Archive for the ‘இராமானுச நூற்றந்தாதி’ Category

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியில் சரமோபாய நிர்ணயம்

December 11, 2022

எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்க வேணுமிறே.
எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமல ப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே.
அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே”
என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே.
அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக் கூடாது என்றபடி.
பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்ல வேணுமென்கையாலே
தந்நாமாநுஸந்தானம் தத் பாத கமல ப்ராவண்ய (ஜநக?)மென்றபடி,

இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே.
“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப் பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று
ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார்.

“பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி ஆறொன்றுமில்லை” என்று அந்ய யோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே
சரம பர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால்,
ப்ரதம பர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி
ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது.

இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக் கலசாதபடி இருக்கவேணுமென்றபடி.
இல்லையாகில் இரு கரையர் என்னுமிடம் சொல்லப்படும்.

வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து
ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடு கநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம்.
ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே.
இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று.

ஒரு நாள் எம்பெருமானார் வடுக நம்பியை அழைத்தருளி,
‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள
‘வேம்பின் புழுப் போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார்.
அதாவது – வேம்பின் புழு வேம்பன்றி யுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி
இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதி யிட்டிருப்பது தத் அபிமானத்தை யொழிய
வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி.

‘கரும்பின் புழு’ என்று சொல்லுகை யன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில்
பரம தயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத்
தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும்,
‘நான் உன்னை யன்றியிலேன்” என்கிறபடியே ததபிமான ராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி
“களை கண் மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்க வேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று.

இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரண த்ரயத்தாலும் ததேக நிஷ்டனாயிருக்கிறவன்
தத் வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி.

ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத் வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே.
“பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று
எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ர வித்தமரான அமுதனார்.

நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே,
எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று
திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள,
அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து,
“உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும்.
உம்மை யண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய,

நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய,
பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து,
நம்பிள்ளை சரம தஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில்,
“எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ?
அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரைய வேண்டா.
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்;
நான் பெற்ற பேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய்,
பரம காருணிகராய் எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய்
அவர் திருவடிகளையே ப்ராப்ய ப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு
வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று
அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள்
களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி.

இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில்,
“உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே
எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம்.

“இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே
எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீல குணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை
சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே.

“இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே,
எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர் மிண்டரோடே
ஸஹவாஸ மின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி.

“சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத் ஸஹவாஸ ராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே
தத் ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி.

எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில்
ஸ்வரூபஹானி பிறக்குமிறே.

”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி.

“இராமாநுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன்” என்கையாலே,
எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி.

“அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத் ஸ்மரணமே, அநிஷ்ட நிவ்ருத்திகரம் என்றபடி
தத் விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம்.

‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னை யாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே
எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹ ஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தி யிருக்கும்படி
தச் சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம்.

“உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே
எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தா தாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரி க்ருத்யம்.

“இராமானுசன் திருநாமம் நம்ப வல்லார் திறத்தை” என்று தொடங்கி
“செய்வன் சோர்வின்றியே” என்கையாலே
எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸ யுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல்
கரண த்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம்.

எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும்.
“இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று
துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.

இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுக மண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய,
அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம்
அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்ம தீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம்.

இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு|
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“,
“இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தா நிலையுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும்
நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே” என்கையாலே
எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும்.
உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.

சரமோபாய நிர்ணயம் முற்றிற்று

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-78-108-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

October 9, 2022

கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே.–78-

பதவுரை

எம் இராமாநுச

எம்பெருமானைரை!
நீ

தேவரீர்
கருத அரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து

நெஞ்சால் நினைக்க முடியாத பரிச்ரமங்கள் பட்டு என்னை நன்றாக ஏமாத்தி
கருத்தில் புகுந்து

(எனது) நெஞ்சிலே வந்து புகுந்து
உள்ளில் கள்ளம் கழற்றி

உள்ளே யிருந்த ஆத்மாபஹார தோஷத்தைப் போக்கி
திருத்தி

சிக்ஷித்து
இந்த மண் அகத்தே

இந்த லோகத்திலே
திருமகள் கேள்மனாக்கு

திருமாலுக்கு ஆளாம்படி
ஆக்கிய பின்

பண்ணிண பின்பு
மற்று ஒர் பொய்

(இதற்கு மாறான ) வேறு எந்த தப்பு விஷயமும்
பொருள் என் நெஞ்சில்

என் மனத்தில்
பொருத்தப் படாது

பொருந்த மாட்டாது.

***- எம்பெருனார் தம்மைத் திருத்துகைக்காகப் பட்ட பாடுகளை எடுத்துச் சொல்லி, இப்படி என்னைத் திருத்தி உத்தேச்யமான விஷயத்திலே ஆட்படுத்தின பின்பு இனி வேறு எந்த விஷயமும் என்னெஞ்சுக்கு இசைய மாட்டாதென்கிறார்.

————-

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து,இந்தப் பூதலத்தே
மெய்மைப் புரக்கும் இராமா னுசன் நிற்க, வேறு நம்மை
உய்யக் கொள வல்ல தெய்வமிங் கியாதென்றுலர்ந் தவமே
ஐயப் படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே.–79-

பதவுரை

பொய்யை சுரக்கும் பொருளை துரந்து

பொய்யான விஷயத்தையே மேன் மேலும் வெளிப் படுத்துகிற (புற மதத்தவர்களின்) அர்த்தங்களைக் கண்டித்து
இந்த பூதலத்தே

இப் பூமியிலே
மெய்யை புரக்கும்

ஸத்யத்தை ரக்ஷிக்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
நிற்க

எழுந்தருளி யிருக்கும் போது

(இவரைக் கணிசியாமல்)

வையத்து உள்ளோர்

இப் பூமியிலுள்ளவர்கள்
நம்மை உய்யக் கொள்ள வல்ல

நம்மை உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடிய
வேறு தெய்வம் இங்கு யாது என்று

வேறு எதாவது தேவதை இவ்வுலகில் உண்டோ என்று விசாரித்துக் (கொண்டு)
உலர்ந்து

மன வருத்தத்தாலே உடம்பு உலர்ந்து
நல் அறிவு இமந்து

(எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருக்கை யாகிற) நல்ல ஞானம் பெறாமல்
அவமே

வீணாக
ஐயம் படா நிற்பர்

ஸம்சயப் படா நின்றார்கள் ஐயா!

***- பொய்யைச் சுரக்கும் பொழுளென்றது -பொய் தவிர வேறில்லாத அர்த்தம் என்றபடி “ஸர்வம் அஸத்யம்” என்கிறவர்களாகையாலே அஸத்ய மயம். மெய்யைப் புரக்கு மிராமாநுசன் = “யதார்த்தம் ஸர்வ விஜ்ஞாநம்” என்று ஸ்தாபித்தருளினவர். புரத்தல்- காப்பாற்றுதல்.

—————–

நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர்,அவர்க்கே
எல்லா விடத்திலும் என்று மெப் போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.–80-

பதவுரை

நல்லார் பரவும் இராமாநுசன்

ஸத்துக்களாலே கொண்டாடப்படுகிற எம் பெருமானாருடைய
திரு நாமம்

திரு நாமத்தை
நம்ப வல்லார் திறத்தை

(தங்களுக்குத் தஞ்சமாக நம்பி யிருக்க வல்லவர்களுடைய படிகளே
மறவாதவர்கள் எவர்

மறவாமல் எப்போதும் சிந்திப்பவர்கள் யாரோ,
அவர்க்கே

அப்படிப்பட்ட ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே
எல்லா இடத்திலும்

ஸகல தேசங்களிலும்
என்றும்

ஸகல அவஸ்தைகளிலும்
எத் தொழும்பும்

ஸகலவித கைங்கரியங்களையும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால்

மனமொழி மெய்களென்னும் த்ரிகரணங்களாலும்
சோர்வு இன்றியே செய்வன்

பிரியாதே யிருந்து செய்வேன்.

***- தம்முடைய நிலை நின்ற நிஷ்டையைப் பேசுகிறார் இதில். ஸத்துக்களனைவரும் கொண்டாடும்படியான எமபெருமானுடைய திருநாமங்களையே தங்களுக்குத் தஞ்சமாக நம்பி யிருக்கிற மஹான்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமாநுஜ பக்த பக்தர்களுக்கே அடியேன் – ஒமிவில் காலமெல்லாம் உடனய் மன்னி வழுவிலா வடிமைகள் செய்யக் கடவேனென்றாராயிற்று. தொழும்பு = அடிமை.

—————

சோர்வின்றி உன்றன் துணை யடிக் கீழ்த்,தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற எனக்கு,அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச! இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு, இல்லை மாறு தெரிவுறிலே.–81-

பதவுரை

உன் தன் துணை அடிகீழ் சோர்வு இன்றி

தேவரீருடைய உபய பாதங்களின் கீழே
தொண்டு பட்டவர் பால்

சோராமல் அடிமைப் பட்டவர்கள் விஷயத்தில்
சார்வு இன்றி நின்ற எனக்கு

பொருத்த மில்லாமலிருந்த எனக்கு
இன்று

இன்றைத் தினத்தில்
அரங்கன் செய்ய தான் இணைகள்

பெரிய பெருமாளுடைய சிவந்த திருவடி யிணைகளே
பேர்வு இன்றி பெறுத்தும் இராமா நுசா

ஒருகாலும் விட்டு நீங்காத படி சிரோ பூஷணமாகத் தந்தருளின எம்பெருனானாரே!
இனி

இப்படியான பின்பு
தெரிவுறில்

ஆராயுமளவில்
உன்

தேவரீருடைய
சீர் ஒன்றிய கருணைக்கு

சிறந்த திருவருளுக்கு
மாறு இல்லை

ஒப்பு இல்லை

——————-

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின் றானென்ன புண்ணீயனோ!
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே.–82-

பதவுரை

தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது

தெளிவான ஞானத்தைச் சேரப் பெறாமல்
வெம் தீ வினையால்

மிகவுங் கொடியதான கருமத்தாலே
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை

உபயோக மற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலை யில்லாமல்) திரிகிற என்னை
ஒரு பொழுதில்

ஒரு க்ஷண காலத்தில்
பொருவு  அற்ற கேள்வியனாக்கி நின்றான்

ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கி யருளினவரும்
தெரிவு உற்ற கீர்த்தி

ப்ரஸித்தமான புகழை யடையவரும்
சீர் முகில் என்னும்

(ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான
இராமாநுசன்

எம்பெருமானார்
என்ன புண்ணியனோ

என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.)

——————

சீர் கொண்டு பேரறம் செய்து,நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமா னுச! இது கண்டு கொள்ளே.–83-

பதவுரை

இராமநுசா

எம்பெருமானாரே!,
சீர் கொண்டு

சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய்
பேர் அறம் செய்து

சிறந்த தருமமாகிய சரணாகதி யோகத்தை யநுஷ்டித்து
நல் வீடு செறிதும் என்னும்

பரம புருஷார்த்தமான மோக்ஷத்தை அடைந்திடுவோம் என்றிருக்கிற
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன்

ப்ரஸித்தமான ப்ரபாவத்தை யுடைய  ப்ரபந்நர்களுடைய கோஷ்டியில் நான் சேர்ந்தவனல்லேன்;
உன் பத யுகம் ஆம்

தேவரீருடைய உபய பாதங்களாகிற
ஏர் கொண்ட வீட்டை

பரம விலக்ஷணமான மோக்ஷத்தை
எளிதினில் எய்துவன்

ஸுலபமாக அடைந்திடுவேன்;
கார் கொண்ட

(ஔதார்யத்தில்) மேகத்தை வென்றிருக்கிற தேவரீருடைய
வண்மை இது

ஔதார்யம் இப்படிப் பட்டது;
கண்டு கொள்

தேவரீரே இதனைக் கண்டு கொள்ளலாம்.

(அடியேன் சொல்ல வேணுமோ?)

***- சரம ச்லோகத்திலே கண்ண பிரான் நியமித்தபடியே நாம் சரணாகதியை அநுஷ்டித்து விட்டோமாகையால் நமக்கு மோக்ஷம் கை புகுந்து விட்டதேயாமென்று அறுதி யிட்டிருக்கும் மஹான்களில் அடியேன் சோர்ந்தவனல்லேன்; அப்படி அடியேன் ஒன்றும் அநுஷ்டிக்கவில்லை. தேவரீருடைய திருவடிகளாகிற மோக்ஷத்தை அடைந்திடத் தடையில்லை யென்கிற மனவுறுதியே அடியேனுக்குள்ளது என்றாராயிற்று.

—————–

கண்டு கொண் டேனெம் இராமா னுசன் றன்னை காண்டலுமே
தொண்டு கொண் டேன் அவன் தொண்டர் பொற் றாளில் என் தொல்லை வெந் நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்று
உண்டு கொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.–84-

பதவுரை

எம் இராமாநுசன் தன்னை

ஸ்வாமி எம்பெருமானாரை
இன்று கண்டு கொண்டேன்

இன்று (உள்ளப்படி தெரிந்து கொண்டேன்;
காண்டலுமே

இப்படி தெரிந்து கொண்டவளலிலே
அவன் தொண்டர் பொன் தாளில்

அவரது பக்தர்களுடைய அழகியதிருவடிகளில்
தொண்டு கொண்டேன்

அடிமைப்பட்டேன்; (அதனால்)
என் தொல்லை வெம் நோய்

எனது பழைய கொடு வினைகளை
விண்டு கொண்டேன்

நீக்கிக்கொண்டேன்,
அவன் சீர் வெள்ளம் வாரியை

அவருடைய கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலை
வாய் மடுத்து உண்டு கொண்டேன்

வாயார அநுபவிக்கப் பெற்றேன்;
இன்னம் உற்றன

இப்படியாக இன்னமும் நான் பெற்ற நன்மை களை
ஒதில்

சொல்லத்தொடங்கினால்
உலப்பு இல்லை

(அதுக்கு) ஒரு முடிவு கிடையாது.

***- இனி மேலும் எம்பெருமானார் திருவருளால் நான் பெறப் போகிற நன்மைகள் அளவற உண்டு; எனினும் இன்றளவும் நான் பெற்ற பேறுகளுக்கு எல்லை யுண்டோ வென்றாராயிற்று.

—————

ஓதிய வேதத்தின் உட் பொருளாய், அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வெறி யாதுழல் கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும் பெரியோர்
பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்றில்லையை.–85-

பதவுரை

ஓதிய வேகத்தின் உள் பொருள் ஆய்

அத்யயநம் பண்ணப்படுகிற வேதங்களின்

உட்பொருளாயும்

அதன் உச்சி மிக்க சோதியை

அந்த வேதங்களின் முடிவாகிய உபநிஷத்துககளிலே மிகவும் விளங்குபவனாயுமிள்ள ஸ்ரீ மந் நாராயணனை
நாதன் என அறியாது

ஸர்வ சேஷி யென்று தெரிந்து கொள்ளாமல்
உழல்கின்ற தொண்டர்

கண்ட விடங்களிலும் அடிமை செய்து திரிகின்ற பாமரர்களுடைய
பேதைமை

அவிவேகத்தை
தீர்த்த

போக்கடித்த
இராமாநுசனை

எம்பெருமானாரை
தொழும்

ஸேவிக்கின்ற
பெரியோர்

மஹான்களுடைய
பாதம் அல்லால்

திருவடிகள் தவிர
என் தன் ஆர் உயிர்க்கு

எனது அருமையான ஆத்மாவுக்கு
யாது ஒன்றும் பற்று இல்லை

வேறு ஏதேனும் புகலிடமில்லை.

***- கீழ்ப்பாட்டிற் கூறின அத்யவஸாயம் எனக்கு கலியன் கொடுமையினால் ஒரு காலத்தில் மாறி விடக் கூடுமென்று நினைக்கிறீர்களோ, அப்படி நினைக்க வேண்டா; இராமாநுசனடியார் திறத்தில் கலி புருஷன் ஒரு கொடுமையும் செய்ய முடியாதவன்; மற்றவர்களைத் தான் கலி புருஷன் கெடுப்பன். எனது அத்யவஸாயம் நெடுநாளளவும் நிலை நிற்கக் கூடியதே என்றாராயிற்று.

—————

பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே
உற்றா ரென வுழன் றோடி நை யேனினி, ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமா னுசனைக் கருது முள்ளம்
பெற்றார் எவர், அவ ரெம்மை நின் றாளும் பெரியவரே.–86-

பதவுரை

பற்றா மனிசரை பற்றி

உபயோக மற்ற மநுஷ்யர்களைப் பற்றி
அப் பற்று விடாது

அந்தப் பற்றுதலை விடாமல்
அவரே உற்றார் என

அவர்களையே உறவினராகக் கொண்டு
உழன்று

அவர்கள் பினனே அலைந்து
ஓடி

அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி
இனி நையேன்

இனி மேல் துவள மாட்டேன்;
ஒள்ளிய நூல் கற்றார்

சிறந்த சாஸ்த்ரங்களைக் கற்றவர்களாலே
பரவும்

கொண்டாடப் படுகிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
கருதும் உள்ளம் பெற்றார் யவர்

அநுசந்திக்கும் படியான நெஞ்சை யுடையோர் யாவரோ,
அவர்

அந்த மஹான்களே
எம்மை

நம்மை
நின்று ஆளும் பெரியவர்

சாஸ்வதமாக அடிமை கொள்ளும் மஹாத்மாக்கள்.
ஒள்ளிய நூல்

“சுடர்மிகு சுருதி” என்றார் ஆழ்வாரும்.

——————-

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட்
குரிய சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி இராமா னுசன் மறை தேர்ந்துலகில்
புரியு நன் ஞானம் பொருந்தா தவரைப் பொரும் கலியே.–87-

பதவுரை

பெரியவர் பேசிலும்

ஞான சக்திகளால் நிறைந்த மஹான்கள் பேசினாலும்
பேதையர் பேசிலும்

ஒன்றுந் தெரியாதவர்கள் பேசினாலும்
தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று

தனது திருக் குணங்களுக்கு ஏற்ற சொற்களை எப்போதும் உடையவரென்று பல காலுஞ் சொல்லி
உணர்வில் மிக்கோர் தெரியும்

சிறந்த ஞானிகள் அநுஸந்திக்கிற
வண் கீர்த்தி

திவ்ய கீர்த்தியை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானார்
மறை தேர்ந்து

வேதங்களை ஆராய்ந்து
உலகில்

இவ் வுலகத்தில்
புரியும்

உபதேசித்தருளின
நல் ஞானம் பொருந்தாதவரை

நல்ல ஞானத்தில் சேராதவர்களை
கலி பொரும்

கலி புருஷன் பீடிப்பன்.

***- கீழ்ப்பாட்டில் “அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து. உண்டு கொண்டேன்” என்றும் “அவன் தொண்டர் பொற்றாளில் தொண்டு கொண்டேன்” என்றும் சொன்ன இரண்டு விஷயங்களுள் முதற் சொன்ன விஷயமே (அதாவது-ஸ்ரீராமாநுஜ பக்தர்களுக்கு பக்தனாயிருப்பதே) எனக்குள் சிறந்த உத்தேச்யமென்றாகிறார் இதில்.

(பெரியவர் பேசிலும் இத்யாதி) இதன் கருத்து யாதெனில்-எம்பெருமானாருடைய திருக் குணங்களை மஹா ஞானிகள் தாம் பேசி முடிக்க வல்லவர்கள்; அற்ப ஞானிகள், நம்மால் பேசமுடியாதென்று பின் வாங்கக் கூடியவர்கள்; என்பதில்லை; “ தங்களன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப” என்றும் “பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாச மலர்த் துழாய் மாலையான் -வடிவு” என்றும் சொன்னாற்போல, பெரியோர் சொன்னாலும் சிறியோர் சொன்னாலும் அவரவர் களுடைய யோக்யதைக்குத் தக்கபடி சொல்லித் துதிக்கத் தகுந்தவர் எம்பெருமானார் என்று பெரியோர்கள் தெரிந்து கொண்டு, நாம் நமது சக்திக்குத் தக்கபடி ஸ்தோத்ரம் பண்ணுவோமென்று துதிக்கின்றார்களென்கை. அப்படி துதிக்கப்படுகின்ற எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தை அநாதரித்து அவ்வுபதேசத்தின்படி நடவாதவர்களே கலி தோஷத்தினால் வருந்துவார்களென்றதாயிற்று.

—————-

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்
வலி மிக்க சீயம் இராமா னுசன் மறை வாதியராம்
புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.–88-

பதவுரை

கலி மிக்க

நிலவளம் மிகுந்த
செந்நெல் கழனி

செந்நெல் கழனிகளை யுடைய
குறையல்

திருக் குறையலூரில் அவதரித்தவராய்
கலை பெருமான்

சாஸ்த்ர மென்னும்படியான திவ்ய ப்ரபந்தகளை யருளிச் செய்த் திரு மங்கை யாழ்வாருடைய
மிக்க ஒலி பாடலை

அதிசயித்த இசையை யுடைய பெரிய திருமொழியை
உண்டு

அநுபவித்து
தன் உள்ளம் தடித்து

தமது திருவுள்ளம்
அதனால் வலி மிக்கம்

அத்தால் மிடுக்கு அதிகரித்த
சீயம்

சிங்கம் போன்ற
இராமாநுசன்

எம்பெருமானார்,
மறை வாதியராம் புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை

வேதத்தில் துர்வாதங்கள் பண்ணுகிற குத்ருஷ்டிகளாகிற புலிகள் அதிகமாய் விட்டன வென்று (அவற்றைத் தண்டிப்பதற்காக ) இவ்வுலகில் அவதரித்த படியை
போற்றுவன்

புகழ்ந்திடக் கடவேன்.

 

***- கலி மிக்க செந்நெற்கழனி = கலியாவது ஆரவாரம்; உழுவது நடுவது அறுப்பதாய்ச் செல்லுகிற கோலாஹலம்.

————-

போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர்
ஏற்றமென்றே கொண் டிருக்கிலு மென் மனம் ஏத்தி யன்றி
ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே.–89-

பதவுரை

போற்ற அரு சீலத்து

புகழ்ந்து தலைக் கட்ட முடியாத சீல குணத்தை யுடைய
இராமாநுச

எம்பெருமானாரே;
நின் புகழ்

தேவரீருடைய திருக் குணங்களை
தெரிந்து சாற்றுவனேல்

உணர்ந்து பேசுவேனாகில்
அது

(நீசனாகிய நான் ) பேசுகிறவது
தாழ்வு

(தேவரீருக்கு) அவத்யமாம்;
அது தீரில்

அப்படி நான் பேசுவது தவிர்த்தல்
உன் சீர் தனக்கு ஒர் ஏற்றம்

தேவரீருடைய திருக் குணங்களுக்கு மேன்மையாகும்
என்றே கொண்டு இருக்கிலும்

என்று நான் தெரிந்து கொண்டிருந்தாலும்
என் மனம்

எனது நெஞ்சானது
எத்தி அன்றி

(தேவரீருடைய திருக் குணங்களைப்) புகழ்ந்தல்லது
ஆற்ற கில்லாது

தரித்திருக்க மாட்டாது;
இதற்கு

இவ் விஷயத்திலே
என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவன்

தேவரீர் என்ன நினைக்குமோ வென்று பயப்படுகிறேன்.

——————

நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே
எனையாள வந்த இராமா னுசனை இருங் கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந் தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே.–90-

பதவுரை

பிறவியை நீக்கும் பிரானை

ஸம்ஸாரத்தை யொழிக்கும் உபகாரகராயும்
இ நீள் நிலத்தே

இப்பெரிய பூமியிலே
எனை ஆள

என்னை அடிமை கொள்வதற்கே
வந்த

அவதரித்தவராயுமுள்ள
இராமாநுசனை

எம்பெருமானாரை
நினையார்

சிந்தியா தவர்களாயும்,
இரு கவிகள் புனையார்

(அவர் விஷயமாக) நல்ல பாடல்களையும் பாடாதவர்களாயும்
புனையும் பெரியவர் தாள்களில்

(ஏதோ பாக்கியத்தாலே) பாடல்களைப்படுகிற மஹான்களின் திருவடிகளில்
பூ தொடையல்வனை யார்

புஷ்ப மாலைகளை ஸமர்ப்பியாதவர்சளாயுமுள்ள
மாந்தர்

மனிசர்கள்
மருள் சுரந்து

அஜ்ஞானம் அதிகமாகப் பெற்று
பிறப்பில் வருந்துவர்

ஸம்ஸாரத்ததிற் கிடந்து துன்பப்படுவர்கள்.

***- கீழ்ப்பாட்டில் அஞ்சுவனே என்ற விவருடைய அச்சம் தீரும்படி குளிரக் கடாக்ஷித்தார் எம்பெருமானார்; அந்தக் கடாக்ஷ வைபவத்தாலே அச்சம் தீரப் பெற்றுத் தேறுதலடைந்து, மநோ வாக் காயங்களில் ஏதேனாமொன்றால்  எம்பெருமானார் விஷயத்தில் ஒரு நன்மை செய்து வாழ்ந்து போகலாமாயிருக்க, பாவிகள் அதுசெய்யாதே பாழாய்ப் போகிறார்களே! என அநுதபிக்கிறார் இதில்.

—————-

மருள் சுரந் தாகம வாதியர் கூறும்,அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
பொருள் சுரந் தான், எம் இராமா னுசன் மிக்க புண்ணியனே.–91-

பதவுரை

ஆகமம் வாதியர்

(சிவன் சொன்ன) சைவ ஆகமத்தைப் பிரமாணமாகக் கொண்டு வாதம் பண்ணுகிற பாசுபதர்கள்
மருள் சுரந்து

அஜ்ஞானம் அதிகரிக்கப் பெற்று
கூறும்

(சிவனுடைய பரத்துவ விஷயமாகச் சொல்லுகிற
அவம் பொருள் ஆம் இருள் சுரந்து

நீசமான அர்த்தங்களாகிற இருள் மேலிட்டு (அதனால்)
எய்த்த

கெட்டுப் போன
உலகு

உலகத்தவர்களுடைய
இருள்

அஜ்ஞாநாந்தகாரமானது
நீங்க

போகும்படியாக
தன்

தம்முடைய
ஈண்டிய சீர் அருள் சுரந்து

விலக்ஷணமான க்ருபையைப் பெருக்கி
எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள்

“எல்லாப் பிராணிகளுக்கும் ஸ்வாமி ஸ்ரீரங்க நாதனே’ என்கிற அர்த்தத்தை
சுரந்தான்

வெளியிட்டவரான
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
மிக்க புண்ணியன்

சிறந்த புண்ணியாத்மா

***- இந்த ஸம்ஸாரிகளுடன் இப்படி விமுகராயிருக்கச் செய்தேயும் இவர்களைத் தம் பேறாக . உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக எம்பெருமானார் முயன்றதைச் சிந்தித்து அவரைக் கொண்டாடுகிறார்.

மிக்க புண்ணியனான எம்மிராமாநுசன் பொருள் சுரந்தான் என்றும், பொருள் சுரந்தவனான எம்மிராமாநுசன் மிக்க புண்ணியன் என்றும் இரண்டுபடியும் யோஜிக்கலாம்;.

—————–

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,அடி போற்றி செய்யும்
நுண்ணருங் கேள்வி நுவன்றுமிலேன்,செம்மை நூற் புலவர்க்
கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீ புகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே.–92-

பதவுரை

செம்மை நூல் புலவர்க்கு

நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவி சொல்ல வல்லவர்களுக்கும்
எண்ண அரு கீர்த்தி இராமாநுச

அளவிட முடியாத கீர்த்தியை யுடைய
இராமாநுச

எம்பெருமானாரே!,
புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன்

புண்ணியமான ஒருவிரதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை;
அடி போற்றி செய்யும்

தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான
நுண் அரு கேள்வி

ஸுக்ஷ்மமாய் அருமையான ஸ்ரவணத்தை
நுவன்றும் இலேன் இன்று

(செய்யவேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை (அப்படியிருந்தும்
என்

இன்று
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்

அடியேனது கண்ணினுள்ளேயும் நெஞ்சினுள்ளேயும்
புகுந்து நின்ற இக் காரணம் கட்டுரை

புகந்து எழுந்தருளி யிருப்பதற்குக் காரணமருளிச்செய்ய வேணும்.

——————–

கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரனல்லனே,என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி
வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே.–93-

பதவுரை

கிட்டி

அடியேன் பக்கல் வந்து நெருங்கி
தன் அருள் என்னும் ஒரு வாள் உருவி

தம்முடைய கிருபை யாகிற அழகிய வாளை உறையில் நின்றும் கழற்றி (அதனால்)
என் பெருவினையை கிழங்கொடு வெட்டி களைந்த

எனது மஹா பாபங்களை வேரோடே அறுத்தொழித்த
இராமாநுசன் என்னும் மெய் தவன்

எம்பெருமானாரென்கிற மா முனிவர் எப்படிப் பட்டவரென்றால்
கயவர்

துஷ்டர்களான குத்ருஷ்டிகள்
கட்டம் பொருளை மறை  பொருள் என்று சொல்லும் பெட்டை

தப்பான அர்த்தங்களை வேதங்களின் அர்த்தமாகக் கொண்டு சொல்லுகிற பிரட்டுப் பேச்சுகளை
கெடுக்கும் பிரான் அல்லனே

கண்டித்தொழித்த மஹா நுபவரமனறோ.

***- கட்டம்-கஷ்டம்; கட்டப்பொருளொன்றது கஷ்டப்பட்டுச் சொல்லும் பொருள் என்றபடி; மதாந்தரஸ்தர்கள் சொல்லும் பொருள்கள் அஸ்வரஸமாகையால் க்லிஷ்டங்களாயிருக்குமென்க. கயவர்-நீசர், துஷ்டர் பெட்டு = பிறரை வஞ்சிக்கச் சொல்லும் பொய்ப் பேச்சு. மெய்த்தவன்-தவமாவது சரணாகதி யோகம்.

—————

தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப் பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள் மகிழ்ந்தே.–94-

பதவுரை

தீது இல் இராமாநுசன்

எவ்வகைக் குற்றமும் அற்றவரான எம்பெருமானார்
தன்னை சார்ந்தவர்கட்கு

தம்மை வந்து அடைந்த வர்களுக்கு
தவம் தரும்

சரணாகதி நிஷ்டையைக் கொடுத்தருள்வர்;
சரியா பிறவி பவம் தரும் தீவினை

நிவர்த்திக்க முடியாத ஜந்ம ஸம்ஸாரங்களை உண்டாக்குகின்ற கொடு வினைகளை
பாற்றி தரும்

போக்கடித் தருள்வர்;
பரம் தாமம் என்னும் திவம் தரும்

பரமபதமென்று சொல்லப்படுகிற வானுலகத்தை அளிப்பர்; (ஆன பின்பு)
யான்

அடியேன்
அவன் சீர் அன்றி

அவ் வெம்பெருமானாருடைய திருக் குணங்களைத் தவிர்த்து
ஒன்றும்

வேறொன்றையும்
உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன்

மனக் காதலோடே விரும்பி அநுபவிக்க மாட்டேன்.

***- இப் பாட்டில், தரும் என்னும் பதம் ஐந்து இடங்களில் வருகின்றது. இரண்டாமடியின் முதலிலுள்ள தரும் என்பது மாத்திரம் தீவினைக்கு விசேஷணம்; மற்ற நான்கும் எம்பெருமானார் பக்கல் அந்வயிக்கும் வினைமுற்றுக்கள்.

“சலியாப்பிறவி, சரியாப்பிறவி” என்பன பாட பேதங்கள். பவம். வடசொல். பரந்தாம. வடசொல். திவம். வடசொல் விகாரம்.

————–

உண்ணின் றுயிர்களுக் குற்றனவே செய்து அவர்க்குயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப் பானெம் இராமானுசன்
மண்ணின் தலத்துதித்து உய் மறை நாலும் வளர்த்தனனே.–95-

பதவுரை

உயிர்களுக்கு உள் நின்று

எல்லா ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி யாயிருந்து கொண்டு
உற்றனவே செய்து

ஹிதமானவற்றையே நடத்திக் கொண்டு
அவர்க்கு

அவ் வாத்மாக்களுக்கு
உயவே பண்ணும் பரனாம்

உஜ்ஜீவநத்தையே பண்ணிக் கொண்டிருக்கிற எம்பெருமானாம்
பரிவு இலன் ஆம படி

(ஆத்மாக்களிடத்தில் எம்பெருமானாரைப் போல்) ப்ரதி யுடையவனல்லன் என்ன வேண்டும் படியாக
பல் உயிர்க்கும்

ஸகல ஆத்மாக்களுக்கும்
வீடு அளிப்பான்

மோக்ஷத்தை அருள்வதற்காக
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
விண்ணின் தலை நின்று

ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும்
மண்ணின் தலத்து உதித்து

இப் பூதலத்திலே அவதரித்து
உய் மறை நாலும்

எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவான நான்கு வேதங்களையும்
வளர்த்தனன்

குறைவின்றி வளரச் செய்ய தருளினார்.

***- இப்பாட்டின் ஈற்றடியை “மண்ணின் தலத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்றே அத்யாபகர்கள் ஒதுவர்கள். “நேர்பரினாறே” என்ற கட்டளைக் கலித்துறையின் இலக்கணப்படி பதினாறெழுத்து ஒத்திருந்தாலும் தளை தட்டுகிறபடியாலும், மணவாளமாமுனி களுரையில் “ஸர்வோஜ்ஜீவந சாஸத்ரமான” என்கிற ஒரு வாக்கியம் வ்யர்த்தமாக வேண்டி வருகையாலும் இவ்விரண்டு குறைகட்கும் இடமறும்படி “ உய் மறை நாலும்” என்கிற ப்ராசீந பாடம் கொள்ளத் தக்கது: உய் என்பதற்குப் பொருளாகவே மணவாள மாமுனிகள் ஸர்வோஜ்ஜீவந சாஸ்த்ரமான” என்கிற வாக்கியமருளிச் செய்தாரென்க.

——————–

வளரும் பிணி கொண்ட வல் வினையால்,மிக்க நல் வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத் தலையூன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்
குளரெம் இறைவர் இராமானுசன் றன்னை உற்றவரே.–96-

பதவுரை

வளரும் பிணி கொண்டவல் வினையால்

அளவற்ற துன்பங்களை யுண்டாக்க வல்ல கொடிய கருமங்களாலே
மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத் தறியாது

மஹா விச்வாஸம் கிடைக்காததனால்
முடை தலை ஊன் தளரும் அளவும்

கெட்ட நாற்றங்களுக்கு இருப்பிடமான சரீரம் கட்டுக் குலையும் வரையில்
தரித்தும் விழுந்தும்

ஒருவாறு தரித்திருந்தும் (சப்தாதி விஷயங்களிலே) போய் விழுந்தும்
தனி திரிவேற்கு

துணை யின்றித் திரிகிற எனக்கு
இறைவர்

ஸவாமிகள் (யாரென்றால்,
எம் இராமாநுசன் தன்னை உற்றவர்

நம் எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள்
உளர்

இருக்கிறார்கள்.

 

——————–

தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர்,மன்னு தாமரைத் தாள்
தன்னை யுற் றாட் செய்ய என்னை யுற் றானின்று தன் தகவால்
தன்னை யுற் றாரன்றித் தன்மை யுற் றாரில்லை என்றறிந்து
தன்னை யுற் றாரை இராமா னுசன் குணம் சாற்றிடுமே.–97-

பதவுரை

இராமாநுசன்

எம்பெருமானாரானவர்,
தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து

தம்மைப் பற்றி யிருப்பாருண்டே யொழிய தம்மைப் பற்றிய யிருப்பவர்களுடைய குண கீர்த்தனம் பண்ணும் ஸ்வ பக்த பக்தர்கள் ஒருவருமில்லை யென்று திருவுள்ளம் பற்றி
என்னை

அடியேனை
இன்று

இன்றைத் தினத்தில்
தன் தகவால்

தமது அருளாலே

(என்ன செய்தாரென்றால்)

தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர்

தம்மை யடைந்து கைங்கரியம் பண்ணும் ஸ்வபாவ முடையரான ஸ்வ பக்தர்களுடைய
மன்னா தாமரை தாள் தன்னை உற்று ஆள் செய்ய

ஒன்றோடொன்று சேர்ந்த திருவடித் தாமரைகளை நான் அடைந்து ஆட் செய்யும்படி
உய்த்தான்

வைத்தருளினார்.

***- எம்பெருமானார் என்னைத் தம்மிடத்து ஆட்படுத்திக் கொள்ளாமல் தம்மை அடுத்தவர்கள் பக்கல் என்னை ஆட்படுத்தினார். இதற்கு என்ன காரண மென்கிறீர்களோ? எல்லாரும் நம்மையே நேராக வந்து ஆச்ரயிக்கிறார்களே யொழிய நம்மை ஆச்ரயித்தவர்களை ஆச்ரயிப்பார் ஆருமில்லையே, இவ் வமுதனார், நம்மை ஆச்ரயித்தவர்களை ஆச்ரயிக்கிற அதிகாரியாக இருக்கட்டும் – என்று திருவுள்ளம் பற்றிச் செய்தார்.

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது வருத்தப் படுத்தும்;  ஜாக ரூகராயிருந்து அந்வயித்துக்கொள்க;-தன்னை யுற்றாரன்றித் தன்னை யுற்றாரைக் குணம் சாற்றிடுந் தன்மை யுற்றாரில்லை யென்றறிந்து, இராமாநுசன், தன்னை யுற்றாட்  செய்யுந் தன்மையினோர் மன்னா தாமரைத்தாள் தன்னையுற்று ஆட்செய்யத் தன் தகவால் இன்று என்னை யுய்த்தான்-என்று அந்வயம்.

சாற்றிடும் என்கிற விசேஷண பதம் பாட்டின் முடிவில் வந்து நின்றது அபூர்வப் பிரயோகமென்பர். என்னை யுற்றான் என்று ஓதுவர்கள்.

——————-

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமா னுசன்நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென் றால், மனமே! நையல் மேவுதற்கே?–98-

பதவுரை

நம் இராமாநுசன்

நம் எம்பெருமானார்,
சரணம் என்றால்

உமது திருவடிகளே சரணமென்று நாம் சொல்லி விட்டோ மானால்
இனிய சுவர்க்கத்திலே இடுமே

(சிலர்க்கு) இனிதாகத் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே நம்மைக் கொண்டு சேர்த்திடுவரோ?
இன்னம்

அல்லது
நரகில் இட்டு சுடுமே

நரகத்திலே கொண்டு தள்ளி தஹிக்கச் செய்வரோ?
அவற்றை தொடர்தரு

அந்த ஸ்வர்க்க நகரங்களைத் தொடர்ந்து கிடக்கிற
தொல்லை சுழல் பிறப் பில்

அநாதியாயும் சுழன்று வருவதாயுமுள்ள ஜன்மத்திலே
நடுமே

நிறுத்துவரோ?
இனி

மேலுள்ள காலங்களில்
நம்மை

நம்மை
நம் வசத்தே விடுமே

நாம் போகிற வழியே விட்டு வைப்பரோ?

(இவை செய்ய மாட்டாரான பின்பு)

மனமே!

ஒ நெஞ்சே!
மேவுதற்கு

பேறு பெறும் விஷயமாக
நையல்

நீ கரையவேண்டா.

—————-

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம், எம் இராமா னுச முனி போந்த பின்னே.–99-

பதவுரை

தற்கம் சமணரும்

தர்க்கம் பண்ணுகிற சமணர்களும்
பேய்

பேய் போலே பிடித்த பிடி விடாதே நிற்கிற
சாக்கியர்களும்

பௌத்தர்களும்
தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்

ருத்ரனாடைய சொல்லாகிய சைவாகமத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும்
சூனிய வாதரும்

சூந்நியவாதிகளும்
நால் மறையும் நிற்க

நான்கு வேதங்களும் விளங்கிக் கொண்டி ருக்கச்செய்தே
குறும்பு செய் நீசரும்

(அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும்
மாண்டனர்

ஒழிந்தார்கள்;

(எப்போது ? என்றால்)

பொன் கற்பகம் எம் இராமாநுச முனி

சிறந்த கல்ப வ்ருக்ஷம் போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானார்
நீள் நிலத்தே போந்த பின்

விசாலமான இப் பூமியிலே திரு வவதரித்த பின்பு.

 

——————

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.–100-

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
என் நெஞ்சு என்னும் பொன் வண்டு

எனது நெஞ்சாகிற அழகிய வண்டானது
உனது அடி போதில்

தேவரீருடையதிருவடித்தாமரைகளில்
ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி

அழகிய குணங்களாகிற தேனைப் பருகி நித்ய வாஸம் பண்ண விரும்பி
நின் பால்

தேவரீரிடந்தில்
போந்தது

வந்து சேர்ந்தது;
அதுவே

அத் திருக் குணங்களையே
ஈந்திட வேண்டும்

அளித்தருள வேணும்;
இது அன்றி

இத் திருக் குணங்களைத் தவிர
ஒன்றும்

வேறொன்றையும்
மாந்த கில்லாது

(நெஞ்சு) புஜிக்க மாட்டாது;
இனி

இப்படியான பின்பு
மற்று ஒன்று காட்டி

வேறொரு விஷயத்தைக் காட்டி
மயக்கிடேல்

மயக்க வேண்டா

***- ஸ்வாமிந்! அடியேனுடைய நெஞ்சு தேவரீருடைய திருக் குணங்களையே எப்போதும் அநுபவிக்க விருப்பங்கொண்டு மேல் விழுந்து தேவரீரிடம் வந்து சேர்ந்தது. இது இனி வேறொன்றை விரும்பாது; தேவரீரும் இனி இதை ஸம்ஸாரத்தில் போக வொடட்டாமல் தேவரீனிடத்திலேயே நிலை நிறுத்திக் கொள்ளவேணும். என்றாராயிற்று.

தமது நெஞ்சை ஒரு வண்டாக ரூபணம் பண்ணினதற்கு ஏற்ப எம்பெருமானாருடைய திவ்ய குணங்களை மதுவாக ரூபணம் பண்ணினார். இந்த வண்டுக்கு அந்தந் தேன் தவிர வெறொன்றும் ரஸிக்க மாட்டாது.

மயக்கிடேல் = முனினிலை யெதிர் மறை வினைமுற்று. மயக்காதே என்றபடி

——————

மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி
உயக் கொண்டு நல்கும் இராமா னுச! என்ற துன்னை யுன்னி
நயக்கும் அவர்க்கி திழுக் கென்பர், நல்லவர் என்றும் நைந்தே.–101-

பதவுரை

மயக்கும்

“அஜ்ஞானத்தை விளைக்க வல்ல
இரு வினை

புண்ய பாப மென்னும் இரு கருமங்களாகிற
வல்லியல்

விலங்கில்
பூண்டு

அகப்பட்டுக் கொண்டு
மதி மயங்கி

அறிவு கெட்டு
துயக்கும்

ப்ரமிச்கச் செய்கிற
பிறவியியல்

ஸம்ஸாரத்திலே
தோன்றிய என்னை

சிறந்த அடியேனை
துயர் அகற்றி உய கொண்டு

துக்கங்களைப் போக்கி உஜ்ஜீவிக்கச் செய்து
நல்கும்

அருள் செய்கின்ற
இராமாநுச

எம்பெருமானாரே!
என்றது இது

என்று தேவரீருடைய பாவநத்வத்தைப் பேசு கையாகிற ஈது
உன்னை உன்னி நைந்து

தேவரீரை அநுஸந்தித்து உருகி
என்றும் நயக்கு

எப்போதும் ஆசையுடனிருப்பவர்களுக்கு
இழுக்கு என்பர் நல்லவர்

தகாதது என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.

***- எம்பெருமானார்க்கு பாவநத்வம் என்றும் போக்யத்வம் என்றும் இரண்டு படிகள் உண்டு. பாவநத்வமாவது-பக்தர்களுடைய பாவங்களைப் போக்கிப் பரிசுத்தப்படுத்தல். போக்யத்வமாவது எப்போதும் அநுபவிக்கக் கூடியவராயிருக்கை. இவ் விரண்டில் பாவநத்வத்தை விட போக்யத்வமே சிறந்தது; ஏனென்றால், நம்முடைய பாவங்களைப் போக்கினாரென்கிற காரணத்தாலே நாம் அவரைப் பாவநர் என்று அநுஸந்திக்க வேண்டும்; இது ஒரு உபாதியைப் பற்றி வருவது; போக்யத்வத்தை அநுஸந்திப்பதோ இப்படிப்பட்டதல்ல. அது ஸ்வரூப ப்ரயுக்தம். ஆகையாலே, பாவநத்வத்தை அநுஸந்திப்பதை விட யோக்யதையை அநுஸந்திப்பதே சிறந்தது. அப்படியிருக்க இவ்வமுதனார் இப்பிரபந்தத்தில் அடிக்கடி எம்பெருமானாருடைய பாவநத்வத்தை அநுஸந்தித்தார்; ‘என்னுடைய பாவங்களையெல்லாம் போக்கினார், என்னுடைய குற்றங்களையெல்லாம் நீக்கினார்’ என்று அடிக்கடி சொல்லி யிருக்கிறார். அப்படி சொன்னதற்கு அநுதாபப்படுகிறார் இப் பாட்டில், போக்யதையில் ஈடுபட்டுப் பேச வேண்டி யிருக்க, பாவநத்வத்தில் ஈடுபட்டமை தோற்றப் பேசினது பிசகு என்று பெரியோர்கள் சொல்லுவர்கள் என்றாராயிற்று.

——————

நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந் தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன்
கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ்
வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே?–102-

பதவுரை

(எம்பெருமானாரே!)

மனம்

எனது நெஞ்சானது
உன் குணங்களை உன்னி

தேவரீருடைய திருக் குணங்களைச் சிந்தித்து
நையும்

கரைகின்றது;
என் நா

எனது வாக்கானது
இருந்து

நிலை நின்று
எம் ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்

எமக்கு ஸ்வாமியான எம் பெருமானாரே! என்று அழைகின்றது.
அரு வினையேன்

மஹா பாபியான என்னுடைய
கையும்

கைகளும்
தொழும்

அஞ்ஜலி பண்ணு கின்றன;
கண்

கண்களானவை
காண கருதிடும்

(தேவரீரை) ஸேவிக்க ஆசைப்படுகின்றன;
கடல்புடைசூழ் வையம் இதனில்

சுற்றிலும் கடல் சூழப் பெற்ற இப்பூ மண்டலத்தினாள்ளே
உன் வண்மை

தேவரீருடைய ஔதார்ய குணம்
என்பால் வளர்ந்தது என்

அடியேன் மீது (இவ்விதமாக) வளர்ந்ததற்குக் காரணம் யாதோ?.

————-

வளர்ந்த வெங் கோப மடங்க லொன் றாய்,அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன் னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய் வினை நோய்
களைந்து நன் ஞானம் அளித்தனன் கையிற் கனி யென்னவே.–103-

பதவுரை

அன்று

முன்னொரு காலத்தில்
வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்று ஆய்

கடூரமான கோபம் மேலிடப் பெற்ற ஒரு நரசிங்க மூர்த்தியாகி
வாள் அவுணன்

வாளை யுடைய ஹிரண்யா ஸுரனது
கிளர்ந்த

செருக்கினால் நெறித்திருந்த
பொன் ஆகம்

பொன் போன்ற மார்வை
கிழித்தவன்

கிழித்துப் பொகட்டவனான எம்பெருமானுடைய
கீர்த்தி பயிர் எழுந்து

திருப் புகழ்களாகிற பயிர் வளர்ந்து
விளைந்திடும் சிந்தை

விளையப் பெற்ற திருவுள்ளத்தை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானார்
என் தன் மெய் வினை நோய் களைந்து

எனது உடலைப் பற்றி யிருக்கிற வினை நோய்களை யெல்லா மொழித்து
கையில் கனி என்ன

கையிலங்கு நெல்லிக் கனி போலே ஸுலபமாக
நல் ஞானம் அளித்தனன்

விலக்ஷணமான ஞானத்தைத் தந்தருளினார்

————–

கையிற் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!–104-

பதவுரை

செழு கொண்டல்

ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற
என் இராமாநுச

எம்பெருமானாரே!

(தேவரீர்)

கண்ணனை

எம்பெருமானை
கையில் கனி என்ன

உள்ளங்கை நெல்லிக் கனி போலே
காட்டி தரினாம்

காட்டிக் கொடுத்தாலும்
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றியான் வேண்டிலன்

தேவரீருடைய திருமேனியில் விளங்குகிற ஸௌந்தரியமும் முதலிய குணங்களைத் தவிர வேறொன்றிலும் நான் கண் வைக்க மாட்டேன்;
நிரயம் தொய்யில்

ஸம்ஸார நரகக் குழியில்
கிடக்கிலும்

அழுந்திக் கிடந்தேனாகிலும்
சோதி விண் சேரிலும்

சோதி மயமான பரம பதத்தை அடைந்தேனாகிலும்
இவ் அருள்

(தேவரீருடைய திரு மேனி யழகை அநுபவித்திருக்கைக்கு உறுப்பான) கிருபையை
நீ செய்யில்

தேவரீர் செய்தருளினால் தான்
தரிப்பான்

(ஸம்ஸாரத்திலோ மோக்ஷத்திலோ) கால் பாவி நிற்பேன்.

***- நிரயத்தொய்யில் = நிரயமாவது நரகம். இந்த ஸம்ஸார நிலமே நரகமெனப்படும். தொய்யில்-சேறு. ஏழனாருபு தொக்கி யிருக்கிறது. தொய்யல் என்பாருமுளர்.

——————–

செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன் ஞானி,நல் வேதியர்கள்
தொழுந் திருப் பாதன் இராமா னுசனைத் தொழும் பெரியோர்
எழுந்திரைத் தாடும் இடமடி யேனுக் கிருப்பிடமே.–105-

பதவுரை

செழு திரை பால் கடல்

அழகிய அலைகளை யுடைய திருப்பாற் கடலில்
கண் துயில்

பள்ளி கொண்டிராநின்ற
மாயன்

ஸர்வேச்வரனாடைய
திரு அடி கீழ்

திருவடிகளின் கீழே
விழுந்து இருப்பார்

விழுந்து கிடக்கும் மஹான்களுடைய
நெஞ்சில்  மேவும்

ஹருதயத்திலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற
நல் ஞானி

சிறந்த ஞானியாயும்
நல்வேதியர்கள் தொழும் திரு பாதன்

நல்ல வைதிகர்களால் ஸேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையராயுமிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
தொழும்

ஸேவிக்கின்ற
பெரியோர்

மஹாத்மாக்கள்
எழுந்து இரைத்து ஆடும் இடம்

உடம்பு இருந்த விடத்தில் இராமல் கிளர்ந்து கோஷித்துக் கொண்டு கூத்தாடும் இடம்
அடியேனுக்கு இருப்பு இடம்

அடியேன் வஸிக்குமிடமாகும்.

***- கீழ்ப்பாட்டில் “ நிரயத் தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும்” என்று ஸம்ஸாரத்தையும் பரம பதத்தையும் வாசி யற்றதாகச் சொன்ன அமுதனாரை நோக்கிச் சிலர், ‘உலகத்தில் எல்லாரும் ஸம்ஸாரத்தை வெறுத்துப் பரம பதத்தை ஆசைப்படா நிற்க நீர் ஸம்ஸாரத்தையும் பரம பதத்தையும் துன்பமாகக் கருதிப் பேசுகின்றீரோ, உமக்கு உத்தேச்யமான ஸ்தானம் எது? சொல்லும், என்ன; ஸ்ரீராமாநுஜ பக்தர்கள் களித்துக் கூத்தாடுகின்ற இடமே எனக்குப் பரமோத்தேச்யமான ஸ்தானம் என்றார்.

——————

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல் லோர்,அவை தன்னொடு வந்
திருப்பிடம் மாயன் இராமா னுசன் மனத் தின்றவன் வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள் ளே தனக் கின்புறவே.–106–

பதவுரை

மாயனாக்கு

ஸர்வேச்வரனுக்கு
இருப்பு இடம்

வாஸஸ்தானம் (எவை யென்றால்)
வைகுந்தம்

பரமபதமும்
வேங்கடம்

திருவேங்கடமலையும்
மாலிருஞ் சோலை என்னும் பொருப்பு இடம்

திருமாலிருஞ் சோலை யென்கிற திருமலையும் (ஆகிய இவையாம்)
என்பர் கல்லோர்

என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.
மாயன்

(இவற்றை இருப்பிடமாக வுடைய) ஸர்வேச்வரன்
அவை தன்னொடும்

அந்த ஸ்ரீவைகுண்டம் முதலியவற்றோடே கூட வந்து எழுந்தருளி யிருப்பது
வந்து இருப்பிடம்

எம்பெருமானாருடைய
இராமாநுசன் மனத்து

திரு வுள்ளத்திலேயாம்;
அவன்

அவ் வெம்பெருமானார் தாம்
இன்று வந்து

இப்போது வந்து
தனக்கு இன்பு உற இருப்பிடம்

தமக்கு ஆநந்தமாக எழுந்தருளி யிருப்பது
என் தன் இதயத்து உள்ளே

அடியேனுடைய ஹ்ருத யத்தினுள்ளேயாம்.

***- கீழ்ப்பாட்டிற் கூறியபடியே அமுதனாருடைய எல்லை கடந்த ப்ராவண்யத்தை அறிந்த எம்பெருமானார் ‘நம்மேல் இவ்வளவு காதல் கொண்டிருக்கிற இவருடைய நெஞ்சை நாம் விட்டு நீங்கலாகாது, என்று கொண்டு அமுதனாருடைய திருவுள்ளத்தை மிகவும் விரும்பி யருள, அதனைக் கண்டு மகிழ்ந்து பேசுகிறார்.

—————-

இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.–107-

பதவுரை

இன்பு உற்ற

ஆநந்த பூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்ய குணமுடைய
சீலத்து இராமாநுசா

எம்பெருமானாரே!
சொல்லுவது ஒன்று உண்டு

தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டியவிஷயம் ஒன்றுண்டு
என்பு உற்ற நோய் உடல் தோறும்

எலும்பிலே உறைந்து நலியக் கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம்
பிறந்து இறந்து

பிறப்பதும் இறப்பதுமாகி
எண்ண அரிய துன்பு

எண்ண முடியாத துன்பங்களை யநுபவித்து
உற்ற வீயினாம்

முடிந்து போனாலும்
என்றும்

எல்லாக் காலங்களிலும்
எவ் இடத்தும்

எல்லா விடங்களிலும்
உன் தொண்டர்கட்கே

தேவரீருடைய பக்தர்கள் விஷயத்திலேயே
அன்பு உற்று இருக்கும்

பக்தனாயிருக்கும் படி
படி என்னை ஆக்கி

அடியேனைச் செய்தருளி
அங்கு

அந்த பக்தர்களிடத்தில்
ஆள் படுத்து

(அடியேனை) ஆட்படுத்தி யருள வேணும்;

(இதுவே அடியேனுடைய வேண்டுகோள்)

 

————-

அங்கயல் பாய் வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நந் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூ மன்னவே.–108-

பதவுரை

நெஞ்சே

ஓ மனமே!
பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து

பக்தி யெல்லாம் நம்மிடத்திலே குடி கொண்ட தென்று சொல்லும்படியாக வீறு பெற்று,
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ

பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள்
நம் தலைமிசையே மன்ன

நமது தலை மேலே நித்ய வாஸம் பண்ணும்படியாக,

(நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால்)

அம் கயல் பாய் வயல் தென் அரங்கன்

அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானுடைய
அணி ஆகம் மன்னும்

அழகிய திருமார்பிலே நித்ய வாஸம் பண்ணுகிறவளாய்
பங்கயம் மா மலர் பாவையை

சிறந்த தாமரைப் பூவில் பிறந்த பதுமை போன்றவளான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை
போற்றதும்

வாழ்த்துவோம்.

***- இப்பிரபந்தத்தின் தொடக்கத்தில் “இராமாநுசன் சரணாவிந்தம் நாம் மன்னிவாழ” என்று எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளைப் பொருந்தி வாழ்வதே தமக்குப் பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தவராகையாலே அந்தப் புருஷார்த்தம் நமக்கு யாவஜ்ஜீவம் ஸித்திக்கும் படியாக -எல்லாச் செல்வங்களையும் அளிக்க வல்ல பெரிய பிராட்டியாரைப் பிரார்த்திப் போமென்கிறார்-முடிவான இப்பாட்டில். ஸாமாந்ய ஸம்பத்தை அளிக்க வல்ல பிராட்டியே இந்த விசேஷ ஸம்பத்தையும் அளிக்கக் கடவள் என்றதாயிற்று.

 

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-45-77-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

October 9, 2022

பேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி,அப்பேறளித்தற்
காறொன்று மில்லை மற்றச் சரண் அன்றி,என்றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே–45-

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
நின் சரண் அன்றி

தேவரீருடைய திருவடிகளைத் தவிர
மற்று பேறு ஒன்றும் இல்லை

உபேயம் வேறொன்று மில்லை;
அப் பேறு அளித்தற்கு

தேவரீர்  திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு
அச் சரண் அன்றி

அத் திருவடிகள் தவிர
மற்று ஆறு ஒன்றும் இல்லை

வேறு உபாயம் ஒன்று மில்லை;
என்ற இப் பொருளை

என்கிற இவ் வுண்மைப் பொருளை

***-   உபாயமும் உபேயமும் எம்பெருமானார் திருவடிகளே’ என்றிருக்கும் மஹான்களுக்கும் தேவரீர் எவ்வாறு அருள் புரிகின்றதோ அவ்வாறாகவே சிறிதும் வாசி வையாமல் பாவியேனுக்கும் அருள் புரிகின்றதே! இஃது என்ன பெருங்குணம்!! த்ருட விச்வாஸ முடைய ஆழ்வான் ஆண்டான் போல்வாரை அடிமை கொள்வது போலவே அவிச்வாஸியான என்னையும் அடிமை கொள்வதே! இச் செம்மைக் குணத்தின் பெருமையைப் பாசுரமிட்டுச் சொல்ல எனக்கு சக்தி யில்லையே யென்று தடுமாறுகின்றார்.

—————

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே.–46-

பதவுரை

கூறும் சமயங்கள் ஆறும் குலைய

மனம் போன படி சொல்லிக் கொண்டிருக்கிற ஆறு பாஹ்ய மதங்களும் தலைமடங்கும்படி
குவலயத்தே

இப் பூ மண்டலத்திலே
மாறன் பணித்த மறை

நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதத்தை
உணர்ந்தோனை

கற்று அறிந்தவராயும்
மதியிலியேன் தேறும்படி

ஜ்ஞாநஹீகனான நானும் தெளியும்படியாக
என் மனம் புகுந்தானை

என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும்
திசை அனைத்தும் ஏறும் குணனை

எல்லாத் திக்குக்களிலும் பரவிய திருக் குணங்களை யுடையவராயுமிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
இறைஞ்சினம்

வணங்கினோம்.

***- எம்பெருமானார் செய்தருளின அரிய பெரிய உபகாரங்கள் நெஞ்சில் ஊற ஊற, பரவசராய்த் திருவடிகளிலே வணங்குகிறார்:- உலகத்தில் பிரமாணமில்லாமலும் யுக்தி யில்லாமலும் மனம் போனபடி சொல்லிக் கொண்டு திரிகிற மதாந்தரஸ்தர்களை யெல்லாம் பங்கப்படுத்துவதற்காக நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமானது திருவாய் மொழியை ஒதி யுணர்ந்தவரும், அவிவேகியான நான் கூடத் கேறுதலடையும்படி என் நெஞ்சினுள்ளே புகுந்து என் ஸக்தையை நோக்குபவரும், திசைகளெங்கும் பரவிய புகழை யுடையருமான எம்பெருமானாரை வணங்கினோமென்றாராயிற்று.

சமயங்கள் ஆறும் = தேஹாத்மவாதி; தேஹ பரீணுமாத்மவதி, விஜ்ஞாநத்மவாதி, சூந்யவாதி, அத்வைதவாதி, சிவபரத்வவாதி என்றிப்படி ஆறு மதஸ்தர்களுண்டு. வேறு வகைகளும் உண்டு எல்லா மதங்களும் திருவாய் மொழியில நெற்; செய்யப் புல் தேயுங் கணக்கிலே தொலைக்கப் பட்டனவென்க. குவலயம் – வடசொல், தோறும்படி – ‘ஒரு வழியாலும் நாம் உஜ்ஜீவிக்க வகையில்லையே! என்செய்வோம், என்று தடுமாறிக் கிடந்த நானாம் ‘இனி நமக்கொரு குறையுமில்லை’ என்று தேறி மார்விலே கை வைத்துறங்குபடியாக என்கை.

————–

இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்
தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்,என் அரு வினையேன்
திறம் செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தை யுள்ளே
நிறைந்தொப்பற விருந்தான், எனக்காரும் நிகரில்லையே!–47-

பதவுரை

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று

‘எல்லாராலும் வணங்கத்தக்க பரதெய்வம் (எது வென்றால்) ஈசனாகிய ஸ்ரீரங்க நாதனேயாம்’ என்று
இ உலகத்து

இப் பூ மண்டலத்திலே
அறம் செப்பும்

ஸாக்ஷாத் தாமத்தை அருளிச் செய்யுமவராய்
அண்ணல்

ஸர்வ ஸ்வாமியான
இராமாநுசன்

எம்பெருமானார்
என் அரு வினையின் திறம் செற்று

என்னுடைய போக்க முடியாத கர்ம ஸமூஹத்தைப் போக்கி
பகலும் இரவும் விடாது

ஸர்வ காலத்திலும்
என் தன் சிந்தை

என் ஹ்ருதயத்தினாள்ளே
நிறைந்து

பரிபூர்ணராகி
ஒப்பு அற இருந்தான்

(இவ்விருப்புக்கு) ஒப்பில்லாதபடி எழுந்தருளி யிருக்கிறார்;
எனக்கு

இப்படிப்பட்ட அருளைப் பெற்ற  எனக்கு
ஆரும் நிகர் இல்லை

ஒப்பாவார் ஆருமில்லை.

***-   ஸ்ரீரங்கநாதனே எல்லாரும் வணங்கத்தக்க பரதெய்வமென்னும் உண்மையை உலகத்தார்க்கு உபதேசிந்து எல்லாரையும் பகவத் ஸமாச்ரயணத்தில் ருசியடையவர்களாக்கிப் போருகின்ற எம்பெருமானார் என்னுடைய தீவினைகளை வேரோடே களைந்தொழித்து அநவரதமும் எனது ஹருதயத்தினாள்ளே பரிபூர்ணரா யெழுந்தருளிரா நின்றார்; இப்படிப்பட்ட பரம பாக்கியம் பெற்றவன் இவ் வுலகில் நானொருவனேயாகையால் – இல்லை யெனக் கெதிரில்லை யெனக் கெதிரே.

————-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னரு ளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃ தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?–48-

பதவுரை

புன்மையிலோர் பருகம் பெருமை இராமாநுச

மஹான்கள் பேச வேண்டும்படியான பெருமையை யுடைய எம்பெருமானாரே!
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு

என்னுடைய ஒப்பற்ற தாழ்மைக்கு
நின் அருளின் கண் அன்றி

தேவரீருடைய க்ருபை யினிடத்தில் தவிர
புகல் ஒன்றும் இல்லை

வேறு எவ் விடத்திலும் ஒதுங்க இடமில்லை
அருட்கும்

தேவரீருடைய அந்த க்ருபைக்கும்
அஃதே புகல்

(என் போல்வாருடைய) அந்தத் தாழ்மையே சரணம்; (ஆக இவ் வகையாலே)
இருவோமுக்கும் பயன் ஆனபின்

அடியேனால் தேவரீருக்குப் பயன், அடியேனுக்குப் பயன் என்று ஸித்தமான பின்பு
இனி

இனி மேலும்
பழுதே

வியர்த்தமான
அகலும் பொருள் என்ன

பிரிந்திருக்கைக்குக் காரணம் என்ன?

***-  “எனக்காரும் நிகரில்லையே” என்று களித்துக் கூறின அமுதனாரை நோக்கி எம்பெருமானார் “இக் களிப்பு உமக்கு எத்தனை நாளைக்கு நிற்கும்? நான் உம்மை விட்டுவிடவுங் கூடும்; நீர் என்னை விட்டுவிடவுங் கூடும், இரண்டத் தொன்று நேர்ந்தால் இக் களிப்பு மாறக் கூடியது தானே” என்ன -; இனி நாம் வீணுக விட்டுப் பிரிவதற்குக் காரணமேயில்லை யென்கிறார்.

(“ததஹம் த்வத்ருதேந நாதவாந் மத்ருதே  த்வம் தயநீயவாந் நச-விதி நிர்மித மேதத்ந்வயம் பகவந் பாலய மாஸ்மஜீஹப:”) என்ற ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ந ச்லோகமும் இப் பொருள் கொண்டதே.

அருட்கும் அஃதே புகல் = நீசர்கள் விஷயத்தில் க்ருபை பண்ணினாலன்றோ அருள் விளங்குவதும் பயன் பெறுவதும்.

————

ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி யிறந்தது வெங் கலி பூங்கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானதில் மன்னும் இராமானுசனித் தலத் துதித்தே.–49-

பதவுரை

பூ கமலம்  தேன்

தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது
நதி பாய்

ஆறாகப் பெருகப் பெற்ற
வயல்

கழனிகளையுடைய
தென் அரங்கன்

ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளி யிருக்கிற பெரிய பெருமாளுடைய
கழல்

திருவடிகளை
சென்னி வைத்து

சிரஸா வஹித்துக் கொண்டு
தான் அதில் மன்னும்

தாம் அத் திருவடிகளிலேயே  ப்ரவணா யிருக்கிற
இராமாநுசன்

எம்பெருமானார்
இ தலத்து உதித்து

இப் பூமியிலே திருவவதரித்ததனால்
செம்மை அறம் நெறி

ருஜூவான தர்ம மார்க்கமானது
ஆனது

ஸத்தை பெற்றது;
பொய்ம்மை அறு சமயம்

பொய்யே நிறைந்து கிடக்கிற அறு சமயங்களும்
பொன்றி போனது

நாசமடைந்தன;
வெம் கலி இறந்தது

கொடிய கலியுகமும் மாண்டது

 

***- எம்பெருமானார் திருவவதரித்தனாலே இவ் வுலகத்துக்கு உண்டான நன்மைகளை அருளிச் செய்கிறார்  இதில்.  முன்பு குத்ருஷ்டிகளினால் அழிந்து கிடந்த தர்ம மார்க்கம் மீண்டு நிலை பெற்றது;  சாஸ்த்ர விருத்தமான புற மதங்களெல்லாம் தலை சாய்ந்தன; கலி தோஷமும் கெட்டுப் போயிற்று.

 

————-

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்ச மஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றமெல்லாம்
பதித்த வென் புன் கவிப் பா வினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமானுசன் றன் இணை யடியே.–50-

பதவுரை

பரவு தொல் சீர்

உலகமெங்கும் பரவின நித்ய கலயாண குணங்களை யுடையவரும்
எதி தலை நாதன்

யதிகளுக்குத் தலையான நாயகருமான
இராமாநுசன் தன்

எம்பெருமானாருடைய
இணை அடி

திருவடி யிணைகள்

(எப்படிப் பட்டவை யென்றால்)

உத்தமர் சிந்தையுள் உதிப்பன

உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை;
ஒன்னலர் நெஞ்சம்

பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது
அஞ்சி கொதித்திட

பயப்பட்டுப் பரிதவிக்கும்படி
மாறி நடப்பன்

மாறி மாறி யிட்டு நடக்குந் தன்மை யுடையன;
கொள்ளை வன்  குற்றம் எல்லாம் பதித்த

அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக் கிடக்கிற
என் புன் கவி

என்னுடைய க்ஷுத்ரமான  கவனமாகிய
பா இனம் பூண்டன

பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகப்) பெற்றுக் கொண்டவை.

***-    தமக்குப் பரம ப்ராப்யமான எம்பெருமானார் திருவடிகளை வருணிக்கிறார் இதில் வடுக நம்பி போல்வாரான உத்தமாதிகாரிகளாலே இடைவிடாது சிந்திக்கப்படுவன; பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சிலே பரீதாபத்தை உண்டுபண்ணுவன; பல்வகைக் குற்றங்கள் நிறைந்த எனது கவிகளையும் ஏற்றுக் கொள்வன – அத்திருவடிகள், என்றாராயிற்று.

ஒன்னவர் நெஞ்ச மஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன – பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரஸிப்பதற்காதப் பல விடங்களிலும் ஸஞ்சரித்தருளினமை அறிக. மாறி நடத்தல் – ஒரு அழகான நடை. நம்பெருமாள் நடை போலே.

————-

அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமானுச னென்னை ஆள வந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.–51-

பதவுரை

அன்று

முற் காலத்தில்
அடியை தொடர்ந்து

திருவடிகளை அவலம்பித்து
எழும்

செருக்கிக் கிளர்ந்த
ஐவீர்கட்கு ஆய்

பஞ்ச பாண்டவர்களுக்காக (பக் ஷபாதம் பூண்டு)
பாரதப் போர்

பாரத யுத்தத்திலே
முடிய

(துரியோதநாதிகள்) மாளும் படியாக
பரி நெடு தேர்

குதிரை பூண்ட பெரிய தேரை
விடும்

நடத்தின
கோனை

ஸர்வேஸ்வரனை
முழுது உணர்ந்த

(ஸ்வரூப ஸ்வபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத் தெரிந்து கொண்ட
அடியார்க்கு

பாகவதர்களுக்கு
அமுதம்

பரம போக்யமான
இப் படியில்

இப் பூ மண்டலத்தில்
வந்து பிறந்தது என்னை ஆள

வந்து அவதரித்தது  (எதற்காக வெனில்) அடியேனை ஆட் கொள்ளுகைக்காகவேயாம்;

***- பார்த்திடில் மற்று காரணம் இல்லை    –    ஆராய்ந்து பார்க்குமளவில் இது தவிர வேறொரு காரணமில்லை.

—————–

பார்த்தான் அறு சம யங்கள் பதைப்ப,இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினே னிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த் தரங்கன் செய்ய தாளிணையோ
டார்த்தான் இவை யெம் இராமா னுசன் செய்யும் அற்புதமே.–52-

பதவுரை

(எம்பெருமானாரானவர்)

அறு சமயங்கள்

(வேத பாஹ்யங்களான) ஆறு சமயங்கள் துடிக்கும் படியாக
பதைப்ப பார்த்தான்

திருக் கண் செலுத்தினார்;
இப் பார் முழுவதும்

இப் பூமண்டலம் முழுவதையும்
புகழ் கொண்டு

தமது கீர்த்தியினாலே
போர்த்தான்

மூடி விட்டார்;
புன்மையினேனிடை

நீசனான அடியேன் பக்கலிலே
தான் புகுந்து

தாமாகவே (நிர்ஹேதுக க்ருபையினால்) வந்து புகுந்து
இரு வினை

பெரிய பாவங்களை
தீர்த்தான்

போக்கி யருளினார்;
தீர்த்து

பாவங்களைப் போக்கினது மன்றியில்
அரங்கன்

ஸ்ரீ ரங்கநாதனுடைய
செய்ய தாள் இணையோடு ஆர்த்தான்

அழகிய திருவடிகளோடே (என்னை)அந்வயிப்பித்தார்;
இவை

ஆகிய இக் காரியங்களெல்லாம்
எம் இராமாநுசன் செய்யும் அற்புதம்

எமக்கு ஸ்வாமியான எம்பெருமானார் செய்தருளின ஆச்சரியச் செயல்களாம்

***-  எம்பெருமானாருடைய ஆச்சரியமான சில செயல்களை எடுத்துக் கூறுகின்றார்:-சாகயர் உலூக்யர் பௌத்தர் சார்வாகர் பாசுபதர் காணுதர் என்றிப்படி சொல்லப்படுகிற புற மதத்தவர்களை யெல்லாம் நடுங்கச் செய்தார்; இப் பூ மண்டலமெங்கும் தமது திருப் புகழே பரவும்படி செய்தார்; ஆத்ம குணமொன்றில்லாத என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மணவாளனாடைய  பாதங்களிலே என்னை ஆச்ரயிக்கச் செய்தார்; இப் பூமண்டலமெங்கும் தமது திருப்புகழே பரவும்படி  செய்தார்; ஆத்ம குணமொன்றில்லாத என்னுடைய ஹ்ருதயத்திலே பகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மணவாளனாடைய  பாதங்களிலே என்னை ஆச்ரயிக்கச் செய்தார்; இப்படியாக எம்பெருமானார் செய்தருளுமவை யெல்லாம் மிக அற்புதமானவை.

—————

அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல் லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை, இந் நானிலத்தே வந்து நாட்டினனே.–53-

பதவுரை

என்னை ஆள வந்த

என்னை ஆட் கொள்வதற்காக அவதரித்த
கற்பகம்

உதாரரும்
கற்றவர் காமூது சீலன்

ஞானிகள் ஆசைப்படும் படியான சீல குணத்தை யுடையவரும்
அற்புதன்

ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையரும்
செம்மை

ருஜூவாயிருக்குந் தன்மை பொருந்திய வருமான
இராமாநுசன்

எம்பெருமானார்,
கருத அரிய பல் பல் உயிர்களும்

நினைக்கவும் முடியாத படி எண்ணிறந்திருக்கிற ஆத்ம வர்க்கங்களும்
பல் உலகு யாவும்

அவ் வாத்மாக்களுக்கு இருப் பிடமான) அளவிறந்த எல்லா வுலகங்களும்
பரனது என்னும் நல் பொருள் தன்னை

எம்பெருமானுடைய ஸொத்துக்களாம் என்கிற ஸாரர்த்தத்தை
இ நானிலேததே

இவ் வுலகத்திலே
வந்து

வந்தவதரித்து
நாட்டினன்

ஸ்தாபித்தருளினார்.

***- எம்பெருமானார் மதாந்தரங்களைக் கண்டித்து நிலை நாட்டிய ஸித்தாந்தம் இன்னதென்கிறார்.- சிறந்த ஞானிகளனைவரும் கொண்டாடுதற்குரிய திருக் குணங்களையும் அதிமாநுஷ வ்யாபாரங்களுக்கு இருப்பிடமாயுள்ள ஸகல லோகங்களும் ஸ்ரீமந் நாராயணனாக்கே உரிமைப்பட்டவை” என்கிற பரமார்த்தத்தை நிலை நாட்டியளினர் என்கை.

உலகு- யாவும், உலகியாயும்; “யவ்வரீனிய்யாம்” என்பது நன்னூல் விதி.

————–

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வு கண்டே.–54-

பதவுரை

மண் உலகில் ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன்

இப் பூலோகத்தில் மேன் மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை யுடையரான எம்பெருமானாருடைய
இயல்வு

ஸ்வபாவத்தை
கண்டு

பார்த்து,
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன

(துஷ்ட யுக்திகளாவே) நிலை நிறுத்தப் பட்டிருந்த ஷூத்ர மதங்களெல்லாம் ஒழிந்தன;
நாரணனை காட்டிய

ஸ்ரீமந் நாராயணனைப் பிரதிபாதிக்க
வேதம்

வேதங்களானவை
களிப்பு உற்றது

(நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று) செருக்கடைந்தன;
தென் குருகை வள்ளல்

அழகிய திருக்குருகூரில் அவதரித்த உதாரரான ஆழ்வார் (அருளிச்; செய்த)
வாட்டம் இலா

ஒரு குறையுமற்ற
வண் தமிழ் மறை

சிறந்த தமிழ் வேதமான திருவாய்மொழி
வாழ்ந்தது

வாழ்வு பெற்றது.

***- சிங்கத்தைக் கனவில் கண்டாலும் ஸாமன்ய மிருகங்கள் நசித்தொழியும்; அவற்றைக் கொல்லுவதற்காகச் சிங்கம் ஒரு முயற்சி  செய்யவேண்டா அதுபோல, இவ்வுலகில் கிளர்ந்து கிடந்த பாஹ்ய குத்ருஷ்டி மதங்களைத் தொலைப்பதற்காக எம்பெருமானார் ஒரு பிரயத்நமும் எடுத்துக் கொள்ள வில்லை; அவை மாளவே ஸ்ரீ மந் நாராயண பரங்களான வேதங்களின் ஸாரமாகிய அருளிச் செயல்களும் பொலிவு பெற்று ஒங்கின – என்றாராயிற்று.

—————–

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத், தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும், குடியா மெங்கள் கோக்குலமே.–55-

பதவுரை

தொகை இறந்த

கணக்கில்லாத
பண் தரு வேதங்கள்

ஸ்வர ப்ரதாநங்களான வேதங்கள்
பார்  மேல்

இப் பூமியிலே
நிலவிட

ஒங்கி வளரும்படி
பார்த்தருளும்

செய்தருளினவரும்
கொண்டலை

பரம உதாரரும்,
கண்டவர் சிந்தை கவரும்

கணடவர்களின் நெஞ்சைக் கவர்கின்ற
கடி பொழில்

மண மிக்க சோலைகள் சூழ்ந்த
தென் அரங்கன்

தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால்
குலாவும்

கொண்டாடப் படுபவருமான
இராமாநுசனை

எம்பெருமானாரை
மேலி கொழும் குடி

பொருந்தி ஆச்ரயிக்கிற குலம்
எங்கள் கோக்குலம் ஆம்

எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடிய குலமாம்.

***- எம்பெருமானாரை அடி பணிந்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தாம் அடியேனை ஆள்வற்கு உரியவர்கள் என்றாராயிற்று ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களுக்கு அடியேன் தாஸனாயிருப்பேன் என்றாவது

இராமாநுனை மேவித் தொழுங்குடி எங்கள் கோக்குலமாம் ஸ்ரீ எம்பெருமானாரன்று எமக்கு ஸ்வாமி; அவரை ஆச்ரயிப்பவர்களே எமக்கு ஸ்வாமிகள்.

கோ என்பதற்கு மேன்மை யென்றும் பொருள் உண்டாதலால், எங்கள் கோக்குலம் – எங்களுடைய மேன்மையான குலம் (எப்படிப்பட்டதென்றால்), இராமாநுசனை மேவித் தொழுங்குடியாம் -, என்பதாகவும் உரைக்கலாம். “எங்கள் கோக் குடியே” என்றும் பாட முண்டு; பொருள் ஒன்றே.

———-

கோக்குல மன்னரை மூவெழுகால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்த பின், என்
வாக்குரை யாது, என் மனம் நினை யாதினி மற்றொன்றையே.–56–

பதவுரை

கோக்குலம் மன்னரை

க்ஷத்திரிய குலத்து அரசர்களை
மூ எழு கால்

இருபத்தொரு தலைமுறை யளவும்
ஒரு கூர் மழுவால்

கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே
போக்கிய

(பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின
தேவனை

எம்பெருமானை
போற்றம்

துதிக்கின்ற
புனிதன்

பரம பரிசுத்தரும்,
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி

உலகமெங்கும் பரவின புகழை யுடையவருமான
இராமாநுசனை

எம்பெருமானாரை
அடைந்த பின்

ஆச்ரயித்த பின்பு
இனி

மேலுள்ள காலமெல்லாம்
மற்று ஒன்றை

வேறு எந்த விஷயத்தையும்
என் வாக்கு

எனது வாக்கானது
உரையாது

சொல்ல மாட்டாது;
என் மனம்

எனது மனமும்
நினையாது

நினைக்க மாட்டாது.

***- அடைந்ததற்பின் வாக்குரையாது என் மனம் நினையாது” என்றும் பாடமுண்டாம்.

—————-

மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்
உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே.–57-

பதவுரை

மற்று ஒரு பேறு

ப்ரயோஜநாந்தரங்களை
மதியாது

கணிசியாமல்
அரங்கன் மலர் அடிக்கு

அழகிய மணவாளனாடைய திருவடித் தாமரைகளுக்கு
ஆள் உற்றவரே

அடிமை பட்டவர்களையே
தனக்கு உற்றவர் ஆ

தமக்கு ஆத்ம பந்துக்களாக
கொள்ளும்

திருவுள்ளம் பற்றுகிற
உத்தமனை

உத்தம புருஷராயும்
நல் தவர் போற்றும்

ப்ரபந்நர்களாலே புகழப் பட்டவராயு மிருக்கிற
இராமாநுசனை

எம்பெருமானாரை
,நானிலத்தே பெற்றனன்

இந்த லோகத்திலே அடியேன் ஆச்ரயிக்கப் பெற்றேன்;
பெற்ற பின்

ஆச்ரயித்த பின்பு
மற்று ஒரு பேதைமை அறியேன்

(வேறு விஷயங்களை விரும்புகை முதலிய) எவ்வித அஜ்ஞான கார்யமும் அறிய மாட்டேன்

***-  “இனி என் வாக்குரையாது, என் மனம் நினையாது மற்றொன்றை” என்று எப்படி நீர் சொல்லக் கூடும்? இருள் தருமா ஞாலத்தில் இருக்கிறீராகையாலே அவிவேகம் வந்து மூடிக் கொள்ள எத்தனை நாழிகை செல்லும்? என்று சிலர் கூற, எம்பெருமானாரை இந்த லோகத்திலே நான் ஆச்ரயித்தேனான பின்பு இனியொரு நாளும் அவிவேகியாக ஆக மாட்டேனென்கிறார்.

நல் தவர் போற்றும் –ப்ரபத்தி யாகிற நல்ல தபஸ்ஸைக் கைப்பற்றின வர்களாலே போற்றப் படுவர்.

————–

பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம் நன்றென்
றோதி மற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள் மெய் விட்
டாதிப் பரனொடொன்றா மென்று சொல்லுமவ் வல்ல லெல்லாம்
வாதில் வென்றான், எம் இராமா னுசன் மெய்ம் மதிக் கடலே.–58-

பதவுரை

பேதையர்

(வேதத்தைப் பிரமாணமாகக் கொள்ளாத) அவிவேகிகள்
இது வேதப் பொருள் என்ற உன்னி

நாங்கள் சொல்லுகிற இது தான் வேதத்தின் அர்த்தம்’ என்று நிரூபித்துக் கொண்டு
பிரமம் நன்று என்று ஒதி

ப்ரப்ரஹமமான எவ்லாவற்றிலும் விலஷணம்’  என்று சொல்லி
மற்று எல்லா உயிரும் அஃது என்று

அந்தப் ப்ரஹ்மந் தவிர மற்ற எல்லா ஜீவ ராசிகளும் அந்த ப்ரஹமமே’ என்று சொல்லி
உயிர்கள் மெய்விட்டு

‘ஜீவாத்மாக்கள் தேஹத்தை விட்ட பின்பு
ஆதி பரனொடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம்

ஸர்வ காரண பூதுனான பரம புரஷனோடே ஐக்கியத்தை யடைகின்றன’  என்று சொல்லுகின்ற அந்த கோலாஹலங்களையெல்லாம்.
மெய்  மதி கடல்

தத்வ ஜ்ஞாநக் கடலாகிய
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
வாதில் வென்றான்

வாதத்தில் நிரஸித்து வெற்றி பெற்றார்.

***-  எம்பெருமானார் குத்ருஷ்டிகளின் குத்ஹிதமான வாதங்கனைக் கண்டித்த படிகளில் ஒருபடியைச் சொல்லி ஈடுபடுகிறார். சில மூர்க்கர்கள் தாங்கள் சொல்லுவதே வேதங்களின் உண்மையான பொருள் என்று கொக்கரித்துக்  கொண்டு அபார்த்தங்களைப் பிதற்றுவர்கள்.பர ப்ரஹமம் ஸர்வ லிலக்ஷணம்; ஜீவாத்மாக்களெல்லாம் பர ப்ரஹ்மத்தில் ஒர் பகுதி; இப்போது உபாதியினால் வெவ்வேறாகத் தோன்றுகின்றன; அவ் வுபாதி கழிந்த பின் ஜீவாத்மாக்கள் பர ப்ரஹ்மத்தோடு ஒற்றுமை அடைந்து விடுகின்றன என்று மூர்க்கர் பிதற்றும் பிதற்றல்களை யெல்லாம் தத்வ ஜ்ஞான நிதியான எம்பெருமானார் வாதத்தில் கண்டித்து உண்மைப் பொருளை ஸ்தாபித்து வெற்றி பெற்றாரென்கிறது.

பிரமம் – ப்ரஹமம் என்ற வடசொல் விகாரம் உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பரனொடு ஒன்றாம் = ஜீவரத்மாககள் பர ப்ரஹ்மத்தோடு ஐக்கியப்படுவது தான் மோக்ஷம் என்று குத்ருஷ்டிகள் உபபாதிப்பார்கள்; “தத் த்வமஸி” என்றும் “ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி” என்றுமுள்ள வேத வாக்கியங்களுக்கு இப்படி அபார்த்தம் பண்ணுவார்கள். வென்றான்  என்பதை வினை முற்றாகக் கொள்ளாமல் வினையாலணையும் பெயராகக் கொண்டு வாதில் வென்றவராகிய எம்பெருமானார், மெய்ம் மதிக் கடல் ஸத்ய ஜ்ஞாந ஸமுத்ரமா யிருப்பவர் என்று முடிப்பதாக வுரைத்தலுமாம்.

——————

கடலள வாய திசை யெட்டி னுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத் திராமா னுசன், மிக்க நான் மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்திலனேல் உயிரை
உடையவன், நாரணன் என்று அறிவார் இல்லை உற்றுணர்ந்தே.–59-

கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும்

நான்கு ஸமுத்ரங்களை எல்லா விடங்களிலும்
கலி இருளே மிடை தரு காலத்து

கலி புருஷனாகிற அந்த காரமே நெருங்கிக் கிடந்த காலத்தில்
இராமாநுசன்

எம்பெருமானார் (திருவவதரித்து)
நால் மறையின்

நான்கு வேதங்களின்
மிக்க சுடர் ஒளியால்

அளவற்ற தேஜஸ்ஸைக் கொண்டு
அவ்விருளை துரந்திலனேல்

அந்த கலி தோஷத்தைப் போக்கி யிராமற் போனால்
உயிரை உடையவன் நாரணன் என்று

‘எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி ஸ்ரீமந் நாராயணனே என்று
உற்று உணர்ந்து

யாரும் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

***- என்னப்பனிராமாநுசன் திருவலதரித்து வேதார்த்தங்களை விளங்கக் காட்டியருளா விடில் இவ்வுலகமனைத்தும் அஜ்ஞாந மயமாகவே கிடக்கும்; தைவாதீநமாக என்னப்பன் திருவவதரித்து எங்கும் வியாபித்துக் கிடந்த கலிபுருஷனுடைய தோஷங்களைத் தொலைத்து வேதச் சுடர் விளக்கேற்றி அஜ்ஞாநாந்தகாரங்களைப் போக்கடிக்கவே எல்லாரும் ஸ்ரீமந் நாராயணனே ஸர்வ சேஷி யென்கிற பர மார்த்தத்தைத் தெரிந்து உய்வு பெறலாயிற்று என்றார்.

மிடைதருதல் – நெருங்கியிருத்தல் இடைவிடாது எங்கும் பரவியிருத்தல்.

————-

உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய் மொழியின்-
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந் திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே.–60–

பதவுரை

குணம் திகழ்

ஆத்ம குணங்களால் விளங்குபவரும்
கொண்டல்

(ஔதார்யத்தில்) காள மேகத்தை ஒத்த வரும்
எம் குலம் கொழுந்து

எங்கள் குலத்துக்குத் தலைவருமான
இராமாநுசன்

எம்பெருமானார்

(எங்கே எழுந்தருளியிருப்பரென்றால்)

உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும்

கற்றுணர்ந்த தத்வ  ஞானிகளுடைய கோஷ்டிகளெங்கும்
திருவாய் மொழியின் மணம் தரும் இன் இசை மன்னும் இடம் தொறும்

திருவாய் மொழியினுடைய பரிமளம் மிக்க இனிய இசையுள்ள இடங்களெங்கும்
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும்

பிராட்டி நித்ய வாஸம் பண்ணுகிற அழகிய மார்பை யுடைய திருமால் எழுந்தருளி யிருக்கிற திவ்ய தேசங்களெங்கும்
புக்கு நிற்கும்

எழுந்தருளி யிருப்பார்.

***- ஞானம் தலை யெடுத்த மஹான்களுடைய திரள் எங்கெங்கும் இருக்கின்றதோ அங்கெல்லாம் எழுந்தருளி யிருப்பவரும். திருவாய்மொழியின் பரம போக்யமான இசை எங்கெங்கு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் ஸேவை ஸாதிப்பவரும் ஸ்ரீ யபதியான ஸர்வேச்வரன் எங்கெங்கு ஸந்நிதாநம் பண்ணுகிறாறோ அந்தத் திருப்பதிகளெங்கும் புகுந்து நிற்பவருமான எம்பெருமானார் அஸ்மத் குல கூடஸ்தர்கிறாராயிற்று.

———–

கொழுந்து விட் டோடிப் படரும் வெங் கோள் வினை யால்,]நிரயத்
தழுந்தி யிட் டேனை வந் தாட் கொண்ட பின்னும், அரு முனிவர்
தொழுந் தவத்தோனெம் இராமானுசன் தொல் புகழ் சுடர் மிக்
கெழுந்தது,அத்தால் நல்லதிசயங் கண்ட திரு நிலமே.–61–

பதவுரை

அருமுனிவர் தொழும்

அருமையான நிஷ்டையை யுடைய மஹான்களாலே மஹான்களாலே ஸேவிக்கப் பெற்றவராயும்
தவத்தோன்

ப்ரபத்தியாகிற தபஸ்ஸை யுடையவராயு மிருக்கிற
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானாருடைய
தொல் புகழ்

நித்யமான கல்யாண குணங்கள்
கொழுந்து விட்டு ஒடி படரும் வெம்கோள் வினையால்

மேன் மேலும் அதிகமாகப் பெருகுகின்ற க்ரூரமாய்ப் பரப்லமான துஷ் கர்மத்தாலே
நிரயத்து அழுந்தி யிட்டேனை

ஸம்ஸாரமாகிற நரகத்திலே அழுந்திக் கிடந்த என்னை
வந்து ஆள் கொண்ட பின்னும் சுடர் மிக்கு எழுந்தது

வந்து ஆட்படுத்திக் கொண்ட பின்பும் ஒளி குன்றாதே  முன்னிலும் விசேஷமாக விளங்கா நின்றன:
அத்தால்

அதைக் கண்டு
இரு நிலம்

விசாலமான இப் பூமண்டலம்
நல்ல அதிசயம் கண்டது

மிக்க ஆச்சரியங் கொண்டது.

***- எம்பெருமானாருடைய குணங்கள் மஹா பாபியான என்னை ஆட்படுத்திக் கொண்டவளவோடு த்ருப்தி பெற்று விடமால் இப்படிபட்ட பாபிகள் இன்னும் யாரேனும் கிடைப்பாருண்டோ? கிடைப்பாருண்டோ? என்று இன்னமும் நாக்கு நீட்டிக் கிளர்ந்து செல்லுகின்றன – என்றும் கருத்தாகும்.

————-

இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்றி யான் இறையும்
வருந்தேன் இனி யெம் இராமானுசன்,மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலை யுடைப் புன்மை யினோர்க் கொன்றும் நன்மை செய்யாப்
பெருந் தேவரைப் பரவும், பெரியோர் தம் கழல் பிடித்தே.–62-

பதவுரை

எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானாருடைய
மன்னா மா தாள் மலர் பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு

சிறந்த திருவடித் தாமரைகளில் சேராத ஸ்வபாவத்தை யுடையவர்களான  நீசர் களுக்கு
ஒன்றும் நன்மை செய்ய

ஒரு விதமான உபகாரமும் செய்யாத
பெரு தேவரை

பெரிய பெருமாளை போற்றுகின்ற
பெரியோர் தம்

ஆழ்வானாகிற மஹானாடைய
சுழல் இன்று பிடித்து

திருவடிகளை இன்று ஆச்ரயித்தேனானபின்பு
இரு வினை பாசம் கழற்றி இருந்தேன்

புண்ணியம் பாவமென்று இரண்டு வகையான கரும பாசங்களினின்று விடுபட்டவனானேன்;
யான்

இப்படி நிர்மலனாகப் பெற்ற அடியேன்
இனி இறையும் வருந்தேன்

இனி மேல் கொஞ்சங்கூட வருத்தப் பட்ட மாட்டேன்.

***- ஸ்ரீ ராமநுஜ பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே ஸர்வ ஸ்வதாநம் பண்ண வல்ல பெரிய பெருமாளைப் போற்றா நின்ற கூரத்தாழவானை அடைந்து உஜ்ஜீவித்த அடியேனுக்கு இனி ஒரு வருத்தமும் வினையக் காரணமில்லை யென்று தம்முடைய க்ருதக்ருத்யத்வத்தைக் கூறினாராயிற்று.

இருவினைப் பாசங்கழற்றி = பாவம் போலலே புண்ணியமும் பரகதிக்குப் பிரதிபந்தகம் என்பதை உணர்க. பாவம் இரும்பு விலங்கென்றும் புண்ணியம் பொன் விலங்கென்றும் சாஸ்திரங்கள் கூறும்.

—————–

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந் தோர் சிதைந் தோட வந்திப்
படியைத் தொடரும் இராமா னுச! மிக்க பண்டிதனே!–63-

பதவுரை

அறுசமயம் செடியை தொடரும் மருள் செறிந்தோர்

பாஹ்யமான ஆறு மதங்களாகிற தூறுகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகம் நிறைந்த மூடர்கள்
சிதைந்து ஒட

பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக
வந்து இப்படியை தொடரும்

இப் பூமியிலே வந்து அவதரித்து (நம்போல் வாரை விஷயீகரிப்பதற்குப்) பின் தொடர்கின்ற
மிக்க பண்டிதன்

மஹா பண்டிதரான
இராமாநுச

எம்பெருமானாரே!,
பிடியை தொடரும் களிறு என்னயான்

யானைப் பேடையைப் பின்பற்றித் திரிகின்ற ஆண் யானை போல
யான்

அடியேன்
சீர்  பிறங்கிய உன் அடியை தொடரும்படி நல்க வேண்டும்

ஸௌந்தரியம் முதலிய குணங்கள் விளங்குகின்ற தேவரீரது திருவடிகளைப் பின் பற்றும்படி கிருபை செய்தருள வேணும்.

***- ஸ்வாமி! யானையானது தன் பேடையினிடத்துப் பெருங்காதல் கொண்டு அதனையே பின் பிற்றித் திரிவது போல் அடியேன் தேவரீருடைய அழகிய திருவடிகளையே அளவற்ற அபிநிவேசத்தோடு அநுவர்த்தித்துச் செல்லும் படியாக அருள் புரிய வேணுமென்று வேண்டினாராயிற்று.

—————-

பண்டரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந் தண்ட மேந்திக் குவலயத்தே
மண்டி வந் தேன்றது வாதியர் காள்! உங்கள் வாழ்வற்றதே -64–

பதவுரை

எங்கள் இராமநுச முனி வேழம்

எங்களுக்கு விதேயமான ஸ்ரீராமாநுஜ முனியாகின்ற மத்த கஜமானது.
மாறன்

நம்மாழ்வார்
பண்

இசைகளாலே
தரு

அருளிச் செய்த
பசுந்தமிழ் ஆனந்தம்

செந்தமிழான திருவாய்மொழியில் விளைந்த ஸந்தோஷம்
பாய் மதம் ஆய் விண்டிட

பெருகு மத நீராக ஒழுகப் பெற்று
மெய்ம்மை கொண்ட நல் வேதம் கொழு தண்டம் ஏந்தி

ஸத்திய வாதியான நல்ல வேதமாகிற பெரிய தடியைத் தூக்கிக் கொண்டு
குவலயத்தே

இப் பூமண்டலத்திலே
மணடி வந்து என்றது

உங்களுடைய பிழைப்பு
உங்கள் வாழ்வு அற்றது

உங்களுடைய பிழைப்பு போயிற்று

***- குத்ஹிதவாகங்கள் பண்ணுகிற துர்வாதிகளே! இனி நீங்கள் பிழைக்க வழியில்லை யென்று நிச்சயித்துக் கொள்ளுங்கள்;

ஏன் என்கிறீர்களோ; எம்பெருமானாரென்னும் ஒரு மதயானை யானது உங்களைப் புடைப்பதாகப் பெரிய தடியை யெடுத்துக் கொண்டு எதிரிட்டு வாரா நின்றது; இதற்குத் தப்பிப் பிழைக்க உங்களாலாகாது-என்கிறார்.

யானைக்கு மத நீர் பெருகுமே; இந்த ஸ்ரீராமாநுஜ கஜராஜனாக்கு எது மதநீர் என்ன; முதலடியிற் கூறுகிறார். திருவாய் மொழியின் அறுபவத்தாலுண்டான ஆநந்த ரஸேமே இந்த கஜராஜனாக்கு மதநீர்ப் பெருக்காம். இதனால்,எம்பெருமானார் எப்போதும் திருவாய் மொழியை அநுபவித்துக் களிப்புறுவர் என்றதாகிறது.

————

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது, தத்துவ நூல்
கூழற்றது குற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்
நாழற்றது,நம் இராமா னுசந் தந்த ஞானத்திலே.–65-

பதவுரை

நம் இராமாநுசன்

ஸ்வாமிஎம்பெருமானார்
தந்க ஞானத்தில்

அருளின ஞானத்தினால் துர்வாதிகளுக்கு வாழ்ச்சி அற்றுப் போயிற்று;
மறையவர் தம் தாழ்வு

வைதிகர்களுடைய குறை
என்றும் அற்றது

இனி ஒருநாளும் இல்லாதபடியாயிற்று
தாரணி

பூமண்டவமானது
தவம் பெற்றது

பாக்கியம் பெற்றது;
தத்துவம் நூல்

தத்வபரமான சாஸ்திரங்கள்
கூழ் அற்றது

ஸந்தேஹமற நிச்சயமான பொருளைத் தெரிவிப்பவையாயின;
குற்றம் எல்லாம்பதித்த குணத்கினர்க்கு

பலவகைக் குற்றங்களும் நிறைந்த ஸ்வபாவத்தையடைய ஜனங்களுக்கு
ஆ நாழ் அற்றது

அந்தக் குற்றங்கள் தீர்ந்தன;

***- எம்பெருமானார் இவ்வுலகில் அவதரித்து உபதேசாதி முகத்தாலே உண்டாக்கின தத்துவ ஞானத்தால் பலித்த அம்சங்கள் எவையென்றால்; துர்வாதிகளுடைய வாழ்வு மாண்டது; வைதிகர்களுக்கு இருந்த ஸங்கடங்கள் அற்றுப் போயின; பூ மண்டலம் மஹா பாக்யம் பெற்றது; தத்வ சாஸ்த்ரங்களில் எவ்விதமான ஸந்தேஹமும்  உண்டாகாதபடி நிச்சய ஞானமே உண்டாயிற்று; பாவிகளின் பாவங்களெல்லாம் தொலைந்து போயின; ஆகிய இவை எம்பெருமானார் அருளிச் செய்த தத்துவ ஞானத்தின் பயனாகத் தேறினவை – என்றாராயிற்று.

தொல்லை வாதியர் = வைதிகர் தாம் அநாதியாக வுள்ளவர்; துர்வாதிகளும் அநாதியாக உண்டோவெனில்; பயிருள்ள போதே தொடங்கிக் களையுமுண்டாவதுபோல, பாஹ்யர் குத்ருஷ்டிகள் என்கிற வாதிகளும் பழையராகவே யுண்டென்க.

தரணி என்ற வடசொல் தாரணி யென நீட்டல் விகாரம் பெற்றது. கூழ்-ஸந்தேஹம் நாழ் – குற்றம்.

—————-

ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன் தக வென்னும் சரண் கொடுத்தே.–66-

பதவுரை

மாதவன்

திருமால்
வானம் கொடுப்பது

மோக்ஷம் அளிப்பது

(எப்படிப் பட்டவர்களுக்கு கென்றால்)

ஞானம்  கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு

ஞானம் பக்தி ரூபமாகப் பரீபக்வமாகி அந்த பக்தியினால் நித்யம் உருகுகிறவர்களுக்கேயாம்;
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன்

மஹா பாபியான எனது ஹ்ருதயத்திலிருந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார்
தன்னை எய்தினர்க்கு

தம்மைப் பற்றினவர்களுக்கு
அத்தானம் கொடுப்பது

அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது
(எவ்விதமாக வென்றால்)

தன் தகவு என்னும் சரன் கொடுத்து

தம்முடைய க்ருபையாகிற ஸாதனத்தை (அவர்களுக்குக் கைம் முதலாகக் கொடுத்து (தமது திவ்ய க்ருபையாலே)

***- அடியார்களுக்கு மோக்ஷமளிக்கிற அதிகாரம் எம்பெருமானாக்குமுண்டு, எம்பெருமானார்க்கு முண்டு. எம்பெருமான் அளிப்பது மிகவும் ச்ரமப்படுத்தியே; எம்பெருமானார் அளிப்பது கேவலம் தம்முடைய திருவருளாலே என்கிறார் இதில்.

ஞானமாது நன்றாகக் கனிந்து அது பக்தி பரமபக்தி பரமபக்தி என்னும்படியான அவஸ்தை களை யடைந்து, அதனால் இந்த ஸம்ஸாரத்தில் க்ஷணகால மிருப்பதும் அஸஹ்யமாய் ஆழ்வார்களைப்போல “{ஒரு பகலாயிணரமூழியாலோ’ என்று துடிப்பவர்களுக்குத்தான்; எம்பெருமான் முக்தியளிப்பது;

எம்பெருமானாரோ வென்னில் –க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யராகையாலே அடியார்களிடத்தில் எவ்விதமான க்லேசத்தையும் எதிர்பாராமல் தமது திருவருளைக் கொண்டே அவர்களைக் கரையேற்றுவர் என்றதாயிற்று.

வல் வினையேன் மனத்திலீனங்கடிந்த என்பதற்கு – மாதவனை அடி பணிந்து வருந்துகையாகிற ஈனத்தை எனக்குத் தவிர்த்த எம்பெருமானார் என்று உரைக்கவுமாம்.

—————-

சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை-
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணவை யுமக் கன்றென்றி ராமானுச னுயிர்கட்கு
அரணங் கமைத்திலனேல், அரணார் மற்றிவ் வா ருயிர்க்கே?-67-

பதவுரை

சரணம் அடைந்த தருமனாக்கு ஆ

தன்னைச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக
பண்டு

முற்காலத்திலே
நூற்றுவரை

துரியோதனன் முதலிய நூறு பேர்களை
மரணம் அடைவித்த மாயவன்

சாகும்படி செய்த எம்பெருமான்
தன்னை வணங்க வைத்த கரணம் இவை

தன்னை வழிபடுவதற்காகவே எற்படுத்தி வைத்த இந்திரியங்களாம் இவை;
உமக்கு அன்று

உங்களுக்கு உரிமைப் பட்டவையல்ல;
என்று

என்று இவ்வாறாக உபதேசித்து
இராமாநுசன்

எம்பெருமானார்
உயிர்கட்கு

ஆத்மாக்களுக்கு
அரண் அமைத்திலன் எல்

ரக்ஷையைக் கற்பித்தில ராகில்
,ஆர் உயிர்க்கு

இந்த அருமையான ஆத்மாக்களுக்கு
மற்று அரண் ஆர்

வேறு ரஷகராவார் ஆர்? (ஆருமில்லை.)

————-

ஆரெனக் கின்று நிகர்ச் சொல்லில் மாயன் அன்று ஐவரைத் தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே.–68–

பதவுரை

மாயன்

ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடைய எம்பெருமான்
அன்று

முற் காலத்தில்
ஐயர்

பஞ்ச பாண்டவர்களுடைய
தெய்வம் தேரினில்

தெய்வத் தன்மை பொருந்திய தேரின் மீது (இருந்து கொண்டு)
செப்பிய

அருளிச் செய்த
கீதையின்

பகவத் கீதையினுடைய
செம்மை பொருள்

ஸ்வ ரஸமான அர்த்தத்தை
தெரிய

(அனைவரும் எளிதாகத்)தெரிந்து கொள்ளும் படி
பாரினில்

இப் பூமிலே
சொன்ன

(கீதா பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
இராமாநுசனை

எம்பெருமானாரை
பணியும்

ஆச்ரயித்திருக்கும்
நல்லோர்

விலக்ஷண புருஷர்களுடைய
சீரினில்

கல்யாண குணங்களிலே
என் ஆவியும் சிந்தையும்

எனது ஆத்மாவும் மநஸ்ஸூம்
சென்று பணிந்தது

சென்று சேர்ந்து விட்டன;
சொல்லில்

சொல்லுமளவில்
இன்று

இக் காலத்தில்
எனக்கு ஆர் நிகர்

எனக்கு ஆர் ஒப்பாவார்?

————

சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந் தெடுத்தனன் இன்றென்னையே–69-.

பதவுரை

முன் நாள்

ஸ்ருஷ்டிருக்கு முற் காலத்தில்
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து

சிந்தையும் இந்திரியங்களு மெல்லாம் அழிந்து
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு

உப ஸமஹாரத்தை யடைந்து அசேதந ப்ராயமா யிருப்பதைப் பார்த்து
என் தனக்கு

(அப்படி அசேதந ப்ராயராய்க் கிடந்தவர்களில் ஒருவனான) எனக்கு
அவை

அந்தக் கரண களேபரங்களை
அன்று

அக் காலத்தில்
அருளால் தந்த அரங்கனாம்

க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானாம்
தன்  சரண் தந்திலன்

தனது திருவடிகளைக் காட்டிக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்க வில்லை;

(அக்குறை நீங்க)

எந்தை இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
தான் வந்து

தாமாகவே வந்து
அது தந்து

அந்தத் திருவடிகளைத் தந்தருளி
இன்று என்னை எடுத்தனன்

இன்று என்னை ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பித்தார்.

—————

என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி யென்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே?உன் பெருங்கருணை
தன்னை யென் பார்ப்பர் இராமானுச! உன்னைச் சார்ந்தவரே?–70-

பதவுரை

இராமா நுச

எம்பெருமானாரே!
என்னையும் பார்த்து

(ஒரு குணமில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி
என் இயல்வையும் பார்த்து

(இனி மேலும் எவ்வித நன்மையும் ஸம்பாதித்துக் கொள்ள முடியாமலிருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி
எண இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில்

எண்ணிறந்த பல திருக் குணங்களை யுடைய தேவரீரையும் நோக்கு மனவில்
அருள் செய்வதே நலம்

( எப்போதும்) அருள் செய் திருப்பதே நல்லது;
அன்றி

இதுவொழிய மேலும் ஆராயுமளவில்
என் பால் நலம் உளதே

என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ? (சிறிதும் இல்லை)

(நன்மை யொன்று மில்லாவிடில் நாம் அருள் செய்யலாகாதென்று திருவுள்ளம் பற்றினால்)

உன்னை சார்ந்தவர்

தேவரீரை ஆச்ரயித்தவர்கள்
உன் பெரும் கருணை தன்னை என் பார்ப்பர்

தேவரீருடைய கிருபையைப் பற்றி என்ன நினைப்பர்கள்?) இளப்பமாக நினையார்களோ.)

————–

சார்ந்த தென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான் மிகவும்
கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு உன்றன் குணங்களுக்கே
தீர்ந்ததென் செய்கை முன் செய்வினை நீ செய் வினையதனால்
பேர்ந்தது வண்மை இராமானுச! எம் பெருந்தகையே.–71-

பதவுரை

வண்மை

ஔதார்ய முடையரும்
எம்

எமக்கு ஸ்வாமியும்
பெரு தகை

பெருந் தன்மை யுடையருமான
இராமாநுசா

எம்பெருமானாரே! எனது நெஞ்சு
உன் தாள் இணை கீழ் சார்ந்தது அன்புதான்

தேவரீருடைய உபய பாதங்தளின் கீழ் அமர்ந்து விட்ட பக்தியும்
அத் தாமரை தாள்களுக்கு

அந்தத் திருவடித் தாமரைகள் விஷயத்திலேயே
மிகவும் கூர்ந்தது

மிகவும் அதிகரித்தது.
என் செய்கை

எனது செயலும்
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது

தேவரீருடைய திருக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது;
முன் செய் வினை

முன்னே செய்த பாவங்களெல்லாம்
நீசெய் வினை அதனால் பேர்ந்தது

தேவரீர் செய்தருளின் (கடாக்ஷமாகிற) காரியத்தாலே தொலைந்து போயின.

———————

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை,என்றுன்னி யுள்ளம்
நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறை புக ழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே.–72-

பதவுரை

இராமாநுசன்

எம்பெருமானார்
மிக்க வண்மை செய்து

தமது ஒளதார்ய குணத்தை அதிகமாகக் காட்டி,
தீய சமயம கலகரை

தீய மதங்களி லிருந்து கொண்டு கலஹஞ் செய்கிறவர்களை
கைத்தனன்

ஒழித்து விட்டார்;
தூய

பரிசுத்தமான
முறை நெறி தன்னை

வேத மார்க்கத்தை
காசினிக்கு உய்த்தனன்

பூமியிலே ஸ்தாபித்தருளினார்;
என்று உன்னி

என்று அநுஸந்தித்து
உள்ளம் நெய்த்து

நெஞ்சு கனிந்து
அவ்வன் போடு இருந்து

அந்த ப்ரிதியோடே கூடி யிருந்து
ஏத்தும்

(அவரை) ஸ்தோத்ரம் பண்ணுகிற
நிறை புகழோரருடனே

புகழ் நிறைந்த மஹான்களோடே
என்னை வைத்தனன்

(என்னையும் ஒருவனாக எண்ணும்படி) என்னை வைத்தருளினார்.
நிறைபுகழோருடனே வைத்தனன்:

அஸத்தக்களோடே பழகிக் கிடந்த என்னை ஸத்துக்களோட கூட்டி வைத்தார் என்னவுமாம்.

—————-

வண்மையினாலுந் தன் மாதக வாலும் மதி புரையும்
தண்மையினாலுமித் தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்
திண்மை யல்லா லெனக் கில்லை, மற்றோர் நிலை தேர்ந்திடிலே.–73-

பதவுரை

தன் வண்மையினாலும்

தம்முடைய ஔதார்ய குணத்தாலும்
மா தகவாலும்

பரம க்ருபையாலும்
மதி புரையும் தண்மையினாலும்

சந்திரனை யொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும்
இத் தரணியோர்கட்கு

இப் பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை

யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தை உபதேசிக்கிற எம்பெருமானாரை
உன்னும் திண்மை அல்லால்

சிந்கிப்பதாகிற அத்யவஸாய மொன்று தவிர
தேர்ந்திடில்

ஆராயமளவில்
எனக்கு மற்று ஒர் நிலை இல்லை

அடியேனுக்கு வேறெரு அத்யவஸாய மில்லை.

 

————–

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏரார் குணத்தெம் இராமானுச னவ் வெழில் மறையில்
சேரா தவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே.–74-

பதவுரை

மறையின்  திறம் தேரார் என்று

(இப்பாலிகள்) வேதஞ் சொல்லிகிற வழியை நிரூலித்திகிற தில்லையென்று
தீயவரை

பாவிகளை
மாயவன்

எம்பெருமான்
குறைப்பது

தண்டிப்பது
கூர் ஆழி கொண்டு

கூர்மையான தனது திருவாழியாலே;
கொண்டல் அனையவண் மை

மேகம்போன்ற ஔதார்யகுண முடையவரும்
ஏர் ஆர் குணத்து

(மற்றும்) பல நல்லகுணங்களுடையவருமான
எம் இராமாநுசன்

ஸ்வாமி எம்பெருமானார்
அ எழில் மறையில் சேராதவரை சிதைப்பது

அந்த சிறந்த வேதத்தில் அந்வயியாதவர்களே பங்கப் படுத்துவது (எப்படி யென்றால்)

***- எம்பெருமான் தனது ஆஜ்ஞா ரூபமான வேதங்களின் கட்டளைப்படி நடவாத கொடியவர்களைத் தனது திருவாழியைக் கொண்டு த்வம்ஸம் பண்ணி விடுவன்; எம்பெருமானாரோ வென்னில் அவ்வளவு ஆயாஸம் எடுத்துக் கொள்வதில்லை; வேதங்களை அடியோடு ஒப்புக் கொள்ளாத பாஹ்யர்களையும்,வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொண்டு அவற்றில் அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளையும் வாதப் போரில் அப்போதப்போது திருவுள்ளத்தில் ஸ்புரிக்கின்ற நல்ல யுக்கிகளைக் கொண்டு கண்டித்து விடுவர் என்கை.

—————

செய்த் தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண் முகப்பே
மெய்த் தலைத் துன்னை விடேனென் றிருக்கிலும் நின் புகழே
மொய்த் தலைக் கும் வந்து இராமா னுச! என்னை முற்று நின்றே.–76-

பதவுரை

செய் தலை

வயல்களில்
சங்கம்

சங்குகளானவை
செழு திரு முத்தம்

அழகிய முத்துக்களை
ஈனும் திரு அரங்கர்

உண்டாக்கு மிடமான திரு அரங்க

மா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள்

கைத் தலத்து

தமது திருக் கையிலே
ஆழியும் சங்கமும் எந்தி

திரு வாழி திருக் கையிலே தரித்துக் கொண்டு
நம் கண் முகப்பே

நமது கண்ணெதிரில்
மொய்த்து

வந்து நெருங்கி
அலைத்து

புத்தியைக் கெடுத்து
உண்னை விடேன் என்று இருக்கிலும்

உன்னை விட மாட்டேன் என்று இருந்தாலும்
இராமாநுசா

எம்பெருமானரே
நின் புகழே

தேவரீருடைய திவ்ய குணங்களே
என்னை வந்து முற்றம் மொய்த்து  நின்று

என் பக்கல் வந்து சூழ்ந்து கொண்டு
அலைக்கும்

ஆகர்ஷிக்கின்றன

***- எம்பெருமான் தனது விலக்ஷணமான அழகைக் காட்டிக் கொண்டு வந்து என் கண்னெதிரே நின்றாலும், என்னை விடாதே வலியப் பற்றினாலும் அவனது அழகில் நான் மோஹிக்கப் பெறுவதில்லை; தேவரீருடைய திருக் குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன பகவத் குணங்களை நான் ஈடுபடுவதில்லை; தேவருடைய திருக் குணங்களே என்னை ஈடுபடுத்துகின்றன. பகவத் குணங்களுக்கு நான் ஈடுபடுவதில்லை யென்றாராயிற்று.

“செய்த் தலைச்சங்கம் செழுமுத்த மீனாம்” என்கிற விசேஷணம்-திருவரங்கர் என்பதன் பகுதியாகிய திருவரங்கத்தில் அந்வயிக்கும். திருவரங்கம் எப்படிப்பட்ட தென்றால், முத்துக்களை யுதிர்க்கும் சங்குகள் நிறைந்த வயல் சூழ்ந்தது என்றவாறு. ஈனாதல்-பிரஸவித்தல்.

————–

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால்,இப்படி யனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே?–77-

பதவுரை

ஈயாத

(இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத
இன் அருள்

விலக்ஷணமான க்ருபையை
ஈந்தனன்

அடியேனுக்குச் செய்தருளின வரும்
எண் இல் மறை குறும்பை

எண்ணிறந்த      வேத விரோதிமதங்களை
அம்மறை பல்பொருளால் பாய்ந்தனன்

அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித்தவரும்
கீர்த்தியினால்

தமது கீர்த்தியாலே
இப்படி அனைத்தும் எய்ந்தனன்

இப்பூமியெங்கும் வியாபித்தவரும்
என் வினைகளை

எனது கருமங்களை
வேர்பறியகாய்ந்தனன்

வேரோடே அரும் படி போக்கினவரும்
வண்மை

ஔதார்யமே வடிவு கொண்ட வருமான
இராமாநுசற்கு

எம்பெருமானார்க்கு
இனி என் கருத்து

இன்னமும் (செய்யத்தக்கதாகத்) திருவுள்ளத்தில் ஏதேனா முண்டோ?

***- கீழ்ப்பாட்டில் தாம் அபேக்ஷித்தபடியே திருவருளைத் தந்தருளப் பெற்று, க்ருத க்ருத்ய ராய், அவர் செய்தருளின உபகாரங்களை அநுஸந்தித்து, இவை யெல்லாம் செய்த பின்பு இன்னமும் செய்தருள்வதாகத் திருவுள்ளம் பற்றிருப்பது எதுவோ என்கிறார்.

மறைக்குறும்பாவது- வேதத்திற்கு மாறாகச் சொல்லும் தப்புப் பொருள்கள். ஈந்தனன் பாய்த்தனன், எய்ந்தன், காய்ந்தனன், என்பவற்றை வினைமுற்றாகலே கொண்டு உரைத்தலுமாம்.

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-22-44-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

October 8, 2022

கார்த்திகை யானும் கரி முகத் தானும் கனலும் முக் கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை யேத்தும் இராமானுச னென்றன் சேம வைப்பே.-22-

பதவுரை

கார்த்திகையானும்

ஸுப்ரஹமண்யனும்

கரி முகத்தானும்

கணபதியும்

கனலும்

(அவர்களுக்குத் துணையாய் வந்த) அக்நியும்

முக் கண் மூர்க்தியும்

சிவனும்

மோடியும்

துர்க்கையும்

வெப்பும்

ஜ்வரதேவதையும்

முதுகு இட்டு

முதுகுகாட்டி ஒடிப்போன பின்பு (அநந்யகதியான பாணாஸுரனானவன்

மூ உலகும் பூத்தவனே என்று போற்றிட

“மூன்று உலகங்களையும் திருநாபிக் கமலத்திலே உண்டாக்கினபெருமானே!” (என்னைக்காத்தருள்) என்று போற்ற

வாணன் பிழை பொறுத்த

(அந்த) பாணாஸுரனுடைய அபராத்தை க்ஷமித்தருளின

தீர்த்தனை

பாவநனான ஸர்வேச்வரனை

ஏத்தும்

நித்யம் துதிக்கின்ற

இராமாநுசன்

எம்பெருமானார்

என் தன் சேமவைப்பு

எனக்கு ஆபத் தநம்.

***- ஐச்வர்யம் சங்கராதிச்சேத் ஆரோக்யம் பாஸ்கராத் ததா சிவன் பக்கல் செல்வம் பெற விரும்ப வேண்டும்; ஸூர்யன் பக்கல் ஆரோக்யம் பெற விரும்ப வேண்டும்) என்று ஸாமாந்யமாகச் சிலர் சொல்லுவதுண்டே; அதனைக் கொண்டு ஒருவன் அமுதனாரை நோக்கி ‘ஒய்! நீர் எம்பெருமானாரைப் பற்றினால் உம்முடைய தாரித்ரியம் நீங்குமோ? சிவனைப் பற்றினாலன்றே செல்வம் மிகும்’ என்று கூற அந்தச் சிவன் பட்ட பரிபவங்களை விளக்கும் ஒரு இதி ஹாஸத்தைப் பரக்கப்பேசிக் கொண்டு, ‘எம்பெருமானார் தாம் தமக்கு ஆபத் தனம்’ என்கிற திண்ணிய அத்யவஸாயத்தை உறுத்திக் கூறுகின்றார் இதில்.

———————-

வைப்பாய வான் பொருள் என்று,நல்லன்பர் மனத் தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழ்க்கே!–23-

பதவுரை

நல் அன்பர்

விலக்ஷண பக்தி யுடையவர்கள்
வைப்பு ஆய வான் பொருள் என்று

“எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத் ரக்ஷகமான அக்ஷ தநம்” என்று கொண்டு
இராமாநுசனை

எம்பெருமானாரை
இரு நிலத்தில்

இந்தப் பெரிய வுலகத்திலே
ஒப்பார் இலாத உறு வினையேன்

ஒப்பற்ற மஹா பாபியான அடியேன்
வஞ்சம் நெஞ்சில் வைத்து

(என்னுடைய) க்ருத்ரிமமான நெஞ்சிலே  வைத்து
முப்போதும் வாழ்த்துவன்

ஸர்வ காலமும் ஏத்தா நின்றேன்;
இது

மிகப் பெரிய அவரை நீசனாகிய நான் வாழ்த்துகையாகிற இது
அவன்

அவ் வெம்பெருமானானாருடைய
மொய் புகழ்க்கு

சிறந்த கீர்த்திக்கு
என் ஆம்

என்னாகுமோ? (அவத்யமமோ?)

***- “வளவேழுலகின் முதலாய” என்ற திருவாய் மொழியில் ஆழ்வார் நைச்யாநுஸந்தானம் பண்ணினது போல, இப் பாட்டில் இவ்வமுதனாரும் நைச்யாநுஸந்தாநம் பண்ணுகிறார்;.

————-

மொய்த்த வெந் தீ வினையால் பல்லுடல் தொறும் மூத்து, அதனால்
எய்த்தொழிந்தேன் முன நாள்களெல்லாம், இன்று கண்டுயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்
கைத்த மெய்ஞ் ஞானத்து இராமானுச னென்னும் கார் தன்னையே.–24–

பதவுரை

முன நாள்கள் எல்லாம்

கீழ்க் கழிந்த அநாதி காலமெல்லாம்
பல் உடல் தொறும்

பல பல சரீரங்கள் தோறும்
மொய்த்த வெம் தீ வினையால் மூத்து

ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கின்ற அதி க்ரூரமான கர்மத்தாலே கிழத் தனம் வருமளவும் வாஸஞ்செய்து
அதனால்

அத்தாலே
எய்த்து ஒழிந்தேன்

மிக்க பரிதாப மடைந்தேன்;
பொய் தவம் போற்றும் புலைச் சமயங்கள்

கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள்
நிலத்து அவிய

இந் நில வுலகத்திலே அற்றொழியும்படி
கைத்த

நிரஸித்தருளின
மெய் ஞானத்து

உண்மை ஞான முடையரான
இராமாநுசன் என்னும் கார் தன்னை

எம்பெருமானாராகிற  காள மேகத்தை
இன்று கண்டு

இன்று அடியேன் ஸேவிக்கப் பெற்று
உயர்ந்தேன்

சிறந்தவனானேன்.

***- நெடு நாளாக ஸம்ஸாரத்திலிருந்து பல பல கருமங்களைப் பண்ணி, அக் கருமங்களின் பலனாகப் பல பல பிறவிகளிற் பிறந்து படாதன பட்டு இப்படியாகவே அநேக பர்யாயம் அவஸந்நனாய்க் கிடந்தேன் நான்; இப்பொழுது பரம உதாரான எம்பெருமானார் இப் பூமியிலவதரித்துப் பல துர் மதங்களை வெறுத் தொழித்தது போல எனது கருமங்களையும் வேரறுத் தொழித்துத்  தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே தம்மைக் காட்டி யருளக் கண்டு கிருதார்த்தனானேனென்கிறார்.

பொய்த் தலம் போற்றும் புலைச் சமயங்கள் -ராவண ஸம்ந்யாஸம், காலநேமி ஜபம் முதலியவை போலே மதாந்தரஸ்தர்கள் க்ருத்ரிமமான ஆசாரங்களை அனுட்டிப்பார்களென்க. மெய்ஞ் ஞானத்திராமாநுசன் – “யதார்த்தம் ஸர்வ விஜ்ஞாநம்”என்று ஸ்தாபித்தருளினவர்

——————

காரேய் கருணை இராமானுச,இக் கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ யென்னை உய்த்த பினுன்
சீரே யுயிர்க் குயிராய், அடியேற்கின்று தித்திக்குமே.–25-

பதவுரை

கார் எய் கருணை இராமாநுச!

மேகத்தை யொத்த கருணையை யுடைய எம்பெருமானாரே!
நான்

அடியேன்
அல்வலுக்கு நேரே உறைவு இடம்

துக்கங்களுக்கு நேரே வாஸஸ்தானமாயிருப்பவன்;
என்னை

இப்படிப்பட்ட அடியேனை
நீ வந்து உற்றபின்

ஸ்வீகரித் தருளின பின்பு
உன் சீரே

தேவரீருடைய கல்யாண குணங்களே
உயிர்க்கு உயிர் ஆய்

ஆத்மாவுக்கு தாரகமாய்
அடியேற்கு

அடியேனுக்கு
இன்று தித்திக்கும்

இன்று ரஸியா நின்றது;
நின் அருளின் தன்மை

தேவரீருடைய க்ருபையின் ஸ்வபாவத்தை
இ கடல் இடத்தில்

கடல் சூழ்ந்த இப் பூ மண்டலத்தில்
ஆரே அறிபவர்

அறியக் கூடியவர்கள் ஆருமில்லை.

***- ஜல ஸ்தல விபாகம் பாராமல் ஸர்வத்ர ஸமமாக வர்ஷிக்கின்ற மேகம் போலே, தாழ்ந்தோர்  உயர்ந்தோர் என்னும்  வாசி பாராமல் எல்லார் திறத்தும் அருள் புரிகின்ற எம்பெருமானாரே! மிகக் கொடிய துக்கங்களுக்கெல்லாம் இருப்பிடமான என்னை தேவரீர் தாமே வந்து விஷயீகரித்த பின்பு தேவரீருடைய திருக் கல்யாண குணங்களே எனக்குப் பரம போக்யமாய்  ஆத்ம தாரகமுமாய் விட்டது. தேவரீர் க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யர் என்னுமிடத்தை இவ் வுலகில் உள்ளபடியே ஒருவருமறியார்கள்.

———–

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை, என் செய் வினையாம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக் குற்ற வாளர் எது பிறப் பேதியல்வாக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் வியல்வே நம்மை யாட் கொள்ளுமே.–26-

பதவுரை

என் செய்வினை ஆம்

என்னாலே செய்யப் பட்ட  வினையாகிற
மெய் குற்றம் நீக்கி

நிலை நின்ற தோஷங்களைப் போக்கி
விளங்கிய

(இவனுடைய தோஷங்களைப் போக்கப் பெற்றோமே என்னும் மகிழ்ச்சியாலே உஜ்வலரான
மேகத்தை

பரம உதாரராய்
திக்கு உற்ற கீர்த்தி

திசைகள் தோறும் விரிந்த புகழை யுடையரான
இராமாநுசனை

எம்பெருமானாரை
மேவும்

பொருந்தி யிருக்கின்ற
நல்லோர்

விலக்ஷணர்கள்
எக் குற்றவாளர்

யாதொரு குற்றத்தை யுடையராகவும்
எது பிறப்பு

யாதொரு ஜன்மத்தையுடையராகவும்
எது இயல்பு ஆக

யாதொரு சரிதையை யுடையவராகவும்
நின்றோர்

முன்பு நின்றார்களோ,
அக் குற்றம்

அந்தக் குற்றமும்
அப் பிறப்பு

அந்த ஜன்மமும்
அ இயல்வே

அந்த சரிதையுமே
நம்மை

நம்மை
ஆள் கொள்ளும்

அடிமைப் படுத்திக் கொள்ளவற்று.

***- ராமாநுஜ பக்தர்களுடைய ஜாதி முதலியவை ஏதாயினும் அவர்களெல்லாரும் அப்படியே நமக்கு உத்தேச்யர்கள்  என்று காட்டியவாறு.

—————–

கொள்ளக் குறை வற் றிலங்கிக் கொழுந்து விட் டோங்கிய வுன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக் கிழுக்கிதென்று
தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனி நெஞ்சமே!–27-

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!
கொள்ள குறைவு அற்று இலங்கி

கொள்ளக் கொள்ளக் குறையாமல் தானே விளங்கி
கொழுந்துவிட்டு ஓங்கிய

மேன்மேலும் இளகிப் பதித்து வளர்ந்திருப்பதான
உன் வள்ளல் தனத்தினால்

தேவரீருடைய ஔதார்ய குணத்தாலே
வல் வினையேன் மனம்

மஹா பாபியான எனது நெஞ்சிலே
நீ புகுந்தாய்

(தேவரீருடைய பெருமை பாராதே) வந்து புகுந்தருளிற்று;
இது

(வஸிஷ்டின் சண்டாளர் க்ருஹத்தில் புகுந்தாற் போலே) புகுந்தவிது,
வெள்ளை

பரிசுத்தமாய்
சுடர் விடும்

பரிசுத்தமாய் விளங்கா நின்றுள்ள
உன் பெரு மேன்மைக்கு

தேவரீருடைய ப்ரபாவத்திற்கு
இழுக்கு என்று

அவத்யாவஹம் என்று
என் தனி நெஞ்சம்

எனது துணையற்ற நெஞ்சானது
தள்ளுற்று இரங்கும்

தளர்ந்து ஈடுபடா நின்றது.

***- ஸ்வாமிந்! தேவரீருடைய பெருமையையும் அடியேனுடைய சிறுமையையும் சிறிதும் பாராமல் “இவன் நம் அடியார் விஷயத்திலே சுபலனாயிரப்பானொருவன்” என்கிற இவ்வளவையே கொண்டு பாபிஷ்டமான என் ஹ்ருதயத்திலே தேவரீர் புகுந்தளிற்று: வஸிஷ்டன் சண்டாளர் மனையிற் புகுந்தாற்போல் தேவரீர் என் நெஞ்சில் புகுந்த விது, தேவரீருடைய பரிசுத்தமாய் விளங்கும் மஹிமைக்கு என்ன அவத்யத்தை விளைத்திடுமோவென்று அஞ்சா நின்றேன்,

————–

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க் கரிய இராமா னுசன் புகழ் அன்றி யென் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே!–28-

பதவுரை

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை

நெஞ்சிலே கல்மிஷத்தை யுடையனா யிருந்த கம்ஸனை
காய்ந்த

முடித்த
நிமலன்

ஹேயப்ரத்ய நீகனாய்,
நங்கள் பஞ்சி திருவடி

ஆச்ரிதர்பக்கல் அபிமாநமுடையளாய் பஞ்சு போல் மெல்லிய திருவடிகளையுடையளான
பின்னை தன் காதலன்

நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனான கண்ண பிரானாடைய
பாதம் நண்ணு

திருவடிகளை ஆச்ரயியாத
வஞ்சர்க்கு

ஆத்மாபஹாரக் கள்வர்களுக்கு
அரிய

துர்லபரான
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
புகழ் அன்றி

குணங்களை யொழிய (மற்றொன்றை)
என் வாய்

என் வாக்கானது
கொஞ்சி பரவகில்லாது

குலாவி ஏத்த மாட்டாது;
இன்று கூடியது வாழ்வு

இன்று (எனக்கு) நேர்ந்த வாழ்ச்சியானது
என்ன

ஆச்சரியமானது

***-  நேற்று வரை அபதார்த்தமாய்க் கிடந்த அடியேன் இன்று ஸத்தை பெற்று வாழ்ந்த அதிசயம் சொல்லி முடியுமோ? இன்று உமக்கு வந்த அதிசயம் என்ன வென்று கேட்கிறீர்களோ? எம்பெருமானாருடைய குண கீர்த்தநத்தில் நேற்று வரை உதாஸீநமாய்க் கிடந்த என் வாயானது இன்று அவருடைய திவ்ய கீர்த்திகளை யன்றி வேறொன்றையும் அநுசந்திக்க மாட்டேனென்று அது தன்னிலே  ஊன்றிக் கிடக்கிறதே, இதைவிட அதிசய முண்டோ? என்கிறார்.

—————-

கூட்டும் விதி யென்று கூடுங்கொலோ,தென் குருகைப் பிரான்
பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத், தன் பத்தி யென்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் யுணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டின்ப மெய்திடவே?–29-

பதவுரை

தென் குருகை பிரான்

நம்மாழ்வாருடைய
பாட்டு என்னும்

பாசுரங்கள் என்று ப்ரஸித்தமாய்
வேதம்

வேத ரூபமாய்
பசும் தமிழ் தன்னை

செந்தமிழாயிருக்கின்ற திருவாய் மொழியை
தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த

தம்முடைய பக்தியாகிற மாளிகையிலே ஸ்தாபித்தருளிய
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
புகழ்

கல்யாண குணங்களை
மெய் உணர்ந்தோர்

உள்ளபடி அறிந்திருக்கு மவர்களுடைய
ஈட்டங்கள் தன்னை

கோஷ்டிகளை
என் நாட்டங்கள் கண்டு

என் கண்களானவை ஸேவித்து
இன்பம் எய்திட

ஸூகிக்கும் படியாக
கூட்டும் விதி

அமைக்க வல்ல (அவருடைய) க்ருபையானது
என்று கூடுங்கொல்

என்றைக்கு வாய்க்குமோ?

***- நம்மாழ்வா ரருளிச்செய்த தமிழ் வேதத்தைப் பத்தியுடன் பரவும் எம்பெருமானாருடைய திருக்கல்யாண குணங்களை உள்ளபடி உணர்ந்து ஈடுபட்டிருக்கும் மஹான்களுடைய சேஷ்டிகளை அடியேன் ஸேவித்து ஆநந்திக்கும் படியான பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார்.

தன்பத்தி யென்னும் வீட்டின்கண் வைத்த = விலையுயர்ந்த மாணிக்கத்தைச் செப்பிலே வைத்துக் கொண்டிருப்பாரைப்போலே அநர்க்கமான அருளிச்செயலைத் தம்முடைய பக்தியாகிற உயர்ந்த மாளிகையிலே வைத்துப் பேணிக் கொண்டிராநின்ற உடையவர் என்றபடி. நாட்டம் – கண்.

—————

இன்பந் தரு பெரு வீடு வந் தெய்திலென்? எண்ணிறந்த
துன்பந் தரு நிர யம் பல சூழிலென்? தொல்லுலகில்
மன் பல் லுயிர்கட் கிறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுச னென்னை ஆண்டனனே.–30-

பதவுரை

தொல் உலகில்

‘அநாதியான இவ் வுலகத்தில்
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயின்

நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷியாவன் விஷ்ணுவே’
என மொழிந்த

என்று (பாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
அன்பன்

பரம காருணிகராய்
அனகன்

நிர்த் தோஷரான
இராமாநுசன்

எம்பெருமானார்
என்னை ஆண்டனன்

என்னை அடிமை கொண்டருளினார்;

(ஆன பின்பு)

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்

ஆநந்தாவஹமான மோக்ஷம் வந்து ஸித்தித்தாலெனன?
எண்  இறந்த துன்பம் தரு பல நிரயம் சூழில் என்

அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நரகங்கள் வந்து சூழ்ந்து கொண்டால் தான் என்ன?

***-  எம்பெருமானார் என்னை அடிமை கொண்டருளப் பெற்ற பின்பு எனக்கு மோக்ஷம் கிடைத்தாலென்ன? பலபல நரகங்கள் நேர்ந்தாலென்ன? எனக்கு எது பரம ப்ராப்யமோ அது கிடைத்து விட்டது! சரக்கறப் பேசுகிறார்.

நிரயம்-வடசொல். அனகன்-வடசொல் வகாரம்:ஹேய ப்ரதிபடர் என்றபடி.

—————–

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் கால மெல்லாம் மனமே!
ஈண்டு பல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே
காண்டகு தோளண்ணல் தென்னத்தியூரர் கழலிணைக் கீழ்ப்
பூண்டவன் பாளன் இராமானுசனைப் பொருந்தினமே.–31-

பதவுரை

மனமே

நெஞ்சே!
நூள் ஆய்

நாள்களாகவும்
திங்கள் ஆய்

மாதங்களாகவும்
ஆண்டுகள் ஆய்

வருஷ்ங்களாகவும்

(இப்படி)

நிகழ் காலம் எல்லாம்

நடந்து செல்லுகிற ஸர்வ காலங்களிலும்
ஈண்டு பல் யோனிகள் தோறும்

திரண்டு பல்வகைப் பட்ட யோனிகள் தோறும்
உழல்வோம்

தட்டித் திரிந்த நாம்
இன்று ஒர் எண் இன்றியே

இன்று ஒரு நினைவு மில்லாதிருக்கச் செய்தே (அகஸ்மாத்தா)
காண்  தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பு ஆளான் இராமாநுசனை பொருந்தினம்

கண்ணாரக் காணத் தக்க  தோள்களை யுடைய ஸ்வாமியான பேரருளாளனாடைய திரு வடிகளில் அன்பு பூண்ட எம்பெருமானாரைச் சேரப் பெற்றோம் (என்ன பாக்கியம்!,)

——————-

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந் தெடுத்தளித்த
அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.–32-

பதவுரை

 

செறு கலியால்

(தரும நெரியைத் திரஸ்கரிக்கின்ற கைலினாலே
வருந்திய

துக்கப்பட்ட
ஞாலத்தை

பூமியை
வண்மையினால் வந்து எடுத்து அளித்த

தமதுநிர்ஹேதுக க்ருபையாலே வந்து உத்தரித்து ரக்ஷித்தவரும்
அரும் அளித்த

சரணுகதியென்கிற அரிய தபஸ்ஸை அநுஷ்டித்தவரும்
எங்கள்

எமக்கு ஸ்வாமியுமான
இராமாநுசனை

எம்பெருமானாரை
அடைபவர்க்கு

ஆச்ரயிக்கு மவர்களுக்கு
பொருந்திய தேசும்

ஸ்வரூபாது ரூபமான தேஜஸ்ஸூம்
பொறையும்

க்ஷமாகுணமும்
திறலும்

ஜிதேந்த்ரியத்வமாகிற பலமும்
புகழும்

கீர்த்தியும்
நல்ல திருந்திய ஞானமும்

பரம விலக்ஷணமான அறிவும்
செல்வமும்

பக்தியாகி றஸம்பத்தும்
சேரும்

தானே வந்துசேரும்.

————

அடையார் கமலத் தலர் மகள் கேள்வன் கை யாழி யென்னும்
படையொடு நாந்தகமும் படர் தண்டும்,ஒண் சார்ங்க வில்லும்
புடையார் புரி சங்கமு மிந்தப் பூதலம் காப்பதற்கென்று
இடையே இராமானுச முனி யாயின இந் நிலத்தே.–33-

பதவுரை

அடை ஆர் கமலத்து அலர் மகள் கேள்வன்

தளங்கள் நெருங்கிய தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமானுடைய
கை ஆழி என்னும் படையோடு

திருக் கையிலே (விளங்கா நின்ற திருவாழி யென்கிற திவ்யா யுதத்தோடே
நாந்தகமும்

நாந்தக வாளும்
படர் தண்டும்

ரக்ஷணத் தொழிலிலே பரந்திரா  நின்ற கதையும்
ஒண் சார்ங்கம் வில்லும்

அழகிய ஸ்ரீ சார்ங்க மென்கிற வில்லும்
புடை ஆர் புரி சங்கமும்

ஒரு பக்கத்துக்குத் தானே ஆபரணமாகப் போரும் படியான அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யமும் (ஆக இப் பஞ்சாயுதாழ்வார்கள்)இந்த பூதலம் காப்பதற்கு என்று
இந்தப் பூமியை ரக்ஷிக்கைக்காக இந் நிலத்து

இப் பூ மண்டலத்திலே இராமாநுச முனி இடையே ஆயின

எம்பெருமானார் பக்கலிலே ஆயினர்

***-  ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களும் லோக ரக்ஷண அர்த்தமாக எம்பெருமானார் பக்கலிலே வந்து குடி கொண்டனர் என்கிறார் இப்பாட்டில்.

“அடையார் + புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந் நிலத்தே இராமாநுச முனியிடையே ஆயின” என்று அந்வயித்தவாறு. ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்கள்  இவர் பக்கலிலே ஆகையாவது – இவருடைய நினைவைக் கடாக்ஷித்து நின்று இவர் அதிகரித்த காரியத்திற்குத் துணை செய்கையாம். அம்பரீஷனுக்குத்த் திருவாழியாழ்வான் ஸஹகரித்தது போல.

இப் பாட்டை மற்றொரு வகையாகவும் அந்வயிக்க இடமுண்டு:- அடையார் +புடையார்  புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்திடையே இராமாநுசமுனியாயின” என்று இப் பக்ஷத்தில் ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களே இந் நிலவுலகைக் காக்க எம்பெருமானாராக வந்து திருவவதாரித் தார்க ளென்றதாகிறது.

—————

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என்
புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப் புகழே.–34-

பதவுரை

இராமாநுசன் தன்

எம்பெருமானாருடைய
நயம் புகழ்

கல்யாணகுணங்களானவை
நிலத்தை செறுத்து உண்ணும் நீசம்

பூலோகத்தை ஹிம்ஹித்ததுத் தின்கிற நீசனான
கலியை

கலிபுருஷனாடைய
நினைப்பு அரிய பெலத்தை செறுத்தும்

இவ்வளவென்று நினை முடியாதபடி அளவற்றதான பராக்ரமப்தைத் தொலைத்தவளவிலம்
பிறங்கியது இல்லை

பிரகாசிக்கவில்லை;

(பின்னை எப்போது பிரகாசித்தன? என்னில்;)

என் பெய் வினை

என்னாலே செய்யப்பட்ட பாவங்களை
தென் புலத்தில்

யமலோகத்தில்
பொறித்த

எழுதிவைத்த
அப் புத்தகம் சும்மை

அந்த புஸ்தகக் கட்டுகளை
பொறுக்கிய பின்

கொளுத்திவிட்டபின்பு
நலத்தை பொறுத்தது

விளக்கம் பெற்றன.

***-  எம்பெருமானாருடைய ஞானம், சக்தி முதலிய திருக் கல்யாண குணங்கள் எப்போது பிரகாசித்தனவென்றால், இந்நிலவுலகத்தில் கலிபுருஷன் செங்கோல் செலுத்த முடியாதபடி அவனுடைய வலிமையைத் தொலைத்துக் கிருதயுக தர்மமே எங்கும் நடைபெறும் படி செய்தருளினவாறே “இவர் மஹா புருஷர்; அரிய பெரிய ஞான சக்திகனை யுடையவர்” என்று உலகத்தா ரனைவரும் போற்ற நேர்ந்ததனால் கலியின் கொடுமையைக் கெடுத்தது காரணமாகவே இவருடைய திருக் கல்யாண குணங்கள்; நன்றாக விளங்கின – என்பர் சிலர்;

அது தகுதியல்ல; கலிதோஷத்தைப் போக்கினவளவிலும் எம்பெருமானாடைய திருக் குணங்கள் பொலிவு பெறவில்லை. பின்னை எப்போது பொலிவு பெற்றனவென்றால், எனது அளவற்ற பாவங்களை யெல்லாம் சிந்திரகுப்தன் எழுதி வைத்திருந்த பெரிய புத்தகச் சுமையைக் கொளுத்தி விட்டு என்னை நிஷ் கல்மஷனாக்கி அடிமை கொண்டாரென்ற விஷயம் வெளி வந்த பிறகு தான் அவருடைய திருக் குணங்கள் ஆச்சரியமாக விளங்கின என்கிறார்.

இதனால் தம்முடைய பாவங்கள் ஸர்வ சக் தனாலும் போக்க முடியாதவை என்பதும், கலியின் கொடுமையிற் காட்டிலும் கொடுமையிற் காட்டிலும் தமது கொடுமை வலிதாயிருந்ததென்பதும், இப்படி மஹா பாபிஷ்டாராயிருக்க தம்மை க்ஷமித்தருளி உஜ்ஜீவிக்கச் செய்தமையைக் கண்டு உலகத்தாரனைவரும் ஆச்சரியப் பட்டார்களென்பதும் தெரிவிக்கப் பட்டன.

———————-

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
புயலே எனக் கவி போற்றி செய்யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன் மன்னு மா மலர்த்தாள்
அயரேன் அருவினை என்னை யெவ் வாறின் றடர்ப்பதுவே?–35-

பதவுரை

ஒரு தெய்வம்

வேறொரு தெய்வத்தை
நயவேன்

விரும்பமாட்டேன்
நால் நிலத்தே

இவ் வுலகில்
சில மானிடத்தை

சில நீச மனிதர்களைக் குறித்து
புயலே என

‘மேகம் போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி
கவி போற்றி செய்யேன்

கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்ய மாட்டேன்;
பொன் அரஙகம் என்னில்

‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே
மயல் பெருகும்

அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
மன்னா மா மலர்த் தாள்

பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை
அயரேன்

மறக்க மாட்டேன்;

(ஆனபின்பு)

அயரேன்

கொடிய பாவங்கள்
என்னை

என்னை
இன்று

இன்று முதலாக
எவ்வாறு அடர்ப்பது

எப்படி ஆக்ரமிக்கக் கூடும்?

———-

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டளிப்பப், பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திடத்தானு மவ் வொண் பொருள் கொண்டவர் பின்
படரும் குணன், எம் இராமானுசன் றன் படி யிதுவே.–36-

பதவுரை

அடல் கொண்ட நேமியன்

(ஆச்ரித விரோதிகளை அழிக்கவல்ல) மிடுக்கையுடைய திருவாழியை எந்தினவனாய்
ஆர் உயிர் நாதன்

ஸ்கல ஆச்மாக்களுக்கும் சேஷியான எம்பெருமான்
அன்று

அர்ஜுனனுக்கு ஸாரதியாயிருந்த வக்காலத்தில்
ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப

வேதங்களாகிற கடலில் மறைந்து கிடந்த நல்ல அர்தங்களை ஆராய்ந்து கீதாமூலமாக) உபதேசிக்க
பின்னும்

அதற்குப் பின்பும்
காசினியோர்

பூமியிலுள்ளவர்கள்
இடரின் கண் வீழ்ந்திட

ஸம்ஸார துக்கத்தில் அழுந்திக் கிடக்க,
தானாம்

(எம்பெருமானாராகிற தாமும்
அ ஒன் பொருள் கொண்டு

(முன்பு ஸர்வேச்வரனருளிச் செய்த) அந்தச் சிறந்த அர்த்தங்களைக் கொண்டு
அவர் பின்படரும் குணன்

அந்த ஸர்ஸாரிகளைப்பின் எம்பெருமானாருடைய
வடி இது

ஸ்வபாவம் இது.

***-  முன்பு பகவான் பல சிறந்த அர்த்தங்களை ஸ்ரீ பகவத் கீதா முகத்தாலே வெளிப்படுத்தின வளவிலும் பாழும் ஸம்ஸாரிகள் அவ் வர்த்தங்களைத் தெரிந்து கொண்டு உஜ்ஜீவிக்க மாட்டாமல் மேன்மேலும் ஸம்ஸாரத்தையே பெருக்கிக் கொண்டு அதோ கதியை யடைந்துவிடவே, “ஐயோ! இப்படி நிந்ய ஸம் ஸாரிகளாய்க் கெட்டுப் போகிறார்களே!” என்று அநுதாபங்கொண்ட  எம்பெருமானார் அந்த கீதா சாஸ்த் ரத்திலுள்ள பொருள்களையே விளங்க உரைத்துக் கொண்டு, இது கேட்டுத் திருந்துவார் ஆரேணு முண்டோ? என்று ஸம்ஸாரிகளைப் பின் தொடர்ந்து செல்லுகிறார்; நம்மைப் பெறுகற்கு அவர் தாமே முயற்சி செய்து கொண்டு – ஆள் பார்த்து உழி தருகின்றார்;  இந்தக் திருக் குணம் உங்களுக்குப் தெரிய வில்லையா? என்கிறார்.

தானும் அவ்வொண் பொருள் கொண்டு = கீதா பாஷ்யம் அருளிச் செய்து என்று கருத்து திருக்கோட்டியூர்  நம்பி பக்கலிலே சரம ச்லோகார்த்தத்தை ஏகாந்தமாகக் கேட்டு அதனை யெல்லாரு மறிந்து உஜ்ஜீவிக்குமாறு கோபுரத்தின் மேலேறி விளம்பரப்படுத்தின திருக் குணத்தை இப் பாட்டில் பேசுகின்றாரென்னவுமாம்.

—————–

படி கொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்தி வெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமா னுசன் குணங் கூறும்,அன்பர்
கடி கொண்ட மா மாலர்த் தாள் கலந் துள்ளங் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே.–37–

பதவுரை

படி கொண்ட கீர்த்தி

உலக மெங்கும் பரந்த புகழை யுடைத்தான
இராமாயணம் என்னும்

ஸ்ரீ ராமாயண மென்கின்ற
பக்தி வெள்ளம்

பக்தி ஸமுத்திரம்
குடி கொண்ட கோயில்

நித்ய வாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
குணம் கூறும் அன்பர்

திருக் குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய
கடி  கொண்ட மா மாலர்த் தாள்

மணம் மிக்குச் சிறந்த பாதார விந்தங்களில்
உள்ளம் கலந்து

நெஞ்சு பொருந்தி
கனியும்

ஸ்நேஹித்திருக்கின்ற
நல்லோர்

மஹாநுபவர்கள்
அடி கண்டு கொண்டு

(இவ்வாதம் வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப்பொருளைத் தெரிந்து  கொண்டு
உகந்து

ஆதரித்து
என்னையும்

அடியேனையும்
அவர்க்கு

அவ்வெம்பெருமானார்க்கு
ஆள் ஆக்கினர்

ஆட் படுத்தினார்கள்

***-  இப்படிப்பட்ட எம்பெருமானாரை நீரே செ ன்று பற்றினீரோ? அன்றி அவர் தாமே  ஸ்வீகரித்தருளினாரே? என்று அமுதனாரைச் சிலர் கேட்க, நானாம் பற்றவில்லை, அவரும் ஸவீகரிக்க வில்லை; அவருடைய ஸம்பந்த ஸம்பந்திகள் என்னைக் கொண்டு சேர்த்தார்கள் என்கிறார்.

அடி கண்டு கொண்டு = அடியாவது  மூலம்; எம்பெருமானார்க்கு  உரித்தாயிருக்கையாகிற மூலத்தைத் தெரிந்து கொண்டு சேர்த்தார்க் கொள்கை. மருமறிந்து காரியஞ்செய்தார்க் ளென்றவாறு-

—————

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை யென்னை இன்று, அவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா?முன்பு புண்ணியர் தம்
வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால், உரையா யிருந்த நுண் பொருளே.–38-

பதவுரை

(ஸ்வாமிந்!)

என்னை

(நெடுநாளாக அஹங்காரியாய்க்கிடந்த) என்னை
இன்று

இன்றைக் தினத்தில்
ஆக்கி

ஒரு பொருளாக்கி
அடிமை

சேஷத்வத்தில்
நிலைப்பித்தனை

நிலைநிறுவத்தினீர்; (இன்று இப்படி செய்தருளின தேவரீர்)
முன்பு

முற்காலமெல்லாம்
அவமே போக்கி

வீணாகப் போக்கி
புறந்து இட்டது

வெளி விஷயங்சளிலே தள்ளி விட்டு வைத்தது
என் பொருளா

என்ன நிமித்தாக?
புண்ணியர் தம்

(தேவரீரை இடைவிடாது அநுபவிக்கும்) பாக்கிய சாலிகளுடைய
வாக்கில் பிரியா

வாக்கை விட்டுப் பிரியாத
இராமாநுச

எம்பெருமானாரே!
தெரிவு அரிது

அறிய முடியாததாக நின்றது;
இந்த நுண் பொருள்

இந்த ஸுக்ஷ்மமான விஷயத்தை
உரையாய்

தேவரீரே அருளிச் செய்ய வேணும்

***-  கூரத்தாழ்வானைக் கொண்டு அடியேனை இன்று திருத்திப் பணி கொண்ட தேவரீர் இதற்கு முற்காலமெல்லாம் இந்த சேஷத்வ ரஸத்தை அடியேனுக்கு ஊட்டாமல் வீணாக விஷயாந்தரங்களிலே அகல வைத்திருந்ததற்கு என்ன காரணம்? இன்று இங்ஙனே திருவுள்ளம் பற்றும்படியாக என்னிடத்தில் என்ன ஸூ ஹ்ருதம் உண்டாயிற்று? ஒன்றுமில்லை; அப்படியிருக்கச் செய்தேயும் தேவரீர் தம்முடைய நிர்ஹேதுக க்ருபையைக் கொண்டே யன்றோ இன்று ஆட்படுத்திக் கொண்டது. ஹா ஹா! இப்படியும் ஒரு க்ருபை யுண்டோ? இவ்வருளின் திறத்தை அறிவாரார்! ஆறிந்த தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்றாராயிற்று.

நிலைப்பித்தனை = முன்னிலை யொருமை வினைமுற்று அவம் – வீண். “இன்று என்னை ஆக்தி அடிமை நிலைப்பித்தனை; முன்பு அவமே போக்கிப் புறத்திட்டது என் பொருளா!” = இன்று ஸ்வீகரித்ததற்கும் இத்தனை நாள் ஒதுக்கி வைத்ததற்கும் என்ன காரணம்?

—————-

பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே
மருள் கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார் தரமோ?
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே.–39–

பதவுரை

பொருள் என்றும்

த்ரவ்யம் என்று சொல்லிக் கொண்டும்
புதல்வர் என்றும்

புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும்
பூமி என்றும்

க்ஷேத்ரமென்று சொல்லிக் கொண்டும் (அர்த்த புத்திராதிகளையே விரும்பி)
மருள் கொண்டு

அறிவு கெட்டு
இளைக்கும் நமக்கு

வருந்திக் கொண்டு கிடக்கிற நமக்கு
இருள் கொண்ட

அஜ்ஞாநத்தோடு கூடிய க்ரூரமான துக்கங்களை
மாற்றி

போக்கடித்து
தன் ஈறு இல் பெரு புகழே தெருளும் தெருள்

தம்முடைய முடிவில்லாத சிறந்த கல்யாண குணங்களையே சிந்திக்கக் கடவதான ஞானத்தை
தந்து

அருளித்தருளி
இராமாநுசன்

எம்பெருமானார்
செய்யும் சேமங்கள்

செய்கிற க்ஷேமங்களானவை
நெஞ்சே

ஒ மனமே!
மற்று உளார் தரமோ

மற்ற பேர்களுக்குச் செய்கிற மாதிரியோ (அல்ல; விலக்ஷணம் என்ற படி.)

***- எம்பெருமானாருடைய திருவருளாலே தாம் பெற்ற நன்மைகளை நினைத்து நினைத்து ஆநந்தமுள்ளடங்காமல் அவ்வாநந்தத்தை நெஞ்சோடே கூடி உலாவுகிறார். நெஞ்சே! – அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாசவார் குழலாள் என்று மயங்கிப் புத்ர தார க்ருஹ க்ஷேத்ரங்களுக்கு மேற்படி வேறொன்று மறியாமல் உடலுக்கே கரைந்து நைந்து கிடந்த நமக்கு அஜ்ஞாநங்களையும் அது காரணமாகவரும் பாவங்களையும் தொலைத்தருளித் தமது திவ்ய கீர்த்திகளையே அநவரதம் பேசும்படியான நிலைமையிலே நம்மைக் கொண்டு நிறுத்தினார் எம்பெருமானார்; இப்படியாக அவர் நமக்குச் செய்தருளும்  க்ஷேமங்கள் இவ்வுலகில் வேறு யார்க்காவது கிடைக்கக் கூடியதோ? நம்முடைய பாக்கியமே பாக்கியமன்றே என்றாராயிற்று.

மற்றுளார் தாமோ?  என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; இப்படிப்பட்ட க்ஷேமங்களை நமக்கு எம்பெருhனார் தவிர வேறு யாரேனும் அளிக்கக் கூடுமோ? என்றும் இப்படிப்பட்ட க்ஷேமங்கள்  நமக்குத் தவிர வேறு ஆர்க்கேனும் கிடைக்கத் தகுமோ? என்றும்.

————–

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம் பொருள் வீடுதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன், இராமானுசன் இந்த மண்மிசையே.–40-

பதவுரை

சேமம் நல்வீடும்

(அனைவர்க்கும்) க்ஷேம ரூபமான சிறந்த மோக்ஷம்
பொருளும்

அர்த்தமும்
தருமமும்

தர்மமும்
சீர்ய நல் காமமும்

மிகவுஞ் சிறந்த காமமும்
என்ற இவை

ஆக இப்படி சொல்லப் பட்டுள்ள இவை
நான்கு என்பர்

நான்கு புருஷார்த்தங்கள் என்று (வைதிகர்கள்) கூறுவார்கள்;
நான்கினும்

இந்த நான்கு புருஷார்த்தங்களுள்
காமம்

காமமாவது
கண்ணனாக்கே ஆமது

எம்பெருமான் விஷயத்திலேயே உண்டாமது;
அறம் பொருள் வீடு

தர்ம அர்த்த மோக்ஷங்கள் மூன்றும்
இதற்கு என்று

இந்தக் காம புருஷார்த்தததிற்கு சேஷ பூதங்கள் என்று
வாமநன் சீலன் இராமாநுசன்

வாமநாவதாரம் செய்த பெருமானொடு ஒத்த சீலத்தை யடையரான எம்பெருமானார்
இந்த மண்மிசை உரைத்தான்

இவ் வுலகத்தில் அருளிச் செய்தார்

***-  எம்பெருமானார் இவ்வுலகத்தார்க்கு உபதேசித்தருளின அர்த்தங்களில் ஒரு அர்த்த விசேஷத்தை இப் பாட்டில் எடுத்துரைக்கின்றார்:- ஸகல சாஸ்த்ரங்களாலும் பிரதி பாதிக்கப்படுமவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என நான்கு புருஷார்த்தங்களாம்; அந்த நான்கினுள் காமமென்பது பகவத்விஷய காமம்; விஷயாந்தரங்களைப்பற்றின காமம் சிற்றின்ப மாதலால் அது புருஷார்த்தமன்று; பேரின்பமாகிய பகவத் காமமே காமம். அதுவே புருஷார்த்தம். மற்ற மூன்று புருஷார்த்தமன்று; சொன்ன காம புருஷார்த்தத்திற்கு சேஷப்பட்டவைகள்; காமமே ப்ரதாந சேஷியான புருஷார்த்தம் என்று உலகத்தாரெல்லார்க்கும் உபதேசித்தருளினர் எம்பெருமானார் என்றாராயிற்று.

சேம நல் வீடு மென்று தொடங்கி அறம் பொருள் வீடிதற்கு என்னுமளவும் எம்பெருமானாருடைய உபதேச வடிவம்

கண்ணுக்கேயாமது காமம் = காம க்ரோதங்களைக் கெட்ட குணமாகத் கூறி யிருப்பது தகாத விஷயங்களில் காமம் கூடாதென்பது பற்றி பகவத் விஷயத்தில் காமம்  சாஸ்த்ர விஹிதம். ஆழ்வார் =ஸுக்திகளில் இக் காமமே பொலியும்.

வாமநன் சீலன் = வாமநாவதாரம் செய்த எம்பெருமானாருடைய சீலம் போன்ற சீலத்தை யடையவர் என்கை. ஒருவரும் அபேக்ஷியாதிருக்கத் தன் பேறாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து திருவிக்ரமன் போலே வெளியிடுபவர் எம்பெருமானார் என்கிறது.

—————-

மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமா னுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு, நாரணற் காயினரே.–41-

பதவுரை

எங்கள் மாதவனே

நமக்கு நாதனான திருமால் தானே
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து

(இப்பூமியிலுள்ள மநுஷ்யாதி) யோனிகள் தோறும் அவதரித்து
கண்உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்

எல்லாருடைய கண்ணுக்கும் தன்னை இலக்காக்கிக் கொண்டு நின்ற விடத்திலும் (அவனை நம்முடைய நாதனென்று) காண மாட்டாதிருக்க இவ்வுலகத்தாரெல்லாரும்
அண்ணல் இராமாநுசன வந்து தோன்றிய அப்பொழுதே

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானார் இங்கே வந்தவதரித்தவுடனே
நண்ண அரு ஞானம் தலைக் கொண்டு

பெறுதற்கரிதான ஞானம் அதிகரிக்கப் பெற்று
நாரணற்கு ஆயினர்

ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப் பட்டனர்.

***-  எம்பெருமானுடைய அவதாரத்திற்காட்டிலும் எம்பெருமானாருடைய அவதாராமே சிறப்புற்ற தென்கிறார். எம்பெருமான் பலபல யோனிகளிற் பலவகைப் பிறவி பிறந்து கண் காண வந்து நின்று உபதேசங்களாலே ஸ்வ ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுத்த விடத்திலும் யாரும் அவனை லக்ஷியம் பண்ணவில்லை; “அவஜாநந்தி மாம் மூடா:” (என்னை மூடர்கள் அவமானப்படுத்துகிறார்கள்) என்று அவன்றானே சொல்லிக் கொண்டு வருத்தப்பட வேண்டிற்றாயிற்று ஆகையாலே பகவானுடைய அவதாரம் ஸம்ஸாரிகளுடைய தெள்ளறிவுக்கு உறுப்பாக வில்லை. எம்பெருமானாருடை அவதாரமோ வென்னில்; பயன் பெற்றது. இவர் தாம் திருவவதரித்தவடனே எல்லா வுலகத்தாரும் ஆச்சரியமான ஞானத்தைப் பெற்று உஜ்ஜீவித்தார்கள் – என்றாராயிற்று.

————-

ஆயிழை யார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்
தூயவன் தீதில் இராமா னுசன் தொல் லருள் சுரந்தே.–42-

பதவுரை

மா மலராள் நாயகன்

லக்ஷ்மீ பதியான
அரங்கன்

பெரிய பெருமாள்
எல்லா உயிர்கட்கும் நாதன் என்னும்

ஸகல ஆத்துமாக்களுக்கும் சேஷி என்று உபதேசிப்பவரும்
தூயவன்

பரம பரிசுத்தரும்
தீது இல்

எவ்வகைக் குற்றமுமில்லாத தவருமான
இராமாநுசன்

எம்பெருமானார்;

(என்னசெய்தாரென்றால்)

ஆய் இழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்திமாயும் என் ஆவியை

அழகிய ஆபரணங்களணிந்த ஸ்த்ரிகளுடைய கொங்கைத் தடத்தில் தங்கும் ஆசையாகிற சேற்றிலே அழுந்தி) நசித்துப் போகிற என் ஆத்மாவை
தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான்

இன்று நிர்ஹேதுக க்ருபை பண்ணி வந்து உத்தரித் தருளினார்.

***-  பகவானுடைய அவதார காலங்களில் திருந்தாத ஸம்ஸாரிகளும் எம்பெருமானார் காலத்தில் திருந்திவிட்டார்களென்று கீழ்ப் பாட்டில் கூறியதற்கு வேறு  த்ருஷ்டாந்தம் காட்ட வேணுமோ? என்னைத் திருத்திப் பணி கொண்ட விஷயமொன்றே போராதோ வென்பார் போலத் தம்மைத் திருத்தினதைச் சொல்லி ஆநந்தப்படுகிறார்.

————

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப் புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்க்கு யான் அறஞ் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசனென்று சொல்லுமினே.–43-

பதவுரை

படியில் உள்ளீர்

இப்பூமியிலுள்ளவர்களே!
யான் உமக்கு உரைக்கின்றனன்

நான் உங்களுக்கு (ஒரு    ஹிதம்) சொல்லுகிறேன்; (என்ன வென்றால்)
அறம் சீறும் உறுகலியை துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமின்

தர்ம மார்க்கத்தில் சீற்றமுடையத் தாய் ப்ரபலமான கலியை ஒட்டி விடும் எம்பெருமானாருடைய திரு நாமத்தைச் சொல்லுங்கள்; (அப்படி சொன்னால்)
திருவும்

பக்திப் பெருஞ்செல்வமும்
உணர்வும்

ஞானமும்
சுரக்கும்

மேன் மேலும் பெருகும்
சோல புகில்

அந்தத் திருநாமத்தைச் சொல்லத் தொடங்கும் போதே
வாய்  அமுதம் பரக்கும்

வாக்கிலே அம்ருத ரஸம் வியாபிக்கும்
இரு வினை

மஹா பாபங்கள்
பற்று அற ஓடும்

அடியோடே போய் விடும்.

 

***- உலகத்தாரை நோக்கி நீங்களெல்லாரும் ஸ்ரீ ராமாநுஜ திவ்ய நாயத்தை வாயாரச் சொல்லுங்கள், உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகுமென்கிறார். ஓ ஜனங்களே! உங்களுக்கு ஓர் அருமையான அர்த்தத்தை உபதேசிக்கிறேன், கேளுங்கள், எம்பெருமானுடைய ஸம்பந்தமுள்ள தேசத்தில் தருமத்திற்கு மாறான கலிபுருஷன் நிற்கப் பெற மாட்டான்; அன்னவரது திருநாமங்களை நீங்கள் அநுஸந்தாநம் பண்ணுங்கள்; உங்களுக்கும் ஜ்ஞாந பக்திகள் தலை யெடுக்கும் பாவங்களும் தொலையும். அத் திரு நாமங்கள் நாவுக்கும் இனிதாயிருக்கும். சொல்லிப் பாருங்கள்.

உமக்கு-யான், உமக்கியான். “யவ்வரீன் இய்யாம்” என்பது நன்னூல்.

நேர்பதினாறே நிரைபதினேழென் றோதினர் கலித்துறையோரடிக் கெழுத்தே” என்ற இலக்கணத்திற்கு மாறாக இப்பாட்டின் மூன்றாமடியில் (ஒற்றொழித்துப்) பதினெட்டெழுத்து

வந்தது என்னெனில்; உமக்கியான் என்ற விடத்தில் ககரத்தின் மேலேறின இகரம் குற்றிய விகர மாகையாவே வண்ணங்கெடாமைக்குக் கழித்து கீழோடே ஒன்றுவித்துப் பதினேழெழுத்தாகவே எண்ணத்தக்கது. கம்பர் இயற்றிய சடகோபரந்தாதியில்  “என் முடியா தெனக்கியாதே திரா வணன்றன்” என்ற இருபத்தொன்பதாம்பாட்டிலும் இப்படியே பிரயோகம் வந்தமை காண்க. இந்த நூற்றந்தாதியிலும் மேல் ஐம்பத்து மூன்றாம் பாட்டில் “பற்பல்லுயிர்களும் பல்லுலகியரவும் பரனதென்றும்” என்ற விடத்திலும் இங்ஙனமே கொள்க.

—————–

சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே.–44-

பதவுரை

அகல் இடத்தோர்

விசாலமான இப் பூமியிலுள்ளவர்கள்,
சொல்ஆர் தமிழ் ஒரு மூன்றும்

சொல் நிரம்பிய இயல் இசை நாடகம் என்கிற ஒப்பற்ற முத் தமிழையும்
சுருதிகள் நான்கும்

நான்கு வேதங்களையும்
எல்லை இல்லா அறம் நெறி யாவும்

கணக்கில்லாத தரும சாஸ்திரங்களையும் மற்றும் எல்லாக் கலைகளையும்
தெரிந்தவன்

அறிந்தவராயும்,
எண் அரு சீர்

எண்ண முடியாத குணங்களை யுடையவராயும்
நல்லார் பரவும்

ஸத்துக்களான் துதிக்கப் படுபவராயு மிருக்கிற
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
திருநாமம்

திரு நாமத்தை
நம்பி கல்லார்

(என் வார்த்தையை) நம்பிக் கற்கின்றார்களில்லை;

(ஸ்ரீ ராமாநுஜ நாமஸங்கீர் த்தநமே புருஷார்த்த மென்று அறியாதவர்களாய்)

எதுபேறு என்று காமிப்பரே!

நமக்குப் புருஷார்த்தம் எது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஐயோ!

***-   சொல் ஆர் தமிழொரு மூன்றும் = இயல் இசை நாடகம் என மூவகைப்படும் தமிழ் – ‘எழுத்துப் பதின்மூன்று இரண்டசை சீர்முப்பதேழ் தளை ஐந்து, இழுக்கிலடிதொடை நாற்பதின் மூன்று ஐந்துபா இனம் மூன்று, ஒழுகிய வண்ணங்கள் நூறு ஒன்பது ஒண்பொருள் கோள் இருமூ, வழுக்கில் விகாரம் வனப்பெட்டு யாப்புள் வகுத்தனவே” என்று தொகுத்து உணர்த்தப்படும் இயற்றமிழின் இலக்கணங்கள் குறிஞ்சி, செருந்தி, இந்தளம், கொல்லி, நாமரம், தக்கேசி, பஞ்சமம், கைசிகம் காந்தாரம் பாலை யாழ் முதலிய பண்களைக் கொண்டுள்ள தமிழ் இசைத்தமிழாம் இயலுக்கும் இசைக்கும் பொது வானது நாடகத் தமிழாம் தராவிட சாஸ்த்ரங்களெல்லாவற்றையும் அறிந்தவர் எம்பெருமானார் என்கிறது.

சுருதிகள் நான்கும் = ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என வேதங்கள் நான்காம். எல்லை யில்லா அறநெறி = தர்மசாஸ்த்ரங்கட்கு அளவே யில்லை. யாவும் = கீழ்ச் சொன்னவற்றையும் மற்றுமுள்ள கலைகளையும்.

 

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-1-7 -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

July 3, 2022

ஸ்ரீ பெரிய கோயில் நம்பி என்ற இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தத்தைத் திருச்செவி சாத்தி அருளி-அமுதன் என்ற திருநாமமும் பிரசாதித்து அருள ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஆனார்

அந்தாதி -அந்தத்தையே ஆதியாகக் கொண்டது -அந்த ஆதி -எழுத்து அசை சீர் அடி -ஏதாவது அந்தமும் ஆதியும் -பொருள் அந்தாதியும் உண்டே

ப்ரபந்ந சாவித்ரி காயத்ரி என்று பூர்வர்கள் கொண்டாடுவார்கள்

சரம திவ்ய பிரபந்தம் -கைங்கர்யத்தில் களை அறுப்பதான இயற்பாவில் சேர்த்தார்கள்

மூன்று சாற்றுப் பாசுரங்கள் கொண்டு வீறு பெற்று இருக்கும் திவ்ய பிரபந்தம் இது

———-

ஸ்ரீ வேதப்பிரான் பட்டர் அருளிச் செய்த தனியன் –

முன்னை வினை அகல மூங்கில் குடி யமுதன்
பொன்னம் கழல் கமலப் போது இரண்டும் -என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் தென் புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்

தெற்குத் திக்கில் உள்ள யம கிங்கர்கட்க்கு ஏதுக்காகப் பிராப்தி யுடையேன் -என் அருகில் வர ப்ரஸக்தியே இல்லையே –
என்னுக்கு கடவுடையேன் -என்னுக் கடவுடையேன் -கடைக்குறை -கடவு -பிராப்தி -உரிமை

———-

நயம் தரு பேர் இன்பம் எல்லாம் பழுது என்று நண்ணினர் பால்
சயம் தரு கீர்த்தி ராமானுஜ முனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சே

நயம் தரு பேர் இன்பம் எல்லாம் -விஷயங்களால் தரப்படும் சிற்றின்பங்கள் யாவும்
பிரமித்து இருப்பார் கருத்தால் பேர் இன்பம் என்கிறார்
நாணாமை நள்ளேன் நயம்-63- -முதல் திருவந்தாதி என்ற இடத்திலும் நயம் -விஷயாந்தரங்கள்

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-நயம்–சப்தாதி விஷயங்களை

நாணாமை நள்ளேன் நயம்  —–ஆசைப்படுவதான-சப் தாதிகளை லஜ்ஜியாதே கிட்டேன் –-ஹாஸ்யமான விஷயம் என்றுமாம் –

பழுது என்று நண்ணினர் பால் -வியர்த்தங்கள் என்று அவற்றை விட்டு ஒழிந்து தம்மை ஆஸ்ரயித்தவர்கள் விஷயத்தில்
சயம் தரு கீர்த்தி -ஸம்ஸார ஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும் புகழுடையரான
ராமானுஜ முனி தாளிணை மேல் -எம்பெருமானார் திருவடி இணைகள் விஷயமாக
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது ஓங்கும் அன்பால் -சிறந்த குணசாலியான அமுதனார் கொழுந்து விட்டு ஓங்கிய பக்தியினால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சே -அருளிச் செய்த இப்பிரபந்தம் அத்யயனம் செய்ய சம்மதித்து இருக்கக் கடவை
நெஞ்சுடைய அனுகூல்யம் பெறப் பாரிக்கிறார்

ஆயிழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளற்ற அழுந்தி மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று -அமுதனாரும்

மதந கதநைர் ந க்லிஸ்யந்தே யதீஸ்வர ஸம்ஸ்ரயா -தேசிகன்

காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் -மா முனிகள்

பழுதின்றி நண்ணினம்பால் -என்றும்
பழுதின்றி நண்ணி நன் பால் -என்றும் பாடபேதங்கள்

சயம் -ஜயம் -நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -போல் மீசை முறுக்கிச் சொல்லப் பண்ணுகை

முதல் சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடை ஒரு சீரும் விளங்காயாகி நேர் பதினாறே நிறை பதினேழு -என்று ஓதினர் கலைத் துறைக்கு ஓர் அடிக்கு எழுத்தே –
முதல் நான்கும் ஈர் அசைச் சீர்கள் –
பெரும்பாலும் ஏகார ஈற்றும் சிறு கால் ஓ கார ஈற்று
இப்பிரபந்தத்தில் ஏகார ஈற்று
திருவிருத்தத்தில் -கோலப் பகல் களிறு ஓன்று கற்புய்ய-40 பாசுரம் ஒன்றே ஓ கார ஈற்று-

சொல் தொடர் நிலை அந்தாதி-

————–

சொல்லின் தொகை கொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல் அன்பார் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறு சமயம்
வெல்லும் பரம இராமானுசா இது என் விண்ணப்பமே

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே வந்து அருளின ஸ்வாமி

தேவரீருடைய திருவடிவாரத்தில் சீலமில்லாச் சிறியேன்
செய்யும் விண்ணப்பம் ஈது ஒன்றே

தங்கள் அன்பர் ஆரத் தமது சொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப -திருநாம சங்கீர்த்தனம் பண்ணுவார்கள் அன்றோ –
அத்திரு நாமங்கள் இடைவிடாது என் நாவிலே திகழும்படி அனுக்ரஹித்து அருள வேணும் –
இது ஒன்றே யாய்த்து அடியேனுடைய பிரார்த்தனை –

தொகை -ஸங்க்யை -நூற்று எட்டு பாசுரங்கள் பாட வேணும் என்கிற ஸங்கல்பம்

எங்கள் கதியே ராமானுஜ முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா
பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கும் மனம் எனக்குத் தா -போல் இதுவும்

———-

மற்ற ஒரு தனியன் மேல் நாட்டில் அனுசந்திக்கப் படுகிறது-

இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திரு நாமத்தால்
முனி தந்த நூற்று எட்டுச் சாவித்ரி என்னும் நுண் பொருளைக்
கலி தந்த செஞ்சொற் கலித்துறை யந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே

ஸர்வேஸ்வரன் ஸங்கல்ப பூர்வகமாக உலகத்தைப் படைத்து சதுர்முக ப்ரஹ்மாவுக்கு சாவித்ரியை உபதேசித்தான்
இந்த அமுதனார் அந்த சாவித்ரியின் சாரார்த்தத்தை எடுத்து இராமானுசன் என்னும் திரு நாமத்துடன் இணக்கிக் கட்டளை கலித்துறையிலே வைத்து
தனது அனுபவ பரிவாஹ ரூபமாக இந்த நூற்றந்தாதியை நமக்கு உபகரித்து அருளினார்
இனி நமக்கு ஐஹிக ஆமுஷ்மிகங்களிலே ஒரு குறையும் இல்லையே

திருப்பெயரால் -என்ற பாடம் வெண்டளைக்குச் சேரும் –

————

ஸகல சாஸ்த்ரங்களுக்கும் ஸங்க்ரஹம் திரு அஷ்டாக்ஷரம்
அதனுடைய பரம தாத்பர்யமாயும்
ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் ஸாரார்த்தமாயும்
பூர்வாச்சார்யர்கள் உபதேச பரம்பரையாலே ப்ராப்தமாயும்
சேதனர்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களின் நிஷ்க்ருஷ்ட வேஷமாயும்
பரம ரஹஸ்யமாயும் இறே
இருப்பது சரம பர்வ நிஷ்டை

அஃது இருக்கும்படியை திருவரங்கத்து அமுதனாருக்கு எம்பெருமானார் தனது நிர்ஹேதுக கிருபையினாலேயே

கூரத்தாழ்வான் திருவடிகளில் தம்மை ஆஸ்ரயிப்பித்து அருளி -அவர் முகமாக உபதேசித்து அருளினார்
அந்த உபதேச ப்ராப்தமான சீரிய பொருளை அனவ்ரதம் பாவனை பண்ணி எம்பெருமானார் திருவடிகளை

சேவித்துக் கொண்டு போந்த அமுதனார்
அவருடைய திருக்கல்யாண குணங்களைத் தம்முடைய பக்திப் பெரும் காதலுக்குப் போக்குவீடாகப் பேசி

அனுபவித்துத் தீர வேண்டிய அவஸ்தை பிறந்து சரம பர்வ நிஷ்டையே சீரியது என்னும் பரம அர்த்தத்தை

சேதனர்களுக்கு உணர்த்த வேணும் என்னும் கிருபா மூலகமான திரு உள்ளத்தாலும்
எம்பெருமானாருடைய திவ்ய குண சேஷ்டிதாதிகளை ப்ரேமத்துக்குத் தகுதியான பாசுரங்களாலே பேசி
மதுரகவி நிஷ்டையை உபதேசிக்கும் முகத்தால் ஆச்சார்ய அபிமான நிஷ்டர்களுக்கு அறிந்து கொள்ளத் தக்க அர்த்தங்களை

எல்லாம் இந்த திவ்ய பிரபந்த முகத்தால் அருளிச் செய்கிறார்

————

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந் துய்ந் தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராம னுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.–1-

 

பதவுரை

நெஞ்சே!

ஓ மனமே!
பூ மன்னு மாது

தாமரைப் பூவில் பொருத்த முடையளாயிருந்த பிராட்டி
பொருந்திய மார்பன்

(அப் பூவை விட்டு வந்து) பொருந்துகைக்குறுப்பான போக்யதையை யுடைய  திருமார்பை யுடையனான பெருமானுடைய
புகழ் மலிந்த பா

திருக் கல்யான குணங்கள் நிறைந்த தமிழ்ப் பாசுரங்களிலே
மன்னு மாறன்

ஊற்றமுடையவரான நம்மாழ்வாருடைய
அடி

திருவடிகளை
பணிந்து

ஆச்ரயித்து
உய்ந்தவன்

உஜ்ஜீவித்தவரும்
பல் கலையோர் தாம் மன்ன வந்த

ஓதின மஹான்கள் நிலை பெறும்படி (இவ் வுலகில்) வந்தவதரித்த வருமான
இராமாநுசன்

எம்பெருமானுடைய
சரணாரவிந்தம்

திருவடித் தாமரைகளை
நாம் மன்னி வாழ

நாம் ஆச்ரயித்து வாழ்வதற்குறுப்பாக
அவன் நாமங்களே

அவ் வெம்பெருமானாரது திருநாமங்களையே
சொல்லுவோம்

ஸங்கீர்த்தநம் பண்ணுவோம்

தாமரை மலரிற் பிறந்த பெரிய பிராட்டியார் அப்பூவைவிட்டு “அகலகில்லேன் இறையும்” என்று வந்து மிக்க விருப்பத்துடன் வஸிக்கப் பெற்ற திருமார்பை யுடையனான திருமாலினது திவ்ய குணசேஷ்டிதங்களை நிறைத்துக்கொண்டிருக்கிற திருவாய்மொழி முதலான திவ்ய ப்ரபந்தங்களை அருளிச் செய்த நம்மாழ்வாருடைய திருவடிகளைதொழுது ஸத்தை பெற்றவாயும்,

பலபல சாஸ்த்ரங்களைக்கற்றும் உஜ்ஜீவநோபாயத்தில் த்ருடாத்யவஸாயமின்றியே ஸம்சய விபர்யயங்கள் கொண்டு தடுமாறு கின்றவர்களை ஒரு நிச்சயஜ்ஞானத்திலே நிலை நிறுத்தி வாழ்விக்கவந் ரதவதரித்தவராயுமிருக்கிற

எம்பெருமானாருடைய திருவடிகளை நாம் ஆச்ரயித்து உஜ்ஜீவிக்குமாறு அவருடைய திருநாமங்களை வாயாரப் பேசுவோமென்று தமது திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுகிறாராயிற்று.

பல் கலையோர் தாம் மன்ன = நாநா சாஸ்த்ரங்களைக் கற்று வல்லவர்களான ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலிய மஹான்கள் ப்ரதிஷ்டிதராகைக்காக என்றுமாம்.

எம்பெருமானாருடைய சரணாரவிந்த ப்ராப்திக்கும் ஸாதநம் அவருடைய திருநாம ஸங்கீர்த்தநமேயாம் என்பது இப்பாசுரத்தின் கருத்து

பூ -மங்கள சொல் முதலில்
திருச்சந்த விருத்தத்தில் ஸப்த சக்தியால் மங்களம் -அர்த்தத்தில் பூமி அங்கு

ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யத்தையே பெரிய வைபவமாக அத்யவசித்து இருப்பார் என்பதால் மாறன் அடி பணிந்து உய்ந்தவன் என்கிறார்
ஸ்ரீ மாதவ அங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய பராங்குச பாத பக்தம் –மா முனிகள்

பா மன்னு மாறன்
ஆழ்வார் தாமும் -பாவின் இன்னிசை -அருளிச் செயல்களின் இனிமையைக் கண்டு ஊற்றம் உடையராய் –
தன் சீர் யான் கற்று மொழி பட்டோடும் கவி யமுத நுகர்ச்சி யுறுமோ முழுவதுமே -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன் -என்றும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்றும்
தாமே அருளிச் செய்தார் இறே

மாறன் -லோக வியாபாரத்துக்கு மாறாக இருந்தவர்
வலிய வினைகட்க்கு மாறாக இருந்தவர்

————-

கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.-2-

பதவுரை

கள் ஆர் பொழில் தென் அரங்கன்

தேன் நிறைந்த சோலைகளை யுடைய தென் திருவரங்கத்திலே பள்ளி கொள்ளும் பெருமானுடைய
கமலம் பாதங்கள்

தாமரை போன்ற திருவடிகளை
நெஞ்சில் கொள்ளா

தமது நெஞ்சிலே வையாத
மனிசரை நீங்கி

மனிதர்களை விட்டொழித்து,
குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன்

திருமங்கை மன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியை யுடையரான
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
மிக்க சீலம் அல்லால்

சிறந்த சீல குணத்தைத் தவிர
ஒன்று

வேறொன்றையும்
என் நெஞ்சு உள்ளாது

எனது நெஞ்சானது நினைக்க மாட்டாது;

(இவ்வாறாக)

எனக்கு உற்ற பேர் இயல்வு

எனக்கு ஸித்தித்ததொரு சிறந்த ஸ்வபாவத்திற்கு
ஒன்று அறியேன்

ஒரு காரணத்தையும் அறிகின்றிலேன்.

ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளை நெஞ்சாலும் நினையாத பாவிகளொடு நெடுங்காலம் பழகிக் கிடந்த என் நெஞ்சானது இன்று அப் பாவிகளோடு உறவை ஒழித்து விட்டு, திருமங்கையாழ்வாருடைய திருவடிகளையே அநவரதம் இறைஞ்சுமவரான எம்பெருமானாருடைய சிறந்த சீலகுணமொன்றையே சிந்தியா நின்றது;

இப்படிப்பட்டதொரு பெருந் தன்மை எனக்கு நேர்ந்ததற்குக் காரணம் அவ்வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக  க்ருபா கடாக்ஷமே யொழிய வேறொன்றுண்டாக நானறிகின்றிலேன் என்றவாறு.

நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்கள் என்ற உடனே ஆழ்வார் திரு உள்ளம் ராமாநுசருடைய சீல குணத்தில் ஆழ்ந்தது பற்றி விஸ்மயப் படுகிறார்
இப்படிப்பட்ட பெரும் தன்மைக்குக் காரணம் அவரது நிர்ஹேதுக கிருபா கடாக்ஷமே

மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய வூர்–உபதேச ரத்ன மாலை

குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் என்கிற விசேஷம் வீறு பெறும்படி திருவாலி திரு நகரியில்
திருமங்கை மன்னன் பாதார விந்த பீடத்தின் கீழ் எம்பெருமானார் திருக்கோலம் ஏறி அருளப்பட்டு இருப்பது ஸேவிக்கத் தக்கது –

சீலம் -மஹான் மந்தமதி -நீசனான தம்மோடு புரையறக் கலந்த சீர்மை –
இது எனக்கு ஸித்தித்த பெரிய விரகு -பேர் இயல்வு

ஓன்று -கீழும் மேலும் அந்வயிக்கும்
மிக்க சீலம் அல்லால் ஓன்று உள்ளாது என்றும்
எனக்குற்ற பேர் இயல்வு ஓன்று அறியேன் -என்றும் கொள்ளலாம்-

—————-

பேரியல் நெஞ்சே! அடி பணிந் தேனுன்னைப் பேய்ப் பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொரு வருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்பு செய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.–3-

பதவுரை

பேர்இயல் நெஞ்சே!

மிகவும் கம்பீரமான மனமே!
உன்னை அடிபணிந்தேன்

உன்னை வணங்குகின்றேன்; (எதற்காக என்னில்;
பேய் பிறவி

ஆஸுரப் பிறப்பை யுடையவர்களான
பூரியரோடு உள்ள சுற்றம்

நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை
புலர்த்தி

போக்கடித்து
பொருவு அரு சீர்

ஒப்பற்ற குணங்களை யுடையவரும்
ஆரியன்

சிறந்த அநுஷ்டாக முடையவரும்
செம்மை

(ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரீமாறுந்தன்மை வாய்ந்தவருமான
இராமாநுச முனிக்கு

எம்பெருமானார் திறத்தில் அன்பு செய்யும் சீரிய பேறு
உடையார்

பக்தி பண்ணுவதையே  பரம புருஷார்க்தமாக வுடையவர்களான  கூரத்தாழ்வான் போல்வாருடைய
அடிக் கீழ்

திருவடிகளின் கீழே
என்னை

(பரம நீசனாயிருந்த) என்னை
சேர்த்ததற்கே

கொண்டு சேர்த்த மஹோபகாரத்திற் காகவே (உன்னை அடி பணிந்தேன்)

பரம நீசர்களோடு எனக்கிருந்த ஸம்ஸர்க்கத்தைப் போக்கடித்து, ஒப்பற்ற குணசாலியான எம் பெருமானாருடைய

திருவடிகளின் ப்ராவண்யமாகிற பரம புருஷார்த்தத்தைப் பெற்றுள்ள ஆழ்வான் போல்வாருடைய திருவடிகளின் கீழே

என்னைக் கொண்டு சேர்த்த நெஞ்சே!

இப் பெரு நன்றி புரிந்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?

“தலை யல்லால் கைம்மாறிலேனே” என்றாற் போல உன்னைத் தலையால் வணங்குவது தவிர

வேறோரு கைம்மாறு நான் செய்யகில்லேன் என்றாராயிற்று.

பூரியர் -இழி பிறப்பாளர்.

புலர்த்துதல் – உலாச்செய்தல்; அதாவது போக்கடித்தல்;

பொருவு – ஒப்பு.

இராமாநுசனடிக் கன்புசெய்யுஞ் சீரிய பேறுடையார்” என்றவிடத்து -ராமாநுஜ பக்தர்களெல்லாரையும் விவக்ஷிக்கிறார். என்றலும்,

கூரத்தாழ்வானை விசேஷித்துக் கருதுகின்றா ரென்றலும் ஒக்கும்.

மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ -நெஞ்சு உடன்பட்டதுக்கு நமஸ்கரிக்கிறார்

ஆரியன் -கர்தவ்யம் ஆசரன் காமம் அகர்தவ்யம் அநா சரன் திஷ்டாதி ப்ரக்ருதா சாரே சது ஆர்ய இதி ஸ்ம்ருத

செம்மை -ஆர்ஜவம் -ருஜு -கௌடில்யத்துக்கு எதிர்மறை -உள்ளத்தை உள்ளபடி சொல்லுகையும் செய்கையும்
ஆஸீத் தசராதோ நாம ராஜா -இத்யாதி பெருமாள் சூர்பணைக்கும் நேராக உத்தரம் சொன்னது போல் –

————-

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமுமென்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவில்லையே.–4-

பதவுரை

ஊழி முதல்வனையே

காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம் பெருமானையே
பன்ன

(எல்லாரும் விவேகித்து) அநுஸந்திக்கும்படி
பணித்த

(ஸ்ரீபாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த
பரன் இராமாநுசன்

ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார்
புவியில்

இந்தப் பூமியிலே
என்னை ஒரு பொருள் ஆக்கி

(அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி
மருள் சுரந்த முன்னை பழை வினை வேர் அறுத்து

அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரறநீக்கி
பாதமும்

தமது திருவடிகளையும்
என் சென்னி

எனது தலையிலே
தரிக்க வைத்தான்

நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவு மஹா ப்ரஸாதம் பெற்றோனான பின்பு)
எனக்கு

அடியேனுக்கு
ஏதும் சிதைவு இல்லை

எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை.

எம்பெருமானாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு ஆளான நான் இனி ஒருநாளும் எவ்விதமான ஹாநியையும் அடைமாட்டேன் என்கிறார், பதார்த்த கோடியில் சேராமல் துச்சனாயிருந்த எனது கருமங்களை யெல்லாம் வேரற நீக்கி, தமது பாதார விந்தங்களையும் என் தலைமேலே வைத்தருளினார் எம்பெருமானார்; இப்பேறு பெற்ற எனக்கு  இனி ஒரு குறையுமில்லை என்றாராயிற்று.

மருள் சுரந்த – அஜ்ஞாந்த்தாலே செய்யப்பட்ட என்கை; மருளாலே சுரக்கப்பட்ட என்றவாறு.

(ஊழி முதல்வனையே பன்னப் பணித்த) ஊழி முதல்வனான எம்பெருமானையே பரவும்படி அமுதனாராகிய தம்மைச் செய்தருளின – என்று அர்த்தமல்ல; பகவத் விமுகரா யிருந்தவர்களை யெல்லாம் உபதேசாதி முகத்தாலே பகவத் ப்ரவணராம்படி செய்தருளினவர் என்று பொதுப் படையாகச் சொன்னபடி. ஊழி முதல்வன் – பிரளய காலத்தில் முழு முதற் கடவுளாயிருந்தவன் என்றுமாம்.

பரன் என்று பரம புருஷனான எம்பெருமானையே சொல்லி
அவனுடைய திருவடிகளையும் எனது சென்னியில் தரிக்க வைத்தான் என்றதாகவுமாம்
பரன் பாதம் என சென்னித் தரிக்க வைத்தான் –என்றும் பாட பேதம்

————–

எனக்குற்ற செல்வம் இராமானுச னென்று இசைய கில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக் குற்றம் காண கில்லார், பத்தி ஏய்ந்த இயல்வி தென்றே.–5-

பதவுரை

எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று

‘நமக்கு ப்ராப்தமான ஸம்பத்து எம்மெருமானாரே’ என்று
இசைய கில்லா

அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத
மனக் குற்றம் மாந்தர்

துஷ்ட ஹ்ருதயர்களான மனிசர்
பழிக்கில்

(இந்நூலைப்) பழிப்பவர்களானால்
புகழ்

(அன்னவர்களுடைய பழிப்பே இதற்குப்) புகழாய் விடும்;
அவன்

அவ்வெம்பெருமானாருடைய
மன்னிய சீர் தனக்கு

நித்ய ஸித்தமான கல்யாண குணங்களுக்கு
உற்ற

தகுதியான
அன்பர்

தகுதியான அன்பை யுடையவர்களான மஹான்கள்
பத்தி ஏய்ந்த இயல் விது என்று

இந்நூலானது பக்தியோடு கூடின ப்ரவ்ருத்தியை யுடையதென்று (திருவுள்ளம் பற்றி)
அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா இனம் குற்றம் காணகில்லார்

அவ்விராமாநுசனுடைய திரு நாமங்களைக் சொல்லுகின்ற என்னுடைய (இந்தப்) பாசுர மாலைகளிலுள்ள குற்றங்களைக் காண மாட்டார்கள்.

உலகத்தில் ஓரு பிரபந்தம் பிறந்தால் அதனைத் தூஷிப்பார் பலரும், பூஷிப்பார் சிலரும் ஏற்படுவது வழக்கம். உண்மையில் தோஷங்கள் இல்லாதிருந்தாலும் எதையாவது சொல்லித் தூஷித்தே தீருவர்கள்; குற்றங் குறைகள் இருந்துவிட்டால் தூஷகர்களின் உத்ஸாஹம் கேட்கவே வேண்டியதில்லை. அறிவிலியான  நான் இயற்றும் இந்நூலில் தோஷங்கள் தான் மிகையாக இருக்கக் கூடும்; அவற்றைக் கண்டு சிலர் நிந்திப்பர்களாகில், அன்னவருடைய தூஷணம் நமக்கு பூஷணமேயா மித்தனை என்கிறார்.

‘பிறருடைய பழிப்பு நமக்கு அப்ரயோஜகம்’ என்று சொல்ல வேண்டியிருக்க, அவர்களுடைய பழிப்புத் தானே நமக்குப் புகழாம் என்கைக்குக் கருத்தென்? அவர்களது பழிப்பு இவர்க்கு எப்படி புகழாய் விடும்? என்று சிலர் சங்கிக்கக்கூடும். அவர்கள் தெளியுமாறு சொல்லுகிறோம்;-

அமுதனாராம் ஒருவர்; அவர் இராமாநுச நுர்ற்றந்தாதி என்றொரு பிரபந்தம் பாடினாராம்; அதில் ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசன் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டு கிடக்கிறார். தவிரவும் சாஸ்திரங்களில் புருஷார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ள ஐச்வர்யம் முதலானவற்றை இகழ்ந்துரைக்கிறார்; ஸகல புருஷார்த்தங்களும் தமக்கு உடையவர் தானாம்; எம்பெருமானைக் கூட அவர் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டாராம். என்றிவை போல்வன சிலவார்த்தைகளைச் சொல்லிப் பழிப்பார்கள்.

வாஸ்தவத்தில் இவையெல்லாம் குணமேயாதலால் குணகீர்த்தநத்தில் சேர்ந்து புகழ்ச்சியேயாய் முடியக் குறையில்லையென்க.

எம்பெருமானைப் பழித்த சிசுபாலாதிகளும் பர்யாயேண குண கீர்த்தநம் பண்ணினார்களாக வன்றோ உய்ந்து போனது.

அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர் திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி தூற்றில் ஸ்துதி யாகும் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் பற்றி உரலிடை யாப்பும் உண்டான் -என்று
பாவிகள் ஏசுவது எல்லாமே அன்புடையாருக்குக் குண கீர்த்தனமே அன்றோ –

ஊரார் கவ்வை எரு விட்டு –

உத்தம அதிகாரிகளுடைய அத்யவசாயம் எல்லாம் சாமான்ய ஞானிகளுக்கு இகழ்ச்சிக்கு உறுப்பாகுமே

—————

இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின்றனன் அவன் றன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே.–6-

பதவுரை

ஈன் கவிகள்

விலக்ஷணரான கவிகள்
அன் பால்

ப்ரீதியினாலே
இயலும் பொருளும்

சப்தமும் அர்த்தமும்
இசைய

நன்கு பொருந்தும் படியாக
தொடுத்து

கவனம் பண்ணி பாடல்களிலே
பக்தி இல்லாத

பக்தியற்றதான
என் பாவி நெஞ்சால்

என்னுடைய பாபிஷ்டமான நெஞ்சினாலே
அவன் தன்

அவ்வெம்பெருமானாருடைய
மயல்

வ்யாமோஹம் தலையெடுத்து
வாழ்த்தும் இராமானாசனை பயிலும்

துதிக்கும்படி நின்ற எம்பெருமானாருடைய வருணிக்கின்ற
பெரு கீர்த்தி

அளவற்றகீர்த்திகளை
மொழிந்திட

பேசுவதாக
மதி இன்மையால் முயல்கின்றன

புத்தி யில்லாமையினாலே ப்ரவர்த்திக்கின்றேன்.

“பக்தியேய்ந்த வியல்விதென்றே” என்று கீழ்ப்பாட்டிற் சொன்னவிவர், அப்படிப்பட்ட பக்தி தமக்கு உண்டோவென்று பார்த்தார், ‘

அந்தோ! நாமோ அவ்வெம்பெரு மானாரைத் துதிக்க இழிந்தது! என்று தம்மைத் தாமே வெறுத்துக் கொள்ளுகிறார் இதில் –

இன் கவி பாடும் பரம கவிகளான சில மஹான்கள் சொல்லின்பமும் பொருளின்பமும் நன்கு பொருந்துமாறு கவி பண்ணி ஆந்தரமான அன்பினாலே வ்யாமோஹித்து இராமாநுசனை வாழ்த்தா நிற்பர்கள்;

அன்னவர்களுடைய பக்தி பரீவாஹ ரூபமான கவிகளில் ஆதரமற்ற எனது பாவி நெஞ்சால் அவ்விராமாநுசனுடைய பெருப் பெருத்த புகழ்களை யெல்லாம் பேசுவதாக நான் முயல்கின்றேனே! இஃது என்ன புத்தி கெட்ட தன்மை! என்று வெறுத்துக் கொள்ளுகிறார்.

கவிகள் வாழ்த்தும் இராமானுஜனை -கவிகளால் மங்களா ஸாஸனம் பண்ணப்படுகிற என்றபடி
மயல் -மையல் -வியாமோஹம் -அறிவு கேடு
மங்களா சாசனம் பண்ணும் போது அறிவு கேடு வேணும் இறே
அறிவு உள்ளபடி கிடந்ததாகில் -வாழி -பல்லாண்டு -ஜய விஜயீ பவ -இத்யாதி சப்தங்கள் வெளிவர ஒண்ணாதே
மதியின்மையால் -நான்காம் அடியில் அந்வயிக்கக் கடவது –

—————

மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி யல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.

பதவுரை

மொழியை கடக்கும்

வாய் கொண்டு வருணிக்க முடியாதபடி வாசா மகோசரமான
பெரு புகழான்

பெரிய புகழை யுடையவரும்
முக் குறும்பு ஆம் வஞ்சக் குழியை கடக்கும்

கல்விக் செருக்கு, செல்வச் செருக்கு குலச் செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படு குழியைக் கடந்திருப்பவரும்
நம்

நமக்கு நாதருமான
கூரத்து ஆழ்வான்

கூரத்தாழ்வானாடைய
சரண்

திருவடிகளை
கூடிய பின்

நான் ஆச்ரயித்த பின்பு
பழியை கடத்தும்

ஸர்வபாப நிவர்த்தகரான
இராமாநுசன்

எம்பெருமானாருடைய
புகழ் பாடி

நற் குணங்களைப் பாடி
அல்லா வழியை கடத்தல்

ஸ்வரூபத்திற்குச் சேராத தீய வழிகளைத் தப்பிப் பிழைக்கையான
எனக்கு

அடியேனுக்கு
இனி

இனி மேலுள்ள கால மெல்லாம்
யாதும் வருத்தம் அன்று

ஈஷத்தும் ப்ரயாஸ ஸாத்யமன்று; (எளிதேயாம்)

 

எம்பெருமானாருடையத் துதிப்பதற்குத் தாம் யோக்யதையற்றவர் என்று பின்வாங்கப் பார்த்த அமுதனார், தமக்குள்ள ஆழ்வான் திருவடி ஸம்பந்தத்தை நினைத்து இஃது வாய்கொண்டு வருணிக்க முடியாத பெரும் புகழ் படைத்தவரும், கல்வி, செல்வம், குலம் என்ற மூன்றுவகை ஸம்பத்தும் புஷ்கலமாயிருந்தும் அவற்றால் இறைவும் அஸங்கார மடையாதவருமான கூரத்தாழ்வானாடைய சரணாரவிந்தங்களை ஆச்ரயித்து க்ருத க்ருத்யனான வெனக்கு எம்பெருமானாருடைய திருக் குணங்களைப் பாடுதலும் அதுவே காரணமான அர்ச்சிராதிகதி யொழிந்த மற்ற கதிகளிற் போகாதபடி அவ்வழியே போதலும் மிகவுமெளிதேயாம் என்றாராயிற்று.

குலம் ரூபம் வயோ வித்யா தனம் -ஐந்தும் இருந்தாலும் இவை மூன்று அஹங்காரங்களும் கொடியவை அன்றோ

நம் பூருவாசாரியர்கள் எல்லாருமே சிறந்த புகழுடையராயினாம் ஆழ்வானாடைய புகழ் அத்யந்த விலக்ஷணமென்பது ப்ரஸித்தமான விஷயம்;.

நம் தர்சந்ததுக்கு மஹாத்ரோஹியான நாலூரானாக்குக் கொடிய நரகங்களைக் கொடுக்க வேணுமென்று பகவத் ஸந்தியிலே ப்ரார்த்திக்க வேண்டி யிருக்க, பேரருளாளன் திருமுன்பே வரதராஜஸ்தவத்தை விண்ணப்பம் செய்து கண் தெரியும்படி வரம் வேண்டிக் கொள்ளீர் என்ற வரம் வேண்டிக் கொள்ளும்படி விசாலமான திருவுள்ளம்பெற்ற ஆழ்வானாடைய புகழை நாம் என்சொல்வோம்!

“மொழியைக் கடக்கும் பெரும் புகழான்” என்றுசொல்வது தவிர வேறு வாசக மில்லை காணும்.

வாசா மகோசர மஹா குண தேசிக அக்ர்ய கூர நாதர் அன்றோ

(வஞ்ச முக்குறும் பாமித்யாதி) கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, குலச் செருக்கு என்ற இம்மூன்று அஹங்காரங்கள் மிகக்கொடியவை; இவற்றைக் கடத்தல் ஆர்க்கும் அரிது;

இவற்றைக் கடந்தவர் என்னும் ஏற்றம் ஆழ்வானொருவர்க்கே அஸாதாரண மென்பதாக எம்பெருமானார் காலத்திலேயே ப்ரஸித்தமாயிற்று.

திருவாய் மொழியில் “பலரடியார் முன்பருளிய பாம்பணையப்பன்” என்றவிடத்து ஈடு முப்பத்தாறாயிரத்தில் ஆழ்வான் விஷயமான அருளிச் செய்யப்பட்ட தொரு ஐதிஹ்யம் குறிக் கொள்ளத்தகும்.

மற்றும் பல இதிஹாஸங்களும் பன்னி யுரைக்குங்காற் பாரதமாம்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–99-108–

December 9, 2021

நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையல் -என்று மனத்தை தேற்றினார் -கீழ் .
நம் வசத்தில் விட மாட்டார் என்னும் நம்பிக்கை குலையாமல் இருக்க வேண்டாமா –
பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் நிறைந்த இவ் உலகத்திலே அவர்களது சேர்க்கையாலே
அது குலைந்து விடில் என் செய்வது என்று -தம் மனம் தளர –
எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் அழிந்து ஒழிந்தனர் -தளரற்க-என்கிறார் .

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –

மாண்டனர் நீணிலத்தே —-பொற் கற்பகம் போந்த பின்னே —
நீணிலத்தே போந்த பின் -என்று இயைக்க –

விண் உலகில் அசையாது இருந்த கற்பகம் கண்ணனால் நீணிலதிற்கு வந்தது
அது வந்தது கருதிய காதலிக்காக –
விண்ணவரான எம்பெருமானாராம் கற்பகம் விண்ணனூரில் உள்ள கண்ணனால் இன் நீணிலத்தே வந்தது
இது வந்தது உயிர் இனம் மறையின் உண்மைப் பொருளை பெற்று உய்வதற்காக
கற்பகம் வந்து நீணிலத்திலே நல்ல பொருளை தருகிறது .

————-

இங்கனம் தேற்றப் பெற்ற நெஞ்சு -எம்பெருமானார் திருவடிகளிலே இன்பம் நுகர விழைந்து மேல் விழ-
அதனது இயல்பினை -எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்து
தேவரீர் வேறு ஒன்றினைக் காட்டி மயக்காது ஒழிய வேணும்-என்கிறார் .

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –

உணவுள்ள நல்ல இடத்தில் வந்து சேர்ந்தமையின்-தம் நெஞ்சை -பொன் வண்டு -என்று
கொண்டாடுகிறார் .பொற் கற்பகம் பூத்த அடிப்போதில் வந்து சேருவதும் பொன் வண்டாய் இருப்பது
மிகவும் பொருந்துகிறது அன்றோ –
ஷட் பதமான ஆறு பதங்களைக் கொண்ட -த்வய மந்த்ரத்தை த்யானம் பண்ணிப் பண்ணி நெஞ்சும் ஷட்பதம்
ஆறு கால் உடைய -வண்டு ஆயிற்று –லஷ்மியினுடைய மீன் போன்ற கண்ணை த்யானம் பண்ணிப் பண்ணி
பகவான் தானே மீன் ஆனது போலே என்று ரசமாக பணிப்பர் பிள்ளை லோகம் ஜீயர் –

தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது ஸூதநனின்
தேனே மலரும் திருப்பாதம் -என்பது அமுதனார் உட் கருத்து .
அந்த குண அனுபவத்திலேயே மேலும் மேலும் திளைத்துக் கொண்டு இருக்குமாறு எம்பெருமானார்
தான் அருள் புரிய வேண்டும் என்று அவரிடம் அதனைப் பிரார்த்தித்தார் ஆயிற்று –

நம் ஆழ்வார் -எம்பெருமானை –சிற்றின்பம் பல நீ காட்டிப் படுப்பாயோ -திரு வாய் மொழி -6 9-9 —என்கிறார்
இவர் எம்பெருமானாரை மற்று ஓன்று காட்டி மயக்கிடல் என்கிறார் –எம்பெருமான் காட்டும் சிற்றின்பம் பல
எம்பெருமானார் காட்டுவதோ பேரின்பமான எம்பெருமான் என்னும் மற்று ஓன்று –
இதனால் தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் ஆயிற்று-

அனந்யார்க்க சேஷத்வம் -எம்பெருமானாருக்கு அன்றி மற்று ஒருவருக்கு உரியர் ஆகாமை –
அநந்ய சரணத்வம் -எம்பெருமானார் அன்றி வேறு உபாயம் இன்மை
அநந்ய போக்யத்வம் -எம்பெருமானாரே நீ யன்றி வேர் ஒருவரையும் அனுபவிக்கத்தக்கவராக கொள்ளாமை
என்னும் ஆகார த்ரயமும் தன் பால் அமைந்து உள்ளமையை
இங்கு அமுதனார் காட்டும் அழகு ரசித்து அனுபவிக்கத் தக்கதாய் உள்ளது

———–

இங்கனம் எம்பெருமானார் உடைய போக்யதையிலே நெஞ்சு படிந்ததும் -முன்பு தாம் அவர் திறத்து பண்ணின –
பாவனர் -தூய்மை படுத்துமவர் -என்னும் பாவனை குற்றமாகப் பட –
எம்பெருமானாரை நோக்கி தேவரீரது போக்யதையிலே ஈடுபட்டு இருப்பவர்களுக்கு-நான் -பாவனர் -என்னும்
பாவனையுடன் பேசினது குற்றமாக தோன்றும் என்று –நல்லவர்கள் சொல்லுவார்கள் என்கிறார்

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- – –

தூயவன் தீதில் இராமானுசன் மாயும் என்னாவியை வந்து எடுத்தான் – 42- என்றும்
புன்மையினேன் இடைத் தான் புகுந்து தீர்த்தான் இருவினை -52 – என்றும்
பலகால் எம்பெருமானாருடைய பாவனத்வத்தை இவர் தானே அனுசந்தித்தையும் நினைவு கூர்ந்து
அவை அனைத்தையும் சேரப் பிடித்து –என்றது இது -என்கிறார்

அமுதம் போலே இனியர் என்றே அனுபவிப்பது நன்று-
சாணிச்சாறு போலே பாவனர் என்று அனுபவிப்பது ஏதமே என்பது -நயக்குமவர்கள் கருத்தாகும்-

————

இங்கனம் தூய்மைப் படுத்துபவர் என்பது கூடப் பொறுக்க ஒணாத படியான-இனிமை வாய்ந்த எம்பெருமானார் திறத்து –
தம் உட் கரணமும் -புறக் கரணங்களும் எவ்வித பாகுபாடும் இன்றி -தாமே மிகவும் ஈடுபட்டு இருப்பதைச் சொல்லி –
இப்பரந்த உலகினிலே அனைவரும் இருக்க -தேவரீருடைய வள்ளல் தனம்
என் மீது வளருவதற்கு ஹேது என்ன -என்று எம்பெருமானாரிடமே வினவுகிறார் .

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

திரு நாமம் எவர் சொன்னாலும் இனிக்கும் -இதற்க்கு மேல் உறவு முறையும் அமைந்து விட்டாலோ
கேட்க வேண்டியது இல்லை -இவ்வினிமையோடு அவ்வினிமையும் சேர்ந்து பேரின்பம் பல்கா நிற்கும் அன்றோ
இதனால் எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள ஆர்வ மிகுதியை காட்டினார் ஆயிற்று –

ஞானம் கொடுக்கும் ஆசார்யன் நிரந்தர உறவு . ஆத்ம ஹிதமளிக்கும் ஆசார்யன் தந்தை போன்றவர்
இந்த உறவைக் குறிப்பிட்டு அமுதனார் எம் அய்யன் என்று அழைத்துப் பெருமைப் படுகிறார்.
கண் கருதிடும் காண-கண் காண எண்ணாமல், கண் கருதிடும் காண-
ரசிகரான தம்மைப் போலே தனியாகத் தம் கருவிகளும் ஆர்வமுடையனவாம்படி எம்பெருமானார்-விஷயத்தில் உட் புக்கபடி இது –
உன்னை மெய் கொள்ளக் காணக் கருதும் என்கண்ணே -திரு வாய் மொழி – 3-8 4-

———

எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும்
தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு
என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் .

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

நரசிம்ஹப் பெருமாளுடைய இந்தக்கீர்திகள் -எம்பெருமானார் திரு உள்ளம் ஆகிற நன்செய்யுள் பயிராகி –
ஓங்கி வளர்ந்து விளைகின்றனவாம்-அவர் நெஞ்சுப் பெறும் செய்யுள் பேணப்படும் கீர்த்திப் பயிர்கள்
பெரியனவாய் யெழுந்து விளைந்து விடுகின்றன –
சிங்கப் பிரானுடைய குண அனுசந்தானத்தின்-விளைவு தான் எனக்கு அளித்த நல் ஞானம் என்பது அமுதனார் கருத்து .

அடியாருக்கு ஆபத்து வரும்கால் ஓடி வந்து காப்பதும், உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து நிற்பதும்,
அடியாருக்கு தீங்கிழைத்தால் சொல்லொணா சினம் கொள்வதும்… இப்படி வளர்ந்த வெம் கோபம் –
கீர்த்திப் பயிரை விளைந்திடச் செய்தார் -என்க .-மடங்கலானதும் ஒரு கீர்த்தி
சரணா கதற்கு தஞ்சமான தனமாக அனுசந்தித்த சீற்றம் -என் மெய் வினை நோயாம் இரணியனை களைவதற்கும் பயன்படுவதாயிற்று –
இங்கனம் அடியார்களைக் காக்கும் திறம் -பரத்வம் -முதலிய பிறவும்
சரண்யனுக்கு வேண்டிய குணங்களாய் அனுசந்திக்கப்பட்டு அச்சம் இன்றி நிறைவுடன் தெள்ளிய அறிவினராய்
வாழும்படி பலித்து -அவரைச் சார்ந்த எனக்கும் நல் ஞானமாய் பயன்படுகின்றன

—————-

உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே கண்ணனைக் காட்டிக் கொடுத்து விட்டால் எங்கனம் நீர் ரசிப்பீரோ –
என்று எம்பெருமானாருக்கு கருத்தாகக் கொண்டு –
கண்ணனை நன்றாக காட்டித் தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை ஒழிய நான் வேண்டேன் –
இந்நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் –சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் –
இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார் .

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எங்கும் உள்ள வ்யாபகனான கண்ணனை கையில் கனியைப் போலே உள்ளங்கையில்
அடக்கி அனுபவிக்கக் கொடுத்தாலும் நான் வேண்டேன் -என்கிறார்
வானுயர் இன்பமே எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -திருவாய் மொழி -என்னும் நம் ஆழ்வார்

தனக்கு புருஷார்த்தம் எம்பெருமானாரின் திருமேனி அழகே என்று அறிவிக்கிறார் அமுதனார்.
இராமானுசரின் மெய்யில் பிறங்கிய சீரை தான் கணண்ணை விட விரும்புவர் என்று தெரிவிக்கிறார் அமுதனார்
அவரது வண்மை இன்றித் தாம் உய்வதற்கு வேறு வழி இல்லாமையினாலே
அதனையே அமுதனார் மீண்டும் மீண்டும் அனுசந்திக்கிறார் .
இவ்வருள் செய்வதற்கு – தன்பால் தகுதி எதுவும் இல்லை –
தம் வண்மை கொண்டே இவ்வருள் புரிதல் வேண்டும் -என்பது கருத்து

———-

எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -பரம பத்திலே போய் இருக்க ஆசைப்படா நிற்பர் –
நீரோ -சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஓன்று போலேபேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –அது தன்னை அருளிச் செய்கிறார் –

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

மாயன் திருவடிக் கீழ் விழுமவர் வேதியர்-
எம்பெருமானாரை தொழுமவர் நல் வேதியர் என்றது ஆயிற்று –
மாயன் திருவடிக் கீழ் வேதியர் விழுந்து இருப்பார் .
விழும் திருவடிகளை உடைய மாயனோ கண் துயில்பவன் .
எம்பெருமானார்பாதத்தை தொழுது பணி புரிபவராய் இருப்பர் நல் வேதியர் .
தொழப்படும் எம்பெருமானாரோ -காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் – 98-
என்றபடி கண் துயிலாதவர் –
எம்பெருமானாரை தொழுவது -சூழ்வது –
முதலியன செய்து எப்பொழுதும் அனுபவித்து கொண்டே இருக்கும் பெருமை வாய்ந்த பெரியோர்கள் –
அவ் அனுபவத்தால் உண்டான களிப்பு -உள் அடங்காது -இருந்த படியே இருக்க ஒண்ணாது
கிளர்ந்து எழுந்து ஆரவாரங்களைப் பண்ணிக் கொண்டு -பிரதம பர்வத்தில் -கும்பிடு நட்ட மிட்டாடி –
திருவாய் மொழி – 3-5 3- என்றபடி –கூத்தாடுகின்ற இடம் –
அவர்களது அந்நிலைக்கு அடிமை பட்டு விட்டவனாகிய-எனக்கு வாழும் இடம் ஆகும் -என்கிறார் .
அடியார்கள் குழாம் களுடன் அனுபவித்தற்கு வைகுந்தத்தில் வாழ -ஏனையோர் விரும்புவது போலே –
தொழும் பெரியோருடன் எம்பெருமானாரை அனுபவிப்பதற்கு அவர் எழுந்து அருளி உள்ள இடமே-
எனக்கு பேறான மோஷ பூமி -என்றது ஆயிற்று

————-

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட எம்பெருமானார் அமுதனாருடைய திரு உள்ளத்தை
மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி – அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார் .

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –

அவை தன்னொடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து
அர்ச்சிராதி வழியே வந்து உடலம் நீங்கினவர்க்கு அடிமை செய்ய பாங்கான இடம் என்று வைகுந்தத்தையும் –
போவான் வழி கொண்டு – -சிகரம் -வந்தடைந்த நீணிலத்தில் உள்ளார்கட்கும்
அடிமைத் தொழில் பூண்பதற்கு பாங்கான இடம் என்று திரு வேங்கடத்தையும்
போவான் வழிக் கொள்வதற்கும் -சிகரத்தில் ஏறுவதற்கும் -திறன் அற்றார்க்கும் விடாய்த்த உடனே
உடலோடு அடிமை செய்வதற்கு பாங்கான இடம் என்று திரு மால் இரும் சோலை மலையையும்
தனக்கு கோயில்களாக கொண்டது போலே –
மாயன் –எம்பெருமானார் இதயத்தையும் தனக்கு கோயிலாக கொண்டான்

இவ்விடம் ஒரே காலத்தில் பல்லாயிரம் பேர்கள் ஆட்பட்டு அடிமை புரிவதற்கு -பாங்காக அமையும் என்பது மாயனது அவா –
ஆயின் ஏனைய இடங்கள் போன்றது அன்று எம்பெருமானார் உடைய இதயம்
வேங்கடத்தை இடமாக கொண்ட போது -த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் -சீரிய வைகுண்டத்தை விட்டு –என்றபடி
வைகுண்டத்தை துறந்தான் –இங்கனமே திரு மால் இரும் சோலை யை இடமாக கொள்ளும் போது
ஏனைய இரண்டினையும் விட வேண்டியதாயிற்று .இம் மூன்று இடங்களிலுமே இருப்பவன்
மாயன் ஒருவனே -ஆயின் இடங்கள் வெவ்வேறு பட்டன .அவ்வவ இடங்களிலே வாசம் பண்ணினதன் பயன்
இவர் இதயத்தில் வாசம் பண்ண வேண்டியதாயிற்று
அங்கனம் வாசம் பண்ண வரும் போது –தான் கோயில் கொண்டு இருந்த மூன்று இடங்களையும் கூடவே கொணர்ந்து
இங்கே குடி புகுந்தானாம் அம் மாயன் –
ஏனைய இடங்கள் அவன் இருப்பதற்கே போதுமானவை – மற்ற இடங்களைக் கொணர்ந்தால் இடம் போதாது –
எம்பெருமானாரிதயமோ இன்னும் எத்தனை இடங்களோடு வந்தாலும் இடம் கொடுக்கும் .அவ்வளவு விசாலமானது –
இது போன்ற இதயம் இருப்பிடம் என்னாது -இதயத்து இருப்பிடம் -என்ற அழகு பாரீர் –

கையில் கணி என்ன கண்ணனைக் காட்டித் தரினும் என்று 104m பாசுரத்தில் ,
கண்ணன் கையில் கனிஎ ன்ன கிடைத்தாலும் வேண்டாம்-இராமனுசர் மெய்யில் பிறங்கிய சீரே வேண்டும் என்று உறுதி பூண்டார் அமுதனார்.
செழுந்திரைப் பாற்கடல் என்னும் அடுத்த பாசுரத்தில் இராமானுசர் அடியார் இருக்கும் இடமே தனக்கு இருப்பிடம் இடம் என்றார்
கீழ் இரண்டு பாட்டுக்களாலே எம்பெருமானார் திரு மேனி குணங்களின் அனுபவம் இன்றேல்
ப்ராப்யமான வைகுந்தம் சேரினும் கால் பாவி நிற்க மாட்டேன் என்றும் –
எம்பெருமானாரைத் தொழும் பெரியவர் களிக் கூத்தாடும் இடமே தனக்கு பிராப்யமான இடம்
என்றும் சர்வேஸ்வரனோடு ஒட்டு அறுத்து பேசினவர் –
இங்கே பிராப்யமான இடத்தோடு மாயனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு
எம்பெருமானார்-தன் இதயத்துக்கு உள்ளே எழுந்து அருளி இருப்பதாக அருளிச் செய்து இருப்பது கவனத்திற்கு உரியது

ஆசார்ய சம்பந்த்தினுடைய மகிமை – இவர் கால் பாவ மாட்டேன் என்று ஒதுக்கின இடமும் –
ஆசார்யனோடும்-அவன் உகந்த ஈச்வரனோடும் தானாகவே இவரை நாடி வருகிறது –
ஆசார்யன் உகந்த இடமும் -அவன் உகந்த எம்பெருமானும் ஆசார்யன் முக மலர்ச்சிக்காக
நெஞ்சார ஆதரிக்கத் தக்க எய்தி விடுவதை இது புலப் படுத்து கிறது .
இதனால் ஆசார்யனைப் பற்றுகை -பகவானை பற்றுவதினின்றும் வேறு பட்டது அன்று –
பேற்றினை எளிதில் தர வல்லது எனபது தெளிவாகின்றது –

இங்கே -ஈஸ்வரனை பற்றுகை கையைப் பிடித்து கார்யம்கொள்ளுமோபாதி
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி –-47 – யென்னும்
ஸ்ரீ வசன பூஷணமும் அதன் வியாக்யானமும் சேவிக்கத் தக்கன

———–

தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய்
இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் -எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம்
இருக்க வேண்டும் என்று -அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற –
அவரை விளித்து –
தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான்
ஆட்படும்படி யாக அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை விண்ணப்பம் செய்கிறார் .

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-

என்னை யாக்கி அங்கு ஆட்படுத்து –
அன்புடையவனாய் இருக்கும்படியும் செய்ய வேணும் –
ஆட்செய்யும்படியாகவும் பண்ண வேணும்
இரண்டும் வேண்டிப் பெற வேண்டிய புருஷார்த்தங்கள் ஆகும் எனக்கு -என்பது கருத்து

புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது மட்டும் எம்பெருமான் திரு முகத்தை நோக்கி
முன்னிலையில் கூறாது –தனக்கேயாக -என்றது –
முகத்தை நோக்கில் புருஷார்த்தத்தில் கொண்ட துணிவு அவ் அழகினால் குலைவுறும்
என்று கவிழ்ந்து இருந்தமையினால் என்று ரசமாக பணிப்பர் ஆச்சார்யர்கள் –

ஆண்டாள் அங்கன் அன்றிப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது அதனில் ஊன்றி
நிற்பவள் ஆதலின் -புருஷார்த்தத்தில் தான் கொண்ட துணிவு குலைவுறுமோ என்னும்
அச்சம் ஏற்பட வழி இல்லாமையால் -கோவிந்தன் முகத்தை நோக்கி –
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று நிஷ்கர்ஷம் செய்து அருளினாள் –

அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி –
உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .
தொண்டர்கட்கே அன்பும் -ஆட்படுதலும் உபயோகப் படுவனவாய் அமைய வேண்டும் .
தொண்டர்கட்கும் பிறர்க்குமாக ஒண்ணாது
தொண்டர் கட்கே யாக வேணும்
தொண்டர்கட்கும் எனக்குமாக ஒண்ணாது
தொண்டர்கட்கே யாக வேணும் என்பது அமுதனார் செய்யும் புருஷார்த்த நிஷ்கர்ஷமாகும் .

————

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது -இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று
தாம் அருளிச் செய்த பேறு–தமக்கு ஆத்மா உள்ள அளவும் கைப்படவும் –
அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் -விரும்பி-அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –
ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் -அதனுக்கு ஏற்ப –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி
உயரினம் அனைத்துக்கும் சார்வாகிச் செல்வம் அளிப்பவளான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று
அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார் .

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார்

முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-
பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே போருந்தினவல் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள் வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .

இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி மங்கள வாழ்க்கை பெற்று -நிரந்தரமாக
வீற்று இருப்பதற்கு -மங்கள வடிவினளான மலர் மகளை போற்றிடுவோம் என்பது இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்-

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–89-98–

December 9, 2021

போற்ற முற்பட்டவர் -தகுதி யற்ற நான் புகழின்-தேவரீர் புகழ் மாசூணாதோ என்று தவிர்ந்து புகழின்
ஏற்றத்தை நிலை நிறுத்தலே நல்லது என்று தீர்மானித்தாலும் -என் மனம் தாங்குகிறது இல்லை .
போற்றியே யாக வேண்டி இருக்கிறது –
தேவரீர் நினைப்பு இவ் விஷயத்தில் எத் தகையதோ -என்று பயமாய் இருக்கிறது -என்று
தம் நிலையை எம்பெருமானார் இடத்தில் விண்ணப்பம் செய்கிறார் .

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

என் கருவி மனம் -என் வசத்தில் இல்லை –
கருவியின் வசத்திலேயே நான் உள்ளேன் என்கிறார் -இதற்கு என் நினைவாய் –அஞ்சுவனே

பெரி யாழ்வார் வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்-
நாக்கு நின்னை யல்லால் லறியாது நனதஞ்சுவன் என் வசமன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும்
என் நாவினுக்கு ஆற்றேன் — 5-1 1- – என்று அருளிச் செய்தது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது –

———–

எம்பெருமானார் கடாஷத்தாலே அச்சம் தீர பெற்ற அமுதனார் –மூன்று கரணங்களுள் ஏதேனும் ஓன்று கொண்டு –
எம்பெருமானார் திறத்தில் அநு கூலமான-செயலில் ஈடுபட்டு உய்யலாமே -அங்கன் உய்யாமல்
மாந்தர் பிறந்து படும் துன்பத்தில்-அழுந்து கிறார்களே -என்று பிறருக்காக வருந்துகிறார் .

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

எம்பெருமானார் அருளுக்கு இலக்காகி பண்டைய அந்நிலை தவிர்ந்து-அவர் குணங்களை அனுபவிக்க வல்லனாய்
அவ் வனுபவத்தை இந்நூல் வடிவத்தில்-அடிவத்து தரும்படி பண்ணினதை நினைந்து -எனை ஆள –என்கிறார்

நினைத்தலும் புனைதலும் எம்பெருமானார் திறத்து செய்ய வேண்டியவைகளாகவும்
பூம் தொடையல் வளைதல் -எம்பெருமானாரை கவி பாடும் பெரியவர் திறத்து செய்ய
வேண்டியதாகவும் அமுதனார் அருளிச் செய்வது குறிக் கொள்ளத் தக்கது .
உத்தாரகரான ஆசார்யர் எம்பெருமானார் ஒருவரே ஆதலின் பிறவியை நீக்குவதற்காக
அவரே நினைக்க தக்கவர் ஆகிறார்

புனையும் பெரியவரை மட்டும் கூறி நினையும் பெரியவரை குறிப்பிடாதது கவனித்தற்கு உரியது .
நினைத்தால்- பிறர் அறியாது தனித்து செய்யப் படுவதாதலின் நினையும் பெரியவரை-அறிதல் அரிதே –
புனையும் பெரியவரையோ அவர்கள் இரும் கவியே காட்டும் ஆதலின்
அவர் தாள்களில்-பூம் தொடையல் வளைவது யாவர்க்கும் எளிதாகி விடுகிறது .
இங்கு நினைத்தல்- புனைதல்- வனைதல்கள் -முறையே
மனம் வாக்கு காயம் என்று மூன்று-கரணங்களின் செயல்களாக கூறப்பட்டு உள்ளன

——–

இன்னும் பிறப்பில் வருந்தும் மாந்தர் உய்வதற்காக எம்பெருமானார்
கைக் கொண்ட முயற்சியை-நினைவு கூர்ந்து அவரைக் கொண்டாடுகிறார் ..

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 —

தமோ குணம் அடியாக சொன்ன அவப் பொருள்-தூய சத்தவ குணம் அடியாக சொன்ன
நற் பொருளாக மாற்றப் பட்டது –
நல் ஆகமமான பாஞ்ச ராத்ரத்தின் படி -முடிய இடர் இலா வழியே -களி நடை நடந்து –
அரங்கனை வழி பட்டு -அந்தமிலா ஆனந்த கடலில் ஆழ முழுகுங்கள் என்று-
பாஞ்ச ராத்ர வழியில் உலகினை நடத்தும் கருத்துடன் அரங்கனை -எல்லா-உயிர் கட்கும் நாதன் -என்கிறார்
வைகுண்டத்தின் கண் உள்ள பரவாசுதேவனான-நாராயணன் அரங்கனே -எனபது எம்பெருமானார் கொள்கை .
வடிவுடை வானோர் தலைவனே – 7- 2- 10-

மிக்க புண்ணியன் இராமானுசன்-இருள் நீங்கப் பொருள் சுரந்தான் –

அரங்கனாம் -பெரிய பெருமாளும் -நீட்டிய திருக் கரத்தாலே -தன் திருவடிகளையே
உபாயமாகப் பற்றும்படி காட்டிய வண்ணமாய் பள்ளி கொண்டு இருப்பதனால் –
பாஞ்ச ராத்ரப் பொருளை விளக்கும் நிலையில் இருப்பதைப் பொறுத்து அரங்கனைப் குறிப்பட்ட தாகவுமாம்-

—————

தாமறியத் தம்மிடம் ஒரு ஹேதும் இல்லாத போது – தம்மை ஏற்று அருளுகைக்கும் –
பின்னர் கண் என்னும் வெளிக் கரணத்திற்கும் -நெஞ்சு என்னும் உட் கரணத்திற்கும் விஷயமாய் –
நிலை நின்று எழுந்து அருளி இருப்பதைக் கண்டு -மிக்க ஈடுபாட்டுடன் -இதனுக்கும் காரணம் -இன்னது
என்று அருளிச் செய்ய வேணும் என்று -எம்பெருமானார் இடமே கேட்கிறார் .

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வினிதால் -பெரிய திருவந்தாதி – 56-
என் கண்ணுள்ளும் -உலகியல் இன்பத்தில் நாட்டம் கொண்ட எண் கண்ணுக்கும் என் நெஞ்சுக்கும்-
தன்னை விஷயமாகக் காட்டி அருளுவதே -என்கிறார் .
கமலக் கண்ணன் என்கண்ணின் உளான் -திருவாய் மொழி – 1-9 8- –
மாயன் என் நெஞ்சின் உள்ளான் -திருவாய் மொழி -1 9-5 – – என்னும் நம் ஆழ்வார் அனுபவம்
அமுதனாருக்கு-எம்பெருமானார் விஷயத்தில் கிடைக்கிறது –
திருமாலே கட்டுரையே -திருவாய் மொழி – 3-1 1- – என்பது போலே இதனையும் கொள்க –
நிர் ஹேதுகமான தேவரீர் கிருபை தவிர வேறு காரணம் இல்லை -என்பது கருத்து .

—————

அவர் செய்யும் அவை யாவையும் -கருணை யன்றி வேறொரு-காரணம் அற்றவைகளாய் அல்லவோ -உள்ளன -என்கிறார் .

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி –
ஸ்வா தந்த்ரியத்தால் அவனது அருளும் ஒரு கால் ஒளி மங்கி மழுங்கியும் போகக் கூடும்
எம்பெருமானார் உடைய அருளோ -அங்கனம் ஒரு காலும் ஒளி மங்கி மழுங்காத சாணை பிடித்த-வாளாய் –
அதனை ஒழித்துக் கட்டியே தீரும் -அது தோன்ற –தன் அருள் என்னும் ஒள் வாள் –என்றார் .
உருவி -என்றமையால் -அவ்வாள் இதுகாறும் வெளிப்படாமல் உறையில் இடப் பட்டமை தெரிகிறது –
சமயம் வரும்போது -அது வெளிப்படுகிறது -அமுதனாரை ஆட் கொள்ளும் சமயம் வரும் அளவும்-அதனை வெளிக் காட்டாது –
மறைத்துக் கொண்டு இருக்கிற எம்பெருமானார் உடைய சங்கல்பம்-என்கிற உறையில் இருந்து உருவப் பட்டது –
அருள் என்னும் ஒள் வாள் -என்க .

நம் ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் – 26-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்-
கானும் மலையும் புகக் கடி வாள் -தானோர்-இருளன்ன மா மேனி எமமிறையார் தந்த-அருளென்னும் தண்டால் அடித்து -என்று
எம்பெருமான் தந்த அருளைத் தண்டாகக் கொண்டு வல் வினையை அடித்துத் துரத்துவதாக கூறினார் .
திரு மங்கை மன்னன் பெரிய திரு மொழியில் – 6-2 – 4- –
நீ பணித்த அருள் என்னும் ஒள் வாளுருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர -என்று
எம்பெருமான் பணித்த அருளை ஒள் வாளாக கொண்டு ஐம்புலன்களின் இடர் தீர எறிந்ததாக-கூறுகிறார்

நம் ஆழ்வார் வாள் ஏந்தாது அந்தணர் போல் சாந்தமாய் இருப்பவர் ஆதலின்-அவருக்கு அருள் தண்டாக கிடைத்தது
திரு மங்கை மன்னனோ ஷத்ரிய வீரர் போன்று-மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் — 3-9 10- –
ஆகையாலே அவருக்கு அருள் வாளாக கிடைத்தது .

அவர்கள் இருவரும் முறையே அடிப்பவர்களையும் எறிபவர்களாயும் தாமே யாயினர் .
அமுதனார்க்கோ அங்கன் அன்றி எம்பெருமானாரே தம் அருள் என்னும் வாள் கொண்டு
பெருவினையை வெட்டிக் களையும் படியான பெருமை கிடைத்தது –
நம் கூடஸ்தர் நமக்கு வைத்து இருக்கும் சொத்து சரணாகதி –அதுவே நமக்கு உஜ்ஜீவனம்

————–

எம்பெருமானார் -தம்மைச் சார்ந்தார்க்கு தவம் தொடங்கி திவம் முடிய அளிப்பரே யாயினும்–
நான் அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பி அனுபவியேன்-என்கிறார் –

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

ஆச்சர்யணைக்கு கைங்கர்யம் பண்ணும் ருசி விளைவிப்பது செலவும் தகவும் தரும் என்னும் பதம்
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சி என்று ஆழ்வார் தாமும் எம்பெருமனிடமே கேட்டது போல் ,
இங்கு எம்பெருமானார் தாமே அளிப்பதாகக் இந்த பாசுரம்

ஸ்ரீ மான் ஆகிய எம்பெருமானார் நம் ஆழ்வாருடைய அழகிய இணைத் தாமரை யடியாக விளங்குகிறார் –
பகவானைப் பற்றிய நம் ஆழ்வார் -தம் வினைகள் கமலப் பாதம் காண்டலும் விண்டே ஒழிந்தன -என்றார் .
நம் ஆழ்வாரைப் பற்றிய மதுர கவிகள் -பண்டை வல் வினை பாற்றி யாருளினான் -கண்ணி நுண் – 7- என்றார் .
விண்டிடில் மீண்டும் உருப்படியாதலும் கூடும் .பாறு ஆக்கி விட்டாலோ தீ வினைகள்
மீண்டும் தலை தூக்க வழி இல்லை .ஆசார்ய அபிமானத்தின் வீறுடைமை இது.
மதுர கவிகளை அடி ஒற்றி –பாற்றித் தரும் -என்கிறார் அமுதனாரும்-

யான் அவன் சீர் அன்றி ஒன்றும் அருந்தேன் –
எம்பெருமானார் தரும் அவையான தவத்தில் இருந்து -திவம் உட்பட -யாதொன்றையும்
மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிக்க மாட்டேன் –அவருடைய கல்யாண குணங்களையே
மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிப்பேன் -என்றதாயிற்று -அவைகள் வலுவிலே என் மடியில்
கட்டப்படில் தவிர்க்க ஒண்ணாது -நானாக மனம் மகிழ்ந்து விரும்பி அவற்றுள் ஒன்றினையும்
விரும்பி அருந்தேன் -என்கிறார் .
எம்பெருமானார் கல்யாண குணங்கள் அவ்வளவு இனிக்கின்றன அமுதனார்க்கு –
நம் ஆழ்வார் செங்கண் மாலை நோக்கி –நின் புகழில் வைக்கும் தம் சிந்தையிலும்
மற்றினிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான் -பெரிய திருவந்தாதி – 53- என்று-
அவன் தரும் வைகுந்தத்தினும் அவன் குணங்கள் இனிப்பதாக கூறுவதை இங்கே நினைவு கூர்க-

—————-

இவர் இவ் உலகத்தவர் அல்லர் -சம்சார சம்பந்தம் அறவே அற்று இருக்கும் நித்ய ஸூரிகளில் ஒருவர் –
வீடளித்து பிறரை உய்விப்பதற்க்காகவே அவதாரம் செய்தவராய் இருத்தல் வேண்டும் என்று
தீர்மானித்து அவதரித்து செய்யும் அவற்றை அனுசந்திக்கிறார் –-இந்தப் பாசுரத்திலே –

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து உயிர் களுக்காக இங்கே வந்து அவதரிக்கிறார்
ஸூர்யனுக்கும் கிழக்குத் திசையில் உதிக்கும் போது அத்திசைக்கும் எங்கனம் யாதொரு தொடர்பும் உண்மையில் இல்லையோ –
அங்கனம் இம் மண்ணின் தலத்திற்கும்-அவருக்கும் யாதொரு தொடர்பும் உண்மையில் இல்லை என்றது ஆயிற்று
மண்ணின் தலத்து உதித்த -என்றதில்-மண்ணின் தோஷம் தட்டாத ஆற்றல் உடைமையும் –
உய் மறை நாளும் வளர்த்தனன் –-என்றதில் வளர்க்க வல்ல அறிவுடைமையும் தோன்றுமே
கீதையினைப் பரிஷ்கரித்து அதன் பொருளை எல்லாருக்கும் தெரியும்படி செய்ய
கீதா பாஷ்யம் -அருளிச் செய்வதற்கு என்றே எம்பெருமானார் பாரினில் அவதரிக்க வேண்டியதாயிற்று-
இப்படி எல்லாம் வல்ல பரனிலும் சீரிய முறையிலேயே அவதரித்து வேதார்த்த ஞானத்தை பரப்பி
உயிர் களை எல்லாம் உய்வித்து அருளுவதே –

————

நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்
எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான் என்கிறார் .

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- –

மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது .
மிக்க நல்வினை –பிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்
தரித்தும் -விழுந்தும் துணை இன்றி -தனியே திரிகின்றவனான எனக்கு
விழாமல் காப்பதற்கு துணையாக இராமானுசன் தன்னை உற்றவர்கள் உள்ளார்கள் -என்கிறார்
இதனால் குழியைக் கடத்தும் கூரத் ஆழ்வானை அண்டை கொண்டு -அவரது அபிமானத்திலே
நிஷ்டை கொண்டு உள்ளமையை குறிப்பிட்டார் ஆயிற்று –
தேவு மற்று அறியேன் என்று எம்பெருமானாரைப் பற்றிய உற்றவர் அபிமானமே
சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லது -என்பது இப்பாசுரத்தின் கருத்து-

————

அவர் தம்மை உற்றவர் அபிமானத்திலே நிஷ்டை ஏற்படும் படியான விருப்பம் – எவ்வாறு உமக்கு வந்தது
என்பாரை நோக்கி அதுவும் எம்பெருமானார் கிருபையினாலே வந்தது -என்கிறார் –

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

முதல் வாக்யத்தால் எம்பெருமானார் தம்மை ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயிப்பித்ததும்
இரண்டாம் வாக்யத்தால் -இறாய்க்காமல் ஆசார்யன் ஆணைக்கு ஆட் பட்டு ஆழ்வான் தமக்கு
ஆசார்யனாகி -அவ் எம்பெருமானாராலே கொண்டாடப் பட்டதும் -குறிப்பால் உணர்த்தப் படுகின்றன
ஆழ்வான் எம்பெருமானார் விஷயமாக கவி பாடக்
கட்டளை இட்டாரே யன்றி தன் விஷயமாக கவி பாட சற்றும் இசைய வில்லை –
மொழியைக் கடக்கும் என்று ஓரிரு இடங்களில் ஆங்கங்கே கவி பட முடிந்தது அவ்வளவே
மணவாள மா முனிகள் கொண்டு கூட்டி ஒரே வாக்யமாக உரை அருளிச் செய்து உள்ளார்-

———-

எம்பெருமானார் சரணம் -என்றவரை திரிந்து உழலும்படி விட்டுக் கொடுக்க மாட்டார்
பேறு கிடையாதோ என்று வருந்த வேண்டாம் -என்கிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

நம் இராமானுசன் -நம்மை கை தூக்கி விட வேணும் என்பதற்காகவே அவதரித்த எம்பெருமானார் .
வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்தவர் -என்றபடி –
மோஷத்திற்கு மட்டும் ஹேதுவானவர் -பந்தத்துக்கு உள்ளாகும்படி நம்மை நம் வசத்தே விடுவாரோ -என்பது கருத்து

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம் –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது –
தான் உள்ளது -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தியும் –
பரதந்திர ச்வரூபனாய் மோஷ ஏக ஹேதுவான ஆசார்யனை உபாயமாக பற்றில் இப் பிரசங்கம்-இல்லை –
சதத நிர்ப் பரனாய் இருக்கலாம் என்று கருத்து -என்னும் மணவாள மா முனிகள்-வியாக்யானமும் அறியத் தக்கன .

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–79-88–

December 9, 2021

உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து
உஜ்ஜீவிப்பிக்க காத்திருக்கும் எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ அருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் -இப்பாசுரத்தில் .

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வா தந்த்ர்யா அபிமானத்தையும் –அந்ய சேஷத்வ அபிமானத்தையும் -ஒட்டி என்றபடி
இவ் அபிமானங்களை தம் உபதேசத்தால் ஒட்டி இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கிறார் எம்பெருமானார் -என்க .
மெய் என்பது -பிறப்பு இறப்புகள் இன்றி -என்றும் ஒருபடி பட்டு -மாறுபாடு அற்று -விளங்கும்
ஆத்மா தத்துவத்தை –மெய் போலே என்றும் குலையாமல் இருத்தலின் -ஆத்மா ஸ்வரூபத்திற்கு மெய் எனபது
ஆகு பெயர் ஆயிற்று

ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -திருவாய்மொழி -4 10-1 – – என்றார் நம் ஆழ்வார் .
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்று
உழலுகிறீரே என்கிறார் அமுதனார் .
உடல் கொடுக்கும் -படைக்கும் -அவனே தெய்வம் என்றார் நம் ஆழ்வார் .
நல் அறிவு கொடுக்கும் ஆத்மா ரஷணம் பண்ணுமவனே தெய்வம் என்கிறார் அமுதனார்

————

எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் .

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –

வீட்டின்பத்தையும் சம்சார பந்தத்தையும் -தருவது நாராயண சதுரஷரீ .
வீட்டின்பமொன்றினையே தர வல்லது ராமானுஜ சதுரஷரி –இதனால் இது சாதுர்யம் வாய்ந்தது

நம் ஆழ்வார் -திருமால் திருப்பேர் வல்லாரடிக் கண்ணி சூடிய மாறன் -திரு விருத்தம் – 100- என்று தம்மை
சொல்லிக் கொள்கிறார் .இவரோ இராமானுசன் திரு நாமம் நம்ப வல்லாரை மறவாதவர்க்கு
அடிமை செய்பவன் நான் -என்று மேலும் ஒரு படி விஞ்சி தம்மை சொல்லிக் கொள்கிறார்

நம் ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் ….அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பகவத் விஷயத்தில் கூறியதை –இவர் இராமானுசர் அடியார் திறத்து கூறுகிறார் –

——

இசைவில்லாமல் இருந்த தமக்கு -எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை –
நேரே அவரை நோக்கி – விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை -என்கிறார்

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

அடியார்க்கு ஆட்படுதலும் –பேர்வின்றி அரங்கன் தாளிணைகளைப் பெறுதலும் –
இன்று எனக்கு பாகவத சேஷத்வத்திலே விருப்பம் உண்டாம்படி திருப்பத்தை ஏற்படுத்தின-
எம்பெருமானார் திருவருளால் கிடைத்த பேறுகள்-என்கிறார் .
பாகவதர்க்கே உரிமைப் பட்டது ஆத்மா -என்று எம்பெருமானார் உண்டு பண்ணின உணர்வு-
அடியாராகிய ஆழ்வானுக்கு அரங்கனால் ஆட்படுத்தப் பட்டு –
அரங்கன் தாளிணைகளை-பேர்வில்லாமல்-பெறும்படி செய்வதனால் -உரம் பெற்று நின்றது -என்க .
பாகவத சேஷத்வத்தை உணர்த்தி -அருளினதாக கூறாது –
அவ் உணர்வில் நிற்பார் பேர்வின்றி பெரும் அரங்கன் தாளிணைகளை பெறுவித்ததாக-கூறுவதனால்
அவ் உணர்வு உரம் பெற்று மிளிருவது காண்க –

பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல்
நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் –

———–

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

தெரிவுற்ற கீர்த்தி –
இன்னாருக்கு தெரிவுற்ற என்னாமையாலே -பூமி எங்கும் உள்ள பண்டிதர் பாமரர் என்கிற
வேறுபாடு இன்றி -எல்லோருக்கும் தெரிந்த கீர்த்தி -என்க –திக்குற்ற கீர்த்தி – 26- என்றார் கீழும்

இராமானுசன் என்னும் சீர் முகில்
சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக
சீர் -இங்கே வள்ளன்மை குணம்
வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் இராமானுசன் -என்க
குணம் திகழ் கொண்டல் – 60- என்று கீழும் முகிலாக எம்பெருமானார் கூறப் பட்டுள்ளமை காண்க .
சீரிய முகில் -சீர் முகில் -சீர் -அழகாகவுமாம் –

—————

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் – ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன –
ஏனையோர் கேள்வி அறிவு பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -பகவானிடம் பிரபத்தி பண்ணி பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் –
அவர் கூட்டத்தில் சேராது -தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு –
அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் –இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை -என்கிறார்

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-

எம்பெருமானாருடைய வண்மை கார் கொண்டது -அதாவது மேகத்தை வென்றது –
சிலருக்கு சில காலத்திலே மழை பொழிவது கார்
எல்லாருக்கும் எல்லாகாலத்திலும் பயன் படுவது வண்மை-ஆதலின் காரை வென்றது வண்மை
இது கண்டு கொள்
தேவரீர் வழங்க நான் பெற்றமை -வழங்கின தேவரீருக்கு தெரியாதோ –
ஏற்ற என் வாயாலே சொல்லிக் கேட்க வேணுமா என்கிறார் .
நான் கேள்வியினால் பிரபத்தி செய்து பகவானை அடைவார்கள் கூட்டத்தில் சேர்ந்திலேன்-
பொருவற்ற கேள்வியினால் ஆசார்யனுடைய அபிமானத்திற்கு பாத்ரமாகி எம்பெருமானார்-திருவடிகளையே
பெரும் பேறாக பெறுமவன் ஆனேன் –என்பது கருத்து .

———–

எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை
ஒரு புறம் இருக்க -இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ –என்கிறார் .

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன் -என்கிறார் .
அவன் சீர் —உண்டு கொண்டேன்
சீர் -குணம் அது வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து கடலாய் தோற்றுகிறது –
விடாய் தீர அக்குணக் கடலையே வாய் மடுத்து உண்டு கொண்டேன் என்கிறார்
இன்னம் -உலப்பு இல்லையே
இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு முடிவே இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் .

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

நாதன் என்னும் அறிவை -ஊட்டி -அறியாமை தீர்த்து -அருளினார் எம்பெருமானார் -என்க –
நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே சேஷப் பட்டவர்கள் ஆகிறோம் -என்னும் உபதேசத்தினால்
அறிவை ஊட்டி எம்பெருமானார் பேதைமை தீர்த்து அருளினார்
இராமானுசனைத் தொழுவார் -என்பதே அவர்கள் பெயர் .
தொழுகையே அவர்களுக்கு நிரூபகம் -இத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் என்றபடி –
ஆழ்வான் -ஆண்டான் போல்வார்கள் பாதம் அல்லால் –பற்று இல்லை –
என் தன் ஆர் உயிர்க்கு பாதமே பற்றுக் கோடு-பிறிது ஒன்றும் இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர் எவராயினும் -அவர் மேல் உள்ள காலம் எல்லாம் –
என்னை ஆள்வதற்கு உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-

பெரியவர் ஆளுவதோ என்றும் அடிமை இன்பம் ஒன்றையே தருவதாய் இருத்தலின் ஒருபடிப் பட்டு இருக்கும்
எம்பெருமானாரைப் பற்றிய பெரியவர் -நாம் பையல் எனக் கொண்டு -தாமாகவே முன் போல் உழன்று ஓடி நைய விடாது ஆள்கின்றனர் .
என்னே என் நிலை அடியோடு மாறின படி -என்கிறார் .
அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –இது நானாக தேடிக் கொண்ட கேடு
இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .
இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற வியந்து பேசுகிறார் .

————

ஸ்ரீ எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு உண்டாகும் என்கிறார்

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த மேன்மைக் குணங்களும் .
பேதையர் பேசும் போது அவர்களுடைய அறியாமை இயலாமை களின் அளவிற்கு ஏற்ப
ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த எளிமை குணங்களும் பொருளாகின்றன .
இங்கு -பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வடிவு -21-என்னும் ஸ்ரீ பேய் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியும் –
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -ஸ்ரீ திருவாய் மொழி -5 -8-4- – –என்னும்
ஸ்ரீ ஸூக்தியும் ஒப்பு நோக்கத் தக்கன
பாம்பின் கால் பாம்புக்கு தெரியும் -என்னும் முறையிலே உணர்வின் மிக்கோரே
தெரிந்து கொள்ள வல்லவர் -என்க
(ஆதி சேஷன் மகிமையை விஷ்வக்சேனர் உணர்வார் -எம்பெருமானார் மஹிமையை நம்மாழ்வார் அறிவார் என்றவாறு )

எம்பெருமானார் என்னும் ஆசார்யன் ஆகிற துறையிலே -சத்துவ குணம் தலையெடுத்து -ஞானஸ்தானம் செய்தவர்கள்
மிகத் தூயராய் இருப்பதனால் -கலி அவர்களை நலிய இயலாது ..
அசுத்தி சிறிதேனும் காணப்படில் அன்றோ -கலியினால் ஆக்ரமிக்க முடியும் –

அந்த நல் ஞானத்தில் சேர்ந்து இருப்பவர்களைக் கலி நலியாதாதலின் அவர்கள் கோஷ்டியில் சேர்ந்த எனக்கு –
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவராயினும் -அவர் எம்மை ஆளும் பரமர் -என்னும் துணிபு
கலியினால் குலைவு பெறாது –என்பது கருத்து —

——–

எம்பெருமானார் ஆகிற சிம்மம்-குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக
இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை
ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

கலைப் பெருமாள்-என்கிறார் .
வட மொழி மறையின் அங்கங்களை –கலை -என்னும் சொல்லாலே வழங்கி உள்ளார் திரு மங்கை ஆழ்வார் –
பன்னு கலை நூல் வேதப் பொருள் எல்லாம் -பெரிய திருமொழி -7 8-2-

ஒலி மிக்க பாடல் -மிகுந்த ஒலியை உடைய பாடல் -என்றபடி -ஒலி -ஓசை
துள்ளலோசை முதலியவை இவருடைய பாடலில் மிகுந்து இருப்பதைக் காணலாம் .
ஒலி கெழு பாடல் -11 4-10 –

இவ்வாறு மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று

ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி
மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–69-78–

December 9, 2021

எம்பெருமானார் உடைய பேருதவி நினைவிற்கு வர –
இறைவன் செய்த உதவியினும் சீரியதாய் -அது தோன்றலின் -அவ்வுதவியில் ஈடுபட்டுப் பேசுகிறார் –

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

தானது தந்து –என்னையே
தன் சரணங்களைத் தானே தந்திலன் அரங்கன்
அவ்வரங்கன் திருவடிகளைத் தாமே -என் வேண்டுகோள் இல்லாமலே -தந்து அருளினார் எம்பெருமானார் .
அரங்கன் சரணம் எம்பெருமானாருக்கு சொந்தம் போலும் –

தாமாகவே எம்பெருமானார் அரங்கன் சரணங்களை எனக்குத் தந்ததற்கு காரணம் தந்தையானமையே என்கிறார் .
இராமானுசன் எந்தையே –தான் அது தந்து என்று இயைக்க –தந்தை தானாக தனயற்கு தனம் அளிப்பது போலே –
எந்தை இராமானுசன் அரங்கன் சரணமாம் தனத்தை தானே தந்தார் -என்க
அரங்கர் செய்ய தாளினையோடு ஆர்த்தான் -என்று முன்னரே இவ் விஷயம் கூறப்பட்டு இருப்பதும் காண்க .
ஞானப் பிறப்புக்கு மூல காரணமாய் இருந்தமை பற்றி –எம்பெருமானார் எந்தை-எனப்படுகிறார் .

எம்பெருமானார் தந்தவைகளோ -அரங்கனுடைய திவ்ய சரணங்களாம்.
சம்சாரத்தில் இருந்து கரை ஏறுவதற்கு உறுப்பான திவ்ய சரணங்களே
ப்ராப்யமும் ப்ராபகமுமாம் என்னும் திண் மதி எம்பெருமானார் தந்தது -என்றது ஆயிற்று

எடுத்தனன் -என்கையாலே ஆழமான சம்சாரக் கடலிலே விழுந்து கரை ஏற இயலாது தவித்தமை தெரிகிறது .-
என்னை –
அரங்கனும் இரங்காத நிலையில் உள்ள பாபியான என்னை –
ஆச்சார்ய சம்பந்தம் இதுகாறும் இல்லாமையின் அரங்கன் சரண் பெற்றிலர் அமுதனார் .
இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் பொருந்தாதவர்களுக்கு நன்மை செய்ய மாட்டார் அன்றோ
அரங்கனாம் பெரும் தேவர் .இன்று இராமானுசன் சம்பந்தம் வாய்த்ததும்
அரங்கன் சரண் பெற்று மேன்மை உற்றார் அமுதனார் -என்க –

———–

மேலும் விடாது -அருளல் வேண்டும் -என்று தம் கோரிக்கையை திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பிக்கிறார் .

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

தமாசார்யான ஆழ்வான் நைச்ய அனுசந்தானம் செய்ததை தாமும் பின்பற்றி –
அமுதனார்-இங்கனம் அருளிச் செய்கிறார்
என்னையும் எண் இயல்வையும் பார்த்து -என்னாது
தனித் தனியே பார்த்து -என்றது -ஒவ் ஒன்றே அருள் செய்வதற்கு போதுமானது -என்று
தோற்றற்கு-என்க
அரங்கன் தராதையும் தந்து சம்சாரப் படு குழியில் இருந்து பெரும் பாவியான என்னை
எடுத்தலின் எம்பெருமானாரது கருணை பெரும் கருணை யாயிற்று-
முன் பாசுரத்தில் ஞானப் பிறப்பிற்கு ஹேதுவான தந்தையைக் கூறப் பட்டார் எம்பெருமானார் .
இந்தப் பாசுரத்தில் அவர் -பெற்றவனை வளர்க்கும் வளர்ப்புத் தகப்பனாராகக் கருதப்படுகிறார்

————-

இவர் விண்ணப்பத்தை எம்பெருமானார் இசைந்து ஏற்று அருளி -விசேஷ கடாஷத்தாலே –
இவருடைய ஞானத்தை தம் திறத்தில் ஊன்றி நிற்குமாறு தெளிவுறுத்தி விட
தமக்கு கிடைத்தவைகளைக் கூறி க்ருதார்த்தர் ஆகிறார்-

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-

தாளிணையில் சார்ந்த -என்னாது –தாளிணைக் கீழ்ச் சார்ந்தது -என்றமையின் –
நிழலும் அடிதாறும் போலே விட்டுப் பிரியாது பொருந்தி விட்டது -என்றது ஆயிற்று –
நீ செய்வினை யதனால் என்னும் ஹேதுவை ஒவ் ஓர் இடத்திலும் கூட்டிக் கொள்ள வேண்டும் .
நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதவ் மே சக்தம் மனோபவது
வாக்குண கீர்த்தநேசவ் க்ருத்யஞ்ச தாஸ்ய கரனேது கரத்வயச்ய -என்று பிரார்த்தனை பண்ணுகிறார் .
அந்நிலை அமுதனார் தமக்கு எம்பெருமானார் கடாஷத்தால் பலித்து விட்டதாக அருளிச் செய்கிறார்.

எம்பெருமானுடைய கமல மலர்ப்பாதத்தை கண்டதும் ஆழ்வாருடைய வினைகள் விண்டு ஒழிந்தன .
மதுர கவி ஆழ்வாருடைய பண்டை வல்வினையை நம்மாழ்வார் கண்டு கொண்டு பாற்றி அருளினார்
அமுதனார் முன் செய்வினை எம்பெருமானார் செய்து அருளிய அத்தகைய
விசேஷ கடாஷத்தால் தானே பேர்ந்து ஒழிந்தது

செய்வினையதனால் -எனபது ஸ்ரீ ரெங்கநாதன் இடம் எம்பெருமானார் செய்த சரணா கதியை
கூறுவதாக பொருள் கொண்டு -அவர் செய்த சரணா கத்தியினால் தன்வினை பேர்ந்தது என்று
அமுதனார் அருளிச் செய்வதாக வியாக்யானம் செய்கின்றனர் சிலர் .
சிந்தை தாள் இணைக் கீழ் சார்ந்தமை முதலியவற்றுக்கு –அது –சரணாகதி காரணம் ஆகாமையாலும் –
அவதாரிகையில் விசேஷ கடாஷத்தாலே இவருடைய கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்தில் ஊன்றி இருக்கும்படி
பண்ணி அருளினதாக கூறி இருப்பதாலும் -அந்த வியாக்யானம் ஆராயத் தக்கதாகும் –

வண்மையாவது, பெறுகிறவர் தகுதி பாராமல், கொடுக்கிற விஷயத்தின் சீர்மை கருதாமல் , கொடுப்பது.
இப்படி கொடுத்தது எம்பெருமானார் பதினெட்டு முறை நடந்து சரம ச்லோகார்த்தம் கேட்டு
அதை ஆசையுடையோர்க்கெல்லாம் வழங்கியது வண்மைத் தன்மை என்று முழங்குகிறார்
ஸ்ரீ நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார்

எம்பெருமானார் வண்மையினால் என் மீது விசேஷ கடாஷம் செலுத்த –என் கரணங்கள் அவர் பால் ஈடுபட்டன .
வினைகள் தொலைந்தன –இனி எனக்கு என்ன குறை -என்று
தாம் கிருதார்த்தர் ஆனமையை இப்பாசுரத்தால் பேசினார் ஆயிற்று .

————-

எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

மிக்க வண்மை செய்து வைத்தனன்
இருந்து ஏத்துதல்-இடைவிடாமல் துதித்து கொண்டு இருத்தல்
புகழோர் உடனே வைத்தல்-குணம் நிரம்பினவர் கூட்டத்திலே என்னையும் குணம்
நிரம்பினவன் ஒருவன் என்று ஒக்க எண்ணலாம் படி சேர வைத்தல் .
இனி தீய குணம் உடையோரிடை இது காரும் கூடி இருந்த என்னை-அடியாரோடு இருந்தமை -என்றபடி
நிறை புகழோர் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே இருக்கும்படி பண்ணினார் -என்னவுமாம் .

கீழ்ப் பாசுரத்தில் கூறப்பட்ட பேறுகள் அனைத்துக்கும் நிறை புகழோர் உடனே
வைத்தல் அடித்தளமாய் முக்கியமாதல் பற்றி இதனைத் தனிந்து நினைவு
கூர்ந்து மிக்க வண்மையினால் இங்கன் உபகரித்து அருளுவதே ! என்று ஈடுபடுகிறார் .

—————

தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே ரஷகராய் –
உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் எம்பெருமானாரை ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய
எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும் நிலை இல்லை என்கிறார் –

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

உண்மை ஞானத்தை -உபதேசிப்பதனால் சம்சார தாபத்தை தீர்த்தலாலும்-
பகவானுடைய குணங்களை துய்க்க செய்து ஆனந்தப் படுத்தலாலும் –
எம்பெருமானார் இடம் சந்தரன் இடத்தில் போன்ற குளிர்ச்சி உள்ளது என்க .-
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தன்மை எம்பெருமானிடம் உள்ளதே யாயினும்
அவன் பால் உள்ள ஸ்வா தந்த்ரியத்தின் வெப்பத்தினால் அத் தண்மை தாக்கு உறுவதும் உண்டு
எம்பெருமானார் இடமும் ஸ்வா தந்த்ரிய வெப்பம் அடியோடு இல்லாமையின் தண்மை என்றும் குன்றாது –
தனிப்பட்டதாய் அமைந்தது -என்க –

ஸ்ரீ பராசார பட்டர்-ஔ தார்ய காருணி கதாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ – என்று
வண்மை கருணை அடியார்கள் இடம் வாத்சல்யம் முதலிய குணங்கள் -என்று லோக மாதாவான-
ஸ்ரீ ரெங்க நாச்சியார் இடம் இம் மூன்று குணங்களை முக்கியமாக அனுசந்த்திது இருப்பது போலே –
அமுதனாரும் இம் மூன்று முக்கிய குணங்களை எம்பெருமானார் இடம் அனுசந்திக்கிறார் –

மாதகவால் சரணானார்
1-வண்மையினால் தானே சரணானார்
2-தண்மை யினால் உண்மை நன் ஞானம் உரைத்தார் -என்னலுமாம் –
உண்மை ஞானம் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதால் தாபத்தை தீர்ப்பதாகவும்
நல் ஞானம் எம்பெருமான் குணங்களை பற்றியதாய் இருத்தலின் ஆனந்தத்தை விளைவிப்பதாயும் உள்ளது ..
மதி போன்ற தண்மை யினால் உரைக்கும் ஞானமும் மதி புரைவது ஆயிற்று .

———

எம்பெருமானார் உரைத்த உண்மை நல் ஞானத்திற்குப் பகைவரான புறச் சமயத்தவரையும் –
அகச் சமயத்தவரான குத்ருஷ்டிகளையும் -களைந்து எறியும் விஷயத்தில் சர்வேஸ்வரனைப்
பார்க்கிலும் அவ் எம்பெருமானார் எளிதினில் காட்டி யருளும் திறமையை பாராட்டி அதனில் ஈடுபடுகிறார் .

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-

1-மாயவன் மறையின் திறம் தேராதவர்களை புத்தியினால் வெல்லலாகாது- கைப்பிடித்த படையினால் வெல்லுகிறான் ..
எம்மிராமானுசனோ மறையில் பொருந்தாத அன்னாரைத் தம் யுக்தியினாலேயே வென்று விடுகிறார் ..
2-மாயவன் குறைக்கிறான் -குறைப்பது மீண்டும் தளிர்ப்பதும் உண்டு
இராவணன் தலை அற்றற்று வீழ மீண்டும் முளைத்தன அன்றோ –
எம்மிராமானுசனோ –சிதைக்கிறார் -சிதைத்தது மீண்டும் தளிர்க்க வழியே இல்லை
3-மாயவன் வேறு ஒரு பொருளான ஆழி கொண்டு குறைக்கிறான்
எம்மிராமானுசனோ தம் சிந்தனா சக்தியாலே சிதைக்கிறார் .
4-மாயவன் குறைப்பது என்றும் உள்ள கூராழி என்னும் ஒரே கருவி கொண்டே
எம்மிராமானுசன் சிதைப்பதோ அவ்வப்போது புதிது புதிதாய்த் தோற்றும் சிந்தை கொண்டே –
அப்போதொரு சிந்தை செய்தே –
ப்ரஜ்ஞா நவ நவோன் மேஷ சாலி நீ பிரதிபாமாதா -புதிது புதிதாக தோன்றி விளங்கும் அறிவு
பிரதிபை -என்று கொள்ளப்படுகிறது -என்றபடி இங்கே கூறப்படும் சிந்தையை பிரதிபை என்று உணர்க

————–

பகவான் தான் அழகு அனைத்தையும் புலப்படுத்திக் கொண்டு கண் எதிரே வந்து -உன்னை விடேன் என்று இருந்தாலும் –
தேவரீர் குணங்களே வந்து போட்டி இட்டு நாலா புறங்களிலும் சூழ்ந்து மொய்த்துக் கொண்டு
என்னை நிலை குலைந்து ஈடுபடும்படி செய்யும் -என்கிறார் .

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

கையில் ஆழியும் -என்னாது கைத்தலத்து ஆழியும் -என்றது கையின் பரப்புடைமை தோற்றற்கு -என்க –
நம் கண் முகப்பே –
திருவரங்கர் கூரார் ஆழி வெண் சங்கேந்தி வந்து தன் சௌந்தர்யம் முதலிய குணங்களில்
ஈடுபடுத்த முற்படினும் தாம் நிலை பேராது நிற்றலுக்கு ஸ்வாமியை சாஷியாக சேர்த்து கூறும்
நோக்கம் உடையவராய் -என் கண் முகப்பே -என்னாது –நம் கண் முகப்பே -என்கிறார் –
எம்பெருமானார் முக்கோல் ஏந்திய கைத்தலத்து அழகே என்னை ஈடுபடச் செய்கிறது .
சஸ்த்ரம் பிடித்த அரங்கர் கையில் எனக்கு ஈடுபாடு இல்லை .
சாஸ்திரம் பிடித்த எம்பெருமானார் கையில் தான் எனக்கு ஈடுபாடு .

தன் வடிவைக் காட்டி ஈடுபடுத்த முற்படுவது இயல்பு -ஆதலின் அவன் அங்கனம் முற்படினும்
என் ஆசார்ய நிஷ்டையை குலைக்க ஒண்ணாது என்கிறார் இப்பாசுரத்தில் .
தேவ பிரான் தன் கரிய கோலத் திரு உருவை மதுர கவியாருக்கு தானே மேல் விழுந்து காட்டினான் அன்றோ மதுர கவியார் கண்டார்
அமுதனாரோ விடேன் என்று தம் அழகைக் காட்டி திருவரங்கர் நிலை நிற்பினும்
கண் எடுத்தும் பாராது எம்பெருமானார் குணங்களிலேயே தாம் ஈடுபட்ட நிலை குலையாமல் இருப்பதாக பேசுகிறார் .

நம்மாழ்வார் தாமும் , கருட வாஹணன் வந்தாலும் அவனுக்கு ஒரு கும்பீடு போட்டு விட்டு இங்கேயே இருப்பேன்
என்று திவ்ய தேசமே தஞ்சம் என்று சொல்வதாக இருப்பதாக பேசுகிறார்-

கூடும் கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*
ஆடும் பறவைமிசைக் கண்டு* கைதொழுது அன்றி அவன் உறையும்,*
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி* ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*
நீடு பொழில் திருவாறன்விளை தொழ* வாய்க்கும்கொல் நிச்சலுமே!

————–

ஆசார்யர் ஆகிய தேவரீரை அன்றிக் கண் எடுத்தும் பாரேன் என்றார் கீழ் –
இதனை உகந்த எம்பெருமானார் இவருக்கு எதனை அளிப்போம் என்னும் கருத்து தோன்ற எழுந்து அருளி இருப்பதை கண்டு –
தமக்கு வேண்டும் பேற்றினை இன்னது என்று முடிவு கட்டிக் கோருகிறார் –

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

திரு மலையின் கீர்த்தி என்றும் ஒருப்பட்டு இருத்தலின் –நின்ற கீர்த்தி -என்கிறார் .
வண் கீர்த்தி
வேறு பயனைக் கோராதவர்க்கு பகவத் ஆபிமுக்க்யம் தொடங்கி-கைங்கர்யம் ஈறாக -தர வல்லது திரு மலையின் கீர்த்தனமே
பொற் குன்றம்
பொன் போலே சீறியதும் -விரும்பத் தக்கதுமாய் இருத்தலின் -பொற் குன்றம் -என்றார் .எம்பெருமான் பொன் மலை -என்றார்
குலசேகரப் பெருமாளும் -பெருமாள் திரு மொழி –4 10-

வேம்கடப் பொற் குன்றத்தில் நிறைந்த வண் கீர்த்தி வாய்ந்த நின்ற திருக் கோலமும் –
வைகுண்ட நாட்டில் செம் தாமரைக் கண் பிரான் காட்டிய இருந்த திருக் கோலமும் –
பாற்கடலில் -கிடததோர் கிடக்கை -என்று கொண்டாடும் சயனத் திருக் கோலமும்
இம் மூன்று இடங்களிலும் எம்பெருமானைத் தன மீது கொண்ட ஆதி சேஷனாய் இருத்தலின் எம்பெருமானாருக்கு பேரின்பம் தருகின்றன

பரம ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வேம்கடப் பொற் குன்றம் முன்னரும் –
ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வைகுண்ட நாடு அதனை எடுத்தும் –
ஆர்த்தி தீர ஆஸ்ரயிக்கும் இடமாதல் பற்றி திருப்பாற்கடல் அதன் பின்னரும் முறைப்படுத்தப் பட்டன

ஏனைவ குருணா யஸ்ய நயாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்த்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
எந்த ஆசார்யனாலேயே எவனுக்கு சரணாகதி விதியை அளிக்கப்படுகிறதோ
அவனுக்கு அந்த ஆசார்யனே வைகுண்டமும் பாற்கடலும் த்வாரகையும் -எல்லாம் ஆவான் –

வில்லார் மணி கொழிக்கும் வேம்கடப் பொற் குன்ற முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளா மிருளோடே மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த அவர் -என்னும் ஞான சாரப் பாசுரமும் அனுசந்திக்கத் தகன

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்க்க வேணும் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று
நம் ஆழ்வாரும் எம்பெருமானைப் பிரார்த்தித்தது போலே அமுதனார் எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார்

————-

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ -என்கிறார் .

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வண்மை இராமானுசற்கு என்கருத்து இனியே –வள்ளலாகிய எம்பெருமானார் இவ்வளவு உபகரித்ததோடு அமையாமல்
மேலும் உதவுதற்கு முற்படுகிறார் -இவ்வளவுக்கு மேலும் உதவுதற்கு என்ன தான் இருக்கிறதோ – என்றபடி –
என்னை முற்றுமுயிர் உண்டு …இன்னம் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே -திருவாய் மொழி – 10-7 3- –
என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் –
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக் குறிப்பே –பெரியாழ்வார் திரு மொழி 5-4 1-
என்னும் பெரியாழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் இங்கு ஒப்பு நோக்குக .

————-

இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உகந்த விஷயமான திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-
வேறு ஒரு பொய்ப் பொருளை என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் .

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

ஆளுமாளார் -என்கிறவனுடைய-தனிமையை தவிர்க்கைக்காக யாயிற்று பாஷ்ய காரரும் இவரும் உபதேசிப்பது -ஸ்ரீ வசன பூஷணம் – 255-

மெய்ப் பொருள் -ஜீவாத்மா திரு மகளுக்கும் அவள் கேள்வனுக்குமே உரியதாய் இருத்தல் –

பொய்ப் பொருளான ஜீவாத்மா பரப்ரம ஐக்யமடைதல் –
அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் –
பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன-மற்று ஓர் பொய்ப் பொருள்-

எம் குருவான ராமானுசன் உபதேசித்த சேஷத்வமே மெய்ப் பொருள் –
அவர் உபதேசிக்காத ஒவ் ஒரு பொருளும் பொய்ப் பொருள் -என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–59-68–

December 9, 2021

இக் கலி காலத்தில்–எம்பெருமானார் அவ் விருளைப் போக்காவிடில் –ஆத்மாவுக்கு ஆத்மாவான சேஷி ஈச்வரனே –
என்று எவரும் நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார் .

கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59-

சிறையிலே நள் இருள் கண் -ஞானத்தின் ஒளி உருவான கண்ணன் என்னும்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு வந்தது -வெளிச்சம் அற்ற நில உலகில்
கலி இருள் மிடை தரு காலத்தில் -பிரபன்ன குலத்தினில் யதிராஜர் என்னும் குன்றில் இட்ட-விளக்கு வந்து ஜ்வலித்தது .
நான்மறை -என்றும் இருப்பினும் -அம் மறையின் சுடர் ஒளி -கொண்டு இருளைத்
துறக்கும் திறமை எம்பெருமானார் ஒருவருக்கே உள்ளது-

உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான்
பயன் உறுவது சேஷி என்றும் பயன் உறுத்துவது சேஷம் என்றும் உணர்க .
ஈஸ்வரனுக்கு உயிர்கள் சேஷமாய் இருத்தலின் -அவன் உகப்பாய் நோக்கி
பணி புரிதலே புருஷார்த்தம் ஆயிற்று -என்க .இவை எல்லாம் எம்பெருமானார்
இருளைத் துரந்து காட்ட நாம் கண்டவை –

——–

ஸ்வாமியின் ஞான வைபவத்தை அறிவித்த பின்பு –பக்தி வைபவத்தையும் அருளிச் செய்கிறார்
பகவான் இடத்திலும் -பாகவதர்கள் இடத்திலும் –
அவ் இருவர் பெருமையும் பேச வந்த திருவாய் மொழி இடத்திலும் -அவருக்கு உண்டான
ப்ரேமம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும்
உள்ளது உள்ளபடியே என்பார் மெய் ஞானியர் .என்கிறார் .
இனி திருவாய் மொழியைப் பற்றி எடுத்துப் பேசுவதால் -திரு வாய் மொழியின் பொருளை-அதாவது
மிக்க இறை நிலையும்-என்றபடி அர்த்த பஞ்சகத்தை -உணர்ந்த மெய் ஞானியர் -என்னலுமாம் –
அணி அரங்கன் திரு முற்றத்தார் -அடியார் தங்கள்-இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும்-
இசைந்துடனே என்று கொலோ இருக்கும் நாளே –என்று குலசேகர பெருமாளும்
அவனடியார் நனிமா கலவியின்பம் நாளும் வாய்க்க நங்கட்கே -என்று நம் ஆழ்வாரும்
இந்நிலையினை பெரும் பேறாக பெற அவாவுவது காண்-

எங்கு எங்கு எல்லாம் ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்
மத்தகதிடை கைகளைக் கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்
திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் எம்பெருமானார் புக்கு நிற்கிறார்
நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- –

மலராள் புணர்ந்த பொன் மார்பன் ஆதலின் இந்நில உலகின் குற்றம் தோற்றாது-திருப்பதிகளிலே-
வாத்சல்யத்துடன் அவன் பொருந்தி எழுந்து அருளி இருக்கிறான்
பொருந்தும் பதி -எனவே
பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம் என்க
திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் -என்க-

நிற்றல்-ஈடுபட்டு மெய் மறந்து நின்றால்
இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார் -என்னலுமாம் .
இதனால் எம்பெருமானாருடைய பக்தி வளம் விளக்கப் பட்டதாயிற்று .
குணம்-அறிவு முதலிய ஆத்ம குணம்
கொண்டல்-வள்ளன்மையால் வந்த ஆகு பெயர் .
மேகம் போலே ஆத்ம குணங்களை அனைவருக்கும் வழங்கும் வள்ளல் -என்றபடி .
இனி நிற்கும் -என்பதை பெயர் எச்சமாக கொள்ளும் போது புக்கு நிற்கும் குணம் எனபது பக்தி ஆகிறது-

பிரமாதாக்களும் -பிரமாணத்தை கொண்டு அறிபவர்கள்-பிரமாணமும் –
ப்ரமேயங்களும் -பிரமாணத்தால் அறியப்படும் அவைகளும் –
பேசப்பட்டு -அவற்றில் எம்பெருமானாருக்கு உள்ள பக்தி வளம் கூறப்பட்டது –

————-

ஸ்வாமியுடைய குண வைபவம் இருக்குபடியை அருளிச் செய்கிறார் –

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –

அவர் இருக்கும் இடம் தேடி நான் போக வில்லை –அழுந்தினவன் எங்கனம் போக இயலும் –
அவரே விண்ணின் தலை நின்று மண்ணின் தலத்துக்கு-என்னை ஆட் கொள்ள வந்தார்

நிரயத்து அழுந்திய இடத்தே வந்தமையால்-வாத்சல்யம் தோற்றுகிறது .-
வேண்டுகோள் இன்றி தன் பேறாக வந்தமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது –
ஆட் கொண்டமையால்-சௌசீல்யமும்
தாமே நேரில் வந்தமையால்-சௌலப்யமும் -புலனாகின்றன .
நிரயத்து அழுந்தி உழலுவதை அறிந்து வந்தமையால்-ஞானமும் –
எடுத்து ஆட் கொண்டமையால்-சக்தியும் –
அரு முனிவர் தொழும் தவத்தோன் -என்றமையால் பூர்த்தியும்
எம் இராமானுசன் -என்றமையால்-பிராப்தியும் -சம்பந்தமும் –வெளி இடப்பட்டு களிப்ப்ட்டுவது காண்க .

தன் புகழ் சுடர் மிக்கு எழுந்தது –
நிரயத்து அழுந்தி யிட்டேனை ஆட் கொண்ட பின்னும் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -என்று இயைக்க –
என்னளவோடு போதும் என்று திருப்தி பெறாமல் என்னை ஆட் கொண்டமையால் சுடர் மிகுந்த குணம்
என் போன்றவர்களை மேலும் தேடிக் கிளர்ந்து எழுந்தது -என்றபடி –
புகழ் சுடர் மிக்கு எழுந்தது
அது கொழுந்து விட்டு ஓடிப் படரும்-புகழ் சுடர் மிக்கு எழுந்தமையால் இந்நிலத்திற்கு சிறப்பு உண்டாயிற்று-

————

கர்ம சம்பந்தம் அறப் பெறுகையால் வந்த கிருதார்த்தத்தை -பயன் அடைந்தமையை –அருளிச் செய்கிறார் –

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –

எம்பெருமானார் சம்பந்தம் வாய்ந்த பெரியோர் தம் கழல்-பிடித்த பின் பேற்றுக்கு செய்ய வேண்டியது யாது ஒன்றும் இல்லாதாயிற்று –
அவை இருவினை கழலுவதற்கு-திண்ணியவைகளான பரி பூர்ண உபாயமாம்
பேறு தப்பாது என்று ஐயம் அற துணிந்து -தெளிந்து நிற்றல் க்ருதக்ருத்யத்வம்
யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன்

பெரும் தேவர் -நித்ய ஸூரிகள்
பெரும் தேவர் குழாம்கள் பிதற்றும் பிரான் பரன்-திருவாய் மொழி -9 3-4 – –
இனி பெரும் தேவர் என்பதற்கு பெரிய பெருமாள் என்று பொருள் கொண்டு உரைத்தலுமாம் .
இயல்பான ஆசார்ய தன்மை வாய்ந்த எம்பெருமானார் சம்பந்தம் இல்லாவிடில் –
அடிகளில் விழுந்து கெஞ்சிப் பல் இளித்தாலும் அரங்கன் சிறிதும் அருள் புரிந்து -நன்மை ஒன்றும் செய்ய மாட்டான் -என்க –

அத்தகைய பெரிய பெருமாளைப் பரவும் பெரியோர் என்பது –
மொழியைக் கடக்கும் பெரும் புகழ் படைத்த கூரத் ஆழ்வானை-ராமானுச சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒன்றும் நன்மை செய்யாத
ஸ்வபாவத்திலே தோற்று பெரிய பெருமானை கூரத் ஆழ்வான் பரவுகின்றார் என்க
அவர் திருவடியை ஆஸ்ரயித்து-என்றபடி–

———–

அநிஷ்டமான கர்ம சம்பந்தம் கழிந்தபடி சொன்னார் கீழ் –
இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபேஷிதமான தேவரீர் திருவடிகளில்
ப்ராவண்ய அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் -என்கிறார் .

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –

களிற்றினுக்கு காதல் அழகார்ந்த பிடியைக் கண்டதும் உண்டாகியது .
அடியேனுக்கு பேரன்பு -நற்குணம் வாய்ந்த நின் திருமேனியை தேவரீர் காட்டித் தர –அதனை நான்-கண்டதும்
உண்டாகும்படி செய்து அருள வேண்டும் -என்று எம்பெருமானாரையே பிரார்த்திக்கிறார் –

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு – .என்னும் பாசுரத்தில் –
தமது நெஞ்சை அனுபவிக்கும் வண்டாகவும்-அடியை அனுபவிக்கப்படும் தாமரை மலராகவும் –
அதன் கண் உள்ள-குளிர்ச்சி மென்மை மணங்களை பிறங்கிய சீராகிய தேனாகவும் –
அதனை உண்டு அம்மலரிலே-நிரந்தரமாக அமர்ந்திட அவ்வண்டு வந்து அடைந்தது என்று பலித்தமை வருணிக்க பட்டுள்ளமையும் –
இப்பாட்டில் வந்துள்ள களிற்றினுக்கு போலே எவ்வகையிலும் பேராத பேரன்பு பலித்தமை-
கையில் கனி என்ன –என்னும் பாசுரத்தில் -உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் -என்று
விளக்க பட்டு உள்ளமையும் கவனிக்க தக்கது –

ஞாலத்தவரை விடாது பின் தொடரும் பரம காருணிகர் -எம்பெருமானார் -என்க
அவ் ஒண் பொருள் கொண்டு அவர்பின் படரும் குணன் -36 – என்று கீழே கூறியதை இங்கே நினைவு கூர்க
படியைத் தொடரும் விஷயத்திலே அறிவுடைமையாவது அவரவர் தகுதிக்கு ஏற்ப –
தம்மை அமைத்துக் கொண்டு -நெஞ்சில் படும்படி உபதேசித்து -அறிவூட்டுகை –
அது மிக்கு இருத்தலாவது அவ்வுபதேசம் பலித்து ஆளாக்கி விஷயீ கரித்தல் என்க –
எம் இராமானுசன் அவ் எழில் மறையில் சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே -74 -என்று மேலே -இவர் கூறுவதும் காண்க –

————

புற மதத்தவரும் குத்ருஷ்டிகளும் ஆகிய வாதியரைப் பார்த்து இராமானுச முனி யாகிய யானை
உங்களை நாடிக் கொண்டு பூமியிலே வந்து எதிர்ந்தது –உங்கள் வாழ்வு இனிப் போயிற்று என்கிறார்

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

திரு வாய் மொழி என்னாது –மாறன் பசும் தமிழ் -என்றார்-அவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களையும் நெஞ்சில் கொண்டு
என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவைமொழிந்து -திருவாய் மொழி -10 6-4 – -என்று
நம் ஆழ்வாரே தம் நூல்களை இரும் தமிழ் நூல் –
குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் – என்றது காண்க –

பண்ணார் பாடலினால் திரு மால் இரும் சோலை யான் ஆனந்தம் அதிகமாகி அவ் ஆனந்தத்துக்கு
போக்கு வீடாக -தென்னா தென்னா -என்று ஆலாபனம் செய்து பாடா நிற்பானாயின்
எம்பெருமானார்க்கு இத்தகைய பண்ணார் பாடலினால் ஆனந்தம் விளைய கேட்க வேண்டுமா –

ஆனந்த பாஷ்பத்தை யானையின் மத நீராக உருவகம் செய்கிறார் .
முந்தைய பாசுரத்தில் பிடி போன்றவராக எம்பெருமானாரை வருணனை செய்தார் –
ஸ்ரீ வைஷ்ணவர் என்னும் களிறு விட்டுப் பிரியலாகாது பின் தொடரத் தக்க தன்மை உடமை பற்றி –
இந்தப் பாசுரத்திலே
மதக் களிறாக அவ் வெம்பெருமானாரையே உருவகம் செய்கிறார் .வாதியரை எளிதில் சிதைக்கும் வலுவுடமை பற்றி
வாதியரை நாடித் துகைத்து சிதைக்கும் வலுவுடமை வாய்ந்து இருப்பினும்
இவ் வேழம் வைணவருக்கு அடங்கி வசப்பட்டே உள்ளது என்பது தோன்ற –எங்கள் வேழம் -என்றார் .
எங்கள் என்பது திருவாய் மொழியை அறியக் கற்று வல்லரான வைஷ்ணவர்களை

இராமானுச முனி யாகிற வேழம் -முனிகிற வேழம் முனி வேழம் என்று வினைத் தொகை யாக்கி இராமானுசனாகிற முனி வேழம் –
முனிவர் .. வேழம் என்று இரு பண்புகளும் கொண்ட இராமானுசன் என்றபடி இரு பெயரேட்டுப் பண்புத் தொகை.
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -17 – என்றும் இவ் ஆச்ரியரே கீழ்க் கூறி இருக்க –
ஏனைய பொருள்களைப் பற்றி வரும் கனிவும் முனிவும் தள்ளத் தக்கனவே அன்றி
பகவத் அனுபவத்தை பற்றி -குறிப்பாக மாறன் பசும் தமிழால்-வரும் பகவத் அனுபவத்தை பற்றி வரும் கனிவும் –
அப் பசும் தமிழ் இன்பத்துக்கு இடையூறாக நிற்கும் வாதியர் திறத்து முனிவும் -மிகவும் வேண்டற் பாலன வாதலின்
எம்பெருமானார் இடம் கனிவும் முனிவும் காட்டியது மிகவும் பொருந்தும் -என்க –

இராமானுச முனி வேழத்துக்கு மதமூட்டும் மருந்தாயிற்று மாறன் பசும் தமிழ்
திருவாய் மொழி மதமும் வேதக் கொழும் தண்டம் சேர்ந்து விட்டன –
வாதியர்கள் வாழ இனி வழி இல்லை -என்கிறார் .
உபய வேதாந்தங்களையும் தன்னகத்தே கொண்ட எம்பெருமானார் அவைகளைக் கொண்டே வாதியரை
வாழ்வு அறச் செய்கிறார் -என்பது கருத்து –

அருள் என்னும் தண்டால் அடித்து பெரிய திருவந்தாதி – 26-
வேதக் கொழும் தண்டம் என்பதனால் எம்பெருமானார் திருக் கரத்திலே ஏந்தின த்ரி தண்டத்தை-அமுதனார் கருதுகிறார்
மூன்று வேதங்களும் முக்கோல்கள் ஆயின -என்பது அவர் கருத்து –
திருவாய் மொழியை ஆழ்ந்து அனுபவித்து-அதனால் வேதப் பொருளை தெளிந்து –
தெளிந்த அப் பொருளுக்கு முரண்பட்டுக் கூறும் வாதியரை அந்த வேத வாக்யங்களைக் கொண்டு-
வாழ்வு அறச் செய்தார் எம்பெருமானார்

———-

வாதியர் வாழ்வு அற-எம்பெருமானார் உதவிய ஞானத்தாலே விளைந்த
நன்மைகளை கண்டு-களிப்புடன் அவற்றைக் கூறுகிறார் .

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-

என்றும் மறையவர் தம் தாழ்வு அற்றது –
என்றும் அற்றது என்று இயைக்க
களை எடுத்தவாறே பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருவது போலே
துர்வாதம் தொலையவே வைதிகர் தலை நிமிர்ந்து ஓங்கி வளர்ந்தனர் -என்க –

தவம் தாரணி பெற்றது –
தவம் -பாக்கியம்
தாரணி தவம் பெற்றது என்று கூட்டுக
துர்வாதம் தொலைந்து வைதிகர் தலை நிமிர்ந்து –தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திருவந்தாதி -16 –என்றபடி
பூமி எங்கும் திரிதலாலே அவர்கள் திருவடி சம்பந்தம் பெறுதலின் பூமி பாக்கியம் பெற்றது என்றபடி .
ஏத்துவார் திரிதலால் தவமுடைத்து இத் தரணி தானே-பெருமாள் திரு மொழி -10- 5-
தத்துவ நூல் கூழ் அற்றது
கூழ் -சந்தேகம்
நூலில் சந்தேகம் தீர்ந்தது -என்றபடி
குற்றமெல்லாம் –அந்நாழ்அற்றது-
இராமானுசன் தந்தஞானத்திலான நலன்கள் எத்திறத்தன என்று வியக்கிறார் .

———-

எம்பெருமானார் தந்த ஞானத்தின் வைபவம் கூறப்பட்டது -கீழ்ப் பாசுரத்திலே .
மோஷத்தை அவர் கொடுத்து அருளும் வைபவத்தை அருளிச் செய்கிறார் இப்பாசுரத்திலே

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

திரு மா மகளோடு கூடிய அருளாளன் -நாணாளும் நின்னினைந்து நைவேற்கு –பெரிய திரு மொழி -3 6-5-
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ
திருவாய் மொழி -6 9-3- – – – என்றபடியும் நைந்து தளர்பவர்களுக்கு வானம் கொடுக்கிறான்
அந்தோ அருளானான மாதவன் நாடொறும் நைய விடுகிறான் தன் பக்தர்களை .
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசனை
மகா பாபியான என் மனத்தில் உள்ள தோஷத்தை போக்கினவரே என்று அமுதனார் இங்கு கூறியது
எத்தகையோருக்கும் தோஷத்தை நீக்கி -வானத்தைக் கொடுக்கும் வல்லமை எம்பெருமானாருக்கு உண்டு
என்று தோற்றுகைக்காக -தன்னை விடப் பாபம் அதிகமாக செய்தவர் வேறு எவருமே இருக்க மாட்டார்கள்-
எம்பெருமானாரை அடைகிறவர்கள் இன்னார் இனையார் என்று இல்லை .
ஏற்றத் தாழ்வு இன்றி எல்லோருக்கும் அந்த வானத்தை கொடுத்து விடுகிறார்-

எய்தின அனுகூலர்க்கு கொடுப்பதால்-சர்வ முக்தி பிரசங்கத்திற்கு இடம் இல்லை
எம்பெருமானார் ஒருவரே தம்மை எய்தினர்க்கு நைதலில்லாமல் அத்தானம் கொடுக்கிறார் .
இதனால் உத்தரகாசார்யர் எம்பெருமானார் என்பதை உணர்த்தினார் -ஆயிற்று

———–

எம்பெருமானார் -தமது உபதேசத்தாலே நம் இந்திரியங்களைக் கட்டுப் படுத்தி-இவ் ஆத்ம வர்க்கத்தை ரஷித்து
இலர் ஆகில் வேறு எவர் காப்பாற்றுவார் என்று தாமே-நினைந்து ஈடு பட்டுப் பேசுகிறார் .

சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

வைத்த கரணம் -என்று நேர் முகமாகவும்
உமக்கு அன்று -என்று எதிர்மறையாகவும்
கரணங்கள் மாயவனுக்கே உரியவை என்பதை எம்பெருமானார் வலியுறுத்து கிறார் -என்க –
நாடாத மலர் நாடி -நாடொறும் நாரணன்தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வைக்கின்று –திருவாய் மொழி –1 4-9 –
சரணாகதி -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான சரணா கதி -யைக் கொண்டமையின் –தருமன் முதலியோர் வாழ்ந்தனர்
தம் நலனுக்காக தம் கரணங்களை உபயோகப் படுத்தி -நூற்றுவர் மாய்ந்தனர் -என்று உதாரணம் காட்டி
உபதேசித்து எம்பெருமானார் உயிர்கட்கு அரண் அமைத்தார் -என்க

———-

இந்நிலத்திலே என்னுடைய ஆத்மாவும் மனமும் எம்பெருமானாரைப் பற்றினவர்களுடைய
குணங்களிலே நோக்குடன் சென்று ஈடுபட்டு விட்டது
ஆகவே எனக்குச் சமமானவர் எவருமே-இல்லை என்று களிப்புடன் கூறுகிறார் .

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

தக்க ஐவர் தமக்காய்-
அன்று ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்புக்க நல் தேர்த் தனிப் பாகா -திரு வாய் மொழி -8 5-8 – –
என்று நம் ஆழ்வார் ஐவர்க்கு கையாளாய் கண்ணன் தேர்ப்பாகன் ஆனதாக அருளிச் செய்து-இருப்பது இங்கே அறியத் தக்கது .
அக்நி தேவனால் அர்ஜுனனுக்குகொடுக்கப் பட்ட தேர் ஆதலின் -தெய்வத் தேர் -என்கிறார்
தெய்வம்-தேவ சம்பந்தம் பெற்றது -வடசொல் –
இனி
தேவனான கண்ணன் திருவடி சம்பந்தம் பெற்ற பீடுடைமை பற்றி -தெய்வத் தேர் -என்றார்-

மறக்க ஒண்ணாதபடி தெரியச் செம்மைப் பொருளை எம்பெருமானார்
உரைத்து இருப்பதனால் மீண்டும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுவதற்கு வழியே இல்லை-

சீரினில் –ஆவியும் சிந்தையுமே –
சீர் -நற்குணங்கள்
பணிந்து -விடில் முடியும் படியான மிக்க ஈடுபாடு கொண்டது
ஆவி -ஆத்மா
சிந்தை -மனம்
பணிந்தன என்று பன்மையில் கூறாது ஒருமையில் கூறினார் .
ஒன்றை ஓன்று எதிர்பாராது -தனித் தனியே ஈடுபட்டமை தோற்றற்கு-
ஆவியும் பணிந்தது -சிந்தையும் பணிந்தது-என்று தனித் தனியே கூட்டி உரைக்க –
சென்றது என்பதோடு அமையாமல் சென்று பணிந்தது -என்றமையால்
சீரினை விட்டு பிரிய இயலாமை தோற்றுகிறது –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .