Archive for the ‘தத்வ த்ரயம்’ Category

ஸ்ரீ சித்தி த்ரய உட்ப்பொருள் -ஸ்ரீ திரு நாங்கூர் உ வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் —

March 13, 2023

ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை ஸ்லோகம்-
மாநத்வம் பகவன் மதஸ்ய மஹத பும்ஸஸ் ததா நிர்ணய
திஸ் ரஸ் சித்தய ஆத்ம ஸம் வித கிலாதீ ஸாந தத்வாஸ்ரய
கீதார்த்தஸ்ய ச ஸங்க்ரஹ ஸ்துதி யுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூந்
யத் க்ரந்த அநு சந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும

ஆகம ப்ராமாண்யம்
மஹா புருஷ நிர்ணயம்
ஆத்ம ஈஸ்வர ஸம் வித் ஸித்திகள்
கீதார்த்த ஸங்க்ரஹம்
சதுஸ் ஸ்லோஹீ
ஸ்தோத்ர ரத்னம்
ஆகிய கிரந்தங்கள் எந்த ஆச்சார்யரால் அருளிச் செய்யப்பட்டதாக ஸ்ரீ பாஷ்ய காரர் அனுசந்திக்கிறாரோ
பரமாச்சார்யராக விளங்கும் அந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கிறோம்

இதில் மஹா புருஷ நிர்ணயம் கிடைக்க வில்லை
ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்துள்ள நியாய தத்வம் யோக ரஹஸ்யம் இவையும் இப்போது கிடைக்கப் பெற வில்லை
ஆகம ப்ராமாண்யம் பகவத் சாஸ்திரமான பாஞ்சராத்ர ப்ராமாண்யத்தைப் பஹு முகமாக நிலை நாட்டுகிறது
வேதம் போலவே ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் பிரபல பிரமாணம் என்று பரமாச்சாரியார் மூதலித்துப் பேசுகிறார்

ஸ்ரீ பாஷ்யகாரர் உத்பத்ய சம்பவாதிகரணத்தில் -2-2-8- இதை அடி ஒற்றியே
ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம ப்ராமாண்யத்தை ஸ்ரீ வியாஸ சித்தாந்தமாக நிர்ணயித்து அருளுகிறார்
கீதார்த்த ஸங்க்ரஹத்தைத் தழுவியே மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருளை தெரியப் பாரினில் சொன்னார் (இராமானுச நூற்று -68-)
சதுஸ் ஸ்லோஹீ ஸ்தோத்ர ரத்தினங்களை அடி ஒற்றியே கத்யங்களையும் அருளிச் செய்தார்

சித்தி த்ரயத்தை அடியாகக் கொண்டே மஹா ஸித்தாந்த அர்த்த விசேஷங்களை அருளிச் செய்துள்ளார்

ஸித்தி -என்பது தத்வ நிர்ணயத்தைக் குறிக்கும்
ஜீவாத்மா பரமாத்மா பிராமண ஞானம் -இவற்றின் யாதாத்ம ஞானம் -நிர்ணயித்துத்
தருவதால் ஆத்ம ஸித்தி -ஈஸ்வர ஸித்தி -ஸம் வித் ஸித்தி

இதில் ஸம் வித் ஸித்தி ஸ்லோஹ ரூபம்
மற்ற இரண்டும் கத்ய ரூபங்கள்

பிராமண நிஷ்கர்ஷம்-ஸம் வித் சித்தியிலும்
ப்ரமேய நிஷ்கர்ஷம்-மற்ற இரண்டிலும்

வேதமே ப்ரமாணமாகக் கொள்ளும் பரம வைதிகராய் இருந்தாலும்
குதர்க்க வாசி நிரஸனத்துக்கு ஸத் தர்க்கங்களைக் கொண்டே ஸித்தாந்த நிர்ணயம் செய்து அருளுகிறார் –

————-

விருத்த மதயோ அநேகாஸ் சந்தயாத்மா பரமாத்மநோ
அதஸ் தத் பரி ஸூத்தயர்த்தம் ஆத்ம சித்திர் வித்யதே

ஆத்ம பரமாத்மாக்களுடைய தத்வ ஞானம் முக்திக்கு இன்றியமையாத ஸாதனம் என்று
வேதாந்தமும் வேதாந்தம் அறிந்த சான்றோர்களின் நூல்களும் பறை சாற்றுகின்றன
இவ்விரு ஞானத்திலும் புறவாதிகளுடைய துர்வாதங்களை நிரஸித்து தத்துவத்தை உள்ளபடி அறிந்து
உஜ்ஜீவிக்கவே ஆத்ம ஸித்தி செய்யப்படுகிறது என்கிறார் ஆளவந்தார் –

நான் நான் என்று எப்போதும் தனக்குத் தான் தோன்றும் ஆத்ம விஷயத்தில்
தேஹமே ஜீவன் என்றும்
புலன்கள் ஜீவன் என்றும்
மனனே ஜீவன் என்றும்
பிராணனே ஜீவன் என்றும்
புத்தியே ஜீவன் என்றும்
சொல்லும் புற வாதங்களைக் கண்டித்து

ஜீவாத்மா இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கும்
ஞான ஆஸ்ரயமாய்
நித்தியமாய்
அணுவாய்
அநேகமாய் இருக்கிறது
இப்படி இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் ஸ்வ தந்திரம் அன்று
பரமாத்வுக்கே சேஷமாய் -பரதந்த்ரமாய் -சரீரமாய் இருக்கும்
என்று ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் ஆத்ம ஸித்தியில்

தேஹ இந்திரிய மந ப்ராண தீப்யோ அந்யோ அநந்ய சாதந
நித்யோ வ்யாபீ ப்ரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னஸ் ஸ்வதஸ் ஸூகீ –என்கிற ஸ்லோகத்தால் ஆத்மாவின் யாதாத்ம்ய ஸ்வரூபத்தைச் சொல்லி
மேலே யுக்திகளாலே விளக்கி அருளுகிறார்

இங்கு வ்யாபீ -எல்லா அசேதனப் பொருள்களிலும் இருக்கத் தக்கவன் -அணுவைப் போன்று ஸூஷ்மன் என்று பொருள் உரைத்தார் பாஷ்யகாரர்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -1-1-10-ஆழ்வார் அருளிச் செயலை ஒட்டி அருளிச் செய்தபடி
ஜீவாத்மா ஸ்வரூபத்தால் வ்யாபியாக இருப்பவன் என்று பிரமிக்க வேண்டாவே

தைத்ரியம்-அன்ன மய ப்ராண மய மநோ மயங்களுக்கு அவ்வருகே
சரீரம் பிராணன் மனம் இவற்றுக் காட்டிலும் வேறுபட்டு
விஞ்ஞான மய -என்று
வேத புருஷன் ஆத்மாவின் வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறான்

சென்று சென்று பரம் பரமாய்–8-8-5-
என் ஊனில் உயிரில் உணர்வில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே –8-8-4-என்று ஆழ்வார் அருளிச் செயல்களை ஒட்டியே
ஆளவந்தார் ஆத்ம சித்தியில் நிலை நாட்டி அருளுகிறார்

மாயாவாதிகள் அறிவே ப்ரஹ்மம்-அவித்யையால் நாநா விதப் பொருள்களாகத் தோன்றுகிறது – என்பர்
நான் அறிகிறேன் என்கிற லோக வழக்குக்கு புறம்பாகுமே
ஞானான் யே வாயம் புருஷ என்றும்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்றும்
அறிவுள்ளவர்களாகவே வேதமும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சொல்வதால்
மாயாவாதம் நிரஸனம்
ஜீவனும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதும் பொருந்தாது
ஜீவன் கர்ம வஸ்யன் -ப்ரஹ்மம் ஸம்ஸார ஸம்பந்தம் அற்றவன்

ஜீவனின் நிலை நின்ற ஆகாரத்தை ஸ்வதஸ் ஸூகீ என்கிறார்
பகவத் குண அனுபவத்தைப் பண்ணி
உகந்து பணி செய்து களித்து இருப்பதே ஆத்மாவின் உண்மையான நிலை
ஸம்ஸார ஸூக துக்கங்கள் கர்மம் அடியாகவே வருபவை
பகவானை சரண் அடைந்து அவன் அனுக்ரஹத்தினால் கர்ம சம்பந்தம் அறப்பெற்றால்
ஸ்வதஸ் ஸூகீ நிலை ஸாஸ்வதமாகப் பெறப் பெறுவானே

மாயாவாதிகள் அறிவே ப்ரஹ்மம்-அவித்யையால் நாநா விதப்பொருள்களாகத் தோன்றுகிறது – என்பர்
நான் அறிகிறேன் என்கிற லோக வழக்குக்கு புறம்பாகுமே
ஞானான் யே வாயம் புருஷ என்றும்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்றும்
அறிவுள்ளவர்களாகவே வேதமும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சொல்வதால்
மாயாவாதம் நிரஸனம்
ஜீவனும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதும் பொருந்தாது
ஜீவன் கர்ம வஸ்யன் -ப்ரஹ்மம் ஸம்ஸார ஸம்பந்தம் அற்றவன்

ஜீவனின் நிலை நின்ற ஆகாரத்தை ஸ்வதஸ் ஸூகீ என்கிறார்
பகவத் குண அனுபவத்தைப் பண்ணி
உகந்து பணி செய்து களித்து இருப்பதே ஆத்மாவின் உண்மையான நிலை
ஸம்ஸார ஸூக துக்கங்கள் கர்மம் அடியாகவே வருபவை
பகவானை சரண் அடைந்து அவன் அனுக்ரஹத்தினால் கர்ம சம்பந்தம் அறப்பெற்றால்
ஸ்வதஸ் ஸூகீ நிலை ஸாஸ்வதமாகப் பெறப் பெறுவானே

யஞ்ஞ மூர்த்தி வாதம் -17 நாள் இரவில் தேவப் பெருமாள் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்வப்னத்தில்
ஆளவந்தார் அருளிச் செய்த ஆத்ம ஸித்தி அர்த்தங்களை -மாயாவாத நிரசனங்களை -பிரஸாதித்து அருள
தெளிந்து எழுந்து ஸந்துஷ்டாராக வாத சதஸ்ஸுக்கு எழுந்து அருள
அவரும் இவர் திருவடிகளிலே சரண் அடைய –
அருளாளப் பெருமாள் எம்பருமானார் திருநாமம் சாற்றப்பெற்று
ஸ்ரீ பாஷ்யகாரருடன் நம் தரிசனத்தை நிர்வகித்துப் போந்தார் அன்றோ

இவற்றால் ஆளவந்தாருடையா ஸ்ரீ ஸூக்திகளின் வீறுடைமை நன்கு விளங்கும் –

—————-

ஈஸ்வர ஸித்தியின் உள் பொருள்

வேதத்தை பிரமாணமாக ஒத்துக் கொண்டும்
வேத வேத்யனான பரம புருஷனை ஒத்துக் கொள்ளாமல்
யகாதி கர்மங்கள் அபூர்வத்தை உண்டு பண்ணி
அதன் வழியாக ஸ்வர்க்காதி பலன்களைப் பெறுகிறார்கள் என்று நிரீஸ்வர வாதம் செய்யும் கர்ம மீமாம்ஸகர்களை நிரஸித்து
பிரளய காலத்தில் அழிந்து கிடந்த எல்லா லோகங்களையும் மறுபடியும் ஸ்ருஷ்டி காலத்தில்
படைத்துக் காத்து அருளும் சர்வேஸ்வரனை ஒருவன் உளன் என்று ஸ்ருதி கூறா நிற்கச் செய்தே
நிரீஸ்வர வாதம் பண்ணும் இவர்களை ஆஸ்திக நாஸ்திகர்கள் என்கிறார்

மேலும்
எவனுடைய திரு ஆராதனமாக யாகாதிகள் ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ
யாகாதிகளால் ஆராதிக்கப்பட்ட எவனுடைய அனுக்ரஹத்தினாலே பலத்தை அவர்கள் அடைகின்றனரோ
அந்தப் பரமன் இல்லாத போது கர்மமும் கர்ம பலனும் ஸித்திக்காது -என்கிறார்

மேலும்
அழிந்து

கிடந்த வஸ்துவுக்கு நாம ரூபங்கள் உண்டாவதற்கு ஒரு விதாதா வேணும்
ஆகவே
ஜகத் ஸ்ருஷ்டவாய்
ஸர்வ கர்ம ஸமாராதனாய்
ஸர்வ பல ப்ரதனான
பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியாலே அவஸ்யம் அங்கீ கரித்தே யாக வேண்டும்
என்று யுக்திகளாலே நிரூபித்து
கருமமும் கர்ம பலனுமாகிய காரணன் தன்னை -என்று
ஆழ்வார் பேணின காரணமான பரம் பொருளை
ஈஸ்வர ஸித்தியிலே நிலை நாட்டி அருளுகிறார் பரமாச்சாரியார்

இதன் இறுதியில்
ஏக ப்ரதான புருஷம் விவாதாத் யாஸிதம் ஜகத்
சேதன அசேதநாத் மத்வாத் ஏக ராஜகதே ஸவத் –என்னும் ஸ்லோகத்தில்
உபய விபூதியிலும் உள்ள ஜீவ ராசிகளும்
அதிகாரி வர்க்கமான வானவர்களும்
ராஜாதி ராஜனான ஸ்ரீ மன் நாராயணனுடைய செங்கோலின் கீழ் இடரின்றி வாழ்கின்றனர்
என்னும் வேதாந்த ஸித்தாந்தத்தை ராஜ ராஷ்ட்ர த்ருஷ்டாந்தத்தாலே விளக்குகிறார்
வேதைக வேத்யன் பரம புருஷன் -என்பதே இவர் திரு உள்ளம்
ஆயினும் வேதார்த்த நிர்ணய ஸஹ காரியான தர்க்கங்களையே ஈஸ்வர ஸித்தியில் முக்யமாகக் காட்டி அருளுகிறார் –

——————

ஸம்வித் ஸித்தியில்
முக்கியமாக கேவல அத்வைத வாதத்தை நிரஸனம் பண்ணி விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்துகிறார்
சத்தான -உளதான பொருள் ஒன்றே-அநேகம் இல்லை என்னும் வாதத்தையும்
ஞானம் -அறிவு -ஒன்றே உளது -ஜேயமும் -அறியப்படும் பொருளும் -ஞாதாவும் அறிகிறவனும் -இல்லை -என்னும் வாதத்தையும் கண்டித்து
சித் அசித் ஈஸ்வரன் என்ற தத்வ த்ரயம் -உண்மைப் பொருள்கள் மூன்றுமே உண்டு என்றும்
அப்படியே ஞானம் -ஜேயம் -ஞாதா -மூன்றும் உள்ளது என்றும் நிரூபிக்கிறார் –

மேலும்
ஏக மேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -5-2-1- ஸ்ருதி வசனத்துக்கு
பரம் பொருளுக்கு குணம் ரூபம் ஐஸ்வர்யம் ஒன்றும் இல்லை என்னும் அபத்தப் பொருளை அத்வைதிகள் உரைத்தனர்
அத்தைத் தகர்த்து
பரம்பொருளான எம்பெருமானுக்கு
நற் குணங்களும்
திவ்ய ரூபங்களும்
வைபவங்களும்
பல பல உண்டு என்று நிரூபிக்கிறார் –

ஸத்யம் ஞானம் அநந்தம் -தைத்ரியம் ஆந -1-2-
விகாரம் அற்று இருப்பதால் ஸத்யமாயும்
ஞானமாகவும்
அளவற்றதாய் இருப்பதால் அநந்தமாயும் –இருக்கும் ப்ரஹ்மம்

பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல கிரியா ச -ஸூவே –6-
இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் –
ஸ்ருஷ்டித்தல் போன்ற பல செயல்களும் உண்டு என்று அறியப்படுகிறது

கந்தர்வ அப்சரஸஸ் ஸித்தாஸ் சகின்நர மஹோ ரகா
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேநா நந்தோ அயமுச்யதே
கந்தர்வர்களும் அப்சரஸ் ஸுக்களும் கின்னர்களுடன் மஹா நாகங்களுடன் கூடிய சித்தர்களும்
இவனுடைய குணங்களின் எல்லையை அடைவது இல்லை
ஆகையால் இவன் அநந்தன் என்று சொல்லப்படுகிறான்

இத்யாதி பிராமண வசனங்களால்
எம்பெருமான் எல்லையில்லா நற் குணங்களையும் வைபவங்களை யுடையவன் என்று விளங்குகிறது
இவனே ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
பிரதானனன் -என்கிற பொருளையே
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி சொல்கிறது

ஏக முக்யாந்ய கேவலா -என்கிற கோசத்தின் படி ப்ரதானன் -என்பதே ஏக பதார்த்தம்

மேலும்
சோழ மன்னன் ஒருவனே அத்விதீயனாக இப்போதும் உளன் -என்பதற்கு எப்படி
அவனே எல்லா மன்னர்களுக்கும் தலைவன்
அவனுக்கு சமானமாகவும் -அவனைக்காட்டிலும் உயர்ந்தவனாக இப்போதும் மற்றொரு மன்னன் இல்லை போல்
இங்கும் கொள்வது என்று மூதலித்துக் காட்டி அருளுகிறார்

யதா சோழ ந்ரூப ஸம் ராட் அத்விதீயோ அத்ய பூதலே
இதி தத் துல்ய ந்ருபதி –நிவாரண பரம் வசஸ்
ந து தத் ப்ருத்ய தத் புத்ர களத்ராதி நிஷேதகம்
ததா சுரா முர நர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட கோடயஸ்
க்லேச கர்ம விபாகாத்யை ரஸ ப்ருஷ்டஸ்யாகி லே ஸிதுஸ்
ஞாநாதி ஷாட் குண்ய நிதேர சிந்த்ய விபவஸ்ய தா
விஷ்ணோர் விபூதி மஹிம ஸமுத்ரத் ரப்ஸ விப்ருஷஸ் –என்னும் ஸ்லோகங்களால்
அநந்த கோடி ப்ரஹ்மாண்டங்களும் அதற்கு உட்பட்ட ஸகல தேவாதி சேதனர்களும்
எம்பெருமானுடைய விபூதியில் அடங்கியவை

ஸ்வ தந்திரமான மற்றொரு வஸ்து இல்லை -என்று நிரூபித்து
ப்ரஹ்மாத்ம நாத்மலாபோயம் ப்ரபஞ்சஸ் சித சின்மயஸ்
இதி பிரமீயதே ப்ராஹ்மீ விபூதிர் ந நிஷித்யதே -என்று
அத்விதீய ஸ்ருதியினால் புருஷோத்தமனுடைய விபூதிக்கு ஒருவிதமான இடரும் இல்லை என்று காட்டி அருளுகிறார்

இவ்வண்ணம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளை
ஸம்வித் ஸித்தியில் நிலை நாட்டி அருளுகிறார் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

இத்யாதியான ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளை உட்க் கொண்டு
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி
வசனத்துக்குப் பொருத்தமான பொருளை விளக்கி அருள்கிறார் பரமாச்சாரியார் –

———————————————–—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது–1-ஆத்ம சித்தி –

November 30, 2021

ஸ்ரீ நாதமுனிகளால் பிரவர்த்தனம் -ஸ்ரீ ஆளவந்தாரால் போஷணம் -ஸ்ரீ ராமானுஜரால் வர்த்திக்கப்பட்ட விசிஷ்டாத்வைதம்

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –

மாநத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீசாநத் தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —

ஸ்ரீ எம்பெருமான் சித்தாந்தம் ஆகிய பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு கீழே உள்ள பலவும் பிரமாணமாக உள்ளன –
அவை யாவன –ஆகம ப்ராமண்யம் -மஹா புருஷ நிர்ணயம் -ஆத்ம சித்தி -சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி ஆகிய சித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -சதுஸ் ஸ்லோஹீ -ஸ்தோத்ர ரத்னம் ஆகிய எட்டும்
இவை அனைத்தையும் யாதிபதியான எம்பெருமானார் எந்த ஆளவந்தாரது அஷ்ட கிரந்தங்கள் என்று
நித்ய அனுசந்தானம் செய்தாரோ அந்த யாமுனாச்சார்யரை ஸ்தோத்ரம் செய்கிறோம்

ஆளவந்தார் ஆத்ம சித்தியில் -உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஆத்ம ஸித்தி – ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)
நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

சம்வித் சித்தியில் -அத்விதீயம் —
யதா சோழ நிரூப சம்ராட அத்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூராஸூரநர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிது –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ர ப்சவிப்ருஷ-
இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –

————

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில்,
ஸித்தி என்ற பெயருள்ள இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.

இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.

இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப்படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய், நித்யமாய், அணுவாய்,
ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்தமயமாய் அநேகமாயும், பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய்,
சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

தைத்ரிய உபநிஷத்தில் அன்னமய, ப்ராணமய மனோமயங்களுக்கு அவ்வருகே சரீரம், ப்ராணன், மனம்
இவற்றைக் காட்டிலும் வேறுபட்டுள்ள ஜீவாத்மாவை அறிவு நிறைந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
உணர்வற்ற பொருள்களைக் காட்டிலும் ஆத்மாவிற்கு உண்டான வேறுபாட்டினை வேதம் விஜ்ஞாநமயன் என்று காட்டியது.
ப்ரபந்நஜனகூடஸ்தரான நம்மாழ்வாரும்
“சென்று சென்று பரம்பரமாய்” என்னூனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே
என்று ஆத்மாவின் நிலையை உணர்த்துகிறார்.

ஸம்ஸார துக்கங்கள் அநாதி காலமாகச் செய்த கர்மத்தின் பயனாய் வந்தேறியுள்ளது.
பகவானை சரணமடைந்து அவனுடைய கருணைப் பெருக்கினால் கர்ம பந்தம் நீங்கி,
எம்பெருமானுக்கு தொண்டு செய்து உகப்பிக்கும் நிலை ஏற்படும்.
ஜீவாத்மாவின் உண்மைநிலை பகவத்குண அனுபவத்தைப் பண்ணி, உகந்து பணி செய்து களித்திருப்பதே ஆகும்.

ஸித்தி த்ரயம் – ஈஸ்வர ஸித்தி
ஈஸ்வர ஸித்தியில் அகில உலகின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும் இறைவனுக்கு உட்பட்டதே
என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிவுருத்த எல்லாம் அறிந்தவனும், எல்லாம் வல்லவனும்,
ஸத்யஸங்கல்பனுமான இறைவன் ஒருவன் உளன் என்பதை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகிறது.

வேதத்தை ப்ரமாணமாக ஏற்றுக் கொண்டு, ஆனால் வேத வேத்யனான பரமபுருஷனை ஒத்துக் கொள்ளாமல்,
யாகம் முதலிய கர்மங்களே ஸ்வர்கம் முதலிய பயனைக் கொடுக்கின்றது. ஆகையால் உலகிற்குக் காரணமாய்,
கர்ம பலன்களைக் கொடுக்கும் இறைவனால் ஒரு பயனுமில்லை என்று கூறும் கர்மமீமாம்சகர் கூறும் கூற்றைத் தவிர்த்து,
ப்ரளயத்தில் அழுந்திக் கிடந்த அகில உலகையும் ஸ்ருஷ்டி காலத்தில் மறுபடியும் படைத்து காத்தருளும்
ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்று நிலைநாட்டுகிறார்.

மேலும் எவனுடைய ஆராதனங்களான யாகம் முதலியவை ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ,
அவை எம்பெருமானுடைய அருளாலேயே பயனை கொடுக்கின்றன. அந்தப் பரமன் இல்லாதபோது, கர்மமும் கர்ம பலமும் சித்திக்காது.

எனவே ஜகத் ச்ரஷ்டாவாய் (உலகைப் படைப்பவனாய்), ஸர்வகர்ம ஸமாராத்யனாய் (அனைத்து கர்மாக்களாலே வழிபடப்படுபவனாய்),
ஸர்வ பலப்ரதனான (அவற்றிற்கு பயனும் அளிப்பவனான) பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியிலே
அங்கீகரித்தே(ஏற்றுக்கொள்ள) வேண்டும் என்று பலபடிகளாலே நிரூபித்து,
“கருமமும் கருமபலனுமாகிய காரணன் தன்னை” என்ற நம்மாழ்வாரின்
ஸகல வித்யா சர்வஸ்வம் என்று போற்றுதற்குரிய திருவாய்மொழியைக் கொண்டு பரம்பொருளை ஈஸ்வர ஸித்தியில் அறுதியிடுகிறார்.

ஸித்தி த்ரயம் – ஸம்வித் ஸித்தி
ஸம்வித் ஸித்தியில் அத்வைத வாதமும் மாயா வாதமும் கண்டிக்கப்படுகிறது. உளதான பொருள் ஒன்று தான்.
அநேகமில்லை என்று கூறும் வாதத்தையும், ஜ்ஞானம் ஒன்றே உள்ளது;
அறியப்படும் பொருளும், அறிகிறவனும் வேறில்லை என்று கூறுபவர்களுடைய வாதத்தையும் கண்டித்து;
அறிவு, அறியப்படும் பொருள், அறிகின்றவன் என்ற மூன்றும் உள்ளன.
இப்படியே சித், அசித், ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் உள்ளன என்பதை நிரூபிக்கிறார் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்.
மேலும் பரம்பொருளுக்கு குணம், ரூபம், ஐஸ்வர்யம், ஆகிய ஒன்றுமில்லை என்ற அத்வைதிகள் கூற்றைத் தகர்த்து
எம்பெருமானுக்கு நற்குணங்களும், திவ்ய ரூபங்களும், வைபவங்களும் பல பல உண்டு.
கணக்கில்லாத நற்குணங்களுக்கு இருப்பிடமாக எம்பெருமான் போற்றப்படுகிறான்.
ஆதலால் எம்பெருமான் ஒருவனே ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாய், தானே அனைவருக்கும் பிரதானனாயிருக்கிறான்
என்பதை அறுதியிட்டு நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் கொள்கைகளை நிலைநாட்டியுள்ளார் நம் ஸ்வாமி.

“ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்ற வாக்கியம் அத்வைதக் கொள்கைக்கு முக்கியமானது.
இதற்கு ப்ரஹ்மம் தவிர வேறேதும் உண்மையில் இல்லை என்பதே அத்வைதிகள் கூறும் பொருள்.

ஸ்ரீ ஆளவந்தாரின் விவரணம் பின்வருமாறு:
நாம் ப்ரத்யக்ஷமாகக் காணும் காரியப் பொருள்கள் யாவும் உண்மை.
“பரம்பொருள் ஒன்றே” என்பதால் உலகம் பொய் என்றாகாது. உண்மையாக உள்ள பரம்பொருளையும்,
இல்லாததான உலகத்தையும் ஒரு பொருளாகக் கூறமுடியாது.

இப்படிச் சொன்னால் (பொய்யான உலகில்) இல்லாத உலகில் உள்ள பரம்பொருளும் இல்லாததாகும்.
எனவே பரம்பொருள் ஒன்றே! இரண்டல்ல” என்று பொருள் கொள்ளவேணுமே ஒழிய உலகில்லை
(உலகு பொய் என்று பொருள் கொள்ள முடியாது ) என்பது ஸ்ரீ ஆளவந்தார் கூற்று.
ஆக அத்விதீயன் என்றால் பரம்பொருளைப் போன்ற மற்றொருவர் கிடையாது என்பதே ஆகும்.
உலகும், மக்களும், தேவர்களும் எம்பெருமானுடைய செல்வத்தில் அடங்கியவையே ஆகும்.
ஆக எம்பெருமானே புருஷோத்தமன் ஆவான் என்று தெளிவாகக் காட்டுகிறார் நம் ஸ்வாமி.

இதே போன்று தத் த்வம் அஸி என்ற வாக்கியத்திற்கு பொருள் கூறும் அத்வைதிகள்
ப்ரஹ்மமும் ஜீவாத்மாவும் ஒரே பொருள் என்பதாகும்.
இதற்கு நம் ஸ்வாமி அறிவுக் களஞ்சியமான பரம்பொருளையும், குறுகிய ஞானமுடையனாய்
சம்சாரியாய் துக்கப்படுபவனான ஜீவாத்மாவோடு ஒன்று படுத்திப் பேசுவது
ஒளியையும், இருளையும் ஒன்று என்பது போல் ஆகிவிடும் என்கிறார்.

——

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது
வேதார்த்தம் ஸ்தாபிக்க -சத் சித்தாந்தம் -வைதிக தர்மம் –
சித்தி -ஞானம் -1-ஆத்ம 2-சம்வித் -3-ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
பிரமாணம் -பிரமாதா -பிரமேயம் -மூன்றும்
அசேதனம் பற்றியும் ஞானி பற்றியும் சர்வஞ்ஞான் பற்றியும்-இப்படி மூன்றும்
மாதா -பிரமாதா -ஆத்மா
மேயம் பிரமேயம் ஈஸ்வரன்
ஏற்படும் ஞானம் பிரமேதி -தர்ம பூத ஞானம்
பாஹ்ய குத்ருஷ்டிகள் உக்திகளைக் கொண்டு -பரமார்த்தம் ஸ்தாபிக்க முடியாதே –
சாஸ்த்ர யுத்தம் எளிமை –4-ஸ்தோத்ர ரத்னம் –5-சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ த்வயார்த்தம் -ஸ்ரீ பெருமை தனியாக
6-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்
7-மஹா புருஷ நிர்ணயம்
8-ஆகம பிராமண்யம்
ஆக எட்டு நூல்கள் அருளிச் செய்துள்ளார் – முதலில் அருளிச் செய்த கிரந்தங்கள் இவை

கை விளக்காகக் கொண்டே ஸ்வாமி ராமானுஜர் ஸ்ரீ ஸூ க்திகள்–
உத்தமூர் வீர ராகவாச்சார்யர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
திரு நாங்கூர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
கத்யமும் ஸ்லோகமும் இவற்றில் உண்டே –
ஸ்ரீ உடையவர் ஒன்பது கிரந்தங்கள்
ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் -அஹம் -ஆத்மதத்வம் –
ஆத்ம சித்தி சம்வித் சித்தி கொண்டு நிர்ணயம்
சித்தி -ஞானம் -ஆத்ம சம்வித் -ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
சம்வித் என்றாலும் ஞானம்
சம்வித் -தர்மபூத ஞானத்தை குறிக்கும் -உத்பத்தி நாசம் கூடி இருக்கும் –
ஆத்மாவே ஞானம் -உத்பத்தி விநாசம் இல்லையே

ஞானம் ஏற்படும் சாதனம் -ஞான த்ரயம்
பிரஸ்தாபனம் -ஸ்ரீ பெரும்புதூர் ஆஸூரி ராமானுஜாச்சார்யார் -பல முகேன உபாய-
ஆயுள் நெய் -தலையிலே ப்ராப்யம் ஏற்றி சொல்வது –
சித்தி த்ரயம் நூலே ஞான த்ரயம் வருவது நிச்சயம் -சடக்கென தடங்கல் இல்லாமல் கிடைப்பதால் -உபச்சாரமாக சொல்வது
சாதனத்தில் பல விபதேசம்-
பல அபேதம் முகேன -சாதனத்தை சாத்தியம் -விளம்பம் இல்லாமல் -விட்டுப் போகாமல் -நிச்சயமாக ஏற்படுத்தும்
ஆத்மதத்வம் இவை கொண்டே நிர்ணயம் மஹா சித்தாந்தத்தில்
ஈஸ்வர சித்தி கொண்டே -சாஸ்த்ர யோனித்வ அதிகரணம் –
ஆகம ப்ராமாண்யம் -அடி ஒற்றி ப்ரஹ்ம மீமாம்ச அந்தக்கதை -பாஞ்சராத்ர ஆகமம் பரம பிராமணியம்
கீதார்த்த ஸங்க்ரஹம் கொண்டே ஸ்ரீ கீதா பாஷ்யம்
வேதார்த்த ஸங்க்ரஹம் தீபம் சாரம் இவை -மஹா புருஷ நிர்ணயம் கொண்டே-சாதித்தார்
ஸ்தோத்ர ரத்னம் சதுஸ் ஸ்லோகி கொண்டே கத்ய த்ரயம்
ஆ முதல்வன் -நிர்ஹேதுக கடாக்ஷம்
ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் -திரு அவதாரம் -74-ரூபங்கள் ஸ்ரீ நரசிம்மர் -மதகுகளை -74-வைதிக சம்ப்ரதாயம் காட்டிக் கொடுத்த கோயில் –

823-ஸ்ரீ மந் நாதமுனிகள் திரு அவதாரம்/ யமுனைத்துறைவன் பெயர் சாத்த -ஈஸ்வர முனிகள் திருத்தந்தை
ஆக்கி ஆழ்வான்-மஹா பாஷ்ய பட்டர் இடம் சிஷ்யர் -பிரதிவாதி வாரணம் பிரகட ஆடோபம் – விபாசனம் ஷம-
ஆ சைலாத் ஹிமாசலம் தொடங்கி -உப கண்டாதி மலை தாழ்வாரை வரை -அத்ரி கன்யா சரண கீதாலயா
கொழுந்து போன்ற திருவடி ஸ்பரிசத்தால் -பாக்யம் பெற்ற தாழ்வாரை –
ஆ ரஷோணீதா சீதா முக கமலம் சமுல்லாசாத ஹேது -சேது வரை –மாத்ருஸ அ ந்யா -என்னை ப் போலே கிடையாது தேடலாம்
அவதாம்சம் -ராக்குடி -கிழக்கு பர்வதம் சூர்யன் -அஸ்தமாத்ரிக்கு சந்திரன் -தேடினாலும் மீமாம்ச சாஸ்த்ரா யுக்ம –
அவற்றிலே புத்தி செலுத்தி நம்மைப் போலே -ஆளவந்தார் பேர் பெற்றார்
மணக்கால் நம்பி -தூது வளைக்கீரை கொடுத்து –கா பிஷா -போட வந்தேன் -கீதா பிரமாணம் பிரமேயம் காட்டி –
பெரிய பெருமாளை காட்டச் சொல்லி
ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்த பிரகாசம் -விமானம் பிராணாவாகாரம் —
சேவித்து மற்றவை விட்டார் -சந்யாச ஆஸ்ரமம் -கஜேந்திர தாசர் காட்டிக் கொடுக்க ஆ முதல்வன் கடாக்ஷித்து -விட்டு
தேவப்பெருமாள் -சரணாகதி –
ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம் கொண்டே ராமானுஜர் -பெரிய நம்பி உடன் வர -சரம திருமேனி சேவித்து திரும்ப
மதுராந்தகம் மகிழமரம் அடியில் சமாஸ்ரயணம்
நாஸ்திகர் –
அநாதி நிதன அவிச்சின்ன -பாட சம்ப்ரதாயம்-ஸூத பிராமண பூதம்- -வேத ஸாஸ்த்ர யுக்த அர்த்தேஷு நாஸ்தி என்பவன்

வேறே வேறே வித நாஸ்திகர்களை ஒரே சப்தத்தால் விளக்கி
சரீரம் தாண்டி வேறே பிறவி என்பது இல்லை -இஹ லோகம் பர லோகம் -கர்மங்களால் கட்டுப்படுத்தலாம் –
சாரு வாகர் -கண்ணாலே பார்ப்பதே உண்மை -அயம் லோக -நாஸ்தி பர /
புத்தன் -க்ஷணிகம் -ஸூந்யா -க்ஷணிக விஞ்ஞான சைதன்யம் பிரவாஹா ரூபேண அனுவர்த்திக்கும் -சைதன்யம் –
ஞானம் ஞாதா ஜே யம் மூன்றும் ஒன்றே அறிவு அறியப்படும் பொருள் அறியுமாவான் சேர்ந்தே -மூன்று இல்லை
நையாயிகன்-வேதம் பிரமாணம் ஒத்துக் கொண்டு -பாஷாண கல்பம் ஆத்மா அடைந்தாள் மோக்ஷம் -அசேஷ விசேஷ குண இல்லாமல் –
சைதன்யம் மாத்திரம் ஞானமே ஆத்மா -அடுத்து -யுக்தியால் வாதங்கள் –
அநிஷ்டம் போனது கல் இஷ்ட பிராப்தி ஆனந்தம் இல்லையே -புருஷார்த்தம் இல்லையே
சங்கர பாஸ்கர யாதவர் மூன்று குத்ருஷ்டிகள் –
பர ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் -வேதார்த்த ஸங்க்ரஹம் மங்கள ஸ்லோகம் இரண்டாவது -விஜயதே யமுனா முனி
தமஸா ஹார்த்தும் -சத் அசத் விவேகம் அறிய காருணிகோ ஈஸா ப்ரதீவம் ததாதி பட்டர் -ரெங்கராஜா ஸ்தவம்
சரபம் சலபமாகி வீட்டில் பூச்சி போலே கூரத்தாழ்வான்
ஆத்ம பரமாத்மா சம்வித் பிரமாணம் கொண்டு ப்ரதிஷ்டிதம் யுக்தி கொண்டே பாஹ்ய நிரசனம் -பிரதானம் -பரமாச்சாரியார் கையாண்டார்
உன் ஸ்திதி என் ஆதீனம் -பிரமாணம் கொண்டே ப்ரமேயம் -திரை விலக்கி சேவை சாதித்தான் திருவேங்கடமுடையான்
-நியாய சாஸ்திரம் -சத்காரியவாதிகள் –
பிரதிபக்ஷ -நிரசன பூர்வக ஆத்மதத்வ நிர்ணயம் -வேத ஸாஸ்த்ர அனுகூல தர்க்கங்கள் கொண்டே –
தேகாதி விலக்ஷணம் -அஜடம் -நித்யம் ஞானானந்த குணகம் -பர ப்ரஹ்ம குண அனுபவ தாஸ்யைக ரசம்
பர ப்ரஹ்ம சேஷ பூதர் -முக்தி பிரசாதத்தால் பெற்ற ஆத்மதத்வம் –
ஆத்மசித்தி கடைசியில் -இது -நாம் அறிந்தவை –
த்வைதம் -சரீராத்மா பாவம் இல்லாமல் சேஷ சேஷி கைங்கர்யம் எல்லாம் உண்டே என்பர்
ஈஸ்வர சித்தி -நிரீஸ்வர வாதி -நிரசித்து -த்ரையந்த வேத பிரமாணம் கொண்டே ஸ்தாபித்தார்
சம்வித் சித்தி -மாத்ரு-பிரமாத மேய -ப்ரமேயம் -பிரமித்தி ஞானம் -பிரமிதி ரூபம் -ப்ரமேயத்தை தத்வம் ஸ்தாபிக்க
பரமார்த்ததக ஸ்வரூப பேதம் இம்மூன்றுக்கும் -தர்மபூத ஞானம் -சங்கோச விகாசம் அடையும் -அர்ஹமாய் இருக்கும் –
இவை இல்லாமல் பரமாத்மா -உபநிஷத்தால் -சச்சிதானந்த ரூபம் ஸ்ரீ மான் புருஷோத்தமன் -உபநிஷத்தால் சொல்லப்படுபவர்
மாயாவதி இத்யாதிகளுடைய கற்பனைகளை தகர்த்து –
யத் பத த்யானம் அசேஷ கல்மஷன்கள் அழிக்கப் பட்டு அஹம் அவஸ்துவாய் இருக்க -பொருளாக்கின யாமுனாச்சார்யரை வணங்குவேன்

ஸ்ரீ மங்களா சரண வஸ்து நிர்தேசங்கள் இரண்டு ஸ்லோகங்கள் உண்டு
பிரகிருதி புருஷ கால வ்யக்த முக்த
பிரகிருதி அவ்யக்தம் -மாறி வ்யக்தம்
புருஷ சப்தம் தனியாக -பத்த ஜீவர்கள் —
யத் இச்சாம் அனுவிததி நித்யம் -சங்கல்பத்தை பின் தொடர்ந்து
நித்தியமாக பின் தொடர்ந்து செல்லும்
இது வரை லீலா விபூதி
நித்யம் நித்ய சித்தர் அநேகர்- எப்போதும் தொடரப்பட்டு
ஸூ பரிசரண போகை-கைங்கர்ய ரசம் யாத்திரை
ஸ்ரீ மதி-ஸ்ரீ யபதி இடத்தில் பிரியமான பிரியம் காட்டப்படுபவர் -பூருஷ பரம புருஷன் பரஸ்மின் -ஒரே வேற்றுமை –
மம பக்தி பூமா -பவது
அகில ப்ரஹ்மணி –ஸ்ரீ நிவாஸே-பரஸ்மின் -பக்தி ரூபா அங்கும் இப்படியே

பிரகிருதி -மாயாந்து பிரகிருதி வித்தி -அவ்யக்தம் -தத் கார்யாணி-வ்யக்தம் -காரியம் –
ப்ரக்ருதி பிராகிருத பரிணாமம் -ஹேது- காலம் தூண்ட -நடக்கும்
தத் பத்த-புருஷ -மூன்றையும் வசப்படுத்தி வைக்கும் காலம் -காலத்தாலும் வ்யக்த்ததாலும் பந்தம் -சரீரத்தாலும் காலத்தாலும்
முக்த -பகவத் உபாசனை பிரபாவாத் -பாவ பந்தனாத் -கர்மா -முக்தா -நிர்முக்தா விநிர்முக்தா -திரும்பி வராத அளவுக்கு –
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் சங்கல்பம் பின் தொடர்ந்து
சைதன்யம் இல்லாமல் பிரக்ருதியும் வ்யக்தியும் எப்படி -என்றால்
ஞானம் இருந்தால் தடுப்போம் -அவை கேட்க்காதே-லீலா ரசம் -அலகிலா விளையாட்டுடையார் -லீலே-ஏவம் லீலா விபூதி யோகம்
நித்ய விபூதி யோகம் -கூடி இருத்தல் யோகம் -நித்யம் மத்திய மணி நியாயம் –
ஸ்ரீ யபதி ஸ்ரீ வைகுண்டம் -நித்ய கைங்கர்யம் ரசம் -அனுபவ ஜெனீத ப்ரீதி காரித்த அசேஷ சேஷ வ்ருத்தி –
அகாத போகம் அநந்தம் -அனந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் -நிரதிசய ப்ரீதி –
ஸ்ரீ வல்லபன் புருஷோத்தமன் -பர ப்ரஹ்மணி -பக்தி -கடல் ஏற்படுத்த வேண்டும்
ஸ்ரேயஸ்-ஸ்ரீயப்பதியிடம் பக்தி ரேவ -பக்தியை பிரார்த்திதுப் பெற்றால் தானே வைகுந்தம் தரும் – பாரம்யம்-இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
அன்பை உள்ளடக்கிக் கொண்ட உபாசனம் பக்தி -அவிச்சின்ன பூர்ண பகவத் அனுபவ கர்ப்ப சேவா கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
ஸூவ அபிமதம் பிரகாரணார்த்தம்-முதல் ஸ்லோகமே ஸங்க்ரஹம் –
அசேதன சேதன பரமாத்மா பேதங்கள் உண்மை -தத்வத்ரயம் -பாரம்யம் ஸ்ரீ மந் நாராயணனே –
சர்வ சேதன அசேதனங்கள் விபூதியாய் இருக்கும் -சார்ந்தே விட்டுப் பிரியாமல் -உபாசனமே அபவர்க்க ஹேது –
திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்

விருத்த மதம் அநந்தம்
ஆத்ம சித்தி விரித்து இவற்றை நிரசித்து–ஆத்ம பரமாத்மா விஷயங்களில் முரண்பாடுகள் -பரிசோதனம் பண்ணி –
நாநா விப்ரபுத்தி -முமுஷுக்கு தானே இவற்றின் யாதாம்ய ஞானம் வேண்டும் –
தோஷ நிரசனம்-சாஸ்திரமும் உக்திகளையும் கொண்டு -தர்க்கம் -கவி தார்க்கிக–ஸ்ரீ தேசிகர்-
நியாய மீமாம்ச வ்யாக்ரண சாஸ்திரங்களில் அவகாஹித்து தத்வ நிர்ணயம் –
பர அவர ஆத்மா -இரண்டையும் யாதாவாக ஸ்தாபித்து -பர பாஷ ப்ரதிஷேப பூர்வகமாக -நிர்ணயம் சாஷாத் நோக்கம் –
ஆத்மாவை பற்றியே சொல்ல வந்தது -பரமாத்வாவுக்கு சேஷி என்று சொல்ல வேண்டுமே –
தர்ம பூத ஞானம் -ஈஸ்வர -இரண்டையும் அடுத்து அருளிச் செய்து –
ஞானத்தால் அறிந்து அவனையே பற்றி அவன் இடமே கைங்கர்யம்- ஸ்ரேயஸ் அடைய

-285-வருஷம் கழித்து பஞ்சாங்கம் மாறும் –அயனாம்சம் -2160-ராசி மாறும் —
பங்குனி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு ஆகும் -2545-வருஷங்கள் கழித்து

அனுபந்தி சதுஷ்ட்யம் -விஷயம் -ஆத்மாவைப்பற்றி /பிரயோஜனம் -ஆத்ம விஷய யாதாம்யா ஞானம் /
சம்பந்தம் பிரதிபாத்ய பிரதிபாதக / அதிகாரி விஞ்ஞாஸூ இந்த நாலும்
முக்கிய க்ருத்யம் -தர்க்கம் சொல்வது -சாஸ்திரங்களை அனுகூலமான தர்க்கம் -சுருதி நியாயம் இரண்டுக்கும் விருத்தமாக இருப்பதை போக்கி -/
ஸ்தாபனம் -அனுமானம் கொண்டு –
இரண்டாவது ஸ்லோகம்

மேலே கத்யம் –
வேதாந்த வாக்ய கூட்டங்கள் பர அபர ஞானமே -அபவர்க்கத்துக்கு மோக்ஷத்துக்கு சாதனம் –
சர்வ சமயேஷு இத்தை ஒத்துக் கொள்ளப்பட்டது -நின் கண் வேட்க்கை எழுவிக்கவே-
ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாநாம் -மத்வ – அம்ருதத்வம் -அறிந்தவன் மோக்ஷம்
சோகமான சம்சார சாகரம் தாண்ட -ஆத்ம ஞானம் வேண்டும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -நன்கு அறிந்தவன் அவனை அடைகிறான் –
சோகம் சரீரகதம் -வேறே அறிந்தால் சோகம் போகுமே
வேதாந்த வாக்ய கூட்டங்கள் இப்படி சொல்லி இருக்க
சங்கை இருந்தால் தானே யுக்தி -நியாயம் பிரவ்ருத்தம் ஆகும் –
வேற தரிசனங்கள் -அவைதிக தரிசனங்கள் -வேதம் ஒத்துக் கொண்டாலும் ப்ரஹ்மம் ஒத்துக்கொள்ளாதவர் மீமாம்சகர் போல்வார் -அபூர்வம் கல்பித்து –
ஆந்திர அஞ்ஞானம் மலத்தை ஒழித்து -தத்வ ஞானம் சுத்தமாக தெளிவாக கொடுக்க -தர்சனம்
சாங்க்யர் வைசேஷிக -இத்யாதி –
சாருவாக்கர் புத்தர் ஜைனர் மூவரும் அவைதீகர்
மீமாம்ஸகர் -பூர்வ உத்தர -பட்ட பிரபாகர் -வைசேஷிகன் -மூவரும் வைதிகர் –
தேகமே ஆத்மா -கண்டதே கோலம் -சாருவாகர்-முதல் -சாரு வாக் -அழகாகப் பேசுவார் -ப்ரத்யக்ஷமே எல்லாம்
இந்த்ரியங்களே ஆத்மா -மனமே ஆத்மா -பிராணனே ஆத்மா –
போத மாத்திரம் -ஸுகத்தர்கள் -ஜீவாத்மா ஞானமாக தான் ஞாதாவாக இல்லை -ஞானம் உடையவர் இல்லை
ஞாதா பாவம் ஏறிடப்பட்டு-ஞாத்ருத்வம் அத்யர்த்தம் -ஞானம் ஒன்றே உண்மை
அநஹங்காரம்-அஹம் சொல்லுக்கு கோசாரமாக மாட்டார் -இத்தையே சொல்லுகிறது -அஹம் புத்தி சப்த அவிஷயம்
அஹம் -அந்தக்கரணம் இவர்கள் மதம்
ஞானத்தை ஞாதா என்று வாசனையால் சொல்லுகிறார் என்பர்

அடுத்தவர் -அஹம் -ஆத்மா என்பர் -ஆகந்துகம் -வரும் போகும் -பாஷாண கல்பம் மோக்ஷம் –
தேக இந்திரிய மந ஞானம் விலக்ஷணன் -அசாதாரணமான குணாகாரம் -என்பர் -சாஸ்திரம் அறிந்தவர் இவர் –
ஆகாசாத்வதி அசித் தானே பிரகாசிக்காது என்பர் -ஸ்வஸ்மை-ஸ்வயம் பிரகாசிக்கும் இரண்டும் உண்டே நம் சம்ப்ரதாயம்
இவர்கள் ஜடப்பொருள் போலே என்பர் -தார்க்கிகள் இவர்கள் -கணாத-கௌதம மதம் –

சாங்க்யர் -செம்பருத்தி பூ படிக்கல் -இயற்க்கை இல்லாமல் சன்னிதானம் ஏறிட்டு -பிரகிருதி ஆத்மா -வெளுப்பு –
சோக துக்கங்கள் இவர் மேலே ஏறிட்டு -மனஸ் பாலம் – வேறே வேறே ஞானம் வந்தால் இவை வாராது என்பர் –
இதுவே மோக்ஷம் -கபிலர் மதம்
உபாதி சன்னிதானம் உபாதானம் உபாதான விசேஷ ஆபாதக-தன்மை ஏறிடப்பட்டு பாதிக்கப்பட்டும் -செம்பருத்தி பூ ஸ்படிக மணி த்ருஷ்டாந்தம்
பிரகிருதி கார்ய சரீரம் -மனம் அந்தக்கரணம் உபாதி -ஆத்மாவில் ஏறிடப்பட்டு -நிர்பாதம் தோற்றும் -ராக த்வேஷ சோக துக்காதிகள்-
தோற்றம் மறைவு இல்லாத ஸ்வரூப பிரகாசம் -ஸ்வஸ்மை பிரகாசம் ஸ்வயம் பிரகாசம் – இரண்டும் -உண்டே –
மனம் வேலை இழந்த நேரம் இருந்தாலும் தான் அவருக்குத் தோற்றும் -தர்மி ஞானம் தனக்கு பிரகாசம் ஸ்வஸ்மை பிரகாசம்-
ஸ்ரீ வைகுண்டம் -அசித் -இருந்தாலும் ஸ்வயம் பிரகாசம் –

மீமாம்சகர் -ஞான ஆனந்த ஸ்வ பாவம் -வடிவம் -சித்தாந்தி போலே -போத விசேஷம் -ஆஸ்ரய ஆனுகூல்ய ஞானமே ஆனந்தமும் ஸூ கமும் –
பிரதிகூல்ய ஞானம் துக்கம் -பேரிடப்பட்டு உள்ளது –
சம்சாரித்வ ஸூகம் துக்கம் -கர்மா உபாதி

பிரமாணங்கள் -அனுமானம் -சமாதிகம்யம் -தார்க்கிக்கரும் -ஸுத்ராந்திக புத்த பக்ஷம் –
மாத்யத்மீகன்-சர்வம் சூன்யம் -உண்மையான புத்த மதம் -யோகாச்சாரன் அடுத்து -ஞானம் உண்டு –
ஞானத்துக்கு விஷயம் இல்லை -அடுத்து
ஸுத்ராநதிக்க பக்ஷம் -ஞானம் உள்ளது -விஷயமும் உண்டு -அனுமானித்து தெரிந்து கொள்ள வேண்டும் –
அடுத்து வைபாஷிகன் -ஞானம் உள்ளது விஷயம் உண்டு பிரத்யக்ஷம் பிரமாணம்-இப்படி நால்வரும்
தார்கிகர் -நீல பீத-வர்ணம் -ஞானம் -அஹம் விஞ்ஞானம் சாலம்பனம் விஞ்ஞானத்வாத் -நான் என்கிற அறிவுக்கு பற்றுக்கொம்பு –
ஆகவே ஆத்மா இருக்க வேண்டும் -அனுமானித்து
இதம் -இது சொல்ல ஆலம்பனம் வேண்டாமே –
விலக்ஷண ஆத்மா பரமாத்மா அனுமானித்து தெரிந்து கொள்ளலாம் -என்பர்
ஆகமத்தால் -அறியலாம் -வேதத்தால் -சாஸ்திரீய கம்யம் -பூத சங்காதம் ஏற்பட்டாலே பரார்த்தம் -பரன் ஆத்மாவுக்காக –
பட்டார்-தார்க்கிகர் பக்ஷம் -மானஸ ப்ரத்யக்ஷம் -நான் -எனக்கு என்னைப் பற்றி தெரியும் -நான் பிரகாசிக்கிறது எனக்கு –
அஹம் சப்த கோசாரம் அந்த அந்த ஆத்மாவுக்கு -மானஸ ப்ரத்யக்ஷ வேதம் –
பிரபாகர் -பக்ஷம் -குடம் -அறிவது -அயம் கட-இது குடம் -பிரமேயம் குடம் -பிரமாணம் -பிரமாதா இல்லை -மானம் மேயம் தான் ஒளி விடும்
கடம் அஹம் ஜானாமி -அறிகிறேன் -பிரமிதி உண்டே இதில் –
பாட்டர் அஹம் கடம் முதலில் அப்புறம் அஹம் கடம் ஜானாமி இப்படி இரண்டு படிக்கட்டுக்கள் என்பர்

சகல விஷய வித்தி -க்ராஹதயா ஏவ -கிரகிக்கும் இருந்தால் தானே கிரகிக்கப்படும் –
அடுத்து சாங்க்யர் -ஞான ஸ்வரூபம் -பிறப்பு இறப்பு இல்லாமல் ஸ்வயம் ஜோதி
ஸ்வம் பாவம்- சோ பாவ- தன் பாவம் ஸ்வபாவம் -தானே ஒளி -இதர அநதீனம்-
வேதாந்தி -ஆகமம் -அனுமானம் -மானஸ ப்ரத்யக்ஷம் மூன்றுக்கும் இடம் உண்டு
ஆத்மா வார்த்தை வியவகாரம்-நான் கையால் எடுத்தேன்-சங்கை -நான் எடுத்தேன் -நான் வேறே அஹம் வேற –
கீதா படித்து அறிந்து -ஸ்திரப்பட -என்ன அளவு -தெரியாதே -ப்ரத்யக்ஷம் இல்லை -அணு சாஸ்திரம் சொல்ல -நம்பி –
அடுத்து நித்யம் என்று அறிந்து –
தனக்கு தோன்றி -சாஸ்திரம் மூலம் உறுதி -தர்க்கம் யுக்தி மூலம் ஸ்திரப்படுத்தி -மனம் புத்தி ஆத்மாவை –
விளக்கினை விதியினால் காண -ப்ரத்யக் விஷயம் -த்யானம் -யோகஜம் –
வ்யவகாரிகம் ஆகம வேத்யம் யுக்தி யோகஜம் நான்கும் –
ப்ரத்யக்ஷமாக மட்டும் இல்லை -இப்போது இல்லை இங்கே இல்லை -அப்போது அங்கே -அறிந்து செய்ய வேண்டியது
சேஷபூதன் என்று அறிந்த பயன் பகவத் ஏக சரண்யம் -பகவத் ஏக போக்யம் என்று அறிந்து -சரணம்
ச சொன்ன உடன் கூட்டிக் கொண்டு பிரத்யக்ஷம்
சாம்யாபத்தி-அடைந்து -இப்படி ஐந்து நிலைகள் -தோன்றியதை தகவல் உடன் அறிந்து ஸ்திரப்படுத்தி –
ஸ்வ இதர விலக்ஷணன் -விசத-ஆகமம் விசததரம்-அனுமானத்தால் – விசததமம் -உபாசனம் மூலம்
அபரோஷம்-நித்யம் அணு ஞாத்ருத்வம் ஆகமத்தால் -அறிந்து -க்ருஹீதோயம் முக்த –
சங்கை இல்லாமல் நேராக அனுபவம் அங்கே

தார்க்கிகர் ஆத்மா விபு -பரம மஹான் என்பர் -இவரைப் போலே ஸ்வரூபத்தால் வியாப்தி -நையாயிகன்
வேதாந்தி அணு பரிமாணம் -வாலாக்ரா சத பாகம் சததா –வியாப்தி தர்மபூத ஞானம் –
உடம்பில் எல்லா அவயவ வலியும் உணரலாம் -சைதன்ய மாத்திரம் வியாப்தி
ஜைனர் -தேகம் அளவு-சரீர பரிமாணம் -நிர்விகாரத்வம் பாதிக்கும்
சாங்க்யர் மனஸ் அளவு-அந்தகாரணத்தால் அளவுபடுத்துகிறது உபாதியால்

ஞானத்து அளவு வியாபகத்வம் -ஸுவ்பரி -50 -சரீரத்து அளவும் வியாப்தி -ஒரே ஆத்மாதான் -அங்கும் –
யோகத்தால் பல சரீரங்களுக்கும் வியாப்தி -ஸ்வ பாவத்தால் வியாப்தி -தர்ம பூத ஞானத்தால் வியாப்தி
ஸ்வரூபத்தால் வியாப்தி நையாயிகர்
ததா ஷணிக-புத்தன் -க்ஷணிக விஞ்ஞானம் -ஞானம் உண்டு என்றாலும் க்ஷணம் தோறும் மாறும்
சாருவாகர் சரீரத்தில் சூடு இருக்கும்வரை இருக்கும் ஆத்மா -யாவது சரீரத் உஷமா
பிராகிருத பிரளயம்–மொத்தமும் அழிந்து – -ப்ரஹ்மதேவர் ப்ரஹ்ம தத்த-வரை
ஆ மோக்ஷம் -வரை ஆத்மாவுக்கு காலம் ஓவ்டுலோமி-சொல்வார்
கூடஸ்த்தர் -நிர்விகாரம் -கொல்லம்பட்டறை இருப்பது த்ருஷ்டாந்தம் -ஆத்மா நிர்விகாரம் நித்யம் -சித்தாந்தி நையாயிகர்
எல்லா சரீரத்தில் ஒன்றே என்பர் சிலர் -ப்ரீத்தி க்ஷேத்ரம் நாநா பூத சித்தாந்தி -சரீரம் தோறும் உண்டே
ஏக ஜீவ வாதம் -மாயாவாதியில் ஒரு சாரார் –
ச -அணுகாத சமுச்சயம் -இன்னும் பல மதி விகற்ப்புக்கள் உண்டே

இதே போலே பரமாத்மா -சர்வஞ்ஞன் சர்வசக்தன் -ஆதி காரணம் ஒருவனை
சாருவாகர் புத்தர் ஜைனர் -இல்லை -என்பார்
பூர்வ பக்ஷிகளுக்கும் மதிப்பு கொடுத்து அவமதியாமல் கேசித் அந்யா என்று சப்த பிரயோகம்
ஒத்துக்கொள்பவர்களும் –
அத்வைதி ஒரு சாரார் -அஸ்தமனம் இல்லாமல்-வேறுபாடு இல்லாமல் -மிதி -பிரமித்தி மேயம் மானம் மாதா இவற்றுள்ளும்
ஈஸ்வர ஈஸித்வய -மான -பேத விகற்பம் -கற்பனை என்பர் –
ஞான மாத்ர ரசமாக இருப்பர்-ஆகாசாதிகளும் கற்பனை -அவனும் கற்பனை -அநாதி அவித்யா -உபாதியால் -தோற்றப்பட்ட
உப தர்சித-வியாதி பேதம் -ஆகாசாதிகள் வேறுபாடு போலே -ஞான ஐஸ்வர்யாதி மஹிமை விகல்பயாதி –
ஆத்மா என்பதை உண்மை -ஆத்மா ஜீவாத்மா என்றால் பரமாத்மா சொல்ல வேண்டி இருக்குமே
இரண்டும் ஏறிடப்படுகிறது-என்பர் –
முத்துச்சிப்பி வெள்ளி பிரமித்து போலே -அவித்யையின் ஆதிக்யத்தால் -ஈசன் ஈஸித்வய
ஏதோக்த ஸ்வரூபம் -அவித்யா -மூலம் காம க்ரோதம் தோன்ற ஜீவன் -செல்லப்படுகிறார் -மாயை தொடர்பால் பரன் –
தத் குணசாரதயா-ப்ரஹ்மாதி ஸ்தாவரம் -வேறுபாடு இல்லாத ஒன்றுக்கு -ப்ரகல்பிதம் விவித ஜீவ பேதம்-
ஸ்வா தீந விவித விசித்திர -விவர்த்த ஸ்வபாவம் மாயையால் -பரன்
ஹிரண்யகர்ப்ப ப்ரவர்த்தகன் யோகமதம்-மரபு அணுக்கள் கூட்டம் -அறிவின் பேதம் –
மரம் ஜங்கமம்-மகரந்த சேர்க்கை குரங்கு சிங்கம் யானை மனுஷ்யன் பிரம்மன் -விஞ்ஞானிகள் கொள்கை
ப்ரக்ருதி பிராகிருதம் -அசேதன அம்சமே அறிவு -என்பர் -தனித்து மனம் ஒத்துக்க கொள்ள மாட்டார்கள்
பிராகிருத ப்ரக்ருஷ்ட சத்வம் -அதிகமான சத்வம் உள்ள பகுதி ஆத்மா என்பர் -உபாதான நிமித்த ஸ்வ தந்த்ர பிரகிருதி என்பர்
நாம் ஸ்வ தந்த்ர ஈஸ்வரன் பிரகிருதி கொண்டு
பரிணாம விஷய மாத்திரமே ஈஸ்வரன் என்று பெயர் என்பர் -ஸ்வ தந்த்ர இல்லையானால் ஆட்டிப் படைக்க பரமாத்மா இருக்க வேண்டுமே –
நித்ய உத்ரிக்த்த சத்வ பகுதி -ப்ரக்ருஷ்ட சத்வ -அதனால் சம்பாதிக்கப்பட்ட ஈஸ்வர பெயர் -என்பர் –

நியாய வைசேஷியர் –
சாங்க்ய யோக கபிலர் ஹிரண்யகர்ப்பர்
பூர்வ உத்தர மீமாம்சை
ஸ்வ தந்த்ர பிரகிருதி -பிரதானம் -சத்வ குணம் உயர்ந்த பகுதி ஆத்மாவாகி -என்பர் ஆத்மா பேரில் ஏறிட படுகிறான்
ஈஸ்வரன் உள்ளார் இல்லார் -ஆத்மாவை தவிர்ந்த இல்லையா -அஞ்ஞானம் -உபாதி -பல வாதங்கள்
பரிணாம வாதி -யாதவ பிரகாசர் பக்ஷம் -கடல் -நுரை -நீர் குமிழி அலைகள் -பேதங்கள் -எதனுடன் சேராமல் –
கடலில் வேறுபட்டவை இல்லை -பரிணாமம் போலே ஆத்மாவே பரிணாமம் -ஜடம் ஜீவ ஈஸ்வர ரூபமாய் -ஆகும் என்பர்
ஞானம் உள்ள ஆத்மா -கடல் -நுரையா அலையா நீர் குமிழியா நீரா -பிரித்து பார்க்க முடியாதது போலே –
பரிணாம வாதம் யாதவ பிரகாசர் வாதம் -ஜடம் ஆத்மா பரமாத்மா மூன்றும் உண்டு என்பவர் இடரும்

அடுத்து -அ பரிணாம வாதி
பிரதி பிம்பம் -வாதிகள் -ஆத்மாவே உள்ளது -மாயையால் பிரதிபலிக்கிறது -ஈஸ்வரன் என்று தோற்றி –
அந்தக்கரணத்தில் பிரதிபலித்து ஆத்மா -ஆத்மா உள்ளது -பரமாத்மா ஜீவாத்மா பேதம் இல்லை என்பர் –
இரண்டு பிரதிபம்பங்களே இவை
ஸூ மாயா -விசித்திர அந்தக்கரணம் -இரண்டிலும் பிரதிபலித்து
விசித்திரம் -வேறே வேரேகா காட்டும் -ஒரு சமயம் அனுகூலமாகவும் ஒரு சமயம் பிரதிகூலமாயும் இருக்குமே
ஆகவே விசித்திரம் என்கிறார் –

சித்தாந்தி -அன்யே து -இதற்கும் இந்த சப்தம் -ஸ்வ ஆதீன த்ரிவித-சேதன –
பத்த முக்த நித்ய -மூன்றும் -அசேதன -சுத்த சத்வ மிஸ்ர தத்வ காலம் -அபிமானி தேவதைகளுக்கு
குண சம்சர்கம் உண்டு என்பதால் நல்ல காலம் இத்யாதி
ஞாத்ருத்வம் இல்லாமையான நித்ய விபூதி பிரகிருதி காலம் மூன்றும் அசேதன த்ரயம்
ஞாத்துருத்வம் உள்ள பத்த முக்த நித்ய மூன்றும் சேதன த்ரயம்
ஞானம் உடைமையால் வேறுபாடு -ஞான ஸ்வரூபத்தால் வேறு பாடு இல்லை
புஸ்தகம் -ஞானமும் ஞானம் உடைமையும் இல்லை
நித்ய விபூதி -ஞான மாத்திரம் ஞானம் உடைமை இல்லை
ஆத்மா ஞானமும் ஞானம் உடைமையும் உண்டே
இவற்றின் ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஈஸ்வர அதீனம்
ஸ்வா பாவிக-இயற்கையான -நிரவதிக எல்லை அற்ற -அதிசய மேன்மை -ஞான பல ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் –
சகல கல்யாண குண ஆர்ணவம் -புருஷ விசேஷம் -சர்வேஸ்வரன் -இத்தகையவர் என்று சொல்லி –

ஸ்வரூப ஸ்வாபாவ சங்கைகளை கீழே பார்த்தோம் -இனி யார் -மத பேதங்கள்
ஹரி ஹர விரிஞ்சு பாஸ்கராதி -தத் தத் மூர்த்தி பரித்யாக -த்ரி மூர்த்தி வாதிகளும் உண்டு -த்ரய தேவா துல்யா-
மூர்த்தி விசேஷ விஷயம் -திருமேனி -பற்றியும் வாதங்கள் –
நித்யத்வ -அநித்ய -ரூபம் -இங்கு -ஸ்வரூபம் ஏற்றுக் கொண்டாலும் -பாதிக்கத்தவ பஞ்ச பூதங்களால் என்றும்
பிராகிருத அப்ராக்ருத -ஸ்வாரத்த பரார்த்தம் என்றும் -பக்தானாம் ப்ரகாஸதே-இப்படி விசாரங்கள்

பரிஜன பத்னிகள்-விசாரம் -ஸ்தான விசேஷ விசாரம் -இப்படி பலவும் உண்டே

பிரமாணம் -வேதம் மட்டுமே -/ ஆகம -அனுமானம் இரண்டையும் என்பாரும் உண்ட –
வேதம் கொண்டு அறிந்து அனுமானம் கொண்டு உறுதிப்படுத்தி த்யானம் -மானஸ சாஷாத்காரம்-
பிரேம பூர்வக -விசிஷ்ட ப்ரத்யக்ஷ சமானா காரம் –
ஆத்மா பரமாத்மா சம்பந்தத்திலும் பல வாதங்கள்
அநாதி அவித்யா உபாதியால் பேதமாக தோற்றம் -சங்கரர் -ஈசன் ஈஸித்வய தொடர்பு -கயிறு பாம்பு –
ஜீவாத்மாவாகவும் பரமாத்மாவும் மாற்றி தோற்றும் தன்மை -அவித்யை -பேதத்துக்கு இடம் கொடுக்கும் –
அபேதம் உண்மை -ஏக தத்துவமே பரமார்த்தம் –
பரமார்த்தம் -ஜகாத் பத்தி இரண்டையும் நாம் சொல்வதால் -ஒருவனே ஜகாத்தும் உண்மை –
சரீரமாக உண்மை -பிரகாரமாக உண்மை –
ஒருவன் -நிகர் அற்றவன் -ஏக சப்தம் -நம் சம்ப்ரதாயம் -..

இரண்டு தத்வ வாதிகள் –
நான் பிம்பம் இரண்டும் தெரியும் -தத்வம் ஓன்று -இரண்டாவது இல்லை – –
வ்யதிரேகம் உண்டு -பிரதிபிம்பம் இருப்பதால் –நேராகவும் சேவித்து கண்ணாடி சேவையும் சேவிக்கிறோமே –
ப்ரதிபிம்ப வாதிகள் -இரண்டு என்று சொல்ல இடம் கொடுக்கிறதே –

பாஸ்கர பக்ஷம் -ஸ்வஸ்தி ஐக்கியம் -உபாதியால் பேதம் பேத அபேத வாதம் -இயற்க்கை அபேதம் –
உபாதியால் பேதம் -ஸ்வரூபத்தால் அபேதம் என்றவாறு

நாநாதவம் யாதவ பிரகாசர்-வேறே வேறே தத்வங்கள் -அபேதமும் உண்டு -வேறு படாமையும் உண்டு –
அம்சம் அம்சி பாவம் -உடல் -கை கால் பல உண்டே -அதே போலே –
சித்தாந்தி -பரதந்த்ரா லக்ஷணை-நாநா சம்பந்த -ஜீவ பர சம்பந்தம் -பிதா -சேஷி -ஸ்வாமி -சேவக சேவகி இத்யாதி நவவித சம்பந்தம்
அப்ருதக் சித்த விசேஷணம் -சமவாயம் -வைசேஷிகர் சொல்வது இல்லை –
பரகத அதிசய ஆதேயன இச்சையா -சேஷத்வ லக்ஷணம்

ப்ராப்தியிலும் வாதங்கள் உண்டே -மரணம் -இயற்க்கை எய்தினார் பாஞ்ச பவ்திகம் -பரமபதித்தார் -ஸ்தானம் –
இறைவன் அடி சேர்ந்தார் -கைங்கர்ய -அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -ஆசார்யர் திருவடி அத்ரபரத்ர
சாருவாகர் -சர்வ சூன்யம் -ஆத்ம ஸ்வரூப அழிந்து மோக்ஷம் –
அவித்யா அஸ்மயத்தி லக்ஷணம் யோகாசாரம் அத்வைதிகள் -ஐக்கியம் –
நியாய வைசேஷகர் -ஞானம் ப்ரதயத்னம் போன்ற குணங்கள் போனால் மோக்ஷம்
சாங்க்யம் கைவல்யம் மோக்ஷம் –
சத் பாவ ப்ரஹ்ம பாவ சா தர்ம லக்ஷணம்-அத்வைதிகள் -ஒரு சிறு பகுதி நமக்கு அஷ்ட குண சாதரம்யம்
சாந்தி தேஜஸ் இவனுக்கும் வருமே
முகில் வண்ணனுக்கு நிழல் – பாட வல்லார்-சாயை போலே அணுக்கர்களே -இது வேறே
மீமாம்சகர் -ஸ்வரூப ஆவிர்பாவம் -நம் போலே -ஸ்வேந ரூபேண -இவர்கள் ஈஸ்வரனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
ஸ்வரூப ஆவிர்பாவமே மோக்ஷம்
சத் குண அனுபவ ஜனித–நிரதிசய ஸூக சம் உன்மேஷ -தூண்டப்பட்ட ஏகாந்திக ஆத்யந்திக-ப்ரஹ்மமே விஷயம்
இடைவிடாமல் -அவிச்சின்னத்வம் – -கிங்கரத்வ லக்ஷணம் -மோக்ஷம் -மேலைத்தொண்டு உகந்து –

சாதனம் -இதிலும் பல வகை
கர்ம யோகம் -ஞான யோகம் லப்யத -அன்யதர அநுக்ரஹீத அன்யதர -அங்கம் அங்கி மாறுபடும் -தரம் இரண்டில் ஓன்று –
கர்ம ஞான யோகங்களில் ஓன்று அங்கி ஓன்று அங்கம்
உபய லப்யம் -ஞான கர்ம சமுச்சயம் -அவித்யா வித்யாஞ்ச -அவித்யா ம்ருத்யம் -கர்மத்தால் சம்சாரம் தாண்டி வித்யையால் மோக்ஷம்
பக்தி யோகமே -ஞான கர்ம அங்கங்கள் -உபய பரிகர்மித்த ஸ்வாந்தம் மனஸ் -சம்ஸ்காரம் இவற்றால் –

பக்ஷங்களில் பலாபலன்கள் அறியாமல் சங்கை -குழம்பி இருக்க –
யாவது- ஆத்மா பரமாத்மா ஸ்வரூபம் சம்பந்தம் பிராப்தி சாதனம் -நிர்ணயத்துக்கு பிரமாணம் கொண்டு –
இவற்றைத் தெளிவு படுத்தவே இந்த பிரபந்தம் –

ப்ரஹ்ம மீமாம்ஸா இவற்றை விளக்க வந்தவை -இந்த கிரந்தம் மூலம் இவற்றை விளக்கி பரியாப்தி பிறவாமல்
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய மநோ ரதித்து பின்பு ஸ்ரீ பாஷ்யகாரர் அத்தை நிறைவேற்றி அருளினார்

பகவத் பாதராயணர் -ப்ரஹ்ம சூத்ர காரர்
விவரணம் -வாக்ய காரர் த்ரவிடாச்சார்யார் -விருத்தி காரர்
போதாயனர் குறிப்பு உரை
பரிமித கம்பீர பாஷாணம் –
ஸ்ரீ வத் சாங்க மிஸ்ரர் -இன்னும் விரித்து -இவர் கூரத்தாழ்வான் இல்லை
பார்த்திரு ப்ரபஞ்சர் -பார்த்திரு மிஸ்ர சங்கரர் போன்றவர் எழுதி -ஸ்புடமாகவும் அஸ்புடமாகவும்
தெளிந்து தெளிவு இல்லாமலும் -அந்யதா ப்ரதிபாதகமாய் -மதாந்தரம்-
பிரகரண கிரந்தம் -இது -ஆத்ம சித்தி -யதாவத்தாக காட்டி அருள -ப்ரதிஜ்ஜை –
ப்ரஹ்ம சூத்ரத்துக்கு -ஒரு பகுதி சாரம் பிரகரண கிரந்தம்-என்றபடி

ஸாஸ்த்ர ஏக தேச அர்த்தம் –ஒரு பகுதி மட்டுமே -ப்ரதிபாதனம் -சாஸ்த்ரார்த்த முழுவதும் அரிய உபயோகப்படும் –
பிரதமம் -ஆத்ம தத்வம் இப்படிப்பட்டது -என்று -சித்தாந்தம் -வேதாந்த தாத்பர்யம்
ஸ்வரூபம் –1-தேக இந்திரிய மன பிராணன் தீ -புத்தி -ஐந்தையும் விட அந்நிய
புத்தி ஞானம் -விஷய பிரகாசனம் -தர்ம பூத ஞானம் வேறே தர்மி வேறே -ஆத்மாவே ஞானம் -ஞான ஸ்வரூபம்
2-அநந்ய சாதனா —ஸ்வயம் பிரகாசம் -3-உத்பத்தி விநாசம் இல்லாதது -4-வியாபி -தேகங்கள் தோறும் புகுர சக்தி உண்டே –
அணு மாத்ரம் -அவன் சர்வ வியாபகம் –
5-பிரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னம்-வேறே வேறே -6-ஸ்வ தஸ் ஸூகி –எப்போதும் அனுகூல புத்தி இயற்க்கை –
ஸ்வா பாவிக ஆனந்தத்வம் –துக்கித்தவம் உபாதி அடியாகவே
கர்மத்தால் ஜென்மத்தால் முக்குண சேர்க்கையால் துக்கம் -இப்படி ஆறு பெருமைகள்

நான் என்கிற உணர்வுக்கு உடலே விஷயம் என்பர் -அதிகரணம் ஸ்தானம் இருப்பிடம் -ஸமான -அதிகரணம்
நான் என்றால் அறிவாளி அன்றோ உடம்பில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்ந்து நாக்கு சிவப்பு ஆகும்- அவயவ சேர்க்கையால் வந்த ஞானம்
அது போனால் முக்தி என்பர் –
உபசார வார்த்தை -போரில் புலி -புலி போன்ற வீரம் மட்டும் அந்வயம் -சாஷாத் –
நாம் அஹம் தேக விஷயத்தில் உபசாரம் -ஆத்மாவில் பர்யவாசிக்கும் சொல்ல
சாஷாத்தாகவே சொல்லலாம் முக்கிய வ்ருத்தி முடியாவிட்டால் தானே பர்யவசான வ்ருத்தி என்பர் -ப்ரத்யக்ஷமாக தேகம் குறிக்கும்
நான் -தேக அவயவங்களை குறிக்க வில்லையே -நான் பேசுகிறேன் -ஏக தேசம் தானே –
கிரியைக்கு உள்ள அவயவத்தையே தானே குறிக்கும்-அவயவி யான தேகத்தை குறிக்காதே -என்று ஆக்ஷேபிக்க –
உடலைப் பற்றிய அறிவு அம்சங்களைப் பற்றி இருக்க வேண்டாமே -நான் அறிகிறேன் மனசால் தானே என்னும் போது
அவயவங்களை கிரஹிக்க வேண்டாமே என்பான் -இந்திரியங்களுக்கு புலப்படாத பரம அணுக்கள் சேர்ந்து –
சேர்ந்த பின்பு -அவயவி பிரத்யஷிக்கிறோம்-
வாயு ஸ்பரிசத்தால் -வந்ததை அறிகிறோம் -ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு –
நான் ஆத்மாவை குறிப்பதாக சொன்னால் ததீய குணங்களை க்ரஹிப்பது இல்லையே
ரூபம் கந்தம் ரசம் விசேஷ குணம் –காரணங்கள் சேர்ந்து கார்யம் -காரண பூர்வகமாக இருக்கும் நியாயம்
ஞானம் சரீரத்துக்கு விசேஷ குணம் என்பர் -காரணத்தில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க -அனுமானத்தை ப்ரத்யக்ஷம் வெல்லும் என்பர் –
பரம அணு தோறும் ஞானம் உண்டு என்பார் ஆகில் சரீரத்தில் பல சேதனர்கள் உண்டாக வேணுமே -என்றும் ஆக்ஷேபிக்க -ப்ரத்யக்ஷ பாதிதம்-
விருப்பம் -தேகம் பண்பு -இந்திரியங்களுக்கு உண்டு -அசைதன்யம் கடாதிகள்-இவற்றுக்கு இல்லையே –
புடவை வேறே உடம்பு வேற -இடுப்பு உறுத்த வேறே நூல் புடவை உடுத்தி கொள்கிறோம் –
அத்யந்த வ்யாவர்த்தம் சரீரத்துக்கு சைத்தன்யம் பொருந்தும் என்பர்
தேகத்துக்கு ஞானம் அழகாக பொருந்தும் -என்பர் –
தேகம் ஏவ ஆத்மா -ப்ரத்யக்ஷமாக தெரிகிறதே -சாருவாக வாதம் -நான் அறிகிறேன் -அஹம் ஜானாமி -எத்தை அறிகிறீர் –
பருத்தவன் என்று -உயரம் சிகப்பு எங்கே இருக்கு -கண்ணுக்கு உடம்பு தானே படுகிறது -தேகத்தின் பண்புகள் –
ஆகவே நான் சொல்வது சரீரத்தை குறிக்கும் என்பர்
அஹம் சப்த கோசாரம் ஆத்மா வேதாந்தம் -அஹங்கார கோசாரம் தேகம் -ஸ்தூலோஹம் இதி தர்சநாத் –
வேறே சொல்வீர்கள் ஆகில் பிரத்யக்ஷ விரோதம் என்பர்
சேர்க்கை விசேஷத்தால் தேகத்தில் சைதன்யம் தோன்றும் -வெத்தலை பாக்கு -சிகப்பு உதாரணம்
சம்யோகம் -மட்டும் இல்லை -வாயில் மெல்லுதல் – உஷ்ணம் வர சிகப்பாக என்று ஆக்ஷேபிக்க –

துணி சித்ரம் வர்ணம் -த்ருஷ்டாந்தம் -நூலில் இல்லாத ஹம்சம் சித்திரத்தில் பார்க்கிறோம் –
மயில் கண் நூலில் இல்லா விட்டாலும் பார்க்கிறோம் –
ஆகவே காரண பூர்வகம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை -விசேஷ குணம் சேர்க்கையில் பார்க்கிறோம் –
அதே போலே தேகத்துக்கு ஞானம் இருக்கலாம் என்பர் –
விசேஷ குண காடின்யம் -பனிக்கட்டியில் -ஜல பிந்துவில் இல்லையே -காரண பூர்வகம் இல்லையே –
அடர்த்தியாக சேர்ந்ததால் வந்த தண்மை -சம்யோக விசேஷம் என்று சொல்ல
அறிவுக்கு இலக்காக உள்ள தேகம் அறிவுக்கு இருப்பிடமாக எப்படி -தேகம் அறிகிறது -தேகத்தை அறிகிறோம் -விரோதி வருமே என்றால்
கர்மாவாகவும் கர்த்தாவாகவும் –
ஆத்மா பக்ஷத்தில் இதே ஆஷேபம் வருமே என்பர்
ஞாத்ருத்வம் -மனம் கர்த்தா -தர்மி ஞானம் நான் -தன்னை உணர்ந்து –
பிருத்வி வாயு தேஜஸ் நீர் -ஆகாசம் இல்லா நான்கும் சேர்ந்து ஞானம் வரும் -கள்ளுக்கு மயக்கம் –
அதன் காரண பொருள்களில் இல்லையே -என்பர் சாருவாகர்
தேகம் விழுந்தால் மோக்ஷம் -தனித்து இல்லை

நான்கு -ஆகாசம் தவிர -மற்ற கூட்டரவே சரீரம் -சைதன்யம் ஞானம் வரலாம்–பிருத்வி அப்பு தேஜஸ் வாயு –
இவற்றில் ஞானம் இல்லா விட்டாலும் –
பனை கள்ளில் மயக்கும் சக்தி இருப்பது போலே -பூர்வ பக்ஷம் -சாருவாக லோகாயுத மதம்

மேலே சித்தாந்தம்
பிரத்யக்ஷ பிரமாணத்துக்கு விரோதம் –
அஹம் இதன்காரவ் -நான் இது சொல்லுகிறோம் -தேகம் ஆத்மா அல்லவே -அஹம் வேறே இதம் வேறே –
ஒரு பொருளில் இரண்டுக்கும் இருக்காதே -நான் உயரமானவர் -அஹம் தத்வம் வேறே இதம் வேறே அன்றோ
பிரத்யக் அர்த்தம் அஹம் -பராக் அர்த்தம் இதம் அன்றோ
என்னுடைய கை சொல்கிறோம்
இதம் -என்னும் சொல்லால் கிரஹிப்பத்து கை வீடு போலே -சரீரத்தை ஆத்மா இடம் பிரித்தே அறிய வேண்டும் –
ஸ்வ ஆத்ம கோஸரா -தானாகிய ஆத்மாவை பொருளாகக் கொண்டது அஹம் சொல்
ஸ்வ அந்யா கோசரத்வம் இதம் –
ஒரே விஷயத்தில் அஹம் இதம் இரண்டும் பொருந்தாதே –
இதம் சரீரம் கௌந்தேய -கிருஷ்ணன் மட்டும் இல்லை -நாமும் இதே பிரயோகம் செய்கிறோம்
இத்தை மேலும் விளக்குகிறார் –

நான் அறிகிறேன் -அஹம் ஞானாமி -ஞானத்துக்கு ஆஸ்ரயம் –
இது குடம் என்னும் அறிவுக்கு இருப்பிடம் ஆத்மா -விஷயம் குடம் –
ஞானத்துக்கு ஆஸ்ரயம் வேறே விஷயம் வேறே -ஆத்மா சரீரம் வேறே தானே இதே போலே
ப்ரத்யக் விருத்தி தன்னைப்பற்றிய அறிவு -இதங்கார கோசாரம் சரீரம் –பராக் —
அகங்கார கோசாரம் ஆத்மா -நிஷ்க்ருஷ்டமேவ -பிரித்தே அறிய வேண்டும்
சேமுஷி -ஞானம் -அறிவு வேறே அறிபவன் வேறே –

ஒரே விஷயத்தில் தன்மை மாறினால் -பிதாவே புத்திரனாக –அகார பேதம் ரூப பேதம் போலே
அஹம் இதம் ஒரே வ்யக்தியிலே -சொன்னால் என்ன என்றால் இது ப்ரத்யக்ஷ விரோதம் ஆகுமே –
சாருவாகன் இடம் வாதம் ஸாஸ்த்ரம் கொண்டு சொல்லமுடியாதே -அவன் அத்தை ஒத்து கொள்வது இல்லையே –
ப்ரத்யக்ஷம் கொண்டே சாதிக்கிறார்
தேவதத்தன் -தண்டம் -அஹம் தண்டி -தண்டம் பிடித்து கொண்டு இருப்பவன் -நான் கோலைக் கொண்டவர்

மனசைக் கொண்டே ஆத்மாவை அறிகிறோம் -கண்களுக்கு விஷயம் இல்லை –
நியமித பஹிர் இந்திரிய வ்ருத்தி -வெளிப்புலன்களையும் அடக்கி மனசையும் அடக்கி –
ஆத்மாவை அறியும் பொழுதே -உடம்பு தெரியாதே -அவயவ கிரஹணம் இல்லையே -ஸ்தூலமாக இருந்தாலும் –
நீ சொல்வது போலே ஒன்றாக இருந்தால் இது தெரியுமே

இதுக்கு ஆஷேபம் -நையாயிகர் பரம அணு -த்வய அணு–இப்படி மூன்று -த்ரய அணுகம் -இத்தையே ஜகத் காரணம் என்பர் –
த்ரய அணுகம் கிரஹிக்கிறோம் -அவயவம் த்வ அணுகமோ பரம அணுவோ கண்ணில் படவில்லையே –
அசேதனங்களுக்குள் சின்னதாக த்ரய அணுகம்
ஜன்னலை திறக்க -சூர்ய கிரணங்கள் -மூலம் கண்ணுக்கு தெரியும் த்ரய அணுகம் -ப்ரத்யக்ஷ யோக்ய அவயவம் -இதுவே

வெளி இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படும் அவயவி -அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹிக்கப் படும்
மனசால் நான் என்னும் சரீரத்தை அறியும் பொழுது அவயவங்கள் உடன் அறிய வேண்டும் -என்பர் பூர்வ பஷி
வ்யாப்தியை குறைக்க பிரமாணம் இல்லையே –
மனசால் கிரஹிக்கப்படும் வஸ்து வெளிப்புலன்களால் கிரஹிக்கப்படும் வஸ்து இரண்டும் இருக்க வேண்டுமே –
மனசுக்கு வெளி இந்திரியங்கள் உதவியால் மட்டுமே கிரகிக்க முடியும் -எல்லாமே அது தான் –
விசேஷணம் வேண்டாமே -நீ சொல்வதும் அங்கே போய் முடியுமே –
ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு -ஸ்பர்சத்தால் மட்டுமே அறிகிறோம் -வாயுவுக்கு அவயம் இல்லையே –
கடம் படம் -இவற்றில் அவயவங்கள் உண்டே

ஸ்தூலோஹம் -நான் பருத்தவன்–சரீரத்தின் குணத்தை ஆத்மாவிடம் சொல்லுகிறோம் –
ஸ்தூலமான சரீரத்தை ஏற்றுக் கொண்ட நான் என்று சொல்ல வில்லையே
இப்படி சொல்லும் பொழுதும் சரீரத்துக்குள்ளே அஹம் ஆகாரம் -வஸ்து தானே அஹம் கோசாரம் –
தேகத்தை அஹம் என்ற சொல் சொல்லாதே –
ஸ்தூலம் பால்யம் இவை ஆத்மா பர்யந்தம் பர்யவசிக்கும் -எனவே தேகமும் ஆத்மாவும் ஓன்று என்பார்
ஓன்று இல்லை -இரண்டு தத்துவங்களே அப்ருதக் சித்தம் என்பதால் –விட்டுப்பிரியாமல் -பர்யவசான வ்ருத்தி -அன்றோ இது –
உபசாரத்துக்காகவா முக்கியமாகவா –அதுக்குள்ளும் பரமாத்மா -இது தனி விசாரம் –

மமேதம் க்ருஹம் -பேத ப்ரதிபாதம் உண்டே -வ்யவஹாரத்திலும் காணப்படுகிறதே
என்னுடைய ஆத்மா சொல்லக்கூடாதே -சொன்னால் -நானாகிய ஆத்மா என்பதையே சொல்கிறோம் –
நடு மதியத்தில் இருக்கிறோம் சொல்வது போலே -அப்ரதானம் -உபசார வார்த்தை என்றபடி
என்னுடைய தேகம் -வ்யவஹாரம் -நானே தேகம் சாருவாகர் பக்ஷம் -உபசாரமாக சொல்வதாக கொண்டால் என்ன என்று ஆஷேபம் –
ப்ரத்யக்ஷ விரோதி ஆகுமே சிலா புத்ரேக சரீரம் அதாவது -பொம்மையின் சரீரம் –சொல்லும் பொழுது
பொம்மை ஒரு வஸ்து சரீரம் வஸ்து இரண்டு இல்லையே -இதம் அர்த்தமே பொம்மையும் சரிரமும்
மம அயம் ஆத்மா -என்னுடைய இந்த ஆத்மா –உபசார வார்த்தை -உபய பஷத்திலும் உபசார பிரயோக சம்மதம்
என்னுடைய ஆத்மா -அஹம் சப்தம் என் -மம -வந்த பின்பு மீண்டும் ஆத்மா -உபசார
என்னுடைய தேகம் -என் -என்றால் தேகம் -அஹம் சப்த கோசாரம் தேகம் ஆகுமே –
நீ இதம் சப்தம் தானே தேகம் என்றாய் -இது வரை -ஆகவே நீ உபசாரமாகக் கொள்ள முடியாதே -என்று சமாதானம் –
நான் உயரமானவர் -தேகம் உயரம் -லக்ஷணையால் தேகத்துக்கு உள்ளே இருக்கும் ஆத்மாவையே நான் குறிக்கும் என்றவாறு

இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது அவி விவேகிகள் -ஒன்றாக பார்ப்பது -எதற்க்காக என்றால் –
அபேத பிரமம் -பிராந்தி -வேறுபாட்டை கிரஹிக்க முடியாமல் –
பாஹ்ய விஷயம் -பரஸ்பர வ்ருத்தம் ரூபம் -பரிமாணம் -சங்க்யா எண்ணிக்கை-சந்நிவேசம் ஆகாரம் –
வேறுபாடு -கிரஹிக்கிறோம் -வ்யதிரேகம் புற விஷயங்களில்
ஆனால் ஆத்மாவில் -ஆத்மாக்களுக்குள் வாசி இல்லை –
சாத்ருசம்-வெள்ளி முத்துச் சிப்பி -பாம்பு கயிறு -பிரமிக்க சில ஒற்றுமைகள் இருக்க வேண்டுமே
ஆத்மா -தேகம் இரண்டுக்கும் பொது தன்மைகள் ஒன்றுமே இல்லையே –
இரண்டும் வேறே வேறே இல்லை வஸ்து ஒன்றே என்பான் பூர்வ பஷி
இதுக்கு சமாதானம்

இச்சைக்கு தகுந்த வியாபாரம் -நான் அங்கே போக நினைக்க -தேகம் -முயன்று -இச்சா சங்கல்பம் —
இரண்டும் ஆத்மா இடம் -பிரயத்தனம் -தேகத்திடம் –
இச்சா அனுவியாதி-அதன் வழி செல்லும் தொடர்பு உண்டே -பொதுத்தன்மை -சாத்ருசம் உண்டே –
இதுவே அபேத பிரமத்துக்கு காரணம் –

பிரனீஹித மனஸ்- யோகிகள் வாசியை நன்றாக அறிகிறார்கள் -அஹம் -அவயவம் இல்லாததாக -ஆத்மாவையையும்
இதம் -அவயவம் கூடி -ஸ்தூலம் தேகம் -வேறு பட்டதாக ப்ரத்யக்ஷத்தாலே காண்கிறார்கள் –

அனுமானம் -மேல் -நான் அறிகிறேன் -அறிவுக்கு -உடம்புக்கு இல்லை -வேறு பட்ட ஒன்றுக்கே -விஷயம்
அப்ரகாசமான தத் அவயவ ப்ரதிபாத்யத்வாத் –
எந்த அறிவு சரீரத்தை கிரஹிக்கறதோ அது அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹித்து அறியும்
நான் அறிகிறேன் -வேறு பட்ட ஆத்மாவை இலக்காக கொண்டதே ஆகும் –
அறிவுக்கு அவயவங்கள் பிரகாசிக்காதே –
யாது ஒரு அறிவு சரீரத்தின் அவயவங்களை இலக்காகாமல் உருவாகிறது அது ஆத்மாவுக்கே -இது முதல் அனுமானம்

சரீரம் அஹம் -என்பதுக்கு இலக்காகாது -இது என்று கிரஹிக்கிறபடியால் -இது கடம் -இது சரீரம் –
அஹம் சொல்லுக்கு பொருளை ஆகாதே -இரண்டாவது அனுமானம்

மூன்றாவது அனுமானம் -பாஹ்ய இந்திரியங்களுக்கு புலப்பட்டால் -சரீரம் -அவயவங்கள் உடன் கூடி இருப்பதால்
சப்தத்துக்கு சப்த ஸ்வரம் -இத்யாதிகள் உண்டே –
கடம் முதலானவை கண்ணால் கிரஹிக்கிறோம் -அவயவம் அற்ற ஆத்மா -கண்ணால் கிரஹிக்கப்படாதது –

எம்மா வீட்டில் எம்மா வீடு –
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
தேஹே கதம் ஆத்ம -பரார்த்தம் தேஹே

அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்–பிறருக்காக இருப்பதே இல்லை -ஸ்வ தந்த்ரன் -தனக்காகவே இருக்கும் -எல்லா பொருள்களும்
சரீரம் பிறருக்காகவே இருக்கும் -ஆத்மா மொத்தம் தனக்காகவே இருக்கும் –
அவயவங்கள் உடன் கூடி இருந்தால் பிறருக்காக இருக்கும்

ஸர்வஸ்ய பாஹ்ய ஆத்யந்த்ர போக்யம்-சப்த ஸூக -இரண்டும் ஆத்மாவின் பொருட்டே –
ஆத்மா அநன்யார்த்தம் -ஸர்வஸ்ய சேஷி -தனக்காகவே –
சரீரம் பிறர்க்காகவே ஏன் என்றால் கூட்டரவாக இருப்பதால் –
படுக்கை -ரத்தம் -நாற்காலி -அவயவங்கள் உடன் -பிறர்க்காகவே -பிறர் யார் -ஆத்மா
அவன் சரீரம் தானே ரதத்தில் -இருக்குமே -பிறர் சரீரமாக அவயவத்துடன் இருந்தாலும் என்பான் பூர்வ பஷி –
யாது ஓன்று மற்ற ஒன்றை தன் உபயோகத்துக்காக கொள்ளுமோ அதுவும் சேர்த்தி பொருள்
ஆத்மா சேர்த்தி பொருளை உபயோகமாக கொள்ளுவதால் அதுவும் சேர்த்தி பொருள் -அவயவங்கள் உடன் கூடியது என்பான் பூர்வ பஷி
அப்பொழுது ஆத்மாவும் பிறருக்காக இருக்கும் -பிரத்யக்ஷ விரோதம் பிறக்கும்
இது அறிந்து தானே சேஷி -அஹம் போகி- நானே எல்லாம் யானே என் தனதே என்று இருக்குமே —
ஆழ்வார் அத்தை சொன்னது பூர்வ பக்ஷம்
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
ஆத்மாநாம் அந்யத்-மேலே ஈஸ்வர சித்தியில் விளக்கம் கிட்டும் –

ஆத்மா கார்ய பொருளே இல்லையே -உருவாவதே இல்லை -அவயவமே இல்லை
கார்ய குண பூர்வகமாக இல்லையே -தேகத்துக்கு ஞானம் வாதம் எடுபடாதே –
கல்லில் மத சக்தி -காரண பொருள்களில் இல்லாவிட்டாலும் காரண பொருளில் இருக்கலாமே
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து மென்னால் சிகப்பு வருகிறதே –
கூட்டுறவு-சங்காதம்- -தனக்கே -தேகம் பிறருக்கே யாக இருக்கும் –
ரதம் கட்டில்-சரீரத்துக்காக உள்ளதை பார்க்கிறோம் -பிறரும் குற்றவாகவே இருக்க வேண்டும் – இது வரை பார்த்தோம் –

பரார்த்தம் –சங்காதம் -அநவஸ்தா நிலை வரும்
போக்தா வேறே போக உபகரணம் வேறே பிரித்து சமாதானம் -அனுபவிப்பவர் அன்றோ
ஆத்மா பிறருக்காகவே இல்லை சங்காதமும் இல்லையே
சங்காதம் என்று கொண்டால் வேறு ஒருவருக்காக இருக்க வேண்டும் –அதற்கும் அந்த சட்டம் வருமே –
த்ருஷ்டாந்தகத்தில் உள்ள எல்லாம் தார்ஷ்டாந்தகத்தில் வர வேண்டாமே -பக்ஷம் ஹேது ஸாத்யம்
மலை புகை நெருப்பு போலே-அனுமானம்
த்ருஷ்டாந்த த்ருஷ்ட தர்மம் மாத்திரமே கொள்ள வேண்டும் -இல்லா விட்டால் அனுமானம் வராதே

ப்ரத்யக்ஷத்தால் பேதம் -சரீர ஆத்மா -தெளிவாக இல்லா விட்டாலும் அனுமானத்தால் அறியலாம் என்பான்
தத் அசம்பாவித -ஞான அசம்பாவித சரீரே
சரீரே அபுஷ்டஸ்வேதே பேதஸ்ய-தஸ்ய அசம்பவாத் –
தஸ்மிந் அசம்பவாத்-சரீரத்தில் ஞானம் ஏற்படாதே எதனால் என்றால் —
தத் குணாந்தர -சரீர குணாந்தர வைதர்மயாதபி –பருமன் இளமை போன்றவை ஞானம் போல இல்லவே –
ஞானம் சரீரத்துக்கு குணம் ஆகாதே –
ஞானம் இருந்தால் சுகம் துக்கம் -இந்த சத்தர்மம் ஆத்மாவுக்குத்தானே
தேகம் தவிர்ந்த சங்காதம் பரார்த்தம்
தேகம் ஆகிற சங்காதம் பரார்த்தமாக இருக்காது தனக்காக இருக்கும் -பூர்வ பக்ஷி-
இப்படி இருந்தால் ஞானம் தேகத்துக்கு சொல்லலாமே என்பர்
ஆனால் தேகத்தின் மற்ற குணங்களுடன் பொருந்தாதே -என்று சித்தாந்தம்
சரீரத்தில் ஞானம் உதிக்கவே அவகாசம் இல்லையே -யோக்யதையே இல்லையே
இத்தை காரிகை -ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

காரண குண பூர்வகம் விசேஷ குணம் –அவயவத்தில் இருப்பது அவயவியில் ஏற்படும்- நூலில் உள்ள நிறம் புடவையில் –
விசேஷ குணம் -16-சாமான்ய குணம் -8-ஆக மொத்தம் -24-
கார்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் இருந்தால் காரண குண பூர்வகத்வம்
சாமான்ய குணத்துக்கு வேண்டாம்
சரீரத்துக்கு ஞானம் சொன்னாய் ஆனால் -காரண குண பூர்வகம் இல்லையே –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி –ஹேதுக
தந்து -நூல் -படம் -சமவாயி காரணம் -உபாதான காரணம் நாம் சொல்வது போலே

சமவேத குணம் சேர்ந்து இருக்கும் குணம் நூலில் -இதுவே துணியில் இருக்கும் ரூபத்துக்கு காரணம் அசமவேத குணம் ஆகும் –
சமவாயி -அசமவாயி -நூலில் சேர்க்கை -சமவாயி காரணம் –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி சமவேத குண அசமவாயிக ஹேதுவாக கொண்டு – -நூலில் வாசனை -துணியில் ரூபம் –
ரூபத்துக்கு வாசனை காரணம் இல்லையே -இத்தையே சஜாதீயம் -வி சஜாதீயம் -என்கிறது
இதே போலே சரீரம் -ஞானம் -சரீரத்தில் உள்ள குணங்கள் ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே –
சிகப்பு கருப்பு நீளம் இவை ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே
சாமான்ய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் -கொண்டே சாதிக்கிறார்

சாருவாகர் -ஆகாசம் ஒத்து கொள்ளவில்லை -நாம் அதுவும் த்ரவ்யம் -சூர்ய சந்த்ரராதிகள் இங்கே இருப்பதால்
கள்-த்ருஷ்டாந்தம் -சொல்வது பொருந்தாது –
சக்தி விசேஷ குணமே அல்லவே
சாமான்ய குணம் -தானே
ரூபம் கந்த ஸ்பர்ச ரசம் சிநேகம் சம்பசிதிகோ த்ரவ்யம் புத்தி -சுகம் துக்கம் இச்சா ப்ரயத்னம் -பாவனா -16-விசேஷ குணங்கள்
சங்க்யா பரிமாணம் பரத்வம் அபரத்வம் குருத்வம் -8-குணங்கள்
மீமாம்சகர் சக்தி -சர்வ த்ரயேஷு–கார்யம் செய்வதை கொண்டு ஊகிக்க படும் —
கார்யதவே உண்டாகும் ஒரு புலனால் அறியப்படும் ஞானம் விசேஷ குணம்
சக்தியை விசேஷ குணம் சொன்னால் என்ன என்பன்–காரண குண பூர்வகம் ஆகும் –
த்ரவ்யங்களை கலந்து த்ரவ்யத்திலே மத சக்தி உண்டாகும் என்று சொல்லலாம் என்று சமாதானம்
அணுவில் மத சக்தி வரும் என்றவாறு –
வெத்தலை பாக்குக்கும் இதே கதை -தாம்பூல ராகத்துக்கும் சிகப்புக்கும் இதே வாதம் –
இதே போலே தனித்தனி அவயவங்களுக்கும் ஞானம் இருக்கு -என்றால் பொருந்தாது –
ஒரே சரீரத்தில் பல ஞானவான்கள் சேர்ந்து ஒரு கார்யம் செய்ய முடியாதே –
அங்கி அங்க பாவமே போகுமே –
சித்ர ரூபம் பல வண்ணங்களின் சேர்க்கை -நூலில் பல வண்ணங்களின் சேர்க்கை இருந்தால் தானே முடியும் –
நாநா வண்ணம் –அந்த துணியானது பல வண்ணங்களாலான நூல்களால் ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால்
என்ன பொருந்தாமை வரும் –
அகாரண குண பூர்வகம் -ஒவ் வொரு நூலிலும் பலவண்ணங்கள் காணா விட்டாலும் –

சரீர குணங்கள் பிரத்யக்ஷமாக அறியும்படி இருக்கும் -ஆனால் ஞானம் அளவை அறிய முடியாதே —
ஞானம் சரீரத்தின் குணமாக இருக்க முடியாது என்றவாறு -ஸாத்யம் -இதுவே –
கிஞ்ச
தேகம் ஆத்மா அல்ல -குடம் போல்வன போலே
உத்பத்தி -உருவாகிறதே -இது போலே ஆத்மா இல்லையே
பிறர் பயனுக்காக –வேதாந்தத்தில் ஆத்மா தனக்காக
அவயவ சேர்க்கை –
ரூபமாதி குணம் உண்டே –
பூதத்வாத் பஞ்ச பூதங்கள் சேர்க்கை

ஸச் சித்ரத்வாத் -ஓட்டை நவ த்வார பட்டணம் -ஆத்மாவில் இல்லை
அதேகித்வாத் -இவர் தேகம் -தேஹி இல்லையே -சாருவாகரும் தேகம் என்றே சொல்லுவான்
தேகமாக
ம்ருத தேகத்வாத் -இறந்து போன உடல் போலே ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே
தேக ஆத்மா வாத நிரசன பிரகரணம் -முடிந்து இந்திரியம்

இந்திரியம் -ஸ்தூலம் இல்லை -அவயவங்கள் உடன் கூடியது இல்லையே -இத்தையே ஆத்மா
இதம் -சப்தம் அர்த்தம் –பாஹ்ய இந்திரிய க்ராஹ்யம் -வெளி புலன்களுக்கு விஷயம் -வேறே அஹம் சப்த அர்த்தம் –
உள் புலன் மனஸ்ஸூ க்கு தானே விஷயம்
அதீந்த்ரியம் -இந்திரியங்கள் -அதிஷ்டான தேசம் இந்திரியங்களால் கிரகிக்க முடியும் -மாம்ச பிண்டம் சஷுர் கோளகம் –
குணங்கள் -ரூபம் ரசம் இத்யாதிகளை இல்லையே -உத்பூத குணங்களாக இருக்காது -பிருத்வியில் காந்தம் நன்றாக தெரியும்
சப்தம் ரூபம் -ஸூ ஷ்மங்களில் தெளிவாக வெளிப்படாமல் இருக்கும்
இந்திரிய ஸூஷ்மம் தானே –மூக்கு நுனியில் தான் இருக்கு –
ஒன்றின் வியாபாரம் -பலன் -முயன்றவர் இடம் -அத்யயனம் பண்ணினவன் இடமே -யத் வியாபார பலம் யதி தத் தன்னிஷ்டம் –
அர்த்த சன்னிகர்ஷம் -நேர் ஆதி தொடர்பு ஞானத்தின் மூலமாக -ஞானம் த்ரவ்யம் குணம் இரண்டு ஆகாரம் -நம் சம்பிரதாயத்தில்
தண்டம் -சக்கரம் -உண்டான குடம் தண்டத்திடம் இல்லையே -த்ரவ்யத்துக்கு இந்த சட்டம் இல்லை
குளித்தால் சரீர சுத்தி புக்கியம் -த்ரவ்யம் இல்லை –
ஞானம் -சாருவாகனுக்கு த்ரவ்யம் இல்லையே
தண்டம் வைத்து குடத்தை உடைத்தால் -அபாயம் தண்டத்தில் இல்லையே -சூரணமாக இருப்பதில் குடத்தில் இல்லாமை இருக்குமே –
பிறப்பது என்றாலே போகுமே -ஸ்ரீ கீதை –
குடம் -அபாயம் -சூர்ணத்தின் அவஸ்தையில் தொடக்கம் -கட்டத்தில் சூர்ணத்தின் அழிவு -இப்படித்தானே
த்ரவ்யத்தில் அபாவத்திலும் பொருந்தாதே –
ஞானம் அபாயம் இல்லை -த்ரவ்ய பின்னம் தானே ஆகவே பொருந்தும் என்பான்
த்ரஷ்டா சஷூஸ் பார்ப்பவர் கண் -கர்த்தா -ஞாதா -ஞானம் குணம் ஆகும் -ஆப்த வாக்கியம் சத்யதபா முனிவர் வார்த்தை
மேலே சமாதானம் -தது ந –சொல்லி மேலே விளக்குகிறார்

விகல்பம்–ஒவ் ஒரு இந்திரியம் தனி தனி ஆத்மாவா -ஐந்தும் சேர்ந்து ஒரே ஆத்மாவா –
ப்ரத்யேகம் -என்றால் -ப்ரதிஸந்தானம் -ஒவ் ஒன்றும் ஆத்மா -கண்ணால் பார்த்த நான்
பழம் கொடுத்தேன் சொல்ல முடியாதே -அவர் வேறே இவர் வேறே -பொருந்தாதே –
எதை நான் பார்த்தேனோ அதை நான் தொடுகிறேன் சொல்ல முடியாதே
சேர்ந்தே ஆத்மா என்றாலும் -பொருந்தாதே -ஒரு இந்திரியம் இல்லாமல் வாழ முடியாதே -பிரத்யக்ஷ விரோதம் வரும் –
கண் போனால் முன்பு பார்த்தவர் நினைவு வரக் கூடாதே கண்ணுக்கு ஞானம் என்றால் –
வியாபார பலன் வாதமும் தப்பு -சாஸ்த்ரத்தால் வெட்டினால் பாபம்–த்ரவ்யம் இல்லை -அபாயமும் இல்லை –
உன் சட்டம் செல்லுபடி ஆகுமே – கத்திக்கு போகாமல் ஆத்மாவுக்கு அன்றோ
ஆப்த வசனம் -அவர் சொன்னது -இந்திரனும் ஸ்ரீ மந் நாராயணன் பேச உபநிஷத் கதை –
வராஹம் வேடன் வேஷன் -போட்டு வர -ரிஷிகள் -இருக்கு இல்லை சொல்ல முடியாமல் -யா பச்யதி ந ப்ரூயதே
-கண் பார்த்தது அது பேசாதே -பேசுவது பார்க்க வில்லை -வேடனே கண்ணு பேசுமா வாக்கு காணுமோ –
த்ரஷ்டா கண் தானே -என்ற இடம் -அனிதா வேறு பயனுக்காக சொன்னது -சரணாகாத பரித்ராயணத்துக்காக சொன்னது –
இந்திரியங்கள் ஆத்மா அல்ல -என்று நிரூபணம் –

மனமே ஆத்மா -அடுத்து
முன்பு சொன்ன தோஷங்கள் வராதே -உத்ப்பூதம் ஸ்தூலம் –
பலவா ஒன்றா வம்பு இங்கு இல்லையே –
வெறும் கருவி தானே -ஆத்மா தானே கர்த்தா -ஆத்மாவின் தர்மா தானே கர்த்ருத்வம் –
இந்திரியங்களின் தலைவர் மனஸ் -தெரிகிறது லோகத்தில் -பிரதி சந்தானம் குறை வராதே –
ஞானம் பதிவது மனசில் -ஞான ஆஸ்ரயம் -தரிசன அனுசந்தான ஆதாரம் -பார்ப்பதும் நினைவும் -இங்கே தானே –
ஒரு இந்திரியம் போனாலும் வாழலாம் -அந்த குறையும் இங்கு இல்லையே –

தத் அபி ந -முதல் ந -அப்புறம் தத் ந
மனம் கர்த்தா அல்ல -கரணமான படியால் -கண்ணைப் போலே சிந்திக்கும் கருவி
எனவே ஞானம் இல்லை -ஞானத்துக்கு இருப்பிடம் வேறே கருவி வேறே அன்றோ
பாஹ்ய ஆந்திர சகல விஷய சம்வேதன ஞானம் அறிவிக்கும் கருவி தானே மனஸ்ஸூ
பாஹ்ய இந்திரிய அதன் அதன் விஷயம் -தொடர்பு -யுகபத் ஒரே காலத்தில் -அனைத்து ஸ்ருஷ்ட்டி போலே –
யுகபாத் ஏவ சர்வ விஷயமும் தோன்றாதே -எதனுடைய உதவி இல்லாத போது வஸ்து பிரகாசிக்காதோ –மனஸ் தானே க்ரஹிக்க வேண்டும் –
ஸூகம் போன்றவை -இவற்றுக்கும் கருவி வேணும் -கிரியை -என்றாலே கரணமும் கர்த்தாவும் வேணுமே -ஆத்மாவும் மனசும் வேண்டுமே –
ஞான கருவியே மனஸ்ஸூ -கர்த்தா அல்ல என்றதாயிற்று -ஞான ஆஸ்ரயம் ஆகாதே
கர்த்தா என்றாலே ஸ்வதந்த்ரர் -கருவி மற்றவர் விருப்பம் படிதானே

மேலே ஸ்வா தந்தர்யம் விளக்கம் –விருப்பம் தகுந்த-கார்யம் செய்யும் கருவி கொண்டு -அடைய
தன இடத்தில் உள்ள இச்சையால் செயல்படுவது ஸ்வ தந்தர்யம் –
பர அதிஷ்டானம் பிறர் நியமனத்தால் -செய்யும் மனஸ் -ஆத்மாவாகாதே -பரஸ்பர விருத்தம்-
மனம் ஆத்மா அவருக்கு கரணம் என்றால் -கர்த்தா கரணம் வேறே வேறே ஒத்துகே கொண்டாலே –
உன் சித்தாந்தம் பலிக்காதே -பேரிலே தான் வாதம் —
ஏவ கண்களால் ரூபம் -சுகாதிகளை மனசாலே க்ரஹிக்கிறார் ஆத்மா
லோக வியாபாரத்துக்கு ஒத்து போகாதே -மனம் கரணமே பரதந்த்ரமே ஞானம் இல்லை ஆத்மா இல்லை
அஹம் சப்த கோசாரம் ஆகாதே –
மன ஆத்மவாத கண்டன பிரகாரணம் முற்றிற்று

மேலே மனஸ் என்ன என்று விவரிக்கிறார்
சம்பிரதாயம் பகவான் இடம் மட்டுமே ஸ்வா தந்தர்யமும் தானே ஏறிட்டுகே கொண்ட பாரதந்தர்யமும் உண்டே
வேறு ஒரு வியக்தியில் இரண்டும் இல்லையே –

அதிஷ்டானம் -நியமனம் என்றபடி இருக்கிறது மட்டும் இல்லை —ஒரே ஆத்மா தான் நியமிப்பான் -சரீரத்துக்குள் பல உண்டே —
தேகம் மனம் இந்திரியம் -மூன்றும் கர்மத்துக்கு அனுஷ்டானம் -கர்ம சாபேஷத்தால் ஈஸ்வரன் நியமிக்கிறார் –
மன வைத்தியர் -கண் வைத்தியர் போலே -அனைவரும் மனோ வியாதிக்கு ஆள்பட்டு இருப்பதால் –
கண்ணுக்கு உபகரணம் கண்ணாடி –கண்ணே கரணம் தானே -மனசுக்கு என்ன பண்ணலாம் –
மற்ற கரணங்களுக்கு மனஸ் சஹகாரி வேண்டும் —

விஷயங்களை இந்திரியங்களை கிரகிக்க -மனஸ் இந்திரியம் விட வலிமை –
புத்தி விவேக ஞானம் அத்தை விட வலிமை -அதிருஷ்ட ரூபமான அனுக்ரஹம் -த்யான ரூபமான கர்மம் –
சத்வம் வளர்ப்பதே மனசுக்கு உப கரணம் –
சத்வ குணம் –கர்மம் பண்ண -ஞான யோகம் -பகவத் பிரீதி வந்து -மனஸ் வியாதி போகும் –
மனஸ் சமாதானம் கோயில் சேவை -வளர்க்க வளர்க்க -ஆகார சுத்தி -சத்வ சுத்தி -துர்குணங்கள் போக்க –
காமம் போக்க வைராக்யம் கோபம் போக்க பணிவிடை செய்து -இதுவே மாற்று மருந்து –
மனசுக்கு பிரகரணம் கண் காது இத்யாதி -மன நோய் மருத்துவர் தூங்க வைப்பர் இதன் அடிப்படையில் –
நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் -நோய் முதல் நாடி தீர்ப்பது -அதுவே அத்தை அறிவது கஷ்டம் தானே குழம்புகிறோம்
ஆந்திர ஞான கரணம் –உள் இந்திரியம் -உள் அறிவு புலன் -த்ரவ்யம் –
யுகபத் ஞான-ஒரே காலத்தில் ஏற்படாதே -கண் காது -சுவைப்பதும் கேட்பதும் பார்ப்பதும் ஒரே அளவிலே பதிவாகாதே –
புலன் உடன் தொடர்பு கொண்டு மனஸ் கிரகிக்கிறது -அதுவே மனசுக்கு லிங்கம் அடையாளம் –
ஞானம் -அறிவு -ஸ்மரணம் -நினைவு -சம்ஸ்காரம் -மனப்பதிவு -விஷய சுகம் ஏக காலத்தில் –
பதித்தது அனைத்தும் ஏக காலத்தில் நினைவுக்கு வர வில்லையே –
யுகபத் ஞானம் -வேறே
யுகபத் ஸ்மரணம் –பண்பு பதிவுகள் –நினைவும் மனசும் ஒன்றா வேறே வேறாயா -அவன் கேள்வி –
கொஞ்சம் கொஞ்சம் எப்போதோ எப்போதோ நினைவுக்கு வருகிறதே –
பதிக்கப்பட்ட வரிசையில் நினைவு வருகிறதா -இல்லையா –
மனசை ஒருமைப்படுத்தினாலும் நினைவு வரிசைகளை மாற்ற முடியாதே –
அனுபவித்த சகல விஷய நினைவுகளும் ஒரே காலத்திலேயே வராதே –
சுக துக்க ரூப கர்மங்கள் –அதிருஷ்டம் –வாயிலாக என்று கொள்ளலாமா -என்றால் –
ஆத்ம ஸ்வ பாவமே க்ரமமாகவே ஞானம் கொடுக்கும் -இப்படி இரண்டு விகல்பம்
இரண்டும் ஒத்து வராது –

துணி -சமவாயி தந்து -அசமவாயி நூலுக்கும் நூலுக்கும் சேர்க்கை -நிமித்தம் -உண்டை பாவி -நையாயிகர் இந்த மூன்று காரணங்கள்
சுக துக்கம் ஏற்படும் -சுக ஞானம் துக்க ஞானம் -இதுக்கு -சமவாயி காரணம் -ஆத்மா -நிமித்தம் –
வெளி விஷயங்கள் -அதிருஷ்டம் -அசமவாயி -சமவாயி உடன் தொடர்பு-சம்யோகத்துக்கு ஓன்று வேண்டுமே அது மனஸ்
மனம் த்ரவ்யம் சித்திக்கும் என்பான் –அது பொருந்தாது -தார்க்கீகன் -மனஸ் ஒன்பதாவது தத்வம்
சுக -துக்க -பூர்வ கால ஜென்ம ஞானம் இருக்க வேண்டுமே அபிமத அநபிமத விஷய தொடர்பு ஞானம்-நெருப்பு -உஷ்ணம் அறிந்து தொட்டால் சுடும் –
இந்த ஞானத்துக்கு இருப்பிடம் ஆத்மாவில் -இதனால் சம்யோகம் -இதுவே அசமவாயி காரணம் -மனஸ் வேண்டாமே –
விஷய ஞானத்துக்கு அசமவாயி -அதுக்கு அசமவாயி -இப்படி மேலே மேலே எவ்வளவு கேட்டாலும் மனஸ் வேண்டாம் என்பான் –
விஷயத்துடன் தொடர்பு உள்ள வெளிப்புலன் அதன் உடன் தொடர்பு கொண்ட -ஆத்மா–அது தான் அசமவாயி –
வெளிப்புலன் தொடர்பு -சப்தாதிகள் இந்திரிய தொடர்பு –
மனசை ஒத்து கொள்ளாதவன் அன்றோ –
இந்திய பொருள் சம்பந்தத்துக்கு அசமவாயி இந்திரிய கிரியா செயல்பாடு
அதுக்கு இந்திரிய ஆத்ம சம்பந்தம் –
அதுக்கு அதிருஷ்டம் கர்மமும்
அதுக்கு பிரயத்னம் அசமவாயி
அதுக்கு கர்தவ்யதா ஞானம் –

சுக துக்கம் அனுபவிக்க த்ரவ்யாந்தரம் -மனசை கல்பிக்க வேண்டாமே -என்பன் பூர்வ பக்ஷி –
நித்ய த்ரவ்யம் -விசேஷ குணம் –த்ரவ்யாந்தர சம்யோகம் தேவை –
மாங்காய் -நாலு நாள் கழித்து மாம்பழம் -பார்த்திப -பிருதிவியின் -பரம அணு –
தேஜஸ் சம்பந்தம் பட்டு கட்டியாக இருந்தது மெலிதாக -சுவையும் மாறி-பச்சை மஞ்சள் – –
அனுமானித்து சம்பந்தம் -தேஜஸ் சம்பந்தம் உணர்கிறோம்
ஆத்மா -சுக துக்கம் -விசேஷ குணம் -இதுக்கு மனஸ் -என்று சொல்லப் போனால் இதுக்கும் வேண்டாமே என்பான்
இஷ்டம் கிடைத்தது தெரிந்தால் சுகம் -அநிஷ்டம் கிடைத்தது தெரிந்தால் துக்கம் -பிராப்தியும் அறிவும் வேணுமே–
இத்தை அசமவாயியாக கொள்ளலாமே என்பான் -மாங்காய் மாம்பழம் நேராக பார்த்து அறிகிறோம் –
பிரத்யக்ஷமாக சம்பந்தம் தெரியாமல் அனுமானிக்கிறோம்
இங்கு அது வேண்டாமே என்பான்
துணி -தந்து -சமவாயி காரணம் -நூலுக்குள் சம்பந்தம் அசமவாயி -தறி உண்டை பாவு நிமித்தம் –
இங்கு காரணம் கிடைப்பதால் அனுமானிக்க வேண்டாமே என்பான் -பூர்வ பக்ஷி

வ்யாப்தியில் தப்பு இல்லையே -நித்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் கிடைக்க த்ரவ்யாந்தர சம்பந்தம் வேணும் –
என்கிற வ்யாப்தியில் குற்றம் இல்லையே –
த்ரவ்யாந்தரம் இருக்க ஒத்துக் கொண்டால் மனசை கல்பிக்கலாமே –
த்ரவ்யாந்தம் ஒத்துக் கொண்டு –அக்னி -சரீரம் தொடர்பால் -மாறுதல் -ஸ்பர்சத்துடன் கூடிய த்ரவ்யந்தரம் -பவ்திகமாகவும் இருக்க வேண்டும் –
மனசை தொட முடியாதே –
ஸ்பர்ச வைத்த த்ரவ்யாந்தரம் -ஆத்மா தேகம் சொல்லலாமே -மனஸ் கண்ணுக்கு தெரியாதே -தேகம் காணலாம்
தேகத்துக்கு தானே சுகம் துக்கம் -அவயவங்களுடன் இருப்பதால் –
கண்ணுக்கு ஸூஷ்மமும் பாஹ்ய குழகமும் உண்டே -மனசுக்கு வலிக்காதே
மனஸ் பவ்திக்கமா இல்லையா விசாரம்
பஞ்ச பூதங்களை விட வேறுபட்டதா இல்லையா –
அனுமானத்தால் வேறுபட்டது என்று சாதிக்கலாம் -மனஸ் சேர்ந்தால் தானே-சப்தம் -ஆகாச குணம் -கிரஹிக்கும்–
ஆகாசம் பிரதானமாக கொண்ட காது -மற்ற ஒன்றை கிரகிக்காதே
ஆகாசாத் வாயு -கண் அக்னி -ஜாலம் -நாக்கு -பிருத்வி மூக்கு -கிரஹித்து அவ் இந்திரியம் அதில் இருந்து உருவானது –
பவ்திக்க இந்திரியம் தனக்கு உள்ளதை தான் கிரகிக்க வேண்டும் வேறே ஒன்றை கிரகிக்கக் கூடாதே
பூதாந்த்ர குணம் கிரகிக்கக் கூடாதே -ஆகவே மனஸ் அபவ்திகம்
நாக்கை போலே இருக்க கண் இல்லை -இது போன்று ஐந்தும் இல்லை -மனம் -ஐந்தையும் கிரகிப்பதால் –
சரீரம் போலே பாஞ்ச பவ்திகம்-என்னலாமே-எண்ணில் —
காது -ஆகாசம் மட்டும் இல்லை பஞ்சீ கரணம் -மற்ற நான்கும் தொட்டு கொண்டு இருக்குமே
மனம் அன்ன மயம் சோம்ய–வேதம் -உபாதானமாக கொண்டது என்று சொல்ல வில்லை -தத் ஆதீன வ்ருத்தி -என்றவாறு –
அன்னத்தால் போஷிக்கப்பட்டுள்ளது என்றவாறு –
ஆபோ மயப்பிராணன் -பிராணன் தண்ணீர் மயம் சொல்வது போஷிப்பதால் -அதனால் ஆக்கப்பட்டது இல்லை
மோக்ஷ தசையில் மனஸ் உண்டு
மனசான் யேதான் காமான் காம ரூபியான் சஞ்சரன் –சாந்தோக்யம் –அபவர்க்க தசையில் மன அநுவிருத்தி –
அப்ராக்ருத மண்டலம் அன்றோ -ஆகவே பிராகிருதம் இல்லை –
மனமே திவ்யமான கண் -சுருதி -அது போலே இங்கும் என்பான்
பரமாத்மாவுக்கு மனசால் சங்கல்பித்தது என்கிறதே எனவே பவ்திகமாக இருக்க முடியாதே என்பான்
நீ சொன்னதில் பாதியை ஒத்துக்கொள்கிறேன் –
த்ரவ்யாந்தரம் கல்பிக்காமல் -பவ்திகமே
புத்தியே மனஸ் -நல்ல புத்தி உடையவன் மனசே
புத்தி -ஞானம் -மனஸ் கரணம் -என்று வாதிப்பான்
நிலை வேறுபாடு -கலக்கமான மனஸ் -தெளிந்த மனஸ் -சந்தோஷிக்கும் மனஸ் சொல்கிறோம் –
புத்தி அகங்காரத்தை சொல்கிறது என்பான் -பூர்வ பஷி
உச்யதே –ஆத்மா மனமா இல்லையா என்று தானே பேச வந்தோம் –
புத்தியே மனமாக இருந்தாலும் -சேதனத்வம் ஞாத்ருத்வம் இல்லையே -புத்தி என்றாலும் ஞாத்ருத்வம் வராதே –
ஆத்மா மனஸ் இல்லை என்று நிகமித்தார்

அடுத்து -பிராணன் -தான் ஆத்மா என்பான் -ஜீவன் பிராணன் கூடிய சரீரத்தை சொல்கிறோம்
உத்க்ரந்தி -லோகாந்த்ர கமனம் -நகர ஸ்பர்சம் வேணுமே புது சட்டம் -வாயுவுக்கு ஸ்பர்சம் உண்டே –
ஆத்மா கிலாபத்தை சுருதி சொல்லுமே –
பிராணன் உடன் இருந்தால் தானே ஜீவதி-என்றும் -இல்லா விட்டால் ஆத்மா இல்லை என்றும் சொல்கிறோமே –
இது சரி இல்லை
வாயுவான படியால் பொருந்தாது -சைதன்யம் இல்லையே வாயுவுக்கு -வெளியில் உள்ள வாயு போலவே உள்ளே இருக்கும் பிராணனும்
நிர் வியாபாரம் -தூங்கும் பொழுதும் – ஆத்மா தூங்கும் பொழுதும் பிராணன் வேலை பார்த்து -வ்ருத்தி உண்டே
உண்டது ஜெரிப்பதும் பிராணன் -சப்த தாதுக்கள் -ரத்தம் இத்யாதி -இதனாலே -வைவரானாக்னி ஜடாராக்கினி —
நாலு வித அன்னம் தளிகை பண்ணுகிறேன் – முழுங்குவது போன்றவை -பிராணாயாமம் முக்கியம் –
வாதம் பித்தம் கபம் மூன்றும் சமமாக ஆக்குவதே ஆயுர்வேத வைத்தியம்
உண்டதும் பருகினதும் பரிமாணம் –பிராணன் வேலை செய்வதால் –
சுவாசம் -வெளி மூச்சு நடப்பது ப்ரத்யக்ஷம் அன்றோ தூங்கும் பொழுதும்
கோஷ்ட்ய மாருதம் -பிராணன் -அபான சமாயுக்த –
தண்ணீராலே நன்றாக எறியும் வாயு வயிற்றுக்குள்ளே –
கடலுள் பாடவாகினி உண்டே -அதே போலே –
பஞ்ச வ்ருத்தி பிராணன் -வேலைக்கு தக்க பெயர் -ஒரே வாயு -கண்டம் முகம் மூக்கு -உள்ளே சென்று –
வெளியில் வந்து பூரகம் ரேசகம் கும்பகம் நிறுத்துவது –
தோலால் தொட்டுப்பார்க்கலாம் -ரேஸிகத்தை வெளியில் வரும் காற்றை தொடலாமே -கடத்தை போலே -ஆகையால் -ஆத்மா இல்லையே –
தேக ஆத்ம ஒன்றே நிரசன வாதமே இதுக்கும் உண்டே தனியாக நிரசிக்க வேண்டாமே
பிரயாணம் -ஸ்பர்சம் -சொன்னாயே -கதி ஆகதி-ஆத்மா அணு வாக இருக்கும் -ஸ்பர்சம் இல்லாமலும் இருக்கும்
பிரயத்தனம் -கர்ம-இவற்றால் தூண்டப்பட்ட -மனசை போலே உதக்ராந்தி-மனஸ் ஸூஷ்மம் இருந்தாலும்
ஸ்பர்சம் இல்லாமல் இருந்தாலும் மனசு செல்வதை பார்க்கிறோமே
ஸ்தூலமாக இருந்தால் தாள் கதி க்கு ஸ்பர்சம் வேண்டும் –
ஆத்மாவுடைய பரிமாணம் மேலே விரிவாக சொல்லுவேன் –
இதி பிராண ஆத்மா ஒன்றே வாத நிரசனம்

அடுத்து சம்பவித்தே ஞானம் -புத்த மதம் நிராசனம் -அயம் கட-உத்பத்தி விநாசத்துடன் கூடிய ஞானத்தை சொல்கிறான் –
தர்ம ஞானத்தை சொல்கிறான் -தர்மி ஞானத்தை இல்லை
பாட்டன் மீமாம்சகர் அனுமானித்தே ஞானம் இருப்பதை அறியலாம்
அஜடத்வாத்–ஸ்வயம் பிரகாசம் -தானே விளங்கும் –மற்று ஒன்றினால் பிரகாசம் ஜடம் –
விளக்கும் ஜடம் -ஞானத்தை பயன்படுத்தியே விளக்கு என்று அறிகிறோம் -தேஜஸ்ஸை சொல்லவில்லை –
வ்யவஹார ஹேதுவை பிரகாசம் என்கிறோம் இங்கு
ஆத்ம ஞானம் தானே பிரகாசிக்கும் -பரமாத்மா -ஸ்ரீ வைகுண்டம் ஞானம் இவையும் ஸ்வயம் பிரகாசம்
புத்தர் ஞானமே ஆத்மா அது க்ஷணிகம்
அத்வைதி ஞானமே ஆத்மா நித்யம்
ஆத்மா அஜாதம் ஸ்வயம் பிரகாசம் சுருதி சொல்லும் -சம்வித்தும் அப்படியே -ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஒன்றே
மடப்பள்ளி போலே புகை இருந்தால் நெருப்பு -அன்வயம்
ஆத்மா போலே வேறு அஜாதம் இருந்தால் தானே சொல்ல முடியும்
அன்வய வ்யாப்தி சொல்ல முடியாதே
எங்கு எங்கு நெருப்பு இல்லையோ அங்கு அங்கு புகை இல்லை
யத்ர யத்ர அநாத்மத்வம் தத்ர தத்ர ஜடத்வம்
யத்ர யத்ர அஜடத்வம் அங்கு அங்கு ஆத்மத்வம் -சொல்ல முடியாதே
இதுக்கு த்ருஷ்டாந்தம் -கடத்தைப் போலே-
ஞானம் ஸ்வயம் பிரகாசம் -அசித் ஸ்ரீ வைகுண்டம் போலே
ஜீவனும் பரமாத்மாவும் ஸ்வயம் பிரகாசமும் சித்தும் –
ஞானத்துக்கு அஜடத்வம் சத்தையாலே பிரகாசிக்கும் -பிரத்யக்ஷம் –
சம்வித் இருக்கும் பொழுது விளங்க வில்லை என்பது இல்லையே -சதி சம்வித் –

அதுக்கு -பட்டார் மீமாம்சகர் -ஆபேஷம் -அனுமானம் -ஞானமே அனுமானித்தே அறிவோம் என்போம் –
நீலக் குடத்தை பார்த்து –நீலம் என்றும் குடம் என்றும் விஷய மாத்திரம் -அநீதம் அதீத ரூபம் –
அறிகிறோம் ஞானம் என்று ஓன்று தனியாக இல்லையே
அனுமானித்தே ஞானம் என்று அறிகிறோம்
இது குடம் -குடம் அறியப்பட்டது -குடத்தில் ஒரு தன்மை அறியப்பட்டது தன்மை வைத்து அறிவு வந்ததாக அனுமானம் –
ஸ்வரூப சத்தையால் இல்லை -இந்திரியம் -அர்த்த சன்னிகர்ஷம் வந்தாலே கிட்டும்
கண் குடத்தை -பார்த்தது என்ற ஞானம் வரவில்லை —
ப்ரத்யக்ஷம் — இந்த்ரியமும் பொருளை தொடர்பு வந்ததும் ஞானம்
அனுமானத்தின் அப்படி இல்லை -எங்கு எங்கு புகை அங்கு நெருப்பு -ஞானமும் வேணும் த்ருஷ்டாந்தமும் வேணும்
இருந்தால் தானே நெருப்பை அனுமானிக்கலாம்
எங்கு எங்கு எல்லாம் அறியப்பட்ட தன்மை உள்ளதோ -என்று பார்த்த குடத்தில் தன்மை ஏறிட்டு –
அதனால் ஞானம் அனுமானித்து அறிகிறோம்
குடத்தில் அதிசயம் -இந்த அறியப்பட்ட தன்மை -ஞாததா – ஆகந்துக பிரகாசத்தால் தரிசனத்தால் -பிரத்யக்ஷம் –
சம்வித் ஆத்மா இல்லை -இவரும் நம்மைப்போல் –
இரண்டு பக்ஷமும் தப்பு –பிரத்யக்ஷத்தாலே -ஸ்தாபித்து -ஞானம் உடையவன் தான் ஆத்மா ஞானம் ஆத்மா இல்லை –
இது தர்ம ஞானத்தை பற்றி -தர்மியும் தர்மமும் வேறே வேறே தானே
நன்றாக பார்க்கிறவர் -ஞானத்தை தவிர்ந்து ஞதாதா பார்ப்பவர் யாரும் இல்லையே -அர்த்த தர்மம் -ஞதாதா
ரூபம் தான் பார்க்கிறோம் -ஞதாதா உடன் இருந்ததை யாரும் பிரத்யக்ஷமாக காண முடியாதே
ஞானத்தைக் கொண்டே சகல வியாபாரமும் பொருந்தும் ஞத்தாவை கற்பிக்க வேண்டாமே
இது குடம் -ஆத்மாவுக்கு ஞானம் -ஞாதா ஞானம் ஜேயம் மூன்றும்
வித்தி -விதித்திரு ஞாதா பிரதிபாத சூன்யம் -இது குடம் -என்பதில் ஞானமும் இல்லை ஞாதாவும் இல்லையே –
இது குடம் என்றாலே நான் குடம் இருப்பதை பார்க்கிறேன் என்பதே தான்
வேறே வேறே பிரயோகம்
இது குடம் எனக்கு தெரியுமா தெரியாதா தெரியவில்லை யாரும் சொல்ல மாட்டார்
தசரதன் ராமன் தந்தை -தசரதன் இடம் ஞாததா ஏற்பட்டு அறியவில்லை
கல்கி இது போலே -விஷய கிரஹணம் -அனுமானிக்க முடியாதே –
ஞானத்தால் வியவகாரம்- வாக்கால் பேசுவோம் -மாற்றி சொல்ல முடியாதே
என்னால் நினைக்கப்பட்டது வாக் வியாபாரம் -பூர்வகம் -ஞானம் -இருக்க வேண்டும் –
முன்பு வேடு பறி உத்சவம் பார்த்ததை-ஸ்ம்ருதி -அப்புறம் வாக்கால் சொல்லுகிறோம் –
அன்யோன்ய ஆஸ்ரம தப்பு வரும் -வெட்கம் இல்லாதவன் தான் நான் வியவஹாரம் செய்வதால் ஞானம் அனுமானிப்பான் –

பிரகட புத்தர் -அனைத்தும் சூன்யம் –
அத்வைதி மறைந்த புத்தர் –
ஞானம் அனுமானித்து அறிகிறோம் என்கிற மீமாம்சகர் பக்ஷம் –
இதில் அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வரும் என்பதை பார்த்தோம்
மீமாம்ச பக்ஷம் நிரசித்த பின்பு மாற்று இருவரையும் நிரசிக்க வேண்டும் ஞானமே ஆத்மா -ஞாதா ஜேயமும் பொய் என்பர் –
இது குடம் -விஷயம் மட்டும் -அறிவாளியை பற்றும் அறிவையும் பற்றியும் இல்லை
நான் குடத்தை அறிகிறேன் -மூன்றும் உண்டே
பேதம் பிராந்தி மயக்கம் -என்பர் –

புத்தன் சொன்ன ஹேதுவை அத்வைதி -முன் முன் க்ஷணிக ஞானம் —
தண்டம் -தண்டி -தண்டி பிள்ளை -க்ஷணிக விஞ்ஞானம் -ஒரு வினாடி ஞானம் அப்புறம் இருக்காது –
ஆத்மாவே ஞானம் என்றால் ஆத்மா வேறே வேறேயா -நேற்று மண்டபத்தை பார்த்த நான்
இன்று அங்கு இருந்து உண்கிறேன் –நேற்று மண்டபம் எல்லாம் பொய்
இத்தை அத்வைதி கண்டனம் –

ஸ்வயம் பிரகாசம் -ஞானம் -அஜடம்-வேறு ஒன்றின் உதவி வேண்டாம் -ஆத்மாவும் ஸ்வயம் பிரகாசம் –
எந்த வஸ்துவின் தொடர்பால் -அர்த்தாந்தரே வேறு பொருளில் வியாவஹாரமோ தர்மம் வேறுபாடு ஏற்பட்டால்
அது அந்த பொருளில் ஸ்வரூபமாகவே இருக்கும் –
வெள்ளைப்பசு -பார்க்க -கண்ணால் வெள்ளையை கிரகிக்க வெள்ளையே காரணம் -பசுவை கிரகிக்க வெள்ளை வேணும் –
வெண்மைக்கு -வேறு ஒன்றின் உதவி இல்லாமல் பிரகாசிப்பதால் ஸ்வயம் பிரகாசம் என்று சொல்லலாமே என்பர் –
அஸ்தி -சொல்ல சத்தா இருப்பே காரணம் -இது தான் வியவஹாரம்
சத்தா அஸ்தி இருப்பு இருக்கு -அந்த இருப்பு எப்படி சத்தத்தையே காரணம் -அது தான் ஸ்வரூபம்

பூமி இருக்கு -சொல்ல இருப்பு காரணம் -இருப்புக்கு அதுவே காரணம் -நிறத்தினால் -இத்தையே ரூபத்தினால் -என்பர் –
தொடர்பால் கண்ணால் பார்க்கிறோம்
குடம் பிரகாசிக்க -அறிவு வர -அதற்கு வேறு ஒன்றின் தேவை இல்லை –
ஆகவே அறிவு ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஆத்மா என்பர்
ஞானம் இருந்து ஞாதா -தனியாக கல்பிக்காமல் –ஞானமே இல்லை என்றால் ஞானம் ஞாதா இரண்டையும் சொல்ல வேண்டாமே –
ப்ரத்யக்ஷ விரோதம் வரும் -நான் அறிகிறேன் சொல்லுகிறோம்-அறிவு வேறே நான் வேறே அன்றோ -ஞானத்துக்கு ஆஸ்ரயம் தானே ஆத்மா
சத்யம் -உண்மை -/ பிரத்யக்ஷம் -விகல்பம் உடன் உள்ள -ப்ரத்யக்ஷம் -நிர்விகல்பிக்க பிரத்யம் -இரண்டு வகை –
பேதத்துடன் பார்ப்பது பிரமத்துக்கு மூலம் –
வஸ்து மாத்திரம் -வஸ்து இருந்தால் தான் கண்ணாடி நீலம் இத்யாதி உண்டே -ஏற்றி சொல்கிறோம்
வஸ்துவை கிரஹித்து மற்றவற்றை அதிலே ஏத்தி –
நான் அறிகிறேன் சொல்வதே பொய் -ச விகல்பிக்க ரத்யக்ஷம்
நான் அறிவு என்பதே நிர்விகல்பிக்க ப்ரத்யக்ஷம் என்பன்

ஞாதாவே ஞானம் -ஒன்றாகவே கிரகிக்கப்படும் -ஸஹ-/ ஒன்றை விட்டுப் பிரியாமல் இருக்கும் -ஸஹ உபலம்பம் –
ஞாதா சொல்லும் பொழுது ஞானத்துடன் தானே –
குடம் அறிவு இருந்தால் தான் குடம் அறிபவர் சொல்ல முடியும் -எனவே ஒன்றே தான் என்பன் -ஸஹ உபலம்ப நியாயம்
அப்ரகாச ஆத்மா என்று ஓன்று இல்லையே -அடுத்த காரணம் –பேத ஞானத்தை பிரமாணமாக கொண்டாலும் –
தெரிய வருவதால் ஞானமே தானே –
இரண்டாலும் ஞானமே ஆத்மா என்பான் –
ஜடமாக உள்ள அஹம் அர்த்தம் சித்திக்காதே -ஸம்வித்தை விட வேறு பட்ட ஆத்மாவை அறியவே முடியாதே

க்ராஹ விகல்பம் இல்லை
க்ராஹ்ய விகல்பம் -விஷயத்தை தனியாக சொல்லாமல் -கட ஞானம் -ஞானத்துடன் சேர்ந்தே விஷயம்
பிரகாச யோகமே ஞானம் –
வாசனையால் -புத்த வாதம் -முன் முன் தப்பாக அறிந்த அறிவு –
சமானந்தர ஞானம் முன் அடுத்து மாறி மாறி வருமே -தண்டம் -தண்டி இத்யாதி –
பொய் நின்ற ஞானம் -சதத பரிணாமம் ஆழ்வார்-விகாரத்தைப் பற்றி -இவனோ க்ஷணிகம் –
அநாதி அவித்யாதி வசப்பட்டு பேதம் -அத்வைதி பக்ஷம்
அந்த அவித்யாவும் பொய்யான -என்பர் அத்வைதி -வேறே ஒன்றையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

பிரமத்துடன் பார்ப்பார்வர்கள் தான் க்ராஹ்ய க்ராஹக ஞான வாசி அறிவார்கள்
மூன்றிலும் வேறுபாடு இல்லை -தோற்றமே –
ஜகத் ஜநநீ-அவித்யை -அதனாலே தோற்றும் -சுத்தமான ஞானம் சின் மாத்திரமே ப்ரஹ்மம் -பிரபஞ்சம் மித்யை –
சுத்தம் நித்யம் பரமார்த்தம் -பிரபஞ்சத்துக்கு உபாதானமாக சொன்னால் சம்சாரத்தில் இருந்து மோக்ஷம் எப்படி –
ஒரே ஆத்மா தானே அவர்கள் பக்ஷம் -மாயா ஏவ ஜநநீ -என்பர்
பிரகட பிரசன்ன புத்தர்கள் இருவர் வாதங்கள் இவை

அத்வைதி -மற்ற பிரகட புத்த வாத கண்டனம் அடுத்து -க்ஷணிகம் -பிரதி விஷயம் வேறே வேறே ஞானம் –
படம் கடம் -முன் பார்த்தவர் இன்று பார்க்கிறவர் எப்படி வரும் -அவரே இவர் -அதுவே இது சொல்ல முடியாதே

அதே நான் அதே பொருளை இன்று வேறு ஒரு நாளில் பார்க்கிறேன் -பொருந்தாதே என்னில் –
நிராலம்பன –ஞானத்துக்கு ஆலம்பனம் விஷயமே இல்லை – நேற்று நன்றான பசுவைப் பார்த்தேன் –
இன்று சோர்ந்த பசுவைப் பார்க்கிறேன்
நேற்று ஞானத்துக்கு விஷயம் இல்லை
நேற்று இன்று கிடையாது
ஞானம் மட்டுமே -மற்ற அனைத்தும் மித்யா
கற்பனையே என்பான்

ப்ரத்யக்ஷம் விரோதம் வரும் -நிராலம்பனம்-எல்லா ஞானமும் விஷயம் அற்றவை என்றால் –
இந்த வார்த்தை யாலே வரும் ஞானத்துக்கு விஷயம் உண்டா இல்லையா
கேள்வியால் ஸ்ரீ ஆளவந்தார் நிரசனம் எளிதாக செய்தார்
பூர்வ மீமாம்சை –1-1- உத்தர மீமாம்சை -2-2-
தர்க்க பாதத்திலும் நியாய தத்வம் நாத முனிகள் இவற்றை காட்டி உள்ளார் -அங்கு கண்டு கொள்க

க்ஷணிக ஞானமே ஆத்மா -பிரகட புத்தன்
அநித்யமான ஞானம் உடையவன் ஆத்மா -இரண்டாம் பக்ஷம் -அனுபவம் ஸ்மரணம் இருப்பதால் –
நித்தியமான ஞானமே ஆத்மா -அத்வைதி
தர்ம பூத ஞானம் அழியும் அநித்தியம் -ஞானம் வேறே ஆத்மா வேறே -சித்தாந்தம்
ஞான சந்தானம் -வினாடிக்கு வினாடி ஏற்படும் ஞான புள்ளி -பல புள்ளிகள் -வரிசையே ஆத்மா –
தொடர் சங்கிலி ஞானமே ஆத்மா -ஞானம் உடையவர் இல்லை -இது புத்தவாதம் –
பிரவாகமாக நித்யம் -அதனால் ஸ்மரணம்-என்பன்–தீப த்ருஷ்டாந்தம்
இப்படி சாதிப்பாய் ஆகில் -அது முடியாது -ஏன் என்றால் – தீபம் -பார்ப்பவன் ஒருவன் -ஒன்றாக தெரிவது சாத்ருசம்-அதுவே இது –
இங்கு பார்க்கிற ஆத்மாவே மாறினால் எப்படி -போன நிமிஷ ஞானம் வேறே ஆத்மா வேறே உனது பக்ஷம் படி –
க்ஷண விஞ்ஞானம் -சந்தானம் -சந்தானி புள்ளி -கோக்க வேண்டும் -அவயவம் சமுதாயம் –இரண்டா ஒன்றா -கேள்வி –
சந்தானி சந்தானம் -ஞானம் ஞானத்து ஆஸ்ரயம் இரண்டு வருமே -ஞானமே ஆத்மா பக்ஷம் பழிக்காதே
ஒன்றானால் -ஸ்மரணம் வராதே –
நிலையாக நின்றால் தானே நினைக்க முடியும் -அனுசந்தாயி நிலைக்கவராக இருக்க வேண்டுமே –
அனுபவிதா-அனுசந்தாதா -வேறே வேறே வ்யக்தி -உன் மதத்தில் –தெரியவே வாய்ப்பு இல்லை –
சாத்ருசம் வந்தால் தானே பிரமம் வரும் -வந்து போகும் சந்தான ஆஸ்ரயம் -ஞான தொடர்ச்சி இருப்பிடம்
என்றால் ஞானம் வேறே ஆத்மா வேறே -என்றதாகுமே -க்ஷணிக வாத நிரசனம்

அடுத்து -ஞானம் நித்யம் -அத்வைதி -அதுவே ஆத்மா -பரமாத்மா -ஞானம் -ப்ராக் அபாவம் –
முன்னால் இருக்கும் நிலை இல்லாதபடியால் –
ப்ரத்வம்சா அபாவம் -இருந்தது இப்பொழுது இல்லை -பானை துவம்சம்
அத்யந்த அபாயம் -ஆகாச தாமரை -முயல் கொம்பு போல்வன
ஞானம் அநித்தியம் என்பது சித்திக்காது -தானே பிரகாசிக்கிறபடியால் -தானே தோன்றுகிறபடியால்
ஞானத்துக்கு ப்ராபக பாவம் இல்லை -இன்மை பாவம் -தன்னால பிறராலோ கிரகிக்க முடியாதே –
இன்மை கிரகிக்க இன்மை இருக்க வேண்டுமே -இருப்பதால் இன்மை அபாயம் இல்லையே -க்ராஹ்யம் இல்லை ஆகுமே
நான் இல்லாத போது கிரகிக்கலாமா என்றால் யார் கிரகிப்பார் -க்ராஹகம் இல்லை –
இன்னும் ஒருவர் கிரகிக்கிறார் என்றால் ஜடமாகுமே -தனது அபாவம் வேறு ஒருவரால் கிரகிக்க முடியாதே-
இன்னொருவர் ஞானம் நமது பாஷையில் -அத்வைதி இன்னும் ஒரு ஞானத்துக்கு விஷயம் என்பார் –

ப்ராபக பாவம் இல்லை உத்பத்தி இல்லை ஆகவே நித்யம்
மேலே -உத்பத்தி இல்லை என்றாலே மற்ற ஐந்து விகாரங்களை இல்லையே –
ஜென்மம் இல்லா விட்டால் அஸ்தி பரிணமதே இத்யாதிகளும் வராவே –
நாநாத்வமும் தள்ளப்பட்டது -கட ஞானம் வெள்ளை ஞானம் —
யத்ர அஸ்தித்வம் முதலான பாவ விகாரங்கள் உண்டோ அங்கு தானே உத்பத்தி உண்டு
எங்கு உத்பத்தி இல்லையோ அங்கு இவை இல்லையே
பலவாக உள்ள தன்மை இருந்தால் உத்பத்தி இருக்க வேண்டுமே

ஞானத்து விஷயம் ஆனால் -ரூபம் நிறம் -அது ஞானத்தின் தர்மம் ஆகாதே –
யத்ர யத்ர ஞான விஷயத்வம் -தத்ர தத்ர சமவித்து தர்மம் ஆகாதே
அதே போலே -விகாரம் -பேதங்கள் -இவை ஞானத்துக்கு விஷயம் தானே -ஞானத்துக்கு தர்மம் ஆகாதே –
ஞானத்துக்கு பேதமோ விகாரமோ இல்லை -சஜாதீய விஜாதீய ஸூ கத பேதங்கள் இல்லை
சஜாதீயம் -வேறே வேறே மரங்கள் -ஒரே ஜாதி
விஜாதீயம் -மலை -மரம் –
ஸூ கத பேதம் -மரத்தில் உள்ள கிளை இலை பழம்
மூன்று பேதங்களும் உண்டு சம்ப்ரதாயம்
ஞானம் உடைமை -ஆத்மா பரமாத்மா -பேதம் உண்டே
விஜாதீயம் -ப்ரக்ருதி -பரமாத்மா
ஸூகத -திருமேனியும் குணங்களும் உண்டே
நலம் உடையவன் –ஸூகத
அயர்வரும் அமரர்கள் அதிபதி -சஜாதீய
மயர்வற மதி நலம் -விஜாதீய –
மூன்றுமே முதலிலே காட்டி அருளினார்
அத்வைதி -மூன்று பேதங்களும் இல்லை -தவிர்ந்து வேறே இல்லை நிர்விசேஷ சின் மாத்திரம் ப்ரஹ்மம்
உத்பத்திமத்வம் நிவ்ருத்தி யானால் வியாப்தமான நாநாத்வமும் சித்திக்கும்
விபாகம் இருந்தால் பிறப்பிலியாக இருக்க முடியாதே
யாருமே கிரகிக்கா விடில் வஸ்துவே இல்லையாகும்

ஞானம் உண்டு -ஞானத்துக்கு தர்மம் இல்லை -என்பர் அத்வைதி –
நிகில பேத விகல்ப–நீர் தர்ம -பிரகாச மாத்ரமாய் இருப்பதாய் -பிரகாசத்தை உடையது இல்லை –
தத்தாக இருக்கும் தத்வமாக இருக்காது
கூடஸ்த-விகாரம் அற்ற – நித்தியமான – சம்வித் ஞானமே ஆத்மா -அதுவே பரமாத்மா -அத்வைதி –
வேதாந்தத்தின் கருத்து என்கிறார் -வேதாந்த சப்தம் சொல்லாது -தாத்பர்யம் என்பர் –
ஞானாந்த கோசாரம் -அறியப்படுவதாக இருக்க முடியாதே -வேறு ஒரு ஞானத்துக்கு விஷயம் ஆகாதே –
வேதாந்தம் நினைக்கும் பேதம் -புரிந்தால் அத்வைதி ஞானம் -ப்ரஹ்மம் சத்யம் -ஜகத் மித்யா -என்பர்

எந்த சம்பவித்தானது -உண்டாகாதோ -அஜத்வம் -வேறு ஒரு ஞானத்தால் அறியப்படாத அமய -அநந்தம் -அழியாததாய் -விநாச ரஹித்யம் –

சம்வித் -அஜா-பிறக்காதது அமேயர் வேறு ஒன்றால் அறிய முடியாதது -ஆத்மா இதி -வேதாந்த வாக்ய தாத்பர்யம் இதுவே –
ஞானம் மாத்திரம் -நிர் விசேஷம் –
வேறு ஒன்றைக் கல்பிக்க வேண்டாம் –
ஞானம் -கொண்டே பிரமாணம் அறிகிறோம் -கடம் படம் பிரமேயம் -லௌகிகத்தில்-
இந்திரிய ஜன்ய ஞானம் பலம் -கட ஞானம் பலம் -பராக் அர்த்தம் –
வேதாந்தத்தில் இதுவே-ஞானமே – ப்ரமேயம் என்பர் – வேதாந்தம் பிரமாணம் –
அமேயா-என்பது -கருத்தால் -சப்தம் சொன்னதாக சொன்னால் பிரமாணம் ப்ரமேயம் இரண்டையும் ஒத்துக் கொள்ள வேண்டுமே –
நிர்விசேஷ -நித்ய விஞ்ஞானமே ஆத்மா -அத்வைதிகள் -புத்தன் க்ஷணிக விஞ்ஞானமே ஆத்மா என்பான் –

ஞாதா இல்லை ஜேயம் இல்லை ஞானம் மாத்திரமே – கடம் அஹம் பார்க்கிறேன் -சொல்ல மாட்டார்கள் -மூன்றையும் சொல்லாமல்
ஞானம் மாத்திரம் உண்மை -மற்ற இரண்டும் மீதியை -ஞானமே ஆத்மா -நிர்விசேஷ சீன மாத்திரமே ஞானம்
அஹம் -ஞானம் உடையவன்
அஹம் -அந்தக்கரண -ஞானத்துக்கு கோசாரம் -அவித்யையால் கடம் இத்யாதி பிரதிபலிக்கிறது –
அந்தக்கரணமும் கடம் இவை எல்லாம் மித்யை பொய்–அவித்யை பட்ட சிதறல் மறைந்து -அதுவே முக்தி -பலவாக தோற்றம் சம்சாரம் –
ப்ரத்யக்ஷத்துக்கு தேவையான இந்திரியம் -இவற்றுக்கு அதீனப்பட்டு மனஸ் -கண்ணுக்கு ஆட்பட்டு காண்கிறது உண்மை இல்லை –
பிரதிபலிப்பது போலே -இவை -அவித்யை காரணம் -மனம் -உபாதி -கண்ணாடி போலே -அனைத்தும் மித்யை

ஆத்மாவை அறிந்தவர் -அலௌகீகம் அவைதிக தர்சனம் -என்பர் உனது அத்வைதத்தை
சம்வித் -தர்மம் பிரசித்தம் -தர்மி இல்லையே –
எப்படி இருக்கும் -ஆச்ரயித்து இருக்கும் ஆத்மாவுக்கு -தானாகவே பிரகாசிக்கிப்பித்துக் கொண்டே இருக்கும் –
ஞான -அவனது -அனுபூதி பர்யாய சொற்கள் -கர்மா -படம் கடம்-பலத்தை நறுக்கினேன் -படத்தை பார்த்தேன்
இரண்டாம் வேற்றுமை உள்ளது கர்மா -முதல் வேற்றுமை கர்த்தா
தர்மம் வேறே தர்மி வேறே –
சர்வ பிராண -உயிர் உள்ள அனைவரும் இப்படியே சொல்வர் -சர்வ பூத ராசியும் -அனுபவம் இப்படியே இருக்கும் –
நான் இதை அறிகிறேன் -ஞானம் ஏற்படும் இருக்கும் அழியும் -நித்யம் இல்லை நீ சொன்னபடி
உத்பத்தி கண்ணுக்கு தெரியுமே -சுகம் துக்கம் வரும் போகும் அதே போலே ஞானமும் -ப்ரத்யக்ஷ சித்தம் –
தூங்கும் பொழுது ஞானம் இல்லை -பின்பு ஸ்மரிக்கிறோமே -அநித்தியம் வரும் போகும் -ஆத்மா நித்யம் -எப்படி இரண்டும் ஒன்றாகும்

மரணம் -நரக வேதனை -கர்ப்ப விசனம் -மூன்றாலும் மறக்கலாம் -பழைய ஜென்ம வாசனை இல்லையே –
யாவது அனுபூதி எல்லாம் ஸ்மரிக்க–சம்ஸ்காரம் -மனப்பதிவு -இந்த மூன்றாலும் விச்சேதம் -ஆகும் –
அத்வைதி தூங்கும் பொழுதும் ஞானம் உண்டு ஆனால் மறக்கிறோம் என்பான் -இது சரி இல்லை –
முன் சொன்ன மூன்றாலும் தான் மறக்கிறோம் -ஆகவே தூங்கும் பொழுது ஞானம் இல்லை -அனுபவம் இல்லை –

ஞானம் -விஷயம் -அந்தக்கரணம் தொடர்பு வந்தால் தான் சம்ஸ்காரம் ஏற்படும் –
தூங்கும் பொழுது விஷயமும் அந்தக்கரணமும் இல்லை அதனால் சம்ஸ்காரம் இல்லை –
ஞானம் இருந்தாலும் ஸ்மரிக்க முடியவில்லை என்பான் –
விஷயம் இல்லை -அந்தக்கரணம் நாசம் அதனால் நினைவு வரவில்லை என்பான்
இது பொருந்தாது –
ஞானம் இருந்தாலே பிரகாசமாக தானே இருக்கும் -ஸ்வயம் பிரகாசம் தானே
நீ சொல்வது சரி இல்லை -ஸ்வயம் பிரகாசம் வேறு ஒன்றை எதிர்பார்க்காதே –
மூன்று சேர்க்கை -தனி தனி ஸம்ஸ்காரத்தை ஏற்படுத்தும் -ஞானம் ஜேயம் ஞாதா –
கடம் அஹம் அறிகிறேன் த்ரிதயம் -பார்த்த பார்த்த அம்சம் தனித்தனியே சம்ஸ்காரம் -ஏற்படுத்து ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆகும்
அஹம் சொல்லுக்கு மனம் என்று சொல்லி அது இல்லை என்கிறாயே
நான் தூங்கும் பொழுது வைத்த மாத்திரை தூங்கி எழுந்த பின் இல்லை என்றால்
நான் -முன்பும் தூங்கும் பொழுதும் அப்புறமும் இருப்பதால் -நான் நித்யம் -இதுவே அஹம் அர்த்தம்

கட பட ஞானம் அநித்யமாகவே இருக்கட்டும் -வேறு ஒரு ஞானம் நித்யம் அதை ஆத்மா என்கிறேன் என்பான் –
நிர் விஷய நிராசரயமாய் -விஷயம் இல்லாமல் -கர்மா கர்த்தா இரண்டும் இல்லாமல் -சம்வித் -ஞானம் என்பதே இல்லையே –
ப்ரத்யக்ஷத்தில் இல்லை என்றால் அனுமானிக்கலாம் என்றால் -முடியாது –
சப்தார்த்தம்–பிதா என்றாலே புத்ரன் இருக்கும் சம்பந்தி எதிர்பார்க்கும்
ஞானம் சொன்னால் -கர்மா கர்த்தா தேடும் எத்தை பற்றி யாருடையது வருமே
இல்லாமல் பிரயோகம் இல்லையே –
ஞா தாது பிரயோகப்படுத்தினால் இரண்டும் கூடவே இருக்க வேண்டுமே –
சம்வித் ஞானம் பிரகாசம் அனுபூதி சப்தங்கள் சம்பந்தத்தை எதிர்பார்த்தே இருக்கும்
சதம்வந்தி சப்தம் தானே இது –

தர்மி ஞானம் -தர்ம ஞானம் -தானே விளங்கும் தனக்கு விளங்கும் -ஸ்வரூப ஞானம் -எல்லாத்தையும் விளக்கும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா வராது -கர்மா மட்டும் இருக்கலாம் -ஞானத்துக்கு விஷயம் உண்டு –
ஆஸ்ரயம் இல்லை -ஆனால் விஷயம் ஆத்மா -நான் நான் என்று ஆத்மா தானே விஷயம்
நான் சொல்லும் பொழுதே ஏகத்துவம் -நாங்கள் இல்லை நான் ஒருவன் தோன்றும் –
அடுத்து நான் எனக்கு அனுகூலமானவன் என்றும் தோன்றும் -வேண்டியவன்
அடுத்து நான் வெளியில் இல்லை உள்ளே -பாராக்த்வம் இல்லை -இப்படி மூன்றும் உண்டே

ஆஸ்ரயம் இல்லாமல் இருந்தாலும் விஷயம் இருக்குமே -இரண்டும் ஞானம் -ஒன்றுக்கு ஆஸ்ரயம் இல்லை -இரண்டா
கோ சப்தம் மாடு பூமி வாக்கு மூன்றையும் குறிக்கும் -வாக்கு சொல்லும்பொழுது நான்கு கால்கள் இருக்க வேண்டாமே
அதே போலே ஞானம் இரண்டு பிரயோகத்தில் இந்த இரண்டும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா இல்லை கர்மா உண்டு
தர்ம ஞானத்துக்கு இரண்டும் உண்டு என்பதில் விருத்தம் இல்லையே -சம்பந்தி –அசம்பந்தி -இரண்டும் இந்த தர்ம தர்மி ஞானங்கள் –
ஞானம் நித்தியமாக இருந்தால் அதுக்கு சம்ஸ்காரம் ஏற்படுத்தி ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆக வேண்டுமே

நான் குடத்தை பார்த்தேன் -கர்த்தா நான் ஆத்மா -ச கர்ம -சேர்ந்தே ஞானம் இருக்கும் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

தத்வ த்ரய விளக்கம் -ஸ்ரீ திருப்புல்லாணி ஸ்வாமிகள் —

September 10, 2019

முமுஷுக்கு தத்வ த்ரய ஞானம் வேண்டுமே

தேஹ ஆத்ம அபிமானம் நீங்க -சித்-அசித் -வாசிகள் ப்ரத்யக்ஷமாகவே -காணலாமே
1–நாம் -நான் -என்று ஆத்மாவைச் சொல்லி –இது அது என்று அசித்தைச் சொல்கிறோமே
2-உடையவன் -ஸ்வாமி என்றும் உடைமை -சொத்து என்றும் சொல்கிறோமே
3-அறிபவன் -அறியப்படும் பொருள் என்று வேறே வேறாகச் சொல்கிறோமே
4-நான் -ஏகம் -ஒருமையில் சொல்லி -அநேக பொருள்களை கண்டு கேட்டு இருப்பதால் -பன்மையாக சொல்லி வேறுபாடு
5-நான் -அவயவ ரஹிதம் -துண்டாக்க முடியாமல் -கை கால்கள் -தோல்-சதை இப்படி அவயவ ஸஹிதம்-வாசியும் உண்டே
6-நான் -ஸ்வயம் பிரகாசம் -தன்னையும் காட்டும் பிறருக்கும் காட்டும் -அதுவோ ஜடம் -ஞானத்து விஷயமாகும்
7-ப்ரத்யக் -தனக்குத் தானே தோன்றும் -நான் எங்கு இருக்கிறேன் -என்று தானே சொல்வோம்-அதுவோ பராக் -பிறருக்குத் தோன்றுமவை
8-இதுவோ எப்போதும் அநு கோலம் -அதுவோ நோய் இத்யாதி இல்லாத போது தான் அநு கூலம் -இருக்கும் பொழுது பிரதி கூலம்
9-இதுவோ போக்தா அனுபவிப்பவர் -அவர்களோ போக்யம் -அனுபவிக்கப்படுபவை
10-இது ஸ்வ தந்திரம் -அவர்களோ பர தந்திரம்
11-இவை சேஷி உடையவர் -அவை சேஷம் -உடைமைகள்
12-இவர்கள் கர்த்தாக்கள் -அவை கரணம் -அவற்றைக் கொண்டு கார்யம் செய்கிறோம்
13-அணுத்வ பரிமாணம் -வெட்டவோ கூட்டவோ முடியாது -அவை மத்யம பரிமாணம் கூறாக்கவும் கூட்டவும் முடியுமே

——————-

இந்த வாசியை உணர்ந்த பின்பு சாஸ்திரம் மூலம் ஈஸ்வர தத்வத்துக்கும் ஜீவ தத்வத்துக்கும் உள்ள வாசி அறிவோம்

1–பிதா -காரணம் / புத்திரர் -காரியம்
2–ரக்ஷகர் -ரஷ்யம்
3–சேஷி -சேஷன்
4–பர்த்தா–பார்யை
5–ஜேயன்-அறியப்படுபவன் -ஞாதா -அறிபவன்
6– ஸ்வாமி -ஸ்வம் –
7–ஆதாரம் –ஆதேயன்
8–வியாபி -அந்தர்யாமி -ஆத்மா அனைத்துக்கும் அனைவருக்கும் -நாமோ அவனுக்கு சரீரம் -வியாப்யம்
9–போக்தா -நம்மை அடைந்து அனுபவிப்பவன் -நாமோ போக்யம் -படியாய் கிடந்து பவள வாய் காண்போம்
10–நிரங்குச ஸ்வ தந்த்ரன் -நாம் பரதந்த்ரர் -ஏவிப் பணி கொள்ளப் பிரார்த்திப்போம்

11–ஸ்வா பாவிக அபஹத பாப்மா -இயற்கையாகவே பாபங்களால் தீண்டப்படாமல் -நாம் அப்படி இல்லையே
12–ஸ்வா பாவிக வி ஜரன்-மூப்பு இல்லாத
13–ஸ்வா பாவிக வி ம்ருத்யு -இறப்பு இல்லாத
14–ஸ்வா பாவிக வி சோகன்-சோகம் இல்லாத
15–ஸ்வா பாவிக வி ஜிகஸ்தன் -பசி இல்லாத
16–ஸ்வா பாவிக அபி பாசன் –தாகம் இல்லாத
17–ஸ்வா பாவிக சத்ய காமன்
18–ஸ்வா பாவிக சத்ய ஸங்கல்பன்
19–அனந்தன் -தேச கால வஸ்து த்ரிவித அபரிச்சேதன்
20–அகில காரண அத்புத காரண -நிஷ்காரண காரணன் –

நாம் அவனது அனுக்ரஹத்தாலே அவனை அடைந்து இந்த அஷ்ட வித –
அபஹத பாப்மா -வி ஜர -வி ம்ருத்யு -வி சோக -வி ஜிகிஸ்தா -அபிபாச-சத்யா காம -சத்யா சங்கல்ப -குணங்களில்
சாம்யம் பெறுவோம் அன்றோ

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ தத்வத்ரய ஸங்க்ரஹம் –

May 24, 2019

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ தத்வத்ரய ஸங்க்ரஹம்

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யானாம் ஸூலப ஸ்ரீதரஸ் சதா

அவதாரிகை –
1–இதர தர்சனங்களில் பதார்த்தங்கள் ஆறு என்பார் -பதினாறு என்பார் -இருப்பத்தஞ்சு என்பார் –
இப்படி பஹு .பிரகாரங்களிலே விப்ரதிபத்தி பண்ணுவர்கள்
2– நம் தரிசனத்துக்கு தத்வம் மூன்று
3–அவையாவன–சித் என்றும் அசித் என்றும் ஈஸ்வரன் என்றும்

———————

அசித் பிரகரணம் –

4-அசித்தாகிறது –
குண த்ரயாத்மகமாய்-
நித்தியமாய் –
ஜடமாய் –
விபுவாய்-
எம்பெருமானுக்கு பிரகாரதயா சேஷமாய்-
இவனுக்கு லீலா உபகரணமாய்-
மஹதாதி சர்வ விகாரங்களுக்கும் ப்ரக்ருதியாய் –
தன்னோடே சம்பந்தித்த சேதனனுக்கு பகவத் ஸ்வரூபத்தை மறைத்து –
தன் பக்கலிலே போக்யதா புத்தியைப் பிறப்பிக்கும் தன்மையை யுடைத்தாய்
சதத பரிணாமிமாய் இருக்கும் –

5–இதில் ஸூஷ்ம பரிணாமம் அவிசதமாய் இருக்கும் –

6–ஸூதூல பரிணாமம் விசதமாய் இருக்கும் –
அதாகிறது மஹதாதி விகாரங்கள் –

7–இந்த மூல ப்ரக்ருதி மஹதாதிகளாய்ப் பரிணமிக்கும் படி
எங்கனே என்னில்

8–குண த்ரயங்களினுடைய சாம்யா அவஸ்தையான மூலப்ரக்ருதியில் நின்றும் மஹான் பிறக்கும்

9–இதில் நின்றும் அஹங்காரம் பிறக்கும்

10–இது தான்
சாத்விகமாயும் –
ராஜஸமாயும் –
தாமஸமாயும் –
மூன்று படியாய் இருக்கும் –

11—இதில் சாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்திரியங்கள் பிறக்கும் –

12–இந்திரியங்கள் தான் எவை என்னில் –
ஸ்ரோத்ர-த்வக் -சஷூர் -ஜிஹ்வா -க்ராணங்கள்-என்கிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
வாக் -பாணி -பாத -பாயூபஸ்தங்கள் -என்கிற கர்மா இந்திரியங்கள் ஐந்தும்
இவற்றுக்கு பிரதானமான மனஸ்ஸூமாக இந்திரியங்கள் பதினொன்று

13–தாமச அஹங்காரத்தில் நின்றும் சப்த தந் மாத்ரை பிறக்கும் –

14–இதில் நின்றும் இத்தினுடைய ஸ்தூல அவஸ்தையாய் சப்த குணகமான ஆகாசம் பிறக்கும் –

15–இதில் நின்றும் ஸ்பர்ஸ தந் மாத்ரை பிறக்கும்

16–இதில் நின்றும் ஸ்பர்ஸ குணகமான வாயு பிறக்கும்

17–இதில் நின்றும் ரூப தந் மாத்ரை பிறக்கும் –

18–இதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ்ஸூ பிறக்கும் –

19–இதில் நின்றும் ரஸ தந் மாத்ரை பிறக்கும்

20–இதில் நின்றும் ரஸ குணகமான ஜலம் பிறக்கும் –

21–இதில் நின்றும் கந்த தந் மாத்ரை பிறக்கும் –

22–இதில் நின்றும் கந்த குணகையான ப்ருத்வீ பிறக்கும் –

23 — ராஜஸ அஹங்காரம் -இரண்டிற்கும் அனுக்ரஹகமாய் இருக்கும் –

24–ஆக –
இந்த மஹதாதி சகல பதார்த்தங்களும் கூட அண்டமாய் பரிணமிக்கும் –

25–இவ் வண்டத்தில் பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மா பிறக்கும்

26–இதுக்கு கீழ் ஸ்வ சங்கல்பத்தாலே எம்பெருமான் தானே ஸ்ருஷ்டித்து அருளும் –

இதுக்கு மேலே ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து அருளும் –

27–இவ்வண்டம் தான் பத்தாத்மாக்களுக்கு
போக்ய
போக உபகரண
போக ஸ்தானமாய்க் கொண்டு பரிணமிக்கும் –

28–போக்யங்களாவன -சப்தாதிகள்

29–போக உபகரணங்கள் ஆவன இந்திரியங்கள் –

30–போக ஸ்தானம் ஆவன –
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித சரீரங்களும் –
பூமி முதலான மேல் ஏழு லோகங்களும் பாதாளாதி லோகங்கள் எழும்

31–இந்திரியங்களும் இச் சரீரங்களும் ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களுக்கு சாதகமாய் இருக்கும்

32–இது வ்யக்த அவ்யக்த ரூபமான அசித் தத்வம்

33–காலமாகிறது –
அசித் விசேஷமாய் –
நித்தியமாய் –
ஏக ரூபமாய் –
கீழ்ச் சொன்ன பிரகிருதி பரிணாமாதிகளுக்கு சஹகாரியாய்க் கொண்டு நிமேஷ காஷ்டாதி விகாரங்களை யுடைத்தாய் –
எம்பெருமானுக்கு ப்ரகாரதயா சேஷமாய்-
லீலா பரிகரமாய் இருப்பது ஓன்று –

அசித் பிரகரணம் முற்றிற்று –

—————————–

சித் பிரகரணம் –

34–ஆத்ம தத்வம் மூன்று வர்க்கமாய் –
அஸங்யாதமாய் இருக்கும் –

35–இதில் பகவத் சேஷத்தை ஏக ரசரான
அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகள் நித்ய வர்க்கம் –

36–சம்சாரிகளாய் ஒரு நாளிலே பகவத் ஞானம் பிறந்து –
அதனாலே பகவத் ப்ராப்தி பண்ணினவர்கள் விமுக்த வர்க்கம் –

37–அநாதியான கர்ம ப்ரபாவத்தாலே சதுர்வித சரீரங்களையும் பிரவேசித்து –
அதனாலே சப்தாதி விஷய ப்ரவணரான சம்சாரிகள் பத்த வர்க்கம் –

38–ஆத்ம ஸ்வரூபம் இருக்கும்படி எங்கனே என்னில் –
ஞான ஆனந்த ஸ்வரூபமாய் –
நித்தியமாய் –
அசித்தில் காட்டில் ஸூஷ்மமாய்-
ஞான குணகமாய் –
அணு பரிமாணமாய்-
பகவதாயத்த கர்த்ருத்வகமாய் –
ஈஸ்வரனுக்கு பிரகாரதயா-சேஷமாய் இருக்கும் –

40–நித்ய முக்தர்களுடைய ஞானம் சங்கோச விகாசங்களுக்கு அநர்ஹமாய் இருக்கும்

சித் பிரகரணம் முற்றிற்று –

———————-

ஈஸ்வர பிரகரணம் –

41–ஈஸ்வரன் சேதன அசேதனாத்மகமான உபய விபூதிக்கும் நியந்தாவாய் இருக்கும் –

42–எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம்
ஹேயபிரத்ய நீகமாய்-
கல்யாணைகதாநமாய் –
சகல இதர விலக்ஷணமாய் –
தேச கால வஸ்துக்களால் அபரிச்சின்னமாய் உள்ள ஞான ஆனந்தமாய் இருக்கும்

43–திவ்ய மங்கள விக்ரஹம்
ஸூத்த சத்வமாய் –
பஞ்ச உபநிஷந் மயமாய்-
எம்பெருமானுக்கு ஸர்வதா அபிமதமாய் –
திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கும் அத்தை ஆஸ்ரயித்து இருக்கும் கல்யாண குணங்களுக்கும் ப்ரகாசகமாய் –
ஏக ரூபமாய் –
சர்வ விஸஜாதீயமாய்-
அப்ராக்ருதமாய் –
அளவிறந்த தேஜஸ்ஸை யுடைத்தாய் –
நித்ய யவ்வன ஸ்வ பாவமாய் –
சர்வ கந்த ஸ்வ பாவமாய் –
ஸுந்தர்யாதி கல்யாண குண யுக்தமாய் –
அதி மநோ ஹரமாய்-
நித்யர்க்கும் முக்தர்க்கும் அநு பாவ்யமாய் –
முமுஷுக்களுக்கும் ஸூப ஆஸ்ரயமாய் இருக்கும் –

44–பரமபதமும் அங்குள்ள பதார்த்தங்களும்
முக்தருடைய விக்ரஹங்களும் –
நித்ய சித்தருடைய விக்ரஹங்களும்
ஸூத்த சத்வமாய் –
பஞ்ச உபநிஷந் மயமாய் இருக்கும் –

45–எம்பெருமானுடைய திவ்யாத்ம குணங்களாவன –
ஞான சக்த்யாதி ஷட் குணங்களும் –
அதிலே பிறந்த ஸுசீல்யாதிகளும்-

46–இவை தான் ஒரோ குணங்களுக்கு அவதி இன்றியிலே –
இவற்றுக்குத் தொகை இன்றியிலே இருக்கும்

47–இப்படிப்பட்ட ஸ்வரூபாதிகளை யுடைய ஈஸ்வரன்
பர வ்யூஹாதிகளினாலே
உபய விபூதியையும் நிர்வகித்து அருளும் –

48–எங்கனே என்னில்

49–கீழ்ச சொன்ன ஷாட் குண்யாதி ஸமஸ்த கல்யாண குணங்களோடும்
திவ்ய மங்கள விக்ரஹத்தோடும்
பரம பதத்தில் நித்யரும் முக்தரும் தன்னை அனுபவிக்க
அவர்களை அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பு பர அவஸ்தை –

50–வ்யூஹ அவஸ்தை யாவது –
லீலா விபூதியை நிர்வஹிக்கைக்காக இவ்விரண்டு இரண்டு குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு
சங்கர்ஷண ப்ரத்யும்னாதி ரூபேண வந்து அவதரிக்கை –

51–இந்த வ்யூஹங்கள் தான்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கும்
திரு வவதாரங்களுக்கும் அடியாய் இருக்கும் –

52–விபவமாவது-
திவ்ய மங்கள விக்ரஹத்தை
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர சரீரங்களோடே சஜாதீயமாக்கிக் கொண்டு –
தன் படிகளை ஒன்றும் விடாதே -அவ்வோ ஜாதிகளில் வந்து அவதரிக்கை -சாஷாத் விபவமாவது –

சேதனர் பக்கல் ஸ்வரூபேண ஆவேசித்து அவதரிக்கை -ஸ்வரூப ஆவேச அவதாரம் –

சில சேதனர் பக்கலிலே சக்தியினாலே கார்ய காலத்திலே ஆவேசித்து ரஷிக்கை-சக்தி ஆவேச அவதாரம் –

53–அர்ச்சாவதாரமாவது –
ஆஸ்ரிதர் உகந்தது ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை அதிஷ்டித்து –
அதிலே திவ்ய மங்கள விக்ரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணிக் கொண்டு
ஆஸ்ரித பராதீனனாயக் கோயில்களிலும்
க்ருஹங்களிலும்
கால அவதி இன்றிக்கே திரு வவதரிக்கை-

54–உபாசிப்பவருடைய ஹ்ருதயங்களிலே விக்ரஹ ஸஹிதனாயக் கொண்டு
அவர்களுக்கு ஸூபாஸ்ரயமாய் இருபத்தொரு பிரகாரம் உண்டு –

சித் பிரகரணம் முற்றிற்று

———————-

55–இப்படி சித் அசித் ஈஸ்வர தத்துவங்களும்
ஸங்க்ரஹேண சொல்லப் பட்டது

56–சகல சேதன அசேதனங்களையும் ஈஸ்வரன் பிரகாரமாக யுடையனாய்
தான் அவற்றுக்கு பிரகாரியாய்
வேறு சேதனர்க்கு பிரகாரி இல்லாமையால்
நம் தர்சனத்துக்குத் தத்வம் ஒன்றே என்னவுமாம் –

—————-

தத்வ த்ரய ஸங்க்ரஹம் முற்றிற்று

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சார சாரம் —

February 2, 2019

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

ஸ்ரீ ராமானுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீ மத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

விகாஹே நிகமாந்தார்ய விஷ்ணு பாத சமுத்பாவம்
ரஹஸ்ய த்ரய சாராக்யாம் த்ரிஸ் ரோதசம் அகல்மஷாம்
அவ்விஞ்ஞாதம் விஜாநதாம் விஞ்ஞாதம் அவிஜாநதாம்
ரஹத்ய த்ரய சாராக்யம் பரம் ப்ரஹ்மாஸ்து மே ஹ்ருதி

நமோ ராமாநுஜார்யாய சவும்ய மூர்த்தி ஸூஸூநவே
விசித்ர சித்ர சாரோயம் யஸ்ய அனுக்ரஹ வாரிஜா

வேதே சஞ்ஜாத கேதே முநிஜன வசனே ப்ராப்த நித்யாவமானே
சங்கீர்ணே சர்வ வர்ணே சதிததநுகுணே நிஷ் பிரமாணே புராணே
மாயாவாதே சமோதே கலி கலுஷ வசாத் சூன்ய வாதே விவாதே
தர்ம த்ராணாய யோபூத் ச ஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார

———————————-

32–அதிகாரங்கள் -4-பாகங்கள் உண்டு
முதல் பாகம் -அர்த்த அநு சாசனம் -22-அதிகாரங்கள் -தத்வ ஹித புருஷார்த்த -சித் அசித் ஈஸ்வர விவரணம்
இரண்டாம் பாகம் -ஸ்திரீகரணம் –4-அதிகாரங்கள் -சங்கா பரிஹாரமும் -விவரத்தை நிலை நாட்டலும்
மூன்றாம் பாதம் -பாத வாக்ய யோஜனை -3-அதிகாரங்கள் –ரஹஸ்ய த்ரய விளக்கம்
நான்காம் பாதம் –ஸம்ப்ரதாய ப்ரக்ரியா -3-அதிகாரங்கள் -ஆச்சார்ய சிஷ்ய கடைமைகள் -கிரந்த பல ஸ்ருதி அருளி தலைக் கட்டுகிறார்

ஒவ் ஒரு அதிகாரமும் -முதலில் ஸ்லோக ரூபமாக -கீழே சொன்ன விஷயமும் -மேலே சொல்லப் போகும் விஷயமும் –
அந்த அந்த அதிகாரத்தின் விஷயமும் –
அதுக்கு ப்ரமாணங்களாக -ஸ்ம்ருதி இதிஹாச சம்ஸ்க்ருத திவ்ய ஸூக்திகள் -அருளிச் செயல்கள் -சுருக்கமான தமிழ் பாட்டு –
இறுதியில் சுருக்கமான ஸ்லோகம் -இப்படி க்ரமமாக அமைந்துள்ளது –

———————————–

ஸ்ரீ குரு பரம்பரா சார சாரம் -நன்றும் தீதும் நமக்கு உரைப்பாறை நாடிப் பெறுதல்

அர்த்த அநு சாசன பாகம்
1-உபோத்காத அதிகாரம் -க்ரந்தத்தின் தலை வாசல் திறப்பு
2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் -எட்டு இரண்டு எண்ணிய சதிர்க்கும் தனி நிலை
3-பிரதான பிரதிதந்தர அதிகாரம் -துழாய் முடியான் உடம்பாய் நாம் அடியோம் -என்ற முக்கிய அடிப்படைக் கொள்கை
4-அர்த்த பஞ்சக அதிகாரம் -அடிப்படையில் அலர்ந்த ஐந்தறிவு
5-தத்வத்ரய சிந்தனை அதிகாரம் -அரு -உருவானவை பற்றி ஆய்வு
6-பர தேவதா பாரமார்த்யதிகாரம் -திரு மாதுடன் நின்ற புராணம்
7-முமுஷூத்வ அதிகாரம் -வீடினை வேண்டும் பெரும் பயன்
8-அதிகாரி விபாக அதிகாரம் –நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளை ஏற்பவர்
9-உபாய விபாக அதிகாரம் -பல மறையின் பரம நெறி
10-பிரபத்தி யோக்ய அதிகாரம் -அநந்யராய் வந்து அடையும் வகை –
11-பரிகர விபாக அதிகாரம் -துணையாம் பரனை வரிக்கும் வகை
12-சாங்க பிரபதன அதிகாரம் -அறமே பரம் என்று அடைக்கலம் வைத்தமை –
13-க்ருதக்ருத்யாதிகாரம்-வேள்வி அனைத்தும் முடித்தமை
14-ஸ்வநிஷ்ட அபிஜ்ஞாந அதிகாரம் -மூன்றில் நிலையுடைமை –
15-உத்தர க்ருத்ய அதிகாரம் -கடன்கள் கழற்றிய அடிமை
16-புருஷார்த்த காஷ்ட அதிகாரம் -நல்லடியார்க்கு ஆதரம் மிக்க அடிமை
17-சாஸ்த்ரீய நியமன அதிகாரம் -மேதினியில் இருப்பது விதியினாலே
18-அபராத பரிஹார அதிகாரம் -மாளாத வினை அனைத்தும் மாளும் வகை
19-ஸ்தான விசேஷ அதிகாரம் -வானாடுகந்தவர் வையத்து இருப்பிடம் நன் நிலம்
20-நிர்ணய அதிகாரம் -உடலைச் சிறை வெட்டி விட்டு வழிப் படுத்தும் வகை
21-கதி சிந்தனை அதிகாரம் -வானேறும் வழி கண்டோம்
22-பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் -அந்தமிலா பேரின்பம் அருந்துதல் –
குருக்கள் குரை கழல் கீழ் மகிழ்ந்து எழும் போகத்து மன்னுதல்

ஸ்திரீகரண பாகம்
23-சித்த உபாய சோதன அதிகாரம் -திரு நாரணன் மன்னிய வன் சரண்
24-ஸாத்ய உபாய சோதன அதிகாரம் -வரிக்கின்றனன் குறி ஒன்றால்
25-ப்ரபாவ வ்யவஸ்தித அதிகாரம் -அடியார் ஆதரத்தில் ஆரண நீதி நெறி குலையாமை
26-ப்ரபாவ ரக்ஷ அதிகாரம் -தண்மை கிடக்க தரம் உள்ளமை

பத வாக்ய யோஜனா பாகம்
27-மூல மந்த்ர அதிகாரம் -நன் மனு ஓதினம்
28-த்வய அதிகாரம் -திருமால் பாதம் இரண்டும் சரண் எனப் பற்றி அடிமை கொள்ளுதல்
29-சரம ஸ்லோகார்த்தம் -மன்னருள் வாசகத்தால் மருள் அற்றமை

சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் –
30-ஆச்சார்ய க்ருத்ய அதிகாரம் -அருளுற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினார்
31-சிஷ்ய க்ருத்ய அதிகாரம் -இருள் அனைத்தும் மாற்றினவர்க்கு ஒரு கைம்மாறு
32-நிகமன அதிகாரம் -நிலைகள் தான் உளனாய் உகக்கும் தரம்

————————————–

ஆச்சார்யரை அணுக -அவர் கடாக்ஷத்தால் கற்கும் மூல மந்த்ரம் -ஐந்தறிவு புகட்டி –
இவ்வைந்தில் முத் தத்வத்தை விளக்கி
இத் தத்துவம் மூன்றில் புராணனே புகல் பயன் என்கிறது
வீடினை வேண்டுபவர் செய்யும் பக்தி அல்லது பிரபத்தி தான் மோக்ஷ உபாயங்கள்
பிரபத்தி செய்ய அனைத்து உலகும் உரியது என அங்கங்களை விளக்கி
அங்கி பரமனுக்கு அடிமை என்ற நினைப்பே என்கிறது
இப்படி வேள்வி முடித்து நிஷ்டையுடன் மேதினியில் இருக்கும் அளவும் கைங்கர்யங்களை
பாகவதர்கள் வரையில் சாஸ்த்ரப்படியே செய்து காலத்தைக் கழிக்கும் ப்ரபன்னனுக்கு பாபங்கள் கழியும்
காலத்தைக் கழிக்க பாகவதர்கள் வசிப்பதாய் உள்ள இடமே ஏற்றது
சரீரம் விழ எம்பெருமான் ஜீவனை அர்ச்சிராதி மார்க்கத்தில் புறப்படச் செய்கிறான்
புறப்பட்ட ஜீவனை விரஜா நதியைக் கடத்துவித்து அழகு ஓலக்கத்திலே நித்ய முக்தர்களோடு
புரையப் பரிமாறும் படி செய்விக்கிறான்
ஜீவன் தேச விசேஷத்தை அடைந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு
முழுமையான பேர் இன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பான்
மேலே சித்த உபாயமான எம்பெருமானைப் பற்றியும் ஸாத்ய உபாயங்களை பற்றியும்
அறிந்த ஞானத்தை ஸ்திரப்படுத்துகிறது
ஸாத்ய உபாய ப்ரபாவத்தை வரை அறுத்து ரஷிக்கிறது
அடுத்து அஷ்டாக்ஷர த்வய சரம ஸ்லோகத்தின் பத வாக்ய யோஜனைகளை விவரிக்கிறது
கடைசியாக ஆச்சார்ய சிஷ்யர்களின் கடமைகளை குறிப்பிட்டு கிரந்தத்தை
பல ஸ்ருதியுடன் தலைக் கட்டுகிறது –

————————-

பிரயோகிக்கப்பட்ட பதங்களின் லக்ஷணம்–

பிரதான பிரதிதந்தர அதிகாரம் —
த்ரவ்யம் -சேதனம் அசேதனம் ஈஸ்வரன் என்ற பிரிவை யுடைய அந்த வஸ்துவே
அத்ரவ்யம் -அந்த த்ரவ்யத்தின் குணம் போன்ற தன்மை குணங்கள்
சத்தா -ஸ்வரூபம் -வஸ்துவின் முதல் க்ஷண சம்பந்தத்தைச் சொல்வது
ஸ்திதி -வஸ்துவின் மேன் மேலான க்ஷண சம்பந்தத்தைச் சொல்வது
ப்ரவ்ருத்தி -த்ரவ்யத்தின் செயல்
தர்மம் -த்ரவ்யத்தின் அடையாளம் -லக்ஷணம்
தர்மி -தர்மத்தை உடைய த்ரவ்யம்
ஸ்வரூப நிரூபக தர்மம் -எந்த தர்மம் அறியப் படா விட்டால் தர்மி ஸ்வரூபமே அறிய முடியாதோ அது
நிரூபித ஸ்வரூப விசேஷணம் -எந்த தர்மம் தர்ம ஸ்வரூபத்தை மற்றவைகளை விட வேறாகத் தெரிவிக்கிறதோ
ஆத்மா -ஒரு த்ரவ்யத்துக்கு எக்கால -எந்த நிலையிலும் -தாரகனாய் -நியாந்தாவாய் -சேஷியாய் -இருக்கை
சரீரம் -சேதனனுக்கு எக்கால -எந்த நிலையிலும் -ஆதேயமாய் -விதேயமாய் -சேஷமாய் இருக்கை

தத்வ த்ரய சிந்தனா அதிகாரம்
அசேதன தத்வம் -ஞானத்துக்கு ஆஸ்ரயமாய் பிறருக்கே தோன்றுவதாய் இருப்பது
சேதனத்வம் -ஞானத்தை உடையதாய் இருக்கை
ஞானத்தவம் -தன்னுடையவோ வேறு ஒன்றினுடையவோ இருக்கையை அறியச் செய்கை
ஜடத்வம் -ஸ்வயம் பிரகாசத்வம் அற்று இருக்கை
ஸ்வயம் பிரகாசத்வம் -தான் தெரியும்படிக்கு வேறு ஒரு ஞானத்தின் உதவி இன்றியும் பிரகாசிப்பது
ப்ரத்யக்த்வம் -தனக்குத் தான் குணங்களோடு தோன்றுகை
விஷயத்வம் -தன்னை ஒழிந்த ஒன்றைக் காட்டுதல்
ஆத்ம வர்க்க லக்ஷணம் -சேதனத்வமும் ப்ரத்யக்த்வமும்
ஈஸ்வர லக்ஷணம் -விபுத்வ -ஸ்வாமித்வத்தோடு சேதனனாய் இருக்கை
ஜீவ லக்ஷணம் -அணுவாயும் சேஷனாயும் இருக்கை
அசேதன லக்ஷணம் -ஞான ஆஸ்ரயம் இன்றிக்கே மற்றவர்க்கே தோன்றக் கடவனாய் இருக்கை

பிரபத்தி யோக்ய அதிகாரம்
அதிகாரம் -பல உபாயத்தில் இழிபவனுக்கு பலத்தில் அர்த்தித்வமும் உபாயத்தில் சாமர்த்யமும்
பலம் -அதிகாரம் உடையவனும் ப்ரயோஜனமாய் அடையப்படுவதாக இருப்பது
அர்த்தித்வம்-அடைய வேண்டும் என்ற ஆசை
உபாயம் -பலத்தை அடையச் செய்ய வேண்டியதாக விதிக்கப் பட்டது –
சாமர்த்யம் – சாஸ்திரத்தை அறிகை / அறிந்தபடி அனுஷ்ட்டிக்க வல்லனாகை /
சாஸ்திரம் சொன்ன ஜாதி குணாதிகள் உடைமை
ஆகிஞ்சன்யம் -வேறே ஒரு உபாயத்தை -உபாசனத்தை -செய்வதில் சாமர்த்தியம் இல்லாமை
அநந்ய கதித்வம் -மோக்ஷத்தை தவிர்த்து வேறே பலனை நாடாமை /
தான் விரும்பும் பலனை அடைய வேறே ஒரு தெய்வத்தை நாடாமை

———————————————-

ஸ்ரீ குரு பரம்பரா சார சாரம் -நன்றும் தீதும் நமக்கு உரைப்பாறை நாடிப் பெறுதல்
யஸ் ஸ்ரேயஸ்யாந் நிச்சிதம் ப்ரூஹி தாமே சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் -என்று
அர்ஜுனன் வேண்டிய கணக்கில் பயனை விழைவோர் ஆச்சார்யரை அணுக வேண்டியதின் அவஸ்யத்தை விளக்குவது

குருப்ய தத் குருப்யச்ச நமோ வாக மதீ மஹே
வ்ருணீ மஹே ச தத்ராத்யவ் தம்பதீ ஜகதாம் பதீ

நன்றும் தீதும் உரைப்பார் யார் -எம்பெருமானும் -அவன் தண் அவதாரமேயான நம் ஸம்ப்ரதாய ஆச்சார்யர்களும்
ஏன் நாட வேணும் -ஏன் எனில் ஆச்சார்யன் உபதேசித்த வித்யை தான் நிலைக்கும்
நாடிப் பெற பிரமாணம் -என்ன –
விதி உள்ளது -ஆகவே நித்யம் / பிராயச்சித்தம் -ஆகவே நைமித்திகம் /ஞான சாதனம் ஆகவே காம்யம் ஆகிறது
எவர்க்குத் தேவை -பாபியான க்ஷத்ர பந்து வாகிலும்-புண்யனான புண்டரீகனே யாகிலும்
எதற்குத் தேவை -மோக்ஷ உபாயம் அறிய -செய்து எல்லையில்லா ப்ரஹ்ம ஆனந்தம் அனுபவிக்க
பெற்று இனிச் செய்வது -ஆச்சார்யர்களைப் போற்றுவது -உபதேசித்த மந்த்ரங்களை மறைத்து ரஷிப்பது
எம்பெருமான் பரம ஆச்சார்யனாவது எப்படி என்னில்
ஹம்ஸ -மத்ஸ்ய -ஹயக்ரவ -நாராயண -கீதாச்சார்யனாக திரு அவதரித்து
வ்யாஸாதிகள் -ஆழ்வார்களை அநு பிரவேசித்து -ப்ரஹ்ம ஸூ த்ரம் -மஹா பாரதம் -அருளிச் செயல்கள்
சனகாதி ஜீவர்களை நியமித்து நாரதர் பராசரர் சனத் குமாராதிகளுக்கு ஞானம் கொடுத்து பிரவசனம் செய்வித்து அருளி
ஆழ்வாராதிகளுக்கு அருளால் உபதேசித்து –
பாஷாண்டிகளை நிரசிக்க ஸம்ப்ரதாய ரக்ஷணத்துக்கு ஆச்சார்யர்களாக அவதரித்ததும் இத்யாதி
சிஷ்யருக்குள் ஞானத்தில் தாரதம்யம் குரு பக்தியில் வாசியே ஹேது

———————————

அர்த்த அநு சாசன பாகம்
1-உபோத்காத அதிகாரம் -க்ரந்தத்தின் தலை வாசல் திறப்பு
அவர் கடாக்ஷத்தால் மூன்றினுள்ளும் நாளும் உகக்கப் பெறுவதே இக்கிரந்தத்தின் பயன் என்று விளக்குகிறது
ஆபகவத்த பிரதிதாம் அநகாம் ஆச்சார்ய சந்ததிம் வந்தே மனசை மம யத் ப்ரஸாதாத் வசதி ரஹஸ்ய த்ரயஸ்ய சாரோயம்
ஆச்சார்யர் அனுக்ரஹத்தால் ரஹஸ்ய த்ரய சாரம் மனசில் நிலை பெற்று இருக்கும்

—————————————————-

2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் –
எட்டு இரண்டு எண்ணிய சதிர்க்கும் தனி நிலை
ஆச்சார்யர் இடம் கற்கும் கல்விகள் பலவாயினும் எட்டு இரண்டு எண்ணுவதே சதிர்க்கும் தனி நிலை என்கிறது
பல கற்ற மெய்யடியார் –
வேதங்களில் -பாஹ்ய குத்ருஷ்ட்டி சாஸ்திரம் -விஷ சாம்ய அத்யந்த அ சாரம்/ கர்ம காண்ட விஷயங்கள் -அல்ப சாரம் /
ஸ்வர்க்காதி புருஷார்த்துக்கு சாரம் சார தமம் / தகவல் லாபம் -உபநிஷத் சார தமம் –ரஹஸ்ய த்ரயம் -அத்யந்த சார தமம் –

—————————————————-

3-பிரதான பிரதிதந்தர அதிகாரம் –
துழாய் முடியான் உடம்பாய் நாம் அடியோம் -என்ற முக்கிய அடிப்படைக் கொள்கை
இம்மூன்றில் முக்கியமாம் மூல மந்த்ரம் -முதல்வனுக்கு இவ்வுலகு உடல் -எனத் தெளிவிக்கும் என்கிறது
நிருபாதிக -ஆதாரத்வ -சேஷித்வ -நியந்த்ருத்வ –
பிரணவம் -அ -எம்பெருமான் -/ அ ஆய -எம்பெருமானுக்கு / ஆ ஆய உ -எம்பெருமானுக்கே /
அ ஆய உ ம -எம்பெருமானுக்கே ஜீவன் சேஷன்
உ பிராட்டி -மிதுனத்துக்கே சேஷன் என்றுமாம் அர்ஜுனன் ரதம் போலே –
பெருமாள் சீதா பிராட்டி இளைய பெருமாள் நடந்து காட்டியது போலே

————————————–

4-அர்த்த பஞ்சக அதிகாரம் –
அடிப்படையில் அலர்ந்த ஐந்தறிவு
இம் முக்கியத்தைச் சார்ந்ததான ஐந்தறிவு புகட்டி நிற்கிறது
பர ஸ்வரூபம்-ஸ்ரீ யபதி – -சத்யம் ஞானம் -அநந்தம் -ஆனந்தம் -அமலம் –
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை ஏக -/ உபய விபூதி உக்தன் /
ப்ராப்ய ப்ராபக உபயுக்த குணங்கள் / அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம்
அர்த்த பஞ்சகத்தில் உள்ள –
எம்பெருமான் -நான் -அஹங்காரம் -இவையே தத்வ த்ரயங்கள்
பகவத் நிக்ரஹ விரோதி நீக்கும் பரிஹாரம் பிரபத்தி -தஸ்ய ச வசீ கரணம் தச் சரணாகதி ரேவா -ஸ்ரீ பாஷ்யகாரர்

———————————————

5-தத்வ த்ரய சிந்தனை அதிகாரம் –
அரு -உருவானவை பற்றி ஆய்வு
இவ் வைந்தில் உடம்பு கொடு மோஹம் கெட உதவும் முத் தத்வத்தை விலக்கி நிற்கிறது

கேவல ப்ரக்ருதி -மூல பிரகிருதி மறு ஸ்ரீ வத்ஸம் /
ப்ரக்ருதி -விக்ருதி -மஹான் -அஹங்காரம் தன்மாத்ரை ஆகிய -3-
கேவல விக்ருதி -மனஸ் இந்திரியங்கள் பஞ்ச பூதங்கள் ஆகிய -21-
மஹான் -தண்டு /அஹங்காரம் -சாத்விக ரஜஸ் தாமச -சங்கு சார்ங்கம் / மனஸ் -திகிரி
கர்ம இந்திரியங்கள் -வாக்கு பாணி பாதம் பாயு உபஸ்தம் –
ஞான இந்திரியங்கள் -கண் காது மூக்கு நாக்கு த்வக் -இவை சரங்கள்
தன் மாத்திரைகள் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம் -பஞ்ச பூதங்கள் -இவை வனமாலை
பிருத்வி -கந்தம்/ தண்ணீர் -ரசம் / அக்னி -ரூபம் / காற்று -ஸ்பர்சம் /ஆகாசம் -சப்தம்

———————————–

6-பர தேவதா பாரமார்த்யதிகாரம் –
திரு மாதுடன் நின்ற புராணம்
இத் தத்துவம் மூன்றில் திரு மாதுடன் நின்ற புராணனே புகல் -பயன் -என்கிறது –

————————–

7-முமுஷூத்வ அதிகாரம் –
வீடினை வேண்டும் பெரும் பயன்
இவ் வளவான அறிவால்-எனக்கு உரியன்-எனது பரம் -எனது பேறு என்னாது
அஞ்சிறைக்கு அஞ்சி பெரும் பயன் வீடினை வேண்டுபவர் முமுஷூ என விளக்கம் அளிக்கிறது
முதல் ஆறு அதிகாரங்களால் தத்வ விளக்கம் –
அடுத்து ஆறு அதிகாரங்களால் ஹித விளக்கம் அருளிச் செய்வதற்கு முன்பு
முமுஷூத்வ அதிகாரம் வளரும் ஏழு படிகள்
1-ப்ரதிபாதன பிரதிதந்தர சரீராத்மா பாவம் அறிவது
2-தேஹ இந்திரியங்களை விட உண்டான ஆத்ம வைலக்ஷண்யம் அறிதல் -உபோத்காதாதிகாரம்
3-க்ருத்ய கரணம் -அக்ருத்ய அகரணம்
4-தான் சேஷ -ஆதேய விதேய-அநு -அல்ப சக்தன்-அறிந்து –
5-ரஹஸ்ய த்ரய ஞானம் -அர்த்த பஞ்சக ஞானம் பெற்று அஹங்கார மமகாரங்களை ஒழித்து
6-சுவர்க்கம் கைவல்யம் அல்பம் அஸ்த்ரம் அறிந்து- சார தம அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் அடைய பாரிப்பு
7-ஸூவ பிரவ்ருத்தி நிவ்ருத்தராய் ஈஸ்வர பிரவ்ருத்திக்கு ஹேதுவான சரண் அடைய முமுஷுக்கு அதிகாரம் கிட்டும் –

—————————————-

8-அதிகாரி விபாக அதிகாரம் —
நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளை ஏற்பவர்
இவ்விதம் வீடு வேண்டும் தகுதி உடையோர் செய்யும் பக்தி அல்லது பிரபத்தி தான்
இருவகையாய் நின்ற போதிலும் அவர்கள் உடலை விட்ட பின் பெரும் பேறு ஒரே வகை தான் என்று விவரிக்கிறது

சத்வாரக பிரபத்தி நிஷ்டன் -பிரபத்தியை அங்கமாகக் கொண்டு -31-ப்ரஹ்ம வித்யா மூலம் பக்தியை சாதன ரூபமாக
அத்வாரக பிரபத்தி நிஷ்டன் -பக்தியை பல ரூபமாக
இதில் யுக்தி நிஷ்டன் -ஆச்சார்ய உபதேசம் பெற்று தானே பிரபத்தி
ஆச்சார்ய நிஷ்டை -ஆச்சார்யன் அனுஷ்ட்டிக்கும் சமர்ப்பணத்தில் அடங்குதல்

—————————————————————————-

9-உபாய விபாக அதிகாரம் –
பல மறையின் பரம நெறி
இவ்வதிகாரிகள் அனுஷ்ட்டிக்க வேண்டிய மோக்ஷ உபாயங்கள் பக்தி ப்ரபத்தியாய் இருவகை என விளக்கும்

———————————————-

10-பிரபத்தி யோக்ய அதிகாரம் –
அநந்யராய் வந்து அடையும் வகை –
இவ்விரு உபாயங்களுக்குள் பிரபத்தி செய்யும் தகுதியை -15-வகையாக எடுத்து இத் தகுதி ஒழிய
ஜாதி ஆஸ்ரமம் போன்ற வேறே தகுதி ஏதும் வேண்டாது அனைத்து உலகும் வந்து அடைய உரியது
என்று தேர்ந்து அளிக்கிறது

—————————————

11-பரிகர விபாக அதிகாரம் –
துணையாம் பரனை வரிக்கும் வகை
செய்ய விழையும் ப்ரபத்தியின் அங்கங்களை விளக்கி நிற்கிறது

சர்வஞ்ஞன்–நம் அபராத பாஹுல்யம்-சங்கை -புருஷகாரத்வம் -அந்தப்புர வாசிக்கு அஞ்ஞாதன் ஆவான்
சர்வசக்தன் -பிரதிபந்தகங்களை போக்கும் சாமர்த்தியம்
கர்ம பலன் அளிக்க வேண்டி வருமே -சம்பந்தம் ப்ராப்தான் -திரு உள்ள நினைவே பாப புண்யங்கள்
ஸ்வயம் பிரயோஜனமாக கொள்ளும் அவாப்த ஸமஸ்த காமன்

———————————————

12-சாங்க பிரபதன அதிகாரம் –
அறமே பரம் என்று அடைக்கலம் வைத்தமை –
இப் பிரபத்திக்கு அங்கி பரம் அறுத்து பரமனுக்கு மிக்க அடிமை என்ற நினைப்பே என்கிறது –
குரு பரம்பரா பூர்வகமாக -ரஹஸ்ய த்ரயார்த்தம் அனுசந்தானம் –
த்ரிவித தியாக புத்தி -ஸ்வரூப -ரஷா பர-ரஷா பல சமர்ப்பணம்
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் சேர்விக்கும் -அதுவும் அவனது இன்னருளே

———————————–

13-க்ருதக்ருத்யாதிகாரம்-
வேள்வி அனைத்தும் முடித்தமை
இப்படி பிரபத்தி செய்வதற்கு முன்பு சோகம் உற்றவனாய்
செய்த பின்பு சோகம் அற்றவனாய்
வேள்வி அனைத்தும் முடித்து நிற்கும் நிலையை அறிவிக்கிறது
நித்ய நைமித்திகங்களும் பகவத் ஆராதன ரூபமே இவர்களுக்கு

—————————–

14-ஸ்வநிஷ்ட அபிஜ்ஞாந அதிகாரம் –
மூன்றில் நிலையுடைமை –
இந் நிலையில் நிஷ்டை யுடன் இருப்பதை அறியும் படியையும்
அப்படிப்பட்டவர்கள் மேதினியில் மேவிய விண்ணவர் எனவும் விவரிக்கிறது

பிறர் தூஷித்தாலும் -பாபம் சம்பாதிக்கிறார்கள் என்று அவர் பால் பொறை கிருபை –
உபகார ஸ்ம்ருதி உகப்பு இத்யாதி
ஈஸ்வரன் தூண்ட செய்வதால் அனைத்தும் ஹிதமர்த்தமாகவே கொள்ளுபவர் ஸூக துக்கங்கள் கர்மாதீனம்
என்று தேக யாத்திரைக்கு விசாரம் இல்லாமல் பிராரப்த கர்மங்கள் அனுபவித்து கடன் கழிகிறது என்று இருத்தல் –

————————————-

15-உத்தர க்ருத்ய அதிகாரம் –
கடன்கள் கழற்றிய அடிமை
மேதினியில் இருக்கும் அளவும் பகவத் ஆஜ்ஞா அநுஜ்ஞா கைங்கர்யங்களை
சங்கிலி துவக்கு போலே உகந்து செய்து வர வேண்டும் என்கிறது –

சாத்விக ஆகாரம் -சேவை -ஸாஸ்த்ர பரிசீலனம் இவற்றிலே மூண்டு
ருசி வாசனைகளை அறவே போக்கிக் கொள்ளுபவர்
த்வயம் நித்ய அனுசந்தானம்

————————————

16-புருஷார்த்த காஷ்ட அதிகாரம் –
நல்லடியார்க்கு ஆதரம் மிக்க அடிமை
இக் கைங்கர்யங்களை பாகவதர்கள் வரையில் செய்யப் பிராப்தம் என்கிறது
கோது அற்ற புருஷார்த்த காஷ்டை -பாகவதர் உகப்பே போக ரசமே உத்தேச்யம் –

——————————–

17-சாஸ்த்ரீய நியமன அதிகாரம் –
மேதினியில் இருப்பது விதியினாலே
இப்படி பகவத் பாகவத கைங்கர்யங்களை சாஸ்த்ரப்படியே செய்து வரச் சொல்கிறது

தேக யாத்ரை கர்மாதீனம் ஆகையால் அதுக்கு கரைய வேண்டாம் கரைந்தால் மரணம் வரை
தான் கர்மம் அனுபவிக்க ஒத்துக்க கொண்டது பொய்யாகி நாஸ்திகனாம்
ஆத்மயாத்ரை பகவத் அதீனம் ஆகையால் அதுக்குக் கரைய வேண்டா –
கரைந்தால் ஆத்மாவைக் காக்கும் பரத்தை சமர்ப்பித்தது பொய்யாகுமே
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் ஆதரித்து சந்தனம் பூ நிலா தென்றல் கண்டது போல் மகிழ வேண்டும்
செய்யும் கிரிசைகள் எல்லாம் பகவத் ப்ரீதிக்கு பாத்திரமாகவே இருக்க வேண்டுமே

————————————–

18-அபராத பரிஹார அதிகாரம் –
மாளாத வினை அனைத்தும் மாளும் வகை
இப்படி எஞ்சிய காலத்தை கழிக்கும் பிரபன்னனுக்கு பிராரப்த கர்ம விசேஷத்தினால் அறியாமலோ
ஆபத்தில் அறிந்தோ செய்யும் பாபங்கள் ஒட்டாது –
அநாபத்தில் அறிந்து செய்பவை பிராயச்சித்தம் செய்வதாலோ சிறு தண்டனை அனுபவித்தோ
கழியும் என்பதைக் கூறுகிறது

——————————————

19-ஸ்தான விசேஷ அதிகாரம் –
வானாடுகந்தவர் வையத்து இருப்பிடம் நன் நிலம்
இப்படி எஞ்சிய காலத்தைக் கழிக்க-வர்ண தர்மங்கள் நிலைத்து இருப்பதாய் –
பாகவதர்கள் வசிப்பதாய் உள்ள இடமே ஏற்றம் என்கிறது

உகந்து அருளின திவ்ய தேசங்களும் நதிக் கரையில் உள்ள தேசங்களும் உசிதம் என்றதாயிற்று

—————————————

20-நிர்ணய அதிகாரம் –
உடலைச் சிறை வெட்டி விட்டு வழிப் படுத்தும் வகை
இப்படி வர்த்திக்கும் பிரபன்னனுக்கு சரீரம் விழக் குறித்த சமயம் வந்தவாறே
எம்பெருமான் தன்னைப் பற்றிய அந்திம ஸ்ம்ருதி உண்டாக்கி
ஜீவனை ஸ்தூல சரீரத்தை விட்டு ப்ரஹ்ம நாடி வழியாக அர்ச்சிராதி மார்க்கத்தில்
புறப்படச் செய்கிறான் என்கிறது –

—————————————–

21-கதி சிந்தனை அதிகாரம் –
வானேறும் வழி கண்டோம்
இப்படி புறப்பட்ட ஜீவனை எம்பெருமான் போகங்கள் பல அனுபவிக்கச் செய்து விரஜா நதியை கடத்துவித்து
அப்ராக்ருதமான ராஜ உபசாரங்களை பண்ணுவித்து அழகு ஓலக்கத்திலே நித்ய முக்தர்களோடு
புரையப் பரிமாறும்படி செய்விக்கிறான் என்கிறது

———————————-

22-பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் –
அந்தமிலா பேரின்பம் அருந்துதல் –
குருக்கள் குரை கழல் கீழ் மகிழ்ந்து எழும் போகத்து மன்னுதல்
இவ்விதம் இந்த ஜீவன் தேச விசேஷத்தை
அடைந்து எல்லா தேச கால நிலைகளிலும் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு
முழுமையான பேர் இன்பத்தை மாறுதல் இன்றி அனுபவித்துக் கொண்டே இருப்பான் என்கிறது

சாயுஜ்யாதிகள் -ஜீவ ப்ரஹ்ம ஐக்கியம் இல்லை -ஜகத் காரணத்வ -மோக்ஷ பிரதத்வ -சர்வ ஆதாரத்வ -சர்வ நியந்த்ருத்வ
சர்வ சேஷித்வ -சர்வ சரீரத்வ -சர்வ சப்த வாஸ்யத்வ -சர்வ வேத வேத்யத்வ -சர்வ லோக சரண்யத்வ
சர்வ முமுஷூ உபாஸ்யத்வ -சர்வ பல பிரதத்வ -சர்வ வியாபித்த ஞான ஆனந்த ஸ்வரூபத்வ
ஸ்ரீ லஷ்மீ ஸஹாயத்வாதிகள் பிரதி நியதங்கள்

————————————–

அநாதி காலம் ஸம்ஸரித்துப் போந்த ஷேத்ரஞ்ஞன் அவசர பிரதீக்ஷையான பகவத் கிருபையால் புரிந்து
சமீஸீன ஸாஸ்த்ர முகத்தால்
தத்வ ஹித புருஷார்த்தங்களைத் தெளிந்து
முமுஷுவாய்
ஸ்வ அதிகார அனுரூபமாய் இருப்பதொரு உபாய விசேஷத்தைப் பரிக்ரஹித்து க்ருதக்ருத்யனாய்
தன் நிஷ்டையைத் தெளிந்து அதுக்கு அனுரூபமாக இங்கு இருந்த நாள்
யதா சாஸ்திரம் நிர் அபராதமாய்ப் பண்ணும் கைங்கர்ய ரூப புருஷார்த்தம் இருக்கும் படியும்
சரீர அநந்தரம்
அர்ச்சிராதி கதியாலே அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்றால் இவனுக்கு அநவிச்சின்னமான
பகவத் அனுபவ பரிவாஹமாக வரும் பரிபூர்ண கைங்கர்ய ரூப பரம புருஷார்த்த சித்தி இருக்கும் படியும்
அர்த்த அநு சாசன பாதத்தில் சொல்லப்பட்டன –

சந்த்ருஷ்ட சார வாக் வித் ஸ்வ பர நிசிததீ சங்கஜித் நைகசம்ஸ்த
ஸ்பஷ்ட உபாய அதிகின்ந ச பரிகர பர ந்யாஸ நிஷ் பன்ன க்ருத்ய
ஸ்வாவஸ்தார்ஹம் சபர்யா விதிம் இஹ நியதம் வ்யாகசம் க்வாபி பிப்ரத்
நிர் முக்த ஸ்தூல ஸூஷ்ம ப்ரக்ருதி அநுபவதி அச்யுதம் நித்யம் எக

——————————————-

ஸ்திரீகரண பாகம் –ஸூஷ்ம தம அர்த்தங்களை விளக்குவதற்காக –

23-சித்த உபாய சோதன அதிகாரம் –
திரு நாரணன் மன்னிய வன் சரண்
மேலே இது வரை விவரித்த விஷயங்களில் -குறிப்பாக சித்தோ உபாயமான எம்பெருமான்
ஸ்வா தந்தர்யம் -கருணை -சேஷித்வம் -ஸ்ரீ லஷ்மீ சஹத்வம் -ஆகிய குணங்கள் பற்றிய
கலக்கங்களுக்கு சமாதானம் சொல்லி அறிந்த ஞானத்தை ஸ்த்திரப் படுத்துகிறது

அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே -என்பவள் இருக்க அவன் ஸ்வதந்திரம் கண்டு கலக்கம் வேண்டாமே
சஹஜ காருண்யம் -பர துக்க துக்கித்தவம் -பர துக்க நிராச சிகீர்ஷை
சரணம் வ்ரஜ என்று விதித்து இருப்பதால் ஆத்ம சமர்ப்பணம் ஸ்வரூப விருத்தம் அன்று
பண்ணவும் வேண்டும் பண்ணியதுக்கு பரிதவிக்கவும் வேண்டுமே
அநாதி கர்ம ப்ரவாஹ விபாக விசேஷத்தாலே ஏற்பட்ட யாதிருச்சிக்க ஸூஹ்ருத்தாதிகளை முன்னிட்டு
ஆத்ம சமர்ப்பணத்திலே மூட்டுவித்து அதனால் ப்ரீதனாய் ரஷிக்கிறான் –
வைஷம்ய தோஷம் தட்டாமல் இருக்க வியாஜ்யமாக ரஷா அபேஷையோடு ஆத்ம சமர்ப்பணம்

———————————————-

24-ஸாத்ய உபாய சோதன அதிகாரம் –
வரிக்கின்றனன் குறி ஒன்றால்
பக்தி பிரபத்தி ஆகிற ஸாத்ய உபாயங்களை பற்றிய அதிகாரம் -ஸ்வரூபம் -பரிஹாரங்கள் பற்றிய
கலக்கங்களுக்கு சமாதானம் சொல்லி அறிந்த ஞானத்தை ஸ்த்திரப் படுத்துகிறது

பிரபத்தி யாக விசேஷமாக ந்யாஸ வித்யையில் விதிக்கப்பட்ட வைதிக தர்மம் என்பதால் த்ரைவர்ணிகர் மட்டுமே என்னில்
சாமான்ய தர்மம் -காகாதிகளும் சரண் அடைந்து உஜ்ஜீவிக்கக் கண்டோமே
ஸ்வரூப ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டியவை
சர்வ தர்மான் பரித்யஜ்ய என்று ஸ்வ ரக்ஷண அர்த்த ஸ்வ வியாபார நிவ்ருத்தியை சொன்னவாறு
பிரபத்தி தர்மம் என்றாலும் சர்வ தர்மங்களை விடச் சொன்ன போது இத்தையும் விட வேண்டுமே என்னில்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -அவனையும் விடச் சொன்னதாக வில்லையே
அதே போலே அவனைத் தவிர என்பது போலே பிரபத்தி தவிர என்றுமாம்

—————————————————-

25-ப்ரபாவ வ்யவஸ்தித அதிகாரம் –
அடியார் ஆதரத்தில் ஆரண நீதி நெறி குலையாமை
ஸாத்ய உபாயங்களின் ப்ரபாவத்தை வரை அறுத்துக் கூறுகிறது

ப்ரபத்தியால் ஜாதியை மாற்ற முடியாது -ஜாதி சரீர நிபந்தம் –
பகவத் பக்தர்கள் சமம் என்றது பரம புருஷார்த்த சாம்யாதிகளாலே
இப் பக்தர்களில் தேவதாந்தர ஸ்பர்சம் இல்லாதவர் -ஏகாந்திகள்
ப்ரயோஜனாந்தர ஸ்பர்சம் இல்லாதவர் -பரமை காந்திகள்
கைங்கர்ய ஏக பிரயோஜனராய் இருப்பவர்–ஷோடச வர்ண ஸ்வர்ண பரமை காந்தி

————————————-

26-ப்ரபாவ ரக்ஷ அதிகாரம் –
தண்மை கிடக்க தரம் உள்ளமை
ஸாத்ய உபாயங்களின் ப்ரபாவத்தை ரஷிக்கிறது

ப்ரபத்தியால் எல்லா சோகங்களும் கழியும் என்றாலும் -பிராரப்த கர்ம பலனை சரீர அவசானம் வரை
இருந்து கழிக்க இசைவதால் அவற்றால் வரும் சோகங்கள் இருக்குமே
ஹிதைஷி யாகையால் துக்கம் இல்லாமல் இங்கே வைத்தால் நசை மாளாதே-
ஆகவே சிஷையும் அனுக்ரஹ விசஷம் தானே
பாகவத அபசாரம் சிறிதும் இல்லாமல்
அங்கே சென்று அனுபவிக்கப் போகும் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு இங்கேயே
முடி சூடி நிற்பதாய் அனுசந்தித்து இருக்க வேண்டும் –

—————————————————————

பத வாக்ய யோஜனா பாகம்
27-மூல மந்த்ர அதிகாரம் –
நன் மனு ஓதினம்
திரு அஷ்டாக்ஷரத்தின் பத வாக்ய யோஜனைகளை விவரிக்கிறது

பரம புருஷார்த்தத்தில் ருசியும் -உபாயத்தில் அதிகாரமும் யோக்கியதையும் -உண்டாக்கி தாரகம் ஆகும் மூல மந்த்ரம்
உபாயத்தைச் செய் என்று விதித்து சத்தா ஞானத்தை வளர்த்து -போஷகமாகும் சரம ஸ்லோகம்
உபாயத்தை ஸக்ருத் அனுஷ்ட்டிக்கும் விதம் சொல்லி சதா அனுசந்தானம் போக்யமாய் இருக்கும் த்வயம்

பிரணவம் -அ உ ம -ஸ்ரீ லஷ்மீ ஸஹிதன் -ஸ்ரீ மன் நாராயண -த்வயம்
நம–சரணவ் சரணம் ப்ரபத்யே -சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஸ்திதா –
அகிஞ்சன்யன் -அநந்ய கதித்வம் -அநந்ய சரண்யன் – உபாயாந்தர நிரபேஷன் –
நாராயணாய -ஸ்ரீ மத் நாராயணாய நம -உபேயம் -நம -பலத்தில் ஸ்வாதீன ஸ்வார்த்த கர்த்ருத்வ போக்த்ருத்வ விரோதி நிவ்ருத்தி

அகாரம் -அவ ரக்ஷனே-சர்வ ரக்ஷகன்
உ காரம் -அயோக அந்நிய யோக விவச்சேதம்
ம காரம் -மன ஞானே -அவ போதநே -மாச பரிமானே -ஞான ஸ்வரூபத்வ ஞான குணகத்வ
அஸ் ம அத் -பிரதானம் நீய மானம் ஹி தத்ர அங்கானி அபகர்ஷதி -பிரதானமான ஜீவனைச் சொல்லி
சேக்ஷத்வாதி குணங்களையும் சொல்லும்
நம-உகார விவரணம்
நர-ர-ரீங்க்ஷயே -ஸ்வரூப விகாரம் அசித் -அதன் வ்யாவ்ருத்தி ந ர -ஜீவ சமூகம் -நாரா -நரர்கள் கூட்டம்
ந்ரு நயே -நல் வழியில் நடத்திச் செல்லும் பரமாத்மாவை காட்டி நர சம்பந்தி -நராத் ஜாயதே -சேதன சேதனங்கள்
நாரம் -ஜலம் -சொல்லி ஸ்ருஷ்டித்தவன் -என்றுமாம்
அயனம் -அய பய கதவ் -ஈ யதே அநேந -இவன் மூலம் அடைய படுகிறது என்று உபாயத்தையும்
ஈயதே அஸ்மின் -இவன் இடத்தில் லயம் -ஆதாரம் / ஈயதே அசவ் -இவன் அடையப் படுகிறான் உபேயம்
பஹு வ்ரிஹீ சமாசம் -நாரா அயனம் யஸ்ய -நாற்றங்கால் எவனுக்கு இருப்பிடமோ
உபய விபூதி யோகம் -அகில ஹேயப்ரத்ய நீகன் கல்யாணை ஏக
ஜகத் காரணத்வம் –
தத் புருஷ சமாசம் -நாரங்களுக்கு இருப்பிடம் –

திருமந்த்ரார்த்தம்
1–ஒரே வாக்ய -உபாய பரம் -நம-சமர்ப்பண பரம் -சேஷத்வ ஸ்வரூப ஞானம் புருஷார்த்தம் இன்றி உபாயம் சித்திக்காதே
2-ஒரே வாக்ய -உபேய பரம் -நாம ப்ரஹவீ பாவ அஞ்சலி பத்த நமஸ் சப்த உச்சாரணாதி ரூப சேஷ வ்ருத்தி பரம்
சேஷ வ்ருத்தி செய்து ஹ்ருஷ்டா பவந்தி -சேஷத்வ ஸ்வரூப ஞான உபாயம் இல்லாமல் சேஷ வ்ருத்தி சித்திக்காதே
3–இரண்டு வாக்கியங்கள் -ஸ்வரூப பரம் -ஆய நாராயணாய உம்-
அகார நாராயண சப்தார்த்த -சர்வ ரஷக- சர்வ ஆதார -சர்வ சேஷிக்கே – நான் -நிருபாதிக அநந்யார்ஹ சேஷன் –
புருஷார்த்தம் ஆர்த்திகம்
நம -எனக்கு உரியேன் அல்லேன் -மற்று வேறே ஒன்றுக்கும் உரியேன் அல்லேன் –
நிருபாதிக ஸ்வாமிக்கே -என்று ஸ்வரூப பரம் –
உபாயம் ஆர்த்திகம்
4–இரண்டு வாக்கியங்கள் -சமர்ப்பண பரம் -ஆய நாராயணாய உம்-ஆத்ம சமர்ப்பண யாகத்தில் ஹவிஸ் ஆகிற நான்
அகார வாச்யனான நாராயணனுக்கே பாரமாக சமர்ப்பிக்கப் படுகிறேன்
நம -என்னுடைய ரக்ஷண பரம் என்னுடையது அல்ல எம்பெருமானுடையதே
5–இரண்டு வாக்யம் -புருஷார்த்த பிரார்த்தனா பரம் -ஆய நாராயணாய உம் -அகார வாஸ்யனான நாராயணனுக்கே
கைங்கர்யம் செய்பவனாக ஆவேன் -இஷ்ட பிராப்தி பிரார்த்தனா பாரம்
நம -எனக்காக அல்லேன் -ஸ்வார்த்த -ஸ்வாதீந -கர்த்ருத்வாதி -அ நிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனா பரம்
6–மூன்று வாக்கியங்கள் -ஸ்வரூப புருஷார்த்த பரம்
ஸ்வரூப பரம் –பிரணவம் -அகார வாஸ்யனான நாராயணனுக்கே நான் உரியேன் ஆவேன்
நம -நான் எனக்கு உரியேன் அல்லேன் –உபாயம் ஆர்த்திகம்
புருஷார்த்த பரம் -நாராயணாய -பவேயம்-பகவானுக்கே -சர்வ தேச சர்வ கால சர்வ உசித சர்வ வித கைங்கர்யம் எழ வேணும்
7–மூன்று வாக்கியங்கள் -ஸ்வரூப புருஷார்த்த பரம் –
பிரணவம் -ஸ்வரூப பரம் -அகார வாஸ்யனான நாராயணனுக்கே உரியேன் ஆவேன்
நம -ஸ்யாம் -ஸ்யாத் -அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனா பரம் -நானும் எனதும் எனக்கு உரியேன் அல்லேன்
நாராயணாய -ஸ்யாம் -இஷ்ட பிராப்தி பிரார்த்தனா பாரம் -நாராயணன் பொருட்டு ஆவேன்
8–மூன்று வாக்கியங்கள் -ஸ்வரூப உபாய பரம் –
பிரணவம் -ஸ்வரூப பரம் -அகார வாஸ்யனான நாராயணனுக்கே நான் சேஷ பூதன்
நம -ரக்ஷணத்தில் எனக்கு ஸ்வாதந்தர்யம் இல்லை -நீயே ரக்ஷகன் -கோப்த்ருத்வ வர்ணத்தால் உபாய பரம்
நாராயணாய -நாரங்களின் ரக்ஷணத்தில் உபாயமானவன் -கோப்த்ருத்வ வர்ணத்தால் உபாய பரம்
9–மூன்று வாக்கியங்கள் -சமர்ப்பண புருஷார்த்த பரம் –
பிரணவம் -ரக்ஷகனுக்கே ஜீவன் சமர்ப்பணம்
நம -ஸ்யாம் -எனக்கு நான் அல்லேன் -அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனா பரம்
நாராயணாய – ஸ்யாம் -நாராயணனின் சரண கைங்கர்யத்துக்கே ஆவேன் -இஷ்ட பிராப்தி பரம்
10–மூன்று வாக்கியங்கள் -ஸ்வரூப உபாய புருஷார்த்த பரம் –
பிரணவம் -ஸ்வரூப பரம் -அகார வாஸ்யனான நாராயணனுக்கே நான் சேஷன்
நம-ஸ்யாம் -ஸ்யாத் – உபாய பரம் -அவனை முக்கரணங்களாலும் சரணம் அடைகிறேன்
நாராயணாய -ஸ்யாம் –புருஷார்த்த பரம் –ஸ்வாமித்வ -பரத்வ –ஆகாரமுடைய நாராயணனுக்கே ஆவேன்

அ -நாராயண -நர -அயன -இவற்றால் ரக்ஷகத்வ காரணத்வமும் -நியந்த்ருத்வ நேத்ருத்வமும் -உபாயத்வ உபேயாதவமும்
ம நார–இவற்றால் ஞான ஸ்வரூப ஞான குணகன் -அநு -நித்யன் -ஜீவ பரஸ்பர பேதமும் சித்திக்கும் –
நாராயண சப்தத்தை ஸ்வர வ்யஞ்ஜனமாக பிரித்து ந் +அ +ர் +ஆ +ய் +அ + ண் + அ -என்று அஷ்ட அக்ஷரங்கள்
பிரணவம் ஒழிந்த மந்த்ர சேஷத்துக்கு
ந –க்ஷேமம் கொடுக்கும் -புருஷார்த்த த்வரை உண்டாக்கும் -பிரதிபந்தக நாசம்
ம -மங்களம் -ஞான விகாசம் -பிறர் வணங்கும்படி செய்தலும்
நா -ஆச்சார்யத்வம் -கைங்கர்ய த்வரை -நாஸ்திக தன்மை நிரசனம்
ரா -பகவத் பிரீதி -இதர விரக்தி -லோக ரக்ஷணம்
ய பகவத் விஷய ஊற்றமும் ஸ்வயம் பிரயோஜனமும்
ணா–பகவத் ஸ்தோத்ரம் -வாக் ஸூ த்தி
ய -யஷ ராக்ஷஸ வேதாள பூதங்கள் பயந்து ஓடும்
திரு மந்திரத்தில் யதார்த்த ஞானமும் நிஷ்டையும் உடையவராய் ஆதரிக்கும் தேசத்தில்
பிரதான வ்யாதிகளாக எடுத்த ராகாதிகளும்
சத்துக்களுக்கு ஸ்ரீ ஞான சம்பத்தில் குறைவும்
ஆத்ம அபஹாராதிகளைப் பண்ணும் மஹா தஸ்கரரான அஹந்காராதிகளும் நடையாடாது

————————————————

28-த்வய அதிகாரம் –
திருமால் பாதம் இரண்டும் சரண் எனப் பற்றி அடிமை கொள்ளுதல்
திரு த்வய மந்திரத்தின் பத வாக்ய யோஜனைகளை விவரிக்கிறது

த்வயம் -உபாய உபேய ப்ரதிபாதனம் –
சரண வரணாதி அங்கங்களையும் -ஸ்வரூப -ரக்ஷண பர -ரக்ஷண பல -சமர்ப்பனமான அங்கியையும் சொல்லுவதால்

ஸ்ரீ -ஸ்ருட் -தாது -ஸ்ருனோதி-ஸ்ராயவதி
ஸ்ருனோதி—
கேட்கிறாள்-ஆஸ்ரிதரின் ஆர்த்த த்வனியைக் கேட்கிறாள்
எம்பெருமானிடம் உபதேசம்-லோக ஹிதம் -கேட்கிறாள்- பெறுகிறாள்
ஸ்ராயவதி-
நமக்காக பகவானிடம் பிரார்த்திக்கிறாள் -அவனிடம் பெற்ற உபதேசத்தை தக்க தருணத்தில் அவனிடம் விண்ணப்பிக்கிறாள்
விபரீதமான ஜீவனுக்கு உபதேசிக்கிறாள்
ஸ்ரீ-ஸ்ரிண் சேவாயாம் -ஸ்ரீ யதே -ஸ்ரயதே –
ஸ்ரீ யதே -மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்யத்தாலே புருஷகார பூதை -நம்மால் ஆஸ்ரயிக்கப் படுகிறாள்
ஸ்ரயதே -பகவத் வாலப்யம் தோற்ற அதிசய காரிணியாய் பகவானை ஆஸ்ரயிக்கிறாள்-
எல்லா வஸ்துக்களையும் ஆஸ்ரயித்து இருக்கிறாள் என்றுமாம் –
ஸ்ரீ–
ஸ்ரூ -ஹிம்சாயாம் -ஸ்ருணாதி-உபாய கைங்கர்ய பிரதிபந்தகங்களைக் கழிக்கிறாள்
ஸ்ரீங் பாகே -ஸ்ரீ ணாதி-கைங்கர்ய பர்யந்தமான குண பரிபாகத்தை உண்டாக்குகிறாள்

மது நித்ய யோகம்
நாராயண -பூர்வ கண்டத்தில் ஆஸ்ரயண உபயோக கல்யாண குணங்கள் –
வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -ஞான -சர்வஞ்ஞத்வம் -பல -சர்வ சக்தித்வம்-
ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் – -பரம காருணிகத்வ -க்ருதஜ்ஞ்ஞத்வ -பரம உதாரத்வ -ஸ்திரத்தவ பரிபூர்ணத்வ இத்யாதிகள்
சரணவ் -திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு உப லக்ஷணம்
உத்தர கண்டம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -சேஷி நிரதிசய போக்யத்வம் பிரதானம்
சரணவ் -திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் உப லக்ஷணம் -குண விபூதிகள் அறியாதாருக்கு இதுவே இலக்கு
பகவானுக்கும் போக்யம் ஜென்ம கர்ம மே திவ்யம் -சகல மனுஷ நயன விஷயம் -ஆஸ்ரயத்வம் பாவனத்வம் –
சரணம் ப்ரபத்யே -பத்ல் -கதி -ரஷிஷ்ய தீதி விச்வாஸம் –ப்ரகர்ஷ விச்வாஸம்

——————————————–

29-சரம ஸ்லோகார்த்தம் –
மன்னருள் வாசகத்தால் மருள் அற்றமை
திரு சரம ஸ்லோகத்தின் பத வாக்ய யோஜனைகளை விவரிக்கிறது

ரஹஸ்ய தம உபாயம் -முடிவாய் உபதேசித்த -சரம உபாயம் –
அதிகார பக்ஷம் -முமுஷுவின் ஆகிஞ்சன்ய அதிகாரம் நினைத்து சர்வ தர்மான் பரித்யஜ்ய –மாஸூச
அனுவாத பக்ஷம் -மாம் ஏகம்
விதி பக்ஷம் -நைரபேஷ்யத்தில் நோக்கு
மாம் ஏகம் -ஸுலப்ய -சர்வ ரக்ஷகத்வ -சர்வ சேஷித்வ -ஸ்ரீ யபதித்வ -நாராயணத்வ -சர்வஞ்ஞத்வ —
சர்வ சக்திதவ -பரம காருணிகத்வ -ஸுசீல்ய வாத்சல்ய -திவ்ய மங்கள விக்ரஹ விசேஷத்வங்கள் விவஷிதம்
அவசர பிரதீஷாபனாய் ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு அபிமுகனாய் நிற்கும் நிலை ஸூசிதம்

ஒரு காரியத்தில் ஜீவனை ப்ரவர்த்திப்பிக்கும் காரயிதா- பல ப்ரதானாதிகளில் பிரவர்த்திக்கும் கர்த்தா –
ஜீவனின் பிரதம பிரவ்ருத்தியை விளக்காத உபேக்ஷகன் – இசைந்து இருக்கும் அனுமந்தா –
இளந்தலை சுமப்பவனுக்கு பெருந்தலை சுமப்பவனாய் ப்ரவர்த்திக்கும் சஹகாரி
அஹம் உல்லசித காருண்யன் -சர்வ விரோதி நிராகாரனார்த்தம் -நிரங்குச ஸ்வாதந்த்ரன் -மோக்ஷ பரதன்
த்வா -ஆச்சார்ய உபதேச பலத்தால் தத்வத்ரய ஞானம் பிறந்து
இதர புருஷார்த்தங்களின் அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்களையும் அறிந்து
உபாயாந்தரங்களிலே துவக்கு அற்று பர ந்யாஸம் பண்ணி க்ருதக்ருத்யனாய்
இனி வேறே கர்தவ்யஅந்தரத்தில் பிராப்தி இல்லாத உன்னை
அஹம் -மோக்ஷ ப்ரதன்
த்வா முமுஷூ
சர்வ பாபேப்யோ -பந்தங்கள் -விரோதி வர்க்கம் சரணாகதி கத்யத்தில் மூன்று சூர்ணிகைகள் –
ஸ்தூல ஸூஷ் ம ரூப பிரகிருதி சம்பந்தம்
மாஸூச
உபாய அனுஷ்டானத்துக்கு முன் அதிகாரத்தைப் பற்றியதும் -மதியத்தில் பிரபத்தி உபாயத்தைப் பற்றியதும் –
யுத்த க்ருத்யத்தில் பல சித்தியைப் பற்றியதும் உண்டாகும் சோகங்கள் கழிந்து பகவத் அனுக்ரஹ பாத்ரமான ஜீவன்
ப்ரபத்தியால் வசீகரிக்கப்பட்ட பகவான் சர்வ ஸூலபன்-விஸ்வசநீயன்-பரம காருண்யன் -நிரங்குச ஸ்வாதந்த்ரன் –
அநந்ய ப்ரயோஜனான அத்யந்த ப்ரீதி தமனான இவனுக்கு சர்வ பிரதிபந்தங்களுக்கும் நிச்சேஷமாக கழிவதால் சோகிக்க வேண்டாமே

——————————————-

சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் –
30-ஆச்சார்ய க்ருத்ய அதிகாரம் –
அருளுற்ற சிந்தையினால் அழியா விளக்கு ஏற்றினார்
ஆச்சார்யர்களுடைய செயல்பாட்டை விவரிக்கிறது

வேதாந்த ஸாஸ்த்ர ரஹஸ்யார்த்தங்களை அனுசந்தித்து ஸத்பாத்ர சிஷ்யர்களுக்கு
அஷட் கர்ணமாக மூன்றாது நபர் கேளா வண்ணம் -ஸம்ப்ரதாய ப்ரவர்த்தனமே –
தத்வ -ஹித -புருஷார்த்தங்களை விசத்தை தாமாக உபதேசித்து அருளுவதே -பிரதான க்ருத்யம்
——————————————

31-சிஷ்ய க்ருத்ய அதிகாரம் –
இருள் அனைத்தும் மாற்றினவர்க்கு ஒரு கைம்மாறு
சிஷ்யர்களின் கடமைகளை குறிப்பிட்டு விவரிக்கிறது

ஆச்சார்யர் பக்கல் க்ருத்தஞ்ஞானாய் -பக்தி ஸ்ரத்தாதிகள் கொண்டு –
ஸ்வயம் பிரயோஜனமாக கற்று ரஹஸ்யார்த்தங்களை ரக்ஷித்து வர்த்தித்தல்

——————————-

32-நிகமன அதிகாரம் –
நிலைகள் தான் உளனாய் உகக்கும் தரம்
கிரந்தத்தை பல ஸ்ருதியுடன் தலைக் கட்டுகிறது

இவ்வர்த்தங்களை கற்றவர் நித்ய ஸூரிகளுடன் ஒரு கோவையாக இருந்து –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும் பெற்று உஜ்ஜீவனம் அடைவார்கள்

——————————

ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரோயம் வேங்கடேச விபச்சிதா
சரண்ய தம்பதி விதாம் சம்மத சமக்ருஹ்யத

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலின
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குறைவே நம

ஸ்ரீ ரஸ்து-

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்யத்தில் -பராயத்தாதிகரணம் -பிரமேய நிஷ்கர்ஷம்–

October 24, 2018

ஸ்ரீ பாஷ்யத்தில் -கர்த்தரதிகரணம் முன்பும் அடுத்தும் பராயத்தாதிகரணம் —
முந்தின அதிகரணம்–ஜீவாத்மா கர்த்தா என்று அறுதியிட்டும்
பிந்தின அதிகரணம்-அந்த கர்த்ருத்வம் -பரமாத்மா யத்தம் என்று அறுதியிட்டது
ய ஆத்மனி திஷ்டன் ஆத்ம நோந்தர–ஆத்மாநம் அந்தரோ யமயதி-அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -இத்யாதி
ஸ்ருதிகளால் கர்மங்கங்களில் பிரேரிப்பவன் என்று தெரிய வருமே –
விதி நிஷேத சாஸ்திரங்கள் வ்யர்த்தமாக வேண்டி வருமே
நிக்ரஹ அனுக்ரஹ பாத்ரத்வம் ஜீவாத்மாவுக்கு இல்லை யாகுமே என்கிற சங்கையைப் பரிக்ரஹிக்க
க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ்து-விஹித ப்ரதிஷித்த அவையர்த்தாதிப்ய-என்ற அடுத்த சூத்ரம் –

பிரதம பிரவ்ருத்தியில்-ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்தர்யமும் -த்விதீயாதி பிரவர்த்திகளில் மட்டுமே பரமாத்ம பாரதந்தர்யமும்
கொள்ளப்படுகையாலே விதி நிஷேத சாஸ்திரங்களை வையர்த்தம் இல்லை என்று சங்கா பரிக்ரஹம்
பரமாத்மாவுக்கு -சாஷித்வம் -அநுமந்த்ருத்வம் -ப்ரேரகத்வம் –மூன்று ஆகாரங்கள் உண்டு
பிரதம பிறவிருத்தியிலே -சாஷித்வம் -உதாசீனத்தவம் மாத்திரமே –
த்விதீயாதி பிரவ்ருத்திகளில் அநு மந்த்ருத்வம்
ப்ரேரகத்வம் -நந்வேவம் ஏஷஹ்யேவா சாது கர்ம காரயதி-இத்யாதி ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகளாலே
ஸ்ரீ பாஷ்யகாரர் ஒருங்க விட்டு அருளினார்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் தத்வ சாரத்தில் -ஆதாவீஸ்வர தத்தயைவ புருஷ ஸ்வா தந்தர்ய சக்த்யா ஸ்வயம் —
தத்ர உபேஷ்ய–தத் அநு மத்ய–இத்யாதி ஸ்லோகத்தால் அருளிச் செய்தார்

அதிகரண சாராவளியில் -ஸ்லோகம் -242-க்ஷேத்ர ஞானம் சாமான்யம் இத்யாதியில் சேதனனுடைய சகல பிரவ்ருத்திகளிலும்
ஈஸ்வரனுக்கு ப்ரேரகத்வம் தாராளமாக உண்டு -என்று அருளிச் செய்து –
இது ஸ்ரீ பாஷ்ய தீப தத்வ சாரங்களோடே விரோதிக்கும் என்று அறிந்து –
ஸ்ரீ பாஷ்யாதி கிரந்த லேசோபி அவஹித மனஸாம் ஜதமர்தத்யம் பஜேதே -என்று முடித்தார்

தத்வத்ரயத்தில் -35-கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீனம் -என்பதற்கு விசதவாக் சிரோமணி ஸ்ரீ ஸூக்திகள்-
பராத்து தத் ஸ்ருதே-என்னும் வேதாந்த ஸூத்ரத்தாலே ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பராயத்தம் என்று சித்தமாகச் சொல்லப்பட்டது இறே
சாஸ்த்ர அர்த்தவத்வத்துக்காக கர்த்ருத்வம் ஆத்மதர்மம் என்று கொள்ள வேண்டும் –
அந்த கர்த்தாவுக்கு தர்மமான ஞான இச்சா பிரயத்தனங்கள் பகவத் அதீனங்களாய் இருக்கை யாகையாலும்
அந்த ஞானாதிகள் பகவத் அனுமதி ஒழிய கிரியா ஹேது வாக மாட்டாமையாலும்
இவனுடைய புத்தி மூலமான ப்ரயத்னத்தை அபேக்ஷித்து ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலே
அந்த கிரியா நிபந்தமான புண்ய பாபங்களும் சேதனனுக்கே ஆகிறது –இப்படி கர்த்ருத்வம்
பரமாத்மா யத்தமானாலும் விதி நிஷேத வாக்யங்களுக்கு வையர்த்தம் வாராது –
கிரியா ப்ரயத்ன அபேக்ஷஸ்து விஹித ப்ரதிஷித்த அவையார்த்திப்ய–என்று பரிஹரிக்கப்படுகையாலே –
அதாவது விஹித ப்ரதிஷிப்தங்களுக்கு வையர்த்தாதிகள் வாராமைக்காக-இச்சேதனன் பண்ணின பிரதம பிரவ்ருத்திக்கு
அபேக்ஷித்துக் கொண்டு ஈஸ்வரன் ப்ரவர்த்திப்பிக்கும் என்றபடி -எங்கனே என்னில்
எல்லாச் சேதனருக்கும் ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் ஆகையால் சாமானையென பிரவ்ருத்தி நிவ்ருத்தி
யோக்யம் யுண்டாயாயே இருக்கும் –
இப்படியான ஸ்வரூபத்தை நிர்வஹிக்கைக்காக ஈஸ்வரன் அந்தராத்மாவாய்க் கொண்டு நில்லா நிற்கும்-
அவனாலே உண்டாக்கப்பட்ட ஸ்வரூப சக்தியை யுடையனான சேதனன் அவ்வோ பதார்த்தங்களில் உத்பன்ன
ஞான சிகீர்ஷா ப்ரயத்னனாய்க் கொண்டு வர்த்தியா நிற்கும்
அவ்விடத்தில் மத்யஸ்தன் ஆகையால் உதாசீனனைப் போலே இருக்கிற பரமாத்வானானவன்
அந்த சேதனனுடைய பூர்வ வாசனா அநு ரூபமான விதி நிஷேத ப்ரவ்ருத்தியில்
அனுமதியையும் அநாதாரத்தையும் யுடையவனாய்க் கொண்டு –
விகிதங்களிலே அநுஹ்ரகத்தையும் நிஷேதங்களிலே நிஹ்ரகத்தையும்
பண்ணா நிற்பானாய் அநுஹ்ரகாத்மகமான புண்யத்துக்கு பலமான ஸூகத்தையும் நிக்ரஹாத்மகமான பாபத்துக்கு பலமான துக்கத்தையும்
அவ்வோ சேதனருக்குக் கோடா நிற்கும்

இத்தை அபியுக்தரும் சொன்னார்
ஆதாவிஸ்வர தத்தயைவ புருஷஸ் ஸ்வா தந்தர்ய சக்த்யா ஸ்வயம் தத் தத் ஞானா சிகீர்ஷண ப்ரயதநாத் உத்பாதயன் வர்த்ததே
தத்ர அபேஷ்ய தத் அனுமத்ய விதயத் தத் நிக்ரஹ அனுக்ரஹவ தத் தத் கர்ம பலம் பிரயச்சத்தி ததஸ் ஸர்வஸ்ய பும்சோ ஹரி -என்று
அடியிலே -சர்வ நியாந்தாவாய் சர்வ அந்தராத்மாவான சர்வேஸ்வரன் தனக்கு உண்டாக்கிக் கொடுத்த ஞாத்ருத்வ ரூபமான
ஸ்வாதந்த்ர சக்தியாலே இப்புருஷன் தானே அவ்வோ விஷயங்களில் ஞான சிகீர்ஷா பிரயத்தனங்களை யுண்டாக்கிக் கொண்டு வர்த்தியா நிற்கும்
அவ்விடங்களில் அசாஸ்த்ரீயங்களிலே உபேக்ஷித்தும் சாஸ்த்ரீயங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களில் நிக்ரஹ அனுக்ரஹங்களைப் பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலத்தையும் சர்வேஸ்வரன் கொடா நிற்கும் என்றார்கள்
இப்படி சர்வ ப்ரவ்ருத்திகளிலும் சேதனனுடைய பிரதம ப்ரயத்னத்தை அபேக்ஷித்துக் கொண்டு
பரமாத்மா ப்ரவர்த்திப்பியா நிற்கும் என்றதாயிற்று –

ஆனால் ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உன்னிநீஷதி ஏஷ ஏவா சாது கர்ம காரயதி
தம் யமதோ நிநீஷதி என்று உன்னிநீஷதையாலும் அதோநி நீஷதையாலும் சர்வேஸ்வரன் தானே
ஸாத்வசாது கர்மங்களை பண்ணுவியா நிற்கும் என்கிற இது சேரும்படி என் என்னில் –
இது சர்வ சாதாரணம் அன்று –
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் அதிமாத்ரமான ஆனுகூல்யத்திலே வியவஸ்திதனாயக் கொண்டு ப்ரவர்த்தியா நிற்கும்
அவனை அனுக்ரஹியா நின்று கொண்டு பகவான் தானே பிராப்தி யுபாயங்களாய் அதி கல்யாணமான கர்மங்களிலே ருசியை ஜெநிப்பிக்கும் –
யாவன் ஒருவன் அதி மாத்ர ப்ராதிகூல்யத்திலே வ்யவஸ்திதனாயக் கொண்டு ப்ரவர்த்திப்பியா நிற்கும் –
அவனை ஸ்வ பிராப்தி விரோதிகளாய் அதோகதி சாதனங்களாக கர்மங்களிலே சங்கிப்பிக்கும் என்று
இந்த சுருதி வாக்யங்களுக்கு அர்த்தம் ஆகையால் –

இது தன்னை சர்வேஸ்வரன் தானே அருளிச் செய்தான் இறே -காம் ஸர்வஸ்ய ப்ரபவோ-மத்தஸ் சர்வம் ப்ரவர்த்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ சமன்விதா –என்று தொடங்கி
தேஷாம் சதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபாயந்ததே –
தேஷாம் அவானுகம்பார்த்தம் காம் அஞ்ஞானஜம் தம னாசையாம் ஆத்மபாவஸ்தோ ஞான தீபேன பாஸ்வதா -என்றும்
அஸத்யமபிரதிஷ்டம் தே ஜெகதாஹுரா நீஸ்வரம்-என்று தொடங்கி –
மாமாத்ம பர தேஹேஷு பிரத்விஷந்தோப்ய ஸூயகா -என்னுமது அளவாக அவர்களுடைய ப்ராதிகூல்யத்தைச் சொல்லி –
தா நஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷு நரதாமான் ஷிபாம் யஜஸ்ரமசுபா நா ஸூரீஷ்வேவ யோநிஷு -என்றும் அருளிச் செய்கையாலே –
ஆகையால் அநு மந்த்ருத்வமே சர்வ சாதாரணம் -பிரயோஜகத்வம் விசேஷ விஷயம் என்று கொள்ள வேணும் –
க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ்து -என்கிற ஸூத்ரத்திலே ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் இறே
இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இ றே -கர்த்ருத்வம் தான் ஈஸ்வராதீனம் என்று அருளிச் செய்தது

ஆக -கீழ்ச் செய்தது ஆயிற்று –

ஞான ஆஸ்ரயம் ஆகையாவது -ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை -என்று பிரதமத்திலே ஆத்மாவினுடைய ஞாத்ருத்வத்தைச் சொல்லி –
ஞானம் மாத்திரம் என்பாரை நிராகரித்துக் கொண்டு –
ஞாத்ருத்வ கதன அநந்தரம் கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்ல வேண்டுகையாலே அவை இரண்டும்
ஞாத்ருத்வ பலத்தால் தன்னடையே வரும் என்னும் இடத்தைத் தர்சிப்பித்து
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது -ஆத்மாவுக்கு இல்லை என்பாரை நிராகரித்துக் கொண்டு –
ஆத்மாவினுடைய கர்த்ருத்வத்தை ஸ்தாபித்து
அந்த கர்த்ருத்வத்தில் ஸ்வரூப ப்ரயுக்தம் இல்லாத அம்சத்தையும்
அது தான் இவனுக்கு வருகைக்கு அடியையும் சொல்லி
இப்படி ஆத்மாவுக்கு உண்டான கர்த்ருத்வம் தான் சர்வ அவஸ்தையிலும் ஈஸ்வர அதீனமாய் இருக்கும் என்று நிகமித்தார் ஆயிற்று –
ஆக இவ்வளவும் தத்வத்ரய வியாக்யானத்தில் மணவாள மானுக்கிளை ஸ்ரீ ஸூக்திகள்

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த-ஸ்ரீ தத்வ பூஷணம் –

February 6, 2018

ஸ்ரீ மாலாதர வம்ச மௌக்திக மணி கண்டீரவோ வாதி நாம்
நாம்நா யமுனா தேசிக கவிவர பாதாஞ்சலே பண்டித –யோக சாஸ்திரத்தில் சிறந்தவர் -வாதிகளுக்கு ஸிம்ஹம் போன்றவர்

ஆக்யாய யாமுனாசார்ய ஸும்ய ராஜ புரோஹித
அரீ ரசதி தம் பும்ஸாம் பூஷணம் தத்வ பூஷணம் –

ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் -ஸ்ரீ சுந்தரத் தோளுடையான்-என்னும் ஸ்ரீ பெரியாண்டான் –
அவர் திருக் குமாரர் -இளையாழ்வார் -என்று எம்பெருமானார் திருநாமம் சாத்த –
இவர் உடைய பௌத்ரர் ஸ்ரீ யமுனாசார்யர் –
இவர் வாதிகேசரி அழகிய மணவாள சீயர் உடைய சிஷ்யர்-

இவர்-
ஸ்ரீ ப்ரமேய ரத்னம் –
ஸ்ரீ தத்வ பூஷணம் –
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் (இது தற்போது கிடைக்க வில்லை ) -மூன்று நூல்களை இயற்றி அருளி உள்ளார் –

——————

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் மநோ லங்க்ருதயே முமுஷோ –

ரமணீய பாஹு ப்ரோஹிதர் -யமுனா தேசிகன் -யாமுனாச்சார்யார்
ஸூந்தர தோளுடையானுக்கு -கைங்கர்யம்
கூரத்தாழ்வான் அரங்கனுக்கு போல் இவர் அழகருக்கு கைங்கர்யம்
திருமாலை ஆண்டான் மூலம் இவருக்கு வந்த கைங்கர்யம் இது
உத்த்ருத்ய அபாரமான வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்
ப்ரமேய ரத்னம் முமுஷுக்களுக்கு அலங்காரமாக எழுதுகிறேன்

பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்

ஸூந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே
வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –

யாமுன கவிவா தீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

இவர் மூன்றாவது யமுனாச்சார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதலிலும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உடைய திருத்தகப்பனார் இரண்டாவது யமுனாச்சார்யர் –

——-

நெஞ்சினால் நினைந்தும்
வாயினால் மொழிந்தும்
நீதி யல்லாதன செய்தும் -என்று சொல்லுகிறபடியே
த்ரிவித கரணங்களாலும் பாபார்ஜனம் பண்ணி

ஓடி ஓடிப் பல பிறப்பும் -என்கிறபடியே –
பிறப்பது இறப்பதாய்-
வேத நூல் பிராயம் நூறு மனுசர் தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிக் கழிப்பது –
நின்றதில் பதினை ஆண்டிலே பேதை பாலகனாய்க் கழிப்பது

நடுவில் உள்ள காலத்திலே-
சூதனாய்க் கள்வனாய் தூர்த்தரோடு சேர்ந்து
அல்ப சாரங்களை அனுபவிக்கைக்காக அஸேவ்ய சேவை பண்ணுவது

அதில் ஆராமையாலே
பர த்ரவ்ய அபஹாரம் பண்ணுவது –
அதுக்கு மேலே பர ஹிம்ஸையிலே ஒருப்படுவது

பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம் செற்றமே வேண்டி -மனிசரில் துரிசனாயும்
பின்புள்ள காலத்தில் –
பண்டு காமரானவாறும் பாவையர் வாயமுது யுண்டவாறும் வாழ்ந்தவாறும்
ஓக்க உரைத்து இருமித் தண்டு காலா யூன்றி யூன்றித் தள்ளி நடப்பதாய்க் கொண்டு –

பால்யத்தில் அறிவில்லாதனாயும் –
யவ்வனத்தில் விஷய பரனாயும் –
வார்த்தக்யத்திலே அசக்த கரணனாயும் -இப்படி

பழுதே பல பகலும் கழித்துப் –
புறம் சுவர் கோலம் செய்து –
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்கும்படி முடிவிலே முள் கவ்வக் கிடப்பது –

ஈங்கி தன் பால் வெந்நரகம் என்று அனந்தரம்
நரகானுபவம் பண்ணுவது

அனுபவிக்கும் இடத்து
வெஞ்சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வனவுள-என்கிறபடியே
பயங்கரரான எம கிங்கரருடைய வெவ்விதான சொற்களாலும் ஈடுபடுவது

அதுக்கு மேலே
ரௌரவம் மஹா ரௌரவம் என்று தொடங்கி
உண்டான நரக விசேஷங்களை அனுபவிப்பது

பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினால்
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைத் தழுவுவதாய்
இப்படி அறுப்புண்பது சூடுண்பது தள்ளுண்பதாய் –
நாநா விதமான நரக அனுபவம் பண்ணுவது
மீண்டு கர்ப்ப வேதனையை அனுபவிப்பதாய் –

மாதாவினுடைய கர்ப்ப கோளகத்தோடு எம தண்டமோடு வாசியறப் போக்குவரத்து செய்து
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பிலே பிறப்பதாய் படுகிற கண் கலக்கத்தைக் கண்டு

ஏவம் சம்ஸ்ருதி சக்ரஸ்தே பிராம்யமாணே ஸ்வ கர்மபி —
ஜீவே து காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுபாஜாயதே-என்றும்

நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்றும் சொல்லுகிறபடியே
ராஜாவானவன் தண்டயனாய் இருப்பான் ஒருவனை
ஒவ்வொரு பகுதியாகக் கட்டினால் ஒரு பகுதியிலே இவன் படும் ஈடுபாட்டைக் கண்டு
மற்றைப் பகுதிகளைக் கழித்துப் பொகடுமா போலே

ஈஸ்வரனும் ஒரு கர்மத்தில் இவன் படும் ஈடுபாட்டைக் கண்டு
ஒரு கர்மத்தினுடைய முடிவிலே ஒரு கர்மம் ஆரம்பிப்பதற்கு முன்னே
நடுவே நிர்ஹேதுக கடாக்ஷத்தைப் பண்ணா நிற்கும்

இது அடியாக
இவன் பக்கலிலே யாதிருச்சிக்க ஸூஹ்ருதம் பிறக்கும்

இத்தாலே சத்வம் பிரகாசிக்கும் –

சத்வம் விஷ்ணு பிரகாசகம் -என்கிறபடியே
சத்வ குணத்தால் பகவத் பிரபாவம் நெஞ்சிலே படும்

இது நெஞ்சிலே படப் பட த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறக்கும்

இது அறிகைக்காக சாஸ்த்ர அபேக்ஷை பிறக்கும் –

இந்த சாஸ்த்ர ஸ்ரவணம் பண்ணுகைக்காக ஆச்சார்ய அபேக்ஷை பிறக்கும்

அவ் வபேஷை பிறந்தவாறே –
தத் வித்தி ப்ரணி பாதேன பரி ப்ரஸ்நேந சேவயா -உபதேஷ்யந்தி
தே ஜ்ஞானம் ஜ்ஞானி நா தத்வ தர்சிந -என்கிறபடியே
ஆச்சார்ய அநு வர்த்தகம் பண்ணும்

அவ்வநுவர்த்தனத்தாலே இவன் அளவிலே பிரசாதம் பிறக்கும்

ஆச்சார்யவான் புருஷ வேத -என்கிறபடியே
ஆச்சார்யரானவர் இவன் பக்கலிலே தனக்குப் பிறந்த
பிரசாதம் அடியாக அர்த்த உபதேசத்தை பண்ணா நிற்கும்

இவ் வர்த்த உபதேசத்தால் –
பாணனார் திண்ணம் இருக்க -என்கிறபடியே இவனுக்கு அத்யவசாயம் பிறக்கும்

இவ் வத்யவசாயத்தாலே பகவத் அங்கீ காரம் பிறக்கும்

பகவத் அங்கீ காரத்தாலே சத் கர்ம ப்ரவ்ருத்தி யுண்டாகும்

இக் கர்ம பரிபாகத்தாலே ஞானம் பிறக்கும்

அந்த ஞான பரிபாகத்தாலே பிரேம ரூபையான பக்தி பிறக்கும்

பக்தி யநந்தரம் பகவத் கடாக்ஷம் பிறக்கும்

பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ஸாத்ய உபாய நிவ்ருத்தியும் சித்த உபாய நிஷ்டையும் பிறக்கும்

சித்த உபாய நிஷ்டையாலே ப்ரபந்ந அதிகாரம் பிறக்கும்

இப்படிக்கு ஒத்த பிரபன்ன அதிகாரிக்கு ஸ்வரூப சித்தி பிறப்பது தத்வ தர்சனத்தாலே

இங்கு தத்வம் என்னப் பார்க்கிறது
உபாய
உபேய தத்வங்களை

உபாய உபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குணவ் -என்கையாலே
இவ்வதிகாரிக்கு உபாய உபேய ரூபமான தத்வ தர்சித்தவம் யுண்டாம் போது
ஞாதவ்யமாய் இருப்பது மூன்றாய் இருக்கும் –

1-தத்வ த்ரய விஷய ஞானமும் —
2-தத்வ த்வய வைராக்கியமும் –
3-தத்வ ஏக விஷய பக்தியும்

இதிலே தத்வ த்ரய விஷய ஞானமாவது –
1-அசித் விஷய ஞானமும் –
2-சித் விஷய ஞானமும் –
3-ஈஸ்வர விஷய ஞானமுமே –

1-அசித்து த்யாஜ்யதயா ஞாதவ்யம் –
2-சித்து த்யாஜ்ய உபாதேய தயா ஞாதவ்யம் –
3-ஈஸ்வரன் உபாதேய தயா ஞாதவ்யன் –

இதில் அசித்து மூன்று படியாய் இருக்கும் –
1-அவ்யக்தம் –
2-வியக்தம் –
3-காலம் –

இதில் அவ்யக்தத்தின் நின்றும் மஹான் பிறக்கும்

மஹானின் நின்றும் அஹங்காரம் பிறக்கும் –

அஹங்காரத்தின் நின்றும்
1-சாத்விக
2-ராஜஸ
3-தாமச ரூபங்களான குண த்ரயங்கள் பிறக்கும்

அதில் சாத்விக அஹங்காரத்தின் நின்றும்
1-ஸ்ரோத்ர
2-த்வக்
3-சஷூர்
4-ஜிஹ்வா
5-க்ராணங்கள் ஆகிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்

1-வாக்
2-பாத
3-பாணி
4-பாயு
5-உபஸ்தங்கள் ஆகிற கர்ம இந்திரியங்கள் ஐந்தும்

இந்திரிய கூடஸ்தமான மனஸ்ஸூம் –
ஆக இந்திரியங்கள் -11-பிறக்கும்

தாமச அஹங்காரத்தின் நின்றும்
1-சப்த
2-ஸ்பர்ச
3-ரூப
4-ரஸ
5-கந்தங்களும்

தத் குண ரூபமான
1-பிருத்வி
2-அப்பு
3-தேஜோ
4-வாயு
5-ஆகாசங்கள் என்கிற பஞ்ச பூதங்களும் பிறக்கும்

ராஜஸ அஹங்காரம் இரண்டுக்கும் ஸஹ காரியாய் இருக்கும்

ஆக இப்படி வியக்தமாகிறது -23- தத்வமாய் இருக்கும்

அவ்யக்தமானது
இவ் வ்யக்தத்துக்கும் காரணமாய் –
குண த்ரயங்களினுடையவ் சாம்யா அவஸ்தையை யுடைத்தாய்
மூல ப்ரக்ருதி சப்த வாஸ்யமாய் –
முடிவில் பெரும் பாழ்-என்று சொல்லும்படியாய் இருக்கும்

இனி காலமும்
அசித் விசேஷமுமாய் –
நித்தியமாய்
ஜடமாய்
நிமிஷ காஷ்டாதி விகாரங்களை யுடைத்தாய்
எம்பெருமானுக்கு பிரகாரதயா சேஷமாய் இருக்கும் –

இவ்வசித்தை -24-தத்துவமாக பிரதமாச்சார்யரும்
மங்கவொட்டு-என்கிற பாட்டிலே அனுசந்தித்து அருளினார்

மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே. யானே நீ யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம் பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே

ஆக இவ் வசித் தத்வம் –
நித்தியமாய் –
ஜடமாய் –
விபூவாய் –
குண த்ரயாத்மகமாய் –
சதத பரிணாமியாய் –
சந்தத க்ஷண க்ஷரண ஸ்வ பாவமாய் –
சர்வேஸ்வரனுக்கு லீலா உபகாரணமாய் இருக்கும் –

—————–

அநந்தரம் சித் ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில்
அப்ராக்ருதமாய் –
ஞான ஸ்வரூபமாய் –
ஞான குணகமுமாய்-
அஹம் புத்தி கோசாரமுமாய் –
ஆனந்த ரூபமாய் –
உத்க்ரந்திகத்யாதிகள் உண்டாகவே அநு பூதமாகையாலே தீபமும் ப்ரபையும் போலே ஸ்வரூப ஸ்வ பாவத்தை யுடையதாய் –
அநேகமாய் –
அகார வாச்யனான எம்பெருமானுக்கு அப்ருதக் சித்த விசேஷணமாய் இருக்கும்

திருமாலை யாண்டான் பெரிய முதலியாரைப் பார்த்து
ஆத்மாவினுடைய வேஷம் இருக்கும்படி என் என்று விண்ணப்பம் செய்ய
சேஷத்வமும் பாரதந்தர்யமும் காண் வேஷமாய் இருப்பது என்று அருளிச் செய்தார் –

கூரத் தாழ்வான்-இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவனம் எம்பெருமானுடைய கிருபை என்று பணிக்கும் –

முதலியாண்டான் -ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் உஜ்ஜீவனம் என்று நிர்வஹிப்பர் –

நம்பிள்ளையை ஆத்ம ஸ்வரூபம் இருக்கும் படி என் என்று கேட்க
உன் இணைத் தாமரை கட்கு அன்புருகி நிற்குமது என்று அருளிச் செய்தார்

இப்படிக்கொத்த ஆத்மாக்களும் மூன்று படியாய் இருக்கும் –
1-நித்யர் –
2-முக்தர்
3-பத்தர் -என்று –

நித்யராவார்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் –
பகவத் இச்சையாலே அவனுடைய திவ்ய குணங்களோபாதி நித்ய பூதராய்
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்திதேவ -என்றும் –
விண்ணாட்டவர் மூத்தவர் -என்றும் –
சொல்லலாம்படியான
அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகளான ஸூரிகள்-

முக்தராவார் –
சந்த்ரைகத்வம் ஸ்ருதமானாலும் சாஷூஷமான திமிர தோஷம் நிவ்ருத்தம் ஆகாமையாலே
சந்த்ர த்வித்வ புத்தி அநு வர்த்திக்குமோபாதி
பிரக்ருதே பரம் -என்கிற ஸ்ரவண ஞானம் யுண்டேயாகிலும்
ஆத்ம சாஷாத்காரம் இல்லாமையால்
பின்னையும் தேகாத்ம அபிமானம் அநு வர்த்திக்க

சதாச்சார்ய பிரசாதத்தாலே ஆத்ம சாஷாத்காரமும் பிறந்து
அதடியாக தேகாத்ம அபிமானம் நிவ்ருத்தமாயும்
பகவத் ஏக போக்யதா விஷய சாஷாத் காரத்தாலே -விஷயாந்தர ருசி நிவ்ருத்தமாயும் –
அந்த ஞான விசேஷத்தாலே –
அதனில் பெரிய என் அவா -என்கிறபடியே

சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவில் பெரும் பாழேயோ*
சூழ்ந்ததனில் பெரிய* பரநல் மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில் பெரிய* சுடர்ஞான இன்பமேயோ!*
சூழ்ந்ததனில் பெரிய* என் அவாஅறச் சூழ்ந்தாயே!

கங்கு கரையுமற பெருகுகிற காவேரி போலே நடக்கிற பகவத் ப்ரேமம் என்ன
ப்ரேம அநு ரூபமாக நடக்கிற பகவத் நிரந்தர அனுபவ ஆத்ம கதை என்ன
அந்த அனுபவ விரோதியான தேக பரித்யாகம் என்ன –
அர்ச்சிராதி மார்க்க கமனம் என்ன –
அவ்வர்ச்சிராதி மார்க்க கமனத்தோடே போம்போது
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின ஆழ் கடல் அலை திரை கை எடுத்தாடின -என்கிறபடியே

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ கடல் அலை திரை கை எடுத்து ஆடின
எழ பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1

ஆகாசமானது மேக முகத்தால் திரைகளாகிற
கைகளை எடுத்து ச சம்பிரம ந்ருத்தம் பண்ண –
ஓங்காரம் ரதம் ஆருஹ்ய -என்கிறபடியே
பிரணவம் ஆகிற தேரிலே ஏறி மநோ ரதத்தோடே கூடிக் கொண்டு

மனஸ்ஸானது ஸுமநஸ்யம் தோன்றும்படி சாரத்யம் பண்ணி
வாயு லோகத்தில் சென்ற அளவிலே அவனும்
தன்னுடைய பாவனத்வம் தோன்றும்படி சத்கரிக்க –
அநந்தரம்

தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -என்கிறபடியே
ஆதித்ய மண்டலத்தைக் கீண்டு புக்கு –
அவ்வருகே சந்த்ர லோகத்தைக் கிட்டி –
அநந்தரம்

வித்யுத் புருஷன் எதிர் கொள்ள –
அவ்வருகே வருண லோகத்தில் சென்று –
இந்த்ர லோகத்தில் சென்று –
பிரஜாபதி லோகத்தில் சென்று –

அங்குள்ளார் அடைய பூர்ண கும்பம் வைப்பார் –
தோரணம் நாட்டுவார் —
மங்கள தீபம் வைப்பார் –
மாலைகள் கொண்டு நிற்பார் –
ஏத்துவார் சிறிது பேர்
வாழ்த்துவர் வணங்குவாராய்
வழி இது வைகுந்ததற்கு -என்று
இப்படித் தந்தான் எல்லை அளவும் வந்து தர்சிக்க அவ்வருகே போய்

அண்ட கபாலத்தைக் கீண்டு தச குணோத்தரமான ஏழு ஆவாரணத்தையும் கடந்து –
அநந்தரம் –
மூல ப்ரக்ருதியையும் கடந்து –
சம்சாரம் அற

பரம பதத்துக்கு எல்லையான விரஜையிலே வாசனா தோஷம் கழித்து
அதிலே குளித்து அழுக்கு அறுப்புண்டு
ஸூஷ்ம சரீரத்தைக் கழித்து
அப்ராக்ருத திவ்ய விக்ரஹத்தை பரிக்ரஹம் பண்ணி
யுவராஜ உன்முகனான ராஜ குமாரன் பட்டத்துக்கு உரிய ஆனையை மேல் கொண்டு வருமா போலே
நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே புக்கு –

ஐரம் மதீயம் -என்கிற சரஸைக் கிட்டின அளவிலே
பார்த்திரு சகாசத்துக்கு போகும் பெண் பிள்ளையை ஒப்பித்துக் கொண்டு போமா போலே –
நிதியும் நற்சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுக மடந்தையர் ஏந்தினர் -என்கிறபடியே

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே –10-9-10-

ப்ரஹ்ம அனுபவத்துக்கு அநு ரூபமாக அலங்கரித்திக் கொண்டு
கலங்கா பெரு நகரான பரம பதத்திலே சென்ற அளவிலே

பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவுவார் –தொடர்ந்து எங்கும் தோத்திரம் பண்ணுவார் –
கொடி யணி நெடு மதிள் கோபுரத்து வாசலிலே சென்று புக்கு
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ளத்
திரு மா மணி மண்டபத்திலே சென்ற அளவிலே –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுப்பார்
கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டுவாராய்க் கொண்டு
பார்த்த இடம் எங்கும் அஞ்சலி பந்தமாம் படி மங்களா சாசனம் பண்ணுவாராய்

இவனுடைய சம்சார தாபமடைய போம்படி அம்ருத தாரைகளை வர்ஷித்தால் போலே
அழகிய கடாக்ஷங்களாலே எளியப் பார்ப்பாராய்
இப்படி இவர்கள் ஆதரிக்க திவ்ய பர்யங்கத்தைக் கிட்டி –
முத்தினை மணியை -என்கிறபடியே

பத்தர் ஆவியை* பால்மதியை,* அணித்-
தொத்தை* மாலிருஞ் சோலைத் தொழுது போய்*
முத்தினை மணியை* மணி மாணிக்க-
வித்தினைச்,* சென்று விண்ணகர்க் காண்டுமே

முக்தா வலிக்கு எல்லாம் நாயக ரத்னமான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கண்டு
வேரற்ற மரம் போலே விழுந்து எழுந்திருப்பதாக
அவனும் அங்கே –
பரதம் ஆரோப்ய-என்னுமா போலே அரவணைத்து அடியிலே வைக்க

அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹம் என்ன –
தத் குண அனுபவம் என்ன –
தத் கைங்கர்ய அனுபவம் என்ன –
இப்படி ச விபூதிக ப்ரஹ்ம அனுபவம் பண்ணும் பாக்யாதிகாரிகள்

பத்தராவார் –
சேற்றிலே இருக்கிற மாணிக்கம் போலவும் –
ராஹு க்ரஸ்தனான சந்திரனைப் போலவும் –
பகவத் சேஷ பூதரான ஆத்ம ஸ்வரூபராய் இருக்கச் செய்தேயும்
அநாத்ய வித்யையாலே திரோஹித ஸ்வரூபராய் –
இருட்டறையில் புக்கு வெளிநாடு காண மாட்டாதாப் போலே இருப்பாராய் –
சார்ந்த இரு வல்வினைகள் ஆகிற இரட்டை விலங்காலே கட்டுண்டு திரியக் கடவராய்
சப்தாதி விஷய பிரவணராய்
ப்ரஹ்மா தலையாக எறும்பு கடையாக நடுவுள்ள ஆத்ம ஜாதிகள்

—————-

அநந்தரம்
ஈஸ்வரனுடைய ஸ்வரூபம் மூன்று படியாய் இருக்கும் –
1-நியந்த்ருத்வம் –
2-வியாபகத்வம் –
3-உபய லிங்க விசிஷ்டத்வம்-என்று –

இதில் நியந்த்ருத்வமாவது –
உபய விபூதியும் தான் இட்ட வழக்காம் படி –
அவற்றுக்கு அந்தராத்மதயா நியமித்துக் கொண்டு நிற்கும் நிலை –

வியாபகத்வமாவது
தன் ஸ்வரூப ஏக தேசத்திலே உபய விபூதியும் தரிக்கும் படி விபுவாய் இருக்கை-

உபய லிங்க விசிஷ்டத்வம் ஆவது –
1-ஹேய ப்ரதிபடத்வமும்-
2-கல்யாணை கதாநத்வமும் –

ஹேய ப்ரதிபடத்வம்-ஆவது –
உலகு உன்னோடு ஒன்றி நிற்க வேறு நிற்றி -என்கிறபடியே
தத் கத தோஷம் தட்டாது இருக்கை –

உலகு தன்னை நீ படைத்து உள் ஒடுக்கி வைத்து மீண்டு
உலகு தன்னுளே பிறந்து ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னோடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே-திருச்சந்த விருத்தம்-

கல்யாணை கதாநத்வமும் –
ஸூபாஸ்ரயத்வம் –

ஆக இவ்விரண்டாலும்
1-அநிஷ்ட நிவ்ருத்தியும்
2-இஷ்ட பிராப்தியும் சொல்லுகிறது –

அதாகிறது
1-உபாய
2-உபேயத்வங்கள் இறே ஈஸ்வரனுக்கு ஸ்வரூபம்

————–

ஆக –
அசித்து ஜ்ஜேயத ஏக ஸ்வரூபத்தாலே போக்யமாய் இருக்கும்

சித்து ஜ்ஞாத்ருத ஏக ஸ்வரூபத்தாலே போக்தாவாய் இருக்கும்

பரமாத்மா நியந்த்ருத ஏக ஸ்வாபாவத்தாலே ஈஸ்வரனாய் இருக்கும்

இப்படி மூவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்த பின்பு
உபய விபூதிக்கும் ஈஸ்வரியான பிராட்டி ஸ்வரூபம்
அசித் கோடியிலேயோ
ஆத்ம கோடியிலேயோ
ஈஸ்வர கோடியிலேயோ என்று நிரூபித்தால்

அறிவுண்டாகையாலே அசித் கோடியில் அன்று –
ஐஸ்வர்யத்தாலே ஆத்ம கோடியில் அன்று –
நித்ய பாரதந்தர்யத்தாலே ஈஸ்வர கோடியில் அன்று

ஆனால் தத்வம் நாலாகிறதோ என்னில்
அதுக்கு பிராமண உபபத்திகள் இல்லை

ஆனால் இவளுடைய ஸ்வரூபம் அறுதியிடும்படி என் என்னில் –
1-நிரூபக விசேஷணம் –
2-நிரூபித விசேஷணம் என்று இரண்டாய்

சேதனன் நிரூபித விசேஷணமாய்
இவள் நிரூபக விசேஷணமாய் இருக்கும்

ஆனால்
அஸ்ய ஈஸாநா ஜகத -என்றும் –
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்றும் –
ஸ்ருதிகளிலே ஈஸ்வரியாக ஓதிப் போருகையாலே
ஈஸ்வர கோடியிலேயாகக் குறையில்லையே என்னில்

1-அப்போது நாட்டுக்கு இரண்டு ஈஸ்வரர்கள் கூடாமையாலும்
2-பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் —
ஷராத்மாநா வீசதே தேவ ஏக –என்றும் தொடங்கி உண்டான பிராமண பரம்பரைகளுக்கு
விரோதம் பிறக்கையாலும்
3-யுக்தி இல்லாமையாலும்
ஈஸ்வரத்வம் கூடாது –

அங்கு ஓதிப் போருகிற ஈஸ்வரத்வம் பத்னீத்வ நிபந்தனமாகக் கடவது —
ராஜ மஹிஷியை சோபசாரமாகச் சொல்லாத போது
அவனுடைய ரோஷத்துக்கு இலக்காம் அத்தனை இறே

பும்பிரதான ஈஸ்வர ஈஸ்வரீம் -என்று தொடங்கி
இவளுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்கிற பிரதேசங்களில் அவளுடைய
போக்யதா அதிசயத்தை சொல்லுகிறது அத்தனை

ஆனால் ஈஸ்வரனோ பாதி இவளுக்கும்
ஜகத் காரணத்வம் உண்டாகத் தடை என் என்னில் –

ஒருவனுக்கு காரணத்வம் உண்டாம் போது
1-க்ராஹக ஸாமர்த்யத்தாலும்-
2-அன்வய வ்யதிரேகத்தாலும் –
3-அர்த்தாபத்தியாலும்-
4-ஸ்ருதியாதி பிரமாணங்களாலும் இறே உண்டாகக் கடவது

இவளுக்கு காரணத்வ சக்தி யுண்டாகையாலே தர்மி க்ராஹத்வம் யுண்டு

பிரபஞ்சம் இவள் பார்த்த போது யுண்டாய்
தத் அபாவத்திலே இல்லாமையால் அன்வய வ்யதிரேகம் யுண்டு –

இது தன்னாலே அர்த்தா பத்தி யுண்டு

பகவச் சாஸ்திரங்களில் காரணத்வ ஸூசகங்களான பிரமாணங்கள் உண்டு –

ஆகையால் காரணத்வம் உண்டாகக் குறை
என் என்னில்

சக்திமத்வம் குணத்தால் அல்ல
பத்நீத்வ நிபந்தம் –

வீக்ஷணாதீந வ்ருத்திமத்வமாகக் கடவது அன்வய வ்யதிரேகம் –

இத்தாலே
ஜகத் ஸித்தியிலே இவளை ஒழிய உபபத்தி யுண்டு –

ஸ்ருதியாதி பிரமாணங்களும்
ப்ரஹ்மாத்மகமான ஜகத்தினுடைய விலோகந பரங்களாய் இருக்கும்

ஆகையால் இவளுக்கு காரண பாவத்தில் அந்வயம் இல்லை –

ஈஸ்வரன் ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டனாய் அன்றோ
காரண பூதனாகிறது –
ஆகையால் இவளுக்கும் காரணத்வத்தில் அந்வயம் யுண்டாகக் குறை
என் என்னில்

அவன் லீலா விபூதியை ஸ்ருஷ்டிக்கும் போது நித்ய விபூதி விசிஷ்டனாய் அன்றோ இருப்பது –
அப்போது நித்ய விபூதிக்கும் காரணத்வம் யுண்டாகிறதோ –
அவ்வோபாதி அவளுக்கும் காரணத்வம் இல்லை

ஆனால் இவளுக்கு ஜகத் ஸ்ருஷ்ட்யாதி காரணத்வத்தில் ஓர் அந்வயம் இல்லையோ
என்னில்
அநு மோதனத்தால் வரும் அந்வயம் யுண்டு –

காரண வஸ்துவே உபாஸ்யமுமாய்
சரண்யமுமாய் ஆகையால்
இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயம் இல்லை

இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயம் யுண்டாக பிரமாணங்கள் யுண்டே
என்னில்
அது சரண்யனுடைய இச்சா அநு விதாயித்தவமாகக் கடவது –

யதா சர்வகதோ விஷ்ணு ததைவேயம் த்விஜோத்தம –என்று தொடங்கி
இவளுடைய வியாப்தி சொல்லா நின்றது இறே என்ன

ரிஷி தானே விபாகம் பண்ணுகையாலே
ஸ்வ விபூதி சரீரங்களில் யுண்டான வியாப்தி ஒழிய
ஸர்வத்ர வியாப்தி இல்லை
இந்த வியாப்தி தான் குணத்தால் வருவது ஓன்று இறே

ஸுபரியைப் போலே -ஆனால் இவளுக்கு சேதன சாமானையோ
என்னில் –
அப்படி அன்று –

பத்தரைக் காட்டில் முக்தர் வ்யாவ்ருத்தர் –
முக்தரைக் காட்டில் நித்யர் வ்யாவ்ருத்தர்
நித்யரைக் காட்டில் அனந்த கருடாதிகள் வ்யாவ்ருத்தர் –
அவர்களில் காட்டில் தேவீ ஜனங்கள் வ்யாவ்ருத்தர்
தேவீ ஜனங்களில் காட்டில் பூ நீளைகள் வ்யாவ்ருத்தர்
பூ நீளைகள் காட்டில் இவள் வ்யாவ்ருத்தை —
ஆகையால் இறே உபய விபூதிக்கும் ஈஸ்வரியாய் போருகிறது

இவளுக்கு
ஸ்வரூபத்தாலே சேதன சாம்யம் யுண்டு –
ஸ்வ பாவத்தால் ஈஸ்வர சாம்யம் யுண்டு

இது நித்யருக்கும் முக்தருக்கும் யுண்டோ என்னில் –
இவர்களுக்கும் இன்றியிலே –
தேவீ ஜனங்களுக்கும் இன்றியிலே –
ஈஸ்வரன் தனக்கும் இன்றியிலே இருப்பன சில குண விசேஷங்கள் யுண்டு

அவை எவையென்னில்
1-நிரூபகத்வம் —
2-அநு ரூப்யம்–
3-போக்யத்வம் —
4-அபிமதத்வம் —
5-அசேஷ சேஷித்வ சம்பந்த த்வராபாவம் –
6-ஆஸ்ரயண சித்தி —
7-ப்ராப்ய பூரகத்வம் –
இவ்வர்த்தத்தை அபியுக்தரும் வெளியிட்டார்கள்-

திருவினுக்கு அரசே -திருமாலே -என்று
நிரூபகத்தையும்

உனக்கேற்கும் கோல மலர்ப்பாவை -என்று
அநு ரூபத்தையும்

அல்லி மலர் மகள் போக மயக்குகள்-என்று
போக்யதையும் –

பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்று
அபிமதத்வத்தையும் –

திரு மா மகளால் அருள் மாரி -என்றும் –
திருமாலால் அருளப் பட்ட சடகோபன் -என்றும் –
அசேஷ சேஷித்வ சம்பந்த த்வார பாவத்தையும் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்று
ஆஸ்ரயண ஸித்தியையும்

திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்று
ததீய பர்யந்தமான ப்ராப்ய பூரகத்தையும் வெளியிட்டு அருளினார்கள்

ஆக
இந்த குணங்களாலே இறே இவள் சர்வ அதிசய காரியாய் இருப்பது

———-

திரு மா மகள் கேள்வா தேவா -என்றும்
பெருமை யுடைய பிரானார் -என்றும்
எம்பெருமானுக்கு சேஷித்வ பூர்த்தி பிறப்பது இவளாலே-

இவளுடைய சத்தை எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும் –
எம்பெருமானுடைய ஐஸ்வர்யம் இவள் இட்ட வழக்காய் இருக்கும்

இருவருடைய ஸ்வரூபமும் பூவும் மணமும் போலே இறே –
பூவை ஒழிய மணத்துக்கு சத்தை இல்லை –
மணத்தை ஒழிய பூவுக்கு ஏற்றம் இல்லை

ஆதித்யனும் பிரபையும் போலே
இருவருடைய சம்பந்தமும் அவிநா பூதமாய் இருக்கும்

இருவரையும் பிரித்துக் காண்பார் யுண்டாகில்
சூர்பணகையும் ராவணனும் பட்டது படுவார்கள்

ஆகையிறே-
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -என்று
சேஷத்வ பிரதி சம்பந்தி ஒரு மிதுனமாய்

நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்று
ஆஸ்ரயண பிரதிசம்பந்தி ஒரு மிதுனமாய்

அடிமை செய்வார் திருமாலுக்கே என்று –
கைங்கர்ய பிரதிசம்பந்தியும் ஒரு மிதுனமாய் இறே இருப்பது

இத்தாலே இறே ஸ்ரீ பாஷ்யகாரரும் –
மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை -என்று அறுதியிட்டது –

மத்ஸயத்தினுடைய ஆகாரம் எல்லாம் ஜலமாய் இருக்குமோ பாதி
ஸ்ரீ மானுடைய வடிவெல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும் என்று
பெரிய முதலியாரும் நஞ்சீயரும் அருளிச் செய்து போருவார்கள் –

ஏவம் பூதமான மிதுன வஸ்துவுக்கு பரதந்தர்யம் ஆத்ம வஸ்து
ஆத்ம வஸ்துவுக்கு பரதந்தர்யம் அசித் வஸ்து
இப்படி வஸ்து த்ரய யாதாம்ய ஞானம் பிறக்கை-தத்வ த்ரய ஞானமாவது

—————

அநந்தரம்
தத்வ த்வய விஷய வைராக்யமாவது என் என்னில்

சேதனனாய் இருப்பான் ஒருவனுக்கு புருஷார்த்தம் மூன்று படியாய் இருக்கும்
1-ஐஸ்வர்யம் –
2-கைவல்யம் –
3-பகவத் பிராப்தி -என்று

இதில் ஐஸ்வர்யம் மூன்று படியாய் இருக்கும் –
1-ராஜபதம் –
2-இந்த்ர பதம் –
3-ப்ரஹ்ம பதம் -என்று

கைவல்யமாவது –
சிறுக நினைவதோர் பாசமுண்டாம் பின்னும் வீடில்லை -என்றும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்றும் சொல்லுகிறபடியே
ஐஸ்வர்யத்தைக் காட்டில் வியாவருத்தி யுண்டாய் இருக்கச் செய்தேயும்
பகவத் அனுபவம் இல்லாமையால் விதவை அலங்கார சத்ருசமாம் படி
ஸ்வ அனுபவம் பண்ணி இருக்கை

ஆக –
1-ஜட ரூபமான ஐஸ்வர்யத்தையும் –
2-சிற்றின்பமான கைவல்யத்தையும் விடுகை தத்வ த்வய விஷய வைராக்யமாவது –

—————-

இனி தத்வ ஏக விஷய பக்தியாவது
தத்வம் ஏகோ மஹா யோகீ-என்று சொல்லுகிறபடியே
எம்பெருமான் பக்கலிலே அநவரத பாவனையாகச் செல்லக் கடவதான ப்ரேமம் –

பக்தி தான் மூன்று படியாய் இருக்கும் –
பக்தி –
பர பக்தி –
பரம பக்தி -என்று

பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
பக்தி க்ரீதோ ஜனார்த்தன -என்றும் சொல்லுகிறபடியே
இந்த பக்தியால் ஏவிக் கொள்ளலான அகார வாச்யனுடைய
ஆகாரமும் மூன்று படியாய் இருக்கும் –

1-நீர்ப் பூ
2-நிலப் பூ
3-மரத்தில் ஒண் பூ -என்று பிரதமாச்சார்யாரும் அருளிச் செய்தார்

(வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–-திரு-விருத்தம்-55-

நிலப்பூவும் கொடிப்பூவும் என்று -நிலத்திலே இரண்டாக்கி –
மற்றை இரண்டையும் கூட்டி நாலாக-சொல்லுவாரும் உண்டு
இத்தால் பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து
திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அக் குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி
நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று தம்மை அனுபவிக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை -அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
அம்பஸ்ய பாரே-புவனஸ்ய மத்யே -நாகஸ்ய ப்ருஷ்டே -என்னக் கடவது இறே –
அம்பஸ்ய -வியூகம்
புவனஸ்ய -விபவம் அர்ச்சை
நாகஸ்ய -பரம்
இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –)

மரத்தில் ஒண் பூ என்கையாலே பரத்வம் சொல்லுகிறதாய் –
நீர்ப் பூ என்கையாலே வ்யூஹம் சொல்லுகிறதாய் –
நிலப் பூ என்கையாலே அவதாரம் சொல்லுகிறது

ஆனால்
அந்தர்யாமித்வமும்
அர்ச்சாவதாரமும் சொல்ல வேண்டாவோ என்னில் –

பரத்வ அந்தர்பூதம் -அந்தராமித்வம் –
அவதார விசேஷம்- அர்ச்சாவதாரம்-
ஆகையால்
ஈஸ்வரனுடைய ஆகாரமும் மூன்று என்னத் தட்டில்லை-

இப்படி ஆகார த்ரய விசிஷ்டனான எம்பெருமானை பிராபிக்கக் கடவனான
சேதனனுடைய ஸ்வரூபம் மூன்று படியாய் இருக்கும்
1-அநந்யார்ஹத்வம் –
2-அநந்ய சாதனத்வம் –
3-அநந்ய ப்ரயோஜனத்வம் –

இருவரையும் சேர விடக் கடவளான பிராட்டி ஸ்வரூபம் –
1-சேஷத்வ பூர்த்தி –
2-புருஷகாரத்வம் –
3-கைங்கர்ய வர்த்தகம் -என்றும் மூன்று படியாய் இருக்கும்

இவனை பிரதமத்திலே அங்கீ கரித்த ஆச்சார்யருடைய ஸ்வரூபம் –
1-அஞ்ஞான நிவர்த்தகம் –
2-ஞான ப்ரவர்த்தகம்-
3-ருசி ஜனகத்வம் – என்றும் மூன்று படியாய் இருக்கும்

இவனுக்கு வரக் கடவதான விரோதி ஸ்வரூபம் –
1-ஸ்வரூப விரோதி –
2-உபாய விரோதி –
3-ப்ராப்ய விரோதி -என்று மூன்று படியாய் இருக்கும்

இந்த விரோதிக்கு இரட்டை வித்தாய்ப் போருகிற அஹங்கார மமகாரங்களும் –
1-அஞ்ஞான –
2-ஞான –
3-போக -தசைகளில் என்று மூன்று படியாய் இருக்கும்

இந்த அஹங்கார மமகார ஹேதுவான அஞ்ஞானம் –
1-ஞான அனுதயம் –
2-விபரீத ஞானம் –
3-அந்யதா ஞானம் என்று மூன்று படியாய் இருக்கும்

ஞான அநுதயம் -தேகாத்ம அபிமானம்
விபரீத ஞானம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம்
அந்யதா ஞானம் -தேவதாந்த்ர சேஷத்வம் –

இந்த அஞ்ஞானத்தைப் பற்றி வரும் அபசாரமும் –
1-பகவத்
2-பாகவத
3-அஸஹ்ய அபசாரம் என்று மூன்று படியாய் இருக்கும்

இந்த அபசாரத்தைப் பற்றி வரும் அகமும் –
1-பூர்வாகம்
2-உத்தராகம்
3-ப்ராரப்தம் என்று மூன்று படியாய் இருக்குc

இதன் அடியாக வரக் கடவதான தாப த்ரயமும் –
1-ஆத்யாத்மீகம்
2-ஆதி பவ்திகம்
3-ஆதி தைவிகம் என்று மூன்று படியாய் இருக்கும்

இப்படிக்கு ஒத்த பாபத்தை குட நீர் வழியும் போது விவேக ஞானம் –
1-ஆத்ம அநாத்ம விவேக ஞானம் –
2-புருஷார்த்த அபுருஷார்த்த விவேக ஞானம் –
3-உபாய அநுபாய விவேக ஞானம் -என்று மூன்று படியாய் இருக்கும்

இந்த விவேகத்துக்கு ஸ்தானமாய் –
தத்வம் –
அபிமதம் –
விதானம் என்றும் மூன்று படியாய் இருக்கும்

ஸ்வரூப ப்ரதிபாதிகமான திருமந்திரம் தத்வமாவது –
புருஷார்த்த ப்ரதிபாதிதமான மந்த்ர ரத்னம் அபிமதமாவது –
ஹித விதாயமாய் சரண்யா அபிமதயாலே ப்ரவ்ருத்தமான சரம ஸ்லோகம் விதானமாகிறது

இதில் தத்வ ரூபமான திருமந்திரமும் பத ரூபத்தாலே
மூன்று படியாய் இருக்கும்-

இதிலே பிரதம பதத்தாலே சேதனனுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது –
மத்யம பதத்தாலே ஸ்திதி சொல்லுகிறது –
த்ருதீய பதத்தாலே வ்ருத்தி சொல்கிறது

இந்த ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் மூன்றும்
எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும்

பிரதம பதத்தாலே இவனுடைய அநந்யார்ஹத்வம் சொல்கிறது –
மத்யம பதத்தாலே அநந்ய சரண்யத்வம் சொல்கிறது –
த்ருதீய பதத்தாலே அநந்ய போக்யத்வம் சொல்கிறது

இவனுக்கு பிரதி சம்பந்தியாய் இருக்கிறவனுடைய சேஷித்வம் சொல்கிறது பிரதம பதத்தாலே –
அவனுடைய சரண்யத்வம் சொல்கிறது மத்யம பதத்தாலே –
அவனுடைய போக்யத்வம் சொல்கிறது த்ருதீய பதத்தாலே –

இந்த ஞானம் அடியாக அஹங்கார ஜன்யமான அஞ்ஞானம் போம்படி சொல்கிறது பிரதம பதம்
அர்த்த ஜன்யமான அஞ்ஞானம் போம்படி சொல்கிறது மத்யம பதம்
கர்ம ஜன்யமான அஞ்ஞானம் போம்படி சொல்கிறது த்ருதீய பதம்

பிரதம பதத்தில் சொல்லுகிற ஞாத்ருத்வமும் –
மத்யம பதத்தில் சொல்லுகிற கர்த்ருத்வமும்
த்ருதீய பதத்தில் சொல்லுகிற போக்த்ருத்வமும் எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும்

திருமந்திரம் சாமாந்யேன ஸ்வரூப பரமாய் இருக்கும் –
சிலர் வாக்ய த்ரயம் என்று நிர்வஹிப்பர்கள்-
சிலர் வாக்ய ஏக வாக்யத்தாலே ஏக வாக்கியம் என்று நிர்வஹிப்பார்கள் –
சிலர் ஸ்வரூப புருஷார்த்தம் என்று நிர்வஹிப்பர்கள்
சிலர் அர்த்த பஞ்சக பரம் என்று நிர்வஹிப்பார்கள்
சிலர் பிரபத்தியையும் கூட்டி ஷடர்த்த பரம் என்று நிர்வஹிப்பர்கள்
சிலர் ஆத்ம சமர்ப்பணம் என்று நிர்வஹிப்பர்கள்

திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை -என்று
பத க்ரமத்துக்கும் தாத்பர்யமான அர்த்தம்
ததீய சேஷத்வம் என்று அருளிச் செய்தார் திரு மங்கை ஆழ்வார்

பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வாரும்
பயிலும் சுடர் ஒளியிலே –
எம்மை ஆளும் பரமர் -என்றும் –
எம்மை ஆளுடையார்கள் -என்றும் –
எமக்கு எம் பெரு மக்களே -என்றும்
ததீயர்களை சேஷிகளாக ப்ரதிபாதிக்கையாலும்

வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே-என்றும் –
சன்ம சன்மாந்தரம் காப்பரே -என்றும் –
நாளுய்யக் கொள்கின்ற நம்பரே -என்றும் –
ததீயரையே சரண்யராக பிரதிபாதிக்கையாலும் –

ஆக பிரதம பத ஸித்தமான சேஷிகளும் ததீயரேயாய் –
மத்யம பத ஸித்தமான சரண்யரும் ததீயரேயாய் –
த்ருதீய பத ஸித்தமான ப்ராப்யரும் ததீயரே யானபடியாலே-
திருமந்த்ரத்துக்குத் தாத்பர்யமான அர்த்தம் ததீய சேஷத்வம் என்று அறிகை

நிருபாதிக தேவதா -பரமாத்மா
நிருபாதி கோயாக-ஆத்ம சமர்ப்பணம் –
நிருபாதிகோ மந்த்ர -பிரணவம்
நிருபாதிக பலம் – மோக்ஷம் -என்று ஓதுகையாலே
ப்ரணவத்துக்குக் கர்மாத்மாகத்வம் யுண்டு

ஏதத் ஞானம் ச ஜ்ஜேயம் ச சேஷ அந்யோ க்ரந்த விஸ்தர-என்கையாலே
ஞானமும் இதுவாகக் கடவது

ஓமித் யாத்மாநம் த்யாயீதா -என்கையாலே
பக்தியும் இதுவாகக் கடவது

ப்ரஹ்மணே த்வாமஹச ஓமித் யாத்மாநம் யூஞ்ஜீத – என்கையாலே
பிரபத்தியும் இதுவேயாகக் கடவது –

பிரணவம் ஸ்வரூப யாதாம்யத்தைச் சொல்லுகையாலே –
பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே-என்று சொல்லுகிற
பலமும் இதுவேயாய் இருக்கும் –

பிரணவம் தான் அக்ஷர ஸ்வ பாவத்தால் –
அகாரம்
உகாரம்
மகாரம் என்று மூன்று படியாய் இருக்கும் –

அதில் அகாரம்
காரணத்வத்தையும் –
ரக்ஷகத்வத்தையும் –
சேஷித்வத்தையும் –
ஸ்ரீ யபதித்வத்தையும்-சொல்லக் கடவதாய் இருக்கும் –

இதில் காரணத்வத்தாலும் ரக்ஷகத்வத்தாலும் உபாய பாவத்தை வெளியிடுகிறது

சேஷித்தவத்தாலும் ஸ்ரீ யபதித்வத்தாலும் உபேய பாவத்தை வெளியிடுகிறது

வாஸ்ய பூதனான எம்பெருமானுடைய ஸ்வரூபமும் உபாய உபேயத்வங்ககள் ஆகையால்
வாசகமான இவ் வகாரமும் உபாய உபேயத்வங்களைச் சொல்லுகிறது

இவ் வகாரத்தில் ஏறிக் கழிந்த சதுர்த்தி
எம்பெருமானுக்கு அதிசய கரத்வமான சேஷத்வத்தைச் சொல்லுகிறது

இச் சேஷத்வத்தினுடைய ஆஸ்ரயத்தைச் சொல்லுகிறது வ்யஞ்ஜன ரூப மகாரம்

அகாரத்தாலே சேஷித்வத்தைச் சொல்லி –
மகாரத்தாலே சேஷத்வ ஆஸ்ரயமான சேதனனைச் சொல்லி –
அவதாரண வாசியான உகாரத்தாலே இவர்களுடைய சம்பந்தம் அவிநா பூதம் என்கிறது –
இக்கிரமத்தை அபியுக்தரும் வெளியிட்டு அருளினார்கள்

கண்ணபுரம் ஓன்று யுடையானுக்கு -என்று –
சதுர்த் யந்தமான அகாரார்த்தத்தை வெளியிட்டு –
அடியேன் -என்று
மகாரார்த்தத்தை வெளியிட்டு –
ஒருவருக்கு உரியேனோ -என்று
உகாரார்த்தத்தை வெளியிட்டு அருளினார் –

மூன்று எழுத்ததனை மூன்று எழுத்ததனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை ஏன்று கொண்டு இருப்பார் என்கிறபடியே
நித்ய அனுசந்தானமாய் இருப்பது பிரணவம் இறே

இப்படி சேஷத்வத்துக்கு ஓம் என்று இசைந்தவர்களுக்கு வரக் கடவதான ஸ்வார்த்த ஹானியைச் சொல்லுகிறது –
அத்யந்த பாரதந்தர்ய ப்ரகாசகமான மத்யம பதத்தாலே –

மத்யம பதம் தான் இரண்டு எழுத்தாய் இருக்கும் -நம -என்று
அஹம் அபி மம ந பகவத ஏவாஹமஸ்மி -என்று இறே இதன் அர்த்தம் இருக்கும் படி –

சம்பந்த சாமான்ய வாசியான ஷஷ்டியாலே ஸ்வர்த்ததையைச் சொல்லுகிறது –

ஸ்வார்த்தத்வமானது
1-ஸ்வா தந்தர்யமும்
2-ஸ்வத் முமம் –

ஸ்வா தந்தர்யமாவது -அஹங்காரம் –

ஸ்வத்மாவது மமகாராம் –

அவ் வஹங்காரம் தான் இரண்டு படியாய் இருக்கும் –
1-தேகாத்ம அபிமான ரூபம் என்றும்
2-தேகாத் பரனான ஆத்மாவினுடைய ஸ்வா தந்தர்ய அபிமான ரூபம்

மமதையும் இரண்டுபடியாய் இருக்கும் –
3-தேக அநு பந்தி போக்ய போக உபகரணாதிகளை விஷயீ கரித்து இருக்கையும்
4-பார லௌகிகமான பல தத் சாதனங்களை விஷயீ கரித்து இருக்கையும்
ஆக நாலு வகைப் பட்டு இருக்கிற
ஸ்வார்த் தத்துவமும் காட்டப் படுகிறது –

உகாரத்தாலே பிறர்க்கு உரியன் அன்று என்றவிடம் சொல்லி
நமஸ் ஸாலே தனக்கு உரியன் அன்று என்றவிடம் சொல்லுகிறது

ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களாலே பூர்ணமாகையாலே
பிரார்த்தனா ரூப சரணாகதியாகவுமாம்

நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்று
ஸ்தான ப்ரமாணத்தாலே பிரபத்தி யாகவுமாம்

ந்யாஸ வாசகமான நமஸ் சப்தமானது
சாஷாத் உபாய பூதனான பரமாத்மாவைச் சொல்லுகையாலே
முக்ய ப்ரபத்தியாகக் குறையில்லை

இப்படி இங்கு பிரபத்தி வாசகமான நமஸ்ஸிலே
மத் யாஜீ மாம் நமஸ் குரு -என்று பக்தியும் ஸூஸிதையாகப் போருகிறது

இப்படி பிரதம பதத்தாலே இவனுடைய ஸ்வரூபம் சொல்லி –
மத்யம பதத்தாலே ஸ்வரூப அநு ரூபமான உபாயம் சொல்லி –
உபாய அநு ரூபமான புருஷார்த்தம் சொல்லுகிறது த்ருதீய பதத்தாலே

இது தான் –
1-நார -என்றும் –
2-அயன -என்றும் –
3-ஆய -என்றும் மூன்றாய் இருக்கும் –

மகார விவரணமான நார சப்தம் ஸமூஹ வாசியாய் –
இதிலே பஹு வசனமும் பஹுத்வ வாசியாகையாலே
பஞ்ச உபநிஷண் மயமான திவ்ய மங்கள விக்ரஹமும் –
ஞான சக்த்யாதி குணங்களும் –
திவ்ய ஆபரணங்களும் -திவ்ய ஆயுதங்களும் –
ஸ்ரீ லஷ்மீ ப்ரப்ருதி திவ்ய மஹிஷீ வர்க்கமும் –
நித்ய விபூதியும் –
ப்ரவாஹ ரூபேண நடக்கிற லீலா விபூதியுமாக
உபய விபூதியும் நார சப்தத்தாலே சொல்லப் படுகிறது

அதில் யுண்டான பஹு வரீஹீ சமாசத்தாலும்
தத் புருஷ சமாசத்தாலும்
அந்தர்யாமித்வமும்
ஆதாரத்வமும் சொல்லுகிறது

அந்தர்யாமித்வத்தாலே எம்பெருமானுடைய சரீரத்வம் சொல்லுகிறது –
ஆதாரத்வத்தாலே அதிசயம் சொல்லுகிறது –

அகார விவரணமான அயன பதத்திலே
கர்மணி வ்யுத்பத்தியாலும்
கரணே வ்யுத்பத்தியாலும் ப்ராப்ய ப்ராபகங்கள் சொல்லப்படுகிறது –
அதாவது
உபாய உபேயத்வங்கள் இறே

ஆக இப்படி பிரணவத்தாலே –
தன் ஸ்வரூபம் பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் என்று ப்ரதிஜ்ஜை பண்ணி
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவர்த்தகமான மத்யம பதத்தாலே அத்யந்த பாரதந்தர்யம் என்று உபபாதித்து
கீழ் ப்ரஸ்துதமான சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று நிகமிக்கிறது

சதுர்த்தியாலே
சேஷ சேஷிகளுடைய போகம் சொல்லுகிறது –

அஹம் அன்னம் -என்ற பலம் –
ந மம -என்றும் –
படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -என்றும் சொல்லுகிறபடியே –
இதில் சாஷாத் போகம் எம்பெருமானதாய்
சைதன்ய ப்ரயுக்தமான போகமாய் இருக்கும் இவனுக்குள்ள அளவு

இந்த போகம் தான்
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோசிதமாய் சர்வாதிகாரமாய் இருக்கும்

ஆக
பிரதம பதத்தாலே
ப்ரக்ருதே பரத்வ பூர்வகமாக ஸ்வ ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –

மத்யம பதத்தாலே
ஸாத்ய உபாய நிவ்ருத்தி பூர்வகமாக சித்த உபாய நிஷ்டையைச் சொல்லுகிறது –

த்ருதீய பதத்தாலே
ஸ்வ போக நிவ்ருத்தி பூர்வகமாக பர போக நிஷ்டையைச் சொல்லுகிறது –

இடைஞ்சல் வராதபடி களை அறுத்துக் கொடுக்கிறது மத்யம பதம் –

விளைந்து ஸ்வாமிக்கு போகம் கொடுக்கிறது த்ருதீய பதம்

பிரதம பதத்தாலே பாணி கிரஹணம் பண்ணுகிறது –
மத்யம பதத்தாலே உடை மணி நீராட்டுகிறது –
த்ருதீய பதத்தாலே சதுர்த்தி படுக்கையாய் இருக்கிறது –
என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் நிர்வஹிப்பர்-

சேஷத்வம் பிறந்தது இல்லையாகில் பிரதம பதத்தில் அந்வயம் இல்லை –
ஞானம் பிறந்து இல்லையாகில் மத்யம பதத்தில் அந்வயம் இல்லை –
ப்ரேமம் பிறந்து இல்லையாகில் த்ருதீய பதத்தில் அந்வயம் இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்வர்

ஸ்வரூப சாஷாத்காரம் பிறந்தது இல்லையாகில் பிரதம பதத்தில் ஒட்டில்லையாகக் கடவது –
உபாய சாஷாத்காரம் பிறந்தது இல்லையாகில் மத்யம பதத்தில் ஒட்டில்லையாகக் கடவது –
போக சாஷாத்காரம் பிறந்தது இல்லையாகில் த்ருதீய பதத்தில் ஒட்டில்லையாகக் கடவது -என்று
நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்வர்

இப்படி சகல நிகமாந்தங்களும் பத த்ரயமான மூல மந்திரத்துக்கு
விவரணமாய் இருக்கும் –

————-

இந்த மூல மந்திரத்துக்கு த்வயம் விவரணமாய் இருக்கும் –
இது விவரணமான படி என் என்னில்

ஈஸ்வர உபாய மாத்ரமேயாய் –
புருஷகாரத்தையும்
அதனுடைய நித்ய யோகத்தையும் –
உபாய பாவத்துக்கு உறுப்பான குண விசேஷங்களையும்-
அக் குணங்களோபாதியான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
உபாய விஷயமாக இந்த அதிகாரிக்கு யுண்டாம் வியவாசத்தையும்
அங்குச் சொல்லாமையாலும்
இங்கே சாப்தமாகப் ப்ரதிபாதிக்கையாலும்
மத்யம பதத்துக்கு பூர்வ வாக்கியம் விவரணமாகக் கடவது –

இங்கு சர்வேஸ்வரனுக்குக் கிஞ்சித்கார பிரார்த்தனா மாத்ரமேயாய்
கிஞ்சித்க்காரம் கொள்ளுமவன் ஸ்ரீ மானாக வேணும் என்றும்
கிஞ்சித்க்காரம் பண்ணுமவன் நிரஹங்கார நிர்மமனாக வேணும் என்றும் சொல்லாமையாலும்
இங்கு சாப்தமாகச் சொல்லுகையாலும்
த்ருதீய பதத்துக்கு உத்தர வாக்கியம் விவரணமாகக் கடவது –

ஆகையால் இப்படி வாக்ய த்வயமாகக் கடவது

ஸ்ரீ யபதி உபேயங்களுக்கு அவதியாய் இருக்குமோபாதி
இது உபாயங்களுக்கு அவதியாய் இருக்கும்

அவன் ஞான சக்த்யாதி ஷட் குணங்களையும் உடையவனாய் இருக்குமோபாதி
இதுவும் கார்ப்பண்யாதி ஷட் அங்கத்தையும் யுடைத்தாய் இருக்கும்

அவன் தேவகீ புத்ர ரத்னமாய் இருக்குமோபாதி
இதுவும் மந்த்ர ரத்னமாய் இருக்கும்

இம் மந்திரம் தான்
ஸ்ரீ மன் நாத முனிகள் –
உய்யக் கொண்டார் –
மணக்கால் நம்பி –
ஆளவந்தார் -என்று சொல்லுகிற
பரமாச்சார்யர்களுடைய நெஞ்சாகிற செப்பிலே வைத்துச் சேமிக்கப் பட்டு இருக்கும் –

அர்த்தோ விஷ்ணு -என்று சொல்லப் படுகிற அர்த்தவான்களுக்குக் காட்டக் கடவதாய்
அறப் பெரு விலையதாய் இருக்கும்

சர்வ உபாய தரித்தற்கு
சர்வ ஸ்வம்மாய் இருக்கும்

இந்த உபாயம்
அஞ்ஞருக்கும்
அசக்தருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தலாய் இருக்கும் –

ஆச்சார்யன் பிரமாதா என்றும் –
அர்ச்சாவதாரம் ப்ரமேயம் என்றும் –
த்வயம் பிரமாணம் என்றும் அருளிச் செய்வார்
உய்யக் கொண்டார்

இது சம்சார விஷ தஷ்டனுக்கு ரசாயனமாய் இருக்கும் என்று அருளிச் செய்வார்
மணக்கால் நம்பி

அந்தகனுக்கு மஹா நிதி போலே இருக்கும் என்று அருளிச் செய்வர்
பெரிய முதலியார்

ஷூத்தார்த்தனுக்கு அம்ருத பானம் போலே இருக்கும் என்று அருளிச் செய்வர்
திருமாலை ஆண்டான்

ஸ்தந்தய பிரஜைக்கு ஸ்தந்யம் போலே இருக்கும் என்று அருளிச் செய்வர்
திருக் கோஷ்ட்டியூர் நம்பி

ராஜகுமாரனுக்கு முடியும் மாலையும் போலே பிரபன்னனுக்கு த்வய உச்சாரணம் என்று
அருளிச் செய்வர் ஸ்ரீ பாஷ்ய காரர்

சம்சாரத்தில் இந்த உபாய விசேஷம் விலங்கு இடப்பட்டவன் தலையிலே முடியை வைத்தால் போலே
என்று அருளிச் செய்வர் எம்பார் –

வாஸ்யங்களில் எம்பெருமானுக்கு அவ்வருகு அல்லாதாப் போலே
வாசகங்களில் பிரபத்தியில் காட்டில் அவ்வருகு இல்லை என்று
அருளிச் செய்வர் நஞ்சீயர்

ராஜகுமாரனுக்கு கர்ப்பூர நிகரம் போலே இவனுக்கு பிரபத்தியை விடில் நாக்கு வற்றும் –
என்று அருளிச் செய்வர் நம்பிள்ளை

எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுவாரோபாதி என்று பணிக்கும்
திருக் குருகைப் பிரான் பிள்ளான்

குரு பரம்பரையை ஒழிந்த பிரபத்தியும் சாதனாந்தரங்களோடு ஒக்கும் என்று
நிர்வஹிப்பர் முதலியாண்டான்

த்வயம் பிறவி மிடியன் கையில் சிந்தாமணி புகுந்தால் போலே என்று
நிர்வஹிப்பர் பிள்ளை உறங்கா வல்லி தாசர்

இப்படி ஆச்சார்ய அபிமதமாய்ப் போருகிற பிரபதனம் –
தென்னன் திரு மாலிரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான் -என்கிறபடியே
அல்லாத உபாயங்கள் போல் அன்றியே
இதுவே கை கூடின உபாயம் இறே

இதில்
கோப்த்ருத்வ வரணத்தையும்-
ஆத்ம நிக்ஷேபத்தையும் சொல்லுகையாலும் -த்வயம் என்று திரு நாமமாய்

25- திரு அக்ஷரமாய் –
ஆறு பதமாய் –
ஸமஸ்த பதத்தாலே பத்து அர்த்தமாய் இருக்கும் –

இதில்
பூர்வ கண்டத்திலும்
உத்தர கண்டத்திலும்
மா மலர் மங்கையாகிற ஸ்ரீ ரத்னத்தோடே கூடுகையாலே இரு தலை மாணிக்கமாய் இருக்கும்

இப்படிக்கொத்த த்வயமும் அர்த்த ப்ராதான்யத்தாலே மூன்று படியாய் இருக்கும் –
1-விசேஷண பிரதானம் –
2-விசேஷ்ய பிரதானம் –
3-விசிஷ்ட பிரதானம் -என்று

ஆஸ்ரயண தசையில் -விசேஷண பிரதானமாய் இருக்கும் —
உபாய தசையில் விசேஷ்ய பிரதான்யமாய் இருக்கும் –
போக தசையில் விஸிஷ்ட பிரதானமாய் இருக்கும்

இதில்
பிரதம பதத்திலே -ஸ்ரீ சப்தத்தால் –
ஸ்ரயந்தீ வைஷ்ணவம் பாவம் ஸ்ரீயமாணா அகிலைர் ஜன –என்றும்
ஸ்ருணோதி தத் அபேக்ஷ உக்திம் -ஸ்ராவயந்தி ச தா பரம் -என்றும்
ஸ்ருணுதி நிகிலான் தோஷான் ஸ்ருணுதி ச குணைர் ஜகத் -என்றும் சொல்லுகிறபடியே

1-சகல ஜனனியான பிராட்டி சர்வேஸ்வரனை ஆஸ்ரயணம் பண்ணி இருக்கையும் –
2-ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த சேதனராலும் தான் ஸமாஸ்ரிக்கப் பட்டு இருக்கையும்
3-இவர்கள் அபேஷா ஸூக்திகளைக் கேட்க்கையும் –
4-கேட்ட ஸூக்திகளை ஈஸ்வரனை கேட்ப்பிக்கையும்
5-அஞ்ஞநாதி தோஷங்களை போக்குகையும்
6-ஞான குண அத்யாவசாயத்தை யுண்டாக்குகையும்
ஆக
1-ஷட் பிரகார விசிஷ்டமான புருஷகாரத்தையும்

2-மதுப்பாலே அதனுடைய நித்ய யோகத்தையும் –
ஆக
ஸ்ரீ மத் சப்தத்தாலே புருஷகார பூர்த்தியைச் சொல்லுகிறது

அநந்தரம் -நாராயண பதத்தாலே
வாத்சல்யமும்
ஸ்வாமித்வமும்
ஸுசீல்யமும்
ஸுலப்யமும்
ஞானமும்
சக்தியும்
பிராப்தியும்
பூர்த்தியும்
கிருபையும்
காரணத்வமும்

ஆக
ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக-
ஆஸ்ரிய கார்ய ஆபாதக குணங்களைப் பிரதிபாதிக்கிறது

இதில்
1-வாத்சல்யம் -தோஷம் போகமாய் இருக்கை
2-ஸ்வாமித்வம் -சொத்தின் பக்கல் உண்டான அபிமானம்
3-ஸுசீல்யம் -தன்னில் தாழ்ந்தவனோடு தன் மேன்மை தோன்றாதபடி புரை யறச் சேர்ந்து இருக்கை –
4-ஸுலப்யம் -அர்ச்சாவதார பர்யந்தமாக எளியனாம் படி சந்நிதி பண்ணி இருக்கை

ஆக இந்த நாலு குணங்களாலும் –
ஸ்வ அபராதங்களாலும் –
பந்துத்வ ஹானியாலும் –
தண்மையாலும் –
கிட்ட ஒண்ணாமையாலும் உண்டான பயம் நிவர்த்தமாகிறது

1-ஞானம் -ஆஸ்ரிதருடைய நினைவை அறிகை
2-சக்தி -அந்த நினைவை தலைக் கட்டிக் கொடுக்கை
3-பூர்த்தி -ஐஸ்வர்யம் தான் இட்ட வழக்காய் இருக்கை
4-பிராப்தி -சேஷி சேஷ பாவத்தால் உண்டான உறவு

ஆக இந்த நாலு குணங்களாலும்
அஞ்ஞன்
அசக்தன்
அபூர்ணன்
அப்ராப்தன் என்கிற சங்கா களங்க நிவ்விருத்தியும் ஆகிறது

கிருபை -கீழ்ச் சொன்ன நாலு குணங்களும்
இவனுடைய கர்மத்தை கணக்கிட்டே பலம் கொடுக்க உறுப்பாகையாலே –
அது வராதபடி ஈடுபாடு கண்டு இவன் அளவிலே பண்ணுகிற இரக்கம் –

காரணத்வம்
அபீஷ்ட அர்த்தங்களை நிதானமாய் இருக்கை

ஆக சரணாகதிக்கு உறுப்பான ஆஸ்ரய குணங்களைச் சொல்லுகையாலே
புருஷகாரமும் மிகை என்னும்படியான குண பூர்த்தியைச் சொல்லுகிறது

சரணவ்-என்கிற பதத்தில்
தாதுவில் யுண்டான அர்த்த விசேஷத்தாலே
ப்ராப்ய
ப்ராபகங்கள் இரண்டும்
திருவடிகளே என்று சொல்கிறது –

இந்த பதம் விக்ரஹத்துக்கு உப லக்ஷணமாய் இருக்கும்

சரணம் ப்ரபத்யே -என்கிற பதங்களால்-
ஈஸ்வரன் அறிவும் ஆசையும் யுடையாருக்கு அபிமதத்தை கொடா நிற்கும் –
அவன் அடியும் அறிவும் ஆசையும் யுண்டாக்கி அபிமதங்களைக் கொடா நிற்கும்

இது சிந்தையந்தி பக்கலிலும்
ஸ்ரீ மாலா காரர் பக்கலிலும் காணலாம்

ஆக
கீழ்ச் சொன்ன குணங்கள் இத்தனையும் தொடைக் கொள்ளலாம்படியான
விக்ரஹ பூர்த்தியைச் சொல்லுகிறது

உத்தர வாக்கியத்தில்
ஸ்ரீ சப்தத்தால்
தாதார்த்ய பல கிஞ்சித்க்கார பிரதி சம்பந்த பூர்த்தியைச் சொல்லுகிறது

மதுப்பாலே
புருஷார்த்தினுடைய சர்வ பிரகார நித்ய பூர்த்தியைச் சொல்கிறது

இந்த பதத்திலே
கைங்கர்ய பிரதி சம்பந்தி யுண்டாகில் அனந்த பதத்தாலே சொல்லுகிறது
என் என்னில்
கைங்கர்யம் ப்ரீதி ஜன்யமாகையாலும் –
ப்ரீதி அனுபவ ஜன்யமாகையாலும் –
அனுபவம் அனுபாவ்ய சாபேஷம் ஆகையால் –
அனுபாவ்யங்களான ஸ்வரூப ரூப குண விபூதியாதிகளைச் சொல்லுகிறது

ஆக -நாராயண பதத்தாலே
ஸ்வரூப ரூப குண விபூதியாதி அபரிச்சின்னத்வ பூர்த்தியைச் சொல்கிறது

சதுர்த்தியாலே
கிஞ்சித்க்கார பிரார்த்தனா பூர்த்தியைச் சொல்லுகிறது

நமஸ்ஸாலே
அதுக்குண்டான விரோதி நிவ்ருத்தி பூர்த்தியைச் சொல்கிறது

1-புருஷகார பூதையான சாஷாத் லஷ்மியையும்
2-தத் சம்பந்தத்தையும் –
3-சம்பந்தம் அடியாக பிரகாசிக்கும் ஸுலப்யாதி குணங்களையும்
4-குணவானுடைய சரண கமலத்தையும்
5-சரண கமலங்களினுடைய உபாய பாவத்தையும்
6-உபாய விஷயமான வ்யவசாயத்தையும்
7-வ்யவசிதனுடைய கைங்கர்ய பிரதிசம்பந்தியையும்
8-பிரதிசம்பந்தி பூர்ணமாகையும்
9-பூர்ண விஷயத்தில் பண்ணும் கைங்கர்ய பிரார்த்தனையும்
10-கைங்கர்ய விரோதியான அஹங்கார மமகார நிவர்த்தியையும்
ஆக -பத்து அர்த்தத்தையும் –
எட்டுப் பதமும்-மதுப்பும்-சதுர்த்தியுமாகச் சொல்லுகிறது -என்று
நிர்வஹிப்பர் ஆச்சான் பிள்ளை

1-ஆஸ்ரயண த்வாரத்தையும்
2-ஆஸ்ரயண வஸ்துவையும்
3-தத் உபாய பாவத்தையும்
4-தத் வரணத்தையும்
5-ஆஸ்ரயண வஸ்துவினுடைய அதிசயத்தையும்
6-தத் பூர்த்தியையும்
7-தத் தாஸ்ய பிரார்த்தனையையும்
8-தத் விரோதி நிவ்ருத்தியையும் -ப்ரதிபாதிக்கிறது என்று
நிர்வஹிப்பர் நஞ்சீயர்

1-பிரதம பதத்தில் விசேஷண பதத்தாலே பிராயச்சித்த வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
2-பிரதம பதத்தாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
3-த்விதீய பதத்தாலே உபேய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
4-க்ரியா பதத்தாலே அதிகாரி வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
5-உத்தர வாக்கியத்தில் பிரதம பதத்தாலே ப்ராப்யாந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
6-த்விதீய பதத்தாலே தேவதாந்த்ர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
7-இதில் சதுர்த்தியாலே பிரயோஜனாந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
8-த்ருதீய பதத்தாலே ஸ்வபாவ வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –என்று
நிர்வஹிப்பர் பெரிய பிள்ளை

1-பிரதம பதத்தில் விசேஷணத்தில் பிரதம அஷரத்தாலே புருஷகாரத்யபாவ வாதிகளை நிரசிக்கிறது
2-அனந்தர பதத்தாலே நிர்குண ப்ரஹ்ம வாதிகளை நிரசிக்கிறது
3-பிரதம பதாந்தமான த்வி வசனத்தாலே நிர்விக்ரஹ வாதிகளை நிரசிக்கிறது
4-அனந்தர பதத்தாலே உபாய த்வித்வ வாதிகளை நிரசிக்கிறது
5-க்ரியா பதத்தாலே அத்யவசாயாபாவ வாதிகளை நிரசிக்கிறது
6-மதுப்பாலே அநித்யயோக வாதிகளை நிரசிக்கிறது
7-உத்தர வாக்கியத்தில் பிரதம பதத்தாலே ஆத்ம சாம்யா வாதிகளை நிரசிக்கிறது
8-அனந்தர பதத்தாலே ஈஸ்வர ஸாம்ய வாதிகளை நிரசிக்கிறது
9-இதில் சதுர்த்தியாலே கிஞ்சித்கார புருஷார்த்த பிரதிபட வாதிகளை நிரசிக்கிறது
10-அனந்தர பதத்தாலே ஸ்வ ப்ரயோஜன வாதிகளை நிரசிக்கிறது -என்று
நிர்வஹிப்பர் நடுவில் திரு வீதிப் பிள்ளை

1-ஸ்ரீ மச் சப்தத்தாலே ஆனு கூல்ய சங்கல்பத்தையும் –
2-பிரதிகூல்ய வர்ஜனத்தையும் ப்ரதிபாதிக்கிறது
3-நாராயண சப்தத்தாலே ரஷிக்கும் என்கிற விசுவாசத்தை பிரதிபாதிக்கிறது
4-உத்தர வாக்கியத்தில் ஸ்ரீமச் சப்தத்தால் கோப்த்ருத்வ வரணத்தை ப்ரதிபாதிக்கிறது
5-நாராயண பதத்தாலே ஆத்ம நிக்ஷேபத்தை பிரதிபாதிக்கிறது
6-விரோதி நிவர்த்தக பதத்தாலே கார்ப்பண்யத்தைப் பிரதிபாதிக்கிறது
ஆக
ஷடங்க சம்பூர்ணமாய்
மந்த்ர ரத்னம் என்னும் திரு நாமத்தை யுடைத்தாய் இருக்கும்

இதில்
சரண சப்தத்தால் சரணாகதி என்று திருநாமம்
க்ரியா பதத்தாலே பிரபத்தி என்று திருநாமம்
வாக்ய த்வயத்தாலே த்வயம் என்று திரு நாமம்
சதுர்த்யந்தமான இரண்டுக்கும் நிஷேபம் என்றும் ந்யாஸம் என்றும் திருநாமம்
விரோதி நிவர்த்தக பதத்தாலே தியாகம் என்ற திருநாமம்

இதில் க்ரியா பதத்தாலே உபாய பிரார்த்தனை
சதுர்த்தியாலே உபேய பிரார்த்தனை
இவை இரண்டும் அதிகாரி க்ருத்யம்

ஏவம் பூதமான த்வயத்தில் நிஷ்டையாவது –
ஸ்வாச்சார்ய புரஸ் சரமாக –
கோவலர் பொற்கொடியான பிராட்டி இருக்க –
சரணம் புக்கு
கொடி வழியாகச் சென்று ப்ரஹ்ம தருவாய் ஆஸ்ரயித்து
இளைப்பாறி இருக்கை

ரகு ராக்ஷஸ சம்வாதத்திலும்
வ்யாக்ர வானர சம்வாதத்திலும் –
கபோத உபாக்யானத்திலும் –
கண்டூப உபாக்யானத்திலும்
சரணாகதியினுடைய ஏற்றத்தைக் கண்டு கொள்வது –

——————————

அநந்தரம்
ஏவம் பூதமான நியாசத்துக்கு விவரணமாய் இருக்கும்
சர்வ தர்ம பரி த்யாக பூர்வகமாக இத்தை விதிக்கிற சரம ஸ்லோகம்
இது விவரணமான படி என் என்னில்

அங்கு
உபாயாந்தர தியாகத்தையும்
உபாய நைரபேஷ்யத்தையும் சொல்லாமையாலே பூர்வ வாக்யத்துக்கு பூர்வார்த்தம் விவரணமாகிறது

இங்கு
பிராப்தி பிரதிபந்தகங்கள் அடையப் போகக் கடவது –
போக்குவான் உபய பூதனானவன் என்று சொல்லாமையாலே
உத்தர வாக்யத்துக்கு உத்தரார்த்தம் விவரணமாகக் கடவது

இப்படிக்கொத்த சரம ஸ்லோகம் மூன்று படியாய் இருக்கும் –
1-பரித்யாகம் என்றும் –
2-ஸ்வீ காரம் என்றும் –
3-சோக நிவ்ருத்தி -என்றும் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று தியாகம் சொல்லுகிறதாய் –
மாமேகம் சரணம் வ்ரஜ என்று ஸ்வீ காரம் சொல்லுகிறதாய் –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கையாலே சோக நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –

இதில் பிரதம பதத்திலே
சோதனா லக்ஷணமான தர்ம சப்தத்தாலே -உபசன்னனான அர்ஜுனனைக் குறித்து
மோக்ஷ உபாயமாக அருளிச் செய்த உபாஸனாத்மிகையான பக்தியைச் சொல்லுகிறது

இதில் பஹு வசனத்தாலே
கர்ம ஞானங்களைச் சொல்லுகிறது –

இது தன்னாலே
யஜ்ஞம்
தானம்
தபஸ்ஸூ
தீர்த்த கமனம்
நித்யம் நைமித்திகம் காம்யம் தொடங்கி யுண்டான கர்ம பேதங்களையும்
சத் வித்யை
தகர வித்யை
அந்தராதித்ய வித்யை
அஷி வித்யை என்று தொடங்கி யுண்டான ஞான பேதங்களையும்
த்யானம்
அர்ச்சனம் தொடங்கி யுண்டான பக்தி பேதங்களையும்
அவதார ரஹஸ்ய ஞானம்
புருஷோத்தம வித்யை
திரு நாம சங்கீர்த்தனம் என்று தொடங்கி யுண்டானவற்றையும் சொல்லுகிறது

வஷ்யமான தியாகத்தினுடைய கர்ம பாவத்தைச் சொல்கிறது த்விதீயா விபக்தியாலே

விசேஷணமான சர்வ சப்தத்தாலே
கர்ம ஞான பக்திகளுக்கும்
யோக்யதாபாதகங்களான வர்ணாஸ்ரம ஆசாரங்களைச் சொல்லுகிறது –

அநந்தரம்
பரித்யஜ்ய என்கிற பதத்தாலே அவற்றினுடைய தியாக பிரகாரத்தைச் சொல்லுகிறது –

இங்கு தியாகம் என்னப் பார்க்கிறது
கர்ம ஞான பக்திகளினுடைய சாதனத்வ புத்தி விடுகை –

இந்த பிரகாரத்தை லயப்பாலே -சொல்லி –
பரி என்கிற உப சர்க்கத்தாலே
கர்மாதிகளுடைய சாதனத்வ புத்தியை ச வாசனமாக விடச் சொல்கிறது –

இப்படி சகல தர்மங்களும் த்யாஜ்யமாய் யுள்ள இடத்தில்
நயத்தை தர்ம தியாகம் இல்லை –
எங்கனே என்னில்

கர்ம ராசி மூன்று படியாய் இருக்கும் –
1-அநர்த்த சாதனம் -என்றும் –
2-அர்த்த சாதனம் என்றும்
3-அநர்த்த பரிஹாரம் என்றும்

இதில்
அநர்த்த சாதனம் என்கிறது ஹிம்ஸாஸ் தேயாதிகமான கர்ம ராசி –

அர்த்த சாதனம் என்கிறது கர்ம ஞானாதிகமான கர்ம ராசி
சரணார்த்திக்குப் பூர்வம் அநிஷ்டாவஹமாகையாலே த்யாஜ்யம் –
உத்தரம் உபாய வரணத்துக்கு அங்கமாகையாலே த்யாஜ்யம்

அநர்த்த பரிஹாரமான கர்ம ராசி இரண்டு வகையாய் இருக்கும் –
இதில் ஒரு வகை பூர்வார்ஜிதமான பாபத்தைப் போக்குகைக்கு ப்ராயச்சித்தமாய் இருக்கும் –
இதுவும் த்யாஜ்யமாகக் கடவது –
மற்றவை ஆகாமியான அநர்த்தத்தை பரிஹரிக்கையாலே இது அநுஷ்டேயமாகக் கடவது –
இது இறே நியதி தர்மம் ஆகையாவது

க்ரியமாணம் ந கஸ்மைசித் யதார்த்தாய பிரகல்பதே அக்ரியாவதநர்த்தாய கர்ம தத்து சமாசரேத் -என்கிறபடியே
நியதி தர்மம் கர்த்தவ்யமாகக் கடவது –

அவிப் லவாய தர்மாணம் பாவநாய குலஸ்ய ச–ஸங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதா ஸ்தாப நாய ச –
ப்ரியாய மம விஷ்ணோச் ச தேவ தேவஸ்ய சார்ங்கிண -மநீஷீ வைதிகாசாரான் மனஸாபி ந லங்கயத் -என்கிறபடியே
தர்மங்களுக்கு நழுவுதல் வாராமைக்காகவும்-
குலா பாலான அர்த்தமாகவும் –
லோக ஸங்க்ரஹார்த்தமாகவும் –
மர்யாதா ஸ்தாபநார்த்தமாகவும் அனுஷ்டிப்பான் –

இது வேண்டா என்று இருந்தானாகில் பகவத் ப்ரீணாரத்தமாக அனுஷ்ட்டிக்க வேணும் –

ப்ராப்த ஹேதுத்வ புத்தி விட்டு ப்ரீதி ஹேது என்று அனுஷ்ட்டிப்பார் –என்று
நம்பிள்ளை அருளிச் செய்வர் –

அநந்தரம் -மாம் -என்கிற பதத்தாலே –
சாத்யங்களாய் –
அசேதனங்களாய் –
அநேகங்களாய் –
த்யாஜ்யங்களான -உபாயங்களைக் காட்டில்

ஸித்தமாய் –
பரம சேதனமாய் –
ஏகமாய் -விசிஷ்டமான –
உபாயத்தினுடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –

பதர்க் கூட்டத்தை விட்டு பர்வதத்தை அண்டை கொள்ளுமாப் போலே -என்று
நம்பிள்ளை அருளிச் செய்வர் –

இந்த சித்த உபாயத்தை விட்டு ஸாத்ய உபாயங்களில் அந்வயித்தான் ஆகில்
மரக்கலத்தை விட்டு தெப்பத்தைப் பற்றுமோபாதி -என்று
நிர்வஹிப்பர் சோமாசி ஆண்டான்

அதர்மத்திலே தர்ம புத்தி பண்ணி இருக்கிற அர்ஜுனனுடைய தோஷம் பாராமல்
தத்வ உபதேசம் பண்ணுகையாலே வாத்சல்யமும்

ஒரு மரகத மலையை உரு வகுத்தால் போலே மேசகமான திவ்ய மங்கள விக்ரஹமும்
ஸேநா தூளி தூசரிதமான மை வண்ண நறுங்குஞ்சிக் குழலும்
மையல் ஏற்றி மயக்கும் திரு முகத்திலே அரும்பின குரு வேர் முறுவலும் கடுக்கின மசிலையும்
கையில் பிடித்த உழவு கோலும்
சிறு வாய்க் கயிறுமாய்
ஒரு தட்டுத் தாழ நிற்கையாலே ஸுசீல்யமும்

விஸ்வரூப தர்சனத்தாலே பீதனான அர்ஜுனனுக்கு தர்ச நீயமான
வடிவைக் காட்டுகையாலே ஸுலப்யமும்

வேதாஹம் சமதீதாநி-என்கையாலே ஞானமும்

ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைக்கையாலே சக்தியும்

நாநவாப்தம் அவாப் தவ்யம்-என்கையாலே பூர்த்தியும்

சர்வாத்ம பாவத்தை அருளிச் செய்கையாலே பிராப்தியும்

ஆக இந்த குணங்கள் அத்தனையும்
விச்வாஸ அர்த்தமாக இந்தப் பதத்திலே அநு சந்தேயம்

அநந்தரம்
ஏவம் குண விசிஷ்டனான சரண்யனுடைய நைர பேஷ்யத்தைச் சொல்லுகிறது –
அவதாரண ரூபமான ஏக சப்தத்தால்

சாதன சாத்யங்களினுடைய ப்ருதுக் பாவ ஜன்யமான த்வித்வத்தையும்-
ஸ்வீ கர்த்தாவினுடைய அன்வயத்தாலே வருகிற த்வித்வத்தையும்
வ்யாவர்த்திகையாலே சரண்யனுடைய சுணை யுடைமையைச் சொல்லுகிறது –

அநந்தரம் -சரண -சப்தத்தால்
ஸ்வீ காரத்துக்கு உபாயத்வம் கொள்ளில் ஸ்வீ கர்த்தா அகலும் –
ஸ்வீ காரத் த்வாரா ஸ்வீ கர்த்தா அகலில் தத் அந்வயம் யுண்டாம் –
ஆகையால் இரண்டையும் வ்யாவர்த்தித்து
ஸ்வீ காரனான எம்பெருமானை உபாய பூதன் என்று சொல்லுகிறது

அநந்தரம் -வ்ரஜ -என்கிற பதத்தாலே
இவ் வுபாயத்தினுடைய வரணத்தைச் சொல்லுகிறதாய் –
இத்தாலே
பிரபத்தி மாத்ரத்தில் யுண்டான ஸுகர்யம் சொல்லுகிறது

அநந்தரம் –
அஹம் -சப்தத்தால் –
அநிஷ்ட நிவர்த்தகனுடைய
சர்வஞ்ஞத்வம்–
சர்வ சக்தித்வம் —
அவாப்த ஸமஸ்த காமத்வம் –
பரம காருணிகத்வம்-என்று தொடங்கி யுண்டானவை அநு சந்தேயம்

அநந்தரம்-
த்வா-என்கிற பதத்தாலே-
நான் சரண்யன் -நீ சரணாகதன்-
நான் பிரபத்தவ்யன் -நீ பிரபத்தா –
நான் பூர்ணன் -நீ அகிஞ்சன்யன் –
ஆகையால் என் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணியிருக்கிற யுன்னை -என்கிறது –

அநந்தரம் –
சர்வ பாபேப்யோ என்கிற பதத்தாலே
புண்ய பாபங்களைச் சொல்லுகிறது –
புண்ணியமும் பாபமோ என்னில்
அபிமத விரோதி பாபமாகையாலே மோக்ஷத்தைப் பற்ற புண்ணியமும் விரோதி யாகையாலே பாபம் என்கிறது –

இதில் பஹு வசனத்தாலே –
அவித்யா கர்மா –
வாசனா -ருசி –
ப்ரக்ருதி சம்பந்தங்களையும்
பூர்வாக உத்தராகங்களையும் சொல்லுகிறது

சர்வ சப்தத்தால் –
க்ருதம் –
க்ரியமாணம்-
கரிஷ்யமாணம் –
அபுத்தி பூர்வகம் –
ஆரப்தம் -என்று தொடங்கி உண்டானவற்றைச் சொல்கிறது

அநந்தரம் –
மோக்ஷயிஷ்யாமி -என்கிற பதத்தாலே –
தாத்வர்த்தத்தாலே பூர்வாக உத்தராகங்களுடைய அஸ்லேஷ விநாசத்தைப்
புத்ர மித்ர களத்ரங்களில் அசல் பிளந்து ஏறிட்ட புண்ய பாபங்களையும்
அதிகாரி விசேஷஸ்தமான ஆரப்த நிரசனத்தையும் –
ஆக இந்த விமோசனத்தைச் சொல்லி-

இதில் ணி ச்சாலே
உபாய பூதனுடைய பிரயோஜக கர்த்ருத்வத்தைச் சொல்லி –

இத்தாலே-
ஆதித்ய சந்நிதியில் அந்தகாரம் போலே
சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடி
முன்பு யாவை யாவை சில பாபத்துக்கு பீதனாய்ப் போந்தாய்-
அவை தான் உனக்கு அஞ்சிப் போம்படி பண்ணுவேன் என்றபடி

அநந்தரம் –
மாஸூச -என்கிற பதத்தாலே –
வ்ரஜ -என்கிற விதியோ பாதி மாஸூச என்கிற இதுவும் விதியாகையாலே
ஸ்வீ காரத்தோ பாதி சோக நிவ்ருத்தியும் கர்த்தவ்யம் என்கை

பலியானவனுக்கு பல அபாவத்தில் சோகம் உத் பன்னமாம்
உபாய கர்த்தாவுக்கு உபாய பாவத்தில் சோகம் உத் பன்னமாம்

இந்த உபாயத்தில்
பல
கர்த்ருத்வங்கள் இரண்டும் உனக்கு இல்லாமையாலும்
இவை இரண்டும் நாமே யாகையாலும் நீ சோகிக்க வேண்டா என்கை

உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
அதாவது
உன்னைப் பார்த்து நிர்ப்பரனாய் இரு –
என்னைப் பார்த்து நிர்ப்பரனாய் இரு -என்கை –

இனி சோகித்தாயாகில்-
உன் ஸ்வரூபத்தையும் அழித்து
என் வைபவத்தையும் அழித்தாயாம் அத்தனை –

முன்பு சோகித்திலை யாகில் அதிகாரி சித்தி இல்லை –
பின்பு சோகித்தாயாகில் பல சித்தி இல்லை –

1-துஷ்கரத்வ ஆபன்னமாய்-ஸ்வரூப விரோதியான -சாதனா பரித்யாகத்தாலே சோகிக்க வேண்டா
2-ஸ்வீ கார உபாயம் ஸூலபமாகையாலே சோகிக்க வேண்டா
3-அது சா பேஷம் அல்லாமையாலே சோகிக்க வேண்டா
4-அவ்யஹித உபாயம் ஆகையால் சோகிக்க வேண்டா
5-மானஸ மாத்திரம் ஆகையால் சோகிக்க வேண்டா –
6-உபாயம் அபாய ரஹிதமாக பல விதரண நிபுணமாகையாலே சோகிக்க வேண்டா
7-விரோதி போமா போகாதோ என்று சோகிக்க வேண்டா

வ்ரஜ -என்கிற பதம்
ஸ்வீ கார நிபந்தனமாய் இருக்குமோபாதி
இந்தப் பதமே நிர்ப்பரத்வ நிபந்தனமாய் இருக்கும்
கமுகு உண்ணில் வாழையும் யுண்ணும் என்று இருக்கை –

ஆக பல பிராப்தி அவிளம்பேந கை புகுருகையாலே
ஒரு பிரகாரத்தாலும் உனக்கு சோக ஹேது வில்லை -என்று தலைக் கட்டுகிறது –

ஆக —
1-த்யாஜ்யத்தையும்
2-த்யாஜ்ய பாஹுள்யத்தையும்
3-த்யாஜ்ய சாகல்யத்தையும்
4-தியாக விஸிஷ்ட வரணத்தையும்
5-தந் நைர பேஷ்யத்தையும்
6-தத் யுபாய பாவத்தையும்
7-தத் வரணத்தையும்
8-தத் அநிஷ்ட நிவர்த்தக குண யோகத்தையும்
9-தந் ந்யஸ்த பரத்வத்தையும்
10-தத் பாபத்தையும்
11-தத் பாஹுள் யத்தையும்
12-தத் சர்வவிதத்தையும்
13-தந் மோசன பிரகாரத்தையும்
14-தந் மோசன சங்கல்பத்தையும்
15-தந் ந்யஸ்த பர சோக நிவ்ருத்தியையும் –பிரதிபாதிக்கிறது –

ஸ்ரீ பாஷ்யகாரர் ஆழ்வானுக்கு -சரம ஸ்லோகத்தை உபதேசித்து –
இருந்தபடி என் -என்று கேட்டருள
ஒரு ஜென்மத்தில் இருந்தும் ஒரு ஜென்மத்தில் போந்தால் போலே இருந்தது -என்று பணித்தார்

நஞ்சீயர் சரம ஸ்லோகத்தைக் கேட்டுத்
தலைச் சுமை போட்டால் போலே இருந்தது என்றார்

ஸ்வரூப பிரகாச வாக்கியம் திரு மந்த்ரம் –
அனுஷ்டான பிரகாச வாக்கியம் த்வயம் –
விதான பிரகாச வாக்கியம் சரம ஸ்லோகம்

சாஸ்த்ர அபிமதம் திரு மந்த்ரம் –
ஆச்சார்ய அபிமதம் த்வயம் –
சரண்ய அபிமதம் சரம ஸ்லோகம் -என்று ஆச்சான் பிள்ளை நிர்வஹிப்பர்

பிராமண ஹ்ருதயம் திருமந்திரம் –
ப்ரமாத்ரூ ஹிருதயம் த்வயம் –
ப்ரமேய ஹிருதயம் சரம ஸ்லோகம் -என்று ஜீயர் நிர்வஹிப்பர்

திரு மந்த்ரம் திரு முகப் பாசுரமாய் இருக்கும் –
த்வயம் படி எடுப்பாய் இருக்கும் –
சரம ஸ்லோகம் வெட்டாய் இருக்கும் –

இந்த சரம ஸ்லோகத்துக்கு ஸங்க்ரஹம் த்வயம் –
த்வயத்துக்கு ஸங்க்ரஹம் திரு மந்த்ரம்

திருமந்திரத்தில் பிரதம பதத்தில்
பிரதம அக்ஷரமான அகாரம்
ப்ரக்ருதி என்றும்
ப்ரத்யயம் என்றும் இரண்டாய்

இதில் பிரக்ருதியான அகாரம் உபாயத்தைச் சொல்கிறது –
ப்ரத்யயமான சதுர்த்தி உபேயத்தைச் சொல்லுகிறது –

அகார விவரணம் உகாரம் –
உகார விவரணம் மத்யம பதம் –
மகார விவரணம் த்ருதீய பதம்

மத்யம பத விவரணம் த்வயத்தில் பூர்வ கண்டம் –
த்ருதீய பத விவரணம் உத்தர கண்டம்

பூர்வ கண்ட விவரணம் சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தம் –
உத்தர கண்ட விவரணம் உத்தரார்த்தம்

பிரதம பதத்தில் மத்யம அக்ஷரமும் -மத்யம பதமும் -த்வயத்தில் பூர்வ கண்டமும் –

சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தமும் உபாய வாசகமாய் இருக்கும் –

பிரதம பதத்தில் த்ருதீய அக்ஷரமும் -த்ருதீய பதமும் -த்வயத்தில் உத்தர கண்டமும் –

சரம ஸ்லோகத்தில் உத்தரார்த்தமும் உபேய வாசகமாய் இருக்கும்

சரம ஸ்லோகத்தில் உத்தார்த்த ஸங்க்ரஹம் த்வயத்தில் உத்தர கண்டம் –

உத்தர கண்ட ஸங்க்ரஹம் திருமந்திரத்தில் த்ருதீய பதம் –

த்ருதீய பத ஸங்க்ரஹம் மகாரம்

சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்த ஸங்க்ரஹம் த்வயத்தில் பூர்வ கண்டம் –

பூர்வ கண்டம் ஸங்க்ரஹம் மத்யம பதம் –

மத்யம பத ஸங்க்ரஹம் உகாரம்

மகார ஸங்க்ரஹம் சதுர்த்தி –

உகார ஸங்க்ரஹம் அகாரம்

ஆக –
சரம ஸ்லோக ஸங்க்ரஹம் த்வயமாய் –

த்வய ஸங்க்ரஹம் திரு மந்திரமாய் –

திரு மந்த்ர ஸங்க்ரஹம் பிரணவமாய் –

பிரணவ ஸங்க்ரஹம் பிரதம அக்ஷரமான அகாரமாய் இருக்கும்

இந்த அகாரம் –
அ இதி ப்ரஹ்ம-ஹாரோ விஷ்ணு வாசக -என்கிறபடியே
பகவத் வாசகமாய் இருக்கும் –

பகவத் வாசகமாய் இருக்கிற அகாரம்
உபாய உபேயங்களைச் சொல்லுகையாலே வாஸ்ய பூதனுடைய
ஸ்வரூபமும்
உபாய உபேயத்வமுமாம்

உபாய உபேயத்வம் ஸ்வரூபமான படி என் என்னில் –
ப்ரஹ்ம ஸ்வரூபம் ஞானாநந்தம் என்று ஸூ பிரசித்தம் ஆகையால்
ஞானம் உபாயம் –
ஆனந்தம் உபேயம் -‘

இவ்வுபாய உபேயங்கள் எம்பெருமானுக்குத் தத்வம் என்று
தத்வ ரூபமான திரு மந்திரத்தாலும்
ஹித ரூபமான த்வயத்தாலும் –
விதான ரூபமான சரம ஸ்லோகத்தாலும் -அறிகை இவ்வதிகாரிக்கு தத்வ தர்சித்வமானது-

இந்த தத்வ தர்சனத்தாலே இறே இவனுக்கு ஸ்வரூப சித்தி பிறப்பது
ஆனால்
ஜனகாதிகள் கர்ம நிஷ்டராயும்
பரதாதிகள் ஞான நிஷ்டராயும்
ப்ரஹ்லாதமுகரானார் பக்தி நிஷ்டராயும்
மோக்ஷம் பெறுகையாலே இவை உபாயமாகக் குறை என் -என்னில்

பாண்டு ரோகியானவன் மாணிக்கத்தைக் கொடுத்து மண்ணாங்கட்டியைக் கொள்ளுகை போலே
அத்ருஷ்ட ரூபமான கர்மமும் சேதன அபிப்பிராயத்தாலே த்ருஷ்டத்தில் நோக்குகிறதாய் இருக்கும் –

செத்து கிடந்த புலியை ம்ருத சஞ்சீவினியை இட்டு எழுப்பினால்
பின்பு அது தானே பாதகமாய் இருக்குமா போலே
ப்ரக்ருதி வஸ்யன் ப்ரக்ருதி ஆத்ம விவேகத்தை பண்ணா நிற்கச் செய்தேயும் –
ஸ்வதந்த்ரோஹம் -என்று இருக்கையாலே பாதகமாய் இருக்கும் –

முக்தி ஹேதுவாகா நிற்கச் செய்தேயும்
ஏவம் விதமான ஞானமும் அநர்த்த ஹேதுவாய் இருக்கும்

பிச்சானையை மேற்கொண்டு வீர பதம் பெறுவாரைப் போலே இருக்கும் பக்தி யோகம்

இப்படி தோஷ பூயிஷ்டங்கள் ஆகையால்
சிர தர ஜென்ம சாத்தியங்கள் ஆகையால் –
அதுக்கும் மேலே
எம்பெருமானுடைய சரணமுடைமையை அழிக்கையாலும் இவையும் யுபாயம் அன்று

இனி உபாயம் ஏது என்று பார்த்தால்
பிரபத்தியே உபாயமாக வேணும் –
பக்தி ப்ரபத்திகள் இரண்டும் தம்மில் ஒவ்வாதோ என்னில்

பக்திக்கு க்ருஷ்யாதி த்ருஷ்டாந்தம் –
ப்ரபத்திக்கு ரத்ன வாணிஜ்யம் த்ருஷ்டாந்தம் –

க்ருஷ்யாதி அர்த்த சாதனமாம் போது-
அநேக யத்னங்களை யுடைத்தாய்
ஓன்று விகலமானாலும் பல வை கல்யம் பிறக்கும்

ரத்ன வாணிஜ்யம்
அல்ப யத்னமும்
அநேக அர்த்தங்களுக்கு சாதனமாய் இருக்கும்

ஆகையால் அஸக்ருத் கார்யையான பக்தியில் காட்டில்
ஸக்ருத் கார்யையான ப்ரபத்திக்கு உத்கர்ஷம் யுண்டு

அதுக்கும் மேலே
பக்தியில் காட்டில் பிரபத்திக்கு பிராரப்த பங்க ரூபமான பலாதிக்யம் யுண்டு –
ஆகையால் பிரபத்தி உத்க்ருஷ்டமாகக் கடவது

பிரபத்தி தான் உபாயமாம் அளவிலே
சப்த உச்சாரண மாத்ரமும் உபாயம் அன்று –

இது உபாயமாகில் சாதனாந்தர விசேஷமாய் இருக்கும் –

இனி உபாயம் ஏது நின்று நிஷ்கர்ஷித்தால்
பிரபத்தவ்யனே உபாயமாகக் கடவது

உபாய உபேயங்கள் ஸ்வரூபம் ஆகையால்
உபேய பூதனானவனே உபாயமாகும் அளவில்
இவ் வதிகாரிக்குச் செய்ய வேண்டிய க்ருத்யம் ஒன்றும் இல்லை-

இவன் ஆர்த்த ப்ரபன்னன் ஆகில்
அப்போதே ப்ராப்ய சித்தி பிறக்கும்

திருப்த ப்ரபன்னனாகில்
சரீர அவசான சமனந்தரம் ப்ராப்ய சித்தி பிறக்கும் –

இப்படி உபாய உபேயங்கள் ஈஸ்வரனுக்கு தத்வம் என்று –
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் நது குணவ் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணி
ரஹஸ்ய த்ரய பர்யந்தமாக இத்தை உபபாதித்து
கர்ம ஞான சக க்ருதையான பக்தியில் காட்டில் பிரபத்தி வ்யாவ்ருத்தி சொல்லுகிற முகத்தாலே
உபாய உபேயத்வங்கள் தத்வம் என்று நிகமிக்கிறது –

இப்படிக்கொத்த தத்வம் அறியும் போது –
உபதேஷ்யந்தி தி ஞானம் ஞானி ந தத்வ தர்சின -என்கிறபடியே
தத்வ தர்சியான ஆச்சார்யனை ஆஸ்ரயித்து
தன் முகத்தாலே உபதேசிக்க அறிய வேணும் என்று

ஜீயர் 12-சம்வத்சரம் ஆஸ்ரயித்த பின் இறே பட்டரும் தத்வ உபதேசம் பண்ணி அருளினார்

வேதாந்தச்சார்யரான உடையவர் -18-பர்யாயம் சென்று ஆஸ்ரயித்த பின்பு இறே
திருக் கோஷ்டியூர் நம்பி இந்த தத்வ உபதேசம் பண்ணி அருளினார்

சர்வஞ்ஞரான உய்யக் கொண்டார் ஸர்வத்ர அனுவர்த்தனம் பண்ணின பின்பு இறே
ஸ்ரீ மன் நாதமுனிகள் தத்வ உபதேசம் பண்ணி அருளினார்

ஆச்சார்யன் இந்த அர்த்தத்தை –
கசடர்க்கும் –
கர்ம பரவசர்க்கும் –
கில்பிஜ ஜீவிகளுக்கும் –
அபிமான க்ரஸ்தருக்கும் –
குத்ஸித ஜனங்களுக்கும் –
க்ருதக்னருக்கும் –
கேவலாத்ம பரர்க்கும் –
கைதவ வாதிகளுக்கும் –
(காமம் கோபம் கொண்ட )கோபிகளுக்கு –
கௌத்ஸகுதற்கும் –
அமரியாதர்க்கும் –
அஸூயா பரர்க்கும் –
வஞ்சன பரர்க்கும் –
சஞ்சல மதிகளுக்கும் –
டாம்பீகருக்கும் –
சாதனாந்தர நிஷ்டர்க்கும் – உபதேசிப்பான் அல்லன் –

கீர்த்தியைப் பற்றவும் ஸத்காரத்துக்காகவும் உபதேசிப்பான் அல்லன் –

கார்ப்பண்ய நிஷ்டரான அதிகாரியினுடைய ஆர்த்தியைக் கண்டு இரங்கி
உபதேசிக்கிறவன் ஆச்சார்யன் ஆகிறான் –

சிஷ்யனாகில் தான் ஸத்ய ப்ரக்ருதியாய்
சதாசார்யர் பரிசாரத்திலே சர்வ காலமும் வர்த்திக்கக் கடவனாய்
சந்ததம் சத்வ குதூஹலியாய்
சம்சாரத்தில் உண்டான ஸூக அனுபவத்தை சப்தார்ச்சிஸ்ஸினுடைய ஜ்வாலையை விழுங்கி ஸந்தாபத்தைப் போக்குமாபாதியும்
விஷ வ்ருஷ பலாஸ்வாதனத்தோ பாதியும் நிர்வேதம் பண்ணி இருக்கக் கடவனாய் –

சஹி வித்யா தஸ்தம் ஜனயதி -என்கிறபடியே
ஆச்சார்யனாகிற பிதாவுக்குத் திருமந்திரம் ஆகிற மாதாவின் பக்கலிலே அபிஜாதனாய் –
ஆஸ்திக்யாதி குண விசிஷ்டனாய் –
ஆச்சார்யருடைய சாயையை அனுவர்த்திக்கக் கடவனாய் –
ஆத்ம யாத்திரையும் தேக யாத்திரையும்
ஆச்சார்யன் இட்ட வழக்காம் படி அவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருக்குமவன் சிஷ்யன்

தேவு மற்று அறியேன் -என்று ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும்
ஆச்சார்ய பர ந்யாஸம் பண்ணினார் –

விட்டு சித்தர் தங்கள் தேவர் -என்று நாச்சியாரும் பர ந்யாஸம் பண்ணினார்

இந்த அர்த்தத்தை இன்னார் சொல்லி இன்னார் கேட்க வேணும் என்கிற நியதி இல்லை

பிதா புத்ர சம்வாதத்திலே பிதாவுக்கு புத்ரன் உபதேசம் பண்ணினான்
அகஸ்தியருக்கு லோபாமுத்திரை உபதேசம் பண்ணினாள்
கௌரிக்கு ருத்ரன் உபதேசித்தான்
ஆச்சார்ய புத்திரனான சுக்ரனுக்கு ஜனகன் உபதேசித்தான்
பரம ரிஷிகளுக்கு தர்ம வ்யாதன் உபதேசித்தான்
ஆண்டாள் பட்டர் பக்கலிலே ஸ்ரவணம் பண்ணி இருந்தாள்
பரதாய அப்ரமேயாய குஹோ கஹந கோசார -என்கிறபடியே
ஸ்ரீ குஹப் பெருமாள் ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் சொன்னான்
விருப்புற்று கிடக்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே -என்று நாச்சியார் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கேட்டாள்

ஆகையால் –
பகவத் வைபவம் சொல்லுமவன் ஆச்சார்யன் –
கேட்க்குமவன் சிஷ்யன்

இவ் வதிகாரி ஆச்சார்யன் பக்கலிலே கேட்க்கும் போது
ஜனகன் வாசலிலே சுக்ரன் பட்டது பட்டாகிலும் கேட்க வேண்டும்

ஊஷர ஷேத்ரத்திலே நல்ல விரையிட்டாலும் பிரயோஜனம் இல்லை –
ஸூ ஷேத்ரத்திலே பொட்டை விரையிட்டாலும் பிரயோஜனம் இல்லை

நல்ல தரையிலே நல்ல விரையை இட்டால் இறே கார்யகரமாவது

ஆகையால் அவன் சத்வ ப்ரக்ருதியுமாய்
நல்ல கேள்வியில் ச்ருதமாக வேண்டும் –

இப்படிக்கொத்த தத்துவத்தை உபதேசித்த ஆச்சார்யனுக்கு
சிஷ்யன் செய்யும் உபகாரம் என் என்று பார்த்தால்
சரீரம் அர்த்தம் பிராணம் ச சத் குருப்யோ நிவேதயத்-என்கிறபடியே –
ஆச்சார்ய சமர்ப்பணம் பண்ணுகிற சரீரமும் அர்த்தமும் பிராணனும்
இதுக்கு சத்ருசம் அல்லாமையாலே
அதுக்கு ஈடாக இவன் செய்யலாவது ஒன்றும் இல்லை

இனி ஆச்சார்யன் பக்கலிலே உபகார ஸ்ம்ருதி பண்ணி இருக்கை இறே
நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்று போருகிறது –

ஆச்சார்யர்களுக்கு எல்லை நிலம் ஸ்ரீ கூரத்தாழ்வான்

ஆச்சார்ய விசுவாசத்துக்கு எல்லை நிலம் சபரியும் பொன்னாச்சியாரும்

ஆச்சார்ய குணங்களுக்கு எல்லை நிலம் இரக்கம்

சிஷ்ய குணங்களுக்கு எல்லை நிலம் உபகார ஸ்ம்ருதி

ஆச்சார்யர் உபதேசிக்கும் திரு மந்திரத்துக்கு எல்லை நிலம் மந்த்ர ரத்னம்

மந்த்ர ரத்னத்தின் சொல்லுகிற ஆஸ்ரய குணங்களுக்கு எல்லை நிலம் ஸுலப்யம்

இந்த குண விசிஷ்டனுக்கு விக்ரஹங்களுக்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்

இவனைப் பெறுகைக்கு உண்டான உபாயங்களுக்கு எல்லை நிலம் இவன் தான்

இவ்வுபாய விசுவாசத்துக்கு எல்லை நிலம் திரௌபதியும் திருக் கண்ண மங்கை ஆண்டானும்

உபாய பூதனான அவன் தானே உபேயத்துக்கும் எல்லை நிலம்

இவ் வுபேய விசுவாசத்துக்கு எல்லை நிலம் சிந்தையந்தியும் பெரிய யுடையாரும்

இம் மந்திரத்துக்கு எல்லை நிலமான அதிகாரி பிரபன்னன்

பிரபன்னனுடைய கால ஷேபத்துக்கு எல்லை நிலம் பகவத் கைங்கர்யம்

பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் அனந்தாழ்வான்

பாகவத கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் எண்ணாயிரத்து எச்சான்

பிரபன்னனுடைய கால ஷேபம் கைங்கர்ய அன்விதம் –

ஞானம் பிறக்கை ஸ்வரூபம் —
ஆச்சார்யனுக்கு மிதுன க்ருதஞ்ஞாபநம் ஸ்வரூபம் —
இத்தை அறிந்த அதிகாரிக்கு வியவசாயம் ஸ்வரூபம்

ஆக -இந்த பூர்ண அதிகாரியானவன் -இப்படி தத்வ உபதேசம் பண்ணின ஆச்சார்யன் பக்கலிலே
பர ஸ்வரூபத்தையும்
ஸ்வ ஸ்வரூபத்தையும்
உபாய ஸ்வரூபத்தையும்
விரோதி ஸ்வரூபத்தையும்
பல ஸ்வரூபத்தையும்
அறிந்து –

அவன் பக்கலிலே க்ருதஞ்ஞனுமாய் —
ஸ்ரீயப்பதியான எம்பெருமானே சேஷியாகவும் -தன்னை சேஷ பூதனாகவும்
அவனை ஸ்வாமியாகவும் தன்னை தாச பூதனாகவும்
அவனை ஆத்மாவாகவும் தன்னை சரீர பூதனாகவும்
அவனைப் புருஷனாகவும் தன்னை ஸ்த்ரீத்வ குண யுக்தனாகவும் -அனுசந்தித்து

நம்முடைய த்ருஷ்டத்தை கர்மாதீனமாகவும் நிர்வஹிக்கும்
அத்ருஷ்டத்தை க்ருபாதீனமாகவும் நிர்வஹிக்கும் -என்று
அவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருக்குமவனுக்கு ஸ்வரூப சித்தி பிறக்கும் –

தத்வ பூஷணம் முற்றிற்று

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ யாமுனாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை —–172-202– –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 25, 2017

சூர்ணிகை -171-

ஆக ஈச்வரனே த்ரிவித காரணமும் என்னும் இடம் சாதித்தாராய் நின்றார் கீழ் –
அஜாமேகாம -என்றும்–பிறப்பிலி ஒன்றாக உள்ள பிரகிருதி
சௌர் நாதாய நதவே தீ -என்றும்
த்ரி குணம் தஜ ஜகத யோநிர அநாதி ப்ராபவாபயயமா -என்றும்
அஜோஹயகே -என்றும்-ஜீவனும் பிறப்பிலி ஏக
ஜ்ஞாஜஜௌ தவா வஜா வீச நீ சௌ -என்றும்–இருவரும் பிறப்பிலி அறிந்தவன் அறிவிலி ஈசன் நியமிக்கப்படுபவன்
அஜோ நித்யச சாச்வதோயம் புராண–ஸ்ரீ கீதை -2–20- -இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே
நித்தியமாய் இருந்துள்ள அசித்தையும் சித்தியும் ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது தான் ஏது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது
அசித்தை பரிணமிப்பிக்கையும்
சேதனனுக்கு
சரீர இந்த்ரியங்களைக் கொடுத்து
ஜ்ஞான விகாசத்தைப்
பண்ணுகையும் –

கீழே ஜகத் காரண பூதனாகச் சொல்லப்பட்ட ஈஸ்வரன்
சேதன அசேதநாத்மகமான ஜகத்தை ஸ்ருஷ்டிக்கை யாவது –
தம பரே தேவே ஏகி பவதி -என்கிறபடியே தன்னோடு அவபிக்தமாய்க் கிடந்து–பிரித்து அறிய முடியாத நிலையில் கிடந்து—
தனித்து பிரகாசிக்காத நிலை முன்பு – தமஸ் சப்த வாச்யமான அசித்தை
ததஸ ஸ்வயம் பூர பகவா நவயகதோ வயஞ்ஜய நதிதம மகா பூதாதி திவ்ருத தௌஜா பராதுரா ஸீத தமோ நுத -என்கிறபடியே
கீழே முன் தன்மை லயம் சொல்லி இங்கு ஏகி பாவம் -ஒன்றாக -தாமஸ் -பாரா தேவதை இடத்து ஒற்றுமை அடைந்தது -ஒன்றாகி விட்டது என்று சொல்லாமல் -ஒன்றி கிடக்கிறது
பரிணாமம் ஆக்கும் வரை ஒன்றி இருக்கும் –
தத்வங்கள் மூன்றும் நித்யம் –சத்தா ஸ்திதி பிறவிருத்திகள் ஈஸ்வர அதீனம்
கீழே பிரளீயதே -பிரளயம் என்றாலே கீழ் நிலையை அடைந்தது -லயம் அடைந்தால் கீழே உள்ள நிலை இல்லை -வார்த்தைப்பாடு பிரளீயதே என்றும்
ஏகி பார்வதி வேதாந்தம் ஜாக்கிரதையாக சொல்லிற்று
ஸ்வ ப்ரே ரண விசேஷத்தாலே ஸ்வ சமாத விபக்தமாக்கி
அநந்தரம்
அஷர அவஸ்ததம் ஆக்கி-மூன்றாவது நிலை இது –
அது தன்னை பின்பு அவ்யவகத அவஸ்த்தம் ஆக்கி-நான்காம் நிலை இது –
அத்தை வ்யக்த சப்த வாச்யமான சமஷ்டி வ்யஷ்டி ரூப சமஸ்த கார்யங்கள் ஆம் படி பரிணமிப்பிக்கையும் –
அசித விசேஷிதான பிரளய ஸீமநி சமசரத -என்கிறபடியே
கரண களேபர விதுரனாய் -புலன்களும் சரீரமும் இல்லாமல் –
போக மோஷ சூன்யனாய்-
அசித் விசேஷிதனாய் -கிடந்த சேதனனுக்கு
போக ஸ்தானமான சரீரத்தையும்-
போக உபகரணங்களான இந்த்ரியங்களையும்
கொடுத்து
போக மோஷ பாகித்வ -அநர்ஹனாம்படி பண்ணி
முன்பு சங்குசிதமாய்க் கிடந்த ஜ்ஞானத்தின் யுடைய விகாசத்தை பண்ணுகையும் -என்கை
சேதனனுக்கு என்ற இது ஜாதி ஏக வசனம் –

————————————–

சூர்ணிகை -172-

அநந்தரம் ஸ்திதி சம்ஹாரங்களின் யுடைய பிரகாரங்களையும் அருளிச் செய்ய வேணும் என்று
திரு உள்ளம் பற்றி
பிரதமம் ஸ்திதியினுடைய பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்திதிப்பிக்கை யாவது –
ஸ்ருஷ்டமான வஸ்துக்களில்
பயிருக்கு நீர் நிலை போலே
அனுகூலமாக பிரவேசித்து நின்று
சர்வ ரஷைகளையும்
பண்ணுகை –

ஸ்திதிக்கை யாவது என்னாதே
ஸ்திதிப்பிக்கை யாவது -என்றது -ஸ்திதி யாவது சிருஷ்டி சம்ஹாரங்கள் போலே
கர்த்ரு கதம்–கர்த்தாவே செய்ய வேண்டியது – அன்றிக்கே ரஷணத்துக்கு
கர்மீபவிக்கிற வஸ்துகதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
என்னை ரஷிக்கப்போகிறார்-கர்மகதம் அன்றோ

ஆத்ம ஞானம் வளர்த்து – -வாழ வைத்தல் -வாழ்வித்தார் என்றவாறு –
நம் இசைவால் தானே வாழவைக்க முடியும் -இசைவித்துஎன்னை உன் தாளிணைக் கீழ் இருத்துமம் அம்மான் அன்றோ –
எந்தன் கருத்தை உற வீற்று இருந்தான் -இருத்திடும் வியந்து
மூன்று ஜுரம் ஆழ்வாருக்கு –பத்துடை அடியவர்க்கு எளியவன் -மூன்று தத்துக்கு பிழைத்த குழந்தை –வாழ்ந்தார் சொல்ல மாட்டோம் / படைப்பித்தார் சொல்ல வேண்டாம் –
பொன்னடிக்கீழே வியந்து இருத்தும் என்று அன்வயம் -ஆச்சர்யப்பட்டு -திமிரிக் கொண்டு நான் இருக்க
என்னை இருத்தி வைத்தது எனக்கு வியப்பு -ஆழ்வார் -இதுவே ஸ்துதிப்பிக்கை -இசைந்தால் தான் ரஷிக்க முடியும் –

ஸ்ருஷ்டமான இத்யாதி -அதாவது -தத் த்ருஷ்ட்வா -என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஷ்டமான வஸ்துக்களிலே
பயிருக்கு ரஷகமாய்க் கொண்டு அனுகூலமாய் நிற்கும் நீர் நிலை போலே ததேவ அனுபிராவிசத் என்கிறபடியே
தத் ரஷண அனுகூலமாக உள்ளே பிரவேசித்து நின்று
தத் தத் வஸ்து அனுகுணமான
சர்வ ரஷைகளையும் பண்ணுகை -என்கை
அனுபிரவேச சப்தத்துக்கு அனுகூலதயா பிரவேசம் இவர்க்கு இவ்விடத்தில் விவஷிதம் –
அனுபிரவேசம் -பின் தொடர்ந்து போனால் தானே அனு சப்தம்
அநந்தரம் சம்ஹார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
-உடம்பு ஊசி மருந்து போலே -அசேதனம் சேதனம் ப்ரஹ்மம் என்பது இல்லை -ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றுமே இல்லையே
அனு என்றது அனுகூலமாய் இருக்கை -பயிருக்கு தண்ணீர் போலே என்றவாறு –
சதா அனுகூலம் -கஷ்டம் கொடுப்பதும் வைராக்யம் வளர்க்க தானே –

இத்தால்
ஸ்திதிப்பிக்கை யாவது
நிலைப்பிக்கையாலே
தத் தத் ரஷணங்களைப் பண்ணுகை
என்றது ஆயிற்று -நிலைத்தார் சொல்லாமல் நிலைப்பிக்கை இங்கு மீண்டும்
சம்ஹரிக்கை யாவது

————————————————–

சூர்ணிகை -173-

அவி நீதனான புத்ரனை
பிதா விலங்கிட்டு வைக்குமா போலே
விஷயாந்தரங்களிலே கை வளருகிற
கரணங்களை
குலைத்திட்டு வைக்கை –

அதாவது
விசித்ரா தேக சம்பத்தீ ரீச்வராய நிவேதிதும் -என்கிறபடியே
ஸ்வ சமாஸ்ரயணீயத்தைப் பண்ணி
உஜ்ஜீவிப்பிகைக்கு உறுப்பாக
தான் கொடுத்த கரணங்களைக் கொண்டு
தன்னை வழி படுககை அன்றிக்கே
பாஹ்ய விஷய பிரவணனாய் போகப் புக்க வாறே
விதி நிஷேத வச்யனாய் ஒடுங்கி வர்த்தியாமல்
ஸ்வைரசாரியான புத்ரனை ஹித பரனானபிதாவானவன்
ஒரு வியாபார அர்ஹன் அல்லாத படி விலங்கை இட்டுஒடுக்கி வைக்குமா போலே
தன்னை ஒழிந்த விஷயங்களிலே அதி பிரவணனாய் நடக்கிற
கரணங்களைக் குலைத்து ஒடுக்கி இட்டு வைக்கை -என்கை –

—————————————-

சூர்ணிகை -174-

இனி இந்த ஸ்ருஷ்டியாதிகள் தான்
பிரத்யேகம் சதுர்விதமாய் இருக்கையாலே
அத்தையும் தர்சிப்பிக்கைக்காக அருளிச் செய்கிறார்

இம் மூன்றும்
தனித் தனியே
நாலு
பிரகாரமாய் இருக்கும் –

சதுர்விபாகச சம்ச்ருஷ்டௌ சதுர்ததா சம ஸ்திதிச ஸ்திதிதௌ பிரளயஞ்ச கரோதயே ந்தே சதுர்பேதா ஜநார்த்தனா-என்னக் கடவது இ றே-

———————————————–

சூர்ணிகை -176-

ஸ்திதியில்
விஷணவாதி ரூபேணஅவதரித்து
மன் வாதி முகேன சாஸ்த்ரங்களை
பிரவர்த்திப்பித்து
நல் வழி காட்டி
காலத்துக்கும்
சகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய்
சத்வ குணத்தோடு கூடி
ஸ்திதிப்பிக்கும்-

அதாவது
ஸ்திதியில் வந்தால்
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார–ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -என்கிற விஷ்ணு அவதாரம் தொடக்கமாக
ஸூ ர நர திரசசாமவதாந -என்றும்–ஜெகதாதி ஜெ முதல் அவதாரம் விஷ்ணு –
என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்கிறபடியே அநேக அவதாரங்களைப் பண்ணி-அவதாரம் பண்ணி ரஷிப்பது மட்டும் இல்லாமல் உபதேசிக்க
தானும் சத்வாரகமாகவும் முனிவரை இடுக்கியுகம் முந்நீர் வண்ணனாய் வெளியிட்டதும் –
மந்த்ர த்ரஷ்டாவாக கொண்டு ஆழ்வாரை -இட்டு -யானாய் தன்னைத் தான் பாடி -இதுவும் அவன் அவதாரமே -யுக வர்ண க்ரம அவதாரம் –
தத்தாத்ர்யர் ராமன் கண்ணன் ஆழ்வார் நான்கு வர்ணங்கள் –பின்னை கொல் –பிறந்திட்டாள் –
யதவை கிஞ்ச மனு ரவதததத பேஷஜம் -என்று ஆபத் தமனாக
ஸ்ருதி பிரசித்தனான மனு முதலான யாஜ்ஞ்ஞாவல்க்ய பராசர வால்மீகி சௌ நகாதிகள் முகேன –
ஸ்ம்ருதி இதிஹாச புராண ரூப சாஸ்த்ரங்களை பிரவர்த்திப்பித்து–
சேதனர் அபேத பிரவ்ருத்தராகாமல் ஈடேறுகைக்கு உறுப்பான நல் வழிகளை தர்சிப்பித்து
ரஷண உபயோகியான காலத்துக்கும்-திரௌபதி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வாராதிகள் கூப்பிட்ட காலத்தில் வந்து ரக்ஷித்தானே –
லோகத்தில் ஓன்று ஓன்று ரஷகமான சர்வ பூதங்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் தன்னதாம்படி அந்தராத்மாவாய்
கார்த்த வீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் உடன் பிரஜைகளை ரக்ஷித்தானே
ஜ்ஞான பிரகாசாதி ஹேதுவான சத்வ குண விசிஷ்டனாய்க் கொண்டு
ஸ்திதிப்பிக்கும் -என்கை –
ஏகா மசேந ஸ்திதி தோ விஷ்ணோ கரோதி பரிபாலனம்
மன்வாதி ரூபீ சானயேன கால ரூபோபாரேண ஸ
சர்வ பூதேஷு சானயேன சம்ஸ்தித
சத்வம் குணம் சமா சரிதய ஜகத் புருஷோத்தம -என்னக் கடவது இ றே
புராணத்தில் ஏகா மசேன ஸ்திதோ விஷ்ணு –ஏக அம்சமான விஷ்ணு என்றவாறு –என்று விஷ்ணு அவதாரம் ஒன்றையும் சொன்னது –
அவதாராந்தரங்களுக்கும் உப லஷணம் என்று கொள்ள வேணும்
விஷ்ணு வாதி ரூபேண அவதரித்து -என்று இவர் அருளிச் செய்கையாலே –

————————————-

சூர்ணிகை –177-

சம்ஹாரத்தில்
ருத்ரனுக்கும்
அக்னி அநதகாதிகளுக்கும்-அந்தகன் -யமன் -நரகாந்தகன் -நரகாசுரனை முடித்த பரப்ரஹ்மம் –
காலத்துக்கும்–சம்ஹார உபயோகி அன்றோ காலம் –
சகல பூதங்களுக்கும்
அந்தர்யாமியாய்
தமோ குணத்தோடு கூடி
சம்ஹரிக்கும் –

அதாவது சம்ஹாரத்தில் வந்தால்
சம்ஹாரத தாதிகளில் தலைவனான ருத்ரனுக்கும்
அவாந்தர சம்ஹர்த்தாக்களான அக்னி அநதகாதிகளுக்கும்
சம்ஹார உபயோகியான காலத்துக்கும்
ஒன்றுக்கு ஓன்று நாசகமான சகல பூதங்களுக்கும்
தத் தத் பிரவ்ருதிகள் எல்லாம் தன்னதாம்படி அந்தராத்மாவாய்
கண் பாராமல் செய்கைக்கு உறுப்பான தமோ குண விசிஷ்டனாய்க் கொண்டு
சம்ஹரிக்கும் -என்கை
ஆசரிதய தமசோ வருத்தி மந்தகாலே ததா பிரபு ருத்ர ஸ்வரூபோ
பகவானே காம சேன பவத்யஜ அகனய நதகாதி ரூபேண பாகேனா நயேன வர்த்ததே கால ஸ்வரூபோ பாகோ நாய்ச சர்வ பூதானி
சாபர விநாசம குர்வதச தஸ்ய சதுர்ததைவ மகாத்மான –ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்னக் கடவது இ றே
ஸ்ருஷ்டியாதிகளில் சதுர்விபாகம் சொல்லுகிற இடத்தில்
அம்ச சப்தத்தாலே ப்ரஹ்மாதிகளைச் சொல்லிற்று
அவர்கள் அவனுக்கு பிரகார பூதர் ஆகையாலே என்னும் இடத்தை
அநந்தரம்
ப்ரஹ்மா தஷாதய காலச ததைவாகில ஜந்தவ விபூதயோ
ஹரே ரேதோ ஜகத் சிருஷ்டி ஹேதவ விஷ்ணுர் மனவாதய காலச சர்வ பூதானி ஸ தவிஜ ஸ்திதிதோ
நிமித்த பூதஸ்ய விஷ்ணோ ரேதா விபூதய ருத்ர காலா ந்த
காதயாச்ச சமசதாச சைவ ஜந்தவ சதுர்த்தா பிரளயே
ஹயேதா -ஜனார்த்தன விபூதய -என்று
மூன்று ஸ்லோகத்தாலே ஸ்புடமாக பிரதிபாதித்தான் இ றே ஸ்ரீ பராசர பகவான் –
இத்தை நினைத்தே இவரும்-அந்தர்யாமியாய் -என்று அருளிச் செய்தது
விஷ்ணு மனவாதய -என்கிற ஸ்லோகத்தில் விஷ்ணுவையும் விபூதியாக சொன்ன இது
அவதார பிரயுக்தமான விக்ரஹ பரமாகக் கடவது –

—————————————

சூர்ணிகை -178-

இனி விஷம சிருஷ்டி அடி யாக மந்த மதிகளுக்கு உண்டாகக் கடவ சங்கையை பறிஹரிக்கைக்காக
பிரதமம் தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –

சிலரை ஸூ கிகளாகவும்
சிலரை துக்கிகளாகவும்
ஸ்ருஷ்டித்தால்
ஈஸ்வரனுக்கு
வைஷம்ய
நைர் கருண்யங்கள்
வாராதோ -என்னில்

அதாவது -ஸ்ருஷ்டிக்கிற அளவில் சர்வ ஆத்மாக்களையும் ஏக பிரகாரமாக அன்றிக்கே
தேவ மனுஷ்யாதி விபாகேன சில ஆத்மாக்களை
ஸூ கிகளாயும்-சில ஆத்மாக்களை துக்கிகளாயும் ஸ்ருஷ்டித்தால்
சர்வ சமனாய் பரம தயாவானாய் இருக்கும் ஈஸ்வரனுக்கு
எல்லார் அளவிலும் ஒத்து இராமையாகிற
வைஷயமும்-துக்கிகளாய் ஸ்ருஷ்டிக்கையால் –
பரத்துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபை இல்லாமையும் வாராதோ -என்கிறதாகில் -என்கை –
சாம்ய குணம் காட்டி அருளுகுகிறான் த்வார த்ரயத்தாலே-

——————————————–

சூர்ணிகை -179-

அத்தை பரிஹரிக்கிறார் –

கர்மம் அடியாகச்
செய்கையாலும்
மண் தின்ற பிரஜையை
நாக்கிலே குறி இட்டு
அஞ்சப் பண்ணும்
மாதாவைப் போலே
ஹித பரனாய்ச் செய்கையாலும்
வாராது –

அதாவது
சிலரை ஸூ கிகளாயும் சிலரை துக்கிகளாயும் ஸ்ருஷ்டிக்கிற இது
விஷம ஸ்ருஷ்டிக்கைக்கு உறுப்பான சேதனர் உடைய கர்மம் அடியாகச் செய்கையாலும்
துக்கிகளாக ஸ்ருஷ்டிக்கிற இது தனக்கு ரோக கரமான மண்ணை விரும்பித் தின்ற பிரஜையை
மேலே தின்னாதபடி நாக்கிலே குறி இட்டு மண் தின்ன பயப்படும்படி பண்ணும்
ஹித பரதையான மாதாவைப் போலே
இவர்கள் மேல்-பின்பு – துக்க ஹேதுவான கர்மங்களைப் பண்ண அஞ்சும்படி
ஹித பரனாய்ச் செய்கையாலும் வைஷம்ய நைர்க்கருணயங்கள் இரண்டும் இவனுக்கு வாராது -என்கை
இத்தால் -வைஷம்ய நைகருண்யே ந சாபேஷத்வாத் -2–1-34- -என்கிற வேதாந்த ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
நிமே நோ ந நதஞ்சகருணஞ்ச ஜகத் விசித்ரம் கர்ம வ்யபேஷய சருஜதச தவ ரெங்க சேஷிந
வைஷம்ய நிர்க்கருண தயோர் ந கலு பிரசக்திச தத் ப்ரஹ்ம
ஸூ த்ரச்சிவா ஸ்ருதயோ கருண நதி–உத்தர சதகம் -42- -என்று இது தன்னை பட்டரும் அருளிச் செய்தார் இ றே –
நிம்னா உன்மய ஈச ஈஸித்வய –உயர்வு தாழ்வு பேச்சுக்கு கூட இடம் இல்லையே -சசிவோத்தமன்-திருவடிக்கு இத்தை சொல்லுவோமே –
-மந்திரி -வேதாந்த வாக்கியம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் மந்திரி போலே ஒழுங்காக ஸ்தாபிக்குமே –

—————————————-

சூர்ணிகை -180-

ஆக
ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் என்றத்தை உபபாதித்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம்
விலஷண விக்ரஹ யுக்தனாய் -என்றத்தை உபபாதிப்பதாக உபக்ரமித்தார் –

இவன் தான்
முந்நீர் ஞாலம் படைத்த
என் முகில் வண்ணன்
என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு
ஸ்ருஷ்டியாதிகளைப்
பண்ணும் –

நடுவு சொன்ன –
ஆர்த்தாதி சதுர்வித புருஷ சமாஸ்ரயணீயத்வமும்
தர்மாதி சதுர்வித பல பிரதத்வமும் ஆகிற
இவை இரண்டையும் உப பாதியாது ஒழிவான்-என் -என்னில்
காரணந்து தயேய-என்றும்
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் இத்யாதியில் சொல்லுகிறபடி
காரண வஸ்துவே உபாசயமும் ஆசரயணீயமும் ஆகையாலே காரணத்வம் சொன்ன போதே
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிற சதுர்வித சமாஸ்ரயணீயத்வமும்
பலமத உபபத்தே -3–2–37–என்கிறபடியே பல ப்ரதத்வ ஹேதுவான–தான் பலமாகவும் இருப்பார் -கேட்டதை கொடுப்பார் -தானும் பலமாக இருப்பார் –
சர்வ சக்தி யோகம் கீழே உக்தம் ஆகையாலே
தர்மாதி சதுர்வித பல பிரதத்வமும் அர்த்தாத் உக்தம் என்னும் நினைவாலும்
அவற்றில் உபபாத நீயாம்சம் மிகவும் இல்லாமையாலும்
தத் உப பாதானம் பண்ணிற்று இலர்-திரும்ப சொல்லி விளக்க வில்லை –
ஆகையால் கீழ்ச் சொன்ன காரணத்வத்தோடே விக்ரஹ யோஹத்துக்கு அந்வயத்தைச்
சொல்லிக் கொண்டு அருளுகிறார்-

இவன் தான் முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே -என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் என்று –
அதாவது
இப்படி ஜகத் சர்க்காதி கர்த்தாவாக சொல்லப் பட்ட இவன் தான்
எனக்காக–ஆழ்வாருக்காக -அவன் செய்து அருளிய எல்லா சேஷ்டிதங்களும் பிரவ்ருத்திகளும்
ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலம் என்று மூன்று வகைப் பட்ட நீரை யுடைத்தான
சமுத்ரத்தோடே கூடின ஜகத்தை ஸ்ருஷ்டித்த
வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவனே என்று
ஆழ்வார் உடைய திவ்ய பிரபந்தத்தில் சொல்லுகிற படியே
விக்ரக ஸ ஹிதனாய்க் கொண்டு ஸ்ருஷடி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றையும் பண்ணும் -என்கை
முகில் வண்ணன் என்கிற இது ஔதார்ய குண பரமாக வ்யாக்யாதாக்கள்
பலரும் வியாக்யானம் பண்ணினார்களே ஆகிலும்
விக்ரஹ பரமாக இவர் அருளிச் செய்கையாலே
இங்கனும் ஒரு யோஜனை யுண்டு என்று கொள்ள வேணும்
ஒன்றுக்கு பல யோஜனைகள் உண்டாய் இ றே இருப்பது –
ஜகத்தை படைக்கும் பொழுது விக்ரஹ விசிஷ்டன் -முகில் வண்ணனாக படைக்கிறான்

————————————-

சூர்ணிகை -181-

இனி இந்த விக்ரஹத்தின் யுடைய வை லஷண்யத்தை ஒரு சூர்ணிகை யாலே விஸ்தரேண
உபபாதிக்கிறார் –

விக்ரஹம் தான்
ஸ்வரூப -குணங்களில் -காட்டில்
அத்யந்த அபிமதமாய்
ஸ்வ அனுரூபமாய்
நித்யமாய்
ஏக ரூபமாய்
ஸூ த்த சத்வாத்மகமாய்
சேதன தேஹம் போலே
ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க
பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார கந்தமாய்
சர்வ ரஷகமாய்
சர்வாபாஸ்ரயமாய்
அஸ்த்ர பூஷண பூஷிதமாய்
இருக்கும்-

விக்ரஹம் தான் ஸ்வரூப -குணங்களில் -காட்டில் அத்யந்த அபிமதம் யாகையாவது
-ஆனந்த மயமான ஸ்வரூபமும் ஆனந்தா வஹமான குணங்களும் போல் அன்றியே
நிரதிசய ஆனந்தாவஹமாய் இருக்கையாலே
அவற்றிலும் காட்டில் மிகவும் அபிமதமாய் இருக்கை –

ஸ்வ அனுரூபம் ஆகையாவது -அநநுரூபமாய் இருக்கச் செய்தேயும் அபிமதமாய் இருக்குமவை போல் அன்றிக்கே
தனக்கு அனுரூபமாய் இருக்கை-

நித்யமாகை -ஆவது –
ஸ்வரூப குணங்களோ பாதி அநாதி நிதனமாய் இருக்கை –ஆதி நிதனம்- முடிவு இல்லாமல் என்றபடி
லோகத்தில் அவயவிகளுக்கு அநித்யத்வம் காண்கையாலே இதுக்கும் அவயவிதவேன அநித்யத்வம் வாராதோ என்னில் வாராது
எங்கும் ஒக்க அவயவ சம்பந்த மாதரம் அல்ல அநித்யத்வ ஹேது அவயவ ஆரப்தம் –
அவயவ சம்பந்தம் மாத்ரமே அநித்யத்வ ஹேதுவாம் ஆகில் கர சரணாத அவயவ சம்பந்தம் உண்டான ஆத்மாவுக்கும் விநாசம் வர வேணுமே
இங்கு அப்படி அவயவார பதத்வத்தில் பிரமாணம் இல்லாமையாலே
இது கர சரணாத யவயவ யோகியாய் நிற்கச் செய்தேயும்
நித்யமாயே இருக்கும் என்று இப்படி விவரணத்தில் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இ றே-

ஏக ரூபமாகை யாவது –வ்ருத்தி ஷயாதி விகார ரஹிதமாய் இருக்கை
சதைக ரூப ரூபாயா -என்னக் கடவது இ றே -சுருக்குவார் இன்றியே சுருக்கினாய்-

ஸூ த்த சத்வாத்மகமாகை யாவது —
குணாந்தர சம்சர்க்கம் இல்லாத சத்வத்துக்கு ஆச்ரயமாய் இருக்கிற அப்ராக்ருத த்ரவ்யமே வடிவாய் இருக்கை –
ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி -என்னக் கடவது இ றே –

சேதன தேஹம் போலே ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய் –
சுத்த சத்வாத்மகம் ஆகையாலே குண த்ரய ஆச்ரயமான சேதன தேஹம் போலே
ஞானமயம் ஆகையாலே தேஜோரூபமான ஸ்வரூபத்தை
புறம் தோற்றாதபடி மறைக்கை அன்றிக்கே
மாணிக்கத்தை செப்பாக சமைத்து அதிலே பொன்னை இட்டு வைத்தால்
உள்ளிருக்கிற பொன்னை அது புறம்பே நிழல் எழும்படி தோற்றுவிக்குமா போலே –
எண்ணும் பொன்னுருவாய் -என்கிறபடியே ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே
பொன்னுக்குள் மாணிக்கம் திருமேனிக்குள் ஸ்வரூபம் இல்லாமல் -மாணிக்கத்துக்குள் பொன் போலே என்கிறார் –
திருமேனி-திவ்ய மங்கள விகிரஹம் – திவ்யாத்ம ஸ்வரூபம் வாசி உண்டே –
பொன்னுரு-ஈஸ்வரன் மின்னுரு – சரீரம் -பின்னுரு -ஆத்மா -தத்வத்ரயம் மூன்று சொற்களால் -அருளிச் செய்தார் இ றே-

பொன்னுரு என்று சொல்லப் படுமதான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு தான் பிரகாசகமாய் இருக்கை-

நிரவதிக தேஜோ ரூபமாகை யாவது –
நித்ய முக்த விக்ரஹங்களும் இதுவும் ஏக ஜாதிய த்ரவ்யமாய் இருக்கச் செய்தே-அப்ராக்ருத த்ரவ்யம் –
ஏக ஜாதீய த்ரவ்யாத்மகமான கத்யோத சரீர தேஜஸ் சில் காட்டிலும்—கத்யோதம் ஆகாசம் மினுமினி பூச்சி —
இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ –நாய் ஆடுவதோ நாரி கேசரி முன் –
ஆதித்ய சரீரத்துக்கு உண்டான தேஜோதிசயம் போலே
இவை ச வதிக தேஜஸ சாம்படி தான் நிரவதிக தேஜஸ் சை யுடைத்தாய் இருக்கை –

சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாகை யாவது –
சௌகுமார்யம் சௌந்தர்யம் லாவண்யம் சௌகந்த்யம் யௌவனம்
முதலான கல்யாண குண சமூஹத்துக்கு கொள்கலமாய் இருக்கை –
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்ய
யௌவன அத்யந்த குணநிதி திவ்ய ரூப-ரூப குணங்கள் சூர்ணிகை –
என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் இ றே —
மாயன் குழல் -கொள்கின்ற -கோள் இருளை- -அன்று –

யோகி த்யேயமாகை யாவது –
பகவத் த்யாந பரமான பரம யோகிகளுக்கு சுபாஸ்ரயமாய்க் கொண்டு
எப்போதும் த்யான விஷயமாய் இருக்கை
காசா நயா தவா மருதே தேவி சர்வ யஞ்ஞமாயம் வபு
அத்யாசதே தேவ தேவஸ்ய யோகி சிந்தயம் கதாபருத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–9-
என்று அசாதாரண விக்ராஹமே யோகி சிந்தயமாகச் சொல்லப் பட்டது இ றே

சகல ஜன மோகனமாகை யாவது –
ஜ்ஞான அஞ்ஞான விபாகம் அற சகல ஜனங்களையும் ஸ்வ வை லஷண்யத்தாலே பிச்சேற்றுமதாய் இருக்கை –
பும்ஸாம் திருஷ்டி சிந்தா அபஹரிணம் -என்றும்
சர்வ ஸ்தவ ம்நோஹர –
கண்டவர் தம் மனம் வழங்கும் -என்னக் கடவது இ றே –சதா சர்வாங்க சுந்தரன் அன்றோ –
கீழே யோகிகளுக்கு த்யான விஷயம் -மேலே நித்ய முத்தர்களுக்கு அனுபாவ்யம் -நடுவில் நம் போன்ற சம்சாரிகளுக்கு இப்படி –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -இழந்தது சங்கே கட்டே -ஒவ் ஒன்றையும் இழக்கும் படி அன்றோ அழகு -இதுவே மோஹனம்
-மெய்யமர் பல் கலன் நன்கு அணிந்தான் இல்லை -மெய்யில் அமர்ந்து -சேர்த்தே -செவ்வரத்தை உடையாடை -அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்று –
மேக்க குழாங்கள் ஒக்கும் அம்மான் உருவம் -காட்டேன்மின் உம் உரு என்று சொல்லும்படி இருக்குமே -படி எடுத்து சொல்லும் படி அன்றே பெருமாள் உருவம் -திருவடி –
ராம கமல பத்ராக்ஷன் -சமுதாய சோபை அவயவ சோபை –

சமஸ்த போக வைராக்ய ஜனக-மாகையாவது –
தன வை லஷண்யத்தைக் கண்டவர்களுக்கு
ஸ்வ இதர சகல விஷய அனுபவத்திலும் ஆசை அறுதியை விளைக்குமதாய் இருக்கை-
பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுது ஆராத தோள்–என்னக் கடவது இ றே -/ தோள் கண்டார் தோளே கண்டார் -/
உன்னும்ம் சோறு –எல்லாம் கண்ணன் -/ தூது செய் கண்கள் -தாயாய் அளிக்கும் தண் தாமரைக்கு கண்ணன் -/
செம் கண் திருமுகத்து /கதிர்மதியம் போல் முகத்தான் -ஜயமான கடாக்ஷம் –

நித்ய முக்த அனுபாவ்ய-மாகை யாவது –
அபரிச்சின்ன ஜ்ஞானாதி குணகரான நித்யராலும் முக்தராலும்
சதா பஸ்யந்தி சூரய-படியே அநவரதம் அனுபவிக்கப் படுமதாய் இருக்கை –

வாசத் தடம் போலே சகல தாப ஹர-மாகை யாவது –
கண் கை கால் தூய செய்ய மலர்களா -என்று தொடங்கி
ஆழ்வார் வர்ணித்த படியே திவ்ய அவயவங்களும் திரு மேனியுமான சேர்த்தியாலே
பரப்பு மாறத் தாமரை பூத்து பரிமளம் அலை எறியா நிற்பதொரு தடாகம் போலே இருக்கையாலே
தன்னைக் கிட்டினவர்களுக்கு சம்சாரிக்க விவித தாபத்தோடு விரஹ தாபத்தோடு வாசி அற
சகல தாபத்தையும் போக்குமதாய் இருக்கை –

அநந்த அவதார கந்த-மாகை யாவது –
அஜாயாமானோ பஹுவிதா விஜாயதே -என்றும்
பஹூ நிமே வயதி தானி -என்றும் சொல்லப்படுகிற
அசங்க்யாதமான அவதாரங்களும் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி கொண்டு
தீபா துதபன்ன ப்ர தீபம் போலே
வருகிறவை யாகையாலே அவை எல்லாவற்றுக்கும் மூலமாய் இருக்கை
பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி -என்றும்
கல்பே கல்பே ஜாயமானச ஸ்வ மூர்த்தாயா –என்றும்
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -என்றும் சொல்லக் கடவது இ றே/ அழுக்கு பதிந்த உடம்பாக பரஞ்சுடர் உடம்பு -சஜாதீயமாக்கி –

சர்வ ரஷகம் -ஆகை யாவது –
ஐஸ்வர் யாதிகளோடு கேவலரோடு
பகவத் சரணாகதர்களில் உபாசகரோடு -பிரபன்னரோடு -அனுபவ கைங்கர்யரான நித்ய முக்தரோடு
வாசி அற சர்வருடைய
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி களைப் பண்ணுவது
திவ்ய மங்கள விக்ரஹ உபேதனாய்க் கொண்டே ஆகையாலே
எல்லாருக்கும் ரஷகமாய் இருக்கை –
சர்வாபாஸ்ரயம் -ஆகை யாவது –
உபய விபூதிக்கும் ஆச்ரயமாய் இருக்கை -மண்ணும் விண்ணும் தொழ-

அஸ்த்ர பூஷண பூஷிதம் -ஆகை யாவது –
கீழ்ச் சொன்ன சர்வாஸ்ரயத்வ ஸூ சகமாம் படி
அஸ்த்ர பூஷன அத்யாயத்தில் சொல்லுகிறபடியே
விபூதய அபிமானிகளான திவ்ய ஆயுதங்களாலும்
திவ்ய ஆபரணங்களாலும் அலங்க்ருதனாய் இருக்கை –
ஆத்மா நமஸ்ய ஜகதோ நிர்லேபம குணாமலம் பிபாததி கௌச்துபமணிமா ஸ்வரூபம்
பகவான் ஹரி ஸ்ரீ வத்ஸ சமஸ்த தானதர மன நதேச சமாசரிதம் பிரதானம் புத்திர பயாசதே கதா ரூபேண மாதவே
பூதாதி மிந்த்ரியா திஞ்ச த்வித அஹங்கார மீச்வர பிபாததி சங்ககரு ரூபேண
சாரங்க ரூபேண ச ஸ்திதிதம் சல ஸ்வரூப மத்யந்த ஜவே நானா தரிதா நிலம் –
சக்ர ஸ்வரூபஞ்ச மனோ தததே விஷ்ணு கரே ஸ்திதிதம்
பஞ்ச ரூபாது யாமாலா வைஜயந்தீ கதாபருத ச பூத ஹேது
சங்கா தோபூத மாலாச ச த்விஜ யாதீந்த்ரிய விசேஷாணீ
புத்தி காமா தமாக நிவி சர ரூபாணாய சேஷாணி தானி ததே ஜனார்த்தனா
பிபாததி யச்சாசிரத நமச்யுதோ தயந்த நிர்மலம் வித்யாமயந்து தத் ஜ்ஞானம் வித்தியாச மமசாம் ஸ்திதிதம் -என்னக் கடவது இ றே-
சஞ்சல மனஸ் -சக்கரம் / கௌஸ்துபம் ஆத்மதத்வம் /பிரதிநீயத்வம் உண்டே -சர்வருக்கு -சர்வத்துக்கும் -/ பிரதானம் ஸ்ரீ வத்சம்
/புத்தி கதை /தாமச சாத்விக அஹங்காரங்கள் –சங்கும் சாரங்கமும் /
தன் மாத்திரை வனமாலை / பஞ்ச பூதங்கள் -இந்திரியங்கள் இவை -சர ரூபம் / வித்யை கட்கம் உறை அவித்யா –

——————————————–

சூர்ணிகை -182-

ஆக -விலஷண விக்ரஹ யுக்தனாய் -என்றத்தை உபபாதித்தார் கீழ் –
இந்த விக்ரஹ யோக பிரயுக்தமான ஈஸ்வரனுடைய பரத்வாதி பஞ்ச பிரகாரத்தையும்
தனித் தனியே ஸூ வியக்தமாக தர்சிப்பிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி -பிரதமம்
அது தன்னை உத்ஷேபிக்கிறார் –

ஈஸ்வர ஸ்வரூபம் தான்
பரத்வம்
வ்யூஹம்
விபவம்
அந்தர்யாமித்வம்
அர்ச்சாவதாரம்
என்று அஞ்சு பிரகாரத்தோடே
கூடி இருக்கும் –

அதாவது -இத்தை சொல்லி அருளி
ஸ்ரீ லஷ்மி பூமா நீளா நாயகனாய் -என்றதையும் உபபாதித்து விட்டு
பின்னை இது சொல்லாது ஒழிவான் என் என்னில்
அதில் உபபாதிக்க வேண்டுவது பணி இல்லாமையாலும்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சகாயோ ஜனார்த்தனா
உபாபயாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -என்கையாலே
மேல் சொல்லுகிற பரத்வத்திலே அர்த்ததாதுகதமாம் என்னுமதைப் பற்றவும்
தனித்து உபபாதிதிலர்-ஆகையால் விரோதம் இல்லை –

ஈஸ்வர ஸ்வரூபம் -என்கிற இடத்தில்
ஸ்வரூப சப்தத்தால் சொல்லுகிறது -ஸ்வ அசாதாரண விக்ரஹதை யாதல்
விக்ரஹ விசிஷ்டமான ஸ்வரூபம் தன்னை யாதல் –
சங்கரஹேண் இட்டு அருளின மற்றை இரண்டு தத்வ த்ரய படியிலும் ஒருபடியிலே திரு மேனியும் அஞ்சு படியாய் இருக்கும் -அதாவது
பரத்வம் -வ்யூஹம் -விபவம் -அந்தர்யாமித்வம் -அர்ச்சாவதாரம் -என்றும்
மற்றைப் படியிலே ஈஸ்வர ஸ்வரூபம் ஹேய பிரதிபடமாய் -என்று தொடங்கி
பத்நீ பரிஜன விசிஷ்டமாய் இருக்கும் -என்றத்தை உபபாதித்த அநந்தரம்
இது தான் அஞ்சு படியாய் இருக்கும் என்றும்
இதம் சப்தத்தாலே பிரக்ருதமான ஈஸ்வர ஸ்வரூபத்தை பராமர்சிதது
அது தான் பரத்வாதி ரூபேண பஞ்ச பிரகாரமாய் இருக்கும் என்று இவர் தாமே அருளிச் செய்கையாலே
இப்படி பரத்வாதி பஞ்ச பிரகார விசிஷ்டனாய் இருப்பன் என்னும் இடத்தை
மம பிரகாரா பஞ்சேதி பரா ஹூரா வேதாந்த பாரக
பரோ வ்யூஹச்ச்ச விபவோ நியந்தா சர்வ தேஹி நாம
அர்ச்சாவதார ச ச ததா தயாலு புருஷர்க்ருதி இத யேவம்
பஞ்சதா பராஹோர் மம வேதாந்த விதோ ஜனா -என்று
விஷ்வக் சேன சம்ஹிதையிலே தானே அருளிச் செய்தான் இ றே-

————————————

சூர்ணிகை -183-
ஆதி முதன்மை- அம் அழகிய- சோதி -மூன்று விசேஷணங்கள் -தீபத்தில் இருந்து கொளுத்திய தீ வெட்டி போலே -த்ருஷ்டாந்தம் -சர்வான் தேவான் நமஸ்யந்தி பெருமாள் நன்மைக்கு கோயில்களுக்கு சென்று அயோத்யா மக்கள் –

இனி இந்த அஞ்சு பிரகாரத்தையும் அடைவே உபபாதிக்கக் கோலி பிரதமம் பரத்வத்தை
உபபாதிக்கிறார் –

அதில்
பரத்வமாவது
அகால கால்யமான
நலமந்த மில்லதோர் நாட்டிலே
நித்ய முக்தர்க்கு
போக்யனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் இருப்பு –

அதாவது
அவ்வைந்திலும் வைத்துக் கொண்டு பரத்வம் ஆவது
நாகால சததரவை ப்ரபு -என்றும்
கலா முஹூர்த்ததாதி மாயச்ச கால ந யத விபூதே பரிணாம ஹேது -என்றும்–ச கண்டம் -பிரித்து -அக்கண்டம்- -பிரளயம் உணர்த்த -இரண்டு வகையான காலம்
யாவை நஜாது பரிணாம பதாஸ்பதம் சா காலாதிகா தவ பரா மஹதீ விபூதி -என்றும்–காலம் அதிக்ரமணம் தாண்டி இருக்கும் –
யத காலாத அபிசேளிமமம–ஸ்ரீ குண ரத்னா கோசம் -என்றும் சொல்லுகிறபடியே–காலத்தால் பக்குவப்படாத தேசம் –
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையாலே
காலகாலயம் அன்றிக்கே இருப்பதாய்
நலமந்த மில்லதோர் நாடு -என்றும்
ஆனந்தம் அளவிறந்து அத்விதீயமாய் இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
யத்ர பூர்வே ஸாத்யாச சந்திதேவா -என்றும்–பிரதம பிராப்யம் -வந்தவர் எதிர் கொள்ள -அடியவர்கள் தானே
யத்ராஷய பிரதமஜா யே புராணா -என்றும்-பிரதம ஜா -அநாதி சித்தர் என்றவாறு -புரா அபி நவ புராணம் -அன்று அன்று புதிதாக -பழமையாக இருந்தும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய அசங்குசித ஜ்ஞானராய் இருந்துள்ள
அநந்த கருட விஷ்வக்சேனர்திகளான நித்ய சூரிகளுக்கும்
சூர்ய கோடி ப்ரதீகாச பூர்ணே நதவயுத சந்நிபா யஸ்மின் பதே விரஜாந்தே முக்தாஸ சம்சார பந்ததை -என்கிறபடியே
நிவ்ருத்த சம்சாரராய்
அசங்குசித ஜ்ஞானரான முக்தருக்கும்–160000-பூர்ண சந்த்ர பிரகாசம் கொண்ட முத்தர்கள் –
அனுபவ விஷய பூதனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு -என்கை –
வைகுண்டேது பரே லோகே நித்யதவேன வ்யவஸ்திதம்
பச்யந்திச சதா தேவம் நேதரைர் ஜ்ஞாநேன வமரா -என்னக் கடவது இ றே-கண்களாலும் ஞானத்தாலும் பார்க்கிறார்கள் –

————————————————

சூர்ணிகை -184-

அநந்தரம் வ்யூஹத்தை உப பாதிக்கிறார் -123-தொடக்கி -24-திருநாமங்கள் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில்

வ்யூஹமாவது
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார அர்த்தமாகவும்
சம்சாரி சம்ரஷண அர்த்தமாகவும்
உபாசாகர் அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண
பிரத்யும்ன
அநிருத்த
ரூபேண
நிற்கும் நிலை –

சம்ஹாரம் -ஸ்ருஷ்ட்டி –ரக்ஷணம் / சங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்தன -/ஆத்மா சரீர சம்பந்தம் -ஸ்திப்பிக்கை வாழ வைக்கை- பிரார்த்திக்காமல்
வ்யூஹ வாஸூ தேவன் –பூ லோக வைகுண்டம் வ்யூஹ வாஸூ தேவன் பெரிய பெருமாள் –வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் கோயிலிலே –
பாஞ்சராத்ரம் வ்யூஹம் தொடர்பு -பூ லோக வைகுண்டம் திவ்ய தேசம் –
சம் ரக்ஷணம் -அர்த்தம் -தனியாக –அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுக்க -திரௌபதி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்-பிரார்த்தித்து பெறுவது –
கேசவாதி துவாதச திரு நாமங்களை இந்த நால்வருக்கும் -பாஞ்ச ராத்ரம் இவற்றை விவரிக்கும் – -நான்கு கைகளிலும் ஒரே திவ்ய ஆயுதம் -வரணங்கள் வேறே –
துவாதச பிராட்டி திரு நாமங்களை உண்டே –

அதாவது -வ்யூஹத்துக்கு விநியோகம் லீலா விபூதியில் ஆகையாலே
இவ் விபூதியினுடைய ஸ்ருஷ்டி என்ன ஸ்திதி என்ன சம்ஹாரம் என்ன
இவற்றை நிர்வஹிக்கைக்காகவும்
புபுஷூக்களான சம்சாரிகளை அநிஷ்ட நிவ்ருத்யாதிகளை
பண்ணி ரஷிக்கைக்காகவும்
முமுஷூக்களாய் உபாசிக்குமவர்களுக்கு சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக
தன்னை வந்து பிராபிக்கைக்கு உடலான அனுக்ரஹத்தை பண்ணுகைக்கு உடலாகைக்காகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்துக்களாய்க் கொண்டு
நிற்கும் நிலை வ்யூஹம் ஆவது -என்கை –
இதில் இன்ன வியூஹத்தாலே இன்னது செய்யும் என்னும் இடம் மேல் உப பாதனத்திலே கண்டு கொள்வது –
சதுர்விதச ச பகவான் முமுஷூணாம் ஹிதாயா அன்யே ஷாம் அபி லோகாநாம் ஸ்ருஷ்டி ஸ்தித்ய ந்த சித்தயே -என்றும்
ஆன நதயாத தவ சேனா நே யயூஹா ஆதயோ மயே ரித
அநாதி கர்ம வச்யா நாம சம்சாரே பததாமத
என்று தொடங்கி
உபாசகா நுக்ரஹார்த்தம் ஜகதோ ரஷணாய ச -என்றும்-முமுஷுக்கும் புகுஷுக்கும் என்றவாறு
ஆவி ராசீத பகவத பஞ்சாயுத பரி ஷக்ருதருக்மாபச சோயமே மலச
சர்வ சாஸ்த்ரேஷூ சப்தித சோயம் பிரத்யும்ன நாம நாபூத
ததோக நாதாவபுர்த்தர
சோயாம சங்கர்ஷணா ககயோபூத ததேகா ந்த வபுர்தர இந்திர நீல பிரதீகாச
எஸ சாஸ்த்ரேஷூ சப்தித ததோ நாம நா அநிர்த்ததோயம் ஸ்வயமேவ வைபவ நமுனே ததேகா ந்த வபுர்யுகதச ததா தவிககந ப்ரப-என்றும்
ருக்ம ஸ்வர்ணம் போலே காந்தி -படைத்து நிர்மலம் -பர வாஸூ தேவன் இடம் நால்வரும் ஆவிர்பவித்து -பிரத்யும்னன் –
அவர் சங்கர்ஷணன் ஆனார் -அவர் இந்திர நீல பிரகாசம் கொண்டு
-அவர் அநிருத்தன் ஆனார்-
பக வத் சாஸ்த்ரத்திலே ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமத்தில் –ஸ்ருஷ்டியாதிகளும்
சம்சாரி சம் ரஷணமும்
உபாசக அனுக்ரஹமும் ஆகிற வ்யூஹ கிருத்யங்களும்
சங்கர்ஷணாதி வுயூஹங்களும் -சொல்லப் பட்டது இ றே –
சதுர்விதச ச பகவான் என்கிற இடத்தில்
சதுர்விதமாகச் சொல்லிற்று வாஸூ தேவரையும் கூட்டுகையாலே –

——————————————————————-

சூர்ணிகை -185-

இந்த பர வ்யூஹங்களுக்கு தன்னில் விசேஷம் ஏது என்ன
அருளிச் செய்கிறார் –

பரத்வத்தில்
ஜ்ஞாநாதிகள் ஆறும்
பூரணமாய் இருக்கும்
வ்யூஹத்தில் ‘
இவ்விரண்டு குணம்
ப்ரகடமாய் இருக்கும் -ப்ரா

அதாவது
சம்பூர்ண ஷட்குணச தேஷு வா ஸூ தேவோ ஜகத்பதி -என்றும்
பூர்ண சமிதி ஷாட்குண்யோ நிச தரங்கா ரண வோபம் -என்றும்-
அலை இல்லா கடல் போலே பூரணமாய் –
ஷணணாம் யுகபது நமேஷாத குணா நாம ஸ்வ ப்ரசோதிதாத
அநந்த ஏவ பகவான் வா ஸூ தேவச சனாதன -என்றும் சொல்லுகிறபடியே
வாஸூ தேவ ரூபமான பரத்வத்திலே
ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸூ க்கள் ஆகிற ஆறு குணங்களும் பரிபூரணமாய் இருக்கும்-
சங்கர்ஷணாதி ரூபமான வ்யூஹத்தில் -தத்ர தத்ர அவசிஷ்டமயத குணா நாம த்வியுகம் முனே அனுவிருத்தம் பஜதயேவ தத்ர தத்ர யதாத்தம் -என்கிறபடியே
அவிசிஷ்டமான குண சதுஷ்ட்யமும் தத்ர தத்ர அனுவிருத்தமாய் நிற்கச் செய்தேயும்
அதிகரித்த கார்யங்களுக்கு அனுகுணமான இவ்விரண்டு குணமே பிரகாசமாய் இருக்கும் என்கை-
சக்தி தேஜஸ் ரஷிக்க/ ஸ்ருஷ்டிக்க ஐஸ்வர்யம் வீர்யம் –படைக்கும் பொழுது விகாரம் அடையாமல் தான் இருக்க /
-சம்ஹரிக்க ஞானம் பலம் என்றவாறு /இவை பிரகாசமாக இருக்கும் மற்றவைகளும் உண்டு
குணை ஷட்பிச தவேதை பிரதமதா மூர்த்தி ச தவ பவௌ
ததஸ திசரச தேஷாம்
த்ரியுக யுகளை ஹி த்ரிபிறப்பு வ்யவஸ்ததா யா சைஷா
ந்து வரத சாவிஷ க்ருதி வசாத பவான சர்வத்ரைவ தவ கணித மகா மங்கள குணா -என்று
த்ரியுக -மூன்று இரட்டைகள் -/மூன்றான இரண்டுகளால் -பிரகாசித்தன -/ எப்பொழுதும் எண்ண முடியாத மங்கள குணங்கள் யுடையவர் அன்றோ -தேவப் பெருமாளே -என்கிறார்
இது தன்னை ஆழ்வான் அருளிச் செய்தார் இ றே-

———————————————————-

சூர்ணிகை -186-

இனி இந்த சர்கர்ஷணாதிகள் மூவர் பக்கலிலும் பிரகாசிக்கிற குண விசேஷங்களையும்
இவர்கள் தான் இன்ன கிருத்யங்களுக்கு கடவராய் இருப்பார்கள் என்னுமத்தையும்
தனித் தனியே அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
பிரதமத்தில் சங்கர்ஷணர் படியை அருளிச் செய்கிறார் –

அதில் சங்கர்ஷணர்
ஜ்ஞான பலங்கள் இரண்டோடும் கூடி
ஜீவ தத்வத்தை அதிஷ்டித்து
அத்தை பிரக்ருதியில் நின்றும் விவேகித்து
பிரத்யும்ன அவஸ்தையையும் பஜிதது–இது ஒரு செயல் -மேலும் –
சாஸ்திர பிரவர்த்தனத்தையும்
ஜகத் சம்ஹாரத்தையும்
பண்ணக் கடவராய் இருப்பார் –

அதாவது வ்யூஹ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு சங்கர்ஷணர்
தத்ர ஞான பல த்வந்தவாத் ரூபம் சங்கர்ஷணம் ஹரே -என்றும்
பகவான் அச்யுதோபீததம ஷட் குணேந சமேதித பல ஞாநௌ குநௌ தஸ்ய சப்புடௌ கார்ய வாசன் முனே -என்றும் சொல்லுகிறபடியே
சர்வகுணங்களும் உண்டாய் இருக்கச் செய்தேயும் கார்ய அனுகுணமாக
ஜ்ஞான பலங்கள் இரண்டும் கூடி
சோயம் சமஸ்த ஜீவானாம் அதிஷ்டாத்ருதயச ச்ததித-என்றும்
சங்கர்ஷண ச து தேவாசோ ஜகத் ஸ்ருஷ்டும் நாச தத ஜீவ தத்வம் அதிஷ்டாய பரக்ருதேச்து விவிசய தன -என்றும்
சொல்லுகிறபடியே
பிரக்ருதிக்கு உள்ளே மயங்கிக் கிடக்கிற ஜீவ தத்தவத்தை அதிஷ்டித்து-ஆதாரமாக இருந்து -அனுபிரவேசித்து என்றுமாம் –
அந்த அதிஷ்டான விசேஷத்தாலே இத்தை பிரக்ருதியில் நின்றும்
நாம ரூப விசேஷம் தோற்றும்படி விவேகித்து பிரித்து -ஸ்ருஷ்டிக்க முதல் வேலை இவர் பார்த்து தயார் நிலையில் வைப்பார் என்றவாறு
விவேகாந்தரம் தேவ பிரத்யும்ன தவ மவாப ச -என்றும்-
சோயம பிரத்யுமன நாம பூத ததேகாந்தவ புத்திர -என்றும்
சொல்லுகிறபடியே
பிரத்யும்ன அவஸ்தையும் பஜிதது –
சாஸ்திர பிரவர்த்த நஞ்சாபி சம்ஹாராஞ்சைவ தேஹி நாம -என்றும்
பலேன ஹாதீ தம ச குணென நிகிலம் முனே ஜ்ஞாநேன தநுதே சாஸ்திரம்
சர்வ சித்தாந்த கோசரம் வேத சாஸ்திரம் இதி க்யாதம் பாஞ்சராத்ரம் விசேஷத –
என்றும் சொல்லுகிறபடியே வேதாதி சாஸ்திர பிரவர்த்தனத்தையும்-ஆதி -பாஞ்சராத்ர ஆகமம் –
ஜகத் சம்ஹாரத்தையும் பண்ணக் கடவராய் இருப்பர் -என்கை –

ஆத்ம தத்வம் அதிஷ்டானம்- சாஸ்த்ர பிரவர்தனம் /மனஸ் தத்வம் அதிஷ்டானம் -தர்ம பிரவர்தனம்/
தத்வ ஞானம் ப்ரவர்த்தனம் – பல பிரதத்வம் மூன்றும் மூவரும் செய்வார் -என்றபடி –

———————————————–

சூர்ணிகை -187-

அநந்தரம் பிரத்யும்னர் படியை அருளிச் செய்கிறார் –

பிரத்யும்னர்
ஐஸ்வர்ய வீர்யங்கள் இரண்டோடும் கூடி
மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து
தர்ம யுபதேசத்தையும்
மனு சதுஷ்டயம் தொடக்கமான
சுத்த வர்க்க சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர்-

அதாவது -ஐஸ்வர்ய வீர்ய சம்போதத ரூபம் பிரத்யும்னம் உச்யதே -என்றும்
பூர்ண ஷடகுண ஏவாயம் அச்யுதோபி மகாமுனே குணா ஐஸ்வர்ய வீர்யா க்க யௌ ச்புடௌ தஸ்ய விசேஷத -என்றும்
சொல்லுகிறபடியே சகல குணங்களும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
கார்ய அனுகுணமான விசேஷண ஸ்ப்புடங்களாய் இருக்கிற ஐஸ்வர்ய வீர்யங்களோடே கூடி
மன சோயம் அதிஷ்டாத மநோ மய இதீரத -என்கிறபடியே
ஜ்ஞான பிரசரண த்வாரமான மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து –
ஐஸ்வர் யேண குணே நாசௌ ஸ்ருஜதே தச சரா சரம வீர்யேண சர்வ தர்மாணி பிரவர்த்தயதி சர்வச –
என்கிறபடியே சாஸ்தராத்த அனுஷ்டான ரூபமான தர்மங்களின் யுடைய உபதேசத்தையும்–வேத போதித இஷ்ட சாதனத்தவமே தர்மம் –
மநு நாம சாசமக்ர்தோ முக பாஹூரு பாத்த சதுராணாம் ப்ரஹ்மணா தீ நாம
சாச்த்வாரம் ஜகத் பத்தி த்விஜ யுகமம் ஷத்ர யுகமம் விஷய யுகமம் ததைவ ச
மிதுநஞ்ச சதுர்தச்ய ஏத நமனு சதுஷ்டயம் மனுப்யோ மான வசதம்
ஸ்திரீ புமமிது ந்தோ பவேதே ஏகைகர்ம வர்ண பேதேன தேபயோ
மாநவ மாநவ சஹசா சமபபுபூ யுச்ச ஸ்திரீ புமமிது நதச ததா
மனுஷ்யாச்ச ததச தேபா பராதுஷயா வீதமதசரா ஏதே ஹி சுத்த சத்வ சதா தேஹா நதம நா நயயாஜின நிராசீ
கர்ம கரணான மாமேவ பராப நுவனதிதே த்ரயந்தேஷூ
ச நிஷணதா த்வாத் சாதயா தம சீததகா வ்யூஹ நிவ்ருத்திம்
சத்தம் குர்வதே தே ஜகத்பதே த்ருதீ யேன ஜகத்தாதர நிர்மிதா மனசா ஸ்வயம்
குண பிரதானயோகே ச நிஷ்டிதா புருஷர்ஷப இத்யேஷசுததசர்கோயம் ச னேச தவ கீர்த்தித -என்று
விஷ்வக் சேன சமிதையில் சொல்லுகிற படியே-கண நாதாயா என்று விஷ்வக்சேனரை -சொன்னவாறு –
முக பாஹூரு பாதஜராய்-முகம் கை பாதம் தொடை
மிதுனமாய் இருக்கிற ப்ரஹ்மானாதி மனு சதுஷ்டயம் தொடக்கமாக-ப்ராஹ்மண மிதுனம் ஆண் பெண் –
இந்த மனுக்கள் பக்கல் நின்றும் மிதுனங்களாய்க் கொண்டு தனித் தனியே
வர்ண பேதேன யுண்டான மாநவ சதமும்
அப்படியே ஸ்திரீ பும மிதுனங்களாய்க் கொண்டு
அந்த மாநவர் பக்கலிலே நின்றும் யுண்டான மாநவரும்
அவர்கள் பக்கலிலே நின்றும் யுண்டான மனுஷ்யருமாயக் கொண்டு
நிர்மதஸ்ரராய்-பகைமை உணர்வு இல்லாமல் – சுத்த சத்வச்தராய் தேஹானத மன யயாஜிகள் அன்றிக்கே
பல அபி ச நதி ரஹீதராய் கொண்டு
பகவத் சமாராதன ரூபமான கர்மத்தை அனுஷ்டியா நிற்பாராய் –
வேதாந்ததிலே நிஷனாதராய்
த்வாதச அஷர முகேன-ஓம் நமோ பகவத் வாசுதேவாயா -முகேன அத்யாத்ம சிந்தராய்க் கொண்டு
சர்வேஸ்வரனுடைய வ்யூஹ அனு வ்ருத்தியை எப்போதும் பண்ணா நின்று கொண்டு
பகவத் பிராப்தியைப் பண்ணா நிற்கும் சுத்த வர்க்கத்தின் யுடைய சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர் -என்கை-

ப்ரவர்த்தன் நாபி கமலத்தில் இருந்து நான்முகன் என்றவாறு =

——————————

சூர்ணிகை -188

அநந்தரம் அநிருத்தர் படியை அருளிச் செய்கிறார் –

அநிருத்தர்
சக்தி தேஜஸ் ஸூக்கள் இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்
தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
கால ஸ்ருஷடிக்கும்
மிஸ்ர ஸ்ருஷடிக்கும்
கடவராய் இருப்பர்-

அதாவது -அநிருத்தர் சக்தி தேஜஸ் சமுத காஷாத அனிருத்த தநூஹரே -என்றும்
புருஷோபி மகாதயஷா பூர்ண ஷட் குண உச்யதே சக்தி தேஜௌ குனௌ
தஸ்ய ஸ்புடா கார்யவசனா முனே -என்றும்
சொல்லுகிறபடியே சர்வ குணங்களும் யுண்டாய் இருக்கச் செய்தேயும் கார்ய அனுகுணமான
சக்தி தேஜஸ் ஸூ க்களோடே கூடி –
சக்த்யா ஜகதிதம் சர்வ மனனதாண்டம் நிரந்தரம் பிப்ரததி பாதி ச ஹரிர
மணிசாநுரி வாணி கம தேஜஸா நிகிலம் தத்வம் ஜ்ஞாபய தயா தமனோ முனே -என்கிறபடியே ஜகத் ரஷணத்துக்கும்
உஜ்ஜீவன ஹேதுவான தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
த்ருடி முதலாக த்விபிரார்தன பர்யந்தமாக உண்டான கால ஸ்ருஷடிக்கும்
துரீ யோயம் ஜகந்நாதோ ப்ரஹ்மணா மசருஜத புன முக பஹூரு பஜ ஜாதோ ப்ரஹ்மண பரமேஷ்டின
சதுர்விதோ பூத சர்வாச தேன ஸ்ருஷ்டச ஸ்வயம்புவா ப்ரஹ்மணாதயாஸ்
ததா வரணா ராஜா பிரசுர்யதோ பவன
தராய் மார்சேஷூ நிஷணாத பலவாதே ரமந்திதே தேவா தீ னேவ மன வானா ந ச மாம் மே நிரே ச்வத
தம ப்ராயாச தவிமே கேசி தமமே நிதானம் பிரகுர்வதே
ஆராத யஞ்ச நியந்தாரம் ந ஜானனதே பரஸ்பரம்
சல லாபம் குர்வதோ வயகரவேதா வா தேஷு நிஷ்ட்டிதா
மாம் ஜ ஜானநதி மோகன தே ஹி சம்சார வாதமனி இத்யேஷ மிஸ்ர சஸ்து கணேச தவ கீர்த்தித –
என்று விஷ்வக் சேனை சம்ஹிதையில் சொல்லுகிறபடி
ப்ரஹ்மாவினுடைய முக பாஹூ ருபாதஜராய்
ப்ரஹ்மணாதி வர்ணராய்
ரஜ பிரசுரராய் பூர்வபாமரர் நிஷதணராய் ஷலவாசதிலே ரம்யா நிற்பரே
ஈஸ்வரனை ஒழிய தேவாதிகளை ஆராதயாரக நினைத்து
அதிலே சிலர் தம பிரசுரராய்
பகவன் நிந்தனையைப் பண்ணி ஆராதயனாய நியந்தாவாய் இருக்கிற அவனை அறியாதே
வயகரமான வேத வாக்யங்களிலே மனசை வைத்து ஒருவர்க்கு ஒருவர் சல்லாபித்துக் கொண்டு
ஆகையாலே பகவத் ஜ்ஞான பக்திகளிலே அந்வயம் இன்றிக்கே
ஸ்வ ஜாதிகளிலே ரம்யா நின்று கொண்டு
ஸ்வ கர்ம பல அவசானத்திலே அதபதித்து கர்ம விஷயமான மனசை யுடையவராய்
ஜரா மரணங்களை அடைந்து சம்சார மார்க்க கர்மிகளாய்
திரியுமவர்கள் ஆகிற மிஸ்ர வர்க்கத்தின் யுடைய சிருஷ்டியும் பண்ணக் கடவராய் இருப்பர் என்கை-

அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனர்க்கு அந்தர்யாமியாய் நின்று யுண்டாக்கும் -என்று
சமஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் அத்வாரமாகவும்
வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் சத்வாரமாகவும் –
இவர் தாமே கீழே அருளிச் செய்கையாலும்
இவ்வண்டத்திலே பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவுக்கும்-முக்தாத்ம சமஷ்டியோ நித்யாத்ம சமஷ்டியோ இல்லையே –
இதுக்கு கீழே ஸ்வ சங்கல்ப்பத்தாலே எம்பெருமான் தானே ஸ்ருஷ்டித்து அருளும்
இதுக்கு மேலே ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து அருளும்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கையாலும்
வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் சத்வாரமாகவே கொள்ள வேணும் ஆகையால்
பிரத்யும்ன கிருத்யமாகச் சொன்ன சுத்த ஆத்ம ஸ்ருஷ்டி அத்வாரகம்
அநிருத்தன் கிருத்யமாகச் சொன்ன மிஸ்ர ஆத்ம ஸ்ருஷ்டி சத்வாரகம் என்ன ஒண்ணாது
ஆகையால் சுத்தாத்மா ஸ்ருஷ்டியும் மிஸ்ராத்மா ஸ்ருஷ்டியும்
சத்வார ஸ்ருஷ்டி தன்னிலே சேதனர் உடைய கர்ம விசேஷ பிரயுக்தமான சங்கல்ப விசேஷத்தாலே யாகக் கடவது
இந்த சுத்தவாத்மா ஸ்ருஷ்டியும் மிஸ்ரவாத்மா ஸ்ருஷ்டியும் எம்பெருமான் தானே அருளிச் செய்ய கேட்ட அநந்தரம்
பகவன் தேவ தேவேச சர்வஞ்க்ன பரமேஸ்வர
கிமேஷ பவிதா ஸ்ருஷ்டோ மிஸ்ரசாமோ ஜகத் பத்தி
சுத்த ஸ்ருஷ்டிம் விஹாயை ஷாம நிர்தய புருஷோத்தமா –
என்று சேனை முதலியார் கேட்க-
தயையே இல்லாமல் சுத்த ஸ்ருஷ்ட்டியை விட்டு மிஸ்ரா ஸ்ருஷ்ட்டியை எதற்க்காக பண்ணினீர் -தேவதேவ -பரமேஸ்வர சர்வஞ்ஞனே -என்று -கொண்டாடி கேட்டார் விஷ்வக் சேனர்
விஹாய சுத்த ஸ்ரீசஞ்ச மிஸ்ரா சாசய காரணம் ஸ்ருணுஷ்வ
கண நாத
தவம் தயாலு நிர்தயோ ந ச சர்வஞ்ஞோஹம் ந சந்தேஹச
ததாபி ச சருஜா மயஹம்
அநாதய விதயா சமமுஷ்ட சேமுஷீ காண நாரா நிஹா
வீஜயாஜா ஜ்ஞான பிரசங்கம் து நிஷித்த கரணம் ததா விஹிதா கரணஞ்சாபி வீஷயை ஷாம
பராதகான மிசராத்மா கரோம யேவ ப்ரஹ்மனா பரமேஷ்டினா
ஏவம் ஸூ கருத லேசேன சுத்த சத்வாத்மா கரோமி ச
மனுபர முகசாசோ யச சுத்த சாசோ மயேரித
சுத்த சத்வ மயாசே சர்வே மதபக்தி நிரதாச சதா மமார்ச்ச்சனா ஜீதேன தரியா
பக்த்யா பரமயா சைவ பரபத்த்யாவா மகா முனே பிராப்யம் வைகுண்டம்
ஆசாதய ந நிவர்த்தந்தி தேவயயா ஏவம் சர்வேஷூ குரவத ஸூ மான வேஷூ முமுஷூ ஷூ
ஸ்ருஷடி ஷயோ மகா நாசித நாரகீ பூச தருண வருதா
இதி ஜ்ஞாத்வா மிஸ்ராத்மா கரியதே லீலயா மயா –
என்று பகவான் தானே அருளிச் செய்கையாலே —
விளையாட்டுக்காக -செய்தென் -நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும்–லோக வைத்து லீலா கைவல்யம் -கண நாதா -என்று விழித்து -சேனைக்கு முதலியார் அன்றோ –
நான் தயாளு தான் -நிர்த்தயோ இல்லை-சர்வஞ்ஞன் தான் சங்கை இல்லை – -ஆனாலும் மிஸ்ரா ஸ்ருஷ்ட்டி பண்ணுவது
அநாதி காலம் அவித்யையால் மூடப்பட்ட ஞானம் – அஞ்ஞானம் உடையவர்கள் -நிஷித்த கரணம் -விஹித அகரணமும் – கடாக்ஷித்து —
பரமேஷ்ட்டி பிரம்மன் முகமாக -நடுவில் வைத்து -ஸூ ஹ்ருதம் லேஸம்–கதாசித் -சுத்த வர்க்க ஸ்ருஷ்டியும் பண்ணுகிறேன் –
இங்கு முக்குணம் இல்லாதவர் என்பது இல்லை -அனைவரும் முக்குண சேர்க்கையால் தானே
மனுக்கள் ஸ்ருஷ்ட்டி சுத்த வர்க்க ஸ்ருஷ்ட்டி -ரஜஸ் தமஸ் -இல்லாமல் -கிட்ட தட்ட சுத்த சத்வம் -பிரகிருதி சம்பந்தம் இருக்கும் வரை முக்குண சேர்க்கை உண்டே —
அர்ச்சன பரர்கள்–பகவத் தியானமே யாத்திரை -ஜிதேந்த்ரியர்கள் -பரம பக்திமான்கள் பிரபன்னர்கள் -ஸ்ரீ வைகுண்டம் அடைந்து திரும்பாமல் உள்ளார்கள்
கர்ம ஞானங்கள் நேராக மோக்ஷம் கொடுக்காதே –
முமுஷுவாக சர்வரும் ஆனால் -ஸ்ருஷ்டிக்க வேண்டிய தேவையே இருக்காதே -நரக பூமி புல் எழுந்து ஒழியும் –
முத்கலன்-நமனும் பேச –நரகில் நின்றார்கள் கேட்க -உபதேசமும் இல்லை -இங்கு -நரகமே ஸ்வர்க்கமானதே -நாமங்கள் யுடைய நம்பி
-லீலையாக மிஸ்ர ஸ்ருஷ்ட்டி செய்யப்பட்டது என்றாரே -விபீஷணன் பிரகலாதன் மிஸ்ர ஸ்ருஷ்டியால் வந்தாலும் சுத்த வர்க்கம் ஆனார்கள்

————————————————————-

சூர்ணிகை -189-

ஆக வ்யூஹத்தின் படியை உபபாதித்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம்
விபவத்தின் படியை விஸ்தரேண உபபாதிக்கிறார் மேல் –

விபவம்
அனந்தமாய்
கௌண
முக்ய
பேதத்தாலே
பேதித்து இருக்கும் –

பிறப்பில் பல் பிறவி என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் -விசேஷனே பவம் இதி விபவம் –

அதாவது
விபவோபி ததா அனந்தோ தவிதைவ பரிகீரதயதே கௌண முக்கய விபாகேன சாஸ்த்ரேஷூ ச ஹரே முனே -என்றும்
ப்ரா துர்ப்பாவோ தவிதா பரோகதோ கௌண முக்கய விபேததே-என்றும்-ப்ராதுர் பாவம் -அவதாரம் —
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -இறங்குகிறார் -அவதாரணம் -விசேஷண பவதி நமக்காக உருவாக்கிக் கொள்கிறார் –
சொல்லுகிறபடியே-இதுவும் விஷ்வக் சேனா சம்ஹிதை பிரமாணம் -அஜாயமானோ பஹுதா விஜாயதே –
விபவமானது பரி கணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அனந்தமாய்
கௌண முக்கியம் ஆகிற பேதத்தால் இரண்டு வகையாகப் பிரிந்து இருக்கும் -என்கை
விபவம் ஆவது -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு ஆவிர்பவிக்கை–ஆழ்வார்கள் -பிறந்து வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்து /
இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு சாஷாத் அவதாரத்துக்குத் தான் பொருந்தும்
இதில் கௌணம் என்றது அவரம் என்றபடி–வர உயர்ந்தது அவர தாழ்ந்தது
முக்கியம் என்றது ஸ்ரேஷ்டம் என்றபடி
கௌணம் ஆவது ஆவேச அவதாரம்– -ஆத்மாவை அதிஷ்டானம் பண்ணிக் கொண்டு என்றபடி
முக்யமாவது -சாஷாத் அவதாரம் -ஆவேசம் தான் -ஸ்வரூப ஆவேசம் என்றும் சக்த்யா ஆவேசம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அதில் ஸ்வரூப ஆவேசம் ஆவது ஸ்வமான ரூபத்தாலே ஆவேசிக்கை–ஸ்வம் ரூபம் ஸ்வரூபம் –தானான தன்மை என்றபடி -ரூபம் இல்லை – /
ப்ரஹ்மத்வமும் குணம் -இதுவே இன்றியமையாது குணம் தன்மை -/
ஆதாவது பராசுராமாதி களான சேதனர் உடைய சரிரங்களிலே
தன்னுடைய அசாதாரண விக்ரஹத்தோடே ஆவேசித்து நிற்கை–
சக்த்யா ஆவேசமாவது -கார்ய காலத்திலே விதி சிவாதிகளான சேதனர் பக்கலிலே
சக்தி மாத்ரத்திலே ஸ்புரித்து நிற்கை –ஸ்வமான ரூபத்தாலே இல்லை –அந்த நிமிஷத்து தோன்றி -என்பதே ஸ்புரித்து –
இதனால் தான் இந்திரன் கோவர்த்தனம் பாரிஜாதம் -இத்யாதிகளில் மீண்டும் மீண்டும் அபசாரம் பட்டான் –
கார்த்த வீர்யார்ஜுனன் -சக்தி ஆவேசம் / பரசுராமர் ஸ்வரூப ஆவேசம் -/பெருமாள் முக்கிய அவதாரம் -/
அங்கதப்பெருமாள் ராவணன் இடம் சொல்லி -கார்த்த வீர்யார்ஜுனன் பெருமை சொல்லி -/
பரசுராமன் பல ராமனை அவதாரத்தில் சேர்த்து இலக்குமனை சேர்க்க வில்லையே- பரசுராமன் கள்ளை குடித்தாராமே -ரோஷ ராமர் என்கிறோமே
இத்யாதி கேள்விகளுக்கு -இந்த ஆவேச விபவமே காரணம் –

————————————

சூர்ணிகை -190-

இனி முக்கிய விபத்தோடு கௌண விபவத்தோடு
சாம்ய
வைஷம்யங்களை
அருளிச் செய்கிறார் –

மனுஷ்யத்வம்
திர்யக்த்வம்
ஸ்த்தாவ்ரத்வம்–குட்டை மா மா மரம் தானான முக்கிய அவதாரம் –
போலே
கௌணத்வமும்
இச்சையாலே வந்தது
ஸ்வ ரூபேண அன்று -ஸ்வரூபேண ப்ரஹ்மத்வம் தானே -இவை இச்சையால்
சாஷாத் அவதாரம் -ஸ்வரூபேணாவும் இச்சையாலும்
கௌணத்வமும்-ஸ்வரூபேண இல்லை இச்சையால் மட்டுமே என்றவாறு

அதாவது
மதிச்சயா ஹி கௌண த்வம் மானுஷ்யம் இச்சேசயயா ஸூ க்ரதவஞ்ச மத்ச்யத்வம்
நாரசிம்ஹ தவமேவச யதாவா தண்ட கராணயே குப்ஜாமரத்வம் மச்சேயா
யதா வர்ஜி முகதவஞ்ச மம சங்கல்ப தோ பவத சேனா பதே
மமேச்சாதோ கௌ ண த்வம் ந ச கர்மணா–விஷ்வக் சேனா சம்ஹிதை – என்கிறபடியே
ராம கிருஷ்ணாத் வாதியான மனுஷ்யத்வம்
மத்ஸ்ய கூர்மத்வாதியான திர்யக்த்வம்–குதிரை முகத்தானும் நரஸிம்ஹமும் இதுவே
குப்ஜாமரத்வம் ஆகிற ஸ்தாவரத்வம்–தாண்ட காரண்யத்தில் இந்த அவதாரம் என்பர் –
ஆகிற இவை -இச்சையாலே ஆனால் போலே
ஆவேச ரூபமான கௌணத்வமும் இச்சையாலே வந்தது என்னும் ஆகாரம் ஒக்கும்
அப்ராக்ருதமாய் இருந்துள்ள ஸ்வ அசாதாரண விக்ரஹத்தோடே வந்தது அன்று என்கை –
உபாத்த வசனங்கள் இச்சையாலே வந்தது என்கிற மாத்ரத்தை சொல்லிற்றே ஆகிலும்
கௌணத்வம் ஆவது மனுஷ்யத்வாதிகள் போலே
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு
அவதரித்தது அல்லாமையாலே
ஸ்வரூபேண வந்தது அன்று என்னும் இடம் சித்தம் இ றே-

———————————-

சூர்ணிகை -191-

இன்னமும் உபாஸ்யத்வ அனுபாஸ்யத்வ கதன முகத்தாலும்
உபயத்துக்கும் யுண்டான விசேஷத்தை
தர்சிப்பிதாக திரு உள்ளம் பற்றி
பிரதம் முக்கிய விபவத்தின் உடைய உபாயஸ்த்வத்தை சஹேதுகமாக அருளிச் செய்கிறார்

அதில்
அப்ராக்ருத விக்ரஹங்களுமாய்
அஜஹத ஸ்வ பாவ விபங்களுமாய்
தீபாதுதபநந ப்ரதீபம் போலே
யிருக்கக் கடவதான
முக்ய பரா துர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூ க்களுக்கு
உபாஸ்யங்களாய் இருக்கும் –

போற்றும் புனிதன் ராமானுஜன் -உபாசித்தார் இல்லை -பூசித்தார் என்ற அர்த்தமே –

அதாவது
உபய விதமான விபவத்திலும் கொண்டு
ப்ராதுர்ப்பா வாஸ்து முக்யாய மதமசதவாத விசேஷத அஜஹத ஸ்வ பாவ விபவா திவ்ய அப்ராக்ருத விக்ரஹா
தீபாத தீபா இவோ தப நானா ஜகதோ ரஷணாய தே அர்ச்சயா
ஏவஹி சேநேச சம்ஸ்ருயூதத தரணாய முக்க்யா உபாசயாச
சேநேச அநாச்சையான இதரான் விது -என்கிறபடியே –
-குண பூர்த்தி உள்ள இடமே சரணம் -ஸுலப்யம் அர்ச்சையிலே பூர்ணம் -அமுக்கிய அவதாரங்களில் குண பூர்த்தி இருக்காதே –
ஆதி யஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தது ஆகையாலே
அப்ராக்ருத விக்ரஹகங்களுமாய்
அஜோபிசன் அவயவத்மா பூதானாம் ஈச்வரோபிசன் -என்கையாலே
விடாதே இருந்துள்ள
அவதாரம் சத்யம் -இச்சையால் சங்கல்பம் மூலம் அவதாரம் -திருமேனியை -அப்ராக்ருதம் -இயல்பான திவ்ய மங்கள விக்ரஹம்– ஸ்வாம் திஷ்டாயா -தரித்துக் கொண்டு —
அபி சன் அத்தோடு இருந்து கொண்டே –விடாமல் -பிறவாதவனாக இருந்தே பிறந்து பிறப்பிலி -கர்மத்தால் இல்லை ஸ்வ இச்சையால் /
அவயவத்மா- அழிவற்றவனாக இருந்து கொண்டே பிறக்கிறேன் -விநாசம் அடைந்தே தானே உத்பத்தி -அழிவில் ஆரம்பித்ததே ஸ்ருஷ்ட்டி -/
சங்கல்பம் முடிந்த பின்பு திரும்புவேன் -அகில ஹேயா ப்ரத்ய நீக்காதவம் சொல்லிற்று
ஈஸ்வரனாக இருந்து கொண்டே நியந்த்ருத்வம் -விடாமல் பிறக்கிறேன் -பிறப்பித்தவனுக்கு அடங்க வேண்டாமோ என்னில்
-மூன்றும் விடாமல் -ஏற்ற திருமேனி எடுத்துக் கொண்டு –
அஜத்வ அவ்யவத்வ சர்வேஸ்வரத்வ வாதியான-
ஸ்வ பாவ விபவங்களை யுடையவையுமாய்-
அத ஏவ தீபத்தில் நின்றும் உத்பன்னமான ப்ரதீபம்
ஸ்வ காரணமான தீபத்தின் யுடைய ஸ்வ பாவத்தை
உடையதாய் இருக்குமா போலே-பரம ஸ்பஷ்டம் -ஜடாயுவை மோக்ஷத்துக்கு அனுப்பியதில் பீரிட்டதே பரத்வம் –
ஸ்வ காரண துல்ய ஸ்வ பாவமாய் இருக்கிற முக்கய ப்ரதுர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூக்களுக்கு உபாசயங்களாய் இருக்கும் -என்கை —

——————————————–

சூர்ணிகை -192-

அநந்தரம்
கௌண விபவத்தின் உடைய அனுபாசயத்வத்தை
சஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –

விதி சிவ பாவக -அக்னி
வியாச
ஜாமதக்ன
யார்ஜூன
விததே சாதிகள் ஆகிற–குபேரன் போன்றார்
கௌண ப்ரா துர்ப்பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுக்த ஜீவர்களை அதிஷ்டித்து
நிற்கையாலே
முமுஷூக்களுக்கு
அனுபாஸ்யங்கள் –

அதாவது
அநர்ச்சயா நபி வஷயாமி பரா துர்ப்பவாந யதாக்ரமம் சதுர்முகச து பகவான் ஸ்ருஷ்டிகார்யே நியோஜித
சங்க ராக்க்யோ மகாருதரச சம்ஹாரே விநியோஜித
மோஹனாககயச ததா புத்தோ வியாச ச சைவ மகா த்ருஷி வேதா நாம வ்யசனே தத்ர தேவேன விநியோஜித
அர்ஜூனோ தன்வி நாம ஸ்ரேஷ்ட்டோ ஜாமதக்ன்யோ மகா நருஷி
வ ஸூ நாம பாவ கச்சாபி வித்தே ச ச ச ததைவ ச ஏவ மாதாயாச து சே நேச
ப்ரா துர்ப்பாவைர திஷ்டி நா ஜீவாத்மா நச சர்வே நோபா சதிர
வைஷ்ணவி ஹி சா ஆவிஷ்ட மாதரச தே சர்வே
கார்யார்த்த மமிததயுதே அநாசசயார்ச சர்வே
யேவைதே விருத்த வான் மகாமதே அஹங்கருதி யூதாச சேமே
ஜீவமிஸ்ரா ஹைய திஷ்டிதா -என்கிறபடியே

ஆராதிக்க தக்கவர்கள் அல்ல -பூஜ்யனாய் -ஸ்ருஷ்ட்டி செய்ய நியமிக்கப்பட்ட சதுர்முகன் -போல்வார்
ஸ்ருஷடி கர்த்தாவான ப்ரஹ்மாவும்
சம்ஹார கர்த்தாக்களான சிவ பாவகாக்களும்–சம் ஸூ கம் கொடுக்கும் சங்கரன் – ருத்ரன் ரோதானாதி பிறந்த உடன் அழுது ஓடி –/ அக்னி போல்வாரும் –
மோகம் பண்ணும் புத்தர் போல்வார் – -கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மான் –
வேதங்களை வ்யசித்த வ்யாசனும்-பிரித்து கொடுத்த வேத வியாசர்
கார்த்த வீர்யார்ஜுனன் -வில்லாளி
துஷ்ட ஷத்ரிய நிரசனம் பண்ணின ஜமதக்னி புத்ரனான பரசுராமனும்
பாவகன் அஷ்ட வசுக்களில் ஒருவன் -குபேரன்
அகார்யா சிந்தா சம மேவ பர துர்ப்பவம் சாபதர புரஸ்தாத் -என்கிறபடியே
சாபரதனாய்க் கொண்டு ஜகத்தை ரஷித்துக் கொண்டு போந்த
கார்த்த வீர்ய அர்ஜூனனும்
ஔ தார்யா பரதானனான வித தேசனும்-குபேரனும்
ஆதி சப்தத்தாலே
கரோடி கருதரான ககுஸ்த முசுகுந்த பரப்ருதி களுமாகிற
கௌண ப்ராதுர்ப் பாவங்கள் எல்லாம்
ஸ்வ தந்த்ர்யா ரூபமான அஹங்கார யுக்தரான ஜீவர்களை–ஸ்வாதந்த்ர யுக்தரான அஹங்காரம் -தேஹாத்ம அபிமானம் இல்லை இவர்களுக்கு –
அத்யந்த பாரதந்தர்யம் புரியாதவர்கள் -ஆத்ம ஞானம் கை வந்த ரிஷிகள் பர்வதம் போலே நம்மை ஒப்பிட்டால் –
ஸ்வ ஸ்வா தந்தர்ய அபிமானம் உண்டே இவர்களுக்கு -அத்தை அன்றோ இங்கு சொல்லிற்று
கார்யார்த்தமாக ஆவேச முகேன அதிஷ்டித்து நிற்கையாலே-
புபுஷூக்களாய் இருப்பார்க்கு ஒழிய
முமுஷூ க்களுக்கு உபாசயங்கள் அன்று -என்கை –
ஒவ் ஒருவருக்கும் ஒரு காரியத்துக்காக முன்பே சொல்லி அந்த காரியத்துக்காக ஆவேசம் -சரீரத்தில் ஜீவன் அஹங்காரம் இருக்கிறதே –
பூஜிக்கத்-உபாஸிக்கத் தக்கவர்கள் அல்லர்கள்
வியாச ஜாமதாகன யார்ஜூன -என்கிற இடத்தில்
அர்ஜூனன் என்கிறது பாண்டு புத்ரனான அர்ஜூனனையும் ஆக்கவுமாம்
அவனையும் ஆவேச அவதாரமாக இதிஹாசாதிகளில் சொல்லுகையாலே-நர நாராயணன் அவதாரமே கண்ணன் அர்ஜுனன் என்பர் –

இந்த கௌண பரா துர்ப்பாவ அனுபாயச்த்வம் தான்
ப்ரஹ்ம ருத்ர ரார்ஜூன வியாச சஹசர கர பார்க்கவா
ககுத சதா தரேயா கபில புத்தாதய யே சஹச்ரச
சகதயா வேசாவதாராச து விஷ்ணோ சததகால விக்ரஹா
அனுபாச்யம் முமுஷாணாம் யதேநதராக நயாதி தேவதா -என்று
சம்ஹிகாந்தரத்திலும் சொல்லப் பட்டது இ றே
காகுஸ்தர் ஆத்ரேயர் கபிலர் புத்தர் -அந்த காலத்தில் உள்ள விஷ்ணு விக்ரகங்கள் -தத்கால் -சக்தி ஆவேச அவதாரங்கள் –
இந்திரன் அக்னி தேவதைகள் போலே உபாஸிக்க தக்கவர்கள் -அல்லர் –
உபதாத வசனங்களில் புத்த முனியையும் ஆவேச அவதாரங்களில் ஒன்றாக சொன்ன இது
மாயுருவில் கள்ள வேடம் -என்று ஸ்வேன ரூபேண அவதரித்ததாகச் சொன்ன-மா யுருவில் என்பதால் -சாஷாத் அவதாரம் அன்றோ என்னில் –
நம் ஆச்சார்யர்கள் வசனத்தோடு விருத்தம் அன்றோ என்னில்
கல்ப பேதத்தால் அப்படி யும் செய்யக் கூடும் ஆகையாலே விருத்தம் அன்று
ஜாமதக் நயன ஸ்வரூப ஆவேச அவதாரமாய் இருக்க
சக்தி ஆவேசங்களோடு சஹபடித்தது
ஸ்வரூபேண ஆவேசிக்கிறது சக்தி விசேஷத்தாலே ஆகையாலே -என்று நியமித்துக் கொள்வது –

—————————————————————————

சூர்ணிகை -193-

ஆக
விபவங்களின் உடைய அனநதத்தையும்
அதில் சொன்ன முக்கய விபாகத்தையும்
அந்த கௌண முக்யங்களுக்கும் உண்டான பரஸ்பர விசேஷத்தையும்
அருளிச் செய்தார் கீழ் –
அநந்தரம்
கீழ்ச் சொன்ன பர வ்யூஹங்களிலும் முக்கய விபவங்களிலும்
உண்டான அவாந்தரபிதைகளும்-இடைப்பட்ட பேதங்கள் –
அவற்றின் உடைய புஜ ஆயுத வரணாதி பேதங்களும் சொல்ல வேண்டி இருக்க
சொல்லாமைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

நிதயோதித
சாந்தோதாதி பேதமும்
ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான
சாதுராதமயமும்
கேசவாதி மூர்த்யந்தரமும்
ஷட் தரிமசத பேத பின்னமான
பத்ம நாபாதி விபமமும்
உபேந்திர த்ரிவிக்ரம ததிபக்த
ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண
மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார
விசேஷங்களும்
அவற்றின் உடைய புஜ ஆயுத
வர்ண க்ருத்ய ஸ்தாநாதி பேதங்களும்
துரவதரங்களுமாய்
குஹ்ய தமங்க ளுமாய்
இருக்கையாலே
சொல்லுகிறிலோம்-

நிதயோதித சாந்தோதாதி பேத-மாவது –
நித்யோதிதாத சமப்பூவ ததா சாந்தோ தித்தோ ஹரி -இத்யாதியில் சொல்லுகிறபடியே
நித்ய முக்த அனுபாவ்யராய்
நிதயோதித சமஞ்ஞகராய் இருக்கும் பர வாஸூ தேவரும்
அவர் பக்கலில் நின்றும் உத்பன்னராய் சங்கர்ஷண வ்யூஹ காரணமாய்
சாந்தோதித சமஞ்ஞகராய் இருக்கிற வ்யூஹ வாஸூ தேவரும்
முதலான வாஸூ தேவ மூர்த்தியில் பேதமும் –
வ்யூஹங்கள் நாலு என்றும் மூன்று என்றும் சாஸ்த்ரங்களிலே சொல்லும்
நாலும் யுண்டாய் இருக்க மூன்று என்கிறது
வியூஹ வாஸூ தேவ ரூபத்துக்கு பர வாஸூ தேவ ரூபத்தில் காட்டில்
அனு சந்தேய குணபேதம் இல்லாமையாலே என்று அபி யுகதர் சொல்லுகையாலே
இவர் கீழ் வியூஹ த்ரயம் என்று அருளிச் செய்ததுக்கு
இங்கு வ்யூஹ வாஸூ தேவர் யுண்டாக அருளிச் செய்ததுக்கும் விரோதம் இல்லை-

விசாக வ்யூஹ ஸ்தம்பம் -ஜாக்கிரதை தசை – ஸ்வப்ந தசை – -ஸூ ஷூ ப்தி தசை -துர்ய தசா -நான்கும் உண்டே -ப்ரஹ்மத்தின் அருகில் –

ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான சாதுராத்மயம்-ஆவது –
சாந்தோதி சோதபத்தி சொன்ன அநந்தரம்
சாதுராதமயம் அதோ பிண்டம் க்ருபயா பரமேஷ்டினா உபாச காநுக்ரஹார்த்தமய ய பரச்சேதி கீர்த்தயதே
சாந்தோதி தாத பிரவ்ருத்த தஞ்ச சாதுராத மயத்ரயம் ததா
உபாசகா நுக்ரஹார்த்தம் சேநேச மமததபுன
ஸூஷுப்தி ஸ்வப்ன சம்ஜஞம் யத ஜாகரத சம்ஜ்ஞம் ததா பரம சாதுர் மாஸ்யம் மகா பாக பஞ்சமம் பாரமேச்வரம் -என்றும்
பரம புருஷன் கிருபையால் -சாதுராத்மா த்ரயம் -நான்காக பிரித்து ஒவ் ஒன்றையும் மூன்றாக -கேசவாதி துவாதச -/பர வாசுதேவனை சேர்த்து ஐந்தாகும் என்றவாறு
ஆதயோ வ்யூஹோ மயா பரோ கதோ ஹய பரம தரிதயம் சுருணு
உபாசகா நுக்ரஹார்த்தம் ச்வப்னாதி பத சம்சதிதம ஸ்வப்ன நாதயவஸ்தா பேதச து தயாயி நாம கேதச நதயே
தத்த பதசத தேவா நாம தந்தி வருததயா தத மேவச ஸ்வப்ன நாதயவஸ்தா ஜீவா நாம அதிஷ்டாதர ஏவ நே
காமதம நாஞ்ச சேநேச ததபதசதோ மமேச்சயா உபாசயோஹம் மஹாபாக பதபேத பிரயோஜனம் -என்றும்
சொல்லுகிறபடியே-
ஸ்வப்னாதி அவஸ்தா பேதம் துக்கம் சாந்தியின் பொருட்டும் –
-உபாசகா நுக்ரஹார்த்தமாக தன கிருபையால் பண்ணினதாய்
தயாதிகளினுடைய கேதசா நதியின் பொருட்டும்
தத்தத பத சத ஜீவர்களுக்கு தனநிவ்ருத்தியின் பொருட்டுமாய்-
தத்தத் வசத ஜீவர்களுக்கு அதிஷ்டாதருதவேன தத்தத் பதச்தனாய் கொண்டு
காம வச்யரான சேதனர்க்கு உபாசயனாகையே பத பேத பிரயோஜனாய்க் கொண்டு
வ்யூஹ சதுஷ்ட்யத்திலும் பிரத்யேகம் உண்டான
ஜாக்ரத ஸ்வப்ன ஸூ ஷுப்தி துரீய சம்ஜ்ஞகனாய்க் கொண்டு நாலு வடிவை உடையனாய் இருக்கை-
கேசவாதி மூர்த்யந்தரமும்-ஆவது –
ஏதத் அந்தர்கதா தாச சர்வே மூர்த்தயந்தே ரசமாஹவயா கேசவாதய த்வாதச
ச லலாடா திஷூ நிஷ்டிதா சரீர ரஷகாச சர்வே தயாயி நாம தாபச நதயே -என்றும்
கேசவாதயம் த்ரயம் தத்ர வா ஸூ தேவதா விபாவயதே
சங்கர்ஷணா ச ச கோவிந்த பூர்வம் த்ரிதயமதபுதம்
த்ரிவிக்ரமாதயம் த்ரிதயம் பிரத்யுமநாத உதிதம் முனே
ஹருஷீ கேசாதிகம் தத்வத அநிருத்தா நமஹ முனே -என்றும் சொல்லுகிறபடி
கேசவ நாராயண மாதவ -வ்யூஹ வாசுதேவ
கோவிந்த விஷ்ணு மது சூதன சங்கர்ஷணன்
த்ரிவிக்ரமன் வாமன ஸ்ரீ தர -பிரத்யும்னன்
ரிஷிகேசன் பத்ம நாபன் தாமோதரன் அநிருத்தன் –
லலாடாதிகளிலே நின்று சரீர ரஷண்த்தைப் பண்ணா நின்றுகொண்டு
தயாயிகளின் உடைய தாபசா நதியின் பொருட்டாய் இருப்பதாய்
வ்யூஹ சதுஷ்ட்யத்திலும் ஓர் ஒன்றிலே மும் மூன்றாக உத்பன்னமாய்
மூர்த்த்யந்தர சமாஹவமாய் இருக்கிற கேசவாதி வ்யூஹாந்தரம்–
ஷட் தரிமசத பேத பின்னமான பத்ம நாபாதி விபமமும்-ஆவது –
பத்ம நாபாதிகாச சர்வே வைபவீயாச தவைச ஷட் த்ரிமசதா
சங்கயா சங்க யாத பராதான யேன கணேஸ்வர
ஷட் த்ரிமசத பேத பின நாச தே பத்ம நாபாதிகாச ஸூ ரா
அநிருததாத சமுத்த பனனா தீ பாத தீப இவேச்வரா -என்கிறபடியே
-36-/39 அவதாரங்கள் என்பர் தேசிகன் -/ பத்ம நாபன் போலே –
தீ பாத தீபான தாம போலே அநிருத்தாத உபபன்னங்களாய் பிரதானங்களாய்
ஷட் த்ரிம சத பேதத்தாலே பின்னங்களாய் இருக்கிற
பத்ம நாபாத யவதார விசேஷங்கள் –
இந்த பத்ம நாபாதிகள் தான்
விபவா பத்ம நாபாதய த்ரி ம ச ச ச நவசைவ ஹி பத்ம நாபோ தருவோ நந்த சக்த்யாத்மா
மது ஸூ தன வித்யாதிதேவ கபிலோ விச்வரூபோ விஹங்கமே கரோடாதமா
படபாவகதரோ தாமோ வாகீச்வரசததா ஏகாம்போ நிதிசாயீ
ச பகவான் கமலேஸ்வர வராஹோ நரசிம்ஹ ச
பீயூஷா ஹரணச ததா ஸ்ரீ பதிர்பகவான் தே கான தாதமா
அம்ருத தாரக ராஹூ ஜித காலனே மிக்ன
பாரிஜாத ஹர்ச ததா லோக நாதச து சாந்தாத்மா தததாதரயோ
மகா பிரபு நாயகரோ தசாயீ பகவான் ஏக ஸ்ருங்க தநுச ததா
தேவோ வாமன தேஹச து சர்வ வியாபி த்ரிவிக்ரம நரோ நாராயண ச சைவ ஹரி கிருஷ்ணச
ததைவச ஜவலதபரசுதாக ராமோ ராமாச்சா நாய்ச சதுர்க்கதி வேதவித பகவான் கல்கி–
பாதாள சயித பிரபி த்ரிம ச ச ச நவசைவைதே பத்ம நாபாதயோ மதா -என்று-
பத்ம நாபன் த்ருவன் அனந்தன் மது சூதனன் கபிலன் -விஷ்வா ரூபன் -தர்மன் -வாகீஸ்வரன் ஏக அம்போ நிதி சாயி -ஷீராப்தி சாயி
/கமலேஸ்வரன் வராஹன் நாரசிம்ஹன் அமிருதம் திருடி ஸ்ரீ பதி-மோஹினி ராகு ஜித் காலநேமி கொன்றவன் பாரிஜாத ஹாரன் தத்தாத்ரேயன்
ஆலிலை சயனம் -ஏக சுருங்க ஒத்தை கொம்பு வாமனன் த்ரி விக்ரமன் நரேன் நாராயணன் கோடாலி ராமன் பரசுராமன் சதுர்த்தி ராமன் -வேத வித் காளி பாதாள பிரபு —
முப்பத்து ஒன்பதாக அஹிர்புதனைய சம்ஹிதாதிகளில்
சொல்லிற்றே ஆகிலும்
விஷ்வக்சேன சம்ஹிதையிலே முப்பத்தாறாக சொல்லி இருக்கையாலே
இவர் ஷட் த்ரிமசத பேத பின்னம் என்றதில் குறை இல்லை
இனி அந்த முப்பத்து ஒன்பதிலே மூன்றைக் குறைத்து கொள்ளுகை இ றே உள்ளது
அவையாவன -கபில தத்தாத்ரய பரசுராம ரூபமான ஆவேச அவதாரங்கள்-குறைத்து -36-
உபேந்திர த்ரிவிக்ரம ததிபகத ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார விசேஷங்களும்–ஆவன –
அவதார கந்தம் ஆகையாலே சர்வ அவதாரங்களுக்கும் அநிருத்தரே காரணமாகச் சொல்லிற்றே ஆகிலும்
முன்பு சொன்ன பத்ம நாபாதிகளிலே சஹபடிதங்கள் ஆனவற்றில்
பூர்வ உத்பன்ன விபவத்தில் நின்றும் விபவாந்தரங்களாக உத் பன்னங்கள் ஆனவையும் உண்டு
என்னும் இடத்தை தர்சிப்பிக்கை முதலான சில பிரயோஜனங்களைப் பற்ற —ஒன்றில் இருந்து அடுத்த அவதாரம் போல்வன வேறே கோஷ்ட்டி –
நர நாரணன் / உபேந்திரனே -வாமனன் த்ரிவிக்ரமன் போல்வன –
பூர்வ உத்பன்நாத வைபவீயாத பராதுர்ப்பூத மகேஸ்வரா
பராதுர்ப்பாவா நதரான விததி தான கணேஸ்வர
முக்கயத உபேன தரா ச ச யதா முக்கய த்ரிவிக்ரம தனுர்ஹரி கிருஷ்ணச ததைவச -என்று
பிரித்து எடுத்துச் சொல்லப் பட்ட இந்தரனுக்கு துணையாய் இருந்து ஜகத் ரஷணம் பண்ணுகிற உபேந்திர அவதாரமும்
எல்லை நடப்பாரைப் போலே லோகத்தை அளந்து அவன் இழந்த ஐஸ்வர் யத்தைக் கொடுத்த த்ரிவிக்ரம அவதாரமும்
அவனுக்கு-இந்திரனுக்கு அம்ருத பிரதானார்த்த மாகக் கொண்ட ததிபக்தாவதாரமும்
வேத பிரதானார்த்த மாகக் கொண்ட ஹயக்ரீவ அவதாரமும்
சிஷ்யாச்சார்யா ரூபேணநின்று திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளின நர நாராயானா அவதாரங்களும்-தர்ம தேவதை இடம் பிறந்த நர நாராயணன் –
தனியாக கோயில் உண்டு தர்ம தேவதைக்கு அங்கு கீழே
அவர்களோடு ஒக்க தர்ம தேவதை பக்கலிலே பிறந்து லோக ரஷணம் பண்ணின ஹரியும்
கிருஷ்ணனுமான அவதாரங்களும்
பிரளய ரஷணம் மந்த்ராதாரத்வம் பூமி யுத்தரணம் ஆகிற இவற்றோடு
வித்யா பரதானங்கள் பண்ணின மத்ஸ்ய கூர்ம வராஹ அவதாரங்களும்
ஆதி சப்தத்தாலே கரோடீ க்ருதங்களுமான நரசிம்ஹ கல்கி அவதாரம் தொடக்க மான வையும் –

அவற்றின் உடைய புஜ ஆயுத வர்ண க்ருத்ய ஸ்தாநாதி பேதங்கள் -ஆவன
கீழ் சொல்லப் பட்ட பர வ்யூஹ விபவங்கள் ஆகிற -அவற்றின் உடைய
புஜ ஆயுத நாம நியமச தத்ர தத்ர இச்ச்யா மம ஜாக்ரத சமஜ்ஜே சாதுராதமயே தத்த புஜச சதுஷ்டயம்
சாந்தோதி தாச து த்விபுஜா ஸ்வப்நாதயா கண நாயகா
ஆதி தேவோ ஜகந்நாதோ வா ஸூ தேவோ ஜகத்பதி
சதுர்புஜஸ் ச ச்யாமளாங்க பரமே வயோமதி நிஷ்டித நித்யோதிசச சாந்தத நுராசதே
வயோமனி நிஷ்டித நித்யோதிசச சாந்தத நுராசதே
வயோமனி ஷட் குண சந்தோதிசச சாந்தவபுர தவி புஜ புருஷாக்ருதி -என்றும்
புஜம் ஆயுத நியமங்கள் இச்சையால் உள்ளன -சாதுராத்மா -ஜாக்கிரதை நான்கு புஜங்கள் –கறுத்த திரு மேனி –வ்யூஹ வாசுதேவன் இரண்டு திருக்கைகள் –
கேசவா தயா குணாதயஷா மூர்த்யாந்தர சமாஹவையா உபாசக நாம சேநேச
புக்தி முக்தி பல ப்ரதா சர்வே சதுர புஜா ஜ்ஞேயோ பத்ம சங்காதி தாரகா
தத்த ச சாஸ்த்ரேஷூ ஜ்ஞேயோ லாஞ்ச நா பரணாதய
சதுச் சக்ர தாம மாம து சம்ருதவா
ஜாமபூ நத பரபம சதுச சங்கதரம் தேவம் நீல ஜீமுத சந்நிபம் இந்திர நீல நிபசயாமம் சதுர ஹசதைர் கதாதரம்
சதுர்புஜ தனுஷமந்தம் சந்த்ரபா சத்ருசா யுதிம்
சதுர ஹலதரம் தேவம் பத்ம கிஞ்ச ஜலக சந்நிபம்
முசலாசதரம் மகா விஷ்ணும்
அரவிந்தாபமேவ ச கடக பாணிம் சதுர ஹஸ்தம் அக்னி சந்நிபதேஜசம சதுர வஜ்ராதரம் தேவம் தருணாதிய சந்நிபம்
பட்டசாயுத ஹச்தஞ்ச புண்டரீகாப மேவ ச சதுர்பிர் முத்கரதரம் புஜைர் வித்யூத சமத்யுதிம் பஞ்சாயுத தரம் மாஞ்ச சஹாஸ்ராம்சு
சம்ப்ரபம் பாச ஹச்ததரம் தேவம் பாலார்ககச
த சந்நிபம் -என்றும்
இத்யாதிகளாலே சொல்லப் படுகிற
நான்கு திருக்கைகள் அனைவரும் –/பத்மம் சங்கம் தரித்து -அடையாளம் ஆபரணம் -மாறி -விளக்கமான சாஸ்திரங்கள் உண்டு
அனைவரும் சதுர்புஜம் /
கேசவன் -நான்கு கைகளிலும் -சக்கரம் தரித்து -பொன்னிறம்-நம் இடம் நெற்றி -கிழக்கு பக்கம் காக்கிறார் -மார்கழி மாதம் கேசவ மாதம் வடக்கே இங்கு தனுர்மாதம்
/ துவாதச ஆதித்யர் -அம்சகன் -பிராட்டி -ஸ்ரீ தேவி பிரதம நாமம் –
நாராயணன் –சங்கு -இந்திர நீலம் நிறம் -/மேற்கு / தாய் /பதன் ஆதித்யன் /அம்ருத உத்பாவில்
மாதவன் -கதை / இந்திரா நீல வர்ணம் -மார்பில் -மேல் பக்கம் காத்து -/மாசி / த்வஷ்டா -பிராட்டி கமலா
மூவரும் வாசுதேவன்
கோவிந்தன் –தனுஷ் சந்த்ர காந்தி ஒளி / வெண் மதி போலே / நடு கழுத்தில் தெற்கு பக்கம் -பங்குனி விஷ்ணு ஆதித்யன் /சந்த்ர சோபனா
விஷ்ணு -கலப்பை கையில் -தாமரை தாது வர்ணம் -வலது வயிற்றில் வடக்கு / சித்திரை தாதா ஆதித்யன் விஷ்ணு பத்னி
மது சூதனன் உலக்கை முசலம் தரித்து -அரவிந்த வர்ணம் -வலது மேல் கை / தென் கிழக்கு வைகாசி காரியமா ஆதித்யன் –
த்ரிவிக்ரமன் கட்கம் வாள் / நெருப்பு நிறம் -வலது கழுத்து -தென் மேற்கு -ஆணி மித்ரன் வராரோஹா
வாமனன் -வஜ்ரம் -இளம் சூர்யன் நிறம் -இடது வயிற்றில் வட மேற்கு வருணன் ஹரி வல்லப -ஆடி
‘ஸ்ரீ தரேன் ஈட்டி / புண்டரீகம் வண தாமரை நிறம் இடது மேல் கை ஆவணி இந்திரன் சாரங்கணி தேவி
அநிருத்தன் – ரிஷிகேசன் -பத்ம நாப-தாமோதரன்
ரிஷிகேசன் -சம்மட்டி மின்னல் நிறம் இடது கழுத்தில் கீழ் ரக்ஷகம் புரட்டாசி விவசுவான் ஆதித்யன் தேவதேசிகா
பத்ம நாபன் சங்கு சக்கரம் பஞ்ச ஆயுதம் சூர்யன் நிறம் முது இதய தாமரை ரக்ஷகம் எப்படி பூசா மஹா லஷ்மி
தாமோதரன் -பாச ஹஸ்தம் -பட்டாம்பூச்சி பின் கழுத்து உள்ளும் புறமும் வியாபித்து கார்த்திகை பர்ஜன்யன் ஆதித்யன் லோக சுந்தரி –

புஜ பேதங்களும்
வர்ண பேதங்களும்
இந்த வ்யூஹ பேத விபவ பேதங்களுக்கு எல்லாம் பிரத்யேகம் உண்டான க்ருத்ய பேதங்களும்
ஆமோதாதிகளும்–வாழும் இடங்கள்
அயோத்யா மதுராதி களுமாய்க் கொண்டு
வ்யூஹ விபவங்களுக்கு பிரத்யேகம் உண்டான ஸ்தான பேதங்களும்
ஆதி சப்தத்தாலே
கரோடீ க்ருதங்களான பூஷண வஸ்த்ராதி பேதங்களும்
துரவதரங்களுமாய் குஹ்ய தமங்க ளுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்-என்றது
இவை எல்லாம் சொன்னாலும் ஒரு வாக்கு புத்தி பண்ணவும் அரியதாய்
அவதார ரஹச்யங்கள் ஆகையாலே மிகபும் குஹ்யமுமாய் இருக்கையாலே
சொல்லுகிறோம் இல்லை -என்கை-

பரத்வாதி பஞ்சகம் நடாதூர் அம்மாள் ஸ்தான பேதம்-அருளிச் செய்கிறார் –

———————————-

சூர்ணிகை -194-

லோகத்தில் ஜென்மங்களுக்கு ஹேது கர்மமாய் அன்றோ இருப்பது
இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது ஏது-என்ன அருளிச் செய்கிறார் –

அவதாரங்களுக்கு
ஹேது
இச்சை –

அதாவது
பஹூ தா விஜாயதே -என்றும்-கர்மாதீன பிறப்பு இல்லை -ஜாயதே இல்லை விஜாயதே விசேஷமாக பிறக்கிறான் -இச்சையால் பிறக்கிறான் –
பஹூ நி மே வயதீ தாநி ஜன்மானி-என்றும்
பல பிறப்பாய் -என்றும்
என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்றும்
மனிசரும் முற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த -என்றும்
பஹூ விதமாக சொல்லப் படுகிற இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது
இப்படி அவதரிப்போம் என்னும் ஸ்வ இச்சை ஒழிய ஹேதவந்தரம் இல்லை -என்கை –
சம்பவாமி ஆத்மமாயயா -என்று தானே அருளிச் செய்தான் இ றே
ஆத்மமாயயா -என்றது ஆத்ம இச்சையா -என்றபடி
மாயா வயு நம ஜ்ஞானம் -என்று மாயா சப்தம் ஜ்ஞான வாசி ஆகையாலே
இச்சா ரூபமான ஜ்ஞானத்தைச் சொல்கிறது
இச்சா க்ருஹீத அபிமதோரு தேக -என்னக் கடவது இ றே –
இயம் வையூஹீ வை ஸ்திதி ரத கிலேச்சா விருஹதயே
விபூதி நாம மத்யே ஸூ ர நர திரச்சாமா அவதரன
சஜாதீயச தேஷா மிதிது விபவாக்கயா ம்பி பஜன
கரீச தவம்
பூர்ணோ வரகுண கணைச தான சதகயசி –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -என்றும்
ஏவம் ஸ்திதே தவதுபசம சரயணா பயுபாயோ மாநேன கேனசித அலபசயத
நோபலப்தும் நோசேத அமாதய மநுஜா தி ஷூ யோ நி ஷூ
தவம் இச்சாவிஹார விதி நாசம்வாதரிஷ்ய-அதி மானுஷ ஸ்தவம் -8- -என்றும்
அவதார ஹேது இச்சை என்னும் இடத்தை ஆழ்வான் விசதமாக அருளிச் செய்தார் இ றே-
அவதரித்து ஸுசீல்யம் ஸுலப்யம் காட்டி அனைவரையும் பக்தி மூலம் அடையலாம் என்று காட்டி அருளி -இந்திரியங்களுக்கு வசப்பட்டு -சகல மனுஷ நயன விஷயமாகி -அருளினீர் –

———————————————

சூர்ணிகை -195-

பலம்
சாது
பரித்ராணாதி
த்ரயம் –

அதாவது
பரித்ராணாய சாது நாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்ததாய சம்பவாமி யுகே யுகே -என்று
த்ராணம் ரக்ஷகம் -பரித்ராபாய நன்றாக சம்ரக்ஷணம்
சாது பிரஹலாதன் போல்வார் -உயிரை மட்டும் காப்பது ரக்ஷணம் -வந்து சேவை சாதித்தது பரித்ராணாம் -தொழும் காதல் யானைக்கு வரா விட்டால் மழுங்குமே –
-தர்மம் ஸ் தாபனம் -சம் ஸ்தாபனம் -தன்னையே சாஷாத் தர்மமாக ஸ் தானம் -ஆக்க அன்றோ அவதாரம் -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
பெருமாள் சாமான்ய தர்மமும் காத்து-பித்ரு வாக்ய பரிபாலனம் – தன்னையும் தர்மமாக காட்டி அருளி – -கண்ணன் அப்படி அன்றோ -சாஸ்திரம் இவனை பின் தொடரும்
வெண்ணெய் திருடினது தப்பா இல்லையா பட்டி மன்றம் இல்லையே -பெருமாள் வாலி வாதம் பட்டி மன்றம் நிறைய உண்டே –
யுகம் தோறும் பிறக்கிறான் -/சாது பரித்ராணாமே பிரதானம் என்பர் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் /
நஞ்சீயர் ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் என்பர் –
அவன் தானே அருளிச் செய்த படியே தன பக்கல் பிரேம யுக்தராய்
தன்னுடைய அனுபவம் ஒழிய ஷண காலமும் செல்லாதே
தன்னைக் கான வேணும் என்று ஆசைப் பட்டு இருக்கும் சாது ஜனங்களைத்
தன்னுடைய ரூப சேஷ்டித அவலோகன ஆலாபன தான முகேன ரஷிக்கையும்
தத் விரோதிகளான துஷ்க்ருதிகளை நசிப்பிக்கையும்
தன்னுடைய ஆராதனா ரூபமாய் ஷீணமாய்க் கிடக்கிற வைதிக தர்மத்தை
ஆராத்யனான தன ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கையும்
ஆகிற இம் மூன்றுமே பலம் -என்கை –
சாதவ்-உக்த லஷண
தர்ம சீலா
வைஷ்ணவ அக்ரேசரா
மத சமாஸ்ரயனே பிரவ்ருத்ததா
மன் நாம கர்ம ஸ்வரூபானாம்
வாங் மனஸா அகோசரதையா
மத தர்ச நேன வினா
ஆத்மதாரண போஷணாதி கம அல்பமானா
ஷண் மாத்ர காலம் கல்ப சஹாச்ரம் மன்வானா ப்ரதி சிதல
சர்வகாதரா பவே யுரிதி
மத ஸ்வரூப சேஷ்டித அவலோகன ஆலப நாதி தானேன தேஷாம் பரித்ராணாய
தத் விபரீதா நாம் விநாசாய ச
ஷீணச்ய வைதிகஸ்ய தர்மஸ்ய மத ஆராதனா ரூபச்ய ஆராத்ய ஸ்வரூப தாசநேன ஸ்தாபநாய
ச யுகே யுகே சம்பவாமி -கருத த்ரேதாதி யுக விசேஷ நியமோபி நாசதீ தயாதத-என்று இ றே–விதுர அக்ரூர மாலாகாரர் உத்தவர் சஞ்சயன் போல்வார்
இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
யே பக்தா பவதேக போக மநசோநனயாதம சஞ்சீவன தத் சம்ச்லேஷண
தத் விரோதி நித நாதாய ததம வநாதரீச்வர
யதவாதரச ஸூர நராத யாகார திவ்யா கருதிச தேநைவ
தறி தசைர் நரை ச ச ஸூ கர்ம ஸ்வ பராததித்த பராத்த நம-ஸ்ரீ ஸூ ந்த்ர பாஹு ஸ்தவம் — -என்று இ றே ஆழ்வானும் அருளிச் செய்தது –

———————————–

சூர்ணிகை -196-

அவதாரம் இச்சம் என்று அறியாதே கர்ம நிபந்தனமாக நினைத்து மந்த மதிகள்
பண்ணும் பிரசனத்தை அனுவதிக்கிறார் –

பல
பிரமாணங்களிலும்
ப்ருகு சாபாதிகளாலே
பிறந்தான் என்கையாலே
அவதாரங்களுக்கு ஹேது
கர்மம் ஆக வேண்டாவோ என்னில்

கவிகளில் உசனா கவியாக இருக்கிறேன் -சுக்ராச்சார்யார் இந்த கவி -மாதா கவ்யா -பித்ருவுடைய தர்ம பத்னி –சாபம் கொடுத்து -ராம கிருஷ்ணா அவதாரம் அதனால் –
உத்தர ராமாயண ஸ்லோகம் –
ஜமதக்கினி பிருகு வம்சம் பார்க்கவ ராமரும் இந்த வம்சம்

அதாவது இதிஹாச புராண ரூபமான பல பிரமாணங்களிலும்
பதிவ்ரதா தர்மபரா ஹதா யேன மம ப்ரியா ச து பரியா விரஹித சிரகாலம் பவிஷ்யதி –
என்றால் போலே யுண்டான ப்ருகு சாபம் முதலான வற்றாலே
பிறந்தானாகச் சொல்லுகையாலே அவதார ஹேது இச்சை அன்றியே கர்மம் ஆக வேண்டாவோ -என்னில் என்கை –

——————————————

சூர்ணிகை -197-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அவை தன்னிலே
சாபம் வியாஜ்யம்
அவதாரம் இச்சம்
என்று
பரிஹரித்தது-
அதே உத்தர ராமாயணம் இப்படி சொல்லுமே

அதாவது
தபசாராதி தோ தேவோ ஹய பரவீத பகவத தசல லோகா நாம சம்ப்ரியார்த்ததம் து சாபம் தம க்ருஹய முகதவான் -என்று
உத்தர ஸ்ரீ ராமாயணத்திலும்
சாபம் லோகங்களுக்கு பிரியார்த்தமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றாரே -அதனாலே இச்சையால் அவதாரம் –
சர்வாவாததே ஷூ வை விஷ்ணோர் ஜன நம ச்வேச்சசயைவ து
ஜரகாச்த்ரா சசலே நைவ ச்வேச்சயா கம நம ஹரே த்விஜ சாப சசலே நைவ அவதீர்ணோபி லீலையா -என்று
லிங்க புராணத்திலும் சொல்லுகையாலே
வேடன் அம்பு / உலக்கை -/ ஜரா வேடன் -கட்டை விரலில் பட -அது வியாஜ்யம் / த்விஜ சாபம் -ப்ராஹ்மணர் சாபம் -/பிரபாச க்ஷேத்ரம் –
பிருகு சாபாதிகளாலே பிறந்தான் என்கிற இவை தன்னில்
சாபம் வ்யாஜ மாதரம்
அவதாரம் இச்சாக்ருஹீதம்
என்று பரிஹரித்தது -என்கை –

——————————————-

சூர்ணிகை -198-

ஆக
இப்படி விபவத்தை உபபாதித்த அநந்தரம்
அந்தர்யாமித்வத்தை
உப பாதிக்கிறார்

அந்தர்யாமித்வம்
ஆவது
அந்த பிரவிசய
நியந்தாவாய்
இருக்கை –

கார்த்த ரூபம் -இரா மதமூட்டுக்குவாராய் போலே -நியமன அர்த்தமாக

அதாவது
ய ஆத்மா நம நதரோ யமயதி
என்றும்
அந்த பிரவிஷ்டச சாஸ்தா ஜனா நாம் -என்றும்
சாஸ்தா விஷ்ணுர் சேஷ சய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்தித -என்றும்–சாஸ்தா நியமிப்பவர் -அசேஷ -சமஸ்தத்துக்கும் உள்ளும் புறமும் வியாபித்து நியமனம் –
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சேதனருடைய யுள்ளே பிரவேசித்து
சகல பிரவ்ருதிகளுக்கும் நியந்தாவாய் இருக்கை
அந்தர் யாமித்வம் -என்கை-

—————————————–

சூர்ணிகை -199-

இது தான் ஆத்மாவின் உள்ளே தன் ஸ்வரூபத்தாலே வியாபித்து நின்று
நியமிக்குமதுவும்
ச விக்ரஹனாய்க் கொண்டு
ஹிருதயத்திலே வியாபித்து இருந்து நியமிக்குமதுவும் கொண்டு
த்வி விதமாய் இருக்கையாலே
உபயத்தையும் அருளிச் செய்கிறார் –

உளன் கண்டாய் நாள் நெஞ்சே -உத்தமன் என்றும் -உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் –இரு வகை என்பதால் மீண்டும் –ஆழ்வார்கள் அனைவரும் அருளிச் செய்கிறார்களே -ஸ்புரித்து இவர்கள் போல்வாருக்கு –
பூ சத்தாயாம் தாது -அனைவர் உள்ளும் உண்டே சத்தைக்கும்-

ஸ்வர்க்க
நரக
பிரவேசாதி -சர்வ அவஸ்தை களிலும்
சகல சேதனர்க்கும் துணையாய்
அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே
சுபாஸ்ரயமான திரு மேனியோடு கூடிக் கொண்டு
அவர்களுக்கு த்யேயன் ஆகைக்காகவும்
அவர்களை ரஷிக்கைக்காகவும்
பந்து பூதனாய்க் கொண்டு
ஹ்ருதய கமலத்திலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பு —

அதாவது –
அந்தர்யாமி ஸ்வரூபஞ்ச சர்வேஷாம் பந்துவத ஸ்திதம் -என்று தொடங்கி-
ஸ்வர்க்க நரக பிரவேசேபி பந்து ராதமாஹி கேசவ -என்று சொன்னபடியே
புண்ய நிபந்தனமாக ஸ்வர்க்கத்தை பிரவேசிக்கையும்
பாப நிபந்தனமாக நரகத்தை பிரவேசிக்கையும்
உபய நிபந்தனமாக கர்மத்தை பிரவேசிக்கையும்
முதலான எல்லா அவஸ்தை களிலும்
எல்லா சேதனர்க்கும் இரா மடம் ஊட்டுவாரைப் போலே
உள்ளேயே பதி கிடந்தது–பதம் -இடம் -பதி என்றவாறு –
அந்தர்யாமி உள்ளே இருந்து நியமிக்கை– அந்தராத்மா உள்ளே இருந்தால் தானே சத்தத்தையே —
சத்தையையே பிடித்து நோக்கிக் கொண்டு போருகையாலே
துணையாய்
அவர்களை ஒரு காலும் விடாதே–அவகாசம் பார்த்து இருப்பானே -சத்து என்றாலே ப்ரஹ்மாத்மகம் தானே -கேட்டு அலைந்த காலத்திலேயே விடாதவன் அங்கு சென்றாலும் விடுவானோ –
அந்தராத்மாவாய் நிற்கும் நிலைக்கு மேலே —
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜயோ திரிவாதூமாக -என்றும்–புகை இல்லாத ஜ்வாலை போலே –
நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா-என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே–மின்னல் விழுங்கிய கருப்பு மேகம் என்று கொள்ள வேண்டும் –
ஜ்யோதி ரூப மயமான ச்யாமளமான தன்னை முட்டாக்கிடும் படி
செம்பொனே திகழுகிற புகராலே நீல தோயத்தை விழுங்கின
வித்யுல்லேகை போலே இருக்கையாலே
பாஹ்ய விஷய பிரவணமான மனசை
அதில் நின்றும் பற்று அறுத்து
தன் பக்கலிலே பிரவணமாம் படிக்கு
சுபாஸ்ரயமான திரு மேனியோடு அந்த சேதனர்க்கு
த்யான ருசி பிறந்த போது த்யெயன் ஆகைக்காகவும்
புத்த்யாதிகளுக்கு நியாமகனாய்க் கொண்டு
அவர்களை ரஷிக்கைக்காகவும்
நாராயணத்வ பிரயுக்தமான குடல் துவக்காலே
பந்து பூதனாய்க் கொண்டு
பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்ச சாபயதோமுகம்-என்கிற ஹிருதயத்திலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பு -என்கை
அந்தராத்மதையை முதலில் சொல்லி
அதுக்கு மேலே ச விக்ரஹனாய்க் கொண்டு ஹிருதய கமலத்தில் இருக்கும் இருப்பைச் சொல்லி தலைக் கட்டிற்று –
விக்ரஹ யோக பிரயுக்தமான பரத்வாதிகளைச் சொல்லி வருகிற பிரகரணம் -ஆகையாலே-

——————————————————–

சூர்ணிகை -200-

ஆக அந்தர்யாமித்வத்தை உப பாதித்தாராய் நின்றார் கீழ் –
அநந்தரம்
அர்ச்சாவதாரத்தை உப பாதிக்கிறார் —

அர்ச்சாவதாரம் -ஆவது
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -என்கிறபடியே
சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே
விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே
தேச கால அதிகாரி நியமம் இல்லாதபடி
சந்நிதி பண்ணி
அபராதங்களைக் காணாக் கண்ணிட்டு
அர்ச்சக பரதந்த்ரமான சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
கோயில்களிலும்
கிருஹங்களிலும்
எழுந்து அருளி நிற்கும் நிலை –

அர்ச்சா -ப்ரதிமா –அர்ச்சா பூஜ்யா என்றுமாம் / அவதாரம் -அவதாரத்துக்கு பிரதிநிதி -அர்ச்சாவதாரம் /அவதார ரஹஸ்யம் -நான்கு ஸ்லோகங்கள் -6-ரஹஸ்யம்
1–அவதாரம் மெய்-2- பெருமைகள் குறையாமல்-3- அப்ராக்ருதம் –4-கர்மத்தால் இல்லை கிருபையால்-5- -தர்மம் குலையும் பொழுது-6- சாது சம்ரக்ஷணத்துக்கு –
விருப்பப்பட்ட படி சேவை -அர்ச்சாவதாரமும் சேர்த்து -அருளி -/கிருஹர்ச்சா — கனிவார் வீட்டு இன்பம் -ஆழ்வார் /
பதி கிடந்து உறைவான் -அவனுக்கு மிகவும் ப்ரீதி-அன்றோ
மோந்து பார்த்து கொண்டு இருப்பான் -வியாக்யானம் -/
பரவாசுதேவன் வ்யூஹம் விபவம் சொல்லும் பொழுது அவனை விளக்கி அர்ச்சை என்றாலே திவ்ய தேசம் இது ஒன்றே நமக்கு போக்கிடம் –
ஆஜகாம முகூர்த்த யத்ர-ராம -ச லக்ஷ்மணன் கதையும் கையுமாக -ராமன் இருக்கும் இடம் வந்தார் -என்று சொல்லாமல் —
-ராமன் எங்கு லஷ்மணன் உடன் கூடி இருந்தாரோ அங்கு -இடத்துக்கு பிரதான்யம் -திருப்புல்லாணி -என்றவாறு –
திவ்ய தேசம் முதலில் -அப்புறம் தானே பெருமாள் வந்தார் -வண்டினம் முரலும் சோலை இத்யாதி -பரன் சென்று சேர் திரு வேங்கட மா மலை அன்றோ –
எந்த திவ்ய தேசத்துக்கு மங்களா சாசனம் -சொல்கிறோம் -ஸ்ரீ ரெங்கம் மாலை பிரசாதம் என்கிறோம் -பெருமாளும் திவ்ய தேசத்துக்கு மாலை போலே எழுந்து அருளி உள்ளார் –
திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதாரத்திலே மண்டி –
நீர் மலி வையத்து நீடு இருப்பாரே -திருக்கண்ணபுரம் இறுதி பதிகம் -கார் மலி கண்ணா புறத்து அடிகளை பாடினேன் இத்தை சொல்லி தெள்ளியீர் தேவர் அனுபவம் இங்கு தானே
பாணனார் திண்ணம் இருக்க –நாணுமோ–காணுமோ கண்ணபுரம் என்று காட்டுவாள் -எங்கு இருந்தும் பார்க்கலாம் –

அதாவது –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே-முதல் திருவந்தாதி -44- என்கிறபடியே
ஆஸ்ரிதர் யாதொன்றை தனக்குத் திரு மேனியாகக் கோலினார்கள்-அத்தையே
தனக்கு வடிவாகக் கொள்ளும் என்றபடியே-
இச்சா க்ருஹீதானம் என்றது ஆஸ்ரிதர் இச்சைப்படி என்று அன்றோ கொள்கிறான் -அவன் திரு உள்ளபடி தானே வேதங்களும் இதிகாசங்களும் புராணங்களும் –
ஆஸ்ரிதரான சேதனர்க்கு அபிமதமான
ஸ்வர்ண ரஜதாதி சிலாபர்யந்தமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்திலே
அயோத்யா மதுராதி தேச நியமம் என்ன
பதினோராயிரம் சம்வச்த்ரம் நூறு சம்வச்தரம் என்றால் போலே யுண்டான கால நியமம் என்ன
தசரத வஸூ தேவாதிகள் என்றால் போலே சில அதிகாரி நியமம் என்ன
இவற்றை யுடைத்தாய் கொண்டு சந்நிதி பண்ணின
ராம கிருஷ்ணாதி விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே –
பௌம நிகேத நேஷ வபி குடீகுஞ்ஜே ஷூ ரெங்கேஸ்வர -உத்தர சதகம் -72- -என்கிறபடியே–இல்லங்கள் தோறும் போகிறீர் -குடில்களிலும் -ஸ்ரீ ரெங்கேஸ்வரனே–
திரு நாகை ஏழும் இரண்டும் ஒன்றும் -ஸூவ அனுபவம் ஏழு – பர உபதேசம் மூன்று – பலம் சொல்லி தலைக்கட்டுகிறார் –
எல்லா திவ்ய தேசங்களையும் சேர்த்து திரு நாகை மங்களா சாசனம் –
ஒருதேச நியமம் இல்லாத படியாகவும்
அர்ச்சகனுடைய அபேஷா காலம் ஒழிய தனக்கு என்று ஒரு கால நியமம் இல்லாத படிக்கும்–தீர்த்தம் பிரசாதியாமல் –
64-சதுர் யுகம் திருக்கண்ணபுரம் அதுக்கு முன் திருவெள்ளறை —
ருசி யுடையார் எல்லாருக்கும் ஆகையாலே இன்னார் எனபது ஓர் அதிகாரி நியமம் இல்லாத படியாகவும்
சந்நிதி பண்ணி
சர்வ சஹிஷ்ணு -என்கிறபடி -சஹிஷ்ணு வாகையாலே
அவர்கள் செய்யும் அபராதங்களைக் காணாக் கண் இட்டு
அர்ச்சக பராதீநா கிலாதம் ஸ்திதி -என்கிறபடியே-
பார்க்காமல் முதலில் பார்த்து இதிலே உள்ளது உதாசீனரை போலே -தெரிந்தும் தெரியாமல் திருந்த அவகாசம் பார்த்து –
அர்ச்சக பரதந்த்ரமான ஸ்நான ஆச நாதிகளான
சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் நிலை அர்ச்சாவதாரம் -என்கை –
அர்ச்சா பூஜா பிரதிமயோ -என்கையாலே–அர்ச்சா சப்தம் பிரதிமா வாசி –

—————————————–

சூர்ணிகை -201-

இவ் வர்ச்சாவதாரத்தின் யுடைய
ருசிஜனகத்வாதி குண பூர்த்தியை
அருளிச் செய்கிறார் –

1—ருசி ஜனகத்வமும்
2–சுபாஸ்ரயமும்
3–அசேஷ லோக சரண்யதவமும்
4–அனுபாவ்யத்வமும்
எல்லாம்
அர்ச்சாவதாரத்திலே
பரி பூர்ணம் –

நான்கிலும் பரி பூர்ணம் -ருசி ஜனகத்வம் வைஷ்ணவ -வாமனத்தவம் -திருக்குறுங்குடி – பாதமே சரணாக தருவான் –உதார குணம் வானமா மலையில் கொழுந்து விடும்
பொது நின்ற பொன்னம் கழல் சாமான்ய அதி தைவம் -கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் –
மருந்தும் விருந்தும் இவனே –

அதாவது
சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய் போரும் சேதனர்க்கு தன்னுடைய
ரூப ஔதார்ய குணங்களாலே வைமுக்யத்தை மாற்றி
தன் பக்கலிலே ருசியை ஜனிப்பிக்கையும்–
ருசி பிறந்த அநந்தரம்
தன்னை பஜிக்குமவர்களுக்கு
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம் படி
சுபாஸ்ரயமாய் இருக்கையும்–இரண்டு கோட்டையும் ஆக்ரமித்து நாட்டை க் கொள்வாரைப் போலே -மங்களம் ஏற்படுத்த வல்ல ஸ்தானம் சுபாஸ்ரயம் –
அவ்வளவு அன்றிக்கே தன்னையே உபாயமாக சுவீகரிக்கும் அளவில்
குணாகுண நிரூபணம் பண்ணாதே
சகல லோகங்களில் உள்ளவர்களுக்கும் சரண வர்ணார்ஹமாய் இருக்கையும்-சமோஹம் சர்வ பூதேஷூ –
உபாயமான மாத்ரமாய் ஒரு தேச விசேஷத்திலே போனால்
அனுபாவ்யமாம் படி இருக்கை அன்றிக்கே
வை லஷண்யத்தில் வாசி அறிந்தவர்களுக்கு
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்னும்படி
அனுபாவ்யமாம் படி இருக்கையும் ஆகிற
இவை எல்லாம் அர்ச்சாவதாரத்தில் பரி பூரணமாய் இருக்கும் என்கை –
விலக்ஷண ஞானம் உள்ளவர்கள் –தொண்டர் அடிப்படை ஆழ்வார் -திருப்பாண் ஆழ்வார் -போல்வார் —
ஸூ ருபாமா பிரதிமாம் விஷ்ணோ பிரச்னனவாத நேஷானாம்
க்ருதவாதமான ப்ரீதி கரீமா ஸ்வர்ண ரஜ தாதிபி தர்மசசயதே தாம பரணமேத
தாம் பஜேதே தாம் விசிந்தயேத் விசதய பாசத தோஷச்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணீம்-என்று
இவ் வர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரிதர் உகந்ததொரு த்ரவ்யத்தை
தனக்குத் திருமேனியாகக் கொண்டு
அவர்களுக்கு உபாசயனுமாய் பிராப்யனுமாய்
இருக்கும் என்னும் இடம் ஸ்ரீ சௌநக பகவானாலும் சொல்லப் பட்டது இ றே-
அரங்கத்து அமலன் முகத்து -அஞ்சேல் என்று வைத்த திருக்கைகள் – இரண்டு தூணுக்கு நடுவில் ஒரு முஹூர்த்தம் மட்டும் இல்லாமல் அனைவருக்குமான இருக்கும் அமலன் –
அடி தோறும் அர்ச்சை –வைபவமும் சர்ச்சையும் சேர்ந்தே அருளிச் செய்கிறார் -மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யார் உய்யலாமே –
அநுகாரமும் அர்ச்சையில் -வடவரை நின்றும் வந்து இடவகை கண்ணபுரம் கொள்வது நானே -கடல் ஞாலம் செய்தெனும் யானே-நம் ஆழ்வார்
பாடவைத்த முக்கோட்டை திருக்கண்ணபுரம் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை என்று வாய் வெருவி–மெய்யம் வினவி -உருகினாள் உல் மெலிந்தாள்-பெருகு நீர் கணபுரம்-
முலையோ முழு முற்றும் போந்தில–பெருமாள் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் –
கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறுவரோ -வாயால் சொல்ல முடியாத நிலையிலும் கை தொழுகிறாள் இவள் –
அக்னி கார்யம் செய்து ப்ரஹ்மம் – -யோகி ஹிருதயம்– சம தர்சனம் எங்கும்-காணலாம் – புத்தி இல்லா மந்த மதிகளுக்கும் விக்ரஹ ரூபம் அர்ச்சை –

————————————————-

சூர்ணிகை -202-

இன்னமும் இவ் வர்ச்சாவதார குணாதிக்யத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார் –

ஸ்வ ஸ்வாமி பாவத்தை
மாறாடிக் கொண்டு
அஜ்ஞ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும்
அசவந்தரைப் போலேயும்
இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு
சர்வ அபேஷிதங்களையும்
கொடுத்து அருளும் –

சர்வ அபேக்ஷித்ங்களையும் கொடுத்து அருளும் என்று பிரபந்தம் நிகமானம் -தானாகே அமைந்ததே

அதாவது
ஸ்வ தவமா தமநி சஞ்ஜாதம் ஸ்வாமி தவம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிறபடியே
சேதனனுக்கு ஸ்வத்வமும்-தனக்கு ஸ்வாமி தவமும் வ்யவஸ்திதமாய் இருக்க
இவன் தன் உடைமைகளோடு ஒக்க அவனையும் சஹபடிக்கும்படி–எல்லாம் எடுத்து வைத்து தீர்த்தம் முறுக்கு படுக்கை போலே பெருமாளையும்
-பெருமாள் பெட்டி என்று அன்றோ சொல்கிறான் -இவன் –
ஸ்வாமித்வம் இவன் பக்கலிலும் ஸ்வத்வம் தன் பக்கலிலும்
ஆக –தன் இச்சையால்– மாறாடிக் கொண்டு–இதுவும் அவன் ஸ்வாதந்தர்ய கார்யம் அன்றோ -மா முனிகள் அழகாக காட்டி அருளுகிறார்
யஸ் சர்வஜ்ஞ்ஞஸ் சர்வவித் பராசய சக்திர் விவிதைவ சரூயதே -என்றும்–அறிவு பூர்த்தி -சக்தி பூர்த்தி –
ந தசயேசே கச்சந -என்றும்–ஓத்தார் மிக்கார் இலையாக மா மாயன்
சர்வேச்வரச சர்வத்ருக் சர்வவேததா சமஸ்த சக்தி பரமேச்வராககைய -என்றும்–
சொல்லுகிறபடி
சர்வஜ்ஞ்ஞனாய்
சர்வ சக்தியாய்
நிரந்குச ஸ்வ தந்த்ரனாய்–அங்குசம் இட ஆள் இல்லையே
இருக்கிற தன்னை அமைத்துக் கொண்டு
தன் காரியமும் பிறர் காரியமும் அறிய மாட்டாத அஜஞரைப் போலேயும்
தன்னைத் தான் ரஷிக்க மாட்டாத அசக்தரைப் போலேயும்
தனக்கு என ஒரு முதன்மை இல்லாத அஸ்வதந்தரைப் போலேயும்
இரா நிற்கச் செய்தேயும்
விமுகரையும் உட்பட விட மாட்டாத படி கரை புரண்டு செல்லுகிற காருண்யம் இட்ட வழக்காய்க் கொண்டு-
சேதனன் இட்ட வழக்கு இல்லை -இவனது காருண்யம் இட்ட வழக்கு அன்றோ –
நேத்ர புத்ர விதரணம் முதலாக மோஷ ஸ்தான பர்யந்தமாக
யதாதிகாரம் சேதனருடைய சகல அபேஷிதங்களையும் கொடுத்து அருளும் என்கை –

அர்ச்சாவதார ரச சர்வேஷம் பாந்தவோ பக்த வத்சல
ஸ்வ தவமாத்மநி சஜ்ஞ்ஞாதம் ஸ்வாமித்வம் மயி ச ஸ்திதம் –விஷ்வக்சேனர் சம்ஹிதை -என்று
அர்ச்சாவதாரமானது சர்வர்க்கும் பாந்தவமாய் பகவத் ஸ்வம்மாய் இருக்கும்
ஸ்வத்வமானது ஆத்மாவின் பக்கலிலும் ஸ்வாமித்வம் ஆனது என் பக்கலிலும் வ்யவஸ்திதமாய் இருக்கும் என்றும்
இதிவ்யவஸ்திதே சாபி மமாயம் கேசவசச தவதி மமாயம் ராம இதயேவ தேவ பிரசுலாஞ்சந-என்றபடி
சேஷித்வம் வ்யவஸ்திதமாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய கேசவன் என்றும்
பரசுவை அடையாளமாக உடையனான தேவனான ராமன் என்னுடையவன் என்றும்
மமாயம வாமனோ நாம நரசிம்ஹாக்ருதி பிரபு வராஹ வேஷா பகவான் நரோ நாராயணஸ் ததா -என்று
என்னுடையவன் இந்த வாமனானவன்
பிரபுவான நரசிம்ஹ ரூபியானவன்
வராஹ வேஷத்தை யுடைய பகவான்
அப்படியே நர நாராயணன் -என்றும்
ததா கிருஷ்ணச ச ராம்ச ச மமயாமிதி நிரதிசேத மதகராமவாசீ பகவான் மமைவேதி ச தீர் பவேத -என்னும்படி
கிருஷ்ணனும் ராமனும் என்னுடையவன் சொல்லா நிற்கும்
என்னுடைய கிராமத்தில் இருக்கும் பகவான் என்னுடையவன் என்றும் மமத்வ புத்தி யுண்டாகா நிற்கும்
சிந்தயேசச ஜகந்நாதம் சுவாமி நாம பரமார்த்தததா அசக்தம்
அஸ்வ தரஞ்ச ரஷ்யஞ்சாபி ஜநார்த்தனம் -என்று
பரமார்த்ததால் ஜகன்னாதனாய ஸ்வாமியான ஜனார்த்தனனை அசக்த னாகவும்
அஸ்வ தந்த்ரனாயும் ரஷ்ய பூதனாகவும் சிந்திப்பதும் செய்யா நிற்கும்–ஜகந்நாதன் ஸ்வா தந்தர்ய பலத்தால் இப்படி ஆக்கி நிற்குமே –
பொன்னுலகம் ஆளீரோ புவனா முழுவதும் ஆளீரோ–குருவி
காட்டும் மூலையில் குடில் கட்டி மிதுனம் வாழும் –
திசசயா மகா தேஜோ புங்க்தே வை பக்த வத்சல ஸ்நானம் பானம் ததா யதா ராம குருதே வை ஜகத்பதி –
என்று பெரிய தேஜஸ் சை யுடைய ஜகத்பதி யானவன்-பக்தனுக்கு வத்சலனாய்க் கொண்டு
அவன் இச்சித்த போது அமுது செய்யா நிற்கும்
அப்படியே ஸ்நானத்தையும் பானத்தையும் யாத்ரையும் பண்ணா நிற்கும் -என்றும்
ஸ்வ தந்த்ரச ச ஜகன்நாதோபி அஸ்வதந்த்ர்யோ யதா ததா
சர்வ சக்தி ஜகந்தாதாபி அச்சக்த இவ சேஷ்ட தே -என்று
ஸ்வ தந்த்ரனாய் ஜகன்நாதனாய் இருக்கச் செய்தேயும் அவன் யாதொருபடி
அஸ்வதந்த்ரன் -அப்படி யாகா நிற்கும்
சர்வ சக்தியாய் ஜகத்துக்கு ஸ்ரஷ்டாவாய் இருக்கச் செய்தேயும் அசக்தரைப் போலே சேஷ்டியா நிற்கும் என்றும்
சர்வான் காமான் தத ச்வாமயபி அச்சக்த இவ லஷ்யதே அபராதா நபி ஜஞச சன சதைவ குருதே தயாம -என்று
எல்லா கர்மங்களையும் கொடா நின்று ஸ்வாமியாய் நிற்கச் செய்தேயும்
அசக்தரைப் போலே காணப்படா நிற்கும்
அபராதங்களில் அறிவிலானாக நின்று கொண்டு எப்போதும் தயைப் பண்ண நிற்கும் -என்றும்

அர்ச்சாவதார விஷயே மயாபி உத்தேச தச ததா உகதா குணா ந சக்யந்தே வக்தும் வாஷச தைரபி-என்று
அவனுடைய யாதோ வாசோ நிவர்த்தந்தி–அவனுடைய மொழியைக் கடக்கும் விஷயம் அன்றோ –
அர்ச்சாவதார விஷயத்தில் என்னாலும் சுருங்கச் சொல்லப்பட்ட அத்தனை
குணங்கள் ஆனவை நூறு வருஷம் கூடினாலும் சொல்ல சக்யங்கள் அல்ல என்றும்
ருதே ச மத பிரசாத தவா ஸ்வதோ ஜ்ஞாநாகமேன வா -என்று
என்னுடைய பிரசாதம் ஒழிந்தாலும்
ஸ்வஸ் சித்தமான ஜ்ஞானம் இல்லாத போதும் சொல்ல முடியாது என்றும்
ஏவம் பஞ்ச பிரகாரோஹம் ஆத்மாநாம பத்தாம அத பூர்வ சமாதபி பூர்வ சமாத ஐயாயாம்ச சைவோத தரோ ததா -என்று
இப்படி பர வ்யூஹாதி பஞ்ச பிரகாரனான நான்
அத பதிக்கிற ஆத்மாக்களுக்கு
பூர்வ பூர்வ பிரகாரங்களில் காட்டில்
உத்தர உத்தர பிரகாரத்தில்
சௌலப்யத்தாலே ஸ்ரேஷ்டனாய் இருப்பேன் என்றும்
சௌலப்யதோ ஜகத் ஸ்வாமீ ஸூ லபோ ஹயுத்த ரோததர -என்று
ஜகத் ஸ்வாமியான தான் சௌலப்யத்தாலெ மேலே மேலே
ஸூ லபனாய் இருப்பேன் இ றே என்றும் –
சர்வாதி சாயி ஷாட குண்யம் சமஸ்திதம் மந்தரபிம்பயோ மந்தரே வாசயதே
மனா நித்யம் பிம்பே து க்ருபயா ஸ்திதம் -என்று
சர்வத்தையும் அதிசயிப்பதான ஷாட் குணிய ரூபமானது
மந்தர பிம்பங்களிலே நிற்கும் என்றும்
மந்தரத்திலே வாசயாதமநா நிற்கும்– பிம்பத்திலே கிருபையாலே நிற்கும் என்றும் –
இப்படி அர்ச்சாவதாரத்தின் உடைய குணாதிக்கியம்
விஷ்வக்சேன சம்ஹிதையிலே சர்வேஸ்வரன் தன்னாலே அருளிச் செய்யப் பட்டது இ றே-
அர்ச்சா திருமேனியில் ஷாட் கணங்கள் பரிபூரணம் -கிருபையால் இங்கு -மந்த்ர சொல்லின் பொருளால் அங்கு

ஆஸ்தாம தே குணாராசிவாத குணா பரீவாஹாதம நாம ஜன்மாநாம் சங்க்யா பௌம
நிகேத நேஷ வபி குடீ குஞ்ஜேஷூ ரெங்கேஸ்வர
அர்ச்சயச சர்வ சஹிஷ்ணு அர்ச்சக பராதீ நாகிலாத மஸ்திதி பரீணீஷி ஹ்ருதயாலுபிச
தவததச சீலாஜா ஜடீ பூயதே –உத்தர சதகம் -74–என்று
அவதாரங்களை அருளிச் செய்த அனந்தரத்திலே
அர்ச்சாவதார வைபவத்தை சங்க்ரஹேண ஒரு ஸ்லோகத்திலே அருளிச் செய்தார் இ றே பட்டர்-

————————————————————————————-

ஆக
ஈஸ்வரனுடைய ஸ்வரூப வைலஷண்யத்தையும்
அந்த ஸ்வரூபத்தையும் நிறம் பெறுத்தும் குண வைலஷண்யத்தையும்
அக் குணங்கள் அடியாக அவன் பண்ணும் ஸ்ருஷ்டியாதி வியாபாரங்களையும்
அப்படி காரண பூதன் ஆனவனுடைய சர்வ பல பிரதத்வத்தையும்
காரணத்வாத் உபயோகியான விலஷண விக்ரஹ யோகத்தையும்
அந்த விக்ரஹ வை லஷண்ய அனுரூபமான லஷ்மி பூமி நீளா நாயகத்வத்தையும்
அந்த விக்ரஹ யோக பிரயுக்தமான பரத்வாதி பஞ்ச பிரகாரத்வத்தையும்
அருளிச் செய்து
ஈஸ்வர தத்தவத்தை நிகமித்தார் ஆயிற்று –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை —-141-171— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 24, 2017

சூர்ணிகை -141-

இப்படி சித் அசித் ரூபமான தத்வ த்வயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை ஸூவ்யக்தமாம் படி அருளிச் செய்து
அநந்தரம்
ஷராத்மா நாவீ சதே தேவ ஏக -என்கிறபடியே–
தத் உபய நியந்தாவான ஈஸ்வரனுடைய ஸ்வரூபாதிகளை
சம்சய விபர்யயம் அற அருளிச் செய்கிறார் –
அதில் பிரதம சூர்ணிகை யாலே
ஈஸ்வரத்வம் அசாதாரண தர்மதயா வஸ்துவுக்கு நிரூபகம் ஆகையாலே
ஈஸ்வரன் என்றே வஸ்துவை நிர்தேசித்து -தத் ஸ்வரூபாதி வை லஷண்யத்தை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார்-
அதில் பிரதமத்தில் குணம் ரூபம் ஆஸ்ரயமான -குணாதிகளுக்கு ஆஸ்ரயமான-ஆதாரமான – ஸ்வரூபத்தை -ஸ்வரூப வைலஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

ஈசன சீலன் நாராராயணன் -ஆதி சங்கரர் தானே அருளி -அம்ருத்ராக்ஷரம் ஹர -ஷரம் அக்ஷரம் இரண்டுக்கும் தேவ ஏக ஈசதே/
ஏகோ தேவ -ஏஷ சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா -திவ்ய தேவ ஏக -தான் ஒரு வேர் தனி முதல் வித்தாய் -நாராயண –
ஐயம் திரிபு இல்லாமல் சம்சயம் விபர்யயம் அற/ நியமன சாமர்த்தியம் இயற்கையிலே -ஈஸ்வரன் –
இன்றியமையாத தனியான தர்மம் இவன் ஒருவனுக்கே -அவ்யாப்தி அவியாப்தி இல்லாமல்

ஈஸ்வரன்
1–அகில ஹேய ப்ரத்ய நீக
2–அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
3–ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –
4–சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
5–ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற-சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-
6–தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
7–விலஷண விக்ரஹ யுக்தனாய் –
8–லஷ்மி பூமி நீளா நாயகனாய் –
இருக்கும்

அதாவது
அகில ஹேய ப்ரத்ய நீக அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
சமஸ்த ஹேய பிரதிபடமாய்-எதிராய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்-தேச கால வஸ்து -விபு என்பதால் -தேசம் பரிச்சேத ரஹிதன் / அந்தராத்மா என்பதால் வஸ்து பரிச்சேத ரஹிதன்
ஸ்வயம் பிரகாசத்வ -ஸூ க ரூபவத்மே வடிவான
ஸ்வரூபத்தை யுடையவனாய் -என்கை –

சத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம -என்றும்
விஜ்ஞ்ஞானம் ப்ரஹ்மம் -என்றும்
ஆனந்தோ ப்ரஹ்மம் -என்றும் சொல்லக் கடவது இ றே-
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந
ச்வேதர சமஸ்து வஸ்து விலஷண
ஆநந்த ஜ்ஞானா நனதைக ஸ்வரூப -என்று இறே எம்பெருமானார் அருளிச் செய்தது -கத்யத்திலே –
அப்படியே இவரும் அருளிச் செய்கிறார் –
ஆனால்
கல்யாணை கதா நத்வமும் -ச்வேதர சமஸ்து வஸ்து விலஷண த்வமும் இவர் அருளிச் செய்யாது ஒழிவான் ஏன் என்னில்
ஹேய ப்ரத்ய நீகதை-புக்க விடத்தே கல்யாணைக தாநத்வமும் வரும் என்னுமதைப் பற்றவும்
ஆநந்த ரூபம் சொல்லுகையாலே தன்னடையே சித்திக்கும்
என்னுமதைப் பற்றவும் கல்யாணை கதா நத்வம் அருளிச் செய்திலர் —
ச்வேதர சமஸ்து வஸ்து விலஷணதவம் உபய லிங்க விசிஷ்டத்வ பிரயுக்தம் ஆகையாலே
அர்த்தாதுகதம் என்று அருளிச் செய்திலர்-அனுமானிக்கலாம் என்றவாறு

ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் –
ஆதி -சப்தத்தாலே குண சூர்ணையில் எம்பெருமானார் அருளிச் செய்த குணங்களை எல்லாம் சொல்லுகிறது –
குணங்களுக்கு கல்யாணத்வம் ஆவது -ஆஸ்ரிதர்க்கு பரம போக்யமாய் இருக்கை–நின் புகழில் வைகும் ஆனந்ததும் மற்று இனிதோ நீ அருளும் வைகுந்தம் எனும் வான்
கண சப்தம் சமூஹ வாசி –
பூஷிதன் ஆகையாவது -இவற்றாலே அலங்க்ருதனாய் இருக்கை-
திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு திவ்ய ஆபரணங்கள் போலே ஆயிற்று
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு திருக் கல்யாண குணங்கள் ஔஜ்வல்ய கரமாய் இருக்கிற படி –
இத்தால் -யஸ் சர்வஜ்ஞ்ஞச சர்வ வித –முண்டக உபநிஷத் -என்றும்–அனைத்தையும் அறிந்தவன் அனைத்து பிரகாரங்களை அறிந்தவன்
பராசய சக்திர் விவிதைவ சரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்றும்
சமஸ்த கல்யாண குணா தமகோ சௌ-என்றும்
சொல்லுகிற கல்யாண குண யோகத்தை அருளிச் செய்தார் ஆயிற்று-

சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் –
ஜகத் -சப்தத்தாலே கார்ய வஸ்துவைச் சொல்லுகிறது
சகல -சப்தத்தாலே சமஷ்டி வ்யஷ்டி ரூபமான சமஸ்த பதார்த்தங்களையும் சொல்லுகிறது
சர்க்கமாவது -சிருஷ்டி
இதுதான் சத்வாரக அத்வாரக ரூபேண த்வி விதையாய் இருக்கும்
ஸ்திதி யாவ்வது -ரஷணம்-இதுவும் பாஹ்யாபயந்தர ரூபேண த்விவிதமாய் இருக்கும்
சம்ஹாரம் ஆவது -அழிக்கை-இதுவும் சத்வாரக அத்வாரக ரூபேண த்விவிதமாய் இருக்கும்
இவை எல்லாம் மேல் இவர் உப பாதிக்கிற இடத்தில் காணலாம்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி
யத ப்ரயந் தய பிசமவிசநதி தத் விஜிஞ்ஞாஸ்வ தத் ப்ரஹ்ம -இத்யாதி
ஸ்ருதிகளாலே இவனுடைய சகல ஜகத் சர்க்காதிகள் சொல்லப் படா நின்றது இ றே–ஆதி மோக்ஷ பிரதத்வமும் உண்டே –
இத்தால் கீழ் சொன்ன குண விசிஷ்டன் ஆனவனுடைய வியாபார விசேஷங்களை அருளிச் செய்தார் ஆயிற்று –

ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ –7–10-என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-கதி த்ரய மூலாஸ்ய -ஆளவந்தார்
ஆர்த்தனாவான் -முன்புண்டான ஐஸ்வர்யத்தை இழந்து அதைப் பெற வேணும் என்று ஆசைப் படுமவன்-துடிப்பு உள்ளவன் -முமுஷு மோக்ஷத்தில் போலே புபுஷு அன்றோ இவன்
ஜிஜ்ஞாஸூ ஆகிறான் -ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவை அனுபவிக்க ஆசைப் படும் கேவலன்-கர்ம யோகம் ஞான யோகம் -கைவல்யம் இவற்றையே அறிபவன்
அர்த்தார்த்தி ஆகிறான் அபூர்வமாக ஐஸ்வர் யத்தை ஆசைப் படுமவன்-புத்த ஐஸ்வர்யம் கேட்பவன்
ஜ்ஞானி ஆகிறான் பரம புருஷார்த்தமான பகவத் பிராப்தியை ஆசைப் படுமவன்-பக்தி யோக நிஷ்டனை ஞானி சப்தத்தால் -ஞானமே பரிபக்குவப்பட்டு பக்தி ஞான விசேஷம்
ஸ்திதே –அஹம் ஸ்மராமி மத பக்திம்-சரணாகதனை பக்தன் என்ற சொல்லால் -அந்திம ஸ்மரணம் வர்ஜனம் -i
ஆர்த்த -பிரதிஷடாஹீந பரஷ்டைச்வர்ய புனச தத் பிராப்தி காம
அர்த்தார்த்ததீ -அப்ராப்த ஐஸ்வர் யதயா ஐஸ்வர்ய காம தயோர் முக பேத மாதரம்
ஐஸ்வர்ய விஷய தயா ஏக ஏவாதிகார-
ஜிஞ்ஞாஸூ -பிரகிருதி வியுக்தாதம் ஸ்வரூபாவ தீசசு ஜ்ஞானமே வாசாய ஸ்வரூபம் இதி ஜ்ஞ்ஞா ஸூ ரித யுக்தம்
ஜ்ஞானிச -இதஸ்த்வ நயாம பிரகிருதி வித்தி மே பராம இத்யாதி ந அபஹித பகவத் சேஷதை கரசாதம் ஸ்வரூபம் இத
பிரகிருதி வியுக்த கேவலாதம நயபாயாவ சயன பகவந்தம் பரேப ஸூ ர பகவந்தம் ஏவ பரமபராபயம் மனவான -என்று
சதுர்வித அதிகாரி வேஷத்தையும் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் அருளிச் செய்தார் இறே-
பிரதிஷ்டா ஹீனன் ஐஸ்வர்யம் போனவன் -அதை அடைய ஆசைப்படுபவன் ஆர்த்தன்-
முக பேதம் -கொஞ்சம் பேதம் -பிரகிருதி -தொலைத்த கேவல ஆத்ம அனுபவம் இச்சிப்பவன் -ஞானமே ஸ்வரூபம் இவனுக்கு -அத்தை வைத்தே பெயர்
ஞானி -வேறான -சேஷத்தைக ரசம் ஆத்ம ஸ்வரூபம் அறிந்தவன் –பூமி ஆப அனலை கம் ஆகாசம் -இவை தாழ்ந்த சொத்துக்கள் -அபரா பிரகிருதி /
உயர்ந்த -வேறு பட்ட -ஆத்ம-பரா பிரகிருதி சைத்தன்யம் உள்ள -சேஷத்வம் அறிந்தவன் —
அவனே ஞானி -தத் சேஷத்தைக ஸ்வரூபம் -பக்தி யோக நிஷ்டன்-
இந்த சதுர்வித புருஷ சமாஸ்ரயணீயத்தை
சதுர்விதா பஜந்தே மாம் ஜனா ச ஸூ கருதிநோர்ஜுனா
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரத ரிஷப –7–14-என்றும்–புண்யசாலிகள் என்று கொண்டாடுகிறான் நால்வரையும் -நால்வரும் உதாரர்கள் –
சதுர்வித மம ஜனா பக்த ஏவ ஹி சே ஸ்ருதா
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ அர்த்தார்த்தீ ஜ்ஞாநீ சேதி பிருதக் பிருதக் –மோக்ஷ தர்ம உபதேசம் –என்றும்
தானே அருளிச் செய்தான் இறே
இத்தால் ஜகத் காரண பூதனாக கீழ்ச் சொல்லப் பட்டவனுடைய
சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தை அருளிச் செய்தார் ஆயிற்று -பெத்த பாவிக்கு விடப்போமோ –
கண்ணாவான் -சஷூஸ் தேவானாம் தானவாம் -அனைவருக்கும் -அஸ்தி நாஸ்தி இரண்டிலும் உள்ளான் -உளன் உளன் அலன் என்றாலும் உளன் –

தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
தர்மார்த்த காம மோஷாக்கிய புருஷார்த்த உதாஹருத -என்று
புருஷார்த்தம் சதுர்விதமாய் இ றே இருப்பது —
சகல பல ப்ரதோ விஷ்ணு
தர்மமாவது -இஷ்டா பூர்த்வங்கள்–
இஷ்டமாவது -யாகாதி பூர்த்தமாவது வாதாஷி–குளம் வெட்டுவது போல்வன
அர்த்தமாவது-ஸூவர்ண ரஜ சாதிகள்–தங்கம் வெள்ளி வைரம் போல்வன –
காமமாவது ஐஹிக பர லௌகிக போக்கிய பதார்த்த அனுபவ ஸூ கம் -விஷயாந்தர அனுபவம்
மோஷம் ஆவது ஆத்மா அனுபவ பகவத் அனுபவங்கள்
இவற்றில் -தர்மம் சாதனயா புருஷார்த்தமாய் இருக்கும்
அர்த்தம் சாதநதாயும் ஸ்வயமாயும் புருஷார்த்தமாய் இருக்கும்
காம மோஷங்கள் இரண்டும் ஸ்வயமாய் புருஷார்த்தமாய் இருக்கும்
ஏவம் விதமான சதுர்வித பலங்களையும் அதிகார அனுகுணமாகக் கொடுக்குமவன் -என்கை-
பிரார்த்தித்தே பெற வேண்டும் -புருஷார்த்தமாக புருஷனாலே ஆர்த்திக்கப்பட வேண்டுமே –
இத்தால் சர்வ சமாஸ்ரயணீயன் ஆன இவனுடைய
சகல பல பிரதத்வத்தையும் அருளிச் செய்தார் ஆயிற்று-
தேவேந்தரச த்ரிபுவன மாதத மேக பிங்கச சர்வாததிம
த்ரிபுவன சாஞ்ச கார்த்த வீர்ய
வைதேக பரமபதம் பரசாதாய விஷ்ணும் சம்ப்ராபதஸ் சகல பல பிரயோஹீ விஷ்ணு -என்னக் கடவது இ றே –
ஏக பிங்கன் குபேரன் சொத்தை பெற்றான் -விதேக ராஜர் பரமபதம் பெற்றார் -தேவேந்திரன் மூன்று லோகம் பெற்றான் -கார்த்த வீர்ய ராஜன் -இப்படி நால்வரையும் பற்றி அருளியது-

விலஷண விக்ரஹ யுக்தனாய் –
அதாவது -விக்ரஹம் தான் ஸ்வரூப குணங்களிலும் காட்டில் அத்யந்த அபிமதமாய் -என்று தொடங்கி
மேல் அருளிச் செய்கிற வைலஷண்யத்தை யுடைய விக்ரஹத்தோடே கூடி இருக்குமவன் -என்கை
நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேக பாஸ்வரா-இத்யாதியிலே விக்ரஹ வைலஷண்யம் ஸ்ருதி பிரசித்தம்
இவ பாஸ்வர இது போலே -லேகா ரேகா -மின்னல் வெட்டு -கொடி போன்ற -கருத்த காள மேகத்தின் நடுவில் -தோயத -தண்ணீர் கொடுப்பதால் தோயதம்- சூல் கொண்ட மேகம்
தன் நடுவே கொடு இருக்கும்-என்றுமாம் -மின்னல் கொடி -அபூத உவமை -கருத்த மேகத்தை தனக்குள் வைத்துக் கொண்டு –
ஒளி அதீதமாக -வர்ணம் கறுப்பு என்பதால் காள மேகம் -பரஞ்சோதிஸ் -மின்னல் வெளுப்பாகுமே -சமன்வயப்படுத்த இப்படி –
ஸ்வ அபிமத அனுரூபைக ரூப அசிந்த்ய திவ்ய அத்புத
நித்ய நிரவதய நிரதிசய ஔஜ்வல்ய சௌந்தர்ய சௌகந்த்ய
சௌகுமார்ய லாவண்ய யௌவன அத்ய அநந்த குணநிதி திவ்ய ரூப -என்று
திவ்ய மங்கள விக்ரஹ லஷணத்தை அருளிச் செய்தார் இ றே -எம்பெருமானார்-
குமாரனார் தாதை -தாமரைக் கண்ணன் -கரி பூசி அருளிச் செய்யும் படி அன்றோ திவ்ய ரூபம் -தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் மஹா புலவ் புண்டரீக விஷாலாஷவ் -என்று கொண்டாடும்படி அன்றோ
கண்டவர் மணம் வழங்கும் ரூப ஸுந்தர்யம் அன்றோ
இத்தால்
கீழ்ச் சொன்ன ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசமாய்
ஜகத் காரணத்வத்துக்கும்–கொப்பூழ் அழகர் -எழு கமலப் பூ அழகர் -அயனைப் படைத்ததோர் எழில் உந்தி அன்றோ காட்டும்
சர்வ சமாஸ்ரயணீயத்வத்துக்கும்–மண்ணுலகில் மனுஷர் உய்ய – இனிதாக திருக்கண் வளர்ந்து –
சர்வ பல பிரத்வத்துக்கும்-அலம் புரிந்த நெடும் தடக்கை -வாங்குபவன் போதும் என்ற சொன்னதும் தானே திரும்பும்
ஏகாந்தமான
திவ்ய விக்ரஹ யோகத்தை
அருளிச் செய்தார் ஆயிற்று-

லஷ்மி பூமி நீளா நாயகனாய் -இருக்கும்
அதாவது-
உனக்கே ஏற்கும் -என்னும்படியான வை லஷண்யத்தை யுடையளாய்
சேதனருக்கு புருஷகார பூதையாயும் –
பிராப்யையாயும்
இருக்கும் பிரதான மஹிஷியான பெரிய பிராட்டியாருக்கும்
அவளோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கும் பூமி நீளைகளான மற்றை இரண்டு பிராட்டிமாருக்கும்
அநுரூப நாயகனாய் இருக்கும் -என்கை
ஹரீச்ச தி லஷ்மீச்ச பத்ன்யௌ-என்று லஷ்மி பூமிகள் இருவரையும்
வேத புருஷன் சொன்ன இது நீளைக்கும் உப லஷணம்-சகாரம் -சமுச்சயம் உண்டே
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சஹாயோ ஜனார்த்தன
உபாயயாம பூமி நீளா பயாம சேவித பரமேஸ்வர–சைவ புராணம் ஸ்லோகம் -என்னக் கடவது இ றே
லிங்க மஹாத்ம்யம் சொன்னதுக்கு பிராயச்சித்தமாக சொல்லும் ஸ்லோகம் -ஆஸ்தே பக்தைஸ் பாகவத சக -வைகுந்தது அமரரும் முனிவரும் -கைங்கர்ய மனன சீலர்கள் உண்டே –
ஸ்வ அபிமத நித்ய நிரவத்ய அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய
சீலாதய நவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண ஸ்ரீ வல்லப
ஏவம் வித பூமி நீளா நாயக -என்று இ றே எம்பெருமானார் அருளிச் செய்தது
-சர்வ கந்த சர்வ ரஸா என்னுமவனுக்கும் கந்தமூட்டும் கந்தம் கமழும் குழலி அன்றோ –
இத்தால்
கீழ்ச் சொன்ன விக்ரஹ வை லஷண்யம்
காட்டில் எரித்த நிலா வாகாதபடி
அனுபவிக்கக் கடவரான பிராட்டிமாரோட்டை சேர்த்தியை
அருளிச் செய்தார் ஆயிற்று-

—————————————————————————

சூர்ணிகை -142-

இப்படி உக்தமான ஸ்வரூபாதிகளை விஸ்தரேண உபபாதித்து அருளுகிறார் மேல்
அதில் பிரதமத்தில் அகில ஹேய பிரத்ய நீகத்வத்தை உபபாதிக்கிறார் –

அகில ஹேய பிரத்ய நீகன்
ஆகையாவது
தமஸ் ஸூ க்கு
தேஜஸ் போலேயும்
சர்ப்பத்துக்கு
கருடனைப் போலேயும்
விகாராதி தோஷங்களுக்கு
பிரதிபடனாய்
இருக்கை –

ஹேயமாவது -தோஷம்
அகில ஹேயம் -என்கையாலே -த்ரிவித சேதன அசேதன தோஷங்களையும் சொல்லுகிறது
த்ரிவித சேதன அசேதன தோஷங்களும் ஈஸ்வரனுக்கு வாராது என்று
இது தன்னை வ்யக்தமாக மேலே அருளிச் செய்கிறார் இ றே
தமஸ் ஸூ க்கு தேஜஸ் ஸூ பிரதிபடமாய் இருக்குமா போலேயும்
சர்ப்பத்துக்கு கருடன் பிரதிபடமாய் இருக்குமா போலேயும் -என்கை –
விகாராதி தோஷங்கள் -என்கிற இடத்தில்
விகார சப்தத்தாலே த்ரிவித அசிததின் யுடைய பரிணாமத்தைச் சொல்லுகிறது
ஆதி -சப்தத்தாலே பக்த சேதனருடைய அஞ்ஞான துக்கங்களையும்
முக்தருடைய சேறு தோய்த்து கழுவினால் போலே
பிரகிருதி சம்ருஷ்டராய் விடுபட்ட ஆகாரத்தையும்
நித்யருடைய பரிச்சின்ன ஸ்வரூபத்வ பாரதந்த்ரியங்களையும் சொல்லுகிறது-விபு இல்லையே -இவர்கள் –
பாரதந்த்ர்யம் தோஷமோ என்னில் புருஷனுக்கு ஸ்தன உத்பேதம் போலே ஸ்வ தந்த்ரனுக்கு தோஷம் என்கை –
இத் தோஷங்களுக்கு பிரதிபடமாய் இருக்கை யாவது -தான் மாறாது இருக்கை –
பிரதிபடம் என்கையாலே -ஆத்மா ஜ்ஞான மயோமல-என்கிறபடியே
ஸ்வரூப நிபந்தனமாக மல சம்பந்தம் இல்லையே யாகிலும்
உபாதி நிபந்தனமான-கர்ம சம்பந்தம் உண்டே – மல சம்பந்தத்துக்கு யோக்யமான
ஆத்மா ஸ்வரூபத்தில் காட்டில் பகவத் ஸ்வரூபத்துக்கு வாசி தோற்றுகிறது –
தத் ப்ரஹ்ம பரமம் நித்யம்ஷ மஷய மவ்யயம் ஏக ஸ்வரூப
ந்து சதா ஹேயா பாவச்ச நிர்மலம் -என்றும்
சமஸ்த ஹேய ரஹிதம் விஷண வாக்கியம் பரமம் பதம் -என்றும்
அவிகாராய சுததாயா நித்யாய பரமாத்மனே -என்னக் கடவது இ றே –
அமலன் விமலன் நிமலன் நிர்மலன் -வீட்டைப்பண்ணி விளையாடும் விமலன் -சதைக ரூப ரூபாயா ஸ்வரூபத்துக்கும் ஸ்வ பாவத்துக்கு -திவ்ய மங்கள விக்ரஹமும் ஏக ரூபம்

ஹேய ப்ரத்ய நீகத்வம் ஆவது -ஆஸ்ரிதர் யுடைய ஹேய நிராசகத்வத்துக்கு அடியான ஹேய பிரதிபடத்வம் -என்னவுமாம்
துயர் அறு சுடர் ஆதி -துயர் அறுக்கும் என்றும் அறும் என்றும் உண்டே வல்வினை மாள்விக்கும் -அதை பார்த்து தான் துயர் அறும்-
என்னும் ஒரு யோஜனையும் யுண்டு இ றே-
கத்ய வ்யாக்யானங்களிலே நஞ்சீயர் ஆச்ச்சான் பிள்ளை முதலான ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது
சர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும் என்கிற த்ருஷ்டாந்தத்தாலே
அதுவும் இவ்விடத்து அர்த்தம் ஆனாலோ என்னில்
விகாராதி தோஷங்களுக்கு பிரதிபடமாய் இருக்கை என்கையாலே
இவ்விடத்தில் இவர்க்கு அது விவஷிதம் அன்று–

————————————————

சூர்ணிகை -143-

அநந்தரம் அனந்ததவத்தை உப பாதிக்கிறார் –

அநந்தன் ஆகையாவது
நித்யனாய்
சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய்
இருக்கை –
அந்தம் நாஸ்தி காலம் தேசம் வஸ்து -மூன்றாலும் வரை அறுக்க முடியாதே

அதாவது
தேசத காலதோ வஸ்து தச்ச அபரிச்சேத்யம்-
விபுதவாத் -தேச பரிச்சேத ராஹித்யம்
நித்யத்வாத் -கால பரிச்சேத ராஹித்யம்
ஸ்வ வய திரிகத சமஸ்த வஸ்துக்களுக்கும் பிரகாரியாய் இருக்கையாலும்
தனக்கு பிரகார்யாந்தரம் இல்லாதபடி நிற்கையாலும்
சத்ருச வஸ்து அபாவத்தாலே வஸ்து பரிச்சேத ராஹித்யம்
அத்தை அருளிச் செய்கிறார்-

நித்யனாய் சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய் இருக்கை -என்று இத்தால்
நித்யன் ஆகையாலே -இன்ன காலத்தில் உள்ளான் காலாந்தரத்தில் இல்லை என்கிற கால பரிச்சேதம் இன்றியிலே
சகல சேதன சேதனங்களுக்கும் வ்யாபகனாய்க் கொண்டு
விபுவாய் இருக்கையாலே -இன்ன தேசத்தில் உள்ளான் தேசாந்தரத்தில் இல்லை என்கிற தேச பரிச்சேத்யம் இன்றியிலே
சர்வாந்தர்யாமி யாகையாலே சர்வத்துக்கும் தான் பிரகாரியாய் தனக்கு பிரகாரந்தரம் இல்லாத படி இருக்கையாலே
இன்ன வஸ்து போலே என்கிற வஸ்து பரிச்சேதமும் இன்றியிலே இருக்கை என்றதாயிற்று
நித்யம் விபும் சர்வச்தம் ஸூ ஸூ ஷ்மம்-என்றும்
அந்த பிரவிஷ்டச சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா -என்றும்–சாஸ்தா நியாமகன் -என்றவாறு
யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்றும்
நதத் சமாச்சா பயதிகச்ச த்ருச்யதே -என்றும் சொல்லக் கடவது இ றே-ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் அன்றோ –

———————————————————–

சூர்ணிகை -144-

இவற்றோடு தான் ஒட்டு அற்று இருக்கை அன்றிக்கே
அந்தர்யாமிதயா அவஸ்திதனாய் இருக்குமாகில்
தத்கத தோஷங்கள் வாராதோ -என்கிற சங்கையை அனுவதிக்கிறார் –

அந்தர்யாமி
ஆனால்
தோஷங்கள்
வாராதோ
வென்னில் —

—————————————–

சூர்ணிகை -145-

அத்தை பரிஹரிக்கிறார்

சரீர கதங்களான
பால்யாதிகள்
ஜீவாத்மாவுக்கு
வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதன
தோஷமும்
ஈஸ்வரனுக்கு வாராது –
பக்ஷம் – சாத்தியம்– ஹேது வைத்தே நையாயிக நியாய வாதங்கள் –

அதாவது
இந்த சரீரத்தை அதிஷ்டித்து ஸ்வா தீனமாக நிர்வஹித்துக் கொண்டு இரா நிற்கச் செய்தேயும்
தத்கதமான பால்ய யௌனாதி விகாரங்கள்
தத் அந்தர்வர்த்தியான ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் அந்தர்யாமியாய்
இவற்றை சரீரமாகக் கொண்டு இரா நிற்கச் செய்தேயும்
தத்கத தோஷம் ஈஸ்வரனுக்கு வாராது -என்கை –
ஆவி சேர் உயிரினுள்ளான் யாதுமோர் பற்றிலாத பாவனை யதனைக் கூடில் யவனயும் கூடலாமே -3–4–என்று இறே ஆழ்வாரும் அருளிச் செய்தது
பற்றற்ற பக்தி பாவனையால் கூடலாம்– மற்ற வன் பாசங்களை முற்ற விட்டு -மால் பால் மணம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு இத்யாதி
சரீரியான ஜீவாத்மாவுக்கு சரீர கதங்களான பால்யாதிகள் வந்ததில்லை யாகிலும்
சரீர சம்பந்த நிபந்தனமாக துக்க அஜஞாநாதிகள் வருகிறவோபாதி
சரீர பூதமான இவற்றோட்டை சம்பந்தத்தால் இவனுக்கும் இங்கனே சில தோஷங்கள் வாராதோ என்னில்
வாராது -அதுக்கு அடி
பிரவேச ஹேது விசேஷம்-கிருபா இச்சா தயா கருணை அனுகம்பா அவனுக்கு
இவனைப் போலே கர்மம் அடியாக அன்றிக்கே–கர்மம் அடியாகவே தான் அனுபிரவேசமும் ஸூ க துக்க அனுபவமும் -ஆத்மாவுக்கு –
அனுக்ரஹம் அடியாக இ றே அவனுக்கு இவற்றில் பிரவேசம் இருப்பது
அனஸ்நன் நன்ய -என்றும்-ஒரு மரம் இரண்டு பறவை பழம் உண்ணாமல் ஒளி விஞ்சி -கர்ம அனுபவத்தால் ஆத்ம –சமானம் விருக்ஷம் ஹிருதய கமபத்தில் –
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா -என்றும்
விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே -என்றும் சொல்லிற்று இ றே–ஜிஷ்ணு அனைத்தையும் வென்றவர்

—————————————–

சூர்ணிகை -146-

அநந்தரம்
ஜ்ஞானாந்ததைக ஸ்வரூபத்தை உப பாதிக்கிறார் –

ஞானானநதைக
ஸ்வரூபன் ஆகையாவது
ஆநந்த ரூப
ஜ்ஞானனாய்
இருக்கை –
அனைவருக்கும் எல்லா ஞானமும் அனுகூலம் -பிரதிகூல்யமாக இருப்பது கர்மத்தாலும் – அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் என்ற அறிவில்லாமை யாலும் –
பயம் கவலை –அஹந்காராதி ரூபமான ஞானம் இல்லாமல்

ஞ்ஞாந ஆநந்தங்களையே ஸ்வரூபமாக யுடையனாய் இருக்கை என்று
சப்தத்துக்கு அர்த்தம் சொல்ல வேண்டி இருக்க
ஜ்ஞானம் என்றும் ஆனந்தம் என்றும் பிரித்துச் சொல்ல
இரண்டு அவஸ்தை இன்றிக்கே
ஜ்ஞானமே ஸ்வரூபமாய்
அது தான் அனுகூலமாய் இருக்கை –
ராவணனாதிகளை பார்த்து லீலைக்கு விஷயம் -ஆழ்வாராதிகளை பார்த்து போகத்துக்கு விஷயமாக இருக்குமே ப்ரஹ்மதுக்கு –
லோகத்தில் தான் ஞானம் ஆனந்தம் இல்லாமலே இருக்குமே
ஆனந்தம் ஆகையாலே ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை என்று அருளிச் செய்கிறார் –
அனுகூல ஜ்ஞானமே ஸ்வரூபமாய் இருக்க
ஜ்ஞான ஆனந்தங்கள் என்று பிரித்துச் சொல்லுகிறது
இரண்டும் யுண்டாகைக்காக என்று இ றே
இவர் தாம் இட்டு அருளின கத்ய வ்யாக்யானத்தில் அருளிச் செய்தது-
பிள்ளை லோகாச்சார்யார் கத்ய த்ரய வியாக்யானம் அருளிச் செய்து இருக்க வேண்டும் –

————————————

சூர்ணிகை -147-

ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை என்றது தன்னை உபபாதிக்கிறார்

அதாவது
கட்டடங்க
அனுகூலமாய்
பிரகாசமுமாய்
இருக்கை –
மீனுக்கு உடம்பு எங்கும் தண்ணீர் போலே -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபன் /உயர் நலம் உடையவன் உயர்வற என்றாரே ஆழ்வார் இத்தையே –

கட்டடங்க என்றது -ஸ்வரூபம் உள்ள பரப்பு எங்கும் -என்றபடி-ஸ்வரூபம் விபு தானே -அதனால் எங்கும் என்றபடி –
இத்தால் ஸ்வரூபத்தில் அ நனுகூலமாயாதல் அபிரகாசகமாயாதல் இருக்கும் இடம் இல்லை என்கை
ஜ்ஞானாந்த ஏக ஸ்வரூபம் என்ற இதில் ஏக சப்தார்த்தம் இது இ றே
அனுகூலத்வம் ஆவது ஆஹ்லாதகரத்வம்
பிரகாசத்வம் ஆவது -ஸ்வயம் பிரகாசத்வம்-
அநந்யாதீன பிரகாசத்வா வாஹ்லாதகரத்வ ரூப ஜ்ஞான மேவ யஸ்ய ஸ்வரூபம் ச ஹிஜ்ஞானாந்ததைக ஸ்வரூப -என்னக் கடவது இ றே

————————————-

சூர்ணிகை -148-

இப்படி ஸ்வரூப வைலஷண்யத்தை யுபபாதித்த அநந்தரம்
ஸ்வரூப ஆஸ்ரிதமான குணங்களின் யுடைய
வைலஷண்யத்தை அருளிச் செய்கிறார் –

இவனுடைய
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள்
1–நித்யங்களாய்
2–நிஸ்ஸீமங்களாய்
3–நிஸ் சங்கயங்களாய்
4–நிருபாதிகங்களாய்
5–நிர்த் தோஷங்களாய்
6–சமா நாதிக ரஹீதங்களாய்
இருக்கும் –

ஆதி சப்தத்தாலே –
பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் ஸூ க்களும்
வாத்சல்யாதிகளும்
சௌர்யாதிகளும்
ஆகிற குண விசேஷங்கள் எல்லா வற்றையும் சொல்லுகிறது-

நித்யங்கள் ஆகையாவது -உத்பத்தி விநாச ரஹீதங்களாய் இருக்கை
ஸ்வரூப அனுபந்திகள் ஆகையாலே யாவதாத்மா பாவிகளாய் இருக்கும் இ றே–ஸ்வரூபம் போலே இவையும் நித்யம் –
த இமே சத்யா காமா -சாந்தோக்யம் – என்று குணங்களின் யுடைய நித்யத்வம் ஸ்ருதி சித்தம்
காமயந்த இதி காமா கல்யாணகுணா த இமே சதயா நித்யா இத்யாதயா -என்று இ றே இந்த ஸ்ருதிக்கு அர்த்தம்
விரும்பப்படும் குணங்களை கொண்டவன் -ஸத்ய காமன் -சத்யம் நித்யம் என்றவாறு –
ஈறில வண் புகழ் -என்றார் இ றே ஆழ்வார்-

நிஸ்ஸீமங்கள் – ஆகையாவது -ஓர் ஒன்றே அவதி காண ஒண்ணாது இருக்கை
எதோ வாசே நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ–தைத்ரியம் -ஆனந்த வல்லி -என்று
மீண்டு விட்டது இ றே ஆநந்த குணத்தை எல்லை காணப் புக்க வேதம்
இது ஆநந்த குணம் ஒன்றிலும் அன்று இ றே
குணங்கள் எல்லாம் இப்படி இ றே இருப்பது
உபர்யு பாயபஜபுவோபி பூருஷாந பரகல்ப்ய தே யே சதமித்ய நுகாரமாத
கிரச தவ தேகைக குணாவதீ பசாய சதா ஸ்திதிதா நோதய மதோதி சேரதே -என்னக் கடவது இ றே-அப்யுஜன் நான்முகன் –
உயர் நலம் என்று இ றே ஆழ்வாரும் அருளிச் செய்தது-
உயர்வு நலம் உலகத்தில் சொல்வதை எல்லாம் உயர்வு அறுந்து போகும் படி அன்றோ இவனுடையது

நிஸ் சங்கயங்கள் -ஆகையாவது -இப்படிப் பட்ட குணங்கள் தான் எண்ணிறந்து இருக்கை –
யதா ரதநாதி ஜலதேர சங்கயேயாநி புத்ரக ததா குணா ஹயன நதஸ்ய
அசங்க யேயோ மஹாத மன -என்றும்
சமுத்திரத்தில் ரத்தினங்கள் போலே அளவற்றவை –
வாஷாயுதைர் யஸ்ய குணா நசகயா வக்தும் சமேதைரபி சர்வ லோகை
மகா தம நச சங்கு சக்ராசி பானே விஷ்ணோர் ஜிஷ்ணோ வசூதேவா தமசஜ்ச்ய –பீஷ்ம பர்வம் -என்றும்
யானும் ஏத்தி எழு உலகும் ஏத்தினாலும் -பேச சக்தி இல்லையே குணங்கள் எண்ணிறந்தவை
சதுர்முகா யுயாதி கோபிவக்தா பவேன நா கவாபி விசுததசேதா சதே குணா
நாமயுதை கம்ம சம வதேன ந வா தேவவா பரசீத–ஸ்ரீ வராஹ புராணம் -என்றும்
அபூத உவமை பிரம்மன் ஸ்ருஷ்டித்து கோடி வாய் கொடுத்து ஏக தேசம் குணத்தை சொல்ல முடியாதே
நஹி தஸ்ய குணா சசர்வே சர்வைர் முனி கணைரபி
வக்தும் சக்யாவியுகதச்ய சத்வாதயை ரகிலை குணை-என்னக் கடவது இ றே
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -என்றார் இ றே ஆழ்வாரும்
யேஷவே கஸ்ய குண சய விபு ருடபி வைலோகோ தாம ச்வாச்ராயம் குர்யாத் தாத்ருசா வைப வைர கணிதைர்
நிஸ் ஸீம பூமா நவிதை நித்யைர் திவ்ய குணை
சத்தோ திக சுபதவை காசபதா தமாஸ்ரையை ரிததம
ஸூ ந்தர பாஹூ மச்மி சரணம் யாதோ வநாதரீச்வரம் –
என்கிற ஸ்லோகத்தில் குணங்களின் யுடைய நித்ய – நிஸ் சீமதிச சங்கயத்வங்களை- அருளிச் செய்தார் இ றே ஆழ்வான் -ஸ்ரீ ஸூ ந்த்ர பாஹு ஸ்தவத்தில்
ஒவ் ஒரு குணத்தின் ஒரு திவலை மட்டும் -சொல்லி முடிக்க முடியாதே -பிரசித்தம் அன்றோ —

நிருபாதிகங்கள் –ஆகையாவது -பரதந்திர வஸ்து கதங்கள் ஆகையாலே
சவோயாதிகளிலே ஈஸ்வர இச்சை யாகிற உபாதியை அபேஷித்து இருக்கும்-
நம்முடைய குணங்கள் அவன் கிருபையை எதிர்பார்த்து இருக்குமே –
சேதன குணங்கள் போல் அன்றிக்கே ஸ்வா பாவிகங்களாய் இருக்கும் –
ஸ்ரீ பாஷ்யத்தில் –
ஸ்வ பாவதோ நிரசத நிகில தோஷா நவதிகாதிசய சங்க யேய
கல்யாண குணகண புருஷோத்தாமோ பிதீயதே -என்கிற
இடத்துக்கு வியாக்யானம் பண்ணுகிற ஸ்ருத பிரகாசகாரர்
அநவதிக அதிசய சப்தத்தாலே -நித்ய சித்தரை வ்யாவர்த்திக்கிறது என்று முந்துற ஒரு யோஜனை பண்ணி
அனுஷ்க தேன ஸ்வ பாவத இதி பதே நவா நித்ய சித்த வ்யாவ்ருத்தி
தேஷாம் தாத்ருச குணகத்வம் ஹி பகவன் நிதயே சசாதீ நம் -என்று
அனந்தர யோஜனையில் இவ்வர்த்தத்தை அருளிச் செய்தார் இ றே
பிரபாவத்தா நித்யர் களுக்கு -ப்ரஹ்மத்துக்கு ஸ்வா பாவிகம்-என்றவாறு -வந்தேறி அவர்களுக்கு வந்த காலம் தெரியாது அதனால் நித்யம் அவர்களுக்கு
-அனுக்ரஹத்தால் வந்தது என்றவாறு
ஸ்வ பாவிகீ ஜ்ஞான பல கிரியாச -என்று குணங்களின் யுடைய ஸ்வா பாவிகத்வத்தை ஸ்ருதியும் சொல்லா நின்றது இ றே
இந்த ஸ்ருதியில் கிரியை என்கிறது நியமநத்தை -நியமன சாமர்த்தியமும் ஸ்வா பாவிகம் -என்றவாறு -ப்ரஹ்மாதிகள் பிரார்த்தித்து பெற்றது
பரா சயேதி-ஜ்ஞான சக்த்யாதி நாம ஸ்வ பாவிகத்வ முக்தம் க்ரியா -நியமனம் என்று இ றே இதுக்கும்
ஸ்ருதி பிரகாசகாரர் வியாக்யானம் பண்ணிற்று-

நிர்த் தோஷங்கள் -ஆகையாவது ‘ஹேய குணா சம்சர்க்கம் ஆகிற தோஷம் இன்றிக்கே இருக்கை –
அபஹத பாப்மா விஜரோவிமிருத்யூர் விசோகா
விஜிகதஸ் சோபிபாசச சத்யகாமஸ் சத்யா சங்கல்ப–சாந்தோக்யம் -என்றும்
சதவாதயோ ந சநதீச யத்ரச பராக்ருதா குணா -என்றும்-பிராகிருத முக்குண சேர்க்கை இல்லையே -குண சூன்யம் என்று குத்ருஷ்டிகள் இதுக்கு –
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் அஸ்ய சேஷத -என்றும்
பகவத் சப்த வாச்யானி வினா ஹேயைர் குணாதிபி-என்றும்
தேஜோ பல ஐஸ்வர்ய மகா வைபோஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி–ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்றும்-குணங்களுக்கு ஒரே கொள்கலம் –
பர பராணாம் சகலா நயதரகாலே சாதயசச நதி பராவரேசே -என்கிறபடியே–ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகன் –
ஆச்ரயம் ஹேய பிரத்ய நீகம்ஆகையாலே இவற்றுக்கு
ஹேய குணா சம்சர்க்க தோஷா பத்திக்கு யோக்யதை இல்லை இ றே –

சமா நாதிக ரஹீதங்கள் -ஆகையாவது
சேதநாந்தர குணங்களை சமமாகவும்
ஈஸ்வர குணங்களை அதிகமாகவும் யுடைத்தாய் இருக்கும்
சேதன குணங்கள் போல் அன்றிக்கே
தனக்கு ஒத்ததும் மிக்கதும் இன்றிக்கே இருக்கை –
ந தத் சமச் சாபயதி கச்ச த்ருச்யதே -என்கிற சமாதிக தரித்திர வஸ்துவை ஆச்ரயமாக யுடையவை ஆகையாலே
இவையும் சமநாதிக ரஹீதங்களாய் இருக்கும் இ றே –
தோஷோ பதாவதி சமாதி சயான சங்க யா நிர்லேப மங்கள குனௌ கதுவா ஷடதே
ஜ்ஞான தைச்வர்யா சக்தி வீர்ய பலாச சிஷ சத வாம ரங்கேச பாச இவ ரத்னம் நாக கய நதி-உத்தர சதகம் -27–என்கிற
ஸ்லோகத்தில் இவை அத்தனையும் பட்டர் அருளிச் செய்தார் இ றே-

———————————————-

சூர்ணிகை -149-

இப்படி இருந்துள்ள குணங்கள் தான் மூன்று வகைப்பட்டு
இருக்கையாலே
அம்மூன்று வகைக்கும் விஷயங்களை வகுத்து அருளிச் செய்கிறார் –

இவற்றில்
வாத்சல்யாதிகளுக்கு விஷயம் அனுகூலர்-
சௌர்யாதிகளுக்கு விஜயம் பிரதிகூலர் –
இவற்றுக்கு காரணமான
ஜ்ஞான சக்தியாதிகளுக்கு
எல்லாரும் விஷயம் –

அதாவது –
வாத்சல்யாதிகள் -என்கிற ஆதி சப்தத்தாலே
சௌசீல்ய சௌலப்ய மார்தவ ஆர்ஜவ -வாதிகளான குண விசேஷங்கள் எல்லா வற்றையும் சொல்லுகிறது –
விஷயம் அனுகூலர் என்றது ஆஸ்ரிதர் -என்றபடி –
சௌர்யாதிகளுக்கு-என்கிற ஆதி சப்தத்தாலே பராக்ரமத்தைச் சொல்லுகிறது
விஷயம் பிரதிகூலர் -என்றது -ஆஸ்ரித விரோதிகள் என்றபடி
தவஷத் அன்னம் ந போக்தவ்யம்-தவிஷ நதம நைவ போஜ்யதே
பாண்டவ நத விஷசே ராஜன மம ப்ராணா ஹி பாண்டவா -என்று
ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் என்று அருளிச் செய்தான் இ றே-
இவற்றுக்கு காரணமான ஜ்ஞான சக்தியாதிகள் -இங்கே ஆதி சப்தத்தாலே
பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் ஸூக்களைச் சொல்லுகிறது –
வாத்சல்யாதிகளுக்கும் சௌர்யாதிகளுக்கும் ஜ்ஞான சக்தியாதிகள்
காரணம் ஆகையாவது
பரக்ருஷ்டம் விஞ்ஞானம் பலமதுலம் ஐஸ்வர்யம் அகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்தி ரபிச பரம தேஜஸ் சேதி பரவர குண ஷட்கம்
பிரதம ஜம குணா நாம் நிஸ சீம நாம கணந விகுணா நாம பிரசவபூ –வரதராஜ சதகம் -என்றும்
அதுலமான பலமும் —விமரியாத வீர்யம் அடக்க முடியாத -உத்க்ருஷ்ட சக்தி தேஜஸ் -பிரதமஜம் -முதலில் எண்ணத்தக்க பிரசவ பூ உத்பத்தி ஸ்தானம் –
மங்கள குண ளாவாஷா ஷடேதா –ஸ்ரீ ரெங்கராஜா சத்வம் -என்றும் சொல்லுகிற படியே
அவற்றுக்கு ஊற்று வாயாய் இருக்கை –
அவை தான் வஸ்து உத்கர்ஷ பாதக ஷட் குணயாத்தகுணா பாவமாய்த்து இ றே இருப்பது

எம்பெருமான் யுடைய திவ்ய ஆத்ம குணங்கள் ஆவன ஜ்ஞான சக்த்யாதி குண ஷட்கங்களும்
அதிலே பிறந்த சௌசீல்யாதிகளும்-என்ற இவ் வாக்யத்துக்கு அர்த்தம் எழுதும் அளவில்
அதிலே பிறக்கை யாவது -வஸ்து உத்கர்ஷ ஆபாதக ஷாட் குண்ய ஆயத்த குண பாவம் -ஆகை -என்று இ றே விவரணத்தில்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –
உத்பத்தி என்றால் நித்யத்வம் குறையுமே –
இந்த குண ஷட்கத்தில் வைத்துக் கொண்டு ஞானம் ஆவது
அஜடம் ச்வாதம் சமபோதி நித்யம் சர்வாகஹானம் ஜ்ஞான நாம குணம் பராஹூ பிரதமம் குணசிந்தகா
என்கிறபடியே– என்றும் ஒக்க -சர்வ விஷய பிரகாசமுமாய்
ஸ்வ பிரகாசமுமான குண விசேஷம் –அஜாதம் -ஸ்வயம் பிரகாசம் -பிரத்யக்காயும் –சர்வ அவகாஹனம் –
சக்தியாவது -ஜகத் பிரகிருதி பாவோ யசஸா சக்தி பரி கீர்த்திதா -என்கிற
ஜகத் பிரகிருதி பாவமாதல்– அகடிதகட நா சாமர்த்தியம் ஆதல்
பலமாவது-சரமஹா நிசது யா சத்தம் குர்வதோ ஜகத் பலம் நாம குணசதஷ்ய கதிதோ குண சிந்தகை -என்கிற
ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்ரமம் இன்றியிலே ஒழிகை ஆதல்
பலம் தாரண சாமர்த்தியம் -என்கிற சமஸ்த வஸ்து தாரண சாமர்த்தியம் ஆதல்
ஐஸ்வர்யம் ஆவது -கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாதந்த்ர்யா பரிபருமகிதம ஐஸ்வர்யம் நாம தத் பரோகதம் குணா தத்வராதாதா சிந்தனை -என்கிற
கர்த்ருத்வ லஷணமான ஸ்வா தந்த்ர்யம் ஆதல்
சமஸ்த வஸ்து நியமன சாமர்த்தியம் ஆதல் –
வீர்யமாவது -தசயோபாத நபாவேபி விகார விரஹோ ஹி யா வீர்யம் நாம குணா சசோ யமச யுததவோ பரா ஹவய -என்று
ஜகத் உபாதானமாகா நிற்கச் செய்தேயும்
ஸ்வரூப விகாரம் இன்றியிலே ஒழியும்படியான அவிகாரயதை–விகாரம் அற்ற தன்மை வீர்யம் என்றவாறு – –
தேஜஸ் ஆவது -சஹ காரியா நபேஷா யா தத் தேஜஸ் சமுதாஹருதம -என்கிற
சஹாகார நைரபேஷம் ஆதல்
பராபி பவன சாமர்த்தியம் ஆதல் –
இவற்றுக்கு எல்லாரும் விஷயமாகை-ஆவது
அனுகூல ரஷணாதிகளுக்கும் பிரதிகூல நிரசனாதிகளுக்கும்
ஜ்ஞான சக்தியாதி விசிஷ்டனாய்க் கொண்டு
நிர்வஹிக்க வேண்டுகையாலே
இவற்றுக்கு சர்வரும் விஷயமாய் இருக்கை

———————————————————

சூர்ணிகை -150-

இப்படி குணங்களை மூன்று வகை யாக்கி அவற்றுக்கு விஷயங்களை தர்சிப்பித்த அளவு அன்றிக்கே குணங்களுக்கு பிரத்யேகம் விஷய நியமம் யுண்டாகையாலே
அத்தையும் தர்சிப்பிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி
கீழ் எடுத்த குணங்களில் சிலவற்றுக்கு தனித் தனியே குணங்களை தர்சிப்பிக்கிறார் –

ஜ்ஞானம் அஞ்ஞர்க்கு
சக்தி அசக்தர்க்கு
ஷமை சாபராதர்க்கு
கிருபை துக்கிகளுக்கு
வாத்சல்யம் சதோஷர்க்கு
சீலம் மந்தர்க்கு
ஆர்ஜவம் குடிலர்க்கு
சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு
மார்த்த்வம் விஸ்லேஷ பீருககளுக்கு
சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு
இப்படி எங்கும் கண்டு கொள்வது-

ஜ்ஞானம் ஆவது-சேதனருடைய -ஹிதாஹித நிரூபணத்துக்கு உறுப்பான குணம் -ஆகையால்
கவாஹமத்யே நததுர்புத்தி கவசாத மஹித வீஷணம் யத்திதம் மமதேவேச ததா ஜ்ஞாப்ய மாதவ -என்கிறபடியே
ஸ்வ ஹிதாஹித நிரூபணாதிகளுக்கு அஞராய் இருக்குமவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை-

சக்தி -அசக்தர்க்கு -என்றது -சக்தியாவது அகடிதகட நா சாமர்த்தியம்
ஆகையால் ஸ்வ இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களில் அசக்தராய் இருக்குமவர்கள் உடைய-கார்ய சித்திக்கு உறுப்பாய் இருக்கும் என்கை –

ஷமை சாபதாரர்க்கு என்றது -ஷமை யாவது அபராத சஹத்வம்
ஆகையால் அஹம் அஸ்ய அபராத நாம் ஆலய -என்கிறபடியே அபராத சஹிதராய் தங்களை அனுசந்தித்து இருப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
ஷமா சாபராதே நுதாபி நயுபேயோ கதம சாபராதேபி தருபதே மயி சயாத-என்று இ றே பட்டர் அருளிச் செய்தது-
-அபராதம் செய்தாலும் அனுதாபம் பட்டால் க்ஷமை கார்யகரம் ஆகும் -கர்வத்துடன் இருக்கும் என் விஷயத்தில் உன் கிருபை எப்படி காரியமாகும் -உத்தர சதகம் -96-
அருளாத நீர் -அபராத சஹத்வம் பற்றாசாக தூது -1–4-என் பிழையே நினைத்து –

கிருபை துக்கிகளுக்கு -என்றது
கிருபை யாவது பர துக்க அசஹிஷ்ணுத்வம் -ஆகையாலே
ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று துளங்குகை முதலான
துக்கம் யுடையவர்களுக்கு உறுப்பாயிருக்கும் -என்கை
தயா பரவசாய நஹராபவவயதா ஸூ காயதே மம ததஹம தாயாதிக -என்று அருளிச் செய்தார் இ றே பட்டர் -உத்தர சதகம் -98-/
துக்கப்படவே இல்லையே -சம்சாரம் துக்கம் என்று சொல்லாமல் சுகம் என்று நினைக்கிறேன் -எனக்கு ஹிதம் அஹிதமே தெரியாதே /எந்த குணத்துக்கு விஷயம் ஆவேன்

வாத்சல்யம் சதோஷர்க்கு -என்றது வாத்சல்யமாவது -அன்று ஈன்ற கன்றின் உடம்பின் வழுவை ஆதரித்துப் புஜிக்கும் தேனுவைப் போலே
அன்று அதனை ஈன்று உகந்த ஆ போலே -செய்த குற்றம் நற்றமாகவே கொள்
ஆஸ்ரிதர் யுடைய தோஷங்களைப் போக்யமாக கொள்ளுவதொரு குணம் –
ஆகையால் அவித்யா காமாதி தோஷ சஹிதராய் தங்களை அனுசந்திப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
தோஷம் இருக்கு என்று நினைக்க வேண்டுமே -இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் –

சீலம் மந்தர்க்கு -என்றது
சீலமாவது -பெரியவன் தாழ்ந்தவர்களோடே புரையறக் கலக்கும் ஸ்வ பாவம் –கஹா குணவான் இத்தை சொன்னது -ஸூ சீலன் யார் -என்றவாறு
ஆகையால் அவர்கள் யுடைய தண்மையை அனுசந்திப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –

ஆர்ஜவம் குடிலர்க்கு -என்றது -ஆர்ஜவம் ஆவது -கரண த்ரயத்தாலும் செவ்வியனாய் இருக்கை
ஆகையாலே தங்கள் உடைய கரண த்ரய கௌடில்யத்தை நினைத்து இருப்பார்க்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
-38-வயசில் தன் சரித்திரம் சொல்லிய பெருமாள் சூர்பனகைக்கு முழுவதும் சொல்லிய பின் நீ யார் என்றாரே அது அன்றோ ஆர்ஜவம்

சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு -என்றது சௌஹார்த்தம் ஆவது எப்போதும் நன்மையை சிந்தித்து இருக்கும் ஸ்வ பாவம்
ஆகையாலே சர்வ காலமும் தீமையே நினைத்து இருக்கும் துஷ்ட ஹிருதயராகத் தங்களை அனுசந்தித்து இருப்பார்க்கு
உறுப்பாய் இருக்கும் -என்கை–ஸூ ஹ்ருதயம் உள்ளவர் என்றபடி -இதை கொண்டே வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்று நாமும் போக நம்பிக்கை இத்தை கொண்டே

மார்த்வம் விஸ்லேஷ பீருக்களுக்கு -என்றது
மார்த்வம் ஆனது -ஆஸ்ரித விரஹம் பொறுக்க மாட்டாத மென்மையாகையாலே
தன்னுடைய விச்லேஷத்தில் பீரு உடையவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை –
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -மகாத்மாக்கள் விசேஷம் தரிக்க மாட்டாத மார்த்வம் –

சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு -என்றது
சௌலப்யமாவது-அதீந்த்ரியமான விக்ரஹத்தை கண்ணுக்கு இலக்காம்படி பண்ணுகை
ஆகையால் தன்னைக் காண வேணும் என்று ஆசைப் பட்டவர்களுக்கு உறுப்பாய் இருக்கும் என்கை-

இத்தால்
இவனுடைய ஜ்ஞானத்தில் அபேஷை உள்ளது -தம்தாமுடைய ஹிதாஹித நிரூபணத்தில் அறிவு இல்லாதவர்களுக்கு ஆகையாலே ஜ்ஞானம் அஜ்ஞர்க்காய் இருக்கும் –
இவனுடைய சக்தியில் அபேஷை உள்ளது -ச்வேஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் அசக்தராய் இருப்பார்க்கு ஆகையாலே சக்தி அசக்தருக்காய் இருக்கும் –
பொறை யில் அபேஷை உள்ளது அபராதம் உடையார்க்கு ஆகையாலே ஷமை சாபராதர்க்காய் இருக்கும் –
ஐயோ என்று இரங்க வேண்டுவது நோவு பட்டவர்க்கு ஆகையாலே கிருபை துக்கிகளுக்காய் இருக்கும்
தோஷத்தை போக்யமாகக் கொள்ள வேண்டுவது தோஷவான்களுக்கு ஆகையாலே வாத்சல்யம் சதோஷர்க்காய் இருக்கும் –
தண்மை பாராதே புரையறக் கலக்க வேண்டுவது தாழ்ந்தவர்கள் விஷயத்திலே ஆகையாலே சீலம் மந்தர்க்காய் இருக்கும்
கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்க் கொண்டு தன்னை அமைத்துப் பரிமாற வேண்டுவது
செவ்வைக் கேடர் விஷயத்தில் ஆகையாலே ஆர்ஜவம் குடிலர்க்காய் இருக்கும் –
தான் எப்போதும் நன்மை சிந்திக்க வேண்டுவது தம்தாமுக்கு தீமைகள் சிந்திக்கும்
தீ மனத்தர் விஷயத்தில் ஆகையாலே சௌஹார்த்தம் துஷ்ட ஹிருதயர்க்காய் இருக்கும்
விரஹம் பொறாத மென்மை வேண்டுவது விரஹத்துக்கு அஞ்சுவார் திறத்தில் ஆகையாலே
மார்த்வம் விஸ்லேஷ பீருக்களுக்காய் இருக்கும்
அதீந்த்ரமான விக்ரஹத்தை கண்ணுக்கு இலக்காக வேண்டுவது
அவ்வடிவைக் காண்கையில் ஆசை உடையவர்களுக்கு ஆகையாலே
சௌலப்யம் காண ஆசைப்பட்டவர்களுக்காய் இருக்கும்
என்று குணங்களின் உடைய விஷய பிரதி நியத்வத்தை தர்சிப்பித்தார் ஆயிற்று
இப்படி எங்கும் கண்டு கொள்வது -என்றது
கீழ் சொன்ன பிரகாரத்தில் அனுக்தமான குணங்கள் எல்லா வற்றுக்கும்
பிரத்யேகம் விஷயங்களை தர்சித்துக் கொள்வது -என்றபடி –

————————————-

சூர்ணிகை -151-

-ஏவம் பூத குண விசிஷ்டன் ஆகையாலே ஈஸ்வரன் ஆஸ்ரித விஷயத்தில் பரிமாறிப் போரும்படிகளை
விஸ்தரேண ஒரு சூர்ணிகையாலே அருளிச் செய்கிறார் மேல் –

இப்படி ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி
அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து
தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே –
நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்கேயாய்
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல்
ஜன்ம ஜ்ஞான வ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே
தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய்
சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே
அரியன செய்தும்
அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும்
அவர்களுக்கு த்ருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும்
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத்
தன்னையும் தன்னுடைமையும் வழங்கி
அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே
அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்வத்தையே நினைத்து
அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி
எல்லா தசையிலும் இனியனாய்
பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு
இருக்கும் புருஷனைப் போலே
அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே
குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும்
அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு
அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்
பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி
தான் ஈடுபட்டு
அவர்களுக்கு பாங்காய் தன்னைத் தாழ விட்டு
அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய்
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும்
புல்லிட வந்தவர்களையும்
கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு
ச்நேஹித்துக் கொண்டு போரும்-

இப்படி -என்று கீழ் உக்தமான குண யோக பிரகாரத்தை பராமர்சிக்கிறது –
ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே -என்று
குண யோகத்தை ஹேதுவாக அருளிச் செய்தது
மேல் சொல்லுகிற பரிமாற்றங்கள் எல்லாம் ஓரோர் குணகார்யம் என்று தோற்றுகைக்காக-
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி -இது கிருபா கார்யம்
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று ஈடுபடுகிறது பர துக்க அசஹிஷ்ணு வாகையாலே இ றே-
அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து –
இது சௌஹார்த்த கார்யம்
எப்போதும் ஒக்க -என்றது இவர்கள் அறிந்த காலத்தோடு அறியாத காலத்தோடு வாசி அற
சர்வ காலத்திலும் -என்றபடி
ஆஸ்ரித சர்வ மங்கள அ ந்வேஷண பரனாய் இருக்கிறது சௌஹார்யத்தாலே இ றே-
தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே –
நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்க்கேயாய்-
இது ஆஸ்ரித பாரதந்த்ர்ய கார்யம்
ஸ்வ அர்த்த பரனாயே இருத்தல் ச்வார்த்த பரார்த்தங்கள் இரண்டுக்கும்
பொதுவாய் இருத்தல் செய்கை அன்றிக்கே
சந்தரிகாதி பதார்த்தங்கள் போலே பரார்த்த ஏக வேஷனாய் இருக்கிறது பாரதந்த்ர்யத்தால் இ றே –
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல் ஜன்ம ஜ்ஞான வ்ருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே –
இது சாம்யகுண கார்யம்-த்வார த்ரயத்தால் காட்டி அருளும் சாம்ய குணம் –
ஆஸ்ரிதர் பக்கல் ஜன்மாதிகளால் உண்டான தண்மை பாராமல் பரிமாறுகிறது-ஆதி சப்தம் –தனம் ஞானம் வ்ருத்தங்கள்
சமோஹம் சர்வ பூதேஷு -என்கிறபடியே
ஜன்மாதிகளால் உத்க்ருஷ்டரோடு அபக்ருஷ்டரோடு வாசி அற
ஆஸ்ரயணீ யதவே சமனாய் இருக்கும் ஸ்வ பாவத்தாலே இ றே-
விருப்பு வெறுப்பு இல்லாமல் -உத்க்ருஷ்டம என்று விருப்பமோ அபக்ருஷ்டர் என்று வெறுப்போ இல்லாமல் சமோஹம் சர்வம்-
தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய் –
இது அசரண சரண்யத்வ கார்யம்
தாங்களும் தங்களுக்கு ரஷகர் அன்று -பிறரும் தங்களுக்கு ரஷகர் அன்று
என்று கை வாங்கின தசையில் தான் ரஷகன் ஆகிறது
பற்றிலார் பற்ற நின்றான்-7–2–7- -ஆகையாலே இ றே -நேரான தமிழ் மொழி பெயர்ப்பு அசரண்ய சரண்யன்
சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே
அரியன செய்தும் அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும் –
இது சத்யகாமத்வ கார்யம் –
மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல் வாய் மாண்டானை -என்கிறபடியே
நெடும் காலத்திலே கடல் கொண்டு போன சாந்தீபன் புத்ரனையும்
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் -என்கிறபடியே
ஜனித்த போதே
என்னுடைய மனைவி காதல் மக்களை பயத்தாலும் காணாள்-என்கிறபடியே
பெற்ற தாயும் தர்சிக்கப் பெறாத படி நாச்சியார் தங்கள் ஸ்வா தந்த்ர்யத்தால் அழைப்பிக்க–கண்ணனை காண ஸ்வா தந்தர்யம் பயன்படுத்தலாமே –
தப்பின பிள்ளைகளை -என்கிறபடியே கை தப்பிப் போய்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியிலே கிடந்த வைதிகன் புத்ரர்களையும் உரு உருவே கொடுத்தான் என்றும்
உடலோடும் கொண்டு கொடுத்தவனை -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வவ ரூபன்களோடு மீட்டுக் கொடு வந்து கொடுத்தால் போலே துஷ்கரங்களைச் செய்தும் ஆஸ்ரிதர் அபேஷிதங்களைத் தலைக் கட்டுகிறது-
ஆஸ்ரித ரஷண விஷயோ மநோரத காம ச பரதிஹதோ அபவதீதி சத்ய காமா -என்கிற சத்ய காமன் ஆகையாலே இ றே –
சத்யகாமன் ஆகையாவது சாந்தீபன் புத்ரனை கொடு வந்தால் போலே சகல அபேஷிதங்களையும் முடிக்க வல்லனாகை
என்று இ றே நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் தத்வ த்ரயத்திலே அருளிச் செய்தது-
அவர்களுக்கு த்ருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும் –
இது சத்யசங்கல்ப கார்யம் –
உத்தானபாத புத்ரனான த்ருவனுக்கு ஊர்த்த அவதியிலே அபூர்வமாய் இருப்பதொரு பதம்
கல்ப்பித்துக் கொடுத்தால் போலே
ஆஸ்ரிதர்க்கு பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்குகிறது –
அபூர்வ போக்யங்களை சிருஷ்டிக்க வல்ல அமோக சங்கல்பன் ஆகையாலே இ றே
சத்ய சங்கல்பன் ஆகையாவது த்ருவ பதம் போலே பண்டு இல்லாத வற்றையும் உண்டாக்க வல்லனாகை என்று
இதுவும் பட்டர் தாமே அருளிச் செய்தார் இ றே –
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத் தன்னையும் தன்னுடைமையும் வழங்கி –
இது ஔதார்ய கார்யம்-கொள்ளக் குறைவிலன் -அலம் புரிந்த நெடும் தடக்கையன்
வரத சகல மேதத சம்சரிதார்த்தம் சகாத்த -என்கிறபடியே
தங்கள் உடைமையை தாங்கள் விநியோகம் கொள்ளுமா போலே
விநியோகம் கொள்ளலாம் படி ஆத்மா ஆத்மீயங்களை
ஆஸ்ரிதர்க்கு கொடுக்கிறது –
கொடுத்தோம் என்கிற அபிமானமும் தன நெஞ்சில் இல்லாதபடியாகவும் கொள்ளுமவர்களுக்கு
பிரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல் பட வேண்டாத படியாகவும்
கொடுக்கும் பரம உதாரன் ஆகையால் இ றே-
அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய் –
இது கிருதிவ கார்யம்
ஆஸ்ரிதர் கார்யம் தலைக் கட்டினால் அவர்கள் கிருதக்ருத்யர் ஆகை அன்றிக்கே
அபிஷசைய ச லங்காயாம் -இத்யாதிப் படியே தான் கிருதகிருத்யனாகிறது –
ஆஸ்ரிதர் ரஷணம் பெற்றால் பேறு தன்னதாய் இருக்கும் ஸ்வ பாவத்தால் இ றே
கருதிகை யாவது -ஆஸ்ரிதர் உடைய அபேஷிதம்பூர்ணமானால் தான் க்ருதக்ருத்யனாகை-என்று இ றே பட்டரும் அருளிச் செய்ததே-
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்வத்தையே நினைத்து –
இது க்ருதஞ்ஞதா கார்யம்
தன திறத்திலே ஒரு சரணாகதி முதலான ஸூ கருத லேசத்தை பண்ணினால்
அவர்களுக்கு தான் ஒரு எல்லா நன்மைகளையும் செய்தாலும் அவற்றை ஒன்றும் நினையாதே
அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்தையே நினைத்து இருக்கிறது
செய்த நன்றி அறியுமவன் ஆகையாலே இ றே
க்ருதஞ்ஞன் ஆகையாவது ஆஸ்ரிதர் உடைய ஸூ க்ருதலவத்தை ஒன்றையுமே நினைத்து
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் பாராதே இருக்கை -என்று இதுவும் பட்டர் அருளிச் செய்தார்-

அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி எல்லா தசையிலும் இனியனாய் –
இது மாதுர்ய கார்யம் –
அநாதி காலம் பிடித்து கொளுந்திக் கிடக்கிற ப்ராக்ருத விஷய ரசங்களை விஸ்மரிக்கும் படி
சர்வ அவஸ்தையிலும் இனியனாகிறது
சர்வ ரச-என்கிறபடியே நிரதிசய போக்யனாய் இருக்கையால் இ றே-
பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு
இருக்கும் புருஷனைப் போலே அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே –
இது சாதுர்ய கார்யம்
பார்யா புத்ராதிகளோடே கூடி வர்த்திப்பான் ஒரு புருஷன் அவர்கள் செய்கிற குற்றங்களைக் கண்டு இருக்கச் செய்தேயும்
காணாதாரைப் போலே இருக்குமா போலே
ஆஸ்ரிதர் செய்து இருக்கிற குற்றங்களை கண்டு இருக்கச் செய்தேயும் தன திரு உள்ளத்தாலே நினையாது இருக்கிறது
ஆஸ்ரிதர் தோஷங்களைத் தெரியாத படி மறைக்க வல்ல சாதுர்யன் ஆகையாலே இ றே-

குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து-
இது ஸ்திரதவ கார்யம் –
சொன்னது செய்ய வேண்டும்படி தனக்கு அபிமதையாய்
சேதனர் குற்றங்களை பொறுப்பித்துச் சேர விடும் பெரிய பிராட்டியார்
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் -என்கிறபடியே குற்றங்களைக் காட்டினாலும்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்று
அவளோடு மறுதலைத்து நிச்சலனாய் நின்று ரஷிக்கிற ஸ்திர ஸ்வ பாவன் ஆகையாலே இ றே-
காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு –
இது பிரணயித்வ கார்யம்
காமினி விஷயத்தில் பிரணயித்வத்தாலே அவள் உடம்பில் அழுக்கை விரும்பும் காமுகனைப் போலே
ஆஸ்ரிதரான வர்களுடைய பிரகிருதி சம்பந்தாதி தோஷங்களை
போக்யமாகக் கொள்ளுகிறது பரம பிரணயி-ஆகையாலே இ றே –
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -நின்றார் அறியா வண்ணம் பராங்குச நாயகி உள்ளம் புகுந்தான் –
பிராட்டியும் அறியா வண்ணம் -குட்ட நாட்டுத் திருப் புலியூர் திருவாய் மொழி –

ஊற்றமுடையாய் ஸ்திர புத்தி /–பெரியாய் செய்தோம் என்று சொல்லிக் கொள்ளாமல் -புருஷோத்தமன் /
-உலகில் தோற்றமாய் நின்ற -ஸுசீலம்- சுடரே -தன் பேறாக கொள்பவன் அன்றோ –

அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய் –
இது ஆர்ஜவ கார்யம் -நேர்மை -செப்பம் யுடையாய் –
மனோ வாக் காயங்கள் மூன்றிலும் செவ்வைக் கேடராய் இருக்குமவர்கள் பக்கலிலே
நீர் ஏறா மேடுகளில் விரகாலே நீர் எற்றுவாரைப் போலே
தன்னை அமைத்து
த்ரிவித கரணங்களாலும் செவ்வியனாய் போருகிறது ருஜூ ஸ்வ பாவன் ஆகையாலே இ றே –
பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி தான் ஈடுபட்டு –
இது மார்த்த்வ கார்யம்
ஊர்த்த்வம் மாசான ந ஜீவிஷயே -என்றால்
ந ஜீவேயம் ஷணம் அபி -என்கிறபடியே-
தன்னைப் பிரிந்தால் ஆஸ்ரிதர் படும் வ்யசனம்
கடல் போன்ற தன வ்யசனத்துக்கு ஒரு குளப்படி மாதரம் என்னும் படி
தான் கிலேசப் படுகிறது
ஆஸ்ரித விரஹம் பொறுக்க மாட்டாத மென்மையாலே இ றே-

அவர்களுக்கு பாங்காக தன்னை தாழ விட்டு –
இது சௌசீல்ய கார்யம் –
ஜன்மாதிகளால் தண்ணியராய் இருக்குமவர்களுக்கு அனுகூலமாக சர்வேஸ்வரன்
சர்வ உத்க்ருஷ்டனான தன்னை தாழ விடுகிறது சீலவத்தையாலே இ றே-

அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய் –
இது சௌலப்ய கார்யம்
அவதார தசையிலே நவநீத சௌர்ய வ்யாஜத்தாலே -சிக்கென வார்த்தடிப்ப -என்கிறபடியே
யசோதாதிகளுக்கு கட்டவும் அடிக்கவும் ஆம்படி எளியனாய் இருக்கிறது -எளிவரும் இயல்வினன்-1-3-2- -ஆகையாலே இ றே-
என் அவலம் களைவாய் -ஆடுக செங்கீரை -சர்வேஸ்வரனும் இவள் சொல்லி ஆடுகிறான்
மன்னு குறுங்குடியாய் -கண்ண புரத்து அரசே -கண்ணன் மட்டும் இல்லை இவர்களும் ஆட வேண்டுமாம் இவள் அவலம் களைய –
சிக்கென ஆர்த்து அடிப்ப –இடுப்பிலும் இடம் இல்லை இடுப்புக்கும் உரலுக்கும் இடைவெளி இல்லை –
-தாம்புகளால் படைப்பை -ஒளியா வெண்ணெய் உண்டான் –ஒண் கயிறு -ஸ்ரீ வேண்டுமே அவன் உடன் சம்பந்தம் கொள்ள – -அலர்ந்தான்-அலந்தான்

அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும்புல்லிட வந்தவர்களையும்
கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு ச்நேஹித்துக் கொண்டு போரும்-
இது வாத்சல்ய கார்யம்
அந்து தான் பெற்ற கன்றுக்கு தாயான பசு இரங்கி-அன்று தான் பெற்ற கன்றுக்கு ஆ -இங்கு -சரணாகதி செய்த இன்று –அப்ரஹ்மாத்வம் இல்லாத வஸ்து இல்லையே –
முன்பு தான் ச்நேஹித்துக் கொண்டு போந்த முன் அணைக் கன்றையும்
தனக்கு போக்யமான புல்லிட வந்தவர்களையும் உட்பட மூசிக் கொம்பிலே கோத்தெடுப்பது
குளம்பாலே மிதிப்பது ஆம்போலே
பரிரம பணாதிபோக உபகாரியான பெரிய பிராட்டியாரையும்
முன்பு சிநேக விஷயமாகப் போந்த நித்ய சூரிகளையும் தள்ளி விட்டு
இன்று ஆஸ்ரயித்தவர்களை ச்நேஹித்துக் கொண்டு போருகிறது வத்சல்யன் ஆகையாலே இ றே-
சமுத்திரம் தாண்ட அன்று ஈன்ற கன்றான -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இடம் கேட்க -சுக்ரீவனை சொல்ல -சரண் அடைய சொல்லி -ஏழு கடுக்காய் எருது கெட்டார்க்கும்-

—————————————

சூர்ணிகை -152-

ஆக
ஜ்ஞான சக்தியாதி கல்யாண குண பூஷிதனாய் -என்றதை விஸ்தரேண உபபாதித்தார் கீழ் –
அநந்தரம்
சகல ஜகத சர்க்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் -என்றதை விஸ்தரேண உபபாதிப்பதாக யுபக்ரமிக்கிறார்

இவனே
சகல
ஜகத்துக்கும்
காரண
பூதன் –

அதாவது
இவன் -என்று கீழ் சொன்ன விலஷண ஸ்வரூப குண விசிஷ்டனான ஈஸ்வரனை பராமர்சிக்கிறது
அவதாரணத்தாலே -ஜகத் காரணத்வத்தின் யுடைய அந்யோந்ய வ்யவச்சேதம் பண்ணுகிறது –
ராமன் வில்லாளியே அயோக வியச்சித்தம்-பரம் -தொடர்பு உண்டு சேர்த்தி இல்லை -இல்லை என்பது இல்லை –
ப்ரஹ்மம் ஜகத் காரணமே /-மறுப்பை நிரசித்து ஸ்தாபனம்
ராமன் வில்லாளி அர்ஜுனன் வில்லாளி -ராமனே வில்லாளி -ப்ரஹ்மமே காரணம் -அவனே இங்கு என்றது அன்யா யோக விவச்சேதம் -வேறு இடத்தில் தொடர்பு இல்லை என்றவாறு –
சமன்வய -அவிரோத -சாதனா பல அத்யாய சதுஷ்டயம்
பொருந்த விடுதல் சமன்வயம் -ஜகத் காரணத்வம் ப்ரஹ்மத்துக்கு
விரோதம் வாராது -முதல் இரண்டாலே ப்ரஹ்மமே ஜகத் காரணமே நிரூபிதம்
காரணம் து த்யேயதா -அடுத்து -பக்தி சாதனம் -பலம் அடுத்து -156-அதிகரணங்கள் -நான்கும் சேர்ந்து –
உபநிஷத் கடலை கடைந்து வேத வியாசர் அருளி –
வேதாந்தத்திலே -சதேவ சோம்யே–இதம் அக்ர- ஏகமேவ ஆஸீத் -என்று சாந்தோக்யத்திலும்-சத் பொதுச் சொல் –
ப்ரஹ்ம வா இதமேக மேவாகர ஆஸீத -என்று வாஜச நேயகத்திலும்–குதிரை முகத்துடன் ஸூ ர்யன் உபதேசம் -கிருஷ்ண யஜுர் வேதம் காக்க -பறவைகள் பிடித்து வைத்து -ஸூக்ல யஜுர் வேதம் ஸூ ர்யன் உபதேசிக்க –
ப்ரஹ்மம் பொதுச் சொல் இங்கும் –
ஆத்மா வா இதமேக மேவ அக்ரே ஆஸீத் -என்று ஐதரேகத்திலும்
சத் ப்ரஹ்மாதமரூப சாமான்ய சப்தங்களாலே சொல்லப் பட்ட
காரண வஸ்து ஏது என்னும் ஆகாங்ஷையிலே
ஆத்மா என்று மீண்டும் பொதுச் சொல் –
கதி சாமான்ய நியாயத்தாலே-பொதுச் சொல்லால் சொல்லப்பட்ட -காரண வஸ்து –கதி-பர்யவசாயனம் -கொண்டு போய் சேர்க்க –
ஏகோஹ வை நாராயண ஆஸீத் -என்று மகா உபநிஷத்திலே விசேஷிக்கப் பட்ட நாராயணனே
ஜகத் காரண பூதனாக நிச்சயித்து இருக்கும் பரம வைதிகர் ஆகையாலே
இவனே என்று சாவதாரணமாக அருளிச் செய்கிறார்-
சிவன் சப்தம் மங்களம் -சிவ ஏவ -விசேஷித்து நாராயணன் / இந்திர =இதி பரம ஐஸ்வர்ய தாது –
அனைத்துக்கும் அந்தராத்மா -திரிசூலத்தை பற்றி யுள்ள சிவன் போன்ற வார்த்தைகளுக்கு -அக்னி முன்னேற்ற பாதையில் கூட்டிச் செல்லுமவன் –

சகல ஜகத்துக்கும் காரனபூதன் -என்றது
சமஷ்டி வ்யஷ்டி ரூப சமஸ்த கார்யங்களுக்கும் காரணபூதன் -என்றபடி –
பிரகிருதி தானே பரிணமித்து -நான்முகன் மூலம் செய்யும் ஸ்ருஷ்டியும் அந்தராத்மாதயா இவனே பண்ணுகிறான் என்றபடி
இத்தால் –சமன்வயமும் -அவிரோதமும் -சாதனமும் -பலமும் -ஆகிற அர்த்த சதுஷ்டத்தையும்
அடைவே பிரதிபாதிக்கிற உத்தர மீமாம்சையில்
அத்யாய சதுஷ்டயத்திலும் வைத்துக் கொண்டு
அததோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாசா -என்று ஜிஜ்ஞாசயமாக சொல்லப் பட்ட ப்ரஹ்மத்துக்கு லஷணமாக-அதனால் -அதன் பிறகு வருகிறான் -அறிய வேணும் என்ற ஆசையுடன் –
ஜனமாதயச்த யத -என்று ஜகத் காரணத்வத்தைச் சொல்லி-யார் இடத்தில் இருந்து ஜென்ம ஆதி -காத்தல் சம்ஹாரங்கள் -போன்றவை ஏற்படுமோ அதே ப்ரஹ்மம் –
அதனுடைய அயோக அந்யயோக வ்யவச்சேத முகத்தாலே
ஜகத் காரண வஸ்து பிரதிபாதிக சகல வேதாந்த வாக்யங்களுக்கும்
ப்ரஹ்மணி சம்யக அந்வயத்தை பிரதிபாதித்த பிரதம அத்யாயத்தின் அர்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று -முழுவதுமான அன்வயம் சம்யக அன்வயம்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதீ லீலே –ரக்ஷிதி தீஷே –சுருதி சிரஸி விதீப்தே -ப்ரஹ்மணி ஸ்ரீனிவாஸ்
வேங்கடம் மேய விளக்கே —சேமுஷீ பக்தி ரூபா ஞானம் ஏற்படட்டும்
ஸ்ரீ பாஷ்யார்த்தம் முழுவதும் உள்ள மங்கள ஸ்லோகம் -/ மிதுனம் சேஷி -சம்ப்ரதாயம் ஸ்ரீநிவாஸே-என்று காட்டி அருளுகிறார்

———————————————-

சூர்ணிகை -153-

அவிரோத பிரதிபாதகமான த்விதீய அத்யாயத்தின் படியே
ப்ரஹ்ம காரணத்வ விரோதியான
பரமாணு காரணவாதிகளை நிராகரிக்கிறார்

சிலர்
பரமாணுவைக்
காரணம்
என்றார்கள்-

அணுக்கள் கூடி த்வை அணு ஆகும் -த்ரி அணு ஆகும் என்பான் -அவயவம் உண்டு என்றால் -தானே ஒன்றுடன் ஓன்று சேரும் -உடையும் பாவும் சேர்ந்து -வஸ்திரம் –
பரமாணு நிரவவயம் —
மஹாதீர்க்கஅதிகரணம் -ரசனாதிகாரணம் பிரதானம் காரணம் என்பவரை நிரசனம்
/பரிமண்டலம் பரம அணு -கூடுவதற்கு வாய்ப்பு இல்லையே அவயவம் இல்லை என்பதால் –

சிலர் என்று பௌத்த ஆர்ஹத வைசேஷிகாதிகளைச் சொல்லுகிறது
இதில் -புத்த ஆர்ஹதர்க்கு கேவல பரமாணுக்களே ஜகத் காரணமாக மதமாய் இருக்கும்
வைசேஷிகாதிகளுக்கு பரமாணுக்கள் உபாதான காரணமாய்
ஆனுமானிக ஈஸ்வரன் நிமித்த காரணமாக மதமாய் இருக்கும்–சாஸ்த்ர ஸித்தமான ஈஸ்வரன் இல்லை –
கர்த்தாவை ஈஸ்வரன் என்று அனுமானித்து -ஞான சக்தி அபரிச்சேதயம்
இவர்களில் பௌத்த வைசேஷிகாதிகள் பாரத்ததிவா அப்பயதை ஐஸ்வர்ய வீயங்கள் என்று
பரமாணுக்களை சதுர்விதமாகக் கொள்ளுவார்கள்
ஆர்ஹதர்-ஜைனர் – ஏகரூபமாகக் கொள்ளுவார்கள்
இங்கனே சில விசேஷங்கள் உண்டானாலும் பரமாணு காரண்த்வ அங்கீகாரம்
எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே சிலர் என்று சமுச்சியத உபாதானம் பண்ணுகிறார் –

————————————————————–

சூர்ணிகை -154-

இவர்கள் மஹீ மஹீதராதிப சகல கார்யங்களும் பரமாணு பரிமாணம் என்று இ றே சொல்வது –
அந்த பஷத்தை நிராகரிக்கிறார் –

பரமாணுவில்
பிரமாணம் இல்லாமையாலும்
ஸ்ருதி விரோதத்தாலும்
அது சேராது-

பிரத்யக்ஷம் அனுமானம் சப்த பிரமாணம் இல்லாமையாலும் -ஆகமம் சாஸ்திரமும் சித்தமும் இல்லை

அதாவது
ஜகத் காரணதயா அங்கீ கரிக்கப் படுகிற பரமாணுக்கள்
ப்ரத்யஷ சித்தமும் இன்றியே
ஆகம சித்தியும் இன்றியே
அனுமானத்தாலே சாதிக்கப் பார்க்கில்
அது ஆகம விருத்தமான அர்த்தத்தை சாதிக்க மாட்டாமையாலே
அனுமான சித்தியும் இன்றியே இருக்கையாலே
பரமாணு சத்பாவத்தில் ஒரு பிரமாணமும் இல்லாமையாலும்
ஈச்வரனே ஜகத் காரணம் என்கிற ஸ்ருதிக்கு விரோதம் ஆகையாலும்
பரமாணுக்கள் ஜகத் காரணம் என்ற வது சேராது -என்கை-

——————————————-

சூர்ணிகை -155-

அநந்தரம் -ஜகத்துக்கு பிரக்ருதியே ஸ்வதந்திர காரணம் என்று சொல்லுகிற கபில மதத்தை
நிராகரிக்கைக்காக அத்தை உத்ஷேபிக்கிறார் –

கபிலர்
பிரதானம்
காரணம்
என்றார்கள்

இயற்கையே போதும் -என்பர் -யுக்தி வைத்தே இவர்களை நிரசிப்பர்-

கபிலர் -என்கிறது கபில மத நிஷ்டரான சாங்க்யரை–சாங்க்ய யோகம் ஸ்ரீ கீதை -சொல்வது வேறே -சாங்க்யம் புத்தி -என்றவாறு
ஜெபா குஸ்மம் படிகங்கள் போலே ஆத்மா பிரகிருதி இரண்டுமே போதும் என்பர் கபிலர் -பிரகிருதி வேறே ஜீவன் விவேக ஞானமே முக்தி என்பர்
ப்ரஹ்மம் உபாதானம் என்றால் அஜடம் தானே ஜகத்தாகும் ஜகம் ஜடம் அன்றோ என்பர் -பொன்னை வைத்து மண் குடம் வராதே என்பர்
மிருதாத்மகமான கடத்துக்கு மிருத் த்ரவ்யமே காரணம் ஆகிறாப் போலே
சத்வ ரஜஸ் தமோ மய ஸூ க துக்க மோஹாத்மகமான ஜகத்துக்கும்
குண த்ரயங்களின் யுடைய சாம்ய ரூபமான பிரதானமே
ஸ்வ தந்த்ரமான காரணம்
ததி பாவேன பரிணமியா நிற்கும்
பயஸ் ஸூ க்கு அனநயாபேஷமாக ஆதயபரிஸ் பநனம் முதலான
பரிமாண பரம்பரை ச்வத ஏவ கூடுகிறாப் போலே யும்
பாலை தயிராக மாறுவதற்கு ஈஸ்வரன் தேவை இல்லையே
மேக விமுகதமாய் ஏக ரசமாய் இருக்கிற ஜலத்துக்கு நாரி கேள தால சூத கபித்த நிம்ப திநதரிண யாதி
விசித்ர ராசா ரூபேண பரிணாம பிரவ்ருத்தி காணப் படுகிறாப் போலேயும்–
எலுமிச்சம் பழம் ரசம் /இளநீர் /விசித்திர ரஸா பரிணாமம் நீருக்கு போலே
பரிமாண ஸ்வ பாவமாய்– பிரதிசர்க அவஸ்தையில்–சம்ஹார தசையில் – சத்ருச பரிணாமமுமாய் இருந்த பிரதானத்துக்கு
அனனயாதிஷ்டிதமாகவே -சர்க வவஸ்தையில் குண வைஷம்ய நிமித்தமான விசித்ர பரிமாணம் கூடும் ஆகையாலே
பிரக்ருதியே ஸ்வ தந்த்ரமாகக் கொண்டு ஜகத் காரணம் ஆகிறது என்று இ றே அவர்கள் சொல்வது –

—————————-

சூர்ணிகை -156-

அத்தை நிராகரிக்கிறார்

பிரதானம்
1–அசேதனம் ஆகையாலும்
2–ஈஸ்வரன் அதிஷ்டியாத போது
பரிணமிக்க மாட்டாமையாலும்
3–சிருஷ்டி சம்ஹார வ்யவஸதை
கூடாமையாலும்
அதுவும் சேராது –

அதிஷ்டானம் -குறுக்கே ஓன்று வேணும் -/சேதனன் அதிஷ்டானம் பண்ணி தானே கார்யம்

அதாவது
விசித்ர ஜகத் காரேண பரிணமிப்போம் என்று இருக்கைக்கு யோக்யதை இல்லாத படி
பிரதானம் சைதன்ய ரஹித வஸ்து வாகையாலும்
பிரக்ருதிம் புருஷஞ்சைவ ப்ரவிசயாத மேசசயா ஹரி ஷோபயாமாச சம்ப்ராப்தே சர்வ காலே வயயா வயயௌ -என்கிறபடியே
தன இச்சையால் புகுந்து -கலக்கி -ஒன்றுக்கு ஓன்று ஒவ்வாத இரண்டையும் கலக்கி -பிரதானத்தையும் புருஷனையும் -சரீரமே நான் என்று
அபிமானிக்கும் படி அன்றோ கலக்கி -கலக்குபன் இருந்தால் ஒழிய தானே கலங்க முடியாதே –
ஈஸ்வரன் அதிஷ்டித்த போது ஒழிய பரிணமிக்க மாட்டாமையாலும்
தத் அதிஷ்டானம் ஒழிய பரிணமிக்கும் ஆகில்
சர்வ காலமும் சிருஷ்டியாய் செல்லுமது ஒழிய
சம்ஹ்ருதயமாய்க் கிடக்கை என்னுமது கூடாமையாலே
கால பேதேன வருகிற சிருஷ்டி சம்ஹார வ்யவஸ்ததை கூடாமையாலும்
பிரதானம் காரணம் என்கிற அதுவும் சேராது என்கை
அதுவும் -என்று பூர்வ யுக்த பரமாணு காரண வாதத்தை சமுச்சயிக்கிறது —

ரசனா அனுபத்தேதே ச -பிரகிருதி தானே ரசனை பண்ணுவது பொருந்தாது என்றவாறு -அசேதனம் ஆனபடியால் -சைதன்யம்
ந அனுமானம் பிரவ்ருத்தேச –
யத்ர அபாவத்தா ச –
அன்யத்ர அபாவத் ச -த்ரினாவது-புல்லை போலே -புல்லை கொண்டு காளைமாடு பாலை தராதே என்று யுக்தி கொண்டே நிரசனம்

————————————

சூர்ணிகை -157-

இப்படி அசேதனமான பிரதானத்தை ஜகத் காரணமாகக் கொள்ளுகிற பஷத்தை நிராகரித்த
அநந்தரம்
சேதனனை ஜகத் காரணமாகக் கொள்ளும் பாசுபதாதி மதத்தை நிராகரிக்கிறார்

சேதனனும்
காரணம்
ஆகமாட்டான்

பொருந்தாதது அவனும் படைக்கப்பட்டவன் தானே -பசுபதியும் –

சப்தத்தாலே கீழ்ச் சொன்ன அசேதனத்தை சமுச்சயிகிறது
ஆகம சித்த ஈஸ்வரன் நிமித்த காரணம் என்றும்
ஆனுமானி கேஸ்வரன் நிமித்த காரணம் என்றும்
பாசுபத வைஷிகாதிகள் சொல்லுகிற ருத்ரன்
சேதனரில் அந்யதமன் இ றே
ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த ததாகரே –இத்யாதி வாக்யங்களைக் கொண்டு
சேதனரில் அந்யதமனான ப்ரஹ்மாவையும் ஜகத் காரணமாகச் சொல்லுவாரும் யுண்டு இ றே
அவை எல்லா வற்றையும் திரு உள்ளம் பற்றி இ றே சேதனனும் -என்று பொதுவிலே அருளிச் செய்தது
காரணம் ஆகமாட்டான் -என்றது காரணமாக ஷமன் அல்லன் -என்றபடி-

—————————————————-

சூர்ணிகை -158-

எத்தாலே -என்ன அருளிச் செய்கிறார் –

கர்ம
பரதந்தனுமாய்
துக்கியுமாய்
இருக்கையாலே –

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி ஆபத் விமோசனம் -இவனே / ருத்ரன் நான்முகன் பதவி தானே –

அதாவது
சங்குசித ஜ்ஞான சக்திகனாய் கொண்டு தான் நினைத்த படி ஒன்றும் செய்ய வல்ல ஷமன் அல்லாதபடி
கர்மாதீனனுமாய்
ஆனந்தியாக் கொண்டு ஜகத் வியாபாரத்திலே மூளுகைக்கு
யோக்யதை இல்லாதபடி துக்கியுமாய் இருக்கையாலே -என்கை –
அபஹத பாபமா -என்கிறபடியே
அகர்ம வச்யனுமாய் -ஆனந்தமய -என்கிறபடியே நிரதிசய ஆனந்தியுமாய்
இருக்கிற அவனுக்கே இ றே அப்ரதிஹத ஜ்ஞான சக்திகனாய் மன ப்ரீத்தியை யுடையவன் பண்ணும் ஜகத் வியாபாரம் கூடுவது
ப்ரஹ்மா தயாச சகலா தேவா மனுஷ்யா பசவச ததா
விஷ்ணோர் மயா மஹா
வர்த்த மோஹாந்ததம சர்வ்ருதா ஆப்ரஹம ஸ்தம்ப
பர்ய நதா ஜகத நதா வ்யவச்திதா
ப்ராணின கர்ம ஜனித சம்சார வசவர்த் தின-என்கிறபடியே
கர்ம வச்யருமாய்
தத க்ரோத ப்ரீ தேன சமாகத நய நேன ச வாமாங்குஷ்ட நகா கரேண சின நம தஸ்ய சிரோ மய
யஸ்மாத் நபரா தஸ்ய சிரச் சின்னம் தவயா மம தசமாச சாப சமா விஸ்ட கபாலீதவம் பவிஷ்யசி -என்கிறபடியே
தலை அறுப்பாரும் அறுப்புண்பாருமாய்க் கொண்டு
துக்கிக்களுமாய் இருப்பார்க்கு
ஜகத் ஸ்ருஷ்டியாதி வியாபாரம் கூடாது இ றே-

————————————————————

சூர்ணிகை -159-

ஆக இப்படி விரோதி பரிஹாரங்களைப் பண்ணி
பிரதிஞ்ஞா அனுகுணமாக நிகமிக்கிறார்

ஆகையால்
ஈச்வரனே
ஜகத்துக்கு
காரணம்

ஆகையால் என்று
சேதன அசேதனங்கள் இரண்டும்
காரணம் இன்றிக்கே ஒழிகையாலே -என்கை -பரம சேதனனே காரணம் என்றவாறு

———————————————————–

சூர்ணிகை -160-

லோகத்திலே அவித்யா கர்ம நிபந்தனமாகவும்
பர நியோக நிபந்தனமாகவும்
காரணமாகை யுண்டாகையாலே -அவற்றைக் கழித்து
இவனுடைய காரண ஹேதுவை-அருளிச் செய்கிறார் –

இவன் காரணம் ஆகிறது
அவித்யா
கர்ம
பர நியோகாதிகளால்
அன்றிக்கே
ஸ்வ இச்சையாலே –

அவித்யாவோ கர்மமோ பிறரால் தூண்டப்பட்டோ லோகத்தில் காரணம் ஆகிறதே -/ஸ்வ இச்சா மாத்திரை நிதானம் -அவதார ரஹஸ்யம் -நான்கு ஸ்லோகங்கள் -ஆறு காரணங்கள் –

அதாவது
அவித்யா கர்ம நிபந்தனமான காரணத்வம் சகல ஜந்து சாதாரணம்
அதாவது -லோகத்தில் ஒன்றுக்கு ஓன்று உத்பாதகமாய்க் கொண்டு வருகிற காரணத்வம்
வைஷயிக ஸூ க பிராவண்ய ஹேதுவான அஞானத்தாலும் கர்மத்தாலும் இ றே–விஷய ஸூக ப்ராவண்யம் -ஹேதுவே அஞ்ஞானம் -அது கர்மத்தால் –
அதில் சாஸ்திர வச்யமான வற்றினுடைய உத்பாதகத்வம் கர்ம பிரதானமாய் இருக்கும்-பித்ருக்கள் கடனை தீர்க்க குழந்தை பெறுவது -கர்ம காரணம் என்றவாறு
அல்லாதது அவித்யா பிரதானமாய் இருக்கும்
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டு இராது
அதிகாரி புருஷர்களான ப்ரஹ்மாதிகள் யுடைய காரணத்வம் பர நியோக பிரதானமாய் இருக்கும்
பிரஜாபத்யம் த்வயா கர்ம பூர்வம் மயி நிவேசி தம் -என்றும்
யெதௌ தவௌ புருஷ சரே ஷட்டௌ பிரசாத க்ரோத ஜௌ சம்ருதௌ
தாதாதா சித்தப நனானௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-இத்யாதிகளிலே கண்டு கொள்வது –
ஆதி சப்தத்தாலே இவர்க்கு விவஷிதம் –அவர்ஜீயமான -ராகமோ –என்று-விட முடியாத ஆசை என்றவாறு -தேவை இல்லை என்று தெரிந்தாலும் -வாசனை ருசி அடியாக –
நடிவில் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்தாராம் இத்தனை –
அந்த ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் எம்பெருமானுக்கு அவித்யா கர்ம நிபந்தனமோ
அன்றிக்கே அவர்ஜீயமான ராகமோ –
இல்லையாகில் பரப்ரேரிதனாய்க் கொண்டு செய்கிறானோ என்று இ றே
அவர் சங்கா வாக்யத்தில் அருளிச் செய்தது
இவற்றால் அன்றிக்கே -ஸ்வ இச்சையால் -என்றது -நிவாரகர் இல்லாத ஸ்வா தந்தர்யம் உண்டே அவனுக்கு
நிரவத்யம் நிரஞ்சனம் -என்றும்
அபஹதபப்மா -என்றும்
ந தசயேசகசசந-என்கிறபடியே
அவித்யாதி தோஷ பிரதிபடனாய்
தனக்கு ஒரு நியாமர் இன்றிக்கே இருப்பானாய்
இருப்பவன் ஒருவன் ஆகையாலே தன் இச்சை ஒழிய ஹேதவாந்தரம் இல்லை -என்றபடி –
அசித விசேஷிதா ந பிரளய ஸீம நி சம்சரத கரண களேபரைர் கடயிதும் தயமா நம நா
வரத நிஜேச சயைவ பரவாநகரோ ப்ரக்ருதம் மஹதபிமா நபூத கரணாவளி கோர கிணீம்-என்றும்
ப்ரளய சமய ஸூ ப்தம் சவம் சரீரை கதேசம வரத சிதசிதாககயம் ஸ்வ இச்சையா
விஸ்தருணாந கசிதமிவ கலாபம் சிதரமாததய தூன வன அனுசிகினி சிகீவ கரீடசி ஸ்ரீ சம்ஷம் –உத்தர சதகம் -44—என்று இ றே பட்டர் அருளிச் செய்தது —
பெண் மயிலை பார்த்து ஆன் மயில் தோகை விரிப்பது போலே உன் சரீர ஏக தேசத்தில் உள்ள சேதன அசேதனங்களை ஸ்ருஷ்ட்டித்தீர் –
அங்கீ கரித்து -பிராட்டி புருவ நெரிப்பே–பிரமாணமாக கொண்டீர் –

—————————————————————-

சூர்ணிகை -161-

இப்படி இச்சை யானாலும் இது தான் ஆயாச ரூபமாய் இருக்குமோ என்ன
அருளிச் செய்கிறார் –

ஸ்வ சங்கல்பத்தாலே
செய்கையாலே
இது தான் வருத்தம் அற்று
இருக்கும் –

அதாவது
யத்ன ரூபமான காயிக வியாபாரத்தால் அன்றிக்கே
அயத்னமான மானச வியாபார ரூப சங்கல்ப்பத்தாலே செய்கையாலே
இந்த ஜகத் சிருஷ்டி ரூப வியாபாரம் தான் இவனுக்கு அநாயாசமாய் இருக்கும் என்கை –
சோகாமயத் பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
மனசைவ ஜகத் ஸ்ருஷ்டும் சம்ஹாராஞ்ச கரோதி யா
தச்ய அரிபஷ ஷபனேகியா நுதயம் விசதர -என்றும்
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய்
முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்துன் பெருமை மாசூணாதோ மாயோனே -என்றும்
சொல்லக் கடவது இ றே-
மனம் செய் ஞானம் -மானஸ சங்கல்பம் –

—————————————

சூர்ணிகை -162-

அநாயாசமாய் இருந்ததே யாகிலும் அவாப்த சமஸ்த காமத்தா
பரி பூர்ணனாய் இருக்கிறவனுக்கு
இந்த வியாபாரத்தால் பிரயோஜனம் என் -என்ன -அருளிச் செய்கிறார் –

இதுக்கு
பிரயோஜனம்
கேவல
லீலை –

அதாவது
இந்த ஜகத் சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனம் வெறும் லீலை -என்றபடி –
லீலை யாவது -தாதாத்விக்ம ரசம் ஒழிய காலாந்தரத்தில் வருவது ஒரு பலத்தை
கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் –
இதுக்கு பிரயோஜனம் -என்று
சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
தாதத்விக்ம ரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது
இந்த சிருஷ்டி ரூப வியாபாரமான சார்வ பௌமரான ராஜாக்களுக்கு த்யூதாதிகள் போலேயும்
பாலர்க்கு மணல் கொட்டகம் போலேயும்
தாதாத்ரவிக ரசமாய் இருப்பது ஓன்று இ றே இவனுக்கு –
இத்தால் -லோகவ்தது லீலா கைவல்யம்-2–1–33- -என்கிற சூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
கரீடதோ பால கச ஏவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய -என்று ஸ்ரீ பராசர பகவானும்
அப்ரமேயோ நியோஜ் யசச யத்ர காம கமோ வசீ
மோததே பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்று ஸ்ரீ வேத வியாச பகவானும்
நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும்
இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்றும்
அபியுக்தரும் இவனுடைய ஜகத் வியாபாரத்துக்கு பிரயோஜனம் லீலையாகவே சொன்னார்கள் இ றே-

ஆனால் –
சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஓன்று ஒன்றி யுலகம் படைத்தான் -என்றும்
உய்ய வுலகு படைத்து -என்றும்
விசித்ரா தேக சம்பத்தி ரீச்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா -விஷ்ணு தத்வம் -என்றும்
மாயன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை —ராமானுஜ நூற்றந்தாதி -என்றும்
அசித் அவிசேஷிதாந பிரளய ஸீ ம நி சமசரத கரண களேபரைர் கடயிதும் தயமான மநா -என்றும்
சேதனர் உடைய உஜ்ஜீவனம் பிரயோஜனமாக ஜகத் சிருஷ்டி பண்ணினான்
என்று சொல்லுகிற இவ் வசனங்களுக்கு வையர்த்யம் வாராதோ -என்னில் வாராது –
எங்கனே என்னில் –
உபய பிரயோஜனமும் உண்டாய் இருக்கச் செய்தேயும் லீலையே பிரயோஜனம் என்ற இது
ப்ராசுர்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை யாகையாலே
ரூப பிரகார பரிணாம கருதவ்ய வசத்தம விச்வம் விபர்யசிம் அன்யதசசச கர்த்தும்
ஷாமயன் ஸ்வ பாவ நியமம் கிமுதீ ஷசே த்வம் ஸ்வதந
த்ரயம் ஐஸ்வர்யம் அபர்யநுயோஜய மாஹூ–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –என்கிறபடியே
நினைத்த படி செய்ய வல்ல சக்திமான் ஆகையாலே
சகல ஆத்மாக்களையும் யுகபதேவ -சக காலத்திலேயே – முக்தராக்க வல்லனாய்
இருக்கச் செய்தேயும்
ஸ்வா தீன ஸ்வரூப ஸ்தித்யாதிகரான ஆத்மாக்களை
கர்மத்தை வ்யாஜி கரித்து
கை கழிய விட்டு சாஸ்திர மரியாதையிலே வரவர அங்கீ கரிப்பன் என்று இருக்கிறது -லீலா ரச இச்சையாலே இ றே
லீலா விபூதி என்று இ றே இது தனக்கு நிரூபகம்
ஆகையால் இவ்விபூதியில் லீலையே ப்ரசுர பிரயோஜனமாகச் சொல்லுகையாலே
சூத்திர காராதிகள் எல்லாரும் சிருஷ்டி பிரயோஜனம் லீலையாகச் சொல்லுகையாலே
இவரும் -கேவல லீலை -என்று அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————–

சூர்ணிகை -163-

இப்படி ஜகத் சிருஷ்டி பண்ணுகிறது லீலார்த்தமாக ஆகில்
சம்ஹார தசையில் லீலை குலையாதோ –
என்கிற சங்கையை அனுவதிக்கிறார்

ஆனால்
சம்ஹாரத்தில்
லீலை ‘
குலையாதோ
என்னில் –

————————————————–

சூர்ணிகை -164-

அத்தைப் பரிஹரிக்கிறார்

சம்ஹாரம்
தானும்
லீலை -யாகையால்
குலையாது –

அதாவது
கொட்டகம் இட்டு விளையாடுகிற பாலர்க்கு
இட்ட கொட்டகம் தன்னை மீள அழித்துப் பொகடுகிறது தானும்
லீலையாய் இருக்குமா போலே
இவற்றை சம்ஹரிக்கை தானும் ஸ்ருஷ்டியோபாதி லீலையாய் இருக்கையாலே
அப்போதும் லீலை குலையாது -என்றபடி –
அகில புவன ஜன்ம ஸ்த்தேம பங்காதி லீலே -என்றும்
நிகில ஜகத் உதய விபவ லய லீல-என்றும்
ஸ்ருஷ்டியோபாதி சம்ஹாரத்தையும் அவனுக்கு லீலையாக அருளிச் செய்தார் இ றே எம்பெருமானார்-

———————————————————————————-

ஆக
இதுக்கு கீழே
ஈச்வரனே ஜகத்துக்கு காரணம் -என்றும்
இவன் காரணம் ஆகிறது ஹேத்வந்தரங்களால் அன்று என்றும்
ஸ்வ இச்சையால் -என்றும்
சங்கல்ப மாத்திர வகலபதம் ஆகையாலே இதுதான் அநாயாசமமாய் இருக்கும் என்றும்
இது தனக்கு பிரயோஜனம் லீலை என்றும்
சொல்லி நின்றது –

————————————-

சூர்ணிகை -165-

இனி இவனுக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வம்
கடபடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான
காரணத்வம் போலே நிமித்தத்வ மாதரமோ –
என்கிற சங்கையில் உபாதான காரணமும் இவனே
என்னுமத்தை அருளிச் செய்கிறார்

இவன் தானே
ஐகத்தாய்ப்
பரிணமிக்கையாலே
உபாதானமமாயும்
இருக்கும் –

பிரக்ருதிச் ச -உபாதானமும் அவனே ப்ரதிஞ்ஞா -வும் பொருந்துகிற படியால் -ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்த படி ஸ்வேதா கேது –
இவன் -தானே பரிணமித்து ஜகத் —தான் தான் உபாதான காரணம் -பரிணமிக்கும் ஓன்று தானே உபாதானம் -தான் -விசுஷ்ட ப்ரஹ்மம் என்றபடி –
நிமித்தமும் உபாதானமும் ப்ரஹ்மம் அபின்ன உபாதானம் -ப்ரஹ்மம் என்றபடி –

அதாவது
லோகத்தில் கார்ய உத்பத்தியில் காரணம் நிமித்த உபாதான சஹகாரி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் -நிமித்த காரணம் ஆவது -உபாதானமான வஸ்துவை
கார்ய ரூபேண விகரிப்பிக்கும் கர்த்ரு வஸ்து
உபாதான காரணம் ஆவது கார்ய ரூபேண விகரிக்கைக்கு யோக்யமான வஸ்து
சஹகாரி காரணம் ஆவது கார்ய உத்பத்திக்கு உப கரணமான வஸ்து –
கடபடாதிகளுக்கு குலால குவின நாதிகள் நிமித்தமாய்–குயவன் நெசவாளி –
ம்ருத்தந்த வாதிகள் உபாதானமாய்–மண்ணும் நூலும்
தண்ட சக்ர வேமாதிகள் சஹ காரியாய் இருக்கும்
இங்கன் அன்றிக்கே ஜகத் ரூப கராய உத்பத்தியில் ஈச்வரனே த்ரிவித காரணமுமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
பஹூச்யாம்–சாந்தோக்யம் -என்கிற சங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு நிமித்த காரணனாயும்
நாம ரூப விபாக அநர்ஹமாம் படி தன்னோடு கூடிக் கிடக்கிற சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு உபாதான காரணமாயும்
ஜ்ஞான சக்த்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு சஹகாரி காரணமாயும் இருக்கும்
ஆகையாலே உபாதான காரணமும் இவனே -என்கிறார் –
இவன் -என்று கீழ் நிமித்த காரணமாகச் சொன்ன ஈஸ்வரனைப் பரமார்சிக்கிறது
சித் அசித்துக்கள் இரண்டும் அப்ருக சித்த விசேஷணமாய்க் கொண்டு
தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அந்தர்பூதமாம் படி இருக்கையாலே
தானே ஜகதாய்ப் பரிணமிக்கையாலே -என்கிறார்
உபதானமுமாயும் இருக்கும் -என்று கீழ்ச் சொன்ன நிமித்த காரணத்தோடு
உபாதான காரணத்வத்தை சமுச்சயிக்கிறது –

இத்தால் ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் காரணத்வத்தை பிரதிபாதிக்கிற வேதாந்த சூத்ரத்தில்
நிமித்த காரணத்வத்தை சாதித்த அநந்தரம்
பிரகிருதி ச்ச பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத -என்று உபாதான காரணத்வத்தையும்
சொன்னால் போலே இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று
பிரகிருதி ச்ச -என்றதை உட்கொண்டே இவரும் -உபாதானமுமாயும் -இருக்கும் என்றது-சக்கரம் உம்மைத்தொகை
அங்கு -பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத-என்று சாத்யம் முன்னாக சாதனத்தைச் சொல்லிற்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் -முன்னே சொல்லி
இங்கு -இவன் தானேஜகத்தாய பரினமிக்கையாலே -என்று
சாதனம் முன்னாக சாத்தியத்தைச் சொல்லிற்று
பரிணாமம் அடைந்து ஜகத்தாக ஆனது -தானே முன்னே சொல்லி –
அங்கு -யேநா சரு நம ச்ருதம் பவதி அம்தம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம் சயாத-என்று
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான பிரதிஞ்ஞையாலும்
யதா சோமயை கேன ம்ருத பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விஞ்ஞா தம ஸ்யாத்-என்கிற
தத் உத்பாதகமான த்ருஷ்டாந்தத்தாலும்–விளக்கும் த்ருஷ்டாந்தத்தாலும் –
ஏக வஸ்து பரிணாமம் ஜகத்து -என்று இ றே சொல்லிற்று –
அந்த ஏக வஸ்து ஆகிறது சூஷ்ம சிதசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் இ றே
அத்தை இ றே இவரும் -தானே -என்கிற சொல்லால் அருளிச் செய்தது –
ஆகையால் அந்த சூத்தார்த்தமே இது என்னத் தட்டில்லை –

ஏகமேவ அத்விதீயம் –மஹா வாக்கியம் -சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமல் இருந்தது -சத் கார்ய வாதம் –என்றும்-நிமித்தம் தேட வேண்டாம் –
காரணமாக சத்தாகவே இருந்தது -உபாதானமாக சூஷ்மமாக இருந்தது –
தத்வமஸி -இதுவும் மஹா வாக்கியம்
நிர்விசேஷ சின் மாத்திரம் அத்வைதம் —
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்-அந்த ப்ரஹ்மம் தானே தன்னை செய்து கொண்டது உபாதானமாக -யானாய் தன்னைத் தான் பாடி –
ச்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–12-என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சர்க கர்த்தா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச
ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-இத்யாதிகளால்
படைக்கப்பட்ட வையும் அவரே கர்த்தாவும் அவரே -பரிபாலிப்பவனும் அவனே
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இ றே –

———————————————

சூர்ணிகை -166-

இப்படி தான் ஜகத்தாய் பரிணமிக்கும் ஆகில்
நிர்க்குணம் நிரஞ்சனம் நிஷ்களம் நிஷ்க்ரியம் சாந்தம் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
அவிகாராய சுத்தாய -என்றும்
இவனை நிர்விகாரனாகச் சொல்லும்படி எங்கனே
என்கிற சங்கையை அனுவதிக்கிறார்

ஆனால்
நிர்விகாரன்
என்னும்படி
என்
என்னில்-

———————————–

சூர்ணிகை -167-

அத்தை பரிஹரிக்கிறார்

ஸ்வரூபத்துக்கு
விகாரம்
இல்லாமையாலே –

அதாவது
சித் அசித் ரூப விசேஷண விசிஷ்டனான– தானே– ஜகதாய்ப் பரிணமிக்கும் இடத்தில்–வ்யாவ்ருத்தி அர்த்தம் தானே விசேஷணம் —
விசேஷண விசிஷ்டமாக விசேஷயம் இருக்கும் அப்ருதக் ஸ்திதி பிரியாமல் இருக்கும் -/ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணம் அன்றோ ப்ரஹ்மம் /
-ஸ்வ ஆதீன த்ரிவித சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
விசேஷ்யமான ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லாமையாலே
நிர்விகாரன் என்னக் குறை இல்லை என்கை –
சரீரம் -ஏக தேசம் தானே பரிணமிக்கும் -திருமேனியில் ஒரு ஏக தேசத்தில் ஒரு துளி தானே பரிணமிக்கும்

————————————————

சூர்ணிகை -168-

ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லை யாகில்
இவன் தானே ஜகத்தாய பரிணமிக்கிறான் -என்ற பரிணாமம்
இவனுக்கு உண்டாம்படி எங்கனே
என்கிற சங்கையை அனுவதிக்கிறார் –

அதில்
பரிணாமம்
உண்டாம்படி
என்
என்னில் –

————————————————————————————–

சூர்ணிகை -169-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

விசிஷ்ட
விசேஷண
சத்வாரகமாக –

சேதன அசேதன மூலமாக பரிணமிக்கிறார் ப்ரஹ்மம் -என்றவாறு -விசேஷணம் வழியாக பரிணமிக்கும் –
விசேஷணம் கூடியே இருக்கும் -விசிஷ்டமாகவே இருக்கும் –
ப்ரஹ்மத்தை விட்டு எப்போதும் பிரியமாட்டோம் என்கிற சிறப்புடன் கூடி இருப்பதால் -இவரே மாறுகிறார் என்றால் தப்பில்லை
ஸ்வரூபேண விகாரம் இல்லை –

விசிஷ்டஞ்ச தத் விசேஷணம் ச இ தி விசிஷ்ட விசேஷணம் -என்று-முன்னால் அடை மொழி -பெயர்ச் சொல் சித்த அசித் –
பிரதமம் கர்ம தாரயா சமாசத்தைப் பண்ணி
த்வாரேண சஹ வர்த்தத இதி சத்வாரகம் – என்று
அனனதர பதத்தை பஹூ வரீகித்து–அதை த்வாரமாக கொண்டு –
விசிஷ்ட விசேஷண -சத்வாரகம்
என்று த்ருதியாதத புருஷனாக சப்தத்துக்கு–இதனால் -சித்த அசித்துக்களால் -என்று – வ்யுத்புத்தி பண்ணிக் கொள்வது-
விசிஷ்டம் ஆவது -விசேஷ யுக்தமானதாய்
விசிஷ்டமான விசேஷணம் என்று தண்ட குண்டலாதிகள் போல் அன்றிக்கே-கழற்றி வைக்க முடியாத படி –
சரீர பூதம் ஆகையாலே ப்ருதக் சித்த யர்ஹம் அல்லாத விசேஷத்தை உடைத்தான
சித் அசித் ரூப விசேஷணத்தைச் சொல்லுகிறது –
அன்றிக்கே
விசிஷ்ட விசேஷணம் என்கிற இதுக்கு
சரீர பூதமாய்க் கொண்டு என்றும் ஒக்கத் தன்னோடு கூடி இருக்கிற விசேஷணம் என்றும் பொருளாம்
அப்போதும் பிருதக் சித்தி அர்ஹமான தண்ட குண்டலாதிகளில் வ்யாவ்ருத்தி சித்திக்கும் இ றே
விசேஷணத்தாலே சத்வாரகமாக என்றது
இப்படி அப்ருதக் சித்த விசேஷணம் ஆகிற ஹேதுவாலே
த்வார சஹிதமாக இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்கை
இத்தால்
அப்ருதக் சித்தமான சித் அசித் ரூப விசேஷண த்வாரா
இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்றது ஆயிற்று –

————————————————–

சூர்ணிகை -170-

இப்படி ஸ்வரூபத்துக்கு விகாரம் இன்றிக்கே இருக்க
ஸ்வ சரீர பூத விசேஷண த்வாரா
கார்ய ஜகத்துக்கு எல்லாம் இவனே உபாதானமாகக் கூடுமோ -என்ன
அருளிச் செய்கிறார்-

ஒரு சிலந்திக்கு
உண்டான
ஸ்வபாவம்
சர்வ சக்திக்கு
கூடாது
ஒழியாது இ றே

நூலை விட நினைத்து நூலை விட்டு சிலந்தி மாறாமல்
இருக்க -ப்ரஹ்மம் சொல்ல வேண்டுமோ என்றபடி

அதாவது
அல்ப சக்திகதமான சிலந்திக்கு ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே
ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தாலே தத் அனுஜாதமாக கார்ய ஜாததுக்குத் தான் உபாதானமாம் படியாம் யுண்டான
ஸ்வ பாவம்-
பராச்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே -என்று ஒதப் படுகிற சர்வ சக்திக்கு கூடாது ஒழியாது இ றே என்கை-
யாதோரண நாபிஸ் ஸ்ருஜதே கருஹண தே ச-முண்டக உபநிஷத் -என்றும்
ஊராண நாபிர் யதா ஸ்ருஷ்ட்வா ஸ்வயம் தத க்ரசதே-என்னக் கடவது இ றே
கார்யே நந்தே சவத நுமுகதச தவா முபாதா நாமா ஹூ ஸ
சா தே சகதிச ஸூ கர மிதரச சேதி வேலாம விலங்கய
இச்சா யாவத விஹரதி சதா ரெங்கராஜா நபேஷா சைவாச நாததி சயகரீ சோரண நாபௌ விபாவய–ஸ்ரீ ரெங்கராஜா சதகம் 2—31-என்று
அருளிச் செய்தார் இ றே பட்டர் -வரம்பிலாய மாய மாயன் -அன்றோ -சிலந்தி படைத்து அத்தை சாக்ஷியாக படைத்து -இத்தை காட்டி அருளினீர்

இப்படி நிமித்த உபாதான காரணத்வங்களை சொல்லி
சஹ காரி காரணத்வம் சொல்லாது ஒழிந்தது –
சர்வஞ்ஞத்வாதி குண யோகம் கீழே சொல்லுகையாலும்
நிமித்த உபாதானங்களுக்கு ஐக்யம் சொல்லுகையாலும்
தன்னடையே சித்திக்கும் என்னுமத்தாலே –

ஆகை இ றே வேதாந்த சூத்ரத்திலும் இதி விசேஷித்து சொல்லாது ஒழிந்தது –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை —102–140— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 22, 2017

சூர்ணிகை -102-

இனி மேல் பூதன மாத்ர சர்கோ ய மஹங்காராதது தாமசாது -என்கிறபடியே
பூதாதி சப்த வாச்யமான தாமச அஹங்காரத்தில் நின்றும்
தந்மாத்ர பஞ்சகமும்
தத் விசேஷமான ஆகாசாதி பஞ்ச பூதங்களும் உத்பன்னங்களாம் க்ரமம் அருளிச் செய்கிறார் –

பூதாதியில் நின்றும்–தாமச அஹங்காரத்தில் நின்றும் என்றபடி –
சப்த தந்மாத்ரை பிறக்கும் –
இதில் நின்றும் ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் வாய்வும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் தேஜஸ் ஸூம் ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் அப்பும் கந்த தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் –

தது மாத்திரம் -தன்மாத்ராம் -அது மட்டும் -விகசித்தமான ஆகாசத்தில் வேறே சிலவும் உண்டே –
சப்தம் தன்மாத்திரை ஆகாசமாக மலர்கிறது -மலர்ந்த பின்பு வேறே சிலவும் உண்டே
நெருப்பு வாயு இரண்டிலும் -விரோத பாவம் தண்ணீர் பிருத்வி -அனுகூல பாவம் – ஆகாசம் உதாசீன மூட பாவம்
சப்தம் ஸ்பர்சம் ரூபம் இவற்றில் விரோத அனுகூல பாவம் தெரியாதே –
அவிசேஷம் விசேஷம் -என்றும் பெயர்களும் உண்டு -தன்மாத்திரைகளுக்கும் பூதங்களுக்கும் –

அதாவது
பூதாதி சம்ஜ்ஞகமான–பெயர் பெற்ற – தாமச அஹங்காரத்தில் நின்றும்
ஆகாசத்தின் யுடைய ஸூஷ்ம அவஸ்தையான சப்த தந்மாத்ரை பிறக்கும்
இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் வ்யக்த சப்த குணகமான ஆகாசமும்-
(அவ்யக்த சப்தம் -சப்த தன்மாத்திரை த்ரவ்யம்-வியக்த சப்த குணம் அத்ரவ்யம் )
வாயுவினுடைய சூஷ்ம அவஸ்தையான ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் ஸ்பர்ச குணகமான வாயுவும்
தேஜசினுடைய சூஷ்ம மான ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய ரூப குணகமான தேஜஸ்ஸூம்
அப்பினுடைய சூஷ்ம மான ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த ரச தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையாய் ரச குணையான அப்பும்
பிருதிவினுடைய சூஷ்ம மான கந்த தந்மாத்ரையும் பிறக்கும்
இந்த கந்த தந்மாத்ரையில் நின்றும் இதனுடைய ஸ்தூல அவஸ்தையா கந்த குணையான பிருத்வி பிறக்கும் -என்கை –

ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
வாயுவும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்
என்று உத்பத்தி சொல்லுகிற அளவில் பூதத்தை முற்படச் சொல்லி
தந்மாத்ரையை பிற்படச் சொல்லிக் கொண்டு வந்தது பூத உத்பத்திக்கு அநந்தரம்
தந்மாத்ர உத்பத்தி என்கிற க்ரமம் தோற்றுகைக்காக-
இந்த தந்மாத்ர அனந்தர உத்பத்தி க்ரமம் நம் ஆச்சார்யர்களுக்கு மிகவும் ஆதரணீயமாகப் போகும்
அத்க்கடி -அஷ்டௌ பிரக்ருதய ஷோடஸ விகார -என்கிற ஸ்ருதிக்கு ஸ்வரார்த்தம் சித்திக்கையாலே
ஈச்வராத பிரகிருதி புருஷௌ பிரக்ருதோ மஹான் மஹதோ
ஹன்காரோ ஹன்காராச சப்த தன்மாத்ரம் சப்த தன்மாத்ராதாகாசம்
ஸ்பர்ச தன்மாத்ராஞ்ச ஸ்பர்ச தன்மாதராத வாயு ரூப தன்மாந்த்ராஞ்ச ரூப தன்மாத்ராதா
தேஜோ ரச தன்மாத்ராஞ்ச ரச தன்மாத்ராதா தாபோ நந்த தன்மாத்ராஞ்ச கந்த தன்மாதராதா பிருத்வி -என்று
இந்த க்ரமத்தை யாதவ பிரகாசிதிகளும் ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்–

————————————-

சூர்ணிகை –103-

இனி பூதாத தந்மாத்ரா உத்பத்தி க்ரமமும்
சாஸ்திர சித்தம் ஆகையாலே அத்தையும் சங்கரஹேண அருளிச் செய்கிறார் –

ஸ்பர்ச தந்மாத்ரை தொடக்கமான
நாலு தந்மாத்ரைகளும்
ஆகாசம் தொடக்கமான
நாலு பூதங்களுக்கும் கார்யமாய்
வாயு தொடக்கமான
நாலு பூதங்களுக்கும் காரணமாய்
இருக்கும் என்றும்
சொல்லுவார்கள்
என்று அடுத்த பக்ஷமும்-சாஸ்த்ர சித்தம் —சப்தம் பிருத்வி எடுத்து நான்கு தன்மாத்திரைகளையும் நான்கு பூதங்களையும் மட்டும் காட்டி அருளுகிறார் –

அதாவது-பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும் –
சப்த தந்மாத்ரை நின்றும் ஆகாசம் பிறக்கும்
ஆகாசத்தில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும்
ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
வாயுவில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ் பிறக்கும்
தேஜஸ் ஸில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
ரச தந்மாத்ரையில் நின்றும் அப்பு பிறக்கும்
அப்புவில் நின்றும் கந்த தந்மாத்ரை பிறக்கும்
கந்த தந்மாத்ரையில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் -என்றபடி-

இந்த க்ரமம் ஸ்ரீ விஷ்ணு புராண சித்தம்
பூர்வ க்ரமம் புராணாந்தர சித்தம் -என்று சொல்வார்கள்
அது சொல்ல ஒண்ணாது இ றே
இரண்டுமே சித்தம் தான் என்றவாறு
அஷ்டௌ பரக்ருதியஷ ஷோடஸ விகாரா –கர்ப்ப உபநிஷத் -என்று ஆகாசாதி பூதங்கள் ஐந்தையும்–
பிரக்ருதிகள் எட்டு -விக்ருதிகள் -பதினாறு / பிரகிருதி மஹான் அஹங்காரம் தன்மாத்திரைகள் எட்டும் -விகாரம் அடைந்து மற்றவை பிறக்கும்
சப்த்தாதி குணங்கள் ஐந்தும் பதினோரு இந்திரியங்கள் விகாரம் என்றவாறு –
த்ரவ்யம் -24-/சப்தாதி குணங்கள் ஐந்தையும் சேர்க்க வேண்டாமோ / தன்மாத்திரைகள் குணங்கள் இரண்டில் ஒன்றையும் மட்டும் சேர்த்து -24-/
தன்மாத்திரைகள் ஐந்தையும் விட்டால் -முன் பாவம் பின் பாவம் தசா விசேஷம் தானே என்பர் /
குணங்களை விட்டால் -பஞ்ச பூதங்களுக்குள் உண்டே இவை என்பர் -/
இந்திரியங்களோபாதி கேவலம் விக்ருதிகளாக–கார்யங்களாக – சுருதி சொல்லுகையாலே
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
ஆகாசச்து விகுர்வாண ஸ்பர்ச மாதரம் சசாஜா ஹி-என்று தொடங்கி–ஆகாசம் விகாரம் அடைந்து ஸ்பர்சம் தன்மாத்திரை ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்று
ஸ்பர்ச தன்மாத்ராதிகளுக்கு காரணமாகச் சொன்ன ஆகாசாதி பதார்த்தங்களையும்
தந்மாத்ர லஷணமான–அடையாளம் இட்டு – பூதங்களாக ஸ்ரீ பராசர பகவானுக்கு விவஷிதம் என்று நினைத்து
வியாக்யாதாக்கள் வியாக்யானம் பண்ணி வைக்கையாலே –
ஆகையால் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் பூதாத தந்மாத்ரா உத்பத்தி சாப்தமாய்த் தோற்றி இருந்ததே யாகிலும்
வியாக்யான பிரகிரியைப் பார்த்தால்
தன்மாத்ராத தந்மாத்ரா உத்பத்தி என்றே கொள்ள வேணும்-
நம் பூர்வர்களுக்கு இந்த பக்ஷம் ஆதரணீயம் என்று அருளிச் செய்தார் -இதனாலே தான் –
பூதாத தந்மாத்ரா உத்பத்தி பஷத்திலும்
அஷ்டௌ பரக்ருதியஷ ஷோடஸ விகாரா -என்று சொல்லுகிற
ஷோடஸ விகாரங்கள் ஆகிறது-அதே பிரமாணம் இந்த பாசத்துக்கும் –
எட்டு விகாரம் காரணம் -தன்மாத்திரை சேர்த்தா பூதங்களை சேர்த்தா என்று கொண்டு இரண்டு பக்ஷங்களும் வரும் –
பூதங்களை ஒழிய ஏகாதச இந்திரியங்களும் சப்தாதிகள் ஐந்தும் என்று
தன்மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதம் இன்றியிலே
அவஸ்தா பேதம் மாதரம் ஆகையாலே-
அஷ்டௌ பரக்ருதய -என்று
பிரகிருதி மஹான் அஹன்காரங்களையும்
ஆகாசாதிகள் ஐந்தையும் சொல்லுகிறது என்றும் ஸ்ருதி அவிரோதம் நிர்வஹிப்பார்கள்-
இது தான் வேத வியாச பகவானாலே
அஷ்டௌ பிரக்ருதய பரோகதா விகா ராசசாபி ஷோடஸ அய வயகதானி
சபதைவ பராஹூர தயாதம சிந்தகா அவயக தஞ்ச மகாமச சைவ
ததா ஹன்கார ஏவ ச பிருத்வி வாயு ஆகாசம் ஆபோ ஜ்யோதிஸ்ஸ பஞ்சமம்
ஏதா பிரக்ருதய சத வஷ்டௌ விகாராநபி மே சருணு ச்ரோதரம்
தவக சைவ சஷூசச ஜிஹ்வா காரணாஞ்ச பஞ்சமம்
வாக ச ஹச்தௌ ச பாதௌச பாயு மேடரம ததைவச சப்த சபாசௌ ச ரூபஞ்ச ரசோ
கந்தசத தைவச ஏதே விசெஷா ராஜேந்திர மகா பூதேஷு பஞ்ச ஸூ தச இந்த்ரியாண யதை தானி சாவி சேஷாணி மைதில மனஷ
ஷோடசமி தயா ஹூர தயா தமகதி சிந்தகா -என்று
மோஷ தர்மத்திலே யாஞ்ஞ்வல்க ஜனக சம்வாதத்திலே சொல்லப் பட்டது –
மிதிலா தேச மன்னன் ஜனகரை கர்மத்தால் சித்தி அடைந்தார்- என்று கிருஷ்ணனே கொண்டாடுகிறான் ஸ்ரீ கீதையில் –
ஞானம்–வேதாந்தம் -/ அனுபவம் அருளிச் செயல் / அனுஷ்டானம் ரஹஸ்ய த்ரயம் –மூன்றுமே வேண்டுமே
-ஆழ்வார்கள் நேராக திருமந்திரம் சொல்லாமல் நானும் சொன்னேன் –நீங்களும் நமோ நாராயணா சொல்லுமின் என்பர்
அவ்யக்தம் -மஹான் -அஹங்காரம் பிருத்வி வாயு -பூதங்கள் -பஞ்சமம் –ஆகிய எட்டும் -/விகாரங்கள் சொல்கிறேன் கேள் மே ஸ்ருணு -ஜனக அரசன் இடம்
–பஞ்ச ஞான இந்திரியங்கள் /கர்ம பஞ்ச இந்திரியங்கள் /மனஸ் சப்தாதிகள் –ஆகிய -16-/

அப்படியே
யம சுருதியிலும்
மநோ புத்திர ஹன்காரகா நிலாகா நிஜலானி பூ ஏதா பிரகருதய ச
தவஷ்டௌ விகாராஷ ஷோட சாபரே சரோதரா ஷிரசநாக ராண தவக ச சங்கல்ப
ஏவ ச சப்த ரூப ரச ஸ்பர்ச கந்த தவக பாணி பாயவ உபசதபாதாவிதி ச விகாரா ஷா ஷோடஸ சம்ருதா -என்று சொல்லப் பட்டது –
இந்த ஸ்ம்ருதியில் பிரக்ருதிகளிலே பரிகணிகையாலும்
பிரதமத்தில் எடுக்கையாலும் மந்த வயதையாலே மனஸ் என்று பிரதானத்வம் சொல்லப் படுகிறது –
மனஸ் சப்தம் பிரக்ருதியை குறிக்கும் இங்கு என்றபடி –இதுவும் எட்டு /-16-காட்டி /கடைசிலேயில் சங்கல்பம் என்றது மனசை சொன்னபடி –
சங்கல்ப சப்தத்தாலே தத் காரணமான மனஸ் லஷிக்கப் படுகிறது என்று ஸூ பால உபநிஷத்தில் வ்யாக்யானத்தில்
சுருதி பிரகாசராலே வியாக்யானம் ஆயிற்று
இப்படி இதிஹாசாதிகளிலே சொல்லப் படுகையாலே
அஷ்டௌ பிரக்ருதய என்கிற ஸ்ருதிக்கு
பூதாத தந்மாத்ரா உத்பத்தி பஷத்தில் விரோத அபாவம் ஸூ ஸ்பஷ்டம் -விரோதம் இல்லை என்றவாறு –

தவசா பீஜ மிவா வருதம-என்கிற திருஷ்டாந்த பலத்தாலே
தவிக்கில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தி இல்லாதவோ பாதி
ஆவாரகத்தை ஒழிந்த போது உத்தர கார்ய சக்தி இல்லை என்று தோற்றுகையாலும்
காரண குணத்தை ஒழிய உத்தர உத்தர விசேஷங்களிலே
ஆத யாத யஸ்ய குணா நேதா நாப நோதிச பர பர -என்று ஸ்வ விசேஷத்துக்கு
சொல்லுகிற குணாதிசயம் கூடாமையாலும்
ஆகாசம் சப்த மாத்ரனது ஸ்பர்ச மாதரம் சமாவிசத ரூபம் ததைவா விசா தசசப ஸ்பர்ச குணா யு பௌ
சப்த ஸ்பர்ச ரூபஞ்ச ரச மாதரம் சமா விசன தஸ்மாத் சதுர்குணாஹயாபோ விசேஷா சசேந்த்ரிய க்ரஹா –
என்கிற புராண வசனங்களின் யுடைய ஆனுகுண்யத்துக்காகவும்

பீஜம் –தோல் / ஆவரணம் தோல் -பஜ்ஜி -கடலை மாவில் தோய்த்து -தன்மாத்ரைக்கு மூடி தோல் எது -/தன்மாத்ரையில் இருந்து தன்மாத்திரை –
பிருத்விக்கு கந்தம் மூடி / சப்த தன்மாத்திரை மூடி ஆவரித்து பீஜம் உருவாகும் சக்தி கொடுக்கும் -குணம் கொடுக்கும் பூதங்களுக்கு -அங்குரிக்கும் சக்தி வேண்டுமே –

தேபய சதநமா தரே பயோ யதா சங்கய மேக தவதரி சது பஞ்சப்யோ பூதானா யாகாசா நிலாநல சலிலாவ நிருபாணி பஞ்ச ஜாயந்தே -என்று
இதில் அதிக்ருதனான சாங்க்ய வாசஸ்பதி சொல்லுகையாலும்
கார்ய உத்பாதங்களான தத்வங்கள் ஸ்வ ஸ்வ காரண ஆவ்ருத்தங்களாய்க் கொண்டு
உத்பாதிக்கிறது என்று சொல்ல வேணும் என்று தத்வ த்ரய விவரணத்திலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கையாலும்

பிரதாந தத்வ உத்போதம் மகா நதம தத் சமா வருணோத -ஸ்ரீ விஷ்ணு புராணம்-என்றும்
யதா பரதா நேன மகான மஹதா ச ததாவ்ருத -என்றும்
சப்த மாதரம் ததாகாசம பூதாதிச சசமா வருணோத -என்றும்
ஆகாசம் சப்த மாத்ரந்து ஸ்பர்ச மாதரம் சமா வருணோத -என்றும்
ஸ்பர்ச மாதரஸ்து வைவாயூ ரூப மாதரம் சமா வருணோத -என்றும்
ரச மாத்ராணி சாமபாமாசி ரூப மாதரம் சமா வருணோத -என்றும்
ஸ்ரீ பராசர பகவானாலே உக்தம் ஆகையாலும்
முன்புத்தை தன மாத்ரைகளோடு கூட்டிக் கொண்டு
உத்தர உத்தர தன மாத்ரைகள் ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே-என்று
இவர் தாமே மேலே அருளிச் செய்கையாலும் ஆவரண க்ரமம் கொள்ள வேணும்

அப்படியே பூர்வ பாவ நியமத்தைப் பற்ற ஸ்பர்சாதி தன மாத்ரைகளுக்கு ஸ்வ ஸ்வ விசேஷங்களை
உத்பாதிக்கும் அளவில் ஸ்வ ஸ்வ பூர்வ பூர்வ சஹாயத் வமும் கொள்ள வேணும்
அதாவது பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்
சப்த தந்மாத்ரையை பூதாதி ஆவரிக்கும்
இதில் நின்றும் ஆகாசம் பிறக்கும்
அநந்தரம் இந்த சப்த தந்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தன மாதரை பிறக்கும்
ஸ்பர்ச தன மாதரை சப்த தன மாத்ரையை ஆவரிக்கும்
இப்படி சப்த தன்மாத்ரா வருதையாய் ஆகாசத்தை சகாயமாய் யுடைத்தான
ஸ்பர்ச தனமாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும்
இந்த ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
ரூப தந்மாத்ரையை ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ஸ்பர்ச தன்மாத்ரா வருதையாய் வாயுவை சகாயமாக யுடைத்தான
ரூப தந்மாத்ரையில் நின்றும் தேஜஸ் ஸூ பிறக்கும்
இந்த ரூப தந்மாத்ரையில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
ரச தந்மாத்ரையை ரூப தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ரூப தன்மாத்ரையாய் வருதையாய் தேஜசைசகாயமாக யுடைத்தான ரச தன்மாத்ரையில்நின்றும் அப்பு பிறக்கும்
இந்த ரச தன மாத்ரையில் நின்றும் கந்த தன மாதரை பிறக்கும்
கந்த தந்மாத்ரையை ரச தந்மாத்ரை ஆவரிக்கும்
இப்படி ரச தனமாத்ரையாய் வருதையாய் அப்பை சகாயமாய் யுடசித்தான கந்த மாத்ரையில் நின்றும் பிருத்வி பிறக்கும் என்கை
சப்த தந்மாத்ரா வருத்தமாய் ஆகாசத்தை சஹாயமாக யுடைத்தான
ஸ்பர்ச தந்மாத்ரையில் நின்றும் வாயு பிறக்கும் என்று தொடங்கிச் சொன்ன விசேஷ உத்பத்தியில் க்ரமம்
பூதாத தன்மாத்ரம் உத்பத்தி பஷத்துக்கும் ஒக்கும்
பூர்வ பூர்வ பூதத்தில் நின்றும் உத்தர உத்தர தந்மாத்ரா உத்பத்தி
ஆகிற இது விசேஷம் -இது தத்வ த்ரய விவரணத்தில்
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த க்ரமம் –

ஒன்றை ஓன்று ஆவரிக்கும் -இரண்டையும் ஆவரிக்கும் -எதன் சகாயம் ஏத்துக் கொள்ளும் இதற்கும் இரண்டு நிர்வாகம் –
-அந்த தன்மாத்திரை அதன் விஷேகமான பூதம் இரண்டையும் -என்றவாறு -முன் உள்ள தன்மாத்திரை
பூதாதி -சப்தத்தையும் ஆகாசத்தையும் ஆவரிக்கும் –
தன்மாத்திரை அதன் விசேஷம் படைக்கும் போது தன பூதம் சகாயத்தை ஏத்துக் கொள்ளும்
முன் உள்ள பூத ஸஹாயமா -தன விசேஷமான பூதம் ஸஹாயமா -என்று கொண்டு இரண்டு பக்ஷங்கள்-

இங்கன் அன்றிக்கே தத்வ நிரூபணத்தில்-ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்- அருளிச் செய்ததும் ஒரு க்ரமம் யுண்டு –
அதாவது பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும்
சப்த தன்மாத்ரையில் நின்றும் அதனுடைய ஸ்தூல அவஸ்தையான ஆகாசம் பிறக்கும்
சப்த தன்மாத்ரையும் ஆகாசத்தையும் பூதாதி ஆவரிக்கும்
இப்படி பூதாதாயா வருதமாய் ஸ்தூல ஆகாச சஹகருதமாய்க் கொண்டு விக்ருதமான சப்த தன்மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தந்மாத்ரை பிறக்கும் –
அதில் நின்றும் ஸ்பர்ச குணகமான வாயு பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான சப்த தந்மாத்ரை ஆவரிக்கும்
சப்த தன்மாத்ரா வருதமாய் வாயு சஹ கருதமாய் விகரித்த ஸ்பர்ச தன்மாத்ரத்தில் நின்றும் ரூப தந்மாத்ரை பிறக்கும்
அதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ் ஸூ பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ஸ்பர்ச தந்மாத்ரை ஆவரிக்கும்
இத்தாலே ஆவ்ருதமாய் தேசச சஹ க்ருதமாய் விகரித்த ரூப தன்மாத்ரையில் நின்றும் ரச தந்மாத்ரை பிறக்கும்
அதில் நின்றும் ரச குணகமான ஜலம் பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ரூப தந்மாத்ரை ஆவரிக்கும்
இத்தாலே ஆவ்ருதமாய் அம்பா சஹ கிருதமாய்க் கொண்டு விகரித்த ரச தன்மாத்ரையில் நின்றும்
கந்த தன்மாத்ரம் பிறக்கும்
அதில் நின்றும் கந்த குணகமான பிருத்வி பிறக்கும்
அவை இரண்டையும் காரணமான ரச தந்மாத்ரை ஆவரிக்கும் -என்கை
இதில் முற்பட்ட க்ரமத்திலே ஸ்பர்ச தன்மாத்ராதி சதுஷ்டயத்துக்கு
ஸ்வ ஸ்வ விசேஷ உத்பாதனத்தில்
பூர்வ பூர்வ பூத சஹாயத்வம் சொல்லப் பட்டது
பிற்பட்ட க்ரமத்தில் பூர்வ பூர்வ தன்மாத்ரத்துக்கு உத்தர உத்தர தன்மாத்ரம்
உத்பாதனத்தில் ஸ்வ ஸ்வ விசேஷ சஹாயத்வம் சொல்லப் பட்டது
ஆகையால் அன்யோன்ய விரோதம் இல்லை-

ஓர் ஒன்றிலே இரண்டும் அனுகதமே யாகிலும் இரண்டும் அபேஷிதம் ஆகையாலே
ஆவரண கதனத்திலும் பூர்வ பூர்வ தன்மாத்ரம் உத்தர உத்தர தன்மாத்ரதையும் தத் விசேஷத்தையும்
ஆவரிக்கும் என்று ஜீயர் அருளிச் செய்கையாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே
சப்த மாதரம் ததாகாசம் பூதாதிசச சமா வருணோத -என்ற விதுக்கு
சப்த மாதரம் -சப்த தன்மாத்ரம் ததாகாசம் ஸ்தூலா காசஞ்ச ச பூதாதி ரா வருணோத
யேதன பூர்வ பூர்வ தன்மாத்ரம் உத்தர உத்தர தன்மாத்ரம் தத் விசேஷஞ்ச வ்ருணோதிதி தர்சிதமே -என்று
பிள்ளை எங்கள் ஆழ்வான் வியாக்யானம் பண்ணுகையாலும்
தத்வ விவரணத்தில்
தன்மாத்ரத்துக்கு ஆவரணம் சொன்னவோபாதி தத் விசேஷத்துக்கு ஆவரணம் சொல்லிற்று இல்லை யாகிலும்
அது உப லஷணமாம் இத்தனை
அல்லாத போது அவ்விடம் தன்னில் பூதாத் தன்மாத்ரா உத்பத்தி சொல்லவும் போகாது
ஆகையால் இரண்டும் கொள்ள வேணும் –

தத்வ நிரூபணத்தில் தன்மாத்ரா தத் விசேஷங்கள் இரண்டுக்கும் ஆவரணம் சொல்லுகிற அளவில்
இரண்டையும் சேர்த்துப் பிடித்துச் சொல்லப் பட்டதே யாகிலும்
விசேஷ உத்பத்திக்கு முன்பே தன்மாத்ரத்துக்கு ஆவரணம் கொள்ள வேணும்-
பூநிலாய ஐந்துமாய் –சம காலத்தில் ஆவரித்தால் குணம் கொடுக்காதே -தன்மாத்திரத்தை ஆவரித்து பூதத்தை ஆவரிக்கும்
த்வகில்லாத பீஜத்துக்கு அங்குர சக்தி இல்லாதாப் போலே
ஆவாரகத்தை ஒழிந்த போது உத்தர கார்ய சக்தி இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது இ றே-

இப்படி பூத தன்மாத்ர சிருஷ்டி சொல்லுகிற இடத்தில் ஆவரண க்ரமம் வக்தவ்யமாய் இருக்கச் செய்தேயும்
அருளிச் செய்யாது ஒழிந்தது அபேஷிதம் அல்லாமை அன்று
சங்கோசேன உத்பத்தி க்ரமத்தை அருளிச் செய்தார் இத்தனை
பெரிய வாச்சான் பிள்ளையும் இப்படி இ றே அருளிச் செய்தது-

——————————————

சூர்ணிகை -104-

ஆக பூத தன்மாத்ர உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தார் கீழ்
அதில் தன்மாத்ரங்கள் தான் எவை -என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –

தன மாத்ரங்கள் ஆவன
பூதங்களின் யுடைய
சூஷ்ம அவஸ்தைகள் –

அதாவது -தஸ்மிம் சதஸ் மிம்ச்து தன்மாத்ரம் தேன தன்மாத்ரா ஸ்ம்ருதா
தன்மாத்ராண்யா விசேஷாணி அவி சேஷாஸ் ததோஹித
ந சாந்தா நாபி கோராச்தே ந மூடாச்ச விசேஷிண-என்று
சாந்தத்வ கோரத்வ மூடத்வ லஷணமான விசேஷங்களை
யுடைத்து அல்லாத
சப்தாதி மாத்ரத்தை குணமாக யுடைத்தாய் இருக்கிற ஆகாசாதி பூத சூஷ்மங்கள் –
இது மாத்திரம் என்பதையே -தன்மாத்ரம்-என்கிறது -பூதமாக விரிந்த பின்பே மற்றவை வரும் –
அகஸ்திய பிராதா -என்பது போலே -மாமான் மகளே போலே -அது மாத்திரம் என்கிற பெயரும் இதுக்கு -குணம் மட்டுமே இருக்கும் -சப்தம் மாத்திரம் ஒன்றில் இத்யாதி –
அதின் இடம் அதுவே இருக்கும் என்று சொல்ல வேண்டுமோ -ஆஸ்ரயம் -திரவ்யம் சப்தம் குணம் —-த்ரவ்யம் தான் ஆவரிக்கும் -ஆவரிக்கும் பொழுது குணத்தை கொடுக்கும்-
ஆகாசம் -மூடம் -அனுகூலமோ பிரதிகூலமோ இல்லையே /வாயு அக்னி கோருங்கள் -பிரதிகூலங்கள் / தண்ணீர் பிருத்வி அனுகூலங்கள் சாந்தம் –
சாந்தத்வம் மூடத்தவம் கோரத்வம் இதுவும் குணங்கள் -பூதங்கள் த்ரவ்யம் –
சத்வ குணத்தால் சாந்தித்வம் -தமோ குணத்தால் மூடத்தவம் -ரஜோ குணத்தால் கோரத்வம் –

சாந்தத்வம் ஆவது -அனுகூல வேத நீயத்வம்
கோரத்மவாது -பிரதிகூல வேத நீயத்வம்
மூடத்வமாவது -உதாசீன வேத நீயத்வம்
அதில் ஸ்வ பாவமே சாந்தங்களாய் இருக்கும் -பூமியும் ஜலமும் –
கோரங்களாய் இருக்கும்–தேஜஸ் ஸூம் வாயுவும்
மூடமாய் இருக்கும் -ஆகாசம்
-மேளனத்தாலே-கலப்படம் – எல்லா பூதங்களும் சாந்தவ கோரத்வ மூடத்வங்களை யுடையனவாய் இருக்கும்-பஞ்சீகரணத்தாலே
தன்மாத்ரைகளுக்கு இந்த சாந்தத்வாதி விசேஷம் இல்லாமையாலே அவை அவிவிசேஷங்கள் என்று சொல்லப் படுகின்றன
ஆகையால் தன்மாத்ரைகள் என்றும் அவிவிசேஷங்கள் என்றும் பர்யாயம்
அதில் அபி யுக்தரான யாதவ பிரகாசாதிகளும்
தன மாத்ராண்யா விசேஷா இதய நர்த்தாந்தரம்
சாந்தவ கோரத்வ மூடத்வ மிதி தரயோ விசேஷாஸ் தரை குண்யாத் மானச தேஷா மனுத்பவாத்
சூஷ்ம ஆகாசம் விசேஷ லஷணம் பவதி
தேன சப்த தன்மாத்ரம் உச்யதே
ஏவம் சூஷ்மோ வாயுஸ் சூஷ்மம் தேஜஸ் சூஷ்மா ஆபஸ் சூஷ்மா பிருத்வி -என்று சொல்லி வைத்தார்கள் இறே
ந அர்த்தஅந்தரம் -வேறு பொருள் இல்லாமல் ஒரே பொருளை குறிக்கும் அவிசேஷம் தன்மாத்திரை –
முக்குணங்களை ஸ்வரூபமாக உள்ள சாந்தத்வம் கோரத்வம் மூடத்தவம் உண்டாகாதாகையாலே-
பிரகிருதி சம்பவம் தானே இவை -m -உள்ளே ஒளிந்து இருக்கும் நீர் பூத்த நெருப்பு போலே உத்பன்னமாக தெரியாது-
சூஷ்மம் -அவஸ்தைகள் போலே -அவை உத்பவித்தது ஸ்தூலமாக தெரியும் பூதங்களில் –

ஆக த்ரிவித அஹங்காரத்திலும் வைத்துக் கொண்டு
சாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்திரியங்களும்
தாமச அஹங்காரத்தில்நின்றும் பூதத் தன்மாத்ரைகளும்
உத்பன்னமாம் க்ரமம் சொல்லி நின்றது-

——————————————————————-

சூர்ணிகை -105-

இனி ராஜஸ் அஹன்காரத்தின் கார்யம் சொல்லுகிறது –

மற்றை இரண்டு
அஹங்காரமும்
ஸ்வ கார்யங்களைப் பிறப்பிக்கும்
ராஜச அஹங்காரம்
சஹகாரியாய்
இருக்கும் –

அதாவது
சதவிக தாமச அஹன்காரங்கள் இரண்டும் வைகார்யங்களை
உத்பாதிக்கும் போது
பீஜத்தின் யுடைய அங்குரத்துக்கு ஜலம் போலவும்–முளை விட நீர் வேணும்
அக்னியினுடைய ஜலனத்துக்கு வாயு போலவும்–ஜ்வலிக்க வாயு வேண்டுமே –
ராஜச அஹங்காரம் சஹ காரியாய் இருக்கும் -என்கை –

இது சஹாகரிக்கை யாவது ரஜ ப்ரவர்த தகம தத்ர -தூண்டு கோல் -போலே என்கிறபடியே
இவற்றில் இந்த்ரிய ஹேதுவான சத்வ அம்சத்துக்கும்–சாத்விக அகங்கார காரியங்கள் தானே
பூத ஹேதுவான தமோ அம்சத்துக்கும்
சல ஸ்வ பாவமான ராஜச ஸூ பிரேரகமாய்க் கொண்டு பிரவர்த்திப்பிக்கை -நின்றவா நில்லா நெஞ்சு -போலே சல சல-ஸ்வ பாவம் -ரஜோ குணத்துக்கு –

————————————————

சூர்ணிகை -106-

இப்படி சாத்விக தாமச அஹன்காரங்களுக்கு சாதாரண சஹாகாரியை அருளிச் செய்தார் கீழ்
அநந்தரம்
சாத்விக அஹங்காரத்துக்கு அசாதாராணாமாய் இருப்பன சில
சஹகாரி விசேஷங்களை அருளிச் செய்கிறார் –
இந்திரியங்கள் சப்தாதிகளை கிரஹிக்க வேண்டுமே –அதனால் சஹகாரிகளாக -கொள்ளும் சப்தம் -காது
ஸ்பர்சம் தோலுக்கு /இத்யாதி அடைவே –
த்ரவ்யம் தானே சஹகாரி ஆகும் அதனால் தன்மாத்திரைகளை சஹகாரியாக கொள்ளும்

சாத்விக அஹங்காரம்
சப்த தந்மாத்ராதி பஞ்சகத்தையும்
அடைவே சஹகாரியாய் கொண்டு
ச்ரோத்ராதி ஞான இந்த்ரியங்கள்
ஐந்தையும் சிருஷ்டிக்கும்
தத சஹ க்ருதமாய்க் கொண்டு
வாகாதி கர்ம இந்த்ரியங்கள்
ஐந்தையும் சிருஷ்டிக்கும்
இவற்றை ஒழிய தானே
மனசை சிருஷ்டிக்கும்
என்றும் சொல்லுவார்கள் –

அதாவது
சாத்விக அஹங்காரம் இந்த்ரியங்களை சிருஷ்டிக்கும் அளவில் இவற்றின் யுடைய விஷய பிரதி நியமத்துக்காக–கண் பார்க்கவும் -காது கேட்கவும் -என்றவாறு
சப்த தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு ச்ரோத்ரத்தையும்
ஸ்பர்ச தன்மாத்ரையை சஹகாரியாகக் கொண்டு தவக் இந்த்ரியத்தையும்
ரூப தன்மாத்ரையை சஹாகாரியாகக் கொண்டு சஷூஸ் சையும்
ரச தன்மாத்ரையை சஹாகாரியாகக் கொண்டு ஜிஹ்வையையும்
கந்த தன்மாத்ரையை சஹாகாரியாகக் கொண்டு க்ராண இந்த்ரியத்தையும்
சிருஷ்டிக்கும்
இப்படி சப்த தன்மாத்ராதி பஞ்சகத்தையும் அடைவே சஹகாரியாகக் கொண்டு
ச்ரோத்ராதி ஞான இந்த்ரியங்களையும் சிருஷ்டித்த அநந்தரம்
ச்ரோத்ர க்ராஹ்யமான சப்த விஷயமாயும்
தவக் இந்த்ரிய க்ராஹ்யமான ஸ்பர்ச விஷயமாயும்
சஷூர் க்ராஹ்யமான ரூபத்தில் ப்ரவ்ருத்தி ஹேதுவாயும்
ரசனா விஷய ரச ஆச்ரயச்மான ஜலத்தின் யுடைய நிசசரண ஹேதுவாயும்
க்ராண விஷய கந்த ஆச்ரயமான பிருத்வி அம்சமான அந்நாதிகளில்
ருஷீ ஷோதர்ச சாஜன ஹேதுவாயும்-
இப்படி ஞான இந்த்ரிய பஞ்சக சேஷமாய்க் கொண்டு
சப்தாதி பஞ்சகத்தையும் ஒட்டி இருக்கும்
கர்ம இந்த்ரிய பஞ்சகத்தை சிருஷ்டிக்கும் அளவில்
ச்ரோத்ர சஹ கருதமாய்க் கொண்டு வாக்கையும்
த்வக் சஹ கருதமாய்க் கொண்டுபாணியையும்
சஷூஸ் சஹ கருதமாய்க் கொண்டுபாதத்தை
ஜிஹ்வா சஹ கருதமாய்க் கொண்டு உபசஸ்தத்தையும்
க்ர்ணா சஹ கருதமாய்க் கொண்டு பாயுவையும்
சிருஷ்டித்து
ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் கர்ம இந்த்ரியங்களுக்கும் சஹகாரியாய்
உபாயதமகமான மனசை சஹகாரி நிரபேஷமாக தானே
சிருஷ்டிக்கும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்கை-

இது தன்னை
ஸ்ரீ விஷ்ணு புராண வ்யாக்யானத்தில்
அயமதரே நதரிய சிருஷ்டிகரம் வைகாரிக அஹங்காரத க்ரமேண சப்த தன்மாத்ராதி பஞ்சக சஹாயாத க்ரமேண
ச்ரோத்ராதி ஞான இந்த்ரிய பஞ்சகச்ய சிருஷ்டி தசமாதேவ தத் சஹாயாத்-
வாகாதி கர்மேந்த்ரிய பஞ்சகச்ய அசஹாயாதது தஸ்மான் மனச்ச ஸ்ருஷ்டிருதி -என்று பிள்ளை எங்கள் ஆழ்வானும் அருளிச் செய்தார்-
சப்தாதிகளுக்கு ஞான இந்திரியங்கள் சஹகாரி -கர்ம இந்திரியங்களுக்கு ஞான இந்திரியங்கள் சஹகாரிகள் என்றவாறு –

———————————-

சூர்ணிகை -107-

அநந்தரம் இப்படி தாம் அருளிச் செய்த இந்த்ரிய உத்பத்தி க்ரமத்துக்கு விரோதி பஷத்தை
நிரசிக்கைக்காக அத்தை யுத்ஷேபிக்கிறார் –

சிலர்
இந்த்ரியங்களில்
சிலவற்றை
பூத கார்யம்
என்றார்கள் –

அதாவது -சிலர் -அவர்கள் ஆகிறார் க்ரணாதிகளான இந்த்ரியங்களை–ஞான இந்திரியங்களை –
பிருதிவ்யாதி பூத காரயமாகவே கொள்ளும்
நையாயிகாதிகள்
அவர்கள் தாம் ஆனுமாநிகர் ஆகையாலே
அனுமானத்தாலே இ றே அர்த்தத்தை சாதிப்பது-

————————————————

சூர்ணிகை -108-

அத்தை காலா தயயாபதேசத்தாலே தூஷிக்கிறார்

அது
சாஸ்திர
விருத்தம்

அதாவது
இந்த்ரியங்களை பூத கார்யம் என்று சொல்வது
இவற்றை ஆகங்காரி களாக சொல்லுகிற
இதிஹாச புராணாதிகளுக்கு விருத்தம் -என்கை-
அஹங்காரிகளில் இருந்து உத்பத்தி -ஆகங்காரிகள்-

———————————————

சூர்ணிகை -109-

அது என் என்ன மோஷ தர்மத்திலே –
சப்த ச்ரோத்ரம ததா காதி த்ரய ஆகாசம் சம்பவம் வாயோ ஸ்பர்சம்
ததா சேஷ்டா தவக் சைவ தரிதயம் சம்ருதம் ரூபம் சஷூஸ்
ததா வயகதி சதரிதயம் தைஜ உச்யதே ரச கலேதசச ஜிஹ்வா ச தரயோ ஜலகுணா சம்ருதா
கராணம் க்ரேயம சரீரஞ்ச தே து பூமிகுணா சம்ருதா -என்று சொல்லுகையாலே
இதிஹாசாதிகள் தன்னிலேயும் இந்த்ரியங்களுக்கு பௌதிகத்வம் சொல்லப் படுகையாலே
பூதங்கள் இவற்றுக்கு காரணமாக வேணுமே -என்ன –

பூதங்கள்
ஆப்யாயங்கள்
இத்தனை –

அதாவது
இதிஹாசாதிகளில் இந்த்ரியங்களுக்குச் சொன்ன பௌதிகத்வம் பூதங்களால் யுண்டான ஆபயாய நமாத்ரத்தைப் பற்ற வாகையாலே
இந்த்ரியங்களுக்கு பூதங்கள் ஆபயாயங்கள் இத்தனை
காரணங்கள் அன்று -என்கை –

ஆப்யாயகத்வம் ஆவது -போஷகத்வம்
இன்னமும் அஹங்காரத்தை இந்த்ரியங்களுக்கு நிமித்த காரணமாகவும்
இவற்றை உபாதான காரணமாகவும் சொல்லுகிற குத்ருஷ்டி மதம் யுண்டு இறே-இரண்டு வித பிரமாணங்களை சமன்வயப்படுத்தும் இத்தால் என்பார்கள் இவர்கள்
அஹங்கார சயே நதரியாணி பாரதி நிமித்தத்த மேவ
பூதானா மேவ உபாதானத்வம் அநனமயம் ஹி சோமாய மன
ஆபோமைய பராணசதேஜோ மயீ வாக இதி சருதேரித கேசிதா ஹூ தத் யுக்தம்
அஹங்கார சயைவோ பாதா நதவேபி பூதானா மாபயாயாக்தவே நாபி ததா நிர்தே சோப பத்தே -என்று
பிள்ளை எங்கள் ஆழ்வான் எடுத்துக் கழித்தது அதுவும்
மயம் வந்தாலே உபாதானம் ஆகும் ஸ்வர்ண மயம் ஆபரணம் அன்னமயம் மனாஸ் ஆபோ மயம் பிராண தேஜோ மயம் வாக்கு –

இந்த்ரியங்களில் சிலவற்றை என்று தொடங்கிஇவர் அருளிச் செய்த க்ரமம் தன்னாலே பிரதிஷிபதம்
அப்போதைக்கு -அது சாஸ்திர விருத்தம் -என்றது
ஏகாதசம மனசசாதர தேவா வைகாரி காச சம்ருதா -இத்யாதிகளாலே
இவற்றை சாத்விக அஹங்கார காரயமாகவே சொல்லுகிற புராணாதிகளுக்கு விருத்தம் -என்கை-
புராணாதிகளைப் பற்ற
அன்னமயம் ஹி சோமாய மன -இத்யாதி ஸ்ருதிக்கு பிராபல்யம் யுண்டே யாகிலும்
இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுபபரு மஹயதே-என்கையாலே
உப பருமண அனுகூலமாக அதுக்கு அர்த்தம் கொள்ள வேணும் என்று கருத்து –

ஆனால் உப பருமஹணங்கள் தன்னிலேயும் பௌதிகத்வம் சொல்லுகையாலே
இவற்றுக்கு பூதங்கள் காரணமாய் அன்றோ தோற்றுகிறது
என்ன -பூதங்கள் ஆப்யாயங்கள் இத்தனை -என்று நிர்வாஹம் –
க்ரணாதிகளான இந்திரியங்களுக்கு பிருத்வ்யாதி பூதங்களால் யுண்டான ஆபயாய நம சுருதி ச்ம்ருதிகளிலே பிரசித்தம்
இது தான் ஸூபால உபநிஷத் வ்யாக்யானத்திலே
க்ர்ணா தீ நாமி நாதரியாணாம் ஹி பிருதிவ்யாதி பூதை
ராப்யாயநம சுருதி ச்ம்ருதிஷூ பிரசித்தம்
அன்னமயம் ஹி சோமய மன ஆபோமய பிராண்ஸ் தேஜோமயீ
வாக் ச்ரோதரம் நபோ கராணமுக்தம் பிருதிவ்யா இதயாரபய வாயவா தமகம
ஸ்பர்ச நமாம நந்தி ன்பே சரோதரஞ்ச தன்மயம் இத்யாதிஷூ –
என்று சுருதி பிரகாசகராலே அபிஹிதம் ஆயிற்று

இப்படி இந்த்ரியங்களுக்கு பூதங்கள் எப்போதும் ஆப்யகங்களாய் இருக்கும் என்னும் இடம்
மோஷ தர்மத்திலே ப்ருகு பரத்வாஜ சம்வாதத்திலே
ஆபயாய ந்தே ச நித்யம் தாதவச தைசது பஞ்சாபி -என்று ஸூ வ்யக்தமாக சொல்லப் பட்டது –

ஆகையால் பூதங்கள் இந்த்ரியங்களுக்கு ஆப்யாயகங்கள் இத்தனை காரணங்கள் அன்று என்றது ஆயிற்று-

——————————————————

சூர்ணிகை -110-

ஆக இப்படி மஹதாதி பதார்த்தங்களின் யுடைய உத்பத்தி க்ரமம் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –
இவற்றைக் கொண்டு ஈஸ்வரன் அண்ட ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும்படியை அருளிச் செய்கிறார் -மேல்

இவை கூடினால் அல்லது
கார்யகரம் அல்லாமையாலே
மண்ணையும் மணலையும் நீரையும்
சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே
ஈஸ்வரன் இவற்றை எல்லாம்
தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி
அதுக்கு உள்ளே
சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் –
பஞ்சீ கரணம் வரை சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -அப்புறம் வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி /
அதாவது –
இவை கூடினால் அல்லது கார்யகரம் அல்லாமையாலே –
நாநா வாயா பருதக் பூதாஸ் ததஸ தே சம்ஹிதம் விநா
நாசக நுவன பரஜாச ஷர ஷடு மசமாக மயகருதச நாசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-என்கிறபடியே
சாந்தத்வ கோரத்வ மூடத்வங்களாலே
நாநா சக்தி யுக்தங்களாய் ப்ருதக் பூதங்களாய் -பிரிந்த பூதங்கள் –இருக்கிற
இம் மஹதாதி பதார்த்தங்கள் பரஸ்பர சமஹதம் ஆனால் அல்லது
அண்டரூபமான கார்யத்தை உத்பாதிக்க மாட்டாமையாலே -என்கை-
மண் பானை அரிசி நீர் நெருப்பு காற்று இடைவெளி வேணுமே சாதம் பண்ண -பஞ்ச பூதங்களும் சேர வேண்டுமே –
மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக் சுவர் இடுவாரைப் போலே –
அதாவது -ப்ருதக் வீர்யங்களாய் ப்ருதக் ஸ்திதங்களாய் இருக்கிற
ம்ருத சிகதா சலிலங்களை-அந்யோந்யம் சேர்த்து
தத் சமுதாயாதமகமான தொரு த்ரவ்யமாகி
பித்தி ரூபமான தொரு கார்யத்தை நிர்மிப்பாரைப் போலே என்கை-அண்ட புத்தி சுவர் என்றபடி –
ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி –
அதாவது -ஜகத் ஸ்ருஷ்டாவான ஈஸ்வரன்
சமேதயா நயோ நய சம்யோகம் பரஸ்பர சமாச ரயா
ஏக சங்காத லஷ்யாசச சமபரா பயைகயம சேஷத மஹதாதயோ விசேஷா நதா ஹயண்ட முதபாதயந்திதே -என்கிறபடியே-
இவற்றை எல்லாம் அந்யோந்யம் சம்ஹதமாக்கி இவற்றாலே அண்ட சிருஷ்டியைப் பண்ணி -என்கை –
முன்பே அது அதுக்கு பிரதான குணம் உண்டு ஆவரித்தது குணத்தை புகுத்த -விதை முளைக்க தோல் போலே என்று முன்பே பார்த்தோம்
இங்கு அஞ்சும் கூடணும்–த்ரவ்யங்கள் சேர வேண்டும் பஞ்சீ கரணத்தில் -முன்பு குணத்தை புகுத்திற்று மட்டுமே –
இவ்வண்டத்துக்கு உள்ளே மஹதாதி கார்யங்களை அடையக் காண்கையாலே
மஹதாதி பதார்த்தங்கள் எல்லா வற்றையும் சேர்த்து அண்ட சிருஷ்டியைப் பண்ணினான் என்னும் இடம் ஸூவ்யக்தம் ஆகையாலே
பூதேப யோண்டம் மகா புத்தே பருஹ த்தது தகேசயம் -என்று
பூதங்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் அது உதகத்திலே கிடக்கும் என்று சொன்னதும்
அப ஏவ சசா ஜாதௌ தா ஸூ வீர்யம்பாச ருஜத ததண்டம் பவத தை மம சஹாஸ்ராமசுச சமபரபம் -என்று
அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் என்று மனு பகவான் சொன்னதும் பூதாந்தரதுக்கும் உப லஷணம்-பெரிய நீர் படைத்து -அப ஏவ சராஜ்ய-
அதாவது பூர்வ பூதாம்சங்களோடேசம்ஸ்ருஷ்டமுமாய்
பிருத்வியும் தனக்கு உள்ளே கரைந்து கிடக்கிற ஜலத்தில் ந