Archive for the ‘தனியன் வ்யாக்யானம்’ Category

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்–தனியன்கள்-/பாசுரங்கள் 1-10—ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

August 29, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும்,
துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும்,
தமது ஞானஸார, ப்ரமேயஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான
அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன்.

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும்,
நான்காவது நிலையான துறவறத்தை மேற்கொண்டவருமான அருளாள மாமுனியை வணங்குகிறேன்.

(ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம்)
யக்ஞ மூர்த்தி என்னும் பூர்வாசார பெயருடன் முன்னைய நிலையில்
எம்பெருமானாரோடு பதினெட்டு நாட்கள் நடத்திய வேதாந்த விசாரத்தில் தர்க்கம் செய்து
எம்பெருமானாரைச் சோர்வுறச் செய்கையில்,
பேரருளாளரான அத்திகிரி வரதராஜப் பெருமாள் கனவில் தோன்றி,
“எம்பெருமானாரே! நீர் சோர்வுற வேண்டா, உமக்குத் திறமையுடைய ஒரு நற்சீடனை உண்டாக்கிக் கொடுத்தோம்.
அவனை வெல்வீராக” என்று உரைத்த குருபரம்பரைத் தொடர்களை இங்கு நினைவு கூர்க.

(வேத சாஸ்திரார்த்த ஸம்பதம்) –
உடையவரோடு பதினெட்டு நாட்கள் தர்க்கம் பண்ணின திறமையாலும் ஞானஸார ப்ரமேயஸார நூல்களில்
வேதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து சாரமான கருத்துக்களை அழகிய வெண் பாக்களினால்
எடுத்துரைத்தமையாலும், இவரது சாஸ்திர புலமை நன்கு விளங்கும்.

(தேவராஜ முனிம்) –
தேவராஜனான பேரருளாளனுடைய திருவருளால் எம்பெருமானாருக்கு சீடரான பெருமையும்,
ஞான, பக்தி, வைராக்யங்களில் ராமாநுஜ முனிக்கு நிகராக விளங்கிய சிறப்பும் பற்றி
“அருளாள முனி” என்று திருநாமம் பெற்றமையும் உணரப்படுகிறது.

————-

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

நான்கு வேதங்களிலிருந்து உட்பொதிந்த ஆழ் பொருள்களையும், திருமந்திரத்தின் மெய்ப்பொருள்களையும்
ஞானஸார ப்ரமேயஸாரம் என்னும் நூல்களைக் கொண்டு அறிவைப் புகட்டியவரும்,
ஞானச் சுடர் விளக்காய் விளங்குபவரும், அருளாள மாமுனி என்னும் திருநாமம் உடையவருமான ஆசார்யருடைய,
அழகியதும், அனைவருக்கும் அடையத் தகுந்ததுமான அவரது திருவடிகளை அடைந்த பிறகு,
ஊழ் வினைகள் அழிவதற்கான வழியை அறிந்து கொண்டேன்.
ஊழ் வினையால் அறிவில் மயக்கம் ஏற்படுகிறது. அவ்வறிவு மயக்கத்தால் பெண்வழிச் சேரலில் துவழ்ச்சி ஏற்படுகிறது.
அத் துவழ்ச்சிக் காரணமாக அவர்களது சுருண்ட கருங்கூந்தலிலும் வேல் போன்ற பார்வையிலும் மனம் நெகிழ்கிறது.
அருளாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த பிறகு காமம் முதலிய
இக் குற்றங்களிலிருந்து நீங்குவதற்கு வழி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாராகிற ஆசார்யருடைய திருவடிகளைப் பற்றின பிறகு
அவர் அருளிச் செய்த ஞான ஸார ப்ரமேய ஸார ப்ரபந்தங்களால் அறிவுக்குத் தெளிவு பிறந்தது.
அதனால் பெண்களின் அழகிய கூந்தலிலும் வேல் போன்ற விழியிலும்
மனம் நெகிழும் தீய வினைகளை அழிக்கும் வழிகளை அறியப் பெற்றேன் என்று கருத்து.

பெண்ணாசையைச் சொன்ன இதில் மற்றும் உண்டான கோபம், உலோபம், மோகம், மதம், பொறாமை
முதலிய குற்றங்களும் அடங்கும்.
“காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” என்ற திருக்குறளின் சொல்படி
மனிதப் பண்பாட்டை அழிக்கும் குற்றங்கள் ஆசார்ய கடாக்ஷத்தால் தீரும் என்பது பாடலின் அருங்கிய கருத்து.
இதனால் இவ்வாசிரியருடைய பெருமை கூறப்பட்டது.

————

முதல் பாட்டின் முகவுரை

ஆன்மாவுக்குப் பேரின்பம் கொடுப்பது வீடுபேறு ஆகும்.
அதை அடைவதற்கு (1) திருமந்திரம் (2) த்வயம் (3) சரம ச்லோகம் என்று மூன்று மந்திரங்களின்
உண்மைப் பொருளை குருவின் மூலம் தெரிந்து கொள்ள வேணும்.
இம்மூன்று மந்திரங்களுக்கும் “இரகசியம்” என்று பெயர்.
இதைத் தெரிந்து கொள்ள வேணும் என்ற அவாவுடையோர்க்கு அன்றி ஏனையோர்க்குச் சொல்லலாகாது என்று மரபு உண்டு.
இவ்வாறு மறைத்து வைப்பதால் இதற்கு இரகசியம் என்று பெயர் இடப்பட்டது.
இம்மூன்று மந்திரங்களும் அனைத்து வேதாந்தக் கருத்துக்களின் முடிவாய்த் திகழ்வன.
மேலும் இம்மூன்றும் பரம்பொருளின் உண்மை, பரம்பொருளை அடைவதற்கு வழி, பரம்பொருளை அனுபவித்து நுகரும் பேரின்பம்
ஆகிய இவற்றின் உண்மைகளை உள்ளது உள்ளபடி சொல்லக்கூடியன.
இம்மூன்று மந்திரங்களும் பிறவிப் பெருங்கடலில் உழலும் ஆன்மாக்கள் கரைசேர்வதற்காக
(துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக) பகவானால் சொல்லப்பட்டவை ஆகும்.

“திருமந்திரம்” பதரிகாச்ரமத்தில் பகவான் தானே நாராயணனான ஆசார்யனாயும் நரனாகிற சீடனுமாயுமிருந்து வெளிப்படுத்தியது.
“துவய மந்திரம்” ஸ்ரீவைகுண்டத்தில் பெரிய பிராட்டியாருக்கு பகவானால் உபதேசிக்கப்பட்டது.
“சரம சுலோகம்” மஹாபாரத யுத்தத்தில் அர்ஜுனனுடைய தேர்த்தட்டிலிருந்து கொண்டு அவனைக் குறித்து சொன்ன
பகவத் கீதையின் இறுதியில் கண்ணபிரானால் சொல்லப்பட்டது.
இம்மூன்று மந்திரங்களும் குருபரம்பரை வழிவழியாக உபதேசத்தாலே சொல்லப்பட்டு வருவன.
செம்பொருள் கண்டவர்களில் முன்னோடிகளும் நம்முடைய முன்னோர்களுமான ஆசார்யர்களுக்கு இவையே மேலான
செல்வமாய் விளங்குவன மற்றும் அவர்களுக்கு நாடோறும் மனனம் செய்வதற்கு உரியனவாயும் இருப்பன.

இத்தகைய பெருமையுடையனவாய் விளங்குவன இம்மூன்று மந்திரங்களும்.
இவற்றுள் முதல் மந்திரமாய் விளங்குவது திருமந்திரம். இதற்கு “முதல் ரகசியம்” என்று பெயர்.
இது மூன்று பதங்களைக் கொண்டது. அவை “ஒம்” என்றும் “நம:” என்றும் “நாராயணாய” என்றும் சொல்லப்படும்.
இந்த மூன்று பதங்களில் முதல் பதமான “ஒம்” என்ற ப்ரணவத்தின் கருத்தை நடுப்பதமான “நம:” என்ற பதமும்
“நாராயணாய” என்ற பதமும் தெளிவு படுத்துவனவாகும்.
அதாவது “ஒம்” என்பது சுருக்கமாகப் பொருளைச் சொல்வது
“நம:” என்பதும் “நாராயணாய” என்பதும் அதனை விளக்கமாகச் சொல்வனவாகும்.

இங்ஙனம் திருமந்திரத்திலுள்ள நடுப்பதமான “நம:” பதத்தின் கருத்தையும் “நாராயணாய” என்ற கடைசி பதத்தின் கருத்தையும்
த்வய மந்திரத்தில் முறையே முதற்பகுதியும், பிற்பகுதியும் விளக்குவனவாகும்.
முதற்பகுதி, பிற்பகுதி என்ற இத்தகைய இரண்டு பகுதிகளைக் கொண்ட த்வய மந்திரம் மந்திரங்களுக்குள் சிறந்ததான
“மந்திர ரத்தினம்” என்று போற்றப்படும். அதன் முதற்பகுதியில் பகவானை அடைக்கலம் புகும் முறைகள் சொல்லப்படுகின்றன.
அதாவது பகவானுடைய திருவடிகளில் அடைக்கலம் புகும் போது எல்லா பற்றுதல்களையும்
தடம் தெரியாமல் விட்டே பற்றவேண்டும் என்றும், அவ்வாறு பகவானுடைய திருவடிகளைப் பற்றுதலையும்
ஒரு பற்றுக் கோடாகக் கருதாமல் அவன் பாதமே தஞ்சமென்ற உறுதிப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் குறிக்கிறது.
பிற்பகுதியில் மேற்கூறியவாறு உறுதி பூண்டுள்ள அடியவர்க்குப் பயன் பிராட்டியும் பெருமாளும் கூடின
இருவருமான சேர்த்தியில் தொண்டு செய்வதேயாகும் என்பதாம்.

இது இராமாயணத்தில் சீதையும் இராமனுமான இருவருடைய சேர்த்தியில் இளைய பெருமாள்
தொண்டு செய்து வாழ்ந்தது போன்றதாகும்.
இத்தகைய (பேறு) ஊழ்வினையினால் வரும் அனைத்துத் தடைகளும் (பாபங்களும்) தடம் தெரியாமல் நீங்கிய பிறகே கை கூடுவதாகும்.
இவ்வாறான த்வய மந்திரத்தின் முதற்பகுதியும், பிற்பகுதியும் ஆகிய இரண்டு பகுதிகளின் கருத்துக்களையும்
“சரம சுலோகம்” எனப்படும் மூன்றாவதான மந்திரம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.
ஆகவே மூன்றாவதான சரம சுலோக மந்திரம் த்வய மந்திரத்திற்குச் சார்புடையதாய் நிற்கிறது.
ஆக இம்மூன்று மந்திரங்களிலும் த்வய மந்திரமே முக்கியமாக நம்முடைய முன்னோர்களான ஆசார்யர்களால் எண்ணப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க த்வய மந்திரத்தின் முதற்பகுதியால் சொல்லப்படுவது என்ன?
பகவானுடைய திருவடிகளில் அடைக்கலம் புகுவது. அது இரண்டு வகையாகும்.
“இப்பொழுதே வீடு பேறு அடைய வேண்டும்” என்னும் வேகத்தில் அடைக்கலம் புகுவது ஒன்று.
மற்றொன்று “உன் திருவடிகளில் அடைக்கலம் புகுகின்றேன். நீ எப்பொழுது வீடு பேறு அளிக்கிறாயோ
அப்பொழுது கொடுப்பாயாக” என்று அடைக்கலம் புகுவது.
இவ்விரண்டினுள் மிக விரைவில் வீடு பேறு அடைய வேண்டும் என்ற நோக்குடன் செய்யும் அடைக்கலமே சிறப்புற்றதாகவும்
மற்றது சிறப்பற்றதாகவும் கருதப்படும்.

இங்குக் கூறிய மிக விரைவுடன் செய்யும் அடைக்கலத்தின் இலக்கணங்கள்
ஞானசாரமாகிற இந்நூலில் முதல் பாடலான “ஊன உடற் சிறை” என்னும் பாடலில் சொல்லப்படுகின்றன.

“ஊன உடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வனடித்
தேன் நுகரும் ஆசைமிகு சிந்தையராய்த் – தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு”

பதவுரை :-

ஊன – மாமிச மயமான
உடல் – சரீரமாகிற
சிறை – சிறைச் சாலையை
நீத்து – துறந்து (விட்டு நீங்கி)
ஒண் கமலை கேள்வன் – அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாகவுடைய லக்ஷ்மீ தேவியின் மணாளனான பகவானுடைய
அடித் தேன– திருவடிகளின் இனிமையை
நுகரும் – துய்க்கும் (அனுபவிக்கும்)
ஆசை மிகு சிந்தையராய் – ஆசை மிகுந்த மனதை உடையவராய்
பழுத்தால் – பழுத்துக் கனிந்தால்
தானே விழும் – தானே விழுகின்ற
கனி போல் – பழம் போல்
பற்றற்று – ஒட்டுதல் அற்று
வீழும் – சரணாகதி செய்யும்
விழுக்காடு தானே– அச்சரணாகதியே
வீடு அருளும்– வீடு பேற்றைக் கொடுக்கும்

உடல், மாமிசமயமானது. அது சதை, நரம்பு, எலும்பு, மஜ்ஜை, விஷ்டை, மூத்திரம் முதலிய
உட் குற்றங்கள் பலவும் நிரம்பியதொன்று. இதை “புண்ணாராக்கை” என்று கூறுவர்.
ஈயின் சிறகளவு தோல் உரித்தாலும் ஈ, எறும்பு, காகம் முதலிய ஜந்துக்கள் மொய்த்துக் கொள்ளும்.
(நாலடியார் துறவறவியல் – தூய்தன்மை – முதல் பாடல்).
உடல் உட்புறத்தை வெளிப்புறமாக்கினால் காக்கையை விரட்டுவதே காலமெல்லாம் பணியாக யிருக்கும்.

இவ்வாறு மிகவும் அருவருக்கத் தக்கதாயுள்ள இச்சரீரத்தின் குற்றங்களை உணர்பவர்களுக்கு
“நான்” என்று சொல்லப்படும் ஆன்மாவாகிற தான் இதனுள் இருக்கும் இருப்பு
(அதாவது உண்டு, உடுத்து வாழ்ந்து வருவது) சிறையில் அடைபட்டவன் போன்று கருதப்படுவதாகும்.

சட்டிக்குள் வைக்கப்பட்ட மாணிக்கத்தின் ஒளி உள்ளேயே அடங்கியிருப்பது போல
உடலுக்குள் அகப்பட்ட ஆத்மாவின் ஞான குணங்கள் அதற்குள்ளேயே சுருங்கிக் கிடக்கின்றன.
அதாவது ஆன்மா, உடலில் மறைந்து இருக்கிறது.
இதுவே ஆன்மாவுக்கு இறைவன் கொடுத்த சிறை தண்டனை என்று உணரலாம்.
இதனை சிறையாக உணராமல் இன்பமாக உணர்வது மூடர் செயலாகும்.
ஆகவே உடலின் உண்மைத் தன்மையை உணரும் அறிவுடையார் (ஞானிகள்) உலக வாழ்வை அருவருத்து
அதிலிருந்து விடுபடுவதற்கு முயலுவர்.
அவ்வாறு உடற்சிறையிலிருந்து விடுபடுவதற்கு முயலும் அறிவுடையார் (ஞானிகள்)
இறைவனிடம் சரணாகதி செய்வது தவிர வேறு வழியைக் காணமாட்டார்கள்.
இச்சிறையிலிருந்து ஆன்மாவை விடுவிப்பதும் இறைவனே என்ற உண்மையை கீதையில் பகவான் அருளிச் செய்துள்ளான்.
ஆன்மாவுக்குச் சரீரம் எற்பட்டது ஆன்மா செய்த வினைப்பயனால் ஆகும்.
அவ்வினையைச் சரணாகதி நெறியினாலன்றி வேறொன்றினால் கடக்க முடியாது.
“என் காலைக்கட்டி சரணாகதி பண்ணினால் நான் அச்சிறையிலிருந்து (ஆன்மாவை) விடுவிக்கிறேன்” என்று பகவான் கூறியுள்ளான்.

ஒரு குருவி பிணைத்த கூட்டை நம்மால் பிரிக்க முடிவதில்லை.
வினைப்பயனால் சர்வ சக்தியுடைய இறைவன் பிணைத்து வைத்த இவ்வுடலாகிற கூட்டை
நம்மால் பிரிக்க முடியுமா? என்று கூறியுள்ளார்.
சிறையில் அடைபட்ட செல்வந்தனுக்கு வெளியில் வந்து சுக போகங்களை அனுபவிப்பதைக் காட்டிலும்
சிறையிலிருந்து விடுபடுவதே முக்கியமாகும்.
அதுபோல ஆன்மா, சரீரச் சிறையிலிருந்து விடுபடுவதே அவசியமானது. சிறை என்பது மிகவும் இழிந்ததல்லவா?
ஆகவே உடல் சிறையிலிருந்து தப்புவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும்.

அவ்வாறு சரணாகதி செய்யும் போது த்வய மந்திரத்தில் சொல்லியபடி பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு
பகவான் திருவடிகளில் சரணாகதி பண்ணவேண்டும்.
அவன் திருவடிகளில் சரணாகதி பண்ணுவது தேனைச் சுவைப்பது போன்று மிக இனிமையாக இருக்கும்.
அவ்வினிமையை அனுபவித்தவர்களின் மனம், மிக்க விருப்புடன் அதிலேயே தோய்ந்திருக்கும்.
குழந்தை தாய்ப்பாலை சுவைப்பதற்கு எப்படி ஆர்வமுடன் இருக்குமோ,
அது போல சரணாகதி செய்பவன் இறைவன் திருவடித் தேனை நுகருவதில் ஆர்வமோடு இருப்பான்.
அவ்வார்வத்தினால் அவன் திருவடியைப் பற்றும் போது தான் முன்பு பற்றிக் கொண்டிருந்த உலகப் பற்றுக்களை அறவே விட்டு விடுவான்.
அப்பற்றுதல்களும் தாமே இவனை விட்டு விலகி விடும் என்பது இப்பாடலின் கருத்து.
இது எது போன்றது என்றால் மரத்தில் கனிந்த பழம் காம்பை விட்டுத் தானே கீழே விழுவது போன்றாய்
எல்லாப் பற்றுதல்களும் தானே விட்டுப் போகும்படி பகவான் திருவடிகளில் வீழ்வது சரணாகதியாகும்.
இச்சரணாகதி மிகவும் விரைவுடன் செய்யப்பட்டால் உடனே பகவானுக்கு இரக்கம் எற்பட்டு அவனுக்கு வீடுபேறு அளிப்பான்.
அவசரமில்லாமல் சரணாகதி செய்தாலும், இச்சரீரம் கழிந்தவுடன் வீடு பேறு அளிப்பான்.

ஆகவே, சரீர வாழ்வை சிறை என்று உணர்ந்து அதிலிருந்து தப்ப விரும்புபவன் பகவான் திருவடியை அனுபவிக்கும்
ஆசையுடையவனாய் பிராட்டி பரிந்துரையுடன் வெளிவுலகப் பற்றுக்களை அறவே விட்டு இறைவன் திருவடிகளில்
சரணாகதி பண்ணினால் அச்சரணாகதிக்கு இரங்கி இறைவன் உடனே வீடளிப்பான்.
ஆகவே, பரபரப்புடன் பண்ணும் சரணாகதி உடனே மோட்சம் தரும் என்பது இப்பாட்டின் கருத்து.

வீடு பேறு என்பது பிறவிக்கடலை கடந்து பகவானாகிற கரையை அடைதலாகும்.
“அக்கரையென்னும் அணர்த்தக் கடலுள் அழுந்தி இக்கரையேறி இளைத்திருந்தேன்”
(பெரியாழ்வார் திருமொழி – 5ம் பத்து – 3ம் திருமொழி – 7ம் பாசுரம்) என்றார் பெரியாழ்வார்.

இவ்விடத்தில் ஒரு வேதாந்த விசாரம் செய்யப்படுகிறது.
சரணாகதியே மோட்சம் தரும் என்ற கருத்தைச் சொன்னால் பகவானே மோட்சம் தருபவன் என்ற சித்தாந்தத்தோடு முரண்படாதா?
மேலும், சரணாகதி என்ற ஞானமில்லாத செயலுக்கு, மோட்சம் தரும் ஆற்றலுண்டு என்று சொல்வதும் உண்மைக்கு மாறாகாதா?
என்ற வினாக்கள் எழுகின்றன. இதன் பதில் வருமாறு:-

பக்தன் செய்யும் சரணாகதியோ, பக்தியோ தவமோ நோன்புகளோ எதுவாகயிருந்தாலும்
அவை அவனை மோட்சத்திற்குத் தகுதியுடையவனாக மட்டும் ஆக்கும் அவையே தவிர, மோட்சத்தைத் தரமாட்டா.
இத்தகைய சரணாகதிக்கு இரங்கி பகவான் தான் மோட்சம் தருவான் என்பது உண்மை.
இதை, சாஸ்திரம் “அதிகாரி விசேஷணம்” என்று கூறும்.

இதற்கு உதாரணம் – மேடான இடத்தை ஆழப்படுத்தி ஏரி கட்டுகிறார்கள்.
மழை பெய்யும் போது ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது. ஏரி கட்டுவது மழை பெய்வதற்குக் காரணமாகாது.
ஆனால், மழை பெய்யும் போது ஏரி இருந்தால்தான் மழை நீர் தேங்கும்.
அது போல ஆன்மாக்களிடத்திலுள்ள சரணாகதி முதலிய எந்த புண்ணியமும் பகவான் அருள் செய்வதற்குக் காரணமாகமாட்டா.
பகவானுடைய அருள் எந்த காரணத்தையும் எதிர்பாராமல் இயற்கையாக தானே வருவது.
அந்த அருள் தானாக வரும் போது அதை எற்றுக் கொள்ள ஆத்மாக்கள் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும்.
அந்தத் தகுதியுடைமையே “சரணாகதி” என்றும் “பக்தி” என்றும் நோன்பு புண்ணியங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.
இப்படித் தகுதியுடைமையைக் காரணம் என்று சொல்ல முடியாது.

“வனத்திடரை எரி ஆம் வண்ணம் இயற்றும் இதுவல்லால் மாரி யார் பெய்கிற்பார்? மற்று என்று
பூதத்தாழ்வார் இதைத் தெளிவுபடுத்தினார்.
ஆகவே, “இவை சரணாகதி பெறுவதற்குரிய தகுதியைத்தான் உண்டு பண்ணும்; பகவான் தானே வீடு தருவான்”
என்ற உண்மைகள் இங்கு கிடைக்கின்றன.
மாம்சமயமான சரீரத்தில் வாழ்வதைச் சிறையில் இருப்பதாகக் கருதி விடுதலையடைய மனம் துடிதுடிக்க வேணும்.
லக்ஷ்மீ நாயகனான பகவான் திருவடிகளின் சுவையை அனுபவிக்க ஆசைப்பட்டு அவன் திருவடிகளில் விழுவதே சரணாகதி ஆகும்.
அது கனிந்த பழம் காம்பிலிருந்து விழுவது போல சகல பற்றுதல்களையும் விட்டுச் செய்யப்படுவதாகும்.

மோட்சத்தை அடைவதற்கு சரீரம் விரோதியாகும்.
அவ்விரோதியை அழிப்பதற்கு பகவான் திருவடிகளில் பண்ணும் சரணாகதியே ஆயுதமாகும்.
இதற்கு விளக்கமாக ராமாயணத்தில் பரதனும் , விபீஷணனும் இராமன் திருவடிகளில் சரணாகதி செய்த கதையைக் காணலாம்.
பரதன் தன் தாயினால் துன்பம் அடைந்தவன். விபீஷணன் தன் அண்ணனால் துன்பம் அடைந்தவன்.
இருவரும் தங்கள் துன்ப நிலையைத் தாங்க மாட்டாதவர்களாய் உள்ளனர்.

“தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன்,
அழுது அழி கண்ணினன், ‘அவலம் ஈது’ என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான்
‘பரதனும் தொழுது தோன்றினான்’ மலரடி வந்து வீழ்ந்தனன்”–(கம்பராமாயணம் – அயோத்திய காண்டம் – திருவடி சூட்டு படலம் – 49)

இது பரதனின் சரணாகதி இதுவே “அதிகாரி விசேஷணம்” எனப்படும்.
இதுவே பகவான் அருளுவதற்கு உரிய தகுதியாகும்.

“கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன், கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை வள்ளல்
இரங்கினன் நோக்கும் தோலும், இருநிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி அன்னதாள் இணை வந்து வீழ்ந்தான்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – விபீஷணன் அடைக்கலப் படலம் – 137)

இதுவே விபீஷணன் நிலை.

இவை இரண்டு நிலைகளும் ஆன்மா உடற்சிறை வேதனையிலிருந்து விடுபடுவதால்
பகவான் திருவடிகளில் சரணாகதி பண்ணுவதற்கு ஒப்பாகும்.
பரதனுக்கு கைகேயியினால் வந்த துன்பம், விபீஷணனுக்கு இராவணனால் வந்த துன்பம்,
ஆன்மாவுக்கு உடற்சிறையினால் வந்த துன்பம்
எத்துன்பமாக இருந்தாலும் துன்பம் தீருவதற்கு வழி பகவான் திருவடிகளில் பண்ணும் சரணாகதியே.
மேலே சொன்ன பரதனும், விபீஷணனும் துன்பத்தை உடனடியாகத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் சரணாகதி செய்துள்ளார்கள்.
அவ்வாறே இவ்வான்மாவும் உடனடியாக உடற்சிறைத் துன்பத்திலிருந்து விடுபடத் துடிதுடிப்புடன் சரணாகதி செய்கிறான்.
“உண்டு கொல் உயிர்? ” என ஒடுங்கினான் உருக் கண்டனன்,
நின்றனன் – கண்ணன் கண் எனும் புண்டரீகம் பொழி புனல் –
அவன் சடாமண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.

“அயாவுயிர்த்து, அழுகணீர் அருவி மார்பிடை
உயர்வுற, திருவுளம் உருக, புல்லினான்
நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலை ஆயினன்
தயா முதல் அறத்தினைத் தழீ இயது என்னவே”–(கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – திருவடி சூட்டு படலம் – 55)

இது பரதனிடம் ராமன் காட்டிய இரக்கம்.

இனி விபீடணனிடம் காட்டிய இரக்கம் காணலாம்..!

“குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம், எம் முழை அன்பு வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் – நுந்தை”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 143)

“திருவடி முடியின் சூடி, செங்கதிர் உச்சி சேர்ந்த
அருவரை என்ன, நின்ற அரக்கர்தம் அரசை நோக்கி
இருவரும் உவகை கூர்ந்தார், யாவரும் இன்பம் உற்றார்,
பொரு அரும் அமரர் வாழ்த்தி, பூமழை பொழிவதானார்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 145)

“தேடுவார் தேடநின்ற சேவடி, தானும் தேடி
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீ இய நல்நீர்
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி, மேல் அமரர் ஆவார்,
சூடுவார் எய்தும் தம்மை சொல்வார் யாவர்? சொல்லீர்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 150)

இவ்வாறே வேதனையுடன் “சரணாகதி பண்ணும் ஆன்மாக்களிடம் பகவான் இரங்கி அருள் செய்வான்” என்பது கருத்து.
இதை “இரக்கம் உபாயம், இனிமை உபேயம்” என்று சுருங்கச் சொன்னார்கள் ஆசார்யர்கள்.

மேலே கூறின பரத, விபீஷண சரணாகதிகளில் விபீஷண சரணாகதி பலித்ததாகவும்
பரத சரணாகதி பலிக்காததாகவும் தெரிகிறது.
“பரதனுக்கு நன்மைதானே தீமையாயிற்று” என்ற வாக்கியமும் காணலாம்.
ஆகவே தான் சரணாகதி முதலிய சாதனங்கள் எல்லாம் அதிகாரி விசேஷணமாகச் சொல்லப்படுவதன்றி
சாதனமாகச் சொல்லப்படுவதில்லை.
சரணாகதி வீடு தரும் என்றது கால தாமதமின்றி வீடு அளிக்கும் என்பதைப்பற்றிச் சொன்னது.
அதற்கு வீடு அளிக்கும் சக்தி கிடையாது.
இவ்வாறு சரணாகதியைப் பற்றிய பல உண்மைகளை இப்பாடல் உரையில்
மணவாள மாமுனிகள் விளக்கி யிருக்கிறார் என்பதை இங்கு உணர வேணும்.

————-

நரகும் சுவர்க்கமும் நாண்மலரள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் – துரிசற்றுச்
சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருத்தல்
கோதிலடியார் குணம்–2-

நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை)
பிரிவு – பிரிந்திருப்பது
நரகம் – துன்பமுமாய்
பிரியாமை – கூடி யிருப்பது
சுவர்க்கமுமாய் – இன்பமுமாய்
துரிசற்று – குற்றமற்று
சாதகம் போல் – சாதகப் பறவை போல (மழையையே எதிர்பார்த்திருக்கும்)
நாதன் தனது – பகவானுடைய
அருள் – கருணையையே
பார்த்திருத்தல் – எதிர்பார்த்திருத்தல்
கோதிலடியார் – குற்றமற்ற அடியார்களது
குணம் – இயல்பாகும்

நரகும் சுவர்க்கமும் என்ற சொற்கள் துன்பத்தையும் இன்பத்தையும் குறிக்கின்றன.
“துன்பமும் இன்பமும்” என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தில்
“இன்பமில் வெந்நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்” என்ற இடத்திற்கு உணரச் செய்கையில்
“சுக துக்கங்கள்” என்று உணர சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே நரகு என்றால் துன்பம் என்றும் சுவர்க்கம் என்றால் இன்பம் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

பரபக்தியுடையவர்களுக்கு எது துக்கம்? எது சுகம்? என்பதை மேல் தொடர் விவரிக்கிறது.
நாண்மலராள் கோன் (பெரிய பிராட்டியாருக்குத் தலைவன்) அவனைப் பிரிதல் துன்பம் என்றும்
பிரியாமை (அவனோடு கூடியிருத்தல்) இன்பம் என்றும் சொல்வர்.

பரபக்தி என்றால் பிரிவில் ஆற்றமாட்டாமை, கூடிடில் ஆற்றாயிருத்தல். இதற்கு உதாரணம் பின்வருமாறு.

ஸ்ரீராமாயணத்தில் பெருமாள் (இராமன்) காட்டிற்கு எழுந்தருளும்போது பிராட்டி நானும் கூட வருவேன் என்று சொல்ல
அதற்குப் பெருமாள் நகர வாசத்திற்கும் வன வாசத்திற்குமுண்டான வேறுபாடுகளை எடுத்துரைத்து
அதனால் காட்டிற்கு உடன் வருவது துன்பம் என்றும், அரண்மனையில் இருப்பது இன்பம் என்றும் அருளிச் செய்தார்.

அதைக் கேட்ட பிராட்டி, “இன்ப துன்பங்கள் நீர் சொல்வது போல் அல்ல;
ஒவ்வொருவருக்கும் வேறு வேறாய் இருக்கும் உம்மோடு கூடியிருப்பது எதுவோ அதுவே சுகம்;
உம்மைப் பிரிந்து அரண்மனையில் இருப்பது துன்பமாகும்;
இந்த உண்மை உமக்குத் தெரியாமல் போனாலும் என்னிடம் கேட்டு அறிவீராக;
தமக்குத் தெரியாததைப் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேணும்; அது தவறில்லையே;
உம்மைப் போலே நாம் அளந்து அன்பு செய்யவில்லை. நான் உம்மிடம் கொண்டுள்ள அன்பு அளவு கடந்ததாகும்” என்று சொன்னாள்.

இதற்கு இராமன் “நம்மைக் காட்டிலும் உனக்கு அன்பு மலை போல் இருப்பதாய்ச் சொன்னாயே.
இதற்கு நம்மை என்ன செய்யச் சொல்கிறாய்?” என்றான்.
அதற்கு பிராட்டி “நான் முன்னே போகின்றேன். நீர் எனக்குப் பின்னாலே வரப்பாரும்” என்று கூறினாள்.
இது பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்.

இங்கு ஒரு வேதாந்த விசாரம்.
சீதை, இராமனைப் பார்த்து உம்முடன் கூடியிருந்தால் சுகம் என்றும்
உம்மைவிட்டுப் பிரிந்தால் துக்கம் என்றும் கூறினாள்.
இது அவள் அளவுக்குப் பொருத்தமாகயிருக்கும்.
இதே வார்த்தையை ஜீவாத்மா பரமாத்மாவைப் பார்த்துச் சொல்வது முறையற்றது.
பிராட்டி பகவானையே இன்பமாகக் கொண்டிருப்பவள்.
ஜீவாத்மாக்களோ பகவானையும் பிராட்டியையும் சேர்த்து இன்பமாகக் கொண்டிருப்பவர்கள்.

அதனால் பிராட்டிக்கு “ஏகாயணை” என்றும்,
ஜீவாத்மாக்கள் “மிதுனாயர்கள்” என்றும் சொல்லப் பட்டிருக்கிறார்கள்.
ஏகாயணை பகவானொருவனையே இன்பமாகக் கொண்டிருப்பவள்.
ஜீவாத்மாக்கள் மிதுனாயனர் என்று சொல்லப்படுவதால் பகவானையும் பிராட்டியையும் சேர்த்து
இருவரையும் இன்பமாகக் கொண்டிருப்பவர்கள்.
பிராட்டிக்கும் ஜீவாத்மாக்களுக்கும் உண்டான வேறுபாட்டை இவ்வாறு பிரித்து அறிய வேணும்.

“நாண் மலராள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்” –
பிராட்டியோடு கூடிய பகவானைப் பிரிதலும், பிராட்டியோடு கூடின பகவானைப் பிரியாமையும்
துன்பமும் இன்பமும் என்று சொல்லப்படுகிறது.
இளையபெருமாள் ராமனைப் பார்த்து “சீதை எப்படி உன்னைப் பிரிந்தால் வாழ மாட்டாளோ
அது போல நானும் உன்னைப் பிரிந்தால் வாழமாட்டேன்” என்று தன்னைப் பிராட்டிக்குச் சமமாகக் கூறிக் கொண்டுள்ளார்.
இங்கு பிரிவுத் துயர் பொறுக்க மாட்டாமைக்கு மட்டும் இருவரும் சமம் என்று கருத்தாகும்.

அவ்வாறன்றி ராமனை மட்டும் பற்றி நிற்கும் சீதையைப் போல் என்று பொருள் கொள்ளலாகாது.
இளைய பெருமாளுக்குப் பிராட்டியும் பெருமாளும் சேர்ந்திருக்கும் நிலையே இன்பமாகக் கொள்ள வேணும்.
ஆகவே தான் காட்டுக்குப் புறப்படும் பொழுது
“நீயும் சீதையும் மலை தாழ்வரைகளில் உலாவும் பொழுதும், உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும்
உங்கள் இருவருக்கும் நான் எல்லா அடிமைகளும் செய்ய வேணும். அதற்காகவே என்னை அழைத்துச் செல்லவேணும்” என்று
இலக்குவன் கூறியுள்ளதால் பகவான், பிராட்டி இருவருக்கும் சேர்த்து செய்யும் அடிமையே ஆன்மாக்கள் எல்லோருக்கும் உரிமையாகும்.

துரிசற்று – துரிசு – குற்றம். அற்று – அது இல்லாமல் அதாவது
பகவானையும் பிராட்டியையும் பிரிந்தால் துன்புற்றும் அவர்களைக் கூடினால் இன்புற்றும் அமைந்த பக்தி உண்டானால்
அதை (தகுதியுடைமையாக) அதிகாரி விசேஷணமாகக் கொள்ள வேணும்.
அதாவது
சாப்பிடுவதற்கு பசி எப்படி அவசியமோ அது போல பகவானை அனுபவிப்பதற்கு பக்தி வேணும்.
இந்த பக்தி சாதனமாக ஆகாது. பக்தியை உபாசகர்கள் சாதனமாகக் கொள்ளுகிறார்கள்.
சரணாகதர்கள் சாதனமாகக் கொள்ளமாட்டார்கள். சாதனமாகக் கொண்டால் அது குற்றமாகும்.
இங்கு துரிசற்று என்பதால் பக்தியை சாதனமாகக் கொள்ளும் குற்றம் இல்லாதவர்கள் என்று பொருள்.

“சாதகம் போல் நாதன் தனதருளே பார்த்திருப்பர்” – அதாவது
மழை நீரை யல்லது பருகாத சாதகப் பறவை விடாயினால் நாக்கு ஒட்டினாலும் மழை நீரையே பார்த்திருக்கும்.
அது போல இவ்வாத்மாவுக்கு வகுக்கப்பட்ட பகவானுடைய அருளையே அவனை அடைவதற்குச் சாதனமாக அறுதி யிட்டு
அவ் வருளையே பார்த்திருத்தல் குற்றமற்ற அடியார் குணம் “துணியேனினி நின்னருளல்லது நின்னருளே புரிந்திருந்தேன்” என்ற
ஆழ்வார் பாசுரங்களாலும் இக்கருத்தைக் காணலாம்.

“கோதிலடியார்குணம்” – அடியார் என்பதற்கு
வேறுவேறு பயன்களிலும், வேறுவேறு சாதனங்களிலும் தொடர்பு கொண்டிருக்கும் குற்றமில்லாதவர் என்று பொருள்.
தங்களுடைய அடிமை இலக்கணத்திற்கேற்ப பகவானையே ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்போனும் அவனே.
அடைய வேண்டியவன் ப்ராப்தா அடைய வழியாய் இருப்பவன் ப்ராபகன்.
அடைந்த பிறகு இவ்வாத்மாவுக்கு பகவானே வகுக்கப்பட்ட தலைவன் என்பது உண்மை.

ஆகையால் இப் பாட்டில் முன்னடியால் “பயன் பகவானே” என்ற கருத்தும்
பின்னடியால் “சாதனமும் பகவான்” என்ற கருத்தும் தோன்றச் சொல்லப் பட்டுள்ளது.
இப்படியிருப்பதே கோதிலடியார் குணம் என்று உணர வேண்டும்.

————

இதில் பரபக்தியின் பழுத்த நிலையான பரமபக்தி பேசப்படுகிறது.
அதாவது பிரிந்தால் ஆற்றமாட்டாமல் உயிர் பிரிதல் அளவுக்கு மீறிய பக்தி மிஞ்சி போகுதல்.
இதை உதாரணத்துடன் கூறுகிறார்.

“ஆனை யிடர் கடிந்த ஆழி அங்கை அம்புயத்தாள்
கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் எனவே
ஆக்கை முடியும்படி பிறத்தல் அன்னவன்தாள்
நீக்க மில்லா அன்பர் நிலை”–3-

பதவுரை:

ஆனை கஜேந்திராழ்வானுடைய
இடர் முதலையினால் உண்டான துன்பத்தை
கடிந்த போக்கின
ஆழி அங்கை சுதர்சனம் என்னும் சக்கரத்தை அழகிய கையிலேந்திய
அம்புயத்தாள் கோனை லக்ஷ்மீ நாயகனை
விடில் பிரியில்
நீரில் தண்ணீரிலிருந்து
குதித்தெழுந்த துள்ளிக் குதித்துப் பிரிந்த
மீனெனவே மீன் போல
ஆக்கை முடியும்படி பிறத்தல் உடல் அழியும்படி நிலை உண்டாதல்
அன்னவன்தாள் அத் திருவின் மணாளனது திருவடிகளை
நீக்கமில்லா பிரிய மாட்டாதது
அன்பர் நிலை அன்புடையார் நிலையாகும்.
கீழ்ச்சொன்னதில் “பிரிவில் ஆற்றாமை, கூடில் ஆற்றுதல்” என்ற பர பக்தியின் நிலை பேசப்பட்டது.

புராணங்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் அடிக்கடி பேசப்படுவது கஜேந்திராழ்வான் சரிதம்.
கஜேந்திரனாகிற யானை பகவான் திருவடிகளில் தாமரைப் பூவை சமர்ப்பிப்பதற்காகத் தாமரைக் குளத்தில் இறங்கி
பூவைப் பறித்துக் கரையேறியது. அப்பொழுது நெடுநாளாக தன் சாபத்தைப் போக்கும் யானையை எதிர்பார்த்திருந்த
முதலை யானையின் காலைக் கவ்வியது. யானை கரைக்கு இழுக்க முதலை நீருக்கு இழுக்க தேவ வருஷத்தில் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன.
முதலைக்கு நீர் தன்னிடமாதலாலும் பலமானதாலும் தனது விருப்பம் நிறைவேறியதால் பலம் வளர்கையாலும்
யானையை நீருக்குள்ளே இழுத்தது. யானைக்கு நீர் நிலை வேற்றிடமாகையாலும் விருப்பம் நிறைவேறாததாலும்
பலம் சிறிது சிறிதாகக் குறைந்து துதிக்கை முழுகும்படியான நிலை ஏற்பட்டதாலும்,
இனி இதுக்கு மேல் துன்பம் இல்லை என்னும்படியான ஆபத்தை அடைந்த நிலையில்

“பக்தர்களின் விரோதியை அழிக்கும் இயல்புடைய இறைவனே (சர்வேஸ்வரனே) நமக்கு “ரட்சகன்” என்று எண்ணி
“நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆனிடரை நீக்காய்” என்று கூப்பிட்ட உடனே
பகவான் ஒடோடி வந்து கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கினான்.
யானைக்கு துக்கமாவது முதலையின் வாயிலே அகப்படுகையாலே தன் சரீரம் அழிகிறது என்றல்ல.
கையில் எடுத்த பூவை அதன் அழகு அழியாமல் பகவான் திருவடிகளிலே சமர்ப்பிக்க முடியவில்லையே என்பதுவே துக்கம்.
அத்தகைய துக்கத்தை கஜேந்திரன் நோவுபடுகிற சமயத்திலே சென்று அவனுக்கு முகம் காட்டி
அவன் துக்கத்தைப் போக்கினான் என்பது புராணக் கதை. இது இங்கு “யானையிடர் கடிந்த” என்ற தொடரால் கூறப்பட்டது.

ஆழியங்கை – “திருவாழியை அழகிய கையிலேயுடைய” என்று பொருள்.
கஜேந்திரனைக் காக்கச் சென்ற போது அவன் விரோதியான முதலையின் தலை துணிப்பதற்கு
கையிலே திருவாழியை ஏந்திக் கொண்டு அப்பொழுது சென்றான் என்பது குறிப்பு.

“மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங் காதற் களிறளிப்பான் புள்ளுர்ந்து தோன்றினையே” என்று நம்மாழ்வாரும் இதைக் குறிப்பிட்டார்.

யானை இடர்கடிய சக்கரத்துடன் சென்றது – தெளிவு.
கஜேந்திரனைக் காக்க வருகின்ற வேகத்தில் கையில் இருக்கும் திருவாழியைக் கூடி அறியவில்லை போலும்,
அறிந்திருந்தால் இருந்த இடத்திலேயிருந்த சக்கரத்தை ஏவிக் காரியம் கொள்ளலாம் அல்லவா? என்று ஒரு பொருள்.
கையில் திருவாழியை அறிந்திருந்தே அப்படிச் செய்யாமல் ஒடோடி வந்து முதலையின் தலையைத் துணித்தான் என்பது மற்றொரு பொருள்.
காரணம், கஜேந்திரன் பக்தியுடன் அவனை அழைத்துத் தொழும் காதற் களிறு என்று இதனை ஆழ்வார் அருளினார்.
அதனால் கஜேந்திரன் பகவானுடைய கையும் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக்கிறவன் கையில்
பறித்த தாமரைப் பூவை பகவான் திருவடிகளில் சமர்ப்பிக்க ஆசைப்பட்டிருக்கிறவன்.
ஆகையால் அவன் இருக்கும் இடம் சென்று அவன் துக்கத்தைத் தீர்க்க வேண்டிய அவசியத்தினால்,
இருந்த இடத்திலேயே காரியம் கொள்ளாமல் தாமரை குளத்திற்குச் சென்றான்.
இதனால் “தன்னைக் காண ஆசைப்படும் பக்தர்களுக்கு ஆசைப்பட்டபடி முகம் காட்டுவான்” என்பது உட்கருத்து.
இக்கருத்து பேயார் “குட்டத்துக் கோன் முதலை துஞ்சக் குறித் தெறிந்த சக்கரத்தான்” என்றார்.

அம்புயத்தாள் கோனை:-
தாமரையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு நாயகனானவனை என்று இதன் பொருள்.
இதுவும் கருத்துடை தொடர். பாற்கடலில் பெருமாள் பள்ளி கொண்டிருக்க மண்மகளும், ஆய்மகளும் திருவடிகள் பிடிக்க,
திருமகளைத் திருமார்பிலே அணைத்துக் கொண்டு பள்ளி கொண்டருளா நிற்க,
அப்பொழுது கஜேந்திரன் கூப்பிட்ட அக்கூப்பீடு பகவான் திருச் செவிப்பட்டது.
அப்போது திருவடி பிடித்தவர்களின் கைகளிலிருந்து திருவடிகளை மெதுவாக இழுத்துக் கொண்டு படுக்கையிலிருந்தும்
சடக்கென எழுந்திருந்து திருக்கண்களையும் மலர விழித்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு திருமகளை அணைத்துக் கொண்டிருந்த
திருமார்பை அவ்விடத்திலிருந்து பக்குவமாக வாங்கி அதன் பிறகே அனைவரும் வியக்கும்படி,
கருடவாகனத்தில் ஏறி மிக வேகத்தோடே எழுந்தருளி ஸ்ரீகஜேந்திராழ்வான் துன்பத்தைப் போக்கினான் என்று புராணம் கூறுகிறது.

அதைப்பற்ற “அம்புயத்தாள் கோன்” என்ற கருத்து கூறப்பட்டது.
மேலும், அரசன் தன் மக்களை நல்லமுறையில் காப்பானானால் அதைக் கண்டு மகிழும் தாயைப் போல,
இறைவன் பக்தர்களை இடுக்கண் களைந்து காத்தால் அதைக் கண்டு களிப்பவள் பிராட்டியான தாயல்லவா?
அதனாலும் “அம்புயத்தாள் கோன்” என்று கூறப்பட்டது.

இதனால் “தன்னை அடைக்கலம் புகுந்தவருடைய ஆபத்து காலங்களில் அவர் இருப்பிடம் சென்று அவருக்கு உதவி காக்குமவன்” என்றும்,
அவர்களைக் காப்பது அவர்களுக்கு செய்த செயலாகக் கருதாமல் தனக்குச் செய்து கொண்ட காரியமாகக் கருதுவான் என்றும்
அத் தகையவன் பெரிய பிராட்டியாருக்குக் கணவனாவான் என்றும் பகவானுடைய இயல்புகள் கூறப்பட்டன.

விடில்:-
தன் பக்தரிடம் இப்படி அன்புடையவனாக இருக்கிறவனைப் பிரிய நேரிட்டால்;

நீரில் குதித்தெழுந்த மீனெனவே:-
நீரிலிருந்து குதித்துக் கிளர்ந்து அந்நீரைப் பிரிந்த மீன்போல;

ஆக்கை முடியும்படி பிறத்தல்:-
சரீரம் அழியும்படியான நிலை உண்டாகும்.
கலவியில் இன்பமும், பிரிவில் துயரமும் பரபக்தியின் இலக்கணம்.
அதைக் காட்டிலும் சிறப்பு பரபக்திக்கு உண்டு.
அதாவது பிரிந்தால் உயிர் போய்விடும் நிலை. இதுவே இதுக்குச் சிறப்பு.
இதை நீரை விட்டுப் பிரிந்த மீன் போல என்று உதாரணத்தோடு கூறினாராயிற்று.

அன்னவன்:-
கீழ் “அம்புயத்தாள் கோன்” என்று சொல்லப்பட்ட இறைவனை ‘அன்னவன்’ என்ற சொல்லால் இங்கே குறிப்பிடுகிறார்.
இங்கு ‘அன்னவன்’ என்றது
அப்படிப்பட்டவன் என்று பொருள்.
அல்லது
மீனுக்கு நீர்போல இவ்வான்மாவுக்கு தாரகனாயிருப்பவன் என்னவுமாம்.

தாள் நீக்க மில்லா அன்பர் நிலை –
அவன் திருவடிகளைப் பிரியப் பொறுக்கமாட்டாத அன்பு.
இப்படியிருந்துள்ள அளவு கடந்த அன்புடையவர்களது இயல்பு
அவனைப் பிரியில் நீரிலிருந்து பிரிந்த மீன் போல உயிர் போகும் நிலை உண்டாகும்.
இது பரம பக்தியின் நிலை என்பதை இப்பாடல் விளக்குகிறது.

————–

கீழ்ச்சொன்ன மூன்று பாடல்களிலும் சொல்லப்பட்ட சுருக்கமான கருத்து.
ஊன உடல் முதல் பாட்டில் –
துவய மந்திரத்தில் முதற்பகுதியில் சரணாகதியினுடைய சிறப்புத்தன்மை சொல்லப்பட்டது.
சரணாகதி செய்வதற்குக் காரணம் பிறவித் துன்பம் தாங்கமாட்டாமை.

அத்துன்பம் தாங்க மாட்டாத நிலை பரபக்தியின் அடிப்படையில் உண்டாகும் என்ற கருத்தை
“நரகும் சுவர்க்கமும்” என்ற இரண்டாம் பாட்டிலும்,

அதையும் காட்டிலும் பிரிவில் உயிரே போகும் நிலையான பரமபக்தியின் நிலை “ஆனையிடர் கடிந்த” 3வது பாட்டிலும் கூறப்பட்டன.

இனி த்வய மந்திரத்தின் பிற்பகுதியால் கூறப்படுகிற லட்சியத்தின் எல்லையான கைங்கர்யத்தின் சீர்மையை அறிந்து
வேறு பயன்களின் (தொடர்புகளை) ஆசாபாசங்களை அறவே விட்டு
ஆன்மாவின் அடிமை இலக்கணத்திற்கு ஏற்புடைய தொண்டுகளில் உறுதி பூண்டவர்களுடைய
சிறப்புத் தன்மை
இந்த நான்காம் பாடலில் கூறப்படுகிறது.

“மற்றொன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து – பெற்ற
பெரும் பேற்றின் மேலுளதோ பேர் என்று இருப்பார்
அரும் பேறு வானத்தவர்க்கு”–4–

பதவுரை:

மற்றொன்றை -செல்வம் முதலிய வேறு வேறு பயன்களை
எண்ணாதே -லட்சியமாகக் கருதாமல்
மாதவனுக்கு -திருமாலுக்கு
ஆட்செயலே -அடிமை செய்வதில்
இது உற்றது -இதுவே அடிமைக்கு ஏற்றது
என்று -என்று முடிவு செய்து
உளம் தெளிந்து -இதயம் தெளிவுற்று
பெற்ற பெரும் பேற்றின் மேல் -அடையப் பெற்ற இப் பெரும் பயனுக்கு மேல்
பேர் உளதோ -வேறு ஒரு பயன் உண்டோ
என்றிருப்பார் -என்று உறுதி கொண்டிருப்பார்
வானத்தவர்க்கு -வைகுந்தத்தில் இருக்கும் நித்ய முக்தர்களுக்கு
அரும் பேறு -பெறுதர்கரிய பயனாவார்

மற்றொன்றை எண்ணாதே:-
அதாவது கைங்கர்யம் என்பது பகவான் திருவுள்ளத்திற்கு உகப்பானது செய்தல்.
இதுவே ஒருவன் அடைய வேண்டிய லட்சியத்தின் எல்லை. இதுக்கு மேல் எதுவுமில்லை.
அத்தகைய கைங்கர்யத்திற்குப் புறம்பானது ஒன்றை லட்சியமாகக் கருதாமல் என்பது இதன் பொருள்.
புறம்பான லட்சியமாவது,
இவ்வுலக இன்பமும் சொர்க்கமும் முதலிய பரலோக இன்பமும் ஆன்மானுபவமாகிற கைவல்ய மோட்ச அனுபவமும்,
இம்மூன்றும் கைங்கர்யத்திற்குப் புறம்பானவை.

“ஆன்மானுபவம்” என்பது தன்னைத் தானே அனுபவித்தல் ஆகும். அதாவது ஆன்மா உடல் தொடர்பின்றியிருத்தலாம்.
ஆன்மாவின் தன்மை இயல்பாக இன்ப வடிவாயிருப்பது. ஆகவே எந்த உடல் தொடர்பும் இல்லாமல் இருந்தால்
அது தன் தன்மையான இன்பமே வடிவாயிருக்கும். அதுவே மோட்சம் என்று சிலர் கூறுவர்.
அது பகவத் கைங்கர்யத்தை பயனாகக் கொள்ளும் கொள்கைக்கு வேறுபட்டதாகையால் “மற்றொன்று” என்று கூறப்பட்டது.

இவற்றின் பெயர் சொல்வதும் விரும்பாமையால் மற்றொன்று என்று மறைத்துச் சொல்லப்பட்டது.
“விரும்பாதே” என்று கூறாமல் “எண்ணாதே” என்று கூறியது.
நினைத்தால் அன்றோ விரும்புவது. அவ்வாறே ஒரு பொருளாக நினையாததால் “எண்ணாதே” என்று சொல்லப்பட்டது.
இவ்வாறன்றி இவ்வுலக இன்பத்தையும் பரலோக இன்பத்தையும் ஆன்மா அனுபவத்தையும் விரும்புபவர்கள்
பகவத் கைங்கர்யத்தின் சுவையறியாதவர்களாக ஆவர்.
பகவத் கைங்கர்யத்தின் சுவையை அறிந்தவர்களுக்கு மற்றையவை உப்பு நீரைக் குடிப்பது போல்
சுவையற்றதாயும் கீழ்த்தரமாயு மன்றோ யிருப்பவை.

மாதவனுக்கு ஆட்செயல்:- என்பதாலே
அவர்கள் இருவருக்கும் செய்யும் அடிமையே ஒருவரால் பெற வேண்டியது என்ற இலட்சியத்தின் எல்லை என்று சொல்லப்படுகிறது.
இக்கருத்து த்வய மந்திரத்தின் பிற்கூற்றில் முதல் பதமான “ஸ்ரீமதே” என்ற பதத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
திருமந்திரத்தில் (ஒம் நமோ நாராயணாய) மூன்றாவது பதமான நாராயணாய என்ற பதத்திலும்
அடியார் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்பவர் பிராட்டியும் பெருமாளுமான இருவரும் என்பது மறைத்துச் சொல்லப்பட்டது.

மறைத்துச் சொன்ன அதைத் த்வய மந்திரம் விளக்குகிறது.
“இதிலே திருமந்திரத்தில் சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அநுஸந்தித்திருக்கிறது” என்று
பிள்ளை லோகாச்சாரியார் அருளிச் செய்ததை இங்கு மேற்கோளாகக் காணலாம்.
“பகவத் கைங்கர்யமே ஒருவன் பெற வேண்டிய லட்சியம்” என்பது திருமந்திரத்திலும்
த்வய மந்திரத்திலும் சொல்லப்படுகையாலே தெளிவாகும்.

“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்று கூறினார் அன்றோ ஆழ்வார்.

உளம் தெளிந்து:-
மேற்கூறிய ஆன்மா பெறும் பயனாக கைங்கர்யத்தில் மனம் தெளிவடைந்து
அதாவது
வேறு வேறு பயன்களை விரும்புவதற்குக் காரணமான “யான்” “எனது” என்ற இரண்டு குற்றங்களைக் களைய வேண்டும்.
செய்யும் தொண்டுகள் அவன் உகப்புக்காகவே அமைய வேண்டும்.
இக்கருத்துக்களை ‘தனக்கே ஆக எனைக் கொள்ளுமீதே’ என்று நம்மாழ்வாரும்
‘உமக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று ஸ்ரீஆண்டாளும் அருளிச் செய்த பாசுரங்கள் கூறுகின்றன.
கைங்கர்யமே ஆத்மாவிற்கு மேலான பயன் என்று சொல்வதற்குத் தக்கபடி இதயம் தெளிவடைந்து செய்ய வேண்டும்.
இதனால் த்வய மந்திரத்தின் பின் கூற்றில் இறுதிப்பதமான நமப் பதத்தின் பொருள் சொல்லப்பட்டது.

பெற்ற பெரும் பேற்றின் மேலுளதோ பேரென்றிருப்பார் –
அதாவது
இக் கைங்கர்யமாகிற பெரும் பயன் கிடைத்தால் ‘இதைக் காட்டிலும் மேலான ஒரு பயன் இல்லை என்று
கைங்கர்ய்மாகிற பயனையே மேலான பயனாக எண்ணியிருக்குமவர்கள் என்கை.
“பரமபதம்” என்கிற இடம் என்றைக்கும் அழியாமல் ஒரே மாதிரியாக இருப்பது. சுத்த சத்வமயமானது.
ஞான ஆனந்தங்களுக்கு உற்பத்தி நிலம். அதனால் கைங்கர்யமாகிற பயன் தடையில்லாமல் செய்வதற்கு ஏற்றது.
இக்காரணங்களால் அதை ஞானிகள் விரும்புகிறார்கள்.
ஆகையால் கைங்கர்யத்திற்கு மேல் வேறு பயன் உண்டோ என்று சொல்வதில் எவ்வித தடையுமில்லை.
இத்தகைய உயர்ந்த கைங்கர்யத்தில் உறுதியாகயிருக்கும் ‘அவர்கள்’ என்று பொருள்.

அரும்பேறு வானத்தவர்க்கு –
கீழ்ச்சொன்ன அடியவர்கள் இயல்பாகவே தங்களை இறைவனுக்கு அடியவராக எண்ணியிருப்பவர்.
பகவத் கைங்கர்யத்திலேயே எப்பொழுதும் ஊன்றியிருப்பவர். பகவானையே பேரின்பமாகக் கொண்டிருப்பவர்.
இத்தகையவர் இவ்வுலகத்தில் காண அரியராக இருப்பார்.
இவர்கள் பரமபதம் சென்றால் அங்குள்ள நித்ய ஸூரிகள் முதலானார்களுக்கும் கிடைத்தற்கரிய
பொருளாகக் கொண்டாடுவதற்கு உரியவர்கள் ஆவார்.
இதனால் எப்பொழுதும் ஆரா அமுதமான பகவானையே அனுபவித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு
அப் பகவத் விஷயத்தை அனுபவிப்பதைக் காட்டிலும் இவர்களுடைய அனுபவம் பெறாப் பேறாக நினைத்து
அனுபவிக்கப்படுவார்கள் என்பது கருத்து.

—————-

த்வய மந்திரத்தில் முதற்கூற்றினால் சொல்லப்படுகிற அர்த்தம் பகவானுடைய திருவடிகளையே பற்றுவதாகும்.
இதற்கு ‘ஸித்தோபாய வரணம்’ என்று பெயர்.
‘ஸித்தோபாயம்’ என்றால் எப்பொழுதும் தயாராக இருக்கும் உபாயம் என்று பொருள்.
பகவான் எப்பொழுதும் தயாராக இருப்பதால் அவனுக்கு ஸித்தோபாயம் என்று பொருள்.
இத்தகைய எம்பெருமானை “நீயே உபாயமாக இருக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிற போது
வேறு எந்த உபாயத்திலும் தொடர்பு கொள்ளலாகாது.
ஏதாவது உபாயங்களில் தொடர்புகள் இருந்தால் அத்தொடர்புகளை முற்றிலும் விட்டு விட்டே பற்ற வேணும்.
இதனால் எம்பெருமானை உபாயமாகப் பற்றுமவனுக்கு மற்ற உபாயங்களை
அறவே விட்டு விட்டுப் பற்ற வேண்டும் என்கிற நியதி ஏற்படுகிறது.

அதனால் மற்ற உபாயங்களை விடுவது முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.
இவ்விஷயங்கள் கீதையின் சரமஸ்லோகத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
சரமஸ்லோகத்தை நன்றாக அறிந்து எம்பெருமான் திருவடிகளைப் பற்றும் போது
வேறு எந்த உபாயங்களிலும் ஈடுபாடு வராது.
தன்னுடைய அடிமைத் தன்மைக்கேற்ப தன்னுடைய எல்லாப் பொறுப்புக்களையும் அவனிடத்திலேயே ஒப்படைத்து
நிம்மதியாயிருப்பார்.
“நம்முடைய சகல க்ஷேமங்களுக்கும் எம்பெருமானே பொறுப்பாய் இருப்பவன்.
அதில் நமக்கு எவ்விதத் தொடர்புமில்லை” என்ற உண்மையை எண்ணிக் கொண்டு நிம்மதியாய் இருக்கும்
அவர்கள் நிலையை எண்ணித் தாமும் அவர்களில் ஒருவராகத் தம்மை நினைத்துத்
தம் நிலையைத் தாமே கூறுகிறார் இந்தப் பாடலில்.

தீர்த்த முயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் – சீர்த்துவரை
மன்னன் அடியோ மென்னும் வாழ்வு நமக்கீந்ததற்பின்
என்ன குறை வேண்டு மினி”–5-

பதவுரை:

முன் – மாபாரதப் போரில் (பார்த்தனை) மனம் கலங்கின அர்ஜுனனை
காத்தபிரான் – கீதோபதேசத்தால் மனம் தெளிவித்து காத்தருளி உதவி செய்த கண்ணபிரான்
பார்ப்பதன் முன் – திருக் கண்களால் நோக்குவதற்கு முன்பு
தீர்த்தம் – புண்ணிய நதிகளான கங்கை முதலிய தீர்த்தங்களில் (பாபம் கழிவதற்காக)
முயன்று – முயற்சிகள் செய்து
ஆடுவதும் – முழுகிக் குளிப்பதுவும்
செய்தவங்கள் – உடல் வருந்தச் செய்யும் நோன்புகளும்
செய்வனவும் – மற்றும் செய்யும் புண்ணியங்களும்
சீர்த்துவரை – சீர்மை மிகுந்த துவராபதிக்கு மன்னன் இறைவனான கண்ணன்
நமக்கு – அவனுடைய அடியவர்களான நமக்கு
அடியோம் என்னும் வாழ்வு – அடிமைத் தன்மையாகிற நற்செல்வத்தை
ஈந்ததற்பின் – அருளின பின்பு
இனி – இனி வரும் காலமெல்லாம்
வேண்டும் குறை என்ன – சாதனங்கள் பற்றியும் பலன்கள் பற்றியும் குறைபட வேணுமோ?
(எதைப் பற்றியும் குறைபட வேண்டாம் என்பதாம்)

தீர்த்தம் முயன்று ஆடுவதும் –
கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய தீர்த்தங்களிலே பாபத்தைக் கழிப்பதற்காகப்
பெரிய முயற்சியோடே குடைந்து நீராடுவதும் அதாவது உடம்பு முழுவதும் நனையும்படி
நீரில் முழுகுதல் (தீர்த்தங்கள் புண்ணிய ஜலங்கள்)

செய்தவங்கள் செய்வனவும் – ஊன்வாட உண்ணாது…
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நின்றும் வீழ்கனியும், ஊழ் இலையும் என்னும்
இவையே நுகர்ந்து உடலம் தான் வருந்தி என்பது முதலான ஆழ்வார்கள் பாசுரங்களில் சொல்லுகிறபடி
உடலை வருந்துவதற்காகச் செய்யப்படும் நோன்புகள் பலவற்றைச் செய்வனவும்.
இங்குச் சொல்கிற தவங்கள் என்னும் பன்மையினால் தானம், யாகம் முதலிய புண்ணியங்களும் அடங்கும்.

பார்த்தனை முன் காத்தபிரான் பார்ப்பதன் முன் –
அதாவது
அர்ஜுனனுக்கு கண்ணபிரான் பகவத் கீதயில் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலான
வேறு வேறு உபாயங்களையெல்லாம் உபதேசித்தான்.
அவற்றை எல்லாம் கேட்ட அர்ஜுனன் அவற்றை செயலாற்றுவதில் உண்டாகும் அருமையையும்
எம்பெருமானுக்கு ஆன்மா அடிமையாய் இருத்தலால் அடிமையாய் இருப்பவன் ஒரு உபாயத்தைச் செய்வதற்கு
உரிமையில்லாதவனாக இருப்பதையும் எண்ணிப் பார்த்து, கண்ணன் சொன்ன கர்ம, ஞான, பக்தியாகிற
இவ் வுபாயங்களை நாம் எப்படிக் கடைப்பிடிப்பது என்று எண்ணி துன்பப்பட்ட அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் இவ்வாறு சொன்னான்.

“அர்ஜுனா, கீழே நான் உபதேசித்த கர்மயோக, ஞானயோக, பக்தியோகமாகிற உபாயங்கள் ஒன்றையும் நீ செய்ய வேண்டாம்.
நான் சொன்ன அவற்றை அறவே விட்டுவிடு. அவற்றை நெஞ்சாலும் நினையாதே. நான் நற்குணக் கடலாயிருப்பவன்.
அடியவர்க்கு எளியவன். அடியவர் பிழை பாராதவன் பிழை பொறுப்பவன். நுண்ணறிவுடையவன்.
மிக்க ஆற்றல் உடையவன். பலம் உடையவன். இவ்வாறான குணங்கள் பலவுமுடைய என்னையே நீ உபாயமாகப் பற்றுவாயாக.
என்னைப் பற்றும் போது “கண்ணன் நம்மிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான். அவனுக்கு எதையும் கொடுக்க வேண்டாம்,
என்று என்னைப் பரிபூர்ணனாக நினைத்துப் பற்றவேண்டும்.”

இவ்வாறு என்னைப் பற்றினால் அறிவு, ஆற்றல் முதலிய குணங்களையுடைய முழுமுதற் கடவுளாகிற நான்
உன்னுடைய அறியாமை, சோர்வு, திறலின்மை முதலிய குணங்களை எண்ணுவேன்.
என்னிடத்தில் உன்னுடைய அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்த நிலையும் எண்ணுவேன்.
“இந்த நிலையில் இருக்கும் உன்னை ஒருபொழுதும் நான் கைவிட மாட்டேன்.”
என்னை அடைவதற்குத் தடையாக என்னென்ன பாபங்கள் உன்னிடத்தில் இருக்கின்றனவோ
அந்தந்த பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிப்பேன். ஆகையினால் நீ கவலைப்பட வேண்டாம்” என்று
அர்ஜுனனுக்கு உபதேசித்து அவனுடைய சோகத்தைத் தீர்த்து அவனைக் காத்தருளினான்.

இத்தகைய பேருபகாரம் செய்த பகவானுடைய அருள் கண் நோக்கம் பெறுவதற்கு முன்பு என்று
(இவ்வாறு கூறிய அதனால் கண்ணன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் நெஞ்சில் படுவதற்கு முன்பு என்றவாறு).

சீர்த்துவரை மன்னன் –
“பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரையென்னுமதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்கிறபடி
வேறு ஒருவர்க்கு அன்றி தனக்கே உரியராய்த் தன்னை அன்றி வேறு உபாயத்திலோ
வேறு பலன்களிலோ தொடர்பு இல்லாதவராய் இருக்கும் தன் மனைவியர்க்கு
மணாளனாய்க் கொண்டு ஸ்ரீமத் துவாரகாபுரிக்கு தலைவனாயிருக்கிறவன்” என்று பொருள்.

அடியோம் என்னும் வாழ்வு –
மேற்படி அவனுக்கு நாம் அடிமைப்பட்டவர் என்றறிந்து ‘தன்னைக் காத்துக் கொள்வதற்காகத் தன் முயற்சியில்
ஈடுபடாமலிருக்கும் அதாவது அவனையே எதிர்நோக்கி இருக்கும் நற்செல்வத்தை நமக்குக் கொடுத்துவிட்ட பிறகு என்பது இதன் பொருள்.

இத்தொடரில் அடியோம் என்று கூறியதால்
ஆன்மா ஞான ஆனந்த குணங்களுக்கு இருப்பிடமாயிருந்தாலும் அவற்றைக் காட்டிலும் அடிமைத் தன்மையே
அதற்கு உண்மை இலக்கணமாகத் தெரிய வருகிறது. ஆன்மாவுக்கு இதுவே முக்கிய அடையாளமாகும்.

‘வாழ்வு’ என்பதால்
இவ்வடிமைத் தன்மையை அறியும்போது தன் முயற்சி ஒழிதல், தன் நலம் ஒழிதல் முதலிய நற்பண்புகள் உண்டாகின்றன.
இவையே ஆன்மாவுக்குரிய செல்வமான வாழ்வு என்பதாம்.

நமக்கு ஈந்ததற்பின் –
எப்பொழுதும் இவ்வடிமைத் தன்மை ஆன்மாவுக்கு இருந்தாலும் அதை இழந்திருந்த என்று பொருள்.
ஈந்ததற்பின் என்றது –
இவ்வுண்மை அறிவு உண்டானதும் அவனருளாலே என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு அவன் நமக்கு அடிமைச் செல்வமாகிற இந்நல்வாழ்வைக் கொடுத்து விட்ட பிறகு.

என்ன குறைவேண்டுமினி –
அதாவது,
இனிமேல் வரும் காலங்களில் உபாயத்தைப் பற்றியோ எந்தக் குறையும் படவேண்டியதில்லை.
இதனால் பகவான் ‘கவலைப்படாதே’ என்று அர்ஜுனனைப் பார்த்துச் சொன்னதில் நாமும் நம் காரியங்களில்
எந்த பிரச்சினைகளும் இல்லாமல் பொறுப்பு ஏதுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று பொருள் சொல்லப்பட்டது.

————-

பகவானை அடைவதற்கு வழியாகக் கர்ம யோக, ஞான யோக, பக்தி யோகாதிகள் சாஸ்திரங்களிலே
சொல்லப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் நடைமுறையில் செயல்படுத்த முடியாதவை என்றும்,
ஆத்மாவின் அடிமை இலக்கணத்திற்கு முரணானவை என்றும்,
குற்றங்களைச் சொல்லிப் பல ஆதாரங்களைக் கொண்டு புறக்கணிக்கப்பட்டதால் இனி அவை தொடர வாய்ப்பில்லை ஆகிவிட்டது.
ஆத்மாவின் க்ஷேமத்திற்கு மேலே சொன்ன குற்றங்கள் அற்றுப் போன நிலையே பெரும் பேறாகும்.
ஆயினும் நீண்ட காலம் (பல பிறப்புக்களில்) ஐம்புலன் அனுபவங்களில் பழகிப்போந்த ஆத்மாவுக்கு,
சாஸ்திரங்கள் குற்றம் என்று கடிந்து பேசின செல்வத்தைக் கண்டால், அதன்மேல் ஆசை செல்லாதிருக்குமோ?
செல்வத்தின் கவர்ச்சி நெஞ்சை கலங்கப் பண்ணாதோ? என்னும் சாதாரண மானிடருடைய நிலையில்
இத்தகைய கேள்வி எழுந்தால் அதற்குத் தக்க பதில் இப்பாடல் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.

அதாவது, பகவானுக்குத் தொண்டு செய்து அதன் சுவையை அறிந்தவர்கள்,
செல்வத்துக்கு எல்லையான ப்ரம்மபதம் கிடைத்தாலும் அதை ஒரு பொருளாக விரும்பார்;
அற்பப் பொருளால் நெஞ்சு கலங்கமாட்டார்கள் என்று விடையளிக்கிறார்.
இதற்கு உதாரணம் ஸ்ரீராமாயணத்தில் சரபங்க முனிவரது வரலாற்றைக் காணலாம்.

ஸ்ரீராமபிரான் தண்டக வனத்தில் சரபங்க முனிவரது தவக்குடிலுக்குச் சென்றான்.
அப்பொழுது இந்திரன், முனிவரோடு உரையாடிக் கொண்டிருந்தான்.
அவன் சென்ற பிறகு ராமபிரான் முனிவரை அணுகி வந்தனை புரிந்து நிற்கையில் முனிவன் கூறினான்.
தமது ஞானக்கண்ணால் ஸ்ரீராமபிரானைப் பார்த்து ‘ஆழியில் அரிதுயிலவன்’ என மகிழ்ந்து
“இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா வந்தனன். மருவுதி மலர் அயன் உலகம் தந்தனென்”
“என் உரவோய்! அந்தமில் உயர்பதம் அடைதலை முயல்வேன்” என்று கூறினான்.

அதாவது, ப்ரம்மதேவன் முனிவனைத் தன் உலகத்திற்கு இந்திரனை அனுப்பி அழைத்துவரச்
சொன்னதாகவும் சரபங்க முனிவன், அவ்வுலகத்திற்கு நான் வரமாட்டேன் என்று சொன்னதாகவும்,
“நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன். இனி ஒரு வினை இலை:- விறலோய்!” என்று கூறி
இராமனைப் பார்த்துக் கொண்டே அந்தமில் உயர் பதமான பரம பதத்தை அடைந்தான் என்னும் வரலாறு கூறப்படுகிறது.

இத்தகைய சரபங்க முனிவன் பிரம்மபதத்தை ஒரு பொருளாக மதிக்காமல் இறை இன்பத்தையே கூறுவதால்,
உண்மையை உணர்ந்த ஞானிகளைச் செல்வம் கலங்கப் பண்ணாது என்பது கண்கூடு.
இப்பாடல் மூலம் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது.

“புண்டரிகை கேள்வன் அடியார் அப் பூமிசையோன்
அண்டமொரு பொருள் ஆதரியார் – மண்டி
மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக்
கலங்கிடுமோ முந்நீர்க் கடல்”–6-

பதவுரை:-

புண்டரிகை -தாமரையில் பிறந்த லக்ஷ்மீ தேவிக்கு
கேள்வன் -மணவாளனான ஸ்ரீ ய::பதியின்
அடியார்-தொண்டராயிருப்பவர்கள்
அப்பூமிசையோன் -தாமரை மலரில் பகவானுடைய அழகிய கொப்பூழ் பிறந்த பிரமனின்
அண்டம் பதினான்கு =உலகங்கள் கூடின அண்டத்தை
ஒரு பொருளா -ஒரு சரக்காக
ஆதரியார் -மதிக்க மாட்டார்கள்
ஒரு மீன் =ஒரு மீனானது
மண்டி -தன் ஆற்றல் எல்லாவற்றோடும் நெருங்கி
மலங்க –நிலை குலைந்து கலங்கும்படி
புரண்ட மாத்திரத்தால் =இடப்புறமாக வலப்புறமாக புரளுவதால்
முந்நீர்க்கடல் -மூன்று வகையான நீர் சேர்ந்த கடலானது
ஆர்த்து =நிலை குலைந்து பேர் ஒலி செய்து
கலங்கிடுமோ -கலக்கத்தை அடையுமோ? அடையாது

“பண்டை நாளாலே நின்றிருவருளும் பங்கயத்தாள் திருவருளுங் கொண்டு” என்று நம்மாழ்வார் கூறினார்.
பகவான் பிராட்டி இவ்விருவருடையவும் சிறப்பான அருள் நோக்கினால், பண்டை வினைகளிலிருந்து திருந்தி
அதாவது
“யானே என்னை அறியகிலாதே, யானே எனதனதே என்றிருந்தேன், யானே நீ என் உடைமையும் நீயே” என்று பேசும்படி ஆனார்.
இத்தகையவர்கள் பகவானுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையையே தங்களுக்குச் சின்னமாகக் (முத்திரையாகக்) கொண்டு
அவனுகந்த பணியைச் செய்வது ஒன்றிலேயே திளைத்திருப்பார்கள்.

(அப்பூமிசையோன் அண்டம் ஒரு பொருளா ஆதரியார்). செல்வத்துக்குக் கடைசி எல்லையாக நூல்களில் சொல்லப்படுவது
பிரமபதம் நான்முகக் கடவுளுக்கிருக்கை. அப்பிரமன் திருமாலின் கொப்பூழ்த்தாமரையில் பிறந்தவன்
அவனுடைய மகிழ்ச்சிக்கு காரணமாயும் பதினான்கு அடுக்குகள் கொண்டதுமான
இப்பிரமாண்டத்தை அடியார்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள் என்பதாம்.

உடலுக்கும் உயிருக்கும் வேறுபாடு காணாமல் உடலையே உயிராக எண்ணும் அறிவிலிகளுக்கும்
இவ்வான்மா பகவானுக்கு அடிமையாய் இருக்கும் என்பது அறியாமல்,
தான் என்றும், தனது என்றும் தன்னை சுதந்திரமாக நினைத்திருக்கும் மூடர்களுக்குமே செல்வம் இன்பகரமாய்
அடைய வேண்டிய குறிக்கோளாயிருக்கும்.

பகவானுக்கு அடிமையாயிருக்கும் சுவையை அறிந்தவர்களுக்குச் செல்வம் சுவையற்றதாய் அருவருக்கத் தக்கதாய் இருக்கும்.
ஆகையால் அச்செல்வத்தை இறைவன் அடியார்கள் ஆதரிப்பார்களோ? ஆதரிக்க மாட்டார்கள் என்றவாறு.

இவ்வாறு சொல்லலாமா? செல்வத்தினுடைய கவர்ச்சி மிகு எழுச்சி, தன்னை ஆசைப்படும்படி
எத்தகையவராக இருந்தாலும் அவர்கள் நெஞ்சை கலங்கப் பண்ணாதோ? என்ற இவ்வினாவிற்கு

“மண்டி மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக் கலங்கிடுமோ முந்நீர்க்கடல்” என்று பதில் சொல்கிறார்.
இதன் பொருள் –
ஒரு மீனானது தன் வலிமை எல்லாவற்றோடும் கூடித் தள்ளிக் கொண்டு நிலை குலைத்துக் கலங்கும்படி
இடம் – வலமாகப் புரண்ட மாத்திரத்தால் கடல் கலங்குமோ? என்பதாம்.

கடலுக்கு “முந்நீர்” என்று பெயர்.
ஆற்று நீர், ஊற்று நீர், மழைநீர் என்ற இம்மூன்றும் சேர்வதால் கடலுக்கு முந்நீர் என்று பெயர்.
மீனுடைய புரட்சியால் கடல் கலங்கினாலன்றோ
செல்வத்தின் எழுச்சி கண்டால் இறை அன்பர்களின் பற்றற்ற மனம் கலங்குவதாகும்.
ஆகவே, எத்தகைய பெருஞ்செல்வத்திற்கும் இறைவனடியார்கள் மனம் கலங்கமாட்டார்கள் என்பது பொருள்.

————-

அடிமைச் சுவை அறிந்தவர்கள் செல்வத்துக்கு எல்லையான பிரம்ம பதத்தையும் விரும்பார்கள் என்று கீழ்ச் சொல்லப்பட்டது.
இதில் இறைவனது அழகிலே தோற்ற அவனுக்கு அடிமையானவர்கள் வேறு விஷயங்களை ஆதரிக்க மாட்டார்களென்று கூறப்படுகிறது.

“தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்
காளானார் மற்றொன்றில் அன்புசெய்யார் – மீளாப்
பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
நரகன்றோ இந்திரன் தன் நாடு”–7-

பதவுரை:

தோளார் -திருத்தோள்களோடே சேர்ந்துள்ள
சுடர்த்திகிரி-ஒளியுடைய சக்கரத்தையும்
சங்குடைய சுந்தரனுக்கு-சங்கையும் அழகையும் உடையவனுக்கு
ஆளானார்-அடிமையானவர்கள்
மற்றொன்றில் -அவனைத் தவிர வேறு ஒரு பொருளில்
அன்பு செய்யார் -பற்றுச் செய்ய மாட்டார்கள்
மீளா -திரும்பவும் வராததும்
பொருவரிய -உவமை இல்லாததுமான
விண்ணாட்டில் -மாக வைகுந்தம் என்று சொல்லப்படும் வைகுந்தத்தில்
போகம் –பேரின்பத்தை
நுகர்வார்க்கு –துய்ப்பவர்க்கு
இந்திரன் தன் நாடு -இந்திரனுக்குரிய சுவர்க்கமும்
நரகன்றோ =துன்பமயமாகும் அன்றோ

“தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்கு”
திருத்தோள்களோடு சேர்ந்திருந்துள்ள ஒளிமயமான திருவாழியையும் அழகிய சங்கத்தையும் ஏந்தியிருப்பதாலே
உண்டான அழகனுக்கு என்று பொருள்.
“மனைப்பாற் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதாரத் தோள்” என்ற பூதத்தார்

பாடலில் இறைவனின் தோள்களைக் கண்களால் ஆரத் தொழுபவர்கள்,
இவ்வுலகில் அனுபவிக்கும் சிற்றின்பத்தையெல்லாம் துறந்து விடுவார்கள் என்று கூறினார்.

ஸ்ரீராமாயணத்தில், இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் வேறு எதையும் காணவில்லை (காண விரும்பவில்லை)
“தோள் கண்டார் தோளே கண்டார்” என்றும்,
“ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்” என்றும் விசுவாமித்திரர் வாயிலாகவும் கம்பர் கூறுகிறார்.

நம்மாழ்வாரும் ‘தோளுமோர் நான்குடைக் காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம்’ என்றார்.

திருமாலின் திருவழகுக்கு கண் எச்சில் வராமல் ஆரத்தி எடுக்க வேணும்.
அத்தகைய அழகைக் கண்டவர்களின் உலகப் பற்றுதல்கள் அனைத்தையும் அறுக்க வல்லதான திருத்தோள்கள் என்றும்
“அணியார் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்” என்றார் ஆழ்வார்.
திருவாழியும் ஏந்து கையால் வந்த அழகு கூடினால் அழகு இரட்டித்திருக்கும் என்று
சங்கு சக்கரம் ஏந்தின தோள் அழகை வருணித்தார்.

ஆளானார் –
இவ்வாறு இருந்துள்ள அழகை உடையவனுக்கு அவ்வழகுக்குத் தோற்று அடிமையானவர்கள் என்று பொருள்.
இறைவனுக்கு அடிமையாயிருத்தல் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது.
ஒன்று அவனுடைய தலைமைக்கு அடிமையாதல்
மற்றொன்று அவன் குணத்துக்கு அடிமையாதல்.

புண்டரீக கேள்வனடியார் – என்றவிடத்து
தலைமைக்கு அடிமை என்று சொல்லப்பட்டது.
‘சுந்தரனுக்கு ஆளானார்’ என்ற இவ்விடத்தில்
அழகாகிற குணத்திற்கு அடிமையாதல் சொல்லப்படுகிறது.
ஆகவே, இரண்டு வகையான வழிகளாலும் அடியவர்களைத் தோற்கடித்து ‘அடியேன்’ என்று எழுதிக் கொடுக்கும்படி
செய்யும் பகவானின் அழகிய பெருமை இருப்பதால்
இங்கு இப்பொழுது அழகுக்குத் தோற்று அடிமையானவர்களைச் சொல்கிறது.

மற்றொன்றில் அன்பு செய்யார் –
அதாவது
“ஆன்மாவின் இயல்புக்கும் பகவானின் குணங்களுக்கும் அடிமையானவர்கள், அவற்றிற்கு வேறாயிருக்கும்
இவ்வுலக விஷயங்கள் ஒன்றிலும் பற்றுக் கொள்ள மாட்டார்கள்.”
பரமபதமாகிற திருநாடு சுத்த சத்வ குணமயமானவை.
அதனால் இவை ப்ராக்ருதம் என்றும் அவை அப்ராக்ருதம் என்றும் சொல்லப்படும்.
இங்குள்ள பொருள்களெல்லாம் கணந்தோறும் மாறுபட்டுக் கொண்டிருக்கும்
அங்குள்ள பொருள்கள் என்றைக்கும் ஒரு படியாகவே இருக்கும்.
மற்றும் அங்குள்ள பொருள்கள் மனதைக் கவருவதாக இருக்கும்.
இவ்வாறாக, இவ்வுலகப் பொருள்களின் தாழ்வுகளையும் அவ்வுலகப் பொருள்களின் உயர்வுகளையும் ஆராய்ந்து அறிந்து
அந்தமில் இன்பத்து அழிவில் வீடு என்று கூறப்படுகிற அப்பரமபதமாகிற அப்பேரின்பத்திற்குத் தோற்றிருக்கும் அவர்கள்
இவ்வுலகப் பொருள்களை விரும்புவார்களோ? மாட்டார்கள்.
காரணம், இவ்வுலகப் பொருள்கள் மேலுக்குக் கவரிச்சியாயிருந்து உள்ளுக்குக் குற்றமுடையதாயிருக்கும்,
அருவருக்கத் தகுந்ததாயும் இருக்கும். ஆகவே இதை விரும்பமாட்டார்கள் என்றவாறு.

இவ்வுலக விஷயங்கள் குற்றமுடையதாயும் அருவரூக்கத் தகுந்ததாயும் இருந்தாலும்
சுவர்க்கம் முதலிய ஏனைய மேலுலகங்களிலுள்ள உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பொருள்களும் சிறப்பாகப் பேசப்படுகின்றனவே
அவற்றைக் கண்டால் அந்த சுவர்க்கம் முதலிய இடங்களில் பற்றுச் செய்யாதோ என்று கேள்வி எழுந்தால்
அதற்குத் தகுந்த பதில் சொல்லப்படுகிறது மேல் தொடரால்.

“மீளாப் பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு” என்று தொடங்கி
அதாவது
வீடுபேறு என்பது “அழிவில் வீடு” என்று கூறப்படுகிறது.
மறுபிறவி இல்லாதது முக்குணங்களுக்கு அப்பாற்பட்டுத் தூய சத்வ மயமானது. அளவு கடந்த ஒளிமயமானது.
தனக்கு உவமையில்லாதது. மேலான வானம் என்று புனைந்து பாராட்டப் பெற்றது.
இத்தகைய திருநாட்டில் இன்பத்தை நுகர வேண்டும் என்று அவா உடையவர்களுக்கு என்று பொருள்.

நரகன்றோ இந்திரன்தன் நாடு –
அதாவது
கீழே சொல்லப்பட்ட சுவர்க்கம் முதலிய உலகங்கள் புண்ணியத்தால் அடையப்படுவது.
புண்ணியம் கழிந்தவாறே அங்கிருந்து தலைகீழாக இம்மண்ணுலகில் விழும்படி இருப்பது.
சுவர்க்கத்திற்கு ஒப்பான மற்றும் பலபல லோகங்களையும் உடையதாய் வினைவயப்பட்ட இந்திரன் முதலிய
தேவர்களின் அனுபவங்களுக்கு இடமாய் உள்ளன.
இத்தகைய சுவர்க்கம் முதலிய உலகங்கள் நரகத்திற்கு ஒப்பாகும் அல்லவா?
ஆகவே அடுக்கடுக்காக உள்ள பதினான்கு உலகங்கள் கூடிய இவ்வண்டம்
பரமபதத்தில் வாழ்வாருக்கு துன்பத்திற்கிடமான நரகமேயாகும் என்பதாம்.

———–

வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் பகவத் அனுபவ கைங்கர்யத்தையே பெரும் பயனாகக் கொண்டு
பகவானிடம் மிக்க அன்புடையவர்கள் அடிமை செய்யும் போது முறை தவறிச் செய்தாலும்
அதைப் பகவான் மிகவும் களிப்புடன் தலையால் தாங்குவான் என்று சொல்லப்படுகிறது.
கீதையில் தன் பக்தன் பக்தியோடு கொடுக்கும் இலை, பூ, பழம், நீர் ஆகிய அனைத்தையும்
நான் அன்போடு அருந்துகிறேன் என்று கூறுகிறான். இதில் இலை, பூ சேர்க்கப்பட்டுள்ளன.
பக்தன் அன்பினால் கொடுப்பதால் அது எதுவாயினும் அதை அருந்துவதாகச் சொல்வதால்
கொடுக்கிற பொருளைப் பார்க்காமல் அவன் நெஞ்சில் அன்பையே பார்த்து ஏற்கிறான் என்பதை உணரலாம்.
இக்கருத்து இப்பாடலில் கூறப்படுகிறது.

“முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழலன்றி – மற்றொன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்ஙனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து”–8-

பதவுரை:

புவனமெல்லாம் -எல்லா உலகங்களையும்
முற்ற உண்ட -ஒன்று விடாமல் அனைத்தையும் விழுங்கித் தன் வயிற்றில் வைத்துக் கொண்ட
முகில் வண்ணன் -மேகம் போன்ற திருமேனியை உடைய இறைவனின்
கற்றைத் துழாய்சேர் -தழைக்கின்ற திருத்துழாய் சேர்ந்துள்ள
கழலன்றி -திருவடிகளைத் தவிர
மற்றொன்றை -வேறு ஒரு பயனையும்
இச்சியா அன்பர் -விரும்பாத பக்தர்கள்
தனக்கு –இறைவனான தனக்கு
எங்ஙனே செய்திடினும் -அடிமைகளை எப்படிச் செய்தாலும்
உகந்து -மிகவும் மகிழ்ந்து
உச்சியால் ஏற்கும் -தலையால் ஏற்றுக் கொள்வான்

“முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில்வண்ணன்” –
அழிவு காலத்தில் அழிபடாமல் அனைத்து உலகங்களையும் ஒன்று விடாமல் தனது வயிற்றிலே வைத்துக் காக்கிறவன்
என்று கதை சொல்லப்படுகிறது.
இவ்வாறு உலகங்களைக் காத்தது பிறர்க்குச் செய்ததாக இல்லாமல் தன் பயனாகச் செய்பவன் என்ற கருத்தை
அவனது நீருண்ட காளமேகம் போன்ற வடிவின் நிறத்தைப் பார்த்தாலே தெரியும்.
மேகமும் பிறர்க்காகவேயிருப்பது.
பகவானும் பக்தர்களுக்காகவே இருக்கிறவன் என்ற குறிப்புப் பொருள் இங்குப் புலனாகிறது.

இப்போது இதைச் சொல்கிறது.
‘தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்’ என்ற பாசுரத்தில் சொன்னபடி
ஆபத்து காலத்தில் உலகங்களையும் அவையறியாதிருக்க, தானறிந்த உறவையே காரணமாகக் கொண்டு
தன் வயிற்றிலே வைத்து ரட்சித்தது தனக்கு லாபம் என்னும் கருத்தை தன் வடிவிலே தெரியும்படி இருந்தான்
என்று விளக்கம் சொல்லப்படுகிறது.
இதனால் வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் தன்னிடம் மிக அன்புடையவர்கள் தன்னிடத்தில் செய்யும்
தொண்டுகளை ஆதரவுடன் ஏற்றுக் கொள்வான் என்னும் கருத்து குறிப்பால் உணரப்படுகிறது.

கற்றைத் துழாய் சேர் கழலன்றி –
இதில் பகவானுடைய திருவடிகளின் இனிமை சொல்லப்படுகிறது.
‘பூமியில் வளரும் திருத்துழாயைக் காட்டிலும் அவன் திருமேனியில் சாத்தப்பட்ட திருத்துழாய்
திருமேனியின் தொடர்பினால் தழை விடுகிறது. அத்தகைய தழைத்திருந்துள்ள திருத்துழாயோடே சேர்ந்திருந்துள்ள
திருவடிகளைத் தவிர என்பது பொருள்.
இக்கூற்றால் அவன் திருவடிகளில் உள்ள அலங்காரத்திற்கும் அழகுக்கும் சிறப்பு அறியப்படுகிறது

மற்றொன்றை இச்சியா அன்பர் –
இப்படியான மிக இனிமை பொருந்திய அவன் திருவடிகளை யொழிய
வேறு ஒரு பயனையும் விரும்பாத மிக்க அன்புடையவர்கள் என்பது இதன் பொருள்.

உலகில் பெரும்பாலும் பகவானை விரும்பாமல் அவனிடம் வேறு வேறு பயன்களைப் பெறுவதற்காக
அவனுக்கு ஏதோ உபசாரம் செய்வது போல செய்வார்கள். இது உலக இயல்பு.

இவ்வாறு இல்லாமல் ஸ்ரீஆண்டாள் அருளியபடி
“உனக்கு உகந்த நூறு தடா அக்கார வடிசலும் நூறு தடாவில் வெண்ணையும் சமர்ப்பிக்கிறேன்.
இதை நீ ஏற்றுக் கொண்டால் நூறை ஆயிரமாகப் பெருக்கிக் கொடுப்பதோடு நானும் உனக்கு ஆட்செய்வேன்” என்றாள்.
இது அவன் ஏற்றுக் கொண்டதற்குப் பலனாக சொல்லப்பட்டது.
அது போல பக்தர்கள் செய்யும் தொண்டினை அவன் ஏற்றுக் கொண்டால் மேலும் ஒன்றுக்கு மேல் பலவாகத்
தொண்டுகளே செய்வது பகவத் பக்தர்களின் இயல்பு.
இத் தகையவர்களுக்குப் பயன் கருதாமல் செய்யும் பண்புடையாளார் என்று பெயர்.

தனக்கு எங்ஙனே செய்திடினும் –
மேற்கூறிய அடியார்கள் தனக்கு அடிமை செய்யும் போது
அன்பில் வயப்பட்டு
முறையாகவோ
முறை தவறியோ
தொண்டுகளை எப்படிச் செய்தாலும்.

உச்சியால் ஏற்கும் உகந்து –
மிகவும் மகிழ்ச்சியுடன் தலையாலே ஏற்பான் என்பது பொருள்.

எங்ஙனே செய்திடினும் – உச்சியால் ஏற்கும் என்பதன் பொருள்.
பக்தன் காலாலே தூக்கி எறிந்ததையும் அவன் தலையாலே ஏற்பான் என்பதாம்.
உதாரணம் பெரியாழ்வார். (கண்ணனுக்காக) பெருமாளுக்காகத் தொகுத்து வைத்த மாலையை
ஸ்ரீஆண்டாள் தன் தலையில் சூட்டி அழகு பார்த்தாள்.
அம்மாலையில் ஸ்ரீஆண்டாள் தலையில் சிக்கிய கேசம் பின்னியிருப்பதைப் பார்த்த ஆழ்வார்
வெளியில் தூக்கி எறிந்து வேறு மாலையைக் கட்டிக் கொண்டு சென்றார்.
பெருமாள், ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்து எறியப்பட்ட அம்மாலைதான் தனக்கு வேணும் என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.
இன்றும் ஸ்ரீஆண்டாள் சூடின மாலையைப் பெருமாள் தலையால் சுமப்பதைக் காணலாம்.
இவ்வாறான பல உதாரணங்கள் காணலாம்.

—————–

பகவானிடம் வேறு பயன் எதையும் விரும்பாமல் அடிமை செய்தலையே விரும்பியிருக்கும்
அடியாரிடத்தில் அவனுக்குண்டான ஈடுபாட்டைக் கீழ்ப் பாடலில் கூறினார்.

இதில் கீழ்ச் சொன்ன ஈடுபாட்டைக் காட்டிலும் இன்னமும் அதிகமான ஈடுபாட்டைச் சொல்கிறார்.
இதில் பகவான்தான் பக்தர்களின் நெஞ்சைச் சோதனை செய்து அதைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்கிறான்.

அவ்வாறு நெஞ்சில் சோதனை செய்தாவது,
“இந்த நெஞ்சு நம்மை மட்டுமே நினைக்கிறதா?
நம்மிடம் ஏதாவது வேறு பயனை விரும்பி நம்மை நினைக்கிறதா?
எந்தப் பயனையும் நினைக்காமல் நம்மையே நினைக்கிறதா?” என்று ஆராய்ந்து பார்த்து
வேறு பயன் எதையும் விரும்பாமல் அவனை நினைப்பதுவே பயனாக எந்த நெஞ்சம் இருக்கிறதோ
அந்த நெஞ்சமே அவன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இடமாகும் என்ற கருத்து இங்கு சொல்லப்படுகிறது.

“ஆசில் அருளால் அனைத்து உலகும் காத்தளிக்கும்
வாச மலராள் மணவாளன் – தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறொன்றை
யெண்ணாதார் நெஞ்சத் திருப்பு”–9-

பதவுரை:

ஆசில் -குற்றமில்லாத
அருளால் -கருணையினால்
அனைத்து உலகும் -எல்லா உலகத்தையும்
காத்து -இரட்சித்து
அளிக்கும் –விருப்பங்களைக் கொடுக்கும்
வாச மலராள் மணவாளன் -தாமரையில் பிறந்த பிராட்டிக்கு நாயகனான பகவான்
தேசு பொலி -ஒளி மயமான
விண்ணாட்டில் -ஸ்ரீவைகுண்டத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றை எண்ணாதார் -தன்னையொழிய வேறு எதையும் நினைக்காதவர்களுடைய
நெஞ்சத்து -இதயத்தில்
இருப்பு -குடியிருப்பை
சால -மிகவும்
விரும்பும் -ஆதரிக்கும்

அருளுக்குக் குற்றமாவது என் எனில்?
ஒரு காரணத்தைப் பற்றி அருள் செய்தால் அவ்வருள் குற்றமாகும்.
அருளுக்கு இலக்கணம் கூற வந்த பரிமேலழகர்,
அருளாவது – தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை என்று கூறினார்.
இது துறவறத்திற்கு அடிப்படைப் பண்பாகக் கூறப்பட்டது.

அருளைப் பற்றி இவ்வாறு அறியும்போது இதோடு தொடர்புடைய அன்பைப் பற்றியும் அறிய வேண்டியதொன்றாகும்.
அதாவது மனைவி, மக்கள் முதலிய தொடர்புடையாரிடத்தில் செலுத்தும் அன்பு காதல் என்று விளக்கப்பட்டுள்ளது.
ஆகவே அதற்கு அருள் வேறுபட்டது.
தொடர்பு முதலிய எவ்விதக் காரணமும் இல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் கருணை தான்
பகவானுக்கும் பகவத் பக்தர்களுக்குமே உள்ள பண்பு என்று உணர வேணும்.

அனைத்துலகும் –
எல்லா உலகத்தையும்
பூமிக்கு மேலே ஏழு உலகங்களும் பூமிக்கு கீழே ஏழு உலகங்களுமாக மொத்தம் பதினான்கு உலகங்கள் என்று சொல்லப்பட்டுள்ளன.
இந்த பதினான்கிற்கும் சேர்த்து அண்டம் என்று பெயர்.
பூமிக்கு மேல் உள்ள ஏழு உலகங்களாவன:-
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனேலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பன.
பூமிக்கு கீழ் உள்ள உலகங்களாவன:-
அதலம், விதலம், சுதலம், ரசாதலம், தலாதலம், மகாதலம், பாதாளம் என்பன.
ஆகவே இவை அனைத்துலகும் எனப்பட்டன.

ஒரு காரணத்தைப் பற்றி அருள் செய்வதானால் அவ்வருளில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும்.
பகவானுடைய அருள் எந்தக் காரணத்தைப் பற்றியும் நல்லவர் தீயவர் என்று பாகுபாடு பண்ணாமல்
எல்லோருக்கும் பொதுவாக இருப்பதால் ஆசிலருள் எனப்பட்டது.

இங்குச் சொல்லப்பட்ட உலகு என்ற சொல்
மக்களைக் குறிக்கும்.

காத்தளிக்கும் –
பக்தர்களுக்கு வேண்டாதவற்றைப் போக்கியும் வேண்டின விருப்பத்தைக் கொடுப்பதும் காத்தல் எனப்படும்.
இவ்விரண்டுமே இறைவனுடைய காக்கும் செயலாகும்.
வ்யாதி தீர்த்தல் ஒரு நன்மை.
அதுபோல வேண்டாததைக் கழித்தும் விரும்பியதைக் கொடுத்தலும் காத்தல் ஆகும்.
“காத்து” “அளிக்கும்” என்ற இரண்டு சொல்லும் ஒரே கருத்தைக் கூறுவதால் இவ்வாறு கூறப்பட்டது.

வாசமலராள் மணவாளன் –
“வேரி மாறாத பூமேலிருப்பாள்” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடி
தாமரையின் அழகு மாறாமையால் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும் பெருமை உடையதும்
நறுமணம் அலை வீசுகின்றதுமான தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் என்று பொருள்.

அவளுக்குக் கணவனாகயிருப்பவன் என்று
வாசமலராள் மணவாளன் என்று எம்பெருமான் சிறப்பிக்கப்பட்டான்.

பெரிய பிராட்டியாருக்கு மணவாளன், “காத்தளிக்கும்” என்று கூறுவதால்
இறைவன் உலகங்களைக் காப்பதற்குப் பிராட்டியோடு கூடியிருந்து காக்கின்றான் என்றும்,
காக்கும் தொழிலில் பிராட்டிக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும் சொல்லும் வேதாந்தக் கருத்து இங்கு உணர்த்தப்படுகிறது.

மேலும் காத்தலுக்கு அடிப்படையான கருணை குணத்தைப் பிராட்டி
பகவானிடத்தில் தூண்டுகிறாள் என்றும்
அவ்வாறு இறைவன் உலக மக்களிடம் கருணை காட்டிக் காப்பதைக் கண்டு
மகிழ்தலும் பிராட்டியுடைய காரியமாகும் என்றும் அறியவேணும்.

இவ்வாறு பிராட்டியோடு கூடி நின்று ஆன்மாக்களைக் காப்பதில் பகவான் பண்ணின முயற்சி பயன் தரும்போது
அதாவது
இறைவனுடைய முயற்சிக்கு இலக்காகும் ஆன்மா சீர் திருந்தி (பண்டை வினைகளைப் பற்றோடு அறுத்து)
இறைவனைத் தவிர வேறு பயன்களை விரும்பாதவர்களாய்த் தூயனராகின்றார்கள்.
அத்தகைய தூய இதயத்தில் இறைவன் பண்ணும் அரவணைப்பின் சிறப்பு மேல் தொடரால் கூறப்படுகிறது.

தேசுபொலி விண்ணாட்டில் –
தேசுபொலி விண்ணாடு – பரமபதம், வைகுண்டம் என்று அழைக்கப்படுகிற அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடு என்பதாம்.
இது பெரிய பிராட்டியாரோடும் நித்ய சூரிகளோடும் பகவான் பேரின்பமாக எழுந்தருளியிருக்கிற இடம்.
இத்தகைய இன்பமிகு இடத்தைக் காட்டிலும்,

சால விரும்புமே –
மிகவும் உகந்திருக்கும் என்றவாறு.
ஏகாரம் ஈற்றசை இவ்வளவு ஆதரித்து நிற்கின்ற இடம் எது என்றால்
அது கூறப்படுகிறது மேல் தொடரால்.

வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்திருப்பு –
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்று ஆழ்வார் இருந்தார்.
அவருக்குக் கண்ணனைத் தவிர வேறு பயன் எதுவும் தேவையில்லை.
அது போல, எல்லாப் பயன்களும் பகவானே என்று நினைத்து
வேறுபயன் எதையும் உள்ளத்தால் உள்ளலும் செய்யாமல் யார் இருக்கிறார்களோ
அவர்களுடைய இதயத்தில் இருக்கும் இருப்பு பரமபதத்தைக் காட்டிலும் மிக இன்பமாக இருக்கும் என்பது கருத்து.

—————

பகவானைத் தவிர வேறு பயன் எதையும் விரும்பாதார் உள்ளத்தில் இருந்தாலும்
அவ்விருப்பு அவனுக்குத் துன்பத்தைத் தருவதால் வெறுப்பாயிருக்கும் என்பதை இதில் அருளிச் செய்கிறார்.

பரமபதத்தைக் காட்டில் மிகவும் ஆதரவோடு இருப்பான் என்று கீழே சொன்னதற்கு மாறாக
இப்பாட்டில் வேறு வேறு பயன்களை விரும்புவாரது இதயங்களில் இருந்தாலும் அவ்விருப்பு
பகவானுக்கு துன்பத்தைத் தருவதால் பொறுக்க மாட்டாமல் இருக்கும் என்ற கருத்து இதில் கூறப்படுகிறது.

“நாளும் உலகை நலிகின்ற வாளரக்கன்
தோளும் முடியும் துணித்தவன்தன் – தாளில்
பொருந்தாதார் உள்ளத்துப் பூமடந்தை கேள்வன்
இருந்தாலும் முள் மேல் இருப்பு”–10-

பதவுரை:

நாளும் -நாள்தோறும்
உலகை -உலகத்தை எல்லாம்
நலிகின்ற -துன்புறுத்துகின்ற
வாளரக்கன் -வாளைத் தனக்குப் பக்கபலமாகக் கொண்ட இராவணனுடைய
தோளும் -இருபது தோள்களும்
முடியும் -பத்துத் தலைகளையும்
துணித்தவன் -அறுத்துத் தள்ளினவனான
பூ மடந்தை கேள்வன் தன் -திருமகள் நாயகனான இராமபிரானுடைய
தாளில் -திருவடிகளில்
பொருந்தாதார் -பற்றாதவர்களுடைய
உள்ளத்தில் -இதயத்தில்
இருந்தாலும் -கொள்கை அளவில் இருந்தாலும் அவ்விருப்பு
முள்மேலிருப்பு -முள் நுனியில் இருப்பது போன்றதாகும்

நாளும் உலகை நலிகின்ற –
ஏதோ ஒரு நாளில் அல்லாமல் தினந்தோறும் துன்புறுத்துகின்ற
அதிலும்
யாரோ ஒருவர் இருவர் என்றில்லாமல் உலகத்தார் அனைவரையும் துன்புறுத்துகின்ற,
துன்புறுத்துவதிலும்
சற்றும் இடையீடில்லாமல் ஒயாமல் துன்புறுத்துகின்ற என்று பொருள்.

வாளரக்கன் –
வாள் ஆயுதத்தையுடைய அரக்கன் இராவணன்.
சிவனை வழிபட்டு அவனிடம் பெற்றுக் கொண்ட வாளாயுதம்.
அதைத் தனக்குப் படைபலமாக பிடித்துக் கொண்டிருக்கும் அரக்கனான இராவணன் கூற்றாக
“சங்கரன் கொடுத்த வாளும்” என்ற கம்பன் கூறியது எண்ணற்குரியது.

தோளும் முடியும் துணித்தவன் –
இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும் அறுத்தவன்.
“நீள்கடல் சூழிலங்கைக்கோன் தோள்கள் தலை துணி செய்தான். தாள்கள் தலையில் வணங்கி,
நாள் கடலைக் கழிமினே” என்றார் நம்மாழ்வார்.
இதன் பொருளாவது: அவனைக் கொல்லும் போது “அகப்பட்டவன் அகப்பட்டான்”
தப்பி ஒடிப் போகாமல் கொன்றுவிடுவோம்” என்று எண்ணாமல் முதலில் அவனது இருபது தோள்களையும் அறுத்துத் தள்ளி.

“தான் போலு மென்றெழுந்தான் தரணியாளன்
அது கண்டு தரித்திருப்பானரக்கர் தங்கள்
கோன் போலும் என்றெழுந்தான் குன்ற மன்ன
இருபது தோளுடன் துணிந்த வொருவன் கண்டீர்”–(பெரிய திருமொழி-4-4-6)

“தலைகள் பத்தையும் வெட்டித் தள்ளி பொழுது போக
விளையாடினாற் போல கொன்றவன்
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன்
சிரங்கள் பத்தறுத்து திர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்”–(திருச்சந்தவிருத்தம் – 802)

பூ மடந்தை கேள்வன் –
தாமரை மலரில் வசிப்பவளாயும்
மாருத யௌவனத்தை உடையவருமான பெரிய பிராட்டியாருக்குக் கணவனானவன்.

கீழ்ச்சொன்ன இராவணனை அழித்தற்குக் காரணம் நாட்டை நலிந்தது மட்டுமன்றி
பிராட்டியைப் பெருமாளிடமிருந்து பிரித்த செயலுமே முக்கிய காரணமாகும் –

“சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடு விசையரக்கன்
எரிவிழித்திலங்க மணிமுடி பொடி செய்து இலங்கை பாழ்படுப்பதற் கெண்ணி”–(பெரிய திருமொழி-5-5-7)

என்ற பாசுரத்தில் இராவணன் அழிவதற்கு முக்கிய காரணம் பெருமாளிடத்திலிருந்து பிராட்டியைப் பிரித்தது தான் காரணம்
என்று திருமங்கை ஆழ்வாரும் அருளிச் செய்திருக்கிறார்.
இவ்வாறு பிராட்டியும் தானுமாக இன்பமிக்க எழுந்தருளியிருக்குமவன்.

தன் தாளில் பொருந்தாதார் உள்ளத்தில் –
தன் திருவடிகளைப் பற்றி நிற்கும் போதே வேறு பயன்களில் மனதைப் பறிகொடுத்து தன் திருவடிகளில்
பொருத்தமற்றிருக்கும் பொய்யர்களுடைய உள்ளத்தில்.

‘பொருந்தாதார்’ என்ற சொல்,
தன் திருவடிகளைப் பற்றி நிற்கும் போதே என்ற பொருளைக் குறிப்பாக உணர்த்துகிறது.
வேறு பயன்களில் மனதைப் பறிகொடுத்தவர்கள் மனம் திருவடியில் பொருந்தி இருக்க முடியாதல்லவா!

இருந்தாலும் – என்ற சொல்லால்
வேறு பயன்களை விரும்புவார் மனதில் இருக்க மாட்டான் என்ற பொருள் குறிப்பாக உரைக்கிடக்கிறது.
தன்னிடம் வேறு பயனைக் கருதித் தன்னை வழிபடும் போலி பக்தருடைய வற்புறுத்தலுக்காக
அவர்கள் மனதில் இருந்தாலும் என்று பொருள்.

முள்மேல் இருப்பு –
முள் நுனியில் இருப்பது போன்றது.
அதாவது
பகவானுக்குத் துன்பம் தரக் கூடியதாகும் என்பதாம்.

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகளின் தனியன் விசேஷங்கள் —

August 23, 2021

கலியுகம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 3069ம் வருஷத்திலிருந்து ஆரம்பம் என்பதை நினைவில் வைத்து,
கலியுகம் என்று சொல்லும்போதெல்லாம் அவரவர்கள் உசிதப்படி ஆங்கில ஆண்டைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

——–

ஸ்ரீ இராமாநுஜர்

திருக் குருகைப் பிரான் பிள்ளான்-இவருக்கு ” குருகேசர் ” என்றும் திருநாமம்.
இவர் பெரிய நம்பிகளுடைய இரண்டாவது குமாரர்
ஸ்ரீ உடையவர் நியமனப்படி, திருவாய் மொழிக்கு ” திருவாறாயிரப்படி ” என்று வ்யாக்யானம் செய்து,
உடையவரால் மிகவும் உகக்கப்பட்டு, “பகவத் விஷயம் ” என்று இன்றளவும் கொண்டாடப் படுகிறது.

இவருக்குப் பிறகு —-ஸ்ரீ விஷ்ணு சித்தர் என்கிற ”எங்களாழ்வான் ”
இவர் , திருவெள்ளறையில் அவதரித்தவர்

பிறகு….நடாதூர் அம்மாள்

பிறகு நம்பிள்ளை

அடுத்து, அப்புள்ளார்

அவருக்கு அடுத்து, ஸ்வாமி வேதாந்த தேசிகன் —–தூப்புல் திவ்ய தேசத்தில் அவதாரம் .

———–

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||

தனியனின் அர்த்தம்–மிகச் சுருக்கமாக—
கருவிலே திருவுடையவரான ,திருவேங்கடவனின் மறு அவதாரமான
வேதங்கள், சாஸ்த்ரங்கள் முதலியவற்றில் மிகவும் வல்லுநரான ,
வாதப் போர் செய்வதில் ஸிம்ஹமான ,வேதாந்த ஆசார்யரான ஸ்வாமி தேசிகன்
எங்களுடைய ஹ்ருதயத்தில் எப்போதும்,எப்போதும் வஸிப்பாராக —
எங்கள் ஹ்ருதயங்களை இருப்பிடமாகக் கொள்வாராக—

இது கலி சகாப்தம் 4431ல் சுக்ல வருஷம் சித்திரை மாதம் ,புனர்வஸு நக்ஷத்ரத்தில் அருளப்பட்டது என்பர். .
ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர் வரதாசார்யர் என்கிற நயினாசார்யர் அருளியது.
நள வருஷம் ஆவணி மாத ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதாரம்.

ஸ்ரீ நயினாசார்யர் அருளிய நூல்கள்–
1-ஸ்வாமி தேசிகனின் ”அதிகரண ஸாராவளி” க்கு ”அதிகரண சிந்தாமணி ”
என்கிற வ்யாக்யானம்
2-தேசிக மங்களம்
3-ப்ரார்த்தநாஷ்டகம்
4-ப்ரபத்தி
5-விக்ரஹத்யாநம்
6-திநசர்யை
7-பிள்ளையந்தாதி மற்றும் பல நூல்கள்.

இவருக்குப் பத்து சிஷ்யர்கள்.
ஜய வருஷம் பங்குனி மாதம் க்ருஷ்ணபக்ஷ ஸப்தமியில் பரமபத ப்ராப்தி.

———-

ராமாநுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

கலியுகம் பிறந்து, 4440 ம் ஆண்டில் பஹூதான்ய வருஷம்….(இப்போது கலியுகம் 5117ம் வருஷம்—– ஆங்கிலம் 2017 )
இந்தத் தனியனை, ஆவணி மாஸ ஹஸ்த நக்ஷத்ரத்தில் அநுக்ரஹித்தவர் ஸ்ரீபேரருளாள ஜீயர்.
இவர் இந்தத் திருநாமத்துடன்,
பிறகு, ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்தரர் என்று ஸ்வாமி தேசிகனாலே பஹூ மானிக்கப்பட்டு,
ஸ்ரீ பரகால மடத்தை மைசூரில் ஸ்தாபித்து, ஸ்வாமி தேசிகன் ஆராதித்து, பிறகு அநுக்ரஹித்துக் கொடுத்த
ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவனை ஆராத்ய தெய்வமாகப் பெற்று, அநேகமாயிரம் சிஷ்ய வர்க்கங்களுடன் அடுத்தடுத்த
ஆசார்ய பரம்பரையுடன் அங்கங்கு மடத்தின் கிளைகளை நிறுவி, பராமரித்து, தேசிக ஸம்ப்ரதாயத்தைப் பரப்பி வரும்
ஸ்ரீ பரகால மடத்தின் முதல் ஜீயர்.

ஸ்வாமியின் ,ப்ரபந்தார்த்த நிர்வாகத்தில் ஈடுபட்டு யாதவாத்ரியில்—மேல்கோட்டையில், இத் தனியன் ஸமர்ப்பிக்கப்பட்டது
என்று குரு பரம்பரையில் கூறப்பட்டது.
ஸ்ரீ ஸ்வாமியின் எழுபதாவது திரு நக்ஷத்ரத்தில் இது ஸமர்ப்பிக்கப்பட்டது என்று தேறுகிறது

ஸ்வாமி தேசிகன், “ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய :——-” என்கிற தனியன், நம்முடைய பெருமையைச் சொல்கிறது.
” ராமாநுஜ தயாபாத்ரம் —-” என்கிற இந்தத் தனியன், நமக்கு ஏற்பட்டுள்ள சதாசார்ய கடாக்ஷப் பெருமையைச் சொல்கிறது …..
என்று சந்தோஷப்பட்டு,
” ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: …..” என்கிற தனியன் ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும் படியும்
” ராமாநுஜ தயா பாத்ரம் …” என்கிற இந்தத் தனியன் “பகவத் விஷய ” காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும்படியும்
நியமித்தார்.

———-

ராமாநுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ப்ரவர்த்தகர்—-ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தம் என்று பெருமையுடன் சொல்லப்படும்,
ஸித்தாந்தத்துக்கு அதிபதி, ஸாக்ஷாத் பரம ஆசார்யன் –ஸ்ரீ உடையவர்
—இவருடைய தயை –கருணைக்கு–பாத்ரம் —பாத்ரமானவர் –இலக்கானவர்
ஸ்ரீராமாநுஜரின் கருணைக்குப் பாத்ரமானவர்–இந்த ஸ்ரீ ராமானுஜர், நமது விசிஷ்டாத்வைத தர்ஸன ஸ்தாபகர்.
இவருடைய தயைக்கு இலக்கானவர்-

இன்னொரு அர்த்தம்——-

இராமாநுஜர் என்பது, ஸ்வாமி தேசிகனின் ஆசார்யன் ஸ்ரீ அப்புள்ளாரைக் குறிக்கிறது என்பர் .
இவருக்கு “ராமாநுஜப் பிள்ளான்” என்றும் திருநாமம் உண்டு.——கிடாம்பி ராமாநுஜாசார்யர் என்றும் திருநாமம்.

இவருடைய தனியன் :–
நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ரதாயிநே |
ஆத்ரேய பத்மநாபார்ய ஸூதாய குணசாலிநே ||

இவருடைய சகோதரி தான், தோதாரம்மா —-ஸ்வாமி தேசிகனின் தாயார்.
தனது மாமாவிடம், மருமானான ஸ்வாமி தேசிகன்,
சப்தம் ,தர்க்கம், மீமாம்ஸம் முதலிய ஸாமாந்ய சாஸ்த்ரங்களைக் க்ரஹித்தார் .
ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், பகவத் விஷயம், முதலான வேதாந்த க்ரந்தங்களையும்
விசேஷ அர்த்தங்களுடன் உபதேசிக்கக் கேட்டார்.

அப்புள்ளார், வைநதேய மந்த்ரத்தை உபதேசித்தார்.

தனது திருமேனியில் நோவு சாத்திக்கொண்டிருந்தபோது, தனக்கு ஸ்ரீ நடாதூர் அம்மாள் மூலமாகக் கிடைத்த ,
தான் ஆராதனம் செய்துவந்த ஸ்ரீ உடையவர் பாதுகைகளையும் கொடுத்தார்.
ஸ்வாமி தேசிகன் அவைகளைப் பக்தியுடன் பெற்று, தன்னுடைய திருவாராதனத்தில், சேர்த்துக் கொண்டார்.

ஸ்வாமி தேசிகன் மங்களத்தில் ,…..
ராமாநுஜார்யாத் ஆத்ரேயாத் மாதுலாத் ஸகலா: கலா : |
அவாப விம்ஸத்யப்தே ய :தஸ்மை ப்ராக்ஞாய மங்களம் ||–என்று மங்களா சாஸனம்—- ஸ்தோத்ரம் சொல்கிறோம்.

ராமாநுஜ தயா பாத்ர வ்யாக்யானத்தில்,
” ராமாநுஜ சப்தத்தாலே, ராமாநுஜ அப்புள்ளார் முகமாய், இதி
எதிராஜ மாகானஸ எதிவரனார் மடப்பள்ளி வந்த மணம் என்னும் இத்யாதியாலும்,
உடையவருடைய கடாக்ஷபரீவாஹமாக வந்து ஸர்வார்த்தங்களும் நிரம்பின “என்று உள்ளது .
இதனாலும், அப்புள்ளார் என்கிற ஆசார்யரின் தயைக்குப் பாத்ரமானவர் என்றும் அர்த்தம் சொல்வர்.

———

எப்படி, தயைக்குப் பாத்ரமாகிறார் என்றால்,
1. அவருடைய திருவுள்ளத்தை நிறை வேற்றுவது —அதன்மூலமாகக் கருணைக்குப் பாத்ரம்
2. அவர் விட்டுச் சென்ற ,ஸம்ப்ரதாய விஷயங்களை நிறை வேற்றுவது —அதன் மூலமாகக் கருணைக்குப் பாத்ரம
இந்த இரண்டுமே, ஸ்வாமி தேசிகனிடம் இருந்தன.
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல் —ஸ்ரீ பாஷ்யகாரர் உகந்த கைங்கர்யம்.
இன்னொன்று—திவ்ய ப்ரபந்த ஸம்ரக்ஷணம்—ஸ்ரீ உடையவர் உகந்த இந்தக் கைங்கர்யங்களை தாமும் செய்து,
தானே ப்ரபந்தங்களை அருளி, திவ்ய ப்ரபந்த ரக்ஷணம் செய்தார்.

———–

3. “ராமாநுஜ ” என்பது, இளைய பெருமாளைக் குறிக்கும்.
“லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்த : ” என்கிறார், வால்மீகி.
பெருமாளாகிய ஸ்ரீ ராமனையே காப்பாற்றியவர் லக்ஷ்மணன்
அத்தகைய இளைய பெருமாளின் அருள் கருணைக்குப் பாத்ரமானவர், ஸ்வாமி தேசிகன்.

———–

4. ராம அநுஜ தயா பாத்ரம் —-
பரதனுக்கும், ராமாநுஜன் என்கிற திருநாமம் உண்டு.
“ராமாநுஜம் லக்ஷ்மண பூர்வஜஞ்ச ……..
”இந்த ராமாநுஜனான பரதன், பதினான்கு ஆண்டுகள், ராமனின் பாதுகைகளை ஆராதித்தவர்.
ஸ்வாமி தேசிகன், பாதுகைகளுக்காகவே ,“சஹஸ்ரம் “—பாதுகா சஹஸ்ரம் –பாடியவர்.
ஆக , ராம அநுஜ தயா பாத்ரம்.

———

5. சத்ருக்னனும் ராமனுக்கு, அநுஜன். பரதனை , ராமனுக்கு அனுஜன் என்று பார்த்தோம்.
அந்தப் பரதனுக்கும் அநுஜன் சத்ருக்னன்.இவன் பரம பாகவதன். நித்ய சத்ருக்களை வென்றவன்
“ராமாநுஜ —சத்ருக்ன தயா பாத்ரம் “என்று சொல்வார்.

————-

6. “ராமாநுஜ ” என்பது ஸ்ரீ க்ருஷ்ணனைக் குறிக்கும்.
ராமாவதாரத்துக்குப் பிந்தைய அவதாரம்.—-க்ருஷ்ணாவதாரம் .
ஆக , க்ருஷ்ணனும் —ராமாநுஜன்
ராமாநுஜ தயா பாத்ரம்—-க்ருஷ்ணனுடைய கருணைக்குப் பாத்ரமானவர், ஸ்வாமி தேசிகன்.
யாதவாப்யுதயம் ஒன்று போதும்; கோபால விம்சதி ஒன்று போதும்

ஸ்வாமி தேசிகன், திருவேங்கட முடையானையும், தேவப் பெருமாளையும் அரங்கனையும்—-கண்ணனாகவே கண்டவர்.

—————-

வைஷ்ணவ சித்தாந்த ஸ்தாபகரான , ஸ்ரீ ராமாநுஜரின் திருநாமத்துடன் தொடங்கும் தனியன்,
ஸ்வாமி தேசிகனுக்கு மட்டிலுமே உண்டு என்பது ஒரு ஏற்றம்.
ராமாநுஜ சித்தாந்தத்தை த் தன்னுடைய க்ரந்தங்களால் ஆழமாக வேரூன்றச் செய்து,
ஆல் போல் தழைக்கச் செய்தவர் ஸ்வாமி தேசிகன்.
ராமாநுஜ தர்சனத்துக்கு –ரக்ஷை கட்டியவர்—–. ஐந்து ரக்ஷைகள் —ரக்ஷை—காப்பு.

1. ஸ்ரீ ஆளவந்தாரின் “கீதார்த்த ஸங்க்ரஹம்”என்கிற க்ரந்தத்துக்கு ,ஸ்ரீ உடையவர், “கீதா பாஷ்யம்” செய்தார்.
இரண்டையும் சேர்த்து, ” கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை ” செய்தார்.
2. “கத்யத்ரயத்து”க்கு ரஹஸ்ய ரக்ஷை செய்தார்.
3. சரணாகதி சித்தாந்தத்தை ஸ்தாபிக்க, “நிக்ஷேப ரக்ஷை” செய்தார்.
4. ஸ்ரீ பாஞ்சராத்ரம் பரஸ்பர முரண்பாடுகளாலே மறைந்துவிடுமோ என்கிற நிலையில் இருந்ததை மாற்றி,
“ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷை ” செய்தார்.
5. அநுஷ்டானங்கள், நலிவு அடையாதபடி, பொலிவு அடைய, “ஸச்சரித்த ரக்ஷை ” செய்தார்.

இப்படி ஐந்து ரக்ஷைகளை, ராமாநுஜ சித்தாந்தத்துக்குக் கட்டி, ராமாநுஜ சித்தாந்தத்தை ,நிலை நிறுத்தியவர் .

ஆதலால், ராமாநுஜ தயாபாத்ரம்.
ஸ்ரீ இராமாநுஜர் பெருமையை, உலகுக்குக் பறை சாற்றியவர், ஸ்வாமி தேசிகனைப் போல வேறு ஆசார்யன் இல்லை.
“யதிராஜ ஸப்ததி ” ஒன்றே போதும்,இதைச் சொல்ல!
ராமாநுஜர் பெருமையை இப்படி உலகறியச் செய்ததால் “ராமாநுஜ தயா பாத்ரம்”

இராமாநுச நூற்றந்தாதியை, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தோடு சேர்த்து, அநுசந்தானம் செய்வித்து,
இன்றளவும் வழங்கும்படியாகச் செய்தவர், ஸ்வாமி தேசிகன், ஆதலால், இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.

———-

இன்னொன்று……
ரமந்த இதி ராமா :தேஷாம் —–அதாவது, ஆழ்வார்களின் அநுஜ:—ராமாநுஜர் —-உடையவர்.
ஸ்வாமி தேசிகன், ஆழ்வார்களின் ப்ரபந்தங்களைக் காத்து, வளர்த்து, உடையவருக்கு உகப்பாக இருப்பதால்,
ராமாநுஜ தயா பாத்ரம்.

ஸ்வாமி தேசிகன் ,” ப்ரபந்த ஸாரம் ” என்று அருளி இருக்கிறார். இதற்குத் தனியனே,
ராமாநுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
இந்தப் ப்ரபந்த ஸாரத்தில், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார்,
நம்மாழ்வார், மதுரகவிகள், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், கோதைப் பிராட்டியான ஸ்ரீ ஆண்டாள்,
தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ….என்கிற 12 ஆழ்வார்களையும் சொல்லி,
அவர்கள் அவதரித்த நாள், ஊர், திருநாமங்கள், திருமொழிகள், அவற்றுள் பாட்டின் வகையான இலக்கம், மற்றுமெல்லாம் சொல்லி,
14 வது பாசுரமாக, ஸ்ரீ உடையவர்—ராமாநுஜரைப் பற்றி,

தேசம் எலாம் உகந்திடவே பெரும்பூதூரில் , சித்திரையில் ஆதிரை நாள் வந்து தோன்றி
காசினி மேல் வாதியரை வென்று, அரங்கர் , கதியாக வாழ்ந்து அருளும் எதிராசா, முன்
பூசுரர் கோன் திருவரங்கத் தமுதனார் ,உன் , பொன் அடி மேல் அந்தாதி ஆகப் போற்றிப்
பேசிய நல் கலித் துறை நூற்றெட்டுப் பாட்டும் பிழை அறவே எனக்கு அருள் செய் பேணி நீயே ——————-என்கிறார்.

தேசம் எல்லாம் போற்றும் ஸ்ரீ பெரும்பூதூரில், சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்ரத்தில்,
அவதரித்து, இவ்வுலகில் குதர்க்க வாதம் செய்பவர்களை வென்று,
அரங்கனே—-பெரிய பெருமாளே– கதி என்று வாழ்ந்து, அருளும்—அருள்புரிந்து கொண்டிருக்கிற—
இப்போதும் , அருள் புரிந்து கொண்டிருக்கிற —யதிராஜா—–யதீச்வரர்களுக்கு எல்லாம் ராஜனே—- என்கிறார்.

இப்படி, எதிராசரான ஸ்ரீ ராமாநுஜரையும் , ஆழ்வார்களோடு, ப்ரபந்த கோஷ்டியில் சேர்த்தவர் ,
ஸ்வாமி தேசிகன்—-ஆதலாலும், இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.

வையகமெண் பொய்கை பூதம் பேயாழ்வார் , மழிசையர் கோன் மகிழ் மாறன் மதுர கவிகள்
பொய்யில் புகழ் கோழியர் கோன் விட்டு சித்தன் , பூங்கோதை தொண்டரடிப் பொடி பாணாழ்வார்
ஐயன் அருள் கலியன் எதிராசர் தம்மோடு, ஆறிருவர் ஓரொருவர் அவர் தாம் செய்த
துய்ய தமிழ் இருபத்து நான்கிற் பாட்டின், தொகை நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே –ஆழ்வார்களின் கோஷ்டிப் பாசுரம் …..

ஆறிருவர் —பன்னிரண்டு ஆழ்வார்கள்…..அவர்களோடு, ஓரொருவர் –ஒரே ஒருவர் —எதிராசர் தம்மோடு—-
ஆறு இருவர்களும், ஒரே ஒருவரும் சேர்கிறார்கள். அதன் பலன், பாட்டின் தொகை, நாலாயிரமும்—“உம் ” என்பது முக்கியம்.
அடியோங்கள் வாழ்வே—–பன்னிரு ஆழ்வார்களுக்கும் எதிராசருக்கும் அடியவர்களான ,எங்களுடைய வாழ்வே —
உய்வதே—-உய்து அவனடி அடைவதே வாழ்வு—-வாழ்வு.— வாழ்வதன் பயன் என்கிறார். ஸ்வாமி தேசிகன்
இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.

————

இன்னொன்று—–“ராமா” —என்றால், கோதைப் பிராட்டியைக் குறிக்கும்
“அநுஜ” என்றால், கோதைக்குப் பின்னால் தோன்றிய வள்ளல்—உடையவர்.
அந்த உடையவரின் கருணைக்குப் பாத்ரமானவர் ,ஸ்வாமி தேசிகன்—

———-

மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்து உறை மார்பினன் ,தாள்
தூமலர் சூடிய தொல் அருள் மாறன் துணை அடிக்கீழ்
வாழ்வை உகக்கும் இராமாநுச முனி வண்மை போற்றும்
சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே .
இராமாநுசனின் வண்மையைப் போற்றும், சீர்மையன்— என்று ஸ்ரீ நயினாசார்யர் பிள்ளை அந்தாதியில் சொல்கிறார்.

எங்கள் தூப்புல் பிள்ளை—ஸ்வாமி தேசிகனின் திருவடிகள்—
என் சென்னியதே—-என் தலைமேல் இருக்கிறது–என்று, ஸ்ரீ நயினாசார்யர் ,பாசுரமிடுகிறார் .
இராமாநுச முனி வண்மை போற்றும் சீர்மையன்—ஆதலால், ராமாநுஜ தயா பாத்ரம்.

————-

ஜ்ஞான வைராக்ய பூஷணம்——–

பூஷணம், என்றால் ஆபரணம் . ஸ்வாமி தேசிகனுக்கு, எது ஆபரணம் என்றால் ,ஜ்நானமும் , வைராக்யமும்
ஜ்ஞானப் பிரான்—-ஸ்ரீ வராஹப் பெருமான
ஜ்ஞாநானந்த மயன்—-ஸ்ரீ ஹயக்ரீவன

1. ஸ்ரீ வராஹப் பெருமான் ,பூமிப் பிராட்டிக்கு, வராஹ சரம ஸ்லோகம் சொல்ல,
பூமிப்பிராட்டி, கோதையாக அவதரித்து வராஹ, சரம ஸ்லோகத்தை ,
” திருப்பாவை ” பாசுரங்களாக , நம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள், உஜ்ஜீவிக் அநுக்ரஹித்தாள் .
ஸ்ரீ உடையவர், ஸ்ரீ ஆண்டாளின் பாசுரங்களில் உருகி, “திருப்பாவை ஜீயரா”க ஆனார்.
இவை எல்லாவற்றையும் சேர்த்து, சிந்தித்து , ஸ்வாமி தேசிகன், “கோதா ஸ்துதி ” அருளினார்.
இந்த ஸ்துதி மூலமாக, ஞானப் பிரானையே வயப் படுத்தினார்.

கோபாயே தநிஸம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத –
ப்ரஹ்மாண்ட : ப்ரளயோர்மி கோஷ குருபிர் கோணா ரவைர் குர்குரை
யத்தம் ஷ்ட்ராங்குர கோடி காட கடநா நிஷ்கம்ப நித்ய ஸ்திதி :
ப்ரஹ்ம ஸ்தம்ப ஸௌதஸௌ பகவதீ முஸ்தேவ விஸ் வர் பரா ||–ஸ்வாமி தேசிகன் , தான் அருளிய ” தசாவதார ஸ்தோத்” ரம்

அதாவது…..
பகவான், மஹா வராஹமாக அவதரித்து, கடல்களின் ஓசையை விட
பெரிய உறுமல்களால், உலகங்களை உய்வித்து தம்முடைய இரு அழகிய பற்களினால்,
மூழ்கிய பூமியைத் தூக்கி நிலை நிறுத்தினார்.
இது, பற்களிடையே சிக்கிய கோரைக்கிழங்கு போலக் காட்சி அளித்தது.

மேலும், ப்ரஹ் மாதி, ஸ்தாவர ,பிராணிகள், மற்ற எல்லாவற்றையும்– ஈன்றது.
அத்தகைய வராஹப் பெருமான் லோகத்தை ரட்சிக்க வேண்டும் …….
.( இந்த ச்லோகம் –நவ க்ரஹங்களில் ராகு , க்ரஹப் ப்ரீதிக்கு ஏற்றது என்றும் சொல்வர் )

2. வைனதேய மந்த்ரத்தைப் பலமுறை ஆவ்ருத்தி செய்து, ஸ்ரீ கருடன் ப்ரஸன்னமாகி,
ஸ்ரீ ஹயக்ரீவரை விக்ரஹ ரூபமாகக் கொடுத்து ஆராதிக்கச் சொல்ல,

ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹ–என்று தொடங்கி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் அருளினார்.

ஸ்ரீ ஹயக்ரீவனின் பரிபூர்ண கடாக்ஷத்தால், எல்லா வித்யைகளும் , போட்டி போட்டுக் கொண்டு,
ஸ்வாமி தேசிகனிடம் வந்து ப்ரார்த்தித்த போது,
ஸ்வாமி தேசிகன், ஞானமும், வைராக்யமும், சம்பந்தப்பட்ட வித்யைகளை மட்டில் பிரார்த்தித்து,
மீதி வித்யைகளை ,எப்போதெல்லாம் ப்ரார்த்தனை செய்யப்படுகிறதோ,
அப்போது வந்து அநுக்ரஹிக்க வேண்டினார்.

ஜ்ஞான பூஷணம் —- இதற்கு அவர் அருளிய க்ரந்தங்கள் ஒன்றா இரண்டா ? பலப் பல !
32 ரஹஸ்ய க்ரந்தங்கள்—-யாவும் ஜ்ஞானத்தின் சிகரங்கள்–
32 ஸ்தோத்ரங்கள் , 24 ப்ரபந்தங்கள் , 24 அநுஷ்டான சாஸ்திரங்கள் , 8 காவ்யங்கள் ,
1 பகவத் விஷயம் —
ஆக மொத்தம் 121

இவைகள் மாத்ரமல்ல, ஸ்வாமி தேசிகன் காலக்ஷேபங்கள் ஸாதித்த பாங்கு,
சிஷ்யர்களுக்கு ஏற்பட்ட சாஸ்த்ர சந்தேக நிவ்ருத்தி —–இப்படிப் பல ,
ஸ்வாமி தேசிகன் ஜ்ஞான பூஷணம் என்பதைச் சொல்கிறது.

———

இனி, வைராக்ய பூஷணம் —-
ஸ்வாமி தேசிகன் க்ரஹஸ்தாஸ்ரமத்தில், தினந்தோறும் , உஞ்ச வ்ருத்தி செய்து, உஞ்ச வ்ருத்தியில் கிடைக்கும்
அமுந்த்ரியை (அரிசி) பத்நியிடம் கொடுத்து, அந்த அரிசியைத் தளிகை செய்து,
திருவாராதனத்தில் தளிகை அமுது பண்ணுவிப்பது வழக்கம்.

இப்படி, ஒரு சமயம், ஸ்வாமி தேசிகன் உஞ்சவ்ருத்தி எடுக்கும்போது,
ஒரு தனிகரின் (பணக்காரர் ) பத்னி, ஸ்வாமி தேசிகனின் ஆசார்ய விலக்ஷண , பரம காருண்ய , பரம தேஜஸ்ஸால் ஈர்க்கப்பட்டு,
அன்றைய தினத்தில், அரிசியுடன் கூட சில தங்கக் காசுகளையும் சேர்த்து , உஞ்சவ்ருத்தி பாத்ரத்தில் சேர்த்து விட்டாள் .
ஸ்வாமி தேசிகன் இதைக் கவனிக்கவில்லை.
க்ருஹத்துக்கு வந்தார்——அரிசியை ஸஹதர்மிணியிடம் கொடுத்துவிட்டு, இவருடைய நித்யஅநுஷ்டானத்தைத்தொடங்கி விட்டார்.
ஸ்வாமியின் பத்னி, அரிசியை முறத்தில் சேர்த்து, அதை சோதிப்பது வழக்கம்.
அதாவது—சுத்தம் செய்வது—ஏதாவது கல் மண் போன்றவை இருப்பின் அதை நீக்குவது—
அப்படி சோதிக்கும் போது, இந்தப் பொற் காசுகளைப் பார்த்தாள் .
இவை என்னவென்று தெரியாமல், ஸ்வாமி தேசிகனிடம் வந்து,
“ஸ்வாமி இன்றைய உஞ்சவ்ருத்தியில் .., அரிசியுடன்கூட, ஏதோ பளபளவென்று மின்னுகிறதே …இது என்ன….? ” என்று கேட்டாள
ஸ்வாமி தேசிகன் முறத்தைப் பார்த்தார் ;அரிசியுடன்கூடப் பொற்காசுகளையும் பார்த்தார்;
“இதுபளபளவென்று இருப்பதாலேயே இது ஒரு புழு…விஷப் புழு….தூர வீசி எறிந்துவிடு…..” என்றார்.
பத்னியும் அப்படியே செய்தாள் .
வைராக்ய பூஷணத்துக்கு இது ஒரு உதாரணம்.

————–

இன்னொரு உதாரணம்—
“வித்யாரண்யர் ” என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அக்காலத்திய விஜய நகர சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர்.
இவரும், ஸ்வாமி தேசிகனும் சஹாக்கள் ( நண்பர்கள்)
வித்யைகளைப் பயிலும் போது ஆசார்யனிடம் இருவரும், , சிஷ்யர்கள்

அதாவது சஹ மாணவர்கள். வித்யைகளை எல்லாம் கற்றுத் தேறி, இருவரும் பிரிந்தார்கள்.
வித்யாரண்யர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரச குமாரியை ” ப்ரஹ்ம ராக்ஷஸ் ”பீடித்து இருந்த போது,
அரசனின் வேண்டுகோளின்படி, ப்ரஹ்ம ராக்ஷஸ்ஸை விரட்டி, ராஜகுமாரியைக் காப்பாற்றினார்.
அது முதல், ராஜ சபையில அத்யக்ஷர் . ஆஸ்தான வித்வான் ஆனார்.
செல்வச் செழிப்பு; அதிகாரம்; ஏகப்பட்ட மரியாதைகள் —-இப்படி வாழ்ந்து வந்தார்.
ஸ்வாமி தேசிகன், வைராக்ய பூஷணமாக இருப்பதும், ராமாநுஜ தர்ஸனத்தைப்
பரப்பி வருவதும், தேசமெங்கும் பரவியது. வித்யாரண்யரும் இதைக் கேள்விப்பட்டார்

தன்னுடைய சஹா ,தன்னை விடவும் ஞானத்தில் முதிர்ந்தவர், ஆசார்ய விலக்ஷணர்
இப்படி, உஞ்சவ்ருத்தி எடுத்துக் கொண்டு, வறுமையில் இருக்கும்போது,
தான் மாத்ரம் செல்வத்தில் புரளுவது சரியல்ல என்று எண்ணினார்.

அவரையும் விஜயநகர சாம்ராஜ்ய வித்வானாக ஆக்கினால், அவரது வறுமை அகன்று விடும் என்று தீர்மானித்தார்.
உடனே ஒரு தூதுவரைக் கூப்பிட்டார், ஒரு பத்ரிகையை . எழுதி, தூதரிடம் கொடுத்து ,ஸ்வாமி தேசிகனிடம் அனுப்பினார்.

அதிகப் ப்ரஸித்தி பெற்ற தூப்புல் குலத் திலகமே —–அடியேன் மூலமாக, தேவரீரின் புகழையும், கீர்த்தியையும் ,
விஜயநகர மஹாராஜா கேள்விப்பட்டு,சந்தோஷப்பட்டார்; அதுமுதல், தேவரீரை ஸேவிக்க ஆசைப்பட்டு,
தேவரீரையே த்யாநித்துக் கொண்டு இருக்கிறார்;
தேவரீரைத் தன்னுடைய தனத்தால் ஆதரித்து,தேவரீருடைய முகார விந்தத்திலிருந்து வரும் வாக் அம்ருதத்தில் மூழ்கித்
திளைக்க விரும்புகிறார்; தேவரீர், சிஷ்யவர்க்கங்களுடன் இங்கு விஜயநகரத்துக்கு—ஹம்பி நகருக்கு, எழுந்தருளி,
தேவரீரின் ஆதரவு பெற்ற அடியேனையும், சந்தோஷிக்கச் செய்யவேண்டும–என்று எழுதினார்.

இந்தப் பத்ரிகையைப் படித்த, ஸ்வாமி தேசிகன்,
க்ஷோணீ கோண சதாம்ச பாலந கலா துர்வார கர்வாந
க்ஷூப்யத் க்ஷூத்ர நரேந்த்ர சாடு சநா தந்யாந்ந மந்யா மஹே |
தேவம் ஸேவிதுமேவ நிஸ்சி நு மஹே யோஸௌ தயாஜ : புர
தாநா முஷ்டி முசே குசேல முநயே தத்தேஸ்ம வித்தே சதாம் ||–என்று பதில் ஸ்லோகம் எழுதி அனுப்பினார

அதாவது—-
இந்தப் பூமண்டலம் மிகப் பெரியது; இதில் ஏதோ ஒரு மூலையில், “ஏக தேசம்” என்று சொல்லிஅரசர்கள், ஆண்டுகொண்டு இருக்கிறார்கள் .
அவர்களை, அடியேன் துதிக்க விரும்பவில்லை. அரசர்களைத துதித்து, அதனால் வரும் தனமும் ஒரு பொருட்டாக அடியேனின் மனத்தில் படவில்லை.
பகவானைத் த்யானம் செய்கிறோம். அவரே எல்லாப் பலன்களையும், கொடுக்க வல்லமை படைத்தவர்
குசேலருக்குக் குபேர. சம்பத்தைக் கண்ணன் கொடுக்க, நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா !
அவன் பகவான்—-கொள்ளக் குறைவிலன்; வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் மணிவண்ணன
ஸ்ரீ நம்மாழ்வார் அருள்கிறார் —
சேரும் கொடை புகழ் எல்லையிலானை ,ஓராயிரம
பேரும் உடைய பிரானையல்லால், மற்றும் யான்கிலேன

வித்யாரண்யருக்கு இந்தப் பதில் போய்ச் சேர்ந்தது.
அவர் வருத்தப்பட்டார்.சிலகாலம் கழிந்தது. வித்யாரண்யரால் வெறுமனே இருக்க முடியவில்லை.
இன்னொரு பத்ரிகை எழுதி, தூதுவன் மூலமாக அனுப்பினார்.

அதையும் படித்தார், ஸ்வாமி தேசிகன்.
உடனே இந்தப் பத்ரிகைக்கும்பதில் எழுதினார்.
அதுதான் “வைராக்ய பஞ்சகம் ”

1-ஸிலம் கிமநலம் பவே தநல மௌதரம் பாதிதும
பய : ப்ரஸ்ருதி பூரகம் கிமு ந தாரகம் ஸாரஸம் |
அயத்ந மலமல்லகம் பதி படச்சரம் கச்சரம
பஜந்தி விபுதா : முத ஹ்ய ஹஹ குக்ஷித : குக்ஷித : ||

2. ஜ்வலது ஜலதி க்ரோட கிரீடத் க்ருபீட பவ ப்ரப
ப்ரதி பட படு ஜ்வாலா மாலா குலோ ஜடரா நல : |
த்ருணமபி வயம்ஸாயம் ஸம்புல்ல மல்லி மதல்லிக
பரிமள முசாவாசா யாசா மஹே ந மஹீச் வராந் ||

3. துரீச்வா த்வார பஹிர் விதர்த்திகா துராஸி காயை ரசிதோய மஞ்ஜலி |
யதஞ்ஜநாப ம் நிரபாய மஸ்தி மே தனஞ்ஜய ஸ்யந்தந பூஷணம் தநம் ||

4. சரீர பத நாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத
அபிந்தந தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் |
தனஞ்ஜய விவர்தநம் தந முதூட கோவர்த்தநம
ஸூ ஸா தந ம பாதநம் ஸூமநஸாம் ஸமாராதநம் ||

5. நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் நமயா கிஞ்சி தார்ஜிதம
அஸ்திமே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதா மஹம் தநம் ||

1-ஒருவனுக்கு, உயிர் வாழ்வதற்கு உணவு, தாகத்துக்குத் தண்ணீர், மானத்தை மறைக்க வஸ்த்ரம் போதும்.
இதற்காக, ராஜாவை அணுகி, இருக்கவேண்டும் என்பதில்லை.
வயல்களில் சிந்தி இருக்கும் நெல்மணிகள்—-உணவுக்குப் போதுமானது.
ஆறு,குளம்,குட்டை இவைகளில் உள்ள தண்ணீர் தாகத்துக்குப் போதுமானது.
வீதிகளில் சிதறிப் போடப்பட்டிருக்கும் கந்தைத் துணிகள் , மானத்தை மறைக்கப் போதுமானது .
இப்படி, இவை எல்லாம் சுலபமாகக் கிடைக்கக் கூடியதாய் இருக்க,
அரசனை அண்டி , அவனை ஸ்தோத்ரம் செய்து, / துதிகள் பாடி அவனிடம் யாசிக்கிறார்களே… பரிதாபம் !

2.ஸமுத்ரத்தில் , “வடவாக்னி ” என்கிற நெருப்பைப் போல ,
வயிற்றில் “ஜாடராக்னி ” வ்ருத்தியாகி பசி, தாகம் என்று கஷ்டப்பட்டாலும், சாயங்கால வேளையில், பூத்துத் தானாக மலர்கிறதே —
வாசனையுள்ள மல்லிகைப்பூ அந்த வாசனையை —– உடைய நமது வாக்கினால்,ஒருபோதும் அரசனை யாசிக்க மாட்டோம் .

3, அர்ஜுனனின் ரதத்தை அலங்கரித்த மைவண்ணன் கண்ணனின் தனம் நமக்கு இருக்கிறது. இந்தத் தனம் குறைவே இல்லாதது.
ஆதலால், துஷ்ட அரசர்களின் வாசலில் போய் தனத்துக்காக, துக்கத்துடன் காத்திருக்கும் நிலை நமக்கு வேண்டாம்–
ஹரியைத் துதித்து, உடனே கிடைக்கும் தனம் உபயோகமானது. சனகாதி முனிவர்களாலும், த்யானம் செய்ய இயலாத பகவானின் தனம்
எப்போது, எப்படிக் கிடைக்கும் என்று சிலருக்குத் தோன்றும். எண்ணலாம் ; அதற்குப் பதில் சொல்கிறேன், கேளும்—

4. ராஜாக்களை அண்டிப் பெறுகிற தனம், நிரந்தரமானதல்ல; தற்காலிகமாகப் பசி தாகத்தைப் போக்கும்;
நம்முடைய மரண பர்யந்தம் அவர்கள் கொடுக்கும் ஸ்வல்ப த்ரவ்யத்துக்காக அவர்கள் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கஷ்டத்தை,
அந்த அல்ப தனம் ஏற்படுத்தும். ஆதலால், அந்தத் தனம் உபயோகமில்லாதது;
நம்மால் ஆச்ரயிக்கப்பட்ட பகவான் என்கிற தனம், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து, மேன்மையை உண்டாக்கியது.
ஜாடராக்னியை மங்கச் செய்தது; தனவானின் தனம் அவனுக்குப் போஷகமாக இருக்கும்;
ஆனால், கோவர்த்தன கிரியைத் தூக்கி, கோக்களையும், கோபாலகர் களையும் காப்பாற்றியது,
பகவானாகிய தனம்; மேலும், தன்னை யார் ஆச்ரயிக்கிறார்களோ —
தேவர்கள் வித்வான்கள் என்று இவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தக் கூடியது.
ஆதலால், பகவான்தான் உயர்ந்த தனம்;

5. சுயார்ஜிதமோ, பிதுரார்ஜிதமோ அதன்மூலம் தனம் இருந்தால்,
அரசர்களை இவ்விதம் அலக்ஷியமாகப் பேசலாம்;
ஒன்றுமில்லாத உஞ்சிவ்ருத்தி செய்பவன், இப்படிப் பேசுதல் கூடாது என்று, நினைக்க வேண்டாம்;
ஹஸ்தி கிரியில், எழுந்தருளி இருக்கும் தேவப் பெருமாள் என்கிற தனம்
என்னிடம் இருக்கிறது; நாம் சம்பாதித்ததோ தகப்பனார் சம்பாதித்ததோ ஒன்றுமில்லை;
ஆனால், நம் பிதாமஹர் (ப்ரஹ் மா) சம்பாதித்த தனம் ஒன்று இருக்கிறது;
அத்திகிரியில் இருக்கிறது; அதை ஒருவராலும் அபகரிக்க முடியாது;
ப்ரஹ்மாவின் யாகத்தில் அவதரித்த தேவாதி ராஜனே, தேவப் பெருமாளே, நமக்குப் பெரிய தனம்

———–

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம் —–

ஸ்ரீமத்—-ஸ்ரீமதே —–
ஸ்ரீமதே, என்றால்,
ஆசார்யன் செய்ய வேண்டுவதாகச் சொல்லப்படுவது நான்கு—
-1. அத்யயனம் 2.அத்யாபனம் 3. ப்ரவசனம் 4.க்ரந்த லேகநம்—-இப்படிப்பட்ட ஆசார்யன்.
“சிஷ்ய வத்ஸலன் ” ஆகிறார்.

இந்த ஆசார்யன், உபதேசம் செய்து சிஷ்யர்களை ரக்ஷிக்கிறார் ;
இது ரக்ஷணம் . க்ரந்தம் மூலமாக, ரக்ஷிப்பது,” ஸூரக்ஷணம் “.
அதனால் தான், உபதேசம் மாத்ரமல்லாமல், க்ரந்தங்களையும் அருளிச் செய்த ஆசார்யர்களை,
” ஸ்ரீமதே வேதாந்த குருவே நம : ” ,
” ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ” என்று பக்தியுடன் அநுஸந்திக்கிறோம் .

ஸ்வாமி தேசிகன், உபதேசம் மாத்ரமல்ல, முன்னேயே சொன்னதைப் போல,
குதர்க்க வாதங்களை அழித்து, ஸத்ஸம்ப்ரதாயத்தை நிலைநாட்ட, வளர்க்க,
அனேக அருமையான க்ரந்தங்களைப் பொக்கிஷமாக அருளி இருக்கிறார்.
——–

வேங்கடநாதார்யம்—-

திருவேங்கட முடையானின், மறு அவதாரமே—ஸ்வாமி தேசிகன்.
” வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் ” என்கிறோம்.
“அர்ச்சையாய் நின்ற இடத்தில், ஆச்ரயணத்துக்கு உறுப்பான, ஸௌலப்ய சௌசீல்யாதி குணங்களைக் காட்ட முடியாமல்,
அதையே காரணமாகக் கொண்டு,உதாசீனர்களாயும், சத்ருபூதர்களாயும், நிற்கிற சேதனர்களைத் திருத்திப் பணிகொள்ள ,
பூர்வோக்தமான குண விசேஷங்களையும் கொண்டு,
” ஸ்ரீமத் வேங்கடநாத தேசிக ரூபேண” ,
எல்லாக் கல்யாண குணங்களையும், ப்ரகாசிப்பித்துக் கொண்டு ,ஆசார்ய ரூபராய் அவதரித்து, நின்றபடியைச் சொல்லிற்று. ……..

உடையவருக்குப் பிறகு, சுமார் 200 ஆண்டுகள் கழித்து, ஸ்வாமி தேசிகனின் அவதாரம்.
இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த ஸம்ப்ரதாயத்துக்கு நலிவு ஏற்பட்டிருக்க வேண்டும்..

வேதே ஸஜ்ஜாதகேதே முநிஜனவசனே ப்ராப்த நித்யாவ மானே |
ஸங்கீர்ணே ஸர்வ வர்ணே ஸதி ததனுகுணே நிஷ்ப்ரமாணே புராணே ||
மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச் சூன்ய வாதே அவிவாதே |
தர்மத்ராணாய யோதி பூத்ஸஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார : ||–ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் , ஸப்ததிரத்ன மாலிகாவில்,
.

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது, தென்குருகை வள்ளல்
வாட்டமிலா வண்தமிழ் மறை வாழ்ந்தது–மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்பு கண்டே.
என்று ஸ்ரீ உடையவரைப் பற்றிச் சொன்னார்.–திருவரங்கத் தமுதனார்,-இராமாநுச நூற்றந்தாதியில்,

ச்லோகத்துக்கும்,பாசுரத்துக்கும் என்ன ஒற்றுமை பாருங்கள் !

ஸ்வாமி தேசிகன் அவதரித்ததால், அழிந்த வேதங்கள் வளர்ந்தன;
புறக்கணிக்கப்பட்ட புராணங்கள் புத்துயிர் பெற்றன;
வர்ணாஸ்ரம தர்மங்கள் பழைய நிலைக்கு வந்தன;
பௌத்தம் போன்ற அவைதிக மதங்கள் ஒதுக்கப்பட்டன;–இப்படி அந்த ஸ்தோத்ரம் சொல்கிறது.

————–

” வேங்கடசா வதாரோயம் தத் கண்டாம் ஸோதவாபவேத் …..”—
திருப்பதி திருவேங்கட முடையானே , வேங்கடநாதனாக அவதரித்தான் .

————

இனி—–“-வந்தே வேதாந்த தேசிகம் ”

வேதாந்த தேசிகபதே விநிவேஸ்ய பாலம்
தேவோ தயா ஸதகமேத தவாத யந்மாம் |
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத ||–ஸ்வாமி “தயா சதக”த்தில் 104 வது ஸ்லோகத்தில் அருள்கிறார்.

அலகிலா விளையாட்டுடைய திருவேங்கட முடையான், மிகுந்த மகிழ்ச்சியோடு, சிறியனான என்னை
வேதாந்த தேசிக பீடத்தில் அமர்த்தி, கைகளில் மகர யாழை எடுத்துப் பாடச் செய்வதைப் போல,
இந்த “தயா சதகம்” என்கிற ஸ்தோத்ரத்தை, அடியேனைக் கொண்டு துதிக்கச் செய்தான் …..என்று ஸ்வாமி தேசிகனே , சொல்கிறார்.

இதைப் பிற்பாடு, திருவரங்கன், “வேதாந்தாசார்யன்” என்று அடியேனுக்குச் சூட்டினான்.
திருமலையில் உற்பத்தியானது, திருவரங்கத்தில் அரங்கேறி விட்டது. அரங்கம் என்றால் “ஸபை” தானே.

வந்தே வேதாந்த தேசிகம்
நம்முடைய நிலையை உணர்ந்து, ஸ்வாமி தேசிகனின் பரிவாஹத்துக்கு —
-தேஜஸ், புகழ், பெருமைக்கு எதிரிட மாட்டாதே வணங்கி “வந்தே..” என்று பலகாலம் சொல்லி,
வேதாந்த பதத்தாலே, உபய வேதாந்தத்தைச் சொல்லி,
தேசிக பதத்தாலே ஆசார்ய நிரூபணமாயிற்று…..

கண்ணானது, நாம் செல்லும் மார்க்கத்தை, நமக்குக் காட்டி, நாம் தவறான வழியில் சென்று படுகுழியில் விழாமல் இருக்க,
நல்ல மார்க்கத்தை —தர்ஸனம் செய்விக்கிறதோ—-காண்பிக்கிறதோ —-அதைப்போல, ராமாநுஜ ஸித்தாந்தம்
நம்முடைய வாழ்நாளில், நாம் நல்ல கதியை அடைய ,தேசிக தர்ஸனமாகக் கிடைக்கிறது. இவர்தான் தேசிகன் —

வந்தே வேதாந்த தேசிகம்.
ஸம்ஸாரத்தில் உழலுபவர்கள் க்ஷர புருஷர்கள். …….
அவர்களை, அக்ஷர புருஷர்களாக —முக்தர்களாக– மாற்றும்
ராமாநுஜ தயா பாத்ரமான ஸ்வாமி தேசிகன்,
ஜ்ஞான வைராக்ய பூஷணமான ஸ்வாமி தேசிகன்,
கணக்கில்லாத உபதேசம், காலக்ஷேபம் மாத்ரமல்ல –கணக்கில்லாத க்ரந்தங்களை அருளிய ஸ்ரீமத் வேதாந்த தேசிகன்,
திருவேங்கட முடையானே , திருவவதாரம் செய்து வேங்கடனாதனாக ஆன ஸ்வாமி தேசிகன்,
புகழ், பெருமை, தேஜஸ் என்று பற்பல குண ஆச்சர்யங்களால் “வந்தே” என்று, விழுந்து, விழுந்து வணங்கும்படி பண்ணும் ஸ்வாமி தேசிகன்,
உபய வேதாந்தங்களுக்கும் விளக்காக ஆகிய ஸ்வாமி தேசிகன் ஆசார்யர் களுக்கும் ஆசார்யனாக ஆனார்.
இன்னும், தனக்குப் பிந்தைய எல்லா ஆசார்யர் களுக்கும் ஆசார்யன் —அதாவது—தேசிகன

வந்தே வேதாந்த தேசிகம்—
ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

ராமானுஜ தயா பாத்ரம்—-ஸர்வ ஆசார்ய கடாக்ஷ சம்பத்து ——-என்றும்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்–கல்யாண குணங்கள் —–என்றும்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—அவதார வைபவம்—–என்றும்
வந்தே வேதாந்த தேசிகம்—உபய வேதாந்த ஸ்தாபன ப்ரவர்த்தனம்—-என்றும
மிக ஆச்சர்யமாக பூர்வாசார்யர்கள் அருளுவர்.

கோயில், திருமலை, பெருமாள் கோயில், மேல்கோட்டை என்கிற நான்கு திவ்ய தேசங்களையும், ஸந்த்யா வந்தன
காலங்களில் மூன்று வேளையும் சேவிக்கிறோம்;
அதாவது—-

ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம

இந்த ஸ்லோகத்தில் , கருணைக்கடல், காளமேகம், பாரிஜாதம், தீபம் என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம்
ராமாநுஜ தயா பாத்ரம்—-மேல் கோட்டையைக் குறிக்கலாம் ( திருநாராயணபுரம் )
இந்தத் தனியன் அவதரித்ததே அங்கு தானே என்பார்.
நம் இராமாநுச வைபவம், இங்கு உலகப் பிரஸித்தம்.

ஜ்ஞான வைராக்ய பூஷணம்—கச்சிநகரைக்குறிக்கலாம் ( காஞ்சீபுரம் )
ஸ்வாமியின் திவ்ய தேசம் மாத்ரமல்ல, வைராக்ய பஞ்சகம் போன்ற
பற்பல ஸ்ரீ சூக்திகள் அவதரித்த இடமல்லவா —என்பார்.

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்— திருப்பதியைக் குறிக்கலாம்;
ஸ்வாமி தேசிகன் திருவேங்கடமுடையானின் அவதாரமல்லவா —என்பார்

வேதாந்த தேசிகம்—-திருவரங்கத்தைக் குறிக்கலாம்;
பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் , ஸ்வாமிக்கு ,அருளப்பாடிட்டு அனுக்ரஹித்த திருநாமமல்லவா —என்பார்.
இவற்றை இப்படியும் பெரியோர்கள், அனுசந்திப்பர்;—

வேதாந்த தேசிகம்—-ஸ்ரீ ரங்கம் பெரிய கோவில்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் —- திருவேங்கடம்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-திருக்கச்சி பெருமாள் கோவில் –ஸ்ரீ ஹஸ்தி சைலம்
ராமாநுஜ தயா பாத்ரம் வந்தே—-யாதவாத்ரி கோவில் –யதி சைல தீபம

ராமாநுஜ தயா பாத்ரம் ——வந்தே
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-வந்தே
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—–வந்தே
வேதாந்த தேசிகம்——வந்தே–என்றும் , புகழ்ந்து உரைப்பர்.

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்——-விசேஷ்யம்
மற்ற மூன்றும்—-விசேஷணம் —
அதாவது,
பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் .
பிறருக்கு இவை சேராது.

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : —————இந்தத் தனியன் திருமந்த்ரத்துக்குச் சமம் என்றும்,
ராமாநுஜ தயா பாத்ரம் ——————-இந்தத் தனியன் த்வயத்துக்கு ஒப்பாகும் என்றும்
சீரொன்று தூப்புல் ——–இந்தத் தனியன் சரம ச்லோகத்துக்குச் சமம் என்றும் சொல்வார்.

——–

ஸ்ரீ மந் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வா மித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே ||(ஸ்ரீ நயினாசார்யருக்கான தனியன் )

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழிக்கு ஆறு தனியன்கள் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் —

May 22, 2021

1-ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்த தனியன் —

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹரம் –

பக்தாம்ருதம்
பத்தராகக் கூடும் –3-6-11-
தொண்டர்க்கு அமுது –9-4-9-என்றபடி

விஸ்வ ஜன அநு மோதனம்
பார் பரவின் கவி –7-9-4-
அடியார்க்கு இன்ப மாரி –4-5-10—என்கிறதைச் சொன்ன படி

ஸர்வார்த்ததம்
எல்லாப் பொருளும் விரித்தானை –4-5-5-என்னும்படி
ஸகல அர்த்த ப்ரதமமாய் இருக்கை –

மிக்க இறை நிலை –என்று தொடங்கி
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்கிறபடி
அறிய வேண்டிய அர்த்தம் எல்லாவற்றையும் அறிவிப்பிக்கும் என்கிறபடி –

ஸ்ரீ சடகோப வாங் மயம்
குருகூர் சடகோபன் சொல் –1-1-11-என்றபடி

ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம்
ஸஹஸ்ர சாகை -சாம விதமாய்
தத் சாரம் -சாந்தோக்ய உபநிஷத்தாய் –
அதின் சாரம் உத்கீதம் -என்றதாய்
அத்தை யாயிற்று இப்படிப் பாடி அருளிற்று என்றபடி –

வேத அரும் பெருமான் நூல்களை –9-3-3-
வண் தமிழ் நூலாக்கின –4-5-10-படி

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் இறே –

நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
அளவியன்ற அந்தாதி ஆயிரத்தை –1-4-11-
பத்தர் பரவும் –1-5-11-படி சொல்லிற்று –

——

கடலையும் சடகோபன் சொல்லையும் சமமாகச் சொல்லுகிறது –

பக்தாம்ருதம்

விண்ணவர் அமுது உண –பெரிய -6-1-2-என்னும்படி
விண்ணின் மீது அமரர் கட்காய -பெரியாழ்வார் –3-4-10-
தேவ போக்யமான அம்ருதத்தை உடைத்தாய் இருக்கும் அது

இது பாலோடு அமுது அன்ன ஆயிரம் –8-6-11-என்னும்படி
அவனித் தேவரான -8-4-10-
பூ ஸூரர்க்குப் போக்யமான அம்ருதமாய்
ஆரா வமுதத்தை -2-5-5- உடைத்தாய் இருக்கும் –

விஸ்வ ஜன அநு மோதனம்
ஸர்வ ஜன அபிமத ப்ரதமம் ஆகையாலும்
தர்ச நீயமாகையாலும்
ஸமுத்ரம் சர்வ ஜன சந்தோஷ வேஷத்தை யுடைத்தாய் இருக்கும் –

இதுவும் முதல் பத்தர் வானவர் என் அம்மான் பார் பரவ –ஆச்சார்ய ஹ்ருதயம் –187-என்னும்படி
சேஸ்வர விபூதி போக்யமாய் இருக்கும் –

ஸ்ரீ சடகோப வாங் மயம்
அதில் அம்பஸ்ஸூ அகஸ்த்ய வாங் மயமாய் இருக்கும்
இதில் சந்தஸ்ஸூ ஸ்ரீ சடகோப வாங் மயமாய் இருக்கும்
திரு வாய் மொழி இறே

ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம்
அது ஸர்வ ஸாகா ஸாரமான சந்தந ஸாகா சமாகத்தை சமீபத்தில் உடைத்தாய் இருக்கும் –
இது ஸர்வ வேதா ஸாரமான உபநிஷத்துக்கள் திரட்சியாய் இருக்கும் –

நமாம் யஹம் திராவிட வேத சாஹரம்
அந்த சாஹரம்
அஞ்சலிக்கு பிராங் முக க்ருத்வா -என்னும் படி
அசரண்யனுக்கு சரண்யமாய் இருக்கும்
வண் தமிழ் நூல்களான இது -4-5-10-சடகோபன் பாட்டு என்றவாறே
நாடு அடைய கை எடுக்கும்படியாய் இருக்கும் –
நமாம் யஹம் -என்று நாடு எல்லாம் அனுசந்திக்கக் கடவர்கள் இறே

——–

வந்தே ராமாயண ஆர்ணவம் -என்னுமா போலே

ஸ்லோக ஜால ஜலாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம்
காண்ட க்ராஹா மஹா மீநம் வந்தே ராமாயண ஆர்ணவம்

அங்கே சதுர் விம்ச ஸஹஸ்ரம்
இங்கே சீர்த் தொடை ஆயிரம் -6-7-11-
தீர்த்தங்களாய் இருக்கும் -7-2-11-

அங்கு ஐநூறு சர்க்கம்
இங்கு பத்து நூறு -6-7-11-என்னும்படி இருக்கும்

அங்கு ஷட் காண்டமாய் இருக்கும்
இங்கே ஷட் பதார்த்த ப்ரதிபாதகமாய் பத்துப் பத்தாய் இருக்கும்

அது ராமாயண ஆர்ணவம்
இது திராவிட வேத சாகரம்

அது ரகு வம்ச சரிதமாய் இருக்கும்
இது முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமாய் இருக்கும் –7-2-11-

அது வால்மீகிர் பகவான் ருஷி என்னும்படி வால்மீகி ப்ரோக்தம்
இது குருகூர்ச் சடகோபன் சொல்லாய் –9-6-11-இருக்கும் –

அது மஹா பாதக நாஸினமாய் இருக்கும்
இதுவும் அருவினை நீறு செய்யுமதாய் இருக்கும் —3-5-11-

அது ஸம்ஸாரம் ஸ விஹாய கச்சதி புமான் விஷ்ணோ பதம் ஸாஸ்வதம் -என்று பலமாய் இருக்கும்
இதுவும் -வானின் மீதி ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே –8-4-11- என்று
திருவடியே அடைவிக்கும் -4-9-11-

————-

2-ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்

ஆழ்வார் திருவடிகளை
அவர் சம்பந்தம் உடைய நாட்டோடும் ஊரோடும் ஆற்றோடும் வாசி அற எல்லாவற்றையும் சேர்த்து
ப்ரஸன்னமான மனஸே -அனுசந்தித்துப் போரு -என்கிறது –

வைகுந்தச் செல்வனார் –நான்முகன் –75-சேவடி யோபாதி
வைகுண்ட வானாடும் -பெரிய திரு –68-
இறந்தால் தங்குமூரான –பெரிய –10-2-10-
கண்ணன் விண்ணூரும் –திரு விருத்தம் -47-
அமுத விரசை ஆறும் -ஆர்த்தி –20-
உத்தேச்யமாம் போலே இங்கும் இவை உத்தேச்யம் ஆகிற படி –

திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —

இத்தால் ஆழ்வார் திருவடிகளைச் படி சொல்கிறது –
கவள யானைக் கொம்பு ஓசித்த கண்ணன் என்றும் -என்று தொடங்கி —
பார்த்தன் பள்ளி பாடுவாளே –பெரிய –4-8-1-என்னுமா போலே

திரு வழுதி நாடு என்றும்
வாய்த்த வழுதி வள நாடன் -5-6-11- என்று
நிரூபகமாக இறே அது தான் இருப்பது –
அவர் ஸம்பந்தத்தால் அவரோ பாதி அதுவும் அனுசந்தேயமாய் இருக்கும் ஆகையால் திருவடிகள் நாட்டோடே நடக்கிறது –

தென் குருகூர் என்றும்
குருகூர் நகரான் -திரு விரு -100–என்று அவர் இருக்கும் ஊர் ஆகையாலே அதுவும் அப்படியேயாய் இருக்கை –

மருவினிய வண் பொருநல் என்றும்
மருவ இனிதான வண் பொருநல் -என்றபடி –
பொருநல் சங்கணித் துறைவன் –10-3-11- இறே
இதுவும் இவர் இறங்கும் துறை
அவர் திருவடிகளும் இறங்கும் துறை
நல் ஞானத் துறை -திரு விரு –93-
வண் சடகோபனைப் போலே இதுவும் வண்மை யுடைத்தாய் இருக்கும் –

ஸவித்ரீ முக்தாநாம்
இப்படி விலக்ஷணமான
நாடும்
நகரும்
துறையும்
என்று அனுசந்தித்து

அரு மறைகள் அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும் சிந்தியாய் நெஞ்சே தெளிந்து —
அதாவது
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச்
சிந்தையுள்ளே சிந்தித்துப் போரு -என்கை

குரு பாதாம் புஜத் த்யாயேத் -என்கிறபடியே
திருவடிகளையே சிந்தித்துப் போரு –
மற்று ஒன்றிலே மருளாதே தெளிந்து அவ்வடியை அனுசந்திக்கப் பார் –

அன்றிக்கே
வேதத்திலே -வைகுண்ட புவன லோகம் -என்று நாட்டையும்
யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் -என்று
அம்ருத வாஹினியான விரஜை ஆற்றிலே ஆவ்ருதமான வைகுண்ட நகரத்தையும்

விஷ்ணோ பத பரமே மத்வ உத்ஸ-என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
அவன் திருவடிகளையும் உபநிஷத்துக்கள் ஓதினால் போலே

அந்த அருமறையின் தாத்பர்யமான அர்ச்சாவதாரமான ஆதிப்பிரானதான திரு வழுதித் திரு நாட்டையும்

திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் –4-10-1-என்னும்படி அவன் வர்த்திக்கிற ஊரையும்

ஊருக்கு வடக்கான வண் பொருநல் ஆற்றையும்

அங்கே நிற்கும் ஆதிப்பிரானுடைய நீள் கழலையும் –1-9-11-இறே -திருவாய் மொழியில் சொல்லிற்று

இது மற்றை உகந்து அருளின நிலங்களில்
ஆற்றுத் துறைக்கும்
ஊருக்கும்
நாட்டுக்கும் உப லக்ஷணம் —

குட்ட நாடு -என்று இறே நாட்டையும் அருளிச் செய்து போருவது
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்-என்றும்
தண் புனல் சூழ் திருவரங்கத்து உள்ளாய் -என்றும் –
ஊரையும் ஆற்றையும் அருளிச் செய்தது –

இப்படி யாயிற்று
திவ்ய தேச
திவ்ய நகர
திவ்ய நதிகளின் வைபவத்தையும் -திருவாய் மொழி முகேன தர்சிப்பித்தது –

ஆக மூர்த்தியில் பண்ணின தமிழனா படி –ஆச்சார்ய ஹ்ருதயம் –

திரு நாமப் பாட்டுக்கள் தோறும் தமக்கு நிரூபகமாகவும்
ஊரையும்-நாட்டையும் –ஆற்றையும் -பாடுகையாலே -அது தான்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளாக அருளிச் செய்கையாலே அத்தைப் பற்ற —
திரு வழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும்
அரு மறைகள் அந்தாதி செய்தான்–என்று இங்கனே சொல்லுகிறது ஆகவுமாம் –

திரு வழுதி நாடு என்றும் -சிந்தியா என்னுதல் –
திரு வழுதி நாடு என்றும்-அரு மறைகள் அந்தாதி செய்தான் -என்னுதல்
ததீய வைபவம் இறே வேத தாத்பர்யம் அறுவது –

இப்படி வேதத்தைத் த்ராவிடமாகச் செய்த திராவிட உபநிஷத் ஆச்சார்யருடைய
அங்கரி யுகங்களை –
தெளிவுற்ற சிந்தையர் -7-5-11-
தெளிந்த என் சிந்தை –9-2-4-என்னுமா போலே
உபாய உபேயம் என்று தெளிந்து
மனஸே ஸந்ததம் ஸ்மரித்துப் போரு -என்று ஆழ்வார் திருவடிகளே அனுசந்தேயமாகச் சொல்லிற்று —

——-

3-ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

இதில் ஆழ்வார் திருவடிகளே
ப்ராபகமும் ப்ராப்யமுமாகிற படியை
அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் தர்சிப்பிக்கிறது

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன்
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணுகை யாவது
திருக்குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின் –4-10-9-
திருக்குருகூர் அதனைப் பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் –4-10-2-என்று
ஆழ்வார் உபதேசம் கேட்ட படியே
மனஸ்ஸாலே நினைத்தும்
வாயாலே சொல்லியும்
போருகை —
பேணுகை -விரும்புகை –

யத்தி மனஸா த்யாயதி தத் வாஸா வததி -என்னக் கடவது இறே –
இப்படி ஆழ்வார் சம்பந்தம் உடைய தேசத்திலே விருப்பம் உடையவர்களை அடைய பஜித்தேன் –
ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளை ஒழிய அந்நியரை ஆதரித்துப் பஜியேன்

வண் குருகூர் பேணும் இனத்தாரை
நல்லார் நவில் குருகூர் –திரு விருத்தம் –100- இறே

இனத்தார்
ஸமூஹமாய் உள்ளவர்கள்
அன்றிக்கே
ஸஜாதீயர் -என்னவுமாம்
இத்தால்
குருகூர் சடகோபன் பாட்டான திருவாய் மொழியிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸமூஹத்தை -என்றபடி –
குழாம் கொள் திருக்குருகூர் இறே –2-3-11-

இத்தால்
திருவாய் மொழியில் அதி பிரவணர் ஆனவர்களை ஒழிய அந்நியரை ஆதரியேன் என்றதாயிற்று –

இப்படி அந்நியரை அநாதரிக்கைக்கு அடியுடைமை சொல்லுகிறது –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் -என்று –
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்கிறபடியே
ஆழ்வார் திருவடிகளைப் பற்றின நமக்கு –
விபூதிஸ் ஸர்வம் -என்னும் படி
தனத்தாலும் ஏதும் குறைவிலேன்-ஒன்றும் குறை உடையேன் அல்லேன் –

எந்தை சடகோபன்
அன்னையாய் அத்தனாய் -கண்ணி -4-
மாதா பிதா –என்னும்படி
எனக்கு ஜனகரான ஆழ்வார் –

பாதங்கள்
ப்ராப்த சேஷியானவர் திருவடிகள் –

யாமுடைய பற்று –
தச் சேஷ பூதரான நம்முடைய பற்று –
தகையார் சரணம் தமர்கட்க்கு ஓர் பற்று –10-4-10—
யாமுடைய பற்று இதுவாயிற்று –

———-

4-ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது —

இனி சடகோபன் பாதங்கள் -என்றத்தை
விவரியா நின்று கொண்டு
திருவாய் மொழி ஹ்ருத் கதமாம் படி
ஆழ்வாருக்கு பரதந்த்ரரான உடையவர் திருவடிகளைத் தொழா நின்றேன் -என்கிறது –

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -3-9-11-என்னுமா போலே
அங்குத்தைக்கு அனுரூபமாய்ப் பொருந்தி இருக்கிற பெரிய புகழை யுடைய
எம்பெருமானார் தம்முடைய

வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஒன்றுக்கு ஓன்று பொருந்தி இருப்பதாய் மலர் போன்ற திருவடிகளை பிரணதி பண்ணா நின்றேன் –
ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே என்கிறபடியே
ப்ராப்ய புத்த்யா வர்த்தமானமாய்ச் செல்லுகிறது –

இப்படி வணங்குகிறது எதுக்காக என்னில்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –

ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன்
ஆய் கொண்ட சீர் -3-9-9- என்றும்
ஆய பெரும் புகழ் –3-9-8- என்றும் சொல்லுகிறபடி
ஆயப்படும் -வி லக்ஷணமாய் நிரவதிகமான கல்யாண குணங்களால் -பூர்ணரான ஆழ்வாருடையதாய்
அதி ஸூ லபமான திராவிட வேதத்தைத் தரிக்கும் படி நிஸ் ஸலமான மனஸ்ஸைப் பெற

அன்றிக்கே
ஆய்ந்த பெரும் சீர் என்று –
செந்தமிழ் வேதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- இறே
இந்தப் பிரபந்த தாரண அர்த்தமாக
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்

தீ மனம் கெடுத்து —2-7-8-
மருவித் தொழும் மனத்தை –2-7-7- ஆச்சார்யன் தர வேணும் இறே —
ஆகையால்
தங்கு மனம் நீ எனக்குத் தா –பெரிய திருமொழி தனியன் -என்னும்படி
பேராத வுள்ளம் பெற -என்று
எம்பெருமானாரைப் பிரார்த்திக்கிறது –

அதாவது
இவர் தான் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவராய்
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை –இராமா -46- என்றும்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த ராமானுஜன் -இராமா –29-என்றும்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாக யுடையராய் –இராமா –64-
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் இருக்குமவராய் –இரா –60-
உறு பெரும் செல்வமும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் என்று அறிதர நிற்குமவர் ஆகையாலும் –இராமா -19-
அவர் திருவடிகள் ராமானுஜர் ஆகையால் –
இவரை அர்த்திக்கிறது –

மற்றை ஆழ்வார் திவ்ய பிரபந்தங்களை அங்க உப அங்கமாக உடைய இவருடைய திராவிட வேதமான திவ்ய பிரபந்தம் ஒழிய
தத் இதர கிரந்தங்களில் சபலமான மனஸ்ஸூ சலியாமல்
இது ஒன்றிலுமே உற்று நிலை நிற்க வேணும் என்று அவரை அர்த்திக்கிறது -என்கை —

————

5- ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

இனி இதில்
திருவாய் மொழியினுடைய உத்பாதகரையும்
வர்த்தமானரையும் -சொல்லுகிறது

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால்
வளர்த்த இதத்தாய் இராமானுசன்

வான் திகழும் சோலை -ஆவது
ஆகாசத்திலே திகழ்கிற பிரகாசிக்கிற சோலை என்றபடி –
வ்ருஷ ஷண்ட மிதோ பாதி –
வான் ஏந்து சோலை
சோலை அணி –திருவரங்கம் இறே –

மதிள் அரங்கர்
திண் கொடி மதிள் சூழ் -திருமாலை –14-
மதிள் திருவரங்கம் –7-2-3-
அதுவும்
வானை யுந்து மதிளாய் இருக்காய் –திருமாலை -9-10-4-

வான் திகழும் சோலை
உயர்ந்த சோலையையும் மதிளையும் யுடைய கோயிலிலே நிரூபகமான பெரிய பெருமாளுடைய –
ஸ்லாக்யமான கல்யாண குண விஷயமாய் விஸ்திருதமாயிற்று ஆயிரம் திருவாய் மொழியும்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் –7-2-11-என்னக் கடவது இறே

அது தான்
சீர்த் தொடை ஆயிரம் –1-2-11- என்று சீர் கலந்த சொல்லாய் இறே இருப்பது –
நலமுடையவன் –1-1-1-
ஈறில வண் புகழ் நாரணன் -1-2-10-என்று உபக்ரமித்து
வாழ் புகழ் நாரணன் –10-9-1-என்று இறே தலைக்கட்டி அருளினார் –

பெரிய பெருமாள் தான் நலம் திகழ் நாரணன் –பெருமாள் –10-11- இறே –
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயணா பரா வேதா –என்னக் கடவது இறே —
அத்தாலே -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்-என்கிறது –

இனித்தான்
திருவாய் மொழி பத்துப் பத்தாலும் ப்ரதிபாதிக்கிற
1-பரபரன் –1-1-8- என்கிற பரத்வமும்

2-சோராத எப்பொருட்க்கும் ஆதி -2-1-11-என்கிற காரணத்வமும்

3-முழுதுமாய் முழுதியன்றாய் –3-1-8-என்கிற வியாபகத்வமும்

4-மறுகல் ஈசன் –4-1-10- என்கிற நியந்த்ருத்வமும்

5-ஆவா என்று அருள் செய்து -5-1-6- என்கிற காருணிகத்வமும்

6-ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் –6-1-10-என்றும்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண் –6-3-7-என்றும் –
சொல்லுகிற சரண்யத்வமும்

7-எண்ணிலாப் பெரு மாயன் –7-1-1- என்கிற சக்தி மதத்வமும்

8-தேவிமார் ஆராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –8-1-1- என்கிற ஸத்ய காமத்வமும்

9-எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –9-1-1-என்கிற ஆபத் ஸகத்வமும்

10-சுரி குழல் கமலக் கட் கனிவாய்க் காள மேகம் –10-1-1-என்ற ஆர்த்தி ஹரத்வமும்

ஆகிற அதில் பத்து அர்த்தமும்
பெரிய பெருமாளைப் பிரதிபாதிக்கிற
கங்குலும் பகலிலும் –7-2- காணலாய் இருக்கும் –

1- வடிவுடை வானோர் தலைவனே -7-2-10-என்று பரத்வமும்

2-முன் செய்து இவ்வுலகம் -7-2-2- என்றும்
விண்ணோர் முதல் -7-2-6- என்றும்
காரணத்வமும்

3-கட்கிலி–7-2-3- என்றும்
என்னுடை ஆவி -7-2-9-என்றும் வியாபகத்வமும்

4- பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் –7-2-7–என்றும்
கால சக்கரத்தாய்–7-2-5- –என்றும்
மூ உலகாளி –7-2-10- என்றும்
நியந்த்ருத்வமும்

5- இவள் திறத்து அருளாய் –7-2-6–என்று காருணிகத்வமும்

6-பற்றிலார் பற்ற நின்றானே -7-2-7- என்று சரண்யத்வமும்

7- அலை கடல் கடைந்த ஆரமுதே –7-2-5- என்று சக்தி மத்வமும்

8-என் திருமகள் சேர் மார்பனே –என்றும்
நில மகள் கேள்வனே –என்றும்
ஆய் மகள் அன்பனே –7-2-9- என்றும்
சக்தியால் நித்யமாகக் கற்பித்த பத்நீ பரிஜா நாதிகளை யுடைய ஸத்ய காமத்வமும்

9- இவ்வுலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் -7-2-2- என்று ஆபத் ஸஹத்வமும்

10- முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் –7-2-11- என்று ஆர்த்தி ஹரத்வமும் அருளிச் செய்தார் இறே –

ஆக -எல்லாவற்றாலும் –
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்னத் தட்டு இல்லை இறே

ஆழ்வார்களில் நம்மாழ்வார் அதிகரானால் போலே
எம்பெருமான்களில் நம் பெருமாள் அதிகாரய் இறே இருப்பது
அத்தைப் பற்றவும் சொல்லிற்று –

இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்
நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே

வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் –
வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று
ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் –
இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே

மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது –
ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று –
இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் –
தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-3-17–
வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து –
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8-
போதர் கண்டாய் –2-9-6-
தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று
குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி
தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து
காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து
அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி
நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே
பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –

அது எங்கனே என்னில் —
இங்கும் ஆழ்வார் அவதரித்து
அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகளால்
பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத்
திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி
திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் –
ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —

—————

6- இதுவும் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ பதிஸ் சேதனஸ் யாஸ்ய ஹேதுத்வேந ஸமாஸ்ரித
அநிஷ்ட ஹானிம் இஷ்டஸ்ய ப்ராப்திஞ்ச குருதே ஸ்வயம் –என்று
சகல வேத ஸங்க்ரஹமான திரு பத த்ரயத்தாலும் ப்ரதிபாதிக்கப் படுகிற அர்த்த பஞ்சகத்தை
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் –8-8-11-என்னும்படி
ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனாலே
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருமாலவன் கவியான –திரு விருத்தம் –48-
திருவாய் மொழி பிரபந்தம் ப்ரதிபாதித்த பிரகாரத்தை இத் தனியனிலே சொல்லித் தலைக் கட்டுகிறது –

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கி இயலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்து இயல் —

மிக்க இறை நிலை–யாவது
இறை நிலை உணர்வு அரிது -1-2-6-என்னும் படியான சர்வ ஸ்மாத் பரத்வம்
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமஞ்ச தைவதம்
நாராயண பரஞ்சோதி
தத்வம் நாராயண பர
மனிசர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ –8-1-5-
தேவ தேவனே -3-6-2-
பரஞ்சோதி நீ பரமாய் –2-1-3-
மிகுஞ்சோதி -2-2-5-
முழுதுண்ட பரபரன் –1-1-8-
வானோர் இறை –1-5-1-
கழி பெரும் தெய்வம் –திரு விருத்தம் –20-
பெரும் தெய்வம் -4-6-2-
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை –8-1-11-
திருவுடை அடிகள் -1-3-8-
திரு மகளார் தனிக் கேள்வன் பெருமையுடைய பிரானார் –1-6-9-
திரு மா மகள் கேள்வா தேவா –6-10-4-
என்றும் சொல்லப்படுகிற சர்வ ஸ்மாத் பரனை ஆயிற்று -மிக்க இறை என்கிறது –

திரு மங்கை நின்று அருளும் தெய்வம் -ராமா -57-
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்–முதல் -64 –
திருவில்லாத் தேவரை தேறேன்மின் தேவு -நான்முகன் -53-
என்னக் கடவது இறே
இது வாயிற்று பர ஸ்வரூபம் –

இறை நிலையாவது
ஸுலப்யத்துக்கு அவ்வருகு இல்லாதபடி முடிந்த நிலமான ஆஸ்ரய பரதந்த்ரத்தோடே நிற்கிற
அர்ச்சாவதாரம் என்கை –
அத்தை ஆயிற்று
எளிவரும் இயல்வினன் –1-3-2- இத்யாதியில் சொன்னது –
இது இறே ஈஸ்வர ஸ்வரூப யாதாத்ம்யம் –

மெய்யாம் உயிர் நிலை–யாவது
உருவியந்த இந்நிலைமை –1-2-6-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் –1-2-10-
உணர்வைப் பெற ஊர்ந்து–8-8-3-
நின்ற ஒன்றை –8-8-4-
உயிர் வீடு உடையான் –1-2-1- என்றும்
ப்ரக்ருதே பரனாய்
ஞான ஆனந்த ஸ்வரூபனாய்
ஞான குணகனாய்
நித்யனாய்
ஈஸ்வரனுக்கு சரீரவத் பரதந்த்ரனான படியைச் சொல்லுகிறது

மெய்யாம் உயிர் என்கையாலே
ஸத்யஞ்ச–என்றும்
உள்ளதும் -1-2-4- -என்றும் –
மெய்ம்மையை —திருமாலை –38-என்றும் –
சொல்லுகையாலே ப்ரக்ருதி ஸ்வபா வத்திலும் காட்டில் ஆத்ய ஸ்வரூப நித்யத்வம் சொல்லிற்று –

அன்றிக்கே
மெய்யாம் உயிர் நிலை -என்கையாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -என்கிறபடி
உள்ளவதன் உரு –சரீர சரீரி பாவம் சொல்லிற்று ஆகவுமாம்

உயிர் நிலை யாவது
மெய்ம்மையை மிக உணர்ந்து —திருமாலை –38-
என்கிறபடியே
தம் அடியார் அடியோங்கள் –3-7-10-என்றும்
தொண்டன் சடகோபன் –7-1-11-என்றும்
சிறு மா மானிசராய் என்னை ஆண்டார் -8-10-3- என்றும் –
ததீய பர்யந்தமான நிலை —
இது இறே ஸ்வ ஸ்வரூப யாதாத்ம்யம் –

தக்க நெறி–யாவது
அத்யந்த பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு அனுரூபமான உபாயம்
அல்லாதது
தகாத நெறியாய் இறே இருப்பது –
நெறி காட்டி நீக்குதியோ –பெரிய திரு –6-என்னக் கடவது இறே –
நீ யம்மா காட்டும் நெறி –பெரிய திரு –5-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் –9-1-10-

சரீர ரக்ஷணம் சரீரிக்கே பரம் இறே
மாஸூச
என்னுடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -என்று இறே அவன் வார்த்தை

எம்மை ஆளும் பரமா –3-7-1- என்று
ததீய சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பர் –3-7-7-என்றவர்களே உபாயமாகவும் வேணும் இறே –
தக்க நெறி
ததீய உபாயமாகவுமாம் –
உபாய யாதாத்ம்யம் இதுவே இறே –

தடையாகித் தொக்கி இயலும் ஊழ் வினை–யாவது
விரோதியாய்த் திரண்டு வர்த்திக்கிற ப்ராரப்த கர்மம் -என்கை –
முன் செய்த முழு வினை –1-4-2-
பாரமாய பழ வினை –அமல –4-என்னக் கடவது இறே

ஊழ்மை –பழமை
வினை -கர்மம்

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் –திரு விருத்தம் –1-
அவித்யா கர்மா வாஸனா ருசி ப்ரக்ருதி சம்பந்தம்
பகவத் ஸ்வரூப திரோதாநகரி இறே தேகம்

விரோதி ஸ்வரூப யாதாத்ம்யம்
அஹங்கார –மமகாரங்கள்
யானே என்னை அறிய கிலாத யானே என் தனதே என்று இருந்தேன் –2-9-9-
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து –1-2-3-
பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம்
முன்னமே –திரு விருத்தம் –95-
என்னும்படி அநாதியாய்ப் போருவது –

இது தான் அனுகூலர் பக்கல் அநாதாரத்தைப் பிறப்பிக்குமதாய் இருக்கும் –
அது தான் தேஹ ஆத்ம பிரம மூலமாகையாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்தில்
ஜென்ம நிரூபணத்தில் மூட்டி -அநர்த்தத்திலே பர்யவசிக்கும் –
அதிலே ஓன்று அவர்கள் பக்கல் ஜென்ம நிரூபணம் –ஸ்ரீ வசன பூஷணம் –195-என்றார் இறே –
மன் பக்கல் சேவிப்பார்க்கு அன்பு செய்வார் சென்ம நிரூபணமும் ஆவிக்கு நேரே அழுக்கு -ஸப்த காதை –5-
என்று ஆயிற்று அதன் குரூரம் இருப்பது –
அமரவோரங்கம் இத்யாதி –திருமாலை

வாழ் வினை-யாவது
வாழ்வை -என்றபடி –
வாழ் வினை -என்று முழுச் சொல்
வாழ்வாவது
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சியைப் பெற்று –3-2-4-
வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர் –3-3-11-என்றபடி –

தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –2-9-4-
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -10-3-8-
என்று அவன் உகந்த படியே செய்து ஆனந்திக்கை –

அன்றிக்கே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -என்கிறபடியே
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை —10-9-11-
என்றும் சொல்லுகிற பரம ப்ராப்யம் ஆகவுமாம் –
இதுவே இறே ப்ராப்யத்தின் எல்லை நிலம் –

ஓதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் —
இந்த அர்த்த பஞ்சகத்தையும் ஓதுகையாவது –
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் –இத்யாதியில்
முந யஸ்ய மஹாத்மநோ வேத வேதார்த்த வேதிந வதந்தி –என்கிறபடியே —
சடகோப முனியான இவர் ஸ்ரீ ஸூக்தியும்

இமையோர் அதிபதி அடியேன் மனனே பொய் மயர்வு பிறந்து அருளினன் விண்ணப்பம்
தொழுது எழு என்று பஞ்சகத்தையும் இறே அடியிலே யாயிற்று சொல்லிற்று –ஆச்சார்ய ஹ்ருதயம் –212–

உயர் திண் அணை ஓன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒரு கொண்ட
நோற்ற நாலும்
எம்மா ஒழிவில் நெடு வேய் –என்கிற
இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே அஞ்சையும் என்று இறே
ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூ க்திகள் –

குருகையர் கோன் யாழின் இசை வேதம் ஆவது –
ஸம்ஸ்க்ருத வேதம் போலே தான் தோன்றி இன்றிக்கே
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் -என்னும்படி
ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட அதிசயத்தை உடையதாய் —
யாழின் இசையே –5-3-6- என்று
கான ஸ்வரூபியான ஸர்வேஸ்வரனை ப்ரதிபாதிக்கையாலே
பண்ணார் பாடல் –10-7-5-
பண்புரை இசை கொள் வேதம் –ஆச்சார்ய ஹ்ருதயம் –50-
என்னலாம் படி
பண் கொள் ஆயிரம் –3-6-11-
என்று சாம வேதம் போலே சரசமாய் இருக்கை –

இதனுடைய வேத சாம்யம் எல்லாம் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் விசதமாக அருளிச் செய்துள்ளார் —
அதிலே கண்டு கொள்வது –

விண் மீது இருப்பாய் –6-9-5–என்கிற பாட்டிலே பர ஸ்வரூபம் காணலாம் –

ஆத்ம ஸ்வரூபம் -அடியார்ந்த வையத்திலே –3-7-10-காணலாம்

உபாய ஸ்வரூபம்–உழலையிலே -5-8-11- காணலாம் —

விரோதி ஸ்வரூபம் –அகற்ற நீ வைத்த –5-6-8- என்கிறதிலே காணலாம்

பலம் -உற்றேனிலே —-10-8-10-உணரலாம்

அர்த்த பஞ்சக ஞானத்தாலே இறே
அந்தமில் பேர் இன்பத்து இன்புறுகையும் -என்று அறுதி இட்டு அருளிற்று –

எண் பெருக்கு அந்நலத்திலும் –1-2-10-
எனக்கே ஆட் செய் –2-9-4-
ஒழிவில் காலம் –3-3-1-
வேங்கடங்கள் –3-3-6-
சீலமில்லா –4-7-1-
களைவாய் –5-9-8-
ஞாலத்தூடே –6-9-3-
என்கிற பாட்டுக்களிலும் —

திரு மந்த்ரத்திலும் காணலாய் இருக்கும் —
அகாரத்தாலும்
மகாரத்தாலும்
ரக்ஷகனையும் ரஷ்யத்தையும் சொல்லி

சதுர்த்தியாலும்
உகாரத்தாலும்
ரக்ஷண ஹேதுவான பிராப்தியும் பலத்தையும் சொல்லுகிறது –

ச விபக்தி கதமான நாராயண பதத்திலே
சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளிலே கைங்கர்யத்தைச் சொல்லுகையாலே
திருமந்திரம் –அர்த்த பஞ்சக ப்ரதிபாதகம் என்னும் இடம் ஸ்பஷ்டம் இறே

ஆகையாலே திருவாய் மொழியிலே பிரதிபாதிக்கிற அர்த்தம் எல்லாம் அர்த்த பஞ்சக ப்ரதிபாதகமான
திருமந்த்ரார்த்தம் என்னத் தட்டு இல்லை

ஸ்ரீ பதி ஸ சேதனஸ் யாஸ்ய –பன்னீராயிரப்படி பிரவேசம்
என்கிற ஸ்லோகத்தில் அருளிச் செய்த அர்த்த பஞ்சகமும்
இதில் இரண்டு பத்தாலே ஒரோர் அர்த்தம் ப்ரதிபாதிக்கப் படுகிறது -என்று
திருவாய் மொழியின் பிரவேசத்தில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தார் இறே

திலதம் உலகுக்கான திரு வேங்கடத்தானை
அலகில் புகழ் அந்தாதி ஆயிரமும் -உலகில்
உரைத்தான் சடகோபன் உத்தமர்கள் நெஞ்சில்
விரித்தான் பெரும் பூதூர் வேந்து

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சொட்டை நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நாதமுனிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ தயா பாத்ரம் – ஸ்ரீ தேசிகனின் வைபவத்தின் வைபவம்-ஸ்ரீ உ.வே அனந்த பத்மநாபாசாரியார் ஸ்வாமி–

February 2, 2021

ஸ்ரீ ராமானுஜ தயா பாத்ரம் – ஸ்ரீ தேசிகனின் வைபவத்தின் வைபவம்
ஸ்வாமி ஸ்ரீ தேசிகனின் வைபவத்தை நாம் அறிந்திடவும், அதனை பகிர்ந்திடவும் முயற்சித்தல், எளிதான செயல் அன்று.
ஸ்வாமியின் வைபவத்தின் வைபவம் அத்தகையதாகும்.
ஸ்வாமி பாதுகா ஸஹஸ்ரத்தில், பாதுகையின் ப்ரபாவத்தை கூறும் பொழுது,
“ஆகாயம் முழுதும் காகிதமாக கொண்டு, ஏழு ஸமுத்ரங்களை மையாக கொண்டு, 1000 தலைகள் மற்றும் கண்கள்
கொண்ட அந்த பரந்தாமனே வந்து எழுதினால், ஒரு வேளை எழுத முடியுமோ என்னவோ” என்று சாதிக்கின்றார்.
निश्शेषमम्बरतलं यदि पत्रिका स्यात् सप्तार्णवी यदि समेत्य मषी भवित्री ।
वक्ता सहस्रवदनः पुरुषः स्वयं चेत् लिख्येत रङ्गपतिपादुकयोः प्रभावः।। 3.2
இது பாதுகைக்கு மட்டும் இன்றி, பாதுகா சேவகராம் ஸ்வாமி தேசிகனுக்கும் உபலக்ஷணம்.
ஸ்வாமியின் பெருமையின் ப்ரபாவமும் அப்படியே ஆகும்.

ஸ்வாமி தேசிகன், பல க்ரந்தங்களை, பல மொழிகளில் அருளியுள்ளார். தேசிகனின் ப்ரபாவத்தையும், க்ரந்தங்களையும்
அறிந்து கொள்ள நம் ஆயுள் போதாது. ஆயினும் தேசிகனின் ஒரு பாசுரம் பயின்றாலே, அது நமக்கு
பரமபதத்திற்கு சோபானமாக(அதாவது படியாக) அமையும். இதையே,
“ஓர் ஒன்று தானே அமையாதோ, தாரணியில் வாழ்வோருக்கு வானேற போமளவும் வாழ்வு” என்று
ஸ்வாமி தேசிகனின் தனியனிலும் அறிகிறோம், போற்றி துதிக்கின்றோம்.

தேசிக அடியாரின் ரஹஸ்ய த்ரயம்:
நம் ஸம்ப்ரதாயத்தில், தத்வ த்ரயம், ரஹஸ்ய த்ரயம் போன்ற விஷயங்களை காணலாம்.
தேசிகனின் அடியார்கள் அறிய வேண்டிய மூன்று விஷயம் என்ன என்றால் அது
தேசிகனின் மூன்று தனியன்களே ஆகும். அவையாவன,
1. ஸ்ரீ நயினாராசார்யர் அருளிச் செய்த தனியன்:
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்கிககேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

2. ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமி அருளிச் செய்த தனியன்:
ராமானுஜ தயாபாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேசிகம் ||

3. பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்ததனியன்:
சீர் ஒன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழமொழியுள் – ஓர் ஒன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு.

ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம்:
ஒரு சமயம் ஸ்வாமி தேசிகன், தன் குமாரர் வரதாசார்யர், ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் மற்றும் சிஷ்யர்கள் சூழ,
திருநாராயணபுரம் /மேல்கோட்டை எழுந்தருளினார்.
அங்கு, ஸ்வாமியின் திருக்குமாரர் பகவத் விஷய” காலக்ஷேபம் சொல்லத் தொடங்கினார்.
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ரர், தேசிகனின் அனுமதியைப் பெற்று, காலக்ஷேப கோஷ்டியில் அமர்ந்து
ஸ்வாமியின் திருக்குமாரர் பற்றிய கீழ்கண்ட தனியனை அனுஸந்தித்தார்.
ஸ்ரீ மந் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வா மித்ர குலோத் பூதம் வரதார்யமஹம் பஜே ||

பிறகு, தர்சனப்ரவர்த்தகர் ஸ்ரீ உடையவரின் பரிபூர்ண கடாக்ஷத்துக்கும்,தாய் மாமாவான ஸ்ரீ அப்புள்ளாரின்
பரிபூர்ண கடாக்ஷத்துக்கும் பாத்ரரான ஸ்வாமி தேசிகன் விஷயமாக,
ராமானுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
என்கிற தனியனை அனுஸந்தித்து, பிறகு குரு பரம்பரையைச் சொல்லி, பகவத் விஷய காலக்ஷேபத்தைக் கேட்கத் தொடங்கினார்.

இதனை அறிந்த ஸ்வாமி தேசிகன், “ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய” என்கிற தனியன், தன்னுடைய பெருமையைச் சொல்கிறது.
”ராமானுஜ தயாபாத்ரம்….” என்கிற தனியன், தனக்கு ஏற்பட்டுள்ள சதாசார்ய கடாக்ஷப் பெருமையைச் சொல்கிறது என்று சந்தோஷப்பட்டார்.
பின்னர் ”ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய:” என்கிற தனியன் ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபத்தின் போது அநுஸந்திக்கும் படியும்
”ராமானுஜ தயா பாத்ரம்” என்கிற தனியன் “பகவத் விஷய” காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும்படியும் நியமித்தார்.
இவ்வாறு பஹுதான்ய வருடம், ஆவணி ஹஸ்தம் நன்னாளில் ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம்.
பின்னர் ஸ்ரீரங்கநாதனின் நியமனத்தின் படி தமிழ் பிரபந்தங்களை ஸேவிக்கும் முன் இந்த தனியனை அநுஸந்திக்கும் முறை பின்பற்றப்படுகிறது.

ஆசார்ய தனியனின் தனிப் பெருமை:
கருணையினால் ஜ்ஞானத்தை அளித்து, நாம் நற்கதி அடைய வழி வகுக்கும் ஆசார்யனுக்கு,
சிஷ்யன் கைமாறு செய்ய முடியுமா என்றால், முடியாது. அப்படி இருக்க, சிஷ்யன் ஆசார்யன் மேல் கொண்டுள்ள
பக்தியை எப்படி வெளிப்படுத்துவது என்பதற்கு பூர்வர்கள் நான்குவித விஷயங்களை கூறியுள்ளனர்.
அவையாவன,
1. ஆசார்யன் பெருமை புலனாகும் படியாக அவரை பற்றிய ச்லோகம் எழுதி,அவரிடம் ஸமர்ப்பித்து,
அவரின் அனுமதியின் பெயரில் அவரை பற்றிய துதி பாடல்களை பாடுவது.
2. விரலை வெட்டி ஆசார்யனுக்கு காணிக்கையாக ஸமர்பிப்பது.
3. மார்பில் ஆசார்யன் பெயரை பச்சை குத்திக் கொள்வது.
4. ஆசார்யன் திருவடி என்று நம்மை ஆசார்யனின் தாஸனாக அறிமுகம் செய்து கொள்வது.
இதனையே ஸ்ரீவைஷ்ணவ அடியார்களாகிய நாம் “அடியேன் ராமானுஜ தாஸன்” என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறோம்.
இதில் நம் ஆசார்யர்கள் ஸாத்வீகமான முறையையே நாம் பின்பற்ற உபதேசித்தனர்.
சிஷ்யர்கள் ஆசார்யனுக்கு தனியன் ஸமர்ப்பித்தல், அவரின் பெருமையையும் குணங்களையும் போற்றும் தனியனை
நித்யம் அனுஸந்தானம் செய்தல், நம் ஆசார்யர்கள் உகந்த அனுஷ்டானங்கள் ஆகும்.
இதையொட்டியே ஸ்வாமி தேசிகனின் ப்ரதான சிஷ்யர் ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர், ஸ்வாமி தேசிகனின் மேல் இருந்த
அபரிமிதமான ஆசார்ய பக்தியினால் அருளியது ”ராமானுஜ தயா பாத்ரம்” என்னும் தனியன் ஆகும்.

ராமானுஜ தயா:
“ராமானுஜ தயா” – இந்த பதத்தின் அர்த்தத்தை நாம் அறிந்தோம் என்றால் அனைத்தையும் அறிந்தவர் ஆகின்றோம்.
ராமானுஜரின் தயைக்கு பாத்திரமான தேசிகன்
ராமானுஜரின் தயைக்கு, கருணைக்கு பாத்ரமானவர் என்பது முதல் விளக்கம்.
ஸ்வாமி தேசிகனின் திருக் குமாரர் —குமார வரதாசார்யர் —-தன்னுடைய பிள்ளை அந்தாதியில்,
மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்து உறை மார்பினன் ,தாள்
தூமலர் சூடிய தொல் அருள் மாறன் துணை அடிக் கீழ்
வாழ்வை உகக்கும் இராமாநுச முனி வண்மை போற்றும்
சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே .
ராமானுஜரின் வண்மையைப் போற்றும், சீர்மையன்—என்று ஸ்ரீ நயினாசார்யர் சொல்கிறார்.
எங்கள் தூப்புல் பிள்ளை—ஸ்வாமி தேசிகனின் திருவடிகள்—என் சென்னியதே—-என் தலைமேல் இருக்கிறது–என்று,
ஸ்ரீ நயினாசார்யர்,பாசுரமிடுகிறார். இராமாநுசமுனி வண்மை போற்றும் சீர்மையன்—ஆதலால்,
ராமானுஜ தயா பாத்ரர். அதுமட்டுமல்ல ராமானுஜரின் மறுஅவதாரம் அன்றோ நம் ஸ்வாமி தேசிகன்.

நான்கு பிரதானமான திவ்ய தேசங்கள்:
ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்திஸைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம்
என திருவரங்கம், திருமலை,திருக்கச்சி, திருயாதவகிரி ஆகிய நான்கு பிரதானமான திவ்ய தேசங்களை வணங்குகிறோம்.
இந்த திவ்ய தேசங்களுக்கும் ராமானுஜ சப்தத்திற்கும் உள்ள தொடர்பை விரிவாக காணலாம்.

ஸ்ரீரங்கநாதனின் தயைக்கு பாத்திரமான தேசிகன்:
பூலோக வைகுண்ட க்ஷேத்திரம் “ஸ்ரீரங்கத்தில்” பெரிய பெருமாளாக, ப்ராணாவகார விமானத்தின் கீழ்,
பள்ளி கொண்டுள்ளான் ஸ்ரீரங்கநாதன். ரங்கநாதனுக்கு ராமானுஜன் என்னும் பெயர் உண்டு.
அன்மொழித்தொகையின் படி “எவனுக்கு ராமன் இளையவனோ அவன் ராமானுஜன்”.
ராமனுக்கு முன்னரே திரு அயோத்தியில் எழுந்தருளிய பெருமாள் ஸ்ரீரங்கநாதன்.
ப்ரம்ம தேவன் இஷ்வாகு குலத்திற்கு தனமாக அளித்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன்.
“தோலாத தனி வீரன் தொழுத கோவில்” – ராமன் ரங்கநாதனை ஆராதித்து இருக்கிறான்.
பெருமாளாம் ராமன் ஆராதித்த ஸ்ரீரங்கநாதன் பெரிய பெருமாள் என போற்றப் பெற்றார்.
ராமன் பின்னர், விபீஷணனிடம் குலா தனமாக அளிக்க, விபீஷணன் இலங்கை செல்லும் வழியில் காவேரியின் மணல்
திட்டில் நித்ய வாசம் செய்ய ஆரம்பித்தவன் ஸ்ரீரங்கநாதர்.
“அம்புயத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோவில்” என்று ஸ்வாமி தேசிகன் ஸ்ரீரங்கத்தை பற்றி அருளியுள்ளார்.
ஆகையால் ஸ்ரீரங்கநாதன் என்னும் ராமானுஜனின் தயைக்கு பாத்திரமான ஸ்வாமி தேசிகன்.
ரங்கநாதனின் தயையினால் வேதாந்தாசார்யன் / வேதாந்த தேசிகன் என்ற பிருதம் பெற்றதாக ஸ்வாமி தேசிகனே சாதித்துள்ளார்.
உபய வேதாந்தங்களுக்கும் ஆசார்யனாக ஸ்வாமி தேசிகன் திகழ்ந்தார்.
ஸ்ரீரங்கநாதன் என்னும் ராமானுஜனின் தயைக்கு பாத்திரரானார் ஸ்வாமி தேசிகன்.

திருமலையப்பனின் தயைக்கு பாத்திரமான தேசிகன்:
ஸ்ரீநிவாசன் வாஸம் செய்யும் திருவேங்கட மாமலை அடுத்த திவ்ய தேசமாகும்.
அந்த ஸ்ரீனிவாசனே தேசிகனாக பிறந்தார். ஸ்ரீனிவாசனின் அனுகிரஹமே தேசிகனின் பிறப்பிற்கு காரணம்.
மங்களத்தை வளர்க்கக்கூடிய புரட்டாசி மாதத்தில், விஷ்ணு நக்ஷத்திரத்தில் அதாவது ச்ரவண நக்ஷத்திரத்தில்,
ஸ்ரீனிவாசனின் தீர்த்தவாரி சுப தினத்தில் அனந்தசூரிக்கும், தோதாரம்பைக்கும் ஸ்வாமி தேசிகன் மகனாக அவதாரம் செய்தார்.
பெருமாளே ஆசார்யனாக பிறந்தான்.

குழந்தை இல்லாத தம்பதியினர் அனந்தசூரி மற்றும் தோதாரம்பை, குழந்தை வேண்டி திருமலைக்கு யாத்திரையாக சென்றனர்.
கனவில் திருமலையப்பனின் மணியினை தோதாரம்பை முழுங்குவதாக தம்பதியினர் ஸ்வப்னம் கண்டனர்.
மறுநாள் கோவிலில் மணியை காணாமல் ஒரே பரபரப்பாக இருந்தது. கோவில் ஜீயர் தோதாரம்பையை காட்டி,
அவள் கர்ப்பத்தில் திருமணியின் அவதாரமாக பிள்ளை பிறக்கப் போவதை கூறினார்.
தேசிகன் அவ்வாறே திருமணியின் அவதாரமாக, தோதாரம்பையின் கர்ப்பத்தில்,
ராமனை போல் பன்னிரெண்டு மாதம் இருந்து அவதாரம் செய்தார்.
ஸ்வாமி தேசிகன் ஸங்கல்ப சூர்யோதயத்தில் தன்னை அனைவரும் திருமணியின் அவதாரமாக போற்றியதை
தன் சொற்களினாலேயே அருளுகிறார்.

திருவாராதன சமயத்தில் தேவர்களை ஆவாஹனம் செய்யவும், அசுரர்களை விரட்டவும், திருமணி அடிக்கப்படுகிறது.
ராமானுஜ ஸம்ப்ரதாயத்திற்கு விரோதமாக பொருள் சொல்லுபவர்கள் அலறி, பயந்து செல்லும் வகையில்
திருமணியின் அவதாரமாகவே பிறந்து, அவர்களை வென்றார் நம் ஸ்வாமி தேசிகன்.
“திருமலை மால் திருமணியாய் சிறக்க வந்தோன்” நம்தேசிகன்.

ஸாக்ஷாத் திருமலையப்பன் அவதாரமோ, இல்லை ஒரு வேளை திருமலையப்பனின் திருமணியின் அவதாரமோ,
இல்லை ஒரு வேளை யதிராஜரின் அம்சமோஎன போற்றப்பட்டவர் நம் ஸ்வாமி தேசிகன்.
அப்படிப்பட்ட ஆச்சர்யமான அவதாரம் நம் ஆசார்யன் அவதாரம்.

பிள்ளை அந்தாதியில்,
அன்றிவ் வுலகினை யாக்கி யரும்பொரு ணூல்விரித்து
நின்றுதன் னீள் புகழ் வேங்கட மாமலை மேவி யும்பின்
வென்றிப் புகழ்த் திரு வேங்கட னாத னெனுங்குருவாய் நின்று
னிகழ்ந்து மண் மேனின்ற னோய் கட விர்த்தனனே.

உலகினை ச்ருஷ்டி செய்து, வேதங்களையும் கொடுத்து எம்பெருமான் ஏழு மலையின் மேல் சென்று அமர்ந்து கொண்டான்.
ஏன் என்றால், விவசாயி தான் பயிரிட்ட பூமியை ரக்ஷிக்க வயலுக்கு நடுவில் ஒரு பரணை கட்டி அமர்ந்து கொண்டு காப்பான்.
அது போல் ஸ்ரீநிவாசன் உலகத்தில் சரணாகதி என்னும் பயிரை நட்டு, அதன் விளைச்சலுக்கு உயர்ந்த திருமலையில் அமர்ந்து கொண்டு,
கண்ணும் கருத்துமாக ரக்ஷித்து வருகிறான். ஒரு வேளை ஆடு மாடுகள் கூட்டமாக பயிரை மேய வந்தால்,
அருகில் உள்ள தன் பசங்களை உடனேயே அவைகளைவிரட்ட சொல்வது போல்,
ஆசார்யர்களை அவதாரம் செய்விக்கிறான் பகவான். வேங்கடநாதன் என்னும் குருவாக அவதரித்தான் ஸ்ரீநிவாசன்.
திருமலையப்பன் என்னும் ராமானுஜனே வேங்கடநாதன் என்னும் குருவாய் அவதரித்தான்.

யசோதை வகுள மாளிகையாக பிறந்தாள்,
கண்ணன் திருவேங்கடமுடையானாக பிறந்தான்.
பலராமனின் அனுஜனான கண்ணனே அதாவது ராமானுஜனே, திருவேங்கடமுடையான்.
அந்த திருவேங்கடமுடையானின் கருணையை தயா சதகம் என்னும் நூறு ச்லோகங்களினாலே பாடியதால்
திருவேங்கடமுடையானின் தயைக்கு பாத்திரமானார் நம் தேசிகன்.
இப்படி ஸ்ரீநிவாஸனின் பரிபூரண கருணைக்கு இலக்கானவர் தேசிகன்.

திருக்கச்சி வரதனின் தயைக்கு பாத்திரமான தேசிகன்
காஞ்சி தேவப்பெருமாள் திருவடியில் பிறந்தவர் தேசிகன். வரதனுக்கு ராமானுஜன் என்னும் பெயர் உண்டு. இது ஒரு ஸ்வாரஸ்யம்.
அனுஜ சப்தத்திற்கு “அனுகாரம்” பண்ணுதல் என்று அர்த்தம். ஒருத்தர் செய்வதை போலச் செய்கை செய்வது அனுகாரம் எனப்படும்.
அப்புள்ளார் தேசிகனின் ஆசார்யன், அவரின் மாதுலர் தாய் மாமா ஆவார்.
“யதி வரனார் மடப்பள்ளியில் வந்த மணம் எங்கள் வார்த்தையில் மன்னியதே” என்று கூறுவது மரபு.
நம் தேசிக ஸம்ப்ரதாயம் மாதுலர் வழி வந்த ஸம்ப்ரதாயமாகும்.
காள மேக தேசிகாத் – வாதி ஹம்ஸ அம்புஜ ஆசார்ய என அழைக்கப்படும் அப்புள்ளாரிடம் அனைத்தையும் கற்றார் நம் தேசிகன்.
தேசிகன் “அப்புள்ளார் ஒரு கிளியை பழக்கினாப் போலே அடியேனை பழக்கி வைத்தார்” என்கிறார்.

அப்புள்ளார், வால்மீகி இராமாயணத்தில் ப்ரணவம் நடந்து சென்றதை இந்த ச்லோகம் மூலம் விளக்கினார்.
अग्रतः प्रययौ रामस्सीता मध्ये सुमध्यमा।
पृष्ठतस्तु धनुष्पाणिर्लक्ष्मणोऽनुजगाम ह।।3.11.1।।
பெருமாள் என்பவன் mobile கற்பக வ்ருக்ஷம். நாம் இருக்கும் இடம் தேடி வந்து அருள் புரிபவன்.
அகார வாச்யனான ராமன், உகார வாச்யகமாக பிராட்டியும், மகாரமாக லக்ஷ்மணனும் நடந்து செல்வதை
ப்ரணவத்தின் விளக்கம் தரும் வகையில் தேசிகனுக்கு விளக்கினார் அப்புள்ளார்.மகாரம் 25வது தத்துவமான ஜீவனை குறிக்கும்.
ராமன், ஸீதை மற்றும் லக்ஷ்மணன் மூவரும் ப்ரணவத்தின் வடிவை விளக்கும் வகையில் நடந்து சென்றனர்.
இவ்வாறு ப்ரணவத்தின் அர்த்த விசேஷத்தை அப்புள்ளார் தேசிகனுக்கு விளக்கினார்.

ராமானுஜர் விந்திய மலையில் வழி தெரியாமல் தவித்த பொழுது, வரதனும் பெருந்தேவியும் வேடுவன் வேடுவச்சியாக வந்து
காப்பாற்றி காஞ்சி வரை அழைத்து வந்தனர். அடியேனின், மேகத்தின் தாகம் என்னும் நூலில் இந்த அனுபவத்தை விரிவாக படிக்கலாம்.
அப்பொழுது அந்த இரவில் வேடுவன் வரதன் வில்லோடு, அவனை தொடர்ந்து வேடுவச்சி பெருந்தேவி, பின்னர் ராமானுஜர்
மூவரும் நடந்து சென்றனர். அன்று ராமன், சீதை, லக்ஷ்மணன் ப்ரணவத்தின் வடிவாக
நடந்து சென்றதை போல் இவர்கள் நடந்து சென்றனர். அன்று ராமன் கொடுத்தது அனுபவம்
இன்று வரதன் காட்டியது அனுஷ்டானம்.

ஸ்வாமி தேசிகன் யதிராஜா சப்ததியில்,சாலைக் கிணறு வ்ருத்தாந்தத்தை பற்றி கூறும் பொழுது,
वन्दे तं यमिनां धुरन्धरमहं मानान्धकारद्रुहा पन्थानं परिपन्थिनां निजदृशा रुन्धानमिन्धानया ।
दत्तं येन दयासुधाम्बुनिधिना पीत्वा विशुद्धं पयः काले नः करिशैलकृष्णजलदः काङ्क्षाधिकं वर्षति ॥
இன்றும் தேவப்பெருமாளுக்கு முதல் தீர்த்தம் சாலைக்கிணற்றிலிருந்து தான் எடுத்து வரப்படுகிறது.
வரதன் என்னும் காள மேகம், நாம் கேட்பதை காட்டிலும் அதிகமாக வருஷிக்க என்ன காரணம்?
மேகமானது ஒரு முறை மழை பொழிந்து விட்டால் காலியாகி விடும். அந்த மேகத்தில் மழைக்கு பின்னர் நீர் இருக்காது.
வரதன் முக்தி மழை பொழியும் முகில் வண்ணனாக இருக்க காரணம் என்னவென்றால்,
தினமும் சாலைக்கிணற்றிலிருந்து ஸமர்ப்பிக்கப்படும் தீர்த்தத்தை பருகிக் கொண்டு இருப்பதினால்.
விபவத்தில் அனுபவத்தையும், வரதனாக அர்ச்சையில் அனுஷ்டானத்தையும் பெருமாள் காட்டுகிறான்.
முதலில் அநந்தனாக, பின்னர் லக்ஷ்மணனாக, அடுத்து பலராமனாக அவதாரம் செய்தவரே,
கலியுகத்தில் ராமானுஜராக அவதாரம் செய்தார்.
இராமாயணத்தில் நடந்த வ்ருத்தாந்தத்தை, வரதன் அனுஷ்டித்து (அனுகாரம் ) செய்து காட்டியதால்,
வரதன் ராமானுஜன். வரதனாம் ராமானுஜனின் கருணைக்கு இலக்கானவர் தேசிகன்.

பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் ஒழன்றோடி இளைத்து விழும் காகம் போல்
முத்தி தரும் னகரேழில் முக்கியமாம் கச்சி தன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் னான் புகுந்தேனே–என கச்சி வரதனின் திருவடியில் சரணாகதி செய்தவர் நம் தேசிகன்.

“வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடகிளியை கை கூப்பி வணங்கினாள்” –
பரகால நாயகியான திருமங்கைஆழ்வார் கிளிக்கு பேச சொல்லிக் கொடுக்கிறாள்.
தான் பழக்கிய கிளி அழகாக பாட ஆரம்பித்தவுடன், சந்தோஷமடைந்த பரகால நாயகி,
அந்த மடப்பம் பொருந்திய கிளியை பார்த்து கை கூப்பினாள். வரதன் வளர்த்த கிளி தேசிகன்.

“திக்கு எட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தை தெளிய உரைத்திடு நாள்” – தேசிகன் திக் எட்டும் ஸ்ரீபாஷ்யத்தை உரைத்திடச் செய்தார்.
அந்த தேசிகனை பார்த்தவுடன், தான் வளர்த்த கிளி என்று பெருமை கொள்கிறான் வரதன்.
தேசிகனின் திருநட்சத்திரம் புரட்டாசி சரவணத்தன்று, தன் குடை, சாமரம், வாத்தியங்கள், பல்லாக்கு,
அனந்த கொத்து கைங்கர்யபரர்கள் என அனைத்தையும் தேசிகனுக்கு அனுப்பி
தன் குழந்தை “வரதா வரதா” என்று வரதன் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறான்.

ஸகல பரிவாரங்களுடன் தன் குழந்தை தேசிகன் வருவதை பார்த்து வரதன் சந்தோஷப்படுகிறான்.
அன்று பெரியாழ்வர் பவனி வருவதைக் காண பெருமாள் வந்தான், இன்று தேசிகனைக் காண, அனுபவிக்க வரதன் வருகிறான்.
தேசிகன் பிறந்தது வரதன் திருவடியில், பின்னர் ஸித்தாந்த ஸ்தாபனம் செய்தது அரங்கன் திருவடியில்.
இதனாலேயே நான்கு திவ்ய தேசங்களில் கைங்கர்யம் இனிதே நடைபெற வேண்டும் என்று வரதனையே தேசிகன் ப்ரார்த்திக்கிறார்.
வரதனின் பரிபூரண கடாக்ஷத்திற்கு பாத்திரபூதர் ஸ்வாமி தேசிகன்.

திருயாதவகிரி சம்பத் குமாரனின் தயைக்கு பாத்திரமான தேசிகன்
சம்பத்குமாரன் ( செல்லப்பிள்ளை) யதிராஜரின் இளவல். ராஜா ராமானுஜர், சம்பத்குமாரன் இளையராஜா ஆவார்.
இந்த பெருமாளுக்கு ராமப்ரியன் என்று திருநாமம். இஷ்வாகு குல தனமான ஸ்ரீரங்கநாதனை, விபீஷணன்
எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்றவுடன், ராமன் தான் ஆராதனம் செய்ய மீண்டும் ஒரு பெருமாளை எழுந்தருளப் பண்ணினார்.
ராமனால் ஆராதிக்கப்பட்டு, ராமனுக்கு மிகவும் பிரியமான பெருமாள் என்பதால் ராமப்ரியன் என்று திருநாமம்.
ராமனுக்கு அடுத்து வந்தவன் ராமப்ரியன், ராமனுக்கு அனுஜன் ஆகையால் ராமப்ரியன் ராமானுஜன்.
பின்னர் கிருஷ்ணனால் யாதவகிரியில் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் இவரே.

ராமனின் பேத்தி கனகமாலினி (கனகாங்கி) என்று பெயர். யது வம்சத்து யதுத்தமனுக்கு கல்யாணம் செய்து கொடுத்தான் குசன்.
குசன் பெண் விட்டு சீதனமாக ராமப்ரியனை ஆராதனம் செய்ய அளித்தான். இப்படி யது வம்சத்தில் ஆராதிக்க பட்ட பெருமாளை,
பலராமன் தீர்த்த யாத்திரை சென்ற போது, யாதவ கிரியில் மூலவர் திருநாராயணன் திரு உருவமும் ராமப்ரியன் திரு உருவமும்
ஒன்றாக இருப்பதைக் கண்டு, கண்ணன் அனுமதியுடன் ராமப்ரியனை திருநாராயணபுரத்தில் ப்ரதிஷ்டை செய்தார்கள்.

ராமனுக்கு பிறகு அவதாரம் செய்ததினால் ராமப்ரியன் ராமானுஜன். யதிராஜனான ராமானுஜர் ராமன் என்றால்,
யுவராஜாவான சம்பத்குமாரன் ராமானுஜன். ராமப்ரியனின் க்ருப்பைக்கு பாத்திர பூதர் தேசிகன்.
இந்த ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம் மேல்கோட்டையில் , சம்பத் குமாரன் ஸந்நிதியில் தான் ஏற்பட்டது.
ராமப்ரியனாம் சம்பத்குமாரின் தயைக்கு பாத்திரமானவர் தேசிகன்.

இவ்வாறு திருவரங்கம், திருமலை,திருக்கச்சி, திருயாதவகிரி ஆகிய நான்கு பிரதானமான திவ்ய தேசங்களின்
எம்பெருமான்களின் கருணைக்கு ஸ்வாமி தேசிகன் பாத்திரபூதர் ஆவார்.
இதை மேலும்நன்கு விவரித்து அனுபவித்தால் தேவநாதனின் பூரண கருணைக்கு முழு வடிவம் நம் ஸ்வாமி என்பதும் நன்கு புரியும்.

ராமானுஜ தயா
இவர்கள் மட்டுமின்றி தசாவதார எம்பெருமான், ஸ்ரீ தேவி, பூ தேவி , மற்றும் நீளா தேவி, விச்வக்சேனர்,
லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன்,நம்மாழ்வார், ஆளவந்தார் மற்றும் பூர்வாசார்யர்கள், ராமானுஜர்,
நடாதூர் அம்மாள், அப்புள்ளார் (ராமானுஜப்பிள்ளான், கிடாம்பி ராமாநுஜாசார்யர்) ஆகியோர் தயைக்கும் தேசிகன் பாத்திரமானவர்.

தேசிகனின் திருவடிகளை சரணம் என்றும் பற்றி, அனைத்து ஆழ்வார், ஆசார்யர்கள், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன்,
ஸ்ரீ தேவி, பூ தேவி, மற்றும் நீளா தேவி, எம்பெருமான் ஆகியோரின் கருணையை நாமும் பெற்றிடலாம்.

ஸ்வாமி தேசிகனின் 750வது திருநக்ஷத்திர மஹோத்சவத்தில், திருவஹீந்திரபுரம் ஸ்ரீ வேத பரிபாலன சபா வெளியிடும் மலரில்,
அடியேனுக்கு லேகன கைங்கர்யம் கிடைத்தது தேசிகனின் அனுகிரஹமே.
இந்த வாய்ப்பை அளித்த மகான்களுக்கு, அடியேனின் தன்யவாதங்கள் ஸமர்ப்பணம் செய்கிறேன்.

தேசிகன் அல்லால் தெய்வம் இல்லை.
தேசிகன் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வாத்ஸ்ய ஸ்ரீ க்ருஷ்ணமார்ய மஹாதேசிகனின் அந்தேவாசி
முகுந்தகிரி ஸ்ரீ உ.வே அனந்த பத்மநாபாசாரியார் ஸ்வாமி

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே அனந்த பத்மநாபாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பூர்வாச்சார்யர் தனியன்கள் -/வாழி திருநாமங்கள் / மங்கள ஸ்லோகங்கள் —

January 14, 2021

ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி அருளிச்செய்த ஸ்லோக குருபரம்பரை (ஸ்லோகம் )

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாச்சார்யான் அஸேஷாந் குரூந்
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ண யாமுநம் முநிம் ராமம்
பத்மவிலோசனம் நாதம் முநிவரம் ஸடத்வேஷிணம்
ஸேநேஸம் ஸ்ரியம் இந்திராஸஹசரம் நாராயணம் ஸம்ஸ்ரயே-

அஸ்மத் தேசிகம் : நம் ஆசார்யனையும்
அஸ்மதீய பரமாச்சார்யான் :ஆச்சார்யனுக்கும் ஆச்சார்யரான பரமாச்சார்யர்களையும்
அஸேஷாந் குரூந்: ஸ்வாமி மணவாளமாமுனிகள் வரை உள்ள மற்றுமுள்ள எல்லா ஆச்சார்யர்களையும்
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ:யதிராஜரான எம்பெருமானாரையும்
மஹாபூர்ண : பெரிய நம்பியையும்
யாமுநம் முநிம்: ஸ்ரீ ஆளவந்தாரையும்
ராமம் : மணக்கால்நம்பியையும்
பத்மவிலோசனம்: உய்யக்கொண்டாரையும்
நாதம் முநிவரம் : ஸ்ரீமந் நாதமுனிகளையும்
ஸடத்வேஷிணம்: நம்மாழ்வாரையும்
ஸேநேஸம்: சேனைமுதலியாரையும்
ஸ்ரியம் இந்திராஸஹசரம்: பெரிய பிராட்டியையும், திருமகள் கேள்வனான
நாராயணம்: நாராயணனையும்
ஸம்ஸ்ரயே: ஆஸ்ரயிக்கிறேன்(தஞ்சமாகப் பற்றுகிறேன்)

————-

வாக்ய குருபரம்பரை.
அஸ்மத் குருப்யோ நம:
எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:
எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:
வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம்
அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:
தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:
திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.

————-

ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்)
ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன
அனைத்தையும் நடத்தும் விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த
பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி அனுஷம்)
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய
வைராக்யம் ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்.

உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை)
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த
நம் குல நாதரான புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

மணக்கால் நம்பி (மாசி மகம்)
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப்
பணிகொண்ட ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)
யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும்
த்வம்சம் செய்து என்னை ஒரு பொருளாக உளவாக்கிய யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

பெரிய நம்பி (மார்கழி கேட்டை)
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாணகுணக் கடலில்
ஆழ்ந்துள்ள நிறைவுள்ள மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

எம்பெருமானார் (சித்திரை திருவாதிரை)
யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலேபோல் வடிவெடுத்தவரும் ஆகிய பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

எம்பார் (தை புனர்வஸு)
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல்போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி
இளைப்பாற்றும் நிழலுமான கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

பட்டர் (வைகாசி அனுஷம்)
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்யஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் கூரத்தாழ்வானின்
திருக்குமாரர் ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

நஞ்சீயர் (பங்குமி உத்தரம்)
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப்
பொழியும் வேதாந்தி நஞ்சீயரை வணங்குகிறேன்.

நம்பிள்ளை (கார்த்திகை கார்த்திகை)
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால்
வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

வடக்குத் திருவீதி பிள்ளை (ஆனி ஸ்வாதி)
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீக்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை
திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட வடக்குத் திருவீதிப் பிள்ளையின்
திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி திருவோணம்)
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

க்ருஷ்ணபாதர் ஆகிய வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து
ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி விசாகம்)
நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்யஸ்ரீயை
அடைந்தவரான திருமலை ஆழ்வார் என்கிற திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல்போல்
நிரம்பியவரும் யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

ஆழ்வார்களும் ஆசார்யர்கள் பிறர் பலரும் நம் குரு பரம்பரையில் உள்ளனர்.

வரிசைக் கிராமத்தில் ஆழ்வார்கள்:

பொய்கை ஆழ்வார் (ஐப்பசி திருவோணம்)
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம் |
கலயே ய: ச்ரிய:பத்யே ரவிம் தீபம் அகல்பயத் ||

காஞ்சித் திருவெஃகாத் திருக்குளத்தில் தங்கத் தாமரைப் பூவில் அவதரித்த, தம் திவ்ய ஞான ஒளியால்
ஸூர்ய தேஜஸ்ஸில் ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட பொய்கை ஆழ்வாரைத் துதிக்கிறேன்.

பூதத்தாழ்வார் (ஐப்பசி அவிட்டம்)
மல்லாபுர வராதீசம் மாதவீ குஸுமோத்பவம் |
பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத ||

திருக்கடல்மல்லைத் தலைவர், மாதவிப் பூவில் அவதரித்தவர், தம் ஞான திருஷ்டியால்
நாராயணனைக் கண்டுகளிக்க ஞான தீபம் ஏற்றியவரான பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

பேயாழ்வார் (ஐப்பசி சதயம்)
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம் |
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே ||

திருமயிலைத் தலைவர், கிணற்றில் செவ்வல்லிப் பூவில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணனைக்
கண்ட திவ்ய சக்ஷுஸ் பெற்ற பேயாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன்.

திருமழிசை ஆழ்வார் (தை மகம்)
சக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜத சித்த ஹாரிணே |
முக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம: ||

எம்பெருமான் முராரியின் கமலப் பாதங்களில் வைத்த பக்தியே வடிவெடுத்தவரும், பஞ்சோபநிஷத்மய
திருமேனியை உடைய (நம் சரீரம் நிலம் நீர் காற்று வெளி தீ எனும் பஞ்ச பூதங்களால் ஆனது.
எம்பெருமான் திருமேனியோ விஸ்வம், நிவ்ருத்தம், சர்வம், பரமேஷ்டி, புமான் எனும் பஞ்ச உபநிஷத்துகளால் ஆனது)
எம்பெருமானைத் தன் நெஞ்சிலே தரித்தவரும், நமக்கு மதி தர வல்லவருமான திருமழிசைப் பிரானுக்கு என் வணக்கங்கள்.
ஸூக்திஹாரன் என்னும் அரசனிடத்தில் ஜயித்த ஹாரத்தை அணிந்து கொண்டிருப்பவர் என்றும் சொல்லப்படும்.

மதுரகவி ஆழ்வார் (சித்திரை சித்திரை)
அவிதித விஷயாந்தரஸ் சடாரேர் உபநிஷதாம் உபகான மாத்ர போக: |
அபி ச குண வசாத் ததேக சேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து ||

நம்மாழ்வாரைப் பாடுவது தவிர வேறொன்றும் செயலாக நினையாதவர், நம்மாழ்வார் பாசுரம் தவிர
வேறொன்றையும் பாடவும் விழையாதவர், அவருக்கே அடிமைப் பட்டவரான மதுரகவி ஆழ்வார்
அடியேன் மனத்தில் உறுதியாக எழுந்தருளட்டும்.

நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

குலசேகர ஆழ்வார் (மாசி புனர்வஸு)
குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே |
தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||

எப்போதும் ஸ்ரீ ரங்க யாத்ரை பற்றிய பேச்சே நிகழும் நகரைத் தலைநகராகக் கொண்ட அரசர்
குலசேகரப் பெருமாள் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகி கிறேன்.

பெரியாழ்வார் (ஆனி ஸ்வாதி)
குருமுகம் அநதீத்ய ப்ராஹவேதாந் அஸேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாது காம: |
ச்வசுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் விஷ்ணுசித்தம் நமாமி ||

ஒரு குருவிடமும் பயிலாது எம்பெருமான் க்ருபையினாலேயே அனைத்து வேதங்களையும் அறிந்து
வேத சாரங்களை சொல்லிப் பரத்வ ஸ்தாபநம் பண்ணிய அந்தணர் தலைவர், ஆண்டாளின் தமப்பனார்,
திருவரங்க நாதனுக்கே மாமனார் ஆகிய பெரியாழ்வாரை அடி பணிகிறேன்.

ஆண்டாள் (ஆடி பூரம்)
நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்நம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||

நீளா தேவியின் திருமார்பில் தலைவைத்துறங்கும் கண்ணன் எம்பெருமானை, பாரதந்தர்யம் உணர்த்தும் வகையில்
துயிலுணர்த்துபவள் , எம்பெருமானுக்கே தான் சூடிக்களைந்த மாலையை அவன் விரும்பியபடி சமர்ப்பித்தவள்
திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழுகிறேன்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி கேட்டை)
தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹணியம் |
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே ||

ஸ்ரீ ரங்கநாதனைப் பரவாசு தேவனாகவே பாவித்து அவனை ஓர் அரசனைபோல் மிகவும்
நளினமாகத் துயிலெழுப்பிய தொண்டரரடிப் பொடி ஆழ்வாரைப் போற்றுகிறேன்.

திருப்பாணாழ்வார் (கார்த்திகை ரோஹிணி )
ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேர ஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் ||

இரண்டு ஆறுகளின் நடுவே அறிதுயில் கொண்ட அரங்கநாதனைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தப் பாடிய,
லோகஸாரங்க முனிவரால் தோள் மேல் சுமந்து அவனைக் கண்டு களித்து அவனைக் கண்டு களித்த கண்களால்
இனி வேறொன்றும் காணேன் என்று அவன் திருவடி சேர்ந்த திருப்பாணாழ்வாரை த்யானிக்கிறோம்.

திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை கார்த்திகை)
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம்
யஸ்ய கோபி: ப்ரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம:

கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர்,
அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான
திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன்.

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

குருகைக் காவலப்பன் (தை விசாகம்)
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர்,
யோகிகளில் சிறந்தவரான குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)
ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், மணக்கால்நம்பிகளின் திருவடித் தாமரைகளில்
வண்டு போன்றவர், ஸ்ரீபராஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக் கடல் போன்றவர்,
ஆசார்யர்களில் சிரேஷ்டரான திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

பெரியதிருமலைநம்பி (வைகாசி ஸ்வாதி)
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

திருமலையப்பனாலேயே தன் தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய
சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த
உத்தம தேசிகரான திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

திருமாலை ஆண்டான் (மாசி மகம்)
ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு
உபதேசித்தவரான மஹாமேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் மாலாதரரைப் பூசிக்கிறேன்.

திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர், ஸ்ரீ ராமானுசரால்
மிகவும் போற்றப் பட்டவர், ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

மாறனேரி நம்பி (ஆனி ஆயில்யம்)
யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி, ஞான பக்திக் கடல்
ஆகிய மாறனேரி நம்பியை பஜிக்கிறேன்.

கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)
ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம்
ஸ்தோத்ரங்களால் காட்டியருளிய கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.

முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர்,
முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை பரணி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர்,
ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை
அடியேன் சரண் புகுகிறேன்.

கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)
ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர்,
ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)
ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர்
ஆகிய ப்ரணதார்த்திஹர குரு கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில்
நிலை நின்றவர் ஆகிய சாலக்ராமாசார்யர் வடுகநம்பியைத் தொழுகிறேன்.

வங்கிபுரத்து நம்பி
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

பாரத்வாஜ குலத்திலகர், எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர்,
வங்கிபுரத் தலைவர் க்ருபாநிதியாகிய வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக் கடல் என்னலாம்படி
அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி
நம்பெருமாளைக் காப்பவர், ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில் வெளிப்படுத்தியவர்,
இரு மருமகன்களை உடையவர், எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாகப் பெரிய பெருமாளை
மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர
வேறு எது பயனுள்ளது? அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு எம்பெருமானார்
அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர்,
தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

திருவரங்கத்து அமுதனார் (பங்குனி ஹஸ்தம்)
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர்,
ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட திருவரங்கத்து அமுத்தனாரிடம் புகல் அடைகிறேன்.

நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)
வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்
நடாதூர் அம்மாள் எனும் வரதாசார்யரை வணங்குகிறேன்.

வேதவ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)
பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும்,
ஆழ்வானின் திருக்குமாரரும், பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும்
வேதவ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)
ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது காவலரும் ஞான, பக்திக்கடலுமான
ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

ச்ருத ப்ரகாசிகா பட்டர்
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ,
அந்தக் கூர குலத்தோன்றல், மஹா ஞானி சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும்
ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய) வேதாந்தங்களில் கரை கண்டவருமான
ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் (ஸ்வாதி)
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

நாலூர்ப் பிள்ளை (பூசம்)
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், எம்பெருமானார் சிஷ்யரான எச்சான் வம்சத் திலகர்,
திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)
நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

நாலூர்ப் பிள்ளை எனும் ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர்
தேவராஜகுரு ஆகிய மஹா குணசாலி நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)
லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர்,
கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான
எனது ஆசார்யர் பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும் கதிரவன்போல்
விளங்கச் செய்பவர், எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர்,
அபயப்ரத ராஜர் பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர்
நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன்,
ஸகல குண ஸம்பன்னரான கூர குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)
துலாSஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர்,
ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான
ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப் பண்ணுகிறேன்.

திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர்,
ஆசார்ய ஹ்ருதய பொருளை விரித்துரைத்தவர் ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

மாமுனிகளின் காலத்திலும் அதற்குப் பிற்பட்டும், பல சிறந்த ஆசார்யர்கள் வாழ்ந்தனர் (மேலும் பலர் உள்ளனர்):

பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

மாமுனிகளை எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும்,
அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர்,
சகல குணங்களும் நிறைந்தவர், வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர்,
மணவாள மாமுனிகளின் திருவடிகளில் சரண் புக்கவரான வரத நாராயண குரு எனும்
கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், மணவாள மாமுனிகள்
கருணைக்குப் பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும்
மங்கள ஸ்வபாவருமான தேவராஜ குரு என்கிற எறும்பி அப்பாவை வணங்குகிறேன்.

அப்பிள்ளை
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மணவாள மாமுனிகள் திருவடித்த தாமரைகளில் வண்டு போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர்
ப்ரணதார்த்திஹர குரு என்கிற அப்பிள்ளையை வணங்குகிறேன்.

அப்பிள்ளார்
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த
ராமானுஜ குரு என்கிற அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)
வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், மாமுனிகள் கருணையைப் பெற்றவரும்
குண ரத்நக் கடலுமான கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர்,
வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)
ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

வானமாமலை பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர்,
வாதூல வரதாசார்யர் என்கிற அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், மாமுனிகளிடம் பரம பக்தர், யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்
திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர், லோகார்ய முனி என்கிற பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

திருமழிசை அண்ணா அப்பங்கார் (ஆனி அவிட்டம்)
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், வாதூல வீரராகவர் என்றும்
அண்ணா அப்பங்கார் என்றும் பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன். .

அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், சேனை முதலியார் அம்சர், அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர்,
திருவாதிரை உத்சவம் போன்றவற்றில் கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர்,
ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

—————–

ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாள் -ஸ்ரீ சிறியாழ்வான் அப்பிள்ளை –

கார்த்திகே பரணி ஜாதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே

கார்த்திகையில் பரணியில் அவதரித்தவராய் ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளை அடைந்தவராய்
உபய வேதாந்தச் செல்வரான ஸ்ரீ மாதவப் பெருமாளை வணங்குகிறேன்.

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸ்ரயம் கருணாம்புதிம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே

உலகாரியரான ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடித்தாமரையைப் பற்றியவராய் கருணைக்கடலாய்
உபய வேதாந்தச் செல்வமுடையவரான ஸ்ரீ மாதவாச்சார்யரை ஆஸ்ரயிக்கிறேன்.

சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை* எழு
தேரார் தமிழ் வேதத்து ஈடுதனைத் – தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தான் கொடுத்தார் பின் அதனைத்தான்

ஆங்கு அவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில்-பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு.

ஸ்வாமி ஸ்ரீ நம்பிள்ளையினுடைய பிரதான சிஷ்யர் ஸ்வாமி ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை.
(சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை – ஆசார்ய ப்ரஸாதத்தாலே அவர் அருளிச் செய்த
அர்த்த விசேஷங்களை யெல்லாம் தெரிந்தெழுதி எல்லார்க்கும் உபகரிக்கும்படியான
ஜ்ஞானாதி குண பூர்த்தியை உடையவராயிருக்கை)
ஸ்ரீ ஸ்வாமி வடக்குதிருவீதிப் பிள்ளை, ஸ்வாமி நம்பிள்ளையிடம் காலக்ஷேபத்திலே கேட்டு அறிந்து கொண்ட
திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை இரவு நேரத்திலே பட்டோலை கொண்டு
ஸ்ரீ ஈடு முப்பத்து ஆறாயிரப்படியாக்கி வைத்தாராம்.
ஆகிலும் ஸ்வாமி ஸ்ரீ நம்பிள்ளையினுடைய அனுமதி பெறாமலே இவர் எழுதிவைத்த படியால்
அந்த ஸ்ரீகோசத்தை கொடும் என்று கேட்டு தாம் வைத்துக்கொண்டாராம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் நியமனமின்றி ஸ்ரீ நம்பிள்ளை இந்த ஸ்ரீ கோசத்தை தந்தருளமாட்டார் என்பதை
நன்கறிந்த ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாள் என்ற ஸ்வாமி, ஸ்ரீ பெரிய பெருமாளிடம் ப்ரார்திக்க,
ஸ்ரீ பெரிய பெருமாளும் திருவுள்ளம் உவந்து இரங்கி ஸ்ரீ நம்பிள்ளைக்கு நியமித்தருள, பின்பு அந்த
ஸ்ரீகோசத்தை நம்பிள்ளை ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு தந்தருளினாராம்.

அப்படியாக ஸ்ரீ நம்பிள்ளையிடம் ஸ்ரீகோசத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீ சிறியாழ்வான் அப்பிள்ளை
தம்முடைய திருக்குமாரரான ஸ்ரீ பத்மநாபப் பெருமாளிடம் அந்த ஸ்ரீ ஈட்டை ப்ரசாதித்து அருளினார்.
ஸ்ரீ பத்மநாபப் பெருமாள் தம் சிஷ்யரான ஸ்ரீ நாலூர்ப் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார்.
அந்த ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை தம்முடைய திருக்குமாரரான ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார்.
அந்த ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளையே மேலுள்ளவர்களுக்கு கொடுத்து உபகரித்து அருளினாராம்.
ஸ்ரீ நாலூராச்சான் ஸ்வாமியின் சிஷ்யர்கள் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி, ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய
ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் ஸ்ரீ ஈயுண்ணி தேவப்பெருமாள் ஆகியோர் ஆவர்.

—————-

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை –

திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.
ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்
வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்

தனியன்
துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே

ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும்
ஸ்ரீ ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “ஸ்ரீ நலந்திகழ் நாராயண தாஸர் என்ற
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.

மற்றொரு தனியன்

ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா

ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதாரவிந்தங்களில் மறைப்பொருள் அனைத்தையும் பெற்றவரும்
அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவரும்,
ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸ்ரீ ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும்
ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்ததுபோல்,
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து
ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.
இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய்மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும்
அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.

ஸ்ரீமத் பகவத் கீதையில் அமைந்துள்ள ஸ்லோகங்களுள் சரம ஸ்லோகம் சிறப்பெய்தினது போல,
ஸ்ரீ வசனபூஷணத்தில் அமைந்துள்ள ப்ரகரணங்களுள் சரம பர்வ நிஷ்டா ப்ரகரணம் சிறப்புற்றது.
ஆகையால் இந்த ப்ரகரணத்தில் அருளிச்செய்யப்பட்ட அர்த்த விசேஷங்களை எல்லாம் திரட்டி
ஒரு பிரபந்தம் அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டு திருவாசிரியம் போலே
ஏழு பாசுரம் கொண்ட ஸப்தகாதை என்னும் நூலை அருளிச்செய்தார் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை என்று பெரியோர் பணிப்பர்.

ஸ்ரீ வசனபூஷண ரஹஸ்ய அர்த்தத்தை ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவருடைய திருவரசு திருவனந்தபுரம் எம்பெருமானின் கர்பக்ரஹம் (அநந்த பத்மநாப பெருமாள் திருவடி).

—————–

ஸ்ரீ மாறனேரி நம்பி

யாமுநாசார்ய ஸச் சிஷ்யம் ரங்கஸ்தல நிவாஸிநம்
ஜ்ஞாந பக்த்யாதி ஜலதிம் மாறனேரி குரும் பஜே

ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பாண்டிய நாட்டிலுள்ள புராந்தகம் என்னும் சிற்றூரில்
நான்காம் வருணம் எனப்படும் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தார்.
மாறனாகிய நம்மாழ்வாருக்கு ஒப்பாக கருதும் வகையில் திருவரங்கத்தில் உறையும் அரங்கன் மீது
அளவற்ற பக்தி கொண்டமையால் இவரை மாறனுக்கு நேரான நம்பி எனும் பொருளில்
மாறனேர் நம்பி (மாறன்+நேர்+நம்பி) அல்லது மாறனேரி நம்பி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

தன் குருவாகிய ஆளவந்தார் இராஜ பிளவை எனப்படும் கொடு நோயால் படும் வேதனை பொருக்க ஒண்ணாது,
தன் குருவை அணுகி, குருப்பிரசாதமாக அக்கொடிய நோயை தனக்கு அளிக்குமாறு வேண்டி நின்றார்.
ஆளவந்தார் மறுதளித்தும் பிடியாய் இருந்த நம்பிக்கு வேறுவழியின்றி தன் நோயை மாற்றியருளினார்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக அக்கொடிய நோயால் பாதிப்படைந்தவர், குருபக்தியால் அனைவரும்
வியக்கும் வண்ணம் விரைவில் குணமடைந்தார். ஆயினும் இச்செய்கையால் தன் குடும்ப அங்கத்தினாராலேயே ஒதுக்கப்பட்டார்.

ஆளவந்தாரின் முதன்மை சீடரும், பிள்ளை பிராயம் தொட்டு தனக்கு உற்ற தோழனுமான பெரிய நம்பிகளிடம்
தான் ஆச்சாரியன் திருவடி அடைந்தப்பின் தன் பூத உடலை தன் உறவினர்களிடம் சேர்க்காது பெரியநம்பிகளே
ஈமக்கிரியையகள் யாவும் செய்ய வேண்டும் என்ற தன் இறுதி விருப்பத்தை தெரிவித்தார்.
ஏனெனில் ஆளவந்தாரின் இராஜபிளவை நோயை குருப்பிரசாதமாக பெற்றுக் கொண்டப்படியால்
தன் உடலும் குருப்பிரசாதம் என்றும் அதனை வைணவர்கள் அல்லாத தன் குடும்பத்தினரிடம் அளிப்பது என்பது
உயர்ந்த யாக நெய்யை தெருநாய்களுக்கு இடுவதற்கு ஒப்பாகும் என்றும் கருதினார்.
அதன்படி இவரின் இறுதிக் கடன் யாவும் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய நம்பிகளால் குறைவற நடத்திவைக்கப்பட்டது.

————-

ஸ்ரீ எறும்பியப்பா

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையில் சரம ஆசார்யராய், ப்ரதமாசார்யரான ஸ்ரீ நம்பெருமாளுக்கும் ஆசார்யராய்,
ஸ்ரீ யதிராசருடைய புநர் அவதார பூதரான ஸ்ரீ மணவாளமாமுனிகளுக்கு ஞான பக்தி வைராக்கியங்களில் சிறந்து விளங்கிய
தலை சிறந்த சிஷ்யர்கள் பலர் உண்டு. அவர்களில் எண்மர் அஷ்ட திக்கஜங்கள் என்று பெயர் பெற்றவர்கள்.
அஷ்டதிக்கஜங்களாக நியமிக்கப்பட்ட எண்மருள் ஸ்ரீ எறும்பியப்பாவும் ஒருவர்.
இவர் சோளஸிம்ஹபுரத்துக்கு அருகிலுள்ள எறும்பி என்னும் ஊரில் முடும்பைக்குடியில்
ஸ்ரீ பெரியசரண்யாச்சார்யார் என்பவருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இயற்பெயர் ஸ்ரீ தேவராஜன்.

திருநக்ஷத்ரம் – ஐப்பசி ரேவதி
ஸ்வாமி ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ வடுகநம்பியைப் போலே ஸ்ரீ மணவாளமாமுநிகளையொழிய
தேவுமற்றறியாதே ஸ்ரீ மாமுநிகளுக்கு அத்யந்த அபிமதராய் இருப்பார் என்று
ஸ்ரீ கோயில் கந்தாடை நாயன் அருளிச்செய்த பெரிய திருமுடி அடைவு கூறும்.

ஸ்ரீ மணவாள மா முனிகள் விஷயமாக இவரருளிச் செய்துள்ள க்ரந்தங்கள்:
வரவரமுநி சதகம், வரவரமுநி காவ்யம், வரவரமுநி சம்பூ, வரவரமுநி நாடகம், பூர்வ தினசர்யா,
உத்திர தினசர்யா ஆகியவை ஆகும்.
மேலும் விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்கிற நூலையும் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய சிஷ்யர் ஸ்ரீ போரேற்று நாயனார்.
நவரத்னங்கள் என்று கொண்டாடப்படுபவர்களான ஸ்ரீ மணவாளமாமுனிகள் சிஷ்யர்கள் ஒன்பதின்மரில் இவரும் ஒருவர்.
ஸ்ரீ போரேற்று நாயனாருடைய சிஷ்யர் ஸ்ரீ சேனாபதியாழ்வான்.
ஸ்ரீ சேனாபதியாழ்வானுக்கும் ஸ்வாமி எறும்பியப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த ஸம்ப்ரதாய தொடர்புடையதான
வினாக்களுக்கு விடையாக அமைந்துள்ளது விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்ற நூல்.

தனியன்
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே

ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றியவரும்
எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

தனியன்
சௌம்யஜா மாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
தேவராஜம் குரும் வந்தே திவ்யஜ்ஞாந ப்ரதம் ஸுபம்

அழகிய மண்வளமாமுனிகளின் திருவடித்தாமரைகளில் வண்டு போல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,
தம்மை அண்டினவர்களுக்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பவரும், அறிவினாலும் அநுஷ்டாணத்தாலும்
சோபிப்பவருமான தேவராஜகுரு என்னும் எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

—————

ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்

ஸ்ரீ திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மேலக்கோட்டையில் ஸ்ரீ ஸேனை முதலியார்
அவதரித்த நன்னாளில் திருவவதரித்தார். திருநக்ஷத்ரம் – ஐப்பசி பூராடம்.

மற்ற திருநாமங்கள் – தேவராஜர், தேவப்பெருமாள், ஆஸூரிதேவராயர், திருத்தாழ்வரை தாஸர்,
ஸ்ரீஸாநுதாசர், மாத்ரு குரு, ஜநந்யாச்சார்யர், ஆயி, தேவராஜ முநீந்த்ரர் ஆகியவை ஆகும்.

ஜநந்யாசார்யருக்கு வேதம், திவ்ய ப்ரபந்தம் கற்பித்து, பஞ்சஸம்ஸ்காரம் செய்தது
அவருடைய திருதகப்பனார் லக்ஷ்மணாச்சார்யார் ஆவார்

திருநாடு அலங்கரித்தது திருநாராயணபுரத்திலே.

ஈடு பரம்பரையின் ஆசார்யர் ஸ்வாமி நம்பிள்ளை.
அவர் சிஷ்யர் ஈயுண்ணி மாதவர்.
அவர் குமாரர் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள்.
இவர் சிஷ்யர் நாலூர்ப்பிள்ளை.
இவர் சிஷ்யர் நாலூராச்சான்பிள்ளை.
இவருடைய சிஷ்யர்கள் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி, இளம்பிளிசைப் பிள்ளையான ஸ்ரீ திருவாய்மொழி ஆச்சான்,
ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை ஆகியோர் ஆவர்.

ஸ்ரீ எம்பெருமானார் தம் திருக்கைகளாலே திருவாராதநம் ஸமர்ப்பித்த ஸ்ரீ திருநாராயணப் பெருமாளுக்கும்,
ஸ்ரீ ராமப்ரியனும் ஸ்ரீ யதிராஜ சம்பத்குமாரனுமான செல்வப்பிள்ளைக்கும் பாலமுதும்,
ஸ்ரீ மாலாகாரர், ஸ்ரீ விஷ்ணுசித்தர் மற்றும் ஸ்ரீ ஆண்டாளைப் போல புஷ்பமும் ஸமர்ப்பித்துக்கொண்டு
கைங்கர்ய நிரதராய் ப்ரசித்தி பெற்றவர் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி ஸ்வாமி.

ஆய் என்ற சொல்லுக்கு தாய் என்று பொருள். இந்த ஸ்வாமி ஸ்ரீ திருநாரணனுக்கு பாலமுது சமர்ப்பிக்கும்
கைங்கர்யத்தை தாயன்போடு செய்து வந்தாராம். ஒரு நாள் பாலமுது சமர்பிப்பதற்கு கொஞ்சம் காலம் தாழ்ந்துபோக,
ஸ்ரீ திருநாரணன் அது பொறாமல் நம் ஆய் எங்கே (தாய்) இன்னம் காணோமே? என்று அர்ச்சகர் மூலம்
வினவினபடியாலே அன்று முதல் இவருக்கு ஆய் என்று திருநாமம் உண்டாயிற்று.

மாமுனிகளுக்கும் இவருக்கும் உள்ள சம்பந்தம்:
மணவாளமாமுனிகள் ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் அருளிச் செய்தபோது
“ஜ்ஞான சதுர்த்திகளின் மேலேயிறே ஆநந்தஷஷ்டிகளுக்கு உதயம்” என்கிற வாக்கியத்திற்கு
அர்த்தம் அருளிச்செய்யும் போது சில விளக்கங்கள் தேவைப்பட தமது ஆசார்யரான
ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் ஸஹ அத்யாயியாய்(கூடப் படித்தவர்) எழுந்தருளியிருந்த
ஸ்ரீ ஆய் ஸ்வாமியினிடத்திலே கேட்கவேணும் என்று திருவுள்ளம்கொண்டு ஸ்ரீ திருநாராயணபுரம் நோக்கி
புறப்பட்டாராம் ஸ்ரீ மாமுனிகள். அதே ஸமயம் ஸ்ரீ திருநாரணன் ஆயி ஸ்வாமியின் ஸ்வப்னத்திலே
ஸ்ரீ மாமுனிகள் அவதாரரஹஸ்யத்தை காட்டியருள ஸ்ரீ ஆய் ஸ்வாமி மாமுனிகளை சேவிப்பதற்காக
ஸ்ரீ ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டார். இருவரும் ஸ்ரீ ஆழ்வார் திருநகரி எல்லையில் சந்தித்துக்கொள்ள
ஸ்ரீ ஆயியும் தாளும் தடக்கையும் கூப்பி சேவிக்க, இதனைக் கண்ட ஸ்ரீ பெரிய ஜீயர் ஸ்வாமியின் சிஷ்யர்கள்
ஸ்ரீ பெரிய நம்பியும் ஸ்ரீ எம்பெருமானாரும் எதிர்பட்டாப் போலாயிற்று என்று உகந்தனராம்.
ஸ்ரீ மாமுனிகளும் ஆசார்ய ஹ்ருதய காலக்ஷேபம் கேட்டு முடித்த பின்பு ஸ்ரீ ஆய் ஸ்வாமிக்கு ஒரு தனியன் சமர்ப்பிக்க

“ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்ஸிதா:
ஸ்ரீ ஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாஸ்ரயே”

ஸ்ரீ ஆயி ஸ்வாமியும் மாமுனிகள் விஷயமாக ஒரு பாசுரம் அருளிச்செய்தாராம்

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ?
பூங்கமழும் தாதாரு மகிழ்மார்பன் தானிவனோ,
தூதூர வந்த நெடுமாலோ?
மணவாளமாமுனிவன் எந்தையிவர் மூவரிலும் யார்?

பிறகு ஸ்ரீ ஆய் ஸ்வாமி சிலகாலம் அங்கேயே எழுந்தருளியிருந்தபின்னர் திருநாராயணபுரம் எழுந்தருளினார்.

இவர் அருளிச்செய்தவை
திருப்பாவைக்கு ஈராயிரப்படி மற்றும் நாலாயிரப்படி வ்யாக்யானம்,
ஸ்ரீ வசனபூஷண வ்யாக்யானம்,
ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் ஆகியவை ஆகும்

————-

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வைபவம்

அவதார ஸ்தலம் – திருவெள்ளியங்குடிக்கு அருகிலே உள்ள சங்கநல்லூர் என்னும் சிற்றூர்
திருவவதாரம் – சர்வஜித் வருஷம், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம்
(கண்ணன் எம்பெருமான் திருவவதரித்த நன்னாளிலே அவதரித்தவர் – ஸ்ரீஜயந்தி)
திருதகப்பனார் திருநாமம் – ஸ்ரீ யாமுனதேசிகர்
திருத்தாயார் – நாச்சியாரம்மாள்
பெற்றோர் இட்ட திருநாமம் – க்ருஷ்ணர்
திருவாராதனப் பெருமாள் – க்ருஷ்ண விக்ரஹம்
திருக்குமாரர் – ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை
மற்ற திருநாமங்கள் – அபயப்ரதராஜர், வ்யாக்யான சக்ரவர்த்தி, க்ருஷ்ணஸூரி, பரம காருணிகர்,
அபார கருணாம்ருத சாகரர் ஆகியவை ஆகும்.
ஆசார்யன் – ஸ்ரீ நம்பிள்ளை

பெரியவாச்சான்பிள்ளை அவதாரச் சிறப்பு :
திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியுள்ள கண்ணன் எம்பெருமான் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த
திவ்ய ப்ரபந்தங்களில் இருக்கக்கூடிய அர்த்தவிசேஷங்களை அறிய திருவுள்ளம் கொண்டதை அறிந்த
ஆழ்வாரும் எம்பெருமானே வாரும் கற்றுத்தருகிறேன் என்று விண்ணப்பித்தாராம்.

மெய்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ணா !
நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே !பெரிய திருமொழி 7-10-10

இதனைத் செவிமடுத்த எம்பெருமான் ஆழ்வாரே நாம் அவஸ்யம் தேவரீரிடம் இருந்து அர்த்த விசேஷங்களை
அறிந்து கொள்வோம்! ஆனால் இப்போது அர்ச்சாமூர்த்தியாய் எழுந்தருளியுள்ளபடியால் சாத்தியமில்லை.

பின்னொரு சமயம் தேவரீர் திருக்கலிகன்றி தாசர் என்னும் திருநாமம் கொண்டவராய் இதே
கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ர நன்னாளிலே இந்தச் சோழ நாட்டிலே அவதரிப்பீர்.
தேவரீர் அவதரித்து சில ஆண்டுகள் கழித்து அதே சோழ நாட்டில் யாம் ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரத்திலே
கிருஷ்ணன் என்ற திருநாமம் கொண்டவராய் அவதரிப்போம்.

அந்த சமயம் தேவரீரை ஆசார்யராகக் கொண்டு ஆழ்வார்கள் அனைவருடைய அருளிச்செயல்களின் பொருளையும்
ஸ்ரீ இராமாயண அர்த்தங்களையும் மற்றும் ரஹஸ்யார்த்தங்களையும் தேவரீரிடம் இருந்து கற்றறிந்து
உலகோர்கள் எல்லோரும் உய்ய வேண்டி உபதேசிப்போம் என்று தெரிவித்தானாம் எம்பெருமான்.

அதன்படிக்கு அருளிச்செயலின் அர்த்தவிசேஷங்களைக் கற்றுக்கொடுப்பதற்கு கலிகன்றியாகிய
திருமங்கை ஆழ்வார் திருக்கலிகன்றி தாசராகவும்(ஸ்வாமி நம்பிள்ளை),
கண்ணன் எம்பெருமானே ஆவணி ரோஹிணியிலே க்ருஷ்ணஸூரி என்னும் திருநாமம் கொண்டு
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையாகவும் திருவவதாரம் செய்தனர் என்பது ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்யர்களின் நிர்வாஹம்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் ஆசார்யன் – ஸ்வாமி நம்பிள்ளை

ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்த விசிஷ்டாத்வைத வேதாந்தப் ப்ரவசனம் செய்த மஹாநுபாவர்களில் தலைவர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை.
நம்பெருமாள் கோஷ்டியோ அல்லது நம்பிள்ளை கோஷ்டியோ என்று வியந்து போகும் அளவிற்கு எண்ணிலடங்கா
சத் சிஷ்யர்களை பெற்றிருந்த பெருமை, லோகாச்சார்யார் என்று ஸ்ரீ கந்தாடை தோழப்பரால் கொண்டாடப்பட்ட
நம்பிள்ளை ஸ்வாமிக்கு உண்டு. அதே போன்று நம் பெரியபெருமாளுக்கு இருக்கக்கூடிய ப்ரபாவத்தை
நம்மால் பேசி முடித்தாலும், நம் பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமியின் பெருமைகளைப் பேசி முடிக்க நம்மால் முடியாது.
லோகத்தை ஆளும் சக்ரவர்திகளுக்கு ஸிம்ஹாஸனம் உண்டு என்பதை கேள்விபட்டு இருக்கிறோம் அல்லவா.
அது போல வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளைக்கு நான்கு திக்குகளிலும்
நான்கு ஸிம்ஹாஸனங்கள் உண்டு என்பது ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருவாக்கு.

முதல் ஸிம்ஹாஸனம் –
நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு ஸ்வாமி அருளிச்செய்த திவ்ய வ்யாக்யானங்களே முதலாவதும்
முக்கியமானதுமான ஸிம்ஹாஸனம் ஆகும். அவைகள் இல்லாவிடில் ஸ்ரீவைஷ்ணவ உலகமே ஞான சூன்யமாய்
இருளடைந்து பாழாகியிருக்கும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருப்பல்லாண்டு முதலான நாலாயிர திவ்யப்ரபந்தங்களையொழிய
பகவானை அறிவதற்கு வேறு வழியில்லை. திவ்யப்ரபந்தங்களிலே இருக்கக்கூடிய ஆழ்ந்த அர்த்தங்களை
அறிவதற்கு பூர்வாசார்ய பரம்பரையாகவும், ஆசார்ய நியமனப்படியும்,
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையால் அருளிச்செய்யப்பட்ட வ்யாக்யானங்களைத் தவிர வேறு புகல் இல்லை.

இரண்டாவது ஸிம்ஹாஸனம் –
இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தில் அமைந்துள்ள மிகச்சிறந்த ஸ்லோகங்கள் பலவற்றில் இருக்கக்கூடிய
ரஹஸ்ய அர்த்தங்களை விவரித்து அருளிச்செய்த ஸ்ரீராமாயண தனிஸ்லோகம்,
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் இரண்டாவது ஸிம்ஹாஸனமாகும்.

மூன்றாவது ஸிம்ஹாஸனம் –
ரஹஸ்யத்ரயங்களையும் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற
ரஹஸ்யார்த்தங்களையும் விவரித்து ஸ்வாமி அருளிச்செய்த பரந்த ரஹஸ்யம், மாணிக்கமாலை,
ஸகலப்ராமண தாத்பர்யம், ரஹஸ்யத்ரய தீபிகை, ரஹஸ்யத்ரய விவரணம் மற்றும் நிகமனப்படி
முதலானவை மூன்றாவது ஸிம்ஹாஸனம்.

நான்காவது ஸிம்ஹாஸனம் –
பரமாசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஜகதாசார்யரான ஸ்வாமி எம்பெருமானாரும் அருளிச்செய்த
ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, கத்யத்ரயம் முதலான ஸ்தோத்ரங்களுக்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த
திவ்ய வ்யாக்யானங்களும் மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானமும்,
வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் நான்காவது ஸிம்ஹாஸனம் ஆகும்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளிலே ஸகல சாஸ்த்ரார்த்தங்களையும் கேட்டு
உணர்ந்துகொண்டு ஆழ்வார்கள் அருளிச்செயல் எல்லாவற்றிற்கும் வ்யாக்யானம் அருளிச்செய்தவர்.

பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகள் காலம் தொடங்கி நம் ஸம்ப்ரதாய அர்த்தங்கள் அனைத்தும்
காலக்ஷேப முறையில் ஆசார்யன் சிஷ்யர்களுக்கு உபதேசித்து வந்தார்கள். ஏடுபடுத்தவில்லை.
பரம காருணிகரும், அபாரகருணாசாகரருமான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை தான்,
முதன் முதலில் நம்போல்வாருடைய உஜ்ஜீவனம் பொருட்டு திவ்யப்ரபந்த அர்த்தங்கள்,
ஸ்ரீ இராமாயண அர்த்தங்கள், ரஹஸ்ய அர்த்தங்கள், ஸ்தோத்ர அர்த்தங்கள் ஆகிய அனைத்தையும்
தன் பெருங்கருணையாலே பட்டோலை கொண்டு உபகரித்து அருளினார்.
இதனாலன்றோ க்ருபா மாத்ர ப்ரசன்னாசார்யர்களின் கோஷ்டிக்கு தலைவராக விளங்குகிறார் நம் ஸ்வாமி.
இப்படி உலகில் உள்ள அனைவரும் நம் ஸம்ப்ரதாய அர்த்தங்களை தெரிந்து கொள்வதற்கு
இவ்வாச்சார்யார் பண்ணிய உபகாரம் போன்று வேறு எந்த ஆசார்யரும் செய்ததில்லை.

ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளைக்கே உண்டான அசாதாரண பெருமையைப் பற்றி
பெரிய ஜீயர் ஸ்வாமி தாம் அருளிச் செய்த உபதேசரத்தினமாலையில் பின்வருமாறு தெரிவிக்கிறார்.

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வ்யாக்கியைகள் செய்வால் –
அரிய அருளிச்செயற்பொருளை
ஆரியர்கட்க்ப்போது அருளிச்செயலாய்த் தறிந்து*

அபயப்ரதராஜரான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை என்னும் மஹாசார்யர் திருவாய்மொழி தவிர
மற்றுமுள்ள திவ்யப்ரபந்தங்களுக்கும் பரமகருணையுடன் வ்யாக்யானங்கள் அருளிச்செய்த படியாலே,
பின்புள்ளார்கள் ஆசார்ய பீடத்தில் அமர்ந்து திவ்யப்ரபந்த பாசுர அர்த்தங்களை ப்ரவசனம் பண்ணுவதற்கு
பாங்காயிற்று என்று தெரிவிக்கிறார் நம் ஸ்வாமி.

திருவாய்மொழிக்கு பன்னீராயிரப்படி வ்யாக்யானம் அருளிச்செய்தவர்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் என்பது எல்லோரும் அறிந்ததே.
வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமியின் இயற்பெயர் வரதராஜர் என்பதாகும்.
இந்த ஸ்வாமி ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமியின் திருமாளிகை திருமடப்பள்ளி கைங்கர்யம் புரிந்து வந்தார்.
எழுத்து வாசனையே அல்லாதவராய் இருந்தவர். அந்த சமயம் கற்றறிந்த பெரியோர்கள் சிலர் சாஸ்த்ர விசாரம்
பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்த வரதராஜர் அவர்களை அணுகி அவர்களுடைய உரையாடல்களைப் பற்றி வினவினார்.
வரதராஜருக்கோ எழுதப்படிக்க தெரியாது என்பதை நன்கு தெரிந்திருந்த அந்த பண்டிதர்கள்
முஸலகிஸலயம் என்ற நூலைப் பற்றி உரையாடிக்கொண்டு இருக்கிறோம் என்று பதில் உரைத்தனராம் அந்த பண்டிதர்கள்.
அப்படி ஒரு நூலே கிடையாது. இவர்கள் சொல்வதை உண்மை என்றெண்ணி வரதராஜர்
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையிடம் சென்று இந்த நிகழ்வைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமி உண்மையை உணர்ந்துகொண்டு உமக்கு கல்வி அறிவு இல்லாதபடியாலே,
இல்லாத ஒரு நூலின் பெயரைச் சொல்லி கேலியாகப் பேசியனுப்பிவிட்டனர் என்று அவரிடம் தெரிவித்தவுடன்
வரதராஜர் மிகவும் வெட்கப்பட்டு ஸ்வாமியினுடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அடியேனுக்கு
ஸாஸ்த்ரம் கற்றுத்தரும்படி வேண்டிக்கொள்ள, அபார கருணை உள்ளம் கொண்ட ஸ்வாமியும் அவருக்கு
ஸாஸ்த்ரம், காவியம், நாடகம், அலங்காரம், ஸப்தம், தர்க்கம், பூர்வ மீமாம்ஸா மற்றும் உத்தர மீமாம்ஸா
முதலான ஸகல ஸாஸ்த்ரங்களையும் மற்றும் ஸம்ப்ரதாய விஷயங்களையும் அவருக்கு உபதேசித்து
ஒரு சிறந்த வல்லுனராக்கி வைத்தார். ஆசார்ய அனுக்கிரஹம் பரிபூர்ணமாக அவருக்கு இருந்த படியாலே
அனைத்து விதமான ஸாஸ்த்ரங்களையும் கற்றுத் தேர்ந்து முஸலகிஸலயம் என்னும் க்ரந்தத்தையும் இயற்றி
இவரைக் கேலியாகப் பேசினவர்களிடத்தே கொண்டு சமர்பித்தாராம்,
பூர்வாஸ்ரமத்திலே வரதராஜர் என்ற திருநாமம் கொண்ட வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி.

ஆசார்ய அபிமானமே உத்தாரகம்!

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் கோஷ்டியிலே எழுந்தருளியிருந்த சிலர்
“எங்களுக்கு தஞ்சமாய் இருபத்தொரு வார்த்தை அருளிச்செய்யவேணும் என்று ப்ரார்திக்க”
அதற்கு ஸ்வாமி, கலங்குகிறவனும், கலக்குகிறதும், கலங்கிக் கிடக்கிறவர்களும்,
தெளிவிக்கிறவனும், தெளிகிறவனும், தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது என்று பதிலுரைத்தாராம்

கலங்குகிறவன் – ஜீவாத்மா
கலக்குகிறது – பகவானையும் ஆத்மாவையும் அறியவிடாமல் மறைத்துத் தன் விஷயத்திலே மூளும்படி பண்ணுகிற அசித்து.
கலங்கிக்கிடக்கிறவர்கள் – தேஹமே ஆத்மா என்று கிடக்கும் சம்சாரிகள்
தெளிவிக்கிறவன் – ஆசார்யன்
தெளிகிறவன் – சேதனன்(ஞானவானான ஜீவாத்மா)
தெளிந்திருக்கிறவன் – ஈஸ்வரன்

ஆகையாலே கலங்குகிற தன்னையும், கலக்குகிற ப்ரக்ருதியையும், கலங்கிக் கிடக்கிற சம்சாரிகளையும்
தஞ்சம் அன்று என்று கைவிட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும், தெளிந்திருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகையே,
ஆசார்யனாலே தெளிந்த இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம் என்று அருளினார் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை.

————–

ஸ்வாமி எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்மாசனாதிபதியான
ஸ்ரீ குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்த
ஸ்ரீ எறும்பில் கந்தாடை அண்ணன் ஸ்வாமியினுடைய திருநக்ஷத்ரம் கார்த்திகை திருவாதிரை.

திருமாளிகையின் எட்டாவது ஸ்வாமியாக எழுந்தருளி இருந்தவர் ஸ்வாமி வரம் தரும் பெருமாள் அப்பை.
தேவுமற்றறியேன் குருகூர் நம்பி என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைப் போல,
எல்லாம் ஆசார்யனே என்று ஸ்வாமி மணவாளமாமுனிகளிடத்திலே
வரம் தரும் பெருமாள் அப்பை ஸ்வாமி எழுந்தருளியிருந்தபடியால்,
இவருடைய ஆசார்ய கைங்கர்ய நிஷ்டையைக் கண்ட ஸ்வாமி மணவாளமாமுனிகள், நம் ஸ்வாமியை
பஞ்சரத்ன ஆசார்ய பீடத்திலே ப்ரதானராய் அபிஷேகம் செய்வித்து
ஸ்ரீ ருக்மிணீ சத்யபாமா ஸமேத ஆஹூய ரக்ஷகரான ஸ்ரீ கிருஷ்ணனை நித்ய ஆராதனத்திற்காக அனுக்ரஹித்து அருளினார்.

வரம் தரும் பெருமாள் ஸ்வாமியின் இரண்டாம் குமாரர் சுத்த ஸத்வம் அண்ணன்.
இவரை பெரிய ஜீயர் ஸ்வாமி அழைத்தருளி ‘பாகவத சேஷத்வத்தை ஈடுமுப்பத்தாறாயிரப்படியாலே நிர்வஹிக்க”
நியமித்தருள ஸ்வாமியும் “பயிலும் சுடரொளி, நெடுமாற்கடிமை” ஆகிய திருவாய்மொழிப் பதிகங்களை
ஸ்வாமி நம்பிள்ளையைப் போல் உபந்யசித்தது கண்டு பெரிய ஜீயரும் “நம் சுத்த சத்வம் அண்ணனோ” என்று
போர உகந்தருளி “திருவாய்மொழி ஆசார்யர்” என்ற சிறப்பு திருநாமமும் சாற்றி
பகவத் விஷய ஸிம்ஹாஸனத்திலே பட்டாபிஷேகம் செய்தருளினாராம்.

வரம் தரும் பெருமாள் அப்பை ஸ்வாமியின் இரண்டாவது திருக்குமாரரான சுத்த ஸத்வம் அண்ணனுக்கு
திருக்குமாரராக அவதரித்தவர் எறும்பில் கந்தாடையண்ணன் ஸ்வாமி. இவருடைய மற்றொரு திருநாமம் வரதராஜ தேசிகர்.
இவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணியருளியவர் ஸ்வாமி வரம் தரும் பெருமாள் அப்பை,
உபய வேதாந்தங்களை கற்பித்தவர் திருதகப்பனாரான ஸ்வாமி சுத்த ஸத்வம் அண்ணன்.
எறும்பில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி சாதித்த க்ரந்தங்கள்.
1. ஸ்ரீ வசன பூஷண மீமாம்ஸா பாஷ்யம்
2. ஸ்ரீ வெங்கடேசஸ்தவம் மற்றும்
3. ஸ்ரீ பராங்குச ஸ்தவம்

எறும்பில் கந்தாடை ஸ்வாமிக்கு நான்கு திருக்குமாரர்கள் அவதரித்தார்கள்.

தனியன்

கௌசிக ஸ்ரீ நிவாஸார்ய தநயம் விநயோஜ்வலம்
வாத்ஸல்யாதி குணாவாஸம் வந்தே வரததேசிகம்

வாழி திருநாமம்

தக்கானையிருசரணம் தனித்தொழுவோன் வாழியே
சகலகலைப் பொருளனைத்தும் சாத்திடுவோன் வாழியே
மிக்கான கௌஸிகரில் மேவினோன் வாழியே
விருச்சிகத்தில் ஆதிரைநாள் விளங்கவந்தோன் வாழியே
எக்காலம் அண்ணனடி யேத்துமவன் வாழியே
யதிராசன் பாஷியம் இங்கு எடுத்துரைப்போன் வாழியே
இக்காலம் என்னை ஈடேத்த வந்தோன் வாழியே
எறும்பில் கந்தாடையண்ணன் இணையடிகள் வாழியே

ஏழ்பாரும் போற்ற வரும் எறும்பி நகர் வாழுமண்ணா
வாழ்வார் குமாண்டூரில் வந்தோனே – ஆழ்வார்கள்
பன்னுகலை யதிராசன் பாஷியம் பார்த்துரைத்தே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்

————-

கார்த்திகே பரணி ஜாதம் யதீந்த்ர ஆச்ரித மாச்ரயே
ஜ்ஞான ப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முநிம்
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம்
சதுர்த்த ஆச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே

எம்பெருமானாருடைய நல்ல சீடராய் வேத சாஸ்த்ரார்த்தப் பொருளைச் செல்வமாக உடையவராய்
ஸந்யாஸ ஆஸ்ரமத்தை உடையவரான தேவராஜ முனிவர் என்னும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கிறேன்.

ஸுவர்ணமுகி நதிக்கரையிலுள்ள விஞ்சை(விஞ்சிமூர்) என்னும் நகரத்தில்
கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் ஸ்வாமி அருளாளப் பெருமாள் எம்பெருமானார்.
இயற்பெயர் யஜ்ஞமூர்த்தி. ஏகதண்டி அத்வைத ஸந்யாசியாக வாழ்ந்தவர்.
எம்பெருமானாருடைய பெருமைகளை அறிந்து கொண்ட இவர், அத்வைதம் தழைக்கவும்,
எம்பெருமானாரை வாதத்திற்கு அழைத்து வெற்றிகொள்ளவும் தீர்மானித்து,
நிறைய க்ரந்தங்களை எழுதி எடுத்துக்கொண்டு வித்யாகர்வத்தோடு தம் சிஷ்யர்களுடன் திருவரங்கம் வந்து சேர்ந்தார்.

ஸ்வாமி எம்பெருமானாரை நோக்கி “நீர் என்னோடு சாஸ்த்ர தர்க்கம் பண்ண வேணும்” என்று அழைத்தார்.
யஜ்ஞமூர்த்தி வாதத்தில் தோற்றால் எம்பெருமானாருடைய மதத்தை ஏற்றுக்கொண்டு,
எம்பெருமானாருடைய பாதுகையை தன் ஸிரஸில் தாங்கி தன்னுடைய பெயரையும்
எம்பெருமானாருடைய திருநாமத்துடன் சேர்த்து வைத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
எம்பெருமானாரும் வாதத்தில் தாம் தோற்றால் க்ரந்த ஸந்யாஸம் மேற்கொள்வதாக
(க்ரந்தங்களை எழுதாமலும் தொடாமலும் விட்டுவிடுவதாக) அறிவித்தாராம்.

16 நாட்கள் வாதம் நடைபெற்று வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்தது. வாதத்தின் 17 ஆம் நாள் முடிவில்
யஜ்ஞமூர்த்தி பக்கமே ஓங்கியிருந்த நிலை ஏற்பட்டது. அன்று இரவு ஸ்வாமி எம்பெருமானார்
தன் திருவாராதன பெருமாளான வரதராஜ பெருமாளிடம்
“பேரருளாளப் பெருமாளே! நாத யாமுன முனிவர்கள் வளர்த்து அடியேனிடம் வந்த இந்த தரிசனம்
அடியேனால் சிதைவு காண வேணுமென உமது திருவுள்ளமோ? இப்படி ஒரு திருவிளையாடலோ? என்று
நினைத்துக்கொண்டு சயனிக்க, அவருடைய ஸ்வப்னத்திலே (கனவிலே) பேரருளாளப் பெருமாள் தோன்றி,
எம்பெருமானாரே ஒரு பெரிய அறிவாளியை உமக்கு சீடனாக ஆக்குவதற்கே இதை செய்தோம் என்று சொல்லி
பரமாசார்யரான ஆளவந்தாருடைய மாயாவாத கண்டணத்தைக் கொண்டு யஜ்ஞமூர்த்தியை வாதத்தில் ஜயிப்பீராக என்று அருளினாராம்.

மறுநாள் காலை மிகுந்த சந்தோஷத்துடனும், மநோபலத்துடனும் மதம் கொண்ட யானையைப் போல
வாதத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானாரைக் கண்ட யஜ்ஞமூர்த்தி, ஸ்வாமியின் முகவொளி கண்டு
மேலே வாதிட விரும்பாமல் ஸ்வாமி திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து
“அடியேன் தோற்றேன், இரங்கி அருளவேணும்” என்று பிரார்த்தித்தார்.

ஸ்வாமி எம்பெருமானார் வாதம் தொடரட்டும் என்று சொல்லி வாதத்தைத் தொடங்கி
முறைப்படி வாதத்தில் வென்று வெற்றி கொண்டார். அவரும் தமது அத்வைத கொள்கையைத் த்யஜித்து
சிகையும் யக்ஞயோபவீதத்தையும் தரித்து த்ரிதண்டமேந்தி ஸ்ரீவைஷ்ணவ முக்கோல் பகவர் ஆனார்.
பேரருளாளப் பெருமாளின் அருளால் இவர் தமக்கு சிஷ்யரானபடியாலும், எம்பெருமானாரிடம் வாதத்தில்
தோற்ற படியாலும் வாத நிபந்தனைப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தோடு சேர்த்து
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமம் சூட்டப்பெற்றார்.

ஆசார்யனான ஸ்வாமி எம்பெருமானாரிடம் ஸகல அர்த்தங்களையும் கற்றறிந்து அதை பின்புள்ளாரும்
அறிய வேண்டி, ஸ்வாமியிடம் அனுமதி பெற்று ஞான ஸாரம் மற்றும் ப்ரமேய ஸாரம் ஆகிய
இரண்டு தமிழ் ப்ரபந்தங்களை அருளிச்செய்தார்.

ஞானசாரம் 40 பாசுரங்களைக் கொண்டது. நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்ட அர்த்த விசேஷங்களை
சாரமாக எடுத்துரைக்கும் ப்ரபந்தம். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தம்முடைய பரம கருணையாலே
தத்வம், ஹிதம், புருஷார்த்தம் ஆகியவற்றின் கருத்தை அனைவரும் அறியலாம்படி தமிழில் அருளிச் செய்த ப்ரபந்தம் ஞானசாரம்.

ப்ரமேய ஸாரம் 10 பாசுரங்களைக் கொண்டது. முதல் மூன்று பாசுரங்களால் ப்ரணவத்தின் பொருளையும்,
அடுத்த நான்கு பாசுரங்களால் திருமந்திரத்தின் இரண்டாவது பதமான நம: என்ற சொல்லின் பொருளையும்,
எட்டாவது பாசுரத்தால் நாராயணாய என்ற சொல்லின் பொருளையும்,
ஒன்பதாவது பாசுரத்தில் ஆசார்ய வைபவத்தையும்,
சரமப் பாசுரமான 10 ஆம் பாசுரத்தில் ஆசார்யன் செய்யும் உபகாரத்தையும் அருளிச் செய்துள்ளார்.

———–

பெரிய திருமுடி அடைவு என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
வைணவ குருபரம்பரை வரலாற்றினைக் கூறுவது. கந்தாடையப்பன் தொகுத்தது.
பார்த்தசாரதி ஐயங்கார் பதிப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
அரிசமய தீபம் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையில் ‘பெரிய திருவடி அடைவு’ நூலைப் பற்றிக் கீழ்க்காணும் செய்திகள் உள்ளன.

கருடவாகன பண்டிதர் செய்த வடமொழி நூல் திவ்வியசூரி சரிதம்.
இதில் இராமானுசர் காலத்தில் அவரது காலம் வரையிலான குருபரம்பரை தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.
‘பிரபன்னாமிர்தம்’ என்னும் நூல் பின்பழகிய பெருமாள் ஜீயர் இயற்றிய குருபரம்பராப் பிரபாவம் என்னும்
நூலை வடமொழியில் மொழிபெயர்த்தார்.
பெரிய திருமுடி அடைவு என்னும் நூல் அது தோன்றிய 15 ஆம் நூற்றாண்டு வரையிலான
வைணவ குருமார்களின் பரம்பரையைத் தொகுத்துக் கூறும் தமிழ்நூல்.

———–

விஷ்ணுவை ஒரு மனித உருவாக பாவித்தால் அந்த முழு அவயவமும் நம்மாழ்வார்.
பூதத்தாழ்வார் திருமுடி.
பொய்கை ஆழ்வார் கண்கள்.
பெரியாழ்வார் தான் முகம்.
திருமழிசையாழ்வார் கழுத்து.
குலசேகரரும் திருப்பாணாழ்வாரும் இரு கைகள்.
தொண்டரடிப் பொடியாழ்வார் மார்பு.
திருமங்கை ஆழ்வார் தொப்புள்.
மதுரகவி ஆழ்வார் திருவடி.
ஆண்டாள்?? — ஜீவனாகத்தான் இருக்கவேண்டும்.

———-

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமும் நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடலோ குறுமுனியின் கையிலடக்கம்
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியில் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப்பாரம்
அரமோ உமையின் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாடத்திற்கொடுக்கம்
இறைவனோ தொண்டருள்ளத்துளொடுக்கம்
தொண்டர்தம் பெருமையை சொல்லலும் பெரிதே–20 நூற்றாண்டு ஔவையார் பாடல்

——-

பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையே உள்ள உறவு குரங்குக்கும் அதன் குட்டிக்கும் இடையேயுள்ள
உறவைப் போன்றது என்று வடகலையார் கூறுகின்றனர்.
இதனை மர்க்கட நியாயம் என்றழைக்கின்றனர் ( மர்க்கடம்– குரங்கு )
தென்கலையாரோ அவ்வுறவு பூனைக்கும் அதன் குட்டிக்கும் போன்றது என்று கூறுகின்றனர்.
இதனை “ மார்ஜாரம்– பூனை என்று அழைக்கின்றனர்.

————–

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b 1074 AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர் (1113-1208 AD)
நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

மாமுனிகள் அரங்கன் திருமுன்னிலையில் திருவாய்மொழிக்கு விரிவுரை செய்தருளிய ஆண்டு 1430 AD

உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின்
வம்சத்தில் தோன்றிய கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன் அவரிடமே பயின்றவர்.
ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;
குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD )
பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

—————

ஸ்ரீ பெரிய பெருமாள் -பங்குனி -ரேவதி
திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
செய்யவிடைத்தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில்வீற்றிருக்கு மிமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே

பெரிய பிராட்டியார் (பங்குனி – உத்ரம்)
பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)
ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)
மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே

நாதமுனிகள் (ஆனி – அனுஷம்)
ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)
வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே

மணக்கால் நம்பி (மாசி – மகம்)
தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே

ஆளவந்தார் (ஆடி – உத்ராடம்)
மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே
கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே

பெரிய நம்பி (மார்கழி – கேட்டை)
அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே

திருக்கச்சி நம்பி (மாசி – ம்ருகசீர்ஷம்)
மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே

எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

மாமுனிகள் ஆர்த்தி ப்ரபந்தத்தில் அருளியன:

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)

சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள்மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறுமெனத்துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே

கூரத்தாழ்வான் (தை – ஹஸ்தம்)
சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே

முதலியாண்டான் (சித்திரை – புனர்பூசம்)
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே.

திருவரங்கத்து அமுதனார் (பங்குனி – ஹஸ்தம்)
எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே
எழில் மூங்கில்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே
நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
பைந்தாம அரங்கர் பதம் பற்றினான் வாழியே
பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே
அணி அரங்கத்தமுதனார் அடி இணைகள் வாழியே

எம்பார் (தை – புனர்பூசம்)
பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே
தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே

பட்டர் (வைகாசி – அனுஷம்)
தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே
அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே

நஞ்சீயர் (பங்குனி – உத்ரம்)
தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
சீமாதவனென்னும் செல்வனார் வாழியே
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே
ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே
ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே
எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே
எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே

நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)
தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே

காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே

வடக்கு திருவீதிப் பிள்ளை (ஆனி – ஸ்வாதி)
ஆனிதனிற் சோதிநன்னா ளவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி – ரோகிணி)

தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால்பதத்தைச் சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிஸ்லோகி அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஓது புகழ் சங்கநல்லூர் உகந்து பெற்றோன் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்தபிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான்பிள்ளை இணையடிகள் வாழியே

தண்மை சிங்கம் ரோகிணிநாள் தழைக்கவந்தோன் வாழியே
தாரணியில் சங்கநல்லூர் தானுடையோன் வாழியே
புன்மைதவிர் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதூர் எதிராசர்தாள் புகழுமவன் வாழியே
மன்புகழ்சேர் சடகோபர் வளமுரைப்போன் வாழியே
மறைநாலின் பொருள்தன்னைப் பகுத்துரைப்போன் வாழியே
அன்புடன் உலகாரியர்தம் அடியிணையோன் வாழியே
அபயப்ரதராசர் தாள் அநவரதம் வாழியே

பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி – திருவோணம்)
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே

கூர குலோத்தம தாஸர் (ஐப்பசி – திருவாதிரை)
சந்ததமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே
தாரணியில் சிறுநல்லூர் தானுடையோன் வாழியே
எந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியே
இலகு துலா ஆதிரையில் இங்குதித்தோன் வாழியே
இந்த உலகோர்க்கு இதமுரைத்தோன் வாழியே
எழில் வசன பூடணத்துக்கு இனிமைசெய்தான் வாழியே
குந்தி நகர் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே
கூரகுலோத்தமதாசர் குரைகழல்கள் வாழியே

திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி – விசாகம்)
வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே

அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி – புனர்பூசம்)
திருவிருந்த மலர்த்தாள்கள் வாழியே
சிறந்த செந்துவராடையும் வாழியே
தருவிருந்தகை முக்கோலும் வாழியே
தடம்புயத்தினில் சங்காழி வாழியே
மருவு கொண்டல் மணவாள யோகியை
வாழ்த்தி வாழ்ந்தருள் வாய்மலர் வாழியே
கருணை மேவும் இராமனுச முனி
கனக மௌலி கலந்தூழி வாழியே

ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார் (ஐப்பசி – திருவோணம்)
செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே

பூதத்தாழ்வார் (ஐப்பசி – அவிட்டம்)
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே
எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே
பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே

பேயாழ்வார் (ஐப்பசி – ஸதயம்)
திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே

திருமழிசை ஆழ்வார் (தை – மகம்)
அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே
எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே

மதுரகவி ஆழ்வார் (சித்திரை – சித்திரை)
சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே
உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)
திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே
திருவான திருமுகத்துச் செவியென்னும் வாழியே
இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே
கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே
காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே

ஆனதிருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியமேழுபாட்டளித்த பிரான் வாழியே
ஈனமறவந்தாதியெண்பத்தேழீந்தான் வாழியே
இலகுதிருவாய்மொழி ஆயிரமுரைத்தான் வாழியே
வானணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

குலசேகராழ்வார் (மாசி – புனர்பூசம்)
அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே
அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.

பெரியாழ்வார் (ஆனி – ஸ்வாதி)
நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

ஆண்டாள் (திருவாடிப் பூரம்)
திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி – கேட்டை)
மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

திருப்பாணாழ்வார் (கார்த்திகை – ரோஹிணி)
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை – கார்த்திகை)
கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

——————

ஸ்ரீரங்க மங்கள மணிம் (நிதிம்) கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்திஸைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீஸம் நமாமி சிரஸா யதுஸைல தீபம்

லக்ஷ்மீசரண லாக்ஷாங்க ஸாக்ஷாத் ஸ்ரீவத்ஸ வக்ஷஸே
க்ஷேமங்கராய ஸர்வேஷாம் ஸ்ரீரங்கேசாய மங்களம்

ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தி நாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

அஸ்துஸ்ரீஸ்தந கஸ்தூரி வாஸனா வாஸிதோரஸே
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதாய தேவராஜாய மங்களம்

கமலாகுச கஸ்தூரீ கர்த்த மாங்கித வக்ஷஸே
யாதவாத்ரி நிவாஸாய ஸம்பத்புத்ராய மங்களம்

நீலாசல நிவாஸாய நித்யாய பரமாத்மநே
ஸுபத்ரா ப்ராண நாதாய ஜகந்நாதாய மங்களம்

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாத்மநே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

ப்ருந்தாரண்ய நிவாஸாய பலராமாநுஜாய ச
ருக்மிணி ப்ராண நாதாய பார்த்தஸூதாய மங்களம்

ஸ்ரீமத்யை விஷ்ணுசித்தார்ய மநோ நந்தந ஹேதவே
நந்த நந்தந ஸுந்தர்யை கோதாயா நித்யமங்களம்

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே சடகோபாய மங்களம்

ஸ்ரீமதாலி ஸ்ரீநகரீ நாதாய கலிவைரிணே
சதுஷ்கவி ப்ரதாநாய பரகாலாய மங்களம்

ஸ்ரீமந் மஹாபூதபுரே ஸ்ரீமத் கேஸவ யஜ்வந:
காந்திமத்யாம் ப்ரஸூதாய யதிராஜாய மங்களம்

ஸ்ரீபராங்குச பாதாப்ஜ ஸுரபீக்ருத மௌலயே
ஸ்ரீவத்ஸ சிஹ்ந நாதாய யதிராஜாய மங்களம்

ஸ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்யமங்களம்

துலா மூலாவதீர்ணாய தோஷிதாகில ஸூரயே
ஸௌம்யஜாமாத்ரு முநயே சேஷாம்ஸாயாஸ்து மங்களம்

மங்களாசாஸந பரை: மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைர் ஆசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அந்திமோபாய நிஷ்டை-1- -ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமிகள் –

January 14, 2021

ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாத்ரம் முநிம் ||

ரம்யஜாமாத்ருயோகீந்த்ரபாத ரேகாமயம் ஸதா|
ததாயத்தாத்மஸத்தாதிம் ராமாநுஜமுநிம் பஜே||

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் தனியன்கள்

ரம்யஜாமாத்ருயோகீந்த்ரபாத ஸேவைகதாரகம் |
பட்டநாதமுநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

காந்தோபயந்த்ருயமிந: கருணாம்ருதாப்தே :
காருண்யஶீதலகடாக்ஷஸுதாநிதாநம் |
தந்நாமமந்த்ரக்ருதஸர்வஹிதோபதேஶம்
ஶ்ரீபட்டநாதமுநி தேஶிகமாஶ்ரயாமி ||

———

1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்-

உபநிஷதம்ருதாப் தேருத்த்ருதாம் ஸாரவித்பி :
மதுரகவிமுகை ஸ்தாமந்திமோபாயநிஷ்டாம் |
உபதிஶதிஜநேப்யோ யோதயாபூர்ணத்ருஷ்டி :
பஜஹ்ருதய ஸதாத்வம் பட்டநாதம் முநீந்த்ரம் ||

ருசிவரமுநீந்த்ரேணாத ரேணோபதிஷ்டாம்
அக்ருத க்ருதிவரிஷ்டாமந்திமோபாயநிஷ்டாம் |
தமிஹ நிகிலஜந்தூத்தாரணோத் யுக்தசித்தம்
ப்ரதிதி நமபி வந்தே பட்டநாதம் முநீந்த்ரம் ||

நமோஸ்து பட்டநாதாய முநயே முக்திதாயிநே |
யேநைவமந்திமோபாயநிஷ்டாலோகே ப்ரதிஷ்டதா||

தாதொன்றும் தார்புயத்தான் மணவாளமுனிதனது
பாதம் பரவும். பட்டர்பிரான்முனி பல்கலையும்
வேதங்களும் சில புராணங்களும் தமிழ் வேதியரும்
ஓதும்பொருளந்திமோபாயநிட்டையுரைத்தவனே!

அந்திமோபாயநிஷ்டாயாவக்தா ஸௌம்யவரோமுநி: |
லேககஸ்யாந்வயோ மேத்ர லேகநீதாலபத்ரவத் |
எந்தை மணவாளயோகி எனக்குரைத்த
அந்திமோபாயநிட்டையாமதனை – சிந்தைசெய்திங்
கெல்லாரும் வாழ எழுதிவைத்தேன் இப்புவியில்
நல்லறிவொன்றில்லாத நான்.

கற்றோர்கள் தாமுகப்பர் கல்விதன்னிலாசையுள்ளோர்
பெற்றோமென உகந்து பின்புகற்பர் – மற்றோர்கள்
மாச்சரியத்தாலிகழில் வந்த தென்னெஞ்சே இகழ்கை
ஆச்சரியமோதானவர்க்கு.

“ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர்வ்யவஸ்திதா: | ப்ராணிந: கர்ம ஜநிதஸம்ஸாரவஶவர்த்திந:” என்றும்,
“ஏவம் ஸம்ஸ்ருதிசக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வகர்மபி:” என்றும் சொல்லுகிறபடியே
இருள் தரு மா ஞாலமான ஸம்ஸாரத்திலே, “நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடிஶதைரபி” என்றும்,
“யத்ப்ரஹ்மகல்பநியுதாநுப வேப்யநாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே
பிறப்பாம் பொல்லாவருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலமாகையாலே, தரைகண்டு காலூன்றித் தரித்து நின்று
அடிகண்டறுக்கவொண்ணாதபடி மூடிக்கிடக்கிற கொடுவினைத் தூற்றில் நின்று பலகாலம் வழிதிகைத்தலமருகின்ற
ஸம்ஸாரி சேதநனுக்கு அஞ்சினான் புகலிடமான ஆசார்யாபிமாநமே உஜ்ஜீவிக்கைக்கு உசிதோபாயமென்று
ஶ்ரீவசநபூஷணாதி திவ்யப்ரபந்த முகேந அறுதியிட்டு,

ஸம்ஸாரத்தில் உருமாய்ந்து “அஸந்நேவ” என்கிறபடியே நஷ்டகல்பனாய் கிடந்த இவனை “ஸந்தமேநம்” என்னும்படி
நிர்ஹேதுகமாக அங்கீகரித்தருளி, த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய அறிவித்து ரக்ஷித்தருளின
மஹோபகாரகனான ஸ்வாசார்யன் திருவடிகளை உபாயமாகப் பற்றி, “தேவுமற்றறியேன்” என்றிருக்கும்
அந்திமோபாயநிஷ்டனுக்கு ஸ்வாசார்யனுடைய திவ்யநாமவைபவத்தையும்,
(அவருடைய ஜ்ஞாநப்ரேமாதி குணவைலக்ஷண்யத்தையும் அவருடைய திருவவதார வைபவத்தையும்)
அவர் எழுந்தருளியிருக்கும் திவ்யதேஶ வைபவத்தையும், அவர் திருவடிகளே உபாயமென்னும் அவ்வழியாலே
உபேயமான தத் விக்ரஹவைலக்ஷண்யத்தையும்,
அவர் திருமேனியை ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் த்ரிவிதகரணத்தாலும் ஒன்றும் தப்பாமல் பேணும்
வழியாலே தத்கைங்கர்ய வைபவத்தையும், அந்த கைங்கர்யத்வாரா அவருக்குண்டான ப்ரீத்யதிஶயத்தாலே தாம் பெறும்
பேற்றினுடைய கௌரவத்தையும் இடைவிடாமல் அநுஸந்தித்து தத் விஷயமாக மங்களாஶாஸநம் பண்ணி
வாழுகையே அநவரத கர்த்தவ்யம் என்னுமத்தையும் இப்ப்ரபந்தமுகேந சொல்லுகிறது.

அனந்தபாரம் பஹூ வேதிதவ்யம் அல்பஶ்ச காலோ பஹவஸ்ச விக்நா: |
யத்ஸாரபூதம் தது பாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்புமிஶ்ரம் ||

அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் |
பஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம் ||

தத்கர்ம யந்ந பந்தாய ஸாவித்யா யாவிமுக்தயே |
ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா ஶில்பநைபுணம் ||

ஶாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேஶம் புத்தேஶ்சலநகாரணம் |
உபதேஶாத்தரிம் புத்த்வா விரமேத் ஸர்வகர்மஸு ||

ஆத்யாநம் ஸத்ருஶேகதம் விஸத்ருஶே தேஹே பவத்யாத்மந:
ஸத்புத்தேஸ்ஸ ச ஸங்க மாதபி பவேதௌஷ்ண்யம் யதா பாதஸி |
கோவாஸங்க திஹேதுரேவமநயோ: கர்மாத ஶாம்யேத் குத:
தத்ப்ரஹ்மாதி கமாத் ஸ ஸித் யதி மஹாந் கஸ்மாத் ஸதாசார்யத: ||

அநாசார்யோபலப்தாஹி வித்யேயம் நஶ்யதி த்ருவம் |
ஶாஸ்த்ராதிஷு ஸுத்ருஷ்டாபி ஸாங்கா ஸஹபலோதயா |
ந ப்ரஸீத தி வை வித்யா விநாஸதுபதே ஶத: ||

தைவாதீநம் ஜகத்ஸர்வம் மந்த்ராதீநம் து தைவதம் |
தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மணதைவதம் ||

வ்ருதைவ பவதோ யாதா பூ யஸி ஜந்மஸந்ததி: |
தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ||

பாபிஷ்ட: க்ஷத்ரபந்துஶ்ச புண்டரீகஶ்ச புண்யக்ருத் |
ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாதாசார்யவாந் பவேத் ||

ப்ரஹ்மண்யேவஸ்திதம் விஶ்வம் ஓங்காரே ப்ரஹ்ம ஸம்ஸ்திதம் |
ஆசார்யாத் ஸ ச ஓங்காரஸ் தஸ்மாதாசார்யவாந் பவேத் ||

ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபீ ந ஸம்ஶய: ||

தஸ்மாத் பார்யாத ய: புத்ராஸ்தமேகம் குருமாப்நுயு: ||

ஸாக்ஷாந்நாரயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் |
மக்நாநுத் தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணிநா ||

தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா ஸம்ஸாரபய பீருணா ||

குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: |
குருரேவ பராவித்யா குருரேவ பரம்தநம் ||

குருரேவ பர: காமோ குருரேவ பாராயணம் |
யஸ்மாத்தது பதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு: ||

அர்ச்சநீயஶ்ச பூஜ்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா ||

உபாயோபேய பாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||

யேந ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீ பப்ரதே குரௌ |
மர்த்யபுத்தி: க்ருதா தஸ்ய ஸர்வம் குஞ்ஜரஶௌசவத் ||

க்ருத்ஸ்நாம் வா ப்ருதி வீம் தத் யாந்ந தத்துல்யம் கதஞ்சந ||

ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷரப்ரத: ||

இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ்தே மநீஷிபி: ||

யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே |
தஸ்ய வைகுண்ட துக்தாப் தித் வாரகாஸ்ஸர்வ ஏவ ஸ: ||

யத் ஸ்நாதம் குருணா யத்ர தீர்த்தம் நாந்யத் ததோதிகம் |
யச்ச கர்ம ததர்த்தம் தத்விஷ்ணோராராத நாத் பரம் ||

பஶுர்மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவஸம்ஶ்ரயா: |
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம் பதம் ||

பாலமூகஜடாந்தாஶ்ச பங்க வோபதி ராஸ்ததா|
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம் ||

யம் யம் ஸப்ருஶதி பாணிப்யாம் யம் யம் பஶ்யதி சக்ஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம்புநர்பாந்த வாஜநா: ||

அந்தோநந்த க்ரஹண வஶகோயாதி ரங்கேஶயத்வத்
பங்குர்நௌகாகுஹரநிஹிதோ நீயதே நாவிகேந |
புங்க்தே போகாநவிதி தந்ருபஸ்ஸேவகஸ்யார்ப காதி:
த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரப வதி ததா தேஶிகோ மே தயாலு: ||

ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியமநகம் ஶ்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம்
ஸத்த்வஸ்தம் ஸத்யவாசம் ஸமயநியதயா ஸாது வ்ருத்த்யா ஸமேதம் |
டம்பா ஸூயாதி முக்தம் ஜிதவிஷயகணம் தீர்க்க பந்தும் தயாலும்
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||

உத்பாதகப்ரஹ்மபித்ரோர்கரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச்ச்ரேஷ்டம்ஜந்ம |
ஶரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: |
தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாத் மந்த்ரஸம்ஸ்காரக்ருத் பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||

நாசார்ய: குலஜாதோபி ஜ்ஞாநப க்த்யாதி வர்ஜித: |
ந வயோஜாதிஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாமநாபதி ||

கிமப்யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வயோநிஷு |
ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம் ||

பிந்நநாவாஶ்ரிதோ ஜந்துர்யதா பாரம் ந கச்சதி |
அந்தஶ்சாந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||

ஜ்ஞாநஹீநம் கோரும் ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |
ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணு பக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ரபக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ்ஶுசி: ||

ஸத்ஸம்ப்ரதாய ஸம்யுக்தோ ப்ரஹ்மவித் யாவிஶாரத: |
அநந்யஸாதநஶ்சைவ ததாநந்யப்ரயோஜந : ||

ப்ராஹ்மணோ வீதராக ஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத்வ்ருத்தஶ்ஶாஸிதா சைவ முமுக்ஷு : பரமார்த்த வித்||

ஏவமாதி குணோபேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹிதபரஸ்ஸதா ||

ப்ரபோத் ய போதநீயாநி வ்ருத்தமாசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் தது பாயப்லவேந து ||

குருமூர்த்திஸ்தி தஸ்ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம: |
த்ரிரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||

குருஶ்ச ஸ்வப்ந த்ருஷ்டஶ்ச பூஜாந்தே சார்ச்சகாநநாத் |
ஈஶ்வரஸ்ய வஶஸ்ஸர்வம் மந்த்ரஸ்ய வஶ ஈஶ்வர: |

மந்த்ரோ குருவஶே நித்யம் குருரேவேஶ்வரஸ்திதி: ||
ஏஷவை பகவாந் ஸாக்ஷாத் ப்ரதாநபுருஷேஶ்வர: ||

யோகீஶ்வரைர்விம்ருக்யாங்க் ரிர்லோகோயம் மந்யதே நரம் ||

நாராயணாஶ்ரயோ ஜீவஸ்ஸோயமஷ்டாக்ஷராஶ்ரய: |
அஷ்டாக்ஷரஸ்ஸதாசார்யே ஸ்திதஸ்தஸ்மாத் குரும்பஜேத் ||

தயாத மஶமோபேதம் த்ருடபக்திக்ரியாபரம் |
ஸத்யவாக் ஶீலஸம்பந்நமேவ கர்மஸு கௌஶலம் ||

ஜிதேந்த்ரியம் ஸுஸந்துஷ்டம் கருணாபூர்ணமாநஸம் |
குர்யால்லக்ஷணஸம்பந்நம் ஆர்ஜவம் சாருஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம்யுக்தம் குருமா வித்யாத்து வைஷ்ணவம் |
ஸஹஸ்ரஶாகாத் யாயீ ச ஸர்வயத்நேஷூ தீக்ஷித: |
குலே மஹ்தி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத வைஷ்ணவ: |
அஜ்ஞாநதிமிராந்த ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகயா |
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீகுருவே நம: ||

மந்தர: ப்ரக்ருதிரித்யுக்தோ ஹ்யர்த்த: ப்ராண இதி ஸ்ம்ருத: |
தஸ்மாந்மந்த்ரப்ரதாசார்யாத் கரீயாநர்த்த தோ குரு: ||

குஶப்த ஸ்த்வந்த காரஸ்ஸ்யாத் ருஶப் தஸ்தந்நிரோத க: ||

அந்த காரநிரோதி த்வாத் குருரித்யபி தீயதே ||

ஶிஷ்யமஜ்ஞாநஸம்யுக்தம் ந ஶிக்ஷயதி சேத் குரு: ||

ஶிஷ்யாஜ்ஞாநக்ருதம் பாபம் குரோர்ப வதி நிஶ்சய: ||

லோபாத் வாயதி வாமோஹாச்சிஷ்யம் ஶாஸ்தி நயோ குரு: |
தஸ்மாத் ஸம்ஶ்ருணுதே யஶ்ச ப்ரச்யுதௌ தாவுபாவபி ||

ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி |
ஸ்வயமாசரதே யஸ்து ஆசார்யஸ்ஸோபி தீயதே ||

ரவிஸந்நிதி மாத்ரேண ஸுர்யகாந்தோ விராஜதே||

குருஸந்நிதி மாத்ரேண ஶிஷ்யஜ்ஞாநம் ப்ரகாஶேதே ||

யதாஹி வஹ்நிஸம்பர்க்காந்மலம் த்யஜதி காஞ்சநம் |
ததைவ குருஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாணவ: ||

ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்சதி |
குருர்ஜ்ஞேயஶ்ச ஸம்பூஜ்யோ தாநமாநாதி அபி ஸ்ஸதா ||

அநந்யஶரணாநாஞ்ச ததா வாந்ந்ய ஸேவிநாம் |
அநந்யஸாத நாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ரமுத்தம்ம் ||

ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸத்ரயமதாபி வா |
பரீக்ஷ்ய விவிதோபாயை: க்ருபயா நிஸ்ஸ்ப்ருஹோவதேத் ||

நாதீக்ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக்நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||

டம்பாஸூயாதி முக்தம் ஜிதவிஷயகணம் தீர்க்க பந்தும் தயாலும் |
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||

உத்பாதகப் ரஹ்மபித்ரோர்க ரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித் யாதஸ்தம் ஜநயதி தச்ச் ரேஷ்டம்ஜந்ம |
ஶரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: |
தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாத் மந்தரஸம்ஸ்காரக்ருத் பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||

நாசார்ய: குலஜாதோபி ஜ்ஞாநப க்த்யாதி வர்ஜித: |
ந வயோஜாதிஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாமநாபதி ||

கிம்ப்யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வயோநிஷு |
ப்ரத்யக்‌ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதி கம் ||

பிந்தாவாஶ்ரிதோ ஜந்துர்யதா பாரம் ந கச்சதி |
அந்த ஶ்சாந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||

ஜ்ஞாநஹீநம் குருமா ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |

ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணுபக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ர பக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ்ஶுசி: ||

ஸத்ஸம்ப்ரதாய ஸம்யுப்தோ ப்ரஹ்மவித் யாவிஶாரத : |
அநந்யஸாத நஶ்சைவ ததாந்ந்யப்ரயோஜந: ||

ப்ராஹ்மணோ வீதராகஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத் வ்ருத்தஶ்ஶாஸிதா சைவ முமுக்‌ஷு: பரமார்த்த வித் ||

ஏவமாதி குணோ பேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹிதபரஸ்ஸதா ||

ப்ரபோத்ய போத நீயாநி வ்ருத்தமாசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் தது பாயப்லவேந து ||

குருமூர்த்திஸ்தி தஸ்ஸாக்‌ஷாத் பக வாந் புருஷோத்தம: |
த்ரிரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||

குருஶ்ச ஸ்வப்நத் ருஷ்டஶ்ச பூஜாந்தே சார்ச்சகாநநாத் |
ஈஶ்வரஸ்ய வஶஸ்ஸர்வம் மந்தரஸ்ய வஶ ஈஶ்வர: |
மந்த்ரோ குருவஶே நித்யம் குருரேவஶ்வரஸ்திதி: ||

ஏஷ வை பகவாந் ஸாக்‌ஷாத் ப்ரதாந புருஷேஶ்வர: |
யோகி ஶ்வரைர்விம்ருக் யாங்க் ரிர்லோகோ யம் மந்யதே நரம் ||

நாராயணாஶ்ரயோ ஜீவஸ்ஸோயமஷ்டாக்ஷராஶ்ய: |
அஷ்டாக்ஷரஸ்ஸதாசார்யே ஸ்திதஸ்தஸ்மாத் குருமா பஜேத் ||

தயாத மஶமோபேதம் த்ருடப்பக்திக்ரியாபரம் |
ஸத்யவாக் ஶீலஸம்பந்நமேவ கர்மஸு கௌஶலம் ||

ஜிதேந்த்ரியம் ஸுஸந்துஷ்டம் கருணாபூர்ணமாநஸம் |
குர்யால்லக்ஷணஸம்பந்நம் ஆர்ஜவம் சாருஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம்யுக்தம் குரும் வித்யாத்து வைஷ்ணவம் |
ஸஹஸ்ரஶாகாத் யாயீ ச ஸர்வயத்நேஷு தீஷித: |
குலே மஹதி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத வைஷ்ணவ: |

அஜ்ஞாந்திமிராந்த ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகாயா |
சக்‌ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீ குரவே நம: ||

மந்த்ர: ப்ரக்ருதிரித்யுக்தோ ஹ்யர்த்த: ப்ராண இதி ஸம்ருத: |
தஸ்மாந்மந்த்ரப்ரதாசார்யாத் கரீயாநர்த்த தோ குரு: ||

குஶப்தஸ்த்வந்த காரஸ்ஸ்யாத் ருஶப் த ஸ்தந்நிரோதக: |
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே ||

ஶிஷ்யமஜ்ஞாநஸம்யுக்தம் ந ஶிக்ஷயதிசேத் குரு: |
ஶிஷ்யாஜ்ஞாநக்ருதம் பாபம் குரோர்பவதி நிஶ்சய: ||

லோபாத் வா யதி வா மோஹாச்சிஷ்யம் ஶாஸ்தி ந யோ குரு: |
தஸ்மாத் ஸம்ஶ்ருணுதே யஶ்ச ப்ரச்யுதௌ தாவுபாவபி ||

ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி |
ஸவயமாசரதே யஸ்துஆசார்யஸ்ஸோபி தீயதே ||

ரவிஸந்நிதி மாத்ரேண ஸூர்யகாந்தோ விராஜதே |
குருஸந்நிதி மாத்ரேண ஶிஷ்யஜ்ஞாநம் ப்ரகாஶதே ||

யதாஹி வஹ்நிஸம்பர்க்காந்மலம் த்யஜதி காஞ்சநம் |
ததைவ குருஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாநவ: ||

ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்ச தி |
குருர்ஜ்ஞேயஶ்ச ஸம்பூஜ்யோ தாநமாநாதி பி ஸ்ஸதா ||

அநந்யஶரணாநஞ்ச ததா வாந்நய ஸேவிநாம் |
அந்ந்யஸாத நாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ரமுத்தமம் ||

ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸத்ரயமதாபி வா |
பரீக்‌ஷய விவிதோபாயை: க்ருபயா நிஸ்ஸ்ப்ருஹோ வதேத் ||

நாதீக்‌ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக் நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||

தேஶகாலாதி நியமம் அரிமித்ராதி ஶோதநம் |
ந்யாஸமுத்ராதி கம் தஸ்ய புரஶ்சரணகம் ந து ||

ந ஸ்வர: ப்ரணவோங்காநி நாப்யந்யவித யஸ்ததா |
ஸ்த்ரீணாஞ்ச ஶுத்ரஜாதீநாம் மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே ||

ருஷ்யாதிஞ்ச கரந்யாஸம் அங்க ந்யாஸஞ்ச வர்ஜயேத் |
ஸ்த்ரீஶூத்ராஶ்சவிநீதாஶ்சேந்மந்த்ரம் ப்ரவணவவர்ஜிதம் ||

ந தேஶகாலௌ நாவஸ்தாம் பாத்ரஶுத்திஞ்ச நை[நே] ச்சதி |
த்வயோபதே ஶகர்த்தாது ஶிஷ்யதோஷம் ந பஶ்யதி ||

துராசோரோபி ஸர்வாஸீ க்ருதக் நோ நாஸ்திக: புரா |
ஸமாஶ்ரயேதாதி தேவம் ஶ்ரத்தயா ஶரணம் யதி |
நிர்தோஷம் வித்திதம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: ||

மந்த்ரரத்நம் த்வயம் ந்யாஸம் ப்ரபத்திஶ்ஶரணாகதி: |
லக்‌ஷமீநாராயணஞ்சேதி ஹிதம் ஸர்வபலப்ரதம் |
நாமாநி மந்த்ரரத்நஸ்ய பர்யாயேண நிபோத த ||

தஸ்யோச்சாரணமாத்ரேண பரிதுஷ்டோஸ்மி நித்யஶ: ||

ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஶ்யாஸ்ஸ்த்ரியஶ்ஶூத் ராஸ்ததே தரா: |
தஸ்யாதி காரிணஸ்ஸர்வே மம பக்தோப வேத்யதி ||

யஸ்து மந்த்ரத்வயம் ஸம்யகத் யாபயதி வைஷ்ணவாந் |
ஆசார்யஸ்ஸ து விஜ்ஞேயோ பவபந்த விமோசக: ||

ந்ருதேஹமாத்யம் ப்ரதிலப்ய துர்லபம்
ப்லவம் ஸுகல்யம் குருகர்ணதாரகம் |
மயாநுகூலேந நப ஸ்வதேரிதம்
புமாந் பவாப்திம் ஸ தரேத் ந ஆத்மஹா ||

ஆசார்யம் மாம் விஜாநீயாந்நாவமந்யேத கர்ஹிசித் |
ந மர்த்யபுத்த்யாத் ருஶ்யேத ஸர்வதே வமயோ குரு: ||

அத ஶிஷ்யலக்ஷணம்: –

மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மிந் ந மூகோ பதிரோபி வா |
நாபக்ரமாதி ஸம்ஸாராத் ஸகலு ப்ரஹ்மஹா பவேத் ||

ஸதாசார்யோபஸத்த்யா ச ஸாபி லாஷஸ்ததாத்மக: |
ததத்வஜ்ஞாநநிதிம் ஸத்த்வநிஷ்டம் ஸத் குணஸாகரம் |

ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதாவிதி |
ப்ரணிபாத நமஸ்கார ப்ரியவாக் பிஶ்ச தோஷயந் |
தத்ப்ரஸாத வஶேநைவ ததங்கீகாரலாபவாந் |
ததுக்தத்த்வயாதாத்ம் யஜ்ஞாநாம்ருதஸுஸம்ப்ருத: ||

அர்த்தம் ரஹஸ்யத்ரிதயகோசரம் லப்த வாநஹம் ||

பரீக்ஷ்ய லோகாந் கர்மசிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்த்யக்ருத:
க்ருதேந தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித்பாணிஶ் ஶ்ரோத்ரியம்
ப்ரஹ்மநிஷ்டம் தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஶாந்தசித்தாய ஶமாந்விதாய
யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் ததத்வதோ ப்ரஹ்ம வித்யாம் ||

குரும் ப்ரகாஶயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் |
அப்ரகாஶப்ரகாஶாப் யாம் க்ஷீயேதே ஸம்பதாயுஷீ ||

ஆசார்யஸ்ய ப்ரஸாதே ந மம ஸர்வமபீப்ஸிதம் |
ப்ராப்நுயாமீதி விஶ்வஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத் ||

ஆத்மநோ ஹ்யதிநீசஸ்ய யோகித்யேயபதார்ஹதாம் |
க்ருபயைவோபகர்த்தாரம் ஆசார்யம் ஸம்ஸ்மரேத் ஸதா ||

ந சக்ராத் யங்கநம் நேஜ்யா ந ஜ்ஞாநம் ந விராகதா |
ந மந்த்ர: பாரமைகாந்த்யம் தைர்யுக்தோ குருவஶ்யத: ||

நித்யம் குருமுபாஸீத த்த் வச: ஶ்ரவணோத்ஸுக: |
விக்ரஹாலோகநபரஸ்தஸ்யைவாஜ்ஞாப்ரதீக்ஷக: ||

ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணிபத்யோபயுஜ்ய ச |
நித்யம் விதி விதர்க்யாத்யாத் யைராத்ருதோப் யர்ச்சயேத்குரும் ||

ஶ்ருதி: – ஆசார்யவாந் புருஷோ வேத | தேவமிவாசார்யமுபாஸீத |

ஆசார்யாதீ நோ பவ | ஆசார்யாதீ நஸ்திஷ்டேத் | ஆசார்யதே வோ ப வ |
யதா பகவத்யேவம்வக்த்ரி வ்ருத்தி: | குருதர்ஶநே சோத்திஷ்டேத் | கச்சந்தமநுவ்ரஜேத் |

ஶரீரம் வஸு விஜ்ஞாநம் வாஸ: கர்ம குணாநஸூந் |
குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ஸஶிஷ்யோ நேதரஸ்ஸ்ம்ருத: ||

தீர்க்கதண்ட நமஸ்காரம் ப்ரத்யுத்தாநமந்த்ரம் |
ஶரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் ||

குர்வர்த்த ஸ்யாத்மந: பும்ஸ: க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மந: |
ஸுப்ரஸந்நஸ்ஸதா விஷ்ணுர்ஹ்ருதி தஸ்ய விராஜதே ||

மந்த்ரே தீர்த்தேத் விஜே தேவே தைவஜ்ஞே பேஷஜே குரௌ |
யாத்ருஶீபாவநா யத்ர ஸித்திர் பவதி தாத்ருஶீ ||

யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ |
தஸ்யைதேகதிதா ஹ்யர்த்தா: ப்ரகாஶ்யந்தே மஹாத்மந: |

தர்ஶநஸ்பர்ஶவசநைஸ்ஸஞ்சாரேண ச ஸத்தமா: |
பூதம் விதாய புவநம் மாமேஷ்யந்தி குருப்ரியா: ||

தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாந்மந்த்ரஸம்ஸ்காரக்ருத்பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||

அவைஷ்ணவோபதிஷ்டம் ஸ்யாத்பூர்வம் மந்த்ரவரம் த்வயம் |
புநஶ்ச விதி நா ஸம்யக் வைஷ்ணவாத் க்ராஹயேத் குரோ: ||

அத ஸ்த்ரீஶூத் ரஸங்கீர்ணநிர்மூலபதிதாதி ஷு |
அநந்யேநாந்யத்ருஷ்டௌ ச க்ருதாபி ந க்ருதா பவேத் ||

அதோந்யத்ராநுவிதி வத்கர்த்தவ்யா ஶரணாகதி: |
தண்டவத் ப்ரணமேத் பூமாவுபேத்ய குருமந்வஹம் |
திஶே வாபி நமஸ்குர்யாத் யத்ராஸௌ வஸதி ஸ்வயம் ||

ஆசார்யாயாஹரதே ர்த்தாநாத்மாநஞ்ச நிவேத யேத் |
தத்தீநஶ்ச வர்த்தேத ஸாக்ஷாந்நாரயணோ ஹி ஸ: ||

ஸத் புத்தி ஸ் ஸாது ஸேவீ ஸமுசிதசரிதஸ்தத்த்வபோதாபிலாக்‌ஷீ
ஶுஶ்ரூஷுஸ்த்யக்தமாந: ப்ரணிபதநபர: ப்ரஶ்நகலாப்ரதீக்ஷ: |

ஶாந்தோ தாந்தோநஸுயுஶ்ஶரணமுபக தஶ்ஶாஸ்த்ரவிஶ்வாஸஶாலீ
ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாங்க்ருதவிதபிமதம் தத்த்வத: ஶிக்ஷணீய: ||

யஸ்த்வாசார்யபராதீ நஸ்ஸத்வ்ருத்தௌ ஶாஸ்யதே யதி |
ஶாஸேநே ஸ்திரவ்ருத்திஸ்ஸ ஶிஷ்யஸ் ஸத்பிருதாஹ்ருத: ||

ஶிஷ்யோ குருஸமீபஸ்தோ யதவாக்காயமாநஸ: |
ஶுஶ்ரூஷயா குரோஸ்துஷ்டிம் குர்யாந்நிர்தூ தமத்ஸர: ||

ஆஸ்திகோதர்மஶீலஶ்ச ஶீலவாந் வைஷ்ணவஶ்ஶுசி: |
கம்பீரஶ்சதுரோ தீர: ஶிஷ்ய இத்யபி தீயதே ||

ஆஸநம் ஶயநம் யாநம் ததீயம் யச்ச கல்பிதம் |
குரூணாஞ்ச பதாக்ரம்ய நரோ யஸ்த்வத மாம் கதிம் ||

கோஶ்வோஷ்டரயாநப்ரஸாத ப்ரஸ்தரேஷு கடேஷு ச |
நாஸீத குருணா ஸார்த்தம் ஶிலாப லகநௌஷு ச ||

யஸ்திஷ்டதி குரூணாஞ்ச ஸமக்ஷமக்ருநாஞ்ஜலி: |
ஸமத்ருஷ்ட்யாத தாஜ்ஞாநாத் ஸ ஸத்யோ நிரயம் வ்ரஜேத் ||

ஆஸநம் ஶயநம் யாநம் அபஹாஸஞ்ச ஶௌநக |
அதிப்ரலாபம் கர்வஞ்ச வர்ஜயேத் குருஸந்நிதௌ ||

யத்ருச்சயா ஶ்ருதோ மந்த்ரஶ்சந்நேநாதச்ச லேந வா |
பத்ரேக்‌ஷிதோ வாவ்யர்த்த ஸ்ஸ்யாத் தம் ஜபேத் யத் யநர்த்த க்ருத்||

மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ரப்ரதே கு ரௌ |
த்ரிஷுபக்திஸ்ஸதா கார்யா ஸாது ஹி ப்ரதமஸாதநம் ||

அத மோதே வதாப க்தோ மந்த்ரபக்தஸ்து மத்யம: |
உத்தமஸ்து ஸ மே பக்தோ குருபக்தோத்தமோத்தம: ||

ஶ்ருதி: –

ஆசார்யாந்மா ப்ரமத: | ஆசார்யாய ப்ரியம் த நமாஹ்ருத்ய |
குரோர்குருதரம் நாஸ்தி குரோர்யந்ந பாவயேத் |
குரோர்வார்த்தாஶ்ச கத யேத் குரோர்நாம ஸதாஜபேத் |

{குருபாதாம்புஜம்த்யாயேத் குரோர்நாம ஸதா ஜபேத் |
குரோர்வார்த்தாஶ்ச கத யேத் குரோர்ந்யந்ந பாவயேத் – பா }

அர்ச்சநீயஶ்ச வந்த்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ்ஜபேந்நமேத் பக்தயா பஜேதப் யர்ச்சயேந்முதா ||

உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||

ஏவம் த்வயோபதேஷ்டாரம் பாவயேத் புத்திமாந்தியா |
இச்சாப்ரக்ருத்யநுகுணைருபசாரைஸ்ததோசிதை: ||

பஜந்நவஹிதஶ்சாஸ்ய ஹிதமாவேதயேத்ரஹ: |
குர்வீத பரமாம் பக்திம் குரௌ தத்ப்ரியவத்ஸல: ||

தத் நிஷ்டாவஸாதீ தந்நாமகுணஹர்ஷித: |
ஶாந்தோநஸுயு: ஶ்ரத் தாவாந் கு ர்வர்த்தாத் யாத்மவ்ருத்திக: ||

ஶுசி: ப்ரியஹிதோ தாந்த: ஶிஷ்யஸ்ஸோபரதஸ்ஸுதீ: |
ந வைராக் யாத்பரோ லாபோ ந போதாத பரம் ஸுகம் |
ந குரோரபரஸ்த்ராதா ந ஸம்ஸாராத் பரோ ரிபு: ||

————

2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஆசார்யவைபவம் – ஸதாசார்யஸமாஸ்ரயணத்துக்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம் ஒரு காலராத்ரி,
அன்று தொடங்கி இவனுக்கு நல்விடிவு. ஆனபடி எங்ஙனே என்னில் –
“புண்யாம் போஜவிகாஸாய பாபத்வாந்தக்ஷயாய ச | ஶ்ரீமாநாவிரத்பூமௌ ராமானுஜ திவாகர:” என்றும்,
“ஆதித்ய – ராம – திவாகர – அச்யுதபாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி,
ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி, விகஸியாதபோதிற்கமலமலர்ந்தது வகுல பூஷணபாஸ்கரோதயத்திலே” என்றும்,
விடியா வெந்நரகான ஸம்ஸாரமாகிற காலராத்ரிக்கு ஆசார்யன் தோற்றரவை ஸூர்யோதயமாகச் சொல்லுவார்கள்.
“பார்வை செடியார் வினைத்தொகைக்குத்தீ” என்றும்,
“ந ஹ்யம்மயாநி தீர்த்தாநி ந தேவாம்ருச்சி லாமயா: | தே புநந்த்யுருகாலேந தர்ஶநாதே வ ஸாதவ: “ என்றும்,
“யாந் பஶ்யந்தி மஹாபாகா: க்ருபயா பாதகாநபி | தே விஶுத்தா: ப்ராயஸ்யந்தி ஶாஶ்வதம் பத மவ்யயம்” என்றும்
சொல்லுகிறபடியே ஆசார்ய கடாக்ஷமானது ஸ்வ விஷயமானவர்களுக்கு வேறொரு ஸாதநாநுஷ்டாநம் பண்ண வேண்டாதபடி
தானே தூறு மண்டிக் கிடக்கிற அவர்களுடைய கர்மத்தை நிஶ் ஶேஷமாகச் சுட்டுப் பொகடுகையாலை அவர்கள் முன்பு
மஹாபாபிகளே யாகிலும் அந்த க்ஷணத்திலே மிகவும் பரிசுத்தராய் அவ்வளவன்றிக்கே
பின்பு ஸுஸ்திரமான பரமபதத்தையும் சென்றடையப் பெறுவார்கள்.
“நாராயணன் திருமால் நாரம் நாமென்னுமுறவு ஆராயில் நெஞ்சே அனாதியன்றோ
சீராருமாசாரியனாலேயன்றோ நாமுய்ந்ததென்று கூசாமலெப்பொழுதும் கூறு”,
“உண்டபோதொரு வார்த்தையும் உண்ணாதபோதொரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப்பேருண்டிறே,
அவர்கள் பாசுரங்கொண்டன்று இவ்வர்த்தம் அறுதியிடுவது, அவர்களைச் சிரித்திருப்பாரொருவருண்டிறே,
அவர் பாசுரங்கொண்டே இவ்வர்த்தம் அறுதியிடக்கடவோம்”.

பரமாசார்யரான நம்மாழ்வார் “அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதம்” என்றார்.
ஶ்ரீமதுரகவிகள் “தென்குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூருமென்னாவுக்கே” என்றார்.
அவர் “மலக்கு நாவுடையேன்” என்றார்.
இவர் “நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றார்.
அவர் “அடிக்கீழ்மர்ந்து புகுந்தேன்” என்றார்.
இவர் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்றார்.
அவர் “கண்ணனல்லால் தெய்வமில்லை” என்றார்.
இவர் “தேவு மற்றறியேன்” என்றார்.
அவர் “பாடியிளைப்பிலம்” என்றார்.
இவர் “பாடித்திரிவனே” என்றார்.

அவர் “இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்” என்றார்.
இவர் “திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்” என்றார்.
அவர் “உரியதொண்டன்” என்றார்.
இவர் “நம்பிக்காளுரியன்” என்றார்.
அவர் “தாயாய்த் தந்தையாய்” என்றார்.
இவர். “அன்னையாயத்தனாய்” என்றார்.
அவர் “ஆள்கின்றனாழியான்” என்றார்.
இவர் “என்னையாண்டிடும் தன்மையான்” என்றார்.
அவர் “கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்” என்றார்.
இவர் “சடகோபன்” என்றார்.
அவர் “யானே என்றனதே என்றிருந்தேன்” என்றார்.
இவர் “நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்” என்றார்.

அவர். “எமரேழுபிறப்பும் மாசதிரிதுபெற்று” என்றார்.
இவர் “இன்று தொட்டுமெழுமையுமெம்பிரான்” என்றார்.
அவர் “என்னால் தன்னை இன்தமிழ் பாடியவீசன்” என்றார்.
இவர் “நின்று தன்புகழேத்த அருளினான்” என்றார்.
அவர் “ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே” என்றார்.
இவர் “என்றுமென்னை இகழ்விலன்காண்மினே” என்றார்.
அவர் “மயர்வற மதிநலமருளினன்” என்றார்.
இவர் “எண்டிசையுமறியவியம்புகேன் ஒண்தமிழ்ச்சடகோபனருளையே” என்றார்.

அவர் “அருளுடையவன்” என்றார்.
இவர் “அருள்கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்றார்.
அவர் “பேரேனென்று என்னெஞ்சு நிறையப்புகுந்தான்” என்றார்.
இவர் “நிற்கப்பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்” என்றார்.
அவர் “வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்றார்.
இவர் “ஆட்புக்க காதலடிமைப் பயனன்றே” என்றார்.
அவர் “பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்” என்றார்.
இவர் “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்” என்றார்.

அவர் “ஆராதகாதல்” என்றார்.
இவர் “முயல்கின்றேனுன்தன் மொய்கழற்கன்பையே” என்றார்.
அவர் “கோல மலர்ப்பாவைக்கன்பாகிய என் அன்பேயோ” என்றார்.
இவர் “தென்குருகூர் நகர் நம்பிக்கன்பனாய்” என்றார்.
அவர் “உலகம் படைத்தான்கவி” என்றார்.
இவர் “மதுரகவி” என்றார்.
அவர் “உரைக்கவல்லார்க்கு வைகுந்தமாகுந்தம் ஊரெல்லாம்” என்றார்.
இவர் “நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டியருளினார்.
அவர் “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றார்.
இவர் “கோலத்திருமாமகள்கொழுநன் தானே குருவாகித்தன் அருளால்” என்றும்,

“தான் ஹிதோபதேஶம் பண்ணும்போது” என்று தொடங்கி,
“நேரே ஆசார்யனென்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்தரத்தை உபதேஶித்தவனை.
ஸம்ஸார வர்த்தகங்களுமாய், க்ஷுத்ரங்களுமான பகவந்மந்த்ரங்களை உபதேஶித்தவர்களுக்கு ஆசார்யத்வ பூர்த்தியில்லை.
ஆசார்யன் உஜ்ஜீவநத்திலே ஊன்றிப்போரும். ஆசார்யன் ஶிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக்கடவன்.
ஆசார்யனுக்கு தேஹரக்ஷணம் ஸ்வரூபஹாநி. ஆசார்யன் தன்னுடைய தேஹரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக்கடவன்.
ஆசார்யன் ஶிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவனல்லன். கொள்ளில் மிடியனாம். அவன் பூர்ணனாகையாலே கொள்ளான்.
அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது. ஈஶ்வரனைப் பற்றுகை கையைப் பிடித்து கார்யங்கொள்ளுமோபாதி,
ஆசார்யனைப் பற்றுகை காலைப்பிடித்துக் கார்யங்கொள்ளுமோபாதி. ஈஶ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டிருக்கும்.
ஆகையிறே குருபரம்பரையில் அந்வயித்ததும், ஶ்ரீ கீதையும் அபயப்ரதாநமும் அருளிச்செய்ததும்,
ஆசார்யனுக்கு ஸத்ருஶ ப்ரத்யுபகாரம் பண்ணலாவது விபூதிசதுஷ்டயமும் ஈஶ்வரத்வயமும் உண்டாகில்.
ஈஶ்வர ஸம்பந்தம் பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும். ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தம் குலையாதே கிடந்தால் ஜ்ஞாநபக்திவைராக்யங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். என்று தொடங்கி,
“இத்தையொழிய பகவத் ஸம்பந்தம் துர்லபம். ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநதைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.

ஆசார்யாபிமாநமே உத்தாரகம்”.
“நல்லவென் தோழி” என்று தொடங்கி, “அசார்யாபிமாநந்தான் ப்ரபத்தி போலே உபயாந்தரங்களுக்கு
அங்கமுமாய் ஸ்வதந்த்ரமுமாயிருக்கும். பக்தியிலஶக்தனுக்கு ப்ரபத்தி,
ப்ரபத்தியிலஶக்தனுக்கு இது. இது ப்ரதமம் ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கும்,
பின்பு புஷ்பிதமாக்கும், அநந்தரம் பலபர்யந்தமாக்கும்”.

“பொறுக்கிறவனுமாசார்யனன்று, பெறுகிறவனுமாசார்யனன்று, நியமிக்கறவனே ஆசார்யன்” என்று ஆச்சான் பிள்ளை அருளிச்செய்வர்.
விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யன் முமுக்‌ஷுவுக்கு த்யாஜ்யன்.
விபரீதஸ்பர்ஶமுடைய ஆசார்யனாவான் ஸம்ஸாரத்திலே சில மினுக்கங்கள் தோன்றச் சொல்லுமவன்.
ஆசார்யன் ஶிஷ்யனுயிரை நோக்கும். ஆசார்யனாவான் ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய்த் தன்னைக் கொண்டு
முழுகுமவனன்று, தன்னைக் கரையேத்தவல்ல ஜ்ஞாநாதி பரிபூர்ணனாய் இருப்பானொருவனே.
ஆசார்யனுடைய ஜ்ஞாநம் வேண்டா, ஶிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்.
கருடத்யாநத்துக்கு விஷம் தீருமாப்போலே ஆசார்யனை த்யாநித்திருக்கவே ஸம்ஸாரமாகிற விஷம் தீர்த்துக்கொள்ளலாம்
என்று அருளிச்செய்வர்கள். ஆசார்யன், இவன், அஜ்ஞாநத்தைப்போக்கி ஜ்ஞாநத்தை உண்டாக்கிக் கொடுக்கும்
பெரிய மதிப்பனாய், அர்த்தகாமோபஹதனன்றிக்கே லோக பரிக்ரஹமுடையனாயிருப்பானொருவன் (ஆசார்யனாவான்).

————–

சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார்,
பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஶிஷ்யலக்ஷணம் :-
“இருள்தருமாஞாலத்தே இன்பமுற்றுவாழும் தெருள்தருமா தேசிகனைச் சேர்ந்து”,
“குற்றமின்றிக்குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்”,
“வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார் தவம்”,
“விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அதுகாண்டுமே”,
“வேறொன்றும் நானறியேன்”,
“தேவு மற்றறியேன்”,
“ஶத்ருக்நோ நித்யஶத்ருக்ந”,
“வடுகநம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையரென்பர்”,
“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“இராமானுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப்பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே”,
“பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்காறொன்றுமில்லை மற்றச்சரணன்றி”,
“நிகரின்றி நின்ற என்னீசதைக்கு நின்னருளின்கணன்றிப்புகலொன்றுமில்லை அருட்குமஃதே புகல்”,
“இராமானுசனையடைந்தபின் என்வாக்குரையாது என்மனம் நினையாதினி மற்றொன்றையே”,
“இராமானுசன் நிற்க வேறுநம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வமிங்கு யாதென்றுலர்ந்தவமே
ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே”,
“கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்”,
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்” என்று
தொடங்கி “இன்றவன் வந்திருப்பிடம் என்றனிதயத்துள்ளே தனக்கின்புறவே”,
“நந்தலைமிசையே பொங்கிய கீர்த்தி இராமநுசனடிப்பூமன்னவே”…

“மாடும் மனையும் கிளையும் மறைமுனிவர் தேடுமுயர்வீடும் செந்நெறியும் பீடுடைய
எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகைகண்டீர் விதி”,
“வேதமொருநான்கு” என்று தொடங்கித் “தீதில் சரணாகதி தந்ததன்னிறைவன் தாளே அரணாகுமென்னுமது”,
“வில்லார் மணிகொழிக்கும்” என்று தொடங்கி, “எந்நாளும் மாலுக்கிடம்”,
“தேனார் கமலம்” என்று தொடங்கி, “யார்க்குமவன் தாளிணையை உன்னுவதே சாலவுறும்”.
“ஆசார்யப்ரேமம் கனத்திருக்கையும்”,
“ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக்கண்டாப்போலேயும்”,
“இப்படி ஸர்வப்ரகராத்தாலும் நாஶஹேதுவான அஹங்காரத்துக்கும் அதினுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளைநிலம் தானாகையாலே” என்று தொடங்கி,
“இப்படி இவை இத்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக்கடவன்.

வக்தவ்யம் ஆசார்ய வைபவமும் ஸ்வநிகர்ஷமும். பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமும் அநுஷ்டாநமும்.
ஆசார்யகைங்கர்யமறிவது ஶாஸ்த்ரமுகத்தாலும், ஆசார்ய வசநத்தாலும்.
இவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய குணம், அஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய தோஷம்,
ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம் அஶக்திக்கிலக்கு நிஷித்தாநுஷ்டாநம்.
ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும், பலஸாதந ஶுஶ்ரூஷையும்,
ஆர்த்தியும், ஆதரமும், அநஸூயையும் உடையவனென்கை”.
“மந்த்ரமும், தேவதையும், பலமும், பலாநுபந்திகளும்” – என்று தொடங்கி –
எல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்.
‘மாதாபிதா யுவதய:’ என்கிற ஶ்லோகத்திலே இவ்வர்த்தத்தை பரமாசார்யர் அருளிச்செய்தார்.

ஶிஷ்யன் தான் ப்ரியத்தை நடத்தக்கடவன். ஶிஷ்யன் உகப்பிலே ஊன்றிப்போரும்.
ஆகையால் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கிலக்காகையொழிய ரோஷத்துக்கிலக்காகைக்கு அவகாஶமில்லை.
ஶிஷ்யனுக்கு நிக்ரஹகாரணம் த்யாஜ்யம். ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன்.
இவனுக்கு ஶரீராவஸாநத்தளவும் ஆசார்யவிஷயத்தில்
“என்னைத் தீமனங்கெடுத்தாய்,
மருவித்தொழும் மனமே தந்தாய்” என்று உபகார ஸ்ம்ருதி நடக்கவேணும்.
பாட்டுக்கேட்குமிடமும் – என்று தொடங்கி – எல்லாம், வகுத்த விடமே என்று நினைக்கக்கடவன்.
இஹலோகபரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை.

ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹயாத்ரையே தனக்கு ஆத்மயாத்ரையாக நினைத்திருக்கவேணும்.
ஶிஷ்யன் ஆசார்யனுடைய உடம்பை நோக்கும், ஆசார்யனுக்கு என் வஸ்துவை உபகரிக்கிறேனென்றிருக்கும்
ஶிஷ்யனுடைய அறிவையும் அழிக்கவடுக்கும்.
ஆசார்யன் பொறைக்கிலக்கான ஶிஷ்யனுக்கு பகவஜ்ஜ்ஞாநம் கைவந்ததென்னவொண்ணாது.
நியமநத்துக்குப் பாத்ரனாக வேணும்.
ஆசார்யன் பண்ணின உபகாரத்தை நாள் தோறும் அநுஸந்தித்திலனாகில் இவனுடைய ஜ்ஞாநாம்ஶமடைய மறந்து அஜ்ஞாநமே மேலிடும்.
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்தும் செய்யப் பெறாத அடிமைக்கு இழவுபட்டிருப்பான்.
ஶிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதமே அப்ரஸாதமாகவும், அப்ரஸாதமே ஸுப்ரஸாதமாகவும் வேணும்.

“சக்ஷுஸா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந | பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் ||” என்று
பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரியான சக்ரவர்த்தி திருமகனார் தன் கண்முன்னே நிற்க அவனை விட்டுத் தன்னுடைய
ஆசார்யர்களுடைய பாத ஸேவை பண்ணப் போகிறேனென்று போனாளிறே தான் சதிரியாயிருக்கச் செய்தேயும்
எல்லைச் சதுரையாகையாலே ஶ்ரீஶபரி.
ஞானமநுட்டானமிவை நன்றாகவேயுடையனான குருவையடைந்தக்கால் – என்று தொடங்கி.
திருமாமகள் கொழுநன் தானே வைகுந்தந்தரும்.
உய்யநினைவுண்டாகில் – என்று தொடங்கி – கையிலங்கு நெல்லிக்கனி.
தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது – என்று தொடங்கி – ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு.
ஆசார்யன் சிஷ்யன் – என்று தொடங்கி – ஆசையுடன் நோக்குமவன்.
பின்பழகராம் பெருமாள் சீயர் – என்று தொடங்கி – நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்.
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – என்று தொடங்கி – தஸ்மாதநந்யஶரணோ பவதீதி மத்வா என்று
நம்முடைய ஜீயர், தாம் அந்திமோபாயநிஷ்டாக்ரேஸரர் என்னுமிடத்தை ஸ்வப்ரபந்தங்களான உபதேச ரத்தின மாலையிலும்,
யதிராஜ விம்ஶதியிலும் நன்றாக ப்ரகாஶிப்பித்தருளித்
தாம் பெற்ற பேறுகளை அநுஸந்தித்தருளுகிற தனியனிலும் – மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்,
முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம், முழுதும் நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம்,
பின்னையொன்றுதனில் நெஞ்சு பேராமற் பெற்றோம், பிறர்மினுக்கம் பொறாமையில்லாப் பெருமையும் பெற்றோமே –
என்று தம்முடைய நிஷ்டையை மதித்துக்கொண்டு மிகவும் ஹ்ருஷ்டரானாரிறே.

————–

4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில்
எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி

வடுகநம்பி உடையவர் தளிகைக்குப் பாலமுது காய்ச்சா நிற்க, பெரிய திருநாளுக்குப் பெருமாள்
அழகாக உடுத்து முடித்துப் புறப்பட்டருளி மடத்து வாசலிலே எழுந்தருள, உடையவர் புறப்பட்டு ஸேவித்து,
“வடுகா! பெருமாளை ஸேவிக்க வா” என்று அழைத்தருள, வடுகநம்பி,
‘அடியேன் உம்முடைய பெருமாளை ஸேவிக்க வந்தால் என்னுடைய பெருமாளுக்குப் பாலமுது பொங்கிப் போங்காணும்.
ஆகையால் இத்தைவிட்டு வரக்கூடாது’ என்று அருளிச்செய்தார் என்று ப்ரஸித்தமிறே.
“உன்னையொழியவொரு தெய்வமற்றறியா, மன்னுபுகழ்சேர் வடுகநம்பி தன்னிலையை,
என்றனுக்கு நீ தந்தெதிராசா எந்நாளும், உன்றனக்கே ஆட்கொள் உகந்து” என்று வடுகநம்பி நிலையையும்
நம்முடைய ஜீயர் ப்ரார்த்தித்தருளினாரிறே.

(1) ப்ரக்ருதிமானாகில் ஸத்வைத்யன் கண்வட்டத்திலே வர்த்திப்பான்;
ஆத்மவானாகில் ஸதாசார்யன் கண்வட்டத்திலே வர்த்திப்பான் என்றும்
(2) நம்பிள்ளை தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கரான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பார்த்துத்
தம்முடைய தேவிகள் நிமித்தமாக ஒரு கைங்கர்யம் நியமித்தருளி, பின்பு,
‘க்ருஷ்ண ! நாம் நியமித்த கார்யத்துக்கு என்ன நினைத்திருந்தாய்? ‘ என்று கேட்டருள,
‘அடியேனுமொரு மிதுனம் தஞ்சமென்றன்றோ இருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
அபிமாநநிஷ்டனாகில் இப்படி இருக்கவேணுமென்று நம்பிள்ளை பிள்ளையை உகந்தருளினார் என்றும்
(3) பிள்ளை லோகாசார்யர் தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராயிருப்பாரொரு
(திருவாய் மொழிப் பிள்ளையுடைய திருத்தாயார் ) ஸாத்த்விகையைப் பார்த்தருளி,
‘புழுங்குகிறது; வீசு’ என்ன, அவளும் ‘பிள்ளை! அப்ராக்ருதமான திருமேனியும் புழங்குமோ’ என்ன,
‘புழங்குகாண், “வேர்த்துப்பசித்து வயிறசைந்து” என்று ஓதினாய்’ என்று அவளுடைய ப்ரதிபத்தி குலையாமல்
அதுக்குத் தகுதியாகத் தம்முடைய க்ருபையாலே பிள்ளை அருளிச்செய்தார் என்றும்
இம்மூன்று வார்த்தையும் பலகாலும் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
இதில் வார்த்தை உபதேஶத்தாலே அறியவேணும்.

உடையவர் காலத்திலே அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்றொருவர் வித்யையாலும் ஶிஷ்யஸம்பத்தாலும்
அறமிகுந்தவராய் அநேகஶாஸ்த்ரங்களை எழுதி க்ரந்தங்களைச் சுமையாகக் கட்டி எடுப்பித்துக் கொண்டு
தம்முடைய வித்யா கர்வமெல்லாம் தோற்றப் பெரிய மதிப்புடன் வந்து உடையவருடனே பதினேழு நாள் தர்க்கிக்க,
பதினெட்டாம் நாள் அருளாளப் பெருமாளுடைய யுக்தி ப்ரபலமாக உடையவர் ‘இது இருந்தபடியென்’ என்று எழுந்தருளியிருக்க,
அவ்வளவில் அருளாளப்பெருமாள் தம்முடைய வெற்றிதோற்ற எழுந்திருந்து அற்றைக்குப்போக,
உடையவரும் மடமே எழுந்தருளித் திருவாராதநம் பண்ணிப் பெருமாளுடனே வெறுத்துப் பெருமாளை
‘இத்தனைகாலமும் தேவரீருடைய ஸ்வரூபரூபகுண – விபூதிகள் ஸத்யமென்று ப்ரமாணத்தை நடத்திக் கொண்டு போந்தீர்;
இப்போது இவனொரு ம்ருஷாவாதியைக் கொண்டுவந்து என்னுடைய காலத்திலே எல்லா ப்ரமாணங்களையும்
அழித்துப் பொகட்டு லீலை கொண்டாடத் திருவுள்ளமாகில் அப்படிச் செய்தருளும்’ என்று
அமுது செய்தருளாமல் கண்வளர்ந்தருள, பெருமாளும் அந்த க்ஷணத்திலே
‘உமக்கு ஸமர்த்தனாயிருப்பானொரு ஶிஷ்யனை உண்டாக்கித் தந்தோம்;
அவனுக்கு இன்ன யுக்தியை நீர் சொல்லும், அவனும் அதுக்குத் தோற்று ஶிஷ்யனாகிறான்’ என்று
உடையவர்க்கு ஸ்வப்நத்திலே அருளிச் செய்தருள,

உடையவரும் திருக்கண்களை விழித்து, ‘இது ஒரு ஸ்வப்நமிருந்தபடி என்’ என்று திருவுள்ளமுகந்து
பெருமாள் ஸ்வப்நத்திலே அருளிச் செய்த யுக்தியைத் தம்முடைய திருவுள்ளத்திலே கொண்டு
“வலிமிக்க சீயமிராமாநுசன் மறைவாதியராம் புலிமிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை” என்கிறபடியே
மதித்த ஸிம்ஹம் போலே ப்ரஸந்ந கம்பீரராய்க் கொண்டு தர்க்க கோஷ்டிக்கு எழுந்தருள,
அவ்வளவில் அருளாளப் பெருமாள், உடையவர் எழுந்தருளுகிற காம்பீர்யத்தையும் ஸ்வரூபத்தையும் கண்டு
திடுக்கென்று இவர் நேற்று எழுந்தருளுகிறபோது இங்கு நின்றும் சோம்பிக் கொண்டெழுந்தருளா நின்றார்,
ஆகையாலே இது மாநுஷமன்று என்று நிஶ்சயித்து, கடுக எழுந்திருந்து எதிரே சென்று உடையவர் திருவடிகளிலே விழ,

உடையவரும் ‘இதுவென்? நீ தர்க்கிக்கலாகாதோ?’ என்ன, அருளாளப் பெருமாள், உடையவரைப் பார்த்து
‘தேவர்க்கு இப்போது பெரியபெருமாள் ப்ரத்யக்ஷமான பின்பு தேவரீரென்ன, பெரியபெருமாளென்ன பேதமில்லை என்றறிந்தேன்.
இனி அடியேன் தேவரீருடைய ஸந்நிதியிலே வாய் திறந்தொரு வார்த்தை சொல்ல ப்ராப்தி இல்லை.
ஆகையாலே அடியேனைக் கடுக அங்கீகரித்தருள வேணும் என்று மிகவும் அநுவர்த்திக்க, உடையவரும்
அவ்வளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து அவரைத் திருத்தி அங்கீகரித்து விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி,
அன்று தொடங்கி அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்று தம்முடைய திருநாமம் ப்ரஸாதித்தருளிப்
பெரியதொரு மடத்தையும் கொடுத்து, ‘உமக்குப் போராத ஶாஸ்த்ரங்களில்லை, புறம்புண்டான பற்றுக்களடைய
ஸவாஸநமாக விட்டு ஶ்ரிய:பதியைப் பற்றும், உமக்கு பரக்கச் சொல்லலாவதில்லை.
விஶிஷ்டாத்வைதப் பொருள் நீரும் உம்முடைய ஶிஷ்யர்களும் கூடி வ்யாக்யாநம் பண்ணிக்கொண்டு ஸுகமே இரும்’
என்று திருவுள்ளம் பற்றியருள, அவரும் க்ருதார்த்தராய், அதுக்குப் பின்பு
அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் அந்த மடத்திலே சிறிது நாள் எழுந்தருளியிருந்தார்.

அநந்தரம் தேஶாந்தரத்தில் நின்றும் இரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் கோயிலுக்கெழுந்தருளித் திருவீதியிலே
நின்றவர்கள் சிலரைப் பார்த்து ‘எம்பெருமானார் மடம் ஏது’ என்று கேட்க,
அவர்கள் ‘எந்த எம்பெருமானார் மடம்’ என்ன, புதுக்க எழுந்தருளின ஶ்ரீவைஷணவர்கள் நெஞ்சுளைந்து
“நீங்கள் இரண்டு சொல்லுவானென்? இந்த தர்ஶநத்துக்கு இரண்டு எம்பெருமானாருண்டோ?” என்ன,
அவர்கள் ‘உண்டு காணும்; அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் எழுந்தருளி இருக்கிறார்;
ஆகையாலே சொன்னோம்’ என்ன, ‘நாங்கள் அவரை அறியோம், ஶ்ரீ பாஷ்யகாரரைக் கேட்டோம்’ என்ன,
ஆனால் ‘உடையவர் மடம் இது’ என்று அவர்காட்ட, அந்த ஶ்ரீவைஷ்ணவர்களும் உடையவர் மடத்திலே சென்று புகுந்தார்கள்.
இந்த ப்ரஸங்கங்களெல்லாத்தையும் யாத்ருச்சிகமாக அருளாளப் பெருமாளெம்பெருமானார் கேட்டு,
‘ஐயோ நாம் உடையவரைப் பிரிந்து ஸ்தலாந்தரத்திலே இருக்கையாலே லோகத்தார் நம்மை
எம்பெருமானார்க்கு எதிராகச் சொன்னார்கள். ஆகையாலே நாம் அநர்த்தப்பட்டு விட்டோம்’ என்று மிகவும் வ்யாகுலப்பட்டு,
அப்போதே தம்முடைய மடத்தையும் இடித்துப் பொகட்டு வந்து உடையவர் திருவடிகளைக் கட்டிக்கொண்டு
‘அநாதி காலம் இவ்வாத்மா தேவர் திருவடிகளை அகன்று அஹம் என்று அநர்த்தப்பட்டு போந்தது போராமல் இப்போதும்
அகற்றிவிடத் திருவுள்ளமாய் விட்டதோ?’ என்று மிகவும் க்லேஶிக்க, உடையவர் ‘இதுவென்’ என்ன,
அங்குப் பிறந்த வ்ருத்தாந்தங்களை விண்ணப்பம் செய்ய, உடையவரும் அச் செய்திகளெல்லாவற்றையும் கேட்டருளி,
‘ஆனால் இனி உமக்கு நாம் செய்யவேண்டுவதென்’ என்ன, அருளாளப் பெருமாளெம்பெருமானார்
‘அடியேனை இன்று தொடங்கி நிழலுமடிதாறும்போலே தேவரீர் திருவடிகளின் கீழே வைத்துக் கொண்டு
நித்ய கைங்கர்யம் கொண்டருளவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும் ,
‘ஆனால் இங்கே வாரும்’ என்று அவரைத் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் வைத்துக் கொண்டு
ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருள அவரும் க்ருதார்த்தராய்த் தாம் உடையவரொழிய வேறொரு தெய்வம்
அறியாதிருந்தவராகையாலே ஸகல வேதாந்த ஸாரங்களையும் பெண்ணுக்கும் பேதைக்கும் எளியதாக கற்று
உஜ்ஜீவிக்கத் தக்கதாக ‘ஞான ஸாரம்’ ‘ப்ரமேய ஸாரம்’ என்கிற ப்ரபந்தங்களையும் இட்டருளி,
அதிலே “சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்” என்றும்
“தேனார்கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகி’ என்றுமித்யாதிகளாலே
ஸச்சிஷ்யனுக்கு ஸதாசார்யனே பரதேவதை; அவன் திருவடிகளே ரக்ஷகம் என்னுமதும்,
அவன்தான் பகவதவதாரம் என்னுமதும் தோற்ற ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாளெம்பெருமானார்
அருளிச் செய்தாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

————-

5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்

கூரத்தாழ்வான் திருவயிற்றிலே அவதரித்துப் பெருமாள் புத்ர ஸ்வீகாரம் பண்ணி வளர்த்துக்கொள்ள,
பெருமாள் குமாரராய் வளர்ந்த பட்டர் தர்ஶநம் நிர்வஹிக்கிற காலத்திலே, ஒரு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து
பட்டருடைய கோஷ்டியிலே நின்று ‘பட்டரே! மேல்நாட்டிலே வேதாந்திகள் என்று ஒரு வித்வான் இருக்கிறான்,
அவனுடைய வித்யையும் கோஷ்டியும் உமக்கு துல்யமாயிருக்கும்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணன் சொன்ன வார்த்தைக் கேட்டு ‘ஆமோ, அப்படி ஒரு வித்வாம்ஸர் உண்டோ’ என்ன,
‘உண்டு’ என்று சொல்ல, அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டு மேல்நாட்டுக்குப் போய்,
வேதாந்திகள் கோஷ்டியிலே நின்று ‘வேதாந்திகளே! உம்முடைய வித்யைக்கும் கோஷ்டிக்கும் சரியாயிருப்பாரொருவர்
இரண்டாற்றுக்கும் நடுவே பட்டர் என்றொருவர் எழுந்தருளியிருக்கிறார்’ என்ன,
வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆமோ, பட்டர் நமக்கொத்த வித்வானோ’ என்ன,
ப்ராஹ்மணன் ‘ஶப்த – தர்க்க – பூர்வோத்தரமீமாம்ஸம் தொடக்கமாக ஸகல ஶாஸ்த்ரங்களும் பட்டருக்குப் போம்’ என்ன,
வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணன் சொன்னது கேட்டு, ‘இந்த பூமியில் நமக்கெதிரில்லையென்று ஷட்தர்ஶநத்துக்கும்
ஆறு ஆஸநமிட்டு அதின் மேலே உயர இருந்தோம்; பட்டர் நம்மிலும் அதிகர் என்று ப்ராஹ்மணன் சொன்னான்’ என்று
அன்று தொடங்கி வேதாந்திகள் திடுக்கிட்டிருந்தார்.

அவ்வளவில் அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்து பட்டர் ஸந்நிதியிலே நின்று,
‘பட்டரே! உம்முடைய வைபவமெல்லாம் வேதாந்திகளுக்குச் சொன்னேன்’ என்ன,
‘பட்டருக்கு எந்த ஶாஸ்த்ரம் போம்’ என்று கேட்டார்’ என்ன, ‘ப்ராஹ்மணா, அதுக்கு வேதாந்திகளுக்கு என் சொன்னாய்’ என்ன,
‘ஶப்த தர்க்கங்களும் ஸகல வேதாந்தங்களும் நன்றாக பட்டர்க்குப் போம் என்று வேதாந்திகளுடனே சொன்னேன்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணனைப் பார்த்து ‘தீர்த்த வாஸியாய் தேஶங்களெல்லாம் நடையாடி எல்லாருடையவும்
வித்யா மாஹாத்ம்யங்களையும் அறிந்து நாகரிகனாய் இருக்கிற நீ நமக்குப் போமதெல்லாமறிந்து
வேதாந்திகளுடனே சொல்லாமல் வேத ஶாஸ்த்ரங்களே போமென்று தப்பச் சொன்னாய்’ என்ன,
அந்த ப்ராஹ்மணன் பட்டரைப் பார்த்து ‘இந்த லோகத்தில் நடையாடுகிற வேதஶாஸ்த்ரங்களொழிய
உமக்கு மற்றெது போம் என்று வேதாந்திகளுடனே சொல்லுவது’ என்ன,
‘கெடுவாய்! பட்டருக்கு திருநெடுந்தாண்டகம் போமென்று வேதாந்திகளுடனே சோல்லப் பெற்றாயில்லையே’ என்று
பட்டர் வெறுத்தருளிச் செய்து, அநந்தரம் பட்டர்
‘வேதாந்திகளை நம்முடைய தர்ஶநத்திலே அந்தர்பூதராம்படி பண்ணிக்கொள்ளவேணும்’ என்று
தம்முடைய திருவுள்ளத்தைக்[தே] கொண்டு பெருமாளை ஸேவித்து,
‘மேல்நாட்டிலே வேதாந்திகளென்று பெரியதொரு வித்வான் இருக்கிறார். அவரைத் திருத்தி நம்முடைய
தர்ஶந ப்ரவர்த்தகராம்படி பண்ணவேணும் என்று அங்கே விடைக்கொள்ளுகிறேன், அவரை நன்றாகத் திருத்தி
ராமாநுஜ ஸித்தாந்தத்துக்கு நிர்வாஹகராம்படி திருவுள்ளம் பற்றியருளவேணும்’ என்று பட்டர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய,
பெருமாளும் ‘அப்படியே செய்யும்’ என்று திருவுள்ளமுகந்தருளித் தம்முடைய குமாரரான வாசி தோற்ற,
‘அநேக கீத வாத்யங்களையும் கோயில் பரிகரத்தையும் கூட்டிப்போம்’ என்றுவிட,

பட்டரும் அங்கே எழுந்தருளி வேதாந்திகள் இருக்கிற ஊர் ஆஸந்நமானவாறே
பராசர பட்டர் வந்தார், வேதாசார்ய பட்டர் வந்தார்’ என்று திருச்சின்னம் பரிமாறுகை முதலான அநேக வாத்ய கோஷத்துடனே
பெருந்திரளாக மஹா ஸம்ப்ரமத்துடனே ஸர்வாபரண பூஷிதராய்க் கொண்டு எழுந்தருள, அவ்வளவிலே அவ்வூரில் நின்றும்
இரண்டு பேர் ப்ராஹ்மணர் எதிரே சென்று,
‘நீர் மஹா ஸம்ப்ரமத்துடனே வந்தீர், நீரார்? நீர் எங்கே எழுந்தருளுகிறீர்? என்று பட்டரைக் கேட்க,
அவர் ‘நாம் பட்டர், வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம்’ என்ன, அந்த ப்ராஹ்மணர் சொன்னபடி –
‘நீர் இப்படி ஸம்ப்ரமத்துடனே எழுந்தருளினால் வேதாந்திகளை உமக்குக் காணப்போகாது.
அவர் க்ருஹத்துக்குள்ளே இருந்துவிடுவர். அவருடைய ஶிஷ்ய ப்ரஶிஷ்யர்கள் தலைவாசலிலே இருந்து
நாலிரண்டு மாஸம் வந்த வித்வான்களுடனே தர்க்கித்து உள்ளே புகுர வொட்டாதே தள்ளி விடுவார்கள்’ என்ன,
பட்டரும் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆனால் நான் நேரே சென்று அவருடைய க்ருஹத்திலே புகுந்து
வேதாந்திகளைக் காணும் விரகேது’ என்று கேட்க, அவர்கள் சொன்னபடி – ‘வேதாந்திகள் தநவானாகையாலே
அவாரியாக {=தடையின்றி} ப்ராஹ்மணர்க்கு ஸத்ர போஜநமிடுவர், அந்த ப்ராஹ்மணருடனே கலசி அவர்களுடைய
வேஷத்தையும் தரித்துக்கொண்டு ஸத்ரத்திலே சென்றால் வேதாந்திகளைக் கண்களாலே காணலாம்.
ஆகையாலே உம்முடைய ஸம்ப்ரமங்களெல்லாத்தையும் இங்கே நிறுத்தி நீர் ஒருவருமே ஸத்ராஶிகளுடனே கூடி எழுந்தருளும்’
என்று சொல்லிப்போனார்கள். பட்டரும் அவர்கள் சொன்னது கார்யமாம் என்று திருவுள்ளம்பற்றித் தம்முடைய அனைத்து
பரிகரத்தையும் ஓரிடமே நிறுத்தி, ஸர்வாபரணங்களையும் களைந்து, ஒரு அரசிலைக் கல்லையையும் குத்தி
இடுக்கிக்கொண்டு ஒரு காவி வேஷ்டியையும் தரித்து ஒரு கமண்டலத்தையும் தூக்கி ஸத்ராஶிகளுடனே கூட
கார்ப்பண்ய வேஷத்தோடே உள்ளே எழுந்தருள,

வேதாந்திகள் ப்ராஹ்மணர் புஜிக்கிறத்தைப் பார்த்துக்கொண்டு ஒரு மண்டபத்தின்மேலே பெரிய மதிப்போடே இருக்க,
ப்ராஹ்மணரெல்லாரும் ஸத்ர ஶாலையிலே புகுர, பட்டர் அங்கே எழுந்தருளாமல் வேதாந்திகளை நோக்கி எழுந்தருள,
வேதாந்திகள் ‘பிள்ளாய் இங்கென் வருகிறீர்?’ என்ன, பட்டரும் ‘பிக்ஷைக்கு வருகிறேன்’ என்ன,
‘எல்லாரும் உண்கிறவிடத்திலே ஸத்ரத்திலே போகீர் பிக்ஷைக்கு’ என்ன, ‘எனக்கு சோற்று பிக்ஷை அன்று’ என்ன,
வேதாந்திகள் இவர் ஸத்ராஶியானாலும் கிஞ்சித் வித்வானாக கூடும் என்று விசாரித்து, ‘கா பிக்ஷா?’ என்ன,
பட்டர் ‘தர்க்க பிக்ஷா’ என்ன, வேதாந்திகள் அத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து
முன்னாள் நமக்குச் சொன்ன பட்டரல்லது நம்முடைய முன்வந்துநின்று கூசாமல் தர்க்க பிக்ஷை என்று கேட்கவல்லார்
இந்த லோகத்திலே இல்லையாகையாலே, வேஷம் கார்பண்யமாயிருந்ததே யாகிலும் இவர் பட்டராக வேணும் என்று நிஶ்சயித்து
‘நம்மை தர்க்க பிக்ஷை கேட்டார் நீரார், பட்டரோ? என்ன, அவரும் ‘ஆம்’ என்று கமண்டலத்தை, காவி வேஷ்டியை
இவையெல்லாத்தையும் சுருட்டி எறிந்து எழுந்தருளிநின்று மஹாவேகத்திலே உபந்யஸிக்க,

அவ்வளவில் வேதாந்திகள் எழுந்திருந்து நடுங்கி வேறொன்றும் சொல்லாதே அரைகுலையத் தலைகுலைய
இறங்கி வந்து பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘அடியேனை அங்கீகரித்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க
பட்டரும் தாம் எழுந்தருளின கார்யம் அதிஶீக்ரத்திலே பலித்தவாறே மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
வேதாந்திகளை அங்கீகரித்து அவர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பண்ணியருளி,
‘வேதாந்திகளே! நீர் ஸர்வஜ்ஞராயிருந்தீர். ஆகையாலே உமக்கு நாம் பரக்கச் சொல்லாவதில்லை.
விஶிஷ்டாத்வைதமே பொருள்; நீரும் மாயாவாதத்தை ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப் பற்றி,
ராமாநுஜ தர்ஶநத்தை நிர்வஹியும்’ என்று அருளிச்செய்து, ‘நாம் பெருமாளை ஸேவிக்கப் போகிறோம்’ என்று
உத்யோகிக்கிறவளவிலே ஊருக்குப் புறம்பே நிறுத்தின அனைத்துப் பரிகாரமும் மஹாஸம்ப்ரமத்துடனே வந்து புகுந்து
பட்டரை மீளவும் ஸர்வாபரணங்களாலும் அலங்கரித்துத் திருபல்லக்கிலேற்றி உபயசாமரங்களைப் பரிமாற
எழுந்தருளுவித்துக் கொண்டு புறப்பட்டவளவிலே வேதாந்திகள் பட்டருடைய பெருமையும் ஸம்பத்தையும் கண்டு
‘இந்த ஶ்ரீமாந் இத்தனை தூரம் காடும் மலையும் கட்டடமும் கடந்து எழுந்தருளி நித்ய ஸம்ஸாரிகளிலும்
கடைகெட்டு ம்ருஷாவாதியாயிருந்த அடியேனுடைய துர்கதியே பற்றாசாக அங்கீகரித்தருளுவதே!’ என்று
மிகவும் வித்தராய்க் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பட்டர் திருவடிகளிலே விழுந்து க்லேஶித்து,

‘பெரிய பெருமாள் தாமாகத் தன்மையான ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதிகளுக்குத் தகுதியாக எழுந்தருளினார்,
அநாதி காலம் தப்பி அலம்புரிந்த நெடுந் தடக்கைக்கும் எட்டாதபடி கை கழிந்து போன இவ்வாத்மா என்றும்
தப்பிப்போம் என்று திருவுள்ளம்பற்றி, இப்படி அதிகார்ப்பண்யமாயிருப்பதொரு வேஷத்தையும் தரித்துக்கொண்டு
ஸத்ராஶிகளுடனேகூட எழுந்தருளி அதிதுர்மாநியான அடியேனை அங்கீகரித்தருளின அந்த வேஷத்தை நினைத்து
அடியேனுக்குப் பொறுக்கப் போகிறதில்லை’ என்று வாய்விட, பட்டரும் வேதாந்திகளை எடுத்து நிறுத்தித் தேற்றி,
‘நீர் இங்கே ஸுகமே இரும்’ என்று அருளிச்செய்து கோயிலேற எழுந்தருளினார்.

அதுக்குப் பின்பு வேதாந்திகள் அங்கே சிறிதுநாள் எழுந்தருளியிருந்து பட்டரைப் பிரிந்திருக்க மாட்டாதே
கோயிலுக்கு எழுந்தருளத்தேட அங்குள்ளவர்கள் அவரைப் போகவொண்ணாதென்று தகையத் தமக்கு நிரவதிக
தநம் உண்டாகையாலே அத்தை மூன்றம்ஶமாகப் பிரித்து, இரண்டு தேவிமாருக்கு இரண்டு அம்ஶத்தைக் கொடுத்து,
மற்றை அம்ஶத்தைத் தம்முடைய ஆசார்யருக்காக எடுப்பித்துக் கொண்டு தத்தேஶத்தையும் ஸவாஸநமாக விட்டு
ஸந்யஸித்துக் கோயிலிலே எழுந்தருளி, பட்டர் திருவடிகளிலே ஸேவித்துத் தான் கொண்டு வந்த தநத்தையும்
தம்மதென்கிற அபிமாநத்தைவிட்டு, பட்டர் இஷ்ட விநியோகம் பண்ணிக் கொள்ளலாம்படி அவர் திருமாளிகையிலே
விட்டுவைத்து, க்ருதார்த்தராய் எழுந்தருளி நிற்க,

அவ்வளவில் பட்டரும் மிகவும் திருவுள்ளமுகந்து, ‘நம்முடைய ஜீயர் வந்தார்’ என்று கட்டிக் கொண்டு
ஒரு க்ஷணமும் பிரியாமல் தம்முடைய ஸந்நிதியிலே வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஜீயரும் பட்டரையல்லது மற்றொரு தெய்வம் அறியாதிருந்தார். பட்டர் நஞ்சீயர் என்று அருளிச்செய்தவன்று தொடங்கி
வேதாந்திகளுக்கு நஞ்சீயரென்று திருநாமமாயிற்று. நஞ்சீயர் நூறு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்து
நூறு திருவாய்மொழியும் நிர்வஹிக்கையாலே ஜீயருக்கு ஶதாபிஷேகம் பண்ணிற்று என்று
நம்முடைய ஜீயர் அருளிச் செய்வர்.

நஞ்சீயர் பட்டரை அநேகமாக அநுவர்த்தித்து அவருடைய அநுமதி கொண்டு திருவாய்மொழிக்கு
ஒன்பதினாயிரமாக ஒரு வ்யாக்யாநமெழுதி, பட்டோலையானவாறே இத்தையொரு ஸம்புடத்திலே
நன்றாக எழுதித் தரவல்லார் உண்டோ என்று ஜீயர் தம்முடைய முதலிகளைக் கேட்க, அவர்களும்
‘தென்கரையனென்னும் வரதராஜனென்று ஒருவர் பலகாலம் இங்கே வருவர். அவர் நன்றாக எழுதவல்லார்’
என்று ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய, ஜீயரும் வரதராஜரை அழைத்து ‘ஒரு க்ரந்தம் எழுதிக் காட்டுங்காண்’ என்ன,
அவரும் எழுதிக்கொடுக்க, ஜீயர் அத்தைக்கண்டு ‘எழுத்து முத்துப்போலே நன்றாயிருந்தது;
ஆனாலும் திருவாய்மொழி வ்யாக்யாநமாகையாலே ஒரு விலக்ஷணரைக் கொண்டு எழுதுவிக்க வேணுமொழிய,
திருவிலச்சினை திருநாமமுண்டான மாத்ரமாய், விஶேஷஜ்ஞரல்லாத வரதராஜனைக் கொண்டு எப்படி எழுதுவிப்பது’ என்று
ஸந்தேஹிக்க, வரதராஜனும் ஜீயர் திருவுள்ளத்தை யறிந்து
‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்குத் தகும்படி திருத்திப் பணி கொள்ளலாகாதோ’ என்ன,

அவ்வளவில் ஜீயரும் மிகவும் திருவுள்ளமுகந்தருளி அப்போதே வரதராஜனை அங்கீகரித்து
விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி ஒன்பதினாயிரமும் பட்டோலை ஓருரு வரதராஜனுக்கு அருளிச் செய்து காட்டி
‘இப்படித் தப்பாமல் எழுதித்தாரும்’ என்று பட்டோலையை வரதராஜன் கையிலே கொடுக்க,
அவரும் அத்தை வாங்கிக் கொண்டு ‘அடியேனூரிலே போய் எழுதிக் கொண்டு வருகிறேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் ‘அப்படியே செய்யும்’ என்று விட, வரதராஜன் திருக்காவேரிக்குள்ளே எழுந்தருளினவளவிலே
சத்திடம் (சிற்றிடம்) நீச்சாகையாலே பட்டோலையைத் திருமுடியிலே கட்டிக்கொண்டு நீஞ்ச,
அவ்வளவிலே ஒரு அலை அவரை அடித்து க்ரந்தம் ஆற்றுக்குள்ளே விழுந்து போக,
அவரும் அக்கரையிலேயேறி ‘பட்டோலை போய்விட்டதே, இனி நான் செய்வதேது’ என்று விசாரித்து,

ஒரு அலேகத்தை {=வெற்றேடு} உண்டாக்கிக் கொண்டு ஜீயர் அருளிச் செய்தருளின அர்த்தம்
ஒன்றும் தப்பாமல் ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதி, தாம் சதிருடைய தமிழ் விரகராகையாலே
ஓரொரு பாட்டுக்களிலே உசிதமான ஸ்தலங்களுக்கு ப்ரஸந்ந கம்பீரமான அர்த்த விசேஷங்களும்
எழுதிக் கொண்டு போய் ஜீயர் திருக்கையிலே கொடுக்க, ஜீயரும் ஶ்ரீகோஶத்தை அவிழ்த்துப் பார்த்தவளவிலே
தாமருளிச்செய்த கட்டளையாயிருக்கச்செய்தே ஶப்தங்களுக்கு மிகவும் அநுகுணமாக
அநேக விஶேஷார்த்தங்கள் பலவிடங்களிலும் எழுதியிருக்கையாலே அத்தைக் கண்டு மிகவும் திருவுள்ளமுகந்தருளி
வரதராஜனைப் பார்த்து ‘மிகவும் நன்றாயிராநின்றது; இதேது சொல்லும்’ என்ன,
அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாதிருக்க, ஜீயரும் ‘நீர் பயப்படவேண்டாம், உண்மையைச் சொல்லும்’ என்ன,
வரதராஜனும் ‘திருக்காவேரி நீச்சாகையாலே பட்டோலையை அடியேன் தலையிலே கட்டிக் கொண்டேன்.
ஓரலை வந்து அடிக்கையாலே அது ஆற்றிலே விழுந்து முழிகிப்போய்த்து.
இது தேவரீர் அருளிச் செய்தருளின ப்ரகாரத்திலே எழுதினேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் ‘இது ஒரு புத்தி விசேஷமிருந்தபடியென்! இவர் மஹாஸமர்த்தராயிருந்தார். நன்றாக எழுதினார்’ என்று
மிகவும் திருவுள்ளமுகந்து வரதராஜனைக் கட்டிக்கொண்டு ‘நம்முடைய பிள்ளை திருக்கலிக்கன்றிதாஸர்’ என்று
திருநாமம் சாத்தித் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் மாப்பழம்போலே வைத்துக்கொண்டு
பிள்ளைக்கு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார். ஆகையாலே ஜீயர் நம்பிள்ளை என்று அருளிச் செய்தவன்று
தொடங்கி வரதராஜனுக்கு நம்பிள்ளை என்று திருநாமமாய்த்து என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவார்.

இந்த வ்ருத்தாந்தங்கள் தன்னை “நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர்,
அவரவர்தம் ஏற்றத்தால், அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தானென்று நன்னெஞ்சே,
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று” என்று உபதேச ரத்தின மாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.
‘இந்திரன் வார்த்தையும், நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன் வார்த்தையும் கற்பவராரினிக் காசினிக்கே
நந்தின முத்தென்றும் நம்பூர் வரதர் திருமாளிகையில்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறை கொள்வரே’ என்றிறே நம்பிள்ளை யுடைய வைபவமிருப்பது.

————–

6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை

திருகோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளிச்செய்யவேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒருநாழிகைப் போது திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே
திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலே காணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று
அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே. நம்பிதான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக்கதவைப் புகட்டு
ஆளவந்தாரை த்யாநித்துக்கொண்டு யமுனைத்துறைவர் என்கிற மந்த்ரத்தை
ஸதாநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச்செய்வர்.

உடையவரும் ஒரூமையைக் கடாக்ஷித்தருளி அவனளவில் தமக்குண்டான க்ருபாதிஶயத்தாலே அவனைக்
கடாக்ஷிக்கக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி, ஏகாந்தத்திலே வைத்துக்கொண்டு ஸம்ஜ்ஞையாலே
தம்முடைய திருமேனியை ஊமைக்கு ரக்ஷகமாகக் காட்டியருள, ஆருக்கும் ஸித்தியாத விஶேஷ கடாக்ஷத்தைத்
கூரத்தாழ்வான் கதவு புரையிலே கண்டு மூர்ச்சித்துத் தெளிந்த பின்பு ‘ஐயோ ஒன்றுமறியாத ஊமையாய்ப் பிறந்தேனாகில்
இப்பேற்றை உடையவர் அடியேனுக்கும் இரங்கியருளுவர்; கூரத்தாழ்வானாய்ப் பிறந்து ஶாஸ்த்ரங்களைப் பரக்கக் கற்கையாலே
தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை அடியேனுக்குத் தஞ்சமாகக் காட்டித் தந்தருளாமல் ப்ரபத்தியை உபதேஶித்து
விட்டாராகையாலே எம்பெருமானாருடைய திவ்ய மங்கள விக்ரஹமே எனக்குத் தஞ்சமென்கிற நிஷ்டைக்கு
அநதிகாரியாய் விட்டேன்’ என்று ஆழ்வான் தம்மை வெறுத்துக் கொண்டாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

உடையவர் ஆழ்வாரை ஸேவிக்க வேணுமென்று திருநகரிக்கெழுந்தருளுகிற போது திருப்புளிங்குடி என்கிற
திருப்பதியிலே எழுந்தருளினவாறே அவ்வூர்த் திருவீதியிலே பத்தெட்டு வயஸ்ஸிலே ஒரு ப்ராஹ்மணப் பெண் இருக்க,
உடையவர் அவளைப் பார்த்து, ‘பெண்ணே திருநகரிக்கு எத்தனை தூரம் போரும்’ என்று கேட்க,
அந்தப் பெண் உடையவரைப் பார்த்து ‘ஏன் ஐயரே! திருவாய்மொழி ஓதினீரில்லையோ?’ என்ன,
உடையவர் ‘திருவாய்மொழி ஓதினால் இவ்வூர்க்குத் திருநகரி இத்தனை தூரம் போம் என்று அறியும்படி எங்ஙனே?’ என்ன,
அப்பெண் – “திருபுளிங்குடியாய்! வடிவணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே” என்று ஆழ்வார் அருளிச்செய்கையாலே
திருநகரிக்கு இவ்வூர் கூப்பிடு தூரமென்று அறிய வேண்டாவோ’ என்று உடையவரைப் பார்த்து விண்ணப்பம் செய்ய,
உடையவரும் ‘இதொரு வாக்யார்த்தமிருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
அந்தப் பெண்ணளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து ‘இவளிருக்கிற ஊரிலே நமக்கு இன்று ஸ்வயம்பாகம் பண்ணுவதாகத்
தேடின பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டு, ‘பெண்ணே உன்னுடைய க்ருஹம் ஏது’ என்ன,
அவளும் தம்முடைய அகத்தைக்காட்ட, உடையவரும் அந்தக் க்ருஹத்திலே எழுந்தருளி,
அந்தப் பெண்ணையும் அவளுடைய மாதா பிதாக்களையும் தளிகைக்குத் திருப்போனகம் சமைக்கும்படி கற்பித்தருளித்
தாமும் முதலிகளும் அமுது செய்தருளி அந்தப் பெண்ணையும் அவளோடு ஸம்பந்தமுடையாரையும் அங்கீகரித்து
விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தாமும் முதலிகளுமாகத் திருநகரிக்கேற எழுந்தருளினார்.
அன்று தொடங்கி அந்தப் பெண்ணும் தத் ஸம்பந்திகளும் உடையவரல்லது மற்றொரு தெய்வமறியாமலிருந்து
வாழ்ந்து போனார்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்கள். இந்த வ்ருத்தாந்தங்களாலே
‘பாலமூக- ஜடாந்தாஶ்ச பங்கவோ பதிராஸ்ததா | ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம்’ என்கிறபடியே
ஶாஸ்த்ராநதிகாரிகளான இவர்களெல்லாம் பரமக்ருபையாலே உஜ்ஜீவித்தார்கள் என்பதை உடையவர் பக்கலிலே காணலாம் என்றபடி.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி அங்கே ஒரு ஶ்ரீவைஷ்ணவ க்ருஹத்திலே விட்டு
ஸ்வயம்பாகம் பண்ணுவதாக எழுந்தருளியிருக்க, அங்குள்ளவர்களெல்லாரும் கேவல பகவந்நாம ஸங்கீர்தநங்களைப் பண்ண,
அது இவர் திருவுள்ளத்துக்குப் பொருந்தாத படியாலே அமுது செய்தருளாமல் அவ்வருகே எழுந்தருளினார் என்றும்,
ஶ்ரீபாஷ்யகாரர் காலத்திலே கோஷ்டியிலே ஒரு வைஷ்ணவர் வந்து நின்று திருமந்த்ரத்தை உச்சரிக்க,
வடுகநம்பி எழுந்திருந்து குருபரம்பரா பூர்வகமில்லாத படியாலே இது நாவகாரியம் என்று அருளிச்செய்து
அவ்வருகே எழுந்தருளினார் என்றும் இரண்டு வ்ருத்தாந்தமும் “நாவகாரியம் சொல்லிலாதவர்” என்கிற பாட்டில் வ்யாக்யாநத்திலே காணலாம்.

திருமாலையாண்டான் அருளிச்செய்யும்படி – நாம் பகவத்விஷயம் சொல்லுகிறோமென்றால் இஸ்ஸம்ஸாரத்தில் ஆளில்லை;
அதெங்ஙனே என்னில், ஒரு பாக்கைப் புதைத்து அதுருவாந்தனையும் செல்லத் தலையாலே எருச்சுமந்து ரக்ஷித்து
அதினருகே கூறைகட்டிப் பதினாறாண்டுகாலம் காத்துக் கிடந்தால் கடவழி ஒரு கொட்டைப் பாக்காய்த்துக் கிடைப்பது;
அதுபோலன்றிக்கே இழக்கிறது ஹேயமான ஸம்ஸாரத்தை, பெறுகிறது விலக்ஷணமான பரமபதத்தை,
இதுக்குடலாக ஒரு நல்வார்த்தை யருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒருகாலாகிலும் க்ருதஜ்ஞராகாத
ஸம்ஸாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்லுவது என்று வெறுத்தார் என்று வார்த்தாமாலையிலே ப்ரஸித்தம்.

“கோக்நேசைவ ஸுராபே ச சோரே பக்நவ்ரதே ததா| நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி:”
என்கிறவிடத்தில் க்ஷுத்ரமான ப்ராக்ருத த்ரவ்யோபகார விஸ்ம்ருதியை அகப்பட, நிஷ்க்ருதியில்லாத
பாபமென்றால் அப்ராக்ருதமாய், நிரதிஶய வைலக்ஷண்யத்தை உடைத்தான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் தொடங்கி,
“அஸந்நேவ” என்கிறபடியே அஸத் கல்பமாய்க் கிடக்க, ஜ்ஞாநப்ரதாநத்தாலே அத்தை “ஸந்தமேநம்” என்னும்போது
உண்டாக்கின ஆசார்யன் திறத்தில் க்ருதக்நராகை பாபங்களுக்கெல்லாம் தலையான பாபமென்னுமிடம் கிம்புநர்ந்யாய ஸித்தமிறே.

தண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துச் தேத்தாம் விரையையிட்டுத் தேற்றினாலும் மண்ணானது கீழ் படிந்து
தெளிந்த நீரானது மேலே நிற்குமாப்போலே அஜ்ஞாநப்ரதமான ஶரீரத்திலே இருக்கிற ஆத்மாவை
ஆசார்யனாகிற மஹோபகாரகன் திருமந்த்ரமாகிற தேத்தாம் விரையாலே தேற்ற, அஜ்ஞாநம் மடிந்து, ஜ்ஞாநம் ப்ரகாஶிக்கும்;
தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்குந்தனையும் கைப்பட்ட போதெல்லாம் கலங்குமாப்போலே,
பிறந்த ஜ்ஞாநத்தைக் கலக்குகிற ப்ராக்ருத ஶரீரத்தை விட்டுப்போய், அப்ராக்ருத ஶரீரத்திலே புகுந்தனையும்
கலங்காமல் நோக்கும் தன்னுடைய ஸதாசார்யன், தத்துல்யர்கள் கண்வட்டத்திலே வர்த்திக்கை ஸ்வரூபம் என்று
பூர்வாசார்யர்கள் அருளிச் செய்வார்கள். (கதகஷோத இத்யாதி).

ஆளவந்தார் திருவநந்தபுரத்துக் கெழுந்தருளுகிற போது தமக்கு அந்தரங்க ஶிஷ்யரான தெய்வாரி யாண்டானை
‘பெருமாளுக்குத் திருமாலையும் கட்டி ஸமர்ப்பித்து மடத்துக்கு காவலாக இரும்’ என்று கோயிலிலே வைத்து எழுந்தருள,
ஆண்டானுக்கு திருமேனியும் ஶோஷித்து, தீர்த்த ப்ரஸாதங்களும் இழியாமையிருக்கையாலே மிகவும் தளர,
பெருமாள் அவரைப் பார்த்து ‘உனக்கிப்படி ஆவானென்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
‘தேவரீருடைய கைங்கர்யமும் ஸேவையும் உண்டேயாகிலும் ஆசார்ய விஶ்லேஷத்தாலே இளைத்தேன்’ என்று
அவரும் விண்ணப்பம் செய்ய, ‘ஆனால் நீர் ஆளவந்தார் பக்கல் போம்’ என்று பெருமாள் திருவுள்ளமாயருள,
அவரும் அங்கே எழுந்தருள, ஆளவந்தாரும் திருவநந்தபுரத்தை ஸேவித்து அரைக்காதவழி மீண்டு,
கரைமனையாற்றங்கரையிலே விட்டெழுந்தருளியிருந்தார். ஆண்டானும் அங்கே சென்று ஆளவந்தாரைக் கண்டு
ஸேவித்துத் தம்முடைய க்லேஶம் தீர்ந்தவாறே மிகவும் ஹ்ருஷ்டராயிருக்க;
அவ்வளவிலே ஆளவந்தாரும் ‘திருவனந்தபுரம் திருச்சோலைகள் தோன்றுகிறது, ஶ்ரீ வைஷ்ணவர்களையும்
கூட்டிக்கொண்டு போய் ஸேவித்துவாரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள;
‘அது உம்முடைய திருவனந்தபுரம், என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது’ என்று ஆண்டான் விண்ணப்பம் செய்ய,
‘இது ஒரு அதிகாரம் இருந்தபடியென்! இந்நினைவு ஒருவர்க்கும் பிறக்கை அரிது’ என்று
ஆளவந்தாரும் ஆண்டானளவிலே மிகவும் திருவுள்ளமுகந்தருளினார் என்று அருளிச் செய்வார்கள்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டுபோலே திருமேனி பாங்காயிற்று.
இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார், இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று
விண்ணப்பம்செய்ய, பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,

பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,
அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,
பிள்ளையும் அத்தைக்கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டு,
‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,
அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச்செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன, மீளவும் பிள்ளை அத்தைக்கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,
“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச்செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.

பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன, ‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன, பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை;
ஆனாலும் அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்.
தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித் தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி
உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.

இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும் ‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’
என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் – என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று
நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.

பெரிய நம்பியும் திருக்கோட்டியூர் நம்பியம் திருமாலையாண்டானும் கூடிச் சந்த்ர புஷ்கரிணிக் கரையிலே
திருப்புன்னைக் கீழெழுந்தருளியிருந்து தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளியிருக்கும் படியையும்,
அவர் அருளிச் செய்தருளும் நல் வார்த்தைகளையும் நினைத்து அநுபவித்துக்கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய்,
ஆனந்த மக்நராய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற அளவிலே திருவரங்கச்செல்வர் பலி ப்ரஸாதிப்பதாக எழுந்தருளிப் புறப்பட,
இவர்களுடைய ஸமாதி பங்கம் பிறந்து எழுந்துருந்து தண்டனிட வேண்டுகையாலே
‘இந்தக் கூட்டம் கலக்கியார் வந்தார்; இற்றைக்கு மேற்பட ஶ்ரீபலியெம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே
இருக்கக்கடவோம்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணிக்கொண்டார்கள் என்று வார்த்தா மாலையிலே உண்டு.

பட்டர் திருத்தின வேதாந்தியான நஞ்சீயரை அநந்தாழ்வான் மேல்நாட்டிலே சென்று கண்டு
‘ஆசார்ய கைங்கர்யத்துக்கு விரோதியான ஸந்யாஸி வேஷத்தை தரித்துத் தப்பச் செய்தீர்;
வேர்த்தபோது குளித்து, பசித்தபோது புசித்து, பட்டர் திருவடிகளே ஶரணம் என்று இருந்தால்
உம்மைப் பரமபதத்தில் நின்றும் தள்ளிவிடப் போகிறார்களோ?
இனிக் கைங்கர்யத்தையும் இழந்து, ஒரு மூலையிலே இருக்கவன்றோ உள்ளது” என்று அருளிச் செய்தார்.

முன்பு ஶைவனாயிருந்து பின்பு தொண்டனூர் நம்பி ஶ்ரீபாதத்திலே திருந்தினாரொரு ஶ்ரீவைஷ்ணவர் திருமலைக்கு எழுந்தருளி,
அநந்தாழ்வானை ஸேவித்து நின்றளவிலே அவர் திருப்பூமரங்களைப் பிடுங்குவது நடுவதாய்க் கொண்டு
திருவேங்கடமுடையானுக்குத் திருநந்தவநம் செய்கிறத்தைக் கண்டு
‘அந்ந்தாழ்வான்! வேங்கடத்தைப் பதியாக வாழ்கிற நித்யஸூரிகளை ஒருவிடத்திலே இருக்கவொட்டாமல்
கழுத்தை நெறிப்பது பிடுங்குவதாய்க்கொண்டு ஏதுக்கு நலக்குகிறீர்;
அடியேனுடைய ஆசார்யன் தொண்டனூர் நம்பி திருமாளிகையிலே நாள்தோறும் ஶ்ரீவைஷ்ணவர்கள்
அமுது செய்தருளின இலை மாற்றுகிற தொட்டிலே எப்பொழுதும் எடுத்துச் செப்பனிடுகிற கைங்கர்யம் அடியேனதாயிருக்கும்;
அதிலே நாலத்தொன்று தேவர்க்கு தருகிறேன். அந்த பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து
*பயிலுஞ்சுடரொளி, *நெடுமாற்கடிமைப் படியே வாழலாம்.
திருப்பூமரங்களை பாதியாமல் எழுந்தருளமாட்டீரோ?’ என்று அருளிச்செய்தார்.
அநந்தரம் அங்குத்தானே அந்த ஶ்ரீவைஷ்ணவர்க்கு திருமேனி பாங்கின்றியிலேயாய் மிகவும் தளர்ந்து
அநந்தாழ்வானுடைய திருமடியிலே கண்வளர, அந்ந்தாழ்வானும் ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து
‘இப்போது உம்முடைய திருவுள்ளத்தில் ஓடுகிறதேது?’ என்று கேட்க, அவரும்
‘தொண்டனூர் நம்பி அடியேனுடைய பூர்வாவஸ்தையில் பொல்லாங்கையும் பாராமல் அங்கீகரித்தருளின
அவருடைய திருமாளிகையில் பின்னாடியை நினைத்துக் கொண்டு கிடக்கிறேன்’ என்று அருளிச்செய்த உடனே
திருநாட்டுக்கு எழுந்தருளினார். இத்தால் சொல்லித்தென் என்னில், அவருக்கும் திருவேங்கடமுடையான் ஸந்நிதி ஸித்தித்திருக்க,
அதில் ஒரு தாத்பர்யமற்று ஆசார்யன் தம்மை அங்கீகரித்த ஸ்தலமே உத்தேஶ்யமானபடி சொல்லிற்று.

—————

7 – நம்பிள்ளை வைபவம் 1

நம்பிள்ளையும் ஶ்ரீபாதத்தில் முதலிகளும் திருவெள்ளறை நாய்ச்சியாரை ஸேவித்து மீண்டு கோயிலுக்கு
எழுந்தருளாநிற்க, திருக்காவேரி இருகரையும் ஒத்துப்பெருக, ஓடம் கிடையாதபடியாலே தோணியிலே எழுந்தருள,
நட்டாற்றிலே சென்றவாறே அப்போது அஸ்தமித்து மழையும் இருட்டுமாய், அக்கரை இக்கரை முன்னடி தெரியாதே
திக்ப்ரமம் பிறந்து, தோணி அமிழத்தேட, ‘இந்த அவஸ்த்தைக்கு நாலிரண்டு பேர் தோணியை விட்டால் கரையில் ஏறலாம்;
ஒருவரும் விடாதிருக்கில் நம்பிள்ளை முதலாக எல்லாரும் அமிழ்ந்து, தட்டுப்பட்டுப்போகும்’ என்று
தோணி விடுகிறவன் கூப்பிட்டவளவில் ஒருவரும் அதற்கிசைந்து நட்டாறாகையாலே பயாதிஶயத்தாலே
தோணியை விட்டார்களில்லை. அவ்வளவில் ஒரு ஸாத்த்விகை தோணி விடுகிறவனைப் பார்த்து
‘நூறு பிராயம் புகுவாய்! உலகுகளுக்கெல்லாம் ஓருயிரான நம்பிள்ளையைப் பேணிக்கரையிலே விடு’ என்று சொல்லி,
அவனை ஆஶீர்வதித்துத் தோணியை விட்டு அந்தகாரத்தையும் பாராமல் ‘நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்’ என்று ஆற்றிலே விழுந்தார்.
அவ்வளவு கொண்டு தோணி அமிழாமல் மிதந்து அக்கரையிலே சேர்ந்தேறிற்று. அவ்வளவில் பிள்ளையும்
‘ஐயோ! ஒராத்மா தட்டுப்பட்டு போய்விட்டதே!’ என்று பலகாலும் அருளிச்செய்து வ்யாகுலப்பட்டருள,
அந்த ஸாத்த்விகையம்மை தோணியைவிட்டு நாலடி எழப்போனவளவிலே அங்கே ஒரு திடர் ஸந்திக்கத் தரித்து நின்று,
இராக்குரலாகையாலே அருளிச்செய்கிறத்தைக் கேட்டு ‘பிள்ளையே! தேவர் வ்யாகுலப்பட்டருள வேண்டாம்;
அடியேனிங்கே நிற்கிறேன்’ என்று குரல்காட்ட, பிள்ளையும் ‘திடர்கள் மரங்கள் ஸந்தித்தாகவேணும்’ என்று
திருவுள்ளம் பற்றியருளித் தோணிக்காரனைவிட்டு அவளைக் கரையிலே அழைப்பித்துக்கொள்ள,
அவளும் திருவடிகளிலே வந்து ஸேவித்து ஆசார்யனையொழிந்து வேறொரு ரக்ஷகாந்தரமறியாதவளாகையாலே
‘ஆற்றிலே அடியேன் ஒழுகிப்போகிற போது தேவர் அங்கே வந்து ஒருகரைமேடாய் வந்து அடியேனை ரக்ஷித்தருளிற்றே?’
என்று கேட்க, பிள்ளையும் ‘உன்னுடைய விஶ்வாஸம் இதுவான பின்பு அதுவும் அப்படியேயாகாதோ’ என்று
அருளிச் செய்தருளினார் என்று நம்முடைய ஜீயர் பலகாலும் அருளிச்செய்தருளுவர்.

வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹா ஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒருகோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒருகோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்கவேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பலகாலும் அருளிச்செய்ய,
அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய, பிள்ளையும்
‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க வென்றொரு
கோல் துறையையும் நமக்குத் தாரும்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
அவளும் ‘அடியேன் அப்படிச் செய்கிறேன்; தேவரீர் பரமபதத்திலே ஒருகோல்துறை அடியேனுக்குத் தந்தருளவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச் செய்ய, ‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று
அருளிச்செய்த வார்த்தையால் போராது, எழுதி எழுத்திட்டுத்தரவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக்கலிக்கன்றி தாஸன்
பரமபதத்திலே ஒரு கோல்துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக் கொண்டு கொடுத்தருளவும்’
என்று ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.
பின்பு அந்த அம்மையார் திருமுகத்தையும் வாங்கிக்கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு
அன்று மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக்கொண்டு ஸுகமேயிருந்து, மூன்றாம் நாள் பரமபதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபயவிபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்குமென்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் நம்பிள்ளையுடைய
ஜ்ஞானபக்தி வைராக்யங்களையும் பாகவத ஸம்ருத்தியையும், லோக பரிக்ரஹத்தையும், ஶிஷ்ய ஸம்பத்தியையும்
கண்டு பொறுக்க மாட்டாமல் ‘கடி கடி’ என்றுகொண்டு போருவராயிருப்பர்.
அக்காலத்திலே அந்த பட்டர் ராஜஸ்தாநத்துக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே பின்பழகிய பெருமாள் ஜீயரைக் கண்டு,
‘ஜீயா! நாம் ராஜகோஷ்டிக்கு போகிறோம்; கூடவாரும்’ என்று ஜீயரைக் கூட்டிக்கொண்டு ராஜஸ்தானத்துக்கேற எழுந்தருள,
ராஜாவும் பட்டரை எதிர்க்கொண்டு பஹுமாநம் பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து ஸேவித்துக்கொண்டு
பெரிய திருவோலக்கமாயிருக்கிறவளவிலே, ராஜா, தான் பஹுஶ்ருதனாகையாலே வ்யுத்பந்நனாகையாலும்,
பட்டர் ஸர்வஜ்ஞர் என்கிறத்தை ஶோதிக்கவேணும் என்று விசாரித்து,
‘பட்டரே! “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஶரதாத்மஜம்” என்று பரத்வம் தோற்றாமல் வர்த்தக்கிற பெருமாள்,
ஜடாயு மஹாராஜருக்கு மோக்ஷம் கொடுத்தபடி எப்படி?’ என்று கேட்க,

பட்டர் அதற்கு உத்தரம் அருளிச்செய்யச் சிறிது விசாரிக்க வேண்டியிருக்க, அவ்வளவில் ராஜாவுக்கு வேறே பராக்காக,
அவ்வளவில் பட்டரும் ஜீயரைப் பார்த்து, ‘ஜீயா! திருக்கலிகன்றிதாஸர் பெரியவுடையாருக்குப் பெருமாள் மோக்ஷம்
கொடுத்தருளினத்தைப் எப்படி நிர்வஹிப்பர்?’ என்று கேட்க,
ஜீயரும் “ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந்தாநேந ராகவ:” என்று பிள்ளை நிர்வஹிப்பர் – என்ன,
பட்டரும் ‘ஆமோ’ என்று அத்தைத் திருவுள்ளத்திலே யோசித்து, ‘ஒக்கும்’ என்று எழுந்தருளியிருக்க,
ராஜாவும் அவ்வளவில் திரும்பி, ‘பட்டரே! நாம் கேட்டதற்கு உத்தரம் அருளிச்செய்தீரில்லை’ என்ன,
பட்டரும் ‘நீ பராக்கடித்திருக்க நாம் சொல்லாவதொரு அர்த்தமுண்டோ? அபிமுகனாய் புத்தி பண்ணிக்கேள்’ என்று
“ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந்தாநேந ராகவ: குரூந்ஶுஶ்ரூஷயா வீரோ தநுஷா யுதி ஶாத்ரவாந்” என்று
இந்த ஶ்லோகத்தை பட்டர் அருளிச்செய்ய, ராஜாவும் போரவித்தராய்,
‘பட்டரே நீர் ஸர்வஜ்ஞர் என்றது நான் அறிந்தேன்’ என்று ஶிர:கம்பம்பண்ணி மிகவும் ஶ்லாகித்து,
மஹாநர்க்கங்களான அநேகாபரணங்கள், உத்தமமான அநேக வஸ்த்ரங்கள், அநேக தநங்களெல்லாத்தையும்
கட்டிக் கொடுத்துத் தானும் தோற்று, பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘நீர் திருமாளிகையிலேற எழுந்தருளும்’ என்று
ஸத்கரித்து விட, பட்டரும் ராஜா கொடுத்த த்ரவ்யங்களை வாரிக் கட்டுவித்துக்கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டு
ஜீயர் திருக்கையைப் பிடித்துக்கொண்டு, ‘ஜீயரே! என்னையும் இந்த தநங்களையும் நம்பிள்ளை திருவடிகளிலே
கொண்டு போய்க் காட்டிக்கொடும்’ என்று போர ஆர்த்தியோடே அருளிச்செய்ய,
ஜீயரும் பட்டர் அருளிச் செய்தபடியே நம்பிள்ளை கோஷ்டியிலே கொண்டுபோய்க் காட்டிக்கொடுக்க,

நம்பிள்ளையும் தம்முடைய பரமாசார்ய வம்ஶ்யரான பட்டர் எழுந்தருளுகையாலே மிகவும் ஆதரித்து,
‘ஐயரே! இது ஏது?’ என்று கேட்டருள, பட்டரும் பிள்ளை திருமுகமண்டலத்தைப் பார்த்து
‘தேவரீருடைய திவ்ய ஸூக்தியில் பதினாயிரம் கோடியில் ஒன்றுக்குப் பெற்ற தநமிதுவாகையாலே
அடியேனையும் இந்த த்ரவ்யங்களையும் அங்கீகரித்தருள வேணும்’ என்ன, ‘ஆகிறதென்? கூரத்தாழ்வானுடைய
திருப்பேரனாரான நீர் இப்படிச் செய்ய ப்ராப்தமன்று காணும்’ என்ன,
பட்டரும் ‘நித்ய ஸம்ஸாரியான ராஜா தேவரீருடைய திவ்யஸூக்தியிலே சிந்தின சொல்லுக்குத் தோற்றுக் கொடுத்த தநமிது;
ஆனபின்பு கூரத்தாழ்வானுடைய குலத்தில் பிறந்த அடியேன் அந்தக் குலப்ரபாவத்துக்குத் தகுதியாகும்
தேவருக்கு ஸமர்ப்பிக்கலாவதொன்றும் இல்லையேயாகிலும், அசலகத்தேயிருந்து இத்தனை நாள் தேவரை இழந்து கிடந்த
மாத்ரமன்றிக்கே தேவருடைய வைபவத்தைக் கண்டு “அஸூயாப்ரஸவபூ:” என்கிறபடியே
அஸூயை பண்ணித்திரிந்த இவ்வாத்மாவை தேவருக்கு ஸமர்ப்பிக்கையல்லது வேறு எனக்கொரு கைம்முதலில்லை.
ஆகையாலே அடியேனை அவஶ்யம் அங்கீகரித்தருள வேணும்’ என்று கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு
பிள்ளை திருவடிகளிலே ஸேவிக்க, பிள்ளையும் பட்டரை வாரியெடுத்துக் கட்டிக் கொண்டு,
விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தம்முடைய திருவுள்ளத்திலே தேங்கிக்கிடக்கிற அர்த்த விஶேஷங்களெல்லாத்தையும்
ஒன்றும், தப்பாமல் பட்டருக்கு ப்ரஸாதித்தருள, இவரும் க்ருதார்த்தராய், ஒரு க்ஷணமும் பிரியாமல்
பிள்ளை ஸந்ததியிலே ஸதாநுபவம் பண்ணி, ஸேவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய் எழுந்தருளியிருந்தார்.

அக்காலத்திலே பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹித்தருள பட்டர் பிள்ளையருளிச் செய்ததொன்றும் தப்பாமல் கேட்டு,
தரித்து, எழுதித் தலைகட்டினவாறே, தாமெழுதின க்ரந்தங்களை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க
‘இதேது?’ என்று கேட்டருள, ‘தேவரீர் இந்த உருத் திருவாய்மொழி நிர்வஹித்தருளின கட்டளை’ என்ன,
பிள்ளையும், ‘ஆமோ’ என்றுக் க்ரந்தங்களையும் அவிழ்த்துப் பார்க்க, நூறாயிரத்து இருபத்தைந்தாயிரம் க்ரந்தமாக எழுதி
மஹாபாரத ஸங்க்யையாயிருக்க, அத்தைக் கண்டு பிள்ளை பெருக்க வ்யாகுலப்பட்டு, பட்டரைப் பார்த்து,
‘இதுவென்? நம்முடைய அநுமதியின்றிக்கே நாட்டுக்கு பாட்டுரையாம்படி நீர் நினைத்தபடியே
திருவாய்மொழியை இப்படி வெளியிடுவானென்?’ என்ன, பட்டரும் ‘தேவரீர் அருளிச் செய்த திவ்யஸூக்தியை எழுதினதொழிய,
ஒரு கொம்பு சுழி ஏற எழுதினதுண்டாகில் பார்த்தருளும்’ என்ன, பிள்ளை பட்டரைப் பார்த்து,
‘திருவாய்மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னத்தை எழுதினீராகில், நம்முடைய நெஞ்சை எழுதப் போகிறீரோ?’
என்று வெறுத்தருளிச்செய்து, ‘உடையவர் காலத்திலே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு
ஶ்ரீவிஷ்ணு புராண ப்ரக்ரியையாலே ஆறாயிர க்ரந்தமாக வ்யாக்யாநமிடுகைக்கு உடையவரை அநுமதி
பண்ணுவித்துக் கொள்ளுகைக்குட்பட்ட யத்நத்திற்கு ஒரு மட்டில்லை. ஆனபின்பு நம்முடைய காலத்திலே
நம்மையும் கேளாமல் ஸபாதலக்ஷ க்ரந்தமாக இப்படி நெடுக எழுதினால்
ஒரு ஶிஷ்யாசார்ய க்ரமமற்று அஸம்பரதாயமுமாய்ப் போங்காணும்’ என்றருளிச்செய்து,
பட்டர் திருக்கையிலும் அவர் எழுதின க்ரந்தத்தை வாங்கிக்கொண்டு நீரைச் சொரிந்து கரையானுக்குக் கொடுக்க,
அவை அன்றே ம்ருத்தாய்ப் போய்த்து.

அந்ந்தரம், பிள்ளை தமக்கு ப்ரியஶிஷ்யராய், தம்முடைய பக்கலிலே ஸகலார்த்தங்களையும் நன்றாகக்
கற்றிருக்கிற பெரியவாச்சான்பிள்ளையை நியமிக்க, அவரும் திருவாய்மொழிக்கு ஶ்ரீராமாயண ஸங்க்யையிலே
இருபத்து நாலாயிரமாக ஒரு வ்யாக்யாநம் எழுதினார்.

அதுக்கநந்தரம் பிள்ளைக்கு அந்தரங்கமான
வடக்குத் திருவீதிப் பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹிக்கிற கட்டளையை பகல்கேட்டு தரித்து,
ராத்ரியில் எழுதித் தலைக்கட்டினவாறே அத்தைப் பிள்ளை ஸந்நிதியிலே கொண்டுபோய் வைக்க,
நம்பிள்ளை ‘இதேது?’ என்று கேட்டருள, அவரும் ‘தேவரீர் இந்த உரு திருவாய்மொழி நிர்வஹித்த கட்டளை’ என்று
விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ஸ்ரீகோஶங்களை அவிழ்த்து பார்த்தருள,
அதிஸங்கோசமுமின்றிக்கே, அதிவிஸ்தரமுமின்றிக்கே ஆனைக்கோலம் செய்து புறப்பட்டாப்போலே மிகவும் அழகாய்,
ஶ்ருதப்ரகாஶிகை கட்டளையிலே முப்பத்தாறாயிர க்ரந்தமாயிருக்கையாலே நம்பிள்ளை அத்தைக் கண்டு மிகவும் உகந்தருளி,
வடக்கு திருவீதிப் பிள்ளையைப் பார்த்தருளி ‘நன்றாக எழுதினீர்;
ஆனாலும் நம்முடைய அநுமதியின்றிக்கே எழுதினீராகையாலே க்ரந்தங்களைத்தாரும்’ என்று
அவர் திருக்கையில் நின்றும் வாங்கிவைத்துக் கொண்டு பின்பு தமக்கு அபிமதஶிஷ்யரான
ஶ்ரீமாதவப்பெருமாள் என்று திருநாமத்தையுமுடையரான ஈயுண்ணிச் சிறியாழ்வார் பிள்ளைக்கு
ஈடு முப்பத்தாறாயிரமும் கொடுத்தருளினார் என்னும், இவ்வ்ருத்தாந்தம் உபதேசரத்தின மாலையிலே
“சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதேரார் தமிழ் வேதத்தீடுதனைத் தாருமெனவாங்கி
முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்தாம் கொடுத்தார் பின்னதனைத்தான்” என்று
நம்முடைய ஜீயர்தாமே அருளிச் செய்தருளினார். ஆகையாலே இன்னமும் திருவாய்மொழிக்குண்டான
வ்யாக்யாந கட்டளைகள் எல்லாம் உபதேசரத்தினமாலையிலே தெளியக் காணலாம்.

ஆக இப்படி நம்பிள்ளை அவதரித்து நெடுங்காலம் ஜகத்தை வாழ்வித்தருளின அநந்தரம்
திருநாட்டுக்குக்கெழுந்தருளினார். அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த முதலிகளெல்லாரும் திருமுடி விளக்கு வித்துக்கொள்ள,
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நேரே ப்ராதாவாய் இருப்பாரொருவர் பட்டரைப் பார்த்து
‘திருக்கலிகன்றிதாஸர் பரம்பதப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள் கூரகுலத்திலே பிறந்த நீர்
தலை ஷௌரம் பண்ணிக்கொண்டது கூரகுலத்துக்கு இழுக்கன்றோ?’ என்ன,
பட்டரும் அவரைப் பார்த்து ‘அப்படியாம்; உங்கள் கூரகுலத்துக்கு இழுக்காகப் பிறந்தேனே’ என்ன,
அவரும் பட்டரைப் பார்த்து, ‘ஏன் வ்யதிரேகம் சொல்லுகிறீர்?’ என்ன,
பட்டரும் ‘நம்பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளினால் அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த நான்
கூரகுலத்தில் பிறந்தேனாகில் ஆழ்வானுடைய ஶேஷத்வத்துக்குத் தகுதியாக தாஸக்ருத்யமான
மோவாயும் முன்கையும் வபநம் பண்ணுவித்துக்கொள்ளவேண்டியிருக்க, அத்தைச் செய்யாதே
ஶிஷ்யபுத்ரர்களுடைய க்ருத்யமான தலைமாத்ரம் ஷௌரம் செய்வித்துக் கொண்டது உங்களுடைய
கூரக்குலத்துக்கு இழுக்கன்றோ பின்னை?’ என்ன, அந்த ப்ராதாவானவர் பட்டரைப் பார்த்து
‘உம்முடைய திருக்கலிகன்றி தாஸர் போய்விட்டாரே! இனி உமக்கு அவர் பக்கல் எத்தனை நாள்
உபகார ஸ்ம்ருதி நடக்கும்?’ என்ன, பட்டரும் ‘நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு
யாவதாத்மபாவி நடக்கும்’ என்ன, அந்த ப்ராதாவானவர் பட்டர் அருளிச் செய்கிறத்தைக் கேட்டு
‘‘உபகார ஸ்ம்ருதி ஆசார்ய விஷயத்தில் யாவதாத்மபாவியோ? இதொரு அர்த்த விஶேஷமிருந்த படி என்!’ என்று,
பெரிய வித்வானாகையாலும், குலப்ரபாவத்தாலும் தெளிந்து, போரவித்தராய், பட்டர் திருவடிகளிலே திருத்தி,
தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் கேட்டுக்கொண்டு ஜ்ஞாநாதிகராய் விட்டார் என்று
நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

சிலர் ஶ்ரீபாஷ்யத்தை எப்படியிருக்குமென்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திருவீதியிலே அந்தியம் போதாக, பழுத்த வேஷ்டியும் உத்தரீயமுமாக தரித்துக்கொண்டு
கூரத்தாழ்வான் என்றொரு மூர்த்தீகரித்து ஸஞ்சரியாநிற்கும்;
அங்கே சென்றால் ஶ்ரீபாஷ்யத்தைக் கண்ணாலே காணலாம் என்றார்கள்.
சிலர் பகவத் விஷயம் எங்கே கேட்கலாம் என்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திருவீதியிலே பட்டர் என்பதொரு தேன்மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப் பார்த்து,
கல்லிட்டெறியாதே, ஏறித்துகையாதே, அடியிலே இருக்க மடியிலே விழும் என்றார்கள்.

பட்டருக்கு அதிபால்யமாயிருக்கச் செய்தே, ‘ஸர்வஜ்ஞன் வந்தான்’ என்று ஒருவன் அநேக ஸம்ப்ரமத்தோடே
விருதூதிவர, பட்டர் அவனைப் பார்த்து ‘நீ ஸர்வஜ்ஞனோ?’ என்ன, அவனும் ‘நாம் ஸர்வஜ்ஞனாம்’ என்ன,
பட்டர் இரண்டு திருக்கையாலும் கிடந்த புழுதியை அள்ளி அவனைப் பார்த்து ‘இது எத்தனை என்று சொல்’ என்ன,
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லமாட்டாமல் லஜ்ஜித்து வாயடைத்து, கவிழ்தலையிட்டு நிற்க,
பட்டர் ‘உன்னுடைய ஸர்வஜ்ஞனென்கிற விருதையும் பொகடு’ என்ன,
அவனும் அவை எல்லாத்தையும் பொகட்டு ‘உமக்கு தோற்றேன்’ என்ன,
பட்டர் அவனைப் பார்த்து ‘கெடுவாய்! இது ஒரு கைப்புழுதி என்று சொல்லி ஸர்வஜ்ஞன் என்று
விருதூதித் திரியமாட்டாதே அஜ்ஞனாய் விட்டாயே! இனிப்போ’ என்று அவனை பரிபவித்துத் தள்ளிவிட்டார்.

பாஷண்டி வித்வான்கள் அநேக பேருங்கூடி ராஜாஸ்தானத்திலே சென்று ராஜாவுடனே தப்த முத்ரா தாரணத்துக்கு
ப்ரமாணமில்லை என்று ப்ரதிஜ்ஞைபண்ண, ராஜாவும் மஹா ஸமர்த்தனாயிருக்கையாலே
இத்தை நன்றாக அறியவேணும் என்று பட்டரைப் பார்த்து ‘பட்டரே! தப்தமுத்ராதாரணத்துக்கு ப்ரமாணமுண்டோ?’ என்ன,
அவரும் ‘நன்றாக உண்டு’ என்ன, ‘உண்டாகில் காட்டிக் காணீர்’ என்ன,
பட்டர் ‘என் தோளைப்பாரீர்’ என்று திருக்தோளும் திருவிலச்சினைகளையும் ராஜாவுக்கு காட்ட,
ராஜாவும் ‘அப்படியே ஆம்; ஸர்வஜ்ஞரான பட்டர் செய்ததே ப்ரமாணம்’ என்று தானும் விஶ்வஸித்து,
ப்ரமாணமில்லை என்ற பாஷண்டிகளையும் வாயடைப்பித்துத் தள்ளி ஓட்டிவிட்டார் என்று
இவ்வ்ருத்தாந்தங்களெல்லாம் பெரியோர்கள் அருளிச்செய்வார்கள்.

ஆகையாலே
‘மட்டவிழும் பொழில் கூரத்தில் வந்துதித்திவ்வையமெல்லாம்
எட்டுமிரண்டும் அறிவித்த எம்பெருமானிலங்கு
சிட்டர்தொழும் தென்னரங்கேசர் தம்கையில் ஆழியை
நானெட்டனநின்ற மொழி ஏழுபாருமெழுதியதே” என்று இந்த திருநாமமும்,
ஶ்ருதிவாக்யமும்
“விதாநதோ ததாந: ஸ்வயமேநாமபி தப்தசக்ரமுத்ராம், புஜயேவமமைவ பூஸுராணாம்
பகவல் லாஞ்சந்தாரணே ப்ரமாணம்” என்று பட்டர் தாமருளிச் செய்த இந்த ஶ்லோகமும் லோகத்திலே ப்ரஸித்தமாய்த்து.

இவ் வ்ருத்தாந்தங்களால் சொல்லிற்று ஏதென்னில்
இவர்கள் எல்லாதனைலும் பெரியோர்களேயாகிலும் ஒருவனுடைய அபிமாநத்திலே ஒதுங்குகையாலே
ஸர்வர்க்கும் ஆசார்யாபிமாநமே உத்தாரகம் என்னும் அர்த்தம் சொல்லித்தாயிற்று.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் -முதல் ஸ்லோகார்த்தம் / ஸ்ரீ ராமாவதார -ஸ்ரீ குச லவர் திரு அவதார -ஸ்ரீ இராமாயண அவதார விசேஷ ஸ்லோகங்கள் —

January 11, 2021

ராமஸ்ய அயனம் எனப்பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து
இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து,
சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.

வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிறுதியாவார். (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும்,
நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.

————

ஸ்ம்ருதி
தர்ம சாஸ்த்ர ரதாரூடா வேதகட்கதரா த்விஜா: |
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயு: ஸதர்ம: பரமஸ்ம்ருத:|| (போதாயனாச்சார்)

வேதத்தை நன்கு அப்யசித்தவர்கள் ஸத்புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச்
சொல்லப் பட்டனவை களே ஸ்ம்ருதிகளாம்.

ஸ்ரீராமாயணம் (2வது சருக்கம்)
மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||

(இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே
இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர்.
நீர் செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம்
வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டதினால், இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

———–

மூன்றாவது :– ஸதாசாரம் = (ஸத்புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)

பாலகாண்டம் முதலாவது சருக்கத்தில் 2 முதல் 4 சுலோகங்களால் வான்மீக முனிவர் நாரத மகரிஷியை நோக்கி,
“சுவாமி! இவ்வுலகத்தில், இக்காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசீல்ய குணமும் மற்றும்
அனேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத்புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன்.
அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்யவேண்டும்” என்று வினாவினபோது நாரதமகரிஷி மிகுந்த களிப்புடன்
‘ஓய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்”

இக்ஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோநாம ஜநை:ச்ருத:|
இக்ஷ்வாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராமபிரான் என்பவர்தான் என விடையளித்திருக்கிறார்.
இதனால் ஸ்ரீராமபிரான் ஸத்புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதாசாரம் என்றும்
ஏற்படுவதால் மூன்றாவது ப்ரமாணமும் பொருத்தமாகிறது.

———-

நான்காவது:—ஆத்ம ஸந்துஷ்டி
பாட்யே கேயேச மதுரம் ஹலாதயத் ஸர்வகாத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச | (ராமாயணம்)
இந்த இராமாயணம் மனதிற்கும் இருதயத்திற்கும் மிக்க களிப்பாக இருக்கின்றது என
இராமாயணம் 4-வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தியாகின்றது.

————————-

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் -முதல் ஸ்லோகார்த்தம்

த‌ப‌:ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம் த‌ப‌ஸ்வீ வாக்விதாம் வ‌ர‌ம்|
நார‌த‌ம் ப‌ரிபப்ர‌ச்ச‌ வால்மீகி முநிபுங்க‌வ‌ம்||” (வா.ரா. பா.கா. ச‌ரு 1 சுலோ 1)

“த‌ப‌சு, வேத‌வேதாந்த‌ங்க‌ள் இவைக‌ளைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ரும், உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ரும்,
முனி ஶ்ரேஷ்ட‌ருமான‌ நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, த‌வ‌த்தோடுகூடிய‌ வான்மீகி முனிவ‌ர் தெண்ட‌ம் ச‌ம‌ர்ப்பித்து வினாவினார்.”

இது இராமாய‌ண‌த்தின் முத‌ல் சுலோக‌ம். இத‌னால் குரு சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

1) த‌போநிர‌த‌ம் :– த‌வ‌த்தைப் பூர‌ண‌மாக‌ அடைந்த‌வ‌ர் என்ற‌தினால் அவ‌ர் ச‌ர்வ‌ச‌க்தி வாய்ந்த‌வ‌ர் என்ப‌து ஸூச‌க‌ம்.
“ய‌த்துஸ்த‌ர‌ம் ய‌த்துராப‌ம் ய‌த்துர்க‌ம் ய‌ச்ச‌துஷ்க‌ர‌ம்|
தத் ஸ‌ர்வ‌ம் த‌ப‌ஸாஸாத்ய‌ம் த‌போஹி துர‌திக்ர‌மம் ||”
“எது க‌ட‌க்க‌முடியாததோ, எது பெற‌ முடியாததோ, எது செய்ய‌முடியாததோ அதெல்லாம் த‌வ‌த்தால் சாதிக்க‌முடியும்.
ஆகையால் த‌வ‌த்தை வெல்வ‌த‌ரிது.”
“வேண்டிய‌ வேண்டியாங் கெய்த‌லாற்செய்த‌வ‌ மீண்டு முய‌ல‌ப் ப‌டும்.
கூற்ற‌ங் குதித்த‌லும் கைகூடு நோற்ற‌லி னாற்ற‌ ற‌லைப்ப‌ட் ட‌வ‌ர்க்கு” (திருக்குற‌ள்) என்ற‌ ஆதார‌ங்க‌ள் நோக்க‌த்த‌க்க‌ன‌.

2) ஸ்வாத்யாய‌ நிர‌த‌ம்:– வேத‌வேதாந்த‌ங்க‌ளைப் பூர்ண‌மாக‌ அடைந்த‌வ‌ர், என்ற‌தினால்
நார‌த‌ர் சொல்வ‌தெல்லாம் த‌ரும‌த்தோடு பொருந்திய‌ வ‌ச‌ன‌ம் என்ப‌து ஸூச‌க‌ம்.

3) வாக்விதாம்வ‌ர‌ம் :– உப‌தேசிப்ப‌வ‌ர்க‌ளுக்குள் மேலான‌வ‌ர், என்ற‌தினால் சிற‌ந்த‌ போத‌னாச‌க்தி வாய்ந்த‌வ‌ரெனவும்,
வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ச‌க‌ல‌சாஸ்திர‌ங்க‌ளையும் ந‌ன்றாக‌ அறிந்த‌வ‌ரென‌வும் பொருள்ப‌டும்.

4) முனிபுங்க‌வ‌ம்:– முனிஶ்ரேஷ்ட‌ர் என்ற‌தினால் இந்திரிய‌ நிக்கிர‌க‌முள்ள‌வ‌ர் என்ப‌தும்,
ப‌க‌வ‌த்யான‌த்தோடு கூடிய‌வ‌ரென்ப‌தும், திரிகால‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிய‌க்கூடிய‌வ‌ரென்ப‌தும் , ஸ‌தா ஜ‌பப‌ரரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

5)நார‌த‌ம்:– நார‌த‌ ம‌ஹ‌ரிஷியை, என்ற‌தினால், நார‌ம் – ஜ்ஞான‌ம், அதைக் கொடுக்கக் கூடிய‌வ‌ர் என்ப‌தும்,
நார‌ம் – அஜ்ஞான‌ம், அதை நிவ‌ர்த்தி செய்ய‌க்கூடிய‌வ‌ ரென்ப‌தும், த்ரிலோக‌ ஸ‌ஞ்சாரியான‌ப‌டியால்,
மூன்று லோக‌த்திலுள்ள‌ வ‌ர்த்த‌மான‌ங்க‌ளை அறிப‌வ‌ரென்ப‌தும், பிர‌ம்ம‌ புத்திரரான‌ப‌டியால் உத்த‌ம‌ குல‌த்தைச் சேர்ந்த‌வ‌ரென்ப‌தும் ஸூசக‌ம்.

ஆக‌வே, இந்த‌ ஐந்து ப‌த‌ங்க‌ளினால், ஆசார்ய‌ன் பூர்ண‌மான‌ த‌ப‌ஸை யுடைய‌வ‌ராக‌வும்,
வேத‌வேதாந்த‌ங்க‌ளையும் வ்யாக‌ர‌ண‌ம் முத‌லான‌ ஸ‌க‌ல‌ ஶாஸ்திர‌ங்க‌ளையும் உண‌ர்ந்த‌வ‌ராக‌வும்,
ப‌க‌வ‌த் ப‌க்தியுட‌ன் அந‌வ‌ர‌த‌ ஜ‌பப‌ரராக‌வும் சிஷ்ய‌னுடைய‌ அஜ்ஞான‌த்தைப் போக்கி, ஜ்ஞான‌த்தைக் கொடுத்துப்
ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்தை உப‌தேசிக்க‌வ‌ல்ல‌வ‌ராக‌வும், ஜிதேந்திரிய‌ராக‌வும், உத்த‌ம‌ குல‌த்த‌வ‌ராக‌வுமிருக்க‌வேணும்
எனறு ஆசார்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

“குஶ‌ப்த‌ஸ் த்வ‌ந்த‌கார‌ஸ்யாத் ருகார‌ஸ்த‌ந் நிவ‌ர்த‌க‌:|
அந்த‌கார‌ நிரோதித்வாத் குருரித்ய‌பி தீய‌தே||”

“கு என்ப‌து அஜ்ஞான‌த்தையும், ரு என்ப‌து அத‌ன் நிவ‌ர்த்தியையும் சொல்லுகிற‌ ப‌டியால்
ம‌ன‌தின் க‌ண்ணுள்ள‌ அஜ்ஞான‌மாகிற‌ இருளை நீக்கி மெய்ஞ்ஞான‌மாகிற‌ பிர‌காச‌த்தைத் த‌ருவ‌தால் குரு வென‌ச் சாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

குல‌ன‌ருள் தெய்வ‌ங்கொள்கை மேன்மை
க‌லைப‌யில் தெளிவு க‌ட்டுரை வ‌ண்மை
நில‌ம‌லை நிறைகோல் ம‌ல‌ர் நிக‌ர் மாட்சியும்
உல‌கிய‌ல‌றிவோ டுய‌ர்குண‌ மினைய‌வும்
அமைப‌வ‌ன் நூலுரையாசிரிய‌ன்னே.” என்ற‌ ந‌ன்னூல் இங்கு நோக்க‌த் த‌க்க‌து.

சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம்

1) த‌ப‌ஸ்வீ: – என்ற‌தினால் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌த்தை அறிய‌ ஆவ‌ல்கொண்டவ‌ரென்ப‌தும்,
ப‌ல‌ விர‌த‌ங்க‌ளை அனுஷ்டித்த‌வ‌ரென்ப‌தும், ஶ‌ம‌த‌மாதி ஸ‌ம்ப‌ந்த‌ங்க‌ளை அடைந்த‌வ‌ரென்ப‌தும்,
ஜீவ‌காருண்ய‌முடைய‌வ‌ரென்ப‌தும், க‌ள‌ங்க‌ம‌ற்ற‌ இருத‌ய‌முடைய‌வ‌ரென்ப‌தும் ஸூச‌க‌ம்.

“உற்ற‌நோய் நோன்ற‌லுயிர்க்குறுக‌ண் செய்யாமை
ய‌ற்றே த‌வ‌த்திற்குரு” (திருக்குற‌ள்)

2) ப‌ரிபப்ர‌ச்ச‌ – என்ற‌தினால் விதிவ‌துப‌ஸ‌ந்ந‌: என்ப‌து பொருள். அதாவ‌து,
உப‌தேச‌ம் பெற்றுக் கொள்ள‌, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதி ப்ர‌கார‌ம் கேட்க‌வேண்டுமென்ப‌து

தத்வித்தி ப்ர‌ணிபாதேந‌ ப‌ரிப்ர‌ஶ்நேந‌ ஸேவ‌யா|
உப‌தேக்ஷ்ய‌ந்தி தே ஜ்ஞான‌ம் ஜ்ஞாநிந‌ஸ் தத்வ‌த‌ர்ஶிந‌: ||

“அந்த‌ ஆத்ம‌ ஜ்ஞான‌த்தை, குருவைத் தேடிப்போய், த‌ண்ட‌ம் ஸ‌ம‌ர்ப்பித்து, விதிப்ர‌கார‌மான‌ கேள்வியினாலும்,
ஶுஶ்ருக்ஷையினாலும் அறிந்துகொள்ள‌க் க‌ட‌வாய். தத்வ‌ம‌றிந்த‌ ப‌ண்டித‌ர்க‌ள் உன‌க்கு ஜ்ஞான‌த்தை போதிப்பார்க‌ள்.”
என்று அர்ஜுனனை நோக்கி அருளிச் செய்த‌ ஸ்ரீகிருஷ்ண‌ ப‌க‌வானுடைய‌ வ‌ச‌ன‌ம் இங்கு க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

ஆக‌வே, த‌ப‌ஸ்வீ, ப‌ரிப்ர‌ச்ச‌ என்ற‌ ப‌த‌ங்க‌ளினால் சிஷ்ய‌ ல‌க்ஷ‌ண‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஸ‌த்புத்திஸ் ஸாதுஸேவீ ஸ‌முசித‌ச‌ரித‌ஸ் தத்வ‌போதாபிலாஷீ|
ஶுஶ்ருஷுஸ்த்ய‌க்த‌மாந‌: ப்ர‌ணிப‌த‌ந‌ப‌ர‌: ப்ர‌ஶ்ந‌கால‌ப்ர‌தீக்ஷ‌:||
ஶாந்தோதாந்தோ ந‌ஸூயுஸ்ஸ‌ர‌ண‌முப‌க‌த‌ஸ் ஶாஸ்த்ர‌ விஶ்வாஸ‌ஶாலி|
ஶிஷ்ய‌:ப்ராப்த‌: ப‌ரீக்ஷாங் க்ருத‌வித‌பிம‌த‌ம் தத்வ‌த‌ஸ் ஸிக்ஷ‌ணீய‌:

“ந‌ற்புத்தியுட‌ன் ஸாதுஸேவை உடைய‌வ‌னாகி, ந‌ன்ன‌ட‌த்தை உடைய‌வ‌னும், உண்மை ஞான‌த்தை அறிவ‌தில்
அபிலாஷை உடைய‌வ‌னும், ப‌ணிவிடைக்கார‌னும், மானாவ‌மான‌ மென்ப‌த‌ற்ற‌வ‌னும், ப்ர‌ஶ்ந‌ கால‌த்தை எதிர்பார்ப்ப‌வ‌னும்,
சாந்த‌னும், அஸூயை இல்லாத‌வ‌னும், ச‌ர‌ணாக‌திய‌டைந்த‌வ‌னும், சாஸ்திர‌ விஶ்வாச‌முடைய‌வ‌னுமே
சிஷ்ய‌னாக‌ அங்கீக‌ரிக்க‌த் த‌குந்த‌வ‌ன்” என்ப‌து நோக்க‌த்த‌க்க‌து.

வால்மீகி ப‌க‌வான் ப்ருகு வ‌ம்ச‌த்தில் அவ‌த‌ரித்த‌வ‌ர். இவ‌ர் (வ‌ல்மீக‌ம் = புற்று) புற்றிலிருந்து வெளிவ‌ந்ததினால்
வால்மீகி என்று பெய‌ர். இவ‌ர்க்கு “ப்ராசேத‌ஸ‌ர்” (அதாவ‌து வ‌ருண‌னுடைய‌ புத்திரர்) என்னும் பெய‌ருண்டு.

———

இராமாவதார காலம்.
(1) வால்மீகி இராமாயணம்-பாலகாண்டம் சரு. 15. சுலோ. 28, 29.
“பயம் த்யஜ் த பத்ர‌ம் வோ ஹிதார்த்தம் யுதிராவணம் |
ஸுபுத்ர பௌத்ரம் ஸாமாத்யம் ஸமித்ரஜ்ஞாதிபாந்தவம் ||
” ஹத்வா க்ரூர‌ம் துராத்மானம் தேவரிஷீணாம் பயாவஹம் |
தச வருஷ ஸஹஸ்ராணி தசவருஷ சதா நிச |
வத்ஸயாமி மா நுஷே லோகே பாலயன் ப்ருத்வீமிமாம் |.”

(இத‌ன் பொருள்)(இனி இ-ள்) ”ஓ தேவர்களே! இனி அச்சம் என்பதை விட்டு விடுங்கள்;
உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாகும். அந்தத் துராத்மாவான இராவணனை அவனுடைய
பரிவாரங்களோடு சங்கரித்துப் பூலோக பரிபாலனஞ் செய்துகொண்டு பதினோராயிரம் வருடமிருப்பேன் ” என்று
தன்னைச் சரணமடைந்த தேவர்களை நோக்கி ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் அருளிச்செய்தனர்.”

2. வால்மீ- இரா. உத்-கா. சரு. 37-க்குப்பின் ப்ரக்ஷிப்தசரு. சுலோ. 18,19.
ஸனத்குமார முனிவர் இராவணனை நோக்கி:’
‘க்ருதே யுகே வ்யதீதேவை முகே த்ரேதாயுகஸ்யது |
ஹிதார்த்தம் தேவமர்த்யானாம் பவிதாந்ருபவிக்ரஹ: ||
இக்ஷுவாகூணாம் ச யோராஜாபாவ்யோ தசர‌தோபுவி !
தஸ்ய ஸூநுர்மஹாதேஜா ராமோநாமபவிஷ்யதி. || ”

(இ-ள்) “க்ருதயுகம் கழிந்தபின்னர் த்ரேதாயுகத்தின் துவக்கத்தில் தேவர்களுக்கும் மனுஷியர்களுக்கு
மிதமியற்றுமாறு இஷ்வாகு குலத்திலே தசர‌தனென ஒரு ராஜன் ஜனிப்பான்;
அந்தத் தசரத மஹாராஜனுக்குப் புதல்வனாய் ஸ்ரீராமனென்னும் ஒரு மஹாநுபாவன் அவதரிக்கப் போகின்றனன் ” என உரைத்தனர்.

3. அத்யாத்ம ரா. பாலகாண்டம் சரு. 7. சுலோ. 25, 26.
” த்ரேதாமுகே தாசரதிர் பூத்வா ராமோஹம் அவ்யய: |
உத்பத்ஸ்யே பரயா சக்த்யா ததாத்ரஷ்யஸிமாம் தத: | ”

(இ-ள்) “‘ அழிவற்ற நான் த்ரேதாயுகத்தில் தசரத சக்ரவர்த்திக்குக் குமாரனாக அவதாரஞ் செய்யப்போகிறேன்.
அப்போது மறுபடியும் நீ என்னைப் பார்க்கப் போகிறாய்” என்பதாக ஸ்ரீமஹாவிஷ்ணு தனக்கு வரமருளியிருப்பதாக
பரசுராமர் ஸ்ரீ ராமபிரானிடம் விண்ணப்பஞ் செய்தனர்.

4. அத்யாத்ம ரா. ஆரண்யகாண்டம் சரு. 9. சுலோ. 19. :
த்ரேதாயுகே தாசர‌திர்பூத்வா நாராயண: ஸ்வயம் |
ஆகமிஷ்யதி தேபாஹுச் சித்யேதே யோஜனாய தெளதேனசாபாத் வினிர்முக்தோ பவிஷ்யஸி யதாபுரா! ‘

(இ -ள்) ” ஸ்ரீமந் நாராயணமூர்த்தி த்ரேதாயுகத்தில் தசரத குமாரனாக பூமியில் அவதாரமெடுத்து,
ஸ்ரீ ராமனென்னும் திருநாமத்துடன் வரப்போகிறார். அவர் திருக்கரத்தால் உன் கரங்கள் சோதிக்கப்படுங்காலம்,
உன் சாபவிமோசன காலமாகும்.” என்பதாக அஷ்டவக்ரமுனிவர் தனக்கு உரைத்திருப்பதாய்
கபந்தாசுரன் ஸ்ரீ ராமபிரானை நோக்கிக் கூறினன்.

5. அத்யாத்ம ரா. சுந்தரகாண்டம் சரு. 1. சுலோ. 48.
‘புராஹம் ப்ரஹ்மணா ப்ரோக்தா ஹ்யஷ்டாவிம்சதிபர்யயே|
த்ரேதாயுகே தாசரதீராமோ நாராயணோ அவ்ய‌ய: || ”

(இ-ள்) “இருபத்தெட்டாவது பரிவிருத்தியில் த்ரேதாயுகத்தில் சாக்ஷாத் நாராயணன்
தசரத குமாரனாகிய ஸ்ரீராமனாக அவ‌தரிக்கப்போவதாய் ப்ரஹ்மதேவர் என்னிடம் அருளிச் செய்திருக்கிறார்”
என்பதாக இலங்கணி என்பவள் திருவடி (ஆஞ்சநேயர் ) உரைத்தனள்.

6. விவஸ்வான் = சூரியன்
அவருடைய புத்ரர் = மனு (வைவஸ்வத மனு) அவருடைய புத்ரர் = இஷ்வாகு .
இஷ்வாகு பரம்பரையில் தசரத சக்ரவர்த்திக்கு ஸ்ரீராமபிரான் அவதாரம்.

7. வால்மீ – ரா. பால கா. சரு. 18 சுலோகம் 9, 10, 11.
”ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமி கெதிதெள !
நக்ஷத்ரெ அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ் தேஷு பஞ்சஸு|
க்ரஹேஷ- கர்க்கடெலக்நே வாக்பதாவிந்து நாஸஹ
ப்ரோத்யமாநெ ஜகன்னாதம் ஸர்வலோக நமஸ்கிருதம்|
கௌஸல்யாஜநயத்ராமம் ஸர்வலக்ஷண ஸம்யுதம்
விஷ்ணொரர்த்தம் மஹாபாகம் புத்ரமைக்ஷவாக வர்த்தந‌ம்|| ”

(இ-ள்) ” பின்பு பன்னிரண்டாவது மாஸமான சித்திரை மாஸத்தில் நவமி திதி புநர்வஸு நக்ஷத்திரம்
கூடின தினத்தில் ஐந்து க்ரஹங்கள் உச்சமாயிருந்தவளவில், கர்கட‌ லக்ந‌த்தில், குரு சந்திரனோடு கூடியிருந்தவளவில்,
கௌஸ‌ல்யாதேவி, ஸகல ஜகத்துக்கும் நாயகராய், ஸமஸ்த பிராணிகளுக்கும் வந்தநீயராய்,
ஸாமுத்ரிக சாஸ்திரத்திற் சொல்லிய ஸமஸ்தமான உத்தம புருஷலக்ஷணங்களோடு கூடினவராய்,
விஷ்ணுவினுடைய பேர்பாதி பாகத்தினா லுண்டான வராய், மஹாபாக்யவானாய்,
பித்ருக்களை நர‌கத்தில்நின்று முத்தரிப்பிக்குமவராய், தசரத மஹாராஜனுடைய மனோல்லாசத்தை
வ்ருத்தி பண்ணுபவரான ஸ்ரீ ராமபிரானைப் பெற்றனள்,

8. கம்ப-ரா. பால-கா. திரு அவதாரப்படலம் 104, 110.”
“ஒரு பகலுலகெலா முதர‌த்துட் பொதிந்
த‌ரு மறைக் குணர்வரு மவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை.”

” மேடமாமதி திதி நவமி மீன் கழை
நீடுறு மாலை கற்கடக நீதிசேர்
ஓடைமா களிறனானுதயராசி கோள்
நாடினேகாதசர் நால் வருச்சரே.” –

இந்த ஆதாரங்களினால், வைவஸ்வத மன்வந்தரத்தில் 28-வது சதுர்யுகமான த்ரேதாயுகத்தில்
சித்திரைமாஸத்தில் சுக்லபக்ஷ நவமி. திதி, புனர்வசு நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில்
ஸ்ரீமந்நாராயணனே தசரத சக்கரவர்த்திக்குத் திருக்குமாரராக ஸ்ரீராமனென்னும்
திரு நாமத்துடன் அவதாரம் செய்ததாக ஏற்படுகிறது.

————————

சர்வஜ்ஞரான ஸ்ரீராமபிரான் மகுடாபிஷேக மஹோத்ஸவம் கண்டருளிய பின்னர், கருமநெறி தவறாது
இராஜ்ய பரிபாலனம் செய்தும் ஒழிந்த வேளைகளில் வைதேஹியுடன் கூடி உத்தியான வனத்திற்குச்சென்று
நாடோறும் விநோதமாக பொழுதுபோக்கியும் வந்தனர். ஸ்ரீராமபிரான் பிரதிதினம் முற்பகலில்
ராஜாங்க சம்மந்தமான சகல காரியங்களையும் நீதிமுறை தவறாது நிறைவேற்றி
அதன் பின்னர் அந்தப்புரஞ் சென்று பிராட்டியுடன் அகமகிழ்ந்திருப்பார். ஜானகி ரகுநாயகர்களுக்கு, இவ்விதமாகவே

– ‘ தசவர்ஷஸஹஸ்ராணி கதாநி ஸுமஹாத்மனோ: |
(வா-ரா. உத்-கா, சரு. 42. சுலோ . 26.)
பதினாயிரமாண்டுகள் பெருமையாகச் சென் றன.
வா -ரா, உத்-கா. சரு. 42. சுலோ . 31, 32.
‘ அப்ரவீச்ச வராரோஹாம் ஸீதாம் ஸுரஸுதோபமாம் !
அபத்ய லாபோ வைதேஹி த்வய்யயம்.ஸமுபஸ்தித:
கிமிச்சஸி வராரோஹேகாம: கிம் க்ரியதாம் தவ /”

(இ-ள்) ஒருநாள் ஸ்ரீராமபிரான் ஜானகியை நோக்கி “ஹே! வைதேஹி! நீ கர்ப்பந்தரித்திருப்பது எனக்கு
மிகவும் களிப்பைத் கருகின்றது. இப்பொழுது நீ யாது விரும்புகின்றனை?
நீ யாது வேண்டினும் அதனை யான் நிறைவேற்றுவேன்” எனக் கூறினார்.
அதற்குப் பிராட்டி , கங்கைக்கரையிலுள்ள மிகப்பரிசுத்தமான தபோவனங்களுக்குச் சென்று, அங்கு,
மகரிஷிகளுடைய பாத மூலத்திற் சில நாள் பணிவிடை செய்து ஆனந்தமனுபவிக்க வேணுமென்ற
ஆசையிருப்பதாகத் தெரிவித்தாள்.

அந்த சமயம் ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியை இராவண கிரஹத்திலிருந்து அழைத்து வந்ததைப்பற்றி
சிலர் அபவாதம் சொல்வதாகக் கேட்டு, பிராட்டி கருதியிருந்த காரணத்தையே வியாஜமாகக் கொண்டு,
அவளையழைத்துக் கொண்டு போய் கங்கா நதி தீரத்தில் வான்மீக முனிவராச்சிரமத்தருகே விட்டுவிடுமாறு ,
இளைய பெருமாளுக்கு நியமித்தருளினர்.

சீதாப்பிராட்டி தனியே புலம்பித் தவிப்பதை ரிஷிகுமாரர்களால் கேள்வியுற்ற வான்மீக முனிவர்
உடனே அவ்விடம் சென்று, பிராட்டியைச் சமாதானப்படுத்தி தமது ஆச்சிரமத்திற்கு அழைத்துவந்து
அங்குள்ள ரிஷிபத்னிகளிடம் ஒப்புவித்து அவளைக் கருத்துடனே காத்து வருமாறு கட்டளையிட்டனர்.

யமுனாதீரவாஸிகளான முனிவர்கள் முலமாக மதுவின் மகிமையையும், அவனது மகன் லவணாசுரனது
வரலாற்றையும் கேட்டு ஸ்ரீராமபிரான், லவணாசுரனை வதைக்குமாறும் அவனது நகரத்திலேயேயிருந்து
ராஜ்ய பரிபாலனஞ் செய்துவருமாறும் சத்ருக்கனருக்கு நியமித்தருளினர்.
லவணாசுரனுடன் போர்புரிவதற்காக அயோத்தியிலிருந்து புறப்பட்டு மூன்றாம் நாள்,
சத்ருக்னர், வான்மீகி ஆச்சிரமத்தில் தங்கினர்.

வா – ரா. உத் – கா. சரு. 66. சுலோ . 1.
”யாமேவ ராத்ரிம் சத்ருக்ன: பர்ணசாலாம் ஸமாவிசத்|
தாமேவ ராத்ரிம் ஸீதாபி ப்ரஸூதா தாரகத்வயம் ” :

(இ-ள்) சத்ருக்ன ஆழ்வார், என்றையத்தினம் இராத்திரி வான்மீக முனிவரது ஆச்சிரமத்திலே பர்ணசாலையில்
படுத்திருந்தனரோ, அன்றைய தினம் இராத்திரி ஸீதாபிராட்டியார் இரண்டு குமாரர்களைப் பெற்றனர்.

இந்த ஆதாரங்களினால் ஸ்ரீ இராமபிரானுடைய பட்டாபிஷேகானந்தரம்,
பதினாயிரம் வர்ஷங்கள் கழிந்த பின்னரே, குசலவர் ஜநநம் என ஏற்படுகிறது.

வா – ரா. பால- கா. சரு. 4. சுலோ . 1, 2. .
”பராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி: |
சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ர பதமாத்மவான் |
சதுர்விம்சத்ஸஹஸ்ராணி ச்லோகாநாமுக்தவான்ரிஷி: |
ததாஸர்க்கசதான் பஞ்ச ஷட்காண்டானி ததோத்தரம் || ”

(இ-ள்) ஸ்ரீராமபிரான் இராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருக்கும் காலத்தில், வான்மீக முனிவர்
இருபத்திநாலாயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சருக்கங்களும், ஆறு காண்டங்களும், உத்ர காண்டமும் செய்தருளினார்.

‘மானிஷாத” என்று ஆரம்பிக்கும் சுலோகத்தினிடமாக வான்மீக முனிவர்க்குற்ற சந்தேகத்தை,
(தமஸா நதிக்கரையில்) ப்ரஹ்மதேவர் வந்து நிவர்த்தி செய்து வரங்கள் அளித்து அந்தர்த் தானமான பின்பு.

வா – ரா. பால-கா. சரு. 2. சுலோ . 39.
“ தத: ஸசிஷ்யோ வால்மீகிர்முநிர் விஸ்மய மாயயௌ
தஸ்ய சிஷ்யாஸ்தத: ஸர்வே ஜகு: ஸ்லோகமிம்ம்புன 😐
முஹர் முஹு: ப்ரீயமாணா: ப்ராஹூஸ்ச ப்ருசவிஸ்மிதா:

(இ-ள்) வான்மீக முனிவர், தம்முடைய சிஷ்யர்களுடனே கூட அதிக ஆச்சரியத்தையடைந்தார்.
அந்த சுலோகத்தை அவருடைய சிஷ்யர்களெல்லோரும் மிகுந்த பிரியத்துடனும், ஆச்சரியத்துட னும்,
அடிக்கடி ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு பாடிக்கழித்தனர்.

மேலேகண்ட சுலோகத்தில் – சிஷ்யா:- என்று பகுவசனமாகக் கண்டிருப்பதற்கு,
கோவிந்த ராஜீய வ்யாக்யானத்தில் தனது ஆச்சிரமத்திலுள்ள, குசலவர், பரத்துவாஜர் என்று
வ்யாக்யானம் செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் குசலவர்கள், ஜனித்து தக்க வயது அடைந்த பின்னரே, இராமாயண கிரந்தம் செய்யப்பட்டதாக ஏற்படுகின்றது.

சத்ருக்ன ஆழ்வான், லவணாஸுரனை சம்ஹரித்து மதுராபுரியை ஸ்தாபித்தபின்
”ததோ த்வாதசமே வர்ஷே சத்ருக்னோ ராமபாலிதாம் |
அயோத்யாம் சக்ரமே கந்துமல்ப ப்ருத்ய பலாநுக: ”
(வா – ரா. உத் – கா. சரு. 7. சுலோ . 1)

(இ-ள்) பன்னிரண்டாவது வருஷத்தில் சத்ருக்னாழ்வான் ஸ்ரீராகவனைச் சேவிக்கக் காதல் கொண்டு
சொற்ப பரிவாரங்களுடன் அயோத்தியைக் குறித்துப்புறப்பட்டனர்.
வழியில் 7, 8 நாள் தங்கி வான்மீகாச்சிரமமடைந்து, அம் முனிவர் அளித்த அர்க்கிய பாத்தியாதி அதிதி
பூஜைகளைப் பெற்று, அன்றிராத்திரி அவ்வாச்சிரமத்திலேயே சயனித்திருந்தனர்.

வா-ரா. உத்- கா. சரு. 71. சுலோ . 14, 15, 16.
”ஸபுக்தவாந் நாஸ்ரேஷ்டோ கீதமாதுர்ய முத்தமம் |
சுச்ராவ ராமசரிதம் தஸ்மின்காலே யதாக்ருதம்
தம்த்ரீலய ஸமாயுக்தம் த்ரிஸ்தான கரணாந்விதம் |
ஸமஸ்க்ருதம் லக்ஷணோபேதம் ஸமதால ஸமந்விதம் |
சுச்ராவ ராமசரிதம் தஸ்மின்காலே புராக்ருதம் |”

(இ-ள்) சத்ருக்னாழ்வான் வான்மீகாச்சிரமத்தில் விருந்தமுது செய்தவளவில்,
ஸமீபத்தில் அதிமதுரமான ஸங்கீதமொன்று கேட்டது. ஸ்ரீராம சரிதமானது ஸம்ஸ்க்ருத பாஷையில்
இசையொத்த தாள லயங்களுடனே, யாழிலிட்டு, சுலக்ஷணமாக மறைவிலே பாடப்பட்டது.
அதனைச் செவியுற்றவளவில், சத்ருக்னாழ்வானுக்கு முன் நடந்த ஸ்ரீராம சரித்திரம் மறுபடி
தமது கண்ணெதிரில் நடப்பதுபோலத் தோன்றியது.
வான்மீக முளிவர் தாமுண்டுபண்ணிய இராமாயண மஹா காவியத்தைக் குசலவருக்கு உபதேசித்தருளினபோது,
அவர்களுக்கு வயது பன்னிரண்டு என ஏற்படுகின்றது.

ஸ்ரீராமபிரான் அச்வமேத யாகஞ்செய்யத் தீர்மானித்து கோமதி நதி தீரத்தில் யாகசாலை நிருமித்து
வருகிறவர்களுக்கு விடுதிகள் அமைத்து, ஸகல பதார்த்தங்களும் அங்கே சித்தப்படுத்தவும்,
வானரர், ராக்ஷஸர் முதலான யாவரையும் அவ்வேள்விக்கு வரவழைக்கும் படிக்கும் தம்பிமார்களுக்கு நியமித்தருளியும்,

வா-ரா. உத் – கா. சரு. 91. சுலோ . 24, 25.
”மம மாத்ருஸ்ததாஸர்வா : குமாராம்த: புராணிச |
காம்சநீம் மம பத்நீம்ச தீக்ஷாயாம்ஜ்ஞாம்ஸ்ச கர்மணி ||
அக்ரதோ பரத: க்ருத்வாகச்சாத்வக்ரே மஹாயசா: ”

(இ-ள்) ‘நமது மாதாக்களையும், பரதன் முதலியோர்களுடைய அந்தப்புர ஸ்திரீகளையும்,
ஸீதைக்குப் பிரதியாக நிருமித்துவைத்திருக்கின்ற சுவர்ண ஸீதையையும் யாகஞ்செய்யும் முறைகளை
நன்குணர்ந்த பிராம்மணர்களையும், முன்னிட்டுக்கொண்டு, பாதன் முன்னாலே செல்லக்கடவன் ” எனவும் நியமித்தருளினர்.
இதனால் ஸீதாப்பிராட்டி வான்மீகாச்சிரமத்திலிருக்கும் பொழுது யாகம் ஆரம்பிக்கப்பட்டதாக வாகின்றது.

வா – ரா. உத் – கா. சரு. 93. சுலோ . 1.
” வர்தமானே ததா பூதேயஜ்ஞேச பரமாத்புதே |
ஸசிஷ்ய ஆஜகாமாசு வால்மீகிர் பகவான் ரிஷி: || ”

(இ-ள்)* இவ்வாறு மகாவைபவத்துடனே நடக்கும் அற்புதமான அச்வமேத யாகத்துக்கு
வான்மீக முனிவரும் தமது சீஷர்களுடனே எழுந்தருளினர்.”
வான்மீகமுனிவர் தாம் கற்பித்த இராமாயணத்தை, முனிவர்கள் வாஸஸ்தானங்களிலும்,
பிராம்மணர்கள் இறங்கியிருக்குமிடங்களிலும், ராஜமார்க்கங்களிலும், அச்வமேதயாகம் நடக்குமிடத்தில்
ஸ்ரீராமபிரான் சன்னதியிலும், பாடிக்கொண்டு போகும்படி தமது சிஷ்யர்களான குசலவர்களுக்குக் கட்டளையிட்டனர்.
அவ்விருவரும் முனிவர் மொழிந்த வண்ணம், இராமாயணத்தை கானம் செய்து கொண்டு சென்றனர்கள்.

வா-ரா. உத்-கா. சரு. 94. சுலோ . 2. –
“தாம் ஸசுச்ராவகாகுத்ஸ்த: பூர்வாசார்ய விநிர்மிதாம் |
அபூர்வாம் பாட்யஜாதிம்ச கேயேன ஸமலம்க்ருதாம் |
ப்ரமாணைர் பகுபிர்பத்தாம் தந்த்ரீலய ஸமந்விதாம்|
பாலாப்யாம் ராகவ: ஸ்ருத்வா கௌதூஹலபரோபவத்.”

(இ-ள்) ” இரண்டு பாலகர்கள் வீணை மீட்டிக்கொண்டு ஒத்த குரலினராய் சுலக்ஷணமாக தம்மாசிரியர் கற்பித்த
இராமாயணத்தை இன்பமாய்ப் பாடிக் கொண்டு வருவதை ஸ்ரீராகவன் திருச்செவி சார்த்தி இஃது
அபூர்வமாயும், அற்புதமாயுமிருக்கின்றதே யென வியந்து களிப்படைந்தனர்.”
அனந்தர‌ம் அந்தக் காவியத்தின் வரலாற்றையும், அதை இயற்றியவர் வான்மீக முனிவரென்பதையும்
அச்சிறுவர்கள் மூலமாக ஸ்ரீராகவன் தெரிந்து கொண்டனர்.

வா -ரா. உத்- கா. சரு. 95. சுலோ . 1.
“ராமோ பஹூன்யஹான்யேவ தத்கீதம் பர‌மம் சுபம் |
சுச்ராவமுனிபி: ஸார்த்தம் பார்த்திவை: ஸஹவானரை|”

(இ-ள்) ஸ்ரீராகவன் நாள்தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடைசூழச் சபையினடுவே
முனிகுமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவிசார்த்திக் களி கூர்ந்தனர்.

இந்த ஆதாரங்களினால் ஸ்ரீராமபிரான் அயோத்யாபுரிக்கு ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,
பதினாயிரம் வருஷங்கள் தருமநெறி தவறாது அரசாட்சி செய்துவந்தபின் சீதாப்பிராட்டி கர்ப்பமடைந்து
வான்மீக முனிவராச்சிரமத்தில் குசன், லவன் என்னும் இரண்டு குமாரர்களைப் பெற்று,
அக்குமாரர்களுக்கு வயது பன்னிரண்டு நிரம்பிய பொழுது, வான்மீக முனிவருக்கு நாரத மகரிஷியால்
ஸ்ரீராமசரிதம் சங்க்ரஹமாக உபதேசிக்கப்பட்டு ப்ரஹ்மதேவரின் ஆக்ஞாப்ரகாரம் அம்முனிபுங்கவர் 24000 கிரந்தங்களடங்கிய
ஸ்ரீ இராமாயணமென்னும் ஆதிகாவியத்தைச் செய்தருளி அதைத் தமது சீடர்களான குசலவர்களுக்கு உபதேசிக்க,
அவர்களால் அந்த இராமாயணம் ஸ்ரீராமபிரானுடைய அஸ்வமேத மகாமண்டபத்தில் முனிவர், அரசர், வானரர்
முதலியோர் சேர்ந்துள்ள சபையில் ஸ்ரீராமபிரான் சன்னதியில் தாளலயத்துக்கிணங்க கானம் செய்து
அரங்கேற்றப்பட்டு சபையோர்களால் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டதாக நிச்சயிக்கப்படுகிறது.

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பாஷ்ய அம்ருதம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

November 5, 2020

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர மங்கள ஸ்லோகம் –

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு.

இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும்.
இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோக ரக்ஷணம் அடங்கும்.
இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்ரீ ஸ்வாமி மீண்டும்,
”விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.

ஸ்ரீ ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல் “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில்
ஸ்ரீ எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
மீண்டும் அவனது மோக் ஷப்ரதத்வம் எனும் எக் காலத்தும் வீடு பேறளிக்கும் மஹா குணத்தை
“வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார்.
முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள்,
மோக் ஷப்ரதத்வம் ஸ்ரீ எம்பெருமானின் மிகத் தனித்ததொரு குண விசேஷம் என்பதால் இது புனருக்தியன்று என்றனர்.

அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.
ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது.
இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.

ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ரீ ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,
“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே

இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன?
வினத=சமர்ப்பிக்கப்பட்ட
விவித=வெவ்வேறுபட்ட
பூத=உயிர்வாழிகள்/ஆத்மாக்கள்
வ்ராத=குழுக்கள்
ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது.

இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11),
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.

ஸ்ரீநிவாச

ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ச்ரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பக்தி ரூபா சேமுஷீ பவது

ஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை.
ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ
ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது,
ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.
ஸ்ரீ ஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” .
அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது,
பக்தி என்பது ஸ்ரீ எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார்.
ஸ்ரீ ஆழ்வார் காட்டிய நெறியை ஸ்ரீ எம்பெருமானார் நன்கு பின்பற்றினார்.
அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.

அதே மங்கள ச்லோகம் ஸ்ரீ நம்மாழ்வாரையும் எப்படிக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அகில-புவன -ஜந்ம -ஸ்தேம -பங்காதி -லீலே

அகில புவன ஸ்தேம பங்காதியாய் இருப்பவன் ஸ்ரீ எம்பெருமான்.
“தேன ஸஹ லீலா யஸ்ய” இந்த ஸ்ரீஎம்பெருமானோடு அவனாகிய லீலையை விளையாடுபவர் ஸ்ரீ ஆழ்வார்.
ஆகவே அகில புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா எனும் அடைமொழி ஸ்ரீ ஆழ்வாரைக் குறிக்கிறது.

ஸ்ரீ எம்பெருமானுடனான விளையாட்டை ஸ்ரீ ஆழ்வாரே பாடுகிறார்
”என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ” என்றும்,
“விளையாடப் போதுமின் என்னப் போந்தமை” என்றும்.

இந்தச் சொற்களின் தேர்வு இன்னொரு விளக்கத்துக்கும் ஹேதுவாகிறது –
புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா அகிலம் யஸ்ய. புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலையே இவ்வண்ட சிருஷ்டியின் ப்ரதான காரணம்,
அதாவது ஸ்ரீ எம்பெருமான். இவன் யாருக்கு இப்படி எல்லாமாய் இருக்கிறான் எனில், ஸ்ரீ ஆழ்வாருக்கே.
ஏன் எனில் அவர் ஒருவரே “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றார்.
நமக்கு உயிர் பிழைக்கச் சில, வளர்ச்சி பெறச்சில, இன்பம் அனுபவிக்கச் சில எனப் பொருள்கள் தேவை.
ஆனால் ஸ்ரீ ஆழ்வாருக்கு ஸ்ரீ கிருஷ்ணனே இம் மூன்றுமாய் உள்ளான்.

விநத-விவித-பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே

இவ்வெல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமானே. ஆயினும் பக்தன் நோக்கில் ஸ்ரீ எம்பெருமான் பூரணமாகத் தேவைப்படுவதில்லை.
ஸ்தனன்ஜயப் ப்ரஜைக்கு அதன் பசி தீரப் பால் கிடைப்பதால் அதன் நோக்கு தாயின் ஸ்தனத்திற்போலே
ஸ்ரீ எம்பெருமானை வணங்கும் அடியானுக்கு அவன் திருவடியிலேயே கைங்கர்யம் பற்றி நோக்கு.

ஸ்ரீ எம்பெருமானின் திருவடி நிலைகளே ஸந்நிதிகளில் ஸ்ரீ சடாரி அல்லது ஸ்ரீ சடகோபம் என ஆழ்வார் பேராலேயே வழங்கப் பெறுகிறது.
ஆகவே ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ எம்பெருமான் திருவடிக்கும் வேறுபாடில்லை.
ரக்ஷை வேண்டும் அடியாருக்குத் திருவடிகளாகிய ஸ்ரீ ஆழ்வாரே கிடைக்கிறார்.

ச்ருதி சிரஸ்ஸாவது வேதாந்தம். ச்ருதி சிரஸி விதீப்தே எனில் வேதாந்தத்தில் நன்கு உணர்ந்தவர்,
வேதாந்தம் ஸ்ரீ எம்பெருமானை அறியவே என்று உணர்ந்தவர் ஸ்ரீ ஆழ்வார். ஆகவே இச்சொற்றோடரும் அவர்க்கு இசையும்.

வேதமே ஆழ்வாரை, “தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ரவாக்ம்ஸஸ் ஸமிந்ததே” விப்ரா எனும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும்.
“ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஸ்ம்ருதா” என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உழலமாட்டார்.
“பண ஸ்துதௌ” என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக்குணங்களைப் பாடுபவர் என்றதால்
அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடிய ஆழ்வாரையே குறிக்கும்.
“தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்”.
“ ஜாக்ர வாக்ம் ஸ” என்பது எப்போதும் விழிப்புணர்ச்சியோடிருப்பது. எம்பெருமானையன்றி வேறொன்றும் பாராது,
அவனையன்றி மற்றொன்று உணராது நினையாது அவனையே அனுபவித்திருக்குமவரான
ஆழ்வாரே இச்சொற்றொடருக்கு இலக்கும் இலக்கியமும். தானே ஸத்தையாயும் எப்பொருளாயும் இருந்து ஒளிரும்
எம்பெருமான் விஷயமாகவன்றோ ஆழ்வார்
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று பாடினார்?
இவ்வேத வாக்யத்துள்ள “வி” என்பதை ஸ்ரீபாஷ்யச்லோக இறுதிச்சொல்லான ஸமிந்ததேவிலுள்ள “ஸம்” காட்டுகிறது.

ப்ரஹ்மணி

எல்லாவிதத்திலும் பெரியது எனக்காட்டும் “ப்ரு” எனும் சொல்லின் அடியாக வந்த சொல் ப்ரஹ்மம்.
பரப்ரஹ்மமே அவரிடம் கட்டுண்டுள்ளதென்பதே ஆழ்வாரின் பெருமை.
பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் இதனை,
“யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார்” என்று காட்டுகிறார். ஆகவே ப்ரஹ்மம் என்பதன் சரியான பரியாயம் பெரியன்.

ஸ்ரீநிவாஸே

இதெல்லாம் சரி….ஆனால், ஸ்ரீநிவாசே என்பதை ஆழ்வார் பரமாக நிர்வஹிக்க முடியாது,
ஏனெனில் ஆழ்வார்க்கு ச்ரிய:பதித்வம் இல்லையே எனலாம்.

ச்ரிய:பதித்வம் எம்பெருமானின் ஏகதேசமான உரிமைதான், எனினும் ஆழ்வார் ஸ்ரீ நிவாசனே
மேலும் சம்பிரதாயத்தில் ஸ்ரீநிவாசர்கள் பலர் உளர்.

லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன – லக்ஷ்மணன் லக்ஷ்மியை உடையவன்,

ஸ து நாக வர ஸ்ரீமான் – கஜேந்த்ரனும்ஸ்ரீமான்,

அந்தரிக்ஷ கத ஸ்ரீமான் – விபீஷணன் நடு வானில் நின்றவன் ஸ்ரீமான் ஆனான்.

இவ்வொவ்வோரிடத்திலும் ஸ்ரீ அல்லது லக்ஷ்மி என்பது வெவ்வேறு பொருள் தருவதாகும்.
லக்ஷ்மணனுக்கு ஸ்ரீ கைங்கர்யம்,
கஜேந்திரனுக்கு ஸ்ரீ அவன் கைம்மலரை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க விரும்பிய மனத்தூய்மை,
விபீஷணனுக்கு ஸ்ரீ அவன் மனதில் துயரம் இருப்பினும் எல்லா செல்வமும் விட்டுப் பெருமாளை சரண் புக்கது.

ஆழ்வார் விஷயமாகவோ எனில் வ்யாக்யாதாக்கள் அவரிடம் ஸ்ரீ இருப்பது போக அவரே ஸ்ரீ, பிராட்டி என்றார்கள்.
ஆழ்வார் முன் சொன்ன பிரபன்னாதிகாரிகளின் ஒவ்வொரு குணமும் நிரம்பப் பெற்றதால் ஸ்ரீநிவாசர்,
தாமே பிராட்டி போலானதாலும் ஸ்ரீநிவாசர் என்று எண்ணத்தகும்.

இவ்வாறாக, எம்பெருமானார் எம்பெருமானை அனுபவிக்கு முகமாக இச்லோகத்தால் ஆழ்வாரை அனுபவித்தார் என்பது தெளிவு.
ஆழ்வார் ப்ரபாவம் ஸ்ரீ பாஷ்யம் முதலில் தொடங்கி, இறுதி வரை, ஆம் கடைசி ஸூத்ர பாஷ்யம் வரை செல்கிறது.

ஸ்ரீ பாஷ்யம் விவரிக்கும் கடைசி ஸூத்ரம் “அநாவ்ருத்தி அநாவ்ருத்திஸ் சப்தாத்” என்பது.
இதில் அநாவ்ருத்தி சொல்லின் பொருளாவது, விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இம்மாயாவுலகுக்கு வருவதில்லை என்பது.

திரும்ப வராததற்குக் காரணம், சப்தாத், அதாவது இவ்வாறு வேதம் சொல்வதால்.
வேதம், “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிறது:விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இவ்வுலகுக்கு வருவதில்லை.

பரம சேதனன் சேதனனைக் காதலோடு ஆரத்தழுவும் நிலை.
ஜீவனின் நிலையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் வெறும் ஆதாரமாய் இருக்கும் நிலையன்றி,
பரம சேதனன் சேதனனை அடையப் பல வடிவுகளும் முயற்சிகளும் ஏற்கிறான்.
அவன் ஆரா அன்புள்ள காதலன், ஒருபோதும் கைவிடாத காதல் கொண்டவன்.
“ஸ ச மம ப்ரிய:” என்று சொல்பவன். ஜீவன் என் அன்புக்குரியவன் எனும் இதைப் பொருளில்லாமல் சொல்வானா?

ஆழ்வார் அநுபவத்தை முன்னாகக் கொண்டு ஸ்வாமி,
“ந ச பரமபுருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்தயிஷ்யதி”.

நழுவாத ஸங்கல்பங்கொண்ட பரமபுருஷன் தனக்கு மிகப்ரியமான மயர்வறப்பெற்ற சேதனனை மிக்க பரிச்ரமத்துடன்
அடைந்தபின் விடுவானா? கிருஷ்ணனை வெண்ணெய் திரும்பத் தா எனில் தருவானோ?

சேதனனை அடைந்து அநுபவிப்பதில் எம்பெருமானுக்குள்ள ஆசையை ஆழ்வார்,
“என்னை முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்” என்கிறார், அவன் என்னை முழுதுமாக அநுபவித்தான்.
இந்தக் காதலை வார்த்தைகளால் விளக்கமுடியாது, உணரவே முடியும்.
இவ்வாறான திருத்தவொண்ணாத காதல் நோயாளன் பெற்ற சேதனனைத் திரும்பவிடுவனோ!

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தை ஒரு பேருரையாய் நிகமிக்கிறார் –
”வாசுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:” எனும் கண்ணன் எம்பெருமானின் தன்னை விட்டு விலகும்
சேதனனைப் பற்றிய நிர்வேத ப்ரகடணத்தை உதாஹரிக்கிறார்.
ஸ்ரீ எம்பெருமான் உத்தராயணத்தில் கிளம்பிச் சென்றபின் ஸ்ரீ ஆழ்வார் தக்ஷிணாயனத்தில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” எனக்
கண்ணனே எனக்கு எல்லாமும் எனச் சொல்லிப் போந்தார்.
ஸ்ரீ கண்ணனின் திருப்பவளம் உதிர்த்த சொற்களே ஸ்ரீ ஆழ்வார் பாசுரமாக வந்தன.

———————————————————————-

ஸ்ரீ கோயில் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஆச்சார்யர் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ-தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ” -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

November 5, 2020

ஸ்ரீ தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”

ஸ்ரீ இராமானுசர் அருளிய மூன்று அர்த்தங்கள்-
கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்- சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை
(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்
(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் — தண்ணீரால் தாங்கப்படும் தாமரை –

“தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே”

சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்

இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது
ஆழ்வாரின் திருவாய்மொழியில் “தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.

திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

கமலக் கண்ணன் அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு எல்லாப் பாவங்களையும் நீக்கும்.
எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது.

ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக் காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டா ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்—

November 5, 2020

ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.

“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள்,
ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே குறிப்பனவாகக் கொள்ள வேணும்.

இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு,
யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட எம்பெருமான், ஆழ்வார், நாதமுனிகளின் திருவடிகள்,

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் –
அவர் தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால். ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.

ஸ்ரீ ஸ்வாமியின் இத் தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே நம்மாழ்வார் திருநாமம்.
இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.

ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில்
ஸ்ரீ இராமானுசருக்கு அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம்.
ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதா விலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டா ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –