Archive for the ‘கிருஷ்ணன் கதை அமுதம்’ Category

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -12-வானபிரஸ்த, சந்நியாஸ ஆசிரம தர்மங்கள் —

May 22, 2020

ஶ்ரீபகவான் உவாச
வனம் விவிக்ஷு: புத்ரேஶு பா4ர்யா ன்யஸ்ய ஸஹைவ வா |
வன ஏவ வஸெச்சா2ந்தஸ்த்ருதீயம் பா4க்3மாயுஷ: || 1 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
உத்தவா! வானபிரஸ்த ஆசிரமத்திற்கு செல்ல விரும்பினால் உன் மனைவியை மகனிடமோ, மகளிடமோ ஒப்படைத்துவிட்டு
அல்லது உன்னுடன் மனைவி வர விரும்பினால் அவளையும் அழைத்துக் கொண்டு போகலாம்.
மன அமைதியுடன் வானபிரஸ்த ஆசிரம தர்மங்களை பின்பற்றிக் கொண்டு வாழ்நாட்களை கழிக்கலாம்.
ஒருவனுடைய ஆயுளின் மூன்றாம் பாகத்தில் இந்த ஆசிரமத்தில் கழிக்க வேண்டும்.

கந்தமூலப2லைர்வன்யைர்மேத்4யைர்வ்ருத்திம் ப்ரகல்பயேத் |
வஸீத வல்கலம் வாஸஸ்த்ருணபர்ணாஜினானி வா || 2 ||

சாஸ்திரத்தில் சொல்லியபடி எளிமையான, தூய்மையான உணவுவகைகள், காட்டில் கிடைக்கின்ற அல்லது நாம் இருக்கின்ற
இடத்தில் கிடைக்கின்றதுமான கிழங்கு வகைகள், வேர் வகைகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்கள் உட்கொண்டு வாழ வேண்டும்.
எளிமையான ஆடைகளை அணிய வேண்டும். புல்லினால் செய்யப்பட்டதும், இலைகளினால் செய்யப்பட்டதுமான ஆடைகளையோ,
மான்தோலையோ உடுத்திக் கொள்ளலாம். இந்தக் காலத்திற்கேற்ப எளிமையான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.

கேஶரோமனக2ஶ்மஶ்ரு மலானி பி3ப்4ருயாத்3த3த: |
தா4வேதப்ஸு மஜ்ஜேத த்ரி காலம் ஸ்த2ண்டி3லேஶய: || 3 ||

தலைமுடி, மீசை, தாடி, நகங்கள் இவற்றை வெட்டக் கூடாது. நறுமணப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
மூன்று வேளை நீரில் குளிக்க வேண்டும். தரையிலேதான் படுக்க வேண்டும்.

க்3ரீஷ்மே தப்யேத பஞ்சாக்3னீன்வர்ஷாஸ்வாஸாரஷாட்3ஜலே |
ஆகண்த2மக்3ன: ஶிஶிர ஏவம் வ்ருத்தஸ்தபஶ்சரேத் || 4 ||

தவம் செய்து கொண்டிருக்க வேண்டும். இதில் சில தவங்களை உதாரணத்திற்கு கூறியிருக்கிறார்.
1. பஞ்சாக்னி தவம் – கோடைகாலத்தில் தன்னைச் சுற்றிலும் நெருப்பை மூட்டிக் கொண்டு, சூரியனின் வெப்பம் மேலேயிருந்து
வந்து கொண்டிருக்கும் இதற்கு நடுவில் அமர்ந்து கொண்டு தவம் செய்ய வேண்டும்.
2. மழைக்காலத்தில் நல்ல மழையில் நின்று கொண்டு தவம் செய்ய வேண்டும்.
3. குளிர்காலத்தில் நீருக்குள் கழுத்துவரை இருக்குமாறு நின்று கொண்டு தவம் செய்ய வேண்டும்.
இவ்விதமாக தவங்களை மேற்கொள்ளலாம்.

அக்3னிபக்வம் ஸமஶ்னீயாத்மாலபக்வமதா2பி வா |
உலூக2லாஶ்மகுட்டோ வா தந்தோலூக2ல ஏவ வா || 5 ||

நெருப்பின் பக்குவப்படுத்தப்பட்ட உணவையும், காலத்தினால் கனிந்த பழம் போன்ற உணவையும், உரலால் அரைத்ததையும்,
அம்மியில் பொடி செய்யப்பட்டதையும், பற்களால் நன்கு மென்று உணவை உட்கொள்ள வேண்டும்.

ஸ்வயம் ஸஞ்சினுயாத்ஸர்வமாத்மனோ வ்ருத்திகாரணம் |
தேஶகாலப3லாபி4க்3ஞோ நாததீதான்யதாஹ்ருதம் || 6 ||

தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையானவற்றை எல்லாம் தானே முயற்சி செய்து அடைய வேண்டும், சேகரித்துக் கொள்ள வேண்டும்.
இடம், காலம், இவைகளின் தன்மைக்கேற்ப வாழ வேண்டிய அறிவை அடைய வேண்டும்.
தன்னுடைய பலத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ரொம்ப காலத்திற்கு முன்னரே சேர்த்துவைத்த உணவை உட்கொள்ள கூடாது.
இது தேவைக்கு மேல் எதையும் வைத்துக் கொள்ளாதே என்ற எச்சரிக்கையை குறிக்கிறது.

வன்யைஶ்சருபரோடா3ஶைர் நிர்வபேத்காலசோதி3தான் |
ந து ஶ்ரௌதேன பஶுனா மாம் யஜேத வனாஶ்ரமீ || 7 ||

வனத்தில் கிடைக்கின்ற கஞ்சி, திடப்பொருட்கள் முதலியவைகளைக் கொண்டு பூஜைகளை, யாகங்களை மேற்கொள்ள வேண்டும்.
சரியான காலத்தில் இவைகளை செய்ய வேண்டும். அந்தந்த காலத்தில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து கொள்ளலாம்.
வேதத்தில் கூறியிருக்கின்றது என்று பசு முதலிய விலங்குகளை பலி கொடுப்பது போன்ற மற்ற ஜீவராசிகளை
ஹிம்சை செய்து என்னை பூஜிக்காதே. வானபிரஸ்த ஆசிரமத்தில் இருப்பவர்கள் மேற்கூறியபடி வாழ வேண்டும்.

அக்3னிஹோத்ரம் ச தர்ஶஶ்ச பௌர்ணமாஸ்ஶ்ச பூர்வவத் |
சாதுர்மாஸ்யானி ச முனேராம்னாதானி ச நைக3மை: || 8 ||

வானபிரஸ்த ஆசிரமத்திற்கு வருவதற்கு முன்னே செய்து கொண்டிருந்த பூஜை, யாகம் போன்ற கர்மங்கள், அக்னிஹோத்திரம்,
அமாவாசை, பௌர்ணமியன்று செய்யும் வைதீக கர்மங்கள், சாதுர்மாஸ்யம் என்ற தவத்தையும் இந்த ஆசிரமத்திலும் அனுஷ்டிக்கலாம்
என்று வேத சாஸ்திரங்கள் நன்கு அறிந்த பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

ஏவம் சீர்ணேன தபஸா முனிர்த3மனிஸந்தத: |
மாம் தபோமயமாராத்4ய ருஷிலோகாத்3ருபைதி மாம் || 9 ||

இவ்விதம் தவம் செய்தால் வானபிரஸ்தன் உடல் நரம்புகள் வெளியே தெரிகின்ற நிலைக்கு சென்று விடுவான்.
தவஸ்வரூபமாக இருக்கின்ற என்னை வழிபட்டதன் பயனாக அவர்கள் பிரம்மலோகத்திற்கு சென்று பின்னர் முறையாக என்னை வந்தடைவார்கள்.

யஸ்த்வேத்த்க்ருச்ச்2ரதஶ்சீர்ணம் தபோ நி:ஶ்ரேயஸம் மஹத் |
காமாயால்பீயஸே யுஞ்ஜ்யாத்3பா3லிஶ: கோSபரஸ்தத: || 10 ||

யாரொருவனால் மிகவும் புனிதமான பலனைக் கொடுக்க கூடிய தவங்களை செய்யாமல், பிராரப்தத்தினால் தானாக வரக்கூடிய
அற்பமான சுகங்களை தவத்தின் மூலமாக அடைந்து அனுபவிப்பவனைப் போன்ற அறிவிலி வேறு யார் இருப்பான்?

யதாஸௌ நியமேSகல்போ ஜரயா ஜாதவேபது2: |
ஆத்மன்யக்னீன்ஸமாரோப்ய மச்சித்தோSக்3னிம் ஸமாவிஶேத || 11 ||

ஒருவேளை வானபிரஸ்தன் அன்றாட கடமைகளை செய்வதற்கான உடற்சக்தியை இழந்து விட்டால் அல்லது வயோகத்தினாலோ,
தீராத வியாதியினால் பாதிக்கப்பட்டால் ம்ருத்யு தேவதையை தன்னிடத்தில் வருவது போன்று தியானிக்க வேண்டும்.
ஈஸ்வரனான என்னை தியானிக்க வேண்டும். மரணத்தை தழுவிக் கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும்.

யதா3 கர்மவிபாகேஷு லோகேஷு நிரயாத்மஸு |
விராகோ3 ஜாயதே ஸம்யட்3ன்யஸ்தாக்3னி: ப்ரவ்ரஜேத்தத: || 12 ||

எப்பொழுது நிறைவான வைராக்கியம் வருகின்றதோ, இந்த உலகத்திலுள்ள எந்தப் பொருளும் மனநிறைவை தரக்கூடியதல்ல என்றும்,
துக்க ஸ்வரூபமானது எனவே செய்த கர்மத்தின் பலனாக அடைந்திருக்கும் இந்த உலகத்தினிடத்தில் வைராக்கியம் வருகின்றதோ அப்பொழுதே எந்த ஆசிரமத்திலிருந்தாலும் அந்த ஆசிரமத்திற்குரிய கடமைகளையெல்லாம் விட்டுவிட்டு சந்நியாஸ ஆசிரமத்திற்கு சென்றுவிடலாம். அல்லது இன்பத்திலும், இன்பத்தை கொடுக்கின்ற பொருட்களிடத்திலும் போதிய அளவு வைராக்கியத்தை இந்த வானபிரஸ்த ஆசிரமத்தில் அடைந்துவிட்டாலும் சந்நியாஸ ஆசிரமத்திற்கு செல்லலாம்.

இஷ்ட்வா யதோ2பதேஶம் மாம் த3த்த்வா ஸர்வஸ்வம்ருத்விஜே |
அக்3னீன்ஸ்வப்ராண ஆவேஶ்ய நிரபேக்ஷ: பரிவ்ரஜேத் || 13 ||

சாஸ்திரத்தில் சொன்னபடி என்னை வழிபட்டு கொண்டு, இறைவனை வணங்கி கொண்டு உன்னிடத்திலுள்ள எல்லாவற்றையும்,
உன்னிடத்திலுள்ள உடமைகளையும், செல்வத்தையும் தகுதியானவர்களுக்கு கொடுத்துவிட்டு, அக்னியை தன்னுடைய பிராணனிடத்தில்
சமர்ப்பித்து விட்டு, அதாவது சந்நியாஸம் எடுத்தவன் இறந்தவனுக்கு சமமானவன். ம்ருதியுவை தன்னிடத்தில்
ஆவாஹரணம் செய்து கொண்டு எதையும் எதிர்ப்பார்க்காமல் சந்நியாஸியாக வாழ வேண்டும்.

விப்ரஸ்ய வை ஸன்ன்யஸதோ தே3வா தா3ராதி3ரூபிண: |
வித்4னான்குர்வன்த்யயம் ஹயஸ்மானாக்ரம்ய ஸமியாத்பரம் || 14 ||

சந்நியாஸத்தை ஏற்றுக் கொண்ட மேலானவனுக்கு, சாதகனுக்கு இந்திரியங்கள் தடைகளை ஏற்படுத்தி கொடுக்கும்.
மனைவி, மக்கள், உற்றார், உறவினர்கள் போன்றவர்கள் மூலமாக தடைகள் வரலாம். இவன் நம்மை கடந்து உயர்ந்த நிலைக்கு
சென்று விடுவான் என்ற கோபத்தால் தேவர்கள் தடைகளை கொடுப்பார்கள்.

பி3ப்4ருயாச்சேன்முனிர்வாஸ: கௌபீனாச்சா2த3னம் பரம் |
த்யக்தம் ந தண்டபாத்ராப்4யாமன்யக்திஞ்சித3னாபதி3 || 15 ||

சந்நியாஸியானவன் எளிமையான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். உடலை மறைக்கும் அளவுக்கு ஆடை இருந்தாலே போதும்.
சாதாரண நேரங்களில் இவ்வாறு இருக்க வேண்டும். ஆபத்து இல்லாத காலத்தில் இவ்வாறு இருக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின்போது தண்டத்தையும், பிக்க்ஷை பாத்திரத்தையும் வைத்துக் கொள்ளலாம்.

த்3ருஷ்டிபூதம் ன்யஸேத்பாத3ம் வஸ்த்ரபூதம் பிபே3ஜ்ஜலம் |
ஸத்யபூதாம் வதே3த்3வாசம் மன:பூதம் ஸமாசரேத் || 16 ||

நான்குவிதமான பண்புகள் இதில் கூறப்பட்டுள்ளது.
காலெடுத்து வைப்பதற்கு முன் நன்கு பார்த்துவிட்டு வைக்க வேண்டும். எதைச் செய்தாலும் முழுகவனத்துடன் செய்ய வேண்டும்.
உணவை சாப்பிடுவதற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். நீரையும் குடிப்பதற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும்.
உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தூய்மைபடுத்தப்பட்ட உணவையும், நீரையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
உண்மையினால் சுத்தம் செய்யப்பட்ட சொற்களை பேச வேண்டும். வாக்கு தூய்மையை இது குறிக்கின்றது
மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். யாருக்கும் துரோகம் பண்ணக்கூடாது

மௌனானீஹானிலாயாமா த3ண்டா3 வாக்3தே3ஹசேதஸாம் |
ந ஹயேதே யஸ்ய ஸந்த்யங்க3 வேணுபி4ர்ன ப4வேத்3யதி: || 17 ||

மௌனம் – பேசாமலிருக்கும் வாக்கு தவம். இதை வாக்கின் தண்டம் என்று குறிப்பிடுவர். அதாவது வாக்குக்கு கொடுக்கப்படும் தண்டனை
அனீஹா – இந்த உடலை ஏதாவது செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையை விட்டுவிட்டு உடலை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
இது சரீரத்திற்கு கொடுக்கப்படுகின்ற தண்டனை
அனிலாயாமா – மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். பிராணாயாமத்தின் துணைக் கொண்டு மனதை அமைதிப் படுத்த வேண்டும்.
பிராணாயாமம் என்பது பிராணனை அமைதிப் படுத்துதல். இது மனதிற்கு கொடுக்கப்படும் தண்டனை
த3ண்டம் – தண்டனை, மூங்கில் குச்சி
அங்க – உத்தவா!
ஏதே ய்ஸ்ய ந ஹி ஸந்தி – எந்த சந்நியாசிக்கு இந்த மூன்று பண்புகள் இல்லையோ அவர்கள்
வேணுபி: ந ப4வேத் யதி: – மூங்கில் குச்சியான தண்டத்தை வைத்திருந்தால் மட்டும் சந்நியாசியாகிவிட மாட்டான்.

பி4க்ஷாம் சதுர்ஷு வர்ணேஷு விக3ஹர்யான்வர்ஜயம்ஶ்சரேத் |
ஸப்தாகா3ரானஸங்க்ல்ருப்தாம்ஸ்துஷ்யேல்லப்3தே4ன தாவதா || 18 ||

அதர்மமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடமிருந்து பிக்ஷை ஏற்கக்கூடாது. முன்னரே தீர்மானிக்காத ஏழு வீடுகளில் மட்டுமே
பிக்ஷை எடுக்க வேண்டும். கிடைத்ததில் திருப்தி அடைய வேண்டும்.

ப3ஹிர்ஜலாஶயம் க3த்வா த்த்ரோபஸ்ப்ருஶ்ய வாக்3யத: |
விப4ஜ்ய பாவிதம் ஶேஷம் பு4ஞ்ஜீதாஶேஷமாஹ்ருதம் || 19 ||

கிராமத்திற்கு வெளியே சென்று அங்கேயுள்ள நீர்நிலையில் கை-கால்களை சுத்தம் செய்து விட்டு, வாக்கையும், நாக்கையும்
கட்டுப்படுத்தியவனாக கொண்டு வந்த உணவை முதலில் தூய்மைப் படுத்த வேண்டும், மந்திரத்தின் மூலமாகவும், பாவனை மூலமாகவும்,
நீரைக் கொண்டும், அக்னியை பயன்படுத்தியும் தூய்மைப்படுத்தி சாப்பிட வேண்டும், மீதியுள்ளதை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஏகஶ்சரேன்மஹீமேதாம் நி:ஸங்க3: ஸம்யதேந்த்3ரிய: |
ஆத்மக்ரீட3 ஆத்மரத ஆத்மவான் ஸமதர்ஶன: || 20 ||

இந்த உலகத்தில் எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை நன்கு அடக்கியவனாகவும், தனக்குள்ளே விளையாடிக் கொண்டும்,
தனக்குள்ளே மகிழ்ந்து கொண்டும் தனியாக சஞ்சரித்துக் கொண்டிருப்பான். பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை அடைந்து,
அதில் நிலைபெற்றிருப்பான். எல்லோரையும் சமநோக்குடன் பார்ப்பவன் பிரம்மஞானி

விவிக்தக்ஷேமஶரணோ மத்3பா4வ்விமலாஶய: |
ஆத்மானம் சிந்தயேதே3கமபே4தே3ன மயா முனி: || 21 ||

அமலம் – தூய்மையான இடத்தில் அன்பை வைத்தல்
சந்நியாஸி மக்கள் நடமாட்டமில்லாத தனிமையான, பாதுகாப்பான, தூய்மையான, அச்சமற்ற இடத்தில் வசிக்க வேண்டும்.
தூய்மையான மனதுடன் என்னிடத்தில் பக்தியுடையவனாக இருக்க வேண்டும். ஆத்மாவான தன்னைப்பற்றிய சிந்தனையுடன்
ஞானயோகத்தில் இருக்க வேண்டூம். ஆத்மாவை ஒன்றே என்றும், என்னிடமிருந்து வேறுபடாதவனாகவும் சிந்தித்து கொண்டிருக்க வேண்டும்.

அன்வீக்ஷேதாத்மனோ ப3ந்த4ம் மோக்ஷம் ச ஞான நிஷ்ட்2யா |
ப3ந்த4 இந்த்ரியாவிக்ஷேபோ மோக்ஷ ஏஷாம் ச ஸம்யம: || 22 ||

ஆத்மன: பந்தம் மோக்ஷம் ச – தனக்கு பந்தமாக இருப்பது எது, மோட்சம் என்பது என்ன என்பதை விசாரம் செய்ய வேண்டும்.
பந்தம் என்பது துயரம், அதை எதனால் நாம் அனுபவிக்கின்றோம், யார் காரணம், எப்படி அதிலிருந்து விடுபடுவது என்ற
ஆராய்ச்சி செய்ய வேண்டும். மனத்தூய்மை அடைந்து ஞானத்தை அடைவதனால் இதற்கான பதிலை அடையலாம்.
மோட்சம் என்பது என்ன அதை எப்படி அடைவது? என்று விசாரித்து உண்மையை அறிய வேண்டும்.
பந்தம் இந்த்ரிய விக்ஷேபம் – பந்தம் என்பது புலன்களின் அமைதியின்மை. எப்பொழுதும் ஏதாவது ஒரு இந்திரியம்
ஏதாவது ஒரு விஷயத்தை நோக்கியே, விஷய சுகத்தை நாடியே சென்று கொண்டிருக்கும்.
மோக்ஷ ஏஷாம் ச ஸம்யம் – புலன்கள் அமைதியோடு இருப்பதே மோட்சம்

தஸ்மான் நியம்ய ஷட்3வர்க3ம் மத்3பா4வேன சரேன்முனி: |
விரக்த: க்ஷுத்3ரகாமேப்4யோ லப்3த்4வாத்மனி ஸுக2ம் மஹத் || 23 ||

ஆகவே மனம், ஐந்து புலன்கல் என்கின்ற ஆறுவிதமான கரணங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும், நெறிப்படுத்த வேண்டும்.
என்னிடத்தில் பக்தியை செலுத்திக் கொண்டு வாழ வேண்டும். அற்பமான விஷயத்தில் வைராக்கியத்தை அடைந்து தன்னிடத்திலே
மேலான சுகத்தை, பேரானந்தத்தை அனுபவித்துக் கொண்டு வாழ வேண்டும். உன்னிடத்திலேயே நேர்மையாக இருந்து கொண்டு,
உன்னையே மதித்து பாராட்டும் வகையில் வாழ வேண்டும்.

புரக்3ராமவ்ரஜான்ஸார்தா2ன்பி4க்ஷார்த2ம் ப்ரவிஶம்ஶ்சரேத் |
புண்யதே3ஶஸரீச்சை2ல வனாஶ்ரமவதீம் மஹீம் || 24 ||

நகரம், கிராமம், ஏழைகள் வாழும் இடங்கள், பக்தர்கள் வாழும் இடங்களில் பிக்ஷைக்காக சென்று வரலாம்.
புனிதமான இடங்கள், ஆறு, மலை போன்ற இடங்கள், காடு, மகான்கள், ரிஷிகள் ஆசிரமம், தவம் செய்து கொண்டிருக்கின்ற
மகான்கள் வசிக்கின்ற ஆசிரமங்கள் போன்ற இடங்களில் சஞ்சரிக்க வேண்டும்.

வானப்ரஸ்தா2ஶ்ரமபதேஷ்பீ4க்ஷ்ணம் பை4க்ஷ்யமாசரேத் |
ஸம்ஸித்4யத்யாஶ்வஸம்மோஹ: ஶுத்3த4ஸத்த்வ: ஶிலாந்த4ஸா || 25 ||

வானபிரஸ்த ஆசிரமத்தில் உள்ளவர்கள் அடிக்கடி பிக்ஷையெடுத்து சாப்பிடுவதே உயர்வானது.
இறைந்து கிடக்கும் தானியங்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு அதை சமைத்து சாப்பிடலாம். கொஞ்ச கொஞ்சமாக உணவை
சில வீடுகளில் பிக்ஷை எடுத்து சாப்பிடலாம். இதனால் விரைவில் சாத்வீக்மான மனதை அடைகிறான்.
தர்ம-அதர்ம விஷயங்களிலும், சாதன-சாத்தியம், உண்மை-பொய் இவைகளில் ஏற்படும் மோஹம் நீங்கப்பெறுகிறான்.
இறுதியில் மோட்சத்தை அடைகிறான்.

நைதத்3வஸ்துதயா பஶ்யேத் த்3ருஶ்யமானம் வினஶ்யதி |
ஆஸக்தசித்தோ விரமோதி3ஹாமுத்ரசிகீர்ஷிதாத் || 26 ||

நம்மால் அனுபவிக்க கூடிய இன்பத்தை தரும் பொருட்களை எனக்கு தேவையானது என்ற பார்வையோடு பார்க்காதே.
ஏனென்றால் அவைகளெல்லாம் அழியக்கூடியது எனவே பற்றில்லாத மனதையுடையவனாக அவைகளிடமிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
இகலோகத்தில், பரலோகத்தில் சுகத்தை தரும் பொருட்களை அடைய முயற்சிக்கும் செயல்களை முயற்சி செய்து விட வேண்டும்.

யதே3த்தா3த்மனி ஜகன்மனோவாக்ப்ராணஸம்ஹதம் |
ஸர்வம் மாயேதி தர்கேண ஸ்வஸ்த2ஸ்த்யக்த்வா ந தத்ஸ்மரேத் || 27 ||

நிலையற்ற பொருட்களில் அடைய வேண்டியது வைராக்கியம். மித்யா என்ற ஞானத்தை அடைய வேண்டும்.
அகங்காரத்திற்கு பொருளாக இருப்பது மூன்று சரீரங்கள். உலகத்தில் சம்பந்தம் வைக்கும் பொருட்களில் மமகாரம் ஏற்படுகிறது.
நான், என்னுடையது என்கின்ற அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் விஷயமாக இருக்கின்ற இந்த உலகமும் சரீரமும்,
ஆத்மாவான என்னுடைய உண்மையான ஸ்வரூபத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. நாம் ஞானத்தை அடைந்த பிறகும்,
இந்த உலகத்தில் வாழ்ந்தாக வேண்டும். எனவே அனைத்தும் மித்யா என்று யுக்தியின் துணைக் கொண்டு உணர்ந்து இவைகளை
மனதளவில் துறந்துவிட வேண்டும். மீண்டும் உண்மையானது என்ற நிலைக்கு திரும்பி செல்லாதே. உன்னிடத்தில் இருப்பவனாக இருப்பாயாக

ஞானநிஷ்டோ2 விரக்தோ வா மத்3ப4க்தோ வானபேக்ஷக: |
ஸலிங்கா3னாஶ்ரமாம்ஸ்த்யக்த்வா சரேத3விதி4கோ3சர: || 28 ||

பிரம்ம ஞானத்தில் நிலைப்பெற்றிருப்பவன் அல்லது தீவிர வைராக்கியத்தை அடைந்து இருப்பவன் அல்லது முழுமையாக மனதை
இறைவனிடத்தில் ஈடுபடுத்தியிருப்பவன் இப்படிபட்ட நிலையை உடையவர்கள், உதாசீனனாக இருப்பவர்கள், சாஸ்திர விதிகள்,
கடமைகள் எதுவும் இல்லாத சந்நியாஸியாக வாழ்ந்துகொண்டு இருப்பான்.
அந்தந்த ஆசிரமத்திற்குரிய அடையாளங்களை, கடமைகளை துறந்திருப்பார்கள்.

பு3தோ4 பா3லகவத்க்ரீடே3த்குஶலோ ஜட3வச்சரேத் |
வதே3த்3ருன்மத்தவத்3வித்3வாங்கோசர்யோம் நைக3மஶ்சரேத் || 29 ||

ஞானநிஷ்டையுடன் இருந்தாலும் குழைந்தையைப் போல விளையாடிக் கொண்டிருப்பான். குழந்தைகளுக்கு ராக-துவேஷம் கிடையாது.
ஆனால் ஆத்ம-அனாத்மா விஷயத்தில் அறியாமையோடு இருக்கும். மோட்ச ஆனந்தத்தை அனுபவிக்கும், பாவ-புண்ணியங்கள் கிடையாது.
மனதும், உடலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியும். காலத்தையும் பயனுள்ளதாக செலவழிக்கவும் உதவுகின்றது.
ஆற்றல் உள்ளவனாகவும் ஜடம் போல் ஒன்றுமறியாதவன் போல் வாழ்ந்து கொண்டிருப்பான். பண்டிதனாக இருந்தாலும்
பைத்தியக்காரன் போல் பேசிக் கொண்டிருப்பான். பைத்தியக்காரன் எப்பொழுதும் நிகழ்காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்பான்.
பசுக்கள் போல நியமங்களை அனுசரிக்காதவனாக இருப்பான்.

வேத3வாதரதோ ந ஸ்யான்ன பாஷண்டீ3 ந ஹைதுக: |
ஶுஷ்கவாத3விவாதே3 ந கஞ்சித்பக்ஷம் ஸமாஶ்ரயேத் || 30 ||

வேதத்திலுள்ள கர்ம காண்டத்தில் உள்ள கர்மங்களில் ஈடுபடமாட்டான். தர்மத்திற்கும், வேதத்திற்கும் விரோதமாக வாழமாட்டான்.
வறண்ட, பயனற்ற வாத-விவாதங்களில் யார் பக்கமும் சேர்ந்துக் கொண்டு வாதம் செய்து கொண்டிருக்க மாட்டான்.

நோத3விஜேத ஜனாத்3தீ4ரோ ஜனம் சோத்3வேஜயேன்ன து |
அதிவாதாம்ஸ்திதிக்ஷேத நாவமன்யேத கஞ்சன |
தே3ஹமுத்3தி3ஶ்ய பஶுவத்3வைரம் குர்யான்ன கேனசித் || 31 ||

தீரனானவன் மக்களிடமிருந்து எந்த பாதிப்பயும் அடையக் கூடாது. பாதுகாத்துக் கொள்ள வேண்டும். துன்பத்தை அடையாதே.
அதே சமயத்தில் மக்களை துன்பறுத்தாதே. பிறர் தூற்றினாலும், நிந்தித்தாலும் பொறுத்துக் கொள்வான்.
யாரையும் அவமதித்து பேசமாட்டான், விலங்குகளைப் போல உடலுக்கு ஏற்படும் கஷ்டத்தினால்
எந்த உயிர்களிடத்திலும் பகை உணர்வை வளர்த்துக் கொள்ளாதே.

ஏக ஏவ பரோ ஹயாத்மா பூ4தேஷ்வாத்மன்யவஸ்தி2த: |
யதே2ந்துருத3பாத்ரேஷு பூ4தான்யேகாத்மகானி ச || 32 ||

மேலான ஆத்மா ஒன்றேதான். அதுவேதான் எல்லா உயிர்களிடத்திலும் இருக்கின்றது. என்னுடைய உடலிலும் இருக்கின்றது.
எல்லா ஜீவராசிகளில் உடல்களும் ஒரே தன்மையுடன்தான் இருக்கின்றது. பஞ்சபூதங்களால் உருவானதுதான் அவைகள்.

ஆலப்3த்4வ ந விஷீதே3த காலே காலேSஶனம் க்வசித் |
ல்ப்த்4வா ந ஹ்ருஷ்யேத்3த்4ருதிமானுப4யம் தைவதந்த்ரிதம் || 33 ||

பிராரப்த வசத்தினால் சாப்பிடுவதற்கு எது கிடைக்கிறதோ அதை திருப்தியுடன் உண்டு அனுபவிக்க வேண்டும்.
உரிய காலத்தில் உணவு கிடைக்காவிட்டால் அதற்காக வருந்த கூடாது. உணவு சரியானகாலத்தில் கிடைத்தாலும்
அதனால் மகிழ்ச்சியடையவும் கூடாது. ஏனென்றால் உணவு கிடைப்பதும், கிடைக்காததும் தெய்வத்தின் அனுக்கிரஹத்தால் நடக்கின்றது.
பிராரப்தத்தின்படிதான் நடக்கின்றது.

ஆஹாரார்த2ம் ஸமீஹேத யுக்தம் தத்ப்ராணதா4ரணம் |
தத்த்வம் விம்ருஶ்யதே தேன தத்3விக்ஞாய விமுச்யதே || 34 ||

தான் உயிர் வாழ்வதற்கு சரியான உணவை அடைவதற்கு தேவையான அளவு அதிக முயற்சி செய்யவேண்டும்.
பிராரப்தத்தின்படி கிடைக்க வேண்டியது கிடைக்கும் என்று எந்த முயற்சி செய்யாமல் இருந்துவிடக் கூடாது.
முயற்சி செய்ய வேண்டும் ஆனால் அதனால் அடையும் பலன் பிராரப்தத்தைப் பொறுத்து அமைந்திருக்கும்.
இவ்வாறு பிராணனை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் ஆத்ம தத்துவ விசாரம் நன்கு செய்ய முடியும்.
ஞானயோகத்தில் முழுமனதோடு ஈடுபடமுடியும். இதனால் அந்த பிரம்மத்தை அறிந்து அடைந்து மோட்சத்தை அடைகிறான்.

யத்3ருச்ச2யோபபன்னான்னமத்3யாச்ச்2ரேஷ்டமுதாபரம் |
ததா2 வாஸஸ்ததா2 ஶய்யாம் ப்ராப்தம் ப்ராப்தம் ப4ஜேன்முனி: || 35 ||

சந்நியாஸியானவன் தன் முயற்சியால் அடைந்ததை அப்படியே திருப்தியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எதிர்பார்க்காமல் பிராரப்தத்தினல் கிடைக்கக்கூடிய அன்னத்தை உட்கொள்ள வேண்டும். உயர்வாக இருந்தாலும்,
தாழ்வாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல கிடைக்கக்கூடிய துணி, படுக்கை, இடம் இவைகளிலும் திருப்தியடைய வேண்டும்.

ஶௌசமாசமனம் ஸ்னானம் ந தும் சோத2னயா சரேத் |
அன்யாம்ஶ்ச நியமாஞ்ஞானீ யதா2ஹம் லீலயேஶ்வர: || 36 ||

தூய்மையாக இருத்தல், வைதீக கர்மங்களை செய்தல் (ஆசமனம்), குளித்தல் போன்ற சாஸ்திரம் விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யக்கூடாது,
மற்றவர்களுடைய நிர்பந்தத்திற்காக ஞானியானவன், சந்நியாஸியானவன் செய்யக் கூடாது. எவ்வாறு ஈஸ்வரனான
நான் கர்மாக்களை விளையாட்டாக செய்கின்றேனோ அதுபோல சந்நியாஸியும் செய்ய வேண்டும

ந ஹி தஸ்ய விகல்பாக்2யா யா ச மத்3வீக்ஶயா ஹதா |
ஆதே3ஹா~தாத்க்வசித்க்2யாதிஸ்தத: ஸம்பத்3யதே மயா || 37 ||

வேற்றுமைகள் யாவும் என்னைக் கண்டவுடனேயே அழிந்துவிடுகிறது. உயிரோடு இருக்கும்வரையில் அவனிடம் இருப்பதில்லை.
தோன்றிக் கொண்டிருக்கும் வேற்றுமைகள் அவனைப் பாதிப்பதில்லை. சரீரம் அழிந்தபின் என்னுடன் ஐக்கியமாகி விடுகின்றான்.

து3:கே2தர்கேஷு காமேஷு ஜாதநிர்வேத3 ஆத்மவான் |
அக்ஞாஸிதமத்3த4மோ முனிம் கு3ருமுபவ்ரதேத் || 38 ||

இன்பத்தைக் கொடுக்கும் என்று நினைக்கும் பொருட்களில் முடிவில் துன்பத்தையே கொடுக்கும் என்பதை உறுதியாக உணர்ந்த
சுயக்கட்டுடைய சந்நியாஸி அடைந்த வைராக்கியத்தை பாதுகாப்பான். இறைவனுடைய உண்மைத்தன்மையை விசாரித்தும்
உணராமல் இருப்பவர்கள் பிரஹ்மநிஷ்டனாக இருக்கும் குருவை அடைக்கலம் புகவேண்டும்.

தாவத்பரிசரேத்3ப4க்த: ஶ்ரத்3தா4வான்னஸூயக: |
யாவத்3ப்3ரஹ்ம விஜானீயான்மாமேவ கு3ருமாத்3ருத: || 39 ||

எவ்வளவு காலம் பிரம்ம ஞானத்தை அடைவதற்கு தேவைப்படுகிறதோ அதுவரை குருவுக்கு பணிவிட செய்துகொண்டு வரவேண்டும்.
சிரத்தையுடனும், குறைக்கூறி கொண்டிருக்காமலும், இறைவனே குருவாக இருக்கிறார் என்று பக்தியுடனும் அவருக்கு சேவை செய்துவர வேண்டும்.

யஸ்த்வஸம்யதஷட்3வர்க3: ப்ரசண்டே3ந்த்3ரியஸாரதி2: |
ஞானவைராக்யரஹிதஸ்த்ரித3ண்ட3முபஜீவதி || 40 ||

ஸுரானாத்மானமாத்மஸ்த2ம் நிஹனுதே மாம் ச த4ர்மஹா |
அவிபக்வகஷாயோSஸ்மாத3முஷ்மாச்ச விஹீயதே || 41 ||

யாரொருவன் ஐந்து ஞானேந்திரியங்களையும், மனதையும் கட்டுப்படுத்தாமலும், நெறிபடுத்தாத புத்தியை உடையவனாகவும்,
ஞானமும், வைராக்கியமும் இல்லாமல் சந்நியாஸத்தை எடுத்துக் கொள்கின்றனோ அவன் என்னையும், தேவதைகளையும்,
தன்னையும் கஷ்டப்படுத்துகிறான். தர்மத்தையே கொன்றவனாகிறான், தர்மத்தை அழிப்பவனாகிறான்.
மனதிலுள்ள அழுக்குகளை நீக்காதவனாக இருக்கிறான். இவன் இந்த உலகத்திலும் சௌக்கியமாக இருக்கமாட்டான்,
பரலோகத்தையும் அடைய மாட்டான்.

பி4க்ஷோர்த4ம: ஶமோSஹிம்ஸா தப ஈக்ஷா வனௌகஸ: |
க்3ருஹிணோ பூ4தரக்ஷேஜ்யா த்3விஜஸ்யாசார்யஸேவனம் || 42 ||

சந்நியாஸியினுடைய தர்மங்களாவது மனவடக்கத்துடன் இருத்தல், அஹிம்ஸையை கடைப்பிடித்தல், நிவிருத்தி பிரதானமான
சாதனங்களை கடைப்பிடித்தல் ஆகியவைகளாகும், வானபிரஸ்தாசிரமத்திற்கு சென்றவர்கள் பின்பற்ற வேண்டிய தர்மங்கள்
மௌனத்துடனும், எளிமையுடன் வாழ்தல், உபாஸனம், ஜபம், தியானம் போன்றவற்றை பின்பற்றுதல் ஆகியவகளாகும்.
கிருஹாஸ்சிரமத்தில் இருப்பவர்கள் மற்ற ஆசிரமத்தில் உள்ளவர்களையும், மற்ற ஜீவராசிகளையும் காப்பாற்ற வேண்டும்.
இறைவழிபாடு, தானம் போன்றவைகளை செய்ய வேண்டும். பிரம்மசாரிகள் ஆசாரியருக்கு சேவை செய்து அறிவை அடைய வேண்டும்.

ப்3ரஹ்மசர்யம் தப: ஶௌசம் ஸந்தோஷோ பூ4தஸௌஹ்ருத3ம் |
க்3ருஹஸ்த2ஸ்யாப்ய்ருதௌ க3ந்து: ஸர்வேஷாம் மத்3ருபாஸனம் || 43 ||

இல்லறத்தில் இருப்பவர்கள் ஒழுக்கத்துடனும், பிறன்மனை நோக்காமலும், என்னை வழிபட்டுக் கொண்டும், தவம் செய்தல்,
தூய்மையாக இருத்தல், மனதிருப்தியுடன் இருத்தல், போதுமென்ற மனதுடன் இருத்தல், எல்லா ஜீவராசிகளிடத்திலும்
நட்புணர்வுடன் இருத்தல் ஆகியவைகள் தர்மங்களையும் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
இவைகள் யாவும் முக்கியமாக பொதுவான் தர்மங்கள் என்று பகவான் கூறுகிறார்.
ஆனால் இல்லறத்தில் இருப்பவனுக்கு முக்கியமான தர்மங்களாகும்..

இதி மாம் ய: ஸ்வத4ர்மேண ப4ஜேன்னித்யமனன்யபா4க் |
ஸர்வபூ4தேஷு மத்3பா4வோ ம3ப4க்திம் விந்த3தே த்3ருடா4ம் || 44 ||

இதவரை என்னால் உபதேசித்த வர்ணாசிரம தர்மங்கள், கடமைகள் முழுமையாக கடைப்பிடித்துக் கொண்டு என்னைத்தவிர
வேறிடம் செல்லாத மனதுடன் வழிபட வேண்டும். எல்லா ஜீவராசிகளிடத்திலும் என்னை காண்பவனுக்கு என்னிடம் நிலையான பக்தி உண்டாகிறது

ப4க்த்யோத்3த4வானபாயின்யா ஸர்வலோகமஹேஶ்வரம் |
ஸர்வோத்பத்த்யப்யயம் ப்ரஹ்ம காரணம் மோபயாதி ஸ: || 45 ||

உத்தவா!, என்னை உணர வேண்டும், அடைய வேண்டும், என்ற நிஷ்காம, தூய்மையான பக்தியினால் அனைத்து உலகங்களுக்கும்
தலைவனாகவும், அவைகளை காப்பாற்றிக் கொண்டு இருப்பவனாகவும், அனைத்து படைப்புக்கும் காரணமாகவும்,
லயத்திற்கும் காரணமாகவும் இருக்கின்ற பிரம்மத்தை, என்னை அந்த பக்தன் அடைகிறான்.

இதி ஸ்வத4ர்மநிர்ணிக்த ஸத்த்வோ நிர்ஞாதமத்3க3தி: |
ஞானவிக்3ஞானஸம்பன்னோ ந சிராத்ஸமுபைதி மாம் || 46 ||

இவ்வாறாக தூய்மையான மனதை அடைந்தவன், தன்னுடைய ஸ்வதர்மங்களை, கடமைகளை அனுஷ்டிப்பதன் மூலம்
மனதிலுள்ள அழுக்குகளான ராக-துவேஷங்கள் நீங்கி தூய்மையான மனதை அடைகின்றான். இது கர்மயோகத்தின் மூலம் அடையப்படுகிறது.
என்னைப் பற்றி உரைக்கின்ற வேதாந்த சாஸ்திரத்தை நன்கு அறிந்தவன், என்னால் கொடுக்கப்பட்ட வேதாந்தத்தை நன்கு உணர்ந்தவன்,
தன்னை முழுமையாக ஞானயோகத்தில் ஈடுபடுத்திக் கொண்டவன் என்பதைக் குறிக்கிறது..
ஞானமும், விக்ஞானமும் என்கின்ற செல்வங்களை அடைகின்றான். ஞானம் என்பது உலகத்தின் நிலையாமையை உணர்ந்தவன்,
விக்ஞானம் என்பது உலகத்திற்கு ஆதாரமாக இருக்கின்ற பிரம்மத்தை உணர்ந்தவன் என்பதாகும்..
ஆத்ம ஞானத்தை அடைந்து அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

வர்ணாஶ்ரமவதாம் த4ர்ம ஏஷ ஆசாரலக்ஷண: |
ஸ ஏவ மத்3ப4க்தியுதோ நி:ஶ்ரேயஸகர: பர: || 47 ||

இந்த வர்ணாசிரம தர்மங்கள் என்னால் வகுக்கப்பட்டது. இவைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவைகளை என்னிடத்தில் பக்தியுடன்
கூடியவனாக இருந்து கொண்டு பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்மை இது மோட்சத்திற்கு அழைத்து செல்லும்.

ஏத த்தேSபி4ஹிதம் ஸாதோ4 ப4வான்ப்ருச்ச2தி மாம் |
யதா2 ஸ்வத4ர்மஸம்யுக்தோ ப4க்தோ மாம் ஸமியாத்பரம் || 48 ||

உத்தமமான உத்தவா! நீ என்னிடம் என்னென்னல்லாம் கேட்டாயோ அவைகளையெல்லாம் நன்கு உபதேசித்து விட்டேன்.
எவ்விதம் தன்னுடைய கடமைகளை செய்து கொண்டிருக்கும் என்னுடைய பக்தன் மேலான என்னை
எப்படி அடைய முடியும் என்பதையும் விளக்கி விட்டேன்.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -11–வர்ணாசிரம தர்மம்–

May 22, 2020

ஶ்ரீஉத்தவ உவாச
யஸ்த்வயாபி4ஹித: பூர்வம் த4ர்மஸ்த்வத்3 ப4க்திலக்ஷண: |
வர்ணாஶமாசாரவதாம் ஸர்வேஷாம் த்3விபதாமபி || 1 ||

யதா2னுஷ்டி2யமானேன த்வயி ப4க்திர்ந்ருணாம் ப4வேத் |
ஸ்வத4ர்மணாரவிந்தாக்ஷ தன்மமாக்2யாதுமர்ஹஸி || 2 ||

வர்ணமானது சத்துவ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையில் .பிரிக்கப்பட்டிருக்கின்றது.
ஆசிரம வாழ்க்கைநெறி வயதின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது என்று பகவான் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்.
உங்களிடம் பக்தி உண்டாக்கவல்ல தர்மமானது ஏற்கனவே விளக்கி சொல்லப்பட்டது. வர்ணாசிரம் நெறிப்படி வாழ்கின்ற
எல்லா மனிதர்களுக்கும் பக்தி ஏற்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
எவ்விதம் தத்தம் கடமைகளை நெறிப்படி செய்து வருவதாலே பக்தி வளர்கின்றது.
தாமரையைப் போன்ற கண்களையுடைய பகவானே! வர்ணாசிரம தர்மத்தை எனக்கு நன்கு விளக்கி சொல்ல வேண்டும்.

புரா கில மஹாபா4ஹோ த4ர்ம பரமகம் ப்ரபோ4 |
யத்தேன ஹம்ஸரூபேண ப்3ரஹ்மணேSப்4யாத்த2 மாத4வ || 3 ||

ஸ இதா3னீ ஸுமஹதா காலேனாமித்ரகர்ஶன |
ந ப்ராயோ ப4விதா மர்த்ய லோகே ப்ராக3னுஶாஸித: || 4 ||

பகவானே! முன்னொரு காலத்தில் மேலான தர்மத்தை ஹம்ஸ ரூபத்தில் பிரம்மதேவனுக்கு உபதேசித்தீர்கள்.
இப்படி செய்த உபதேசமானது பல காலங்கள் சென்றுவிட்டபடியால் மண்ணுலகில் மறைந்து போய்விட்டது என்றே தோன்றுகிறது.

வக்தா கர்தாவிதா நான்யோ த4மஸ்யாச்யுத தே பு4வி |
ஸபா4யாமபி வைரிஞ்ச்யாம் யத்ர மூர்தித4ரா: கலா: || 5 ||

கர்த்ராவித்ரா ப்ரவக்த்ரா ச ப4வதா மது4ஸூதன |
த்யக்தே மஹீதலே தே3வ வினஷ்டம் க: ப்ரவக்ஷ்யதி || 6 ||

தத்த்வம் ந: ஸர்வத4ர்மக்ஞ த4ர்மஸ்த்வத்3 பக்திலக்ஷண: |
யதா2 யஸ்ய விதீ4யேத ததா2 வர்ணய மே ப்ரபோ4 || 7 ||

அச்சுதா! தர்மத்தை உபதேசிப்பவரும், அதன்படி வாழ்பவரும், அதை காப்பாற்றுபவரும் தங்களைத் தவிர இந்த உலகில் வேறு யாரும் இல்லை.
பிரம்மலோகத்திலும் கூட தேடினாலும் யாரும் இருக்கமாட்டார்கள். விதவிதமான அறிவுக் கலைகள் அனைத்தும் உயர்ந்த நிலையில் இருக்கும்
பிரம்மலோகத்திலும் கூட யாரும் அப்படி கிடையாது. மதுசூதனா! தாங்கள் இந்த தர்மத்தை தொடங்கியவர், உபதேசிப்பவர்.
தேவர்களுக்கெல்லம் தேவனாக இருப்பவரே! தாங்கள் இந்த மண்ணுலகை விட்டு சென்றபின் இந்த தர்மம் மெல்ல மெல்ல மறைந்து போகும்.
அப்போது யார்தான் அதை எடுத்து சொல்வார்கள். ஆகவே எல்லா தர்மங்களையும் அறிந்த பிரபோ!
தங்களிடம் பக்தியை உண்டாக்கும் அறநெறியை விளக்கிக் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் யாருக்கு எவ்விதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கூறுங்கள்.

ஶ்ரீஶுக உவாச
இத்த2ம் ஸ்வப்4ருத்யமுக்2யேன ப்ருஷட: ஸ ப4க3வான் ஹரி: |
ப்ரீத: க்ஷேமாய மர்த்யானாம் த4ர்மானாஹ ஸனாதனான் || 8 ||

இவ்விதம் தன்னுடைய மேலான பக்தரான உத்தவர் கேட்டவுடன், பகவான் ஶ்ரீகிருஷ்ணர் மிகவும் மகிழ்ச்சியை அடைந்து
மனித இனத்திற்கு நன்மை தரக்கூடியதும் என்றும் தொடர்ந்து இருக்கின்ற அறநெறிகளை, தர்மங்களை அவருக்கு உபதேசம் செய்தருளினார்.

ஶ்ரீபகவான் உவாச
த4ர்ம்ய ஏஷ தவ ப்ரஶ்னோ நை:ஶ்ரேயஸகரோ ந்ருணாம் |
வர்ணாஶ்ரமாசாரவதாம் தமுத்3த4வ நிபோ3த4 மே || 9 ||

ஆதௌ3 க்ருதயுகே3 வர்ணோ ந்ருணாம் ஹம்ஸ இதி ஸ்ம்ருத: |
க்ருதக்ருத்யா: ப்ரஜா ஜாத்யா தஸ்மாத்க்ருதயுக3ம் விது3: || 10 ||

ஶ்ரீபகவான் உபதேசிக்க தொடங்கினார்.
உத்தவா! உன்னுடைய இந்த கேள்வியானது உத்தமமானது, தர்மமயமானது. இந்த கேள்வி மனிதனுக்கு மோட்சத்தை
கொடுக்க கூடிய வழியை கொடுக்கும் பதிலை உடையது. வர்ண, ஆசிரம நெறிப்படி நடக்கும் மனிதர்களுக்கு மோட்சத்தை தரக்கூடிய
அத்தகைய தர்மங்களை சொல்லப் போகிறேன். கவனமாக கேள்.
கிருதயுக ஆரம்பத்தில் மனிதர்கள் பின்பற்றுகின்ற வர்ணங்களில் ஹம்ஸம் என்ற ஒரு வர்ணம்தான் இருந்தது.
பிறப்பிலே மனிதர்கள் மனநிறைவுடனும், மனத்தூய்மையுடனும், தர்மவான்களாகவும் இருந்தார்கள்.
எனவே இதை கிருதயுகம் என்று அழைத்தார்கள்

வேத3: ப்ரணவ ஏவாக்4ரே த4ர்மோSஹம் வ்ருஷரூபத்4ருக் |
உபாஸதே தபோநிஷ்டா2 ஹம்ஸம் மாம் முக்தாகில்பி3ஷா: || 11 ||

த்ரேதாமுகே2 மஹாபா4க3 ப்ராணான்மே ஹ்ருதயாத் த்ரயீ |
வித்3யா ப்ராதுரபூ4த்தஸ்யா அஹமாஸம் த்ரிவ்ருன்மக2: || 12 ||

அப்போது வேதம், ப்ரணவ ரூபம் மட்டும்தான் இருந்தது. பசு வடிவமாக நானே தர்மமாக இருந்தேன்.
பசுவின் நான்கு கால்களாக தவம், தூய்மை, தயை, சத்யம் இருந்தது. தவ நிஷ்டர்களான சான்றோர் ஹம்ஸ வடிவில்
பரமாத்மாவாகிய என்னை வழிப்பட்டார்கள். அவர்கள் தர்மத்துடனும், மனத்தூய்மையுடனும் இருந்தார்கள்.
உத்தவா! பின்னர் த்ரேதாயுகத்தில் என் இருதயத்திலிருந்தும், பிராணனிடமிருந்தும் மூன்று வேதங்கள் தோன்றின.
மூன்று வேதங்களை உபதேசிக்கின்ற மூன்று ரித்விக்குகள் தோன்றினார்கள்

விப்ரக்ஷத்ரியவித்ஶூத்3ரா முக2பா3ஹுருபாத3ஜா: |
வைராஜாத்புருஷாஜ்ஜாதா ய ஆத்மாசாரலக்ஷணா: || 13 ||

க்3ருஹாஶ்ரமோ ஜக4னதோ ப்3ரமச்ர்ய ஹ்ருதோ3 மம |
வக்ஷ:ஸ்த2லாத்3வனேவாஸ: ஸந்ந்யாஸ: ஶிரஸி ஸ்தி2த: || 14 ||

பிராமணர், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்குவிதமான மனிதர்கள் தோன்றினார்கள்.
விராட் புருஷனாகிய என்னுடைய முகத்திலிருந்து பிராமணர்களும், கைகளிலிருந்து சத்திரியர்களும்,
தொடையிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள்.
இவர்களுடைய வாழ்க்கை முறையிலிருந்தும், செய்கின்ற செயல்களிலிருந்தும் இவ்வாறு பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
விராட் புருஷனாகிய என்னுடைய தலையிலிருந்து சந்நியாஸ ஆசிரமும், மார்பிலிருந்து வானப்பிரஸ்த ஆசிரமும்,
இருதயத்திலிருந்து பிரம்மச்சர்ய ஆசிரமும், இடுப்புக்கு கீழே முன்புற பகுதியிலிருந்து கிருஹஸ்தாசிரமும் தோன்றின

வர்ணானாமாஶ்ரமாணாம் ச ஜன்மபூ4ம்யனுஸாரிணீ: |
ஆஸன்ப்ரக்ருதயோ ந்ருனாம் நீசைர்னீசொத்தமோத்தமா: || 15 ||

ஒவ்வொரு மனிதனும் சத்துவ, ரஜோ, தமோ குணங்களின் விதவிதமான சேர்க்கையோடுதான் இருக்கிறார்கள்.
அவர்களுடைய குணசேர்க்கைக்கு தகுந்தமாதிரி என்னுடைய அதற்கேற்ற சங்கல்பத்திலிருந்து பிறப்பான்.
வர்ணங்களும், ஆசிரமங்களும் மனிதர்களுக்கு இவ்வாறு இருக்கின்றது.
மேலான அங்கத்திலிருந்து மேலான வர்ணாசிரமும், கீழான அங்கத்திலிருந்து கீழான வர்ணாசிரமும் தோன்றின.

ஶமோ தமஸ்தப: ஶௌசம் ஸந்தோஷ: க்ஷாந்திரார்ஜவம் |
மத்3ப4க்திஶ்ச தயா ஸத்யம் ப்3ரஹ்மப்ரக்ருதயஸ்த்விமா: || 16 ||

ஶமஹ – சிந்தித்தல், ஆலோசித்தல் போன்ற சத்துவகுண பிரதானமானவைகள்
தமஹ – புலனடக்கத்துடன் இருத்தல்
ஶௌசம் – உள்ளம், உடல், வசிக்குமிடம், சுற்றுப்புற சூழ்நிலைகள் இவைகளை தூய்மையாக வைத்திருக்கும் குணம்
தபஹ – எளிமையான வாழ்க்கையை வாழ்தல்
ஸந்தோஷ: – இருப்பதில் திருப்தியடைதல்
க்ஷாந்தி – பொறுத்தல், மன்னித்தல்
ஆர்ஜவம் – மனம், சொல், செயல் இவை மூன்றிலும் நேர்மையாக இருத்தல். என்ன நினைக்கிறோமோ அதையே சொல்லுதல், செயல்படுத்துதல்.
மேலும் என்னிடம் பக்தியுடன் இருத்தல், இரக்கம், உண்மை பேசுதல் இவைகள் யாவும் பிராமணனின் இயற்கையான குணங்கள்.

தேஜோ ப4லம் த்4ருதி: ஶௌர்யம் திதிக்ஷௌதா3ர்யமுத்3யம: |
ஸ்தை2ர்யம் ப்ரஹ்மன்யமைஶ்வர்யம் க்ஷத்ரப்ரக்ருதயஸ்த்விமா: || 17 ||

தேஜஹ – மனதைரியம்
ப4லம் – உடல் வலிமை,
ஶௌர்யம் – மன வலிமை
த்4ருதி – மனோதிடம் ( எடுத்தக் காரியத்தை முடிக்கும் திறமை)
திதிக்ஷா – துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி
ஔதா3ர்யம் – பொதுநலத்தோடு செயல்படுதல், பொத சொத்தை பாதுகாத்தல்
உத்3யஹ – முயற்சி, கண்காணிக்கும் திறமை
ஸ்தைர்யம் – மனவுறுதி
ப்3ரஹ்மன்யதா – பிராமணர்களை மதித்தல், பாதுகாத்தல்
ஐஸ்வர்யம் – ஆளும்திறமை இவைகளனைத்தும் சத்திரியனின் குணங்களாகும்

ஆஸ்திக்யம் தா3ன நிஷ்டா2 ச ஆத3ம்போ4 ப்ரஹ்மஸேவனம் |
அதுஷ்டிரதோ2பசயைர்வைஶ்ய ப்ரக்ருத்யஸ்த்விமா: || 18 ||

ஆஸ்திக்யம் – இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை, இறைவன் கர்மபலனைத் தருபவர் என்ற நம்பிக்கை
தா3ன நிஷ்டா – தானம் செய்யும் குணம்
அத3ம்ப4ஹ – செய்த தானத்தை வெளிக்காட்டாத குணம், மற்றவர்களை ஏமாற்றாத குணம்
பிரஹ்மஸேவனம் – பிராமணர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து, பாதுகாத்தல்
அதுஷ்டி அர்த உபசயை – கிடைத்தப் பொருளை கொண்டு மனநிறைவு அடையாமல் மென்மேலும் பொருள் சேர்த்தல்,
இவைகளனைத்தும் வைசியனின் இயல்பான குணங்கள்

ஶுஶ்ருஷணம் த்3விஜக3வாம் தேவானாம் சாப்யமாயா |
தத்ர லப்3தே4ன ஸந்தோஷ: ஶூத்ரப்ரக்ருதயஸ்த்விமா: || 19 ||

மற்ற மூன்று வர்ணத்தினருக்கும், உயிரினங்களுக்கும் உடலளவில் சேவை மற்றும் பணி செய்தல்,
இறைவன் இருக்கின்ற ஆலயங்களுக்கும் ஏமாற்றாமல், வஞ்சனையில்லாமல் பணி செய்தல்,
கிடைத்ததில் திருப்தி அடைதல் ஆகியவைகள் சூத்திரர்களுடைய இயல்பான குணங்கள்.

அஶௌசமந்ருதம் ஸ்தேயம் நாஸ்திக்யம் ஶுஷ்கவிக்3ரஹ: |
காம: க்ரோத4ஶ்ச தர்ஷஶ்ச ஸ பா4வோSந்த்யாவஸாயினாம் || 20 ||

உடல், உள்ளம், வசிக்குமிடம், சுற்றுப்புறம் இவைகளை தூய்மையில்லாமல் வைத்திருத்தல்,
அந்ருதம் – பொய்கூறுவது,
ஸ்தேயம் – திருடுதல் (பொருள், செல்வம், உழைப்பு, அறிவு )
நாஸ்திக்யம் – இறைவனையும், சாஸ்திரத்தையும் நம்பாமல் இருத்தல்
ஶுஷ்கவிக்3ரஹ – காரணமில்லாமல் சண்டை செய்தல்
காமஹ – போகத்தில் பற்று
க்ரோதம் – கோபப்படுதல்
தர்ஷஹ – பேராசைபடுதல்
இந்த குணங்களெல்லாம் இயல்பாக இருந்தால் அவன் எந்த வர்ணத்தையும் சார்ந்தவனும் அல்ல.

அஹிம்ஸா ஸத்யமஸ்தேயமகாமக்ரோத4லோப4தா |
பூ4தப்ரியஹிதேஹா ச த4ர்மோSயம் ஸார்வ வர்ணிக: || 21 ||

இனிமேல் சொல்கின்ற குணங்களனைத்தும் எல்லா வர்ணத்தினரிடமும் பொதுவாக இருக்க வேண்டியவைகள்.
அஹிம்ஸா – சொல்-செயல்-மனம் இவைகளால் மற்ற உயிர்களை துன்புறுத்தாமல் இருத்தல்
ஸத்யம் – உண்மை பேசுதல்
அஸ்தேயம் – திருடாமை
அகாம, அக்ரோத4, அலோப4 – காமம், குரோதம் லோமப் இவைகள் இல்லாமல் இருத்தல்.
எல்லா உயிர்களிடத்தும் அன்பாக இருத்தல், நன்மை செய்தல், மகிழ்ச்சி அளித்தல் போன்ற குணங்கள்
எல்லா மனிதர்களுக்கு பொதுவானவை

த்3விதீயம் ப்ராப்யானுபூர்வ்யாஜ்ஜன்மோபனயனம் த்3விஜ: |
வஸன்கு3ருகுலே தா3ந்தோ ப்ரஹ்மாதீ4ஹீத சாஹூத: || 22 ||

த்3விஜ: – பிரம்மச்சாரி ஆசிரமத்துக்குள் செல்ல தயாராக இருப்பவர்கள், இரண்டாவது ஜன்மம் என்றும் பொருட் கொள்ளலாம்
த்3விதீயம் ஜன்ம ப்ராப்யா உபநயனம் அனுபூர்வ்யாத் – உபநயனம் என்கின்ற இரண்டாவது பிறப்பை கிரமப்படி அடைகிறான்
வஸன் குருகுலம் – பிறகு குருகுலத்திற்கு சென்று வசித்து,
தாந்தஹ – புலனடக்கத்துடன் இருக்க வேண்டும்
ப்ரஹ்ம அதீ4ஹீத – சாஸ்திரத்தை படிக்க வேண்டும்
அஹூத: – ஆசாரியார் சொல்வதை படிக்க வேண்டும்

மேக2லாஜினத3ண்டாக்ஷ ப்ரஹ்மஸூத்ரகமண்டலூன் |
ஜடிலோSதௌ4த த3த்வாஸோSரக்தபீட2: குஶாந்த த4த் || 23 ||

ஸ்னானபோ4ஜன்ஹோமேஷு ஜ்யோச்சாரே ச வாக்யத: |
ந ச்சி2ந்த்3யான்னக2ரோமாணி கக்ஷோபஸ்த2க3தான்யபி || 24 ||

மேக2ல – புற்களாலான கயிறு
அஜின – மான்தோல், அதன்மீது அமர்ந்து படிப்பதற்கு
த3ண்டம் – எழுதுப் பொருட்கள்
அக்ஷ – ஜபமாலை (மனதை தளர்த்தி படிக்க தயாராக இருக்க உதவும் ஜபம் செய்வதற்காக)
ப்ரஹ்மஸூத்ரம் – பூணூல்
கமண்டல் – குடிநீர் உள்ள பாத்திரம்
இவைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு சிவப்புநிறமில்லாத ஆசனத்தில் அமர வேண்டும்.
எளிமையான தோற்றத்தோடு இருக்க வேண்டும். வாசனை திரவியங்களை பயன்படுத்தக் கூடாது. தலையலங்காரம் பண்ணிக் கொள்ளக்கூடாது.
வாக்யத – வாக்கு இந்திரியத்தை கட்டுப்படுத்தியவனாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்க கூடாது
நீராடும்போதும், உணவு அருந்தும் போதும், ஹோமம், பூஜை செய்யும் போதும், ஜபம் செய்யும் போதும் மௌனமாக இருக்க வேண்டும்.
கக்ஷம் – பிறப்புறுக்களிலிருந்து முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது.

ரேதோ நாவகிரேஜ்ஜாது ப்ரஹ்மவ்ரத த4ர: ஸ்வயம் |
அவகீர்ணேSவகா3ஹயாப்ஸு யதாஸுஸ்த்ரிபதா3ம் ஜபேத் || 25 ||

பிரம்மச்சர்ய விரதங்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். நீரால் உடலை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
பிராணாயாமம் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
ஒருபோதும் வீர்யத்தை இழக்க கூடாது. ஒருவேளை கனவில் இழக்க நேரிட்டால் குளித்து உடலை தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும்.

அக்3ன்யர்காசார்யகோ3விப்ர க3ருவ்ருத்3த4ஸுராஞ்ஶுசி: |
ஸமாஹித உபாஸீத ஸந்த்4யே த்3வே யதவாக்3ஜபன் || 26 ||

அறிவை அடைய பணிவு, ஒழுக்கம், போன்ற குணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும்.
வாக்கை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். மேலும் அக்னி, சூரியன், ஆசாரியன், பசு, மகான்கள், குரு, வயதில் மூத்தவர்கள்,
தேவர்கள் இவர்களை எல்லாம் வணங்க வேண்டும். சிரத்தையுடனும், மரியாதையுடனும், மன ஒருமுகத்தோடும், பக்தியோடும் வழிபட வேண்டும்.
சந்தியா வேளைகளில் (காலை, மாலை, மதியம்) சந்தியா தேவிகள் (காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி) ஜபம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

ஆசார்ய மாம் விஜானீயான்னாவன்மன்யேத கர்ஹிசித் |
ந மர்த்யபு3த்3த்4யாஸூயேத ஸர்வதே3வமயோ கு3ரூ: || 27 ||

ஆசாரியனை என் ஸ்வரூபமாக நினைக்க வேண்டும். ஒருபோதும் அவமதிக்க கூடாது. அவரை ஒரு சாதாரண மனிதராக எண்ணி
குற்றம் குறையெதுவும் அவரிடத்தில் பார்க்க கூடாது. ஏனென்றால் குரு என்பவர் அனைத்து தெய்வ வடிவமானவர்.

ஸாயம் ப்ராதருபானீய பை4க்ஷ்யம் தஸ்மை நிவேதயேத் |
யச்சான்யத3ப்யனு ஞாதமுபயுஞ்ஜீத ஸ்ம்யத: || 28 ||

காலை, மாலை வேளைகளில் பிக்ஷை எடுத்து வந்த அன்னம் முதலியவைகளை குருவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வேறு எது கிடைத்தாலும் அதை அவருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். குரு அனுமதித்த பிறகே அடக்கத்துடன் உணவை உட்கொள்ள வேண்டும்.

ஶுஶ்ரூஷமாண ஆசார்யம் ஸதோ3பாஸீத நீசவத் |
யானஶய்யாஸன்ஸ்தா2னைர்னிதிதூரே க்ருதாஞ்ஜலி: || 29 ||

ஆசாரியருக்கு சேவை செய்து கொண்டு, எப்பொழுதும் குருவை வணங்க வேண்டும். எப்படி ஒரு சேவகன் தன் எஜமானனுக்கு
சேவை செய்வானோ அதுமாதிரி நடந்து கொள்ள வேண்டும். எல்லா நேரத்திலும் தேவைப்படும் சமயத்தில் சேவை செய்ய வேண்டும்.
அவர் பயணம் செய்யும் போதும், படுத்துக் கொண்டு இருக்கும்போதும், நடக்கும் போதும் அவரருகிலே இருந்து கொண்டு
பணிவுடன் கூப்பிய கரங்களுடன் அவர் உத்தரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஏவம்வ்ருத்தோ கு3ருகுலே வஸேத்3தோ4க3விவர்ஜித: |
வித்3யா ஸமாப்யதே யாவத்3பி3ப்4ரத்3வ்ரதமக2ண்டி3தம் || 30 ||

இங்கு கூறப்பட்ட நியமத்தை கடுமையாக பின்பற்றி குருகுலத்தில் வசித்துவர வேண்டும். புலனுகர் போகங்களை தவிர்த்து,
எவ்வளவு காலம் கல்வி கற்றுக் கொண்டு வருகிறோமோ அதுவரை சுகபோகங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
பிரம்மச்சர்ய விரதங்களை பின்பற்ற வேண்டும்.

யத்3யஸௌ ச2ந்த3ஸாம் லோகமாரோக்ஷ்யன்ப்3ரஹ்மவிஷ்டபம் |
கு3ரவே வின்யஸேத்தே3ஹம் ஸ்வாத்4யாயார்த2ம் ப்3ருஹத்3 வ்ரத: || 31 ||

ஒருவேளை இந்த பிரம்மச்சாரி வேதத்தின் துணைக்கொண்டு அடையக்கூடிய பிரம்ம லோகத்தை அடைய விரும்பினால்
அவன் தன்னுடைய வாழ்க்கையை குருவிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் அறிவை வளர்த்துக் கொள்ள விரும்பிய இவன்
மேலான விரதத்தை மேற்கொண்டவனாக கருதப்படுகின்றான்

அக்3னௌ கு3ராவாத்மனி ச ஸர்வபூ4தேஷு மாம் பரம் |
அப்ருத2க்3தீ4ருபஸீத ப்ரஹ்மவர்சஸ்வ்யக்ல்மஷ: || 32 ||

நைஷ்டிக பிரம்மச்சாரி உலகத்தின் ஈர்ப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மன ஒருமுகப்படுத்தி அக்னி, குரு, தன்னிடத்திலும்,
எல்லா ஜீவராசிகளிடத்திலும் இருக்கின்ற பரம்பொருளான என்னையே தியானிக்க வேண்டும்.
இவைகள் ஈஸ்வரனிடத்திலிருந்து வேறில்லை என்று தியானிக்க வேண்டும்.

ஸ்த்ரீணாம் நிரீக்ஷணஸ்பர்ஶம் ஸம்லாபக்ஷ்வேலனாதி3கம் |
ப்ராணினோ மிது2னீபூ4தானக்3ருஹஸ்தோ2Sக்3ரதஸ்த்யஜேத் || 33 ||

நைஷ்டிக பிரம்மச்சாரி புலனடக்கத்துடனும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும் என்பதை இதில் வலியுறுத்துகிறார்.
பெண்களை பார்ப்பதும், அவர்களிடம் உரையாடுவதும், தொட்டு பேசுவதும், எப்பொழுதும் கூடாது.
விலங்குகளின் சேர்க்கையை பார்ப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

ஶௌசமாசமனம் ஸ்னானம் ஸ்ந்த்3யோபஸ்திர்ம மார்சனம் |
தீர்த2ஸேவ ஜபோSஸ்ப்ருஶ்யா ப4க்ஷ்யாஸம்பா4ஷ்யவர்ஜனம் || 34 ||

தூய்மையாக இருத்தல், ஆசமனம் செய்தல், குளித்தல், சந்தியா வேளைகளில் தியானம் செய்தல், நேர்மையாக இருத்தல்,
புனிதயாத்திரை மேற்கொள்ளுதல், புண்ணிய நதியில் நீராடுதல், ஜபம் செய்தல், தொடக்கூடாததை தொடாமல் இருப்பது,
சாப்பிடக்கூடாததை சாப்பிடாமல் இருப்பது, பேசக்கூடாதவர்களுடன் பேசாமல் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

ஸர்வாஶ்ரமப்ரயுக்தோSயம் நியம: குலநந்த3ன |
மத்3பா4வ: ஸர்வ்பூ4தேஷு மனோவாக்காயஸம்யம: || 35 ||

ஏவம் ப்3ருஹத்3வ்ரத த4ரோ ப்ராஹ்மணோSக்னிரிவ ஜ்வலன் |
மத்3ப4க்தஸ்தீவ்ரதபஸா தக்3த4கர்மாஶயோSமல: || 36 ||

உத்தவா! எல்லா ஆசிரமங்களைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட பொதுவான நியமங்கள், எல்லா ஜீவராசிகளிடத்திலும்
என்னையே காண்கின்ற ஈஸ்வர பக்தி, மனம், சொல், உடல் இவைகளை கட்டுப்பாட்டுதன் வைத்திருத்தல் போன்ற
மிகப்பெரிய நியமங்களை கடைப்பிடிக்கும் நைஷ்டிக பிரம்மச்சாரியம் இவன் அக்னியைப் போல் ஓளி வீசிக் கொண்டு இருப்பான்.
என்னிடம் பக்தி கொண்டவனாக இருந்து கொண்டு, கடுமையான தவங்களால், கர்ம-சம்ஸ்காரங்களை சுட்டெரித்துவிட்டு
தூய்மையானவாகின்றான், மனத்தூய்மை அடைகிறான், பாவங்களையெள்ளம் அழித்து விடுகிறான்.

அதா2னந்தரமாவேக்ஷ்யன்யதா2ஜி ஞாஸீதாகம: |
கு3ரவே தக்ஷிணாம் த3த்த்வா ஸ்னாயாத்3கு3ர்வனுமோதி3த: || 37 ||

க்3ருஹம் வனம் வோபவிஶேத்ப்ரவ்ரஜேத்3வா த்3விஜோத்தம: |
ஆஶ்ரமாதாஶ்ரமம் க3ச்சே2ன்னான்யதா2மத்பரஶ்சரேத் || 38 ||

உத்தவா! இந்த சாஸ்திரத்தை முறைப்படி நிறைவு செய்து அடுத்த ஆசிரமமான கிருஹாசிரமத்திற்கு செல்ல விரும்பினால்,
குருவுக்கு தட்சிணை கொடுத்து விட்டு அவருடைய அனுமதியை பெற்று பிறகு குருகுலத்தை விட்டு
வெளியேறும் சம்ஸ்காரத்தை செய்து கொள்ள வேண்டும். குருகுலத்தில் முறையாக படித்துவிட்டு வெளிவந்த மேலான
பிரம்மச்சாரி இல்லறத்துக்கு செல்லலாம். அல்லது வானப்ரஸ்தாசிரமத்திற்கோ. சந்நியாஸ ஆசிரமத்திற்கோ செல்லலாம்.
அல்லது கிரமப்படி ஒரு ஆசிரமத்திலிருந்து அடுத்த ஆசிரமத்திற்கு முறையாக செல்லலாம்.
எந்த ஆசிரமத்தில் இருந்தாலும் உன்னுடைய வாழ்க்கை பயணம் என்னை அடைதலையே இறுதி குறிக்கோளாக இருக்க வேண்டும்.

க்3ருஹார்தீ2 ஸத்ருஶீம் பா4ர்யாமுத்3வஹேத3ஜுகு3ப்ஸிதாம் |
யவீயஸீம் து வயஸா யம் ஸ்வர்னாமனு க்ரமாத் || 39 ||

இல்லறத்திற்கு இருக்க விரும்புகின்றவன் தனக்கு பொருத்தமான (மனம், குணம், செல்வம், வயது) தன்னைவிட குறைந்த
வயதுள்ளவளும், சாஸ்திர விதிப்படியான லட்சணங்கள் அமையப் பெற்றவளுமான பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இஜ்யாத்4ய யனதானானி ஸர்வேஷாம் ச த்3விஜன்மனாம் |
ப்ரதிக்3ரஹோSத்4யாபனம் ச ப்ராஹ்மணஸ்யைவ யாஜனம் || 40 ||

இல்லறத்திற்கு சென்ற எல்லோரும், அவரவர்களுடைய ஸ்வதர்மத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். சாஸ்திரங்கள், மகான்கள்
எழுதிய தர்ம சாஸ்திர புத்தகத்தை படித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல், கற்றுக் கொடுத்தல், யாகம் செய்து வைத்தல்,
இவைகளெல்லாம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது.

ப்ரதிக்3ரஹம் மன்யமானஸ்தபஸ்தேஜோயஶோனுத3ம் |
அன்யாப்4யாமேவ ஜீவேத ஶிலைர்வா தோ3ஷத்ருக்த்யோ: || 41 ||

பிராமணர்கள் தானம் வாங்கினால் தன்னுடைய தவத்திற்கோ, புகழுக்கோ தடையாக இருக்கும் என்று நினைத்தால் இதை விட்டுவிட்டு
மற்ற இரு கடமைகளை செய்து கொண்டு வாழ்ந்து கொள்ளலாம். மேலும் இந்த இரண்டிலும் குறை இருப்பதாக நினைத்தால்
ஶிலவிருத்தியால் ஜீவிதம் செய்யலாம். ஶிலைவா – வயலில் அறுவடையானவுடன் கீழே இறைந்து கிடக்கும்
தானியங்களை பொறுக்கி எடுத்து, அதை புசித்து வாழ்தல்

ப்ராஹ்மணஸ்ய ஹி தே3ஹோSயம் க்ஷுத்ரகாமாய நேஷ்யதே |
க்ருச்ச்3ராய தபஸே சேஹ ப்ரேத்யானந்தஸுகா2ய ச || 42 ||

பிராமணனுடைய ஸ்தூல உடல், மனம் இவைகள சத்துவத்தில் நிலைப்பெற்றுள்ளது. எனவே இவன் தன் உடலை கீழான
சுக-போகங்களை அனுபவிப்பதற்காக பயன்படுத்தக் கூடாது. வாழ்க்கை முழுவதும் கடுந்தவம் செய்ய வேண்டும்.
இதனால் அவன் இறந்த பிறகு எல்லையற்ற பேரின்பத்தை அடைவதற்காக பயன்படுத்த வேண்டும்.

ஶிலோஞ்ச2வ்ருத்த்யா ப்ரிதுஷ்டசித்தோ த4ர்ம மஹாந்தம் விரஜம் ஜுஷாண: |
மய்யர்பிதாத்மா க்3ருஹ ஏவ திஷ்ட2ன்னாதிப்ரஸக்த: ஸமுபைதி ஶாந்திம் || 43 ||

ஶிலோஞ்சவ்ருத்தி – மற்றவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கியவைகளை எடுத்துக் கொள்ளுதல், தியாக மனநிலையோடு வாழ்ந்து கொண்டிருப்பவன்.
பரிதுஷ்டசித்தஹ – கிடைத்ததில் போதும் என்ற மனதிருப்தியுடன் இருப்பவன்,
விரஜம் – மனதிலுள்ள அழுக்குகளை நீக்கியவனாக, நற்பண்புகளுடன் கூடியவனாக
மய்யர்பிதாத்மா – என்னிடத்தில் அர்ப்பணம் செய்துவிட்ட மனதையுடையவன்
க்2ருஹ ஏவ திஷ்ட2ன் – இல்லறத்திலே இருந்து கொண்டு
ந அதிப்ரஸக்தஹ – தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமுள்ள செல்வத்திலும், பொருட்களிலும் பற்றுக் கொள்ளாதவன்
ஸஹ ஶாந்திம் உபைதி – மேலான பேரானந்தத்தை, அமைதியை அடைகிறான்

ஸமுத்3த4ரந்தி யே விப்ரம் ஸீதந்தம் மத்பராயணம் |
தானுத்3த4ரிஷ்யே ந சிராதா3பத்3ப்4யோ நௌரிவர்ணவாத் || 44 ||

இல்லறத்திலிருப்பவர்கள் மற்ற ஆசிரம தர்மத்தில் இருப்பவர்களையும், இல்லறத்தில் இருந்து கொண்டு கஷ்டப்படும் மற்ற
ஆசிரமத்திலிருப்பவர்கலயும், என் பக்தர்களையும், தர்மத்துடன் வாழ்பவர்களையும் காப்பாற்ற வேண்டும்.
இவர்களுக்கு கஷ்டம் வரும் போது கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவனை காப்பாற்றும் படகு போல
நான் அவர்களை உடனடியாக காப்பாற்றுகிறேன் என்று பகவான் உறுதி கொடுக்கிறார்.
விப்ரம் – கஷ்டத்தில் இருக்கும் இல்லறத்தில், மற்ற ஆசிரமத்தில் இருக்கின்ற
மத்பராயணம் – பக்தர்களையும், தர்மத்துடன் வாழ்பவர்களையும்
ஸமுத்ரஹ – யார் காப்பாற்றுகின்றார்களோ
ஸீதந்தம் – அப்படிபட்டவர்களை
நௌரிவர்ணவாத் – கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவனை காப்பாற்றும் படகைப் போல
ஆபத்3பயஹ – கஷ்டத்திலிருக்கும் போது
நசிராத் – உடனடியாக
தான் உத்3த4ரிஷ்யே – அவர்களை காப்பாற்றுகிறேன்

ஸர்வா: ஸமுத்3தரேத்ராஜா பிதேவ வ்யஸனாத்ப்ரஜா: |
ஆத்மானமாத்மனா தீ4ரோ யதா2 க3ஜபதிர்க3ஜான் || 45 ||

இல்லறத்தில் இருக்கும் சத்திரியர்களின் கடமைகளை கூறுகிறார். அரசன் எப்படி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதைக் கூறுகிறார்.
அரசன் தம் மக்களை ஒரு தந்தையைப் போல பாதுகாக்க வேண்டும். ஆனால் உன்னை நீயேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
துன்பப்படும் யானையை யானைத் தலைவன் காப்பாற்றுவது போல மக்களைக்காக்க வேண்டும்.

ஏவம்விதோ4 நரபதிர்விமானேனார்வர்சஸா |
விதூ4யேஹாஶுப4ம் க்ருத்ஸ்னமிந்த்ரேண ஸஹ மோத3தே || 46 ||

சத்திரியன் தன்னுடைய தர்மத்தை செவ்வனே கடைப்பிடித்து இறந்தபிறகு சொர்க்கத்தை அடைகிறான்.
சொர்க்கத்திற்கு விமானம் மூலமாக அழைத்துச் செல்லும் போது தேவர்கள் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டு,
அனைத்து பாவங்களிலிருந்தும் முழுமையாக விடுபட்டவனாக இந்திரனுடன் சமமாக இருப்பான்.

ஸீத3ன்விப்ரோ வணிக்3வ்ருத்த்யா பண்யைரேவாபத3ம் தரேத் |
க2ட்3கே3ன வாபதா3க்ராந்தோ ந ஶ்வ வ்ருத்த்யா கத2ஞ்சன || 47 ||

ஒரு பிராமணனுக்கு தன்னுடைய தர்மப்படி வாழமுடியவில்லையென்றால், அவன் வைசியனுடைய வாழ்க்கை முறையான
வியாபாரத்தை பின்பற்றலாம். தர்மத்துக்குட்பட்ட பொருட்களைத்தான் விற்று பிழைக்க வேண்டும்.
தனக்கு வரும் கஷ்டத்தை இதன் மூலம் நீக்கி கொள்ளலாம்.
ஆபதா3க்ரந்தஹ – ஆபத்தான காலத்தில்
க2ட்கே3ன – வாளேந்தி சத்திரிய தர்மத்தையும் பின்பற்றலாம்
கதஞ்சன – ஒருகாலத்திலும்
ந ஶ்வ வ்ருத்தயா – அதர்மமான வாழ்க்கை முறையை பின்பற்றக் கூடாது

வைஶ்யவ்ருத்த்யா து ராஜன்யோ ஜீவேன்ம்ருக3யயாபதி3 |
சரேத்3வா விப்ர்ரூபேண ந ஶ்வ வ்ருத்த்யா கத2ஞ்சன || 48 ||

இதுபோலவே சத்திரியன் தன்னுடைய தர்மத்தின் மூலம் வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால்,
வைசியனுடைய வாழ்க்கை முறையை பின்பற்றலாம். மிகவும் கஷ்டமான நிலையில் வேட்டையாடியும் பிழைக்கலாம்
அல்லது பிராமணர் தொழிலையும் செய்யலாம். ஆனால் எந்தக் காலத்திலும் அதர்மமான வாழ்க்கை முறையை பின்பற்றக்கூடாது

ஶூத்ரவ்ருத்திம் ப4ஜேத்3வைஶ்ய: பூ4த்ர: காருகடக்ரியாம் |
க்ருச்ச்2ரான்முக்தோ ந க3ஹர்யேண வ்ருத்திம் லிப்ஸேத கர்மணா || 49 ||

வைசியனும் கஷ்டகாலத்தில் சூத்திரனுடைய வாழ்க்கைமுறையை ஏற்றுக் கொள்ளலாம்.
அதேபோல சூத்திரனும் கஷ்டகாலத்தில் பாய்முடைதல் போன்ற பணிகளைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம்.
கஷ்டங்களிலிருந்து விடுபட்டபின் மீண்டும் தத்தம் தொழிலுக்கு திரும்பிவிட வேண்டும்.
தன்னுடைய வர்ணத்திற்கும் கீழான வாழ்க்கை முறையிலே இருந்துவிடக்கூடாது.

வேதா3த்4யாயஸ்வதா4ஸ்வாஹா ப3ல்யன்னாத்3உஐர்யதோ2த3யம் |
தேவர்ஷிபித்ருபூ4தானி மத்3ரூபாண்யன்வஹம் யஜேத் || 50 ||

வேத ஆத்யாய – ரிஷி யக்ஞம்
பிரஹ்ம யக்ஞம் – சாஸ்திரங்களைப் படித்தல்
ஸ்வாஹா – ஸ்வாஹா என்று கூறி தேவர்களுக்கு ஹோமங்களால் வழிபடுதல்
ப3லி – மிருகங்களுக்கு கொடுக்கப்படுகின்ற உணவு
அன்னம் – மற்ற மனிதர்களுக்கு கொடுக்கப்படுகின்ற உணவு
ஆத்யை – இவைகள் மூலமாக
யதோ2த3யம் – அவரவர்களுடைய சக்திகேற்ப மேற்கூறிய யக்ஞங்களை செய்ய வேண்டும்.
தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், ஜீவராசிகள் இவைகள் எல்லாவற்றிலும் நான்தான் இருக்கின்றேன்.
என்னுடைய ஸ்வரூபங்கள்தான் எல்லாவற்றிலும் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு யக்ஞத்தை செய்ய வேண்டும்.

யத்ருச்ச2யோப பன்னேன ஶுக்லேனோபார்ஜிதேன வா |
த4னேனாபீடயன்ப்4ருத்யான்ன்யாயேனைவாஹரேத்க்ரதூன் || 51 ||

பிராரப்தத்தினால் முயற்சியின்றி உழைக்காமல் கிடைத்தப் பொருளைக்கொண்டும், பரம்பரையாக கிடைத்த செல்வம்,
தந்தை சம்பாதித்த செல்வத்தை கொண்டும் அல்லது தான் நேர்மையாக உழைத்து சம்பாதித்த செல்வத்தில் அரசாஙகத்திற்கு
கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு மீதியிருப்பதில் தன்னை அண்டியிருக்கும் மக்களுக்கு எவ்வித துன்படம் ஏற்படாத வகையில்
நியாயமான முறையில் சேர்த்த செல்வத்தைக் கொண்டு தன்னுடைய கடமைகளை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

குடும்போ3ஷு ந ஸஜ்ஜேத ந ப்ரமாத்3யேத்குடும்ப்3யபி |
விபஶ்சின்னஶ்வரம் பஶ்யேத த்3ருஷ்டமபி த்3ருஷ்டவத் || 52 ||

குடும்பத்தில் இருந்த போதிலும் உறவுகளிடத்தில் பற்று வைக்கக் கூடாது. உறவுகளிடத்தில் கவனக்குறைவாகவும் இருந்துவிடாதே.
யாரையும் சார்ந்திருக்காதே. இந்த அறிவை உடையவனாக இருப்பாயாக. இவைகள் அழியக்கூடியது,
மாறிக் கொண்டேயிருப்பது என்று பார்க்க வேண்டும். கண்ணால் காணப்படும் பொருட்களில் நிலையாமையை பார்க்க வேண்டும்.
இல்லறத்தில் இருக்கும்போது பாதுகாப்பை உணர்ந்திருந்தாலும், உண்மையில் பாதுகாப்பற்றது.
எதிர்காலத்தில் இவைகளெல்லாம் எனக்கு பாதுகாப்பையும், சுகத்தையும் கொடுக்கும் என்று நினைப்பவைகளும் நிலையற்றவை
என்று அறிந்து கொள்ள வேண்டும். புண்ணியமும் அழியக் கூடியதுதான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

புத்ரதாராப்தபந்தூ4னாம் ஸட்3க3ம: பாந்த2ஸட்க3ம: |
அனுதேஹம் வியந்த்யேதே ஸ்வப்னோ நித்3ரானுகோ3 யதா2 || 53 ||

உறங்கிக் கொண்டிருக்கும் வரை கனவு இருக்கும். அதுபோல மனைவி, மக்கள், நெருங்கிய உறவினர்கள், மற்ற உறவினர்களின்
சேர்க்கை வழிப்போக்கர்களின் சேர்க்கையை போன்றதாகும். பயணத்தில் பழகும் மனிதர்களின் உறவைப் போல இது இருக்கின்றது.
மனிதர்களின் உடல் அழிந்து விட்டால் உறவுகளும் மறைந்து விடும் இந்தப்பிறவியிலே உறவின் பிடிப்பு குறைந்து போகும்.
ஒவ்வொரு உடலும் மாறும்போது உறவுகளும் மாறிவிடும்.

இத்த2ம் பரிம்ருஶன்முக்தோ க்3ருஹேஷ்வதிதி2வத்3வஸன் |
ந க்3ருஹைரனுப3த்4யேத நிர்மமோ நிரஹட்3க்ருத: || 54 ||

இவ்விதம் உறவுகளின் நிலையாமையை ஆராய்ந்து உணர்ந்து அவைகளிலிருக்கும் பற்றை நீக்கியவனாக தம் வீட்டிலேயே
விருந்தினரை போல வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். வீட்டிலிருப்போரிடமும், வீட்டிலுள்ள பொருட்கள் மீதும் அதிக பற்று வைக்காதே.
இவைகள் என்னுடையது, இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் என்றும் இவர்களை காப்பாற்றுவதும்,
நன்றாக வைத்திருப்பதும் நானே என்றும் அனைத்தும் நன்றாக இருப்பதற்கு நானே காரணம் என்றும் நினைக்க கூடாது.

கர்மபி4ர்க்3ருஹமேதீ4யைரிஷ்ட்வா மாமேவ ப4க்திமான் |
திஷ்டே2த்3வனம் வோபவிஶேத்ப்ரஜாவான்வா பரிவ்ரஜேத் || 55 ||

ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் சாதகன் இல்லறத்தில் குழந்தை, மனைவியுடன் இருப்பவன், இறைவனான என்னையே
இல்லறத்திலுள்ள தனது கடமைகளை நன்கு செய்து கொண்டே பூஜை செய்து கொண்டு வாழ்நாள் முழுவதும்
இல்லறத்திலே இருக்கலாம் அல்லது வானபிரஸ்த ஆசிரமத்திற்கு செல்லலாம் அல்லது சந்நியாஸ ஆசிரமத்திற்கே செல்லலாம்.

யஸ்த்வாஸக்தமதிர்கே3ஹே புத்ரவித்தைஷணாதுர: |
ஸ்த்ரைண: க்ருபணதீ4ர்மூடோ4 மமாஹமிதி ப3த்4யதே || 56 ||

ஒருவேளை ஒருவன் இல்லறத்தில் அதிகப்பற்றுடனும், மக்கள், செல்வத்தின் மீது அதிக ஆசைக் கொண்டும்,
மனைவி மற்றும் மற்ற உறவுகளிடத்தில் அதிக பற்றுடனும் இருந்தால் அவன் மிகவும் பரிதாபத்திற்குரியவனாகிறான்.
இவர்கள் எல்லோரும் இருந்தாலும், எதையோ இழந்தவன் போல துயரைத்தையே அடைகின்றான்,
நான்-என்னுடையது என்ற பந்தத்தில் வீழ்ந்து விடுகிறான் இந்த அறிவற்றவன்.

அஹோ மே பிதரௌ வ்ருத்3தௌ4 பாலாத்மஜாத்மஜா: |
அனாதா2 மாம்ருதே தீ3னா: கத2ம் ஜீவந்தி து3:கி2தா: || 57 ||

ஏவம் க்3ருஹாஶயாக்ஷிப்த ஹ்ருதயோ மூட4தீ4ரயம் |
அத்ருப்தஸ்தானனுத்4யாயன்ம்ருதோSந்த4ம் விஶதே தம: || 58 ||

அய்யோ! என்னுடைய வயதான பெற்றோர்களும், இளங்குழந்தைக்கு தாயாக இருக்கின்ற என் மனைவியும், குழந்தைகளும்
நான் இல்லையென்றால் அனாதையாகிவிடுவார்கள், வறுமை நிலைக்கு சென்று விடுவார்கள், துன்பப்படுவார்கள்.
எவ்வாறு வாழ்க்கையை நடத்த முடியும் என்று இவ்வாறெல்லாம் எண்ணிக் கொண்டு இல்லறத்தில் நன்கு செயல்படாமல்,
அதிகப் பற்றுடன் இருக்கும் இத்தகைய மூடர்கள் எதிலும் திருப்தி அடையாதவனாகவும், அவைகளை நினைத்துக் கொண்டிருந்து,
இறந்த பிறகு இருள் சூழ்ந்த நரகத்தையே அடைகிறார்கள்.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -10–

May 22, 2020

ஶ்ரீஉத்தவ உவாச
த்வம் ப்3ரஹ்ம பரமம் ஸாக்ஷாத3னாத்3யந்தமபாவ்ருதம் |
ஸர்வேஷாமபி பா4வானாம் த்ராணஸ்தி2த்யப்ய்யோத்3ப4வ: || 1 ||

உத்தவர் கேட்கிறார்
பகவானே தாங்கள்தான் மேலான பிரம்மமாக இருக்கிறீர்கள். தொடக்கமும், முடிவும் இல்லாதவர். எதனாலும் மறைக்கப்படாதவர்,
எதையும் சாராதிருப்பவர். உலகத்தில் தோன்றியுள்ள அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாப்பவர்.
உற்பத்தி, இருப்பு, லயம் இவைகளுக்கும் காரணமாக இருப்பவரும் தாங்கள்தான். கர்ம பலனைக் கொடுத்து பாதுகாப்பவரும் நீங்கள்தான்.

உச்சாவ்வசேஷு பூ4தேஷு து3ர்ஞேயமக்ருதாத்மபி4: |
உபாஸதே த்வாம் ப4க3வன்யாதா2த த்2யேன ப்ராஹ்மணா: || 2 ||

தாங்கள் உபாதிகளின் அடிப்படையில் பிறந்த மேலான, கீழான பிராணிகளிடத்துக்குள்ளும் இருக்கின்றீர்கள்.
உங்களை அவ்வளவு சுலபமாக அறியமுடியாது. பண்பாடற்ற மனதுடைய மனிதர்களால் சுலபமாக உங்களை அறிந்து கொள்ள முடியாது.
இப்படிப்பட்ட உங்களை பிராமணர்கள், மனத்தூய்மை அடைந்தவர்கள் இவர்களால்தான் உண்மையான தன்மையை அறிந்து வழிபடுதிறார்கள்

யேஷு யேஷு ச பூ4தேஷு ப4க்த்யா த்வாம் பரமர்ஷய: |
உபாஸீனா: ப்ரபத்3யந்தே ஸம்ஸித்தி4ம் தத்3வதஸ்வ மே || 3 ||

அனைத்து உலகத்திலும் வெளிப்பட்ட பொருட்களிடத்தில் உங்களை பக்தி என்ற உணர்வுடன் மேலான ரிஷிகள் தியானம் செய்து
மோட்சத்தை அடைந்தார்களோ, மனத்தூய்மையை அடைந்தார்களோ, தங்களையே அடைந்தார்களோ அதை எனக்கு கூறுங்கள்.

கூ3ட4ஶ்சரஸி பூ4தாத்மா பூ4தானாம் பூ4தபா4வன |
ந த்வாம் பஶ்யந்தி பூ4தானி பஶ்யந்தம் மோஹிதானி தே || 4 ||

நீங்கள் மறைந்து கொண்டு உலகத்தில் சஞ்சரிக்கிறீர்கள்.(கூ3ட4ஸ்சரஸி). எல்லா ஜீவராசிகளுடைய ஆத்மாவாக இருந்த போதிலும்
யாருக்கும் உங்களை அறிய முடியவில்லை. பூதபாவன – எல்லா ஜீவராசிகளை பாதுகாத்துக் கொண்டிருக்கும் பகவானே!
மாயையால் மதிமயங்கிய மக்கள் தங்களை பார்க்க முடிவதில்லை, பார்ப்பதில்லை. ஆனால் தாங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

யா: காஶ்ச பூ4மௌ திவி வை ரஸாயாம் விபூதயோ திக்ஷு மஹாவிபூதே |
தா மஹ்யமாக்2யாஹயனுபா4விதாஸ்தே நமாமி தே தீர்த2பதா3ங்க்4ரி பத்3மம் || 5 ||

இந்த மண்ணுலகம், விண்ணுலகம், பாதாளம் போன்ற உலகங்களிலும், எல்லா திசைகளிலும் உங்களுடைய ஆற்றல்,
பெருமை வெளிப்பட்டு உள்ளதோ; மேலான ஆற்றல்களை உடைய பகவானே! இவைகளனைத்தையும் உபதேசித்தருளுங்கள்.
தீர்த2ம் – புனிதமானது. புனிதமானதை மேலும் புனிதம் அடையச் செய்யும் தங்கள் தாமரைத் திருவடிகளில் பணிந்து வணங்குகிறேன்.

ஶ்ரீபகவான் உவாச
ஏவமேதத3ஹம் ப்ருஷ்ட: ப்ரஶ்னம் ப்ரஶ்னவிதா3ம் வர |
யுயுத்ஸுனா வினஶனே ஸபத்னைர்ர்ஜுனேன வை || 6 ||

ஶ்ரீபகவான் உபதேசிக்கிறார்
இதே கேள்வியானது என்னிடம் முன்பு கேட்கப்பட்டது. கேள்வி கேட்பவர்களில் சிறந்தவரான உத்தவா! எதிரிகளுடன் போர்
செய்கின்ற தருணத்தில் குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனால் இதே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது.

ஞாத்வா ஞாதிவத4ம் கஹர்யமதர்மம் ராஜ்யஹேதுகம் |
ததோ நிவ்ருத்தோ ஹன்தாஹம் ஹதோSயமிதி லௌகிக: || 7 ||

அரசுரிமைக்காக உறவினர்களை கொள்வது என்பது இழிவான செயல் என்றும் அதர்மமானதும் கூட என்றும்
ஒரு பாமர மனிதனைப் போல, “நான் இவர்களைக் கொல்லப்போகிறேன். இவர்கள் எல்லாம் கொல்லப்படப் போகிறார்கள்
என்று எண்ணி போரிலிருந்து விலக விரும்பினான்.

ஸ ததா3 புருஷவ்யாக்4ரோ யுக்த்யா மே ப்ரதிபோ3தி4த: |
அப்4யபா4ஷத மாமேவம் யதா2 த்வம் ரணமூர்த4னி || 8 ||

அப்போது பல யுக்திகளைக் கூறி, நான் அவனுக்கு தெள்ளறிவு புகட்டினேன்.
போர்க்களத்தில் அவன் என்னைப்பார்த்து நீ இப்போது கேட்ட கேள்வியைதான் என்னிடம் கேட்டான்.

அஹமாத்மோத்3த4வாமீஷாம் பூ4தானாம் ஸுஹ்ருதீ3ஶ்வர: |
அஹம் ஸர்வாணி பூ4தானி தேஷாம் ஸ்தி2த்யுத்3ப4வாப்யய: || 9 ||

உத்தவா! நான் ஆத்மாவாக (சேதனமாகவும், உணர்வு ஸ்வரூபமாகவும்) இருக்கிறேன்.
இந்த அனைத்து ஜீவராசிகளின் ஆத்மாவாக இருக்கிறேன். நான் அனைத்து ஸ்தூல உடலாகவும் நான் இருக்கிறேன்.
அதே சமயம் அனைத்து ஜீவராசிகளை ஆள்பவனாகவும் இருக்கிறேன்.
நான் வகுத்த நியதிப்படிதான் உலகத்திலுள்ள எல்லாம் இயங்குகின்றன. எல்லா ஜீவராசிகளுடைய நண்பனாகவும் இருக்கிறேன்.
நானே அனைத்துனுடைய தோற்றம், இருத்தல், அழிவுக்கு காரணமாக இருக்கின்றேன்.

அஹம் க3திர்கதிமதாம் கால: கலயதாமஹம் |
கு3ணானாம் சாப்யஹம் ஸாம்யம் கு3ணின்யௌத்பத்திகோ கு3ண: || 10 ||

ஸ்தாவரம்- ஒரே இடத்தில் இருப்பவை; ஜங்கமம்-நகர்ந்து கொண்டிருப்பவை
நகர்கின்றவைகளினுடைய நகரும் சக்தியாகவும், ஒன்றை உருவாக்குவதில், மாற்றி அமைப்பதில் காலமாகவும் இருக்கிறேன்.
நான் சமநிலை (ஸாம்யம்) என்ற பண்பாக இருக்கிறேன்.
குணங்கள் உள்ள பொருட்களில் இயற்கையான (ஔத்பத்திக) குணமாக நானே இருக்கின்றேன்.

கு3ணினாமப்யஹம் ஸூத்ரம் மஹதாம் ச மஹானஹம் |
ஸுக்ஷ்மாணாமப்யஹம் ஜீவோ து3ர்ஜயானாமஹம் மன: || 11 ||

படைக்கப்பட்டவைகளில் ஹிரண்யகர்ப்பனாகவும் (சூத்ராத்மா), பெரியவைகளுக்குள் பெரியதான விராட் ஸ்வரூபமாகவும் இருக்கிறேன்.
மிக மிக நுட்பமான விஷயத்தில் ஜீவதத்துவமாக இருக்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு வெற்றியடையக்கூடிய பொருட்களில் மனமாக இருக்கிறேன்.
நம் மனதை வெற்றிக் கொள்வதற்கு கடினமாக இருப்பதன் காரணம் அது ஒரு பொருளாக இல்லாமல் இருப்பதுதான்.
மற்ற வெற்றிகள் அடைவதற்கு மனம்தாம் காரணமாக இருக்கிறது. அந்த மனதிலுள்ள குறைகளை நம்மால் கண்டு கொள்ள முடியாது.
மற்றவர்களுக்கு நம் மனம் ஒரு பொருளாக இருப்பதனால் அவர்களால் அதனிடத்து உள்ள குறைகளை கண்டு கொள்ள முடிகிறது.
எனவே மற்றவர்கள் குறை கூறினாலோ அல்லது சரியாக நம் திறமைகளை சொல்லும்போது நம்மைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஹிரண்யக3ர்போ4 வேதானாம் மந்த்ராணாம் ப்ரணவஸ்த்ரிவ்ருத் |
அக்ஷராணாமகாரோSஸ்மி பதானிச்ச2ந்து3ஸாமஹம் || 12 ||

இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும். முக்கிய லட்சியத்தையும் அதை அடையும் வழியையும் வேதங்கள்தான் உரைக்கிறது.
வேதங்களின் கர்த்தாவான ஹிரண்யகர்ப்பனாக இருக்கிறேன். மந்திரங்களுக்குள் மூன்று எழுத்துக்கள் கொண்ட ஓங்காரமாக இருக்கிறேன்.
எழுத்துக்களில் அகாரமாகவும், சந்தங்களில் (செய்யுள் அமைப்புக்களில்) மூன்று பாதங்களைக் கொண்ட காயத்ரீயாக இருக்கிறேன்.

இந்த்ரோSஹம் ஸர்வதேவானாம் வஸூனாமிஸ்மி ஹவ்யவாட் |
ஆதி3த்யானாமஹம் விஷ்ணூ ருத்3ராணாம் நீல்லோஹித: || 13 ||

தேவர்களுக்குள் இந்திரனாகவும், எட்டு வஸுக்களில் அக்னியாகவும், அதிதியின் பிள்ளைகளில் விஷ்ணுவாகவும்,
பதினோரு ருத்திரர்களில் சிவனாக இருக்கிறேன்

ப்ரஹ்மர்ஷீணாம் ப்4ருகுரஹ்ம் ராஜர்ஷீணாமஹம் மனு: |
தேவர்ஷீணாம் நாரதோSஹம் ஹவிர்தா4ன்யஸ்மி தே4னுஷு || 14 ||

பிரம்ம ரிஷிகளுக்குள் பிருகு முனிவராகவும், ராஜரிஷிகளில் மனுவாகவும், தேவரிஷிகளில் நாரதராகவும்,
பசுக்களுள் காமதேனாகவும் நான் இருக்கிறேன்.

ஸித்3தே4ஶ்வராணாம் கபில: ஸுபர்ணோSஹம் பதத்ரிணாம் |
ப்ரஜாபதீனாம் த3க்ஷோSஹம் பித்ருணாமஹமர்யமா || 15 ||

சித்திகளை அடைந்தவர்களில் அவைகளுக்கு தலைவனாக இருக்கும் கபிலனாகவும், பறவைகளில் கருடனாகவும்,
ப்ரஜாபதிகளில் தக்ஷப்பிரஜாபதியாகவும், பித்ருக்களில் அர்யமாவாகவும் இருக்கிறேன்.

மாம் வித்3த்4யுத்த4வ தைத்யானாம் ப்ரஹலாதமஸுரேஶ்வரம் |
ஸோமம் நக்ஷத்ரௌஷதீ4னாம் த4னேஶம் யக்ஷரக்ஷஸாம் || 16 ||

உத்தவா! அசுரர்களில் அசுரமன்னன் பிரஹலாதனாகவும், நட்சத்திரங்களில் தாவரங்களுக்கு சக்தி தருகின்ற சந்திரனாகவும்,
யக்ஷர்களுக்கும், ரக்ஷகர்களுக்குள்ளும் நான் த4னேஶ்வரனாகவும், குபேரனாகவும் இருக்கிறேன்.

ஐராவதம் க3ஜேந்த்ராணாம் யாதஸாம் வருணம் ப்ரபு4ம் |
தபதாம் தயுமதாம் ஸூர்யம் மனுஷ்யாணாம் ச பூபதிம் || 17 ||

யானைகளுக்குள் ஐராவதமாகவும், நீரில் வாழும் பிராணிகளுக்கு தேவதைகளாக இருப்பவர்களுக்குள் வருணனாகவும்,
வெப்பத்தைக் கொடுக்கும் பொருட்களிலும், வெளிச்சத்தைக் கொடுப்பவைகளில் சூரியனாகவும், மனிதர்களில் அரசனாகவும் இருக்கிறேன்.

உச்சை:ஶ்ரவாஸ்துரங்கா3ணாம் தா4தூனாமஸ்மி காஞ்சனம் |
யம: ஸம்யமதாம் சாஹம்ஸர்பாணாமஸ்மி வாஸுகி: || 18 ||

குதிரைகளுக்குள் உச்சைஶ்ரவஸாகவும், உலோகங்களுக்குள் தங்கமாகவும், தண்டனை கொடுப்பவர்களுக்குள் யமனாகவும்,
சர்ப்பங்களில் (விஷமுடைய பாம்புகளில்) வாசுகியாகவும் இருக்கிறேன்.

நாகேந்த்ராணாமனந்தோSஹம் ம்ருகேந்த்ர: ஶ்ருங்கி3தம்ஷ்ட்ரிணாம் |
ஆஶ்ரமாணாமஹம் துர்யோ வர்ணானாம் ப்ரதமோSனக4ம் || 19 ||

குறைகளெதுவுமில்லாத உத்தவா! விஷமற்ற பாம்புகளில், ஆதிசேஷனாகவும், அனந்தனாகவும்,
கோரமாக பற்கள் உடைய விலங்குகளில் சிங்கமாகவும், நால்வகை ஆசிரமங்களில் சந்நியாஸ ஆசிரமமாகவும்,
வர்ண பிரிவுகளில் பிராமணனாகவும் இருக்கிறேன்

தீர்தா2னாம் ஸ்ரோதஸாம் கங்கா3 ஸமுத்ர: ஸரஸாமஹம் |
ஆயுதா4னாம் த4னுரஹம் த்ரிபுரக்4னோ த4னுஷ்மதாம் || 20 ||

ஓடிக்கொண்டிருக்கும் நதிகளல் கங்கையாகவும், தேங்கியிருக்கின்ற நீர்நிலைகளுக்குள் கடலாகவும், ஆயுதங்களில் வில்லாகவும்,
ஆயுதம் தாங்கியவர்களில், வில்லேந்தியவர்களில் முப்புரம் எரித்த பரமசிவனாகவும் இருக்கிறேன்.

தி4ஷ்ன்யானாமஸ்ம்யஹம் மேருர்கஹனானாம் ஹிமாலய: |
வனஸ்பதீனாமஶ்வத்த2 ஓஷதீ4னாமஹம் யவ: || 21 ||

மேலான, உயர்ந்த இடங்களில் மேருமலையாகவும், கடினப்பட்டு அடையக்கூடிய இடங்களுக்குள் இமயமலையாகவும்,
மரங்களில் அரச மரமாகவும், தானியங்களில் யவமாகவும் (பார்லியாகவும்) இருக்கிறேன்.

புரீத4ஸாம் வஸிஷ்டோ அஹம் ப்ரஹிமஷ்டானாம் ப்3ருஹஸ்பதி: |
ஸ்கந்தோ3Sஹம் ஸர்வஸேனான்யாமக்3ரண்யாம் ப4க3வானஜ: || 22 ||

புரோகிதர்களில் வசிஷ்டராகவும், வேதமறிந்தவர்களில் பிருஹஸ்பதியாகவும், படைத் தலைவர்களுக்குள் ஸ்கந்தனாகவும்,
ஒன்றை தொடங்கி வைப்பவர்களில் பிரம்மாவாகவும் இருக்கிறேன்

யஞானாம் ப்ரஹ்மயஞோSஹம் வ்ரதானாமவிஹிம்ஸனம் |
வாய்வக்ன்யர்காம்பு3வாகா3த்மா ஶுசீனாமப்யஹம் ஶுசி: || 23 ||

மோட்சத்தை அடைய உதவும் சாதனங்களில் பிரம்மயக்ஞமான சாஸ்திரம் கேட்டல், படித்தல் என்ற சாதனமாகவும்,
விரதங்களில் அஹிம்சையாகவும், தூய்மைப்படுத்தும் சாதனங்களுக்குள் வாயு, அக்னி, நீர், வாய்பேச்சு (பகவான் நாம உச்சாரனை),
மனமாகவும் ஆத்மஞானமாகவும் இருக்கிறேன். நம்மை தூய்மைப்படுத்தும் சாதனங்களுள் ஆத்மஞானம்தான் மேலானது முக்கியமானது.

யோகா3னாமாத்மஸம்ரோதோ4 மந்த்ரோSஸ்மி விஜிகீ3ஷதாம் |
ஆன்விக்ஷிகீ கௌஶலானாம் விகல்ப: க்2யாதிவாதி3னாம் || 24 ||

அஷ்டாங்க யோகங்களில் சமாதி என்ற யோகமாகவும், வெற்றி அடைபவர்களில் சரியான திட்டமிடுதலாகவும், கொள்கையாகவும்,
ஆத்ம-அனாத்மா பிரித்தறியும் அறிவை அடைகின்ற திறமையாகவும், க்2யாதி வாதங்களில் (அடைந்த தவறான அறிவைப்பற்றிய விசாரம்,
சரியான அறிவைப்பற்றிய விசாரம்) விகல்பமாக (சந்தேகம்) இருக்கிறேன்.

ஸ்த்ரீணாம் து ஶதரூபாஹம் பும்ஸாம் ஸ்வாயம்பு4வோ மனு: |
நாரயணோ முனீனாம் ச குமாரோ ப்ரஹமசாரிணாம் || 25 ||

பெண்களில் ஶதரூபா என்கின்ற பெண்ணாகவும், ஆண்களில் ஸ்வாயம்பு மனுவாகவும், முனிவர்களில் நாராயணன் என்ற
பெயருடைய முனிவராகவும், பிரம்மசாரிகளில் சனத் குமாரராகவும் இருக்கிறேன்.

த4ர்மாணாமஸ்மி ஸந்நியாஸ: க்ஷேமாணாமபஹிர்மதி: |
கு3ஹ்யானாம் ஸுந்ருதம் மௌனம் மிது2னானாமஜஸ்த்வஹம் || 26 ||

தர்மங்களில் சந்நியாஸ தர்மமாகவும், நலத்தை, அபயத்தை விரும்பும் மனிதர்களில் உட்புறமாக பார்க்கக்கூடிய மனமாகவும்,
(ஒருவன் தன்னிடத்தில் பயமின்றி மனநிறைவுடன் இருந்திட வேண்டும்) ரகசியத்தை பாதுகாப்பதில் மௌனமாகவும்,
ஸுந்ருதம்- இனிமையான சொற்களைக் கொண்டு மறைக்கும் திறமையாகவும்,
முதலில் படைக்கப்பட்ட ஆண்-பெண் ஜோடிகளில் பிரம்மாவாகவும் இருக்கிறேன்.

ஸம்வத்ஸரோSஸ்ம்ய நிமிஶாம்ருதூனாம் மது4மாத4வௌ |
மாஸானாம் மார்க3ஷீர்ஷோSஹம் நக்ஷத்ராணாம் ததா2பி3ஜித் || 27 ||

நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பவைகளில் வருடமாகவும், பருவ காலங்களில் வசந்த காலமாகவும், மாதங்களில் மார்கழியாகவும்,
நட்சத்திரங்களில் அபிஜித் என்ற நட்சத்திரமாகவும் நான் இருக்கிறேன்.
உத்திராடம் 4வது பாதம், திருவோணம் முதல் பாதம் இவையிரண்டும் சேர்ந்து இருப்பதை அபிஜித் என்று அழைக்கப்படுகிறது.

அஹம் யுகா3னாம் ச க்ருதம் தீ4ராணாம் தேவலோSஸ்தி: |
த்வைபாயனோSஸ்மி வ்யாஸானாம் கவீனாம் காவ்ய ஆத்மவான் || 28 ||

நான்கு யுகங்களில் க்ருதயுகமாகவும், தீரர்களுக்குள் தேவலர், அஸிதர் போன்றவர்களாகவும்,
வியாஸர்களுக்குள் த்3வைபாயனவராகவும், சாஸ்திரம் அறிவாற்றல் உள்ளவர்களில் சுக்கிராச்சாரியாரகவும் இருக்கிறேன்.

வாஸுதேவோ ப4கவதாம் த்வம் து ப4க3வதேஷ்வஹம் |
கிம்புருஷானாம் ஹனுமான்வித்3யாத்4ராணாம் ஸுத3ர்ஶன: || 29 ||

என்னுடைய அவதாரங்களில் வாசுதேவனாகவும், பக்தர்களில் உத்தவராகவும், வானரங்களில் அனுமானாகவும்,
தேவலோகத்தில் வசிக்கின்ற கலைஞானத்துடன் இருப்பவர்களில் சுதர்சனனாகவும் நான் இருக்கிறேன்

ரத்னானாம் பத்3மராகோ3Sஸ்மி பத்3மகோஶ: ஸுபேஶஸாம் |
குஶோSஸ்மி த3ர்ப4ஜாதீனாம் க3வ்யமாஜ்யம் ஹவி:ஷ்வஹம் || 30 ||

ரத்தினங்களில் பத்3மராகம் என்ற பெயருடைய ரத்தினமாகவும், மென்மையான பொருட்களில் தாமரை மொட்டாகவும்,
புல் வகைகளில் குஶம் என்ற புல்லாகவும், யாகங்களில் போடும் பொருட்களில் பசுநெய்யாகவும் இருக்கிறேன்.

வ்யவஸாயினாமஹம் லக்ஷ்மீ: கிதவானாம் ச2லக்3ரஹ: |
திதிக்ஷாஸ்மி திதிக்ஷூணாம் ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் || 31 ||

முயற்சி செய்பவர்கள் அடையும் செல்வமாக விளங்குவதும், மற்றவர்களை ஏமாற்றுவர்களிடத்தில் இருக்கும் திறமையாகவும்,
சகிப்புத்தன்மை இருப்பவர்களின் சகிப்பு குணமாகவும், சாத்வீக மக்களிடத்திலிருக்கின்ற சத்துவகுணமாகவும் நான் இருக்கிறேன்.

ஓஜ: ஸஹோ ப3லவதாம் கர்மாஹம் வித்3தி4 ஸாத்வதாம் |
ஸாத்வதாம் நவமூர்தீனாமாதி3மூர்திரஹம் பரா || 32 ||

பலம் வாய்ந்தவர்களிடத்தில் இருக்கின்ற இந்திரிய சக்தியாகவும், மனோ பலமாகவும் இருக்கின்றேன்.
பலனில் பற்றில்லாமல் கடமையை செய்பவர்களில் கர்மயோகமாகவும், விஷ்ணு பக்தர்களால் பூஜிக்கப்படுகின்ற சத்துவகுண
பிரதானமாக இருக்கின்ற ஒன்பது மூர்த்திகளில் பரவாசுதேவ மூர்த்தியாக இருக்கிறேன்.
வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர், நாராயணர், வராஹர், ஹயக்ரீவர், நரசிம்மர், வாமனர் ஆகிய ஒன்பது மூர்த்திகள்.

விஷ்வாவஸு: பூர்வசித்திர்க3ந்த4ர்வாப்ஸரஸாமஹம் |
பூ4த4ராணாமஹம் ஸ்தை2ர்யம் க3ந்த4மாத்ரமஹம் பு4வ: || 33 ||

கந்தர்வர்களில் விஷ்வாவஸூவாகவும், அப்ரஸ்களில் பூர்வசித்தி என்ற பெண்ணாகவும், அசையாக மலைகளில் அசையா தன்மையாகவும்,
பூமியின் குணமான வாசனையாகவும் நான் இருக்கின்றேன்.

ஆபாம் ரஸ்ஶ்ச பரமஸ்தேசிஷ்டானாம் விபா4வஸு: |
ப்ரபா4 ஸூர்யேந்துதாராணாம் ஶப்3தோ3Sஹம் நப4ஸ: பர: || 34 ||

நீரினுடைய குணமான சுவையாகவும், பேரொளி வீசுபவைகளுள் அக்னியாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் கிரகணங்களாகவும்,
ஆகாயத்தின் குணமான சப்தமாகவும் இருக்கிறேன்.

ப்3ரஹ்மண்யானாம் ப3லிரஹம் வீராணாமஹமர்ஜுன: |
பூ4தானாம் ஸ்தி2திருத்பத்திரஹம் வை ப்ரதிஸங்க்ரம: || 35 ||

மேலானவர்களை , சான்றோர்களை மதிப்பவர்களில் பலி என்ற அரசனாகவும், வீர்ர்களில் அர்ஜுன னாகவும்,
அனைத்து ஜீவராசிகளில் தோற்றதிற்கும், இருப்புக்கும், அழிவுக்கும் காரணமாக இருக்கிறேன்.

க3த்யுக்த்யுத்ஸர்கோ3பாதானமானந்தஸ்பர்ஶலக்ஷனம் |
ஆஸ்வாதஶ்ருத்யவக்4ராணமஹம் ஸர்வேந்த்3ரியம் || 36 ||

புலன்களுக்கெல்லாம் புலனாகவும், ஜீவனுடைய இந்திரிய சக்திகளுக்கெல்லாம் சக்தியாகவும் இருக்கிறேன்.
நம்மிடத்து இருக்கும் இந்த்ரிய சக்தி அனைத்தும் இறைவனுடையது என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
நடக்கும் சக்தியாகவும், பேசும் சக்தியாகவும், கழிவுகளை வெளியேற்றும் சக்தி, கைகளால் எடுக்கும் சக்தி,
இன்பத்தை கொடுக்கும் சக்தியாகவும், தொட்டுணரும் சக்தியாகவும், பார்க்கும் சக்தி, சுவைக்கும் சக்தி,
கேட்கும் சக்தி, நுகரும் சக்தி ஆகிய சக்திகளாகவும் நானே இருக்கிறேன்.

ப்ருதி2வி வாயுராகாஶ ஆபோ ஜ்யோதிரஹம் மஹான் |
விகார: புருஷோSயக்தம் ரஜ: ஸத்த்வம் தம: பரம் |
அஹமேத த்ப்ரஸங்க்2யானம் ஞானம் த்த்த்வ்வினிஶ்சய: || 37 ||

அவ்யக்தம், மஹத், அஹங்காரம், ஐந்து சூட்சும பூதங்களான பூமி, வாயு, ஆகாசம், நீர், நெருப்பு இவைகளாகவும்,
இவைகளிலிருந்து தோன்றிய ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஸ்தூல பூதங்கள்,
மனம் இவைகளாகவும் நான் இருக்கிறேன். புருஷ தத்துவமாகவும், ரஜோ, தமோ, சத்துவ குணங்களாகவும் இருக்கிறேன்.
இந்த தத்துவங்களில் எண்ணிக்கையாகவும், மற்ற லட்சணங்களை அறிந்து கொள்வது, அதன் பயனான தத்துவ ஞானமும் நானாக இருக்கிறேன்.

மயேஶ்வரேண ஜீவேன கு3ணேன கு3ணினா வினா |
ஸர்வாத்மனாபி ஸர்வேண ந பா4வோ வித்யதே க்வசித் |\ 38 ||

நானே ஈஸ்வரன், நானே ஜீவன், நானே குணங்கள், நானே குணங்களுடையவனாகவும் இருக்கிறேன்.
எல்லா ஜீவராசிகளிடத்திலுள்ளும் இருக்கும் ஆத்மாவாக இருக்கிறேன். அனைத்து உடலாகவும் இருக்கிறேன்.
என்னைத் தவிர வேறெந்தப் பொருளும் எங்கும் இல்லை.

ஸங்க்2யானம் பரமாணுனாம் காலேன க்ரியதே மயா |
ந ததா2 மே விபூ4தீனாம் ஸ்ருஜதோSண்டானி கோடிஶ: || 39 ||

என்னுடைய பெருமைகளை அளவிட முடியாது. பரமாணுக்களின் எண்ணிக்கையை ஒரு காலத்திற்குள் எண்ணி முடிவடையலாம்.
ஆனால் என் கோடிக்கணக்கான அண்டங்களைப் படைக்கும் விபூதிகளை கணக்கிடவே முடியாது

தேஜ: ஶ்ரீ: கீர்திரைஶ்வர்யம் ஹ்ரீஸ்த்யாக3: ஸௌப4க3ம் ப4க3: |
வீர்யம் திதிக்ஷா விஞானம் யத்ர யத்ர ஸ மேSஶக: || 40 ||

யாரிடத்திலெல்லாம், எங்கெங்கெல்லாம் அதிக சக்தி (தேஜஸ்), செல்வம், புகழ், ஐஸ்வர்யம் (ஆளும் திறமை),
பணிவு, தியாகம், சௌந்தர்யம், சௌபாக்கியம், பராக்கிரமம், பொறுத்துக் கொள்ளும் தன்மை, செயல்திறமை,

ஏதாஸ்தே கீர்திதா: ஸர்வா: ஸங்க்ஷேபேண விபூ4தய: |
மனோவிகாரா ஏவைதே யதா2 வாசாபி4தீ4யதே || 41 ||

உத்தவா! நீ கேட்டுக் கொண்டபடி என்னுடைய பெருமைகள் சுருக்கமாகச் சொல்லப்பட்டது. இவைகளெல்லாம் மனதினுடைய
விகாரங்களேயாகும். இவைகள் என் வாக்கினால் சொல்லப்பட்டதே தவிர உண்மையில் அவைகள் இல்லை.
இவைகள் வெறும் வாக்கியங்கள்தான், அனைத்தும் மித்யா என்ற கருத்தை உபதேசிக்கின்றார்.

வாசம் யச்ச2 மனோ யச்ச2 ப்ராணான்யச்சே2ந்த்3ரியாணி ச |
ஆத்மானமாத்மனா யச்ச2 ந பூ4ய: கல்பஸேSத்4வனே || 42 ||

உத்தவா! உன்னுடைய வாக்கை கட்டுப்படுத்து பிராணனை கட்டுப்படுத்து, மனதைக் கட்டுப்படுத்து, உணவு கட்டுப்பாட்டை செயல்படுத்து,
புலன்களையும் கட்டுப்படுத்து, புத்தியின் துணைக் கொண்டு புத்தியை கட்டுப்படுத்து, புத்திக்கு நல்லறிவை கொடு.
உன்னை நீயே எல்லாவகையிலும் கட்டுப்படுத்திக் கொள், உயர்த்தி கொள்வாயாக.
இவ்வாறு செய்வதால் மீண்டும் சம்சாரப் பாதைக்கு செல்ல நேரிடாது

யோ வை வாங்மனஸீ ஸம்யக3ஸம்யச்ச2ந்தி4யா யதி: |
தஸ்ய வ்ரதம் தபோ தா3னம் ஸ்ரவத்யாமக4டாம்பு3வத் || 43 ||

ஒருவன் வாக்கையும், மனதையும் நன்கு முழுமையாக கட்டுப்படுத்தவில்லையென்றால், மேற்சொன்ன உபதேசத்தின்படி
கட்டுப்படுத்தவில்லையென்றால், மற்ற சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், எவ்வளவு விரதம், தவம், தானம் போன்ற
நற்செயல்கள் அனைத்துமே பச்சை மண் குடத்து நீர் போல வீணாகிப் போகும்

தஸ்மாத்3வாசோ மன: ப்ராணான்னியச்சே2ன்மத்பராயண: |
மத்3ப4க்தியுக்தயா பு3த்3த்4யா தத: பரிஸமாப்யதே || 44 ||

ஆகவே, மனம், வாக்கு, பிராணன், புலன்கள் இவைகளையெல்லாம் நன்கு கட்டுப்படுத்த வேண்டும். நெறிப்படுத்த வேண்டும்.
என்னை அடைய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு இவைகளையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும்.
என் மீது பக்தி செலுத்தப்பட்ட மனதுடன் கூடிய புத்தியுடன் இவைகளை முயற்சி செய்து அடைய வேண்டும்.
இவைகளை செய்தபின் எல்லாம் முற்றுப் பெறுகின்றன.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -22–ஞான யோக சுருக்கம் –

May 22, 2020

ஸ்ரீபகவானுவாச
பரஸ்வபா4வகர்மாணி ந ப்ரஶம்ஸேன்ன க3ர்ஹயேத் |
விஶ்வமேகாத்மகம் பஶ்யன்ப்ரக்ருத்யா புருஷேண ச || 1 ||

ஆத்ம ஞானத்தை யுடையவன் உலகத்தை எப்படி மனதுக்குள் பார்த்து கொண்டிருப்பான் எப்படி வெளிஉலகத்தோடு
விவகாரம் செய்து கொண்டிருப்பான் என்பதை விளக்குகின்றார்.
சம்சாரத்தில் புகழ்ச்சி, இகழ்ச்சி இவையிரண்டும் இருக்கிறது. ஞானியானவன் யாரையும் மனதால் புகழவோ, இகழவோ மாட்டான்.
பர ஸ்வபாவ கர்மாணி – மற்றவர்களுடைய செயல்களையும், குணங்களையும், இயற்கையாக நடந்து கொள்ளும்போதும்
ந ப்ரஶம்ஸே ந கர்ஹயேத் – புகழவும் மாட்டான், இகழவும் மாட்டான். அதாவது மனதில் ஏற்றுக் கொள்ளவும் மாட்டான், நிராகரிக்கவும் மாட்டான்.
விஶ்வம் ஏகாத்மகம் பஶ்யன் – இந்த உலகத்தை அத்வைத தத்துவமாக உணர்ந்து கொண்டு, ஒன்றாகத்தான் பார்க்கின்றான்.
இவ்வாறு வேற்றுமைகளுடன் தோன்றிக் கொண்டிருக்கும் உலகத்தை ஒன்றாக பார்க்கும்போது,
ப்ரக்ருத்யா புருஷேன ச – பிரம்மன், மாயை இவையிரண்டின் சேர்க்கையாக உலகம் இருக்கின்றது. ஈஸ்வரனே இந்த உலகமாக காட்சியளிக்கிறார்

பரஸ்வபா4வகர்மாணி ய: ப்ரஶம்ஸதி நிந்ததி |
ஸ ஆஶு ப்4ரஶ்யதே ஸ்வார்தா2த3ஸத்யபி4னிவேஶத: || 2 ||

பரஸ்வபாவ கர்மாணி – யாரொருவன் மற்றவர்களுடைய குணங்களை, செயல்களைப் புகழ்ந்து கொண்டும்,
இகழ்ந்து கொண்டும் இருக்கின்றானோ அவன் உடனடியாக மோட்சத்தை அடையும் லட்சியத்திலிருந்து விழுந்து விடுகின்றான்.
அவன் மித்யாவில் சத்யத்வத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் இவ்வாறு செயல்படுகின்றான்.

தைஜஸே நித்3ரயாபன்னே பிண்டஸ்தோ2 நஷ்டசேதன: |
மாயாம் ப்ராப்னோதி ம்ருத்யும் வா தத்3வன்னானார்த2த்3ருக்புமான் || 3 ||

நம்மை பிறர் இகழும்போது அந்த வார்த்தைகளுக்கு நாம் மனதில் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதால் அதனால் பாதிப்பை அடைகிறோம்.
நிந்தனையும், ஸ்துதியும் பொய்யானது என்று நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனவே யார் நம்மை நிந்தாஸ்துதி செய்தாலும்
அவர் பொய் சொல்கிறார் என்று மனதில் நினைத்தால் அதனால் பாதிக்கமாட்டோம்.
விழிப்பு நிலையில் அனுபவிக்கும் அனைத்தும் கனவு நிலையில் அனுபவிப்பதற்கு சமமாகும்.
ஆத்மஞானமானது விழிப்புநிலை அனுபவங்களனைத்தும் பொய்யானவை என்று நினைக்க வைக்கும்.
பிண்டஸ்தஹ – சரீரத்தை உடைய ஜீவன்
நித்ரயாபன்னே – உறக்கம் என்ற சக்தி ஆட்கொள்ளும்போது
தைஜஸஹ – இந்திரியங்களை, சூட்சும சரீரத்தை
நஷ்ட சேதனஹ – ஜாக்ரத் அவஸ்தையில் இழந்து
மாயாம் ப்ராப்னோதி – கனவு நிலையை அடைகின்றான். அல்லது
ம்ருத்யும் வா – ஆழ்ந்த உறக்கத்திற்கும் செல்கின்றான்
தத்3வத் – அதுபோல
புமான் – விழிப்பு நிலையில் இருக்கும் ஜீவன்
நானார்த2 த்3ருக் – அந்த நிலையிலும் கனவு கண்டுகொண்டுதான் இருக்கின்றான்
இதிலிருந்து விழிப்புநிலை அனுபவங்களும் கனவு நிலை அனுபவங்களைப் போல பொய்யானவை என்ற அறிவை அடைய வேண்டும்.

கிம் ப4த்3ரம் கிமப4த்3ரம் வா த்3வைதஸ்யாவஸ்துன: கியத் |
வாசோதி3தம் தத3ந்ருதம் மனஸா த்4யாதமேவ ச || 4 ||

அவஸ்துன: த3வைதஸ்யா – பொய்யான இந்த பிரபஞ்சத்தில்
கியத் – எவ்வளவு தூரம், எந்த அளவுக்கு
கிம் பத்ரம், கிம் அபத்ரம் வா – எது நல்லது, எது கெட்டது என்று எண்ணுகின்றோம். ஆனால்
வாசா உதிதம் – வாக்கினால் விளக்கப்படுகின்ற உலகம்
மனஸா த்யாதமேவ ச – மனதினால் கற்பணை செய்து வைத்திருக்கின்ற உலகம்
தத்3 அந்ருதம் – இவைகள் வெறும் தோற்றம்தான்,

சா2யாப்ரத்யாஹவயாபா4ஸா ஹயஸந்தோऽப்யர்த2காரிண: |
ஏவம் தே3ஹாத3யோ பா4வா யச்ச2ந்த்யாம்ருத்யுதோ ப4யம் || 5 ||

எவைகள் பயன்படுகின்றதோ அவைகள் சத்யம் என்றும், பயன்படவில்லையென்றால் அவைகள் பொய்யென்று நினைத்து வைத்திருக்கின்றோம்.
ஆனால் ஒரு பொருள் பொய்யாக இருந்தாலும் அதனால் நாம் உணர்ச்சிவசப்படுகின்றோம். கனவில் காணும் புலியைக் கண்டு பயந்து கொள்கிறோம்.
தைஜஸன் அடைந்த சுக-துக்கங்களை விஶ்வன் கொஞ்ச நேரம் அனுபவிக்கின்றான்.
எனவே உண்மையான வஸ்து மட்டுமே சுக-துக்கங்களை கொடுப்பதில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சா2யா – நிழல், பொய்யானது.
நிழல் விழும் இடம் எதுவாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படுவதில்லை. வெயிலில் நிற்கும்போது கீழே தோன்றும் நிழல்
மற்றவருக்கு வெப்பத்திலிருந்து தப்பிக்க உதவுகின்றது. இதை வைத்து நிழல் சத்யமானது என்று சொல்லமுடியாது.
ப்ரத்யாஹ்வயா – எதிரொலி – மலையிலிருந்து எதிரொலிக்கும் நம் குரலைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஆபா4ஸா – பிரதிபிம்பம் – கண்ணாடில் தெரியும் நம் முகமானது பொய்யாக இருந்தாலும் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஹி அஸந்தஹ அப்யர்த அகாரிண – இவை மூன்றும் பொய்யாக இருந்தாலும் அவைகள் உண்மையான பலனை கொடுக்கின்றது
ஏவம் தோஹாதயோ பாவ்4வா – இவ்வாறு உடல் போன்ற எல்லா பொருட்களும்
ஆ ம்ருதியத் – மரண காலம் வரை
ப4யம் யச்சந்தி – பயம் போன்ற உணர்ச்சிகளை கொடுத்துக் கொண்டிருக்கும்

ஆத்மைவ ததி3த3ம் விஶ்வம் ஸ்ருஜ்யதே ஸ்ருஜதி ப்ரபு4: |
த்ராயதே த்ராதி விஶ்வாத்மா ஹ்ரியதே ஹரதீஶ்வர: || 6 ||

படைப்பில் அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்று முதன்மையான பிரிவு உள்ளது. அனுபவிப்பவன் பலவிதமாக அனுபவிக்கிறான்.
அனுபவிக்கப்படும் பொருட்களும் பலவாக இருக்கின்றன.
ஆத்ம ஏவ இதம் விஶ்வம் – ஆத்ம தத்துவம்தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்ற உலகமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.
ப்ரபு: – ஈஸ்வரனே
ஸ்ருஜதி இதம் விஶ்வம் – இந்த உலகத்தை படைக்கின்றார்
ஸ்ருஜ்யதே – அவரே தன்னையே உலகமாக படைத்துக் கொள்கிறார்.
இதிலிருந்து அறிவது படைப்பவதும், படைக்கப்படுவதும் ஒன்றேதான்.
விஶ்வாத்மா – உலகத்தை காத்துக் கொண்டிருக்கின்ற தத்துவத்தை
த்ராயதே – தன்னையே காப்பாற்றபடுபவராகவும் இருக்கிறார்.
ஹரதி – அழிக்கிறார்
ஹ்ரியதே – அழிக்கப்படுபவராகவும் இருக்கிறார்.

தஸ்மான்ன ஹயாத்மனோऽன்யஸ்மாத2ன்யோ பா4வோ நிரூபித: |
நிரூபிதேऽயம் த்ரிவிதா4 நிர்மூல பா4திராத்மனி |
இத3ம் கு3ணமயம் வித்3தி4 த்ரிவித4ம் மாயயா க்ருதம் || 7 ||

ஆகவே ஆத்மாவைக் காட்டிலும் வேறாக இருக்கின்ற ஒன்றை நிரூபிக்கப்படவில்லை த்ரிவிதா – மூன்று விதமான உலகங்களை
ஆத்மனி பா4தி – இவைகள் எல்லாம் ஆத்மாவில் தோன்றும் வெறும் தோற்றமாக உள்ளது
நிர்மூல – அவைகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை
இதம் குணமயம் வித்தி – இவைகள் அனைத்தும் முக்குணங்களாக அறிந்து கொள்
த்ரிவிதம் மாயயா க்ருதம் – மாயையினால் இந்த முக்குணங்கள் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஏதத்3வித்3வான்மது3தி3தம் ஞானவிக்ஞானநைபுணம் |
ந நிந்த3தி ந ச ஸ்தௌதி லோகே சரதி ஸூர்யவத் || 8 ||

மத்3 உதிதம் – என்னால் இதுவரை உபதேசிக்கப்பட்ட
ஏதத்- இந்த உபதேசத்தை
வித்வான் – அறிகின்ற ஞானி;
நைபுணம் – அறிவில் நிலைபெற்றவர். அதாவது இது ஞானநிஷ்டையும், விக்ஞான நிஷ்டையும் அடைந்தவன்.
இது மற்றவராலும் அடையக் கூடியது. ஆகவே இவன் யாரையும் நிந்திப்பதில்லை, யாரையும் புகழ்வதில்லை.
இவ்வாறு இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான். எப்பதி சூரியன் சமநோக்குடன் அனைத்திற்கும்
வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது
அது போல ஞானியும் அனைத்து ஜீவராசிகளையும் சமமாக பாவித்து வாழ்ந்து கொண்டிருப்பான்.

ப்ரத்யக்ஷேணானுமானேன நிக3மேனாத்மஸம்விதா3 |
ஆத்3ய~ண்தவத3ஸஜ்ஞாத்வா நி:ஸங்கோ3 விசரேதி3ஹ || 9 ||

ஒன்றைப் பற்றிய சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் அதைக் கொடுக்க கூடிய சரியான பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும்.
பிரத்யக்ஷ பிரமாணம் – நம் அனுபவத்தில் பார்ப்பவைகள் அனைத்தும் அழிந்து போகின்றது.
அதாவது தோன்றி மறையும் தன்மையுடையது என்று அறிகின்றோம்.
அனுமான பிரமாணம் – அனுமானத்தின் மூலமாகவும் இதை உறுதி செய்து கொள்ளலாம்.
0அழிந்து போன ஜீவராசிகள், கட்டிடங்கள் பார்க்கும் போது இவைகள் தோன்றி பிறகு அழிந்திருக்கிறது.
சாஸ்திர பிரமாணம் – சாஸ்திரத்தின் உபதேசங்களை பிரமாணமாக கொண்டு அதன் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீஉத்தவ உவாச
நைவாத்மனோ ந தே3ஹஸ்ய ஸம்ஸ்ருதிர்த்3ரஷ்டுத்3ருஶ்ய்யோ: |
அனாத்மஸ்வத்3ருஶோரீஶ கஸ்ய ஸ்யாது3பலப்4யதே || 10 ||

உத்தவர் கேட்கிறார்.
ஸம்ஸ்ருதிஹி – சம்சாரம்
அஸ்ய – யாரை
ஸ்யாத் – எதை
சம்சாரம் யாரை சார்ந்தது அல்லது எதைச் சார்ந்தது. இந்த உடலைச் சார்ந்தது அல்ல என்று தெரிகிறது
த்ருஶ்யம் – அனாத்மா – பார்க்கப்படுவது
த்ரஷ்டம் – பார்ப்பவன் – ஆத்மா
இவையிரண்டும் சம்சாரம் இருக்குமிடமல்ல
கிருஷ்ண பகவானே! இந்த அனாத்மவான உடலைப் பார்க்கின்ற ஆத்மாவும் சம்சாரம் அல்ல
உபலப்யதே – ஆனால் அனுபவிக்கப்படுகின்றது

ஆத்மாவ்யயோகு3ண:ஶுத்3த4: ஸ்வயஞ்ஜ்யோதிரனாவ்ருத: |
அக்னிவத்3தா3ருவத3சித்3தே3ஹ: கஸ்யேஹ ஸம்ஸ்ருதி: || 11 ||

ஆத்மா அவ்யயஹ – ஆத்மா அழிவற்றது. எனவே சம்சாரம் இதில் இருக்கமுடியாது
அகுணஹ – மூன்று குணங்களுமற்றது (சம்சாரம் குணங்களுடையது)
ஶுத்தஹ – தூய்மையானது. பாவ-புண்ணியங்களற்றது, செயலற்றதாக இருக்கிறது
ஸ்வய்ம் ஜ்யோதி – அறிவு ஸ்வரூபம், சாட்சி ஸ்வரூபம், தானே பிரகாசித்துக் கொண்டு மற்றவைகளை பிரகாசித்துக் கொண்டிருக்கிறது
அனாவ்ருத – ஆத்மாவை எதுவும் மறைக்காது
அக்னிவத் – அக்னியைப் போல ஸ்வயம் பிரகாசம்
தா3ருவத் அசித் தேஹ: – தேகமானது மரக்கட்டையைப் போல ஜடமானது
கஸ்ய இஹ ஸம்ஸ்ருதி – ஆகவே இந்த சம்சாரம் ஆத்மாவை சார்ந்ததல்ல பிறகு யாரை சார்ந்தது? அல்லது எதைச் சார்ந்தது?

ஸ்ரீபகவான் உவாச
யாவத்3தேஹேந்த்3ரியப்ராணைராத்மன: ஸன்னிகர்ஷணம் |
ஸம்ஸார: ப2லவாம்ஸ்தாவத3பார்தோ2ऽப்யவிவேகின: || 12 ||

பகவான் கூறுகிறார்.
அவிவேகின ஸம்ஸார ப2லவாம் – அக்ஞானிகளுக்கு சம்சாரம் அனுபவமாக இருக்கிறது
ஆத்மா அனாத்மாவுக்கு இடையே உள்ள சிதாபாஸனிடத்தில்தான் சம்சாரம் இருக்கிறது. இது தன்னை மூன்று சரீரங்களாக நினைக்கலாம்
அல்லது ஆத்மாவின் பிரதிபிம்பம் என்றும் புரிந்து கொள்ளலாம், இந்த சிதாபாஸன்தான் ஜீவன் என்றும் அழைக்கப்படுகிறான்.
எது தேகத்துடனும், இந்திரியங்களுடனும், பிராணன்களுடனும் ஆத்மா அருகே இருந்து கொண்டு பிரகாசிக்கின்றதோ அதுவே சிதாபாஸன்.
இந்த சிதாபாஸன் அறியாமையில் இருக்கும்வரை சம்சாரத்தை அனுபவிக்கிறான். இது உண்மையிலேயே இல்லாத நிலையிலும் அதை மெய்யாக இருக்கிறது

அர்தே2ऽஹயவித்3யமானே பி ஸம்ஸ்ருதிர்ன நிவர்ததே |
த்4யாயதோ விஷயானஸ்ய ஸ்வப்னேऽனர்த்தா2க3மோ யதா2 || 13 ||

யதா2 – எவ்விதம் கனவில்
அனர்த்தாஅகமஹ – துயரங்களும், வேண்டாததும் வருகின்றதோ அது போல, உண்மையில் இல்லாதவைகளை அடைந்து அனுபவிப்பது போல
அவித்யமானே அர்தே2 – பிரபஞ்சம் என்ற ஒன்று உண்மையிலே இல்லாதபோதிலும் நம்மை வருத்தப்பட வைத்துக் கொண்டிருக்கும்
விஷயங்கள் உண்மையில் இல்லாத போதிலும்
ஸம்ஸ்ருதி ந நிவர்ததே – சம்சாரம் நம்மை விட்டு போவதில்லை
அஸ்ய – இந்த ஜீவனுக்கு
விஷயான் த்யாயதஹ – அந்த மித்யாவான பொருளை உண்மையென்று நினைப்பதால் சம்சாரம் அவனை விட்டு விலகுவதில்லை.

யதா2 ஹயப்ரதிபு3த்3த4ஸ்ய ப்ரஸ்வாபோ ப3ஹவனர்த2ப்4ருத |
ஸ ஏவ ப்ரதிபு3த்3த4ஸ்ய ந வை மோஹாய கல்பதே || 14 ||

யதா2 ஹி அப்ரதிபுத்தஸ்ய – விழித்துக் கொள்ளாதவனுக்கு,, அறியாமையிலிருப்பவனுக்கு
ப்ரஸ்வாபஹ – கனவானது
பஹு அனர்த2ப்4ருத – பலவிதமான துயரத்தை, சம்சாரத்தை கொடுத்து கொண்டு இருக்கும்
ஸ ஏவ ப்ரதிபு3த்3த4ஸ்ய – அவனே விழித்துக் கொண்டால்
ந வை மோஹாய கல்பதே – அதற்கு பிறகு அவனுக்கு சம்சாரம் என்பது கனவில் கிடையாது. கனவில் அடையும் சோகம்,மோகம் கிடையாது

ஶோகஹர்ஷப4யக்ரோத4 லோப4மோஹஸ்ப்ருஹாத3ய: |
அஹங்காரஸ்ய த்3ருஶ்யந்தே ஜன்ம்ம்ருத்யுஶ்ச நாத்மன: || 15 ||

சம்சாரம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற விதங்களை இதில் கூறுகிறார்.
ஶோக – சோகமாகவும்
ஹர்ஷ – நிலையற்ற மகிழ்ச்சியாகவும்
ப4ய – பயமாகவும்
க்ரோத4 – கோபமாகவும்
லோப4 – கருமியாகவும், பகிர்ந்து கொள்ளாத குணமாகவும், என்னிடத்திலுள்ளது யாரிடமும் போகக்கூடாது என்ற மனப்பாங்காகவும்
மோஹம் – மனமயக்கமாகவும், மதிமயக்கமாகவும், பொருட்கள் மீது அதிக பற்று வைக்கும் உணர்வாகவும்
ஆத3யஹ –சம்சாரமானது அனுபவிக்கப்படுகிறது.
அஹங்காரஸ்ய த்ருஶ்யந்தே – இவைகளெல்லாம் அகங்காரத்தை சார்ந்ததாக இருக்கின்றது. என்னுடைய வெளிப்பாடுகள் அல்ல
ஜன்ம ம்ருத்யு ச – பிறப்பும், இறப்பும் கூட அகங்காரத்தை சார்ந்தது
ந ஆத்மனஹ – ஆத்மாவாகிய என்னோடு சம்பந்தப்பட்டவைகளல்ல என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

தே3ஹேந்த்3ரியப்ராணமனோऽபி4மானோ ஜீவோऽந்தராத்மா கு3ணகர்மமூர்த்தி: |
ஸூத்ரம் மஹாநித்யுருதே4வ கீ3த: ஸம்ஸார ஆதா4வதி காலதந்த்ர: || 16 ||

அந்தராத்மா – சுத்த சைதன்யம், உடலுக்கு ஆதாரமாகவும், ஐந்துகோசங்களை கடந்ததாகவும் இருக்கின்ற ஆத்மா
ஜீவஹ – அதுதான் ஜீவனாக இருக்கின்றது
தேஹ இந்திரிய ப்ராண மனோபிமானஹ – ஸ்தூல உடல், புலன்கள், பிராணன்கள், மனம் இவைகளில் அபிமானத்துடன் இருக்கின்றான்
குண கர்ம மூர்த்திஹி – இது ஜீவனை குறிக்கின்றது
முக்குணங்கள் அதற்கேற்ற செயல்களை புரிய வைத்து பாவ-புண்ணியங்களை கொடுக்கின்றது.
இவைகள் அதற்கேற்ற மாதிரியான ஸ்தூல, சூட்சும உடல்களையும் மனப்பாங்கையும் கொடுக்கின்றது.
ஸூத்ரம் – ஹிரண்யகர்ப்பன்
மஹான் – மஹத் என்கின்ற தத்துவம் என்று
உருத4ஹ தேவ – விதவிதமாக சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது
கால தந்த்ர – ஈஸ்வரனுடைய கட்டுக்குள் இருந்து கொண்டு
சம்சார ஆதா4வதி – சம்சாரத்தை அனுபவிக்கின்றான், சம்சாரத்தில் உழன்று கொண்டு இருக்கின்றான்

அமூலமேத்த்3ப3ஹுரூபரூபிதம் மனோவச:ப்ராணஶரீரகர்ம |
ஞானாஸினோபாஸனயா ஶிதேன ச்சி2த்த்வா முனிர்கா3ம் விசரத்யத்ருஷ்ண: ||17||

ஏதத் – இந்த அகங்காரம்
பஹூரூபரூபிதம் – விதவிதமான வெளிபாடுகளாக வெளிப்பட்டுள்ளது. இந்த அகங்கார தத்துவம் விதவிதமான வேஷங்களை
போட்டுக் கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
அமூலம் – இது ஆதாரமற்றது, மித்யா, இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது
மனோ வச:ப்ராணஶரீர – மனம், வாக்கு போன்ற கர்மேந்திரியங்கள், ஸ்தூல சரீரம்
கர்ம – இவைகளை தன்னிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றது
ஞானம் என்கின்ற சாதனத்தின் மூலமாக அகங்காரத்தை நீக்கிக்கொள்ள வேண்டும்,
ஞானம் என்கின்ற வாளால் அகங்காரத்தை வெட்ட வேண்டும்.
ஶிதேன உபாஸனயா – அனைத்து விதமான உபாஸனைகளின் மூலம் இந்த வாளை கூர்மைப்படுத்த வேண்டும்.
மேலும் தியானம் மூலமும் மனதை அமைதிப்படுத்த வேண்டும், பக்குவப்படுத்த வேண்டும். தூய்மையாகவும், உறுதியாகவும் வைத்து கொள்ள வேண்டும்.
முனி – அகங்காரத்தி நீக்கி நிறைவான மனதுடைய முனிவன்
கா3ம் – இந்த உலகத்தில்
அத்ருஷ்ணஹ – எந்தப்பற்றும் இல்லாமல்
விசரத் – மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்

ஞானம் விவேகோ நிக3மஸ்தபஶ்ச ப்ரத்யக்ஷமைதிஹயமதா2னுமானம் |
ஆத்3யந்தயோரஸ்ய யதே3வ கேவலம் காலஶ்ச ஹேதுஶ்ச ததே3வ மத்4யே || 18 ||

நிகமஹ – இந்த அறிவை உபநிஷத்தின் மூலம் அடையலாம்
தபஶ்ச – உபாஸனையின் மூலமாகவும், உன்னை ஞானத்திற்கு தயார் செய்கின்ற அனைத்து தவங்களின் மூலமாகவும்
மனதை செம்மைபடுத்திக் கொள்ளலாம்
ஐதிஹயம் – குருமுகமாக சாஸ்திரத்தை கேட்கவேண்டும்
அனுமானம் – கேட்டதை சிந்தித்து, விசாரம் செய்து அறிவு தெளிவு பெற வேண்டும்
ப்ரத்யக்ஷம் – இந்த அறிவை நாம் சந்திக்கும் அன்றாட அனுபவத்தில் பயன்படுத்த வேண்டும். அடைந்த அறிவை அனுபவமாக்க வேண்டும்.
அஸ்ய – இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பும், அழிந்த பின்பும் எது இருக்கின்றதோ அதுவே இடைப்பட்ட காலத்திலும் இருக்கின்றது.
அதுவே அனைத்திற்கும் காரணமாக இருக்கின்றது. காலமாகவும் இருக்கின்றது.

யதா2 ஹிரண்யம் ஸ்வக்ருதம் புரஸ்தாத்யஶ்சாச்ச ஸர்வஸ்ய ஹிரண்மயஸ்ய |
ததே3வ மத்4யே வ்யவஹார்யமாணம் நானபதே3ஶைரஹமஸ்ய தத்3வத் || 19 ||

ஸு அக்ருதம் – ஆபரணங்கள் செய்வதற்கு முன்பு
யதா2 ஹிரண்யம் – எவ்வாறு தங்கமானது இருக்கின்றது
ஸர்வஸ்ய – எல்லாவிதமான
ஹிரண்மயம் – ஆபரணங்களும்
புரஸ்தாத பஶ்சாத் – உருக்கி அழிக்கப்பட்ட பின்பும்
நானா அபதே – விதவிதமான பெயர்களால் விவகாரம் செய்யப்பட்ட போதிலும் அது இருக்கிறது
ததே3வ மத்4யே – அதுவேதான் இடைக்காலத்திலும்
வ்யவஹார்யமானம் – அதே தங்கம்தான் எந்தப்பெயரோடு, எந்த உருவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்றதோ அதுவாக அழைக்கப்படுகின்றது
தங்கம்தான் எல்லா நிலையிலும் இருக்கின்றது. அதுபோலவே பிரம்ம ஸ்வரூபியான நானும் இருக்கின்றேன்

விக்ஞானமேதத்ரியவஸ்த2மங்க3 கு3ணத்ரயம் காரணகர்யகர்த்ரு |
ஸமன்வயேன வ்யதிரேகதஶ்ச யேனைவ துர்யேண ததே3வ ஸத்யம் || 20 ||

ஏதத்3 விக்ஞானம் – நம் மனதில் தோன்றுகின்ற அறிவு ஸ்வரூபம், சிதாபாஸத்துடன் கூடிய மனம்
த்ரி அவஸ்தம் – மூன்று அவஸ்தைகளுடன் கூடியது
அங்க – உத்தவா!
குணத்ரியம் – நாம் மூன்றுவிதமான குணங்களின் தூண்டுதலினால் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்
காரண – விவகாரத்திற்கு காரணமான பொருட்களை காரணம் என்று இங்கு பொருட்படுத்த வேண்டும்
காரிய – நம்முதைய உடல் இது இயங்குவதற்கு வெளியேயுள்ள பொருட்கள் காரணமாக இருக்கின்றது
கர்த்ரு – உடலிலுள்ள புலன்களுக்கு அதிஷ்டானமான தேவதைகள் கர்த்தாவாக இருக்கின்றது

அன்வய வ்யதிரேக நியாயத்தை பயன்படுத்தி ஜீவனையும், துரிய தத்துவத்தையும், பரமாத்மாவையும்,
இவைர்களுக்கிடையே உள்ள உறவையும் அறிந்து கொள்ள வேண்டும்.காரிய-காரண சம்பந்தம் இருக்கின்றதா என்று முதலில் பார்க்க வேண்டும்.
களிமண்-பானை உதாரணத்தில் எது இருந்தால் அது இருக்குமோ, எது இல்லையென்றால் அது இருக்காதோ என்ற இரண்டு
நியாயத்தை பொருத்திப்பார்க்க வேண்டும். குயவன் இல்லையென்றாலும் பானை இருக்கின்றது.
ஆனால் களிமண் இந்த இரண்டு நியாயங்களுக்கும் பொருந்தி வருவதால் களிமண் காரணம், அதுவே சத்யம், பானைகளனைத்தும் காரியம்-
ஸமன்வய வ்யதிரேக என்ற நியாயத்தை பயன்படுத்தி எந்த துரிய தத்துவத்தால் அனாத்மாக்கள் இருக்கின்றனவோ
அந்த துரிய தத்துவமே சத்யம். சைதன்யம் இருக்கும்போதுதான் சிதாபாஸம் இருக்கும், அது இல்லையென்றால் சிதாபாஸமும் இல்லாமல் போகும்

ந யத்புரஸ்தாது3த யன்ன பஶ்சான்மத்4யே ச தன்ன வ்யபதே3ஶமாத்ரம் |
பூ4தம் ப்ரஸித்3த4ம் ச பரேண யத்3யத்ததே3வ தத்ஸ்யாதி3தி மே மனீஷா || 21 ||

எது தோன்றுவதற்கு முன் இல்லையோ, அழிவுக்குப் பிறகும் இல்லையோ அது இடையிலும் இல்லை என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இடையில் இருப்பது போல தோன்றுவது வெறும் நாம-ரூபம்தான்(வ்யபதே3ஶமாத்ரம்)
எவையெல்லாம் வேறொன்றின் துணையில்லாமல் இருப்பை அடைகின்றதோ, உதாரணமாக உடல் பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது,
அதை எது பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது அதுவே மெய்ப்பொருளாகின்றது இதுதான் என்னுடைய தீர்மானமான உபதேசமாகும்.

அவித்3யமானோऽப்யவபா4ஸதே யோ
வைகாரிகோ ராஜஸ ஸர்க3 ஏஸ: |
ப்3ரஹ்ம ஸ்வயம் ஜ்யோதிரதோ விபா4தி
ப்ரஹ்மேந்த்3ரியார்தா2த்மவிகாரசித்ரம் || 22 ||

எந்தவொரு படைப்பு உண்மையில் இல்லாத போதிலும் (அவித்யமானஹ) இருப்பது போல் தோன்றிக்கொண்டிருக்கின்றதோ(அவபா4ஸதே)
இது அனுபவத்திற்கு இருக்கின்ற காரிய ஸ்வரூபம். இது ரஜோ குணத்தின் படைப்பு. மாயை ரஜோகுணத்தின் வெளிப்பாடு இந்த ஸ்ருஷ்டி.
பிரம்ம தத்துவம் சுயப்பிரகாசம் அதாவது தானாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.
ஆகவே இந்த பிரம்மனே மாயையின் துணைக் கொண்டு இவ்வாறாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.
இது மாயையின் துணைக் கொண்டு புலன்கள், மனம், சூட்சும பூதங்கள், ஸ்தூல பூதங்கள் என்றெள்ளம் தோற்றமளித்துக் கொண்டிருக்கின்றது.
ஸ்ருஷ்டி அனைத்தும் வரைப்படங்கள் போல இருக்கின்றது.

ஏவம் ஸ்பு2தம் ப்ரஹ்மவிவேகஹேதுபி4:
பராபவாதே3ன விஶாரதே3ன |
சி2த்த்வாத்மஸந்தே3ஹமுபாரமேத ஸ்வானந்த
துஷ்டோऽகி2லகாமுகேப்4ய: || 23 ||

இவ்விதம் தெளிவாக பிரம்ம ஞானத்தைக் கொடுக்கும் பிரமாணங்கள் (உபநிஷத், பாகவத புராணம்) மூலமாக அறிந்து
இந்த அறிவுக்கு எதிராக இருக்கும் கருத்துக்களை திறமையுடன் உறுதியாக நீக்கி ஆத்ம விஷயத்தில் இருக்கும் சந்தேகத்தை நீக்கி விடவேண்டும்.
பின்னர் தானே ஆனந்தஸ்வரூபமாக உணர்ந்து அனைத்து விஷயங்களிலிருந்தும், புலன்கள் கொடுக்கும் ஆசைகளிலிருந்தும் நீங்கி இருக்க வேண்டும்.

நாத்மா வபு: பார்தி3வமி~ண்த்3ரியாணி
தேவா ஹயஸுர்வாயுர்ஜல்ம்ஹுதாஶ: |
மனோ ன்னமாத்ரம் தி4ஶணா ச ஸத்த்வமஹங்க்ருதி:
க2ம் க்ஷிதிரர்த2ஸாம்யம் || 24 ||

பார்திவம் வபு: – பூமியை ஆதாரமாக கொண்ட இந்த உடல் ஆத்மா அல்ல. இந்த உடலை நான் என்றூ உணர்வுபூர்வமாக நினைக்கக்கூடாது.
பத்து புலன்களும் நான் அல்ல. புலன்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற தேவதைகளும் நான் அல்ல. ஐந்து பிராணன்களும் நானல்ல.
மனம் நானல்ல. புத்தியும் நான் அல்ல. சித்தமும் நானல்ல. அகங்காரமும் ஆத்மாவல்ல என்று அனைத்தையும் நீக்கிவிட வேண்டும்.
இதிலிருந்து எல்லா கோசங்களும், மூன்று சரீரங்களும் நீக்கப்படுகிறது. மேற்சொன்னவைகள் அனைத்தும் அன்னத்தின் மூலமாக உருவானது.
ஸ்தூலமான வாயு, நீர், அக்னி, ஆகாசம், நிலம் இந்த பூதங்களும் ஆத்மாவல்ல. ஐந்து சூட்சும பூதங்களும் ஆத்மாவல்ல.

ஸமாஹிதை: க: கரணௌர்கு3ணாத்மபி4:
கு3ணோ ப4வேன்மத்ஸுவிவிக்ததா4ம்ன: |
விக்ஷிப்யமணைருத கிம் நு தூ3ஷணம்
க4னைருபேதைர்விக3தை ரவே: கிம் || 25 ||

புலன்களையும், மனதையும் நன்கு கட்டுப்படுத்தி நற்குணங்களை எல்லாம் அடைந்து அதனால் நல்ல உறுதியான தூய்மையான
மனதை அடைந்தாலும் என்ன பலன். ஞானிக்கு இந்த மாதிரியான மனதினால் எந்தப் பலனுமில்லை.
ஸுவ்விக்ததாம்னஹ – நன்கு பிரம்ம ஸ்வரூபத்தை அடைந்தவன்
சஞ்சலமான மனதிருந்தாலும் அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேகங்களால் சூரியம் மறைக்கப்பட்டாலும்,
மறைக்காமலிருந்தாலும் அதனால் சூரியனுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

யதா2 நபோ4 வாய்வனலாம்பு3பூ4கு3ணை:
க3தாக3தைர்வர்துகு3ணைர் ந ஸஜ்ஜதே
ததா2க்ஷரம் ஸத்த்வரஜஸ்தமோமலை:
அஹமதே: ஸம்ஸ்ருதிஹேதுபி4: பரம் || 26 ||

நப: – ஆகாசம்
எவ்வாறு வாயு, நீர், அக்னி பூமி முதலியவைகளின் குணகேடுகளால் ஆகாசத்திற்கு எந்தப்பாதிப்பும் ஏற்படுவதில்லையோ
அவ்வாறு பிரம்மமானது சத்துவ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களிலுள்ள அழுக்குகளால் பாதிக்கப்படுவதில்லை.
இந்தக் குணங்கள் சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றது. இவைகளால் அகங்காரத்தை கடந்துள்ள பிரம்மத்திற்கு
எந்தப்பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த முக்குணங்களில் நன்மையும், தீமையும் இருக்கின்றது.
இந்த இரண்டு நிலைகளிலும் ஆத்மாவுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை

ததா2பி ஸங்க3: பரிவர்ஜனீயோ கு3ணேஷு மாயாரசிதேஷு தாவத் |
மத்3ப4க்தியோகே3ன த்3ருடே4ன யாவத்3ரஜோ நிரஸ்யேத மன:கஷாய: || 27 ||

ததா2பி – இரூந்தபோதிலும், ( மனதை அமைதிப்படுத்தவும், தூய்மைபடுத்தவும் வேண்டும்)
ஸங்க3: பரிவர்ஜனீய: – மனதிலுள்ள தோஷங்களான பற்றுக் கொள்ளுதல், உணர்ச்சிவசப்படுதல் இவைகளை
மனதிலிருந்து அறவே நீக்கி மனதை பக்குவப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும்.
குணேஷு – விஷயங்களில், புலனுகர் போகப்பொருட்களில் உள்ள பற்றை நீக்க வேண்டும்
மாயா ரசிதேஷு – மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட இந்த விஷயங்களை, இந்த பற்றை எவ்வாறு, எதன் துணைக்கொண்டு நீக்குவது?
மத் பக்தியோகேன த்ருடேன – என்னிடத்தில் உறுதியான பக்தி செலுத்துவதன் மூலமாக, பொருட்களின் மீதுள்ள பற்றை நீக்க முடியும்
ரஜஹ – அசுத்தம்
மன:கஷாயஹ – மனதிலுள்ள வெளிபடுத்தப்பட்ட ராக-துவேஷங்கள், மறைந்துள்ள ராக-துவேஷங்கள், வெளித்தோற்றத்திற்கு வராத அழுக்குகள்
நிரஸ்யேத – இவைகள் நீங்கும் வரை இறைவன் மீது பக்தி செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

யதா2மயோऽஸாது4 சிகித்ஸிதோ ந்ருணாம் புன: புன: ஸந்துத3தி ப்ரரோஹன் |
ஏவம் மனோऽபக்வகஷாயகர்ம குயோகி3னம் வித்4யதி ஸர்வஸங்க3ம் || 28 ||

மனித சரீரத்தில் நோய் வந்து விட்டால் அது முழுமையாக குணமாகும்படி வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
அரைகுறையாக செய்து கொண்டால் அந்த நோய் மீண்டும் உன்னைத்தாக்கும். அதுபோல போகப்பொருட்களில்
பற்றுக் கொண்டிருக்கும் மனதை, முழுமையாக பயன்படுத்தாத நிலையில் அதிலிருந்து வெளிப்படுகின்ற
செயல்கள் நம்மை துன்புறுத்தும், தாக்கும்

குயோகி3னோ யே விஹிதாந்தராம்யைர்மனுஷ்ய
பூ4தைஸ்த்ரித3ஶோபஸ்ருஶ்டை |
தே ப்ராக்தனாப்4யாஸப3லேன பூ4யோ யுஞ்ஜந்தி
யோ3கம் ந து கர்மதந்த்ரம் || 29 ||

வேதாந்த சாஸ்திரத்தை கற்றுக் கொள்ள முயற்சி செய்யும்போது தடைகள் பல வரும். நல்லதை செய்யும் போதுதான்
தடைகளை சந்திக்க நேரிடும். இந்த தடைகளை தாண்டிவிட்டால் அதிக பலன்களை அடைந்திடுவோம்.
குயோகினஹ – மோட்ச சாதனத்தை பின்பற்றிக் கொண்டிருக்கும் சாதகன், இன்றும் மனப்பக்குவத்தை முழுமையாக அடையாத சாதகன்
மனுஷ்ய பூத4 த்ரித3ஶ உபஸ்ருஷ்டை – நம்மை சுற்றியுள்ள மனிதர்கள், மற்ற உயிரினங்கள், 30 தேவர்கள் இவர்களால்
விஹித ஆந்தராய: – நம்மை நோக்கி வருகின்ற, செலுத்தப்படுகின்ற தடைகள் வந்தாலும்
தே – அவர்கள்
பூயஹ – மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
யோக: – சாதனத்தை
ப்ராக்தன் அப்யாஸ ப3லேன – ஏற்கனவே முயற்சி செய்திருந்தது, அந்தப்பலத்தைக் கொண்டு
யுஞ்ஜந்தி – ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும்.
ந து கர்மதந்த்3ரம் – மீண்டும் கர்மகாண்டத்திற்கு சென்றுவிடக்கூடாது

கரோதி கர்ம க்ரியதே ச ஜந்து: கேனாப்யஸௌ
சோதி3த ஆனிபதாத் |
ந தத்ர வித்3வான்ப்ரக்ருதௌ ஸ்தி2தோऽபி
நிவ்ருத்த த்ருஷ்ண: ஸ்வஸுகா2னுபூ4த்யா || 30 ||

சம்சாரியானவன் விதவிதமான செயல்களை செய்துக் கொண்டிருக்கின்றான். எப்போதும் கர்த்தாவாகவே இருக்கின்றான். கர்மத்தின் பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான். இந்த அக்ஞானிகள் அவர்கள் அறியாமலேயே ஏதாவது காரணத்தால், சம்ஸ்கார பதிவினாலோ மற்றவர்களின் தூண்டுதலினாலோ செயல் செய்து கொண்டு இருக்கிறான். மரணம் அடையும் வரை செயல்களை செய்து கொண்டிருப்பான். ஆனால் ஞானியானவன் இந்த விஷயத்தில் அவர்கள் மாதிரி செயல் புரிவதில்லை. தன்னுடலில் இருந்து கொண்டிருந்த போதும், சூழ்நிலைகளாலும், ஸம்ஸ்காரங்களாலும் தூண்டப்படுவதில்லை. செயல் செய்ய வேண்டிய மன வேட்கையற்று இருக்கின்றான். ஏனென்றால் தன்னுடைய ஆனந்த ஸ்வரூபத்தை உணர்ந்துவிட்டதால் அவனால் இவ்வாறு வெறும் சாட்சியாக மட்டும் இருக்க முடிகிறது.

திஷ்ட2ந்தமாஸீனமுத வ்ரஜந்தம் ஶயானமுக்ஷந்தமத3ந்தமன்னம் |
ஸ்வபா4வமன்யக்திமபீஹமானமாத்மானமாத்மஸ்த2மர்தினி வேத3 || 31 ||

ஆத்மாவில் புத்தியை நிலைநிறுத்திவிட்ட ஞானி இந்த உடல் நிற்கிறது, உட்கார்ந்து கொண்டிருக்கிறது, நடக்கிறது, படுத்திருக்கிறது, மல-மூத்திரத்தை வெளிதள்ளுகிறது, உணவு உட்கொள்கிறது ஆகிய இதுபோன்ற இயல்பான பிற செயல்களை செய்து கொண்டிருக்கிறது என்பதையே அறியமாட்டான். அவன் ஆத்மஸ்வரூபத்திலேயே நிலைத்திருக்கின்றான். இவையெல்லாம் இந்த உடல்தான் செய்கிறது நானல்ல என்று அவன் உணர்ந்திருக்கின்றான்.

யதி3 ஸ்ம பஶ்யத்யஸதி3ந்த்3ரியார்த2ம் நானானுமானேன விருத்3த4மன்யத் |
ந மன்யதே வஸ்துதயா மனீஷீ ஸ்வாப்னம் யதோ2த்தா2ய திரோத3தா4னம் || 32 ||
இந்திரியார்த2ம் – புலன்களுக்கு அனுபவிக்கப்படுகின்ற உலகம்
அஸத் – பொய்யானதாக இருக்கின்ற உலகம்,
நானா – விதவிதமாக இருக்கின்ற உலகம்
யதி3 ஸ்ம பஶ்யதி – எவ்வாறு பார்க்கப்படுகிறது
அனுமானேன விருத்தம் – அனுமானம் மூலமாக பார்த்தாலும், உலகம் வெவ்வேறாகத்தான் இருக்கும். இந்த நிலையில்
அன்யத் – எனக்கு வேறாக தோன்றிக் கொண்டிருக்கின்றது. அனைத்தும் பஞ்ச பூதங்களாலானது. எனவே இந்த எண்ணம் தவறானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மனீஷீ – புத்தியுடையவன், ஞானியானவன் புலன்களுக்கு தோன்றியபடி இருக்கும் உலகத்தை ஏற்றுக் கொள்வதில்லை. விழித்தவுடன் மறைந்து போகின்ற கனவு உலகத்தைப்போல பார்த்து கொண்டிருக்கின்றான்.

பூர்வம் க்3ருஹீதம் கு3ணகர்மசித்ரமஞானமாத்மன்யவிவிக்தமங்க3 |
நிவர்ததே தத்புனரீக்ஷயைவ ந க்3ருஹயதே நாபி விஸ்ருய்ய ஆத்மா || 33 ||

உத்தவா! குணங்களாலும், கர்மங்களாலும் பலவகையாக இருக்கும் சரீரம் புலன்கள் முதலியவை அக்ஞானம் காரணமாக ஆத்மாவில் இருப்பதாக முன்னர் கருதப்பட்டன. ஆனால் ஞானம் ஏற்பட்டவுடன் அக்ஞானமும் அதன் காரியங்களும் மறைந்து விடுகின்றன. இந்த ஆத்மா உடலை கிரகிக்கவும் இல்லை, நீக்கவும் இல்லை. அதாவது ஆத்மா எப்போதும் ஒரேவிதமாகத்தான் இருந்து வருகிறது. அதில் விகாரம் எதுவும் ஏற்படமுடியாது. அக்ஞானத்துடன் கூடிய மனம் சம்சாரி, ஞானத்துடன் கூடிய மனதையுடையவன் ஞானி என்று புரிந்து கொள்வாயாக

யதா2 ஹி பா4னோருத3யோ ந்ருசக்ஷுஷாம்
தமோ நிஹன்யான்ன து ஸத்3வித4த்தே |
ஏவம் ஸமீக்ஷா நிபுணா ஸதீ மே
ஹன்யாத்தமிஸ்ரம் புருஷஸ்ய ப்83த்3தே4: || 34 ||
இதில் ஞானத்தின் ஸ்வரூபத்தை பகவான் கூறியிருக்கிறார். ஞானத்தை அடைந்து விட்டால் அறியாமையானது நீக்கப்பட்டு மறைந்திருக்கின்ற மெய்ப்பொருள் தெரிந்துவிடுகிறது. எவ்விதம் சூரியன் உதிக்கும்போது மனிதர்களுடைய பார்வையை மறைக்கின்ற இருளை நீக்குகின்றதோ அதுபோல ஆத்மஞானம் பிரம்மத்தை மறைக்கின்ற அறியாமையை நீக்கிவிடும். சூரியோதயம் எந்தப்பொருளையும் உருவாக்குவது இல்லை அதுபோல ஆத்மாவைப்பற்றிய சரியான அறிவு, மிக சக்தி வாய்ந்த அறிவான, உண்மையான ஞானம் அந்த ஜீவனுக்குள் இருக்கின்ற அறியாமையை அழிக்கின்றது

ஏஷ ஸ்வயஞ்ஜ்யோதிரஜோऽப்ரமேயோ மஹானுபூ4தி: ஸகலானுபூதி: |
ஏகோ த்3விதீயோ வசஸாம் விராமே யேனேஷிதா வாக3ஸவஶ்சரந்தி || 35 ||

இதில் ஆத்மாவினுடைய ஸ்வரூபம் விளக்கப்படுகிறது. இந்த ஆத்மாவானது தானாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. பிறப்பற்றது,
அப்ரமேயஹ – புலன்களுக்கு விஷயமாகாதது. புலன்களுக்கு வசப்படாதது.
மஹானுபூதி – வரையறுக்க முடியாத பூரணமான சைதன்ய ஸ்வரூபம்
ஸகலானுபூ4தி – வரையறுக்கப்பட்ட எல்லா அறிவிற்கும் ஆதாரமாக இருப்பது.
ஏக – ஒன்றாக இருப்பது
அத்வீதிய – இரண்டற்றதாகவும் இருக்கிறது
வசஸாம் விராமே – வாக்கால் விளக்கமுடியாததாக இருக்கிறது
இந்த சைதன்யத்தின் இருப்பினால் வாக் இந்திரியமும், பிராண தத்துவமும் செயல்படுகின்றது.

ஏதாவானாத்மஸம்மோஹோ யத்3விகல்பஸ்து கேவலே |
ஆத்மந்ருதே ஸ்வமாத்மானமவலம்போ3 ந யஸ்ய ஹி || 36 ||

இவ்வளவுதான் ஒருவனுடைய மோஹம், தன்னைப்பற்றிய தவறான எண்ணம் தூய்மையான ஆத்மாவிடம் எல்லாவற்றையும்
ஏற்றி வைத்து அனுபவிப்பதுதான் அவனுடைய மோஹத்தின் எல்லை. தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தை தாண்டி
இந்த உடலுக்கும், உலகத்திற்கும் இருப்பு என்பது இல்ல என்று உணர வேண்டும்.

யன்னாமாக்ருதிபி4ர்க்3ரஹயம் பஞ்சவர்ணமபா3தி4தம் |
வ்யர்தே2னாப்யர்த2வாதோऽயம் த்3வயம் பண்டி3தமானினாம் || 37 ||

இதில் பூர்வமீமாம்ஸர்களின் கருத்தான் வேதத்தின் முதல்பகுதியான கர்ம காண்டம். அதுதான் பிரமாணம் என்று கருத்தானது
நிராகரிக்கப்படுகிறது இந்த ஸ்லோகம். நாம-ரூபங்களினால் எது கிரகிக்கப்படுகின்றோ, அதுவே ஐந்து பூதங்களாக உள்ளது.
அதே சமயம் உண்மையாக இருக்கின்றதோ, இருமையாக உள்ள இந்த உலகம் வேதாந்தத்தில் கூறியிருக்கும் வார்த்தைகள்
அர்த்தவாதம் என்று அறிவு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இவ்விதம் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களிடம் பேசுவதினால் எந்தப் பயனும் இல்லை

யோகே3னோ பக்வயோக3ஸ்ய யுஞ்ஜத: காய உத்தி2தை: |
உபஸர்கை3ர்விஹன்யேத தத்ராயம் விஹிதோ விதி4: || 38 ||

சாதனத்தை பூர்த்தி செய்யாமல் இருக்கும் சாதகர்கள் அந்த முயற்சியில் இருக்கும் போது இந்த உடலும், மனமும்
ஒருவேளை விதவிதமான தடைகளால் தாக்கப்பட்டால் இந்த சூழ்நிலைகளில் கீழ்வரும் சாதனங்கள் கூறப்பட்டிருக்கிறது.
சாஸ்திரத்தால் வழிக்காட்டப்பட்டுள்ளது. இவைகளை பயன்படுத்தி தடைகளிலிருந்து மீள வேண்டும்.

யோக3தா4ரணயா கம்ஶ்சிதா3ஸனைர்தா4ரணான்விதை: |
தபோமந்த்ரைஷதை4: காம்ஶ்சிது3பஸர்கா3ன்வினிர்த3ஹேத் || 39 ||

சில தடைகளை யோகசூத்திரத்தில் கூறப்பட்ட தாரணை என்ற சாதனத்தின் மூலம் நீக்கிக் கொள்ளலாம்.
தாரணையுடன் கூடிய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில ஆசனங்களையும் பயன்படுத்தி நீக்கி கொள்ளலாம்.
வேறு சில தடைகளை தவத்தின் மூலமாக நீக்கி கொள்ள வேண்டும். ஆத்ம ‘ஞானத்தை அடைவதற்கான தகுதியை அடைந்துவிட வேண்டும்.
சில மந்திரங்களின் துணைக் கொண்டும், அவற்றை உச்சாடனம் செய்தும், மருந்துகளினால் உடலிலுள்ள நோய்களையும் நீக்கிக் கொள்ள வேண்டும்.

காம்ஶ்சின்ம மானுத்4யானேன நாமஸங்கீர்தனாதி3பி4: |
யோ3கே3ஶ்வரானுவ்ருத்த்யா வா ஹன்யாத3ஶுப4தா3ன்ஶனை: || 40 ||

சில விதமான தடைகளை பகவானை நினைப்பதன் மூலமாக நீக்கிக் கொள்ள வேண்டும், இதனால் இறைவன் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.
பயம் நீங்கும். ஆழ்மனதில் இறைத்தியானம் செய்து பழகிவிட்டால் எல்லா சமயங்களிலும் பகவான் நாமம் அறியாமல் வாயிலிருந்து வெளிப்படும்.
விராட் புருஷனாக இறைவனை தியானம் செய்தால், உலகத்தின் மீதுள்ள ராக-துவேஷங்கள் நீங்கிவிடும்.
இறை நாம சங்கீர்த்தனம் போன்றவைகளையும் பயன்படுத்தி தடைகளை நீக்கிக் கொள்ளலாம்.
யோகேஶ்வரானுவ்ருத்த்யா – சாஸ்திர குருவுக்கு சேவை செய்தும், பணிவிடை செய்தும் நீக்கிக் கொள்ளலாம்.
இறைவன் யாருக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பு கொடுக்கிறாரோ அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,
இவைகளின் மூலமாக அசுபத்தைக் கொடுக்கும் தடைகளை படிப்படியாக நீக்கிக் கொள்ள வேண்டும்.

கேசித்3தே3ஹமிமம் தீ4ரா: ஸுகல்பம் வயஸி ஸ்தி2ரம் |
விதா4ய விவிதோ4பாயைரத2 யுஞ்ஜந்தி ஸித்3த4யே || 41 ||

சில சாதகர்கள், யோக அப்யாஸம் செய்து கொண்டிருப்பவர்கள், இந்த சரீரத்தை அதிக காலம் குறையாத சக்தி உடையதாக இருந்தால்
உற்சாகத்தினால் பல சாதனங்களை மூலமாக உடலையும், மனதையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
இறுதியில் அவர்கள் அறியாமையினால் சித்திகளை அடைவதற்கு முயற்சியில் ஈடுபட்டுவிடுவார்கள்.
இதனால் முக்கியமான லட்சியப்பாதையிலிருந்து வீழ்ந்து விடுவார்கள்

ந ஹி தத்குஶலாத்ரு3த்3யம் ததா3யாஸோ ஹயபார்த2க: |
அந்தவத்த்வாச்ச2ரீரஸ்ய ப2லஸ்யேவ வனஸ்பதே: || 42 ||

ஆத்ருத்யம் – நாடுவது; குஶலா – அறிவாளிகள்
இந்த சித்திகளையெல்லாம் அறிவாளிகளால் நாடப்படுவதில்லை. இதை அடைவதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி, காலம், உழைப்பு
அனைத்தும் வீணாகிப் போய்விடும். இந்த சரீரத்திற்கு முடிவு இருப்பதனால் அழிந்து போகும் நிலையையுடையது
எனவே அடையப்போகும் சித்திகள் நிலையற்றது, அழிந்து போகக்கூடியது. உதாரணமாக மரத்தில் இருக்கின்ற பழங்கள்
நன்கு பழுத்ததும் மரத்தில் இருந்து தானே விழுந்துவிடும். அதுபோல இவைகளும் நிலையற்றவைகள் காலம் வரும்போது
அழியக்கூடியவைகள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யோக3ம் நிஷேவதோ நித்யம் காயஶ்சேத்கல்பதாமியாத் |
தச்ச்2ரத்3த3த்4யான்ன மதிமான்யோக3முத்ஸ்ருஜ்ய மத்பர: || 43 ||

சித்திகள் மீதுள்ள ஆசையை விட்டுவிட வேண்டும். மோட்சத்தை அடைவதில் உறுதியாக இருக்க வேண்டும்.
யோகத்தை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவனுக்கு உடலும் மனமும் அதிகமான சக்திகளைப் பெற்று அதனால் சித்திகள் பல வரலாம்.
அப்பொழுது அவைகளில் ஆர்வம் காட்டாதே. அவைகள் மீது உன்னுடைய சிரத்தை இருக்கக்கூடாது. மோட்ச மார்க்கத்தை விட்டுவிட்டு
அறிவையுடையவன் என்னை இலக்காக கொண்டவன் சித்திகளின் பின்னால் சென்றுவிடக்கூடாது.
என்மீது கொண்டிருக்கும் சிரத்தையை விட்டுவிடக்கூடாது

யோக3சர்யாமிமாம் யோகீ3 விசரன்மத3பாஶ்ரய: |
நாந்தராயைர்விஹன்யேத நி:ஸ்ப்ருஹ: ஸ்வஸுகா2னுபூ4: || 44 ||

மோட்ச மார்க்கத்தில் இருக்கும் சாதகன் இதைப் பின்பற்றிக் கொண்டு எல்லா நேரத்திலும், நிலையிலும் இறைவனையே
நம்பிக் கொண்டிருந்தால், அவனுக்கு எந்த தடைகள் வந்தாலும் அதனால் அழிந்துவிட மாட்டான்.
தன் லட்சியத்திலிருந்து நழுவி விட மாட்டான். வைராக்கியத்துடன் இருப்பான்.
இதனால் தன்னிடத்திலே சுகத்தை அனுபவிப்பனாக உணர்கின்றான்.

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -9–

May 22, 2020

ஶ்ரீபகவான் உவாச
ஜிதேந்த்3ரியஸ்ய யுக்தஸ்ய ஜிதஶ்வாஸஸ்ய யோகி3ன: |
மயி தா4ரயதஶ்சேத உபதிஷ்ட2ந்தி ஸித்3த4ய: || 1 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்
தன்னுடைய புலன்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன், மனதை நன்கு தியானத்தில் ஈடுபடுத்தியவன்,
ப்ராணனை கட்டுப்படுத்தியவன், இறைவனாகிய என்னிடத்தில் மனதை தொடர்ந்து வைத்திருப்பவன்
இத்தகைய சாதகனிடம் பல சித்திகள் வந்து நிற்கின்றன.

ஶ்ரீஉத்தவ உவாச
கயா தா4ரணயா கா ஸ்வித்கத2ம் வா ஸித்3தி4ரச்யுத |
கதி வா ஸித்3தி4யோ ப்ரூஹி யோகி3னாம் ஸித்தி4தோ3 பவான் || 2 ||

உத்தவர் கேட்கிறார்.
அச்சுத பகவானே! எந்த தியானத்தினால் எந்தவிதமான சித்திகள் அடையப்பெறுகின்றன? சித்தி என்றால் என்ன?
அவைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தாங்கள் கூறவேண்டும். தாங்கள்தான் யோகிகளுக்கு சித்திகளை வழங்குபவர்.

ஶ்ரீபகவான் உவாச
ஸித்தயோSஷ்டாதஶ ப்ரோக்தா தா4ரணா யோக3பாரகை3: |
தாஸாமஷ்டௌ மத்ப்ரதா4னா தஶைவ கு3ணஹேதவ: || 3 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்
சித்திகள் பதினெட்டு வகையாக இருக்கின்றன என்று சாஸ்திரங்களிலும், தியானத்தில் முழுமையாக வெற்றி பெற்றவர்களாலும்,
ஸித்திகளை அடைந்தவர்களாலும் கூறப்படுகிறது. அவைகளில் எட்டுவிதமான சித்திகள் என்னிடத்தில் இயற்கையாக இருக்கின்றது.
மீதமுள்ள பத்து சித்திகள் சத்துவகுண வளர்ச்சியினால் அடைவது.

அணிமா மஹிமா மூர்தேர்லகி4மா ப்ராப்திரிந்த்3ரியை: |
ப்ரகாம்யம் ஶ்ருத்த்3ருஷ்டேஷு ஶக்திப்ரேரணமீஶிதா || 4 ||

1. அணிமா – உருவத்தை சிறியதாக்கி கொள்ளும் சக்தி
2. மஹிமா – உருவத்தை பெரியதாக்கி கொள்ளும் சக்தி
3. லகிமா – உடல் எடையை லேசாக்கி கொள்ளும் சக்தி
இவைகள் மூன்றும் ஸ்தூல உடலோடு சம்பந்தப்பட்டது.
4. ப்ராப்தி – மற்றவர்களின் புலன்கள் மூலமாக உலகத்தை அனுபவிக்கும் சக்தி
5. ப்ராகாம்யம் – மனதினாலே உலகத்தை அனுபவிக்கும் சக்தி. அதாவது கேள்விபட்ட பொருட்களில்,
பார்க்கின்ற, பார்த்த பொருட்களில் உள்ள இன்பங்களை மனதினாலே அடையும் சக்தி
6. ஈஶிதா – இயற்கையிலிருக்கும் சக்தியை தூண்டும் சக்தி

குணேஷ்வஸங்கோ3 வஶிதா யத்காமஸ்த்த3வஸ்யதி |
ஏதா மே ஸித்3த4ய: ஸௌம்ய அஷ்டாவௌத்ய்பத்திகா மதா: || 5 ||

7. வஶிதா – மூன்று குணங்களை (சத்துவ, ரஜோ, தமோ) விருப்பப்படி தூண்டிவிட்டுக் கொள்வது,
அவைகளை வசப்படுத்திக் கொள்வது
8. காம அவஸ்யதி – போகப்பொருளில் இருக்கும் முழுமையான இன்பத்தை, இன்பத்தின் எல்லையை அடையும் சக்தி
உத்தவா! இந்த எட்டு சித்திகளும் இறைவனாகிய என்னிடத்தில் இயற்கையாக அமைந்துள்ளது.

அனூர்மிமத்த்வம் தே3ஹேSஸ்மிந்தூரஶ்ரவணதர்ஶனம் |
மனோஜவ: காமரூபம் பரகாயப்ரவேஶனம் || 6 ||

1. அனூர்மிமத்த்வம் – இது உடல் சம்பந்தமான சித்தி. உடலுக்கு வருகின்ற பசி,தாகம், வலி, நோய்கள் இவைகளை உணராமல் இருத்தல்
2. தூ3ர தர்ஶனம் – வெகுதூரத்திலுள்ள பொருட்களை பார்க்கும் சக்தி
3. தூ3ர ஶ்ரவணம் – வெகுதூரத்திலுள்ள சப்தங்களை கேட்கும் சக்தி
4. மனோஜவ: – மனம்போல் வேகமாக செல்லுதல்
5. காமரூபம் – விரும்பும் வடிவத்தை எடுத்துக் கொள்ளுதல்
6. பரகாய ப்ரவேஶனம் – பிறர் உடலில் பிரவேசிப்பது

ஸ்வச்ச3ந்தம்ருத்யுர்தேவானாம் ஸஹக்ரீடா3னுதர்ஶனம் |
யதா2ஸங்கல்பஸம்ஸித்தி4ராக்ஞாப்ரதிஹதா க3தி: || 7 ||

7. ஸ்வச்ச2ந்தம் ம்ருத்யு – தான் விரும்பும் போது மரணம் அடையும் சக்தி
8. தே3வானாம் ஸஹக்ரீடானுதர்ஶனம் – தேவர்களுடன் சேர்ந்து அவர்கள் அனுபவிக்கும் சுகத்தை அனுபவித்தல்,
அவர்களின் இன்ப விளையாட்டை பார்க்கும் சக்தி
9. யதா2 ஸங்கல்ப ஸம்ஸித்3தி4 – மனதில் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி
10. ஆக்ஞாப்ரதிஹத க3தி- நம்முடைய வாக்கு பலிக்கும்
.
த்ரிகாலஞத்வமத்3வந்த்வம் பராசித்தாத்3யபி4ஞதா |
அக்3ன்யர்காம்புவிஷாதீனாம் ப்ரதிஷ்டம்போ4 பராஜய: || 8 ||

இதில் மேலும் ஐந்து வகையான சித்திகளை கூறுகிறார். இவைகள் கீழானவைகள் என்றும் இழித்துரைக்கிறார்.
1. மூன்று காலங்களில் நடப்பதை தெரிந்து கொள்வது
2. உடலுக்கு வருகின்ற இருமைகளிலிருந்து விடுபட்டு இருப்பது. (சுக-துக்கம், தட்ப-வெப்பம்)
3. மற்றவர்கள் மனதில் ஓடும் எண்ணங்களை தெரிந்து கொள்ளும் சக்தி
4. எந்தப் பொருளுக்கும் அவைகளிடத்தில் இயற்கையாக இருக்கும் சக்தியை தடைபடுத்தி வைத்தல்.
தன்னைப் பாதிக்காதபடி செய்தல். உதாரணமாக அக்னி, விஷம், நீர், சூரியன் இவைகளிடத்தில் இருக்கும் சக்தியை
தன்னிடத்தில் செயல்படாதபடி தடுத்து வைத்தல்
5. எடுக்கும் முயற்சிகளெல்லாவற்றிலும் வெற்றியை அடைதல்
இவைகள் யாவும் யோக தாரணையால் அடையக் கூடியவை.

ஏதாஶ்சோத்தே3ஶத: ப்ரோக்தா யோகதா4ரணஸித்த4ய: |
யயா தா4ரணயா யா ஸ்யாத்யதா2 வா ஸ்யான்னிபோ4த4 மே || 9 ||

யோக தாரணையால் அடையப்படும் சித்திகளின் பெயர்களையும், ஆற்றல்களையும் ஒருவாறு விளக்கிவிட்டேன்.
இனி எந்த தியானத்தினால், தாரணையினால் எந்த வகையான சித்திகளை எவ்வாறு அடையலாம் என்பதை கூறுகிறேன். கேட்பாயாக!

பூ4தஸூக்ஷ்மாத்மனி மயி தன்மாத்ரம் தாரயேன்மன: |
அணிமானமவாப்னோதி தன்மாத்ரோபாஸகோ மம || 10 ||

சூட்சுமமான பஞ்ச பூதங்களின் நுட்பமான வடிவமான தன்மாத்திரையே என் ஸ்வரூபம்.
இந்த ஸ்வரூபத்தை தன் மனதில் தாரணை செய்து (நிலை நிறுத்தி) தியானிப்பவனுக்கு,
அணிமா என்ற சித்தி கிடைக்கின்றது.

மஹத்த்த்வாத்மனி மயி யதாஸம்ஸ்த2ம் மனோ த3த4த் |
மஹிமானமவாப்னோதி பூதானாம் ச ப்ருத2க்ப்ருத2க் || 11 ||

மஹத் ஸ்வரூபமாக இருக்கின்ற மேலான இறைவனிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்வதனால்
மஹிமா என்ற சக்தி கிடைக்கிறது.

பரமாணுமயே சித்தம் பூதானாம் மயி ரஞ்ஜயன் |
காலஸூக்ஷ்மார்த2தாம் யோகீ லகி4மானமவாப்னுயாத் || 12 ||

தா4ரயன்மய்யஹந்தத்த்வே மனோ வைகாரிகேSகி2லம் |
ஸர்வேந்த்3ரியாணாமாத்மத்வம் ப்ராப்திம் ப்ராப்னோதி மன்மனா || 13 ||

நான்கு பூதங்களின் பரமாணு ஸ்வரூபமாக இருக்கின்ற என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்வதனால்
காலத்தைப் போல சூட்சுமமான தன்மையுடைய லகிமா என்ற சித்தியை அடைகின்றான். சத்துவ பிரதானமான அஹம் தத்துவமாக
இருக்கின்ற இறைவனான என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்வதனால் மற்றவர்களுடைய புலன்களை
பயன்படுத்திக் கொள்ளும் சக்தியான ப்ராப்தி என்ற சித்தியை அடைகின்றான்.

மஹத்யாத்மனி ய: ஸூத்ரே தா4ரயேன்மயி மானஸம் |
ப்ராகாம்யம் பாரமேஷ்த்யம் மே விந்ததேSவ்யக்தஜன்மன: || 14 ||

ஈஸ்வரனிடமிருந்து தோன்றிய ஹிரண்யகர்ப்பனான சூத்ராத்மா மிகப்பெரியதாக இருப்பது.,
எல்லா சக்திகளையும் தன்னிடத்தில் கொண்டிருப்பது. இந்த சூத்ராத்மாவான என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி
தியானம் செய்வதனால் ப்ராகாம்யம் என்ற சித்தியை அடைகிறான்.

விஷ்ணௌ த்ர்யதீ4ஶ்வரே சித்தம் தா4ரயேத்காலவிக்3ரஹே |
ஸ ஈஶித்வமவாப்னோதி க்ஷேத்ரஞக்ஷேத்ரசோதனாம் || 15 ||

முக்குணமயமான மாயைக்கு தலைவனான விஷ்ணு வடிவத்தில் மனதை லயிக்கச் செய்பவனுக்கு
ஈஶித்வம் என்ற சித்தி கிடைக்கின்றது. விஷ்ணு கால வடிவமாக காணப்படுகிறார். உலகத்திலுள்ள இயற்கை சக்திகளையும்,
மனிதர்களிடத்தில் இருக்கும் சக்தியை தூண்டிவிடும் சக்தியே ஈஶித்வம் என்று கூறப்படுகிறது.

நாராயணே துரியாக்2யே ப4கவச்ச2ப்3த3ஶப்3தி3தே |
மனோ மய்யதத4த்யோகீ மத்3த4ர்மா வஶிதாமியாத் || 16 ||

நாராயணன் என்று அழைக்கப்படுகின்றவரும், துரீயம் என்ற உண்மை தத்துவத்தை உணர்ந்தவர்களால் அழைக்கப்படுகின்றவரும்,
பகவான் என்று அழைக்கப்படுகின்றவரும் இவ்வாறாகவெல்லாம் அழைக்கப்படுகின்ற என்னை மனதில் நிலைநிறுத்தி
தியானம் செய்வதனால் என்னிடத்தில் இயற்கையாக இருக்கும் வஶிதா என்ற சித்தியை அடையலாம்

நிருகுணே ப்ரஹ்மணி மயி தா4ரயன்விஶதம் மன: |
பரமானந்தமாப்னோதி யத்ர காமோSவஸீயதே || 17 ||

மேன்மையான குணங்களை உடைய என்னை தூய மனதோடு யார் தியானம் செய்கின்றார்களோ அவர்கள்
மேலான ஆனந்தத்தை அடைகின்றனர். அந்த ஆனந்தத்தின் எல்லை வரை முழுமையாக அனுபவிக்கின்றான்.

ஶ்வேத்த்3வீப பதௌ சித்தம் ஶுத்3தே4 த4ர்ம மயே மயி ||
தாரயஞ்ச2வேததாம் யதி ஷதூர்மிரஹிதோ நர: || 18 ||

சத்துவகுணத்திற்கு அதிபதியாக இருக்கின்ற, தர்ம ஸ்வரூபமாக இருக்கின்ற என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி
தியானம் செய்வதனால் சத்துவத்தில் மேலோங்கி இருப்பான். அந்த நிலையில் பசி, தாகம், சோகம், மோகம், முதுமை, மரணம்
என்கின்ற ஆறுவிதமான துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.
ஸ்தூல சரீரத்திற்கு வருகின்ற வலிகள் தெரியாமல் இருக்கும் சக்தியை பெறுகிறான்.

மய்யாகாஶாத்மனி ப்ராணே மனஸா கோ4ஶமுத்3வஹன் |
தத்ரோபலப்தா4 பூதானாம் ஹம்ஸோ வாச: ஶ்ருணோத்யஸௌ || 19 ||

ஆகாசத்தை சரீரமாக கொண்டு ப்ராண தத்துவமாக இருக்கின்ற என்னை மனதினால் சப்த ஸ்வரூபமாக இருக்கின்ற
நிலைநிறுத்தி தியானம் செய்வதனால் எல்லா ஜீவராசிகளின் பேச்சுக்களையும் கேட்கும் சக்தியை பெறுகிறான்.

சக்ஷுஸ்த்வஷ்டரி ஸம்யோஜ்ய த்வஷ்டாரமபி சக்ஷுஷி |
மாம் தத்ர மனஸா த்4யாயன்விஶ்வம் பஶ்யதி தூரத: || 20 ||

நம்முடைய கண்களை சூரிய தேவதையோடு இணைத்து என்னை மனதில் நிலைநிறுத்தி தியானம் செய்வதனால்
நுட்பமான பார்வையைப் பெறுகிறான். உலகம் முழுவதையும் தன் கண்களால் பார்க்கும் சக்தியை அடைகிறான்.

மனோ மயி ஸுஸம்யோஜ்ய தேஹம் தத3னுவாயுனா |
மத்தா4ரணானுபா4வேன தத்ராத்மா யத்ர வை மன: || 21 ||

மனம், சரீரம் அதை அனுசரித்திருக்கும் வாயுவுடன் என்னைச் சேர்த்து தியானிப்பவனுக்கு மனோஜவம்
என்ற சிறப்பாற்றல் கிடைக்கிறது. இந்த சக்தியின் மூலம் அவன் விரும்பும் இடத்திற்கு அவனது உடல் அந்த விநாடியே சென்றுவிடுகின்றது.

யதா3 மன உபாதாய யத்3யத்3ரூபம் பு3பூ4ஷதி |
தத்தத்3ப4வேன்மனோரூபம் மத்3யோக3ப3லமாஶ்ரய: || 22 ||

எந்தெந்த உருவத்தை அடைய விரும்புகின்றோமோ மனதை அவ்விதம் சங்கல்பம் செய்தால் அந்தந்த உருவத்தை அடைகின்றான்.
என்னுடைய மாயையை தியானம் செய்பவனுக்கு இந்த சக்தி கிடைக்கின்றது.

பரகாயம் விஶன்ஸித்த4 ஆத்மானம் தத்ர பா4வயேத் |
பிண்ட3ம் ஹித்வா விஶேத்ப்ராணோ வாயுபூ4த: ஷட்3ஹ்க்4ரித் || 23 ||

மற்ற ஜீவராசிகளின் உடலில் பிரவேசிக்க விரும்பும் சாதகன் தான் அவ்வுடலில் இருப்பதாக சிந்திக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது பிராணன் சூட்சும ரூபமாக, வெளியிலிருக்கும் வாயுவுடன் சேர்ந்து ஒரு மலரை விட்டு
இன்னொரு மலருக்குத் தாவும் வண்டைப்போல தன் சரீரத்தை விட்டுவிட்டு பிறிதொரு தேகத்தினுள் பிரவேசிக்கும் சக்தியை அடைகின்றான்.

பாஷ்ண்ர்யாபீட்ய கு3தம் ப்ராணம் ஹ்ருதுர:கண்ட2மூர்த3ஸு |
ஆரோப்ய ப்3ரஹமரந்த்4ரேண ப்ரஹ்ம நீத்வோத்ஸ்ருஜேத்தனும் || 24 ||

குதிகாலால் மலதுவாரத்தை அடைத்து, பிராண சக்தியை இதயம், மார்பு, கழுத்து, தலை என்ற வரிசைப்படி எடுத்துச் செல்ல வேண்டும்.
பின் தலையுச்சியில் இருக்கும் துவாரத்தில் வழியாக வெளியேற்றி பிரம்மலோகம் செல்லும் வழியாக
உடலை துறக்கும் சக்தியை அடைகின்றான். இதனால் அவன் விரும்பும் நேரம்வரை ப்ராணனை
தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தியை அடைகின்றான்.

விஹரிஷ்யன்ஸுரக்ரீடே3 மத்ஸ்த2ம் ஸத்த்வம் விபா4வயேத் |
விமானேனோபதிஷ்ட2ந்தி ஸத்த்வ வ்ருத்தீ: ஸுரஸ்த்ரிய: || 25 ||

ஒருவனுக்கு தேவலோகம் முதலிய மேலுலகங்களுக்கு சென்று அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்,
சத்துவகுணமுள்ள என் வடிவத்தை தியானிக்க வேண்டும். அப்படி செய்தால் சத்துவகுணமுள்ள தேவமகளிர்
விமானத்தில் அவனிடம் வந்து சேருவார்கள். பிறகு அவனை தேவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

யதா2 ஸங்கல்பயேத3பு3த்த்4யா யதா3 வா மத்பர: புமான் |
மயி ஸத்யே மனோ யுஞ்ஜம்ஸ்ததா2 தத்ஸ்முபாஶ்னுதே || 26 ||

சத்திய சங்கல்ப மூர்த்தியான என்னிடமே சித்தத்தை நிலைநிறுத்தி என்னையே தியானம் செய்பவனுடைய
எண்ணங்கள் எல்லாம் உண்மையாக நிறைவேறுகின்றன. அவருக்கு சங்கல்ப சித்தி ஏற்படுகிறது.

யோ வை மத்3பா4வமாபன்ன ஈஶிதுர்வஶிது: புமான் |
குதஶ்சின்ன விஹன்யேத தஸ்ய சாஞா யதா2 மம || 27 ||

யாரொருவன் இந்த ஈஶித்வம், வசித்வம் இரண்டு ஸ்வரூபங்களாக என்னை தியானம் செய்கின்றானோ அவனுக்கு
தான் சொல்பவைகள் எல்லாம் அப்படியே நடந்து விடுகின்ற சக்தி கிடைக்கின்றது.
இவைகள் என்னிடத்தில் இயல்பாகவே இருக்கின்றவைகள்.

மத்3ப4க்த்யா ஶுத்3த4ஸத்த்வஸ்ய யோகி3னோ தா4ரணாவித: |
தஸ்ய த்ரைகாலிகீ பு3த்3தி4ர்ஜன்ம ம்ருத்யூபம்ப்4ருஹிதா || 28 ||

மேலும் என்னிடம் அத்யந்த பக்தி செலுத்தி, அதனால் மனத்தூய்மை அடைந்து பிறகு என்னை மனதால் தியானிப்பவனுக்கு
முக்காலத்து விஷயங்கள் அனைத்தும் தெரிய வரும். பிறப்பு – இறப்பு போன்ற
அறிவுக்கு புலப்படாத விஷயங்கள் கூடத் தெளிவாக தெரியத் தொடங்கும்.

அக்3ன்யாதி3பி4ர்ன ஹன்யேத முனேர்யோக3மயம் வபு: |
மத்3யோக3ஶாந்தசித்தஸ்ய யாத3ஸாமுத3கம் யதா2 || 29 ||

அக்னி முதலிய இயற்கை சக்திகளில் உள்ள என்னிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்பவனுடைய யோகமயமான
உடல் இயற்கை சக்திகளினால் பாதிக்கப்படாது. எவ்விதம் நீரில் வாழும் உயிரினங்களுக்கு நீரினால் அழிவு கிடையாதோ
அதுபோல இந்த சக்தியானது இவனிடத்தில் செயல்படாது.

மத்3விபூ4தீரபி4த்4யாயன்ஶ்ரீவத்ஸாஸ்த்ரவிபூ4ஷிதா: |
த்4வஜாதபத்ரவ்யஜனை: ஸ ப4வேத3பராஜித: || 30 ||

என்னுடைய மகிமைகள், பெருமைகள், சக்திகள் இவைகளை தியானிப்பவனுக்கு ஶ்ரீவத்ஸம் என்கின்ற மருவை மார்பில் உடையவனும்,
விதவிதமான அஸ்திரங்களை உடையவனாகவும், கொடி, குடை, சாமரம் இவைகளை கூடியதுமான என் அவதாரங்களை
தியானிப்பவனுக்கு அவனுடைய எல்லா முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.

உபாஸகஸ்ய மாமேவம் யோகதா4ரணயா முனே: |
ஸித்த4ய: பூர்வகதி2தா உபதிஷ்ட2ந்த்யஶேஷத: || 31 ||

இறைவனான என்னை விதவிதமான தியான முறைகளால் உபாஸகனுக்கு மேற்கூறிய சித்திகள் அனைத்தும் அவனிடம் வந்து நிற்கும்.

ஜிதேந்த்ரியஸ்ய தா3ந்தஸ்ய ஜிதஶ்வாஸாத்மனோ முனே: |
மத்3தா4ரணாம் தாரயத: கா ஸா ஸித்தி4: ஸுது3ர்லபா4 || 32 ||

தன்னுடைய பிராணன், மனம், புலன்கள் இவைகளை வென்று மிகவும் சாந்தமாக இருப்பவனும் என்னிடமே
மனதை நிலைநிறுத்தி தியானம் செய்பவனுக்கு எந்த சித்திதான் கிடைக்காமல் போகாது!!?

அந்தராயான்வதந்த்யேதா யுஞ்ஜதோ யோகமுத்தமம் |
மயா ஸம்பத்3யமானஸ்ய காலக்ஶபணஹேதவ: || 33 ||

இதுவரை கூறிய சித்திகள் எல்லாம மோட்சத்தை அடைவதற்கு தடைகளாக இருக்கும். என்று சான்றோர்கள் கூறுகிறார்கள்.
உத்தமமான யோகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பவனுக்கு சித்திகள் தடைகளே. என்னை அடைவதை லட்சியமாக
கொண்டு இருப்பவனுக்கு சித்திகள் நிச்சயமாக தடைகளாக இருக்கும். இந்த சித்திகளை அடைவதற்கு செலவழித்த காலமும் வீணாகின்றது.

ஜன்மௌஷதி4தபோமந்த்ரைர்யாவதீரிஹ ஸித்த4ய: |
யோகேனாப்னோதி தா: ஸர்வா நான்யைர்யோக3கதிம் வ்ரஜேத் || 34 ||

சித்திகளை தியானம் செய்வதன் மூலம் அடையலாம் என்று அறியும் போது அதன் பெருமையை உணர்ந்து தியானத்தின் மீது சிரத்தை ஏற்படும்.
இந்த சிரத்தையானது நம்மை தியானத்தில் ஈடுபடுத்தும். பிறகு தொடர்ந்து செய்யவைக்கும். பிறப்பிலேயோ, சில மூலிகை தாவரங்களினாலோ,
தவங்களை செய்வதினாலோ, சில மந்திரங்களினாலோ எவ்வளவு சித்திகள் சொல்லப்பட்டுள்ளதோ அவைகள் மேற்கூறிய தியானத்தின் மூலம் அடையலாம்.
ஆனால் இறுதி லட்சியமான மோட்சத்தை அடையவே முடியாது. பலனின் எல்லையான மோட்சத்தை அடைய முடியாது, பகவானை அடைய முடியாது.

ஸர்வாஸாமபி ஸித்தி4னாம் ஹேது: பதிரஹம் ப்ரபு4: |
அஹம் யோக3ஸ்ய ஸாங்க்2யஸ்ய த4ர்மஸ்ய ப்3ரஹ்மவாதினாம் || 35 ||

எல்லாவிதமான சித்திகளுக்கு நானே காரணம், சித்திகளுக்கு தலைவனாக இருப்பதும் நானே, அவைகளை கொடுப்பவனும் நானே.
யோகத்திற்கும், சாங்க்யம் தர்மம், பிரம்ம ஞானத்தை உபதேசிக்கும் குருமார்களுக்கும் நானே தலைவனாக இருக்கிறேன்.
இங்கே சாங்க்யம் என்பது ஆத்மவிசாரம் செய்வதையும், தர்மம் என்பது அதை கடைபிடிப்பதனால் வரும் பலனகளயும் குறிக்கின்றது.

அஹமாத்மாந்தரோ பா3ஹயோSனாவ்ருத: ஸர்வதேஹினாம் |
யதா2 பூ4தானி பூ4தேஷு ப3ஹிரந்த: ஸ்வயம் ததா2 || 36 ||

எல்லா ஜீவராசிகளுக்குள்ளேயும், வெளியேயும் ஆத்மாவாக இருக்கிறேன். எதனாலும் மறைக்கப்படாதவன்.
எவ்விதம் பஞ்ச பூதங்கள் ஜீவராசிகளின் உள்ளும், புறமும் இருப்பது போல நானும் அவ்விதமே எங்கும் வியாபித்திருக்கின்றேன்.

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -8–

May 22, 2020

ஶ்ரீஉத்தவ உவாச
வதந்தி க்ருஷ்ண ஶ்ரேயாம்ஸி ப3ஹூனி ப்3ரஹ்மவாதி3ன: |
தேஷாம் விகல்ப்ப்ராதா4ன்யமுதாஹோ ஏகமுக்2யதா || 1 ||

உத்தவர் கேட்கிறார்
ஹே கிருஷ்ணா! வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவர்களே மோட்சத்தை அடைவதற்கு பலவிதமான வழிகளை கூறுகிறார்கள்.
அவைகள் யாவும் முக்கியமானவையா? அல்லது ஏதேனும் ஒரு வழி மட்டுமே முக்கியமானதா?

ப4வதோதா3ஹெத: ஸ்வாமின்ப4க்தியோகோ3Sனபேக்ஷித: |
நிரஸ்ய ஸர்வத: ஸங்க3ம் யேன த்வய்யாவிஶேன் மன: || 2 ||

பகவானே! உங்களால் பக்தியோகமும் உபதேசிக்கப்பட்டுள்ளது. இது வேறெதையும் சார்ந்திராது என்றும் எல்லாவிதமான
பற்றுகளும் நீங்கப்பெற்று பகவானிடத்தில் மட்டும் அன்பை செலுத்தி கொண்டிருப்பது என்றும்
இதனால் உங்களிடத்தில் மனதை முழுமையாக ஈடுபடுத்தி வைக்க கூடியது என்றும் கூறியிருக்கிறீர்கள்
அனபேக்ஷித – வேறதையும் சார்ந்தில்லாதது
நிரஸ்ய ஸர்வத: ஸங்க3ம் – எல்லாவிதமான பற்றுக்களும் நீங்கப் பெற்றது
த்வயி மனஹ ஆவிஶே – உங்களிடத்தில் மனதை முழுமையாக ஈடுபடுத்தி வைக்கக்கூடியது

ஶ்ரீபகவானுவாச
காலேன நஷ்டா ப்ரலயே வாணீயம் வேத3ஸ~ம்ஞிதா |
மயாதௌ3 ப்3ரஹ்மணே ப்ரோக்தா த4ர்மா யஸ்யாம் மதா3த்மக: || 3 ||

வேத3ஸம்ஞிதா – வேதம் என்ற சாஸ்திரமானது
வாணீ இயம் – என்னுடைய வார்த்தைகள்
ப்ரளயே காலேன நஷ்டா – பிரளய காலத்தின் போது அவைகளும் அழிந்து விடுகின்றது
ஆதௌ3 – மீண்டும் ஸ்ருஷ்டியின் துவக்கத்தில்
மயா – ஈஸ்வரனான என்னால்
ப்ரஹ்மனே – பிரம்ம தேவருக்கு உபதேசிக்கப்படுகிறது
யஸ்யாம் – அந்த வேத சாஸ்திரத்தில்
மதா3த்மக: த4ர்மஹ – என்னை அடைவதையே இலக்காக கொண்ட தர்மமானது கூறப்பட்டுள்ளது

தேன ப்ரோக்தா ஸ்வபுத்ராய மனவே பூர்வஜாய ஸா |
ததோ ப்4ருக்3வாத3யோSக்3ரஹணன்ஸப்த ப்3ரஹ்ம மஹர்ஷய: || 4 ||

இந்த வேதமானது பிரம்மாவின் மூத்த புதல்வனான மனுவுக்கு பிரம்மாவினால் உபதேசிக்கப்பட்டது.
பிறகு ப்ருகு முனிவரும் மற்ற ஏழு ரிஷிகளும் அதனை அறிந்து கொண்டார்கள்.

தேப்4ய: பித்ருப்4யஸ்தத்புத்ரா த்எவதா3னவகு3ஹ்யகா: |
மனுஷ்யா: ஸித்3த4க3ந்த4ர்வா: ஸவித்3யாத4ரசாரணா: || 5 |

கிந்தேவா: கின்னரா நாகா3 ரக்ஷ:கிம்புருஷாதய: |
ப3ஹ்வ்யஸ்தேஷாம் ப்ரக்ருதயோ ரஜ:ஸத்த்வத்மோபு4வ: || 6 ||

பித்ருக்களுடைய புதல்வர்கள், தேவர்கள், அசுரர்கள், குஹ்யகர்கள், மனிதர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதர்ர்கள்,
சாரணர்கள், கிம்தேவர்கள் (பாதி தேவன், பாதி மனிதனாக இருப்பவர்கள்),
கின்னரர்கள் (அதிகளவு மனிதத்தன்மை, குறைந்த அளவு தேவகுணம்), நாகர்கள், ரக்ஷர்கள்,
கிம்புருஷர்கள் விதவிதமான தன்மையுடையவர்கள், சத்துவ, ரஜோ, தமோ குணங்களால் உண்டானவர்கள்.
இவர்கள் யாவரும் வேதத்தை பிரம்ம ரிஷிகளிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்.

யாபி4ர்பூதானி பி4த்3யந்தே பூ4தானாம பதயஸ்ததா2 |
யத2ப்ரக்ருதி ஸர்வேஷாம் சித்ரா வாச: ஸ்ரவந்தி ஹி || 7 ||

எப்படிபட்ட வாஸனைகளுடன் ஒருவர் இருக்கின்றாரோ அதற்கேற்றவாறு அவர்கள் செயல்படுவார்கள்.
எனவே மனிதர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டு இருக்கின்றார்கள். அந்த மனிதர்களுடைய மனமும் வேறுபடுகிறது,
அறிவும் வேறுபடுகின்றன. சாஸ்திரத்தை பொருட்படுத்தும் விதமும் வேறுபடுகிறது.
அவரவர்கள் இயல்புக்கு ஏற்றவாறு விதவிதமாக பொருட்படுத்துகிறார்கள்

ஏவம் ப்ரக்ருதிவைசித்ர்யாத்3பி4த்3யந்தே மதயோ ந்ருணாம் |
பாரம்பர்யேண கேஷாஞ்சித்பாஷண்டமதயோSபரே || 8 ||

இவ்வாறு பிறக்கும்போதே இருக்கின்ற இயல்புகளின் வேறுபாட்டினால், மனிதர்களுடைய கொள்கைகளும், அறிவும் வேறுபடுகின்றன.
சிலர் பரம்பரையாக அந்த வேறுபாடுகளை ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றும் சிலர் வேதத்திற்கு முற்றிலும் எதிரான
பாஷண்ட கொள்கைகளையும் பின்பற்றுகிறார்கள்

மன்மாயாமோஹித்தி4ய: புருஷா: புருஷர்ஷப4 |
ஶ்ரேயோ வத3ந்த்யனேகாந்தம் யதா2கர்ம யதா2ருசி || 9 ||

உத்தவா! என்னுடைய மாயையினால் மதி மயங்கிய மனிதர்கள் விதவிதமான இறுதி லட்சியங்களை கூறுகிறார்கள்.
அவர்களுடைய வாஸனைகளின் அடிப்படையில்தான் அவர்களுடைய இறுதி லட்சியம் முடிவெடுக்கப்படுகிறது.
ஆழ்மனதில் பதிந்துள்ள பதிவுகளின் அடிப்படையிலும், மனதின் விருப்பத்தின் அடிப்படையிலும் இறுதி லட்சியமானது முடிவு செய்யப்படுகிறது.

த4ர்மமேகே யஶஶ்சான்யே காமம் ஸத்யம் த3மம் ஶமம் |
அன்யே வதந்தி ஸ்வார்த2ம் வா ஐஶ்வர்யம் த்யாக3போ4ஜனம் |
கேசித்3யக்ஞம் தபோ தா3னம் வ்ரதானி நியமான்யமான் || 10 ||

சிலர் தர்மப்படி வாழ்வதே லட்சியமாகவும், வேதத்தில் கூறியுள்ள நித்திய, நைமித்திக கர்மாக்களையே மோட்சத்தை அடைய உதவும்
சாதனம் என்கின்றார்கள். வேறு சிலர் புகழை அடைவதையே லட்சியமாகவும், புலனின்பத்தை அனுபவிப்பதே லட்சியமாகவும்,
வாய்மையே லட்சியமாகவும், புலனடக்கமே லட்சியமாகவும், மனதை கட்டுபடுத்துவதை இறுதி லட்சியமாக கூறுகிறார்கள்.
வேறு சிலர் எல்லோரையும் ஆள்பவனாக இருப்பதே லட்சியமாகவும், தியாகம் செய்வதே லட்சியமாகவும்,
தான் மட்டுமே அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருப்பார்கள்.
மற்றும் சிலர் யாகங்கள் செய்வதையும், தானம் செய்வதையும், விதவிதமான தவங்கள் செய்வதையும்,
விதவிதமான விரதங்கள் இருப்பதும், நியம-யம எனப்படும் வழிமுறைகளை கடைப்பிடிப்பதே இறுதி லட்சியமாக கொண்டிருக்கிறார்கள்.

ஆத்3யந்தவந்த ஏவைஷாம் லோகா: கர்மவினிர்மிதா: |
து3:கோ2த3ர்காஸ்தமோனிஷ்டா2: க்ஷுத்3ரா மந்தா3: ஶுசர்பர்தா: || 11 ||

ஏவ ஏஷாம் – இவர்கள் எவ்வாறு
கர்மவினிர்மிதா – கர்மத்தினால் உருவாக்கப்பட்ட, செயல்களினால் தோற்றுவிக்கப்பட்ட
லோகா: இறுதி லட்சியமானது கீழ்கண்ட குறைகளை உடையது
ஆத்3யந்தவந்த – முதலும், முடிவும் உடையது, நிலையற்றது
து3:க2 உத3ர்கா: – துயரத்திற்கு காரணமாக இருக்கும், சுகம் போல தெரிந்தாலும் துயரத்தையே கொடுக்கக்கூடியது
தமோ நிஷ்டா – மோஹ வசத்திலும், அக்ஞானத்திலும் வைத்திருக்கும்
க்ஷுத்3ராமந்தா3: – அற்ப சுகத்தைக் கொடுக்க கூடியது, குறைவான இன்பத்தைக் கொடுத்துவிட்டு துன்பத்தில் ஆழ்த்திவிடும்
ஶுசார்பிதா: – துயரம் கலந்தவைகளாக இருக்கும்.

மய்யர்பிதாத்மன: ஸப்4ய நிரபேக்ஷஸ்ய ஸர்வத: |
மயாத்மனா ஸுக2ம் யத்தத்குத: ஸ்யாத்3விஷயாத்மனாம் || 12 ||

உத்தவா! என்னிடத்தில் மனதை செலுத்தி வேறெதிலும் நாட்டம் கொள்ளாமல் ஆத்மாவான என்னிடமே சுகத்தை அனுபவித்துக்
கொண்டிருப்பவர் அடையும் பேரானந்தத்தை புலனுகர் போகங்களில் ஈடுபட்டுள்ளவன் எப்படி அனுபவிக்க முடியும்?
எனவே நானேதான் அடையப்பட வேண்டிய இறுதி லட்சியம்.

அகிஞ்சனஸ்ய தா3ந்தஸ்ய ஶாந்தஸ்ய ஸமசேதஸ: |
மயா ஸந்துஷ்டமனஸ: ஸர்வா: ஸுக2மயா திஶ: || 13 ||

அகிஞ்சனஸ்ய – தன்னிடத்திலே ஒன்றுமில்லாதவன் மானசீகமாக தன்னிடத்திலிருக்கும் பொருட்கள் மீதுள்ள மமகாரத்தை விட்டுவிட்டவன்.
தா3ந்தஸ்ய – புலனடக்கத்துடன் இருப்பவன்
ஶாந்தஹ – மனக்கட்டுப்பாட்டை அடைந்தவன் ( பக்தி வளர வளர புலனடக்கம் அதிகமாகும், மனவடக்கமும் அதிகரிக்கும் ).
ஸம சேதஸ – சமநோக்கு உடையவனாகின்றான். சமபுத்தியை உடையவனாகின்றான்
மயா ஸந்துஷ்ட மனஸ: – என்னிடத்திலே மனதை நிலைநிறுத்தி நிறைவோடு இருப்பவன் எவனோ
ஸர்வா: ஸுக2மயா திஶ: – அவனுக்கு எல்லாதிசைகளும் சுகமாக இருக்கும்

ந பாரமேஷ்ட்யம் ந மஹேந்த்ரதி3ஷ்ண்யம்
ந ஸார்வபௌ4மம் ந ரஸாதி4பத்யம் |
ந யோக3ஸித்3தீ4ரபுனர்ப4வம் வா
மய்யர்பிதாத்மேச்ச2தி மத்3வினான்யத் || 14 ||

என்னிடத்திலே மனதைச் செலுத்தியிருப்பவன் பிரம்ம பதவியையோ, இந்திரனுடைய சொர்க்க லோகத்தையோ,
எல்லா பூமண்டலங்களுக்கும் பேரரசனாக இருப்பதையோ, ரஸாதலம் என்கின்ற பாதாள லோகத்திற்கு தலைவனாக இருப்பதையோ,
யோக ஸித்திகளையோ, மறுப்பிறவி வேண்டாம் என்ற ஆசைகளோ விரும்ப மாட்டான். என் பக்தன் என்னிடத்தில் மனதை
அர்ப்பணித்தவனுக்கு இவைகளை விரும்ப மாட்டான், என்னைத் தவிர வேறெதையும் விரும்ப மாட்டான்.

ந ததா2 மே ப்ரியதம ஆத்மயோனிர்ன ஶங்கர: |
ந ச ஸங்கர்ஷணோ ந ஶ்ரீர்னைவாத்மா ச யதா2 ப4வான் || 15 ||

உத்தவா! உன்னிடம்(பக்தர்களிடம்) நான் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றேனோ, அவ்வளவு அன்பு பிரம்மா, பரமேஸ்வரன்,
சங்கர்ஷணன், லட்சுமிதேவி ஏன் என்னிடத்திலும் வைக்கவில்லை. பக்தனை பெருமைபடுத்த இவ்வாறு பகவான் கூறுகின்றார்.

நிரபேக்ஷம் முனிம் ஶாந்தம் நிர்வைரம் ஸமதர்ஶனம் |
அனுவ்ரஜாம்யஹம் நித்யம் பூயேயேத்யங்க்4ரி ரேணுபி4: || 16 ||

நிரபேக்ஷம் – என் பக்தன் எதையும் சார்ந்திருக்க மாட்டான், தன்னிடத்திலே மனநிறைவோடு இருப்பான்
முனிம் – ஆத்ம ஞானத்தையுடையவன்
ஶாந்தம் – உலக பற்றையொழிந்து மன அமைதியுடன் இருப்பவன், சஞ்சலமற்ற மனதை உடையவன்
நிர்வைரம் – பகையுணர்வு அற்றவன்
ஸமத3ர்ஶனம் – அனைவரையும், எல்லா ஜீவராசிகளையும் சமமாக பார்ப்பவன்; அனைத்தும் ஈஸ்வர ஸ்வரூபமே என்று எண்ணுபவன்
அனுவ்ரஜாம் அயம் நித்யம் – நான் எப்பொழுதும் அவர்களை தொடர்ந்து செல்வேன்
அங்க்4ரிரேணுபி4: பூயேயே – பக்தனுடைய பாத தூளிகளால் நான் புனிதப்படுகிறேன்

நிஷ்கிஞ்சனா மய்யனுரக்தசேதஸ:
ஶாந்தா மஹாந்தோSகி2லஜீவ வத்ஸலா: |
காமைரனாலப்3த4தி4யோ ஜுஷந்தி தே
யன்னைரபேக்க்ஷ்யம் ந விது3: ஸுக2ம் மம || 17 ||

நிஷ்கிஞ்சனா – தன்னிடத்தில் ஒன்றுமில்லாதவன்; தனக்கென்று எதுவுமில்லாதவன்
மயி அனுரக்த சேதஸ: – மனதினால் என்னிடத்தில் மட்டும் முழுமையான அன்பை, பக்தியை செலுத்தி கொண்டிருப்பவன்
ஶாந்தா: – மன அமைதியுடன் இருப்பவன்
மஹாந்தஹ – விரிவான மனதையுடையவன், தாராள மனதுடையவன்; விசால மனதை உடையவன்
அகி2ல ஜீவ வத்ஸலா: – எல்லா ஜீவராசிகளிடத்திலும் கருணையுடன் இருப்பவன்
காமை: அரனாலப்3த4தி4யோ – எந்த ஆசைகளாலும், போகம்தரும் பொருட்களாலும் மன சஞ்சலமடையாமலிருப்பான்; தாக்கப்படாமலிருப்பவன்
நைரைபேக்ஷ்யம் – எதையும் சார்ந்திராத அந்த
மம ஸுக2ம் ஜுஷந்தி – என்னிடத்திலிருக்கும் ஆனந்தத்தை அடைகின்றான்
தத3 ந விது3: – மற்ற அபக்தர்கள் இதை அறிய மாட்டார்கள்

பா3த்4யமானோSபி மத்3ப4க்தோ விஷயைரஜிதேந்த்ரிய: |
ப்ராய: ப்ரக3ல்ப4யா ப4க்த்யா விஷயைர்னாபி4பூ4யதே || 18 ||

விஷயை பா3ந்த்4யமான: அபி – விஷயங்களால் தாக்கப்பட்டாலும் கூட, காமம், பொறாமை, கோபம் போன்ற உணர்ச்சிகளால் தாக்கப்பட்டாலும் கூட
மத்3 ப4க்தஹ – என்னுடைய பக்தன்
அஜிதேந்த்3ரிய: – புலன்களை அடக்கும் சக்தியில்லாதவனாக இருந்தாலும் கூட
ப்ராய: – என்னவாகுமென்றால்
ப்ரக3ல்ப4யா பக்தயா – தீவிரமான, உறுதியான பக்தியினால்
விஷயை: ந அபி பூயதே – அந்த விஷயங்களால் அழிந்துவிட மாட்டான்.

யதா2க்னி: ஸுஸம்ருத்3தார்சி: கரோத்யேதா4ம்ஸி ப4ஸ்மஸார் |
ததா2 மத்3விஷயா ப4க்திருத்3த4வைனாம்ஸி க்ருத்ஸ்னஶ: || 19 ||

ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பிராரப்தத்தை நீக்கும் சக்தி பக்திக்கு உண்டு.
யதா2க்3னி ஸுஸம்ருத்3த4 அர்சி: – நன்கு கொழுந்துவிட்டு ஜுவாலையுடன் எரியும் அக்னியானது. விறகு கட்டைகளை
சாம்பலாக்கி விடுவது போல, என்னையே இலக்காக கொண்ட பக்தியானது பிராரப்தத்தில் இருக்கும் பாவங்களை பொசுக்கி விடுகின்றது.

ந ஸாத4யதி மாம் யோகோ3 ந ஸாங்க்2யம் த4ர்ம உத்3த4வ |
ந ஸ்வாத்4யாயஸ்தபஸ்த்யாகோ யதா2 ப4க்திர்ம்மோர்ஜிதா || 20 ||

உத்தவா! யோகங்கள் விதவிதமாக செய்தாலும் என்னை அடைய முடியாது. தத்துவ விசாரம் பக்தியில்லாமல் அறிவைக் கொடுக்காது,
தர்மப்படி வாழ்ந்து கொண்டு இருந்தாலும், சாஸ்திரத்தை நன்கு படித்தாலும், அத்யயனம் செய்தாலும், வெவ்வேறு தவங்களை செய்தாலும்,
தியாகங்களை செய்தாலும், உறுதியான என் மீதுள்ள பக்தியைப் போன்று என்னை இவைகள் அடைய உதவாது.
நம்மிடத்திலுள்ள பலவீனத்தை ஏற்றுக்கொண்டால்தான் அதை நீக்குவதற்கு முயற்சி செய்வோம்.

ப4க்த்யாஹமேகயா க்3ராஹ்ய: ஶ்ரத்3த4யாத்மா ப்ரிய: ஸதாம் |
ப4க்தி: புனாதி மன்னிஶ்டா2 ஶ்வபாகானபி ஸம்ப4வாத் || 21 ||

பக்தியின் லட்சணத்தையும், பெருமையையும் இதில் கூறியிருக்கிறார்.
ப3க்த்யா அஹம் ஏகயா க்3ராஹய: – பக்தியினால் மட்டுமே என்னை அடைய முடியும். என் மீது மட்டும் முழுமையானதும்,
பிளவுபடாததும், நம்பிக்கையோடு கூடியதாகவும் இருக்கின்ற பக்தியை செலுத்த வேண்டும்.
ஆத்மா ப்ரிய: ஸதாம் – நான் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கிறேன். ஸத் புருஷர்களுக்கும், சான்றோர்களுக்கும் பிரியமானவனாக இருக்கிறேன்.
மன்னிஷ்டா2 பக்தி: புனாதி – என்னிடத்தில் செலுத்தப்பட்ட பக்தியானது அவனை தூய்மைபடுத்துகின்றது.
ஶ்வபாகான அபி – சண்டாளனாக இருந்தாலும் கூட
ஸம்ப4வாத் – சம்சாரத்திலிருந்து காப்பாற்றிவிடும், புனிதமானவனாக மாறிவிடுகின்றான்.

த4ர்ம: ஸத்யத3யோபேதோ வித்3யா வா தபஸான்விதா |
மத்3ப4க்த்யாபேதமாத்மானம் ந ஸம்யக்ப்ரபுனாதி ஹி || 23 ||

சாஸ்திரம் விதித்த தர்மத்தை பின்பற்றினாலும், உண்மை பேசுபவனாக இருந்தாலும், அனைவரிடத்திலும் கருணையோடு இருந்தாலும்,
விதவிதமான உபாஸனைகள், சாஸ்திர அறிவு, தியானங்கள், தவத்துடன் கூடிய அறிவு இருந்தாலும்,என்மீது பக்தி இல்லையென்றால்
அவைகள் நன்கு முழுமையாக ஒருவனை தூய்மை படுத்தாது

கத2ம் வினா ரோமஹர்ஷ த்ரவதா சேதஸா வினா |
வினானந்தாஶுகலயா ஶுத்4யேத்3ப4க்த்யா வினாஶய: || 23 ||

உணர்ச்சி பெருக்கினால் உடல் சிலிர்த்தல், புல்லரித்தல், மனம் உருகுதல், ஆனந்தக்கண்ணீர் பெருக்கு இவைகள் ஏற்படாத வரையில்,
பக்தி உடையவனாக இருந்தாலும் அவனுடைய மனம் எப்படி தூய்மையை அடையும்! பக்தியினால் இப்படிபட்ட உணர்வுகள்
ஆரம்ப நிலையில் இருக்க வேண்டும். இவையில்லாத வரையில் மனம் தூய்மை அடையாது

வாக்3க3த்3கதா3 த்ரவதே யஸ்ய சித்தம் ருத3த்யபீ4க்ஷ்ணம் ஹஸதி க்வசிச்ச |
விலஜ்ஜ உத்3கா3யதி ந்ருத்யதே ச மத்3ப4க்தியுக்தோ பு4வனம் புனாதி || 24 ||

நிறைவான பக்தி ஏற்பட்டு விட்டவனுடைய சொல்லில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நா தழுதழுப்பு ஏற்படுகிறது. மனம் நீராக உருகுகிறது.
சில சமயங்களில் அழுகிறான். சில நேரத்தில் சிரிக்கிறான். வெட்கத்தைவிட்டு உரத்தக் குரலில் பாடுகிறான், ஆடுகிறான்.
என்னிடத்தில் பக்தி கொண்ட பக்தன் உலகத்தையே புனிதப்படுத்துகிறான். தன்னுடைய சுற்றுப்புற சூழ்நிலைகளையும், சமுதாயத்தையும் புனிதப்படுத்துகிறான்.

யதாக்4னினா ஹேம மலம் ஜஹாதி த்4மாதம் புன: ஸ்வம் ப4ஜதே ச ரூபம் |
ஆத்மா ச கர்மானுஶயம் விதூ4ய மத்4ப4க்தியோகே3ன ப4ஜத்யதோ மாம் || 25 ||

நெருப்பினால் உருக்கப்பட்ட தங்கம் அழுக்கு நீங்கப்பெற்று தன் இயல்பான தன்மையை அடைகிறது. அதுபோல பக்தன் என்னிடம்
பக்தி செலுத்துதல் சம்சாரம் என்கின்ற அசுத்தம் நீங்கப்பெற்று தன் இயல்பு வடிவான என்னை (பரமாத்வை அடைகிறான்.)

யதா2 யதா2த்மா பரிம்ருஜ்யதேSஸௌ மத்புண்யகா3தா2ஶ்ரவணாபி4தா4னை: |
ததா2 ததா2 பஶ்யதி வஸ்து ஸூக்ஷ்மம் சக்ஷுர்யதை2வாஞ்ஜனஸம்ப்ரயுக்தம் || 26 ||

என்னைப் பற்றிய புனிதமான கதைகளை கேட்பதனாலும், சொல்வதனாலும் இந்த ஜீவாத்மா எந்த அளவுக்கு தூய்மை அடைகின்றானோ
அந்த அளவு சூட்சுமமான உண்மைகளை புரிந்து கொள்கின்றான், பார்க்கின்றான், அறிகின்றான். எப்படி விசேஷமான சக்தி வாய்ந்த
மையை கண்ணில் தீட்டிக் கொண்டால், மிக நுட்பமான பொருட்கள் கூடப் பார்வையில் படுகின்றதோ அதுபோல பக்தியோகத்தினால்
ஞானத்தை அடையும் சாதனங்களை அடைந்து அதன் மூலம் ஆத்மஞானத்தை அடைவோம்.
தகுதியில்லாமல் உபநிஷத் என்கின்ற பிரமாணத்தினால் ஒரு பயனும் அடைய முடியாது

விஷயாந்த்4யாயதஶ்சித்தம் விஷயேஷு விஷஜ்ஜதே |
மாமனுஸ்மரதஶ்சித்தம் மய்யேவ ப்ரவிலீயதே || 27 ||
விஷயான் – போகத்தை தரும் பொருட்களை

த்4யாயத: – மனமானது தொடர்ந்து நினைப்பதன் மூலமாக
விஷயேஷு விஷஜ்ஜதே – அந்தப் பொருட்களில் சிக்கிக் கொள்கிறது
பக்தியை வளர்த்துக் கொள்ள பகவானின் நாம சங்கீர்த்தனம், பகவத் சிந்தனையுடன் இருத்தல், பகவான் ஸ்தோத்திரத்தை சொல்லுதல்
போன்ற சாதனங்களை பயன்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.
அதுபோல என்னையே சிந்தித்துக்கொண்டிருப்பவனுடைய மனம் என்னிடத்திலே லயமடைகிறது

தஸ்மாத3ஸத3பி4த்4யானம் யதா2 ஸ்வப்னமனோரத2ம் |
ஹித்வா மயி ஸமாத4த்ஸ்வ மனோ மத்3பா4வபா4விதம் || 28 ||

யதா2 ஸ்வப்ன மனோரதம் – கனவில் காணும் பொருட்கள், விழிப்பு நிலையில் கற்பணை செய்து கொண்டு அனுபவிக்கும் விஷயங்கள் எப்படி பொய்யாக இருக்கின்றதோ அதுபோல உலகப்பொருட்களை, விஷயங்களை பொய்யானது என்று புரிந்துணர்ந்து கொள்ள வேண்டும்.
ஹித்வா மயி ஸ்மாத4த்ஸ்வ – உன்னுடைய மனம் உலக விஷயங்களை சிந்திப்பதை விட்டுவிட்டு
மத்3பா4விதம் மனோ – என்னைப்பற்றியே சிந்தித்து கொண்டிருக்க வேண்டும். மனதை என்னிடத்திலே நிலைநிறுத்த வேண்டும்.
தஸ்மாத்3 – ஆகவே
அஸத்3 அபி4த்4யானம் – இருப்பது போல் தோன்றும் உலகத்தையே மீண்டும் மீண்டும் நாடி செல்லாதே!

ஸ்த்ரீணாம் ஸ்த்ரீஸங்கி3னாம் ஸங்கம் த்யக்த்வா தூரத ஆத்மவான் |
க்ஷேமே விவிக்த ஆஸீனஶ்சிந்தயேன்மாமதந்த்3ரித: || 29 ||

ஸ்த்ரீணாம் ஸ்த்ரீஸங்கி3னாம் – பெண்களையும், பெண்ணாசை கொண்டவர்களின்
ஸங்க3ம் த்யக்த்வா – உறவைய்ம் முழுமையாக விட்டுவிட வேண்டும்
தூ4ரத ஆத்மவான் – தனித்திருக்க வேண்டும்.
க்ஷேமே விவிக்த ஆஸீன – தூய்மையான தனிமையான இடத்தில் அமர்ந்து
மாம் சிந்தயேத் – என்னையே தொடர்ந்து தியானித்துக் கொண்டிருக்க வேண்டும்
ஆதந்த்3ரித: – இந்த முயற்சியில் தோல்வியடைந்தாலும் இடைவிடாது முயற்சியை தொடர வேண்டும்

ந ததா2ஸ்ய ப4வேத்க்லேஶோ ப3ந்த4ஶ்சான்யப்ரஸங்க3த: |
யோஷித்ஸங்கா3த்3யதா2 பும்ஸோ யதா2 தத்ஸங்கி3ஸங்கத: || 30 ||

உறவுகளினால் வரும் அதிக அளவு மனத்துயரங்கள் வேறெதனிடமிருந்தும் வருவதில்லை மனித உறவுகளால் அனுபவிக்கும்
மனத்துயரங்களைப் போன்று மற்றவைகளிடத்தில் வைக்கும் பற்றினால் அனுபவிப்பதில்லை

ஶ்ரீஉத்3த4வ உவாச
யதா2 த்வாமரவிந்தாக்ஷ யாத்3ர்ஶம் வா யதா3த்மகம் |
த்4யாயேன்முமுக்ஷுரேதன்மே த்4யானம் த்வம் வக்துமர்ஹஸி || 31 ||

உத்தவர் கேட்கிறார்.
தியானம் செய்யும் முறையை எனக்கு கூறியருளுங்கள். எந்தெந்த வகையில் தியானம் செய்வதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.
தியானிக்கும் இறைவனை என்னென்ன வகையில் தியானிக்க வேண்டும். தியானத்திற்குரிய விஷயம் எதுவென்றும் கூற வேண்டும்.

ஶ்ரீப4கவானுவாச
ஸம ஸாஸன ஆஸீன: ஸமகாயோ யதா2ஸுக2ம் |
ஹஸ்தாவுத்ஸங்க3 ஆதா4ய ஸ்வனாஸாக்3ரக்ருதேக்ஷண: || 32 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
சமமான ஆசனத்தில் அமர்ந்து, உடலை நேராக வைத்துக் கொண்டு, சௌக்கியமாக இருக்கும் நிலையில் அமர்ந்து கொண்டு,
இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு மடிமேல் வைத்துக் கொள்ள வேண்டும்.
கண்பார்வை மூக்குநுனியை பார்க்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

ப்ராணஸ்ய ஶோத4யேன்மார்க3ம் பூரகும்ப4கரேசகை: |
விபர்யயேணாபி ஶனைரப்4யஸேன்னிர்ஜிதேந்த்3ரிய: || 33 ||

தியானத்தை செய்வதற்கு முன்பு எளிமையான பிராணாயாமம் செய்ய வேண்டும். இது ரஜோ குணத்தின் வேகத்தை குறைத்து,
தமோ குணத்தினால் வரும் உறக்கத்தை தடுக்கும்.
பிராணன் சென்று வருகின்ற வழியை (நாடியை) சுத்தம் செய்ய வேண்டும். தடையின்றி சென்று வருவதற்கு இது உதவுகிறது.
பூரகம், ரேசக, கும்பக என்கின்ற பிராணாயாமத்தை செய்ய வேண்டும். ரேசக, கும்பக, பூரகம் இவைகளை இந்த வரிசைப்படியே செய்ய வேண்டும்.
இதை மெதுவாகவும், தொடர்ந்தும் செய்து வர வேண்டும். தியானத்தை அதிக உணர்ச்சியுடன் இருக்கும் சமயத்தில் செய்யக் கூடாது.
பூரகம் – மூச்சை உள்ளே இழுத்தல்,
கும்பகம் – இழுத்தக் காற்றை உள்ளேயே வைத்திருத்தல்
ரேசகம் – மூச்சுக் காற்றை வெளியே விடுதல்.
இவை மூன்றும் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இருக்க வேண்டும். தகுந்த ஆசிரியரின் உதவியுடன்தான் இதை செய்ய வேண்டும்.

ஹ்ருத்3யவிச்சி2னமோங்காரம் க4ண்டானாதம் பி3ஸோர்ணவத் |
ப்ராணேனோதீ3ர்ய தத்ராத புன: ஸம்வேஶயேத்ஸ்வரம் || 34 ||

தியானத்தின் போது மற்ற எண்ணங்களால் தாக்கப்படாமல் இருப்பதற்கு ஓங்கார சப்தத்தை எழுப்பிக் கொண்டு இருக்க வேண்டும்.
பிறகு தியானத்தை ஆரம்பிக்க வேண்டும். இது தீர்க ப்ரணவ உச்சாடனம் என்று கூறுவர்
இதயத்தில் இருக்கும் ஆகாசத்திலுள்ள பிளவுபடாத ஓங்காரத்தை, எங்கும் இருக்கின்ற ஓங்காரத்தை பெரிய கோயில் மணியில்
ஒலியை போன்று மெதுவாக முடிய வேண்டும். தாமரைத்தண்டைப்போன்று நீளமாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும்.
பிராண சக்தி மூலம் இந்த சப்தத்தை ஒலிக்க செய்ய வேண்டும். மகார ஒலியில் அந்த ஓங்காரத்தை சிறிது நேரம் நிலை நிறுத்த வேண்டும்.

ஏவம் ப்ரணவஸம்யுக்தம் ப்ராணமேவ ஸமப்4யஸேத் |
த3ஶக்ருத்வஸ்த்ரிஷவணம் மாஸாத3ர்வாக்3ஜிதானில: || 35 ||

ப்ரணவத்துடன் கூடிய பிராணாயாமத்தை அப்யாஸம் செய்ய வேண்டும். நாள்தோறும் மூன்று வேளை வீதம்
பத்து தடவைகள் பயிற்சி செய்தால் ஒரு மாதத்திற்குள்ளகவே புலன்களை வென்று விடலாம்

ஹ்ருத்புண்டரீகமந்த:ஸ்த2மூர்த்4வனாலமதோ4முக2ம் |
த்4யாத்வோர்த்4வமுக2முன்னித்ரமஷ்டபத்ரம் ஸகர்ணிகம் || 36 ||

இந்த அலங்காரத்துடன் இருப்பார் என்று தியானித்தல். நமக்குள் இருக்கின்ற தாமரைப் போன்ற இதயத்திற்குள் பகவான் வீற்றிருக்கின்றார்.
தாமரைத்தண்டு மேல் நோக்கியும், மலர் கீழ்நோக்கி இருப்பதாகவும், மலர்ந்திருப்பதாகவும், அதன் எட்டுவிதமான இலைகளுடன் கூடிய
இதழ்கள் விரிந்து இருப்பது போன்றதாகவும், நடுவில் ஒரு காய் இருப்பதாகவும் பாவித்து தியானம் செய்ய வேண்டும்.

கர்ணிகாயாம் ந்யஸேத்ஸூர்ய ஸோமாக்3னீனுத்தரோத்தரம் |
வஹினமத்4யே ஸ்மரேத்ரூபம் மமைத த்3த்4யானமங்க3லம் || 37 ||

அந்தக் காயில் சூரிய, சந்திர, அக்னி தேவதைகள் ஒருவர் மீது ஒருவராக இருப்பதாக கருத வேண்டும்.
அக்னியின் நடுவில் தியான மங்களமான என்னுடைய விஷ்ணு ரூபத்தை தியானிக்க வேண்டும்.

ஸ்மம் ப்ரஶாந்தம் ஸுமுக2ம் தீ3ர்க3சாருத்துர்பு4ஜம் |
ஸுசாருஸுந்த்ரக்ரீவம் ஸுகபோலம் ஸுசிஸ்த்மிதம் || 38 ||

எல்லா அவயவங்களும் உரிய அளவுப்படி சரியாக அமைந்திருப்பதாகவும், அமைதியாக இருப்பதாகவும், அழகான முகம்,
நீண்ட அழகிய நான்கு கைகள், பேரழகு பொருந்திய கழுத்து, அழகான கன்னங்கள், மனங்கவர் புன்னகையுடன் இருப்பதாக தியானிக்க வேண்டும்.

ஸமானகர்ணவின்யஸ்த ஸ்குரன்மகரகுண்டலம் |
ஹேமாம்ப3ரம் க4னஶ்யாமம் ஶ்ரீவத்ஸ ஶ்ரீநிகேதனம் || 39 ||

அளவாக அமைந்தை இரு காதுகளிலும் மின்னலடிக்கும் மகர குண்டலங்கள், பட்டாடையும், தங்கநிற ஆடையும்,
கார்கால மேகத்தைப் போன்ற வர்ணத்துடன் உடையவராகவும், மார்பில் ஶ்ரீவத்ஸம் என்கின்ற அடையாளமும்,
ஶ்ரீதேவியுடன் இருப்பிடமாகவும், இருப்பதாக காட்சி அளித்துக் கொண்டிருப்பதாக தியானிக்க வேண்டும்.

ஶங்க2சக்ரக3தா3பத்3ம வனமாலாவிபூஷிதம் |
னூபுரைர்விலஸத்பாத3ம் கௌஸ்துப3ப்ரப4யா யுதம் || 40 ||

சங்கு, சக்ர, கதாயுதம், தாமரை மலர், வனமாலைகள் இவைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பவராகவும்,
பாதங்களில் அழகான சதங்கைகள், கௌஸ்துப மணி கழுத்திலே அலங்கரித்துக் கொண்டிருப்பவராகவும் தியானிக்க வேண்டும்,

த்3யுமாத்கிரிடகடக கடிஸூத்ராங்க3தா3யுதம் |
ஸர்வாங்க3ஸுந்தரம் ஹ்ருதயம் ப்ரஸாதஸுகே2க்ஷனம் || 41 ||

ஓளிவீசுகின்ற கிரீடம், கங்கணம், அரைஞான், தோள்வளைகள் இவைகளை அணிந்திருக்கும் காட்சியுடனும்,
எல்லா அங்கங்களும் அழகோ அழகு, மனதைக் கொள்ளைக் கொள்வதும் பேர்ருளைப் பெருக்குவதுமான திருப்பார்வை
இவைகளுடன் கூடியவராக தியானிக்க வேண்டும்.

ஸுகுமாரமபி3த்4யாயேத்ஸர்வாங்கே3ஷு மனோ த3த4த் |
இந்த்3ரியாணீந்த்ரியார்தே3ப்4யோ மனஸாக்ருஷ்ய தன்மன: |
பு3த்3த்4யா ஸாரதி2னா தீ4ர: ப்ரணயேன்மயி ஸர்வத: || 42 ||

கண்களைக் கவரும் இளமைப் பருவம், இத்தகைய மனோகரமான வடிவத்துடன் ஒவ்வொரு அங்கத்திலும்,
மனதை செலுத்தி தியானிக்க வேண்டும். புலனுகர் பொருட்களிலிருந்து மனதின் துணைக் கொண்டு புலன்களை இழுத்து,
பிறகு புத்தி என்ற சாரதியின் துணையுடன் மனதை என்மீது செலுத்த வேண்டும்.

த்த்ஸ்ர்வ்வ்யாபகம் சித்தமாக்ருஷ்யைகத்ர தா4ரயேத் |
நான்யானி சிந்தயேத்3ப4ய: ஸுஸ்மிதம் பா4வயேன்முக2ம் || 43 ||

இதுவரை கூறிய முழுவடிவ தியானம் கைக்கூடியபின் அந்த மனதை இழுத்து ஓரிடத்தில் நிலைநிறுத்தி
வேறு அங்கங்களை சிந்திக்காமல், புன்னகையுடன் கூடிய என் முகத்தை மட்டும் தியானிக்க வேண்டும்.

தத்ர லப்3த3பத3ம் சித்தமாக்ருஷ்ய வ்யோம்னி தா4ரயேத் |
தச்ச த்யக்த்வா மதா3ரோஹோ ந கிஞ்சித3பி சிந்தயேத் || 44 ||

ஒரு அங்கத்தில் மனம் நிலைபெற்றதும், அந்த மனதை எடுத்து காரண ஈஸ்வரனிடத்தில் செலுத்த வேண்டும்.
காரண ஈஸ்வரன் என்பது நாம-ரூபங்களை நீக்கியதாக இருக்கும். ஈஸ்வரனின் லட்சணங்களை தியானிக்க வேண்டும்.
இதில் நிலைத்த பின்னர் அதனையும் விட்டு விட்டு என்னுடைய நிர்குண ஸ்வரூபத்தின் மேல் நிலைநிறுத்தி
வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதிருக்க வேண்டும். பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை தியானிக்க வேண்டும்.

ஏவம் ஸமாஹிதமதிர்மாமேவாத்மானமாத்மனி |
விசஷ்டே மயி ஸர்வாத்மன்ஜயோதிர்ஜ்யோதிஷி ஸம்யுதம் || 45 ||

இவ்விதம் மனம் ஒன்றிப் போனவுடன் நிர்குணமாக இருக்கின்ற என்னை தன்னிடத்தில் பார்க்கிறான்.
என்னிடத்திலே அவனைப் பார்க்கின்றான். எவ்வாறு ஒரு ஓளியை இன்னொரு ஓளியுடன் சேர்க்கும்போது இரண்டும் ஒன்றிப் போய்விடுகிறதோ
அதுபோல இந்த ஐக்கியம் இருக்கிறது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றிப் போய்விடுகின்றன.

த்4யானேனேத்த2ம் ஸுதீவ்ரேண யுஞ்ஜதோ யோகினோ மன: |
ஸ்ம்யாஸ்யத்யாஶு நிர்வாணம் த்ரவ்ய ஞானாக்ரியாப்4ரம: || 46 ||

இவ்விதமான தீவிரமான தியானயோகத்தில் என்னிடம் மனதை பிணைத்துக் கொள்ளும் யோகிக்கு, உடனடியாக மனம் நிர்வாணம் அடைகிறது.
அனைத்தையும் தூக்கியெறிந்து விடுகிறான். உலகத்திலுள்ள பொருட்களை, செயல்களை, மீதுள்ள மோகம் நீங்கி விடுகின்றது.

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -7-ஸ்ரீ ஹம்ஸ கீதை–

May 22, 2020

ஶ்ரீபகவான் உவாச
ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு3ண பு3த்3த்4ர்ன சாத்மன: |
ஸத்த்வேனான்யதமௌ ஹன்யாத்ஸத்த்வம் ஸத்த்வேன சைவ ஹி || 1 ||

சம்சார ஸ்வரூபம்
ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு3ணா – சத்துவ, ரஜோ, தமோ ஆகிய மூன்று குணங்கள் இருக்கின்றன.
சத்துவ குணம் – ஞான சக்தி; அறிவை அடைய உதவும் சக்தி; ஞான இச்சா
ரஜோ குணம் – க்ரியா சக்தி; செயல்பட வைக்கும் சக்தி; கர்ம இச்சா
தமோ குணம் – இவையிரண்டும் இல்லாத ஜடமாக இருக்கும் தன்மை உடையது. ஜட சக்தி; செயலற்ற சக்தி – அகர்மா இச்சா
சம்சார ஸ்தானம்
பு3த்3தே4ர் ந ச ஆத்மனஹ – முக்குணங்கள், மனதிலும் புத்தியிலும் இருக்கின்றது. சூட்சும சரீரத்திலும் இருக்கின்றது.
சத்துவ குணத்தின் துணைக் கொண்டு மற்ற இரண்டு குணங்களையும் ஒடுக்கிவிட வேண்டும்.
சத்துவ குணத்தை அதன் துணையாலே அதையும் கடந்தவனாகி விட வேண்டும்.

ஸத்த்வாத்3த4ர்மோ ப4வேத்3வ்ருத்3தா4ஸோ ஸத்3ப4க்தி லக்ஷண: |
ஸாத்த்விகோபாஸயா ஸத்த்வம் ததோ த4ர்ம: ப்ரவர்ததே || 2 ||

சத்துவ குணத்திலே இருக்கும் நிலையை அடைவதுதான் என்னிடத்தில் பக்தி செலுத்துதல் என்ற சிறப்பான நற்பண்பை வளர்க்கும்.
ஞானயோகத்தில் ஈடுபட வைக்கும். உபநிஷத்தின் உபதேசமும் நன்கு புரியும். ஞானயோகத்தில் ஈடுபட்டால் அதன் பலனை அடைந்து விடுவான்,
உபநிஷத்தின் உபதேசத்தை புரிய வைக்கும்
ஸாத்த்விகா உபாஸயா ஸத்த்வம் – சாத்விகமான சில சாதனங்களை, உபாஸனைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக சத்துவ குணம் மேலோங்கும்
ததோ த4ர்ம ப்ரவர்த்தே – சத்துவ நிலை அடைந்த பிறகு தர்மநெறியில் முன்னேற்றமும் ஏற்படுகிறது. மேலே சொல்லப்பட்ட தர்மத்தை அடைந்து விடுவாய்.

த4ர்மோ ரஜஸ்தமோ ஹன்யாத்ஸத்த்வ வ்ருத்3தி4னுத்தம: |
ஆஶு னஶ்யதி தன்மூலோ ஹயத4ர்ம அப4யே ஹதே || 3 ||

மேற்சொன்ன தர்மம் ரஜோ, தமோ குணங்களை அழித்துவிடும். சத்துவகுணம் முதிர்ந்த நிலையில் அடைவதுதான் இந்த தர்மம்.
இதைத்தவிர அடையக்கூடிய வேறெதுவும் இல்லாத மேலான மனநிலையை அடைவோம் (அனுத்தமஹ)
ஹி அத4ர்ம உப4யே ஹதே – ஏனெனில் இந்த இரண்டு அதர்மங்களான ரஜோ, தமோ குணங்கள் அழிந்து போகும்போது
ஆஶு நஶ்யதி தன்மூலஹ – இவைகளுக்கு ஆணிவேராக இருக்கின்ற அதர்மமும் விரைவில் அழிந்து போகிறது

ஆக3மோSப: ப்ரஜா தேஶ: கால: கர்ம ச ஜன்ம ச |
த்4யானம் மன்த்ரோSத2 ஸம்ஸ்காரோ த3ர்ஶைதே கு3ணஹேதவ: || 4 ||

இந்த குணங்கள் அடைவதற்குக் காரணங்கள் கீழ்கண்ட பத்து விதமான விஷயங்களான
சாஸ்திரம், உணவு, சந்ததி, காடு, காலம், செயல், பிறப்பு, தியானம், மந்திரம், ஸம்ஸ்காரங்கள் ஆகியவைகளாகும்
1. ஆக3ம எதை திரும்ப திரும்ப படிக்கின்றோமோ, கேட்கின்றோமோ, பார்க்கின்றோமோ அவைகள்தான் அதற்கேற்ற குணத்தை கொடுக்கின்றது.
அதாவது ஞானேந்திரியங்களை எந்த விஷயத்தில் அதிகமாக பயன்படுத்துகின்றோமோ அதன் அடிப்படையில் தான் குணங்கள் அமைகின்றது
2. அபஹ – உணவு – எப்படிபட்ட உணவை உட்கொள்கின்றோமோ அதன் அடிப்படையில் குணங்கள் அமைகின்றது.
அதர்ம வழியில் கிடைக்கும் உணவை உட்கொள்ளும்போது அதர்ம குணங்களை அடைகிறோம்
3. ப்ரஜா: -ஸங்கம் – நாம் யாரோடு நெருக்கமாக பழகுகின்றோமோ அவர்களுடைய குணங்கள்,
பழக்க வழக்கங்கள் நம்மையறியாமலே அடைந்து விடுவோம். நம் குணங்கள் அவர்களுக்கும் சென்றுவிடும்
4. தேஶ – சூழ்நிலைகள் – நாம் அதிக நேரம் இருக்கின்ற சூழ்நிலைகள், புனித யாத்திரை செல்லுதல்,
வசிக்கும் வீட்டில் இருக்கும் சூழ்நிலைகள் அதற்கேற்ற குணங்களை அடையச் செய்யும்
5. கால: – காலம் – சந்தியா காலம் சாத்வீகமானது, பகல் நேரமானது ராஜஸமானது, இரவு நேரம் தாமஸமானது.
சாத்விக காலத்தில் சாத்விகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய சாதனங்களில் ஈடுபட வேண்டும்.
எதற்காக அதிக காலம் பயன்படுத்துகின்றோமோ அதற்கேற்ற குணங்களை அடைந்துவிடுவோம்.
6. கர்ம – செயல் – எப்படிபட்ட செயல்களில் ஈடுபடுகின்றோமோ அதைப் பொறுத்தும் குணங்கள் அமைகின்றது.
நிஷ்காம கர்மம் – சாத்வீகமானது; காம்ய கர்மம் ரஜோ குணமாகவும், நிஷித்த கர்ம தாமஸமானதாகவும் இருக்க வைக்கிறது
7. ஜன்ம –வ்ரதம் – தீக்ஷிதா – பிறத்தலின் போது தமோ குண பிரதானத்தில்தான் இருப்பார்கள்.
பள்ளியில் சேர்க்கும்போது வித்யா தீக்ஷை. நாம் எதை அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அதற்குத் தேவையான
கல்வித்தகுதியை அடைவோம். மனதில் சங்கல்பம் எடுத்துக் கொள்வது அதை கட்டாயம் அடைய வேண்டும் என்ற ஆசையினால்தான்
8. த்யானம் – எந்த தேவதையை தொடர்ந்தி தியானம் செய்து கொண்டிருக்கின்றோமோ அதேபோன்று எந்த விஷயத்தை
தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அதுவாகவே மாறிவிடுவோம்
9. மந்த்ரஹ – மந்திரம் – எந்த வகையான மந்திரங்களை உச்சரிக்கின்றோமோ அதற்கேற்ற குணங்களை அடைகிறோம்
10. ஸம்ஸ்காரஹ – பழக்க வழக்கம் – எவையெல்லாம் பழக்கமாகி வைத்திருக்கின்றோமோ அவைகளை சாத்வீகமாக
மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வெற்றி அடைந்திட வேண்டும்.

மேலே கூறப்பட்ட பத்தும் நம்முடைய குணங்களை நிர்ணயிக்கின்றது, மாற்றி அமைக்கின்றது

தத்த த்ஸாத்த்விகமேவைஷாம் யத்3யத்3வ்ருத்3தா4: ப்ரசக்ஷதே |
நிந்த3ந்தி தாமஸம் தத்தத்3ராஜஸம் தது3பேக்ஷிதம் || 5 ||

மூன்று குணங்களின் வேறுபாட்டை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதற்கான பதில்தான் இந்த ஸ்லோகத்தில் பகவான் கூறியிருக்கிறார்.
நம்முடைய உள்ளுணர்வே நமக்கு தர்ம-அதர்ம செயலை காட்டிக் கொடுத்து விடும். எவைகளையெல்லாம் சான்றோர்கள் சாத்வீகம் என்று
அங்கீகரித்துள்ளார்களோ அவைகளை சாத்வீகம் என்றூம், எவைகளைப் புறக்கணிக்கின்றார்களோ அவைகள ராஜஸம் என்றும்,
எவைகளை இழித்துரைக்கின்றார்களோ அவைகளை தாமஸம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸாத்த்விகான்யேவ ஸேவேத புமான்ஸத்த்வவி வ்ருத்3த4யே |
ததோ த4ர்மஸ்ததோ ஞானம் யாவத்ஸ்ம்ருதிரபோஹனம் || 6 ||

ஒரு சாதகன் சத்துவ குண வளர்ச்சிக்காக, சாத்வீகமானவற்றிலே மனதை செலுத்தி அதையே கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் தர்மப்படி வாழ்க்கையை நடத்துவதும், உபநிஷத்தின் உபதேசத்தை புரிந்து கொள்ளும் சக்தியையும்,
அதன் தொடர்ச்சியாக உள்ளத்திலிருந்த சந்தேகங்கள் யாவும் நீங்கி, ஆத்ம-ஸ்வரூப ஞானத்தை அடையலாம்.
பிறகு அதுவே நிலைபெற்றுவிடும். தேவையான நேரத்தில் இந்த ஞானம் செயல்படும்
ஸ்ம்ருதி – அடைந்த ஆத்மஞானம் உணர்வுபூர்வமாக மாறிவிடுதல்
அபோஹனம் – இதுவரை நான் என்பதன் தவறான அர்த்தத்தை, நாம் நான் என்ற சொல்லுக்கு தவறாக புரிந்து கொண்டதை நீக்கிவிடும்.
எந்தெந்த தவறான எதிர்பார்ப்புக்கள் நமக்கு துயரத்தைக் கொடுக்கின்றதோ அவைகளையெல்லாம் நீக்கப்பட்டுவிடும்.

வேணுஸங்க4ர்ஷஜோ வஹினர்த3க்3த்4வா ஶாம்யதி தத்3வனம் |
ஏவம் கு3ணவ்யத்ய யஜோ தே3ஹ: ஶாம்யதி தத்க்ரிய: || 7 ||

வேணு ஸங்க4ர்ஷ ஜஹ வஹினி – மூங்கில்களின் உராய்விலிருந்து தோன்றிய நெருப்பு
த3க்3த்4வா ஶாம்யதி தத்3 வனம் – தன்னை தோற்றுவித்த மூங்கில் காட்டையே எரித்துவிட்டு அடங்கி விடுகின்றது
ஏவம் – அதுபோல
குண வ்யத்யய ஜஹ தே3ஹ – குணங்களின் மாற்றத்தினால் தோன்றியுள்ள இந்த உடல்
தத்க்ரிய: – ஞானாக்னியால் முற்றிலுமாக எரித்துவிட்டு தானும் அழிந்துவிடுகிறது.

ஶ்ரீஉத்தவா உவாச
வித3ந்தி மர்த்யா: ப்ராயேண விஷயான்பத3மாபதாம் |
ததா2பி பு4ஞ்ஜதே க்ருஷ்ண தத்கத2ம் ஶ்வக2ராஜவத் || 8 ||

உத்தவர் கேட்கிறார்.
பொதுவாக மனிதர்களுக்கு விஷயபோகங்கள் எல்லாம் ஆபத்துக்கு இருப்பிடமாக இருக்கிறது என்றும்,
துயரத்தை கொடுக்கக்கூடியது என்பதை அறிகிறார்கள். இருந்தாலும் நாய், கழுதை, ஆடு இவைகள் போல அதை
அடைவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன

ஶ்ரீபகவான் உவாச
அஹமித்யன்யதா3பு3த்3தி4: ப்ரமத்தஸ்ய யதா2 ஹ்ருதி3 |
உத்ஸர்பதி ரஜோ கோ4ரம் ததோ வைகாரிகம் மன: || 9 ||

ஶ்ரீபகவானுடைய கூறுகிறார்.
தமோ குணத்தின் விளைவான சோம்பல், உறக்கம், கவனமின்மை, மதிமயக்கம் போன்ற இவைகளில் ஏதோ ஒன்றினால்
ஆட்கொள்ளப்படும்போது நான் -என்னுடையது என்ற தவறான அறிவு உண்டாகிவிடுகிறது.
இயற்கையாக சாத்வீகமாக உள்ள மனதை கோரமான ரஜோ குணமானது முழுவதுமாக வியாபித்து விடுகின்றது.

ரஜோயுக்தஸ்ய மனஸ: ஸங்கல்ப: ஸவிகல்பக: |
தத: காமோ கு3ணத்4யானாத்3து3:ஸஹ: ஸ்யாத்3தி4 து3ர்மதே || 10 ||

ரஜோ குணம் மேலோங்கி இருக்கின்ற மனதில் வெவ்வேறான எண்ணங்கள் தோன்ற தொடங்குகின்றன.
அந்த எண்ணங்களையே மீண்டும் மீண்டும் தியானிப்பதனால் உறுதியான ஆசையானது,
விடமுடியாத ஆசையானது உருவாகி விடுகின்றது. அந்த நேரத்தில் அறிவிழந்து செயல்படுவான்.

கரோதி காமவஶக3: கர்மாண்யவிஜிதேந்த்3ரிய: |
து3:கோ2த3ர்காணி ஸம்பஶ்யன்ரஜோவேகவிமோஹிஹ: || 11 ||

ஆசையின் வசப்பட்ட மனிதன் செயல்களில் ஈடுபடுகின்றான். துயரத்தை கொடுக்கின்ற செயல்களை செய்கின்றான்.
புலன்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாமல் இவ்வாறு செயல்படுகின்றான்.
ரஜோ குணத்தால் ஆட்கொள்ளப்பட்டு (ஸம்பஶ்யன் – தெரிந்தே) தன் விருப்பங்களை அடைவதற்காக பற்பல காரியங்களை செய்கின்றான்.
அவற்றின் விளைவு துன்பம் என்று அறிந்திருந்தாலும் அதை செய்கின்றான்.

ரஜஸ்தமோப்4யாம் யதபி வித்3வான்விக்ஷிப்ததீ4: புன: |
அதந்த்3ரிதோ மனோ யுஞ்ஜந்தோ3ஷத்3ருஷ்டிர்ன ஸஜ்ஜதே || 12 ||

ரஜோ, தமோ குணங்களால் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டும், தடுமாறிக் கொண்டும் இருக்கும் அறிவாளியானவன் ஆசைப்படும்
பொருட்களிலுள்ள குறைகளை பார்க்க வேண்டும். அவைகள் அழியக் கூடியது, துன்பத்தை கொடுக்க கூடியது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இடைவிடாது முயற்சி செய்து இறைவனிடத்தில் மனதை திருப்ப வேண்டும் இதனால் அவன் பந்தப்படமாட்டான்.

அப்ரமத்தோSனுயுஞ்ஜீத மனோ மய்யர்பயஞ்ச2னை: |
அனிர்விண்ணோ யதா2காலம் ஜிதஶ்வாஸோ ஜிதாஸன: || 13 ||

ஆஸனத்தில் வெற்றியடைந்தவன் அன்னமய கோசத்தை தன் வசப்படுத்த வேண்டும், உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும்.
பிராண சக்தியை அடைய வேண்டும். இது நாம் நன்றாக செயல்படுவதற்கு உதவும். செயல்படும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு ரஜோ குணத்திற்கு வர வேண்டும். பிராணயாமம், உணவுக் கட்டுப்பாடு இவைகள்தான் ரஜோ குணத்தை அடைவதற்கான வழிகள்.
இதை அடைவதற்கு. எடுத்துக் கொண்ட லட்சியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அடைய வேண்டிய குறிக்கோளை நன்றாக
நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். மெல்ல மெல்ல மனதை என்னிடத்திலே அர்ப்பணம் செய்ய வேண்டும்.
மேற்சொன்ன சாதனங்களை பலனை அடையும் வரை விடாமல் தொடர்ந்து செய்து வர வேண்டும். இந்த முயற்சியில் மனம்
சோர்வடையாமல் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். எவ்வளவு காலமானாலும் இந்த முயற்சியில் மனம் தளரக் கூடாது.

ஏதாவான்யோக3 ஆதி3ஷ்டோ மச்சி2ஷ்யை: ஸனகாதி3பி4: |
ஸர்வதோ மன ஆக்ருஷ்ய மய்யத்3தா4வேஶ்யதே யதா2 || 14 ||

இதுவரை கூறிய கருத்துக்கள் அனைத்தும் மோட்சத்தை அடைவதற்கான வழிகள். இவைகள் என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டுவிட்டது.
என்னுடைய சிஷ்யர்களான ஸனகாதி ரிஷிகளுக்கு இதை நான் உபதேசித்து இருந்தேன். எல்லாவிடத்திலிருந்தும் மனதை எடுத்து
பிரம்மனாகிய என்னிடத்தில் நேரிடையாக எப்படி வைக்க முடியுமோ அதை பிரம்மனுக்கும், சனகாதி முனிவர்களுக்கும் உபதேசித்தேன்.

ஶ்ரீஉத்தவ உவாச
யதா3 த்வம் ஸனகாதி3ப்4யோ யேன ரூபேன கேஶவ |
யோக3மாதிஷ்டவானேத்த்ரூபமிச்சா2மி வேதி3தும் || 15 ||

உத்தவர் கேட்கிறார்.
பகவான் கேசவா! தாங்கள் இந்த உபதேசத்தை சனகாதி ரிஷிகளுக்கு எப்போது, எந்த உருவத்தில் உபதேசித்துள்ளீர்கள்.
அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஶ்ரீபகவான் உவாச
புத்ரா ஹிரண்யக3ர்ப4ஸ்ய மான்ஸா: ஸனகாதய: |
ப்ப்ரச்சு2: பிதரம் ஸூக்ஷ்மாம் யோக3ஸ்யைகாந்திகீம்க3திம் || 16 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
பிரம்மவினுடைய மனதிலிருந்து தோன்றிய மைந்தர்களான சனகர் முதலியவர்கள் தங்களுடைய தந்தையாரிடம்
யோகத்தின் முடிவான கதியை, இலக்கைப் பற்றி கேட்டார்கள்.

ஸனகாதய ஊசு:
கு3ணேஷ்வாவிஶதே சேதோ கு3ணாஶ்சேதஸி ச ப்ரபோ4 |
கத2மன்யோன்யஸந்த்யாகோ3 முமுக்ஷோரதிதிர்ஷோ: || 17 ||

சனகாதியர்கள் கேட்கிறார்கள்
உலக புலனுகர் பொருட்களில் மனம் வேகமாக சென்று அதனோடு சம்பந்தம் வைத்துக் கொண்டு துயரப்படுத்தி கொள்கிறது.
அதே மாதிரி அவைகள் மனிதர்களின் மனதிற்குள் புகுந்து கொண்டு துயரப்படுத்துகிறது. சம்சாரக் கடலை கடக்க விரும்புகின்ற
சாதகர்கள் எவ்வாறு ஒன்றையொன்று தூண்டும்போது பாதுகாத்து கொள்வது?

ஶ்ரீபகவான் உவாச
ஏவம் ப்ருஷ்டோ மஹாதேவ: ஸ்வயம்பூ4ர்பூ4தபா4வன: |
த்4யாயமான: ப்ரஶ்னபீஜம் நாப்4யபத்3யத கர்மதீ4: || 18 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
இவ்விதம் கேள்விகேட்கப்பட்ட பிரம்மதேவரானவர் தானாகவே தோன்றியவர். மற்ற ஸ்ருஷ்டிகளை தோற்றுவிப்பவர்.
இந்த கேள்வியில் இருக்கும் ஆழ்ந்த தத்துவத்தை நன்கு தியானித்து பார்த்தார். இவருக்கு அதை புரிந்து கொள்ள முடியவில்லை.
எப்பொழுதும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் அவரால் கேள்வியின் உட்கருத்தை புரிந்து கொள்ள
முடியாமல் போனதால் அவரால் பதில் ஏதும் கூற முடியவில்லை

ஸ மாமசிந்தயத்3தேவ: ப்ரஶ்னபாரதிதீர்ஷயா |
தஸ்யாஹம் ஹன்ஸ்ரூபேண ஸகாஶமக3மம் ததா3 || 19 ||

ஆனால் அந்தக் கேள்விக்கு பதில் கூற விருப்பம் கொண்டு என்னைத் தியானித்தார். அப்போது அவருக்கு நான் ஹம்ஸ ரூபமாக தோன்றினேன்.
ஹம்ஸ என்ற சொல் சந்நியாஸியையும் குறிக்கின்றது.

த்3ருஷ்ட்வா மாம்த உபவ்ரஜ்ய க்ருத்வ பாதா3பி4வந்த3னம் |
ப்ரஹமாணமக்3ரத: க்ருத்வா பப்ரச்சு3: கோ ப4வானிதி || 20 ||

என்னைப் பார்த்தவுடன் அவர்கள் என்னருகே வந்து என் காலைத் தொட்டு வணங்கினார்கள்.
பிரம்மதேவரின் முன்னிலையில் தாங்கள் யார் என்று கேட்டார்கள்.

இத்யஹம் முனிபி4: ப்ருஷ்டஸ்தத்த்வஜிக்ஞாஸுபி4ஸ்ததா3 |
யத3வோசமஹம் தேப்4யஸ்த்து3த்3த4வ நிபோ3த4 மே || 21 ||

உத்தவா! உண்மையை அறிந்து கொள்ள விரும்பிய சனகாதி முனிவர்களால் கேட்கப்பட்டதும் அப்போது அவர்களுக்கு
அந்த நேரத்தில் நான் என்ன கூறினேனோ அதை இப்போது என்னிடம் இருந்து நீ கேட்பாயாக.

வஸ்துனோ யத்3யனானாத்வ ஆத்மன: ப்ரஶ்ன ஈத்3ருஶ: |
கத2ம் க4டேத வோ விப்ரா வக்துர்வா மே க ஆஶ்ரய: || 22 ||

ஹம்ஸ கீதை இந்த ஸ்லோகத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது.

யத்3 – ஒருவேளை
ஆத்மனஹ வஸ்துனஹ – உண்மையாக இருக்கின்ற ஆத்மாவானது
அனானாத்வம் – இரண்டற்றதாக இருக்கின்ற காரணத்தால்
யத்3 ப்ரஶ்ன ஈத்3ருஶ: – இப்படிபட்ட ஆத்மாவின் அடிப்படையில் கேட்டிருந்தால்
கத2ம் க4டேத வோ – அது எப்படிப் பொருத்தமாக இருக்கும்
வக்துர்வா மே க ஆஶ்ரயஹ – ஆத்மாவைத் தவிர வேறொன்று இருந்தால்தானே, அதனுடைய ஆதாரத்தில் பதில் சொல்ல முடியும்.

பஞ்சாத்மகேஷு பூ4தேஷு ஸமானேஷு ச வஸ்துத: |
கோ ப4வானிதி வ: ப்ரஶ்னோ வாசாரம்போ4 ஹயனர்த2க: || 23 ||

எல்லா ஜீவராசிகளின் உடல்களிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன் என்பதால் அவை ஒன்றுகொன்று சமமானவையே.
எனவே தாங்கள் யார் என்ற கேள்வி வெற்றுச் சொற்களே, பொருளற்றது.

மனஸா வசஸா த்3ருஷ்ட்யா க்3ருஹ்யதேSன்யைரபீந்த்ரியை: |
அஹமேவ ந மத்தோSன்யதி3தி பு3த்4யத்4வமஞ்ஜஸா || 24 ||

மனதினாலும், வாக்கினாலும், பார்வை மற்றும் பிற புலன்களால் கிரகிக்கப்படுவது எல்லாமே நான்தான்.
என்னைத் தவிர வேறெதுவுமில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள். விசாரத்தின் மூலமாக அறிந்து கொள்ளுங்கள்.

கு3ணேஷ்வாவிஶதே சேதோ கு3ணாஶ்சேதஸி ச ப்ரஜா: |
வீவஸ்ய தே3ஹ உப4யம் கு3ணஶ்சேதோ மதா3த்மன: || 25 ||

ப்ரஜா: – முனிவர்களே!
குணேஷு ஆவிஶதே சேதஹ – மனமானது புலனுகர் பொருட்களை நாடிச் செல்கின்றது
குணாஹா சேதஸி – புலனுகர் போக பொருட்கள் மனதை நாடி வருகின்றது
ஜீவஸ்ய மதா3த்மனஹ – என் ஸ்வரூபமான ஜீவனுக்கு
குணா: சேத – புலனுகர் பொருட்களும், உடலும், மனமும், புலன்களும் உலகமும்
உபயம் தே3ஹ – இவையிரண்டும் உபாதிகள்
உபாதி – எந்தவொன்று உண்மையில் எனக்கு வேறாக இருந்து கொண்டு, ஆனால் அதன் குணங்களை, தன்மைகளை
பொய்யாக என்னுடையதாக நினைக்க வைக்கின்றதோ அதுவே உபாதி என்ற் கூறப்படுகிறது.
நான் என்கின்ற ஆத்மாவுக்கு உடலும், மனமும், புலனுகர் பொருட்களெல்லாம் உபாதிகள்.
எனவே. அவைகள் என்னுடைய தன்மை என்று நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணங்களை நீக்க வேண்டும்.

கு3ணேஷு சாவிஶச்சித்தமபீ4க்ஷ்ணம் கு3ணஸேவயா |
கு3ணாஶ்ச சித்தப்ரப4வா மத்3ருப உப4யம் த்யஜேத் || 26 ||

மனமானது புலனுகர் பொருட்களை நாடிச் செல்கின்றது. (அபீக்ஷணம் – தொடர்ந்து) மீண்டும் மீண்டும் அவைகளை நாடிச் செல்கின்ற
பழக்கத்தினால் அவைகள் மீது அதிக பற்றுடன் இருக்கிறார்கள். த3மஹ என்ற தகுதியை அடைவதன் மூலம் இந்த நிலையை மாற்றிக் கொள்ளலாம்.
சூழ்நிலைகள், போகப் பொருட்கள், சுகத்தை தருகின்ற மனிதர்கள் இவைகள் வாஸனை ரூபமாக மனதில் இருக்கின்றன.
இவைகள்தான் நம்மை துயரப்படுத்துகின்றன. இதை ஶமம் என்ற தகுதியை அடைவதன் மூலம் நீக்கிக் கொள்ள வேண்டும்.
இறைவனைக் குறித்து ஜபம், தியானம் போன்றவற்றை செய்வதன் மூலம் மனதில் வாஸனை ரூபத்தில் இருக்கும்
துயரத்தை கொடுக்கின்றவற்றை நீக்கி விடலாம். இவையிரண்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால்
அனைத்துமே இறைவன் என்ற அறிவை அடைய வேண்டும்.

ஜாக்3ரத்ஸ்வப்ன: ஸுஷுப்தம் ச கு3ணதோ பு3த்3தி4வ்ருத்தய: |
தாஸாம் விலக்ஷணோ ஜீவ: ஸாக்ஷித்வேன வினிஶ்சித: || 27 ||

விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் இவைகள் குணத்தின் அடிப்படையிலும், மனதில் ஓடும் எண்ணங்களாலும் அனுபவிக்கப்படுகின்றது.
உறக்கத்தில் ஆனந்தத்தை அனுபவிக்கும் எண்ணமும், அறியாமை என்கின்ற எண்ணமும்தான் இருக்கின்றது.
இந்த மூன்று நிலைகளுக்கும் வேறாக இருப்பவன் ஜீவன். இவைகளுக்கு சாட்சியாக மட்டுமே இருக்கின்றது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

யர்ஹி ஸம்ஸ்ருதிப3ந்தோ4Sயமாத்மனோ கு3ணவ்ருத்தித3: |
மயி துர்யே ஸ்தி2தோ ஜஹயாத்த்யாக3ஸ்தத்3கு3ணசேதஸாம் || 28 ||

குணத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களினால்தான் ஆத்ம ஸ்வரூபமாகிய நாம் மனதுடன் தொடர்பு கொண்டு துயரத்தை அனுபவிக்கின்றோம்.
துரிய தத்துவமான என்னிடத்திலும் உறுதியாக நின்று, பொருட்களின் மீது பற்றை வைக்கும் மனதை விலக்கிவிட வேண்டும்.
புலனுகர் பொருட்களையும், மனதையும் துறந்துவிட்டு நானே ஆத்மஸ்வரூபம் என்று நினைக்க வேண்டும்.

அஹங்காரக்ருதம் ப3ந்த4மாத்மனோSர்த2விபர்யயம் |
வித்3வான்னிர்வித்3ய ஸம்ஸார சிந்தாம் துர்யே ஸ்தி2தஸ்த்யஜேத் || 29 ||

தேவையில்லாத, தவறான உணர்வுகளும், சிந்தனைகளும், தவறாக புரிந்து கொள்ளுதலே பந்தம் எனப்படுகிறது.
இவைகள் நம்மை அனாத்மாவான உடல், மனம் இவைகளை நான் என்று அபிமானிக்க வைக்கின்றது.
நித்யம் – அநித்யம், ஆத்மா – அனாத்மா இந்த அறிவை அடைய வேண்டும். இந்த அறிவில் நிலைத்து நின்ற பின்,
என்னுடைய ஸ்வரூபத்தில் (துரியத்தில்) நிலைத்து நின்ற பின் சம்சார சிந்தனைகளை விட்டுவிட வேண்டும்.

யாவன் நானார்த2தீ4: பும்ஸோ ந நிவர்தேத யுக்திபி4: |
ஜாக3ர்த்யபி ஸ்வபன்னஞ: ஸ்வப்னே ஜாக3ரணம் யதா2 || 30 ||

ஜீவனுக்கு பொருட்கள் பலப்பல என்ற மனப்பிரமை எதுவரை ஆத்ம விசாரத்தினால் நீங்கவில்லையோ அதுவரை அவன்
விழித்துக் கொண்டிருந்தாலும், உறக்கத்தில் இருப்பவனாக கருதப்படுவான். கனவில் விழித்து கொண்டிருப்பது போல இது இருக்கின்றது.

ஆஸத்த்வாதா3த்மனோSன்யேஷாம் பா4வனாம் தத்க்ருதா பி4தா3 |
க3தயோ ஹேதவஶ்சாஸ்ய ம்ருஷா ஸ்வப்னத்3ருஶோ யதா2 || 31 ||

ஆத்மாவை தவிர மற்ற அனைத்தும் பொய்யாக இருப்பதனால், அவைகளினால் உருவான வேற்றுமைகளும் பொய்யானவையாக இருக்கும்.
இந்த உலகத்தில் நாம் அடைய நினைக்கின்ற லட்சியங்களும் மித்யா. அதை அடைய உதவும் சாதனங்களும் மித்யா.
இது எப்படி கனவில் காணப்படும் காட்சிகளும், கனவில் அடைபவைகளும் மித்யாவாக இருக்கின்றனவோ அதுபோல
விழிப்பு நிலையில் அனுபவிப்பதெல்லாம், பார்ப்பதெல்லாம் மித்யாவே என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யோ ஜாக3ரே ப3ஹிரனுக்ஷணத4ர்மிணோSர்தா2ன்
பு4ங்க்தே ஸமஸ்தகரணைர்ஹ்ருதி3 த்த்ஸத்ருக்ஷான் |
ஸ்வப்னே ஸுஷுப்த உபஸம்ஹரதே ஸ ஏக:
ஸ்ம்ருத்யன்வயாத் த்ரிகு3ணவ்ருத்தித்3ருகிந்த்ரியேஶ: || 32 ||

ஸ்தூல உடலில் அபிமானம் வைக்கும் போது வெளியே உள்ள பொருட்களை அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.
இவைகள் ஒவ்வொரு நொடியிலும் மாறிக் கொண்டேயிருக்கும் தன்மையை உடையது. தன்னுடைய புலன்களின் துணைக்கொண்டு
அனுபவிக்கின்றோம். கனவு நிலையில் விழிப்பு நிலையில் இருப்பது போல நமக்குள்ளேயே அவைகளை அனுபவிக்கின்றோம்.
ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்திலிருந்தும் நீங்கி இருக்கின்றோம். அறிவு ஸ்வரூபமாக இருக்கின்ற ஆத்ம தத்துவமாகிய நான்
ஒருவனே இந்த மூன்று நிலைகளிலும் தொடர்ச்சியாக இருப்பதால் இந்த அனுபவங்களை சொல்ல முடிகின்றது.
நான் மூன்று குணங்களினால் தோன்றிய அவஸ்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சியாக இருக்கின்றேன்.
இந்த்3ரியேஶ: – புலன்களுக்கெல்லாம் தலைவனாக இருக்கின்றேன்

ஏவம் விம்ருஶ்ய கு3ணதோ மனஸ்ஸ்த்ர்யவஸ்தா2
மன்மாயயா மயி க்ருதா இதி நிஶ்சிதார்தா2: |
ஸஞ்சி2த்3ய ஹார்தமனுமானஸதுக்திதீக்ஷ்ண
ஞானாஸினா ப4ஜத மாகி2லஸம்ஶயாதி4ம் || 33 ||

இவ்வாறு விசாரம் செய்து மனதின் மூன்று அவஸ்தைகளும், குணங்கள் மூலமாக என்னுடைய மாயையால் ஜீவனிடத்தில்
தோற்றுவிக்கப்படுகிறது என்பதை நிச்சயமாக உணர்ந்து கொள்ளுங்கள்.
எல்லா சந்தேகங்களுக்கும் ஆதாரமான அகங்காரத்தை ஞானம் என்கின்ற கூர்மையான வாளால் வெட்டி தள்ளிவிட்டு
குருவினுடைய உபதேசத்தின் மூலமாகவும், சாஸ்திரமும், குருவும் உபதேசித்ததை மனனத்தின் மூலமாக ஆராய்ந்து அடைந்த அறிவால்
உன்னுடைய இதயத்தில் வீற்றிருக்கும் என்னை அடைவாயாக

ஈக்ஷேத விப்4ரமாமித3ம் மனஸோ விலாஸம்
த்3ருஷ்டம் வினஷ்டமதிலோலமலாதசக்ரம் |
விஞானமேகமுருதே4வ விபா4தி மாயா
ஸ்வப்னஸ்த்ரிதா4 கு4ணவிஸர்க3க்ருதோ விகல்ப: || 34 ||

த்34ருஷ்டிம்தத: ப்ரதி நிவர்த்ய நிவ்ருத்தத்ருஷ்ணஸ்
தூஷ்ணீம் ப4வேன்னிஜஸுகா2னுப4வோ நிரீஹ: |
ஸந்த்3ருஶ்யதே க்வ ச யதீ3த3மவஸ்துபு3த்3த்4யா
த்யக்தம் ப்4ரமாய ந ப4வேத்ஸ்ம்ருதிரானிபாதாத் || 35 ||

இந்த உலகத்தினிடமிருந்தும், புலனுகர் போகப் பொருட்களிலிருந்தும் உன்னுடைய பார்வையை விலக்கி ஆசைகளிலிருந்து விடுபட்டு,
வைராக்கியத்தை அடைந்து மனதை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். புலன்களை அடக்கி மௌனமாக இருக்க வேண்டும்.
கர்மேந்திரியங்களை அமைதிப்படுத்தி பழக வேண்டும். மனதை அமைதியுடன் வைத்திருக்க வேண்டும்.
உன்னிடத்திலே மகிழ்ச்சியுடன் இருக்க பழகு. மனதளவில் பொறுப்புக்களை எல்லாம் விட்டுவிடு.
நான்தான் அனைத்திற்கும் காரணம் என்ற அகங்காரம் நீங்கி இருக்க வேண்டும். இவைகளெல்லம் ஞானயோக சாதனங்கள்,
இவைகளை பின்பற்றி மோட்சத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.
இந்த உலகம் வஸ்துவல்ல, உண்மையல்ல என்ற புத்தியால் நீக்கப்பட வேண்டும். ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் அனுபவத்திற்கு வந்தாலும் பழையமாதிரி சம்சாரத்தை கொடுக்காது. மரணம் அடையும்வரை இந்த உலகம்
அனுபவத்திற்கு இருக்கும் ஆனால் துயரத்தைக் கொடுக்கும் சக்தியை இழந்து விடும்.

தேஹம் ச நஶ்வரமவஸ்தி2தமுத்தி2ம் வா
ஸித்3தோ4 ந பஶ்யதி யதோSத்4ய்க3மத்ஸவரூபம் |
தை3வாத3பேத்மத2 தை3வ வஶாதுபேதம்
வாஸோ யதா2 பரிக்ருதம் மதி3ராமதாந்த4: || 36 ||

அதிக மது அருந்தியவன் தன்மீது ஆடையிருக்கிறதா, இல்லையா என்று எவ்வாறு அறிய மாட்டானோ அதுபோல
அழியக் கூடிய இந்த உடல் உட்கார்ந்து கொண்டிருந்தாலோ, நின்று கொண்டிருந்தாலோ, படுத்துக் கொண்டிருந்தாலும்,
பிராரப்தத்தினால் எங்கேயாவது போகலாம், வரலாம் இந்த எல்லா நிலையிலும் ஞானியானவன் உதாஸீனனாக இருப்பான்.
அதைப்பற்றி கவனமில்லாமல் இருப்பான், மனதால் பாதிக்கபடாமல் இருப்பான். ஞானி தனியாக இருந்தாலும்,
பலருடன் சேர்ந்திருந்தாலும் மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் இருப்பான். தன் உண்மையான ஸ்வரூபத்தை அடைந்திருப்பதால்
அவனால் இவ்வாறு இருக்க முடிகிறது.

தே3ஹோSபி தை3வ வஶக3: க2லு கர்ம யாவத்
ஸ்வாரம்ப4கம் ப்ரதிஸமீக்ஷத் ஏவ ஸாஸு: |
தம் ஸப்ரபஞ்சமதி4ரூட4 ஸமாதி4யோக:
ஸ்வப்னம் புனர்ன ப4ஜதே ப்ரதிபு3த்3த4வஸ்து: || 37 ||

ஜீவனுடைய உடலானது தெய்வத்தின் வசத்தில் இருக்கிறது. பிராரப்தத்தின் வசத்தில் இருக்கிறது.
இந்த உடல் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்ற கர்மபலன் இருக்கும்வரை உயிருடன் இருந்து கொண்டிருக்கின்றது.
பிராரப்தத்தை கழித்துக் கொண்டிருப்பான். தன்னுடலையும், உலகத்தையும் ஞானியானவன் கனவில் காணும்
பொருட்களைப் போல உணர்ந்து அதை நாடி செல்ல மாட்டான்.

மயைதது3க்தம் வோ விப்ரா கு3ஹ்யம் யத்ஸாங்க்2ய யோக3யோ: |
ஜானீத மாக3தம் யக்ஞம் யுஷ்மத்3த4ர்மவிவக்ஷயா || 38 ||

சனகாதி முனிவர்களே! என்னால் உங்களுக்கு ரகசியமானதும், யாருக்கும் தெரியாததுமான சாங்க்யம், யோகம் ஆகியவைகள் உபதேசிக்கப்பட்டது.
சாங்க்யம் என்பது ஆத்ம ஞானம், ஆத்ம தத்துவம், யோகம் என்பது அதை அடைய உதவும் சாதனங்கள்.
உங்களுக்கு இந்த உபதேசதத்தை அருளிய என்னை விஷ்ணு என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விருப்பத்துடன் வந்திருக்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்கள்

அஹம் யோக3ஸ்ய ஸாங்க்2யஸ்ய ஸத்யஸ்யர்தஸ்ய தேஜஸ: |
ப்ராயணம் த்3விஜஶ்ரேஷ்டா2: ஶ்ரிய: கீர்தேர்தமஸ்ய ச || 39 ||

பிராமணோத்தமர்களே! யோகத்தினுடைய இறுதி இலக்கு நான்தான் என்று அறிந்து கொள்ளுங்கள்.
யோகம் என்பது அனைத்து ஞானயோக சாதனங்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
சாங்க்யமான ஆத்ம விசாரமும் என்னை அடைவதற்குதான். சிலவகை ஞானயோக சாதனங்களை கூறுகிறார்.
ஸத்யஸ்ய – சாஸ்திரம் உரைக்கும் தர்மத்தை, உபதேசத்தை பின்பற்றுதல்
ரிதஸ்ய – சாஸ்திர உபதேசத்தை சரியாக புரிந்து கொள்ளுதல்
தேஜஸ் – அடைய வேண்டிய சக்திகள்
த்3விஸ்ஶ்ரேஷ்டா – மேலான பிராமணர்களே!
ஶ்ரியஹ – அனைத்து செல்வங்களை அடைவதற்கும்
கீர்தே – அடையும் புகழ் அனைத்தும்
த3மஸ்ய – புலனடக்கம்
இறுதியில் என்னை அடைவதையே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

மாம் ப4ஜந்தி கு3ணா: ஸர்வே நிர்கு3ணம் நிரபேக்ஷகம் |
ஸுஹ்ருத3ம் ப்ரியமாத்மானம் ஸாம்யாஸங்காத3யோSகு3ணா: || 40 ||

ஸர்வே குணா – எல்லா நற்பண்புகளும்
மாம பஜந்தி – என்னையே நாடித்தான் வருகின்றன்.
நற்பண்புகள் அனைத்தும் பகவானை அடைவதற்கான சாதனங்களே என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸாம்ஸம் அஸங்கம் – சமநோக்கு பார்வை, சமபுத்தியுடைய நிலை, பற்றின்மை, மனப்பூர்வமாக எல்லோரிடமும் பற்றற்று இருக்க வேண்டும்
அகு3ணா – குணங்களற்ற நிர்குண பிரம்மனை இது குறிக்கின்றது. அதை அடைய வைக்கும் குணங்கள்
நிர்குணம் – குணங்களற்றவனாகவும் அதாவது முக்குணங்களற்றவனாகவும், மாயையை கடந்து இருக்கின்ற என்னை
நிரபேக்ஷம் – யாரையும், எதையும் சார்ந்தில்லாத இருக்கின்ற என்னை
ஸுஹ்ருதம் – எல்லோருக்கும் நன்மை செய்பவன், அனுக்கிரகம் செய்பவன்
ப்ரியம் – எல்லோராலும் விரும்பப்படுபவனாகவும் இருக்கின்றேன்
ஆத்மானம் – ஜீவாத்மாவாக ஒவ்வொரு உடலுக்குள்ளும் அறிவுப் பிரகாசமாகவும் இருக்கிறேன்.
இதன் மூலம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை மறைமுகமாக உபதேசித்திருக்கிறார்.

இதி மே சி2ன்னஸந்தேஹா முனய: ஸனகாத3ய: |
ஸபா4ஜயித்வா பரயா ப4க்த்யாக்3ருணத ஸம்ஸ்தவை: || 41 ||

உத்தவா! இவ்விதம் உபதேசித்து நான் அந்த சனகாதி முனிவர்களின் சந்தேகங்களை நீக்கினேன். அவர்கள் மனதில் என்மீது பக்தி பெருகியது
பரய பக்தியா – என்மீது மேலான, புனிதமான பக்தியை அடைந்தார்கள்
ஸ பா4ஜயித்வா – என்னை வணங்கினார்கள்
ஸம்ஸ்தவை: – வேதத்திலுள்ள மந்திரங்களால்
அக்3ருணத – என் பெருமைகளை கூறி மகிழ்ந்தார்கள்
இறைவன், குரு, அரசன் இவர்களை மட்டும்தான் புகழ வேண்டும்.

தைரஹம் பூஜித: ஸம்யக்ஸம்ஸ்துத: பரமர்ஷிபி4: |
ப்ரத்யேயாய ஸ்வகம் தா4ம பஶ்யத: பரமேஷ்டி2ன: || 42 ||

சனகாதி முனிவர்களால் நன்றாக வணங்கித் துதிக்கப்பட்ட நான் மேலான ரிஷிகளால் புகழ்ந்து கொண்டிருக்கும் போதே
என்னுடைய இருப்பிடமான வைகுண்டத்திற்கு சென்று விட்டேன். அங்கு பிரம்மதேவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சென்று விட்டேன்.

இத்துடன் ஹம்ஸ கீதை முடிவுற்றது

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -6-

May 22, 2020

ஶ்ரீபகவான் உவாச
ந ரோத4யதி மாம் யோகோ3 ந ஸாங்க்2யம் தர்ம ஏவ ச |
ந ஸ்வாத்4யாயஸ்தபஸ்த்யாகோ3 நேஷ்டாபூர்தம் ந த2க்ஷிணா || 1 ||

ந ரோத4யதி மாம் – பக்தியில்லாமல் கீழ்கண்ட செயல்களை செய்தாலும் அவைகள் என்னை அடையச் செய்யாது
யோகம் ஸாங்க்2யம் – விதவிதமான யோகாஸனங்களாலும், சாஸ்திர விசாரத்தினாலும்
த4ர்ம ஏவ ச – விதவிதமான தானங்கள் செய்வதினாலும்
ஸ்வாத்4யாய – வேதத்தை ஓதுவதினாலும்
தபஹ த்4யாகஹ – விதவிதமான தவங்களை செய்வதினாலும், தியாகங்களை செய்வதாலும்
இஷ்டா பூர்தம் – யாகம், சமுதாய சேவையினாலும்
தக்ஷிணா – அந்தணர்களுக்கு தட்சணை கொடுப்பதினாலும்
என்மீது பக்தியில்லாமல் இவைகளால் என்னை அடைய முடியாது. என் அருளை பெற முடியாது

வ்ரதானி யஞஶ்ச2ந்தா3ம்ஸி தீர்தா2னி நியமா யமா: |
யதா2வருந்தே4 ஸத்ஸங்க3: ஸர்வஸங்கா3பஹோ ஹி மாம் || 2 ||

வ்ரதானி யக்ஞஹ – விதவிதமான விரதங்களை மேற்கொள்ளுதல், யாகங்களை செய்தல்
ச2ந்தா3ம்ஸி தீர்தா2னி – விசேஶ மந்திரங்களை ஜபித்தல், புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லுதல்
நியமா யமா – செய்ய வேண்டியதை கடைபிடித்துக் கொண்டும், தவிர்க்க வேண்டியவைகளை கடைபிடித்துக் கொண்டும்
ஸத்ஸங்க3 – பகவானிடம் பக்தி செய்வதைப் போல
யதா2வருந்தே4 – இவைகள் என்னை வசப்படுத்தக் கூடியவை அல்ல
ஸர்வ ஸங்கா3பஹோ ஹி மாம் – ஏனென்றால் என்மீது கொண்ட பக்தியானது எல்லாவித பற்றுதல்களையும் நீக்கி விடுகின்றன.

ஸத்ஸங்கே3ன ஹி தை3தேயா யாதுதா4னா ம்ருகா3: க2கா3: |
க3ந்த4ர்வாப்ஸரஸோ நாகா3: ஸித்3தா4ஶ்சாரணகு3ஹ்யகா: || 3 ||
வித்3யாத4ரா மனுஷ்யேஷு வைஶ்யா: ஶூத்3ரா: ஸ்த்ரியோSந்த்யஜா: |
ரஜஸ்தம:ப்ரக்ருதயஸ்தஸ்மிம்ஸ்தஸ்மின்யுகே3 யுக் || 4 ||
ப3ஹவோ மத்பத3ம் ப்ராப்தாஸ்த்வாஷ்ட்ரகாயாத4வாதய: |
வ்ருஷபர்வா ப3லிர்பா3ணோ மயஶ்சாத2 விபி4ஷ்ண: || 5 ||
ஸுக்3ரீவோ ஹனுமாந்ர்க்ஷோ க3ஜோ க்3ருத்4ரோ வணிக்பத2: |
வ்யாத4: குப்3ஜா வ்ரஜே கோ3ப்யோ யக்ஞபத்ன்யஸ்த தா2பரே || 6 ||

மேலே உள்ள நான்கு ஸ்லோகங்களில் பக்தியால் பலனடைந்தவர்களில் சிலரை உதாரணத்திற்காக கூறுகின்றார்.
உத்தவரே! என் மீது பக்தி செலுத்திய காரணத்தால் அசுர-ராட்சஸர்கள், சில விலங்குகள், பறவைகள், கந்தர்வ-அப்ரஸ்கள்,
நாகர்கள், ஸித்தர்கள், சாரண-குஹ்யக வித்யாதரர்கள் மற்றும் மனிதர்களில் வைசியர்கள், சூத்திரர்கள், பெண்களும்,
மிகக்கீழான நிலையில் உள்ளவர்கள், ஆகியோர்களும், முக்குணத்தில் எந்த குணத்தில் ஜீவர்கள் இருந்தாலும் அவர்களும்,
மேலும் பலர் என் திருவடியை அடைந்திருக்கிறார்கள்.
அவர்கள் விருத்திராசுரன், பிரகலாதன், விருஷபர்வா, பலி சக்கரவர்த்தி, பாணாசுரன், மயன், விபீஷணன், சுக்ரீவன்,
ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஜடாயு, வணிகன், தர்மவியாதன், குப்ஜை, வ்ரஜ தேசத்திலிருக்கும் கோபிகைகள்,
ரிஷிபத்தினிகள் மற்றும் பலரும் என்மீது கொண்ட பக்தியினாலே என்னை அடைந்தவர்கள்

தே நாதீ4தஶ்ருதிக3ணா நோபாஸிதமஹத்தமா: |
அவ்ரதாதப்த தபஸ: மத்ஸங்கா3ன்மாமுபாக3தா: || 7 ||

இவர்கள் விதவிதமான சாஸ்திரங்கள் படித்ததில்லை, எந்தவிதமான தியானங்களோ, உபாஸனைகளோ செய்யவில்லை.
எந்தவிதமான விரதங்களும் மேற்கொள்ளவில்லை. தவங்களும் செய்யவில்லை.
என்னிடத்தில் கொண்ட சங்கத்தினால் ஒன்றினாலே என்னை அடைந்துள்ளார்கள்

கேவலேன ஹி பா4வேன கோ3ப்யோ கா3வோ நகா3 ம்ருகா3: |
யேSன்யே மூடா4தி4யோ நாகா3: ஸித்3தா4 மாமீயுரஞ்ஜஸா || 8 ||

இறைவன் மீது செலுத்தப்படுகின்ற அன்பினால் மட்டுமே கோபிகைகள், பசுக்கள், மரங்கள், விலங்குகள், அறிவற்றவர்கள்,
நாகங்கள், சித்தர்கள் போன்றவர்கள் என்னை அடைந்தார்கள்

யம் ந யோகே3ன ஸாங்க்2யேன தானவ்ரத தபோSத்4வரை: |
வ்யாக்2யாஸ்வாத்4யாயஸன்ன்யாஸை: ப்ராப்னுயாத்3யத்னவானபி || 9 ||

எவ்வளவுதான் கடும் முயற்சி செய்தாலும், யோகம், சாஸ்திர விசாரம், தானம், விரதங்களை அனுஷ்டித்தல்,
தவம், வேள்வி, வேதாத்யயனம், ஸ்வாத்யாயம், துறவு முதலிய சாதனங்களை பின்பற்றுவதனால் மட்டும் என்னை அடைய முடியாது.

ராமேண ஸார்த4ம் மது2ராம் ப்ரணீதே ஶ்வாப2ல்மினா மய்யனுரக்தசித்தா: |
விகா3ட4பா4வேன ந மே வியோக3 தீவ்ரத4யோSன்யம் த3த்3ருஶு: ஸுகா2ய || 10 ||

என்னையும் பலராமனையும் அக்ரூரர் மதுரா நகருக்கு அழைத்து சென்ற போது பிருந்தாவனமானது என்னிடத்தில் இருந்த
ஆழங்காண முடியாத அன்பினால், பக்தியால், நிரம்பித் தளும்பியது.
பிருந்தாவனவாசிகள் என்னுடைய பிரிவினால் தாங்க முடியாத துயரத்தை அடைந்தார்கள்.
பகவான் மீது பக்தியை வளர்த்துக் கொள்ள முடியாததால் அடையும் துயரமே நம் பக்தியின் அளவை எடுத்துக் காட்டுகின்றது.
அந்த கோபிகைகள் என்னைத் தவிர வேறெதிலும் சுகத்தைக் காணவில்லை. அதனால்தான் இத்தகைய துயரத்தை அடைந்தார்கள்.

தாஸ்தா: க்ஷபா: ப்ரேஷ்டதமேன நீதா மயைவ வ்ருந்தாவனகோ3 சரேண |
க்ஷணார்த4வத்தா: புனரங்க3 தாஸாம் ஹீனா மயா கல்பஸமா ப3பூ4வு: || 11 ||

வ்ருந்தா – துளஸி; வ்ருந்தாவனம் – துளஸி மலர்களை உடைய வனம்
அவர்களுடைய எல்லையில்லாத அன்புக்குரிய பிருந்தாவனத்து இடையனான என்னுடன் பல இரவுகள் கழித்திருக்கின்றனர்.
அப்போது அந்த இரவுகள் எல்லாம் அரைநொடி பொழுதாக கழிந்தன.
ஆனால் நான் இல்லாத இரவுகள் கற்பகாலம் போல் மிகவும் நீண்டதாகி விட்டன.

தா நாவித3ன்மய்யனுஷங்க3ப3த்3த4 தி4ய: ஸ்வமாத்மானமத3ஸ்த்தே2தம் |
யதா2 ஸமாதௌ4 முனயோSப்3தி4தோயே நத்ய: ப்ரவிஷ்டா இவ நாமரூபே || 12 ||

மயி அனுஷங்க ப3த்3த4 தி4ய: – என்னிடத்தில் பிரிக்க முடியாத பிரேமை கொண்டிருந்ததால்
ஸ்வாத்மானம் – தங்களுடைய உடல், மனம் போன்றவற்றையும் மறந்திருந்தார்கள்
தா நாவிதன் – தங்களை மறந்திருந்தார்கள்
அத3 ச இத3ம் – தாங்கள் இருக்கும் சூழ்நிலைகளையும் மறந்திருந்தார்கள்
கோபிகைகள் இவ்வாறு அனாத்மாவில் உள்ள அபிமானத்தை முற்றிலுமாக இழந்தார்கள்.
முனிவர்கள் எவ்வாறு சமாதி நிலையில் தம்மை மறந்து பகவானுடன் ஒன்றிப்போகிறார்களோ
அதேபோல கோபிகைகள் என்னுடன் ஒன்றிப் போனார்கள். கடலில் கலந்து விட்ட நதிகள் எவ்வாறு தத்தம் பெயரையும்,
தனித்தன்மையையும் இழந்து விடுகின்றதோ அதுபோல என்னுடன் கலந்துவிட்ட கோபிகைகள் இருந்தார்கள்

மத்காம ரமணம் ஜாரமஸ்வரூபவிதோ3Sப3லா: |
ப்3ரஹ்ம மாம் பரம ம் ப்ராபு: ஸங்கா3ச்ச2தஸஹஸ்ரஶ: || 13 ||

கோபிகைகள் என்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்தவர்களில்லை. ஆனால் தூய்மையான மனதுடையவர்கள்.
என் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள். என்னுடைய மேலான பிரம்மத்தை அடைந்தார்கள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான
அந்தப் பெண்கள் என் மீதுள்ள பற்றினால் மட்டுமே இந்த நிலையை அடைந்தார்கள்.

தஸ்மாத்த்வமுத்3த4வோத்ஸ்ருஜ்ய சோத3னாம் ப்ரதிசோதனாம் |
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஶ்ரோதவ்யம் ஶ்ருதமேவ ச || 14 ||

ஆகவே உத்தவா! நீ சாஸ்திரங்கள் உரைத்த கட்டளைகள், விதிமுறைகளையும், சாஸ்திரத்தில் செய்யாதே என்று கூறுபவைகளையும்,
உன்னுடைய கடமைகளை, செயல்களை ஆகிய அனைத்தையும் செய்வதை விட்டுவிடு.
சந்நியாச தர்மங்கள், கேட்க விரும்பியவைகள், இதுவரை கேட்டவைகள் இவைகள் அனைத்தையும் விட்டுவிடு.

மாமேகமேவ ஶரணமாத்மானம் ஸர்வதே3ஹினாம் |
யாஹி ஸ்ர்வாத்மபா4வென மயா ஸ்யா ஹயகுதோப4ய: || 15 ||

என்னை ஒருவனையே சரணடைவாயாக. எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கின்ற என்னிடத்தில் மட்டும்
ஒன்றிய மனதுடன் சரணடைவாயாக. அப்போது எதனிடமிருந்தும் உனக்கு பயம் ஏற்படாது.
விதவிதமான காரணத்திலிருந்து அடையும் பயத்திலிருந்து விடுபடுவாய்(அக்ருதோ பய:)

ஶ்ரீஉத்3த4வ உவாச
ஸம்ஶய: ஶ்ருண்வதோ வாசம் தவ யோகே3ஶ்வரேஶ்வர |
ந நிவர்ததே ஆத்மஸ்தோ2 யேன ப்4ராம்யதி மே மன: || 16 ||

உத்தவர் கேட்கிறார்.
யோகேஸ்வர்களுக்கெல்லாம் தலைவராக இருப்பவரே! தங்களுடைய உரையைக் கேட்ட பிறகு, என் மனதில் ஒரு சந்தேகம் வந்தது.
ஆனால் அது நீங்கவில்லை. இந்த சந்தேகத்தினால் என் மனம் குழப்பமடைகின்றது. நான் கடமையை செய்ய வேண்டுமா? வேண்டாமா?
மோட்சத்திற்கு கர்மம் செய்வது மட்டும்தான் வழியா அல்லது ஞானத்தில்தான் மோட்சத்தை அடைய முடியுமா?

ஶ்ரீபகவான் உவாச
ஸ ஏஷ ஜீவோ விவரப்ரஸூதி: ப்ராணேன கோ4ஷேண க்3ருஹாம் ப்ரவிஷ்ட: |
மனோமயம் ஸூக்ஷ்ம முபேத்ய ரூபம் மாத்ரா ஸ்வரோ வர்ன இதி ஸ்த2விஷ்ட2: || 17 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
ஸ்ருஷ்டி என்பது வஸ்துவும் நாம-ரூபமும் சேர்ந்ததே.

ஸ ஏஷ ஜீவஹ – அந்த ஈஸ்வரன் (ஜீவர்களை உயிர்வாழ வைப்பவன்)
விவரப்ரஸூதி: – விதவிதமான இடங்களில் விதவிதமாக வெளிப்படுபவர்
கோ4ஷேண – காரண ருபமான சப்தமாக (பிந்து)
கு3ஹாம் – மூலாதாரத்தில்
ப்ராணேன ப்ரவிஷ்ட: – பிராண சக்தி மூலம் நுழைகின்றார்
மனோமயம் ஸூக்ஷ்மம் உபேத்ய ரூபம் – பிறகு சப்தம் சூட்சும ரூபமாக மனதில் வெளிப்படுகிறது
ஸ்த2விஷ்ட2: – சப்தம் ஸ்தூல ரூபமாக வெளிப்படுகிறது
மாத்ரா – ஒலியின் ஏற்றத்தாழ்வுகளாக (குறில், நெடில் )
ஸ்வரஹ – ஒலியை ஸ்வர பேத3த்தோடு (உச்ச ஸ்தாயி, கீழ் ஸ்தாயி)
வர்ண – எழுத்து வடிவமாக மாறுகிறது
இவ்வாறாக சப்தம் ஸ்தூல ரூபத்தை அடைகின்றது

யதா2னல: கே2Sனிலப3ந்து4ருஷ்மா ப3லேன தா3ருண்யதி4மத்2யமான: |
அணு: ப்ரஜாதோ ஹவிஷா ஸமேத4தே ததை2வ மே வ்யக்திரியம் ஹி வாணீ || 18 ||

யதா2 அனல: – எவ்விதம் அக்னியானது
அனில ப3ந்து4: – வாயுவால் வளர்க்கப்படுகிறது
கே2 ஊஷ்மா – ஆகாயத்தில் உஷ்ணரூபமாக (காரண ரூபமாக இருக்கின்றது)
ப3லேன தா3ருணி அதி4மத்2யமான: – அரணிக்கட்டைகளை பலமாக உராயும் போது
அணு: ப்ரஜாதோ – சிறு பொறியாக வெளிப்படும் (சூட்சும வடிவமாக இருக்கிறது)
ஹவிஷா ஸமேத4தே – நெருப்பு பற்றிக் கொள்ளும் பொருளுடன் சேர்ந்து பெரிய அக்னியாக மாறுகின்றது. (ஸ்தூல வடிவம்)
ததை2வ – அதுபோல
மே – என்னுடைய சப்த பிரம்மம்
வ்யக்திரியம் ஹி வாணீ – முத்லில் மிக நுண்ணிய உருவம் எடுத்து, பின்னர் ஸ்தூல வடிவம் எடுக்கின்றது.
பரபிரம்மமான நானே சப்தபிரம்மமாக வெளிப்படுகிறேன்.

ஏவம் க3தி3: கர்ம க3திர்விஸர்கோ3 க்4ராணோ ரஸோ த்3ருக்ஸ்பர்ஶ: ஶ்ருதிஶ்ச |
ஸங்கல்பவிஞானமதா2பி4மான: ஸூத்ரம் ரஜ:ஸத்த்வதமோவிகார: || 19 ||

சத்துவ, ரஜோ, தமோ குணங்களின் மாறுபட்ட சேர்க்கைகளே ஸ்ருஷ்டியாக உருவாகிறது
ஹிரண்யகர்ப்பன் என்கின்ற தத்துவம் முதலில் தோன்றியது. இவ்வாறு கர்மேந்திரியங்களின் சக்திகளான, பேசுதல்,
செயல்களை செய்யும் கைகள், நடக்க உதவும் கால்கள், உடலிலிருந்து கழிவுப்பொருட்களை வெளியேற்றவது (மலம்) போன்றவைகள்.
ஞானேந்திரியங்களின் சக்திகளான நுகர்தல், சுவைத்தல், பார்த்தல், தொடுதல், கேட்டல் போன்றவைகள்,
சங்கல்பம் செய்ய வல்ல மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இவைகளெல்லாம் தோன்றின

அயம் ஹி ஜீவஸ்த்ரிவ்ருத3ப்3ஜயோ நிரவ்யக்த ஏகோ வயஸா ஸ ஆத்3ய: |
விஶிலஷ்டஶக்திர்ப3ஹுதே4வ பா4தி பீ3ஜானி யோனிம் ப்ரதிபத்3ய யத்3வத் || 20 ||

இந்த ஈஸ்வர தத்துவம் முக்குண மாயையை தன்னுடைய சக்தியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
சூட்சும பிரபஞ்சத்திற்கு காரணமாக இருப்பவர். ஆனால் அவர் வெளித்தோற்றத்திற்கு வராதவர். புலன்களால கிரகிக்க முடியாதவர்.
அவர் ஒன்றாகத்தான் இருக்கின்றார். காலத்தையும் கடந்து இருப்பவர். விதவிதமான சக்திகளாக வெளிப்பட்டு இருக்கிறார்.

யஸ்மின் இத3ம் ப்ரொதமஶேஷமோதம் யடோ யதா2 தந்துவிதானஸம்ஸ்த2: |
ய ஏஷ ஸம்ஸாரதரு: புராண: கர்மாத்மக: புஶ்ப்ப2லே ப்ரஸூதே || 21 ||

இந்த சம்சாரம் மரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. இது தொன்று தொட்டு இருக்கின்றது. இது கர்ம ஸ்வரூபமாக இருக்கின்றது.
அதாவது சம்சாரம் என்பது செயல் விளைவுகளின் தொடர்ச்சியாக இருக்கின்றது. மரமானது மலர்களை, பழங்களை உற்பத்தி செய்வதுபோல்
இந்த சம்சாரம். செயலையும், அதன் விளைவையும் கொடுக்கின்றது. சுக-துக்கங்களை கொடுத்து கொண்டு இருக்கின்றது.
துணியென்பது குறுக்கும், நெடுக்குமாக நெய்யப்பட நூல்தான் என்பது போல இந்த உலகம் பகவானில் விளங்கிக் கொண்டிருக்கின்றது

த்3வே அஸ்ய பீ3ஜே ஶதமூலஸ்த்ரினால: பஞ்சஸ்கந்த4: பஞ்சரஸப்ரஸூதி: |
த3ஶைகஶாகே2 த்3விஸுபர்ணனீSஸ்த்ரிவல்கலோ த்3விப2லோSர்கம் ப்ரவிஷ்ட: || 22 ||

சம்சாரம் என்ற மரத்திற்கு இரண்டு விதைகள் (பாவ-புண்ணியம்), நூற்றுக்கணக்கான வேர்கள் (மனப்பதிவுகள்-வாஸனைகள், ஆசைகள்),
மூன்று முக்கிய பிரதான கிளைகள் (ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்கள்), ஐந்து பெரிய கிளைகள் (பஞ்ச பூதங்கள்),
ஐந்து வகைச் சாறுகள் (ஞானேந்திரியங்கள் வழியாக கிடைக்கும் அனுபவங்கள், சுவை, ஒலி, ஒளி, ஓசை, நாற்றம்),
பதினொன்று சிறு கிளைகள் (ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம்),
இரண்டு அழகான பறவைகளின் கூடுகள் (ஜீவன், ஈஸ்வரன் ), மூன்று பட்டைகள் (வாத, பித்தம், கபம்),
இரண்டுவிதமான பழங்கள் (சுகம், துக்கம்), இத்தகைய சம்சாரம் என்கின்ற மரம் பிரம்மலோக வரை வியாபித்துள்ளது

ஆத3ந்தி சைகம் ப2லமஸ்ய க்3ருத்4ரா த்3ராமேசரா ஏகமரண்யவாஸா: |
ஹம்ஸா ய ஏகம் ப3ஹுருபமிஜ்யைர்மாயாமயம் வேத3 ஸ வேத3 வேத3ம் || 23 ||

கிராமத்தில் இருக்கும் கழுகுகள் இந்த சம்சார மரத்தில் உள்ள ஒருவிதமான பழத்தை சாப்பிடுகின்றது.
காடுகளில் வாழ்கின்ற ஹம்ஸா என்கின்ற பறவைகள் சுகம் என்ற பழத்தை புசிக்கின்றது.
ஞானி ஒன்றாக உள்ள ஈஸ்வரனையும், பலவிதமாக மாயையினால் தோன்றி இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தை மாயாமயமாக உள்ளது
என்று குருமுகமாக அறிந்து இருக்கின்றான். அவன் வேதத்தையே அறிந்தவனாகின்றான்.

ஏவம் கு3ருபாஸனயைகப4க்த்யா வித்3யாகுடா2ரேண ஶிதேன தீ4ர: |
விவ்ருஶ்ச்ய ஜீவாஶயமப்ரமத்த: ஸம்பத்3ய சாத்மானமத2 த்யஜாஸ்த்ரம் || 24 ||

இவ்விதம் சாதகன் குருவை அடைந்து முறையாக உபதேசம் பெற்று, பிளவுப்படாத பக்தியுடன், சிரத்தையுடன் கூடிய அன்புடன்,
ஞானம் என்ற கூர்மையாக்கப்பட்ட வாளால் (நிதித்யாஸனம்), நான் ஜீவன் என்ற அக்ஞானத்தை, சரீர அபிமானத்தை
ஆத்மாவில் இருந்து பிரித்து எடுத்து விட வேண்டும். இதை மிகக்கவனமாக செய்ய வேண்டும். ஆத்ம ஸ்வரூபத்தை அடைய வேண்டும்.
பிறகு இறுதியில் ஞான வடிவமான ஆயுதத்தை எறிந்துவிட வேண்டும். அதாவது சாஸ்திரம், குரு, ஈஸ்வரன் இவைகளையும் விட்டுவிட வேண்டும்.

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -5-

May 22, 2020

ஶ்ரீபகவன் உவாச
ப3த்3தோ4 முக்த இதி வ்யாக்2யா கு3ணதோ மே ந வஸ்துத: |
கு3ணஸ்ய மாயாமூலத்வான் ந மே மோக்ஷோ ந ப3ந்த4னம் || 1 ||

ப3த்3தோ4 முக்த இதி – நான் பந்தத்துடன் இருக்கிறேன். மோட்சத்தில் இருக்கிறேன் என்ற
வ்யாக்2யா – நினைவானது, எண்ணமானது, அனுபவமானது
மே கு3ணதஹ ந வஸ்துத: – என்னுடைய சத்துவ, ரஜஸ், தமஸ் குணத்தின் காரணமாக வந்திருக்கிறது. உண்மையிலே அவைகள் இல்லை.
சத்துவம் மோட்சத்திற்கு காரணமாகவும், ரஜோ குணம் சம்சாரத்தின் வெளிப்பாடாகவும், தமோ குணம் சம்சாரத்திற்கு காரணமாகவும் இருக்கிறது
கு3ணஸ்ய மாயாமூலத்வான் – முக்குணங்களுக்கு என்னுடைய மாயையே மூலமாக உள்ளது
ந மோக்ஷோ ந ப3ந்தனம் –

ஶோகமோஹௌ ஸுக2ம் து:க2ம் தே3ஹாபத்திஶ்ச மாயயா |
ஸ்வப்னோ யதா2த்மன: க்2யாதி: ஸம்ஸ்ருதிர் ந து வாஸ்தவீ || 2 ||

ஶோகமோஹௌ ஸுக2ம் து:க2ம் – மனதில் அனுபவிக்கும் துயரங்கள், மதிமயக்கம், இன்ப-துன்பங்கள்
தே3ஹ ஆபத்தி – மீண்டும் மீண்டும் பிறத்தல், அதாவது பிறப்பு-இறப்பு
மாயயா – இவைகளெல்லாம் மாயையினால் உருவாகின்றது
யதா2 – எவ்விதம்
அவரவர்கள் மனதினால் தோற்றுவிக்கும் கனவுலக அனுபவங்கள் மித்யாவாக இருக்கின்றதோ அதுபோல
விழிப்புலகில் மீண்டும் மீண்டும் பிறப்பதும் உண்மையல்ல.

வித்3யாவித்3யே மம தனூ வித்3த்4யுத்3த4வ ஶரீரிணாம் |
மோக்ஶபந்த4கரீ ஆத்3யே மாயயா மே வினிர்மிதே || 3 ||

அறியாமையினால் பந்தத்தில் இருக்கிறோம். அறிவினால் மோட்சத்தை அடைகின்றோம்.
ஜீவர்களிடத்தில் இருக்கும் அறியாமையும், அறிவும் என்னுடைய சக்தியாக இருக்கின்றது.
வித்யா என்ற சக்தி மோட்சத்தையும், அவித்யா சக்தியானது பந்தத்தில் வைத்திருக்கும்.
இவை என்னிடத்தில் உள்ள மாயையினால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏகஸ்யைவ மமாம்ஶஸ்ய ஜீவஸ்யைவ மஹாமதே |
ப3ந்தோ4 அஸ்யாவித்3யயானாதிர்வித்யயா ச ததே2தர: || 4 ||

ஏகஸ்ய ஏவ – ஒருவனாக மட்டும் இருக்கின்ற
மம அம்ஶஸ்ய – என்னுடைய அம்சமாக இருக்கின்ற (சூரியனுடைய பிரதிபிம்பம் அதனுடைய அம்சமாக இருப்பது போல)
ஜீவஸ்ய ஏவ – ஜீவனிடத்தில்தான் பந்தமும்,மோட்சமும் இருக்கிறது
மஹாமதே – ஹே உத்தவரே! (மதி மிக்கவரே)
பந்த3ஹ அஸ்ய அவித்3யா – அந்த ஜீவன் அறியாமையின் வசத்தில் இருக்கும் போது பந்தத்தில் இருக்கிறான்
வித்3யயா – வித்யாவினுடைய வசத்தில் இருக்கும் போது மோட்சத்தில் இருக்கிறான்
தத2 இதர அனாதி3 – இவைகள் அனாதி காலத்திலிருந்து இருந்து கொண்டிருக்கிறது.

அத2 ப3த்3த4ஸ்ய முக்தஸ்ய வைலக்ஷண்யம் வதா3மி தே |
விருத்3த4 த4ர்மிணோஸ்தாத் ஸ்தி2தயோரேக த4ர்மிணி || 5 ||

அத2 – இனி
ப3த்3த4 முக்தஸ்ய வைலக்ஷண்யம் வதா3மி தே – உனக்கு பந்தப்பட்டவனுக்கும் முக்தியை அடைந்தவனுக்கும்
இடையே உள்ள வேற்றுமையை கூறுகிறேன்
விருத்3த4 தா4ர்மிணோஸ்தாத் – வேறுபட்ட இரண்டு தர்மங்களுடன் இருப்பவர்கள்
ஏக த4ர்மிணி ஸ்தி2தயோ – ஒரே உடலில்தான் இருக்கிறார்கள்

ஸுபர்ணாவேதௌ ஸத்3ர்ஶௌ ஸகா2யௌ
யத்3ர்ச்ச2யைதௌ க்ருதனீடௌ3 ச வ்ருக்ஷே |
ஏகஸ்தயோ: கா2த3தி பிப்பலான் ந மன்யோ
நிரன்னோSபி ப3லேன பூ4யான் || 6 ||

இரண்டு பறவைகள் (முக்தன், சம்சாரி) உணர்வின் அடிப்படையில் ஒரே தன்மையுடையது. பிரிக்க முடியாதவைகள்,
கர்ம வசத்தினால் இந்த மரத்தில் கூடுகட்டிக் கொண்டு அவரவர்கள் கர்மபலன்களுக்கேற்ப உடல் என்ற மரத்தில்
மனம் என்ற கூடு கட்டிக் கொண்டு அந்த மரத்தில் உள்ள பழங்களை சாப்பிட்டு கொண்டிருக்கிறது.
மற்றொரு பறவை சாப்பிடாமல் இருந்த போதிலும் (சாப்பிட்டுக் கொண்டிருக்கின்ற பறவையை விட) அதிக பலத்துடன் இருக்கிறது..
ஒரு பறவை கர்த்தா, போக்தாவாக இருந்து கொண்டு அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.
சுக-துக்கங்களில் மூழ்கியிருக்கின்றான்.
வேறொரு பறவை (ஞானி) வைராக்கிய ஞான பலத்துடன் இருக்கிறான். எதையும் அனுபவமாக ஏற்றுக் கொள்ளமாட்டான்.

ஆத்மானமன்யம் ச ஸ வேத3 வித்3வானபிப்பலாதோ3 ந து பிப்பலாத3: |
யோSவித்3யயா யுக்த து நித்யப3த்3தோ4 வித்யாமயோ ய: ஸ து நித்யமுகத: || 7 ||

ந து பிப்பலாத3 – பழத்தை சாப்பிடும் பறவை இதை அறிவதில்லை
யஹ – எந்தவொரு ஜீவன்
அவித்3யயா யுக் – அறியாமையுடன் இருக்கின்றானோ
ஸ து நித்யபத்3த4ன் – அவன் எப்போதும் பந்தப்பட்டவனாக இருக்கிறான்
யஹ வித்யயா ஸாது நித்யமுக்தஹ – எந்தவொரு ஜீவன் அறிவுடன் இருக்கின்றானோ அவன் கண்டிப்பாக முக்தனாக இருக்கிறான்

தே3ஹஸ்தோ2 அபி ந தே3ஹஸ்தோ2 வித்வான் ஸ்வப்னாத்3யதோ உத்தி2த: |
அதே3ஹஸ்தோ2 அபி தே3ஹஸ்த2: குமதி: ஸ்வப்னத்3ருக்யதா || 8 ||

தே3ஹஸ்த2 அபி ந தே3ஹஸ்த2ஹ வித்3வான் – அவன் உடலோடு இருந்தாலும் உடல் இல்லாதவன்.
பொதுவாக ஒவ்வொருவரும் அவரவர் உடலின் தர்மத்திற்கேற்றவாறு செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஞானி எந்த சூழ்நிலையிலும் தன் அறிவிலிருந்து பிறழ மாட்டான். உடல் சக்தியுடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதனால் பாதிக்கப்படமாட்டான்.
வித்3வான் ஸ்வப்னாத் யதா2 உத்தி2தஹ – கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல இருப்பான் ஞானி
அதே3ஹஸ்த2ஹ அபி தே3ஹஸ்த: – இல்லாத தேகத்துடன் அபிமானம் வைத்து செயல்படுபவன் தேகத்தையுடையவனாக இருக்கிறான்
குமதி ஸ்வப்னத்3ருக்3யதா2 – அக்ஞானி கனவை கண்டு கொண்டிருப்பவன் போல இந்த நிலை இருக்கின்றது.

இந்த்3ரியைரிந்த்3ரியார்தே2ஷு கு3ணைரபி கு3ணேஷு ச |
க்3ருஹ்யமாணேஷ்வஹம் குர்யான் ந வித்3வான் யஸ்த்வ்விக்ரிய: || 9 ||

வித்3வான் அவிக்ரியஹ – ஞானியானவன் சஞ்சலமற்ற தெளிவான மனதுடையவன். புலன்கள் விஷயங்களோடு சம்பந்தம்
வைக்கும்போது மனம் விகாரமடைகின்றது. மேலும் மனம் சித்தத்திலுள்ள பழைய எண்ணங்களுடன் சம்பந்தம் வைக்கும் போதும் விகாரமடைகிறது
இந்த்3ரியைரிந்த்3ரியார்தே2ஷு கு3ணைரபி கு3ணேஷு ச – குணங்களாலான புலன்கள் மூலமாக அந்தந்த குணங்களால்
புலன்களுக்குரிய விஷயங்களுடன், பொருட்களுடன்
க்3ருஹ்யமாணேஷு – சம்பந்தம் வைக்கும்போது
ந அஹம் குர்யான் – ஞானி இந்த நிலையில் நான் எதுவும் செய்யவில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பான்.

தைவாதீ4னே ஶரீரேSஸ்மின் கு3ணபா4வ்யேன கர்மணா |
வர்தமானோSபு3த4ஸ்தத்ர கர்தாஸ்மீதி நிப3த்4யதே || 10 ||

தை3வாதீ4னே – நம்முடைய பிராரப்தத்தை சார்ந்துள்ளதும்
அஸ்மின் ஶரீரே – இந்த ஸ்தூல, சூட்சும உடலில்
கர்மணா – செய்த கர்மத்தால் அடைந்த, கர்மத்தின் பலனாக அடைந்த
கு3ணபா4வ்யேன – குணங்களின் தூண்டுதலால் (செய்த செயலின் விளைவாக) அடைந்த பலன்கள்
அபுத4 தத்ர – அக்ஞானி அந்த உடலால், மனதால் செய்யப்படும் செயல்களனைத்தும்
கர்தா இதி நிப3த்4யதே – நான்தான் இதை செய்கிறேன் என்ற அகங்காரம் கொள்கிறான்
வர்தமானஹ – அபிமானித்துக் கொண்டிருக்கின்றான்.

ஏவம் விரக்த: ஶயன ஆஸனாடனமஜ்ஜனே
தர்ஶனஸ்பர்ஶனக்4ராண போ4ஜனஶ்ரவணதி3ஷு || 11 ||
ந ததா2 ப3த்4யதே வித்3வான்தத்ர தத்ராதயன்கு3ணான்
ப்ரக்ருதிஸ்தோ2Sப்யஸம்ஸக்தோ யதா2 க2ம் ஸவிதானில: || 12 ||

இந்த மாதிரி பூரண வைராக்கியத்தை அடைந்த ஞானி தூங்குவது, உட்காருவது, சுற்றித்திரிவது, உடலை தூய்மைபடுத்துவது,
பார்ப்பது, தொடுவது, முகர்வது, உண்பது, கேட்பது முதலான செயல்களைச் செய்வதாலும் அவைகளினால் பந்தப்படமாட்டான்.
தத்ர தத்ர ஆதா3யன் கு3ணான் – அந்தந்த புலன்களின் விஷயங்களோடு சேர்ந்து விவகாரம் செய்யும் போது அவன் பந்தப்படுவதில்லை
ப்ரக்ருதிஸ்த2ஹ – ஸ்தூல உடலிலிருந்து விவகாரம் செய்தாலும்
அஸம்ஸக்தோ – அதனோடு பற்றோடு சம்பந்தப்படுவதில்லை
யதா2 க2ம் ஸவிதானிலஹ – எவ்வாறு ஆகாயம், சூரியன், வாயு, செயல்படுகின்றதோ அதுபோல செயல்படுகின்றான்.
செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் எதனோடும் பந்தப்படுவதில்லை

வைஶாரத்3யேக்ஶயாஸங்க3 ஶிதய சி2ன்னஸம்ஶய: |
ப்ரதிபு3த்3த4 இவ ஸ்வப்னான் நானாவாத்3 வினிவர்ததே || 13 ||

சி2ன்னஸம்ஶய – சந்தேகங்களை நீக்கியவன். இது மனனத்தின் சாதனம் மூலமாக சந்தேகங்களை அனைத்தையும் நீக்கிக் கொள்கிறான்
அஸங்க3 ஶிதயா – அடைந்த ஞானத்தை பற்றின்மை என்ற சாதனம் மூலமாக பலப்படுத்த் கொள்கின்றான்.
இதுவே நிதித்யாஸனம் என்று அழைக்கப்படுகிறது.
ப்ரதிபு3த்3த4 இவ ஸ்வப்னான் – கனவிலிருந்து விழித்தவன் போல
நானாவாத்3 வினிவர்ததே – இருமையிலிருந்து விடுதலை அடைகின்றான்.
ஶிதயா-கூர்மையாக்குதல்,

யஸ்ய ஸ்யுர்விதஸங்கல்பா: ப்ராணேந்த்3ரியர்னனோதி4யாம் |
வ்ருத்தய: ஸ வினிர்முக்தோ தே3ஹஸ்தோ2Sபி ஹி தத்3கு3ணை: || 14 ||

ஞானியானவன் எந்த செயலாலும் பந்தப்படமாட்டார். செய்கின்ற எந்த செயலுக்குப் பின்னாலும் எந்தவிதமான சங்கல்பம் எதுவும் இருக்காது.
எனவே அதனால் பந்தப்படாமல் இருக்கிறார்.
யஸ்ய ஸ்யு: வீதஸங்கல்பா: – யாரொருவன் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்
ப்ராண – கர்மேந்திரியங்களால்,
இந்தி3ரிய – ஞானேந்திரியங்களால்,
மனோ தி4யாம் – மனதினால், புத்தியால்
வ்ருத்தய: – செய்யப்படும் செயல்கள்
தே3ஹஸ்த2 அபி ஹி – தேகத்தில் இருந்த போதிலும்
தத்3கு3ணை: – தேகத்திலுள்ள குணங்களினால்
ஸஹ வினிர்முக்தோ – அவன் முக்தியை அடைந்தவன்

யஸ்யாத்மா ஹிம்ஸ்யதே ஹிம்ஸ்ரைர்யேன கிஞ்சித்3யத்3ருச்ச2யா |
அர்ச்யதே வா க்வசித்தத்ர ந வ்யதிக்ரியதே பு3த4: || 15 ||

யேன கிஞ்சித் யத்3ருச்ச2யா – ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ( பிராரப்தத்தினால்)
யஸ்ய ஆத்மா – எந்த ஞானியுடைய உடலானது
ஹிம்ஸ்ரைஹி – மற்றவர்களால், சூழ்நிலைகளால்
ஹிம்ஸ்யதே – துன்பப்படுத்தப்பட்டாலும்
அர்ச்யதே வ க்வசித் – எப்பொழுதாவது போற்றப்பட்டாலோ
தத்ர ந வ்யதிக்ரியதே பு3த4ஹ – அவைகளால் மனதால் பாதிக்கப்படமாட்டான். அவைகளை பொருட்படுத்த மாட்டான்.

ந ஸ்துவீத ந நிந்தே3த குர்வத: ஸாத்4வஸாது4 வா |
வத3தோ கு3ணதோஷாப்4யாம் வர்ஜித: ஸமத்3ருங்முனி: || 16 ||

ஸாது3 குர்வதஹ வத3தே – நல்ல செயல்களை செய்பவர்களையும், பேசுபவர்களையும்
ந ஸ்துவீத – யாரையும் புகழ்ந்து பேசமாட்டான்
அஸாது3 குர்வதஹ வத3தஹ – தீய செயல்களை செய்பவர்களை, பேசுபவர்களை
ந நிந்தே3த – யாரையும் இகழ மாட்டான்
கு3ணதோ3ஶாப்4யாம் வர்ஜிதஹ – நல்லது-கெட்டது, தர்மம்-அதர்மம் இவைகளை கடந்தவனாக
ஸமத்3ருங்முனி: – ஞானி எல்லாவற்றிலும் சமநோக்குடன் இருப்பான்

குர்யான்ன வதே3த்கிஞ்சித் ந த்4யாயேத்ஸாத்4வஸாது4 வா |
ஆத்மாராமோSன்யா வ்ருத்தயா விசரேத் ஜட3வன் முனி: || 17 ||

ஸாது4 அஸாது4 வா – நல்லது கெட்டது
ந குர்யாத் ந வதேதி – எதையும் செய்யாமலும், எதையும் பேசாமலும்
கிஞ்சித் ந த்4யாயேத் – தியானம் எதுவும் செய்யாமலும்
ஆத்மாராமஹ – தன்னிடத்திலேயே மகிழ்ந்து கொண்டிருப்பான்
அனயா வ்ருத்த்யா – இப்படிபட்ட வாழ்க்கை முறையில்
விசரேத் ஜட3வன் முனி: – ஜடம் போல வாழ்ந்து கொண்டிருப்பான் ஞானி. மற்றவர்கள் பார்வைக்கு சாதாரணமாக தோன்றிக் கொண்டிருப்பான்.

ஶப்3த3ப்3ரஹ்மணி நிஷ்ணாதோ ந நிஷ்ணாயாத்பரே யதி3 |
ஶ்ரமஸ்தஸ்ய ஸ்ரமப2லோ ஹயதே4னுமிவ ரக்ஷத: || 18 ||

ஶப்3த3 ப்3ரஹ்மணி – சாஸ்திரனுடைய சப்தத்தில் மட்டும்
நிஷ்ணாதஹ – தேர்ச்சி பெற்றவன், பயிற்சி பெற்றுள்ளவன்
யதி3 பரே – ஒருவேளை மேலான பிரம்மத்தை (அ) சாஸ்திர சப்த அர்த்தத்தை அறிவதில் தேர்ச்சி அடையவில்லையென்றால்
ஶ்ரம தஸ்ய – அந்த சாதகனுதைய முயற்சியெல்லாம், உழைப்பெல்லாம்
ஶ்ரம ப2லஹ – வீணாகி விடும், பயற்றதாகி விடும், வீணாகி போவதுதான் பலன்
அதே4னும் இவ ரக்ஷதஹ – இது பால் கொடுக்காத பசுமாட்டை பராமரிப்பது போல இருக்கிறது.

கா3ம் து3க்3த4தோ3ஹாமஸர்தீ ச பார்யாம் தே3ஹம் பராதீ3னமஸத்ப்ரஜாம் ச |
வித்தம் த்வதீர்தீ2க்ருதமங்க3 வாசம் ஹீனாம் மயா ரக்ஷதி து3:க2து2:கீ || 19 ||

கா3ம் து3க்3த4தோ3ஹாம – கறவை நின்ற பசு,
அஸதீம் ச பா4ர்யாம் – நம்பிக்கைத் துரோகமுள்ள மனைவி
தே3ஹம் பராதீ4னம் – பிறருக்காக ஊழியம் செய்து வாழ்வது, அடிமைபட்டு வாழ்ந்து கொண்டிருப்பது
அஸத் ப்ரஜாம் ச – நல்லொழுக்கமில்லாத மைந்தன்
வித்தம் து அதீர்தீ2க்ருதம் – தீயவழிகளில் செலவழிக்கப்படுகின்ற செல்வம்
அங்க3 – ஹே உத்தவா!
வாசம் ஹீனாம் மயா – இறைவனைப் பற்றி பேசாமலிருப்பவர்கள்
து3:க2து3:கி2 – இவைகளை உடையவர்கள் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்

யஸ்யாம் ந மே பாவனமங்க3 கர்ம ஸ்தி2த்யுத்3ப4வப்ராண நிரோத4மஸ்ய |
லீலாவதாரேப்ஸிதஜன்ம வா ஸ்யாத்3வந்த்4யாம் கி3ரம் தாம் பி3ப்4ருயான் ந தீ4ர: || 20 ||

தீரன், சாதகன் வெறும் சப்த3த்தை மட்டும் சுமந்து கொண்டிருக்கக்கூடாது.
அங்க3 – உத்தவா
மே பா4வனம் கர்ம – என்னுடைய புனிதமான செயல்களின் பொருளை தெரிந்து கொள்ளாத
அஸ்ய இந்த
ஸ்திதி உத்3ப4வ ப்ராண நிரோத – ஸ்ருஷ்டி, லய, பராமரிப்பு

ஏவம் ஜிக்3ஞாஸயாபோஹய நானாத்வப்4ரமமாத்மனி |
உபாரமேத விரஜம் மனோ மய்யர்ப்ய ஸர்வேகே3 || 21 ||

இவ்விதம் வேதாந்த விசாரத்தின் (ஜிக்ஞாஸயா) ஈடுபட்டு
மனோ மயார்ப்ய ஸர்வகே3 – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற என்னிடத்தில் தூய்மையான மனதை நிலைநிறுத்தி
உபாரமேத – அமைதியுடன் இருப்பாயாக. மற்ற எண்ணங்களிலிருந்து, செயல்களில் இருந்து விலகி உன்னிடத்தில் அமைதியாக இருப்பாயாக.

யத்3யனீஶோ த4ரயிதும் மனோ ப்3ரஹ்மணி நிஶ்சலம் |
மயி ஸர்வாணி கர்மாணி நிரபேக்ஷ: ஸமாசர || 22 ||

ஒருவேளை மனதை உறுதியாக பிரம்மத்தில் நிலைநிறுத்துவதற்கு முடியவில்லையென்றால்,
செய்கின்ற எல்லா செயல்களையும் அதனால் வரும் பலனை விட்டுவிட்டு எனக்காக நன்கு செய்து வர வேண்டு.ம்.

ஶ்ரத்3தா4லுர்மத்கதா2: ஶ்ருண்வன்ஸுப4த்3ரா லோகபாவனீ: |
கா3யன் அனுஸ்மரன் கர்ம ஜன்ம சாபி4னயன் முஹு: || 23 ||

ஶ்ரத்3தா4லு: – பகவான் மீது அன்பு செலுத்தியவனாக
மே கதா2 ஶ்ருண்வன் – இறைவனைப் பற்றிய மங்களமானவைகளும், மனிதர்களுடைய மனதை தூய்மைபடுத்துபவைகளுமான
ஸுப3த்3ரா – மங்களமானவைகளும்
லோகபாவனீ: – மனிதர்களுடைய மனதை தூய்மைபடுத்துபவைகளுமான
கா3யன் – இறைவனது பெருமைகளை பாட வேண்டும்.
அனுஸ்மரன் – அவைகளை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
முஹு: – அடிக்கடி இறைவன் புரிந்து செயல்களையும், பிறப்பையும், அவருடைய கதைகளை நாடகமாக நடிக்க வேண்டும்.

மத3ர்த2 த4ர்மகாமார்தா2னாசரன்மத3பாஶ்ரய: |
லப4தே நிஶ்சலாம் பக்திம் மய்யுத்3த4வ ஸனாதனே || 24 ||

உத்தவரே! இவ்வாறு என் பொருட்டாகவே என்னையே புகலிடமாகக் கொண்டு தர்ம-அர்த்த-காம புருஷார்த்தங்களை
செய்து வருபவர் என்றும் இருக்கின்ற பரமாத்வான என்னிடம் அசைக்க முடியாத பக்தியை பெறுகிறார்.

ஸத்ஸங்க3லப்3த்4யா ப4க்த்யா மயி மாம் ஸ உபாஸிதா |
ஸ வை மே தரிஶிதம் ஸத்3பி4ரஞ்ஜஸா விந்த3தே பத3ம் || 25 ||

விஷயத்தில் விருப்பம் உடையவர்களுடன் நட்பு உறவு வைத்துக் கொள்ளுதலே ஸத்ஸங்கம்.
நற்குணங்களை உடையவர்களிடத்தில் வைக்கும் உறவும் சத்ச‘ங்கம்தான், குருவிடம் வைக்கும் உறவும் ஸத்ஸங்கம்

ஶ்ரீஉத்3த4வ உவாச
ஸாது4ஸ்தவோத்தமஶ்லோக மத: கீத்3ருக்3வித4: ப்ரபோ4 |
ப4க்திஸ்த்வய்யுபயுஜ்யேத கீத்3ர்ஶீ ஸத்3பி4ராத்3ருதா || 26 ||

உத்தவர் கேட்டார்.
உத்தமஶ்லோக – நற்கீர்த்தி உடையவரே! பகவானே!
கீத்3ருக்3வித4: – எப்படிபட்ட குணங்களுடன் இருப்பான்
பக்தி த்வய உபயுஜ்யேத – உங்களிடத்தில் செலுத்தப்படுகின்ற பக்தியானது
ஸத்3பி4ராத்3ருதா – சான்றோர்களால அங்கீகரிக்கப்பட்ட அல்லது பின்பற்றப்பட்ட பக்தியானது
கீத்3ருஶீ – எந்த முறையில் இருக்கும்

ஏதன்மே புருஷாத்4யக்ஷ லோகாத்4யக்ஷ ஜக3த்ப்ரபோ4 |
ப்ரணதாயானுரக்தாய ப்ரபன்னாய ச கத்2யதாம் || 27 ||

புருஷாத்4யக்ஷ – எல்லா ஜீவர்களுக்கும் தலைவனாகவும்
லோகாத்4யக்ஷ – எல்லா லோகங்களுக்கும் தலைவனாகவும்
ஜக3த்ப்ரபோ4 – இந்த உலகத்துக்கும் தலைவனாகவும் இருக்கின்ற பகவானே!
ப்ரணதாய – உங்களை வணங்கி கொண்டிருக்கும்
அனுரக்தாய – உங்கள் மீது முழுமையான அன்பை வைத்திருக்கும்
ப்ரபன்னாய ச – மேலும் உங்களிடம் முழுமையாக சரணடைந்திருக்கும்
எதத்3 மே கத்2யதாம் – எனக்கு இந்த கேள்விக்கான பதிலை கூறுங்கள்

த்வம் ப்3ரஹ்ம பரமம் வ்யோம புருஷ: ப்ரக்ருதே: பர: |
அவதீர்னோSஸி ப4க3வன்ஸ்வேச்சோ2பாத்தப்ருத2க்3வபு: || 28 ||

நீங்களே அழியாத, மேலான பிரம்மமாக இருக்கிறீர்கள். ப்ரக்ருதியான இந்த படைப்புக்கும் மேலான புருஷனாக இருக்கிறீர்கள்.
இறைவா! நீங்கள் அவதாரம் எடுத்துள்ளீர்கள். உங்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் இந்த உடலை எடுத்துள்ளீர்கள்.

க்ருபாலுரக்ருதத்3ரோஹஸ்திதிக்ஷு: ஸர்வதே3ஹினாம் |
ஸத்யஸாரோSனவத்3யாத்மா ஸம: ஸர்வோபகாரக: || 29 ||

ஶ்ரீகிருஷ்ண பகவான் கூறுகிறார்
இந்த ஸ்லோகத்தில் ஏழு பண்புகளை கூறியிருக்கிறார். .
ஸர்வதேஹினாம் – எல்லா ஜீவராசிகளிடத்திலும் கீழே கூறப்பட்ட நற்பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும்.
1. க்ருபாலு – கருணையோடும், தயையோடும், பிறருடைய துன்பத்தைக் கண்டு இரங்கும் மனதை உடையவனாக இருத்தல்,
அதாவது அஹிம்சையை பின்பற்ற உதவும் குணம்
2. அக்ருத் த்3ரோஹம் – நம்பிக்கை துரோகம் செய்யாது இருத்தல், நம்மிடம் பிறர் வைத்திருக்கும்
நம்பிக்கைக்கு துரோகம் செய்யக்கூடாது. அதைக் காப்பாற்ற வேண்டும்.
3. திதிக்ஷூ – சகிப்புத்தன்மையுடையவன்; பொறுத்துக் கொள்ளும் இயல்புடையவனாக இருத்தல்,
4. ஸத்யஸாரம் – உண்மையாக இருத்தல், உண்மையையே பேசுதல், சத்தியத்தை பலமாக கொண்டிருத்தல், வாய்மையில் நம்பிக்கை வைத்தல்
5. அனவத்3யாத்மா – நற்குணங்களுடன் இருப்பவன்; பொறாமைப் போன்ற தீயகுணங்கள் எதுவும் இல்லாதவன், பண்பாடு உடையவன், மனிதநேயம் மிக்கவன்
6. ஸமஹ – சமநோக்கு உடையவன்; எல்லா நிலைகளிலும் சமபுத்தி உடையவனாக இருத்தல்,
கர்ம பலன்களை அனுபவிக்கும்போதும், இருமைகளை அனுபவிக்கும் போதும் சமமாக இருத்தல், ஒரே மனநிலையில் இருத்தல்
7. ஸர்வௌபகாரகஹ – எல்லோருக்கும் உதவி செய்பவன்

காமைரஹத்தீ4ர்தா3ந்தோ ம்ருது3: ஶுசிரகிஞ்சன: |
அனீஹோ மிதபு4க்ஶாந்த: ஸ்தி2ரோ மச்ச2ரணோ முனி: || 30 ||

8. காமை: அஹத்தீ4: – பற்றற்ற மனதுடன் இருத்தல்; இன்பத்தைக் கொடுக்கும் பொருட்களில் என்னுடையது என்ற புத்தி இல்லாமல் இருத்தல்
9. தா3ந்தஹ – புலன்களைக் கட்டுபடுத்தியவன்
10. ம்ருது3: – மென்மையானவனாக இருத்தல் (வாக்கு, செயல், மனம்)
11. ஶுசி – தூய்மையுடன் இருத்தல் (நம்மையும், சுற்றுபுறத்தையும், வீட்டையும், மனதையும் தூய்மையாக வைத்திருத்தல்)
12. அகிஞ்சன – தேவைக்கு மேல் பொருட்களை சேர்த்து வைக்கக் கூடாது. பயன்படுத்திக் கொண்டிருக்கும்
பொருட்களிலும் “என்னுடையது” என்ற புத்தி இல்லாமல் இருத்தல்
13. அனீஹ – செயல்களற்றவன், தனக்குள்ளே ஏதாவது செய்து கொண்டிருப்பான்.
தவம், ஜபம், உபாஸனம், சிரவணம், மன்னம், நிதித்யாஸனம் போன்ற சாதனங்களை செய்து கொண்டிருப்பான்
14. மிதபு4க் – அளவுடன் உண்பவன்; ஆரோக்கியமானதை உண்பவன்
15. ஸ்திரஹ – மனவுறுதியுடன் எடுத்துக் கொண்ட செயலை தொடர்ந்து அது முடியும் வரை செய்து கொண்டிருப்பவன்
16. ஶாந்தஹ – மனக்கட்டுபாடுடையவன்; உணர்வுகளால் அதிகமாக தாக்கப்படாதவன், மனதை ஓரளவுக்கு ஒருமுகப்படுத்தும்
திறனுடையவன்; மனதை தன் வசப்படுத்தியவன்; மனதில் விக்ஷேபமற்றவன்; தேவையற்ற விஷயங்களை சிந்திக்காமல் இருப்பவன்
17. மத் சரணஹ – இறைவனிடத்தில் (என்னிடத்திலே) சரணைடைந்தவன். அவர் வகுத்து கொடுத்த தர்ம பாதையில்
வழுவாது இருந்தால்தான், இந்த சரணாகதி பயனளிக்கும். எனவே தர்மத்தில் முழுசிரத்தை உடையவனாக இருப்பவன்
18. முனி: – ஞானியாக இருப்பவன். எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பான், வாக்கை கட்டுபடுத்தியவனாக இருப்பான்

அப்ரமத்தோ க3பீ4ராத்மா த்4ருதிமாஞ்ஜிதஷங்கு3ண: |
அமானீ மானத3: கல்போ மைத்ர: காருணிக: கவி: || 31 ||

19. அப்ரமத்தஹ – எச்சரிக்கையுடன் இருப்பவன், கவனத்துடன் இருப்பவன்
20. க3பீ4ராத்மா – கம்பீரமாக இருப்பவன்; நிமிர்ந்து நடப்பான்; நம்மை உயர்வாக நினைத்துக் கொள்ளுதல்,
சுயமரியாதையுள்ளவன். நம்மை உயர்வாகவும் நினைத்துக் கொள்ளக் கூடாது, தாழ்மையாகவும் நினைத்துக் கொள்ளக்கூடாது
21. த்4ருதிமான் – உறுதியுடன் இருப்பான்; எடுத்துக் கொண்ட லட்சியத்தில், புரிந்து கொண்ட விஷயத்தில், அடைந்த அறிவில் உறுதியாக இருப்பான்
22. ஜிதஷட்3குணஹ – ஆறுவகையான விஷயங்களை வென்றவன். பசி-தாகம் இவைகளை கடந்தவன்,
இதனால அடையும் துயரங்களை வென்றவன்; ஶோக-மோகம் இல்லாதவன்; ஜரா-ம்ருத்யு – வயோதிகம்-மரணம் இதில் பயமற்றவனாக இருப்பவன்
பிராண மயம் – பசி-தாகத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியுடையவன்
மனோ மயம் – சோகம்- மனதை வருத்தமடைய செய்யும் உணர்வுகளை வென்றவன்
விக்ஞான மயம் – மோஹம் – புத்தியில் எதையுமே சரியாக புரிந்து கொள்ளாததால் வரும் உணர்ச்சிகள்
அன்ன மயம் – ஜரா-ம்ருத்யு; வயோதிகமும், மரணத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனவுறுதி, மனப்பக்குவம் இல்லாதவன்
23. அமானீ – மற்றவர்களிடமிருந்து மதிப்பையோ, பாராட்டையோ எதிர்ப்பார்க்காதவன்
24. மானத3ஹ – மற்றவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன், மரியாதை கொடுப்பவன்
25. கல்பஹ – திறமையானவன்; ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு தகுதியுடையவன்;; மற்றவர்களுக்கு நன்கு புரியும்படி உபதேசம் செய்பவன்
26. மைத்ரஹ – எல்லா மனிதர்களிடத்திலும் நட்புடன் இருப்பவன். பணம், பதவி, புகழ், அறிவு இவைகளை
அடைந்திருந்தாலும் அனைவரிடத்திலும் நட்புணர்வோடு இருப்பவன்
27. காருணிகஹ – கருணையுடன் இருப்பவன்; ஸத்புருஷர்கள் செயல் செய்வதற்கு காரணமாக இருப்பது அவர்களின் மனதிலுள்ள கருணைதான்
28. கவி: – ஞானத்தை உடையவன்; விதவிதமான சாஸ்திரங்களை கற்றறிந்த பண்டிதன், நுட்பமான விஷயங்களை கிரகித்துக் கொள்பவன்

ஆஞாயைவம் கு3ணாந்தோ3ஷான்மயாதி3ஷ்சானபி ஸ்வகான் |
த4ர்மான் ஸந்த்யஜ்ய ய: ஸர்வான்மாம் ப4ஜேத ஸ து ஸத்தம: || 32 ||

29. தியாகம் – மோட்சம் என்ற லட்சியத்தை அடைவதற்கு தடையாக இருப்பவைகளெல்லாம் நீக்க முயற்சி செய்தல்.
சிறிது சிறிதாக லௌகீக கடமைகளை விட்டுவிடுதல்
ஆக்ஞாய ஏவம் – நன்கு ஆராய்ந்து பார்த்து
கு3ணான் தோ3ஷான் – நல்லது-கெட்டது இவைகளை ( நம்மை பாதிக்கும் விஷயம் )
ஸ்வகான் த4ர்மான் – தன்னைச் சார்ந்துள்ள, தனக்குரிய கடமைகளை ( ஸ்வதர்மங்களை)
மயா ஆதி3ஶ்டான் அபி – இறைவனாகிய என்னால் வகுத்து கொடுக்கப்பட்ட கடமைகளாக இருந்தாலும்
மாம் பஜதே – என்னை நாடி வருவதற்காக, என்னை அடைவதற்காக
ஸந்த்யஜ்ய – அவைகளை சிறிது சிறிதாக விட்டு விடவேண்டும்
ஸஹ ஸத்தமஹ – அவன்தான் மிகவும் உத்தமமானவன், ஸத்புருஷர்களிலே மிகவும் உயர்ந்தவன்

ஞாத்வாஞாத்வாத2 யே வை மாம் யாவான்யஶ்சாஸ்மி யாத்3ருஶ: |
ப4ஜந்த்யனன்யபா4வேன தே மே ப4க்த தமா மதா: || 33 ||

30. பக்தி
ஞாத்வா, அக்ஞாத்வாத்2 – அறிந்தும் முழுமையாக அறியாமலும், முழுமையாக அறிந்தும்
யே மாம் – எந்த சாதகர்கள் என்னை
யாவான் யாத்3ருஶ – என்ன மகிமை பொருந்தியவன்? எப்படிபட்டவன்
யஶ் ச அஸ்மி – நான் யார்?
இவைகளை தெரிந்து கொண்டோ, தெரியாமலோ
அனன்ய பா4வேன – வேறெதிலும் நாட்டமில்லாமல்
யே ப4ஜந்த்யா – யார் என்னை மட்டும் வழிபடுகின்றார்களோ
தே மே – அவர்களை
பக்த தமா மதா – உயர்ந்த பக்தர்கள் என்பது என் கருத்து

மல்லிங்க3மத்3ப4க்தஜன தர்ஶனஸ்பர்ஶனார்சனம் |
பரிசர்யா ஸ்துதி: ப்ரஹ்வ கு3ணகர்மானுகீர்தனம் || 34 ||

மத்3லிங்கம் தர்ஶன – என் உருவச்சிலையை தரிசித்தல்
மத்3ப3க்தஜன த3ர்ஶன – என்னுடைய பக்தர்களை தரிசித்தல்
ஸ்பர்ஶன் – கடவுள் சிலைகளை அலங்கரித்தல், தொட்டு வணங்குதல்
அர்சனம் – அர்ச்சனை செய்தல், பகவானை ஸ்துதி செய்கின்ற ஸ்தோத்திரம் சொல்லுதல்
பரிசர்யா – இறைவனுக்காக சேவை செய்தல்
ஸ்துதி – பாராயணம், பகவானை போற்றி பாடுகின்ற தோத்திரங்களை சொல்லுதல்
ப்ரஹ்வ – விதவிதமான முறையில் பகவானை நமஸ்கரித்தல்
கு3ணகர்ம அனுகீர்தனம் – பகவானின் மேன்மையான குணங்களையும், அவதாரத்தின் போது செய்த செயல்களையும் புகழ்ந்து மீண்டும் மீண்டும் பாடுதல்

மத்கதா2ஶ்ரவணே ஶ்ரத்3தா4 மத3னுத்4யானமுத்3த4வ |
ஸர்வலாபோ4பஹரணம் தா3ஸ்யோனாத்மனிவேத3னம் || 35 ||

உத்தவ – ஹே உத்தவா1
மத்கதா3ஶ்ரவணே ஶ்ரத்3தா4 – என்னைப் பற்றிய கதைகளை கேட்பதில் சிரத்தை
மத்3 அனுத்4யானம் – என்னையே எப்போதும் தியானித்துக் கொண்டிருத்தல்
ஸர்வலாப4 உபஹரணம் – தனக்கு கிடைப்பனவற்றையெல்லாம் பகவானுக்கு படைத்து விட்டு எடுத்துக் கொள்ளுதல்
தா3ஸ்யேன் ஆத்ம நிவேதனம் – உடலையும், மனதையும் அவருடைய சேவைக்காக அவரிடம் ஒப்படைத்தல்

மஜ்ஜன்மகர்மகத2னம் மம பர்வானுமோதனம் |
கீ3த தாண்ட3வ்வாதி3த்ர கோ3ஷ்டீ2பி4ர்த்3க்3ருஹோத்ஸவ: || 36 ||

என்னுடைய அவதாரத்தின் போது, செய்யப்பட்ட செயல்களைப் பேசிப்பேசி மகிழ்தல்
மம பர்வானுமோத3னம் – என்னுடைய அவதார பிறந்த தினத்தை கொண்டாடுதல்
கீ3த தாண்ட3வ வாதி3த்ர கோ3ஷ்டி – இசை-நாட்டியம், வாத்தியங்களைக் கொண்டும், கோஷ்டியாகவும்,
என் திருக்கோயில்களில் திருவிழா நடத்துதல், உற்சவத்தை கொண்டாடி மகிழ்தல்

யாத்ரா ப3லிவிதா4னம் ச ஸர்வ வார்ஷிகபர்வஸு |
வைதி3கி தாந்த்ரிகி தீ3க்ஷா மதீ3யவ்ரத்தா4ரணம் || 37 ||

புனித ஸ்தலங்களுக்கும், கோவில்களுக்கும், இறை அவதார நடந்த இடங்களுக்கும் யாத்திரை செய்தல்,
பற்பல பொருட்களைக் கொண்டு எனக்கு அர்ப்பனம் செய்து வழிபடுதல், வைதீக நியமப்படியோ, ஆகமத்தில்
சொல்லப்பட்டுள்ளபடியோ விரதங்களை அனுஷ்டிக்க வேண்டூம். எனக்காகவே அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும்

மார்சாஸ்தா2பனே ஶ்ரத்3தா4 ஸ்வத: ஸம்ஹத்ய சோத்3யம: |
உத்3யானோபவனாக்ரிட3 புரமந்தி3ரகர்மணி || 38 ||

என்னுடைய உருவச்சிலைகளை சிரத்தையுடன் நிறுவுதல், தன்னுடைய சொந்த முயற்சியாலோ, அல்லது மற்றவர்களின்
ஒத்துழைப்புடனோ பொதுநல தொண்டுகளான பூங்கா, பூஞ்சோலை, விளையாட்டு மைதானம், நகர நிர்மாணம்,
கோவில் கட்டுதல் போன்றவைகளை நிறைவேற்றுவதில் பேரார்வம் காட்ட வேண்டும்

ஸம்மர்ஜனோபலோபாப்4யாம் ஸேகமண்ட3லவரதனை: |
க்3ருஹஶுஶ்ரூஷணம் மஹ்யம் தா3ஸவத்3யத3மாய்யா || 39 ||

நான் உறையும் திருக்கோயில்களை துடைப்பத்தால் பெருக்கி தூய்மைபடுத்துதல், வண்ணக்கோலங்களை போட்டு அழகு படுத்தலாம்.
இவ்வாறு மனவொருமுகப்பாடு இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும்.

அமானித்வமத3ம்பி4த்வம் க்ருத்ஸ்யாபரிகீர்தனம் |
அபி தீபாவலோகம் மே நோபயுஞ்ஜ்யான் நிவேதி3தம் || 40 ||

அமானித்வம் – நான் பக்தன் என்ற கர்வம் கொள்ளக்கூடாது
அத3ம்பி4த்வம் – இறைவனுக்காக செய்யும் செயல்கள் யாருக்கும் வெளிக்காட்டாமல் செய்ய வேண்டும்.
க்ருதஸ்ய அபரிகீர்தனம் – தாம் செய்த நற்காரியங்களை வெளியே பறைசாற்றிக் கொண்டிருக்க கூடாது.
இறைவனுக்கு அர்பணிக்கப்பட்ட பொருட்கள் யாவும் புனிதத்தை அடைந்து விடுகின்றது. அவைகளை பிரசாதமாக கருத வேண்டும்.
எனக்கு ஆராதனை செய்து விட்ட தீபத்தை வேறெதற்கும் பயன்படுத்தக் கூடாது.

யத்3யதி3ஷ்டதமம் லோகே யச்சதிப்ரியமாத்மன: |
த த்தன்ன்னிவேத3யேன்மஹயம் ததா3னந்த்யாய கல்பதே || 41 ||

இந்த உலகத்தில் எவையெல்லாம் விரும்பப்படுகின்றதோ, எவைகள் உன்னால் அதிகமாக விரும்பப்டுகின்றதோ அவைகளைத்தான்
எனக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும், படைத்து பூஜிக்க வேண்டும். இப்படிபட்ட தியாகம் மோட்சத்திற்கு தகுதிபடுத்துகின்றது.

ஸூர்யோSக்3னிர் ப்3ராஹ்மணா கா3வோ வைஷ்ணவ: க2ம் மரூஜ்ஜலம் |
பூ4ராத்மா ஸர்வபூ4தானி ப4த்3ர பூஜாபதா3னி மே || 42 ||

ஹே உத்தவா! என்னைப் பூஜிப்பதற்குரிய இடங்களானவைகள் சூரியன், அக்னி, பிராமணன், அந்தணன் (வேதம் சொல்லிய தர்மப்படி வாழ்பவன் )
பசு, பக்தர்கள், ஆகாசம், காற்று, தண்ணீர், நிலம், ஆத்மா மற்றும் எல்லா ஜீவராசிகள் ஆகியவைகளாகும்

ஸூர்யே து வித்3யயா த்ரய்யா ஹவிஷாக்3னௌ மாம் |
ஆதித்2யேன து விப்ராக்3ரயே கோ3ஷ்வங்க3 யவஸாதி3னா || 43 ||

உத்தவா! சூரியனை ஆலம்பனமாக கொண்டு மூன்று வேத மந்திரங்களைக் கொண்டு என்னை வழிபட வேண்டும்.
யாகங்களில் உண்டாக்கப்படும் அக்னியில் போடப்படும் ஆஹூதிகளை கொடுப்பதாலும்,
உத்தம பிராமணனுக்கு விருந்தளிப்பதன் மூலமாகவும், பச்சைப் பசுமையான புல்லை பசுவுக்குக் கொடுத்தும் என்னை பூஜிக்கலாம்.

வைஷ்ணவே ப3ந்து4ஸத்க்ருத்யா ஹ்ருதி3 கே2 த்4யான நிஷ்ட2யா |
வாயௌ முக்2யதி4யா தோயே த்34அவ்யைஸ்தோயபுர: ஸரை: || 44 ||

என் பக்தர்களை தன் உறவினரைப் போல அன்புடன் பாவிப்பதும், எப்போதும் மனம் என்ற ஆகாசத்தில் இறைவனான என்னை
தியானம் செய்வதன் மூலமும், காற்றை ஆலம்பனமாக வைத்துக் கொண்டு முக்கிய பிராணன் என்ற கருத்துடனும்,
தண்ணீரால் இறைவனக்கு அர்ப்பணிக்கப்படும் பொருட்களை மந்திரங்களால் தூய்மைப்படுத்தி என்னை வழிபட வேண்டும்.

ஸ்த2ண்டி3லே மந்த்ரஹ்ருதயைர் போ4கை3ராத்மானமாத்மனி |
க்ஷேத்ரக்3ஞன் ஸர்வபூ4தேஷு ஸமத்வேன யஜேத மாம் || 45 ||

பூமியை சிலவிதமான மறைமந்திரங்களால் புனிதப்படுத்தியும், இந்த ஸ்தூல உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு தர்மத்தின் மூலம்
இன்பத்தை கொடுப்பதன் மூலமும், எல்லா ஜீவராசிகளிடத்தும் சமமாக தங்கியிருக்கும் பரமாத்மாவை தியானிப்பதன் மூலமாகவும் என்னை வழிபடலாம்.

தி4ஷ்ண்யேஷ்வித்யேஷு மத்3ரூபம் ஶங்க2சக்ரக3தா3ம்பு3ஜை: |
யுக்தம் சதுர்பு4ஜம் ஶாந்தம் த்4யாயன்னர்சேத்ஸமாஹித: || 46 ||

இறைவனை வழிபடும் இடங்களில் என்னுடைய ஸ்வரூபமான சங்கு-சக்கரம்-கதை-தாமரை தாங்கிய நான்கு கைகளையுடையவரும்,
பேரமைதிக் கொண்டவருமானம் சாக்ஷாத் பகவான் என் எதிரில் தோன்றும் இந்த எல்லா பொருட்களிலும் இருக்கிறார்
என்ற நிச்சயமான புத்தியுடன் பூஜிக்க வேண்டும்.

இஷ்டாபூர்தேன மாமேவம் யோ யஜேத ஸமாஹித: |
லப4தே மயி ஸ்த்3ப4க்திம் மத்ஸ்ம்ருதி: ஸாது4ஸேவயா || 47 ||

இவ்வாறு இறைவனான என்னை மன ஒருமுகப்பாடோடு வழிபடுகின்றார்களோ, யாகங்கள் மூலமாகவும், சமுதாய சேவையின் மூலமாகவும்,
கிணறு-குளம் தோண்டுதல், வழிப்பாதை, சாலைகள் அமைத்தல் போன்ற பொதுப்பணிகளை செய்வதன் மூலமாகவும் வழிபடுபவனுக்கு
என்னிடத்தில் திடமான பக்தியை அடைகிறான், பிளவுபடாத பக்தியை அடைகின்றான். என்னைப் பற்றிய உண்மையான ஞானத்தை அடைகிறான்.
சாதுக்களுக்கு தேவையான நேரத்தில் உதவுதல், சேவை செய்தல், பெரியோர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலமாக
மேலே சொன்ன சாத்தியத்தை அடையலாம்.

ப்ராயேண ப4க்தியோகே3ன ஸத்ஸங்கே3ன வினோத்3த4வ |
நோபாயோ வித்3யதே ஸம்யக்ப்ராயணம் ஹி ஸதாமஹம் || 48 ||

உத்தவா! பக்தியோகத்தின் மூலமாகவும், ஸத்ஸங்கத்தின் மூலமாகவும் இவைகளை தவிர சம்சாரக்கடலை கடப்பதற்கான
வேறு வழிகள் இல்லை என்பது என்னுடைய கருத்து. நான் சான்றோர்களுக்கு புகலிடமாக இருக்கின்றேன்.

அதை2தத்பரமம் கு3ஹ்யம் ஶ்ருண்வதோ யது3 நந்த3ன |
ஸுகோ3ப்யமபி வக்ஷ்யாமி த்வம் மே ப்4ருத்ய: ஸுஹ்ருத்ஸகா2 || 49 ||

உத்தவா! இப்போது நான் உனக்கு மிகவும் ரகசியமானதும், மறைத்து வைக்கதக்கதாகவும் உள்ள ஒரு விஷயத்தை சொல்லப்போகிறேன்.
ஏனென்றால் நீ என்னுடைய சேவகன், என்னுடைய நன்மையை விரும்பும் நண்பன் அத்துடன் ஸத் விஷயங்களில் கேட்பதில்
விருப்பம் உடையவனாகவும் இருக்கின்றாய்.

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ உத்தவர் கீதை–அத்யாயம் -3-

May 22, 2020

ஶ்ரீப்3ராஹ்மண உவாச
பரிக்3ரஹோ ஹி து3:கா2ய யத்3யத்ப்ரியதமம் ந்ருணாம் |
அனந்தம் ஸுக2மாப்னோதி தத்3வித்3 வான்யஸ்த்வகிஞ்சன: || 1 ||

பரிக்3ரஹம் – தேவைக்கு மேல் வைத்துக் கொள்வது, இன்பத்தை தரும் பொருட்கள் அதிகமாக வைத்திருத்தல்.
இந்தக் குணம் பயத்தைக் கொடுக்கும், அடிமைப்படுத்தி விடும், அவைகளை பராமரிப்பதற்கு காலமும், சக்தியும் செலவிட வேண்டியதாக இருக்கும்.
பரிக்ரஹம் என்ற குணம் துன்பத்தைத்தான் கொடுக்கும். இதை அறிந்தவர்கள்
ந்ருணாம் யத் யதிப்ரியதமம் – மனிதர்களுக்கு எதையெல்லாம் விரும்பி அதை அதிகமாக சேர்த்துக் கொள்வதாலும் துன்பம் உண்டாகிறது.
பொருளே இல்லாத, அல்லது தேவைப்படும் அளவுக்கு குறைவாக வைத்துக் கொண்டிருக்கும் அறிவாளி எல்லையில்லாத இன்பத்தைப் பெறுகிறான்.

ஸாமிஷம் குரரம் ஜக்3னுர்ப3லினோSன்யே நிராமிஷா: |
ததா3மிஷம் பரித்யஜ்ய ஸ ஸுக2ம் ஸமவிந்த3த || 2 ||

குரரம் என்ற பறவை ஒரு மாமிசத்துண்டை தன் வாயில் வைத்துக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மற்ற பறவைகள்
அதைத் துரத்திக் கொண்டிருந்தன. அந்தப்பறவை மாமிசத் துண்டை கீழே போட்டதும், துரத்திய பறவைகள் கீழே போடப்பட்ட
மாமிசத்துண்டை நோக்கி சென்று விட்டன. இந்தப் பறவை சுகத்தை அடைந்தது.
பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்வது துன்பங்களுக்கு வேர் என்பதுதான் இதன் கருத்து.

ந மே மானாபமானௌ ஸ்தோ ந சிந்தா கே3ஹபுத்ரிணாம் |
ஆத்மக்ரீத3 ஆத்மரதிர்விசராமீஹ பா3லவத் || 3 ||

கூர்ந்து கவனிக்கும் திறமையானது அறிவைக் கொடுக்கும். முடிவு பண்ணும் திறமையானது அறிவை வளர்க்காது.
ஞானியும், குழந்தைகளும் எப்பொழுதுமே நிகழ்காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ந மே மானாபமானௌ ஸ்தஹ – எனக்கு மான-அவமானம் என்ற பேத புத்தி கிடையாது
ந சிந்தா கே3ஹபுத்ரிணாம் – வீடு, மக்கள் இவர்களிடம் பற்றற்று இருப்பவர்களுக்கு கவலைகள் எதுவும் இருக்காது
பா3லவத் – குழந்தையைப் போல
விசாரம் இஹ – இங்கே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்
ஆத்மக்ரீட3 – தன்னிடத்திலே விளையாடிக் கொண்டிருப்பான்;
ஆர்மரதி – தன்னிடத்திலே மகிழ்ச்சியுடன் இருப்பான், முழுமனநிறைவுடன் இருப்பான்.

த்3வாவேவ சிந்தயா முக்தௌ பரமானந்த3 ஆப்லுதௌ |
யோ விமுக்3தோ4 ஜடோ3 பா3லோ யோ கு3ணேப்4ய: பரம் க3த: || 4 ||

த்வௌ ஏவ சிந்தயா முக்தௌ – இரண்டு பேர்தான் மனதிற்குள் வரும் துயரங்களில் இருந்து விடுபட்டவர்கள்
பரமானந்த3 ஆப்லுதௌ – அதேபோல பரமானந்தத்தில் மூழ்கியிருப்பார்கள்
விமுக்3த4ஹ – சூதுவாது அறியாத
ஜடஹ – எதையும் திட்டமிட்டு செயல்படாமல், தன்னிச்சையாக செயல்படும்
பா4லஹ – குழந்தையைப் போல இருக்கும் ஞானி
யஹ கு3ணேப்4யஹ பரம் க3த: – குணங்களையெல்லாம் கடந்து விட்டு மேலான நிலையை அடைந்துள்ளார்.

க்வசித்குமாரீ த்வாத்மானம் வ்ருணானான்கு3ஹமாக3தான் |
ஸ்வயம் தானர்ஹயாமாஸ க்வாபி யோதேஷு ப3ந்து4ஷு || 5 ||

இதில் தனிமையில் அவசியத்தைப் பற்றி விளக்கப்படுகிறது.
ஒரு கன்னிகையைப் பெண் பார்ப்பதற்காக சிலர் அவள் விட்டுக்கு வந்தார்கள். அந்த சமயத்தில் வீட்டிலிருக்கும்
பெற்றொர் வெளியே சென்றிருப்பதால் தானே விருந்தாளிகளை வரவேற்று உபசரித்தாள்.

தேஷாமப்4யவஹாரார்த2ம் ஶாலீப்3ரஹஸி பார்தி2வ |
அவக்3னந்த்யா: ப்ரகோஷ்த2ஸ்தா2ஶ்சக்ரு: ஶங்கா2: ஸனம் மஹத் || 6 ||

அவர்களுக்கு உணவளிப்பதற்காக வீட்டில் தனியே ஓரிடத்தில் நெல்லைக் குத்தும்போது,
கைகளில் அணிந்திருந்த சங்கு வளையல்கள் பெரிய ஒலியை எழுப்பின.

ஸா தஜ்ஜுகு3ப்ஸிதம் மத்வா மஹதீ வ்ருர்ட3டிதா தத: |
ப3ப4ஞ்ஜைகைகஶ: ஶங்கா2ந்தவௌ த்3வௌ பாண்யோரஶேஶயத் || 7 ||

அதனால் வெட்கமடைந்த அவள் மிகவும் வருந்தினாள். எனவே கைகளில் இரண்டு இரண்டு வளையல்களை
மட்டுமே வைத்துக் கொண்டு மற்றவைகளை உடைத்துப் போட்டாள்

உப4யோரப்யபூ4த்3கோ4ஷோ ஹயவக்3னந்த்யா: ஸ்வஶங்க2யோ: |
த்த்ராப்யேகம் நிரபி4த3 தேகஸ்மான்னாப4வத்3த்4வனி: || 8 ||

பின் அவள் மறுபடியும் நெல் குட்ட தொடங்கியதும், இரண்டு வளையல்களின் உரசலினால் சத்தம் உண்டாயிற்றூ.
ஒவ்வொரு வளையலைக் கழற்றிப் போட்டாள். மீதமிருந்த ஒரு வளையலிருந்து சத்தம் எதுவும் வரவில்லை

அன்வஶிக்ஶமிமம் தஸ்யா உபதே3ஶமரிந்தம் |
லோகான்னுசரன்னேதான்லோகத த்த்வ்விவித்ஸயா || 9 ||

அந்தப் பெண்ணிடமிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக் கொண்டேன் அரசே! இந்த உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு,
உலகம் நடைமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தால் மக்களிடையே சுற்றி வந்தபோது இது நடந்தது.

வாஸே ப3ஹூனாம் கலஹோ ப4வேத்3வார்தா த்3வயோரபி |
ஏக ஏவ வஸேத்தஸ்மாத்குமார்யா இவ கங்கண: || 10 ||

பல பேர்களுடன் சேர்ந்து வசித்தால் சண்டை-சச்சரவு ஏற்படும். இரண்டு பேர் இருந்தால் வீண் பேச்சு வரலாம்.
ஆகவே பெண்ணின் கைக்கங்கணத்தைப் போல தனியாக இருக்க வேண்டும்.;

மன ஏகத்ர ஸம்யுஞ்ஜ்யாஜ்ஜிதஶ்வாஸோ ஜிதாஸன: |
வைராக்3யாப்4யாஸயோகே3ன த்4ரியமாணமதந்த்ரித: || 11 ||

ஏகத்ர – எடுத்துக் கொண்ட விஷயத்தில்
மன: ஸம்யுஜ்யாத் – மனதை பொருத்த வேண்டும்
ஜிதாஸன – ஆஸனத்தில் வெற்றியடைய வேண்டும். குறிப்பிட்ட நேரம் தியான காலத்தில் ஒரே நிலையில் அசையாமல்
அமர்ந்து பழக வேண்டும். உடலிலிருந்து மனதுக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது
ஜிதஶ்வாஸஹ – சுவாசத்தில் வெற்றியடைய வேண்டும். மூச்சுக்காற்றின் அமைதி மனதை அமைதியாக இருக்க வைக்கும். பிராணன சீராக வைத்திருத்தல்
ஜிதேந்த்ரியஹ – புலன்களை வென்றிட வேண்டும் அவைகளை அமைதியாக இருக்குமாறு பழக்கியிருக்க வேண்டும்
வைராக்கியம் – மனதை ஒரு இடத்தில் நிறுத்தி பழக்க வேண்டுமென்றால், விஷயங்களில் வைராக்கியத்தை அடைய வேண்டும்.
சித்தத்திலிருந்து எண்ணங்களை எடுத்துக் கொண்டு மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கும்.
அப்4யாஸம் – இடைவிடாமல் பயிற்சி செய்து மனதை ஒரு இடத்தில் நிறுத்தி முயற்சிக்க வேண்டும்.
மனதை ஒரு இடத்தில் இருக்குமாறு பயிற்சி செய்து பழக வேண்டும். ஜபம் என்பது ஒரு முக்கியமான சாதனமாக இதற்கு கருதப்படுகிறது.
பக்தி – வைராக்கியம், அப்யாஸம் சித்3தி4க்க பகவான் மீது பக்தி செலுத்தி கொண்டிருக்க வேண்டும்.
த்4ரியமாணம் – இவ்விதமாக பயிற்சி கொடுத்து மனதை ஒரிடத்தில் நிலைநிறுத்தி பழக வேண்டும்.
அதந்த்ரிதஹ – சோம்பலற்றவனாகவும் இருக்க வேண்டும். தமோ குணத்திலிருந்து நீங்கியவனாக இருக்க வேண்டும்.

யஸ்மின்மனோ லப்3த4பத3ம் யதே3தச்ச2னை: ஶனைர்முஞ்சதி கர்மரேணூன் |
ஸத்த்வேன வ்ருத்3தே4ன ரஜஸ்தமஶ்ச விதூ4ய நிர்வாணமுபைத்ய நிந்த4னம் || 12 ||

யஸ்மின் – நிர்குண பிரம்மனிடத்தில், பரமாத்மாவிடத்தில்
ஶனைஹி ஶனைஹி – கொஞ்ச கொஞ்சமாக
யதே3தத் மனோலப்3த4பத3ம் – எந்த மனமானது நிலைபெற்று விட்டதோ
கர்மரேணூன் விமுஞ்சதி – கர்மவாசனைத் துகள்கள் அவனைவிட்டு நீங்குகின்றன.
நான் கர்த்தாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நீங்கும். நான் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது
ஸத்த்வேன வ்ருத்3தே4ன – சத்துவ குணம் மேலோங்கியிருந்தால்தான் இவ்வாறு இருக்க முடியும்.
ரஜஸ் தமஹ ச விதூ4ய – ரஜோ, தமோ குணங்களுடைய ஆதிக்கத்தை நீக்கி விட வேண்டும்.
நிர்வாணம் உபைதி – முடிவில்லா முழுமையான மன அமைதியை அடைகிறான். ஜீவன் முக்தியை அடைகிறான்.
அநிந்த4னம் – அக்னி எரிவதற்கு மரக்கட்டை இல்லாததால் அமைதி அடைவதுபோல இது இருக்கின்றது.
மன ஒருமுகப்பாட்டினாலும், சத்துவ குணத்தினாலும், ஞானம் அடையப்படுகின்றது. விறகு உள்ளவரைதான் அக்னியும் இருக்கும்,
கர்மவாஸனை உள்ளவரை மனம் கொந்தளிப்பாக இருக்கும், விறகு இல்லாத அக்னி தானாக அடங்கி விடுவதைப் போல
மனமும் தானாக அமைதி அடைந்து விடும்.

ததை3வமாத்மன்யவருத்3த4சித்தோ ந வேத3 கிஞ்சித்3 ப3ஹிரந்தரம் வா |
யதே2ஶுகாரோ ந்ருபதிம் வ்ரஜந்தமிஷௌ க3தாத்மா ந த3த3ர்ஶ பார்ஶ்வ || 13 ||

அவ்வாறே ஆத்மாவிலேயே நன்றாக மனதை ஒருமுகப்படுத்தியுள்ளவர், வெளியேயும், உள்ளேயும் உள்ள எதையும் அறியமாட்டான்.
இவைகள் எல்லாம் அநித்யம், மித்யா என்பதை அறிந்திருப்பான், நிலையற்றது என்பதையும் புரிந்து கொண்டிருப்பான்.
அவைகளால் பாதிக்கப்படமாட்டான்.
யதா2 இஷுகாரோ – எவ்வாறு அம்பை செய்து கொண்டிருப்பவன்
ந்ருபதிம் வ்ரஜந்தமிஶௌ – தன்னை மறந்து வேலையில் ஈடுபட்டிருக்கும் போது
க3தாத்மா ந த3த3ர்ஶ பார்ஶ்வே – அரசன் பரிவாரங்களுடன் தன்னருகே சென்றதைக் கூட அறியாமல் இருப்பான்.

ஏகசார்யனிகேத: ஸ்யாதப்ரமத்தோ கு3ஹாஶய: |
அலக்ஷ்யமாண ஆசாரைர் முனிரேகோSல்ப்பா4ஷண: || 14 ||

பாம்பிடமிருந்து சந்நியாஸி, சாதகன் கற்றுக் கொள்ள வேண்டிய ஏழு பாடங்களைக் கூறுகிறார்.
பாம்பிடம் உள்ள குணங்கள்
ஏகசாரி – தனித்திருக்கும்
அனிகேத: – சொந்தமான இருப்பிடம் கிடையாது
அப்ரமத்தஹ – மிக கவனமாக இருக்கும்
கு3ஹாஶய: – மலைக்குகை, மரப்பொந்தில் வசிக்கும், தான் இருக்கும் இடத்தை வசிக்கும் இருப்பிடமாக வைத்துக் கொள்ளும்
அலக்ஷ்யமாண ஆசாரை – தன்னை மறைத்துக் கொள்ளும்
ஏகஹ – அனைத்தையும் தானே செய்து கொள்ளும், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும்
அல்ப பா4ஷண – எந்த சப்தத்தையும் உருவாக்காது. அல்ப – பயனற்ற, சிறிது

சாதகன், சந்நியாஸியிடம் இருக்கும் பாம்பின் குணங்களை பொருத்தி பார்க்கலாம்
தனித்தே சென்று வருபவன், தனித்தே வாழ்ந்து கொண்டிருப்பவன்
குடியிருக்கும் வீட்டின் மீது பற்றில்லாமல் வசித்துக் கொண்டிருப்பான்
எச்சரிக்கையாக இருத்தல். தான் கொண்டிருக்கும் லட்சியத்திற்கு வரும் தடைகளால் பாதிக்காமல் மிகவும் கவனமாக இருப்பான்
கிடைப்பதில் மகிழ்ச்சியுடன் இருப்பான், திருப்தியுடன் இருப்பான்
தன்னை மறைத்துக் கொள்வான். புகழுக்காக எதையும் செய்ய மாட்டான். தன்னை யாருமே கண்டு கொள்ளாமல்
இருக்கும்படி நடந்து கொள்வான். விதவிதமான தவங்களை செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டான்
தேவையில்லாமல் மற்றவர்கள் உதவியை நாட மாட்டான் 0அளவுடன் பேசுவான்

க்3ருஹாரம்போ4 ஹி து3:கா2ய விப2லஶ்சாத்4ருவாத்மன: |
ஸர்ப: பரக்ருதம் வேஶ்ம ப்ரவிஶ்ய ஸுக2மேத4தே || 15 ||

அதிக காலம் வாழாத இந்த உடலுக்காக இருக்க வீடு கட்டுவது என்பது வெகு சிரமமானது, துன்பத்தைக் கொடுப்பது, பயனற்றது.
எப்படி பாம்பானது வேறொன்றினால் கட்டப்பட்ட வீட்டில் புகுந்து கொண்டு சுகமாக இருக்கின்றதோ
அதுபோல கிடைத்த இடத்தை இருப்பிடமாக கொண்டு சுகித்துக் கொண்டிருப்பான் ஞானி

ஏகோ நாராயணோ தே3வ: பூர்வஸ்ருஷ்டம் ஸ்வமாயயா |
ஸம்ஹ்ருத்ய காலகலயா கல்பாந்த இத3மீஶ்வர: || 16 ||

ஏகோ நாராயணஹ – மனிதனுடைய இறுதி லட்சியமான ஈஸ்வரன் ஒருவராகத்தான் இருக்கிறார்.
தன்னுடைய ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு யாருடைய உதவியும் அவருக்கு தேவையில்லை.
தே3வ: – சைதன்ய ஸ்வரூபமானவர், உணர்வு பூர்வமானவர்
கல்பாந்த – கல்பத்தின் முடிவில்
ஸ்வமாயயா – தன்னிடத்திலுள்ள, தன்னைச் சார்ந்துள்ள மாயா சக்தியினால்
பூர்வஸ்ருஷ்டம் இத3ம் – படைக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தை
காலகலயா – கால சக்தியினல்
ஸம்ஹ்ருத்ய – தனக்குள் இழுத்துக் கொள்ளப் போகிறார்

ஏக ஏவாத்3விதீயோSபூ4தா3த்மாதா4ரோSகி2லாஶ்ரய: |
காலேனாத்மானுபா4வேன ஸாம்யம் நீதாஸு ஶக்திஷு |
ஸத்த்வாதி3ஶ்வாதி3புருஷ: ப்ரதா4னபுருஷேஶ்வர: || 17 ||

ஏக ஏவ அத்3விதீய அபூ4த் – தான் மட்டும் இரண்டற்றதாக இருக்கின்றார்.
ஆத்மாதா4ரஹ – தனக்குத்தானே ஆதாரமாக இருப்பவர்
அகி2லாஶ்ரயஹ – அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்றார்
ப்ரதா4ன புருஷ ஈஶ்வரஹ – மாயையாகவும், புருஷனாகவும் இருக்கின்ற ஈஸ்வரன்
ஆதி3புருஷ: – என்றும் இருப்பவர்
காலேன ஆத்மானுபா4வேன – தனக்கு வேறில்லாத காலத்தின் துணைக்கொண்டு
ஸத்த்வாதி4ஷு – சத்துவம், ரஜஸ், தமஸ் என்கின்ற சக்திகள்
ஸாம்யம் நீதாஸு – சமநிலையை அடையும் போது பிரளயகாலம் ஏற்படுவதால் அனைத்தையும் இழுத்துக் கொள்கிறார்.
பிறகு இரண்டற்றவராக தான் மட்டும் ஒருவராகவும் இருக்கிறார். பிரளயம் மூன்று சக்திகளும் சமநிலை அடையும் போது ஏற்படுகின்றது.
தன்னிடத்தினின்று வேறில்லாத கால சக்தியின் துணைக் கொண்டு பிரளயம் ஏற்படுகின்றது.
அப்போது அனைத்தும் அவருக்குள் ஒடுங்கி விட்ட நிலையில் அவர் மட்டும் இருக்கிறார்.

பராவராணாம் பரம ஆஸ்தே கைவலஸஞ்ஜித: |
கேவலானுப4வானந்த3 ஸந்தோ3ஹோ நிருபாதி4க: || 18 ||

இதில் ஈஸ்வர ஸ்வரூபத்தை விளக்குகிறார்.
பரவராணாம் – மேலான, கீழான ஜீவர்கள். சரீரத்தின் அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது
பரமஹ ஆஸ்தே – இந்த ஜீவர்களை காட்டிலும் மேலானவராக இருக்கிறார் ஈஸ்வரன்
கைவல்ய ஸஞ்ஜிதஹ – மோட்சம் அல்லது முக்தி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்.
பிரம்மத்தை அடைதலும், மோட்சத்தை அடைதலும் ஒன்றுதான். ஈஸ்வரனே மோட்ச ஸ்வரூபமாக இருக்கின்றார்.
கேவல அனுப4வ ஆனந்த3 – தூய்மையான ஆனந்த ஸ்வரூபமாகவும்
ஸந்தோ3ஹ – சைதன்ய ஸ்வரூபமாகவும் சேர்ந்து இருப்பவர்
நிருபாதி4கஹ – உண்மையில் மாயை என்கின்ற உபாதிகளையும் அற்றவராக இருக்கிறார்

கேவலாத்மானுபா4வேன ஸ்வமாயாம் த்ரிகு3ணாத்மிகாம் |
ஸங்க்ஷோப4யன்ஸ்ருஜத்யாதௌ தயா ஸூத்ரமரிந்தம் || 19 ||

அரிந்த3ம் – ஓ அரசே!
கேவலாத்மானுபா4வேன – தன்னுடைய சக்தியினால் மட்டுமே
ஸ்வமாயாம் த்ரிகு3ணாத்மிகாம் – தன்னிடத்திலுள்ள மூன்று குணங்களையுடைய மாயையில் உள்ள
ஸங்க்ஷோப4யன் – குணங்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தி
ஆதௌ – முதலில்
ஸூத்ர – சூத்ராத்மாவான ஹிரண்யகர்ப்பனை
ஸ்ருஜத்ய – தோற்றுவித்தார்

தாமாஹுஸ்திகு3ணவ்யக்திம் ஸ்ருஜந்தீம் விஶ்வதோமுக2ம் |
யஸ்மின்ப்ரொதமித3ம் விஶ்வம் யேன ஸம்ஸரதே புமான் || 20 ||

தாம் ஆஹு த்ரிகுணவ்யக்திம் – ஹிரண்யகர்ப்பன் மூன்று குணத்தையுடைய மாயையிலிருந்து வந்தவர் என்றும்
விஶ்வதோமுக2ம் ஸ்ருஜந்தீம் – இந்த ஸ்தூல உலகத்தையும் படைத்தவர் என்றும் கூறுகிறார்கள்
யஸ்மின் – இந்த சூத்ராத்மாவான ஹிரண்யகர்ப்பனோடு
ப்ரோதமிதம் விஶ்வம் – இந்த ஸ்தூல உலகம் கோர்க்கப்பட்டுள்ளது
புமான் யேன ஸம்ஸ்ரதே – இந்த உலகத்தில் ஜீவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்

யதோ3ர்ணனாபி4ர்ஹ்ருத3யாதூர்ண ஸந்தத்ய வக்த்ரத: |
தயா ஹிஹ்ருத்ய பூ4யஸ்தாம் க்3ரஸத்யேவம் மஹேஶ்வர: || 21 ||

எவ்வாறு சிலந்தி பூச்சியானது தன் உடலிலிருந்து வாய் வழியாக நூலைக் கொண்டு வந்து வலையை பின்னுகின்றது.
அதிலேயே வாழ்கிறது. பிறகு அதை தனக்குள் இழுத்துக் கொள்கிறது. அது போல மஹேஸ்வரன் தானே
உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருந்து இந்த உலகத்தை ஸ்ருஷ்டித்து, லீலைகள் புரிந்து,
கல்ப முடிவில் தன்னுள் இழுத்துக் கொள்கிறார்.

யத்ர யத்ர மனோ தே3ஹீ தா4ரயேத்ஸகலம் தி4யா |
ஸ்னெஹாத்3 த3வேஷாத்3 ப4யாத்3வாபி யாதி தத்தத்ஸ்வ ரூபதாம் || 22 ||

தே3ஹி – ஜீவாத்மாவான நாம்
யத்ர யத்ர மனோ தா4ரயேத் – எந்தெந்த இடத்தை மனதில் தொடர்ந்து
ஸகலம் தி4யா – முழுமையாக, அறிவுடன் நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ
தத்தத் ஸ்வரூபதாம் – அதையே அடைகின்றான். அந்த தன்மையை அடைகின்றான்
ஸ்னேஹாத், த3வேஷாத், ப4யாத் – அன்பினால், வெறுப்பினால், பயத்தினால் நமக்குள் இருக்கும் மூன்று சக்தியின்
உணர்வுகளின் தூண்டுதலினால் இவ்வாறு தொடர்ந்து ஒன்றையே நினைக்க வைக்கின்றது. அவைகள் பற்று போன்ற
ஏதோ ஒரு குணத்தினாலோ, வெறுப்பினாலோ, பயத்தினாலோ ஒன்றையே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க வைக்கும்.

கீட: பேஶஸ்க்ருதம் த்4யாயன்குட்3யாம் தேன ப்ரவேஶித: |
யாதி த்த்ஸாத்மதாம் ராஜன் பூர்வரூபமஸந்தயஜன் || 23 ||

அரசே! வண்டினுடைய கூட்டினுள் அடைக்கப்பட்ட புழுவானது வண்டையே நினைத்துக் கொண்டிருந்தது.
அதன் விளைவாக தன் சரீரத்தை விடாமலே தானும் வண்டாகி மாறிவிடுகிறது. வண்டின் குணத்தை அடைந்து விடுகிறது.

ஏவம் க்3ருப்4ய ஏதேப்4ய ஏஷா மே ஶிக்ஷிதா மதி: |
ஸ்வாத்மோபஶிக்ஷிதாம் பு3த்3தி4ம் ஶ்ருணு மே வத3த: ப்ரபோ4 || 24 ||

அரசே! இவ்விதம் மேற்சொன்னபடி இந்த குருமார்களிடமிருந்து என் அறிவைக் கொண்டு அந்தந்த பாடங்களை கற்றுக் கொண்டேன்.
நான் என்னுடைய சரீரத்திலிருந்து கற்றுக் கொண்ட படிப்பினையைக் கேட்பாயாக.

தே3ஹோ கு3ருர்மம விரக்திவிவேகஹேதுர்
பி3ப்4ரத்ஸ்ய ஸத்த்வநித4னம் ஸத்தார்த்யுதர்கம் |
தத்த்வான்யனேன விம்ருஶாமி யதா2 ததா2பி
பாரக்யமித்யவஸிதோ விசராம்யஸங்க3: || 25 ||

இந்த தேகமும் எனக்கு குருவாகின்றது. இது வைராக்கியத்தை அடைவதற்கும், விவேகத்தை அடைவதற்கும் காரணமாக இருக்கின்றது.
இந்த உடல் அடிக்கடி துன்பத்தை தரக்கூடியது. இதனால் வைராக்கியத்தை அடைய வேண்டுமேயொழிய,
வெறுப்பையோ, பயத்தையோ அடையக் கூடாது. பாவம் செய்ய தூண்டுவதிலிருந்து நீங்கி இருக்க வேண்டும்.
இந்த உடல் பிறப்பு-இறப்பு தன்மையை உடையது. இந்த காரணங்களினால் நான் வைராக்கியத்தை அடைந்தேன்.
இந்த உடலின் துணைக் கொண்டுதான் தத்துவ விசாரம் செய்கின்றேன். இருந்தாலும் இந்த உடல் பிறர்க்கு உரியது என்று
முடிவு செய்து இந்த உடலின் மீது பற்று இல்லாதவனால் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றேன்.

ஜாயாத்மதார்த2பஶுப்4ருத்யக்3ருஹாப்தவர்கா3ன்
புஷ்னாதி யத்ப்ரியசிகீர்ஶயா விதன்வன் |
ஸ்வாந்தே ஸக்ருச்ச்3ரமவருத்3த4 த4ன: ஸ தே3ஹ:
ஸ்ருஷ்த்வாஸ்ய பீ3ஜமவஸீத3தி வ்ருக்ஷ த4ர்ம: || 26 ||

இந்த உடலைக் கொண்டு மனிதன் மனைவி, மக்கள், செல்வம், வீடு, நிலம், பசு, பணியாள், நண்பர்கள், உறவினர்கள்
ஆகியோரிடமிருந்து சுகத்தை எதிர்பார்த்து இவைகளை கஷ்டப்பட்டு பெருக்கி பராமரித்துப் போஷிக்கிறான்.
சந்தோஷத்தை அடைந்தானா என்று கேட்டால் இல்லைதான் என்பான். இவன் அனுபவித்த கஷ்டங்கள் என்னவாகின்றன.
கடைசியில் இந்த தேகமானது அடுத்த பிறவிக்கு விதையை விதைத்துவிட்டு இறந்து போகின்றது.
இந்த உடலுக்கு சுகத்தை கொடுக்க வேண்டும் என்ற விவகாரத்தில் பாவங்களைத்தான் சேர்த்து வைக்கப்படுகின்றது.
எப்படி ஒரு மரம் விதையை உற்பத்தி செய்தபின், அழிந்து விடுகிறதோ அதுபோலதான் இந்த சரீரமும் இருக்கின்றது.

ஜிஹவைகதோSமுமபகர்ஷதி கர்ஹி தர்ஷா
ஶிஶ்னோSன்யதஸ்த்வகு3த4ரம் ஶ்ரவணம் குதஶ்சித் |
க்4ரானோSன்யதஶ்சபலத்3 த3க்க்வ ச கர்மஶக்திர்
ப3ஹவ்ய: ஸ்பத்ன்ய இவ க்ஹபதிம் லுனந்தி || 27 ||

இந்த புருஷனை கண், காது, நாக்கு, தோல், மூக்கு ஆகிய ஞானேந்திரியங்களும், ஐந்து கர்மேந்திரியங்களும்
நாலாபக்கமும் இழுத்து துன்புறுத்தப்படுகின்றான். எப்படி ஒருவனுக்கு பல மனைவிகள் இருந்தால் ஒவ்வொருவரும்
அவனை தன்னிடத்து இழுக்க முயற்சி செய்து அவனை அலைக்கழிக்கின்றார்களோ
அதுபோல இந்தப் புலன்கள் மனிதனை அலைகழிக்கும்.

ஸ்ருஷ்ட்வா புராணி விவிதா3ன்ய ஜயாத்மஶக்த்யா
வ்ரிக்ஷான்ஸரீஸ்ருப்பஶூன்க2 க3த3ந்த3 ஶூகான் |
தைஸ்தைரதுஷ்டஹ்ருதய: புருஷம் விதா4ய
ப்3ரஹ்மாவலோகதி4ஷணம் முத3மாப தேவ: || 28 ||

பகவான் தன்னுடைய மாயாசக்தியின் துணைக் கொண்டு விதவிதமான உடல்களைப் படைத்தார்.
அவைகள் மரங்கள், ஊர்வன, விலங்குகள், பறவைகள், கொசுக்கள், நீரில் வாழ்பவைகள் ஆகியவைகளை தோற்றுவித்தார்.
இந்தப் படைப்புக்களால் அவர் மனதில் திருப்தி ஏற்படவில்லை.
எனவே பிரம்மத்தை புரிந்து கொள்கின்ற புத்தியுடைய மனிதனை படைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

லப்3த்4வா ஸுது3ர்லப4மிதம் ப3ஹுஸம்ப4வாந்தே
மானுஷ்யமர்த2 த3மநித்யமபீஹ தீ4ர: |
தூர்ணம் யதேத ந பதேத3னும்ருத்யு யாவன்
நி:ஶ்ரேயஸாய விஷய: க2லு ஸர்வத: ஸ்யாத் || 29 ||

இந்த கிடைத்தற்கரிய இந்த மனித உடல் பல பிறவிகளுக்கு பிறகுதான் கிடைக்கும். இது நிலையற்றதாக இருந்தாலும்
இதைக் கொண்டுதான் இப்பிறவியிலேயே புருஷார்த்தங்களைப் பெற முடியும் என்பதை அறிவாளி (தீர புருஷன்) உணர வேண்டும்.
எனவே உடல் சக்தியை இழப்பதற்கு முன் விரைவில் பகவத் பிராப்தி என்கின்ற மகத்தான பேரின்பத்தை அடைய முயல வேண்டும்.
ஏனென்றால் மற்ற இன்பங்கள் எந்த ஜந்துவாக பிறந்தாலும் கிடைக்கும். பேரின்பத்தை மனித உடலால் மட்டுமே அடைய முடியும்.
விலை மதிக்க முடியாத மனிதப் பிறவியை வீணாக்க கூடாது.

ஏவம் ஸஞ்தாதவைராக்3யோ விக்3ஞானாலோக ஆத்மனி |
விசராமி மஹீமேதாம் முக்தஸங்கோ3Sனஹங்க்ருத: || 30 ||

இவ்வாறு நான் வைராக்கியம் அடைந்தவனாக இருக்கின்றேன். ஆத்ம ஞானத்தை ஓளியாக கொண்டு என்னிடத்திலே
வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். எதனிடத்திலும் பற்றில்லாதவனாகவும், அகங்காரமற்றவனாகவும்,
கர்வமற்றவனாகவும் இருக்கின்றேன். இந்த உலகத்திலே கவலையில்லாமல் பரம சாந்தமாய் சுற்றிக் கொண்டிருக்கின்றேன்.

ந ஹயேகஸ்மாத்3 கு3ரோர்ஞானம் ஸுஸ்தி2ரம் ஸ்யத்ஸுபுஷ்கலம் |
ப்3ரஹ்மைத3த்3விதீயம் வை கீ3யதே ப3ஹுதா3ர்ஷிபி4: || 31 ||

ஒரே ஒரு ஆசாரியரிடமிருந்து முழுமையாக நிலையானதைப் பெற முடியாது. இரண்டற்றதான, ஒன்றாகவே இருக்கின்ற
பிரம்மத்தை பல வித்தில் ரிஷிகள் விளக்கி இருக்கிறார்கள்

ஶ்ரீப4கவான் உவாச
இத்யுக்த்வா ஸ யது3ம் விப்ரஸ்தமாமந்த்ரய க3பீ4ரதீ4: |
வந்தி3த: ஸ்வர்சிதோ ராஜா ய்யௌ ப்ரீதோ யதா2 க3தம் || 32 ||

ஶ்ரீபகவான் கூறுகிறார்.
இவ்விதம் ஆழ்ந்த அறிவுடைய ஆத்ம ஞானத்தையுடைய அவதூத அந்தணர் யது மன்னருக்கு உபதேசித்தார்.
மன்னரால் மிகவும் கௌரவிக்கப்பட்ட அவர் தான் வந்தபடியே மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்.

அவதூ4தவச: ஶ்ருதா பூர்வேஷாம் ந: ஸ பூர்வஜ: |
ஸர்வஸங்க3வினிர்முக்த: ஸ்வசித்தோ ப3பூ4வ ஹ || 33 ||

இந்த அவதூதருடைய உபதேசத்தை கேட்டு நம்முடைய முன்னோர்கள் எல்லா பற்றுக்களையும் நீக்கிவிட்டு
மன ஒருமைப்பட்டை, மன அமைதியை அடைந்தார்கள்

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-