Archive for the ‘கதய த்ரயம்’ Category

ஸ்ரீ ரெங்க கத்யம் -சூரணை -1 -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 26, 2014

பிரவேசம் –

ஸ்ரீ ரெங்க கத்யத்தால் செய்தது ஆகிறது –
ப்ராப்யமான கைங்கர்யத்தை ப்ரதமத்திலே  பிரார்த்தித்து
தத் சித்தி அர்த்தமாக ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டு
ஸ்வ தோஷக்யாபன பூர்வகமாக திருவடிகளையே உபாயமாக ஸ்வீகரித்து
அநந்தரம்
அர்த்தநா மாத்ரத்தாலே
இப்படி விலஷணமாய் இருந்துள்ள தாஸ்யத்தை தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்து
இவ் விஸ்வாசம் தன்னையும்
காருண்யாதி கல்யாண குண பரி பூரணரான தேவரே தந்து அருள வேணும் என்று அபேஷித்து
தேவருக்கு அனன்யார்ஹ சேஷ பூதமான இவ் வஸ்துவை
ஸ்வரூப அனுரூபமான
வ்ருத்தி பர்யந்தமாக தேவரே பண்ணி அருள வேணும் என்று
பெரிய பெருமாள் திருவடிகளிலே அபேஷித்து தலைக் கட்டுகிறார்-
இப் பிரபத்தி அதிகாரத்திலே இழிந்த முமுஷூக்கள் யாவச் சரீர பாதம்

கால ஷேபம் பண்ணும்படி எங்கனே என்னில் –
தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்து உரைத்த வெநநாகத்து உன்னை -தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் -திருவந்தாதி -63-என்கிறபடியே
உகந்து அருளின நிலங்களிலே அனுகூல வருத்தி உடனே கால ஷேபம் பண்ணுதல்
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச்
சார்த்தி இருப்பார் தவம் -நான் முகன் திருவந்தாதி -18- என்றும்
ஆராத நாநாம் சர்வேஷாம் விஷ்ணோ ராராதனம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததி யாராதனம் பரம் -என்றும்
சொல்லுகிறபடியே
உகந்து அருளின நிலங்களிலே பரவண ஹ்ருதயரான ததீயர் உடைய ஆராதனம் ஆகிற
அனுகூல வருத்தி உடனே கால ஷேபம் பண்ணுதல்
அ தல் அசக்தராய் இருப்பார்
கார்கலந்த மேனியான் கைகலந்த வாழியான்
பார்கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ துயரை
என்னினைந்து போக்குவர் இப்போது -பெரிய திருவந்தாதி -86-என்கிறபடியே
பகவத் குண அனுபவத்திலேயே கால ஷேபம் பண்ணுதல்
அவ்வளவு பகவத் ப்ராவண்யம் போராதவர்கள்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ -என்கிறபடியே
த்வயத்தின் உடைய அர்த்த அனுசந்தானத்தைப் பண்ணா நின்று கொண்டு கால ஷேபம் பண்ணுதல் ஆயத்து இருப்பது
அதில் இவர் த்வயத்தின் அர்த்த அனுசந்தானத்துடனே கால ஷேபம் பண்ண நினைத்து
இதில்
பெரிய கத்யத்தில் விஸ்த்ருதமாக அனுசந்தித்த அர்த்தத்தை
ஸ்ரோதாக்களுக்கு ஸூ க்ரஹமாகவும்
பெரிய பெருமாளுக்குத் திருச் செவி சாத்த ஏகாந்தமாகவும்
அந்த த்வயத்தின் உடைய அர்த்தத்தை பாசுரப் பரப்பற
திரு முன்பே விண்ணப்பம் செய்யலாம்படி
சங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

————————————————————————————-

சூரணை -1- அவதாரிகை –

அதில் முதல் சூரணை யிலே
பரம புருஷார்த்தமாக நிர்ணீதமான கைங்கர்யத்தை அபேஷிக்கிறார்
கைங்கர்ய பிரதி சம்பந்தியாவான் நாராயணன் இ றே
அந் நாராயண சப்தத்துக்கு அர்த்தம்
உபய விபூதி யோகமும்
ஹேய பிரதி படத்வமும்
சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும் இ றே
அதில் உபய விபூதி யோகத்தை முதலில் அருளிச் செய்கிறார்-

ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்
க்லேச கர்மாத் யசேஷ தோஷா சம்ச்ப்ருஷ்டம்
ஸ்வாபாவிக அநவதிக அதிசய
ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்
சௌசீல்ய வாத்சல்ய மார்த்த்வ ஆர்ஜவ
சௌஹார்த்த சாம்ய காருண்ய மாதுர்ய
காம்பீர்ய ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய
தைர்ய சௌர்ய பராக்கிரம சத்யகாம
சத்ய சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத்ய
அசங்க்யேய கல்யாண குண கனௌக
மஹார்ணவம் பரப் ப்ரஹ்ம பூதம்
புருஷோத்தமம் ஸ்ரீ ரங்க ஸாயினம்
அஸ்மத் ஸ்வாமினம் பிரபுத்த
நித்ய நியாமய நித்ய தாஸ்யை கர சாத்ம
ஸ்வ பாவோஸஹம்
தத் ஏக அனுபவ
தத் ஏக பிரியா
பரிபூரணம் பகவந்தம்
விசத தம அனுபவேன
நிரந்தர அனுபூய
தத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித
அசேஷ சேஷை தை கரதி ரூப
நித்ய கிங்கரோ பவானி

ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் –
த்ரிவித சேதனர் -என்ன
த்ரிவித அசேதனங்கள் -என்ன
இவற்றின் உடைய ஸ்வரூப பேதம் என்ன
ஸ்திதி பேதம் என்ன
ப்ரவ்ருத்தி பேதம் என்ன
இவற்றை ஸ்வாதீனமாக உடையவன் –
சேதன த்ரைவித்யம் பத்த முக்த நித்ய பேதத்தாலே  –
அசேதன த்ரைவித்யம் -சுத்த சத்வ ஆத்மகதை யாலும் -சுத்த சத்வமான அசித்தும் –
குண த்ரயாத்ம கதையாலும் -குண த்ரயாத் மிகையான -பிரகிருதியும் –
சிருஷ்டி யாதி நிர்வாஹகமான கால ரூபத்தாலும் –
அதில் பத்தர் ஆகிறார் -ஜ்ஞான சங்கோச அர்ஹ ஸ்வரூப ராய்
புண்ய பாப பலமான சுக துக்க அனுபவத்திலே ஸ்திதியை உடையராய்
தத் ஹேதுவான புண்ய பாப ரூப கர்ம ப்ரவ்ருத்தி கரராய் இருப்பார்கள்
முக்தர் ஆகிறார் -நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே
ஜ்ஞான சங்கோச ஹேதுவான தேக சம்பந்தாதிகள் நிவ்ருத்தமாய்
அதடியாக ஆவிர்ப்பூத ஸ்வரூபராய்
கைங்கர்ய சோகத்திலே ஸ்திதியை உடையராய்
தத் அனுரூபமாக
சோஸ் நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா-என்கிறபடியே
பகவத் குண அனுபவ ப்ரவ்ருத்திகராயும்
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி
தத் யதா தருண வத்ஸா வத்சம் வத்சோ வா மாதரம் சாயா வா சத்வம் அனுகச்சேத் ததாப்ரகாரம் -என்கிறபடியே
காயிகமான கைங்கர்ய ப்ரவ்ருத்த கராயும்-
அத்தாலே கழித்து
ஹாவு ஹாவு ஹாவு -என்கிறபடியே -வாசிக ப்ரவ்ருத்திகராயும் இருப்பார்கள்

நித்யர் ஆகிறார் -அச்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -முக்தரைப் போலே ஒரு நாள் அளவிலே வந்து
கிட்டினவர் அன்றிக்கே -அநாதி அனந்த கைங்கர்ய சுகத்திலே ஸ்திதியை உடையவ ராய்
சதா தர்சன ப்ரவ்ருத்தி கராயும் நித்ய அஞ்சலி புடராய் பிரவ்ருத்தி கராயும்
நித்ய ஸ்துதி பிரவ்ருத்தி கராயும் இருப்பார்கள்
ஆகையால் ஆயிற்று நித்யர் என்று இவர்களுக்கு பேராயிற்று –
பிரகிருதி தத்வம் -குண த்ரயாத் மகமாய
சத்த பரிமாண ஸ்வரூபமாய்
சேதன கர்ம அனுகுணமாகப் பரிணமிக்கை யாலே ஸ்திதியை உடைத்தாயும்
சேதனருக்கு ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப புருஷார்த்த ஸ்வரூப உபாய ஸ்வரூப விரோதி ஸ்வரூப
சம்பந்த ஸ்வரூப திரோதானகரமாயும் இருக்கும்
பஞ்ச உபநிஷண் மயமான அசித்து சுத்த சத்வ மயமாயும்
சதைக ரூப ரூபமாயும்
நித்ய முக்தர்கள் உடைய கைங்கர்யத்துக்கு உபகரண ரூபேணவும்
ஈஸ்வரன் உடைய ரஷண் க்ருத்யத்துக்கு அனுகூலமாக வ்யூஹ விபவ ரூபேணவும்
ஸ்திதி யை உடைத்தாயும்
சர்வத்ர பிரகாச ப்ரவ்ருத்திக மாயும் இருக்கும்
காலம் -பிரக்ருதியில் காட்டில் வ்யாவ்ருத்தமாய்
ஏக ஸ்வரூபமாய்
நிமேஷ காஷ்டாத்யவ அவஸ்தா யுக்தமாய்க் கொண்டு
ப்ராக்ருத பதார்த்தங்கள் என்ன
தத் சம்ஸ்ருஷ்ட சேதனர் என்ன
இவற்றின் உடைய நிர்வஹணத்திலே ஸ்திதியை யுடைத்தாயும்
சகலத்தி உடைய உத்பத்தி விநாசாதி ப்ரவ்ருத்தி கமாயும் இருக்கும்
இவற்றை ஸ்வாதீனமாக உடையனாகை யாவது
அந்தராத்மா தயா நின்று நியமிக்கை-
ஆக சகல சேதன சேதனங்களின் உடைய சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகள்
ஈஸ்வர அதீனமாகையாலே இவற்றின் உடைய சரீரத்வமும் ஈஸ்வரன் உடைய சரீரித்வமும் சொல்லிற்று ஆயிற்று –

க்லேச கர்மாத் யசேஷ தோஷா சம்ச்ப்ருஷ்டம்
சேதன அசேதனங்கள் இரண்டும் சரீரமாய்
ஈஸ்வரன் சரீரியாய் இருக்கிறான் ஆகில்
சரீர பிரயுக்தமான தோஷம் சரீரிக்கு வாராதோ -என்னில் –
தத் கத தோஷை ரசம் ஸ்ப்ருஷ்டன் -என்கிறது
கிலேசம் ஆவது –
அவித்யாஸ் மிதாபிநிவேச ராக த்வேஷா பஞ்ச கிலேசா -இவை என்ன
இவற்றுக்கு காரணமுமாய் கார்யமுமாய் இருந்துள்ள புண்ய பாப ரூப கர்மங்கள் -என்ன
ஆதி -சப்த க்ராஹ்யமான விபாகா சயங்கள் -என்ன
இவை முதலான அசேஷ தோஷங்களாலும் ச்பர்சிக்கப் படாதவன் –
விபாகம் ஆவது -தேவாதி ஜாதி யோகம் -என்ன
ஆயுஸ் என்ன -இவை முதலானவை
ஆசயம் ஆகிறது -தத் தஜ் ஜாத்ய அனுகுண புத்தி பேதங்கள்
அசேஷ -பதத்தாலே அசித் கதமான பரிணாமத்தையும்
சேதன கதமான துக்க அஜஞநாதிகளையும் நினைக்கிறது
அசம்ச்பர்சத்தாலே ப்ராக பாவத்தை நினைக்கிறது
ஸ்வாபாவிக -இத்யாதி-
இதில் சர்வ சாதாரணமாயும்-ஆஸ்ரித விஷயமாகவும் -ஆஸ்ரித விரோதி விஷயமாகவும்
மூன்று வகைப் பட்ட குணங்களைச் சொல்லுகிறது –
ஸ்வா பாவிகம் ஆகையாவது -ஜலத்துக்கு சைத்யம் போலேவும் அக்னிக்கு ஔஷ்ண்யம் போலேயும் யாவத் த்ரவ்ய பாவியாய் இருக்கை-
அநவதிக அதிசய –
உபர்யுபர்யப்ஜபு வோஸபி பூருஷான் பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதெ கைக குணவதீபசய சதா ஸ்திதா நோத் யமதோஸ்தி சேரதே-ஸ்தோத்ர ரத்னம் -19-என்கிறபடியே
தனித் தனியே நிஸ் சீமமாய் ஆச்சர்ய அவஹமுமாய் இருக்கை

ஜ்ஞான –
ஈஸ்வர ஜ்ஞானம் -ஆகிறது -யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்ய ஷேண சதா ச்வத – என்கிறபடியே
சர்வ காலமும் சர்வ வஸ்துக்களையும் ஒரு காலே சாஷாத் கரிக்கும் சாமர்த்தியம்
அதாகிறது -விஷம சிருஷ்டியிலே கரமே பாவித்து இருந்துள்ள அசந்க்யாதமான ஆத்மாக்களின் உடைய ஸ்வரூப பேதத்தையும்
நாம பேதத்தையும் தத் தத் கர்ம பேதத்தையும் சாஷாத் கரிக்கும் சக்தி –
பல –
அதாவது -ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களையும் ஸ்வ சங்கல்ப சஹச் ரைக தேசத்தாலே
தரிக்கும் தாரண சாமர்த்தியம்
ஐஸ்வர்ய –
அதாவது -சகல ஆத்மாக்களையும் கர்ம அனுகுணமாக நியமிக்கும் நியமன சாமர்த்தியம்

வீர்ய –
அதாவது -ச்ருஷ்ட்யாதி சகல வியாபாரங்களையும் பண்ணா நின்றாலும்
அநாயாச ரூபமான அவிகாரித்வம்
யதா சந்நிதி மாத்ரேண கந்த சோபாய ஜாயதே
மனசோ நோபா கர்த்ருத்வாத் ததாசசௌ பரமேஸ்வர – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-20-
சக்தி
அதாவது -ப்ரவ்ருத்த உன்முகரான சேதனருக்கு சக்தியைக் கொடுத்து
ப்ரவர்த்திப்பிக்கும் பிரவர்த்தக சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் ஆகவுமாம்
தேஜஸ் –
அதாவது -பராபிபவன சாமர்த்தியம்
ஜ்யோதீம்ஷ்யாதி த்யவத் ராஜன் குரூன் ப்ரச்சாதயன் ஸ்ரீ யா -என்றும்
தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் -என்றும்
இவ்வாறு ஆறு குணங்களும் சர்வ விஷயம் –

இப்படி ஜ்ஞாநாதி ஷட் குண யுக்தனான ஈஸ்வரனுக்கே
அநந்தரம் –ஆஸ்ரித விஷயமாக பன்னிரண்டு குணம் சொல்லுகிறது
1-சௌசீல்ய –
சீலம் ஆவது -மகதோ மந்தைச் சஹ நீரந்த்ரேண சம்ச்லேஷ ஸ்வபாவத்வம்
சௌசீல்யம் ஆவது -அந்த மஹத்வம் தன திரு உள்ளத்திலும் இன்றிக்கே ஒழிகை –
ஆத்மானம் மானுஷம் மன்யே –
2-வாத்சல்ய –
அதாகிறது -ஆஸ்ரித கதமான தோஷமும் குனமாய்த் தோற்றும்படியான ப்ரேமம் –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய தோஷத்தை தன பேறாகப் போக்கி ஸ்வ குணங்களாலே தரிப்பிக்கை
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும் வந்து உன்னை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய் நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே – -திருச் சந்த விருத்தம் -111
மாலே படிச் சோதி மாற்றெல் இனி உனது
பாலே போல் சீரில் -பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு -பெரிய திருவந்தாதி -58
அதாவது அத்யஜாதமான வத்சத்தின் பக்கல் தேனுவிருக்கும் படி
கோபாலத்வம் ஜூ குப்சிதம்

3-மார்த்த்வ –
இது ரூப குணமாய் இருக்க
ஆத்ம குண பிரகரணபடிதமாகையாலே மாநசமான
தௌர்ர்ப்பல்யத்தைக் காட்டுகிறது –
அதாகிறது -ஆஸ்ரித விச்லே ஷம் பொறுக்க மாட்டாது ஒழிகை –
சம்ஸ்மராம் யஸ்ய வாக்யானி பிரியாணி மது ராணி ச
ஹ்ருத் யான் யம்ருத கல்பானி மன ப்ரஹ்லாத நானி ச -ஆரண்ய -16-39
அநித்ரஸ் சத்தம் ராம -சுந்தர -36-44-
4-ஆர்ஜவ-
அதாவது -ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமாக தன்னுடைய மநோ வாக் காயங்கள் ஏக ரூபமாய் இருக்கை-
அதாவது -அவர்கள் உடைய செவ்வைக் கேடு தானே செவ்வியம் படி தான் செவ்வியனாய் இருக்கை –
5-சௌஹார்த்த –
அதாவது -சோபா நாசம்சீதி ஸூ ஹ்ருத் –
ஆஸ்ரிதர் உடைய சந்நிதியோடு அசந்நிதியோடு வாசி அற
அவர்கள் உடைய சர்வ மங்களங்களையும் அன்வேஷியா நிற்கை –
6-சாம்ய
அதாவது ஜாதி குண வ்ருத்தாதிகள் உடைய உத்கர்ஷ அபகர்ஷங்கள் பாராதே ஆபிமுக்கியமே ஹேதுவாக
ஆஸ்ரயணீயத்வே சமனாகை-
குஹென சாஹித
சபர்யா பூஜிதாஸ் சமயக்
7-காருண்ய –
அதாவது –ஸ்வார்த்த நிரபேஷ பரதுக்கஅசஹிஷிஷ்ணுத்வம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித
உத்சவேஷூ ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி -அயோத்யா -2-40–என்றும்
இயம் சா யத்க்ருதே ராமஸ் சதுர்ப்பி பரிதப்யதே
காருண்யே நான்ரு சம்ச்யேன சோகேன மத நேன ச – சுந்தர -15-49-என்றும்
ஸ்திரீ ப்ரணஷ்டேதி காருனண்யாதா ஸ்ரிதேத் யான்ரு சம்ச்யத
பத்நீ நஷ்டேதி சோகேன ப்ரியேதி மத நேன ச -சுந்தர -15-50 -என்றும் -இருக்கை
8-மாதுர்ய-
அதாவது ஸ்வரூப ரூப குண விபூதிகளால் உண்டான சர்வதோ முகமான சாரச்யம்
ஹந்தும் ப்ரவ்ருத்தன் ஆனாலும் அவனுக்கு ரசாவஹனாய் இருக்கை
அசூர்யமிவ சூர்யேன-
ஏஹ்யேஹி புல்லாம் புஜ பத்ர நேத்ர
சர்வ கந்தஸ் சர்வ ரச -என்று இருக்கை
9-காம்பீர்ய –
அதாவது -ஆஸ்ரீதர்க்கு செய்ய நினைத்து இருக்குமவை ஒருத்தராலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்கை
அதாவது தன்னுடைய கோடையின் சீர்மையையும்
கொள்ளுகிறவன் உடைய சிறுமையையும் பாராது ஒழிகை
எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கை
யா ஆத்மாதா பலதா
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ -நின் புகழில்
வைக்கும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான் -பெரிய திருவந்தாதி -53-
10-ஔதார்ய –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய அபேஷிதங்களை இரந்து கொடுக்கை –
ச சர்வா நர்த்தி நோ த்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நந்த்ய ச –
உதாராஸ் சர்வ ஏவைத –
11-சாதுர்ய –
அதாவது -ஆஸ்ரிதர் உடைய தோஷங்களை பிராட்டியும் அறியாதபடி மறைத்து வைக்கை
ஆஸ்ரிதராய் இருப்பார் தன்னுடைய ரஷகத்வத்திலே அதி சங்கை பண்ணினால்
அவ் வதி சங்கியைப் போக்கி ரஷிக்கை –
பாதாங்குஷ்டென சிஷேப சம்பூர்ணம் தச யோஜனம்-
பிபேத ச புநஸ் சாலான் –
12-ஸ்தைர்ய-
அதாவது ப்ரத்யூஹ சஹஸ்ரம் உண்டானாலும்
ஆஸ்ரித ரஷண பிரதிஜ்ஞை குலையாது ஒழிகை –
மகா ராஜர் தொடக்க மானவர் நேராக விரோதிக்கச் செய்தேயும் -ந த்யஜேயம் கதஞ்சன -என்றார் இ றே
ஆக
இப்பன்னிரண்டு குணம் ஆஸ்ரித விஷயம்
அநந்தரம் மூன்று குணம் ஆஸ்ரித பிரதி பஷ விஷயம் –
1-தைர்ய-
அதாவது எதிரியை மதியாது ஒழிகை
இலங்கையிலே ராவணனும் பலமும் யல்லாம் குறி அழியாது இருக்க
அவன் தம்பியை கடலுக்கு இக்கரையிலே லங்கா ராஜ்யத்துக்கு அபிஷேகம் பண்ணி வைத்தான் இறே
அப்திம் ந தேரித ந ஜிக்யித ராஷ சேந்தரம்
நைவாச்ய ஜிஜ்ஞித யதா ச பலா பலம் த்வம்
நிச் சம்யச் சபதி தஸ்ய பதெச்ப் யாஷி யஷிஞசஸ்
தஸ்யா நுஜம் கதமிதம் ஹாய் விபீஷணஞ்ச -அதிமாநுஷ ஸ்தவம் -24
மூல பலம் சந்நிஹிதமான வன்று பெருமாள் திரு உள்ளம் பூர்வ ஷணத்தில் காட்டில்
ஒரு விக்ருதி இன்றிக்கே  இருந்த படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
2-சௌர்ய –
அதாவது பர பலத்திலே சென்று புகும் போது ஸ்வ பலம் போலே இருக்கையும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -என்கிறபடியே ப்ரஹர்த்தாவாய் இருக்கையும் –
3-பராக்கிரம –
அதாவது சாரிகை வரும் போது கையும் வில்லுமாக சஞ்சரிக்கும் சஞ்சாரத்திலே
எதிரிகள் துவகுண்டு எதிரி என்று அறியாதபடி சஞ்சரிக்கை
ப்ரஹர்த்தாரம் சரீரேஷூ ந தே பஸ்யந்தி ராகவம்
இந்த்ரி யார்த்தேஷூ திஷ்டந்தம் பூதாத்மா நமிவ பிரஜா -யுத்தம் -94-23

1-சத்யகாம-
அநந்தரம் ஆஸ்ரித விஷயமாகவும்
உபாய விஷயமாகவும்
உபேய விஷயமாகவும்
நாலு குணங்களைச் சொல்லுகிறது
நித்தியமான காமங்களை உடையவன் -என்கிறது –
அன்றிக்கே -காம்யந்த இதி காமா -ஆஸ்ரித ரஷண விஷய மநோ ரதம் –காமம் ஆகிறது
அது அப்ரதிஹதமாய் இருக்கை -என்றுமாம் –

2-சத்ய சங்கல்ப –
அதாவது -அபூர்வமான போக்யங்களை சங்கல்ப்பித்து அனுபவிப்பிக்கும் இடத்தில் அமோகமாய் இருக்கை –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -திருவாய் -8-5-2- இருக்குமவர்களுக்கு
கண்ணாலே கண்டு அனுபவிக்கைக்கு தேவ மனுஷ்யாத் யவதார சங்கல்பம் அப்ரதிஹதமாய் இருக்கை -என்றுமாம்

3-க்ருதித்வ –
அதாகாது ஆஸ்ரிதர் அபிமதம் பெற்றால் அப் பேறு தன்னதாய் இருக்கை –
அபிஷிச்ய ச லங்கா யாம் –
இவர்கள் கர்த்தவ்யங்களை யடையத் தான் ஏறிட்டுக் கொண்டு செய்கை -என்றுமாம்
ஆதி கர்மணி க்தின் நந்த –

4-க்ருதஜ்ஞதா-
அதாவது ஆஸ்ரிதர் ஒரு கால் சரணம் என்ன
அம்மாத்ரத்தாலே   பின்பு செய்யும் குற்றம் பாராதே அத்தையே நினைத்து இருக்கை –
ஆஸ்ரித விஷயத்தில் தான் செய்த வற்றை ஒழிந்து அவர்கள் செய்த வற்றையே நினைத்து இருக்கை -யென்னவுமாம்
ஆஸ்ரீதர்க்கு எல்லாம் செய்தாலும் பிரதமத்தில் சரணம் என்ற உக்தி மாதரத்தையே நினைத்து இருக்கும் யென்னவுமாம்
ஆஸ்ரீதர்க்கு எல்லாம் செய்தாலும் அத்தை மறந்து அவர்கள் செய்ததை ஒழிய தான் செய்யாத வற்றையே
நினைத்து இருக்கை -யென்னவுமாம்
சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதம் மயா
ஆதி –
இவை முதலான

அசங்க்யேய கல்யாண குண கனௌகமஹார்ணவம் –
என்னுடைய மனஸ் ஸூ க்கு கோசரமாய் இருப்பன சில குணங்கள் சொல்லிற்று இத்தனை போக்கி
அனுக்தமான குணங்களுக்கு எண்ணில்லை
ஒரு மஹார்ணவத்தில் ஜல பரமாணு வுக்கு சங்க்யை யுணடாகில் யாய்த்து
பகவத் குணங்களுக்கு சங்க்யை யுணடாவது
வர்ஷா யுதைர் யஸ்ய குணா ந சகா
சதுர்முகாயுர் யதி கோடி வக்த்ர –
பரப் ப்ரஹ்ம பூதம் புருஷோத்தமம் –
பர ப்ரஹ்ம சப்தத்தாலும் புருஷோத்தம சப்தத்தாலும்
வேதாந்தங்களில் ப்ரசித்தனானவன்
பர ப்ரஹ்மம் -ஆவது -ப்ருஹத்த்வ ப்ரும்ஹணத்வ குண யோகத்தால் ப்ரஹ்ம சப்த வாச்யத்வம் –
ப்ருஹத்வம் ஆவது -தான் பெரியனாகை
ப்ரும்ஹணத்வம் ஆவது –
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு
தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – -பெரிய திருமொழி -11-3-5-என்றும்
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சா தர்ம்யமாகதா
சர்க்கேசபி நோப ஜாயந்தே பிரளயே ந வ்யதந்தி ச -கீதை -14-2-என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரிதரை தன்னைப் போலே ஆக்குகை-
என்னாவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே -திருவாய் -3-9-4

புருஷோத்தமத்வம் ஆவது –
யஸ்மாத் ஷரமதீ தோசஹம் அஷராதசபி சோத்தம
அதோச்ச்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தம -ஸ்ரீ கீதை -15-18-என்று சர்வாதிகன் -என்றும்
புரு பஹூ ஸூ நோதி ததாதீதி புருஷ -என்று சர்வ அபேஷித பல ப்ரதன் ஆகையாலே பரம உதாரன் என்றும் சொல்லப் படுகை –

ஸ்ரீ ரங்க ஸாயினம்-
இப்படி என்றும் ஒக்க ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற நீர்மையைச் சொல்லுகிறது –

அஸ்மத் ஸ்வாமினம் –
இத்தால் -கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -23-என்கிறபடியே
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகாலும் சீலத்தாலும்
தம்மோடு எனக்கு உண்டான முறையை உணர்த்தினவர் -என்றபடி –
அஹம் அஸ்யாவரோ பராதா குணைர் தாஸ்யம் உபாகத -கிஷ்கிந்தா -4-12-

இதுக்கு கீழ் கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லிற்று
இனி மேல் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை சொல்லுகிறார்
பிரபுத்தநித்ய நியாமய நித்ய தாஸ்யை கர சாத்மஸ்வ பாவோஸஹம்-
நித்ய நியாம்யமாய்
நித்தியமான தாஸ்யததையே ஏக ரசமாக
உடைத்தாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வபாவம் உள்ளபடி பிரகாசித்த நான் –
இத்தால் ஸ்வா தந்த்ர்யமும் விஷயாந்தரமும் ஆத்ம நாசகம் -என்றபடி –

தத் ஏக அனுபவ
பகவத் விஷயம் ஒன்றுமே ஜ்ஞாநத்துக்கு விஷயமாம் படி யாய் –
தத் ஏக பிரியா
அவனையே பக்திக்கு விஷயம் ஆக்கினவனாய்
இத்தால் பகவத் அனுபவ ஹேதுவாய் இருந்துள்ள பர பக்தியாதிகளை நினைக்கிறது –

பரிபூரணம் பகவந்தம் விசத தம அனுபவேன நிரந்தர அனுபூய-
ஜ்ஞாநாதிகளால் குறைவற்று இருக்கிற ஈஸ்வரனைப்
பரி பூரணமாக
விசததம அனுபவத்தாலே
இடைவிடாதே  அனுபவித்து –
பூர்ண அனுபவம் ஆகிறது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம் அனுபவத்துக்கு விஷயமாய் இருக்கை –
விசத அனுபவம் ஆகிறது -பிரத்யஷ அனுபவம் என்னலாம் படி தத் சமமாய் இருக்கை –
அது தான் பர பக்தி தச அனுபவம்
விசத தர அனுபவம் ஆகிறது -பரஜ்ஞான அனுபவம் –
விசத தம அனுபவம் ஆகிறது -பரம பக்தி தச அனுபவம் –
நிரந்தர அனுபவம் ஆகிறது -இடை இடையே விஷயாந்தரம் கலசாது இருக்கை –

தத் அனுபவ ஜனிதஅநவதிக அதிசய ப்ரீதி காரிதஅசேஷ அவஸ்த உசிதஅசேஷ சேஷை தை கரதி ரூபநித்ய கிங்கரோ பவானி-
அவ் வனுபவத்தாலே ஜநிதமான
அநவதிக அதிசய ப்ரீதியாலே செய்விக்கப் படுமதாய் –
சர்வ அவஸ்தை களிலும் உசிதமான சகல சேஷ வருத்தி ஒன்றையே பற்றின ஆசையை வடிவாக உடைத்தாய்
யாவதாத்மா பாவியான கைங்கர்யத்துக்கு ஆஸ்ரய பூதனாக வேணும் –
அநவதிக அதிசயம் ஆகையாவது –
யாவதாத்மபாவியான கைங்கர்யத்துக்கு அடியாய் இருக்கையும்
பர பக்தி யாதிகளைக் காட்டில் அதிசயத்து இருக்கையும் –
அசேஷ அவஸ்தை களாவன
அந்தபுரம் -திரு வோலக்கம் பூம் சோலை நீர் வாவி இவை முதலானவை -என்னுதல்
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்கள் ஆகிற அவஸ்தா விசேஷங்கள் -என்னுதல்
அசேஷ சேஷைதை யாகிறது –
நிவாச சய்யா ஆசன பாதுகாம் ஸூ கோபதான வர்ஷாத பவாரணாதிபி -என்றும்
சென்றால் குடையாம் -என்றும்
கிம் சைனாம் ப்ரதிவஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருசம்
யதா யதா ஹி கௌசல்யா தாசி வச்ச சகீ வ ச
பார்யாவத் பகிநீ வச்ச மாத்ரு வச்சோப திஷ்டதி -அயோத்யா -12-68- என்றும்
சொல்லுகிறபடியே நாநா விதமான அடிமைகள்

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -20-21-22-23– -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 23, 2014

சூரணை -20-அவதாரிகை –

ஆக –ஏவ பூதோசி -என்று தொடங்கி-இவ்வளவும் வர சரீர சமநந்தரம் பெரும் பேற்றையும்
இங்கு இருக்கும் நாள் கால ஷேபம் பண்ணும் பிரகாரத்தையும் அருளிச் செய்தாரே நின்றார்
இனி
இவ்வதிகாரிக்கு சரீர விஸ்லேஷ தசையில் அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாகத் தான் செய்யும் ஏற்றங்களை அருளிச் செய்கிறார் –

சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதிபர புத்த
மாமேவா வலோகயன் அப்ரச்யுத
பூர்வ சம்ஸ்கார மநோரத
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம்
ஸ்தூல ஸூ ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய
ததா நீமேவ மத பிரசாத லப்த
மச் சரணார விந்த யுகளை
காந்திகாத் யந்திக பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய
மத் அனுபவ ஸ்தவம்
ததாவித மத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரிதா
அசேஷ அவஸ்த உசித 
சேஷ சேஷ தைக ரதி ரூபா
நித்ய கிங்கரோ ப விஷ்யசி

சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதிபர புத்த –
இச் சரீர விஸ்லேஷ தசையில்
உமக்கு ஒரு விசேஷம் உண்டு
அது தான் ஏது என்னில்
அதி பிரபுத்த –
ஸ்வ ஸ்த தசையிலும் காட்டில்
அவ்வளவில் வெளிச் செறிப்பு மிகையாம்
அதுக்கடி என் என்னில்
கேவலம் மதீய யைவ தய்யா
அவ்வளவில் எங்கே போயிற்று எனலாம் என் பிரசாதத்தை
ஆனால் இது முன் பிறந்த பிரசாதம் அடியாகப் பிறந்ததோ என்னில்
கேவலம் –
இப்போது உண்டாயிற்று
கர்ம யோகம் அடியாக ஜ்ஞான யோகம் உண்டாய்
அது அடியாக பக்தி உண்டாய்
அது பரம பக்தியாமோபாதி
ஓன்று நிதானமாக வந்தது அல்ல
நிர்ஹேதுகமாக இப்போது உண்டாயிற்று
ஆனால் இவ்வளவாக கீழ் இவனுக்கு பிறந்த பாக விசேஷங்கள் அடைய
போக உபகரணமாய் கார்யம் செய்கைக்கு உருப்பாமோ என்னில்
மதீய யைவ தய்யா –
இத்தை ஒழிந்தால் வேறு அடி இல்லை
கீழேயும் –மதீய யைவ தய்யா -என்று வைத்து
இங்கும்- மதீய யைவ தய்யா -என்கையாலே
விஷயீ கரிக்கும் தசை யோடு விஷயீ கரித்த தசையோடு
விரோதி போக்கும் தசையோடு அனுகூலங்களை உண்டாக்கும் தசையோடு
வாசி அற எல்லா தசைகளிலும் இவனுக்கு பரிகரமாய் உள்ளது வெறுமை
கார்யம் செய்கைக்கு அடி அவன் பிரசாதமே என்றது ஆயிற்று –
பிரபுத்த -என்ன அமைந்து இருக்க
அதி பிரபுத்த -என்றது பூர்வ அவஸ்தை களில் காட்டில் இதுக்கு விசேஷம் உண்டு என்கைக்காக-
அது தான் ஏது என்ன
மாமேவா வலோகயன் –
இது வாயிற்று இதுக்கு உண்டான விசேஷம்
முன்புத்தை அறிவு ஒரு தலையில் சரீரத்தையும் ஒரு தலையில் பகவத் விஷயத்தையும்
இரண்டையும் அவகாஹித்து இருக்கும்
அங்கன் அன்றியே தன்னை அபேஷியாதே என் பிரசாதம் அடியாக வந்த அறிவு ஆகையாலே
என்னை ஒருவனையே விஷயீ கரித்து இருக்கும்
அதுக்கு மேலே
அப்ரச்யுத பூர்வ சம்ஸ்கார மநோரத –
பூர்வ சம்ச்காரத்துக்கு பிரச்யுதி இல்லாத மநோ ரதத்தை வுடையீராய்
அதாவது -பகவத் சமாஸ்ரயணம் பண்ணி வைத்து
அபசாரங்களை கனக்கப் பண்ணிப் போந்து
சாம்போதாக-நாமோ சாவப் புகா நின்றோம்
நம் திறத்தில் ஈஸ்வர ஹ்ருதயம் எங்கனே இருக்கிறதோ
நமக்கு பேறு எங்கனே இருக்குமோ
நாம் அநந்தரம் என் என்பதாகப் புகுகிறோமோ-நம்மால் செய்ய அடுப்பது என் –
என்று கலங்குகை அன்றிக்கே –
தன்னை இசைவித்த பகவத் பிரசாதம் அடியாக பிறந்த ஆசார்ய விஷயீ காரத்தையும்
தத் அனுகுணமான ஆசார்ய உபதேசத்தையும்
அது அடியாக வருகிற பகவத் சமாஸ்ரயணத்தையும்
சமாஸ்ரயித்த பின்பு பிறக்கும் வ்யவசாயா நந்தரம் தனக்கு
ஈஸ்வரன் பிறப்பிக்கும் பாக விசேஷங்களையும்
அனுசந்தித்துக் கொண்டு
கீழ் நின்ற நிலை இது -பின் பிறந்த பாக விசேஷம் இது
ஆனபின்பு நமக்கு இனி அவன் பேற்றைத் தருகைக்கு ஓர் குறையும் இல்லை என்னும்
சம்ச்காரத்துக்கு
பிரச்யுதி இல்லாத மநோ ரதத்தை வுடையீராய் -என்றபடி

அதுக்கு மேலே –
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூ ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய –
ஸ்தூலமாயும் சூஷ்மமாயும் இருந்துள்ள பிரக்ருதியை
ஜீரணமான வஸ்த்ரத்தைக் கழித்து
ஜீர்ணமுமாய் மலினமுமான வச்த்ரத்தை பரிஹரிக்கும் போது
ஜூகுப்சை யுடன் பரிஹரிக்குமா போலே
மாம்ஸா ஸ்ருகாதி மயமான இச் சரீரத்தை விடும் போதும் ஜூகுப்சை பிறக்கும் என்று
திருஷ்டாந்த பலத்தாலே சித்திக்கிறது
வஸ்த்ரத்துக்கும் உடம்புக்கும் உள்ள சம்பந்தமே யாய்த்து
ஆத்மாவுக்கும் உடம்புக்கும்
ஆகையாலே –ஸூ கேன -என்கிறது
அன்றிக்கே சம்பந்தத்தில் வாசி யுன்டானாலும் என் பிரசாதம் அடியாக கழிகையாலே
தலையில் சுமையை பொகடுமா போலே அநாயாசேன விட்டு -என்னவுமாம் –

இப்படி சரீரத்தோடே இருக்கும் போது பிறக்கும் பாக விசேஷங்களை அருளிச் செய்தவாறே
இப்பாக விசேஷம் எல்லார்க்கும் பிறக்கும் அது ஒன்றோ
இவ்வளவு இல்லாதார் இப் பேற்றை இழக்கும் அத்தனையோ
இவ்வளவு உண்டானாலும் இன்னமும் அவஸ்ய அபேஷிதமான பாக விசேஷங்கள் சில உடை இருக்கும்
அவை யுன்டாம்படி எங்கனே -என்ன
ததா நீமேவ –
இச் சரீர விஸ்லேஷ சம நந்தரத்திலேயே பரம பக்தி பர்யந்தமாக முன்பு பிறவாத பாக விசேஷம் எல்லாம்
உண்டாகக் கடவது
கீழ் சில உண்டாய் இருக்கையும் இல்லாமல் இருக்கையும் பேற்றுக்கு அப்ரயோஜகம்
உண்டான அம்சம் உண்டாகில் போகத்துக்கு உறுப்பாகிறது
இல்லை யாகில் சரீர சமநந்தரத்திலே
க்ஷண  மாத்ரத்திலே  எல்லாவற்றையும் உடையன் ஆகிறான் -என்கிறார்
உபாசகனுக்கு உபாசன சமாப்தியிலே ஒரு குறை வரிலும்
ப்ராப்ய புண்யக்ருதான் லோகா நுஷித்வா சாஸ்வதீ சமா
ஸூ சி நாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோச்பி ஜாயதே-ஸ்ரீ கீதை -6-42-என்று கொண்டு
கீழது மேலதாகப் பலிக்கும்

நடுவே ஒரு குறை வரிலும் அதுவே குறையாக அனர்த்தம் பலிக்கும்
இங்கன் அன்றாகில் அந்திம ஸ்ம்ருதி இல்லாத போது
பழைய நிலையே யாய்த் தலைக் கட்டிவிடும்
ஆனபின்பு இது கூடுமோ என்ன –
மத்  பிரசாத லப்த –
தன் தலையில் உபாய பாவம் சுமப்பானுக்கு அல்லவோ கீழ்ச் சொன்ன அனர்த்த சந்ததி எல்லாம் சம்பவிப்பது
அது தான் என் தலையிலே கிடக்குமாகில் அவனுக்கு இவ் வதிசயங்கள் எல்லாம் உண்டாகைக்கு ஒரு குறை இல்லையே
புருஷார்த்த லாபத்துக்கும் ஒரு தட்டு இல்லையே –

ஆனால் தேவர் பிரசாதம் அடியாக லபிக்குமவை தான் எவை என்ன –
மச் சரணார விந்த யுகளை காந்திகாத் யந்திக பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி –
என்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளில் உண்டாய்
ஐகாந்திகமாயும் ஆத்யந்திகமாயும் இருந்துள்ள
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் –

க்ருத பரி பூர்ண அநவரத நித்ய விசததம அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய மத் அனுபவ
முன்பு சொன்ன பர பக்த்யாதிகலால் பண்ணப் பட்டதாய்
பரி பூர்ணத்வாதி விசேஷண விசிஷ்டமாய்
அநவதிக அதிசயமான ப்ரீதியாலே அனுபவிப்பதான
என்னுடைய அனுபவத்தையும் –

ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரிதா அசேஷ அவஸ்த உசித சேஷ சேஷ தைக ரதி ரூபா நித்ய கிங்கரோ ப விஷ்யசி-
அவ் வனுபவத்தால் உண்டாக்கப் பட்டதாய்
அநவதிகமான அதிசயத்தை உடையதான
ப்ரீதியாலே பண்ணப் படுமதாய்
எல்லா அவச்தைகளிலும்
அனுகூலமான எல்லா அடிமைகளிலும் உண்டான
அபிநிவேசத்தையும் வடிவாக வுடைத்தாய்
அபுநரா வ்ருத்தி லஷணமான கைங்கர்யமும்
உமக்கு உண்டாகக் கடவது
என்று பெரிய பெருமாள் அருளிச் செய்கிறார் –

———————————————————————————-

சூரணை -21
மா தே பூதத்ர சம்சய

பின்பு நிரூபித்து பார்த்தவாறே
பேறு கனத்து இரா நின்றது
நேர்த்தியைப் பார்த்தால் அத்யல்பமாய் இருந்தது
சூத்திர பலங்களில் ஒன்றுக்குப் பண்ணும் பிரவ்ருத்திகளே குவாலாய் இருந்த தாகில்
இப்படிக் கனத்த பேற்றுக்கு ஓர் ஆயாசம் இன்றிக்கே இருக்க
இவை எல்லாம் கிடைப்பதாக அருளிச் செய்யக் கூடுமோ
என்று எம்பெருமானாருக்கு அபிப்ராயமாக
மா தே பூதத்ர சம்சய -என்று அருளிச் செய்கிறார் –
இவ்வர்த்தத்தில் உமக்கு சம்சயம் உண்டாக வேண்டா
பிறருக்கு ஆனால் உண்டாக அமையும்
தனக்கு என்ன ஒரு கைம்முதல் இன்றிக்கே என் பக்கல்
ந்யச்த பரரான உமக்கு சம்சயிக்க வேண்டுவது இல்லை –
இது தான் நான் சொன்ன வார்த்தை யாகையாலேயும் சம்சயம் இல்லை

——————————————————————————————

சூரணை -22-

அந்ருதம் நோகத பூர்வம் மே ந ச வஷ்யே கதாசன
ராமோ த்விர் நாபி பாஷதே
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் மம
சர்வ தரமான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூ ச –

அந்ருதம் நோகத பூர்வம் மே ந ச வஷ்யே கதாசன –
இது பொய் அன்று-
இதுவரையில் நான் முன்பு சொல்லிப் போந்த வற்றில்
ஒன்றாவது பொய்யாய் இருப்பது இல்லை
அப்படிப் பொய்யாகாமை வைதமாய் வந்தது அல்ல
வாசனை இல்லாமையாலே இனி மேலாகிலும்
அந்ருத பாஷணம் சம்பவிக்கலாமோ -என்ன

ந ச வஷ்யே கதாசன —
வாசனை அடி யற்ற பின்பு இனி மேல் கூடுவது எங்கனே -என்று அருளிச் செய்ய
ஆனாலும் கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயனான தேவர் உக்தி அன்றோ -என்ன –
ராமோ த்விர் நாபி பாஷதே –
இது நம் வார்த்தை அன்றே-
ஆன்ரு சம்சய பிரதரான ரிஷிகள் கோஷ்டியிலே
பரிமாறும் வார்த்தை இறே
ராமாவதாரம் என்றால் நாக்கு புரளாது என்னும் இடம் எங்கும் பிரசித்தம் இறே
இனி நம் பக்கல் குறை இல்லையே -என்ன
ஓம் சக்ரவர்த்தி திருமகனாய் எங்கே அருளிச் செய்தீர் -என்ன
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் மம -என்று-
ராமாவதாரத்தில் நாம் கடல் கரையில் சொன்ன வார்த்தையாக இதிஹாச ஸ்ரேஷ்டமான
ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதி வைத்த படி கண்டீரே -என்ன
ஆனாலும் இது தேவர் உக்தியோ என்ன
இன்றிக்கே ஒழிந்தாலும் இத்தோடு சக யுக்தி   யன்றோ கண்ணனாய் அவதரித்த என் உக்தியும் -என்ன
ஆகில் அது எங்கே -என்ன
சர்வ தரமான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூ ச -என்று
கிருஷ்ணாவதாரத்தில் திருத் தேர் தட்டிலே இருந்து நாம் சொன்னதாக
பஞ்சமா வேதமான மகாபாரதத்திலே ஸ்ரீ வேத வியாச பகவான் ஓதி வைத்தபடி பாரீர் -என்ன
ஆகிலும் அவதார பேதம் உண்டே -என்ன
உண்டானாலும் ராமாவதாரத்தில் மெய்யும்
கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும்
இரண்டும் ஒக்கும் இ றே ஆசீதர்க்கு தஞ்சமாகைக்கு –என்ன
ஆனாலும் அதுவாமோ என்ன
இரண்டும் ஒருவர் வார்த்தை யாகில் அதுவாகைக்கு தட்டு என் -என்கிறார்

இதி மைவ ஹ்யுக்தம் -என்று
வேத முகத்தாலே யாதல்
வைதிக முகத்தாலே யாதல் -அன்றிக்கே
சரண்யனான என்னாலேயே சொல்லப் பட்டவை அல்லவோ -அவை

———————————————————————————————–

சூரணை -23-

அதஸ் த்வம் தவ தத்த்வதோ
மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ
நிஸ் சம்சயஸ்
ஸூக மாஸ் ஸ்வ

அதஸ் –
ஆகையாலே

த்வம் –
இப்படிப் பட்ட நம்முடைய மெய்ம்மைப் பெரு வார்த்தையைக் கேட்டு -என்னையே விஸ்வசித்து இருக்கிற நீர்

தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ –
மத் -என் விஷயமாக
தவ
உமக்கு
தத்வத
மெய்யாக உண்டான
மெய்யே என்னுடைய ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலே
பக்த்யா தவ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோர்ஜூன
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப-ஸ்ரீ கீதை -11-54-
என்கிற ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலே
நிஸ் சம்சயஸ் ஸூ க மாஸ் ஸ்வ
சம்சயம் இல்லாதவராய்க் கொண்டு
சுகமே வர்த்தியும்

——————————————————————————————–

அந்த்ய காலே ஸ்ம்ருதிர்யா து தவ கைங்கர்ய காரிதா
தாமே நாம் பகவன் நத்ய க்ரியமாணாம் குருஷ்வ மே

பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை
அருளிச் செய்த சரணாகதி கத்ய  வியாக்யானம் சம்பூர்ணம் –

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -17-18-19– -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 23, 2014

சூரணை -17-அவதாரிகை –

இப்படி த்வயம் வ்யாக்யாதம் ஆயிற்று ஆகில் -இனி மேல் செய்கிறது என் என்னில் -இவ்வதிகாரி -உபாய உபேய அத்யவசிதனான -பக்கல் பெரிய பெருமாள் -சோம்பரை உகத்தி போலும் –
தமக்கு உண்டான பரீத் யதிசயத்தாலே
கீழ் சொன்னவற்றை அனுபாஷித்துக் கொண்டு
உமக்கு மத்  ப்ரசாதத்தாலே சர்வமும் குறைவற உண்டாயிடுக -என்று அருளிச் செய்து
இவருடைய ஹ்ருதயத்தை சந்துஷ்டம் ஆக்குகிறார்
இப்படி பெரிய பெருமாள் அருளிச் செய்தார் என்று நாங்கள்
விஸ்வசித்து இருக்கும்படி எங்கனே –
என்று எம்பார் கேட்க –
எனக்கு பெரிய பெருமாள் தம்முடைய சீலாதி குணங்களைக் கரதலாமலகமாகக் காட்டித் தந்து
அவர் சொல்லுவிக்கச் சொன்ன வார்த்தை யாகையாலே
அவர் அருளிச் செய்த வார்த்தை என்று விஸ்வசிக்க தட்டில்லை
அவர் திரு உள்ளம் ஆகாதது என் வாயால் புறப்படாதே
என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் –

ஏவம் பூத மத கைங்கர்ய ப்ராப்தி
உபாய தயா வக்லுப்த
சமஸ்த வஸ்து விஹீ நோபி
அநந்த தத் விரோதி பாபா க்ராந்ஸதோபி
அநந்த மத்  அபசார யுக்ஸதோபி
அநந்த மதீய அபசார யுக்தோஸபி
அநந்த அசஹ்யா அபசார யுக்ஸதோபி
ஏதத் கார்ய காரண பூதாநாதி விபரீத அஹங்கார
விமூடாத்ம ஸ்வ பாவோபி
ஏதத் உபய கார்ய காரண பூதாநாதி விபரீத வாஸநா சம்பத்தோஸபி
ஏதத் அனுகுண பிரகிருதி விசேஷ சம்பத்தோஸபி
ஏதன் மூலாத் யாத்மிக ஆதி பௌதிக ஆதி தைவிக
ஸூ க துக்க தத் தேது
தாதி தரோ பேஷணீ யவிஷய
அனுபவ ஜ்ஞான சங்கோச ரூபா
மச் சரணாரவிந்த
யுகளை காந்திகாத் யந்திக
பர பக்தி பர ஜ்க்னானபரம பக்தி
விக்ன ப்ரதிஹதோஸபி
யேன கேநாபி ப்ரகாரேண
த்வய வக்தா
தவம் கேவலம் மதீயயைவ தய்யா
நிச் சேஷ விநஷ்ட ஸ ஹேதுக
மச் சரணார விந்த யுகளை காந்திகாத் யந்திக
பர பக்தி பரஜ்ஞான பரம பக்தி விக்ன
மத்  பிரசாத லப்த
மச் சரணாரவிந்த யுகளை காந்திகாத் யந்திக
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி
மத்  பிரசாத தேவ சாஷாத் க்ருத யதா வச்தித
மத்  ஸ்வரூப ரூப குண விபூதி லீலோப கரண விஸ்தார
அபரோ ஷ சித்த
மன் நியாம்யதா மத தாச்யைக
ஸ்வபாவாத்ம ஸ்வரூப
மத்  ஏக அனுபவ
மத்  தாச்யைக ப்ரிய
பரிபூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய
ப்ரீதி காரிதா
அசேஷ அவஸ்த உசித சேஷ சேஷைதை கரதிரூப
நித்ய கிங்கரோ பவ

ஏவம் பூத மத்  கைங்கர்ய ப்ராப்தி –
இப்படிப் பட்ட என்னுடைய கைங்கர்ய லாபத்துக்கு –

உபாய தயா வக்லுப்த –
உபாயமாக வேதாந்தங்களிலே சொல்லப் பட்ட கர்ம ஜ்ஞான பக்திகள் என்ன -உமக்கு இல்லையே யாகிலும் –

சமஸ்த வஸ்து விஹீ நோபி –
இவ் உபாசன அங்கமான ஜீவ பர யாதாம்ய ஜ்ஞானம் என்ன
இதுக்கு அடியான வர்ண ஆஸ்ரம ஆசாரம் என்ன
இவை எல்லாவற்றுக்கும் அடியான அமாநித்வ அத்யாத்ம குணங்கள் என்ன
இங்கன் சொல்லப் பட்டவை -சர்வமும் -எல்லாம் உமக்கு இல்லை யாகிலும் –

அநந்த தத் விரோதி பாபா க்ராந்ஸதோபி-
இவை இல்லாமையே அன்றியே இவற்றுக்கு விரோதியான
அநந்த பாபங்களாலே
ஆக்ராந்தராய் இருந்தீரே யாகிலும்
இவற்றிலே இழிய ஒட்டாதே இருக்கிற சகல பாபங்களாலே நெருக்கு உண்டு இருந்தீரே யாகிலும் –

அநந்த மத அபசார யுக்ஸதோபி –
கீழ் சொன்ன விரோதி பாபங்கள் மாதரம் அன்றிக்கே முடிவில்லாத நம் விஷயமான அபசாரத்தோடே கூடி இருந்தீரே யாகிலும் –

அநந்த மதீய அபசார யுக்தோஸபி –
இவ்வளவு அன்றிக்கே மத அபிமான அந்தர் பூதராய் இருப்பார் திறத்தில் உண்டான
அளவிறந்த அபசாரத்தோடு கூடி இருந்தீரே யாகிலும்
அநந்த அசஹ்யா அபசார யுக்ஸதோபி –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயங்களில் உண்டான
அளவிறந்த அபசாரத்தோடு கூடி இருந்தீரே யாகிலும்

ஏதத் கார்ய காரண பூதாநாதி விபரீத அஹங்கார
இப்படிப் பட்ட பாபங்களுக்கு கார்யமுமாய் -காரணமுமாய்
இருந்துள்ள அநாதியான விபரீத அஹங்காரம் –
விபரீத அஹங்காரம் ஆவது
அஹம் அல்லாத வஸ்துவிலே அஹம் புத்தி பண்ணுகை –
இதுக்கடி பாபங்கள் ஆகையாலே பாப கார்யமுமாய்
பாபங்களுக்கும் அடி தேகாத்ம அபிமானம் ஆகையாலே
தான் காரணமுமாய் இருக்கும்
அஹம் அர்த்தம் தான் ஜ்ஞான ஆனந்த ஸ்வரூபமாய்
ப்ரக்ருதே பரமாய் இருப்பது ஒன்றாய் இருக்க
துக்க ரூபமுமாய் ஜடா முமாய் சத்த பரிணாமினியுமான ப்ரக்ருதியிலே
அப்புத்தி பண்ணுகை பாப கார்யமுமாய் பாப காரணமுமாய் இருக்கும் இ றே

இத்தால் வரும் அவத்யம் ஏது என்ன –
விமூடாத்ம ஸ்வ பாவோபி –
இப்படிப் பட்ட அஹங்காரத்தாலே மறைக்கப் பட்ட ஆத்மாவினுடைய சேஷத்வ ஸ்வரூபத்தை
உடையீராய் இருந்தீரே யாகிலும் –
சேஷோஹம்–என்னாமல்- ஸ்வ தந்த்ரோஹம்– என்னப் பண்ணுகை –

ஏதத் உபய கார்ய காரண பூதாநாதி விபரீத வாஸநா சம்பத்தோஸபி
கீழ் சொன்ன பாபங்களுக்கும் அஹங்காரத்துக்கும் கார்யமுமாய் காரணமுமாய் அநாதியுமாய்
போருகிற  துர்வாசனையாலே கட்டுண்டு இருந்தீரே யாகிலும் –

ஏதத் அனுகுண பிரகிருதி விசேஷ சம்பத்தோஸபி –
இவற்றுக்கு எல்லாம் காரணமான துஷ் பிரக்ருதியாலே ஒரு சர்வ சக்தி பிரிக்கப் பார்க்கிலும்
அரிதாம்படி பிணை யுண்டு இருந்தீரே யாகிலும்
பத்தோஸ்பி -என்னாமல்- சம்பத்தோஸ்பி -பிணை உண்ட உறைப்பை சொல்கிறது –

ஏதன் மூலாத் யாத்மிக ஆதி பௌதிக ஆதி தைவிக –
இப் பிரகிருதி அடியாக வருகிற தாப த்ரயங்கள்
ஆத்யாத்மிகம் ஆவது -ஆதியும் வியாதியும்
ஆதியாவது -காம குரோத பய த்வேஷ லோப முஹ விஷாதஜ
சோகா அசூய அவமான எர்ஷ்யாமாத் சர்யாதி மயஸ் ததா -என்கிற இவை –
வியாதி யாவது –
சிரோ ரோக ப்ரதிச்யாய ஜவர சூலப கந்தரை
குல்மச்வாச ச்வயது பிச்ச்ர்த் யாதி பிர நேகதா
ததாஷி ரோகாதி சார குஷ்டாங்கா மய சம்ஜ்ஞகை -யென்னுமவை-

ஆதி பௌதிகம் ஆவது
பசு பஷி மனுஷ யாத்யை பிசாசோ ரக ராஷசை
சரீச்ருபாத்யைச்சன்ருனாம் ஜன்யந்தெ சாதி பௌதிக -என்கிற இவை
ஆதி தைவிகமாவது –
சீதோஷ்ண வாத வர்ஷாம்பு வைத்யுதாதி சமுத்பவ -என்கிற இவை

ஸூ க துக்க தத் தேது –
இப்படிப் பட்ட மூன்று வகைப் பட்ட சுக துக்கங்கள் என்ன –
அதுக்கு ஹேதுவாய் இருந்துள்ள -அவை தான் எவை என்னில் –
தாதி தரோ பேஷணீ யவிஷய –
தனக்கும் பிறர்க்கும் உபே ஷனீயரான மத்யச்தர்க்கும் உண்டாமதான
காம க்ரோதாதி விஷயங்கள் -என்ன -இவற்றின் உடைய
தனக்கு காமம் அன்வயத்தில் சுக ஹேதுவாய் வ்யதிரேகத்தில் துக்க ஹேதுவாய் இருக்கும்
தனக்கு குரோதம் எதிரியை நலியும்போது சுக ஹேதுவாய்
அதுவே எதிரி அளவில் பலியாது ஒழிந்தால் துக்க  ஹேதுவாய் இருக்கும்
ச்வேதரரான அனுகூலர்க்கு காமம் அன்வயத்தில் சுக ஹேதுவாய் வ்யதிரேகத்தில் துக்க ஹேதுவாய் இருக்கும்
ச்வேதரரான பிரதி கூலர்க்கு காமம் அன்வயத்தில் துக்க ஹேதுவாய் வ்யதிரேகத்தில் சுக ஹேதுவாய் இருக்கும்
மத்யச்தர்க்கு காமாதிகள் உடைய அன்வய வ்யதிரேகங்களில்  உண்டான சுக துக்கங்கள் உபேஷணீயங்களாய் இருக்கும்-

அனுபவ ஜ்ஞான சங்கோச ரூபா –
இப்படி ஸ்வ கீயமாயும் பர கீயமாயும் உபேஷணீயாருடையதையும்
இருந்துள்ள விஷயங்களின் அனுபவம் ஆனது
ஜ்ஞான சங்கோச – ரூபமாய் இருக்கும்
ஆகையால் அந்த ஜ்ஞானம் அடியாக உண்டாக கடவ பர பக்த்யாதிகளுக்கு
விஷய அனுபவம் தான் பிரதி பந்தகமாய் இறே இருப்பது
அத்தை அருளிச் செய்கிறார்
மச் சரணாரவிந்த யுகளை காந்திகாத் யந்திக பர பக்தி பர ஜ்க்னானபரம பக்தி விக்ன ப்ரதிஹதோஸபி –
நிரதிசய போக்யமான என் திருவடிகளிலே நித்தியமாய் ஏக ரூபமாய் இருந்துள்ள பர பக்த்யாதிகளுக்கு
விக்னமாய் இருந்துள்ள விஷய அனுபவத்திலே இழிந்தீரே யாகிலும் –
பிரதி ஹதோபி
ஹதம் ஆகையாவது -நசிக்கை -அதாவது நஷ்ட கல்பமாகை –
ஆக
யேன கேநாபி ப்ரகாரேண
ஏதேனும் ஒரு வகையிலே
த்வய வக்தா –
த்வய அனுசந்தானமே யாய்த்து செய்ய வேண்டுவது
அது தன்னிலும் ஒரு நியதி இல்லை
யேன கேநாபி ப்ரகாரேண-
அஹ்ருதயமாகவுமாம் -ஹ்ருதயமாகவுமாம்
ஆர்த்தராகவுமாம் த்ருப்தனாகிலுமாம்
அர்த்த சாஹிதம் ஆகிலுமாம்–  அர்த்த விதுரம் ஆகிலுமாம்
அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
த்வயமாம் இத்தனையே வேண்டுவது
முதலிலே மந்த்ராந்தங்களாக ஒண்ணாது
அது ஒழிந்தாலும்வ்யாபகாந்தரங்களாக ஒண்ணாது
அது ஒழிந்தாலும் திரு மந்த்ரமாக ஒண்ணாது
த்வயத்திலே  யாய்த்து இளைப்பாற வேண்டுவது
அது தன்னிலும் பூர்வ கண்ட அனுசந்தானமும் அமையாது
உத்தர கண்ட அனுசந்தானமும் அமையாது
உபயமும் ஆக வேணும்
எதுக்காக வென்னில்
பூர்வ கண்ட மாதரம் அனுசந்திதீர் ஆகில் அதில் சொன்ன சரண வரணம்
சர்வ சாதாரணம் ஆகையாலே உமக்கு புருஷார்த்தம் ஏதோ -என்ன வேண்டி வரும்
உத்தர கண்ட மாதரம் அனுசந்திதீர் ஆகில் அதில் சொன்ன ப்ராப்யம் சாதநாந்தர
சாதாரணம் ஆகையாலே உமக்கு சாதனம் ஏதோ -என்ன வேண்டி வரும்
இக்குறைகள் எல்லாம் தீர வேண்டி இருந்தீர் ஆகில்
த்வயத்திலே  யாய்த்து இளைப்பாற வேண்டுவது –

த்வம் –
அப்படிப் பட்ட அனுசந்தானம் கை புகுந்த நீர்

கேவலம் மதீயயைவ தய்யா நிச் சேஷ விநஷ்ட ஸ ஹேதுக-
த்வய அனுசந்தானமே ஹேதுவாக
இரு கரையும் அழியப் பெருகின என் கிருபை ஒன்றாலுமே
நிச்சேஷமாகவும் சஹேதுகமாகவும் விநஷ்டமான –

மச் சரணார விந்த யுகளை காந்திகாத் யந்திக பர பக்தி பரஜ்ஞான பரம பக்தி விக்ன –
நிரதிசய போக்யமான என் திருவடிகளில் நித்தியமாய் ஏக ரூபமாய் செல்லுகிற
பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி களுக்கு இடைச் சுவரான
முன் சொன்னவற்றை உடையீராய்
ஆனால்  விரோதி  நசித்த வாறே பர பக்த்யாதிகள்  தனக்குத் தானே உண்டாகிறனவோ என்னில்
மத் பிரசாத லப்த-
அதுக்கு மேலே இதுவும் என்னுடைய கிருபையாலேயே உடையீராகக் கடவீர்
பெறுவது தான் ஏதேனும் அபேஷையிலே-
மச் சரணாரவிந்த யுகளை காந்திகாத் யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி –
இது காணும் பெரும் பேறு
இவ்வளவே அன்று
இன்னமும் உண்டு
மத் பிரசாத தேவ சாஷாத் க்ருத யதா வச்திதமத ஸ்வரூப ரூப குண விபூதி லீலோப கரண விஸ்தார –
அதுக்கு மேலே சஹ கார்யந்தர நிரபேஷமான என் கிருபையாலே சாஷாத் கரிக்கப் பட்ட தாய்
உள்ளபடி இருந்துள்ள என்னுடைய ஸ்வரூபம் என்ன
ரூபம் என்ன குணம் என்ன விபூதி என்ன லீலோபகரணமான இவ் விபூதி என்ன
இவற்றின் உடைய பரப்பை வுடையீராய்
இங்கு யதாவஸ்தித -என்கிறார்
அயதா வாகவும் கண்டது உண்டோ என்னில் -உண்டு
வேதாந்தத்தில் பிரதேச விசேஷத்தில் கார்க்கி வித்யை என்று ஒரு வித்யை உண்டு -அதிலே எழுதக் கண்டோம்
சைஸா பார்க்க வீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்டித
வருணனால் ப்ருகுவுக்கு சொல்லப் பட்ட -வித்யை –
அன்றிக்கே
நீயாக வருந்திக் காணும் அன்று இ றே அயதாவாகக் கடவது
என் பிரசாதம் அடியாக காண்கையாலே யதாவஸ்திதமாக குறை இல்லையே -என்றுமாம் –
அதுக்கு மேலே
அபரோ ஷ சித்த மன் நியாம்யதா மத தாச்யைக ஸ்வபாவாத்ம ஸ்வரூப –
சரவண மனநாதிகளால் சித்திக்கை அன்றிக்கே
சாஷாத் காரத்தாலே சித்தித்த
மன்நியாம் யாதையையும் மத்தாச்ய தயையும்
ஸ்வபாவமாக உடைத்தான ஆத்மா ஸ்வரூபத்தை வுடையீராய்
ஸ்வரூப சாஷாத் காரம் பிறந்தால்
தத்கதமான ஈசவரைக நியாம்யத்வமும் தன்னடியே வெளிச் செறிக்கும் இறே
அப்படி ஆத்மா ஸ்வரூபத்தை சாஷாத் கரித்தவராய்
மத் ஏக அனுபவ
ஸ்வரூப சாஷாத்காரம் பிறந்தால் அவனை விஷயீ கருத்து அல்லது நில்லாதே
ஸ்வ ஸ்வரூபத்தை தெளியக் கண்டால் ஸ்வரூப கதமான ஜ்ஞான ஆனந்தங்களில்
பர்யவசிக்கை அன்றிக்கே ஸ்வரூப யாதாம்யத்து அளவும் செல்லும் இ றே
ஸ்வரூப யாதாத்ம்யம் ஆவது ஆத்மகதமான பகவத அத்யந்த பார தந்த்ர்யாதிகள் இறே
ஆகையாலே கைவல்யம் போல் அன்றிக்கே என்னை ஒருவனையுமே அனுபவ விஷயமாக உடையீராய்
அவதாரணத்தாலே
ஸ்வ ரசத்துக்கு உடலாக அனுபவிக்கும் அதிகாரியை வ்யாவர்த்திக்கிறது
தனக்கு என்று தன்னை அனுபவிக்கும் அனுபவத்தோடு
தனக்கு என்று ஈஸ்வரனை அனுபவிக்கும் அனுபவத்தோடு வாசி இல்லை
ஆக இத்தால் சொல்லிற்று ஆயிற்று
ஸ்வரூப தர்சனத்தில் வந்தால் -எனக்கு சேஷி -என்று அவனை தர்சிக்கை அன்றிக்கே
அவனுக்கு சேஷம் என்று தன்னை தர்சிக்கையும்
தர்சித்தால் அனுபவத்தில் அவனே விஷயம் ஆகையும்
இவ்வர்த்தத்தில் பிரமாணம் -அஹம் அன்னம் -என்னும் இதுவே
ஆனால் அன்னம் போலேயாக ஒண்ணாது
அஹம் அந்நாத-என்றது
சேதனனுக்கு இ றே உபேயத்தில் உகப்பு உண்டாவது
அது இன்றிக்கே ஒழிந்தால் புருஷார்த்தம் ஆக மாட்டாதே

மத் தாச்யைக ப்ரிய
இவனை அனுபவிக்கப் புக்கால் அவ்வளவிலே பர்யவசிக்கும் படியாய் அன்றே இருப்பது
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னிச் -செய்வது என் என்னில்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்றார் இ றே
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்

நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று இ றே ஸ்வரூபம் இருப்பது
அனுபவ ஜனித ப்ரீதி காரிதம் இ றே கைங்கர்யம்
இவ் அவதாரணத்தாலே வ்யாவர்த்த்யம் தனக்கு எண்ணப் பன்னுமது –
இது தான் கூடாது என்று கழித்தது இ றே உத்தர கண்டத்தில் நமஸ் சப்தம் –
எனக்குப் பண்ணும் கைங்கர்யத்தையே ப்ரீதி விஷயமாக உடையீராய்

பரிபூர்ண அநவரத நித்ய விசததம அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரீதி மத் அனுபவ வஸ்தவம் –
பரிபூரணமாய்
ஷணம் தோறும் இடை விடாதே நித்தியமாய்
பிரத்யஷம் யென்னலாம்படியாய்
அநந்ய பிரயோஜனமாய்
ப்ரஹ்மாதிகள் உடைய அதிசயத்தையும் கால் கடைக் கொண்ட
என்னுடைய அனுபவத்தையே ப்ரீதி பாத்ரமாக உடையீரான நீர்

ததா வித மத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரித-
அப்படிப் பட்ட என்னுடைய அனுபவத்தால் உண்டான
அநவதிகமான
அதிசயத்தை வுடைத்தான
ப்ரீதியாலே செய்விக்கப் பட்ட

அசேஷ அவஸ்த உசித சேஷ சேஷைதை காரதிரூப நித்ய கிங்கரோ பவ –
எல்லா அவஸ்தை களிலும் அனுகூலமாய்
எல்லா அடிமைகளிலும் உண்டான
அபிநிவேசத்தையே வடிவாக உடையீராய்க் கொண்டு
யாவதாத்மா பாவி அனுபாவ்யமான
கைங்கர்யத்தைப் பெற்று அனுபவிக்கக் கடவீர் –

——————————————————————————–
சூரணை -18-

ஏவம் பூதோசி-
பகவத் ப்ராப்த் யுபாவ்யமாகச் சொல்லப் பட்ட உபாசன அங்கமாய் இருந்துள்ள
வர்ண ஆஸ்ரமா சாராதி விஹீ நராய் இருந்தீரே யாகிலும்
உபாசன அங்க விரோதியான அநந்த பாபாக்ராந்தராய் இருந்தீரே யாகிலும்
அநந்த மத அபசார யுக்தராய் இருந்தீரே ஆகிலும்
அநந்த மதீய அபசார யுக்தராய் இருந்தீரே ஆகிலும்
அநந்த அசஹ்ய அபசார யுக்தராய் இருந்தீரே ஆகிலும்
ஏதத் காரண பூதா நாதி
விபரீத அஹங்கார விமூடாத்ம ஸ்வ பாவராய் இருந்தீரே யாகிலும்
ஏதத் உபய ஹேது பூதா நாதி விபரீத வாஸநா சம்பத்தராய் இருந்தீரே ஆகிலும்
ஏதன் மூல பூத பிரகிருதி சம்பந்த விசிஷ்டராய் இருந்தீரே யாகிலும்
ஏதன் மூலாத் யாத்மிகாதி சுக துக்கங்கள் என்ன
இவற்றுக்கு ஹேதுவாய் இருந்துள்ள ததி தரோ பேஷநீய விஷயங்கள் என்ன
இவற்றின் உடைய அனுபவத்தால் உண்டான பகவத் ஜ்ஞான சங்கோச ரூபமான பர பக்தி யாதி
விரொதியாலே நஷ்ட ப்ராயராய் இருந்தீரே ஆகிலும்
ஏதேனும் ஒரு படியாலே
த்வய அனுசந்தானம் பண்ணப் பெறுவீர் ஆனால்
சஹாயாந்தர நிரபேஷமான என்னுடைய கிருபையாலே
என் திருவடிகளில் உண்டான பர பக்தி யாதிகளுக்கு விரோதி யாமவை எல்லாம்
ஹேதுக்கள் உடன் நிச்சேஷமாக நசித்து
என் திரு வடிகளிலேயே பர பக்தி யாதிகள் உண்டாகப் பெற்று
என்னுடைய ஸ்வரூபாதிகளின் பரப்பை உள்ளபடி சாஷாத் கரிக்கப் பெற்று
மன்நியாம் யதாதிகளையே ஸ்வபாவமாக வுடைய ஆத்மா ஸ்வரூப சாஷாத் காரம் பெற்று
மத் ஏக அனுபவராய்
மத் தாச்யைக பிரியராய்
பகவத் அனுபவத்தையே எல்லா அன்புக்கும் இலக்காக்கி
ததாவித பகவத் அனுபவத்தில் உண்டான அநவதிக ப்ரீதியாலே செய்விக்கப் பட்ட
அசேஷ அவஸ்த உசித
சகல வித கைங்கர்யமே தேக யாத்ரையாம் படி யாகக் கடவீர் -என்று
பெரிய பெருமாள் அருளிச் செய்த வாறே
இவை எல்லா வற்றுக்கும் ஹேது ஏதோ வென்று பார்த்த வாறே
த்வய அனுசந்தானமே யாய் இருந்தது –
இது இருந்த படி என் -என்ன
அதுக்கு குறை உண்டோ -என்ன
அது இருந்தபடி கண்டோமுக்கு-

ஏவம் பூதோசி -என்று சொல்ல வேண்டும்படியோ இதின் பிரபாவம் இருப்பது –

——————————————————————————–

சூரணை -19–அவதாரிகை-
எல்லாம் குறைவற வன்றோ உமக்கு இருக்கிறது
ஒரு தேச விசேஷத்தில் உள்ளாரோபாதி
இச் சரீரத்தோடே அடிமை செய்யும் படியாய் இருக்கிறது அன்றோ உமக்கு -என்ன
தாப த்ரயாதி களுக்கு அடியான இச் சரீர சம்பந்தம் கிடந்தது
இதுக்கு அவசான காலம் அறிகிறிலேன்
இங்கு இருக்கும் நாளைக்கு கால ஷேபம் பண்ணும் விரகு அறிகிறிலேன்
வஸ்தவ்ய பூமி ஏது என்று அறிகிறிலேன்
இப்படி இருக்க எல்லாம் குறை வற்றவனாக அருளிச் செய்யும்படி
உபச் சந்தனமா இரா நின்றதீ-என்ன
இதுவோ நீர் சொல்லிற்று இவ்வளவே யன்றிக்கே இன்னமும் இது செய்யும்படி கேளீர்
என்று பெரிய பெருமாள் அருளிச் செய்கிறார் –

ஆத்யாத்மிகாதி -பௌ திகாதி -தைவிக துக்க விக்ன கந்த ரஹித ஸ்தவம்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன
சஹ சதா ஏவம் வக்தா
யாவச் சரீரபாதம்
அத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூகமாஸ்ஸ்வ

ஆத்யாத்மிகாதி -பௌ திகாதி -தைவிக துக்க விக்ன கந்த ரஹித ஸ்தவம்
தாபத் த்ரயாதிகளால் வரும் துக்கம் ஆகிற விக்நத்தின் உடைய
கந்தமும் அற்றவராய் –

இச் சரீரத்தோடே இருக்கச் செய்தே
தாப த்ரயத்தால் வரும் துக்க கந்தம் அற வர்த்திக்கப் போமோ -என்னில்
ஸ்தவம் -நீர் அல்லீரோ
நீர் ஆகில் வர்த்திக்க குறை என்ன –
ஏவம் பூதோசி –என்று நான் சொல்லும்படியான வீறு உடையீர் அல்லீரோ –
அதாவது
காலம் குறுகா நின்றது -கர்மம் ஷயிக்கத் தொடங்கிற்று -‘கர்மம் ஷயிக்க -பிராப்யம் அணித்தாகா நின்றது -என்று
அநந்தரம் பெறுகிற பேற்றை அனுசந்தித்து
இவற்றால் வரும் துக்கங்களை மதியாதே வர்த்தியும் -என்றபடி –
என்போலே என்னில் -அபிஷேகப் பட்டினி போலே –

அங்கனே ஆகிலும் சரீரத்தோடே இருக்கும் நாளைக்கு கால ஷேபம் பண்ணுவது
யெத்தாலே  என்னில்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ –
த்வயத்தின் உடைய அர்த்த அனுசந்தானத்தைப் பண்ணிக் கொண்டு
அதுவே துணையாக இரும்
நாட்டாரோடு இயல் ஒழிந்து-திருவாய் மொழி -10-6-2- என்கிறபடியே
சம்சாரத்தில் வ்யாவ்ருத்தனாய்
கைங்கர்ய பிரார்த்தனை யேயாம்படி
இதுக்கு தூரியனாய்
நாரணனை நண்ணினம் – திருவாய் மொழி -10-6-2- என்கிறபடியே பகவதி ந்யச்த பரனாய் இருக்கும் அதிகாரிக்கு
த்வயத்தில் அர்த்த அனுசந்தானமே யாய்த்து துணையாய் இருப்பது
கீழ் த்வய வக்தா –என்றது
இங்கு -த்வயம் அர்த்த அனுசந்தா நேன சஹ -என்கிறது
இதுக்குக் கருத்து என் என்னில்
பகவத் விஷயீ காரத்துக்கு பாசுரமே அமையும்
கால ஷேபத்துக்கு உடலாம் அன்று அர்த்த அனுசந்தானத்து அளவும் அபேஷிதமாய் இருக்கும் –

சதா ஏவம் வக்தா –
ஏவம் என்றது இப் ப்ரகாரத்தாலே   -என்றபடி
அதாவது கீழ் தாம் ஒரு பிரகாரத்தாலும்
முன்பு உள்ளார் படியாலும்
இதிஹாச பிரக்ரியை யாலுமாக
மூன்று ப்ரகாரத்தாலெ சரணம் புக்கார் –
இதில் பூர்வர்கள் பிரக்ரியையும் ஒழிய
இதிஹாச பிரக்ரியையும் ஒழிய இக் கத்யத்தில் சொன்ன வழியாலே என்றபடி
இன்னம் இருபது படி சரணம் புக்காலும் மறித்து மறித்து சரணம் புகா நிற்கும்
அத்தனை போக்கி உபாயாந்தரம் இல்லையே இவர்க்கு –
வேறு புகல் இல்லையே இவர்க்கு –
இப்படி சரணம் புகுகிறது அவன் பிரசாதத்துக்க்காக இ றே –
அது தானும் இதிலே சித்திக்கையாலே –ஏவம் ப்ரகாரத்தாலே -என்கிறார் –

வக்தா –
நெஞ்சுக்கு உள்ளே வேண்டா –
அனுபவம் வலிந்து புறப்பட்ட சொல்லே அமையும்
அன்றிக்கே –
ஏவம் வக்தா த்வயம் அர்த்த அனுசந்தா நேன சஹ –
இக் கத்யத்தை அனுசந்திக்கவே
த்வயத்தை அர்த்த அனுசந்தானதுடன் அனுசந்தித்தீர் ஆகிறீர்
இரண்டும் பொருள் ஒன்றே இறே என்னவுமாம் –
அதுக்கு பாசுரம் இதுவாம் இத்தனை இறே –

ஆனால் ஒருகால் அனுசந்தித்தாலும் அமையுமோ என்னில்
சதா –
எப்போதும்
எப்போது வேண்டுவான் என் என்னில்
உபாயாந்தரங்களும் நடையாடும் நெஞ்சு ஆகையாலே
அவை புகுராமைக்காக சதா என்கிறது
அன்றிக்கே
இவ் வதிகாரிக்கு பிரகிருதி சம்பந்தமும் பகவத் சம்பந்தமும் இரண்டும் கூடக் கலசி வர்த்திக்கையாலே
பிரகிருதி சம்பந்தம் இதர விஷயங்களிலே மூட்டும்
பகவத் சம்பந்தம் ஸ்வரூப அநுரூப வ்ருத்தியிலே மூட்டும்
இங்கனே இருக்கச் செய்தே இதர விஷயங்களுக்கு அஞ்சி
பகவத் விஷயத்தைப் பற்றினவர் ஆகையாலே
ஏற்கவே அதில் அன்வயம் இல்லை
இனி வ்ருத்தி விசேஷமோ என்றால் ஒரு தேச விசேஷத்திலே யாகையாலே
சால விப்ரக்ருஷ்டமாய் இருந்தது
இனி இருக்கும் நாளைக்கு போது போக்கு இதுவே இருக்கும் ஆகையாலே
எப்போதும் -என்கிறது -என்றுமாம் –

ஆகிலும் இவ்விருப்புக்கு அவஸானம் ஏதோ அபேஷையிலே
யாவச் சரீரபாதம் -என்கிறார் -பெரிய பெருமாள் –
இவர் தாம் இப்படி கேட்கிறது உபாயாந்தர பரிக்ரஹம் பண்ணி அது முடிந்த அளவிலேயோ
அன்றியே
உபாசனம் சமாபித்தாலும்
பிராயச பாப காரித்வாத் ம்ருதயோருத் விஜதே ஜன -க்ருதக்ருத்யா ப்ரதீஷந்தே ம்ருத்யும் ப்ரியமிவாதிதம் -என்று
தன்னளவும்

பார்த்து இருக்க வேண்டும்படியான கர்ம அவஸாநத்திலேயோ
என்று சங்கித்துக் கேட்கிறார் அல்லர்
உபாயாந்தில் அன்வயம் இல்லாமையாலும்
அது இன்றிக்கே ஒழிந்தால் எப்போதோ -என்று சம்சயிக்க வேண்டாதே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -திருவாய் மொழி -9-10-5-என்று
பரமாச்சார்யர் அருளிச் செய்து வைக்கையாலும் –
இனி இப் பிரசன்னத்துக்கு கருத்து என் என்னில்
ப்ராப்ய த்வரையாலும்
காலம் நெடுகித் தோற்றுகையாலும்
பரிக்ரஹித்த உபாயம் விளம்ப சஹம் அல்லாமையாலும்
கேட்க வேண்டி வரும்
நமக்கு ருசியும் உண்டாய் இருந்தது
ஸ்வீகரித்த உபாயமும் கண் அழிவு அற்று இருந்தால் இனி
இவ் விருப்புக்கு அடி அவன் நினைவாம் அத்தனை ஆகையாலே அவனையே நிர்பந்தித்துக் கேட்கிறார்

அத்ரைவ ஸ்ரீ ரங்கே ஸூகமாஸ்ஸ்வ
உமக்கு உபய விபூதியில் உள்ளாறும் ஒப்பாக மாட்டாதாப் போலே காணும்
பரம பதத்தையும் கால் கடைக் கொண்டு நாம் படுகாடு கிடக்கும் கோயிலுக்கு உபய விபூதியும் ஒப்பாக மாட்டாதபடி
வடிவுடை வானோர் தலைவன் வண் திருவரங்கன் -திருவாய் மொழி -7-2-10-என்றது இ றே
ஸூகமாஸ்ஸ்வ
முக்த ப்ராயர் ஆகையாலே சுகமே வர்த்திக்கக் குறை இல்லை இ றே

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -13-14-15-16- -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 22, 2014

சூரணை – -13- அவதாரிகை –

கீழ் நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்றே நின்றது –
நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் விரோதி நிவ்ருத்தி இ றே –
அவ்வளவும் போறாதே இவருக்கு –
பரம புருஷார்த்த லஷண மோஷ ரூபா கைங்கர்ய சித்தியும் வேணுமே
இக் கைங்கர்ய உபயோகியுமாய்
கைங்கர்யததோபாதி ஆதரணீயமுமாய் -பிரிய விஷயமுமாய்-
பிராப்ய பூமியிலும் அனுவர்த்திக்குமவையான பர பக்தி பர ஜ்ஞான பரம பக்திகளை அபேஷிப்பாராய்
அதுக்கு பூர்வ பாவியாய் இருந்துள்ள அநந்ய பிரயோஜன பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை
அதினுடைய ஸித்தி அர்த்தமாக
ஸ்ரீ கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்த ஸ்லோக த்ரயத்தையும் முன்னிட்டு
அந்த ஜ்ஞாநத்தையும் உண்டாக்கி அருள வேணும் -என்று அபெஷிக்கிறார் –

தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ மம ப்ரிய

தேஷாம்-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸூ க்ருதிநோர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ஸ பரதர்ஷப –ஸ்ரீ கீதை -7-13-என்று சொல்லுகிற
ஐஸ்வர்ய கைவல்ய பகவச் சரணார்த்திகளில் வைத்துக் கொண்டு

ஜ்ஞாநீ –
ஜ்ஞானி யானவன்

அவன் என் என்னில் –
விசிஷ்யதே –
விசேஷம் உடையவனாக சொல்லப் படுகிறான் –

அவனுக்கு ஏற்றம் ஏது என்னில் –
நித்ய யுக்த ஏக பக்திர்-
இது இ றே அவனுக்கு உள்ள ஏற்றம் –
நித்ய யுக்தன் ஆகையாவது –
ஒரு பிரயோஜனதுக்காக என்னைப் பற்றி -அது கைப் பட்ட வாறே அகன்று போகை அன்றிக்கே
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் –
ஏக பக்தி யாவது –
ஒரு பிரயோஜனத்தில் சிநேகத்தைப் பண்ணி –
தத் ஸித்தி அர்த்தமாக என் பக்கலிலும் ஸ்நேஹம் பண்ணுகை அன்றிக்கே –
என்னையே பிரயோஜனமாக பற்றினவன் ஆகையாலே
தன் ஸ்நேஹத்திற்கும் என்னையே விஷயம் ஆக்குகை –

ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் –
ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் -ப்ரியோ ஹி-
ஜ்ஞாநிக்கு நான் அத்யரத்தம் பிரியனாய் இருப்பன்
என் பக்கல் அவனுக்கு உண்டான ப்ரீதிக்கு பாசுரம் இட ஒண்ணாது
அபிதேய வசன -அர்த்த சப்த

ஸ ச மம ப்ரிய –
அவனும் எனக்கு பிரியனாய் இருப்பன்
தன பக்கல் அவனுக்கு உண்டான ப்ரேமத்தை அத்யர்த்தம் என்று சொல்லி
அவன் இடத்தில் தனக்கு உண்டான ப்ரேமத்தைக் குறையச் சொல்லுகிறது என் கொண்டு
அவனுடைய ப்ரேமத்துக்குக் குறைந்ததோ தன்னுடைய ப்ரேமம் -என்னில் -அங்கன் அன்று
அவன் தன் அளவிலேயாய் இருக்கும் அவன் ப்ரீதி

தன் ப்ரீதி தன் அளவிலேயாய் இருக்கும்
அணு பூதனுக்கு உள்ள அளவேயோ விபுவுக்கும்
குளப்படி கலங்கினால் போல் அன்றே கடல் கலங்குவது –
ஆயிருக்க அவன் ப்ரேமத்துக்கு என் ப்ரேமம் எங்கே கிடப்பது என்று
அருளிச் செய்கிறான் -தன் வாத்சல்ய அதிசயத்தாலே-
அன்றிக்கே
சர்வ சக்தியான தன்னாலும் அபரிஹார்யமாய் இருக்கையாலே அதுவே கனத்து இருக்கும் என்கிறான் ஆகவுமாம்-
பயா நாம பஹாரியாலும் பரிஹரிக்க ஒண்ணாத பயத்தை விளைப்பிக்குமது ஓன்று இ றே
பய நிவ்ருத்திக்கு உடலாமவையே பயத்துக்கு உடலாம்படி இ றே அவன் ப்ரேமம் இருப்பது

——————————————————–

உதாராஸ் சர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்
ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம்
உதாராஸ் சர்வ ஏவைதே –
யாவர் சிலர் யாதொன்றை அபேஷிக்கும் இடத்தில்
தேவதாந்தரங்கள் பக்கலாதல்
மனுஷ்யர் பக்கலாதல் -அன்றிக்கே
என் பக்கலிலேயே அபேஷிக்கிறார்கள்
அவர்கள் அத்தனைவரும் உதாரர் –

அவர்களில் வைத்துக் கொண்டு
ஜ்ஞாநீ து –
விலஷணன் ஆகிறான் ஜ்ஞானி
அவனுக்கு வை லஷண்யம் என் என்னில்

ஆத்மைவ –
ஜ்ஞானி யானவன் எனக்கு ஆத்மாவே இருப்பவன்
எனக்கு தாரகன் -என்றபடி –
அவதாரணத்தாலே -ஒரு காலத்தில் இவன் தாரகனாய்
காலாந்தரத்தில் மற்றைப்படியாய் இருக்கை அன்றிக்கே
எப்போதும் ஒக்க –சர்வ காலமும் -இவனே தாரகன் என்கிறது –
ஸ்வரூப ஜ்ஞானம் -பகவத் ஜ்ஞானம் பிறந்தான் ஒருவன் -உண்ணும் சோறு பருகு நீர் -தின்னும் வெற்றிலை
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-1-7-என்கிறபடியே
தாரக போஷாக போக்யங்கள் அடைய ஈச்வரனே என்று நினைத்து இருக்கை பிராப்தம் –
ஆயிருக்க இது விபரீதமாய் இருந்ததீ -என்ன –
மே மதம் –
ஆரானும் நினைத்தபடி நினைத்திடுக
முந்துற முன்னம் என் நினைவு இதுவே -என்கிறான் –

ஆஸ்தி தஸ் சஹி யுக்தாத்மா மாமேவா நுத்தமாம் கதிம் –
அநுத்தமாம் கதிம் மாமேவ யுக்தாத்மா ஆஸ்தி தஸ் ச ஹி –
இப்படி ஆஸ்தானம் பண்ண அனுக்தமகதியானஎன்னை –
அனுக்தமான கதி யாகிறது –
தன்னை ஒழிந்ததாய் -தனக்கு மேலாய் இருப்பது ஓன்று இன்றிக்கே பரம ப்ராப்யனான -என்னையே

யுக்தாத்மா
கூடினவனாய்

ஆஸ்தி தஸ் ச ஹி
இப்படி த்யானம் பண்ணுவான் அவனே இ றே
இப்படி ஆஸ்தானம் பண்ணா நிற்கும் -த்யானம் பண்ணா நிற்கும்

————————————————————————————-

பஹூ நாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞான வான் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் சர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப

பஹூ நாம் ஜந்ம நாமந்தே-
யாவன் ஒருவன் அநேக ஜன்மங்கள் கூடி என்னையே ஆராதித்து ஜன்மாந்தரத்திலே-

ஜ்ஞான வான் –
மதேக விஷய ஜ்ஞானவானாய்

மாம் –
என்னை –

வாஸூ தேவஸ் சர்வமிதி –
சேலேய் கண்ணி யாரும் பெரும் செல்வமும் -திருவாய் மொழி -5-1-9- என்றும்
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண – என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய் மொழி -6-7-1- என்றும் சொல்லுகிறபடியே
த்யஜித்தவை எல்லாம் அவனே -என்றும் சர்வ வித பந்துவுமாக

ப்ரபத்யதே –
யாவன் ஒருவன் பற்றுகிறான் -அத்யவசிக்கிறான் -என்றபடி

ஸ மஹாத்மா –
அவன் அறப் பெரியன்
அவனை ஒப்பார் இல்லை -அவனுக்கு நாமும் ஒப்பு அல்லோம் –
இது ப்ரசம்சையோ என்னில் அன்று உண்மை –
ஹேய பிரதிபடன் ஆகையாலே நமக்கு சம்பந்த ஜ்ஞானம் உண்டாகலாம் –
சம்சார துரிதமாகிற கலக்கம் தட்டாமல் இருக்கையாலே சம்பந்தம் உணர்ந்து இருக்கலாம் –
பக்தனான இவன் அத்தை உணர்ந்து இருக்கையாலே அவனுக்கு நாமும் ஒப்பாக மாட்டோம் –

ஸூ துர்லப –
அங்கன் இருப்பான் ஒருவனை சம்சாரத்திலும் கிடையாது -பரம பதத்திலும் கிடையாது -என்கிறான்
தேசிகரையும் உட்படக் கலக்க வற்றான இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தே
தெளிந்து இருக்கும் அதிகாரியை உபய விபூதியிலும் கிடையாது -என்றபடி –
நாமும் ஆசைப் பட்டே போம் இத்தனை போக்கி இவன் தனை அதிகாரியை
நமக்கும் கூடக் கிடையாது கான் -என்கிறான்

—————————————

இதி ஸ்லோக தர யோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
இதி -இப்படி

ஸ்லோக தர யோதித ஜ்ஞாநினம் மாம் குருஷ்வ
கீழ்ச் சொன்ன ஸ்லோக த்ரயத்திலும் பிரதிபாதிக்கப் பட்ட ஜ்ஞாநத்தை வுடையனாம் படி
என்னைப் பண்ணி அருள வேணும்
முதல் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு பிரியன் -என்றான் –
இரண்டாம் ஸ்லோகத்தில் -அவனே நமக்கு தாரகன் -என்றான் –
மூன்றாம் ஸ்லோகத்தில் -இவை இரண்டுக்கும் விஷயம் உள்ளது அத்தனை அதிகாரியைக் கிடைக்கில் அன்றோ
முந்துற முன்னம் அவனைக் கிடையாது காண் -என்றான் –

——————————————————————————————–
சூரணை -14 -அவதாரிகை

முன் பர பக்த்யாதிகளுக்கு
பூர்வபாவியான பக்தி ரூபா பன்ன ஜ்ஞாநத்தை அபேஷித்தார்
இங்கு கைங்கர்யத்துக்கு  பூர்வ பாவியான
பரபக்த்யாதிகளை அபேஷிக்கிறார் –

புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா தவ நனயயா சக்ய-ஸ்ரீ கீதை -11-54
மத்  பக்திம் லப்தே பராம் -ஸ்ரீ கீதை -18-54
இதி ஸ்தான தர யோதித பரபக்தி யுத்தம் மாம் குருஷ்வ

அதில் பர ஜ்ஞாபரம பக்திகள் பரபக்தி கார்யமாய்
அது உண்டானால் உண்டாம் அது ஆகையாலே
அத்தை பிரதானமாய்
எட்டாம் ஒத்திலும் பதினோராம் ஒத்திலும் பதினெட்டாம் ஒத்திலும்
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் தவ நனயயா-என்றும்
பக்த்யா தவ நனயயா சக்ய-என்றும்
மத்  பக்திம் லப் தே பராம் -என்றும்
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் -இப்படி மூன்று -பிரதேசத்திலும் -அருளிச் செய்த பரபக்தி யுக்தனாக என்னைப் பண்ணி அருள வேணும் -என்கிறார் –

———————————————————————————————

சூரணை -15
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்த்யேக
ஸ்வபாவம் மாம் குருஷ்வ

இவை மூன்றும் –பர பக்தியும் -அதன் கார்யமான பர ஜ்ஞானமும் -அதன் கார்யமான பரம பக்தியும்
எனக்கு யாவதாத்மா பாவியாக உண்டாக வேணும் -என்கிறார்

த்வத் பாதாரவிந்த யுகளம் சரண மஹம் ப்ரபத்யே -என்று
சாதநாந்தர நிரபேஷமான உபாயத்தை பற்றினவர் -ஆகையாலும்
ஸ்வபாவம் மாம் குருஷ்வ -என்று பக்தி தன்னை அன்றிக்கே ஸ்வ பாவத்தை அபேஷிக்கிறார் ஆகையாலும் –
இங்கு பர பக்த்யாதிகளை அபேஷிக்கிறது
கைங்கர்ய உபகரண தயா வல்லது
நிரபேஷ உபாய ஸ்வீகாரம் பண்ணினவர் ஆகையாலே
உபாய தயா அல்ல –

அத்தேச விசேஷத்தில் அனுபவம் பரம பக்தி க்ருதமாய் இருக்குமாகில் அதுவே அமையாதோ
பரபக்தி பர ஜ்ஞானங்களும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபேஷிக்க -இதுக்கு ஹேது என் என்னில்
அனுபூதாம்சமே நாள் தோறும் அனுபவித்து போருகிறதாகில் அதுவே அமையும்
தன் விடாயாலே அதுவும் நித்யமாகவும் தட்டில்லை
அனுபாவ்ய அம்சம் விஞ்சி இருக்கும்
அனுபவார்த்தமாக அபூர்வ தர்சனத்தை ஈஸ்வரன் பண்ணுவிக்கும்
அப்போதே கண்ட போதே மேல் விழுகையும்
அநந்தரம் இதிலே ஜ்ஞானம் சஞ்சரிக்கையும்
பின்பு பெறா விடில் முடியும்படியான தசை பிறக்கையும்
இப்பாகம் அபூர்வ தர்சனத்திலெ உண்டாமாவை ஆகையாலே –
மூன்றையும் யவதாத்ம பாவியாக வேணும் என்று அபெஷிக்கிறார் –

————————————————————————————————

சூரணை -16-அவதாரிகை

பர பக்த்யாதிகளால் பண்ணும் கைங்கர்ய வேஷத்தை
இரண்டாம் சூரணை யிலே பரக்க அருளிச் செய்து இருக்க –
இங்கும் சொன்னால் புனர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு கைங்கர்ய ருசியை உண்டாக்க வேணும் என்று பிராட்டி திருவடிகளில் சரணம் புக நினைத்து
ஏவம் விதமான கைங்கர்யத்திலே எனக்கு ருசியைத் தந்து அருள வேணும் -என்கைக்காக-
கைங்கர்ய ஸ்வரூபத்தை அருளிச் செய்தார் கீழ் –
இங்கு
ருசி பூர்வகமாகப் பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புக்குக்
கைங்கர்யம் தன்னையே அபே ஷிக்கிறார் -ஆகையாலே புநர் உக்தி தோஷம் இல்லை –
பர உபதேசமாக அருளிச் செய்கிறார் அல்லாமையாலே –
தோஷம் இல்லாமையே அன்று குணமாக புத்தி பண்ண தட்டில்லை

பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி
கருத பரி பூர்ண
அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன
அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம்
ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித அசேஷ அவஸ்தோசித
அசேஷ சேஷை தைகரரூப
நித்ய கிங்கரோ பவாநி

பரபக்தி பர ஜ்ஞான பரம பக்தி கருத –
இப் பர பக்த்யாதிகளாலே பண்ணப் படுமதான

பரி பூர்ண –
அதாவது -ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
ஒரு போகியாக அனுபவிக்கை –

அநவரத –
அதாவது அவிச்சின்னமாய் இருக்கை –
அதாவது -விஷயாந்தரம் கலசாது இருக்கை –

நித்ய –
யாவதாத்மா பாவியாய் இருக்கை

விசததம –
விசதம் ஆவது -பர பக்தி தசையில் அனுபவம்
விசத தரமாவது -பர ஜ்ஞான தசையில் அனுபவம்
விசத தமமாவது -பரம பக்தி தசையில் அனுபவம் –

அநந்ய பிரயோஜன –
இவ் வனுபவத்தில் பிறக்கும் ப்ரீதியும் வேண்டா
ப்ரீதி கார்யமான கைங்கர்யமும் வேண்டா -என்னும்படி
தானே ரச்யமாய் இருக்கை –

அநவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவோஹம் –
அநவதிகமான
அதிசயத்தை உடைத்தான
பகவத் அனுபவத்தை உடைய -நான்

ததாவித பகவத் அனுபவ ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித அசேஷ அவஸ்தோசித –
அப்படிப் பட்ட அனுபவத்தாலே பிறப்பதாய்
அநவதிக அதிசயத்தை உடைய ப்ரீதி காரிதமாய் –
எல்லா அவஸ்தை களிலும் அனுகூலமாய் இருக்கிற –

அசேஷ சேஷை தைகரரூப –
சகல சேஷ வ்ருத்தி ஒன்றிலும் உண்டான
அபி நிவேசத்தை வடிவாக உடையனாய்க் கொண்டு

நித்ய கிங்கரோ பவாநி
நித்ய கைங்கர்யத்தை பெற்று
அனுபவிக்கப் பெறுவேனாக வேணும் –
அன்றிக்கே
நித்ய சப்தம் புநரா வ்ருத்தி ரஹீதமான தேசத்தைச் சொல்லி
அதிலே கிங்கரோ பவாநி -என்னவுமாம் –

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -10-11-12- -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 22, 2014

சூரணை -10 -அவதாரிகை –
ஆக முதல் சூரணை யிலே ப்ராப்ய ருசிக்கும் பிராபக விவசாயத்துக்கும் ஆகப் பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கு
இரண்டாம் சூரணை யிலே பிராட்டி பிரசாதத்தாலே பெற்று
அநந்தரம் -ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பான உபய விபூதி நாதத்வம் சொல்லி
அநந்தரம் ஆஸ்ரயிக்கைக்குத் துணையான சீலாதி குணங்களை முன்னிட்டு பிராட்டி புருஷகாரமாகத் தாம் சரணம் புக்கு
அநந்தரம் பூர்வர்கள் உடைய ப்ரக்ரியையாலே சரணம் புக்கு
அநந்தரம் இதிஹாச பிரக்ரியை யாலே சரணம் புக்கு
அநந்தரம் –கீழ் விட்டவை யடைய ஈச்வரனேயாகப் பற்றி
இதுதான் என்னளவே யன்று சகல சேதனர்க்கும் ஒக்கும் -என்று கீழ் பண்ணின பிரபத்திக்கு ஷாமணம் பண்ணினார்
பூர்வர்கள் உடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே யாகிலும்
அவர்கள் பாசுரத்தை முன்னிடவே ஈஸ்வரன் திரு உள்ளம் பிரசன்னமாம் என்று பார்த்து
அவர்கள் பாசுரத்தாலே சரணம் புகுந்தார் –
அதவா
சக்ருதேவ பிரபன்னாய-என்று சக்ருத் பிரபத்திக்கு கார்யம் செய்கைக்கு ஈஸ்வரன் சமைந்து நிற்க
ப்ராப்ய த்வராதி சயத்தாலும் இது ஒழியச் செல்லாமையாலும்
யார் பாசுரத்துக்கு ஈஸ்வரன் இரங்கும் என்று அறியாதே பஹூ முகமாக பிரபத்தி பண்ணினார்
ஆக இவ்வலவாலும் பூர்வ கண்டார்த்தத்தை அனுசந்தித்தாராய் நின்றார் –
இனி உத்தர கண்டார்த்தத்தை அருளிச் செய்கிறார்
அதில் அநிஷ்ட நிவ்ருத்தி யுன்டானால் அல்லது இஷ்ட ப்ராப்தி கிடையாமையாலே
முந்துற –நமஸ் சப்தார்த்தை- அருளிச் செய்கிறார் –
அது தனக்கு தேஹாத்மாபி மானம் தொடக்கமாக
கைங்கர்யத்தில் மமதா புத்தி ஈறாக
நடுவுள்ள விரோதியைப் போக்கித் தர வேணும் என்று இ றே அர்த்தமாக நிர்வஹித்துப் போருவது-
அது தான் சகல கர்ம ஷயத்தாலே யாய்த்து பிறப்பது –
ஆகையாலே முந்துறக் கர்மத்தை அருளிச் செய்கிறார்
நம்மாழ்வார் -பொய்ந்நின்ற ஜ்ஞானமும் -திரு விருத்தம் -1-என்று
அவித்யயை முதலாக அருளிச் செய்தார்
இவர் கர்மத்துக்கு அடி அஞ்ஞானம் -அஞ்ஞானத்துக்கு அடி தேக சம்பந்தம் -என்று
கர்மத்தை முந்துற அருளிச் செய்கிறார்
ஆழ்வாருக்கு ஸ்வ அனுபவமாய் இருக்கை யாலே தேஹாத்மா அபிமான த்வாரா நின்று
அஹங்காரம் நலிகிற ப்ரகாரத்தாலே அவித்யை முன்னாக அருளிச் செய்தார்
இவர்க்கு ஸ்வ அனுபவமாய் இருக்கச் செய்தே தர்சனத்துக்கு
கர்ம ப்ராதன்யம் சொல்லிப் போருவது ஒரு
நிர்பந்தம் உண்டு ஆகையாலே அதினுடைய ஸ்திதிக்கு
உறுப்பாகவும்
மாயாவாதி -அவித்யா நிவ்ருத்தி மோஷம் -என்று அவித்யயை பிரதானமாக சொல்லுகையாலே
அதினுடைய ப்ரதிஷேப அர்த்தமாகவும்
இவர் கர்மம் முதலாக அருளிச் செய்கிறார்
அவர் காரண பரம்பரையை அருளிச் செய்தார்
இவர் கார்ய பரம்பரையை அருளிச் செய்கிறார்-

மநோவாக் காயைர் அநாதி கால ப்ரவ்ருத்த
அநந்த அக்ருத்ய கரண
கருத்ய அகாரண
பகவத் அபசார
பாகவத அபசார
அசஹ்ய அபசார ரூப
நாநாவித அநந்த அபசாரான்
ஆரப்த கார்யான்
அநாரப்த கார்யான்
கருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச்ச
சர்வான்
அசேஷத ஷமஸ்வ-
மநோவாக் காயைர் –
கர்மத்துக்குப் பரிகரம் ஏது என்று பார்த்தால் –மநோ வாக் -காயங்கள் –
இவைதான் ஈஸ்வரனை லபிக்கைக்கும்
அவனை இழந்து அனர்த்தப் படுகைக்கும்
உடலாய் இருக்கும் –
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷ யோ
பந்தாப விஷயா சங்கி முக்த்யை நிர்விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்று இ றே இருப்பது –

அநாதி கால ப்ரவ்ருத்த
அநாதி காலம் பண்ணிப் போந்த

அநந்த –
இவை தான் அளவிறந்து இருக்கை –

இவை தான் இருக்கும் படி என் என்னில் –
அக்ருத்ய கரண-இது என்ன –
கருத்ய அகாரண -இது என்ன –
பகவத் அபசார -இது என்ன –
பாகவத அபசார -இது என்ன –
அசஹ்ய அபசார -இது என்ன –
ரூப நாநாவித -இப்படி பஹூ விதமாய்
அநந்த அபசாரான்-இவற்றில் ஒரோ விதமே அனநதமாய்
இப்படி உள்ளவை தான் அசந்க்யாதமாய் இருக்கை –
இது இ றே அபசாரத்தின் உடைய அனல்பதை இருந்தபடி –
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவேப்ய நாச்யம்
தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ ஷணார்த்தே -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -60-என்று
நூறாயிரம் ப்ரஹ்ம கல்பம் கூடினாலும் அனுபவித்து முடிக்க ஒண்ணாத பாபத்தை இ றே
இச் சேதனன் ஒரு ஷணார்த்தத்திலே பண்ணுவது

ஆரப்த கார்யான்-
பல பிரதானத்தில் ஒருப்பட்டவை

அநாரப்த கார்யான் –
பிரபல கர்ம திரோதா நத்தாலே அவசர ப்ரதீஷம் ஆனவை –

கருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச்ச
கால த்ரயத்தில் உள்ளவையும்

சர்வான் –
இவை தான் சிலவற்றைச் சொல்லிற்று இத்தனை
என்னால் சொல்லி முடிக்க ஒண்ணாத எல்லாப் பாபங்களையும் –

அசேஷத ஷமஸ்வ –
சவாசனமாகப் பொறுத்து அருள வேணும்
அக்ருத்ய கரணம் ஆவது –
சாஸ்திர விருத்தமான வற்றை அனுஷ்டிக்கை
க்ருத்ய அகரணமாவது-
சாஸ்திர விஹிதமாம வற்றை அனுஷ்டியாது ஒழிகை
விது ஷோதிக்ரமே தண்டபூயஸ்த்வம்-ஞானி விதியை மீறினால் அதிக தண்டனை பெறுவான் என்றும்
சக்த்ஸ் யாதீவ தோஷ வத் -சக்தனாய் இருக்க சாஸ்திர விதியை அனுஷ்டியாது ஒழிந்தால் தோஷம் கனத்து இருக்கும் இ றே
பகவத் அபசாரம் ஆவது –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமாம் அவற்றை விச்சேதம் பண்ணுகை
அதாவது -அவற்றை தான் வாங்கி ஜீவித்தல்
பிறர்க்கு உபகரித்தல்
அத்தாலே ஜீவிப்பார் பக்கலிலே யாசிதமாயாதல் அயாசிதமாயாதல் பரிக்ரஹித்து ஜீவித்தலும்
அவதாரங்களில் சஜாதீய புத்தி பண்ணுகையும்
அர்ச்சாவதாரத்தில் உபாதான ஸ்ம்ருதியும்
ஈஸ்வரன் பக்கல் தேவதாந்தரந்களோடு சஜாதீய புத்தியும்
அவன  தான வஸ்துக்களில் மமதா புத்தியும் –
இதுவும் அக்ருத்ய கரணங்களில் ஒன்றாய் இருக்க பிரிய எடுக்க வேண்டிற்று-இதனுடைய க்ரௌர்யா திசயம் இருந்த படி
பாகவத அபசாரம் ஆவது
அர்த்த காம அபிமான நிமித்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்களோடு விவாதம் பண்ணுகையும்
ஜன்ம வ்ருத்தாதிகளால் அவர்களை குறைய நினைக்கையும்
விகல கரணர் பக்கல் ஷேபோக்தி பண்ணுகையும்
அசஹ்ய அபசாரம் ஆவது
நிர்நிபந்தநமாக பகவத் பாகவத சம்ருத்தியை கண்டால் பொறுக்க மாட்டாதே
முட்டிக் கொள்ளுதல் நான்று கொள்ளுதல் செய்கை
ஸ்ரீ வைஷ்ணவன் என்னும் இதுவே ஹேதுவாக ப்ரத்வேஷம் பண்ணுகை

புத்திர வாத்சல்யம் செல்லா நிற்க திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக அக்னி தாஹம் முதலான ஹிம்சையைப் பண்ணினான் இ றே ஒருவன்
சிசூபாலாதிகள் பண்ணினவை பகவத அபசாரம்
ராவணாதிகள் பிராட்டி போல்வார் விஷயத்தில் பண்ணினவை பாகவத அபசாரம்
ஹிரண்யாதிகள் ஸ்ரீ ப்ரஹலாதாதிகள் விஷயத்தில் பண்ணினவை அசஹ்ய அபசாரம்-

——————————————————————————–

சூர்ணிகை -11- அவதாரிகை –
அநாதி கால பிருவ்ருத -இத்யாதி
கீழ் பொல்லா ஒழுக்கும் -என்கிற படியே அக்ருத்ய கரணாதி அபராதங்களைப்
பொறுத்து அருள வேணும் -என்றார்
இங்கு -அதுக்கு அடியான விபரீத வ்ருத்தத்தால் உண்டான அபராதத்தை பொறுத்து அருள வேணும் -என்கிறார்
வ்ருத்த ஹாநி கீழே சொல்லிற்று இல்லையோ வென்னில்
அங்கு அக்ருத்ய கரண க்ருத்ய அகரணம் என்று சாஸ்திர விருத்தம் ஆனவற்றை அனுஷ்டிக்கையும்
விஹித அனுஷ்டானம் பண்ணாது ஒழிகையும் ஆகிற வ்ருத்த ஹாநி சொல்லிற்று
வேதாந்த விஷய ஜ்ஞான பாவத்தால் வரும் சில வ்ருத்த ஹானிகள் உண்டு
அவற்றை யாய்த்து இங்கு சொல்லுகிறது
ஆகையால் புநர் உக்தி தோஷம் இல்லை –

அநாதிகால ப்ரவ்ருத்தம்
விபரீத ஜ்ஞானம்
ஆத்ம விஷயம் க்ருத்சன ஜகத் விஷயஞ்ச
விபரீத வருத்தம் ச
அசேஷ விஷயம்
அத்யாபி வர்த்தமானம்
வர்த்திஷ்ய மாணாஞ்ச
சர்வம் ஷமஸ்வ

அநாதிகால ப்ரவ்ருத்தம்
அநாதி காலம் பண்ணிப் போந்த

விபரீத ஜ்ஞானம்
இது ஸ்வரூப ஸ்பர்சி யன்று
ஆனால் ஒரு நாள் அளவிலே வந்தேறிற்றோ வென்னில்
அங்கன் சொல்ல ஒண்ணாது –
அநாதி -என்னும் இத்தனை –
ஸ்வரூப ஸ்பர்சி என்னலாம் படி இ றே இதின் அநாதித்வம் இருப்பது –
பகவத் பிரசாதத்தாலே ஒரு நாள் வரையிலே கழியக் காண்கையாலே வந்தேறி என்று அறியும் இத்தனை-
விபரீத ஜ்ஞானம் ஆவது
ஓர் அர்த்தத்தில் அர்த்தாந்தர புத்தி பண்ணுகை –
அதாவது ரஜ்ஜூவிலே சர்ப்ப புத்தியும்
சூக்தியிலே ரஜத புத்தியும் .-

இதுக்கு விஷயம் ஏது என்னில்
ஆத்ம விஷயம் க்ருத்சன ஜகத் விஷயஞ்ச –
ஆத்மவிஷயமாகவும் க்ருத்சன ஜகத் விஷயமாகவும்
ஆத்மவிஷயமான விபரீத ஜ்ஞானம் ஆவது –தேகாத்ம அபிமானம்
க்ருதச ஜகத் விஷயமான விபரீத ஜ்ஞானம் ஆவது
தேவ திரயக் மனுஷ்ய ஸ்தாவர சரீரங்களில் தத் தத் புத்தி பண்ணுகை –

விபரீத வருத்தம் ச –
அதாவது விருத்தமாக அனுஷ்டிக்கை
க்ருத்சன ஜகத் விஷயமான விபரீத வ்ருத்தம் ஆவது
ஒருவன் தனக்கு ஓர் அபகாரம் பண்ணினால் ஸ்வ கர்ம பலம் என்றும்
தத் தத் கர்ம அனுகுணமாக ஈஸ்வரன் ப்ரவர்த்தகன் என்றும் நினையாதே
நிமித்த மாத்ரமான சேதனனை ஸ்வதந்த்ரனாக புத்தி பண்ணி அவன் செய்தான் என்று அவனுக்கு அபசாரம் செய்கை-
ஆத்ம விஷயமான விபரீத வ்ருத்தம் ஆவது –
பரதந்த்ரனான தன்னை ஸ்வ தந்த்ரன் என்று நினைத்து தான் பிரவ்ர்த்திக்கை –

அசேஷ விஷயம் –
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களை அபேஷிக்கையும்
இப்படி சர்வ விஷயமாகவும் முன்பு செய்தவற்றையும் –

அத்யாபி வர்த்தமானம் –
இப்போது செய்கிறவற்றையும்

வர்த்திஷ்ய மாணாஞ்ச –
மேலே செய்யப் புகுகிற வற்றையும்

சர்வம் ஷமஸ்வ
அஞ்ஞன் ஆகையால் என்னால் அறிந்து தலைக் கட்ட ஒண்ணாது
சர்வஞ்ஞரான தேவர் அறிந்த எல்லா வற்றையும் பொறுத்து அருள வேணும் –

———————————————————————————————-

சூரணை -12-அவதாரிகை –

கீழ் கர்மத்தையும் சொல்லி
அதுக்கடியான அஞ்ஞா னத்தையும் சொல்லி நின்றார் –
இவ் வஞ்ஞா னத்துக்கு அடியான தேக சம்பந்தத்தை கடத்தி அருள வேணும் என்கிறார் -இங்கு
கீழே –ஷமஸ்வ -என்றார்
இங்கு தாரய-என்கிறார்
இங்கனே வேண்டுவான் என் -என்னில்
கர்மமும் அஞ்ஞானமும் நிக்ரஹ ரூபமாய்க் கொண்டு அவன் திரு உள்ளத்திலே கிடப்பது ஓன்று ஆகையாலே
அவன் ஷமிக்க நசிக்கும் –
இவ் வசித்துத் தான் நித்யம் ஆகையாலே நசிக்க எனபது ஓன்று இல்லை –
இனி இதனின்றும் கழலுகையே யாய்த்து உள்ளது
ஆகையால் தாரய-என்கிறார் –
ஈஸ்வர விபூதியை அழிக்க வேணும் என்று அன்று இ றே இவருக்கு கருத்து
இதின் நின்றும் தம்மை எடுக்கை இ றே உள்ளது
பிரிக்க வென்னுதல் -விடுவிக்க என்னுதல் -செய்யலாவது ஸ்வரூபம் தோற்ற கிடக்கில் இ றே
ஸ்வரூபம் நேராக நசித்து தேகமாய் கிடக்கை யாலே எடுக்க வேணும் -என்கிறார்
பாலும் நீரும் தன்னிலே கலந்தால் பால் இது நீர் இது என்று பிரித்து காண ஒண்ணாத படியும்
அது ஒரு பதார்த்தத்தின் கைப் பட்ட வாறே சாரமான பாலை க்ரஹித்து ருஜீஷமான நீரைக் கழிக்குமா போலே
ஒரு சர்வ சக்தி பிரித்தல் இல்லையாகில் நசித்தல் போலே காணும் உள்ளது –
தை வீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத் யந்தே மாயாமேதாம் தரந்தி தே ஸ்ரீ கீதை 7-14—என்றும்
நான் பண்ணின மாயை ஒருவராலும் கடக்க ஒண்ணாது என்றும் என்னையே பற்றிக் கடக்க வேணும் என்றும்
அருளிச் செய்கையாலே நீயே கடத்தி அருள வேணும் -என்கிறார் –

மதீய அநாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம்
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்
விபரீத ஜ்ஞான ஜநநீம்
ஸ்வ விஷயா யாஸ்ச போக்ய புத்தேர்ஜநநீம்
தேஹேந்த்ரிய த்வேன போக்யத்வேன ஸூ சம ரூபேண சா வஸ்திதாம்
தைவீம் குண மயீம்
மாயம்
தாஸ பூதம்
சரணாக தோஸ்மி தவாஸ்மி தாஸ
இதி வக்தாரம் மாம் தாரய

அநாதி கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தாம்
அநாதி காலம் பண்ணிப் போந்த கர்ம பரம்பரையாலே உண்டானதாய் –

மதீய-
இது தான் பிறர் உண்டாக்கினது ஓன்று அன்றிக்கே
பகவத் பிரசாதம் அடியாக வந்தது ஒன்றும் அன்றிக்கே
என்னாலே சம்பாதிக்கப் பட்டது ஓன்று என்கை –

இது செய்யும் கார்யம் என் என்னில்
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் –
வகுத்த சேஷியான தேவர் உடைய ஸ்வரூபத்துக்கு திரோதா நத்தைப் பண்ணக் கடவதே
அதாவது -மறைக்கை -என்றபடி –
பகவத் ஸ்வரூபத்தை இது மறைக்கை யாவது என் -என்னில்
ஸ்ரீயபதியாய் -புருஷோத்தமனாய்-சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் உபய விபூதி நாதனாய் இ றே ஈஸ்வரன் இருப்பது
இப்படி இருக்க -குத்ருஷ்டி முகத்தாலே

நிர்விசேஷ சின் மாத்ரமாய் இருப்பதொரு வஸ்து வுண்டு
அல்லாதவை எல்லாம் அபாரமார்த்தம் -என்னும் மாயாவாதி –
சித் அசித் ஈஸ்வர தத்வங்கள் மூன்றும் உண்டு
அதில் சித் அசித்க்கல் இரண்டும் ஈஸ்வர சேஷமாய்
ஈஸ்வரன் அவற்றுக்கு சேஷியாய் இருக்கிறான் அல்லன்
எல்லாம் கூடி ஏக த்ரவ்ய பரிணாமம் -என்னும் பேத அபேத வாதி –
கர்மம் பண்ணுகைக்கு தான் உண்டாகில்
அதின் பலம் புஜிப்பிக்கைக்கு கர்மம் உண்டாகில்
இனி ஈஸ்வர அபேஷை தான் ஏன்
அது கொண்டு ஒரு தேவை இல்லை காண் -என்னும் சாங்க்ய -வைசேஷிகர்கள் –
ஆக இது வாய்த்து மறைக்கை யாவது
இதுக்கு அடி தேக சம்பந்தமாய் இறே இருப்பது –

விபரீத ஜ்ஞான ஜநநீம்-
அதுக்கு மேலே விபரீத ஜ்ஞானத்துக்கும் உத்பாதிகையாய்
விபரீத ஜ்ஞானம் ஆவது -அநாத்ம ந்யாத்மபுத்தி -அதாவது தேகத்தில் ஆத்மபுத்தி பண்ணுகை
இத்தால் ஸ்வ ஸ்வரூபத்தை மறைத்த படி சொல்லிற்று
ஆக -தன்னையும் மறைத்து
அவனையும் மறைத்தது இ றே –
இனி தேகமே இ றே உள்ளது –
இத்தால் தன்னரசு நாடே விட்டது -என்றபடி –
ஸ்வ விஷயா யாஸ்ச போக்ய புத்தேர் ஜநநீம்
தன்னரசு நாடாய்த்தே
இனி கள்ளர் பள்ளிகள் சாம்ராஜ்யம் பண்ணும் இத்தனை இ றே
ஸ்வ கார்ய பூதமான சப்தாதி களிலே போக்ய  புத்தியைப் பிறப்பிக்குமதாய்-

தேஹேந்த்ரிய த்வேன போக்யத்வேன ஸூஷ்ம ரூபேண சா வஸ்திதாம்-
போகாயதநமான தேக ரூபத்தாலும்
போக உபகரணமான இந்திரிய ரூபத்தாலும்
போக்யமான சப்தாதி ரூபத்தாலும்
இத்தனைக்கும் கிழங்கான சூஷ்ம பிரகிருதி ரூபத்தாலும்
அவஸ்திதையாய்-நாலு வகைப் பட்ட பரிமாணத்தை வுடைத்தாய்

தைவீம் –
தேவருக்கு க்ரீடா பரிகரமாய்

குண மயீம்-
குண த்ரய ப்ரசுரையுமாய் –
அதாவது -ஸ்வரூபம் தான் குண த்ரய ஆத்மகமுமாய் இருக்காய் –
அதில் சேதனர் பரிகிரஹித்த சரீரங்கள் தம பிரசுரமாயும் ரஜ பிரசுரமாயும் சத்வ பிரசுரமாயும் இருக்கும் –

மாயம்
விசித்திர கார்யகரத்வத்தாலே மாயா சப்த வாச்யையாய்
விசித்திர பரிணாமிநி யாகையாலே
ஆச்சரயத்தை உடைத்தாய் –
ஆச்சர்யம் யெத்தாலே என்னில்
பஞ்ச பூதங்களும் ஏக த்ரவ்ய பரிமாணங்களாய் இருக்க
அந்யோந்யம் பின்ன ரூபமாயும்
போகய போக உபகரண போக ஸ்தானங்களாயும்
சித்ர படம் போலே ஆச்சர்ய கரமாய் இருக்கை

மாம் தாரய-
இப்படிப்பட்ட ப்ரக்ருதியிலே அகப்பட்ட என்னைக் கடப்பித்து அருள வேணும் -என்கிறார் –
நாம் எடுத்து விடுகைக்கு அடியாக நீர் செய்து வைத்தது ஏதேனும் உண்டோ –
என் கொண்டு என்னை எடுத்து விடச் சொல்லுகிறது -என்று பெரிய பெருமாள் திரு உள்ளமாக
என் பக்கல் கைம்முதல் உண்டாய்ச் சொல்லுகிறேனோ
அநாதி காலம் துஷ் கர்மங்களைப் பண்ணிப் போந்தேனே யாகிலும்
தேகாத்ம அபிமானியாய் போந்தேனே யாகிலும்-
சப்தாதி விஷய பிரவணனாய்ப் போந்தேனே யாகிலும்
ஸ்வரூபத்தை நிரூபித்த வாறே உனக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கும் என்னும் இவ் வளவாலே சொல்லுகிறேன் -என்கிறார் –

தாஸ பூதம்-என்று
அது சர்வ சாதாரணம் அன்றோ –
ஆனபின்பு நாம் கார்யம் செய்கைக்கு உம்முடைய பக்கல் ஏதேனும் ஒரு வ்யாவ்ருத்தி வேணுமே -என்ன

சரணாக தோஸ்மி தவாஸ்மி தாஸ இதி வக்தாரம் –
சரணாக தோஸ்மி-என்றும்
தவாஸ்மி-என்றும்
தாஸ-என்றும்
சொன்னேன்
தேவரே உபாயம் என்றும்
உபேயம் என்றும்
நான் தேவருக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும் -சொன்னேன்

வக்தாரம் மாம்
இப்படி உக்தி ப்ரதனாய் இருந்துள்ள என்னை

தாரய-
இவ்வுக்தி மாதரத்தையே பற்றாசாகக் கொண்டு
கடப்பித்து அருள வேணும் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -6-7-8-9- -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 22, 2014

-சூரணை -6-அவதாரிகை –
சரணம் புகும் போது தத் அனுகுணமான பிராப்ய ருசியும் பிராபகத்தில் கனக்க அத்யாவசாயமும் உண்டாக வேண்டுகையாலே
அதினுடைய சித்த்யர்த்தமாக முதல் சூரணை யிலே பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கு ‘
இரண்டாம் சூரணை யிலே பிராட்டி ப்ரசாதத்தாலே பெற்றார்
அநந்தரம் ஆஸ்ரயணீயனானவன் ஆர் என்னும் அபேஷையிலே
நாராயணனே ஆஸ்ரயணீயனாக வேண்டுகையாலே
நார சப்த வாச்யங்களுக்கும்
அயநமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை அகில ஹேய -என்கிற சூரணையிலே சொல்லி
பின்பு நார சப்த வாச்யங்களை நிகில ஜகத் உதய விபவ லய லீல -என்னும் அளவாக
அவனுடைய உபய விபூதி நாதத்வம் சொல்லி
அநந்தரம் அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யவசித்து
இப்படி மேன்மையை உடைத்தான வஸ்துவை நம்மால் கிட்டப் போமோ -என்னும்
அபேஷையிலே
இருந்ததே குடியாக எல்லாருக்கும் கிட்டும் படியான சீலாதிகளை முன்னிட்டு
பிராட்டி புருஷகாரமாக சரணம் புக்கு நின்றார் இவ்வளவால்
அநந்தரம்
சரணம் புக்கோம் நான் அன்றோ -என்று தம்மை அனுசரித்து
பூர்வர்கள் உடைய பிரக்ரியையை முன்னிட்டு
சரணம் புகுகிறார்
அநந்தரம் சரணம் புகும் போது
விட வேண்டுவன முன்னாக விட்டு
வகுத்த விஷயத்தைப் பற்ற வேண்டி இருப்பதோர் ஆகாரம் உண்டாய் இருக்கையாலே
அது கீழ் இரண்டு இடத்திலும் செய்யாமையாலே
அத்தால் ஏதேனும் குறை யுன்டாகிறதோ என்று – பார்த்து
புராண புருஷர்கள் உடைய சரணாகதி பிரக்ரியையான
இதிஹாச புராண வசனங்களை முன்னிட்டு சரணம் புகுகிறார்
ஆனால் கீழ் செய்யாத வற்றுக்கு குறை உண்டாகிறதோ -என்னில்
குறை வில்லாமையே யன்று
இத்தால் ஏற்றம் உண்டாகிறது -எங்கனே என்னில்
த்வயத்தில் தியாக  பூர்வகமாக ஸ்வீகரிக்க வேண்டிற்றாகில்
சர்வாதிகாரமாக மாட்டாது –
ஆகையால் ஏற்றம் உண்டாகிறது

பூர்வ புருஷர்கள் உடைய ஹ்ருதயம் வகுத்த விஷயத்தில் ஸ்வரூப அனுரூபமாக சரணாகதியை
பண்ணுமது ஒழிய இவன் விட வேண்டுவது உண்டோ பற்ற வேண்டுவது உண்டோ என்று ஆயத்து இருப்பது
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு சம்சார பய பீதனாய் கொண்டு திருவடிகளில் சரணம் புகுவதுவே அமையும்
இவர் பிராப்ய ருசி செய்விக்க மாட்டிற்று இல்லாமையாலே ருசி ப்ரேரிக்கச் செய்வர்
ஆகையால் இவர் செய்யாது எல்லாம் குறையாகக் கடவது
இவர் தாம் இதுக்கு அவ்வருகு சரணம் புகக் காணாமையாலே மீண்டார் அத்தனை அல்லது
அமையும் என்று மீண்டார் அல்லர் -ஆகையால் சரணம் புகுகிறார்

பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத்நாதி தான தான்யானி ஷேத்ராணி ஸ் க்ருஹாணி ச
சர்வ தர்மாம்ச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான் –
லோக விக்ராந்த சரனௌ தேவ்ரஜம் விபோ

பூர்வாத்தத்தாலே சேதனரையும்
உத்தரார்த்தத்தாலே அசேதனங்களையும் சொல்லுகிறது
இவைதான் உபாயாந்தர சஹகாரியுமாய் ஸ்வயம் பிரயோஜனம் ஆகையாலே உபேயமுமாய்
இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும்
சர்வ தர்மாம்ச்ச –
என்று உபாயாந்தரமான கர்ம யோகாதிகளைச் சொல்லுகிறது
சர்வ காமாம்ச்ச சாஷரான் -என்று உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களைச் சொல்லுகிறது –
சந்த்யஜ்ய -என்றது சவாசனமாக விட்டு -என்றபடி
சர்வ தர்மாம்சச சர்வ காமாம்ச்ச -என்று இரண்டையும் கூட எடுத்து விடச் சொல்லுகையாலே
உபேயாந்தரங்கள் ஸ்வரூப நாசகமோபாதி உபாயாந்தரங்களும் ஸ்வரூப நாசகம் என்று கருத்து
இவற்றை ஸ்வரூப நாசகம் என்னலாமோ என்னில்
அவற்றில் ஸ்வயம் பிரயோஜனமாக இழிகையே ஸ்வரூபம்
இத்தை ஒழிந்தது எல்லாம் ஸ்வரூப நாச பர்யாயம்
இவை தான் ஸ்வரூப உஜ்ஜீவனம் ஆகிறது இல்லையோ வென்னில்
இவன் இவை தன்னை சாதனம் ஆக்கினால் போலே இதுக்கு புறம்பே ஒன்றை
பிரயோஜனம் ஆக்காதே நம்மையே பிரயோஜனமாகப் பெற்றோமே -என்னும் ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் ஆகிறது
பிரயோஜனாந்தரத்துக்கு மடி ஏற்ப்பாரையும்
உதாரா -கீதை 7-18–யென்னுமவன் ஸ்வபாவத்தாலே உஜ்ஜீவனம் ஆகிறது இத்தனை
மேல் பற்றப் படும் விஷயம் சொல்லுகிறது –லோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ரஜம் விபோ –
சீலாதி குண யுக்தனுமாய் -வகுத்த ஸ்வாமியுமாய்-ஜ்ஞான சக்தியாதி குண பூர்ணனுமான
உன் திருவடிகளையே உபாயமாகப் பற்றுகிறேன் -என்கிறது –

பிதரம் மாதரம்
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று ஈச்வரனோபாதி
மாதா பித்ரு அனுவர்த்தனத்தையும் உபாசன அங்கமாக
சாஸ்திரம் விதிக்கையாலே -உபாயாந்தர சஹாகாரிகளுமாய்
உள்ளது அனையும் அனுவர்த்தித்து விடுகை அன்றிக்கே இவர்கள் உடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே
ஸ்வயம் பிரயோஜனமுமாய் இருப்பார்கள்
தாரான் –
ஸ்திரீயும் சஹ தர்ம சாரிணி யாகையாலே உபாயாந்தர சஹ காரிணியுமாய்
அபிமத விஷயம் ஆகையாலே உபேயாந்தர்ப்பூதையுமாய் இருக்கும் –
புத்ரான் –
புத்திர ஹீனனான போது புத் என்கிற நரக தர்சனம் பண்ண வேண்டுகையாலே
புத்திர உத்பாதனம் புன்நாம் நோ நரகாத் த்ராயத இதி புத்திர -என்கிறபடியே
அந்த நரக தர்சனத்துக்கு அடியான பாப விமோசன ஹேதுவாகிற முகத்தாலே உபாயாந்தர சஹகாரியுமாய்
அவ்வளவு அன்றிக்கே தத் வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்
பந்தூன்
அவர்கள் ஆகிறார் -இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழி நடத்துமவர்கள் ஆகையாலே
உபாயாந்தர சஹகாரிகளுமாய்
இன்ன பெரும் குடிப் பாட்டிலே பிறந்தான் என்கிற செருக்காலே உபேய பூதருமாய் இருப்பார்கள்

சகீன்
தோழனும் இவனுக்கு ஹிதைஷியாய் ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கை யாலே உபாயாந்தர சஹகாரியுமாய்
அபிமதம்ன் ஆகையாலே உபேய பூதனுமாய் இருக்கும்
குரூன்
அவர்கள் ஆகிறார் -பகவத் ப்ராப்தி யாகிற உபேயத்தைக் குறித்து உபாயாந்தரங்களை உபதேசித்தும்
உபேயாந்தரங்களை குறித்து உபாயாந்தரங்களை உபதேசித்தும் போருகையாலே
உபாயாந்தர சஹகாரிகளுமாய் -ஹிதபரர் ஆகையாலே உபேய பூதருமாய் இருப்பர்
ரத்னாநீ-இத்யாதி
ரத்னம் தொடக்க மானவையும் உபாயாந்தரங்களுக்கு இதி கர்த்தவ்யதயா சஹகாரிகள் ஆகையாலே
உபாயாந்தர சஹகாரிகளுமாய்-அவற்றை அழிய மாறியும் விநியோகிக்க லாம் ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்
க்ருஹாணி ச
கருஹங்களும்கீழ் சொன்ன வற்றுக்கு எல்லாம் ஆவாச ஸ்தானம் ஆகிற ரஷகத்வம் முகத்தாலே உபாயாந்தர சஹகாரமுமாய்
மாட மாளிகையாக எடுக்கும்படியான அபிமதத்வத்தாலே உபேயமுமாய் இருக்கும்

சர்வ தர்மாம்ச்ச
தர்ம சப்தத்தாலே உபாய ரூபமான கர்ம யோகாதிகளைச் சொல்லுகிறது
சர்வ சப்தத்தாலே அதிகாரி சம்பத்தி தர்மங்களைச் சொல்லுகிறது
சர்வ காமாம்ச்ச
என்று புத்திர பசு அந்நாதி தொடக்கமாக ஸ்வர்க்க ஐஸ்வர்யம் நடுவாக
பிரம்மா ஐஸ்வர்யம் பர்யந்தமான வற்றை எல்லாம் சொல்லுகிறது
சாஷரான் -என்றது கைவல்யத்தை
சந்த்யஜ்ய -லஜ்ஜா புரச்சரமாக விட்டு
லோக விக்ராந்த சரனௌ -தொடங்கி பற்றுகிற விஷயம் வரையாதே வைத்த திருவடிகள் ஆகையாலே சௌசீல்யம் சொல்லுகிறது
உறங்குகிற பிரஜையை தாய் முதுகிலே அணைத்து கொண்டு கிடக்குமா போலே
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே
விமுகனார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே வாத்சல்யம் சொல்லுகிறது
இத்தனையும் அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே சௌலப்யம் சொல்லிற்று
தே
என்று வகுத்த சேஷி -என்று –ஸ்வாமித்வம் சொல்லுகிறது
விபோ
என்கையாலே பிரபுத்வம் சொல்லுகிறது -அதாகிறது ஜ்ஞான சக்த்யாதி குண பூர்த்தி
இத்தால் அஹம் -சப்த வாச்யமும் இதிலே அனுசந்தேயம்
ஆக இத்தனையும் நாராயண சப்தார்த்தம்
தே -என்கிற இடத்தில் ஸ்வரூப அனுபந்தியான லஷ்மி சம்பந்தமும் அனுசந்தேயம்
இத்தால் புருஷகாரபாவம் சொல்லுகிறது
சரனௌ -என்கையாலே விக்ரஹ யோகம் சொல்லுகிறது
சரணம் -என்கையாலே உபாய பாவம் சொல்லுகிறது
அவரசம்அத்ய வசித்தேன் -என்றபடி
ஆக இஸ் ஸ்லோகங்களால் விடுமவற்றை விட்டுப்
பற்றுமவற்றைப் பற்றி நின்றது

————————————————————————————

சூரணை -7-அவதாரிகை –
ஆனால் கீழ் விட்டவை எல்லாம் இழவே யாகிறதோ-என்னில்
அங்கனே இருப்பதொரு சாபேஷை யுண்டோ சர்வ பிரகார
பரிபூர்ண விஷயத்தைப் பற்றினவனுக்கு
ஆகையாலே கீழ் விட்டவை எல்லாம் ஈச்வரனே என்கிறார் –

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்ச குருஸ் த்வமேவ
த்வமேவ வித்யா தரவினம் த்வமேவ
த்வமேவ சர்வம் மம தேவ தேவ

த்வமேவ மாதா ச –
பிறந்த பின்பு ஹித பரஞான பிதாவைப் போல் அன்றியே கர்ப்ப வாசமே தொடங்கி ரஷித்துப் போருமவல் இ றே மாதா –
இத்தால் இவர் நினைக்கிறது என் என்னில் மேல் ஸ்ருஷ்டிக்கைக்கு உறுப்பாக முதல் அழியாதபடி
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -பெரிய திருமொழி -11-6-6- ரஷித்துப் போந்தவன் -என்கிறார் –
பிதா த்வமேவ
மாதா-வுக்கு முன்னே பிறக்க கிருஷி பண்ணுவான் பிதாவிறே
இத்தால் -ஜிதந்தே புண்டரீகாஷ நமஸ்தே விஸ்வ பாவன
நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மகாபுருஷ பூர்வஜா –ஜிதந்தே-1-என்றத்தை நினைக்கிறது
பிறப்பித்த தந்தை மற்றை யாராவாரும் நீ-பெரிய திருவந்தாதி -5-
த்வமேவ பந்துச்ச –
பந்துவாய் இருப்பார் இவன் வழி கெட வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துமவர் இ றே
அப்படியே நான் வழி கெட வர்த்தியாதபடி அந்தராத்மதயா இருந்து நியமித்து நல் வழி யாக்கும் பந்துவும் நீயே
குருஸ் த்வமேவ –
கு சப்தஸ் த்வந்தகார ஸ்யாத் ருசப்தச் தந் நிரோதக
அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே -இருள் தரும் மா ஞாலத்தைப் போக்கித் -திருவாய் மொழி -10-6-1-
தெளி விசும்பிக் கொடுக்கையாலே-திருவாய் மொழி -9-7-5-
எனக்கு அஜ்ஞாத ஜஞாபனம் பண்ணும் ஆசார்யனும் நீயே –
அறியாதன அறிவித்த அத்தா -திருவாய் மொழி -2-3-2–என்னக் கடவது இ றே
ஆசார்யரில் வைத்துக் கொண்டு பிரதம ஆசார்யனானவான் ஈஸ்வரன் இ றே
லஷ்மீ நாத சமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சர்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்னக் கடவது இ றே
இசைவித்து என்னை -திருவாய் மொழி -5-8-9- என்கிறபடியே
முதல் அடியிலே ருசி ஜனகன் ஆகையாலே பிரதம ஆச்சார்யன் -என்னக் குறை இல்லையே
த்வமேவ வித்யா –
உபதேசித்த ஜ்ஞானமும் நீயே –
ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே -திருவாய் மொழி -1-9-8-என்கிறபடியே
ஜ்ஞானத்தின் உடைய சத்தாதிகள் அவன் ஆதீனம் ஆகையாலும்
ஜ்ஞான பிரதிபாத்யன் அவன் ஆகையாலும்
ஜ்ஞானமும் நீயே -என்கிறது
த்ரவிணம் த்வமேவ –
த்ரவிணம் ஆகிறது த்ரவ்யம் -அதாவது -போகத்துக்கு உபகரணமாய் இருக்கை
இத்தால் போக உபகரணமான பர பக்தி யாதிகளும் நீயே -என்கிறார் –
அன்றிக்கே –
தனம் மதியம் -என்கிறபடியே பிராப்ய ப்ராபகங்கள் இரண்டும்
நீயே என்கிறார் -ஆகவுமாம்
த்வமேவ சர்வம் –
சொல்லிச் சொல்லாதவை எல்லாம் நீயே
மம தேவ தேவ –
சர்வத்தையும் விட்டு உன்னையே பற்றின எனக்கு
விட்டவையும் எல்லாம்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீயே -என்கிறார் –

———————————————————————————
சூரணை 8- அவதாரிகை –
இது தான் உமக்கு ஒருவருக்குமேயோ – என்னில்
என் அளவே அன்று -சகல லோகங்களிலும் வர்த்திக்கிற சகல சேதனருக்கும் சகல வித பந்துவும் சர்வாதிகனான நீயே –என்கிறார்

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஸ் ச குருர் கரீயான்
ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ
லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய-
சர்வ லோகங்களிலும் உண்டான ஜங்கம ஸ்தாவராத் மகமான
சகல பதார்த்தங்களுக்கும் உத்பாதகன் ஆனவனே-

த்வமஸ்ய பூஜ்யஸ் –
ஆகையாலே சர்வத்துக்கும் பூஜ்யன் நீ அல்லையோ

ச குருர் கரீயான்-
ஸ்ரேஷ்டனான ஆசார்யனும் நீயே
கீழ் சொன்ன பூஜ்யத்தை பித்ருத்வத் அளவிலே நிற்குமது
இத்தால் –
உத்பாதக பிரம்மா பித்ரோர் கரீயான் ப்ரஹ்மத பிதா -கூரத் ஆழ்வான்-என்று
பூஜ்யதையின் எல்லை சொல்லுகிறது

ந த்வத் சமோஸ்த்யப் யதிக குதோந்யோ
பித்ரு மாத்ரு ஸூத பிராத்ரு தார மித்ராத யோபி வா
ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –ஆகையாலே
த்வத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும் உனக்கு சத்ருசர் இல்லை என்றால்
அதிகர் இல்லை என்னும் இடம்சொல்ல வேணுமோ –
ஒத்தார் மிக்கார் இலையாய -திருவாய் மொழி -2-3-2-இ றே

லோக த்ரயேப்ய ப்ரதிமப்ரபாவ –
ஆகையாலே த்ரிவித சேதனரிலும் காட்டில் ஒப்பில்லாத பிரபாவத்தை உடையவனே –

————————————————————————————-
சூரணை -9- அவதாரிகை –
அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது –
ஆருடைய ஹ்ருதயத்தாலே என்னில் –ஸ்வ ஹ்ருதயத்தாலே –
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும்
ரிபூணாமபி வத்சலா -யதிவா ராவண ஸ்வயம் -என்கிற அவன் படி பார்த்தால்
இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையும் இல்லை
ஆகிலும் பதி வரதை யாய் இருப்பாள் நெடுநாள் வ்யபசரித்து பின்பு பார்த்தா வானவன் பழி யாளன் -என்கிற இதுவே ஆலம்பனமாக
வந்து என்னை ரஷிக்க வேணும் -என்று முன்னே நின்றாள்
வருகை தானே அபராதமாய் அதுக்கு மேலே என்னை ரஷிக்க வேணும் என்கையாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்த்ரீத்வ ஹானியுமாய் இருக்கும் இ றே –
அப்படியே இவனும் அனன்யார்ஹ சேஷ பூதனுமாய் இருந்து வைத்து
கனக்க அபராதத்தைப் பண்ணிப் போந்து இன்று வந்து சரணம் புகுருகையாவது
அபராதத்துக்கு மேல் யெல்லையுமாய்
சேஷத்வ ஹாநியுமாய் இருக்கக் கடவது இ றே
ஆனால் சரணம் புகுகிறது என் -ஷாமணம் பண்ணுகிறது என் -என்னில்
தமேவ சரணம் கத -என்று காகத்தோ பாதி புறம்பு புகல் இல்லாமையாலே
சரணம் புகவும் வேணும்
பூர்வ வ்ருத்தத்தை பாரா -பண்ணின இதுவும் அபராதம் என்று பய ஹேது வாகையாலே ஷாமணம் பண்ணவும் வேணும்

தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரசாதயே த்வாமஹ மீச மீட்யம்
பிதேவ புத்ரச்ய சகேவ சக்யு
பிரியா ப்ரியாயார்ஹசி தேவ சோடும்

தஸ்மாத் –
த்வமேவ -இத்யாதிப் படியே நீயே சகல வித பந்துவும் ஆகையாலே
செய்த குற்றம் பொறுக்கும் போது சகல வித பந்துவுமாக வேணும் போலே காணும்
அது தன்னிலும் பார்த்தா வென்றால் போலே ஒரு முறையேயாய்
ஒரு வழிப்பட்டு இருக்குமாகில் குற்றமே யாய்த்
தலைக் கட்டுகை  அன்றிக்கே -சகல வித பந்துவுமாய் இருக்கையாலே இவனுக்குச் செய்யல் ஆகாதது இல்லை
அவனுக்கு பொறுக்கல் ஆகாததும் இல்லை என்கை –

ப்ரணம்ய –
மானசமான தண்டன் –

ப்ரணிதாய காயம் –
காயிகமான தண்டன்
இரண்டையும் சொல்லுகையாலே வாசிகம் அர்த்தாத் சித்தம்
ஆக த்ரிவித கரணங்களாலும் சரணம் புக்க படி சொல்லிற்று
எதுக்காக வென்னில்

ப்ரசாதயே –
பிரசாதிப்பிக்கைக்காக
ஆரை என்னில்

ஈச மீட்யம் த்வாம் –
சேஷியுமாய் ஸ்துத்யனுமாய் இருந்துள்ள உன்னை

ஆர் என்னில்
அஹம் –
அனன்யார்ஹ சேஷபூதனுமாய் இருந்து வைத்து
அபராதத்தைப் பண்ணிப் போந்து
இன்று வந்து சரணம் புக்க -நான்
ஈசன் -என்கையாலே உடையவன் -என்றபடி –
ஈட்யன் -என்றது -ஸ்துத்யன் -என்றபடி
நினைத்தபடி செய்யப் புக்கால் நிவாரகர் இல்லாமைக்காக உடையவன் என்கிறது
ஸ்துதிக்க வேண்டும் விஷயத்திலே த்வேஷித்துப் போந்தேன்-என்று
தம்முடைய இழவு தோன்ற ஈட்யன் -என்கிறார் –

பொறுக்கைக்கு ஹேது சொல்லுகிறது மேல் –
பிதேவ புத்ரச்ய –
புத்திரன் பண்ணின குற்றத்தைப் பிதா பொறுக்குமா போலவும்
சகேவ சக்யு –
தோழன் செய்த குற்றத்தை தோழன் பொறுக்குமா போலவும்
பிரியா ப்ரியாயா-
ப்ரியையினுடைய குற்றத்தை ப்ரியனானவன் பொறுக்குமா போலேயும்
சந்திரார்ஷ
சோடும்
பொறுக்கைக்கு சர்வ வித பந்துவுமாய் இருக்கையாலே
தேவ அர்ஹசி
தேவரும் அப்படிக்கு அர்ஹர்

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -2- 3-4-5 -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 21, 2014

இரண்டாவது சூரணை அவதாரிகை –

கீழ் பிராட்டி யுடைய சரண்யதையும்
அதுக்கு அடியான ஊற்றுவாயையும்
தம்முடைய அநந்ய கதித்வத்தையும் -சொல்லி
அவள் திருவடிகளில் சரணம் புக்கு நின்றார்
அநந்தரம் -உமக்கு அபேஷிதம் என் -என்று பிராட்டி திரு உள்ளமாக
கைங்கர்ய ருசியும் பிரபத்தி நிஷ்டையும் எனக்கு உண்டாக வேணும் -என்கிறார் –
ஈஸ்வரன் திருவடிகளிலே கைங்கர்ய சித்திக்கு இ றே சரணம் புகுவது –
அவ்வளவு அன்றிக்கே ருசி விச்வாசங்கள் என்றுதைத் தனியே அபேஷித்துப் பெற வேண்டுவன சில அதிகாரி விசேஷணங்கள் உண்டு இ றே –
இப்போது அபேஷித்துப் பெற வேண்டும்படி இதுக்கு முன்பு இவர்க்கு இன்றிக்கே இருந்ததோ -என்னில்
உண்டானாலும் தம்தாமுக்கு என்றும் இல்லையாக விறே தம்தாமை நினைத்து இருப்பது

——————————————————————

பாரமார்த்திக பகவச் சரணாரவிந்த யுகள
ஐகாந்திக அத்யந்திக
பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி க்ருத
பரிபூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன
அநவதிக அதிசய பிரிய பகவத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதிகாரித
அசேஷா வச்தோசித
அசேஷ சேஷ தைகரதிரூப
நித்ய கைங்கர்ய
ப்ராப்த்ய பேஷயா
பாரமார்த்தி கீ பகவச் சரணார விந்த
சரணாகதி யதாவஸ்திதா அவிரதா அஸ்து மே

—————————————————————–

பாரமார்த்திக –
அர்த்தம்-என்று பிரயோஜனத்துக்கும்  மெய்க்கும்பெயர் –
இது பர பக்திக்கு விசேஷணம் ஆனபோது அதனுடைய அக்ருத்ரிமத்வம் சொல்லுகிறது
திருவடிகளுக்கு விசேஷணம் ஆனபோது அதனுடைய பரம பிரயோஜனத்வம் சொல்லுகிறது
இப்பிரிவுக்கு பிரயோஜனம் என் என்னில்
பக்தி விஷயமான போது திருவடிகள் பரம பிரயோஜனமாகக் கடவது
திருவடிகள் விஷயமான போது பக்தி அக்ருத்ரிமையாகக் கடவது
பகவத் சரணார விந்த –
கீழ்ச் சொன்ன பகவச் சப்தம் சர்வ உத்கர்ஷ வாசி –
இது குணயோகத்தால் வந்த ரச்யதையைச் சொல்லுகிறது

குணங்களும் போக்யமாக இருக்கையாலே பரம பக்தி ஜனகம் –
சரணாரவிந்தம் –
விக்ரஹவத்தையால் வந்த போக்யதை சொல்லுகிறது –

யுகள –
சேர்த்தியால் வந்த போக்யதை

ஐகாந்திக –
ஏகமே அனந்தமாய் இருக்காய்
அதாவது -வேறு ஒரு விஷயத்தை யுடைத்து அன்றிக்கே இருக்கை-

ஆத்யந்திக –
அனந்தத்தை அதிகிரமித்து இருக்கை -அதாவது நித்தியமாய் இருக்கை –

பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி –
பரபக்தி யாவது -சம்ச்லேஷ விஸ்லேஷ சுக துக்காராம் படியான பிரேமா விஷயம்
பர ஜ்ஞானம் ஆவது –இதனுடைய விபாக தசையான சாஷாத் காரம்
பரமா பக்தி யாவது -ஷண காலமும் விசலேஷத்தைப் பொறுக்க மாட்டாத தசை
உபய பரிகர்மித ஸ்வாந்தச்ய -என்கிறபடியே
ஜ்ஞான கர்மங்களாலே சம்ஸ்க்ருத அந்த கரணனாய் -பக்தி பிறந்து
அதனுடைய விபாக தசை பரம பக்தியாக கடவது உபாசகனுக்கு
இவர்க்கு அந்த ஸ்தானத்திலே பகவத் அனுக்ரஹம் நிற்க மேல் உள்ள தசைகளை அபேஷிககிறார்-

க்ருத
இவற்றால் பண்ணப் பட்ட

பரி பூர்ண –
பரிபூரணம் ஆகையாவது ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும் ஒரு காலே அனுபவ விஷயமாகை-

அநவரத-
அவிச்சின்னமாய் இருக்கை
அதாவது -இடைவிடாதே செல்லுகை-

நித்ய
யாவதாத்மா பாவியாய் இருக்கை

விசததம –
விசதம் ஆவது பர பக்தி தசையில் அனுபவம்
விசத தரமாவது -பர ஜ்ஞான தசையில் அனுபவம்
விசத தமம் ஆவது -பரம பக்தி தசையில் அனுபவம்

அநந்ய பிரயோஜன –
அனுபவ ஜனித ப்ரீதியும்
ப்ரீதி காரித கைங்கர்யமும் -வேண்டாம்
இது தானே அமையும் -என்னும் படி இருக்கை –

அநவதிக அதிசய ப்ரிய –
அநவதிகமான அதிசயத்தை உடைத்தான ப்ரீதி

பகவத் அனுபவ
சரம சரீர அவசான சமனந்தரமாக அர்ச்சிராதி கத்தியாலே போய்ப் பரம பதத்தில் அனுபவிக்கும் அனுபவம்

ஜனித அநவதிக அதிசய ப்ரீதிகாரித
அத்தால் பிறந்த ப்ரீதியாலே பண்ணுவிக்கப் பட்ட

ஸ்வாரத்தணி ஜந்தோ வா
அசேஷ அவஸ்த உசித
சர்வ அவச்தைகளிலும் அனுகூலமாய் இருக்கை

அசேஷ சேஷைதை கரதிரூப –
நிவாஸ ஸ்ய்யா ஆசன பாதுக அம்ஸூகோப தான வர்ஷா தப வாரணாதிப
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர் யதோசிதம் சேஷ இதீரிதே ஜனை-ஸ்தோத்ர ரத்னம் -40 -இத்யாதிப் படியே
சர்வவித சேஷதையிலும் உண்டான அபிநிவேசத்தையே வடிவாக உடைத்தாய் இருக்கை

நித்ய
அபுநரா வ்ருத்தி லஷணமாய் இருக்கை

கைங்கர்ய ப்ராப்த்ய பேஷையா
கைங்கர்ய ப்ராப்தியில் உண்டான அபேஷையாலே

பாரமார்த்திகீ
ஆர்த்த ரூபமாய் இருக்கை
பகவத்
ஜ்ஞான சக்த்யாதிகளால் பூரணமான விஷயம் ஆகையாலே
சஹாயாந்தர நிரபேஷமான உபாய பௌஷ்கல்யம் சொல்லுகிறது

சரணாரவிந்த
விக்ரஹத்தின் உடைய பரம உபாயத்வம் சொல்லுகிறது

சரணாகதி
ஸ லஷணமாய் இருக்கை

யதாவஸ்திதா
உபாயாந்தரங்கள் உடைய அனுபாயத்வ புத்தி பூர்வகமாக அத்தைப் பற்றுகை போலே காணும்
அதாகிறது -பற்றி விடுகையும் அன்றிக்கே
பற்றிப் பற்றுகையும் அன்றிக்கே
ஸ்நாத்வா புஞ்ஜீத-என்னுமா போலே விட்டுப் பற்றுகை

யதாவஸ்திதா-
என்றது -இருந்தபடியே -என்றபடி
இது இப்படிப் போலே காணும் இருப்பது
ரஹச்யம் ஆகையாலே நேராக வெளியிடாது ஒழிகிறார்-

அவிரதாஸ்து மே –
அநந்ய கதியாய் இருந்துள்ள எனக்கு
யாவத் ப்ராப்தி விச்சேதம் இன்றிக்கே ஒழிய வேணும்-

———————————————————————————

சூரணை -3

அஸ்து தே
பிராட்டி அருளிச் செய்கிறார் –
உமக்கு அப்படியே உண்டாயிடுக-

—————————————————————————————

சூரணை -4-
தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே
அப்படிப் பட்ட உபாயம் தன்னாலேயே
பரபக்தி தொடக்கமாகக்
கைங்கர்யம் ஈறாக
நடுவு உள்ள தசைகள் அடைய
உண்டாகக் கடவது-

————————————————————————————————

சூரணை -5-
அவதாரிகை –
மேல் ஆஸ்ரயணீய வஸ்து நிர்த்தேசம் பண்ணுகிறார் –
ஆஸ்ரயணீய னானவன் நாராயணன் இறே
அதில் நார சப்தார்த்தம் மேல் சொல்லுவதாகக் கோலி
அதுக்கு ஆஸ்ரயமாய் அயன சப்தார்த்தமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை முதலிலே அருளிச் செய்கிறார்-

அகில ஹேய பிரத்யநீக
கல்யாணை கதான
ஸ்வேதர சமஸ்து வஸ்து விலஷண
அநந்த ஜ்ஞான ஆனந்தைக ஸ்வரூப

அகில ஹேய பிரத்யநீக
நிர்க்குணம் -என்கிற வஸ்து இருக்கிற படி –
ஹேயங்கள் ஆவன –அசித் கதமான பரிணாமமும்
சேதன கதமான துக்க அஜ்ஞாநாதிகளும் –
நித்ய முக்தர் பக்கல் உண்டான பாரதந்த்ர்யமும் –
அகில சப்தத்தாலே உபய விபூதியில் உண்டான சேதன அசேதனங்களை சொல்லுகிறது –
பாரதந்த்ர்யம் ஹேயமோ என்னில் –
புருஷனுக்கு ஸ்தன உத்பேதமும்
ஸ்திரீக்கு ஸ்ம ஸ்ரு சம்யோகமும் போலே
பரதந்த்ரனுக்கு ஸ்வா தந்த்ர்யம் ஹேயம்
அப்படியே ஸ்வதந்த்ரனான ஈஸ்வரனுக்கு பாரதந்த்ர்யம் ஹேயமாகக் கடவது
ப்ரத்யநீகத்வம் ஆவது
பதார்த்தாந்தர சம்சர்க்க அபாவாதாரத்வம் –
ஆஸ்ரிதர் உடைய ஹேய நிரசனத்துக்கு அடியான ஹேய ப்ரத்யநீகத்வம் -என்றுமாம்
கல்யாணை கதான –
கல்யாணைக விஸ்தார
அகண்டைக ரசம் போலே இஸ் சப்தம்
ஸ்வேதர சம்ஸ்த வஸ்து விலஷண-
அத ஏவ சம்ஸ்த வஸ்து வஸ்து விலஷண–
அநந்த
த்ரிவித பரிச்சேத ரஹித
விபுத்வாத் தேச பரிச்சேத ராஹித்யம் –
நித்யத்வாத் –கால பரிச்சேத ராஹித்யம் –
ஸ்வ வ்யதிரிக்த சம்ஸ்த வஸ்துக்களுக்கும் தான் பிரகாரியாய் தனக்கு ப்ரகார்யந்தரம் இல்லாதபடி நிற்கையாலே
ஸ்த்ருச வஸ்தவ பாவத்தாலே வஸ்து பரிச்சேத ராஹித்யம்
துலையாலே-தராசுவாலே யாதல் –
பிரஸ்தாதிகளாலே -பரிமாணத்தை அளக்கும் படி முதலிய பாத்ரங்களால் -ஆதல்
வரும் பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் –

ஜ்ஞான ஆனநதைக் ஸ்வரூப
அநந்ய அதீன பிரகாசத்வ -ஆஹ்லாத கரத்தவ –
ஜ்ஞானமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ -ஜ்ஞான ஆனந்தைக ஸ்வரூப
அதாவது -ஸ்வயம் பிரகாசத்வ
சுக ரூபத்வங்களே ஸ்வரூபமாய் இருக்கை –
இப்படி திவ்ய ஆத்ம ஸ்வரூபம் சொல்லப் பட்டது

———————————————————————————–

அநந்தரம் நார சப்த வாச்யங்களில் ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசமாய்
பஞ்ச உபநிஷண் மயமான திவ்ய விக்ரஹத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்வ அபிமத அநுரூப அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய
நிரவத்ய நிரதிசய ஔ ஜ்ஜ்வல்ய
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்ய
லாவண்ய யௌவன ஆதி
அநந்த குணநிதி திவ்ய ரூப

ஸ்வ அபிமத
கீழ்ச் சொன்ன ஸ்வரூபத்துக்கு -குணங்களில் காட்டில் பிரகாசகமுமாய்
அந்தரங்கமுமாய் இருக்கையாலே
குணங்களுக்கு முன்னே விக்ரஹத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்வ அபிமத –
சம்ஸ்த கல்யாண குணாத் மகோ ச்சௌ-ஸ்வ சக்திலேஸ உத்த்ருத பூத சரக்க –
இச்சாக்ருஹீ தாபி மதோருதே ஹஸ் சம்சாதி தாஸ் சேஷ ஜகத்தி தோஸ் சௌ -என்கிறபடியே
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில் காட்டில் அபிமதமாய் இருக்கை
அநுரூப
ஸ்வரூப அனுபவத்துக்கு திரோதாயகமாய் இருக்கை அன்றிக்கே
ஸ்வரூப அனுபவத்துக்கு வர்த்தகமாய் இருக்கை –
ஏக ரூப –
ஷட்பாவ விகார ரஹீதமாய் இருக்கை –
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே
சதைக ரூப ரூபாய -விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே என்று இருக்கை —
அசிந்த்ய
இதர சஜாதீயதயா சிந்தயிதும் அசக்யமாய் இருக்கை –
திவ்ய
வருந்தியும் உபமானம் இன்றிக்கே இருக்கை –
அப்ராக்ருதமாய் இருக்கை -என்றுமாம் –
அத்புத –
ஷணம் தோறும் அபூர்வமாய் இருக்கை
அத ஏவ ஆச்சர்ய அவஹமாய் இருக்கை –
நித்ய நிரவத்ய
நித்ய நிர்தோஷமாய் இருக்கை –
அதாவது -என்றும் ஒக்க ஸ்வார்த்தமாய் இராது ஒழிகை –
பக்தாநாம் -என்று இருக்கும் இருப்பு –
நிரதிசய ஔஜ்ஜ்வல்யம்
சர்வ தேஜஸ்ஸூக்களையும் கீழ்ப் படுத்திக் கொண்டு இருக்கும் ஔஜ்ஜ்வல்யம்
இத்தால் ப்ரஹ்மாதி களுக்கும் அமைத்துக் காட்ட வேண்டும் படியாய் இருக்கை
இத்தால் விக்ரஹ வைலஷண்யம் சொல்லிற்று
அத விக்ரஹ குணா நாஹ
சௌந்தர்ய -அவயவ சோபை
சௌகந்தய -சர்வ கந்த -என்கிறபடியே சர்வத்தையும் பரிமளிதம் ஆக்கவற்றாய் இருக்கை
சௌகுமார்ய -நாய்ச்சிமாரும் உறைக்கப் பார்க்கப் பொறாதபடி
புஷ்பஹாச சுகுமாரமாய் இருக்கை –
லாவண்ய-சமுதாய சோபை
அதாவது லவணம் போலே எங்கும் ஒக்க வியாபித்து நின்று ரசத்தை தரவற்றாய் இருக்கை
யௌவன -யுவாச குமார -என்கிறபடியே
நித்ய யுவாவாய் இருக்கும் பருவம்
ஆதி
இவை தொடக்கமான
அநந்த குணநிதி
அசந்க்யாதமான குணங்களுக்கு கொள்கலமாய் இருக்கும்
திவ்ய ரூப
திவி ஸ்தித ரூப
அதாவது இவ் விபூதியில் அடங்காது இருக்கை –

————————————————————————————-

விக்ரஹ குணங்கள் விக்ரஹத்துக்கு பூஷணமாய் இருக்குமா போலே
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு பூஷணமான ஸ்வரூப குணங்களை சொல்லுகிறது –

ஸ்வா பாவிக -அநவதிக அதிசய ஜ்ஞான பலை ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேச சௌசீல்ய
வாத்சல்ய மார்த்தவ ஆர்ஜவ சௌஹார்த்த
சாம்ய காருண்யா மாதுர்ய காம்பீர்ய
ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய தைர்ய
சௌர்ய பராக்ரம சத்யகாம சத்ய
சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத்
அசந்க்யேய கல்யாண குணகனௌக மஹார்ணவ

ஸ்வா பாவிக
ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தமாய் இருக்கை
அநவதிக அதிசய
நிஸ் ஸீமமுமாய் ஆச்சர்ய கரமுமாய் இருக்கை
பிரதமத்தில் ஜ்ஞாநாதிகள் ஆறும் சர்வ விஷயங்கள்
அவற்றில்
ஜ்ஞான –
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ச்வத
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே -என்கிறபடியே
எல்லாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி அறியவற்றாய் இருக்கை –
பல –
சங்கல்ப மாத்ரத்தாலே சர்வ பதார்த்தங்களையும் தரிக்கும் தாரண சாமர்த்தியம்
ஐஸ்வர்ய
சம்ஸ்த பதார்த்த நியமன சாமர்த்தியம்
வீர்ய
சர்வத்தையும் தரித்து நியமித்துப் போரா நின்றால் புருவம்
வேராத அநாயாமை
எல்லா வற்றையும் உண்டாக்கா நின்றால் தான் அவிக்ருதனாய் இருக்கும் அவிகாரத்தை -யென்னவுமாம்
சக்தி
ப்ரவ்ருத்த உன்முகரான சேதனர்க்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திப்பிக்கும் ப்ரவர்த்தகத்வ சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் -யென்னவுமாம்
ஜகத் உபாதான சக்தி -யென்னவுமாம் –
தேஜஸ்
பராபிபவன  சாமர்த்தியம்-

ந தத்ர ஸூ ர்யோ பாதி ந சந்திர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோஸ்யம் அக்நி
தமேவ பாந்தம் அநுபாதி சர்வம்
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -இத்யாதி
இப்படி சர்வ உத்க்ருஷ்டன் ஆனவனுக்கு -இனி பன்னிரண்டு குணம் ஆஸ்ரித விஷயம்
1-சௌசீல்ய –
மஹதோ மந்தைஸ் சஹ நீரந்த்ரேண சம்ச்லேஷ ஸ்வ பாவத்வம் சீலம் -என்கிறபடியே
அந்த மஹத்வம் தம் திரு உள்ளத்திலும் இன்றிக்கே ஒழிகை சௌசீல்யம்
அப்ரவீத் த்ரிதஸ ஸ்ரேஷ்ட்டான் ராமோ தர்ம ப்ருதாம் வர
ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம்-யுத்தம் -120-11-15-என்னுமா போலே –
2-வாத்சல்ய –
தன் பிரேமத்தாலே ஆஸ்ரித கதமான குணமாகத் தோற்றுகை-
கோபாலத்வம் ஜூ குப்சிதம்
3-மார்த்தவ –
ஆஸ்ரித விச்லேஷம் பொறுக்க மாட்டாத திரு உள்ளத்தில் மென்மை
அநித்ரஸ் சத்தம் ராம ஸூ ப்தோச்பி ச நரோத்தம
சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் ப்ரதிபுத்யதே-சுந்தர -36-44
4-ஆர்ஜவ
ஆஸ்ரித சம்ச்லேஷத்தில் தன்னுடைய மநோ வாக் காயங்கள் ஏக ரூபமாய் இருக்கை
அதாவது -அவர்களுக்கு தன்னை நியமித்து கொடுக்கை –
5-சௌஹார்த்த
ஆஸ்ரிதர்க்கு சர்வ மங்களான் வேஷண பரனாகை
சோபனாசம் சீதி –ஸூ ஹ்ருத்
6-சாம்ய
ஜாதி குண வ்ருத்தாதிகளைப் பாராதே
அவர்களுக்கு ஆச்ரயனீயத்வத்தில் சமனாய் இருக்கை
குஹேன சஹிதோ ராமோ லஷ்மனேன ச சீதயா-என்றும்
சபர்யா பூஜித சமயக் ராமோ தசரதாத் மஜ-என்றும்
7-காருண்ய-
ஸ்வார்த்த நிரபேஷ பரத்துக்க அசஹிஷ்ணுத்வம்-என்றும்
ததாவிதம் த்விஜம் த்ருஷ்ட்வா நிஷாதேன நிபாதிதம்
ருஷேர் தர்மாத்மநஸ் தஸ்ய காருண்யம் சம்பத்யத -பால -2-13-
8-மாதுர்ய
ஹந்தும் ப்ரவ்ருத்தத் வேச்பி ரசாவஹத்வம்
ஏஹ்யேஹிபுல்லாம்புஜ பத்ர நேத்ரா
நமோச்சஸ்து தே தேவ வராஸ் பிரமேய
பிரசஹ்ய மாம் பாதய லோகநாத
ரதோத்தமாத் பூத சரண்ய சந்க்யே-என்றும்
அசூர்யமிவ சூர்யேன நிவாதமிவ வாயுநா
க்ருஷ்நேன சமுபேதேன ஜஹ்ருஷே பாரதம் புரம் – என்றும்
சர்வ ரச -என்றும் உள்ளவன்

8-காம்பீர்ய
ஆஸ்ரிதர்க்கு செய்ய நினைத்து இருக்குமவை ஒருவராலும் பரிச்சேதிக்க அரிதாய் இருக்கை –
அதாவது -தன் கொடையின் சீர்மையும் கொள்ளுகிறவன் சிறுமையும் பாராது இருக்கை –
ய ஆத்மதா பலதா -தன்னையும் கொடுத்து தன்னை அனுபவிக்க பலமும் கொடுப்பவன்
9-ஔ தார்ய
ஆஸ்ரிதர் உடைய அபேஷிதங்களை தானே இரந்து கொடுக்கை
அத மத்யம கஷ்யாயாம் சமாகச்சத் ஸூ ஹ்ருஜ்ஜனை
ஸ சர்வாநர்த்தி நொத்ருஷ்ட்வா சமேத்ய பிரதி நன்த்யச-16-27-என்றும்
உதாராஸ் சர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18-
10-சாதுர்ய
ஆஸ்ரித தோஷங்களை பிராட்டியும் அறியாதபடி மறைத்துக் கொண்டு இருக்கை –
ஆஸ்ரிதர் உடைய அதி சங்கையைப் போக்கி ரஷிக்கை -என்னவுமாம்-
உத்ஸ்மயித்வா மஹாபாஹூ ப்ரேஷ்ய சாஸ்தி மஹாபல
பாதாங்குஷ்டேன சிஷேப சம்பூர்ணம் தச யோஜனம்-பால -1-65-
11-ஸ்தைர்ய-
ப்ரத்பூஹசதைரபி ஆஸ்ரித ரஷண பிரதிஜ்ஞா பங்கம் ந கரோதி
மித்ரா பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேத்த கர்ஹிதம்
யுத்தம் -18-2-
12-தைர்ய
அதுக்கடியான நெஞ்சில் திண்ணிமை

அநந்தரம் இரண்டு குணம் ப்ரதிபஷ விஷயம்
1-சௌர்ய
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்ய வல்லனாய் இருக்கை
2-பராக்ரம
அளவற முடுகினாலும் வினை செய்ய வல்லனாய் இருக்கை –
அதவா
தை ர்யாதி தரயோ குணா ப்ரதிபஷ விஷயா
1-தைரிய
மூல பலே சந்நிஹிதேச்பி பூர்வ ஷனாத் ந விசேஷ
2-சௌர்ய
அவ்வளவு அன்றிக்கே அனுகூல இவ தத் பல பிரவேசனம்
3-பராக்ரம –
அபியாதா ப்ரஹர்த்தா ச் சேனாநய விசாரத –அயோத்யா 1-29என்றும்
சின்னம் பின்னம் சரீர் தக்தம் ப்ரபக்னம் சஸ்திர பீடிதம்
பலம் ராமேன தத்ருசூர் ந ராமம் சீக்ர காரிணம்-யுத்தம் -94-22
1-சத்யகாம –
கல்யாண குணங்களையும் விபூதிகளையும் சொல்லுகிறது
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான குண விபூதிகள் என்கை
2-சத்ய சங்கல்ப –
அமோகமான அபூர்வ போக்யங்களை சிருஷ்டிக்க ஷமன் ஆகை

ஆஸ்ரித சம்ரஷண விஷயோ மநோ ரத காம
சோச்ப்ரதி ஹதோ பவதீதி சத்யகாம
தத் ரஷனாய தேவ மனுஷ்யாத் யாவதார சன்கல்பொ மநோ ரத
சோச்ப்ரதி ஹதோ பவதீதி சத்ய சங்கல்ப –
இக் குணங்கள் இரண்டும் ஜகத் சிருஷ்டிக்கு உறுப்பு ஆகையாலே-மத்யஸ்த ஜகத் ரஷண அர்த்தமாகவுமாம்
1-க்ருதித்வ-
ஆஸ்ரிதர் அபேஷிதம் பெற்றால் அந்த லாபம் தன்னதாய் இருக்கை-
அபிஷிச்ய ச லங்காயாம் ராஷசேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ –
இவர்கள் கர்த்தவ்யங்கள் அடையத் தானே ஏறிட்டுக் கொண்டு இருக்கை -என்னவுமாம் –
ஆதி கர்மணி க்திந்தந்த
2-க்ருதஜ்ஞாதா-
ஒருகால் சரணம் என்னும் உக்தி மாத்ரத்தாலே பின்பு செய்யும் குற்றங்கள் பாராதே அத்தையே நினைத்து இருக்கை –
ஆஸ்ரிதர்க்கு எல்லாம் செய்தாலும் அவற்றை மறந்து அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்தையே நினைத்து இருக்கை -என்னவுமாம்-
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸிநாம்
ருணம் ப்ரவ்ருத்த மிவ மீ ஹ்ருத யானநாப சர்ப்பத்தி –
ஆஸ்ரித விஷயத்தில் தான் செய்த அபகாரத்தையே நினைத்து இருக்கை -என்னவுமாம் –
தம் து மே ப்ராதரம் த்ரஷ்டும் பரதம் த்வரதே மன
மாம் நிவர்த்தயிதும் யோசசௌ சித்ரகூடம் உபாகத
சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந கருத்தும் மா -யுத்தம் -124-19
ஆதி -சப்தத்தாலே அநுக்த குணங்களை நினைக்கிறது
அசந்க்யேய
இக்குணங்கள் எண்ணிறந்து இருக்கை –
அநவதிக அதிசய –
என்று நிஸ் ஸீ மத்வம்
இத்தால் நிஸ் சங்க்யே யத்வம்
கல்யாண
உள்ளது எல்லாம் நன்றாக இருக்கை
குணகனௌக
அவை தான் திரள் திரளாக இருக்கை
க்ரோதாதிகளும் ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இருக்கை –
மஹார்ணவ-
அஸ்மான் மநோ கோசரா கேசி தேவ உகதா
வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக்யா
வக்தும் சமேதைரபி சர்வலோகை
மகாத்மான சங்க சக்ராசி பானேர்
விஷ்ணோர் ஜிஷ்னோர் வஸூ தேவாத் மஜச்ய -என்றும்
சதுர முகாயுர் யதி கோடி வக்த்ரோ
பவேன் நர க்வாபி விசூத்த சேதா
ச தி குணா நாம யுதைக தேசம்
வதந்த வா தேவவர ப்ரசீத –

—————————————————————————

ஸ்வ உசித விவித விசித்திர
அநந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய
நிரதிசய ஸூகந்த
நிரதிசய ஸூகஸ்பர்ச
நிரதிசய ஔஜ்ஜ்வல்ய
கிரீட மகுட சூடாவதம்ச
மகர குண்டல க்ரைவேயக
ஹார கேயூர கடக ஸ்ரீ வத்ஸ
கௌச்துப முக்தா தாமோதர பந்தன
பீதாம்பர காஞ்சி குண நூபுராத்
அபரிமித திவ்ய பூஷண

விக்ரஹ குணமான சௌந்தர்யாதி களோபாதி பூத்தாப் போலே
சாத்தின கிரீட மகுடாதி திவ்ய ஆபரணங்களை அனுசந்தித்து அருளுகிறார் –
ஏவம் விதனானவனுக்கு சோப அவஹமான திவ்ய ஆபரணங்களைச் சொல்லுகிறது –
ஜ்ஞாநாதிகள் ஆத்மஸ்வரூபத்துக்கு அலங்கார மானவோபாதி
விக்ரஹத்துக்கு ஆபரணங்கள் அலங்காரம் ஆகையாலே அவற்றைச் சொல்லுகிறார் –
ஸ்வ உசித
அவயவங்கள் தான் ஒருபடி பூத்தாப் போலே தகுந்து இருக்கை –
விவித –
அவை தான் நாநாவாய் இருக்கை –
அதாவது க்ரீடாதி பேதத்தாலே பலவகைப் பட்டு இருக்கை –
விசித்திர –
அங்கு லீயகம் என்றால் இடைச்சரி கடைச்சரி -என்னுமா போலே ஒரோ வகைகளிலே நாநாவிதமாய் இருக்கை –
விவித
முத்தின்படி மாணிக்கப்படி என்கிற விவித பதத்தைச் சொல்லுகிறது
விசித்திர
க்ரீடாதி நூபுராந்தமான வைசித்ர்யத்தைச் சொல்லுகிறது -என்னவுமாம் –
அநந்த ஆச்சர்ய
எல்லை யிறந்த ஆச்சர்யத்தை உடைத்தாய் இருக்கை –
ஒரோ ஆபரணச் சேர்த்தியை அனுபவித்து முடிக்க ஒண்ணாது இருக்கை –
நிரவத்யங்களாய் இருக்கும் அவற்றுக்கும் காதா சித்கமான
அவத்யங்கள் உண்டாய் இருக்கும் –
அங்கன் இன்றிக்கே நித்ய நிரவத்யங்களாய் இருக்கை –
நித்ய –
உத்பத்தி விநாசர ஹிதமாய் இருக்கை –
நிரவத்ய
ஸ்ரக் வஸ்த்ராப ரனைர்யுக்தம் ஸ்வ அனுரூபைர நூபமை
சிந்மயை ஸ்வ ப்ரகாசைச்ச அந்யோந்ய ருசிரஞஜகை -என்கிறபடியே
திவ்ய ஆபரண ஆழ்வார்கள் சேதனர் ஆகையாலே தம் தாமுடைய
சோபை ஸ்வார்த்தம் அன்றிக்கே இருக்கை –
சேதனராய் இருப்பார்க்கு ஸ்வார்த்தம் என்று இருக்கை அவத்யம் இறே
நிரதிசய ஸூ கந்த –
சர்வ கந்த -என்கிற விஷயத்துக்கும் ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை –
அதாவது -திரு வாபரணம் சாத்தினால் திருமாலை சாத்துகை  பரிமளத்துக்கு உறுப்பு
அன்றிக்கே அலங்காரத்துக்கு உறுப்பாம் படி இருக்கை –
நிரதிசய ஸூக ஸ்பர்ச
அல்லாத ஆபரணங்கள் அழகுக்கு உறுப்பு ஆகையாலே
போகத்தில் வந்தால் கழற்ற வேண்டி வரும்
இவையோ என்னில் -பிராட்டிமாரோட்டை கலவியிலும் கழற்ற வேண்டாத படி
ஸ்ரக் சந்த நாதிகளோபாதி அனுகூலமாய் இருக்கும்

நிரதிசய ஔஜ்ஜ்வல்ய
விக்ரஹ காந்தியையும் அமுக்கும் ஔஜ்ஜ்வல்யத்தை உடைத்தாய் இருக்கை
கிரீட மகுட
கிரீடம் ஆகிறது -திரு வபிஷேகத்தின் சுற்று
மகுடம் ஆகிறது -மேலில் கவிப்பு
சூட -திருச் சுட்டி -திருச் சுட்டு –
அவதம்ச-திருச் செவி மலர்
மகர குண்டல –மகர ஆகாரமான திருத் தோடுகள்
க்ரைவேயக-திருக் கழுத்தில் ரேகா த்ரயங்களுக்கும் சாத்தும் ஆபரணமான முத்துத் திருக் கட்டு -திருவட்ட மணி முதலானவை –
ஹார-பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போலே -மூன்றாம் திருவந்தாதி -55-என்னுமா போலே
திரு மார்பில் மடித்துச் சாத்த வேண்டும்படியான ஹாரம்
கேயூர-திருத் தோள் வளை
கடக –முன்கையில் சாத்தும் திரு வளைகள்
ஸ்ரீ வத்ஸ -திரு மறு
கீழ் உள்ள ஆபரணங்கள் போலே ப்ருதக் ஸ்திதி யோக்கியம் அன்றிக்கே
சர்வேஸ்வரத்வ சிஹ்னமான ஆபரணம்
கௌஸ்துபம்-ஸ்ரீ கௌஸ்துபம் -ஒரு காலமும் பிரியாதபடி அபிமதமாய்
சர்வேஸ்வரத்வ சிஹ்னமாய் இருக்கும் ரத்னம்
முக்தாதாம-
ஏகாவளீ-த்ரி சரம் பஞ்ச சரம் தொடக்கமான திரு முத்து வடங்கள்
உதர பந்தன-
திரு வுதர பந்தனம்
பிரளய ஆபத்துக்களிலே ஜகத்தை திரு வயிற்றிலே வைத்துப் போந்த ஆபத் சகத்வத்துக்கு
பட்டம் கட்டினால் போலே இருக்கை –
பீதாம்பர –
சர்வேஸ்வரத்வ லஷணமாய்
திருவரை பூத்தால் போலே ஸூ சங்கதமாய் –
பும்ஸ்த்வ அவஹமாய் இருந்துள்ள திருப் பீதாம்பரம்
காஞ்சீகுணா
அந்தத் திருப் பீதாம்பரத்துக்கு சோப அவஹமாய்
அந்தரங்கமாய் இருந்துள்ள அரை நூல் பட்டிகை
நூபுர
பகவத் விஷயத்தில் இழிவார் எல்லாருக்கும் இழியும் துறையான திருவடிகளுக்கு
பிரகாசகமான திருச் சிலம்பு
ஆதி –
சப்தத்தாலே -புடையார் பொன் நூலினன் -மற்றும் பல்கலன் நடையா வுடைத் திரு நாரணன் -திருவாய் மொழி -3-7-4-என்கிறபடியே
அனுக்தமான திரு யஞ்ஞோபவிதம் கணையாழி மோதிரம் முதலானவற்றை சொல்லுகிறது
அபரிமித
எண்ணில் பல் கலன்களும்-திருவாய்மொழி -4-3-5-என்றும்
பல பலவே யாபரணம் -திருவாய்மொழி -2-5-6-என்றும்
சொல்லுகிறபடியே திரு வாபரணங்களுக்கு தொகை இல்லை என்கிறது –
திவ்ய பூஷண
ஸூ த்த சத்வாத்மகமாய்
திவ்ய அவயவங்களுக்கும் ஆபரணங்களுக்கும் உண்டான
சேர்த்தி அழகுக்கும் அடியான த்ரவ்ய லஷணம்

———————————————————————————–

ஸ்வ அநுரூப
அசிந்த்ய சக்தி சங்க சக்ர கதாசி சாரங்க ஆதி
அசந்க்யேய நித்ய நிரவத்ய
கல்யாண திவ்ய ஆயுத

ஸ்வ அனுரூபே–இத்யாதி
கீழ் சொன்ன ஆபரணங்க ளோடு விகல்ப்பிக்க லாம்படியான
திவ்ய ஆயுத வர்க்கத்தைச் சொல்லுகிறது –
ஸ்வ அநுரூப
கீழ் சொன்ன பல வீர்யாதிகளை யுடைய தனக்கு அனுரூபமாய் இருக்கை –
அதவா
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும் போது ஆயுதமாய்
ஆஸ்ரிதரை உகப்பிக்கும் போது ஆபரணமாய் இருக்கும் -என்றுமாம்
அசிந்த்ய சக்தி
சர்வ சக்தியினுடைய சக்தியைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்க
அரிதான சக்தியை யுடைத்தாய் இருக்கை –
சங்க சக்ர கதாசி சார்ங்க –இவை அஞ்சுக்கும் உப லஷணம்
ஆசி சப்த விதுரமாகவே கிடக்கிறது
பத்யவத் கத்யத்துக்கும் ஒரு நியதி யுண்டாய் இருக்கும் இ றே -என்று பிள்ளை அருளிச் செய்வர் –
ஆதி
இவை முதலான
அசந்க்யேய
இவை தான் எண்ணிறந்து இருக்கும் இறே
ஆபரணங்களோபாதி திவ்ய ஆயுதங்களுக்கும் தொகை இல்லாமையாலே
பிரதானமான சில சொன்ன இத்தனை
நித்ய
உத்பத்தி விநாச ரஹீதங்களாய் இருக்கை –

நிரதிசய –
சிந்மயர் ஆகையாலே பிரதிகூல நிரசநாதிகளில் சக்தி பிரவருத்திகள் ஸவார்த்தமாய் இராதே சேஷிக்கு உறுப்பாய் இருக்கை –
அதவா
நித்ய நிரவத்ய
நாள் செல்ல நாள் செல்ல மழுங்குகை அன்றிக்கே
மழுங்காத வைன் நுதிய -திருவாய் மொழி -3-1-9- என்கிறபடியே சத்ரு சரீரங்களில்
தைக்கத் தைக்கச் சாணையில் இட்டாப் போலே கூர்மை மிக்கு இருக்கை –
நிரதிசய கல்யாண
ஸ்வ சம்பந்தத்தாலே சர்வ மங்களங்களையும் அத்தலைக்கு உண்டாக்க வற்றாய் இருக்கை –
அதாவது-
ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் வந்தால் ஈஸ்வர சங்கல்ப்பத்திலும் முற்பாடராய் இருக்கை –
அறமுயலாழி படையவன் கோயில் -திருவாய் மொழி -2-10-5–இ றே
திவ்ய ஆயுத
அப்ராக்ருத விக்ரஹராய் இருக்கை –

——————————————————————————–

ஸ்வ அபிமத நித்ய நிரவத்ய
அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசந்க்யேய
கல்யாண குண கனேத் யாதி ஸ்ரீவல்லப
ஏவம் பூத பூமி நீளா நாயக

ஸ்வ அபிமத —
கீழ் சொன்ன விக்ரஹாதி வைலஷ்ண்யம் அடையக் காட்டில் எரித்த நிலா வாகாதபடி
போக்த்ரிகளான மஹிஷீ வர்க்கத்தை சொல்லுகிறது –
பிரதம சூரணை யிலும் இக்குணங்கள் உக்தமாய் இருக்கத்
திரியட்டும் சொல்லுகிறது புனர் உக்தம் அன்றோ என்னில்-
இவர் தாம் பிறர்க்கு உபதேசிக்கிறார் அன்றியிலே
அனுபவிக்கிறராய்-
அத்தாலே வந்த ஆதர அதிசயம் சொல்லுவிக்கச் சொல்லுகிறார் ஆகையாலே புனர் உக்தி தோஷம் இல்லை –
அதவா
அங்கு சரண்யதைக்கு உறுப்பாக அருளிச் செய்தார்
இங்கு வால்லப்யத்துக்கு உறுப்பாக அருளிச் செய்கிறார் –
இங்கு உள்ள பதங்களுக்கு அர்த்தம் அதுவே –
ஸ்ரீ வல்லப
ஏவம் வித வை லஷண்யோ பேதையான பிராட்டிக்கு நாயகனானவனே
பசியன் சோற்றின் மேலே விழுமா போலே அவன் தானும் மேல் விழும்படியாய் இருக்கை –
பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -என்னக் கடவது இ றே –
இவ்வால்லப்யம் புருஷகார பாவத்துக்கும்
ப்ராப்யதைக்கும் உறுப்பாய் இருக்கும் இ றே
ஏவம் பூத
ஏவம் வித வை லஷண்யோ பேதைகளான
பூமி நீளா நாயக –
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் -என்னக் கடவது இ றே –
கீழ் -ஸ்ரீ வல்லப -என்றது
இங்கு –நாயக –என்கிறது
இவர்கள் பக்கல் முறையாலே பரிமாறுகையும்
அவள் பக்கல் முறை கெடப் பரிமாறுகையும்
இம்முறை கேடு தனக்கு இவர்கள் தானும் தங்களை எழுதிக் கொடுத்து இ றே இருப்பது —

————————————————————————————–

ஸவச் சந்தா அனுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
பேத அசேஷ சேஷ தைகரதி ரூப
நித்ய நிரவத்ய
நிரதிசய ஜ்ஞான கரியை ஐஸ்வர்ய
அத்யந்த கல்யாண குண கண
சேஷ சேஷாசன-கருட பிரமுக -நாநாவித அநந்த பரிஜன பரிசாரிக -அபரிசரித சரண யுகள

ஸ்வ சந்த அனுவர்த்தி
இப்படிப் பிராட்டிமாரோட்டை சேர்த்தியே தங்களுக்கு ஸ்வரூப லாபமாய்
அவர்களோட்டை கலவிக்கு கைதொடுமானமாய்
இருக்கிற பரிஜனத்தைச் சொல்லுகிறது
ஸ்வ சந்த அனுவர்த்தி –
நித்ய சூரிகள் முகம் அறிந்து -முறை அறிந்து -பரிமாறு
மவர்கள் ஆகையாலே
ஸ்வ சந்த அனுவர்த்திகளாய் இருப்பார்கள்
சம்சாரிகள் முறை அறியாதே பரிமாறு கையாலே
சங்கல்ப அனுவர்த்தி களாய் இருக்கும்
ஸ்வ சந்த அனுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதங்கள் ஆவது –
ஈஸ்வரன் யாவர் சிலரைக் கொண்டு யாதோர் அடிமை கொள்ள நினைத்து அருளுகிறான்
அவ்வடிமைக்கு அனுரூபமான ஸ்வரூபமும் ஸ்திதியும் ப்ரவ்ருத்தியுமாய் இருக்கை –
பாவஜ்ஞென க்ருதஜ்ஞென தர்மஜ்ஞென ஸ லஷ்மண
த்வயா புத்ரேன தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம – ஆரண்ய -15-28-என்னக் கடவது இறே
அசேஷ சேஷ தைக ரதி ரூப
ஈஸ்வரன் அடிமை கொள்ளும் போது அவ்வோ அடிமைகளில் வ்யவஸ்திதராய் இருக்கும் அத்தனை போக்கி
அவ்வாதரத்தைப் பார்த்தால்
சர்வ சேஷ வ்ருத்தியிலும் உண்டான ஆதரத்தையே வடிவாக உடையராய் இருப்பர்கள் –

தாஸ்ய உபகரணங்களை சொல்லுகிறது மேல்
நித்ய
முக்தரைப் போலே ஒரு கால் இல்லாமல் ஒரு கால் உண்டாகை அன்றிக்கே
எப்போதும் உண்டாய் இருக்கை –
நிரவத்ய
ஜ்ஞாநாதிகள் ஸ்வ உத்கர்ஷ ஹேதுவாய் இருக்கை அன்றிக்கே
பவந்த மேவா நுசரன் நிரந்தரம்
பிரசாந்த நிஸ் சேஷமநோ ரதாந்திர
கதாஸ் ஹமை காந்திக்க நித்ய கிங்கரர்
ப்ரஹர்ஷயிஷ்யாமி சநாத ஜீவித -ஸ்தோத்ர ரத்னம் -46–என்று
கைங்கர்யத்துக்கு அனுகூலமாய் இருக்கை –
அஞராய் அக்ரியராய் இருக்கிலும் இருப்பர்கள் –
நிரதிசய ஜ்ஞான
அடிமைக்கு உறுப்பான நியமனம்
க்ரியா
ஜ்ஞான அனுரூபமான வியாபாரம்
ஐஸ்வர்ய –
அடிமைக்கு உறுப்பான -உபயத்துக்கும் சத்ருசமான -நியமனம்
சேனை முதலியார் பிரம்பும் கையுமாய் பிறரை நியமிக்கும் அதுவும்
அங்குற்றைக்கு உறுப்பாய் இருக்கும் இறே
ஆதி -சப்தத்தாலே அனுக்தங்களான குணா விசேஷங்களை நினைக்கிறது –
அநந்த
ஈஸ்வரனுடைய ரஷண விஷயமான குணங்களுக்கு தொகை இல்லாதாப் போலே
கைங்கர்ய விஷயமான குணங்களுக்குத் தொகை இன்றிக்கே இருக்கை –
குண கண
திரள் திரளாக அறியும் இத்தனை போக்கித் தனித் தனியே காண அரிதாய் இருக்கை –
சேஷ
திரு வநந்த ஆழ்வான்
சேஷாசன
சேனை முதலியார்
கருட
பெரிய திருவடி
பிரமுக
இவர்கள் தொடக்கமான
நாநாவித
சண்டாதி த்வார பாலர்கள்
குமுதாதி கணாதிபர்கள்
முதலான விவித பேதங்கள்
அநந்த பரிஜன
குணங்களுக்கு தொகை இல்லாதாப் போலே இவர்களுக்கும் தொகை இன்றிக்கே இருக்கை
பரி சாரிகா பரிசரித்த சரண யுகள –
ஏவம் வித ஜ்ஞாநாதிகளை உடைய விமலாதிகள் என்ன
தம் பஞ்ச சதான்ய பிரசரசாம் பிரதி தாவந்தி சதம் மாலா ஹஸ்தா
சதம் அஞ்ஞன ஹஸ்தா சதம் சூர்ண ஹஸ்தா சதம் வாசோ ஹஸ்தா
சதம் பண ஹச்தாச் தம் பர்மா லங்கா ரேணா லங்கு ர்வந்தி -என்கிறபடியே
மதி முக மடந்தையர் -திருவாய் மொழி -10-9-10-என்ன
ஸூ த்ரவதி முதலான இவர்கள் மகிஷிகள் என்ன
இவர்களால் அடிமை செய்யப் பட்ட ஏற்றத்தை உடைய
திருவடிகளை உடையவனே
இவர்கள் மகிஷிகள் தம் போகத்துக்கு உறுப்பாகை அன்றிக்கே
அங்குத்தைக்கு உறுப்பாய் இருப்பர் இ றே
அயர்வறும் அமரர்கள் அதிபதி -திருவாய் மொழி -1-1-1- என்று இ றே ஏற்றம்

—————————————————————————————

பரமேதி
ஸூரி போக்யமான கைங்கர்யத்தின் உடைய ஸ்வரூபம் சொல்லிற்று கீழ்
அந்தக் கைங்கர்யத்துக்கு வர்த்தகமான தேச விசேஷத்தை சொல்லுகிறது மேல்

பரம யோகி வாங் மனஸ் அபரிச்சேத்ய ஸ்வரூப ஸ்வபாவ

முக்தாநாம் லஷணம் ஹயேதத் யாச்ச வேதத் வீப வாஸிநாம்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி ந-என்கிற
சனகாதிகள்  உடைய வாங் மனஸ் ஸூக்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடைத்தாய் இருக்கை-
அதாவது -பஞ்ச உபநிஷன்மயம் ஸூ த்த சத்வ மாயம் என்று திரள
நினைத்தால் சொல்லுதல் செய்யும் இத்தனை ஒழிய
ஏவம் ஸ்வரூபம் ஏவம் ஸ்வபாவம் என்று பரிச்சேதிக்க அரிதாய் இருக்கை
பஞ்ச உபனிஷன்மயமாய் இருக்கையாலே ஏக த்ரவ்யம் என்ன ஒண்ணாது
அநேக த்ரவ்ய உபசயாத்மகம் ஆகையாலே நித்ய த்ரவ்யம் என்ன ஒண்ணாது
அவஸ்தாந்தராபத்தி இல்லாமையாலே பரிணாம ச்வபாம் என்ன ஒண்ணாது
பகவத் சன்கல்ப்பத்தாலே சில உண்டாகச் சொல்லுகையாலே ஏக ரூபம் என்ன ஒண்ணாது
ஆகையால் அளவுடையாராய் இருக்கும் பரம யோகிகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கும் தேசம்-

ஸ்வ அபிமத விவித விசித்திர
அநந்த போகய போக உபகரண போக ஸ்தான
சம்ருத்த அநந்த ஆச்சர்ய
அநந்த மஹா விபவ
அநந்த பரிமாண
நித்ய நிரவத்ய
நிரதிசய வைகுண்ட நாத

ஸ்வ அபிமத –
அன்புற்று அமர்ந்து உறைகின்ற -திருவாய் மொழி -7-10-1-என்கிறபடியே ஆதரித்து வர்த்திக்கிற படியால் -அபிமதமாய்

விவித -விசித்திர –
நாநாவிதமாய்
அநந்த
முடிவு இன்றிக்கே இருப்பதான –

போகய போக உபகரண போக ஸ்தான சம்ருத்த
போக்யங்களான அப்ராக்ருதமான சப்தாதி விஷயங்கள் என்ன
போக உபகரணங்கள் ஆன-சூட்டு நன் மாலை -திரு விருத்தம் -21-பரிஜன பரிச்சதாதிகள் என்ன
போக ஸ்தானங்கள் ஆன தேச விசேஷங்கள் என்ன
இவற்றாலே சம்ருத்தமாய் இருந்துள்ள

அநந்த ஆச்சர்ய –
அநந்த உத்யோக நதீ தடாகாதி லஷணமான விபவத்தை உடைத்தாய் இருக்கை –
அநந்த ஆச்சர்யம் ஆகையாவது
க்ருதகம் என்றாதல் -நவம் என்றாதல் -புராதனம் என்றாதல் சொல்ல ஒண்ணாதே
அக்ருத்ரிமமாய் பிரதி ஷணம் அபூர்வமாய் இருக்கை

அநந்த மஹா விபவ
மஹத்வம் ஆவது இவற்றுள் ஓர் ஒன்றே போக்தாககளால் அனுபவித்து முடிக்க ஒண்ணாது இருக்கை

அநந்த பரிமாண –
ஆயாம விஸ்தாரன்களால் அளவிறந்து இருக்கை

நித்ய நிரவத்ய நிரதிசய வைகுண்ட நாத
சதைக ரூபமாய் –
ஹேய ப்ரத்யநீகமாய்
சர்வ பிரகாரத்தாலும் அதிசயிதமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு நாதன் ஆனவனே
பரம பதத்தில் போக்தாக்களை சொல்லாது ஒழிந்தது
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -திருவாய் மொழி -4-9-10-என்கிறபடியே
இவர்கள் போகத்துக்கு கை தொடுமானமாம் ஆகாரம் ஒழிய
அஹம் மம-என்று இருப்பார் இல்லாமையாலே
ஆனால் சுருதி
ஏதத் சாம காயன்னாச்தே ஹா வுஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ
என்று போக்தாக்களை-சொல்லிற்று இல்லையோ வென்னில்

தான் அங்குத்தைக்கு ஸ்ரக் சந்த நாதிகளோபாதி போக உபகரணமாய் இருக்கும் இருப்பு
புருஷார்த்தம் ஆகையாலே சொல்லிற்று இத்தனை –
அங்கன் அன்றாகில் அஹம் அன்னம் என்றத்தோடு விரோதிக்கும் இ றே-

————————————————————————————-

ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
ஸ்வ சேஷ தைக ஸ்வபாவ பிரகிருதி
புருஷ காலாத்மக
விவித விசித்ர அநந்த-போகய போக்த்ரு  வர்க்க போக உபகரண போக ஸ்தான ரூப
நிகில ஜகத் உதய விபவ லய லீல
சத்யகாம
சத்யசங்கல்ப
பரப்ரஹ்ம பூத
புருஷோத்தம
மஹா விபூதே
ஸ்ரீ மன் நாராயண
ஸ்ரீ வைகுண்ட நாத
அபார காருண்யா
சௌசீல்ய
வாத்சல்ய ஔதார்ய ஐஸ்வர்ய
சௌந்த்ர்ய மஹொததெ
அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய
பிரணதார்த்தி ஹர
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே
அநவரத விதித நிகில பூத ஜாத யாதாம்ய
அசேஷ சர அசர பூத நிகில நியமன நிரத
அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத
நிகில ஜகதாதார
அகில ஜகத் ஸ்வாமின்
அஸ்மத் ஸ்வாமின்
சத்யகாம சத்யசங்கல்ப
சகல இதர விலஷண
அர்த்தி     கல்பக ஆபத்சக ஸ்ரீ மன் நாராயண
அசரண்ய சரண்ய
அநந்ய சரண
த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே
அதர த்வயம் –

ஸ்வ சங்கல்ப -இத்யாதி –
இப்படி அப்ராக்ருதமான நித்ய விபூதி யுக்தனுக்கு
ஆவது அழிவதாய் -லீலா ரச ஹேதுவான லீலா விபூதி யோகம் சொல்லுகிறது மேல்
ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி –
ஸ்வ சங்கல்பத்தைபின் செல்லா நின்று உள்ள ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடைத்தாய் –
பிரகிருதி யாவது –
சத்வாதி குணத்ராயாத் மகமாய -அநந்த மாய்-விசித்ரமான அவஸ்தா விசேஷ ரூப பரிணாமத்துக்கு சமர்த்தமாய் இருந்துள்ள பிரதானம் –
பிரக்ருதிக்கு ஸ்வரூபம் ஆவது –
சத்வாதி குணகமான ஜடத்வம் –
ஸ்திதி யாவது -சேதனருக்கு போக மோஷ சாதனா அனுஷ்டானத்துக்கும் பல அனுபவத்துக்கும் உபகரணமாய் இருக்கை –
பிரவ்ருத்தி யாவது -ததர்த்தமாக -போகய போக உபகரண போக ஸ்தான ரூபேண பரிணமிக்கை –
சம்சாரி சேதனனுக்கு ஸ்வரூபம் ஆவது -அசித் விசிஷ்ட ஆகாரத்வம்
ஸ்திதி யாவது -அந்நாதி களால் தரிக்கை-
பிரவ்ருத்தி யாவது -புண்ய பாப ரூப கர்ம அனுஷ்டானம் என்ன
தத் பல அனுபவம் என்ன -இவை
காலத்துக்கு ஸ்வரூபம் ஆவது -அசித்வம்
ஸ்திதி யாவது -சேதன அசேதனங்கள் உடைய பரிமாணங்களுக்கு நிர்வாஹகமாய் இருக்கை –
பிரவ்ருத்தி யாவது -நிமேஷ கலா காஷ்டாதி ரூபத்தாலே
உத்பத்தி விநாசாதிகளை ப்ரவர்த்திப்பிக்கை –

ஸ்வ சேஷ தைக ஸ்வபாவ –
தனக்கு அனன்யார்ஹ சேஷமாய் இருக்கை –

பிரகிருதி புருஷ காலாத்மக –
இப்படிப் பட்ட பிரகிருதி -புருஷ -கால -ரூபமாய்

விவித –
அத ஏவ விவிதமாய்

விசித்ர –
விசித்ரமாய்

அநந்த-
அனந்தமாய்

போக்ய –
போக்யம் என்ன –

போக்த்ரு வர்க்க-
போக்த்ரு வர்க்கம் என்ன

போக உபகரண-
போக உபகரணங்கள் என்ன

போக ஸ்தான –
போக போக்யங்களான ஸ்தான விசேஷங்கள் என்ன –

ரூப
இவற்றை வடிவாக உடைய

நிகில ஜகத் உதய விபவ லய லீல-
சகல லோகங்களின் உடைய உத்பத்தி ஸ்திதி சம்ஹாரங்களை லீலையாக உடையவனே
விசித்ரம் ஆகையாவது -நாநாவிதமாய் இருக்கை –
அநந்தம் ஆகையாவது -தொகை இன்றிக்கே  இருக்கை
போக்த்ரு வர்க்கம் ஆவது –தேவாதி சரீரன்களிலே அஹம் புத்தியாலே ஸ்வ தந்த்ரராய்
சப்தாதி விஷயங்களுக்கு போக்தாக்கள் ஆகை-
ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ரஷ்ட்ருத்வாதிகள் உண்டாகிறது ஈஸ்வரனுக்கு உபகரண தயா வல்லது ஸ்வ தந்திர தயா வல்ல –
ஆனால் துக்க ரூபமாய் இராதோ -என்னில்
அவர்களுக்கு தப பலமாய் வந்தது ஆகையாலே சுக ரூபமாய் இருக்கும்
நித்ய விபூதி யோகத்தால் வந்த பூர்த்தியை உடையனாகை யாலே ஈஸ்வரனுக்கு இது லீலையாய் இருக்கும்
ஆக -நாராயண சப்தார்த்தம் சொல்லிற்று ஆயிற்று-

சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்கலாவது
உபேய ருசியும் -உபாயாத் யவசாயமும் உண்டானால் ஆகையாலே
அதினுடைய சித்தி அர்த்தமாக முதல் சூரணை யிலே பிராட்டி திருவடிகளிலே சரணம் புக்கார் –
இரண்டாம் சூரணை யிலே -பிராட்டி பிரசாதத்தாலே அத்தை பிராப்தரானார்
அநந்தரம் ஆஸ்ரய ணீயராவார் ஆர் என்னும் அபேஷையிலே
காரணம் து த யேய-என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹ்ணோதி தஸ்மை
தம் ஹ தேவமாத்ம புத்தி பிரசாதம்
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்னும் இத்யாதியாலே
சகல ஜகத் காரண பூதனான நாராயணனே ஆஸ்ரயணீயனாக வேண்டும் ஆகையாலே
அகில ஹேய -என்கிற சூரணை யிலே நார சப்த வாச்யங்களுக்கு ஆஸ்ரயமான திவ்ய ஆத்மா ஸ்வரூபத்தை சொல்லி
அநந்தரம் -அவ விக்ரஹத்துக்கு அலங்காரமான திவ்ய ஆபரணங்களைச் சொல்லி -அநந்தரம் -எவம் விதமானவற்றுக்குக் காவலான திவ்ய ஆயுத வர்க்கங்களைச் சொல்லி
அநந்தரம் -இப் போக்யதை காட்டில் எரித்த நிலா வாகாதபடி தலை நீர்ப் பாட்டிலே இருந்து அனுபவிக்கும் மஹிஷிகளைச் சொல்லி
அநந்தரம் -இச் சேர்த்தி அழகைக் கண்டு அனுபவித்து தோற்று எழுதிக் கொடுத்து
எடுத்துக் கை நீட்டிப் பரிமாறும் திவ்ய பரிஜனங்களைச் சொல்லி
அநந்தரம் -கைங்கர்யத்துக்கு ஏகாந்தமாய் -தத் வர்த்தகமுமான நித்ய விபூதியைச் சொல்லி
அநந்தரம் -ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு விஷயமான லீலா விபூதியைச் சொல்லி
இப்படி அவனுடைய உபய விபூதி நாதத்வத்தைப் பேசி அருளினார் –
இனி ஆஸ்ரயிக்கை இறே உள்ளது-

அவ ஆஸ்ரயணத்துக்கு உபயோகியான குணங்களைச் சொல்லுகிறது மேல்அபார காருண்யா –இத்யாதியாலே
நடுவே எட்டு குணங்களைச் சொல்லா நின்றதே -இவற்றால் சொல்லுகிறது என் என்னில்
மேல் பண்ணப் புகுகிற ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாய்
கீழ் சொன்னவற்றை அனுபாஷிக்கிறதுமாய் இருக்கிறது –
கீழ் ஆஸ்ரயணீயனை சொல்லிற்று ஆகில் அநந்தரம் ஆஸ்ரயிக்க அமையாதோ என்னில் -அமையாது –
ஆசார்ய உபதேச பூர்வகமாய் இறே ஆஸ்ரயணீயம் இருப்பது
அவ்விடத்தில் ஆசார்ய உபதேச முகத்தாலே அவனே பிராப்ய பிராபகன்கள்  என்று அத்யவசித்து
அநந்தரம் ஆஸ்ரயிக்க வேண்டும்
அல்லாத போது அவனுடைய ரஷகத்வத்திலே ஆதல்
உபாயத்வத்திலே ஆதல் அதிசங்கை நடக்குமாகில் ஆஸ்ரயித்தவனாக மாட்டான்
ஆகையால் –
அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம்
ததே கோபாயதா யாச்ஞா பிரபத்தி சரணா கதி -என்னும்
நியாயத்தாலே கீழ்ச் சொன்ன நாராயணத்வத்தை அனுபாஷித்துக் கொண்டு
அவனே உபாய உபேயங்கள் என்று -அத்யவசிக்கிறார்
இரண்டாம் சூரணை யிலே பிராட்டி பிரசாதத்தாலே தாம் பெற்ற அர்த்தத்தை அனுசந்திக்கிரார் –

முதல் நாலு குணங்களும் சிருஷ்டிக்கு உறுப்பு
மேல் நாலு குணங்களும் பிரப்யத்வத்துக்கு உறுப்பு
சத்யகாம சத்யா சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத -என்கிற இவை லீலா விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது
புருஷோத்தம நாராயண -என்கிற இவை குண சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது –
மஹா விபூதே ஸ்ரீ வைகுண்ட நாத -என்கிற இவை நித்ய விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது
ஸ்ரீ வைகுண்ட நாத -என்கிறது ஆஸ்ரயித்தால் பின்னை அடிமை கொள்ளும் தேசத்தைச் சொல்லுகிறது
ஆஸ்ரயித்தால் பின்னை அடிமை செய்கை போலே காணும் சேஷ பூதனுக்கு க்ருத்தியம்-இத்தால் அடிமை கொள்ளும் படி ஆஸ்ரயிக்கையே ஆஸ்ரயணம் என்றது ஆயத்து –

1-சத்யகாம
காம்ய ஸ்ப்ருஹா ஸ்மர காம -என்று நிகண்டு –
காம சப்தம் ஸ்மரனையும்-இச்சிக்கப் படுமத்தையும் -இச்சையையும் சொல்லுகிறது
கீழே சத்யகாம -என்கிறது ஆஸ்ரயித்தார்க்கு அனுபாவ்யமாய்
அவ்வழியாலே தனக்கும் காம விஷயமான விபூதியைச் சொல்லுகிறது –
இங்கு சத்யகாம -என்றது லீலார்த்தமாக பிரகிருதி புருஷ காலங்களை
ஸ்ப்ருஹா விஷயமாக உடையவன் -என்கிறது –
கீழ் காமிக்கப் படுமவற்றைச் சொல்லிற்று
இங்கு காமத்தைச் சொல்லுகிறது –
சத்ய சப்தம் நித்ய வாசி
சிருஷ்டிக்கு விஷயமான புருஷ சமஷ்டி
ஸ்ருடரான சேதனர்க்கு போகய போக உபகரண போக ஸ்தான ரூபியான பிரகிருதி
இவற்றைக் கர்ம அனுகுணமாக நிர்வஹிக்கைக்குக் காலம்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகள் ப்ரஹ்மாதிகளுக்கு தப பலமாகையாலே போக ரூபமாய் இருக்கும்
ஈஸ்வரனுக்கு லீலையாய் இருக்கும் ஐச்சிகம் ஆகையாலே
லீலை என்கிறது சேதனனுக்கு பந்தகமுமாய் நாச ஹேதுவுமாய் ஈஸ்வரனை மறைத்து அநர்த்த அவஹமாய் இருக்க
ஈஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் ஆவான் என் என்னில்
சுக்கோ முக்தோ வாமதேவோ விமுக்த -என்கிறபடியே ஓன்று இரண்டு வ்யக்தியிலே பலிக்கக் காண்கிறது இறே
அந் நசை யாயிற்று இவனுக்கு ஸ்ப்ருஹையை விளைக்கிறது –
ஆகை இறே அழித்து அழித்து சிருஷ்டிப்பது ஸ்திதிப்பிப்பது-அதி ப்ரவ்ருதமான வாறே சம்ஹரிப்பது
பின்னையும் இது தன்னையே செய்வதாக நிற்கிறது –
என் போலே வென்னில்
ஒரு ஷேத்ரம் நெடும் காலம் இட்டிறையாய் போகா நின்றாலும் ஒருகால் பலிக்கக் காண்கையாலே
அழித்து அழித்து பயிர் செய்யும் கர்ஷகனைப் போலே
2-சத்ய சங்கல்ப -கீழேயும் –சத்ய சங்கல்ப -என்றது
ஆஸ்ரயித்தார்க்கு அனுபாவ்யமான அபூர்வ போகங்களை தன நினைவாலே சிருஷ்டிக்க வல்லவன் யென்கைக்காக
இங்கு சத்ய -சப்தம் அமோக வாசி –
இங்கு சத்யசங்கல்ப -என்றது லீலைக்கு ஹேதுவான சங்கல்பம் அப்ரதிஹதமாய் இருக்கும் யென்கைக்காக
அதாவது இவற்றை அமோகமாக தன நினைவிலே சிருஷ்டிக்க வல்லனாகை
ப்ரஹ்மாவினுடைய சங்கல்பமும் மோகமாய் இருக்கும் -எங்கனே என்னில்
சனகாதிகளை தன நினைவாலே ஜகத் சிருஷ்டிக்கு உறுப்பாக சிருஷ்டித்தான்
அவர்களோ என்றால் -முமுஷூக்களான எங்களுக்கு இச் செயல் ஆகாது -உனக்கேயாம் இத்தனை -என்று இகழ்ந்து போனார்கள்
தான் சிருஷ்டித்த அசுரர்கள் கையிலே வேதத்தை பறி கொடுத்து தான் ஈஸ்வரன் காலிலே விழுந்து
வேதா மே பரமம் சஷூ வேதா மே பரமம் தனம்
வேதா மே பரமம் தாம வேதா மே பரமம் சோத்தமம் -என்று கூப்பிட்டான் –

மேலே அவனுடைய திருவடிகளிலே சரணம் புகுகைக்கு உறுப்பாக
சிருஷ்டி முதலாக புருஷார்த்தத்துக்கு எல்லையான கைங்கர்ய பர்யந்தமான
நடுவுள்ளவை யடங்க அவனிட்ட வழக்கு என்று அருளிச் செய்கிறார் –எட்டு ஸ்வ பாவத்தாலே
1-சத்யகாம –
சேதனர் உடைய சரீர சம்பந்தத்துக்கு அடியான சிருஷ்டிக்கு உபகரணமான நித்ய பதார்த்தங்களை உடையவன் -என்கிறது
2-சத்யசங்கல்ப
சிருஷ்டி அர்த்தமாக சன்கல்ப்பிக்கும் சங்கல்பம் அமோகமாய் இருக்கும் -என்கிறது
குண சூரணை யிலே இவ்விரண்டு குணங்களும் உக்தமாய் இருக்க இங்கும் சொன்னால் புநர் உக்தம் அன்றோ என்னில்
அங்கு குண சத்பாவத்துக்கு உறுப்பாக சொல்லிற்று
இங்கு சிருஷ்டி யர்த்தமாக சொல்லுகிறது ஆகையாலே தோஷம் இல்லை –
3-பரப்ரஹ்ம பூத –
ததை ஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத-என்கிறபடியே
ஜகதா காரனாய் ப்ரும்ஹிதனாகை-
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே இ றே கார்யமான ஜகத்தும் –
4-புருஷோத்தம –
புருஷாணா முத்தம –
புருஷாநாம் என்கிற பஹூ வசனத்தாலே த்ரிவித சேதனரையும் வயாவர்த்திக்கிறது-
புருஷ
உத்புருஷ உத்தர புருஷ உத்தம புருஷ
புருஷர் ஆகிறார் -அசித் வ்யாவ்ருத்தரான பத்த சேதனர்
உத்புருஷர் ஆகிறார் -பத்தரில் வ்யாவருத்தரான முக்தர்
உத்தர புருஷர் ஆகிறார் முக்தரில் வ்யாவ்ருத்தரான நித்யர்
உத்தம புருஷன் ஆகிறான் -ஸூ ரிகளிலும்  வ்யாவ்ருத்தனான ஈஸ்வரன்
பத்தர் ஹேயாகாரராய் இருப்பர்
முக்தர் ஹேய த்தின் நின்றும் ஒரு நாள் குளித்து ஏறினவராய் இருப்பர்
நித்யர் ஹேய ரஹிதராய் இருப்பது ஒழிய ஹேய பிரதி படர் அல்லர்
ஈஸ்வரன் ஹேய ப்ரதிபடனாய் இருப்பன்
ஈஸ்வரன் த்ரிவித சேதன அசேதனங்களிலும் அந்தராத்மா தயா நிற்கச் செய்தே
அவற்றின் உடைய ஹேய கந்தம் தட்டாதவனாய்
ஆஸ்ரிதர் ஹேயத்தை போக்க வல்லனுமாயும் இருக்கும்
இத்தால் ஸ்ருஷ்டமான ஜகத்தின் உடைய வ்யாபன பரண ச்வாம்யத்தால் உண்டான வைலஷ்ண்யம் சொல்லுகிறது –
இத்தால் உஜ்ஜ்வலனாகா நிற்கும் என்றது ஆயத்து
அங்கன் அன்றிக்கே
ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கு அபேஷித புருஷார்த்தங்களை கொடுக்குமவன் ஆகையாலே புருஷோத்தமன் -யென்னவுமாம் –
புரு -பஹூ
சநோதி -ததாதி -என்று இ றே இதுக்கு வ்யுத்பத்தி
மஹா விபூதே –
கீழேயும் விபூதியைச் சொல்லிற்று
மேலும் விபூதியை சொல்லப் புகா நின்றது
இப்படி சொல்லுகை புநர் உக்தம் அன்றோ -என்னில்
விபூதி மான் -யென்கைக்காக விபூதி யோகம் சொல்லிற்று கீழ் –
அநந்ய பிரயோஜனருக்கு அவ விபூதியைக் கொடுக்கும் என்று விபூத் ஔதார்யம் சொல்லுகிறது இங்கு
மேல் அடிமைக்கு ஏகாந்தமான தேசம் என்று விபூதி விநியோகம் சொல்லுகிறது
ஆகையால் தோஷம் இல்லை
ஸ்ரீ மன் –
கொடுத்த தேசத்தில் போகய விஷயத்தை சொல்லுகிறது –
அங்கு இருவருமாய் இ றே அடிமை கொள்ளுவது
வைகுண்டே  து பர் லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவத்தைஸ் சஹ -சிவ புராணம் -எண்ணக் கடவது இ றே –
நாராயண –
அநந்த மங்கள குணங்களோடு குறைவற விருந்து அடிமை கொள்ளும்வன் என்கிறது –
ஆக ஸ்ரீ மன் நாராயண -என்கையாலே ஒரு மிதுனமே பிராப்யம் –என்கிறது –
ஸ்ரீ வைகுண்ட நாத –
அடிமை கொள்ளுகைக்கு ஏகாந்த மான பரம பதத்திலே நாதனாய் இருந்து அடிமை கொள்ளும் -என்கிறது
இவற்றில் கீழ் நாலு குணங்களும் சிருஷ்டிக்கு உறுப்பாய் இருக்கும்
மேல் நாலு குணங்களும் பிராப்யத்துக்கு உறுப்பாய் இருக்கும்
காரணமுமாய் பிராப்யமுமான வஸ்து இ றே பிராபகம் –

அநந்தரம் ஆஸ்ரயணீயத்வத்தில் ப்ரக்ருஷ்ட உபகாரகங்களான குணங்களைச் சொல்லுகிறது –
அபார காருண்யா இத்யாதி –
காருண்யம் ஆகிறது கிருபை அதாகிறது -பர துக்க அசஹிஷ்ணுத்வம்
இது அபாரமாகை யாகிறது
ஆனயை நம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம்ஸ் யாபயம் மயா
விபீஷணோ வா சூக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் -யுத்தம் 18-34-என்று அவன் அளவும் செல்லுகை –
அங்கன் அன்றியே
என்னளவும் வர வெள்ளம் கோக்கும் குணம் யென்னவுமாம்
1-சௌசீல்ய –
உயர்ந்தவன் தாழ்ந்த வர்களோடு வந்து கலவா நின்றாள்
இவன் நம்முடையான் என்று புரை யற கலக்கலாம்படி இருக்கை –
இதுக்கு அபாரத்வம் ஆவது
தேவ மனுஷ்யாத் அவதாரங்கள் போல் அன்றிக்கே மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களிலும் இவை நம்முடையது என்று இருக்கையும்
தானும் அவற்றிலே ஒன்றாய் இருக்கையும்
இவற்றிலே நாம் ஓன்று என்று நினைத்து இருக்கையும் –
நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ
அஹம் வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்யமிதோ அந்யதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12-
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -யுத்தம் -120-11-
2-வாத்சல்ய –
வாத்சல்யம் ஆவது -ப்ரேமத்தாலே ஆஸீத கதமான தோஷமும் குணமாகத் தோற்றுகை
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -முதல் திருவந்தாதி -41-
இதுக்கு அபாரத்வம் ஆவது
ஆசீதர் அளவு அன்றிக்கே
சகே ராகவ தர்மஜ்ஞ ரிபூனாமபி வத்சலா
அப்ய நுஜ்ஞாதும் இச்சாமி கமிஷ்யாமி யதாகதம் -யுத்தம் -50-56-என்று
சத்ருக்கள் பக்கலிலும் அப்படி இருக்கை
ஆனால் பையல் தலையை அறுத்து விடுவான் என் என்னில்
அவர்கள் பக்கலிலும் அவன் படி யில் குறை இல்லை
அதுவும் ஜீவியாதபடி அவர்கள் சூல்த்துக் கொண்ட வித்தனை
அங்கன் அன்றியே
தலை அறுக்கை தானும் வாத்சல்யம் ஆக்கவுமாம்
எங்கனே என்னில் விளையாடக் கொடுத்த கோலைக் கொண்டு பிரஜை கண்ணை கலக்கிக் கொள்ளப் புக்கால்
கையில் கொலை வாங்கி இட்டு வைக்கும் தாயை போலே –
3-ஔதார்ய
ஔதார்யம் ஆவது -ஆஸ்ரீதர்க்கு ஸ்வரூப அனுரூபமான
அபேஷிதங்களை தன் பேறாக கொடுக்கை
இதுக்கு அபாரத்வம் ஆவது
ஆசீதர்க்கு எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்திலனாக எப்போதும் நெஞ்சாறல் பட்டுக் கொண்டு இருக்கை –
ருணம் ப்ரவ்ருத்தம் இவ –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி -53

4-ஐஸ்வர்ய –
ஐஸ்வர்யம் ஆவது அர்த்திகள் அர்த்தித்தவை எல்லாம்
கொடுக்கும்படியான அடிவுடைமை
இதுக்கு அபாரத்வம் ஆவது
அவ்வடிவுடைமை தான் இவ்வளவு என்று இருக்கை அன்றிக்கே
கொடுக்க மேல் மேல் என வளர்ந்து கொடு செல்லுகை
5-சௌந்த்ர்ய மஹொததே 
சௌந்தர்யம் ஆவது அழகு
இதுக்கு அபாரத்வம் ஆவது
ரூபௌதார்யா குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -என்கிறபடியே
சரகிலை தின்னிகளான ரிஷிகளையும் கூட மடல் எடுக்கப் பண்ண வற்றாய் இருக்கை –
அனுகூலரை யன்றிக்கே ப்ரதிகூலையான சூர்பணகி பொல்வாரையும் மடல் எடுக்கப் பண்ணுகை-என்றுமாம் –
அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-
ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்கள் பாராதே
இருந்ததே குடியாக சரண வரண அர்ஹனானவனே
பிரணதார்த்தி ஹர –
இப்படி அத்யவசித்த ஆஸ்ரிதர் உடைய ஆர்த்தியைப் போக்குமவனே
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே –
கீழ் சொன்ன குணங்கள் எல்லாம் ஒரு தலை யானாலும்
அவற்றை எல்லாம் கீழ்ப் படுத்தும் படியான நிரவதிக வாத்சல்யத்தை உடையவனே
நிகரில் புகழாய் -திருவாய் மொழி -6-10-10-என்கிறபடியே
ஆக
கீழ் ஆஸ்ரயண அர்ஹதை சொல்லி ஆஸ்ரிதர் உடைய ஆர்த்தியைப் போக்குமவன் என்று சொல்லி
அதுக்கடியான வாத்சல்யம் சொல்லிற்று
அநவரத விதித நிகில பூத ஜாத யாதாம்ய –
சத்தா யோகி சகல பதார்த்தங்களின் உடைய உண்மையை எப்போதும் ஒக்க அறியுமவனே
இத்தால் -அனுத்தமமான பாத்ரம் -ஸ்தோத்ர ரத்னம் -24-என்று நான் என்படி சொல்ல வேண்டா வி றே -என்கிறார்
அசேஷ சர அசர பூத நிகில நியமன நிரத
அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத –
சகல சேதன அ சேதனங்களுக்கும் சேஷி யானவனே
இத்தால் என் கார்யம் உன் பேறாக செய்ய வேண்டும் சம்பந்தம் உடையவன் அல்லையோ என்கை
நிகில ஜகதாதார –
பகவத் பாகவத விஷயங்களில் அபராதம் பண்ணிப் போரும் ஜகத்துக்கும் ஆதார பூதனே
இத்தால் எனக்கு சத்தா தாரகன் அல்லையோ -என்கிறார் –
அகில ஜகத் ஸ்வாமின் –
அபராதத்தை தவிர்ப்பித்து ஆபி முக்யத்தைஉண்டாக்கி
தேவர் திருவடிகளிலே புகுர நிறுத்துகைக்கு வேறு நிர்வாஹகர் உண்டோ
அத ஏவ
அஸ்மத் ஸ்வாமின்
கீழும் சேஷித்வம் சொல்லிற்று -அங்கு சம்பந்த பரம்
இங்கு சம்பந்த அனுகுண நியமன பரம்
இத்தால் என்னை இவ்வளவாக புகுர நிறுத்தினவன் நீ  அல்லையோ -என்கிறார்
சத்யகாம –
கீழ் குண சூரணை யிலே ஆசீதர்க்கு அனுபாவ்யமான வழியாலே தனக்கும் இனிதான குண விபூதியைச் சொல்லிற்று –
நடுவு –சத்யகாம -என்றது லீலார்த்தமாக பிரகிருதி புருஷ காலங்களை ஸ்ப்ருஹா விஷயமாக உடையவன் யென்கைக்காக
இங்கு சத்யகாம -என்கிறது ஆஸ்ரயிக்கும்இடத்தில் இவன் இட்டது கொண்டு வயிறு நிறைய வேண்டாதபடி
அவாப்த சமஸ்த காமதயா வந்த பூர்த்தியை உடையவன் -யென்கைக்காக
இத்தால் -அகிஞ்சனோ அநந்ய கதி -ஸ்தோத்ர ரத்னம் -என்று
அகிஞ்சனான என் கார்யம் பூர்ணனான உனக்கு பரம் அன்றோ -என்கிறார்
சத்யசங்கல்ப –
கீழ் குண சூரணை யிலே சத்யசங்கல்ப -என்றது
அபூர்வமான போக்யங்களை அமோகமாக சிருஷ்டிக்க ஷமண் யென்கைக்காக –
நடுவே சத்ய சங்கல்ப என்றது லீலைக்கு ஹேதுவான சங்கல்பம் அப்ரதிஹதம் –யென்கைக்காக
இங்கு சொன்னது அகடிதங்களையும் சங்கல்ப மாத்ரத்தாலே கர்த்தும் ஷமண் –யென்கைக்காக
இத்தால் -நித்ய சம்சாரியான என்னையும் நித்ய ஸூரி களோடு ஒரு கோவையாக்க நினைத்தால்
செய்து முடிக்க வல்லன் அல்லையோ நீ -என்கிறார்
சகல இதர விலஷண-
சேதனர் உடைய ஜீவனம் சொல்லுகிறது
ஸ்வரூப தோ குண தச்ச விலஷண-
ஆஸ்ரீதர்க்கு அனுபாவ்யமான ஸ்வரூப குணங்களை உடையவனே
இவை தன்னை யாருக்காக படைத்தது -ஸ்வார்த்தம் ஆகவோ -என்கிறார்
ஒரு விபூதியாக அனுபவிப்பாரும் அனுபவிப்பிப்பாரும் ஆய்ச் செல்லா நிற்க ச்வார்த்தமாகவோ-என்கிறார் இ றே
இவரை ஒழிய எல்லாரையும் அனுபவிப்பித்தாலும் குறையாய் இருக்கும் இ றே –
இவரை அனுபவிப்பித்தால் ஆயத்து அவனுடைய ரஷகத்வம் பூர்ணம் ஆவது
பூர்ண அனுபவம் பண்ணுவார்க்கு ஓன்று குறைந்தாலும் நெடும் பாழாய்த் தோற்றும் இ றே
ஆகையால் இவரோடும் கூட அனுபவித்தால் ஆயத்து அவர்கள் அனுபவம் பூர்ணம் ஆவது
இதுக்கு ஹேது சொல்லுகிறது மேல்
அர்த்தி கல்பக
தன் தலையாலே இரந்து கொடுக்குமவனுக்கு இரந்தார்க்கு கொடாது ஒழிகை போருமோ -குறை யன்றோ –
அர்த்திப்பார்க்கு கடக்க நின்று தன்னை ஒழிந்த சிலவற்றை கொடுத்து விடும் பூண்டு போலேயோ -இங்கு கற்பக மரம் –
அர்த்திகளையும் உண்டாக்கி தானே இரந்து சகல பல பிரதனான உன்னையும் தருகிற நீ
என்னை யாக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -திரு வாய் மொழி -2-7-11-என்னக் கடவது இ றே –
அது போலே நாரும் நரம்புமாயிருக்கை –
அன்றிக்கே –
அபார சௌந்த்ர்ய மகோததே-யென்னும்படியாய் இ றே இருப்பது
இரந்து கொடுக்கும் அத்தனை ஒழிய இரந்தார்க்கு கொடுக்கலாது ஓன்று உண்டோ
ஆபத்சக –
ஆபத்து வந்தவாறே தோழனாய் இருக்கை
அதாவது துணையாய் இருக்கை
சர்வ ரஷகன் ஆனவனே அறச் செய்ய வேண்டும்படியான ஆபத்திலும் தானே துணையாய் இருக்கை

மாதா பிதாக்களும் பந்துக்களும் தள்ளிக் கதவை யடைக்கும் தசையிலும்
ரகுவர யதபூஸ்த்வம் தாத்ருசோ வாயச்ய ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோச்பூ
வாத கிமபத மாகஸ் தஸ்ய தேச்ஸ்தி ஷமாயா -ஸ்தோத்ர ரத்னம் –
தமேவ சரணம் கத -என்றும் தேவரே துணையாய் இருக்கை –
ஸ்ரீ மன் –
இப்படி இருக்கிற உன்னையும் அச்சிர்த்துப் புருஷகார பூதையான பிராட்டியைப் பார்த்து ரஷிக்க வேணும் –
நாராயண
இவள் புருஷகாரம் ஆவதற்கு முன்னமே ஸ்ருஷ்ட் யார்த்த அநு பிரவேசத்தாலே சத்தியை நோக்கினவன் அல்லையோ –
இத்தால் எனக்கு சத்தா தாரகன் அல்லையோ -என்றபடி
அசரண்ய சரண்ய –
கின் புனர சரண்ய சரண்யத்வம்-
அதாகிறது –
இப்படி இருக்கிற தேவர்க்கும் புறம்பாய் பின்னையும் தேவரை ஒழிய புறம்பு புகல்
அற்றார்க்கு சரண்யன் ஆனவனே -என்கிறார்
இப்படி இருப்பார் உண்டோ என்னில்

அநந்ய சரண அஹம்-
ததா விதோ அஹம்
அந்த அசரண்யன் ஆனவனே நான் என்கிறார்
பற்றிலார் பற்ற நின்றானே
த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் ப்ரபத்யே
இப்படி இருக்கிற நான்
நிரதிசய போக்யமான தேவர் திருவடிகளையே
உபாயமாக அதயவசிக்கிறேன்
அத்ர த்வயம் –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சரணாகதி கத்யம்-பிரவேசம்–சூரணை -1- -ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

January 20, 2014

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாப ஸ்ரீ தரஸ் சதா

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத ஸ்திதி தராணி த்ருணாய மேன
அஸ்மத் குரோர் கவதோச்ய தயை கசிந்தோ
ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே –

வந்தே வேதாந்த கர்ப்பூர சாமீ கர கரண்டகம்
ராமாநுஜார்ய மார்யாணம் சூடாமணி மஹர் நிஸம்

————————————————————-

ப்ரேவேசம்-
ஸ்ரீ பாஷ்யத்தில்
தத் தவம் அஸி-இத்யாதி வாக்ய ஜன்ய ஜ்ஞானமே மோஷ சாதனம் என்றும்
கர்ம ஜ்ஞான சமுச்சயமே மோஷ சாதனம் என்றும் சொல்லுகிற
குத்ருஷ்டிகளை நிரசிக்கைக்காக
கர்ம அங்கமாய் வேதன த்யான உபாசன ஆதி சப்த வாச்யமாய்
பக்தி ரூபாபன்னமான உபாசாத்மாக ஜ்ஞானமே
வேதாந்த ப்ரதிபாத்யமான மோஷ சாதனம் என்று இவர் நிச்சயித்து அருளிச் செய்கையாலே
இவர் மோஷ சாதனமாக அறுதி இட்ட அர்த்தம் இதுவே என்று கொண்டு தம்முடைய
ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தையே விஸ்வசித்து இருக்கும் சாத்விகர் இத்தையே
விஸ்வசித்து இருக்கக் கூடும் என்று பார்த்து அருளி
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமாய்
தமக்குத் தஞ்சமாகத் தாம் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் –பிரபத்தி -என்னும் இடத்தை
இக் கதய ரூபேண வெளி இட்டு அருளுகிறார் –
ஆனால் இப் பிரபத்தி தன்னையே கொண்டு குத்ருஷ்டி நிரசனம் பண்ணாது ஒழிவான் என் என்னில்
பிராமணன் சண்டாளனுக்கு வேதத்தை உபதேசித்தால் போலே
தூரஸ்தர் ஆனவர்களுக்கு பரம ரகஸ்யமான இவ்வர்த்தத்தை வெளி இட ஒண்ணாது என்று பார்த்து –
அவர்கள் இழிந்த சாஸ்திர முகத்தாலே அவர்களை நிரசித்து
சாஸ்திர தாத்பர்யமான ஸ்வ சித்தாந்தத்தை இம் முகத்தாலே
வெளியிடுகிறார் –

வேதாந்தங்களில் மகா பதமாக சொல்லுகிற பக்தியைக் காட்டில் இப் பிரபதிக்கு ஏற்றம் என் என்னில்
அது அதி க்ருதாதிகாரமுமாய்
துஷ்கரமுமாய்
விளம்ப பல பிரதமுமாய்
பிரமாத சம்பாவனை யுள்ளதுமாய்
சாத்யமுமாய்
ஸ்வரூப அன்னு ரூபமுமாய்
பிராப்யத்துக்கு விசத்ருசமுமாய் இருக்கும் –
இதுவோ என்றால்
அதுக்கு எதிர்த் தட்டாம்படி சர்வாதிகாரமுமாய்
1-ஸூ கரமுமாய்
2-அவிளம்ப பல பிரதமுமாய்
3-பிரமாத சம்பாவனையும் இன்றிக்கே–4-சித்தமுமாய்
5-ஸ்வரூப அனுரூபமுமாய் -6-பிராப்யத்துக்கு சத்ருசமுமாய் இருக்கும் –

ஆனால் இவ்வுபாயம் வேதாந்த சித்தமோ அன்றோ -என்னில்
யாஜ்ஞிகீயமான உபநிஷத்தில்
சத்யம் தபோ தம சமோ தானம் தம ப்ரஜனனம் அக்னய
அக்னி ஹோத்ரம் யஜ்ஞோ மானசம் நயாசோ த்வாதச -என்று
ஒன்றுக்கு ஓன்று உத்க்ருஷ்டமாக சொல்லிப் போந்து
எல்லாவற்றுக்கும் மேலாக
தஸ்மாத் நயாச மேஷாம் தபஸா அதிரிக்த மாஹூ -என்று
தபஸ்ஸூக்களில் வைத்துக் கொண்டு அதிரிக்தமான தபஸ்ஸூ பிரபத்தி என்று இதினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று
அதுக்கு மேலே
தர்மஜ்ஞ சமய பிரமாணம் வேதாச்ச –ஆபஸ்தம்ப சூத்திரம் என்று பிரபல பிரமாணமான ஆசார்ய ருசி பரிக்ருஹீதத்வம் ஆகிற ஏற்றமும் இதுக்கு உண்டு
வேதாச்ச -என்று வேதமும் அப்ரதான பிரமாணமாம்படி இறே
வைதிக பரிக்ருஹீதத்வத்தின் பிரமாண அதிசயம் இருப்பது –
அளவுடையாராய் இருப்பார்க்கு இதுவே போருமாயிற்று பிராமணியத்துக்கு
இது தான் அளவில்லாதார்க்கு வேதாந்த சித்தமுமாய் இருக்கும் –
ஆக
1-இப்படி வேதாந்த சித்தமுமாய்
2-ஸ்வரூப ப்ராப்தமுமாய்
3-ஆசார்ய ருசி பரிக்ருஹீதமுமாய்
4-சரண்ய ஹ்ருதய அனுசாரியுமாய் -இருக்கையாலே
அதிலும் இதுவே அனுஷ்டேயம் என்னும் இடத்தை தம்மை விஸ்வசித்து இருக்கும் சாத்விகர்
இழக்க ஒண்ணாது என்று பார்த்து
தாமும் பெரிய பெருமாளும் அறிந்ததாக அனுசந்த்து விட அமைந்து இருக்க
தம்முடைய பரம கிருபையால் கத்ய  முகேன  வெளியிடுகிறார்

இது தான் அவதரித்த படி எங்கனே என்னில்
ஒரு திருவுத்தர திரு நாளிலே
பெருமாளும் நாச்சியாருமாகப் புறப்பட்டு ஏறி அருளா நிற்கும் அளவிலே
எம்பெருமானார் எழுந்தருளி திருவடி தொழா நின்றார்
அஸ்யாம் அவஸ்தாயாம்-திரு உள்ளத்திலே சம்சார பீதி நடையாட
திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கவதுக்குப் பாசுரம் இட்டபடி
முதலிலே சம்சார பய பீதராய்க் கொண்டு பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த போதே-
பெரிய பெருமாள் திருவடிகளிலே சரணம் புக்கிலரோ –
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்று அன்றோ சரண்யன் ஹிருதயம் இருப்பது
ஆனபின்பு
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் ப்ரபலார்தன
மாம் நயேத் எதி காகுத்சதஸ் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்றும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றும்
சொல்லுகிறபடியே உடையவன் உடைமையைச் செய்தபடி செய்கிறான் என்று ஆறி இருக்கப் பிராப்தமாய் இருக்க
திரியட்டும் இப்போது சரணம் புக வேண்டுவான் என் என்னில்
அவ்வளவு ஆறி இருக்க மாட்டாதே தம் பிராப்ய த்வரையால் சரணம் புகுகிறார்
இது இறே ஆழ்வார்களுக்கும் ரீதி
அவர்களை அடி ஒற்றுகிற ஆசார்யர்களுக்கும் அதுவே ரீதியாம் அத்தனை அன்றோ –
சம்சார பயமும் ப்ராப்ய ருசியும் கனக்கக் கனக்க
ஒருகால் சரணம் புக்காப் போலே
ஒன்பதின்கால் சரணம் புகும் இத்தனை இறே அவர்கள்
ஆக
சம்சார நிவ்ருத்தி பூர்வமாகக் கைங்கர்ய சித்திக்குப்
பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் புகுகிறார் –

பிரவேசம் முற்றிற்று –

——————————————————————–
முதல் சூரணை
அவதாரிகை –
இதுதான் த்வயத்துக்கு வியாக்யானம் ஆகிறது –
இதில் முதல் சூரணை யிலே
சரணம் புகுவார்க்கு சரணம் புக யோக்யதை யுள்ளது கண் அழிவு அற்ற
உபேய ருசியும் உபாய அத்யாவசாயமும் உண்டானால் ஆகையாலே
தத் சித்தி அர்த்தமாகப் பிராட்டி திருவடிகளில் சரணம் புகுகிறார்
அது என் –
தேவேந்த்ரஸ் த்ரிபுவன மரத்த மேகபிங்க
சர்வர்த்திம் த்ரிபுவன காஞ்ச கார்த்த வீர்ய
வைதேஹ பரமபதம் பிரசாதய விஷ்ணும்
சம்ப்ராப்தாஸ் சகல பல பிரதோ ஹி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று
சர்வ அபேஷைகளுக்கும் பலப்ரதன் அவன் அன்றோ
ஆனபின்பு அந்த யோக்யதா சித்திக்குமாக அவன் திருவடிகளிலே சரணம் புகத் தட்டு என் -என்னில் –
போக்தாரம் யஜ்ஞ்த தபஸாம் சர்வ லோக மகேஸ்வரம்
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் ஜ்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி-ஸ்ரீ கீதை -5-29-என்கிறபடியே
சர்வ பூத ஸூஹ்ருத்தாய் இருக்க
ஈஸ்வரனையும் நீரிலே நெருப்பு கிளருமா போலே
தானஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான்
ஷிபாம் யஜஸ்ரம ஸூபாநாஸூ ரீஷ்வேவ யோநிஷூஸ்ரீ கீதை -16-19-என்றும்
மத்பக்தம் ஸ்வபசம் வாசபி நிந்தாம் குர்வந்தி யே நாரா
பத்மகோடிச தே நாபி ந ஷமாமி வஸூ ந்தரே-ஸ்ரீ வராஹ புராணம் -என்ன
அபராதங்களைப் பண்ணிப் போந்த நாம் நேர் கொடு நேர் நின்று சரணம் புக்கால்
பூர்வ வ்ருத்தத்துக்கு ச்மாரகமாவுதோம் என்று தம்மை அஞ்சி
தம் திறத்தில் ஈஸ்வரனுக்கு உண்டான சீற்றத்தை ஆற்றுமவளாய்
ஸ்த்ரீத்வ பிரயுக்தமான மார்த்த்வத்தை உடையவளுமாய்
மாத்ருவ பிரயுக்தமான குடல் துவக்கை  உடையளுமாய்
இவர்கள் சொல்லும் வார்த்தையை செவி தாழ்த்துக் கேட்க்குமவளாய்
அவனைத் தன்  போக்யதையால் துவக்கிக் கேட்பிக்குமவளாய்
அதுக்கு மேலே
ஸ்தனந்தய பிரஜைக்கு தாய் கீழே ஒதுங்குகை ப்ராப்தம் ஆனவோபாதி ஸ்வரூப ப்ராப்தையுமாய் இருக்கையாலே
பிராட்டி திருவடிகளிலே சரணம் புகுகிறார்
நெடும்காலம் விஷய பிரணனாய் போந்த பிரஜை நிவ்ருதனான வன்று பிதாவின் பக்கல்
நேர் முகம் பார்த்து சொல்லுகை அரிதாய்
மாதாவின் பக்கல் சொல்லுகை எளியதாய்  இருக்கும் இறே
பிரதமத்தில் ஆஸ்ரயிக்கைக்கும் கூட இறாய்த்த இவர்
இவளை ஆஸ்ரயித்த அனந்தரம்
பண்ணின அபராதங்களை
ஷமஸ்வ -என்றார் இறே அந்தப்புர பரிகாரம் ஆகையாலே –

————————————————————————————

ஓம் பகவன் நாராயண
அபிமத அநுரூப
ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணாம்
பத்மவ நாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம்
அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே

————————————————————————————-

பகவன் நாராயண –
பகவச் சப்தத்தாலே
மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரேண
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த த்வயான் வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக்ரச்ய வீர்யச்ய யசசஸ் ஸ்ரீ ய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ஸ ஸ பூதேஷ்வசே ஷேஷூ வகார்த்தஸ் ததோச்வ்யய
ஜ்ஞான சக்தி பலை ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் ஸ்ய சேஷத
பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவமேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா சமன்வித
சப்தோயம் நோபசாரேன த்வன்யத்ர ஹ்யுவசாரத -என்கிறபடியே
ஹேய சம்பந்த ரஹித பூர்ண ஷாட் குணயத்தைச் சொல்லுகிறது –
இத்தால் பயிருக்கு நீர் நிலை போலே சர்வ ஆத்மாக்களுக்கும் கூட உஜ்ஜீவன ஹேதுவான குணபூர்ணனுமாய்
பிறர் உடைய தோஷம் தட்டாத படியான ஹேய ராஹித்யத்தையும் உடையவன் –என்கிறது-

நாராயண –
பகவச் சப்தத்திலெ சர்வமும் இல்லையோ
இனி நாராயண சப்த அபேஷை உண்டோ -என்னில்
அத்யத்ர ஹ்யுபசாரத -என்கிறபடியே
பகவச் சப்தத்துக்கும் ப்ரஹ்ம சப்தத்தோபாதி வ்யக்த் யந்தரங்களிலே ஔ பசாரிகமாக வாகிலும் பிரயோகம் உண்டு
அதுவும் இன்றியே அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தமாய்
யோகரூடியாலே நாராயண பதம் சர்வேஸ்வரனுக்கே வாசகமாய் இருக்கும்
அத்தாலே விசேஷிக்கிறது-
ஆக –பகவன் நாராயண -என்று
சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
உபய விபூதி நாதனான சர்வேவரனைச் சொல்லிற்று ஆயிற்று –

பிராட்டி திருவடிகளிலே சரணம் புகுகிறார் ஆகில்
இவ்விடத்தில் இது சொல்ல வேண்டுவான் என் என்னில் –
ஆற்றுக்கு சஹ்யம் போலேயும்
விளை நிலத்துக்கு ஏரிக் கட்டு போலேயும்
இவளுடைய கல்யாண குணங்களுக்கு அடியான கல்யாண குண யோகத்தையும்
இவளுடைய விபூதிக்கு அடியான உபய விபூதி யோகத்தையும் சொல்லுகிறது –
அவனைச் சொல்லும் போது –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம் -ஹரிவம்சம் –என்ன வேண்டினவோபாதி
இவளைச் சொல்லும் போதும் –
அஸ்யேசானா ஜகதோ விஷ்ணு பத்நீ -என்ன வேண்டி இறே இருப்பது
நிரூபகத்தை ஒழிய நிரூப்யத்துக்கு ஸ்திதி இல்லாதவோ பாதி
நிரூப்யத்தை ஒழிய நிரூபகத்துக்கும் ஸ்திதி இல்லையே –

அபிமத
ஏவம்விதனாய் இருந்துள்ள இவனுக்கு அபிமதமாய் இருக்கை-
அநுரூப – 
ராஜாக்கள் நீச ஸ்திரீ காற்கடையிலே துவளுமா போலே
அபிமதமே ஆகிலும் அநனுரூபமாய் இருப்பன உண்டு –
அங்கன் அன்றிக்கே
உனக்கு ஏற்கும் கோலமலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ-திருவாய்மொழி -10-10-6-யென்னும்படியே
அனுரூபமாய் இருக்கை –
இப்படி அபிமதமாய் அனுரூபமாய் இருக்குமவை எவை என் என்னில் –
ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதிகள் –
அவனுக்கு இவள் ஸ்வரூபம் அபிமதமாய் இருக்கை யாவது –
இவள் ஸ்வரூபம் அவன் ஸ்வரூபத்துக்கு தாரகமாய் இருக்கை
ராவணன் மாயா சிரசைக் காட்டின போதும் இந்த்ரஜித்து மாயா சீதையைக் காட்டின போதும்
இருவருக்கும் மெய் என்று பிரமிக்கச் செய்தே
அந்யோந்யம் தரித்து கிடந்த இடம் ஸ்வரூப சத்தையால்  இறே-
அவன் ஸ்வரூபம் இவளுக்கு தாரகம் ஆகிறது ஸ்வரூபத –
இவள் ஸ்வரூபம் அவனுக்கு தாரகம் ஆகிறது அபிமதத்வத்தாலே

அனுரூபம் ஆகையாவது –
நித்யை வைஷா ஜகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயினி
யதா சர்வகதோ விஷ்ணுஸ் ததை வேயம் த்விஜோத்தம-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17-என்றும்
த்வம் மாதா சர்வ லோகானாம் தேவ தேவோ ஹரி பிதா
த்வயை தத் விஷ்ணு நா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
யுக்தா ராமஸ்ய பவதீ தர்ம பத்நீ யசச்விநீ
பிரதி சந்திச மாம் தேவி கமிஷ்யே யத்ர ராகவ -யுத்த -116-47-என்றும்

ஸ்வ வைஸ்வ ரூப்யேண சதா அநுபூதயா அப்யபூர்வ வத் விஸ்மயமாத தா நயா
குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ் சதா தவை வோசிதயா தவ ஸ்ரீ யா -ஸ்தோத்ர ரத்னம் -38-என்றும்
சொல்லுகிற படியே இவளுடைய ஸ்வரூபம் அவனோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை
ரூப
ரூபம் ஆவது -விக்ரஹம்
ஸ்வரூபத்தை சொன்ன அநந்தரம் ஸ்வரூப குணங்களைச் சொல்ல பிராப்தமாய் இருக்க
விக்ரஹத்தைச் சொல்லிற்று –ஸ்வரூபத்துக்கும் ஸ்வரூப ஆஸ்ரிதமான குணங்களுக்கும் பிரகாசமாகையாலே
ஸ்வரூபம் அபிமதம் ஆகா நின்றால்
ரூபம் அபிமதம் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே
அது தான் ஸ்வரூப ஆஸ்ரிதம் என்று இறே அபிமதம் ஆயிற்று
ரூபம் அபிமதம் ஆகையாவது
அகலகில்லேன் இறையும் -என்று அவள் துணுக்  துணுக்  என்னும்படியான அவன் தானும் மேல் விழும்படியாய் இருக்கை –
மெல்லியல் தோள் தோய்ந்தாய் –
மா மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -என்றும் அவனுக்கு
உண்ணும் சோறு பருகு நீரும் இவள் வடிவேயாய் இறே இருப்பது
இது அனுரூபம் ஆகையாவது
சீலத்தாலும் வயசாலும் வ்ருத்தத்தாலும் துல்யமாய் இருக்கை –

குண
ரூபாநந்தர பாவித்வத்தாலே இது தான் சௌந்தர்யாதிகளாகக் கடவது
இவையும் ரூபத்துக்கு நிறம் கொடுத்து போக வர்த்தகங்களுமாய் இருக்கையாலே
அபிமதமாய் இருக்கும்
அத ஏவ அனுரூபமாய் இருக்கும்
விபவ
அர்த்தோ விஷ்ணு ரியம் வாணீ நீதிரேஷா நாயோ ஹரி
போதோ விஷ்ணு ரியம் புத்தி தரமோ சௌ சத்க்ரியா த்வியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-18-என்று
அர்த்தாம்சம் அவனதாய் சப்தாம்சம் இவளதாய் -இருக்கை –
இவள் நியாய சாஸ்திரம் அவன் நியாயம்
அவன் ஜ்ஞானம் இவள் அதற்கு உபகரணமான புத்தி –
அவன் தர்மம் -இவள் அதை சாதிக்கும் நல் கர்மம் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் ஆத்மா குஹாயாம் நிஹி தோசய ஜந்தோ
தமக்ரதும் பஸ்யதி வீத சோகோ தாது ப்ரசாதான் மஹிமான மீசம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-என்னும்படி
புல்லிங்க பதார்த்தங்கள் அவனதாய்
ஸ்திரீ லிங்க பதார்த்தங்கள் இவளதாய் இருக்கை –
இயம் ஸா தயிதா பார்யா ராஷசீ வசமாகதோ
சர்வான் போகான் பரித்யஜ்ய பர்த்ரு சிநேக பலாத் க்ருதா
அச்சிந்த்தயித்வா துக்காணி பிரவிஷ்டா நிர்ஜனம் வனம் -சுந்தர -16-19

என்று சர்வ போகங்களையும் விட்டு காடு ஏறப் புறப்பட்டாள் என்கையாலே
லீலா உபகரணங்களும் போக உபகரணங்களும் அவன் விபூதியிலும் விஞ்சி இருக்கை
அவை யாவன-
முற்றிலும் பைம் கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8
பூவை பைம் கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்-யென்னுமவையும் -திருவாய் மொழி -6-7-3-
ஸ்ரக் சந்தநாதிகளும்
இவை தான் சாமான்யமாயும் அந்தப்புர பரிகரமாயும் இருக்கும்
அங்கன் அன்றியே
யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிச்சய
யோ யஸ்து நாரீபாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா
ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே
அதகிம் பஹூ நோக்தேன நர நாரீமயோ ஹரி -என்றும்
ஹேலாயா மகிலம் சராசரமிதம் போக்கே விபூதி பரா
தன்யாச்தே பரிசார கர்மணி சதா பஸ்யந்தி யே ஸூ ரய
ஸ்ரீ ரெங்கே ஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்க்கே வயம்
சேஷித்வே பரம புமான் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரனே -ஸ்ரீ குண ரத்ன-22 -யென்னும்படியே
ஸ விபூதிகனான ஈஸ்வரன் என்றுமாம்
இது அவனுக்கு அபிமதம் ஆகிறதும் அந்தபுரகரம் ஆகையாலே
ஐஸ்வர்ய-
அதாவது –சகல பதார்த்த நியமன சாமர்த்தியம்
த்ரிவித சேதனரையும் ஸ்வரூபேண நியமிக்கும்
ஈஸ்வரனை பிரணயித்வத்தாலே நியமிக்கும்
நியமிக்கும் பிரகாரம் என் என்னில் –
பத்தரைக் கர்ம அனுகுணமாக நியமிக்கும்
நித்ய முக்தரை ஸ்வரூப அனுரூபமாக நியமிக்கும் –
ஈஸ்வரனை ரஷண அனுகுணமாக நியமிக்கும்
இது தான் அபிமதமாகிறதும் புருஷோத்தமத்வ ஸூசகம் ஆகையாலே
பிரணயினுடைய நியமனம் பிரணயிக்கு பும்ஸ்த்வ அவஹமாய் இருக்கும் இறே
இது ஜ்ஞாநாதி குணங்களுக்கும் உப லஷணம்-
சீல-
சீலம் ராஷசிகள் பக்கல் பிரசித்தம்
ராவணனைக் குறித்து –
மித்ர மௌ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப் சதா
வதம் சாநிச்சதா கோரம் த்வயா சசௌ புருஷர்ஷப -சுந்தர -21-19-என்றும்
விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞஸ் சரணாக தவத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவது மிச்சசி-சுந்தர -21-20-என்றும்
ராஷசிகளைக் குறித்து
ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வ -சுந்தர -58-90-
ராஜ சம்ஸ்ரய வச்யாநாம் குர்வந்தீநாம் பராஜ்ஞயா
விதேயா நாஞ்ச தாசீநாம் கே குப்யேத் வானரோத்தம-யுத்த 116-38
பாபாநாம் வா ஸூ பாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்
கார்யம் கருணா மார்யேண நகஸசின் நாபராத் யதி -யுத்தம் -116-44-என்றும்
திருவடியோடே மறுதலித்து ரஷித்தாள் இ றே
இக்குணம் அபிமதம் ஆகிறது
தனக்கு ஸ்வரூபமான ரஷணத்துக்கு உபயோகி யாகையாலே
ஆதி -சப்தத்தாலே அனுக்தமான குண விசேஷங்களை நினைக்கிறது
சமஸ்த கல்யாண குணாத்மகனைப் பேசிலும் இவளைப் பேசி முடியாது -என்கை

அநவதிக அதிசய
இவை தான் ஓர் ஒன்றே அபரிச் சேத்யமாய் இருக்கும்
அசங்யேய-
எண்ணிறந்து இருக்கை
கல்யாண
சதஹ்ரதாநாம் லோலத்வம் சஸ்த்ராணாம் தீஷ்ணதாம் ததா
கருடா நிலயோ சைக்ர்யம் அனுகச்சந்தி யோஷித
இயம் து பவதோ பார்யா தோஷை ரேதைர் விவர்ஜிதா
ஸ்லாக்யா ச வ்யபதேச்யா ச யதா தேவீ ஹ்யருந்ததீ -ஆரண்ய -13-7-என்கிறபடியே
உள்ளது எல்லாம் அழகியதாய் இருக்கை
இவள் குணங்களுக்கு வ்யாவர்த்தம் அவன் குணங்கள் –
அவன் குணங்களுக்கு தோஷம் எது என்னில்

தசை யுண்டு –
அதுதானும் இவளுக்கு இன்றிக்கே இருக்கை
குணகணாம்-
இவை தான் திரள் திரளாய் இருக்கை
பத்மவ நாலயாம்
பத்மசப்தம் -மங்களங்களுக்கு உப லஷணமாய் -சர்வ மங்கள நிவாஸிநீ -என்கை
அங்கன் இன்றியே -சர்வ கந்த சர்வ ரச -என்கிற வஸ்துவையும் ஸ்வ சம்பந்தத் தாலே பரிமளிதமாக்குகை -என்றுமாம்
பத்ம சப்தத்தாலே போக்யதையைச் சொல்லிற்றாய்-அத்தாலே
நிரதிசய போகய பூதை -என்றுமாம்
பரிமளம் இறே இவள் வடிவுக்கு உபாதானம்
சர்வ கந்தஸ் சர்வ ரச -என்னும் இவை இரண்டும் இத்தலையிலே கிடந்தபடி –
பகவதீம்
பகவத் சப்தம் பூஜ்ய வாசி-தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா சமன்வித
சப்தோயம் நோபசாரேன –

அவனுக்கு ஸ்வரூப அனுபந்தியான நிரங்குச ஸ்வா தந்த்ர்யம் உண்டு –
க்ரோத மாஹாரயத் தீவரம் வதார்த்தம் சர்வ ரஷஸாம்
துஷ்ப்ரேஷ சோபவத் க்ருத்தோ யுகாந்தாக்னி ரிவ ஜவலன்-ஆரண்ய -24-34-என்று
கோபத்தை அருளப் பாடிட்டுக் கார்யம் கொள்ள வேண்டும் என்கிறவனுக்கும் பூஜ்யையாய் இருக்கை –
ஆக -பத்மவ நாலயாம் பகவதீம் -என்கிற இத்தால்
தன் வழியாக அவனைப் பற்றினால் குற்றம் பாராதபடி அவனைத் தன் போக்யதையால்-துவக்கிப் பொறுப்பிக்குமவள்-என்கை
ஸ்ரியம்-
தன்னைப் பற்றி சர்வமும் உண்டாம்படியாய்
தான் அவனைப் பற்றி உளளுமாய் இருக்கை –
இதிலே நிருக்தி பிரக்ரியையும் நடக்கக் கடவது –
தேவீம்
வடிவிலே புகர் இருக்கிறபடி
அவனோட்டைச் சேர்த்தியாலே த்யோதமானையாய் இருக்கிறவளை-
நித்ய அநபாயிநீம்
விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீம் -என்கிறபடியே அவனோடு உண்டான நித்ய சம்ச்லேஷத்தாலே-அபாயம் இன்றியே இருக்கை –அபாய -விஸ்லேஷ
நிரவத்யாம் –
கீழ்ச் சொன்ன ஏற்றம் எல்லாம் ஸ்வார்த்தமாய் இராதே
அத்தலைக்கேயாம்படி இருக்கை –
ஏதேனும் ஓன்று எனக்கு என்கை அவத்யம்
பிறர்க்கு என்கை நிரவத்யம்
இனி விஷய விபாகமே யுள்ளது
அது வகுத்த விஷயமாம் இத்தனையே வேண்டுவது
அவன் தானும் தன்னையும் தன் உடைமையையும்

ந தே ரூபம் ந ச ஆகாரோ நாயுதானி நசாஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் பிரகாசசே-ஜிதந்தே -1-5-என்று இறே இருப்பது
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
சர்வேஸ்வர சாம்ராஜ்யத்திலே -தேவர்க்கும் தேவனானவனோடு ஒக்க அபிஷிக்தை யானவள் –
க்ருதாபிஷேகா மஹிஷீ போகி அந்யோன்யா ந்ருபச்த்ரிய
அகில ஜகன் மாதரம் –
இப்பெரிய மேன்மையைக் கண்டு இறாய்க்க வேண்டாதபடி சகல சேதனரோடு உண்டான
அவிநாபூதமான குடல் துடக்கைச் சொல்லுகிறது –
சார்வ பௌமன் மஹிஷி தன் பிரஜை சேற்றை யளைந்து மடியிலே ஏறப் புக்கால் அணைத்து உச்சி முகக்கும் இத்தனை இ றே –
பிரஜையின் பக்கல் ப்ராப்தி இறே ஜீவிப்பது
அகில சப்தத்தில் தாமும் அந்தர்பூதர் ஆகையால் தம்மையும் கூட்டிக் கொள்கிறார் –
தம் பக்கலில் வாத்சல்யாதிசயம் கண்டார் ஆகையாலே விசேஷித்து அருளிச் செய்கிறார் –அஸ்மன் மாதரம் -என்று

அசரண்ய சரண்யாம் –
குணலேச மாத்ரத்தாலெ குற்றங்களை அடையப் பொறுத்து உகக்குமவள் –
அங்கன் அன்றிக்கே -தேன மைத்ரீ பவது -என்று குற்றத்தோடே உகக்குமவள்
புறம்பு புகல் அற்றார்க்கு பகவத் விஷயம் புகலாய் இருக்கும்
பகவத் விஷயத்துக்கும் புறம்பாய் இருப்பார்க்கும் புகலாய் இருக்கும் இவள் –
செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திரு மொழி -4-9-2-என்னுமவர் சீறிக் கையும் வில்லுமான அன்றும்
இவள் திருவடிகளே புகலாய் இருக்கும்
சர்வ லோக சரண்யர்-என்று காளமூதித் திரிகிறவர் அசரண்யர் ஆனவன்றும்
இவள் சரண்யையாய் இருக்கும்
சரணம் என்கிற உக்தியைப் பற்றி சரண்யர் அவர் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யையாய் இருக்கும் இவள் –
ஸ பித்ரா ஸ பரித்யக்தஸ் ஸூ ரைச்ச சமஹர்ஷிபி
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ் தம் நிபதிதம் பூ மௌ சரண்ய சரணாகதம்
வதார்ஹமபி காகுத்ச்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34/35–
மித்ர மௌ பயிகம் கர்த்தும் –
விதி தாச ஹி தர்மஜஞ
ராஜ சம்ச்ரயவச்யானாம்
பாபாநாம் வா ஸூ பானாம் வா
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய -என்கிறபடியே
சர்வ சமாஸ்ரயநீயமான பகவத் விஷயத்துக்கு புறம்பாய் இருப்பாரும் உண்டோ என்னில்
அநந்ய சரணோஹம்-
அந்த அநந்ய சரணன் ஆகிறான் நான் என்கிறார்
சரணம் பிரபத்யே
அசரண்யர்க்கும் சரண்யரான தேவர் திருவடிகளையே உபாயமாக அத்யவசிக்கிறேன்
அசரண்யர்க்கும் சரணை யாவது என் என்னில்
அகில ஜகன் மாதா வாகையாலே அபேஷா நிரபேஷமாகப் பரிக்ரஹிக்கும் தேவர்க்கும்-பரிக்ரஹித்து அல்லது நிற்க ஒண்ணாத படியான அபேஷையையும் பண்ணினேன் –
சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம்
ஸ்ரீ யம் லோகே தேவ ஜூஷ்டா முதாராம்
தாம் பத்ம நேமிம் சரணம் அஹம் ப்ரபத்யே
அலஷ்மீர் மே நச்யதாம் த்வாம் வ்ருனே—-ஸ்ரீ ஸூ க்தம் -5

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்