடவது இறே

ஏறு அது ஊர்தி -என்று
வேதமயனான பெரிய திருவடிக்கு எதிராக ரிஷபத்தை வாகனமாகக் கொண்டு இருக்கிற
துர்மானம் தோற்றுகைகாக

என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை –
ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன்
ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று
வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்

யல்லது இல்லை மற்றுரைக்கிலே —
அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் –
ஸூபர்ண வைகுண்ட சம்வாதே –
யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே
ப்ரஹ்மணச்சாபி சம்பூதச்சிவ இத்யவதார்யதாம்
சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி –

———————————————————————————

73 -பாட்டு –

அவதாரிகை –

ஸ்ரீயபதியே ஆஸ்ரயணீயன்
ப்ரஹ்ம ருத்ராதிகள் ஷேத்ரஞ்ஞர் ஆகையாலே அநாஸ்ரணீயர் -என்றதாய் நின்றது கீழ் –

இதில் –
அந்த ஸ்ரீயபதி தான் தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கைகாக மனுஷ்ய சஜாதீயனாய் தன்னை
தாழ  விட்டுக் கொண்டு நின்ற நிலையிலே
ப்ரஹ்ம ருத்ரர்கள் உடைய அதிகாரத்தில் நின்றாருக்கு மோஷ ப்ரதன் என்று கொண்டு –
தேவதாந்தரங்களுக்கும் சர்வேஸ்வரனுக்கும் உண்டான நெடுவாசியை அருளிச் செய்கிறார் –

மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன்னோர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –73-

பதவுரை

முன் ஓர் நாள்

முன்னொரு காலத்திலே
மரம் பொத

ஸம்பஸாலவ்ருஹங்கள் துளைபடும்படியாக
சரம் துரந்து

அம்பைப் பிரயோகித்து (அதற்குப் பிறகு)
வாலி வீழ

வாலியானவன் முடியும்படியும்
உரம் பொத

அவனது மார்பிலே பொத்தும் படியும்
சரம் துரந்த

பாணத்தைப் பிரயோகித்த
உம்பர் ஆளி எம் பிரான்

தேவாதி தேவனான எம்பெருமான்
வரம் குறிப்பில்

(தன்னுடைய) சிறந்த திருவுள்ளத்திலே
வைத்தவர்க்கு அலாது

யாரை விஷயீகரிக்கிறானோ அவர்கட்குத் தவிர;
வானம் ஆளினும்

மேலுலகங்கட்கு அதிபதிகளாயிருந்தாலும்
யார்க்கும்

மற்றவர்கட்கும்
நிரம்பு நீடு போகம்

சாச்வதமாய்ப் பர்பூர்ணமான கைங்கர்யஸுகம்
எத்திறத்தும்

எவ்வழியாலும்
இல்லை

கிடைக்கமாட்டாது.

வியாக்யானம் –

மரம் பொதச் சரம் துரந்து –
மகாராஜர் உடைய விஸ்வாச அர்த்தமாக மராமரங்களை மாறுபாடுருவ திருச் சரத்தை ஏவி

இத்தால் –

தன்னுடைய ரஷணத்தில் அதிசங்கை பண்ணினாருக்கும் அவ்வதி சங்கையைத்
தீர்த்து -தன் பக்கலில் விஸ்வாசத்தை பிறப்பித்து -ரஷிக்கும் சீலவான்-என்கை

வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச் சரம் துரந்த
ராவணனை வாலிலே கட்டிக் கொண்டு திரியும் பெரு மிடுக்கனான வாலியை –
முன் போன சதுர் யுகங்களிலே ஒரு த்ரேதா யுகத்திலே இவன் தறைப் படும்படியாக
மராமரங்களையும் -திண்ணிய அவன் மார்வு மாறுபாடுருவும்படி அம்பை விட்டு –

அதிகாரிகளுமாய் -நிவர்த்த விரோதருமாய் இருக்குமவர்களுக்கு ஸ்வரூப
அநுரூபமான அபிமதத்தை கொடுக்கை யன்றிக்கே
தத் விரோதியான -அவித்யாதி ப்ரபல விரோதிகளையும் போக்கி
அதுக்கு அடியான அதிகாரத்தையும் கொடுக்கும் சீலவான் என்கைக்கு உதாஹரணம் இது
என்கை –

வரம் தரும் மிடுக்கு இலாத தேவர் -என்று அபிமத பிரதானத்திலும் அசக்தர் என்றது இறே
ப்ரஹ்மாதிகளை

வும்பர் ஆளி –
நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுகிறவன் கிடீர் தாழ்ந்தாருக்கு இப்படி உபகரிக்கிறான் -என்கை
ரஷணத்திலே அதி சங்கை பண்ணினவனுடைய அதி சங்கையை தீர்த்து
அவன் விரோதியைப் போக்கின அந்த சீலம் அறிய வுரியார் நித்யஸூரிகள் இறே

எம்பிரான் –
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்டவன்

அதவா
உம்பராளி எம்பிரான் -என்று
அச் செயலாலே பிரயோஜநாந்த பரரான தேவர்களையும் –
அநந்ய பிரயோஜனரான அஸ்மாத்தாதிகளையும் எழுதிக் கொண்டவன் என்றுமாம்

உரம் பொதச் சரம் துரந்த –எம்பிரான் -என்று முன்பு மகாரஜருக்கு உதவினதும் தமக்கு
உதவிற்றாக நினைத்து இருக்கிறார் –

வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது –
இப்படிப்பட்ட தசரதாத்மஜநுடைய ஸ்ரேஷ்டமான திரு உள்ளத்தாலே விஷயீ கரிக்கப்பட்ட
வர்களுக்கு அல்லது -ஸ்ரேஷ்டம் ஆகையாவது பர ஸம்ர்த்த்யேக பிரயோஜனமாய் இருக்கை –

வானம் ஆளிலும் –

ஜ்ஞாநாதிகராய் -சதுர்தச புவநன்களுக்கும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளாக இருந்தாலும்

நிரம்பு நீடு போகம் –
குறைவற்று -நித்தியமான போகம்
அதாவது -பரம பக்தி க்ர்தமாய் -பரிபூரணமாய் -விசத தமமான-நித்ய அநுபவம் –

எத்திறத்தும் யார்க்கும் இல்லையே —
அநந்ய பிரயோஜனர்க்கும் இல்லை –
கர்மாதி உபாயங்களை அனுஷ்டிக்கவுமாம் -சித்த உபாய பரிக்ரஹம் பண்ணவுமாம்

அவன் பிரசாதம் ஒழிய மோஷ சித்தி இல்லை-
ஜ்ஞாநாதிகராய் அநந்ய  ப்ரயோஜனராய் ஆகவுமாம் –
அகிஞ்சநராய் அநந்ய  ப்ரயோஜனராய் ஆகவுமாம் –
அவன் ப்ரசாதமே மோஷ சாதனம் என்கை –

விரோதி நிரசந  சீலனான தசரதாத்மஜன் பிரசன்னரானார்க்கு அல்லது
ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய அதிகாரத்தாலே நின்றாருக்கும் நித்யமான மோஷத்தை
ப்ராபிக்க விரகு இல்லை என்றது ஆய்த்து –

———————————————————————————————-

74 -பாட்டு –அவதாரிகை –

ஆஸ்ரயணீயனுடைய பிரசாதமே மோஷ சாதனம் ஆகில் -முமுஷுவான இவ் வதிகாரிக்கு
பிரசாதகமான கர்த்தவ்யம் ஏது என்னில் –
ஸ்ரீ வாமனனுடைய திருவடிகளில் தலை சாய்த்தல் –
ஷீராப்தி நாதனுடைய சீலத்துக்கு வாசகமான திரு நாமத்தை வாயாலே சொல்லுதல் செய்யவே
புருஷார்த்த சித்தி உண்டு -என்கிறார் –

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-

பதவுரை

முதலாயிரம்

திருச்சந்தவிருத்தம்
வாமணன்

உலகளந்த பெருயாமனுடைய
அடி இணை

அடியிணைகளை
அறிந்து அறிந்து

உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து கொண்டு
வணங்கினால்

நமஸ்கரித்தால்
செறிந்து எழுந்த ஞானமொழி

பரம ச்லாக்யமாகக் கிளர்ந்த ஞானமும்
செல்வமும்

பக்தியாகிற செல்வமும்
செறித்திடும்

பரிபூர்ணமாக விளையும்
மறிந்து எழுந்த

பரம்பிக்கிளர்ந்த;
தென் திரையுள்

தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலிலே
மன்னு

நிதய்வாஸம் செய்தருள்கின்ற
மாலை

ஸர்வேச்வரனை
வாழ்தினால்

ஸங்கீரத்தகம் பண்ணினால்
எழுந்த தீவினைகள்

ஆத்மஸ்வரூபத்திலே வளர்ந்து கிடக்கிற கொடு வினைகள்
பற்று அறுதல்

வாஸனையும் மிகாதபடி நசித்துப்போதல்
பன்மையே

இயற்கையேயாம் (அநாயானமாக நசிக்குமென்கை.)

வியாக்யானம் –
அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்-
தன்னுடைய உடைமையை லபிக்கைகாக தான் அர்த்தியாய் வந்தவன் திருவடிகளை –
ப்ராப்யமும் ப்ராபகமும் அதுவே -என்று அத்யவசித்து -அத்திருவடிகளில்
ந்யஸ்தபரன் ஆதல் –

வாமனன் அடி இணை -என்று -வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை
வைக்கையாலே -சர்வ சுலபன் ஆனவன் திருவடிகளை -என்றுமாம் –

அறிந்து அறிந்து -என்று
சாஸ்திர ச்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும் -என்றுமாம் –

இது -அன்று பாரளந்த பாத போதை யொன்றி -என்று கீழ்ச் சொன்னதினுடைய விவரணம் –

செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் –
ப்ரத்யக் ப்ரவணமாய் -சாஷாத்கார பர்யந்தமான சர்வேஸ்வரனுக்கே அனந்யார்ஹ
சேஷபூதன் -இவ்வாத்மா என்கிற ஜ்ஞானமும் –
அது அடியாக கைங்கர்ய உபகரணமான பக்தியும் குறைவற உண்டாம் –

சிறப்பு -மிகுதி
அது கைங்கர்யத்துக்கும் விரோதி நிவ்ருத்திக்கும் உப லஷணம்
நிர்தோஷனுக்கு இ றே கைங்கர்ய உபகரணமான பக்தி உண்டாவது –
ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம் –
தனமாய தானே கைகூடும் -என்று வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யம் பக்தி யாகையாலே
அந்த பக்தியை இங்கு –செல்வம் -என்கிறது –

மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால் –
பரம்பி கிளர்ந்து தெளிந்த திரைகளை உடைய ஷீராப்தியிலே நித்ய வாஸம்
பண்ணுகிற ஆஸ்ரித வத்ஸலனுடைய வாத்ஸல்ய வாசியான திரு நாமத்தை வாயாலே-சொன்னால்

மறிதல் -விரிதல்

பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் –
பகவத் ப்ராப்தி பந்தகங்களாய் -ஸ்வ ஆஸ்ரயித்தில் வேர் விழுந்தவை அவற்றை விட்டு-பறிந்து போய்

மறுவல் இடாதபடி வாசனையோடே போம்படி பண்ணுகை

பான்மையே —
அவன் ஓர் ஏற்றம் செய்தானாக அன்றிக்கே ப்ரக்ர்தியாய் இருக்கை

இதுவும் -சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கிறபடியே கைங்கர்யத்துக்கும் உப லஷணம் –

———————————————————————————————

75 -பாட்டு –

அவதாரிகை –

இப்படி அவனை ஆஸ்ரயித்து -அவனுடைய கடாஷத்தாலே பிரதிபந்தக நிரசன
பூர்வகமாக அவனைப் பெறுகை ஒழிய –
உபாயாந்தரஙககளிலே இழிந்து ஆஸ்ரயிப்பாருடைய அருமையை அருளிச் செய்கிறார் –
மேல் ஏழு பாட்டுக்களாலே –

இதில் முதல் பாட்டில்
கர்ம யோகமே தொடங்கி -பரம பக்தி பர்யந்தமாக -சாதிக்குமவர்களுடைய
துஷ்கரதையை அருளிச் செய்கிறார் –

ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-

பதவுரை

ஒன்றி நின்று

மனம் சலியாமல் நிலைத்து நின்ற
நல் தவம்

விலக்ஷணமான தபஸ்ஸை (அதாவது  கர்மயோகத்தை)
ஊழி ஊழிதோறு எலாம் செய்து

பலபல ஜந்மபரம்பரைகளிலே அநுஷ்டித்து
அவன் குணங்கள்

அப்பெருமானுடைய திருக்குணங்களை
நின்று நின்று உள்ளி

ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுஸந்தித்து
உள்ளம் தூயர் ஆய்

கல்மஷமற்ற நெஞ்சை யுடையராய்
சென்று சென்று

மேல்மேல் படிகளிலே ஏறி (ச்ரவணம்  மநநம் நிதித்யாஸதம் என்கிற பர்வங்களிற் சென்று)
உம்பர் உம்பர் உம்பர் ஆய் அன்றி தேவதேவர்

பரபக்தி யுக்தராய் பரஜ்ஞாந யுத்தராய் பரம பக்தியுந்தராய் இப்படி யெல்லா மானால்லது
தேவதேவர்

(மற்றபடி) தேவதேவராயிருந்தாலும்
எங்கள் செம் கண் மாலை

செந்தாமரைக் கண்ணாலே எம்மை விஷயீகரித்தருளும் பெருமானை
யாவர் காணவல்லர்

யார் காணக்கூடியவர்கள்.

வியாக்யானம் –

ஒன்றி நின்று –
சஞ்சலம் ஹி மந க்ர்ஷ்ண -என்கிறபடியே விஷயாந்தரங்களிலே மண்டி -அவற்றில் நின்றும்
மீட்க அரிதான நெஞ்சை -பகவத் விஷயத்தில் உத்தேச்ய புத்தியாலே மீட்ட –
அம் மனஸ்சோடே பகவத் விஷயத்தில் ஒன்றி நின்று –

நல் தவம் செய்து-
தபஸ் என்று -யஜ்ஞே நதாநேந தபஸா நாஸ கேந -என்றும் –
யஜ்ஞோ தாநம் தபஸ் கர்மநத்யாஜ்யம் கார்யமே வதத் -என்றும் -சொல்லுகிற
கர்மங்களுக்கும் உபலஷணம் –

நல் தவம் என்று –
ஜீவ பர யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாகவும்
த்ரிவித பரித்யாக பூர்வகமாகவும் –
அனுஷ்டிக்கும் கர்ம யோகத்தை சொல்லுகிறது –

ஊழி ஊழி தோறேலாம் –
புதுப் புடைவையில் அழுக்கு கழற்றுமா போலே -அந்த கர்மத்தாலே விரோதி பாபம்
போகும் இடத்தில் -ஜந்மாந்தர சஹஸ்ரேஷூ -இத்யாதி படியே கால தைர்க்யத்தை
சொல்லுகிறது

நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி-
க்ரமத்தாலே பரம பாவநனாய் இருந்துள்ளவன் குணங்களை அனுசந்தித்து -இத்தால்-
விவேக விமோகாதி சாதனா சப்தங்களில் அப்யாசத்தை சொல்லுகிறது –
க்ரமத்தாலே அநவரத பாவநையும் சொல்லுகிறது –

உள்ளம் தூயராய் –
உக்தமான கர்ம யோகத்தாலும்
பகவத் குண அப்யாசத்தாலும்
மநஸா விசுத்தேந -என்றும் -மநஸா க்ராஹ்யா -என்றும் -சொல்லுகிறபடியே
பரிசுத்த அந்த கரணராய்

 

சென்று சென்று-
த்ருவாநு ஸ்ம்ர்தி -என்றும் -நிதித்யாஸிதவ்ய -என்றும் -சொல்லுகிறபடி க்ரமத்தாலே
அநவரத பாவனை அளவும் சென்று –

தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய் அன்றி –
சூரிகள் அளவும் செல்ல சோபன க்ரமத்தாலே -பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி ரூபத்தாலே
உத்க்ர்ஷ்டராய் பெறுவது ஒழிய

எங்கள் செங்கண் மாலை –
சரணாகத வத்ஸலனான புண்டரீகாஷனை

எங்கள்-என்று மற்ற ஆழ்வார்களையும் கூட்டிக் கொள்கிறார் என்னுதல் –
தம்மையே பற்றி வர்த்திக்கும் சரணாகத சமூஹத்தை கூட்டிக் கொள்கிறார் -என்னுதல்

செங்கண் மால் என்றது -ஜிதந்தே புண்டரீகாஷ-என்கிறபடியே
ருசியே தொடங்கி பரமபக்தி பர்யந்தமாக -அத்தலையிலே விசேஷ கடாஷத்தாலே
சித்தி என்று தோற்றுகைக்காக

யாவர் காண வல்லரே —
நிர்ஹேதுக கடாஷத்தாலே எங்களுக்கு அவன் காட்ட நாங்கள் கண்டாப்  போலே
யாவர் காண வல்லர்

உம்பர் உம்பர் உம்பராய் -மேலே மேலே போய் அல்லது -தேவதேவர் -எங்கள் செங்கண் மால் -என்று கூட்டுவது –

—————————————————————————————-

76-பாட்டு –அவதாரிகை –

த்ரவ்ய அர்ஜநாதி க்லேசம் என்ன –
பர ஹிம்சாதி துரிதம் என்ன –
இவற்றை உடைத்தாய் -இந்த்ரிய வ்யாபார ரூபமான கர்ம யோகத்தில் காட்டில் –
இந்த்ரியோபாதி ரூபமான ஜ்ஞான யோகத்தில் பிரதமத்தில் இழியுமவர்கள் உடைய
துஷ்கரதையை அருளிச் செய்கிறார் –

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே –76-

பதவுரை

புல்

க்ஷுத்ரங்களான
புலன் வழி

சப்தாதிவிஷயங்களிலே இந்திரியங்கள் ஓடுவதற்குரிய வழியை
அடைத்து

அடைத்து
அரக்கு இலச்சினை செய்து

(விஷயமார்ந்த த்வாரத்திலே) அரக்கு முத்திரையிட்டு
நன் புலன் வழி திறந்து

ஸத்விஷய மார்க்கத்தைத் திறந்து விட்டு
ஞானம்

ஞானமாகிய
நல்சுடர்

விலக்ஷமான ப்ரபையை
கொளீ இ

கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து)
என்பு இல்

எலும்பு வீடாகிய சரீரம்
என்கி

சிதிலமாகி
நெஞ்சு உருகி

நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உள் கனிந்து

நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உன் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி

பரிபக்குவமாய்க் கிளர்ந்த யிலக்ஷணமானதொரு ப்ரேம முண்டானலல்லது
ஆழியானை

திருவாழியைக் கையிலேந்தின பெருமானை

யாவர் காண வல்லர்  ?.

வியாக்யானம் –

புன்புல வழி அடைத்து –
ஷூத்ர விஷயங்களைப் பற்றி போருகிற இந்த்ரிய வ்யாபாரத்தை நிரோதித்து –

விஷயங்களுக்கு புல்லிமை யாவது –

அல்பமாய் -அஸ்த்ரிமாய் -அபோக்யமாய் -இருக்கையும்
வகுத்த விஷயத்திலே வைமுக்யத்தை பண்ணுகையும் –

தத் விஷயமான இந்த்ரிய பதத்தை நிரோதிக்கை யாவது –
விஷயங்களில் சாபலத்தை பண்ணி -சேதனனையும் தன் வழியில் ஆகர்ஷிக்கும்
இந்த்ரியங்களை ப்ரத்யாஹாரத்தாலே மீட்கை –

அரக்கு இலச்சினை செய்து –
சப்தாதி விஷயங்களினுடைய ஷூத்ரதையை அனுசந்தித்து -வாசநையும் -அனுவர்த்தியாத
படி -பலவான் இந்த்ரிய க்ராமோ வித்வாம் ஸம்பி கர்ஷதி -என்று ஜ்ஞானாதிகர்களையும்
வாசனை நலியும் இ றே -அதுவும் பிரவாதபடி பண்ணி –

நன் புல வழி திறந்து –
விலஷண விஷயத்தில் இந்த்ரிய மார்க்கத்தை பிரகாசிப்பித்தது
இவ்வாத்மாவுக்கு ப்ராப்தமாய் -ஸூ ஸூ கம் கர்த்தும் -என்கிறபடியே சாதனை வேளையே
தொடங்கி ரசிக்கும் பகவத் விஷயமே இந்த்ரியங்களுக்கு விஷயமாக்கி -என்கை

ஞான நற் சுடர் கொளீ இ –
நன்றாக ஞானப் பிரபையை மிகவும் உண்டாக்கி
ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை -ஸ்வ ஜ்ஞானத்துக்கு விஷயமாம்படி பண்ணி –

என்பில் எள்கி –
எலும்பிலே தட்ட சரீரம் சிதிலமாய்

நெஞ்சு உருகி –
மனஸ் தத்வம் த்ரவீபூதமாய்
கீழ்ச் சொன்ன ஜ்ஞானம் பரபக்தி அவஸ்தாம் படி வாசனை பண்ணி

உள் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி –
உள்ளே பக்வமாய் -பரம பக்தி ரூபேண ஆவிர்ப்பூதமான பிரேமத்தால் அல்லது பெற
விரகு இல்லை –

ஆழி யானை யாவர் காண வல்லரே —
எங்கள் செங்கண் மால் -என்று -கீழ்ச் சொன்ன ஸ்தானத்திலே –ஆழியானே –என்கிறார்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -என்கிறபடியே விஷயாந்தர
ப்ராவ்ண்ய ஹேதுவான பாவத்தையும் –
பகவத் வைமுக்ய ஹேதுவாய் இருந்துள்ள பாபங்களையும்
கையில் திருவாழி யாலே  இரு துண்டமாக வெட்டி –
கையும் திரு ஆழியும் ஆன சேர்த்தியைக் காட்டி
ஸ்வ விஷயமான பக்தியை வர்த்திப்பித்தவனை நான் கண்டாப்  போலே யாவர் காண வல்லர்

இந்த்ரியங்களுக்கு விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து –
பகவத் விஷயமே விஷயமாக்கி –
தத் விஷய ஜ்ஞானம் பக்தி ரூபாபன்ன ஜ்ஞாநமாய்
அது பரபக்தியாதிகளாய் பழுத்தால் அல்லது சர்வேஸ்வரனை லபிக்க
விரகு இல்லை -ஆய்த்து –

—————————————————————————————

77-பாட்டு –

அவதாரிகை –

கர்ம ஜ்ஞானன்களை சஹ காரமாகக் கொண்டு ப்ரவர்த்தமான பக்தியாலே
பகவத் லாபத்தை சொல்லிற்று -கீழ் –

சர்வ அந்தர்யாமியாய் -ஜகத் காரணபூதனான சர்வேஸ்வரனை அஷ்டாங்க ப்ரணாமம்
முன்னாக -திரு மந்த்ரத்தை கொண்டு பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கிறார் –

இப்பாட்டு முதலாக

இதிஹாச புராண ப்ரக்ரியையாலே பகவத் பஜனத்தை அருளிச் செய்கிறார்

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-

பதவுரை

எட்டும் எட்டும் எட்டும் ஆய்

இருபத்தினான்கு தத்துவங்களுக்கு நிர்வாஹகனாயும்
ஓர் ஏழும் ஏழும் ஆய்

ஸப்தத்வீபங்களுக்கும் ஸ்பத குலபர்வதங்களுக்கும் ஸ்பத ஸாகரங்களுக்கும் நிர்வாஹகனாவும்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற

த்வாரதசாதித்யர்களுக்கு அந்த ராத்மாவாயுமிருக்கிற
ஆதி தேவனை

பரமபுருஷனை
எட்டியைப் போதமோடு இரஞ்சி நின்று

ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணி
அவள் பெயர் எட்டு எழுத்தும்

அவ்வெம்பெருமானுக்கு வாசகமான திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை
ஓதுவார்கள்

அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன வல்லர்

பரமபதத்தை ஆளவல்லவர்களாவர்

வியாக்யானம்-

எட்டும் எட்டும் எட்டுமாய் –
சதுர் விம்சதி தத்வங்களுக்கும் ஆத்மாவாய் நின்று சத்தையை நோக்குமவன் –
இந்த சாமாநாதி கரண்யம் சரீர ஆத்ம பாவத்தாலே சொல்லுகிறது –

ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய் –
சப்த த்வீபங்களும் -அவற்றுக்கு தாரகமான சப்த குல பர்வந்தகளும்
அந்த த்வீபங்களுக்கு அவச் சேதகங்களான சப்த சமுத்ரங்களுமாய் –

அண்டாந்த வர்த்திகளான சகல லோகங்களுக்கும் உப லஷணம் –
ஸ்தல சரராயும் -ஜல சரராயும் -பர்வதேயருமான சேதனரை நினைக்கிறது –

எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற –
த்வாதச ஆதித்யர்களுக்கும் அந்தராத்மாவாய் நின்ற இது -ஆராத்ய தேவதைகளுக்கும் உப லஷணம் –

அக்நௌ ப்ராஸ்தா ஹூதிஸ் சம்யக்

வாதி தேவனை –
சூஷ்ம சித் அசித் வஸ்து சரீரனாயும்
ஸ்தூல சித் அசித் சரீர வஸ்து சரீரனாயும்
கார்ய காரணம் இரண்டுமாய்க் கொண்டு சர்வ சமாஸ்ரயணீயனானவனை

எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று
அஷ்டாங்க ப்ரணாமத்தை பண்ணி
அம்முகத்தாலே ஆஸ்ரயித்து நின்று பிரணாமத்துக்கு அஷ்டாங்கதை யாவது –
பக்ன அபிமாநியாய் விழுகையும்
மநோ புத்திகளுக்கு ஈச்வரனே விஷயம் ஆகையும்
பத த்வய கர த்வயங்களும் கூர்மவத் பூமியிலே பொருந்துகையும்-

மநோ புத்த்ய  அபிமாநேன ஸஹநயஸ்ய தராதல-

அவன் பெயர் எட்டெழுத்தும் ஓதுவார்கள் –
கீழ்ச் சொன்ன ஜகத் அந்தராத்ம பாவத்துக்கு வாசகமான மந்த்ராந்தந்தரங்களில் காட்டில்
திரு அஷ்டாஷரத்தை வாயாலே உச்சரிக்குமவர்கள் –

வல்லர் வானம் ஆளவே –
அர்த்தத்தை மனசாலே அனுசந்தித்தும் –
வாயாலே சப்தத்தை உச்சரித்தும் –
சாரீரமான ப்ரணாமத்தை பண்ணியும்
இப்படி மநோ வாக் காயங்களாலே பஜிக்குமவர்கள் இட்ட வழக்கு பரமபதம் -என்கை

ஆபோ நாரா இதி ப்ராக்தோ -என்றும்
நராஜ் ஜாதா நிதத்வாநி -என்றும் –
ஜகத் காரண வஸ்துவை நாராயணன் என்னக் கடவது இறே –

———————————————————————————-

78 -பாட்டு –அவதாரிகை –

உபாசனதுக்கு சுபாஸ்ரயம் வேண்டாவோ என்ன –
கார்ய ரூபமான ஜகத்தில் ஆஸ்ரித அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற ஷீராப்தி
நாதனை சுபாஸ்ரயமாகப் பற்றி –
மந்திர ரஹஅச்யத்தாலே முறை யறிந்து –
ஆஸ்ரயித்து –
இடைவிடாதே பிரேமத்துடன் இருக்குமவர்கள்
பரமபதத்தி ஆளுகை நிச்சயம் -என்கிறார் –

சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78-

பதவுரை

நீர்

திருப்பாற்கடலிலே
அரா அணை

திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
கிடந்த

கண் வளர்ந்தருள்கிற
நின்மலன்

அகில ஹேயப்ரத்யநீகனான எம்பெருமானுடைய
நலம் கழல்

நன்மைபொருந்திய திருவடிகளை
ஆர்வமோடு

அன்புடன்
இறைஞ்சி நின்று

அச்ரயித்து
சோர்வு இல்லாத காதலால்

விஷயாந்தரப்பற்றினால் தளராத காதலோடு
துடக்கு அது மனத்தர் ஆய்

விச்சேதமில்லாமல் ஏகாந்ரமான மனமுடையவர்களாய்

அவன் பெயர் எட்டு எழுத்தும்

வாரம் ஆக

இதுவே நமக்குத் தஞ்சம் என்கிற அத்யவஸாயத்தோடு
ஓதுவார்கள்

அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன

பரமபதத்தை ஆள்வதற்கு
வல்லர்

ஸமர்த்தராவர்.

வியாக்யானம் –

சோர்விலாத காதலால்-
சர்வ காலமும் -விஷயாந்தரங்களால் அபஹ்ர்தம் ஆகாத பிரேமத்தை உடையவர்
ஆகையாலே -அதாவது பிரேம அதிசயத்தாலே
தத் சம்ச்லேஷ விஸ்லேஷ துக்க ரஹிதராகை –

தொடக்கறா மனத்தராய் –
பகவத் ஸ்ம்ர்த்தி சந்ததி ரூபேண செல்லா நின்றால் விச்சேதம் இல்லாத நெஞ்சை உடையராய் –

சத்வ சுத்தௌ த்ருவா ஸ்ம்ர்தி -என்றும் –
ஸ்ம்ரதிலம் பேசர்வகரந்தீநாம் விபர மோஷ -என்கிற அளவைச் சொல்லுகிறது

நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் –
இப்படி பிரேமத்தை விளைக்கும் விலஷண விஷயமான சுபாஸ்ரயத்தை சொல்லுகிறது –

நீர் அராவணைக்கிடந்த –
ஷீராப்தியில் திரு வநந்த வாழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிற

இத்தால் -நீர் உறுத்தாமைக்கு அதன் மேல் திரு வநந்த வாழ்வானைப் படுக்கையாக
உடையவன் ஆகையாலே -சௌகுமார்யமும் -ஆஸ்ரித சம்ச்லேஷைக ஸ்வபாவத்வமும்
அர்தித்வ நிரபேஷமாக ஆஸ்ரித அனுக்ரஹத்தாலே கண் வளர்ந்து அருளுகையாலே
சௌலப்யாதிகளையும் சொல்லுகிறது –

நின்மலன் நலம் கழல் –
பஜன விரோதி பாபங்களைப் போக்கும் ஹேய ப்ரத்யநீகனுடைய ருசி ஜநகமான திருவடிகளை-

ஆர்வமோடு இறைஞ்சி நின்று –
பிரேமயுக்தராய்க் கொண்டு ஆஸ்ரயித்து நின்று -இத்தால்-
நாஸ்த்ய க்ர்தா க்ர்தேந -என்கிறபடியே -சம்ஸாரம் அநித்யம் -ஈஸ்வரன் நித்யன் -என்று-
ஆஸ்ரயிக்கும் அளவு அன்றிக்கே -நிரதிசய போக்யன் -என்கிற பிரேமத்தால் ஆஸ்ரயிக்கை –

அவன் பெயர் எட்டு எழுத்தும் –
ஷீராப்தி நாதன் திருநாமமான திருவஷ்டாஷரத்தையும் –
ஏஷ நாராயண ச ஸ்ரீ மான் -என்றும் –
நாராயணனே நமக்கே பறை -தருவான் என்றும் –
பவான் நாராயணோ தேவ -என்றும் –
தர்மி  புக்க விடம் எங்கும் இத்திருநாமம் பிரதம அபிதாநமாய் இருக்கும் -என்கை-

வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –
நமோ நாராயணா யேதி மந்தரைக சரணா வயம் -என்கிறபடியே
தன் நிஷ்டராய்க் கொண்டு சொல்லுமவர்கள் –
பரமபததுக்கு நிர்வாஹகராக வல்லர் -என்கிறார் –

நீர் அராவணைக் கிடந்த -நின்மலன் நலம் கழல் -ஆர்வமோடு இறைஞ்சி நின்று –
சோர்விலாத காதலால் -துடக்கறா மனத்தராய் -அவன் பெயர் எட்டு எழுத்தும் –
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -என்று அந்வயம் –

———————————————————————————–

79 பாடு –

அவதாரிகை –

ஸ்வேத த்வீப வாசிகளை ஒழிந்த சம்சாரிகளுக்கு அது நிலமோ என்ன –
அவதார கந்தமான ஷீராப்தியில் நின்றும் தன் மேன்மை பாராதே
தச ப்ராதுர்பாவத்தை பண்ணி சுலபனானவன் திருவடிகளிலே
அவதார ரஹச்ய ஜ்ஞானம் அடியான பக்தியை உடையவர்களுக்கு அல்லது
முக்தராக விரகு உண்டோ –என்கிறார்

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே –-79-

பதவுரை

பத்தினோடு பத்தும் ஆய்

பத்து திக்குகளுக்கும் பத்து திக்பாலகர்களுக்கும் அந்தர்யா மியாய்
ஓர் ஏழினோடு ஓர் ஒன்பது ஆய்

ஸப்தஸ்வரங்களென்ன நவநாட்ய ரஸங்களென்ன இவற்றுக்குப் ப்ரவர்த்தகனாய்
பத்து நூல் திசை கண் நின்ற

பதினான்கு வகைப்பட்ட
நாடு

லோகங்களிலுள்ளவர்கள்
பெற்ற

பெறக்கூடிய
நன்மை ஆய்

நன்மைக்காக
பத்தின் ஆய தோற்றமோடு

தசாவதாரங்களோடு (ஆவிர்ப்பவித்து)
ஆற்றல்மிக்க

பொறுமையினாலே பூர்ணனான
ஓர் ஆதி பால்

எம்பெருமான் விஷயத்திலே
பக்தர் ஆமவர்க்கு அலாது

க்தியுடையவராயிருப்பவர்களுக்கன்றி (மற்றையோர்க்கு)
மூர்த்தி

மோக்ஷபுருஷார்த்தம்
முற்றல் ஆகுமே

பரிபக்வமாகுமோ?

வியாக்யானம்-

பத்தினோடு பத்துமாய் –
தச திக்குகளுக்கும் -அத் திக்குகளிலே வ்யவஸ்திதரான தசாத் யஷருக்கும் -நிர்வாஹகராய்

அவர்கள் ஆகிறார் –
இந்த்ராதி திக்பாலர்கள் என்றுமாம்
ஊர்த்தவ லோகங்களுக்கு மேல் எல்லையான சத்ய லோகத்துக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவும்
அதோ லோகத்துக்கு கீழ் எல்லையிலே தாரகனான அனந்தனும்

ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய் –
அத்வதீயனான சப்த  ஸ்வரமும்

நாட்ய ரசம் ஒன்பதும்
அவை யாகிறன -இசைகள் ஏழும்

நிஷா தர்ஷப காந்தார ஷட்ஜ மத்யம தைவதா -பஞ்சமச் சேத்ய மீ சப்த -என்கிறபடியே-

ச்ர்ங்கார ஹாஸ்ய கருணா வீர ரௌத்ர பயா நகா
பீபத்சாத் புத சாந்தாச்ச நவ நாட்ய ரசாஸ் ச்ம்ர்தா -என்கிறபடியே நாட்ய ரசங்களும்

இவை சப்தாதி விஷயங்களுக்கும் உப லஷணம்

இத்தால் -கீழ் சொன்ன தசாத் யஷரோடு
அவர்களுக்கு நிர்வாஹகரான சேதனரோடு வாசியற
எல்லார்க்கும் போக்யமான சப்தாதிகளுக்கும் நிர்வாஹகன் என்கை –

பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப் –
பதினாலு வகைப்பட்டு இருந்த லோகங்களுக்கு பிரயோசனமான சப்தாதி விஷயங்கள்
எல்லாம் தானே யாகைக்காக -ஏஷா திக் -என்கிறபடியே –

திசை -என்று பிரகார வாசி –

பத்து நான்கு திசைக் கண் நின்ற நாடு -என்று –

பத்தினோடு பத்துமாய் –என்ற இடத்தை
அநுபாஷிக்கிறார் –

பெற்ற நன்மை -என்று –

ஏழினோடு ஓர் ஒன்பதாய் –
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால் என்ற இடத்தை
அநுபாஷிக்கிறார் –

ஆய் –என்று ஆகைக்காக -என்றபடி –

உயிர் முதலா முற்றுமாய் –என்னக்-கடவது இறே –

சர்வ ரச -என்கிற தானே சேதனர்க்கு போக்யனாகைகாக என்கை

பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதியாய் –
தச ப்ராதுர்பாவத்தாலே ஆவிர்பவித்து
சம்சாரிகள் பண்ணும் பரிபவதை பொறுத்து
ரஷிக்கும் பூர்வஜன் பக்கலிலே

தோற்றம் ஆவது -அதீந்த்ரியனான தன்னை சஷூர் விஷயம் ஆக்குகை

ஆற்றல்-பொறை
பூர்வஜன் ஆகையாவது -சம்சாரிகளுக்கு ருசி பிறந்த வன்று -ஆஸ்ரயணீயரான தாம்
தூரஸ்தர் ஆக ஒண்ணாது என்று ஏற்கவே அவதரித்து நிற்கை –

பத்தர் ஆமவர்க்கு அலாது-
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத -என்கிறபடியே அவன் பண்ணின
உபகாரத்தை உள்ளபடி அறிந்து அதிலே சக்தராய் இருக்குமவர்களுக்கு அல்லது –

முக்தி முற்றல் ஆகுமே —
மோஷ பலம் பக்குவமாகைக்கு விரகு இல்லை-
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி -என்கிறபடி

விரோதி நிவர்த்தி  பூர்வகமான பகவல் லாப முண்டாக விரகு இல்லை -என்கிறார் –

——————————————————————————————-

80 பாட்டு –

அவதாரிகை –

அவதார ரஹச்ய ஞானம் அடியான ப்ரேமம் மோஷ சாதனம் என்றது கீழ் –
இதில்

அவதார விசேஷமான க்ர்ஷ்ணனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தை
அநுவதித்து –அவன் திருவடிகளில் ஆசை உடையார்க்கு அல்லது நித்ய ஸூரிகளோடு
ஒரு கோவையாய் அநுபவிக்கைக்கு விரகு இல்லை -என்கிறார் –

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல ஆகுமே –80-

பதவுரை

வாசி ஆகி

(கோவேறு) கழுதையின் வடிவங்கொண்டு
நேசம் இன்றி வந்து

பக்தியற்றவனாய் வந்து
எதிந்த

எதிரிட்ட
தேனுகன்

தேநுகாஸுரனை
நாசம் ஆகி நான் உலப்ப

ஆயுள் ஸுமாண்டு அழிந்து போம்படியாக
மேல் நிமிர்ந்த தோளின்

உயர்த்தூக்கப்பட்ட தோளாலே
நன்மை சேர் பணங்கனிக்கு வீசி

அழகிய பணம்பழங்களின் மேலே தூக்கியெறிந்து
இல்லை ஆக்கினாய் கழற்கு

(அவ்வசுரனை) ஒழித்தருளின தேவரீருடைய திருவடிகளுக்கு
ஆசை ஆமவர்க்கு அலால்

நேசிக்குவமர்களுக்கன்றி மற்றையோர்க்கு
அமரர் ஆகல்

நித்யஸூரிகளோடு ஒப்படைத்தல்
ஆகுமே

கூடுமோ?

வியாக்யானம் –

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் –
கால்யவநாதிகளைப் போலே ஸ்வரூபேண வந்து தோற்றாமே
வாஜி வேஷத்திலே வந்து தோற்றினான் ஆய்த்து -க்ருஷ்ணன் அவதாநம் பண்ணி
மேல் விழுகைக்காக –

நேசமின்றி வருகை யாவது –
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர -என்று
கிருஷ்ண சேஷ்டிதங்களாலே திர்யக்குகளும் ப்ரேம பரவசமாய் செல்லா  நிற்க –
துஷ்ப்ரக்ர்தி யாகையாலே அத்துறையிலே இழியாது ஒழிகை –

எதிர்ந்து வருகை யாவது –
ஆதரம் இல்லையானாலும் உபேஷகன் ஆகலாம் இ றே -அதுவும் இன்றிக்கே பாதகனாய் வருகை

நாசமாகி நாளுலப்ப-
இப்படிப்பட்ட தேனுகனை ம்ர்த ப்ராயனாக்கி ஆயுஸ்ஸை முடிக்கைக்காக

நாசம் –துன்பம்

நன்மை சேர் பனம் கனிக்கு வீசி –
தர்சநீயமாய் பழுத்து நின்ற பனம் பழம் உதிரும்படி -பனைத் தலையிலே சுழற்றி எறிந்து –
க்ர்ஹீத்வா ப்ரமனே நைவ சோம்ப ரேகத ஜீவிதம்
தஸ்மின் நேவஸசி ஷேப தேனு கந்த்ர்ண ராஜ நி
ததா பலான்ய நேகா நிதா லாக்ரான் நிபதன்கர –
ப்ர்தி வ்யாம் பாதயாமாச மஹாவாதோகநாநிவ -என்னக் கடவது இறே

மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு –
எதிரி அளவு அன்றிக்கே விஞ்சின தோள் வலியாலே அவனை அழியச் செய்த உன் திருவடிகளுக்கு
சங்கல்ப்பத்தாலே அழித்தல்
ஆயுதத்தாலே அழித்தல்
அன்றிக்கே-
கை தொட்டு தோள் வலியாலே அழியச் செய்தபடி

ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல ஆகுமே —
உன்னுடைய விரோதி நிரசன சீலதயை அனுசந்தித்து
உன் பக்கலிலே ப்ரேமம் உடையாருக்கு அல்லது
நித்ய ஸூரிகளோடு ஸத்ர்சராய் தேவரீரை அனுபவிக்கப் போமோ -என்கிறார் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -61-70-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 29, 2013

61 -பாட்டு –

அவதாரிகை –
இப்படி போக ஸ்தானம் ஆகையாலே ஆராவமுத  ஆழ்வார் திருவடிகளில் தாம்
அனுபவிக்க இழிந்த இடத்தில் –
வாய் திறத்தல் -அணைத்தல் -செய்யாதே –
ஒரு படியே கண் வளர்ந்து அருளக் காண்கையாலே
ஸூகுமாரமான இவ்வடிவைக் கொண்டு த்ரைவிக்ரமாதி சேஷ்டிதங்களைப்
பண்ணுகையாலே -திருமேனி நொந்து கண் வளர்ந்து அருளுகிறாராக
தம்முடைய பரிவாலே அதிசங்கித்து
என் பயம் கெடும்படி ஒன்றை நிர்ணயித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் -என்கிறார்
இது ஒழிய -ப்ராங்ந்யாயத்தாலே -அர்ச்சாவதார சங்கல்பம் என்ன ஒண்ணாது இறே -இவர்க்கு –

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

பதவுரை

விலங்கு

நீர் பெருகவொண்ணாதபடி    தடையாயிருக்கிற
மால் வரை

பெருப்பெருத்த மலைகளையும்
கரம்

பாலைநிலம் முதலிய அருவழிகளையும்
கடந்த

(வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற
கால் பரந்த

விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய
காவிரி

திருக்காவேரி நதியினுடைய
கூரை

கூரைமீது
குடந்தையும்

திருக்குடந்தையிலே
கிடந்த ஆறு

திருக்கண் வளர்ந்தருளுகிறபடியானது
நடந்த கால்கள் நொந்தவோ

உலகளந்த திருவடிகள் நொந்ததனாலோ? (உலகளந்த வீடாய் தீரவோ?)
ஞாலம்

பூமிப்பிராட்டியானவள்
நடுங்க

(பாதாளத்திலே உருமாய்ந்து நம்மை யெடுக்க வல்லார் ஆருமில்லையே’ என்று) நடுங்கிக் கிடந்த காலத்து)
ஏனம் ஆய்

மஹாவராஹமூர்த்தியாகி
இடந்த

அப்பூமியை அண்டபித்தியில் நின்றும் விடுவித்து உத்தரிப்பித்த
மெய்

திருமேனி
குலுங்கவோ?

ச்ரமப்பட்டதனாலோ? (ஏனமாய் உலகிடந்த விடாய்தீரவோ?)
கோனே

கோவனே!
எழுந்திருந்து போ

(எந்தவிடாய் தீரக் கிடக்கிறாயென்பதை) எழுந்திருந்து அருளீச்செய்க;
வாழி

இக்கிடையழகு என்றும் வாழ்க.

வியாக்யானம் –

நடந்த கால்கள் நொந்தவோ
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்கிறபடியே
ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு திரு உலகு அளந்த இது பொறாமே நொந்து
கண் வளர்ந்து அருளுகிறதோ –

சக்கரவத்தி திருமகனாய்  காட்டிலும் மலையிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு
திரிந்த வது பொறாமே நொந்து கண் வளர்ந்து அருளுகிறதோ –

எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ -என்று -சௌகுமார்யத்தை அறியுமவர்கள்
கூப்பிடும்படியாய் இ றே இருப்பது –
நடந்து பொறாமே கண் வளர்ந்து அருளுகிற தாகில் -நான் திருவடிகளைப் பிடிக்க –

நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ –
அன்றிக்கே –
பூமிக்கு அபிமானியான பிராட்டி -பாதாளகதையாய் தன்னுடைய உத்தரணத்துக்கு ஒரு
வழி காணாதே நின்று நடுங்குகிற தசையிலே -பஞ்சாசத்கோடி விஸ்தீர்ணையான பூமியை
மஹா வராஹமாய் -அண்ட புத்தியிலே புக்கு –அதுவாகில் நான் திரு மேனியைப் பிடிக்க –

விலங்கு மால் வரைச் சுரம் கடந்த கால் பரந்த காவிரி கரை-
நீர் வர ஒண்ணாதபடி இரு விலங்கான பெரிய மலைகளையும் சுரங்களையும் கடந்த
நீரோடு கால் பரந்து வருகிற காவிரிக் கரையிலே

சுரம் -காடும் அரு நெறியும்

இத்தால் -ஆராவமுத ஆழ்வார் உடைய சௌகுமார்யத்துக்கு அநுகூலமாக சிசுரோபசாரம்
பண்ணுகைக்கு -காவிரி மலை என்ன -அரு நெறி என்ன -இவற்றைக் கடந்து தன் அபிநிவேசம்
தோற்றப் பரந்து வந்த படியைச் சொல்லுகிறது

குடந்தையுள் கிடந்தவாறு –
காவிரி அடிமை செய்ய திருக் குடந்தையிலே ச்ரமம் தோற்ற கண் வளர்ந்து அருளுகிற படியை
காவிரி சிசுரோபசாரம் பண்ணக் காண்கையாலும்

திரு வெக்கா கிடையில் -சாயாவாஸ த்வம் அநுகச்சேத் -என்கிறபடியே தொடர்ந்து போரக்
காண்கையாலும்

கோயிலிலும் -உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் -என்று
தன்  அபிமதம் பெறுகையாலும்

திருக் குடந்தையிலே முகம் தாராதே கண் வளர்ந்து அருளுகைக்கு ஹேது ச்ரமம் என்று
இருக்கிறார் –

ஆராவமுத ஆழ்வாரும்- இவருடைய பரிவின் எல்லையை அனுபவிக்கைக்காவும் –
படுக்கை வாய்ப்பாலும் -கண் வளர்ந்து அருளுகிறார்

எழுந்து இருந்து பேசு-
இதுக்கு ஹேதுவை -கண் வளர்ந்து அருளா நிற்க -அருளிச் செய்ய ஒண்ணாது
என் பயம் கெட எழுந்து இருந்து அருளிச் செய்ய வேணும் –

எழுந்து இருக்கும் போதை சேஷ்டிதத்தாலும் –
அருளிச் செய்யும் பொழுது ஸ்வரத்தாலும் –
எனக்கு பயம் கெட வேணும்

வாழி –
அப்படி அருளிச் செய்யாமையாலே -ஆயுஷ்மான் -என்னுமா போலே -ஒரு தீங்கு
இன்றிக்கே கண் வளர்ந்து அருளுகிற இவ்வழகு நித்யமாய் செல்ல வேணும் என்று மங்களா
சாசனம் பண்ணுகிறார் –

கேசனே —
கேசவ சப்தமாய்  கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்

இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை

——————————————————————————————–

62 -பாட்டு –

அவதாரிகை –
திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின இதுக்கு ஹேது நிச்சயிக்க மாட்டாதே பீதர்
ஆனவருக்கு –ஹிரண்யனை அழியச் செய்த வீரத்தோடே –
திருக் குறுங்குடியிலே நின்று அருளின படியை காட்டக் கண்டு தரித்து –
நம்பி உடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -முரட்டு ஹிரண்யனை -அழியச் செய்தாய்
என்பது உன்னையே என்று விஸ்மிதர் ஆகிறார் –

கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே –-62-

பதவுரை

கரண்டம் ஆடு பொய்கையுள்

நீர்க்காக்கைகள் உலாவுகின்ற பொய்கையிலே
கரு பனை பெரு பழம்

கரிய பெரிய பனம்பழங்களானவை
புரண்டு வீழ

விழுந்துபுரள (அவற்றைக் கண்டு நீர்க்காக்கைகளாக ப்ரமித்து அஞ்சின)
வாளை

மீன்கள்
பாய்

துள்ளியோடி யொனிக்கின்ற
குறுங்குடி

திருக்குறுக்குடியிலே எழுந்தருளியிருக்கிற
நெடுந்தகாய்

மஹாதுபாவனே!
திரண்ட தோள்

திரண்டதோள்களையுடையவனான
இரணியன்

ஹிரண்யனுடைய
சினம்கொள் ஆகம் ஒன்றை

மாத்ஸர்யம் விளங்குகிற கடுமையின் அத்விதீயமான சரீரத்தை
இரண்டு கூறு செய்து

இருபிளவாகப் பிளந்து
உகந்த

மகிழ்ந்த
சிங்கம் என்பது

நரஸிம்ஹ மூர்த்தியென்று சொல்வது
உன்னையே

உன்னையோ? (ஸுகுமாரனானவுன்னை முரட்டுச் சிங்கமென்னத்தகுமோ?.)

வியாக்யானம் –

கரண்ட மித்யாதி –
நீர்க் காக்கை சஞ்சரிக்கும் பொய்கையிலே -பனையினுடைய கறுத்த பெரிய பழம்
அதினின்றும் விழுந்து -புரண்டு நீரிலே விழ -அவற்றை நீர்க் காக்கையாக கருதி
வாளைகள் அஞ்சிப் பாயா நின்ற திருக் குருங்குடியிலே –
அழகும் சௌகுமார்யமும் சீலமும் மேன்மையும் -ஆகிற
இஸ் ஸ்வபாவங்கள் குறைவற்று இருக்கிற மஹா ப்ரபாவனே

கரண்டம் -நீர்க் காக்கை

ஆடுகை -நடையாடுதல் -என்னுதல் -முழுகுதல் -என்னுதல்

தகை -இயல்வு

போலியைக் கண்டு வாளையானது அதி சங்கை பண்ணுகிற இது
அத்தேசத்தின் பதார்த்தங்கள் நம்பி பக்கல் அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறபடிக்கு
ஸூசகமாய் இருக்கிறது

திரண்ட தோள் இரணியன்
திரட்சி பெற்ற தோளை உடைய ஹிரண்யன்
அவன் வலியை கோட் சொல்லித் தருகிற தோள் -என்கை

அதவா
தேவர்கள் உடைய வலி யடங்க திரண்ட தோள் என்னுமாம் –

இந்த்ரத்வ மகரோத் தைத்ய -இத்யாதி –

சினம் கொள் ஆகம் –
நெஞ்சில் க்ரோதம் வடிவிலே தோற்றி இருக்கிற படி -சினம் மிக்க வடிவு
ஒன்றையும் இரண்டு கூறு செய்து –
இஸ் ஸூகுமாரமான வடிவைக் கொண்டு அத்வதீயனான ஹிரண்யன் சரீரத்தை இரண்டு கூறாக பிளந்து

உகந்த சிங்கம் என்பது உன்னையே –
சிறுக்கன் உடைய விரோதி போகப் பெற்றோம் என்று உகந்த நர சிம்ஹமாக பிரமாணங்கள்
சொல்லுவது அத்யந்த ஸூகுமாரமான உன்னையே

உக்ரம் வீரம் — ம்ர்த்த்யும்ர்த்த்யும் -என்று சொல்லுவது உன்னையே

க்வ் யவன உந்முகீ பூத ஸூ குமார தநுர் ஹரி –
க்வ வஜ்ர கடிநா போக சரீரோயம் மஹா ஸூர -என்கிறபடியே
உன் சௌகுமார்யாம் கண்டபடிக்கு அவ்வபதாநம் அநுபபன்னம் என்று கருத்து –

சர்வாதிகனாய் அத்யந்த ஸூகுமாரமான அவன் –விமுகரான சம்சாரிகள் நடுவே
திருக் குருங்குடியிலே வந்து தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்க நிற்கிற நிலை யாய்த்து

அவ் ஊரில் பதார்த்தங்களுக்கு அதி சங்கை மாறாதே செல்லுகைக்கும்
இவ் வாழ்வாருக்கு நம்பி உடைய சௌகுமார்யத்தையே அனுசந்திகைக்கும் ஹேது 

——————————————————————————————

63-பாட்டு –

அவதாரிகை –
தேவரீர் சௌகுமார்யத்தை பாராதே ஸ்ரீ ப்ரஹலாதன் பக்கல் வாத்சல்யத்தால் ப்ரேரிதராய்
ஹிரண்யனை அழியச் செய்யலாம் –
விமுகரான சம்சாரிகளுடைய ஆபிமுக்யத்தை அபேஷித்து
உன் மேன்மையைப் பாராதே –
கோயில்களிலே நிற்பது -இருப்பது -கிடப்பது -ஆகிற இது
என்ன நீர்மை என்று ஈடுபடுகிறார் –

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-

பதவுரை

நன்று இருந்து

(யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து
யோகம் நீதி

யோகமாகியு உபாயத்தை
நண்ணுவார்கள்

ஸாதிக்கின்ற யோகிகளுடைய
சிந்தையுள்

ஹ்ருதயத்தினுள்ளே
சென்று இருந்து

ப்ரவேசித்திருந்து
ஊரகத்தும்

திருவூரகத்திலும்
வெஃகனை

திருவெஃகாவிலும்
தீ வினைகள் தீர்த்த

(அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின
தேவ தேவனே!

தேவாதி தேவனே!
குன்று இருந்த நீடு மாடம்

மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய
பாடகத்தும்

திருப்பாடகத்திலும்
இருந்து நின்று கிடந்தது

(க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது
என்ன நீர்மை

என்ன ஸௌஹார்த்தமோ!

வியாக்யானம் –

நன்று இருந்து –
சேலாஜி ந குசோத்தரம் ஸ்திர மாஸநம் சு சௌ தேச ப்ரதிஷ்டாப்ய -என்கிறபடியே
சுத்தமான தேசத்திலே குசாஜிந சேலோத்தமான ஆசநத்தை இட்டு -அதிலே ஏகாக்ர சித்தனாய்
இருந்து -ஆஸிநஸ் சம்பவாத் -இத்யாதி –

யோக நீதி நண்ணுவார்கள் –
யோகமாகிற உபாயத்தாலே உன்னை லபிக்க இருக்கிறவர்கள்

நீதி -வழி

சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான உன் மேன்மை பாராதே
அவர்கள் உடைய ஹ்ர்தயத்திலே சென்று சுபாஸ்ரயமாகக் கொண்டு
அநாதிகாலம் விஷயாந்தர ப்ரவணமாயப் போந்த ஹ்ர்தயம் என்று குத்ஸியாதே
ஆசன பலத்தாலே ஜெயிப்பாரைப்  போலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்து –

ஆந்தரமாயும் பாஹ்யமாயும் இருந்துள்ள அனுபவ விரோதிகளான துக்கங்களைப் போக்கும்
ஸ்வபாவத்தை உடையவனே அவர்கள் ஹ்ர்தயத்தில் செல்லுகைக்கும் –

நெடுநாள் விஷயாந்தர ப்ரவணமான ஹ்ர்த்யம் என்று குத்ஸியாதே அதிலே
நல் தரிக்க இருக்கையும் –

ஸ்வ ப்ராப்தி விரோதிகளான -அவித்யா கர்ம வாசநாதிகளை போக்கையும்

தேவரீருக்கே பரம் இறே -யோகோ யோக விதான் நேதா -என்னக் கடவது இறே –

ஸாதநாந்தர நிஷ்டர் என்று பாராதே -அநந்ய பிரயோஜனர் என்கிற
இவ்வளவே பார்த்து -அவர்கள் உடைய ஹ்ர்தயத்திலே சென்று -உன்னைப் பெறுகைக்கு
க்ர்ஷி பண்ணின -இவ் ஔதார்யம் பொறாமே -உன் பக்கல் த்வேஷம் பண்ணி இருக்கிற
சம்சாரிகள் திறத்திலே பண்ணின இவை என்ன நீர்மை என்கிறார் -மேல் –

குன்றிருந்த -இத்யாதி –
மலைகள் சேர்ந்து இருந்தால் போல் ஓங்கின மாடங்களை உடைய திருப் பாடகத்திலும்
அப்படியே இருந்துள்ள திரு ஊரகத்திலும் –
முகம் காட்டுவார் உண்டோ -என்று திரு ஊரகத்தில் –நின்று அருளியும் 

ஒருத்தரையும் கண்டிலோம் -என்று சோம்பாதே திருப் பாடகத்திலே இருந்து அருளியும்-

அவ்விடத்திலும் ஆதரிப்பார் இல்லாமையாலே -ருசி பிறந்த வன்று கிடை அழகைக் கண்டு
ஆதரிக்கிறார்கள் என்று திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளியும்
இப்படி செய்து அருளினே இது என்ன நீர்மை -என்கிறார்

உன்னைப் பிரிய மாட்டாதே -நித்ய ஸூரிகளுக்கும் நித்ய அனுபவ விஷயமாகலாம்
உன் வாசி அறிந்தார்
உன்னை நோக்கோம் என்று இருந்த சம்சாரிகள் உடைய உகப்பை ஆசைப்பட்டு
வளைப்பு கிடக்கிற இது என்ன நீர்மை -என்கிறார்

————————————————————————————-

64 -பாட்டு –அவதாரிகை –

கீழ்ச் சொன்ன நீர்மையை உடையவன் -எனக்கு ருசி ஜனகன் ஆகைக்காக
திரு ஊரகம் தொடக்கமான திருப்பதிகளில் வர்த்தித்து –
ருசி பிறந்த பின்பு என் பக்கல் அதி வ்யாமோஹத்தைப் பண்ணுகையாலே
கீழ்ச் சொன்ன நீர்மை பலித்தது என் பக்கலில் -என்கிறார் –

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-

பதவுரை

எந்தை

எம்பெருமான்
ஊரகத்து

திருவூரகத்திலே
நின்றது

நின்றருளினதும்
பாடகத்து

திருப்பாடகத்திலே
இருந்தது

வீற்றிருந்ததும்
வெஃகனை

திருவெஃகாவில்
கிடந்தது

திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்)
என் இலாத முன் எலாம்

நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து
அன்று

அப்போது
நான் பிறந்திலேன்

நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை
பிறந்தபின்

அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு)
மறந்திலேன்

மறக்கவில்லை
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர்.

வியாக்யானம் –
நின்றது எந்தை ஊரகத்து –
த்ரைவிக்ரமம் பண்ணின தூளி தாநம் தோற்ற திரு ஊரகத்திலே  நின்று அருளிற்று –
எனக்கு ஸ்வாமி என்று நான் இசைகைக்காக –
நிலை அழகைக் காட்டி ருசியைப் பிறப்பித்து
த்ரிவிக்ரம அபதாநத்தை பிரகாசிப்பித்தது -முறையை உணர்த்துகைக்காக –என்கை

அதவா –
எனக்கு இசைவு இன்றிக்கே இருக்கச் செய்தேயும் -வந்து நின்று அருளுகிறது –
உடையவன் உடைமையை இழக்க மாட்டாமையாலே நின்று அருளுகின்றான் என்றுமாம் –

இருந்தது எந்தை பாடகத்து –
அந்த நிலை அழகிலும் எனக்கு ஆபிமுக்யம் காணப் பெறாமையாலே –
இருப்பழகைக் காட்டி -குணைர் தாஸ்யம் உபாகதா -என்கிறபடியே –
நீ எனக்கு ஸ்வாமி -நான் அடியேன் -என்னும் முறை உணருகைகாக -திருப்பாடகத்திலே
எழுந்து அருளினான் –

அன்று வெக்கணைக் கிடந்தது –
கீழ்ச் சொன்ன இரண்டு திருப்பதிகளிலும் எனக்கு ருசி பிறவாத அன்றாக
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளிற்றும் –
அத்திருப்பதிகளை ஆஸ்ரயித்த காலத்துக்கு அவதி என் என்னில் –

என்னிலாத முன்னெலாம் –
நான் இல்லாத முற்காலம் எல்லாம் –
நான் அபிமுகீபவிப்பதற்குமுன்பு எல்லாம் -என்னாகி -நானாகி -என்னக் கடவது இறே

உபய விபூதி நாதனான தான் -சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலம் எல்லாம்
ருசி பிறக்கைக்காக -நிற்பது இருப்பது கிடப்பது ஆவதே –

என்னுடைய சத்தை தன்னுடைய கடாஷம் அதீனமாய் இருக்க -இத்தலையில்
கடாஷம் தனக்கு தேட்டமாவதே –

அக்காலத்தில் நீர் செய்தது என் என்னில் –
அன்று நான் பிறந்திலேன் –
நான் திருவடிகளில் தலை சாய்க்கைகாக ஸ்ர்ஷ்டி காலத்தில் நாம ரூபங்களை தந்து அருள –
விஷயாந்தர ப்ராவண்யத்தால் அனுபவிக்கப் பெற்றிலேன் –

நான் பிறந்திலேன் –
ஆத்மாவுக்கு ஜன்மம் ஆகிறது ஜ்ஞான லாபம் ஆகையாலே அஜ்ஞனனாய்ப் போனேன்

அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் -அஸநநேவஸ பவதி -என்னக் கடவது இறே

கரீயான் ப்ரஹ்மத பிதா –

பிறந்த பின்பு மறந்திலேன் –
அவன் க்ர்ஷியாக எனக்கு அறிவு பிறந்தபின் மறந்து அறியேன் –

மத்தஸ் ஸ்ம்ர்திர் ஜ்ஞாந மபோஹநஞ்ச –
அவனடியாக பிறந்த ஜ்ஞானம் –மதி நலம் -என்கிறபடியே -பக்தி ரூபா பன்ன ஞானம்
ஆகையாலே -விஸ்ம்ர்தி பிரசங்கம் இல்லை இறே

ஆக -தன்னுடைய சத்பாவ அசத் பாவங்கள் ஆகிறன-பகவத் விஷயத்தில் ருசி பிறக்கையும்
அது அன்றிக்கே ஒழிகையும்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –

எனக்கு மறக்க ஒண்ணாதபடி ருசி பிறந்த பின்பு -அவன் திருப்பதிகளில் பண்ணின
செயல்கள் எல்லாவற்றையும்  -திருப்பதிகளை காற்கடைக் கொண்டு என்னுடைய
ஹ்ர்தயத்தில் பண்ணி  அருளா நின்றான்-

முதலிலே தான் என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் –அசத் சமனாய் இருந்துள்ள
என்னையும் உளனாம்படி பண்ணி -தன்னை மறக்க ஒண்ணாத பிரேமத்தை விளைத்து –
அதுக்கு விஷய பூதனாய் -தன்னுடைய விடாயும் தீர்ந்தான் என்றது ஆய்த்து

சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த -என்றார் கீழ்-

நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே -என்று அனுபவத்தைச் சொன்னார் இங்கு –

இவை இரண்டாலும் –
சாதநாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தம்முடைய அதிகாரத்துக்கு உண்டான ஏற்றத்தை
அருளிச் செய்து விட்டார் ஆய்த்து –

———————————————————————————

65- பாட்டு –அவதாரிகை –
தம் திறத்தில் ஈஸ்வரன் பண்ணின உபகாரமானது தம் திரு உள்ளத்தில் நின்றும் போராமையாலே
பின்னும் அதிலே கால் தாழ்ந்து -திருமலையில் நிலையும் -பரம பதத்தில் இருப்பும் –
ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளின இதுவும் எனக்குத் தன் திருவடிகளில் ருசி
பிறவாத காலம் இறே -என்கிறார்

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-

பதவுரை

எந்தை

எம்பெருமான்
ஊரகத்து

திருவூரகத்திலே
நின்றது

நின்றருளினதும்
பாடகத்து

திருப்பாடகத்திலே
இருந்தது

வீற்றிருந்ததும்
வெஃகனை

திருவெஃகாவில்
கிடந்தது

திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்)
என் இலாத முன் எலாம்

நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து
அன்று

அப்போது
நான் பிறந்திலேன்

நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை
பிறந்த பின்

அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு)
மறந்திலேன்

மறக்கவில்லை
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர்.

வியாக்யானம் –

நிற்பதும் ஓர் வெற்பகத்து –
அத்வதீயமான திருமலையிலே நிற்பதுவும்-
திருமலைக்கு அத்வதீயம் -கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -என்கிறபடியே தாழ்ந்தார்க்கு
முகம் கொடுக்கும் நீர்மைக்கு எல்லை நிலமாய் இருக்கை –

ஸ்தாவரங்களுக்கும் திரியக்குகளுக்கும் தத் ப்ராப்யரான வேடர்க்கும் திருவடிகளிலே
ருசியைப் பிறப்பிக்கைக்கு நிற்கிற நிலை -இறே

இருப்பும்  விண் –
ருசி பிறந்தாரை அஸ்பஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளோபாதி முகம் கொடுத்து
அனுபவிகைக்காக எழுந்து அருளி இருக்கிற பரம பதத்தில் இருப்பும் –

கிடப்பதும் நற்  பெரும் திரைக் கடலுள் –
தெளிந்து குளிர்ந்து இருக்கிற திரைகளை உடைத்தாய் –
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடியே விஸ்த்ர்தமாக
கண் வளர்ந்து அருளுகைக்கு வேண்டும் பரப்பை உடைத்தாய்
திரையாகிற கை களாலே திருவடிகளை வருட ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளுவதும் –

நான் இலாத முன்னெலாம்-
தன்னோடு உண்டான முறையை அறியாதே நான் அசத் சமனாய் இருந்த காலம் எல்லாம்
இப்படி என் பக்கலிலே அத்ய அபிநிவேசத்தை பண்ணுகிறவன் சர்வ ப்ரகார பரி பூரணன்
கிடீர் என்கிறது மேல் –

அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்-
ஆச்சர்யமான ஜ்ஞான சக்தியாதி குண பரி பூர்ணனாய்
அநந்த சாயி யாகையாலே சர்வேஸ்வரனாய்
ஜகத் காரண பூதனாய்
உபய விபூதி நாதத்வத்துக்கும் அவ்வருகான ஸ்ரீ ய பதித்வத்தையும்
உடையவன் கிடீர் -என்னுதல்

என்னைப் பெற்ற பின்பு அவனுக்கு இவை எல்லாம் நிறம் பெற்றது -என்னுதல்

நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே-
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம் –
என்கிறபடியே அத் திருப்பதிகளை காற்கடைக் கொண்டு அவ் வவ் இடங்களில்
நின்றும் இருந்தும் கிடந்தும் செய்து அருளின நன்மை எல்லாம் என் நெஞ்சிலே யாய்த்து –

நிகிந அக்ரேசரனான என்னை -விஷயீ கரித்தவாறே -திருமலையில் நிலையும் மாறி
என் நெஞ்சில் நின்று அருளினான் –

தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை
மாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –

தாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின
படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில்
கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –

இப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது
இல்லை -என்கிறார் –

————————————————————————————

66-பாட்டு –

அவதாரிகை –

பகவத் விஷயம் ஸூலபமாய் இருக்க-
சம்ஸாரம் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதம் என்னும் இடம் ப்ரத்யஷ சித்தமாய்
இருக்க -பகவத் சமாஸ்ரயணம் அபுநாவ்ர்த்தி லஷணமான மோஷ ப்ராப்தமாய் இருக்க –
சம்சாரிகள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணாது இருக்கிற ஹேது என்னோ -என்று விஸ்மிதர்
ஆகிறார்

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

பதவுரை

பிறந்தானென்கிற க்ஷணத்திலே செத்துப்போவதோ
நின்று சாதல்

சிலகாலமிருந்து செத்துப் போவதோ
அன்றி

இவ்விரண்டத்தொன்று தவிர
யாரும்

மேன்மக்களான ப்ரஹ்மாதிகளும்
வையகத்து

இந்நிலத்திலே
ஒன்றி நின்று

சிரஞ்சீவியாயிருந்து
வாழ்தல் இன்மை கண்டும்

வாழ முடியாதென்பதை ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும்
நீசர்

அறிவில்லாதவர்கள்
அன்று பார் அளந்தபாதபோதை உன்னிசென்று

முன்பு பூமி முழுவதையும் அளந்தருளின பாதாரவிந்தத்தைச் சிந்தித்து
சென்று

அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று
வானின்மேல் சென்று

பரமபதத்தேறப் புகுந்து
தேவர் ஆய் இருக்கிலாத வண்ணம் என் கோல்

நித்யஸூரிகளோடொக்க இராதது ஏனோ?

வியாக்யானம் –

இன்று சாதல் –
யோஷித் புருஷ சம்யோக சமநந்தரம் முடிதல்

கர்பாஷ்டமேஷூ -என்கிறபடியே கர்ப்பாதந சமயம் -உத்பத்தி காலமாய்  -கர்ப்ப வச காலம்
ஆயுஸ் ஸூக்கு உடலாக கடவது

நின்று சாதல் –
சதாயுஸ் சம்பூர்ணனாய் முடிதல் –
கல்பாதியிலே தோற்றி கல்பாந்தரத்திலே முடியும் தேவர்களைப் போல் ஆதல்
நாயம் பூத்வா பவிதாவாந பூய -என்னக் கடவது இறே
அன்றி –
இந்த அஸ் தைர்யத்திலும் உள்மானம் புறமானம் ஒழிய நித்யராய் இருப்பார் ஒருவரும் இல்லை –
கர்ப்பே விலீயதே பூயோ ஜாய மா நோஸ் தமே திச
ஜாதமாத்ரே சம் ரிய தே பால பாவே ச யௌ வ நே -இத்யாதி –

யாரும்-
எத்தனை யேனும் அதிசயித ஜ்ஞாநராய் சதுர் தச புவநத்திலும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளும்

வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் –
சதுர் தச புவநத்திலும் ஒருபடிப்பட்டு நின்று ஜீவிக்கும் அது இல்லாமையை கண்டு வைத்தும் –

வையகம் -என்று சதுர் தச புவநத்துக்கும் உப லஷணம்

வாழ்தல் -என்று ஷேபிக்கிறார் -ஆதல்
சம்சாரிகள் கருத்தாலே  யாதல்

நீசர் –
தங்கள் அனுபவத்துக்கு உபதேசம் வேண்டும்படி அஜ்ஞராய் இருக்குமவர்கள்
ப்ரக்ர்தி ப்ராக்ர்தங்களின் தண்மை ப்ரத்யஷத்தாலும் பரோஷத்தாலும் ப்ரகாசியா
நிற்கச் செய்தே விட மாட்டாதே இருக்கிற பாப ப்ரசுரம் –என்றுமாம் –

நீசர் –என்று அறிவிலோரும் -பறையரும்

அன்று –
பூமி மஹாபலியாலே அபஹ்ர்தமாய் -அத்தாலே தன்னுடைய
சேஷித்வமும் சேதனருடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று –

பாரளந்த பாத போதை –
குணாகுண நிரூபணம் பண்ணாதே பூமி முதலான சகல லோகங்களிலும் உண்டான
சகல சேதனர் தலையிலும் வைத்து முறையை உணர்த்தின சர்வ ஸூலபமான
திருவடித் தாமரைகளை –

பார் –என்று -ஊர்த்தவ லோகங்களுக்கும் உப லஷணம்

தாமரை -என்றது -துர்லபமானாலும் விட ஒண்ணாத போக்யதையாலே –

யொன்றி –
ஆஸ்ரயணம் அநாயாசம் -என்கிறது
சிந்திப்பே அமையும் -என்னக் கடவது இறே

ஆஸ்ரயணத்தில் ஆயாசம் இன்றிக்கே ஒழிந்தால் -பலமும் ஷூத்ர மாய் இருக்குமோ என்னில்
வானின் மேல் சென்று சென்று –
அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் அபுநா வ்ர்த்தி லஷணமான பரமபதத்திலே சென்று

அதவா
சென்று சென்று –
தேசப் ப்ராப்தியில் காட்டில் வழிப் போக்குக்கு தானே இனிதாய் இருக்கிறபடியை சொல்லிற்று ஆகவுமாம் –
தேவராய் இருக்கிலாத வண்ணமே –என் கொலோ –
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாய் இராதே ஒழிகிற ஹேது என்னோ –
நித்ய ஸூரிகளாய் இருக்கை யாவது -சர்வ தாஸ த்ர்சராய் இருக்கை
அதாகிறது
அசங்கோசத்தாலும் -ரூபத்தாலும் -பேதத்தாலும் -அவர்களோடு சமராய் இருக்கை

என் கொலோ
1-ப்ரத்யஷ சித்தமான சம்சார தோஷத்துக்கு கண் அழிவு உண்டாயோ –
2-சாஸ்திர சித்தமான பகவத் ப்ராப்தியில் நன்மைக்கு கண் அழிவு உண்டாயோ –
3-ஆஸ்ரயணீய வஸ்துவினுடைய சௌலப்யத்துக்கு கண் அழிவு உண்டாயோ –
4-ஆஸ்ரயணீ யத்தில் ஆயாசம் உண்டாயோ –
5-வழிப் போக்கில் அருமை உண்டாயோ –

 ப்ரகர்தி ப்ராக்ர்தங்களில் ப்ராவண்ய ஹேதுவான பாபமும்
பகவத் வைமுக்ய ஹேதுவான பாபமும்
ஒழிய இப் புருஷார்த்தத்தை இழைக்கைக்கு ஒரு ஹேதுவும் கண்டிலோம் -என்கை

————————————————————————————

67 -பாட்டு –

அவதாரிகை –

சம்சாரிகள் தங்களுக்கு ஹிதம் அறிந்திலரே ஆகிலும் –
இதில் ருசி பிறந்த வன்று இத்தை இழக்க ஒண்ணாது என்று பார்த்து –
இவர்கள் துர்கதியைக் கண்டு –பரோபதேச ப்ரவ்ர்த்தர் ஆகிறார் -மேல் ஏழு பாட்டாலே –

இதில் முதல் பாடு
அர்ச்சிராதி கதியிலே போய் -நிலை நின்ற புருஷார்த்தத்தை லபிக்க வேண்டி இருப்பீர் –
ப்ராப்யமும் ப்ராபகமும் ஆன பகவத் விஷயத்தை ஆஸ்ரயித்து
உங்கள் விரோதியைப் போக்கி
உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கியுய்மினோ –67-

பதவுரை

சண்டன் மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று

ஸூர்யமண்டல மத்யமார்க்கத்தாலே போய்
வீடு பெற்று

பரமபதத்தை அடைந்து (அவ்விடத்தில்)
மேல்வீடு இலாத

பக்தியின் பயனான கைங்கர்ய
காதல் இன்பம்

ஸுகத்தை நித்தியமாகப் பெற
நாளும் கண்டு

விருப்பமுடையவர்களே!
எய்துவீர்

(முமுக்ஷுக்களே)
புண்டரீக  பாதன்

தாமரைபோன்ற திருவடிகளையுடைனான பெருமானுடைய
புண்ய கீர்த்தி

பரிசுத்தமான திருப்புகழ்களை
நும் செவி

உங்களுடைய காதுகளிலே
மடுத்து

தேக்கி
உண்டு

அநுபவித்து.
நும் உறு வினை துயரும் நீங்கி உய்ம்மின்

உங்களுடைய ப்ரபல பாபங்களின் பலனை துக்கங்களின் நின்றும் நீக்கி உஜ்ஜிவித்துப்போங்கோள்.

வியாக்யானம் –

சண்ட மண்டலத்தினூடு சென்று –
கடிதான ஆதித்ய மண்டலத்தின் நடுவே போய்
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின்னனடுவுள் -என்கிறபடியே –

முமுஷூக்கள் அல்லாதவருக்கு துஷ் ப்ராப்யமான ஆதித்ய மண்டலத்தின் மத்யத்திலே –
ராஜ புத்ரர்கள்ராஜ குலத்தாலே அப்ரதிஹத கதிகளாய் போமாப் போலே போய் –

வீடு பெற்று —
பரம பதத்தை லபித்தது

மேல் கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர் –
மேல் -வீடிலாத காதல் இன்பம் -கண்டு நாளும் எய்துவீர் –
ப்ராப்ய பலமாய் -யாவதாத்மபாவி விச்சேத சங்கை யன்றியே -ஸ்வரூப அநுபந்தியாய்-
பகவத் அனுபவ ஜனித பக்தி காரித கைங்கர்ய சுகத்தை சாஷாத் கரித்து -யாவதாத்மபாவி லபிக்க வேண்டி இருப்பீர் –

புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி –
செவ்வித் தாமரை போலே நிரதிசயமான போக்யமான திருவடிகளில் பாவநத்வ
ப்ராபகத்வ ப்ரதையிலே-

பாவநஸ் சர்வ லோகாநாம் -என்றும் -பவித்ராணாம் ஹி கோவிந்த -என்றும் –
லோகாநாம் த்வம் பரோதர்ம -என்றும் -க்ர்ஷ்ணம் தர்மம் சநாதனம் -என்றும் -ப்ரசித்தம் இறே

நுஞ் செவி மடுத்தி –
பகவத் விஷயத்தை கனாக் காணாதே போந்த உங்கள் செவியை –
ஆச்சார்ய உபதேசத்துக்கு பாத்ரமாக்கி-
ஆப்த வாக்ய ஸ்ரவணமே பகவத் விஷயீகாரத்துக்கு வேண்டுவது -என்கை

உண்டு –
ஸ்மர்த்தவ்ய தசையே தொடங்கி -இனிதாகையாலும் –
நிரபேஷ உபாயம் ஆகையாலும்
பகவத் குணங்களையே அனுபவித்து

நும் உறுவினைத் துயருள் நீங்கியுய்மினோ –
நீங்கள் சூழ்த்துக் கொண்டதாய் அவஸ்யம் அநு போக்தவயம் -என்கிற பாப பலமான-
துக்கத்தின் உள்ளே வர்த்திக்கிற  நீங்கள் -இதில் நின்றும் நீங்கி
முன் சொன்ன கைங்கர்ய சுகத்தை லபித்து-தொழுது எழு-என்கிறபடியே உஜ்ஜீவியுங்கோள்

—————————————————————————————-

68 -பாட்டு –

அவதாரிகை –

சம்சாரிகள் குணத்ரய ப்ரசுரர் ஆகையாலே குண அநுகூலமாக ராஜச தாமச
தேவதைகளை ஆசரயித்து உஜ்ஜீவிக்கப் பார்க்கிறவர்களை நிஷேதியா நின்று கொண்டு –
ஆத்ம உஜ்ஜீவநத்தில் ருசியை உடையராய் -சாத்விகர்ஆனவர்கள் சர்வாதிகனை
ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க பாரும் கோள் -என்கிறார்

முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும்  நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-

பதவுரை

மூத்திறந்து

மூன்று வகைப்பட்ட (ஸாத்வீக, ராஜஸ, தாமஸங்களான) பல்களுக்குள்ளே
இரண்டில்

(ஸாத்விகமொழிந்த) மற்றையிரண்டு பலன்களில்
ஒன்றும்

விருப்பமுடையரான
நீசர்கள்

நீசரான மனிசர்கள்
அதில் இட்டு

அந்த லோகத்திலே அந்தக் கரும பலன்களையொழித்து
இறந்து

அவற்றை யநுபவிப்பதற்காகப் பூண்டுகொண்ட சரீரத்தை முடித்து
போந்து

(மறுபடியும் கர்ப்பவான வழியாலே) பூலோகத்தில் வந்து
மத்தர் ஆய்

“தேஹமே ஆத்மா” என்கிற ப்ரமத்தையுடையராய்
மயங்குகின்றது

மோஹித்துப்போவார்கள்; (அப்படிப்பட்டவர்கட்கு)
உய்வது ஓர் உபாயம்

உஜ்ஜீவ்நோபாயம்
எத்திறத்தும் இல்லை

எவ்வழியாலுமில்லை, (மேலேறுவதும் கீழிறங்குவதுமாய்த் திரித்லொழிய நிலைநின்ற புருஷார்த்தம்பெற விரகில்லை)
உய்குறில்

(உங்களுக்கு) உஜ்ஜீவிக்க விருப்பமுண்டாகில்
கொத்து இறுத்த

கொத்துக்கொத்தாகச் செறிந்த
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையனான
நம் மாலை

பரமபுருஷனை
வாழ்த்தி

துகித்து
வாழ்வின்

உஜ்ஜீவித்துப் போங்கோள்.

வியாக்யானம் –

முத்திறத்து வாணியத்து
சாத்விக ராஜஸ தாமஸ தேவதைகளை தம் தாமுடைய குண அநுகூலமாக பற்றி
ஆராதிக்கப் பெறும் மூன்று வகைப்பட்ட பலங்களிலும்

திறம் -ப்ரகாரம்

பலங்களை –வாணியம் என்கிறது
வ்யாபாரம் அல்பமாய் -பலம் விஞ்சிதாய் இருக்கை

அக்நௌ ப்ராஸ்தா ஹூதிஸ் சம்யக் -என்றும் –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் –
த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே
வேதங்களும் குணத்ரய வச்யரான சேதனருக்கு குண அநுகூலமாக ஆராத்ய தேவதைகளையும்
தத் ஆராதன பிரகாரங்களையும் -ஆராதன பலன்களையும் சொல்லி -வைத்தது

இரண்டில் ஒன்றும் நீசர்கள் –

ஸ்வ குணங்களுக்கு அநுகூலமாய் இருக்கையாலும் -சாஸ்திர அனுமதியாலும்
நித்ய சத்வத்தையும் -தத் ஆராத்யனான ஈஸ்வரனையும் -தத் ஆராதன பலமான
மோஷத்தையும் ஒழிந்து -ராஜஸ தாமஸ பலங்களில் ருசியைப் பண்ணும் நீசர் –

நீசர் ஆகிறார் -சம்சாரத்தை வர்த்திப்பித்து கொள்ளும் ஹேயர்

மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து –
இட்டதில் –
கர்ம அவசாநத்திலே அந்த பலத்தை இட்டு

இறந்து –
அவ் வவ தேசங்களில் போக சரீரங்களை முடித்து

போந்து –
அந்த போக பூமியில் நின்றும் ஆகாச மேக அவச்யாதிகளிலே கிடந்தது
கர்ப்ப வாஸ அர்த்தமாக போந்து-
ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -என்கிறபடியே பூமியிலே பிறந்து –

மத்தராய் –
தேக ஆத்ம அபிமானத்தாலே ப்ராக்ர்த பதார்த்த லாபத்தாலே களித்து
மயங்குகின்றது –
ஆத்மாவை ஆதல் –
ஈஸ்வரனை ஆதல் –
உள்ளபடி அறியாமையாலே மோஹாங்கதரைப் போலே இருக்கிறது இறே

ஸ்வர்க்காதி பல அனுபவங்களை புண்யம் ஷயித்த அளவிலே மத்யே விட்டு
அந்த போக சரீரங்களையும் முடித்து -கர்ப்ப வாஸ அர்த்தமாக அதி கிலேசத்தோடே
போந்தபடியை அனுசந்தியாமையால் இறே சேதனர் ப்ரக்ர்த போகங்களில்
களித்து வர்த்திக்கிறது என்கை-

எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை –
ஆகையால் ஸ்வ பௌருஷத்தாலும் இதர தேவதைகளை ஆஸ்ரயணீயராக பற்றினாலும்
ஈஸ்வரன் தன்னையே ஐஸ்வர்ய அர்த்தமாகப் பற்றினாலும்
உஜ்ஜீவிக்கைக்கு வழி இல்லை

யுய்குறில் –
உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தி கோள் ஆகில் –
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ —

சர்வேஸ்வரத்வ ஸூ சுகமாய் -தொடை செறிந்து ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
திருத் துழாயாலே அலங்க்ர்தனாய் -சௌலப்யாதி கல்யாண குண உக்தனாய்
இருக்கிற சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து வாழும் கோள்

நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -இத்யாதிகளைச் சொல்லிப் புகழ்ந்து
யாவதாத்மபாவி ஆநந்த நிர்பரராய் இரும் கோள்

ஏஷஹ் யேவா நந்த யாதி -என்னக் கடவது இறே

—————————————————————————————

69 -பாட்டு –அவதாரிகை

எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை -என்கிறது என்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தால் உஜ்ஜீவிக்க ஒண்ணாமை என் என்ன –
அந்த தேவதாந்தர சமாஸ்ரயணம் துஷ்கரம்
அத்தைப் பெற்றாலும் அபிமத பிரதானத்தில் அவர்கள் அசக்தர்
ஆனபின்பு ஜகத் காரண பூதனான யாஸ்ரயித்து சம்சார துரிதத்தை அறுத்துக் கொள்ள
வல்லிகோள் -என்கிறார் –

காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —69-

பதவுரை

காணிலும்

கண்டாலும்
உரு போலார்

விகாரமான உருவத்தையுடையராயும்
செவிக்கு இனாத கீர்த்தியார்

காதுக்குக் கடூரமான சரித்திரங்களையுடையராயும்
பேணிலும்

(இப்படிப்பட்ட விகாரமான உருவத்தையும் ஹேமயமான சரிதையையும், கவனியாமல்) ஆச்ரயித்தாலும்
வரம் தர

(ஆச்ரயித்தவர்கட்கு) இஷ்டத்தைக் கொடுக்க
மிடுக்கு இலாத

சக்தியற்றவர்களாயுமுள்ள
தேவரை

தேவதைகளை
ஆணம் என்று

சரணமென்றுகொண்டு
அடைந்து வாழும்

அவற்றையடைந்து கெட்டுப்போகிற
ஆதர்கள்

குருடர்களே!
என் ஆதிபால்

ஸர்வகாரணபூதனான எம்பெருமானிடத்து
பேணி

வழிபாடுகளைச் செய்து
நும்

உங்களுடைய
பிறப்பு எனும்

ஸம்ஸாரமாகிற
பிணக்கு

பெரும்புதரை
அறுக்க கிற்றிரே

அறுத்தொழிக்க வல்லீர்களே?

வியாக்யானம்-

காணிலும் உருப்பொலார் –
தாமஸ தேவதைகள் ஆகையாலே முமுஷுக்களுக்கு அவர்கள் த்ரஷ்டவ்யர் அல்லர் –

ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா பிரதி ஷித்தாஸ் து பூஜநே –
அசுத்தாஸ் தே சமஸ்தாச்ச தேவாத்ய கர்மயோநய -என்னக் கடவது இறே –

ஆத்மாவாரேத்ரஷ்டவ்ய -என்னும் அவன் அல்லன் இறே

இங்கன் இருக்கச் செய்தே உங்கள் குண அநுரூபமான ருசியாலே கண்டாலும்
விருபா ஷத்வாதிகளாலே வடிவு பொல்லாதாய் இருப்பர்

திரு உள்ளத்தில் தண்ணளியை கோட் சொல்லித் தாரா நின்ற புண்டரீகாஷனைப் போலே
வடிவு ஆகர்ஷமாய் இருக்கிறது அன்றே
அவர்களுடைய ஹ்ர்தயத்தில் க்ரௌர்யமே அவர்கள் வடிவில் பிரகாசிப்பது

செவிக்கினாத கீர்த்தியார் –
த்ரஷ்டவ்யர் அல்லாதவோபாதி ச்ரோதவ்யரும் அல்லர்

கேட்க வேண்டி இருந்தி கோளே யாகிலும்
பித்ர் வத ப்ரசித்தி என்ன –
தத் பலான பிஷாடந சாரித்ர ப்ரதை என்ன –
அத்வரத்வம்ச கதை என்ன –
சுர அசுர வத கதை -என்ன –
இத்யாதி சரவண கடுகமான கீர்த்தியை உடையராய் இருப்பர் –

ம்ர்தனான புத்ரனை சாந்தீபிநிக்கு மீட்டுக் கொடுத்தான்
புநராவ்ர்த்தி யில்லாத தேசத்தில் நின்றும் வைதிகன் புத்ரர்களை மீட்டுக் கொடுத்தான்
என்று -இத்யாதிகளாலே ஸம்ச்ரவே மதுரமான கீர்த்தி இறே

பேணிலும் –
ஆஸ்ரயணீயரும் அல்லர் –
ஆஸ்ரயித்தார் திறத்தில் -உன் பயலை அறுத்து இடும் -என்றும் -ஊட்டியிலே தட்டிற்றிலை

காண் -என்றும் சொல்லுகையாலே -உங்கள் ருசியாலே அவற்றையும் பொறுத்து
ச்ரவண கடோரமான கீர்த்தியையும் ஸ்வரூபத்தையும் பொறுத்து ஆஸ்ரயித்தாலும் –

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் -என்றும் –

ஸூ ஸூகம் கர்த்தும் -என்றும் ஆஸ்ரயணம்
ஸூக கரமுமாய் ஸூக ரூபமுமாய் இருக்கிறது அன்றே –

வரந்தர மிடுக்கிலாத தேவரை –
பர ஹிம்சையிலே வந்தால் -ஜகது உபசம்ஹார ஷமராய்
அபிமத பலம் தருகைக்கு சக்தி இல்லாத தேவதைகளை
ஒரு பிசாசுக்கு மோஷம் கொடுப்பது
ஒரு பஷிக்கு மோஷம் கொடுப்பது
உதாராஸ் சர்வ யேவைதே -என்று தானும் -பிறரும் –
சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு -என்னும் விஷயம் அன்று இறே

நீ தந்த நித்யத்வம் எனக்கு கழுத்து கட்டி யாய்த்து -என்று மார்கண்டேயன் அவனை வளைக்க
மோஷ ப்ரதன் கையிலே காட்டிக் கொடுத்து நழுவும் சீலம் இறே பிறரது

ஆணம் என்று அடைந்து –
இப்படி இவர்கள் ஆஸ்ரயணீயரும் அன்றிக்கே இருக்கச் செய்தே தங்கள் பிரேமத்தால் ஆஸ்ரயித்து

ஆணம் -அரண்
நத்யஜேயம் -என்னும் விஷயம் அன்றே
மா சுச -என்ன மாட்டான்
ஏறுண்டவன் ஆகையாலே-

வாழும் ஆதர்காள் –
ம்ர்த்ராய் இருக்கிற அறிவு கேடர்காள்

ஆதர் -குருடரும் -அறிவு கேடரும்
நா ஹாரயதி சந்த்ரா சம்பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா -என்றும்
பாஹூ இச்சாயமவஷ்ட ப்தோ யஸ்ய லோகோ மகாத்மாந -என்றும் –
அதஸோ பயங்கதோ பவதி -என்றும் -இருக்கிறார்கள் அன்றே

எம் ஆதி பால் பேணி –
எங்களுக்கு காரண பூதனானவன் பக்கலிலே ஆதரத்தைப் பண்ணி –
ஜகத் காரண வஸ்துவாய் இருக்கிறவனை

எம்மாதி -என்பான் என் என்னில் –
ஈஸ்வரன் ஜகத் ஸ்ர்ஷ்டியைப் பண்ணுகிறது முமுஷூ சிஸ்ர்ஷையால் யாகையாலே
அந்த ஸ்ர்ஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர் பக்கலிலே என்று எம்மாதி -என்று
விசேஷிக்கிறார்

நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே –
ஒருத்தராலும் அறுக்கப் போகாத உங்களுடைய பிறப்பு என்கிற தூற்றை அறுத்துக் கொள்ள
வல்லி கோளே

பிணப்பு அறுக்க -ஜன்மம் அறுக்க

ஜென்மத்தை தூறு என்கிறது அகப்பட்டவனுக்கு புறப்படாது போக ஒழிகையும்
தன்னால் தரிக்க ஒண்ணாது ஒழிகையும்
முதலும் முடிவும் காண முடியாது இருக்கையும் –

—————————————————————————————

70–பாட்டு

அவதாரிகை –

வரம் தரும் மிடுக்கு இலாத தேவர் -என்று அவர்களுக்கு சக்தி வைகல்யம்
சொல்லுவான் என் -அவர்களை ஆஸ்ரயித்து தங்கள் அபிமதம் பெற்றார் இல்லையோ
என்ன –

ருத்ரனை ஆஸ்ரயித்து அவனுக்கு அந்தரங்கனாய்ப் போந்த பாணன்
பட்ட பாடும் -ருத்ரன் கலங்கிய படியும் தேவர்களே அறியும் அத்தனை இறே -என்கிறார்

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே –70-

பதவுரை

குந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்

ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட)
பந்தம் ஆன தேவர்கள்

கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள்
பரந்து

(பல திக்குகளிலும்) சிதறிப் போய்
வானகம் உற

தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர
வந்த வாணன்

(பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய
ஈர் ஐநூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணிந்த நாள்

அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்)
அந்த அந்த அகுலம்

வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை
அமரரே அறிவர்

(நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.)

வியாக்யானம் –

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள் பந்தமான தேவர்கள் –
குந்தம் முதலான ஆயுதங்களைக் கொண்டு ருத்ரனுக்கு பந்துக்களாக உதவி செய்ய வந்த தேவதைகள்

குந்தம் -சவளம்

தோமரம் -எறி ஈட்டி
இவ் வாயுத வர்க்கத்தைக் கொண்டு வந்து -அவை தானே காற் கட்டாய் பொகட்டு போன
தேவர்கள் என்றுமாம்
அப்போது பந்தம் -என்றது பந்தகம் என்றபடி –

விநாசாய ச துஷ்க்ர்தாம் -என்கிறபடியே -க்ர்ஷ்ணனை தங்களுக்கு விரோதிகளான
அ சூர ராஷசர்களை அழியச் செய்து குடி இருப்பு தர வந்தவன் என்று பாராதே
அந்த துர்வர்க்கத்தோ பாதி எதிரம்பு கொத்து வருகையாலே
க்ர்தக்நருமாய் -துர்மாநிகளுமாயும் இருக்குமவர்கள் -என்கை

ஸாயூதரை வந்த தேவர்கள் என்று சுருங்க சொல்லாதே பரக்க ஆயுதங்களைப் பேசிற்று
உபகாரனானவன் பக்கலில் இத்தனை அபகாரத்தை  பண்ணுவதே என்ற நெஞ்செரிவாலே
யருளிச் -செய்கிறார்

பரந்து வானகமுற
க்ர்ஷ்ணன் சன்னதியிலே நேர் நிற்க மாட்டாதே
ஒருவர் போன வழி ஒருவர் போகாதே சிதறி தங்கள் குடி இருப்பிலே புக

வந்த வாணன் –
தேவதைகள் ஆயுதங்களைப் பொகட்டு போன இடத்திலும்
தனக்கு நியாமகனான ருத்ரன் ச்ஜ்ர்ம்பிதனான இடத்திலும்
தன்  தோள் வலியை விஸ்வசித்து வந்த பாணனுடைய

ஈரைஞ்சு நூறு தோள்களைத் துணித்த நாள்-
ஆயிரம் தோள்களையும் துணித்த வன்று –
தோள் வலியை கொண்டு வந்தவனுடைய தோள் வலியைக் கழித்தான் –
ஆயுதங்களைப் பலமாகக் கொண்டு வந்த தேவர்களை ஆயுதங்களைப் பொகட்டு
பிற்காலித்து போம்படி பண்ணினான்

சர்வாத்யஷனாய் வந்த ருத்னனை நிச் சேஷ்டனாம் படி பண்ணினான்
அந்தவந்தவாகுலம்
ருத்ரன் கொன்றையும் தும்பையும் ஜடையும் குலைய கேட்டுப் போன பாரவச்யமும்
போக்கற்றவாறே கலங்கி க்ர்ஷ்ணனுடைய முகம் பெறுகைக்கு ஸ்தோத்ரம் பண்ணின பாரவச்யமும்

பாரவச்யம் சமாயாதஸ் சூலி ஜ்ர்ம்பித தேஜஸா
பாஞ்ச ஜன்யச்ய யகோ ஷேண சாரங்க விஷ்ப் பூர் ஜி தே ந ச -என்றும்
க்ர்ஷ்ண க்ர்ஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்
பரிசம் பரமாத்மாந ம நா தி நிதநம் ஹரிம் -என்னக் கடவது இறே

அமரரே யறிவரே
ஆக இப்படி இரண்டு வகைப்பட்ட ஆகுலத்துக்கும் கெட்டுப் போன தேவர்களே சாஷி
நான் இன்று சொல்ல வேண்டி இருந்ததோ –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருச்சந்த விருத்தம் -51-60-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் –

April 27, 2013

பாட்டு -51-
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-

வியாக்யானம்

பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல் –
தன் அபிநிவேசம் எல்லாம் கொண்டு -எங்கும் ஒக்கப் பரந்து மாறாதே வந்து பொன்களை
கோயிலிலே தள்ளி அலை எறியா நின்றுள்ள காவேரி

வார் புனல் –
ப்ரவாஹ ரூபமான ஜலம்

அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே —
உபயபாவ நிஷ்டனான ப்ரஹ்மாவானவன் தன் அதிகாரத்துக்கு வரும் விரோதிகளை
பரிஹரிகைக்கு –
ப்ரஹ்ம பாவனைக்கும் -பலமான மோஷத்துக்குமாக சதுர்தச புவன ஸ்ரஷ்டா என்றும்
நாலு வேதங்களையும் ஒருக்காலே உச்சரிகைக்கு ஈடான நான்கு முகத்தை உடையன் என்றும்
அஜன் -என்றும் -தன்னை சர்வாதிகனாக அபிமானித்து இருக்கிறவன் பக்ன அபிமாநனாய்
வந்து ஆஸ்ரயிக்கும் கோயிலை –ஸ்ரீ ரெங்கம் -என்னா நின்றார்கள் புராண வித்துக்கள் –

ரதிங்கத இதி –ரங்கம் -என்றும் –
ஷீராப்தேர் மண்டலாத்பாநேரர் யோகிநாம் ஹர்த்தா தபி
ரதிங்கதோ ஹரிர்யத்ர ரங்க மித்யபி தீயதே -என்னக் கடவது இறே

————————————————————————————-

52 பாட்டு –அவதாரிகை –

ராமாவதாரதுக்கு பிற்பாடர்க்கு கோயிலிலே வந்து உதவினபடி சொல்லிற்று -கீழ் மூன்று பாட்டாலே
இனி -இரண்டு பாட்டாலே கருஷ்ணாவதாரதுக்கு பிறபாடர்க்கு உதவும்படி சொல்லுகிறது –

அநந்தரம் கீழில் பாட்டோடு சங்கதி என் என்னில் –
சதுர்தச புவநாத் யஷனாய் ஜ்ஞானாதிகனான ப்ரஹ்மாவுக்கு ஆஸ்ரயணீ யமான
அளவு அன்றிக்கேஅநந்ய ப்ரயோஜனராய் அநந்ய சாதநராய் இருந்துள்ளவர்களுக்கு
அனுபவ ஸ்தானம் கோயில் -என்கிறார் –

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-

அற்ற பற்றர் -என்றும் பாட பேதம் –

வியாக்யானம் –
பொற்றை யுற்ற முற்றல் யானை –
கற்பாறையிலே வர்த்திக்கையாலே திண்ணிதான ஆனை
மனுஷ்ய சஞ்சாரம் இன்றிக்கே மரங்களால் நெருங்கின காட்டிலே வர்த்திக்கையாலே
மநுஷ்யரைக் கண்டு கண் கலங்கி வர்த்திக்கிற ஆனை என்றுமாம் –

பொற்றை -கற்பாறையும் -கரிக்காடும்

போர் எதிர்ந்து வந்ததைப் –
ரஜகனைப் போல் அன்றியே யுத்தத்தில் எதிர்த்து வந்ததை

பற்றி உற்று –
மதியாதே சென்று பற்று -நாலு காலுக்கும் உள்ளான அதன் உடலிலே புக்கு நுழைந்து

மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர் –
அதுக்கு மேலே அதின் ஹிம்ச பரிகரமான கொம்பை அநாயேசேந முறித்த பாகன்
வர்த்திக்கிற தேசம் –

பாகன் -என்று அதற்க்கு ரஷகனாவன் –
அதின் அளவு அறிந்து -இடம் கொள்ளுமா போலே இடம் கொண்டு அத்தை அழித்த
படியாலே சொல்லுகிறது

இத்தால் க்ருஷ்ணாவதாரத்தில் பிற்பாடர் ஆனார்க்கு -பெருமாள் ஸ்வ அநுபவ
விரோதி வர்க்கத்தை குவலயாபீடத்தை அழித்தால் போலே -அழியச் செய்யுமவர்
என்கை –

ஸ்ரீ வசுதேவரும் தேவகிப் பிராட்டியாரும் ஸ்ரீ மதுரையில் பெண்களும்
ரங்க மத்யத்திலே க்ருஷ்ணனைக் காண ஆசைப்பட்டு இருக்க-வாசலிலே இடைச் சுவராய்
இறே  குவலயாபீடம் நின்றது –
சக்ய பஸ்யதே -வஸூ தேவோ  பூத் ப்ராதுர ஸீஜ்ஜ நார்த்தந -என்னக் கடவது இறே

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் –
சிறுகின கண்களை உடைத்தாய் -திண்ணியதான மூங்கில் தண்டு மூன்று தரித்த –
சந்ன்யாசிகள் –மூங்கில் மூன்று -தண்டர் -என்கிற இத்தால் -கீழ் உள்ள ஆஸ்ரம த்ரயத்தையும்
வ்யாவர்த்திக்கிறது –
சிற்று எயிற்று முற்றல் -என்ற இத்தால் –
ஏகேந ப்ரஹ்ம தண்டேந சர்வாஸ் த்ராணி ஹதா நிமே -என்கிற ந்யாயத்தால்
எதிர்த்த விரோதி வர்க்கத்தை தானே யழிய செய்யவற்றாய் -தனக்கு அழிவு அன்றிக்கே
இருக்கும் என்னும் அத்தை நினைக்கிறார் –

ஒன்றினார் –
பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயர் ஆனவர்கள் என்னுதல்

தேசாந்தரங்களை விட்டு இத் தேசமே ப்ராப்யம் என்று வந்து சேர்ந்தவர்கள் –என்னுதல்

அற்ற பத்தர் –
புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று
பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –

த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்
பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்

சுற்றி வாழும் –
சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள்
என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள்
என்னுதல் –

சுற்றல்-எண்ணல்

அம் தண் நீர் அரங்கமே –
தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –

——————————————————————————–

53 பாட்டு –அவதாரிகை –

அநிருத்த ஆழ்வானுடைய அபிமத விரோதியாய் -ப்ரபலமான பாண ப்ரமுக வர்க்கத்தை
போக்கினாப் போலே -இன்று ஆஸ்ரிதருடைய போக விரோதியைப் போக்குகைக்கு
அந்த க்ருஷ்ணன் நித்ய வாஸம் பண்ணும் தேசம் கோயில் –என்கிறார் –

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்றபேரதே –53-

பதவுரை

மோடியோடு

காளியும்
இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான்

வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும்
மக்களோடு

ஸ்வஜனங்களோடு
கூடு

திரண்ட
சேனை

ஸேனையை
கொண்டு

அழைத்துக்கொண்டு
வெம் சமத்து

பயங்கரமான போர்க்களத்திலிருந்து
மண்டி ஓட

வேகமாக ஓடிப்போன வளவிலே
வாணன்

பாணாஸுரனது
ஆயிரம் கரம்

ஆயிரம் கைகளை
கழித்த

அறித்தொழித்த
ஆதி மால்

பரமபுருஷனுடைய
பீடுகோயில்

பெருமைதங்கிய கோயில்
நீர் கூடு

காவேரியோடு கூடின
அரங்கம் என்றபோது

திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்

 

வியாக்யானம் –

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி –
சாத்விகர்க்கு தர்சனமே தொடங்கி லஜ்ஜையாம் படி அவர்களால் அபரிக்ராஹ்யை யான
சாபத்தை ப்ராபித்த காளியோடே -தமஸ் சுரை -யாகையாலும் துராசாரை யாகையாலும்
சாத்விகரால் உபேஷணீயையாய் இறே -இவள் இருப்பது –

சாபம் எய்திஇலச்சையாய -முக்கண்ணான் –
கபாலீத்வம் பவிஷ்யசி -என்று ப்ரஹ்மா சபிக்கையாலே லஜ்ஜா விஷ்டனான லலாட
நேத்ரன் -என்றுமாம் –
ஆகம முகத்தாலே தன்னை சர்வேச்வரனாக உபதேசித்து -லலாட நேத்ரத்வ
கங்கா தரத்வாதிகளோடு தன்னுடைய சக்திகளையும் ஆவிஷ்கரித்து
லோகத்தை அடங்கலும் கும்பிடு கொள்ளுகிற -இவனுக்கு ப்ரஹ்ம சாபத்தாலே
ஷேத்ரஞ்ஞத்வமும் -சாஸ்திர வஸ்யதையும் -பிரகாசித்தால் லஜ்ஜா விஷ்டனாகச்
சொல்ல வேணுமோ

கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து -ஓட-
மக்களோடே திரண்ட சேனையும் கொண்டு அரை குலையத் தலை குலைய யுத்தத்திலே
ஓடி -நம்பி மூத்த பிரானும் க்ருஷ்ணனும் விசயத்திலே மண்டினவாறே
ருத்ரனும் பரிகரமும் ஒடுகையிலே மண்டின படி

வாணன் ஆயிரம் கரம் கழித்த –
பாணனுடைய ஆயிரம் தோள்களையும் கழித்த-பாணனுடைய ரஷணத்தில் பிரதிக்ஜை பண்ணின ருத்ரனுடைய அபிமானத்தை
கழித்தான்

வாதிமால் –
ஜகத் காரணனான சர்வேஸ்வரன்
கர்ஷண ஏவகி லோகாநாம் உத்பத்தி ரபி சாப்யய -என்னக் கடவது இறே

பீடு கோயில்-
பெரிய கோயில் –பீடு -பெருமை

கூடு நீர் அரங்கம் என்றபேரதே —
சஹ்யத்தின் நின்றும் வந்ததும் -இப்பாலும் உண்டான வர்ஷத்தாலும் கூடிய நீரை உடைத்தான
திருவரங்கம் என்னும் திருநாமத்தை உடைத்து

சாபம் எய்தி -இலைச்சையாய -முக்கண்ணான் -மோடியோடு -மக்களோடு –
கூடு சேனை கொண்டு -வெஞ்சமத்து -மண்டி ஓட -வாணனன் ஆயிரம் கழித்த
வாதிமால் -கூடு நீர் -அரங்கம் என்ற பேரதான -பீடு கோயில் -என்று அந்வயம் –

ஆக இரண்டு பாட்டாலும் செய்தது ஆய்த்து –
ஆஸ்ரிதருக்கு விரோதிகளாம் இத்தனையே வேண்டுவது –
எதிர்தலை திர்யக் ஆகவுமாம்
சர்வாதிகனான ருத்ரன் ஆகவுமாம்
அழியச் செய்கைக்கு குவலயாபீடம் -கொலை யானையாய்த் தோற்றுகையாலே
கொன்று அருளினான் -க்ருஷ்ணனைத் தோற்ப்பித்து பாணனை ரஷிக்க  கடவோம் என்று
வந்த ருத்ரன் தோற்று போம்படி பண்ணி யருளினான் –

பாராய மம கிம் புஜை -என்று தோள் வலி கொண்டு  வந்த பாணனுடைய
தோள்களைக் கழித்தான் –

ஆக –அவர்கள் உடைய நினைவு அவர்கள் தலையிலே யாக்குமவன் என்கை –

———————————————————————————-

54 பாட்டு –அவதாரிகை –
இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

பதவுரை

இலை தலை

இலைபோன்ற நுனியையுடைய
சரம்

அம்புகளை
துரந்து

பிரயோகித்து
இலங்கை

எல்லையினுடைய
கட்டு

அரண்களை
அழித்தவன்

அழியச்செய்த இராமபிரான்;
மலைத்தலை

(ஸஹ்யமென்னும்) மலையிலே
பிறந்து

பிறந்து
இழிந்து

அங்கு நின்றும் ப்ரவஹித்து
வந்து

நெடுக ஓடிவந்து
சந்தனம்

சந்தன மரங்களை
நுந்து

(போர்த்துத்) தள்ளாநின்றதாயும்,
குலைத்து

(குங்குமப்படர்கொடியை சிதிலப்படுத்தி
அலைத்து

அலசி
இறுத்து

முறிக்க
எறிந்த

(அக்கொடிகள் தம்மிலிருந்து) வெளிப்படுத்தின
குங்குமம் குழம்பினோடு

குங்குமத் துகள்களினாலாய குழம்புடனேகூட
அலைத்து ஒழுகு காவிரி

அலைமோதிக்கொண்டு பெருகா நின்றதாயுமுள்ள திருக்காவேரியுடைய
அரங்கம்

கோயிலிலே
மேய

எழுந்தருளியிருக்கிற
அண்ணன்

ஸ்வாமியாவர்.

 

வியாக்யானம் –
சம்சாரத்தில் தன பக்கல் ருசி இல்லாதாருக்கு ருசி ஜநகனாகைக்கும்
ருசி பிறந்தாருக்கு ஆஸ்ரயணீயன் ஆகைக்கும்
ஆஸ்ரிதரை அஹங்கார ரஹீதமாக அடிமை கொள்ளுகைக்கும்
உரியவன் -என்கை-

அடுத்த 7 பாசுரங்களில் திருவரங்க அர்ச்சா மூர்த்தியை அனுபவிக்கிறார் –
சந்தனம் குங்குமப் பூ இழிந்து வரும் காவேரி அன்றோ-

——————————————————————————————

55-பாட்டு –அவதாரிகை –

இப்படி ஆஸ்ரித அர்த்தமாக கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை காட்டி –
லஷ்மீ பூமி நீளா -நாயகனாய் இருந்து வைத்து எனக்கு மறக்க ஒண்ணாதபடி

என்னை-அங்கீ கரித்து அருளினான் -என்கிறார் –

இவ்வாறு  7 பாசுரங்களில் திருவரங்க அர்ச்சா மூர்த்தியை அனுபவிக்கிறார் –

மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –55-

பதவுரை

மா மலர் மன்னு கிழத்தி

சிறந்த தாமரைப்பூவில் பொருந்திய பிராட்டுக்கும்
வையம் மங்கை

ஸ்ரீபூமிப்பிராட்டிக்கும்
மைந்தன் ஆய்

(விரும்பத்தக்க) யுவாவாய்,
பின்னும்

மேலும்
ஆயர் பின்னை

(கோபாலரான ஸ்ரீகும்பருடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
தோள்

தோளோடே
மணம் புணர்ந்து

ஸம்ச்லேஷித்து (விளங்குமவனாய்)
அது அன்றியும்

அதுக்கு மேலும்
உன்ன பாதம்

உன்னுடைய திருவடிகளை
என்ன சிந்தை

என்னுடைய நெஞ்சினுள்ளே
மன்னை வைத்து

பொருந்தவைத்து
கல்கினாய்

அருள்செய்த பெருமானே!
பொன்னி சூழ் அரங்கம் மேய

(நீ) காவிரி சூழ்ந்த கோயிலிலே எழுந்திருளியிருக்கிற
புண்டரீகன் அல்லையே

தாமரைபோன்ற அவயங்களையுடைய தேவனன்றோ.

வியாக்யானம்-

மன்னு மா மலர்க்கிழத்தி –
மென்மை குளிர்த்தி நாற்றம் -என்கிற இவற்றால் ச்லாக்யமான தாமரைப் பூவிலே
பிறப்பை உடையளான பெரிய பிராட்டியார் ஆகிற மஹிஷி
க்ர்தாபிஷேகா மஹிஷீ -என்கிறபடியே ஜகத் ரஷணத்துக்கும் உரியவள் என்கை
கிழத்தி -உரியவள்

வைய மங்கை மைந்தனாய்ப் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அபிமதனாய் –
யுவதிச்ச குமாரிணி -என்கிற இவள் பருவத்தோடே சேர -யுவா குமார -என்கிற
பருவத்தை உடைய காந்தனாய் –

மைந்தன் -இளையோன் –

பின்னும்
அதுக்கு மேலே
சர்வாதிகத்துவத்துக்கும் போக பௌஷ்கல்யத்துக்கும் இவர்கள் இருவருமே அமைந்து
இருக்க -அதுக்கு மேலே –

அஸ்ய ஈசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -என்றும் -ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ -என்றும்
தேவிமாராவார் திருமகள் பூமி

ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது –
அபிஜாதையான நப்பின்னை பிராட்டியாரோடு கலந்து போரும் போக பௌஷ்கல்யத்தை
உடையனாய்

அன்றியும் –
உனக்கு அபிமத விஷயங்கள் குறைவற்று இருக்கச் செய்தே -அதுக்கு மேலேயும் –

உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் –
அமரர் சென்னிப் பூ -என்கிறபடியே ஸூரி போக்யமான உன் திருவடிகளை
நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னுடைய ஹ்ருதயத்திலே ஷண காலம் விச்லேஷம்
இல்லாதபடி வைத்து என் பக்கலில் பஷ பதித்தாய்
வாத்சல்யம் -தம் தாமுடைய வைலஷண்யத்தையும் -எதிர்தலையில் தண்மையையும்
பார்க்க ஒட்டாது இறே

பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே —
ஸ்ரமஹரமான காவேரியாலே சூழப் பட்ட கோயிலிலே நித்ய வாஸம் பண்ணின

புண்டரீக அவயவன் அல்லையோ –
புண்டரீக அவயவ ப்ரசுர்யத்தாலே புண்டரீகவ்யபதேசம்

ஆனந்தோ ப்ரஹ்மோ -விஞ்ஞாநம் ப்ரஹ்ம -இதிவத்

திவ்ய அவயவங்களுக்கு ஸ்ரமஹரமான தேச வாசத்தாலே பிறந்த செவ்விக்கு மேலே
என்னோட்டை சம்ச்லேஷத்தாலேயும் புதுக் கணித்தது என்கை –

—————————————————————————————-

56 -பாட்டு –அவதாரிகை –
இனி மேல் ஆறு பாட்டாலே -திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை
அனுபவிக்கிறார்
இதில் -முதல் பாட்டில் –
ஆஸ்ரித விரோதியான ராவணனை அழியச் செய்த சக்ரவர்த்தி திருமகன்
பின்புள்ளாரான –அநந்ய பிரயோஜனருக்கு ஸ்வ ப்ராப்தி விரோதிகளைப் போக்கி
அநுகூல வ்ர்த்தி கொள்ளுகைகாக திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற
படியை அனுபவிக்கிறார் –

இலங்கை மன்னன் ஐந் தொடைந்து பைந்தலை நிலத்துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-

பதவுரை

அன்று

முற்காலத்தில்
இலங்கை மன்னன்

இராவணனுடைய
ஐந்தொடு ஐந்து

பத்தாகிய
பை தலை

வலிய தலைகள்
நீலத்து உலக

பூமியிலே விழுந்தொழியவும்
கலங்க

(அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும்
சென்று

இலங்கையிற் புகுந்து
கொன்று

(அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து
வென்றி கொண்ட

விஜயம் பெற்ற
வீரனே

மஹாவீரனே!
விலக்கு நூலர்

உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும்
வேதம் நாவர்

வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும்
நீதி ஆன கேள்வி யார்

(நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள்.
வலம் கொள

வழிபாடுகள் செய்யும்படியாக
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண் வளர்ந்தருளா நின்ற
மாலும் அல்லையே

ஸர்வேச்வரனும் நீயன்றோ

 

வியாக்யானம் –

இலங்கை மன்னன் –
குளவிக்கூடு சேர்த்தாப்  போலே ஹிம்சகர் சேர வர்த்திக்கும் இலங்கைக்கு நிர்வாஹகனான
ராவணன் -ராவணோ ராஷஸேஸ்வர -என்கிறபடியே அந்த துர் வர்க்கத்துக்கடைய
நிழலாய் இருக்குமவன் இறே

ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துக-
அறுக்க அரிதான பத்துத் தலையையும் பூமியிலே உதிர்த்து உரு மாய்ந்து போம்படி
பைந்தலை -வலிய தலை

ஐந்தொடைந்து-என்று தசேந்த்ரியாநநம் -என்கிறபடியே அநந்ய பிரயோஜனருக்கு
பாதகமான சில வஞ்சகங்களை நினைக்கிறார் ஆய்த்து –

கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே –
பயமிருக்கும்படி அறியாதவன் பயத்தாலே போக்கற்று கலங்கும்படி –
இவனுக்கு வரம் கொடுத்த தேவதைகளும் குடி இருப்பு இழக்கும்படியான தசையிலே
ஜனஸ்தான வதத்தையும் -சேது பந்தனத்தையும் பண்ணிச் சென்று அவனைக் கொன்று
விஜயத்தை லபித்த ஆண் புலியானவனே –

விலங்கு நூலர் –
சர்வ காலமும் வைதிக கர்ம அனுஷ்டாதாக்கள் என்று தோற்றும்படியான
யஞ்ஞோ பவீதத்தை சரீரத்துக்கு நிரூபகமாக உடையராய் –

விலங்கு -உடம்பு

வேத நாவர் –
சர்வ காலமும் வேத பாராயணம் பண்ணுகையாலே வேத உச்சாரணத்தை நிரூபகமாக
உடையராய்

நீதியான கேள்வியார் –
சர்வ கர்ம சமாராத்யன் சர்வேஸ்வரன் என்று சதாசார்யர் உபதேசம் உடைய ப்ராஹ்மணர்

வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே —
அவர்கள் உடைய அநுகூல வ்ர்த்தியை ச்வீகரிக்கைகாகத் திருக் குடந்தையிலே கண்
வளர்ந்து அருளுகிற சர்வாதிகன் அல்லையோ –

வலம் -அநு கூலம்

சக்கரவர்த்தி திருமகனுடைய ஆண் பிள்ளைத் தனத்தை ஆராவமுத ஆழ்வார் பக்கலிலே
அநுபவித்த படி சொல்லிற்றாய்  விட்டது –

—————————————————————————————–

57 -பாட்டு –அவதாரிகை –

ப்ராப்தி விரோதியைப் போக்கி அநுகூல வ்ர்த்தி கொள்ளும் அளவு அன்றிக்கே
நித்ய அநபாயிநி யான பிராட்டி யோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச் சுவரான
ராவணனை அழியச் செய்தாப் போலே –

பிற்பாடரான ஆஸ்ரிதருக்கு அநுபவ
விரோதிகளைப் போக்குகைகாகத் திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை-அநுபவிக்கிறார் –

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த  வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –57-

பதவுரை

சங்கு தங்கு முன் கை நங்கை

(நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய
கொங்கை

திருமுலைத்தடத்திலே
தங்கல் உற்றவன்

விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய)
அங்கம்

சரீரமானது
மங்க

மாளவேணுமென்று
அன்று சென்று

முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி
அடர்ந்து

அவ்வூரை ஆக்ரமித்து
எறிந்த

(அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய்.
ஆழியான்

கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான்
கொஞ்கு தங்குவார் குழல்

நீண்ட கூந்தலையுடையவர்களான
மடந்தையார்

திவ்யஸுந்தரிகள்
குடந்தை

அவகாஹிக்கப்பெற்ற
நீர்

தீர்த்தமானது
பொங்கு

வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற
தண் குடந்தையுள்

குளிர்ந்த திருக்குடந்தையிலே
கிடந்த

பள்ளிகொண்டிராநின்ற
புண்டரீகன்

ஸுந்தராங்கன்.

வியாக்யானம் –

சங்கு தங்கு முன்கை –
வளை கழலாதே இருந்துள்ள முன்கையை உடையவள் –
அவன் கொண்டாடும் வளை- முன் கை வளை – யாகையாலே வ்யதிரேகத்தில் கழலுவதும்
அதுவே இறே -இத்தால் -நித்ய அநபாயிநி -என்கை –

நங்கை-
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யானவள் –
துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜந லஷணாம் -என்கிற பிராட்டி பக்கலிலே –

கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க –
திருவடிகளில் தங்க ப்ராப்தமாய் இருக்க -மாதர்  விஷயம் என்று பாராதே அதிக்ரமத்தை
நினைத்த ராவணனுடைய சரீரம் அழிகைக்காக –

தங்கல் -தொங்கல்
இந்த துர் புத்திக்கு அடி -தேஹாத்ம அபிமானம் ஆகையாலே அதுக்கடியான சரீரத்தை
யாய்த்து அழிக்க நினைத்தது

வன்று –
உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே -இருவரையும் கடலுக்கு அக்கரையும்
இக்கரையுமாம்படி பண்ணின அன்று என்னுதல்
வேணி யுத்க்ரதந தசையிலே -என்னுதல்

சென்று –
அபியாதா ப்ரஹர்த்தாசா -என்கிறபடியே அவன் இருந்த  இடத்தே  சென்று

அடர்த்து எறிந்த  வாழியான் –
அடை மதிள் படைத்து -அவந்தலையை அறுத்து அந்த ஹர்ஷத்தாலே கடல் போலே
ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –

எறிதல் -அறுத்தல்

கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் –
பரிமளம் மாறாத நீண்ட குழலை உடைய ஸ்திரீகள்

குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் –
அவஹாகித்த நீரானது இவர்களுடைய நெருக்கத்தாலே ப்ரவர்த்தமாய் -அத்தாலே
ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே

இத்தால் –
ஆராவமுத ஆழ்வாரை அனுபவிக்க செல்லுமவர்களை –

சதம் மாலா ஹஸ்தா -என்கிறபடியே எதிரேற்றுக் கொள்ளுமவர்களையும்

அங்குதைக்கு பரிசாரிகைகளாயும்-நிற்குமவர்கள் -என்கை

கிடந்த புண்டரீகனே —
தாமரைக்காடு பரப்பு மாறப் பூத்தாப் போலே இருக்கிற திவ்ய அவயவங்களோடு தன்னை
அனுபவிக்கைக்காக கண் வளர்ந்து அருளுகிறவன் –

ஆக –
இரண்டு பாட்டால் சக்கரவர்த்தி திருமகனுடைய ஆண் பிள்ளைத் தனத்தையும்
அழகையும் அனுபவித்து
மேல் இரண்டு பாட்டாலே
க்ருஷ்ணனுடைய வீர சரிதத்தையும் அழகையும் ஆராவமுத ஆழ்வார் பக்கலிலே அனுபவிக்கிறார்

————————————————————————————–

58 -பாட்டு- அவதாரிகை –
ஆஸ்ரித அர்த்தமாக யமளார்ஜுநங்கள் தொடக்கமான பிரதிகூல வர்க்கத்தைப்
போக்கின நீ -அக்காலத்துக்கு பிற்பாடருக்கு உதவுகைக்காக
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே வந்து கண் வளர்ந்து அருளினாய் அல்லையோ -என்கிறார்

மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த கிடந்த மாலும் அல்லையே –58-

பதவுரை

மரம் கெட கடந்து

யமனார்ஜுந ஸ்ருக்ஷங்கள் முடியும்படி கடைகற்று.
மத்த யானை அடர்ந்து

(குவலயாபீடமென்னும்) கொழுத்த யானையை மத மொழித்து
மத்தகத்து

(அவ்வானையின்) தலைமேல்
உரம்கெட புடைத்து

(அதன்) வலிமான ப்ரஹாரங்கள் கொடுத்து
ஓர்கொம்பு ஒசித்த உத்தமர்

(அதன்) தந்தத்தை முறித்தெறிந்த பரமபுருஷனே!
துரங்கம்

குதிரை வடிவங்கொண்டு  வந்த கேசியென்னுமசுரனுடைய
வாய்பிளந்து

வாயைப்பிளந்து (அவனையொழித்த பெருமானே)
மண் அளந்த பாத!

உலகங்களை யளந்து கொண்ட திருவடிகளையுடையோனே! (நீ.)
வேதியர் வசம் கொள

வைதியர்கள் தங்கள் தங்களுடைய விருப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு

குடந்தையுள் கிடந்தமால் அல்லையே.

வியாக்யானம் –

மரம் கெட நடந்து –
மருதுகள் முறிய நடை கற்று
நடக்கையாவது -தவழுகையும் -தளர் நடை இடுகையும் –

அடர்த்து மத்த யானை –
மதிக்கப் பண்ணி கொண்டு வந்த குவலயாபீடத்தை செருக்கு போம்படி நெருக்கி

மத்தகத்துஉரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து –
ஆனை விழ குத்தும் இடத்தில் அத்வதீயமான கொம்பை முறித்து
அதினுடைய மிடுக்கு அழியும்படி மஸ்தகத்திலே புடைத்து –
மதத்தாலே வந்த செருக்கை அதினுடைய நாலு காலுக்குள்ளேயும் புக்கு நின்று
உழைப்பித்துக் கொடுத்து -அதினுடைய ஹிம்சா பரிகரமான கொம்பை கொன்று
அருளினான் என்றது ஆய்த்து

உகந்த உத்தமா-
ஆஸ்ரித விரோதி போகப் பெற்றது என்று உகந்த புருஷோத்தமனே –
இங்கு புருஷோத்தமன் -என்கிறது ஸ்வரூபத்தால் வந்த உத்கர்ஷத் தளவு அன்றியே
ஆஸ்ரித பஷ பாதத்தால் வந்த உத்கர்ஷத்தை நினைத்து –

குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு உத்கர்ஷ ஹேது

துரங்கம் வாய் பிளந்து –
சந்த்யா காலத்திலே திருவாய்ப்பாடியை அழிக்க வந்த கேசியுடைய வாயைக் கிழித்து

மண் அளந்த பாத –
ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலையிலும் வைத்த திருவடிகளை உடையவனே
த்ரிவிக்ரம அபதாநம் -கேசி வத சமநந்தரத்திலே கிருஷ்ணனுடைய சேஷ்டிதமாக பேசலாம்படி
இறே இரண்டு அவதாரத்துக்கும் உண்டான சௌப்ராத்ரம் -அதாகிறது
எல்லாரையும் வரையாது தீண்டுகையும்
எதிரிகளை அழகாலே அழிக்கையும்

வேதியர் வரம் கொளக் குடந்தையுள் கிடந்த கிடந்த மாலும் அல்லையே-
வேதார்த்த தாத்பர்யம் கைப்பட்டவர்கள் தம் தாம் அபேஷிதங்களை உன் பக்கலிலே
அபேஷிக்கலாம்படி திருக் குடைந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற வ்யாமுக்தன்-அல்லையோ
-வஞ்சகராய் வந்த யமளார்ஜூநங்களை தன் மௌக்யத்தாலே அழித்து
எதிரிகளாக கண் முகப்பே தோற்ற வந்த குவலயாபீடத்தையும் கேசியையும் அநாயேசேந-அழியச் செய்து
தான் வஞ்சகனாய் எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறை உணர்த்தின-புருஷோத்தமன் –

தன் வாத்ஸல்யத்தாலே-பிற்பாடருக்கு உதவ வந்து கிடக்கிற தேசம் திருக் குடந்தை என்றது ஆய்த்து –

———————————————————————————-

59 -பாட்டு -அவதாரிகை –

பண்டு ஆஸ்ரித விரோதிகளைப் போக்கின மிடுக்கனாய் வைத்து
அழகாலும் சீலத்தாலும் ஆஸ்ரிதரை எழுதிக் கொள்ளுகைகாக அவதரித்த கிருஷ்ணன் –
பிற்பாடருடைய இழவு தீர சர்வ பிரகாரத்தாலும் புஷ்கலமான திருக் குடந்தையிலே
கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் –

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –-59-

பதவுரை

சாலிவேலி

செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய
தண் வயல் தடம் கிடங்கு

குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன
தண்

குளிர்ந்ததான
குடந்தை

திருக்குடந்தையிலே

மேய எழுந்தருளியிராநின்ற

கோவலா

க்ருஷ்ணனே!
காலநேமி

காலநேமியென்ன
வக்கரன்

தந்தவக்ரனென்ன
பூபொழில் கோலம் நீடு மாடம்

புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய்
கரன் முரன்

கொடியவனான முரனென்ன இவர்களுடைய
சிரம் அவை

தலைகளானவை
காலனோடு கூட

யமலோகம் போய்ச் சேரும்படியாக
வில்குனித்த

வில்லை வளைத்த
வில் கை

அழகிய திருக்கையையுடைய
வீரனே

தனி வீரனே! (என்று ஏத்துகிறார்)

வியாக்யானம் –

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
செந்நெலை சுற்றும் உடைத்தாய் -ஸ்ரமஹரமான வயலையும் -அதுக்குள்ளாக பெரிய
அகழையும் -அதுக்குள்ளாக பூத்த பொழிலையும் -உடைத்தாய் –

இத்தால்
ஆராவமுத ஆழ்வார் உடைய சௌகுமார்யத்துக்கு அநுரூபமான சர்வ பிரகார-போக்யதையை உடைய தேசம் -என்கை

கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா –
தர்சநீயமாய் -ஒக்கத்தை உடைய மாடங்களை உடைத்தாய் -ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே
நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனே –

இத்தால்-
ஆராமுத ஆழ்வார் உடைய ரசிகத்வதுக்கு ஏகாந்தமான போக ஸ்தானம் என்கை

கோவலா -என்கிறது
கிருக்ஷ்ணனுடைய அழகும் சௌலப்யமும் சீலமும் ஆராமுத ஆழ்வார் பக்கலிலே
காணலாம்படி இருக்கையாலே -அவதார அந்தரங்கள் என்ன ஒண்ணாது -சர்வதாஸாத்ர்ச்யத்தாலே

குடந்தையன் கோவலன் குடி குடியார் -என்று ஒரு தேச விசேஷத்திலும் பிரசித்தம் இறே

காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை-
காலநேமி தந்த வக்ரன் க்ரூரரான முரன் -இவர்களுடைய தலையை அறுத்து
கரன் அரக்கன் நிரஸனம் ராம பெருமான் –

இது கிருஷ்ணன் பராக்ரமம் சொல்ல வந்ததால் இங்கு கரன் என்பதை குரூரமான முரன் என்கிறார் –

காலனோடு கூட வில் குனித்த –
இவர்கள் பேர் கேட்க அஞ்சும் காலன் இவர்களுக்கு நிர்வாஹகனாய்
இவர்கள் அஞ்சிச் சென்று கூப்பிடும்படியாக
சங்கல்பத்தாலே அன்றி -வில்லாலே -அழியச் செய்தவனே –

வில் கை வீரனே —
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்கைக்கு வில் வளைக்கவும் வேண்டாதே
சக்ர சாப நிபே சாபே க்ர்ஹீத்வா சத்ரு நாசநே -என்னும்படியே வில் பிடித்த பிடியிலே
அவர்கள் முடியும்படி ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனே –

——————————————————————————-

60 -பாட்டு -அவதாரிகை –
உகந்து அருளின நிலங்கள் ஆஸ்ரயணீய ஸ்தலம்
போக ஸ்தானம் ஒரு தேச விசேஷம் என்று இராதே
நிலையார நின்றான் -என்று
நிலை யழகிலே துவக்குண்பார்க்கு திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளியும்
இப்படி செய்து அருளிற்று
போக்தாக்களான ஆஸ்ரிதர் பக்கலிலே உள்ள வ்யாமோஹம் இறே -என்கிறார்

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –-60-

பதவுரை

செழும் கொழும் பெரும்பணி

இடைவிடாதே தாரைகளாய் விழுகிற கனத்த மூடுபனியானது.
பொழிந்திட

பொழிந்தவளவிலே
உயர்ந்த வேய் விழுந்து

முன்பு ஓங்கியிருந்த மூங்கிற்பணைகள் (அப்பணியின் கனத்தாலே) தரையிலே சாய்ந்து
உலர்ந்து எழுந்து

(பிறகு ஸூர்யகிரணங்களாலே அப்பனி) உலர்ந்த பின்பு
எழுந்து

(அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி
விண் புடைக்கும்

விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய
வேங்கடத்துள்

திருவேங்கடமலையிலே
நின்று

நின்றருளி
தேன்

வண்டுகளானவை
எழுந்து இருந்து பொருந்து

மேலே கிளம்புவதும் கீழே படிந்திருப்பதுமான நிலைமைகளோ பொருந்தியிருக்கப் பெற்ற
பூ பொழில்

புஷ்பங்கள் நிறைந்த சோலைகள்
தழை கொழும்

தழைத்தோங்கா நிற்கப்பெற்றதாய்
செழும்கடல்

செழுமை தங்கிய தடாகங்களையுடைத்தான்
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண்வளர்ந்தருளா நின்ற
மால் அல்லையே

பெருமாள் நீயிறே.

வியாக்யானம்-

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட –
பருத்து தாரைகளாய் விழுகிற மூடு பனி சொரிய

செழுமை -பெருமை

கொழுப்பு -கொழுமை
இடைவிடாதே தாரைகளாய் விழுகை

செழுமை -வண்மை

பெரும்பனி -மூடு பனி

இப்படி பனியை வர்ணிக்கிறது -ஏதேனுமாக திருமலையில் சம்பந்தித்தவை தமக்கு
மநோஹரமாய் இருக்கையாலே-

வுயர்ந்த வேய் விழுந்து –
ஓங்கின மூங்கில்கள் பனியால் வந்த கனத்தாலே தரை யளவும் சாய்ந்து
செழும் கொழும் -உயர்ந்த வேய் -பெரும் பனி பொழிந்திட -விழுந்து -என்னவுமாம்

அப்போது -பெருத்து -ச்ரத்தையை உடைத்தாய் -உயர்ந்த மூங்கில்கள் என்றாகக் கடவது –
திருவேம்கடமுடையானுடைய விசேஷ கடாஷமே விளைநீராக வளருகிறவை -என்கை –

உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று –
ஆதித்ய கிரணங்களாலே பனி உலருகையாலே –
பனி உலர்ந்தவாறே தலை எடுத்து ஆகாசத்தின் எல்லையில் -முட்டும்
திருமலையிலே நின்று அருளி –

இத்தால்-திருவேம்கடமுடையானுடைய விசேஷ கடாஷத்தாலே
தலை எடுக்கையும் -வ்யதிரேகத்தில் தரைப்படுகையும் -அத்  தைசிகமான பதார்த்தங்களுக்கு
ஸ்வபாவம் என்னும் இடத்துக்கு த்யோதகம் என்கை –

எழுந்திருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக்கும்
வண்டுகள் கிளர்ந்து பரவா திரியும்படி வர்த்திக்குமதாய்
தழைத்து ச்ரத்தையை உடைத்தாய்
பரப்பு மாறப் பூத்த பொழிலை உடைய தேசம் –

இத்தால் -வண்டுகள் பொழிலின் மது வெள்ளத்தால் அவஹாக்கிக மாட்டாதே
அலமாக்கும் என்கை

செழும் தடம் குடந்தையுள் –
விடமாட்டாதே -அப் பொழிலுக்குள்வாயில் அழகிய தடாகத்தை உடைத்தான திருக் குடந்தையிலே

இத்தால் -அத்தேசத்தில் திர்யக்குகளும் போக்யத்தால் வந்து களித்து வர்திக்கும்படியாயும் –
தாபத் த்ரயாதுரர்க்கு கண்ட போதே ஸ்ரமஹரமாய் இருக்கும் தேசம் -என்கிறது –

கிடந்த மாலும் அல்லையே
கிடை அழகிலே துவக்குண்டு அனுபவிப்பார் ஆரோ -என்று அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற வ்யாமுக்தன் அல்லையோ –

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .