சதுர்-விதா பஜந்தே மாம்mஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ க்ஞானி ச பரதர்ஷப
பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.
————
அபிவ்ருத்தியர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர் வித பல புருஷார்த்த
——–
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-16-
இனி மேல் சாஸ்திர பிரதி பாத்யார்த்த விசேஷங்களை சங்க்ரஹேண பிரதி பாதித்து கொண்டு
ஏவம் பூத சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சாபேஷதையா துஷ்கரம் என்று தானே திரு உள்ளம் பற்றி
ஈத்ருசா நேக யோக்யதா நிர் அபேஷத்வேன ஸூகரமாய் சாஸ்திர தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈஸ்வரன்
வெளி இட்டு அருளிய படியை அருளி செய்கிறார் மேல்-
கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் -என்று அருளிச் செய்தார்
அந்த கலைகளில் சொல்லப்படும் பொருள்கள் இன்னவை இன்னவை என்று இதில் விவரித்து
அதுக்கு மேலே அக்கலைகளை கற்பதற்கு வேண்டிய தகுதிகளை விவரித்து
அதுக்கு மேலே அத்தகுதிகள் இருந்து கற்க முயன்றாலும் -அல்ப வாழ் நாள்-பல் பிணி -சிற்று அறிவினர் ஆகையால்
அக்கலைகளைக் கற்று அறிந்து தெளிதல் அரிது என்று காட்டி அருளி
ஆகையினாலே பக்தி யுடையார் எல்லாரும் அதிகாரிகளாம் படி
எளிதான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினமையையும்
அந்த திருமந்திரத்தின் பெருமையையும்
அது தேனும் பாலும் அமுதமுமாய் திருமால் திரு நாமம் ஆகையால் அத்தை வேதத்தின் நின்றும் எடுத்த வகையையும்
அருளிச் செய்கிறார் இதில் –
சதுர் விதமான தேக வர்ண ஆஸ்ரம அதிகாரி
பல மோஷ சாதன கதி யுக தர்ம வியூக ரூப
கிரியாதிகளை அறிவிக்கிற
பாட்டுப் பரப்புக்கு
பெரிய தீவினில்
ஒன்பதாம் கூறும்
மானிட பிறவியும்
ஆக்கை நிலையும்
ஈரிண்டில் ஒன்றும்
இளைமையும்
இசைவும் உண்டாய்
புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
விக்னமற
நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே
வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்
முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை
தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும்
ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக
வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-
சதுர் விதம் என்கிறது மேல் சொல்லுகிற எல்லா வற்றிலும் அனுவர்த்திக்கிறது
அதாவது
1-தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –ஆகாரேன நாலு வகை பட்ட தேகம்-
2-ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய சூத்திர ரூபேண நாலு வகை பட்ட வர்ணம்
3-பிராமச்சரயா கார்கஸ்த்ய வானப்ரஸ்த சந்த்யா சாத்மக தயா நாலு வகைப் பட்ட ஆஸ்ரமம்
4-ஆர்த்தோ ஜிஜ்ஞாசு அர்த்தா அர்தாதீ ஜ்ஞானி-ஸ்ரீ கீதை -7–16- -என்கிற நாலு வகை பட்ட அதிகாரம்
5-தர்ம அர்த்த காம மோஷங்கள் என்கிற நாலு வகை பட்ட பலம்
6-சாலோக்ய சாமீப்ய சாருப்ய சாயுஜ்யங்கள் என்கிற நாலு வகை பட்ட மோஷம்
(சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்தா லோகம் தன்னை அகற்றுவித்து -கந்தர் கலி வெண்பா )
7-கர்ம ஞான பக்தி பிர பத்திகள் என்கிற நாலு வகை பட்ட ஸாதனம்
8-பஞ்சாக்னி வித்யோக்த பிரகாரேண வரும் கர்ப்ப கதி யாம்ய கதி தூமாதி கதி அர்ச்சிராதி கதி என்கிற நாலு வகைப் பட்ட கதி
9-கிருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகை பட்ட யுகம்
10-த்யாயன் க்ருதே யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி தாதாப்நோதி
கலவ் சங்கீர்த்திய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–12–16–என்று சொன்ன
த்யான யஜன அர்ச்சன சங்கீர்த்தனங்கள் ஆகிய நாலு வகை பட்ட யுக தர்மம்
11-வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் ஆகிய நாலு வகை பட்ட வியூகம்
12-கிருதாதி யுகங்களில் – பாலின் நீர்மை செம் பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்து
வண்டு விண்டுலாம் நீல நீர்மை –திருச்சந்த -44- படியே சொல்லுகிற ஸீத பீத ஸ்யாம நீல தயா -நாலு வகைப் பட்ட ரூபம்
13-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கார மோஷ பிரதத்வங்கள் என்கிற நாலு வகை பட்ட கிரியை
ஆதி சப்தத்தாலே மற்றும் சதுர் வித மான பிரமேய விஷயங்களை சொல்லுகிறது
14-வாசுதேவாத் உத்பன்னரான கேசவ நாராயண மாதவர்கள்
-சங்கர்ஷணாத் உத்பன்னரான கோவிந்த விஷ்ணு மது சூதனர்கள்
பிரத்யும்நாத் உத்பன்னரான த்ரி விக்கிரம வாமன ஸ்ரீதரர்கள்
அனுருத்நாத் உத்பன்னரான ஹ்ருஷீகேச பத்ம நாப தாமோதரர்கள்-என்ற நாலு வகை பட்ட வியூகாந்தரம்
15-ஆமோத பிரமோத சம்மோத வைகுண்ட ரூபேண
நாலு வகைப் பட்ட வியூக ஸ்தானம் முதலானவை பலவும் உண்டு இறே
ஆக இப்படி -பல சதுர் விதமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற-
பாட்டுப் பரப்புக்கு
அதாவது-
பாட்டும் முறையும் படுகதையும் பல பொருளும் ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட மனுவும் சுருதி மறை நான்கும்
மாயன் தன் மாயையில் பட்டதற்பு–நான்முகன் -76- -என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்திர விஸ்தரத்துக்கு-
பெரிய தீவினில் –
அதாவது –
நாவலம்பெரிய தீவு -பெரியாழ்வார் -3-6-1-என்கிற போக மோஷ சாதன அனுஷ்டான பூமி ஆகையாலே
த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூத்வீபத்தில்-
ஒன்பதாம் கூறும்
அதாவது
நவ கண்டத்திலும் வைத்து கொண்டு
வர்ஷாந்தரங்களை போலே-மற்ற கண்டங்களைப் போலே -இவ்வுலகோடு சம்பந்தப்பட்டு இருக்கிற –
ப்வ்மமான -ஸ்வர்க்கம் என்னலாம் படி போக பூமியாய் இராதே
ஸ்வர்க்க மோஷ ரூபமான பலங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஸ்தலமாய்
காயந்தி தேவா கில கீத கானி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே
ஸ்வர்க்க அபவர்க்க ஆஸ்பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷாஸ் ஸூரத்வாத்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-3-24-
என்று தேவர்களும் ஸ்லாகிக்கும் படி யான நவம கண்டமான பாரத வர்ஷமும்
பாரத கண்டத்தில் பிறக்கும் பிறப்பும்-
மானிட பிறவியும்
அதாவது
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21- என்றும்
அத்ர ஜன்ம சகஸ்ராணாம் சகஸ்ரைரபி சத்தம,கதாசித் லபதே ஜந்து மனுஷ்யம் புண்ய சஞ்சயாத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–3–24-
என்றும் சொல்லுகிற படியே
மானிட பிறவி அந்தோ-திருக் குறும் தாண்டகம் -8- என்று துர்லபமாக சொன்ன மனுஷ்ய ஜன்மமும்-
ஆக்கை நிலையும்-
அதாவது –
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21 -என்கிற படியே
மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் -திருவாய் -1-2-2- -என்று அஸ்திரமாக சொன்ன
சரீரத்தின் உடைய ஸ்தர்யமும் –
ஈரிண்டில் ஒன்றும்-
அதாவது –
நிலையுள்ள சரீரத்தைப் பெறினும்
சாஸ்திர ஞான யோக்ய வர்ணங்களில்
பிரதம கண்யமாய்-குலங்களாய ஈர் இரண்டில் ஓன்று–திருச்சந்த -90- என்கிற ப்ராஹ்மண ஜன்மமும்-
இளைமையும்
அதாவது
அந்தணர் குலத்திலே பிறப்பினும்
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயசே சதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-75- -என்கிற படியே
புத்தி கொழுந்து விட்டு அப்யசிக்கைக்கு உறுப்பான கிளர் ஒளி இளமை-திருவாய் -2-10-1- -என்கிற பால்யமும்-
இசைவும் உண்டாய்
அதாவது –
இளமைப்பருவத்தோடு இருப்பினும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-பெரிய திருவந்தாதி -26- என்கிறபடியே
எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே
இதில் மூழுகைக்கு உறுப்பான இச்சையும் உண்டாய்-
புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
அதாவது –
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும்–திருமாலை -3- என்று
சதாயூர் வை புருஷ என்று வேத சாஸ்த்ரோக்தமான ஆயுஸு நூறும்
மனுஷ்யர்கள் தாங்கள் புகுந்தாகள் ஆகிலும் என்று சொல்லுகிற இந்த ஆயுசுக்குள்ளே –
விக்னமற
அதாவது
அனந்தபாரம் பஹுவேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ்ச விக்நா–உத்தர கீதை -7-10–என்றும்
ஸ்ரேயாம்சி பஹிவிக்னானி பவந்தி மஹதாமபி-என்றும் சொல்லுகிறபடியே
சாஸ்திர அப்யாசம் பண்ண வரும் விக்னங்களும் அற்று-
நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே
அதாவது
நின்றவா நில்லா நெஞ்சு–பெரிய திருமொழி -1-1-4- என்றும்
சஞ்சலம் ஹி கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-ஸ்ரீ கீதை -6-34-என்றும் சொல்லுகிற படி
ஒரு விஷயத்தில் அரை ஷணமும் நில்லாதே இவனை அடர்த்து தன் வழியே இழுக்கும்
மனசை கொண்டு அறக் கற்கை
-கலை அறக் கற்ற மாந்தர் -திருமாலை 7–என்கிறபடி சுருதி ஸ்ம்ருதாதி
சாஸ்த்ரங்களை தாத்பர்யம் கை படும் படு அதிகரிக்கை
ஆமாறு அறிவுடையார் ஆர் அவர் அரிது அன்றே-பெரிய திருவந்தாதி -37- -என்று
தாத் பர்யத்தில் உற்று நிற்கை யுக்தமாம் படி அறிவுடையார் ஆகை அரிதன்றோ
என்கிற படியே அரிது என்று திரு உள்ளம் பற்றி இறே-
அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சார தரம் த்யஜேத் பஜேத் சார தாமம் சாஸ்திரம் ரத்நாகார இவாம்ருதம் –
ஸ்ரீ வைகுண்ட தீக்ஷிதீயம் -என்கிறபடியே என்று சார தமமான சாஸ்த்ரத்தை
பஜிப்பான் என்கையாலே வஹ்ய மாணத்தின் சார தமத்தை -தான் மேலே அருளிச் செய்யப் புகும்
திரு மந்திரத்தின் சீர்மையை -தர்சிப்பிக்கிறார் மேல்-
(ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -வீற்று இருந்து ஏழு உலகம் அடுத்து இனி யாம் உறாமை –
சொல்லாமல் விட்டது ஆழ்வார் உளராகைக்காக -ஸ்ரீ ஈடு
நாளை வதுவை போலே சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே –
வேத சாரம் உபநிஷத் இத்யாதி இதில்
அசாரம் பாஹ்யம் -அல்ப சாரம் வேதம் -சாரம் உபநிஷத் –சார தரம் நாராயண அநுவாகம்
-சார தமம் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி -திருமந்திரத்தின் சாரதமம் தர்சிப்பிக்கிறார்)
வேத சார உபநிஷத் என்றது
பூர்வ பாகத்தில் சாரமான வேதாந்தம் என்ற படி
அயதார்த்த பிரதி பாகம் ஆகையாலே அசாரமான பாஹ்ய
சாஸ்திரங்கள் போல் அன்றிக்கே யதா பூத வாதியாய் இருந்ததே ஆகிலும்
சேன விதி முதலாக ஜியோதிஷ்டோஹமாதிகள் ஈறாக
ஐகிக பாரலௌகிக புருஷார்த்த சாதனங்களை பிரதி பாதிக்கிற பூர்வ பாகம்
சூத்திர புருஷார்த்த தத் சாதனம் பிரதி பாதம் ஆகையாலும்
சாஸ்திர ஆஸ்திக்யம்–பிரகிருதி ஆத்மா விவேகம் ..இவற்றை பிறப்பிக்கும்
மாத்ரம் ஆகையாலும் அல்ப சாரமாய் இருக்கும்
அங்கன் இன்றிக்கே அனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதி களையும் —
தத் பிராப்தி சாதனத்தையும் –பிரதி பாதிக்கையாலே
உபநிஷத் பாகம் சாரமாய் இருக்கும்-
சார தர அநுவாகம்
அது தன்னிலும் அவ் உபநிஷத்துகளில் சொல்லுகிற
பர ப்ரஹ்ம பர தத்வ பரம் ஜோதி பரமாத்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலும்
விசேஷ வாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும்
பிரதி பாடுகிறவன் நாராயணனே என்று பகவத் பரத்வத்தை ஸூஸ் ஸ்பஷ்டமாக
பிரதி பாதிக்கிற அநந்ய பரமான நாராயண அனுவாகம் சார தரமாய் இருக்கும்-
சார தம காயத்ரியில்
அது தன்னிலும் காட்டிலும் சர்வ ஸ்மாத் பரதத்வத்துக்கு பிரதான லிங்கமான
அவனுடைய சர்வாந்தர ஆத்மவத்தை பிரகாசிப்பதாய்
அவ் வியாபகமான சகல பகவன் மந்த்ரங்களிலும் ஸ்ரேஷ்டராயிருக்கிற
வியாபக மந்திர த்ரயத்தையும் பிரதி பாதிக்கிற விஷ்ணு காயத்ரி சார தமமாய் இருக்கும்-
முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை – இப்படி உள்ள காயத்ரியிலே
வியப்யாத்யா ஹாராதி சாபேஷமான வியாபகாந்தரங்களில்-விஷ்ணு வாஸூ தேவன் – வ்யாவிருத்தம் ஆகையாலே –
(எவற்றை வியாபிக்கிறார் -எத்தாலே வியாபிக்கிறார் என்று ஸ்பஷ்டமாக இல்லாத விஷ்ணு போல் இல்லாமல் –
வாசுதேவாயா என்பதை போலே அத்யாஹாரம் பண்ண வேண்டாதே)
நாராயணாய வித்மஹே–புருஷ ஸூக்தம்- என்று ஆதரம் தோற்ற பிரதமத்திலே ஓதப் படுகிற –
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -இரண்டாம் -39-என்கிற படியே
வேதாந்த தாத்பர்யமாய் –
ரூசோ யஷும்ஷி சாமானி ததைவா அதர்வணா நிச , சர்வம் அஷ்டாஷர ஆந்தஸ்தம்–பாஞ்சராத்ரம் –என்கிற படியே
சகல வேத ஸங்க்ரஹமுமான திரு மந்த்ரத்தை-
வேதங்களின் சாரமாய் —
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திரு நாமம்-பெரிய திருமொழி -6-10-6-
என்னும் படி இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் கிரஹிக்கிற போது
கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார் மேல் –
தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும்
தேனும் பாலும் அமுதமாக வெடுத்து –
பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-என்பதை
1-தெய்வ வண்டானவன் சாகைகளிலே தேனாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது -என்றும்
2-அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
3-அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
பிரித்து நிரல் நிறையாக பொருள் கொள்ள வேண்டும் –
தெய்வ வண்டாய் சாகைகளிலே தேனாக எடுத்து –
அதாவது
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-ஆகையாலே -ஷட் பதமானது
சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே ,
(விபீஷணன் இடம் நம்பிக்கை ஆகிற தேன்-விதுரர் இடம் -பரதன் இடம் பாரதந்த்யம் –இத்யாதிகளை கிரஹித்து
திருமந்த்ரார்த்தம் தானே திருவாய்மொழி )
சார பூத சமஸ்தார்த்த போதக தயா-எல்லாப் பொருள்களையும் அறிவிக்கின்ற காரணத்தால்
எல்லா சாஸ்திரங்களின் ரசமாய் – சர்வ ரசமான தேன் போலே இருக்கிற
இத்தை வேத சாகைகளிலே தேனை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் –
அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து
அதாவது –
அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திருமொழி -5-7-3-என்கிற படி
ஹம்ச ரூபியானவன் ஆகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற
பாலை விவேகித்து எடுக்குமா போலே
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -பெரிய திருமொழி -6-10-6-என்னும் படி இருக்கையாலே-
(ரிஷிகளும் சொன்னார்கள்-மற்றைய ஆழ்வார்களும் சொன்னார்கள் -நானும் உம்மைத் தொகை )
இன்னார் இனியார் என்னாது எல்லாரும் உட் கொள்ளும்படி -சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை
ஓதம் போல் கிளர் வேத நீரனே-திருவாய் -1-8-10-பாலை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —
அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து
அதாவது –
அமுதம் கொண்ட பிரான்-பெரிய திருமொழி -6-10-3-என்கிற படியே
அசுர பய பீதராய் அமரத்வ சாபேஷரான தேவர்கள் உடைய ரஷணார்த்தமாக
விலஷண போக்யமாய் , விநாச ஹரமும் ஆகையாலே ,அமிர்தம் போல் இருக்கிற இத்தை
நால் வேத கடலிலே அமிர்தத்தை—பெரியாழ்வார் திருமொழி -நாலாம் பத்து
கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும் சொல்லுகிறது -எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —
பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தான்
அதாவது –
ஆக
இப்படி வேத சாராமான இத்தை
ஸ்வயமேவ எடுத்து
அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் வதரி யாஸ்ரமத்து உள்ளானே- பெரிய திருமொழி -1-4-4–என்கிற படியே
நித்ய சூரிகளுக்கு போக்யமாய்
பரம ஆகாச சப்த வாச்யமான பரம பதத்தை கொடுப்பதான
நிர்ஹேதுக கிருபையால்
நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி -10-6-1- என்கிற படியே
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண அவதரித்து
தானே சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாய் நின்று ஸ்வரூப சாஸ்திரம்
சங்குசிதம் ஆகாமல்-சிங்காமை -சுருங்கி விடாமல்- உபதேச அனுஷ்டாங்களாலே வித்ருதமாம் படி பண்ணிற்று-
அறக் கற்கை அரிது என்று இறே -என்றதோடு அன்வயிக்கிறது-
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே
இவர்கள் தன்னை அறிந்து கரைமரம் சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான்
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக –
சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வயம் ஆர்ஜிதம் போலே
திருமந்த்ரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –முமுஷுப்படி
——————————————-
ஸ்ரீ சதுர் வேத விளக்கம் –
ஸ்ரீ ரிக் வேதத்தில் – அதாவது ஸம்ஹிதையில் – பத்தாயிரத்து சொச்சம் [10170] ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. [1028 ஸூக்தங்கள்] .
ரிக் வேதத்தைப் பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்களாகவும் இரண்டு விதத்தில் பிரித்திருக்கிறது.
அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடு ஆரம்பித்து, அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடேயே அது முடிகிறது.
வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாயிருப்பது ரிக் வேதம்.
அதில் உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியைச் சொல்லியிருப்பதால்,
அக்னி உபாஸனைதான் (Fire worship) வேத தாத்பர்யம் என்றே கொள்கிறவர்களும் உண்டு.
அக்னி என்றால் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசம் (ஸத்ய தத்துவத்தைப் பற்றிய அறிவொளி) என்றால், இதுவும் சரிதான்.
‘யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன.
‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான
வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது.
இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில்
பொருத்திக் கொடுப்பதே ( practical application ) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது.
ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, ப்ரோஸில் (உரை நடையில்) யக்ஞம்
முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது.
காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.
ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிற மாதிரி மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே
நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர்.
‘சுக்லம்’ என்றால் வெளுப்பு. ‘கிருஷ்ணம்’ என்றால் கறுப்பு.
சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு “வாஜஸநேயி ஸம்ஹிதா” என்றும் பெயருண்டு.
“வாஜஸநி” என்பது சூரியனுடைய பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய ரிஷி இந்த ஸம்ஹிதையை
உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஜஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது.
கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதத்தின் பெருமை.
தர்ச பூர்ண மாஸம், ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேத யக்ஞங்களைப் பற்றியும்,
பலவிதமான ஸத்ர யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.
அதோடு கூட ரிக் வேதத்தில் இல்லாத சில உயர்ந்த ஸ்தோத்திர பூர்வமான மந்திரங்களும் இதில்தான் வருகின்றன.
உதாரணமாக, இப்போது பெரும்பாலும் வழக்கில் சொல்லப்படும் ஸ்ரீருத்ரம் யஜுர் வேதத்திலிருந்து எடுத்ததுதான்.
ஸூத்ரம் என்பது ஸித்தாந்ததத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது.
பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை.
இந்த விரிவுரையையும் ஸாங்கோபாங்கமாக விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.
தசோபநிஷத்துக்கள் என்கிற முக்கியமான பத்து உபநிஷத்துக்களில்
முதலாவதான ‘ஈசாவாஸ்யம்’, முடிவான ‘ப்ருஹதாரண்யகம்’ இரண்டுமே சுக்ல யஜுர் வேதத்தில்
உள்ளவையே என்பதும் இந்த வேதத்துக்கு ஒரு பெருமை.
‘ஸாமம்’ என்றால் மனஸை சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று அர்த்தம்.
ஸாம-தான-பேத-தண்டம் என்கிறபோது, முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக்
கொள்வதற்கு ‘ஸாமம்’ என்று பெயர் இருக்கிறது. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு
அந்நியோந்நியமாகப் பண்ணித் தருவது ஸாம வேதம். ஒருத்தரை சந்தோஷப்படுத்த என்ன வழி?
ஸ்தோத்திரம் செய்தால் அது சந்தோஷப்படுத்துகிறது. அல்லது பாட்டு பாடினால் சந்தோஷப்படுத்துகிறது.
ஸ்தோத்திரத்தையே பாட்டாகவும் கானம் செய்து விட்டால் இரட்டிப்பு ஸந்தோஷம் உண்டாக்கும் அல்லவா?
இம்மாதிரிதான் ரிக் வேதத்தில் ஸ்துதிகளாக இருக்கப்பட்ட மந்திரங்களில் பலவற்றையே ஸாம கானமாக
ஆக்கித் தருவது ஸாம வேதம். ரிக் வேத மந்திரமேதான்.
ஆனால் ரிக்கில் முன்னே சொன்ன உதாத்தம், அநுதாத்தம் முதலான ஸ்வரங்கள் மட்டுமே இருக்க
ஸாமத்திலோ கானமாகவே அவற்றை நீட்டி நீட்டிப் பாட விதிகள் செய்திருக்கிறது.
பிற்பாடு உண்டான ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம்தான்.
ஸாமகானத்தினால் ஸகல தேவதைகளும் பிரீ்தி அடைந்து விடுகிறார்கள்.
யக்ஞங்களில் ஆஹூதி தருவது மட்டுமின்றி, உத்காதா என்பவர் ஸாம கானம் பண்ணுவதாலேயே
தேவதாநுக்கிரஹம் ஸித்திக்கிறது .
ஸோம யக்ஞங்கள் என்பதாக, ஸோம ரஸத்தைப் பிழிந்து ஆஹூதி கொடுத்துப் பண்ணுகிற
யக்ஞங்களுக்கு ஸாமகானம் ரொம்ப முக்கியமாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, கீதையில் “வேதானாம் ஸாமவேதோஸ்மி” என்கிறார்:
“வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்கிறார்.
அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார்.
அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம்.
அதிலே பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன.
ப்ரோஸ், பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்த பிரயோஜனம் உண்டு.
ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும்
மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன.
மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அநேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.
ரொம்ப உயர்ந்த தத்வங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன.
லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்ரத்தை எல்லாம் கொண்டாடுகிற ‘ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தில் தான் வருகிறது.
யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை.
இதன் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய்
தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும் பிரஸித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள்,
‘பிரச்னம்’, ‘முண்டகம்’, ‘மாண்டூக்யம்’ என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
முமுக்ஷுவானவன் (ஞான சாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்று வசனம் இருக்கிறது.
அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.
மந்திரங்களுக்குள் மஹா மந்திரமாக விளங்கும் காயத்ரி மூன்று வேத ஸாரம் என்று கருதப்படுகிறது.
மூன்று வேதம் என்பதால் இங்கே அதர்வத்தைச் சேர்க்கவில்லை என்றாகிறது.
இதனால் அதர்வ வேதத்தை அத்யயனம் பண்ணுமுன் புனருபனயனம் (இரண்டாம் முறை பூணூல் கல்யாணம்)
பண்ணவேண்டும் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது.
பொதுவாக பிரம்மோபதேசத்தில் உபதேசிக்கப்படும் காயத்ரிக்கு “த்ரிபதா காயத்ரி” என்று பெயர்.
அது மூன்று பாதம் உடையதாக இருப்பதால் இப்படிப் பெயர். ஒவ்வொரு பாதமும் ஒரு வேதத்தின் ஸாரமாகும்.
அதர்வ வேதத்துக்கு வேறு காயத்ரி உண்டு. இப்போது அதர்வ வேதிகள் என்று யாரும் இல்லாதபோது,
அந்த வேதத்தை மற்ற வேதக்காரன் அத்யயனம் பண்ண வேண்டுமானால் இன்னொரு முறை உபநயனம் செய்து கொண்டு
அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிக் கொண்டு, பிறகு அந்த வேதத்தைக் கற்க வேண்டும்.
மற்ற மூன்று வேதங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மூன்றில் மற்ற இரண்டை அத்யயனம் பண்ண வேண்டுமானால்,
இப்படி புனருபனயனம் செய்து கொள்ள வேண்டியதில்லை.
ஏனென்றால், இந்த த்ரிவேதிகளுக்கும் பொதுவாக ஒரே காயத்ரி இருக்கிறது.
நான்கு வேத ஸம்ஹிதைகளும் சேர்ந்து 20,500 மந்திரங்கள்.
ஸாமவேத ஸம்ஹிதையில் ரிக் வேத ஸ்தோத்திரங்கள் உள்ள ‘அர்ச்சிக’ என்ற பாகமும்,
‘கானம்’ என்ற பாகமுமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.
கானங்களில் க்ராம கானம், அரண்ய கானம், ஊஹ கானம், ஊஹ்ய கானம் என்ற நாலுவகை உள்ளன.
———————-
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-2-வ்யூஹ நிலை திரு நாமங்கள் -123-146-
ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-
சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14
லோகாத்யஷஸ் ஸூராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்ப்புஜ–15
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-
———————————————————-
இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது
கிமேகம் தைவதம் லோகே-எது உயர்ந்த ஒரே தெய்வம் -என்றும் கிம் வாபி ஏகம் பாராயணம் –எது அடையப்பட வேண்டிய ஒரே உயர்ந்த இலக்கு -என்றும் கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன
இனி ஸ்துவந்த கம் –யாரை ஆராதிப்பது -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப் படுகிறது –
அதில் வாஸூதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது –
அடுத்து வரும் மஹா தப என்பதன் மூலம் ஸங்கர்ஷணன் பற்றிக் கூறப்படுகிறது
இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-
ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந –சாந்தி பர்வம்-பீஷ்மர் யுதிஷ்டரன் இடம் கூறுவது
பரமாத்மாவின் ஸ்ரீ வைகுண்டத்தை ஒப்பிடும் போது ஸ்வர்க்காதிகளும் தாழ்வான நரகம் போன்றவையே யாகும்
பர வ்யூஹ விபவ ஆத்மநா த்ரிவிதம்
பரம் ப்ரஹ் மேதி பாகவத ஸித்தாந்த -தத்ர பரம் நாம அகார்யம் கார்யாந வச்சிந்ந பூர்ண ஷாங்குண்ய மஹா ஆர்ணவோ த் கலிகை காதபத் ரீக்ருத
நிஸ் ஸீம நித்ய போக விபூதிகம் முக்தோபஸ் ருப்யம் அநவ்பாதிகம் அவஸ்தா நாம்
வ்யூஹஸ் ச
முமுஷு ஸிஸ்ருஷயா ப்ரதேய ஸ்ருஷ்டி ஸ்திதி லய
ஸாஸ்த்ர ததர்த்த தத் பலாநி
த்யாந ஆராதநே லீலா சேதீத் ருஸ
கார்ய உப பக்த விபக்த பர குண ரூப வ்யாபார ஸீகர வ்யூஹ நிர்வாஹித லீலா விபூதிகம்
முக்தி ஸாதகம் சதுர் கா அவஸ்தா நாம்
விபவஸ் ச
தச்சாய ஸூர நர திர்யக்காதி
ஸ்வ விபவ ஸஜாதீய ஐச்ச ப்ராதுர் பாவ வர்க
ததா ச ஸ்ரீ ஸாத்வதே
ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
நாநா க்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் – சாத்துவத சம்ஹிதை
ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே
தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
மத்ஸ்ய கூர்மாதயா
அந்யே து ருஷ்யாதிவி ஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந யதா
பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா
அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
யதா அர்ச்சாவதார
இதி சதுர்த்தா
நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் தத பேத உபதேசாத்
ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்
அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது
புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்
நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநா ஸ்வ பரி கண நாத்
தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச
ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்
ப்ராதுர் பாவ விசேஷாதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே
அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்
தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்
ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்
இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்
இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் தத் அம்ச பூதஸ் ஸந
விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
அம்ச ஸப்தஸ் சைதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத
அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்
ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதீதரஸ்ய
யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அலைசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
யுகங்களின் முடிவில்
சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்
அத்ராந்தர ஸப்தோ பேத வசந
இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்
ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்
ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்
அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச
புநரபி தாத்ருஸ லக்ஷணம்
ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வதா காராந்தர மாக்ருத
யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம்
ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
அப்யயை பிரபவாக் யைஸ்து கௌண முக்யை ஸூ ரேஸ்வரை
இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே
ததா முமுஷு பிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நஷேதஸ் ச
ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது
யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
ஜ்ஞாத் வைவம் பக்தி ஸா கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-
ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போம் கோப கரண தயா
பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்
இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீ நம் அவ திஷ்டதே
வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
காலோபி யந்தி யந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக
முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
ஜீ முதாச்சா அகிலா நாமா து அப்சரோ கண உத்தம
ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
சந்த்ரார்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச
அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி பண்டிதந்யாய பண்டிதம் அந்யாயாம்
ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே
———–
இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –
வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-
சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்
———-
139-சதுராத்மா –
நான்கு ரூபங்கள் –
இத்தம் சதுராத்மா
வாஸூ தேவ -ஸங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்த -இதி –வாசுதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் –
மீண்டும் -775-நாலு விதமாக -ஜாக்ரத -ஸ்வப்ன -ஸூ ஷுப்தி -துரீயம் -ஸ்தூலம் சூஷ்மாயும் விளங்குபவன்
வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சதுராத்மா நம
——————-
140-சதுர்வ்யூஹ –
நான்கு வ்யூஹ மூர்த்திகளாக
மீண்டும் 773–வாசுதேவ கிருஷ்ணன் -பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்
கதமேகஸ்ய சாதுராத்ம்யம் –தத்ராஹ
சதுர்வ்யூஹ
யத் யுக்த ப்ரயோஜன -ஏப்யோத்யே -ஆராத்யா -வ்யக்தயே –
ச ஸமஸ்தவ் யஸ்தேந குண ஷட்கந -தத் வ்யஞ்ஜகவ்ய அவஸ்தித
அவயவ- வர்ண-பூஷண- ப்ரஹரண -வாஹந -த்வஜாதி பிர்ஜா
கரா க்ரதாத்ய வஸ்தா சதுஷ்டய விஸிஷ்ட அபி மூர்த்திபிஸ்
சதுர்த்தா வ்யூஹத இதி
த்யானத்துக்கு-ஏற்ப -உருவம் நிறம் திரு ஆபரணங்கள் வாஹனம் த்வஜம் வேறு பட்டு
அநிருத்தன் -ஜாக்ரத விளித்து கொண்டு இருக்கும் அவஸ்தை நிலை
பிரத்யும்னன் -ஸ்வப்ன -நிலை
சங்கர்ஷணன் ஆழ்ந்த தூக்கம் ஸூ ஷுப்தி
வாசுதேவன் துரீய அவஸ்தை மூச்சும் அடங்கி இருக்கும் நிலை
மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-
ஜாக்ரத் -விழிப்பு நிலை / ஸ்வப்னம் கனவு நிலை /ஸூஷூப்தி-ஆழ்ந்த நிலை உறக்கம் /தூரியம்-மயக்க நிலை -நான்கும்
வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –
வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சதுர் வ்யூஹயா நம
———————
141-சதுர்த்தம்ஷ்ட்ர-
நான்கு முன் பற்களை உடையவன் -முத்துக்கள் போலே
வ்யூஹ மூலேந பரேண ரூபேண
சதுர் தம்ஷ்ட்ர
சதுர் தம்ஷ்ட்ரத்வம் மஹா புருஷ லக்ஷணம்
யதா
சதுர்தச சம த்வந்த்வ சதுர் தம்ஷ்ட்ர சதுர் கதி –ஸூந்தர-35-19-
14-உறுப்புக்கள் -4-பற்கள் -4-நடைகள் கொண்டவன்
வ்யூஹங்களுக்கு மூலமான பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
சிங்கம் புலி யானை காளை நடைகள் -சிம்ம கதி வ்யாக்ர கதி கஜ கதி ரிஷப கதி
14-உறுப்புக்கள் -புருவங்கள்- நாசி துவாரம் -கண்கள்- காதுகள்- உதடுகள் -திரு மார்புகள் -கை முஷ்டிகள்-
இரண்டு பட்ட இடுப்புக்கள் -கால் முஷ்டிகள் -மணிக்கட்டுகள்- திருக்கரங்கள் -திருவடிகள் -கால்கள் –
நரசிம்ஹ அவதாரத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -அல்லது நான்கு கொம்புகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
நான்கு கோரைப் பற்களை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சதுர் தம்ஷ்ட்ராய நம
—————–
142-சதுர் புஜ –
நான்கு திருக்கைகள் உடையவன்
ததா சதுர்புஜ-ததா ஹி பரம் ரூபம் ஆஹ
சதுர் புஜம் உதாராங்கம் சக்ராத்யாயுத முஷ்ணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்
நான்கு திருத்தோள்களோடே கம்பீரமான திவ்ய மங்கள விக்ரஹத்துடன்
திருச் சக்ரம் போன்ற திவ்ய ஆயுதங்களைத் தரித்தவன்
தமச பரமோதாதா சங்க சக்ர கதா தர –யுத்த -114-15-
அப்பால் உள்ள பரமபதத்தில் சங்கு சக்ரம் கதை போன்ற திவ்ய ஆயுதங்களை ஏந்தியபடியே உள்ளவன்
புஜைஸ் சதுர்பி சம்மதம் -மஹா பாரதம்-நான்கு புஜங்களுடன் கூடியவன்
ஈரிரண்டு மால் வரைத் தோள்
நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-
பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு திருக் கைகள் உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-
நான்கு திருக் கரங்கள் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –
தர்ம அர்த்த காம மோஷங்களைத் தருபவர் -நான்கு கைகளை உடையவர் -நான்கு வேதங்களினால் உண்டாகும் ஞானத்தால்
தம்மைக் காட்டித் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-
ஓம் சதுர் புஜாய நம
தாமரை -பரம புருஷார்த்தம்
நான்கு புருஷார்த்தங்கள் -அறம் பொருள் இன்பம் வீடு
————
139 வது திருநாமம் சதுராத்மா – பெருமான் தன்னையே வாஸீ தேவன் ப்ரத்யும்னன், ஸங்காஷணன் அநிருத்தன் என நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ராமாயணத்தில் பகவான் ஒருவர் தான் தன்னை ராம லஷ்மணர் பரத சத்ருக்கன் என பிரித்துக் கொண்டார் என்கிறது . பிதரம் ரோஜயா மாஸ்ய எனது வங்கும் ப்ரமாணத்தின் படி பகவான் தசரதனை தனக்கு தந்தையாக வரித்தார். ராமன் என்பது ஒரு நாமம் தானே என்றால் அவரவர் செய்வதை பொறுத்து நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார் என்றார். லக்ஷமணன் செய்வது ஒன்று. பரதனின் அவதார நோக்கமே வேற . அது போல் சத்ருக்கன் அவதார நோக்கமே வேற. அது போல் இப்போது பார்க்கும் நான்கு பேரும் தன்னை வெவ்வேறு தொழிலுக்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைத்தும் ஒருவரே பண்ணலாம் என்றாலும் நாம் அனுபவிக்க ஹேதுவாய் 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவருக்கு படைப்பது பிடிக்கும், மற்றெருவருக்கு அழிப்பு தொழில் பிடிக்கும். ஆக ஆஸ்திரிகர்களின் விருப்பப்படி சேவை சாதிக்க தகுந்தார் போல் அந்தந்த ரூபத்தில் வணங்கத்தக்கவராய் தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டார்கள் என சாதித்தார். ராமனின் அவதார நோக்கமே லோகத்தில் தர்மம் சீர்குலைந்து போயிற்று. பெரியவர்கள் சொன்னால் சிறியவர்கள் கேட்பதில்லை என ஆயிற்று இது போல க்ருத த்ரேதா யுகத்தில் தாய் சொல்வதை மகள் கேட்பது கிடையாது . ஆச்சராயன் சொன்னால் சிஷ்யன் கேட்பது கிடையாது. இந்த மாறுபட்ட கருத்தை சரி பண்ணத்தான் இராமன் அவதரித்தார் என்றார். தந்தை சொல்மிக்க மந்தரமில்லை என தந்தை சொன்னார் என்பதற்காக காட்டிற்கு ராமன் சென்றனர். ஆதிசேஷன் அவதாரமான லக்ஷ்மணன் பகவானுக்கு கைங்கரியம் சேஷத்துவம் புரியவே இருந்தார். ஸ்வயம்புது. எனது வங்கும் ப்ரமாணப்படி நீ ஆணையிடு ராமா அதை நான்பின் தொடர்ந்து கைங்கரியம் புரிவேன். ஆக ஜீவாத்மாக்கள் அனைவரும் பரமாத்வாவின் சேஷர்கள். ஆக கைங்கர்யம் புரிவதல் லக்ஷ்மணன் நோக்காக கொண்டுள்ளார். பரதனின் அவதார நோக்கம் நிறைய கைங்கரியம் செய்வார். ஆனால் ராமனுடன் கூட செல்லவில்லை. ஆனால் ஆச்சார்யர்கள் பரதனையே லக்ஷ்மணனை விட உயர்நதவன் என கொண்டாடுகிறார்கள் . லக்ஷ்மணன புரிந்த கைங்கர்யத்திற்கு சேஷத்துவம். என்று பெயர் பரதன் ராமன் இட்ட வழக்காய் கைஙகர்யம் புரிந்ததற்கு பாரதந்திரியம் என்று பெயர். சேஷத்துவத்தை விட பாரதந்திரிய மே போற்றத் தகுந்தது . பரதனுக்கு மட்டும் நாட்டில் இருக்க விருப்பமா? ராமன் கூறினான் என்பதற்காக நாட்டில் இருந்தார். நாமும் பகவானுக்கு கைங்கரியம் பண்ணும் போது அவர் திருவுள்ளம் கோணாதபடி நடக்க வேண்டும் என அறுதியிட்டார். பகவானுக்கு கைங்கர்யம் புரிவதைவிட அவர் அடியார்களான பாகவதோத்தமர்களுக்கு அத்யந்த பார தந்திரியனாய் கைங்கர்யம் புரிவதை வெளிக்காட்டவே சத்ருக்கன் அவதாரம். ராமனின்றி இருந்த பரதன். பரதன் அன்றியிருந்த சத்குக்கனன். இதைத்தான் அடியார்க்கு அடியார்- தம் அடியார்க்கு அடியார் – தமக்கு அடியார்க்கு அடியர் – தமக்கு அடியோங்களே ஆக அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியன் என்பதையை சத்ருக்கன் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். சதுராத்மா – 4 ஆக பிரிந்தார் போல் வாஸுதேவன் முழுவதுமாய் இருந்து பின் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என நான்காக இருக்கிறார்
140 வது திருநாமம் – சதுர்வியூ ஹ : வியூகம் என்றால் பிரித்தல் வகுக்கிறது என அர்த்தம். துவாபரயுகம் வரை மொத்த வேதமும் ஒன்றாக இருந்தது. வேதவியாசர் பிறந்த பின் தான் மொத்த வேதத்தையும் பிரித்தார். வேதங்கள் 4 ராம லக்ஷணாதிகள் – 4 ஆக எதிலும் 4. இங்கு வாஸுதேவன் ஸங்கர்ஷணன் ப்ரத்யும்னன், அநிருத்தன் என 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ததம் ஏகஸ்ய ….என பட்டர் சாதித்தபடி எதற்காக ஒருவரே தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். த்யேய ஆராத்ய … குணஷட் கேண..6 குணங்களாய் தன்னைப் பிரித்துக் கொண்டு ஞான பலம் – சங்கர்ஷணன் ஐஸ்வர்யம் வீர்யம் – ப்ரத்யும்னன் சக்தி தேஜஸ் – அநிருத்தன் என்றும் தலா ஒவ்வொருவரும் 2 குணங்களை கொண்டுள்ளார். அப்போது அநிருத்தனுக்கு ஞானம் கிடையாதா என கேள்வி எழ எல்லோர்க்கும் எல்லா குணங்களும் உண்டு. ஆனால் அந்தந்த 2 குணங்கள் ப்ரதானமாய் மேலோங்கி இருக்கும் என சாதித்தார். திருவேங்கடமுடையான் எளிமையின் நீர்மையின் ஸ்வரூபமாய் திகழ்கிறார் என்றால் ஸ்ரீரங்கநாதனுக்கு எளிமை கிடையாது என்று அர்த்தமில்லை அவரவர்கள் செய்யும் தொழிலுக்கேற்ப முக்கியமான 2 குணங்களை எடுத்துக் கொள்கிறார். தத்வியஞ்ச விவஸ்தித… எனது வங்கும் ப்ரமாணத்தின் படி அவரவர் கையில் வைத்திருக்கும் ஆயுதம், அவரவர்கள் திருமேனி வர்ணம், அவரவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள், வாகனங்கள் எல்லாம் வேறாக இருக்கும். இதற்கு சான்றாய் நிறைய ஹோம குண்டங்கள் கொண்டுள்ள யாகசாலையில் நிறைய படங்கள் இருக்கும். அந்த ஒவ்வொரு படங்களிலும் இந்த 3 பேர்களின் படம் தான் வரையப்பட்டிருக்கும். சங்கம், கதை சக்கரம் என ஒவ்வொருவரும் தரித்துக் கொண்டு இருப்பர். இதை பாஞ்சராத்ர ஆகமத்தில் விவரித்து கூறப்பட்டு இருக்கிறது. முன் குறிப்பட்டது போல் கையில் பிடித்திருக்கும் ஆபரணம், திருமேனி வர்ணம் ஒவ்வொன்றும் மாறி இருக்கும். விசாக வியூக ஸ்தம்பம் என்று ஒன்று உள்ளது. இதே போல் ஸ்ரீரங்கத்திலும் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது. அந்த இடத்தில் நீளமாய் தூணை கட்டி வைத்துள்ளார்கள். அந்த தூணில் கீழே 4 கிளை. நடுவில் 4 கிளை மேலே 4 கிளை – 4.4-4-4 என 16 கிளைகள் இருக்கும். இதை ஒவ்வொரு கிளையாக பிரித்திருப்பதின் நோக்கம் – கீழ் களையிலிருந்து அடுத்த களைக்கு போகும் போது ஒரு தெளிவு பிறக்கும். இப்போது எல்லாம் முழித்துக் கொண்டு இருக்கோம். இந்த தசைக்கு பெயர் ஜாக்ரதா தசை. (விழித்திருக்கும் தசை) மனசு வேலை பார்க்கிறது. கண் காது போன்ற இந்த்ரியங்கள் வேலை பார்க்கிறது. இதற்கு அடுத்த தசை தூங்குவது. தூங்கி விட்டோம் என்றால் ஸ்வப்னம் காணும் நிலை . இதை யே ஸ்வப்னதசை என்கிறார்கள். மனது மட்டும் வேலை பார்க்கும். கண்காது எல்லாம் மூடிக்கொண்டு விடும். ஆனால் உள்ளே இருக்கும் உலகம் தெரிகிறது. மனது வேலை செய்கிறது. இது ௨வது தசை. ஸ்வாபதசை . 3வது தசைக்கு ஸீஸுக்தி என்று பெயர். நல்ல ஆழ் நிலை உறக்கம். மனசு, கண் காது எல்லாம் தூங்கிவிட்டது நன்றாக தூங்கின தசை .3வது .அடுத்து 4வது தசை துரியதசா. துரிய தசா என்பது மயக்க தலை இப்போது மயக்கநிலை அந்த தூரத்தில் ஒன்று உள்ளே வரப்போவது தெரியும். சுமாராகத் தெரியும். இன்னும் அருகில் வந்தால் நேற்று பார்த்தது போல் தோன்றும். அதன் பின் சற்று அருகாமையில் மேலும் வரும் போது இவர் தான் என ஊர்ஜிதமாகிறது. வந்து உட்கார்ந்தவுடன் அங்க அடையாளங்கள் தெரிந்து விட்டது. தள்ளி இருக்கும் போது சுமாராக காட்சி அளித்தது எல்லாம் கிட்டக்க அருகாமையில் வர வர தெளிவாய் தெரியும். அது போல் ப்ரஹ்மத்தை நோக்கி போக போக தெளிவு பிறக்கும். ஆக படிப்படியான எல்லா தசைகளையும் அடைந்து முடிவில் நன்றாக தூங்கிவிட்டால் நன்றாக பெருமானை ஒன்றி அனுபவிக்கிறோம். அதாவது பெருமானுடன் ஒன்றிவிடுகிறோம். இதைத்தான் விசாக வியூக ஸ்தம்பம் என அழைப்பர்
———
தசரதனின் நான்கு பிள்ளைகளை மணந்த நாலு பெண்கள்
ராமர்-சீதை
லெட்சுமணர்-ஊர்மிளை
பரதர் – மாண்டவி
சத்ருக்னன் -ஸ்ருதகீர்த்தி
வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் நாலு
ரிஷிக்களிடம் அவைகளைப் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்
ருக் – பைலர்
யஜூர் – ஜைமினி
சாம – வைசம்பாயன
அதர்வண – சுமந்து
மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை கடந்து செல்ல வேண்டிய நாலு நிலைகள்
பிரம்மசர்யம் (மாணவன்)
கிருஹஸ்தன் (இல்லறத்தான்)
வானப்ரஸ்தம் (கடவுளை வணங்க கானக வாழ்வு)
சந்யாசம் (துறவு)
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
வெண்பா (4 வரிகள் உடையது),
இரண்டு வரிகளை உடையது குறள்.
பிரம்மாவின் நாலு மானச
புத்திரர்கள் யாவர்?
சநகர்
சநாதனர்
சநந்தனர்
சனத் குமாரர்
நான்கு வகைப் பூக்கள் யாவை
கோட்டுப் பூ, கொடிப் பூ,
நிலப் பூ, நீர்ப் பூ
க’ வர்க்கத்தில் துவங்கும் நாலு புண்ய சொற்களைத் தியானிப்போற்கு புனர் ஜன்மம் இல்லை
கங்கை
கோவிந்தன்
கீதா
காயத்ரி
கும்பமேளா நடைபெறும் நாலு இடங்கள்
ஹரித்வார்
அலகாபாத் (பிரயாகை திரிவேணி
த்ரிவேணி
சங்கமம்)
நாசிக்
உஜ்ஜையினி.
ரத, கஜ, துரக, பதாதி
(தேர், யானை, குதிரை,
காலாட் படைகள்)
உபநிஷத்தில் கூறப்படும் நாலு
மஹா வாக்யங்கள்
அஹம் ப்ரஹ்மாஸ்மி
தத்வம் அஸி
ப்ரஹ்ஞானம் ப்ரஹ்ம,
அயமாத்ம ப்ரஹ்ம
———————–———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்