Archive for the ‘ஆச்சார்ய ஹிருதயம்’ Category

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –222–

September 29, 2018

(த்வய உத்தர அர்த்தம் முதல் மூன்றால் -பூர்வ அர்த்தம் அடுத்த மென்றால் புருஷார்த்தம் –
முதல் மூன்றால் -ஹிதம் அடுத்த மூன்று பாத்தாள் -நாலாம் பத்து நியந்த்ருத்வம்
தாய் மகள் தோழி-மூன்றுமே உண்டு நான்காம் பத்தில் -பாலனாய் -மண்ணை இருந்து துழாவி -தீர்ப்பாரை யாம் இனி -இவை –
ஜீவ பர ஸ்வரூப மூன்றிலும் இதில் உண்டே -ஒன்றும் தேவும் பர ஸ்வரூபம் -ஏறாளும் -ஜீவாத்மா ஸ்வரூபம் -ஒரு நாயகமாய் விரோதி ஸ்வரூபம்
ஆழ்வார் திருக்குருகை- பொலிந்து நின்ற -பரே சப்தம் அருளிச் செய்கிறார் இதில்
ராமானுஜர் சமர்ப்பித்த ஒரு நாயகம் பாசுரம்

முதல் பதிகமும் -எட்டாம் பதிகமும் வைராக்யம் -விரக்தி பூர்வகமாக ஆச்ரயணத்தை ருசிப்பிக்கிறார் இதில்
ஒரு நாயகமாய் -ஐஸ்வர்ய கைவல்யம் விட -ஹித உபதேசம் –
இந்த உபதேசம் இவருக்கு பகவத் ப்ராவண்யம் வளர –முடியானே போலே -நடக்க முடியாததை –
ஒழிவில் காலத்தில் -கைங்கர்ய அபிநிவேசம் போலே –
தேச கால விப்ரக்ருஷ்டமான அபதானங்களை–பாலனாய் -தண்ணம் துழாய் ஆசைப்பட்டு —
மண் அளந்த தாளாளா வரை எடுத்த தோளாளா -தாளும் தோளும் காட்டினால் போதும் -திருமங்கை ஆழ்வார்–இவர் அந்த யுகத்துடன் சேவை
தேச கால விப்ரக்ருஷ்டம் என்று அறியாமல் –பாலனைப் போலே -மாலுமால் -தாய் பாசுரம் -அவனும் அப்படியே அருளிச் செய்ய –
பூசும் சாந்து என் நெஞ்சமே -அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே–ஸந்தோஷம் உன்மத்தம் -சற்றே நெகிழ நிற்க
தன்னிலை போய் -சம்பந்த சத்ருச பதார்த்தங்கள் -வெண்ணெய் காள மேகம் போல்வன –மண்ணை இருந்து துழாவி 4-4-தாய் பாசுரம் –
இவர் சத்தை பெற வைகுண்ட இருப்பை காட்ட -மங்களா சாசனம் -விடாயை வளர்க்கவும் தீர்க்கவும் கிருஷிகன் அவன் தானே –
இனி யார் நிகர் –சூழ் விசும்பு பின் இல்லாமல் போனதே -பட்டர்
தீர்ப்பாரை -அடுத்து -வெறி விலக்கு-தோழி பதிகம் -மோர் உள்ளதனையும் சோறோயோ–
சங்கதி ரேவ சங்கதி-அவன் அவருக்கு கொடுக்கும் அனுபவம் யார் அறிவார் –
மோகமே தேவலை உணர்த்தி படுத்தும் பாடு -அடுத்த பதிகம் -ஓலம் இட்டார் –நாராயணா என்று என்று
கோல மேனி காண வாராய் -கூவியும் கொள்ளாய்–
மந்திரங்களில் சுலபம் திரு மந்த்ரம் அத்யந்த சுலபம் -நாமம் -மூன்று எழுத்து உடைய பேரால் -கோவிந்தா –
திரு நாமம் வைபவம் தானே புடவை சுரந்தது
சதுரா சதுராக்ஷரி-ராமானுஜர் சாரதமம் –
அடுத்து ஏறாளும் -மகள் பாசுரம்–ஆத்ம ஆத்மீய வைராக்கிடம் -அவன் உபேக்ஷித்த எதுவும் வேண்டாம்
ந தேகம் ந பிராணன் ந ஸூ கம் –ராக்ஷஸே மத்யே -நஹி மே ஜீவிதா நஹி பூஷண –
சம்சார வெறுப்பால் –நண்ணாதார் முறுவலிப்ப –கொடு உலகம் காட்டேல்-லோக யாத்ரா வைராக்யம் -4-9-
சம்சாரிகளை திருத்த கூரத்தாழ்வான் -உபதேசிக்கிறார் என்பர் –
தவளை சர்ப்பம் வாயில் அகப்பட்டு கத்துகிறதே -ரக்ஷகர் இருக்கிறார் என்று அது அறிந்து தானே கத்துகிறது –
பரே சப்தம் காட்ட –ஒன்றும் தேவும் 4-10-அர்ச்சாவதார பரத்வம் -விஷயாந்தர ஆசை தேவதாந்த்ரத்தில் பரத்வ புத்தி தவிர்க்க -உபதேசம் –
புருஷார்த்த பல அந்ய ருசி தவிர்ப்பதே இதன் ப்ரமேயம் )

நாலாம் பத்தில் –

கீழ் சொன்ன வியாப்தி ஆகாச வியாப்தி போல் அன்றிக்கே -நிறம் பெறும்படி –
அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனானாம் –ஆரணம் -3-20–என்றும் ,
ய ஆத்மா நமந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யம் -என்றும் –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய ஜகத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-20– -என்றும் –
சாஸ்தா சராசரஸ் யைக -இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களின் -பிரவ்ருத்தி நிவ்ருதிகள்-
ஸ்வாதீனமாம் படி -நியமித்து கொண்டு போருகையாலே –
சர்வ நியந்தாவாய் இருக்கிறவன் –

ஒழிவில் காலத்தில் -கைங்கர்ய அபிநிவேசம் போலே –
தேச கால விப்ரக்ருஷ்டமான அபதானங்களை -தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்க வேண்டும் என்று –
அதி சாபலம் பண்ணின இவர்க்கு -காலோபாதியை கழித்து -சமகாலம் ஆக்கி அனுபவித்து –
இவருடைய இழவைத் தீர்த்து -இவருடைய கரண த்ரய வியாபாரத்தையும் போக்யமாகக் கொள்ள –
அந்த பிரணயித்வத்திலே தோற்று –

விரஹ தசையில்-சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகக் கருதும்படி பித்தேறி –
தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு கூப்பிட –(4-4-)
அவ் இழவு தீரும்படி –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணு அசிந்தியாத்மா பக்தைர் பாகவதஸ் ஸஹ –
இத்யாதிப் படியே –தேச விசேஷத்தில் பெரிய பிராட்டியாரும் தானுமே போக்தாக்களாய் இருக்கும் இருப்பைக் காட்டி
அனுபவித்தாப் போலே -பிரத்யஷமாம் படி -அனுபவிப்பிக்க அனுபவித்து –(4-5-)
இப்படி முக்த போக்யதை மானசமாக பிராபித்து –அதுக்குப் பலமான
தேவதாந்த்ரங்களில் வைராக்யதை உடையரான இவர் –

ஐஸ்வர்ய கைவல்யங்களின் அல்ப அஸ்திரத்வ சாவதிகத்வாதி -தோஷங்களையும் –
(அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்கள் -4-1-ஒன்றும் தேவும் / தேவதாந்த்ர வைராக்யம் -4-6-/
ஆத்ம ஆத்மீய வைராக்யம் -4-8-/மூன்றையும் சேர்த்து அருளிச் செய்கிறார் )
நிந்த்த்ய பதார்த்தங்களாலே சூத்திர தேவதா பஜனம் பண்ணுமத்தின் நிஹீததையும் –
ப்ரசம்சா பர வாக்யங்களாலே சொல்லப்பட்டு –
பகவத் விபூதி பூதராய் இருக்கச் செய்தே அவனோடு விகல்ப்பிக்கலாம் படி அவன்
கொடுத்த ஐஸ்வர்யத்தை உடையராய் இருக்கிற பிரம ருத்ராதிகளுடைய அஞ்ஞனாதி களையும் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களின் தமோ நிஷ்டதையும் -வெளி இட்டு –(4-10-)
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத் பலமும் கை கண்டிகோள் –
ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலே சர்வேஸ்வரனே ரஷகன் –
அல்லாதார் அடையவம் -தத் ரஷ்ய பூதர் – என்னும் அர்த்தத்தை சாஸ்திர முகத்தால்
கண்டு வைத்தும் தேற மாட்டுகிறிலிகோள் –

இப்படி நீங்கள் தேறாமைக்கு அடி -அவன் இட்ட வழக்கான -பிரகிருதி சம்பந்தம் –
தத் விமோசன உபாயமும் -அவன் திரு அடிகளில் ஆஸ்ரயணீயம் என்று அறிந்து –
தத் ஆஸ்ரயணீயத்தைப் பண்ணி இத்தை தப்பப் பாருங்கோள் –
அவன் திரு அடிகளில் கைங்கர்யமே உங்களுக்கு சீரிய புருஷார்த்தம் என்று –
பிரயோஜனாந்தர -தேவ தாந்திர -விரக்தி -முன்னாக -பரதேவதையும் பரம பிரயோஜனமும் அவனே –
அவன் விஷயத்தில் கைங்கர்யமே -என்று உபதேசித்து
பகவத் ஆஸ்ரயணீயத்தை ருசிப்பிக்கிறார் என்கிறார்-

—————————————-

1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே
என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –
ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின
சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்
2-போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே
காதல் மையல் ஏறிய பித்தாய்
3-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது
தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட
வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச
ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை
ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர்
உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன்
என்ன உடையரானவர்
4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ
அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும்
5-ஆடு கள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற
நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும்
நிஹீநதையையும்
6-பேச நின்ற தேவாத ஞான சக்தி
சாபேஷத்வாதிகளையும்
7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி
மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர்
8-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின்
ஆட் செய்வதே உறுவது ஆவது என்று
விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை
ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் —

————————————————-

1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர் கொள் வானத்தும் ஆயே
என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –
மருகலில் ஈசனை –4-1-10-
ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்த–4-3-2-
ஈசன் பாலோரவம் பறைதல் என்னாவது இலங்கியர்க்கே -4-10-4–என்று
நியந்தரு வாசக சப்தத்தாலே சொல்லும் படி –

ஏர் கொள் ஏழு உலகமும் துன்னி முற்றுமாக நின்ற சோதி ஞான மூர்த்தியாய் -4-3-8–என்றும்
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-4-5-9- – என்றும்
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே -4-9-7–என்கிற
கீழில் பத்தில் சர்வ விஷயமாகச் சொன்ன வ்யாப்தி -ஆகாச வியாப்தி போல் ஆகாமே நிறம் பெரும்படியாக –
(நியந்த்ருத்வம் உடன் கூடிய வியாபகத்வம் நாலாம் பத்தில் -கீழ் பத்தில் சர்வ விஷய வியாப்தி –
ராஜா போலே நியமனம் -ஆகாசம் போலே வியாப்தி -உண்டே இவனுக்கு )
வீற்று இருந்து எழ உலகும் தனிக் கோல் செல்ல-4-5-1- -என்கிறபடி
உபய விபூதியும் தன் நியமனத்திலே ஆம் படி -தன் ஆக்ஜை நடத்துகிற
சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன்

ஒழிவில் காலத்துக்கு சேர -(பாலனாய் ஏழு உலகு 4-2–திருவாய் மொழியுடைய தாத்பர்யம் இது முதல் )
பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கி
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -என்று
அடிமை செய்யப் பாரிக்கிற அளவில் சர்வ தேச சர்வ அவஸ்தைகளோபாதி
சர்வ காலத்திலும் வேணும் என்று கீழ் கழிந்த காலத்தில் அடிமையையும்
ஆசைப் பட்டதுக்குச் சேரும் படி –
பாலனாய் ஏழு உலகு உண்டு -தொடங்கி –
தேச கால விப்ரக்ருஷ்டங்களான அவனுடைய அபதானங்களை –
தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்கையில் அபிநிவேசத்தாலே –
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி
பைம் பொற் துழாய் என்றே ஒதுமால் எய்தினள்-4-2-6–என்று
பூர்வ காலீன போகங்களையே வாய் புலற்றும் படி பிராந்தியை அடைந்த
சாபலத்துக்கு அனுரூபமாக காலத்தினுடைய பேத வ்யவஹாரத்துக்கு
உடலான உபாதியைக் கழித்து ஒரு போகி ஆக்குகையாலே -சம காலமாக்கி அனுபவிப்பித்து

—————

2-(கோவை வாயாள்-திருவாய் மொழி தாத்பர்யம் இது முதல்)
போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே(-4-3)- காதல் மையல் ஏறிய பித்தாய்(-4-4-)தீரக
பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே – 4-3-1-என்று தொடங்கி –
ஏக மூர்த்திக்கே பூம் தண் மாலை கொண்டு உன்னை போதால்
வணங்கேனேலும் நின் பூம் தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே –4-3-4-
என்று விரோதி நிரசனம் பண்ணுகிற அவ்வவ காலங்களிலே உதவி புஷ்பாதி உபகரணங்களை
கொண்டு சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் -விலஷண விக்ரக யுக்தனாய் -சர்வேஸ்வரனாய்
இருக்கிறவன் -என்னுடைய கரண த்ரய வியாபாராதிகளையே தனக்கு போக்ய வஸ்துகள்
எல்லாமாகக் கொள்வதே ! என்று இவர் தாமே ஈடுபடும்படி பண்ணி –

அவ்வவோ காலங்களில்
தனக்கு உதவி அடிமை செய்யாத இழவை அவன் தீர்த்த பிரணயித்வ குணத்திலே –
காதல் மையல் ஏறினேன் -என்கிறபடியே பிரேமம் மேல் இட்டு அறிவு கலங்கினவாறே –
வெள்ளக் கேடாக ஒண்ணாது என்று அவன் அல்பம் பேர நிற்க
(மண்ணை இருந்து துழாவி -திருவாய் மொழி சாரம் இது முதல் )-அவனோடு சத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே கருதி பேசும்படியாக
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -4-4-6-என்னும்படி பித்தேறி –

———————————————

3-(சீலமில்லாச் சிறியேனேலும்-4-7–பொருள்)தேச தூரத்துக்கு கூவியும் கொள்ளாய் என்றது
தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட
தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு தேச தூரத்தைப் பற்ற –
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே-4-7-1–என்று
உன் வடிவு அழகை இங்கே வந்து அனுபவிப்பித்து அருளுதல்-
என்னை அங்கே அருளப் பாடு இடுதல் -செய்கிறிலை என்று -கூப்பிட்ட இழவும் தீர –

(நண்ணாதார் முறுவலிப்ப-4-9-சாரம்)
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு -4-9-10-என்று
நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும் நீயுமே போக்த்தாக்களாய் -அவ் விபூதியில்
உள்ளார் அடைய போகோ உபகரண கோடியாம்படி கண்டு வைத்த நேர்பாட்டை நான் கண்டேன் என்னும்படி –
கீழ் காலோ உபாதியை நீக்கி சமகாலம் ஆக்கினார் போலே –
அவ் விபூதியில் அனுபவத்தையும் இங்கு
இருந்தே அனுபவிக்கலாம் படி ஒரு போகியாக பிரகாசிப்பிக்க-
(4-5-கால உபாதி கழிந்ததால் முன்னும் பின்னும் திருவாய் மொழி பதிகங்கள் இருக்குமே )

(வீற்று இருந்து ஏழு உலகம் சாரம்)-வீவில் இன்பம் கூட்டினை– என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவியே -என்றும் ,
கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே –4-9-9-என்று
அவனைக் கிட்டி நிரதிசய ஆனந்தியாகப் பெற்றேன் –யாவர் சிலர்க்கும் தம் தம்மால் சேர்த்து கொள்ள அரிய
திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய் – நான் அனுபவிக்கப் பெற்றேன் என்ற
அது மானச அனுபவம் ஆகையாலே -இப்படி முக்தருடைய போகமான-
(இதுவே -இந்த ருசியே புருஷார்த்த பிராப்தி )
அவ் அனுபவத்தில் மானசமாக உண்டான பிராப்திக்குப் பலமாக –

தேவதாந்திர ஆத்மா ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர்
உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர்
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்–4-6-10–என்று தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு
தெய்வத்தை தொழுது அறியாள் என்னும் படி -தேவதாந்தரங்களில் வைராக்யத்தையும் –
உயிரினால் குறைவிலமே -4-8-10–என்றும் ,
உடம்பினால் குறைவிலமே–4-8-9- -என்னும் படி ஆத்ம ஆத்மீயங்களில் வைராக்யத்தையும் –
கொடு உலகம் காட்டேல்—4-9-7-என்னும் படி லோக யாத்ரையில் வைராக்யத்தையும் -,
வேட்கை எல்லாம் விடுத்து -4-9-9–என்று சமுதாயவேனவும்
ஐம் கருவி கண்ட இன்பம் ஒழிந்தேன் சிற்று இன்பம் ஒழிந்தேன்—4-9-10-என்று ப்ருதக்தவேனவும்
சொல்லும்படி ஐஸ் வர்யத்திலும் அஷர சப்த வாச்யமான ஆத்ம அனுபவ கை வல்யத்திலும்
உண்டான வைராக்யத்தையும் உடையரான இவர்

———————————————————-

(இது முதல் பர உபதேசம் செய்து அருளியவை )
4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சா வாதிகத்வாதிகளையும்
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -4-1-1–என்று தொடங்கி-
ராஜ்ஜியம் நாம மகா வியாதி ரசிகி த்ச்யோ விநாசன
பிரதாரம் வா ஸூதம் வாபி த்யஜந்தி கலு பூமிபா – என்கிற ராஜ்ய ஐஸ்வர்யத்தின் அல்பத்தையும் –
குடி மன்னு மின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் 4-1-9–என்று
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே
மர்த்த்ய லோகம் விசந்தி–ஸ்ரீ கீதை-9-21 -என்கிற ஸ்வர்க்க அனுபவத்தின் அஸ்த்ரத்வத்தையும் –
இருகலிறப்பு-4-1-10- -என்ற ஆத்ம அனுபவத்தின் சாவதிகத்வத்தையும் –
ஆதி சப்த்தாலே –
துக்க மிஸ்ரத்வ -துச்சாததத்வ-நிச்சாரத்வங்களை சொல்லுகிறது-

——————————————————–

(தீர்ப்பாரை 4-6–சாரம் )
5-ஆடு கள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு
இழைத்தாடும் நிஹீநதையையும்
த்ரவ்யம் நிந்த்த்ய ஸூராதி தைவத மதி சூத்ரஞ்ச பாஹ்யாகமோ
த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிக ஜனா திக் திக் திகேஷாம் க்ரமம்-என்கிறபடி
அங்கோர் ஆடும் கள்ளும் –4-6-7-
அங்கோர் கள்ளும் இறைச்சியும் –4-6-3-
கரும் சோறும் மற்றை செஞ்சோறும்-4-6-4- -என்கிற
சூரா மாம்ஸாதி நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு –
நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம்-4-6-2- -என்கிற
சூத்திர தேவதைகளுக்கு
களன் இளைத்து-4-6-4- -என்று
அவ்வோ தேவதைகள் சந்நிதி பண்ணும் ஸ்தலங்களிலே பலி இட்டு –
நீர் அணங்கு ஆடுதல் கீழ்மை-4-6-8- -என்று
தைவா விஷ்டராயாடுமதின் தண்மையும்

—————————————————-

(ஒன்றும் தேவும்-4-10–சாரம் )
6-பேச நின்ற தேவதா அஜ்ஞான அசக்தி சாபேஷத்வாதிகளையும்
தத குரோத பரீ தேன சம்ரக்த்ன யநேனச வாமாம்குஷ்ட ந
காக்ரேனஸ் சின்னம் தஸ்ய சிரோ மயா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,
யச்மா தன பராதச்ய சிரச் சின்னம் த்வயா மம
தச்மச் சாபா சமாயுக்த கபாலீ த்வம் பவிஷ்யசி–ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும்
தத்ர நாராயணா ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித—ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,
விஷ்ணு பிரசாததாத் சூஸ்ரோணி கபாலம் தத் சஹச்ரதா –
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் தனம் யதா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் சொல்லுகிறபடியே –
பிரம்மா ருத்ரனால் தலை அறுப்புண்டு -சோச்யனாய் ருத்ரனை சபிக்க -ருத்ரன்
குருசிரச் சேதநத்தாலே பாதகியாய்-பிரம சாபம் தன்னால் போக்கிக் கொள்ளப் போகாமையாலே –
ஸ்ரீய பதியான சர்வேஸ்வரனை அர்த்திக்க -அவன் சாபத்தை போக்கினான் ஆகையாலே –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே
கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -4-10-4–என்று வேதத்தில் பர சம்சா பரமான
வாக்யங்களாலும் –ராஜச தாமச புராணங்களாலும் -பரத்வேன பேசலாம் படி –
முட்டுப் பொறுத்து நின்ற -பிரம ருத்ராதிகள் ஆகிற தேவதைகள் உடைய அன்யோன்யம் –
தங்களுக்கு வருகிற கிலேசம் அறியாமையும் -அந்த கிலேசம் தங்களால் தவிர்த்துக் கொள்ள
மாட்டாமையும் -அதைத் தவிர்த்து கொடுக்கைக்கு ஈஸ்வரன் வேண்டுகையும் -ஆகிற
அஞான அசக்தி சாபேஷ்த்வங்களையும்–
ஆதி சப்ததாலே கர்ம வஸ்யதையும்

—————————————————-

7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி
இலிங்கத்திட்ட -4-10-5–என்றும் ,
விளம்புமாறு சமயமும் -4-10-9–என்கிற பாட்டுகளில் சொல்லுகிற பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் ஆவன
யன்மயம் ச ஜகத் சர்வம்—ஸ்ரீ விஷ்ணு புராணம்–1-1-5- என்ற பொதுவிலே பிரசன்னம் பண்ண –
விஷ்னோஸ் சகாசாதுத்பூதம் ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-41–என்று கோல் விழுக்காட்டாலே-உத்தரமாகை அன்றிக்கே –
எருமையை ஆனையாக கவி பாடத் தர வேணும் என்பாரைப் போலே –
லிங்கம் என்று ஒரு வியக்தியை நிர்தேசித்து இதுக்கு உத்கர்ஷம் சொல்லித் தர வேணும் என்று –
கேட்கிறவனும் தமோ பிபூதனாய் கேட்க-சொல்லுகிறவனும் தமோ பிபூதனாய் சொல்ல –
இப்படி பிரவர்த்திகமான இலிங்க புரணாதிகள்-குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளும் – சிலவற்றைச் சொல்லா நின்றால்-
தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்கும் இத்தனை போக்கி -பிராமண அனுகூல தர்க்கம்
அல்லாமையாலே -கேவலம் உக்தி சாரமாய் இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் என்கிற –
ஷபணக பௌத்தாதிகளுடைய ஸ்ம்ருதிகளும் ஆகையாலே –
ய வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாச்ச காச்ச குத்ருஷ்டைய தாச் சர்வா
நிஷ்ப்பலா ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா –மனு ஸ்ம்ருதி-12-95-என்கிறபடியே
அவற்றினுடைய தமோ நிஷ்டைதையும் சொல்லி –

ஓடிக் கண்டீர்
ஓடியோடி -4-10-7–என்று தொடங்கி
வழி ஏறிக் கண்டீர் -4-10-7–என்று ,
கதாகதம் காமகாமா லபந்தே–ஸ்ரீ கீதை-9-21- -என்கிற படியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது –
கர்ப்பதேற வருவதாய்க் கொண்டு -அநேக ஜன்மங்களில் பிறந்து -தேவதாந்தரங்களை
திரிவித கரணங்களாலும் பல பர்யாயம் தத் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிற சாஸ்திர
மார்க்கத்தாலே ஆஸ்ரயித்து -அவ் ஆஸ்ரய பலமும் கண்டீர்கள்

———————————————————

8–கண்டும் தெளிய கில்லீர்-4-10-3-
இவனுடைய ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களை -சாஸ்த்ரத் த்வாரா பிரத்யஷித்தும் –
இவனே ஆஸ்ரயணீயன் என்று தெளிய மாட்டுகிறீலி கோள் –

அறிந்து அறிந்து ஓடுமின்-4-10-6-
உங்களை இங்கனே வைத்தது -சதசத் -கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்ம
அணுகுண பலங்களை அனுபவிக்கக் கடவதான சாஸ்திர மரியாதை -அழியும் என்று –
அது தான் -மம மாயா துரத்யயா –ஸ்ரீ கீதை-7-14- என்று பிரக்ருதியை இட்டு -அவன் மயக்கி வைத்தபடி காணுங்கோள்-
ஆன பின்பு அது அவன் மாயை என்று அறிந்து –
மா மேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -என்கையாலே -மாயா தரண உபாயமும் –
அவன் திருவடிகளைப் பற்றுகை என்று அறிந்து -அவனை ஆஸ்ரயித்து இந்த மாயையை தப்பப் பாருங்கோள் –
( நாட்டினான் தெய்வம் எங்கும் அருளால் காட்டினான் திருவரங்கம் நல்லதோர் -அருள் தன்னால்–திருமாலை )

ஆட் செய்வதே உறுவது ஆவது என்று
நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவதாவது -4-10-10–என்கையாலே –
நிரதிசய போக்யமான சேஷ்டிதத்தை உடையவனுக்கு அடிமை செய்வதே
இவ் ஆத்மாவுக்கு சீரியதும் ஸூசகமும் -என்று இப்படி உபதேசித்து

விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் .
அதாவது –
பிரயோஜனாந்தர-4-1–தேவதாந்திர-4-6- -பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் –4-10-
விரக்தி பூர்வகமாக –
ஜகத் காரணத்வாதிகளான பிரமாண உப பத்திகளாலே
பகவத் சமாஸ்ரயனத்தை சம்சாரிகளுக்கு ருசிப்பிக்கிறார் என்கை-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –221–

September 29, 2018

(நாயிகா பாவம் இல்லாத ஒரே பத்து –
த்வய உத்தர வாக்கியம் உள்ள சிறப்பு இதில் -ப்ராப்ய பிரதானம் -3-3-
நாம சங்கீர்த்தனம் -3-5-
அர்ச்சா வைபவம் -3-6-
பாகவத பிரபாவம் -3-7-
கரணங்கள்-மற்றவை ஆசைப்படும் -3-8-
வாய் படைத்த பயம் அஸேவ்ய சேவை -3-9
ஆழ்வார் பெருமை அவனுக்கும் மேலே -3-10–ஆழ்வார் பிரபாவம் -தன் பாழியை அருளிச் செய்கிறார் இதில் –
முதல் பத்து-ஒன்பதும் பத்தும்–மூன்றும் மகள் பாசுரம் மட்டுமே
இரண்டாம் பத்து-ஐந்தாம் பத்து மகள் தாய்
நான்காம் பத்து ஆறு -மூன்றுமே உண்டே
எட்டாம் -மக்கள் தோழி இரண்டும் உண்டே -தாய் பாசுரம் இல்லை
வியாபகத்வம் -குணம்

அழகர் திரு மேனி காட்ட–3 -1-அதையும் அனுபவிக்க முடியாமல் -கலங்க-3-2-
ப்ராப்யம் கைங்கர்யம் பிரார்த்திக்க -வடக்கு திருமலை காட்ட 3-3-
சர்வாத்மபாவம் காட்டி அருள -3-4-என்ன சொல்லிக் கூப்பிடுவேன் -கண்ணனைக் கூவுமாறு அறிய மாட்டேன் –
அன்புள்ளவரை ஆதரித்தும் -அன்பு இல்லாதாரை நிந்தித்தும் -3-5-திரு நாம சங்கீர்தன பிரபாவம் –
இவர்களையும் ஈடுபடுத்த அர்ச்சாவதார பிரபாவம் -3-6-இதம் பூர்ணம் — சர்வம் பூர்ணம் ஸஹோம் –
ஸுலப்யம் மூன்று நிலைகள் -1-3 /-2-8-/-3-6-பத்துடை அடியவரிலும் 1-3–அணைவது அரவணை -2-8–மேலிலும்
வெளி இட்ட அவதார சௌலப்யம் பரத்வ ஸ்தாநீயனாம் படி
அன்று தேர் தடவிய பெருமான் கனை கழல் காண்பது -என்று கொல் கண்களே -பாதரேகை அடியார்கள் –
திருவடி ஸ்தாநீயர்கள் பயிலும் சுடர் -3-7-ப்ராப்யம் ஸ்வாமி புருஷார்த்தம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -இதுக்கு அங்கம் –
சாது சமாஹம் தூண்ட அடுத்து -கரணங்கள் மற்ற கரணங்களின் கார்யம் ஆசைப்பட்டு -3-8-
வாக்கு சிலர் அஸேவ்ய சேவை –சொன்னால் விரோதம் -3-9-உபதேசம் –
சன்மம் பல பல செய்து -குறைவிலனே -முட்டிலேனே -பரிவிலனே -இடரிலனே-துயரிலனே -துக்கமிலனே -தளர்விலனே -கேடிலனே–3-10-

ஞானம் முதல் பத்தில் -அடுத்து -இரண்டாம் பத்தில் -காரணந்து த் யேய -அந்தர் கத குண உபாசனம் —
மூன்றாம் பத்தில் கைங்கர்யம் ஸ்வ வ்ருத்தி இதில் –
ஞப்த்தி-பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து –மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து – )

சூர்ணிகை -221..

மூன்றாம் பத்தால்-
தத் த்ருஷ்ட்வா ததேவ அனுப்ராவிசத் -தைத்ரியம்-என்கிறபடியே –
கார்ய பூத சேதன அசேதனங்களை அடைய வியாபித்து -தத் கத தோஷை ரசம் அஸ்ப்ருஷ்டனாக இருக்கையாலே
சர்வ வியாபனான சர்வேஸ்வரன்
கீழில் பத்தில் –
இவர் உபாய அனுகுணமாக நிஷ்கர்ஷித்த மோஷத்துக்கு பலமான
ஸ்வ விக்ரக அனுபவத்தை இவரைப் பண்ணுவிக்க –
இவர் அனுபவித்து தரித்து –

( முந்நீர் 3-2-தரிக்காமல் பட்ட வியசனம் –நிலைபெற்றது என் நெஞ்சம்-3-2-10–என்றதை இங்கு தரித்து -என்கிறார் )

அவ் அனுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷத்தால்
சர்வ வித கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபிநிவேசத்தை உடையராய்
தம் அபிநிவேச அனுகுணமாக -அவன் காட்டிக் கொடுத்த
அவனுடைய சர்வாத்ம பாவத்தைப் பேசி –
(சர்வவித ஸமஸ்த கைங்கர்யம் பெற்றுக் கொள்ளவே – சர்வாத்மா பாவம்-என்று காட்ட)
அத்தால் வந்த ப்ரீதியின் உகளிப்பை உடையராய்-

அந்த பிரீதி அவன் அளவில் பர்யவசியாதே –
பாகவத சேஷத்வத்தில் -எல்லை அளவும் சென்று –
அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான -பகவத் வைலஷண்ய அனுசந்தானத்தாலே –
ஒன்றின் வ்ருத்தியை ஓன்று ஆசைப் படும் படி -சேதன சமாதியை அடைந்த –
கரண க்ராமமும் தாமும் தனி தனியே அனுபவிக்கும் வேண்டும் பெரு விடாயை உடையராய் –
இதர ஸ்தோத்ரத்துக்கு அனர்ஹா கரணராய்-அவ்வளவும் அன்றிக்கே –
பகவத் ஸ்தோத்தரத்துக்கு அர்ஹா கரணருமாய்
பகவத் அனுபவத்துக்கு தமக்கு ஒரு பிரதி கதி தொடக்க மானவையும் அற்று
நிரதிசய ஆனந்த யுக்தரானவர் –

புண்டரீ காஷனாய் -ஸூரி சேவ்யனானவனை நம்மால் ஆஸ்ரயிக்கப் போமோ -என்று
சம்சாரிகள் அஞ்சி கை வாங்காமல் -மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும் படி –
கீழ் இரண்டு பத்தாலும் உபதேசித்த -அவதார சௌலப்யம் –
பரத்வ ஸ்தாநீயமாம் படி அர்ச்சாவதார சௌலப்யத்தை உபதேசித்து –
அர்ச்சிராதி கதியாலே பரமபதத்தை ப்ராபிக்கும் அவனை ஒழிய
இதர ஸ்தோத்ரத்திலே தாழ இழிகை நிஷ் பிரயோஜனம் –
ஆன பின்பு நீங்கள் – சகல பல பிரதனுமாய் -சாம்யா பத்தி பிரதனுமான –
அவன் விஷயத்திலே வாசிகமான அடிமை செய்யுங்கோள் என்று
நிஹீன வ்ருத்தியான இதர சேவையை நிவர்ப்பித்து –
தம்முடைய விருத்தியான வாசிக கைங்கர்யத்தில் மூட்டுகிறார் என்கிறார் ..

1-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று
தோய்விலனாம் சர்வ வியாபகன் தீர்ந்த அடியார்களை
தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும்
2-நீ தந்த மா மாயப் புணர்வினை
பிறப்பு அழுந்தி அலமருகின்றேன்
வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து
தலைப் பெய்வன் என்று கழித்து
புகும் தம் காதலுக்கும் சத்ருசமாக
கண்டு கொள் என்னும்
3-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில்
அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று
அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி
சர்வ ஆத்ம பாவத்தைப் புகழ்ந்து
4-சொல்லிப் பாடி ஏத்திப் பிதற்றி
எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்து
தடு குட்டக் கும்பிடு நட்டமிட்டு
சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி
உகள தம் அடியார் என்ன உடன்
கூடும் சாத்யம் வளர
5-பை கொள் பாம்பு போலே
இந்திரிய வ்ருத்தி நியம மற
பாடவந்த கவி அன்றிக்கே
படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்
6-குறை முட்டுப் பரிவு இடர் துயர்
துன்பம் அல்லல் துக்கம் தளர்வு
கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர்
செய்ய தாமரைக் கண்ணன்
அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி
எளிவரும் இணைவனாம் என்றவை
பரத்வமாம் படி
7-அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி
வழியைத் தருமவன் நிற்க இழிய
கருதுவது என்னாவது வேண்டிற்று
எல்லாம் தரும் –தன்னாகவே கொள்ளும்
கவி சொல்ல வம்மின் என்று
8 -முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு
ஸ்வ விருத்தியை மாற்றி
ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார்
மூன்றாம் பத்தில் ..

1-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன்-
அதாவது
முழுதுமாய் முழுதி யன்றாய்–3-1-8-என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் -3-2-4–என்றும் ,
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற -3-2-7–என்றும் ,
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் –3-10-10-என்றும்-
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் உணர்வின் மூர்த்தி-3-4-10- -என்றும்
தேச கால வஸ்துக்களால் பர்ச்சேதிக்க ஒண்ணாதபடி கார்யபூத சகல சேதன அசேதனங்களையும் வியாபித்து –
அநஸ்நன் அந்யோ அபிசாக சீதி-(இவற்றில் வேறான பர ப்ரஹ்மம் கர்மபலன்களை அனுபவிக்காமல்
அதிகமாகப் பிரகாசிக்கிறான் )கடோபநிஷத் -என்கிறபடியே
(பிரவேச வைலஷண்ய ஹேது -கிருபையால் அவன் பிரவேசம் -கர்மத்தால் ஆத்மா
சிறைக்குள் கைதியும் அரையனும் இருப்பது போலே )
தத்கத தோஷை ரச அஸ்ம்ப்ருஷ்டனாய் இருக்கையாலே வியாபகனான சர்வேஸ்வரன்

தீர்ந்த அடியார்களைத் தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் –
அதாவது
தீர்த்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல-3-5-11 -என்று
பிராப்ய பிராககங்கள் இரண்டும் தானேயாக ஆஸ்ரயித்த-( அத்யவசித்த-)ஆஸ்ரிதரை –
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்
தன்மை பெறுத்தி தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பன் -3-7-7–என்று
ஜன்ம பரம்பரைகளில் புகாதபடி ரஷித்து ஆரப்த சரீர அவசானத்திலே –
அர்ச்சிராதி மார்க்கத்தில் -தேச விசேஷத்தில் கொண்டு போய் –
ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து -பாத உபதானத்தோபாதி –
தன் திருவடிகளின் கீழ் இட்டுக் கொள்ளும் சேஷியான தன்னுடைய ஒவ்தார்யத்துக்கும்

2-நீ தந்த மா மாயப் புணர்வினைப் பிறப்பு அழுந்தி அலமருகின்றேன்
வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வன் –3-2-1-
பல்மாயப் பல்பிறவியில் படிகின்ற யான் –3-2-2-
பொல்லா ஆக்கையின் புணர்வினை –3-2-3-
வினை யியல் பிறப்பு அழுந்தி –3-2-7-
கொடுவினை தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமருகின்றேன்-3-2-9- என்று
சிருஷ்டி காலத்தில் உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ தந்த சரீரத்தைக் கொண்டு உன்னை நான் பெறப் பெறாதே –
நான் அதன் வழியே போய் அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டு -குண த்ரய பேதத்தால் -பலவகைப் பட்டு –
துரத்யயையான பிரகிருதி கார்யமான தேவாதி தேஹங்களில் அவஹாகித்து –
(நின் பல் மா மாயம் -மம மாயா துரத்யயா ஸ்ரீ கீதை–மாயை குண மயீ -சேர்த்து இருப்பதால் வியாக்யானம் -)
ஹேயமான சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடு ஓன்று பிணைந்து இருக்கிற கர்மம் அடியாக மீண்டும்
பாபத்திலே கொண்டு போய் மூட்டக் கடவதான ஜன்ம பரம்பரைகளில் அழுந்தி –
என்னால் அடி அறுக்கவும் அடி காணவும் ஒண்ணாதே –புகுர வழியும் தெரியும் ஒழிய –
புறப்பட வழி தெரியாத -பாபம் ஆகிற மிடைந்த தூற்றிலே அகப்பட்டு நின்று –
உன்னை பிராபிக்கைக்கு ஈடான வழி காணாதே -கூப்பிட்டு அலமாவா நின்றேன் –

வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும்
வினைகளை வேரறப் பாய்ந்து –3-2-1-
தொன் மா வல் வினைத் தொடர்களை முதலரிந்து -3-2-2–என்று –
அநாதியாய் -அபரிச்சேதமாய் -ஸ்வ யத்னம் நிவர்த்யம் அல்லாதபடி -அதி பிரபலமான
பாபங்களினுடைய அனுபந்தங்களை மறு கிளை வாராமல் வேரற்று போம் படி ஊசி
வேரோடே அறுத்து பொகட்டு –

எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் –3-2-1-
எங்கு வந்து அனுகிற்பன் –3-2-5-
எங்கு இனி தலைப் பெய்வன் -3-2-9–என்று
நான் உன்னை கிட்டுவதற்கு நாள் அறுதி இட்டு தரவேணும் –
நான் உன்னை எங்கே வந்து கிட்டக் கடவேன் –
இனிக் கிட்டுகை என்ற பொருள் உண்டோ -என்று சரீர சம்பந்தத்துக்கு நொந்து –
அதிலுண்டான அருசியோடே –

(வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை ஆய பெரும் புகழ் எல்லையிலாதன பாடிப் போய்)
காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் 3-9-8–என்று
பகவத் குண அனுபவத்தோடு -கால ஷேபத்தைப் பண்ணி -சரீரத்தை விட்டு –
அவன் திருவடிகளின் கீழ் புக வேணும் என்னும்படியான சேஷ பூதரான தம்முடைய ஆசைக்கும் –

சத்ருசமாக கண்டு கொள் என்னும் இப்படியான இருவர் படிக்கும் தகுதியாக –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே-3-9-9- -என்று ஈஸ்வரன் காட்டிக் கொடுக்கிற

3-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று
ஊனமில் மோக்கம் என்கோ-3-4-7- -என்று பிரகாரமான ஆத்ம அனுபவ மாத்ரத்தில்
அன்றிக்கே -ப்ரகாரி அளவும் செல்ல அனுபவிக்கையாலே -குறைவில்லததாய் –
ஸ்வரூப அனுரூபமாக -கீழில் பத்தில்–( 2-9-)அறுதி இட்ட -பரம புருஷார்த்த லஷண மோஷத்துக்கு
பலம் -பகவத் அனுபவ கைங்கர்யங்கள் ஆகையாலே –
( அனுபவமும் கைங்கர்யங்களும் இரண்டும் வேண்டுமே -அனுபவ காரித ப்ரீதி–ப்ரீதி காரித கைங்கர்யம் )
முடிச் சோதி -3-1–என்கிற திரு வாய் மொழியிலே அவன் வடி வழகையும் ஆபரண சேர்தியையும் அனுபவித்து –
அவை பரிசேதித்து அனுபவிக்க ஒண்ணாமையாலே -இது கரண சங்கோச நிபந்தனம் என்று நினைத்து –
இவர் படுகிற கிலேசத்தை – விஷய வைலஷண்ய நிபந்தனம் -என்று அறிவித்து -ஈஸ்வரன் நிவ்ருத்தமாக –
அவ் அனுபவத்தாலே –(கலை பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு )
நிலை பெற்றது என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே -3-2-10-என்று நித்ய வஸ்து சத்தை பெற்று

அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி
சத்தா கார்யமும் பலிக்க வேண்டுகையாலே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1-என்று –
தேச கால அவஸ்தா பிரகாரங்களை இட்டு -அவச்சேதியாபடி –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களும்
செய்ய வேண்டும் படியான அபிநிவேசத்தாலே –

சர்வ ஆத்ம பாவத்தை (நான்காம் பத்தின் பொருள் சர்வ வியாபகத்வம் ) புகழ்ந்து
தம்முடைய பாரிப்புக்கு ஈடாக தம்மை அடிமை கொள்ளும் படி கோலி –
அவன் காட்டிக் கொடுத்த -சர்வாத்ம பாவத்தை –
புகழில் நல் ஒருவனிலே –3-4-
பூதங்கள்- பௌதிகங்கள் -உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள் -ரசவத் பதார்த்தங்கள் –
காநாதி சப்தராசிகள் -மோஷாதி புருஷார்த்தங்கள் -ஜகத் பிரதானரான பிரம ருத்ராதிகள் –
இவற்றுக்கு அடைய காரணமான பிரகிருதி புருஷர்கள் –
இவற்றை அடைய விபூதியாக உடையவனாய் –
இவற்றுக்கு அந்தராத்மாதயா வியாபித்து -தத்கத தோஷ -ரச அஸ்ம்ஸ்ப்ருஷ்டனாய்-
இருக்கிற படியைப் பேசி அவ் அனுபவத்தால் பிரீதராய்-
(புகழு நல் ஒருவன் குணம்–பொருவில் சீர் பூமி – விபூதி -பத்தாவது அத்யாயம் -கல்யாண குணம் -ஸ்வ அதீனம்–ஆளவந்தார் )

4-சொல்லிப் பாடி ஏத்தி பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்துதடு குட்டக் கும்பிடு
நட்டமிட்டு சிரிக்க குழைந்து நையும் ப்ரீதி உகள
எம்மானைச் சொல்லிப் பாடி –3-5-1-
பண்கள் தலைக் கொள்ளப் பாடி –3-5-2-
முனிவின்றி ஏத்தி –3-5-6-
பேர் பல சொல்லிப் பிதற்றி –3-5-8-
எழுந்தும் பறந்தும் துள்ளாதார் –3-5-1-
ஏத்தி குனிப்பார்
தடு குட்டமாய்
கும்பிடு நட்டமிட்டு ஆடி –
உலோகர் சிரிக்க நின்றாடி –
நெஞ்சம் குலைந்து நையாதே
என்று வாசிக காயிக மானச வியாபாரங்களாலே களிக்கும் படி –
அந்த ப்ரீதி தலை மண்டி இட்டு செல்ல –

(அடுத்த செய்ய தாமரைக்கண்ணன்-3-6- -திருவாய் மொழியும் பர உபதேசம் என்பதால் இதன் பொருளையும்
சொன்னால் விரோதம் திருவாயமொழியின் பொருளுடன் மேலே அருளிச் செய்வார் –
ஆகையால் பயிலும் சுடர் ஒளி 3-7–தாத்பர்யம் இங்கே )

தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர
இப்படி உண்டான ப்ரீதி அவன் அளவில் பர்யவசியாதே –
தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியோங்களே –3-7-10-
என்று ததீய சேஷத்வத்தின் எல்லையிலே நிற்கிறவர்கள் -நமக்கு உத்தேச்யர் என்னும் படி –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
கீழ் பத்தில் பிரார்த்தித்த சாத்தியம் -அவர்களோடு கூடி அவனை அனுபவிக்கும் அளவு அன்றிக்கே –
அவன் அடியார் உடைய சேஷத்தின் எல்லை அளவும் செல்ல வளர —
(மூன்றாவது படி இது -அவன் அடியார் உடன் அவனை பாடுமத்துக்கும் மேல் இது )

5-பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற
பை கொள் பாம்பேறி உறை பரனே 3-8-4–என்று (முடியானே -எட்டாம் திருவாயமொழியின் தாத்பர்யம் )
அவனுடைய சர்வாதிகத்வ பிரகாசமான படுக்கையாய் இருக்கும் –திரு அனந்தாழ்வான் –
சஷுஸ் ஸ்ரவா -என்கிறபடியே – ஒரு கரணத்தாலே கர்ணாந்தர விருத்தியும் கொள்ளுமா போலே –
நெஞ்சம் நீள் நகராக இருந்த என் தஞ்சனே-3-8-2- -என்றும் ,
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -3-8-3–என்றும் ,
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை–3-8-4-என்றும் ,
கண்களால் காண வரும் கொல் -3-8-5–இத்யாதிகளாலே –
வாக் பாணி சஷூர் ஸ்ரோத்ரம்
மனோ வாக் பாணி சஷுஸ் விருத்திகளை -ஆசைப் படும்படி ஆகையாலே –
இந்திரிய விருத்தி நியமமின்றிக்கே -அவனை அனுபவிக்க
வேண்டும் படியான பெரு விடாயை உடையராய்-

(வாக் மனோ விருத்தியையும்
பாணி வாக் விருத்தியையும்
சஷுஸ் பாணியின் விருத்தியையும்
ஸ்ரோத்ரம் சஷுஸ் விருத்தியையும்
கண்ணும் நீ காட்சிப்பொருளும் நீ காண்பவனும் நீ -ஆகவே கொடுப்பதில் என்ன குறை )

பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான்
(சொன்னால் விரோதம் 3-9–திருவாய் மொழி தாத்பர்யம் )
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் 3-9-9—என்றும்
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு -3-9-10–என்றும்

அஹம் ஸ்லோக க்ருத் அஹம் ஸ்லோக க்ருத் -என்கிற
உபநிஷத்தின் படி கவி பாடுமவருமாய்

6 -குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர்
(சன்பம் பல பல -பத்தாம் திருவாய்மொழியின் தாத்பர்யம் )
தேச விஷயத்தில் போய் அனுபவிக்க பெற்றிலேன் என்கிற குறை இல்லை –
இவ் அனுபவத்துக்கு எனக்கு ஒரு பிரதிஹதி இல்லை –
அவன் விஷயத்தில் ஆன பின்பு -ஏக தேசமும் என் மனசில் துக்கம் இல்லை –
வகுத்த சேஷி என்று பற்றுகையாலே எனக்கு ஒரு துக்கம் இல்லை –
ருசி முன்னாக தேச விசேஷ பிராப்தி பண்ணுகிற எனக்கு -வைதிக புத்ரர்களைப் போலே –
மீளில் செய்வது என் என்கிற துக்கம் இல்லை –
இங்கே அவன் குணங்களை நெருங்கே புஜித்த எனக்கு -பூர்ண அனுபவம்
பண்ணலாம் தேசத்தில் போகப் பெற்றிலேன் என்கிற துக்கம் இல்லை –
இது அவனுடைய லீலா விபூதி என்று அறிந்த எனக்கு -இனி லீலா விபூத் அன்வயமாகிற துக்கம் இல்லை –
(இது அவன் லீலா விபூதி விளையாட்டுக் களம் -அதுவே நமக்கு -விண்ணாட்டர் நாடு -அறிந்தால் கேடு இல்லையே )
ஸ்வ சங்கல்ப்பத்தாலே -சிருஷ்டியாதிகளை பண்ணவல்ல ஆசர்ய சக்தி யுக்தனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை ..
அகடி தகடனா சமர்த்தனானவனை பற்றின எனக்கு ஒரு தளர்ச்சி இல்லை –
விமுக தசையில் வியாப்தி யாலும் -அபிமுக தசையில் அவதாரத்தாலும் –
ரஷிக்கும் அவனைப் பற்றின எனக்கு ஒரு கேடு இல்லை -என்றபடி –
சன்மம் பல பலவில் -பத்துப் பாட்டாலும் அடைவே-(குறைவிலனே –முட்டிலனே –பரிவிலனே -இடரிலனே-
துயரிலனே -துன்பமிலனே -அல்லலிலனே -துக்கமிலனே-தளர்விலனே -கேடிலனே-என்று ) தாம் பேசும்படி –
நிரஸ்த சமஸ்த கிலேசராய் -அம்ருதரான முக்தர் -பகவத் அனுபவத்தாலே ஆனந்திக்குமா போலே –

அவ் ஆனந்த சாகர மக்நரானவர் –
செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி
செய்ய தாமரை கண்ணனாய் 3-6-1–என்று தொடங்கி –
எஞ்சலில் அமரர் குல முதல் மூவர் தம் உள்ளும் ஆதியை அஞ்சி நீர் உலகத்து உள்ளீர்கள்–3-6-9-என்று –
புண்டரீகாஷத்வாதி பரத்வ சிஹ்னங்களை உடையனாவன் – ஞான சங்கோச
ரஹீதரான நித்ய ஸூரிகள் திரளுக்கு நிர்வாஹன் அன்றோ –
சம்சாரிகளான நம்மால் அவனை ஆஸ்ரயிக்கப் போமோ என்று அஞ்சாதபடி

எளிவரும் இணைவனாம்-என்றவை பரத்வமாம் படி
எளிவரும் இயல்வினன்-1-3-2-
இணைவனாம் எப்பொருட்கும் 2-8-1- என்று
பத்துடை அடியவரிலும் 1-3–அணைவது அரவணை -2-8–மேலிலும்
வெளி இட்ட அவதார சௌலப்யம் பரத்வ ஸ்தாநீயனாம் படி

7-அவனாகும் சௌலப்ய காஷ்டையைக் காட்டி
நெஞ்சினால் நினைப்பவன் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே-3-6-9–என்று
மனசால் யாதொன்றை திரு மேனியாக கோலினி கோள்-அபரிசேத்ய மஹிமனான
சர்வேஸ்வரன் அத்தையே தனக்கே அசாதாரமான விக்கிரகமாக விரும்பும் என்று –
யேய தாமாம் பிரபத்யந்தே தாம்ஸததைவ பஜாம் யஹம் –ஸ்ரீ கீதை -4-11 -என்றும்
அர்ச்சயஸ் சர்வ சஹிஷ்ணுர் அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74–என்கிற
அர்ச்சாவதார சௌலப்ய காஷ்ட்டையைக் காட்டி-
(எதா ததா–4-11-கீதை ஸ்லோகமே அவன் இவன்
ஆச்சார்ய ஸுவ்லப்யம் -அர்ச்சா ஸுவ்லப்யம் விட சிறந்தது )

வழியை தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது-
ஒழிவு ஓன்று இல்லாத -3-9-3-என்று தொடங்கி –
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே -என்று
யாவதாத்மபாவி பகவத் அனுபவம் தான் ஒரு சிறாங்கை என்னும் படியான
அர்ச்சிராதி மார்க்கமும் தருகிறவன் -தன்னை ஒரு சொல் சொல்லுவார் யாரோ –
என்று அவசர பிரதீஷனாய் நிற்க -அவனை விட்டு புறம்பே கவிபாடுகைக்கு விஷயம்
தேடித் போய் -ஒரு சொல்லுக்கு பாத்தம் போராத-சூத்ர மனுஷ்யரைக் கவி பாடி முன்பு
நின்ற நிலையிலும் காட்டில் தாழ இழிய நினைக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு ?
அத்தால் ஸ்வரூபம் பெற்றிலிகோள்-
(கருட வாகனனும் நிற்க சேட்டை –திருமாலை பாசுரம் போலவே இங்கும் )

வேண்டிற்று எல்லாம் தரும் –3-9-5-
சகல பல ப்ரதோஹி விஷ்ணு -என்கிறபடியே
சர்வ அபேஷிதங்களையும் தரும்

தன்னாகவே கொள்ளும்-3-9-4-
பரம் சாம்யம் உபைதி -என்கிறபடி –
தன்னோடு சாம்யா பத்தியை கொடுக்கும் .
கவி சொல்ல வம்மின்-3-9-5-என்று
இதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை —
இதர ஸ்தோத்ரம் பண்ணி உங்கள் கரணங்களை பாழே போக்காதே -வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி –
இவ் விஷயத்திலே கவி சொல்ல வாருங்கோள் என்று –

8 -முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு
வழியை தரும் நங்கள் வானவர் ஈசன் நிற்க -3-9-3–என்றும் ,
தன்னாகவே கொண்டு -3-9-4-என்றும்
சொல்லுகையாலே -இவ் விஷயத்தை கவி பாடினால் சித்திப்பது பகவத் அனுபவ
பரம சாம்யா பத்தி யாதிகள் என்று -முக்த ஐஸ் வர்யமான பேற்றை முன்னிட்டு

ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் ..
அதாவது –
இப்படி தம்முடைய உபதேசத்தாலே –
சேவா ஸ்வ விருத்தி ராக்யயாதா -என்று-( மனு ஸ்ம்ருதி -சேவா நாய் தொழில் )
நிஹீநதரர் ஆகையாலே -ஸ்வ விருத்தியாக சொல்லப் பட்ட அப்ப்ராப்த விஷய சேவையை மாற்றி –
சாயாவா சத்வமனுகச்சேத் – சா கிமர்த்தம் ந சேவ்யதே – விஹகேஸ்வர சம்ஹிதை -என்று
( சாயை போல் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே போலே )
இவ் விஷயத்தை சேவிப்பான் என்றும் -எத்தைப் பற்ற இவ் விஷயம் சேவிக்கப் படாது
ஒழிகிறது என்றும் -விதிக்கும் படி ப்ராப்தமான இவ் விஷயத்திலே –
புகழு நல் ஒருவனில் -படியே தம்முடைய வாசிக விருத்தியிலே மூட்டுகிறார்
மூன்றாம் பத்தில் என்கை-

(ஆக -மூன்றாம் பத்தில் -சர்வ வியாபகத்வம் -வெளியிட்டு அருளி
அவன் வண்மைக்கும் இவர் நிஷ்கர்ஷித்த ப்ராப்யத்துக்கும் அனுரூபமான மோக்ஷத்தைக் காட்டிக் கொடுக்க
அதன் பலமாக ப்ரீதி காரித கைங்கர்யங்களையும் ஒருவாறு பெற்றமையையும்
அதனால் பெற்ற ப்ரீதி உள்ளடங்காமல் தலைமண்டியிட்டுச் சென்றமையையும்
அவன் அளவோடு நில்லாமல் அடியார் அடியார் அடியார்கள் அளவும் செல்ல வளர்ந்தமையையும்
மீண்டும் பகவத் அனுபவத்தில் விடாயைப் பெற்றமையையும்
அவனை ஸ்தோத்ரம் பண்ணி நிரதிசய ஆனந்தம் பெற்றமையையும்
பரோபதேசம் செய்தமையும் அருளிச் செய்கிறார்-என்றவாறு )

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –220–

September 29, 2018

சூரணை–220-

இரண்டாம் பத்தால்
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் கீழில் பத்திலே தமக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண –
அவனாலே தத்வ ஞானரான இவர் -அந்த ஞானத்துக்கு பலமான மோஷத்தை-அப்போதே பெற வேண்டும் என்று
ஆசைப் பட்டுப் பெறாமையாலே –
( அந்தமில் பேர் இன்பத்துக்கு அடியாரோடு இருந்தமையை இவருக்கு ப்ராப்யம் ) அவசன்னராக (2-4-)
இவருடைய அவஸாதம் எல்லாம் தீரும் படி –
அவன் வந்து சம்ஸ்லேஷித்து -(2-5 -அந்தாமத்து அன்பு )–அந்த சம்ஸ்லேஷத்தினால் வந்த ப்ரீதியை உடையவனாய் –
(உடையவராய் என்று ஆழ்வாரைச் சொல்ல வில்லை -உடையவனாய் -என்று இவர் சிக்கெனப் பிடித்தேன் -என்று
சொல்ல அதனால் அவனும் ப்ரீதனாய் )
அந்த ப்ரீதி இவர் ஒருவர் அளவிலே பர்யவசியாதே -இவரோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் வெள்ளம் இட்டு –
அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை -இவர்க்கு அவன் கொடுக்கத் தேட –(அணைவது அரவணை மேல் -2-8-)
அந்த மோஷத்தை -அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்துக்கும் அனுகுணமாம் படி நிஷ்கரிஷித்தவர் –

ஆஸ்ரயணீயான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனான லக்ஷணங்களை வெளி இட்டு –
தத் அனுகுணமான வசன பிரத்யஷங்களையும் தர்சிப்பித்து –ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக-
த்யாஜ்யமான சம்சாரத்தின் துக்கமும்
பிராப்யமான மோஷத்தின் ஆனந்ததமும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக-மோஷ பிராப்திக்கு உறுப்பான -சாதனத்தின் உடைய ரசமும் –
முன்னாக விதிக்கிற ச குண ப்ரஹ்ம உபாசனத்தை –
நிஷித்த அனுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக ஷேத்திர வாஸாத் யங்கங்களோடே கூட்டுகிறார் -என்கிறார் —

(உபாசனத்தை -அங்க யுக்தம் ஆக்குகிறார்
கீழே அவனுடைய சேவைக்கு பக்திக்கு -எளிமையும் இனிமையும் உண்டு –பஜனத்தில் சேர்க்கிறார் -என்றார் –
இங்கு குண உபாசனம் -பக்தி சேவை -பர்யாயம் -சேவை -கைங்கர்யம் -பக்தியை கைங்கர்யம் நமக்கு –
கண்ணன் சொல்லும் கர்மயோகம் போல இல்லாமல் -ஷேத்ரவாச சங்கீர்த்தன அஞ்சலி ப்ரதக்ஷிண கதி சிந்தனாதி –
ரசமான -காலைப்பிடிக்க பாலைக் கொடுப்பது போலே அருளிச் செய்கிறார்
குண அனுபவ கைங்கர்யமே பொழுது போக்காக கொள்ளுகை-பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்வது போலவே இங்கும் -)

(முகம் காட்டாமல் இருக்க -சிதிலமாகி – -காற்றும் கழியும் கட்டி அழுது -2-1-பெருமாள் பரத்வத்தை காட்ட –
கொஞ்சம் ஸைதில்யம் நீங்கி- ப்ராசங்கிகமாக-அடுத்த பத்து -2-2-விபவ அவதாரத்தில் பரத்வம் -திண்ணன் வீடு –
எல்லாம் தன்னுள்ளே கலந்து தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஒத்து-ஸந்தோஷம்-
அடியார்கள் உடன் கூட ஆசைப் பிறந்து கிடைக்காமல் வியசனம் மிக்கு ஆடி ஆடி –துடிக்க –
அடுத்து -தன் பக்தர் உடன் ஆழ்வார் உடன் சேர -அந்தாமத்து அன்பு-2-5-இது தான் மா முனிகள் கலந்தான் என்கிறார் –
2-3-கலந்தாலும் -எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தான்– இந்த சம்ச்லேஷத்தாலும் ஆழ்வாருக்கு திருப்தி பிறக்க வில்லையே
மேலே ஆனந்தம் -ஆழ்வாருக்கு -2-6-உன்னைப் பிடித்தேன் சிக்கனவே -பின்பு கேசவன் தமர்–2 7–
இவன் தானே மோக்ஷ பிரதன் உபதேசம் -அணைவது அரவணை மேல் -2-8–
அவன் கொடுக்க வர புருஷார்த்த நிர்தேசம்-எம்மா வீட்டு -ப்ராப்ய நிஷ்கர்ஷம்–2-9-கைங்கர்யம் தெற்குத் திருமலையில் -2-10-
பராங்குச பயோதி-கடல் அன்றோ -வியாக்யானம் மூலம் கடல் கரையில் இருந்து அனுபவிக்கத் தான் முடியும் )

1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற
சித் அசித் த்ரய திரிவித காரணமானவன் அறியாதன அறிவிக்க
உள்ளம் தேறித் தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான
ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
2-உலராமல் ஆவி சேர்ந்து சிக்கெனப் புகுந்து
சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன
வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில்
எம்மா வீட்டை உபய (சேஷ சேஷி இருவருக்கும் ) அனுகுணம் ஆக்கினவர்
3-ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை
ஸ்தாபிக்கிற சகல பல ப்ரதத்வ காரணத்வ
சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை
திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
4-கள்வா தீர்த்தன் என்று வசன
பிரத்யஷங்களும் காட்டிப்
5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ
சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற
அந்தர் கத குண உபாசனத்தை
6-மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக்
கீழ்மை வலம் சூதும் செய்து
இளமை கெடாமல் செய்யும்
ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி
பிரதஷிணகதி சிந்தநாத் அங்க
உக்தம் ஆக்குகிறார்
இரண்டாம் பத்தில்-
( 2-10-பாசுரங்களில் விவரித்தவை )

1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற சித் அசித் த்ரய திரிவித காரணமானவன்
அதாவது
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி-2-1-11 -என்றும் ,
மூவாத் தனி முதலாய் -2-8-5–என்றும் ,
எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் -2-8-10–என்றும் ,
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் -2-10-11-என்றும்–
லீலா விபூதியில்
சங்கல்ப விசிஷ்ட வேஷத்தால் நிமித்தமாயும் –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட வேஷத்தால் உபாதானமாயும் —
ஞான சக்தி யாதி குண விசிஷ்ட வேஷத்தாலே சஹ காரியாயும் —

நித்ய விபூதியில் -அப்ராக்ருதம் -கார்யத்வம் இல்லாமல் ஸூஷ்மம் நாம ரூபம் இல்லாமல் இருக்காதே -அங்கு
சர்வ காரணம் அவன் -லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் –
இச்சா விசிஷ்ட ரூப (சங்கல்ப-இங்கு -அங்கு இச்சையால் ) வேஷத்தால் நிமித்தமாயும் –
அப்ராக்ருத அசித் ஜீவ விசிஷ்ட வேஷத்தால் உபாதானம் -லீலா விபூதியில் இங்கும் ஜீவன் அப்ராக்ருதம் தானே –
உபாதானம் -மாறுவது -ச ஏகதா பவதி-இத்யாதி -இமான் லோகான் காமான் நீ காம ரூப்யான் ஸஞ்சரன்-அங்கும் உண்டு –
அதுவே ஸ்ருஷ்ட்டி அங்கு -கைங்கர்யத்துக்கு அனுரூபமான திரு மேனி
விநியோக உபயோகி ஞானாதி வேஷத்தாலே சஹகாரி அங்கு –

இப்படி பக்த -முக்த -நித்ய ரூபமான சித் த்ரயத்துக்கும்
ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித் த்ரயத்துக்கும்
திரிவித காரணமும் தானே யான சர்வேஸ்வரன்

(நித்ய இச்சையால் அது நித்ய விபூதி -அவர்கள் நித்யர்கள் –
நியதி பூர்வ க்ஷண வ்ருத்தித்வமே காரணம்–அது இங்கு -மாறக்கூடிய அசித் –
எது சத்வே-முதல் வினாடியில் இது இருந்ததால் அது இருக்கும் – சங்கல்பம் காரணம் –
அங்கு -இவை நித்தியமாக இருக்கட்டும் என்பதால் அவை நித்யம் -இதுவே நியாயம் –
சங்கல்பம் மாற்ற மாட்டான் -ஸ்வதந்த்ரன்
அப்ரக்ருத அசித் ஜீவ சரீரம் அங்கும் உண்டே அவனுக்கு -ப்ரதிஜ்ஜைக்கு ஹானி வராது
ப்ரஹ்மத்தை விட வேறு இல்லையே -2-3-5-ப்ரஹ்ம ஸூத்ரம்-
ப்ரஹ்ம கார்யத்வேன-ஆகாசம் -ப்ரஹ்மாத்மகம் –
நித்ய விபூதியில் -நித்ய சித்த -ப்ரஹ்ம சரீரத்வேன-கார்ய காரண அபாவம் –
சரீரமாக இருப்பதால் ப்ரஹ்மாத்மகம் அங்கு சுருதி பிரகாசர் -விளக்கம் –
இத்தை மா முனிகள் திரு உள்ளத்தில் கொண்டு -இப்படி பிரித்து அருளுகிறார் இரண்டையும் –
காலத்துக்கு குணத்ரயம் இல்லை -அபிமானி தேவதைக்கு குணத்ரய வஸ்யம் இருப்பதால் -கலியுகம் படுத்துகிறது என்பர் –
த்ரிவித சேதன த்ரிவித அசேதன-இதனாலே -)
(ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-ஓன்று விடாமல்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்- மூவா -கலங்காமல் – -காரணந்து த்யேயா
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
காரணத்வம் நியந்த்ருத்வம் வியாபகத்வம் காருணிக்கத்வம்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் 2-10-11–மீண்டும் மேம்படும் -படைக்கிறான் –
கீழே மூவா வருத்தப்படாமல் இருப்பதை சொல்லி -)

அறியாதன அறிவிக்க உள்ளம் தேறி
அறியாதன அறிவித்த அத்தா-2-3-2- -என்று இவருக்கு அஜ்ஞாதமான தத்வ ஹித புருஷார்த்தங்களை
விசத தமமாக அறிவிக்க —
அடியை அடைந்து உள்ளம் தேறி -2-6-8–என்று அத்தாலே இவரும் அவனைக் கிட்டி
நெஞ்ளில் தெளிவை உடையவராய்-(மனோ பூர்வ வாக் உத்தர க்ரமம் இல்லையே அவன் மூலம் பெற்றதால் )

தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
தூ மனத்தனனாய் –2-7-8-
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11 -என்று
மோஷ ஏக ஹேது தயா பரிசுத்தமான அந்த கரணத்தை உடையராய் –
அவனுடைய கல்யாண குண விஷயமான அஞ்ஞான கந்தம் இல்லாதபடி –
கீழில் பத்தில் பிறந்த தம்முடைய ஞானத்துக்கு (தத்வ வேதன மறப்பற்று ) பலம் மோஷம் ஆகையாலே –
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் –
அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –2-3-10–என்று
பிராக்ருத விஷய லாப அலாபங்களால் வரும் கர்வ க்லேசங்களும் -ஷட் பாவ விகாரங்களும் போய் –
சுத்த சத்வம் ஆகையாலே –நிரவதிக தேஜோ ரூபமான விக்ரகத்தை உடையோமாய் –
நித்ய சூரிகள் திரளிலே கூடப் பெறுவது எப்போதோ என்று
அந்த மோஷத்தை பெறுகையில் ஆசையாலே தேடி
அப்போதே கிடையாமல்
வாடி விடும் -2-4-1-என்று
ஆஸ்ரயித்தை இழந்த தளிர் போல் வாடி

2-உலராமல் ஆவி சேர்ந்து
உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து-2-4-7- -என்கிற தாபம் ஆறும் படி
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு-2-5-1- -என்கிறபடியே
பரம பதத்தில் பண்ணுகிற வியாமோகத்தை இவர் பக்கலிலே செய்து —
கமர் பிளந்த தரையிலே நீர் பாய்ச்சுவாரைப் போலே -இவரோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணி –

சிக்கெனப் புகுந்து-
சிறிதோர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கி சிக்கனே புகுந்தான்-2-6-2- -என்று
அத் அல்பமாய் இருப்பதோர் பதார்த்தமும் தன் பக்கல் நின்று பிரி கதிர் பட்டு நோவு படாதபடி
தன் சங்கல்ப சஹஸ்ரைக தேசத்தில் சர்வ லோகங்களையும் ஒருக் காலே வைத்து இனி போராதபடி புகுந்து

சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன வாழ்வித்து
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்த்தல் மாறினர்-2-6-7- -என்று
இவருடைய சம்பந்த சம்பந்திகளும் -சம்சாரான் முக்தராம் படி பண்ணி -அத்தாலே –
எமர் ஏழு பிறப்பும் –கேசவன் தமர் –மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -2-7-1–என்று
என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக பகவத் அதீயரானார்கள் –
நிர்ஹேதுக பகவத் கிருபையாகிற பெரும் சதிரைப் பெற்று
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகிகிற படியே ! என்றிவர்
தாமே ஆச்சர்யம் படும் படி இவரை வாழ்வித்து –
(இளிம்பு-பகவத் கிருபை பெறாமல் / சதிர்-கிருபையை உபாஸனாதிகளால் பெற்று / மா சதிர் -நிர்ஹேதுகமாக பெற்று )

உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபய அனுகுணம் ஆக்கினவர்
இப்படி தம்முடைய ( சம்பந்தி ) பரம்பரை அளவும் வெள்ளம் இடுகிற தன் ப்ரீதியாலே
தமக்கு அவனுபகரித்து இடுகிற
நீந்தும் துயர் இல்லா வீடு –2-8-2-
கெடலில் வீடு-2-9-11-
எம்மா வீட்டுத் திறமும் -2-9-1–என்றும்
துக்க கந்த ரஹிதமாய்–அநர்த்த கந்தம் இல்லாததாய் -எவ் வகையிலும் விலஷணமான மோஷத்தை எனக்கு என்று தரில் –
(மூன்று வீட்டு சப்த அர்த்தங்கள் இத்தால் -துயர் இல்லா வீடு -ஸ்வார்த்ததா-அநர்த்தம் இல்லா வீடு – கெடலில் வீடு–எம்மா வீடு – )
அந்த மோஷம் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே ஐஸ்வர்யகளோபாதி ஸ்வரூப விருத்தம் ஆகையாலே –
அதனுடைய பிரசங்கமும் எனக்கு அசஹ்யமான பின்பு எனக்கு மோஷம் தரப் பார்த்தது ஆகில் –
நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர் தொல்லை –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
என்று சேஷியான உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய் -பரம பூஜ்யமாய் –
பரம போக்யமான திரு அடிகளை -சேஷ பூதனான என் தலையிலே –
கொக்கு வாயும் படி கண்ணியும் போலே சடக்கென சேர்க்க வேணும் —
சேஷியான உன் பக்கல் சேஷ பூதனான நான் அபேஷித்து பெறுவது இதுவே என்றும் –
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4–என்று
உபய ( சேஷ சேஷி இருவருக்கும் ) ஸ்வரூபத்துக்கும் அனுகுணமாக நிஷ்கரிஷித்தார்-

3-ஆச்ரயணீயனுக்குப் பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற
ஆஸ்ரயணீயான அவனுக்கு -முதல் பத்தில் சொல்லப் பட்ட -சர்வ ஸ்மாத் பரத்வத்தை –நிலை பெருத்துவனான

சகல பல ப்ரதத்வ காரணத்வ சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
வீடு முதல் முழுதுமாய் -2-2-1-–என்று சகல பல பரதத்வம் –
தேவும் எல்லா பொருளும் 2-2-8-—கருத்தில் –வருத்தித்த மாயப் பிரான் -என்றும் –
(வர்த்தித்து -வளர்த்து என்ற அர்த்தம் )
ஆக்கினான் தெய்வ வுலகுகள்-2-2-9- -என்று சர்வ காரணத்வம் –
ஆழி அம் பள்ளியாரே -2-2-6–என்ற லக்ஷணையாலே சேஷ சாயித்வம் –
(பாற் கடலில் -ஆதி சேஷன் மேல் படுத்த -என்று கூட்டி லக்ஷணை-என்றவாறு -அஸ்வாரஸ்யம் )
பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து -2-2-3-– என்று ஸ்ரீயபதித்வம் –
கண்ணன் கண் –2-2-1- கோபால கோள் அரி ஏறு-2-2-2- -என்று அவதார சௌலப்யம் –
(ஸுவ்லப்யமும் பரத்வத்தை விளக்க வந்தது தானே
ஐந்தும் இரண்டு திருவாய் மொழியிலும் –என்றும்
இரண்டு மட்டும் திண்ணன் -மீதி மூன்றும் அணைவது -என்று இரண்டு நிர்வாகங்கள் )

ஆதி -சப்தத்தாலே
தகும் கோலத் தாமரைக் கண்ணன் -2-2-5–என்று புண்டரீகாஷத்வம் –
ஏழு உலகும் கொள்ளும் – வள்ளல் வல் வயிற்று பெருமான் -2-2-7–என்று அகடி தகடனா சாமர்த்தியம் –
என்கிறவற்றை – திண்ணன் வீட்டிலும் —பிரகாசிப்பித்தது
(இவை இரண்டும் பரத்வத்தை விளக்கும்)

அணைவது அரவணை மேல்-2-8-என்று சேஷ சாயித்வம் –
பூம் பாவை ஆகம் புணர்வது -என்று ஸ்ரீ யபதி த்வம் –
இருவர் அவர் முதலும் தானே -என்று காரணத்வம் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்று அவதார பிர யுக்த சௌலப்யம் –
வீடு முதலாம் -சகல பல ப்ரதத்வம்-
(மோக்ஷத்துக்கு காரணம் –ஈட்டில் -மோக்ஷம் தொடக்கமான-என்று கொண்டு அஸ்வாரஸ்யம் –
கீழே திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -)

ஆதி -சப்தத்தாலே
பிறவி கடல் நீந்துவார்க்கு புணைவன் – என்று மோஷ உபாயத்வம் –
ஆனை இடர் கடிந்த -என்று ஆபத்ஸஹத்வம் –
மூ உலகும் காவலோன் -சர்வ ரஷகத்வம்
ஆகியவற்றை -அணைவது அரவணையிலும் -பிரகாசிப்பித்தது –

அன்றிக்கே –
வீடு முதல் முழுவதுமாய் -என்று மோஷ ப்ரப்ருதய அசேஷ புருஷார்த்த
பிரதன் என்கையாலே சகல பல பிரதத்வத்தையும் –
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க –
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த –
தன் உந்தி உள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் -என்று
காரணத்வத்தையும் – திண்ணன் வீட்டிலும் –

அணைவது அரவணை மேலிலும் -என்றும் –
பூம் பாவை யாகம் புணர்வது- என்றும் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்றும்
அடைவே சேஷ சாயித்வ ஸ்ரீ ய பதித்தவ சௌலப்யங்களையும் —

ஆதி சப்ததாலே -வீடு முதலாம் -என்று மோஷ பிரதத்வத்தையும் –
நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -பலமுந்து சீரில் படிமின் -என்று
முமுஷ பாஷ்யத்வத்தையும்
அணைவது அரவணை -யிலும் வெளி இட்டு என்னவுமாம் —

இந்த யோஜனை இதன் பட்டோலையான க்ரந்தத்தில் இவர் அருளிச் செய்ததுவுக்கு சேருவது ..
முற்பட்ட யோஜனையில் –
ஆழி அம் பள்ளியாரே -என்று சேஷ சாயித்வம் லக்ஷணை யாலே கொள்ள வேண்டுகையும் –
வீடு முதலாம் -என்று மோஷத்துக்கு ஹேதுவாம் என்கிறதை பிரகரண விருத்தமாம் படி –
மோஷாதி புருஷார்த்த பிரதத்வமாக சொல்லுகையும் –
சகல பல பரதத்வம் என்று தொடங்கி இவர் எண்ணின அடைவுக்குச் சேர இரண்டு திருவாய் மொழியிலும்
சொல்லப் போகாமையும் ஆகிற அஸ்வாரஸ்யங்களும் உண்டு

4-கள்வா தீர்த்தன் என்று வசன பிரத்யஷங்களும் காட்டி
கள்வா-2-2-10–என்கிற பாட்டிலே –
அவதரித்து உன் பரத்வம் தெரியாதபடி நின்றாயே ஆகிலும்
எங்களுக்கு காரண பூதனான சேஷி நீயே -என்று தேவதாந்த்ரங்களில் தலைவரான
பிரம ருத்ராதிகளே தங்களுக்கு காட்சி கொடுக்கைக்கு -பெரிய திரு வடியை மேல் கொண்டு புறப்பட்டால் –
அவனுடைய திருவடிகளில் விழுந்து கூப்பிடா நிற்ப்பார்கள் என்று
அவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இவ் அர்த்தத்துக்கு தேவதாந்த்ரங்கள் வசனத்தையும் –

தீர்த்தனுலகு அளந்த -2-8-6-–என்கிற பாட்டிலே –
ஓர் அஸ்த்ர லாபத்துக்காக புஷ்பாதிகளும் கொண்டு ருத்ர சமாராதானம் பண்ணப் புகுகிற அர்ஜுனனைப் பார்த்து –
அந்த புஷ்பங்களை நம் காலிலே பொகடு – என்று கிருஷ்ணன் அருளிச் செய்ய –
அவனும் தீர்த்த பூதனான அவனுடைய -திரு உலகு அளந்த திரு அடிகளிலே -அப்பூவை பரிமாற —
பார்த்தோ விஜேதா மதுசூதனச்ய பாதாரா விந்தார்ப்பித்த சித்ர புஷ்பம்
ததர்ச கங்காதர மௌலி மத்யே பபூவ வீர க்ருத நிச்சி தார்த்த – என்கிறபடி
தன் திருவடிகளிலே சாத்தின புஷ்பங்களோடு –
சஜாதீயமான வற்றை அன்றிக்கே – அவை தன்னையே
பாடே பக்கே அன்றிக்கே -ருத்ரன் தலை மேலே -ஆப்த வாக்யத்தால் அன்றிக்கே –
தானே பிரத்யஷித்து -சது பார்த்தோ மகாமனா-ஸ்ரீ கீதா பாஷ்யம் -என்கிறபடியே –
பேரளவு உடையவனான அவன் நிர்ணயித்த பரத்வம் மந்த மதிகளால் இன்று ஆராயும் படி இருந்ததோ என்று
பிரத்யஷைத்தையும் காட்டி-
(மிலேச்சனும் பக்தன் ஆனால் சூத்ரம் -வசன அனுஷ்டானங்கள் முன்பு -பார்த்தோம் இங்கு வசன ப்ரத்யக்ஷங்கள் )

5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற அந்தர் கத குண உபாசனத்தை
(சம்சார துக்கம் மோக்ஷ ஆனந்தம் சாதன ரசம்-என்று பிரித்து )
புலன் ஐந்து -2-8-4-என்கிற பாட்டில் –
ஆஸ்ரயணத்தில் இழிகிறவர்களுக்கு
த்யாஜ்யத்தில் -ஜிகாசையும் –
பிராப்யத்தில் பிராவண்யமும் –
சாதனத்தில் ருசியும் -விளையும் படி –
புலன் ஐந்து மேவும் பொறி ஐந்து நீங்கி- என்று
பரிச்சின வஸ்துக் க்ராஹமான -இந்த்ரிய வஸ்யராகை தவிர்ந்தது என்கையாலே –
அல்ப அஸ்திரஸ்வாதி தோஷ துஷ்டமான சப்தாதி போகங்களை
அனுபவித்து இருக்கும் சம்சாராத்தினுடைய துக்கமும் –

நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் –2-8-4-என்று
நன்மைக்கு முடிவு இல்லாத திரு நாட்டிலே புகுவீர் என்கையாலே -மோஷத்தினுடைய ஆனந்தமும்

பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -2-8-4-என்று -ஸூசகம் கர்த்தும் -என்கிறபடி ( சீரில் படிமின் குண உபாசனம் )
ஸ்மர்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-பல தசையில் போல சாதன தசையிலும் இனிதாய் இருக்கையாலே –
பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களில் பிரவணர் ஆகுங்கோள் என்கையாலே –
சாதனத்தினுடைய ரசம் முன்னாக -சம்சார நிவ்ருத்தி பூர்வகமான -மோஷ பிராப்தி வேண்டி இருப்பார் –
(அலமந்து அசுரரை வீயச் செற்றவன் )அசூர வர்க்கத்தை தடுமாறி முடிந்து போம் படி செற்றவன் ஆகையாலே –
பிரபல பிரதி பந்தகங்களை அனாயசேன போக வல்லவனுடைய குணங்களிலே பிரவணர் ஆகுங்கோள் என்று விதிக்கிற –
தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர்கதமான -அபஹத பாப்மத்வாதி
குண உபாசனத்தை

(அந்தர் கத குண உபாசனம் -அங்கி இவை அங்கங்கள்
தஹர வித்யை -உபாசனம் ப்ரஹ்ம புர-தஸ்மிந் யத் அந்த அன்வேஷ்டவ்யம் -தேடத்தக்கது -விசாரிக்கத்தக்கது –
ப்ரஹ்மத்துக்குள் காமம் -கல்யாண குணங்கள் இருக்கும் -தேடி உபாசிப்பாய்
என்ன குணங்கள் -அபஹத பாப்மாதி அஷ்ட குணங்கள் –
இந்திரன் மாம் ஏவ உபாஸ்வ–மாம் என்னை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை -உபேந்த்ரன் -உலகமாய் தோட்ட அவதாரம் –
கண்ணன் – மாம் சரணம் -இவனுக்குள்ளே என்று கொள்ளாமல் -அவனையே –
தஹர ஆகாசம் ஹ்ருதயத்துக்குள்ளே -நிறைந்த சோதி வெள்ளம் ஆகாசம் -அதற்குள் உள்ளதைத் தேடச் சொல்லி -சாந்தோக்யம் –
ஆழ்வார் அங்கங்கள் உடன் கூடிய உபாசனத்தை விதிப்பாரா -உபாயாந்தரங்கள் அன்றோ –
அஷ்டாங்க யோகம் -பக்தி –ஹிதம் ஷட்விதா சரணாகதி -பிரபத்தி நியாஸ பஞ்ச அங்கங்கள் கூடிய -ஹித தரம் –
சரணாகதி -அங்கங்கள் இல்லாமல் ஹித தமமாய் இருக்குமே –
தன்னடையே ஏற்கும் சம்பாவித ஸ்வ பாவம் -உத்தர க்ருத்யம் -அங்கங்கள் ஆகாதே –
அவகாத ஸ்வேதம் போலே ஆகுமே -பின் அங்கங்கள் என்று எதற்க்காக சொல்ல வேண்டும் –
நமக்கு சங்கை -போகும் இடம் உயர்ந்தது -பாபங்கள் பிரபலம் -செய்வது வெறும் சரணாகதி -உபாய பல்குத்வம்-
மூன்றாலும் விசுவாசம் குறையுமே
அந்தர் கத குண உபாசனம் சின்னதும் ஆசையுடன் கேட்க வருவோம் –கல்யாண குண அனுசந்தானம் -சொல்வது நம் சம்ப்ரதாயம்
அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
அங்கங்கள் எதற்கு -உபாசனத்துக்கு அங்கங்கள் இருப்பது போலே இதுக்கும் இவை உண்டே
அங்கங்கள் என்ற புத்தியோ அனுஷ்டானமோ இல்லை ஆழ்வாருக்கு -இங்கும் உண்டு -சம்பாவித ஸ்வ பாபம் –
குண உபாசனை பலன் குண அனுசந்தானத்துக்கும் உண்டு -அங்கங்களாக இல்லை சம்பாவிதம் என்றவாறு – )

6-மதித்து பெருக்கி மூழ்கி அழுந்தி கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல்
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து –
திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி –
வல்வினை மூழ்கி
நரகழுந்தி
கீழ்மை செய்து
வலம் கழித்து
சூது என்று களவும் சூதும் செய்து
கிளர் ஒளி இளைமை கெடுவதன் முன்னம் -என்று
உபாசன விரோதியான -இதர விஷய பிராவண்யத்தைப் பண்ணி –
அத்தாலே பாபங்களை கூடு பூரித்து -அவற்றிலே மறு நனைய மூழ்கி தரைப் பட்டு
தண்மையை செய்து– பலத்தை பாழ் போக்கி -பஸ்யதோகரனாய்-க்ரித்ரிமனாய்
பால்யத்தை பாழ் போக்காதே –
(க்ருத்யம் அக்ருத்ய விபாகம் பண்ணி-மதியாது -என்ற பாசுரத்தை மதித்து –
பெருக்காது -என்றதை பெருக்கி —
மூழ்காது -மூழ்கி / அழுந்தாதே -அழுந்தி இத்யாதி
கைங்கர்யம் பண்ணும் நாம் கிளர் ஒளி -கைங்கர்யம் கொள்ளும் அவன் ஒளி வளர் ஒளி மாயோன் –
திவ்ய தேசம் வளர் இளம் பொழில் சூழ் -ஆகவே நாம் தளர்விலராகிச் சார்வது சதிர்
இங்கு அக்ருத்யங்களைச் சொல்லி மேலே க்ருத்யங்களை விவரிக்கிறார் –
செய்யாதன செய்யோம் -செய்யும் கிரிசைகள் -திருப்பாவை போலே )

செய்யும் ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத் அங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்
அதாவது
பால்ய ஏவ சரேத் தர்மம் -என்றும் ,
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரயசே சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75–என்றும்
சொல்லுகிறபடியே
பால்யத்தில் கர்தவ்யமான –
மாலிரும் சோலை சார்வது சதிரே –2-1-
போது அவிழ் மலையே புகுவது பொருளே-2-10–என்கிற ஷேத்திர வாசம் –
பதியது ஏத்தி 2-10-2-என்கிற சங்கீர்த்தனம்
தொழக் கருதுவதே -2-10-9-என்கிற அஞ்சலி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே-2-10-8- -என்கிற பிரதஷணம்
நெறிபட அதுவே நினைவது நலமே -2-10-6–என்கிற கதி சிந்தனை
ஆகிற இவை முதலான உபாசன அங்கத்தோடு சேர்க்கிறார்
இரண்டாம் பத்தில் என்கை–
(உபநிஷத் விதிக்கும் அங்கங்களை சம்பாவித ஸ்வ பாவங்களாக -தானே ஏற்படுவதைக் காட்டி அருளுகிறார் -என்றவாறு -)

(ஆக இரண்டாம் பத்தால்
காரணத்வத்தை வெளியிட்டு –
அவனாலே அறியாதது அறிவிக்கப் பெற்று உள்ளம் தேறினமையும்
ஞானத்தின் பலமாக மோக்ஷத்தைத் தேடி வாடினமையையும்
அந்த வாட்டம் தீர விசேஷ அனுக்ரஹம் செய்து அருளி மோக்ஷத்தைக் கொடுப்பதாக இருந்தமையையும்
அந்த மோக்ஷத்தின் தன்மையை ஆழ்வார் அறுதியிட்டு பேசினமையையும்
உலோகோருக்கு உபதேசிக்க ஒறுப்பட்டு ச குண ப்ரஹ்ம உபாசனத்தை அங்கத்தோடே விதித்தமையையும் தெரிவித்தபடி – )

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –219–

September 28, 2018

நான்காம் பிரகரணம்-

சூரணை-219-

இதில் முதல் பத்தாலே-சர்வ ஸ்மாத் பரனான -சர்வேஸ்வரன் –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையால்
அஞ்ஞானத்தைப் போக்கி
பக்தி ரூபான்ன ஞானத்தைக் கொடுத்து
இன்னும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று
தம் பக்கல் அவன் தனக்கு உண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய
ஹ்ருதயத்திலே நிரந்தர வாசம் பண்ண –

(உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.-1-1-1-

மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–1-7-4-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை –1-10-10– )

அத்தாலே –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி ( ஐயம் திரிபு மறதி) ரஹிதமான தத்வ ஞானத்தை உடையரான ஆழ்வார் –
அவனுடைய குணங்களைத் தம் திரு உள்ளத்தோடே அனுபவித்து –

அவ் விஷயம் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே -சம்சாரிகளையும் பார்த்து –
த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் –
தத் த்யாக பிரகாரத்தையும்
உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
தத் பஜன பிரகாரத்தையும்
பஜன ஆலம்பமான மந்தரத்தையும் -உபதேசித்து –

(த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும்
மின்னின் நிலை இல, மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை, உன்னுமின் நீரே–1-2-2-

தத் த்யாக பிரகாரத்தையும்
நீர்நுமது என்றிவை, வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்குஅதன், நேர்நிறை இல்லே.-1-2-3-

உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
இல்லதும் உள்ளதும், அல்லது அவன்உரு
எல்லையில் அந்நலம், புல்குபற்று அற்றே-1-2-4-

தத் பஜன பிரகாரத்தையும்
பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன், முற்றில் அடங்கே-1-2-6-
அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃது என்று, அடங்குக உள்ளே-1-2-7-

பஜன ஆலம்பமான மந்தரத்தையும்
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10–உபதேசித்து –
அங்கு இருப்பது நாமம் -மட்டுமே –
மா முனிகள் மந்த்ரம் -அதே பலன் கிட்டும் என்பதால் -)

பஜநீயவனுடைய
சௌலப்யம் -அபராத சஹத்வம் -சீலவத்தை -ஸ்வ ஆராததை –
ஆஸ்ரயண ரஸ்யத்தை -ஆர்ஜவம் -சாத்ம்ய போக பரதத்வம் –
பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் -ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு –

(சௌலப்யம்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! —1-3-1-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் -எளியவனைச் சொல்லி –
சரணம் -பஜனீயத்வம் -பின்பு அஹம் -கேட்ட ஒருவனும் மறந்தான் அங்கு
இங்கு பரத்வம் சொல்லி-பஜனீயத்வம்- பின்பு ஸுவ்லப்யம் –

அபராத சஹத்வம் –
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-

சீலவத்தை –
வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-

ஸ்வ ஆராததை –
பரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்!
பிரிவகை இன்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே–1-6-1-

ஆஸ்ரயண ரஸ்யத்தை –
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை உண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியைத்
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

ஆர்ஜவம் –
ஓடும் புள் ஏறிச், சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை, ஆடும் அம்மானே–1-8-1-
வைகலும் வெண்ணெய், கை கலந்து உண்டான்
பொய் கலவாது என், மெய் கலந்தானே–1-8-5-

சாத்ம்ய போக பரதத்வம் –
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-
என் அருகலிலானே–1-9-2-ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
என் ஓக்கலையானே –1-9-4-
என் நெஞ்சி னுளானே–1-9-5-எனது உச்சி யுளானே–1-9-10-

பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே–1-10-2-
மார்க்கங்களுக்குள் சாம்யம் இங்கு -அதிகாரிகளுக்குள் சாம்யம் த்வார த்ரயத்தால் –

ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு -)

அவ் வழியாலே -பஜனத்தின் உடைய
ஸூகரத்வ ரஸ்யதைகளையும் –
பஜிக்கவே சர்வ பலங்களும் சித்திக்கும் என்னும் அத்தையும்
பஜன உபக்ரமத்தில் -பஜன விரோதிகள் அடைய நசிக்கும் -என்னும் அத்தையும் அறிவித்து —
(சகல பலப்ரதன் விஷ்ணு- வாஸூ தேவ சர்வம் -எல்லாம் கண்ணன் )

ஆன பின்பு ஸ்ரீ கீதையில் அவன் அருளி செய்த பக்தி மார்க்கத்தில் நின்று (வணக்குடை தவ நெறி நின்று )
தேவதாந்த்ரங்கள் பக்கல் பரத்வ சங்கா நிவ்ருத்தி பூர்வமாக அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு
அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று –
தமக்கு அவன் மயர்வற மதி நலம் அருளினாப் போலே தாமும் இவர்களுக்கு
அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி
பஜனத்திலே மூட்டுகிறார் என்கிறார் —

(ஆழ்வார் அருளிச் செய்த இறைவனது குணங்களையும்
ஆழ்வாருக்கு அவன் செய்த உபகாரங்கள் இன்னது என்னுமத்தையும்
உலகோருக்கு உபதேசித்தவை இன்னது என்னுமத்தையும்
ஆக மூன்று பகுதியாக அருளிச் செய்கிறார் )

1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர்
வானவர் அதிபதி -மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி
2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்னி
அயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ
என்னும் படி தத்வ ஜ்ஞனர் ஆனவர்
3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும்
நானும் என்கிற சஹ்ருதய அனுபவம்
சம்சாரிகளுக்கு ஆம் படி
4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய
தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
5 -எளிதாக அவதரித்துப் பிழைகளை
சஹித்துப் புரையறக் கலந்து
அல்ப சந்துஷ்டனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
6 -நீர் புரையத் தன்னை நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
7-பக்தி கணனை களுக்கு
ஒக்க வருமவனுடைய சேவைக்கு
எளிமையும் இனிமையும் உண்டு
8-தொழுதால் அரும் பயனாய தரும்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று
இருபசை மலமற உணர்வு கொண்டு
10-நலம் செய்வது என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி
பஜனத்தில் சேர்க்கிறார்-

முதல் பத்தில் ..
பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி–
அதாவது
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்-1-1-8- -என்றும் ,
ஆய் நின்ற பரன் -1-1-11-என்றும் ,
வள வேழ் உலகின் முதலாய வானவர் ஏறே-1-5-1 -என்றும் ,
வைப்பாம் மருந்தாம் -1-7-2-என்றும்
நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -1-7-2–என்றும் ,
அவையுள் தனி முதல் -1-9-1–என்றும் ,
உம்பர் வானவர் ஆதி அம் சோதி-1-10-9- -என்றும் ,
அயர்வறும் அமரர்கள் அதிபதி-1-1-1- -என்று-
(கார்க்கி -அக்ஷரம் -ஆத்மா பொதுவாக அநேக இடங்களில் -இல்லது உள்ளதும் அல்லது அவன் உரு –
மாறும் பிரகிருதி போலவும் மாறாத ஆத்மா போல அல்லவே அவனது
பிரதானம் பிரகிருதி ஷரம்–லயம் இறுதியில் பிரக்ருதியில் லயம் -அழியாததால் அதையும் அக்ஷரம் இங்கு-
ப்ருஹதாரண்யம் அக்ஷராத் பர-அத்தைக் காட்டிலும் உயர்ந்தது ஆத்மா –
அக்ஷராத் பரதகா பர -அதிலும் உயர்ந்த பரமாத்மா -பரதா பரன்-இத்தையே பரபரன் ஆழ்வார் -அவை முழுதுண்ட பரபரன் –
ஷர பக்த ஜீவன் என்றும் சில இடங்களில் -அக்ஷர முக்த நித்ய ஜீவன் -த்வாவிமவ் புருஷ லோக கீதையில் -இந்த அர்த்தம் )

சகல ஜகத் சர்க்காதி கர்த்ருத்வத்தாலும் –
உபயவிபூதி யோகத்தாலும் —
உபய விபூதி நாதத்வத்தாலும் –
பிராப்ய பிராபகவத்தாலும் —
அபரிசேத்ய ஆனந்த யுக்ததையாலும் –
சர்வ சரீரி தயா சர்வ சப்த வாச்யத்வத்தாலும் –
நித்ய ஸூரி நிர்வாகத்தாலும் —
நித்ய அசங்குஜித ஞானரானவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும்
பரிசேதிக்க ஒண்ணாத பெருமை உடையவன் ஆகையாலும் –
சர்வ ஸ்மாத் பரன் ஆனவன் –

1-மயர்வற மன்னி மனம் வைக்க திருத்தி –
அதாவது
மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்றும் ,
மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4–என்று
ஸ்வ கேவல கிருபையாலே –
ஞான அனுதய – அந்யதா ஞான -விபரீத ஞான -ரூபமான அஞ்ஞானத்தை
இவருக்கு வாசனையோடு போக்கி-
பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து –
இவர் திரு உள்ளத்திலே புகுந்து –
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்க திருத்தி -1-5-10–என்கிறபடியே
பிரிக்க ஒண்ணாதபடி இவரோடு பொருந்தி கிடக்கிற பிரபலமான புண்ய பாப கர்மங்களையும் –
பாஹ்ய விஷய ருசி வாசனைகளையும் போக்கி –
அயோக்யா அனுசந்தானத்தாலே அகன்ற அளவிலும் -தன் சீலத்தைக் காட்டி இவரை மீட்டு –
அல்லேன் என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன் பக்கல் நெஞ்கை வைக்கும் படி –
தரிசு கிடந்த நிலத்தை செய் காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி

2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன
அதாவது
மறக்கும் என்று செம்தாமரைக் கண்ணோடு -1-10-10–என்றும் ,
நல்கி என்னை விடான்-1-10-8–என்றும் ,
மறப்பற என்னுள்ளே மன்னினான் -1-10-10–என்கிறபடியே –
இவர் இன்னமும் -நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று -நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி –
இவரை விடாதே அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு –
ஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி -இவர் திரு உள்ளத்திலே -ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்க –

அயர்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும் படி தத்வ ஜ்ஞானர் ஆனவர் –
அதாவது –
பெருநிலம் கடந்த நல் அடிப் போது அயர்ப்பிலன் -1-3-10–என்றும் ,
தூய அமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் -1-7-3–என்றும் –
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ-1-10-9- –என்றும்-
குண அகுண நிரூபணம் பண்ணாதே –பூமிப் பரப்பை அளந்த பரம போக்யமான திரு அடிகளை -ஒரு காலும் விஸ்மரியேன் —
நிரதிசய போக்யமான அவனை நிரந்தரம் அனுபவித்து -ஆச்சர்யமான ஜன்மம் அடியாக வரும் அஞ்ஞானத்தை போக்கப் பெற்றேன் –
எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி விஸ்மரிப்பது என்னும்படி –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஞானத்தை உடையர் ஆனவர்

3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானும் என்கிற சஹ்ருதய அனுபவம் சம்சாரிகளுக்கு ஆம் படி
அதாவது
சுடரடி தொழுது எழு என் மனனே 1-1-1–என்றும் –
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -1-10-3–என்றும் –
நெஞ்சமே நல்லை நல்லை-1-10-4- -என்றும் –
மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-1-10-4–என்றும் –
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -1-10-5–என்றும் –
நீயம் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்-1-10-6- -என்று –

நிரவதிக தேஜோ ரூபமான அவன் திரு அடிகளில் -நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க பாராய் –
என் நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே நமக்கு -உபகாரனான அவனைத் -தொழப் பாராய் –
நெஞ்சே நீ செய்த படி மிகவும் நன்று –நான் அயோக்யா அனுசந்தானத்தாலே அகலும் போதும்
ஸ்ரீ யபதி யானவனை விடாதே கிடாய் ,–நெஞ்சே அவனுடைய ( கருமங்கள் )நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்த படி கண்டாயே
தொழச் சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழ சொல்லுகிற நானும் –
(அஹம் த்வா -என்று அவனைப் போல் இல்லாமல் நீயும் நானும் ஆழ்வார் )
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகலாமல் இப்படியே நிற்க பெறில் –
அநாதிகால ஆர்ஜிதமான கர்மம் -விஷய பிராவண்யம் -பிரயோஜனாந்தர ஸ்ரத்தை –சாதனாந்தர சங்கம் -முதலான துரிதங்கள்
ஒன்றையும் சேர விட்டுக் கொடான் –நெஞ்சே உனக்கு இப் பரமார்த்தத்தை சொன்னேன் -என்று இப்படி
திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்து –

திரு உள்ளமும் தாமும் கூடி அனுபவித்த பகவத் அனுபவம் தனியே அனுபவிக்க ஒண்ணாது ஆகையாலும் –
ஏகத் ஸ்வாது ந புஞ்சீத –என்கிறபடியே –தனியே அனுபவிக்க வல்லார் அல்லாமையாலும் –
அவனோடு உள்ள சம்பந்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் –
பரர் அநர்த்தம் பொறாத பரம கிருபையாலும் –
இவ் அர்த்தம் சம்சாரிகளுக்கும் ஆக வேணும் என்று சம்சாரிகளைப் பார்த்து

4 வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
(த்யாஜ்ய – தோஷ – பரித்யாக க்ரமத்தை
உபாதேய – குண – சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து )
அதாவது
வீடு மின் முற்றத்திலே –1-2-
-வீடு மின் முற்றவும் -1-2-1-என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் 1-2-2–என்று
அதனுடைய அல்ப அஸ்திரத் வாதி தோஷங்களையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து 1-2-3–என்று
அதனுடைய பரித் த்யாக க்ரமத்தையும்

வீடுடையான்-என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும்
எல்லையில் அந்நலம் -என்று அவ் வஸ்துவினுடைய குணத்தையும்
வீடு செய்மினே –1-2-1-
இறை சேர்மின் –1-2-3-
இறை பற்று –1-2-5-
திண் கழல் சேர் –1-2-10-
என்று அவ் விஷயத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கும் க்ரமத்தையும்
வண் புகழ் நாரணன் -1-2-10–என்று
அந்த சமர்ப்பண ரூப பஜனத்துக்கு ஆலம்பனமான திரு மந்த்ரதோடே உபதேசித்து

5 -எளிதாக அவதரித்து
அதாவது
ஆஸ்ரயிப்பார் -அதீந்திரியன் -என்று இறாயாத படி
பல பிறப்பாய் –எளிவரும் இயல்வினன் -1-3-2-–என்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார முகத்தாலே
அவர்களுக்கு சுலபனாய்

-பிழைகளை சஹித்து
அதாவது
ஆஸ்ரயண தசையிலே சுலபனாய் -அபராதம் கண்டவாறே -கைவிடாதே –
என் பிழைத்தாள் -திரு வடியின் தகவினுக்கு-1-4-7- -என்னும் படி
அபராத சஹனாய்
( குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் ஞால நாதன் )

-புரையறக் கலந்து
அதாவது
அபராதம் கண்டு தான் இகழாத அளவு அன்றிக்கே –
அயோக்யா அனுசந்தானத்தாலே தாங்களே அகல்வாரையும்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் – -தான் ஓர் ஒருவனே -1-5-3–என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி
அவர்களோடு புரை அறக் கலக்கும் சீலவானாய் –

அல்ப சந்துஷ்டனாய்
அதாவது
ஆஸ்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமே ஆகிலும் அவன் உகக்கும் படி
பச்சை இடப் போகாமையாலே -ஆஸ்ரணீயம் அரிது -என்னாதாம் படி இவன் இட்டது கொண்டு த்ருப்தன்
ஆக வேண்டாத பரிபூர்ணன் ஆகையாலே –
புரிவதுவும் புகை பூவே -1-6-1-என்று
இவன் பக்கலில் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் ஸ்வ ஆராதனாய்

அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
அதாவது
நேர்த்தி இல்லை யாகிலும் உள்ளது தேவையாய் இருக்குமோ என்னாதபடி
அம்ருததையே ஒவ்ஷதம் ஆக்குமா போலே –
தூய அமுதைப் பருகிப் பருகி –என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்-1-7-3- -என்று
நிரதிசய போக்யனான தன்னுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே -மிகவும் இனிதாயிருக்கும்
அவற்றையே சம்சார வியாதி பேஷஜமாக்கி

6 -நீர் புரைய தன்னை நியமித்து
அதாவது
இனிதாய் இருக்கும் ஆகிலும் -அவன் நினைவு அறிந்து பரிமாறுகை அரிது
என்னாதபடி -இவர்களைத் தன் நினைவிலே பரிமாறவித்துக் கொள்ளப் பாராதே –
நீர் புரை வண்ணன் -1-9-11-என்று
மேட்டிலே நீரை விரகாலே ஏற்றுமா போலே இவர்கள் செவ்வை கேடும் செவ்வை யாம்படி
தன்னை செவ்வியனாக நியமித்து-
(ஆழியால் இரவியை மறைத்து ஜயத்ரதனை கொல்வித்ததும் -போல்வன -அவன் நேர்மை ஆர்ஜவம் செவ்வியனாக
-அவன் தலை அங்கே போய் விழ மர்மத்தையும் சொல்லிக் கொடுத்து -தன்னை அமைத்துக் கொள்வதும் உதாரணம் -)

போகத்தை சாத்மிப்பித்து
அதாவது
இப்படி ஆனாலும் குளப்படியிலே கடலை மடுத்தார் போலே அசாத்தியமாக
பரிமாறுமோ என்னாத படி —
என்னுடை சூழல் உள்ளான் -1-9-1-என்று தொடங்கி –
உச்சி உளானே -1-9-10- -என்னும் படி சாத்மிக்க தன்னை அனுபவிப்பித்து
(திரு முடி சேவையும் ஆழ்வார் திரு நகரியிலே இன்றும் சேவை உண்டே )

7-பக்திகணனை களுக்கு ஒக்க வருமவனுடைய சேவைக்கு —
அதாவது
இப்படி அனுபவிக்கைக்கு ஈடாக முகம் காட்டும் அளவில் இவன் பக்கல்
பிரேம அனுகுணமாகவோ செய்வது என்னாத படி –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் –1-10-2- என்று
பரம பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து முகம் காட்டும் ஸ்வபாவன் ஆனவனுடைய பஜனதுக்கு

எளிமையும் இனிமையும் உண்டு
அதாவது
எளிதாய் இனிமை அற்று இருத்தல் -இனிதாய் எளிமை அற்று இருத்தல் -அன்றிகே –
கீழ் சொன்ன குண விசேஷங்களை உடையவனுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –
எளிதுமாய் இனிதுமாய் இருக்கும் —
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் ,
அமுதிலும் ஆற்ற இனியன்-1-6-6- -என்கிறவன்
தன்னை போலே ஆய்த்து தத் ஆஸ்ரயணீயமும்-
ஏவம் பூத பஜனத்தாலே பல சித்தி இருக்கும் படி என் என்னில் –

8-தொழுதால் அரும் பயனாய தரும்
அதாவது
அவனைத் தொழுதால் வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவு இன்றி ஆக்கம் தரும்-1-6-8- -என்றும் ,
தருமவரும் பயனாய -1-6-9–என்று
அவனை பஜித்தால் ப்ராப்தி பிரதி பந்தங்களையும் நிஸ்சேஷமாக போக்கி –
அழிவு இல்லாத பெறுதற்கு அரிய பிரயோஜனங்களையும் தரும் ..
பஜித்தால் அன்றோ தருவது -பஜன விரோதிகளும் குவாலுண்டே என்னில்

உத்யோகத்தே வினைகளும் மாளும்
அதாவது
நாளு நின்று அடு நம் பழைமை அம் கொடு வினை யுடனே மாளும் -1-3-8–என்று
நாள் தோறும் நின்று இவ் ஆத்மாவை முடிக்கிற -அநாதியாய் அதி க்ரூரமான
கர்மங்கள் பஜன உபக்ரமத்திலே நசிக்கும் –
(கழித்து தொழுமின் -அவனைத் தொழுதால் -துர்லபம் என்பதால் மீண்டும் -பஜனத்தால்-
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே
தரும் அவ்வரும் பயனாய திரு மகளார் கேள்வன் –
உத்யோகத்தே–அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே போலே )

ஆனால் பஜன உபாயம் யாது என்னில்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வது என்று
அதாவது
பிணக்கற 1-3-5–என்று தொடங்கி
அம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று வைதிக சமயத்துக்கும்
பாஹ்ய ஷட் சமயத்துக்கும் -தன்னில் தான் உண்டான பிணக்கு அறும் படி –
வேத மாரக்கத்தை யதா நிரூபணம் பண்ணி அருளிச் செய்த -நிரவதிக வாத்சல்ய யுக்தனாய் –
ஞாநாதி குண பரிபூர்ணனான கிருஷ்ணன் திரு தேர் தட்டிலே -அர்ஜுன வ்யாஜேன ஸ்ரீ கீதா முகத்தாலே –
பக்த்யா த்வந் அந்யயா சக்யா அஹம் ஏவம் விதோர்ஜுன ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச
தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–ஸ்ரீ கீதை -11-54- -என்றும் ,
மந்பனா பவ மத் பக்த மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானாம் மத் பராயணா –-ஸ்ரீ கீதை-9-34-என்றும்
அருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –

நும் இரு பசை அறுத்து-1-3-7- -என்றும் ,
மனன கமல மறக் கழுவி-1-3-8- -என்றும்
தேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்கு உண்டான சங்கத்தை அறுத்து –
இவனோ அவர்கள் ஆஸ்ரயணீயர் -என்ற சம்சயதையும் மனத்தில் நின்றும் ச வாசனமாகப் போக்கி –
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து-1-3-5- -என்று
தத் விஷய ஞானத்தைக் கொண்டு –

10-நன்று என நலம் செய்வது அவனிடை-1-3-7–என்று
அநந்ய பிரயோஜன பக்தியை பண்ணுங்கோள் என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி பஜனத்தில் சேர்க்கிறார் முதல் பத்தில் ..
அதாவது
சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினாப் போலே –
சம்சாரிகளுக்கு தம்முடைய கிருபையாலே -தத்வ ஹித புருஷார்த்த –
விஷயமான அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி –
ஞான பக்திகளை உபதேசித்து –
பகவத் பஜனத்தில் மூட்டுகிறார்
முதல் பத்தால் என்கை-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –215/216/217/218—-

September 28, 2018

சூரணை-215-

(கீழே ஐந்து ஸூரணைகளால் ரஹஸ்ய த்ரய சம்பந்தம் அருளிச் செய்தார் )
இனி இப் பத்துகளையும் இவற்றின் சமுதாயமான பிரபந்தத்தையும்
ஆழ்வார் ஸ்லாகித்து பேசின பாசுரங்களில் சாபிப்ராயதையை
சத்ருஷ்டாந்தமாக அருளிசெய்கிறார் —

ஐந்தினோடு
ஒன்பதினோடு
ஒரு பத்து
என்னுமவை போலே
நூறே சொன்ன
பத்து நூறு
ஓர் ஆயிரம்
என்றது
சபிப்ராயம் —

(ஐந்தினோடு-என்னுமது போலே-
ஒன்பதினோடு-என்னுமது போலே–
ஒரு பத்து-என்னுமது போலே–
நூறே சொன்ன என்றதும்
பத்து நூறு என்றதும்
ஓர் ஆயிரம் என்றதும்
சபிப்ராயம் –ஒரு கருத்தை உட்க்கொண்டது -என்றவாறு )

ஐந்தினோடு-என்னுமது போலே
அதாவது
முன்னில் ஓர் ஐந்துக்கு ஒரு கருத்தும் பின்னில் ஐந்து பாட்டுக்கு ஒரு கருத்தும் -ஆகையாலே –
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் –10-2-11-என்றும்-
(கேவல பர உபதேசம் முதல் ஐந்தும்-அடுத்ததில் தன்னையும் சேர்த்து உபதேசம் )

ஒன்பதினோடு-என்னுமது போலே-
அதாவது
ஒன்பது பாட்டுக்கு ஒரு கருத்தும் ஒரு பாட்டுக்கு ஒரு கருத்தும் ஆகையாலே
ஒன்பதோடு ஒன்றுக்கும் —9-5-11- என்றும் –
( கீழே ஒன்பதில் உண்டான வியசனம் ஸூகம் என்னலாம் படி ஜீவனத்தில் நசை அற்று பத்தாம் பாட்டு )

ஒரு பத்து-என்னுமது போலே-
அதாவது
பத்து பாட்டுக்கும் சேர ஒரு கருத்து ஆகையாலே –
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து-3-4-11 -என்றும் சொன்னவை போலே –

நூறே சொன்ன என்றதும்-
அதாவது-
நூறே சொன்ன ஓர் ஆயிரம் -9-4-11-என்று கிழி கிழியாகக் கொடுப்பாரைப் போலே –
நூறு நூறு ஆகச் சொன்ன ஆயிரம் என்றும் –

பத்து நூறு என்றதும் –
அதாவது-
பத்து நூற்றுள் இப் பத்து -6-7-11-என்று பத்து நூறு என்றும்
இப்படி பத்துகளை பிரித்து சொன்னதும்
( பத்து ஸூத்ரங்களில் மேலே விவரித்து அருளிச் செய்கிறார் )

ஓர் ஆயிரம் என்றதும் –
அதாவது-
தெரியச் சொன்ன ஓர் ஆயிரம்–6-9-11 -என்றும் –
மிக்க ஓர் ஆயிரம் –7-6-11-என்றும் –
அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரம்-10-10-11 -என்றும் ,
ஆயிரத்தை சேரச் சொன்னதும்-

பத்துகள் தோறும் வெவ்வேறு கருத்தாயும்-
ஆயிரத்துக்கும் சேர ஒரு கருத்தாயும்
இருக்கும் படியை நினைத்து ஆகையாலே சாபிப்ராயம் என்கை —

——————————————-

சூரணை-216-

இனி பத்துகள் தோறும் உபதேச பரமான ஓர் ஒரு திருவாய்மொழி பிரதானமாய் –
அவ்வோ பத்துகளுக்கு அவ்வோ திருவாய்மொழியில் நோக்காய் இருக்கும்படியை சத்ருஷ்டாந்தமாக
அருளிச் செய்கிறார் —

பாட்டுக்கு க்ரியையும்
பத்துக்கு கருத்தும் போலே
நூற்றுக்கு உபதேச பத்து —

பாட்டுக்கு க்ரியை போலே
அதாவது
பாட்டானால் க்ரியை (பயனிலை) யோடு தலைக் கட்ட வேண்டும் ஆகையாலே பாட்டுகள் தோறும்
க்ரியா பதம் பிரதானமாக இருக்குமா போலேயும்-
( கிரியா பதமே இல்லாத பாசுரம் பல்லாண்டு -முடித்ததாக திரு உள்ளம் இல்லையே அங்கே -)

பத்துக்கு கருத்தும் போலே-
அதாவது-
ஒரொரு திரு வாய் மொழிக்கு -பரத்வம்-பஜநீயதை – சௌலப்யம் -அபராத சஹத்வம் என்றாப் போலே –
(உயர்வற உயர்நலம் -பரத்வத்திலே நோக்கு -பிரதான பாசுரம் -1-1-1-/
வீடுன் முற்றவும் -பஜநீயதை – எண் பெருக்கு அந்நலத்து-1-2-10–/
ஸுலப்யம் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1-/
அபராத சஹத்வம் -எண் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு -1-4-7–)
தனித் தனியே கருத்துகள் ஆகையாலே -பத்துப் பாட்டுக்குக் கருத்தான
நிதானம் சொல்லும் பாட்டு பிரதானமாய் இருக்குமா போலேயும் —

நூற்றுக்கு உபதேச பத்து-
அதாவது
நூறு பாட்டுக்கு பர உபதேசமான பத்துப் பாட்டு பிரதானமாய் இருக்கும் என்கை —
(முதல் பத்தில் வீடுமுன் முற்றவும் /இரண்டாம் பத்தில் கிளர் ஒளி இளமை /மூன்றாம் பத்தில் சொன்னால் விரோதம் /
நான்காம் பத்தில் -ஒன்றும் தேவும் /ஐந்தாம் பத்தில் -பொலிக பொலிக / ஆறாம் பத்தில் -நல்குரவு செல்வமும் /
ஏழாம் பத்தில் -இன்பம் பயக்க / எட்டாம் பத்தில் -எல்லியும் காலையும் / ஒன்பதாம் பத்தில் -மாலை நண்ணி /
பத்தாம் பத்தில் -கண்ணன் கழலிணை )

இத்தால் பாட்டுகளுக்கு க்ரியையிலும் –
பத்து பாட்டுகளுக்கு நிதானம் சொல்லும் பாட்டிலும்- தாத்பர்யமாய் இருக்குமோபாதி
நூறு பாட்டுக்கும் பர உபதேசமான பத்து பாட்டிலே -தாத்பர்யமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

பிணங்கி அமரர் பிதற்றும் -1-6-4–என்கிறபடியே –
பேர் அளவு உடைய நித்ய ஸூரிகள் -ஸ்வ ஸ்வ அநுபூத குண தாரதம்யங்களைச் சொல்லி –
சரச விவாத கோலாகலம் பண்ணும்படி இருக்கிற அவனுடைய
பரத்வ சௌலப்ய பிரயுக்தமான குண விசேஷங்களைத் தனித்து தம்மால் புசித்து தலை கட்ட ஒண்ணாமையாலே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-– என்று ‘
கூட்டரான ரசஞ்சரைத் தேடின அளவில் கிடையாதபடி தூரஸ்தராக-
சந்நிஹிதரான சம்சாரிகளுடைய அனாத்ம குணம் பாராதே
பகவத் குணங்களில் மூட்டித் திருத்திக் கூட்டிக் கொள்ள தேட்டமாய் உபதேசத்திலே
ஒருப் படுகையாலே அதிலே நோக்காக வேணும் இறே–

(உபதேச பத்து பிரதானம் என்றது ஈட்டில் அருளிச் செய்த படி -கோயில் திருவாய் மொழி அடைவு வேறே –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் பற்றை விடுதல் -வீடுமுன் முற்றவும் -சர்வ வ்யாபகன் சர்வ நியாந்தாவானவை அனுபவிக்க -முதல் பதிகம்
ப்ராப்ய நிஷ்கர்ஷம்-எம்மா வீட்டில் அருளிச் செய்து அதுக்கு சஹகாரிகள் தேட்டம் கிளர் ஒளி இளமை -சதிர் பயன் அனுபவிக்க -உபதேசம்
சொன்னால் விரோதம் -அஸேவ்ய சேவை அஸ்துதியர் -முடியானே 3-8-கரணங்கள் மற்ற அனுபவம் -போக்கி அவனையே பற்ற உபதேசம்
ஒன்றும் தேவும் -தேவதாந்த்ர பஜனம் தவிர்ந்து -பரே சப்தம் பொலிய-கீழே நண்ணாதார் முறுவலிப்ப –இது என்ன உலகு இயற்க்கை –
அல்ப ஸூகத்துக்காக போகிறார்கள்-மாற்ற உபதேசம்
பொலிக பொலிக -மங்களா சாசனம் –பர உபதேசமா -திருந்தின திருவடிகளில் விழுந்தும் -திருந்துகைக்கு யோக்யதை
உள்ளாரை திருத்தி -தொழுது உய்மினோ -உண்டே -திருந்தாதவரை உபேக்ஷித்தும் உய்யும் வகை இல்லை -என்றும் உண்டே –
நிரு ஹேதுக கடாக்ஷத்தால் தான் திருத்தினார் இதுக்கு-5-1 –
நல் குரவும்–மின்னிடை -ஊட-தன்னையும் சேர்த்துக் கொண்டானே -அகடி கடநா சாமர்த்தியம் -விருத்த விபூதி ஐஸ்வர்யம் –
கழல்கள் அன்றி மற்று ஓர் களை கண் இளம் காண்மின்களே -உபதேசம் உண்டே இதிலும் –
யானாய் தன்னைத் தான் பாடி 7-9-அடுத்து இன்பம் பயக்க -7-10-6-தொழுமின் தொண்டீர் –தீவினை கெடும் உள்ளித் தொழுமின் -உபதேசம் –
எல்லியும் காலையும் -8-6-முன்பு மாயக் கூத்தா-ஒரு நாள் காண வாராய் -அழுது- அலற்றி -நாக்கிலே சொட்ட விடு என்பாரைப் போலே
ஏத்த நில்லா இடர் குறிக்கொள்மின்-8-6-6-இந்த இடர் சரம தசையில் –
மாலை நண்ணி -நேராக உபதேச திருவாய் மொழி -தொழுது எழுமினோ வினை கெட -புஷ்ப அர்ச்சனம் ஸுவ்ரி பெருமாள் அன்றோ
மல்லிகை கமழ் -பூசல் -9-9-ஸ்மாரக சம்பந்த பதார்த்தங்கள் துன்பம் தராது அவற்றைக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க உபதேசம்
கண்ணன் கழலிணை –நேராக உபதேசம் –சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -பக்தி பலித்தது-அதன் பின் இந்த உபதேசம் )

——————————————–

சூரணை -217-

இவற்றில் பகவத் பக்த பரங்களாய் வரும் அவற்றுக்கு தாத்பர்யம் எது என்னும்
ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் ..

பகவத் பக்த பரங்கள்
ஆஸ்ரயண விதி சேஷங்கள் —

(ஆஸ்ரயண விதிக்கு -பகவத் பக்த பரங்கள்-பகவத் அடியார்களை பற்றிய திருப்பாசுரங்கள் –
சேஷங்கள் -உறுப்புக்கள் -என்றவாறு )

பகவத் பக்த பரங்கள்
அதாவது
பயிலும் சுடர் ஒளி -முதலான பாகவத பரங்களான திருவாய்மொழிகள் –
ஜ்யோதிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜதே -என்கிற விதிக்கு பிரயாஜாதி விதிகள்
சேஷமாய் -அவற்றினுடைய அனுஷ்டானதோடே அது பல பர்யந்தமாய்த் தலைக்கட்டுமா போலே —
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினோ–4-1-1- –என்றும் ,
நலம் அந்தமில் நாடு புகுவீர் பலமுந்து சீரில் படிமினோ ஓவாதே -2-8-4–என்று
விதிக்கிற பகவத் ஆஸ்ரயணம் -பாகவத் ஆஸ்ரயணத்தோடு ஒழிய தலைக் கட்டாமையாலே
பகவத் ஆஸ்ரயணீய விதிக்கு சேஷங்கள் என்கை ..

அதவா-
பர உபதேச பரமான இதில் பகவத் குணங்களையும் ஜீவ (பாகவத பக்த ) குணங்களையும்
பிரதி பாதிக்கிறவற்றுக்கு விநியோகம் ஏது என்ன அருளிச் செய்கிறார் —
பகவத் பரங்களாயும் -தத் பக்தரான -ஜீவ பரங்களாயும் -அவ்வவ் குணங்களை பிரதி பாதிக்கிறவை
ஆஸ்ரயண விஷயத்தையும் – ஆஸ்ரயண கர்த்தாவையும்- சொல்லுகிறது ஆகையாலே
ஆஸ்ரயண விதிக்கு சேஷங்கள் இத்தனை என்கை ..
( பகவத் குணங்களும் பாகவத குணங்களும் ஆஸ்ரயணத்துக்கு சேஷம் என்றவாறு )

———————————————-

சூரணை -218-

இப்படி பத்து தோறும் உள்ள அர்த்தங்களை பர உபதேசத்துக்கு உறுப்பாக ஒருங்க விட்டு –
விஸ்தரேண மேல் -யோஜிப்பதாக திரு உள்ளம் பற்றி –
பரத்வாதி குண விசிஷ்டனான சர்வேஸ்வரன் தமக்கு பிறப்பித்த தசா விசேஷங்களை
பத்து தோறும் வெளி இடுகிறார் என்று ஸங்க்ரஹேண வாக்கியம் அருளிச் செய்கிறார் மேல் ..

பரத்வ
காரணத்வ
வ்யாபகத்வ
நியந்த்ருத்வ
காருணிகத்வ
சரண்யத்வ
சக்தத்வ
சத்ய காமத்வ
ஆபத் சகத்வ
ஆர்த்தி ஹரத்வ
விசிஷ்டன்

மயர்வை அறுக்க
தத்வ வேதன
மறப்பற்று

ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர
நிஷ்கரிஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
ப்ரேமே பல உபாயத்தே புகுந்து
சாதன பல உபகார கைம்மாறு இன்றி
க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி
க்ருதமானத்தை உணர்ந்து
ஆத்ம தர்சன பல ப்ராப்தி
மரணா வதியாகப் பெற்று

காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின
தம் பேற்றை பிறர் அறிய
பத்து தோறும் வெளி இடுகிறார் ..

( ராகவாயா மஹாத்மனே ஸுலப்யம் பரத்வம் -சர்வ லோக சரண்யன் –
இங்கு பரத்வம் முதல் நான்கு பத்துக்கள்- ஸுலப்யம் ஐந்தாம் பத்து – சர்வலோக சரண்யன் ஆறாம் பத்து-
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு அரண் -அவ்யபதேச மகன் வாக்கு–
அந்தராத்மா –ஆத்மாவுக்குள் இருக்கும் பரமாத்மா –ஆகாசம் கைக்குள்ளே
அந்தர அசேதனம் -ஆகாசம் வியாபகம்
அந்தர்யாமி- அடக்கி ஆளும் சக்தி -சரீரத்துக்குள் உள்ள ஆத்மா அந்தர்யாமி எப்பொழுதும் இல்லையே –
ஆத்மாவுக்குள் உள்ள பரமாத்மா தானே அந்தர்யாமி சர்வ நியாந்தா –
உள்ளே இருக்கும் சேதனன் வியாபகன் பரமாத்மாவே தான் -)

அதாவது
1-சர்வ ஸ்மாத் பரனாய்-
2-அந்த பரத்வ பிரகாசகாம் படி சர்வ காரண பூதனாய் —
3-லோகத்தில் காரிய காரணங்கள் போல் அன்றிக்கே -உபாதான காரணமும் தானே ஆகையாலே –
கார்ய பூத சமஸ்த வஸ்துக்களுக்கும் வ்யாபகனாய் –
4-அந்த வியாப்தி தானே ஆகாச வ்யாப்தி போல் அன்றிக்கே அந்தர் ஆத்மா ஆகையாலே -சர்வ நியந்தாவாய் –
5-அந்த பரத்வாதிகளைக் கண்டு வெருவ வேண்டாதபடி பரம காருணிகனாய் –
6-இப்படி க்ருபாவான் ஆகையாலே சர்வ சரண்யனாய்–
7-சரண்ய க்ருத்யமான -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -பிராப்தி கரணதுக்கு ஈடாகும் படி –சர்வ சக்தி யுக்தனாய் –
8-அந்த சக்தியாலே நித்யமாக கல்பித்த பத்நீ பரிஜனாதிகளை உடைய வான் ஆகையாலே-சத்ய காமனாய் –
9-அந்த போகங்களில் அந்ய பரனாய் இருந்து விடாதே -பிரளயாத்ய ஆபத்துகளில் உதவி –
லீலா விபூதியை ரஷிக்கையாலே -ஆபத் சகனாய் –
10-இப்படி ஆபத் சகன் ஆகையாலே சம்சார தாபத்தரான ஆஸ்ரிதர்க்கு ஆர்த்தி கரனாய் –
இப்படி பத்து பத்தாலும் பிரதிபாதகமான பத்து குணத்தோடு கூடி இருக்கிற சர்வேஸ்வரன்-

மயர்வை அறுக்க

1-தத்வ வேதன மறப்பற்று-
அதாவது-
மயர்வற மதி நலம் அருளினன் -1-1-1–என்கிறபடியே
பக்தி ரூபாபன்ன ஞான பிரதான முகேன அஜ்ஞ்ஞானத்தை ஸ வாசனமாக போக்க-
அதனால் தத் விஷய ஞானம் ஆகிற தத்வ ( பகவத் விஷய ) வேதனத்தில் –
மறப்பேனோ இனி யான் என் மணியை -1-10-10-– என்கிறபடியே -விஸ்ம்ருதி அற்று –

2-ஜ்ஞப்தி ( தத்வ வேதன – பர்யாய சொல் ) பல முக்தி தலை சேர நிஷ்கரிஷித்து-
அதாவது –
அந்த ஞான பலமான மோஷத்தை –
நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர்த்து -2-9-1- -என்று -ஸ்வரூப அனுரூபமாக நிஷ்கர்ஷித்து –

3-மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து-
அதாவது-
அந்த மோஷத்துக்கு பலமான கைங்கர்ய ரூப வ்ருத்தியை-
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1–என்று அர்தித்து –

4-புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து-
அதாவது–
அந்த புருஷார்தத்துக்கு பலம் அந்ய ருசி நிவ்ருத்தி ஆகையாலே தத் பலமாக –
ஐம் கருவி கண்ட இன்பம் -சிற்றின்பம் ஒழிந்தேன் -4-9-10–என்று அந்ய புருஷார்தங்களில்
ருசியைத் தவிர்ந்து –

5-விரக்தி பல ராகம் கழிய மிக்கு-
அதாவது–
அந்த இதர விஷய விரக்திக்கு பலமான பகவத் விஷய ராகம் –
கழிய மிக்கதோர் காதல்-5-5-10- -என்னும் படி அதிசயித்து –

6-ப்ரேமே பல உபாயத்தே புகுந்து-
அதாவது–
அந்த நிரதிசய பிரேம பலமான விளம்ப அஷமத்வத்தால் வந்த த்வரையாலே –
அலர்மேல் மங்கை உறை மார்பா -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10–என்று
உபாய வரணம் பண்ணி –

7-சாதன பல உபகார கைம்மாறு இன்றி-
அதாவது-
அந்த சாதன பலமான உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக –
உதவி கைம்மாறு என் ஆர் உயிர் -7-9-10–என்று ஆத்ம சமர்ப்பணம் பண்ணத் தேடி –
அவ் வாத்ம வஸ்து ததீயம் என்று அறிகையாலே –
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -எதுவும் ஓன்று இல்லை செய்வது இங்கும் அங்கும் –7-9-10-
என்று பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறி –

8-க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி க்ருத மானத்தை உணர்ந்து-
அதாவது-
அந்த க்ருதக்ஜைக்கு பலமான பிரத்யுபகாரமாக –
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10- -என்ற ப்ரீதியாலே கலங்கி
சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவை –
நின்ற ஒன்றை உணர்ந்தேன் -8-8-4–என்று தேகாதிகளில் விலஷணமாய்
அவனுக்கு பிரகார தயா சேஷமாக கொண்டு -அனந்யார்ஹமாய் இருக்கும் என்று அறிந்து –
( இந்த ப்ரகாரதயா சேஷம் என்கிற அறிவே உணர்வே பிரதியுபகாரம் இந்த உணர்வே ஆத்ம தர்சனம் )

9-ஆத்ம தர்சன பல ப்ராப்தி மரணா வதியாகப் பெற்று-
அதாவது-
ஆத்ம தர்சன பலமான -பகவத் பிராப்தியை –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் 9-10-5–என்கிறபடி சரீர அவசானத்திலே பண்ணித் தருகிறோம் என்று
அவன் நாள் இட்டு கொடுக்கப் பெற்று –
( பக்தி உபாசனனனுக்கு கர்ம அவதி -ப்ரபன்னனனுக்கு மரண அவதி தானே
மரணாமானால் கால ஆஸக்தி பர்யாயம் )

10-காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின தம் பேற்றை
அதாவது-
இப்படி பிராப்தி காலம் அணித்தானதுக்கு பலம்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்துக்கு ஏறப் போவதாகையாலே -அவ் வர்சிராதிகதிக்கு –
காள மேகத்தை இன்றி மற்று ஓன்று இல் அம் கதி 10-1-1–என்றும் ,
ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரணே 10-1-6–என்று பரம ஆப்தன் ஆனவன் தன்னையே
துணையாகக் கூட்டின தம்முடைய பேற்றினை

பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார் ..
அதாவது-
பிறர் அறிந்து வாழும் படி –அறிந்து -( உணர்ந்து வாழ வேண்டுமே -எனவே இந்த வியாக்யானம் )
முதல் பத்தே தொடங்கி பத்துப் பத்தாலும் பிரகாசிப்பித்தது அருளுகிறார் என்றபடி ..

இத்தால் பரத்வாதி குண விசிஷ்டனான ஈஸ்வரன் தமக்கு பண்ணிக் கொடுத்த பேறுகளை
பலரும் அறிந்து வாழ வேண்டும் என்று
பத்து பத்தாலும் பிரகாசிப்பிக்கிறார் என்று பத்து நிகமனத்துக்கு
வாக்யார்த்தம் சொல்லப் பட்டதாய்த்து –

ஞப்தி
முக்தி
விருத்தி
விரக்தி
பக்தி
பிரபத்தி
சக்தி
பிராப்தி
பூர்த்தி
ஆர்த்தி ஹரத்வம்
ஆகிய பத்துக்களும் பத்தின் அர்த்தம் –

மூன்றாம் பிரகரணம் முற்றிற்று.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –211/212/213/214—

September 28, 2018

சூரணை -211-

ஆக இப்படி த்வ்யார்த்த பிரதிபாதகதயா தீர்க்க சரணாகதியாய் இருக்கிற திரு வாய் மொழிக்கு
மற்றும் ஆச்சார்யர்கள் அருளிச் செய்யும் அர்த்த யோசனைகளை அருளிச் செய்கிறார் —

மூன்றில் சுருக்கிய ஐந்தையும்
உயர் திண் அணை ஓன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒருக் கொண்ட
நோற்ற நாலும்
எம்மா ஒழிவில் நெடு வேய்
என்கிற இருபதிலே விசதமாக்கி
எண்பதிலே பரப்புகையாலே
ஐந்தையும் —
அருளினன் வீடு பெற்ற என்கையாலே
ஐந்திலும் இரண்டையும்
தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய்
என்கிற முக்த லஷண வ்ருத்தியாலே
இரண்டில் ஒன்றையும்
இதுக்கு பிரமேயம் என்னும் —

(ப்ரமேயம் ப்ரம் இயம்–புத்திக்கு கருத்து என்றவாறு
மூன்று -திருவிருத்தம் -திருவாசிரியம் பெரிய திருவந்தாதி -/இவற்றில் சுருக்கிய ப்ரமேயம் -ஐந்து -அர்த்த பஞ்சுகம் –
இத்தை இருபதில் விசதமாக்கி-எண்பதில் பரப்பி -என்றும் கொண்டு –
அருளினன் -வீடு பெற்ற -இரண்டிலும்– உபாய ஸ்வரூபத்தையும் உபேய ஸ்வரூபத்தையும் -என்றும் கொண்டு
தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லஷண வ்ருத்தியாலே
இந்த இரண்டில் ஒன்றான உபேய -பிராப்தி ஸ்வரூபமே ப்ரமேயம் -என்றவாறு-
திருவாய் மொழி ப்ராப்ய பிரதானம் என்றதாயிற்று )

அதாவது
மந்த்ர ஸ்லோககங்களில் -சங்கரஹேன உக்தங்களான அர்த்த விசேஷங்களை
த்வயத்திலே விவரிக்குமா போலே –
பூர்வ பிரபந்த த்ரயத்திலும் சங்கரஹேன சொல்லப் பட்ட அர்த்த பஞ்சகத்தையும் –

ஸ்ருதி சாயையாலே – அந்வய ரூபேண -ஸ்வ அனுபவ முகத்தாலே —
பரத்வத்தில் பரத்வத்தை பிரதி பாதித்த -உயர்வற உயர் நலமும் —1-1-
இதிகாச புராண பிரக்ரியையாலே –அந்வய வ்யதிரேகங்கள் -இரண்டாலும்-
பர உபதேச முகத்தாலே – அவதாரத்திலே பரத்வத்தை பிரதி பாதித்த -திண்ணன் வீடும் –2-2-
மோஷ பிரதத்வ கதனத்தாலே பரத்வத்தை பிரதி பாதித்த -அணைவது அரவு அணையும் –2-8-
அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை பிரதி பாதித்த -ஒன்றும் தேவும்-4-10- -ஆகிற
நான்கு திரு வாய் மொழியாலும் பர ஸ்வரூபம் —

பகவத் சேஷத்வதிலும் தத் காஷ்டையான பாகவத சேஷத்வமே ஆத்மாவுக்கு உத்தேச்யம் என்று
பிரதி பாதித்த -பயிலும் சுடர் ஒளியும் —3-7-
சேஷத்வ பஹிர் பூதங்களான ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யம் என்கிற வ்யதிரேகத்தாலே
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று பிரதி பாதித்த -ஏறாளும் இறையோனும்-4-8-
பகவானுக்கு இவ் ஆத்ம வஸ்து பிரகார தயா சேஷமாய் -ப்ரக்ருதே பரமாய் -ஞான ஆனந்த லஷணமாய்
இருக்கும் என்பதை பிரதிபாதித்த -கண்கள் சிவந்தும் –8-8-
அந்ய சேஷத்வ பிரசங்கமும் – அசஹ்யமாம் படி அதின் அனந்யார்ஹத்வத்தை
பிரதி பாதித்த -கரு மாணிக்க மலையும் -8-9–ஆகிற
நான்கு திரு வாய் மொழியாலும் ஸ்வ ஸ்வரூபமும்-

பகவத் வ்யதிரிக்த விஷயங்களை பற்றுகைக்கு உடலான அஹங்கார மம காரங்கள்
த்யாஜ்யம் என்ற -வீடு முன் முற்றவும் –1-2-
அசேவ்ய சேவை த்யாஜ்யம் என்ற -சொன்னால் விரோதமும் –3-9-
ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்ற -ஒரு நாயகமும் –4-1-
சரீர சம்பந்த நிபந்தனமாக வரும் பரிக்ரஹங்கள் த்யாஜ்யம் என்கிற -கொண்ட பெண்டிரும் –9-1-
ஆகிய நாலு திரு வாய் மொழிகளும் விரோதி ஸ்வரூபம் —

நோற்ற நோன்பு இலேன் –என்று ஆகிஞ்சன்ய பூர்வமாக -ஆறு எனக்கு நின் பாதமே சரணாக
தந்து ஒழிந்தாய்–என்ற நோற்ற நோன்பும்–5-7-
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்–என்று
அநந்ய கதித்வ பூர்வகமாக -கழல்கள் அவையே சரணாக கொண்ட -என்ற -ஆரா அமுதும் –5-8-
வைகலும் வினையேன் மெலிய -என்று பக்தி பாரவச்யம் முன்னாக –
நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்ற -மானேய் நோக்கும் –5-9-
எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்று தரித்து நின்று அவன் குணங்களை
அனுசந்திக்க மாட்டாத சைதில்யம் செல்லா நிற்க –நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
நமக்கு என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய் -என்ற -பிறந்தவாறும்–5-10- -ஆகிற
நாலு திரு வாய் மொழியாலும் உபாய ஸ்வரூபமும் —

தனக்கேயாக -என்று கைங்கர்யத்திலே ஸ்வார்த்ததா நிவ்ருத்தியை அபேஷித்த -எம்மா வீடும் —2-9-
சர்வ கால அவிசிஷ்டமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணும் என்று பாரித்த-ஒழிவில் காலமும் —3-3-
அதுதான் பாகவத கைங்கர்ய பர்யந்தமாக வேணும் என்று மநோ ரதித்த –நெடுமாற்கு அடிமையும் –8-10-
அது தன்னில் பர சம்ருத்யேக பிரயோஜனத்தை சொன்ன -வேய் மரு தோளிணையுமாகிற–10-3-
நாலு திரு வாய் மொழியாலும்-பல ஸ்வரூபமாய் –

அது தன்னையே விஸ்தரிக்கையாலே – அர்த்த பஞ்சகமே -இப் பிர பந்தத்துக்கு பிரமேயம் என்றும் –

மயர்வற மதி நலம் அருளினன் -1-1-1–என்று தொடங்கி –
அவா அற்று வீடு பெற்ற-10-10-11- -என்று தலைக் கட்டுகையாலே –
அவ் ஐந்திலும் வைத்துக் கொண்டு -பிரதானமான -உபாய உபேயங்கள் -இரண்டையும்
இதுக்கு பிரமேயம் என்றும் –

தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணி செய் என்கிற முக்த லஷண வ்ருத்தியாலே-
அதாவது-
தொழுது எழு என் மனனே-1-1-1- -என்றும் ,
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேன் -10-8-6–என்றும் –
மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7–என்றும் -சொல்லப் படுகிற
பத்தாஞ்சலி புடத்வ ஹ்ருஷ்டத்வ நம இத்யேவ வாதித்வங்களாகிற–முக்த லஷணத்தாலும் –

விபந்யவ -என்கிறவர்களைப் போலே
சொற் பணி செய் ஆயிரம் -1-10-11-என்று சொல்லப் படுகிற வாசக வ்ருத்தியாலும் –
அவ் இரண்டிலும் வைத்து கொண்டு –
உபேயம் -ஒன்றுமே இதுக்கு பிரமேயம் -என்றும் சொல்லும் என்கை —
(முக்த லக்ஷணம் அடையாளங்கள் மூன்றும் விருத்தம்- அனுஷ்டானமும்-நான்கையும் சொன்னபடி )

இருபதில் விசதமாக்கி -எண்பதிலே பரப்புகையாலே -ஐந்தையும் இதுக்கு பிரமேயம் -என்னும் -என்ற இது –
இப் பிரபந்தங்களில் ஸூக்திகள் –
பிராப்யனான எம்பெருமான் உடைய ஸ்வரூப பிரதிபாதன பரமாய் இருக்கும் சில —
பிராப்தாவான பிரத்யகாத்மா ஸ்வரூப விஷயமாய் இருக்கும் சில —
பிராப்த் யுபாயத்தை சொல்லும் சில —
பலத்தை சொல்லும் சில ..
பிராப்ய விரோதியை சொல்லும் சில –
அவ சிஷ்டமானவை இவற்றுக்கு உபபாதங்களாய் இருக்கும் -என்று ஈட்டில் யோஜித்த க்ரமம் ..

உபாய உபேயங்கள் இரண்டையுமே இதுக்கு பிரமேயம் என்னும் -என்ற இது –
இவை இரண்டுமே பிரதான பிரமேயம் ..
இவ் உபாய உபேயங்களுக்கு அதிகாரி இன்னான் என்கைக்காக -பிரத்யகாத்மா ஸ்வரூபம் ..
உபாய பூதனும் உபேய விஷயமும் இன்னார் என்கைக்காக பர ஸ்வரூபம் ..
உபேய பிரதி பந்தகமாய் -உபாய நிவர்தமாய் இருக்கும் அது -இன்னது என்கைக்காக -விரோதி ஸ்வரூபம்
சொல்லுகிறது இத்தனை என்று நினைத்து —

உபேயம் ஒன்றுமே இதுக்கு பிரமேயம் -என்ற இது –இவற்றில் உத்தேச்யம் பலம் –
தத் அர்த்தமாக மற்றுள்ள நாலு அர்த்தம் சொல்லுகிறது -என்று ஈட்டில் சொன்ன படி கைங்கர்யமே பிரதானம் –
மற்றை நாலும் சொன்னது –
கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் –
தத் ஆஸ்ரயத்தையும் –
தத் விரோதியையும் –
அவ் விரோதி நிவர்தகத்தையும்
அறிவிக்கைகாக ஆகையாலே -தத் சேஷமாக சொன்னது இத்தனை என்று நினைத்து —

———————————-

சூரணை -212-

இனி பிரதம சரம பிரபந்தங்களினுடைய ஸங்க்ரஹங்களான முதல் பாட்டுகளில்
பிரதி பாத்யார்த்தங்களை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் ..

ரஹஸ்யத்துக்கு ஓர் எழுத்தும்
அதுக்கு ஓர் உருவம் போல் ஆனவற்றிலே
இமையோர் அதிபதி
அடியேன் மனனே
பொய் மயர்வு
பிறந்து அருளினன்
விண்ணப்பம் தொழுது எழு
என்ற பஞ்சகத்தோடே
அவித்யாதி ஸ்வரூப ஸ்வபாவ
ஆத்மேஸ்வர பந்த
ரஷண க்ரம
குண விக்ரஹ விபூதி யோக
ததீய அபிமான
உபதேச விஷய
அந்ய உபதேச
ஹேத்வாதிகளும்
சங்க்ருஹீதம் —

ரஹஸ்யத்துக்கு ஓர் எழுத்தும் அதுக்கு ஓர் உருவம் போல் ஆனவற்றிலே –
அதாவது
(பார் ஏழு கடல் ஏழு மலை ஏழுமாய் சீர் கெழும் இவ்வுலகு ஏழும் எல்லாம் ஆர் கெழு வயிற்றினுள்
அடக்கி நின்று அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே -ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள்
எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே -6-1-5– )
ஓர் எழுத்து ஓர் உரு-பெரிய திருமொழி -6-1-5- -என்னும்படி –
திருமந்த்ரமாகிற ரஹஸ்யத்துக்கு ஸங்க்ரஹமாய் -ஓம் இத் ஏக அஷரம் – என்று
ஏக அஷரமாக இருக்கிற பிரணவமும் –
தஸ்ய பிரகிருதி லீனச்ய -என்கிற படி -அந்த பிரணவதுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் அகாரம் போலவும் –
திரு விருத்தம் -திரு வாய் மொழி ஆகிய பிரபந்தங்களுக்கு ஸங்க்ரஹங்களான முதல் பாட்டுகளில் –

1-இமையோர் அதிபதி-
அதாவது-
இமையோர் தலைவா-என்றும் ,
அயர்வறும் அமரர்கள் அதி பதி -என்றும் ,
ஸூரி சேவ்யமாய் -சர்வாதிகமாய் இருக்கும் -பர ஸ்வரூபத்தையும் –

2-அடியேன் மனனே-
அதாவது–
அடியேன் -என்றும் ,
என் மனனே -என்றும்
சேஷ பூதமாய் -பரி சுத்த அந்த கரணமாய் இருக்கும் -ஸ்வ ஸ்வரூபத்தையும் –

3-பொய் மயர்வு-
அதாவது–
பொய் நின்ற ஞானமும் ,பொல்லா ஒழுக்கும் , அழுக்கு உடம்பும் -என்றும் ,
மயர்வு -என்றும் ,அவித்யாதிகளான விரோதி ஸ்வரூபத்தையும் –

4-பிறந்து அருளினன்-
அதாவது-
உயிர் அளிப்பான் என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்றும் ,
மதி நலம் அருளினன் -என்றும் ,
லோக ரஷண அர்த்தமாக அநேக அவதாரங்களைப் பண்ணின சர்வேஸ்வரனுடைய
கிருபையே உபாயம் என்று -உபாய ஸ்வரூபத்தையும் –

5-விண்ணப்பம் தொழுது எழு -என்ற பஞ்சகத்தோடே-
அதாவது-
செய்யும் விண்ணப்பம் -என்றும் ,
தொழுது எழு -என்றும்
சேஷி விஷயத்தில் கரண த்ரயத்தாலும் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
என்று பல ஸ்வரூபத்தையும் கொண்டு
ஸங்க்ரஹித்துச் சொன்ன அர்த்த பஞ்சகத்தோடே —

1-அவித்யாதி ஸ்வரூப –
அதாவது-
பொய் நின்ற ஞானம் இத்யாதியாலே –
அவித்யாதிகளைச் சொல்லுகிற அளவில் -உத்பத்தி விநாசாதி யோகத்தாலே
(உத்பத்தி விநாசாதி-ஆதி -ஷட் பாவ விபாகங்களையும் சொன்னபடி -)
அசத்ய சப்த வாச்யமான -அசேதன விஷயத்தில் ஆத்ம ஜ்ஞானமும்
அந்த தேக -ஆத்ம அபிமான அடியான -சாம்சாரிக துஷ்கர்ம பிரவ்ருதியும் –
அக் கர்மம் அடியாக வரக் கடவதான -மாம்ஸ ஸ்ருகாதி மல ரூப தேக சம்பந்தமும் –
என்ற இவற்றின் உடைய ஸ்வரூபங்களும்–

2-அவித்யாதி — ஸ்வபாவ-
அதாவது-
விபிரதிபத்தி ஹேதுத்வம்
சம்சார ஹேதுத்வம்
ஸ்வரூப திரோதாயகத்வம்
உத்தர உத்தரங்களில் -பூர்வ பூர்வ காரணத்வம்
இனி யாம் உறாமை -என்கையாலே -அவற்றின் அநாதித்வம்-சோபாதிகத்வம்-
மயர்வற மதி நலம் அருளினன் -என்கையாலே
அவற்றின் ஜ்ஞான நிவர்த்த்யத்வம் முதலான ஸ்வபாவங்களும் –

3-ஆத்மேஸ்வர பந்த-
அதாவது–
இமையோர் தலைவா –அடியேன் -என்றும் –
அதிபதி –அடி தொழுது –
என்கையாலே ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான சேஷ சேஷி பாவ சம்பந்தமும் —

4-ரஷண க்ரம-
அதாவது–
உயிர் அளிப்பான் என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்றும் ,
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும்
அநேக அவதாரங்களைப் பண்ணி ரஷிக்கும் படியையும் –
சம்சார ஹேதுவான அஜ்ஞானத்தை போக்கி –
உஜ்ஜீவன ஹேதுவான -ஞான பக்திகளை தன் கிருபையாலே தந்த படியையும்
சொல்லுகையாலே-ஈஸ்வரனுடைய ரஷண க்ரமமும்–

5/6/7–குண விக்ரஹ விபூதி யோக-
அதாவது-
உயர்வற -உயர்நலம் -துயர் அறு சுடர் அடி -என்றும் ,
இமையோர் -என்றும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
குண -விக்ரக -விபூதிகளும் —

8-ததீய அபிமான-
அதாவது-
அந்த ஸூரிகளை முன் இடுகையாலே ததீய அபிமானமும்

9-உபதேச விஷய-
அதாவது-
நின்று கேட்டு அருளாய் -என்றும் ,
தொழுது எழு என் மனனே -என்றும் ,
நெஞ்சு போலே பவ்யனான ஈஸ்வரனும் –அப்படி பவ்யமானார் உபதேச விஷயம் -என்னும் அதுவும் –

10-அந்ய உபதேச
அதாவது-
நலம் அருளினன் என்று –
பக்தியைத் தந்தான் என்கையாலே -அந்ய உபதேசத்துக்கு ஹேதுவான பக்தியும் –
முதலான அர்த்தங்களும் ஸங்க்ரஹேண சொல்லப் பட்டன என்கை —
(பக்தி முற்ற முற்ற பேர் அமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கோர் காதல்-
சூழ்ந்து அதனில் பெரிய அவா -வரை வளர்த்து – -ப்ரேமத்தால் தாய் மகள் தோழி பாசுரங்கள் )

அந்ய உபதேச ஹேத்வாதிகளும் -என்ற இடத்தில் -ஆதி சப்தத்தாலே
மற்றும் வேதாந்த ஸங்க்ரஹ தாத்பர்யங்களான அர்த்தங்கள் பலவும் இவற்றில்
சங்க்ருஹீதங்கள் என்னும் இடம் காட்டப் பட்டது —

—————————————

சூரணை -213-

அவிக்ன பரிசமாப்தி பிரசயகம நார்தமாக பிரபந்த ஆரம்பத்தில் ஆசரிக்கப் படும் –
ஆசீர் – நமஸ்க்ரியா -வஸ்து -நிர்தேசங்கள் ஆகிற மங்கள ஆசாரங்கள் இதிலும் உண்டோ என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —

அடி தொழுது எழு
என்ற இதிலே
வஸ்து நிர்தேச
நமஸ்கார
ஆசீஸ் ஸூக்களும் உண்டு–

(அடி-என்ற இதிலே வஸ்து நிர்தேசமும்
தொழுது – என்ற இதிலே நமஸ்காரமும்
எழு -என்ற இதிலே ஆசீஸ்ஸூம் உண்டு–என்றவாறு )

அதாவது
துயர் அறு சுடர் அடி -என்கையாலே வஸ்து நிர்தேசமும்
தொழுது -என்கையாலே -நமஸ்காரமும்
எழு -என்கையாலே ஆசீஸ்ஸும்
உண்டு என்ற படி .

உண்டு–
அதாவது-
இப்படி நாம் ஒரு பிரபந்தம் பண்ண வேண்டும் கருதி இருந்து இவர் செய்தது அன்றிக்கே –
நிரம்பின ஏரி நெளிக்குமா போலே -வாய்கரை மிடைந்து புறப் பட்ட சொற்கள்
இவர் பாசுரத்தாலே லோகத்தைத் திருத்தக் கோலுகிற சர்வேஸ்வரன் நினைவாலே –
சர்வ லஷணோ பேதமாக தலைக் கட்டின பிரபந்தம் ஆகையாலே –
இம் மங்கள ஆசாரங்களும் கோல் விழுக் காட்டாலே பலித்தன இத்தனை ஆகையாலே ஆய்த்து ..
அடி தொழுது எழு -என்ற இதிலே இவையும்- பண்ணப் பட்டன- என்னாதே- உண்டு – என்று விட்டது —

———————————————-

சூரணை -214-

இனிமேல் இப் பிரபந்தம் பத்து பத்தாக அவதரித்ததின் பிரயோஜனத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் —

1-சாது சனம்- நண்ணா
2-மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவார்
3-அடிமை அற- வுரிய
4-நோய்கள் அறுக்கும் உடைந்து
5-ஏற்றரும் -வானின் –
6-தாளின் கீழ் – அடிக் கீழ்
7-இன்பக் கதி- பயக்கும்
8-ஊடு புக்கு -மூஉலகும் உருகா நிற்பர்
என்னும் சாம்யத்யாலே வாச்யன் பத்தினாய தோற்றம் போலே
தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப் பத்தான இதின் ஆவிர்பாவம் —

1-சாது சனம்-நண்ணா-
அதாவது
சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு–திருவாய்-3-5-5–என்றும் –
சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சமஸ்த்தாபனர்த்தாய சம்பவாமி யுகே யுகே –ஸ்ரீ கீதை -4-8- -என்றும் –
இத்யாதிப் படியே சாது பரித்ராண துஷ்க்ருத் விநாசார்தமாக அவன் அவதரித்தாப் போலே –
இதுவும் –
நண்ணா அசுரர் நவிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த-திருவாய்-10-7-5- -என்று
பகவத் பிரதி பஷ பூதரான ஆசூர பிரக்ருதிகள் மண் உண்ணவும் –
பகவத் பக்தி பரரான தேவ பிரக்ருதிகள் வாழவும் அவதரித்தது என்றும் —

2-மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவார்
அதாவது
மயர்வற மதி நலம் அருளினன்-திருவாய்-1-1-1–என்று
அவன் அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி ஞான பக்திகளைக் கொடுக்குமா போலே –
இதுவும் –
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து உள்ளத்தை மாசறுக்கும்–திருவாய்-5-2-11 -என்று
மனசுக்கு மாஸான அஞ்ஞானத்தைப் போக்கி –
தெருள் கொள்ள சொன்ன ஓர் ஆயிரம்-திருவாய்-2-10-11–என்றும் ,
தூய ஆயிரத்து இப் பத்தால் பத்தராவார் -திருவாய்-6-4-11-என்றும்
சொல்லுகிறபடி -ஞான பக்திகளை கொடுக்கும் .என்றும் ..

3-அடிமை அற வுரிய-
அதாவது-
அடிமை அறக் கொண்டாய்-திருவாய்–4-9-6- -என்று
தனக்கு அனந்யார்ஹ சேஷமாக அவன் அங்கீகரிக்குமா போலே –
இதுவும்
உரிய தொண்டர் ஆக்கும் உலகு உண்டாற்கே–திருவாய்-6-9-11 -என்று
தத் அனந்யார்ஹ சேஷம் ஆக்கும் என்றும் ..

4-நோய்கள் அறுக்கும்-உடைந்து
அதாவது-
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே-திருவாய்-9-3-3- -என்கிறபடி-
அவன் சம்சார வியாதி பேஷஜமாம் போலே
இதுவும்
உடைந்து நோய்களை ஒடுவிக்கும் –திருவாய்-1-7-11- என்று
சாம்சாரிக சகல துக்கங்களையும் உரு மாய்ந்து போம் படி பண்ணும் என்றும் ..

5-ஏற்றரும்- வானின் –
அதாவது-
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு – திருவாய்-7-6-10–என்கிறபடி-
ஸ்வ யத்னத்தால் பிராபிக்க அரிதான பரம பதத்தை அவன் கொடுக்குமா போலே –
இதுவும்
வானின் மீது ஏற்றி அருள் செய்து -திருவாய்-8-4-11-என்று
பரமபத பிராப்தியை பண்ணுவிக்கும் என்றும்-

6-தாளின் கீழ் – அடிக் கீழ்-
அதாவது–
தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை –திருவாய்-7-5-10–என்கிறபடியே
அவன் பாத உபாதானம் போலே திரு அடிக் கீழ் சேர்த்து கொள்ளுமா போலே
இதுவும்
அருளி அடிக் கீழ் இருத்தும்–திருவாய்-8-8-11 -என்று
அவன் திரு அடிகளின் கீழே சேர்த்து வைக்கும் என்றும் —

7-இன்பக் கதி- பயக்கும்-
அதாவது—
இன்பக் கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனை -திருவாய் -7-5-11-என்றபடி-
அவன் தன்னோடு அன்வயித்தார்க்கு தன்னுடைய அனுபவம் ஆகிற நிரதிசய ஆனந்த யுக்தமான
பிராப்யத்தை கொடுக்குமா போலே –
இதுவும் –
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும்-திருவாய் -7-9-11-என்று
ஸ்வ அன்வித சேதனருக்கு பகவத் அனுபவ ஆனந்தத்தை உண்டாகும் என்றும் –

8-ஊடு புக்கு -மூஉலகும்- உருகா நிற்பர்-
அதாவது–
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தன்னை–திருவாய் -5-10-10—என்கிறபடி-
அவன் தன்னை அனுபவிக்க இழிந்தாரை த்ரவ த்ரவ்யமாம்படி வுருக்குமா போலே –
இதுவும் –
ஒன்பதோடு ஒன்றுக்கு மூ உலகும் உருகும்–திருவாய்-9-5-11- -என்றும்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய்-திருவாய்- -6-8-11–என்று
சொல்லுகிறபடி -தன்னை அனுபவிக்க இழிந்தாரை த்ரவ த்ரவ்யமாக்கும் என்றும் —

என்னும் சாம்யத்யாலே வாச்யன் பத்தினாய தோற்றம் போலே
தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப் பத்தான இதின் ஆவிர்பாவம் —
அதாவது—
இப்படி அவனோடு சாம்யம் உடைத்தாகையாலே
வாச்யனான -சர்வேஸ்வரனுடைய – பத்தினாய தோற்றம் -திருச்சந்த-79-என்கிற பத்து அவதாரம் போலே –
தோற்றங்கள் ஆயிரம் -திருவாய்-6-8-11-என்கிற இதனுடைய பத்து பத்தான ஆவிர்பாவம் என்கை ..

இத்தால் வாச்யனான ஈச்வரனோடு பலபடியாலும் சாம்யத்தை உடைத்தது ஆகையாலே
அவன் தான் லோக ரஷண அர்த்தமாக பத்து அவதாரமாய் அவதரித்தது போலே
இதுவும் லோக ரஷண அர்த்தமாக பத்துப் பத்தாக அவதரித்தது என்றது ஆய்த்து-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –205/206/207/208/209/210–

September 28, 2018

சூரணை -205-

இப்படி விமுகரான சம்சாரிகளைக் குறித்து இவ் ஆழ்வார் உபதேசித்த இது சபலமாய்த்தோ என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் ..

க்யாதி லாப பூஜ அபேஷை யற
மலர் நாடி யாட் செய்ய
உய்யக் கொண்டு
ஆரைக் கொண்டு
வாளும் வில்லும் கொண்டு
என்கிற இழவுகள் தீரப் பெற்றது ..

(க்யாதி அபேக்ஷை அற்று –பூஜா அபேக்ஷை அற்று -லாப அபேக்ஷை அற்று –
மலர் நாடி யாட் செய்ய-
உய்யக் கொண்டு என்கிற இழவும் –
ஆரைக் கொண்டு என்கிற இழவும் –
வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும் -தீரப் பெற்றது
மூன்றிலும் ஆசை அற்று மூன்று இழவுகளும் தீரப்பெற்றார் -)

க்யாதி அபேக்ஷை அற்று-
அதாவது
நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-3-3-4 -என்று
தண்மைக்கு எல்லையாகத் தம்மை நினைத்து இருக்கையாலும் ,

லாப அபேக்ஷை அற்று
அதாவது
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக -4-9-4–என்று
ஐஸ்வர்யத்தை அக்நி சமமாகக் காண்கையாலும் –

பூஜா அபேக்ஷை அற்று-
அதாவது-
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்-8-9-1- -என்று
பகவத் சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்களுக்கு தம்மை சேஷமாக நினைத்தும் –
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆள் உடையார்கள் பண்டே–9-1-1- -என்று
இப் பிரபந்தத்தில் அன்வயித்தவர்களை தமக்கு சேஷிகளாக நினைத்தும் இருக்கையாலும் —
க்யாதியிலும் லாபத்திலும் பூஜையிலும் அபேஷை அற்று —

மலர் நாடி யாட் செய்ய-
அதாவது-
நறிய நன் மலர் நாடி-5-5-11 -என்கிறபடியே –
சேஷத்வ பரிமள யுக்தமாய் ஸ்லாக்யமான ஆத்ம புஷ்பங்களைத் தேடி —
ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் -4-10-11–என்று
கைங்கர்ய ரூபமாக உபதேசிக்கையாலே ஜகத்தாக திருந்துகையாலும் —

உய்யக் கொண்டு என்கிற இழவும்-
அதாவது-
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே-4-10-9- -என்று
சம்சாரிகள் உஜ்ஜீவன நிமித்தமாக உண்டான இழவும் –
ஆரைக் கொண்டு என்கிற இழவும்
உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகோ–7-3-4- -என்று
தனக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த இழவும் ..

வாளும் வில்லும் கொண்டு என்கிற இழவும்-
அதாவது–
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை–8-3-3-என்று
அவன் சௌகுமார்யம் அறிந்து பரிகைக்கு ஒருவரும் இல்லை என்ற இழவும்
தீரப் பெற்றது என்கை ..

எல்லாரும் உஜ்ஜீவித்து
தமக்கு உசாத் துணையாய் –
அவனுக்கு மங்களாசாசனமும் பண்ணுகையாலே –
மூன்று இழவும் தீரும் இறே —

மலர் நாடி-என்கிற இதுக்கு
நறிய நன் மலர் நாடி 5-5-11-–என்கிற இது சொல்லும் போது
சர்வ வ்யாக்யானங்களிலும் -பரிமளத்தை உடையதாய் -ஸ்லாக்யமான புஷ்பங்கள்
போல ஆராய்ந்து சொன்ன ஆயிரம்-என்று பிரபந்த விசேஷணமாகச் சொல்லி இருக்கையாலே –
இவருக்கு நினைவு-(ஸ்ரீ நாயனார் நினைவு ) ஆத்ம புஷ்பங்களைத் தேடி -என்கிற இது என்று கொள்ள வேண்டும் ..
அன்றிக்கே
மலர்நாடி -என்கிற இது –
நாடாத மலர்-1-4-9- -என்கிறதை நினைத்து அருளிச் செய்தார் என்று கொள்ளில் ஒரு விரோதமும் இல்லை ..
வாடாத மலர் அடிக் கீழ் வைக்க -என்று கைங்கர்ய பிரசங்கம் உண்டு ஆகையாலே
ஆட் செய்ய -என்றதோடு சேரும் இறே-

————————————-

சூரணை -206-

இப்படி உபதேசம் பலித்ததாகில்-
பரீஷ்ய லோகான் – இத்யாதிப்படியே கர்ம பலமான சம்சார போகங்கள் -அல்ப அஸ்திரத்வாதி தோஷத்தையும் –
நித்யனான பரமாத்வானாவன்- கர்ம சாத்யன் அல்லாமையும் –அனுசந்திக்கையால் உண்டான நிர்வேதத்தோடே
சம தம உபேதனாய்- உபஹார பாணியாய்க் கொண்டு
ஸ்ரோத்ரியனாய் -ப்ரஹ்ம நிஷ்டனான ஆசார்யனை உபசத்தி பண்ண –
அவனும் –
நாசம்வச்தர வாசினே ப்ரப்ரூயாத் -என்கிறபடியே –
ஒரு சம்வஸ்தரம் பரீஷித்து பின்னை உபதேசிக்கக் கடவனாக சொல்லுகிற சாஸ்திர மரியாதையில்
சம்சாரிகள் அனுவர்திக்க இவர் உபதேசித்தார் ஆனாலோ என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

ப்ரஹ்ம நிஷ்டரும்
சம்வத்சர வாசிகளும் ஆகில்
ஏ பாவம்
பயன் நன்றாகிலும்
சேராது-

(உபதேசிக்கும் ஆழ்வார் ப்ரஹ்ம நிஷ்டராகில் -ஏ பாவம் சேராது -என்றும் –
உபதேசம் கேட்கும் மக்கள் சம்வத்சர வாசிகளாகில் -பயன் அன்றாகிலும் சேராது -என்றவாறு )

உபதேசிக்கும் ஆழ்வார் ப்ரஹ்ம நிஷ்டராகில் -ஏ பாவம் சேராது
அதாவது
உபதேஷ்டாவான இவர் ச க்ரமமாக உபசத்தி பண்ணினவனுக்கு ஒழிய உபதேசியோம்
என்று இருக்கும் ப்ரஹ்ம நிஷ்டர் ஆகில் –
அப்படி வந்து உபசத்தி பண்ணினவர்களுக்கு ப்ரீதியோடே உபதேசிக்கை ஒழிய –
அநாதிகாரிகளுக்கு உபதேசிக்கப் புக்கு –
ஏ பாவம் பரமே -2-2-2–என்றும் ,
ஒ பாவம் எனக்கு இது பரமாவதே -என்று
உபதேச உபக்ரமத்தில் வெறுத்து சொன்ன உக்தி சேராது ..

உபதேசம் கேட்கும் மக்கள் சம்வத்சர வாசிகளாகில் -பயன் அன்றாகிலும் சேராது
அதாவது
இவர் பக்கல் உபதேசம் கேட்டவர்கள் சம்வத்சர வாசிகள் ஆகில் உபஹார பாணிகளாய்
நாம் அனுவர்த்திது அன்றோ பெற்றோம் என்று இருக்கை ஒழிய –
இவருக்கு பிரதம சிஷ்யர் ஆனவர் –
பயன் நன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்–கண்ணி நுண்-10- -என்று
பிரயோஜன சூன்யர் ஆகிலும் -அவிதரே ஆகிலும் – தம்முடைய செயலாலே எல்லாம் நன்றாம் படி திருத்திக் கொள்வார் இவர் என்று –
கிருதக்ஜையாலே உகந்து சொன்ன உக்தியும் சேராது என்கை ..

இப்படி ஆச்சார்ய யுக்தியும் சிஷ்ய யுத்தியும் ஆகையாலே
முன் சொன்ன ஹேதுக்களாலே விமுகரைக் குறித்து உபதேசிக்க –உபதேச சுத்தியாலே சர்வரும் திருந்தி –
இவருடைய இழவுகள் எல்லாம் தீர்ந்தது என்றே கொள்ள வேண்டும் என்றது ஆய்த்து–

——————————————–

சூரணை-207-

இனி இப்படி பரே உபதேசர் ஆன போது பகவத் அனுபவம்
விச்சேதம்-விச்சின்னம் -ஆகாதோ என்கிற சங்கையில் மேல் அருளி செய்கிறார் —

மெய் நின்று
மங்க ஓட்டுக்கு நடுவு
அநுபவ கர்ப்ப உபதேசம் —

(அநுபவ கர்ப்ப உபதேசம்-அனுபவம் மனசிலே செல்லா இருக்கும் பொழுதே உபதேசம் என்றவாறு
உபதேச கர்ப்ப அனுபவம் -அனுபவ கர்ப்ப உபதேசம் -இரண்டும் உண்டே –
ஓன்று பிரதானம் -மற்ற ஓன்று கர்ப்பம் உள்ளடங்கி இருக்கும் என்றவாறு -)

அதாவது
மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே–திருவிருத்தம் –1- -என்றது முதல்-
மங்க ஒட்டு உன் மா மாயை -திருவாய்-10-7-10–என்கிறது அளவாக
நடு உள்ள நான்கு பிரபந்தங்களும் அனுபவம் உள்ளே நில்லாச் செய்தே இருக்கும் பர உபதேசம் என்கை ..
இவர் தமக்கு அனுபவ கர்பமான உபதேசமும் ,உபதேச கர்ப்பமான அனுபவமுமாகவே செல்லும் என்று இறே
நம் முதலிகள் அருளிச் செய்வது ..
ஆகையால் இவருக்கு அனுபவ விச்சேதம் ஒருக்காலும் இல்லை இறே —

(பத்துடை அடியவர்க்கு எளியவன் -உபதேசம் -எத்திறம் -எளிவே-அனுபவம் -1-3-
மேவலுறுவீர் 1-6-1–உபதேசம் -எது பணி என்னாது 1-6-2–உபதேசம் –
ஈடும் எடுப்பும் இல் ஈசன் -என் நா-அனுபவம் -1-6-3-மீண்டும் உபதேசம் அதே பதிகத்தில் – )

ஆக இப்படி இவருடைய
பர உபதேச விஷயங்களும் –
உபதேச ஹேதுக்களும் –
உபதேச சாபல்யமும் –
உபதேசம் தான் அனுபவத்தை விட்டு இராது
என்னும் இடமும் சொல்லிற்று ஆய்த்து —

——————————————–

சூரணை-208-

இப்படி இவ் ஆழ்வார் உடைய அனுபவ உபதேச ரூபமான பிரபந்த சதுஷ்டயமும் –
ரஹஸ்ய த்ரயார்த்த பிரதி பாதகமாய் இருக்கும் படி பிரகாசிப்பதாக நினைத்து
உபக்ரமிக்கிறார் மேல் —

இவற்றுக்கு
மந்த்ர
விதி
அநுசந்தான
ரஹஸ்யங்களோடே
சேர்த்தி ..

(மந்த்ர ரஹஸ்யம் -திருமந்திரம் /விதி ரஹஸ்யம் -சரம ஸ்லோகம் /அனுசந்தான ரஹஸ்யம் -த்வயம் )

அதாவது
மெய் நின்று மங்க ஓட்டுக்கு நடுவு –என்று கீழ் பிரஸ்துதமான இப் பிரபந்தங்கள் நாலுக்கும் –
சகல சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தையும் –சம்சய விபர்யம் அற-பிரதிபாதிக்கு மவையாய் –
சர்வம் அஷ்டாஷர அந்தஸ்தம் -ஸ்ரீ பாஞ்சராத்ரம் – என்னும் படி
சகல சாஸ்திர ஸங்க்ரஹமான திரு மந்த்ரமும் —
சித்தோ உபாய வர்ணத்தை சாங்கமாக விதிக்கும் சரம ஸ்லோஹமும் –
உபாய உபேய வர்ண பிரார்த்தனைகளை -ச க்ரமமாக-பிரகாசிப்பியா நின்று கொண்டு –
கால ஷேபத்துக்கும் –
போகத்துக்குமாக –
சாரஜ்ஞ்ஞராலே சதா அநுசந்தானம் பண்ணப் படும்
த்வயமும் ஆகிய ரஹஸ்யதோடே சேர்த்தி என்கை ..
(உபாய வரணமும் உபேய பிரார்த்தனையும் தானே பூர்வ உத்தர வாக்ய விஷயம்
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -கால ஷேபம் -த்வயம் சொல்லி உதடு துடிக்கும் –
த்வயம் அர்த்த அனுசந்தானம் சதா -ஸ்ரீ நம்பெருமாள் ஸ்ரீ பாஷ்யகாரருக்கும் ஆஜ்ஜை )

——————————————

சூரணை-209-

அதில் எந்த பிரபந்தத்துக்கு எந்த ரஹஸ்யத்தோடே சேர்த்தி என்னும்
ஆ காங்க்ஷையில் அத்தை இட்டு அருளிச் செய்கிறார் மேல் —

அளிப்பான் அடியேன் அடைக்கலம் சூடிய
பொய் யாதானும் அழுந்தார் என்று
ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் –
தாமரை உந்திப் பெரு மா மாயன்
ஆளாகவே வாழிய என்று -பிராப்ய பலங்களையும் –
நெறி காட்டி மனத்துக் கொண்டு
கண்ணனால் அடித்துக்
கண்டிலமால் யாதாகில் என்று
உபாயத்தையும் சொன்னவை
மந்த்ர ஸ்லோஹங்களோடே சேரும் ..

(மந்த்ர ஸ்லோகங்கள் என்றது திருமந்த்ரத்தையும் சரம ஸ்லோகத்தையும்
திரு விருத்தம் -பிரணவம் நமஸ்
நாராயணாயா திருவாசிரியம்
சரம ஸ்லோகம் பெரிய திருவந்தாதி )

1-அளிப்பான்
அதாவது
உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -திருவிருத்தம்-1-– என்று
பிரணவத்தில் பிரதம அஷரத்தில் தாத்வர்தமான பகவத் ரஷகத்வையும் —

2-அடியேன்
அதாவது
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -திருவிருத்தம் -1–என்று
தத் ரஷ்ய பூதமாய் -சதுர்த்தி -உகாரங்களில் -சொல்லுகிற படியே
தத் அநந்யார்ஹ சேஷமாய் -பிரக்ருதே பரமாய் –ஞான ஆனந்த லஷணமாய்-
த்ருதீய அஷரத்தில் சொல்லப் படுகிற ஆத்ம ஸ்வரூபத்தையும் —

3-அடைக்கலம்
அதாவது
பிரதம அஷரத்தில் சதுர்த்தி சம் பிரதானத்திலேயாய் –
ப்ரஹ்மணே த்வாமஹச ஒமித்யாத்மானம் யுஞ்ஜீத-தைத்ரியம் -என்ற படி –
பிரணவத்துக்கு ஆத்ம சமர்பணமும் அர்த்தம் ஆகையாலே –விரோதி பயத்தாலே கலங்கின தசையிலே –
அடியேனடி யாவி யடைக்கலம்-திருவிருத்தம்-85- -என்று
அந்த ஆத்ம சமர்ப்பணைத்தையும் –
(பேர் உதவிக்கு கைம்மாறா -தோள்களை ஆரத்தழுவி அறவிலை செய்தனன் –
பின்பு தான் தோள்கள் ஆயிரத்தாய் பணைத்தன-பிரதானம் -சமர்ப்பணம் -)

4-சூடிய
அதாவது
திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்–திருவிருத்தம்-100–என்று
பிரணவோக்தமான பகவத் அனந்யார்ஹ சேஷத்வம் ததீய சேஷத்வத்தையும்-
(அடியார்க்கு ஆட்படுத்த வல்ல விமலன்-நமஸ் சப்தார்த்தம் ததீய சேஷத்வ பர்யந்தம் )

5-பொய் யாதானும்
அதாவது
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -திருவிருத்தம்-1–என்றும் ,
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டு ஆப்பு அவிழ்ந்தும் -திருவிருத்தம்-95–என்றும்
ஷஷட் யந்தமான ம காரத்தில் சொல்லப் பட்ட -அஹங்கார மமகாரங்களாகிற –
அனாத்ம அன்யாத்ம புத்யாதி ரூப அவித்யையும்-
தத் கார்யமான அக்ருத்ய கரணாதிகளையும்-
தத் காரயமாக வரும் தேவ மனுஷ்யாதி ரூபமான பிரகிருதி சம்பந்தத்தையும் –

6=அழுந்தார்-என்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் –
அதாவது-
இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல்
பொய்ந்நிலத்தே –திருவிருத்தம் -100- என்று
தத் நிஷேத வாசியான நஞ்சாலே சொல்லப் பட்ட -அவித்யை முதலாக சம்சார கர்தமம் ஈறாக –
உள்ள விரோதி நிவ்ருத்தியையும் சொல்லுகையாலே –

சர்வ ரஷகனான சர்வேஸ்வரனுக்கு (அகார வாச்யன் உயிர் அளிப்பான் )
அனந்யார்ஹ சேஷமாய் —
ஞான ஆனந்த லஷணமாக ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தையும்
சம்சார ஹேது பூத அவித்யாதிகளான விரோதிகளின் நிவ்ருத்தியையும்
பிரதிபாதிக்கிற –திரு விருத்தம் -பிரதம மத்யம-பதங்கள் இரண்டோடும் சேர்ந்து இருக்கையாலும் –
( ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் -பிரணவம் -மகாரம் -நம )

7-தாமரை உந்திப் பெரு மா மாயன்-
அதாவது-
தாமரை உந்தி தனிப் பெரும் நாயக –திருவாசிரியம் -1-என்று தொடங்கி
எம் பெரு மா மாயன்–திருவாசிரியம் -5- -என்று தலைக் கட்டுகையாலே –
நாராயண -பதத்தில் சொல்லப் படுகிற -உபய விபூதி யுக்தமான பிராப்ய வஸ்துவையும் –

8-ஆளாகவே வாழிய என்று-என்று -பிராப்ய பலங்களையும்
அதாவது-
தனி மா தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல் –திருவாசிரியம் -3 என்றும் –
ஊழி தோறு ஊழி ஓவாது வாழிய என்று யாம் தொழ இசையும் கொல் -திருவாசிரியம்-4–என்றும் –
அந்த பதத்தில் சதுர்த்திய அர்த்தமான பல ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே –
பிராப்ய -பலன்கள்- இரண்டையும் சொல்லும் திரு வாசிரியம் —
(ததீய சேஷத்வ பர்யந்தம் பிரார்த்தனாயாம் சதுர்த்தி -ப்ராப்யம் -நாராயண ப்ரக்ருதி -/ பலன்கள் -ஆய-ப்ரத்யயம் )

பிரகிருதி பிரத்யய அம்சங்களாலே –தத் உபய பிரதி பாதகமான த்ருதீய பதத்தோடு
சேர்ந்து இருக்கையாலும் -இரண்டு பிரபந்தமும் -திரு மந்த்ரத்தோடு சேரும் —

9-நெறி காட்டி-
அதாவது-
நெறி காட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி -6–என்று
உபாயாந்தரங்களைக் காட்டி என்னை அகற்றப் பார்க்கிறாயோ என்கையாலே –
சர்வ தர்மான் பரித் யஜ்ய–ஸ்ரீ கீதை-18-66 -என்ற உபாயாந்தரங்களின் பரி த்யாஜ்யத்தையும் —

10-மனத்துக் கொண்டு-
அதாவது-
வெம் கோட்டு ஏறு ஏழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டு -பெரிய திருவந்தாதி-48-– என்று
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை-18-66–என்கிற மானஸ அத்யாவச்ய ரூபமான -உபாய ஸ்வீகாரத்தையும்-

11-கண்ணனால் அடித்து-
அதாவது-
சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன்
கண்ணனால் யான் -பெரிய திருவந்தாதி-25-என்றும் –
எம் இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து வல் வினையைக் கானும் மலையும்
புகக் கடிவான் பெரிய திருவந்தாதி-26-என்றும்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று
உபாய பூதன் பண்ணும் சர்வ பாப விமோசனத்தையும் —
(அஹம்-மாம் என்னும் தொட்டு உரைத்த சொல் -கண்ணன் பாசுரத்தையே எடுத்துக் காட்டி அருளுகிறார் –
உபாய பூதன் -அருள் இரக்கம் உபாயம் -எனவே இரண்டு பதங்கள் )

12-கண்டிலமால்-
அதாவது-
வானோ மறி கடலோ பெரிய திருவந்தாதி-54-என்று தொடங்கி –வன் துயரை -மருங்கு -கண்டிலமால்–என்று
விரோதிகள் ஆனவை போன இடம் தெரியாத படி தன்னடையே விட்டு போய்த்து என்கையாலே –
நானும் வேண்டா நீயும் வேண்டா – அவை தன்னடையே விட்டு போம் -என்கிற நிஜர்தத்தையும் —

13-யாதாகில் என்று-உபாயத்தையும் சொன்னவை-
அதாவது-
அடர் பொன் முடியானை–பெரிய திருவந்தாதி-70 -என்று தொடங்கி – யாதாகில் யாதே இனி -என்று –
இனி கர்மம் இருந்து என் -நசித்து என் -எதனால் நமக்கு என் வரும் -என்று
மா ஸூ ச -என்கிற பதத்தால் பலிதமான
நிர் பரத்வ அனுசந்தானத்தையும் – சொல்லுகையாலே

உபாய பிரதி பாதகமாய் இருக்கிற பெரிய திரு அந்தாதி -சரம ஸ்லோகத்தோடே சேரும் என்கை ..

14-உபாயத்தையும் சொன்னவை-என்று சொன்ன பிரபந்தங்கள் என்ற படி ..
( உம்மைத் தொகை கீழே ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் -ப்ராப்ய பலன்களையும் -அருளிச் செய்ததால் –
ஓங்காரம் அர்த்தம் அறிந்து திருட்டு போக்கி -நமஸ் அர்த்தம் அறிந்து பஞ்சம் போக்கி –
நாராயண அர்த்தம் அறிந்து வியாதி போக்கி -)

———————————–

சூரணை -210-

சரம பிரபந்தமான திரு வாய் மொழியின் த்வயார்த்த பிரதிபாதகத்வம் விஸ்த்ரேண உபபாதிக்க வேண்டுகையாலும்
தத் விஷயமாக தம்முடைய திருத் தமையனார் பிள்ளை ஒரு பிரபந்தம் முன்பே இட்டு அருளுகையாலும் –
அதிலே தர்சிப்பித்து விடக் கடவோம் என்று மேலே அருளுகிறார் ..
(ஸூகாச்சார்யார்-9-அத்யாயம் கடைசியில் சுருக்கமாக அருளிச் செய்து –
வால்மீகி விவரித்து அருளிச் செய்ததால் -அங்கே கண்டு கொள்ள – அதே போலவே இங்கும் )

த்வயார்தம்
தீர்க்க சரணாகதி
என்றது
சார சங்கரஹத்திலே-

அதாவது
திருவாய்மொழி பத்து பத்தாலும்
ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக
த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே ,
த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது –
பிள்ளை அருளிச் செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில் என்கை —

அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்-
அகில ஜகத் ஹித அநு சாசன பரமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக –
பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் –
சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –
நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை – பிரதி பாதிக்கையாலே –
த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் –
பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது –அதாகிறது –

1-ஸ்ரீ யபதித்வம்
2-நாராயணத்வம்
3-நாராயண னுடைய சர்வ லோக சரண்யமான -சரணார விந்த யுகளம்
4-அதினுடைய ப்ராபகத்வம்
5-தத் கோசரமாய் -சேதனகதமாய் இருந்துள்ள -பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம்
(நம்பிக்கையை உள்ளடக்கிக் கொண்ட பிரார்த்தனை வேண்டுமே )

6-லஷ்மி தத் வல்லபர் உடைய -நிகில ஆத்ம கைங்கர்ய -( பிரார்த்தனா-) பிரதான அர்த்தமான நித்ய சம்பந்தம்
7-கைங்கர்ய பிரதி சம்பந்தியான -ஈஸ்வரனுடைய -நிரதிசய போக்யதை
8-சர்வ ஸ்வாமித்வம்
9-நித்ய கைங்கர்யம்
10-கைங்கர்ய பிரதி பந்தக நிச்சேஷ நிபர்ஹணம் -ஆகிய அர்த்த விசேஷங்கள் ..

ஈத்ருசார்த்த விசேஷ பிரகாசமான மந்த்ர விசேஷத்தின் உடைய விவரண ரூபமாய் –
பௌருஷேய உபநிஷத்தாய் இருந்துள்ள -திரு வாய் மொழியில் -பத்து பத்தாலும் –
(அது போலே தான் தோன்றி இல்லையே இது)
இப் பத்து அர்த்தத்தையும் நம் பூர்வ ஆச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து போருவர்கள்-

(நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று ஏக சிந்தையனாய் -சரணவ் சரணம் பிரபத்யே அர்த்தம்
அஷ்ட ஸ்லோகி -பட்டர் இதே பத்து அர்த்தங்களை த்வயத்துக்கு அருளிச் செய்கிறார்
நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-5-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
நேத்ருத்வம்- நித்ய யோகம் -இரண்டும் ஸ்ரீ யபதித்வம் இத்யாதி -ஆறும் நாலும்-இங்கே ஐந்தும் ஐந்தும் –
உத்தர வாக்ய நாராயண -போக்யத்வமும் ஸ்வாமித்வமும் -ஏழாம் பத்தும் எட்டாம் பத்தும் –
பன்னீராயிரப்படியில் -அர்த்த பஞ்சக பரமாக–பரமாத்மா -ஜீவாத்மா -உபாயம் -அநிஷ்ட ஹாநீம் -இஷ்ட ப்ராப்யம்
தேசிகன் -உபாயத்வம் -ப்ராப்யத்வம் -கல்யாண திரு மேனி -ஐஸ்வர்யம் -அடுத்த ஆறும் இதன் விளக்கம் -என்பர்
தாரகம் -போஷகம் -போக்யம்
சேஷத்வம் பாரதந்தர்யம் கைங்கர்யம் -இளைய பெருமாள் பரதன் சத்ருகன்
திருவடி திருமேனி திரு மார்பு-ரஹஸ்யத்ரயம்
அநந்ய கதித்வம் -அநந்ய பிரயோஜனம் -த்வயம்
பகவத் கிருபை வர்த்தகம் -ப்ரீதி வர்த்தகம் -இவை இரண்டும்
இரக்கம் இனிமை -த்வயம்
அசித் வ்யாவ்ருத்தி -ஈஸ்வர வ்யாவ்ருத்தி காட்ட த்வயம் -பிராட்டியால் பேறு இதில் – )

அதில் முதல் பத்தால்-
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்-1-3-1 -என்றும் ,
மலராள் மைந்தன் -1-5-9–என்றும் ,
திரு மகளார் தனிக் கேள்வன்-1-6-9- -என்றும் ,
திருவின் மணாளன் -1-9-1–என்றும் ,
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3–என்றும் ,
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4–என்றும்
ஸ்ரீ யபதித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து ..

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7–என்றும் ,
எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1–என்றும் ,
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -2-7-2-– என்றும்
நாராயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து-

மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9–என்றும் ,
அம் கதிர் அடியன் -3-4-3–என்றும் ,
அவன் பாத பங்கயம்-3-6-4- -என்றும் ,
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10–என்றும் ,
மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியான் -3-8-1–என்றும் ,
நாராயண னுடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து ..

நாலாம் பத்தாலே –
இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4-2-8–என்றும் ,
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11–என்றும் ,
தொல் வினை தீர-4-4-11 -என்றும் ,
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே-4-5-2- -என்றும் ,
மேவி நின்று தொழுவார் வினை போக-4-5-4- -என்றும் ,
பிறந்தும் செற்றும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்-4-7-7- -என்றும் ,
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்று இவை ஒழிய-4-9-7- -என்றும் ,
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திருவடி கண் கூட்டினை -4-9-9–என்றும் ,
அக்தே உய்யப் புகும் ஆறு -4-1-11–என்றும் ,
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும்
அநிஷ்ட நிவ்ருத்த இஷ்ட ப்ராப்தி கரத்தவ லஷணமான ப்ராபகத்வம் பிரதிபாத்யம் ஆய்த்து-

அஞ்சாம் பத்தில் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2–என்றும்
ஆர் எனக்கு நின் பாதமே சரணாக -5-7-10–என்றும் ,
உன்னால் அல்லால்-5-8-3- -என்றும் ,
கழல்களையே சரணாக கொண்ட-5-8-11- -என்றும் ,
நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென்குருகூர் சடகோபன்-5-9-11 -என்றும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய்-5-10-11- -என்றும்
தத் கோசரமாய் சேதனகதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாத்யம் ஆய்த்து-

ஆறாம் பத்தில் –
திரு மா மகளிரும் தாம் மலிந்து-6-5-8- -என்றும் ,
அடிமை செய்வார் திரு மாலுக்கே -6-5-11–என்றும் ,
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன்-6-7-8- -என்றும் ,
என் திரு மார்வற்கு -6-8-10-என்றும் ,
கோலத் திரு மா மகளோடு உன்னை -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரதான அர்த்தமான லஷ்மி தத் வல்லபர்களுடைய நித்ய சம்பந்தம் பிரதி பாத்யம் ஆய்த்து –

ஏழாம் பத்தால் –
கன்னலே அமுதே-7-1-2- -என்றும்
கொடியேன் பருகு இன் அமுதே -7-1-7–என்றும் ,
அலை கடல் கடைந்த ஆர் அமுதே-7-2-5- -என்றும் ,
திரு மாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ-7-9-9- -என்றும் ,
இவ் எழ உலகை இன்பம் பயக்க-7-10-1–என்றும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதி பாத்யம் ஆய்த்து ..

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய அம்மானே -8-1-3- -என்றும் ,
விண்ணவர் கோன் தங்கள் கோனை-8-2-2- -என்றும் ,
அமர்ந்த நாதனை -8-4-10–என்றும் ,
மூ உலகாளி-8-9-5–என்றும் ,
நேர் பட்ட நிறை மூ உலகுக்கும் நாயகன்-8-9-11- -என்றும்
சர்வ ஸ்வாமித்வம் பிரதி பாத்யம் ஆய்த்து-

ஒன்பதாம் பத்தால்
பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து -9-2-1–என்றும் ,
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல்–9-2-2–என்றும் ,
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3–என்றும் ,
கொடி வினையேனும் பிடிக்க-9-2-10- -என்றும் ,
உறுவது இது என்று உனக்கு ஆட் பட்டு-9-4-4- -என்றும் ,
ஆட் கொள்வான் ஒத்து-9-6-7- -என்றும் ,
நானும் மீளா அடிமை பணி செய்யப் புகுந்தேன்-9-8-4- -என்று
நித்ய கைங்கர்யம் பிரதி பாத்யம் ஆய்த்து —

பத்தாம் பத்தால் –
துயர் கெடும் கடிது -10-1-8–என்றும் ,
கெடும் இடராய -10-2-1–என்றும் ,
எழுமையும் ஏதமும் சாரா -10-2-2–என்றும் ,
தீரும் நோய் வினைகள் எல்லாம்-10-2-3- -என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5–என்றும் ,
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்-10-3-9- – என்றும் ,
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் -10-4-7–என்றும் ,
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3–என்றும் ,
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-4-9–என்றும் ,
அமரா வினைகளே -10-5-9–என்றும் ,
கடு நரகம் புகல் ஒழித்த -10-6-11–என்றும் ,
பிறவி கெடுத்தேன்-10-8-3- -என்றும் ,
தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -10-8-5–என்றும் ,
அந்தி தொழும் சொல்லு-10-8-7- -என்றும் ,
அவா வற்று வீடு பெற்ற-10-10-11- -என்றும்
கைங்கர்ய பிரதிபந்தக நிசேஷ்ய நிபர்ஹணம் பிரதிபாத்யம் ஆய்த்து —

இப்படி ஸ்ரீ யபதித்ய பிரமுகங்களாய் –கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்கண பர்யந்தங்களாய் இருந்துள்ள
உபாதேயார்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள –
வாக்ய த்வயமும் –திரு வாய் மொழியும் –
பகவத் சரணார்த்திகளாய் – அநந்ய உபாயராய் இருக்கும் அதிகாரிகளுக்கு –
கால ஷேப ஹேதுவாகவும்-
போக ஹேதுவாகவும் —
ஈஸ்வர ப்ரீதி ஹேதுவாகவும் –
யாவச் சரீர பாவம் அனுசந்தேயம் -என்று அருளிச் செய்த இப் பிரபந்தம் என்கை –

இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாகத்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே –
ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிரபந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து ..

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –199/200/201/202/203/204–

September 28, 2018

சூரணை -199-

இப்படி இவர்கள் இருவருக்கும் பலகாலம் உபதேசிகைக்கு ஹேது ஏது என்னும்
ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் ..
( கீழே பிரயோஜனம் சொல்லி இதில் காரணம் –
உபதேசத்தால் மீளாத போது அவனை அழகால் திருத்தும் -நம்மை அருளாலே திருத்தும் –
வாலப்யமும் கிருபையும் போலே-)

கதிர் ஞான மூர்த்திக்கு
உணர்த்துவது பிரேமத்தாலே —
தமஸ் மூடுவாருக்கு
வேட்கை எழுவிப்பது ஞானத்தாலே ..

கதிர் ஞான மூர்த்திக்கு-உணர்த்துவது பிரேமத்தாலே
அதாவது
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய்–திருவாய்-6-2-8–என்று
சம்ஹ்ருதி சமயத்தில் சகல சேதன அசேதனங்களையும் ஒக்கக் கலசி —
சிருஷ்டி சமயத்தில் ஒருவர் கர்மம் ஒருவர் இடம் கலசாத படி –
பிரித்த இடத்திலும் தன் ஸ்வரூபத்துக்கு ஒரு பேதம் இன்றிக்கே –
அத்வீதியமாய் -அபரிசேத்யமான கீர்த்தி சமுத்ரத்தை உடைத்தாய் இருக்கிற
பிரபா ரூபமான ஜ்ஞானத்தை வடிவாக உடையவன் ஆகையால் சர்வஜ்ஞ்ஞனாய் இருக்கிறவனுக்கு –
உனக்கு ஓன்று உணர்த்துவன்–திருவாய்-6-2-5- -என்று
உபதேசிகிறது —தத் விஷய பிரேமத்தாலே ..

தமஸ் மூடுவாருக்கு-வேட்கை எழுவிப்பது ஞானத்தாலே
அதாவது
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக கொள் என்று தம மூடும்-திருவாய்-4-9-4- -என்று
ஐஸ் வர்யம் விநாச ஹேதுவாக காணா நிற்கச் செய்தே
பின்னையும் அத்தை ஸ்வீகரிக்கும் படி தமோ அபிபூதராக நிற்கும் சம்சாரிகளுக்கு –
நின் கண் வேட்கை எழுவிப்பன்–திருவிருத்தம்-96–என்று
தம் உபதேசத்தாலே பகவத் பக்தியை ஜனிப்பிக்கிறது ..
தத் சம்பந்தம் அடியாக அவர்களை விடமாட்டாதே திருத்தி
தம்மோபாதி பகவத் அனுபவ பரராக்க வேணும் என்கிற ஞானத்தாலே என்கை ..
(பர உபகார சிந்தன ஞானம் என்றபடி )

————————————————

சூரணை -200-

இப்படி ஞான பிரேமங்கள் இரண்டும் காரணமாக சொல்லுவான் என் –
பர துக்க அசஹிஷ்ணுத்வம் அன்றோ பர உபதேசத்துக்கு பிரதான காரணம்
என்ன அருளிச் செய்கிறார் மேல் ..
(பர துக்க என்றது -பரன் துக்கம் என்றும் பிறர் துக்கம் என்றும் -பரகாலன் -அவனுக்கும் பற சமயிகளுக்கும் போலவே –
இதே போலே பர உபதேசம் என்றதும் பிறருக்கும் பரனுக்கும் –
துக்கம் என்றது அநர்த்தம் அடியாக துக்கம் பிறருக்கு -அவனுக்கு துக்கம் நேராகவே அர்த்தம் -)

உயிர் மாய்தல்
ஆழும் என் ஆர் உயிர் என்னும்
பர துக்கம் சஹியாமை
இரண்டிலும் உண்டு-

(உயிர் மாய்தல்-என்னும் பர துக்கம் சஹியாமை-ஞானத்திலும் உண்டு –
ஆழும் என் ஆர் உயிர் என்னும் பர துக்கம் சஹியாமை பிரேமத்திலும் உண்டு )

உயிர் மாய்தல்-என்னும் பர துக்கம் சஹியாமை-
அதாவது-
கொண்டாடும் குலம் புனைவும் -என்று தொடங்கி-
தமர் உற்றார் விழு நிதியும் வண்டார் பூங்குழலாலும் மனை ஒழிய உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன் -என்று
சம்சாரிகள் பாரிக்கிற பாரிப்பும் –
முடிந்து போகிற படியும் -கண்டு ஆற்ற மாட்டுகிறிலேன் என்கையாலே
பரருடைய துக்கம் சஹியாமையும் –

ஆழும் என் ஆர் உயிர் என்னும் பர துக்கம் சஹியாமை-
அதாவது-
அசுரர்கள் தலைப் பெய்யில் எவம் கொல் ஆங்கு ஆழும் என் ஆர் உயிர்-திருவாய் -10-3-8- -என்று
அசுரர்கள் வந்து கிட்டினால் -அங்கு என்னாய் விளையுமோ என்று -என் ஆத்மாவானது தரைப் படா நின்றது என்கையாலே –
பரனான -ஈஸ்வரனுடைய துக்கம் சஹியாமையும் –

இருவருக்கும் உபதேசிகைக்கு ஹேதுவான சொன்ன ஞான பிரேமங்கள் இரண்டிலும் என்கை ..

இத்தால்
ஞான பிரேமங்கள் இரண்டும் பர துக்க அசஹிஷ்ணுவத்தை ஒழிந்து இராது என்றது ஆய்த்து ..
( ஞானம் கலந்த பர துக்க அஸஹிஷ்ணுத்வம் என்றும் ப்ரேமம் கலந்த பர துக்க அஸஹிஷ்ணுத்வம் என்றபடி -)

——————————————–

சூரணை -201-

இப்படி பிரேம மாத்ரத்தால் அன்றிக்கே –
ஈஸ்வரன் நினைவாலே -அவனுக்கு தாம் ஆத்மா பூதர் ஆகையாலும் –
அவனுக்கு தீங்கு வரப் பொறுக்க மாட்டார் என்னும் அத்தை தர்சிப்பிகிறார் மேல் ..

என்னது உன்னதாவியிலே
அறிவார் ஆத்மா என்று
அவன் மதம் தோன்றும் ..

என்னது உன்னதாவியிலே
அதாவது
என்னது உன்னதாவியும் -திருவாய் -4-3-8-என்று
உன்னுடைய திவ்ய ஆத்மா ஸ்வரூபம் நான் இட்ட வழக்கு என்ற இடத்தில் –
( தத் தவம் அஸி -லோகத்தை சொல்லி ஸ்வேதகேது நீயும் ப்ரஹ்மத்துக்கு சரீரம் –
என்னது உன்னதாவி பாசுரத்தில் தம்மைச் சொல்லி லோகத்தையும் சொல்கிறார் ஆழ்வார் -)

அறிவார் ஆத்மா-என்று-
அதாவது-
அறிவார் உயிர் ஆனாய் -6-9-8–என்று
அறிவாரை உயிராக உடையவன் என்னும் படி –
ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் –ஸ்ரீ கீதை -7-18–என்று ,
ஜ்ஞானி யானவன் எனக்குத் தாரகனாகவே என்னுடைய மதம் என்று அருளிச் செய்த படியே
இவரை அவன் தனக்கு ஆத்மாவாகவே நினைத்து இருக்கிற ஆகாரம் தோன்றும் என்ற படி ..

ஆகையால் அவனுக்கு ஒரு துக்கம் வரப் பொறுக்க மாட்டார் என்று கருத்து ..

(கலியனும்-என் ஆவி ஒப்பர் -2-8-8-/ பத்தராவி நித்திலத்தொத்து -அங்கும் அறிவார் ஆத்மா போலே )

(உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -என்னும் இந்த திருப் பாசுரத்துக்கு ஸ்ரீ ஆளவந்தார் பொருள் அருளிச் செய்ய
கேட்டிருந்த முதலிகளில் சிலர் -இவ்வாத்மாவின் ஸ்வரூபம் பரமாத்மா இட்ட வழக்கு என்னக்கூடும்-
பரமாத்மாவின் ஸ்வரூபம் ஜீவாத்மா இட்ட வழக்கு என்பது என் -என்று கேட்க
இவன் தன்னை அவனுக்கு ஆக்குவன் என்ற அன்று கர்மம் தடை செய்யவும் கூடும்
சர்வேஸ்வரன் தன்னை இவன் இட்ட வழக்கு ஆக்கும் அன்று தடை செய்பவர் இலர் –
ஆனபின்பு அதுவே நிலை நிற்பது –
மேலும் இவன் ஸ்வரூபம் அவன் இட்ட வழக்கு ஆகக் கூடுமோ -என்று
இதிலே காணும் சந்தேகிக்க வேண்டுவது -என்று அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார் )

—————————————————

சூரணை -202-

ஆக ஜீவேச்வரர்களுக்கு பல காலும் ஹிதாஹிதங்கள் சொல்லுகைக்கு ஹேதுக்களை
தர்சிப்பித்தாராய் நின்றார் கீழ் —
இப்படி இவர் உபதேசிப்பர் ஆனாலும் ,
சிஷ்ய லக்ஷண யோக்யதை இல்லாத ஈஸ்வரன் உபதேசத்துக்கு
முக்ய பாத்ரம் அன்றே என்னும் ஆ காங்க்ஷையில் அருளி செய்கிறார் மேல் —
(சிஷ்ய லக்ஷணம் ஆச்சார்ய லக்ஷணம் பூர்த்தி
கூரத்தாழ்வானுக்கும் ஈஸ்வரனுக்கும் -11-வகை லக்ஷணங்கள் இங்கே உண்டே )

இருத்தும் எண் தானாய்
பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய்
ஷூத் த்ருட்பீடித
நிர்தனரைப் போல்
கண்டு கொண்டு உண்டு பருகி
பரிஜநாதிகளோடே தன்னைத் தந்து
என் செய்வன் என்றே இருந்து
அகில பரத்தையும் சமர்ப்பிக்க
அது சுமந்து அல்லு நன் பகலும் போகு
என்றாலும் அகல்வானும் அல்லனாய்
போகேல் என்றால் உகப்பையும் தவிர்ந்து
விதி வகையே நடத்துமவனே
உபதேச சத் பாத்ரம்-

(ஷூத் த்ருட்பீடித நிர்தனரைப் போல் கண்டு கொண்டு உண்டு பருகி
அதாவது
ஷூத் பீடிதனைப்-பசி உள்ளவனைப் – போல் உண்டு –
த்ருட்பீடிதனைப் -நீர் வேட்கை உள்ளவனைப் – போல் பருகி
நிர்தனரைப்-வறியவனைப் – போல் கண்டு கொண்டு -)

அதாவது –
சஸ் சிஷ்யனானவன் ஆச்சர்யனை
1-தத் அபிமத ஸ்தலத்திலே வைத்து –
2-தத் சந்த அனுவர்த்தியாய் –
3-தத் விக்ரகத்திலே புரை அற்ற விருப்பம் உடையவனாய் –
4-சகல சிநேகத்தையும் அவன் பக்கலிலே பண்ணி –
5-தத் இதரங்களிலே சங்கம் அற்று –
6-மிடியனும் பசியனும் விடாயனும் -தனம் சோறு தண்ணீர் -பெற்றார் போலே –
அத்யபிநிவேசத்தோடே அவனை அனுபவித்து
7-சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத் குருப்யோ நிவேதயத் –விஹகேஸ்வர சம்ஹிதை –என்கிற படியே –
தன் ஆத்மா ஆத்மீயங்களை ஆச்சர்யனுக்கு சமர்ப்பித்து
8-எல்லாம் செய்தாலும் –
க்ருத்ஸ்னாம் வா ப்ருதிவீம் தத்யாத் நதத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே –
ஆசார்யன் பண்ணின மகோ உபகாரத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே -குறைவாளனாய் –
9-ஆசார்யன் தன்னுடைய தேக யாத்ரா பரம் எல்லாம் தன் மேலேயே பொகட்டு இருக்க –தான் அது அடங்கலும் சுமந்து –
10-திவாராத்ரா விபாகம் அற-அவனைப் பிரியாதே -அவன் நிக்ரஹித்து போ என்றாலும் போகாதவனாய் —
11-அவனுக்கு அநிஷ்டம் ஆனால் தனக்கு உகப்பான வற்றையும் விட்டு –ஆசார்யன் விதித்த படியே நடத்தும் அவன் ஆகையாலே —

எம்பெருமானும் –
1-இருத்தும்-
அதாவது-
இருந்தும் வியந்து என்னை தன் பொன் அடிக் கீழ் –திருவாய்-8-7-1–என்று
இவருக்கு அபிமதமான இடத்தில் இவரை இருத்தி —
(நிராங்குச ஸ்வ தந்த்ரனின் அத்யந்த பரதந்தர்ய கார்யம் அன்றோ இது )

2-எண் தானாய்-
என் எண் தானான்-திருவாய்-1-8-7- –என்று
இவர் நினைவிலே ஒழுகுவானாய்-
(எனக்கு கை புகுந்தான் -என் எண்ணத்தை அவனும் கொண்டவனானான் -திருநகரி வந்து
ஆழ்வார் தமர்கள் உடன் கூடி இருந்து குளிர எண்ணினான் –
ஆச்சார்யர் சிஷ்யன் ஸ்வரூபத்தை பேணக்கடவன்-சிஷ்யன் ஆச்சார்யர் தேகத்தைப் பேணக்கடவன் -)

3-பொய் கலவாது-
அதாவது
பொய் கலவாது என் மெய் கலந்தான் திருவாய்-1-8–5–என்று
இவர் திரு மேனியிலே பண்ணும் விருப்பத்தில் புரை இன்றி இருக்க —

4-அன்பு செய்து
அதாவது
அந்தாமத்து அன்பு செய்து-திருவாய்-2-5-1- -என்று
பரம பதத்தில் பண்ணும் வ்யாமோகத்தை இவர் பக்கலிலே பண்ணி —

5-பற்றிலனாய்-
அதாவது
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றான்-திருவாய்-1-2-6- -என்று
இவர் பக்கல் சங்கத்தாலே அங்குள்ளார் பக்கல் சங்கத்தை விட்டு –
(ஈட்டில் இரண்டு நிர்வாகங்கள்–
1–எதிலும் பற்று இல்லாத ஈஸ்வரன் -வியாபகன்- பற்று அற்று அவனில் முற்றும் அடங்க உபதேசம்
2–ஈஸ்வரன் பற்றை இல்லமாகக் கொண்டவன் -பகவத் விஷய பற்றை இல்லமாகக் கொண்டு அவனுள் அடங்க உபதேசம் -)

6-ஷூத் த்ருட்பீடித நிர்தனரைப் போல் கண்டு கொண்டு உண்டு பருகி
(-ஷூத் பீடிதனைப்-பசி உள்ளவனைப் – போல் உண்டு –
த்ருட்பீடிதனைப் -நீர் வேட்கை உள்ளவனைப் – போல் பருகி
நிர்தனரைப்-வறியவனைப் – போல் கண்டு கொண்டு )
இருந்தான் கண்டு கொண்டு –திருவாய்-8-7-2–என்றும் -(எனது ஏழை நெஞ்சு ஆளும் -நிர்த்தனன் )
என்னை முற்றவும் தான் உண்டான் -திருவாய்-9-6-8– என்றும் ,
தான் என்னை முற்றப் பருகினான்-திருவாய்-9-6-10 -என்று சொல்லுகிறபடி
நிர் தனன் நிதி கண்டார் போலேயும் –
பசித்தவன் சோறு கண்டார் போலேயும் –
தாஹித்தவன் தண்ணீர் கண்டார் போலேயும் –
அத்யந்த அபிநிவேசத்தோடே இவரை அனுபவித்து –
(மிடியனுக்குத் தானே நிதி கண்டு கொள்ள வேண்டும் -பசித்தவனுக்கு உண்ண வேண்டும்
விடாயான் தண்ணீர் பருக வேண்டும் -எனவே க்ரமமாக வியாக்யானம் )

7-பரிஜனாதிகளோடே தன்னைத் தந்து-
அதாவது-
பரிஜன பரிபர்ஹா பூஷணா ந்யாயுதானி ப்ரவர குண கணாச்ச
ஜ்ஞான சக்த்யா தயஸ்தே பரமபதம தாண்டான் யாத்மா தேஹஸ்
ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகரத்த –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்–63–என்றும்
(பக்தானாம் ப்ரசாததே ஜிதந்தே ஸ்தோத்ரம் அடியாக கூரத்தாழ்வான் )
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –திருவாய்-2-7-11–என்றும் -சொல்லுகிற படியே
தன் விபூதியையும் தன்னையும் இவருக்குக் கொடுத்து –

(பற்பநாபன், உயர்வு அற உயரும் பெருந்திறலோன்,
எற்பரன், என்னை ஆக்கிக் கொண்டு, எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம், கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே–2-7-11-
பஞ்சாம்ருத பாசுரம் இது -பரத்வம்-ஸுவ்ர்யம் -உபாயத்வம் -ப்ராப்தவம் -ஸுலப்யம் )

8-என் செய்வன் என்றே இருந்து-
அதாவது–
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி–பெரிய திருவந்தாதி-53- -என்கிறபடியே
இவர்க்கு எல்லாம் செய்தாலும் தான் இழவாளனாய்–

9-ஆத்மாத்மீய அகில பரத்தையும் -நமஸ் -சப்த முகேன இவர் சமர்ப்பிக்க –
வேம்கடத்து உறைவார்க்கு நமவென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கு–திருவாய்-3-3-6- -என்னும்படி –
பூயிஷ்டாம்-யஜுர் வேதம்-என்கிறபடியே
நம உக்தி தனக்கு கனத்து தோற்றுகையாலே — அவ் வழியாலே அகில பாரத்தையும் சுமந்து –

10-அல்லு நன் பகலும் போகு-என்றாலும் அகல்வானும் அல்லனாய் –
அதாவது–
அல்லு நன் பகலும் இடை வீடு இன்றி நல்கி என்னை விடான்–திருவாய்-1-10-8- -என்று
இவர் பக்கலில் பண்ணின ஸ்நேகத்தாலே -திவாராத்ரா -விபாகமற -இவரை விட மாட்டாதே –
(கங்குலும் பகலும் இடைவிடாமல் பின்பு ஏழாம் பத்தில் ஆழ்வார் -எதிலும் அவனே முற்பாடன் )

11-போகு நம்பீ -திருவாய்-6-2-2–என்று சீறிப் போகச் சொன்னாலும் ,
அகல் வானும் அல்லன் இனி-திருவாய்-2-6-7- -என்கிறபடியே அகலாதவனாய் —

ஆன் பின் போகேல் -திருவாய்-10-3-8–என்று இவர் நிவர்திப்பித்தால் –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -திருவாய்-10-3-10-– என்கிறபடியே-
தனக்கு உகப்பானவையும் தவிர்ந்து –

அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே–திருவாய்-10-6-1- -என்று
இவர் விதித்த படியே நடத்துகிற சர்வேஸ்வரனே உபதேசத்துக்கு சத் பாத்ரம் என்கை —

————————————————-

சூரணை -203-

ஆனால் இங்கன் இன்றிக்கே
அஜ்ஞரான சம்சாரிகளுக்கு உபதேசிக்கிற அளவிலே
சம்சார விரக்தராய் –ஆத்ம குண உபேதராய் –சம்யக் உப சன்னரானவர்களுக்கு –உபதேசிக்கும் அர்த்தத்தை
பகவத் விமுகராய் -பிரயோஜனாந்த பரராய் –அனுவர்த்தன ஹீனரானவர்களுக்கு —
வலியப் பிடித்து உபதேசிப்பான் என் என்னும்
ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் —

நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே
ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின
ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு

உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை

வம்மின் விரோதம் ஈனச் சொல்
எவ் உயிர்க்கும் அறிய என்று
அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது

1-ஞாலத்தார் பந்த புத்தியும்
2-அனர்த்தமும் கண்டு ஆற்றாமையும்
3-மிக்க கிருபையும் இறே-

(அமாநித்வம் -மேன்மக்களை உபேக்ஷை செய்யாமல் இருப்பது / அதபஸ்கர்-தவம் இல்லாதவர் )

நண்ணாதார் -மெய்யில்- ஊன்- ஆசை நிர்வேதத்தோடே
அதாவது–
நண்ணாதார் முறுவலிப்ப–திருவாய்மொழியிலும்-4-9-
மெய்யில் வாழ்க்கை -பெருமாள் திருமொழியிலும் -3-1-
ஊனேறு செல்வத்திலும்–பெருமாள் திருமொழியிலும் -2-1-
ஆசை வாய் சென்ற சிந்தையிலும் -பெரியாழ்வார் -4-5-1—சொல்லுகிற படி –
1-பகவத் விமுக லோக யாத்ரையிலும் –
2-மாம்ஸ ஸ்ருகாதி மல ரூப தேஹத்திலும் —
3-கர்ம உபாதிகங்களான தேக அனுபந்திகளிலும் –உண்டான தோஷ தர்சனத்தாலே –
பரீஷ்ய லோகான் கர்ம சிதான் ப்ராம்ஹணோ நிர்வேத மாயாத் நாஸ்தி அக்ருத க்ருதேன -முண்டகம் -2-11-
( செய்யும் செயல்களால் ஈட்டப்படும் பலன்களை ஆராய்ந்த பிராமணன் -செய்யும் செயல்களால் பரம்பொருளை
அடையைப் படுகிறான் இல்லை என்று வெறுப்பை அடைவான் )-இத்யாதிப் படியே பிறந்த நிர் வேதத்தோடே–

ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின-
அதாவது-
ஆஸ்திகோ தர்ம சீலச்ச சீலவான் வைஷ்ணவச் சுசி கம்பீரஸ் சதுரோ தீரஸ் சிஷ்ய இத்ய பிதீயதே –
(சாஸ்திரங்களில் நம்பிக்கை -தர்மங்களைச் செய்ய வேண்டும் என்னும் தன்மை -ஒழுக்கம் விஷ்ணு பக்தி –
தூய தன்மை–காம்பீர்யம் -சாதுர்யம் -தைர்யம் யுடையவனுமான ஒருவன் சிஷ்யன் என்று கொல்லப்படுகிறான்-)என்றும் ,
அமாநித்வம் அதம்பித்வம் அஹிம்சா ஷாந்தி ஆர்ஜவம் ஆச்சார்யா உபாசனம் ஸௌசம் ஸ்தைர்யம் ஆத்மவி நிக்ரக -ஸ்ரீ கீதை -13-7-
(உயர்ந்தவர்களை அலக்ஷியம் செய்யாமலும் -கர்மாநுஷ்டானங்களைப் பெருமைக்காகச் செய்யாமலும் –
மூன்று கரணங்களாலும் பிறருக்கு துன்பம் செய்யாமலும் -பொறுமையுடனும் -அனைவரையும் சமமாகப் பார்த்தும்
ஆச்சார்யரை வணங்கியும் – ஸாஸ்த்ர நியதிப்படி பரிசுத்தனாகவும் சாஸ்திரங்களில் சொல்லியவற்றை உறுதியுடன் நம்பியும் –
ஆத்மாவிலேயே மனசை வைத்து இருப்பதும் )இத்யாதிகளிலும் சொல்லப் படுகிற –
ஆஸ்திக்யாதிகளும் –அமாநித்வாதிகளும் ஆகிற சிஷ்ய லஷணமான ஆத்ம குணங்களில் அதிகராய் –

ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு-
அதாவது-
ப்ரணி பாத்ய அபிவாத்யச –ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-1–என்றும் ,
தத் விததி ப்ரணிபாதேன பர பிரச்நேன சேவையா –ஸ்ரீ கீதை-4-34–என்றும் சொல்லுகிற படி –
பக்ன அபிமானராய் கொண்டு — ப்ரணி பாத அபிவாதன பரி ப்ரஸ்ன சேவை ஆகிய இவற்றில் –
தத் பரராய் –சிரகாலம்-அனுவர்த்தித்தவர்களுக்கு

உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை-
அதாவது-
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே –திருவாய்-4-10-9- -என்றும் —
பேசும் அளவன்று இது வம்மின் நமர் ! பிறர் கேட்பதன் முன் -பெரிய திருமொழி -2-4-9-என்றும்
இப்படி அஷட் கரணமாக உபதேசிக்க வேண்டும் அர்த்த விசேஷத்தை —

வம்மின்-விரோதம்-ஈனச் சொல்
அதாவது-
வம்மின் புலவீர் -திருவாய்-3-9-6–என்று வலிய அழைத்து –
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ –திருவாய்-3-9-1–என்று –
நான் சொல்லுகிற இது உங்களுக்கு விரோதமாய் தோற்றி இருந்தது ஆகிலும் சொல்லுவேன்
இத்தை கேளுங்கள் என்று அபேஷித்து –
ஈனச் சொல் ஆயினுமாக –திருவிருத்தம் -99–என்கையாலே
ஆகிலுமாக -என்று பொகடு பொருளாகவும்-

எவ் உயிர்க்கும் அறிய என்று-அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது-
அதாவது–
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்–திருவாய்–9-1-7-என்றும் —
திண்ணம் நாம் அறிய சொன்னோம் -திருவாய்-10-2-5–என்றும் —
சர்வருக்கும் பிரசித்தம் ஆகும் படியாகவும் –இப்படி அடைவு கேடாக –
இதம் தே நாதபஸ்காய நா பக்தாயா கதாசன நஸா ஸூஸ்ரூஷவே வாஸ்யம் நசமாம் யோப்யஸூயதி -ஸ்ரீ கீதை-18-67–
இத்யாதிகளால் சொன்ன அநதிகாரிகளுக்கு உபதேசிக்கிறது ..

ஞாலத்தார் பந்த புத்தியும் அனர்த்தமும் கண்டு ஆற்றாமையும் –
அதாவது—
1-ஞாலத்தார் அவர்க்கும் வானத்தவர்க்கும் பெருமான்–திருவாய்-4-5-8- -என்று
நித்ய விபூதியில் உள்ளவோர்பாதி லீலா விபூதியில் உள்ளோர்க்கும் அவனுடைய சம்பந்தம் ஒத்து இருக்க –
இவர்கள் அவனை இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த ஞானமும்

2-கண்டு ஆற்றேன் உலகு இயற்க்கை கடல் வண்ணா–திருவாய்-4-9-3- -என்று
இவர்கள் சம்சாரத்தில் படும் அனர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாத ஸ்வாபமும்-

3-தாவன் மாத்ரம் அன்றிக்கே –மிக்க கிருபையும் இறே-
அதாவது–
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கது–கண்ணி நுண்-8- -என்று ..
ஷிபாமி -என்றும்/ந ஷமாமி-என்றும் ஈஸ்வரன் கை விட்டவர்களையும் திருத்தி அல்லது நிற்க மாட்டாத
கரை புரண்ட காருண்யம் இறே என்கை ..

பந்த புத்தியும் அநர்த்த அசஹத்வமும் இவர் தம்முடைய உக்தி சித்தம் ஆகையாலும் –
க்ருபாதிக்யம் சிஷ்யோக்தி சித்தம் ஆகையாலும் ஆய்த்து இப்படி பிரசித்தி தோற்ற அருளிச் செய்தது
(பிரசித்தி தோற்ற- இறே-என்று அருளிச் செய்கிறார்-என்றவாறு )..

—————————————

சூரணை -204-

மற்றும் இப்படி உபதேசிப்பார் பலரும் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் ..

தாய்க்கும்
மகனுக்கும்
தம்பிக்கும்
இவர்க்கும்
இவர் அடி பணிந்தவர்க்குமே
இவை உள்ளது ..

தாய்க்கும்
அதாவது
தன் பக்கலிலே விபரீத புத்தியைப் பண்ணி நிற்கிற பாபிஷ்டனான ராவணனைக் குறித்து –
மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதம்சா நிச்சதா கோரம் த்வயா ஸுபுருஷர்ஷப–ஸூந்தர-21-19-என்றும்
விதிதஸ் சஹி தர்மஞ்ச சரணாகத வத்ஸல தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி -ஸூந்தர-21-20- -இத்யாதிகளாலே
ஹிதோபதேசம் பண்ணின –நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ -ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17 -என்கிற
சர்வ லோக ஜனனியான பிராட்டிக்கும் —

மகனுக்கும்
அதாவது
திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக சீறி தன்னை அதி குரூரமான தண்டங்களைப் பண்ணும்படி –
பாகவத் அத்யந்த விமுகனாய் -பாபிஷ்ட அக்ரகண்யனான -ஹிரண்யனைக் குறித்து –
சர்வ பூதாத்மகே தாத ஜகன்னாத ஜகந்மயே பரமாத்ம கோவிந்த -ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-19-37-என்றும் –
உர்வ்யாமஸ்தி -இத்யாதிகளாலே ஹிதத்தை உபதேசித்தும் –
விமுகரான அசுர புத்ரர்களைக் குறித்து –
அபார சம்சார விவரத்த நேஷு மாயாத தோஷம் பிரசபம் ப்ரவீமி
சர்வத்ர தைத்யாஸ் சமுதாமுபேத சமத்வ மாராதநம் அச்யுதஸ்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-17-89–இத்யாதிகளாலே
ஹிதத்தை உபதேசித்தும் –
மீளவவன் மகனை-பெரியாழ்வார்-1-6-2- -என்கிற ஹிரண்ய புத்ரனான பிரகலாதனுக்கும்-

தம்பிக்கும்
அதாவது
யாவந் னலங்காம் சமபித்ரவந்தி வலீமுகா பர்வத கூட மாத்ரா
தம்ஷ்ட்ரா யுதாச்சைவ நகாயுதாச்ச ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ–யுத்த-14-3–என்றும் –
யாவான் நக்ருஹ்ணந்தி சிராம்சி பாணாராமேரிதா ராஷச புங்கவானாம்
வஜ்ரோபமா வாயு சமான வேகா ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ –யுத்த-14-4–என்று இப்படி
தனக்கு ஹிதம் சொன்னது பொறாமல் –
த்வாம் து திக் குலபாம்சனம்–யுத்த-16-5- -என்று திக்கரித்த க்ரூரனான ராவணனைக் குறித்து –
ஸூலபா புருஷா ராஜன் சததம் பிரிய வாதினா – அப்ரியயச்யது பத்யச்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப–யுத்த-16-20
பத்தம் காலச்ய பாசேன சர்வ பூதாபஹாரிணா நனச்யந்த முபேஷேயம் ப்ரதீப்தம் சரணம் யதா –யுத்த-16-21-
என்று தொடங்கி ஹித உபதேசம் பண்ணின –
அவன் தம்பிக்கே –திருவாய்-7-6-9–என்கிற ராவண அனுஜனான ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும்–

இவர்க்கும்
அதாவது
பகவத் விமுகராய் –அநந்ய பரராய் திரிகிற சம்சாரிகளை விட மாட்டாமல் –
வீடு மின் முற்றவும்–1-2 -தொடங்கி பல இடங்களிலும் -பல படிகளாலும் உபதேசித்த
இவ் ஆழ்வார் தமக்கும் —

இவர் அடி பணிந்தவர்க்குமே
அதாவது
ஓராண் வழியாக பூர்வர்கள் உபதேசித்து போந்த நியமத்தைக் குலைத்து
பலரையும் உபதேசிக்கப் படி பண்ணியும் –
பல கால் நடந்து துவண்டு கேட்ட பரமார்த்தத்தை ஓலக்கமாக வைத்து உபதேசித்தும் —
வ்ருதைவ பவதோ யாதா பூயசீ ஜன்மசன்ததி -தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ-சாண்டில்ய ஸ்ம்ருதி-
( உனக்குத் தொடர்ந்து வருகிற பல பிறவிகள் பயன் அற்றுப் போயின -அவற்றுள் இது ஒரு பிறவி
என்று நினைத்து இறைவனைச் சரணம் அடைவாய் ) -என்று
ருசி விச்வாஸ ஹீநரையும் நிர்பந்தித்து சரமோ உபாயஸ்தர் ஆக்கியும் –
இப்படி அதிகாரம் பாராமல் அவர்கள் துர் கதியை பார்த்து உபதேசித்து அருளும் ஸ்வபாவராய்-
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்–இராமானுச நூற்றந்தாதி-1- -என்று
நிரூபகமாய் இருக்கும் எம்பெருமானாருக்குமே- இவ் ஆகாரங்கள் உள்ளது என்கை —

(ஏரார் இன்னருளால் பேசி வரம்பறுத்தார் -அழகாலும் அருளாலும்–பாரில் உள்ள ஆரியர்களுக்கும் –
மாநிலத்து எவ்வுயிர்க்கும் ஆழ்வாரைப் போலவே ஓராண் வழியாக வந்ததை -74-ஸிம்ஹாஸனாதிபதிகளை
ஏற்படுத்தி-பலருக்கும் உபதேசம் –
பராங்குச பாத பக்தன் -ஸ்ரீ ராமானுஜன் இன்றும் ஆழ்வார் திருநகரியில் வாங்கிக் கொள்கிறோம் -மற்ற இடங்களில் மதுர கவி – )

இவை என்று கீழ்ச் சொன்ன
சம்பந்த ஞானம்
அநர்த்த அசஹத்வம்
அநவதிக க்ருபை–
ஆகிய மூன்றையும் பராமர்சிக்கிறது –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –191/192/193/194/195/196/197/198–

September 27, 2018

சூரணை-191-

பிரபந்த உதய ஹேது வைலஷண்யத்தால் வந்த ஆதிக்யம் சொல்கிறது மேல் —

அது
ஐவரை வெல்வித்துப்
பதிற்றைந்திரட்டி
படச் சொன்னது
இது
நாடாக தோற்றோம் என்று
ஐ ஐந்து முடிப்பான்
சொன்னது ..

அதாவது ..
அந்த பிரபந்தம்-
அன்று ஐவரை வெல்வித்த–திருவாய் -4-6-1-என்கிறபடியே –
த்ரௌபத்யா சகிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –பாரதம் ஆரண்ய –192-56- -என்று
ராஜ்ய ஆ காங்க்ஷிகளாய் சரணம் புக்கு நிற்கிற பாண்டவர்களையும் –
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ணே -ஸ்ரீ கீதை -1–32 – என்ற அர்ஜுனனை –
கரிஷ்யே வசனம் தவ–ஸ்ரீ கீதை -18-73- -என்னப் பண்ணி யுத்தத்திலே மூட்டி -விஜயீகளாக்கி-
பதிற்றைந்திரட்டி படை வேந்தர் பட -பெரிய திருமொழி -2-4-4-என்கிறபடியே -அவர்களுக்கு
பிரதி பஷ பூதரான துர்யோனாதிகள் நூற்றுவரையும் முடிக்கைக்காக சொன்னது ..

இந்த பிரபந்தம் –
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7—என்று
வகுத்த சேஷி பக்கலிலே எல்லோரும் அபஹ்ருத சித்தராய் போம்படியாக –
(உபதேசம் கேட்டு நாடாக திருந்தி ஊரும் நாடும் உலகும் ஆழ்வாரைப் போலே ஆனதே )
முடிப்பான் சொன்ன ஆயிரம் –திருவாய் -8-7-11–என்கிற படியே
அதுக்கு விரோதியாய் இருந்துள்ள –(ஜன்மம் விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே -8-7-11)
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் -திருவாய் -10-7 10–இத்யாதியால் சொன்ன
சதுர் விம்சதி தத்வாத் மகமான அசித்திலும் –
ஞான ஆனந்த லஷணமாய் கொண்டு ஸ்வ போக்யதையாலே தன் பக்கலிலே கால் தாழ்த்தப் பண்ணும் ஆத்மாவிலும்
உண்டான சங்கத்தை முடிப்பதாக சொன்னது என்கை ..
(அநந்தம் ஸ்திரம்-பகவத் அனுபவம் -அல்பம் அஸ்திரம் அசித் அனுபவம் -அநந்தம் அஸ்திரம் ஆத்ம அனுபவம் )

இத்தால் மோஷ சாஸ்திரமே ஆகிலும் உதிக்கிற போது அன்யார்த்தமாக உதித்த குறை உண்டு அதுக்கு –
மோஷார்தமாகவே உதித்த ஏற்றம் உண்டு இதுக்கு என்றது ஆய்த்து ..

—————————–

சூரணை -192-

உபக்கிரம உப சம்கார பிரகிரியையால் வந்த வைபவம் சொல்கிறது இதில் ..

அங்கு நம்பி சரண்
என்று தொடங்கி
முடிவில் அப்ரியம் என்றது ..
இங்கு பரமே என்று இழிந்து
பொலிக என்று உகந்தது ..

அதாவது
அந்த பிரபந்த்ததில் உபதேசம் தொடங்குகிற போது –
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி–பெரிய திருமொழி –1-9-4-என்கிறபடியே ,
சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2-7-என்று
அர்ஜுனனுடைய அனுவர்தனம் கண்டு – ப்ரீதி யோடே உபக்ரமித்து —
(அனுவர்த்தன ப்ரசன்னாச்சார்யார்-என்றும் க்ருபாமாத்ர ப்ரசன்னாச்சார்யார் என்றும் உண்டே –
ஆசை யுடையார்க்கு கூற பேசி வரம்பு அறுத்தார் ராமானுஜர் )
நூனமச்ரத் ததாநோசி துர்மே தாச்சாசி பாண்டவ அபுத்த்யா அன்ன ஜாநீஷே தன்மே ஸூமஹத் அப்ரியம் –ஸ்ரீ அநு கீதை –
(அர்ஜுனா நிச்சயம் சிரத்தை இல்லாதவனாய் இருக்கிறாய்-கெட்ட புத்தியையும் யுடையவனாய் இருக்கிறாய் –
இக்காரணத்தால் அறிவின்மையால் அறியவில்லையோ அது எனக்குப் பெரிதும் விருப்பம் இல்லாதது ஆகும் )- என்று
அவன் பக்கல் அனவதானம்-( கவனக்குறைவு -) காண்கையாலே அப்ரியத்தோடே தலைக் கட்டிற்று —

இப் பிர பந்தத்தில் விமுகரைக் குறித்து கிருபையாலே உபதேசிக்கையாலே -(அங்கு அபிமுக்யர் அனுவர்த்தனம்)
உபதேச உபக்ரமத்தில்
ஏ பாவம் பரமே ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் –திருவாய் -2-2-3- -என்று
அப்ரிதியோடே உபக்ரமித்து –
அவ் உபதேசம் கேட்டு ஜகத்தாக திருந்துகையாலே -இப்படி திருந்தினவர்களைக் கண்டு –
பொலிக பொலிக பொலிக –திருவாய் -5-2-1- -என்று
மங்களாசாசனம் பண்ணி –
உகந்து பணி செய்தேன்–திருவாய் -10-8-10- -என்னும் படி
ப்ரீதியோடே தலைக் கட்டிற்று என்கை ..

இத்தால் அர்ஜுனன் யுத்தே பிரவ்ருதனான மாத்ரம் ஒழிய
சித்த தர்ம பர்யந்தம் உபதேசித்த பலம் சித்திக்கப் பெறாமையாலே உபதேசம் ச பிரயோஜனம் ஆய்த்து இல்லை அங்கு –
அது ச பிரயோஜனம் ஆய்த்தது இங்கே என்றது ஆய்த்து-

——————————————-

சூரணை -193-

பிரதி பாத்ய அர்த்த கௌரவத்தால் வந்த வைபவம் சொல்கிறது இதில் –
(ப்ரதிபாத்ய சாம்யம் -189-பார்த்தோம் –
பெருமாள் சமுத்திரராஜன் இடம் சரண் அடைந்து வியர்த்தமானதே )

அதில்
சித்த தர்ம விதி ..
இதில்
விதி
அனுஷ்டானங்கள் ..

அதாவது-
அந்த கீதையில் –
மா மேகம் சரணம் விரஜ –ஸ்ரீ கீதை –18-66–என்ற சித்த தர்மம் மாத்ரமே உள்ளது ..
(ஸாத்ய தர்மங்களை விட்டு சித்த தர்மம் பற்ற விதிக்கிறான் )
இந்த பிரபந்தத்தில் –
திரு நாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்மினோ-திருவாய் -4-1-1 -என்ற விதியும் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்-6-10-10 -என்ற அனுஷ்டானமும்-
இரண்டும் காணலாம் என்கை ..
இத்தால்
விதி மாத்ரம் பிரதி பாதகமான அதில் (காட்டிலும் )
விதி அனுஷ்டானங்கள் இரண்டையும் பிரதி பாதிக்கும் இதுக்கு ஏற்றம் உண்டு என்றது ஆய்த்து ..

——————————————–

சூரணை -194-

இனி அந்த ஸ்ரீ கீதை தனக்கு உத்கர்ஷமும் இவர்
அங்கீகாரத்தாலே என்கிறது இதில் ..

பகவன்
ஞான விதி
பணிவகை என்று
இவர் அங்கீகாரத்தாலே
அதுக்கு உத்கர்ஷம் –

அதாவது
அந்தமில் ஆதி யம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று –திருவாய் -1-3-5–என்றும் –
ஞான விதி பிழையாமை –திருவாய் -5-2-9–என்றும் –
பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் –திருவாய் -10-4-9–என்றும்
பரம வைதிகரான இவர் அத்தை பிரமாணமாகக் கொள்ளுகையாலே ஆய்த்து
அந்த ஸ்ரீ கீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கை –
(வேதம் அத்யயனம் பண்ணா விட்டாலும் அதன்படி நடந்ததால் நம்மாழ்வார் பரம வைதிகர் )

புத்த முனியாயும் -கபில முனியாயும் சொன்ன பௌத்த சாஸ்திரமும் -சாங்க்ய சாஸ்திரமும் –
அவன் தான் அருளிச் செய்ததாய் இருக்கச் செய்தே -வைதிக பரிக்ரகம் இல்லாமை இறே
அப்ரமாணம் ஆய்த்து ..
இதி மோஹன வர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –
(இப்படி பிறரை மயங்கச் செய்கின்ற தேவரீராலேயே செய்யப்பட வேதங்களுக்குப் புறம்பான
மதங்களை புல்லுக்குச் சமமாக நினைக்கிறேன் )-என்று
பகவத் யுக்தமே யாகிலும் வேத விருத்தமானது வைதிகர் அங்கீகரியார்களே ….
வேதா விரோதித்வம் பிரகாசிப்பது வைதிக பரிகிரகத்தாலே இறே ..
ஆகையால் அதுக்கு உத்கர்ஷம் இவர் அங்கீகாரத்தால் என்ன குறை இல்லை ..

இத்தால் அதுக்கு உத்கர்ஷம் இவர் பரிக்ரகம் கொண்டு சொல்ல வேணும் ..
இவர் வாக்கில் பிறந்த இதுக்கு அதுவும் வேண்டாம் என்று இவ் வழியாலும் ஓர் ஆதிக்யம் சொல்லிற்று ஆய்த்து ..
(இது ஆறாவது பெருமை
பெருமாளைப் பற்ற புருஷகாரம் வேண்டும்– பிராட்டியைப் பற்ற -ஆச்சார்யரைப் பற்ற அதுவும் வேண்டாமே -அதே போலே இதுவும் )

ஆக ஸ்ரீ கீதை யிலும் இதுக்கு உண்டான ஆதிக்ய ஹேதுக்கள் எல்லாம் சொல்லிற்று ஆய்த்து ..

———————————————–

சூரணை -195-

இப்படி ஈஸ்வர உபதேசத்தில் இவர் உபதேசத்துக்கு ஏற்றம் சொன்ன பிரசங்கத்திலே ,
பிரமேய பூதனான அவனோடே-பிரமாண – பிரமாதக்களையும் கூட்டி –
அவர்கள் எல்லார் உபதேசமும் சங்குசித விஷயம் –
இவர் உபதேசம் சர்வ விஷயம்-என்று
இவ் வழியாலே உபதேஷ்டாவான ஆழ்வாருக்கு ஓர் ஆதிக்யம் அருளி செய்கிறார் மேல் —

வேத வேத்ய வைதிக
உபதேசம்
ஆவித்யர் அளவிலே ..
அஜ்ஞர்
ஜ்ஞானிகள்
ஜ்ஞான விசேஷ யுக்தர்
சர்வஜ்ஞன்
என்னாமல் இவர் திருத்துவர்-

(பிரமாணம் -வேத உபதேசம் -ப்ரமேயம் -வேத்ய உபதேசம் -பிரமாதா -வைதிகர் உபதேசம் –
ஆவித்யர்-அறிவில்லா உலகோர்-)

அதாவது
வேத உபதேசம் –
ஹித அநுசான பரமான வேதத்தினுடையவும்
வேத வேத்யே பரே பும்சி -ஸ்காந்தம் ( வேதங்களால் அறியப்படும் பரம் புருஷன் ) -என்று
வேதைக சமதி கம்யனான ஈஸ்வரனுடையவும்-உபதேசம்
வைதிக உபதேசம் –
யேச வேத விதோ விப்ராயே சாத்யாத்ம விதோ ஜனா
( எந்த அந்தணர்கள் வேதத்தின் பூர்வ பாகத்தை அறிந்தவர்களோ -எவர்கள் வேதாந்தம் அறிந்தவர்களோ )-என்கிற படியே
வேதத்தில் பூர்வ உத்தர பாகார்த்த ஜ்ஞராய் –வைதிகர் என்று -நிரூபகமாக இருக்கும் மகரிஷிகள் உடைய உபதேசம்-

ஆவித்யர் அளவிலே
ஆவித்யா ப்ராக்ருத ப்ரோக்த -(தத்வம் ஹிதம் புருஷார்த்தம் என்னும் அவற்றின் ஞானம் இல்லாமையாகிற
அறியாமையோடு கூடிய இவ்வுலகோர் ஆவித்யர் என்று சொல்லப்படுவர் ) என்கிறபடியே
தத்வ ஹித புருஷார்த்த -ஜ்ஞான அபாவ ரூப -அவித்யா யுக்தரான சம்சாரிகள் மாத்ரத்தில்.(இம்மூவர் உபதேசம் ).

இவர் -ஆழ்வார் –
அஞ்ஞர்
தத்வ ஹிதாதிகளில் அஜ்ஞரான சம்சாரிகளோடு
ஞானிகள்
பகவத் உபாயத்வ நிஷ்டராய் இருக்கும் ஜ்ஞானிகள் ஆனவர்களோடு —
ஞான விசேஷ யுக்தர்
தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத் கரித்து –உபேய பரராய்-
தத் அனுபவமே யாத்ரையாய் இருக்கும் -ஜ்ஞான விசேஷ யுக்தரோடு —
சர்வஞ்ஞன் என்னாமல்
நைவ கிஞ்சித் பரோஷம் தே ( உனக்கு காணப்படாத பொருள் ஒன்றும் இல்லை )-என்றும் ,
யோ வேத்தி யுகபத் சர்வம்) யாவன் ஒரு பொழுதில் எல்லாவற்றையும் அறிகிறானோ ) -என்கிறபடியே
சர்வஜ்ஞனான ஈஸ்வரனோடு வாசி அற சர்வர்க்கும் வேண்டும் அம்சங்களை
உபதேசித்து இவர் திருத்துவர் என்கை ..

———————————————–

சூரணை -196-

எல்லார்க்கும் இவர் இப்படி அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண வேணுமோ என்னும் அபேஷையிலே
கீழ் சொன்ன நாலு விஷயத்துக்கும் இவர் அறிவிக்க வேண்டும் அர்த்த விசேஷங்களை தர்சிப்பிகிறார் இதில் –

அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும்
இக் கரை எறினார்க்கு இன்ப வெள்ளமும்
நிலை அறியாதார்க்கு ஆழங் காலும்
கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும்
அறிவிக்க வேணும் —

அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும்
அதாவது-
செம் கண் அடியாரைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் -பெரிய திருமொழி -11-7-8–என்று
முதலிலே பகவத் ஞானம் இல்லாத சம்சாரிகளுக்கு –
அக்தே உய்யப் புகும் ஆறு –திருவாய் -4-1-11–என்று ,
திரு நாரணன் தாள்-4-1-1- -என்கிற இதுவே உஜ்ஜீவிகைக்கு உபாயம் என்று –
சம்சார நிஸ்தரண உபாயமும் –

இக் கரை எறினார்க்கு இன்ப வெள்ளமும்
அதாவது
அக்கரை என்னும் அனர்த்த கடலுள் அழுந்தி -உன் பேர் அருளால் -இக்கரை ஏறி இளைத்து
இருந்தேனை–பெரியாழ்வார் -5-3-7- -என்று
சம்சார சாகரத்தில் அழுந்துகிறவர்களுக்கு பகவத் ஏக உபாயத்வ ஞானம் பிறந்தால் –
இங்கே இருக்கச் செய்தே -அக்கரை இக்கரை -என்னும் படி -சம்சாரம் தூரமாய் –
பரம பதம் அசந்னமாம்படி இருக்கையாலே –பகவத் ஏக உபாயத்தில் வ்யவசிதராய் –
ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருதராய் இருக்கிறவர்களுக்கு வ்யாவசாயம் குலைந்து த்வரிக்கும் படி –
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேர் இன்பத்து வெள்ளத்தே -திருவாய்–7-2-11- -என்று பிராப்ய வைலஷண்யமும்

நிலை அறியாதார்க்கு ஆழங் காலும்
அதாவது
ஆற்றிலே இழிந்து போகா நிற்க செய்தே -நிலைக்கும் இடமும் நிலையாத இடமும் அறியாதாரைப் போலே –
பிராப்ய பரராய் அனுபவியா நிற்கச் செய்தே -அதில் நிலை கொள்ளலாம் இடமும் –
ஆழம்கால் படுத்தும் இடமும் அறியாதவர்களுக்கு –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -திருவாய் –10-7-1-என்று –
சீல குணமான ஆழம் காலும் –

கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும்
அதாவது
சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜனம் த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிணா-என்கிற படியே
சம்சார சமுத்ரத்தை கடத்தி -அக்கரைபடுத்தும் அவனுக்கு –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் இத்யாதி –திருவாய் -10-7-10–
இத்யாதியாலே -சதுர் விம்சதி தத்வமும் அறிவிக்க வேணும் என்கை —

ஆக அறிவு கேடரை உபாயத்தில் மூட்டுவர் .
உபாயத்தில் ஊன்றுவாரை பிராப்ய பரர் ஆக்குவார் .
ப்ராப்யத்தில் அவஹாகிக்கும் அவர்களுக்கு ஆழம் கால் அறிவிப்பார் .
பிராப்தியை உண்டாக்கும் அவனுக்கு த்யாஜ்யத்தை அறிவிப்பார் என்றது ஆய்த்து —

————————————————-

சூரணை -197-

இவர்களுக்கு இவ் அர்த்தங்களை உறுப்பான ஹேதுக்களோடே இவை தன்னை
இன்னும் ஒரு பிரகாரேண வ்யக்தமாய் அருளிச் செய்கிறார் இதில்-

அவன் முனிந்தார்க்கு
தாம் கண்டது –
தம்மை முனிவார்க்குத்
தம் கண் –
காணாதது
காண்பார்க்குக் கண் மாறும் இடமும் –
ராகாந்தனுக்கு மாயா தோஷம்
இவர் காட்டுமவை —

(அவன் முனிந்தார்க்கு இவர் காட்டுமது தாம் கண்டது –
தம்மை முனிவார்க்கு இவர் காட்டுமது தம் கண் –
காணாதது காண்பார்க்கு இவர் காட்டுமது கண் மாறும் இடம் –
ராகாந்தனுக்கு இவர் காட்டுமது மாயா தோஷம்-என்றவாறு )

அதாவது
ஷிபாமி (தள்ளுகிறேன் ) -என்றும்
ந ஷமாமி ( பொறுக்க மாட்டேன் )-என்கிறவன்
முனிவுக்கு விஷயமாய் அஜ்ஞான சம்சாரிகளுக்கு
தாம் கண்டது –
அதாவது –
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லது–திரு விருத்தம் -99- -என்று –
நிமக்த்த உத்தாரண கதனாய் -ஞான உபகாரனானவனை ஒழிய சர்வருக்கும்
உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தாம் அறுதி இட்ட விலஷணமான அர்த்தமும் —

தம்மை முனிவர்க்கு
அதாவது
எங்கனயோ அன்னைமீர்கள் என்னை முனிவது நீர்–திருவாய் -5-5-1- -என்னும் படி
உபாயத்வ அத்யாவச்ய தசையில் நின்று ஸ்வ யத்ன பீருக்களாய் ,
பிராப்ய வைலஷண்யம் அறியாதே இத்தனை அதி பிராவண்யம் ஆகாது என்று ஹிதம் சொல்லுபவர்களுக்கு —
தம் கண்
அதாவது
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் -திருவாய் -5-5-2-என்று பிராப்ய வை லக்ஷண்ய அவஹாகியான
என் நெஞ்சினால் பார்க்க மாட்டீர்களோ என்று -தம்முடைய உள் கண்ணானான -பிராப்ய வைலக்ஷண்ய ஜ்ஞானமும் —

காணாதது காண்பாருக்கு
அதாவது
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின்–திருவாய் -10-7-1- -என்று கவிகளாய் –
(கவிகள் – கிராந்தி தர்சிகள்/ ரிஷி மந்த்ர த்ருஷ்டர் / முனி மனன சீலர் )
கூர்க்கக் காணும் அவர்கள் ஆகையாலே புறம்பு ஒருவர் காணாததும் காண வல்லவர்களுக்கு –
கண் மாறும் இடம்,
அதாவது
அவன்
சீல குணத்திலே கண் வையாதே கொள்ளும் கோள் என்று -கண் மாறும் இடமும் —

ராகாந்தகனுக்கு ( ஆசையால் கண் மூடப்பட்டவனுக்கு )
அதாவது
தம் பக்கத்தில் ராகத்தால் முன்னடி தோற்றாமையாலே த்யாஜ்ய தேக தோஷம் காண மாட்டாதவனுக்கு
மங்க ஒட்டு உன் மா மாயை–திருவாய் -10-7-10- -என்று
பிரகிருதி தோஷம் இவர் தர்சிப்பிக்குமவை என்கை ..

(அஜ்ஞர்–அறியாதார்க்கு -அவன் முனிந்தார்க்கு தாம் கண்டது -சம்சார நிஸ்தரண உபாயமும் -உய்யப் புகும் ஆறும்
அறிவு கேடரை உபாயத்தில் மூட்டுவர் .
ஜ்ஞானிகள்-இக் கரை எறினார்க்கு -தம்மை முனிவார்க்குத் தம் கண் – முனிவது-ஹிதம் பண்ணுவது —
தாய்மாருக்கு -சாதனஸ்தர் –இன்ப வெள்ளமும் -பிராப்ய வைலஷண்யமும் –உபாயத்தில் ஊன்றுவாரை பிராப்ய பரர் ஆக்குவார் .
ஜ்ஞான விசேஷ யுக்தர்-நிலை அறியாதார்க்கு -சாத்யஸ்தர்கள் -காணாதது காண்பார்க்குக் கண் மாறும் இடமும் –
சீல குணமான ஆழம் காலும் -ப்ராப்யத்தில் அவஹாகிக்கும் அவர்களுக்கு ஆழம் கால் அறிவிப்பார் .
சர்வஜ்ஞன்-கரை ஏற்றும் அவனுக்கு -ராகாந்தனுக்கு மாயா தோஷம்-நாலும் ஆறும்-சதுர் விம்சதி தத்வமும்-பிரகிருதி தோஷம்
பிராப்தியை உண்டாக்கும் அவனுக்கு த்யாஜ்யத்தை அறிவிப்பார் என்றது ஆய்த்து -தர்சிப்பார் -கண் சப்தார்த்தம் –)

————————————–

சூரணை -198-

ஆனால் அஜ்ஞருக்கு உபதேசிக்குமா போலே இவர்கள் எல்லாருக்கும் பலகாலம்
உபதேசிப்பாரோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் —

சாதன சாத்யஸ்த மத்யஸ்தரை விட்டு
அவற்றில் கலங்கும் ஜீவேஸ்வரர்க்கு

வீடுமின்
நினைமின்

பிடித்தேன்
விடுவேனோ
வைத்தெழ ஊது
வாடி நிற்க
கன்மமன்று
ஆன்பின் கை கழியேல்
உழி தராய்
என் சொற் கொள் என்று
இவர் பல காலும்
ஹிதாஹிதங்கள் சொல்லுவர் ..

( சாதன சாத்யஸ்தர்களாகிய மத்யஸ்தரை விட்டு அவற்றில் கலங்கும் ஜீவ-ஈஸ்வரர்களுக்கு –
கர்ம பரவசர்களுக்கும் ப்ரேம பரவசர்களுக்கும் -இவர் பல காலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர் ..)

சாதன சாத்யஸ்த மத்யஸ்தரை விட்டு
அதாவது
சாதன சாத்தியங்கள் கைபட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டியது அல்பம் ஆகையாலே –
சாதனஸ்தராகவும் சாத்யஸ்தராகவும் ,
நடுவு சொன்ன ஞானிகளும் -ஞான விசேஷ யுக்தருமாகிய -அவர்கள் இருவரையும் விட்டு –

அவற்றில் கலங்கும் ஜீவர்கட்க்கு
அதாவது
கர்ம பரவசராய் -சாதன சாத்தியங்கள் இன்னது என்று அறியாதே -கலங்கி நிற்கிற சம்சார சேதனருக்கு –
வீடு முன் முற்றவும்–1-2–என்று தொடங்கி –
சுனை நன் மலர் இட்டு நினைமின் நெடியானே -10-5-10-என்னும் அளவும் –
த்யாஜ்ய உபாதேயங்களை -பல படியாலும் உபதேசிக்கையாலும் –

அவற்றில் கலங்கும் ஈஸ்வரனுக்கு
அதாவது
பிரேம பரவசனாய் -சாதன சாத்தியங்கள் இன்னது என்று அறியாதே -கலங்கும் ஈஸ்வரனுக்கு –
அயோக்யதா அனுசந்தானத்தாலே இவர் நம்மை விடின் என் செய்வது -என்று
அதிசங்கை பண்ணி அலமருகிற அளவிலே –
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே -2-6-1–என்றும் ,
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -2-6-10–என்று –
மாஸூ ச- என்பது-(ஆழ்வார் சர்வஞ்ஞனுக்கு சொன்ன மாஸூச தானே இது )
(கோவர்த்தனம் -ஊராக ரஷித்தது -உலகு அளந்து -உலகமாக ரஷித்தது–சிக்கென பிடித்துக் கொண்டேன்
என்றதும் மலர்ந்த செங்கண் மாலே -திருமாலையிலும் உண்டே -)

வைத்து எழ ஊது
அதாவது
தோகை மா மயிலார்கள் –செவி ஓசை வைத்து எழ ஆகள் போக விட்டு குழலூது -6-2-2–என்று
சாதன சாத்தியங்களை அறிவிப்பது —

வாடி நிற்க
அதாவது
மழறு தேன் மொழியாளர்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் குழறு பூவையோடும்
கிளியோடும் குழகேல் -6–2-5- என்றும் –

கன்மம் அன்று
கன்ம மன்று எங்கள் கையில் பாவை பறிப்பது -6-2-8–என்றும் –
ஆன் பின் கை கழியேல்
அதாவது
ஆன் பின் போகல் -10-3-8–என்றும் –
என் கை கழி யேல் –10-3-8–என்றும்
அக்ருதங்களை செய்யாதே கொள் என்பது –

உழி தராய்
அதாவது
நீ உகக்கும் நல்லவரோடும் உழி தராய் -10-3-8–என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொற் கொள் -10-3-10–என்றும்
கிருத்யங்கள் ஆனவற்றை செய் என்பதாய் —

இப்படி பல இடங்களிலும் உபதேசிக்கையாலும் –
பிரதம சரம யுக்தரான -அஜ்ஞா சர்வஜ்ஞர்களுக்கு- பலகாலங்கள் ஹிதாஹிதங்கள் சொல்லுவார் என்ற படி —

சாதன சாத்தியங்களில் கலங்கும் ஈஸ்வரனுக்கு என்று உபக்ரமித்து ,
பிடித்தேன் விடுவேனோ வாடி நிற்க -இத்யாதிகளை எல்லாம் அருளிச் செய்வான் என் என்னில் –
1-சாதன சாத்யஸ்தரை சொன்னதுக்கு பிரதி கோடியாக அவற்றில் கலக்கம் ஜீவ ஈஸ்வரர்களுக்கு –
இருவருக்கும் ஒரோ வழிகளால் உண்டு என்று தர்சிப்பதைக்கு சொன்னது இத்தனை ஒழிய ,
மேல் சொல்லுகிற ஹிதாஹிதங்கள் எல்லாம் அவ் இரண்டு விஷயமாகவே இருக்க வேணும் என்கிற
நிர்பந்தம் இல்லாமையால் விரோதம் இல்லை —
ஜீவ விஷயமான உபதேசம் தன்னிலும் அர்த்த பஞ்சகமும் உபதேசிக்கையாலே -அவை இரண்டுமே இருக்க
வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை இறே ..

2-அங்கன் இன்றிக்கே –
ஜீவ விஷயமான உபதேசத்திலும் -வீடு முன் முற்றவும் பக்தி ரூப சாதன உபதேச பரமாகையாலும் –
கண்ணன் கழலினை -பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படி உபதேசதித்தது ஆகையாலும் ,
நடுவு உள்ள உபதேசத்தை ஆராய்ந்தாலும் -பக்தி பிரபத்தி ரூப சாதன உபதேசமும் ,
பகவத் அனுபவ கைங்கர்ய ரூப சாத்திய உபதேசமும் -பிரசுரமாய்
பிராப்யமான பர ஸ்வரூபத்தையும் –
ப்ராப்தாவான பிரத்யக் ஆத்மா ஸ்வரூபத்தையும் –
பிராப்தி விரோதி யுமையுமே உபதேசித்தவை ..
இந்த சாதன சாத்தியங்களுக்கு ஊன்றவைக்கு உடலாகையாலே — ஏதஸ் சேஷமாய் அறுகையாலும் ,
சாதன சாத்தியங்களில் கலக்கம் தீர்க்கையே உபதேசதங்களுக்கு பிரதானம் என்று ஒருங்க விட்டு-

ஈஸ்வர விஷயமான உபதேசமும் –
சாதன சாத்திய விஷயங்களில் கலக்கம் தீர்க்கையைப் பற்ற என்றே கொள்ள வேணும் ஆகில் –
பிடித்தேன் –விடுவேனோ -என்றிரண்டும் –
தனக்கு சாத்திய பூதரான இவரோடு வந்து சம்ஸ்லேஷித்து பெறாப் பேறு பெற்றானாய் இரா நிற்கச் செய்தே –
இவர் அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலில் செய்வது என் -என்று
அதிசங்கை பண்ணை அலமாக்கிறத்தை நிவர்திப்பிக்கைகாக சொன்னவை ஆகையாலே –
சாத்திய விஷயமான கலக்கத்தை தெளிவிக்கைக்கு சொன்னவை ஆகலாம் ..

சாத்தியத்தில் கலக்கம் ஆவது -சாத்தியம் இன்னது என்று கலங்குகை ஆனாலும் –
சாத்திய வஸ்து விஷயமான கலக்கம் என்கிற மாத்ரத்தைக் கொண்டு -இப்படி யோஜித்தால் வரும் விரோதம் இல்லை ..

வைத்து எழ ஊது -என்கிற இது –
தனக்கு அபிமத விஷயங்களை பிரிந்து -கண்ணாம் சுழலை இட்டு-
அதஸ்மிம்ஸ் தத் புத்தி பண்ணி தங்கள் குழலை கொண்டாடினாகக் கருதி
நாங்கள் அவர்கள் அல்லோம் காண் -அவர்கள் பக்கல் போ -என்கிற நினைவாலே
தோகை மா மயிலார்கள் செவி ஓசை வைத்து எழ -என்று சாத்தியத்தையும் —
ஆகள் போக விட்டு குழலூது -என்று சாதனத்தையும் அவனுக்கு அறிவிக்கையாலே –
உபயத்திலும் கலங்கின அவனுக்கு சொல்லுகிறது என்னும் இடம் சம்பிரதிபன்னம்-

வாடி நிற்க -என்கிற இது
மழறு தேன் மொழியார்கள்-என்று தொடங்கி -உனக்கு அபிமதைகள் ஆனவர்கள் –உன்னைப் பிரிந்து உறாவிக் கிடக்க –
உனக்கு உபேஷா விஷயமான – எங்கள் பூவை கிளிகளோடே கலந்து பேச்சு கொள்ளாதே கொள் -என்கிறது ஆகையாலே –
சாதயத்தில் கலக்கம் கண்டு சொன்னதாம் இது –

கன்ம மன்ற -என்ற இது –
தங்களோடு இட்டீடு கொண்டு ,தங்கள் அபிசந்தையைக் குலைத்து –
தங்களை வசீகரிக்கைக்கு சாதனமாக நினைத்து -தங்களுக்கு அநிஷ்டம் என்று அறியாமல் –
கையில் பாவையைப் பறிக்கும் அவனை குறித்து -உனக்கு இது கார்யம் அன்று இது -என்கையாலே –
சாதனத்தில் கலக்கம் கண்டு சொன்னது ஆகலாம் –

ஆன் பின் போகல் கை கழி யேல் -என்ற இது
பசு மேய்க்க போன இடத்தே -தனக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும்
பிரிவாற்றாமலும்
இத் தலை படுகிற கிலேசம் அறிந்தால் பிரியாதே –இத்தலையோடு கூடி இருக்கை புருஷார்தமாய் இருக்க –
ஜாதி உசித தர்மம் என்கிற மாத்ரமே கொண்டு -பசு மேய்க்க போக ஒருப்படுகிறவனைக் குறித்து –
ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகல் -என்றும் –
கலவியும் நலியும் என் கை கழி யேல் -என்றவை ஆகையாலே –
சாத்தியத்தில் கலங்கினவனுக்கு சொல்கின்றவை ஆகலாம் —

உழி தரு -என்கிற இது –
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி –என்று வசிகர சாதனத்தையும் –
உகக்கும் நல்லவரோடு உழி தரு -என்று அபிமத விஷய சம்ஸ்லேஷமாகிற சாத்தியத்தையும் –
அவை அறியாமல் நிற்கிற இவனுக்கு அறிவித்த தாகவே இருக்கிறது ….

என் சொற் கொள் –என்கிற இது —
பசு மேய்க்க போக வேண்டா என்று விலக்குகிறது .. நமக்கு ஒரு தீமை வாராமைக்காகா என்று அறியாதே –
பரிவையான தன் வார்த்தையை அநாதிக்கிறவனைக் குறித்து –
அவத்தங்கள் விளையும் என் சொற் கொள் -என்றது ஆகையாலே
இதுவும் சாத்தியத்தில் கலங்கினவனுக்கு சொன்னதாக கொள்ளலாம் —

ஆன பின்பு -இவற்றில் கலங்கும் ஈஸ்வரனுக்கு பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர் –
என்றதுக்கு அனுகுணமாக இச் சந்தைகளுக்கு எல்லாம் இப்படி யோசித்தாலும் குறை இல்லை-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –187/188/189/190–

September 27, 2018

சூரணை -187-

இத் திருப்பதிகளில் பிராவண்யம் இவர்க்கு உண்டாய்த்து எப்போது ?
இவர் தாம் பிரபந்தம் அருளி செய்யத் தொடங்கிற்று எத்தனை திரு நஷத்த்ரத்து அளவில் ?
இது தனக்கு போக்த்ரு நியமமுண்டோ ?
இதின் போக்யதை தான் இருக்கும் படி எங்கனே ?
என்னும் ஆ காங்க்ஷையில் அருளிச் செய்கிறார் மேல் ..

இவற்றில் பிராவண்யம் இவள் பரமே என்ன உண்டாய்
ஷோடசகலா பூரணமான சந்திர மண்டலம் போலே
பதினாறு நஷத்ரம் நிரம்பினவாறே
தேவ போக்யமானவதில்
அம்ருதம் போல் அன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர்
முதற் பத்தர் வானவர் என் அம்மான் பார் பர வென்னும் படி
சேஸ்வர விபூதி
போக்யமான பாலோடு அமுதன்ன மென் மொழி முகம் செய்தது–

(இவற்றில் -கீழ் சொன்ன-இத் திருப்பதிகளில் பிராவண்யம் இவர்க்கு உண்டாய்த்து எப்போது ?–
இவற்றில் பிராவண்யம் இவள் பரமே என்ன உண்டாய்-சகஜம் என்றவாறு –
இவர் தாம் பிரபந்தம் அருளி செய்யத் தொடங்கிற்று எத்தனை திரு நஷத்த்ரத்து அளவில் ?-
ஷோடசகலா பூரணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் நிரம்பினவாறே –
இது தனக்கு போக்த்ரு நியமமுண்டோ ?-
தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே என்னாத் தமிழர் இசைகாரர்
முதற் பத்தர் வானவர் என் அம்மான் பார் பர வென்னும் படி சேஸ்வர விபூதி போக்யம்-
இதின் போக்யதை தான் இருக்கும் படி எங்கனே ? -பாலோடு அமுதன்ன மென் மொழி
திரு வாய் மொழி -இவர் முகம் செய்தது
என்னா-என் நா -என்றபடி )

அதாவது
இவ் அர்ச்சாவதார ஸ்தலங்களிலே ப்ராவண்யம் –இவள் பரமே என்ன உண்டாய்-
முலையோ முழு முற்றும் போந்தில –பெருமான் மலையோ திரு வேம்கடம் என்று
கற்கின்ற வாசகம் இவள் பரமே –திருவிருத்தம் -60–என்னும் படி பருவம் நிறம்புவதர்க்கு முன்னே உண்டாய் —

பதினாறு கலைகளாலும் பரி பூர்ணமான சந்திர மண்டலம் போலே பதினாறு நஷத்ரம் பூர்ணமான வாறே

தேவ போக்யமானவதில் அம்ருதம் போல் அன்றிக்கே
அதாவது
கிருஷ்ண பஷே அமரைஸ் சஸ்வத் பீயதே வை ஸூதாமய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-11-22-என்கிறபடியே
தேவர்களுக்கு போக்கியம் ஆகையாலே -போக்த்ரு நியமம் உடைத்தான அந்த சந்திர மண்டல அம்ருதம் போல் அன்றிக்கே —
பொருந்தா வானுறை நாள்களை நாள் தொறும் புணர்வோன் அருந்த வானவர்க்கு
ஆரமுது அன்புடன் அளிப்போன்-வில்லி பாரதம் ஆதி பர்வம்
என்னாவில் இன் கவி –திருவாய் -3-9-1-என்றும் -( இத்தால் ஆழ்வாருக்கும் இதன் இனிமை சொல்லி )
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –திருவாய் -1-5-11–என்றும் –
தூ முதல் பத்தர்க்கு–திருவாய் –7-9-3- -என்றும் -(இவற்றால் கற்பவர்களுக்கு இனிமை )
கேட்டாரார் வானவர்கள்–திருவாய் -10-6-11- -என்றும் –
தென்னா வென்னும் என்னம்மான் -என்றும் -திருவாய் -10-7-5–
பார் பரவின் கவி–திருவாய் -7-9-5- -என்றும்
சொல்லுகிறபடி ஸ்வ பர விபாகம்-ஸூரி சம்சார விபாகம்–ஈச ஈசி தவ்ய விபாகம் அற-
ஈஸ்வரனோடே இரண்டு விபூதியும் புஜிக்கைக்கு யோக்யமாய் –

( பெருமான் மகுடம் சாய்க்கும் வண்ணம் கவி சொல்ல வல்ல ஞானக்கவி -)

பாலோடு அமுதன்ன ஆயிரம்–திருவாய் -8-6-11– -என்றும் –
அமுத மென்மொழி–திருவாய் –5-6-2- -என்கிறபடியே
வாச்ய வாசக சம்ச்லேஷ ரசத்தால் -பாலும் அமுதும் கலந்தால் போலேயாய் –
போக்யத அதிசயத்தாலும் – புஜித்தார்க்கு நித்யத்வத்தை கொடுக்கையாலும் – அம்ருத சமமாய் –
அதில் வ்யாவ்ருத்தமான மார்த்வத்தை உடைத்தான சப்தம்
இவர் முகோத்கதமாய்த்து என்கை ..

————————————————

சூரணை-188-

இவர் பக்கல் பிரபந்தம் அவதரிக்க தொடங்கின காலத்தை அருளிச் செய்தார் கீழ் ..
இது தான் அவதரிக்கிற அளவில் -இப்படி நாம் அவனைக் கவி பாட வேணும் -என்று
சங்கல்ப்பித்து இருந்து பாடினாரோ -என்னும் ஆ காங்க்ஷையில் இதின் அவதரண
க்ரமத்தை அருளிச் செய்கிறார் மேல் ..

நீர் பால் நெய் அமுதாய்
நிரம்பின வேரி நெளிக்குமா போலே
பர பக்தியாதி மய ஞான அம்ருதாப்தி
நிமிகிற வாய்கரை மிடைந்து
மொழிபட்டு அவாவில் அந்தாதி
என்று பேர் பெற்றது-

அதாவது
நீர் பாலாய்–பால் நெய்யாய் –நெய் அம்ருதமாய் -அத்தாலே நிரம்பினதோர் ஏரி
பொறாமல் நெளித்து உடையுமா போலே —
மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1–என்கிற இடத்தில்
கர்ம ஞான அனுக்ருஹீதையான பக்தியின் ஸ்தானத்திலே -பகவத் பிரசாதமாய் —
அது அடியாக பர பக்தி தொடங்கி – பிறக்கையாலே -ஞானம் முதலிலே பர பக்தி ரூபமாய் –
பர பக்தி ஆனது பர ஞானமாய் –பர ஞானம் பரம பக்தியாய் –
அச்யுத பக்தி தத்வ ஜ்ஞான அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வாசோபி -ஸ்தோத்ர ரத்னம் -3-என்கிறபடியே –
அந்த பர பக்தியாதிகளாய் நிறைந்த ஜ்ஞானம் ஆகிற அம்ருதாப்தி யானது –( அப்தி -கடல் )

ஆஸ்ரயம்-அழியாமல் -பரீவாக அபேஷை பிறந்து –
நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க —திருவாய் -6-5-2–என்கிறபடி –
நெளிகிற வாய் கரையிலே –
மிடைந்த சொல் தொடை –திருவாய் -1-7-11–என்கிறபடியே –
சொற்கள் தான் நாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்தோம் ஆக வேணும் -என்று
என்னைக் கொள் என்னைக் கொள் –என்று மேல் விழுகையாலே -நெருங்கிக் கொண்டு –
மொழி பட்டோடும் கவி அமுதம் –திருவாய் -8-10-5–என்கிற படியே
வசன ரூபமாய் பிரவஹித்து இப்படி
பரபக்த்யாத்ய அவஸ்தா த்ரயாபன்ன பக்தி ப்ரேரிதமாய் அவதரிக்கையாலே –
அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரமும் -திருவாய் -10-10-11-– என்று
பக்தி பலாத்காரத்தாலே பிறந்த அந்தாதியான ஆயிரம் என்று நிரூபகமாம் படியாய்த்து என்கை —

(இவர் அறிந்து பாடினார் அல்லர் -அவன் அன்றோ அறிந்து -இவர் நா முதல் அப்பன் பாடினார்
ஆயிரமும் அவாவின் அடிப்படையில் பிறந்தவை -தத்வ த்ரயங்களையும் கபளீகரம் பண்ண வல்ல ஆழ்வார் அவா
நீர் -ஞானம் – பால் பரபக்தி-நெய் பர ஞானம் – அமுதம் -பரம பக்தி -நான்கு தசைகள்
வீடு விடை கவி பாடுவார்கள் –மறியல் -ஆழ்வார் திரு நகரியில் -மாதுளம் பழம் மாலை சாத்தி சேவை உண்டே -)

ஆக இவர் இப் பிரபந்தம் அருளி செய்கைக்கு அடியான பிராவண்யம் பிறந்த காலமும் ,
அருளி செய்யத் தொடங்கின காலமும் ,
இதனுடைய சர்வாதிகாரத்வமும் ,
ரஸ்யதையும்,
அவதரித்த க்ரமமும்
சொல்லிற்று ஆய்த்து ..

——————————————-

சூரணை -189-

இனி மேல் இப் பிரபந்த பிரதிபாத்ய அர்த்தங்களை விஸ்த்ரேண பிரதி பாதிப்பதாக திரு உள்ளம் பற்றி ,
அதில் பிரதமத்திலே சாஷாத்க்ருத பகவத் தத்வரான இவர் -சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்தம்
உபதேசம் பண்ணின இப் பிரபந்தம் –பிரதி பாத்ய அர்த்த சாம்யத்தாலே -பகவத் ப்ரணீத –
கீதோ உபநிஷத் -சமமாகச் சொல்லப் படும் என்கிறார் -மேல் –
(மேலே ஸ்ரீ கீதா சாம்யமும் இதன் ஏற்றமும் அருளிச் செய்கிறார் -மேல் ஐந்து ஸூத்ரங்களால்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருளினான் ஸ்ரீ கீதாச்சார்யர்
அவர் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
திருக்குருகூர் ஞானப்பிரான் சந்நிதியும் பிரதானம் -)

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை
நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் ..

அதாவது
மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —
எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –
எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி
சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –
சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே
பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –
தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –
ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –

நின்மலமாக வைத்தவர் –
எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று
பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசத தமாக அனுபவித்து –
என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லது -திருவிருத்தம் -99-என்று
பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –
என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே–திருவாய் -4-10-9-என்று
உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை
உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை
குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –
அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்ம தியா குலம்
பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –
அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –
நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –
யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம்
சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து
யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே
லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

1 ,2 ,3 தத்வ விவேக –
பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –
வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –
நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –
நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று
சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –
ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –
தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –
பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

4 -நித்யத்வ அநித்யத்வ —
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிண
அநாசின அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்
நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ்
அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,
வாசாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே
ஆத்ம நித்யத்வ தேக அநித்யங்களையும்-

5 -நியந்த்ருத்வ –
பூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –
அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா–7-4-
அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-5-என்கிற படியே
சேதன அசேதன சரீரியாய் –
சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசே ர்ஜூன திஷ்டதி
ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-18-61- -என்றும்
சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று -சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும் —

6 -சௌலப்ய –
தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின-8-11- –என்றும்
பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும்
பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

7 -சாம்ய –
சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று
அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

8 -அஹங்கார தோஷ –
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

9 -இந்திரிய பல–
யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித
இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று
இந்திரிய பிராபல்யத்தையும்-

10 -மன ப்ராதன்ய –
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –
அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம்
அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும்
மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும் –

11 -கரண நியமன –
தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பர
வசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –
சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும்
கரண நியமனத்தையும் —

12 -ஸூஹ்ருதி பேத –
சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று
ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

13 -தேவாசுர விபாக –
த்வௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும்
தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று
தேவாசுர விபாகத்தையும்

14 -விபூதி யோக –
ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும்
ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம்
ரவிரம்சுமான்-10-21- -இத்யாதியால் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சன –
பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச தீப்தான் 11-15-இத்யாதியாலே
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தி –
மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று
அங்க சஹிதையான பக்தியையும்-
(உபாய – சாதன -உபாசனை -பக்தி இது–என் விஷயமாக ஆறு தடவை சொல்கிறான் -)

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா
மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும்
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று
அங்கத்வேனவும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூ ச -18-66- –
ஸ்வதந்த்ரவேனும் –
இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்-

(ரஹஸ்ய த்ரயத்தில் தான் ஸ்வ தந்த்ர பிரபத்தி -கீதா பாஷ்யம் வேதாந்த அர்த்தம் சொல்ல வந்ததால் –
அங்க பிரபத்தி தான் இரண்டுமே )

இவரும்
1-2 -3–ஜீவ பர பேதமும்/ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –
பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்
ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,
( அடியேன் உத்தம புருஷன் இதனால் ஜீவ பரஸ்பர பேதம் -அடிமைத்தனம் அறிந்த அறியாத என்றும் பேதமும் உண்டே )
சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று
ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம்
ஆகிற தத்வ விவேகத்தையும் —

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும்
மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –
உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும்
சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

5–நியந்தருத்வத்தையும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்
சேதன அசேதன சரீரியாய்
நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே
அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய
நியந்தருத்வத்தையும்-

6 -அவனுடைய சௌலப்யத்தையும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும்
ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான
அவனுடைய சௌலப்யத்தையும்-

7 -சாம்யத்தையும்
பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று
அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-
(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

8 -அஹங்கார தோஷத்தையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
சம்சார ஹேது அதுவேயாக சொல்லுகையாலே -அஹங்கார தோஷத்தையும்-

9 -இந்திரிய பலத்தையும்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று
இந்திரிய பலத்தையும்-

10 -மனோ பிரதான்யத்தையும்
மனத்தை வலித்து -5-1-4-என்று
மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

11 -கரண நியமனத்தையும்
உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று
கரண நியமனத்தையும்-( மத் பர அவன் இறை உள்ளில் ஒடுங்கு இவர் )

12 -ஸூஹ்ருதி பேதத்தையும் –
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே
ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்
இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே
ஜிஜ்ஞாசுவான கேவலன் –
குணம் கொள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே
அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே
ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

13 -தேவ அசுர விபாகத்தையும்
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,
நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று
தேவ அசுர விபாகத்தையும்-

14 -விபூதி யோகத்தையும்
புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –
நல் குரவும்-6-3-1- -என்றும் –
மாயா வாமனன்-7-8-1- -என்றும் –
இவைகளில் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சனத்தையும் –
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தியையும்
வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –
மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன்
தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –
மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும் –

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று
அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே –
பக்தி அங்கத் வேனவும் –
மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் –
சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்
ஸ்வதந்திர வேனேவும் –
இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு
மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற
ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –
19-அவதார ரஹச்ய வைபவம்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே
இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று
சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –

20-ஸ்வ ஆராதன்-
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –
ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன -9-26– என்றார் போலே –
பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன
அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –

21-கர்ம யோகம் தொடங்கி ஆச்சார்ய அபிமானம் பர்யந்தம் உபதேசம்
தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –
சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில்
வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது –

———————————-

சூரணை -190-

ஆக ஸ்ரீ கீதையோடு திரு வாய் மொழிக்கு உண்டான சாம்யம் சொல்லிற்று கீழ் .
அதில் இதுக்கு உண்டான ஆதிக்யத்தை பல ஹேதுக்களாலும் சொல்கிறது மேல் …
பிரதமம் வக்த்ரு வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் சொல்கிறது இதில் ..
(பிரபந்த உதய ஹேது வைலக்ஷண்யம் அடுத்ததில் -191-
உபக்ரம உபஸம்ஹார ப்ரக்ரியை வைலக்ஷண்யம் -192-
ப்ரதிபாத்ய அர்த்த வைலக்ஷண்யம் -193 —-கீழே-189- ப்ரதிபாத்ய அர்த்த சாம்யம் பார்த்தோம்
ப்ராமாண்ய உதகர்ஷ வைலக்ஷண்யம் -194- )

அது தத்வ உபதேசம்
இது தத்வ தர்சி வசனம்-

அதாவது
அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –
தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை
தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர –பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே –
தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது ..(ஞானம் இச்சா ஜிஜ்ஞாஸூ )

இப் பிரபந்தம் –
தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று
ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த
தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை ..

இத்தால் சொல்லிற்று ஆய்த்து ..
அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –7-6-என்றும்
மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும்
இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசம்சை போலே
இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது ..
(ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ஐதிக்யம் )

சுத்த சத்வ ஜ்ஞானரான இவர்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் –
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று
இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே ,
இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-