நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-
பதவுரை
விலங்கு |
–
|
நீர் பெருகவொண்ணாதபடி தடையாயிருக்கிற |
மால் வரை |
–
|
பெருப்பெருத்த மலைகளையும் |
கரம் |
–
|
பாலைநிலம் முதலிய அருவழிகளையும் |
கடந்த |
–
|
(வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற |
கால் பரந்த |
–
|
விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய |
காவிரி |
–
|
திருக்காவேரி நதியினுடைய |
கூரை |
–
|
கூரைமீது |
குடந்தையும் |
–
|
திருக்குடந்தையிலே |
கிடந்த ஆறு |
–
|
திருக்கண் வளர்ந்தருளுகிறபடியானது |
நடந்த கால்கள் நொந்தவோ |
–
|
உலகளந்த திருவடிகள் நொந்ததனாலோ? (உலகளந்த வீடாய் தீரவோ?) |
ஞாலம் |
–
|
பூமிப்பிராட்டியானவள் |
நடுங்க |
–
|
(பாதாளத்திலே உருமாய்ந்து நம்மை யெடுக்க வல்லார் ஆருமில்லையே’ என்று) நடுங்கிக் கிடந்த காலத்து) |
ஏனம் ஆய் |
–
|
மஹாவராஹமூர்த்தியாகி |
இடந்த |
–
|
அப்பூமியை அண்டபித்தியில் நின்றும் விடுவித்து உத்தரிப்பித்த |
மெய் |
–
|
திருமேனி |
குலுங்கவோ? |
–
|
ச்ரமப்பட்டதனாலோ? (ஏனமாய் உலகிடந்த விடாய்தீரவோ?) |
கோனே |
–
|
கோவனே! |
எழுந்திருந்து போ |
–
|
(எந்தவிடாய் தீரக் கிடக்கிறாயென்பதை) எழுந்திருந்து அருளீச்செய்க; |
வாழி |
–
|
இக்கிடையழகு என்றும் வாழ்க. |
நடந்த கால்கள் நொந்தவோ-உலகு அளந்த திருவடிகள் நொந்ததாலோ
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலா மகள் பிடிக்கும் மெல்லடியாலே அளந்து அருளினாய்
நடுங்க ஞாலம் ஏனமாய்-
பூமிப் பிராட்டி தம்மை எடுக்க வல்லவர் யாரும் இல்லை என்று பாதளத்தில் உரு மாய்ந்து இருந்த காலத்தில்
மகா வராஹ மூர்த்தியாய்
இடந்த மெய் குலுங்கவோ -பூமியை விடுவித்த சிரமம் தீரவோ
திருவடிகளைப் பிடிக்கவும் திருமேனியைப் பிடிக்கவும் பாரிக்கிறார்-
விலங்கு மால் வரைச் -நீர் பெருக தடையாய் இருந்த பெருத்த மலைகளையும்
சுரம்-பாலை நிலம் போன்ற ஆறு வழிகளையும்
கடந்த கால் பரந்த -வேகத்தால் கடந்து கொண்டு வருகிற விஸ்தாரமான வாய்க்கால்களை உடைய
சீதோ உபசாரம் பண்ணவே திருக்காவேரி பாரித்து ஓடி வருகிறாள் –
காவிரி கரைக் குடந்தையுள்- காவேரி கரை மீது
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே-
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலம் மகள் பிடிக்கும் மெல்லடி
உலகளந்த விடாய் தீரவோ -அல்லது என்னமாய் உலகு இடந்த விடாய் தீரவோ -எதனால் வந்த ஆயாசம்-
மலைகளையும் நிலங்களையும் கடந்து காவேரி சீதோ உபசாரம் பண்ண ஓடி வருகிறாள்
எழுந்து இருக்கும் போது உண்டாகும் சேஷ்டிதங்கள் காணவும்
அருளிச் செய்யும் போது ஸ்வரத்தை கேட்கவும் ஆசை
சித்ர கூடத்தில் சீதா பிராட்டி எழுப்பிய பின்பு அனுதாபப் பட்டது போலே இவரும் உணர்ந்து வாழி என்கிறார்
ஆராவமுதன் எழுந்து இருந்து பேச முயலும் போது ஆழ்வார் அர்ச்சாவதார சமாதி குலைய கூடாது என்று வாழி என்கிறார் –
உத்தான சயனம் –
இப்படி ஆரவாமுதாழ்வார் திருவடிகளிலே அநுபவிக்க இழிந்த இவ்வாழ்வாரை நோக்கி
அப்பெருமான் வாய்திறந்து ஒரு வார்த்தை யருளிச் செய்யாமலும்
கைகோவி அணைத்தருளாமலும் ஏகாகாரமாகக் கண்வளர்ந்தருளக் காண்மையாலே
‘இது அர்ச்சாவதாரஸமாதி’ என்று இவர் திருவுள்ளம் பற்றாமல், ஏதோ அளவற்ற ச்ரமத்தினால் இப்படி
திருக்கண் வளர்ந்தருள்கிறாரென்று அதிசங்கை பண்ணி,
“வடிவினையில்லா மலர்மகன் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி” என்கிறபடியே
பரமஸுகுமாரமான திருவடிகளைக்கொண்டு உலகங்களை அளந்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ?
அன்றி, பூமியைப் பாயாகச்சுருட்டி எடுத்துப் போன ஹிரண்யாக்ஷனை மஹா வராஹமூர்த்தியாய்க் சொன்று
அப்பூமியைக் கொணர்ந்து பழையபடி விரித்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ
இங்ஙனே தேவரீர் ஆடாது அசங்காது திருக்கண்வளர்த்தருள்கிறது?;
இதை எனக்குத் தெரியவருளிச் செய்யவேணும் என்கிறார்.
உலகளந்த ச்ரமமாகில் திருவடிகளைப் பிடிக்கவும் உலகிடந்த ச்ரமமாகில் திருமேனியைப் பிடிக்கவும் பார்க்கிறார்போலும்.
(விலங்குமால் இத்யாதி.) பல மலைகளையும் பல பாலை நிலங்களையும் கடந்துகொண்டு,
பெருமாளுக்கு கீதோபசாரம் பண்ணவேணுமென்னும் அபிநிவேசத்தாலே காவேரி ஓடி வருகின்றானென்க.
எழுந்திருந்து போசு = கண் வளர்ந்த***யின் காரணத்தை சயனித்துக் கொண்டே அருளிச் செய்யலாகாது;
என்னுடைய அச்சம் தீரும்படி எழுந்திருந்து அருளிச்செய்யவேணும் என்கிறார்.
எழுந்திருக்கும்போது உண்டாகக்கூடிய சேஷ்டிதங்களைக் காணவும் அருளிச் செய்யும் போதை ஸ்வரத்தைக்கேட்கவு>ம் விரும்புகிறபடி.
வாழி – ***-***-***- என்று- சித்ரகூடத்திலே திருக்கண்வளர்ந்தருளின இராமபிரானைப் பிராட்டி தட்டி யுணர்த்தி
யெழுப்பினதற்காகப் பின்பு அநுதாபப்பட்டாற்போல், ஆச்சரியமான இந்த சயாத்திருக்கோலத்தைக் குலைத்து
அடுத்த க்ஷணத்திலே நாமும் அநுதாபப்படும்படி நேர்ந்துவிடுமோ வென்றஞ்சின ஆழ்வார் வாழியென்று
அந்த சயனத்திருக்கோலத்துக்கே உகந்து மங்களாசாஸகம் செய்தருள்கிறார்.
ஒரு தீங்கு இல்லாமே கண்வளர்ந்தருளுகிற இவ்வழகு நித்யமாய்ச் செல்லவேணுமென்கிறார்.
திருமழிசைப்பிரான் ஆராவமுதாழ்வாரைநோக்கி “கிடந்தவாறெழுந்திருந்து பேசு” என்று பிரார்த்திக்க,
பெருமாளும் பந்தபாரதீகனாகையாலே அப்படியே எழுந்திருக்கப்புக அது கண்ட ஆழ்வார்
அர்ச்சாவதாரஸமாகி குலைய வொண்ணாதென்று திருவுள்ளம்பற்றி வாழிவாழி என்று மங்களாசாஸநமுகத்தால்
அப்படியே கிடந்தருளும்படியை விரும்ப,
ஆராவமுதாழ் வாரும் அவ்வண்ணமே தன்னுடைய எழுச்சிமுயற்சியை நிறுத்திக்கொண்டாரென்றும்,
இப்போதைய அர்சாவதார நிலைமையில் இவ்வம்சம் விளங்குமாறு உதாந†யியாக ஸேவைஸாதிப்பதும்
இதுபற்றியேயென்றும் பெரியோர் ஐதிஹ்யங்கூறக்கேட்டதுண்டு.
——————————————————
கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே –62-
பதவுரை
கரண்டம் ஆடு பொய்கையுள் |
–
|
நீர்க்காக்கைகள் உலாவுகின்ற பொய்கையிலே |
கரு பனை பெரு பழம் |
–
|
கரிய பெரிய பனம்பழங்களானவை |
புரண்டு வீழ |
–
|
விழுந்துபுரள (அவற்றைக் கண்டு நீர்க்காக்கைகளாக ப்ரமித்து அஞ்சின) |
வாளை |
–
|
மீன்கள் |
பாய் |
–
|
துள்ளியோடி யொனிக்கின்ற |
குறுங்குடி |
–
|
திருக்குறுக்குடியிலே எழுந்தருளியிருக்கிற |
நெடுந்தகாய் |
–
|
மஹாதுபாவனே! |
திரண்ட தோள் |
–
|
திரண்டதோள்களையுடையவனான |
இரணியன் |
–
|
ஹிரண்யனுடைய |
சினம்கொள் ஆகம் ஒன்றை |
–
|
மாத்ஸர்யம் விளங்குகிற கடுமையின் அத்விதீயமான சரீரத்தை |
இரண்டு கூறு செய்து |
–
|
இருபிளவாகப் பிளந்து |
உகந்த |
–
|
மகிழ்ந்த |
சிங்கம் என்பது |
–
|
நரஸிம்ஹ மூர்த்தியென்று சொல்வது |
உன்னையே |
–
|
உன்னையோ? (ஸுகுமாரனானவுன்னை முரட்டுச் சிங்கமென்னத்தகுமோ?.) |
கரண்ட மாடு பொய்கையுள்
நீர் காக்கைகள் இருக்கும் பொய்கையுள்
கரும் பனைப் பெரும் பழம் புரண்டு வீழ
கரிய பெரிய பனம் பழங்கள் விழுந்து புரள
அத்தைப் பார்த்து நீர்க் காக்கைகள் என்று என்று பிரமித்து மீன்கள் அஞ்சின
அஸ்தாநே பய சங்கை பண்ணுவதும் உப லக்ஷணம்
வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
மீன்கள் துள்ளி ஓடி ஒளிகின்ற திருக் குருங்குடியில் எழுந்து அருளும் மஹானுபாவனே
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே
ஸூகுமாரமான உன்னை முரட்டு சிம்ஹம் என்னலாமா
கடுமையில் அத்விதீயமான சரீரம்
சினம் விம்முதலுக்கும் வாசகமாய் விம்ம வளர்ந்த சரீரம் என்றுமாம்
இப்போதும் இங்கே பொய்கையின் பெயர் கரண்ட மாடு பொய்கை –
அதன் கரையில் திரு பனை மரம் நம்பியின் கடாஷமே தாரகமாக கொண்டு இன்றும் உண்டே
—————————
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-
பதவுரை
நன்று இருந்து |
–
|
(யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து |
யோகம் நீதி |
–
|
யோகமாகியு உபாயத்தை |
நண்ணுவார்கள் |
–
|
ஸாதிக்கின்ற யோகிகளுடைய |
சிந்தையுள் |
–
|
ஹ்ருதயத்தினுள்ளே |
சென்று இருந்து |
–
|
ப்ரவேசித்திருந்து |
ஊரகத்தும் |
–
|
திருவூரகத்திலும் |
வெஃகனை |
–
|
திருவெஃகாவிலும் |
தீ வினைகள் தீர்த்த |
–
|
(அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின |
தேவ தேவனே! |
–
|
தேவாதி தேவனே! |
குன்று இருந்த நீடு மாடம் |
–
|
மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய |
பாடகத்தும் |
–
|
திருப்பாடகத்திலும் |
இருந்து நின்று கிடந்தது |
–
|
(க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது |
என்ன நீர்மை |
–
|
என்ன ஸௌஹார்த்தமோ! |
நன்று இருந்து
யோக பயிற்சிக்கு உரியது போலே ஆசனத்தில் முறைப்படி நன்று இருந்து
யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த
தேவ தேவனே குன்று இருந்து மாட நீடு பாடகத்தும்
மலைகளைக் கொண்டு சேர்த்து வைத்தது போலே மாடங்கள் உடைய திருப் பாடகத்திலும்
ஊரகத்தும் நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே
பிரகலாதனுக்கு என்று முரட்டு சிங்கமாக வந்தது பொருந்தலாம்
சர்வ பிரகாரத்தாலும் விமுகரான சம்சாரிகளுடைய விமுகத்தை கூட கணிசியாமல்
ஆபிமுக்யத்தை எதிர்பார்த்து உன்னுடைய மேன்மையைப் பாராதே திருக் கோயில்களில்
சம்சாரிகளை கடைத்தேற
இப்படி நின்றும் இருந்தும் கிடக்கிறாய் என்கிறார்
வெக்கணை-வெக்கா-யதோத்தகாரி சந்நிதி
ஊரகம் -உலகளந்த பெருமாள் சந்நிதி-
தேவரீர் ஸௌகுமார்யத்தைக் கணிசியாமல் பக்த சிகாமணியாகிய ப்ரஹ்லாதன் திறத்திலுள்ள
வாத்ஸல்யமே காரணமாக முரட்டவதாரமெடுத்து இரணியனை அழியச் செய்தது பொருந்தலாம்;
ஸர்வப்காரத்தாலும் விமுகரான ஸம்ஸாரிகளுடைய அபிமுக்யத்தை எதிர்பார்த்து
உம்முடைய மேன்மையைப் பாராதே கோயில்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாகிற விது
அந்தோ! என்ன நீர்மை! என்று ஈடுபடுகிறார்.
ஊரகம் – ஆதிசேஷனென்னும் பொருளையுடைய ** மென்ற வடசெல் ஊரகமென்று நீண்டு கிடக்கிறது;
பெருமாள்கோயிலில் உலகளந்த பெருமாள் ஸந்நிதி ஊரகமென வழங்கும்.
அங்கே திருவனந்தாழ்வானுடைய ஸரப்ரஸாதித்வம் ப்ரஸித்தம்.
வெஃகணை- வேகவணை’ என்பது வெஃகணையென்று கிடக்கிறது. ** என்று வடசொல் வழக்கம்; ஸ்ரீயதோக்தகாரி ஸந்நிதி
————-
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-
பதவுரை
எந்தை |
–
|
எம்பெருமான் |
ஊரகத்து |
–
|
திருவூரகத்திலே |
நின்றது |
–
|
நின்றருளினதும் |
பாடகத்து |
–
|
திருப்பாடகத்திலே |
இருந்தது |
–
|
வீற்றிருந்ததும் |
வெஃகனை |
–
|
திருவெஃகாவில் |
கிடந்தது |
–
|
திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்) |
என் இலாத முன் எலாம் |
–
|
நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து |
அன்று |
–
|
அப்போது |
நான் பிறந்திலேன் |
–
|
நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை |
பிறந்தபின் |
–
|
அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு) |
மறந்திலேன் |
–
|
மறக்கவில்லை |
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே |
–
|
ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர். |
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
நான் பிறவாத முன் காலத்திலே
அன்று நான் பிறந்திலேன்
அப்பொழுது நான் ஜ்ஞான ஜன்மம் பெற வில்லை
பிறந்த பின்பு மறந்திலேன்-நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே
கைங்கர்ய கடனைப் பெற்றுக் கொள்ள -கடனைத் தீர்த்தால் அல்லது போக மாட்டேன் என்று நின்று இருந்து கிடந்து-எல்லாம்
அவன் மேல் ருசி விளைவிக்க -ருசி பிறப்பது சாத்தியம் -பலன் கிடைத்தவாறே இத்தத் தவிர்த்து
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –
அந்த செயல்கள் எல்லாம் நமது நெஞ்சிலே பண்ணுகிறான்
நான் இலாத முன் எலாம் என்று அருளாமல் என்னிலாத முன்னெலாம்- என்றது
அப்பனை என்று மறப்பேன் என்னாகியே -திருவாய் மொழி போலே பிரயோகம்-
உலகத்திலே ஒருவனுக்கு ஒருவன் கடன் கொடுத்திருந்தால் அந்தக் கடனைத் திருப்பி வாங்கிக் கொள்வதற்காகக்
கடனாளி வீட்டிலே வந்து கேட்கும்போது முதலில் சிலநாள் நின்று கொண்டே கேட்டு விட்டுப் போய்விடுவன்:
அவ்வளவில் காரியம் ஆகாதே; மறுபடியும் வந்து சிலநாள் வரையில் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டு கடனை நிர்பந்தித்துப்போவன்;
அவ்வளவிலும் கைபுகாவிடில் ‘கடனைத் தீர்த்தாலொழியப்போல தில்லை’ என்று படுக்கைபடுத்து நிர்ப்பந்திப்பன்;
இப்படியாகவே எம்பெருமானும் அஸ்மதாதிகள் செலுத்தவேண்டிய கைங்கரியக் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக
ஓரிடத்தில் நின்று பார்க்கிறான். மற்றோரிடத்தில் வீற்றிருந்து பார்க்கிறான்; இன்னுமோரிடத்தில் சாய்ந்து பார்க்கிறான்-
திருவூரகத்திலே நிற்கிறான், திருப்பாடகத்திலே இருக்கிறான்; திருவெஃகாவிலே கிடக்கிறான்;
இப்படி நிற்பது இருப்பது கிடைப்பதாகிறவிவை எப்போதென்னில்;
நான் ஆபிமுக்யம் பண்ணப்பெறாத காலத்திலே யாய்த்து,
உபயவிபூதிநாதனான தான் ஸம்ஸாரியான வெனக்கு ருசி பிறவாத காலமெல்லாம்
ருசி பிறக்கைக்காக நின்றா னிருந்தான் கிடந்தான்;
எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அளவுக்கு ருசிபிறக்கைக்காக நின்றானிருந்தான் கிடந்தான்;
எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அவனுக்கு ஸாத்யம் (பலன்):
அதற்கு ஸாதகம்- நிற்றவிருத்தல் கிடத்தல்கள்,
பலன் கைபுகுந்தவாறே திவ்ய தேசங்களிலே நிற்றலிருத்தல் கிடத்தல்களைத் தவிர்த்து
(“அரவத்தமணியினோடு மழகிய பாற்கடலோடும். அரவிந்தப்பாவையுந்தானு மகம்படி வந்து புகுந்து” என்னுமாபோலே)
அவ் விருப்புகளை யெல்லாம் எனது நெஞ்சிலே செய்தருளினானென்கிறார்.
இரண்டாமடியில், நானிலாத என்ன வேண்டுமிடத்து என்னிலாத என்றதை
வடமொழியில் ஆர்ஷப்ரயோகங்களைப் போலவும் சாந்தஸப்ரயோகங்களைப்போலவும் கொள்க:
‘அப்பனையென்று மறப்பன் என்னாகியே” என்ற திருவாய்மொழிப் பிரயோகமும் நோக்கத் தக்கது.
—————
நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-
பதவுரை
அற்புதன் |
–
|
(ஞானம் சக்தி முதலியவற்றால் ஆச்சரியபூதனும் |
அனந்த சயனன் |
–
|
அரவணைமேற் பள்ளி கொள்பவனும் |
ஆதிபூதன் |
–
|
ஜகத்காரணபூதனும் |
மாதவன் |
–
|
ச்ரியாபதியுமான பெருமான் |
ஓர் வெற்பு அகதது நிற்பதும் வீண் |
–
|
விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நின்றருள்வதும் பரமாகாசமென்னும் திருநாட்டிலே |
இரும்பும் |
–
|
வீற்றிருப்பதும் |
நல் பெருதிரை கடலுள் கிடப்பதும் |
–
|
நல்ல பெரிய அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சாய்ந்தருள்வதும், |
நான் இலாத முள் எலாம் : |
–
|
நான் முறையறியாதே அனத்தாய்க் கிடந்த காலத்திலேயாம்; (இப்பொழுதோவென்றால்) |
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சனே.
|
நிற்பதும் ஓர் வெற்பகத்து
நின்ற சேவை ஒப்பற்ற திருவேங்கடத்தில்
இருப்பும் விண்
வீற்று இருந்த சேவை பரம பதத்தில்
கிடப்பதும் நற் பெரும் திரைக் கடலுள்
கிடப்பது நல்ல பெரிய அலைகளை உடைய திருப் பாற் கடலிலே
நான் இலாத முன்னெலாம்
நான் முறை அறியாமல் அசத்தாய்க் கிடந்த காலத்தில்
இப்பொழுதோ என்றால்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
அந்த பரிமாற்றங்கள் எல்லாமே எனது நெஞ்சுக்குள்ளே அன்றோ –
தம்முடைய திருவுள்ளத்தினின்றும் எம்பெருமான் பேராமல் இங்கேயே ஸ்தாவர ப்ரதிஷ்டை யாயிருக்கிற
இருப்பிலே மிகவும் ஈடுபட்டு,
எம்பெருமான் திருவேங்கட மலையில் நிற்பதும் திருநாட்டிலே இருப்பதும் திருப்பாற்கடலிலே கிடப்பதுமெல்லாம்
தன்னோடுண்டான முறையை அறியாதே நான் அஸத்கல்பனாயிருந்த காலத்திலேயாம்:
நான் முறையறிந்து பரிமாறின பின்பு அவ்வெம்பெருமானுடைய பரிமாற்றமெல்லாம் எனது நெஞ்சினுள்ளே யாய்த்து என்கிறார்.
———————————————
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-
பதவுரை
|
–
|
பிறந்தானென்கிற க்ஷணத்திலே செத்துப்போவதோ |
நின்று சாதல் |
–
|
சிலகாலமிருந்து செத்துப் போவதோ |
அன்றி |
–
|
இவ்விரண்டத்தொன்று தவிர |
யாரும் |
–
|
மேன்மக்களான ப்ரஹ்மாதிகளும் |
வையகத்து |
–
|
இந்நிலத்திலே |
ஒன்றி நின்று |
–
|
சிரஞ்சீவியாயிருந்து |
வாழ்தல் இன்மை கண்டும் |
–
|
வாழ முடியாதென்பதை ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும் |
நீசர் |
–
|
அறிவில்லாதவர்கள் |
அன்று பார் அளந்தபாதபோதை உன்னிசென்று |
–
|
முன்பு பூமி முழுவதையும் அளந்தருளின பாதாரவிந்தத்தைச் சிந்தித்து |
சென்று |
–
|
அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று |
வானின்மேல் சென்று |
–
|
பரமபதத்தேறப் புகுந்து |
தேவர் ஆய் இருக்கிலாத வண்ணம் என் கோல் |
–
|
நித்யஸூரிகளோடொக்க இராதது ஏனோ? |
இன்று சாதல் நின்று சாதல்
பிறந்த உடன் சாவது -சிறிது காலம் இருந்த பின் சாவது
அன்றி யாரும் வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் –அன்று பாரளந்த பாத போதை யொன்றி
வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே என் கொலோ
இவை இரண்டும் இல்லாமல் அன்று உலகு அளந்த திருவடித் தாமரையை நினைந்து ஆஸ்ரயித்து
அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று
நித்ய ஸூரிகளுடன் இருக்க முயல்வார் யாரும் இல்லையே என்கிறார்
கருவிலேயே சிலவுயிர்கள் மாண்டொழிகின்றன;
கருவில் நின்றும் கீழே விழுந்தவாறே சிலவுயிர்கள் மாண்டொழிகின்றன;
சில காலம் ஜீவித்திருந்து சிலர் மாள்வர்;
இப்படியல்லது, என்றைக்கும் அழிவில்லாதவர்களென்று சொல்லும்படியாக இந்நிலத்தில்
சிரஞ்ஜீவிகளாயிருப்பார் ஆருமில்லை என்னுமிடத்தைக் கைவிலங்கு நெல்லிக்கனியாக ப்ரத்யக்ஷ்கரித்துவைத்தும்,
அன்றொருநாள் குணதோஷ நிரூபணம் பண்ணாமல் ஸகலலோகங்களிலுமுண்டான கைல சேதநர் தலையிலும்
பொருந்தி முறையையுணர்ந்ததின ஸர்வ ஸுலுபமான திருவடித்தாமரைகளை ஆச்ரயித்து
அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று மீட்சியற்ற வைகுந்த மாநகரைக் கிட்டி நிர்யஸூரிகளோடு
ஒரு கோவையாயிருப்பதற்கு முயல்வார். ஆரூமில்லையே! இஃது என்ன பாவம்!! என்கிறார். “
பாதபோதை யொன்றி” என்றும் பாடமுண்டு.
————
இந்த பாசுரம் முதல் ஏழு பாட்டாலே நமக்கு உபதேசம் பண்ணி அருளுகிறார்-
சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி யுய்மினோ –67-
பதவுரை
சண்டன் மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று |
–
|
ஸூர்யமண்டல மத்யமார்க்கத்தாலே போய் |
வீடு பெற்று |
–
|
பரமபதத்தை அடைந்து (அவ்விடத்தில்) |
மேல்வீடு இலாத |
–
|
பக்தியின் பயனான கைங்கர்ய |
காதல் இன்பம் |
–
|
ஸுகத்தை நித்தியமாகப் பெற |
நாளும் கண்டு |
–
|
விருப்பமுடையவர்களே! |
எய்துவீர் |
–
|
(முமுக்ஷுக்களே) |
புண்டரீக பாதன் |
–
|
தாமரைபோன்ற திருவடிகளையுடைனான பெருமானுடைய |
புண்ய கீர்த்தி |
–
|
பரிசுத்தமான திருப்புகழ்களை |
நும் செவி |
–
|
உங்களுடைய காதுகளிலே |
மடுத்து |
–
|
தேக்கி |
உண்டு |
–
|
அநுபவித்து. |
நும் உறு வினை துயரும் நீங்கி உய்ம்மின் |
–
|
உங்களுடைய ப்ரபல பாபங்களின் பலனை துக்கங்களின் நின்றும் நீக்கி உஜ்ஜிவித்துப்போங்கோள். |
சண்ட மண்டலத்தினூடு சென்று -சூர்ய மண்டல மத்திய மார்கத்திலே போய் வீடு பெற்று
பரம பதம் அடைந்து அங்கே
மேல் கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
அழிவில்லா பக்தியின் பலனாக கைங்கர்ய இன்பம் நித்யமாக பெற விருப்பம் உடையவர்களே –
காதல் இன்பம் -காதல் பக்தி -அதன் பலனாக கைங்கர்ய ஸூகம் –
முமுஷூக்களே
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி யுய்மினோ
அவனது திருப் புகழ்களை காதுகளில் தேக்கி அனுபவித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள் –
இது முதல் மேலேழுபாட்டாலே பரோபதேசம் பண்ணியருளுகிறார்.
ஸம்ஸாரிகள் தங்களுக்கு ஹிதயமானதை அறிந்து கொள்ளாவிடிலும்
நாமாவது அறிவித்து அவர்களை உய்விப்போமென்று திருவுள்ளம்பற்றி,
அவர்களுடைய துர்கதியைக் கண்டு பொறுத்திருக்கமாட்டாத க்ருபாவிசேஷத்தாலே உபதேசத்திலே மூளுகிறபடி,
அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று நிலைநின்ற புருஷார்த்தத்தைப்பெற விருப்புமுடையீர்!
ப்ராப்யமும் ப்ராபகமுமான பகவத் விஷயத்தை ஆச்ரயித்து உங்களுடைய விரோதிகளைப் போக்கிக்
கொண்டு உஜ்ஜீவித்துப் போங்கள் என்கிறார் இப்பாட்டில்.
வடமொழியில் ஸூர்யனுக்கு *** என்று பெயர்; அதில் ஏகதேசத்தைக் கொண்டு சண்டன் என்கிறாரிங்கு.
காதலின்பம்- காதல் என்று பக்திக்குப் பெயர்: -பக்தியின் பலமான இன்பமாவது கைங்கர்யஸுகம்.
“செவிமடுத்துண்டு” என்றவிடத்து, “செவிக்குணவில்லாதபோது சிறிது, வயிற்றுக்கு மீயப்படும்” என்ற குறள் நினைக்கத்தக்கது.
————————
முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-
பதவுரை
மூத்திறந்து |
–
|
மூன்று வகைப்பட்ட (ஸாத்வீக, ராஜஸ, தாமஸங்களான) பல்களுக்குள்ளே |
இரண்டில் |
–
|
(ஸாத்விகமொழிந்த) மற்றையிரண்டு பலன்களில் |
ஒன்றும் |
–
|
விருப்பமுடையரான |
நீசர்கள் |
–
|
நீசரான மனிசர்கள் |
அதில் இட்டு |
–
|
அந்த லோகத்திலே அந்தக் கரும பலன்களையொழித்து |
இறந்து |
–
|
அவற்றை யநுபவிப்பதற்காகப் பூண்டுகொண்ட சரீரத்தை முடித்து |
போந்து |
–
|
(மறுபடியும் கர்ப்பவான வழியாலே) பூலோகத்தில் வந்து |
மத்தர் ஆய் |
–
|
“தேஹமே ஆத்மா” என்கிற ப்ரமத்தையுடையராய் |
மயங்குகின்றது |
–
|
மோஹித்துப்போவார்கள்; (அப்படிப்பட்டவர்கட்கு) |
உய்வது ஓர் உபாயம் |
–
|
உஜ்ஜீவ்நோபாயம் |
எத்திறத்தும் இல்லை |
–
|
எவ்வழியாலுமில்லை, (மேலேறுவதும் கீழிறங்குவதுமாய்த் திரித்லொழிய நிலைநின்ற புருஷார்த்தம்பெற விரகில்லை) |
உய்குறில் |
–
|
(உங்களுக்கு) உஜ்ஜீவிக்க விருப்பமுண்டாகில் |
கொத்து இறுத்த |
–
|
கொத்துக்கொத்தாகச் செறிந்த |
தண் துழாய் |
–
|
குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையனான |
நம் மாலை |
–
|
பரமபுருஷனை |
வாழ்த்தி |
–
|
துகித்து |
வாழ்வின் |
–
|
உஜ்ஜீவித்துப் போங்கோள். |
முத்திறத்து-சாத்விக ராஜச தாமஸ-என்ற மூ வகைப் பட்ட
வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
பலன்களுக்குள் சாத்விகம் ஒழிந்த மற்ற இரண்டின் பலன்களில் விருப்பம் உடையீரான நீசர்களே
மத்தராய் மயக்குகின்றது-தேகமே ஆத்மா என்று மோஹித்து
இட்டு அதில் இறந்து போந்து-அந்த லோகத்தில் அந்த கர்ம பலன்களை ஒழித்து அத்தை அனுபவிக்கும் சரீரம் முடித்து –
மறுபடியும் கர்ப்ப வாசம்-வழியே பூ லோகத்தில் வந்து –எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை-
உஜ்ஜீவன உபாயம் எவ்வழியிலும் இல்லை -பல பல ஜன்மங்கள் தான் எடுப்பார்கள்
யுய்குறில்
உய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ
புனத் துழாய் மாலையானை ஆஸ்ரயித்து உஜ்ஜீவனம் அடைய வேணும் –
ஸம்ஸாரிகள் ஸத்வ குணமொன்றையே மேற்கொள்ளாமல் ரஜஸ் தமோ குணங்களுக்கும் வசப்பட்டிருப்பதால்
அக்குணங்கட்குத் தகுதியான ராஜஸ தேவதைகளையும் அவர்கள் ஆச்ரயிக்கக் கூடுமாதலால்
அப்படி மதிகெட்டுப்போகாதபடி ஸர்வாதிகனான புனத்துழாய் மாலையானையே ஆச்ரயித்து உஜ்ஜீவிக்கச் சொல்லுகிறார்.
உலகததில் அவரவர்கள் பெறும் பலன்கள் மூன்று வகைப்படும்;
ஸாத்வீக தேவதையை ஆச்ரயித்தால் ஸாத்விகபலன் பெறலாகும்;
ராஜஸ தேவதைகளை ஆச்ரயித்தால் ராஜஸபலன்; தாமஸ தேவதைகளை ஆச்ரயித்தால் தாமஸபலன்;
இம்மூவகைப்பட்ட பலன்களினுள் ஸாத்விக பலனைப்பேணாது மற்ற இருவகைப் பயன்களை விரும்பி
அவ்வழியிலே ஊன்றித்திரிகின்ற நீச மனிசர்கள் நியத்ஸுகத்தை அடையமாட்டார்கள்;
அந்தப் பலன்களைச் சில தேசவிசேஷங்களில் அநுபவிப்பதும் மீண்டும் இவ்வுலகத்திலே பிறந்துழல்வதுமாய்
இப்படியே தேஹாத்மாபிமாநிகளாய் நசித்துப்போவர்களேயன்றி எவ்விதத்திலும் உஜ்ஜிவிக்கக் கடமைப்பட்டவர்களல்லர்.
உஜ்ஜீவிக்க வேண்டில், ஸர்வரக்ஷகனென்னுமிடத்துக்கு ப்ரகாசமாகத் திருத்துழாய் மாலையை
யணிந்துள்ள பெருமானைப் பணிந்து வாழ வேண்டும்.
—————————
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —69-
பதவுரை
காணிலும் |
–
|
கண்டாலும் |
உரு போலார் |
–
|
விகாரமான உருவத்தையுடையராயும் |
செவிக்கு இனாத கீர்த்தியார் |
–
|
காதுக்குக் கடூரமான சரித்திரங்களையுடையராயும் |
பேணிலும் |
–
|
(இப்படிப்பட்ட விகாரமான உருவத்தையும் ஹேமயமான சரிதையையும், கவனியாமல்) ஆச்ரயித்தாலும் |
வரம் தர |
–
|
(ஆச்ரயித்தவர்கட்கு) இஷ்டத்தைக் கொடுக்க |
மிடுக்கு இலாத |
–
|
சக்தியற்றவர்களாயுமுள்ள |
தேவரை |
–
|
தேவதைகளை |
ஆணம் என்று |
–
|
சரணமென்றுகொண்டு |
அடைந்து வாழும் |
–
|
அவற்றையடைந்து கெட்டுப்போகிற |
ஆதர்கள் |
–
|
குருடர்களே! |
என் ஆதிபால் |
–
|
ஸர்வகாரணபூதனான எம்பெருமானிடத்து |
பேணி |
–
|
வழிபாடுகளைச் செய்து |
நும் |
–
|
உங்களுடைய |
பிறப்பு எனும் |
–
|
ஸம்ஸாரமாகிற |
பிணக்கு |
–
|
பெரும்புதரை |
அறுக்க கிற்றிரே |
–
|
அறுத்தொழிக்க வல்லீர்களே? |
காணிலும் உருப்பொலார் -கண்டாலும் விஹார உருவம் உடையவர்கள்
செவிக்கினாத கீர்த்தியார்
கடினமான வார்த்தைகள் உடையவர்
பேணிலும் -எப்படி இருந்தாலும் ஆஸ்ரயித்தால்
வரந்தர மிடுக்கிலாத தேவரை-ஆணம் என்று அடைந்து-சரணம் என்று அடைந்து கேட்டுப் பெரும் குருடர்களே
வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்-பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே-
தேவ தாந்த்ரங்களை பார்க்கவே கூடாதே -அவற்றின் அயோக்யதைகளை சொல்லி –
ஜகத் காரணனைப் பற்றி முக்தர் ஆகணும் என்கிறார்-
மற்ற தேவர்கள் “பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவர்களே” என்கிறார். மேலும், “காணிலும் உருப்பொலார்” என்கிறார்.
மற்ற தேவர்களை (தெய்வங்களை) அப்படியே போய் ஆஸ்ரயித்தாலும் (பற்றினாலும்), அவர்கள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை;
பகவான் புண்டரீகாஷன் (தாமரைக் கண்ணன்) – மற்றொருத்தன் (சிவன்) விரூபாக்ஷன்.
பகவான் சந்தனத்தைத் தன் திருமார்பிலே ஈஷிக்கொண்டவன்; சிவனோ சாம்பலை எடுத்து திருமார்பிலே பூசிக்கொண்டவன்.
பகவானுக்கு இருப்பதோ சிறந்த கேஸ வாசம்; சிவனுக்கு இருப்பதோ சடைமுடி!
பகவான் தலையில் இருப்பதோ உயர்ந்த புஷ்பஹாரம்; சிவன் தலையில் இருப்பதோ வெறும் கங்கா தீர்த்தம்!
இவன் ஏறுவது கருடன் மீது; அவன் ஏறுவது ரிஷபமான தாழ்ந்த வலிய பந்தமான ஜந்துவைப் படைத்திருக்கிறான்!
இவனுக்கு அடியார்கள் அத்தனை பேரும் நித்யஸுரிகள்; அவனது அடியார்களோ பேய்க் கணங்களும் பூதகணங்களும்!
இவன் பிடித்திருப்பதோ சிறந்த சங்க சக்கரங்களை; அவன் பிடித்திருப்பதோ ஒண்மழுவான ஆயுதத்தை!
எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் ஒருநாளும் ஒத்துவரப்போவது கிடையாது.
ஆகவே “காணிலும் உருப்பொலார்” என்று பாடியுள்ளார் ஆழ்வார். சிவனது காட்சி ஒருநாளும் உருப்பெறுவது முடியாது.
“செவிக்கினாத கீர்த்தியார்” –
செவிக்கு இனிய கீர்த்தி என்றால், பகவானுடைய ஸ்ரீ திரிவிக்கிரம அவதாரமா – ஸ்ரீ வாமன மூர்த்தியாய் உலகளந்தானே –
அந்தப் புகழைக் கேட்பதா அல்லது ஸ்ரீ ந்ருசிம்ஹ மூர்த்திக்காகவா?
ஒவ்வொன்றும் அடியார்க்காக அடியார்க்காக என்று அவன் புகழ் செவிக்கு இனியதான கீர்த்தியாக இருக்கிறது.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்” என்பது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம அத்தியாயத்திலே தெரிவித்ததார்.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:” – “ஸ்தவ்ய:” என்றால் ஸ்தோத்ரம் என்று பண்ணணும்னா, பகவான் ஒருத்தன் தான்;
அதற்கு அருகதை என்றும், மற்ற யாருக்கும் அதற்கு அருகதையே கிடையாது என்று அர்த்தம்.
ஆக, பகவான் ஸ்தவ்யன்! ஆனால், சிவனை என்னவென்று சொல்லி ஸ்தோத்ரம் செய்வது?
இவர் தானும் சுடுகாட்டிலே பஸ்பதாரியாய் சுற்றித் திரிகிறார்;
தன் தகப்பனார் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளித் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்;
பத்மாசுரனைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்; வாணாசுரனையும் கண்டு பயந்து ஓடிவிட்டார்;
தன் சிஷ்யனிடத்திலேயே அவர் “பிள்ளைக் கறி கொண்டுவா என்று! தலையை அறுத்து தனக்கு யாக யஞ்ஞம் செய்” என்று கூறினார்.
இவற்றை எல்லாம் பாடினால் அது கீர்த்தி (புகழ், தோத்திரம்) ஆகுமோ?
அப்படியே இவற்றைப் பற்றிப் பாடினாலும், அது செவிக்குத்தான் இனியதாக இருக்குமா?
இத்தனையும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மறுபடியும் நீங்கள் அவனைத்தான் விடாமல் பிடித்துக்கொள்வோம் என்று
பிடிவாதம் பிடித்தாலும் பிடிக்கலாம்! அவர்களுக்கும் ஆழ்வார் சமாதானம் சொல்லிவிட்டார் –
“பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை” என்று
பாடி! அதாவது, இத்தனையும் தாண்டி நீங்கள் அவனையே ஆஸ்ரயிக்க (பற்ற) நினைத்தாலும்,
நீங்கள் கேட்கப் போவதைக் கொடுக்கிற சக்தி மட்டும் அவனுக்குக் கிடையாது!
அது இருக்குன்னாலும் அவனிடத்தில் போய் நீங்கள் ஆஸ்ரயிப்பதில் அர்த்தமுண்டு.
அதுவும் இல்லாதவனைப் போய் ஆஸ்ரயிப்பதில் ஏதானும் இலாபம் உண்டா?
அவனே லக்னனாகத் திரிய, அவனிடத்தில் போய் வேஷ்டி தானம் வேணும்னு கேட்டா தருவானா?
ஒரு கடையில் நிறைய வேஷ்டிகள் அடுக்கப் பட்டிருக்க, அவனிடத்தில் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டால் கேட்டால்,
அவன் கொடுத்துவிடுவான். ஒருத்தன் இடுப்பில் ஒன்று ஒன்று கொடியில் மாட்டிவைத்திருக்க,
அவனிடம் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டாலும் ஒன்றைக் கொடுத்துவிடுவான்;
இன்னொருத்தன் ஒரே ஒரு வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கொண்டிருக்க, அவனிடம் தானம் கேட்டாலும்
அவன் அதையும் கழற்றிக் கொடுத்துவிடுவான்! ஆனால், சிவனோ, லக்னனாக, அவனே வேஷ்டி இல்லாதவனாக இருக்க,
அவனிடம் போய் வஸ்திர தானம் வேணும்னு கேட்டா, கொடுக்கமுடியலை என்றுமட்டுமில்லை; அவனும் கொடுக்கபோறதில்லை;
நமக்கும் கிடைக்கப் போறதில்லை!ஐயோ! என்னிடமே ஒன்றுமில்லை; என்னிடத்தில வந்து கேட்கிறாயே! என்று வருத்தமும் படுவான்.
இதனால்தான், ஸ்ரீ ஆழ்வார் தெரிவித்தார்: “அப்படி உங்கள் சிவனுக்கு வருத்தம் ஏற்படும்படி நீங்கள் இருக்கவேண்டாம்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடத்தில் போய் கேட்கக் கேட்க, கொடுக்கமுடியாத ஸ்ரமத்தாலே அவர் துடிக்க போறார்!
ஏன் வீணாக அவனையும் சிரமப்படுத்திண்டு, உங்களுக்கும் கிடைக்காமால்….!
ஆகையால், சிரமப்பட வேண்டாம் என்று தவிர்க்கிறார் ஸ்ரீ ஆழ்வார்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. மேலே உள்ள பாடலுக்கு வேத அர்த்த ரீதியாகவும் இவர் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.
“திவுக்ரீடாயாந் தாது; || திவு விஜிஹீஷாந் தாது; || திவு வியவஹாரந்: தாது; || திவு த்யுதீந்: தாது; || திவு ஸ்துதிந்:தாது; ||
திவு மோதாந்: தாது; || திவு மதாந்: தாது; || திவு காந்தீந்:தாது; || திவு கதீந்:தாது.”
“கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தனே! (இராமபிரான்) (நான்.திரு.53) – அவன் ஒருத்தன் தான் தெய்வமே தவிர,
மற்ற அனைவரும் பொல்லாத தேவரே” என்றும்,
அதனால் “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” –
எவனுக்குத் திருமகள் சம்மந்தம் இருக்கிறதோ அவனே பரதெய்வம்; அப்படிப்பட்ட சம்மந்தம் இல்லாதவர்கள் தெய்வம் அல்லர்;
ஆகையால், அவர்களை வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அற்புதமாகத் தன் பாசுரத்தில் காட்டினார் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் .
இவருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த வாக்குவாத யுத்தத்தின் முடிவில்தான் பரமசிவன் இவர் பக்தியை மெச்சி,
இவருக்கு ஸ்ரீ “பக்திஸாரர்” என்ற திருநாமத்தையும் கொடுத்தார் பரமசிவனார்.
தேவதாந்தரங்களினுடைய அயோக்யதைகளை நன்றாகச்சொல்லி, இப்படிப்பட்ட தேவதாந்தரங்களை உதறித்தள்ளிவிட்டு
ஸர்வ ஜகத்காரண பூதனான எம்பெருமானை யடிபணிந்து முந்தர்களாய் போகலாகாதா? என்கிறார்.
காணிலும் உருப்போலார்- அந்தத் தேவதாந்தரங்களைக் காணவே கூடாது;
கண்டால் வடிவாவது கண்ணுக்கு நன்றாயிருக்குமோவென்றால், இராது, மஹாகோரமாயிருக்கும்: ‘
விருபாக்ஷன்’ என்கிற பெயரே போராதோ வடிவின் பொல்லாங்கைக் காட்டுகைக்கு.
அங்குப் புவியினதளுமான கோலம் காணப்பொல்லாதாயிருக்குமே.
வடிவின் பொல்லாங்கு இருக்கட்டும்; சரித்திரமானது காதுகொடுத்துக்கேட்க இனிதாயிருக்குமோவென்னில்;
செவிக்கு இனாத கீர்த்தியாய்-
தகப்பன் தலையைக் கிள்ளினான்; கபாலதாரியாய் உலகமெங்குந்திரிந்து பிச்சையெடுத்தான்;
யாகத்தைக் கெடுத்தான்; மாமனாரை மாய்த்தான்; என்றிப்படிப்பட்ட சரிதைகள் காதுகொண்டு கேட்கக்கூடாதவையிறே.
‘இவற்றையெல்லாம் ஸஹித்துக்கொண்டு வருந்தி ஆச்ரயித்தாலும் இஷ்டத்தை நிறைவேற்றித்தரவல்ல சக்தியாவது உண்டோவென்னில்;
பேணிலும் ‘வரந்தர மிடுக்கு இலாத தேவர்- கண்டா கர்ணனுடைய சரித்திரத்தை ஆராய்ந்தால் இது தெரியும்.
இப்படிப்பட்ட தேவதைகளைச் சரணமாகப் பற்றிநின்ற அறிவுகேடர்களே!
நமக்கெல்லார்க்கும் காரணபூதனான பரமபுருஷன் பக்கலிலே ஆதரத்தைப்பண்ணி,
ஒருவராலும் அறுக்கப்போகாத உங்களுடைய பிறவியென்னும் துற்றை அறுத்துக்கொள்ள மாட்டீர்களோ?.
‘வரந்தரும் மிடுக்கிலாத” என்றும் பாடமுண்டு.
ஆணம்- சரணம்.
அடைந்து வாழும் = அயோக்ய ஸதவங்களை யடைந்து பாழாய்ப்போகிறீர்களே! என்று க்ஷேபித்தபடி.
ஆகவே, வாழும் என்றது விபரீதலுலக்ஷணை.
ஆதர்- குருடும், அறிவுகேடும்.
————————————
குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே –70-
பதவுரை
குந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள் |
–
|
ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட) |
பந்தம் ஆன தேவர்கள் |
–
|
கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள் |
பரந்து |
–
|
(பல திக்குகளிலும்) சிதறிப் போய் |
வானகம் உற |
–
|
தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர |
வந்த வாணன் |
–
|
(பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய |
ஈர் ஐநூறு தோள்களை |
–
|
ஆயிரந்தோள்களை |
துணிந்த நாள் |
–
|
அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்) |
அந்த அந்த அகுலம் |
–
|
வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை |
அமரரே அறிவர் |
–
|
(நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.) |
குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
ஈட்டி சூலாயுதம் வேலாயுதம் இரும்பு உலக்கை கதை வாள் இவற்றுடன் இருக்கும்
பந்தமான தேவர்கள்-
கூட்டம் கூட்டமாக இருந்த ருத்ராதி தேவர்கள்
பரந்து வானகமுற
பல திசைகளிலும் சிதறிப் போக -தங்கள் இருப்பிடம் சென்று சேர
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்-அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே
ஆகுலம் — வியாகுலம் பட்டு
ரஷகமாக வேண்டிய ஆயுதங்கள் எல்லாம் கால் கட்டு போலே ஆயின
ராவணன் கையில் வில் போலே -இருந்த வரை அடி பட்டான் -வெறும் கை வீரன்
வரம் தரும் மிடுக்கு இலா யஜவருக்கு திருஷ்டாந்தம் வாண விருத்தாந்தம் –
“வரந்தரமிடுக்கிலாததேவர்” என்று கீழ்ப்பாட்டிற் கூறியதைக்கேட்ட சிலர்,
‘இப்படிச் சொல்லலாமோ? அவர்களுக்கு சக்தி இல்லையோ?
அவர்களை ஆச்ரயித்து இஷ்ட ஸிக்தி பெற்றவர்கள் பலபேர்களில்லையோ?” என்ன;
ருத்ரனை யாச்ரயித்து அவனுக்கு தந்தரங்கனாயிருந்த பாணாஸுரன் பட்டபாடும்,
அந்த ருத்ரன் தானும் கண்கலங்கினபடியும் அப்போது உடன்பட்ட தேவர்கட்கே தெரியுமத்தனையென்கிறார்.
பந்தமான தேவர்கள் = பந்தமாவது ஸம்பந்தம்; ருத்ரனோடு ஸம்பந்தமுடையவர்களான ஷûப்ரஹ்மண்யன் முதலான தேவதைகள் என்றபடி
வாணனுக்கு உறவான ருத்ராதிகள் என்றுமாம்.
இங்ஙனன்றிக்கே, “குந்தமோடு சூலம் வேற்கள் தோடரங்கள் தண்டுவாள் பந்தமான” என்று சேர்த்து அந்வயிக்கவுமாம்;
குந்தம் முதலான ஆயுதங்கள் காற்கட்டாகப் பெற்ற தேவர்கள் என்றதாகிறது.
ரக்ஷகமாக வேண்டிய ஆயுதங்கள் காற்கட்டானபடி; இராவணனுக்குப்போல.
———————————
வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே -71-
பதவுரை
வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் |
–
|
(மகரந்தத்திற்காக) வண்டுகள் உலாவப்பெற்ற பூமாலையை அணிந்திருந்த உஷையின் நிமித்தமாக |
வெகுண்டு |
–
|
கோபங்கொண்டு |
இண்ட |
–
|
செறித்துவந்த |
வாணன் |
–
|
பாணாகரனுடைய |
ஈர் ஐ நூறு தோள்களை |
–
|
ஆயிரந்தோள்களை |
துணித்தநாள் |
–
|
கழித்தபோது |
முண்டன் நீறன் |
–
|
மொட்டைத்தலையனாய் நீறு பூசினவனான ருத்திரனும் |
மக்கள் |
–
|
அவனுடைய குமாரர்களும் |
வெப்பு |
–
|
ஜ்வரதேவதையும் |
மோடி |
–
|
பிடாரியும் |
அங்கி |
–
|
அக்நி தேவதையும் (மற்றுமுள்ளவர்களும்) |
ஓடிட |
–
|
(பாணாசுரனை வஞ்சித்துவிட்டு. தங்களுயிரைக் காத்துக் கொள்ள) ஓடிப்போன வளவிலே |
கண்டு |
–
|
பார்த்து |
நாணி |
–
|
(இந்த முதுகுகாட்டிப் பயல்களோடு போர் செய்யவா நாம் வந்தோமென்று) வெட்கப்பட்டு |
வாணனுக்கு |
–
|
பாணாகரன் விஷயத்தில் |
இரங்கினான் |
–
|
கிருபைபண்ணினவன் |
எம்மாயனே |
–
|
ஆச்சரிய சக்தியுக்தனான எம்பெருமானேயாவன். (‘எம் ஆயனே’ என்று பிரிக்கவுமாம். ஆயன் கண்ணபிரான்.) |
வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
மகரத்துக்காக வண்டுகள் உலாவும் பூ மாலை அணிந்து இருந்த உஷையின் நிமித்தமாகக் கோபம் கொண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
செறிந்து வந்த வாணனது ஆயிரம் கரங்களையும் துணித்து
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்கண்டு நாணி
மொட்டைத் தலையனும் திரு நீறு பூசினவனுமான ருத்ரனும் -அவனுடைய குமாரர்களும் ஜுர தேவதையும் பிடாரியும்-
அக்னி தேவனும் மற்று எல்லாரும் ஓடிட
பாணாசுரனை வஞ்சித்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிப் போன போது
பார்த்து இந்த புற முதுகு காட்டி ஓடும் பயல்களுடனே போர் செய்ய வந்தோம் என்று வெட்கப் பட்டு
வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –
இவன் தானே ரக்ஷகன் -என்ன ஆச்சர்யம் எம் ஆயனே என்றும் கொள்ளலாம் –
ருத்ரனானவன் பாணனை ரக்ஷிப்பதாகப் பிரதிஜ்ஜை பண்ணிவைத்து,
பரிகாரங்களோடு கூட ரக்ஷிக்க முயற்சியுஞ்செய்து ரக்ஷிக்க முடியாமல்
எதிரி கையிலே அவனைக் காட்டிக் கொடுத்துத் தப்பிப்போனபடியாலும்,
கண்ணபிரான் க்ருபை பண்ணி அவனடைய ஸத்தையை நோக்கினபடியாலும்
அந்தச்சிவன் ரக்ஷகனல்லவென்றும் கண்ணபிரானே ரக்ஷகனென்னும் ப்ரத்யக்ஷஸித்தமாயிற்றென்கிறார்.
தன்னுடைய பெண்ணான உஷையானவள் தன் ஆசை தீர அதிருந்தாழ்வானோடு கலவி செய்திருக்கச்செய்தே
அதனையுணர்ந்து ஸந்தோஷியாமல் கோபங்கொண்டவனாய் யுத்தத்திலே வந்து மேல்விழுந்த வாணனுடைய
ஆயிரத்தோள்களை யறுத்தவக்காலத்தில், மொட்டைத் தலையனும் சம்பலாண்டியுமான சங்கரனும்
அவனது புதல்வரான ஷண்முகாதிகளும், ஜ்வரதேவதை, பிடாரி, நாற்பத்தொன்பது அக்நிகளுக்குக் கூடஸ்தனான அக்நி இவர்களும்
தங்கள் தங்கள் பிராணனைக் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்றெண்ணி முதுகுகாட்டி ஓடிப்போக,
உயிரிழக்கவேண்டியவனான வாணன் மீது பரமகிருபையைச் செய்தருளி நான்கு தோள்களையும் உயிரையும் கொடுத்தருளினான் எம்பெருமான்;
ஆனபின்பு இவன் ரக்ஷகனோ! மற்றையோர் ரக்ஷகரோ? ஆராய்ந்து காண்மின் என்றவாறு.
————————
போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72-
பதவுரை
போதில் மங்கை |
–
|
பூமகளான லக்ஷிமியும் |
பூதலம் கிழத்தி |
–
|
பூமிப்பிராட்டியும் |
தேவி |
–
|
தேவிமாராவர்; |
அன்றியும் |
–
|
மேலும் |
போது தங்குநான் முகன் |
–
|
பூவிலே பொருந்திருப்பவனான பிரமன் |
அவன் மகன் |
–
|
பேரனாயிரா நின்றான்; |
என்று |
–
|
இவ்வண்ணமாக |
வேதம்நூல் |
–
|
வேத சாஸ்த்ரம் |
ஓதுகின்றது |
–
|
உரைப்பதானது |
உண்மை |
–
|
ஸத்யம் |
மகன் |
–
|
புத்திரனாயிரா நின்றான்; |
சொலில் |
–
|
மேலும் சொல்லப்புக்கால் |
மாது தங்கு கூறன் |
–
|
ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய் |
ஏறு அது ஊர்தி |
–
|
எருதை வாஹனமாக வுடையனான சிவன் |
மற்று |
–
|
இங்ஙனன்றிக்கே |
அல்லது |
–
|
இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை) |
உரைக்கில் |
–
|
(சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில் |
இல்லை |
–
|
அது அஸத்யம் |
போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
ஸ்ரீ மகா லஷ்மியும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தேவிமார் ஆவார் -அன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
பூவில் பொருந்திய இருக்கன் பிரமன் -புத்திரன் -மேலும் சொல்லப் பார்க்கில்
மாது தங்கு கூறனேற தூர்தி –
ஒரு பக்கம் பார்வதி தேவி தங்கப் பட்டவனாய் -எருமையை வாகனமாக கொண்டவனாய் உடைய சிவன் –
அவனது பேரனாய் இருக்கிறான்
என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே
இது தான் சத்யம் -வேறு பட சொல்வது அசத்தியம் என்கிறார்
இவனது பரத்வத்தையும் ப்ரஹ்மாதிகளுடைய அவரத்வத்தையும் வேதமே ஸ்தாபித்துக் கொடுக்கிறதே –
எம்பெருமானுடைய பரத்வஹேதுவான பெருமைகளைப் பேசுகிறார்.
பூவிலே பிறந்த பெரியபிராட்டியாரும்; ஸ்ரீபூமிப்பிராட்டியாரும் தேவிமாராக இருக்கிறார்கள்;
நாபிக் கமலத்திலே பிறந்த நான்முகம் புத்திரனாக அமைந்திருக்கிறான்;
ஸாம்பமூர்த்தியாய் ஸ்ரூஷபத்வஜனான ருத்திரன் பௌத்திரனாக அமைந்திருக்கிறான் –
இது நான் சொல்லும் வார்த்தையல்ல;
வேதங்களில் முறையிடப்படும் பொருள் இதுவேயாம்.
இது யதார்த்தமேயன்றி ப்ரசம்ஸாவாக்யமல்ல.
ச்ரிய: பதி என்னுமிடமும் பிரமனுக்குப்பிதா என்னுமிடமும் சிவனுக்குப் பிதாமஹன் என்னுமிடமும்
எம்பெருமானுடைய பரத்துவத்தை ஸ்தாபித்துக் கொடுத்து சிவாதிகளுடைய அவரத்வத்தையும் நிலைநாட்டித் தருமென்க.
——————————
மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன்னோர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –73-
பதவுரை
முன் ஓர் நாள் |
–
|
முன்னொரு காலத்திலே |
மரம் பொத |
–
|
ஸம்பஸாலவ்ருஹங்கள் துளைபடும்படியாக |
சரம் துரந்து |
–
|
அம்பைப் பிரயோகித்து (அதற்குப் பிறகு) |
வாலி வீழ |
–
|
வாலியானவன் முடியும்படியும் |
உரம் பொத |
–
|
அவனது மார்பிலே பொத்தும் படியும் |
சரம் துரந்த |
–
|
பாணத்தைப் பிரயோகித்த |
உம்பர் ஆளி எம் பிரான் |
–
|
தேவாதி தேவனான எம்பெருமான் |
வரம் குறிப்பில் |
–
|
(தன்னுடைய) சிறந்த திருவுள்ளத்திலே |
வைத்தவர்க்கு அலாது |
–
|
யாரை விஷயீகரிக்கிறானோ அவர்கட்குத் தவிர; |
வானம் ஆளினும் |
–
|
மேலுலகங்கட்கு அதிபதிகளாயிருந்தாலும் |
யார்க்கும் |
–
|
மற்றவர்கட்கும் |
நிரம்பு நீடு போகம் |
–
|
சாச்வதமாய்ப் பர்பூர்ணமான கைங்கர்யஸுகம் |
எத்திறத்தும் |
–
|
எவ்வழியாலும் |
இல்லை |
–
|
கிடைக்கமாட்டாது. |
மரம் பொதச் சரம் துரந்து
சப்த சால மரங்கள் துழாய் படும்படி அம்பை பிரயோகித்து
வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச்
வாலி முடியும் படியும் அவனது பார்பில் பொருந்தும் படியும்
சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்-வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது
தன்னுடைய சிறந்த திரு உள்ளத்தில் யாரை விஷயீ கரிக்கிரானோ அவரைத் தவிர
வானம் ஆளிலும்
மேல் உலகங்களுக்கு அதிபதியாக இருந்தாலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –
நித்ய சுகானுபவம் அவர்களுக்கு ராமனின் திரு உள்ளத்தில் இல்லாதவர்களுக்கு இல்லை என்கிறார்-
அந்தப் பரமபுருஷனை இராமபிரானாகத் திருவவதரித்தன னென்றுசொல்லி
அந்த மஹாநுபாவனால் திருவுள்ளம் பற்றப்படாதவர்கள் உத்தமாதிகாரிகளாயிருந்தாலும்
யத்ய ஸுகாநுபவத்திற்கு உரியரல்லர் என்கிறார்.
ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்ததுபோலவே வாலியின் மார்பையும் பாணத்தினால் துளைத்து
அவனுயிரை மாய்த்த மஹாநுபாவனது திருவுள்ளத்தாலே விஷயீகரிக்கப்பட்டவர்களுக்கன்றி
மற்றெவர்க்கும் நித்யமான மோக்ஷத்தைப்பெற வழியில்லை.
மூன்றாபடியில், அலாது = ‘அல்லது’ என்பது அலது எனத் தொக்கி நீட்டல் பெற்றது.
வானம் ஆளினும் = சிறந்த ஞானத்தையுடையராய்ப் பதினான்கு லோகங்கட்கும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளாயிருந்தாலும் என்றபடி.
——————————————
அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-
பதவுரை
முதலாயிரம் |
–
|
திருச்சந்தவிருத்தம் |
வாமணன் |
–
|
உலகளந்த பெருயாமனுடைய |
அடி இணை |
–
|
அடியிணைகளை |
அறிந்து அறிந்து |
–
|
உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து கொண்டு |
வணங்கினால் |
–
|
நமஸ்கரித்தால் |
செறிந்து எழுந்த ஞானமொழி |
–
|
பரம ச்லாக்யமாகக் கிளர்ந்த ஞானமும் |
செல்வமும் |
–
|
பக்தியாகிற செல்வமும் |
செறித்திடும் |
–
|
பரிபூர்ணமாக விளையும் |
மறிந்து எழுந்த |
–
|
பரம்பிக்கிளர்ந்த; |
தென் திரையுள் |
–
|
தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலிலே |
மன்னு |
–
|
நிதய்வாஸம் செய்தருள்கின்ற |
மாலை |
–
|
ஸர்வேச்வரனை |
வாழ்தினால் |
–
|
ஸங்கீரத்தகம் பண்ணினால் |
எழுந்த தீவினைகள் |
–
|
ஆத்மஸ்வரூபத்திலே வளர்ந்து கிடக்கிற கொடு வினைகள் |
பற்று அறுதல் |
–
|
வாஸனையும் மிகாதபடி நசித்துப்போதல் |
பன்மையே |
–
|
இயற்கையேயாம் (அநாயானமாக நசிக்குமென்கை.) |
அறிந்து அறிந்து
உபாயமும் உபேயமும் என்று தெரிந்து கொண்டு
வாமனன் அடி இணை வணங்கினால் செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் மறிந்து எழுந்த தெள் திரையுள்
பரம்பி கிளர்ந்த தெளிந்த அலைகளை உடைய திருப் பாற் கடலிலே
மன்னு மாலை வாழ்த்தினால்
நித்ய வாசம் செய்யும் சர்வேஸ்வரனை சங்கீர்த்தனம் பண்ணினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –
நசிவித்து இயற்க்கை-அவனது திரு உள்ளம் பற்றுதல் தான் மோஷ சாதனம்
திரு நாமங்களைச் சொன்னால் பாபங்கள் தானாகவே ஒழியும்
பரமபுருஷனுடைய திருவுள்ளம்பற்றல்தானே மோக்ஷஸாதநமாகில்
முமுக்ஷுலான அதிகாரி செய்ய வேண்டிய சூது ஒன்றுமில்லையோவெனில்;
அவ்வெம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை வணங்குதலும்
அவனது திருப்புகழ்களை வாயார வாழ்த்துதலும் இவனுக்குக் காலக்ஷேபமாகக் கடவது;
இவற்றால் இவனுடைய பாவங்களை தொலைந்து நல்ல ஞானபக்திகள் தழைக்கும் என்கிறார்.
எம்பெருமான் தன்னுடமையைப் பெறுவதற்குத் தானே யாசகனாய் நிற்பவன் என்பதையும்,
அடியாரை ஆட்கொள்ளுமிடத்தில் வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல்
எல்லார் தலையிலும் ஒரு ஸமமாகத் திருவடிகளை வைத்து ஆட்படுத்திக் கொள்பவன் என்பதையும்
சாஸ்த்ர ச்ரவணைத்தாலும் ஆசார்ய உபதேசத்தாலும் நன்கு தெரிந்துகொண்டு அத்திருவடிகளை வணங்கினால்
ஞான ஸம்பத்தும் பக்தி ஸம்பத்தும் குறைவின்றி உண்டாகும்;
திருப்பாற் கடலிலே துயில்கின்ற அப்பெருமானுடைய திருநாமங்களை வாயாலே சொன்னால்
அவனைப் பெறுதற்கு ப்ரதிபந்தகங்களாயுள்ள பாவங்கள் அவலீலையாக அற்றொழியும் என்கை.
பான்மை- இயற்கை;
பாவங்களை ப்ரயானப்பட்டுப் போக்கினதுபோலாகாமே தன்னடையே போனதாகப் போமென்றபடி.
——————————
ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-
பதவுரை
ஒன்றி நின்று |
–
|
மனம் சலியாமல் நிலைத்து நின்ற |
நல் தவம் |
–
|
விலக்ஷணமான தபஸ்ஸை (அதாவது கர்மயோகத்தை) |
ஊழி ஊழிதோறு எலாம் செய்து |
–
|
பலபல ஜந்மபரம்பரைகளிலே அநுஷ்டித்து |
அவன் குணங்கள் |
–
|
அப்பெருமானுடைய திருக்குணங்களை |
நின்று நின்று உள்ளி |
–
|
ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுஸந்தித்து |
உள்ளம் தூயர் ஆய் |
–
|
கல்மஷமற்ற நெஞ்சை யுடையராய் |
சென்று சென்று |
–
|
மேல்மேல் படிகளிலே ஏறி (ச்ரவணம் மநநம் நிதித்யாஸதம் என்கிற பர்வங்களிற் சென்று) |
உம்பர் உம்பர் உம்பர் ஆய் அன்றி தேவதேவர் |
–
|
பரபக்தி யுக்தராய் பரஜ்ஞாந யுத்தராய் பரம பக்தியுந்தராய் இப்படி யெல்லா மானால்லது |
தேவதேவர் |
–
|
(மற்றபடி) தேவதேவராயிருந்தாலும் |
எங்கள் செம் கண் மாலை |
–
|
செந்தாமரைக் கண்ணாலே எம்மை விஷயீகரித்தருளும் பெருமானை |
யாவர் காணவல்லர் |
–
|
யார் காணக்கூடியவர்கள். |
ஒன்றி நின்று
மனம் சலியாமல் நிலைத்து நின்று
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி-சாத்மிக்க சாத்மிக்க அனுசந்தித்து
நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம் நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று -ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் போன்ற படிகளில் ஏறி-
உம்பர் உம்பர் உம்பராய் அன்றி-பர பக்தி பர ஞான பரம பக்த உக்தராய் அல்லது
தேவ தேவர் -மற்றபடி தேவதேவராய் இருந்தாலும்
எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே
எங்கள் பெருமான் -எங்கள் ஈசன் என்று சொல்லாமல் எங்கள் செங்கண் மால் என்கிறார்
ருசி பிறந்து பரம பக்தி பர்யந்தமாக -அவனது கடாஷத்தால் தான் சித்தி கிட்டும் –
செந்தாமரைக் கண்ணால் விஷயீ கரித்து அருளினால் தானே சித்தி கிட்டும்-
விசாலமான விஷயாந்தர வழிகளிலே ஓடக்கடவதான நெஞ்சை அவற்றில் நின்றும் வருந்தி மீட்டுப்
பகவத் விஷயத்திலே நிலை நிறுத்தி நெடுங்காலம் கர்மயோகத்தை யநுஷ்டித்து
அவ்வெம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை க்ரமேண அநுஸந்தித்து,
ஆகவிப்படி கர்மயோகா துஷ்டாகத்தாலும்
குணாநுஸந்தாகதத்யாலும்
மனம் பரிசுத்தமாகப் பெற்று, க்ரமத்தில் அநவரதபாவகையனவிற்சென்று பரமபக்தி தலையெடுத்துப்
பரமபதத்திற்சென்று சரணாகதவத்ஸலனான புண்டரீகாக்ஷனை ஸேவிக்கப்பெறலா மத்தனையொழிய
வேறு எவ்வழியாலே அவனை ஸாக்ஷாத்கரிக்க முடியும்? என்கிறார்.
எங்கள் பெருமானை யென்றாவது,
எங்களீசனை யென்றாவது அருளிச்செய்யாது
“எங்கள் செங்கண்மாலை” என்றருளிச் செய்த தன் உட்கருத்தைப் பெரிய வாச்சான் பிள்ளை யருளிச்செய்கிறார். காண்மின்-
ஜிதந்தே புண்டரீகாஷ–என்கிறபடியே ருசியே தொடங்கிப் பரமபக்தி பர்யந்தமாக
அத்தலையில் விசேஷ கடாக்ஷத்தாலே ஸித்தி யென்று தோற்றுகைக்காகச் செங்கண்மால் என்றது என்று.
————————————
புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே –76-
பதவுரை
புல் |
–
|
க்ஷுத்ரங்களான |
புலன் வழி |
–
|
சப்தாதிவிஷயங்களிலே இந்திரியங்கள் ஓடுவதற்குரிய வழியை |
அடைத்து |
–
|
அடைத்து |
அரக்கு இலச்சினை செய்து |
–
|
(விஷயமார்ந்த த்வாரத்திலே) அரக்கு முத்திரையிட்டு |
நன் புலன் வழி திறந்து |
–
|
ஸத்விஷய மார்க்கத்தைத் திறந்து விட்டு |
ஞானம் |
–
|
ஞானமாகிய |
நல்சுடர் |
–
|
விலக்ஷமான ப்ரபையை |
கொளீ இ |
–
|
கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து) |
என்பு இல் |
–
|
எலும்பு வீடாகிய சரீரம் |
என்கி |
–
|
சிதிலமாகி |
நெஞ்சு உருகி |
–
|
நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்) |
உள் கனிந்து |
–
|
நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்) |
உன் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி |
–
|
பரிபக்குவமாய்க் கிளர்ந்த யிலக்ஷணமானதொரு ப்ரேம முண்டானலல்லது |
ஆழியானை |
–
|
திருவாழியைக் கையிலேந்தின பெருமானை |
யாவர் காண வல்லர் ?.
|
புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
விஷய மார்க்க த்வாரத்தில் அரக்கு முத்தரை இட்டு அடைத்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
ஞானமாகிய விலஷணமான பிரபையைக் கொளுத்தி
என்பில் எள்கி நெஞ்சு உருகி
எலும்பு வீடாகிய சரீரம் சிதிலமாக்கி
யுள் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே
எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
விஷயாந்தரங்களில் அவகாகிப்பதற்கு அடியான பாபங்களையும் -அவன் பக்கல் வைமுக்யமாக இருக்கைக்கு
அடியான பாபங்களையும் திருக்கையில் உள்ள திருவாழி கொண்டு வெட்டி
திருக்கையும் திருவாழி யான சேர்த்தி அழகைக் காட்டி தன் பக்கல் பக்தி -காதலை வளர்க்குமவன் அன்றோ –
கடல் நிற கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ இங்கும் எள்கி என்கிறார் இதிலும்
க்ஷûத்ர விஷயங்களைப் பற்றியோடுகிற இந்திரியங்களின் ஓட்டத்தைத் தடுத்து
அவ்விஷயமார்க்கமே புல்மூடிப் போம்படி அடைத்து அரக்கு முத்திரையிட்டு வானனையும் மறுவலிடாதபடி பண்ணி,
விலக்ஷண விஷயத்தில் இந்த்ரியங்களைப் பரவவிட்டு விலக்ஷணமான ஜ்ஞாநப்ரபையை நன்றாக விளக்கி
எம்பெருமானுடைய ஸ்வரூபரூப குணவிபூதிகளை ஸ்வரூபரூப குணவிபூதிகளை ஸ்வஜ்ஞாநத்துக்கு விஷயமாக்கி,
அஸ்திமயமான சரீரம் சிதிலமாய் ஹ்ருதயம் உருகிக் கனிந்த ப்ரேம முண்டானவல்லது
சக்ரபாணியான எம்பெருமானை யார் ஸாக்ஷாத்கரிக்கவல்லர்?-
“எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்” என்கிறபடியே-
விஷயாந்தரங்களிலே அவகாஹிப்பதற்கு அடியான பாபத்தையும்
எம்பெருமான் திறத்தில் வைமுக்கியத்துடனிருக்கைக்கு ஹேதுவான பாபத்தையும்
கையில் திருவாழியாலே இரு துண்டமாக வெட்டி, கையுந் திருவாழியுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காட்டித்
தன் விஷயமான பக்தியை வளரச்செய்த அப்பெருமானை நான் கண்டாப்போனே வேறுயார் காணவல்லாரென்றவாறு.
புன்புலவழிகளில் அரக்கிலக்கினை (ஸீல்) வைக்க முடியுமோ வென்னில்;
மறுபடியும் அந்த வழி காணவொண்ணாதபடி நன்றாக அதனை மறந்து என்றபடி,
என்பிலென்கி = என்பு- எலும்பு; எலும்புகட்கு, இல்- இருப்பிடம், சரீரம் ;
அது என்குமோ வெனில்
“கடல்நிறக்கடவுளெந்தையரவணைத்துயிலுமா கண்டு, உடலெனக் குருகுமானோ” என்றாரே தொண்டரடிப் பொடியாழ்வார்.
—————————
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-
பதவுரை
எட்டும் எட்டும் எட்டும் ஆய் |
–
|
இருபத்தினான்கு தத்துவங்களுக்கு நிர்வாஹகனாயும் |
ஓர் ஏழும் ஏழும் ஆய் |
–
|
ஸப்தத்வீபங்களுக்கும் ஸ்பத குலபர்வதங்களுக்கும் ஸ்பத ஸாகரங்களுக்கும் நிர்வாஹகனாவும் |
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற |
–
|
த்வாரதசாதித்யர்களுக்கு அந்த ராத்மாவாயுமிருக்கிற |
ஆதி தேவனை |
–
|
பரமபுருஷனை |
எட்டியைப் போதமோடு இரஞ்சி நின்று |
–
|
ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணி |
அவள் பெயர் எட்டு எழுத்தும் |
–
|
அவ்வெம்பெருமானுக்கு வாசகமான திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை |
ஓதுவார்கள் |
–
|
அநுஸந்திக்குமவர்கள் |
வானம் ஆன வல்லர் |
–
|
பரமபதத்தை ஆளவல்லவர்களாவர் |
எட்டும் எட்டும் எட்டுமாய்
24 தத்துவங்களுக்கும் நிர்வாஹகனாய்
ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
7 தீவுகள் 7 மலைகள் 7 கடல்கள் இவற்றுக்கும் நிர்வாஹகனாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி
12 ஆதித்யர்களுக்கும் அந்தராத்மாகவும்
நின்ற வாதி தேவனை எட்டினாய பேதமோடு இறைஞ்சி
இப்படி சர்வ ஜகத் காரண பூதனான சாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணி
நின்றவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே
எட்டும் எட்டும் எட்டுமாய் = மூவெட்டு இருபத்தினான்கு;
கருமேந்திரியங்கள் ஐந்து; ஞானேந்திரியங்கள் ஐந்து; சப்தாதி விஷயங்கள் ஐந்து; நிலம் நீர் முதலிய பூதங்கள் ஐந்து;
மநஸ் , மஹாந், அஹங்காரம், ப்ரக்ருதி – ஆக இருபத்தினான்கு தத்துவங்களுண்டிறே;
அந்தத் துவங்களுக்கு அந்தராத்மாவாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.
(ஓர் ஏழும் இத்யாதி. “ஜம்பூத்வீபம் முதலிய ஏழு தீவுகளென்ன, ஏழு குலபர்வதங்களென்ன, ஏழு கடல்களென்ன
இவற்றுக்கு நிர்வாஹகனென்கிறது.
எட்டும் மூன்றும் ஒன்றும் கூடினால் பன்னிரண்டாம்; த்வாதசாதித்யர்களுக்கு அந்தர்யாமியானவ னென்றபடி,
இப்படிப்பட்ட ஸர்வ ஜகத் காரண பூதனான எம்பெருமானை அஷ்டாங்க ப்ரமணாமபூர்வமாக ஆச்ரயித்துத்
திருவஷ்டாக்ஷரத்தை ஓதுமவர்கள் பரமபதத்தை ஆளப்பெறுவார்களென்கிறார்.
எட்டினாய பேதமோடிறைஞ்சுகையாவது- “*** *** ***” என்றபடி ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணுகை.
பேதம் – *** மென்ற வடசொல் விகாரம். பேதமாவது ப்ரகாரம்.
————————
சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78-
பதவுரை
நீர் |
–
|
திருப்பாற்கடலிலே |
அரா அணை |
–
|
திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே |
கிடந்த |
–
|
கண் வளர்ந்தருள்கிற |
நின்மலன் |
–
|
அகில ஹேயப்ரத்யநீகனான எம்பெருமானுடைய |
நலம் கழல் |
–
|
நன்மைபொருந்திய திருவடிகளை |
ஆர்வமோடு |
–
|
அன்புடன் |
இறைஞ்சி நின்று |
–
|
அச்ரயித்து |
சோர்வு இல்லாத காதலால் |
–
|
விஷயாந்தரப்பற்றினால் தளராத காதலோடு |
துடக்கு அது மனத்தர் ஆய் |
–
|
விச்சேதமில்லாமல் ஏகாந்ரமான மனமுடையவர்களாய் |
அவன் பெயர் எட்டு எழுத்தும்
|
வாரம் ஆக |
–
|
இதுவே நமக்குத் தஞ்சம் என்கிற அத்யவஸாயத்தோடு |
ஓதுவார்கள் |
–
|
அநுஸந்திக்குமவர்கள் |
வானம் ஆன |
–
|
பரமபதத்தை ஆள்வதற்கு |
வல்லர் |
–
|
ஸமர்த்தராவர். |
சோர்விலாத காதலால்
விஷயாந்தர பற்றினால் தளராத காதலோடு-பகவத் விஷயத்திலே ஏகாக்ர மான காதல்-
தொடக்கறா மனத்தராய்
விச்சேதம் இல்லாமல் ஏகா க்ரமமான மனம் உடையவராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே
இதுவே தஞ்சமாக -பகவத் விஷயம் ஒன்றிலேயே காதல் சோர்வில்லாத காதல் ஆகும் –
ஷீரா சாகர சேஷசாயியினுடைய திருவடிகளை போக்யதா புத்தியுடன் ஆஸ்ரயித்து
திரு அஷ்டாக்ஷரத்தை அன்புடன் அதிகரிக்க வல்லவர்கள் பரமபதத்துக்கு நிர்வாஹகராகப் பெறுவார்கள் என்றபடி –
ஒருவன் பகவத்விஷயத்தில் மிக்க ப்ராண்யமுடையனாயிருந்தாலும்
அவனுக்கு விஷ்யாந்தரப்பற்றும் சிறிது கிடக்குமாகில் அதுவானது
பகவத் விஷயப்ரவண்யத்தை விரைவில் குலைத்துவிடும்.
அங்ஙனல்லாமல் பகவத்விஷயமொன்றிலேயே ஏகாக்ரமான காலானது சோர்விலாத காதலெனப்படும்.
அப்படிப்பட்ட ப்ரேமத்தினால் பகவதநுஸந்தாநம் மாறாத நெஞ்சையுடையராய்க் கொண்டு,
க்ஷீரஸாகரசேஷசாயியினுடைய திருவடிகளை போக்யதாபுத்தியோடே ஆச்ரயித்துத்
திருவஷ்டாக்ஷாரத்தை அன்புடன் அதிகரிக்கவல்லவர்கள் பரமபதத்துக்கு நிர்வாஹகராகப் பெறுவார்கள்.
—————————
பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே –-79-
பதவுரை
பத்தினோடு பத்தும் ஆய் |
–
|
பத்து திக்குகளுக்கும் பத்து திக்பாலகர்களுக்கும் அந்தர்யா மியாய் |
ஓர் ஏழினோடு ஓர் ஒன்பது ஆய் |
–
|
ஸப்தஸ்வரங்களென்ன நவநாட்ய ரஸங்களென்ன இவற்றுக்குப் ப்ரவர்த்தகனாய் |
பத்து நூல் திசை கண் நின்ற |
–
|
பதினான்கு வகைப்பட்ட |
நாடு |
–
|
லோகங்களிலுள்ளவர்கள் |
பெற்ற |
–
|
பெறக்கூடிய |
நன்மை ஆய் |
–
|
நன்மைக்காக |
பத்தின் ஆய தோற்றமோடு |
–
|
தசாவதாரங்களோடு (ஆவிர்ப்பவித்து) |
ஆற்றல்மிக்க |
–
|
பொறுமையினாலே பூர்ணனான |
ஓர் ஆதி பால் |
–
|
எம்பெருமான் விஷயத்திலே |
பக்தர் ஆமவர்க்கு அலாது |
–
|
க்தியுடையவராயிருப்பவர்களுக்கன்றி (மற்றையோர்க்கு) |
மூர்த்தி |
–
|
மோக்ஷபுருஷார்த்தம் |
முற்றல் ஆகுமே |
–
|
பரிபக்வமாகுமோ? |
பத்தினோடு பத்துமாய்
பத்து திக்குகளுக்கும் பத்து திக் பாலர்களுக்கும் அந்தர்யாமியாய்
ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
சப்த ஸ்வரங்கள் நவ நாட்டிய ரசங்கள் இவற்றுக்கு பிரவர்த்தனாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
14 வகைப் பட்ட லோகங்களில் உள்ளவர்க்களின் நன்மைக்காக
பத்தினாய தோற்றமொடு
தசாதவரங்களோடு ஆவிர்பவித்து
ஓர் ஆற்றல் மிக்க வாதி பால் பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே
ஆற்றலாவது பொறுமை -சம்சாரிகள் பலவகைகளில் திரஸ்காரங்கள் பண்ணினாலும் அவற்றைக் கணிசியாது
பொறுமை காட்டுபவன்-
பத்து திக்குகளுக்கும் அவற்றுக்கு அத்யக்ஷர்களான தேவர்கள் பதின்மர்க்கும் நிர்வாஹகனாய்,
ஸப்தஸ்வரங்களுக்கும் ஒன்பது நாட்டிய ரஸங்களுக்கும் நிர்வாஹகனாய்,
பதினான்கு வகைப்பட்ட உலகங்களி லுள்ளார்க்கு போக்யனாகைக்காக தசாவதாரங்கள் செய்தருளி
அவ்வவதாரங்களில் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவங்களையெல்லாம் பொறுத்து ரக்ஷிக்குமவனான எம்பெருமான் திறத்தில் பக்தியுள்ளவர்களாயிருப்பார்க்கல்லது மோக்ஷபலம் பக்குவமாகைக்கு வழியில்லை.
பதினான்றிசைக் கண்நின்ற = பத்தோடு கூடிய நான்கு – பதினான்கு; திசை – ப்ரகாரம்;
பதினான்கு வகையிலேயிருக்கிற நாடுகளாவன – சதுர்த்தச புவனங்கள். ஆகுபெயரால், நாட்டிலுள்ளவர்களெனப் பொருள்படும்.
அவர்கள் பெறும் ப்ரயோஜநமாகைக்காக- (அதாவது) பயன் பெற்றோமென்று களித்து அநுபவிப்பதற்காக;
மீனோடாமை கேழலரி குறளாய் மூன்று பிராமனாய்த் தானாய்ப் பின்னுமிராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியுமானான்” என்கிறபடியே
தசாவதாரங்கள் செய்தருளின ஸர்வ ஜகத்தாரணபூதனனான எம்பெருமான் திறத்திலே
நன்றியறிவுடையார்க்கன்றி மற்றையோர்க்கு மோக்ஷபலன் பக்குவமாக வழியில்லை.
ஆற்றல் மிக்க – ஆற்றலாவது பொறுமை; ****** என்றபடி ஸம்ஸாரிகள் பலவகைகளிலே திரஸ்காரங்கள் பண்ணினாலும்
அவற்றைக் கணிசியாது பொறுமை பாராட்டுபவனென்கை.
——————————
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே –80-
பதவுரை
வாசி ஆகி |
–
|
(கோவேறு) கழுதையின் வடிவங்கொண்டு |
நேசம் இன்றி வந்து |
–
|
பக்தியற்றவனாய் வந்து |
எதிந்த |
–
|
எதிரிட்ட |
தேனுகன் |
–
|
தேநுகாஸுரனை |
நாசம் ஆகி நான் உலப்ப |
–
|
ஆயுள் ஸுமாண்டு அழிந்து போம்படியாக |
மேல் நிமிர்ந்த தோளின் |
–
|
உயர்த்தூக்கப்பட்ட தோளாலே |
நன்மை சேர் பணங்கனிக்கு வீசி |
–
|
அழகிய பணம்பழங்களின் மேலே தூக்கியெறிந்து |
இல்லை ஆக்கினாய் கழற்கு |
–
|
(அவ்வசுரனை) ஒழித்தருளின தேவரீருடைய திருவடிகளுக்கு |
ஆசை ஆமவர்க்கு அலால் |
–
|
நேசிக்குவமர்களுக்கன்றி மற்றையோர்க்கு |
அமரர் ஆகல் |
–
|
நித்யஸூரிகளோடு ஒப்படைத்தல் |
ஆகுமே |
–
|
கூடுமோ? |
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
கோவேரி கழுதை வடிவம் கொண்டு -பக்தி அற்றவனாய் வந்த தேனுகாசுரனை
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
ஆயுசு மாண்டு அழிந்து போகும் படி -அழகிய பனம் பழங்களின் மேலே தூக்கி எறிந்து
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
உயரத் தூக்கப் பட்ட தோள்களாலே அந்த அசுரனை ஒழித்து அருளின திருவடிகளுக்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே-
ஆஸ்ரித விரோதி நிவர்த்தகனான எம்பெருமான் திருவடிகளில் ஆசை உடையார்க்கு அன்றி
மற்றையோர்க்கு நித்ய ஸூரி போக்யத்வம் கிட்டாது என்றவாறு-
கீழ்ப்பாட்டில் “பத்தினாபதோற்றமோடு” என்று ப்ரஸ்தாவிக்கப்பட்ட தசராவதாரங்களுள்
ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தை அநுஸந்தித்து அவ்வவதார சேஷ்டிதங்களுன் ஒன்றான தேநுகாஸுர நிரஸந விருத்தாந்தத்தைப் பேசி,
இப்படிப்பட்ட ஆச்ரித விரோதி நிவாதகனான எம்பெருமான் திருவடிகளிலே ஆசையுடையார்க்கன்றி
மற்றையோர்க்கு நித்யஸூரிபோகம் கிடைக்கமாட்டாதென்கிறார்.
—————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்