Archive for the ‘தனி ஸ்லோக வியாக்யானம்’ Category

ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-பராசரம் முநிவரம்-1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

February 17, 2015

அவதாரிகை –
ச்ரோதாக்களுக்கு இப்பிரபந்தம் ஆப்த தமம் என்று
இதிலே புபுத்சை பிறக்கைக்காக
விலஷணனான ஆச்சார்யன் பக்கலிலே
புபுத்ஸூவாய்
அபி ஜாதனான சிஷ்யன் அவசரத்திலே பிரச்னம் பண்ணின படியைச் சொல்லுகிறது –

பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்
மைத்ரேய பரிபப்ரச்ச ப்ரணிபத்யாபி வாத்ய ச –1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்   -முனிவர் தலைவராய் -காலைக் கடன்களை முடித்தவராய் யுள்ள ஸ்ரீ பராசர மகரிஷியை
மைத்ரேய -ப்ரணிபத் யாபிவாத்ய ச –பரிபப்ரச்ச-ஸ்ரீ மைத்திரேயர் என்னும்  ரிஷி வணங்கி -அபிவாதனம் செய்து -நன்றாகக் கேட்டார் –

1-பராசரம்-
சஹோவாச வியாச பாராசர்ய -தை ஆர -1-9-என்று வேதாச்சார்யனான ஸ்ரீ வேத வியாச பகவானுக்கு இவனோட்டை சம்பந்தத்தாலே
ஆப்தி சொல்ல வேண்டும்படி சுருதியிலே ஆப்தனாக சித்தனானவனை
2- பராசரம் –
வைதிக பஷத்துக்கு சத்ருக்களான பாஹ்ய குத்ருஷ்டிகளை பிரமாண தர்க்கங்கள் ஆகிற சரங்களாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம் –
அதவா -3- பராசரம் –
ஆந்தர சத்ருக்களான ராகத் வேஷாதிகளை சம தமாதிகளாலே ஹிம்சியா நின்றான் என்றாக வுமாம்-

முநிவரம் –
பரமாத்ம விஷயத்தில்  மனன சீலர் ஆனவர்களில் உத்க்ருஷ்டனானவனை
இத்தால் ஜ்ஞான சம்ருத்தி சொல்லுகிறது –

1-க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்   -என்று
இவ் உபாசனத்துக்கு அங்கமாக சாஸ்திர சோதிதமாய் ஜ்ஞான பூர்வகமான அனுஷ்டானமும் –
அனுஷ்டிதமான சமயத்திலே -2-1-க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்  -என்கையாலே சத்வோத்தர காலத்திலே என்கை –
இத்தாலே வசிஷ்டன் அந்ய பரனாய் இருக்க த்ரி சங்கு சென்று கேட்டால் போலே அன்றிக்கே
ஆச்சார்யன் அநந்ய பரனாய் இருக்கிற சமயத்திலே கேட்டான் -என்கை –
பரபஷ பிரதிஷேபம் பண்ணுகிற போது அவசரம் அன்று
உபாசன காலமும் அவசரம் அன்று
ததங்கமான அனுஷ்டான சமயமும் அவசரம் அன்று
ஆகையாலே க்ருத க்ருத்யனாய்த் தன்னுடைய ஜ்ஞானத்துக்கு வீடு தேட்டமான அவசரத்தே கேட்டான் என்கை –

3-மைத்ரேய –
யாஜ்ஞ வல்க்ய பகவானை  இடங்களிலே பிரச்னம் பண்ணிப் போரும் ப்ரஹ்ம விதுஷியான மைத்ரி ஸூதனாகையாலே –
அவசரத்திலே பிரச்னம் பண்ணுகை தன்னைத் தோன்றி வந்ததன்று -தன்னுடைய பிறப்பால் வந்தது -என்கை –
அன்றியிலே
கேகய மித்ரயு பிரளய -பாணி நி ஸூ த்த்ரம் -7-3-2- என்றபடி இய என்னும் பதம் -நிஷ் பன்னமாகக் கிடக்கிறதாகவுமாம்   -மித்ரயு -என்பவரின் பிள்ளை என்றும் கொள்ளலாம்-

1-பரிபப்ரச்ச-
ஒரு வார்த்தை சொல்லுகை அபேஷிதமான போது கண்ணுக்கு எட்டாதபடி பின்னே இருக்கவும் கடவது அன்று
கண் படும்படி பார்ச்வத்திலே இருக்கை சிஷ்யனுக்கு பிராப்தம்
அந்த ஸ்தானத்திலே நின்று கேட்டான் -என்கை –
2- பரிபப்ரச்ச –
நினைத்த அர்த்தத்திலே ஆச்சார்யன் உதாரனாம்படி பாடே அத்தைக் கேட்கை-
அதாகிறது
யன்மயம் ச ஜகத் ப்ரஹ்மன்-யதைஸ் சைதச்  சராசரம்
லீ ந மாஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ர ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-5-என்று
சாமான்யத்தில் பிரச்னமாய்
விஷ்ணோ சகாஸாத் உத்பூதம் -ஜகத் தத்ரைவ ச ஸ்திதம்
ஸ்திதி சம்யம கர்த்தா அசௌ ஜகதோ அஸ்ய ஜகச்ச ஸ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-31-என்று
விசேஷத்திலே உத்தரமாம்படி கேட்டான் -என்கை –
பரிபப்ரச்ச –
அன்றியிலே பரி -என்கிறது சாகல்யா வசனமாய் ஜ்ஞா தவ்யங்களை யடையக் கேட்டான் என்றாக வுமாம் –

ப்ரணிபத்ய-
பதனம் ஆகிறது -சர்வ அவயவங்களும் தரையிலே பொருந்த விழுகை –
நிபத நமாகிறது -ஆந்தரமான அபிமானமும் பக்னமாய் விழுகை
ப்ரணி பதநாமிகிறது -இது தானே விஹிதம் என்று இருக்கை அன்றிக்கே ப்ரீதி பூர்வகமாக இருக்கை –
அபிவாத்ய –
ஸ்வ நாமத்தை ஆவிஷ்கரித்துக் கொண்டு பாதோப சங்க்ரஹனம் பண்ணுகை –

ச —
ஆச்சார்யன் பக்கல் அனுஷ்டிக்கக் கடவ விநயங்களை சமுச்சயிக்கிறது –

—————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கண்ணபுர நாயகி சமேத ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-சர்வ லோகேஸ்வர-யுத்த -114-17 /பாபாநாம் வா ஸூபாநாம் வா -116-44 /ஸ்நேஹோ மே பரமோ ராஜன் -உத்தர -40-16–

February 16, 2015

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகாநாம் ஹிதகாம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–

—————————————————————————————————————————————————————-

அவதாரிகை –
இப்படி பரிவார மனிதரும் தாமும் பிறந்தது ஏதுக்காக-என்னில் –
மனிசர்க்கா நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து இருக்கைக்காக -திருவாய் -7-5-2-என்கிறது –

1-சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம் ஹிதகாம்யயா-
இத்தை உடையராகையாலும் -உடைமையை இவன் நலிந்த படியாலும் -லோக ஹிதமாக கொன்றார் –
2- சர்வ லோகேஸ்வர –
பதிம் விச்வச்ய -என்றும் -சர்வச்ய வசீ சர்வஸ்யேசாந-ப்ருஹ -6-4-22-என்றும்
பொழில் ஏழும்காவல் பூண்ட புகழ் ஆனாய் -திரு நெடு -10-என்றும் சொல்லுகிறபடியே
ஒரு ஊருக்கு அன்று -ஒரு நாட்டுக்கு அன்று -ஒரு மண்டலத்துக்கு அன்று -ப்ரஹ்மாண்ட பரிந்த ஜகஜ் ஜென்மாதி காரணம் ஆனவன் –
3- சர்வ லோகேஸ்வர –
சதுஸ் சமுத்திர முத்ரிதமான பூ மண்டலத்துக்கு மாத்ரம் அன்றியிலே
பூர்ப் புவஸ் ஸூவர் மஹர் ஜனஸ் தப சத்யம் -நாராயண வல்லி -என்கிற லோகங்களோடு
ஹிரண்மயே பரே லோகே -முண்டக -2-2-10- என்கிற லோகத்தோடு வாசியற எல்லா வுலகுமுடைய எம்பெருமான் -என்கிறது –
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்யாபத் விமோசன மஹிஷ்ட பல ப்ரதாநை -ஸ்தோத்ர ரத்னம் -13- என்று
ப்ரஹ்மாதிகளைப் போலே ஒருவன் காலிலே குனிந்து அவன் ஆபத்துக்களைப் போக்கி அவன் அபீஷ்டங்களைக் கொடுக்க  வந்த பதமோ -என்னில்
4-சாஷாத் சர்வ லோகேஸ்வர –
ய ஈசே அஸ்யஜகதோ நித்யமேவ நான்யோ  ஹேதுர் வித்யத ஈசநாய-ஸ்வே -6-17- என்றும் –
ஸ்வா பாவி காநவதிகாதி சயே சித்ருத்வம் -ஸ்தோத்ர ரத்னம் -10- என்றும்
ஒரு காரண ஜன்யம் அன்றிக்கே அவ்யவ ஹிதமாக ச்வதஸ் சித்தமான  சர்வாதிபத்யம் உடையவன் –
5- சாஷாத் சர்வ லோகேஸ்வர –
ஒருவன் காணிப் பற்றிலே பலர் குடியேறி அகம் எடுத்திருந்து இன்னாரகம் -என்று ஆண்டு  போந்தார்களே யாகிலும்
ஸ்வா ம்யம் காணிக்காரனதாய் இருக்குமா போலே அவ்வவ  லோகங்களை இந்த்ராதிகள்
ஆண்டு போந்தார்களே யாகிலும் அவ்யவஹிதமான ச்வத ஸ்வா ம்யம் எம்பெருமானுக்காய் இருக்கை-
6- சர்வ லோகேஸ்வர சாஷாத் –
தம்முடைய ஈஸ்வர பாவத்திலே நின்று
ந சந்த்ருசே திஷ்டதி ரூபம் அஸ்ய ந சஷூஷா பஸ்யதி கஸ்ஸ நை நம் -என்றும்
கட்கிலீ -திருவாய் -7-2-3- என்றும்-
ஒருவருக்கும் தோற்றாதபடி நிற்கை அன்றிக்கே
நந்தாமி பஸ்ய ந்நபி தர்சநே பவாமி த்ருஷ்ட்வா ச புநர் யுவேவ -அயோத்ய -12-104- என்றும்
ஸோ மமிவோத் யந்தம் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண-ஆரண்ய -1-11-என்றும்
ராகவஸ்ஸ மயா த்ருஷ்ட -சுந்தர -27-12-என்றும்
ராஜாக்களோடு -ருஷிகளோடு -ராஷசிகளோடு -வாசி அறக் கண்ணிட்டுக் காணலாம் படி நின்று -என்றுமாம் –
-அன்றியிலே -7- சாஷாத் -என்று -சாஷாத் பூத்வா ஹதவான் -என்று அந்தர்யாமி போலே கண்ணுக்குத் தோற்றாதபடி நிற்கை அன்றிக்கே
பௌமரோடு திவ்யரோடு  வாசி அறக் காட்சி கண்டு நின்று
நாத தாநம் சரான் கோரான் ந முஞ்சந்தம் சரோத்தமான் -ஆரண்ய -25-39- என்றும்
தொடுத்ததும் விட்டதும் தெரியாதே ஓர் அம்பிலே பல அம்புகள் புறப்பட்டால் போலே
வளைந்த வில்லும் தாரளமான அம்பும் இருக்கும் படி என்-என்று கைவாரம் கொள்ளும்படியாக-எதிரிகளும் அஞ்சலி பண்ணும்படியே- பிரத்யஷராயே நின்றார் -என்றுமாம்
இப்படி சர்வ லோகங்களுக்கும் ரஷகர் ஆனால் -ச ராஷச பரீவாரம் ஹதவாம்ஸ் த்வாம் -என்று
ஒரு ஜாதியாக நிர்வாஹகனோடு  கிழங்கு எடுப்பப் பெறுமோ -என்னில்
1- லோகாநாம் ஹிதகாம்யயா-
ஸ்வா ர்த்தமாக நலிந்தவர் அல்லர் -பரஹிதமாகச் செய்தார் அத்தனை –
பரித்ராணாய சாது நாம் வி நாசாய ச துஷ்க்ருதாம் -ஸ்ரீ கீதை -4-8- என்று பயிர் செய்வான் ஒருத்தன் களை பறிக்குமா போலே சிஷ்ட பரிபால நார்த்தம் அசிஷ்ட நிக்ரஹம் பண்ணுகை பிராப்தம்  இ றே-
2- சர்வ  லோகேஸ்வர லோகா நாம் ஹித காம்யா த்வாம் ஹதவான் –
எல்லா யுலகுமுடைய எம்பெருமானாய்   இருந்தார் அவர்  –
ப்ரவ்ருத்தம் லோக கண்டகம் -பால -15-20- என்று அவருடைய நாட்டை நலியும் அரக்கனாய் இருந்தாய் நீ –
ஆகையாலே யதா பாராத தண்டா நாம் -ரகுவம்சம் -1-6- என்று குற்றம் செய்கையாலே பொடிந்தார் அத்தனை -என்றுமாம் –
3- சர்வ லோகேஸ்வர –
ஈஸ்வரத்வம் ஆவது -ஈசதே தேவ ஏக -ஸ்வே-1-10- என்றும்
சாஸ்தா ராஜா துராத்மா நாம் -என்றும்
சாஸ்தா விஷ்ணுர சேஷச்ய-என்றும் நியந்த்ருத்வம் இ றே –
அந்த ஸ்வா பாவிக நியந்த்ருத்வம் நிலை நிற்கைக்காகச் செய்தார் என்றுமாம் –
4- சர்வ லோகேஸ்வர ஹித காம்யயா-
ராஜா நாம் சர்வ பூதா நாம் -என்றும்
ராஜா த்வசாச நாத்பாபம் ததவாப் நோதி கில்பிஷம் -என்றும்
ராஜா தண்ட்யாம்ச் சைவாப்ய தண்ட யன் -அயசோ மஹதா நோதி நிரயஞ்சைவ கச்சதி -என்று
குற்றம் செய்தவர்களை தண்டியாத போது பாபம் வரும் –
அது வாராமைக்கு ஸ்வ ஹிதத்துக்காகச் செய்தார் என்றாக வுமாம் –
5- சர்வ லோகேஸ்வர லோகா நாம் ஹித காம்யயா -என்று
தமக்கு ரஷணீயமான லோகத்தில் உள்ளார் -பரிபாலய நோ ராஜன் வத்யமா நான் நிசாசரை -ஆரண்ய -6-19- என்றும்
ராஷசைர் வத்யமா நா நாம் பஹூ நாம் பஹூ தா வ நே -ஆரண்ய 6-16- என்றும்
முறை பட்டவர்களுடைய ரஷண அர்த்தமாக என்றாக வுமாம் –
6- சர்வ லோகேஸ்வர தவ ஹித காம்யயா த்வாம் ஹதவான் -என்றாய் –
தேவா நாம் தா நவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -ஜிதந்தே -2- என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் மூன்றாம் திரு -88- என்றும்
அநு கூலரோடு பிரதிகூலரோடு வாசியற
ச்வத சர்வே ஹ்யாத்மா ந -என்று சம்பந்த விசிஷ்டர் ஆகையால் ரஷிக்க வேணும் என்று –
ராஜபிர் த்ருத தண்டாஸ்து க்ருத்வா பாபா நி மா நவா நிர்மலா ஸ்வர்க்க மா யந்தி -கிஷ்கிந்தா -18-4- என்று
உன்னைத் தண்டித்து ஸூ பனாக்கி -பரிசுத்தனாக்கி -உன்னைக் கைக் கொள்ளுகைக்க்குச் செய்தார் ஆகவுமாம்
7- ஹித காம்யயா –
அவர்களுடைய நன்மைக்கு உறுப்பாக வேணும் என்று
8- லோகா நாம் ஹித காம்யயா –
ஜகதாம் உபகாராய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72- என்றும்
சகலமேதத் சம் ஸ்ரீ தாரத்த சகர்த்த -ஸ்ரீ வராத ராஜ  ஸ்தவம் -63- என்றும்
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்  பிறந்தான் -திரு விருத்தம் -1- என்றும்
இவருடைய வியாபாரம் ஆகில் பரார்த்தமாய் இ றே இருப்பது –
இப்படி   பரார்த்தமாகச் செய்த ஹிதம் தான் ஏது என்னில் –
1-ஸ ராஷச பரீவாரம் ஹத வாம்ஸ் த்வாம் —
பாதகனான உன்னையும் உனக்குத் துணையான பரிகாரத்தையும் கொன்றார் –
2- ஸ  ராஷச பரீவாரம் –
பொல்லா வரக்கரைக் கிள்ளிக் களைந்தானை -என்கிறபடியே நிதான ஜ்ஞனான பிஷக்கு தோஷம் உள்ள இடத்திலே குட்டமிட்டுச் சிகித்சிக்குமா போலே
நல்லவரக்கர் இருக்க துஷ்ட ராஷசரையே நலிந்தார் –
3- ஸ ராஷச பரீவாரம் –
தனித்தால் இத்தனை பாதகனாகான் இ றே
இப்படி கருத் துணையாக்கி இ றே இப்படி கை விஞ்சிற்று
3- ஸ ராஷச பரீவாரம் –
பாதகன் ஆனவன்றும் கூட்டாய் -பாத்தின் ஆனவன்றும் கூட்டாய் ஆயிற்று –
4- ஸ ராஷச பரீவாரம் –
சர்ப்ப ஜாதிரியம் க்ரூரா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-71-என்றும்
அலம்பா  வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்து -பெரியாழ்வார் -4-2-1-என்றும்
ச்வத ப்ரயுக்த பாதகத்வம் உடைய ஜாதி யாகையாலே நிரவேஷம் ஆக்கினார்
5- ஸ ராஷச பரீவாரம் –
இவன் பட்டான் என்றால் நம் அரசனைக் கொன்றார் என்று பறை கொட்டி முழக்கிப் பின்பு ஒருத்தன் புறப்படாமே
கீழ்  உலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே  ஆழி விடுத்து  அவருடைய கரு அளித்த அழிப்பன்-பெரியாழ்வார் -4-8-6- என்று
அசுரர்களை அற முடித்த படி –
இப்பரிகரத்து அளவில்  விட்டாரோ என்னில் –
1- த்வாம் –
இதுக்கு எல்லாம் அதிஷ்டாதாவாய் இன்னபடி நலியுங்கோள்-என்று வகை இட்டுக் கொடுத்துப் பகைத் தொடனாய் இருக்கிற உன்னை –
2- த்வாம் –
ஆததாயி நாமா யாந்தம் ஹன்யாதே வாவிசாரயன்-ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதி -5-185—188-என்று தார அபஹாரம் பண்ணி வத்யனான உன்னை –
3- த்வாம் –
தார மாதரம் அன்றிக்கே ராஜ தாரமாய் ராஜத்ரோகியான உன்னை –
4- த்வாம் –
தம்மள வன்றியிலேஅநரண்ய வதத்தாலே குல விரோதியான உன்னை
5- த்வாம் –
அநு ஜ பார்யா அபஹாரம் பண்ணின வாலி பட்டபடி கண்டும் ஆக்ரஜ பார்யா அபஹாரம் பண்ணி விடாதே இருந்த உன்னை
6- த்வாம் –
விபீஷணஸ்து தர்மாத்மா -என்று -பரம தார்மிகனான விபீஷணன் ஹிதம் சொன்னால்
ப்ருச்ச பாலம்பி புத்தி சாலி நம் -என்றும்
யதச்ய கத நாயா சைர் யோஜிதோ அஸி மயா குரோ  தத் ஷமயதாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-11- என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8- என்றும்
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -அடியேன் அறிந்தேனே -திருவாய் -2-3-2- என்றும்
பிரத்யஷத்தில் குரு ஸ்தோத்ரமும் -சரீர அர்த்த ப்ராணாதி நிவேதனமும்  பண்ண ப்ராப்தமாய் இருக்க
அப்ரவீத்  பருஷம்  வாக்கியம்  -16-1- என்றும்
தாச வச்சாவமா நித -17-14- என்றும் பரிபவ பரம்பரைகளைப் பண்ணி
குருத்ரோஹியாய் பந்து பரித்யாகம் பண்ணின உன்னை –
7- த்வாம் –
இந்த்ராதி சங்கர பர்யந்தமாக  தேவதைகளைச் சிறை வைத்தும் -அழித்தும் -உதைத்தும் -தேவதாத் ரோஹாம் பண்ணிப் பல பாக்கான உன்னை –
8-த்வாம் –
மருத்தாதிகள் உடைய யாக பங்கம் பண்ணின உன்னை –
9- த்வாம் –
யஜ்ஞ்  சத்ரு என்று -இது விருது போராய் -பலமச்யாப்ய தர்மஸ்ய ஷிப்ரமேவ பிரபத்ச்யசே-யுத்த -51-30-என்று
அதர்மம் பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்கிற உன்னை –
10-த்வாம் –
மாரீச மால்யவத் கும்பகர்ண விபீஷணாதி பந்து வாக்யங்களைக் கேளாதே விபரீதமே செய்த உன்னை –
11- த்வாம் –
தேவதா திருப்தி பண்ணுகிறேன் என்று உன் தலையை அறுக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த உன்னை –
இவனைச் செய்தது என் என்னில் –
1- ஹதவான் –
கண்ணோட்டம் அறக் கொன்று விட்டார் –
2- ஹதவான் –
யாத்ருசம் குருதே கர்ம தாத்ருசம் பலம் அஸ்நுதே -என்று யதோபா சனம் பலமாய் -பிறரை ஹிம்சித்தால் போலே தானும் ஹிம்சிதன் ஆனான் –
3- ஹதவான் –
ஸ்வர்க்க ஆரோஹண சாதனமான யுத்த யஜ்ஞத்திலே ஸ்வ ஆலம்பனம் பண்ணினார்
4-ஹதவான் –
ஹந ஹிம்சா -இத்யோ-இ றே-அந்தர் பாவ  ணி ச்சாய் ஸ்வர்க்க நரகங்களை கமிப்பித்தார் -என்றாக வுமாம் –
இப்படி விரோதியைப் போக்கிச் செய்தது என் -என்னில் –
1- மஹாத்யுதி –
வடிவில் புகரிலே தொடை கொள்ளலாம் படி இருந்தார்
2- மஹாத்யுதி –
நடுவுண்டான ராஜ்ய பிரம்சவநவாசா திகளால் பிறந்த செருப்பு தீர்ந்து இப்போது லோக கண்டகனான நீ பட்டவாறே பெரிய தேஜச்வியாய் இருந்தார் –
3- மஹாத் யுதி-
அபிஷிச்ய ச லங்கா யா ராஷச  சேந்த்ரம் விபீஷணம் க்ருதக்ருத்யஸ் ததா ராம -பால -1-85-என்று
ஆ ஸ்ரீத கார்யம் செய்யப் பெறுகையாலே வந்த தீப்தி யாகவுமாம் –
4-ஹதவான் மஹாத்யுதி –
ராவணனைக் கொன்றது ஆயுதத்தை இட்டு என்று இருந்தோம் -அங்கன் அன்றிக்கே
நிர்த ஹேதபி காகுத்ச்த  கருத்த சவீவ்ரேண சஷூஷா-சுந்தர -30-14- என்று பிரதாபத்தை இட்டு சுட்டு விட்டார் இத்தனையாய் இருந்தது –
5-மஹாத் யுதி –
தமேவ பாந்தம் அநு பாதி சர்வம் தஸ்ய பாஸாசர்வமிதம் விபாதி -கடக்க -2-5-15-என்று
நீ புகர் கொள்ளுகைக்குப் பற்றின ஷூத்ர தேவதைகள் அடையக் கரிக் கொள்ளியாம்படி நிரவதிக தேஜோ ரூபரானவர் –
6- மஹாத் யுதி –
மஹாத் யுதி என்றும் தேஜசாம் ராசி மூர்ஜிதம் -என்றும் ஒண் சுடர்க் கற்றை -திருவாய் -1-7-4- என்றும்
தேஜ பதார்த்தங்களை அடையத் திரளப் பிடித்து ஒராக்கை இட்டால் போலே இருந்தார் –
1- ஏஷ த்வாம் ஹதவான் –
என்று மூலியான அநு மானத்தை இட்டு மூலமான பிரத்யஷத்தை பாதிக்க ஒண்ணாதே இருந்தது
மனுஷ்ய ரான இவரே ராஷசனான உன்னைக் கொன்றார் –
2- மஹா யோகீ த்வாம் ஹதவான் –
சௌர்ய வீர்ய தைர்யஸ் தைர்ய சாதுர்ய மாதுர்யாதி சமஸ்த கல்யாண குணங்களை யுடைய  இவர்
அமர்யாத ஷூத்ரஸ்  சாலமதிர் அசூயாப்ரசவபூ கருதக்நோ துர்மா நீ ஸ்மர பரவசோ வஞ்சநபர நருசம்ச பாபிஷ்ட -ஸ்தோத்ர ரத் -62-
என்று சொல்லுகிற சமஸ்த ஹேய குண பூர்ணனான உன்னைக் கொன்றார் –
3- பரமாத்மா த்வாம் ஹதவான் –
எல்லாருக்கும் மேலாய் -நியாமகராய் இருக்கிறவர் -எல்லாருக்கும் கீழாய் நியாம்யனான உன்னைக் கொன்றார் –
4- மஹத பரம்ஸ் த்வாம் ஹத்வான் –
மஹதாத்ய சித்  வி லஷணரானவர்-அசித் சம்ஸ்ருஷ்டனான உன்னைக் கொன்றார்
5- ஹதவான் சநாதநஸ் த்வாம் –
எப்போதும் உளராய் இருக்கிறவர் காலைக்க தேச வர்த்தியான உன்னைக் கொன்றார் –
6-அநாதி  மத்திய நிதநஸ் த்வாம் ஹத்வான் –
முதலும் நடுவும் முடிவும் இல்லாத இவர் ஜன்மமும் ஆயிரவதியும் யுடைய உன்னைக் கொன்றார் –
7- மஹான் த்வாம் ஹத்வான் –
மஹானான இவர் ஏஷோ அணு ராதமா -என்கிற உன்னை சரீரவியுக்தனாம் படி பண்ணினார் –
8-தம்ஸ பரம்ஸ் த்வாம் ஹதவான் –
அப்ராக்ருதராய் இருக்கிற இவர் ப்ராக்ருதனான உன்னைக் கொன்றார் –
9-தாதா த்வாம் ஹதவான் –
ஜகத் தாரகராய் இருக்கிற இவர் தார்யங்களில் ஏக தேசனான உன்னைக் கொன்றார்
10- சங்க சக்ர கதா  தரஸ் த்வாம் ஹத்வான் –
திவ்ய ஆயுத தாரரான இவர் ஷூத்ர ஆயுத தரனான உன்னைக் கொன்றார் –
11-ஸ்ரீ வத்ஸ வஷாஸ் த்வாம் ஹதவான் –
பரத்வ சின்ஹங்களை  உடையவர் அபரத்வ சின்ஹங்களை யுடைய உன்னைக் கொன்றார்
12- நித்ய ஸ்ரீ த்வாம் ஹதவான் –
நித்ய அநபாயிநியான ஸ்ரீரியை யுடையவர் ஆகமா பாயிநியான ஸ்ரீ யை யுடைய உன்னைக் கொன்றார் –
13- அஜய்யஸ் த்வாம் ஹதவான் –
அபராஜிதரானவர் தன் பக்கல் பராஜயமேயான உன்னைக் கொன்றார் –
14- சாசவதஸ் த்வாம் ஹதவான் –
போது செய்யாதவர் போது செய்கிற உன்னைக் கொன்றார் –
15- த்ருவஸ் த்வாம் ஹதவான் –
ஸ்திர ஸ்வ பாவராய் இருக்கிறவர் அஸ்திரனான உன்னைக் கொன்றார் –
16- மா நுஷம் வபுராஸ் தாய த்வாம் ஹதவான் –
மா நுஷ்யம் உடையவர் மா நுஷ்யம் இல்லாத உன்னைக் கொன்றார் –
17- விஷ்ணுஸ் த்வாம் ஹதவான் –
வ்யாபகரானவர் வ்யாப்யைகதேசனான   உன்னைக் கொன்றார் –
18- சத்யா பராக்ரமஸ் த்வாம் ஹதவான் –
உண்மையான வாக்ய சேஷ்டைகளை யுடையவர் அசத்திய வாக்ய சேஷ்டனான உன்னைக் கொன்றார் –
19-சர்வை பரிவ்ருதோ தேவைஸ் த்வாம் ஹத்வான் –
வி லஷணராலே சூழப் பட்டவர் ஹேயராலே சூழப் பட்ட உன்னைக் கொன்றார்
20-வாநரத்வம் உபாகதை பரிவ்ருதஸ் த்வாம் ஹதவான் –
ராஷசனாய் பிரபலனான உன்னை ஷூத்ர மிருகங்களை கொண்டு கொன்றார் –
21- சர்வ லோகேஸ்வரஸ் த்வாம் ஹதவான் –
சர்வ நிர்வாஹகராய் இருக்கிறவர் ஏகதேச நிர்வாஹகனான உன்னைக் கொன்றார் –
22-சாஷாத் த்வாம் கொன்றார் –
நேரே தனக்கு ஒரு குற்றம் செய்யாமையாலே வாலியை மறைந்து நின்று கொன்றவர்
அது தீரக் கழியத் தனக்குக் குற்றம் செய்த படியாலே நேர் கொடு நேர் நின்று உன்னைக் கொன்றார் –
23- லோகா நாம் ஹித காம்யயா த்வாம் ஹதவான் –
லோக ஹிதத்துக்காக அஹிதனான உன்னைக் கொன்றார்
24- மஹாத் யுதிஸ்  த்வாம் ஹதவான் –
பெரிய தேஜஸ் சை யுடையவர் தேஜோ ஹீனனான உன்னைக் கொன்றார் –
எதிரியைப் பெருப்பித்து அவனைக் கொன்றான் என்றால் அல்லவோ நாயகனுக்குப் பெருமை யாவது
பெருமாள் பெருமையும் ராவணனுடைய அபகர்ஷமும் சொல்லப் பெறுமோ என்னில்
இவ்விடத்தில் நாயகனுடைய உத்கர்ஷ அபகர்ஷங்களில் தாத்பர்யம் இல்லை
மா நுஷாணாமவிஷயே சரத காம ரூபிண வி நாசஸ்தவ ராமேண சம்யுகே நோபாபாத் யதே -114-7-என்று
பெருமாளை சிறியராகவும்-ராவணனை பெரியனாகவும் பிரமித்து பெருமாளால் இவனுக்கு வதம் கூடாது என்று நினைத்திருந்து
அவரை யுக்திகளால் தெளிந்து -பெருமாள் பெரியவர்   ராவணன் ஓர் ஆபாசன் என்று அறுதி இடுகிறாள் ஆகையாலே ஓர் அநு பாபத்தி இல்லை –
ஆக இஸ் சதுஸ் ஸ்லோகியால் சொல்லிற்று ஆயிற்று –
இவளுடைய முன் செய்வினை வெளிப்பட்டு
ஸ தவம் மா நுஷ   மாத்ரேண ராமேன யுத்தி நிர்ஜித  ந ஹ்ய பத்ர பசே ராஜன்  கிமிதம்   ராஷசர்ஷப -என்று
ராவணனை உத்கர்ஷித்துப் பெருமாளை உபாலம்பித்து
சாபராதையான மந்தோதரி
அநு தப்தையாய் –
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டைகளைத் தெளிந்து பேசி
ஸ்தோத்ர முகத்தாலே பிராயஸ் சித்தம் பண்ணிப் பூதையாகிறாள் –

————————————————————————————————————————————————————————————–

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

பாபாநாம் வா ஸூபாநாம் வா -பாபிகள்  விஷயத்திலும் புண்ணியவான்கள் விஷயத்திலும்
வதார்ஹாணாம் -கொல்லத் தக்கவர் விஷயத்திலும்
பிலவங்கம-வானரனே
கார்யம் கருண கார்யேண-நல்லோனாலே கருணை யானது செய்யத் தக்கது
ந கச்சின் நாபராத்யதி-எவனும்  குற்றம் செய்ய வில்லை எனபது இல்லையே –

அவதாரிகை –
ராவணனும் பட்டுப் பெருமாளும் விஜயிகளானார்என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாய் இருக்க
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம் போலே
கிந்நு சிந்தயசே தேவி கிம் தவம் மாம் நாபி பாஷசே -116-16- என்று
பெரிய பிரியத்தை விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாதே தேவர் எழுந்து அருளி இருக்கிற இருப்பு என் தான் -என்று திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் உனக்கு சத்ருசமாகத் தரலாவது ஓன்று இல்லாமை காண்நான் பேசாது இருந்தது என்ன
இவனும் இவ்வளவில் நம் அபேஷிதத்தை விண்ணப்பம் செய்து கொள்வோம் என்று பார்த்து
தேவரை சுற்று முற்றும் நலிந்த ராஷசிகள் ஆகிறார்-க்ரூரைகளாய் தத் அநு குண பாவைகளாய் ஆயிற்று –
ராவணனுக்கு முன்னே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளை யாயிற்று –
அவனும் இவர்களோபாதி கேடன் அல்லன் –
இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினால் போலே இருக்கிறார்கள் அத்தனை ஆயிற்று
இவர்களை பஹூ பிரகாரமாக ஹிம்சிக்கப் பாரா நின்றேன் –
முஷ்டிபி பாணிபிஸ் சைவ -116-33- என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சேதித்தும் பற்களாலே கடித்தும் துடித்தும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -94-22-என்று பெருமாள் திருச் சரங்கள் செய்தது எல்லாம் நானே பண்ணப் பாரா நின்றேன்
முன்பு வந்த போது இடம் இல்லாமல் விட்டுப் போனேன் இத்தனை
இப்போது எனக்கு எல்லா பிரத்யுபகாரங்களும் பண்ணி அருளிற்று ஆகலாம் -இத்தனையும் திரு உள்ளமாக வேணும் -என்ன -பாபா நாம் வா -என்று அருளிச் செய்கிறாள் –

பாபாநாம் வா ஸூபாநாம் வா –
இவர்கள் நீ நினைத்து இருக்கிறபடியே பாபைகள் ஆக வுமாம் –
நான் நினைத்து இருக்கிறபடியே ஸூபைகள் ஆக வுமாம் –
அது தானே யன்றே உத்தேச்யம் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றால் போலே அழுக்கு உடையவன் அன்றோ குளிக்க ப்ராப்தி யுடையான்
அவர்கள் பாபைகள் ஆகில் அன்றோ நாம் முகம் கொடுக்க வேண்டுவது
சுபைகள் ஆகில் உன் வால் வேணுமோ –அவர்கள் புண்யங்களே கை கொடுக்குமே –
கை முதல் இல்லார்தார்க்கு அன்றோ கை முதலாக வேண்டுவது -என்றாள்-

வதார்ஹாணாம்
தண்ட்யனை தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்ம சாஸ்திரம் தேவரீரைத் தோற்றி கிழுத்துப்  பொகடக் கடவதோ -என்கிறாள் –

ப்லவங்கம்-
பின்னையும் அவன் புத்தி திரிய விடாமையாலே -ஹரி ஹரி -என்கிறாள் –
அன்றிக்கே -ப்லவங்கம் -என்று
நச்சினத்தை நச்சும் ஜாதி யானமை கண்டோம் -என்கிறாள் –
வசிஷ்ட ப்ரப்ருதிகள் மந்த்ரிக்கும் படியான இஷ்வாகு வம்சத்தில் பிறந்தாய் அல்லை –
யோகிகளாய் ஜனக குலத்திலே பிறந்தாய் அல்லை –
காட்டிலே பணை யோடு பணை தாவித் திரிகிற ஜாதியிலே இ றே பிறந்தது –
அங்கன் ஒத்தாருக்கு சரணாகதியோட்டையது தெரியாது -என்கிறாள் –
வா நரோத்தம -16-18-என்றவள் தானே இ றே ப்லவங்கம் -என்றாள்
ராஜாக்க்களுமாய் மூலையடியெ நடக்க யுரியருமாய் இருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்
நீ வா நர ஜாதியாய் இருந்து வைத்து இங்கனே கோபிக்கக் கடவையோ –

கார்யம் கருண கார்யேண –
இவர்கள் புண்ய பாபம் கிடக்க இப்போது ஓடுகிற தய நீய தசையைப் பாராய் –
இவர்களுக்கு ஒரு ரஷகன் அல்லையே
இப்போது இவ்வளவிலே நாம் இரங்க வேணும் காண் –
ஆர்யேண-நல்லோனாலே –
இவை எல்லாம் இப்போது நான்  கற்பிக்க வேண்டும்படி யாவதே உனக்கு –
ஆர்யேண-
ஐந்த்ரவ்யாகரண  பண்டிதன் என்கிறது பொய்யோ –
அவையும் எல்லாம் கற்றுக் கேட்டு இருக்கச் செய்தேயும் இப்போது ராம கோஷ்டியில் பரிசயமான படி யாகாதே
அந்த கோஷ்டியில் பரிசயம் பழக்கம் இ றே நீ இங்கனே சொல்ல வல்லை யாயிற்று
நான் பிரிந்த பின்பு அக் கோஷ்டி இங்கனே நீர்த்தது ஆகாதே -நீர் விடப் பட்ட பால் போலே -என்று கருத்து –
ந கச்சின் நாபராத்யதி -குற்றம் செய்யாதவன் ஒருத்தனும் இல்லை –
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார் –
திரை நீக்கிக் கடலாடப் போமோ
நல குதிரையாக பாவித்து இருக்கிற பெருமாள் தான் குற்றவாளர் அல்லரோ
நான் தான் குற்றப்பட்டவள் அல்லேனோ-
பெருமாள் குற்றவாளர் ஆனபடி என் என்னில்  -தாம் காடேறப் போனார் -அவர் பின்னே மடலூருவாரைப் போலே இளைய பெருமாளும் போந்தார்
தம்மோடு ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்-
என்னைப் பிரிந்து பத்து மாசம் இருந்தார்
நான் வராவிட்டால் தன்னதோரம்பு இயங்க மாட்டாமை இல்லை இ றே
இவ்வழி இத்தனை நாள் பிரிந்து இருக்க வல்லரான போதுபெருமாள் பக்கலிலே யல்லவே குற்றம்
பார தந்த்ர்யத்துக்கு அநுகுணமாக பேசாது இராதே அது தன்னைச் சொன்ன என் பக்கலில் அன்றோ குற்றம்
இந் நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரை தண்டிக்கப் பார்த்த அன்று பெருமாள் அருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்பட தண்டித்து கொண்டு அன்றோ
ராவணன் சொன்ன கார்யம் செய்த இவர்களை தண்டிப்பது
ஆகையால் நீ அல்லையோ குற்றவாளன்
எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி யோடு போக வேண்டி இருந்த அன்று எனக்கு நீ யுண்டு -என்று இருந்தேன்
நீயும் இங்கனே யானால் அபராதம் செய்வார்க்குப் புகலாவார் உண்டோ -என்கிறாள் –

அஜ்ஞாத நிக்ரஹ -கோபம் என்பதையே அறியாதவள் -நம் போல்வாருக்கு தஞ்சம் ஆவது பெருமாள் உடைய சரம ஸ்லோகம் அன்று
பிராட்டி யுடைய இந்த சரம ஸ்லோகமே நமக்கு தஞ்சமாகக் கடவது –

மாதர் மைதிலி  ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்தி ஷமௌ ரஷத
ஸா ந சாந்திர மஹாக ஸ ஸூ காது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ-ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

————————————————————————————————————————————————————————————–

ஸ்நேஹோ  மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரத்திஷ்டித
பக்திஸ்ஸ நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி –உத்தர -40-16-

ஸ்நேஹோ  மே பரமோ ராஜன் -ராஜன் -மே-  பரம ஸ்நேக -அரசரே எனக்கு மிகச் சிறந்த அன்பானது
த்வயி நித்யம் ப்ரத்திஷ்டித-தேவரீர் இடத்திலே எப்போதும் நிலை நிற்கிறது
பக்திஸ்ஸ நியதா -பக்தியும் நித்தியமாய் இரா நின்றது
வீர பாவோ நாந்யத்ர கச்சதி -சூரனே என் நினைவு  வேறு ஒரு இடத்தில் செல்கின்றது இல்லை –
ஸ்நேஹோ  மே பரமோ-
எந்தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம்  நூற்ற -100–உன்னிடம் எனக்கு உள்ள அன்பு என்னிலும் பெரிது என்கிறார்-
ராஜன் த்வயி –
இது தானும் என்னால் வந்தது அன்றி –அதுவும் அவனது இன்னருளே -திருவாய் -8-8-3-
நித்யம் ப்ரத்திஷ்டித-
இன்று அன்றாகில் மற்று ஒரு போதுகொடு போகிறோம் என்ன -அங்கன் செய்யுமது  அன்று
தர்மியைப் பற்றி வருகிறது ஆகையாலே -நின்னலால் இலேன் கான் -பெரிய திரு -7-7-4-என்னுமாப் போலே –
பக்திஸ்ஸ நியதா-
ஸ் நேஹமாவது என் -பக்தியாவது என் -என்னில்
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து -வ்யதிரேகத்தில் முடிந்த சக்ரவர்த்தி நிலை ஸ் நேஹம் –
பக்தியாவது -நில் என்ன -குருஷ்வ -அயோத்யா -31-32-என்னும்படியாய் முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை –
வீர –
தன்னைத் தோற்ப்பித்த துறை –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்று இங்கு வெல்ல முடியாது
தானும் வீரன் ஆகையாலே தோற்ப்பித்த துறையைப் பிடித்து பேசுகிறான் –

பாவோ நான்யத்ர  கச்சதி –
என்னை மீட்டீர் ஆகிலும் என்னுடைய நெஞ்சை மீட்கப் போகாது
அன்யத்ர -என்கிறது -மற்றானும் உண்டு என்பார் -சிறிய திருமடல் -5-என்றும்
அச்சுவை பெறினும் வேண்டேன் -திருமாலை -2- என்னுமா போலே
கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் கூட அசஹ்யமாய் இருக்கிறது-

——————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர-யுத்த -114-15/மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு -16/–

February 14, 2015

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம்ஹித  காம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–

இரண்டாம் ஸ்லோகம் –
இரண்டாம் ஸ்லோகத்தாலே –மஹத பரமோ -மஹான்-என்று மஹத் அவ்யக்தங்களில் வ்யாவ்ருத்தனாய் பெருத்து இருக்கும் என்று சொல்லி நின்றது
அவ்யக்தம் அஷரே லீயதே —ஸூ பால உபநிஷத் – என்றும்
மம யோ நிர்மஹத் ப்ரஹ்ம-ஸ்ரீ கீதை -14-3- என்றும் –
தே நாக்ரே சர்வமே வாஸீத் வ்யாப்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-21- என்றும் –
தத நந்தம சங்க்யாதம ப்ரமாணஞ்ச-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-26-என்றும்
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழ்-திருவாய் -10-10-10- என்றும்
இவ்வருகில் உள்ளவற்றுக்கு எல்லாம் மேலாய்ப் பெருத்து இருப்பது தமஸ் சப்த வாச்யையான மூல பிரகிருதி அன்றோ -என்ன
1- தமஸ பரம –
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ் தாத் -என்றும் –
ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே -என்றும் ரஜஸ் தமஸ் சப்த வாச்யையான மூலப் பிரக்ருதிக்கும் அவ்வருகாய் இருக்கும்
2-தமஸ பரம –
அத யத்த பரோதி வோ ஜ்யோதிர் தீப்யதே -என்றும் ஹிரண்மயே பர் லோகே -என்றும்
வைகுண்டேது  பரே லோகே –ஆஸ்தே-என்றும்
ப்ராக்ருதத்தைக் கடந்து அவ்வருகாய் இருக்கிறவன் –
தமஸ பரம -என்றால் என்-
அதீத்ய ப்ராக்ருதான் லோகன் -என்றும் -தத் விஷ்ணோ பரமம் பதம் -கட -1-3-9-என்றும்
விஸ்வத  ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூத்த மேஷ்வ நூத்த மேஷூ லோகேஷூ -சாந்தோக் -3-13-7- என்றும்
இப்பிரக்ருதிக்கு மேலாய் இருப்பது பரமபதம் அன்றோ -என்ன
1- தாதா –
விஷ்டப்யாஹ மிதம் க்ருத்ஸ் நமே காம் ஸேந ஸ்திதோ ஜகத் -ஸ்ரீ கீதை -10-32- என்று உபய விபூதியும் தார்யம் இத்தனை போக்கி தாரகன் ஆனவன் அவன் அன்றோ –
2- தாதா –
டுதாஞ் தாரண போஷண யோ -என்றும் –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வாஸ் ஆனந்தி பவதி –தை ஆன -7-1- என்றும்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-11- என்றும்
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி இருக்கிறவன் –
3- தாதா –
முகுந்தா என்றும் சகல பல ப்ரத -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-47-என்றும் –
புக்த்வா ச போகான் விபுலான் –மம லோகமவாப்ஸ் யஸி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-26-என்றும் என்றும்
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-பெரிய திரு 5-19-26-என்றும்
போக மோஷ ப்ரதன் என்றாக வுமாம் –
4-தாதா –
காரணகளே பரை–ஸ்ரீ ரெங்க ஸ்த -2- 41-என்றும் -சங்கல்பாதே  வாஸ்ய பிதர சமுத்திஷ்டந்தி –சாந்தோ  -8-2-1-என்றும்
ச ஏகதா பவதி –சஹச்ரதா பவதி -என்றும்
சம்சாரிகளுக்கு ஸ்வ ப்ராப்த்யு உபகரணமாகவும்
முக்தருக்கு ஸ்வ அனுபவ உபகரணமாகவும் -கரணகளேபர ப்ரதன் என்றாக வுமாம் –
அன்றிக்கே -5-தாதா –
யத் த்ரவ்யம் யத் த்ரவ்யச்ய சர்வாத்ம நா ச்வார்த்தே நியந்தும் தாரயிதுஞ்ச சகயம் தச் சேஷதைக ஸ்வரூபஞ்ச தத் தஸ்ய சரீரம் -ஸ்ரீ பாஷ்யம்-2-1-9-என்றும்
யஸ் யாத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் -ப்ருஹ -5-7-என்றும்
ஸ்வ சரீர பூத சேதன அசேதனங்களை ஆத்மாதா நின்று தரிக்கும் -என்றாக வுமாம் –
இது எல்லாம் என் -தமஸ பரமோ தாதா -என்றால் -பிரகிருதி மண்டலத்துக்கு மேலாய்
பக்தைர் பாகவதைஸ் சஹ ஆஸ்தே விஷ்ணு –லைங்கம்-என்றும்
ஷயம் தமச்யரஜஸ பராகே -என்றும்
ப்ரஜாபதே சபாம் வேசம ப்ரபத்யே -என்றும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் ஸூ ரிகளும் முக்தரும் எழுந்து அருளி இருக்க
ஆதாரமாய் இருக்கிறது திரு மா மணி மண்டபமும் திவ்ய லோகமும் அன்றோ -என்ன
1-சங்க சக்ர கதா தர –
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ -நாச் -7-1-என்று
கேட்கலாம் படி அநு கூலர்க்கு ஆஸ்வாசம் பண்ணுகிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்ன –
க்ராஹம் சக்ரேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-81- என்றும்
கருதுமிடம் பொருது -திருவாய் -10-6-8- என்றும்
பிரதி கூலரை நிரசிக்கும் திரு வாழி யாழ்வான் என்ன  –
கௌ மோதகீம் ஜ்ஞான விகாச ஹேதும்-என்று ஆ ஸ்ரீ தர்க்குஜ்ஞான விகாச ஹேதுவாய்புத்த்யபி நினியான கதை என்ன-இவற்றை யுடையவர்
2- சங்க சக்ர கதா தர –
என்று ஸ்ரீ பஞ்சாயுத உப லஷணம் ஆக வுமாம் –
இத்தால் என் -மம சாதர்ம்யமா கதா -ஸ்ரீ கீதை -14-2–என்றும் தம்மையே ஒக்க அருள் செய்வர் -பெரிய திரு -11-3-5- என்றும் ஸாரூப்யம் பெற்ற நித்ய ஸூ ரிகளும் சக்ராதி தரராய் அன்றோ இருப்பது என்ன –
1- ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ –
அசித் தத்வாபிமாநிநி யாகையாலே -யவ நிகா மாயா ஜகன் மோஹி நீ -சதஸ் லோகி -1-என்று இருக்கிற அந்தப்புர நாச்சிமாரை யுடையவர்
இரண்டைத் தொன்று அமைந்து இருக்க இரண்டு விசேஷணம் என் என்னில்
சமஸ்த ஹேய ரஹிதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-53- என்றும் ஆசறு சீலனை –மாசறு சோதி -திருவாய் -5-3-1- என்றும்
ஒரு மறு வற்று இருக்கிறவனை மறு வுடையவன் என்றால் அவத்யமாம் என்று நித்ய ஸ்ரீ என்கிற இதுவே விவஷிதம் –
பிரதான  மகிஷிக்கு உசித பரிகரம் திரஸ் கரிணி யாகையாலே யவ நிகையான  ஸ்ரீ வத்சத்தைக் கூட்டிச் சொல்லுகிறாள்
அநு கரித்த பௌண் டரீக வா ஸூ  தேவனை வ்யாவர்த்திக்கலாம்
அது பிற்பட்ட அவதாரத்திலே யானாலும் ஸூ ரிகளிலே வ்யாவர்த்திக்கிற பிரகரணம் ஆகையாலே சம்சாரிகளை வ்யாவர்த்திக்கப் போகாதாகையாலும் அநு சித்தம்
2-நித்ய ஸ்ரீ –
நித்யைவைஷா நபாயி நீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17- என்றும்
இறையும் அகலகில்லேன் -திருவாய் -6-10-10- என்றும்
உபாய தசையில் புருஷகாரத்வ ண் விடாள்
உபேய தசையில் ப்ராப்ய அந்தர் கதையாய் விடாள்
இப்படிக்கு எப்போதும் அவசர ப்ரதீஷை பண்ணி விடாதே இருக்கும்
நித்ய ஸ்ரீ என்றால் தான் தவிர்ந்ததோ -லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -பால -18-29- என்றும்
அந்தரிஷ கத ஸ்ரீ மான் -யுத்த -16-17- என்றும்
ஸ து நாக வர ஸ்ரீ மான் -என்றும்
பரமனைப் பயிலும் திருவுடையார் -திருவாய் -3-7-1- என்றும்
தாஸ்ய ஸ்ரீ யும் -கைங்கர்ய ஸ்ரீ யும் யுடையராய்
அவன் பார்யாத்வேன நித்ய ஸ்ரீ யாய் இருக்குமா போலே  மாத்ருத்வேன-ச்வாமித்வேன-நித்ய ஸ்ரீ க்க்களுமாய் அன்றோ சூ ரி பரிஷத் இருப்பது என்னில்
1- அஜய்ய-
அவர்கள் எல்லாரும் ஜேதவ்யராய்இருப்பார்கள்
இவன் ஒருவனுமே ஜெயிக்க ஒண்ணாத படியாய் இருப்பான்
2- அஜய்ய –
ஜிதந்தே புண்டரீகாஷா -என்றும் –ஜிதம் பகவதோ ஜகத் -என்றும்
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7- என்றும்
எல்லாரும் தோற்று கிடக்கும் இத்தனை போக்கி இவரை ஒருவராலும் தோற்பிக்க ஒண்ணாது –
இவருக்கு ஏற்றம் என்-சர்வ விஜய -என்றும் அபராஜித -என்றும் -கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம் சீறா வெரியும் திரு நேமி -திருவாய் -6-10-2- என்றும்
ஆழ்வான் சத்ருக்களுக்கு ஜேதாவாய் அவர்களுக்கு அஜய்யராய் அன்றோ இருப்பது என்னில்
1-சாஸ்வத அஜய்ய –
ஆழ்வான் பூசல் யுண்டானால்அப்போது ஜெயித்து இருக்கும் அத்தனை அன்றோ
இவர் சர்வ காலமும் அஜய்யராய் இருப்பார்
2- சாஸ்வத அஜய்ய –
காதாசித்கம் அல்ல –
சத்யேன் லோகன் ஜயதி தீனான் தாநேந ராகவ குரூன் ஸூஸ்ருஷயா வீரோ தநுஷா யதி சாத்ரவான் -அயோத்யா -12-29-என்றும்
குணைர் தாஸ்யம் உபாகத -என்றும் எப்போதும் அநுபோக்தாக்கள் யுண்டாகையாலும்
அது தான் ஒரு பிரகாரம் இன்றிக்கே ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டைகள் எல்லாவற்றிலும் ஆழம் கால் பட்டு இருக்கையாலும்
எப்போதும் இவர்க்கு தோற்று இருப்பார்கள் -இவர் எப்போதும் அஜய்யராய் இருப்பார்
இதா நீ மிவ சர்வத்ர த்ருஷ்டான் நாதி கமிஷ்யதே என்று லோக வ்யாப்தி விருத்தமாக வருவது  உண்டோ -பங்கம் ஜெயம் சாபதுரவ்ய வஸ்தம்-என்றும்
அவ்யவஸ்தௌ ஹி த்ருச்யேதே யுத்தே ஜெயபராஜயௌ-என்றும்
ஜயாபஜயங்கள் அவ்யவஸ்திதங்கள் அன்றோ -ஏக ரூபமாகக் கூடுமோ என்ன
1- த்ருவ –
சர்வச்ய வசீ சர்வச்யேசாந -என்றும்
ந தஸ்யேச கச்சன  தஸ்ய நாம மகாத் யச -என்றும்
ந தத் சமச்சாப்யாதி கச்சா த்ருச்யதே -என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய -திருவாய் -2-3-2-என்றும்
சர்வாதிகனாய்  சர்வ வி லஷணனாய் இருக்கையாலே லோக சாமான்ய சங்கை பண்ண ஒண்ணாது
ஜெயமும் வ்யவச்திதமாய் இருக்கும்
2-அஜய்ய சாச்வதோ த்ருவ
என்று அஜய்யராய் இருக்கும் இருப்பில் சர்வ கால சம்பந்தியாய் இருக்கும் –
த்ருவ மசாலா மம்ருதம் விஷ்ணு சம்ஜ்ஞம் சர்வாதாரம் தாம -என்று வ்யவஸ்தி தாஸ்ரயமுமாயும்   இருப்பர்
3- த்ருவ
விஷ்ணு பரம என்று லோகத்தில் வி லஷண புருஷர்களில் மேலாம் இடத்தில் எல்லை நிலமாய் இருப்பர்
4- த்ருவ –
உபே பவத ஒத் ந ம்ருத்யுர் யஸ்ய உபசே ச நம் –கடக-1-2-25-என்றும்
ஏகோ ஹ வை நாராயண ஆசீன்ந ப்ரஹ்மா நேசா ந நேமீ த்யாவாப்ருதிவீ -மகா உபநிஷத் -என்றும்
யாதும் இல்லா வன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய் -4-10-1-என்று
ப்ரஹ்மே சேநாதி சர்வமும் சம்ஹ்ருதமான வன்று எல்லாவற்றையும் உண்டாக்குகைக்குத் தான் ஒருவனுமே யுளனாய் ஸ்திரனானவன் –

ஆக –
இந்த ஸ்லோகத்தால் –
நித்ய விபூதி பூஷண  ஆயுத பத்னீ பரிச்ச தாதி யோகமும்
ஸ்வ இதர வி லஷணத்வமும்
சொல்லிற்று –

———————————————————————————————————————————————————————————–

மூன்றாவது ஸ்லோகம் –
அவதாரிகை –
இப்படி வ்யாவ்ருத்தரானவர் -திவி திஷ்டதி -முண்டக -1-1-7- என்றும்-
திவ்யோ தேவ ஏகோ நாராயண -முண்டக 2-2-10-என்றும் -பரம பதத்திலே அன்றோ –
ஏஷ-என்னும்படி கர்ம பூமியிலே  சந்நிஹிதராய் -மாநுஷ வேஷமும்  கையும் வில்லுமான இவர் என்-என்ன
மானுஷம் வபுராஸ் தாய விஷ்ணு சத்யா பராக்கிரம -என்று
அவர் தான் தேவாதிகளால் படாத படி ப்ரஹ்மாதி முகத்தாலே வரம் கொடுத்த படியாலே
தாம் பொய்யாகாத படி தம்மைக் காக்க மண்ணிலே இட்டு மயக்கிச் சுற்றுப் பரிகாரம் நர வா நரங்களாய் அவதரித்து நிற்கிறபடி காண்-என்கிறாள் மூன்றாம் ஸ்லோகத்தால் –

மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை–114-16-

1-மா நுஷம் வபுராஸ்தாய-
திவி திஷ்டதி -என்றும் –
வைகுண்டேது  பரே லோகே –ஆஸ்தே விஷ்ணு -என்றும்
பரமபதத்தில் இருந்த விஷ்ணு தான் கிடீர் ஆதி யஞ்சோதியுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -திருவாய் -3-5-5–
2–மா நுஷம் வபுராஸ்தாய–வர மந்யத்ர மா நுஷாத்-பால -16-5- என்று வரம் கொள்ளுகைக்கும் பாத்தம் போராத ஷூ தர மனுஷ்யர் சரீரத்தை கிடீர் பரிக்ரஹித்தது
3- -மா நுஷம் வபுராஸ்தாய–
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் -திருமாலை -3-என்று உபா லம்ப விஷயமான த்தைக் கிடீர் ஆதரித்து அருளியது
4- -மா நுஷம் வபுராஸ்தாய–
இச்சாக் ருஹீதாபி மதோருதேஹ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்று வடிவை மாறாட்டும் இத்தனை போக்கி –
வஸ்து வஸ்த்வாத் மகம் குத-என்று ஸ்வரூபத்தை மாறாட்ட ஒண்ணாதே –
5- மா நுஷம் வபு –
அஜாயமா நோ பஹூ தா விஜாயதே -என்றும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமான் -திருவாய் -2-9-5- என்றும்
உயிர் அளிப்பான் என்நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் -திரு விருத்தம் -1- என்றும்
கர்ம பந்தமான பிறவி தனக்கு இன்றிக்கே இருக்க அநுக்ரஹத்தாலே ஆஸ்ரீத ரஷண அர்த்தமாக அவன் கோலின வடிவுகளிலே இதுவும் ஓன்று இத்தனை அன்றோ –
பஹஊதா விஜாயதே -என்று -உபேந்திர -மத்ஸ்ய -கூர்ம -வராஹ -நாரசிம்ஹ வாம நாதிகளான தேவ திர்யக் மனுஷ்யாதி  பரிக்ரகாம் பண்ணுகிறது போராமல்
விவிதம் ஜாயதே -என்று நரம் கலந்த சிங்கமாயும் -ஹயம் கலந்த நரமாயும் -ஹன்சம் கலந்த தேவனையும்
அடுத்ததோர் உருவாய் -திருவாய் -8-1-3- என்றபடி -வேறு ஒரு வடிவோடு கூடி வேறு ஒரு வடிவாயும்  தோற்றிலனோ
6-ஆஸ்தாய-
-எடுத்துக் கொண்டு -ஸ்வதஸ் ஸித்தம் இன்றியிலே கொண்டு கூட்டாய் இருந்தபடி -ஏறிட்டுக் கொண்டபடி –
7- ஆஸ்தாய –
ஆஸ மந்தாத் ஸ்தித்வா -அனுபரிமாணனானஜீவனைப் போலே -ஹ்ருதி ஹ்யயமாத்மா -என்று ஏக தேசத்திலே அடங்குகை அன்றிக்கே விபு வாகையாலே சரீரம் முழுக்க வியாபித்து –
8- ஆஸ்தாய –
சரீரத்து அளவேயோ -அநேக ஜீவே நாத்ம நா  -என்றும்
தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -என்றும் –
ப்ராணோ அஸ்மி பிரஜ்ஞாத்மா -என்றும்
அடியேன் யுள்ளான் -திருவாய் -8-8-2-என்றும்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை -திருவாய் -8-8-4–என்றும்
ஆத்ம சரீர இந்த்ரிய பிராண பிரஜ்ஞாதிகள் எல்லாத்திலும் நின்றும்
இப்படி எங்கும் பரந்து உளனாகைக்கு அடி என்-என்னில்
1-விஷ்ணு –
விஷ்லு வ்யாப்தௌ-இலே நிஷ்பன்ன பதம் ஆகையாலே -வியாபகன் ஆகையாலே -என்கிறது
அன்றியிலே -2- விஷ்ணு -என்று
விஸ பிரவேச நே -என்ற தாதுவாய்-ஸோ அந்தரா தந்திரம்  ப்ராவிசத் -என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவா நுப்ராவிசத் தத் நுப்ரவிச்ய சச்ச த்யச்சா பவத் -என்றும் -சர்வ அநு ப்ரவஷ்டா வாகையாலும் -என்றுமாம் –
3-விஷ்ணு சங்க சக்ர கதா தர –
ஏதஸ்மின் நந்தரே  விஷ்ணு ரூப யாதோ  மஹா தாயாதி -சங்க சக்ர கதா பாணி -பால -15-16-என்று
பாக ப்ரதிக்ரஹார்த்த மாகத்-தசரத யாக ஹவுஸ் கொள்ள – திரண்ட தேவர்கள் திரளிலே வந்தவன் தானே இவன் என்று ப்ரதி சந்தானம் பண்ணுகிறான் ரிஷி
4- விஷ்ணு –
ரிஷியே அல்ல -சா தம் சமா சாத்ய வி ஸூ த்த சத்வா மனச்வி  நீ -கிஷ்கிந்தா -24-3- என்ற தாரையைப் போலே ராம சந்நிதியிலே மயர்வற மதி  நலம் பிறந்து ஒரு போகம் சாஷாத் கரித்து
தத்ர த்வம் மா நுஷோ பூத்வா ப்ரவ்ருத்தம் லோக கண்டகம் –சமரே ஜஹி ராவணம் -பால -15-20-என்று தேவர்கள் அபேஷித்தவர் தாமே இவர் -என்கிறாள் –
இப்படியே பர வஸ்து தானாகில் மனுஷ்யத்வம் ஏறிட்டுக் கொள்ளுகைக்கு அடி என் என்னில்  –
1- சத்ய பராக்கிரம –
சத்யா வால்யர் ஆகையாலே -என்கிறது –
2- சத்ய பராக்கிரம –
க்ரமு பத விஷேபே -இ றே-பத  விஷேபம் ஆகிறது பத பிரயோகம் –
பத வாக்ய ரூபமாய் இ றே வசன வ்யக்தி இருப்பது -இத்தால் -தேவர்களால்  படாதபடி அடியிலே வரம் கொடுத்த படியாலே
தாமான தன்மையிலே கொல்ல ஒண்ணாது என்று சத்யா வசனம் பண்ணினத்துக்காக இவ்வடிவு கொண்டார் -என்கை-
வேஷம் மானுஷமாய் மாராடினால் வீர்ய சௌர்யாதிகளும்மராடுமோ -என்னில்
3- சத்ய பராக்கிரம
சத்யகாம -சத்ய சங்கல்ப  -என்றும் -தா இமே சத்யா காமா -என்றும் -ஸ்வாபாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -என்றும்
விக்ரஹம் மாறினாலும் பராக்ரமாதி குணங்கள் சதைகரூபமாய் இருக்கும் -என்றுமாம் –
4- சத்ய பராக்கிரம –
ஒருபடிப்பட்ட பராக்கிரமம் யுண்டு -பற்றை ஆக்ரமிக்கை -சத்ருக்களை பரிபவிக்கை -அத்தை யுடையராய் இருப்பர்
இப்படிப் பரிபவம் பண்ணிற்று தனியே நின்றோ -என்னில் 1- சர்வை பரிவ்ருதோ தேவை –
அவனாலே செறுப்புண்ட தேவர்கள் அடையக் கூடினார்கள் –
2-சர்வைர் தேவை –
பூர்வ தேவர்களான அசூரர்களோடு அந்ய தமரான தேவர்களோடு வாசி அறக் கூடினார்கள் –
3- சர்வைர் தேவை –
தேவதா நவயஷ கந்தர்வ கின்னர கிம்புருஷ ப்ரப்ருதி சமஸ்த தேவ ஜாதியும் சூழ்ந்தது –
4- சர்வை பரிவ்ருத –
முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவர் குறைந்தார் இல்லை –
5- தேவை –
தீவு க்ரீடா விஜிகீஷா வ்யவஹாரத் யுதி ஸ்துதி கதிஷூ -என்று இத்தனை யுண்டு இ றே தாத்வர்த்தம் –
விளையாட்டு -வழக்கு -தேஜஸ் -துதி -கதி -பொருள்கள் யுண்டே தாதுவுக்கு –
முதல் க்ரீடையிலேயாய்-க்ரீடந்தோ நந்தவநே  ரௌத்ரேண கில ஹம்சிதா -பால -15-23- என்று ராவணனாலே நலியப் பட்டு க்ரீடிக்கப் பெறாதே இருந்தார்கள்
இப்போது யுத்த கிரீடை பண்ணும்படி பெருமாளைப் பற்றினார்கள் –
6- தேவை –
ராஷஸ நிர்ஜிதா -என்று முன்பு தோற்றுக் கிடந்தவர்கள் இப்போது இவனை வேல்லுவதாக பெருமாளை அண்டை கொண்டார்கள்
7- தேவை –
ஸ்வயம் ஜல்பதே -என்று பயப்பட்டு -வாயைத் திறக்கவும் மாட்டாதே இருந்தவர்கள் இன்று பெருமாளை
அவஷ்டம்பித்துப் பூசலிலே புக்கு வீர வாதமும் பரோ பாலம்பமும் பண்ணும்படி யானார்கள் –
8- தேவை –
ராவணன் கையிலே தோற்றுத் தேஜோ ஹீ நராய் இருந்தவர்கள்  இன்று ராவணனைக் கொன்று புகர் படிக்கும்படி வந்தார்கள் –
9- தேவை –
முன்பு ராவணனைப் புகழைத் தொடங்கி-வீணாம் சம்ஹார நாரத ஸ்துதி  கதாலா பைரலம் தும்புரோ -என்று
அது தனக்கும் இடம் பெறாதே திரிந்தவர்கள் கலக்கமற்று
பவான் நாராயணோ தேவ  -எனபது –புஷ்கராஷ மஹா பாஹோ -எனபது -சீதா லஷ்மீர் பவான் விஷ்ணு -என்பதாய் ஸ்தோத்ரம் பண்ணும் படி யானார்கள் –
10-தேவை -கதியைக் குறிப்பதாய் –
சாரணாஸ்ஸ திசோ கதா -என்னும்படி வாசலிலே கட்டுண்டு கிடப்பாரும் -தி கந்தங்க ளிலே ஓடிப் போய் ஒளித்துக் கிடப்பாரும் ஆனவர்கள் –
அத்ய வை நிர்ப்பயா லங்காம்  பிரவிஷ்டா ஸூ ர்யச்மய -என்னும்படி ச்வை ரகதிகளாய்த் திரியத் தொடங்கினார்கள் –
இப்படி பீதரேத் திரிந்தவர்கள் இப்போது ராவணனைக் கொல்ல வந்தபடி என் என்னில் –
1-வாநரத்வம் உபாகதை –
அவர்களும் சாகாம்ருகங்களாய்-மறைந்தவர்களாய் வந்தார்கள் –
2-வாநரத்வம் உபாகதை —
அவன் நரனான வாறே இவர்கள் வா நர ரூபி யானார்கள் -ஹீ நான்ன வஸ்த்ர வேஷ ஸ்யாத் சர்வதா குரு சன்னிதௌ-என்று
ஸ்வாமி சந்நியியில் ஒரு மாற்றுத் தாழ நிற்க வேணும் இ றே-
3- வாநரத்வம் உபாகதை —
என்று உப லஷனமாய் ருஷ கோபுச்ச வா நரர்களாய்பிறந்தார்கள் –
4- வாநரத்வம் உபாகதை —
பின்னையும் இரண்டு ஜாதி யும் யுண்டாய் இருக்க வா நர விசேஷத்தைச் சொல்லுவான் என் என்னில்
வா நரங்களாலே இலங்கை அழியக் கடவது என்ற நந்தி கேஸ்வர சாபம் பளித்தமை தோற்றுகைக்காக-
வாநரத்வமா கதை -எண்ணாதே -வாநரத்வம் உபாகதை -என்பான் என் என்னில் –
விஜ்ஞான பிரம்சமாப் நோதி-என்று பூர்வ ஜன்ம வாசனையை மறந்து வெறும் வா நரமாகை அன்றிக்கே
தேவாத அநு குணா ஜ்ஞான சக்த்யாதிகளை விடாதே
கார்யப் பட்டாங்காலே
வா நர வேஷ மாதரத்தை ஏறிட்டுக் கொண்டார்கள் என்று தோற்றுகைக்காக –
5-வாநரத்வம் உபாகதை –
ஸூ க்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-20-என்று பெருமாள் சரணம் புகும் போதுஅதின் வாசி அறியும் ஜாதியிலே யாக வேணும் இ றே
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-31–என்றும்
அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோ ததே -யுத்த -21-1- என்றும் –
சமுத்ரத்தை சரணம் புக்க விடத்திலே அது வாசி அறியாமையாலே பலித்தது இல்லை இ றே –
6-வாநரத்வம் உபாகதை –
கர்த்தரி நிஷ்டையாய் கர்ம பந்தனமாய் அவகாசம் அன்றிக்கே வர அவிரோதமாக ஸ்வ புத்த்யதீந ச்வீகாரத்தைச் சொல்லுகிறது
இத்தேவர்களால் பெருமாள் பெற்றது என் -என்னில்
1- பரிவ்ருத -சூழப் பட்டார் –
நமக்காகக் கீகட தேசத்திலே எழுந்து அருளினார் -விரோதி பஹூளமாய் இருக்க -என் புகுகிறதோ என்று  பரிவாரங்களாலே சூழ்ந்து இருக்கப் பட்டார் –
2-பரிவ்ருத –
பரிதோ வ்ருத-சுற்றிலும் சூழப் பட்டார் -ஒரு பார்ச்வம் வெளியானால் அவ்விடத்தில் ராஷசர் புகுவார்கள்  என்று
ஸ்ரீ நலரும் பரிகரும் கிழக்கும் -ஹனுமத் ப்ரப்ருதிகள் தெற்கும் -ஜாம்பவத் ப்ரப்ருதிகள் மேற்கும் -கஜன் கவயாதிகள் வடக்குமாக சூழ விட நோக்கும்படி யானார்
3- வாநரை பரிவ்ருத –
சாகா ம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்த -59-45-என்று
கோப்த்ருத்வ வாரணம் பண்ணப் பட்டார்
4- தேவை பரிவ்ருதஸ் த்வாம் ஹதவான் –
என்றாய் -ராவணச்ய வதார்த்திபி அர்த்தித -அயோத்ய -1-7- என்கிறபடியே தேவர்களால் அபேஷிக்கப் பட்டு உன்னைக் கொன்றார்-என்றுமாம்
5- தேவை பரிவ்ருதோ ஹதவான் –
என்று பாக ப்ரதி க்ரஹ சமாஜத்தில் அபேஷித்த அளவன்றிக்கே  கார்ய காலத்தில் மறக்கக் கூடும் என்று தேவர்கள் தான் பூசலிலே பெருமாள் அருகே நின்று
வைத்த நாள் வரை எல்லை குறுகிற்று -திருவாய் -3-3-10- என்றும்
அத –மாதலிஸ்–111-1/2- என்றும் பிரம்மாஸ்திரம் தொடுத்து அருளீர் -என்று அபேஷிக்கக் கொன்றார் -என்றுமாம் –
6- வாநரத்வம் உபாகதைர் தேவை பரிவ்ருத –
விஷத் த்ருஷ்டிகளுடைய கண் படலாகாது என்று தாங்களும் மறைந்து பெருமாளையும் மறைத்தார்கள் -என்றுமாம் –

——————————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-வ்யக்தமேஷ மஹோ யோகீ–யுத்த -114-14–

February 13, 2015

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம்ஹித  காம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–

-ஏஷ-இந்த ராம பிரான் -மஹோ யோகீ -பெரிய யோகியாய்
பரமாத்மா -பரம் பொருளாய்
ஸநாதந-எல்லா காலத்திலும் இருப்பவராய்
அநாதி மத்யநிதந-முதல் நடுவு முடிவுகள் இல்லாதவராய்
மஹத பரமோ -மஹத்தைக் காட்டிலும் பெரியவராய்
மஹான்-உயர்ந்தவராய்
தமஸ -மூல பிரகிருதியைக் காட்டிலும்
பரம் -மேலானவராய்
தாதா -ஆதாரராய்
சங்க சக்ர கதா தர -சங்கு சக்கரம் கதை ஏந்தியவராய்
ஸ்ரீ வத்ஸ வஷா -ஸ்ரீ வத்சம் என்னும் மறுவை மார்பில் யுடையவராய்
நித்ய ஸ்ரீ-இணை பிரியாத ஸ்ரீ மஹா லஷ்மியை யுடையவராய்
அஜய்ய -ஜெயிக்க முடியாதவராய்
சாஸ்வதோ -விகாரம் அற்றவராய்
த்ருவ-நிலை நிற்பவராய் யுள்ளவர்
வ்யக்தம் -இது -தெளிவு
மஹாத்யுதி -பேர் ஒளியை யுடையவராய் –
சர்வ லோகேஸ்வர -எல்லா யுலகுக்கும் ஸ்வாமியாய்
விஷ்-சர்வ வியாபியான நாராயணன்
த்யபராக்கி-உண்மையான பராக்ரமத்தை யுடையவராய்
வா நரத்வமுபாகதை-வானர நிலையை அடைந்து இருக்கும்
சர்வை தேவைர்-எல்லா தேவர்களாலும்
பரிவ்ருதோ -சூழப் பட்டவராய்
மா நுஷம் வபு ஆஸ்தாய்-மனித யுருவை அடைந்து
சாஷாத் -நேரே
லோகா நாம் -உலகங்களுக்கு
ஹித  காம்யயா -நன்மை செய்ய விரும்பி
சராஷஸ பரீவாரம் -ராஷச பரி ஜனங்களோடு கூடின
த்வாம் ஹதவான் -உன்னை கொன்றார்  –

அவதாரிகை –
வேதாந்தங்க ளிலே-
ந கிரிந்திர த்வதுத்தரோ ந ஜ்யாயோ அஸ்தி வ்ருத்ரஹன் -என்றும்
மாமுபாஸ்வ -என்றும்
விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி -என்றும்
சிவா ஏகோதிய சிவங்கர -என்றும்
ததா யதா பூர்வம் கல்பயத் -என்றும்
ப்ரஜாபதே சபான வேசம ப்ரபத்யே   -என்றும் எவமாதி வாக்யங்களாலே சமாக்யா பிரமாணத்தை இட்டு -இந்திர ருத்ர ப்ரஹ்மாதிகள் காரணங்களாயும் மோஷ பிரதாராகராவும் சங்கித்து-
ஏகோ ஹைவ நாராயண ஆசீன்ந ப்ரஹ்மா நேஸாந -என்றும்
அத புநரேவ நாராயண ஸோ அநயம் காமம் காமையாதா -என்றும்
ப்ரஹ்மா சதுர்முகோஸ் சாயாத -என்றும்
த்ர்யஷ ஸூல பாணி புருஷோஸ்  ஜாயதே -என்றும்
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே –ருத்ரோ ஜாயதே –இந்த்ரோ ஜாயதே –என்றும்
தத்வம் நாராயண பர -என்றும்
நாராயண பரம் ப்ரஹ்ம-என்றும்
ப்ரஹ்மா  விதாப்  நோதி பரம் -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி  -என்றும்
சோன் வேஷ்டவ்ய ஸ விஜிஜ்ஞாசி தவ்ய-என்றும்
பராத்பரம் புருஷ முபைதி திவ்யம் -என்றும்
ஏவமாத்ய அந்ய பர நாராயண அநுவாக மஹா உபநிஷத் -ஸூ பால உபநிஷத்  ப்ரப்ருதி ஸ்ருதி வாக்யங்களாலும்
ஸ்ருதி  லிங்க வாக்ய  பிரகரண ஸ்தான சாமாக்யா நாம் சமவாயே பார தௌர்ப்பல்ய மர்த்த விபர கர்ஷாத் -என்று
ஸ்ருதி லிங்காதி காரண ந்யாயத்தாலே பூர்வ பூர்வத்தைப் பற்ற உத்தர உத்தரம் துர்ப்பலமாய் சமாக்யை துர்பலம் ஆகையாலும்
உபக்ரமாதி காரண நியாயத்தாலும் -அந்தர்யாமி பர்யந்த ஸ்வா ர்த்தாபி தாயியாகையாலும் அவயவ சக்தியாலும்
நாராயணனே சர்வ காரணம் பரதத்வம் உபாஸ்யன் மோஷப்ரதன்-என்று அறுதி இட வ்யுத்பன்நாதிகாரமாய்
பக்த்யா சாஸ்த்ராத் வேதமி ஜனார்த்தனம் -என்று புண்யாதி காரமுமாய் க்லேசிக்குற படியைக் கண்ட  ஸ்ரீ வால்மீகி பகவான் சதுரன் ஆகையாலே -ஆஸ்த்ரீ பாலம் பிரசித்தம் -என்னும்படி உலக்கைப் பாட்டாக பர்த்ரு ஹீனைகளாய் பிரலாபிக்கிற -தார அங்கதாதிகளைக் இட்டு –த்வமப்ரமேயச்ச –என்று தொடங்கி தத்வ நிர்ணயம் பண்ணி
இப்போது ராவண வதாநந்தரமாக மந்தோதரியை இட்டுத் தத்வ நிர்ணயம் பண்ணுகிறான் இப்ரதேசத்தால் –
எங்கனே -என்னில்
ராவணம் நிஹதம் ச்ருத்வா ராகவேண மகாத்மாநா -அந்தபுராத் விநிஷ்பேதூ ராஷச்ய ஸோ க கர்சிதா -113-1-என்று
பெருமாள் கையிலே ராவணன் பட்டான் என்று கேட்டு அந்தபுரத்தில் நின்றும் பெண்டுகள் புறப்பட்டு
உத்தரணே  -113-3-என்று வடக்கு வாசலாலே புறப்பட்டுப் படுகலத்திலே சென்று
தா பதிம் -113-7-என்று ராவணனைக் கண்டு அறுப்புண்ட கொடிகள் போலே இவன்மேல் விழுந்து
பஹூமா நாத் -119-8/9-என்று வல்லபையாய் இருப்பாள் ஒருத்தி சர்வாங்க பர்ஷ்வங்கம் பண்ணிக் கிடந்தது கூப்பிட அடியாள் கூத்தி யாய் இருப்பாள் ஒருத்தி காலைக் கட்டிக் கிடந்தது கூப்பிட வேறு ஒரு கந்தரப் பிராட்டி பார்ஸ்வத்திலே வந்து
கழுத்தைக் கட்டிக் கூப்பிட
ஆற்றாமை மிகுந்து இருப்பாள் ஒரு அகப்பரிவாரத்தாள் பறி கொடுத்தால் போலே
கை எடுத்துக் கூப்பிட்டுத் தரையிலே கிடந்தது புரள தாசாம் -114-1/2- என்று இவர்கள் அப்படிக் கூப்பிடா நிற்க
பிரதான மஹிஷியியாய் அபிமதையுமாய் இருக்கிற மந்தோதரி யானவள் நினைக்க ஒண்ணாத தொழிலை யுடைய பெருமாளாலே
கொலை யுண்டு கிடக்கிற ராவணனை ஏற விழியப் பார்த்து -நெஞ்சு அழிந்து -பிரலாபித்து அழுகிறாள்
அழுதபடி -ந நு நாம மஹா பாஹோ தவ வைஸ்ரவண அநுஜ-க்ருத் தஸ்ய  பிரமுகே ஸ்தாதும்-114-3/4/5-என்றும்
மானுஷாணாம்–114-7- என்றும்
நாட்டார் இரண்டு தோள் படைப்பார்கள் ஆகில் இருபது தோள் படைத்தவன் அன்றோ
ந சோ பார்த்தாவி மௌ பாஹூ-அயோத்யா -23-31-என்று நாட்டார் எழிலுக்கு  தோள் படைத்தார்கள் ஆகில்  ஆண்மைக்கு தோள் படைத்தாய் நீ யன்றோ
ஆளுடைமைக்கும் ஐஸ்வர்யம் உடைமைக்கும் வைஸ்ரவணன் தமி அன்றோ
நீயுமாய்க் கோபித்தால் நாட்டில் படை வீடு எல்லாம் அழித்துத் திரிந்த இந்த்ரனும் உன் முன்னே நிற்க வல்லனோ –
சாபா நுக்ரஹ சக்தரான ரிஷிகள் பிராமணர் திவ்யரான சாரண கந்தர்வாதிகள் அகப்பட உனக்கு அஞ்சி திக நதந்களிலே ஓடிப் போய்க் கிடப்பது –
இப்படி மதிப்பானாய்க்   கிடக்கிற நீ ஷூத்ரரான மனுஷ்யருக்குத் தோற்றோம் என்று வேள்கவும் அறிந்திலையீ-
வரம் கொள்ளுகைக்குக் கூட பாத்தம் போராத மனுஷ்யர் கிட்ட ஒண்ணாத நிலத்திலே நின்று ஓர் உடம்பிலே அம்பு பட்டால் அவ்வடிவை விட்டு வேறு ஒரு வடிவு கொள்ள வல்லையாய் இருக்கிற
உனக்கு ராமனால் பிறந்த வி நாசம் எனக்க்குக் கூடி இருக்கிறது இல்லை என்று அநுபாபத்தி பட்டு
யதைவ -114-11/19- என்று குரங்குப் படை கொண்டு
உனக்கு அகப்பட தலைக்காவலாய் அழிவில்லாத பரிகரமும் தானுமாய் இருந்த கரனைக் கொன்ற படியாலும்
இந்த யுக்திகளாலே இவரை மனுஷ்யர் அல்ல -திவ்யர் -என்று அறுதி இட்டு –
அதவா வாஸவேந த்வம் தர்ஷித அஸி-114-13-என்று இந்த்ரனாலே நலிவு பட்டாயோ-யம குபேராதிகளா லேயோ -சம்ஹர்த்தாவான ருத்ரனாலேயோ -என்று சங்கி த்து
வாஸ வசய -114-13-என்றும் -யேந வித்ராசித்த –113-12- என்றும் -சேதாரம் –114-49- என்றும்
தூசியிலே நின்ற உன் மகன் கையிலே கட்டுண்டு போன இந்த்ரன் உன் முன்னிலையிலே நிற்கவும் மாட்டான்
எல்லார்க்கும் கூற்றம் ஆனானாகிலும் உனக்கு அஞ்சி ப்ரஹ்மாவை இட்டு  உறவு செய்து நழுவின யமனும் மாட்டான்
தமையனே யாகிலும் ஏற்ற புரவியான புஷ்பகத்தை யகப்பட பரி கொடுத்து இன்று கூட மீட்க மாட்டாத வைஸ்ரவணனும் மாட்டான்
சந்திர ஹாசம் கொடுத்து உபகாரகனாய் இருக்கச் செய்தேயும் பீடத்தோடு -கைலாசத்தோடே -பிடுங்குண்ட வனாகையாலே ருத்ரனும் மாட்டான் -என்று கழித்து
சதாம் ஹி சந்தேஹபதேஷூ வஸ்து ஷூ பிரமாண மந்த காரண பிரண்ருத்தய -சாகுந்தலம்-1-19-என்று
மானஸ ப்ரத்யஷத்தாலும்
ராவண வதத்தில் ஐந்த்ரிய ப்ரத்யஷ்த்தாலும் -சேது பந்தன கர வாத வாலி வதாதி காரணங்களால் வருகிற அனுமானத்தாலும்
பராசச்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே ஸ்வா வாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -சவே -6-8- என்றும்
விசித்ரா சக்த யச்சைதா ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -6-7-70- என்றும்
சீதா லஷ்மீர் பவான் விஷ்ணு -120-28–என்றும் -பவான் நாராயணோ தேவ -120-13- என்றும்
சொல்லுகிற ஆகமக்ரமங்களாலும்
பெருமாளை பரவஸ்து என்று தானே அறுதியிட்டு தான் அறிந்த பிரகாரத்தை பிறர்க்கும் அறிவிப்பதாகக் கோலி
ராவணனை நோக்கி இவர் கேவலர் அல்ல -பர வஸ்துவான நாராயணன் –
தேவாதிகளால் படாத படி ப்ரஹ்ம அந்தர்யாமியாய் நின்று வரம் கொடுத்த படியாலே
சத்ய வாக்ய பிரயோகராகைக்காக தம்மை மூடி -மனுஷ்ய சட்டை இட்டு ஒறுப் புண்ட   தேவர்களையும் -ருஷ -கரடி -வானர கோபுச்ச விக்ராஹன்களைக் கொள்ளுவித்து தம்முடைய விபூதியான லோகத்தை
வருத்தம் லோல கண்டகம் -பால -15-20-என்னும்படி நீ நலிந்த படியாலே தமக்கு வேண்டி அன்றிக்கே லோக ஹிதார்த்தமாக சபரிகரனான உன்னைக் கொன்று
பெரிய புகரும் தாமுமாய் நின்றார் என்று நிஷ்கர்ஷித்துத் தலைக் கட்டுகிறாள் இப் பிரதேசத்தில் இச் சதுஸ் ஸ்லோகியாலே-

—————————————————————-
முதல் ஸ்லோகம் –

அவதாரிகை –
இதில் முதல் ஸ்லோகத்தால் லீலா விபூதியிலே எல்லாரோடும் உருக்கலந்து நிற்கிற இவர்
சேதன அசேதன வி லஷணமான வஸ்து -என்று அறிந்தேன் -என்றாள்-

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்–114-14-

1-வ்யக்தம்-தெளிவு
அவரோ இவரோ என்று அலமந்து திரிந்தோம் -இப்போது ஒரு படி வெளியாயிற்று
2- வ்யக்தம் –
தேவதாந்திர விஷய விசாரமான போது தெரியாதபடி இருள் மூடிக் கிடந்தது –
பகவத் விஷயத்தில் வந்தவாறே  பிரகாசமாய் அறிய வாயிற்று
ததாமி பத்தி யோகம் தம் -ஸ்ரீ கீதை -10-10- என்றும்
மத்த ச்ம்ருதிர் ஜ்ஞாநம போஹா நஞ்ச -ஸ்ரீ கீதை -15-15-என்றும்
அறியாதன அறிவித்த அத்தா -திருவாய் -2-3-2-என்றும்
ஜ்ஞானத்துக்கு ஊற்றுவாய் இவன் இ றே-
3- வ்யக்தம் –
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -நான் முகன் திரு  -96-என்னுமா போலே
இத்தனை போதும் அறிந்திலேன் -இப்போது அறிந்தேன் -என்கிறாள் –
4- வ்யக்தம் –
கண்டவாற்றால் தனதே உலகென நின்றான் -திருவாய் -4-5-10-என்கிறபடியே
கண்டபோதே சர்வ லோகேஸ்வர சாஷாத் -114-17-என்னும்படி யானார் –
5- வ்யக்தம் –
கா தவம் பவசி-சுந்தர -33-6.7/8/9-என்று திருவடியானவன் -ருத்ர மருத் வ ஸூக்களுடைய  தேவதையோ
சந்தரனைப் பிரிந்த ரோஹிணியோ
வசிஷ்டனைப் பிரிந்த அருந்ததியோ -என்று சங்கித்து-யுக்திகளால் பிராட்டி என்று அறுதி இட்டால் போலே அன்றிக்கே
கண்ட போதே பெருமாள் என்றும் பெருமாளை பர வஸ்து என்றும் அறுதி இட்டேன் -என்கிறாள் –
6-வ்யக்தம் –
மம வ்யக்தம் -மா ஜ்ஞாதம் -பார சபா -90-41-என்கிற திரௌபதியைப் போலே சொல்லுகிறாள் –
மஹத்யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி  இத்யேவம் யதௌரா கீதம் வசிஷ்டேந மகாத்மநா
மேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான் ததிதா நீம் மா ஜ்ஞாதம் -பார சபா -90-41- என்றாள் இ றே –
ஜ்ஞாதம் என்று சாமான வாசியான ஜ்ஞான சப்தம் இவ்விடத்திலே ஸ்ம்ருதி விசேஷத்திலே பர்யவசிக்கிறது
7- வ்யக்தம்
ஸ ஹி தேவை ருதீர்ணச்ய ராவணசய வதார்த்திபி அர்த்திதேர் மா நுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு ஸநாதன -அயோத்யா -1-7- என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -திருவாய் -6-4-5-என்றும்
ராவண வதார்த்திகளான  தேவர்கள் அபேஷையாலே வந்து பிறந்தார் என்கிற தேவ ரஹச்யம் இப்போது வெளியாயிற்று
8-வ்யக்தம் –
வர விரோதம் வரும் என்று ராவணன் படும் தனையும் தம்மை மறைத்து –
நாட்டிலே பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்த் -திரு வாய் -7-5-2- என்கிறபடி திரிந்து ராவணன் பட்ட வாறே இப்போது வெளியாயிற்று
வெளியான படி எங்கனே எனில்
1- ஏஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந–இதிவா
பர வஸ்து என்னும் இடமானால் -வ்யக்தம் ஏஷ -என்று சாமா நாதிகரிக்க வேண்டாவோ -என்னில்
வக்தாவினுடைய விவஷா வசம் இ றே- வாக் ப்ரவ்ருத்தி -ராவண வதம் ராமனால் கூடாது எனபது -இந்த்ராதிகளோ எனபது அங்கும் கூடாது என்பதே சாமான்யத்திலே விசாரித்து யுக்திகளால் ஒரு படி அறிந்தோம் என்று விசேஷத்திலே -நிச்சயித்து தனியே ஒரு வாக்யமாகக் கிடக்கிறது –
மை நாக —என்று பஹூ முகமாக விகல்பமாய் -ஆ ஜ்ஞாதம் ச ஜடாயு இதர சரசா க்லிஷ்டோ வதம் வாஞ்சதி -போலே கிடக்கிறது –
வ்யக்தம் என்று தான் அறிந்தாள் ஆகில் -ஏஷ மஹா யோகி பரமாத்மா -என்று மேலே சொல்லுகிறது என்-என்னில்
ஸ த்வம் மானுஷ மாத்ரேண ராமேண யுத்தி நிர்ஜித -114-5-என்றும்
ஸ ராசாச பரிவாரம் ஹதவாம்ச்த்வாம்-114-7- என்றும் ராவணனை வோக்கிச் சொல்லுகிறவள் ஆகையால்
அவரோ இவரோ என்று சந்தேஹித்தவள் -ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் -சிறிய திருமடல் -23-என்றால் முற்பட
அனந்தரம் -உமக்கு அறியக் கூறுகேனோ-சிறிய திருமடல் -23-என்று ராவணனுக்கும் பிறர்க்கும் அறியச் சொல்லுகிறாள் –
பிணமாய்க்  கிடக்கிறவனுக்குச்சொல்லுகிறது என் என்னில்
விரஹி நி களுமாய்ப் பதி ஹீ நைகளுமாய் இருக்கிற ஸ்திரீகள் நாயன்மார்  அசந்நிஹிதராய் இருக்க முன்னிலையாக பாவித்துச் சொல்லக் கடவது
ந நு நாமாவி நீதா நாம் வி நே தாஸி பறந்தப –ஆரண்ய -49-26-என்றும்
ஷமசே தம் மஹீபதே-சுந்தர -38-39- என்றும்
ஹா ராமா – ஹா லஷ்மணா ஹா ஸூ மித்ரே ராமமாத சஹ மே ஜனநா -சுந்தர -28-8- என்றும்
முகில் வண்ணா தகுவதோ -திருவாய் -7-2-2- என்றும்
வட்கிலள்  இறையும் மணி வண்ணா  என்னும் –கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் -திருவாய்-7-2-3- என்றும்
தகவில்லை தகவிலையே  நீ கண்ணா     -திருவாய்-10-3-1- என்றும்
அசோகா வநிகையிலே இருக்கிற பிராட்டி மால்யவானிலே இருக்கிற பெருமாளை நோக்கிச்  சொன்னாள்-
தந்தாம் ஊர்களிலே இருக்கிற ஆழ்வார்கள் ஆகிற நாய்ச்சிமார்கள் தந்தாம் திருப்பதிகளில்  இருக்கிற நாயன்மாரை நோக்கிச் சொன்னார்கள்
தாரையும் வாலி பட்டுக் கிடக்கிற போது-உத்திஷ்ட -கிஷ்கிந்தா -20-5/6-என்று சொன்னாள்
மந்தோதரியும்-ந நு நாம -மஹா பாஹோ தவ வைஸ்ரவண அநுஜ -114-3- என்றும் உத்திஷ்டோ -114-82-என்று சொன்னாள்
ப்ரத்யஷமாக லௌகிக வி லாபங்கள் தானே கானா நின்றோம்
இவள் தான் தனக்கு வ்யக்தமாகச் சொன்ன பாசுரம் என் -என்னில் –
ஏஷ பரமாத்மா நித்ய ஸ்ரீர் லோகா நாம் ஹித காம்யா ஸ ராஷஸபரிவாரம் ஹத வாம்ஸ் த்வாம் மஹாத் யுதி-என்று இப்புடைகளிலே
1- ஏஷ -இவர் –
மா நுஷம் வபுராஸ் தாய -114-16-என்று  மனுஷ்யச் சட்டை இட்டுத் தம்மை மறைத்துக் கொடு நிற்கிற இவர்
2- ஏஷ –
ராம சோகசமாவிஷ்டம்–112-14-என்றும்
சம்ஸ்கார -114-92- என்றும்
எங்களுக்கு எல்லாம் நியாமகராய் -பூசலில் பட்டார்க்கு வெறுக்கிறது என் -சம்ஸ்காரத்தில் ப்ரவர்த்திக்கலாகாதோ -பெண்களை மீள விடும் -என்று
உத்தர க்ருத்யங்களுக்கு விதாயகராய் இருக்கிற இவர் –
3- ஏஷ –
விபீஷண ஸ்திரீகளை ஆபரண பூஷிதை யாக்கி நிற்கிற இவர் –
4- ஏஷ
கொழுந்தனார் பெண்டுகளை அந்தப்புர விபூஷிதைகள் ஆக்கி எங்களை ரண பூஷிதைகள் ஆக்கி நிற்கிற இவர்
5- ஏஷ –
தர்ம சம்ஸ்தாபநார்த்தாய -ஸ்ரீ கீதை -4-8-என்றும்
தர்ம பாலோ ஜனஸ் யாச்ய-ஆரண்ய -1-18-என்றும் ரிஷிகளுக்கு தர்மத்தைக் கொடுத்து
விபீஷண விதேயம் ஹி லங்கைஸ்வர்யமிதம் க்ருதம்-116-13- என்றும் விபீஷணனுக்கு அர்த்த ஐஸ்வர் யத்தைக் கொடுத்து
பஜஸ்வ காமம் ஸூ கரீவ -என்று  -ஸூக்ரீவனுக்குகாமத்தைக் கொடுத்து
மா த்வம் சம நுஜ்ஞாதோ கச்ச லோகா ந நுத்தமான் -ஆரண்ய -68-30- என்றும்
ஆவஹத் பரமாம் கதிம் -கிஷ்கிந்தா -17-8- என்றும் ஜடாயு வாலிகளுக்கு மோஷத்தைக் கொடுத்து
அறம் பொருள் இன்பம் வீடு என்கிற புருஷார்த்தம் நாலும் மாண்டவாறே எனக்குக் கைவல்யத்தையே தந்து நிற்கிற இவர் –
6-ஏஷ –
சர்வ  சக்திஸ்  து  பகவா ந சக்த இவ சேஷ்டதே-என்கிறபடியே -கர வாலி வதாதி சேது பந்த லங்கா பங்க ராவண வதாத் யதிமானுஷ சேஷ்டிதங்களைப் பண்ணி ஒன்றும் அறியாதாரைப் போலே நிற்கிற இவர் –
7-ஏஷ –
மாநுஷீம் தநுமா ஸ்ரீ தம்  பரம் பாவமஜா நந்த -ஸ்ரீ கீதை -9-11-என்று அபலைகளான என் போல்வார்க்கு ஆஸ்ரீத சௌகர்யார்த்தமாகத் தாழ விட்டு நீர்மையைத்  தண்மையாக நினைக்கும்படி எளியராய் இருக்கிற இவர் –
இப்படி எளியராய் இருக்கிற இவர் தாம் ஆர் -என்னில்
1- மஹா யோகீ-
கேவலர் அல்ல -சமஸ்த கல்யாண குணாத்மகோ அசௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்று கட்டடங்க நன்றான திவ்ய குணங்களை உடையவர் –
2- மஹா யோகீ –
ஏஷாம் விபூதி யோகஞ்ச -என்றும்
யோகயுக் பரமாத்மா அசௌ நித்ய மங்கள விக்ரஹ -என்றும் சொல்லுகிறபடியே
யுநக்தீதி யோக -என்று குணங்களுக்குப் பேராய்-
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண-என்றும்
உயர்வா யுயர் நலம் யுடையவன் -என்றும்
அதி விலஷணமான குணங்களுக்கு ஆகரமானவர் –
3- மஹா யோகீ –
யோக சந்னஹா நோபா த்யா நயா சங்கதி  யுக்திஷூ எகிற இவ்வர்த்தங்களிலே யாகிலுமாம் –
முதல் சநநஹனமாய்-சந் நாஹா கவச்சத -என்று யுடம்புக்கீடாய் –
மஹா யோகம் என்று கேவலமான மானுஷ சந் நாஹம் அன்றியிலே இந்த்ரன் வரக் காட்டினதாய் –
திவ்யமாய் ராவண சச்தாச்த்ரங்களுக்கு ஈடுபடாதே
வி லஷணமான யுடம்புக்கு ஈடுடையராய் இருந்தார் என்றுமாம் –
சன்னாகம் -என்று கவசத்தை தமிழனும் சொன்னான் இ ரே
அன்றியிலே -4-மஹா யோகீ -என்று
சந்நத் தௌ விசரிஷ்யத -என்கிறபடியே -சந்  நாஹம் -உத்யோகமாய் -உத்யோகம் தவ சம்ப்ரேஷ்ய -17-64-என்று ராஜ்யப் பிரஷ்டர் என்று முசித்து இராதே படை கூட்டுவது –
துணை அணைப்பது அணை யடைப்பது இலங்கையை  யடைக்கப் பாய்ச்சுவது சுடுவது இடிப்பது   கருடனை அழைப்பது ஔ சாதம் அழைப்பிப்பதாய்
பெரிய உத்சாஹம்   யுடையராய் இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -5- மஹா யோகீ –
என்று உபாயமாய் -உபாய கோ வதே தஸ்ய -பால -16-2-என்று இவர் கேட்பது –
பிரவிஷ்டோ மாநுஷீம் தநும் அவத்யம்  தைவதைர் விஷ்ணோ சமரே ஜஹி-பால -15-21-என்று தேவர்கள் சொல்லுவதாய்
இப்படி வரத்தின் வரியில் அகப்படாதபடி-இது ஒரு யுபாயம்  யுடையவராய் ஆயிற்று என்றுமாம் –
அன்றியிலே -6- மஹா யோகீ –
என்று த்யானமாய்-த்யை சிந்தாயாம் இ றே -தசரத யஜ்ஞத்தில் தேவர்கள் திரண்ட அன்று தொடங்கி ராவண வத பர்யந்தமாக நடுவுள்ள கார்ய சிந்தைகளில் ஒன்றும்
பழுது போகாதபடி பத்தும் பத்தாகக் கார்ய விசாரம் யுடையராய் இருந்தார் -என்றுமாம் –
அன்றியிலே -7- மஹா யோகீ –
என்று -சங்கதியாய்-நா சகா யஸ்ய சித்த்யாதி -என்று துணை இல்லாதவனுக்கு ஓன்று ஆகாமையாலே
இது முடியும்படியாக ஹனுமத் ஸூ க்ரீவ விபீஷணாதி களான சஹாய சங்கதி யுடையராய் இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -8- மஹா யோகீ –
என்று யுக்தியாய்-உத்தர உத்தர யுக்தௌ ஸ வக்தா வாசஸ் பதிர் யதா -அயோத்ய -1-17- என்னுமா போலே
வன வாச நிவ்ருத்திக்கு இளைய பெருமாள் பஷங்களைத் தள்ளியும்
ஜாபாலி சொன்ன தர்ம ஆஷேபங்களைத் தள்ளியும்
வாலி வத அநந்தரம் அவன் சொன்ன பஷங்களைத் தள்ளியும்
விபீஷண சரணாகதிக்கு ஸூ க்ரீவ சரப ஜாம்பவத் ப்ரப்ருதிகள் யுடைய பஷங்களைத் தள்ளியும்
இப்படி பலரோடு கலந்த இடத்திலும் இத்தனை பேரையும் தள்ளும்படியான பிரபல யுக்திகளை யுடையவராய் இருந்தார் -என்றுமாம் –
அன்றியிலே -8- மஹா யோகீ –
என்று தபச்வீயாய் தலையும் சடையும் அரையும் மரவுரியுமான வேஷத்தாலும் இத்தனை பெண்டுகள் திரண்டு கிடக்க
முகம் எடுத்துப் பாராத விரக்தியாலும் வென்று கொண்ட ராஜ்யங்கள் ஸூ க்ரீவ விபீஷணா திகளுக்குக் கொடுத்துத் தாம் அவற்றில் நசை பன்னாமையாலும்
நினைத்தது முடிக்கும் படியான தப அனுஷ்டானத்தாலும்
இவர் தாம் பெரிய யோகியாய் இருந்தார் என்றுமாம் –
இப்படி யோகிகள் ஆகில் கர்ம வச்யரான சம்சாரியாய் இருந்தாரோ -என்னில் –
1- பரமாத்மா –
அப்படி அல்ல -சர்வ அந்தர்யாமியான புருஷோத்தமன் –
2- பரமாத்மா –
பரோ மா அஸ்மாதி தி பரம-என்றாய்
யஸ்மாத் பரம் நா பரம் அஸ்தி கிஞ்சித் -என்றும்
ந தத் சமஸ் சாப்யதி  கஸ்ஸ த்ருஸ்யதே-என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா -திருவாய் -2-3-2- என்றும் சொல்லுகிறபடியே சமாப்யதிக தரித்ரனானவன்
3- பரமாத்மா –
ஆத்மா ஜீவே த்ருதௌ தஹே ஸ்வ பாவே பரமாத்மா நி -யத் நேர்க்கே அக் நௌ மதௌ வாதே -என்ற இவ்வர்த்தங்களிலும் ஆம் –
4- பரமாத்மா –
என்று ஜீவா ராசியாய்
சாச்ச த்யச்சா பவத் என்றும் -ச ஏவ சர்வம் யதஸ்தி யன் நாஸ்தி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-38-என்றும்
இல்லதும் உள்ளதும் -திருவாய் -7-8-4- என்றும் சொல்லுகிறபடியே
சரீராத்மா பாவத்தாலே அவன் தான் என்று சொல்லலாம்படிஇருக்கிறவர்
அன்றியிலே -5- பரமாத்மா –
என்று -த்ருதியிலேயாய்-தைர்யம் -ஆபத்யயி ஸ்வ கார்யேஷூ கர்த்தவ்யத்வ வஸ்தி திர் த்ருதி  -என்று இ றே-
ராஜ்ய ப்ரம்ச வனவாச சீத அதர்சன ஜடாயுவதாதியான வ்யசனங்கள் வந்த அளவிலும் செய்யும் கார்யங்கள் ஈடேறும் படியான நிலையை யுடையராய் இருந்தார் -என்றுமாம்
அன்றியிலே -6-பரமாத்மா –
என்று தேஹத்திலேயாய்-நித்யம் நித்யா க்ருதி தரம்  -என்றும்
ந பூத சங்க சம்ஸ்தா நோ தேஹோ அசய பரமாத்மா ந -என்றும்
மணியுருவில் பூதம் ஐந்தாய் -திரு நெடு -1- என்றும் –
எதிரிகளுக்கு ஈடுபடாத படியான நித்ய நிரவத்ய விக்ரஹராய் இருந்தார் -என்றுமாம் –
அன்றியிலே -7- பரமாத்மா –
என்று -ஸ்வ பாவத்திலேயாய் -சம்பாஹூப் யாம் நமதி சமபதத்ரை-என்றும்
வாங் மநசை கபூமயே -என்றும் -எளிவரும் இயல்வினன்-திருவாய்-1-2-2- என்றும்
நஹி பால ந சாமர்த்தியம் ருதே சர்வேஸ் வாத் ஹரே -என்றும்
காக்கும் இயல்வினன் -கண்ணபெருமான் -திருவாய் -2-2-9- என்றும்
சௌலப்ய-ரஷகத் வாதியான ஸ்வ பாவம் யுடையராய் இருந்தார் -என்றுமாம் –
அன்றியிலே -8-பரமாத்மா –
என்று பரமாத்மா வாசியாய் -அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்கிறபடியே
சர்வமும் வ்யாப்தமாய்த் தாம் வியாபகர் என்னலாம் படி இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -9-பரமாத்மா –
என்று -யத்நத்திலே யாய் -யதன வாம்ஸ்ஸ பவிஷ்யாமி -என்றும்
உத்சாஹ பௌருஷம் சத்த்வம் -என்றும் மேலே மேலே உத்சாஹம் யுடையராய் இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -10-பரமாத்மா –
என்று அர்க்க- சூர்ய- வாசியாய்-கபே ராம திவாகர -சுந்தர -17-18- என்றும்
தேஜஸா சூர்ய சங்காச -சுந்தர -35-9- என்றும்
முளைக்கதிரை -திரு நெடும் -14- என்றும்
சீரார் சுடர்கள் இரண்டாய் -திருவாய் -6-9-1- என்றும்
பிரதாபாதிகளால் ஆதித்யன் தானாய் இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -11-பரமாத்மா –
என்று அக்னியாய் -அகரம் பதம் நயதீத் யக்நீ-என்றாய் -நயாமி பரமாம் கதிம் -என்றும்
காலாக் நி சத்ருசா குரோத -பால -1-18- என்றும்
நிர்த்த தேஹதபி காகுத்ச்த க்ருத்தஸ்த க்ருத்தஸ்  தீவ்ரேண சஷூஷா-சுந்தர -30-14- என்றும்
நிலனாய் தீயாய் -என்றும் தாஹகத்வாதிகளாலே அக்னி தானாய் இருந்தார் என்றுமாம் –
அன்றியிலே -12-பரமாத்மா –
என்று மதி வாசியாய் -புத்திமான் மதுரா பாஷி -அயோத்யா -1-13- என்றும்
புத்தா ஹ்யஷ்டாங்கயா யுகத -கிஷ்கிந்தா -54-2-என்றும்
மதியினால் குறள் மாணாய -திருவாய்-1-4-3- என்றும் அவசர உசித புத்தியோகம் யுடையவர் என்றுமாம்
அன்றியிலே -13- பரமாத்மா –
என்று வாத -காற்று-வாசியாய் -தஸ்மை வாதாத்ம நே நம -ஸ்ரீ விஷ்ணு புராணம்  -1-14-31- என்றும்
காலாய் -திருவாய் -6-9-1- என்றும் -சர்வ பிராணி பிராணந ஹேதுவான காற்றுத் தானாய் இருந்தார் –
இது எல்லாம் என் பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேச்மின் புருஷ பர -ஸ்ரீ கீதை -13-23-என்று பரமாத்மா சப்தம் முக்தனுக்கும் பேராய் இருந்தது –
இது வ்யாவர்த்தகம் ஆகமாட்டாது -என்ன
1- ஸ நாத ந -பரமாத்மா –
முக்தன் நெடும் காலம் பக்தனாய்த் திரிந்து பின்பு முக்தன் ஆனால் அன்றோ பரமாத்மா சப்த வாச்யத்வம் வருவது –
இவன் எப்போதும் பரமாதமா சக்த வாச்யனாய் இருக்கும்
2- ஸ நாத ந பரமாத்மா –
இவன் நித்யம் விபும் சர்வகதம் -என்று சர்வ காலத்திலும் சர்வ தேசத்திலும் சர்வ வஸ்துக்களிலும் இருக்கும் –
ஸநாதந-பரமாத்மா -என்றாலும் -ஆத்மன் சப்தம் தேக வாசியாய் அசித்தாகையாலும்  -நித்யம் சதா சதாத்மகம் -என்றும்
நித்யா சத்த விக்ரியா -என்றும் அசித்துத் தான் ஸநாதனம் ஆகையாலும் பர வஸ்து ஆகக் கூடாதோ -என்னில் –
1-அநாதி மத்யநிதந –
அசித்து ஸ்வரூபேண வித்யமாகிலும் ஆதி மத்ய அவஸாநங்கள் யுண்டு   –
இவன் -அநாதி மத் யாந்தமஜம வ்ருத்தி ஷயமச்சுதம் -என்று அசித்துப் போலே ஆதி மத்திய அவஸா நங்கள் இன்றிக்கே இருக்கும் –
2- அநாதி மத்ய நிதந-
ஆதி மத்ய நிதநங்கள் மூன்றுக்கும் ஒவ்வொன்றுக்கு இரண்டு அவஸ்தையாய்
அஸ்தி-ஜாயதே -பரிணமதே-விவர்த்ததே -அபஷீயதே -விநச்யதி-என்று அசித்து ஷட்பாவ விகார யுக்தமாய் இருக்கும்
இவன் அப்படி அன்றிக்கே -அபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜன்மபி வர்ஜித சக்யதே  வக்தும் யஸ் சதாஸ் தீதி கேவலம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-11-என்று
சர்வதா சத்தையேயாய் வ்யதிரிக்த அவஸ்தா பஞ்சகங்கள் இன்றிக்கே இருக்கும் –
ஸ்தூல ஸூஷ்மாத்மாநே நம-என்றும் -அவ்யக்த  வ்யக்த ரூபாய -என்று அசித்துத் தான் ஸூ ஷ்மமாய்-அவ்யக்தமாய் ஸ்தூலமாய் வ்யக்தமாய் இரண்டு அவஸ்தையாய் ஆயிற்று இருப்பது –
ஸ்தூலமாய் விகாரம் என்று பேரை யுடைத்தான ப்ருதிவ்யாதிகளுக்கு ஆயிற்று ஆதி மத்யாதிகள் யுள்ளது
ஸூ ஷ்மமாய் பிரகிருதி விக்ருதியான மஹாதாதிகளுக்கு
த்ரி குணம் யஜ்ஜ்கத்யோ நிர நாதி பிரபவாப்யாயம்   -என்று ஆதி மத்யாதிகள் இல்லையே -என்ன
1- மஹத பரம –
அப்படி இருக்கிற மஹானுக்கும் அவ்வருகாய் இருக்கும்
2- மஹத பரம –
இவ்வருகுள்ள கார்ய  வர்க்கங்களில் பெருத்து மகான் என்று சொல்லலாம்படியான மஹத் தத்வத்துக்கும் அவ்வருகாய் இருக்கும்
மஹத பரம-என்றால்  மஹத பரம வ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -என்று -மஹானுகுக்கு பரம் அவயகதம் அன்றோ -அது வானாலோ என்ன –
மஹான்-
மஹதோ மஹீயான் -என்றும்
மஹாந்தம் விபு மாதமாநம் மத்வா தீரோ ந ஸோசதி -என்றும்
பெரியதுகும் பெரியதாய் முமுஷூ பாஸ்யமுமாய் இருக்கும் –

ஆக
இந்த ஸ்லோகத்தால் லீலா விபூதி யோகமும்
அங்குள்ள சேதன அசேதன வைலஷண்யமும் சொல்லிற்று –

—————————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-ந மே துக்கம் -5-5 /சாபமாநய சௌமித்ரே -21-22 /

February 12, 2015

ந மே துக்கம்   ப்ரியா தூரே ந மே துக்கம் ஹ்ருதேதி வா
ஏததேவா நுஸோசாமி வயோ அஸ்யா ஹ்யதிவர்த்ததே –5-5-

அவதாரிகை –
பிராட்டியைப் பிரிந்த விரஹத்தாலே பெருமாள் பேசும் பாசுரம் இது-

ப்ரியா தூரே -எனக்கு இனிமையான சீதை தூரத்தில் இருக்கிறாள் என்று –
ந மே துக்கம் -எனக்குத் துக்கம் இல்லை –
ந மே துக்கம் ஹ்ருதேதி வா-ராவணனால் அபஹரிக்கப் பட்டாள் என்றாவது எனக்குத் துக்கம் இல்லை –
ஏததேவா நுஸோசாமி வயோ அஸ்யா ஹ்யதிவர்த்ததே-இவளுடைய வயது கழிகின்றது அன்றோ -இத்தைக் குறித்தே வருந்துகிறேன்-
ந மே துக்கம்   ப்ரியா தூரே ந மே துக்கம் ஹ்ருதேதி வா
ஏததேவா நுஸோசாமி –
மைதிலி நம்மைப் பிரிந்து தூரத்தில் வர்த்தியா நின்றாள் -என்றதுக்கு வெறுக்கிறேனும் அல்லேன்
இனி -வழிய ராஷஸ் ஸாலே பிரிவு பிறந்தது -இனி எங்கனே நாம் சாதிக்கும் படி -என்றதுக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
அதாகிறது -கடக்க இருந்தாள் ஆகில்  நாலு பயணம் உள்ளே எடுத்து விட்டுத் தீருகிறது
இனி பிரிவுக்கு ஹேது பூதனான பையலைக் கிழங்கு எடுத்துப் பொகடத் தீருகிறது அக்கார்யம் –
நான் இது ஒழிந்த அல்லாதவற்றுக்கு வெருவேன்-இது ஒன்றுக்குமே நான் மோஹிப்பது-அது எது என்னில் –
வயோ அஸ்யா ஹ்யதிவர்த்ததே-
இவை போலே காணும் என் அம்பாலே மீள விடலாவது ஓன்று அன்றே
அணைக்குக் கிழக்குப்பட்ட நீரை மீட்க்கப் போகாது இ றே-

———————————————————————————————————————————————————————————

சாபமாநய சௌமித்ரே ஸராம்ஸ் சாஸீ விஷோபமான்
ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா –21-22- –

அவதாரிகை –
கடலை நோக்கி வரக் கிடந்த -ஜட -மூட -பிரக்ருதியானது   வந்து முகம் காட்டாமையாலே
ஆழியைச் சீறி -திரு விருத்தம் -34-என்றும்
மாமயம் மகராலய அஸமர்த்தம் விசா நாதி -யுத்த -21-20-என்று மீன் படு குட்டமான இது நம்மை மதிக்கிறது இல்லை -கொடுவா தக்கானை -என்கிறார் –

சாபமாநய சௌமித்ரே -சுமித்ரையின் குமாரனான இலக்குவனே வில்லையும் கொண்டு வாரும்
ஸராம்ஸ் சாஸீ விஷோபமான் -விஷப் பாம்பை ஒத்த அம்புகளையும் கொண்டு வாரும்
ஸாகரம் சோஷயிஷ்யாமி -கடலை உலர்த்தப் போகிறேன் –
பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-வானரர்கள் கால்களினாலே நடந்து செல்லட்டும் –
1-சாபமாநய-
குண ஹீனனான இவனை நியமிக்கும் படி குணவானான வில்லைக் கொடு வாரீர் -என்கிறார் -நற்குணம் -நாண் உடைய வில்
2- சாபமா நய –
இதன் கட்டை -வரம்பை குலைக்கும்படி -கட்டுடை உறுதியுடைய வில்லை கொண்டு வாரீர் -என்கிறார்
3- சாபமா நய –
இவனுடைய இறுமாப்பைப் போக்கும் படி வளைந்த -இயற்கையில் வளைந்த -வில்லைக் கொண்டு வாரீர் -என்கிறார் –
4- சாபமா நய -இது புல்லைக் கவ்வும்படி வில்லைக் கொண்டு வாரீர்
என்ற அளவிலே இளைய பெருமாள் தாம் படுக்கையான படியாலே படுக்கைப் பற்றிப் படைப் பற்றாகக ஒண்ணாது என்று குசை  தாங்கி நிற்க -கால தாமதம் பண்ண –
1-சௌமித்ரே –
தாய்மார் சொல்லிற்று செய்யுமது ஒழியத்   தமையன்மார் சொல்லிற்று செய்ய ஒண்ணாதோ
2- சௌ மித்ரே –
ராமே பிரமாதம் மா கார்ஷீ -அயோத்யா -40-15-என்று ஆய்ச்சி சொன்னபடி செய்ய வேண்டாவோ
3- சௌ மித்ரே –
ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நௌ-கிஷ்கிந்தா -5-18- என்று நைத்ரியைப் பார்த்தால் நம்மைப் பண்ணின பரிபவம் உமக்கும் இல்லையோ –
என்றவாறே பயப்பட்டு வில்லைக் கொண்டு வந்து கொடுத்தார் –
1-ஸராம்ஸ் ச-
இக்குறையும் தாரீர் என்கிறார் –
2- 1-ஸராம்ஸ் ச-
அம்புக்கு -அப்புக்கு-ஜலத்துக்கு -அம்பை இட்டு அழிக்க வேணும்
கண்ட கேநேவ கண்டகம் -இ ரே -முள்ளை முள்ளைக் கொண்டே எடுக்க வேணும் –
ஏகேந மகேஷூ ணா-பால -1-66-என்று ஓர் அம்பே அமைந்து இருக்கப் பல அம்பு வேண்டுவான் என்-என்னில்
சமித்ரஜ்ஞாதி பாந்தவம்-பால -15-27-என்று இக்கடலோடு துவக்கான ஏழு கடலையும் அழைக்கையில் யுண்டான  திரு உள்ளத்தாலே
பிபேத ஸ புன  சாலான் சப்தைகேந மஹேஷூணா  கிரீன் ரசாதலஞ்சைவ -என்று
மராமரம் ஏழும் மலை ஏழும் கீழில் ஏழு உலகுமாக மூவேழு இருபத்தொன்றையும் ஓர் அம்பாலே துளை யுருவப் பண்ணினவருக்கு
ஒரு ஏழுக்கு பல அம்பு வேணுமோ என்ன
ஆனை தன பலம் அறியாதால் போலே கோபத்தின் மிகுதியாலே தம்முடைய மிடுக்கை மறந்து  அருளிச் செய்தார் ஆகவு மாம் –
சோஷயிஷ்யாமி -என்று  சுவறப் பண்ணப் போகிறவருக்கு அம்பென் என்னில்
3- சாரான் –
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -யுத்த -94-22-என்றும்
தீபத பாவக சங்கா சை  சரை-யுத்த -103-4-என்றும்
சரங்கள் தமக்கே தாஹக சக்தி யுண்டாகையாலே அருளிச் செய்கிறார்
என்றவாறே போலியாய் இருப்பன சில அம்பைக்கொடுத்தார்
1-ஆஸீ விஷோபமான் –
இவை அன்றே -உம்மைப் போலே உக்த அனுஷ்டானம் பண்ணும்படியானவற்றைக் கொண்டு வாரீர்
2-ஆஸீ விஷோபமான் –
இவை அன்றே -உம்மை-போலே உக்த அனுஷ்டானம் பண்ணும் படியானவற்றைக் கொண்டு வாரீர் ]
3-ஆஸீ விஷோபமான் –
ஆ ஸீ விஷம் ஆகிறது திருஷ்டி விஷம் –
வாயிட்டுக் கடிக்க வேண்டா –
கண்ணிட்டுப் பார்த்த போதே படும்படியாய் இருக்குமது
அப்படியே இங்கும் வாய்ப்பட வேண்டா
உடலில் கண் பட்ட போதே அழியும்படியாய் இருக்கை –
என் தான் திரு உள்ளத்தில் ஓடுகிறது என்ன –
1-ஸாகரம் சோஷயிஷ்யாமி –
ஊண் அடங்க வீண் அடங்குமே -இதன் ஜீவனத்தை -ஜலத்தை உயர் வாழ்வை -சுவறப் பிடிக்கக் காணும் பார்க்கிறது
-2–ஸாகரம் சோஷயிஷ்யாமி –
நாம் உண்டாக்கின வருத்தம் உண்டோ இத்தை அழிக்கும் போது
3-ஸாகரம் சோஷயிஷ்யாமி —
ஏகஸ் த்வமஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரகஸ் ததா -ஜிதந்தே -3-என்கிறபடியே
சிருஷ்டி சம்ஹாரங்கள் இரண்டும் ஒருவன் பணி இ றே
4-ஸாகரம் சோஷயிஷ்யாமி —
அப ஏவ சசர்ஜா தௌ-மனு -1-8-என்று சிருஷ்டிக்கு முற்பட்டால் போலே சம்ஹாரத்திலும் ராவணனுக்கு முற்பாடனாக்குகிறோம்
5-ஸாகரம் சோஷயிஷ்யாமி –
கருதக்நமான இத்தைத் துடிக்க துடிக்க வெறும் தரை யாக்குகிறோம்
6- ஸாகரம் சோஷயிஷ்யாமி
அச்சேத்ய அயமதாஹ்ய அயமக்லேத்ய அசசோஷ்ய ஏவ ச  -ஸ்ரீ கீதை -2-24–என்கிற ஆத்ம வஸ்து வன்றே
அசேதனமான நீராகையாலே உலர்த்தி விடுகிறோம்
7- ஸாகரம் சோஷயிஷ்யாமி –
இது நம்மோடு  ஜ்ஞாதித்வம் கொண்டாடுமாகில் நாம் இத்தோடு ஜ்ஞாதித்வம் கொண்டாடுகிறோம்
ஜ்ஞாதே கார்யம் மஹோ தாதி -யுத்த -19-32-என்னக் கடவது இ றே
சகரர்கள் கல்லின குழி -தாயாதி காய்ச்சல் கொண்டு இத்தை அழிக்கிறேன்
8- ஸாகரம் சோஷயிஷ்யாமி –
அன்று அறுபதினாயிரம் பேர் கல்லினத்தை நாம் ஒருவருமே அல்லா வாக்குகிறோம்
9- ஸாகரம் சோஷயிஷ்யாமி —
விஷ வ்ருஷோ அபி சம்வர்த்ய ஸ்வயம் சேத்தும சாம்ப்ரதம் -என்று நாம் ஆக்கினதை அழிக்கல் ஆகாது
இதின் நீர்க்களிப்பு அறும்படி உலர்த்தி விடுகிறோம்
10- ஸாகரம் சோஷயிஷ்யாமி —
இத்தை ஆக்கும் போது அன்றோ நாம் வேண்டுவது
அழிக்கும் இடத்தில் ருத்ராதிகளை இட்டால் போலே அம்பை இட்டு அழிக்கிறோம்
இத்தால் பெறப் புகுகிற  பிரயோஜனம்  என்-என்னில்
1-பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-
இவர்கள் மரக் கொம்பு பாயாமே மணல் குன்றிலே பாய்ந்து போவதாக
2- பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-
இவர்கள் கை நீச்சு நீஞ்சாமே காலிட்டு நடப்பனவாக
3- பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-
இவர்கள் அக்கரையோடு இக்கரையோடு தாவாமே காலிட்டு நடப்பனவாக
4- பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-
இவர்கள் நீருக்கு மேல் அழுந்தாமே மண்ணிலே நடந்து போவதாக –
5- சாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா-
பண்ணின பாபத்துக்கு இதின் பெருமை எல்லாம் தரை மட்டமாக்கிக் குரங்கின் காலின் கீழே துகை யுண்ணும்படி பண்ணுகிறோம் –

——————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது–ராமஸ்ய து வச -18-35 /கிமத்ர சித்ரம் -18-36 /மம சாப்யந்தராத் மாயம் -18-37 /தஸ்மாத் ஷிப்ரம் -18-38/ததஸ்து ஸூக்ரீவவசோ – 18-39 /ராகவேண அபயே தத்தே-19-1 /ஸ து ராமஸ்ய -19-2/அப்ரவீச்ச ததா ராமம் -19-3 /அநுஜோ ராவணஸ் யாஹம் -19-4/பரித்யக்தா மயா லங்கா -19-5/தஸ்ய தத் வசனம் -19-6/ஆக்யாஹி -19-7 /ராஷஸாநாம் வதே -19-23-

February 12, 2015

ராமஸ்ய து வச  ஸ்ருதவா ஸூக்ரீவ ப்லவகேஸ்வர
பிரத்யபாஷத காகுத்ஸ்தம் சௌஹார்த்தே நாபி சோதித–18-35-

ப்லவகேஸ்வர -வானரர் தலைவரான –
ஸூக்ரீவ  து -ஸூ க்ரீவ மகா ராஜரும் –
ராமஸ்ய து வச-ஸ்ரீ ராம பிரானுடைய வார்த்தையை
ஸ்ருதவா -கேட்டு
சௌஹார்த்தேந-ஸ்ரீ ராம பிரானுடைய நட்பினாலே
அபி சோதித-ஏவப் பட்டவராய்
பிரத்யபாஷத காகுத்ஸ்தம் -ஸ்ரீ ராம பிரானைக் குறித்துப் பதில் சொன்னார்-

 

–ராமஸ்ய து வச  ஸ்ருதவா –
தம்முடைய வடிவு கண்டார்க்கு உண்டு அறுக்க ஒண்ணாதால்  போலே
கேட்ட ஆ ஸ்ரீ த வர்க்கத்துக்கு உண்டு அறுக்க ஒண்ணாத வார்த்தையைக் கேட்டு –
து –
ப்ரேமாந்தராய் பெருமாளோடு விரோதித்த நிலை குலைந்து பெருமாளோடு ஏக கண்டரான வேறுபாடு –
ஸூக்ரீவ ப்லவகேஸ்வர –
இவருடைய பரிகரமும் முன்பு நின்ற நிலை குலைந்து இவரைப் போலே ஏக கண்டார்கள் ஆனார்கள் என்று கருத்து –
சௌஹார்த்தே நாபி சோதித—
தம் பக்கல் பெருமாளுக்கு யுண்டான சௌஹார்த்தத்தாலே ப்ரேரிதராய் சொன்னார்
சௌ ஹார்த்தமாவது -தத்தம் அஸ்ய அபயம் மயா என்று ஸ்வாமி களான தாம் செய்ததை நமக்குப் பின் செல்ல வேண்டி இருக்க
நம்மை பஹூ முகமாகத் தெளிவித்து நாம் இசைந்தால் ச்வீ கரிக்கக் கடவோம் என்னும் நீர்மை –
பிரத்யபாஷத காகுத்ஸ்தம் –
இந்நீர்மைக்கு அடியான குடிப் பிறப்பை யுடையவரை ஒரு வார்த்தை சொன்னார்
தம்முடைய சௌ ஹார்த்தம்  பிரேரகமாக ஒண்ணாது இ ரே -அது கலக்கத்துக்கு  ஹேதுவாகையாலே-

——————————————————————————————————————————————————————————

கிமத்ர சித்ரம் தர்மஜ்ஞ   லோகநாத ஸூகாவஹ
யத் த்வமார்யம் ப்ரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித –18-36-
தர்மஜ்ஞ   லோகநாத ஸூகாவஹ -அறம் அறிந்தவரே –உலகின் தலைவரே -இன்பம் அளிப்பவரே –
சத்வவான்-நல் நெஞ்சை யுடையீராய் –
சத்பதே ஸ்தித-அற வழியிலே நடப்பவரான தேவரீர் –
யத் த்வமார்யம் ப்ரபாஷேதா  -ஆர்யம் ப்ரபாஷேதோ யத் -நல் வார்த்தை பேசினது யாதொன்று உண்டோ அது –
கிமத்ர சித்ர-கிம் சித்ரம் அத்ர-தேவரீர் விஷயத்தில் ஆச்சரியமோ-

அவதாரிகை –
லோகத்தில் ரஷக அபேஷை யுடையாருடைய இவ்வார்த்தையின் நிழலிலே ஒதுங்கலாம்படி வார்த்தை சொன்னீர்
என்னுமிது தேவர்க்கு ஒரு ஏற்றமோ -என்கிறார் –
கிமத்ர சித்ரம் –
உம்மை ஒழிந்தார் இவ்வார்த்தை சொன்னார்கள் ஆகில் அன்றோ ஆச்சர்யம் ஆவது –
தேவரீர் அருளிச் செய்தீர் என்றால் ஆச்சர்யமோ
ஆச்சர்யம் அன்று என்னும் இடத்துக்கு ஹேதுக்கள் சொல்லுகிறது மேல்
தர்மஜ்ஞ –
தர்மங்களில் வெளிறு கழிந்த தர்மம் சரணாகத ரஷணம் என்று அறியுமவர் அல்லீரோ –
லோகநாத –
அவ்வளவேயோ -சிறியதைப் பெரியது நலியாதபடி நோக்காது ஒழிந்தால் குறையாம் படியான சர்வ நிர்வாஹகத்வத்தை யுடையீர் அல்லீரோ –
ஸூகாவஹ –
உம்முடைய நிர்வாஹகத்வம் துக்க நிவர்த்தகம் ஆனவளவேயோ -ஸூ க ஹேதுவுமாக வன்றோ இருப்பது –
சத்வவான்-
த்வயி கிஞ்சித் சமாபன்னே -41-4- என்று போந்த நீர்
நான் வத்யதாம் -17-27- என்ன
ந த்யஜேயம் -18-3- என்று நெஞ்சில் தூய்மை யுடையீர் அல்லீரோ –
சத்பதே ஸ்தித —
அபிமதம் ஆனவர்களையும் பஹிஷ்கரித்துச் செய்ய வேண்டும்படி சரணாகத ரஷணத்தில் நிஷ்டர் ஆனவர் அல்லீரோ
யத் த்
சர்வ லோகமும் உம்மை ஒழியவே உம்முடைய வார்த்தையின் நிழலிலே ஒதுங்கலாம் படி நீர் சொன்னீர் என்றது யாதொன்று
அதாகிறது –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-18-3- என்றும்
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -18-33–என்றும் சொன்ன வார்த்தையை
இஸ் ஸ்வ பாவங்களை யுடைய தேவரீர் அருளிச் செய்தீர் என்று இது ஒரு ஆச்சர்யமோ
உம்மை ஒழிந்தார் ஒருவர் சொல்லில் அன்றோ ஆச்சர்யம் ஆவது –

——————————————————————————————————————————————————————————–

மம சாப்யந்தராத் மாயம் ஸூத்தம் வேத்தி விபீஷணம்
அநுமாநாச்ச பாவச்ச சர்வத ஸூ பரீஷித   –18-37-

மம சாப்யந்தராத் மாயம் -மம அயம் அந்தராத்மா அபி -என்னுடைய இந்த உள்ளமும்
ஸூத்தம் வேத்தி விபீஷணம்-விபீஷணனை தோஷம் அற்றவனாக அறிகிறது
அநுமாநாச்ச பாவச்ச சர்வத ஸூ பரீஷித   –அனுமானத்திலும் -நினைவினாலும் -எல்லா விதத்திலும் இவன் நன்கு ஆராயப் பட்டான் –

அவதாரிகை –
நம்முடைய வார்த்தையை நீர் கொண்டாடின இத்தால் பிரயோஜனம் என்-
உம்முடைய நெஞ்சு தெளிந்தால் அன்றோ இவனை ச்வீ கரிக்கலாவது -என்ன அதுக்கும் குறை இல்லை -என்கிறார்-
மம சாப்யந்தராத் மாயம் ஸூத்தம் வேத்தி விபீஷணம்
அநுமாநாச்ச –
முக விகாராசாதி லிங்கங்களாலும்
பாவச்ச –
அவனுடைய வார்த்தை த்வநிகளாலே பிரகாசிக்கப் பட்ட நெஞ்சில் மேன்மையாலும்
ச -சப்தத்தால்
நான் வத்யதாம் -17-27-என்ற போதொடு
நீர் ந த்யஜேயம் -18-3- என்ற போதொடு
திருவடி -வித்யதே த்வச்ய சங்க்ரஹ -17-65 -என்ற போதொடு
வாசி அற ஏக ரூபனே இருந்தபடியாலும்
சர்வத –
இப்படி சர்வ பிரகாரங்களாலும்
ஸூ பரீஷித   —
சம்சய விபர்யய ரஹிதமாகப் பரீஷிக்கப் பட்டான்-

————————————————————————————————————————————————————————

தஸ்மாத் ஷிப்ரம் சஹாஸ்மாபிஸ் துல்யோ பவது ராகவ
விபீஷணோ மகா ப்ராஜ்ஞ சகித்வஞ்சாப் யுபைது ந–18-38-

தஸ்மாத் ஷிப்ரம் -ஆகையாலே   விரைவிலேயே
சஹாஸ்மாபிஸ் துல்யோ பவது -சஹ அஸ்மாபி துல்ய -நம்மோடு கூட ஒத்தவனாக
ராகவ -ரகு குலத் தோன்றலே
விபீஷணோ மகா ப்ராஜ்ஞ-பெரும் பேர் அறிவாளனான விபீஷண ஆழ்வான்
சகித்வஞ்சாப் யுபைது ந–சகித்வம் ச அப்யுபைது -நண்பனாய் இருக்கும்   நிலையையும் அடையட்டும்-

அவதாரிகை –
இப்படி ஸூ த்த ஸ்வபாவன் ஆகையாலும் -அத்தாலே தேவர்க்கு பரிகரனாக ப்ராப்தனாகையாலும்
நாங்கள் எல்லாரும் பெற்றபேற்றை இவன் ஒருவனே பெற வேணும் -என்கை-

தஸ்மாத் ஷிப்ரம் –
ஆஜகாம முஹூர்த்தேந-என்று பதறி வந்தபடியாலும்
தத்தம் அஸ்ய அபயம் மயா-என்ற தேவர் படியாலும் விளம்ப ஹேது இன்றிக்கே இருக்க
என்னாலே யாயிற்று அவனை சவீ கரிக்கையில் விளம்பம் யுண்டாயிற்று –
நான் தெளிந்த பின்பு சடக்கென விஷயீ கரிக்க வேணும் –
சஹாஸ்மாபிஸ் துல்யோ பவது –
எங்களை எல்லாரையும் கொண்டு கொண்ட அடிமையை இவனை ஒருவனைக் கொண்டு கொண்டருள வேணும் –
கண்ணன் வானாடமரும் தெய்வத்தினமோர் அன்னையீர்களாய்-திரு விருத்தம் -27-என்று
நித்ய சூரிகள் அனைவரையும் ஆழ்வாருக்கு ஒப்பாகச் சொல்லக் கடவது இ றே-
சஹாஸ்மாபி –
இவரை அடிமை கொள்ளும் இடத்தில் இவர் பிரதானராய் இவர்க்கு நாங்கள் பரிகார பூதராய் அடிமை செய்யும்படி விஷயீ கரித்து அருள வேணும் -சஹ யுக்தேஸ் ப்ரதாநே –
ராகவ-
பிரபன்ன பவித்ரானம் பண்ணாத போது ஸ்வரூபத்தை அழிக்கும் படியான குடிப்பிறப்பை உடையீர் அல்லீரோ –
விபீஷணோ மகா ப்ராஜ்ஞ-
ஜ்ஞானன் ஆகையாவது -நம்மை வெறுமையே பற்றாசாக விஷயீ கரிப்பர் என்று இருக்கை-
ப்ராஜ்ஞனாகை யாவது -ராவண சம்சர்க்கத்தால் வந்த தோஷங்களை பாராதே விஷயீ கரிப்பர் என்று இருக்கை
மஹா  ப்ராஜ்ஞனாகை யாவது -எத்தனையேனும்-அந்தரங்கரானார் -வத்யதாம் -என்றாலும்  -தாம் பிற்காலியாதே இவனைத் தெளிய விட்டு விஷயீ கரிப்பர் என்று இருக்கை –
இப்படி உம்மை உள்ளபடி அறியும் பேர் அறிவாளன் அல்லனோ –
சகித்வஞ்சாப் யுபைது ந-
சஹா தாஸ அஸ்மி -40-10-என்னும்படி நான் பெற்ற பேறு பெற வேணும் –
எங்களுக்கு சஹித்வத்தை அடைய வேணும் என்றுமாம் –
தோழன் நீ -பெரிய திருமொழி -5-8-1- என்று நீர் அடிமை கொள்ளுமா போலே இவனும் எங்களை அடிமை கொள்ள வேணும் –

———————————————————————————————————————————————————————————-

ததஸ்து ஸூக்ரீவவசோ நிசம்ய தத் ஹரீஸ்வரேணாபி ஹிதம் நரேஸ்வர
விபீஷணேநாஸூ ஜகாம சங்கமம் பதத்ரி ராஜேன யதா புரந்தர  18-39-

ததஸ்து ஸூக்ரீவவசோ நிசம்ய தத் -சுக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு அதற்குப் பின்
ஹரீஸ்வரேணாபி ஹிதம் நரேஸ்வர-மனிதர் தலைவரான ஸ்ரீ ராம பிரான் -வானவர் தலைவரான சுக்ரீவனாலே -அபிஹிதம் -சொல்லப் பட்ட
விபீஷணேந சங்கமம் -விபீஷண ஆழ்வானோடே சேர்த்தியை
பதத்ரி ராஜேன யதா புரந்தர  -புள்ளரையனான கருடனோடே சேர்ந்தால் போலே
ஆ ஸூ ஜகாம-விரைவில் அடைந்தார்-

அவதாரிகை –
மஹா ராஜர் சொன்னபடியே தன் பேறாகக் கிட்டினார் -என்கிறது-

தத் ஸூக்ரீவவசோ நிசம்ய து –
வத்யதாம் -என்ற மஹா ராஜருடைய அநு கூலமான அந்த வார்த்தையைக் கேட்ட பின்பு ப்ரீதியாலே பிறந்த விசேஷம்
நிசம்ய தத் பி ஹிதம் நரேஸ்வரோஸ் பூத் –
அந்த வார்த்தையைக் கேட்ட பின்பு நரேஸ்வருமானார் –
திருவடி வார்த்தையைக் கேட்ட  பின்பு தாம் உளரானார்
மஹா ராஜர் வார்த்தையைக் கேட்ட பின்பு சர்வ நிர்வாஹகரானார் –
ஹரீஸ்வரேணா விபீஷணேந  சங்கமம் –
சபரிகரராய்க் கொண்டு புகுர ஓட்டம் என்ற தாமே சபரிகரராய்க் கொண்டு விஷயீ கரிக்க வேண்டும் என்கிறார் என்று கருத்து
ஆ ஸூ ஜகாம –
கட்டு விடப்பட்ட தருண வத்ஸ தே நு கன்றின் பேரிலே விழுமா போலே சடக்கென கிட்டினார்
மஹா ராஜருடைய ப்ரேமம் மறுவலிடில் செய்வது என்-என்று அவர் இசைந்த போதே சடக்கென கிட்டினார் -என்றுமாம் —
புரந்தர பதத்ரிராஜே ந யதா –
இந்த்ரன் தன் பேறாகப் பெரிய திருவடியைக் கிட்டினால் போலே  இவரும் தம் பேறாகக் கிட்டினார் -என்கை –

——————————————————————————————————————————————————————————–

ராகவேண அபயே தத்தே  சந்நதோ ராவணாநுஜ
விபீஷணோ மகாப்ராஜ்ஞோ பூமிம் சமவலோகயன்
காத் பபாதாவநிம் ஹ்ருஷ்டோ பக்தைரநுசரை சஹ -19-1-

ராகவேண-ரகு குலத்து உதித்தவரான ஸ்ரீ ராம பிரானால்
அபயே தத்தே -அபாயமானது கொடுக்கப் பட்ட அளவிலே
சந்நதோ ராவணாநுஜ -நன்கு வணங்கியவனாய் -ராவணன் தம்பியாய்
விபீஷணோ மகாப்ராஜ்ஞோ -பேர் அறிவாளானான விபீஷணன்
பூமிம் சமவலோகயன் -பூமியைப் பார்த்துக் கொண்டு –
அநுசரை-பின் தொடர்ந்து வந்த –
பக்தை சஹ -அன்பு நிறைந்த அரக்கரோடு கூட
ஹ்ருஷ்ட -ஆனந்தம் உடையவனாய்
காத்-ஆகாயத்தில் நின்றும்
அவ நிம் பபாத -தரையிலே விழுந்தான் –
காத் பபாதாவநிம்  பக்தைர சஹ –

அவதாரிகை –
அனந்தரம் -பெருமாளும் விஷயீ கரித்து மஹா ராஜரும் இசைந்தததுக்குப் பின்பு ஸ்ரீ விபீஷண ஆழ்வான் செய்தபடி -சொல்லுகிறது –
ராகவேண –
பிரபன்ன பரித்ராணம்-தமக்கு ஏற்றம் அன்றிக்கே குல தர்மம் என்கை –
தத்தம் அஸ்ய அபயம் மயா -18-34- என்றது ஜீவித்தது -மஹா ராஜர் இசைந்ததுக்குப் பின்பு -என்கை –
ராவணாநுஜ விபீஷணோ -சந்நத-
ந நமேயம் என்று இருந்த ராவணன் தம்பியாய் இருந்து வைத்துப் பிறர் அள்ளி எடுக்க வேண்டும்படி திருவடிகளிலே வந்து விழுகிறதே என்று ரிஷி கொண்டாடுகிறான் –
மகாப்ராஜ்ஞோ சந்நத-
தமக்கு அபிமதராய் இருந்துள்ள மஹா ராஜ ப்ரப்ருதிகள் -வத்யதாம் -என்ன ந த்யஜேயம்-என்று விஷயீ கரித்த உபகாரத்தை அறிந்தவன் ஆகையாலே
விஷயீ காரமாகிற மஹா உபகாரத்துக்குத் தோற்றுத் திருவடிகளிலே விழுந்தான் -என்கை
பூமிம் சமவலோகயன் சந்நத –
ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -பெரிய திருமொழி -5-8-1-என்கிறபடியே என்னுடைய நிகர்ஷம் பாராதே தம்முடைய பேறாக மேல் விழுவதே
என்று லஜ்ஜா விஷ்டனாய்க் கொண்டு திருவடிகளிலே விழுந்தபடி –
காத் பபாதாவநிம் ஹ்ருஷ்டோ பக்தைரநுசரை சஹ –
மஹா ராஜர் வத்யதாம் -என்ற போது தலையில் கால் பாவ விரகு இன்றிக்கே ஆகாஸ்தனாய் நின்றவன்
அவர் தாமே சென்று அளித்த பின்பு பிறந்த ப்ரீத்தி பிரகர்ஷத்தாலே பெருமாள் திருவடிகள் அளவும் செல்லாதே
ப்ரிய பரிகரனாய்க் கொண்டு ஆகாசத்தில்நின்றும் தரையிலே விழுந்தான் –
உத்பபாத கதா பாணிஸ் சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -16-16- என்று அவன் லங்கா சம்பந்தம் அற்ற போதே தாங்களும் சம்பந்தம் அற்றுப் போந்தார்கள்
வத்யதாம் ஏஷ தீவ்ரேண தண்டேந சசிவை சஹ -17-27-என்று வதத்திலும் பாக்கில் ஆனார்கள் -சவீ காரத்திலும் அந்தர் பூதரானார்கள்
இத்தால் சொல்லிற்று ஆயிற்று
ஒருவனைக் கண் அழிவு அற்ற வைஷ்ணவன் என்று நிர்ணயித்தால் அவனைப் பிரிய மாட்டாதே ச்நேஹத்தை யுடையாரைப் பரீஷிக்கக் கடவதல்ல -என்று கருத்து –

—————————————————————————————————————————————————————————————-

ஸ து ராமஸ்ய தர்மாத்மா நிபபாத விபீஷண
பாதயோ சரணான் வேஷீ  சதுர்ப்பி சஹ ராஷஸை–19-2-

ஸ து ராமஸ்ய தர்மாத்மா-விபீஷண–அப்படிப்பட்ட அற வழி நெஞ்சினான விபீஷண ஆழ்வானும் ராமபிரானுடைய
நிபபாத  பாதயோ சரணான் வேஷீ  சதுர்ப்பி சஹ ராஷஸை–புகலிடத்தை தேடினவனாய் துணைவரான நாலு அரக்கரோடு கூட திருவடிகளில் விழுந்தான்-

அவதாரிகை –
பின்பு பதற்றம் தீர்ந்து பெருமாளுடைய திருவடிகளைப் புகலிடமாக நினைத்து சபரிகரனாய் வந்து விழுந்தான் -என்கிறது-
ஸ து –
இப்படி கலங்கின கலக்கம் தீர்ந்த வேறுபாடு
விபீஷண தர்மாத்மா-
எல்லா அவச்தைகளிலும் சரணாகதி தர்மத்தில் நின்றும் நெஞ்சு குலையாதே இருக்குமவன்
அதாகிறது -வத்யதாம் -என்ற போதோடு-சங்க்ய தாம் என்ற போதோடு -ந த்யஜேயம் -என்ற போதோடு -ஆ நயைநம் என்ற போதோடு
அஸ்மாபிஸ் துலா பவது -என்றபோதொடு வாசி அற -ராகவம் சரணம் கத -என்ற தான் பற்றின பற்றில் குலையாது ஒழிகை
ராமஸ்ய பாதயோ சரணான் வேஷீ  நிப பாத –
ராமஸ்ய –
தன் பக்கலில் ஆதாராதிசயம் தோற்றும்படி அபிராமமான வடிவை யுடையராய் யுள்ளவருடைய
பாதையோ சரணான் வேஷீ –
ஸ்த நந்தய பிரஜை  மாதாவின் குடைய ஸ்தநத்தையே அபாஸ்ரயமாகச் செல்லுமா போலே
திருவடிகளிலே தனக்கு புகலிடத்தை நினைத்த படி
நிபபாத
இவர் அள்ளி எடுக்கும்படி விழுந்தான்
சதுர்ப்பி சஹ ராஷஸை–
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் -என்னுமா  போலே தன்னுடைய விழுக் காட்டிலே அவர்கள் அந்தர் பூதராம்படி விழுந்தான் –

——————————————————————————————————————————————————————————

அப்ரவீச்ச ததா ராமம் வாக்யம் தத்ர விபீஷண
தர்மயுக்தம் ஸ யுக்தம் ஸ சாம்ப்ரதம் சம்ப்ரஹர்ஷணம்–19-3-

அப்ரவீச்ச -சொல்லவும் செய்தான்
ததா-அப்போது
ராமம் வாக்யம் -ஸ்ரீ ராம பிரானைக் குறித்து
தத்ர விபீஷண-அக்கூட்டத்தில் விபீஷண ஆழ்வான்
தர்மயுக்தம் ஸ -தர்மங்களோடு கூடினதாயும்
யுக்தம் ஸ -தகுந்ததாயும்
சாம்ப்ரதம் -தற்சமயம்
சம்ப்ரஹர்ஷணம்-உகப்பிப்பதாயும் இருக்கிற-
விபீஷண அப்ரவீச்ச –
பாதயோர் நிபபாத –19-2- என்று காயிகமான சரணாகதியைப் பண்ணினான் -கீழ்
அவ்வளவே பெருமாளுக்கும் அமைந்து இருக்க அவ்வளவில் தனக்குப் பர்யாப்தி இல்லாமையாலே வாசிகமாகவும் சரணம் புகுந்தான் –
ததா –
திருவடியில் விழுந்த சமயத்தில் –
தாத்ரா –
பெருமாளும் மஹா ராஜரும் முதலிகளும் -ஏக கண்டராய் இருக்கிற கோஷ்டியிலே –
ராமம் வாக்யம் –
ஸூ க்ரீவம் தாமசச சம்ப்ரேஷ்ய -17-9-என்று தன்னை நிவேதிக்கைக்காக மஹா ராஜரையும் முதலிகளியும் குறித்துச் சொன்ன வார்த்தை அன்றிக்கே
சரண்யரான பெருமாள் தம்மைக் குறித்துச் சொன்ன வார்த்தை –
வாக்யம்-
சர்வார்த்தத்தையும் பரி பூரணமாகச் சொல்லுகை –
தத்ர விபீஷண
தர்மயுக்தம் ஸ-
சரணாகதிக்கு அங்கங்களான தர்மங்களோடு கூடி யுள்ளதை –
யுக்தம் ஸ –
சரண்ய விஷயத்தைக் குறித்து பிரயோக்கிகிற தாகையால் யுக்தமாய் இருக்கை-
சாம்ப்ரதம்  சம்ப்ரஹர்ஷணம்-
ராகவம் சரணம் கத -17-14-என்றது போலே மஹா ராஹருக்கும் பரிகரத்துக்கும் ஸ்ரவண கடுகமாய் இருக்கை அன்றிக்கே -இப்போது எல்லார்க்கும் ஹ்ருதயங்கமமாய் இருக்குமதை –

————————————————————————————————————————————————————————————

அநுஜோ ராவணஸ் யாஹம் தேந சாஸ்ம்யவமாநித
பவந்தம் சர்வ பூதா நாம் சரண்யம் சரணம் கத –19-4–

அநுஜோ ராவணஸ் யாஹம் -நான் ராவணனுடைய தம்பியாகவும்
தேந சாஸ்ம்யவமாநித -அந்த ராவணனாலே அவமதிக்கப் பட்டவனாயும்
சர்வ பூதா நாம் சரண்யம் -எல்லா உயிர் களுக்கும் புகலிடமாய் இருக்கிற –
பவந்தம்-தேவரீரை
சரணம் கத –தஞ்சமாக அடைந்தவன் ஆகிறேன் –

அவதாரிகை –
அவ்வாக்கியம் இன்னது என்கிறது மேல் –

அநுஜோ ராவணஸ் யாஹம் தேந சாஸ்ம்யவமாநித-
இப்பாசுரத்தைச் சொல்லி முன்பே சரணம் புக்கான் அன்றோ –
புநரபி இப்படி சரணம் புகுகிறது ஏன்-என்னில் –
ஸூ க்ரீவம் தாம்ஸ்ஸ சம்ப்ரேஷ்ய-என்று ஸூக்ரீவரையும் பரிகரத்தையும் பார்த்து  -நிவேதயாத -என்கிற பிரயோஜனத்துக்காக -ராகவம் சரணம் கத என்று பரோஷ ரூபேண சொன்னான் அங்கு –
இங்கு பவந்தம் சரணம் கத -என்று இவர் தம்மையே குறித்துச் சொல்லுகையாலே புநருக்தி இல்லை
அநுஜ -என்கிற ஸ்வ தோஷ க்யாபநம் ஆகிஞ்சன்யத்துக்கும் உப லஷணம்-
சர்வ பூதா நாம் சரண்யம் –
பாப பிரசுரனாய் இருந்துள்ள ராவணன் கிடந்துள்ள குடலிலே கிடந்து அவனிலும் தண்ணியன் ஆகையாலே
ராவணஸ்ய ந்ருசம் சஸ்ய ப்ராதா -என்று உம்முடைய் கோஷ்டிக்கு ஆகாத அளவே அன்றிக்கே
த்வாம் து திக் குல பாம்சனம் -என்று அவனுக்கும் ஆகாத எனக்கு சரணார்ஹரான தேவர்க்கும் ஆகாதார் உண்டோ –
பவந்தம் சரணம் கத-
ஜ்ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணரான தேவரைப் புகலாகப் பற்றினேன்-

——————————————————————————————————————————————————————————————–

பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த நாநி ச
பவத்கதம்  மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை –19-5-

பரித்யக்தா மயா லங்கா -என்னாலே இலங்கை யாராசும் கை விடப் பட்டது
மித்ராணி ச த நாநி ச -நண்பர்களும் செல்வங்களும் கை விடப் பட்டன –
பவத்கதம்  மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை –என்னுடைய அரசும் உயிரும் ஸூ கங்களும் தேவரீர் இடம் அடங்கி உள்ளன –

அவதாரிகை –
அநந்தரம் ப்ராப்யாந்தர நிரசன பூர்வகமாக ப்ராப்யம் இன்னது என்கிறது-

பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த நாநி ச-
ராவண சம்பந்தத்தால்  வந்த இலங்கை -என்ன
தத் அநு பந்தி மித்ரங்கள் என்ன
தத் த்வாரா சம்ப்ராப்தமான தனம் என்ன
மற்றும் ஸோ பாதிகங்களான சம்பந்தங்களை ஸ்வாசநமாக விட்டு வந்தவன் –
இது முமுஷூவுக்கு சாஸ்திர சித்தமாக த்யாஜ்யமான ப்ராப்ய ஆபாசங்களுக்கு உப லஷணம்-
பவத்கதம்  மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை-
ராஜ்யம்–என்று பரிக்ரஹங்களுக்கு எல்லாம் உப லஷணம் –
ஜீவிதம் -என்று தாரக போஷாக போக்யங்களுக்கு உப லஷணம்
ஸூ கா நி -என்று உபயத்தாலும் வந்த ஸூ கங்களும் தேவர் திருவடிகளே –
சகல பாக்யங்களும் தேவர் திருவடிகளில் கைங்கர்ய ஸூ கத்திலே அந்தர் பூதம்
மாதா பிதா யுவதய –என்றும்
ப்ராதா பார்த்தா ச பந்துஸ்ஸ பிதா ச மம ராகவ -என்றும்
சேலேய் கண்ணியரும்-என்னக் கடவது இ றே-
விட்டவை ஓர் உறவாக மாட்டாது
சம்பந்தோ அபி ந சம்பந்த ஆத்மந பிராண காயயோ புத்ர மித்ர கலத்ராதி சம்பந்த கேந ஹேது நா -என்று எல்லா உறவுமாக வல்லீர் தேவர்
பித்ரு மாத்ரு ஸூஹ்ருத் பிராத்ரு தார புத்ராதயோ அபி வா – ஏகைகப லலாபாய சர்வலாபாய கேசவ -என்னக் கடவது இ றே –

————————————————————————————————————————————————————————–

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்
வசஸா சாந்த்வயித்வைநம் லோசநாப்யாம் பிபந்நிவ–19-6-

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா -அந்த விபீஷணனுடைய அந்த சொல்லைக் கேட்டு
வசஸா-வார்த்தையினாலே
சாந்த்வயித்வா -ஆறுதல் செய்து
ஏநம் -இந்த விபீஷணனை
லோசநாப்யாம் பிபந்நிவ–கண்களினாலே பருகுவார் போலே
ராமோ வசனம் அப்ரவீத் -ஸ்ரீ ராம பிரான் சொல்லை உரைத்தார் –

அவதாரிகை –
இவர் தம் ஸ்வரூப அநு ரூபமான வார்த்தையைக் கேட்டு தமக்கு இவர் பக்கல் யுண்டான ஆதார அதிசயம் எல்லாம்
கடாஷத்திலே தோற்றும்படி விசேஷ கடாஷம் பண்ணி யருளி ஒரு வார்த்தை அருளிச் செய்கிறார்-
தஸ்ய-
தன்னுடைய பரிகரங்களையும் விட்டுப் பெருமாளுடைய திருவடிகளையே சரணமாகப் பற்றினவனுடைய –
தத் வசனம் ஸ்ருத்வா –
பெருமாள் திருவடிகளிலே கைங்கர்யமே எனக்கு சகல போகங்களும் என்று சொன்ன வார்த்தையைக் கேட்டு –
ஏவம் வசஸா சாந்த்வயித்-
பூர்வ வ்ருத்தம் பாராதே நம்மை இங்கனே விஷயீ கரிப்பதே என்று ஹ்ருஷ்டராய் இருந்துள்ள இவரைக் குறித்து
சாபாரதன் தன் ஷாபணம் பண்ணுமா போலே வாயாலே இன்சொல்லைச் சொல்லி
அதாகிறது -நம்முடைய வைபவத்தை சொன்னதே ஹேதுவாக ராவணன் -கோன்யஸ்த் வேவம்–குல பாம்சனம் -16-15-என்ற பரிபவிக்கிற தசையிலே வந்து கைக் கொள்ள வேண்டாவோ
குறைவாளர்கள் செய்ததைப் பொறுக்கும் இத்தனை அன்றோ என்கை
லோசநாப்யாம் பிபந்நிவ–ராமோ வசனம் அப்ரவீத் –
அந்த இன்சொல்லாலே இவனை நீராக்கிக் கண்ணாலே பருகுவாரைப் போலே விசேஷ கடாஷம் செய்து அருளா நின்று கொண்டு பெருமாள் ஒரு வார்த்தை அருளிச் செய்து அருளினார் –
என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -திருவாய் -9-6-10-என்னக் கடவது இ றே –

———————————————————————————————————————————————————————————————

ஆக்யாஹி மம தத்த்வேந ராஷஸாநாம் பலாபலம்–19-7-

ஆக்யாஹி -சொல்லும்
மம தத்த்வேந -உள்ளபடி எனக்கு
ராஷஸாநாம் பலாபலம்–அரக்கர்கள் உடைய பலமுடைமையையும் பலமின்மையையும்

அவதாரிகை
உம்முடைய விரோதிகளை அழியச் செய்து லங்கா ராஜ்யத்திலே உம்மை அபிஷேகம் பண்ணக் கடவோம் –
உம்முடைய எதிரிகளுடைய பலம் இருக்கும்படி சொல்லீர் என்கிறார்-
யத்வா -நம் பக்கல் அநு கூல  வ்ருத்தியே நமக்கு பிரயோஜனமாக சொன்னீரே
காயிகமாக வ்ருத்தியைப் பின்னைக் கொள்ளுகிறோம்-
வாசிகமாய் இருப்பதொரு வ்ருத்தியைப் பண்ணீர் என்கிறார்-
யா யா சேஷ்டா ததர்சநம்  -ஸ்ரீ விபீஷண ஆள்வான் யுடைய முக மலர்த்தி காண்கைக்காக-
ஆக்யாஹி  ராஷஸாநாம் பலாபலம்–
அவர்களிலே அந்ய தமனாய் இருக்கிற அவனை விஜாதீயருடைய பலம் கேட்பாரைப் போலே கேட்பான் என்-என்னில்
ந து ராஷஸ சேஷ்டித-17-24- என்னும் அளவன்றிக்கே ராஷஸ ஜாதியாரும் அல்லர் இவர்
இஷ்வாகு வம்ச்யர் என்னும் நினைவாலே
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து -திருப் பல்லாண்டு -5-என்றும்
குலம் தரும் -பெரிய திருமொழி -1-1-9-என்றும்
சொல்லலாம்படி இ றே பகவத் சமாஸ்ரயண  வைபவம் இருப்பது
விப்ராத் த்விஷட் குநாயுதாத் -என்றும்
தமராவார் -நான் முகன் திருவந்தாதி -91-
மம தத்த்வேந க்யாஹி –
ராஷஸ பலத்தை அழியச் செய்யக் கடவோமாய்
அந்த பலத்தின் யுடைய அளவறியாத நமக்கு
நிலவராய் இருந்துள்ள நீர் நம் முன்பே எதிரிகளுடைய மிடுக்கைச் சொலுவது என் என்று இராதே உள்ளபடி எனக்குச் சொல்லும் என்கிறார் –

—————————————————————————————————————————————————————————-

ராஷஸா நாம் வதே சாஹ்யம் லங்கா யாஸ்ச பிரதர்ஷணே
கரிஷ்யாமி யதாப்ராணம் பிரவேஷ்யாமி   ச வாஹிநீம் –19-23-

ராஷஸா நாம் வதே -அரக்கர்களை அழிப்பதிலும்
லங்கா யாஸ்ச பிரதர்ஷணே -இலங்கையை வெல்லுவதிலும்
சாஹ்யம் -உதவியை
கரிஷ்யாமி யதாப்ராணம் -உயர் உள்ள அளவிலும் செய்வேன்
பிரவேஷ்யாமி   ச வாஹிநீம்-சேனையிலும் நுழைந்து போரிடக் கடவேன் –

அவதாரிகை-
அஹத்வா ராவணம் சங்க்யே சபுத்ரம் சஹ பான்தவம் -அயோத்யாம் ந பிரவேஷ்யாமி த்ரிபிஸ் தைர் ப்ராத்ருபி சபே 19-21-என்று
இவருடைய அபிஷேக பரிபந்தியாக பலத்தை நிர்ணயித்தார் பெருமாள் –
இவரும்
ராஷஸா நாம் வதே சாஹ்யம் லங்கா யாஸ்ச பிரதர்ஷணே
கரிஷ்யாமி யதாப்ராணம் பிரவேஷ்யாமி   ச வாஹிநீம் -என்று
தாம் அடிமை செய்யும் படியைச் சொல்லுகிறார்
பெருமாள் அருளிச் செய்த படியே தாமும் விஜாதீயராய்ப் பேசுகிறார் –

சாஹ்யம்-என்றது தேவர் அதிகரித்து கார்யத்தில் என்னுடைய ஸ்வரூப சித்த்யர்த்தமாக யுத்தத்திலே அம்பு எடுத்துக் கொடுக்கிறேன் -என்கிறார் -யதாப்ராணம்-என்று –
ராகவார்த்தே பராக்ராந்தா ந பிராணே குருதே தயாம்–27-1-என்கிற முதலிகள் யுடைய நிலையிலே நின்று பேசுகிறார்-
பட்டர் ஸ்ரீ பாதத்திலே  அபய பிரதானம் கேட்டார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -இப்பிரகரணத்தில் செய்தது ஆயிற்று என்-என்று கேட்க –
சதோஷராய் இருப்பார் சரணாகதர் ஆகார் -என்று மஹா ராஜர்   பஷத்தாலே பூர்வபஷித்து
தோஷ குணங்கள் அப்ரயோஜனங்கள்
சேதனர் நின்ற நிலையிலே சரணாகதிக்கு அர்ஹர் -என்று  பெருமாள் திரு உள்ளத்தாலே சித்தாந்தம் –

அபய பிரதராஜரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அபய ப்ரதானசாரம் முற்றிற்று

———————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஸக்ருதேவ ப்ரபன்னாய –யுத்த -18-33 /ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட -18-34- –

February 11, 2015

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-

ஸக்ருதேவ -ஒரு தரமே
ப்ரபன்னாய -பிரபத்தி பண்ணினவன் பொருட்டும்
தவாஸ் மீதி ஸ யாசதே -தவ -உனக்கு அடியேனாய் -அஸ்மி -ஆகிறேன் -இனி -என்று -யாசதே -யாசிக்கிறவன் பொருட்டும்
சர்வ பூதேப்யோ-எல்லா பிராணிகள் இடத்தில் நின்றும்
அபயம் -பயம் இன்மையை
ததாமி-பண்ணிக் கொடுக்கிறேன்
யேதத் வ்ரதம் மம –இது எனக்கு விட முடியாத சங்கல்பம் –

அவதாரிகை –
இப்படி சொன்ன இடத்திலும் மஹா ராஜர் நேராகத் தெளியாதே சலித ஹ்ருதயராய் இருக்கிற படியைக் கண்டு அருளி
ப்ரக்ருத்யநுகுணமாக ப்ரபன்ன பரித்ராண பிரதிஜ்ஞையைப் பண்ணி அருளுகிறார் -ஸக்ருதேவ -என்கிற ஸ்லோகத்தாலே –
மித்ர பாவேந -என்கிற ஸ்லோகத்தில் பிரகிருதி -தன்மையை -அருளிச் செய்தார் –
இதில் தத் அநு குணமாக பிரதிஜ்ஞையைப் பண்ணுகிறார்-
ஸக்ருதேவ ப்ரபன்னாய-
ஸக்ருச் சப்தத்துக்கு -சஹஸா ஆதேஸமாய் –சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி
அதாகிறது -தன் அயோக்யதையைப் பார்த்துத் தே-இது ஆள்வான் நிர்வாஹம் –
கீழ் அநாதிகாலம் சம்சரித்துப் போந்தவன்  மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே
யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும் அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்
ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –
ஸக்ருதேவ -என்கையாலே உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவர்த்திக்கிறது –
தவாஸ் மீதி ஸ யாசதே –
இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –
ஸக்ருதேவ  ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி
தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் -அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி-
சர்வ பூதங்கள் நிமித்தமாக பய நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுப்பன் –
பீத்ரார்த்தா நாம் பய ஹேது -பாணினி ஸூ த்த்ரம் -1-4-25-
இதி  ஹேதௌ பஞ்சமீ –
மஹா ராஜர் எதிரிடிலும் காட்டக் கொடோம் என்றபடி
யேதத் வ்ரதம் மம —
நமக்கு அநு பால நீயமான சங்கல்பம் இது
அமோக சங்கல்பரான நமக்கு சங்கல்பங்கள் அடையக் குலையிலும் குலையாத சங்கல்பமாகும் இது –

————————————————————————————————————————————————————————————-

தனி ஸ்லோக- வியாக்யானம்-

அவதாரிகை –
ஸ ராவண -யுத்த -11-33-என்று பெருமாளும் பரிகரமுமாகக் கடல் கரையிலே குறுகி வந்து விட்டார்கள என்று கேட்ட ராவணன்
சசிவசா மந்த மந்த்ரி புரோஹிதாதி வர்க்கத்தைக் குறைவறக் கூட்டி
பவித்பிர் -12-26-என்று நியமித்து கார்ய விசாரம் பண்ணுகிறவன்
தான் செய்து நின்ற நிலைகளையும் செய்ய வேணும் கார்யங்களையும் சொல்லி
தஸ்ய காம பரி தஸ்ய -12-27-என்று இத்தைக் கேட்ட கும்ப கர்ணனும் குபிதனாய்
யதா து ராமஸ்ய -12-28-என்று இவன் அபஹரித்த வன்றே இப்படி விளையும் என்று அறுதி இட்டோமே என்று
ஸ்வ புத்தி சம்வாதத்தை சம்வதித்து
சர்வமேத -12-29-என்று செருக்கி நான் செய்த வற்றுக்கு ஒப்புண்டோ என்ற ராவணனை  அதி ஷேபித்து
எங்கள் சொல் கேட்டுச் செய்ய இருந்தாய் ஆகில் இந்த சீதா அபஹாரத்துக்கு முன்பே அன்றோ செய்வது -என்றும்
ய -பஸ்சாத்-12-32- என்று பூர்வ உத்தர கார்யங்களை க்ரம ஹீனமாகப் பண்ணுகிறவன் நயாப நயங்களை அறியான் என்றும்
திஷ்ட்யா-12-34-என்று நஞ்சூட்டின பழம் போலே இனியராய் இருக்கச் செய்தேயும் அறக் கொடியர் பெருமாள்
அவர் உன்னைக் கொல்லாது ஒழிந்தது உன் புண்யம் -என்றும்
அதில் கோபித்து இவன் வெறுக்க ஒண்ணாது என்று சமீ கரிஷ்யாமி -12-35-என்று
பள்ளத்துக்கு மேட்டை நிரவுமா போலே உன் அநீதியை என் தோள் வலியாலே ஒக்க விடுகிறேன் -என்று சமாதானம் பண்ண
மஹா பார்ச்வனும் அவனுக்கு பிரியமாக சில வார்த்தைகளைச் சொல்லி -நிசாசர-14-1- என்று
அவர்கள் நிரர்த்தகமாகப் பிதற்றின வார்த்தைகளைக் கேட்டு விபீஷணப் பெருமாள் ஹிதரூபமாக
வ்ருதோ-14-2-என்று பாம்போடு ஒரு கூரையிலே பயிலுவாரைப் போலே -பெரிய திருமொழி -11-8-3-சீதை யாகிற பெரும் பாம்பின் அருகே கையை நீட்டுவார் உண்டோ –
யாவந்த -14-3/4-என்று தொடங்கி-குரங்குகள் கடலை அடைத்துப் படை வீட்டை அடைக்கப் பார்க்க புகுகிறார்கள்
ராம சரங்கள் குறும் தெருவும் நெடும் தெருவுமாக புகுந்து தலைகளைத் திருகப் புகுகிறது
அதுக்கு முன்னே பிராட்டியைப் பெருமாள் பக்கலிலே போக விடாய்-என்றால் போலே சில வார்த்தைகளைச் சொல்ல
ப்ரகுஅச்த இந்த்ரஜித் ப்ரப்ருதிகளும் அதுக்கு விபரீதமாக சில வார்த்தைகளைச் சொல்ல
ஸ்ரீ விபீஷணப் பெருமாளும் குபிதராய் -ந தாத -15-9/10/11-என்று தொடங்கி உனக்கு இவற்றில் அபியோகம் இல்லை
பெற்ற பிள்ளை நீ தான் புத்ரன் என்று ஒரு சத்ருவாய் இருந்தாய்
தகப்பனார் அனர்த்தத்தை இப்படி இசைவார் உண்டோ
சத்ருக்களைக் கொல்லில் முற்பட உன்னைக் கொல்ல வேண்டும் என்று வார்த்தை சொல்லி
த நாநி -15-14-என்று உபஹார புரஸ் சாரமாகப் பிராட்டியை உடையவன் வசத்திலே விட்டு உங்கள் முடியோடு நெஞ்சாறல் கெட்டிருக்கப்  பாருங்கோள்-என்றுசர்வர்க்கும் ஹிதம் சொல்ல
இத்தைக் கேட்ட ராவணன் ஸூ நிவிஷ்டம் -16-1-என்று இப்படி ஹிதம் சொன்னால் என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய்-2-7-8–என்றும்
அறியாதன அறிவித்த   அத்தா நீ செய்தன -திருவாய் -2-3-2- என்றும்
காலிலே விழப் பிரார்தமாய் இருக்க தன் வசம் இன்றியிலே கால பரவசனான படியாலே பருஷங்களைச் சொல்லி
த்வாம்  து திக் குல பாம்சனம் –16-16-என்று திக்கரிக்க
உத்பபாத கதா பாணி -16-17-என்று
சோதர ப்ராதாவுமாய் ஹித உபதேசம் பண்ணின என்னை இப்படிச் சொன்ன இவன் என் படப் புகுகிறான் -என்று
தளர்ந்து தடியூன்றி எழுந்து இருந்து தனக்கு பவ்யராய் இருப்பார் நாலு பேரோடு கிளம்பி
ஆத்மானம் -16-26- என்று நாலு வார்த்தை சொல்லி
ஆஜகாம முஹூர்த்தே ந -17-1-என்று
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4-புரிவதற்கு முன்னே தம்பி சொல்லு ஜீவியாத ராவண கோஷ்டியில் நின்றும்
தம்பி சொல்லு ஜீவிக்கிற ராம கோஷ்டியை நோக்கி வந்து
நிவேதயாத மாம் ஷிப்ரம் ராகவாய மகாத்மனே -17-15-என்று
நெறி கெட மடுத்துக் கொண்டு  புகலாகாது
அதி சங்கையும் பண்ணுவார்கள்
த்வார சேஷிகளை கொண்டு பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து ஆனய-18-34-என்னப் புக வேணும்  என்று நின்ற நிலையிலே நின்று விண்ணப்பம் செய்ய
இத்தைக் கேட்ட மஹா ராஜர் -யேதத்து -17-16-என்று இவன் வார்த்தையைக்  கேட்டு
பெருமாள் முற்பாடராய் வருவதற்கு முன்னே தாம் நடை இட்டுச் சென்று ராஜ்ய கார்யங்கள் விசாரிக்க வேண்டாவோ -ஓய்ற்றரியோ போக விட வேண்டாவோ -நம்மிலும் அவர்கள் முற்பட்டார்கள் –
ப்ரணிதீ -17-20-என்று இங்கு ஆகாசத்திலே   நிற்கிற இவன் ஒற்றனாக வேணும்  -ராவணன் தமி -மூர்க்கன் -நலிய வந்தவன்
இவனைக் கழுத்திலும் காலிலும் கோக்க அடுக்கும் -எனபது -அது பெருமாள் செவிக்குப் பொறுத்த வாறே -வந்தவனையும் அவனையும் கொள்ள பிராப்தம் -என்று சொல்ல
இத்தைக் கேட்டு அருளின பெருமாள் திரு உள்ளம் தளும்பி முதலிகளைப் பார்த்து -யதுக்தம் -17-30-என்று முதலிகளைப் பார்த்து
தோழனார் ராஜாக்களாய்ச் செருக்கிச் சொன்ன வார்த்தையை சரணாகத ரஷணம் பண்ணின ஜாதியிலே பிறந்த நீங்களும் கேட்டிகோளே-உங்கள் நினைவுகளை சொல்லுங்கோள்-என்ன
ஸ்வம் ஸ்வம் -17-32-என்று மாட்டார்கள் -மகா ராஜர்க்காக மாட்டார்கள் உபயாவிருத்தமாகப் பரீஷித்து
ஒழுக விசாரித்துக் கைக் கொள்ள பிராப்தம் -என்று சொல்லித் தலைக் கட்ட –
இத்தைக் கேட்ட திருவடியும் எழுந்து இருந்து ந வாதான் -17-50-என்று இப் பஷங்களை அழிக்கப் புகுகிறவன் ஆகையாலே
சிலரோடு பிணக்கு யுண்டாய் அல்ல -சிலரோடு வெறுப்பு யுண்டாய் அல்ல -எல்லார்க்கும் மேலாய் நியாமகனாய் அல்ல -பிரதிபன்ன வாதி யல்ல –
அப்யஹம் ஜீவிதம் ஐ ஹ்யாம்  -ஆரண்ய -10-19-என்கிற பெருமாளை இழக்க வரும் என்று பெருமாள் பக்கல் ஆதாரத்தால் சொல்லுகிறேன் -என்று அவை அடக்கம் சொல்லி
புகுர விட்டால் பரீஷிப்பது -பரீஷித்தால் புகுர விடுவது என்று அந்யோந்ய ஆஸ்ரயணம் வரும்
தாத்ரா -17-58-என்று சாம பேதம் பண்ணிக் குலைத்து அழைக்க ப்ராப்தமாய் இருக்க
தன்னடையே விஸ்வசித்து வந்தவனை அதிசங்கை பண்ணினால் குலைந்து போம் அப்போது ராஜ நீதி அல்ல -சாஸ்திர விருத்தம் -என்று பர பஷ தூஷணம்  சொல்லி
ந த்வச்ய-17-60/61-என்றும் இப்புடைகளிலே ஸ்வ பஷ ஸ்தாபனத்தையும் பண்ணி
திரு முன்பே நாமும் சில அறிந்தோமாகஒண்ணாது என்று யதா சக்தி -17-66-என்று
அடியேனுக்குத் தோன்றின அளவு விண்ணப்பம் செய்தேன் இத்தனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் -என்று தேவரீர்திரு உள்ளத்தில் அகலத்துக்கு இது எங்கே -இனி திரு உள்ளமான படி செய்து அருளீர் என்று தலைக் கட்ட
அத ராம-18-1-என்று  காற்றின் மகனான திருவடியாலே லப்த சத்தரான பெருமாள் தன் திரு உள்ளத்தில் கிடந்தது அருளிச் செய்வதாகக் கோலி
மித்ர பாவேந -18-3-என்கிற ஸ்லோகத்தாலே
மித்ர பாவேந சம்ப்ராப்தன் சதோஷனே யாகிலும்    கை விடேன் என்று சொல்லி
தஸ்யாநு பந்தா பாபமாந சர்வே நச்யந்தி தத் ஷணாத்-அஹிர்புத்த -37-33-என்று பிரபன்னன் ஆனபோதே நிர்த்தோஷன்
இப்படி -பிரபன்னனாய் நிர்த்தோஷன் ஆனவனுக்கு -உம்மாலும் என்னாலும் பிறராலும் வரும் பயன்களைக் போக்கக் கடவேன் -என்கிறார் இந்த ஸ்லோகத்தால்
வேதோ உபப்ப்ரும்ஹணா ர்த்தாய தாவக்ராஹயாத பிரபு -பால -4-6-என்று வேத ப்ரும்ஹண ப்ரவண ப்ரபந்தம் அன்றோ இது
இவ்விடத்தில் உபப்ரும்ஹிக்கிற வேதார்த்தம் எது -வேத வாக்கியம் தான் எது -என்னில் –
தம் ஹி தேவமாத்மபுத்தி பிரசாதம் முமுஷூவை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்வே-6-18-என்றும்
ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே ஸ்வஸ்தி சம்பாதேஷ்வபயம் நோ அஸ்து-ருக்வேத -என்றும் சொல்லுகிற
பிரபத்புபாய வைபவம் இவ்விடம் உபப்ரும்ஹிக்கிறது
வாக்யமும் ப்ரயதபாணி சரணமஹம் ப்ரபத்யே என்கிற இது சரனௌ சரணமஹம் ப்ரபத்யே –என்று த்வயம்
சரணம் காடம் நிபீட்ய–அயோ என்றும் திருவடிகளைக் கையாலே பிடிக்கும் போது ஸூ த்த ஹச்தனாக வேணும்
அந்தஸூ த்த ஹஸ்ததையாவது -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத் நாதி  தந தான்யாநி ஷேத்ராணி ச க்ருஹாணி ச
சர்வ தர்மாமச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணு சரணம் தேவராஜம் விபோ -விஹா கேஸ்வர சம்ஹிதை -என்றும்
வீடு மின் முற்றவும் -திருவாய் -1-2-1- என்றும் மற்றாரும் பற்றிலேன் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் உபாயாந்தரங்களை விட்டுப் பற்றுகை –
அத்தை இ றே ப்ரயதபாணி -என்கிறது –
மாம் வ்ரஜ -சரணம் ப்ரபத்யே -பிரார்த்தனா மதி சரணாகதி -என்று உபாய பிரார்த நாரூப ஜ்ஞானத்தை -சரணம் பிரபத்யே -என்கிறது –
இவ்வாக்யத்தை இந்த ஸ்லோகம் உபப்ரும்ஹித்தபடி ஏன் என்னில்
சக்ருத் ஏவ -என்கிற பதங்களால்  அசக்ருதாவ்ருத்தி சாபேஷையான பக்தியை வ்யாவர்த்திக்கையாலே சர்வ தர்ம தாக பூர்வகமான ப்ரயுத பாணி என்கிற பதத்தையும்
பிரபன்னாய-என்கிற பதத்தாலே சரணம் பிரபத்யே -என்கிற பதங்களையும்
த்வாஸ் மீதி ச யாசதே -என்கிற பதங்களாலே ஸ்வஸ் த்யஸ்து -என்கிற பதங்களையும்
அபயம் ததாமி -என்கிற பதங்களாலே அபயமஸ்து-என்கிற பதங்களையும் உபப்ரும்ஹிக்கிறது
ஆகிறது -ப்ரபத்யே  என்கிற பிரபதன தசையில் ஏக வசனமாய் இரா நின்றது
பல தசையிலே ந என்று-எங்களுக்கு என்று – பஹூ வசனமாய் இரா நின்றது -இது செய்யும்படி ஏன் என்னில்
வைஷ்ணவோ ந குலே ஜாத என்று ஏக வசனமாகச் சொல்லி
தே சர்வே முகத்திமா யாந்தி -என்று பஹூ வசாமாகவும்
யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தே நைவ தே பிராஸ் யந்தி -என்று ஏக வசன பஹூ வசனங்களாலும்
இப்படி பஹூ பிரமாணங்கள் உண்டாகையாலும் –
லோகத்தில் ஒருவன் ராஜ சேவை க்ருஷ்யாதிகளைப் பண்ண
அவன் யதன பலமான அன்ன தான தான்யா வஸ்த்ராதி பலங்களை அவன் அபிமானத்திலே பார்யா புத்திர சிஷ்ய தாசாதிகள் வருத்தமற புஜிக்கக் காங்கையாலும்
இப்படி லோக வேதங்களிலே அநு பூத சரமாகையாலே
ஒருவன் பிரபன்னனாக அவன் அபிமானத்திலே ஒதுங்கினார்க்கு எல்லாம்  பலமாகக் கடவது -என்கிறது –

ஆகிறது -பிரபத்த்யுபாயம் எனபது எம்பெருமான் உபாயம் என்பதாகா நின்றது –
பிரபத்தியாவது -த்வமேவோ பாய பூதோ மே பவதி -ப்ரார்த்த நா மதி -சரணாகதி -என்று
சேதனனுடைய ப்ரார்த்த நா ரூப ஜ்ஞானமாய் இரா நின்றது –
எம்பெருமான் ஆகிறான் ப்ரார்த்த நீயானாய் இருப்பான் ஒருவன் பரம சேதனனாய் இரா நின்றது -இது செய்யும்படி என் என்ன –
ப்ராம்ருஷ்ட லிங்கம் அநு  மானமாய் இருக்க -லிங்க பராமர்சோ அநு மானம் -என்று  பராமர்ச ப்ராதான்யத்தைப் பற்ற ஔ பசாரிகமாகப் பராமர்சத்தைச் சொன்னால் போலவும்
நீலாம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் என்றால் ஜ்ஞானத்துக்கு ஒரு நைல்ய பீதி மாதிகள் அற்று இருக்க விஷயகதமான நைல்ய பீதி மாதிகளை விஷயியான ஜ்ஞானத்திலே உபசரித்து
நீளம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் -என்றால் போலேயும் ச்வீகார ப்ராதான்யத்தைப் பற்ற சவீ கார விஷயமான பகவத் கத உபாய வ்யவஹாரத்தை விஷயியான ச்வீகார ரூப பிரபத்தி ஜ்ஞானத்திலே உபசரித்து சொல்லுகிறது ஆகையால் ஒரு விரோதமும் இல்லை –

மலை நெருப்பை யுடையது புகை இருப்பதால் -அநு மானம்
மலை -பஷம்
-நெருப்பு சாத்தியம்
ஹேது -லிங்கம் -அடையாளம் காரணம் -ஆகிறது-ஸ  ஸ்வேநைவ பலப்ரத ஸ்வே நைவ நாராயண -அனர்க்க ராகவம் -3-20-என்றும்
மாம்  வ்ரஜ -ஸ்ரீகீதை -18-66-என்றும்
மாமேவைஷ்யசி -ஸ்ரீ கீதை -18-65-என்றும்
இறைவா நீ தாராய் பறை -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நான் ஆட் செய்யோம் -என்றும்
எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று இ றே சொல்லுகிறது -அந்த உபாய உபேயங்கள் ஆகிறது கார்ய காரணங்கள் இ றே
யத நந்தரம் யத்த்ருச்யதே தத் தஸ்ய காரணம் -என்றும்
நியத பூர்வ பாவி காரணம் -என்றும்
பூர்வ பாவியுமாய் பூர்வ காலத்திலேயே சத்துமாய் இ றே காரணம் இருப்பது
நியத பஸ்சாத் பாவித்வம் ச கார்யத்வம் -என்றும்
ப்ராக சத்  சத்தா யோகித்வம் கார்யத்வம் -என்றும்
பூர்வ காலத்திலேயே சத்துமாய் இராதே
அத்தாலே பிறக்கக் கடவதுமாய் பஸ்சாத் பாவியுமாய் இ றே கார்யம் இருப்பது
இப்படி இருக்க
நித்யம் விபும் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் என்றும்
ஏகமே யத்விதீயம் -என்றும்
நித்யமுமாய் ஏகமுமாய் இருக்கிற பகவத் வஸ்துவுக்கு பரஸ்பர விருத்தமான பாவ அபாவத்மகத்வம் கூடும்படி என் -என்னில் –
ஸ தேவ சோம்யேத மக்ர ஆசீதே கமேவாத் விதீயம்ம்,-என்றும்
அவிகாரமுமாய்  நித்யமுமாய் ஏகமுமான ப்ரஹ்மத்துக்கு
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருஷ ஆஸீத் -என்றும்
ஸோ ஆகாமயத பஹூச்யாம் ப்ரஜாயேயேதி -என்றும்
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ ஸ சரக்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ஸ பால்யதே -ஸ -என்றும்
த்ரிவித காரணத்வமும் சருஷ்டுஸ்ருஜ்யத்வமும் பரஸ்பர விருத்தமுமாய் இருக்க
ஸூ ஷ்ம சிதசித் விசிஷ்ட பிரமம் காரணம்
ஸ்தூல சிதசித விசிஷ்ட ப்ரஹ்மம் கார்யம் -என்று
அவ்விருத்த தர்மங்கள் விசேஷணங்களிலே யாய் -விசிஷ்ட ஐக்யத்தாலே நிர்வஹித்தால் போலே
இங்கும் -தாது ப்ரசாதான் மஹிமா நமீ சம்-என்றும்
தஸ்மின் பிரசன்னே க்லேச  சங்ஷய -என்றும்
ப்ரஹர்ஷயாமி-என்றும்
த்வத் ப்ரீதயே-என்றும்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் வியக்க இன்புறுதும்-என்றும்
பிரசாத விசிஷ்டன் உபாயம்
ப்ரீதி விசிஷ்டன் உபேயம்
என்று விசேஷண பேதம் கிடக்கச் செய்தே விசிஷ்ட ஐ க்யத்தாலே
உபாய உபேய எம்பெருமான் என்கிறது ஆகையாலே எல்லாம் கூடும்
இரக்கம் உபாயம் -இனிமை உபேயம் -என்று இ றே ஜீயர் அருளிச் செய்யும் படி –

அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே -என்று பிரபத்யாதி சாத்யம் இ றே மோஷம்
சாத்யம் ஆவது முன்பு இன்றியிலே பின்பு உத்பன்னம் ஆவது
உத்பன்னச்ய வினாச யோகாத் -என்று உத்பன்னமாய் நசிக்கும் ஆகில் உபேயமான பகவத் ப்ராப்தி ரூப மோஷ நசிக்குமாய் இருந்ததே என்னில் நசியாது
இதுக்கு இரண்டு பிரகாரம் உண்டு –
அதில் ஓன்று சாத்யம் தான்- உத்பாத்யம் என்றும் -ப்ராப்யம் என்றும் -விகார்யம் -என்றும் சம்ஸ்கார்யம் -என்றும் நாலு பிரகாரமாய் இருக்கும்
உண்டு பண்ணப் படுவது -அடையப்படுவது -விகாரம் அடைவிக்கப் படுவது -சம்சரிக்கப் படுவது -சாதிக்கப் படுபவை நான்குவகை –
அவற்றில் உத்பாத்யமாவது -கடம்  கரோதி -படம் கரோதி போலே முன்பு இன்றியிலே பின்பு உண்டாவது
ப்ராப்யம் ஆவது -க்ராமம் கச்சதி ராஜா நம் கச்சதி -என்றும் காம் தோக்தி பய -என்று முன்பே சித்த ரூபமான வஸ்துவை அதிகாரிக்கு இடுகை –
விகார்யம் ஆவது -ஷீரமப் யஞ்ஜயதி -என்றும் தரபுசீசே ஆவர்த்தயதி -பாலைத் தயிர் ஆக்குகையும் ஈயங்கள்  உருக்குகையும்
சம்ஸ்கார்யம் ஆவது வ்ரீஹீன் ப்ரோஷதி -என்றும் வ்ரீஹீ நவ ஹந்தி -என்று தன்னைக் கார்யாந்தர யோக்யமாகப் பண்ணுகை-மந்திர ஜலத்தால் பிரிஷித்து -நெல்லை உரலில் இட்டு குத்தி போல்வன
இங்கும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்றும்
பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய -என்றும்
உன்னை எய்தி -என்றும்
பண்டே சித்த ரூபனான பரமாத்மாவை இவன் கிட்டுகையாலே ப்ராப்யம் நித்தியமே யாகிறது
இனி மற்றை இரண்டாவதுபிரகாரம் -நிதிப் நித்யா நாம் -என்றும் அஜோஹ்யேக-என்றும்
ந ஹாய் விஜ்ஞாதூர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே -என்றும்
பர நல மலர்ச் சோதி -என்றும்
ஆத்மாக்கள் நித்யர் ஆகையாலும் இவர்களுக்கு தர்மமான ஜ்ஞானா நந்தாதிகள் நித்யங்கள் ஆகையாலும்
தமஸா கூட மக்ரே பிரகேதம் -என்றும்
தயா திரோஹிதத் வாச்ச சக்தி ஷேத்ரஜ்ஞ  சம்ஜ்ஞிதா-என்றும்
ஆத்ம ஸ்வரூப   தர்மங்களுக்குத் திரோ தாயகமாய் பிரகிருதி சம்சர்க்கம் போய்
ஸ்வே ந ரூபே ணாபி நிஷ்பத்யதே -என்றும்
ஆவுர்ப்பூதஸ்வ ரூபஸ்து-என்றும்
அவபோதா தயோ குணா பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மநோ  ஹி தே-என்றும்
ஸ்வா பாவிகாரம் விஸ்த்ருதமாய் உத்பாத்யம் அன்றிக்கே ஒலிகையாலும் நித்யம் ஆகிறது என்ற பிரகாரம் –
அவையும் அப்படி ஆகிறது -இப்பிரதேசம் பிரபத்த்யுபப்ரும் ஹணம் பண்ணுகிறதாகில்
அஹம் அஸ்மா அபராதானாம் ஆலய –என்கிற  பிரபத்தி லஷணம் கிடந்ததோ என்னில்
ராவணோநாம துர்வ்ருத்தோ -17-19-என்று ராவண சம்பத்தாலும்
பீஷ யசே ஸ்மபீரோ-15-4-என்று நாம நிர்வசனத்தாலும் ஸ்வ தோஷத்தை முன்னிடுகையாலே -அஹம் அஸ்ம்ய  அபராதானாம்  ஆலய -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
ராஜ்யம் ப்ரார்த்தயமா நச்ச-17-65- என்று தனக்கு ராஜ்யம் வேண்டி வந்தவனாய் பெருமாளுக்கு கிஞ்சித்காரம் பண்ண வந்தவன் அல்லாமையாலே அகிஞ்சன -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
த்வாம் து திக் குல பாம்சநம் -16-15- என்று தள்ளி விடும்படி ஸோ தரப்ராதாவுக்கு உட்பட ஆளன்றிக்கே போருகையாலே அகதி என்னும் அர்த்தம் சொல்லுகிறது
பவந்தம் சரணம் -19-4- என்கையாலே  த்வமேவ   உபாய பூதோ மே பவதி  ப்ரார்த்த நா மதி சரணாகதி -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்கையாலே  சா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் -என்னும் அர்த்தம் சொல்லலுகிறது
ஆகையால் இது நேராகக் கிடந்தது
ஆநு கூல்ய சங்கல்பாதிகளும்  கிடந்ததோ என்னில் -இந்த லஷணமும் புஷ்கலம்
ஆத்மாநாம் -16-25-என்று ராவணனுக்கும் படை வீட்டுக்கும் நன்மையை ஆசாசிக்கையாலே ஆநு கூல்ய சங்கல்பம் சொல்லிற்று
உத்பபாத கதா பாணி -16-16- என்று கையிலே தடி இருக்க பரிபவித்தனை கரைய வடித்து போராமையாலே ப்ராதி கூல்ய வர்ஜனம் சொல்லிற்று –
வாலி நஞ்ச –17-6-என்று ஸோ தா ஹரணமாக ராஜ்யம் த்ரவ்யம் என்று அறுதி இட்டு வருகையாலே ரஷிஷ்யதீதி விஸ்வாசம் சொல்லிற்று
பவந்தம் சரணம் கத -19-4-என்று சொல்லுகையாலே கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்று
பவத்கதம் -19-5-என்று அகில பர சமர்ப்பணம் பண்ணுகையாலே ஆத்ம நிஷேபம் சொல்லிற்று –
பிராணா தச்ச-18-14-என்று ஸ்வரத்தில் தளர்த்தியாலும்
சீக்ரம் -17-7- என்று பெருமாள் பக்கல் போக ஒண்ணாத படி நடு வழியிலே கொல்ல நிற்கையாலும்
தைந்யம் கார்ப்பண்யம் உச்யதே -என்கிற கார்ப்பண்யம் சொல்லிற்று
ஆகையாலே இந்த லஷணமும் புஷ்கலம் –

இப்படி
புஷ்கல லஷணையான பிரபத்தியைப் பண்ணி
இதுக்குப் பலமாக கொள்ளைக் குப்புக்கு கூலம் எடுத்தவோ பாதி
நாம் இருக்க பலாந்தரங்களை ஆசைப்படாதே  நம்மையே உகந்து வந்தவனுக்கு சகல பய நிவ்ருத்தியும் பண்ணுவேன்
இது நமக்கு வ்ரதம் என்கிறார் இந்த ஸ்லோகத்தாலே –

———————

இப்படி அபய பிரதானம் பண்ணுவது ஆருக்கு என்னில் –
சக்ருதேவ பிரபன்னாய –
ச லஷண பிரபத்தி பண்ணினவனுக்கு -அதாவது -சக்ருதேவ பிரபன்னனாய் இருக்கை-
சக்ருத்-தனக்குப் பொருள் என் என்றால் –
ஆவ்ருத்தி ரசக்ருதுபதே சாத் -என்றும் அநேக ஜன்ம சமசித்த -என்றும் பக்தி போலே ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் சிரகால சாதியை யன்றிக்கே
தத் த்வயம்  சக்ருத் உச்சாரோ பவது -கடவல்லி -என்றும்
உபாயோசயம் சதிர்த்தஸ்தே ப்ரோக்த சீக்ர பலப்ரத-லஷ்மி தந்த்ரம் -17-76-என்றும்
ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் ஒரு காலேயாய் இருக்கை –
சக்ருதேவ -என்கிற அவதாரணம் -பிரபன்னனே-என்றும்
ஒருகாலே -இருகால் மாட்டில்லை -என்றும் அயோக வ்யவச் சேதமோ -அந்யயோக வ்ய்வச் சேதமோ
சங்கு வெளுப்பே –அயோக வ்யவச் சேதம் -அப்பொருள் அங்கெ இருக்கிறது போலே
பார்த்தன் ஒருவனுமே வில்லாளி –  ஒருவன் தான் என்பதை குறிக்கும் அந்ய யோக வயவச் சேதம் –
பிரபன்னனே -என்ற போது பிரபன்னனை அநு வதித்து அவனுக்கு அபய பிரதானம் பண்ணுவன் என்று வாக்யத்துக்கு விதேயம் இத்தனை போக்கி
பிரபன்னனோ அபய பிரபன்னனோஎன்று விமர்சமாய் பிரபன்னனே என்று விதயம் அல்லாமையாலும் -அயோக வ்யவச் சேத பொருள் பொருந்தாது
சக்ருச்சாரோ பவதி -என்றும் சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த -என்றும் பிரபத்தியாகில் சக்ருத் பிரயோஜ்யையாய் -அசக்ருத் பிரயோஜ்யை அல்லாமையாலே சக்ருத்தா வ்ருத்தியாய் இருப்பதொரு பிரபத்தியில் வ்யவச் சேதம் இல்லாமையாலும்
அயோக வ்யவச் சேதம் இல்லாமையாலும்
அபயங்கதோ பவதி என்று அப்பிரபன்னனான   பக்தி நிஷ்டனுக்கும்  அபாய பிரதானம் பண்ணின படியாலே அந்ய யோக வ்யவச் சேதம் அல்லாமையாலும்
வ்யாவர்த்தம் இல்லை என்று இட்டு வ்யர்த்தம்
இனி சக்ருதேவ -என்று இங்கே கூட்டின போது-சக்ருதேவ குர்யான் ந அசக்ருத் -என்று
பிரபத்தி ஸ்வரூப அபிதானம் பண்ணுகிறது அன்றிக்கே
பிரபன்னன் அநூத்யனாய்
அபாய பிரதானத்திலே  தாத்பர்யம் ஆகையாலே சக்ருத்தோடே கூட்டிலும் வ்யர்த்தம்
இந்த உபபத்திகளாலே சக்ருத் பிரயோகமும் வ்யர்த்தம்
சக்ருதேவா பயம் ததாமி -என்று இங்கே அன்வயித்தாலோ   என்னில்
ஒரு சரீரிக்குப் பிறக்கக் கடவ பயன்கள் எல்லாம் ஒரு காலே சஹிதமாய்  அவற்றினுடைய நிவ்ருத்தியை ஒரு காலே பண்ணுகிறதல்ல-
பூத காலத்தில் பயங்கள் பண்டே அனுபவித்துப் போயிற்றன –
ஆகாமி காலத்தில் பயங்கள் உத்பன்னம் அல்லாமையாலே நிவ்ருத்தி இப்போது பண்ண ஒண்ணாது
இன்னமும் ததாமி -என்று ப்ராரப்தமாய் -நிகழ கால பிரயோகம் -பரிசமாப்தம் அல்லாத பயங்கள்  உத்பன்னங்கள் அல்லாமையாலே மேல் வரும் அவை அடைய வர வரப் போக்குகிறேன் என்கிற வர்த்தமானத்துக்கும்
ஒரு கால் என்கிற சக்ருத் பதத்துக்கும் வ்யாஹதியும் வரும்
அபாய பிரதானம் பண்ணுகிற இன்று தொடங்கி ராவண வத பர்யந்தமாகவும் பயங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் அவதி இல்லாமையாலே அனுஷ்டான விருத்தமும் ஆகையாலே
சக்ருத் என்றும் ஏவ என்றும் ப்ரஸ்துத பதங்களுக்கு வையர்த்யம் வரும் என்னில்
வாராது –
1- சக்ருத் ஏவ –
பிரபன்னன் என்றார் பெருமாள் –அதுக்கு அனுபபத்தியாக மஹா ராஜர் சக்ருத் பிரயோஜ்யை யான ப்ரபத்தியை –
ராகவம் சரணம் கத –17-14- என்றும்
பவந்தம் சரணம் கத-19-4- என்றும்
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்றும்
முக்கால் பண்ணி பிரபத்தி லஷண ஹாநியும்
ப்ரபத்த்ரு ஸ்வரூப ஹாநி யும்
பிரபத்தவ்ய ஸ்வரூப ஹாநி யும் -பண்ணினான் என்று தூஷணம் சொல்ல
சக்ருதேவ பிரபன்னாய -அவன் பலகால் பண்ணிற்று இலன் -ஒரு கால் பண்ணினான் -என்கிறார்-
நாலு மூன்று பண்ணை பண்ணிற்றாக எடுத்த பிரமாணங்கள் செய்யும்படி என் என்னில்
ராஷசோ -17-5- என்று அபிசாபம் -கடும் சொல் -சொன்ன உங்களைப்   பார்த்து
ஸோ அஹம் —ராகவம் சரணம் கத -17-14- என்கிறபடி விரோதியாய் வந்தவன் அல்லேன்
அவன் தானே பரிபவித்து போகச் சொல்ல -அவனோட்டை சம்பந்தங்களையும் விட்டு பெருமாளை சரணம் புக வந்தேன்
என்று தன அருள்பாடுசொன்னான்  முற்பட -சரணம் கத-என்கிற நிஷ்டை
உம்முடைய வார்த்தைகளாலே கலங்கினோமே என்று சங்கித்து நம்மைத் தெளிய விடுகைக்கு
பவந்தம் சரணம் கத -என்று விண்ணப்பம் செய்த படி
பாதகனாய் வந்தவன் அல்லன்  உம்மை சரணம் புகுவதாக வந்தவன் என்று நமக்கு பட்டாங்கு சொன்னான் இரண்டாம் பண்ணை –
ஆ நய-18-34-மேல் -என்று நாமும் அழைத்து அஸ்மாபிஸ் துல்யோ பவது –18-38-என்றும்
ஸ்கித் வஞ்சாப்யுபைது ந-என்று நீர் அனுமதி   பண்ணின பின்பாயிற்று –
காத் பபாதாவ நிம் -19-1- என்று பூமியிலே இழிந்து
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2-என்று நம் காலிலே விழுந்தது ஆகையாலே ஒரு காலே யாயிற்று அவன் சரணம் புகுந்தது –
ஒரு ஹானியும் பண்ணிற்று இலன் -என்கிறார் -ஆகையாலே சக்ருதேவ -என்கிற பதம் பிரயோஜனம் ஆகிறது
2-அன்றியிலே -சக்ருதேவ பிரபன்னாய -என்று
அநேகஸ்மாத வ்யாவ்ருத்தோ தர்ம –அநேக தர்ம -என்கிறாப் போலே
சக்ருத்வ நிச்சித்ய ப்ரபன்னன்-என்றாய் -மத்யம பத லோபி யான சமாசமாய் -விசார்யா ச புன புன -என்று
துஷ்டனோ அதுஷ்டனோ -மித்ரனோ அமித்ரனோ வத்யனோ அவத்யனோ -ச்வீகாரனோ பஹிஷ்கார்யானோ
என்று நாம் பட்டால் போலே லங்கா மித்ர நாதிகளை விடுவேனோ பற்றுவேனோ
ராவணனை விடுவேனோ பற்றுவேனோ -போகிற இடத்தில் கைக் கொள்ளுவார்களோ தள்ளுவார்களோ ராஜ்யம் கிடைக்குமோ கிடையாதோ என்று
இப்புடைகளிலே பஹூ முகமாய் விசாரித்து அளப்பது முகப்பதாகை அன்றிக்கே
சக்ருத் சமீஷ்யைவ  ஸூ நிச்சிதம் ததா -யுத்த -12-28-போலே ஒரு காலே அறுதியிட்டு வந்தவன் என்கிறார் ஆகவுமாம் –
3- அன்றியிலே சஹஸா சப்தத்துக்கு சக்ருதேசமாய் -சஹஹைவ பிரபன்னாய -என்றாய் -அதாவது ஆஜகாம முஹூர்த்தேந -17-1-என்றும்
ஒல்லை நீ போதாய் -என்றும் சொல்லுகிறபடியே -நின்றவா நில்லா நெஞ்சில் பிறந்த ஆநு கூல்யம் புரிவதற்கு  முன்பே வந்தான் -என்கை
4- அன்றியிலே -சரணாகத ரஷணம்பண்ணுகிறீர் ஆகில் அடியேன்
சஹஸா பிரபன்னாயா -என்று ஒன்றையும் நிரூபியாதே சாஹசிகனாய் வந்தான் -அதாவது
ராவணன் கோஷ்டியில் நின்று கடல் கரையில் இருக்கிற பெருமாளை சரணம் புக்கால் அவர் பிடித்துக் கொண்டு போய் விலங்கிலே இடில் செய்வதென் -என்று
பயப்படாதே பட்டது படுகிறது என்று அவன் வந்த சாஹசம் காணும் என்கிறார் ஆக வுமாம் –
5- இப்படி  சரணாகதியில் சர்ப்பம்ருதி யுண்டோ என்ன -சஹாச பிரபன்னாய –
அன்று ஈன்ற கன்றுக்காக முன்னீன்ற கன்றைக் கொம்பிலும் குளம்பிலும் கொள்ளும்  தாயைப் போலே பால்பாயப் பாய சரனாகதனாய் பலமும் பெறாத இவனுக்கே
யாம் அத்தனை போக்கி பூர்வ சரணாகதனாய் ராஜ்ய தார பலமும் பெற்ற உமக்காகோம் –
இப்படியாவது அவன் தான் சரனாகத்தான் ஆகில் அன்றோ –
சீக்ரம் 17-7- என்றும் வத்யதாம் -17-27- என்றும்
நாங்கள் சொன்ன வார்த்தையிக் கேட்டு வெருவிப் போக நிற்கிறவன் அன்றோ -என்ன
1- பிரபன்னா யைவ –
நாம் இப்படி விபரத்தி பின்னர் ஆனா அளவிலும் அவன் பிரபண்ணனே -போகான் காணும் -என்கிறார்
பிரபன்னனே காணும் என்று அருளிச் செய்யா  நின்றீர் -அவன் பக்தி நிஷ்டனைப் போலே அங்கமாக சில தர்ம அனுஷ்டானம் பண்ணி -ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ -14-3/4- என்று நல்வார்த்தி சொல்லுவதும்
தூத வதம் ஆகாது என்பதும் -தன் மகள் அநலையை இட்டு நல் வார்த்தை சொல்லுவதுமாய்
அநேகம் புனஸ் சரணம் பண்ணி அன்றோ வந்தது -ஆனபின்பு அவன் பக்தி நிஷ்டன் என்றார் மஹா ராஜர் -பெருமாள் -2- பிரபன்னா யைவ –
அவன் நல் வார்த்தை சொல்லிற்று நமக்காக அல்ல –
விபீஷணஸ்து-17-24-என்று ப்ரக்ருத்யா தார்மிகன் ஆகையாலும்
குருத்வாத்தி தமிச்சதா -என்று தமையன் விஷயத்தில் ஹித பரன் ஆகையாலும்
ஆநு கூல்யச்ய சங்கல்ப -என்று பிரபத்த்யாதி காரியாகச் சொன்னான் இத்தனை –
ஆகையால் இது அந்யா சித்தம் -பக்தி நிஷ்டன் என்ன ஒண்ணாது
சேனயோர் உபயோர் மத்யே ரதம் சதாபய -ஸ்ரீ கீதை -1-21-என்று பள்ளரும் பறையரும் பார்ப்பாரும் பார்க்கருமான இரு படைக்கு நடுவே தேரை நிறுத்திச்
சரம ஸ்லோகம் உபதேசித்த போது அர்ஜுனன்
எங்கே குளித்து குலை  குடுமியும் தோதவத்தியுமாய் நின்றான் –
-வெளுத்த உடுப்பை -தோதவத்தித் தூய மறையோர் -பெரியாழ்வார் -4-8-1-
இன்னமும் உறங்குதியோ -என்ன நங்கைமீர் போதர்கின்றேன் -என்றும்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் -என்றும்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் நோன்புக்கு போகிற போது அனந்தலிலே-தூக்கக் கலகத்தாலே -கண்ணையும் கடை வாயையும்
துடைத்து வந்தார்கள் அத்தனை போக்கி எந்த உவர்க் குழியிலே குளித்து வந்தார்கள் –
அப்படியே இவனும்  -யோ விஷ்ணும் சததம த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரே தசம் -என்று
விஷ்ணு த்வெஷியாய் கர்ம சண்டாளனான ராவணன் கோஷ்டியில் நின்று போருகிற போது
கஸ்ய ஏவ வ்யதிஷ்டத -17-8-என்று ஆகாசத்திலே நின்றான் இத்தனை போக்கி என்ன கடலாடி புனலாடி வந்தான்
யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபால உபநிஷத் -என்றும்
நாஸ்தி  நஷத்ர சம்பந்தோ ந நிமித்த பரீஷணம் ஸ்ரத்தைவ காரணம் நித்ய மஷ்டாஷர பரிக்ரஹே-நாராதீய கல்பம் -என்றும்
போதுவீர் போதுமினோ -என்றும்
ருசி பிறந்த போதே வந்தான் அத்தனை –
கங்கை ஆடுவாருக்கு ஒரு உவர் குழியிலே குளிக்க வேணுமோ
பகவான்  பவித்ரம் வாசு தேவ பவித்ரம் -பவித்ராணாம் பவித்ரம் – பாவனா சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன -என்று
பேசப்பட்ட நம் பக்கல் வருகிறவனுக்கு பெரு புரச் சரணம் வேண்டா -ப்ரபன்னன் ஆகில் -என்கிறார்
அது இருந்தபடி ஏன் –பக்திக்கு சாஸ்திர விஹிதம் வர்ணாஸ்ரம தர்மங்கள் உண்டாய் இரா நின்றது -இதுக்கு
சர்வ தரமான் பரித்யஜ்ய -என்று உள்ள தர்மங்களையும் விடச் சொல்லா நின்றது
ஆகையாலே பிரபத்தியில் பக்தி விலஷனையாய் தொடரா நின்றதீ என்னில் -அது சொல்ல ஒண்ணாது
சப்த பிரமாணகே  ஹ்யர்த்தே யதாசப்தம் வ்யவஸ்திதி-என்று சாஸ்திர பிரமாண கரானால் அது சொன்ன படி கொள்ளக் கடவோம்
அதாவது -பஹவோ ஹி யதா  மார்க்கா  விசந்த யேகம் மஹா புறம் -ததா ஜ்ஞாநாநி  சர்வாணி ப்ரவிசந்தி தமீச்வரம் -என்று
ஓர் ஊருக்குப் போகா வென்றால் பல வழியாய் இருக்குமாப் போலே
பகவத் ப்ராப்திக்கு பல உபாயங்கள் உண்டு என்று சொல்லி
ஒரு உபாயம் ஸ்வயம் அசக்தம் ஆகையாலே சில சஹ கார்யாந்தரங்களை விதித்து –
ஒரு உபாயம் சர்வ சக்தி யாகையாலே சஹ கார்யாந்தரங்களை வேண்டா என்கிறது
பிரகார பேதத்தாலே ஒன்றுக்கு ஓன்று வை லஷண்யம் வாராது
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் என்றும் நிரூபித்த ஸ்வரூபத்துக்கு விசேஷ சமர்ப்பக தர்மங்கள் என்றும் யுண்டு
அநேக விசேஷ சமர்ப்பகங்களைப் பார்த்தால் பிரபத்தியே விலஷனை -எங்கனே என்னில்
ஸோ அன்வேஷ்டவ்ய ச விஜிஜ்ஞாசி தவ்ய-என்றும்
ப்ரஹ்ம விடாப் நொதி பரம் -என்றும்
ஜ்ஞாத்வா தேவம் முச்யதே சர்வபாசை -என்றும்
தமேவைகம் ஜானதாத்மானம் அந்யா வாசோ விமுஞ்ச்சத அம்ருதச்யைஷ சேது -என்றும்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும் வேதாந்த விஹிதத்வமும் மொஷாதி சாதனத்வமும் ஒத்து இருக்கச் செய்தேயும்
பக்த்யாபாய ஸ்வரூபம் போலே சாத்திய பக்தயேக சோசா என்று இவனாலே சாத்தியமாக அன்றிக்கே பிரபத்ய்யுபாய ஸ்வரூபம்
சித்தரூபம் பரம் ப்ரஹ்ம -என்றும்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
பண்டே சித்த ரூபமாய்   த்யாயீத -என்றும்- தருவா  ஸ்ம்ருதி என்றும்
ஸ்ம்ருதி சந்தான ரூப ஜ்ஞானமாய் அசேதனமாகை அன்றிக்கே
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -சத்யம் ஜ்ஞானம் –சர்வம் சர்வத்ர சர்வதா ஜாநாதி -என்று
ஜ்ஞாதாவாய் சதாதன ஜ்ஞான ஸ்வரூபமாய்   -சுவீகரிக்கும் இடத்தில்
ஆவ்ருத்திர சக்ருதுபதேசாத் -என்று அநேக ஜன்ம சித்தமாய் சிரகால சாத்தியமாய் இருக்கை அன்றிக்கே
தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவதி –உபாய பூதோ மே பவதி  ப்ரார்த்த நா மதி சரணா கதி –
தஸ்ய தாவதேவ சிரம் -யாவததிகாரம் -என்று விளம்பித பலப்ரதமாகை அன்றிக்கே
உபாயோ அயம் சதுர்த்த் தஸ்தே ப்ரோக்த சீகர பலப்ரத –
தாவதார்த்திஸ் ததா வாஞ்ச தாவன் மோஹஸ் ததா ஸூ கம் யாவன்னயாதி சரணம் -என்று
சீகர பல பிரதமாய்
தபஸா அ நாஸ கேன் -யஜ்ஞோ தானம் தபஸ் சைவ -பஞ்சாக் நயோ யே ச திரிணா சிகேதா -தபஸ் சந்தாப லப்தச்தே ஸோ அயம் தர்ம பரிக்ரஹ –
கார்யஸ் த்ரிஸ்வபி ஷேகச்ச காலே காலே ச நித்யச-என்றும்
ஓதி ஆமாம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப்பாதம் நாளும் பணிவோம் -என்றும்
மாரி கோடை இன்றியிலே  உப்பு நீரிலும் உவர் நீரிலும் சுட்ட நீரிலும் சுனை நீரிலும் தோய்ந்தும் க்லேசிக்கும்படி யாகை அன்றிக்கே
ஆனந்தோ ப்ரஹ்ம –ஆனந்தம் ப்ரஹ்ம –கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -என்றும்
சர்வகந்த சர்வராசா என்றும் ஸூ கரூபமாய்
மித்யா பிரயிக்தோ யஜமானம் ஹி நஸ்தி -என்றும்
ஜ்ஞான தோஷ பரிப்ரஷ்டஸ் சண்டாளீம் யோனி மா கத -என்றும் அல்ப்பம் தப்பில் கர்த்தா நசிக்கை அன்றிக்கே
யதா ததா வாபி சக்ருத் க்ருதோஞ்சலி ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்ய சேஷத ஸூ பாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -என்றும்
துராசாரோபி சர்வாசீ கருதக் நோ நாஸ்திக புறா -சமாஸ்ரயே தாதி தேவம் சரத்தா சரணம் யது நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -என்றும்
பயனன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்றும்
அடைவு கெடப் பண்ணினாலும் தோஷங்களைப் போக்கி திருத்தி அனுஷ்டாதாவை உஜ்ஜீவிப்பிக்கக் கடவதாய்
அவித்யயா ம்ருத்யும் தீர்த்தவா வித்யயா   அம்ருத மஸ் நுதே -என்றும்
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமாகதி -கஷாய கர்மபி பக்வே ததா ஜ்ஞானம் ப்ரவர்த்ததே-என்றும்
தரத்தும் ம்ருத்யு மவித்யயா -என்றும் -ஸ்வ உத்பத்தி பிரதிபந்தக நிவர்தகமாய்
அந்தவதே வாஸ்ய தத்பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை பராப்யதே -என்றும் பலவா ஹ்யேதே அத்ரூடா யஜ்ஞரூபா -என்றும் நச்யத் த்ரவ்ய உபகரணமாய்-நச்வர க்ரியாரூபமுமாய் -ஸ்வயம சக்த தேவதாத்மகமுமாய் ஸ்வர்க்க பசு புத்ராதி  சாதாரணமான கர்மாதிகளை அங்கமாக அபேஷிக்கை அன்றிக்கே
தமேவைகம் ஜானதாத்மான மன்யா வாசோ விமுஞ்சத் -என்றும்
சர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும் ததே கோபாயதாயாச்ஞா  -என்றும்
மாமேவைஷ்யசி என்றும்
சிருஷ்டியில் த்ரிவித காராணமும் தானே யாகிறாப்  போலே
ஆத்யந்திக பிரளயமான மோஷத்திலும் அங்கமும் அங்கியும் உபாயமும் உபேயமும் ஒன்றேயாய்
சர்வ முக்தி வை ஷம்யம் நைர்க்ருண்யாதிகள் வாராமைக்காக அதிகாரி ஸ்வரூப யோக்யதாபாதகமான ஆநு கூல்ய சங்கல்பாதி மாத்ர சாபேஷையாய்
இப்படிக்கொத்த அநேக குண பௌஷ் கல்யங்களாலே பக்தியில் பிரபத்தியே அத்யந்த விலஷணை -இப்படிகொத்த பிரபத்தியைப் பண்ணினவனுக்கு –
3- பிரபன்னா யைவ –
மந்திர வ்யூஹே நயே சாரே யுக்தோ பவிதுமர்ஹதி-17-18–என்று கர்ம யோக நிஷ்டரான உமக்கும் ஆகோம்-
ஜாம்பவாம்ஸ் த்வதசம்ப்றேஷ்ய சாஸ்திர புத்த்யா விசஷண   -17-43-என்கிற ஜ்ஞான யோக நிஷ்டரான ஜாம்பவானுக்கும் ஆகோம்
பக்திச்ச நியதா வீர -உத்தர -40-16-என்கிற பக்தி யோக நிஷ்டரான ஹனுமானுக்கும் ஆகோம்
ராகவம் சரணம் கத -17-14- என்று பிரபன்னனான விபீஷணனுக்கே ஆகக் கடவோம்  –
4- பிரபன்னா யைவ –
அகார்த்தாயைவ -அஷ்டச்லோகீ-3 என்றும்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் -2-9-4-என்றும் அவன் நமக்கேயாய் இருக்குமா போலே
எனக்கே தந்தைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-11-என்று அபியுக்தர் சொன்னபடியே பிரபன்னனுக்கே யாகக் கடவோம்
அவன் பிரபன்னனாவது ஷூத்ர பிரயோஜனத்துக்காக அன்றோ
ராஜ்ய -17-66-என்று உம்முடையஹ்னுமான் அன்றோ சொன்னான் -என்ன
1-தவாஸ் மீதி ச யாசதே -உனக்கே யாவேன் என்று யாசிப்பவனுக்கு
அநந்ய பிரயோஜனநாயே வந்தான் காணும் -என்கிறார்
அதாவது-ச காரம் அவதாரண அர்த்தமாய் -தூத வதம் ஆகாது என்று தனக்குப் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக ராஜ்யம் கொடுக்க வேணும் என்று  அபிப்ராயமாக ஹனுமான் சொன்னான் அத்தனை போக்கி
விபீஷணன் சொன்னானோ –
ந தேவலோகா க்ரமணம் நா மரத்வமஹம் வ்ருனே ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமே ந த்வயா வி நா -என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய் -5-8-3- என்றும் லஷ்மணனும் சடகோபனும் சொன்னால் போலே
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச -17-14- என்றும்
பரித்யக்தா -19-5-என்றும் புறம்பு உள்ளவற்றை அடைய விட்டுச்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் தாமேயாக-திருவாய் -5-1-8- வந்தவன் -என்கிறார் –
2- தவாஸ்மீதி ச யாசதே –
தவை வாச்ம்யஹ மச்யுத -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்றும் அநந்ய பிரயோஜனனாயே வந்தான் –
3- தவாஸ்மி
ந மம-ந ராவணஸ்ய-ஸ்வா தந்த்ர்யமும் இல்லை -பர பாரதந்த்ர்யமும் இல்லை
மத பாரதந்த்ர்யமே ஏவ ஸ்வரூபம் -என்று வந்தவன் –
4-தவைவாஸ்மி-
அவன் நம்மை நோக்கி தவைவாஸ்மி -என்றான் -நாமும்
புக்த்வா ச போகான் விபுலான் ததோ அந்தே மத பிரசாதாதாதா -மம அநுஸ்மரணம் ப்ராப்ய மம லோகம் ச கச்சதி -என்றும்
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-பெரிய திரு மொழி -5-8-5-என்று லாங்கா ராஜ்யமும் கைங்கர்ய சாம்ராஜ்யமும் -தவைவாஸ்து -என்னக் கடவோம் –
ஸ்ரீ மதா ராஜராஜோ லங்காயாம் அபிஷேசித-யுத்த -28-27-என்றும்
விபீஷண விதேயம் ஹி லங்கா ஐஸ்வர்யம் இதம் க்ருதம் -யுத்த -116-13-என்றும்
லப்த்வா குலதனம் ராஜா லங்காம்   ப்ராயாத விபீஷண -யுத்த -131-9-என்றும்
இப்படி இரண்டும் கொடுத்து விட்டு அருளினான் இ றே-
குலதனம் என்னக் கோயில் ஆழ்வாரைக் காட்டுகிறபடி   என்-என்னில்
இதம் விமானம் ஆச்சர்யம் இஷ்வாகு குலதைவதம் -என்றும்
மநு வம்ச ப்ரசூதா நாம் ஷத்ரியாணாம் இதம் தனம் காமகம் காமதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிதம்-என்றும்
உப புராணத்திலும் ப்ரஹ்மாண்ட புராணத்திலும் ஸ்பஷ்டமானத்தை இங்கே அநு வதிக்கிறது ஆகையாலே குறை இல்லை –
5- தவாஸ்மி –
ஸ்தித மாத்மநி  சேஷத்வம் -என்றும் -ஸ்வத்வமாத்மநி சஞ்ஜாதம -என்றும்  -ஆத்மதாஸ்யம் -என்றும்
ஆத்மசத்தையுண்டாகிற போதே சேஷமாய் அன்றோ இருப்பது –
6- தவாஸ்மி –
அஹம் ப்ரஹ்மாஸ்மி -போலேசாமா நாதி கரண்யத்தாலே சொன்னாலும் சேஷ சேஷி பாவம் சித்திக்கும் இ றே
அப்படிச் சொல்லாதே வ்யதிகரணமாகச்  சொல்லிற்று -பூர்வாபரங்களாலும் பிரமாணாந்தரங்களாலும் உபபாதிக்க வேண்டி ஆபாதத்தில் ஸ்வரூப ஐக்கியம் போலே தோன்றி பிரமிக்க ஒண்ணாது என்று ஜீவ பரமாத்மா பேதமும் வ்யக்தம் ஆகைக்காக
1-இதி –
இப்பாசுரம் ரசித்த  படியாலே -தவாஸ்மி-என்ற  பிரகாரத்தைச்  சொல்லுவதே -என்று அநுபாஷித்து ப்ரீதராகிறார் –
2- இதி –
இத்யாஹா மால்யோப ஜீவந-என்றால் போலே யாராகச் சொல்லக் கடவ பாசுரத்தை யார் சொல்லுகிறார் –
புலஸ்த்யன் புல ஹாதிகள் இதி ஹாசமாகச் சொல்லக் கடவ பாசுரத்தை ஒரு ராஷசன் சொல்லுவதே –
-ச –
உபாய மாத்ரத்தை அபெஷித்து விடாமே பலத்தையும் வேண்டுவதே -என்று சமுச்ச்யார்த்த மாக வுமாம்
–1-தவாஸ்மீதி ச –
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா-என்று பல சதுஷ்ட்ய சாதாரணமான உபாயத்தை அபேஷித்தால் உபேயங்களில் த்ரிவர்க்கத்தை அபேஷியாதே பரம புருஷார்த்தமான அபவர்க்கத்தை அபேஷிப்பதே-
2- தவாஸ்மீதி ச –
பூர்வார்த்தத்தில் உபாயத்தை அபேஷித்து-சரணாகதனாய்ப் போகாதே -உக்த அர்த்தத்தில் கைகர்யத்தையும் அபேஷித்து த்வய நிஷ்டன் ஆவதே –
3-தவாஸ்மீதி ச –
த்வாஸ்மீத் யபி என்றாய் -அதாவது -பரிபாலய நோ ராஜன் வத்யமாநான் நிசாசரை-என்ற ரிஷிகளையும்
த்ராணகாம இமாம் லோகம் சர்வம் வை விசசார ஹ -என்றும்
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்ற ஜெயந்தனைப் போலே ஷூத்ர சரீர ரஷணத்துக்காக அன்றிக்கே -ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தமான நம்மை -என்கை-
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் -ஸ்ரீ மதே நாராயணாய -என்றும் –
சஹ வைதேஹ்யா–அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருவருமான சேர்த்தியிலே அன்றோ –
தனித்து இருக்கிறது உமக்கு சேஷமானால் ஏகா யனனாகானோ -என்ன –
பித்ரா ச பரித்யக்த -என்கிற இடத்தில் -மாத்ரா ச பரித்யக்த -என்று அநுக்த சமுச்சயமானால் போலே இங்கும் தவாஸ்மீதி ச -என்றது –
வைதேஹ்யாஸ் சாஸ்மி அநுக்த சமுச்சயமாய் மிதுன விஷயத்திலே காணும் அபேஷித்தது என்கை-
அன்றியிலே-
உங்களைப் போலே சாகா ம்ருகமாய் சாகைக்கு மேலே சஞ்சரிக்கை அன்றிக்கே
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசானாம் க்ருஹே  க்ருஹே -என்றும்
ஸூ ஸ் ராவ ப்ரஹ்ம கோஷாம்ச்ச விராத்ரே ப்ரஹ்ம ரஷசாம் -என்றும்
அகத்துக்கு உள்லேசாகா சஞ்சாரியாய் -வேதம் ஓதி -இருப்பவனுக்குத் தெரியும் காணும்
அதாவது -ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
நித்யைவைஷாநபாயிநீ  -என்றும்
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -என்றும்
அப்ருதக் சித்த நித்ய தர்மமே-ச -வ்வுக்கு உள்ளே உண்டு என்று அறிந்து சொன்னான் காணும் -என்கிறார் ஆக வுமாம் –
இப்படி  எல்லாம் அறிந்து இருக்கிற இவன் பர தந்த்ரனாய் செய்தபடி கண்டிருக்க ப்ராப்தம் இத்தனை போக்கி நிர்பந்திக்கப் பெறுமோ -என்னில்
1- யாசதே –
தனக்கு இது அபிமதம் என்னும் இடம் தோற்ற இரந்தான்-இத்தனை –
2- யாசதே –
ரஷா பேஷாம் ப்ரதீஷதே -என்றும்
அர்த்திதோ –ஜஜ்ஞே -என்றும்
வேண்டித் தேவர் -இரக்க-திருவாய் -6-4-5-என்றும்
அத்தலையிலே இரப்பை நாம் பாரித்து இருந்த படியாலே இரந்தான் –
3- யாசதே –
கதாஹமை காந்திக நித்ய கிங்கரர் பிரகர்ஷ்யிஷ்யாமி -ஸ்தோத்ர ரத்னம் -46-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய் -3-3-1- என்றும் பிரார்த்திக்கிறான்
அவன் கண் குழியும் பையாப்பும் கண்டால் ஆர்க்கு மறுக்கலாம்
இப்படி இருந்தால்  அவனுக்குச் செய்து அருளப் புகுகிறது ஏது என்னில்
1-அபயம் ததாமி –
அத ஸோ பயங்க தோ பவதி -என்னும்படி பண்ணுவன்
அபயம் -தத் அந்ய– தத் அபாவ -தத் விரோதிகளை இ றே கூட்டுவது –
ஆகையால் -2-தத் அந்யமான  மங்க ளங்களை கொடுப்பன்
3-தத் அபாவமான அச்சம் இல்லாமையைப் பண்ணுவன்
4-பரகரிஷ்யமான ஆபச் சிந்தை இ றே பயம் -தத் விரோதியான இவன் புஜபல ரஞ்சிதரான பரரால் பண்ணப் படுகிற உபகார சந்துஷ்டியை உடையவனாம் படி பண்ணுவன் –
5-அபயம் –
அதீதே ஸோ க வர்த்தமா நே வ்யதா ஆகாமி நி பயம் -என்று இ றே லஷணம்
சோகம் இறந்தகால துன்பம் –வ்யதை-வதை – நிகழ் கால துன்பம்  -பயம் வரும்கால துன்பம்  –
ஆகையால் மேல் ஒரு அநர்த்தம் வாராதபடி பண்ணுவன் –
ஆர் நிமித்தமாக-பய நிவ்ருத்தி பண்ணுவது -என்ன –
1- சர்வ பூதேப்ய –
ஏதேனுமாக பய ஸ்தானமாய் உள்ளவை எல்லாம் -நிமித்தமாக –
2- சர்வ பூதேப்ய –
பூதங்கள் ஆகின்றன அசித் சம்ஸ்ருஷ்டங்கள் இ றே-அதாவது தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத்மகமாய் இ றே இருப்பது –
இவை இத்தனையும் நலியாதபடி பண்ணுவன் –
3- சர்வ பூதேப்ய –
ராவணனால் பட்ட  பரிபவத்தாலே -அவன் தம்பி என்றும் இந்த்ராதிகளால் வருமது-
நம் பக்கலிலே பரிவாலே  -வத்யதாம் -17-27-என்று திர்யக்கான உம்மால் வருமது –
ராவண விஜயத்தாலே பரிபூதரான மருத்தன்  தொடக்கமான மனுஷ்ய ராஜாக்களால் வருமது –
பீடத்தோடு பிடுங்குண்ட ஸ்தாவரமான கைலாசம் அடியாக வரும் இவ்வாபத்தை அடியைப் பரிஹரிபபன்-
4- சர்வ பூதேப்ய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11- என்றும்
பௌதிகா நீந்த்ரியாண் யாகூ-என்னும் பிரக்ரியையால்
ப்ருதிவ்யாதி பூத கார்யமான சரீரேந்த்ரிய விஷயாதிகள் நலியிலும் பரிஹரிப்பன் –
5- சர்வ பூதேப்ய –
நானே நாநா வித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- என்ற உன்னால் வரும் பயமும்
ஜகத் சசைலபரிவர்த்தயாமி -ஆரண்ய -64-7- என்றும்
ஷிபாமி -ந  ஷமாமி -என்றும் நம்மால் வரும் பயமும்
ஹிரண்ய ராவனாதி பித்ரு பிராத்ரு திகளால் வரும் பயமும் பரிஹரிபபன்
5- சர்வ பூதேப்ய –
என்று அசேதனமான பாபங்களும் -அவ்வோ பாபங்கள் அடியாக  பாதிக்கும் ஜந்துக்களும் -இதடியாக வரும் பயமும் அடையப் போக்குவான்
இப்படி பீத்ரார்த்தானாம் பய ஹேது -பஞ்சமி யாக வுமாம்
அன்றியிலே
சதுர்த்தியாய் -பிரபன்னனாய் -தவாஸ்மீதி ச  யாசதே -என்று சரனாகதனாய் -பலார்த்தியான விபீஷணன் ஒருவனுக்குமோ  பய நிவ்ருத்தி பண்ணுவன் -என்றால்
இதி ச -என்கிற சவ்வை இங்கே கூட்டி
6-சர்வ பூதேப்யச ச –
அவனுக்கே அல்ல -சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -17-5- என்று அவனோடு கூட வந்தவர்களுக்கும் -அவர் தங்களைப் பற்றினார்க்கும் -அபய பிரதானம் பண்ணுவன் என்றாக வுமாம் –
பய நிமித்தம் சொல்ல வேண்டாவோ -என்னில் -ராகவேணாபயே தத்தே -19-1-என்கிற இடத்தில் உண்டோ
பயம் பா நாம்ப ஹாரிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-36-என்கிற இடத்தில் உண்டோ
அது தன்னடையே வரும் –
அன்றியிலே -பிரபன்னாய -என்று பிரபன்னருக்கயோ பண்ணுவது -பக்தி நிஷ்டருக்கும் புருஷகார நிஷ்டருக்கும் இல்லையோ –
7- சர்வ பூதேப்ய –
பக்தி நிஷ்டரோடு புருஷகார நிஷ்டரோடு வாசி அற-அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத சந்தமேனம் ததோ விது-என்று
பகவத் ஜ்ஞானத்தாலே சத்தை பெற்றார் எல்லார்க்குமாம்
இப்படி கைம்முதல் உடையரான விலஷண அதிகாரிகளுக்கோ கொடுத்து அருளுவது –
சரணாகதர் -பக்தர் -ஆச்சார்யநிஷ்டர் -பகவத் ஞானம் உள்ளோர்  -போன்றாருக்கு மட்டுமா -கிம் பஹூ நா-பல சொல்லி என்
8-சர்வ பூதேப்ய
ச லஷண உபாய நிஷ்டராக வேண்டா -அதிப்ரசங்கம் வாராதபடி பவத் விஷய வாசிந-ஆரண்ய -1-20- என்று நம் எல்லைக்குள் கிடக்கையே உள்ளது –
யதி வா ராவண ஸ்வயம் -18-34- என்று சத்ருவான ராவணனோடு
பாத மூலம் கமிஷ்யாமி யா நஹம் பர்யசாரிஷம் -ஆரண்ய -4-14- என்று-உதாசீனையான சபரியோடு
ஆவஹத் பரமாம் கதிம் -கிஷ்கிந்தா -17-8-என்று மிருகமான வாலியோடு
கச்ச லோகா ந நுத்தமான் -ஆரண்ய -68-30- என்று பஷியான ஜடாயுவோடு
பாஷாண கௌதம வதூ வபுராப்தி ஹேது -என்று ஸ்தாவரமான அஹல்யா சிலையோடு
பிரதிபேதே ஸ்வ மாலையம் -சுந்தர -38-38- என்று ஜங்கமமான ஜெயந்தனோடு
புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே -நற்பால் அயோத்தியில் வாழும்
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய் -7-5-1-என்று த்ருண குல்ம வீருதாதிகளோடு
பிதாமஹபுரோகாம்ஸ் தான் –பால -15-26-என்று அடியிலே நம்மைப் பெற வேணும் என்று அபேஷித்த ப்ரஹ்மாதிகளோடு
வாசி அற -ப்ரஹ்மாதி பிபீலீகாந்தமான  சர்வ வச்துக்களுக்குமாம்
இவர்களுக்கு செய்து அருளுவது என் என்னில்
1- ததாமி –
த்யாகமும் அல்ல -ஔ தார்யமும் அல்ல -உபகாரமும் அல்ல -தானமாகவே பண்ணுவேன் –
த்யாகமாவது -கீர்த்தி முத்திச்ய யோகயே  யோக்ய  சமர்ப்பணம் -என்று பிறர் அபேஷித்ததை கீர்த்தி பலமாக பசையறக் கொடுக்கை
ஔ தார்யமாவது -சர்வ விஷய விதாரணம் ஔ தார்யம் -என்று விஷய வைஷம்யம் பாராதே முலைக் கடுப்பு தீரச் சுரக்குமா போலே தன் பேறாகக் கொடுக்கை
உபகாரமாவது -பிரத்யுபகாரதியா பந்து க்ருதிருபகார -என்று பிரத்யுபகார பிரயோஜனமாக ஆசன்னருக்குக் கொடுக்கை –
அத்ருஷ்ட முத்திச்ய யோகயே யோக்ய சமர்ப்பணம் தானம் -என்று விலஷண விஷயத்தில் விலஷண பதார்த்தங்களை அத்ருஷ்ட பலமாகக் கொடுக்கை
2- ததாமி –
மோஷயிஷ்யாமி போலே -தாஸ்யாமி-என்று கால விளம்பனம் பண்ணோம் -வரும்கால பிரயோகம் செய்ய மாட்டேன்
3- ததாமி -கொடுக்கிறேன் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ   பவதி -போலே -உபாசன ப்ராரம்பே மோஷ ப்ராரம்ப -என்று அவன் நம்மை நோக்கிக் கிளம்பின போதே நாமும் உபக்ரமித்தோம்
இது யாவதாத்மா பாவியாகக் கடவது
ப்ராரப்தோ ஸ்பரிசமாப் தஸ்ச வர்த்தமான -தொடங்கியதாய்முடியாமல் இருப்பது ங்கள் காலம் -இ றே-
4- பிரபன்னாய ததாமி –
நியாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தபஸ்ருதம் -என்றும் –
இதர உபாயங்களில் பிரபத்தி விலஷணை யானால் போலே –
நார் ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடிதமீமபி -என்று அல்லாத அதிகாரிகளில் ப்ரபன்ன அதிகாரி விலஷணனாய் இ றே இருப்பது –
இவ்விலஷண அதிகாரியைக் கண்டால் தானம் பண்ணாது இருக்கப் போமோ –
அது தான் பாஷிகமோ -நியமம் உண்டோ -என்னில்
1- ஏதத் வ்ரதம் மம-
இது நமக்கு நியத அநு ஷ்டேயம்-
2-ஏதத் -பிரபன்னனுக்குப் பண்ணுகிற அபய பிரதானம்  -அநு பல நீயஸ் ஸ-என்று ஏறிட்டுக் கொண்டால்
முடியும் அளவும் விடாதே நடக்குமது இ றே வ்ரதம் ஆகிறது
ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத -ஆரண்ய -10-19-என்று அடியிலே சொன்னோமே
3-ஏதத் வ்ரதம் –
பரித்ராணாய சாதூநாம் –சம்பவாமி –ஸ்ரீ கீதை -4-8-என்றும்
சரீரக்ர ஹணம் வ்யாபின் தர்மத் ராணாய கேவலம் – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-50-என்றும்
பொழில் ஏழும் காவல் பூண்ட -திரு நெடும் -10-என்றும்
காக்கும் இயல்விணன் -திருவாய் -2-2-9- என்றும்
இது நமக்கு சத்தா பிரயுக்தம் –
இது அனுஷ்டேயம் ஆருக்கு என்ன
1- மம-
அர்த்திதோ மா நுஷே லோகே -அயோத்ய -1-7-என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -திருவாய் -6-4-5- என்றும் பராபேஷையாய் அதுக்கு இட்டுப் பிறந்த நமக்கு –
2- மம –
ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் பணி அல்ல -சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் பணி யல்ல
நஹி பாலன சாமர்த்யம் ருதே  சர்வேஸ்வராத்ஹரே -ஸ்ரீ விஷ்ணு புறா -1-22-21- என்றும்
ரஷார்த்தம் சர்வ லோகா நாம் விஷ்ணுத்வம் உபஜக் மிவான் -உத்தர -104-9-என்றும்
ரஷணை நமக்கே பணி என்கிறார் –
3- மமைதத் வ்ரதம் –
நம் பக்கல் பரிவாலே விலக்குகையும் உனக்குப் பணி யானால் போலே ஆ ஸ்ரீ தா ரஷணமும்  நமக்குத் தொழில் காணும்
4- ஏதத் வ்ரதம் மம –
சதா மேத்த கர்ஹிதம் -18-3-போலே சத்தா பிரயிக்தத்துக்கு பிரயோஜனம் இல்லை
செய்யாத போது கபோத வானர விச்வாமித்ராதிகள் இருந்து எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் என்று கதவை அடைப்பார்கள்-
அது செய்யாதே சாது கோட்டியுள் கொள்ளப் படுகிறதே பிரயோஜனமாக இது நமக்கு அனுஷ்டேயம் என்கிறார்
5-ஏதத் வ்ரதம் மம –
இது நமக்கு அனுஷ்டேயம் -இத்தத் தலைக் கட்டித் தாரீர் என்று மஹா ராஜரை இரக்கிறார்-
இப்படி பெருமாள் மஹா ராஜரைப் பார்த்து அபய பிரதானம் பண்ணி ஆ ஸ்ரீ தனான விபீஷண ரஷணம் பண்ண வேணும் என்று
இந்த ஸ்லோகத்தில் தாத்பர்யார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

——————————————————————————————————————————————————————————-

ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தமஸ் யாபயம் மயா
விபீஷணோ வா ஸூ க்ரீவ யதி வா ராவண ஸ்வயம் –18-34-

தத்தமஸ் யாபயம் மயா-தத்தம் அஸ்ய அபயம் மயா-என்னால் இந்த விபீஷணனுக்கு அடைக்கலம் அளிக்கப் பட்டது –
விபீஷணோ வா -விபீஷணன் ஆகிலும் –
ஸூ க்ரீவ யதி வா ராவண ஸ்வயம் -ராவணன் தானே யாகிலும் சுக்ரீவனே –
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட–ஹர ஸ்ரேஷ்ட ஏநம் ஆநய -வானவர் தலைவரே இவனை அழைத்து வாரீர்-
அவதாரிகை –
மித்ர பாவேந–18-3-யில் பிரகிருதி அறிந்தீர்
சக்ருதேவ பிரபன்னாய –18-33-விலே நம்முடைய சங்கல்பம் அறிந்தீர்
அஞ்சாதே ச்வீகரிக்கைக்கு பிசாசான் –18-23-என்கிறதிலே நம்முடைய மிடுக்கும் கண்டீர்
ஒரு திர்யக்கும் கூட  அனுஷ்டித்தது ஆகில் நமக்கு அனுஷ்டிக்க வேணும் என்னும் இடமும் கண்டீர்
சரணம் என்றவனை ரஷித்தார்க்கும் ரஷியாதார்க்கும் உண்டான லாபச் சேதங்கள் கண்டு வசனத்திலே கண்டீர்
ஆனபின்பு அவன் ஆரேனும் ஆகிலுமாம்-ராகவம் சரணம் கத -17-14-என்கிற போதே அவனுக்கு அபயம் தத்தம் -அத்தை க்ரியை செலுத்தீர் என்கிறார்-
ஆநயைநம் –
நிவேதயத மாம் -17-15- என்று சபரிகரரான உம்மைப் புருஷகாரமாகப் புகுர ஆசைப் பட்டவன் நெஞ்சாறல் தீர்ந்து புகுந்தானாவதும் –
நாம் ச்வீகரித்தோம் ஆவதும் -நீர் அவனைச் சென்று அழைத்து வந்தால் அன்றோ –
ஹரிஸ்ரேஷ்ட –
அவன் நெஞ்சாறல் தீரும் அளவேயோ
நம் பக்கல் பரிவுடையார் எல்லாராலும் பிரஸஸ்ய தமரான உம்முடைய அனுமதியை ஒழிய நாம் சவீ கரிக்க சக்தரோ –
தத்தமஸ் யாபயம் மயா-
அஸ்ய -தன் பந்து வர்க்கத்தை அடைய விட்டு ஸ்வ நிகர்சா பூர்வகமாக சரணம் புகுந்தவனுக்கு –
மயா -மித்ர பாவமே அமைந்து இருந்துள்ள நம்மாலே சரணம் என்ற போதே அபயம் தத்தம் –
அத ஸோ அபயம் கதோ பவதி -நாம் சவீ கரித்தோமாய் அவனும் சவீ கரிக்கப் பட்டவனாம்படி அனுமதி பண்ணுவீர் –
அழைக்கப் போகிறவரை   அழைத்து அருளிச் செய்கிறார் மேல்
விபீஷணோ வா ஸூ க்ரீவ யதி வா ராவண ஸ்வயம் –
விபீஷணனை இ ரே அழைக்கச் சொல்லிற்று என்று மீலாதே
ராவணன் தானே யாகிலும் அழைத்துக் கொண்டு போரும்
விபீஷணனைக் கைக் கொண்டோம்   ஆகில் -விபீஷணஸ்து  தர்மாத்மா -ஆரண்ய -17-24- என்றபடியே தன் பக்கலிலே ஒரு முதல் உடையவனை ச்வீகரித்தோம் ஆவுதோம்
ராவணஸ்ய நருஸம்ஸஸ்ய -17-27- என்கிறபடியே  அந்த நருசம்சனை சவீ கரித்தோம் ஆகில் காணும் நமக்கு நிறம் உள்ளது
விபீஷணனை ச்வீ கரித்தால் அவனோடு கூடின நால்வரும் பிழைத்துப் போரும் அத்தனை
ராவணனை ச்வீ கரித்தால் துறுப்புக் கூட்டோடு இலங்கை யடைய நோக்கினோம் ஆவுதோம்
ஸூ க்ரீவ-
நமக்கு வரும் ஏற்றம் அடைய -ஏகம் துக்கம் ஸூகஞ்ச நௌ-என்று இருக்கிற உம்முடைய ஏற்றம் அன்றோ –

——————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஸூக்ரீவஸ்ய து தத்வாக்யம் -யுத்த -18-21/ஸூதுஷ்டோ -18-22/பிசாசான் தாநவான் -18-23 /ஸ்ரூயதே ஹி கபோதேந -18-24 /ஸ ஹி தம் பிரதிஜக்ராஹ -18-25 /ருஷே கண்வஸ்ய -18-26 /பத்தாஞ்ஜலிபுடம் –18-27 /ஆர்த்தோ வா -18-28 /ஸ சேத் பயாத்வா -18-29/விநஷ்ட -18-30/அஸ்வர்க்யம்-18-31/கரிஷ்யாமி -18-32-

February 9, 2015

ஸூக்ரீவஸ்ய து தத்வாக்யம் ராம ஸ்ருத்வா விம்ருஸ்ய ச
தத ஸூ பதரம் வாக்யமுவாச ஹரி புங்கவம் -யுத்த -18-21-

ஸூக்ரீவஸ்ய து தத்வாக்யம் ராம ஸ்ருத்வா -ஸ்ரீ ராம பிரான் சுக்ரீவனுடைய அந்தச் சொல்லைக் கேட்டு
விம்ருஸ்ய ச -ஆராயவும் செய்து
தத ஸூ பதரம் வாக்யமுவாச ஹரி புங்கவம் -அதற்குப் பின் வானவர் தலைவனான சுக்ரீவனைக் குறித்து மிகவும் மங்களமான வார்த்தையை யுரைத்தார் –

அவதாரிகை –
தத் அநந்தரம் நிதான ஜ்ஞரான பெருமாள் மஹா ராஜருடைய அதி நிர்ப்பந்த ஹேதுவைத் தம்
திரு உள்ளத்திலே நிரூபித்து தத் அநு ரூபமாக வார்த்தை அருளிச் செய்கிறார் -என்கிறது-
ஸூக்ரீவஸ்ய து தத்வாக்யம்  ஸ்ருத்வா –
ப்ரேமாந்தராய் ஹ்ருதயம் அறியாதே சொன்ன வார்த்தையைக் கேட்டு –
ராமஸ்து –
இவர் உபபத்தி சாத்யர் என்று அறிந்த விசேஷம்
விம்ருஸ்ய ச –
ப்ரேமாந்தராய் இருக்கும் அவர்க்குப் பரிஹாரம் ஏது என்று விசாரிப்பதும் செய்து
தத-
இனி இவர்க்கு நம்மைக் குறித்து வார்த்தை இல்லை என்று நிச்சயித்த பின்பு வார்த்தை சொன்னார்
ஸூ பதரம் வாக்யமுவாச –
ப்ரேமாந்த்யம் செல்லா நிற்கச் செய்தே ஸ்வாமியை எதிரிடும் கலக்கம் எல்லாம் தீர்ந்து அநு வர்த்தனம் பண்ணி வைக்கும் வார்த்தையாகி –
ஹரி புங்கவம் –
ராஜாக்களாய் இருக்கச் செய்தே நீதி சாத்யராய் இருக்கை அன்றிக்கே இருக்கிற ப்ரேமாந்த்யத்தை அநு சந்தித்து ரிஷி கொண்டாடுகிறான் –

———————————————————————————————————————————————————————————

ஸூதுஷ்டோ வாப்யதுஷ்டோ வா கிமேஷ ரஜநீசர
ஸூ ஷ்மம ப்யஹிதம் கர்த்தும் மமாசக்த கதஞ்சன –18-22-

ஏஷ ரஜநீசர-இந்த  அரக்கன்
ஸூதுஷ்டோவா -மிகவும் துஷ்டன் ஆனாலும்
அதுஷ்டோ வா-தோஷம் அற்றவன் ஆனாலும்
கிம் -என்ன
கதஞ்சன -எப்படியாயினும்
மம -எனக்கு
ஸூ ஷ்மமபி சிறிதும்
அஹிதம் கர்த்தும் -தீமை செய்ய
அசக்த –வல்லமை அற்றவன்-

அவதாரிகை –
முந்துற முன்னம் அதி ஷூத்ரனான ராஷசன் நம் பக்கல் அபகாரத்தை நினைக்கவும் சக்தன் அல்லன் -என்கிறார்-
ஸூதுஷ்டோ வாப்யதுஷ்டோ வா-
இவன் நீர் சொன்னபடியே துஷ்டனாக வுமாம்
நான் சொன்னபடியே அதுஷ்டனாக வுமாம்
இவை இரண்டும் அப்ரயோஜகம் –
எங்கனே என்னில் -சரணாகதன் பக்கலிலே பஹூ பிரகாரங்களாக தோஷங்களைச் சொன்னீரே யாகிலும் துஷ்டன் என்று என் நெஞ்சிலே பட மாட்டாது –
உமக்கு மறுமாற்றம் இல்லாதபடி  ஹேதுக்களாலே இவனுடைய நைர்தோஷ்யத்தை ஏற்றித் தந்தாலும் அஸ்தானே பய சங்கிகளான உம்முடைய நெஞ்சில் பட மாட்டாது –
கிமேஷ ரஜநீசர –
நீர் நினைத்தபடியே பாதகனாய் வந்தானாயிடுக
ஆனாலும் இவன் தன்னைக் கண்டிலீரோ
வா
அஹித மாத்ரனான இவன் நமக்கு என்ன அபகாரம் பண்ணுவான்
அவனுக்கு அஞ்சின நீர் எங்கனே ராவண வதம் பண்ணக் கடவதாக எடுத்து விட்டு இருக்கிறபடி
வஞ்சகராய் இருப்பாரை துர்பலர் என்று பரீஷிக்கலாமோ -என்ன
ஸூ ஷ்மம ப்யஹிதம் கர்த்தும் மமாசக்த –
பாஹூச்சாயாம வஷ்ட்ப்தோ யஸ்ய லோகோ மஹாத்மன-சுந்தர -34-31-என்று கண்டார் கவி  பாடுகிற தோளை இவன் கண்டால் நெஞ்சாலும் ஓர் ஹிதத்தை இவன் பண்ண அசக்தன் அல்லன்
கதஞ்சன —
நீர் அநு கூலன் என்று விஸ்வசித்தால் நலியலாமே என்ன
புலி கிடந்த துறைக் கண்டு அஞ்சுவாரைப் போலே நம் தோள் வலியைக் கண்டு அவன் மாட்டான்  –

————————————————————————————————————————————————————————-

பிசாசான் தாநவான் யஷான் ப்ருதிவ்யாஞ்சைவ ராஷசான்
அங்குள் யக்ரேண தான் ஹன்யாமிச்சன்  ஹரி கணேஸ்வர –18-23-

பிசாசான் தாநவான் யஷான் ப்ருதிவ்யாஞ்சைவ ராஷசான்-
பிசாசங்களையும் அசுரர்களையும் யஷர்களையும் பூமியில் உள்ள அரக்கர்களையும் கூட
தான் -அவர்கள் அனைவரையுமே
அங்குள் யக்ரேண தான் ஹன்யாமிச்சன்-விரும்பினேன் ஆகில் விரல் நுனியாலேயே கொள்ளக் கடவேன் –
ஹரி கணேஸ்வர-வானர சமூகத்தின் தலைவரான மஹா ராஜரே –

அவதாரிகை –
இப்படி அருளிச் செய்யச் செய்தேயும் எதிர்தலையில் ஜாதி பிரதியுக்தமான க்ரௌர்யமே மேல் கிடந்தது நெஞ்சு தெளியாமையாலே
இவர் தெளிக்கைக்காக –
லோகத்திலே க்ரூர ஜாதி என்று பேர் பெற்றவற்றை அடங்க அநாயாசேன அழிக்க வல்ல தம் வீர்யத்தை ஆவிஷ்கரிக்கிறார் –
பிசாசான் தாநவான் யஷான்-
கள்ளர் பள்ளிகள் வலையர் கொலையர் என்னுமா போலே ஹிம்சக ஜாதியினுடைய  அவாந்தர பேதம்  இருக்கிற படி
இந்த துர்வர்க்கம் அடைய அந்யோந்யம் யுண்டான சஹஜ சாத்ரவத்தை பொகட்டு நம்மை நலிகைக்காக ஏக கண்டராய் வருகை –
ப்ருதிவ்யாஞ்சைவ ராஷசான்-
இலங்கையில் யுள்ள ராஷசர் அளவன்றிக்கே பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணையான பூமியில் யுள்ள ராஷச ஜாதி யடங்கக் கீழ்ச் சொன்னவர்களோடே ஏக கண்டராய் வருகை –
அங்குள் யக்ரேண தான் ஹன்யாம் –
இவர்கள் அடைய அழியச் செய்யும் இடத்தில் நம் பலம் எல்லாம் வேண்டா –
ஆயுதமும் வேண்டா –
விரலிலே ஏக தேசத்தாலே நலிய வல்லோம்
ஒரு பரிகரத்தாலே கொல்லப் பாற்றம் போராத க்ரீமிகீடாதிகளை விரல் தலையாலே தேய்க்குமா போலே தேய்த்துப் பொகடுகிறோம் என்கை-
ஆனால் நம்முடைய பிரதிபஷம் குறி அழியாமே இருப்பான் என் என்னில்
இச்சன் –
அருமையால் அன்று -செய்ய நினையாமலே என்கிறார் –
நம் உயிர் மர்மமான நிலையிலே நலிந்த ராவணனை நலிகைக்கு இசைவு இன்றிக்கே இருப்பான் என் என்னில்
விபீஷணனை போலே உயிர் உடன் தலை சாய்க்கும் ஆகில் வ்யர்த்த்மாக கொல்லுகிறது என் -என்னும் நினைவாலே என்று கருத்து –
இச்சன் –
அங்குல் யக்ரம்  தானும் வேண்டா -நம்முடைய சங்கல்பமே ஹேதுவாக அழிக்க வல்லோம் -என்று
இவருடைய பய நிவ்ருத்திக்காக தம்முடைய ஈஸ்வரத்தை ஆவிஷ்கரிக்கிறார் -என்றுமாம் –
ஹரி கணேஸ்வர-
நாம் மாட்டாது ஒழிந்தால் சபரிகரான நீர் உளீர் என்று கருத்து –
ப்ரேமாந்தராய் நம்மை அறியாது ஒழிந்தால் உம்மை அறியாது ஒழிய வேணுமோ –

————————————————————————————————————————————————————————————-

ஸ்ரூயதே ஹி கபோதேந சத்ரு சரணமாகத
அர்ச்சி தஸ்ச யதா ந்யாயம் ஸ்வஸ்ச மாம் சைர் நிமிந்த்ரித –18-24-

சரணமாகத -சரணம் ஆகத -இருப்பிடத்தைக் குறித்து வந்தவனான –
சத்ரு -எதிரியான வேடன்
கபோதேந -புறாவினால்
யதா ந்யாயம்-முறைப்படி
அர்ச்சி தஸ்ச-பூஜிக்கவும் மாட்டான்
ஸ்வஸ்ச மாம் சைர் நிமிந்த்ரித-தானாகிற மாம்சங்களாலும் விருந்து அளிக்கவும் பட்டான்
ஸ்ரூயதே ஹி -கேட்கப் படுகிறது அன்றோ —

அவதாரிகை –
தம்முடைய பலத்தைக் காட்ட மஹா ராஜர் நெஞ்சு நெகிழ்ந்த அளவிலே
நாமும் பல ஹீனராய் அவனும் நமக்கு பாதகன் ஆனாலும் விட ஒண்ணாமைக்கு அடியான
சத்துக்கள் அனுஷ்டித்த இதிஹாசத்தைக் கேளீர் என்று கபோதோ பாக்யானத்தை அருளிச் செய்கிறார்-
ஸ்ரூயதே –
ஸ்மர்யதே -நினைக்கப் படுகிறது என்னாமல் -ஸ்ரூயதே -கேட்க்கப் படுகிறது -என்கிறது -வேதம் போலே கேட்டுப் போருவது ஓன்று –
வர்த்தமான நிர்த்தேசம் -பூர்வே பூர்வேப்யோ வாச ஏத -யஜூர் காடகம் -பிர 3-9–என்னும்படியே
சம்ப்ரதாய விச்சேதம் இன்றிக்கே போருகை-
அங்கன் இன்றிக்கே
கேட்டே போம் இத்தனை போக்கி அனுஷ்டிக்க அரிது என்கிறது என்றுமாம் –
ஹி –
இஷ்வாகு  ராஜ்யத்தைப் போலே வானர ராஜ்யத்திலும் இது பிரசித்தம் அன்றோ –
கபோதேந –
சாஸ்தராதி காரிகளாய் விவஷிதரான நாம் விசாரியா நின்றோம் –
ஒரு திர்யக் அனுஷ்டித்து நின்றது -என்று கருத்து
ஏக வசனத்தாலே நம்மைப் போலே விலக்குகைக்குப் பரிகரம் இல்லாமையாலும் தன அபிமான அந்தர்ப்பூதையான பேடை சந்நிஹிதையாய் அதிலே மூட்டுகையாலும் சரணாகத சம் ரஷணம் பண்ணலாயிற்று -என்று கருத்து
சத்ரு –
சத்ரு சம்பந்தத்தாலே நாம் விசாரியா நின்றோம் -சாஷாத் சத்ரு விறே அவன் –
சரணமாகத –
பந்துக்களை அடைய விட்டு
ஸ்வ நிகர்ஷக பூர்வகமாக புகுந்த இவனை விசாரியா நின்றோம் –
தான் இருந்த நிழலிலே வந்ததுவே ஹேதுவாக ரஷித்தது-
அர்ச்சி தஸ்ச –
நாம் இவனை சவீ கருக்கையிலே  சந்தேஹியா நிற்கிறோம்
அது பூஜ்யரைப் போலே ஆராதித்து -அதாகிறது சீத பரிஹாராதிகளைப் பண்ணுகை-உலர்ந்த குச்சிகளை கொண்டு தீ மூட்டி -குளிரைப் போக்கி -எல்லாம் செய்ததே –
யதா ந்யாயம் –
சத்ருவை ஆராதித்தும் தனக்கோர் ஏற்றம் என்று நினைத்து இருக்கை அன்றிக்கே ப்ராப்தம் என்று இருக்கை –
ஸ்வஸ்ச மாம் சைர் –
பஷிகளுக்கு தேஹாத்மா விபாக ஜ்ஞானம் இல்லாமையாலே தானான மாம்சங்களாலே
ஸ்வ -சப்தம் ஸ்வரூபத்திலும் வர்த்திக்கும் -ஸ்வ த்திலும் வர்த்திக்கும்
ப்ராக்ருதி யாத்ம விவேகம் பண்ணி இருக்கிற நாம்  இறே சந்தேஹிக்கிறோம்
நிமிந்த்ரித –
தன்னை அழிய மாறி விருந்திட்டது –

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந்தடைந்த பேதை
வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை   நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம்புள்
வீடு பெற்று உயர்ந்த காதை வேதத்தின் விழுமிதன்றோ-ஸ்ரீ கம்ப ராமாயணம் -விபீஷணன் அடைக்கலப் படலம் –

————————————————————————————————————————————————————————————-

ஸ ஹி தம் பிரதிஜக்ராஹ பார்யா ஹர்த்தார மாகதம்
கபோதோ வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத விதோ ஜன –18-25-

வானர ஸ்ரேஷ்ட-வானவர் தலைவனே
ஸ கபோதோ -அந்த ஆண் புறா
பார்யா ஹர்த்தாம்-தன் பேடையை அபஹரித்தவனாய்
ஆகதம் -தன்னை அடைந்து இருக்கிற
தம் -அந்த வேடனை
பிரதிஜக்ராஹர -வரவேற்றது
மத்வித -ஏன் போன்ற
ஜன -மனிதன்
கிம் புநர் -வர வேற்க வேணும் என்பதைச் சொல்ல வேண்டுமோ-
ஸ –
பார்யா விரஹத்தாலே தளர்ந்துள்ள
தம் –
ஜாதி பிரயுக்தமான சாத்ரவத்தை உடையவனாய் உள்ளவனை
பார்யா ஹர்த்தாரம் –
தனக்கு ஆபத்துக்கு உதவக் கடவளாய்-சஹ தர்ம சாரிணியாய் -தன்னைப் பிரிய மாட்டாத பார்யை உடலையும் உயிரையும் பிரித்தால் போலே பிரித்தவனை –
ஆகதம் ஹி –
தான் இருந்த இடத்திலே வந்ததுவே ஹேதுவாக
கபோத -பிரதிஜக்ராஹ  –
ரஷணத்திலே அயோக்யமான ஜன்மத்திலே பிறந்த கபோதமானது
த்யாக ஹேதுக்கள் அநேகம் உண்டாய் இருந்தாலும்
ரஷணத்தையும்  பண்ணக் கடவதாக பரிக்ரஹித்தது-
இந்த சிஷ்டா சாரத்தால் ராவணன் தானே வந்தாலும்  நமக்குப் பரிக்ரஹிக்க வேண்டிக் காணும் இருப்பது –
வானர ஸ்ரேஷ்ட
வ்யாக்ர வானர சம்வாதத்தாலும் நாம் உங்கள் சரணாகத சம் ரஷணத்திலே தப்பினாலும் உமக்கு எம்மை திருத்த வேண்டிக் காணும் இருக்கிறது –
கிம் புநர் மத விதோ ஜன-
திர்யக்கின் உடைய அனுஷ்டானம் இதுவானால்
ரகு வம்சத்தில் பிறந்த நமக்கு எத்தனை செய்ய வேணும்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்று நான் சொன்ன ஏற்றமும் திர்யக்குக்கு கொண்டு போயிற்று இத்தனை இ றே
அது செய்தாலும் அது செய்ததை செய்தோம் இத்தனை இ றே
இவ்வளவிலே அருளாள பெருமாள் எம்பெருமானார் அந்திமத்தில் சொன்ன வார்த்தையை ஸ்மரிப்பது-

ஒரு புறாவைப் போலும் நாம் சரணாகத ரஷணம் செய்யப் பெற்றிலோம்
அப்படிச் செய்ய நேர்ந்தாலும் அப்பெருமையை நமக்கு முன்னமே ஒரு புறா பெற்றுப் போனது -என்று
கடல் கரையிலே பெருமாள் திரு உள்ளம் புண் பட்டார்
இத் தன்மையை நினைத்து சரணாகதரான நாம்   பரமபதம் அடைவதில் ஐயம் இல்லை -என்று நிர்ப்பரனாய்க் கிடந்தேன் -ஐதிஹ்யம் -திருவாய் மொழி -6-8-6- ஈட்டில்- ஸ்ரீஸூக்தி-

——————————————————————————————————————————————————————————————

ருஷே கண்வஸ்ய புத்ரேண கண்டு நா பரமர்ஷிணா
ஸ்ருணு காதாம்   புரா கீதாம் தர்மிஷ்டாம் சத்யவாதி நா –18-26-

ருஷே கண்வஸ்ய-கண்வர் என்கிற ரிஷியினுடைய
புத்ரேண சத்யவாதி நா -புத்ரராய் -உண்மையையே உரைப்பவரான
கண்டு நா பரமர்ஷிணா-கண்டு என்னும் பெயர் உள்ள மஹா முனிவரால்
புரா கீதாம் தர்மிஷ்டாம் -முன்னே அருளப் பட்டதாய் –அறநெறி வழுவாததான
ஸ்ருணு காதாம்  -ஸ்லோகத்தை கேட்பீராக –

அவதாரிகை –
ஆக -கபோதத்தின் யுடைய அனுஷ்டானத்தாலும் சரணாகத சம் ரஷணம் கர்த்தவ்யம் –
அதுக்கு மேலே ஆப்ததமரான கண்டு வாக்யத்தாலும் சரணாகத சம் ரஷணம் பண்ணக் கடவேன் -அத்தைக் கேளும் -என்கிறார் –

ஜ்ஞான ஹீநமான திர்யக்கையும் ஜ்ஞான அக்ரேசரரான ரிஷியையும் சரணாகத ரஷணத்துக்கு பிரமாணமாகச் சொல்லுகையாலே
சரணாகத ரஷணம் சைதன்ய பிரயுக்தம் -ஜ்ஞான சங்கோச விகாச ஹேதுவான ஜென்மத்தின் தாழ்வு ஏற்றங்கள் அப்ரயோஜகங்கள் -என்றதாயிற்று –

ருஷே கண்வஸ்ய –
சகல வேதாந்த தாத்பர்யமான தத்வ ஹிதங்களை சாஷாத் கரித்த கண்வ பகவானுடைய
புத்ரேண கண்டு நா –
ஸ ஹோவாச வியாச பாராசர்யா -என்று பாராசர புத்ரர் என்று வியாசருக்கு ஆப்தி சொன்னால் போலே
கண்வ புத்ரர் என்று கண்டு வசனத்துக்கு ஆப்தி சொல்லுகிறார் –
பரமர்ஷிணா-
கண்வருக்கு தபோ பலத்தால் வந்த சாஷாத் காரம்
இவனுக்கு அவன் வயிற்றில் பிறந்தால் போலே சர்வ சாஷாத் காரமும் பிறந்த ஏற்றம் சொல்லுகிறது –
ஸ்ருணு-
முன்பே கேட்டுப் போரா நிற்க ஸ்ருணு-என்று சொல்லுவான் என் என்னில் –
தம்முடைய மிடுக்கைக் காட்டின இடத்தில் பிறந்த தெளிவை ஒழிய விபீஷன விஷயீ காரத்துக்காக இவர் சொல்லுகிற வசனங்கள் நெஞ்சில் படாமையாலே ஆனைக்குப்பு- சதுரங்கம் -ஆடுவாரைப் போலே வேறு ஒன்றிலும் மனம் செல்லாதவராய் இருக்க இருக்க கேளீர் -என்கிறார் –
புரா கீதாம்-
இப்போது உம்முடைய நெஞ்சில் தெளிவுக்காகச் சொல்லப் பட்டது அல்ல –
விலஷணர்க்கு அனுஷ்டிக்கப் படுமது ஓன்று என்று முன்பே சொல்லப் பட்டது ஓன்று
உக்தாம் -என்னாதே -கீதாம் -என்றது -பகவத் உக்தி போலே அதி கௌரவத்தாலே சொல்லுகிறார் –
-காதாம்    தர்மிஷ்டாம் –
தர்மங்களில் வெளிறு கழிந்த தர்மம் சரணாகத ரஷணம் என்று சொல்லுகையாலே தர்மிஷ்டாம் -என்கிறது –
சத்யவாதி நா –
விப்ரலம்பக வாதம் அன்று -யதார்த்த வாதியாலே சொல்லப் பட்டது என்கை –
பூத ஹித வாதி ந -என்றுமாம் –

————————————————————————————————————————————————————————————–

பத்தாஞ்ஜலிபுடம் தீநம் யாசந்தம் சரணாகதம்
ந ஹந்யாதா ந்ருசம்ஸ் யார்த்தமபி சத்ரும் பரந்தப–18-27-

ந ஹந்பாதா ந்ருசம்ஸ் யார்த்தமபி சதரும்
பரந்தப–சத்ருக்களைத் தவிக்கச் செய்பவனே –
பத்தாஞ்ஜலிபுடம் -கூப்பிய கையை யுடையவனாகவோ –
தீநம் -நெஞ்சில் ஆர்த்தியை யுடையவனாகவோ –
யாசந்தம் -யாசிக்கும் வார்த்தையை யுடையவனாகவோ –
சரணாகதம் -வீட்டை அடைந்து இருக்கிற
சத்ரூம் அபி -எதிரியையும்
ஆந்ருசம்ஸ் யார்த்தம் -கொடியவன் ஆகாமைக்காக
ந ஹந்யாத் -கொல்லக் கூடாது-

அவதாரிகை –
சரணம் புகுகிறவன் சத்ருவேயாகிலும் அவனுக்கு சரணாகதி இல்லை யாகிலும்
ஹிம்சிக்கல் ஆகாது என்கிறது -பத்தாஞ்சலி -இதி ஸ்லோகத்தாலே-

பத்தாஞ்ஜலிபுடம் தீநம் யாசந்தம் –
காயிகமான அஞ்சலி யாதல் -மானசமான ஆதரமாதல் -வாசிகமான பிரார்த்தனை யாதல் -ஒன்றே அமையும் என்கை-
சரணாகதம்-
க்ருஹே  ஆகாதம் –வீட்டை அடைவான் -உபாயம் வீடு  ரஷகன் –
அதவா –
பத்தாஞ்சலி ப்ரப்ருதிகள் கௌணம்-சரணாகதம் -என்று அத்யாவசா யாத்மாக ஜ்ஞான விசேஷத்தைச் சொல்லுகிறது -என்னவுமாம்
சத்ரு ந ஹந்யாதா-
கீழ்ச் சொன்னபடியே கௌணமாக சரணம் புகவுமாம் -முக்யமாக சரணம் புகவுமாம் –
சரணம் புகுந்தவனை ரஷிக்கும் அத்தனை ஒழிய -அவன் பக்கலிலே சத்ருத்வம் உண்டு இ றே என்று ஹிம்சிக்கக் கடவது அன்று
ஆந்ருசம்ஸ் யார்த்தம் –
ஹிம்சியாது ஒழிகிறது-ரஷகத்வ பிரசித்திக்கோ -பாபம் போகைக்கோ -புண்ய சித்திக்கோ -என்னில்
இத்தனைக்கும் அன்று -நாட்டார் க்ரூர கர்மா என்று கூசாமைக்காக –
பரந்தப-
கேவலம் சத்ருவானால் அன்றோ நீர் ஹிம்சிக்கக் கடவது –
அவன் சரணாகதன் ஆனாலும் ஹிம்சிக்கக் கடவீரோ –

—————————————————————————————————————————————————————————————

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த பரேஷாம் சரணாகத
அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா –18-28-
பரேஷாம்-சத்ருக்களுக்குள்
சரணாகத அரி -சரணம் அடைந்த சத்ருவானவன் –
ஆர்த்தோ வா யதி வா த்ருப்த -பயந்தவன் ஆகிலும் பயம் அற்றவனாகிலும்
க்ருதாத்மநா –நல்ல நெஞ்சினனாலே
பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய-உயிரை விட்டுக் காப்பாற்றத் தகுந்தவன் –

அவதாரிகை –
ஏதேனும் ஒரு வழியிலே யாகிலும் சத்ரு வந்து சரணம் புகுந்தால் ஹிம்சியாதே விடுமது போராது-
ஆத்மாவான் ஆனால் தன பிராணனை நேர்ந்தாகிலும் ரஷிக்கப் படும் -என்கிறது ஆர்த்தொவா -என்கிற ஸ்லோகத்தாலே-

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த-
பீதனாய் வந்து சரணம் புகவுமாம் –
அபீதனாக பாவித்து வந்து சரணம் புகவுமாம் -என்கிறார் –
த்ருப்த பிரபன்னனும் ரஷிக்கப் படும் என்கிற இத்தால் -மித்ர பாவேந சம்ப்ராப்தம் -என்றவதுக்கு ஆப்த வசனமும் உண்டு -என்கிறார் –
பரேஷாம் சரணாகத அரிரஷிதவ்ய-
சத்ருக்களில் வைத்துக் கொண்டு சரணாகத சத்ருவானவன் ரஷிக்கப் படும் –
பரேஷாம் -என்கிற இடத்தில் சாத்ரத்வம் தோற்றி இருக்க பின்பும்  அரி-சப்த பிரயோகம் பண்ணினது
அவனுடைய சாத்ரவ அநு வ்ருத்யோத நார்த்தமாக –
சரணாகதன் ஆனால் சாத்ரவமுண்டோ என்னில் -பிரகிருதி வச்யர் ஆகையாலே குணா நு குணமாக  சாத்ரவம்  அநு வர்த்திக்கவும் கூடும்
அங்கன் அன்றிக்கே -கொன்றேன்  பல்லுயிரை  குறிக்கோள் ஓன்று இலாமையினால் –அன்றே வந்தடைந்தேன் -பெரிய திருமொழி -1-9-3-என்கிறபடியே
ரக்த ஹச்தனாய் கொண்டு சரணம் புகுருகையாலே சொல்லிற்று ஆக வுமாம் –
பிராணான் பரித்யஜ்ய-
பிராணான் அபி பரித்யஜ்ய -என்னாது ஒழிந்தது சரணாகத ரஷணத்துக்கு பிராணனை பரித்யஜிக்கை ஓர் ஏற்றம் அன்று என்று தோற்றுகைக்காக
க்ருதாத்மநா ரஷிதவ்ய –
க்ருத ஸ்வரூபனால் ரஷிக்கப் படும் –
ஆத்மாவானாலே ரஷிக்கப் படும் -என்கை-
அங்கன் அன்றிக்கே
குருகுல வாசத்தாலே ஸூ ஷிதமான  மனஸை யுடையவனாலே ரஷிக்கப் படும் என்றுமாம் –

——————————————————————————————————————————————————————————————–

ஸ சேத் பாத்வா காமாத்வா மோஹாத்வாபி   ந ரஷதி
ஸ்வயா சக்த்யா யதா தத்வம் தத்பாவம் லோக கர்ஹிதம் –18-29-

ஸ -அவன் –
பாத்வா -உயிருக்கு பயந்தோ
காமாத்வா-பொருளாசையாலேயோ
மோஹாத்வாபி -அறியாமையினாலேயோ –
யதா தத்வம் -உண்மையாக –
ஸ்வயா சக்த்யா-தனக்குள்ள சக்தியைக் கொண்டு
ந ரஷதிசேத்-சரணம் அடைந்தவனைக் காப்பாற்றா விடில்
தத்பாவம் லோக கர்ஹிதம்-அவனுடைய அந்தப் பாபம் ஜனங்களால் இகழத் தக்கது-

அவதாரிகை –
பிராண சாபலத்தாலே சரணாகதனை ரஷியா விடில் வரும் த்ருஷ்ட தோஷத்தைச் சொல்லுகிறது-
ஸ சேத் பயாத்வா-
பிராண பயாத்வா –
காமாத்வா –
இவனுக்கு பாதகனானவன் பக்கலிலே கைக்கூலி கொள்ளுதல் —
அவன் பக்கலிலே பஷபாதத்தாலே யாதல் –
மோஹாத்வாபி –
இது கர்த்தவ்யம் -இது அகர்த்தவ்யம் -என்று அறியாமையாலே யாதல் –
ஸ யதா தத்வம் ஸ்வயா சக்த்யா  ந ரஷதி சேத் –
அவன் மெய்யாகத் தன் சக்தி உள்ளளவும் ரஷியான் ஆகில் –
தன் நெஞ்சு அறிய யாவத் பிராணான் ரஷியான் ஆகில் -என்கை –
தத்பாவம் லோக கர்ஹிதம்-
சரணாகதனை ரஷியாது ஒழிந்த பாபம் சதா மேதத கர்ஹிக்கும் -18-3- என்று சத்துக்கள் அளவன்றிக்கே இருந்ததே குடியாக கர்ஹிக்கும் -என்கிறது –

———————————————————————————————————————————————————————————

விநஷ்ட பஸ்யதஸ்தஸ்ய ரஷிண சரணாகத
ஆதாய ஸூ க்ருதம் தஸ்ய சர்வம் கச்சேத ரஷித -18-30-
ரஷிண -ரஷகனான
தஸ்ய பஸ்யதஸ்-அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் போது
அரஷித -ரஷிக்கப் படாதவனாய்
விநஷ்ட -அழிந்து போன
சரணாகத -சரணம் அடைந்தவன்
தஸ்ய சர்வம் ஸூ க்ருதம்-அவனுடைய எல்லா புண்ணியத்தையும்
ஆதாய  கச்சேத -பெற்றுக் கொண்டு மேலுலகம் சென்று விடுவான்

அவதாரிகை –
அதருஷ்ட தோஷம் சொல்லுகிறது -வி நஷ்ட -என்கிற ஸ்லோகத்தாலே-

ரஷிணஸ் தஸ்ய  பஸ்யத அரஷித வி நஷ்ட -சரணாகத -தஸ்ய ஸூ க்ருதம் -சர்வம் ஆதாய கச்சேத்-என்று அந்வயம்
ரஷகனானவன் காணா நிற்க -அற்றைக்கு முன்பு சரண்யார்ஜித ஸூ க்ருதத்தை யடைய வாங்கிக் கொண்டு
இவனுடைய ஸூ க்ருத பலமான லோகத்து ஏறப் போம் –

——————————————————————————————————————————————————————————

அஸ்வர்க்யம் அயஸஸ்யம் பலவீர்ய விநாசனம் -18-31-

அஸ்வர்க்யம் -புண்ணியம் -ஸ்வர்க்கத்தை தராமல் இருக்கும்படி செய்வதையும்
அயஸஸ்யம் -புகழை அழிப்பதாயும்
பலவீர்ய விநாசனம் ஸ-பலத்தையும் வீர்யத்தையும் அழிப்பதாயும்
சரணாகதனை ரஷியாமை ஆகிறது-

அவதாரிகை –
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் வரும் அநர்த்தம் சொல்லுகிறது அஸ் வர்க்யம் -என்கிற ஸ்லோகத்தாலே –

அஸ்வர்க்யம் –
ஆதாய ஸூ க்ருதம் தஸ்ய கச்சேத் -என்று அவன் கொண்டு போக வேண்டாதே தானே நிஷ்பலமாம்
அயஸஸ்யம் ஸ –
முன்பு பலரையும் ரஷித்து சம்பாதித்த யசஸ் ஸூ நசிக்கும்
பலவீர்ய விநாசனம் –
பலமாகிறது தோள் வலி –
வீர்யம் ஆகிறது ரஷண தர்மத்தில் அநாயாசதை-
அவை இரண்டும் யுண்டாய் இருக்க சரணாகதனை ரஷியாமையாலே -இவை தானே நசிக்கும் –

———————————————————————————————————————————————————————–

கரிஷ்யாமி யதார்த்தம் து கண்டோர் வசனம் உத்தமம்
தர்மிஷ்டம் ஸ யசஸ்யம் ஸ ஸ்வர்க்யம் ஸ்யாத்து பலோதயே -18-32-

கண்டோர்-கண்டு மஹா முனியினுடைய
உத்தமம் யதார்த்தம் வசனம்-உயர்ந்ததும் உண்மையானதுமான வார்த்தையை
கரிஷ்யாமி-அனுஷ்டிக்கப் போகிறேன்
அந்த வசனம் –
தர்மிஷ்டம்-அற நெறி வழுவாததாகவும்
ஸ யசஸ்யம் -புகழை அளிப்பதாகவும்
ஸ ஸ்வர்க்யம் ஸ்யாத்து பலோதயே -பலன்  யுண்டாகும் போது ஸ்வர்க்கத்தை அளிப்பதாயும் ஆகும் —

அவதாரிகை –
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் நன்மையைத் தருவதாய் இருந்துள்ள
கண்டுவினுடைய வசனத்தை அனுஷ்டிப்பேன் -என்கிறார்-

கரிஷ்யாமி யதார்த்தம் து –
உக்தமான அர்த்தங்களில் பிரசம்சாதிகள் இன்றிக்கே மெய்யேயாய் இருக்கை
கண்டோர் வசனம் உத்தமம் –
வசனத்துக்கு உத்தமமாவது சரணம் புகுகிறவன் சத்ரு  என்றாலும் தன்னை அழிய மாறி இருந்ததே யாகிலும்
அவனை ரஷிக்க வேணும் என்னும் பாசுரத்தை யுடைத்தாய் இருக்கை –
தர்மிஷ்டம் ஸ-
அவனுடைய வசன அனுஷ்டானம் தர்மாத நபேதமாய் இருக்கும் -அதாகிறது -ஆன்ரு சம்சயம் ஆகிற பரம தர்மத்தைப் பற்றி இருக்கை –
யசஸ்யம் ஸ-
நாட்டார் இருந்ததே குடியாகக் கொண்டாடும்படியான ஏற்றத்தை யுடைத்தாய் இருக்கும் –
பலோதயத்தில் ஸ்வர்க்கத்தைத் தரக் கடவதாய் இருக்கும் –
ஸ்வர்க்கம் என்கிறது நிரவதிக ஸூ கத்தை –
நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூகபாவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-59-

———————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

 

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -அபாபாஸ் தத் குலீ நாச்ச-யுத்த -18-11 /யஸ்து தோஷஸ் 18-12/ந வயம் தத் குலீ நாஸ்ச -18-13 /அவ்யாக்ராஸச –18-14/15 /ந சர்வே பிராதரஸ் -18-16 /ஏவமுக்தஸ்து ராமேண -18-17 /ராவணேந ப்ரணிஹிதம்-18-18 /ராஷஸோ ஜிஹ்மயா-18-19 /ஏவமுக்த்வா ரகு ஸ்ரேஷ்டம் -18-20–

February 9, 2015

அபாபாஸ் தத் குலீ நாச்ச மாநயந்தி ஸவகான் ஹிதான்
ஏஷ ப்ராயோ நரேந்த்ராணாம் சங்க நீயஸ்து சோபந –யுத்த -18-11-

அபாபாஸ் தத் குலீ நாச்ச-பாபம் அற்றவரான அரசனுடைய குலத்தில் பிறந்தவர்கள்
ஸவகான்-தன்னைச் சேர்ந்த
ஹிதான் -நன்மை விரும்புமவர்களை
மாநயந்தி   -கொண்டாடுவார்கள் –
நரேந்த்ராணாம்-ராஜாக்களுக்கு
ஏஷசோபந –இந்த நல்ல ஸ்வ பாவம்
ப்ராயோ -பெரும்பாலும்
சங்க நீயஸ்து -குறைவாகவே உள்ளது-

அவதாரிகை –
ஸ்வ குலஜராய் அபிமதராய் இருப்பாரைக் கொண்டாடுமது ஒழிய நலியக் கூடுமோ -என்னச் சொல்லுகிறார் –

அபாபாஸ் தத் குலீ நாச்ச ஸவகான் ஹிதான் -மாநயந்தி –
ஸ்வ குலஜரானாலும் அபாபராக வேணும் தனக்கு இஷ்ட விநியோக அர்ஹனாம் படி -ஹிதரானார் புத்திகளைக் கொண்டாடும் போது-என்கை-
நரேந்த்ராணாம்-ஏஷ சோபந –ப்ராயோ  சங்க நீயஸ்து –
லோகத்தில் பாபிஷ்டர் பெருத்து இருக்கையாலே -ராஜாக்களுக்கு பந்து சம்பாவ நா ரூபமான இந்த சோபன ஸ்வ பாவம் ப்ராயஸ் சங்க நீயம் –
இந்த ஸ்வ பாவம் உடையார்க்குச் சுருக்கம் என்கை –
ராஜாக்களில் வைத்துக் கொண்டு பந்து பந்து சம்பாவனா ரூபமான இந்த சோபன ஸ்வ பாவத்தை யுடையவன்  சங்க நீயன் என்று புருஷ பரமாக வுமாம் –
நிர்தாதாரணே சஷ்டி –
து சப்தம் -அவதாரணே-சங்கநீயனே -என்கை-
ஹிதம் வாக்கியம் உகத வந்தம் -16-1-என்றும்
மயா ஹிதைஷிணா-16-26- என்றும் அநு கூலன் ஆகையாலே
இஷ்ட விநியோக அர்ஹனாய் இருந்தானே யாகிலும் விபீஷணன்
பர ஹிம்சா ருசியாய் பாபிஷ்டனாய் போந்த ராவணனைக் கொண்டாட சம்பாவனை இல்லை -ஹிம்சையே சம்பாவிதம் -என்கை –

—————————————————————————————————————————————————————————————-

யஸ்து தோஷஸ் த்வயா ப்ரோக்தோ ஹ்யாதா நே அரிபலஸ்ய ச
தத்ர தே கீர்த்தயிஷ்யாமி யதா சாஸ்த்ரமிதம் ச்ருணு–18-12-

அரிபலஸ்ய-எதிரியின் படையைச் சேர்ந்தவனை
யாதா நே-ஏற்றுக் கொள்வதில்
யா -யாதொரு
தோஷஸ்-தோஷமானது
த்வயா ப்ரோக்தோ-உம்மாலே சொல்லப் பட்டதோ
தத்ர -அது விஷயத்தில்
தே -உமக்கு
யதா சாஸ்த்ரமிதம் -சாஸ்த்ரத்தை ஒட்டி
கீர்த்தயிஷ்யாமி-சொல்லப் போகிறேன்
இதம் -இச் சொல்லை
ச்ருணு—கேளும்-

அவதாரிகை –
வர்ஜயித்வா த்விஷத் பலம் -17-22-என்று சத்ரு பல பரிக்ரஹத்தில் யாதொரு தோஷம் சொல்லப்பட்டது –
அவ்வளவில் ஒரு விசேஷம் யுண்டு -அத்தை நான் சொல்லக் கேளும் -என்கிறார் —
அரிபலஸ்ய ச-யாதா நே -ஹி யோ   தோஷஸ் த்வயா ப்ரோக்தோ தத்ர து –
சத்ருபலம் பரிக்ராஹ்யம் என்று தோஷங்களுக்கு எல்லாம் நீர் தலையாகச் சொன்ன அதிலே
சங்க்ராஹ்யனாய் இருக்கைக்கு ஒரு ஹேது யுண்டு –
அந்த விசேஷத்தைக் கேளும் -என்கிறார் –
யதா சாஸ்த்ரம்-
சத்ருபலம் அபரிக்ராஹ்யம் என்று நீர் நீதி சொல்லுகிறீராக உம்முடைய பிரேமத்தை வெளியிட்டீர் அத்தனை –
அப்படி அன்றிக்கே சாஸ்த்ரீயா நதிக்ரமேணசொல்லுகிறோம் -என்கை –
தே கீர்த்தயிஷ்யாமி-
தோஷம் சொன்ன உம்முடைய ஹிருதயம் இசையும்படிக்குச் சொல்லுகிறோம் என்கை –
இதம் ச்ருணு–
நாம் சொன்னதுக்கு விருத்தம் என்றாதல்
ராஜாக்கள் என்றாதல்
நம் பக்கல் சங்கத்தால் என்றாதல்
உபேஷியாதே இத்தைக் கேட்டுத்தாரும் என்கை –

—————————————————————————————————————————————————————————–

ந வயம் தத் குலீ நாஸ்ச ராஜ்ய  காங்ஷீ ச ராஷஸ
பண்டிதா ஹி பவிஷ்யந்தி தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண–18-13-

ராஷஸ-அரக்கனான விபீஷணன்
ராஜ்ய  காங்ஷீ ச -ராஜ்யத்தில் இச்சை யுடையனாயும் இருக்கிறான் –
வயம்  ந தத்குலீ நாஸ்ச -நாம் அவனுடைய குலத்தில் பிறந்தவர்களும் அன்று
பண்டிதா -அரக்கர் குலத்திலும் அறிவாளிகள்
ஹி பவிஷ்யந்தி-இருப்பார்கள் அன்றோ
தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண–ஆகையால் விபீஷணன் கைக் கொள்ளத் தக்கவன் அன்றோ –

அவதாரிகை –
கீழ் -து சப்தத்தாலே சொன்ன விசேஷம் இன்னது என்கிறார் –
ந வயம் தத் குலீ நாஸ்ச ராஜ்ய  காங்ஷீ ச ராஷஸ-
நாட்டிலே ஒரு ராஜாவுக்கு வ்யசனம்வந்த அளவிலே –
தத் குலீ நராய் இருப்பார்க்கும்  அந்த ராஜ்ய ஸ்ப்ருஹை யுண்டாகையாலே  அவர்கள் தனக்கு சஹகாரிகள் அல்லாமையாலும்
தத் குலீ நனான அவனுடைய ராஜ்யத்தை ஆசைப் படுகையாலும்
தத் குலீ நர் அல்லாமையாலே  அந்த ராஜ்யத்தில் ஸ்ப்ருஹையும் இன்றிக்கே பிரபலருமாய் இருப்பாரைப் பற்றி ராஜ்யத்தைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நிற்கும் –
ஆகையால் இவனும் ராவணனுக்கு நம்மாலே ஓர் ஆபத்து வந்த அளவிலே ராஷஸ குலீ நத்வேன ராஷஸ ராஜ்ய காங்ஷி யாகையாலும்
கார்யாந்தரத்தைப் பற்றி ராவணனை அழியச் செய்யக் கடவதாக பெரிய சம்ப்ரமத்தோடே கிட்டிதனாக எடுத்து விட்டு இருக்கிற நமக்கு
அந்த குலீந ராஜ்ய ஸ்ப்ருஹை இல்லாமையாலும்
நம்மைப் பெற்றித் தன்னுடைய ராஜ்யம் பெற்றானாகில் தட்டில்லை –
ஒரு ராஷாசனுக்கு இந்த புத்தி எல்லாம் உண்டாகக் கூடுமோ
உம்முடைய பேரளவாலே அருளிச் செய்கிறீர் இத்தனை அன்றோ -என்ன
பண்டிதா ஹி பவிஷ்யந்தி –
ராஷசர் என்கிற ஜாதி மாதரம் கொண்டு எல்லாரையும் கழிக்க ஒண்ணாது
இவ்வளவு எண்ண வல்லாரும் உண்டு காணும் என்கிறார் –
தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண–
நம்மைக் கொண்டு தான் ராஜ்யம் பெற வந்தவனை அழியச்  செய்வது அப்ராப்தம் –
மேல் ஹிதகாரியாகக் கடவன் ஆகையாலும் நமக்கு க்ராஹ்யன் –

——————————————————————————————————————————————————————————————

அவ்யாக்ராஸச பிரதுஷ்டாஸ்தே ந பவிஷ்யந்தி சங்கதா
ப்ராணா தஸ்ச மஹா நேஷஸ்  ததோ அஸ்ய பயமாகதம்
இதி பேதம் கமிஷ்யந்தி  தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண –18-14/15-

அவ்யாக்ராஸச -பதறாத வர்களாய்
பிரதுஷ்டாஸ்தே -மிகவும் துஷ்டராய் இருக்குமவர்கள்
ந பவிஷ்யந்தி சங்கதா-கூடி இருப்பவர்க்களுமாய் இரார்கள் –
ஏஷ ப்ராணா தஸ்ச -விபீஷணனுடைய இந்த த்வநியானது
மஹா -பெரியதாய் இருக்கிறது
ததோ அஸ்ய பயமாகதம் -ராவணன் இடம் இருந்து இவ் விபீஷணனுக்கு பயம் உண்டாய் இருக்கிறது
இதி பேதம் கமிஷ்யந்தி  -ஆகையால் வேறுபாட்டை அடைவர்கள்
தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண -ஆகையால் விபீஷணன் கைக் கொள்ளத் தக்கவனே-

அவதாரிகை –
திருவடி இவன் வரவுக்கு ஹேதுவாகப் பிற்படச் சொன்
அத்தை முற்பட உபபாதித்து –
அவனுடைய ஸூ த்தி பிரகர்ஷத்தையே சித்தாந்திக்கிறார் -அவ்யக்ரா -என்று தொடங்கி -மூன்று அர்த்தத்தாலே –

பிரதுஷ்டாஸ்தே –
மிகவும் துஷ்டர் ஆகிறார் -நினைவும் சொலவும் செயலும் பேதித்து இருக்குமவர்கள்
அவ்யாக்ராஸச ந பவிஷ்யந்தி –
பதறாதேயும் இரார்கள் –
இங்குள்ளார் வத்யதாம் –17-27- என்பாரும்
ஆராய வேணும் என்பாருமாகா நின்றால் பதறாது இருப்பார் இல்லை –
இவர்கள் பக்கல் பதற்றம் கண்டிலோம் –
சங்கதாஸ் ச பவிஷ்யந்தி –
ஸூ க்ரீவம் தாம் ஸ் ச சம்ப்ரேஷ்ய-17-9-என்றும்
நிவேதயதமாம் -17-15-என்றும் சொல்லுகிற இடத்தில் எல்லாரும் ஒரு மிடறாய் இருந்தார்கள் –
இவர்கள் தன்னிலே சேர்ந்தார்கள் –
ப்ராணா தஸ்ச –
இவனுடைய த்வனியும் நம்மோடு சம்பந்தம் தோன்றும் படியாய் இருந்தது –
ப்ராணா தஸ்து சப்த ஸ்யாத நு ராகச -இத்யமர-
மஹா நேஷஸ்
த்வனி கேட்டார்க்கும் இவன் அபேஷிதம்பூரணம் பண்ணி அல்லது குடி இருக்க ஒண்ணாத படி ஆர்த்தி தோற்றி அன்றோ இருக்கிறது
ஏஷ –
நான் கேட்டு உபதேசிக்கிறானோ-நாம் இருவரும் கூடக் கேட்டதன்றோ –
ததோ அஸ்ய பயமாகதம் –
வ்யச நேஷூ ப்ரஹர்த்தார-18-10- என்கிறபடியே அவன் நம்மைக் கொல்லும் ராவணனாலே பயப்பட்டு வந்தான் – என்று
இதி பேதம் கமிஷ்யந்தி –
இதிர்  ஹேதௌ
சிலராலே சிலர்க்கு பயம் பிறந்தால் அவர்களை அவர்கள் விட்டுப் போவார்கள் –
தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண –

—————————————————————————————————————————————————————————–

ந சர்வே பிராதரஸ் தாத பவந்தி பரதோபமா
மத்விதா வா பிது புத்ரா ஸூ ஹ்ருதோ வா பவத்விதா -18-16-

தாத -அப்பா
சர்வே பிராதரஸ் -எல்லா சகோதரர்களும்
பரதோபமா-பரதனை ஒத்தவர்களாயும்
பிது புத்ரா-தந்தைக்கு பிள்ளைகள்
மத்விதா-என்னை  ஒத்தவர்களாயும்
ஸூ ஹ்ருதோ வா பவத்விதா -தோழர்கள் உம்மை ஒத்தவர்களாயும்
ந பவந்தி -ஆகார்கள் –

அவதாரிகை –
பரதாதிகளோடு தேவர் பரிமாறிப் போந்தவை தேவர் அருளிச் செய்யக் கேட்டிருந்தோம்
ஜ்யேஷ்டப் ப்ராதா நலியப் புக இவன் அஞ்சிப் போனான் ஆகையாலே இவன் நமக்கு க்ராஹ்யன் என்று
தேவர் அருளிச் செய்கிறது உக்தாமோ -என்னச் சொல்லுகிறார் –
தாத சர்வே பிராதரஸ்   பரதோபமா ந பவந்தி –
பிள்ளை பரதனுடைய படி ப்ராத்ருத்வ பிரயுக்தம் அல்ல -பரதத்வ பிரயுக்தம் -என்கை-
படியில் குணத்து பரத நம்பி -பெரியாழ்வார் -3-9-6-என்னக் கடவது இ றே-அதாகிறது
நடுவில் ஆய்ச்சி ராஜ்ய ஸூ ல்கையாலும் -தேவா ஸூ ர சங்க்ராமத்தில் வர பிரதானத்தாலும் –
ஐயர் தமக்கு ராஜ்யம் கொடுக்க -நாமும் அவர்சந்நிதியில் கொடையை அநாதரித்து காட்டிலே போன பின்பு
தாய் வழியே ஒதுங்க பிராப்தமாய் இருக்க அது செய்யாதே காட்டிலே தொடர்ந்து வந்து
உம்முடைய ராஜ்யத்தை நீரே கைக்கொள்ளும் -என்று நிர்ப்பந்திப்பான் ஒரு ப்ராதா உண்டோ –
அதுக்கும் மேலே நமக்கு ப்ரீத்யர்த்தமாக பொருந்தாத ராஜ்யத்தை ஏறிட்டுக் கொண்டு
நான்
காட்டில் பட்ட கலேசத்து அளவன்றிக்கே படைவீட்டிலே இருந்து படுவான் ஒரு ப்ராதா உண்டோ –
இதுவே அன்று -லோக வ்யவஹாரத்துக்கு திருஷ்டாந்தம் –
அன்றிக்கே -உல்லோகமாய் இருப்பது இன்னம் சில வ்யக்திகள் உண்டு என்று ப்ரச்துதஸ் தைர்யார்த்தமாக பிரதிபாதிக்கிறார்
மத்விதா வா பிது புத்ரா –
பித்ருமான்களில் நம்மொடுஒப்பார் இல்லை –
அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பின்பு மஹதா தபஸா -ஆரண்ய -66-3-என்று கனத்த தபசைப் பண்ணி நம்மைப் பெற்று
நம்மைக் கொண்டு பிராண தாரணம் பண்ணிப் போந்து நம்முடைய வ்யதிரேகத்தில் லோகாந்தரங்க தரான நம்
ஐயரைப் போலே இருக்கும் பிதாக்களை யுடையராய் இருப்பார் நம்மை ஒழிய உண்டோ –
நமக்கே யுள்ளதோர் ஏற்றம் அன்றோ இது
அதவா –
பிது புத்ரர்களில் நம்மோடு ஒப்பார் இல்லை-
ராஜ்யத்துக்கு உரியோமாய் நம்மை யாராலே ஸ்வே ச்சாதத் தமாய் இருக்கிற யௌ வராஜ்யத்துக்கு நடுவில் ஆய்ச்சியாலே விக்நம் பிறக்க
அதில் விவாதம் பண்ணாதே பித்ரு வசனத்தையே ஆதரித்து நெடு நாள் வன் வாசம் பண்ணப் போந்த நம்மைப் போலே இருப்பரும் சில ராஜ புத்ரர் உண்டோ -என்றுமாம் –
வியாச சாது -என்றால் போலே மஹா ராஜர் தெளிவுக்கு உறுப்பாக யதார்த்த உக்தியாகையாலே ஆத்ம பிரசம்சை இல்லை –
ஸூ ஹ்ருதோ வா பவத்விதா –
உம்முடைய சௌ ஹார்த்தமும் ஸூ ஹ்ருத்தவ சாமான்ய பிரயுக்தம் அன்று
நீர்  முன் வரக் கடவதாகப் பண்ணின சமயத்தை அல்பம் அதி லங்கிக்க அது பொறாதே
த்வாம் து சத்யாததி க்ராந்தம் ஹ நிஷ்யாமி ச பாந்தவம் -கிஷ்கிந்தா -30-82- என்று
நான் குபிதனாய் பிள்ளையை கொடுவந்து காட்ட அவனும் அதி குபிதனாய்ச் சொல்லக் கடவதல்லாத வார்த்தையைச் சொன்ன இடத்திலும்
பந்தத்தையே பார்த்து பீதராய் நம் பக்கல் பிரேம அதிசயத்தாலே
சரணம் புகுந்தவனையும் சத்ரு என்று அஸ்தானேபயசங்கி களாய் இருப்பார் சில ஸூ ஹ்ருத்துக்கள் புறம்பே உண்டோ –
உமக்கே உள்ளது ஓன்று அன்றோ –
ஆனபின்பு -லோக வ்யவஹாரத்தைப் பார்த்தால் ராவணன் இவனை நலிய நினைக்கையும்
அவனோடு இவன் பின்னனாய்ப் போருகையும் கூடும் -என்கை –

——————————————————————————————————————————————————————————————-

ஏவமுக்தஸ்து ராமேண ஸூ க்ரீவ சஹ லஷ்மண
உத்தாய ஏதம் மஹா ப்ராஜ்ஞ ப்ரணதோ வாக்யம் அப்ரவீத்  –18-17-

ஏவமுக்தஸ்து ராமேண -ராமனால் இவ்வண்ணமாக   சொல்லப்பட்ட
மஹா ப்ராஜ்ஞ-பேர் அறிவாளரான
ஸூ க்ரீவ சஹ லஷ்மண-ஸூ க்ரீவ மஹா ராஜரும் இளைய பெருமாளோடு கூடினவராய்
உத்தாய -எழுந்து  இருந்து
இதம்  ப்ரணதோ வாக்யம் அப்ரவீத் -நமஸ்காரம் பண்ணினவராய் இந்த சொல்லை உரைத்தார்-

அவதாரிகை –
இப்படி சரணாகதனான விபீஷணன் பக்கல் பெருமாளுக்கு யுண்டான பஷ பாதாதிசயத்தைக் கண்டு
மஹா ராஜரும் ஸ்வ அபேஷித சித்திக்காக இளைய பெருமாளையும்கூட்டிக் கொண்டு சரணம் புக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறார்-
-ராமேண ஏவமுக்தஸ் ஸூ க்ரீவஸ்து –
பெருமாள் தம்மை அநு கூலித்துசொன்ன படியாலும்
தமக்குப் பதகம் முட்டின படியாலும்
அவர் வழியே போகப் ப்ராப்தமாய் இருக்க
பின்னையும் அவரோடு வேறு பட்டு அவரைத் தம் வழியிலே போக்க யத்னம் பண்ணின படி
சஹ லஷ்மண –
தம்மிலும் பரிவர் என்று -லஷ்மணஸ் யாக்ரத-17-16-என்று பிரதமத்தில் கூட்டுக் கொண்டால் போலே பிரபத்திக்கும் அவரைக் கூட்டிக் கொள்ளுகிறார்
ப்ரணத –
சத்ருக்கள் பண்ணும் பிரபத்தியே அன்று இ றே பிரபத்தி யாவது
அநு கூலர் பண்ணும் பிரபத்திக்கும் இரங்க வேண்டாவோ -என்று அவனுடைய
ஒரு சரணாகதிக்கு அபவாதமாக இரண்டு சரணாகதியைப் பண்ணுகிறார் என்று கருத்து –
மஹா ப்ராஜ்ஞ-
தமக்குப் பதகம் மூட்டின தசையிலும் சரணாகதி சாத்யர் பெருமாள் என்று அறிகை-
உத்தாய   ப்ரணதோ இதம் வாக்யம் அப்ரவீத்  –
பெருமாள் தம்மை அள்ளி எடுத்து -நீர் சொன்ன கார்யம் செய்கிறோம் -என்று சொல்லும்படி திருவடிகளிலே விழுந்து இந்த வார்த்தையை விண்ணப்பம் செய்தார்-

—————————————————————————————————————————————————————————————

ராவணேந  ப்ரணிஹிதம் தம வேஹி நிசாசரம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே ஷமம் ஷமவதாம் வர -18-18-

ராவணேந -ராவணனாலே
ப்ரணிஹிதம் -ஒற்றனாய் அனுப்பட்டவனாய்
அவேஹி  தம் நிசாசரம் -அந்த ராஷசனை அறியும்
ஷமவதாம் வர-பொறுமையாளர் களுக்கு தலைவரே
தஸ்யாஹம் நிக்ரஹம் -நான் அவனுடைய கொலையை
மன்யே ஷமம் -தக்கதாக நினைக்கிறேன்-

அவதாரிகை –
இப்படி பிரசன்னராய் பிரபன்ன வாக்யம் கேட்டு அருளுமவர் என்று -ராவணேந  ப்ரணிஹித-என்று முற்பட
விண்ணப்பம் செய்தவை தன்னையே விண்ணப்பம் செய்கிறார்
புனர் வசனத்துக்கு பிரயோஜனம் –அவன் சரணம் என்ற வார்த்தையிலே அபஹ்ருத சித்தராய் இருந்த அளவிலே யாயிற்று நாம் அவை சொல்லிற்று –
நாம் சரணம் புக்க பின்பு தெளிந்து நல் வார்த்தை கேட்பர்-என்று முன்பு சொன்னவை தன்னையே திரு உள்ளத்தில் படுத்துகை-

கள்ளரைப் போலே மத்திய ராத்ரியிலே புறப்பட்டு
பர ஹிம்சையைப் பண்ணிக் கொண்டு திரியும் ஜன்மம் என்று
இவன் தண்மை திரு உள்ளத்தில் படாமை  இ றே இவன் நமக்கு சஹ காரி என்று அருளிச் செய்தது
ஆகையாலே நிசாசரம் -என்கிறார் –

——————————————————————————————————————————————————————————————–

ராஷஸோ ஜிஹ்மயா புத்த்யா சந்திஷ்டோ அயம் இஹா கத
ப்ரஹர்த்தும் த்வயி விஸ்வஸ்தே  ப்ரச்சநநோ மயி சா நக
லஷ்மணே வா மஹா பாஹோ ஸ  வத்ய ஸசிவை ஸஹ –18-19-

அ நக -குற்றம் அற்றவரே
அயம் -இந்த
ராஷஸோ-அரக்கன்
ஜிஹ்மயா -வஞ்சகமான
புத்த்யா-புத்தியினாலே
சந்திஷ்டோ -ஏவப்பட்டவனாம்
த்வயி விஸ்வஸ்தே–நீர் நம்பிக்கை யுடையீராய் இருக்கையில்
ப்ரச்சநநோ-மறைந்து நின்று
த்வயி மயி லஷ்மணே ச -உம்  விஷயத்திலும் -ஏன் விஷயத்திலும் -இலக்குவன் விஷயத்திலும்
ப்ரஹர்த்தும்  -ஹிம்சையைச் செய்வதற்கு
இஹ ஆகாத -இங்கே வந்தான்
மஹா பாஹோ -நீள் கையரே
ஸ  -அவன் –
வத்ய ஸசிவை ஸஹ-மந்த்ரிகள் உடன் கூட கொல்லத் தக்கவன் –
ராஷஸோ ஜிஹ்மயா புத்த்யா சந்திஷ்டோ ப்ரச்சநநோ இஹா கத –
நீச ஜாதியான இவன்  ஸ்வ ஜாதிக்குக் கார்யம் செய்யும் அத்தனை போக்கி
தார்மிகரான நமக்குக் கார்யம் செய்யான் காணும்
ப்ரஹர்த்தும் த்வயி விஸ்வஸ்தே –
தேவர் விஸ்வசித்த வாறே  சஹ காரி யன்றிக்கே ஒழியும் அளவன்றிக்கே உம்மை நலிவதும் செய்யும்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்று அதுக்கு இசைந்தோம் இ றே என்றவருக்குப் பரிஹரிக்கைக்காக -மயி -ச -என்கிறார் –
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-என்றும்
ஸூ ஹ்ருதோ வா பவத்விதா -என்றும்
நீர் நினைத்து இருக்கிற என் பக்கலிலும் நலியும் காணும் இவன்
லஷ்மணே வா –
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்று அருளினீர் ஆகில் உளராய் இருக்கும் அவரையும் நலியும்
சரணாகத ரஷணம் என்ற ஒரு வாசத்தால் ஒரு ராஷசனுக்காக எங்கள் இருவரையும் நீர் இழக்கக் கிடீர்   புகுகிறது
அநக-
இந்த  பொல்லாங்குகள் உமக்கு வாராது ஒழிந்திடுக -என்று கருத்து –
மஹா பாஹோ –
உம்முடைய தோளை அண்டை கொண்டு இருக்கும் எங்களை சத்ருவின் கையிலே காட்டிக் கொடுக்கலாமோ
எங்கள் பக்கலிலே தண்ணளி யும் அவன் பக்கலிலே தோள் வலியுமாகை யன்றோ யுக்தம்
ஸ  வத்ய ஸசிவை ஸஹ –
ஆகையாலே சபரிகரனாக அவன் வத்யன் –

————————————————————————————————————————————————————————-

ஏவமுக்த்வா ரகு ஸ்ரேஷ்டம் ஸூ க்ரீவோ வாஹிநீபதி
வாக்யஜ்ஞோ வாக்ய குசலம் ததோ மௌநமுபாகமத் –18-20-

ஏ வாக்ய குசலம் ரகு ஸ்ரேஷ்டம் -வாக்யம் உரைப்பதில் தலைவரான ரகு குலத் தலைவரைக் குறித்து
வாஹிநீபதி வா க் யஜ்ஞோ ஸூ க்ரீவோ-சேனாபதியும் வாக்யங்களின் குண தோஷம் அறியுமவரான ஸூ க்ரீவ மஹா ராஜர்
வமுக்த்வா-இவ்வண்ணமாக உரைத்து
ததோ மௌநமுபாகமத் — அதற்குப் பின் பேசாது இருத்தலை மேற்கொண்டார்-

ரகு ஸ்ரேஷ்டம் –
சரணாகதனுக்காகத் தன்னை அழிய மாறின ரகுவினுடைய குலத்தார்க்கு சஸ்யர் என்னும்படி சரணாகத சம் ரஷணத்தில் பிரசச்தராய் யுள்ளவரை –
ஸூ க்ரீவோ வாஹிநீபதி-
தாம் போம் வழியை அநு விதானம் பண்ணும் பரிகரத்தை யுடையவன் –
வாக்யஜ்ஞோ-
சர்வ வசன வ்யக்திகளுடைய குண தோஷம் அறியுமவர் –
வாக்ய குசலம்
எதிரிகளுடைய அபிப்ராய   பூர்வகமாக வார்த்தை சொல்ல வல்லவரை
ஏவமுக்த்வா-  ததோ மௌநமுபாகமத்-
தம் சீர்மை அறியாதவரோ டு நாம் சொல்லுவது யுண்டோ என்று ப்ரணய ரோஷத்தால் பேசாது இருந்தார்-

———————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஸூ க்ரீவஸ் த்வத தத் வாக்யம் – யுத்த -18-4 /ஸூ துஷ்டோ வா-18-5 /வாநராதிபதேர் வாக்யம் ஸ்ருத்வா -18-6/7-/அநதீத்ய ச சாஸ்த்ராணி –18-8/அஸ்தி ஸூஷ்மதரம்-18-9/அமித்ராஸ் தத் குலீநாஸ்ச -18-10 /

February 8, 2015

ஸூ க்ரீவஸ் த்வத தத் வாக்யம் ஆபாஷ்ய ச விம்ருஸ்ய ச
தத ஸூ பதரம் வாக்யமுவாச ஹரி புங்கவ -யுத்த -18-4-

அத -அதற்குப் பின்
ஹரி புங்கவ -வானரர் தலைவரான
ஸூ க்ரீவஸ்-ஸூ கரீவ மஹா ராஜரோ எனில்
தத் வாக்யம் -அந்த வாக்யத்தை
விம்ருஸ்ய ச -ஆராய்ச்சியும் செய்து
தத-அதைக் காட்டிலும்
ஸூ பதரம் வாக்யமுவாச -மிகவும் அழகியதான வார்த்தையை உரைத்தார்-

அவதாரிகை –
ராம பிரகிருதியைக் கேட்ட மஹா ராஜர் -அதி சாஹசம் என்று மிகவும் பயப்பட்டு -ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்கிறார்-
ஸூ க்ரீவஸ்து இதி –
கீழில் சர்க்கத்தில் சிந்தயித்வா முஹூர்த்தம் து -17-4-என்கிற
து சப்தத்தால் ராவண பவனத்தில் நின்றும் வந்த இவன் நம்மை நலிகை நிச்சிதம் என்று இவருடைய ஹ்ருதயத்தில் பிறந்த வேறுபாட்டைச் சொல்லிற்று
ஏதத் து வசனம் ஸ்ருத்வா-17-16- என்கிற து சப்தத்தாலே பெருமாள் பிரக்ருதியையும் இக் கோஷ்டியில் விலைச் செல்லும் வார்த்தையும் அறிந்து
ராகவம் சரணம் கத–17-14- எனபது நிவேதயத் -17-15- என்று இங்கனே சிலரைப் புருஷகாரமாகப் பிடிப்பதாக நின்றான்
இது பெருமாள் செவிப்படுமாக்கில் நம் வார்த்தை கொள்ளார் என்று த்வரித்த விசேஷத்தைச் சொல்லிற்று
இந்த து சப்தத்தாலே பெருமாள் நாம் போன வழி வருவர்  எதிரிகளை அவரைக் கொண்டு வெல்லலாம் -என்று இருந்தார் –
மித்ர பாவம் யுடையார்
நம்மை நலிய வந்தார்கள் ஆகிலும் அதுக்கு இசைந்தோம் என்று அருளிச் செய்கையாலே இவரும் அவனுக்குக் கூட்டாய் இருந்தார்
இனி இவன் நோக்கலாவது என் செய்தால் என்கிற பய அதிசயத்தாலே வேறுபட்டபடி
அத-ஸ்வாமி வார்த்தை சொன்னால் சேஷ பூதனானவன் கருத்தையும் அறிந்து -தன சேஷத்வத்தையும் பார்த்து விசாரித்து அதுக்குச் சேர வார்த்தை சொல்ல வேண்டி இருக்க
அதி சாஹசம் விளைந்தபடியாலே  க்ரமம் பாராதே வார்த்தை முடிவது முன்பே சடக்கென பிரதி வசனம் பண்ணத் தொடங்கின படி –
தத் வாக்யம்-மேல் பற்றில்லாத வார்த்தையை -அதாவது
இவன் துஷ்டன் என்று இ றே  சொல்லலாவது –
அத்தையும் இசைந்தோம் என்கையாலே போக்கடி இல்லை என்கை-
ஆபாஷ்ய ச-பதசவும் திரளவும் அநு பாஷித்து
விம்ருஸ்ய ச -வேர்ப் பற்றியான பதத்தை விமர்சிப்பதும் செய்து
அதவா –
வாக்ய அநு பாஷாணமும் அதினுடைய அர்த்த விமர்சமும் என்னவுமாம் –
தத ஸூ பதரம் வாக்யமுவாச -பெருமாள் அருளிச் செய்த வாக்யம் ஸூ பம்
அதில் காட்டில் ஸூப தரமான வாக்யத்தைச் சொன்னார்
அதாவது -என்னைப் பற்றுவார்க்கு மித்ர பாவமே அமையும் -அவர் குற்றம் பார்த்து விடோம் -என்று
தம்மைப் பற்றினார்க்கு இவ்வார்த்தையின் நிழலிலே  ஜீவிக்கலாம் வார்த்தை யாகையாலே அது ஸூ பம் –
நீர் போன வழியே போய் உம்முடைய சத்பாவத்தை இழக்க மாட்டேன் -என்ற வார்த்தை யாகையாலே  இது ஸூ பகரம்
ஹரி புங்கவ -ராஜவித்யா -ஸ்ரீ கீதை -9-2-என்கிறபடியே தம்முடைய கலக்கத்துக்குப் போரும்படி பெருமாளுக்கு அவ்வருகை விண்ணப்பம் செய்த அளவுடைமை –

————————————————————————————————————————————————————————————–

ஸூ துஷ்டோ வாப்யதுஷ்டோ வா கிமேஷ ரஜ நீசர
ஈத்ருசம் வ்யசனம் ப்ராப்தம் ப்ராதரம் ய பரித்யஜேத்
கோ நாம ஸ பவேத் தஸ்ய யமேஷ ந பரித்யஜேத் -யுத்த -18-5-

ஸூ துஷ்டோ வா-மிகுந்த தோஷத்தை உடையவன் ஆகிலும்
அதுஷ்ட வா -தோஷம் அற்றவனாகிலும்
ய ஏஷ ரஜ நீசர -யாவன் ஒரு இந்த அரக்கன்
ஈத்ருசம் வ்யசனம் ப்ராப்தம் -இப்படிப்பட்ட துன்பத்தை அடைந்த
ப்ராதரம் ய பரித்யஜேத்-சஹோதரனை அடியோடு   விட்டு விட்டானோ
தே ந கிம் -அவனால் என்ன பயன்
ஏஷ -அப்படிப்பட்ட இவன்
யம் -எவனை
ந பரித்யஜேத்-கை விட மாட்டானோ
ஸ-அவன்
தஸ்ய -அவ விபீஷணனுக்கு
கோ நாம -என்ன இரவிணன் தான் ஆவான் –

அவதாரிகை-
தூஷணாந்தரம் சொல்லுவாராக சம்ப்ரதிபன்ன தூஷணத்தை அநு வதிக்கிறார்-

ஸூ துஷ்டோ வாப்யதுஷ்டோ வா –
குணங்களிலே இ றே விப்ரதிபத்தி -சர்ப்ப ஜாதிரியம் க்ரூரா -என்னுமா போலே -ராஷசன் என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் அன்றோ –
கிமேஷ ரஜ நீசர-கிம் ஷேப -இவனால் என்ன பிரயோஜனம் யுண்டு
இவன் ராஷசன் ஆனாலும் கிமேஷ எண்ணக் கடவதோ
ஸ்வ நிகர்ஷ பூர்வகமாக சரணம் புகுந்த நமக்கு சஹகாரியாம் என்னச் சொல்லுகிறது
ஈத்ருசம் -ராஜா வாகையாலே ஆட்யனானவனை
வ்யசனம் ப்ராப்தம் -சத்ருக்களான நம்மாலே தடிகானவனை
வ்யசனம் ஆவது லங்கா த்ஹனம் பந்து வதம் இத்யாதிகள்
ப்ராதரம்-வ்யசனம் இன்றிக்கே ஒழிந்தாலும் விட ஒண்ணாத பந்தம் உடையவனை
ய பரித்யஜேத்-யாவன் ஒருவன் சவாசனமாக விட்டான் -என்று கர்ஹிக்கிறான்
கர்ஹ்யாம் லிங் -கீழ்ச் சொன்ன ஒன்றே விடாமைக்கு ஹேதுவாய் இருக்க
எல்லா வற்றையும்யுடையவனாய் இருக்கிறவனை விட்டான் யாவன் ஒருவன் அந்த இவனால் என்ன பிரயோஜனம் யுண்டு -என்று கீழோடு அந்வயம்-
அதவா -ஈத்ருசம்  -என்று வ்யசன விசேஷணம் ஆக வுமாம் –
அதாவது -மாதா பிதாக்களாலும் பரித்யாஜ்யராய் வதார்ஹராய் இருப்பார்க்கு உம்முடைய நிழலிலே ஒதுங்க வேண்டும் படி இருக்கும் தேவர்
புலி சீறினால்  போலே சீறி அழியச் செய்வதாக எடுத்து விட்டிருக்கிற இந்த விசனத்தை அன்றோ அவன் ப்ராப்தன் ஆயிற்று
இப்படி அவனோடு தொத்தற விட்டுப் போந்து நம் பக்கலிலே வந்தவன் நமக்கு சஹ காரியாகக் கூடாதோ என்னச் சொல்கிறார் –
கோ நாம இதி தஸ்ய அஸ்ய கோ நாம ச பவேத் யமேஷ விபீஷணே ந பரித்யஜேத்-
கர்ஹா ப்ரவர்த்தகனாக வந்த இந்த விபீஷணனுக்கு அவன் ஆராய்வான்
யாவனொருவனை இந்த விபீஷணன் விடான் -இவன் விடாது ஒழிகைக்கு ஒருத்தன் இல்லை -என்கை-
அதாவது நாட்டில் அபரித்யாஜ்யராவார் சம்பத்தி விபத்தி பந்துத்வங்களை தனித்தனியே உடையராய் இருப்பார் மூவரும்
இவற்றில் இரண்டையும் உடையார் மூவரும் -சமுதிக குணனாய் இருப்பான் ஒருவனும் -ஆக எழுவரும் ஆயிற்று –
இவர்களில் சமுதிக குணனான ராவணனை விட்ட இவனுக்கு அபரித்யாஜ்யனாய் இருப்பான் ஒரு அஷ்டமன் இல்லாமையாலே இவன் விட மாட்டாதான் ஒருவன் முதலிலே இல்லை -என்கை  –

—————————————————————————————————————————————————————————————-

வாநராதிபதேர் வாக்யம் ஸ்ருத்வா சர்வாநுதீஷ்ய ச
ஈஷது தஸ்மயமா நஸ்து லஷ்மணம் புண்ய லஷணம்
இதி ஹோவாச காகுத்ஸ்தோ வாக்யம் சத்ய பராக்ரம -யுத்த -18-6/7-
சத்யபராக்ரம -தடையற்ற பராக்ரமத்தை யுடைய
காகுத்ஸ்தோ-ஸ்ரீ ராமபிரான்
வாநராதிபதேர் வாக்யம் ஸ்ருத்வா-சுக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டும்
சர்வாநுதீஷ்ய ச -அனைவரையும் பார்த்து
ஈஷது தஸ்மயமா ந-சிறிது புன்சிரிப்பை யுடையவராய்
புண்ய லஷணம்-நல்ல முகக் குறியை யுடையவராய்
லஷ்மணம் -இலக்குவனைக் குறித்து
இதி வாக்யம் உவாச ஹ -இவ்வன்னமாக வார்த்தையை உரைத்தார்-

அவதாரிகை –
மகா ராஜர் வார்த்தையைக் கேட்ட பெருமாள் தாம் நோக்க  நினைத்த நன்மையையும் பார்த்து –
இது ஒரு ப்ரேம ஸ்வ பாவம் இருந்தபடி என் என்று முறுவல் செய்து இவருடைய பரிசுரத்தில் நமக்கு ஆளாவார் யுண்டோ என்று பார்த்து
அங்கே ஒருவரைக் காணாமையாலே தம்முடைய கருத்து அறியும் இளைய பெருமாளைக் குறித்து வார்த்தை அருளிச் செய்கிறார் –

வாநராதிபதேர் வாக்யம் ஸ்ருத்வா-
பேரளவு யுடையராகையாலே எட்டா நிலத்திலே வார்த்தை சொன்னவருடைய வார்த்தையைக் கேட்டு தாம் போன வழி
எல்லார்க்கும் சிரஸா வக்கக வேண்டும்படியான  நிர்வாஹகத்தை யுடையவர் -என்றுமாம் –
சர்வாநுதீஷ்ய ச –
இவர்கள் நம்மையும்   பார்ப்பார்களோ -இவர் போன வழியே போவார்களோ -என்று பார்த்து –
அதவா –
ஆச்சார்ய ப்ராசார்ய சந்நிபாதே ப்ராசார்யாயோப சங்க ருஹ்ய -ஆபஸ்தம்ப தர்மம் -1-8-19/20-என்கிற ந்யாயத்தாலே
நாமும் மகாராஜருமானால் நம்மை அநு விதானம்  பண்ணுவார்களோ என்று பார்த்து என்றுமாம் –
ச -சப்தத்தாலே
முகம் பார்த்த அளவிலேயும் அன்றிக்கே
இங்கிதங்களையும் ஹ்ருதயத்திலே ஓடுகிற வார்த்தையைப் பார்த்த படியை சமுச்சயிக்கிறது
ஈஷது தஸ்மயமா நஸ் –
தாம் நோக்கப் புக்க நன்மையையும்  பார்த்தபடி ஆந்த்யத்தை பண்ணும் அளவன்றிக்கே நாம் சொன்ன பஷத்து தூஷணம் சொல்லும்படி தெளிவையும் பிறப்பிக்கும் ஆகாதே
இது ஒரு ப்ரேம ஸ்வ பாவம் இருந்தபடி என் என்று ஸ்மிதம் பண்ணினபடி
நலமே வலிது கொல்-மூன்றாம் திருவந்தாதி -என்னக் கடவது இ றே-ஆய்ச்சியின் அன்பின் வலிமை சொல்லும் பாசுரம் இது
து –
மஹா ராஜர் சொன்ன பஷத்தைத் தள்ளி அதுக்கு அவ்வருகே வார்த்தை சொல்ல நினைத்த வேறுபாடு –
அதாகிறது -யமேஷ ந பரித்யஜேத் -என்கிறவரைக் குறித்து
வ்யசநே ஷூ ப்ரஹர்த்தாரஸ் தஸ்மாத யமிஹாகத -18-10-என்று வந்தான் -விட்டுப் போந்தான் என்று சொல்லுகை –
லஷ்மணம் –
மஹாராஜர் பரிகரத்தில் தன் வார்த்தை கேட்பார் இல்லாமையாலே -ப்ராகேவ து மஹா ப்ராஜ்ஞ-சுந்தர-33-28-என்று
தம் நினைவுக்கு முற்படக் கடவரான இளைய பெருமாளைக் குறித்து அருளிச் செய்தார் –
புண்ய லஷணம்-
இவ்வளவு சரணாகதரை விடாத வார்த்தையாலே மஹா ராஜர் பஷத்துக்கு அவ்வருகே வார்த்தை சொல்லக் கடவர் என்று
தச் சரவண கௌதூஹலம் வடிவிலே தோற்றும்படியான நல்குறியை  உடையவர்
இதி வாக்யம் உவாச –
மஹா ராஜர் தம்மைக் கொண்டாடும்படி அவர் ப்ரேம அதிசயத்தைக் கொண்டாடின பிரகாரத்தை யும்
அவர்
சொன்ன பஷத்துக்கு அவ்வருகே வார்த்தை சொன்ன பிரகாரத்தையும் சொல்லுகிறது
ஹ –
தம் மேன்மை பாராதே இப்படி கொண்டாடுவதே -இது என்ன நீர்மை -என்றும்
அவர் பஷத்துக்கு அவ்வருகே உத்தரம் காண்பதே -என்றும் ரிஷி கொண்டாடுகிறார்
காகுத்ஸ்தோ வாக்யம் –
இந்த்ராதிகளுக்கும் இக்குடியில் பிறந்தாரைக் கொண்டு தங்கள் வன்னியம் அறுத்துக் கொள்ளும்படியான
குடியில் பிறப்பால் வந்த மேன்மை பாராதே தாழ வார்த்தை சொல்லுவதே -என்கை –
சத்ய பராக்ரம –
அமோக பராக்கிரமம் –
வியாபாரிக்க ஒண்ணாத படி எதிரிகள் முடுக்கினால் பராக்கிரமம் மிக்க வல்லாரைப் போலே  பாதகம் முடிந்தாலும்  உத்தரம் கண்டு பிரதிவாதிகளை வெல்ல வல்லவர் –

—————————————————————————————————————————————————————————————

அநதீத்ய ச சாஸ்த்ராணி வ்ருத்தான் அநுபசேவ்ய ச
ந சக்யம் ஈத்ருசம் வக்தும் யதுவாச ஹரீஸ்வர–18-8-
ஹரீஸ்வர–வானவர் தலைவரான மஹா ராஜர்
யதுவாச -யாதொரு வார்த்தை சொன்னாரோ
ஈத்ருசம்-இப்படிப்பட்ட வார்த்தையை
சாஸ்த்ராணி-சாஸ்த்ரங்களை
அநதீத்ய-ஓதாமலும்
வ்ருத்தான்-பெரியவர்களை
அநுபசேவ்ய ச -அநு வர்த்தனம் பண்ணிக் கேளாமலும்
வக்தும் -சொல்லுவதற்கு
ந சக்யம்  -முடியாது-

அவதாரிகை –
அவர் தாம் சொல்லப் புகுகிற உத்தரத்தின் உடைய ஏற்றம் தோற்றுகைக்காக இவர் சொன்ன வார்த்தையின் கனத்தைக் கொண்டாடுகிறார்-

அநதீத்ய ச சாஸ்த்ராணி வ்ருத்தான் அநுபசேவ்ய ச ந சகயம்  வக்தும் யதுவாச
ஒரு சாஸ்திரத்தையும் -ஒரு ஆச்சார்யனையும் -ஒரு அடிப்பாடான புத்தியையும் உடையவனுக்குச் சொல்லலாம் வார்த்தை அன்று –
ஈத்ருசம்-இவ்வார்த்தை ஒரு பிறர்க்குப் போலியாக சொல்ல ஒண்ணாது
ஸ்ரைஷ்ட்யம் சாஸ்திர சமுஹேஷூ ப்ராப்த -அயோத்ய -1-27- என்றும்
வ்ருத்தோபஸே வீ -சுந்தர -38-61-என்றும்
மேலே சொல்லப் படுகிற தம்மாலும் சொல்லப் போகாதுஎன்று கருத்து
யதுவாச –
சாமான்ய நிர்தேசத்தால் இவ்வார்த்தை அநு பாஷிக்கவும் முடியாது என்கை –
ஹரீஸ்வர–
இதுக்கு சத்ருசம் ஏது என்னில் இவர்பெருமைக்கு சத்ருசம் -என்கை –

————————————————————————————————————————————————————————————–

அஸ்தி ஸூஷ்மதரம் கிஞ்சித் யதத்ர ப்ரதிபாதி மே
ப்ரத்யஷம் லௌகிகம் வாபி வித்யதே சர்வ ராஜஸூ  -18-9-

அத்ர -இவ்விஷயத்தில்
யத் கிஞ்சித் மே -யாதொன்று எனக்கு
ப்ரதிபாதி -தோன்றுகிறதோ
தத் -அது
ஸூஷ்மதாம்  -மிகவும் நுண்ணியதாய்
அஸ்தி-உள்ளதோ
ப்ரத்யஷம் லௌகிகம் வாபி-அனைவருக்கும் நேரில் தெரிவதாயும் உலகத்தோடு ஒட்டி இருப்பதாயும்
சர்வ ராஜஸூ  -எல்லா அரசர்களிடமும் காணப் படுவதாயும்
வித்யதே -இருக்கிறது-

அவதாரிகை –
இப்படி இளைய பெருமாளை நோக்கி மஹா ராஜரை பிரசம்சித்து ஸ்ரீ விபீஷண ஆழ்வானை விச்வச நீயன் என்று
தான் சொல்லப் புகுகிற வார்த்தை ராஜாக்கள் எல்லார் பக்கலிலும் உள்ளது என்று மஹா ராஜரைக் குறித்து வார்த்தை சொல்லுகிறார் –

அஸ்தி ஸூஷ்மதரம் –
மஹா ராஜர் கீழ்ச் சொன்ன வார்த்தை ஸூ ஷ்மம்-
இது ஸூ ஷ்ம தரம்
இதுக்கு மேல் ஒரு அர்த்தமில்லாமையாலே –
ஒரு தப்பைப் பொறுப்பது ஓன்று இல்லாமையாலேயும்
எல்லார்க்கும் மேலான வார்த்தை -என்கை –
எங்கனே என்னில் -மஹா ராஜர் பக்கலிலும் உகத அநு பாஷணம் ஒழிய அர்த்தாந்தரம் இல்லை –
பெருமாளும் இவர் ப்ரேமாந்த்யத்தை போக்குகைக்காகத் தம் தோள் வலி யைப் பேசுகிறார் இத்தனை –
ஆகையாலே எல்லா வற்றுக்கும் மேலான வார்த்தை இது
கிஞ்சித் –
மஹா ராஜர் வார்த்தைக்கு அவ்வருகாய் இருக்கச் செய்தே
கிஞ்சித் என்று ஸ்வ உக்தி யாகையாலே இலகுவாகப் பேசுகிறார் –
யதத்ர ப்ரதிபாதி மே-
விபீஷண விஷயீ காரத்தில்
ப்ரத்யஷம் –
சர்வ ப்ரத்யஷ சித்தம்
லௌகிகம் வாபி –
பிரத்யஷமே யாகிலும் ஜ்ஞாதி வதம் தோஷம் அன்றோ என்னில் எல்லார்க்கும் ஏறுவது  ஓன்று -எங்கனே என்னில் –
வித்யதே சர்வ ராஜஸூ  –
எல்லா ராஜாக்கள் பக்கலிலும் பரிமாறுவது ஓன்று யுண்டு
சர்வ ராஜ ஸூ என்கையாலே மஹா ராஜர் பக்கலிலும் உள்ளதொன்று –
தம் பக்கல் ப்ரேமாந்த்யத்தாலே மறந்தார் இத்தனை –

————————————————————————————————————————————————————————————–

அமித்ராஸ் தத் குலீநாஸ்ச ப்ராதிதேஸ் யாஸ்ச கீர்த்திதா
வ்யச நேஷூ ப்ரஹர்த்தாரஸ் தஸ்மாத யமிஹா கத –18-10-

தத் குலீநாஸ்ச -அரசனுடைய அக்குலத்திலே பிறந்தவர்களும்
ப்ராதிதேஸ் யாஸ்ச -அடுத்த தேசத்தில் இருக்கும் அரசர்களும்
வ்யச நேஷூ -அரசனை-ஆபத்துக் காலங்களில்
ப்ரஹர்த்தாரஸ் அமித்ராஸ்-துன்புறுத்தும் எதிரிகளாக
கீர்த்திதா -ராஜ நீதி சாஸ்த்ரங்களில் -சொல்லப் படுகின்றனர் –
தஸ்மாத் -ஆகையால்
அயம் -இவ்விபீஷணன்
இஹ -இங்கே
ஆகத -வந்தான்-

வ்யச நேஷூ ப்ரஹர்த்தாரஸ் -தத் குலீநாஸ்ச ப்ராதிதேஸ் யாஸ்ச-அமித்ராஸ்  கீர்த்திதா –
ராஜாக்களுக்கு வ்யசனம் வந்தால் -ப்ரஹர்த்தாக்கள்   ஆவார் -இரண்டு கோடி-
தத் குலீ நரான அமித்ரரும் –
ப்ராதிதேச்யரான அமித்ரரும் –
தத் குலீ நராகிறார் -வீர குல சாடர்
ப்ராதி தேச்யராகிறார் -ப்ரதி தேச வர்த்திகள் -அனந்தர தேச வர்த்திகள் -என்றபடி
வ்யசநேஷூ –
அவர்களில் அந்ய தமனை வ்யச நாதிகள் ப்ராப்தங்களாய் உள்ள இடத்தில்
ப்ரஹர்த்தாரஸ்-கீர்த்திதா —
ப்ரஹரிப்பார்கள் என்று நீதி சாஸ்திர வித்துக்களால் சொல்லப் படா நின்றார்கள் -அமித்ரா கீர்த்திதா -என்றுமாம் –
தஸ்மாத யமிஹா கத –
ராவணன் தனக்கு நம்மாலே வ்யசனங்கள் வந்தவாறே -குலீ நனான இவன் நம்மை பரிஹரிக்கும் என்று அவன் நலியக் கூடும் என்று அத்தாலே வந்தான் –
ஜ்ஞாதிகள் எல்லார்க்கும் ஒவ்வாதோ -இவனுக்கு விசேஷம் என்ன -என்ன ஒண்ணாது
அவனுக்கு ஹிதம் சொல்லுகிற இடத்திலே நம்முடைய உத்கர்ஷமும் இவனுடைய அபகர்ஷமும் தோற்றச் சொன்னான்
அத்தாலே இவன் பக்கலிலே சத்ரு புத்தி பண்ணக் கடவன் -அத்தாலே வந்தான் –
அதவா –
அவனுக்குவ்யசனம் வந்த அளவிலே அவனுக்கு இவன் ஜ்ஞாதி யாகையாலே நம்என்று ஒரு வ்யாக்யாதா சொன்னான்
இவை இரண்டிலும் யமேஷ ந பரித்யஜேத் -என்று சொன்ன இவரைக் குறித்து இவருடைய ஸூ த்தியே சாத்திக்கிறார் ஆகையாலும்
மேல் மாநயந்தி ஸ்வகான் ஹிதான் -என்று சொல்லுகையாலே முற்பட்டதே பொருளாகக் கடவது
ஆக -இஸ் ச்லோகத்தாலே -அவனுக்கு அஞ்சி வந்தான் ஆகிலும் சங்க்ராஹ்யன் –
நம்மைக் கொண்டு அவனை நலிய வந்தான் ஆகிலும் சங்க்ராஹ்யன் –
உபய பஷத்தாலும் -யமேஷ ந பரித்யஜேத் -என்னும் அவன் அல்லன் -நம் சஹ காரி -என்றது ஆயிற்று –

——————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .