Archive for the ‘கம்பராமாயணம்’ Category

ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம்-3-அத்யாயம்-31-ஸ்ரீ கபில முனிவர் உபதேசம் -சேதனர்களின் சம்சார சாகர மக்ந நிலை

November 7, 2020

ஶ்ரீப⁴க³வானுவாச
கர்மணா தை³வநேத்ரேண ஜந்துர்தே³ஹோபபத்தயே .
ஸ்த்ரியா꞉ ப்ரவிஷ்ட உத³ரம்ʼ பும்ʼஸோ ரேத꞉ கணாஶ்ரய꞉ .. 1..

கலலம்ʼ த்வேகராத்ரேண பஞ்சராத்ரேண பு³த்³பு³த³ம் .
த³ஶாஹேன து கர்கந்தூ⁴꞉ பேஶ்யண்ட³ம்ʼ வா தத꞉ பரம் .. 2..

மாஸேன து ஶிரோ த்³வாப்⁴யாம்ʼ பா³ஹ்வங்க்⁴ர்யாத்³யங்க³விக்³ரஹ꞉ .
நக²லோமாஸ்தி²சர்மாணி லிங்க³ச்சி²த்³ரோத்³ப⁴வஸ்த்ரிபி⁴꞉ .. 3..

சதுர்பி⁴ர்தா⁴தவ꞉ ஸப்த பஞ்சபி⁴꞉ க்ஷுத்த்ருʼடு³த்³ப⁴வ꞉ .
ஷட்³பி⁴ர்ஜராயுணா வீத꞉ குக்ஷௌ ப்⁴ராம்யதி த³க்ஷிணே .. 4..

மாதுர்ஜக்³தா⁴ன்னபாநாத்³யைரேத⁴த்³தா⁴துரஸம்மதே .
ஶேதே விண்மூத்ரயோர்க³ர்தே ஸ ஜந்துர்ஜந்துஸம்ப⁴வே .. 5..

க்ருʼமிபி⁴꞉ க்ஷதஸர்வாங்க³꞉ ஸௌகுமார்யாத்ப்ரதிக்ஷணம் .
மூர்ச்சா²மாப்னோத்யுருக்லேஶஸ்தத்ரத்யை꞉ க்ஷுதி⁴தைர்முஹு꞉ .. 6..

கடுதீக்ஷ்ணோஷ்ணலவணரூக்ஷாம்லாதி³பி⁴ருல்ப³ணை꞉ .
மாத்ருʼபு⁴க்தைருபஸ்ப்ருʼஷ்ட꞉ ஸர்வாங்கோ³த்தி²தவேத³ன꞉ .. 7..

உல்பே³ன ஸம்ʼவ்ருʼதஸ்தஸ்மின்னந்த்ரைஶ்ச ப³ஹிராவ்ருʼத꞉ .
ஆஸ்தே க்ருʼத்வா ஶிர꞉ குக்ஷௌ பு⁴க்³னப்ருʼஷ்ட²ஶிரோத⁴ர꞉ .. 8..

அகல்ப꞉ ஸ்வாங்க³சேஷ்டாயாம்ʼ ஶகுந்த இவ பஞ்ஜரே .
தத்ர லப்³த⁴ஸ்ம்ருʼதிர்தை³வாத்கர்மஜன்மஶதோத்³ப⁴வம் .
ஸ்மரன் தீ³ர்க⁴மனுச்ச்²வாஸம்ʼ ஶர்ம கிம்ʼ நாம விந்த³தே .. 9..

ஆரப்⁴ய ஸப்தமான்மாஸால்லப்³த⁴போ³தோ⁴(அ)பி வேபித꞉ .
நைகத்ராஸ்தே ஸூதிவாதைர்விஷ்டா²பூ⁴ரிவ ஸோத³ர꞉ .. 10..

நாத²மான ருʼஷிர்பீ⁴த꞉ ஸப்தவத்⁴ரி꞉ க்ருʼதாஞ்ஜலி꞉ .
ஸ்துவீத தம்ʼ விக்லவயா வாசா யேனோத³ரே(அ)ர்பித꞉ .. 11..

ஜந்துருவாச
தஸ்யோபஸன்னமவிதும்ʼ ஜக³தி³ச்ச²யாத்த-
நானாதனோர்பு⁴வி சலச்சரணாரவிந்த³ம் .
ஸோ(அ)ஹம்ʼ வ்ரஜாமி ஶரணம்ʼ ஹ்யகுதோப⁴யம்ʼ மே
யேனேத்³ருʼஶீ க³திரத³ர்ஶ்யஸதோ(அ)னுரூபா .. 12..

யஸ்த்வத்ர ப³த்³த⁴ இவ கர்மபி⁴ராவ்ருʼதாத்மா
பூ⁴தேந்த்³ரியாஶயமயீமவலம்ப்³ய மாயாம் .
ஆஸ்தே விஶுத்³த⁴மவிகாரமக²ண்ட³போ³த⁴-
மாதப்யமானஹ்ருʼத³யே(அ)வஸிதம்ʼ நமாமி .. 13..

ய꞉ பஞ்சபூ⁴தரசிதே ரஹித꞉ ஶரீரே
ச²ன்னோ யதே²ந்த்³ரியகு³ணார்த²சிதா³த்மகோ(அ)ஹம் .
தேனாவிகுண்ட²மஹிமானம்ருʼஷிம்ʼ தமேனம்
வந்தே³ பரம்ʼ ப்ரக்ருʼதிபூருஷயோ꞉ புமாம்ʼஸம் .. 14..

யன்மாயயோருகு³ணகர்மநிப³ந்த⁴னே(அ)ஸ்மின்
ஸாம்ʼஸாரிகே பதி² சரம்ʼஸ்தத³பி⁴ஶ்ரமேண .
நஷ்டஸ்ம்ருʼதி꞉ புனரயம்ʼ ப்ரவ்ருʼணீத லோகம்
யுக்த்யா கயா மஹத³னுக்³ரஹமந்தரேண .. 15..

ஜ்ஞானம்ʼ யதே³தத³த³தா⁴த்கதம꞉ ஸ தே³வ꞉
த்ரைகாலிகம்ʼ ஸ்தி²ரசரேஷ்வனுவர்திதாம்ʼஶ꞉ .
தம்ʼ ஜீவகர்மபத³வீமனுவர்தமானா-
ஸ்தாபத்ரயோபஶமனாய வயம்ʼ ப⁴ஜேம .. 16..

தே³ஹ்யன்யதே³ஹவிவரே ஜட²ராக்³னினாஸ்ருʼக்³-
விண்மூத்ரகூபபதிதோ ப்⁴ருʼஶதப்ததே³ஹ꞉ .
இச்ச²ன்னிதோ விவஸிதும்ʼ க³ணயன் ஸ்வமாஸான்
நிர்வாஸ்யதே க்ருʼபணதீ⁴ர்ப⁴க³வன் கதா³ நு .. 17..

யேனேத்³ருʼஶீம்ʼ க³திமஸௌ த³ஶமாஸ்ய ஈஶ
ஸங்க்³ராஹித꞉ புருத³யேன ப⁴வாத்³ருʼஶேன .
ஸ்வேனைவ துஷ்யது க்ருʼதேன ஸ தீ³னநாத²꞉
கோ நாம தத்ப்ரதி வினாஞ்ஜலிமஸ்ய குர்யாத் .. 18..

பஶ்யத்யயம்ʼ தி⁴ஷணயா நனு ஸப்தவத்⁴ரி꞉
ஶாரீரகே த³மஶரீர்யபர꞉ ஸ்வதே³ஹே .
யத்ஸ்ருʼஷ்டயா(ஆ)ஸம்ʼ தமஹம்ʼ புருஷம்ʼ புராணம்
பஶ்யே ப³ஹிர்ஹ்ருʼதி³ ச சைத்யமிவ ப்ரதீதம் .. 19..

ஸோ(அ)ஹம்ʼ வஸன்னபி விபோ⁴ ப³ஹுது³꞉க²வாஸம்
க³ர்பா⁴ன்ன நிர்ஜிக³மிஷே ப³ஹிரந்த⁴கூபே .
யத்ரோபயாதமுபஸர்பதி தே³வமாயா
மித்²யாமதிர்யத³னு ஸம்ʼஸ்ருʼதிசக்ரமேதத் .. 20..

தஸ்மாத³ஹம்ʼ விக³தவிக்லவ உத்³த⁴ரிஷ்ய
ஆத்மானமாஶு தமஸ꞉ ஸுஹ்ருʼதா³த்மனைவ .
பூ⁴யோ யதா² வ்யஸனமேதத³னேகரந்த்⁴ரம்ʼ
மா மே ப⁴விஷ்யது³பஸாதி³தவிஷ்ணுபாத³꞉ .. 21..

கபில உவாச
ஏவம்ʼ க்ருʼதமதிர்க³ர்பே⁴ த³ஶமாஸ்ய꞉ ஸ்துவன் ருʼஷி꞉ .
ஸத்³ய꞉ க்ஷிபத்யவாசீனம்ʼ ப்ரஸூத்யை ஸூதிமாருத꞉ .. 22..

தேனாவஸ்ருʼஷ்ட꞉ ஸஹஸா க்ருʼத்வாவாக்ஶிர ஆதுர꞉ .
விநிஷ்க்ராமதி க்ருʼச்ச்²ரேண நிருச்ச்²வாஸோ ஹதஸ்ம்ருʼதி꞉ .. 23..

பதிதோ பு⁴வ்யஸ்ருʼங்மூத்ரே விஷ்டா²பூ⁴ரிவ சேஷ்டதே .
ரோரூயதி க³தே ஜ்ஞானே விபரீதாம்ʼ க³திம்ʼ க³த꞉ .. 24..

பரச்ச²ந்த³ம்ʼ ந விது³ஷா புஷ்யமாணோ ஜனேன ஸ꞉ .
அனபி⁴ப்ரேதமாபன்ன꞉ ப்ரத்யாக்²யாதுமனீஶ்வர꞉ .. 25..

ஶாயிதோ(அ)ஶுசிபர்யங்கே ஜந்து꞉ ஸ்வேத³ஜதூ³ஷிதே .
நேஶ꞉ கண்டூ³யனே(அ)ங்கா³நாமாஸனோத்தா²னசேஷ்டனே .. 26..

துத³ந்த்யாமத்வசம்ʼ த³ம்ʼஶா மஶகா மத்குணாத³ய꞉ .
ருத³ந்தம்ʼ விக³தஜ்ஞானம்ʼ க்ருʼமய꞉ க்ருʼமிகம்ʼ யதா² .. 27..

இத்யேவம்ʼ ஶைஶவம்ʼ பு⁴க்த்வா து³꞉க²ம்ʼ பௌக³ண்ட³மேவ ச .
அலப்³தா⁴பீ⁴ப்ஸிதோ(அ)ஜ்ஞாநாதி³த்³த⁴மன்யு꞉ ஶுசார்பித꞉ .. 28..

ஸஹ தே³ஹேன மானேன வர்த⁴மானேன மன்யுனா .
கரோதி விக்³ரஹம்ʼ காமீ காமிஷ்வந்தாய சாத்மன꞉ .. 29..

பூ⁴தை꞉ பஞ்சபி⁴ராரப்³தே⁴ தே³ஹே தே³ஹ்யபு³தோ⁴(அ)ஸக்ருʼத் .
அஹம்ʼ மமேத்யஸத்³க்³ராஹ꞉ கரோதி குமதிர்மதிம்ʼ .. 30..

தத³ர்த²ம்ʼ குருதே கர்ம யத்³ப³த்³தோ⁴ யாதி ஸம்ʼஸ்ருʼதிம் .
யோ(அ)னுயாதி த³த³த்க்லேஶமவித்³யாகர்மப³ந்த⁴ன꞉ .. 31..

யத்³யஸத்³பி⁴꞉ பதி² புன꞉ ஶிஶ்னோத³ரக்ருʼதோத்³யமை꞉ .
ஆஸ்தி²தோ ரமதே ஜந்துஸ்தமோ விஶதி பூர்வவத் .. 32..

ஸத்யம்ʼ ஶௌசம்ʼ த³யா மௌனம்ʼ பு³த்³தி⁴꞉ ஶ்ரீர்ஹ்ரீர்யஶ꞉ க்ஷமா .
ஶமோ த³மோ ப⁴க³ஶ்சேதி யத்ஸங்கா³த்³யாதி ஸங்க்ஷயம் .. 33..

தேஷ்வஶாந்தேஷு மூடே⁴ஷு க²ண்டி³தாத்மஸ்வஸாது⁴ஷு .
ஸங்க³ம்ʼ ந குர்யாச்சோ²ச்யேஷு யோஷித்க்ரீடா³ம்ருʼகே³ஷு ச .. 34..

ந ததா²ஸ்ய ப⁴வேன்மோஹோ ப³ந்த⁴ஶ்சான்யப்ரஸங்க³த꞉ .
யோஷித்ஸங்கா³த்³யதா² பும்ʼஸோ யதா² தத்ஸங்கி³ஸங்க³த꞉ .. 35..

ப்ரஜாபதி꞉ ஸ்வாம்ʼ து³ஹிதரம்ʼ த்³ருʼஷ்ட்வா தத்³ரூபத⁴ர்ஷித꞉ .
ரோஹித்³பூ⁴தாம்ʼ ஸோ(அ)ன்வதா⁴வத்³ருʼக்ஷரூபீ ஹதத்ரப꞉ .. 36..

தத்ஸ்ருʼஷ்டஸ்ருʼஷ்டஸ்ருʼஷ்டேஷு கோ ந்வக²ண்டி³ததீ⁴꞉ புமான் .
ருʼஷிம்ʼ நாராயணம்ருʼதே யோஷின்மய்யேஹ மாயயா .. 37..

ப³லம்ʼ மே பஶ்ய மாயாயா꞉ ஸ்த்ரீமய்யா ஜயினோ தி³ஶாம் .
யா கரோதி பதா³க்ராந்தான் ப்⁴ரூவிஜ்ருʼம்பே⁴ண கேவலம் .. 38..

ஸங்க³ம்ʼ ந குர்யாத்ப்ரமதா³ஸு ஜாது
யோக³ஸ்ய பாரம்ʼ பரமாருருக்ஷு꞉ .
மத்ஸேவயா ப்ரதிலப்³தா⁴த்மலாபோ⁴
வத³ந்தி யா நிரயத்³வாரமஸ்ய .. 39..

யோபயாதி ஶனைர்மாயா யோஷித்³தே³வவிநிர்மிதா .
தாமீக்ஷேதாத்மனோ ம்ருʼத்யும்ʼ த்ருʼணை꞉ கூபமிவாவ்ருʼதம் .. 40..

யாம்ʼ மன்யதே பதிம்ʼ மோஹான்மன்மாயாம்ருʼஷபா⁴யதீம் .
ஸ்த்ரீத்வம்ʼ ஸ்த்ரீஸங்க³த꞉ ப்ராப்தோ வித்தாபத்யக்³ருʼஹப்ரத³ம் .. 41..

தாமாத்மனோ விஜானீயாத்பத்யபத்யக்³ருʼஹாத்மகம் .
தை³வோபஸாதி³தம்ʼ ம்ருʼத்யும்ʼ ம்ருʼக³யோர்கா³யனம்ʼ யதா² .. 42..

தே³ஹேன ஜீவபூ⁴தேன லோகால்லோகமனுவ்ரஜன் .
பு⁴ஞ்ஜான ஏவ கர்மாணி கரோத்யவிரதம்ʼ புமான் .. 43..

ஜீவோ ஹ்யஸ்யானுகோ³ தே³ஹோ பூ⁴தேந்த்³ரியமனோமய꞉ .
தந்நிரோதோ⁴(அ)ஸ்ய மரணமாவிர்பா⁴வஸ்து ஸம்ப⁴வ꞉ .. 44..

த்³ரவ்யோபலப்³தி⁴ஸ்தா²னஸ்ய த்³ரவ்யேக்ஷாயோக்³யதா யதா³ .
தத்பஞ்சத்வமஹம்ʼமாநாது³த்பத்திர்த்³ரவ்யத³ர்ஶனம் .. 45..

யதா²க்ஷ்ணோர்த்³ரவ்யாவயவத³ர்ஶனாயோக்³யதா யதா³ .
ததை³வ சக்ஷுஷோ த்³ரஷ்டுர்த்³ரஷ்ட்ருʼத்வாயோக்³யதானயோ꞉ .. 46..

தஸ்மான்ன கார்ய꞉ ஸந்த்ராஸோ ந கார்பண்யம்ʼ ந ஸம்ப்⁴ரம꞉ .
பு³த்³த்⁴வா ஜீவக³திம்ʼ தீ⁴ரோ முக்தஸங்க³ஶ்சரேதி³ஹ .. 47..

ஸம்யக்³த³ர்ஶனயா பு³த்³த்⁴யா யோக³வைராக்³யயுக்தயா .
மாயாவிரசிதே லோகே சரேன்ன்யஸ்ய கலேவரம் .. 48..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த்ருʼதீயஸ்கந்தே⁴ காபிலேயோபாக்²யானே ஜீவக³திர்நாம ஏகத்ரிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 31

———————————————————-

பூர்வ கர்ம வசத்தால் உந்தப்பட்டு ஜீவன் உடலை எடுக்கும் பொருட்டு புருஷனுடைய வீரியத்தில் ஒட்டிக் கொண்டு
ஸ்திரீயின் கர்பப்பையில் புகுகிறான்.
ஓர் இரவில் கருவாகவும், ஐந்து இரவுகள் சென்றபின் நுரை போன்ற வடிவமும், பத்து நாட்களில் இலந்தைப்பழ வடிவமும்
அதன் பிறகு முட்டை வடிவமும் எய்துகிறான்.
ஒரு மாதத்தில் தலையும், இரண்டு மாதத்தில் கை கால் முதலிய அங்கங்களின் தோற்றமும் மூன்று மாதங்களில்
நகம் ரோமம் தோல் எலும்பு முதலியவைகளின் அடையாளங்களும் தோன்றுகின்றன.
ஆணா பெண்ணா என்பது இப்போது நிச்ச்யிக்கப்படுகிறது.
ஐந்தாவது மாதத்தில் சிசு பசி தாகம் இவைகளை உணர்கிறது. ஆறாவது மாதம் அசைய ஆரம்பிக்கிறது.
ஏழாவது மாதம் தொடங்கி அறிவு உதிக்க ஆரம்பிக்கிறது. இந்த சமயம் பூர்வ ஜன்ம நினைவுகள் வர மறுபடி பிறவி எடுக்க
பயந்து எந்த பகவானால் தாயின் வயிற்றில் புகுத்தப்பட்டானோ அந்த பகவானைக் கை கூப்பி துதிக்க ஆரம்பிக்கிறான்.

பகவானுடைய மாயையின் சக்தியினால் கர்ம வசப்பட்டு என் உண்மை நிலையை உணராமல் சம்சார பந்தத்தில் அகப்பட்டுள்ளேன்.
எங்கும் நிறைந்த அந்த பரம் பொருளின் கிருபையால் எனக்கு இப்போது பூர்வ ஜன்ம நினைவு வருகிறது.
அவர் அருளாலேயே கர்ம பந்தத்தில் இருந்து விடுபட முடியும்.
இப்போது இன்னொரு உடலினுள் அகப்பட்டு அங்குள்ள திரவங்களால் அலைக் கழிக்கப் பட்டு ஜாடராக்னியால்
பொசுக்கப்பட்டு வெளியேறுவேன் என நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
ஆயினும் இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்தாலும் இதை விட்டு வெளியேற விரும்பவில்லை. ஏனென்றால்
வெளியே என் நினைவுகள் மறைந்து உலக மாயையில் அகப்பட்டு சம்சார பந்தத்தில் சிக்கி பகவானை மறந்து
தேகமே நான் என்றெண்ணி மறுபடி பிறவிப் பிணியை அனுபவிக்க வேண்டுமே.

அதனால் நான் இறைவனின் பகவத் த்யானத்தினால் இந்தப் பிறவித் துன்பத்தை ஒழிக்க எண்ணுகிறேன்.
இவ்வாறு கர்பத்தில் இருக்கும் போது ஈச்வரனைத் துதித்துக் கொண்டிருக்கையில் பத்து மாதம் முடிந்து சட வாயுவானது
அவனை உந்திக் கீழே தலை கீழாகத் தள்ளி விடுகிறது.
அறிவு மறைந்து விபரீத அஞ்ஞானநிலையடைந்து வீரிட்டு அழத் தொடங்குகிறான்.
பிறந்தவுடன் நடக்கவும் பேசவும் ஆரம்பிக்கும் முன் பிறர் தயவில் வாழும்போது, பூச்சி கடித்தாலும்,
உடல் உபாதை இருந்தாலும் அவனால் அழத்தான் முடிகிறது.
அறிவுள்ள பெற்றோர் வாய்ப்பின் ஓரளவு சுகம் காண முடியும் இல்லாவிட்டால் நரக வேதனைதான்.

வளர்ந்த பிறகும் தேவைகளும் ஆசைகளும் கூடவே வளர்வதால் முந்தைய ஜென்மத்தின் இடர்கள் பின் தொடர்கின்றன.

நல்ல வழியில் செல்லும் ஜீவனும் காம இச்சைக்கும் வயிற்றை நிரப்புவதற்குமே வாழும் தீயோரிடம் சேர்ந்தால்
முன் போல் நரக வாசம் போன்ற பிறவித் துன்பத்தை அடைகிறான்.
அதனால் இந்த துன்பத்தை வெல்ல என்ன வழி ?
மரண பயத்தை விட்டு தன் உண்மை நிலை என்ன என்று உணர்ந்து பற்றற்ற வாழ்க்கை மூலம் தேஹாத்ம புத்தியை விட்டு
கர்ம பந்தத்தில் இருந்து விடுபட வேண்டும்.

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார்-மகாவித்வான் ஸ்ரீ ரா. இராகவையங்கார்

November 3, 2020

கவிச்சக்ரவர்த்தி கம்பர்
மகாவித்வான் ரா. இராகவையங்கார்
(சேது சமஸ்தான வித்வான் – அண்ணாமலைப் பல்கலைக்கழக
முன்னாள் தலைமைத் தமிழாராய்ச்சியாளர்)

‘கல்வியிற் பெரியர்’ என்றும், ‘கவிச்சக்ரவர்த்தி’ என்றும் நல்லியற்புலவரெல்லாம் மனமொத்து வாயாரப் புகழும்
பெருமாண்புடைய அருமைக் கம்பரின் பெருமைச் சிறப்பு முழுதும், இத்தமிழுலகம் நன்றறிந்து நாளும் பாராட்டுவதேயாம்.
இக்கவியரசர் வரலாறு, காலம் முதலியன இக்காலத்து, ஒன்றோடொன்றொவ்வாப் பல்வேறு வகையால் வழங்கப்படுகின்றன.
சிறிது பழைய தமிழ் நூல்களையே பெருங்கருவியாகக் கொண்டு நோக்கின், அவற்றதுண்மை இன்னதென்று துணியலாகும்.
இவ்வாராய்ச்சிக்குப் பெருண்துணையாகக் காண்பன:-
தமிழ் நாவலர் சரிதை, தொண்டைமண்டல சதகம், சோழமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம் என்பனவும், பிறவுமாம்.
இவற்றுள் கண்ட சில பாடல்களையும் அடிகளையும் ஈண்டு எடுத்தோதி விளக்குதலானே, இத்தெய்வப்புலவரது வரலாறு
ஒருவாறு நண்குணரலாகும். இவற்றில் சில கற்பனை வரலாறுகளும் இருக்க வாய்ப்பு உண்டு.

இவர் ஊர்

திருவழுந்தூர்த் தாதியை, சோழன், எந்த ஊர் என்று கேட்ட போது பாடியது,

கம்பன் பிறந்தவூர் காவேரி தங்குமூர்
கும்பமுனி சாயங் குலைந்தவூர் – செம்பதுமத்
தாதகத்து நான்முகனுந் தாதையுந்தே டிக்காணா
வோ தகத்தார் வாழுமழுந் தூர்.–(தமிழ் நாவலர் சரிதை)

இவர் குலம்

நாரணன் விளையாட் டெல்லா நாரத முனிவன் சொல்ல
வாரணக் கவிதைசெய்தா னறிந்துவான் மீகியென்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூருவச்சன்
காரணி கொடையான் கம்பன் றமிழினாற் கவிதை செய்தான்.-(இராமாவதாரப் பாயிரம்.)

இப்பாட்டில் ‘உவச்சன்’ என்பதற்கியைய, வாணியன் தாதன் என்பான் இக்கம்பரைப் பாடிய வசைப்பாட்டின்கண்,
“கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன்” (தமிழ் நாவலர் சரிதை) என வருதல் காண்க.
கைம்மணிச் சீர் – கையின் மணியோசை. உவச்சர் என்பார் காளிகோயில் முதலியவற்றிற் பூசைபுரியும் வகுப்பினராதலால்,
அவர்க்குக் கையால் மணியொலிப்பித்தலுந் தொழிலாம்.

இவர் வளர்ந்து கல்வி பயின்று சிறந்தவாறு

பெற்றுவளர்த்தும் வித்தைதனைப் பேணிக்கொடுத்தும் பெயா கொடுத்தும்
பற்றவரும்பா லமுதளித்தும் பகைத்தவறுமைப் பயந் தீர்ந்துங்
கற்றமுதனூற் றிருவழுந்தூர்க் கம்பன்றழையக் கருணை செய்தோர்
மற்றும்புலவோ ரையும்வாழ வைத்தார் சோழ மண்டலமே.–(சோழமண்டல சதகம்.)

இங்ஙனம் கம்பரை வளர்த்துச் சிறப்பித்தவன் வெண்ணெய் நல்லூர்ச் சடையன் என்பான்.
இதனை மேல்வருஞ் செய்யுளானும் உணர்க.

கம்பர், தெய்வ வரத்தினாற் கவி சொல்லிய நாளிற் பாடிய வெண்பா:

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே – நாட்டி
லடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு
முடையான் சரராமனூர் (தமிழ் நாவலர் சரிதை)

சரராமன் என்பது வெண்ணெய்நல்லூர்ச் சடையற்க்கு ஒரு பெயர்.
“மழையென், றாசங்கை கொண்ட கொடை மீளியண்ணல் சரராமன் வெண்ணெய்,” (நாகபாசப் படலம்)
என இவர் இராமாவதாரத்து வழங்குதலானுமுணர்க.

இவர் ஏரெழுபது பாடி அரங்கேற்றியது

குணங்கொள் சடையன் புதுச்சேரிக் கொடையன் சேதிராயன் முதற்
கணங்கொள் பெரியோர் பலர்கூடிக் கம்பநாடன் களிகூற
விணங்கும்பரிசி லீந்துபுலி யேழும்புகழே ரெழுபதெனு
மணங்கொள் பெருங்காப் பியப்பனுவல் வகித்தார் சோழ மண்டலமே–(சோழமண்டல சதகம்.)

சடையனாகிய புதுச்சேரிக் கொடையன் என்க, சேதிராயனும் புதுவை ஊராதல் பற்றிப் புதுச்சேரிக் கொடையனாகிய
சேதிராயன் எனினுமமையும், சடையன், சேதிராயன் முதலிய பெரியோர் நிறைந்த அவையியற்றான் இவர் ஏரெழுபது அரங்கேற்றியது.

இப்பாட்டின்கண் ‘குணங்கொள் சடையன்’ எனப்பட்ட மேற்கூறிய வெண்ணெய்ச் சரராமனாவன்.
புதுவை, புதுச்சேரி என்று வழங்குகின்ற ஊரும் இவனதாதல் பற்றி இவனையே ‘புதுச்சேரிக் கொடையன்’ எனவும்,
‘புதுவைச் சடையன்’ எனவும் வழங்குபவர் எனத் தெரிகின்றது.
இவனைப் ‘புதுவைத் திரிகர்த்தன்’ ‘வெண்ணெய்த் திரிகர்த்தன்’ என வழங்குதலுமுண்டு.
இவன், மூவேந்தர்க்கும் அவர் பரிசனங்கட்கும் ஒருகாற் பெருவிருந்தளித்து, அவரால் திரிகர்த்தராயன் எனச் சிறப்புப் பெயர்
சூட்டப்பெற்றான் என்பர். இவர் சோணாட்டில் மிகப்பெரிய காணிவளமுடையனாயிருந்தனனெனவும், நாளும் பல்லாயிரவர்க்குப்
பாலுஞ்சோறும் பரிந்தளித்தனனெனவும், சிங்களமாண்ட பரராசசிங்கப் பெருமான் என்னுமரசன், ஈழநாடு பஞ்சம் பட்டபோது
இவ்வள்ளலைப் பாட, இவன் ஆயிரங்கப்பலில் நெல்நிறைத்துக் கொண்டுபோய்க் கொடுத்து அவன் நாடு முற்றும்
பாதுகாத்துச் சிறந்தனனெனவும் சொல்லுவர்.

இவன் சங்கரன் என்பவர்க்குப் புதல்வனென்பதும், இணையாரமார்பன் என்பவனைத் தம்பியாக உடையவனென்பதும்,
பெரும்பாலும் திருவெண்ணெய் நல்லூரையே தனது பெருங்குடிக் கிருக்கையாகக் கொண்டவனென்பதும்,
கல்வியில் சிறந்தானென்பதும் தெரிகின்றன. சிறுபான்மை, இவனைப் புதுவைச் சடையன் என வழங்குவது,
அதன்கண் இவன் தந்தையாகிய சங்கரன் வதிந்த சிறப்புப் பற்றியும், அவ்வூர் இவனுக்குச் சிறந்த கடற்றுறைப் பட்டினமாதல் பற்றியும் ஆகும்.
இவன் வியலூர் என்னும்மிடத்துமிருந்தனனென்ப. புதுவையும் வெண்ணெயும் வியலூரும் தூரவூர்களல்லாமை உணர்ந்து கொள்க.
இவன் தந்தையாகிய சங்கரனுக்கு ஒட்டக்கூத்தர் முதலில் உதவித்தொழில் புரிந்து கொண்டிருந்தனரெனவும்,
அவரை, அப்புதுவைக்கணிருந்த காங்கேயன் என்னும் உபகாரியொருவன் கல்விபயிலுவித்து நல்லறிஞராக்கிக் கவிராக்ஷசன் எனவும்,
கெளடப் புலவன் எனவும், பெயர் சிறப்பித்து உயரச் செய்தானெனவும், அந்நன்றி பாராட்டி அக்கூத்தர்
காங்கேயன் மேல் ‘நாலாயிரக் கோவை’யொன்று பாடினாரெனவும் அறியலாவன, “கெளடம்” என்பது ஒருவகைக் கவிமார்க்கம்.

அது, பொருள் புலப்படத் தொடுப்பதிலும் சொல்வளம்படத் தொடுப்பதே சிறப்பெனக் கருதுவோம்.
‘இடுக்கட்புண்படு’ ‘பத்துக் கொண்டன’ ‘விக்காவுக்கு’ என்பது முதலாக வரும் இக்கூத்தர் பாடல்கள்,
அக்கெளட நெறியே என்றதாதலுணர்க. ஒட்டக்கூத்தர், சடையன்றந்தையாகிய சங்கரனுக்கு உதவித்தொழில்
புரிந்துகொண்டிருந்தனரெனவும், கம்பர் அச்சடையனால் வளர்த்துச் சிறப்பிக்கப்பட்டனரெனவும் தெரிதலால்
கம்பர் கூத்தருக்கு இளையராவரென உய்த்துணரப்படுகின்றது.
மற்றுமிச் சடையனைப் பற்றியன ஆங்காங்குக் கூறப்படும். பின்னர்க் கண்டுகொள்க.

இனி, புதுவைச் சடையனும், வெண்ணெய்ச்சடையனும் வேறு வேறாவரெனக் கூறின், இருவரும் ‘திரிகர்த்தன்’ எனச்
சிறப்புப் பெயர் புனையப் பெற்றனரெனவும், இருவரும் நாளும் பல்லாயிரவர்க்குப் பசியாற்றும் வண்மையும்
வளப்பமுமுடையராயிருந்தனரெனவும், இவ்விருவரும் கல்வியிற் பெரிய கம்பரைப் போற்றினரெனவும்,
“புதுவைச் சடையனிருந்த வியலூர்” என்று பாடப்பெற்ற வியலூர், வெண்ணெய்நல்லூர்க்கு மிக அணித்தாதலால்,
அவ்விருவரும் நெருங்கி வதிந்தனரெனவும் கொள்ள நேரும். அங்ஙனம் திரிகர்த்தனென்னும் பட்டம்
அக்காலத்து இருவர்க்குச் சூட்டியமை அறியப்படாமையாலும், புதுவையானொருவனே திரிகர்த்தனே பட்டம் பெற்றானாக
வெண்ணெய்த்திரிகர்த்தன் எனவும் வழங்குதலறியப்படுதலாலும், திரிகர்த்தனென்னுஞ் சிறப்புடையானொருவனே
வெண்ணெயும் புதுவையுமுடையனாயினான் எனக் கருதுதலே இயைபுடைத்தாமென்பது உணரத்தக்கது.
அன்றியும், ஊரன்றி மற்றைவளமுங் குணமும் வண்மையும் பெயரும், கம்பரால் புகழப்படுஞ் சீருஞ்சிறப்புமென்னுமிவற்றில்
எவ்வகை வேற்றுமையும் அறியப்படாமை காண்க. இவற்றுக்கெல்லாம் செய்யுள் வருமாறு; —

அளிக்கும்படைமூ வேந்தருங்கொண் டாடும்விருந்தா லதிசயமாய்த்
திளிக்குந் திரிகர்த் தராயனெனச் செப்பும்வரிசைத் திறஞ்சேர்ந்தோன்
விளைக்குமரிசி மாற்றியநீர் வெள்ளங்கிழக்கு விளையுமென
வளைக்குப் பெருமைப் புதுவையர்கோன் வளஞ்சேர் சோழமண்டலமே.-(சோழமண்டல சதகம்.)

புரந்தர தாரு புதுவைச் சடையன்
னிருந்தவிய லூர்தெற்கு மேற்கு – பரந்த பொன்னி
யாற்றுநீ ரால்விளையு மப்பாற் கிழக்கரிசி
மாற்றுநீ ரால்விளையு மாம்.

யாமார் புகழ வியற்கம்ப நாட னிராமரொடும்
பாமாலை சூட்டுங் குலமுடை யானைப் படிபுரக்கக்
கோமாற னிட்டபொற்சிங்கா தனம் பெற்ற கொற்றவனைத்
தேமாலை யச்சந் தவிர்ப்பான் வெண்ணெய்த்திரிகர்த்தனையே.

தண்ணார் கமலச் சதுமுகத் தோனையும் தப்புவதோ
பண்ணா மணித்தலைக் கட்செவி யானது பாரிலுள்ளே
கண்ணாக வாழும் வெண்ணெய்த்திரி கர்த்தன் கலைத்தமிழ்கேட்
டெண்ணா முடியசைத் தாலுல கேழுமிறக்கு மன்றே.

எட்டுத் திசையும் பரந்த நிலா வெறிக்குங்கீர்த்தியேருழவர்
சட்டப்படுஞ்சீர் வெண்ணெய்நல்லூர்ச் சடையன் கெடிலன் சரிதமெலா
மொட்டிப்புகழ வாயிநா வுடையார்க்கன்றி யொருநாவின்
மட்டுப்படுமோ வவன்காணி வளஞ்சேர் சோழ மண்டலமே.

தேனார்தொடையார் பரராச சிங்கப்பெருமான் செழுந்தமிழ்க்குக்
கானார்நெல்லின் மலைகோடி கண்டிநாடு கரைசேரக்
கூனார்கப்ப லாயிரத்திற் கொடுபோயளித்த கொடைத் தடக்கை
மானாகரன் சங்கரன் சடையன் வளஞ்சேர் சோழ மண்டலமே.

இரவுநண்பக லாகிலென்பக லிருளறாவிர வாகிலெ
னிரவியெண்டிசை மாறிலென்கட லேழுமேறிலென் வற்றிலென்
மரபுதங்கிய முறைமைபேணிய மன்னர்போகிலெனாகிலென்
வளமையின்புறு சோழமண்டல வாழ்க்கை காரணமாகவே

கருதுசெம்பொனி னம்யலத்திலோர் கடவுணின்று நடிக்குமே
காவிரித்திரு நதியிலேயொரு கருணைமாமுகி றுயிலுமே
தருவுயர்ந்திடு புதுவையம்பதி தங்குமன்னிய சேகரன்
சங்கரன்றரு சடையனென்றொரு தருமதேவதை வாழவே.
இது பரராசசிங்கப்பெருமான் சடையனுக்கு எழுதி விடுத்த செய்யுளாயினுமாம்.

கம்பர் காவிரி எச்சிற்படப் பாடிய வெண்பா

மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவ நீர்போதுங் காவிரியே பொய்கழுவும்
போர்வேள் சடையன் புதுவையான் றன்புகழை
யார்போற்ற வல்லா ரறிந்து. (தமிழ் நாவலர் சரிதை)

விருந்துநுகர்வோர் கைகழுவ விளங்கும்புனற்கா விரியென்றார்
தருந்தாயனைய புகழ்ப்பதுவைச் சடையன்கொடையார் சாற்றவல்லார்
பரிந்தாரெவர்க்கு மெப்போதும் பாலுஞ்சோறும் பசிதீர
வருந்தாதளிக்க வல்லதன்றோ வளஞ்சேர்சோழ மண்டலமே.

இவற்றால் இவன் நாளும் பல்லாயிரவர்க்குணவளித்தது உணரப்படும்.

கோலாகலமன் னரிலவன்போற் கொடுத்தேபுகழுங் கொண்டாரார்
மேலார்கவுடப் புலவனெனும் விழுப்பேர்க்கூத்தன் முழுப்பேரா
னாலாயிரக்கோ வையம்புனைய நவில்கென்றிசைத்து நாட்டுபுகழ்
மாலாமெனுங்காங் கயன்வாழ்வு வளஞ்சேர்சோழ மண்டலமே. (சோழமண்டல சதகம்.)

புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்
குதவித் தொழில்புரி யொட்டக் கூத்தனைக்
கவிக்களி றுகைக்குங் கவிராட்சதனெனப்
புவிக்குயர் கவுடப் புலவனு மாக்கி
வேறுமங் கலநாள் வியந்துகாங் கயன்மேற்
கூறுநாலாயிரக்கோவைகொண் டுயர்ந்தோன்.

இனிச் சேதிராயனென்பான் புதுவையின்கணிருந்த ஓர் உபகாரி. இவன் ‘கம்பர் வேளாளரைச் சிறப்பித்துப்பாடிய
ஏரெழுபது’ என்னும் நூலைச் சடையனுடனிருந்து கேட்டவன். கம்பர் ஏரெழுபது அரங்கேற்றும்போது
இச்சேதிராயனை விடந்தீண்டிற்றாகவும் அதனாலரங்கேற்றம் இடையறவு படலாகாது என்னுங்கருத்தாற்
சேதிராயன் தனக்கு நிகழ்ந்ததனைப் பிறர்க்குறையாது மறைத்து அவையத்திருந்து நூல்கேட்க,
விடந்தலைக்கேறுதலால் மயங்கி வீழ்ந்தனன்.
அவ்வளவில் ஆங்குக்கூடிய பெரியார் பலரும் உடற்குறியால் விடமென்று கண்டு வருந்தாநிற்கையிற்
கம்பர் தமதருமைத் தெய்வவாக்கினாற் சிலவெண்பாக்கள் பாடி விடத்தையேறியபண்பே யிறக்கி அவனை உயிர்ப்பித்தார் என்ப.
இச்சேதிராயனுக்குத் தொண்டைநாட்டிலுங் காணிவளமுண்டு. இவற்றிர்குச் செய்யுள்:

அழுவதுங் கொண்டு புலம்பாது நஞ்சுண் டதுமறைத்தே
ரெழுபதுங் கொண்டு புகழ்க்கம்ப வாணனெழுப்பவிசை
முழுவதுங் கொண்டொரு சொற்பேச நெய்யின் முழுகிக்கையின்
மழுவதுங் கொண்டு புகழ்கொண்ட தாற்றொண்டை மண்டலமே–(தொண்டைமண்டல சதகம்.)

“…………………………பாவலர்தா
மேரெழுப தோதியரங் கேற்றுங் களரியிலே
காரிவிட நாகங் கடிக்குங்கை.” (திருக்கைவழக்கம்)

கம்பர் ஏரெழுபது பாடி அரங்கேற்றும்போது புதுவைச் சேதிராயனை விடந்தீண்டத் தீர்த்த வெண்பா

ஆழியான் பள்ளி யணையே யவன்கடைந்த
வாழி வரையின் மணித்தாம்பே – பூழியான்
பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற
நாணே யகல நட.

மங்கை யொருபாகர் மார்பிலணி யாரமே
பொங்கு கடல்கடைந்த பொற்கயிறே – திங்களையுஞ்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே
யேறிய பண்பேயிறங்கு. (தமிழ் நாவலர் சரிதை)

இவர் வல்லியை விழைந்தது

இவர் ஒருகால் தொண்டைநாட்டுள்ள திருவொற்றியூருக்குச் சென்றபோது, அங்குச் சதுரானன பண்டிதன் மடத்திருந்த
வல்லி எனப்பெயரிய கணிகையொருத்தியை விழைந்து, பலகாலம் அவளுடன் அங்கே தங்கி மகிழ்ந்து அவளுக்கு
எருமைகள் வாங்கி வரப் புழற்கோட்டம்புக்குக் காளிம்பன் என்னும் நிரைமேய்ப்பானொருவனைக் கண்டு பாட,
அவன் ஈன்ற எருமைகள் ஆயிரம் (பல) கொடுக்கப் பெற்று, அவற்றையெல்லாம் வல்லிபாலுய்த்துப்,
பின் அவளுக்கு அணி பலவியற்றித் தருதற்குத் திருமயிலைபோய் ஆண்டுத்திருவாலி என்னும் தட்டான் ஒருவனைப்பாடி
அணியெல்லாம் இயற்றுவித்துக்கொண்டு மீண்டு அவளுக்கு அணிவித்து, இன்னவாறு அவளுக்கு வேண்டுவன பலவும் உதவிவந்தனர்.
அவள் இவர்பாற் பாராட்டிய பேரன்பினாற் பின் அவளைப் பிரியலாற்றாது உடன்கொண்டு சோணாடுபுக்கு ஆங்கும்
அவளுடன் இனிது களித்தனர் என்ப. அக்காலத்து ஆங்கு வல்லியிருந்தவீட்டினை மழையால் நனையாமற்,
கம்பருக்கு ஆருயிர்த் துணைவனான சடையவள்ளல் ஓரிரவிற்குள் நெற்கதிராலே வேய்ந்து இனிது புரிந்தனன் என்ப.
இவற்றிர்குச் செய்யுள் வருமாறு:

திருவொற்றியூர் வல்லியைக் கண்டு சொல்லியது

இல்லென்பார் தாமவரை யாமவர்தம் பேரறியோம்
பல்லென்று செவ்வாம்பன் முல்லையையும் பாரித்துக்
கொல்லென்று காமனையுங் கண்காட்டிக் கோபுரக்கீழ்
நில்லேன்று போனாரென் னெஞ்சைவிட்டுப் போகாரே.–(தமிழ் நாவலர் சரிதை)

நடக்கிலன்னமா நிற்கினல் வஞ்சியாங்
கிடக்கி லோவியப் பாவை கிடந்ததாந்
தடக்கை யான்சது ரானன பண்டிதன்
மடத்து ளாளென் மனத்துறை வல்லியே. (க்ஷெ)

கம்பருக்குக் காளிம்பன் ஈன்ற எருமை ஆயிரம் கொடுத்த வெண்பா

புக்கு விடைதழுவிக் கோடுழுத புண்ணெல்லாந்
திக்கிலுயர் காளிம்பன் றென்புழன்மா – னக்கணமே
தோள்வேது கொண்டிலனேற் சுந்தரப்பொற் றோன்றலுக்கு
வாழ்வேது கண்டிலமே மற்று. (தமிழ் நாவலர் சரிதை)

கம்பர் திருவாலிமேற் பாடிய வெண்பா

அண்ணறிரு வாலி யணிமயிலை யத்தனையும்
வெண்ணிலவின் சோதி விரித்ததே – நண்ணுந்
தடந்துப்பு விற்பாணந் தன்முகத்தே கொண்டு
நடந்துப்பு விற்பா ணகை. (க்ஷெ)

தனதானியத்தி லுயர்ந்தோர்க டாமேயென்னுந் தருக்கேயோ
வினவாதிரவி னெற்கதிரான் வேய்ந்தாரவல்லி வீடதல்லாற்
கனிசேர்தமிழ்க்குப் பன்னிரண்டு கடகயானைக் காடளித்த
மனைவாழ்வுடையான் வெண்ணெய்நல்லூர் வாழ்வான் சோழமண்டலமே. (சோழமண்டல சதகம்.)

பொதுமாதர் வீட்டைப் புகழ்பெற வேனெற்
கதிரானே வேய்ந்தருளுங் கங்கைப் – பதிநேர்
வருவெண்ணெய் நாடன் வருநா வலர்க்குத்
தருவா னவன்சடையன் றான்.

கம்பர் குரும்பை என்னுந் தாதிபாற் சொல்லிய கலித்துறை

சொல்லியைச் சொல்லி னமுதான செல்லியைச் சொற்கரும்பு
வில்லியை மோக விடாய்தவிர்ப் பாளை விழியம்பினாற்
கொல்லியைக் கொல்லியம் பாவையொப் பாளைக் குளிரொற்றியூர்
வல்லியைப்புல்லியகைக்கோ விவர்வந்து வாய்த்ததுவே. (தமிழ் நாவலர் சரிதை)

இப்பாட்டினால் இவர் வல்லியைப் பிரிந்த காலத்துக் குரும்பை என்பாளைத் தழுவி மனம் பொருந்தாமையால் வெறுத்தனர்
எனத் தெரிகின்றது. இவர் வல்லியைப் பிரிகின்றபோது பாடியதாக “வடிப்பாளை வீசுந் திருவொற்றியூர்வல்லி” என்னும்
முதலையுடைய பாட்டொன்றும் வழங்குகின்றது.

இவர்களையன்றிக் களந்தைப் பதியிலொருத்தியையும் இவர் விழைந்தனரென “வில்லிகளந்தை மின்னை”
(தமிழ் நாவலர் சரிதை) என்னும் முதலையுடைய செய்யுளான் விளங்குகின்றது. இப்புலமைக்கரசரது அறிவு வீற்றிருந்த
செறிவுடை மனத்தையும் இவ்வாறு அலைக்கவல்ல காமனே யாரினும் பெருவலியுடையன் என்பது ஒருதலை.

‘எவர்க்கும் வேள்கணை தீர்திறமின்று’ என்பரன்றோ? இவ்விழைவெலாமுட்கொண்டு போலும் இப்புலவர் பெருந்தகையார்
“கற்றனர் ஞான மின்றேற் காமத்தைக் கடக்கலாமோ” (மாரீசன்வதை) எனப்பாடினாராவர்.

இவர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது

அரும்பெறன்மணியும் பெரும்பெயரமிழ்துமே நிறையப் பெற்ற பாற்கடல்போலப் பரந்துவிளங்குகின்ற இராமாயணமென்னுந்
தெய்வான்பனுவலை இவர் பாடியருளியதற்குக் காரணம், இவரது சீராமபத்தியேயன்றி வேறில்லையென்பது,
இவர், “ஆசைபற்றியறையலுற் றேன்மற்றிவ், வேசில் கொற்றத் திராமன் கதையரோ.” எனவும்,
“ஆங்கவன் புகழ்ந்த நாட்டை யன்பெனு நறவமாந்தி, மூங்கையான் பேச லுற்றா னென்னயான் மொழியலுற்றேன்” எனவும்
இராமாவதாரத்துரைத்துப் புகுந்தவாற்றால் நன்கறியத்தக்கது.
இவர் “பத்தர் சொன்னவும் பன்னப்பெறுபவோ” என்றதூஉம் இக்கருத்தையே வலியுறுத்தும்.
இவர் வளர்ந்து சிறத்தற்க்குக் காரணமான சடையவள்ளல் குடிக்கும் இச்சீராமபத்தி உண்டென்பது,
அவ்வள்ளற்க்குச் சரராமன் எனப்பெயரிட்டு வழங்கியவாற்றால் ஊகிக்கப்படும்.
அக்குடிப் பரிசயம் இவரது பத்திக்கு ஒரு காரணமாயினும் ஆம். அன்றியும் வான்மீகி முனிவர் திருவாய் மலர்ந்தருளிய
சீராமாயணத்தின் திட்பநுட்ப ஒட்பன்களே இவர்காலத்து யாண்டும் பரந்து விளங்கிமேம்பட்டன என்பதும்,
அக்காலத்தறிஞரெல்லாம் சீராம கதையை அம்ழ்தினும் அதிகமாகமதித்துவந்தனரென்பதும்,

“வைய மென்னை யிகழவு மாசெனக்
கெய்த வும்மி தியம்புவ தியாதெனிற்
பொய்யில் கேள்விப் புலமையி னோர்புகழ்
தெயவ மாக்கதை மாட்சி தெரிக்கவே.” (பாயிரம்)

“நொய்தினொய்யசொன் னூற்கலுற் றேனெனை
வைத வைவின் மராமர மேழ்துளை
யெய்த வெய்தவற் கெய்திய மாக்கதை
செய்த செய்தவன் சொன்னின்ற தேயத்தே.” (க்ஷெ)

“வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகியென்பான்
றீங்கவி செவிகளாரத் தேவரும் வருகச் செய்தான்.” (நாட்டுப்படலம்)

“எறிகடலுலகந் தன்னு ளின் றமிழ்ப் புலவர்க் கெல்லா
முறுவலுக் குரியதாக மொழிந்தனன் மொழிந்த வென்சொற்
சிறுமையுஞ் சிலையி ராமன் கதைவழிச் செறித றன்னா
லறிவுடை மாந்தர்க் கெல்லா மமிழ்தமொத் திருக்குமன்றே.” (பாயிரம்)

என இவர் இராமாவதாரத்து வழங்கியவாற்றால் உய்த்துணரப்படும். இவ்வாறு அறிஞரெல்லாம் ஒருங்குபாராட்டும்
சீராம காதையின் தெய்வமாட்சி, இப்பெரும்புலவரது அறிவுடை நெஞ்சினையும் நன்கு கவர்ந்ததாதலின்,
அதனையே தமது ‘செவ்விய மதுரஞ்சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய’
தமிழ்ப்பாக்களாற் பாடிப் புகழ் நிறுத்துதற்கு ஆசைப்பட்டனர் எனினும் அமையும்.

இவர் இராமாயணத்தைப் பெரும்பான்மை வெண்ணெய்நல்லூரிலும், சிறுபான்மை ஒற்றியூரிலும் இருந்துபாடினரெனவும்,
ஒற்றியூரில் இவரிருந்தபோது இந்நூலை இரவிலே பாடினரெனவும், அக்காலத்து மாணாக்கர் பலர் பிந்தாமலெழுதுவதற்கு
அவ்வூர்க் காளியைத் தீப்பந்தம் பிடிக்கப் பாடினரெனவும்,

‘தொடை நிரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல் லூர்வயிற் றந்ததே’ (இராமாவதாரப் பாயிரம்.)

கம்பர் காளியைப் பந்தம்பிடியென்று பாடியது

ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே
வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை – பற்றியே
நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்
பிந்தாமற் பந்தம் பிடி. (தமிழ் நாவலர் சரிதை) என வருவனவற்றால் அறியப்படுகின்றன.
இவர் தாம் பாடிய சீராம கதைக்கு இட்டபெயர் இராமாவதாரம் என்பது, (இது பின்னர் விளக்கப்படும்.)

“நடையி னின்றுயிர் நாயகன் றோற்றத்தி
னிடைநி கழ்ந்த விராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை.”-(இராமாவதாரப் பாயிரம்.)

“இத்த லத்து மிராமாவ தாரமே
பத்தி செய்து பரிவுடன் கேட்பவர்
புத்தி மிக்கரும் புண்ணிய முந்தரு
மெத்த லத்து மவனடி யெய்துவார்.” (க்ஷெ) என வருவனவற்றாலும்,
புறத்திரட்டுடையார் இந்நூலை, இராமாவதாரம் என்னும் பெயரே கொண்டாளுதலாலும் தெரிகின்றது.
இவர் பாடியது பாலகாண்டமுதல் யுத்த காண்ட மீறாகவுள்ள ஆறுகாண்டங்களே என்பதும்,
பின் உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தர் பாடினாரென்பதும், அவ்வுத்தரகாண்டம் சோழனதவைக்களத்தே அரங்கேற்றப்பட்டதென்பதும்,

“பூணிலாவுங் கம்பனலம் பொலியுந்தமிழாற் புகழெய்திக்
காணுமாறு காண்டமுறுங் கதையிற்பெரிய கதையென்னுந்
தாணிலாவுங் கழலபயன் சபையிற்பயிலுத் தரகாண்டம்
வாணிதாச னரங்கேற்ற வைத்தார்சோழ மண்டலமே.” (சோழமண்டல சதகம்.) என்னும் பாடலாற் றெரிகின்றன.
ஈண்டு அபயன் என்பது சோழன் என்னும் பொருளில் வந்தது. ஒட்டக்கூத்தர் சரசுவதி தம்பலங் கொடுக்க அதனாற் கவித்திறம்
எய்தினவராதலால் அவரை ‘வாணி தாசன்’ எனப் பெயர் சிறப்பித்து வழங்குவரெனத் தெரியலாகும்.
இங்ஙனம் கம்பர் பாடியன ஆறுகாண்டங்களேயாம் என்பதற்குப் பெரிதும் இயையவே, அரசகேசரியார் தாமியற்றிய இரகுவம்மிசம்
என்னுஞ் செந்தமிழ் நூலிற் சீராமமூர்த்தியின் திருவவதாரமேயுரைத்து
“மற்றிவ்விராமகதையின் பூருவபாகம் முழுவதையுங் கடலிற்பெரிய தமிழ்க்கல்வியினையுடைய கம்பநாடர் நிகழ்ந்தவாறு
உரைத்தாராதலால் அதனை யீண்டு ஓதினேனில்லை; அவருரையாத அக்கதையின் உத்தரபாகமே யானினியோதப்புக்கேன்”
என்னுங்கருத்தினை வெளிப்படுத்த,

பொற்றா மரைமா னொழியாது பொலியு மார்ப
வெற்றாங்கு மேனி ரகுராம சரிதை யாவுங்
கற்றார் கலியிற் பெரிதாந் தமிழ்க் கம்பநாட
னுற்றாங் குரைத்தானுரையாத வோது கிற்பாம். என ஒரு பாடலைக்கூறி அதன்பின்னே
சீதை வனம்புகுதல், இலவணன்வதை, சம்புகன்வதை, இராமாவதார நீங்குதல் முதலாகிய உத்தரகாண்டக் கதைகளையே
பல படலங்களாற் பாடியதனையும் ஈண்டைக்கு ஆராய்ந்து கொள்க.
இவ்விரகுவம்மிசச் செய்யுளாற் கம்பர் உத்தர காண்டம் பாடினாரில்லையென்பது நன்கு தெளியப்படும். இனிச் சில இராமாயண ஏடுகளில்,

கரைபொரு காண்டமேழு கதைகளாயிரத்தெண்ணூறு
பரவிய பாடைபத்து படலநூற் றைம்பத்தாறு
ளுரைதரு விருத்தம்பன்னீ ராயிரத் தொருபத்தாறு
வரமிகு கம்பன்சொன்ன வண்ணமு மெண்பத்தேழே. என ஓர் செய்யுள் உள்ளது.
மேற்காட்டிய பிரபலமான பிரமாணங்களோடு பகைத்தலால் பண்டை வழக்கறியாதார் ஒருவர்
பிற்காலத்து இயற்றியதாகுமெனக் கொள்ளத்தகும்.
‘கரைபொருகாண்டமாறு’ என்னும் முதலோடு, அதற்குப் பொருந்திய படலமுதலியவற்றின் வரையறையையுமுடைய
பழைய பாட்டொன்றைப் பிற்காலத்தார் ஏழுகாண்டங்கட்கும் ஒருவாறு இயையத்திரித்து இவ்வாறு வழங்கினரென ஊகித்தலுமாம்.
இச்செய்யுளிற் கணக்கிட்ட ஏழுகாண்டச் செய்யுட்டொகையினின்று உத்தரகாண்டச் செய்யுட்டொகையாகிய 1500ஐக் கழித்து
நோக்கின் மற்ற ஆறுகாண்டங்கட்கும் உரிய செய்யுட்டொகை 10516 ஆகும்.
இக்காலத்து முதல் ஆறுகாண்டங்கட்கும் உள்ள செய்யுட்டொகை
அச்சுப் பிரதிகளில் 10587ஆகவும் ஏட்டுப் பிரதிகளில் 10825; 10685 ஆகவும் பல வேறுவகைப்படுவது,
ஆறுகாண்டங்கட்கும் உள்ள படலத்தொகையும் இங்ஙனமே 113, 115, 128, 137 எனப்பலவாறாகக் காணப்படுகின்றது.
உத்தரகாண்டச் செய்யுட்டொகை, 1500 என்பதிற் பெரும்பான்மை வேறுபாடு காணாவிடினும்
அதன் படலத்தொகை 18, 23, என வேறு வேறு காணப்படுகிறது. இவ்வளவு மாறுபாடுற்ற இக்காலத்துப் பிரதிகளைக் கொண்டு
இச்செய்யுளில் கண்ட வரையறைகட்குப் பொருந்தவுரைப்பது அரிதாமென்க.
அன்றியும் புறத்திரட்டுடையார் இராமாவதாரமெனப் பெயரிட்டாண்ட,

எய்தவின்னல் வந்த போழ்தி யாவரேனும் யாவையுஞ்
செய்ய வல்ல ரென்ப தோர்க சென்னெறிக்க ணேகிட
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல வாய மற்றிவன்
கைக ளின்று பன்ன சாலை கட்ட வல்ல வாயவே (இடுக்கணழியாமை – 15) என்னுஞ் செய்யுளுக்கு வேறாக இக்காலத்து

மேவு கான மிதிலையர் கோன்மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தாவி லெம்பிகை சாலை சமைத்தன
யாவை யாது மிலார்க்கியை யாதவே.
(அயோத்திய காண்டம். சித்திரகூடப்படலம்) என ஒரு செய்யுள் காணப்படுதலாற்
கம்பர் பாடிய பாடல்கள் சில பிற்காலத்து விடப்பட்டும் பிறர் பாடியன சில இடையிடையே மடுக்கப்பட்டும்
இப்போதைப் பிரதிகளுள்ளனவென்று தெளியப்படும்.

பரிபாடலிலும் சிந்தாமணியிலும் பிற்காலத்துக் கந்தியார் என்பாரொருவர் தன்சொற்களையுஞ் செய்யுள்களையும்
இடைமடுத்தாற்போல இவ்விராமவதாரத்திலும் பிற்காலத்து வெள்ளியம்பலத் தம்பிரான் என்பாரொருவர்
தன் செய்யுள்கள் சிலவற்றை இடைமடுத்துப் போயினரென்பர். இவற்றை வெள்ளிபாடல் என்னும் பெயரான் வழங்குவர்.
இப்பிறழ்ச்சியேயன்றி எழுதினர் பிழைப்பாலும் பாடகர் பிழைப்பாலும் இவ்வேடுகளெய்திய மாறுபாட்டிற்கும் அளவேயில்லை.
ஆதலால் இந்நிலையில் கம்பர் ஆறு காண்டங்கட்கும் வகுத்த படலங்கள் இத்துணையெனவும், பாடிய பாடல்கள் இத்துணையெனவும்,
அப்படலங்களும் பாடல்களும் இவை இவை எனவும் வரையறுத்துணர்த்தல் இயலாதென்றுணர்க.
மேற்குறித்த மாறுபாடுகளொன்றும் எய்தாதனவும், புறத்திரட்டில் இராமவதாரம் என்று பெயரிட்டு எடுத்தாளப்பட்ட
செய்யுள்களெல்லாம் தம்பாலுள்ளனவும் ஆகிய மிகப்பழைய ஏடுகள் சில கிடைத்தனவாயின்
இவ்வரையறைகளின் உண்மை நன்கு புலனாகும் என்று கொள்க.

இனி கம்பர் தாம் பாடியருளிய இராமாவதாரத்துள் சடைய வள்ளலது பெருநன்றி பாராட்டி அவ்வள்ளலை
ஆங்காங்கு ஒருபது கவிகளால் புகழ்ந்துள்ளனரென்பது,

எண்ணத்தகும்பா ருள்ளளவு மிரவிமதிய மெழுமளவும்
கண்ணிற்கினிய சயராம் கதையிலொருபான் கவிமுழுதுங்
வெண்ணெய்ச்சடையன் சடையனென விறலார்கம்பன் விளங்கவைத்த
வண்ணத்துரைவே ளான்பெருமான் வளஞ்சேர் சோழ மண்டலமே.(சோழமண்டல சதகம்.)என்னுஞ் செய்யுளாற் றெரிகின்றது.
அப்பத்துப் பாடல்களாவன :-

நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடைநி கழ்ந்த விராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயிற் றந்ததே. (பாயிரம்.)

விண்ணவர் போயபின்றை விரிந்தபூ மழையினாலே
தண்ணெனும் கானநீங்கித் தாங்கருந் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமைநோய்க்கு மருந்தன சடையள் வெண்ணை
யண்ணறன் சொல்லேயன்ன படைக்கல மருளினானே. (பாலகாண்டம், வேள்விப்படலம்)

அரம டந்தையர் கற்பக நவநிதி யமிழ்தஞ்
சுரபி வாம்பரி மதமலை முதலியதொடக்கற்
றொருபெ ரும்பொருளின்றியே யுவரிபுக் கொளிப்ப
வெருவி யோடின வெண்ணைவாழ் கண்ணன்மேவாரின் (க்ஷெ அகலிடைப்படலம் 18)

வண்ண மாலைக் கைபரப்பி யுலகை வளைந்த விருளெல்லா
முண்ண வெண்ணித் தண்மதியத் துதயத்தெழுந்த நிலாக் கற்றை
விண்ணு மண்ணுந் திசையனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநன்னீர்ப்
பண்ணை வெண்ணைச் சடையன்றன் புகழ்போலெங்கும் பரந்துளதால். (க்ஷெ மிதிலைகாண்படலம். 74.)

மஞ்செனத் திகழ்தரு மலையை மாருதி
யெஞ்சலிற் கடிதெடுத் தெறிய வேநளன்
விஞ்சையிற் றாங்கினன் சடையன்வெண்ணையிற்
றஞ்சமென் றார்களைத் தாங்குந் தன்மைபோல். (யுத்தகாண்டம், சேதுபந்தனப்படலம்.)

வாசங்கலந்த மரைநாளநூலின் வகையென்ப தென்னை மழையென்
றாசங்கைகொண்ட கொடைமீளியண்ணல் சரராமன் வெண்ணை யணுகுந்
தேசங்கலந்த மறைவாணர் செஞ்சொ லறிவாள ரென்றிம் முதலோர்
பாசங்கலந்த பசிபோலகன்ற பதகன்றுரந்த வுரகம். (க்ஷெ நாகபாசப்படலம். 263)

வன்னிநாட் டியபொன் மொளலி வானவன் மலரின் மேலான்
கன்னிநாட் டிருவைச் சேர்ந்த கண்ணனுமாளுங் காணிச்
சென்னிநாட் டெரியல் வீரன் றியாகமா விநோதன் தெய்வப்
பொன்னிநாட் டுவமைப்பைப் புலன்கொள நோக்கிப் போனான்.(க்ஷெ மருத்துமலைப்படலம். 58)

அந்தணர் வணிகர் வேளாண் மரபின ராலி நாட்டுச்
சந்தணி புயத்து வள்ளல் சடையனே யனைய சான்றோர்
ருய்ந்தன மடிய மென்னு முவகைய ருவரி நாண
வந்தன ரிராமன் கோயின் மங்கலத் துரிமை மாக்கள்.
‘சங்கரனைய சான்றோர்’ எனவும் பிரதிபேதமுண்டு(க்ஷெ திருவபிடேகப்படலம்.)

அரியணை யநுமன் தாங்க அங்கத னுடைவாள் வாங்கப்
பரதன்வெண் கவிகை யேந்த விருவருங் கவரி பற்ற
விரைசெறி குழலி லோங்க வெண்ணைமன் சடையன் வண்மை
மரபுளோர் கொடுப்ப வாங்கி வசிட்டனே புனைந்தான் மொளலி. (க்ஷெ க்ஷெ. 38)

‘விரதமா தவர்களேத்த வெண்ணையூர்ச் சடையன் முந்தை’ எனவும்,
‘விரிகடலுலகங்காக்கும் வெண்ணைமன் சடையன் வண்மை’ எனவும்,
‘உரிமையி னயோத்தியுள்ளாருரைசெய் வெண்காடன் வந்த மரபினோர்’ எனவும் பிரதிபேதங்கள் உள்ளன.

8மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூன்
முறைசெயு மரசர் திங்கண் மும்மழை வாழி மெய்ம்மை
யிறையவ னிராமன் வாழி யிக்கதை கேட்போர்வாழி
யறைபுகழ்ச் சடையன் வாழி யரும்புக ழநுமன் வாழி.
(க்ஷெ விடை கொடுத்த படலம் வாழ்த்து)

இவற்றுள் ‘வெண்ணைவாழ் கண்ணன்’ எனவும் ‘கன்னிநாட்டிருவை சேர்ந்த கண்ணன்’ எனவும்
வருவனவற்றாற் சடையற்குக் கண்ணன் என்பதும் புலவர் கொடுத்த குணப்பெயராமெனத் தெரிகின்றது.
பலர்க்குக் கண்போன்றவன் ஆதலால் அவ்வாறு வழங்கினராவர். இக்கருத்துக்கியையவே
தண்ணார் கமலச்சதுமுகத் தோனை, என்னும் பாட்டில்
“பாரிலுள்ளோர் கண்ணாக வாழும் வெண்ணைத் திரிகர்த்தன்” என வந்ததுங் காண்க.
இராமகதையில் ஒரு பான் கவியாற் புகழப்பட்டவன் சடையனே என்பது
“சயராமகதையிலொரு பான்கவிமுழுதும், வெண்ணைச் சடையன் சடையனென விறலார் கம்பன் விளங்க வைத்த,
வண்ணத்துரைவேளாண் பெருமான்” என்று கூறுதலானும் அறியப்படும்.

இதற்குப் பொருந்தவே பாண்டிமண்டல சதகமுடையாரும்

தேனேறு மின்சொலி ராமாயணத்துத் திருவழுந்தூ
ரானே றனைய தமிழ்க்கம்ப நாட னமைத் துவைத்த
தானேரில் கீர்த்திசெய் வெண்ணெய்நல் லூரிற் சடையனைப் போல்
வானேறு சீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே—எனக்கூறினார்.
இனி ‘அந்தணர் வணிகர்’ என்னுஞ் செய்யுளிற் ‘சங்கரனனையசான்றோர்’ எனவும்
‘அரியணையநுமன்’ என்னுஞ் செய்யுளில் ‘உரிமையி னயோத்தியுள்ளாரைசெய்வெண் காடன்வந்த மரபினோர்’ எனவும்
வந்த பாடங்களையே கொண்டு நோக்கிற் கம்பர் சடையனையல்லாமல் அவன் குலத்தவரையும் பாடினாரெனெ எண்ணலாகும்.
சங்கரன் என்பான் சடையன் தந்தை என்பது முன்னரே கூறப்பட்டது. வெண்காடன் என்பவன் சடையனுக்கு இன்னவுறவினன் என்பது
தெளியப்படவில்லையாயினும் நெருங்கிய சுற்றத்தவன் என்பது மட்டிலூகித்தலாகும்.
இச்சடைய வள்ளலது குலத்துப் பெண் வழியினரென்று சொல்லப்படுகின்ற மெய்கண்டதேவர்க்குச் ச்வேதவனப் பெருமாள் என
ஒரு பெயருளதாதல் பற்றி ஈண்டை வெண்காடன் என்பது அவர் பெயராக வைத்து அவர்க்குப் பிற்காலத்து ஒருவர்
இப்பாடத்தை இடைமடுத்தனரோ என ஐயுறுதற்கு மிடனுண்டாதலால் இப்பாடபேதங்களிலுண்மை இப்போது அறிதலறிதாகின்றது.

ஒருசாரார் கண்ணன், சரராமன் என்னுமிருவரும் சடையனுக்குத் தம்பியர் எனவும் கூறுவர்.
இவ்வாறு பகுத்தறிதற்கு ஏற்ற மேற்கோளொன்றும் யான் காண்கிலேன்.
அன்றியும் கம்பர், பாண்டியன் முன்னே இணையாரமார்பன் என்பானொருவனை இன்னவன் என்றுரைத்தவிடத்துச்
சரராமனுக்கிளையான் எனவே கூறியுள்ளார். சரராமன் சடையனின் வேறாய் அவனுக்கு இளையனேயாயின்
இயல்பாகவே மூத்தோனும் எல்லாரினுஞ் சிறந்து புகழ் பெற்றோனும் பல்லோரானும் நன்கறியப்பட்டோ னும் ஆகிய
சடையனுக்கிளையான் எனக்கூறுவல்லரது அவ்வாறு கூறார்; பின்னர்ச் சரராமனை இன்னவன் எனத் தெரிவித்தற்குச்
சடையன்றம்பி எனவே கூறவேண்டும்.

இவையல்லாமற் கம்பர் தெய்வவரத்தினாற் கவி சொல்லிய நாளில் முதன்முதற் பாடிய ‘மோட்டெருமை வாவிபுக’ என்னும்
வெண்பாவில் வெண்ணெய்நல்லூரைச் சரராமனூர் எனப்பாடுதலால் சடையனினும் முற்படச் சரராமனது நன்றியே பாராட்டினார்
எனக் கருதற்கும் இடனாகும். சோழமண்டல சதமுகமுடையார், ஒருபான் கவிமுழுதும் வெண்ணைச்சடையன் புகழப்பட்டுள்ளான்
எனக் கருதியதும் தவறாகும். கம்பர் தம்மால் நன்றி பாராட்டிப் புகழப்பட்டார் பலராகவும், நூல் இறுதியிற் சடையன் ஒருவனையே
வாழ்த்தலும் தாம் சாகும்போதும் அச்சடையனது நன்றியே நினைந்துருகுதலும் பொருந்தாவாம்.
இவற்றால் அவ்வொருசாரார் கூற்றுப் பெரிதும் ஐயப்படுதலுடைத்து. மழையென்றா சங்கை கொண்ட கொடைமீளியண்ணலும்,
மண்ணவர் வறுமைநோய்க்கு மருந்தானவனும், பாரிலுள்ளோர் பலர்க்குக் கண்போன்றவனும், திரிகர்த்தன் எனப் பட்டம்
பெற்றவனுமாகிய வெண்ணைச் சடையனொருவனே சரராமன், கண்ணன் என்னும் பெயர்களானும் விளங்கினோன்
எனக்கருதுதற்கண் மேற்காட்டிய இடையீடொன்றும் எய்தாமையும் பலவற்றுக்கும் பொருந்தியதாலும் ஆராய்ந்து கொள்க. இவர்,

“புவிபுகழ் சென்னிபோ ரமலன் றோழ்புகழ்
கவிகடம் மனையெனக் கனக ராசியுஞ்
சவிபுடைத் தூசுமென் சாந்தும் மாலையு
மவிரிழைக் குப்பையு மளவி லாதது”–(கிட்கிந்தாகாண்டம், பிலநீங்குபடலம்.)

“சென்னிநாட் டெரியல் வீரன்றியாகமா விநோதன் தெய்வப்
பொன்னிநாட் டுவமை வைப்பைப் பலன்கொள் நோக்கிப்போனான்.” (யுத்தகாண்டம், மருத்துமலைப் படலம்)

எனப்பாடுதலான் இவரைச் சிறப்பித்துயர்த்திய சோழனும் இவரால் நன்றி பாராட்டப்பட்டுள்ளான் என்பது அறியலாகும்.
இனி இவர் இராமாவதாரம் அரங்கேற்றியது திருவரங்கப் பெரியகோயிற்கண்ணே யென்பதும் அந்நாள் பங்குனி உத்திரமாம் என்பதும்,

திண்மையேறுங் கம்பனிடஞ் செய்யத்தகும்பல் சிறப்பயர்ந்து
நண்மையேறு மிராமகதை நற்பேர்புவியிற் றழைத்தேற
வுண்மையேறுந் திருவரங்கத் தொருவன்சபையி லுத்தரநாள்
வண்மையேற வரங்கேற்றி வைத்தார்சோழ மண்டலமே.

“பண்ணிய விராமகாதை பங்குனி யுத்தரத்திற்
கண்ணிய வரங்கர் முன்னே கவியரங் கேற்றினானே”.–என்பனவற்றானறியப்படும்.
பங்குனியுத்தரநாள் சீராமமூர்த்தியின் திருக்கல்யாண தினமாதலால் அதனையே தாம்பாடிய இராமாவதாரம்
அரங்கேற்றுதற்கு உரிய மங்கலநாளாகக் கொண்டனராவர்;

பங்குனி யுத்தர மான பகற்போ
தங்க ணிருக்கினி லாயி நாமச்
சிங்க மணத்தொழில் செய்த திறத்தான்
மங்கள வங்கி வசிட்டன் வகுத்தான் (கடிமணப்படலம்) எனக் கூறியதனையும் நோக்கிக்கொள்ளுக.
‘பங்குனி யுத்த நாளில்’ என்னும் பிரதிபேதமுமுண்டு. அது சோழ மண்டல சதகத்துக் கூறப்பட்டதனோடு மாறுபடுதலையும்
பங்குனி யுத்தரம் போலச் சிறவாமமையும் தேர்ந்துகொள்க. இவர் சோழனது அவையிலரங்கேற்றாமற் பெரியகோயிலையே
அதற்கேற்ற நல்லவையாகக் கருதியதனானே, இவர் அரசவையிலும் அறிவுடையந்தணரது நல்லவையையே பெரிதும் மதித்தனரென்பதும்,
ஒருவரான் வேண்டப்படாமற் றாமே தமது சீராமபத்தி முதிற்ச்சியாற் பாடிய பெருநூலாகலின் அதனை அப்பெரிய கோயிற் கடைத்தலை
பற்றி வாழும் பரமபத்தர்களான அரியபெரியார்கள் திருச்செவிகளில் ஏற்பிக்கவே உள்ளமுவந்தனரென்பதும் நன்குணரலாகும்.

இவர் இராமாவதாரம் அரங்கேற்றுதற்காகத் திருவரங்கப் பெரியகோயிலையெய்தி ஆண்டைப் பிரணவாகார விமானத்து
அறிதுயிலமர்ந்த கருணைமாமுகிலைச் சேவித்து நின்றபோது அவ்விறைவன், இவரது பத்திக்குவந்து இவரைத்
தன்னடியார்க்கு ஆட்படுத்தக்கருதி “நஞ்சட கோபனைப் பாடினையோ” என்று அருச்சகர் முகனாய்த் திருவுளம்பற்றித்
தமிழ்மகளின் தவப்பேறனைய சடகோபரது பரமஞானபத்தியதிசயத்தை இவர் நெஞ்சிற்றேற்றுவித் தருளினான்.
அப்போதே இவர் அவ்வாழ்வாரது திருக்கோயின் முன்றிலிற் புக்குப் பணிந்து கிடந்தார்க்கு ஆழ்வாரது திருவருணோக்கம் உண்டாயிற்று.
அந்நிலையிலெழுந்து ஆழ்வாரைப்போற்றி, ‘வேதத்தின் முன்செல்க’ என்றெடுத்துத் தேனெனப் பாலெனச் சில்லமிழ் தூற்றென
ஒருநூறு செய்யுள் அந்தாதியாகப் பாடி ஆழ்வார்க்கடியராய்ச் சிறந்தனர்.
இதன்பின்னேதா னிராமாவதார வரங்கேற்றம் சிறப்பாக நிறைவேறியடென்ப. இவர் சடகோபரந்தாதிக்கண்,

“பாவைத் திருவாய் மொழிப்பழத் தைப் பசுங் கற்பகத்தின்
பூவைப் பொருகடற் போதா மமுதைப் பொருள் சுரக்குங்
கோவைப் பணித்தவெங் கோவையல் லாவென்னைக் குற்றங்கண்டென்
நாவைப் பறிப்பினு நல்லோரன் றோமற்றை நாவலரே.”–எனப்பாடுதலால்
இவர் இராமாவதாரம் அரங்கேற்றப் புக்கபோது திருவரங்கத்துள்ள பெருநாவலர்கள் இவர்க்கு ஆழ்வார் சம்பந்தமில்லாமை
பற்றி இவர்பாற் பலகுற்றங் காணத் தலைப்பட்டனரெனவும் ஆழ்வாரைப்பாடியடியராயபின்னே தான் இவர் அவர்களால்
அபிமானிக்கப்பட்டனரெனவும் கொள்ளத்தகும். இவர் ஆழ்வாரால் அருளப்பட்டனரென்பது,

இழைத்தா ரொருவரு மில்லா மறைகளை யின்றமிழாற்
குழைத்தார் குருகையிற் கூட்டங்கொண் டார்கும ரித்துறைவர்
மழைத்தார் தடக்கைக ளாலென்னை வானின்வரம் பிடைநின்
றழைத்தா ரறிவுந்தந் தாரங்கும் போயவர்க் காட்செய்வனே.

நாய்போற் பிறர்கடை தோறு நுழைந்தவ ரெச்சினச்சிப்
பேய்போற் றிரியும் பிறவியி னேனைப் பிறவியென்னும்
நோய்போ மருந்தென்னு நுன்றிருவாய்மொழி நோக்குவித்துத்
தாய்போ லுதவிசெய் தாய்க்கடி யேன்பண்டென் சாதித்ததே. என இவர் பாடுதலான் நன்கறியலாகும்.
இவர் ஆழ்வாரது திருவாய்மொழியினை எவ்வளவாக மதித்தனரென்பது

பண்ணுந் தமிழுந் தவஞ்செய் தனபழ நான்மறையு
மண்ணும் விசும்புந் தவஞ்செய் தனமகிழ் மாறன்செய்யு
ளெண்ணுந் தகைமைக் குரியமெய் யோகியர் ஞானமென்னுங்
கண்ணும் மனமுஞ் செவியுந் தவஞ்செய்த காலத்திலே.

உரிக்கின்ற கோடலி னுந்துகந் தம்மென வொன்றுமின்றி
விரிக்குந் தொறுவெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய்
தெரிக்கின்ற கோச்சட கோபன்றன் றெய்வக் கவிபுவியிற்
சுரிக்கின்ற நுண்மணலூற்றொக்குந் தோண்டச் சுரத்தவினே.–என்னும் இவர் பாடல்களான் உணரப்படும்.

(இவ்வுவமை இராமாவதாரத்தும் வந்தது கண்டு கொள்க.)

தேவிற் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவிற் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே
நாவிற் சிறந்தநம் மாறற்குத் தக்கநந் நாவலவன்
பூவிற் சிறந்தவாழ் வான்கம்ப நாட்டுப் புலமையனே. என்னுஞ் சடகோபரந்தாதிப் பாயிரத்தான்
அத்திருவரங்கத்துள்ள பெரியாரெல்லாம் இவரை நம்பெருமாளுக்கு உரியராகிய நம்மாழ்வார்போல,
நம்மாழ்வார்க்குரியராகிய நந்நாவலரென்று உரிமையினுயர்த்தி அன்பு பாராட்டினாரென்பது தேறப்படும்.
நன்னாவலவன் என்றும் பாடமோதுவாருமுளர்.

இனிச் சில இராமாயண ஏடுகளில் விடைகொடுத்த படலத்த்ன்பின் சில அரிய செய்யுட்கள் வரையப்பட்டுள்ளன. அவையாவன:

நாராயணாய நமவென்னு நன்னெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன்
காராரு மேனிக் கருணா கரமூர்த்திக்
காரா தனையென் னறியாமை யொன்றுமே.

பராவரு மிராமன் மாதோ டிளவல்பின் படரக்கான் போய்
விராதனைக் கரனை மானைக் கவந்தனை வென்றி கொண்டு
மராமரம் வாலி மார்பு துளைத்தணை வகுத்துப் பின்ன
ரிராவணன் குலனும் யொன்ற வெய்துட னயோத்தி வந்தான்.

வாள்வளஞ் சுரக்க நீதி மதுநெறி முறையெந் நாளுந்
தான்வளர்ந் திடுக நல்லோர் தங்கிளை தழைத்துவாழ்க
தேன்வளர்ந் தறாத மாலைத் தெசரத ராமன்செய்கை
யானளந் தறிந்த பாட லிடையறா தொளிர்க வெங்கும்.

ஆவின் கொடைச்சசர ராயிரத்து நூறொழித்துத்
தேவன் றிருவழுந்தூர் நன்னாட்டு-மூவலூர்ச்
சீரார் குணாதித்தன் சேயமையப் பாடினான்
காரார்கா குத்தன கதை.

தராதலத்தி னுள்ள தமிழ்க்குற்ற மெல்லா
மராவு மரமாயிற் றன்றே-யிராவணனை
யம்பினால் வீழ்த்தா னடிபணியு மாதித்தன்
கம்பனா டாள்வான் கவி.

ஆதவன் புதல்வன் முத்தி யறிவினை யளிக்கு மண்ணல்
போதவ னிராமகாதை புகன்றருள் புனிதன் மண்மேற்
கோதவஞ் சிறிது மில்லான் கொண்டன்மா றன்ளை யொப்பான்
மாதவன் கம்பன் செம்பொன் மலரடி தொழுது வாழ்வாம்

இம்பரு மும்பர் தாமுமேத்திய விராமகாதை
தம்பமா முத்தி சேர்தல் சத்தியஞ் சத்தியம்மே
யம்பரந் தன்னின் மேவு மாதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன்செங் கமல பாதங் கருத்துற விருத்துவாமே.

இவற்றுள்; முதன்மூன்றும் கம்பர் பாடியவாமெனத் தோற்றுகின்றது. மற்றை நான்கும் பிறர்பிறர் கூறியனவாகும்.

இறுதிச் செய்யுளில் ‘ஆதித்தன் புதல்வன்’ எனவருதலானும், அவ்வாதித்தன் என்னும் பெயரே மற்றையிரண்டு வெண்பாக்களிலும்
பயிறலானும் கம்பர் தந்தையார்க்கு ஆதித்தன் என்பது தெரிகின்றது.
இது பற்றியே “தராதலத்திலுள்ள” என்னும் பாட்டில் ‘ஆதித்தன் கம்பன்’ என வழங்கினர் என்று அறியப்படுகின்றது.
இது சங்கரன் புதல்வனான சடையனைச் ‘சங்கரன் சடையன்’ என வழங்கியது போல்வது.

ஆதவன் என்பது ஆதித்தனென்பதற்குப் பிரதிநாமமாதலால், இவரை, “ஆதவன் புதல்வன்” எனவும் வழங்கினராவர்.
‘ஆவின்கொடை’ என்னுஞ் செய்யுளில் “திருவழுந்தூர் நன்னாட்டு மூவலூர்ச் சீரார் குணாதித்தன்சேய்” என வருதலால்,
இவருடைய தந்தையார் திருவழுந்தூர் நாட்டு மூவலூரில் வசித்தவரெனத் தோன்றுவது.
கம்பர் பிறந்தவூர் திருவழுந்தூர் என்பது நன்கு தெளியப்பட்டதாதலின் அவ்விரண்டூர்களிலும் இவர் தந்தையார்
இருந்தனராவரெனக் கருதப்படுகின்றது. திருவழுந்தூரும், மூவலூரும் மிகவும் அண்மை ஊர்களென்பதும் உணர்க.
மேற்காட்டிய வெண்பாக்களிரண்டும், இவர் இராமாவதாரமரங்கேற்றிய காலத்து ஆண்டிருந்து கேட்டோர் பாடியவாமெனக் கொள்ளத்தகும்.

இவர் சோழனுடன் கோபித்துக் கொண்டது.

கம்பர் சோழனுடன் கோபித்துக் கொண்டு மதுரைக்குப் போகும்போது சொல்லியது.

காத மிருபத்து நான்கொழியக் காசினியை
யோதக் கடல்கொண் டொளித்ததோ–மாதவா
கொல்லி மலையுடைய கொற்றவா நீமுனிந்தா
வில்லையோ எங்கட்கிடம். (தமிழ்நாவலர் சரிதை)

இச்செய்யுளானும் இதன்றலைக் குறிப்பானும் கம்பர் சோழனுடன் கோபித்துக் கொண்டமை உணரப்படும்.
இதன்கட் கம்பர் சோழனை நோக்கி “நீ முனிந்தால்” எனக் கூறுதலால், அவன் இவரை முதற்கண் முனிந்தனனென்பது அறியப்படுகின்றது.
இவரைச் சோழன் முனிதற்குக்காரணம், இவர், பெருஞ்செல்வத்தினும், பெருங்கொடையினும், புலவரெல்லாம் ஒருங்குபாராட்டுஞ்
சிறப்பினும் சோழனாற் பெரிதும் அழுக்காறு கொள்ளப்பட்ட வெண்ணைச் சடைய வள்ளலையே மீப்படமதித்து
இராமாவதாரத்துப் புகழ்ந்து பாடியதேயாகும்.

சடையன், முடியுடையரசரும் அழுக்காறு கொள்ளும் வளப்பமும் வண்மையும் உடையனாயினான் என்பதற்குப் பல கதைகள் வழங்குவன.
அவற்றுட் சிலவற்றை ஈண்டைக்கேற்றவாறு சுருக்கியுணர்த்துவேன். முன்னர் இவர் சோழனால் பெரிதும் பாராட்டப் பெற்றவராவர்.

ஒருநாள் சடையவள்ளல் சோழனதவைக்களத்தே போந்து சிறக்கவீற்றிருந்தபோது, பெருங்குடி வணிகனொருவன்,
கடலிற்பட்ட அருவிலையுடைய பெருகொளிப்பருமுத்துகள் பலவற்றைக் கொணர்ந்து சோழன் திருமுன்னர் வைத்து,
‘இவை முடியுடை வேந்தர்க்குத் தக்கன’ என்று கூறாநிற்ப, அரசன் அவற்றைக் கண்டு மகிழ்ந்து புகழ்ந்தானாக,
அதுகண்ட சடையவள்ளல் கழனிபடு வளத்தையே மேம்படுத்தேத்தி, அக்கழனிபடுமுத்தைக் போல
இவை பெரியனவும் ஒள்ளியனவுமாகா’ என்று சோழற்கு மாறுரைத்தனன்.

அதுகேட்ட சோழன் கழனியில் முத்துப்படுவது கேட்டறிவதன்றி யாம் கண்டறிவதில்லை என்ன,
சடையவள்ளல் அது நுமக்கரிதாவதன்றி எமக்கன்று; நுமக்கு யான் அதுகாட்டுவேன் என்று,
தமது கழனியிற் கமுகுபோலப் பருத்துவளர்ந்துள்ள கரும்புகளில் ஒரு சிலவற்றைக்கொணருவித்து,
அவற்றுட் கோணிக் குறுகியதொரு கரும்பினை எடுத்து அதனொரு கண்ணை முறித்தனன்.
அதினின்று பல முத்துகள் தெறித்து வீழ்ந்து, அரசனது முடிமணியொளியினும் பேரொளி பரப்பின.

அப்போது சடையவள்ளல் தன் கழனிகளிலொன்றில் ஆயிரக்கணக்கான கரும்புகளில் ஒரு சிலவற்றானாயதொரு
சிறுகட்டின்கணிருந்தவற்றில் ஒரு கோணற் சிறுகரும்பின் ஒரு கண்ணிலிருந்தன இவை என்றும்,
இங்ஙனமே தன்கழனிதோறும் உள்ளனவற்றையெண்ணிற் கணக்கிலவாமென்றும் அரசற்கு எடுத்துக் கூறினன்.
அதுகேட்டு, அரசவையிலிருந்த சான்றோரெல்லாம் ‘சடையன் கழனிபடுவ கடல்படா’ என்று புகழ்ந்தனர்.
கரும்பினின்று தெறித்த முத்துகளெல்லாம் ஒளியானும் பருமையானும், வணிகன் கொணர்ந்த கடல்படு முத்துகளையும்
வென்று சிறத்தலை அரசன் கண்ணாரக்கண்டு, முகத்தான் வியந்து, அகத்தாற் சடையனது செல்வத்தில் அழுக்காறு கொண்டனன் என்ப.

இவ்வரியகதையே மேல் இணையார மார்பனைப் பாண்டியன் இவன் ஆரென்னும்போது கம்பர் பாடும் வெண்பாவிற்
“கன்னன்மதயானைக் கண்டன்மகந்முன்னங் கணையாழி முத்துதிர்க்கும்” என்பதனாற் குறிக்கப்படுவதாகும்.
மதயானைக் கண்டன்மகன் முன்னங் கன்னலினின்று கணையாழி முத்தினை உதிர்க்கும் என உரைக்க.
கணையாழிமுத்து-திரட்சியையுடைய கடல்முத்து.

பின், ஒருநாள் வடநாட்டு வணிகன் மற்றொருவன், முடிவேந்தர்க்கேற்ற நுண்ணிய தொழில் பலவியற்றிய
பெருவிலைப் பட்டொன்று கொண்டு சோழன்பால் எய்திய போது, சோழன் அவ்வழகிய பட்டாடையைக் கண்டு
அதனைப்பெறுதற்கு மனமுவந்து அதற்குரியவிலையை அவ்வணிகன் பால் வினாயினான்.
அதற்கு வணிகன் கூறிய விலைப் பொன்னளவு, தனது பெருநிதியறைக்கணுள்ள பொன்னளவினும் பன்மடங்கு அதிகமானது கண்டு,
அரசன் அவ்வழகிய பட்டினைக் கொள்ளவியலாமல் மனம்வாடி, அவ்வணிகனைச் செலவிடுத்தனன்,
பின்பு, அவ்வணிகன், அரசனினும் சடையவள்ளலையே பெருஞ்செல்வனாக நாடுமுழுதும் புகழ்தலைக் கேட்டு
வெண்ணெய்நல்லூரெய்தி அவ்வள்ளல் பால் அப்பெருவிலைப்பட்டைக் காட்டி நிகழ்ந்ததுரைக்க,
அவ்வள்ளல் மகிழ்ந்து அதனைக் கொள்ளுதல் கருதி விலையினைச் சொல்லக்கேட்டு,
இப்பட்டின் மென்மையையும் நுண்டொழிலையும் கருதுமிடத்து இவ்விலை மிகவுஞ் சிறியதேயாமென்று நினைந்து,
தனது பெருநிதியறைக்கணிருந்து அதன் பெருவிலையை எளிதினல்கி அப்பட்டினை வாங்கிக்கொண்டு வணிகனைச் செலவிடுத்தனன்.
இதன் மேற் சோழன் ஒருநாள் சடையவள்ளலைக் கண்டு அளவளாவவேண்டித் தூதரை விடுத்தானுக்கு,
அவ்வள்ளல் தனக்குத் துடையிற் புண்ணுண்டாயிருந்ததலால் இவ்வமயம் அரசவையெய்தற்கு இயலாதென்றும்,
அதுதீர்ந்து சிறிது குணப்பட்டவாறே ஆண்டுதான் எய்தலாகுமென்றும் ஓலை போக்கி, சின்னாளில் அப்புண் சிறிது தீர்ந்தவாறே,
முன் வணிகன்பால் வாங்கிய பெருவிலைப்பட்டினை உடுத்துக் கொண்டு சோழன்பால் எய்தினான்.
சோழன், தன்னாலுங் கொள்ளற்கியலாத அப்பட்டைச் சடையனதரையிற்கண்டு வியப்பும் அழுக்காறும் மிக்கு
முகத்தான் அளவளாவுதற்கிடையே ‘துடையிற் புண் தீர்ந்து முழுதும் குணப்பட்டதில்லையே: இப்போது எவ்வளவிலுள்ளது;
அதனையாள் காணவிரும்புவல்’ என அன்புடன் மொழிந்தனனாக, அப்போது சடையன்,
உடுத்த ஆடையைத் திரைந்து நீக்கித் துடையைக் காட்டுதல் அரசர் மரியாதைக்குப் பொருந்தாதென்று கருதுத்,
தான் பெருவிலை கொடுத்துப் பெற்ற அப்பட்டாடையைப் புண்ணுள்ள இடத்துக்கு நேரே கையாற் கிழித்து அப்புண்ணளவிற் கட்டினான்.
அது கண்டு அரசன், எமக்கரியதாய்த் தன் செல்வமிகுதி தோன்றற்குக் காரணமான
இப்பட்டாடையையும் இவன் ஒரு பொருளாகக் கருதினானில்லை; இவன் செல்வநிலையும் மனநிலையும் இருந்தவாறென்னே!
என்று முன்னினும் அதிகமாக இவன்பால் அழுக்காறுகொண்டனன் என்பர். இவ்வரிய கதையே,

“… … … ஆறாத்
துடையிலெழுசிலந்தி தோற்றுவிக்கப்பட்டின்
புடைவை கிழித்த பெருங்கை” எனத் திருக்கை வழக்கத்தினும்,

“விளைவாஞ் சிலந்தியை ஆடையைக் கீறி வெளியிலிட்டும்
வளமான கீர்த்திகொள் வேளாளர்” எனப் பாண்டிமண்டல சதகத்திலும் பாராட்டப்பட்டிருத்தல் காண்க.
தன்னால் விலைகொடுத்துக் கொள்ளற்கியலாததொன்றை இவன் கொண்டதனைத் தனக்கறிவிக்கவே,
இவன் இப்பட்டுடுத்திப் போந்தானென்றும், தான் அதிகமாக மதித்துள்ள இவ்வரிய பட்டாடையையும்
இவன் ஒரு பொருளாக மதியாமையைத் தனக்குணர்த்தவே இவ்வாறு கிழித்தனன் என்றும்
சோழன் கருதிச் சடையன்பாற் செற்றங்கொண்டனனாவன். அன்றியும்,

“மரபுதங்கிய முறைமை பேணிய மன்னர்போகிலெனாகிலென்
………………………………………….
சங்கரன் றரு சடையனென்றொரு தருமதேவதை வாழவே”

எனச் சங்கரன் பாடல்பெறுதலாலும் இவன்பால் அரசன் அழுக்காறு கொண்டனனாவன்.
இது முற்காலத்துப் பாரியென்னும் வள்ளற்றலைவன்பால் தமிழ் மூவேந்தரும் அழுக்காறு கொண்டதனோடு ஒக்கும்.

இனி, வேறொரு வணிகன், பெரும்பொருள் செலவு செய்து நெடுங்காலஞ் சென்றாலும் தனது தூய்மையினும்
நறுமணத்தினும் குறைவுறாத மேலான கலவைச்சாந்தை மிகுதியாக இயற்றி அதனை ஒரு வண்டியிலுய்த்துச் சோழன்
பாலெய்தினானுக்கு, தக்க பொருள் கொடுத்து அந்நறுஞ் சாந்தினைப் பெறுதற்கியலாமல் அவ்வணிகனை அரசன் செலவிடுக்க,
அவன் சடையன் பாற்சென்று நிகழ்ந்தது தெரிவிக்க, இவ்வாறு முடியுடையரசரும் பெறுதற்கியலாத இத்தகைப்
பொருள்களெல்லாம் தன்பாலெய்தற்கு இவ்வளம்பெறு கழனியே காரணமென்றும், அஃதே இவற்றை அனுபவித்தற்குரியதென்றுங் கருதி,
அச்சாந்து முழுதையும் சில கழன்களில் உழுதொளியுடன் கலக்கி அச்சாந்துக்குரிய விலைப் பொருளை அது கொணர்ந்த
வணிகற்கு ஈந்து விடுத்தனன் எனவும், அதுகேட்டுச் சோழன் சடையன்பால் அழுக்காறுஞ்செற்றமுங் கொண்டனனெனவுஞ்சொல்லுவர்.

பின்னொரு காலத்து, புலவர் பலர் பரிசில் பெறுதற்கு வெண்ணெய் நல்லூரையெய்திச் சடையனது
வளமனைக்கண் வீற்றிருந்தாராக, அவ்வமயம் கழனிவெளியிற் சென்றிருந்த சடையவள்ளல் தம் மனைமுற்றத்தைச் சார்ந்த
வளவில் ஆண்டு நெல் மிகுதியாகச் சிதறுண்டு கிடத்தலைக் கண்டு, மக்கட்கு உயிர்போலச் சிறந்த இந்நல்லுணவு
இவ்வாறு பலர் காலிற்பட்டுப் போவதாகாதே என்னுங் கருத்துக் கொண்டு அவற்றைப் பொறுக்கி ஒருங்கு சேர்க்கத் தலைப்பட்டனன்.
ஆண்டுக் குழுமிய புலவரெல்லாரும் அவ்வள்ளலது திருவுளத்தினைத் தேறாமல், இவ்வாறு ஒவ்வொரு நெல்லையும் விடாமற்
பொறுக்கிச் சேர்ப்போன் நமக்கெவ்வாறு பொருள் வழங்க வல்லான்! என்று தம்முள்ளே கூறியிழிந்தனர்.
அதனைக் குறிப்பானுணர்ந்த சடையவள்ளல் சிதறிய நெல்முழுதையும் பொறுக்கிச் சேர்த்துவிட்டுக் கூடிய
புலவர்க்கெல்லாம் நல்வரவு கூறி அவர்கட்குணவளித்தர்கு விரைந்து அவர்களனைவரையும்
வரிசைப்பட அமர்த்தி வைத்து உண்கலனமைத்தனன்.

பொன்னையே அமுதும் பொரிக்கறியுமாகப் படைத்து அவற்றை உண்டு பசிதீருமாறு வேண்ட, அவரெல்லாம் ஒன்றும்
அறியாராய்த் திகைத்திருந்தவளவில், பொற்கறியும் பொன்னமுதும் உண்டற்காகாவாதலால் இவற்றையெடுத்து வெளியே
எறிந்து விட்டு வேறுண்கலம்பரப்பி நெற்சோறளிக்க என ஆவினான். உடனே தொழிற்குரியார் அவ்வாறே புரியப்,
புலவர்கள், வயிறாரவுண்டு கைகழுவி வாய் பூசி வெளியிற் குப்பையிலெறியப்பட்ட பொன்களைத் தாம்தாம்
விரைந்து பொறுக்கிக் கொள்ளப் புக்குழி, அவர்கள் ஒருவரோடொருவர் கலகம்பட்டுப் பூசன்மிகுத்து நின்றார்கள்.
அப்போது சடையவள்ளல் அங்கேபோந்து ‘எச்சிற்கலத்துக்குப் பெரும்புலவர்கள் இவ்வாறு கலகமிடலாகாதே’ என்று கூறி
அவர்கட்கு வேண்டுவன நல்கி விடுத்தனன் என்ப. இவ்வரிய கதையினொருபகுதியே,

“பொன்னா லமுதும் பொரிக்கறியுந் தான்கொணர்ர்ந்து
நன்னா வலர்க்களித்த காணயக்கை”–எனத் திருக்கைவழக்கத்திற் பாராட்டப்பட்டிருப்பதாகும்.

இவ்வாறு முடியுடை வேந்தரும் அழுக்காறுகொள்ளும் வளப்பமும் வண்மையும் சடையவள்ளல் உடையனாய்ச்
சிறந்தனனென்பதற்கு இயையக் கேட்கப்படுங் கதைகள் பலவாம். இத்துணையுங் கூறியவற்றாற்,
சோழன் சடையன்பால் அழுக்காறு கொண்டிருந்தனனென்பது ஒருதலையாம். அவ்வழுக்காறடியாகச் சடையற்க்குயிர்த்
துணையாய்ச் சிறந்த கம்பர்பாலும் சோழற்கு வெறுப்புண்டாயிற்றென்பது பொருந்திற்றேயாம்.
பல்லாற்றானும் தன்னால் அழுக்காறு கொள்ளப்பட்ட சடையனுக்கே கம்பர் உயிர்த்துணையாய்ச் சிறந்து
அவனையே மீப்படப்பாராட்டியதும், தமக்கு அரசர்க்கொத்த வரிசை பலவளித்துத் தம்மை மிகவுமுயர்த்திய தன்னை
அவ்வாறு பாராட்டாமையுமே சோழன் இவரை முனிதற்குக் காரணமென்பது உணர்ந்து கொள்க.
இஃதன்றி வேறு வேறு கூறுவாருமுளர். பின்னர் பாண்டிய மன்னரால் பெரிதும் ஆதரிக்கப் பெற்று மீண்டும் சோழ நாடு திரும்பினார்.

கம்பர் பின்னொருகாற் சோழனுடனேகோபித்துக் கொண்டபோது சொன்ன வெண்பா

மன்னவனு நீயெயோ மண்ணுலகு மிவ்வளவோ
வுன்னையோ யான்புகழ்த்திங் கோதுவ தென்னை
விருந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ சோழா
குரங்கேற்றுக் கொள்ளாதோ கொம்பு.(தமிழ் நாவலர் சரிதை) எனவரிதலானறியப்படுகின்றது.
இவர் சோழனுடன் திரும்பவும் இவ்வாறு கோபித்துக்கொள்ளுதற்குக் காரணம் என்னையெனிற் கேறுவேன்.

கம்பருக்கு அம்பிகாபதி என்னும் பெயரிலோர் திருமகனாரிருந்தனர். அவரும் புலமையாற் சிறந்து அரசவையேத்த வாழ்கின்ற
காலத்துச் சோழன்றிருமகள் அவரைக் காமிக்க அவரும் அவளை விழைந்து களவினொழுகுதலைச் சோழன் தெரிந்துகொண்டு
அவரை ஒறுத்தற்க்குக் காலம் பார்த்திருந்தனன். அக்காலத்து அம்பிகாபதி பாடுவனவெல்லாம் சிற்றின்பம் பற்றியே
வரிதலை அரசன் தேர்ந்து ஒருநாள் அவன் அவரை நோக்கி “நீவிர் இப்போதே ஒருநூறு செய்யுள் சிற்றின்பம்பற்றாது
பேரின்பமே பற்றிப் பாட வல்லீரோ?” என வினாவ அவரும் “அங்ங்னம் பாட வல்லேன்” என்ன,
அரசன் அந்நூறிலொன்றேனுஞ் சிற்றின்பங் கலந்ததாயின் தலையை வெட்டிவிடுவேனென அவரும் ஒட்டிய
முறைதவறின் அவ்வாறே புரிக என்றுடன்பட்டுப் பாடிக்கொண்டிருந்தனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற
சோழன்மகள் தன் ஆசைநாயகருக்கு ஏதேனும் இடையூறு நேருமோ என்று கவன்றிருந்தவள் சில்போது கழிந்தவாறே
அம்பிகாபதியாரைக் காண்டல் வேட்கை மீதூர்ந்து மாளிகையின் மேனிலையினோர்புறத்தே மறைந்து நின்று
தலையை மட்டும் வெளிக் கொண்டு அவரிருந்த அரசவையை நோக்குவாளாயினாள்.
அந்நிலையில் அம்பிகாபதியார் தொண்ணூற்றொன்பது கவியும் பேரின்பமாகப் பாடியவர் ஊழ்வினை சூழ்தலான்
அம்மறைந்து நோக்கிய சோழன்மகள் தலையினைத் தாம் முற்படக்கண்டு மயங்கி நூறாஞ் செய்யுளொன்றைச்
‘சற்றே பருத்த தனமே குலுங்க’ என்றெடுத்துச் சிற்றின்பமாகப் பாடி முடித்தனர்.
அப்போதே சோழன் ஒட்டியநெறி பிழைத்தீரென்று அம்பிகாபதியார்க்கு உரைத்து அவர் தலையினை வாளாலெறிந்தனன்.
இந்நிகழ்ந்தவெலாம் கம்பர் கேட்டு விரைந்து போந்து வெட்டுண்டு கிடக்கும் மகனுடலைக் கண்டு ஆறாத்துயருடையராய்,

மட்டுப் படாக்கொங்கை மானார் கலவி மயக்கத்திலே
கட்டுப்பட்டாயென்ன காதல்பெற் றாய்மதன்கையம்பினாற்
பட்டுப்பட்டாயினுந் தேறுவையோவென்று பார்த்திருந்தேன்
வெட்டுப்பட் டாய்மக னேதலை நாளின் விதிபடியே.–என்னுஞ் செய்யுளைக் கூறித் தம்மகனார்க்குச் செய்வன செய்திருந்தனர் என்ப.
இங்ஙனந் தம்மருமை மகனாரை அரசன் கொன்றதே கம்பர் திரும்பவும் அவனுடன் கோபித்தற்குத் தலையாய காரணமாகும்.

இனி, கம்பர் வம்மிசத்தினர்க்குள் ஓர் அரிய கதை வழங்குகின்றது. அஃதாவது; –
கம்பருக்குக் காவேரி என்னும் பெயரில் ஓர் அழகுடைத் திருமகள் இருந்தனள். அவளைச் சோழன்மகன் முறை தவறி
விரும்பி அவளைத் தான் எய்தற்குப் பல்லாற்றானும் முயன்றனன். இது தெரிந்த அத்திருமகள் உயிரினும் பன்மடங்கு
சிறந்த கற்பினையழித்துப் பழிமலைந்து வாழ்தலினும், அவ்வுயிரையிழந்து புகழெய்தலே சீரிதாமெனத் தேர்ந்து,
கம்பர் திருமனையின்முற்றத்தொருபுறத்துக் கம்புநிறையப் பெய்திட்ட மிகவும் ஆழமான பெரியதோர் கம்பங்குழி நடுவில்
ஒருநள்ளிரவில் தனியே இறங்கி மூழ்கிமாய்ந்தனள். [கம்பு என்னுந்தானியத்தை ஒரு பெருங்குழி நிறையப் பெய்து
அதன்மேல் ஓர் திண்னியபொருளையிட்டால் அக்கம்பு எளிதிலிடம் விட்டுக் கொடுத்தலால், அப்பொருள் விரைந்து உள்ளே புக்கு மூழ்கலுறும்]
இங்ஙனம் தம்மருமைமகள் மாய்ந்தவகையினைக் கம்பர் ஆராய்ந்தறிந்து ஆற்றொணா இடரில் மூழ்கினவராகி,
‘இஃது அரசன் முறை தவறியதனானே எய்தியது’ என்று தெரிந்தபோது அரசனை முனிந்தனர் என்பதேயாம்.
இப்போதும் இவர் வம்மிசத்தினர் மேற்காட்டிய காவேரி என்னுங் கற்புடையாட்டியைத் தங்கள்வீட்டுத் தெய்வமாகக் கொண்டு
அவளது திருவுருவத்தை வழிபட்டு வருகின்றனர். இதுவும் கபர் சோழனை முனிதற்குத் தக்க பெருங்காரணமாம்.
இக்கதைகளில் உண்மை எவ்வளவோ! எனினும் கவிநயம் கருதி எழுதப் பெற்றது.

கம்பர் குறித்த தமிழ்ப்பெருமை

இக்காலத்துத் தமிழாராய்வாருட் சிலர் தமிழை வடமொழியினின்று திரிந்த மரூஉ மொழியெனவும்
சிலர் அவ்வாறு திரியாத் தனிமொழியெனவும் க்க்றுவர். வேறுசிலர் தமிழ் என்னும் பெயரே திரமிளம் என்பதன்றிரிபு எனவுரைப்பர்.
பின்னர் சிலர் அப்பெயர் தமி என்பதனடியாய்ப் பிறந்ததென்பர்;
சிலர் தமிழ் என்பது இனிமையென்னும் பொருட்டாதலின் அதுபற்றி அப்பெயர் எய்திற்றென்பர்.

சிலர் தமிழ்மொழி சிவபிரான் பாற்றோன்றியதெனவுரைப்பர்; சிலர் தமிழ்மொழி என்றுமுள்ளதெனவுரைத்து
அதனிலக்கணமே சிவபிரானரிளினர் என்பர்; சிலர் அகத்தியர் அவலோகிதன்பாற்றமிழ் கேட்டார் என்பர்;
சிலர் சிவபிரான்பால் கேட்டனர் என்பர். சிலர் அகத்தியர் தமிழிலக்கணமே செய்திலர் என்பர்.
சிலர் தமிழ் வடவெல்லையாகிய வேங்கடத்தைக் குமரக்கடவுள் வரைப்பு என்பர்.
சிலர் அதனை நிலங்கடந்த நெடுமுடியண்ணலதென்பர். சிலர் பாண்டிய நாட்டைச் செந்தமிழ்நாடென்பர்.
சிலர் சோணாட்டை அங்ஙனம் கூறுவர்.
சிலர் செந்தமிழ்ப் புலவர் பலர் ஒருங்கு குழுமி ஆராய்ந்த சங்கமென்பது முன்னில்லையென்பர்.
இவ்வாறு தமிழின் பெருமை வரலாறு முதலியன பற்றிக் கேட்கப்படுவன வேறு வேறு மிகப் பலவாம்.
இன்னோரன்ன பலவற்றைப்பற்றி இற்றைக்குப்பன்னூறு வருடங்கட்குமுற் சிறந்து விளங்கிய அரிய கல்வியில்
பெரிய கம்பர் கருத்தென்னவாமென ஆராய்வது இக்காலைத் தமிழ்மக்களால் விரும்பப்படுவதேயாகும்.

கம்பர் சீராமாயணமென்னுத் தேவபாஷைக்கதையினையே பாடப்புக்காரேனும், தாம் அத்திருக்கதையினைத் தம் அருமைத்
தாய்மொழியாகிய பெருமைத் தமிழ்க்கண்ணேயாகலான் தாம்கண்டு கேட்டுணர்ந்த தமிழ் நாட்டியல்புகளையும், தமிழ்வழக்குகளையும்,
தமிழ்நூல் பொருள்களையுமே கொண்டு கோசலை நாட்டியல்புகளையும் அயோத்தியர் வழக்காசாரங்களையும் வருணித்தனர்
என்று கருதுதலே பொருந்திற்றாகும்; என்னையெனின், மிகப் பழைய காலத்தே நிகழ்ந்தனவும் மொழியாலும் வழக்காலும்
இயல்பாலும் பல வேற்றுமப்பட்டனவுமாகிய வேற்றுநாட்டுச் சரிதைகளை மிகப்பிற்பட்ட காலத்தே அவ்வேற்றுநாட்டுப்
பரிச்சயமில்லாரொருவர் தந்தாய் மொழியில் புனைந்துரைக்கப் புகின், அவர்க்குத் தாங்கண்டு கேட்டுணர்ந்த தந்நாட்டு
வழக்கியல்புகளேயன்றி வேறு தோன்றாவாதலான் என்க. வான்மீகி முநிவர் ஒரு சுலோகம் ஒன்றானே மிகச்சுருங்கவுரைத்த
கோசலநாட்டினைக் கம்பர் வருணிக்கப்புக்கு மழையை முன்னோதி ஆற்றைச்சிறப்பித்து நானிலம் பகுத்துக்கொன்டு விரித்துப்
பலபல பாடல்களாற் புனைவதெல்லாம் தமிழ்நாட்டு இயல்பும் வழக்கும் பற்றியேயாகும்,
நாட்டு வருணனையில் மருதத்தையே மிகுத்துக் கூறுவதும் தாங்கண்ட காவிரிநாட்டியல்பு கொண்டேயாம்.

கம்பர் “காவிரி நாடன்ன கழனிநாடு” எனவும் “தெய்வப்பொன்னியே பொருவுங்கங்கை” எனவும்
“பொன்னிநாட்டு வமைவைப்பை” எனவும் ஆங்காங்குப்பாடுதலாலும் இக்கருத்து வலியுறுவதென்க.

அம்முநிவர் நூற்றுக்கணக்கான சுலோகங்களால் மிக விரித்துப்புனைந்த தசரதருடைய அசுவமேதத்தை
“முகமலரொளிர்தர” (திருவவதாரம்-86.) என்னுஞ் செய்யுளொன்றானே கம்பர் மிகச்சுருங்கவுரைத்து விடுதலும்
தமிழர் சுவைக்கேற்பது கருதியேயாம்.

கம்பர் வான்மீகி முனிவர் போல அயோத்தியை அஷ்டா பதாகாரமான கட்டடங்களையுடைத்தெனவும்
இராமனைக் காகபஷம் எனப்பெயரிய மயிர் முடியுடையனனெனவும் கூறினாரில்லை. இவ்வாறு தமிழ்நாட்டில்லைபோலும்.
கம்பர் “நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்” (ஆற்றுப்படலம் 3) என மகட்கொடுத்தானை மாதுலன் என்னும் பெயரால் வழங்கினார்.
மாதுலன் என்பது வடமொழியுள் தாயுடன் பிறந்தானுக்காவது. தாயுடன் பிறந்தானே மகட்கொடுத்தற்குரியனாதல்
தமிழ்நாட்டுத் தொன்று தொட்ட வழக்கம்;
“கண்போன்ற மாமன்மகள் கண்மணிப் பாவையன்னட் பெண்” [சிந்தாமணிப்பதிகம் 22] எனவருதலானுமுணர்க.
இவ்வழக்குப் பற்றியே மாமன் என்பது தமிழில் தாயுடன் பிறந்தானுக்கும் மகட்கொடுத்தானுக்கும் பொதுவாக வழங்கப்படும்.

“மாமனானென்னு மதத்தா லுனையிகழ்ந்து, தோமுற்றார் தக்தனார் சோமேசா” என மாமனென்பது மகட்கொடுத்தாக்கானுயிற்று.
இத்தமிழர் வழக்குப் பற்றியே மாதுலன் என்பதை மகட்கொடுத்தானுக்கு வழங்கினராவர்.

இங்ஙனமே கம்பர் முதனூற்கதைகளையும் தமிழர் சுவைக்கும் இயல்புக்கும் ஏற்ற பெற்றியாற்றிரித்தும்
சேர்த்தும் விரித்தும் விடுத்துங் கூறியன பலவுள. இராமனும் சீதையும் மிதிலையில் வில் முறித்தற்கு முன்னே
ஒருவரையொருவரைக் கண்டு விழைவு மிகுத்துக் காமத்தால் வருத்தினர் எனவைத்து வருணித்தல் முநிவர் உடன்படாதது
“ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப” (தொல்-கள-2) என்பதனாற் பிறப்பு முதலியவற்றானொப்புமையுடைய
தலைவனுந் தலைவியும் ஒருவர் முயற்சியானன்றித் தனியெதிர்ப்பட்டு நோக்கெதிர் நோக்கி ஒருவருள்ளத்தொருவர் புகுந்து
ஈருடற்கோருயிர்போல் இயையும் உழுவலன்பினையே தலையாய காமம் என்பது தமிழ் வழக்காதல் பற்றிக் கம்பர் அங்ஙனங் கூறினராவர்.

“அண்ணலு நோக்கினாவளு நோக்கினாள்” (மிதிலைக்காட்சி 35) “இருவரு மாறிப்புக்கிதய மெய்தினார்” (ஷெ 38)
“ஒருங்கியவிரண்டுடற் குயிரொன்றாயினர்” (ஷெ 38) என இவர் ஓதியனபற்றியுணர்ந்து கொள்க.

முநிவர் சூர்ப்பநகைக்கு மூக்கரிதலே கூறினராகவும் கம்பர் அம்மூக்குடன் முலையும் காதும் அரிதல் கூறுவர்.
“மூக்குங் காதும்மெம் முரண்முலைக் கண்களுமுறையாற், போக்கி” (சூர்ப்ப-64)
“நங்கைநிருஞ் செவி முலையுமூக் குமரிந்தநாள்” (அங்கதப்படலம்) என வருதலானுமுணர்க.
“முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்று” என்பதும் “காதிரண்டுமில்லாதாள் ஏக்கழுத்தஞ் செய்தலும்” என்பதும்
தமிழ்நூல் வழக்காதலால் முலையரித்து அவள் பெண்மையைக் குலைத்தும் காதரிந்து அவள் தலையெடுப்பினைத் தொலைத்தும்
மூக்கரிந்து அவள் பிறர்முன் முகங்காட்டலை யொழித்தும் போக்கினர் என்றல் ஆண்டைக் கேற்பதேயாம்.

இராவணன் சீதையைத் தொடாமலே பன்னசாலையோடு பெயர்த்துக் கொண்டேகினான் எனக் கம்பர் கூறுவது முநிவர் கூற்றுக்கு மாறாம்.
அரக்கன் உலகுக்கொரு தாயைத் தொட்டிழுத்துச் சென்றான் என்பது பெருந்தமிழரான தம்பத்திக்கும் தந்நாட்டார் பேரன்பிற்குப்
பொருந்தாதாதலின் அவ்வாறு கூறினார்.

சீதை இலங்கையிற் சிறையிருந்த காலத்து ஊண் துறந்திருந்தனள் என்பார் கம்பர்.
இந்திரன் நாளுந்தரும் பாயசத்தின் பகுதியை உண்டு உயிர் தரித்திருந்தனளென்றார் முநிவர்.
இதுவும் பத்தியான் மிகுத்துக் கூறியவாறாம். இங்ஙனம் சொல், பொருள், வழக்கு, கதை முதலியவற்றையும்
தமிழுக்கியையக் கொண்டு இவர் கூறியன எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டப்புகின் மிக விரிஉமென்றுணர்க.
சுருங்கவைத்து விளங்கவிரைக்கின் இவர் தமிழ் மாட்டுற்ற அளவிலன்பினால் தாமெடுத்துக் கொண்ட தெய்வக்கதையைத்
தனி நாயகனான சீராமமூர்த்தியையும் தமிழ் முழுதுணர்ந்த தமிழறிவனாகக் கூறுவர்.
இதனை “தென்சொற் கடந்தான் வடசொற்கலைக்கெல்லை தேர்ந்தான்” (அயோத்தி-நகர் நீங்கு-140) என இவர் வழங்குதலாலுணர்க.

நச்சினார்க்கினியர் சிந்தாமணியுரையில் (குணமாலை-42) சாதாரண வரசராகிய விக்கிரமாதித்தனும், சீவகனும் முறையே
எறும்பின் பாஷையையும் கரும்பின் பாஷையையும் உணர்ந்திருந்தனரெனக் கொள்ளுதலால் கல்வியிற்பெரியர் தெய்வவேந்தாகிய
சீராமமூர்த்தியைத் தமிழ் வல்லவனாகவுங்கூறல் இழுக்காகாதென்க.
எடுத்துக்கொண்ட கதாநாயகனைத் தமிழ்ச்சுவை அறியானாகக் கொண்டு அவனைச் செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்றிமிழால்
துதிப்பதே இழுக்காமெனக் கொள்க. இவ்வாறு தமிழர் பண்பும் தமிழறிவும் ஓருருக்கொண்டாற் போன்ற இக்கல்வியிற்
பெரியாருக்குத் தமிழைப்பற்றித் தனியே யுரைத்தற்கு அற்றம்வாயாவிடினும் அதன் பெருமையையும்
அதன் தொன்மை வரலாறு முதலியவற்றையும் பற்றிச் சிறிதும் விளக்காமற் போயினாரில்லை.

இவர் பழைய தமிழ்ப் புலவர்களையும் அவர்களினிய கவிகளையும் அக்கவியின் சொன்னடை பொருளமைதிகளையும்
அவற்றாலெய் துமின்பத்தினையுமே பலவிடத்தும் வாயாரப் புகழ்ந்து உயர்ந்த உவமையாகக் கூறுவர்.
“முத்தமிழ்த் துறையின் முறைபோகிய உத்தமக் கவிகள்”; (பாயிரம்)
“துறைபடுத்த விருத்தத் தொகைக் கவிக்குறையடுத்த செவிகள் (ஷெ)
“செவ்வியமதுரஞ் சேர்ந்தநற் பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்” (பால நகர்.1)
“தென்னுண்டேனிற் றீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்” (மிதிலை-23)
“சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி” (சூர்ப்பந)
“பாவருங் கிழமைத் தொன்மைப் பருணிதர் கொடுத்த பத்தி, நாவருங் கிளவிச் செவ்விநடை வருநடையள்” (நாடவிட்ட 64)
என வருவனவற்றான் உய்த்துணரலாம்.

இவர் தாடகைபடலத்துத் “தமிழெனும் அளப்பருஞ் சலதி தந்தலன்” எனவும்
அகத்தியப்படலத்து “நீண்ட தமிழ் வாரி நிலமேனி மிரவிட்டான்” எனவும்
ஆறுசெல் படலத்து “எத்திறத்தினு மேழுலகும் புகழ் முத்துத்தமிழும்” எனவும்
பம்பைப்படலத்துத் “தன்பாற்றழுவுங்குழல்வண்டு தமிழ்ப்பாட்டிசைக்குந் தாமரையே” எனவும் கூறினாராதலான்
இவர் தமிழை அளத்தற்கரிய பெருங்கடலாகக் கொண்டு அது பல்வகையானும் பல்லுலகும் புகழத்தக்கதெனவைத்து
அஃது இனிமையென்பதையே பொருளாக உடைத்தென்று காட்டி, அது வடமொழி போல் காடிந்நியம் உடையதின்றிக் குழைவே
இயல்பாகவுடைத்தெறுரைத்துத் தமிழின் பெருமையை நன்கு விளக்கினார்.

இக்காலத்த்துப் புலவர் பல்பிறப்புத் தோறும் இடைவிடாமற் பயின்றாலும்எய் தற்காகாவென ஒரு தலையாகத் துணியப்படும்
பெருங்கவியும் நுண்ணறிவும் அருங்கவித் திறனும் இயல்பிற் பெற்றுப் பாற்கடல் போலப் பல்லாயிரஞ் செய்யுட்களை
இந்நிலவுலகில் நிமிர்ந்தேற விட்ட தெய்வப்புலவரே தமிழை அளப்பருஞ் சலதி எனவும் நீண்ட வாரி எனவும் உரைத்தருளுவரானால்
அதனகலமும் ஆழமும் பெரும் பொருளமைதியும் யாமே யளத்தற்குரியேம்.
தமிழ்ப்பாஷை இரண்டு மூன்று வருஷத்துப் படிப்பின் முற்றுமென்று வாய்பிதற்றுவார்
இவ்வரிய பெரியார் வாய்மொழிவழி நின்று சிறிது சிந்திப்பாராகுக.

அசரீரி, நாமகள், முருகக்கடவுள், சிவபிரான் முதலாகிய தெய்வங்களும் புகழ்ந்தோதிய பாடல்கள் நிறைதலால்,
தமிழ் பல்லுலகும் புகழ்வது எனக்கூறியது மிகையன்றாம்.
ஸ்ரீசடகோபராந் தெய்வக்கவிவாணர் “பாலேய் தமிழர்” எனப்பாடுதலால் தமிழின் இனிமையுங்குழைவுந் தூய்மையும் எளிதினறியத்தக்கதாம்.
இவ்வாறே சான்றோர் பலருந் தமிழைந் கூறுமிடனெல்லாந் தனியே கூறாமல்
தட்பம், ஒட்பம், வண்மை, நறுமை, அருமை, பெருமை, இனிமை, செம்மை, பசுமை, நன்மை, விழுப்பம் முதலிய
குணங்களாற் சிறப்பித்தே கூறுதலானும் இதனியல் புணரப்படும்.

இத்துணைக் குணங்களாற் சிறப்பிக்கப்படும் தீந்தமிழை ஒருசாரார் ஒன்றின் மரூஉமொழி என்பராலெனின்
அது கல்வியிற் பெரியார்க்குக் கருத்தன்றாம் எனவுணர்க.
அவர் அகத்தியப்படலத்து “என்றுமுள தென்றமிழ் இயம்பியிசை கொண்டான்” என்பதனால் தமிழை என்றுமுள்ளதென விளங்கவைத்தல் காண்க.
ஒன்றினின்று மருவிய மரூஉவானால் இதற்குத் தனியே என்றுமுளதா தற்தன்மை யெய்தாதென்பது ஒருதலையாம்.
மற்று, இத்தமிழை இயம்பி இசைகோடலாவது எஞ்ஞான்றுமுளதாய் தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்துப்புகழ் பெறுதலாம் என்பது.
புகழாவது குறுமுனியாகிய அகத்தியர் தமிழ்முனியெனச் சிறந்தோங்குதவாம். ஈண்டு “என்றுமுள தென்றமிழ்” எனவுரைத்து வைத்துமேல்,

“உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்
வழக்கினு மதிக்கவி னினுமரபினாடி
நிழற்பொலி கணிச்சி மணிநெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்.”–என்பதனால் சிவபிரான் தந்தமிழ் என்பராலெனின்
ஆண்டுச் சிவபிரான் தந்தது எனக் கூறியதும் தமிழிலக்கணத்தையேயாமென்க.
சிவபிரான் தந்த தமிழிலக்கணத்தையே அகத்தியர் உலகிற்குத் தந்தார் என்பதே இதன் கருத்தாம்.
சிவபிரான் பாணினிக்குணர்த்தியதும் வடமொழி இலக்கணத்தையேயாகும். அதுபோல இதனையும் கொள்க.
நான்மறையினும் உலகவழக்கினும் கவின்பெற நூலினும் முறைப்பட ஆராய்ந்து கடவுள் தந்த தமிழ் என்றதனாலும்
அஃதிலக்கணமேயாவதறிக. நான்மறையினாராய்ந்தன – மொழிக்கு முதற்காரணம் எழுத்தென்றலும், அச்சும் அல்லுமாம்.
அவற்றின் வேற்றுமையும் கலப்பும் இயக்கமும் கருதி அவற்றிற்கு உயிரையும் உடலையும் உவமையாகக் கண்டு அங்ஙனமே குறியிடுதலும்,
அவற்றிற்குப் பிறப்பு வருணமுதலிய உணர்த்தலும், அவற்றிற்கு மாத்திரை காண்டலும், அவற்றிற்சிலவற்றிற்குப் புலுதங்கோடலும்,
அறம்பொருள் இனப்பகுதி கோடலும், நிலங்கட்குத்தெய்வங்கள் கூறலும், யாழோர் கூட்டமுடன்படலும்,
அந்தணர் அரசர் வணிகர் வேளாண்பக்கத்தியல்பு காட்டலும், அங்கடம் பிசி மந்திரம் வாய்மொழி முதலியன வகுத்தலும், பிறவும் ஆம்.
உலகவழக்கினாராய்ந்தன:- இயற்சொல் திரிசொல், செந்தமிழ்ச்சொல், கொடுந்தமிழ்ச்சொல், மரீஇயினசொல்,
மருவாமுதற்சொல், மங்கலச்சொல், இடக்கரடக்குக் குழூஉக்குறிச்சொல் முதலியனவும், மரபியலிற் முறித்தனவும், பிறவுமாம்.
மதிக்கவினினாடியன – தமிழ்நாட்டுத் தொன்றுதொட்டுக்கேள்வியான்வந்த அம்மானைவரி, ஊசல்வரி, குன்றங்குரவை,
ஆய்ச்சியர் குரவை, வள்ளைப் பாட்டு, உழத்தில் பாட்டு, குறத்திப் பாட்டு, வெறிப் பாட்டு என்பன போன்ற பாடல்கள் பற்றி ஆராய்ந்தனவாம்.
மதி-நூல். அகத்தியனாராற் செய்யப்பட்டது மூன்று தமிழிலக்கணம் என அறியப்படுதலால்
இம்மூன்றாகிய இயல், இசை, கூத்து எனப்பாகுபாடு செய்வதற்கேற்றவாறு, தமிழ் என்னும் பெயரிய மொழி
அவரிலக்கணஞ் செய்வதற்கு முன்னே இருந்தவென்பது நன்கறியலாகும்.
இதனாற் சிவபிரான் திருவாய்மலர்ந்த தமிழிலக்கணத்தையே அகத்தியர் முத்தமிழிலக்கணம் எனச்செய்து
தொல்காப்பியர் முதலிய பன்னிரு புலவர்க்கும் அளித்தவாறு கூறிற்றாம்.

தொல்காப்பியனாரும் அம்முந்துநூல் கண்டு முறைப்படவெண்ணிப் புலர்ந்தொகுத்தோராதலால்,
தாம் அகத்தியர், வாயிலானுணர்ந்த அச்சிவபிரான் பரக்கவருளிய இலக்கணங்களினொருபகுதியையே
சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவினர்க்கேற்றவாறு தொகுத்துச் சுருங்கவுரைத்தாரெனக் கொள்ளப்படும்.
இதுவே நல்லறிவுடைய தொல்பேராசிரியர்க்கும் கருத்தென்றுணர்க; அவர்,

தாயிற் சிறந்ததன்று நாண்டையலாருக்கந் நாண்டகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண் கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற்றம்பலத் தாடுமெங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே.–என்னுந் திருச்சிற்றம்பலக்கோவையுரையில்
(“உயிரினுஞ் சிறந்தன்று” – தொல்காப்பியம் – களவியல் 22) என்றாராகலின் வாயிற்சிறந்த மதியிற் சிறந்த என்பதற்குத்
தாய்போல நாண் சிறத்தலும் நாணிலும் கற்புச்சிறத்தலும் ஆகிய இரண்டும் கூத்தப்பிரான் வாயிற்சிறந்த நூல்களிடத்துச்
சிறப்புடையப் பொருள் என்றுரைப்பினுமமையும்) என ‘உயிரினுஞ் சிறந்தன்று நாணே’ என்னுந் தொல்காப்பியத்தினை
எடுத்தோதி அதனைக் கூத்தப்பிரான் வாயிற்சிறந்த நூலாகக் கொண்டு நாண் சிறத்தலும் கற்புச்சிறத்தலுமிரண்டும் அந்நூற்பொருளெனக் கூறுதற்குடன் பட்டதனாற்றெளிந்துகொள்க. இதனாலும் கூத்தப்பிரானருளியதிலக்கணமென்ப துணரப்படும்.

இனிக் கம்பர் நாடுவிட்ட படலத்தின்காண்,

“வடசொற்குந் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையு மற்றைநாலு
மிடைசொற்ற பொருட்கெல்லா மெல்லையதாய் நல்லறத்துக் கீறாய்வேறு
புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பொதிந்த மெய்யேபோற் பூத்துநின்ற
வுடைசுற்றுந் தண்சார லோங்கியவேங் கடத்திற்சென் றுறுதிர்மாதோ”.

“கோடுறுமால் வரையதனைக் குறுகுதிரே லுங்கொடிய கொடுமைநீங்கி வீடுறுதிர்” (26)

“பிறக்க முற்ற மலைநாடு காடி நகன்றமிழ்நாட்டிற் பெயர்தி மாதோ” (30)

“தென்றமிழ்நாட் டகன் பொதியிற் றருமுனிவன் தமிழ்ச் சங்கஞ் சேர்கிற்றீரேல்” (31)

என ஓதியபின்னரும் ஆறுசெல் படலத்துள்
“இருந்ததிற் றீர்ந்து சென்றார் வேங்கடத் திறுத்த காலை.” (33)

“வலங்கொ ணேமி மழைநிற வானவ
னலங்கு தாளிணை தாங்கிய வம்மலை
விலக்கும் வீடுறு கின்றன மெய்ந்நெறிப்
புலங்கொள் வார்கட்கனையது பொய்க்குமோ?” (35)

“அனைய பொன்னி யகன்புன னாடொரீஇ
………. ……… ………. ……….. ………..
இனைய தென்றமிழ் நாடுசென் றெய்தினார்.” (52)

“அத்தி ருத்தகு நாட்டினை யண்டர்நா
டொத்தி ருக்குமென் றாலுரை யொக்குமோ
வெத்திறத்தனு மேழுலகும்புகழ்
முத்துமுத்தமிழுந் தந்துமுற்றுமோ.” (53)

எனவும் கூறுதலான் வடசொல், தென்சொல் இரண்டிற்குந் தனிப் பேரெல்லையாய் விளங்கியது, திருவேங்கடமலையென்றும்,
அம்மலை தன்னடைந்தார்க்கெல்லாம் வீடளிக்கவல்லதென்றும் அது வசக்கரத்துச் சக்கராயுதத்தைத் தரித்த
மழைநிற வானவன் றிருத்தாளிணை தாங்கியதென்றும், சேர சோழ பாண்டிய நாடுகள் மூன்றினுள்ளும் சிறப்பித்துத்
தமிழ் நாடென்பது பாண்டிய நாலாமென்றும் அந்நாட்டுப் பொதிய முனிவன் தமிழ்ச்சங்கம் ஒன்று முன்னே உண்டு என்றும்
அந்நாடே பல்லுலகும் புகழ்கின்ற முத்தையும் முத்தமிழையுந் தந்ததென்றும் விளங்க வைத்தனராவர்.

திருவேங்கடம் வடசொற்குத் தெற்கெல்லையாகவும் தென்சொற்கு வடவெல்லையாகவும் இருப்பதென்று கருத்தாம்.
தொல்காப்பியப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியர் வடவேங்கடத்தை
‘நிலங்கடந்த நெடுமுடியண்ணலைநோக்கியுலகந் தவஞ்செய்து வீடு பெற்ற மலை” என வுரைத்துள்ளார்.
அதுவும் “மால்வரையதனைக் குறுகுதிரேல் வீடுறுதீர்” எனவும்
“மழைநிற வானவன் அலங்குதாளிணை தாங்கியவம்மலை விலங்கும் வீடுறுகின்றது” எனவும் ஓதிய
பொருளையே தழுவி நிற்றல் நோக்கிக் கொள்க.

ஸ்ரீசடகோபரும் “திருவேங்கடநங்கட்குச் சமன்கொள் வீடு தருந்தடங்குன்றமே” எனப்பணிந்தருளினார்.
“வேங்கட மென்னு மோங்குயர் மலையத்துச்சிமீமிசை… நன்னிறமேக நின்றதுபோலச்….
செங்கணெடியோ னின்ற வண்ணமும்” எனச் சிலப்பதிகாரத்துக் கூறியது கொண்டு
“மழைநிற வானவன் தாளிணை தாங்கிய அம்மலை” என்றார் எனினுமமையும்.
ஆசிரியமாலை யுடையாரும் “புடையிது நெடுமால்வரைக் கப்புறம் புகினும்” எனவுரைத்தார்.
ஐயனாரிதனாரும்,
“வெறிகொ ளறை யருவி வேங்கடத்துச் செல்வி
னெறிகொள் படிவத்தோய் நீயும்–பொறிகட்
கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க
வருளீயு மாழியவன். (பாடாண்-(42))–என ஓதினார்.
பாரதம் பாடிய பெருந்தேவனாரும்,
தேனோங்கு நீழற் றிருவேங்கட மென்றும்
வானோங்கு சோலை மலையென்றுந்–தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தி யூரென்றுஞ்
சொன்னவர்க்கு முண்டோ துயர்”–எனப் பாடியருளினார்.
கம்பர் திருவாக்கு இப்பல்சான்றோர் கருத்தையுந் தழுவி விளங்குதல் கண்டுகொள்க.

இனிக் ‘காவிரிநாடன்ன கழனிநாடு’ எனச் சோணாட்டை மேம்படுத்துரைக்கின்ற கம்பர் அதனை ஈண்டுத் தமிழ்பற்றிச் சிறப்பியாமற்
பாண்டி நாட்டையே தென்றமிழ் நாடெனக் கூறி அதனைற் தமிழ்ச் சங்கத்தானும் முத்தமிழானும் புகழ்தலால்
அதுவே செந்தமிழ் நாடெனக் கருதினராவரென உய்த்துணரப்படும்.
இவர் ஈண்டுக்குறித்த சங்கம் முதற்சங்கமாமென்பது “பொதியத்திருமுனிவன் தமிழ்ச் சங்கம்” என்றதனாலறியப்படும்.
ஈண்டுக்குறித்த சில கொண்டு இக்காலத்தார் கருத்துக்கும் அக்காலத்துக் கல்வியிற்பெரியார் கருத்துக்கும் உள்ள
ஒற்றுமை வேற்றுமைகளை நன்குணர்ந்துகொள்க.

இனிக் கம்பர் சடகோபரந்தாதிக் கண்ணே,
சுவடிறக் கத்தொட ராசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக்கண் பரிந்துசங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை யானைநங்காய்
இவடிறத் தொன்றும் படரந்தி வான மிருள்கின்றதே.–என்னும் பாட்டிற்
சடகோபரைச் சங்கமாகிய மலைக்குவடு இடியக்குத்திய மாறன் என்னும் பெயருடைய கொலையானை எனக் கூறியுள்ளார்.
இதனால் சடகோபர் காலத்தே சங்கம் ஒன்றிருந்ததெனவும் அதனை அவர் வென்றனரெனவும் கம்பர் குறித்தனராவர்.

சடகோபர் சங்கம் ஒன்றை வென்ற கதை வைணவருக்குள்ளும் விளங்குகின்றது.
அச்சங்கம் கூடலில் முந்நூறு புலவரையுடைத்தாயிருந்த தெனவும் அப்புலவரெல்லாம் வீற்றிருந்த தனிமரப்பலகை
ஆழ்வாரருளிய ஒரு செய்யுள் வரைந்த ஓலையொன்றிற்கு இடந்தந்து வேறியார்க்கும் இடந்தராமற் றன்னுட்சுருங்கியதெனவும்
அதுகண்டு புலவரெல்லாம் ஆழ்வாரைப் புகழ்ந்து பாடினரெனவும் கூறுவர்.

இதனுண்மை எவ்வாறோ எனக்கருதப்படுமாயினும், இவ்வரிய செய்தியின் குறிப்பு கல்வியிற்பெரியார் திருவாக்கினும்
காண்டலால் இது முழுதும் பொய்யேயாமென நினைத்தற்கு இடமின்றாகிறது.
இதெற்கேற்ப ஆழ்வார் திருநகரியினின்று கிடைத்த சில பழைய தமிழ் ஏடுகளில்
“சங்கத்தார்க்கு ஆழ்வார் அருளிச்செய்த அகவல்” என்ற தலைப்பின் கீழ்

“அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணல் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே
தன்வலி யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னொன்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி லெழுந்து கடலிலழுந்தி
யறுகாற் குறவ னீரற விளைக்கு
நிறைபொழிற் குப்பை தறுகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன
ளவளிவ னவளென் றறித
றுகளறு காட்சிப் புலவரது கடனே”–என ஓரரும்பெருஞ் செய்யுள் காணப்படுகிறது.

இனி இச்சங்கப் புலவர்கள் முந்நூற்றுவர் எனக் கேட்கப்படுதலால் இச்சங்கம் முதல் மூன்று சங்கமும் இல்லையென்பது எளிதிலறியத்தகும்.
முன்னைமூன்று சங்கத்துக்கும் பின்னே வேறு சங்கம் உண்டோ என ஆராயுமிடத்துத் திகம்பர தரிசனம் என்னும் ஓர்
சமயநூலின்கண் விக்கிரமசகம் 546-இல் (கி.பி. 470) பூச்சியபாதர் என்பாருடைய மாணாக்கருள் ஒருவராய் வச்சிரநந்தி என்பவரால்
தென்மதுரையில் ஒரு திராவிட சங்கம் கட்டப்பட்டதென்று கூறப்பட்டிருத்தல் கேட்கப்படுகின்றது.
மதுரையில் இச்சைநர் தொகுத்த தமிழ்ச்சங்கம் கி.பி.470-முதல் எத்துணைக்காலம் நடைபெற்றதென அறியப்படாவிடினும்,
அது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் காலத்துக்குப் பின்னும் ஆண்டிருந்ததெனக் கருதற்கு இடனில்லையாகும்.

அந்நாயனாரால் மதுரையிற் சைநர் கொலையுண்டது பல நூற்களாற்றெளிந்தது.
அந்நாயனார் காலத்துப் பாண்டியன் நெல்வேலிவென்ற நெடுமாறன்.
அப்பாண்டியனுடன் நெல்வேலியிற் பொருதவன் நந்திபோதவன்மனுடைய சேனாதிபதியான உதயசந்திரன் என்பதும்,
நந்திபோதவன்மன் காலம் கி.பி.710 முதல் கி.பி.760 வரையாம் என்பதும்
உதயேந்திர சாஸனத்தாலும் பிறசாஸனங்களாலும் உய்த்தறியப்படுகின்றன.
இதனால் நெடுமாறனும் நந்திபோதவன்மனும் ஒருகாலத்தவராகத் துணியப்படுதலுடன் ஸ்ரீஞானசம்பந்தர் காலமும் அஃதாமெனக் கருதவுமாகும்.

அங்ஙனமாயின் மேற்குறித்த சைநர் தமிழ்ச்சங்கமும் கி.பி.470 முதல் கி.பி.760-வரைக்குமே இருந்ததாக வைத்துக் கொள்ளலாம்.
இக்காலந்தான் சைவர் சமணருடனும் சாக்கியருடனும் வாது செய்த காலமாகும்.
சடகோபர் “இலிங்கத்திட்ட புராணத்தீருஞ் சமணருஞ் சாக்கியரும், மலிந்து வாது செய்வீர்களு” மெனப்பணித்தலையும் ஈண்டைக்கு நோக்குக.
இச்சங்கந்தான் கிளிவிருத்தம், எலிவிருத்த முதலிய நூல்களைத் தோற்றுவித்ததாகும்.

ஞானசம்பந்தர் காலத்துப் பின்னர்க் கூடலில் வேறுசங்கமுண்டென்பது எல்லாற்றானும் அறியப்படாமையாற் கல்வியிற் பெரியார்
குறித்த ஆழ்வார் காலத்துச் சங்கம் இச்சைநசங்கமேயாமெனத் துணியப்படும்.
கம்பர் சடகோபரைத் “தெருளிற் கரும்பொக்கு மாயிரம்பாப்புண்டு செய்தவரே” எனப்பாடுதலால்
ஆழ்வார் கம்பருக்கு மிக முந்திய காலத்தவராகக் கருதப்படுதலுங் காண்க.

இனி இக்கல்வியிற் பெரியாரால் மிகவுயர்த்திப் புகழப்பட்ட தமிழ் நூல்கள் இரண்டு எனத் தெரிகின்றது.
அவை திருக்குறளுந் திருவாய் மொழியும். இவர் திருக்குறளை வேதமெனவும் திருவாய்மொழியினை உபநிடதம் எனவும் புகழ்வர்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வாற்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வ ரென்றேயித் தொல்லுலகி
லெழுதுண்டமறை சொன்னால்” (ஏரெழுபது) (16)

“தென்றலைத் தோன்று முபநிடத்தை யென்றீவினையை
நின்றலைத் தொன்று நியாய நெறியை நிறைகுருகூர்
மன்றலைத் தோன்று மதுரகவியை” (சடகோபரந்தாதி 62)
எனவருதலால் அறியலாம்.

இராமாவதாரம்

இது நம்நாட்டுள் மிகுதியாகப் பயின்றுவரும் சிறந்த தமிழ்க் காவியங்களுள் ஒன்று.
இத்தமிழ் நூலை அறியாதார் ஒருவருமிராராயினும், ஈண்டுக்காட்டிய பெயர் மாத்திரம் பெரும்பாலார்க்குப் புதுமையாகத்
தோன்றுமென்று நினைக்கின்றேன். அதன் காரணம் இக்காலத்து அந்நூல் வேறு பெயரான் வழங்கப்பட்டு வருதலேயாகும்.
இக்காலப்பெயர் “கம்பராமாயணம்” என்பதே.

கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாடார், தாம் சீராம கதையினை செந்தமிழ்த் தொடர்நிலைச் செய்யுளாக அமைத்த காலத்து
‘இந்நூல் இவ்வாறு வழங்குக’ என இட்டபெயர் இராமாயணம் என்னும் முதனூற் பெயர் அன்று;
மேற்குறித்த இராமாவதாரம் என்பதேயாகும். என்னை?

“நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல் லூர்வயிற் றந்ததே.”–என அவர்தாமே அந்நூற்கு அவ்வாறு பெயர் வழங்குதலால் என்க

நம் மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்குக் கிடைத்த பழைய பாடல் காண்டப் பிரதி ஒன்றில் –

“இத்த லத்தினு மிராமாவ தாரமே
பக்தி செய்து பரிவுடன் கேட்பவர்
புத்தி மிக்கரும் புண்ணிய முந்தரு
மெத்த லத்து மவனடி யெய்துவார்.” என்னுஞ் செய்யுளொன்று உள்ளது.
அதனாலும் கம்பர் இயற்றிய தொடர்நிலைச் செய்யுட்கு வழங்கிவந்த பெயர் இராமாவதாரமே என்பது நன்கு தெளியப்படும்.

தாமிட்ட அவ்விராமாவதாரப் பெயர், இராமபிரானது பிறப்பொன்றே விரிக்கும் நூல் என்னும் பொருள்படவும் நிற்றலான்
இங்ஙனம் கொண்டு உலகம் மயங்காமைப் பொருட்டுத் திருமாலினது தசாவதாரங்களுள் ஒன்றாகிய இராமாவதாரத்து நிகழ்ந்த
சரித முழுவதும் உணர்த்தும் நூல் என்பதே பொருளென்பார்,
“….நாயகன், தோற்றத் தினிடை நிகழ்ந்த விராமாவதாரப் பேர்த்….மாக்கதை” என்றார்.

இவ்வாறு ஒரு பெயர் வழக்குண்மை அறியாது சிலர் இராமாவதாரப் பேர் மாக்கதை என்பதற்கு
‘இராமாவதாரத்தைக் குறித்த பிரசித்தமான கவித்தொடைகள் நிறைந்த குற்றமற்ற பெருமை பொருந்திய சரிதம்’ எனப் பொருள் கூறினர்.

இது தவிர, அப்பெயர் கம்பநாடர் காலத்தன்றி, அவர் காலத்துக்குப் பின்னரும் வழங்கப்பட்டு வந்ததென்பதற்கு
மேல் உண்டோ வெனின்:- உண்டு. தான் எடுத்துக்காட்டும் தலைப்பில் அவ்வந்நூற்பெயரை எழுதி விளக்குவதும்,
பல அதிகாரவடைவுகளையுடையதுமாகிய ‘புறத்திரட்டு’ என்னுந் தொகை நூலுட் கம்பர் இயற்றிய
தொடர்நிலைச் செய்யுளினின்றும் பல பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
அங்ஙனம் அவையுள்ள இடங்களிலெல்லாம் இராமாயணம் என வேறு பெயராற் குறிக்கப்படாது, இராமாவதாரம் என்றே எழுதப்பட்டுள்ளது.
அதனாற் புறத்திரட்டுத் தொகுத்தார் காலத்து அப்பெயரே வழங்கி வந்தமை நன்கு விளங்கும். இதுநிற்க.

இனி, அப்புறத்திரட்டு நூலுட் காணப்படும் இராமாவதாரச் செய்யுட்களுள்:-

“எய்தவின்னல் வந்தபோழ்தி யாவரேனும் யாவையுஞ்
செய்யவல்ல ரென்றுகொள்க செந்நெறிக்க ணேகிட
மையகண்ணி செய்யபாதம் வல்லவாய மற்றிவன்
கைகளின்று பன்னசாலை கட்டவல்ல வாயவே”–என்பதும் ஒன்று.
இஃது அச்சுப்பிரதிகள் எவற்றினும் இல்லாதது. இப்புறத்திரட்டுச் செய்யுளுள் ‘இவன்’ என்றும் ‘இன்று’ என்றும்
சுட்டப்பட்டிருத்தலால் இலக்குமணர் பன்னசாலை கட்டிய வரலாற்றினைக் குறித்த வேறுசில செய்யுள்கள் இருந்தனவாதல் பெறப்படும்.

அக்கதைத் தொடர்பு, அச்சுப்பிரதி அயோத்தியாகாண்டம் சித்திரகூடப்படலத்துள் 43-ஆம் செய்யுண்முதல் 48 வரை காணப்படுகின்றது.
அன்றியும், “எய்தவின்னல்” எனும் புறத்திரட்டுச் செய்யுளின் கருத்தமைந்த செய்யுளால் அப்படலத்துள்:-

“மேவு கான மிதிலையர் கோன்மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தாவி லெம்பிகை சாலை சமைத்தன
யாவை யாதுமி லார்க்கியை யாதவே.” என வேறு சந்தத்தில் உள்ளது.
இச்செய்யுளும் மேற்காட்டிய ‘எய்தவின்னல்’ என்னுஞ் செய்யுளும் இருவேறு சந்தங்களில் அமைந்து
பெரும்பான்மை பொருள் ஒத்து நிற்றலான், இவற்றுள் ‘கம்பர் பாடல் இது’ என ஒருதலை துணிதல் அரிதாயினும்,
புறத்திரட்டு தொகுத்தாரது பெருமையும் பழைமையும், அவர் நூலானும், இராமாவதாரமெனக் கம்பரிட்ட முற்காலப் பெயரையே
வழங்குதலானும் தெளியக் கிடத்தலின், அவர் எடுத்தாண்ட செய்யுளே கம்பராற் செய்யப்பட்டதாமென ஊகித்தல் ஆகும்.

அவ்வாறாயின், அவ்’எய்தவின்னல்’ என்னும் பாடலும், அச்சந்தத்தில் வேறு பாடல் உளவாயின் அவையும் பிற்காலத்து
நீக்கப்பட்டமையும், அவ்விடத்து ‘மேவுகானம்’ என்னும் வேறு சந்தங்கொண்ட பாடலும் மற்றுஞ் சிலவும் இடைச்செருகப்பட்டமையும் தெளிவாம்.
பரிபாடலுள் மிகைபடு பொருளை நகைபடுபுன்சொலில் தந்திடை மடுத்தும். சிந்தாமணி முதலாய முற்காலப் பெருங்காப்பியங்களுள்
தஞ்செய்யுள்களை இடைச்செருகியும் போந்த கந்தியாரைப்போல, இடைக்கால இசக்கியங்களுள்
இடைச்செருகிய வெள்ளி என்பார் காலத்தே இப்பிறழ்ச்சியும் நேர்ந்துள்ளது போலும்.

யாப்பருங்கல விருத்திகாரர் “பாதம் பலவரிற் பஃறொடை வெண்பா” (63) என்பதன் உரையில்
“இன்னும் பலவடியான் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராண சாகரமு முதலாகவுடைய செய்யுட்களிற் கண்டுகொள்க”
எனக் கூறுதலால் தமிழில் வெண்பாயாப்பிற் சீராம சரிதையை அமைத்து ‘இராமாயணம்’ எனப் பெயரிடப்பட்ட
ஒரு நூல் முற்காலத்து இருந்ததாகத் தெரிகின்றது.

வீரசோழியவுரையிற் கண்ட சில பாடல்களின் பொருளை ஆராய்ந்தால், அவை சீராமகதையினைப் பற்றியன எனப் புலப்படும்.
அச்செய்யுள்கள் வருமாறு:-

“மற்றிவனை மாலென் றறிந்தாலவ் வாளரக்கன்
பெற்றி கருதுவதென் பேதையர்காண்-மற்றிவன்றன்
கண்டான் கடைசிவத்தற் குண்டோ கடலிலங்கை
வண்டா ரரக்கன் வலி.:

“ஐயிருப தோசனையு மாங்கோ ரிடமின்றிக்
கைபரந்த சேனைக் கடலொலிப்பத்-தையல்
வழிவந் திராமன் வடகரையா னென்றான்
விழிவந்து வேறாக மீட்டு.”

(பொருட்படலம், “வேந்தன் சிறப்பு” என்னுங்கலித்துறையுரை.) இவை, அவ்விராமாயணச் செய்யுள்கள் போலும்!

கம்பர் காலம்

கம்பரது வரலாற்றால் அவரது காலம் இஃதாகுமென ஒருவாறு ஆராய்ந்து கொள்ளலாகும்.
ஆயினும் அதனைப் பலருந் தெளியுமாறு வெளிப்பட வைத்து விளக்கி ஈண்டுச் சில கூறுவேன்.
கம்பரது வரலாற்றால், அவர் சடையர்க்குயிர்த்துணைவர் எனவும் ஒரங்கலுருத்திரனாற் சிறப்பிக்கப்பட்டனரெனவும் தெரிதலோடு
சடையவள்ளலுக்குச் சங்கரன் தந்தையெனவும் ஒட்டக்கூத்தர் அச்சங்கரனுக்கு முதலில் உதவித் தொழில் புரிந்து
கொண்டிருந்தனரெனவும் தெளிதலுமாயிற்று. சங்கரசோழனுலா வுடையார்,

“கூடிய சீர்தந்த வென்றெடுத்த கூத்தனுலாச்
சூடிய விக்கிரம சோழனும்-பாடிய
வெள்ளைக் கலியுலா மாலையொடு மீண்டுமவன்
பிள்ளைத் தமிழ்மாலை பெற்றோனுந்-தெள்ளித்தன்
முன்னாய கரினவன் மூதுலாக் கண்ணிதொறும்
பொன்னாயிரஞ் சொரிந்த பூபதியும்” என வுரைத்ததனாற்,
கூத்தர், விக்கிரமசோழன் முதலாக மூவர் சோழரைப் பாடினாரென்றறியப்படுதலின், அவர் அச்சோழர் மூவர் காலத்தவரென்பது நன்கறிந்தது.

அச்சோழர் மூவரும், விக்கிரமனும் அவன் மகன் குலோத்துங்கனும், அக்குலோத்துங்கன் மகன் இராசராசனும்
ஆவரென்பது அக்கூத்தர் பாடிய மூன்றுலாக்களாலுந் தெளிந்தது.
இவ்வுண்மை ‘கூத்தருங் குலோத்துங்கன் கோவையும்’ என்னும் ஆராய்ச்சியினும் நன்கு தெளிவிக்கப்பட்டதாம் (செந்தமிழ், தொகுதி-3, பக்கம்-194).
புராதன சாசன ஆராய்ச்சியுடையார் பலரும் விக்கிரமன் கி.பி. ஆண்டு 1118 முதல் 1132 வரைக்கும்,
குலோத்துங்கன் கி.பி. ஆண்டு 1132 முதல் 1162 வரைக்கும்,
இராசராசகி கி.பி. ஆண்டு 1162 முதல் 1200க்கு மேற் சிலவாண்டுகள் வரைக்கும் அரசாண்டார்களெனக் கூறுவர்.

இதனாற் கம்பருக் குயிர்த்துணைவனான சடைய வள்ளலுடைய தந்தையாகிய சங்கரனுக்கு உதவித்தொழில் புரிந்து
கொண்டிருந்த ஒட்டக்கூத்தர், கி.பி.1118-க்கும் கி.பி.1200க்கும் இடைப்பட்ட காலத்தே பெயர்சிறந்திருந்தவரென்று கொள்ளலாகும்.
விக்கிரமன் அரசாட்சிக்காலம் 14 ஆண்டேயாகக், கூத்தர் அக்காலத்தே புலமை நிரம்பினராகி அவனை உலாவாற் பாடினரென்பதால்,
அவர் அவ்விக்கிரமன் ஆட்சி செய்ததற்கு முன்னே பிறந்தவராதல் தெள்ளிதாம்.
கூத்தர், விக்கிரமன் அரசாட்சியினிறுதிக்காலத்தே தான் புலமை நிரம்பினராகி, அவனை உலாவாற் பாடினராவர் எனக் கூறுதலாகும்.
விக்கிரமனாட்சி 1132-க்கு மேற்படாமையால், கூத்தர் உலாப்பாடிய அவனாட்சியின் இறுதிக்காலம் 1130-க்கும் பிற்பட்டிருத்தல் பொருந்தாதாம்.

கூத்தர் விக்கிரமனை உலாப்பாடும்போது அவருக்கு வயது இருபதிற்குக் குறைந்திராதென வைத்துக்கொள்ளலாகும்.
விக்கிரம சோழன் கூத்தருக்கு முதன் முதல் பரிசில் பல நல்கிச் சிறப்புச் செய்தபோது அவர்
‘இடுக்கட் புண்படு நிரப்புக் கொண்டுழன் றிரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களந்,
திடுக்குற் றஞ்சும்வெஞ்சினத்துச் செம்பியன் றிருக்கைப் பங்கயஞ் சிறக்கத் தந்தன’ என்பதனால்
தம் வறுமைப்பட்ட நிலையை எடுத்துரைத்தலின், அக்காலம், குடும்ப வருத்தம் நெஞ்சிற்றோற்றி அதனைத் தீர்த்தற்கு
அவர் உழன்றதோர் பெரும்பிராயகாலமாகுமென்றும் ஊகித்தல் கூடும்.

தமிழ் நாவலர் சரிதைக்கண் 25’கடித்தது நச்சரவு’ என்னுஞ் செய்யுட்டலைப்பில்
“சரசுவதி தம்பலங்கொடுக்கக் கவிதையுண்டாகிய கூத்தமுதலியார் அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது விக்கிரமசோழன்
கேட்டு ஒரு கவியை ஒட்டச் சொல்லென்று சொன்னபோது பாடியது” என அமைந்திருத்தலால்,
கூத்தருக்குக் கவிதையுண்டாகிய காலம் என்பது விக்கிரமசோழன் ஆட்சிக்காலமே யென்பது அறியப்படும்.
கூத்தர் குலோத்துங்கன் ஆட்சிக்காலமாகிய முப்பதியாண்டையும் கடந்து இராசராசனது நெடிதாட்சிக் காலத்தின்
முற்பகுதியின் பெரும்பாகத்தும் இருந்தாராவரென்று அறியப்படுதலால், அவர் விக்கிரமன் காலத்திற் கவிதையுண்டானவராகி
அவனை உலாவாற்பாடியபோது, அதிகவயதாயினராகக் கொள்ளுதற்கும் இயையாதாம்.
இவற்றாற் கூத்தர் விக்கிரமனுலாப் பாடியபோது இருபது பிராயத்தினரெனவும் அது
விக்கிரமன் இறுதியாட்சிக் காலமாகிய கி.பி.1130-க்கு அடுத்ததாமெனவும் கொள்ளின்,
கூத்தர் பிறந்த காலம் கி.பி.1110 எனக் கூறலாம்.

சடையவள்ளலுடைய தந்தையாகிய சங்கரனுக்கு உதவித் தொழில் புரிந்து கொண்டிருந்த கூத்தர்
கி.பி.1110-ஆம் ஆண்டினை அடுத்துப் பிறந்தவரானால், கூத்தரை அத்தொழிற்கு அமைத்துக் கொண்ட சங்கரன்
கூத்தரின் மிக மூத்தோனாவனென்று ஊகித்தலாகும்.
கூத்தர் சங்கரனுக்கு உதவித் தொழில் புரிந்தது அவருக்குக் கவிதையுண்டாததற்கு முன்னேயாம்.
அக்காலம் கூத்தருடைய இளமைக்காலமாகத் துணியப்படும். அன்றியும் கூத்தர் விக்கிரமனுலாவின்கண் அச்சோழனிருமருங்கும்
‘மந்திரிகள், படைத்தலைவர், சிற்றரசர், பெருங்காணியாளர் எனப்பலர் மொய்த்தீண்ட உலாப்போந்தான்’ எனக் கூறுமிடத்து
விக்கிரமன் தந்தையாகிய அபயன்காலத்தேகலிங்கம் வென்று கொண்ட கருணாகரத்தொண்டைமான் முதலிய பலருடன்,

“…… …… …… மோட்டரணக்
கொங்கைக் குலைத்துக் குடகக் குவடொடித்த
செங்கைக் களிற்றுத் திரிகர்த்தனும்” என்பதனால் திரிகர்த்தனைக் கூறுதலின்,
விக்கிரமசோழன் காலத்தே திரிகர்த்தனாகிய சடையன் சிறந்திருந்தனன் என்பது தெளியப்படும்.
சங்கரன் மகனான வெண்ணெய்ச் சடையனையே திரிகர்த்தன் என்பர் என்பது,
‘இராமரொடும் பாமாலை சூடும் குலமுடையானை… ….வெண்ணெய்த்திரி கர்த்தனையே’ எனவும்
“பாரிலுள்ளோர் கண்ணாக வாழும் வெண்ணெய்த்திரிகர்த்தன்’ எனவும் மேல்வரலாற்றுள் எடுத்துக்காட்டிய மேற்கோள்களால் நன்கறிந்தது.

விக்கிரம சோழன் திருமருங்கும் மொய்த்தீண்டிய இப்பலர் வரிசையில்,

“……. …….. …….. மட்டையெழக்
காதித் திருநாடர் கட்டரணங் கட்டழிந்த
சேதித் திருநாடர் செல்வனும்”-என்பதனாற் சேதிராயனும் கூறப்பட்டுள்ளான்.
சேதிராயன் என்பான் சடையனுடனிருந்து கம்பருடைய ஏரெழுபதினைக் கேட்டவன் என்பதும்
அவன் அவ்வரங்கேற்றத்திடையே பாம்பாற் கடியுண்டு, பின்னர்க் கம்பருடைய தெய்வவாக்கால் உயிர்ப்பிக்கப்பட்டான் என்பதும்
முன்னை வரலாற்றாற் தெரிந்தனவாம். (செந்தமிழ், தொகுதி-3, பக்கம்-8)
இச்சேதிராயன் காலத்தே திரிகர்த்தன் எனப்பட்டவன் சடையனல்லாமல் வேறில்லாமையால் விக்கிரமசோழ னுலாவிற் கூறப்பட்ட
திரிகர்த்தன் சடையனே யாவனெனத் தெளிந்து கொள்க. இதனாற் கம்பர்பால் ஏரெழுபது கேட்ட சடையனும் சேதிராயனும்
கூத்தர் விக்கிரமையுலாவாற்பாடும் போதே சிறப்புற்றிருந்தனராதல் அறியலாகும்.

இவ்விக்கிரமனுலாவிற் கூத்தர் சங்கரனைக் கூறாமற் சடையனையே கூறுதலால், அவர் விக்கிரமன் மேலுலாப் பாடும்போது
சங்கரன் இறந்தனன் எனவும் சடையனே அக்குடியிற் தலை சிறந்த்தனன் எனவும் கொள்ளலாம்.
கூத்தருடைய இளமைக்காலத்தே அவரை உதவித் தொழிற்கு அமைத்துக்கொண்ட சங்கரன்,
அவர் புலமையெய்தி விக்கிரமனைப் பாடிய போது இல்லையாயினான் என்பதனால்,
அச்சங்கரன் இறந்தகாலம் கூத்தருடைய 16 பிராயத்திற்கும் 20 பிராயத்திற்கும் இடைப்பட்டதாகுமென்று உய்த்துணரலாகும்.
கூத்தர் பிறந்த காலம் கி.பி.1110 எனக் கொள்ளப்படுதலாற் சங்கரன் இறந்த காலம் கி.பி.1127ஆம் ஆண்டினை
அடுத்ததாகுமென்று ஊகிக்கப்படும்.

கம்பர், சங்கரனுடைய இளையமகனும், சரராமனாகிய சடையனுக்குத் தம்பியும் ஆகிய இணையாரமார்பன் என்பானை
என்னுடைய தம்பி சரராமனுக்கிளையான்… இணையாரமார்பனிவன்” என்று பாண்டியனுக்கு அறிவுரைத்தலாற்
கம்பராற் றம்பியென்று சிறப்பிக்கப்பட்ட இணையாரமார்பன் பிறத்தற்கு முன்னே கம்பர் பிறந்தவராதல் தெளியப்படும்.

இதனாற் கம்பர் பிறந்த காலம் சங்கரன் இணையாரமார்பனைப் பிறப்பித்தற்கு முன்னேயாமெனத் தேறலாம்.
கம்பர் தெயவவரத்தினாற் கவிசொல்லிய நாளில் முதன் முதற் பாடிய
‘மோட்டொருமை வாவிபுக’ என்னும் வெண்பாவின்கண்ணே வெண்ணெய் நல்லூரை,
“நாட்டில், அடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு, முடையான் சரராமனூர்” எனவே கூறுதலாற்
கம்பர் கவித்திறம் எய்தற்கு முன்னே சடையன் கொடைத் திறம்பயின்று சிறந்தனன் எனவும்
அக்காலத்துச் சங்கரன் இல்லையாயினான் எனவும் துணியலாகும்.

கம்பர் கவித்திறமெய்தற்கு முன்னே சடையன் கொடையாற் சிறந்தனன் என்பதனாலும்
கூத்தர் புலமை நிரம்பி விக்கிரமனைப் பாடும்போதே சடையனாகிய திரிகர்த்தன் சிறந்து விளங்கினன் என்பதனாலும்
சடையன் கம்பருக்கு மூத்தோனாகக் கருதப்படுகின்றான்.
அங்ஙனமாயின் கம்பர் பிறந்தது, சங்கரன் காலத்தே சடையன் பிறந்ததற்குப் பின்னும் இணையாரமார்பன் பிறந்ததற்கு முன்னும்
ஆம் எனத் தெளியப்படும். கம்பர் கவித்திறம் எய்தற்கு முன்னே சங்கரன் இறந்துவிட்டனன் என்பதனாலும்
கூத்தர் இளமைக்காலமெல்லாம் சங்கரனுக்கு உதவித் தொழில் புரிந்து கொண்டிருந்தனர் என்பதனாலும்
கூத்தர் விளங்கிய விக்கிரமன் காலத்தே கம்பரும் புலமையாற் சிறந்தது புலப்படாமையாலும் கூத்தருக்கும் இளையராகவே துணியப்படுவர்.

கூத்தர் பிறந்தது கி.பி.1110-ஆம் ஆண்டினை அடுத்தும், சங்கரன் இறந்தது கி.பி.1127 ஆம் ஆண்டினை அடுத்தும் ஆதலின்,
கம்பர் பிறந்த காலமும் அந்த கி.பி.1110க்கும் கி.பி.1127க்கும் இடைப்பட்டதாகுமென்று தெளிந்துகொள்க.
இந்நிலையிற் சடையனையும் கூத்தரையும் ஒத்த பிராயத்தினராகக் கொள்ளுதலும்
அவ்விருவருக்கும் கம்பர் பத்து வருடம் இளையராகக் கருதுதலும் இழுக்காவாம்.
அவ்வாறு கொண்டு கருதிற் கம்பர் பிறந்தது கி.பி.1120-ஆம் ஆண்டினை அடுத்ததாமென உய்த்துணரப்படும்.
இதனாற் கம்பர் காலத்துக்கு முதலெல்லை சங்கரனது இறுதிக் காலத்தை யடுத்ததென்பதும்,
அதுவே விக்கிரமனது இடையாட்சிக் காலமென்பதும் உணர்ந்து கொள்க.

இனிக் கம்பருக்கு அடைப்பை கட்டிச் சிறப்புச்செய்த ஓரங்கல் உருத்திரன் காலத்தை யாராயுமிடத்து,
ஓரங்கற் கணபதியரசர்களுள் இவ்வுருத்திரன் என்னும் பெயரினர் இருவரிருந்தமை காணப்படும்.
அவருள் ஒருவன் கி.பி.1162க்குச் சிறிதுமுன் முதல் கி.பி.1197க்குச் சிறிது பின்வரை அரசாட்சி புரிந்தனன் எனவும்
மற்றொருவன் 29கி.பி.1288 முதல் கி.பி.1323 வரை அரசாண்டனன் எனவும் புராதனசாசன ஆராய்ச்சி செய்தார் கூறுவர்.
இவருள் பின்னோனாகிய உருத்திரன் காலந்தொட்டேதான் பிராதாபருத்திராப்தம் வழங்கியது.

இச்சங்கத்துள்ள சில பழையதமிழ் ஏடுகளில் அவ்வவ்வேடு எழுதப்புக்க (அல்லது எழுதி முடித்த)
அப்தம் ஆண்டு திங்கள் நாள் முதலியவற்றை வரைந்த பிரதிகளும் உள்ளன.

இதன்கட் கூறப்பட்ட மற்றை அப்தங்களெல்லாம் இப்போது வழங்குவனவற்றோடு கணக்கிடுமளவிற் பொருந்தியனவேயாதலால்
இதன் பிராதாபருத்திராப்தமும் உண்மையுடையதேயாமென நம்புதலாகும். இதன்கட்கண்ட சகாப்தம் முதலியவற்றாலிவ்வேடு
நூற்றாறு வருடங்களுக்கு முற்பட்டதாமெனத் துணியலாம்.

அந்நூற்றாறினையும் 511-வருடத்துடன் கூட்டி நோக்கின் இப்போது பிராதாபருத்திராப்தம் 617 எனத் துணியப்படும்.
இந்த 617-வருடங்களையும் நிகழும் கி.பி.1905இல் கழித்தால் பிராதாபருத்திரன் காலம் கி.பி.1288 என்னலாகும்.
இதுவே, பின்னோனாகிய உருத்திரன் ஆட்சியெய்திய காலமாம்.

கம்பருக்கு அடைப்பை கட்டிய உருத்திரன் இப்பின்னோனாயின், கூத்தர் விக்கிரமனுலாப்பாடுதற்கு முன்னே இறந்த
சங்கரன்காலத்தே இணையாரமார்பனுக்கு முன்னே பிறந்த கம்பர் (அது கி.பி.1120 அடுத்தது) கி.பி.1288க்குப் பிற்பட்டும்
இருந்தாரெனப்பட்டுக் கம்பர் வாழ்நாள் 160 வருடங்களுக்கு அதிகமாகி இயற்கைக்கு மாறாகிப் பொய்யாகி விடும்.

முன்னோனாகிய உருத்திரனைப் பற்றி ஆராயுமிடத்து, அவன் பெயரிட்ட சாசனங்கள் கோதாவரி ஜில்லா திராக்ஷாராமா
என்ற ஊரில் கி.பி.1179இல் அமைந்தது ஒன்றும் (Sewells List of Antiquities, Madras, Vol 1, p.31)
கிருஷ்ணாஜில்லா குங்கலகுண்டா என்ற ஊரில் கி.பி.1197இல் அமைந்தது ஒன்றும் (Do. Do. p.71) 1162இல் அமைந்தது
மற்றொன்றும் (Do. Vol.11, p.173) காணப்படுதலால் இவன் கி.பி.1162க்குச் சிறிது பின்னும் ஆட்சி புரிந்தவனாகக் கருதப்படுகின்றான்.

கி.பி.1120ஆம் ஆண்டினை அடுத்துப் பிறந்த கம்பர் கி.பி.1200க்கு மேற் சில்லாண்டிருந்தாலும்,
அது மக்கள் யாக்கைக்கு இயல்பாகிய ஆயுளைக் கடவாதாதலின் முதலாம் பிராதாபருத்திரனுடைய ஆட்சியின்
இறுதிக் காலமாகிய கி.பி.1197இலும் கம்பர் இருந்து அவனால் அடைப்பை கட்டுஞ்சிறப்பப்ப் பெற்றனரென்பதில் விரோதமில்லையாம்.

இதனாற் கம்பருக்கு அடைப்பைக்கட்டினவன் முதலாம் உருத்திரன் எனவும் அவன் அவருக்கு அது புரிந்த காலம்
கி.பி.1162க்கும் 1197க்கும் இடைப்பட்டதாகுமெனவும் கொள்ளத்தகும்.

இவற்றாற் கம்பருடைய காலத்திற்கு இறுதியெல்லை, முதலாம் உருத்திரனுடைய அரசாட்சியின் இறுதிக்காலமேயாமென்பதுணர்ந்து கொள்ளலாம்.

கி.பி.1162க்குப் பிற்பட்ட காலம் இராசராசன் காலமாதலால் கம்பர் ஓரங்கல் உருத்திரன்பாற்சென்று சிறப்பெய்தியதும், அவன் காலத்தேயாதல் ஒருதலையாம்.

இதனாற் கம்பரை முனிந்தவனும் கொன்றவனும் ஆகிய சோழன் இராசராசனே என்பதும் உய்த்துணரப்படும்.
இவன் காலத்தோடு சோழருடைய பேரரசாட்சி சிதைந்ததெனவும் பின் சிற்சில சிற்றரசர்களால் நாடு ஆளப்பட்ட போது
ஓரங்கல் வேந்தர் படையெடுத்துச் சோணாட்டைக் கைப்பற்றிக் கொண்டு அதனை 14ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனரெனவும்
புராதனசாசன ஆராய்ச்சியாற் றெரிகிறது (Sewells List of Antiquities, Madras, Vol 11, p.159).
இதனாலே “என்பாட்டம்புநின் குலத்தைச் சுட்டெரிக்குமென்றே துணி” என்று கல்வியிற் பெரியரால் முனியப்பட்டவன்
இவ்விராசராசனே யாவனென்று கொள்க.

கம்பர் இராமாயணம்பாடி அரங்கேற்றியதும் இவ்விராசராசன் காலமேயாகும்.
கூத்தர் தக்கயாகப்பரணி பாடிய காலமும் இவன் காலமேயாம்.
இவ்விராசராசன் காலம் கம்பருடைய 42 வயதுக்கு மேற்பட்டதாகலின் அதுவே இவரதுளத்தூய்மைக்கும் பத்தியொழுக்கங்கட்கும்
உலகியலுணர்ச்சிக்கும் வீட்டுநெறி விழைவுக்கும் ஏற்றதாகும்.

கி.பி.1162க்கு முன்னெல்லாம் இவரது யெளவனகாலமாம். அக்காலங் குலோத்துங்கன் காலமே.
அக்காலத்தே தான் இவர் வல்லியை விழைந்ததும் ஏரெழுபது பாடியதும் மும்மணிக் கோவை பாடியதும் ஆம்.
இவரது கவித்திறத்துக்கு உவந்து இவருக்குப் பெருஞ்சிறப்பெல்லாஞ் செய்தவன் குலோத்துங்கன் ஆவன்.

அவன் இவருடைய 42ஆம் பிராயத்தோடு இறந்தனன். இதன் பின்னேதான்
‘இராமாயணமென்னும்பத்தி வெள்ளம்’ கம்பருடைய அறிவுடை நெஞ்சிற் குடிகொண்டதாகும்.

இனி, “எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழின்மேற் சடையப்பன் வாழ்வு, நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே
கம்பநாடன், பண்ணிய விராம காதை” என்பதனாற் கம்பர் இராமாயணம் பாடியரங்கேற்றிய காலம்
சகாப்தம் 807-என்று கூறுதலாற் கம்பர் காலமே மேற்காட்டிய காலத்துக்கு 1200-வருடம் முற்பட்டதன்றோவெனிற்
கூறுவேன். சகாப்தம் 807-என்பது கி.பி.885 ஆகும்.
அது விக்கிரமன் காலத்துக்கு நெடுதூரமானது. அங்ஙனமாயின் அஃது ஒட்டக்கூத்தர் காலமும் அன்று.
கூத்தர் காலமன்றாயிற் சங்கரன் காலமுமன்று. சங்கரன் காலமன்றாயிற் சடையன், சேதிராயன் காலமுமன்று.
சடையன், சேதிராயன் காலமன்றாயிற் கம்பர் காலமுமன்றாம். ஓரங்கலுருத்திரன் காலமும் இஃதன்றாதல் கூற வேண்டா.
இங்ஙனம் கம்பர் காலத்தவராகத் தெளியப்பட்ட வேறு பலர் காலங்கட்கும் இக் கி.பி.885 பொருந்தாதாதலின்
அது கம்பருக்கும் பொருந்தாதென்பது ஒருதலை.

மேற்காட்டிய பிரபல பிரமாணங்களாற்றெளியப்பட்ட கம்பர் காலத்தோடு பொருந்த வைத்து நோக்கின்,
இந்த ‘எண்ணியசகாத்தம்’ என்ற செய்யுள் சிறிது பாடம் பிழைத்ததென்றேனும் வேறொரு பொருளுடைய தென்றேனும் கருதப்படும்.
பாடம் பிழைத்தலாவது ‘எண்ணிய சகாத்தம்’ என்ணூற்றேழின்மேல் எனவிருந்ததை “எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்மேல்” எனக் கொண்டதாம்.

அஃதாவது ‘எண்ணிய சகாத்தம், என்கின்ற நூற்றேழின் மேல்’ என்றவாறாம்.
ஆயிரம் என்ற பேரெண்ணையொழித்துக் கொல்லமாண்டு முதலியவற்றை 80ஆம் ஆண்டு என்பது முதலாகச்
சிற்றெண்ணையே வழங்கல் இக்கால வழக்காதல் போலப் பண்டும் சகாப்தம் ஆயிரத்து நூற்றேழினைச் சகாப்தம் நூற்றேழென வழங்கியதென்க.
இனி வேறொரு பொருள் பெறுதலாவது “எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்மேல்” என்ற பாடமே
‘கருதிய சகாத்தம் எண்ணப்பட்ட நூற்றேழின் மேல்’ என்ற பொருள் படுதல்.

இவ்விரு வகையினும் ஆயிரமாகிய பேரெண்ணையொழித்து உலகவழக்கு நெறியே தழுவிச்
சிற்றெண்ணானே கூறியதாமெனக் கொண்டால், சகாப்தம் 1107 என்பது கி.பி.1185ஆம் ஆண்டாம்.
இந்தக் கி.பி.1185ஆம் ஆண்டு கம்பருக்கு 65ஆம் பிராயமெனக் கொள்ளப்படுமாதலின் அது கம்பர்காலமேயாதல் தேறப்படும்.

இந்த ‘எண்ணிய சகாத்தம்’ என்ற செய்யுளை இவ்வாறு இணங்கிக் கொள்வது, மேற்காட்டிய உண்மைப் பிரமாணங்களோடு
பொருந்த நோக்குமிடத்து உசிதமேயாகும். அன்றியும் இஃது “இராமாயணமெனும் பத்தி வெள்ளங் குடிகொண்ட கோயி”லாகிய
இராமாநுஜமுனிவர் நிலைநாட்டிய வைணவம் தழைத்தோங்குகின்ற காலமுமாம்.

அக்காலத்தே தான் ஞானபூரணரான ஸ்ரீசடகோபரது குணாநுபவம் செய்யும் அடியாரும் பகவரும் மிக்கனராவர்.
கம்பர் சடகோபரந்தாதிக் கண்ணே
“கூட்டங்கடோ றுங் குருகைப் பிரான்குணங் கூறுமன்பர் ஈட்டங்கடோ றும் இருக்கப்பெற் றேமிருந் தெம்முடைய,
நாட்டங்க டோ றும் புனல் வந்து நாலப்பெறேம்” எனப்பாடுதலால் இவர் காலத்தே பெரிய கோயிற்கண்ணே
கூட்டம் கூட்டமாகக் குருகைப்பிரான் குணாநுபவம் பண்ணும் பரமபக்தர்கள் மிக்கிருந்தனரெனவும்,
அத்திருக்கூட்டத் தோடெல்லாம் தாமும் உடன் இருக்கப் பெற்றார் எனவும் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினாரெனவும் அறியப்படும்.
இங்ஙனம் கம்பர் குருகைப்பிரானார் திருவடிகளில் ஈடுபடுதற்கேற்ற காலம் அதுவேயாமென நோக்கிக் கொள்க.
ஈண்டுக்காட்டிய கி.பி.1185ஆம் ஆண்டு இராசராசன் ஆட்சியின் இடைக்காலமாதல் ஆராய்ந்து கொள்க.

இனி இவர் இராமாவதாரத்து “சென்னிநாட்டெரியல் வீரன் தியாகமாவிநோதன் தெய்வப், பொன்னிநாட்டுவமை வைப்பை”
எனக் கூறிய விடத்துச் சென்னியாகிய சோழனொருவனை ‘வீரன்’ என்னும் பெயரால் வழங்கியுள்ளார்.
கூத்தர் இராசராசனுலா விறுதியிற் பாடிய,

“அன்று தொழுத வரிவை துளவணிவது
என்று துயில்பெறுவ தெக்காலந்-தென்றிசையி
னீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த
வீரதரா வீரோத யா.”–என்னும் வெண்பாவிலும்
இராசராசனுக்கு வீரசப்தமே பெயராகப் பயின்றுள்ளது. இவனை வீரராசராசன், வீரராசேந்திரன் எனவும் வழங்குவரெனத் தெரிகின்றது.
இதனாலும் கம்பர் இராமாயணம் பாடிய காலத்தவன் இராசராசனென ஊகித்தலாகும்.

கம்பர் இராமாவதார இறுதியில் “அறைபுகழ்ச் சடையன்வாழி அனுமனெப்போதும்வாழி” என வாழ்த்துக் கூறுதலாற்
சடையன் அவர் இராமாயணம் பாடி முடித்த காலத்தும் இருந்தனன் என்று கொள்ளப்படும்.
கூத்தர் உத்தரராமாயணம் பாடிய காலமும் அதுவாம். அக்காலத்துச் சடையற்கும் கூத்தருக்கும் 75 வயதாமெனக் கொள்ளலாகும்.

இனி “ஆவின் கொடைச்சகர ராயிரத்து நூறொழித்து” என்னும் வெண்பாவினை வைத்து நோக்கின்
கம்பர் இராமாயணம் பாடியது சகாப்தம் 1100 (அஃதாவது கி.பி.1178) எனத் தெரியலாகும்.
அஃது ‘எண்ணிய சகாத்தம்’ என்ற செய்யுளாற் கொள்ளப்பட்ட சகாப்தம் 1107க்கு (அஃதாவது கி.பி.1185க்கு)
ஏழுவருடம் முற்பட்டதாமெனக் கருதப்படும். ‘எண்ணிய சகாப்தம்’ என்ற செய்யுள் அரங்கேற்றக் காலமாக வைத்துக்கொண்டால்
கம்பர் இராமாயணம் பாடிமுடித்த காலம் அவ்வரங்கேற்றத்திற்கு 7 வருடம் முற்பட்டதாமெனத் தேறலாம்.

இங்ஙனம் பல்லாற்றானோக்கினும் கம்பர் காலம் 1120க்கும் 1200க்கும் இடைப்பட்டதலால் கண்டு கொள்க.

திருத்தக்கதேவரும், கம்பரும்–இருவரும் யாத்த காவியம்

இவர்கள் இருவரும் தமிழிற் பெருங்காப்பிய நூல்கள் இயற்றி மிகச்சிறந்த புகழ்படைத்த புலவர் பெருமக்களாவர்.
துறையடுத்த விருத்தத் தொகைக்கவிகளாற் றொடர்நிலைச் செய்யுளை வளம்பெறப் பாடுதலில் இவர்களுடைய பேராற்றல்
அளத்தற்கு அரியதேயாகும். இவருள் திருத்தக்கதேவர் பாடியது சீவகசிந்தாமணி என்பது. கம்பர் பாடியது இராமாவதாரமென்பது.
இவ்விரு பெரும் புலவர்களுடைய அறிவின் ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்ந்தறிதற்கு இவ்விரண்டு நூல்களுமே உற்ற கருவிகளாவன.

சீவகன் கதையும், ராம் காதையும்

சீவகன் கதைக்கும் சீராமகாதைக்கும் சரிதையினியல்பு பற்றி நோக்குமிடத்துச்
சிறிய உவர்க்குட்டத்துக்கும் பெரிய பாற்கடற்குமுள்ள வேற்றுமை புலனாகும்.
சீவகன் கதையாண்டுஞ் சிற்றின்பமே பெரும்பாலும் பயின்று வருகின்றது.
சீராமகாதை அறம் பொருளின்பம் வீடு என்னும் நாற்பொருளும் மலிந்து இயல்வது.
இக்காப்பியங்களின் தலைவர்களை நோக்குமிடத்துச் சீவகன் பல தாரங்களை மணந்தவனாவான்;
சீராமமூர்த்தி ஏகதார மகாவிரதனாவான்.
சீவகசரிதையில் இரண்டோ ரிடங்களில் வாழ்வுந் தாழ்வுங் கலந்து இன்பச்சுவையும் துன்பச்சுவையும் காணப்படினும்
பெரும்பாலும் கதையினைச் செல்வ வாழ்க்கையிலே கொண்டு செலுத்த சுவையின்றாவது.
சீராமகாதைக்கண் யாண்டும் வாழ்வுந்தாழ்வும் பற்றி இன்பமும் துன்பமும் விரவிவருதலிற் சுவை மிகுதி பயக்கின்றது.
இன்னோரன்ன சரித்திரவியல்புபற்றி இவ்விரண்டு நூல்களுக்குள் உயர்வு தாழ்வு காண்டல் எளிதேயாகும்.
ஆதலால் சரித்திரவியல்பினை எடுத்து இவ்விரு பெருங்காப்பியங்களையும் நன்றியற்றிய இவ்விரு நூலாசிரியர்களுக்குள்
புலமைத்திறன் பற்றியுள்ள ஒற்றுமை வேற்றுமைகளையே யான் இவ்விடத்தாராயப்புக்கேன்.

புலமைத்திறன்

இவ்விரு புலவர்களும் காலத்தானுங் கொள்கையினானும் வேற்றுமைப்பட்டவர்களேயாயினும்
புலமை எய்தியது தமிழ்க்கல்வியிலே யாதலால் இவர்கள் அம்மொழியில் கற்ற பெருநூல்களெல்லாம்
பழைய சங்கநூல்களே யாகுமென்று துணியலாம். இவ்விருவர் வாக்கிலும் திருக்குறள், புறநானூறு, அகநானூறு
முதலிய பழைய நூல்களின் அரிய வழக்குகள் பல விரவியிருத்தலானே ஈதறியப்படும்.
இவ்விருவரும் எடுத்தாண்ட சங்கநூல் மேற்கோள்களை இங்கு ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டப்புகின் மிக விரியுமாதலால்
ஒரு சிலவே கூறிச்செல்வேன்.

சிந்தாமணியும் திருக்குறளும்

சிந்தாமணிக்கண்,
“வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய் மென்றோள்” (குணமாலை-192) என்பது

“வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோ ள்” (1305) என்னும் திருக்குறளையும்;

“கண்ணிலா லின்று கண்டாங் கூற்றினைக் காமர் செவ்வாய்
…. ….. ….. ……. ……
பெண்ணுடைப் பேதைநீர்மைப் பெருந்தடங் கண்ணிற்றம்மா” (இலக்கணை-81) என்பது

“பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு” (1083)

என்னும் திருக்குறளையும் கொண்டு வந்தனவாதல் அறிக.
இவ்வாறு முழு முழுத் திருக்குறளைக் கொண்டுவருவன இந்நூலுண் மிகப்பலவாகும்.
இவையன்றி ஒவ்வொரு திருக்குறளில் குறித்த உவமை பற்றி வருவனவும் பலவுள.

“பெரும்பார வாடவர்போல் பெய்பண்டந் தாங்கி” (முத்தி-186) எனப்பகட்டிற்கு ஆடவரை-உவமித்தது
“மடுத்த வாயெல்லாம் பகடன்னான்” (திருக்குறள்-624) என்பது கொண்டு என அறிக.
“போதுவாய் திறந்தபோதே பூப்பொறி வண்டு சேர்ந்தால், கூதுமே மகளிர்க் கொத்த போகமு மன்னதொன்றே” (கேமசரி 379) என்பது
“மலரினு மெல்லிது காமம்” (1289) என்னும் திருக்குறள் கருத்தினை விளங்கவுரைத்ததாம்.

“வாய்ப்படும் கேடு மின்றாம் வரிசையினரிந்து நாளும்
காய்த்தநெற் கவளத் தீற்றிற் களிறுதான் கழனிமேயின்
வாய்ப்பட லின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின்” (முத்தி-309) என்பது

“சாய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாந்தை வில்லதும் பன்னாட் காகு
தூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்பகு வதனினும் கால்பெரிது கெடுக்கு
மறிவுடை வேந்த னெயறிந்து கொளினே” (184) என்னும் புறப்பாட்டையும்;

“நெல்லுயிர் மாந்தர்க் கெல்லா நீருயி ரிரண்டு செப்பில்
புல்லுயிர்………..மன்னர்கண்டாய் நல்லுயிர்…………..” (முத்து-310) என்பது

“நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்” (186)

என்னும் புறப்பாட்டையும் கொண்டு வந்தன. இவைபோல வந்தன பிறவும் கண்டுகொள்க.

இராமாவதாரத்தில் திருக்குறள்

இனி இராமாவதாரத்தில்,

“ஊருணி நிறையவு முதவு மாடுயர்
யார்கெழு பயன்மரம் பழுத்தன் றாகவும்
கார்மழை பொழியவும் கழனி பாய்நதி
வார்புனல் பெருகவு மறுக்கின் றார்கள் யார்–(அயோத்தி-மந்திரம்-82) என்பது

“ஊருணி நீர் நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிரு” (215)

“பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ நயனுடைய யான்கட் படின்” (216)

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றும் கொல்லோ வுலகு” (211)

என்னும் திருக்குறளையுட்கொண்டு எழுந்தது என்று துணியத்தகும்.
பேரறிவாளனும், நயனுடையானுமாகிய இராமன் அரசுச் செல்வம் எய்தல் ஊருணி நிறைதல் போலவும்
பக்கத்துயர்ந்த பயன்மரம் பழுத்தது போலவும் கார்மழை பொழிதல் போலவும், கழனி பாய்ந்து பெருகல் போலவும்
எல்லாரானும் தத்தமக்கு வரும் நன்மையாகக் கொண்டு விரும்பப்படும் என்றதாம்.
இதன்கண் நதிபெருகலொழித்து மற்றை மூன்றும் திருக்குறளைக் கொண்டு நின்றன.

“மானநோக்கில் கவரிமாவனைய நீ ரார்” (அயோத்தி-மந்திரம்-7) என்பது

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா ருயிர்நீப்பர் மானம் வரின்”–என்னும் திருக்குறளைக் கொண்டு வந்தது.

“உரைசெயற் கெளிதுமாகி யரிதுமா மொழுக்கினின்றான்” (கிட்கிந்தை, அரசியல்-44) என்பது

“சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்” (664) என்னும் திருக்குறளைக் கருதி வந்தது.
இதன்கண் உரைசெயற்கு என்பதனை ஒரு சொல்லாகக் கொள்ளாது உரைக்கு செயற்கு எனப் பிரித்து
உரைக்கு எளிதுமாகிச் செயற்கு அரிதுமாம் என இயைத்துரை கொள்க.

“கொடுப்பது விலக்குகொடி போயுனது சுற்ற
முடுப்பதுவு முண்பதுவு மின்றிவிடு கின்றாய்” (பால-வேள்வி-33) என்பது

“கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும்” (165) என்னுந் திருக்குறளைப் பற்றி வந்தது.
இவைபோல வந்தன பலவுள. கம்பர் திருக்குறளை “எழுதுண்டமறை” என்று வழங்கலால்
அவருக்கு அந்நூற்கண் உண்ண நன்மதிப்பினை எளிதிலறியலாகும்.

சங்கத்தமிழும், கம்பரும்

இனிக் கிட்கிந்தாக்காண்ட கார்காலப்படலத்து

“காலமறி வுற்றுணர்தல் கன்னலள வல்லான்
மாலைபக லுற்றதென வோர்வரிது மாதோ” என்பது

“நிலனும் விசும்பு நீரியைந் தொன்றிக்
குறுநீர்க் கன்ன லெண்ணுத ரல்லது
கதிர்மருங்கறியா தஞ்சுவாப் பாஅய்த்
தளிமயங் கின்றே தண்குர லெழில்” (43) என்னும் அகப்பாட்டினையே கருதிவந்தமை கண்டுகொள்க.
கம்பர் கன்னல் என்றது குறுநீர்க்கன்னலை. குறுநீர்க்கன்னல் என்பது அளவுபட்ட நீரினையுடைய நாழிகை வட்டில்;
ஒரு கடாரத்து நீரிலே ஒரு நுண்ணிய துளையுடையதோர் வட்டிலையிட்டு அதன்கண் நீர் புகுவதுபற்றி
நாழிகையளப்பதோர் கருவியாகும்.

சூர்ப்பநகைப் படலத்து,

“சேற்றவளை தன்கணவ னருகிருப்பச் சினந்திருகிச்
சூற்றவளை வயலுழக்குந் துறைகெழுநீர் வளநாடா”
என்பது
“கதிர்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை
நாகிளந் தவளையொடு பகன்மணம் புகூஉ
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்” (296)–என்னும் புறப்பாட்டைக் கொண்டு கூறியதென்றுணரப்படும்.
புறப்பாட்டுரையாசிரியர் இப்பாடத்தினை எடுத்தோதி
“நந்தி னேற்றை நாகிளந் தவளையுடனே தத்தம் இனத்தோடு புகன்மணம்புகூஉம் எனினுமமையும்” என்றார்.
இவ்வுரைக்குத் ‘தத்தமினத்தொடு’ பாடத்திலில்லாமல் வருவித்ததாம்.
இங்ஙனம் வருவித்துரையாது இப்பாடத்தின் நேர்பொருளே கொண்டு கம்பர் கூறியுள்ளாரென்று துணியப்படும்.
இவ்வாறு சங்கநூல் வழக்குப்பற்றி வருவன இராமாவதாரத்து மிகப்பலவாகும்.
இவற்றால் திருத்தக்க தேவருக்கும் கம்பருக்கும் சங்கம் மருவிய பழைய பெருநூல்களிலெல்லாம் நல்லதேர்ச்சியுண்லென்றுணரலாம்.

கம்பர்க்குற்ற ஏற்றம்

பண்டைத்தமிழ் நூற்பயிற்சி இருவர்க்கும் ஒத்ததென்று துணியப்பட்டவிடத்தும்
கம்பருக்கும் சிந்தாமணியாரினுஞ் சிறந்ததோரேற்றமுள்ளது.
அஃதாவது கம்பர் சிந்தாமணியார் பேரறிவையும் நன்கறிந்தவராவார். சிந்தாமணியார் கம்பருக்கு முற்பட்ட காலத்தவராதலால்,
சிந்தாமணியாரோ கல்வியிற் பெரியாராகிய கம்பரது விழுப்பேரறிவையறியார்.
கம்பர், சிந்தாமணி தமிழ்மக்களாற் பெரிதும் போற்றப்படுதலைக் கண்டுவைத்து அதனினுஞ் சிறக்கவே ஒரு பெருங்காப்பியஞ்செய்து
புகழ்பெற வேண்டுமென்ற ஊக்கத்துடனே இராமாவதாரத்தைப் பாடியிருப்பார்.
இவர் காலமோ சிந்தாமணியையே அரியபெரிய காப்பியமாகப் போற்றிப் படித்த காலமாகும்.
அன்றியும் இவர் காலம் செயங்கொண்டார், சேக்கிழார் நாயனார், புகழேந்தியார், ஒட்டக்கூத்தர் முதலிய
கவிவேந்தர்களெல்லாம் பெரிய பெரிய நூல்கள் பாடி அழியாப்புகழ் நிறுத்திய காலமாம்.
கம்பர் இவர்கள் அறிவையெல்லாமும் அளந்தறிந்து கொண்டவருமாவர்.
அளக்கலாகா இயற்கையறிவின் மாட்சி நன்கு பெற்ற ஒருவருக்குப் பல பெரிய புலவர்களின் புலமையையும் அளந்து கண்ட
செயற்கையறிவும் நன்கு கூடுமாயின் அவருக்கு அரியவாவனயாவை?
“மதிநுட்ப நூலோடுடையார்க் கதிநுட்பம், யாவுன முன்னிற் பவை” என்பது பொய்யாமொழியன்றோ?

சிந்தாமணியினும் சிறக்கப் பாடுதல்

இதனேற்றிருத்தக்க தேவர்க்கும் கம்பருக்கும் நூலான் எய்திய செயர்கையுணர்விலுஞ் சில வேற்றுமையுண்டென்று கொள்ளப்படும்.
மற்றுக்கம்பர் திருத்தக்கதேவர் கவிகளையும் நன்றறிந்தவர் என்றற்குச் சான்று என்னையெனின்
இராமாவதார நூற்கண்ணே சிந்தாமணிச் சொல்லும் கருத்தும் ஆங்காங்குப் பயின்றிருதலேயாமென்க.
கம்பர் சிந்தாமணிக் கருத்தை எடுத்தாளுமிடங்களிலெல்லாம் அந்நூற்கண் உள்ளவாறே கூறியொழியாது
தாமெடுத்தாளப்புகுந்த ஒவ்வொரு கருத்தையும் முன்னதினுஞ் சிறக்கப் புனைந்து பல அழகும் ஒருங்கு பெறப்பாடுவரெனவறிக.
சிந்தாமணியார் கருத்தும் கம்பர் பாற்பட்டு இனிய சுவையுடைத்தாமென்று கொள்க. இவ்வாறு வந்தன பலவற்றுள் ஈண்டுச் சில கூறுவல்.

குவளை மலர்ந்த தாமரை

கம்பர் ஆரணியகாண்டத்து மாரீசன்வதைப் படலத்து,
“ஆற்றாகிற்றம்மைக் கொண்டடங்காரோ வென்னா ருயிர்க்குக்
கூற்றாய் நின்றகுலச்சனகி குவளை மலர்ந்ததாமரைக்கு
தோற்றாயதனான கங்கரிந்தாய் மெலிந்தாய்வெதும்பத் தொடங்கினாய்
மாற்றார்செல்வங் கண்டழிந்தால் வெற்றியாக வற்றாமோ” எனப் பாடியுள்ளார்.
இது சூர்ப்பநகையாற் சீதையின் பேரழகை நன்றுகேட்டு அச்சீதைபாற் பெருங்காமங் கொண்ட இராவணன்,
இரவிற்றண்ணிலவெறிப்பக்கண்டு, என்றுங் குளிர்கின்ற மதிமயங்கிச் சுடுகின்றதெனக்கருதி, மதிமயங்கி
அத்தங்களை நோக்கிக் கூறியதுக்குச் செய்யுள். இதனட் ‘குவளை மலர்ந்த தாமரை’ என்பது சிந்தாமணியார் கருத்தாம்.

“தாமரைப் போதிற் பூத்த தண்ணறுங் குவளைப் பூப்போற்
காமரு முகஹ்த்டிற் பூத்த கருமழை தடங்கண் டம்மால்” (மண்மகள்-23) எனவும்

“இழையொளி பரந்த கோயி லினமர்க் குவளைப்பொற்பூ
விழைதகு கமல வட்டத் திடைவிராய்ப் பூத்த தேபோல” (ஷெ-29) எனவும் வருவனவற்றானுணர்க.
கம்பருக்குக் “குவளை மலர்ந்த தாமரை” என்னுங்கருத்து இச்சிந்தாமணி யடிகளினின்றும் உண்டாயிற்று என்று
கொள்ளலாமாயினும் கம்பர் சிந்தாமணியார் கூறியாங்குக் கூறாமல்,
அக்குவளை தாமரைகளுக்கும் திங்களுக்கும் உள்ள இயைபினைத் தெளிந்து,
குவளையும் தாமரையும் வேறு வேறிடங்களிலுளவாயின் முன்னதை யலர்த்தியும் பின்னதைக் குவித்து வாடுவித்தும் போதுகின்ற
அத்திங்கள், குவளையைத் தன்னடுவில் வைத்துக் கொண்டதொரு தாமரையுளதாயின் அதனைக் குவிக்கலாற்றாது தோற்கும் என்று கண்டு,
யாண்டுந் தாமரை திங்களுக்குத் தோற்றதுபோல் ஈண்டுச் சமயோசிதமாகக் ‘குவளை மலர்ந்த தாமரைக்குத் தோற்றாய்’ என்று அலங்கரித்தனர்.
திங்கள் குவளையைத் தன் நடுவில் வைத்துக்கொண்டதோர் தாமரைக்குத் தோற்ரவாறு யாங்ஙனமெனின்,
திங்களின் இயல்பு குவளையை அலர்த்தி தாமரையைக் குவித்தல் அன்றோ?
இத்தாமரை குவளையைத் தன் நடுவில் வைத்துக் கொண்டடாதலால் தாமரையைக் குவித்தால்
அதனடுவிலுள்ள குவளையும் அதனுள்ளே சாம்பும்; அப்போது தானியல்பாக அலர்த்தும் குவளையை
இவ்விடத்டலர்த்தினானாகான்; குவளையை அலர்த்தினும் அதனை நடுவிலுடைய தாமரையும் அலர்ந்து விடும்;
அப்போது தானியல்பாகக் குவிக்கின்ற தாமரையை ஈண்டுக் குவித்தானாகான்;
இவ்வாறு தன்னியற்கையான செயல் ஈண்டு நிகழ்த்தலாகாற்றாது தோற்றான் என்க.
இத்தகைய தாமரை சாநகி பாலுள்ளது. அதற்கு மதி தோற்றானென்க.
இவ்வியைபெல்லாம் தம்முடைய பரந்தவுள்ளத்து விரைந்துபட்டனவில்லையாயின்
“குவளை மலர்ந்த தாமரைக்குத் தோற்றாய் அதனால் அகங்கரித்தாய் மெலிந்தாய் வெதும்பத் தொடங்கினாய்” என
அழகு பொலியக் கூறலாகாதென்க.

திங்கள் சாநகியினுடைய கண்களாகிய குவளை மலர்ந்த முகத்தாமரைக்குத் தோற்றதனா லுண்டாய உள்வெதுப்பு,
அத்திங்களை அகங்கரித்து மெலியச் செய்து புறத்தும் வெதும்பத் தொடங்கிற்றானென்க.
இப்பாட்டில் “மாற்றார் செல்வங் கண்டழிந்தால் வெற்றியாகவற்றாமோ” என்னும் அறவுரை நினைக்கத்தக்கது.
இவ்வறவுரை உபதேசஞ் செய்கின்ற இராவணனார், தாம் இப்போது புரிகின்றது அம்மாற்ரார் செல்வங்கேட்டறபவர் போலும்!
இதனாற் சிந்தாமணியார் கருத்து என்னப்பட்டதோர் நல்லவண்ணத்தில் கம்பர் தம்பேரறிவாகிய எழுதுகோலைத் தோய்த்துக்
கண்டார் கண்ணும் மனமும் கவருந்தகைத்தாக ஒரு செய்யுளாகிய திருவுருவைச் சித்திரித்தனர் என்று துணியலாகும்.

இல்லை உண்டு என்னும் இடை

கம்பர் கோலங்காண்படலத்து,
“பல்லியனெறியிற்பார்க்கும் பரம்பொருளென்ன யார்க்கும்
இல்லையுண்டென்னநின்ற விடையினுக்கிடுக்கண் செய்தார்” என்றார்.
இது,
“………………கண்கொள்ளா நுடங்கிடையை
யுண்டெனத்தமர்மதிப்பர் நோக்கினாற்பிற செல்லா
முண்டில்லையெனவையமல்ல தொன்றுணர்வரிதே” (நாமகள்-146) என்பதுபற்றி வந்தது என்னலாம்.
இதன்கண் ‘உண்டெனத் தமர் மதிப்பர்’ என்பதுபற்றியே
பின்னும் நாடவிட்ட மடலத்தின் கண் சீராமபிரான் “தொட்டவற்குணரலாமற்றுண்டெனுஞ் சொல்லுமில்லை” எனக்
கூறியருளியதாகப் பாடினாரெனவுங் கருதலாம்.
இவ்வீரிடத்துஞ் சிந்தாமணியார் கருத்தே பயின்றதாயினும் கம்பர் சிந்தாமணியார் கூறியாங்கு
‘உண்டு இல்லை யென வையம் உணர்வரிது’ எனக் கூறியொழியாமல்
“பல்லிய னெறியிற்பார்க்கும் பரம்பொருளென்ன யார்க்கும் இல்லையுண்டென்ன நின்ற இடை” என்ன
மிகவும் அழகியதோருவமையினை முன் வைத்து இன்மையும் உண்மையுங் கூறுதல் காட்டியது,
எத்துணையேற்ற முடையதென்பது உய்த்துணர்ந்து கொள்க.
பரம்பொருளை யெய்தியறிந்த சுவாநுபூதிமான்களுக்கே அதனுண்மை புலனாம்; ஏனையோர்க்காகாது.
அதுபோல இவளிடையும் தொட்டறிந்தவனுக் குணரலாமல்லாது ஏனையோர்க்காகாது. இக்கருத்துப்பற்றியன்றே
“தொட்டவெற்குணரலா”மென்று சீராமமூர்த்தி திருவாக்கில் வைத்தார், கவிச்சக்கரவர்த்தி கம்பநாடர்.
இதுபோல் பல்வேறு இடங்களில் கம்பர், திருத்தக்க தேவரைத் தம் முன்னோடியாகக் கொண்டுள்ளார்.

இராமாவதாரவுரை
[முதல் இரு பாடல்களுக்கு விளக்கம்]

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.

(இதனுரை) நாடிய பொருள்-நாடப்பட்டவனாகிய கல்விப் பொருளும் செல்வப் பொருளும்; இவ்விரண்டனையுமே
பொருளென்பதாகக் கருதினாரென்பது மேலிவற்றின் பயனாக ஞானமும் புகழுமுண்டாம் என்றதனானுய்த்துணரலாகும்.
கல்விப் பொருளான் ஞானமும் செல்வப் பொருளாற் புகழுமுண்டாம் என்க.
பொருளைப் பெற்ருப் புகழெய்தாமலும், கல்வியைப் பெற்று ஞானெமெய்தாமலும் வாளாகழியும் உயிர்கள் பலவாதலின்
அவற்றை வேறுகூறினார்; “ஓங்குபுகழ் செய்யான் — பொருள் காத்திருப்பான்” (நாலடி)
“கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ” (இராமாவதாரம்) எனவருதலானுணர்க;
கைகூடும் என்பது கால்சீத்தல் போல்வதோர்சொல்.
“திருவேறு தெள்ளியராதலும் வேறு” என்று கூறப்பட்ட இருவேறு நல்வினைப்பயன்களும் ஒருங்கே கைகூடும் என்றதாம்.
உண்டாம் என்றது, வித்தினின்று முளையுண்டாம் என்பதுபோல, அக்கைகூடிய பொருள்களினின்று இவைதோன்றலுணர்த்தி நின்றது.

“ஞானிக்குமப் பயனில்லையேற் சிறுக நினைவதோர் நினைவுண்டாம் பின்னும் வீடில்லை.” (திருவாய்மொழி) எனப்
பெரியார் பணித்தலான் முன்னோதிய ஞானத்தாலும் எய்தலாகாமையின் “வீடியல் வழியுமாக்கும்” என வேறே கூறினார்.
மற்று “ஞானத்தால் வீடெனவே நாட்டு” என்பது போன்று வருவனவெல்லாம் பத்திவிசிட்ட ஞானத்தையே குறித்தனவாகும்.
“அன்பே தகளியா….ஞானச்சுடர் விளக்கேற்ரினேன்” எனவும்,
“ஞானநற்சுடர் கொளீஇ……. அன்பினன்றியாழியானை யாவர்காண வல்லரே” எனவும்
“இனியார் ஞானங்களா லெடுக்க லெழாத வெந்தாய்” எனவும் வருந் திருவாக்குகளான் இதனுண்மை உணர்க.

“பக்தி ஞானத்தினுஞ் சிறந்தது” என்னுமதம்பற்றி “வீடியல் வழி” என்று பக்தியையே ஞானத்தின் மேம்பயனாகக் கூறினார்.
வீடியல்வழி, வீட்டிற்கியலுநெறி; “பக்திநெறி” என்பது வழக்கு. வேரியங் கமலைநோக்கு வீடியல் வழியுமாக்கும் என்க.
“வேரி மாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே” அதுவுமவன தின்னருளே” எனவரும்
திருவாக்குகளையுட்கொண்டு கமலைநோக்கு அப்பக்திமையை உண்டாக்குமென்றார்.
பிறசான்றோரும், அருட்சத்திநோக்கந் தம்பால் வீழ்தலையே தெய்வ வழிபாட்டிற்குக் காரணமாகக் கூறுப.
“அவனருளானே அவன்றாள் வணங்கி” என்பது அவர்க்கு மேற்கோள்.

இவ்விராமாயணம் பக்திசத்திரமாதலான் அப்பக்தியையே முடிவு பேறாகவுரைத்தார்.
“படிகொண்ட கீர்த்தியிராமாயணமெனும் பக்திவெள்ளம்” என்பது அமுதனார் திருவாக்கு.
வேரி-தேன். நீடியவரக்கர்-அழிவில்லாத அரக்கர்; “நீடுவாழ்வார்” என்புழிப் பரிமேலழகருரைத்தவாறுணர்க.
அரக்கருஞ் சேனையு நீறுபட்டழிய வாகைசூடிய சிலை-வென்றிமாலை சூடியவில், “நீறுபட்டழிய” என்றது.
“நீறுபடவிலங்கை செற்றநேரா” என்ற தெய்வச்சடகோபர் திருவாக்கினையுட்கொண்டு கூறியதாம்.
“மசரதமனையவர் வரமும் வாழ்வுமோர், நிசரத கணக்களா னீறு செய்யாந், தசரதன் மதலையா வருதும்” என்று
வரமணித்ததனையும் நோக்குக.
“தென்னிலங்கையெரியெழச் செற்றவில்லியை” என்று அப்பெரியார் பணித்தலான் நீறுபட்ட வாறுணர்ந்து கொள்க.
சீராமமூர்த்தி திருச்சரத்தைச் “சுடுசரம்” எனப் பலவிடத்துங்காண்க.
அரக்கரை அழித்தல் முழுமுதற்கோர் பொருளன்றாதலின் வாகை சூடியது சிலையேயென்றார்.
சிலையிராமன், பரசுராமன், அலராமன் இவரின் வேற் பிரித்துணர வைத்தது.
“இராமன் தோள்வலி கூறுவோர்க்கு” என்றது. “தென்னிலங்கை செற்ராய் திறல்போற்றி” என்ற
திருவாக்கினையுட்கொண்டு கூறியதாம்.
“கற்பாரிராமபிரானையல்லான் மற்றுங்கற்பரோ” எனவும்,
“நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்றவுயிர்களெல்லாங், கற்கின்றதிவன்றன்னாமம்” எனவும் வருதலாற்
“கூறுவோர்க்கே” என்ற சொன்னோக்குணர்ந்து கொள்க.
கூறுவோர்க்கே கைகூடும், உண்டாம், கமலை நோக்கு ஆக்கும் எனவுரைக்க.

பாயிரம்

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலு நீக்கலு நீங்கலா
வலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே.

(இ-ரை) உலகம் என்றது புவனமும், சனமும். யாவையும் என்றது உலகிலுள்ள உயிர்கட்குத்
தாரகபோட போக்கியங்களான மற்றெல்லாமும் எனலாம்.
உயிர்கட்கு வேண்டிய தனுகரண புவனபோகமெனப்பட்ட நான்கனுள் ஈண்டுலகமென்றது அஃதொழிந்த மற்றைய
மூன்றுமாம் எனினும் உலகம் என்பது காணப்பட்டதெனக்கொண்டு
யாவையும் என்பது நூற்றொகைகளாற் கேட்கப்பட்டனவுமாம் என்னும் அமையும். கேட்கப்பட்டன சத்தியலோகாதிகள்.
தாமுள வாக்கல்-தாமேசிருட்டித்தல்.
தாம் என்றது உபாதான நிமித்தசக காரிகாரணங்கள் தம்மின் வேறல்லாமையுணர நின்றது.
“மன்னுயிரெல்லாந் தானே வருவித்து வளர்க்குமாயன்” என மேலும் இக்கருத்தே பற்றிவந்தது. (இராம. வீடணனடைக்கலம் 114)
நிலைபெறுத்தல்-நிற்றலைப் பெறுவித்தல், இம்முத்தொழிலும் நீங்கா விளையாட்டு,
அகிலா விளையாட்டு-கணக்கில்லாத விளையாட்டு, உயிர்த்தொகைகளும் அவற்றின் கருமப்பகுதிகளும்
அளக்கலாகாமையின் அவைபற்றி நிகழும் விளையாட்டும் கணக்கின்றாம் என்பது;
முதற்காரணமுந் தாமேயாகவும் படைப்பளிப்பழிப்பானோர் துன்புறுதலிலர் என்பார் விளையாட்டென்றார்.
உயிர்த்தொகைகள் ஒரோவொன்றாக வீடுபெற்றேகின் இறுதியில் ஒருகால் விளையாட்டுக்குயிர்களே யில்லையாங்கொல்
என்னுஞ் சங்கையைப் பரிகரித்தற்கு நீங்காவிளையாட்டென்றார். உயிர்ப்பகுதி ஒன்றொன்றாக எண்ணப்படினும்
அதன் பெருந்தொகுதி எண்ணப்படாதென வறிக.
இது காலம் என்பது, நிமிஷங் கலை காட்டை முகூர்த்தம் யாமம் பகல் இரவு நாள் திங்கள் ஆண்டூழி எனப்
பலபகுதிகளாக எண்ணப்படினும் அதன் பெருந்தொகுதி முடிவுபெறாது நெடிதுசேறல் போலக் கொள்க.
இம்முத்தொழில் விளையாட்டுடையாரே தலைவரென்றது.
பிரமசூத்திரத்துள் வியாசபகவான் “இவற்றினுடைய தோற்றம் முதலியன எதனிடத்தினின்று நிகழ்வனவோ அது பிரமம்”
எனக்கூறிய சூத்திரகருத்தைத் தழீஇயுரைத்தாம். இராமாநுசரும் அச்சாரீரகபாடிய முகத்து
“எல்லாவுலகங்களுடையவும் படைப்பளிப்பு முதலிய விளையாட்டுடையான்” என இறைவனை முந்துறவுரைப்பது காண்க.
தலைவர்-முதல்வர். இது பிரணவப் பொதுவாகிய தலைமைப்பண்புபற்றித் தலைவர் எனப்பெயராடலையுநோக்குக.

இதனையே வடமொழி வல்லுநரான பட்டரும் உலகின் படைப்பளிப்பழிப்பழிப்பினைப் புரிகின்றவனான இறைவன்
அகரப் பொருள் என உரைத்தார். இனி, “அன்னவர்க்கே சரண்” என்பது, ஆன்மாக்கள் தமக்கேனும்
அசித்துக்கேனும் உரியவல்லவவென்று உகாரப்பொருள் கொள்ள வைத்தது.
உகாரம், “அகரப் பொருளான இறைவனுக்கன்றி வேறொருவர்க்கு உயிர்கள் உரியஅல்லாமை நியமிப்பது” என்றதற்கு இயையவந்தது.
உகாரம் அவதாரணப் பொருள் குறித்துவரும். இனி, “நாங்கள்” என்றது மகாரப்பொருளைக் கொண்டு கூறியது;
மகாரப்பொருள் ஜீவன் என்றுரைத்தவாறு நோக்கிக் கொள்க. இவ்வாறு, அ-உ-ம என்னும் மூன்றெழுத்துகளின்
பொருள்களை முறையே கொண்டு கூறியவாறறிக. “அன்னவர்க்கு” என்றது, அகாரத்திலேறிக் கழிந்த சதுர்த்தியை விரித்துரைத்ததாம்.
“அன்னவர்க்கே சரணாங்களே” என்பது, “உனக்கே நாமாட்செய்வோம்” என்னுங் கோதையர் திருவாக்கின் கருத்தையே
தழுவி நிற்பது, இதனாற் சரணங்களே என்ற பாடம் தவறாதலுணர்ந்து கொள்க.

இனித்தலைவர்க்கே நாங்கள் சரண் என்னாமல் தலைவரன்னவர்க்கே நாங்கள் சரணென்றது,
தலைவர்க்கும் அவரொடொரு நீர்மயராகிய திருமகனார் முதலிய பாகவதர்க்கும் நாங்கள் சரண் எனினும் அமையும்.
நாங்கள் சரணென்றது நாங்கள் சரண்புக்கோம் என்றவாறு.

மற்றைய கடவுள் வாழ்த்துப் பாடல்களின் உரையைச் “செந்தமிழ்” இலக்கிய இதழ்களில் பரக்கக் காணலாம்.

ஆதிகாவியமும் தென்னக இலக்கியமும்

[மகாவித்வான் பல இடங்களில் கம்பன், காளிதாசன், வால்மீகியின் காவியங்களைப் பற்றி உரையாற்றியதுண்டு.
இதன் குறிப்புகளை என் தந்தையார் சேகரித்து வைத்திருந்தார். அவற்றின் சுருக்கமே இது.]

இராமாயணம் என்ற மெரிய இதிகாசம் “ஆ சேது இமாசலம்” என்று பாரத காண்டம் முழுவதும் பலரால் படிக்கப்படும் பெருநூலாகும்.
வால்மீகியால் இயற்றப்பெற்ற இந்நூலை ஆதி காவியம் என்பர். காளிதாசனும் இரகுவம்சத்தில் இவ்வரலாற்ரைக் குறிப்பிடுகிறான்.
வால்மீகி இராமாயணத்தில் தான் வடமொழி அல்லாத பிறமொழிகளின் குறிப்பு காணப்படுகிறது.
அநுமன் பிராட்டியிடம் உரையாடத் தேவபாஷையை ஒதுக்கி மானுட மொழியை உபயோகித்தான் எனக்கவி கூறுவர்.
இது தென்னகமொழியேயாகும். அநுமன் தாய் அஞ்சனை.
இவள் பிறந்த ஊர் அஞ்சனை புரி, என்றும், மூசுஸ்ரீ (குரங்கின் ஊர்) அல்லது குரங்கிலூர்,
முசிறி என்றும் உலக் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் கேட்கப்படுகிறது.

இது இன்றைய கேரள நாட்டில் உள்ள ஊராகும். (அஞ்சைக்களம், கரங்கலூர்) இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.

இக்காவியத்தை இயற்றிய வால்மீகி, இராமனை, தேவ, மானிட பாவம் தோன்றவே சுலோகம் செய்துள்ளார்.
இதற்கிணங்க இராமன் “நான் தேவனல்லன், மனிதன்; தசரதன் புத்திரன்” என்று கூறுகிறான்.
விசுவாமித்திரரும் தசரதனிடம் “உலகத்தைக் காக்க உன் புதல்வனை நான் காப்பாற்றி உன்னிடம் சேர்க்கிறேன்” என்று
தேவ, மனித பாவம் இரண்டும் விளங்குமாறு கூறுவார். தன் தெய்வத்தன்மையை அறிந்தபடியால்தான் இராமன்,
சபரியை அவள் விரும்பும் மேலுலகத்திற்குச் செல்ல வழி அமைக்கிறான். சீதையைவிடத் தன்னுடன் கூடியிருந்தவர்களுக்கே
அன்பையும் அருளையும் காட்டுவதாகப் பல இடங்களில் வால்மீகி கூறுவார்.
இராவண வதத்திற்குப் பின்பு அநுமன் சீதையை அழைத்து வந்து அவள் கற்பின் மேன்மையை வாயார இராமனிடம் புகழ்வான்.
ஆனால் இராமனோ தன் அகன்ற மார்பை அநுமனைத் தழுவக் கொடுப்பான்.
“அகலகில்லேன் என்று உறையும் அலர்மேல் மங்கை”க்குத் தன் மார்பைத் தராது அநுமனுக்குக் கொடுத்தது,
நட்பின் பெருமையைக் காட்டவில்லையா? சுக்கிரீவன் இலங்கை சென்று போராட்டத்திலிருந்து மீண்டு இராமனிடம் வருகிறான்.
சுக்கிரீவனைப் பார்த்து இராமன் “ஏதானும் உனக்குக் கேடு வருமானால் சீதையால் நான் பெறும் சுகம் என்ன?” என்று வருந்திக் கூறுவான்.
இராமாவதாரம் சரணாகதியின் பெருமையைக் கூறும் நூல் என்பர் வைணவர். விபீஷணனைத் தம்பக்கல் சேர்க்கக் கூடாது என்று
பலரும் கூற “சர்வலோக சரண்யாய, ராகவாய, மகாத்மனே” என்று விபீஷணன் கூறிய வாக்குக்காகவே
அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். இதே போல் குகனையும் தன் தம்பியாக ஏற்றுக் கொள்கிறான்.

இராமனுடைய பாதுகைக்கு இராமனுடைய முடிசூடும் பாக்கியம் கிட்டியது பின் தன் அடி சூடிய முடியை
இராவண வதத்திற்குப்பின் இராமன் முடிசூடினான். ஏனென்றால் தன் தம்பியும், பரமபகவதனுமான பரதன்,
தன் பாதுகையைச் சிரமேல் வைத்திருந்த அன்பு நோக்கியே, இராமன் தன் முடி மேலும் சூடினான்.
நந்திக் கிராமத்தில் பாதுகையில் வைத்த முடி இராம பிரானுக்குத் திருமுடியாகிறது.

அவதாரத்தின் மகியைக் காட்ட, வால்மீகி, தசரதன் பல மகளிரை மணந்தும் புத்திரப் பேற்றைப் பெறமுடியாமல் போய்,
பின் இராமன், யாரைத் தந்தையாக வரித்து அசுரர்களை அழிக்கலாம் என நினைத்து தசரதனுக்கு
மகப் பேற்றை யாகத்தின் மூலம் அளித்தான் என்று கூறுவர். புதல்வர் பேறு இறைவனால் வருவது என்று பண்டைத் தமிழரும் கருதுவர்.

“குன்றக்குறவன் கடவுள் பேணி
ஓம்பினன் பெற்ற காதல் குறமகள்” (ஐங்குறு நூறு-257)

“மலைவாழ்குறவன் கடவுளைப் பேணித் தவங்கிடந்து பெற்ற அழகிய குறப்பெண்” என்பது இதன் பொருளாகும்.

கிஷ்கிந்தையில் சுக்ரீவன் சீதையைத் தேட அனுப்பும் வானர வீரர்களுக்குத் தெந்திசையில் உள்ள பெருநகரங்களையும்,
அவர்கள் பேசும் மொழியையும் வர்ணிக்கிறான். அவையாவன: ஆந்திரம், சோளம், கேரளம், பாண்டிய நாடுகள்,
பொன்மயமான வண்ணமுள்ளதாய் முத்துகளால் அலங்கரிக்கப் பெற்ற பாண்டியனின் கபாடபுரத்தையும் குறிப்பிடுகிறார் வால்மீகி.
கபாடபுரம் இடைச்சங்கம் இருந்த ஊர் என்பர் பண்டைத்தமிழ் நூலார். இது போன்றே கேரள, சோழ நாட்டு நகரங்களையும் கவி வர்ணிக்கிறார்.

தமிழ் மக்களுடய பழக்க வழக்கங்களையும் வால்மீகி நன்கு அறிந்திருந்தார்.
தென்னாட்டவரைப்போல வடநாட்டு வீரர்களும் தலையில் பூக்களை அணிந்தனர் என்று பரதன் கூற்றாக
அயோத்தியா காண்டத்தில் தெரிவிக்கிறார். தமிழ் அரசர் போருக்குச் செல்லுமுன் தங்கள் குலத்திற்கேற்பப்
பூச்சூடுவது பண்டைத் தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம்.
இறந்தவர்களை எரிக்காமல் புதைக்கும் வழக்கமும் தென்னாட்டில் இருந்ததாகத் தெரிகிறது.

கம்பர் இராமாவதாரம் இயற்று முன்பே ஒருசில இராமாயணங்கள் தமிழில் இருந்தன.
ஜைன இராமாயணம் இராமாயண வெண்பா நூல்களில் ஒரு சில பாட்டுகள் இப்பொழுது கிடைத்துள்ளன.
இவற்றின் காலம் கூட நன்கு அறியப்பட இயலவில்லை.

சங்க இலக்கியங்களிலும், வைணவப்பிரபந்தங்களிலும் இராமாயணக் கதைக் குறிப்புகள் உள்ளன.
சில செய்திகள் வடமொழி நூல்களில் காணப்படாதவையாகும். தனுஷ்கோடிக்கரையில் இராமபிரான் யுத்த சம்பந்தமான
ஆலோசனை நடத்துகையில், ஆலமரத்தில் இருந்த பறவைகளின் ஒலியால் துன்பப்பட்டு, தன்கையமர்த்தி பறவைகளை
ஒடுங்கி இருக்கச் செய்த சேதி வால்மீகியால் கூறப்படாதது கடுவன் மன்னனார் என்ற சங்கப் புலவர்,

வெள்வேல் கவுரியர் தொன்முதுகோடி
முழங்கிரும் பெளவம் இரங்கு முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்து அன்றால்” (அகநானூறு-70)என்று பாடுவர்.
“குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை” என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் குறிப்பிடுவது
வால்மீகி குறிக்கும் சேதுவா, கன்னியாகுமரியா என்பதை அறிஞர்கள் ஆராயவேண்டும்.

வானரங்களுடன், அணிலும் அணைகட்ட உதவிய செய்தி வால்மீகியில் இல்லாதது. தொண்டரடிப் பொடியாழ்வார்,

“குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோ டித்
தரங்கநீரடைக்கலுற்ற சலமிலா அணிலம் போலேன்” (திருமாலை-27)என்று பாடியுள்ளார்.
இக்கதை தமிழ்நாட்டில் பலராலும் கேட்கப்பட்டதொன்று.

கம்பரும், வால்மீகியும் குறிப்பிடாத ஓர் அரிய செய்தி பெரியாழ்வார் வாக்கால் நாம் அறிகிறோம். மிகவும் அழகிய பாடல்.
சீதையிடம் அடையாளம் சொல்ல அனுப்பிய அனுமனிடம் இராமன் தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய
ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறான்.

“எல்லியம் போதினிருத்தல் இருந்ததோர் இடவகையில்
மல்லிகை மாலை கொண்டங்கார்த்தது மோர் அடையாளம்” (பெரியாழ்வார் திருமொழி 3-10)

சீதையும், இராமனும் தனித்து அயோத்தியில் இருக்கும் பொழுது, சீதை குறும்பாக இராமனை மல்லிகை மாலையால் கட்டினாளாம்.
கூனி முதுகில் உண்டைவில் அடித்த கதை தமிழ் நாட்டுக்கே உரியது. சூர்ப்பனகை மூக்கொரு மார்பையும் அறிந்ததும் அவ்வாறேயாகும்.

ஊன் பொதி பசுங்குடையார் என்ற சங்கப் புலவர் புறநானூற்ற்஢ல் உவமை முகமாக ஓர் அரிய செய்தி கூறுகிறார்.
சோழன் இளஞ்சேட் சென்னியிடம் பரிசில் பெற்ற புலவர்கள் தாங்கள் பெற்ற அணிகலன்களை அணியும் முறை அறியாமல் மாறி மாறி அணிந்தனர்.
சீதையின் அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினம் எவ்வாறு நகையாடும்படி அணிந்ததோ அவ்வாறு இருந்தது
வறுமையுற்ற புலவர் செய்கை. [புறநானூறு 378] இந்த விநோத விவரம் கம்பராலும் காட்டப்படாடதாகும்.

ஜைன ராமாயணத்தில் தசரதன் காசி அரசன் என்றும், பின் அயோத்தி அரசனானதாகவும் கூறப்படுகிறது.
கதையும் மிக வேறுபடுகிறது. அநுமன் அணுமகான் என்று குறிப்பிடப்படுகிறான். இலட்சுமணனால் இராவணன் அழிக்கப்படுகிறான்.
இராமன் துறவறம் மேற்கொண்டு சுவர்க்கமடைகிறான். இராவணனும், அநுமனும் ஜைன மதத்தைத் தழுவுகின்றனர்.
அநுமன் ஆயிரம் பெண்களை மணந்தான். ஓர் இராமாயணம், சீதையை இராவணன் மகளாகவே கூறும்.
பெளத்த இராமாயணம் புத்த ஜாதகக் கதைகளிலிருந்து அறியப்படுகிறது. சாக்கிய மரபில் உடன் பிறந்தோர்
தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது உண்டாம். இதன் மூலம் சீதையும், இராமனும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.
அகஸ்தியர் இயற்றியதாக அத்யாத்ம இராமாயணம் என்ற நூல் உண்டு. துளசிதாசர் இயற்றிய இந்தி இராமாயணமும்,
எழுத்தச்சன் எழுதிய மலையாள இராமாயணமும், தியாகையரின் இராமரைப் பற்றிய பாடல்களும் பக்தி ரசம் ததும்பப் பாடப்பட்டவை.
அருணாசலக் கவிராயரின் இராமர்கதை நாடக பாணியில் அமைந்து உள்ளது.

கம்பர் பொதுவாக வால்மீகியைப் பின்பற்றுகிறார் சிலவிடங்களில் வேறுபடுகிறார்.
அகல்யையை “நெஞ்சினால் பிழையிலாள்” என்று கூறும் கம்பர், அவள் கெளதம முனிவர் வேடம் தரித்த
இந்திரனோடு அடைந்த இன்பம் புதியது என உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

“தக்கதன்று என் ஓராள், தழ்ந்தனள்” என்பது கம்பர் வாக்கு. இவள் இவ்வாறு கூறி மயங்கியதற்குக் காரணம்:

“காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்க உண்டிருத்தலால்” ஏற்பட்டதாகு. கள்ளுண்டோர் இது
“தக்கது”, “தக்கது அன்று” என்று பிரித்து எண்ண முடியாத, மயக்க நிலையில் இருப்பார்கள்.
இவ்வாறு நாம் பொருள் கொள்ளாவிடில் அகல்யை மனதறிந்து குற்றம் செய்தவள் ஆகி விடுவாள்.
வில் முரிப்பதற்கு முன்பே இராமனும், சீதையும் ஒருவரையொருவர் பார்த்து உள்ளங்கவர்ந்தவராயினர் என்று
தமிழர் சுவைக்கு ஏற்ப வைத்தார். இதற்குப் பழைய தமிழ் நூல் வழக்குகளிலும் சான்றுகள் உள்ளன.
(தொல் காப்பியம், பொருளதிகாரம் 54 உரை). தம் வாழ்வில் புத்திர சோகம் கண்டவராகையால்,
இராமாயணத்தில் இப்படிப்பட்ட நிகந்ச்சிகள் வரும்பொழுது ஆதிகாவியத்தையும் மிஞ்சி விடுகிறார்.
மேகநாதன் மறைவு கேட்ட மண்டோதரி இறந்த மகன் உடம்பைப் பார்த்தாள்.

பஞ்செரி உற்றதென்ன அரக்கர்தம் பரவை எல்லாம்
வெஞ்சின மனிதர் வெல்ல விளைந்ததே மீண்டதில்லை
அஞ்சினேள் அஞ்சினேன் இச்சீதை என்ற அமிழ்தாற்செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ? (யுத்தகாண்டம்)

வால்மீகியும், கம்பரும் பெண் கதாபாத்திரங்களை, நளினமாகக் கையாள்வார்கள்.
இராமாயணத்தைச் “சீதையின் மகத்தான சரிதம்” என்று வால்மீகி உரைப்பர்.
கம்பரும் “வாழி சானகி, வாழி இராகவன்” என்று சீதையை முற்பட வைத்தார்.
தாடகை, சூர்ப்பனகை, கைகேயி, கூனி, மண்டோ தரி போன்ற பெண்களைக் கூட நாம் மதிக்கும் வண்ணம் கதையில் சித்தரித்துள்ளனர்.

பல நூற்றாண்டுகள் இந்த இரு மகாகவிகளைப் பிரித்த போதிலும், மனநிலையை அறிவதில் ஒரே மாதிரியாகக் கவனம் செலுத்தினார்கள்.
இராவணன் வதத்திற்குப் பிறகு அநுமன் சீதையைச் சந்தித்தது, “அரக்கர் யாவரும் அழிந்து விட்டனர்” என்று கூறியவுடன்
சீதை அடக்க முடியாத இன்பத்தில் கூத்தாடுவாள் என்று எதிர்பார்க்க, அவளோ பல விநாடிகள் ஏதும் பேசாமல் இருந்தாள்.
அநுமன் பன்முறை சொல்லியும் காதில் விழாதவள் போல் குனிந்து இருந்தாள். பலகாலமாக எதிர்பார்த்து,
நடக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது, மனம் மரத்துச் செயலற்றுப் போகிறது.
வால்மீகி இதைக் கையாளும் முறையைக் கம்பரும் மிகவும் ரசித்து அதே போல் கவிபாடுகிறார்.

இந்தியப் பண்பாட்டுக்கு இராம காதை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இரு மகாகவிகளும் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மகாகாவியம் படைத்துள்ளனர்.
இதை அநுபவிக்கும் பேறு பாரத மக்களுக்கு எப்பொழுதும் கிட்ட வேண்டும்.

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/39. விடை கொடுத்த படலம்–

November 3, 2020

பூமகட்கு அணி அது என்னப் பொலி பசும் பூரி சேர்த்தி,
மா மணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகைமீதே, கொண்டலும் மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான். 1

விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க,
எரி கதிர்க் கடவுள்தன்னை இனமணி மகுடம் ஏய்ப்ப,
கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர்க் காடு பூத்து, ஓர்
அரியணைப் பொலிந்தது என்ன, இருந்தனன், அயோத்தி வேந்தன். 2

மரகதச் சயிலமீது வாள் நிலாப் பாய்வது என்ன,
இரு குழை இடறும் வேற் கண், இளமுலை, இழை நலார்தம்
கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற,
உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த, 3

உலகம் ஈர்-ஏழும் தன்ன ஒளி நிலாப் பரப்ப, வானில்
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து, எளிதின் தேய,
கலக வாள் நிருதர் கோனைக் கட்டழித்திட்ட கீர்த்தி
இலகி மேல் நிவந்தது என்ன, எழு தனிக்குடை நின்று ஏய. 4

மங்கல கீதம் பாட, மறையவர் ஆசி கூற,
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை துவைப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பொரு கயல் கருங் கண், செவ் வாய்,
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில மாதோ. 5

திரை கடல் கதிரும் நாணச் செழு மணி மகுட கோடி
கரை தெரிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப, நாளும்
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து, மன்னர்
பரசியே வணங்கும் தோறும் பதயுகம் சேப்ப மன்னோ. 6

மந்திரக் கிழவர் சுற்ற, மறையவர் வழுத்தி ஏத்த,
தந்திரத் தலைவர் போற்ற, தம்பியர் மருங்கு சூழ,
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தெரிவையர் பலாண்டு கூற,
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்தகாலை. 7

கெவனொடு கெவாக்கன், தூம்பன், கேசரி, கெந்தமாதன்,
தவன் உறு சரபன், சாம்பன், சுடேணன், சம்பாதி, நீலன்,
நவை அறு பனசன், தாரன், கெசன், நளன், சமீரன், நண்பாம்
இவன் அரிலோமன், மின்போல் எயிற்றினன், இடபன் என்பான். 8

விரதன், வீமாக்கன், வேகதரிசியே, விந்தன், வெற்றிக்
கரமுடைச் சதுக்கன், சோதிமுகன், தெதிமுகன், கயந்தன்,
அரன், விறல் கொடிய கோபன், இடும்பனோடு, அரம்பன், ஆண்மை
தெரிவரு வசந்தன், கொற்றத் துன்முகன், தீர்க்க பாதன், 9

மயிந்தன், மா துமிந்தன், கும்பன் அங்கதன், அனுமன், மாறு இல்
சயம் தரு குமுதக் கண்ணன், சதவலி, குமுதன், தண் தார்
நயம் தெரி ததிமுகன், கோசமுகன், முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்தி ஏழு கோடியாம் வீரரோடும். 10

ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந் தார் வீடணக் குரிசில், செய்ய
மான வாள் அரக்கரோடு வந்து, அடி வணங்கிச் சூழ்ந்தான். 11

வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் புலியின் வௌ; வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன்,
கல் திரள் வயிரத் திண் தோள் கடுந் திறல் மடங்கல் அன்னான்,
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், தொழுது சூழ்ந்தான். 12

வள்ளலும் அவர்கள் தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல்
உள்ளுறப் பிணித்த செய்கை ஒளி முகக் கமலம் காட்டி,
அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
‘எள்ளல் இலாத மொய்ம்பீர்! ஈண்டு இனிது இருத்திர்’ என்றான். 13

நல் நெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர், மற்றைச்
சொல் நெறி அறிவு நீரார், தோம் அறு புலமைச் செல்வர்,
பல் நெறிதோறும் தோன்றும் பருணிதர், பண்பின் கேளிர்,
மன்னவர்க்கு அரசன் பாங்கர், மரபினால் சுற்றமன்னோ. 14

தேம் படு படப்பை மூதூர்த் திருவொடும் அயோத்தி சேர்ந்த
பாம்பு-அணை அமலன் தன்னைப் பழிச்சொடும் வணக்கம் பேணி,
வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்
ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின், இரு மதி இறந்தது அன்றே. 15

நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங் கடற் கிடை நின்று ஏத்த,
பொருக்கென அயோத்தி எய்தி, மற்று அவர் பொருமல் தீர,
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரி வில் கொண்ட
திருக் கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம். 16

மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும், பொன்னும்,
நிறைவளம் பெருகு பூவும், சுரபியும், நிறைந்து, மேல் மேல்,
‘குறை இது’ என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அறக் கொடுத்து, பின்னர்,
அறை கழல் அரசர் தம்மை ‘வருக’ என அருள, வந்தார். 17

ஜஒரு சில பிரதிகளில் இதுமுதல் விடை கொடுத்த படலம் தொடங்குகிறதுஸ

ஐயனும் அவர்கள் தம்மை அகம் மகிழ்ந்து, அருளின் நோக்கி,
வையகம், சிவிகை, தொங்கல், மா மணி மகுடம், பொன் பூண்,
கொய் உளைப் புரவி, திண் தேர், குஞ்சரம், ஆடை இன்ன
மெய் உறக் கொடுத்த பின்னர், கொடுத்தனன் விடையும் மன்னோ. 18

சம்பரன் தன்னை வென்ற தயரதன் ஈந்த காலத்து
உம்பர் தம் பெருமான் ஈந்த ஒளி மணிக் கடகத்தோடும்,
கொம்புடை மலையும், தேரும், குரகதக் குழுவும், தூசும்,-
அம்பரம் தன்னை நீத்தான்-அலரி காதலனுக்கு ஈந்தான். 19

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல்,
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்தனை ஈந்தான்;
அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார்? 20

பின்னரும், அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும்
மன்னும் நுண் தூசும், மாவும் மதமலைக் அரசும்; ஈயா
‘உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு இலாதாய்!
மன்னுக, கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி’ என்றான். 21

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான். 22

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை
முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி,
பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும்,
வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான். 23

பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க,
பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு
ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே. 24

சந்திரற்கு உவமை சான்ற, தாரகைக் குழுவை வென்ற,
இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தொடு
கந்து அடு களிறு, வாசி, தூசு, அணிகலன்கள், மற்றும்
உந்தினன், எண்கின் வேந்தற்கு-உலகம் முந்து உதவினானே. 25

நவ மணிக் காழும், முத்தும், மாலையும், நலம் கொள் தூசும்,
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும், ஒண் தார்க்
கவன வெப் பரியும், வேகக் கதமலைக்கு அரசும், காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு ஈந்தான். 26

பத வலிச் சதங்கைப் பைந் தார்ப் பாய் பரி, பணைத் திண் கோட்டு
மதவலிச் சைலம், பொன் பூண், மா மணிக்கோவை, மற்றும்
உதவலின் தகைவ அன்றி, இல்லன உள்ள எல்லாம்
சதவலிதனக்குத் தந்தான்-சதுமுகத் தவனைத் தந்தான். 27

‘பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை; இதனுக்கு ஈதுக்
கோ, சரி இலது’ என்று எண்ணும் ஒளி மணிப் பூணும், தூசும்,
மூசு அரிக்கு உவமை மும்மை மும் மதக் களிறும், மாவும்,
கேசரிதனக்குத் தந்தான்-கிளர் மணி முழவுத் தோளான். 28

வளன் அணி கலனும் தூசும், மா மதக் களிரும், மாவும்,
நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான்-
களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே. 29

அவ் வகை அறு பத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எவ் வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறி,
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன், கடைக் கண் நோக்கம். 30

மின்னை ஏர் மௌலிச் செங் கண் வீடணப் புலவர் கோமான்-
தன்னையே இனிது நோக்கி, ‘சராசரம் சூழ்ந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர், உளரேல்; ஐய!
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று’ என்றான். 31

என்று உரைத்து, அமரர் ஈந்த எரி மணிக் கடகத்தொடு
வன் திறல் களிறும், தேரும், வாசியும், மணிப் பொன் பூணும்,
பொன் திணி தூசும், வாசக் கலவையும், புது மென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான்-நாகணைத் துயிலைத் தீர்ந்தான். 32

சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி,
‘மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு?’ என்னா,
கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. 33

அனுமனை, வாவி சேயை, சாம்பனை, அருக்கன் தந்த
கனை கழல் காலினானை, கருணை அம் கடலும் நோக்கி,
‘நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர் வைப்பும்
எனது; அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும்’ என்றான். 34

இலங்கை வேந்தற்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி,
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்தருளலோடும்,
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நலன் உறும் நெஞ்சர், பின்னர்க்
கலங்கலர், ‘ஏவல் செய்தல் கடன்’ எனக் கருதிச் சூழ்ந்தார். 35

பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு ஆர்
விரத மா தவனை, தாயர் மூவரை, மிதிலைப் பொன்னை,
வரதனை, வலம்கொண்டு ஏத்தி, வணங்கினர் விடையும் கொண்டே,
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார். 36

குகனைத் தன் பதியின் உய்த்து, குன்றினை வலம் செய் தேரோன்
மகனைத் தன் புரத்தில் விட்டு, வாள் எயிற்று அரக்கர் சூழ,
ககனத்தின் மிசையே ஏகி, கனை கடல் இலங்கை புக்கான்,-
அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், சென்று, அன்றே. 37

ஐயனும் அவரை நீக்கி, அருள் செறி துணைவரோடும்
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல,
செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும்
நையுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் தீர்த்தே. 38

வான் வளம் சுரக்க் நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்ந்திடுக் நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க்
தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க, எங்கும். 39

எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல்,
சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை செய்யும்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி. 40

வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி! 41

இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. 42

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/6. வருணனை வழி வேண்டு படலம்–

November 3, 2020

கடல் கடக்கும் உபாயம் உரைக்குமாறு இராமன் வீடணனைக் கேட்டல்

‘தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும் தோளால்
அடக்கும் வண்ணமும், அழித்தலும், ஒரு பொருள் அன்றால்;
கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் பெருஞ் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி-எண்ணு நூல் கற்றாய்!’ 74

கடல் கடக்க வீடணன் வழி கூறுதல்

‘கரந்து நின்ற நின் தன்மையை, அது, செலக் கருதும்;
பரந்தது, உன் திருக் குல முதல் தலைவரால்; பரிவாய்
வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி வேறு
இரந்து வேண்டுதி, எறி திரைப் பரவையை’ என்றான். 75

இராமன் துணைவருடன் கடற்கரையை அடைதல்

‘நன்று, இலங்கையர் நாயகன் மொழி’ என நயந்தான்,
ஒன்று தன் பெருந் துணைவரும் புடை செல, உரவோன்,
சென்று வேலையைச் சேர்தலும், விசும்பிடை, சிவந்த
குன்றின் மேல் நின்று குதித்தன, பகலவன் குதிரை. 76

இராமன் புல்லில் அமர்ந்து, வருண மந்திரத்தைத் தியானித்தல்

கொழுங் கதிர்ப் பகைக் கோள் இருள் நீங்கிய கொள்கை,
செழுஞ் சுடர்ப் பனிக் கலை எலாம் நிரம்பிய திங்கள்
புழுங்கு வெஞ் சினத்து அஞ்சனப் பொறி வரி அரவம்
விழுங்கி நீங்கியது ஒத்தது, வேலை சூழ் ஞாலம். 1

‘தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக!’ என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி. 2

ஏழுநாள் இராமன் இருந்தும் வருணன் வாராமை

பூழி சென்று தன் திரு உருப் பொருந்தவும், பொறை தீர்
வாழி வெங் கதிர் மணி முகம் வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பன, ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன் வந்திலன், எறி கடற்கு இறைவன். 3

இராமன் சினந்து மொழிதல்

‘ஊற்றம் மீக் கொண்ட வேலையான், “உண்டு”, “இலை”, என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம், யாம்’ எனும் மனத்தால்,
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்தென்னச்
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன, தாமரைச் செங் கண். 4

‘மாண்ட இல் இழந்து அயரும் நான், வழி, தனை வணங்கி,
வேண்ட, “இல்லை” என்று ஒளித்ததாம்’ என, மனம் வெதும்பி,
நீண்ட வில்லுடை நெடுங் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண்
பூண்ட வில் எனக் குனிந்தன, கொழுங் கடைப் புருவம். 5

‘ஒன்றும் வேண்டலர் ஆயினும், ஒருவர்பால் ஒருவர்
சென்று வேண்டுவரேல், அவர் சிறுமையின் தீரார்;
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான்;
நன்று, நன்று!’ என, நகையொடும் புகை உக, நக்கான். 6

‘”பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத்
தாரம் நீங்கிய தன்மையன், ஆதலின், தகைசால்
வீரம் நீங்கிய மனிதன்” என்று இகழ்ச்சி மேல் விளைய,
ஈரம் நீங்கியது, எறி கடல் ஆம்’ என இசைத்தான். 7

‘புரந்து கோடலும், புகழொடு கோடலும், பொருது
துரந்து கோடலும், என்று இவை தொன்மையின் தொடர்ந்த்
இரந்து கோடலின், இயற்கையும் தருமமும் எஞ்சக்
கரந்து கோடலே நன்று; இனி நின்றது என், கழறி? 8

‘”கானிடைப் புகுந்து, இருங் கனி காயொடு நுகர்ந்த
ஊனுடைப் பொறை உடம்பினன்” என்று கொண்டு உணர்ந்த
மீனுடைக் கடல் பெருமையும், வில்லொடு நின்ற
மானுடச் சிறு தன்மையும், காண்பரால், வானோர். 9

‘ஏதம் அஞ்சி, நான் இரந்ததே, “எளிது” என இகழ்ந்த
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக,
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும,
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர், என் படைஞர். 10

‘மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்,
வெறுமை கண்ட பின், யாவரும் யார் என விரும்பார்;
குறுமை கண்டவர் கொழுங் கனல் என்னினும் கூசார்;
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார்.’ 11

இராமன் வேண்டுகோள்படி இலக்குவன் வில்லைக் கொடுத்தல்

திருதி என்பது ஒன்று அழிதர, ஊழியில் சினவும்
பருதி மண்டிலம் எனப் பொலி முகத்தினன், பல் கால்,
‘தருதி, வில்’ எனும் அளவையில், தம்பியும் வெம்பிக்
குருதி வெங் கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான். 12

இராமன் கடலின்மேல் அம்பு விடுதல்

வாங்கி வெஞ் சிலை, வாளி பெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு, தோள்வலம் வீக்கினன்; கோதையை விரலால்
தாங்கி, நாணினைத் தாக்கினன்; தாக்கிய தமரம்,
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல். 13

மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல, வடித்த,
சீரிது என்றவை எவற்றினும் சீரிய, தெரிந்து,
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடு சரம் துரந்தான். 14

பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற
வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கி,
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும் மடி கொடியன சுடு சரம் எய்தான். 15

கடல் அடைந்த நிலையும், அம்புகளின் செயலும்

மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த,
பேன நீர் நெடு நெய் என, பெய் கணை நெருப்பால்
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது, கடற் குட்டம். 16

பாழி வல் நெடுங் கொடுஞ் சிலை வழங்கிய பகழி,
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி,
ஊழி வெங் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி,
ஆழி மால் வரைக்கு அப் புறத்து இருளையும் அவித்த. 17

மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கிச்
செரும, வானிடைக் கற்பக மரங்களும் தீய,
நிருமியா விட்ட நெடுங் கணை பாய்தலின், நெருப்போடு
உருமு வீழ்ந்தெனச் சென்றன, கடல்-துளி உம்பர். 18

கூடும் வெம் பொறிக் கொடுங் கனல் தொடர்ந்தெனக் கொளுந்த,
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன் உம்பர்
ஆடும் மங்கையர் கருங் குழல் விளர்த்தன – அளக்கர்க்
கோடு தீந்து எழ, கொழும் புகைப் பிழம்பு மீக் கொள்ள. 19

நிமிர்ந்த செஞ் சரம் நிறம்தொறும் படுதலும், நெய்த்தோர்
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல் உருவத்
துமிந்த துண்டமும் பல படத் துரந்தன, தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கிலகிலங்களும் சிதறி. 20

நீறு மீச்செல, நெருப்பு எழ, பொருப்பு எலாம் எரிய,
நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய,
ஆறு கீழ்ப் பட, அளறு பட்டு அழுந்திய அளக்கர்
சேறு தீய்ந்து எழ, காந்தின சேடன் தன் சிரங்கள். 21

மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின, மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என, பொரு கணை எரிய்
உய்த்த கூம்பொடு நெடுங் கலம் ஓடுவ கடுப்ப,
தைத்த அம்பொடும் திரிந்தன, தாலமீன் சாலம். 22

சிந்தி ஓடிய குருதி வெங் கனலொடு செறிய,
அந்தி வானகம் கடுத்தது, அவ் அளப்ப அரும் அளக்கர்;
பந்தி பந்திகளாய் நெடுங் கடுங் கணை படர,
வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன, சில மீன். 23

வைய நாயகன் வடிக் கணை குடித்திட, வற்றி,
ஐய நீர் உடைத்தாய், மருங்கு அருங் கனல் மண்ட,
கை கலந்து எரி கருங் கடல் கார் அகல் கடுப்ப,
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன, சில மீன். 24

குணிப்ப அருங் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப,
கணிப்ப அரும் புனல் கடையுறக் குடித்தலின், காந்தும்
மணிப் பருந் தடங் குப்பைகள் மறி கடல் வெந்து,
தணிப்ப அருந் தழல் சொரிந்தன போன்றன, தயங்கி. 25

எங்கும் வெள்ளிடை மடுத்தலின், இழுதுடை இன மீன்
சங்கமும், கறி கிழங்கு என, இடை இடை தழுவி,
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த்
பொங்கு நல் நெடும் புனல் அறப் பொரித்தன போன்ற. 26

அதிரும் வெங் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப,
வெதிரின் வல் நெடுங் கான் என வெந்தன, மீனம்;
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த
உதிரமும் கடல் திரைகளும் பொருவன, ஒரு பால். 27

அண்ணல் வெங் கணை அறுத்திட, தெறித்து எழுந்து அளக்கர்ப்
பண்ணை வெம் புனல் படப் பட, நெருப்பொடும் பற்றி,
மண்ணில் வேர் உறப் பற்றிய நெடு மரம், மற்றும்,
எண்ணெய் தோய்ந்தென எரிந்தன, கிரிக் குலம் எல்லாம். 28

தெய்வ நாயகன் தெரி கணை, ‘திசை முகத்து ஒருவன்
வைவு இது ஆம்’ என, பிழைப்பு இல மனத்தினும் கடுக,
வெய்ய வல் நெருப்பு இடை இடை பொறித்து எழ, வெறி நீர்ப்
பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்தது, புணரி. 29

செப்பின், மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்
தப்புமே? அது கண்டனம், உவரியில்; ‘தணியா
உப்பு வேலை’ என்று உலகு உறு பெரும் பழி நீங்கி,
அப்பு வேலையாய் நிறைந்தது; குறைந்ததோ, அளக்கர்? 30

தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்களும் தானே
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ? –
பாரை உண்பது படர் புனல்; அப் பெரும் பரவை
நீரை உண்பது நெருப்பு எனும் அப் பொருள் நிறுத்தான்! 31

மங்கலம் பொருந்திய தவத்து மா தவர்,
கங்குலும் பகலும் அக் கடலுள் வைகுவார்,
அங்கம் வெந்திலர், அவன் அடிகள் எண்ணலால்;
பொங்கு வெங் கனல் எனும் புனலில் போயினார். 32

தென் திசை, குட திசை, முதல திக்கு எலாம்
துன்றிய பெரும் புகைப் படலம் சுற்றலால்,
கன்றிய நிறத்தன கதிரவன் பரி
நின்றன் சென்றில் நெறியின் நீங்கின. 33

‘பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர்
அறிந்திருந்து, அறிந்திலர் அனையர் ஆம்’ என,
செறிந்த தம் பெடைகளைத் தேடி, தீக் கொள,
மறிந்தன, கரிந்தன – வானப் புள் எலாம். 34

கமை அறு கருங் கடல், கனலி கைபரந்து,
அமை வனம் ஒத்த போது, அறைய வேண்டுமோ?
சுமையுறு பெரும் புகைப் படலம் சுற்றலால்,
இமையவர் இமைத்தனர்; வியர்ப்பும் எய்தினார். 35

பூச் செலாதவள் நடை போல்கிலாமையால்,
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்,
தீச் செலா நெறி பிறிது இன்மையால், திசை
மீச் செலர் புனலவன் புகழின் வீந்தவால். 36

பம்புறு நெடுங் கடல் பறவை யாவையும்,
உம்பரின் செல்லலுற்று, உருகி வீழ்ந்தன்
அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல,
இம்பரின் உதிர்ந்தன, எரியும் மெய்யன. 37

பட்டன படப் பட, படாத புட் குலம்,
சுட்டு வந்து எரிக் குலப் படலம் சுற்றலால்,
இட்டுழி அறிகில, இரியல் போவன,
முட்டை என்று எடுத்தன, வெளுத்த முத்து எலாம். 38

‘வள்ளலை, பாவிகாள், “மனிதன்” என்று கொண்டு
எள்ளலுற்று அறைந்தனம்; எண் இலாம்’ என
வெள்ளி வெண் பற்களைக் கிழித்து, விண் உறத்
துள்ளலுற்று இரிந்தன – குரங்கின் சூழ்ந்தில. 39

தா நெடுந் தீமைகள் உடைய தன்மையார்,
மா நெடுங் கடலிடை மறைந்து வைகுவார்,
தூ நெடுங் குருதி வேல் அவுணர், துஞ்சினார்;
மீன் நெடுங் குலம் என மிதந்து, வீங்கினார். 40

தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய
பசும் பொனின் மானங்கள் உருகிப் பாய்ந்தன்
அசும்பு அற வறந்தன, வான ஆறு எலாம்;
விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே. 41

செறிவுறு செம்மைய, தீயை ஓம்புவ,
நெறியுறு செலவின, தவத்தின் நீண்டன,
உறு சினம் உறப் பல உருவு கொண்டன,
குறுமுனி எனக் கடல் குடித்த – கூர்ங் கணை. 42

மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால்,
பூதலம் காவொடும், எரிந்த் பொன் மதில்
வேதலும், இலங்கையும், ‘மீளப் போயின
தூதன் வந்தான்’ எனத் துணுக்கம் கொண்டதால். 43

அருக்கனில் ஒளி விடும் ஆடகக் கிரி,
உருக்கு என உருகின, உதிரம் தோய்ந்தன,
முருக்கு எனச் சிவந்தன் முரிய வெந்தன,
கரிக் குவை நிகர்த்தன, பவளக் காடு எலாம். 44

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்,
ஓர் இடத்து, உயிர் தரித்து, ஒதுங்ககிற்றில,
நீரிடைப் புகும்; அதின் நெருப்பு நன்று எனாப்
பாரிடைக் குதித்தன, பதைக்கும் மெய்யன. 45

சுருள் கடல் திரைகளைத் தொலைய உண்டு, அனல்
பருகிடப் புனல் இல பகழி, பாரிடம்
மருள் கொளப் படர்வன, நாகர் வைப்பையும்
இருள் கெடச் சென்றன, இரவி போல்வன. 46

கரும் புறக் கடல்களோடு உலகம் காய்ச்சிய
இரும்பு உறச் செல்வன, இழிவ, கீழுற
அரும் புறத்து அண்டமும் உருவி, அப் புறம்,
பெரும் புறக் கடலையும் தொடர்ந்து பின் செல்வ. 47

திடல் திறந்து உகு மணித் திரள்கள், சேண் நிலம்
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன்
கடல் திறந்து எங்கணும் வற்ற, அக் கடல்
குடல் திறந்தன எனக் கிடந்த, கோள் அரா. 48

ஆழியின் புனல் அற, மணிகள் அட்டிய
பேழையின் பொலிந்தன, பரவை; பேர்வு அறப்
பூழையின் பொரு கணை உருவப் புக்கன,
மூழையின் பொலிந்தன, முரலும் வெள் வளை. 49

நின்று நூறாயிரம் பகழி நீட்டலால்,
குன்று நூறாயிரம் கோடி ஆயின் –
சென்று தேய்வு உறுவரோ, புலவர் சீறினால்? –
ஒன்று நூறு ஆயின, உவரி முத்து எல்லாம். 50

சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர்
வீடு பெற்றன் இடை மிடைந்த வேணுவின்
காடு பற்றிய பெருங் கனலின் கை பரந்து
ஓடி உற்றது நெருப்பு, உவரி நீர் எலாம். 51

கால வான் கடுங் கணை சுற்றும் கவ்வலால்,
நீல வான் துகிலினை நீக்கி, பூ நிறக்
கோல வான் களி நெடுங் கூறை சுற்றினாள்
போல, மா நிலமகள் பொலிந்து தோன்றினாள். 52

கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக்
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு,
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால்,
மற்றொரு கடல் புக, வட வைத் தீ அரோ. 53

வாழியர் உலகினை வளைத்து, வான் உறச்
சூழ் இரும் பெருஞ் சுடர்ப் பிழம்பு தோன்றலால்,
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய
ஆழியின் பொலிந்தது, அவ் ஆழி, அன்ன நாள். 54

ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் –
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ –
மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப, மீதுபோய்,
வானவர் மலர் அயன் உலகின் வைகினார்? 55

இராமன் வருணன் மேல் சதுமுகன் படையை ஏவுதல்

‘இடுக்கு இனி எண்ணுவது இல்லை; ஈண்டு இனி
முடுக்குவென் வருணனை’ என்ன, மூண்டு எதிர்
தடுக்க அரும் வெகுளியான், சதுமுகன் படை
தொடுத்தனன்; அமரரும் துணுக்கம் எய்தினார். 56

பல இடத்தும் நிகழ்ந்த மாறுபாடுகள்

மழைக் குலம் கதறின் வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன்; உலகினில் அடைத்த, ஆறு எலாம்;
இழைத்தன நெடுந் திசை, யாதும் யாவரும்
பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால். 57

அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது; ஏழு
தெண் திரைக் கடலின் செய்கை செப்பி என்? தேவன் சென்னிப்
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள்; பார்ப்பான்
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே. 58

‘இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து, உலகு எலாம் ஈன்று, மீளக்
கரக்கும் நாயகனைத் தானும் உணர்ந்திலன்; சீற்றம் கண்டும்,
வரக் கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார்
அரக்கரே? அல்லர்’ என்னா, அறிஞரும் அலக்கண் உற்றார். 59

பூதங்கள் வருணனை வைதல்

‘உற்று ஒரு தனியே, தானே, தன்கணே, உலகம் எல்லாம்
பெற்றவன் முனியப் புக்கான்; நடு இனிப் பிழைப்பது எங்ஙன்?
குற்றம் ஒன்று இலாதோர்மேலும் கோள் வரக் குறுகும்’ என்னா,
மற்றைய பூதம் எல்லாம், வருணனை வைத மாதோ. 60

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/–5. இலங்கை கேள்விப் படலம்–

November 3, 2020

இராமன் வீடணனுக்கு உறையுள் அளித்தலும், சூரியன் மறைதலும்

வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழித்
தந்தனன் விடுத்த பின், இரவி, ‘தன் கதிர்
சிந்தின வெய்ய’ என்று எண்ணி, தீர்ந்தனன். 1

அந்தி மாலையின் தோற்றம்

சந்தி வந்தனைத் தொழில் முடித்து, தன்னுடைப்
புந்தி நொந்து, இராமனும் உயிர்ப்ப, பூங் கணை
சிந்தி வந்து இறுத்தனன், மதனன்; தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே. 2

மாத் தடந் திசைதொறும் வளைத்த வல் இருள்
கோத்தது, கருங் கடல் கொள்ளை கொண்டென்
நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர்
பூத்தென மீன்களால் பொலிந்தது, அண்டமே. 3

சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய
வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வேட்கையால்,
எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால்,
மல்லிகைக் கானமும், வானம் ஒத்ததே. 4

ஒன்றும் உட் கறுப்பினோடு, ஒளியின் வாள் உரீஇ,
‘தன் திருமுகத்தினால் என்னைத் தாழ்த்து அற
வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன்’
என்றது போல, வந்து எழுந்தது – இந்துவே. 5

‘கண்ணினை அப்புறம் கரந்து போகினும்,
பெண் நிறம் உண்டுஎனின், பிடிப்பல் ஈண்டு’ எனா,
உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான். 6

புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல்,
‘உடைக் கருந் தனி நிறம் ஒளித்துக் கொண்டவன்,
அடைக்க வந்தான் எனை, அரியின் தானையால்;
கிடைக்க வந்தான்’ எனக் கிளர்ந்தது ஒத்ததே. 7

மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்
தோல் உகுத்தாலென, அரவத் தொல் கடல்,
வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம்,
பால் உகுத்தாலென, நிலவு பாய்ந்ததால். 8

மன்றல்வாய் மல்லிகை எயிற்றின், வண்டு இனம்
கன்றிய நிறத்தது, நறவின் கண்ணது,
குன்றின்வாய் முழையின் நின்று உலாய கொட்பது,
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால். 9

கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்
உரத்தொடும், கரனொடும், உயர ஓங்கிய
மரத்தொடும், தொளைத்தவன் மார்பில், மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். 10

இராமன் சீதையை நினைந்து வருந்துதல்

உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்குமால்;
இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்;
கடலினை நோக்கும்; அக் கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால். 11

பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால்,
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்,
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ? 12

வீடணனோடு மேல் விளைவு பற்றி எண்ணமாறு சுக்கிரீவன் இராமனிடம் கூறுதல்

ஆயது ஓர் – அளவையின், அருக்கன் மைந்தன், ‘நீ
தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை;
மேயவன் தன்னொடும் எண்ணி, மேல் இனித்
தூயது நினைக்கிலை’ என்னச் சொல்லினான். 13

இராமன் கட்டளைப்படி, வீடணனை அழைத்துவருதல்

அவ்வழி, உணர்வு வந்து, அயர்வு நீங்கினான்,
‘செவ்வழி அறிஞனைக் கொணர்மின், சென்று’ என,
‘இவ்வழி வருதி’ என்று இயம்ப, எய்தினான் –
வௌ; வழி விலங்கி, நல் நெறியை மேவினான். 14

இராமன் இலங்கையின் அரண் முதலியன பற்றி வீடணனை வினவுதல்

‘ஆர்கலி இலங்கையின் அரணும், அவ் வழி
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும்,
தார் கெழு தானையின் அளவும், தன்மையும்,
நீர் கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்’ என்றான். 15

வீடணன் விடை பகர்தல்

எழுதலும், ‘இருத்தி’ என்று இராமன் ஏயினான்,
முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான்
பழுது அற வினவிய பொருளைப் பண்புற,
தொழுது உயர் கையினான், தெரியச் சொல்லினான்: 16

இலங்கையின் அரண்

‘நிலையுடை வட வரை குலைய நேர்ந்து, அதன்
தலை என விளங்கிய தமனியப் பெரு
மலையினை மும் முடி வாங்கி, ஓங்கு நீர்
அலை கடல் இட்டனன், அனுமன் தாதையே. 17

‘ஏழு நூறு யோசனை அகலம்; இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை; ஆழி மால் வரை,
வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால். 18

‘மருங்குடை வினையமும், பொறியின் மாட்சியும்,
இருங் கடி அரணமும், பிறவும், எண்ணினால்,
சுருங்கிடும்; என், பல சொல்லி? சுற்றிய
கருங் கடல் அகழது; நீரும் காண்டிரால். 19

வாயில் முதலியவற்றைக் காக்கும் காவலர்

‘வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்,
இடை இலர், எண் – இரு கோடி என்பரால்;
கடையுக முடிவினில் காலன் என்பது என்?
விடை வரு பாகனைப் பொருவும் மேன்மையோர். 20

‘மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு
ஏற்றமும் உள, அவர்க்கு இரண்டு கோடி மேல்;
கூற்றையும் கண் – பொறி குறுகக் காண்பரேல்,
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார். 21

‘தென் திசை வாயிலின் வைகும் தீயவர்
என்றவர் எண் – இரு கோடி என்பரால்;
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்?
வன் திறழ் யமனையும் அரசு மாற்றுவார். 22

‘கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர்
ஈட்டமும் எண் – இரு கோடி என்பரால்;
கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும்
தாள் துணை பிடித்து, அகன் தரையின் எற்றுவார். 23

‘விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்
எண் – இரு கோடியின் இரட்டி என்பரால்;
மண்ணிடை வானவர் வருவர் என்று, அவர்
கண் இலர், கரை இலர், கரந்து போயினார். 24

‘பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும்,
உறங்கலர், உண் பதம் உலவை ஆதலால்,
கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல்,
அறைந்துளது ஐ-இரு நூறு கோடியால். 25

‘இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ?
மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர்
முப்பது கோடியின் மும்மை முற்றினார். 26

‘சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார்,
அறப் பெரும் பகைஞர்கள், அளவு இல் ஆற்றலர்,
உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர்,
இறப்பு இலர், எண் – இரு நூறு கோடியே. 27

கோயில் வாயிலின் காவலர்

‘”விடம் அல, விழி” எனும், வெகுளிக் கண்ணினர்,
“கடன் அல, இமைத்தலும்” என்னும் காவலர்,
வட வரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர், எண் – எண் கோடியால். 28

‘அன்றியும், அவன் அகன் கோயில் ஆய் மணி
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்,
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்;
குன்றினும் வலியவர்; கோடி கோடியால். 29

படைகளின் பெருக்கம்

‘தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக்
கார்வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம்
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே. 30

‘பேயனேன், என், பல பிதற்றி? பேர்த்து அவன்
மா இரு ஞாலத்து வைத்த மாப் படை
தேயினும், நாள் எலாம் தேய்க்க வேண்டுவது,
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது – ஆழியாய்! 31

இராவணனது துணைவர்கள்

‘இலங்கையின் அரண் இது; படையின் எண் இது;
வலங் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய
அலங்கல் அம் தோளவன் துணைவர், அந்தம் இல்
வலங்களும் வரங்களும், தவத்தின் வாய்த்தவர். 32

‘உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான்,
சுகம் பல் போர் அலால் வேறு இலன், பொரு படைத் தொகையான்,
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான்,
அகம்பன் என்று உளன்; அலை கடல் பருகவும் அமைவான். 33

‘பொருப்பை மீதிடும் புரவியும், பூட்கையும், தேரும்,
உருப்ப விற் படை, ஒன்பது கோடியும் உடையான்,
செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து செறுத்த
நெருப்பை வென்றவன், நிகும்பன் என்று உளன், ஒரு நெடியோன். 34

‘தும்பி ஈட்டமும், இரதமும், புரவியும், தொடர்ந்த
அம் பொன் மாப் படை ஐ-இரு கோடி கொண்டு அமைந்தான்,
செம் பொன் நாட்டு உள சித்திரைச் சிறையிடை வைத்தான்,
கும்பன் என்று உளன்; ஊழி வெங் கதிரினும் கொடியான். 35

‘பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது
ஆய தேர்ப் படை ஐ – இரு கோடி கொண்டு அமைந்தான்,
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா
மாயையான் உளன், மகோதரன் என்று ஒரு மறவோன். 36

‘குன்றில் வாழ்பவர் கோடி நால் – ஐந்தினுக்கு இறைவன்,
“இன்று உளார் பினை நாளை இலார்” என எயிற்றால்
தின்றுளான், நெடும் பல் முறை தேவரைச் செருவின்
வென்றுளான், உளன், வேள்வியின் பகைஞன், ஓர் வெய்யோன். 37

‘”மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால்,
உண்ணும் நாள் ஒரு நாளின்” என்று ஒளிர் படைத் தானை
எண்ணின் நால் – இரு கோடியன், எரி அஞ்ச விழிக்கும்
கண்ணினான், உளன், சூரியன் பகை என்று ஒர் கழலான். 38

‘தேவரும், தக்க முனிவரும், திசைமுகன் முதலா
மூவரும், பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான்,
தா வரும் பக்கம் எண் – இரு கோடியின் தலைவன்,
மாபெரும்பக்கன் என்று உளன், குன்றினும் வலியான். 39

‘உச் சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன்,
நச் சிரப் படை நால் – இரு கோடிக்கு நாதன்,
முச் -சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரு மொய்ம்பன்,
வச்சிரத்துஎயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான். 40

‘அசஞ்சலப் படை ஐ – இரு கோடியன், அமரின்
வசம் செயாதவன், தான் அன்றிப் பிறர் இலா வலியான்,
இசைந்த வெஞ் சமத்து இயக்கரை வேரொடும், முன் நாள்
பிசைந்து மோந்தவன், பிசாசன் என்று உளன், ஒரு பித்தன். 41

‘சில்லி மாப் பெருந் தேரொடும், கரி, பரி, சிறந்த
வில்லின் மாப் படை ஏழ் – இரு கோடிக்கு வேந்தன்,
கல்லி மாப் படி கலக்குவான், கனல் எனக் காந்திச்
சொல்லும் மாற்றத்தன், துன்முகன் என்று அறம் துறந்தோன். 42

‘இலங்கை நாட்டினன், எறி கடல் தீவிடை உறையும்
அலங்கல் வேற் படை ஐ – இரு கோடிக்கும் அரசன்,
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான்,
விலங்கு நாட்டத்தன் என்று உளன், வெயில் உக விழிப்பான். 43

‘நாமம் நாட்டிய சவம் எனின், நாள் தொறும் ஒருவர்
ஈம நாட்டிடை இடாமல், தன் எயிற்றிடை இடுவான்,
தாமம் நாட்டிய கொடிப் படைப் பதுமத்தின் தலைவன்,
தூம நாட்டத்தன் என்று உளன், தேவரைத் துரந்தான். 44

‘போரின் மத்தனும், பொரு வயமத்தனும், புலவர்
நீரின் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் படையார்;
ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அமரில்
பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய்! 45

சேனை காவலன் பிரகத்தன்

‘இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் –
அன்னவன் பெருந் துணைவராய், அமர்த் தொழிற்கு அமைந்தார்?
சொன்ன சொன்னவர் படைத் துணை இரட்டியின் தொகையான்,
பின்னை எண்ணுவான், பிரகத்தன் என்று ஒரு பித்தன்; 46

‘சேனை காவலன்; இந்திரன் சிந்துரச் சென்னி
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல,
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய,
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான். 47

கும்பகருணனின் வலிமை

‘தம்பி, முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும்
கும்ப மாக் கிரிக் கோடு இரு கைகளால் கழற்றி,
செம் பொன் மால் வரை மதம் பட்ட தாம் எனத் திரிந்தான்,
கும்பகன்னன் என்று உளன், பண்டு தேவரைக் குமைந்தான். 48

இராவணனது புதல்வர்களின் ஆற்றல்

‘கோள் இரண்டையும் கொடுஞ் சிறை வைத்த அக் குமரன்
மூளும் வெஞ் சினத்து இந்திரசித்து என மொழிவான்;
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை,
தாளினும் உள, தோளினும் உள, இனம் தழும்பு. 49

‘தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான்,
முன்னவன் தரப் பெற்றது ஓர் முழு வலிச் சிலையான்,
அன்னவன் தனக்கு இளையவன், அப் பெயர் ஒழிந்தான்
பின் ஒர் இந்திரன் இலாமையின்; பேர் அதிகாயன். 50

‘தேவராந்தகன், நராந்தகன், திரிசிரா, என்னும்
மூவர் ஆம், – “தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின்,
போவாராம்; தகை அழிவராம்” எனத் தனிப் பொருவார்
ஆவாரம் – தகை இராவணற்கு அரும் பெறல் புதல்வர். 51

இராவணனது திறம் எடுத்துரைத்தல்

‘இனைய நன்மையர் வலி இஃது; இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி அளவு எலாம் அறைவென்;
தனையன், நான்முகன் தகை மகன் சிறுவற்கு; தவத்தால்,
முனைவர் கோன் வரம், முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான். 52

‘என் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும்
வெள்ளி அம் பெருங் கிரியினை வேரொடும் வாங்கி,
அள்ளி விண் தொட எடுத்தனன், உலகு எலாம் அனுங்க. 53

‘ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை
ஊன்று கோடு இற, திரள் புயத்து அழுத்திய ஒண்மை
தோன்றும் என்னவே, துணுக்கமுற்று இரிவர், அத் தொகுதி
மூன்று கோடியின்மேல் ஒரு முப்பத்து மூவர். 54

‘குலங்களோடும் தம் குல மணி முடியொடும் குறைய,
அலங்கல் வாள் கொடு காலகேயரைக் கொன்ற அதன்பின்,
“இலங்கை வேந்தன்” என்று உரைத்தலும், இடி உண்ட அரவின்
கலங்குமால் இனம், தானவர் தேவியர் கருப்பம். 55

‘குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன்,
திரண்ட மாடும், தன் திருவொடு நிதியமும், இழந்து,-
புரண்டு, மான் திரள் புலி கண்டது ஆம் என, போனான்-
இரண்டு மானமும், இலங்கை மா நகரமும் இழந்து. 56

‘”புண்ணும் செய்தது முதுகு” என, புறங்கொடுத்து ஓடி,
“உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம் தன் உயிர்மேல்
நண்ணும் செய்கையது” எனக் கொடு, நாள்தொறும், தன் நாள்
எண்ணும் செய்கையன், அந்தகன், தன் பதம் இழந்தான். 57

‘இருள் நன்கு ஆசு அற, எழு கதிரவன் நிற்க் என்றும்
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை, பண்டு அமரில்,
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு, பயத்தால்
வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து மறைந்து. 58

‘என்று, உலப்புறச் சொல்லுகேன், இராவணன் என்னும்
குன்று உலப்பினும் உலப்பு இலாத் தோளினான் கொற்றம்?
இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சில நாள்
சென்று உலப்பினும், நினக்கு அன்றி, பிறர்க்கு என்றும் தீரான். 59

அனுமன் இலங்கையில் புரிந்த வீரச் செயல்கள்

‘ஈடு பட்டவர் எண்ணிலர், தோரணத்து, எழுவால்;
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால்;
சூடு பட்டது, தொல் நகர்; அடு புலி துர்ந்த
ஆடு பட்டது பட்டனர், அனுமனால் அரக்கர். 60

‘எம் குலத்தவர், எண்பதினாயிரர், இறைவர்,
கிங்கரப் பெயர்க் கிரி அன்ன தோற்றத்தர், கிளர்ந்தார்;
வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி,
சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார். 61

‘வெம்பு மாக் கடற் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான்,
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி,
உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று உற்றான்,
சம்புமாலியும், வில்லினால் சுருக்குண்டு – தலைவ! 62

‘சேனைக் காவலர் ஓர் ஐவர் உளர், பண்டு தேவர்
வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர்,
தானைக் கார்க் கருங் கடலொடும், தமரொடும், தாமும்,
யானைக் கால் பட்ட செல் என, ஒல்லையின் அவிந்தார். 63

‘காய்த்த அக் கணத்து, அரக்கர்தம் உடல் உகு கறைத் தோல்,
நீத்த எக்கரின், நிறைந்துள கருங் கடல்; நெருப்பின்
வாய்த்த அக்கனை, வரி சிலை மலையொடும் வாங்கி,
தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில, இலங்கையின் தெருவில். 64

‘சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச்
சின்னம் ஆனவர் கணக்கு இலர்; யாவரே ஆதரிப்பார்?
இன்னம் ஆர் உளர், வீரர்? மற்று, இவன் சுட எரிந்த
அன்ன மா நகர் அவிந்தது, அக் குருதியால் அன்று. 65

இலங்கை அனலால் அழிந்ததும், அதை அயன் மீண்டும் படைத்ததும்

‘விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ-
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த
கலங்களோடும், அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள்
இலங்கை வேந்தனும், ஏழு நாள் விசும்பிடை இருந்தான்! 66

‘நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன்;
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்;
இது மற்று அவ்வழி எய்தியது; இராவணன் விரைவினின் ஏவ,
பதுமத்து அண்ணலே பண்டுபோல் அந் நகர் படைத்தான். 67

வீடணன் தான் போந்த காரணத்தை உரைத்தல்

‘காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின்
வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று; அவ் இலங்கை
தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப்
போந்தவா கண்டும், நான் இங்குப் புகுந்தது – புகழோய்!’ 68

இராமன் அனுமனைப் புகழ்ந்து உரைத்தல்

கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான்,
வாள் கொள் நோக்கியை, பாக்கியம் பழுத்தன்ன மயிலை,
நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்த
தோள்கள் வீங்கி, தன் தூதனைப் பார்த்து, இவை சொன்னான்: 69

‘கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்;
ஊட்டினாய், எரி ஊர் முற்றும்; இனி, அங்கு ஒன்று உண்டோ?
கேட்ட ஆற்றினால், கிளிமொழிச் சீதையைக் கிடைத்தும்
மீட்டிலாதது, என் வில் தொழில் காட்டவோ? – வீர! 70

‘நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்;
பின் செய்தோம் சில் அவை இனிப் பீடு இன்று பெறுமோ? –
பொன் செய் தோளினாய்! – போர்ப் பெரும் படையொடும் புக்கோம்;
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம்? 71

‘என்னது ஆக்கிய வலியொடு அவ் இராவணன் வலியும்
உன்னது ஆக்கினை; பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய்!
முன்னது ஆக்கிய மூஉலகு ஆக்கிய முதலோன்
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென்; பெற்றாய்.’ 72

என்று கூறலும், எழுந்து, இரு நிலன் உற இறைஞ்சி,
ஒன்றும் பேசலன் நாணினன், வணங்கிய உரவோன்;
நின்ற வானரத் தலைவரும் அரசும், அந் நெடியோன்
வென்றி கேட்டலும், வீடு பெற்றார் என வியந்தார். 73

மிகைப் பாடல்கள்

திரு மறு மார்பனை இறைஞ்ச, செல்வனும்,
அருள் சுரந்து, அரக்கனை அருகு இருத்தியே,
‘அரு வரை அனைய தோள் அறிஞ! நீ புகல்
பொருள் உளது எமக்கு; அது புகலக் கேட்டியால். 14-1

மருக் கிளர் தாமரை வாச நாள்மலர்
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்,
திருக் கிளர் தாமரை பணிந்த செம்மலை,
‘இருக்க, ஈண்டு எழுந்து’ என இருந்த காலையில். 14-2

‘வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு,
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனைத்
தலம் கொடு சமைத்து, நல் நகரும் தந்து, இதற்கு
“இலங்கை” என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள். 18-1

‘ஆய இந் நகரிடை, அரக்கர் ஆகிய
தீயவர் தொகையினைத் தெரிக்கின், எண் இல் நாள்
போயிடத் துணிந்து, அவை புந்தி ஓரினும்
ஓயுமோ? அறிந்தவை உரைப்பென், ஆழியாய்! 19-1

‘பேயர்கள் என்ன யான் பிதற்ற, பேர்கிலா
மா இரும் புற மதில் வகுத்த மாப் படை
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள்
ஆயிர வெள்ளமே அறிந்தது, ஆழியாய்! 28-1

‘ஈங்கு இவை அன்றியும், ஏழு தீவினும்,
ஓங்கு பாதலத்தினும், உயர்ந்த வானத்தும்,
தாங்கிய சக்கர வாளச் சார்பினும்,
ஆங்கு அவன் படைதனக்கு அளவை இல்லையால். 30-1

‘ஆயவர் அளவிலர், அறத்தை நுங்கிய
தீயவர், தேவரைச் செறுத்து, தேவர் ஊர்
காய் எரி படுத்திய கடுமையார்களில்,
நாயக! அறிந்தமை நவிலக் கேட்டியால். 32-1

‘இன்னும் மைந்தர்கள் இயம்பின், மூவாயிர கோடி
என்ன உண்டு; அவர் இரதமும், கரிகளும், பரியும்,
துன்னும் ஆள் வகைத் தொகுதியும், செறிந்திட, மேல்நாள்
பன்னகாதிபன் உலகினைப் பரிபவப் படுத்தோர். 51-1

கோ…ன் குடைப்பரா கடு களிற்றை மீக்கொள்ளா
வாடலிந்திர …….ளடைவர வமரிற்
கோடி வெங்கரி கோள் அரி கண்டெனக் குலையா
ஓடினான் தரு முதலியர் பிற விழுந்துருகி. 56-1

‘பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும்
திண் திறல் பெறும் வானகத் தேர் ஒன்றின் இவர்ந்தே,
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து, அரசுரிமை
கொண்டு மீளுவான் ஒரு கணத்து இலங்கையில், கொடியோன். 58-1

‘சுற்று தன் கிளைப் பரப்பொடும் தொலைவு இன்றி வாழ்தற்கு
உற்ற மூன்றரைக் கோடியின் உகம் அவன் தவத்தின்
பெற்றனன், சிவன் கொடுத்திடப் பெரு வரம்; பெரியோய்!
இற்று அவன் செயல்’ என்று கொண்டு இனையன உரைப்பான்: 58-2

‘ஈது நிற்க, மற்று எந்தை! நீ ஏவிய தூதன்
மோது வாரிதி கடந்து, ஒரு கணத்தினில் முடுகி,
ஆதி நாயகிதன்னைக் கண்டு, அணி நகர் அரணும்,
காது வெஞ் சினத்து அரக்கர் தம் வலிமையும், கடந்தான். 59-1

மழுவும் ஈட்டியும் தோட்டியும் முசலமும் மலையும்
தழுவு மாப் படை முடிவு இலாது அதனொடும் தாமும்,
எழுவர் சூட்சியின் தலைவர்கள், கிளர் ஒளி இரவிக்
குழுவின் வாய்ப்படு புழு என, வழுவுறக் குறைந்தார். 63-1

‘இலங்கை வெந்தது; வேறு இனி இயம்புவது எவனோ?
அலங்கலோடு செஞ் சாந்தமும், அன்று தான் அணிந்த
கலன்களோடும் அச் சாத்திய துகிலொடும், கதிர் வாள்
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் இருந்தான். 65-1

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/38-திருமுடி சூட்டு படலம்–

November 2, 2020

இராமன் தம்பியரோடு நந்தியம் பதியை அடைந்து, சடை நீக்கி, நீராடி கோலம்கொள்ளுதல்

நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். 1

தம்பிமாருடன் இராமன் அயோத்தி புகுதல்

ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால் நிறக் கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் கொள்ளப் போனான் 2

தேவரும் முனிவரும் மலர் மழை பொழிதல்

தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்,
பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே 3

சேனைகள் முதலியவற்றின் மகிழ்ச்சி

கோடையில் வறந்த மேகக் குலம் எனப் பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணை முகப் பரும யானை,
காடு உறை அண்ணல் எய்த, கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின, உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததேபோல். 4

துருவத் தார்ப் புரவி எல்லாம், மூங்கையர் சொல் பெற்றென்ன,
அரவப் போர் மேகம் என்ன, ஆலித்த; மரங்கள் ஆன்ற
பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகையின் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிறப் பசலை பூத்த. 5

தாய் மார் முதலியோரை வணங்கி, இராமன் அரண்மனையை அடைதல்

ஆயது ஓர் அளவில், செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் களி நடம் செய்யக் கண்டான். 6

நகர மாந்தரின் மகிழ்ச்சிப் பெருக்கு

‘வாங்குதும் துகில்கள்’ என்னும் மனம் இலர், கரத்தின் பல்கால்
தாங்கினர் என்ற போதும், மைந்தரும் தையலாரும்,
வீங்கிய உவகை மேனி சிறக்கவும், மேன் மேல் துள்ளி
ஓங்கவும், களிப்பால் சோர்ந்தும், உடை இலாதாரை ஒத்தார். 7

வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற, வெற்றிப்
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்துச் சுற்ற,
வாசம், மென் கலவைச் சாந்து, என்று இனையன, மயக்கம்தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார், பூசலார் புகுந்துளோரும். 8

இறைப் பெருஞ் செல்வம் நீத்த ஏழ்-இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக் கொழுந்து அனைய நெற்றிப் பெய் வளை மகளிர், மெய்யை
மறைத்தனர் பூணின், மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற 9

விண் உறைவோர்தம் தெய்வ வெறியோடும், வேறுளோர்தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால்,
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும்,
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே 10

இராமன் திருமுடி சூடும் நாள் குறித்து எங்கும் செய்தி அனுப்புதல்

இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற
மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து விட்டார்-
சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி. 11

மூவுலகத்தாரும் அயோத்தியில் வந்து குழுமுதல்

அடுக்கிய உலகம் மூன்றும், ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒரு பேரும் இன்றி, அயோத்தி வந்து இறுத்தார் என்றால்,
தொடுக்குறு கவியால் மற்றைத் துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான் முகத்து ஒருவற்கு உண்டோ ? 12

பிரமன் ஏவலால், மயன் முடி சூட்டு மண்டபம் அமைத்தல்

நான்முகத்து ஒருவன் ஏவ, நயன் அறி மயன் என்று ஓதும்
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன், வணங்கு நெஞ்சன்,
கோல் முகத்து அளந்து, குற்றம் செற்று, உலகு எல்லாம் கொள்ளும்
மான் முகத்து ஒருவன், நல் நாள் மண்டபம் வயங்கக் கண்டான் 13

அனுமன் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வருதல்

‘சூழ் கடல் நான்கின் தோயம், எழு வகை ஆகச் சொன்ன
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று’ என்ன, ‘ஆம்’ என்று,
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி, அன்றே
ஏழ் திசை நீரும் தந்தான், இடர் கெட மருந்து தந்தான். 14

இராமன் நீராடுதல்

தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய,
ஐயம் இல் சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும்
நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக் காட்ட,
எய்தின இயன்ற பல் வேறு, இந்திரற்கு இயன்ற என்ன, 15

வசிட்டன் இராமனுக்குத் திருமுடி புனைதல்

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி 16

வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின், நல்ல ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின களிப்ப, மோலி சூடினான்-கடலின் வந்த
தெள்ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும் தோளான். 17

மூவுலகத்தாரும் மகிழ்தல்

சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர்த் தெய்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும், மேன்மை
ஒத்த மூஉலகத் தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்,
தம் தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது, அத் தாம மோலி. 18

பல் நெடுங் காலம் நோற்று, தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற
பின் நெடுங் கணவன் தன்னைப் பெற்று, இடைப் பிரிந்து, முற்றும்
தன் நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க் கை நீட்டி,
நல் நெடும் பூமி என்னும் நங்கை, தன் கொங்கை ஆர. 19

பரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுதல்

விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி,
வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும்
கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ 20

உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
‘எம் பெருமான்!’ என்று ஏத்தி, இறைஞ்சி நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும், தரணி காத்தான்-
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல். 21

மிகைப் பாடல்கள்

நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி,
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ,
சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள் பூண்டு,
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணித் தேரின் ஆனான் 1-1

வீடணக் குரிசில், மற்றை வெங்க் கதிர்ச் சிறுவன், வெற்றிக்
கோடு அணை குன்றம் ஏறி, கொண்டல் தேர் மருங்கு செல்ல,
தோடு அணை மவுலிச் செங்கண் வாலிசேய் தூசி செல்ல,
சேடனைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான். 2-1

அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி, மானுடச் செவ்வி வீரம்
பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 2-2

எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர்
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப் பகட்டினர், பைம் பொன் தேரர்,
வட்ட வெண்குடையர், வீசு சாமரை மருங்கர், வானைத்
தொட்ட வெஞ் சோதி மோலிச் சென்னியர், தொழுது சூழ்ந்தார். 2-3

எழு வகை முனிவரோடும், எண் திசைத் திசைகாப்பாளர்
குழுவினர், திசைகள்தோறும் குழாம் கொண்டு களித்துக் கூடி,
தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில் துன்னி,
வழுவல் இல் மலர்கள் சிந்தி, மானிடம் சுருங்கச் சார்ந்தார். 2-4

வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து,
ஊனம் இல் பிடியும் ஒண் தார்ப் புரவியும் பிறவும் ஊர்ந்து,
மீன் இனம் மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற,
பூ நிற விமானம் தன்மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள். 2-5

ஆயது நிகழ, செங் கண் இராமனும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக் கண்டான். 3-1

உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன் தானே
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும்,
தம்பியர் தாமும், மற்றும் தாபதர் சங்கத்தோடும்,
அம் புவிதன்னில் மேலாம் அயோத்தியில், அமர்ந்தான் அம்மா. 3-2

இருபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஏற்ற
திரு ஒத்த சிறப்பர் ஆகி, மானிடச் செவ்வி வீரர்
உருவத் தோள் ஒளிரும் பூணர், உச்சி வெண் குடையர், பச்சை
மரு ஒத்த அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 6-1

ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை அருளின் நோக்கி,
‘தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும், தொல்லை
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும், பிறர்க்கும், நம் தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி’ என்றான். 10-1

என்றலும், இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் யாவரோடும்
சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில் தெய்வப்
பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் மேருக்
குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில் புக்கான். 10-2

வயிரம், மாணிக்கம், நீலம், மரகதம், முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற செழுஞ் சுடர்க் கற்றை சுற்ற,
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட,
மயர்வு அறு மனத்து வீரர், இமைப்பிலர், மயங்கி நின்றார். 10-3

விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர்; பரதன் தன்னை வினவினர் அவர்க்கு, ‘காதல்
புண்டரீகத்துள் வைகும் புராதன, கன்னல் தோளான்,
கொண்ட நல் தவம்தன்னாலே உவந்து, முன் கொடுத்தது’ என்றான் 10-4

‘பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மை
இங்கு இது மலராள் வைகும் மாடம்’ என்று இசைத்த போதில்,
‘எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ’ என்று கூறி,
செங் கைகள் கூப்பி, வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார். 10-5

இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி,
பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி, ‘தூயோய்!
கருந்தடம் கண்ணினாற்குக் காப்பு நாண் அணியும் நல் நாள்
தெரிந்திடாது இருத்தல் என்னோ?’ என்றலும், அண்ணல் செப்பும்: 10-6

‘ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து’ என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், காலின் தோன்றல். 10-7

‘கோமுனியோடு மற்றை மறையவர்க் கொணர்க!’ என்னா
ஏவினன்; தேர் வலான் சென்று இசைத்தலும், உலகம் ஈன்ற
பூமகன் தந்த அந்தப் புனித மா தவன் வந்து எய்த,
யாவரும் எழுந்து போற்றி, இணை அடி தொழுது நின்றார். 10-8

அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, ‘பெரு நிலக் கிழத்தியோடும்
உரிய மா மலராளோடும் உவந்து, இனிது ஊழிக் காலம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை’ என்றான். 10-9

கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம்
அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து மொய்த்தார்,
குயில் மொழிச் சீதை கொண்கன் நிலமகள் தன்னைக் கொள்ளும்
இயல்புடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த. 12-1

வேறு இனி உரைப்பது என்னோ? வியன் தருக் குலங்கள் ஆதி
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண,
தேரு தம் உருவு நீத்து, மானிட உருவில் சேர்ந்து, ஆங்கு
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே. 12-2

அவ் வயின் முனிவனோடும் பரதனும், அரியின் சேயும்,
செவ்வியின் நிருதர்கோனும், சாம்பனும், வாலி சேயும்,
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று, ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது சொன்னார். 12-3

‘நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல்நாள்;
காளை! நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக!’ என்று,
வேளையே பொடியதாக விழிக்கும்நீள் நுதலின் வெண் பூம்
பூளையே சூடுவானைப் பொருவும் மா முனிவன் போனான். 12-4

தேவர் கம்மியன் தான் செய்த செழு மணி மாட கோடி
யாவரும் புகுந்து மொய்த்தார்; எழுந்த மங்கலத்தின் ஓசை
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி கொண்டார். 13-1

எரி மணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல் வரிசைக்கு ஆன்ற
விரி மதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும் ஏந்தி,
புரை மணிக் காளம் ஆர்ப்ப, பல்லியம் துவைப்ப, பொங்கும்
சரயுவின் புனலும் தந்தார், சங்கு இனம் முரல மன்னோ. 14-1

மாணிக்கப் பலகை தைத்து, வயிரத் திண் கால்கள் சேர்த்தி,
ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம்,
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ 14-2

அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர், ஆலி நாட்டுச்
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர்,
‘உய்ந்தனம் அடியம்’ என்னும் உவகையின் உவரி நாண
வந்தனர், இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள். 14-3

மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச்
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பூ மழை பொழிய, விண்ணோர்,
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம் செய்தார். 14-4

மா தவர், மறைவலாளர், மந்திரக் கிழவர், மற்றும்
மூதறிவாளர், உள்ள சான்றவர் முதல் நீராட்ட,
சோதியான் மகனும், மற்றைத் துணைவரும், அனுமன் தானும்,
தீது இலா இலங்கை வேந்தும், பின் அபிடேகம் செய்தார். 14-5

‘அம் கண் வான், உலகம், தாய அடி, மலர்த் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான், கண்ணுதல் ஒருவன்; இந் நாள்
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர்
எங்கண் ஏற்று அன்னோன் வாழும்?’ என்றனர், புலவர் எல்லாம் 14-6

மரகதச் சயிலம் செந் தாமரை மலர்க் காடு பூத்து,
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து, செய்ய
இரு குழை தொடரும் வேற் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,
பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார். 14-7

‘வான் உறு முகுர்த்தம் வந்தது’ என்று மா மறைகள் நான்கும்
தான் உருக் கொண்டு போற்ற, சலம் தவிர்ந்து அமரர் ஏத்தி,
தேன் உறு மலர்கள் சிந்தி, திசைமுகம் பரவ, தெய்வ
வான் உறை மகளிர் ஆட, மா தவர் மகிழ்ந்து வாழ்த்த. 15-1

இப்படித் தழுவி, மாதர் இருவரும், இரண்டு பாலும்,
செப்புறல் அரிய இன்பச் செல்வத்துள் செலுத்தும் நாளில்,
கப்புடைச் சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன், காதல்
வைப்புடை வளாகம் தன்னில், மன்னுயிர் வாழ்த்த, வந்தான். 19-1

மறையவர் வாழி! வேத மனுநெறி வாழி! நன்னூல்
முறை செயும் அரசர், திங்கள் மும் மழை, வாழி! மெய்ம்மை
இறையவன் இராமன் வாழி! இக் கதை கேட்போர் வாழி!
அறை புகழ்ச் சடையன் வாழி! அரும் புகழ் அனுமன் வாழி! 20-1

[இது முதற்கொண்டு ‘விடை கொடுத்த படலம்’ என்று சில பிரதிகளில் காண்கிறது]

பூமகட்கு அணி அது என்னப் பொலி பசும் பூரி சேர்த்தி,
மா மணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகைமீதே, கொண்டலும் மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான். 20-2

விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க,
எரி கதிர்க் கடவுள்தன்னை இனமணி மகுடம் ஏய்ப்ப,
கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர்க் காடு பூத்து, ஓர்
அரியணைப் பொலிந்தது என்ன, இருந்தனன், அயோத்தி வேந்தன் 20-3

மரகதச் சயிலமீது வாள் நிலாப் பாய்வது என்ன,
இரு குழை இடறும் வேற் கண், இளமுலை, இழை நலார்தம்
கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற,
உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த, 20-4

உலகம் ஈர்-ஏழும் தன்ன ஒளி நிலாப் பரப்ப, வானில்
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து, எளிதின் தேய,
கலக வாள் நிருதர் கோனைக் கட்டழித்திட்ட கீர்த்தி
இலகி மேல் நிவந்தது என்ன, எழு தனிக்குடை நின்று ஏய. 20-5

மங்கல கீதம் பாட, மறையவர் ஆசி கூற,
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை துவைப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பொரு கயல் கருங் கண், செவ் வாய்,
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில மாதோ. 20-6

திரை கடல் கதிரும் நாணச் செழு மணி மகுட கோடி
கரை தெரிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப, நாளும்
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து, மன்னர்
பரசியே வணங்கும் தோறும் பதயுகம் சேப்ப மன்னோ. 20-7

மந்திரக் கிழவர் சுற்ற, மறையவர் வழுத்தி ஏத்த,
தந்திரத் தலைவர் போற்ற, தம்பியர் மருங்கு சூழ,
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தெரிவையர் பலாண்டு கூற,
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்தகாலை. 20-8

கெவனொடு கெவாக்கன், தூம்பன், கேசரி, கெந்தமாதன்,
தவன் உறு சரபன், சாம்பன், சுடேணன், சம்பாதி, நீலன்,
நவை அறு பனசன், தாரன், கெசன், நளன், சமீரன், நண்பாம்
இவன் அரிலோமன், மின்போல் எயிற்றினன், இடபன் என்பான் 20-9

விரதன், வீமாக்கன், வேகதரிசியே, விந்தன், வெற்றிக்
கரமுடைச் சதுக்கன், சோதிமுகன், தெதிமுகன், கயந்தன்,
அரன், விறல் கொடிய கோபன், இடும்பனோடு, அரம்பன், ஆண்மை
தெரிவரு வசந்தன், கொற்றத் துன்முகன், தீர்க்க பாதன், 20-10

மயிந்தன், மா துமிந்தன், கும்பன் அங்கதன், அனுமன், மாறு இல்
சயம் தரு குமுதக் கண்ணன், சதவலி, குமுதன், தண் தார்
நயம் தெரி ததிமுகன், கோசமுகன், முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்தி ஏழு கோடியாம் வீரரோடும். 20-11

ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந் தார் வீடணக் குரிசில், செய்ய
மான வாள் அரக்கரோடு வந்து, அடி வணங்கிச் சூழ்ந்தான். 20-12

வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் புலியின் வெவ் வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன்,
கல் திரள் வயிரத் திண் தோள் கடுந் திறல் மடங்கல் அன்னான்,
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், தொழுது சூழ்ந்தான் 20-13

வள்ளலும் அவர்கள் தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல்
உள்ளுறப் பிணித்த செய்கை ஒளி முகக் கமலம் காட்டி,
அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
‘எள்ளல் இலாத மொய்ம்பீர்! ஈண்டு இனிது இருத்திர்’ என்றான் 20-14

நல் நெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர், மற்றைச்
சொல் நெறி அறிவு நீரார், தோம் அறு புலமைச் செல்வர்,
பல் நெறிதோறும் தோன்றும் பருணிதர், பண்பின் கேளிர்,
மன்னவர்க்கு அரசன் பாங்கர், மரபினால் சுற்றமன்னோ. 20-15

தேம் படு படப்பை மூதூர்த் திருவொடும் அயோத்தி சேர்ந்த
பாம்பு-அணை அமலன் தன்னைப் பழிச்சொடும் வணக்கம் பேணி,
வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்
ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின், இரு மதி இறந்தது அன்றே 20-16

நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங் கடற் கிடை நின்று ஏத்த,
பொருக்கென அயோத்தி எய்தி, மற்று அவர் பொருமல் தீர,
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரி வில் கொண்ட
திருக் கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம். 20-17

மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும், பொன்னும்,
நிறைவளம் பெருகு பூவும், சுரபியும், நிறைந்து, மேல் மேல்,
‘குறை இது’ என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அறக் கொடுத்து, பின்னர்,
அறை கழல் அரசர் தம்மை ‘வருக’ என அருள, வந்தார். 20-18

[ஒரு சில பிரதிகளில் இதுமுதல் விடை கொடுத்த படலம் தொடங்குகிறது]

ஐயனும் அவர்கள் தம்மை அகம் மகிழ்ந்து, அருளின் நோக்கி,
வையகம், சிவிகை, தொங்கல், மா மணி மகுடம், பொன் பூண்,
கொய் உளைப் புரவி, திண் தேர், குஞ்சரம், ஆடை இன்ன
மெய் உறக் கொடுத்த பின்னர், கொடுத்தனன் விடையும் மன்னோ 20-19

சம்பரன் தன்னை வென்ற தயரதன் ஈந்த காலத்து
உம்பர் தம் பெருமான் ஈந்த ஒளி மணிக் கடகத்தோடும்,
கொம்புடை மலையும், தேரும், குரகதக் குழுவும், தூசும்,-
அம்பரம் தன்னை நீத்தான்-அலரி காதலனுக்கு ஈந்தான். 20-20

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல்,
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்தனை ஈந்தான்;
அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார்? 20-21

பின்னரும், அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும்
மன்னும் நுண் தூசும், மாவும் மதமலைக் அரசும்; ஈயா
‘உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு இலாதாய்!
மன்னுக, கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி’ என்றான். 20-22

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான். 20-23

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை
முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி,
பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும்,
வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான். 20-24

பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க,
பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு
ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே. 20-25

சந்திரற்கு உவமை சான்ற, தாரகைக் குழுவை வென்ற,
இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தொடு
கந்து அடு களிறு, வாசி, தூசு, அணிகலன்கள், மற்றும்
உந்தினன், எண்கின் வேந்தற்கு-உலகம் முந்து உதவினானே. 20-26

நவ மணிக் காழும், முத்தும், மாலையும், நலம் கொள் தூசும்,
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும், ஒண் தார்க்
கவன வெப் பரியும், வேகக் கதமலைக்கு அரசும், காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு ஈந்தான். 20-27

பத வலிச் சதங்கைப் பைந் தார்ப் பாய் பரி, பணைத் திண் கோட்டு
மதவலிச் சைலம், பொன் பூண், மா மணிக்கோவை, மற்றும்
உதவலின் தகைவ அன்றி, இல்லன உள்ள எல்லாம்
சதவலிதனக்குத் தந்தான்-சதுமுகத் தவனைத் தந்தான். 20-28

‘பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை; இதனுக்கு ஈதுக்
கோ, சரி இலது’ என்று எண்ணும் ஒளி மணிப் பூணும், தூசும்,
மூசு அரிக்கு உவமை மும்மை மும் மதக் களிறும், மாவும்,
கேசரிதனக்குத் தந்தான்-கிளர் மணி முழவுத் தோளான். 20-29

வளன் அணி கலனும் தூசும், மா மதக் களிரும், மாவும்,
நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான்-
களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே. 20-30

அவ் வகை அறு பத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எவ் வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறி,
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன், கடைக் கண் நோக்கம் 20-31

மின்னை ஏர் மௌலிச் செங் கண் வீடணப் புலவர் கோமான்-
தன்னையே இனிது நோக்கி, ‘சராசரம் சூழ்ந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர், உளரேல்; ஐய!
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று’ என்றான் 20-32

என்று உரைத்து, அமரர் ஈந்த எரி மணிக் கடகத்தொடு
வன் திறல் களிறும், தேரும், வாசியும், மணிப் பொன் பூணும்,
பொன் திணி தூசும், வாசக் கலவையும், புது மென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான்-நாகணைத் துயிலைத் தீர்ந்தான் 20-33

சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி,
‘மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு?’ என்னா,
கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. 20-34

அனுமனை, வாவி சேயை, சாம்பனை, அருக்கன் தந்த
கனை கழல் காலினானை, கருணை அம் கடலும் நோக்கி,
‘நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர் வைப்பும்
எனது; அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும்’ என்றான் 20-35

இலங்கை வேந்தற்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி,
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்தருளலோடும்,
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நலன் உறும் நெஞ்சர், பின்னர்க்
கலங்கலர், ‘ஏவல் செய்தல் கடன்’ எனக் கருதிச் சூழ்ந்தார். 20-36

பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு ஆர்
விரத மா தவனை, தாயர் மூவரை, மிதிலைப் பொன்னை,
வரதனை, வலம்கொண்டு ஏத்தி, வணங்கினர் விடையும் கொண்டே,
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார். 20-37

குகனைத் தன் பதியின் உய்த்து, குன்றினை வலம் செய் தேரோன்
மகனைத் தன் புரத்தில் விட்டு, வாள் எயிற்று அரக்கர் சூழ,
ககனத்தின் மிசையே ஏகி, கனை கடல் இலங்கை புக்கான்,-
அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், சென்று, அன்றே 20-38

ஐயனும் அவரை நீக்கி, அருள் செறி துணைவரோடும்
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல,
செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும்
நையுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் தீர்த்தே. 20-39

வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்ந்திடுக; நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க;
தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க, எங்கும். 21-1

எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல்,
சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை செய்யும்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி. 21-2

வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி! 21-3

இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. 21-4

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/37-மீட்சிப் படலம்–

November 2, 2020

வீடணன் புட்பக விமானம் கொணர்தல்

‘ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் அயின்,
மாண்டதாம் இனி என் குலம், பரதனே மாயின்;
ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ ?’ என, ‘இன்றே
தூண்டு மானம் உண்டு’ என்று, அடல் வீடணன் தொழுதான். 1

‘இயக்கர் வேந்தனுக்கு அரு மறைக் கிழவன் அன்று ஈந்த,
துயக்கு இலாதவர் மனம் எனத் தூயது, சுரர்கள்,
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு’ என்றே
மயக்கு இலான் சொல, ‘கொணருதி வல்லையின்’ என்றான். 2

அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து, ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க,
கண்டை ஆயிர கோடிகள் மழை எனக் கலிப்ப,
கொண்டு அணைந்தனன் நொடியினின், அரக்கர் தம் கோமான், 3

இராமன் புட்பக விமானத்தில் ஏற, தேவர்கள் மலர்மாரி பொழிந்து வாழ்த்துதல்

‘அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு, ‘இனி நம்
வினையம் முற்றியது’ என்று கொண்டு ஏறினன்; விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள் புகன்றே. 4

சீதையும் இலக்குவனும் விமானத்தில் ஏறுதல்

வணங்கு நுண் இடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, ‘ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்குதான் என இருத்தி’ என்று, ஐயன்மாட்டு அணைந்தாள்;
மணம் கொள் வேல் இளங் கோளரி மானம் மீப் படர்ந்தான். 5

விமானத்தில் நின்ற இராமன் வீடணன் முதலிய துணைவர்க்கு விடை தரல்

அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து, அனிலன்
சண்ட வேகமும் குறைதர, நினைவு எனும் தகைத்தாய்,
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்மேல்
கொண்ட கொண்டல், தன் துணைவரைப் பார்த்து, இவை குனித்தான்: 6

வீடணன் தனை அன்புற நோக்குறா, விமலன்,
‘தோடு அணைந்த தார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது; உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி, நீள் அரசின்,
நாடு அணைந்தவர் புகழ்ந்திட, வீற்றிரு நலத்தால். 7

‘நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்!
ஆதி நான்மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்!
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள், இனி நீ
போதியால்’ எனப் புகன்றனன்-நான் மறை புகன்றான். 8

‘சுக்கிரீவ! நின் தோளுடை வன்மையால் தசம் தொகு
அக்கிரீவனைத் தடிந்து, வெம் படையினால் அசைந்த
மிக்க வானரச் சேனையின் இளைப்பு அற மீண்டு, ஊர்
புக்கு, வாழ்க!’ எனப் புகன்றனன்-ஈறு இலாப் புகழோன். 9

வாலி சேயினை, சாம்பனை, பனசனை, வயப் போர்
நீலன் ஆதிய நெடும் படைத் தலைவரை, நெடிய
காலின் வேலையைத் தாவி மீண்டு அருளிய கருணை
போலும் வீரனை, நோக்கி, மற்று அம் மொழி புகன்றான். 10

ஐயன் அம் மொழி புகன்றிட, துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர, விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாள் இணை முடி உறச் சேர்த்தி,
‘உய்கிலேம், நினை நீங்கின்’ என்று இனையன உரைத்தார். 11

அயோத்தியில் ஐயன் திருமுடிசூடுதலைக் காண விரும்பி உரைத்தல்

‘பார மா மதில் அயோத்தியின் எய்தி, நின் பைம் பொன்
ஆர மா முடிக் கோலமும் செவ்வியும் அழகும்,
சோர்வு இலாது, யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து
பேரவே அருள்’ என்றனர்-உள் அன்பு பிணிப்பார். 12

இராமன் உடன்பட்டுக் கூற, யாவரும் மகிழ்தல்

அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும், அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும், நோக்கி, ‘நீர் துளங்கல்;
முன்பு நான் நினைந்திருந்தது அப் பரிசு; நும் முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது’ என்று உரைத்தனன்-பெரியோன் 13

ஐயன் வாசகம் கேட்டலும், அரி குலத்து அரசும்,
மொய் கொள் சேனையும், இலங்கையர் வேந்தனும், முதலோர்,
வையம் ஆளுடை நாயகன் மலர்ச் சரண் வணங்கி,
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார். 14

யாவரும் புட்பகத்தின்மேல் ஏறுதல்

அனையது ஆகிய சேனையோடு அரசனை, அனிலன்
தனயன் ஆதியாம் படைப் பெருந் தலைவர்கள் தம்மை,
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை, ‘வந்து இங்கு
இனிதின் ஏறுமின், விமானம்’ என்று, இராகவன் இசைத்தான். 15

சொன்ன வாசகம் பிற்பட, சூரியன் மகனும்,
மன்னு வீரரும், எழுபது வெள்ள வானரரும்,
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும்,
துன்னினார், நெடும் புட்பகமிசை ஒரு சூழல். 16

பத்து நால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும், வெற்றிடம் மிகுமால்;
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்,
இத் தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே! 17

புட்பக விமானத்தில் இராமன் விளங்கிய காட்சி

எழுபது வெள்ளத்தாரும், இரவி கான்முளையும், எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும், வான் பெரும் படையும், சூழ
தழுவு சீர் இளைய கோவும், சனகன் மா மயிலும், போற்ற,
விழுமிய குணத்து வீரன் விளங்கினன், விமானத்து உம்பர். 18

அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்,
எண் தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதேபோல்,
புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ. 19

இராமன் சீதைக்கு வழியிலுள்ள காட்சிகளைக் காட்டிச் செல்லுதல்

குட திசை மறைந்து, பின்னர்க் குண திசை உதயம் செய்வான்
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப, மானம்
தடை ஒரு சிறிது இன்று ஆகி, தாவி வான் படரும் வேலை,
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான்: 20

சேதுவைக் காட்டி, அதன் தூய்மையைப் புகழ்தல்

‘இந்திரற்கு அஞ்சி, மேல் நாள், இருங் கடல் புக்கு, நீங்கால்
சுந்தர சயிலம், தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி, இவண் கிடப்ப கண்டாய்;
பைந்தொடி! அடைத்த சேது பாவனம் ஆயது’ என்றான். 21

‘கங்கையோடு, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி,
பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே 22

‘நெற்றியின் அழலும் செங் கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையில் மேவு கங்கையும், “சேது ஆகப்
பெற்றிலம்” என்று கொண்டே, பெருந்தவம் புரிகின்றாளால்;
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது?-மலர்க்கண் வந்தாய்!’ 23

வருணன் சரணம் அடைந்த இடத்தைக் காட்டுதல்

தெவ் அடும் சிலைக் கை வீரன் சேதுவின் பெருமை யாவும்,
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங் கண் செவ் வாய்,
நொவ் இடை, மயில் அனாட்கு நுவன்றுழி, ‘வருணன் நோனாது
இவ் இடை வந்து கண்டாய், “சரண்” என இயம்பிற்று’ என்றான் 24

பொதிய மலை முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

‘இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம்; முன் தோன்று
அது வளர் மணிமால் ஓங்கல்; உப் புறத்து, உயர்ந்து தோன்றும்
அது திகழ் அனந்த வெற்பு’ என்று அருள் தர, ‘அனுமன் தோன்றிற்று
எது?’ என, அணங்கை நோக்கி, இற்று என இராமன் சொன்னான்: 25

அனுமனைச் சந்தித்த இடம், கிட்கிந்தை ஆகியவற்றைக் காட்டுதல்

‘வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகர நீர் சூழ்
வேலையைக் கடக்கப் பாயும் விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர்-
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது’ என்றான் 26

வானர மகளிரையும் உடன் அழைத்துச் செல்ல, சீதை விரும்பி மொழிதல்

‘கிட்கிந்தை இதுவேல், ஐய! கேட்டியால்: எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ, ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து’ என்றாள் 27

இராமன் ஆணைப்படி சுக்கிரீவன் அனுமனை அனுப்பி, மகளிர்களை அழைத்து வரச் செய்தல்

அம் மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர அனுமன் தன்னை நோக்கி, ‘நீ விரைவின், வீர!
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி’ என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன், சென்று மன்னோ 28

வானர மகளிர் மங்கலப் பொருள்களுடன் வந்து முறைப்படி வணங்குதல்

வரிசையின் வழாமை நோக்கி, மாருதி மாதர் வெள்ளம்
கரைசெயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன், கணத்தின் முன்னம்;
விரைசெறி குழலினார் தம் வேந்தனை வணங்கி, பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது, நின்றார். 29

மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும்
அங்கு அவர் வைத்து, பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ,
நங்கையும் உவந்து, ‘வேறு ஓர் நவை இலை, இனி மற்று’ என்றாள்;
பொங்கிய விமானம் தானும், மனம் என, எழுந்து போன. 30

கோதாவரி, தண்டகாரணியம், முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்,
சூது ஆர் முலைத் தோகையை நோக்கி, ‘முன் தோன்று சூழல்
கோதாவரி; மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை,
பேதாய்! பிரிவுத் துயர் பீழை பிணித்தது’ என்றான். 31

‘சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள்: இது நீள்
தரத்து உவாசவர், வேள்வியர், தண்டகம்; அதுதான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம்;
பரத்துவாசவன் உறைவிடம் இது’ எனப் பகர்ந்தான். 32

மின்னை நோக்கி, அவ் வீரன் ஈது இயம்பிடும் வேலை,
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து, தன் அகத்தின்,
‘என்னை ஆளுடை நாயகன் எய்தினன்’ என்னா,
துன்னு மா தவர் சூழ்தர, எதிர் கொள்வான், தொடர்ந்தான். 33

பரத்துவாசன் ஆச்சிரமத்தில் இறங்குதல்

ஆதபத்திரம், குண்டிகை, ஒரு கையின் அணைத்து,
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய,
மா தவப் பயன் உருவு கொண்டு எதிர் வருமாபோல்,
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன், நெடியோன். 34

எண் பக, தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி, மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி எனப் பொலி வீரன்,
புட்பகத்தினை வதிகென நினைந்தனன், புவியில். 35

இராமன் முதலியோர் முனிவனைத் தொழ, முனிவனும் இராமனை உபசரித்தல்

உன்னும் மாத்திரத்து, உலகினை எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்தெனப் புட்பகம் தாழ,
என்னை ஆளுடை நாயகன், வல்லையின் எதிர் போய்,
பன்னு மா மறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான். 36

அடியின் வீழ்தலும் எடுத்து, நல் ஆசியோடு அணைத்து,
முடியை மோயினன் நின்றுழி, முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர, தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம் அது ஆட்டினன், நெடியோன். 37

கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே,
அருகு சார்தர, அருந் தவன் ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம் களித்தனன், பரிவால். 38

வானரேசனும், வீடணக் குரிசிலும், மற்றை
ஏனை வீரரும், தொழும்தொறும் ஆசிகள் இயம்பி,
ஞான நாதனைத் திருவொடு நன் மனை கொணர்ந்தான்,
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே. 39

பன்ன சாலையுள் புகுந்து, நீடு அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்த பின், சூரியன் மருமான்-
தன்னை நோக்கினன், பல் முறை கண்கள் நீர் ததும்ப,
பின் ஒர் வாசகம் உரைத்தனன், தபோதரின் பெரியோன்: 40

‘முனிவர் வானவர் மூவுலகத்துளோர் யாரும்
துனி உழந்திடத் துயர் தரு கொடு மனத் தொழிலோர்
நனி மடிந்திட, அலகைகள் நாடகம் நடிப்ப,
குனியும் வார் சிலைக் குரிசிலே! என், இனிக் குணிப்பாம்? 41

‘விராதனும், கரனும், மானும், விறல் கெழு கவந்தன் தானும்,
மராமரம் ஏழும், வாலி மார்பமும், மகர நீரும்,
இராவணன் உரமும், கும்பகருணனது ஏற்றம் தானும்,
அராவ அரும் பகழி ஒன்றால் அழித்து, உலகு அளித்தாய்-ஐய!’ 42

இராமன் அனுமனைப் பரதனிடம் அனுப்பல்

‘இன்று நாம் பதி போகலம்; மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும்’ என்று ஏயினன், நெடியோன்;
‘நன்று’ எனா, அவன், மோதிரம் கைக் கொடு நடந்தான். 43

தந்தை வேகமும், தனது நாயகன் தனிச் சிலையின்
முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகி,
சிந்தை பின் வரச் செல்பவன், குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம், கூறி, மேல் வான் வழிப் போனான். 44

இன்று இசைக்கு இடம் ஆய இராகவன்
தென் திசைக் கருமச் செயல் செப்பினாம்,
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்: 45

நந்தியம் பதியில் பரதன் இருந்த நிலை

நந்தியம்பதியின் தலை, நாள்தொறும்
சந்தி இன்றி நிரந்தரம், தம்முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா,
இந்தியங்களை வென்றிருந்தான் அரோ. 46

துன்பு உருக்கவும், சுற்றி உருக்க ஒணா
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய்,
முன்பு உருக் கொண்டு ஒரு வழி முற்றுறா
அன்பு உருக் கொண்டது ஆம் எனல் ஆகுவான்; 47

நினைந்தவும் தரும் கற்பக நீரவாய்
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும், அக்
கனைந்த மூலமும் காயும் கனியும், அவ்
வனைந்த அல்ல அருந்தல் இல் வாழ்க்கையான்; 48

நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்;
ஏக்குற்று, ஏக்குற்று, ‘இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான்; வரும், வரும்’ என்று, உயிர்
போக்கிப் போக்கி, உழக்கும் பொருமலான்; 49

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்,
எண்ணும் கீர்த்தி இராமன், திரு முடி
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி,
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான். 50

இராமன் வரவேண்டிய நாள் குறித்து சோதிடரை அழைத்துப் பரதன் வினவுதல்

அனையன் ஆய பரதன், அலங்கலின்
புனையும், தம்முனார் பாதுகைப் பூசனை
நினையும் காலை, நினைத்தனனாம் அரோ,
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள். 51

‘யாண்டு வந்து இங்கு இறுக்கும்?’ என்று எண்ணினான்,
‘மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த் தருக’ என்ன, வந்து எய்தினார்,
‘ஆண் தகைக்கு இன்று அவதி’ என்றார் அரோ. 52

இராமன் வாராமையால் பரதன் அவலமுற்றுப் பலவாறு சிந்தித்தல்

என்ற போதத்து, இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ் உரை, செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்,
கொன்ற போதத்த உயிர்ப்புக் குறைந்துளான். 53

மீட்டு எழுந்து, விரிந்த செந் தாமரைக்
காட்டை வென்று எழு கண் கலுழிப் புனல்
ஓட்ட, உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும், அவலத்து அழிந்தான் அரோ. 54

‘எனக்கு இயம்பிய நாளும், என் இன்னலும்,
தனைப் பயந்தவள் துன்பமும், தாங்கி, அவ்
வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர்
வினைக் கொடும் பகை உண்டு’ என விம்மினான். 55

‘மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும்,
பூவகத்தில், விசும்பில், புறத்தினில்,
ஏவர் கிற்பர் எதிர் நிற்க, என்னுடைச்
சேவகற்கு?’ என ஐயமும் தேறினான். 56

‘என்னை, “இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின், அவன் அது கொள்க” என்று
உன்னினான்கொல், உறுவது நோக்கினான்?
இன்னதே நலன்’ என்று இருந்தான் அரோ. 57

உயிர் துறக்கக் கருதிய பரதன், தூதரை அனுப்பி, சத்துருக்கனை அழைத்தல்

‘அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக;
வனத்து இருக்க; இவ் வையம் புகுதுக;
நினைத்து இருந்து நெடுந் துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன். 58

என்னப் பன்னி, ‘இளவலை என்னுழைத்
துன்னச் சொல்லுதிர்’ என்னலும், தூதர் போய்,
‘உன்னைக் கூயினன், உம்முன்’ எனா முனம்,
முன்னர்ச் சென்றனன், மூவர்க்கும் பின் உளான். 59

தொழுது நின்ற தம்பியிடம் பரதன் வரம் வேண்டல்

தொழுது நின்ற தன் தம்பியை, தோய் கணீர்
எழுது மார்பத்து இறுகத் தழுவினான்,
அழுது, ‘வேண்டுவது உண்டு, ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்! தரற்பாற்று’ என்றான். 60

‘”என்னது ஆகும்கொல், அவ் வரம்?” என்றியேல்,
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்;
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்;
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது’ என்றான். 61

சத்துருக்கன் வருந்தி உரைத்தல்

கேட்ட தோன்றல், கிளர் தடக் கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி, துணுக்குறா,
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்;
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான். 62

விழுந்து, மேக்கு உயர் விம்மலன், வெய்து உயிர்த்து,
எழுந்து, ‘நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?
அழுந்து துன்பத்தினாய்!’ என்று அரற்றினான்-
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான். 63

‘கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; “போனவன் தான் வரும் அவதி போயிற்று” என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா! 64

‘”மன்னின் பின், வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல் நிற்கும்” என்று அஞ்சி, புறத்து இருந்தும், அருந் தவமே தொடங்கினாயே!
“என்னின் பின் இவன் உளனாம்” என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும்,
உன்னின் பின் இருந்ததுவும், ஒரு குடைக் கீழ் இருப்பதுவும் ஒக்கும்’ என்றான். 65

சத்துருக்கனுக்குப் பரதன் சமாதானம் கூறி, எரி அமைக்குமாறு பணித்தல்

முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு வெள்ளிக் கொழு நிறத்து, முளரிச் செங்கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, ‘அவன் இங்குத் தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன்பின், இவ் உலகை உலைய ஒட்டான்;
அத் திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும் அரசு; எரி போய் அமைக்க’ என்றான். 66

செய்தி அறிந்து கோசலை விரைந்து ஓடி வருதல்

அப்பொழுதின், அவ் உரை சென்று, அயோத்தியினின் இசைத்தலுமே, அரியை ஈன்ற
ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள், வயிறு புடைத்து, அலமந்து ஏங்கி,
‘இப்பொழுதே உலகு இறக்கும், யாக்கையினை முடித்து ஒழிந்தால், மகனே!’ என்னா,
வெப்பு எழுதினாலனைய மெலிவுடையாள் கடிது ஓடி, விலக்க வந்தாள் 67

மந்திரியர், தந்திரியர், வள நகரத்தவர், மறையோர், மற்றும் சுற்ற,
சுந்தரியர் எனப் பலரும் கை தலையில் பெய்து இரங்கித் தொடர்ந்து செல்ல,
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த,
அந்தர மங்கையர் வணங்க, அழுது அரற்றி, பரதனை வந்து அடைந்தாள் அன்றே. 68

கோசலை பரதனைத் தீயில் விழாதபடி பற்றிக் கொண்டு, தடுத்துக் கூறுதல்

விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஓசிய, மேனி தள்ள,
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள் தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான், அவள் புகுந்து, பற்றிக்கொண்டாள்.69

‘மன் இழைத்ததும், மைந்தன் இழைத்ததும்,
முன் இழைத்த விதியின் முயற்சியால்;
பின் இழைத்ததும், எண்ணில், அப் பெற்றியால்;
என் இழைத்தனை, என் மகனே?’ என்றாள். 70

‘நீ இது எண்ணினையேல், நெடு நாடு எரி
பாயும்; மன்னரும் சேனையும் பாய்வரால்;
தாயர் எம் அளவு அன்று; தனி அறம்
தீயின் வீழும்; உலகும் திரியுமால். 71

‘தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றிக் கண்டிலம், கண்களால்;
அருமை ஒன்றும் உணர்ந்திலை; ஐய! நின்
பெருமை, ஊழி திரியினும், பேருமோ? 72

‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும்,
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? 73

‘இன்று வந்திலனே எனின், நாளையே
ஒன்றும் வந்து, உனை; உன்னி, உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல்; பிழைத்தான் எனின்,
பொன்றும் தன்மை புகுந்தது போய்’ என்றாள். 74

‘ஒருவன் மாண்டனன் என்று கொண்டு, ஊழி வாழ்
பெரு நிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்
கருவும் மாண்டு அறக் காணுதியோ?-கலைத்
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்! 75

‘”இறக்கையும், சிலர் ஏகலும், மோகத்தால்
பிறக்கையும், கடன்” என்று, பின் பாசத்தை
மறக்கைகாண், மகனே! வலி ஆவது; என்,
துறக்கைதானும்?’ என்றாள்-மனம் தூய்மையாள். 76

கோசலையின் உரையைப் பரதன் மறுத்து உரைத்தல்

‘”மைந்தன் என்னை மறுத்து உரைத்தான்” எனல்;
எந்தை மெய்ம்மையும், இக் குலச் செய்கையும்,
நைந்து போக, உயிர் நிலை நச்சிலேன்;
முந்து செய்த சபதம் முடிப்பெனால். 77

‘யானும், மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய்,
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ? 78

‘தாய் சொல் கேட்டலும், தந்தை சொல் கேட்டலும்,
பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும்,
ஈசற்கே கடன்; யான் அஃது இழைக்கிலேன்;
மாசு அற்றேன், இது காட்டுவென், மாண்டு’ என்றான். 79

அனுமன் தோன்றுதல்

என்று தீயினை எய்தி, இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோருடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு,
குன்று போல் நெடு மாருதி கூடினான். 80

இராமனது வருகையை உரைத்து, அனுமன் எரியை அவித்தல்

‘ஐயன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்,
உய்யுமே, அவன்?’ என்று உரைத்து, உள் புகா,
கையினால் எரியைக் கரி ஆக்கினான். 81

ஆக்கி, மற்று அவன் ஆய் மலர்த் தாள்களைத்
தாக்கத் தன் தலை தாழ்ந்து வணங்கி, கை
வாக்கின் கூடப் புதைத்து, ‘ஒரு மாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும்’ எனச் சொல்லினான். 82

‘இன்னம் நாழிகை எண்-ஐந்து உள, ஐய!
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்;
இன்னது இல்லைஎனின், அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து, இவ் எரியில் முடிவெனால். 83

‘ஒன்றுதான் உளது; உன் அடியேன் சொலால்,
நின்று தாழ்த்தருள், நேமிச் சுடர் நெடுங்
குன்று தாழ்வளவும்; இது குன்றுமேல்,
பொன்றும், நீயும், உலகமும்-பொய் இலாய்! 84

‘எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்,
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால்,
அங்கு வைகினன் அல்லது, தாழ்க்குமோ?
இங்கண், நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால்: 85

அனுமன் இராமனது மோதிரத்தை அடையாளம் காட்ட, அங்குள்ளார் அனைவரும் மகிழ்தல்

‘அண்டர் நாதன் அருளி அளித்துளது
உண்டு ஓர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோது அறு சிந்தையாய்!
கண்டு கொண்டருள்வாய்’ எனக் காட்டினான். 86

காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்,
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம் அரோ,
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும், 87

அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன;
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன;
தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை. 88

மோதிரம் பெற்ற பரதனது பெரு மகிழ்ச்சி

மோதிரம் வாங்கி, தன் முகத்தின்மேல் அணைத்து,
‘ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ?’ எனா
ஓதினர் நாண் உற, ஓங்கினான்-தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான். 89

ஆதி வெந் துயர் அலால், அருந்தல் இன்மையால்,
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்,
‘ஏதிலன் ஒருவன்கொல்’ என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன, வயிரத் தோள்களே. 90

அழும்; நகும்; அனுமனை ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும், வெங் களி துளக்கலால்;
விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடும் குனிக்கும்; தன் தடக் கை கொட்டுமால். 91

‘ஆடுமின், ஆடுமின்!’ என்னும்; ‘ஐயன்பால்
ஓடுமின், ஓடுமின்!’ என்னும்; ‘ஓங்கு இசை
பாடுமின், பாடுமின்!’ என்னும்; ‘பாவிகாள்!
சூடுமின், சூடுமின், தூதன் தாள்!’ எனும். 92

‘வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர், இனி’ எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற,
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும், பாடுமால். 93

வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்;
தாதியர்தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;-
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! 94

பரதன் அனுமனைப் பாராட்டி, ‘நீ யார்?’ எனல்

அத் திறத்து ஆண்தகை, அனுமன் தன்னை, ‘நீ
எத் திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன்; மூர்த்தி வேறு
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன்’ என்றான். 95

‘மறையவர் வடிவு கொண்டு, அணுக வந்தனை;
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்;
“துறை எனக்கு யாது எனச் சொல்லு, சொல்!” என்றான்;
அறை கழல் அனுமனும் அறியக் கூறுவான்: 96

அனுமன் தன் வரலாற்றை உரைத்து, பெரு வடிவையும் காட்டுதல்

‘காற்றினுக்கு அரசன் பால் கவிக் குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து, நும் முனாற்கு
ஏற்றிலா அடித் தொழில் ஏவலாளனேன்;
மாற்றினென் உரு, ஒரு குரங்கு, மன்ன! யான். 97

‘அடித் தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித் தடந் தாமரைக் கண்ணின் நோக்கு’ எனா,
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்,
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான். 98

வடிவு கண்டோர் அஞ்ச, பெரு வடிவைச் சுருக்குமாறு பரதன் வேண்டுதல்

வெஞ் சிலை இருவரும், விரிஞ்சன் மைந்தனும்,
‘எஞ்சல் இல் அதிசயம் இது’ என்று எண்ணினார்;
துஞ்சிலது ஆயினும், சேனை துண்ணென
அஞ்சினது, அஞ்சனை சிறுவன் ஆக்கையால். 99

‘ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின், உலப்பு இல் யாக்கையை
வாங்குதி, விரைந்து’ என, மன்னன் வேண்டினான். 100

அனுமனுக்குப் பரதன் பரிசு கொடுத்தல்

சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன்,
பொருக்கென நிதியமும், புனை பொன் பூண்களின்
வருக்கமும், வரம்பு இல நனி வழங்கினான். 101

கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம்,
மாவொடு கரித் திரள், வாவு தேர் இனம்,
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்,
எவரும் சிலை வலான், யாவும் நல்கினான். 102

அனுமன் விமானத்திலுள்ளாரைப் பரதனுக்குச் சுட்டிக் காட்டுதல்

அன்னது ஓர் அளவையின், விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினார் என,
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்,
மன்னவர்க்கு அரசனும், வந்து தோன்றினார். 103

‘அண்ணலே! காண்டியால்-அலர்ந்த தாமரைக்
கண்ணனும், வாரைக் கடலும், கற்புடைப்
பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. 104

‘ஏழ்-இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்
ஊழியான்’ என்று கொண்டு, உணர்த்தும் காலையே. 105

இராமனைக் கண்டவர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தல்

பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும்,
அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன்
தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால். 106

இராமனைப் பரதன் காணுதல்

ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான். 107

ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன், தொழுத கையினன்,
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்,
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான். 108

இராமனும் தம்பியைக் கண்டு மகிழ்தல்

தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச்
சான்று என நின்றவன், ‘இனைய தம்பியை,
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை,
ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு’ எனா, 109

காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால்,
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். 110

புட்பக விமானம் நிலத்தைச் சார்தல்

ஆனது ஓர் அளவையின், அமரர்கோனொடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என,
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். 111

இராமனது வருகையால் தாயர் முதலியோர் உற்ற நிலை

தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் 112

எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்;
ஒளி வரப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். 113

ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும், வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர், உணர்வு பெற்றார். 114

சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரி வளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலின மா விலாழியும், எண் இல் யானை
வண்ண வார் மதமும், நீரும், மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே. 115

அடியில் வீழ்ந்து வணங்கிய பரதனை இராமன் அன்புறத் தழுவுதல்

சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி,
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான். 116

தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி
வழுவுற, பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை அன்னான். 117

இலக்குவன் பரதனது பாதங்களில் விழுந்து வணங்குதல்

அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன்-படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான் 118

சத்துருக்கனையும் இராமன் தழுவி, பரத சத்துருக்கனர்களைத் துணைவர்களுக்கு அறிமுகப்படுத்தல்

பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங் கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் தம்பிமாருக்கு,
இன் உயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான்; இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார். 119

மிகைப் பாடல்கள்

‘வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம்
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்
எங்குளார் எனும் இடம் உளது; அதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-1

‘வாங்கினான் இரு நிதியொடு தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் ஏழு பஃது ஏறினும், ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது; இவரின், நீ இனிது
பூங் குலா நகர் புகுதி, இஞ் ஞான்று’ எனப் புகன்றான். 1-2

‘மங்கலா நிதி வட திசை வானவன் மானம்;
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்,
எங்கு உளார்?” எனும் இடம் உளது; இதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-3

‘வாங்கினான், அளகேசனைத் துரந்து, இந்த மானம்;
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும், உரவோய்!
ஆங்கு இடம் பினும் உடையதாம்; அதுதனில் ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-4

வாங்கினான் அது, மா நிதியோடு அவன் மானம்;
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால், இன்னும்,
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது; அதனை நீ ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-5

என்று, தேரினை வீடணன் எய்தியது என்றான்;
‘நன்றுதான்’ என நாயகன் ஏறினன், அவரோடு
அன்றுதான் இளங் கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என இரு திசை இருந்தும் ஒக்கும். 1-6

ஏறினன் விமானம் தன்னில் இராமனும், இளைய கோவும்,
மாறு இலாச் சனகியோடு, வள நகர் இலங்கை வேந்தும்,
கூறிய அனுமன், சாம்பன், குமரன், வெங் கவி வந்து ஏற;
மாறிலோர் நிலத்து நின்றார், வயந்தனார் கொத்தில் உள்ளார். 1-7

[இது முதல் 1-19 வரையில் ‘இமயப் படலம்’ என்றும், ‘வசந்தன் உயிர்வரு படலம்’ என்றும், சில பிரதிகளில் உள்ளன.]

மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி,
‘ஏறும் நீர் தேரில்’ என்ன, ‘கருணன் வந்து எதிர்த்தபோது,
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட, அரக்கன் சீறி,
நீறு எழப் பிசைந்தே இட்டான் நெற்றியில்’ என்னச் சொன்னார் 1-8

என்ற வாசகம் கேட்டலும், வானரர் இறங்கி,
நின்ற போதினில் இராகவன் தேரின்நின்று இழிந்தான்;
‘பொன்றுமா வரக் காரணம் என்?’ எனப் புழுங்கா’
துன்று தார்ப் புயத்து இலக்குவ! பொறி’ எனச் சொன்னான். 1-9

‘வரிசிலை இராமன், ஓலை மறம் புரி மறலி, காண்க!
எரிகொளும் இலங்கைப் போரில், இன் உயிர் துறந்து போந்த
குரிசிலை, வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க; அன்றேல்,
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென்’ என்று எழுதிவிட்டான். 1-10

அக் கணத்து அருகு நின்ற அனுமன் கைத் திருமுகத்தைத்
தக்கவன் நீட்ட, வாங்கி, தன் தலைமிசையில் சூடி,
‘இக்கணம் வருவென்; வாழி! இராம!’ என்று, இரு தோள் கொட்டி,
மிக்க மா மடங்கல் போல, விண்ணிடை விசைத்துப் பாய்ந்தான் 1-11

மண்டிப் புக்கனன், மறலிதன் பெரும் பதம்; நரகில்
தண்டிப்புண்டு, அறுப்புண்டு, எரிப்புண்டவர்தம்மைக்
கண்டு, மாருதி கண் புதைத்து, ‘அரி! அரி’ என்ன,
மிண்டி ஏறினர், நரகிடை வீழ்ந்தவர் எல்லாம். 1-12

துளங்கி, அந்தகன் வந்து, அடி தொழுதலும், தோலா
வளம் கொள் மாருதி, ‘வசந்தனைக் காட்டு’ என, அவனும்
உளம் கலங்கி, ‘உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள்;
விளங்கு கீர்த்தியாய்! தேடு விண்ணவர் புரத்து’ என்றான். 1-13

சொன்ன கூற்றுவன் தன்னைத் தன் வாலிடைத் துவக்கி,
பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப் புகலும்,
முன்னை வந்து கண்டு, இந்திரன், ‘முனிவு எனோ?’ என்ன,
‘மன்ன! ஏகுவென்; வயந்தனைக் காட்டுதி’ என்றான். 1-14

‘வல் அரக்கரை மடித்து, எமை எடுத்த மாருதியே!
இல்லை இங்கு; அயன் உலகிடை அறிதி’ என்று இசைப்ப,
சொல்லும் அங்கு அவன் தன்னையும் வாலிடைத் துவக்கி,
பல் உயிர்த் திறம் படைத்தவன் உலகிடைப் பாய்ந்தான். 1-15

சிந்தை தூயவன் செல, உளம் துளங்கு நான்முகனும்,
‘வந்த காரியம் எது?’ என, ‘வயந்தனைப் பார்த்துச்
சுந்தரத் தடந்தோள் வில்லி நின்றனன்; அவன் தான்
உந்தன் நீள் பதத்துளான் எனின், காட்டு’ என உணர்த்தும்: 1-16

‘என்னுடைப் பெரும் பதத்தின் மேலாகிய எந்தை-
தன்னுடைப் பெருஞ் சோதியின் கீழதாய்த் தழைத்த
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான்; விறலோய்!
அன்னவன் தனைக் கொணருதி, ஆங்கு அணைந்து’ என்றான். 1-17

என்ற நான்முகன் தன்னையும், இந்திரன் யமனோடு
ஒன்ற, வால்கொடு துவக்கினன், ஒரு குதிகொண்டான்;
மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின் பதத்தில்
சென்று, கண்டு கொண்டு இழிந்தனன், திசைமுகன் பதியில். 1-18

மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க,
குலவு வாசவன் யமனை விட்டு, இரு நிலம் குறுகி,
இலகு இல் வீரன் தன் அடி, இணை அவனொடும் வணங்கி,
சலமும் தீர்த்தனன்; படையையும் ஏற்றினன், தேர்மேல். 1-19

[வேறு சில பிரதிகளில் 1-6 பாடலுக்குப்பின் 1-20 முதல் 1-27 வரையில் உள்ள பாடல்களுடன் வசந்தன் வரலாறு பற்றி, (1-7 முதல் 1-19) முன் வந்த பாடல்களின் சிலவற்றையும் இடையில் கொண்டு, இவ் வரலாறு வேறு வகையில் அமைந்துள்ளது.]

ஏறினான் இராமன் தேர்மேல் எழில் மலர் மாதினோடும்;
ஏறினான் இளைய கோவும், இராக்கதர் வேந்தனோடும்;
ஏறினான் அனுமன்; சாம்பன், இடபனே, முதலோர் ஏற,
மாறினார் நிலத்து நின்றார், வசந்த கோத்திரத்திலுள்ளார். 1-20

ஏறினன், இளைய கோவும்; இரவி சேய், சாம்பன், நீலன்,
‘ஏறினன், வாலி மைந்தன்’ என்றனர்; பலரும் ஏற,
சீறிய கும்பகன்னன் சினத்திடைச் சிதைந்து பட்ட,
மாறிலா வசந்தன் சேனை நின்றது, மாறி மண்மேல். 1-21

வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும், மயிலும்,
கண்டு கைதொழ வானரக் கடலும், மற்று யாரும்
எண் தவாத பொன் மானமீது இருந்திடும் இயற்கை
அண்டர் நாதனும், வானமும், அமரரும், ஆமால். 1-22

பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ளப் படை; அவர்தம்மை,
‘வாரும் தேரின்மேல்’ என, ‘கும்பகர்ணன் வந்து ஏன்ற
போரில் எம் படைத் தலைவனோ பொன்றினன்; அவனை
நீர் எழப் பிசைந்து, இட்டனன் நெற்றியில்’ என்றார். 1-23

ஆழி வெள்ளம் ஓர் எழுபதும், அனுமனே முதலாம்
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படைத் தலைவரை இராமன்
சூழ நோக்கினன்; சுக்கிரீவன் தனைப் பாரா,
‘வாழி மாப் படை அனைத்தும் வந்தன கொலோ?’ என்றான். 1-24

இரவி கான்முளை இறங்கி வந்து, இராமனை இறைஞ்சி,
‘சுருதியாய்! ஒரு பேர் அரு சொல்லுவ; தொடர்ந்து
வருவதான இச் சேனையில் வசந்தன் என்று உரைக்கும்
ஒருவன் வந்திலன்; கண்டருளுதி’ என உரைத்தான். 1-25

கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன்
இசைந்த போரின் வந்து எய்தலும், இவன் தனை எடுத்துத்
தசைந்த தோல், மயிர், எலும்பு, இவைதமைத் தெரியாமல்,
பிசைந்து மோந்து, உடற் பூசினன், பெரு நுதற்கு அணிந்தே. 1-26

‘இசைந்த சீராமன் ஓலை; இலங்கையில் பூசல் தன்னில்
வசந்தனைக் கண்டதில்லை; மதித்தவாறு அழகிது அம்மா!
வசந்தனைக் கொண்டுதானும் வருக! எனோ? வாராகினாகில்,
நமன் குலம் களைவென்’ என்றான் -‘நாளை வா’ என்ற வீரன். 1-27

[இதன் பின் 1-10, 11, 12, 13 என்ற பாடல்கள் உள்ளன.]

‘செல்வனே! இன்னம் கேளாய்; யான் தெரி பாசக் கையால்
அல் எனும் அரக்கர் தம்மை வம்மின்!’ என்று அழைத்து, மெள்ள
நல் இருட் பரவை மேனி நாரணன் தமரைக் கண்டால்,
‘செல்லவே போமின்’ என்று விடுக்குவென், செவியில், செப்பி. 1-32

[இதன்பின் 1-14, 15, 16,17, 18, 19 என்ற பாடல்கள் உள்ளன.]

‘மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து, மாதே!
செய்யளாகிய திரு எனப் பொலிந்து, இனிது இருத்தி’
கைகளால் மிகப் புல்கியே, கண்கள் நீர் ததும்ப,
பொய் இலா மனத் திரிசடை, ‘விடை’ எனப் போனாள். 5-1

என்ற காலையில், எழுந்தவன் இயற்கையை நோக்கி,
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்;
சென்று சேனையை நாடினன், திரிந்து வந்து எய்தி,
வென்றி வீரரில் வசந்தனைக் கண்டிலர், வெறுத்தார். 16-3

[சில பிரதிகளில், ‘சொன்ன வாசகம் பிற்பட’ (16) என்ற பாடலுக்குப் பின் ‘வசந்தன் உயிர் வரு படலம்’ தொடங்குகிறது. 16-3 என்னும் இந்த பாடலுக்கு முன் இதன் முன்னர் தந்துள்ள 1-21, 1-23 என்ற இரு பாடல்களும் காணப்பெறுகின்றன. இதன் பின் 1-24 என்ற பாடல் உள்ளது.]

என்னும் காலை (யில்), இராமனும் யமபடர் யாரும்
மன்னும் தொல் புரம் நோக்கியே, ‘மணி நகை முறுவல்
உன்னின் அன்றி, யான் தேவருக்கு உதவி செய்து’ என்னா,
பொன்னின் வார் சிலை எடுத்தனன், பொறுத்தனன், பொரவே. 16-5

எண் திசாமுகம் இரிந்து உக, யமபுரம் குலைய,
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற, அழியாப்
புண்டரீகத்துப் புராதனன் முதலிய புலவோர்
தொண்டை வாய் உலர்ந்து அலமர, தொடு வில் நாண் எறிந்தான் 16-6

பாக வான் பிறையாம் என, பலர் நின்று துதிப்ப,
வாகை கொண்ட வெஞ் சிலையின் வளைவுற வாங்கி,
மேக சாலங்கள் குலைவுற, வெயிற் கதிர் மாட்சி
சோகம் எய்தி மெய் துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-7

வல்லை மாதிரம் மறைந்திட, வானவர் மயங்க,
எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக,
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த,
தொல்லை நான்மறை துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-8

வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க,
மின் புலம் கொளும் உரும் என்ன, வீக்கிய வில்லைத்
தன் பொலங் கையில் தாங்கியே தொடுத்த அச் சரங்கள்
தென் புலன் தனை நிறைத்தது; செறிந்தன, சேணில். 16-9

தருமராசனும், காலனும், யமபடர் தாமும்,
உருமு வீழ்ந்தென, சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து,
மரும தாரையில் பட்டது ஓர் வடிக் கணை வாங்கி
நிருமியா, ‘இது இராகவன் சரம்’ என நினைந்தார். 16-10

‘கெட்டது இன்று இனித் தென்புலம்; கேடு வந்து எய்தி,
பட்டனம்; இனிப் பிழைப்பு இலம்’ என்பது ஓர் பயத்தால்,
முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப,
சிட்டர் தம் தனித் தேவனை வணங்கினர், சென்றார். 16-11

‘சிறந்த நின் கருணை அல்லால், செய் தவம் பிறிது இலார்மேல்
புறம் தரு முனிவு சாலப் போதுமோ? புத்தேள்! நின்னை
மறந்திருந்து உய்வது உண்டோ ? மலர்மிசை அயனைத் தந்த,
அறம் தரு சிந்தை ஐய! அபயம், நின் அபயம்’ என்றார். 16-12

‘ஐயனே! எமை ஆளுடை அண்டர் நாயகனே!
மெய்யனே!’ என, சரணில் வந்து, யாவரும் வீழ்ந்தார்;
‘பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள்!’ என, போர் மூண்டு
எய்ய நேரிலாச் சிலையினை மடக்கினன், இராமன். 16-13

வந்து அடைந்து, ‘உனக்கு அபயம்’ என்று, அடியினில் வணங்கி,
“எம் தனிப் பிழை பொறுத்தி” என்று, இயம்பினிர்; இதனால்
உம்தம்மேல் சலம் தவிர்ந்தனென்; யூக நாயகன் தான்
தந்த சேனையில் வசந்தன் வந்திலன்; தருக’ என்றான். 16-14

தன் தனிச் சரண் வணங்கலும், இராகவன் சாற்றும்:
‘”என் தனிப் பிழை பொறுத்தி” என்று இயம்பினை; அதனால்
உன் தன் மேல் சலம் தவிர்ந்தனம்; யூகநாயகன் தான்
தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக’ என்றான். 16-15

அண்ணல் ஆரியன், ‘தருதி’ என்று அருளலும், அவர் போய்,
விண் எலாம் புகுந்து ஓடியே, வசந்தனை விரைவில்
கண்ணின் நாடி, நல் உயிரினைக் காண்கிலாது இருந்தார்;
‘திண்ணன் யாக்கை எங்கே?’ என, சாம்புவன் செப்பும்: 16-16

[இதன்பின் 1-25, 1-10, 1-11 என்னும் பாடல்கள் உள்ளன.]

அன்னதே என, ‘அவன் உயிர்க்கு அமரர்தம் பதிக்கே
முன்னது ஓர் உடல் கொண்டு, இவண் தருக!’ என மொழிய,
சொன்ன வாய்மை கேட்டு, அனுமனும் துணைவரைப் பாரா,
‘பொன்னின் பாதுகம் பணிந்தனென், விடை’ எனப் போனான். 16-20

[இதன்பின் 1-12, 13, 27, 1-14, 15, 16, 17, 18, என்னும் பாடல்கள் வர ‘வசந்தன் உயிர் வரு படலம்’ முடிவு பெறுகிறது]

அன்னது ஆதலின் அமரர் அந் நகரிடை, ஆங்கண்
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட, முந்தச்
சொன்ன வாயுவைத் தரிசிக்க, வசந்தனும் தோன்றி,
பொன்னின் பாதுகம் புனைந்தனன்; தருமனும் போனான். 16-29

அன்ன காலையில், புட்பக விமானம் ஆங்கு அடைய,
முன் இராகவன், சானகி, இலக்குவன் முதலா,
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா
உன்னி ஏறலும், உச்சியில் சொருகு பூப் போன்ற. 16-30

என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்;
‘நன்றுதான்’ என நாயகன் ஏறினன் திருவோடு;
அன்றுதான் இளங்கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும். 17-1

ஆய கண்டு, அமலன் உள்ளம் மகிழ்ந்தனன்; அனுமன் தன்பால்
நேயம் மூண்டு அது தான் நிற்க, நெடியவன் சரணம் சூடி,
மேயினன், தமர்களோடு வசந்தனும்; விண்மீதாகப்
போயினது, இராமன் சொல்லின், புட்பக விமானம் அம்மா! 17-2

தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வென்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந் தலைவர்தாமும்,
மானுட வடிவம் கொண்டார்; வள்ளல் தன் வாய்மைதன்னால். 19-1

வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்,
ஒன்றும் நல் சீதையோடும், உம்பரும் பிறரும் காண,
வென்று உயர் சேனையொடும், இராமனும் விரைவின் எய்தி,
தென் திசை இலங்கை ஆதி, தேவிக்குத் தெரியக் காட்டும். 20-1

வென்றி சேர் கவியின் வெள்ளக் கடல் முகந்து எழுந்து, விண்மேல்
சென்றது விமானம்; செல்ல, திசையோடு தேசம் ஆதி
என்றவை அனைத்தும் தோன்ற, இராமனும் இனிது தேறி,
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்குத் தெரிக்கலுற்றான்: 20-2

‘மன்னு பொற் கொடிகள் ஆட, மாட மாளிகையின் ஆங்குத்
துன்னு பைம் பொழில்கள் சுற்ற, தோரணம் துவன்றி, “வானோர்
பொன்னகர் ஒக்கும்” என்று புகழ்தலின், புலவராலும்
பன்ன அரும் இலங்கை மூதூர், பவளவாய் மயிலே! பாராய். 20-3

‘வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகைக் கனி வாய் வல்லி!
எதிர் பொர வந்த விண்ணோர்-இறைவனைச் சிறையில் வைத்த
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு செல்ல,
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய். 20-4

‘வென்றி வேல் கருங் கண் மானே! என்னொடும் இகலி, வெய்ய
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய்;
கன்றிய அரக்கன் சேனைக் காவலன் தன்னை நீலன்
கொன்று, உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் 20-5

‘மறத்திறல் வாலி மைந்தன், வச்சிரத்து எயிற்றோன் தன்னைச்
செறுத்து, உயிர் செகுத்து, நின்ற தென் திசை வாயில் நோக்காய்;
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி
வெறுத்து, எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் 20-6

‘கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய்;
மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி!
இருங் கட முகத்த யானை இவுளி, தேர், காலாள், துஞ்சி,
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப் பாராய். 20-7

‘கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த் தோன்ற,
அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத் தாக்கி,
சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை வெம் போர்ப்
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப் பாராய். 20-8

‘பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா நின்றேன்;
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று
ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து
நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும் நோக்காய். 20-9

‘இலங்கையை வலஞ் செய்து ஏக’ என நினைந்திடுமுன், மானம்
வலம் கிளர் கீழை வாயில் வர, ‘பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண்’ என, நமன் தன் வாயில்
கலந்திட, ‘ஈங்குக் கண்டாய், சுபாரிசற் சுட்டது’ என்றான். 20-10

குட திசை வாயில் ஏக, ‘குன்று அரிந்தவனை வென்ற
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது’ என் முன்,
வட திசை வாயில் மேவ, ‘இராவணன் மவுலி பத்தும்,
உடலமும் இழந்தது இங்கு’ என்று உணர்த்தி, வேறு உரைக்கலுற்றான்: 20-11

‘நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் துணையாக நட்ட
பின்னை, மாருதி வந்து, உன்னைப் பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது, இச் சேது கண்டாய். 20-12

‘மற்று இதன் தூய்மை எண்ணின், மலர் அயன் தனக்கும் எட்டா;
பொன் தொடித் தெரிவை! யான் என் புகழுகேன்! கேட்டி, அன்பால்
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து, சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார். 20-13

ஆவினை, குரவரோடும் அருமறை முனிவர்தம்மை,
பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து தம் இல்
மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து
தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும் சுரர்கள் ஆவார் 22-1

மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,
பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே. 22-2

ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, ‘கமலம் அன்ன
பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என் பொருட்டால் செய்த
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு’ என, இரதம் ஆங்கே
பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை பகரலுற்றான்: 23-1

‘அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு இடுக்கண் செய்தோர்,
செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர், தம்பால்
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர், பெற்ற
தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச் செற்றோர், 23-2

‘குருக்களை இகழ்வோர், கொண்ட குலமகள் ஒழியத் தங்கள்
செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர் கொல் தீம்பர்,
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள் தின்று
பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை செய்வோர் 23-3

‘வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,
மை அறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள்,
கை உள முதல்கள் தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார்,
துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச் சுளித்துக் கொல்வோர், 23-4

‘ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண வந்தோர்க்கு
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே சென்று
நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர், சான்றோர்
தாரமது அணைவோர், மூத்தோர் தமை இகழ் அறிவிலாதோர். 23-5

‘கண்டிலாது “ஒன்று கண்டோ ம்” என்று கைக்கூலி கொள்வோர்,
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர்,
மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால் ஒருவன் சோற்றை
உண்டிருந்து, அவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர், 23-6

‘பின்னை வா, தருவென்’ என்று பேசித் தட்டுவிக்கும் பேதை,
கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளுண் மாந்தர்,
துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து இகழ்வோர், சுற்றம்
இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல் செய்வோர் 23-7

‘ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர்,
நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை வஞ்சிப்போர், நன்மை
வேண்டிடாது, இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை நீப்போர்,
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர். 23-8

‘கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர், தங்கள்
வயிற்றிடக் கருவைத் தாமே வதைப்பவர், மாற்றார்தம்மைச்
செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச் செற்றோர்,
மயிர்க் குருள் ஒழியப் பெற்றம் வெளவு வோர், வாய்மை இல்லோர், 23-9

‘கொண்டவன் தன்னைப் பேணாக் குலமகள், கோயிலுள்ளே
பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை,
உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள் உலோபர், ஊரைத்
தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர், 23-10

‘தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள் வௌவும்
பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள், வந்து
‘கா’ எனா, ‘அபயம்’ என்று, கழல் அடைந்தோரை விட்டோர்,
பூவைமார் தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று போவோர் 23-11

‘முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத் தீயோர்,
மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர்,
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில் வாழும்
பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும் பாவர். 23-12

கார்க் கன வரை சேர் கானில் கடுங் குழி கல்லும் கட்டர்,
நீர்க் கரை அதனில் ஒட்டி நெடுங் கலை முயல் மான் கொல்வோர்,
ஊர்க் கெழு கூவல் வீழ்ந்த உயிர்ப் பசு எடாது போவோர்,
வார்க் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள். 23-13

வழி அடித்து உண்போர், கேட்டால் வழி சொல்லாதவர்கள், வைப்பைப்
பொழி இருள் களவு காண்போர், பொய் சொல்லிப் பண்டம் விற்போர்,
அழிவு இலா வாய்மை கொன்றோர், அடைந்தது …………………
……………………….தெரிசிக்கத் தீர்க” என்றான். 23-14

‘ஆதியர் மூவர்க்கு அந் நாள், அரு மறை அறைந்த அந்த
நீதியாம் புராணம் தன்னை இகழ்பவர், நிறையக் கேளார்,
பாதியில் விட்டு வைப்போர், படித்தவர்ப் பிரியப்படுத்தார்,
போதம் இலாதார், “மற்றச் சமயம் பொல்லாதது” என்பார். 23-15

‘என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம்
ஒன்றிலர், நன்றிதன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர்,
துன்றிய வினைகள் எல்லாம், சுடர் கண்ட இருளே போல,
தென் திசை வந்து, சேது தரிசிக்க, தீரும்’ என்றான். 23-16

ஆங்கது கேட்டு, அருந்ததியே அனையாளும், ‘அவதியுடன்
தீங்கு அணுகும் செய்ந் நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள்
தாங்க அரும் பாவங்களையும் எனக்காகத் தவிர்க்க’ என,
‘நீங்கிடுக அதுவும்’ என்றான்-நிலமடந்தை பொறை தீர்த்தான். 23-17

‘பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும்,
சீர் எழுவு திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க’ என,
கார் எழுவு திரு மேனிக் கண்ணன் நினைப்பின் படியே,
ஈர்-எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் எழுதினரால். 23-18

‘பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்ச மா பாதகமும்
சீர் மேவும் திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க’ எனா,
கார் மேவும் திரு மேனிக் காகுத்தன் கட்டுரைத்து,
வார் மேவும் முலைச் சனகி மாதோடும் வழிக்கொண்டான். 23-19

என்பன பலவும் அந்த ஏந்திழைக்கு இருந்து கூறி,
தன் பெருஞ் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும்
பொன் பொரு விமானம் தன் மேல் போகின்றபோது, மிக்க
இன்புடை இராமன் வேலைக்கு இப் புறத்து இழிந்து, என் செய்வான் 23-20

முன் பெல அரக்கன் தன்னை முனி கொலை தொடரக் கண்டு, ஆங்கு,
‘அன்பினால் அரி பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி,
துன்பமே தொடரும் பொல்லாச் சூழ் கொலை தொலையாது’ என்று ஆங்கு
இன்புறும் இராமன் வேலைக்கு இப் புறத்து இழிந்து நின்றான். 23-21

திருவணை உயர் பதம் செப்பி மீண்டபின்,
அருகு அணை திருமகட்கு, ஆங்கு மற்று உள
தரு அணை திரள் புயச் சனக வல்லிக்கு, ஆம்
கரு வரை முகில் நிற வண்ணன் காட்டுவான். 23-22

கப்பை எனும் கன்னியையும், கந்தனார் தாதையையும்,
அப்பொழுதே திருவணைக்குக் காவலராய் அங்கு இருத்தி,
செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,
ஒப்பு அரியாள் தன்னுடனே, உயர் சேனைக் கடலுடனே. 23-23

வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே,
வாய்ந்த சாய்கையும் வந்தது; வானவர் வணங்க,
ஏந்து தோள் புயத்து இராமனும், இலக்குவன் தானும்,
வாய்ந்த சீதையும், மானமும், வானர வேந்தும், 23-24

பாய்ந்த வேலையின் கரையிடைப் பரமன் அங்கு உறவே,
சாய்ந்த சாய்கையும் வந்து, அணுகாது அயல் கிடக்க,
ஏந்து திண் புயத்து இராமனும், இளையவன் தானும்,
வாய்ந்த சீதையும், சேனையும், மற்றுள பேரும், 23-25

நின்ற போதினில், நிகர் இலா அகத்தியன் முதலோர்
குன்றுபோல் புயத்து இராகவன் தனை வந்து குறுக,
“நன்று நின் வரவு” என்னவே, நாதனும் வணங்கி,
வென்றி வேந்தனும் வேதியர் தம்மொடு வியந்து, 23-26

சேதுவின் கரை சேர்ந்த அத் திறல் புனை இராமன்,
‘ஏது இத் தலம்?’ எனக் குறு முனிவனைக் கேட்ப,
‘வாத ராசனும் வாசுகிதானும் முன் மலைந்த
போது, தந்தது, இப் பொன் நகர்’ என்று அவன் புகன்றான். 23-27

புகன்றவன் தனைப் பூங் கழல் இராகவன் சாய்கை
அகன்ற காரணம் குறு முனி உரைசெய, அவனும்,
‘பகர்ந்த தேவரும், பாற்கடல் பள்ளியான், பரமன்,
புகுந்தது இவ் வழி; பூவில் வந்தவனும், மற்று யாரும், 23-28

‘இருப்பது இத் தலம்; ஆகையால், இராவணன் சாய்கை,
அருத்தி இன்றியே, அகன்றது’ என்று அருள் முனி அறைய,
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி,
‘கருத்து மற்று இனி உரை’ என, குறுமுனி கழறும்: 23-29

‘இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து,
உன் தன் மா நகர் எய்தினால், சாய்கை போம், உரவோய்!’
‘அந்த நீதியே செய்தும்’ என்று, அனுமனை அழைத்திட்டு,
‘எம் தம் நாதனை இமைப்பினில் கொடு வருக’ என்றான். 23-30

அந்த வேலை, முனிவன் அளி தெருள்
இந்த மா நிலத்து யாவரும் இன்புற,
‘கந்த மேவிய கங்கையில் ஓர் சிலை
தந்து காண்’ என, மாருதி தாவினான். 23-31

‘போதி’ என்று, அவற் போக்கிய இராமனும், இந்த
மாது சீதையும், மைந்தனாம் இலக்குவன் தானும்,
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி,
ஆதி நாதனும் இருந்தனன், அமரர்கள் வியப்ப, 23-32

ஆன போதினில், ஐயன் மனத்துளே
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார்?
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன்
மோனமாகி இருந்தனன், மூவரான். 23-33

காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே,
‘ஆலம் உண்ட தே இவர் ஆம்’ என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே. 23-34

‘முகுத்தம் ஆனதே’ என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண் மணல் கூப்பி,
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி,
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும். 23-35

ஒத்த பூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி,
சித்தம் வாழ்தர நின்றனன், தேவர்கள் துதிப்ப. 23-36

நின்ற போதினில், நிறங்களும் படலமும் கொண்டு,
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து,
‘நன்று செய்தனை!’ என்னப் போய் நாதனைப் பிடுங்கி,
வென்றி வால் அற்று, மேதினி வீழ்ந்தனன், வீரன். 23-37

[இந்தப் பாடல் காணும் இடத்தில், இதற்குப் பிரதியாக, பின்வரும் ஐந்து பாடல்கள் ஒரு பிரதியில் உள்ளன]

ஆய வேலையில், கங்கையின் அருஞ் சிலை வாங்கி,
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான்; தோன்றா,
சீயமாய் மலி அண்ணல் முன் திருச் சிலை வைத்து,
நேயமோடு இரு தாள் பணிந்து, அங்கு அவன் நின்றான். 23-37(அ)

நின்ற காலையில், அமலன் அங்கு அனுமனை நோக்கி,
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து, ‘நம் பூசை
சென்றது ஆதலின், திருச் சிலை தாழ்த்தது; இப் புளினக்
குன்றினால் சிவன் தன்னுருக் குறித்தனென், கோடி’. 23-37(ஆ)

என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட, இறைஞ்சி,
முன்னி மாருதி மொழிந்தனன்; ‘மூவுலகு உடையோய்!
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடைப் பிழையாது
அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை’ எனவே. 23-37(இ)

ஈர்த்தனன் வாலினாலே, இராகவன் பூசை கொள்ளும்
கூந்தனை; அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி
வார்த்த பேர் உருவம் கொள்ள, வால் விசைத்து, அனுமன் அந்த
மூர்த்தி என்று உணரான், நெஞ்சம் மூச்சு அற, தளர்ந்து வீழ்ந்தான் 23-37(ஈ)

மனுபரன் அனுமன் தன்னை வரவழைத்து, ஈசன் வன்மை-
தனை உரைத்து, ‘இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி,
முனம் அதை ஏத்தி, பின் இம் மூர்த்தியை ஏத்தும்’ என்ன,
அனைவரும் அமரர்தாமும் அம் முறை ஏத்தி நின்றார். 23-37(உ)

விழுந்தவன்தனை வெந் திறல் இராகவன் நோக்கி,
‘அழுந்து சிந்தையாய்! அறிவு இலாது அதனை என் செய்தாய்?
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி’ என்று உரைப்ப,
எழுந்து போய், அவன், இறைவனை அருச்சனை செய்தான். 23-38

அவ் இடத்து, ‘அனுமன் தந்த, கங்கைமேல்
வவ்விடப்படும் வந்திடுமான் சிலை
இவ் இடத்தினில் யாவரும் ஏத்து’ எனா,
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான். 23-39

‘எம்தன் நாதன் இவன்’ என்று இறைமகன்
தந்த நாமம் சராசரம் சார்ந்த போது,
இந்திரன், பிரமா, முதல் எய்தினார்;
வந்து, வானவர் யாவரும் வாழ்த்தினார். 23-40

‘இத் தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார்,
நத்து உலாய கை நாரணன், நான்முகன்,
பித்தன், மூவரும் ஏத்தப் பெறுக’ எனா. 23-41

என்று, இராகவன் ஈசன் பெருமையின்
நன்றிதன்னை நவில, அடங்குமோ?
சென்று சென்று, ‘செய செய! போற்றி!’ என்று,
அன்று இராச குமாரன் அறைகுவான்: 23-42

பூசனைத் தொழில் முடிந்தபின், பூங் கழல் இராமன்
தேவத் தச்சனை அழைத்து, ‘நீள் திரைக் கடல் கிடந்த
காவல் மா மலை கொணர்ந்து, நீ கண்ணுதல் கோயில்
பூவில் வந்தவன் சொல்வழிச் சமை’ எனப் புகன்றான். 23-43

நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே,
‘இந்த மா மலை இரும்’ என, யாவையும் நல்கி,
‘விந்தை தங்கிய தோளினீர்! வேந்தனைப் பூசித்து,
இந்த மா நகர் இரும்’ என, இராமனும் அகன்றான். 23-44

போன காலையில், பூங் கழல் இராகவன் பின்னே
சேனை தான் வர, தேவர்கள் யாவரும் வணங்கி,
மேல் நிலத்தவர் சென்றிட, விடை கொடுத்தருளி,
தானும், சீதையும், தம்பியும், சேதுவைச் சார்ந்தார். 23-45

தேர் ஏறி, மா நாகம் சென்னிமிசைச் சென்று ஏற,
கார் ஏறு கண்ணபிரான், காவலன் கமழ் துளபத்
தார் ஏறு தடந் தோளான், தனி வயிரக் குனி சிலைக் கைப்
போர் ஏறு, பொலிவுடனே வட திசையில் போயினனால். 23-46

சேர்ந்து, சேதுவின் தென் கரை கடந்து, வந்து எய்தி,
கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகிப்
போந்து, வானரப் புதுமையும் சனகிக்குப் புகன்று,
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன், திறலோன். 23-47

வரையலுற்றான், மலர்க் கரத்து இருந்த வன் சிலையால்,
திரையில் உற்றிட மரக்கலத் தொகுதிகள் செல்ல,
விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே;
உரை செய்து உற்றனன், சனகிக்குப் பின்னும் அங்கு உரவோன்: 23-48

‘நின்னை மீட்பதே நினைந்து, சில் நெறி எலாம் நீந்தி,
என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப,
சொன்ன வேற் படை அரக்கரைக் குறைத்த இச் சேனை
மன்னனால் பெற்ற வலி இது; வென்றியும் அதனால். 23-49

‘தேய்ந்த மா மதி போலும் சிலைநுதல்!
வாய்ந்த வானர வாரணம், மாருதி,
ஆய்ந்த மா மணி ஆழியை அன்றுதான்
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால். 24-1

‘மாருதி, நின்னை நாடி வருபவன், ஏறிப் பாயப்
பாரிடைக் குளித்து நின்ற பவள மால் வரையைப் பாராய்;
போரிடைப் பொலன் கொள் பொன் தார்ப் புரவிகள் போக்கு இற்று என்ன,
நீரிடைத் தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய்!’ 24-2

ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ஐய
வேரி அம் கமலை செப்பும்: ‘விரிந்த கிட்கிந்தை உள்ளார்,
சீரிய அயோத்தி சேரத் திருவுளம் செய்தி’ என்ன,
கார் நிற அண்ணல், ‘மானம் காசினி குறுக’ என்றான். 26-1

என்றவன் சேயை நோக்கி, இசைந்து, கிட்கிந்தை உள்ளார்,
நன்று நம் பதியைக் காண, நாயக! அழைத்தி’ என்ன,
சென்று அவன் சாம்பன் தன்னை, ‘திசை எட்டும் திரியச் சாற்றி,
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு’ என்றான். 27-1

என்றபோது, எழுந்து சாம்பன், இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு
ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான்; ஓதக் கேட்டே,
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்றென்ன,
மன்றல் அம் குழலினார்கள் துவன்றினர், மகிழ்ச்சி கூட, 27-2

சந்திர மானம் தன்மேல் தாரகை சூழ்ந்தது என்ன,
இந்திரன் மகனார் தாரத் தாரையும், ருமையும், கூடி
வந்தனர்; வந்து மொய்த்தார், வானர மடந்தைமார்கள்;
இந்திரை கொழுநன் தன்னை ஏத்தினர், இறைஞ்சி நின்றார். 29-1

நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழக் கடைந்தபோது, அங்கு
ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே,
தன்னுடன் பிறந்த முத்து மாலையை, தரையில் தோன்றி
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள், விரைவில் தாரை. 29-2

தாரையைச் சீதை புல்கி, ‘தாமரைக் கன்ணன் அம்பால்
பாரை விட்டு அகன்றான் வாலி; பார் உளோர்க்கு அவதி உண்டோ?
சீரிது மலரோன் செய்கை; தெரியுமோ? தெரியாது அன்றே?
ஆர் இது தெரியகிற்பார், காலத்தின் அளவை அம்மா?’ 29-3

என்றிட, தாரை நிற்க; எரி கதிர்க் கடகம் ஒன்று,
மின் திரிந்தனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன் ஈந்தது,
அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது, அன்று
சென்று அடி இணையில் இட்டே, இறைஞ்சியே, ருமையும் நின்றாள் 29-4

நின்றவள் தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று,
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்குச் சூழ,
தன் திருக் கைகளாலே தழுவினள் என்னக் கண்ணால்
ஒன்று அல பலவும் கூற, உணர்ந்து உளம் உவகை உற்றே. 29-5

‘கடி கமழ் குழலினாளே! கார்காலம் யாங்கள் வைகும்
வடிவுடைச் சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய்;
அடு திறல் பரிதி மைந்தன் நகர் அதன் அழகு பாராய்;
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய். 30-1

‘கனி வளர் பவளச் செவ் வாய்க் கனங் குழை! நின்னைக் காணாத்
துனி வளர் துன்பம் நீங்க, தோழமை நாங்கள் கொண்ட
பனி வளர் இருளை மாற்றும் பகல்வன் சேயும் யாமும்
நனி வளர் நட்புக் கொண்ட நலம் தரு நாகம் நோக்காய். 30-2

‘மாழை ஒண் கண்ணாய்! உன்னைப் பிரிந்து யான் வருந்தும் நாளில்,
தாழ்வு இலாத் துயரம் நீங்க, தாமரை உந்தியான் கை
ஆழி அம் ஆற்றலானை, அனுமனை, அரக்கர் அஞ்சும்
பாழியான் தன்னை, கண்ட பம்பையாறு அதனைப் பாராய். 30-3

‘பொய் வித்தி, வஞ்சம் காத்து, புலை விளைத்து, அறத்தைத் தின்றோன்
கை வித்தும் சாத்தினான் அக் கடல் பெரும் படையை எல்லாம்
நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து, நம்மை
உய்வித்த வீரன் தன்னைக் கண்ட இடம் உது கண்டாயே. 30-4

‘சவரியது இருக்கைதானும், கவந்தனைத் தடிந்த கானும்,
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும்,
சவையுறு சுருட்டன் மைந்தன், சரவங்கள், முதலோர் காதல்
கவை அறு முனிவர் தங்கள் இடங்களும் கருதி நோக்காய். 30-5

‘விரை கமழ் ஓதி மாதே! விராதன் வந்து எதிர்ந்து போர் செய்
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை அதனை நோக்காய்;
‘சரதம் நான் அரசு வேண்டேன்; தட முடி சூடுக’ என்று
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனைப் பாராய். 30-6

‘வளை பயில் தளிர்க் கை மாதே! வரு புனல் பெருகக் கண்டு,
துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி, யான் துயரம் இன்றி
விளை தரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப, வெல் போர்
இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனைப் பாராய். 30-7

‘பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை பாராய்;
கயல் பொரு கங்கை யாறும், குகன் உறை நகரும், காணாய்;
அயன் முதல் அமரர் போற்ற அனந்தன்மேல் ஆதிமூலம்
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியைத் தொழுது நோக்காய்.’ 30-8

என்று உரைத்து, இளவலோடு சனகியும், இரவிசேயும்,
வென்றி வீடணனும், சேனை வெள்ளமும் விளங்கித் தோன்ற,
பொன் திகழ் புட்பகத் தேர் பூதலத்து இழிய ஏவி,
இன் துணைப் பரத்துவாசன் இட வகை இழிந்தான் அன்றே. 30-9

என்று, மன்னவன் பற்பல புதுமையும் யாவும்
மன்றல் அம் குழல் சனகிக்குக் காட்டினன், மகிழ்ந்து,
குன்று துன்றிய நெறி பயில் குட திசைச் செவ்வே
சென்று, கங்கையின் திரு நதித் தென் கரை சேர்ந்தான். 35-1

ஆர்த்து விண்ணவர் ஆடினர்; ஆடகத் தேரும்
பேர்த்த போகினில் நிலமிசை அணுகுற, பெரியோர்க்கு
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து,
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான். 35-2

மான மானம் மீப்போனது, வட திசை வருவது
ஆன காலையில், அறிவனும் ஆயிழை அறிய,
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப,
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார். 35-3

‘பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை
ஆகும் ஈது’ என அறநெறி வழுவுறா அலங்கல்
மேக வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி,
தாகம் நீங்கினர்; அவ் இடைத் தேவரும் சார்ந்தார். 35-4

இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி,
வெறித் துழாய் முடி வேத மெய்ப் பொருளினை வியவா,
‘புறத்ததாம் உயிர் பெற்றனம்’ என அகம் பொங்க,
திறத்து இராமன்பால் திருமுனி அவனும் வந்துற்றான். 35-5

வந்த மா முனிவோர்களை வணங்கும் முன், அவர்கள்,
‘எந்தை! நீ இன்று இங்கு இருந்து, உள வருத்தமும் நீக்கி,
செந்து, நாளை அத் திருநகர் அடைக’ எனச் செப்பி,
உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார். 39-1

‘தகும் அருந் தவங்கள் ஈட்டி, தசமுகத்து அரக்கன் பெற்ற
யுகம் அரைக் கோடிகாறு ஏவல் செய்து உழலும் தேவர்
சுகம் உற, சிலை கைக் கொண்ட தொல் மறை அமல! யார்க்கும்
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி உண்டோ ?’ 41-1

இந்த வாசகம் இயம்பினன், பின்னரும் இசைப்பான்,
‘எந்தை! நீ இன்று இங்கு இருந்து உள வருந்தமும் போக்கி,
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க!’ என்று
அந்தம் இல் பரத்துவன் சொல, அவ் இடத்து அடைந்தான். 42-1

அடைந்த மா முனித் தலைவனை அருச்சனை செய்து,
மிடைந்த சேனை அம் பெருங் கடல் சூழ் தர, மேல் நாள்,
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி, வானவர்கள்
படிந்து போற்றிட இருந்தென, பரிவுடன் இருந்தான். 42-2

இருந்த போது, இராமன் தன்னை இருடியும் இயம்பும்: ‘எந்தாய்!
பெருந் திறல் இலங்கை தன்னை எங்ஙனம், பெரியோய்! நீயே
வருந்தினை, குரங்கு கொண்டு, மாய வல் அரக்கன் தன்னைத்
திருந்த அப் போரில் வென்று மீண்டவா செப்புக!’ என்றான். 42-3

இராகவன் அவனை நோக்கி, ‘இறந்த வாள் அரக்கர் எல்லாம்
அராவின் மாருதியும், மேன்மை வீடணன் தானும், ஆங்கே
குராவருஞ் சேனை எல்லாம் கொன்றிட, கொற்றம் கொண்டு
விராவியே மீண்டது’ என்று, மீளவும் பகரலுற்றான்: 42-4

‘தந்திரம் உற்ற சேனை தரைப்பட, மறுப்படாமல்
அந்தரம் உற்றபோது, அங்கு அரு மருந்து அனுமன் தந்தான்;
மந்திர வித்தே! எம்பி வரி சிலை வளைத்த போரில்
இந்திரசித்தும் பட்டான்; இலங்கையும் அழிந்தது அன்றே. 42-5

‘கறங்கு கால் செல்லா, வெய்ய கதிரவன் ஒளியும் காணா,
மறம் புகா, நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே;
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர்; தேரும் காலை,
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அப் பதியும், ஐயா! 42-6

‘மறக் கண், வெஞ் சினத்தின் வன்கண், வஞ்சக அரக்கர் யாரும்
இறக்க, மற்று இறந்தது எல்லாம் எம்பிதன் ஈட்டின், எந்தாய்!
பிறப்பு மேல் உளதோ? சூழ்ந்த பெருந் திசை பேரின், பேராத்
துறக்கத்தோ, யாதோ, பெற்றார்? அறிந்தருள், சுருதி நூலோய்!’ 42-7

என்ற வாசகம் இருந் தவன் கேட்டு, இகல் இராமன்
தன் துணைப் பெருந் தம்பியைத் தழுவி, ‘நீ தக்கோய்!
வென்று மீண்டிலை ஆயின, அவ் விண்ணவர் முனிவர்
பொன்றுமாறு அன்றி, ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ? 42-8

மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு, மறையோன்
பாதம் முந்துற வணங்கி, மா முனிவனைப் பாரா,
‘ஏதும் யான் செய்தது இல்லை; அவ் இலங்கைமேல் வெகுண்டு
வேத நாயகன் புருவத்தை நெரித்தனன்; விளிந்தார். 42-9

‘அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென்; அது அத்
துன்று தார் புனை மாருதி பெரும் புயத் துணையால்
வென்றி கொண்டனம், யாங்கள்; மேல் விளம்புவது எவனோ?’
என்று இயம்பினன், இருடிக்கும் இளவலும், இயைந்தே. 42-10

அனுமன் என்பவன் வாள்முகம் நோக்கினன்; அவனும்
புனித மாதவன் தனைத் தொழா, ‘புண்ணியப் பொருளாம்
தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன் தனயன்
எனும் அது என்கொலோ? யாவர்க்கும் தந்தை நீ’ என்றான். 42-11

அங்கு அவன் சொல, அனுமனும் உரைசெய்வான்: அருணப்
பங்கயந்தனில் சீதையாம் பராபரையாட்டி,
சங்கரன் அயன் தன்னையும் தரணி ஈர்-ஏழும்
தங்கு பொன் வயிற்று அன்னைதன் தன்மையை நிகழ்த்தும்: 42-12

‘இராகவன் பெருங் குலத்தையும், இப் பெருஞ் செல்வத்
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும், தந்து, என்
பராபரத்தினைப் பங்கயத்து அமுது எனப் பணிந்தாள்;
புராதனர்க்கு அரசே!’ என மாருதி புகன்றான். 42-13

அன்ன வாசகம் கேட்டலும், அந்தணர் கோவும்,
‘என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது, யாம்?’ என்று,
ஒன்றும் வாசகம் உரைத்திலன்; உள் அன்பு குளிர,
‘அன்னை வாசவன் திருவினைத் தந்தது’ என்று அறைந்தான். 42-14

பண் குலாவிய சுக்கிரீவன்தனைப் பாரா,
கண்குலா மனம் களித்தவன் கழல்மிசைப் பணிந்து,
மண்குலாம் புகழ் வீடணன், ‘நீலனே முதலாம்
எண்கின் வேந்தனும் அழித்தனர் இலங்கையை’ என்றான். 42-15

என்று அவன் இயம்பக் கேட்டு, அங்கு இருந்த மா தவனும், ‘இந்த
வென்றிஅம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மேவிக்
குன்று என வருக!’ என்று கூறலும், இமையோர் நாட்டில்
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து, ஆங்கு வந்தார் 42-16

பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண்
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து, இழிந்தார்;
ஆன மெய்ப்படை தம்முடைப் போகத்துள் அழுந்த,
ஆன கற்பினாளுடன் எழுந்து, இராமனும் அறைவான்: 42-17

முனிவன் வாள் முகம் நோக்கி, ‘மெய் முழுது உணர் முனியே!
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால்
நினையவும், உரை நிரப்பவும், அரிது; இனி, நீதிப்
புனித! உண்டி எம்முடன்’ எனப் புரவலன் புகன்றான். 42-18

என்ற வாசகம் கேட்டலும், இருந் தவத்து எவரும்,
‘நன்று, நாயகன் கருணை!’ என்று உவகையின் நவில,
துன்று தாரவன் பாதுகம் தொழுது, ‘அருந் தொல்லோய்!
ஒன்று கேள்’ என, உவகையின் மாருதி உரைக்கும்: 42-19

‘செய்த மா தவம் உடைமையின், நினக்கு அன்பு சிறந்து
பொய் இல் சாதனம் பூண்டனன்; புண்டரீகக் கண்
ஐய! நின் பெருங் கருணைதான் அடியனேற்கு அமையும்;
உய்யுமாறு இதின் வேறு உளதோ?’ என்று மொழிந்தான். 42-20

திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய, ஆண்டு
இருந்தபோது, தன் திருவுளத்து இராகவன் நினைந்தான்;
‘பொருந்த மா முடி புனைக!’ எனப் பொருந்துறான், போத
வருந்து தம்பிக்கு, ‘வருவென் யான்’ என்பதோர் வாக்கை. 42-21

‘சித்திரகூடம் தீர்ந்து, தென் திசைத் தீமை தீர்த்திட்டு
இத் திசை அடைந்து, எம் இல்லின் இறுத்தன்மை இறுதியாக,
வித்தக! மறந்திலேன் யான்; விருந்தினையாகி, எம்மோடு
இத் திறம் இருத்தி’ என்றான், மறைகளின் இறுதி கண்டான். 42-22

‘சுரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம் தணித்து, உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங் கண் வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென்; கேட்டி’ என்றான். 42-23

‘வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்;
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான். 42-24

இந்தியம் களைந்து, இருங் கனி காய் நுகர்ந்து, இவுளிப்
பந்தி வந்த புல் பாயலான்; பழம் பதி புகாது,
நந்தியம்பதி இருந்தனன், பரதன் – நின் நாமம்
அந்தியும், பகல் அதனினும், மறப்பிலன் ஆகி.’ 42-25

முனிவன் இம் மொழி கூறலும், முது மறைப் பெருமான் –
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும்
மனம் நெகிழ்ந்து, இரு கண்கள் நீர் வார, அங்கு அமலன்
நினைவின் முந்துறும் மாருதிக்கு, இனையன நிகழ்த்தும்: 42-26

என்று உரைத்து, ‘அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும், குல வரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும், இறுத்த வீர!
நின் தனைப் பிரிந்தது உண்டே, யான்’ என நிகழ்த்தினானால். 42-27

‘மின்னை ஏய் உமையினானும், விரை மலர்த் தவிசினானும்,
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி, உன் தன் அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை’ என்றான் 42-28

அவ் உரை புகலக் கேட்ட அறிவனும், அருளின் நோக்கி,
‘வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன்; கேட்டி, வேண்டிற்று
எவ் வரம் எனினும்; தந்தேன்; இயம்புதி’ எனலும், ஐயன்,
‘கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க.’ 42-29

‘”அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று, கிழங்கொடு கனி காய் துன்றி,
விரி புனல் செழுந் தேன் மிக்கு, விளங்குக!” என்று இயம்புக’ என்றான்;
புரியும் மா தவனும், ‘அஃதே ஆக!’ எனப் புகன்றிட்டானால். 42-30

அருந்தவன், ‘ஐய! நின்னோடு அனிக வெஞ் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென்’ என்னா, விளங்கும் முத் தீயின் நாப்பண்,
புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து, புறப்படும் அளவில், போகம்
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே. 42-31

அன்று அவர் தம்மை நோக்கி, அந்த மாதவனும், ‘இந்த
வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மற்றும்
குன்றினில் அருளும்’ என்று கூறலும், வான நாட்டுள்
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து, ஒருங்கு வந்தார். 42-32

அரைசரே ஆதியாக, அடியவர் அந்தமாக,
கரைசெயல் அரிய போகம் துய்க்குமா கண்டு, இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி, அறு சுவை அமைக்கும் வேலை,
விரை செறி கமலக் கண்ணன் அனுமனை விளித்துச் சொன்னான்: 42-33

மாருதி விடைகொண்டு ஏக, வரதனும் மறையோன் பாதம்
ஆர் அருளோடு நீட வணங்கினான்; அவனும் ஆசி
சீரிது கூறி, ‘சேறி’ என்றலும், மானம் சேர்ந்து,
போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து போனான். 44-1

‘மான் நேர் விழியாளுடனே வனம் முன்
போனான் ஒரு நாள்; வரும் நாள் இலதோ?
தேனே! அமுதே! தெளிவே! தெளிவின்
ஊனே! உயிரே! உலகு ஆளுடையாய்! 44-2

‘அம் பவளச் செவ்வாய், அணி கடகச் சேவகன்,
வம்பு அவிழும் சோலைக் கோசல நாடுடை வள்ளல்,
எம் பெருமான், என்னை, இழி குணத்து நாயேனை,
‘தம்பி’ என உரைத்த தாசரதி தோன்றானோ! 44-3

வாழி மலைத் திண் தோள் சனகன் தன் மா மயிலை,
ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை,
“தாழ்வு இல் பெருங் குணத்தாள்தான் உன் கொழுந்தி; நீ
தோழன்” என உரைத்த தோன்றலார் தோன்றாரோ!’ 44-4

‘துங்க வில் கரத் தோளினார் சொன்ன நாள்,
இங்கு வந்திலர்; யான் இறப்பேன்’ எனா,
மங்கைமாரும் படையும் வன் சுற்றமும்
அங்கு நீர்க் கங்கை அம்பியில் ஏற்றினான். 44-5

‘வேத நாதனும், வில்லியும், விரை மலர்த் திருவும்,
ஏது செய்யினும், என் உயிர் முடிப்பென்’ என்று எண்ணி,
ஓத நீரிடை ஓடம் அது உடைத்து, உயிர் விடுவான்,
காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான். 44-6

‘கண்ணும் தோளும் வலம் துடிக்கும்; கரை
வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே,’
எண்ணும் காலையிலே, எழில் மாருதி,
‘அண்ணல் வந்தனன்’ என்று உரையாடினான். 44-7

உள்ள வான் கிளை ஏற்றி, உயர் குகன்
வெள்ளக் கங்கையின் ஆக்கி, விரைந்து, அவண்
உள்ளும் நெற்றி உடைப்பளவில், புகும்
வள்ளலார் விடும் மாருதி தோன்றினான். 44-8

ஓங்கு வாலினை ஓட்டி, அவ் ஓடங்கள்
தீங்கு உறாவகைச் சுற்றி, திருகி, நீர்
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான்; அவை
தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால். 44-9

‘கை ஆர் வெய்ய சிலைக் கருணாகரற்குக் காதலுடைத் தோழ-
மை ஆர், சிருங்கவேபுரம் உடையாய்! மிகு கோசலை களிறு,
மை ஆர் நிறத்தான், வந்தொழிந்தான், மிதிலை வல்லி அவளுடனே;
ஐயா! வந்தான் தம்பியொடும்; அடியேம் உய்ய, வந்தானே. 44-10

‘ஆர்? உனை உரை’ என, அனுமன் கூறுவான்:
‘சீரிய வாயுவின் தோன்றல்; சீரியோய்!
குருடை இராமற்குத் தூதன்’ என்று எனது
ஏருடைத் தலையின் மேல் எழுதப்பட்டுளேன். 44-11

பரதனைத் தீயையும் விலக்கி, பாருடை
வரதனை, இராமனை, மாறிக் காண்பது
சரதமே; இனி இறை தாழ்க்க ஒணாது’ என,
கரதலத்து ஆழியும் காட்டிப் போயினான். 44-12

பரத்துவன் வருதலும், பரிந்து, இராமனும்
கரத்துணை குவித்தனன், இளைய காளையோடு,
எரித் திற முனியும் ஆசிகள் இயம்பிட,
விருப்பொடும் இடவகை இனிது மேயினான். 84-1

நின்றவன், ‘இவ் வயின் நெடியவன் தனைச்
சென்று இறைப் பொழுதினில் கொணர்வென், சென்று’ எனா,
பொன் திணி பொலங் கழல் வணங்கிப் போயினான்,
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான். 102-1

ஆய காலையில், ஐயனைக் கொண்டு, தன்
தூய காவின் உறைவு இடம் துன்னினான்;
‘மேய சேனைக்கு அமைப்பென் விருந்து’ எனா,
தீயின் ஆகுதி செங் கையின் ஓக்கினான். 102-2

பான நெய்யொடு, நானமும், சாந்தமும், பலவும்,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய், கருப்பூரம்,
தேன் அளாவிய முக்கனி காயொடு தேன், பால்,
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார். 102-3

கங்கை தரு கழலாற்கும், இளவலுக்கும், காரிகைக்கும்,
துங்க முடி வீடணற்கும், சுக்கிரிவப் பெருமாற்கும்,
தங்கு பெருஞ் சேனைக்கும், தனித்தனியே, பொன் கலந்தால்
அங்கு அடைவின் மண்டலம் இட்டு, அணி விளங்க நிறைத்தனரால் 102-4

வெள்ளை நறும் போனகமும், மிகு பருப்பும், பொரிக் கறியும்,
தள்ள அரிய முக்கனியும், சருக்கரையும், நறு நெய்யும்,
எள்ள அரிய பலவிதத்துக் கறியமுதும், இமையவர்தம்
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை படைத்தனரால் 102-5

நீர் உலவி, நீர் குடித்து, நினைந்திருந்து, ஆகுதி பண்ணி,
கார் உலவு மேனியனும், காரிகையும், இளங் கோவும்,
தேர் இரவி திருமகனும், தென் இலங்கைப் பெருமானும்,
போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர், பொலிவால். 102-6

அக் கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத்
திக்குறு மானத்தைச் செவ்வன் எய்தி, அச்
சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்;
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான். 102-7

‘உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அப்
பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன்,
திருப்பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின, உலகம் யாவையும், 102-8

‘தீவினை யாம் பல செய்ய, தீர்வு இலா
வீவினை முறை முறை விளைவ, மெய்ம்மையாய்!
நீ அவை துடைத்து நின்று, அழிக்க நேர்ந்தனை;
ஆயினும், அன்பினால் யாம் செய் மா தவம்’ 102-9

என்று உரைத்து, அனுமனை இறுகப் புல்லினான்;
ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், எந்தைக்கும்,
இன் துணைத் தம்பிக்கும், யாய்க்கும்?’ என்றனன் –
குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். 102-10

‘இரவி காதலன், இலங்கையர் கோன், இவர் உதவி
அரசின் ஆசையது என்னலாம்; அனுமனே! என்பால்
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு
தருவது ஒன்று இலை, உடன் உணும் தரமது அல்லால்.’ 102-11

[இதன்பின் 42-18, 19, 20 எண்ணுள்ள பாடல்கள் உள்ளன].

‘கொற்றவன் உடன் உண்ணுமோ?-கோது இல் மாதவனே!
வெற்றி வீரனே!’ என அஞ்சி நின்றனன்; விமலன்
மற்றப் போனகம் ஒரு கை வாய் வைத்தபின், வாராப்
பற்றி, அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான். 102-12

பரிகலத்து அமுது ஏந்தியே, பந்திகள் தோறும்
இரவி காதலற்கு, அங்கதற்கு, இலங்கையர் வேந்தற்கு,
உரிய வீரர்கட்கு அளித்து, தான் அவர்கள் ஓபாதி
வரிசையால் உண்ண, மா முனி விருந்தும் உண்டனரால். 102-13

பரிகலத்து ஒ(வ்)வோர் பிடிகொடு, பந்திகள் தோறும்
இரவி புத்திரற்கு, இலங்கையர் வேந்துக்கும் உதவி,
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி, பின், அவனும்
வரிசையின் கொண்டு, மா முனி விருந்தும் உண்டனனால். 102-13(அ)

அன்ன காலையில் போனகம் அமரர் பொற்கலத்தே
முன்னம் போல் படைத்து, திருமுன்பு வைத்தனரால்;
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும், பசி தீரா
மன்னன் மா முனி விருந்தும் உண்டு, அகம் மகிழ்ந்தனனால். 102-14

பான நல் அமுதுடன் கருப்பூரமும், பலவும்,
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி, முன் நிற்ப,
தான மெய்ப் படைத் தம்முடைப் போகத்துள் தந்த
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான். 102-15

அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர்-
வண்ணனே முதல் வானரக் கடல் எலாம் வாய்ப் பெய்து,
உண்ணும் வாசகம் கேட்டு, இமையோர், முனிவோரும்,
மண்ணும், நாகரும் யாவரும், அருந்துயர் மறந்தார். 102-16

மான வேந்தரும் வள்ளலும் மலர்க் கரம் விளக்கி,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி,
ஞான மா முனி பெருமையைப் புகழ்ந்து, நாயகனும்
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து, 102-17

ஆர் இருள் அகலும் காலை, அமலனும், மறையோன் பாதம்,
ஆர்வமோடு எழுந்து சென்று, வணங்கலும், அவனும் ஆசி
சீரிது கூறி, ‘சேறி’ என்றலும், தேர்மேல் கொண்டு,
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து சென்றான். 102-18

விருந்தும் உண்டு, மா முனிவனை விடைகொண்டு, தேர்மேல்
அருந்ததிக் கற்பினாளொடும் படையொடும் அமைந்தான்;
வருந்து கோசல நாடுடன் அயோத்தியும் வாழ,
பரிந்து, இராமனும் ஏகினன், பரதனைக் காண்பான். 102-19

இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான் அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ, சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான். 102-20

இளவலை, ‘”அண்ணலுக்கு எதிர் கொண்ம்” என்று, நம்
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை,
“கிளையொடும் ஏகு” எனக் கிளத்தி, எங்கணும்
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய்’ என்றான். 102-21

‘”தோரணம் நட்டு, மேல் துகில் பொதிந்து, நல்
பூரணப் பொற் குடம் பொலிய வைத்து, நீள்
வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்
சீர் அணி அணிக!” எனச் செப்புவாய்’ என்றான். 102-22

பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம் பொன் நீள்
சிரத் தொகை மதில் புறத்து இறுதி சேர்தர,
வரத் தகு தரள மென் பந்தர் வைத்து, வான்
புரத்தையும் புதுக்குமா புகறி, போய்’ என்றான். 102-23

என்றலும், அவன் அடி இறைஞ்சி எய்தி, அக்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினான்,
நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன்
தன் துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான். 102-24

அவ் உரை கேட்டலும், அறிவின் வேலையான்,
கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான்,
‘வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று, அறை பறை எற்றுக!’ என்றிட, 102-25

‘வானையும் திசையும் கடந்த வான் புகழ்க்
கோனை இன்று எதிர்கொள்வான், கோல மா நகர்த்
தானையும் அரசரும் எழுகதான்’ எனா,
யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார். 102-26

முரசு ஒலி கேட்டலும், முழங்கு மா நகர்
அரசரும் மாந்தரும் அந்தணாளரும்,
கரை செயல் அரியது ஓர் உவகை கைதர,
திரை செறி கடல் என, எழுந்து சென்றவால். 102-27

‘அனகனை எதிர்கொள்க’ என்று அறைந்த பேரி நல்
கனகம் நல் கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்,
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய
வனை கடிப் பேரியும், ஒத்த ஆம் அரோ. 102-28

அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும், ஏனை வேந்தரும்
செறி நகர் மாந்தரும், தெரிவைமார்களும்,
உறுபொருள் எதிர்ந்தென, உவந்து போயினார். 102-29

அன்னையர் மூவரும், அமரர் போற்றிட,
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்,
தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர,
மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா. 102-30

திருவடி இரண்டுமே செம் பொன் மௌவியா,
இரு புறம் சாமரை இரட்ட, ஏழ் கடல்
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ,
பொரு அரு வெண்குடை நிழற்ற, போயினான். 102-31

எல்லவன் மறைந்தனன் – என்னை ஆளுடை
வில்லியை எதிர் கொள, பரதன் மீச் செல்வான்,
அல்லி அம் கமலமே அனைய தாள்களில்
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே. 102-32

அவ் வழி மாருதி அம் கை பற்றிய
செவ் வழி உள்ளத்தான், ‘திருவின் நாயகன்,
எவ் வழி உறைந்தது? அச் செயல் எலாம் விரித்து,
இவ் வழி எமக்கு நீ இயம்புவாய்’ என்றான். 102-33

என்றலும், மாருதி வணங்கி, ‘எம்பிரான்,
மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மா நகர்
நின்றதும், மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும், நாயினேன் செப்பல் வேண்டுமோ?’ 102-34

சித்திரகூடத்தைத் தீர்ந்த பின், சிரம்
பத்து உடையவனுடன் விளைந்த பண்பு எலாம்,
இத் தலை அடைந்ததும், இறுதி ஆய, போர்
வித்தகத் தூதனும் விரிக்கும் சிந்தையான். 102-35

‘குன்று உறழ் வரி சிலைக் குரிசில், எம்பிரான்
தென் திசைச் சித்திரகூடம் தீர்ந்தபின்,
வன் திறல் விராதனை மடித்து, மா தவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான். 102-36

‘ஆங்கு உறை தபோதனர், “அரக்கர்க்கு ஆற்றலேம்,
நீங்கினம் தவத்துறை, நீதியோய்!” என,
‘நீங்கு செய்பவர்களைச் செகுத்தல் திண்ணம்; நீர்
வாங்குமின் மனத் துயர், வாய்மையால்’ என்றான். 102-37

‘ஆறு நால் ஆண்டு அவண் வைகி, அப் புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலாத் தமிழ் முனி வனத்தை நண்ணினான்,
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர. 102-38

‘குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடங் கணான் தனை எதிர் தழுவி, சாபமும்,
கடுங் கணைப் புட்டிலும், கவசம் தானும், அத்
திடம் படு சுரிகையும், சேர ஈந்தனன். 102-39

‘அப் புறத்து எருவையின் அரசைக் கண்ணுறா,
துப்பு உறச் சிவந்த வாய்த் தோகை தன்னுடன்
மெய்ப் புகழ்த் தம்பியும் வீரன்தானும் போய்,
மைப் பொழில் உறு பஞ்சவடியின் வைகினார். 102-40

‘பல் பகல் இறந்த பின்றை, பாதக அரக்கி தோன்றி,
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி, இளைய வீரன்
அல்கிய திருவைத் தேற்றி, அவளுடைச் செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான்; மறித்து, அவள் கரற்குச் சொன்னாள் 102-41

‘கரனொடு திரிசிராவும், கடிய தூடணனும், காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார், எழுந்து, வெஞ் சேனையோடும்
விரவினர்; ஐயன் செங் கை வில்லினை நோக்கும் முன்பு, ஓர்
எரி தவழ் பஞ்சின் உக்கார்; அரக்கியும், இலங்கை புக்காள். 102-42

‘இருபது தடக் கையான் மாட்டு இசைத்தலும், எழுந்து பொங்கி,
ஒருபது திசையும் உட்க, வஞ்சக உழை ஒன்று ஏவி,
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு,
திருவினை நிலத்தொடு ஏந்தி, தென் திசை இலங்கை புக்கான் 102-43

‘போகின்ற காலை, ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறை அதனில் வைத்தான்;
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன்-கொன்று, இளவலோடு,
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையைப் பரிவின் கண்டான். 102-44

‘அன்னவன் தனக்கு வேண்டும் அருங் கடன் முறையின் ஆற்றி,
நன்னுதல் தன்னைத் தேடித் தென் திசை நடக்கும் ஐயன்,
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி,
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான். 102-45

‘ஆங்கு அவள் தனது சொல்லால், அருக்கன் மா மகனை அண்மி,
பாங்குற நட்டு, “வாலி பருவரல் கெடுப்பல்” என்னா,
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு,
ஆங்கு அவன் தனக்குச் செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் 102-46

‘கால மா மாரி நீங்க, கயவனோடு இடபன், காந்து
நீலன், மா மயிந்தன், சாம்பன், சதவலி, பனசன், நீடு
வாலி மா மைந்தன், என்று இவ் வானரத் தலைவரோடு
கூல வான் சேனை சூழ, அடைந்தனன், எங்கள் கோமான். 102-47

‘எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி,
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி, அருக்கன் மைந்தன்,
தழுவிய திசைகள் தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீளப் போக்கினன், திருவை நாடி. 102-48

‘தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும், வாலி சேயும்
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ, நாயேன்
குன்றிடை இலங்கை புக்கு, திருவினைக் குறித்து மீண்ட
பின்றை வந்து, அளக்கர் வேலைப் பெரும் படை இறுத்தது அன்றே 102-49

‘அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன், அலங்கல் தோளான்,
செறி புயந்து அரக்கன் தம்பி, “திருவினை விடுதி; அன்றேல்,
இறுதி உற்றன, நின் வாணாள்” என அவன் உரைப்ப, சீறிக்
கறுவுற, பெயர்ந்து போந்து, கருணையான் சரணம் பூண்டான். 102-50

‘ஆங்கு அவற்கு அவயம் நல்கி, அரசொடு, முடியும் ஈந்து,
பாங்கினால் வருணன் தன்னை அழைத்திட, பதைப்பு இலாது
தாங்கினன் சிறிது போது, தாமரை நயனஞ் சேப்ப,
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே. 102-51

‘மற்று அவன் அவயம் என்ன, மலர்ச் சரண் அடைந்த வேலை,
வெற்றி வானரர்கள் பொங்கி, வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி, மொய் ஒளி இலங்கை புக்கு,
பற்றினர் சுற்றி ஆர்த்தார், வானவர் பயங்கள் தீர்ந்தார். 102-52

‘மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்,
தலை ஒரு பத்தும் சிந்தி, தம்பிதன் தோளும் தாளும்
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் நிலத்து வீழ,
சிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்ந்தான் 102-53

‘இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்க அரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்;
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள் தோறும் உடற் குறை ஆடல் கண்டார். 102-54

‘தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகுளோரும், முறை முறை தொழுது மொய்ப்ப,
பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி, “மாண்டோ ர்க்கு இயற்றுதி கடன்கள்” என்றான் 102-55

‘”ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் முதலோர்க்கு எல்லாம்
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன்; அவனுக்கு இன்னே
சூடுக மௌலி” என்ன, சுந்தர இராமன் தம்பி
மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து விட்டான். 102-56

‘நான்முகன், விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்,
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற,
ஊன்முகம் கெழுவு வேலாய்! உம்பர் நாயகியைச் சீறி,
தேன் முகம் மலரும் தாரான், அரி சொல, சீற்றம் தீர்ந்தான். 102-57

‘மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்கோன் விமானத்தை எய்த,
ஐயனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ,
கையினால் பொருந்தப் புல்லி, கண்ணின் நீர்க் கலசம் ஆட்டி,
“செய்யவட்கு அருள்க” என்றான்; திருவின் நாயகனும் கொண்டான் 102-58

‘”என்னை நன் கருணைதன்னால் ஈன்று எடுத்து, இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல் ஆக” என, அருளின் ஈந்து,
மன்னவன் போய பின்றை, வானரம் வாழ்வு கூர,
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கிப் போனார். 102-59

‘வெள்ளம் ஓர் ஏழு பத்தும், விலங்க அரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும், ஒற்றை ஆழி
வள்ளல் தன் மகனும், உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் –
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன், இலங்கை வேந்தன். 102-60

‘ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து, காதல்
சூரியன் மகனும், தொல்லைத் துணைவரும், இலங்கை வேந்தும்,
பேர் இயல் படையும், சூழ, பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறி, பரத்துவன் இருக்கை சேர்ந்தான். 102-61

‘அன்பினால் என்னை, நின்பால் ஆழியும் காட்டி, “ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி” என்று துரந்தனன், தோன்றல்’ என்று,
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் – முது நீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன். 102-62

காலின் மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர,
‘வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட
நீல மா முகில் பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன்,
போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழ் உடைத்து, அடிமை மன்னோ’ 102-63

என்று அவன் இரங்கி ஏங்கி, இரு கணும் அருவி சோர,
வன் திறல் அனுமன் செங் கை வலக் கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளினூடு, செறி புனல் கங்கை சேர்ந்தான்,
குன்றினை வலஞ்செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர் 102-64

இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான், அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவின் தையலும், மகிழ சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான். 102-65

காலை வந்து இறுத்த பின்னர், கடன் முறை கமலக் கண்ணன்
கோல நீள் கழல்கள் ஏத்தி, குரக்கினத்து அரசை நோக்கி,
‘சாலவும் கலைகள் வல்லோய்! தவறு உண்டு போலும், வாய்மை;
மூலமே உணரின், உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ ? 102-66

‘எழுபது வெள்ளம் சேனை வானரர், இலங்கை வேந்தன்
முழு முதல் சேனை வெள்ளம், கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ?
விழுமிது, “எம்பிரான் வந்தான்” என்று உரைத்தது, வீர!’ என்றான் 102-67

‘ஓசனை இரண்டு உண்டு அன்றே, பரத்துவன் உறையும் சோலை;
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம் கோன் எங்கு உளன், பெரும!’ என்றான் 102-68

பரதன் அஃது உரைத்தலோடும், பணிந்து மாருதியும், ‘சீர் சால்
விரத மா தவத்து மிக்கோய்! விண்ணவர் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித் துயின்றது, தானை எல்லாம். 102-69

‘வானவர் கொடுக்க வந்த வரத்தினால், மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துக்
கானகம் பொலிதலாலே, கவிக் குலம் அவற்றை மாந்தி,
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும்; நீ துயரல், எந்தாய்! 102-70

‘இனி ஒரு கணத்தின், எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டுப்
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி’ என்று உரைத்தான்; இப்பால்,
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன், வண்ணக்
குனி சிலைக் குரிசில், செய்தது இற்று எனக் குணிக்கலுற்றாம்: 102-71

அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப, ஐயன்
கருந் தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும்,
விருந்து இனிது அருந்தி, நின்ற வேலையின், வேலை போலும்
பெருந் தடந் தானையோடும், கிராதர் கோன் பெயர்ந்து வந்தான் 102-72

தொழுதனன்; மனமும் கண்ணும் துளங்கினன்; சூழ ஓடி
அழுதனன்; கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான்;
தழுவினன் எடுத்து, மார்பில் தம்பியைத் தழுவுமாபோல்;
‘வழு இலா வலியர் அன்றோ, மக்களும் மனையும்?’ என்றான். 102-73

‘அருள் உனது உளது, நாயேற்கு; அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ, வாழ்வு மன்னோ?’ 102-74

ஆயன பிறவும் பன்னி, அழுங்குவான் தன்னை, ‘ஐய!
நீ இவை உரைப்பது என்னே; பரதனின் நீ வேறு உண்டோ?
போய், இனிது இருத்தி’ என்ன, புளிஞர் கோன் இளவல் பொன் தாள்
மேயினன் வணங்கி, அன்னை விரை மலர்த் தாளின் வீழ்ந்தான். 102-75

தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள் தமையும் நோக்கி,
முழ்து உணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; “முழு நீர்க் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்;
வழுவு இலா எயினர் வேந்தன்; குகன் எனும் வள்ளல் என்பான்.’ 102-76

அண்ணல் அஃது உரைத்தலோடும், அரி குலத்து அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிது உறத் தழுவி, நட்டார்;
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல,
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன், இரவி என்பான் 102-77

அலங்கல் அம் தொடையினானும், அந்தியின் கடன்கள் ஆற்றி,
பொலங் குழை மயிலினோடு துயிலுற, புணரி போலும்
இலங்கிய சேனை சூழ, இளவலும் எயினர் கோனும்,
கலங்கலர் காத்து நின்றார்; கதிரவன் உதயம் செய்தான். 102-78

கதிரவன் உதிப்ப, காலைக் கடன் கழித்து, இளவலோடும்
அதிர் பொலன் கழலினான் அவ் அருந் தவன் தன்னை ஏத்தி,
விதி தரு விமானம் மேவி, விளங்கிழையோடும், கொற்றம்
முதிர் தரு துணைவரோடும், முனி மனம் தொடரப் போனான். 102-79

தாவி வான் படர்ந்து மானம் தடையிலாது ஏகும் வேலை,
தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவ்வி
ஓவியம் உயிர் பெற்றென்ன உம்பர்கோன் நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே. 102-80

பொன் மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற,
நன் மதிக் கிழவர்தம்மை நோக்கிய ஞான மூர்த்தி,
‘சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று’
என்னலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சி நின்றார். 102-81

தோன்றலும், சுமந்திரன் தொழுத கையினன்,
ஈன்று, காத்து, அழித்து, அவை இயற்றும் அவ் உரு
மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல்
சான்றினைப் பரதற்குச் சுட்டி, சாற்றுவான். 103-1

கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப, முன்பு தாம்
பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன், மானவன்-தொழுதல் உன்னியே,
விட்டனன் மாருதி கரத்தை, மேன்மையான். 107-1

[இதன் பின் சில பிரதிகளில் 102-7, 8, 9, 10 பாடல்கள் உள்ளன]

அப்பொழுது அவ் வயின் அடந்துளோர்களைத்
‘தப்பு அறக் காண்பென்’ என்று ஐயன் தன் மனத்து
ஒப்பு அற எண்ணும் முன், உம்பர் நாடு வந்து
இப் புறத்து இழிந்தென இழிந்த, மானமும். 111-1

அவ் வயின், ‘அயோத்தி வைகும் சனமொடும், அக்குரோணி
தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும், தாயரோடும், இவ் வயின் அடைந்துளோரைக் காண்பென்’ என்று இராமன் உன்ன,
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது, விமானம் தானும். 110-2

எவ் வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய
செவ்விய புட்பகம் நிலத்தை சேர்தலும்
அவ் அவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் 110-3

அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி, அருளின் வேலை-
தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பிமாரும்
புனையும் நூல் முனிவன் தானும், பொன் அணி விமானத்து ஏற,
வனை கழல் குரிசில் முந்தி, மாதவன் தாளில் வீழ்ந்தான். 115-1

எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி கூறி
அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, அன்பு கூர்ந்து,
விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ,
வடித்த நூல் முனியும் ஏந்தி, வாழ்த்தினான், ஆசி கூறி. 115-2

கைகான் தனயை முந்தக் கால் உறப் பணிந்து, மற்றை
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங் கண்
ஐயனை, அவர்கள் தாமும் அன்புறத் தழுவி, தம் தம்
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார். 115-3

அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்;
தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர்தங்கள்
பொன் அடித் தலத்தில் வீழ, தாயரும் பொருந்தப் புல்லி,
‘மன்னவற்கு இளவல் நீயே; வாழி!’ என்று ஆசி சொன்னார். 115-4

நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின் மலன்
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர,
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்;
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி, எய்தினான். 118-1

ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிதறி ஓட,
தாள்தொடு தடக் கை ஆரத் தழுவினன் -‘தனிமை நீங்கி,
காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
நாடு மறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது?’ என்று உலகம் நைய 118-2

மூவர்க்கும் இளைய வள்ளல், முடிமிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும், செறி கழல் இளவல் தாளும்,
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் பொருந்தப் புல்லி,
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித் தலத்து வீழ்ந்தான். 118-3

ஆயிடைக் குகனும் வந்து, ஆங்கு, ஆண்டவன் அடியில் வீழ,
நாயகன் உவந்து புல்லி, ‘நண்ணி, என் பின்பு வந்த
தூயனே! கிளையினோடும் சுகம் இருந்தனையோ?’ என்று
வாயிடை மொழிந்தான்,-மற்றை மறைகளும் காணா அண்ணல். 119-1

குரக்கினத்து அரசை, சேயை, குமுதனை, சாம்பன் தன்னை,
செருக்கிளர் நீலன் தன்னை, மற்றும் அத் திறத்தினோரை,
அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி,
மருக் கமழ் தொடையல் மாலை மார்பினன், பரதன் நின்றான். 119-2

மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு தானைத்
தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும்
சிந்துரக் களிறு போல்வார் எவரொடும், சேனையோடும்,
சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன் தோன்றினானால். 119-3

அழுகையும் உவகைதானும் தனித்தனி அமர் செய்து ஏற,
தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன் நிற்றலோடும்,
தழுவினன் இராமன்; மற்றைத் தம்பியும் அனைய நீரான்,
‘வழு இனி உளது அன்று, இந்த மா நிலக் கிழத்திக்கு’ என்றான் 119-4

வேறு வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி
கூறிய குழுவினோரும் குழுமி, அங்கு இராமன் பாதம்,
ஊறிய உவகை தூண்ட, தொழுதனர்; உவந்த பின்பு
தேறிய கமலக் கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான். 119-5

‘ஏறுக சேனை எல்லாம் விமான மீது’ என்று, தன்போல்
மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே. 119-6

‘உரைசெயின், உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா,
கரை செயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா,
விரை செறி அலங்கள் மாலைப் புட்பக விமானம்’ என்று என்று,
உரை செய்து, வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார். 119-7

அசனியின் குழுவும், ஆழி ஏழும் ஒத்து ஆர்த்ததென்ன,
விசையுறு முரசும், வேதத்து ஓதையும், விளி கொள் சங்கும்,
இசையுறு குரலும், ஏத்தின் அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த. 119-8

நம்பியும் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி,
‘வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென்’ என்று விம்மும்
கொம்பு இயல் மருங்குல் தெய்வக் கோசலை குளிர் பொன் பாதம்
தம்பியரோடும் தாழ்ந்தான், தாமரைக் கண்ணீர் தாழ. 119-9

மூன்று என நின்ற தன்மைக் குணங்களின் உயிர்கட்கு எல்லாம்
சான்று என நின்ற மானச் சிறுவனைத் தலைப்பட்டாட்குத்
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ?
ஈன்ற போது ஒத்தது அன்றே, எதிர்ந்த போது ஒத்த தன்மை! 119-10

இணை மலர்த் தாளின் வீழ்ந்த இலக்குவன் தன்னை ஏந்தி,
பணை முலைப் பாலும், கண்ணீர்த் தாரையும் பாய, நின்றாள்;
பிணை எனத் தகைய நோக்கின் சீதையை, பேடை அன்னத்
துணையினை, உலகில் கற்பின் பெருங் கதித் துறையை, கண்டாள் 119-11

நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி, விம்மி,
பால் முலை சோர நின்ற பல் பெருந் தவத்தினாளை,
கால் முதல் தொழுது, தங்கள் கட்டு இரும் பாவம் விட்டார்,
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம். 119-12

அவ் வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி நோக்கி,
செவ்வையின் படரல் உற்ற, செகதல மடந்தையோடும்;
இவ் உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான்,
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே. 119-13

வளம் கெழு கயிலை ஈசன், மலர் அயன், மறைகள் நான்கும்,
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து, உயர் வெளிப் பாழ் மேலாய்,
விளங்குறும் நேமிப் புத்தேள் மேவும் மா அயோத்தி கண்டார். 119-14

விளங்கிய புட்பகம் நிலத்தின் மீது உற,
தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட,
களங்கணி அனைய அக் கண்ணன் மாதொடும்
விளங்கினன் நகரிடை, விளைவு கூரவே. 119-15

புகுந்தனர் நகரிடை-பொங்கும் ஓசையின்
மிகுந்துள கவிப் பெருங் கடலும், மேதகு
மகம் பயில் முனிவனும், மற்று உளோர்களும்,
அகம் தனில் அருங் களிப்பு எழுந்து துள்ளவே. 119-16

நம்பியும் வசிட்டன் கூற, நந்தியம்பதியில் சென்று,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மாதோடு
இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பம் செய்தார். 119-17

உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும்
மயிர் வினை செய்வித்து, ஆங்கே மாசு அற மண்ணில் தாழும்
செயிர் அறு கடிலக் கற்றைத் திரள் அறக் களைந்து நீக்கி,
குயில் புரை மொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் கொண்டார் 119-18

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/36–இராவணன் வதைப் படலம்–

November 2, 2020

தேவர்கள் வாழ்த்த, இராமன் தேரில் செல்லுதல்

ஆழி அம் தடந் தேர், வீரன் ஏறலும், அலங்கல் சில்லி பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத, ஊழி வெங் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார், வாழிய அனுமன் தோளை ஏத்தினார், மலர்கள் தூவி. 1

‘எழுக, தேர்; சுமக்க, எல்லோம் வலியும்; புக்கு இன்றே பொன்றி விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்; விம்மி அழுக, பேர் அரக்கிமார்’ என்று ஆர்த்தனர், அமரர்; ஆழி முழுகி மீது எழுந்தது என்னச் சென்றது, மூரித் திண் தேர். 2

இராமன் எதிரே தேரை செலுத்துமாறு இராவணன் சாரதிக்குக் கூறுதல்

அன்னது கண்ணின் கண்ட அரக்கனும், ‘அமரர் ஈந்தார் மன் நெடுந் தேர்’ என்று உன்னி, வாய் மடித்து எயிறு தின்றான்; பின், ‘அது கிடக்க’ என்னா, தன்னுடைப் பெருந் திண் தேரை, மின் நகு வரி வில் செங் கை இராமன் மேல் விடுதி’ என்றான். 3

வானரர் போருக்கு ஆயத்தமாதல்

இரிந்த வான் கவிகள் எல்லாம், ‘இமையவர் இரதம் ஈந்தார்; அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல்’ என்று, அஞ்சார், திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; ‘திசையோடு அண்டம் பிரிந்தனகொல்!’ என்று எண்ணப் பிறந்தது, முழக்கின் பெற்றி. 4

வார்ப் பொலி முரசின் ஓதை, வாய்ப்புடை வயவர் ஓதை, போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை, ஆர்த்தலின், யாரும் பார் வீழ்ந்து அடங்கினர், இருவர் ஆடல் தேர்க் குரல் ஓதை பொங்க, செவி முற்றும் செவிடு செய்த. 5

இராமன் மாதலிக்கு தன் கருத்து கூற, அவன் அதற்கு இசைதல்

மாதலி வதனம் நோக்கி, மன்னர் தம் மன்னன் மைந்தன், ‘காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என் தன் சோதனை நோக்கிச் செய்தி; துடிப்பு இலை’ என்னச் சொன்னான் 6

‘வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும், மாற்றலார்தம் உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதிதானும், கள்ளம் இல் காலப் பாடும், கருமமும், கருதேன் ஆகில், தெள்ளிது என் விஞ்சை!’ என்றான்; அமலனும், ‘சீரிது!’ என்றான் 7

வேறு இடத்துப் பொர மகோதரன் வேண்ட , இராவணன், ‘நீ இலக்குவனோடு போர் செய்’ எனல்

‘தோன்றினன் இராமன், எந்தாய்! புரந்தரன் துரகத் தேர் மேல்; ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது; இடையே, யான் ஓர் சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை ஈண்டு’ என்றான் – வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை. 8

‘அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம்’ என்றான்; வெம்பு இகல் அரக்கன், ‘அஃதே செய்வென்’ என்று, அவனின் மீண்டான் 9

இராமன் தேர் அணுக, ‘அதன் எதிரே தேரை விடு’ எனச் சாரதிக்கு மகோதரன் பணித்தல்

மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம், ஆண்தகை தெய்வத் திண் தேர் அணுகியது; அணுகும் காலை, மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, ‘முட்டத் தூண்டுதி தேரை’ என்றான்; சாரதி தொழுது சொல்லும்: 10

மகோதரன் இராமனுடன் பொருது, முடிதல்

‘எண் அருங் கோடி வெங் கண் இராவணரேயும், இன்று நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது அல்லால்? அண்ணல் தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் அன்ன கண்ணனை ஒழிய, அப் பால் செல்வதே கருமம்’ என்றான். 11

என்றலும், எயிற்றுப் பேழ் வாய் மடிந்து, ‘அடா! எடுத்து நின்னைத் தின்றனென் எனினும் உண்டாம் பழி’ என, சீற்றம் சிந்தும் குன்று அன தோற்றத்தான் தன் கொடி நெடுந் தேரின் நேரே சென்றது, அவ் இராமன் திண் தேர்; விளைந்தது, திமிலத் திண் போர் 12

பொன் தடந் தேரும், மாவும், பூட்கையும், புலவு உண் வாட் கைக் கல் தடந் திண் தோள் ஆளும், நெருங்கிய கடல்கள் எல்லாம் வற்றின, இராமன் வாளி வட அனல் பருக; வன் தாள் ஒற்றை வன் தடந் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான். 13

அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத் தேர்மேல், குசை உறு பாகன் தன்மேல், கொற்றவன் குவவுத் தோள்மேல், விசை உறு பகழி மாரி வித்தினான்; விண்ணினோடும் திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல் செய்தான். 14

வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறலுடைக் கரம் ஓர் ஒன்றால், கல் ஒன்று தோளும் ஒன்றால், கழுத்து ஒன்றால், கடிதின் வாங்கி, செல் ஒன்று கணைகள், ஐயன் சிந்தினான்; செப்பி வந்த சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், அரக்கன் துஞ்சி 15

மகோதரனது முடிவு கண்டு வருந்திய இராவணன், இராமன் எதிரே தேரைச் செலுத்தச் செய்தல்

மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகத்தோடும் மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான், சேதனை உண்ணக் கண்டான்; ‘செல விடு, செல விடு!’ என்றான்; சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரதத் திண் தேர். 16

இராவணன் சேனையை இராமன் கணத்தில் நீறாக்குதல்

‘பனிப் படா நின்றது என்னப் பரக்கின்ற சேனை பாறித் தனிப்படான் ஆகின் இன்னம் தாழ்கிலன்’ என்னும் தன்மை நுனிப் படா நின்ற வீரன், அவன் ஒன்று நோக்காவண்ணம் குனிப் படாநின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் கொன்றான். 17

இராவணனுக்குத் துன்னிமித்தம் தோன்றுதல்

அடல் வலி அரக்கற்கு அப் போழ்து, அண்டங்கள் அழுந்த, மண்டும் கடல்களும் வற்ற, வெற்றிக் கால் கிளர்ந்து உடற்றும்காலை, வடவரை முதல ஆன மலைக் குலம் சலிப்ப போன்று, சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த பொன் -தோள். 18

உதிர மாரி சொரிந்தது, உலகு எலாம்; அதிர வானம் இடித்தது; அரு வரை பிதிர வீழ்ந்தது, அசனி; ஒளி பெறாக் கதிரவன் தனை ஊரும் கலந்ததால். 19

வாவும் வாசிகள் தூங்கின; வாங்கள் இல் ஏவும் வெஞ் சிலை நாண் இடை இற்றன; நாவும் வாயும் உலர்ந்தன; நாள்மலர்ப் பூவின் மாலை புலால் வெறி பூத்ததால். 20

எழுது வீணை கொடு ஏந்து பதாகை மேல் கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர் ஒழுகுகின்றன, ஓடு இகல் ஆடல் மா; தொழுவில் நின்றன போன்றன, சூழி மா. 21

துன்னிமித்தங்களை மதியாது, இராவணன் பொர நெருங்குதல்

இன்ன ஆகி, இமையவர்க்கு இன்பம் செய் துன்னிமித்தங்கள் தோன்றின; தோன்றவும், அன்னது ஒன்றும் நினைந்திலன், ‘ஆற்றுமோ, என்னை வெல்ல, மனித்தன்?’ என்று எண்ணுவான். 22

வீங்கு தேர் செலும் வேகத்து, வேலை நீர் ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல், தாங்கல் ஆற்றகிலார், தடுமாறித் தாம் நீங்கினார், இரு பாலும் நெருங்கினார். 23

இராம இராவணர் தோற்றம்

கருமமும் கடைக்கண் உறு ஞானமும், அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும், பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலாத் தருமமும், எனச் சென்று, எதிர் தாக்கினார். 24

சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும், உரவு கொற்றத்து உவணத்து அரசனும், பொர உடன்றனர் போலப் பொருந்தினர், இரவும் நண்பகலும் எனல் ஆயினார். 25

வென்றி அம் திசை யானை வெகுண்டன ஒன்றை ஒன்று முனிந்தன ஒத்தனர்; அன்றியும், நரசிங்கமும் ஆடகக் குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார். 26

துவனி வில்லின் பொருட்டு ஒரு தொல்லைநாள், ‘எவன் அ(வ்) ஈசன்?’ என்பார் தொழ, ஏற்று, எதிர் புவனம் மூன்றும் பொலங் கழலால் தொடும் அவனும் அச் சிவனும் எனல் ஆயினார். 27

இராவணன் சங்கம் ஊத, திருமாலின் சங்கம் தானே முழங்குதல்

கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம் விண்டு அசங்க, தொல் அண்டம் வெடித்திட, அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம் உண்ட சங்கம் இராவணன் ஊதினான். 28

சொன்ன சங்கினது ஓசை துளக்குற, ‘என்ன சங்கு?’ என்று இமையவர் ஏங்கிட, அன்ன சங்கைப் பொறாமையினால், அரி- தன்ன வெண் சங்கு தானும் முழங்கிற்றால். 29

திருமாலின் ஐம்படையும் அடிமை செய்ய வந்ததை இராமன் காணாதிருத்தல்

ஐயன் ஐம் படை தாமும் அடித் தொழில் செய்ய வந்து அயல் நின்றன; தேவரில் மெய்யன் அன்னவை கண்டிலன், வேதங்கள் பொய் இல் தன்னைப் புலன் தெரியாமைபோல். 30

மாதலி இந்திரனது சங்கை முழக்குதல்

ஆசையும் விசும்பும் அலை ஆழியும் தேசமும் மலையும் நெடுந் தேவரும் கூச அண்டம் குலுங்க, குலம் கொள் தார் வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். 31

இராவணன்-இராமன் போர்

துமில வாளி அரக்கன் துரப்பன் விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே, கமல வாள் முக நாடியர் கண் கணை அமலன் மேனியில் தைத்த அனந்தமால். 32

சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய குன்றி வெங் கண் குதிரை குதிப்பன, ஒன்றை ஒன்று உற்று, எரி உக நோக்கின; தின்று தீர்வன போலும் சினத்தன. 33

கொடியின்மேல் உறை வீணையும், கொற்ற மா இடியின் ஏறும், முறையின் இடித்தன- படியும் விண்ணும் பரவையும் பண்பு அற முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால். 34

இருவருடைய வில்லின் ஒலி

ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம், வீழி வெங் கண் இராவணன் வில் ஒலி; ஆழி நாதன் சிலை ஒலி, அண்டம் விண்டு ஊழி பேர்வுழி, மா மழை ஒத்ததால். 35

ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம் வீங்கு வெஞ் சின வீரர் விழுந்தனர்- ஏங்கி நின்றது அலால், ஒன்று இழைத்திலர், வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். 36

தேவர்களின் திகைப்பும், பூமழையும்

‘ஆவது என்னை கொலாம்?’ என்று அறிகிலார், ‘ஏவர் வெல்வர்?’ என்று எண்ணலர் ஏங்குவார், போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால், தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். 37

சேண அந்தரம் நோக்கலும் திண் சரம், பூண முந்தின, சிந்தின பூ மழை, காண வந்த கடவுளர் கை எலாம்- ஆணவம் துணை யார் உளர் ஆவரோ? 38

இருவரின் வில்லின் தகைமை

நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில் பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன- ஆண்ட வில்லிதன் வில்லும், அரக்கன் தன் தீண்ட வல்லர் இலாத சிலையுமே. 39

இராவனது சினத்தின் எழுச்சி

அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும், அப் பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்பபோல், குரைக்கும் வேலையும் மேகக் குழாங்களும் இரைத்து இடிக்கின்ற, இன்றும் ஒர் ஈறு இலா. 40

மண்ணில் செல்வன செல்லினும், மாசு அற எண்ணின் சூல் மழை இல்ல; இராவணன் கண்ணின் சிந்திய தீக் கடு வேகத்த விண்ணில் செல்வன வெந்தன வீழ்வன. 41

மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம் நால் கலங்க நகும்தொறும், நாவொடு கால் கலங்குவர், தேவர்; கண மழைச் சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். 42

இக் கணத்தும் எறிப்ப தடித்து என, நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என, பக்கம் வீசும் படைச் சுடர், பல் திசை புக்குப் போக, பொடிப்பன போக்கு இல. 43

இராவணன் சின மொழி

‘கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலாச் சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும் பற்றி வானில் சுழற்றி, படியின்மேல் எற்றுவேன்’ என்று உரைக்கும், இரைக்குமால். 44

‘தடித்து வைத்தன்ன வெங் கணை தாக்கு அற, வடித்து வைத்தன்ன மானுடன் தோள் வலி ஒடித்து, தேரை உதிர்த்து, ஒரு வில்லொடும் பிடித்துக் கொள்வென், சிறை’ எனப் பேசுமால். 45

இராவணன் அம்பு மாரி பொழிதலும், இராமன் தடுத்தலும்

பதைக்கின்றது ஓர் மனமும், இடை படர்கின்றது ஒர் சினமும், விதைக்கின்றன பொறி பொங்கின விழியும், உடை வெய்யோன், குதிக்கின்றன நிமிர் வெஞ் சிலை குழைய, கொடுங் கடுங் கால் உதைக்கின்றன சுடர் வெங் கணை, உரும் ஏறு என, எய்தான் 46

உரும் ஒப்பன, கனல் ஒப்பன, ஊற்றம் தரு கூற்றின் மருமத்தினும் நுழைகிற்பன; மழை ஒப்பன; வானோர் நிருமித்தன, படை பற்று அற நிமிர்வுற்றன, அமிழ்தப் பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய. 47

‘துண்டப்பட நெடு மேருவைத் தொளைத்து, உள் உறை தங்காது அண்டத்தையும் பொதுத்து ஏகும்’ என்று இமையோர்களும், அயிர்த்தார்; கண்டத் தெறு கணைக் காற்றினை, கருணைக் கடல், கனகச் சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே அறத் தடுத்தான் 48

உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற, இடையூறு உறச் சிதைந்தாங்கெனச் சரம் சிந்தின, விறலும்; தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து, அவை துரந்தான்- கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்தென, கடியான். 49

விண் போர்த்தன; திசை போர்த்தன; மலை போர்த்தன; விசை ஓர் கண் போர்த்தன; கடல் போர்த்தன; படி போர்த்தன; கலையோர் எண் போர்த்தன; எரி போர்த்தன; இருள் போர்த்தன; ‘என்னே, திண் போர்த் தொழில்!’ என்று, ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான். 50

அல்லா நெடும் பெருந் தேவரும் மறை வாணரும் அஞ்சி, எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர், இருந்தார்; செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை; வில்லாளனும் அது கண்டு, அவை விலக்கும் தொழில் வேட்டான் 51

செந் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன், சிறுவிலை நாள், முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின, முதல்வன் வந்து ஈந்தன வடி வெங் கணை; அனையான் வகுத்து அமைத்த வெந் தீவினைப் பயன் ஒத்தன, அரக்கன் சொரி விசிகம். 52

இராம இராவணப் பெரும் போர்

நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான், ஆறா விறல் மறவோன்; அவை தனி நாயகன் அறுப்பான்; கூறு ஆயின, கனல் சிந்துவ, குடிக்கப் புனல் குறுகி, சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். 53

வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் வெம் போர் வல்லான், எழு, மழு, தோமரம், மணித் தண்டு, இருப்பு உலக்கை, தொல் ஆர் மிடல் வளை, சக்கரம், சூலம், இவை தொடக்கத்து எல்லாம் நெடுங் கரத்தால் எடுத்து எறிந்தான், செரு அறிந்தான் 54

வேல் ஆயிரம், மழு ஆயிரம், எழு ஆயிரம், விசிகக் கோல் ஆயிரம், பிற ஆயிரம், ஒரு கோல் படக் குறைவ- கால் ஆயின, கனல் ஆயின, உரும் ஆயின, கதிய சூல் ஆயின, மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க. 55

ஒத்துச் செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை,-உடனே பத்துச் சிலை எடுத்தான், கணை தொடுத்தான், பல முகில்போல் தொத்துப் படு நெடுந் தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான்- குத்துக் கொடு நெடுங் கோல் படு களிறு ஆம் எனக் கொதித்தான் 56

ஈசன் விடு சர மாரியும், எரி சிந்துறு தறுகண் நீசன் விடு சர மாரியும், இடை எங்கணும் நெருங்க தேசம் முதல் ஐம் பூதமும் செருக் கண்டனர் நெருக்க, கூசிம் மயிர் பொடிப்பு அற்றன; அனல் ஆயின கொடிய. 57

மந்தரக் கிரி என, மருந்து மாருதி தந்த அப் பொருப்பு என, புரங்கள் தாம் என, கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டென அந்தரத்து எழுந்தது, அவ் அரக்கன் தேர் அரோ. 58

எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன் பொழிந்தன சர மழை உருவிப் போதலால், ஒழிந்ததும் ஒழிகிலது என்ன, ஒல்லெனக் கழிந்தது, கவிக் குலம், இராமன் காணவே. 59

தேரை விசும்பில் எழவிடுமாறு இராமன் கூற, மாதலி அவ்வாறே செய்தல்

‘முழவு இடு தோளொடு முடியும் பல் தலை விழ விடுவேன், இனி; விசும்பு சேமமோ? மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்; எழ விடு, தேரை’ என்று இராமன் கூறினான். 60

‘அந்து செய்குவென்’ என அறிந்த மாதலி உந்தினன், தேர் எனும் ஊழிக் காற்றினை; இந்து மண்டிலத்தின்மேல் இரவி மண்டிலம் வந்தென, வந்தது, அம் மானத் தேர் அரோ. 61

இருவரது தேரும் சாரிகை திரிதல்

இரிந்தன மழைக் குலம், இழுகித் திக்கு எலாம்; உரிந்தன உடுக் குலம், உதிர்ந்து சிந்தின; நெரிந்தன நெடு வரைக் குடுமி; நேர் முறை திரிந்தன சாரிகை, தேரும் தேருமே. 62

வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும், அலம்வரு குல வரை அனைத்தும், அண்டமும், சலம் வரும், குயமகன் திகிரித் தன்மைபோல். 63

‘எழும் புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர் இது’ என்று உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன, தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர், பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார். 64

உக்கிலா உடுக்களும், உருள்கள் தாக்கலின், நெக்கிலா மலைகளும், நெருப்புச் சிந்தலின், வக்கிலாத் திசைகளும், உதிரம் வாய் வழி கக்கிலா உயிர்களும், இல்லை, காண்பன. 65

தேர்களின் வேகம்

‘இந்திரன் உலகத்தார்’ என்பர்; ‘ஏன்றவர், சந்திரன் உலகத்தார்’ என்பர்; ‘தாமரை அந்தணன் உலகத்தார்’ என்பர்; ‘அல்லரால், மந்தர மலையினார்’ என்பர்-வானவர். 66

‘பாற்கடல் நடுவணார்’ என்பர்; ‘பல் வகை மால் கடல் ஏழுக்கும் வரம்பினார்’ என்பர்; ‘மேல் கடலார்’ என்பர்; ‘கிழக்கு உளார்’ என்பர்; ‘ஆர்ப்பு இடை இது’ என்பர்-அறிந்த வானவர். 67

‘மீண்டனவோ?’ என்பர்; ‘விசும்பு விண்டு உகக் கீண்டனவோ?’ என்பர்; ‘கீழவோ?’ என்பர்; ‘பூண்டன புரவியோ? புதிய காற்று!’ என்பர்;- ‘மாண்டன உலகம்’ என்று, உரைக்கும் வாயினார். 68

ஏழுடைக் கடலினும், தீவு ஓர் ஏழினும், ஏழுடை மலையினும், உலகு ஓர் ஏழினும், சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா, ஊழியில் காற்று எனத் திரிந்த, ஓவில. 69

அரக்கன் வீசிய படைக்கலங்களை இராமன் தடுத்தல்

உடைக் கடல் ஏழினும், உலகம் ஏழினும், இடைப் படு தீவினும், மலை ஒர் ஏழினும், அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய படைக்கலம், மழை படு துளியின் பான்மைய. 70

ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும், ஓட்டிடை இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன் செறுத்து ஒரு தொழிலிடைச் செய்தது இல்லையால். 71

தேர்கள் இலங்கையை அணுகுதல்

விலங்களும் வேலையும், மேலும் கீழரும், அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும், கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக் காற்றென, இலங்கையை எய்திய, இமைப்பின் வந்த தேர். 72

தேர்ப் பரிகளின் திறமை

உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை மொய்த்தது, கடலிடை மணலின் மும்மையால்; வித்தகர் கடவிய விசயத் தேர் பரி, எய்த்தில வியர்த்தில, இரண்டு பாலவும். 73

இராமன் தேர்க்கொடியை இராவணன் அறுத்தல்

இந்திரன் தேரின்மேல் உயர்ந்த, ஏந்து எழில் உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை, சந்திரன் அனையது ஓர் சரத்தினால், தரைச் சிந்தினன், இராவணன், எரியும் செங் கணான். 74

சாய்ந்த வல் உருமு போய், அரவத் தாழ் கடல் பாய்ந்த வெங் கனல் என முழங்கிப் பாய்தலும், காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுறத் தோய்ந்த நீர் ஆம் எனச் சுருங்கிற்று, ஆழியே. 75

இராமனது தேர்க் குதிரைகள் மீதும், மாதலிமீதும் இராவணன் அம்பு எய்தல்

எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப் பரிக் குழுக்களைக் கூர்ங் கணைக் குப்பை ஆக்கி, நேர் வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறு அரோ. 76

மாதலி மார்பில் அம்பு தைத்தமை கண்டு, இராமன் வருந்துதல்

நீல் நிற நிருதர்கோன் எய்த, நீதியின் சால்புடை மாதலி மார்பில் தைத்தன கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ் வேலினும் வெம்மையே விளைத்த, வீரற்கு. 77

இராவணன் அம்புகளால் இராமன் மறைபடுதல்

மண்டில வரி சிலை வானவில்லொடும் துண்ட வெண் பிறை எனத் தோன்ற, தூவிய உண்டை வெங் கடுங் கணை ஒருங்கு மூடலால், கண்டிலர் இராமனை, இமைப்பு இல் கண்ணினார். 78

‘தோற்றனனே இனி’ என்னும் தோற்றத்தால் ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்; வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழுமாய்க் காற்று இயக்கு அற்றது; கலங்கிற்று அண்டமே. 79

அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி பொங்கில திமிர்த்தன; விசும்பில் போக்கு இல, வெங் கதிர் தண் கதிர், விலங்கி மீண்டன; மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால். 80

திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின; அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின; விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன் குசன் என, மேருவும் குலுக்கம் உற்றதே. 81

வானரத் தலைவனும், இளைய மைந்தனும், ஏனை, ‘அத் தலைவனைக் காண்கிலேம்’ எனக் கானகக் கரி எனக் கலங்கினார்; கடல் மீன் எனக் கலங்கினார், வீரர் வேறு உளார். 82

இராவணன் தேர்க் கொடியை இராமன் வீழ்த்துதல்

எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக் கொய்தனன் அகற்றி, வெங் கோலின் கோவையால் நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். 83

தூணுடை நிரை புரை கரம் அவைதொறும் அக் கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய, சேணுடை நிகர் கணை சிதறினன்-உணர்வொடு ஊணுடை உயிர்தொறும் உறைவுறும் ஒருவன். 84

கயில் விரிவு அற வரு கவசமும் உருவிப் பயில் விரி குருதிகள் பருகிட, வெயிலொடு அயில் விரி சுடு கணை கடவினன்-அறிவின் துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன். 85

திசை உறு துகிலது, செறி மழை சிதறும் விசை உறு மிகிழது, விரிதரு சிரனொடு இசை உறு கருவியின் இனிது உறு கொடியைத் தசை உறு கணைகொடு தரை உற விடலும். 86

படை உக, இமையவர் பருவரல் கெட, வந்து இடை உறு திசை திசை இழுகுற, இறைவன் அடையுறு கொடிமிசை அணுகினன்-அளவு இல் கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். 87

பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக் கண் அகன் உலகினை வலம் வரு கலுழன் நண்ணலும், இமையவர், ‘நமது உறு கருமம் எண்ணலம், முனிவினின் இவறினன்’ எனவே. 88

இராவணன் தாமதம் என்னும் படையை விடுதலும், அப் படையின் செயல்களும்

ஆயது ஒர் அமைதியின், அறிவினின் அமைவான் நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான், ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத் தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன். 89

தீ முகம் உடையன சில; முகம் உதிரம் தோய் முகம் உடையன; சுரர் முகம் உடைய; பேய் முகம் உடையன; பிலமுகம் நுழையும் வாய்முகம் வரி அரவு அனையன வருவ. 90

ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும், இரு திசை எயிறு உற வருவன; பெரிய; கருதிய கருதிய புரிவன; கனலும் பருதியை மதியொடு பருகுவ-பகழி. 91

இருள் ஒரு திசை, ஒரு திசை வெயில் விரியும்; சுருள் ஒரு திசை, ஒரு திசை மழை தொடரும்; உருள் ஒரு திசை, ஒரு திசை உரும் முரலும்; மருள் ஒரு திசை, ஒரு திசை சிலை வருடம். 92

இராமன் சிவனது படையை விட்டு, தாமதப் படையைத் தொலைத்தல்

இனையன நிகழ்வுற, எழு வகை உலகும் கனை இருள் கதுவிட, அமரர்கள் கதற, வினை உறு தொழிலிடை விரவலும், விமலன் நினைவுறு தகையினன் நெறியுறு முறையின், 93

கண்ணுதல் ஒருவனது அடு படை கருதிப் பண்ணவன் விடுதலும், அது நனி பருக; எண்ணுறு கனவினொடு உணர்வு என, இமையில், துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய 94

இராவணன் இராமன் மேல், ஆசுரப் படையை விடுதல்

விருந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த; எரிந்த கண்ணினன், எயிற்றிடை மடித்த வாயினன், தன் தெரிந்த வெங் கணை, கங்க வெஞ் சிறை அன்ன, திறத்தான், அரிந்தமன் திரு மேனிமேல் அழுத்தி, நின்று ஆர்த்தான். 95

ஆர்த்து, வெஞ் சினத்து ஆசுரப் படைக்கலம், அமரர் வார்த்தை உண்டது, இன் உயிர்களால் மறலிதன் வயிற்றைத் தூர்த்தது, இந்திரன் துணுக்குறு தொழிலது, தொடுத்து, தீர்த்தன்மேல் வரத் துரந்தனன், உலகு எலாம் தெரிய. 96

ஆசுரப் பெரும் படைக்கலம், அமரரை அமரின் ஏசுவிப்பது, எவ் உலகமும் எவரையும் வென்று வீசு வெற்பு இறத் துரந்த வெங் கணையது, – விசையின் பூசுரர்க்கு ஒரு கடவுள் மேல் சென்றது போலாம். 97

ஆசுரப் படையை அக்கினிப் படையால் இராமன் அறுத்தல்

‘நுங்குகின்றது, இவ் உலகை ஓர் நொடி வரை’ என்ன, எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப, மங்குல் வல் உருமேற்றின்மேல் எரி மடுத்தென்ன அங்கி தன் நெடும் படை தொடுத்து, இராகவன் அறுத்தான். 98

தொடர்ந்து இராவணன் பல படை துரக்க, இராமன் அவற்றைப் பிறைமுக அம்புகளால் பிளத்தல்

கூற்றுக் கோடினும் கோடல, கடல் எலாம் குடிப்ப, நீற்றுக் குப்பையின் மேருவை நூறுவ, நெடிய காற்றுப் பின் செலச் செல்வன, உலகு எலாம் கடப்ப, நூற்றுக் கோடி அம்பு எய்தனன், இராவணன், நொடியில். 99

‘என்ன கைக் கடுப்போ!’ என்பர் சிலர்; சிலர், ‘இவையும் அன்ன மாயமோ; அம்பு அல’ என்பர்; ‘அவ் அம்புக்கு இன்னம் உண்டுகொல் இடம்!’ என்பர் சிலர்; சிலர், ‘இகல் போர் முன்னம் இத்தனை முயன்றிலனாம்’ என்பர்-முனிவர். 100

மறைமுதல் தனி நாயகன், வானினை மறைத்த சிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய, பொறை சிகைப் பெருந் தலைநின்றும் புங்கத்தின் அளவும் பிறை முகக் கடு வெஞ் சரம் அவை கொண்டு பிளந்தான். 101

இராவணன் விட்ட மயன் படையைக் கந்தருவக் கணையால் இராமன் போக்குதல்

அயன் படைத்த பேர் அண்டத்தின் அருந் தவம் ஆற்றி, பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன், ‘பல் போர் வியன் படைக்கலம் தொடுப்பென் நான், இனி’ என விரைந்தான்; மயன் படைக்கலம் துரந்தனன், தயரதன் மகன்மேல். 102

‘விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகைச் சுட்டனன்’ எனத் துணுக்கமுற்று, அமரரும் சுருண்டார்; ‘கெட்டனம்’ என வானரத் தலைவரும் கிழிந்தார்; சிட்டர் தம் தனித் தேவனும், அதன் நிலை தெரிந்தான். 103

‘பாந்தள் பல் தலைப் பரப்பு அகன் புவியிடைப் பயிலும் மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு’ என வருகின்ற அதனைக் காந்தர்ப்பம் எனும் கடுங் கொடுங் கணையினால் கடந்தான்- ஏந்தல் பல் மணி எறுழ் வலித் திரள் புயத்து இராமன். 104

இராவணன் தண்டாயுதம் எறிய, அம்பினால் இராமன் அதைப் பொடியாக்கல்

‘பண்டு நான்முகன் படைத்தது, கனகன் இப் பாரைத் தொண்டு கொண்டது, மது எனும் அவுணன் முன் தொட்டது, உண்டு இங்கு என் வயின்; அது துரந்து உயிர் உண்பென்’ என்னா, தண்டு கொண்டு எறிந்தான், ஐந்தொடு ஐந்துடைத் தலையான். 105

தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது, தனி மா மேகு மந்தரம் புரைவது, வெயில் அன்ன ஒளியது, ஓர் உகம் தனின் உலகம் நின்று உருட்டினும் உருளாச் சீர் உகந்தது, நெரித்தது, தானவர் சிரத்தை. 106

பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது, பனிப்புற்று அசும்பு பாய்கின்றது, அருக்கனின் ஒளிர்கின்றது, அண்டம் தசும்புபோல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர, விசும்பு பாழ்பட, வந்தது மந்தரம் வெருவ. 107

கண்டு, ‘தாமரைக் கடவுள் மாப் படை’ எனக் கழறா, அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா, புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முகக் கணையால் உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான். 108

இராவணன் மாயையின் படையை விடல்

‘தேய நின்றவன், சிலை வலம் காட்டினான்; தீராப் பேயை என் பல துரப்பது? இங்கு இவன் பிழையாமல் ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய மாயையின் படை தொடுப்பென்’ என்று, இராவணன் மதித்தான். 109

பூசனைத் தொழில் புரிந்து, தான் முறைமையின் போற்றும் ஈசனைத் தொழுது, இருடியும் சந்தமும் எண்ணி, ஆசை பத்தினும் அந்தரப் பரப்பினும் அடங்கா வீசி மேற் செல, வில் விசைத் தொடை கொண்டு விட்டான். 110

மாயம் பொத்திய வயப் படை விடுதலும், வரம்பு இல் காயம் எத்தனை உள, நெடுங் காயங்கள் கதுல, ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர்-அமரில் தூய கொற்றவர் சுடு சரத்தால் முன்பு துணிந்தார். 111

இந்திரற்கு ஒரு பகைஞனும், அவற்கு இளையோரும், தந்திரப் பெருந் தலைவரும், தலைத் தலையோரும், மந்திரச் சுற்றத்தவர்களும், வரம்பு இலர் பிறரும், அந்தரத்தினை மறைத்தனர், மழை உக ஆர்ப்பார். 112

குடப் பெருஞ் செவிக் குன்றமும், மற்றுள குழுவும், ப்டைத்த மூல மாத் தானையும், முதலிய பட்ட, விடைத்து எழுந்தன-யானை, தேர், பரி, முதல் வெவ்வேறு அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து, அல் வழி அடைய. 113

ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த காய் சினப் பெருங் கடற்படை களப் பட்ட எல்லாம், ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன, தேசம், முற்றவும் செறிந்தன, திசைகளும் திசைக்க. 114

சென்ற எங்கணும், தேவரும் முனிவரும் சிந்த- ‘வென்றதும் எங்களைப்போலும்; யாம் விளிவதும் உளதோ? இன்று காட்டுதும்; எய்துமின், எய்துமின்’ என்னா, கொன்ற கொற்றவர்தம் பெயர் குறித்து அறைகூவி. 115

மாயப் படையால் பூதங்களும் பேய்களும் தோன்றுதல்

பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய, பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய, ‘பேர் இடம் கதுவ அரிது, இனி விசும்பு’ என, பிறந்த, பேர் இடங்கரின் கொடுங் குழை அணிந்தன பேய்கள். 116

மாயத்தினால் தோன்றியவர் பல வகைப் படைகளை ஏந்தி நிற்றல்

தாமசத்தினில் பிறந்தவர், அறம் தெறும் தகையர், தாம் அசத்தினில் செல்கிலாச் சதுமுகத்தவற்கும் தாமசத்தினைத் தொடர்ந்தவர், பரிந்தன தாழ்ந்தார்- தாம சத்திரம் சித்திரம் பொருந்திய, தயங்க. 117

தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர், தாம இந்துவின் பிளவு எனத் தயங்கு வாள் எயிற்றர், தாம் அவிஞ்சையர், கடல் பெருந் தகையினர், தரளத் தாம விஞ்சையர் துவன்றினர், திசைதொறும் தருக்கி. 118

தாம் மடங்கலும், முடங்கு உளை யாளியும் தகுவார், தாம் அடங்கலும் நெடுந் திசை உலகொடும் தகைவார், தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார், தாம் மடங்கலும் கொடுஞ் சுடர்ப் படைகளும் தரித்தார். 119

மாயப் படையின் விளைவு கண்டு, இராமன் மாதலியை வினவுதல்

இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன், ‘வினையம் மற்று இது மாயமோ? விதியது விளைவோ? வனையும் வன் கழல் அரக்கர்தம் வரத்தினோ? மற்றோ? நினைதியாமெனின், பகர்’ என, மாதலி நிகழ்த்தும்: 120

இராமன் ஞானக் கணையால் அதனை ஒழித்தல்

‘இருப்புக் கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி, விருப்பின், “கோடியால் விலைக்கு” எனும் பதடியின், விட்டான்- கருப்புக் கார் மழை வண்ண!-அக் கடுந் திசைக் களிற்றின் மருப்புக் கல்லிய தோளவன் மீள அரு மாயம். 121

‘வீக்கு வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின்,- நோய்க்கும், நோய் தரு வினைக்கும், நின் பெரும் பெயர் நொடியின், நீக்குவாய்!-உனை நினைக்குவார் பிறப்பு என, நீங்கும். 122

‘வரத்தின் ஆயினும், மாயையின் ஆயினும், வலியோர் உரத்தின் ஆயினும், உண்மையின் ஆயினும், ஓடத் துரத்தியால்’ என, ஞான மாக் கடுங் கணை துரந்தான்- சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன். 123

துறத்தல் ஆற்று உறு ஞான மாக் கடுங் கணை தொடர, அறத்து அலாது செல்லாது, நல் அறிவு வந்து அணுக, பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது, அம் மாயை. 124

இராவணன் சூலம் வீசுதல்

நீலம் கொண்டு ஆர் கண்டனும், நேமிப் படையோனும், மூலம் கொண்டார், கண்டகர் ஆவி முடிவிப்பான், காலம் கொண்டார்; கண்டன முன்னே கழிவிப்பான், சூலம் கொண்டான், அண்டரை எல்லாம் தொழில் கொண்டான். 125

கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது, கண்ணில் கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது, ‘வீரர்- கண் தா, குலம், முற்றும்’ சுடும் என்று அக் கழல் வெய்யோன், கண் தாகுதல் முன், செல்ல விசைத்துள்ளது கண்டான். 126

எரியாநிற்கும் பல் தலை மூன்றும் எரி சிந்தி, திரியாநிற்கும் தேவர்கள் ஓட, திரள் ஓட, இரியாநிற்கும் எவ் உலகும் தன் ஒளியே ஆய், விரியா நிற்கும்; நிற்கிலது, ஆர்க்கும் விழி செல்லா, 127

சூலத்தை வெல்ல தேவர்கள் இராமனை வேண்டுதல்

‘செல்வாய்’ என்னச் செல்ல விடுத்தான்; ‘இது தீர்த்தற்கு ஒல்வாய் நீயே; வேறு ஒருவர்க்கும் உடையாதால்; வல் வாய் வெங் கண் சூலம் எனும் காலனை, வள்ளால்! வெல்வாய், வெல்வாய்!’ என்றனர், வானோர், மெலிகின்றார். 128

சூலத்தின்மேல் எறிந்த படைகள் பயனிலவாக, இராமன் செய்வதறியான் போல் இருத்தல்

துனையும் வேகத்தால் உரும் ஏறும் துண்ணென்ன வனையும் காலின் செல்வன,-தன்னை மறவாதே நினையும் ஞானக் கண் உடையார்மேல் நினையாதார் வினையம் போலச் சிந்தின-வீரன் சரம் வெய்ய. 129

எய்யும், எய்யும் தேவருடைத் திண் படை எல்லாம்; பொய்யும் துய்யும் ஒத்து, அவை சிந்தும்; புவி தந்தான் வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான், ஐயன் நின்றான், செய் வகை ஒன்றும் அறிகில்லான். 130

இராமனை நெருங்கிய சூலம் அவனது உங்காரத்தால் பொடியாதல்

‘மறந்தான் செய்கை; மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் துறந்தான்’ என்னா, உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார்; அறம்தான் அஞ்சிக் கால் குலைய, தான் அறியாதே, பிறந்தான் நின்றான்; வந்தது சூலம், பிறர் அஞ்ச. 131

சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப, தழல் சிந்த, பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடிப் புகலோடும், வெங் காரத்தான் முற்றும் முனிந்தான்; வெகுளிப் பேர் உங்காரத்தால் உக்கது, பல் நூறு உதிர் ஆகி. 132

வானோரின் பெரு மகிழ்ச்சி

ஆர்ப்பார் ஆனார்; அச்சமும் அற்றார்; அலர் மாரி தூர்ப்பார் ஆனார்; துள்ளல் புரிந்தார்; தொழுகின்றார், ‘தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை பேர்ப்பாய் போலாம்!’ என்றனர்-வானோர், உயிர் பெற்றார். 133

இராமனை வேத முதல்வனோ என இராவணன் கருதுதல்

‘வென்றான்’ என்றே, உள்ளம் வெயர்த்தான், ‘விடு சூலம் பொன்றான் என்னின் போகலது’ என்னும் பொருள் கொண்டான்; ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு, ஓடுதல் காணா நின்றான், அந் நாள் வீடணனார் சொல் நினைவுற்றான். 134

‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம் அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்; தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்; இவனோதான் அவ் வேத முதல் காரணன்?’ என்றான். 135

இராவணன் நிருதியின் படையை விடுதல்

‘யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை பேரேன்; இன்றே வென்றி முடிப்பென்; பெயர்கில்லேன்; நேரே செல்வென்கொல்’ என் அரக்கன் நிமிர்வு எய்தி, ‘வேரே நிற்கும்; மீள்கிலென்’ என்னா, விடலுற்றான். 136

நிருதித் திக்கில் நின்றவன் வென்றிப் படை நெஞ்சில் கருதி, தன்பால் வந்தது அவன் கைக்கொடு, காலன் விருதைச் சிந்தும் வில்லின் வலித்து, செலவிட்டான்- குருதிச் செங் கண் தீ உக, ஞாலம் குலைவு எய்த. 137

வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச, பெய்யும் கோடிப் பல் தலையோடும் அளவு இல்லா, மெய்யும் வாயும் பெற்றன, மேருக் கிரி சால நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப, 138

வாய் வாய்தோறும் மா கடல் போலும் விட வாரி போய் வாழ்கின்ற, பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற மீவாய் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற, பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற. 139

‘கடித்தே தீரும்; கண் அகன் ஞாலம் கடலோடும் குடித்தே தீரும்’ என்று உயிர் எல்லாம் குலைகின்ற, ‘முடித்தான் அன்றோ, வெங் கண் அரக்கன்? முழு முற்றும் பொடித்தான் ஆகும், இப்பொழுது’ என்னப் புகைகின்ற. 140

நிருதிப் படையைப் போக்க, இராமன் கருடப் படையை விடுதல்

அவ்வாறு உற்ற ஆடு அரவன் தன் அகல் வாயால் கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான், ‘எல் வாய்தோறும் எய்தின’ என்னா, எதிர் எய்தான், ‘தவ்வா உண்மைக் காருடம் என்னும் படைதன்னால். 141

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து இனம் என்ன, பவணத்து அன்ன வெஞ் சிறை வேகத் தொழில் பம்ப, சுவணக் கோலத் துண்டம் நகம் தொல் சிறை வெல் போர் உவணப் புள்ளே ஆயின, வானோர் உலகு எல்லாம். 142

அளக்க அரும் புள் இனம் அடைய ஆர் அழல் துளக்க அரும் வாய்தொறும் எரியத் தொட்டன, ‘இளக்க அரும் இலங்கை தீ இடுதும், ஈண்டு’ என விளக்கு இனம் எடுத்தன போன்ற, விண் எலாம். 143

குயின்றன சுடர் மணி, கனலின் குப்பையின் பயின்றன, சுடர் தரப் பதும நாளங்கள் வயின் தொறும் கவர்ந்தென, துண்ட வாள்களால் அயின்றன, புள் இனம் உகிரின் அள்ளின. 144

ஆயிடை அரக்கனும், அழன்ற நெஞ்சினன், தீயிடைப் பொடிந்து எழும் உயிர்ப்பன், சீற்றத்தன், மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அறத் தூயினன், சுடு சரம் உருமின் தோற்றத்த. 145

அங்கு அ(வ்) வெங் கடுங் கணை அயிலின் வாய்தொறும், வெங் கணை படப் பட, விசையின் வீழ்ந்தன; புங்கமே தலை எனப் புக்க போலுமால்; துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல! 146

இராவணன் விஞ்சைகள் தளர்தலும், இராமன் வீரமும் வலியும் மிகுதலும்

ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில், முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு நெக்கன, விஞ்சைகள், நிலையின் தீர்ந்தன; மிக்கன, இராமற்கு வலியும் வீரமும். 147

பிறை முக அம்பினால் இராமன் இராவணன் தலையை அறுக்க, அது கடலில் போய் விழுதல்

வேதியர் வேதத்து மெய்யன, வெய்யவற்கு ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான், சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையைத் தள்ளினான், பாதியின் மதி முகப் பகழி ஒன்றினால். 148

மேருவின் கொடுமுடி, வீசு கால் எறி போரிடை, ஒடிந்து போய், புணரி புக்கென ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை நீரிடை விழுந்தது, நெருப்பொடு அன்று போய். 149

குதித்தனர் பாரிடை, குன்று கூறுற மிதித்தனர்; வடகமும் தூசும் வீசினார் துதித்தனர்; பாடினர்; ஆடித் துள்ளினார்; மதித்தனர், இராமனை-வானுளோர் எலாம். 150

இராவணனது அற்ற தலை மீண்டும் முளைத்து, இராமனை ஆரவாரத்துடன் வைது அதட்டுதல்

இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால் பிறந்துளதாம் எனப் பெயர்த்தும், அத் தலை மறந்திலது எழுந்தது, மடித்த வாயது;- சிறந்தது தவம் அலால், செயல் உண்டாகுமோ! 151

கொய்தது, ‘கொய்திலது’ என்னும் கொள்கையின் எய்த வந்து, அக் கணத்து எழுந்தது ஓர் சிரம், செய்த வெஞ் சினத்துடன் சிறக்கும் செல்வனை வைதது, தெழித்தது, மழையின் ஆர்ப்பினால். 152

கடலீல் வீழ்ந்த இராவணன் தலையும் ஆரவாரித்தல்

இடந்தது கிரிக் குவடு என்ன எங்கணும் படர்ந்தது, குரை கடல் பருகும் பண்பது, விடம் தரு விழியது, முடுகி, வேலையில் கிடந்ததும், ஆர்த்தது, மழையின் கேழது. 153

இராவணனது கையை இராமன் அறுக்க, அதுவும் முன்போல் முளைத்தல்

‘விழுத்தினன் சிரம்’ எனும் வெகுளி மீக்கொள, வழுத்தின, உயிர்களின் முதலின் வைத்த ஓர் எழுத்தினன், தோள்களின் ஏழொடு ஏழு கோல் அழுத்தினன்-அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான். 154

‘தலை அறின், தருவது ஓர் தவமும் உண்டு’ என, நிலை உறு நேமியான் அறிந்து, நீசனைக் கலை உறு திங்களின் வடிவு காட்டிய சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான். 155

கொற்ற வெஞ் சரம் பட, குறைந்து போன கை பற்றிய கிடந்தது சிலையைப் பாங்குற மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது; அற்ற கை, பிறந்த கை, யார் அது ஓர்குவார்? 156

அற்ற தன் கையை எடுத்து இராவணன் மாதலிமேல் வீசித் தாக்குதல்

பொன் கயிற்று ஊர்தியான் வலியைப் போக்குவான் முன்கையில் துறு மயிர் முள்ளின் துள்ளுற, மின் கையில் கொண்டென வில்லை விட்டிலா வன் கையைத் தன் கையின் வலியின் வாங்கினான். 157

விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய தளம் கிளர் தடக் கை தன் மார்பில் தாக்கலும், உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி துளங்கினன், வாய் வழி உதிரம் தூவுவான். 158

மாதலிமேல் இராவணன் தோமரம் வீச, இராமன் அதனைத் துகளாக்குதல்

மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர் தோமரத்தால் உயிர் தொலைப்பத் தூண்டினன்- தாம் அரத்தால் பொராத் தகை கொள் வாட் படை, காமரத்தால், சிவன் கரத்து வாங்கினான். 159

‘மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு’ என, மூண்ட வெந் தழல் சிந்த முடுக்கலும், ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெங் கணை தூண்டினான்; துகளானது, தோமரம். 160

இராவணனது தலைகளை இராமன் தொடர்ந்து அறுக்க, அவை பல இடங்களிலும் சிதறி விழுதல்

ஓய்வு அகன்றது, ஒரு தலை நூறு உற, போய் அகன்று புரள, பொரு கணை ஆயிரம் தொடுத்தான்-அறிவின் தனி நாயகன் கைக் கடுமை நடத்தியே. 161

நீர்த் தரங்கங்கள்தோறும், நிலம்தொறும், சீர்த்த மால் வரைதோறும், திசைதொறும், பார்த்த பார்த்த இடம்தொறும், பல் தலை ஆர்த்து வீழ்ந்த-அசனிகள் வீழ்ந்தென. 162

தகர்ந்து மால் வரை சாய்வுறத் தாக்கின; மிகுந்த வான்மிசை மீனம் மலைந்தன; புகுந்த மா மகரக் குலம் போக்கு அற முகந்த வாயின், புணரியை முற்றுற. 163

வீழ்ந்த இராவணனது தலைகளின் கண்களைப் பேய்கள் தோண்டுதல்

பொழுது சொல்லினும் புண்ணியம் போன பின், பழுது சொல்லும் அன்றே, மற்றைப் பண்பு எலாம்?- தொழுது சூழ்வன முன், இன்று தோன்றியே, கழுது சூன்ற, இராவணன் கண் எலாம். 164

இராவணன் வாள் முதலியன வீச, இராமன் அவனை வெல்லும் வகை குறித்துச் சிந்தித்தல்

வாளும், வேலும், உலக்கையும், வச்சிரக் கோளும், தண்டும், மழு எனும் கூற்றமும், தோளின் பத்திகள்தோறும் சுமந்தன, மீளி மொய்ம்பன் உரும் என வீசினான். 165

அனைய சிந்திட, ஆண் தகை வீரனும் ‘வினையம் என் இனி? யாதுகொல் வெல்லுமா? நினைவென்’ என்ன, ‘நிசாசரன் மேனியைப் புனைவென், வாளியினால்’ எனப் பொங்கினான். 166

இராவணனது மேனியை முற்றும் அம்பினால் இராமன் மூடுதல்

மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும், நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும், வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான். 167

வாய் நிறைந்தன, கண்கள் மறைந்தன, மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன, தோய்வுறும் கணை, செம்புனல் தோய்ந்தில, போய் நிறைந்தன, அண்டப் புறம் எலாம். 168

மயிரின் கால்தொறும் வார் கணை மாரி புக்கு, உயிரும் தீர உருவின் ஓடலும், செயிரும் சீற்றமும் நிற்க, திறல் திரிந்து, அயர்வு தோன்ற, துளங்கி அழுங்கினான். 169

தேரில் இராவணன் உணர்வு இழந்து கிடக்க, சாரதி தேரை விலக்கி நிறுத்தலும், இராமன் அம்பு எய்தலைத் தவிர்த்தலும்

வாரி நீர் நின்று எதிர் மகரம் படர் சோரி சோர, உணர்வு துளங்கினான்; தேரின் மேல் இருந்தான்-பண்டு தேவர் தம் ஊரின் மேலும் பவனி உலாவினான். 170

ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்; வேர்த்துத் தீவினை வெம்பி விழுந்தது; ‘போர்த்துப் பொய்த்தனன்’ என்று, பொலம் கொள் தேர் பேர்த்துச் சாரதி போயினன், பின்றுவான். 171

கை துறந்த படையினன், கண் அகல் மெய் துறந்த உணர்வினன், வீழ்தலும், எய் திறம் தவிர்ந்தான்-இமையோர்களை உய் திறம் துணிந்தான், அறம் உன்னுவான். 172

இப்பொழுதே இவனைக் கொல்வாய் என்ற மாதலிக்கு, இராமன், ‘அது நீதி அன்று’ என மறுத்தல்

‘தேறினால், பின்னை யாதும் செயற்கு அரிது; ஊறுதான் உற்றபோதே உயிர்தனை நூறுவாய்’ என, மாதலி நூக்கினான்; ஏறு சேவகனும், இது இயம்பினான். 173

படை துறந்து, மயங்கிய பண்பினான் இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின் நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ? கடை துறந்தது போர், என் கருத்து’ என்றான். 174

உணர்வு பெற்ற இராவணன், தேரைத் திரும்பி நிறுத்தியதற்காகச் சாரதியைச் சினத்தல்

கூவிரம் செறி பொன் கொடித் தேரொடும் போவர் அஞ்சினர், அன்னது ஓர் போழ்தினின், ஏவர் அஞ்சலையாதவர்? எண்ணுடைத் தேவர் அஞ்ச, இராவணன் தேறினான். 175

உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என, மறக் கண் வஞ்சன், இராமனை வான் திசைச் சிறக்கும் தேரொடும் கண்டிலன்; சீற்றத் தீப் பிறக்க நோக்கினன், பின்னுற நோக்கினான். 176

‘தேர் திரித்தனை, தேவரும் காணவே; வீர விற்கை இராமற்கு வெண் நகை பேர உய்த்தனையே; பிழைத்தாய்’ எனா, சாரதிப் பெயரோனைச் சலிப்புறா. 177

‘தஞ்சம் நான் உனைத் தேற்ற, தரிக்கிலா வஞ்ச! நீ பெருஞ் செல்வத்து வைகினை; “அஞ்சினேன்” எனச் செய்தனை; ஆதலால், உஞ்சு போதிகொலாம்!’ என்று உருத்து எழா. 178

சாரதி தேரைத் திருப்பி நிறுத்திய காரணத்தைத் தெரிவித்தல்

வாள் கடைக்கணித்து ஓச்சலும், வந்து, அவன் தாள் கடைக்கு அணியாத் தலை தாழ்வுறா, ‘மூள் கடைக் கடுந் தீயின் முனிவு ஒழி, கோள் கடைக் கணித்து’ என்று அவன் கூறுவான்: 179

‘ஆண்தொழில் துணிவு ஓய்ந்தனை; ஆண்டு இறை ஈண்ட நின்றிடின், ஐயனே! நின் உயிர் மாண்டது அக் கணம் என்று, இடர் மாற்றுவான், மீண்டது, இத் தொழில்; எம் வினை மெய்ம்மையால். 180

‘ஓய்வும் ஊற்றமும் நோக்கி, உயிர் பொறைச் சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால், மாய்வு நிச்சயம் வந்துழி; வாளினால் காய்வு தக்கது அன்றால்; கடை காண்டியால்.’ 181

இராவணன் சாரதிமேல் இரக்கம் கொண்டு, தேரை மீட்கச் செய்து இராமன் எதிருறல்

என்று இறைஞ்சலும், எண்ணி இரங்கினான், ‘வென்றி அம் தடந் தேரினை மீட்க!’ என, சென்று எதிர்ந்தது, தேரும்; அத் தேர்மிசை நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா. 182

கூற்றின் வெங் கணை கோடியின் கோடிகள் தூற்றினான், வலி மும் மடி தோற்றினான்; வேற்று ஓர் வாள் அரக்கன் என, வெம்மையால் ஆற்றினான் செரு; கண்டவர் அஞ்சினார். 183

இராமன் இராவணனின் வில்லைத் துண்டித்தல்

‘”எல் உண்டாகின் நெருப்பு உண்டு” எனும் இது ஒர் சொல் உண்டாயதுபோல், இவன் தோளிடை வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம்’ எனா, செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான். 184

நாரணன் படை நாயகன் உய்ப்புறா, பார் அணங்கினைத் தாங்குறும் பல் வகை வாரணங்களை வென்றவன் வார் சிலை ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான். 185

அயன் படைத்த வில், ஆயிரம் பேரினான் வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும், உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும், ‘பயன் படைத்தனம், பல் கவத்தால்’ என்றார். 186

மாறி மாறி, வரிசிலை வாங்கினான் நூறு நூறினொடு ஐ-இருநூறு அவை வேறு வேறு திசை உற, வெங் கணை நூறி நூறி, இராமன் நுறுக்கினான். 187

இருப்புலக்கை, வேல், தண்டு, கோல், ஈட்டி, வாள், நெருப்பு உலக்க வரும் நெடுங் கப்பணம், திருப் புலக்க உய்த்தான்-திசை யானையின் மருப்பு உலக்க வழங்கிய மார்பினான். 188

அவை அனைத்தும் அறுத்து, அகன் வேலையில் குவை அனைத்தும் எனக் குவித்தான், குறித்து, ‘இவை அனைத்தும் இவனை வெல்லா’ எனா, நவை அனைத்தும் துறந்தவன் நாடினான். 189

‘கண்ணினுள் மணியூடு கழிந்தன, எண்ணின் நுண் மணலின் பல வெங் கணை; புண்ணினுள் நுழைந்து ஓடிய, புந்தியோர் எண்ணின் நுண்ணிய; என் செயற்பாற்று’ எனா, 190

‘நாரணன் திரு உந்தியில் நான்முகன் பார வெம் படை வாங்கி, இப் பாதகன் மாரின் எய்வென்’ என்று எண்ணி, வலித்தனன், ஆரியன், அவன் ஆவி அகற்றுவான். 191

முந்தி வந்து உலகு ஈன்ற முதற் பெயர் அந்தணன் படை வாங்கி அருச்சியா, சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா, மந்தரம் புரை தோள் உற வாங்கினான். 192

புரம் சுடப் பண்டு அமைந்தது, பொன் பணை மரம் துளைத்தது, வாலியை மாய்த்துளது, அரம் சுடச் சுடர் நெஞ்சன் அரக்கர் கோன் உரம் சுட, சுடரோன் மகன் உந்தினான். 193

அயன்படை இராவணனது மார்பில் பாய, அவன் உயிர் இழத்தல்

காலும் வெங் கனலும் கடை காண்கிலா, மாலும் கொண்ட வடிக் கணை, மா முகம் நாலும் கொண்டு நடந்தது, நான்முகன் மூல மந்திரம் தன்னொடு மூட்டலால். 194

ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம், பாழி மாக் கடலும் வெளிப் பாய்ந்ததால்- ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற, வாழி வெஞ் சுடர் பேர் இருள் வாரவே. 195

அக் கணத்தின் அயன் படை ஆண்தகை சக்கரப் படையோடும் தழீஇச் சென்று, புக்கது, அக் கொடியோன் உரம்; பூமியும், திக்கு அனைத்தும், விசும்பும்; திரிந்தவே. 196

முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்நாள், ‘எக் கோடியாராலும் வெலப்படாய்’ எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த புய வலியும், தின்று, மார்பில் புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று, இராகவன் தன் புனித வாளி 197

இராவணனைக் கொன்ற அம்பு தூ நீராடி மீண்டு, இராமனது தூணியில் புகுதல்

ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும், ஆசி கூறித் தூர்க்கின்ற மலர் மாரி தொடரப் போய், பாற்கடலில் தூய் நீர் ஆடி, தேர்க் குன்ற இராவணன் தன் செழுங் குருதிப் பெரும் பரவைத் திரைமேல் சென்று, கார்க்குன்றம் அனையான் தன் கடுங் கணைப் புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா. 198

தேரிலிருந்து இராவணன் தலைகீழாக நிலத்தில் விழுந்து, முகம் பொலிவுற்றுக் கிடத்தல்

கார் நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ என, திணி தோட் காட்டின் நின்றும், தார் நின்ற மலைநின்றும், பணிக் குலமும் மணிக் குலமும் தகர்ந்து சிந்த, போர் நின்ற விழிநின்றும் பொறிநின்று புகையோடும் குருதி பொங்க, தேர் நின்று நெடு நிலத்துச் சிரமுகம் கீழ்ப் பட விழுந்தான், சிகரம் போல்வான். 199

வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய, தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க, மயல் அடங்க, ஆற்றல் தேய, தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா, நிலை அடங்கச் சாய்த்த நாளின் மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா. 200

இராமன் இராவணனைப் பார்த்தல்

‘பூதலத்தது ஆக்குவாயாக, இனிப்பொலந் தேரை’ என்ற போதில், மாதலிப் பேரவன் கடவ, மண் தலத்தின் அப் பொழுதே வருதலோடும், மீது அலைத்த பெருந் தாரை விசும்பு அளப்பக் கிடந்தான் தன் மேனி முற்றும் காதலித்த உரு ஆகி, அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரியக் கண்டான். 201

‘தேரினை நீ கொடு விசும்பில் செல்க’ என்ன மாதலியைச் செலுத்தி, பின்னர், பாரிடம்மீதினின் அணுகி, தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற, போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப் போர்விரன் பொருது வீழ்ந்த சீரினையே மனம் உவப்ப, உரு முற்றும் திருவாளன் தெரியக் கண்டான் 202

புலைமேலும் செலற்கு ஒத்துப் பொது நின்ற செல்வத்தின் பன்மைத் தன்மை நிலை மேலும் இனி உண்டோ ? நீர்மேலைக் கோலம் எனும் நீர்மைத்து அன்றே தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின் படர்புறத்தும் தாவி ஏறி, மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால் வானரங்கள், வரம்பு இலாத 203

தோடு உழுத நறுந் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழியத் தொங்கல் பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப, பணைக் கை யானைக் கோடு உழுத நெடுந் தழும்பின் குவை தழுவி, எழு மேகக் குழுவின் கோவைக் காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தனபோல் கிடக்கக் கண்டான்: 204

இராவணனின் புறப்புண் கண்ட இராமன் முறுவலித்தல்

தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும், தருக்கினோன் தன் கிளர் இயல் உருவினோடும் கிழிப்புறக் கிளர்ந்து தோன்றும் வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும், மருவ நின்ற முளரி அம் கண்ணன், மூரல் முறுவலன், மொழிவதானான்: 205

‘வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும், பொன்றினான் என்று தோளைப் பொது அற நோக்கும் பொற்புக் குன்றி ஆசுற்றது அன்றே-இவன் எதிர் குறித்த போரில் பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா. 206

‘”கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான்” என்னக் கற்கும் வார்த்தை உண்டு; அதனைக் கேட்டு, நாணுறு மனத்தினேற்குப் போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பும் போலாம் நேர்த்ததும் காணலுற்ற; ஈசனார் இருக்கை நிற்க! 207

‘மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது, ஊண் தொழில் உகந்து, தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண, பூண் தொழில் உடைய மார்பா! போர்ப் புறங்கொடுத்தோர்ப் போன்ற ஆண் தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று’ என்றான். 208

இராவணனது முதுகில் வடு உற்ற உண்மையை வீடணன் விளக்கி, அவனது உயர்வைப் புலப்படுத்துதல்

அவ் உரைக்கு இறுதி நோக்கி, வீடணன், அருவிக் கண்ணன், வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சன், ‘செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை, செல்வ!’ என்னா, எவ் உயிர்ப் பொறையும் நீங்க இரங்கி நின்று, இனைய சொன்னான்: 209

‘ஆயிரம் தோளினானும், வாலியும், அரிதின், ஐய! மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை; தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்-தன்மை நோயும் நின் முனியும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்? 210

‘நாடு உளதனையும் ஓடி நண்ணலார்க் காண்கிலாமல், பீடு உள குன்றம் போலும் பெருந் திசை எல்லை யானைக் கோடு உளதனையும் புக்குக் கொடும் புறத்து எழுந்த புண் கோள் பாடு உளது அன்றி, தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும்? 211

‘அப் பணை அனைத்தும் மார்புக்கு அணி எனக் கிடந்த; வீரக் கைப் பணை முழங்க, மேல்நாள், அமரிடைக் கிடைத்த காலன் துப்பு அணை வயிர வாளி விசையினும், காலின் தோன்றல் வெப்பு அணை குத்தினாலும், வெரிநிடைப் போய அன்றே. 212

‘அவ் வடு அன்றி, இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற தெவ் அடு படைகள் அஞ்சாது இவன் வயின் செல்லின், தேவ! வெவ் விடம் ஈசன் தன்னை விழுங்கினும், பறவை வேந்தை அவ் விட நாகம் எல்லாம் அணுகினும், அணுகல் ஆற்றா. 213

‘வென்றியாய்! பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம், ஆண்டு, ஓர் பன்றியாய் எயிற்றுக் கொண்ட பரம்பரன் முதல பல்லோர், “என்று யாம் இடுக்கண் தீர்வது?” என்கின்றார்; “இவன் இன்று உன்னால் பொன்றினான்” என்றபோதும், புலப்படார், “பொய்கொல்?” என்பர்.’ 214

இராவணனுக்கு இறுதிக்கடன் செய்ய இராமன் வீடணனைப் பணித்தல்

‘அன்னதோ?’ என்னா, ஈசன் ஐயமும் நாணும் நீங்கி, தன்ன தோள் இணையை நோக்கி, ‘வீடணா! தக்கது அன்றால்; என்னதோ, இறந்துளான் மேல் வயிர்த்தல்? நீ இவனுக்கு, ஈண்டச் சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி’ என்றான். 215

மிகைப் பாடல்கள்

புரந்தரன் பகைவன் ஆவி போக்கிய புனிதன், வென்றி சுரந்தருள் அனுமன், நீலன், அங்கதன், சுக்கிரீவன், உரம் தரு வீரர் ஆதிக் கவிப் படைத் தலைவருள்ளார், பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர், திரியலுற்றார். 5-1

வரம் படைத்து உயர்ந்த வன் போர் வயப் படைத் தலைவரோடு நிரம்பிய வெள்ளச் சேனை நிரு தரும், களிறும், தேரும், மரம் படர் கானில் தீப்போல், வள்ளல் தன் பகழி மாரி பொரும்படி உடல்கள் சிந்தி, பொன்றினர் எவரும் அம்மா. 17-1

பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் போக, தங்கிய பிணத்தின் குப்பை தடுத்தது; சமரபூமி எங்கணும் கவந்தம் ஆட, எய்தி அங்கு அரக்கிமார்கள், தங்கள் தம் கணவர்ப் பற்றி, தம் உடல் தாங்கள் நீத்தார். 17-2

எழும் படை வெள்ளம் எல்லாம், இரண்டு ஒரு கடிகை தன்னில், ஆங்கு களம் பட, கமலக்கண்ணன் கடுங் கனல் பகழி மாரி வளம் படச் சிலையில் கோலி, பொழிந்து, அவை மடித்தான்; கண்டு, உளம் கனல் கொளுந்த, தேரின் உருத்து, எதிர், அரக்கன் வந்தான் 17-3

மூஉலகு அடங்கலும் மூடும் அண்டமேல் தாவினன் தேரொடும், அரக்கன்; தாவியே, கூவினன்; அங்கு அறைகூவ, கொண்டலும் மேவினன், அரக்கனை விடாது பற்றியே. 71-1

அண்டம் ஓராயிர கோடி எங்கணும் மண்டினர், செருத் தொழில் மலைதல் விட்டிலர்; அண்டர்கள் கலங்கினர்; ‘அரக்கராயுளோர் உண்டு, இனிக் கரு’ என ஓதற்கு இல்லையால். 71-2

உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது, அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது, சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது, இமையவர் அடல் வலி பருகியது, எளிமையின். 89-1

மயன் படைக்கலம் அழிந்தது கண்டு, இகல் மறவோன், ‘சயம் படைத்தது நன்று; இவன் செருக்கினைத் தடுக்க, பயன் படைத்துள தண்ட மாப் படைகள் உண்டு; அதனால், நயம் படைப்பென்’ என்று, ஒரு கதை நாதன்மேல் எறிந்தான். 104-1

அன்ன மாக் கதை விசையொடு வருதலும், அமலன் பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான்; முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய, சின்னமாக்கினன்; அது கண்டு, அங்கு அரக்கனும் சினந்தான். 106-1

ஆயது ஆக்கிய செய்கை கண்டு, அரக்கனும் சினந்தே, தீயின் மாப் படை செலுத்த, அப் படையினின் செறுத்தான்; தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட, அரக்கன் ஏய அப் படை ஏவி, அங்கு அமலனும் இறுத்தான். 108-1

இரவிதன் படை ஏவினன், அரக்கன்; மற்று அமலன் சுருதி, அன்ன திண் படைகொடு காத்தனன்; மதியின் விரவு வெம் படை வெய்யவன் விடுத்தலும், வீரன், உரவு திங்களின் படைகொண்டு, அங்கு அதனையும் ஒறுத்தான் 108-2

வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் மறைந்தான்; நேர் உதிக்க அப் படை கொண்டு நிமலனும் நீக்க, தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி, ‘பேருவிப்பென், மற்று இவன் உயிர்’ எனும் உளம் பிடித்தான். 108-3

முக்கணான் படை முதலிய தேவர்தம் படைகள் ஒக்க வாரி, அங்கு அரக்கனும், ஊழ் முறை துரப்ப, புக்கி, அண்ணலை வலங்கொண்டு போனதும், பொடிபட்டு உக்கி, ஓடினதும் அன்றி, ஒன்று செய்துளதோ? 108-4

இத் திறம்பட மாயையின் படை வகுத்து, எழுந்து, அங்கு எத் திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி, சித்திரம் பெற அடங்கிய கவிப் பெருஞ் சேனை மொய்த்து மூடியது, அண்டங்கள் முழுவதும் மாய. 119-1

‘அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து உலையக் கொண்ட காலம் ஈதோ!’ எனக் குலைகுலைந்து, அமரர் துண்ட வான் பிறை சூடியைத் தொழ, அவன் துயரம் கண்டு, ‘இராகவன் கடிந்திடும்; கலங்கலீர்’ என்றான். 119-2

மாயையின் படை தொலைந்திட, வகுப்பொடும் எழுந்த தீய வெவ் வினைச் செய்கைகள் யாவையும் சிதைந்தே போயது; எங்கணும் இருள் அற ஒளித்தது; அப் பொழுதில் காயும் வெஞ் சினத்து அரக்கனும் கண்டு, உளம் கறுத்தான். 124-1

நெற்றி விழியான்-அயன், நிறைந்த மறையாளர், மற்றை அமரர், புவியில் வானவர்கள், ‘ஈர்-ஐந்து உற்ற தலை தானவன் விடும் கொடிய சூலம் இற்று ஒழிய ஆன்று அழியுமோ?’ என-இசைத்தான். 131-1

‘வேதம் ஒரு நாலும், உள வேள்விகளும், வெவ்வேறு ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும், நீதியொடு கால்குலைய, நீசன் விடு சூலம் ஈது அழியும்’ என்று இதயம் எண்ணினன், இராமன். 131-2

எவ் வகை உரகமும் இரியல் போயின, நொவ்வியல் உற்றன; நொடிப்பது என் இனி? அவ் வயின் அரன் அணி அடல் அராவுமே கவ்வையின் உழந்தன, சிறையின் காற்றினே. 144-1

பிறைத் தலைப் பகழியால் பின்னும் ஓர் தலை அறுத்தனன்; முளைத்தது, அங்கு அதுவும் ஆர்த்து; உடன் மறுத்து இரு தலைதனை மாற்ற, வள்ளலும் குறைத்திலன் எனும்படி முளைத்த, குன்றுபோல். 151-1

ஆயிரப் பதின் மடங்கு அரக்கன் மாத் தலை தீமுகப் பகழியால் சினந்து, இராகவன் ஓய்வு அறத் துணிக்கவும், உடன் முளைத்ததால், தீயவன் தவப் பெருஞ் செயலின் வன்மையால். 151-2

அண்ணலும் இடைவிடாது அறுத்து வீழ்த்தலால், மண்ணொடு வானகம், மருவும் எண் திசை, எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை நண்ணியது; அமரரும் நடுக்கம் எய்தினார். 152-1

இத் திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின் தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால், அத் திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன்- முத் திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான், 153-1

தொடுத்த ஆழியின் தோமரம் தூள்பட, விடுத்த வீரன் அவ் வெய்யவன் மாத் தலை அடுத்து மீளவும் நின்று அறுத்தான்; உயிர் முடித்திலன் விளையாடலை முன்னியே. 160-1

ஆனபோது, அங்கு அரக்கன் அத் தேரொடும் வான மீது எழ, மாதலி தூண்டிட, ஞான நாயகன் தேரும் எழுந்துறப் போனது; அண்டப்புறத்து அமர் கோலினார். 164-1

அஞ்சல் இன்றி, அமர்க் களத்து, ஆரியன் வெஞ் சினத்தொடு வேல் அரக்கன் பொர, எஞ்ச ஏழு திவசம் இராப் பகல் விஞ்சு போர் செயும் வேலையில் வீரனும், 183-1

ஆய கண்டு, அங்கு அமலன் விடும் சரம் சாயகங்களை நூறி, தலைத்தொகை போய் அகன்றிடச் செய்தலும், போக்கிலாத் தீயவன் சினந்து, இம் மொழி செப்புவான்: 183-2

‘துறக்கும் என்பதை எண்ணி, சிரத் தொகை அறுக்குமுன் முளைத்து உய்குவது அன்றியே, மறுக்கும் என்று மனக் கொளல், மா நிலத்து இறக்கும் மானுடர் போன்று, என் உயிரும், நீ.’ 183-3

ஈது அரக்கன் புகல, இராமனும், ‘தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து, ஓது உரைக்கு எதிருற்று, என் பகழி இப் போது உரைக்கும்’ எனக் கொடு பொங்கினான். 183-4

மாறுபடத் தேவர்களை ஏவல்கொளும் வாள் அரக்கன் மடிய, அன்னான் ஏறி வரு பொன் தடந் தேர் பாகனும் பொன்றிட, பண்டு அங்கு இமையா முக் கண் ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின் ஏகியதால்-இடையே கூடித் தேறுதல் செய்து உழல் போதில், தீவினை மாய்த்திடப் போம் நல் வினையேபோல. 200-1

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/35-இராமன் தேர் ஏறு படலம்–

November 2, 2020

இராமன் போர்க்கோலம் பூண்டு எழுதல்

தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை துளங்கி, விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர் அழுந்து பணிமீது அமளி, ‘அஞ்சல்’ என, அந் நாள், எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன். 1

கடக் களிறு எனத் தகைய கண்ணன், ஒரு காலன் விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான், ‘மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர்தம் இடர்க் கடலினுக்கும், முடிவு இன்று’ என இசைத்தான். 2

தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின் பின்னக அசத்த பொருள் இல்லை; பெரியோனை மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ? இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால். 3

புட்டிலொடு கோதைகள், புழுங்கி எரி கூற்றின் அட்டில் எனலாய மலர் அங்கையின் அடக்கிக் கட்டி, உலகின் பொருள் எனக் கரை இல் வாளி வட்டில், புறம் வைத்து, அயல் வயங்குற வரிந்தான். 4

இராமனுக்குத் தேர் அனுப்புமாறு, சிவபெருமான் தேவருக்கு கட்டளையிடல்

‘மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; இனி, வெற்றி ஆண் தகையது; உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர், பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் தேர் ஈண்ட விடுவீர், அமரில்’ என்று, அரன் இசைத்தான். 5

இந்திரன் கூற மாதலி தேரைக் கொணர்தல்

தேவர் அது கேட்டு, ‘இது செயற்கு உரியது’ என்றார்; ஏவல் புரி இந்திரனும், ‘அற்று’ என இசைத்தான்; ‘மூஉலகும் முந்தும் ஒர் கணத்தின்மிசை முற்றிக் கோவில் புரிகேன்; பொரு இல் தேர் கொணர்தி’ என்றான். 6

மாதலி கொணர்ந்த தேரின் சிறப்பு

மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும் பூதலம் எழுந்து படர் தன்மைய பொலந் தேர்; சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில். 7

குலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும், அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும், கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின் வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை. 8

ஆண்டினொடு நாள், இருது, திங்கள், இவை என்று மீண்டனவும் மேலனவும் விட்டு, விரி தட்டில் பூண்டு உளது; தாரகை மணிப் பொரு இல் கோவை நீண்ட புனை தாரினது; நின்றுளது குன்றின். 9

மாதிரம் அனைத்தையும் மணிச் சுவர்கள் ஆகக் கோது அற வகுத்தது; மழைக் குழுவை எல்லாம் மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப் பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா! 10

மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரித் தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக் கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து, உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை. 11

பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப் புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம் உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன், அண்டச மணிச் சயனம் ஒப்பது, அகலத்தின். 12

வேதம் ஒரு நாலும், நிறை வேள்விகளும், வெவ் வேறு ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும், பூதம் அவை ஐந்தும், எரி மூன்றும், நனி பொய் தீர் மா தவமும், ஆவுதியும், ஐம் புலனும், மற்றும், 13

அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும், ஒருங்கு அரணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும், பெரும் பகலும், நீள் இரவும், என்று இவை பிணிக்கும் பொரும் பரிகள் ஆக நனி பூண்டது, பொலந் தேர். 14

மாதலி இராமனிடம் தேர் கொணர்ந்து அதன் சிறப்பைச் செப்புதல்

வந்ததனை வானவர் வணங்கி, ‘வலியோய்! நீ எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்; தந்தருள்வை வென்றி’ என நின்று, தகை மென் பூச் சிந்தினர்கள்; மாதலி கடாவி, நன் சென்றான். 15

‘வினைப் பகை விசைக் கொடு விசும்பு உருவி, மான மனத்தின் விசை பெற்றுளது வந்தது’ என, வானொடு அனைத்து உலகமும் தொழ, அடைந்தது, அமலன்பால்; நினைப்பும் இடை பிற்பட, நிமிர்ந்தது நெடுந் தேர். 16

தேரினை வியந்த இராமன், தேர் கொணர்ந்தது குறித்து மாதலியை வினாவுதல்

‘அலரி தனி ஆழி புனை தேர் இது எனில், அன்றால்; உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்; நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிதுஅம்மா; தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ? 17

‘என்னை இது நம்மை இடை எய்தல்?’ என எண்ணா, மன்னவர்தம் மன்னன் மகன், மாதலியை, ‘வந்தாய், பொன்னின் ஒளிர் தேர் இது கொடு, ஆர் புகல?’ என்றான்; அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்: 18

மாதலியின் மறுமொழி

‘முப் புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள், அப் பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு ஒப்பு உடையது; ஊழி திரி நாளும் உலைவு இல்லா இப் பொரு இல் தேர் வருவது இந்திரனது;-எந்தாய்! 19

‘அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக் கொண்டு பெயரும்; குறுகும்; நீளும்; அவை கோளுற்று உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்; புண்டரிக! நின் சரம் எனக் கடிது போமால். 20

‘கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால், உண்ணும் விசையால்; உணர்வு பின் படர ஓடும்; விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே, எண்ணும் நெடு நீரினும், நெருப்பிடையும்-எந்தாய்! 21

‘நீரும் உளவே, அவை ஒர் ஏழு? நிமிர்கிற்கும் பாரும் உளவே, அதின் இரட்டி? அவை பண்பின் பேரும் ஒரு காலை, ஒரு காலும் இடை பேராத் தேரும் உளதே, இது அலால்?-உலகு செய்தோய்! 22

‘தேவரும், முனித் தலைவரும், சிவனும், மேல்நாள், மூஉலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்துள இது’ என்றான், மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான். 23

இராமன் அரக்கர் மாயையோ என ஐயமுற, மாதலி தேரில் பூட்டிய குதிரைகள் உண்மை என்பதை விளக்குதல்

ஐயன் இது கேட்டு, ‘இகல் அரக்கர் அகல் மாயச் செய்கைகொல்?’ எனச் சிறிது சிந்தையில் நினைந்தான்; மெய் அவன் உரைத்தது என வேண்டி, இடை பூண்ட மொய் உளை வயப் பரி மொழிந்த, முது வேதம். 24

இராமன் ஐயம் நீங்கி, சாரதியின் பெயரைக் கூறு என, மாதலி தன் பெயரை வெளியிடுதல்

‘இல்லை இனி, ஐயம்’ என எண்ணிய இராமன், நல்லவனை, ‘நீ உனது நாமம் நவில்க!’ என்ன, ‘வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர் சொல்லுவர்’ எனத் தொழுது, நெஞ்சினொடு சொன்னான். 25

மாருதியையும் இளவலையும் நோக்கி, ‘உம் கருத்து யாது?’ என, அவர்களும், ‘இதில் ஐயம் இல்லை’ என்றல்

மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி, ‘நீர் கருதுகின்றதை நிகழ்த்தும்’ என, நின்றான்; ஆரியனை வணங்கி, அவர், ‘ஐயம் இலை, ஐயா! தேர் இது புரந்தரனது’ என்றனர், தெளிந்தார். 26

மாதலி கொணர்ந்த தேரில் இராமன் ஏறுதல்

விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப, தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள, அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் – இராமன். 27

மிகைப் பாடல்கள்

இத் தகையன் ஆகி, ‘இகல் செய்து, இவனை இன்னே கொத்து முடி கொய்வென்’ என, நின்று எதிர் குறிப்ப, தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என, வானில், சித்தர்கள், முனித் தலைவர், சிந்தை மகிழ்வுற்றார். 4-1

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/34–இராவணன் தேர் ஏறு படலம்–

November 2, 2020

எஞ்சிய சேனையைத் திரட்டுமாறு மகோதரனுக்கு இராவணன் கூறுதல்

பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச் செந் தீ, மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி, ‘”ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை யாதையும் எழுக!” என்று, ஆனை மணி முரசு எற்றுக!’ என்றான் 1

சேனைகள் திரளுதலும், இராவணன் பூசனை செய்து, தானம் முதலிய நல்குதலும்

எற்றின முரசினோடும் ஏழ்-இரு நூறு கோடி கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித் திண் தேரும், சுற்றுறு துளைக் கைம் மாவும், துரகமும், பிறவும் தொக்க, வற்றிய வேலை என்ன, இலங்கை ஊர் வறளிற்று ஆக. 2

ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம் வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம் ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான் 3

இராவணன் போர்க்கோலம் பூணுதல்

அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர் உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர, கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், கட்டிச் செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், சேர்த்தான். 4

வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாகணத்தின் தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி; கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை மீள்வு இல் கிம்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி; 5

மறை விரித்தன்ன ஆடுறு மான மாக் கலுழன் சிறை விரித்தன்ன கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி; முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில் பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து; 6

மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து; முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ தழைக்கும் மின் ஒளிப் பொன் மலர்ச் சதங்கையும் சாத்தி; 7

உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான் உலகின் இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும் புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி; சரியுடைச் சுடர் சாய் வலம் சார்வுறச் சாத்தி; 8

நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன் ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும் கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி; தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ; 9

கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின் அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க; உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; 10

உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின் துதையும் குங்குமத் தோளொடு தோளிடைத் தொடர; புதை இருள் பகைக் குண்டலம் அனையவை பொலிய; சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்துஇனம் திகழ; 11

வேலைவாய் வந்து, வெய்யவர் அனைவரும் விடியும் காலை உற்றனர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும் மாலை பத்தின்மேல், மதியம் முன் நாளிடைப் பலவாய் ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப; 12

பகுத்த பல் வளக் குன்றினில் முழை அன்ன பகு வாய் வகுத்த வான் கடைக் கடை தொறும் வளை எயிற்று ஈட்டம், மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை, தசும்பூடு உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க; 13

ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஒக்கத் தத்துகின்றன, வீர பட்டத் தொகை தயங்க; முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க; 14

புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி, தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணி முடித் தலங்கள் உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி, அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; 15

நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன் பணித்த வாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு அளவி; தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி; 16

அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை, நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? நின்ற இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத் தன் புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; 17

‘வருக, தேர்!’ என, வந்தது-வையமும் வானும் உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும், உச்சிச் சொருகு பூ அன்ன சுமையது; துரகம் இன்று எனினும், நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் இமைப்பில். 18

ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன் பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர் நீர் வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன் காற்றின் நாயகற்கு, வந்து உதித்தவும், பூண்டது நலத்தின். 19

பாரில் செல்வது, விசும்பிடைச் செல்வது; பரந்த நீரில் செல்வது; நெருப்பிடைச் செல்வது; நிமிர்ந்த போரில் செல்வது; பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன் ஊரில் செல்வது; எவ் உலகினும் செல்வது, ஓர் இமைப்பின். 20

எண் திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும் கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன் மண்டிலங்களை மேருவில் குவித்தென வயங்கும் அண்டம் விற்கும் நன் காசுஇனம் குயிற்றியது, அடங்க. 21

முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர் எனைவர் ஈந்தவும், இகலினில் இட்டவும், இயம்பா வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும் சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க. 22

கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்து அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத் திண்மை சான்றது; தேவரும் உணர்வு அருஞ் செய்கை உண்மை ஆம் எனப் பெரியது, வென்றியின் உறையுள். 23

அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி, இனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் எவர்க்கும் வினையின் நல் நிதி முதலிய அளப்ப அரும் வெறுக்கை நினையின் நீண்டது ஓர் பெருங் கொடை அருங் கடன் நேர்ந்தான் 24

ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர் தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், திகைத்தார்; வேறு தாம் செயும் வினை இலை, மெய்யின் ஐம் புலனும் ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. 25

இராவணனின் சபதம்

‘மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்; அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் உறுதல்; இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்’ என்றான் 26

இராவணன் தோள் புடைத்து ஆர்த்து, வில் நாணைத் தெறித்தல்

பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் தோள் அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க, விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப, உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான். 27

விசும்பு விண்டு இரு கூறுற, கல் குலம் வெடிப்ப, பசும் புண் விண்டெனப் புவி பட, பகலவன் பசும் பொன் தசும்பின் நின்று இடை திரிந்திட, மதி தகை அமிழ்தின் அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான். 28

‘நணித்து வெஞ் சமம்’ என்பது ஓர் உவகையின் நலத்தால், திணித் தடங் கிரி வெடித்து உக, சிலையை நாண் தெறித்தான்; மணிக் கொடுங் குழை வானவர், தானவர், மகளிர் துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். 29

போர்க்களத்தில் இராவணன் தோன்றுதல்

சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற, வீங்க, இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய, ‘பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும் விரித்து எழுந்தனன், அனந்தன்மீது’ என்பது ஓர் மெய்யான். 30

தோன்றினான் வந்து-சுரர்களோடு அசுரரே தொடங்கி மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய, ‘ஊன்றினான் செரு’ என்று உயிர் உமிழ்தர, உதிரம் கான்று, நாட்டங்கள் வட அனற்கு இரு மடி கனல. 31

உலகில் தோன்றிய நிலைகுலைவைச் சுக்கிரீவன் முதலியோர் கண்டு, துணுக்கமுற்று எழுதல்

உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் உலைவும், மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும், அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும், தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். 32

‘பீறிற்றாம் அண்டம்!’ என்பது ஓர் ஆகுலம் பிறக்க, வேறிட்டு ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க, ‘மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம் ஏறிற்று; உற்றுளது என்னைகொலோ?’ என எழுந்தார். 33

இராவணன் வருகையை அவர்கள் உணர்தல்

கடல்கள் யாவையும், கல் மலைக் குலங்களும், காரும், திடல் கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன சிவண, அடல் கொள் சேனையும், அரக்கனும், தேரும், வந்து ஆர்க்கும் கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதும் கண்டார். 34

இராவணனது வருகையை வீடணன் இராமனுக்குக் கூறுதல்

‘எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானைக் கொழுந்து முந்தியது உற்றது; கொற்றவ! குலுங்குற்று அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் அஞ்சி, விழுந்து சிந்தினர்’ என்றனன், வீடணன், விரைவான். 35

மிகைப் பாடல்கள்

ஏழ்-இரு நூறு கோடி எனும் படைத் தலைவரோடும் ஆழியின் வளைந்த சேனை ஐ-இருநூறு வெள்ளம் ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர் வேந்தன், ‘வாள் அமர் முடிப்பென் இன்றே’ என மணித் தவிசு நீத்தான். 2-1

உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை கேள்வன் அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு ஆழி முரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியா விரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான். 4-1

அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை கண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன், பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது அளிக்கக் கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின், 18-1

ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன் நால்-ஐந் தும், ஐந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள் ஒழிய இம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு ஈசன் வெம்மை ஆடு அமர்க்கு எழுந்தென, தேர்மிசை விரைந்தான். 27-1

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-