Archive for the ‘அஷ்டோத்ரம்’ Category

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –ஸ்ரீ மாங்கள்ய விருத்தி ஸ்லோகம் —

February 24, 2022

ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ஸ்ரீ மாங்கள்ய விருத்தி ஸ்லோகம்
ஸ்ரீ தால்ப்யர் னென்கிற மகரிஷி ஸ்ரீ புலஸ்ய மஹரிஷி இடம் கேட்பதாக – ஸம்வாதம் -மூலமாக பிறந்த ஸ்லோகம்

தால்ப்ய உவாஸ
கார்ய ஆரம்பேஷு ஸர்வேஷு துஸ் ஸ்வப்னேஷு ச சத்தம
அமங்கல்யேஷு த்ருஷ்டேஷு யஜ் ஜப்த்தவ்யம் தத் உச்யதாம் –1-
யேந ஆரம்பாஸ் ச ஸித்த்யந்தி துஸ் ஸ்வப்னஸ் சோப ஸாம்யதி
அமங்கலா நாம் திருஷ்டா நாம் பரிகாதஸ் ச ஜாயதே –2-

ஏதாவது நற்காரியங்கள் தொடங்கும் போதும் -தீய கனாக்கள் கண்ட போதும் அமங்கல வஸ்துக்களைப் பார்க்க நேரும் போதும்
எத்தை ஜபிக்க வேணுமோ அத்தை தேவரீர் அருள வேணும்

எத்தை ஜபித்தால் தொடங்கின கார்யங்கள் எல்லாமே ஸித்தி பெறுமோ
தீய கனாக்கள் கெட்ட பலன்களைத் தராமல் ஒழியுமோ
கண்ட அமலங்கள் கெடுதலை விளையாமல் போகுமோ
அத்தைச் சொல்ல வேண்டும் என்று பிரார்த்திக்க

——

புலஸ்ய உவாஸ
ஜநார்தநம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்யஸ் ஸததம் மஹா முநே
துஷ்டான்யசேஷாண்யபஹந்தி ஸாதயத்யஸேஷ கார்யாணி ச யான்ய பீப்ஸதி –3-

சகல பிராணிகளுக்கும் சேஷியாய் -ஸகல சேதனர்களுக்கும் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குபவராய் –
ஜனார்த்தனன் என்ற திருநாமம் கொண்ட பெருமாளை
இடைவீடு இன்றி சிந்தனை செய்யும் மனிதன் ஸகலவிதமான கெடுதல்களை தவிர்த்துக் கொள்கிறான்
சாதித்திக் கொள்ள விரும்பும் சகல காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்கிறான் –

———

ஸ்ருணுஷ்வ ஸான்யத் கததோ மமாகிலம் வதாமி யத் நே த்விஜ வர்ய மங்களம்
ஸர்வார்த்த சித்திம் பிரததாதி யத் ஸதா நிஹந்த்ய சேஷாணி ச பாதகாநி–4-

மேலும் நான் உரைக்கக் கேளீர்
ஸர்வார்த்த ஸித்தியைத் தரவல்லதும் ஸகல பாதகங்களையும் தொலைக்க வல்லதான
மங்கள ஸ்தவம் யாது ஓன்று உண்டோ -அது தன்னைச் சொல்லா நின்றேன் –

————-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதஸ் ச ஹேது
ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –5-

இது முதல் ஸ்தோத்ரம் தொடக்கம்
ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
கிருஷ்ணே திஷ்டதி ஸர்வ மேதத் அகிலம் -என்கிறபடியே
ஸகல சராசரங்களும் யாவன் ஒரு எம்பெருமான் பக்கலிலே ப்ரதிஷ்டிதம் பெற்று இருக்கின்றனவோ

ய ஜகத் த்ரயே
நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணன் என்கிறபடியே
யாவன் ஒருவன் மூன்று உலகினுள்ளும் பிரதிஷ்டித்தனாய் இரா நின்றானோ

யச் ச ஜகதஸ் ஹேது
ஸகல ஜகத் காரண பூதன் யாவன் ஒருவனோ
தான் ஓர் உருவே தனி வித்தாய் -வேர் முதல் வித்தாய் -த்ரிவித காரணமும் யாவன் ஒருவனோ
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்
ஞான ஸக்த்யாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸஹகாரி காரணம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்த காரணம்

ய ஜகத் ச பாதி ச யத்தி
காரண பூதன் ஒருவனாய்
ரக்ஷக ஸம்ஹாரங்கள் வேறு ஒருவராய் இருக்கை அன்றிக்கே
ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கும் இவனே கர்த்தா
அத்தி -என்று ஸ்ருதி சாயையிலும் ஸூத்ர சாயையிலும் ஸம்ஹரதியைச் சொன்னவாறு
ஆக ஸகல ஜகத்துக்கும் ஆதார பூதனாயும்
ஆதேய பூதனாயும்
தத்புருஷ ஸமாஸமும் பஹு வரீஹீ ஸமாஸமும்
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்தனாயும்
இரா நின்ற ஸர்வேஸ்வரேஸ்வரன்

யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
எனக்கு மங்கள விவ்ருத்தி ப்ரதானாக வேணும் என்றதாயிற்று
ஸர்வதா -மத்யம தீப நியாயத்தாலே மூன்றாம் பாதம் நான்காம் பாதம் இரண்டுடன் அன்வயம்

———-

வ்யோ மாம்பு வாய்வகனி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான் யோ அணு தரோணு பாவாத்
அஸ்தூல ஸூஷ்மஸ் ஸததம் பாரேச்வரோ மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–6-

வ்யோ மாம்பு வாய்வகனி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான்
நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடு வானாய் -என்கிறபடியே
பஞ்ச பூதங்களாக விரிந்தும்

யோ அணு தரோணு பாவாத்
அணு பாதார்த்தங்களிலும் அணுவாய்

அஸ்தூல ஸூஷ்மஸ் ஸததம் பாரேச்வரோ
ஸ்தூல வஸ்துவாயும் ஸ்தூல இதர வஸ்துவாயும் ஸூஷ்ம வஸ்துவாயும் ஸூஷ்ம இதர வஸ்துவாயும்
இருக்கும் பரம புருஷன்

மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
எனக்கு மாங்கள்ய விருத்தியைத் தந்து அருள வேணும்

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோய்

————-

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத நந்தாத் அநாதி மத்யாததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது ஹேது பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–7-

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத்
அநந்தத்வமாவது -பரிச்சேத ரஹிதத்வம்-தேச கால வஸ்து -த்ரிவித பரிச்சேத ராஹித்வத்தைச் சொல்கிறது
எப்பொருளும் தானாய் -வஸ்து பரிச்சேத ரஹிதன்

அநாதி மத்யாததிகம்
ஆதியும் அந்தமும் இல்லாதவன்
ஆகவே மத்யமும் இல்லாதவன்

ந கிஞ்சித் ஸ ஹேது ஹேது
கார்ய பதார்த்தங்களை எல்லாமே காரண பூதன்

ஸ ஹேது -பதம் கார்ய பதார்த்தங்களைச் சொல்லுகிறது —
ஹேதுவுடன் கூடியதாகில் அது கார்யமாகவேதானே இருக்க வேண்டும்

பரமேஸ்வரேஸ்வரோ –
பரமேஸ்வரன் என்ற பேர் பெற்றவனுக்கும் ஈஸ்வரனானவன்

மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–
அப்படிப்பட்டவன் எனக்கு மாங்கள்ய விவ்ருத்தி பிரதனாக வேணும் –

————-

ஹிரண்ய கர்பாஸ்யுத ருத்ர ரூபீ ஸ்ரு ஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி ச
குணாக் ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–8-

ஹிரண்ய கர்பாஸ்யுத ருத்ர ரூபீ ஸ்ரு ஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி ச
நான்முகனை ஆவேசித்து ஸ்ருஷ்டியும்
ருத்ரனை ஆவேசித்து ஸம்ஹாரத்தையும்
ஸ்வேந ரூபேண நின்று ரக்ஷணத்தையும்
பண்ணிப்போருவதாக ஸாஸ்த்ரம் சொல்வதையே பூர்வ அர்த்தம் சொல்லுகிறது

குணாக் ரணீர் யோ பகவான்
குண ஸப்தம் குணவான்களைச் சொல்லுகிறது –
குணவான்களுக்குள்ளே தலைவன் என்கை
ஸமஸ்த கல்யாண குண அம்ருதமாய் இருப்பவன் என்றவாறு

ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–
அப்படிப்பட்டவன் எனக்கு மாங்கள்ய விவ்ருத்தி பிரதனாக வேணும் –

————-

பரஸ் ஸூராணாம் பரமோஸ் ஸூராணாம் பரோ யதீநாம் பரமோ முனீ நாம்
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி–9-

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தால்ப்ய மகரிஷி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புலஸ்ய மஹரிஷி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்–

January 6, 2022

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்

கதாசித் காலிந்தீ தட விபின சங்கீதகரவோ
முதாபீரீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப:
ரமா சம்பு ப்ரஹ்மாமர பதி கணேசார்ச்சித பதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 1

யமுனைக்கரையில் உள்ள சோலைகளில், சில வேலைகளில் பகவான் ஜெகந்நாதர் மிக்க ஆனந்தத்துடன்,
புல்லாங்குழலை ஊதி, இசைக்கச்சேரி நிகழ்த்துவார்.
அவர் விரஜபூமியிலுள்ள இடையர்குல கன்னியர்களின் தாமரை போன்ற, வதனங்களை சுவைக்கும், பெரும் வண்டு போன்றவர்.
அவருடைய தாமரைப் பாதங்கள் லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணேசன் போன்ற மகா ஜனங்களால், பூஜிக்கப்படுகின்றன.
அந்த ஜெகந்நாத ஸ்வாமியே, எனது காட்சிக்குரியவராக இருக்க வேண்டும்.

———

புஜே சவ்யே வேணும் சிரசி சிகி பிச்சம் கடி தடே
துகூலம் நேத்ராந்தே சஹசரி கடாக்ஷம் விதததே
சதா ஸ்ரீமத் வருந்தாவன வசதி லீலா பரிச்சயோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே பதம் 2

பகவான் ஜெகந்நாதரின் இடது கரத்தில், புல்லாங்குழலை வைத்திருக்கின்றார். தலையில் மயிலிறகை அணிந்துள்ளார்.
இடுப்பில் மஞ்சள் நிறபட்டாடை உடுத்தியிருக்கிறார்.
அவருடைய கடைக்கண்கள், அவருடைய பிரேம பக்தர்களைப் பார்த்து அருளை பொழிந்து கொண்டிருக்கின்றன.
அவர் தனது நித்ய இருப்பிடமாகிய, விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்து கொண்டு, தன்னை வெளிப்படுத்திகிறார்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி எனக்கு காட்சிக்கொடுக்க மாட்டாரா ?

——–

மஹாம்பேதேஸ் தீரே கனக ருசிரே நீல சிகரே
வசன் ப்ராசாதாந்த : சகஜ பல பத்ரேன பலினா
சுபத்ரா மத்யஸ்த சகல சுர சேவாவசர தோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 3

பெரிய சமுத்திரத்தின் கரையில், தங்கமயமான நீலாசல மலையின் உச்சியல், இருக்கும் பெரிய மாளிகையில்,
சக்தி வாய்ந்த சகோதரர் பலபத்ரருடனும் நடுவிலே, தங்கை சுபத்ரையுடனும் விற்றிருந்து, பகவான் ஜெகந்நாதர் தேவர்களைப் போன்ற,
தன்மை கொண்ட ஆத்மாக்களுக்கு, பக்தி சேவையாற்றும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது தான் என் வாழ்வின் நோக்கம்.

———

கிருபா பாராவார சஜல ஐலத ஸ்ரேணி ருசிரோ
ரமா வாணி ரமா ஸ்புரத் அமல பங்கேருஹ முக
சுரேந்திரைர் ஆராத்ய ஸ்ருதி கண சிகா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 4

பகவான் ஜெகந்நாதர் கருணாசமுத்திரம். மழை முகில்களின், கறுப்புக் கோடுகள் போன்ற அழகு நிறைந்தவர்.
லக்ஷ்மி தேவியின் இன்ப வார்த்தைகளால், திருப்தியடைபவர்.
அவருடைய வதனம், நன்றாக மலர்ந்த தாமரை மலர் போன்று அப்பழுக்கற்றது.
அவர் தேவர்களாலும், முனிவர்களாலும், பூஜிக்கப்படுகிறார். அவருடைய புகழ் உபநிஷத்துகளில் பாடப்படுகின்றன.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பதுதான் எனது ஆவலும், நோக்கமும்.

———-

ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை
ஸ்துதி ப்ராதுர்பாவம் ப்ரதி பதம் உபாகர்ண்ய சதய
தயா சிந்துர் பந்து சகல ஜகதாம் சிந்து சுதயா
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 5

பகவான் ஜெகன்நாதர் ரதத்தில், வீதி வழியாக, அசைந்து பவனி வரும் பொழுது, ஒவ்வொரு அசைவிலும்,
உரக்க பாராயணம் பண்ணுகின்றவர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அத்துடன் பிராமணர்கள் ஓதும் வேதப் பாடல்களும் கேட்கும்.
அவர்களின் ஸ்லோகங்களை கேட்டுக்கொண்டு, பகவான் ஜெகன்நாதர் அவர்களுக்கு சாதகமாக அவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்.
அவர் கருணாசமுத்திரம். உலகனைத்திற்கும் உண்மையான நண்பன்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி, அமிர்தக் கடலிலிருந்து தோன்றிய லக்ஷ்மி சமேதராய் பார்ப்பது தான் எனது ஒரே ஆவல் ஒரே நோக்கம்.

————

பர ப்ரம்மா பீட : குவலய தலோத்புல்ல நயனோ
நிவாஸி நீலாத்ரி நிகித் சரணோ அனந்த சிரஸி
ரசானந்தீ ராதா சரஸ வபுர் ஆலிங்கன சுகோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 6

நீலத்தாமரை இதழ்களின் அடுக்குகளை போன்ற, அழகிய தலைப்பாகை அணிந்திருக்கும், பரப்பிரம்மமாகிய பிரபு ஜெகந்நாதரின் கண்கள்,
நன்கு மலர்ந்து சிவந்த தாமரை மலரைப் போன்று விரிந்து பரவசமூட்டுகிறது.
நீலாசல மலையில் வசிக்கும் அவரது பாதார விந்தங்கள், அனந்த தேவனின் தலையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
பகவான் ஜெகந்தாதர் மாதுர்ய ரசத்தில் திளைத்து, குளிர்ந்த குளம் போன்று திகழும்
ஶ்ரீமதி ராதா ராணியின் மேனியினைத் தழுவிப் பேரானந்தமடைகிறார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பது ஒன்றே எனது வாழ்வின் நோக்கமாகும்.

————

ந வை யாசே ராஜ்யம் ந ச கனக மாணிக்ய விபவம்
ந யாசே அஹம் ரம்யாம் சகல ஜன காம்யாம் வர வதூம்
சதா காலே காலே பிரமத பதினா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 7-

இந்த ராஜ்யத்தை விரும்பியோ அல்லது பொன், மாணிக்கம் , போன்ற செல்வத்தை வேண்டியோ பாராயணம் செய்ய வில்லை.
திறமையும் அழகும் நிறைந்த மனைவி வேண்டும், என மற்றவர்கள் ஆசைப்படுவது போல, நான் ஆசைப்படவில்லை.
நான் ஜெகந்நாத ஸ்வாமியை விருப்பி பாராயணம் பண்ணுகிறேன். அவருடைய புகழை சிவபெருமான் எப்போதும் பாடுகின்றார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது ஒன்றே எனது நோக்கம்.

————

ஹர த்வம் சம்சாரம் த்ருததரம் அசாரம் சுர பதே
ஹர த்வம் பாபானாம் விததிம் அபராம் யாதவ பதே
அஹோ தீனே நாதே நிஹித சரணோநிச்சிதம் இதம்
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 8

தேவர்களுக்கு அதிபதியே ! தயவு செய்து இந்த பயனற்ற, பிரபஞ்ச வாழ்க்கையை விரைவில் நீக்கி விடுவீராக!
யது வம்சத்தின் தலைவனே! கரையற்ற சமுத்திரமாகிய பாவக் கடலை அழிப்பீராக !
ஐயஹோ வீழ்ச்சியடைந்தவர்களுக்கு வேறு கதியில்லை.
ஆனால் ஜெகந்நாதரின் பாதாரவிந்தங்கள், என்றும் தஞ்சம்ளிக்கும் என்பது நிச்சயம்.
அத்தகைய ஜெகந்நாதரை காண்பதே எனது நோக்கம்.

————-

ஜகந்நாதாஷ்டகம் புண்யம்
ய : படேத் ப்ரயத : ஸுச்சி:
ஸர்வ பாப விசுத்தாத்மா
விஷ்ணு லோகம் ஸ கச்சதி–பதம் 9

தன்னுணர்வு பாதையில் வழுவாது முன்னேறிக் கொண்டிருக்கும், நல்லொழுக்கம் மிக்க ஒவ்வொரு ஜீவாத்மாவும்,
பகவான் ஜெகந்நாதரை போற்றும் எட்டு பாடல்கள் அடங்கிய, இந்த ஜெகந்நாதாஷ்டகத்தை, தினமும் ஓதுவதன் மூலம்,
தனது பாவ விளைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவதுடன் ,
இறுதியில் பகவத் தாமமான கோலோகத்( வைகுண்டத்)தை அடைவது நிச்சயம்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸூபத்ரா தேவி ஸ்ரீ நம்பி மூத்த பிரான் ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மஹா லஷ்மி அஷ்டோத்திரம்

January 6, 2022

ஓம் ப்ரக்ருத்யை நம
ஓம் விக்ருத்யை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம
ஓம் ச்ரத்தாயை நம

ஓம் விபூத்யை நம
ஓம் ஸுரப்யை நம
ஓம் பரமாத்மிகாயை நம
ஓம் வாசே நம
ஓம் பத்மாலயாயை நம

ஓம் பத்மாயை நம
ஓம் சுசயே நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் ஸுதாயை நம

ஓம் தன்யாயை நம
ஓம் ஹிரண் மய்யை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் நித்ய புஷ்டாயை நம
ஓம் விபாவர்யை நம

ஓம் அதித்யை நம
ஓம் தித்யை நம
ஓம் தீப்தாயை நம
ஓம் வஸுதாயை நம
ஓம் வஸுதாரிண்யை நம

ஓம் கமலாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமாயை நம
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம
ஓம் அனுக்ரஹபதாயை நம

ஓம் புத்யை நம
ஓம் அநகாயை நம
ஓம் ஹரிவல்லபாயை நம
ஓம் அசோகாயை நம
ஓம் அம்ருதாயை நம

ஓம் தீப்தாயை நம
ஓம் லோக சோக விநாசிந்யை நம
ஓம் தர்ம நிலயாவை நம
ஓம் கருணாயை நம
ஓம் லோகமாத்ரே நம

ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மஹஸ்தாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் பத்மஸுந்தர்யை நம
ஓம் பக்மோத்பவாயை நம

ஓம் பக்த முக்யை நம
ஓம் பத்மனாப ப்ரியாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் பத்ம மாலாதராயை நம
ஓம் தேவ்யை நம

ஓம் பத்மிந்யை நம
ஓம் பத்மகந்திந்யை நம
ஓம் புண்யகந்தாயை நம
ஓம் ஸுப்ரஸந்நாயை நம
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம

ஓம் ப்ரபாயை நம
ஓம் சந்த்ரவதநாயை நம
ஓம் சந்த்ராயை நம
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம
ஓம் சதுர்ப் புஜாயை நம

ஓம் சந்த்ர ரூபாயை நம
ஓம் இந்திராயை நம
ஓம் இந்து சீதலாயை நம
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம
ஓம் புஷ்ட்யை நம

ஓம் சிவாயை நம
ஓம் சிவகர்யை நம
ஓம் ஸத்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் விச்ய ஜநந்யை நம

ஓம் புஷ்ட்யை நம
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம

ஓம் ச்ரியை நம
ஓம் பாஸ்கர்யை நம
ஓம் பில்வ நிலாயாயை நம
ஓம் வராய ரோஹாயை நம
ஓம் யச்சஸ் விந்யை நம

ஓம் வாஸுந்தராயை நம
ஓம் உதா ராங்காயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் தந தாந்ய கர்யை நம

ஓம் ஸித்தயே நம
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் ந்ருப வேச்ம கதாநந்தாயை நம
ஓம் வரலக்ஷம்யை நம

ஓம் வஸுப்ரதாயை நம
ஓம் சுபாயை நம
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம
ஓம் ஸமுத்ர தநயாயை நம
ஓம் ஜயாயை நம ஓம் மங்கள தேவதாயை நம

ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம
ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம

ஓம் தேவ்யை நம
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம
ஓம் நவ துர்காயை நம
ஓம் மஹாகாள்யை நம
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம

ஓம் த்ரிகால ஜ்நாந ஸம்காயை பந்நாயை நம
ஓம் புவனேச்வர்யை நம.

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

———–

1-மஹா லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் (அனைத்து உயிர்களிலும்) ஸ்ரீலக்ஷ்மி உருவில் உள்ள
ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

2.வித்யா லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு வித்யா (புத்தி) ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ
அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

3.ஸந்தான லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) ,எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள
ஸந்தான லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

4.காருண்யலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரிங்களிலும் தயையுருவில் உள்ள
காருண்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

5.சௌபாக்ய லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்) , எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில்
உள்ள சௌபாக்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

6.தனலக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), புஷ்டி (நிறைவு / பலம் ) உருவத்தில் உள்ள
தனலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

7.வீர லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் தைர்ய உருவில் உள்ள
வீரலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

8.தான்ய லக்ஷ்மி:

யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும்(அனைத்து உயிர்களிலும்), எல்லா உயிரினங்களிலும் பசியை நீக்கும்
தான்ய உருவில் உள்ள தான்ய லக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம் –ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம் –ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகம்–ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம்–

January 1, 2022

ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்

ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே!! நிராபாஸாய தீமஹி!! தந்நோ ஸ்ரீநிவாஸஹ் : ப்ரசோதயாத்!

———

ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம்

ஓம் ஶ்ரீ வேஂகடேஶாய நமஃ
ஓம் ஶ்ரீநிவாஸாய நமஃ
ஓம் லக்ஷ்மிபதயே நமஃ
ஓம் அநாநுயாய நமஃ
ஓம் அம்ருதாம்ஶநே நமஃ
ஓம் மாத4வாய நமஃ
ஓம் க்ருஷ்ணாய நமஃ
ஓம் ஶ்ரீஹரயே நமஃ
ஓம் ஜ்ஞாநபஂஜராய நமஃ || 9 ||

ஓம் ஶ்ரீவத்ஸ வக்ஷஸே நமஃ
ஓம் ஜக3த்3வந்த்3யாய நமஃ
ஓம் கோ3விந்தா3ய நமஃ
ஓம் ஶாஶ்வதாய நமஃ
ஓம் ப்ரப4வே நமஃ
ஓம் ஶேஶாத்3ரிநிலாயாய நமஃ
ஓம் தே3வாய நமஃ
ஓம் கேஶவாய நமஃ
ஓம் மது4ஸூத3நாய நமஃ || 18 ||

ஓம் அம்ருதாய நமஃ
ஓம் விஷ்ணவே நமஃ
ஓம் அச்யுதாய நமஃ
ஓம் பத்3மிநீப்ரியாய நமஃ
ஓம் ஸர்வேஶாய நமஃ
ஓம் கோ3பாலாய நமஃ
ஓம் புருஷோத்தமாய நமஃ
ஓம் கோ3பீஶ்வராய நமஃ
ஓம் பரஂஜ்யோதிஷே நமஃ || 27 ||

ஓம் வ்தெகுண்ட2 பதயே நமஃ
ஓம் அவ்யயாய நமஃ
ஓம் ஸுதா4தநவே நமஃ
ஓம் யாத3 வேந்த்3ராய நமஃ
ஓம் நித்ய யௌவநரூபவதே நமஃ
ஓம் நிரஂஜநாய நமஃ
ஓம் விராபா4ஸாய நமஃ
ஓம் நித்ய த்ருப்த்தாய நமஃ
ஓம் த4ராபதயே நமஃ || 36 ||

ஓம் ஸுரபதயே நமஃ
ஓம் நிர்மலாய நமஃ
ஓம் தே3வபூஜிதாய நமஃ
ஓம் சதுர்பு4ஜாய நமஃ
ஓம் சக்ரத4ராய நமஃ
ஓம் சதுர்வேதா3த்மகாய நமஃ
ஓம் த்ரிதா4ம்நே நமஃ
ஓம் த்ரிகு3ணாஶ்ரயாய நமஃ
ஓம் நிர்விகல்பாய நமஃ || 45 ||

ஓம் நிஷ்களஂகாய நமஃ
ஓம் நிராந்தகாய நமஃ
ஓம் ஆர்தலோகாப4யப்ரதா3ய நமஃ
ஓம் நிருப்ரத3வாய நமஃ
ஓம் நிர்கு3ணாய நமஃ
ஓம் க3தா3த4ராய நமஃ
ஓம் ஶார்ஞ்ஙபாணயே நமஃ
ஓம் நந்த3கிநீ நமஃ
ஓம் ஶங்க3தா3ரகாய நமஃ || 54 ||

ஓம் அநேகமூர்தயே நமஃ
ஓம் அவ்யக்தாய நமஃ
ஓம் கடிஹஸ்தாய நமஃ
ஓம் வரப்ரதா3ய நமஃ
ஓம் அநேகாத்மநே நமஃ
ஓம் தீ3நப3ந்த4வே நமஃ
ஓம் ஜக3த்3வ்யாபிநே நமஃ
ஓம் ஆகாஶராஜவரதா3ய நமஃ
ஓம் யோகி3ஹ்ருத்பத்3ஶமந்தி3ராய நமஃ || 63 ||

ஓம் தா3மோத3ராய நமஃ
ஓம் ஜக3த்பாலாய நமஃ
ஓம் பாபக்4நாய நமஃ
ஓம் ப4க்தவத்ஸலாய நமஃ
ஓம் த்ரிவிக்ரமாய நமஃ
ஓம் ஶிம்ஶுமாராய நமஃ
ஓம் ஜடாமகுட ஶோபி4தாய நமஃ
ஓம் ஶங்க3 மத்3யோல்ல ஸந்மஂஜு கிஂகிண்யாட்4ய நமஃ
ஓம் காருண்ட3காய நமஃ || 72 ||

ஓம் நீலமோக4ஶ்யாம தநவே நமஃ
ஓம் பி3ல்வபத்த்ரார்சந ப்ரியாய நமஃ
ஓம் ஜக3த்கர்த்ரே நமஃ
ஓம் ஜக3த்ஸாக்ஷிணே நமஃ
ஓம் ஜக3த்பதயே நமஃ
ஓம் சிந்திதார்த4 ப்ரதா3யகாய நமஃ
ஓம் ஜிஷ்ணவே நமஃ
ஓம் தா3ஶார்ஹாய நமஃ
ஓம் த3ஶரூபவதே நமஃ || 81 ||

ஓம் தே3வகீ நந்த3நாய நமஃ
ஓம் ஶௌரயே நமஃ
ஓம் ஹயரீவாய நமஃ
ஓம் ஜநார்த4நாய நமஃ
ஓம் கந்யாஶ்ரணதாரேஜ்யாய நமஃ
ஓம் பீதாம்ப3ரத4ராய நமஃ
ஓம் அநகா4ய நமஃ
ஓம் வநமாலிநே நமஃ
ஓம் பத்3மநாபா4ய நமஃ || 90 ||

ஓம் ம்ருக3யாஸக்த மாநஸாய நமஃ
ஓம் அஶ்வரூடா4ய நமஃ
ஓம் க2ட்3க3தா4ரிணே நமஃ
ஓம் த4நார்ஜந ஸமுத்ஸுகாய நமஃ
ஓம் க4நதாரல ஸந்மத்4யகஸ்தூரீ திலகோஜ்ஜ்வலாய நமஃ
ஓம் ஸச்சிதாநந்த3ரூபாய நமஃ
ஓம் ஜக3ந்மங்கள3 தா3யகாய நமஃ
ஓம் யஜ்ஞபோ4க்ரே நமஃ
ஓம் சிந்மயாய நமஃ || 99 ||

ஓம் பரமேஶ்வராய நமஃ
ஓம் பரமார்த4ப்ரதா3யகாய நமஃ
ஓம் ஶாந்தாய நமஃ
ஓம் ஶ்ரீமதே நமஃ
ஓம் தோ3ர்த3ண்ட3 விக்ரமாய நமஃ
ஓம் பரப்3ரஹ்மணே நமஃ
ஓம் ஶ்ரீவிப4வே நமஃ
ஓம் ஜக3தீ3ஶ்வராய நமஃ
ஓம் ஆலிவேலு மங்கா3 ஸஹித வேஂகடேஶ்வராய நமஃ || 108 ||

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம் ||

————–

ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம்

அஸ்ய ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
ப்³ரஹ்மா ருஷி꞉
அநுஷ்டுப் ச²ந்த³꞉
ஶ்ரீ வேங்கடேஶ்வரோ தே³வதா இஷ்டார்தே² விநியோக³꞉ ।

நாராயணோ ஜக³ந்நாதோ² வாரிஜாஸநவந்தி³த꞉ ।
ஸ்வாமிபுஷ்கரிணீவாஸீ ஶங்க²சக்ரக³தா³த⁴ர꞉ ॥ 1 ॥

பீதாம்ப³ரத⁴ரோ தே³வோ க³ருடா³ஸநஶோபி⁴த꞉ ।
கந்த³ர்பகோடிலாவண்ய꞉ கமலாயதலோசந꞉ ॥ 2 ॥

இந்தி³ராபதிகோ³விந்த³꞉ சந்த்³ரஸூர்யப்ரபா⁴கர꞉ ।
விஶ்வாத்மா விஶ்வலோகேஶோ ஜய ஶ்ரீவேங்கடேஶ்வர꞉ ॥ 3 ॥

ஏதத்³த்³வாத³ஶநாமாநி த்ரிஸந்த்⁴யம் ய꞉ படே²ந்நர꞉ ।
தா³ரித்³ர்யது³꞉க²நிர்முக்தோ த⁴நதா⁴ந்யஸம்ருத்³தி⁴மாந் ॥ 4 ॥

ஜநவஶ்யம் ராஜவஶ்யம் ஸர்வகாமார்த²ஸித்³தி⁴த³ம் ।
தி³வ்யதேஜ꞉ ஸமாப்நோதி தீ³ர்க⁴மாயுஶ்ச விந்த³தி ॥ 5 ॥

க்³ரஹரோகா³தி³நாஶம் ச காமிதார்த²ப²லப்ரத³ம் ।
இஹ ஜந்மநி ஸௌக்²யம் ச விஷ்ணுஸாயுஜ்யமாப்நுயாத் ॥ 6 ॥

இதி ப்³ரஹ்மாண்ட³புராணே ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ ஶ்ரீ வேங்கடேஶத்³வாத³ஶநாமஸ்தோத்ரம் ।

1-நாராயணோ
2-ஜக³ந்நாதோ²
3-வாரிஜாஸநவந்தி³த꞉ ।
4-ஸ்வாமி புஷ்கரிணீ வாஸீ
5-ஶங்க²சக்ரக³தா³த⁴ர꞉பீதாம்ப³ரத⁴ரோ தே³வோ
6-க³ருடா³ஸநஶோபி⁴த꞉ ।
7-கந்த³ர்ப கோடி லாவண்ய꞉
8-கமலாயதலோசந꞉ ॥ 2 ॥
9–இந்தி³ராபதிகோ³விந்த³꞉
10-சந்த்³ரஸூர்யப்ரபா⁴கர꞉ ।
11-விஶ்வாத்மா
12-விஶ்வலோகேஶோ
ஜய ஶ்ரீவேங்கடேஶ்வர꞉

———————

ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகம்

திருமலையில் உறையும் எம்பெருமான் தன்னை நாடி வருவோருக்கு எல்லா மங்களங்களையும்
இனிதே வழங்கி ரட்சிக்கும் வரப்பிரசாதி.
ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகத்தை எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்து நலம் பெறலாம்.

இது சர்வ மங்களங்களை அருள்வதோடு, சகல துக்கங்களையும் போக்கும் வல்லமை படைத்தது.

ஸ்ரீக்ஷோண்யோ ரமணீ யுகம் ஸுரமணி புத்ரோபி வாணீ பதி:
பௌத்ரச் சந்த்ர சிரோமணி: பணிபதி: சய்யா ஸுரா: ஸேவகா:
தார்க்ஷ்யோ யஸ்யரதோ மஹச்ச பவனம் ப்ரஹ்மாண்டமாத்ய: புமான்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

ஸ்ரீதேவி-பூதேவி ஆகிய இரு அழகிய மனைவியரைக் கொண்ட பெருமாளே,
சரஸ்வதியின் நாயகனான பிரம்மதேவனைப் புத்திரனாக அடைந்தவரே,
சந்திரனை தலையில் சூடிய ருத்ரனைப் பேரனாகப் பெற்றவரே,
ஆதிசேஷனே படுக்கையாக, தேவர்களே வேலைக்காரர்களாகப் பணிபுரிய,
கருடனை வாகனமாகக் கொண்டவரே,
இந்த அண்ட சராசரத்தையே வீடாகக் கொண்டிருப்பவரே,
ஆதி புருஷனே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———

யத் தேஜோரவிகோடி கோடி கிராணான் திக்க்ருத்ய ஜேஜீயதே
யஸ்ய ஸ்ரீவதனாம் புஜஸ்யஸுஷமா ராகேந்து கோடீரபி:
ஸௌந்தர்யம் ச மனோ பவானபி பஹூன் காந்திச்ச காதம்பினீம்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ர ரமண: குர்யாத்தரிர் மங்களம்.

கோடி கோடி சூரியர்களின் பேரொளியையும் விஞ்சிய தேஜஸ் கொண்ட பெருமாளே,
கோடி கோடி சந்திரன்களின் பிரகாசத்தையும் மங்கச் செய்யும் ஒளிவீசும் திருமுகம் கொண்டவரே,
கோடி கோடி மன்மதர்களின் பேரழகையும் குன்றச் செய்யும் எழில் மிகுந்தவரே,
மேகக் கூட்டங்களையும் மீறி நிர்மலமாய் விளங்கும் பரந்த ஆகாயத்தையும் விட பிரமாண்டமானவரே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———

நானா ரத்ன கிரீட குண்டல முகைர் பூஷா கணைர் பூஷித:
ஸ்ரீமத் கௌஸ்து பரத்ன பவ்ய ஹ்ருதய: ஸ்ரீவத்ஸ ஸல்லாஞ்சன:
வித்யுத் வர்ண ஸுவர்ண வஸ்த்ர ருசிரோ ய: சங்க சக்ராதிபி:
ஸ்ரீமத் வேங்கட பூதேந்த்ர ரமண: குர்யாத்தரிர் மங்களம்.

பலவித ரத்னங்களால் தயாரிக்கப்பட்ட கிரீடம், குண்டலம் முதலான ஆபரணங்களுடன் கம்பீரமாக
அலங்கரிக்கப்பட்டிருக்கும் பெருமாளே,
கௌஸ்துப ரத்தினம் எனப்படும் விலை மதிப்பில்லா ரத்தின ஆபரணத்தை மார்பில் அணிந்து
பேரெழில் பரமனாகக் காட்சியளிப்பவரே,
ஸ்ரீவத்ஸம் என்னும் மச்சத்தால் மிகைப்பட்ட அழகுடன் திகழ்பவரே,
கொடி மின்னலோ என்று வியக்க வைக்கும் வண்ணம் பிரகாசம் மிகுந்த தங்கப் பட்டாடை யில் ஜொலிப்பவரே,
சங்கு சக்கரம் முதலிய ஆயுதங்களைத் தரித்து வீரப் பேரழகுடன் ஒளிர்பவரே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————-

யத் பாலேம் ருக்னாபி சாரு திலகோ நேத்ரேப்ஜ த்ராயதே
கஸ்தூரீ கண ஸார கேஸரமிலச் ஸ்ரீகந்த ஸாரோத்ரவை:
கந்தைர் லிப்த தனு: ஸுகந்த ஸுமனோ மாலாதரோய: ப்ரபு:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

கஸ்தூரி திலகத்தினை நெற்றியில் அணிந்து அதனால் பிரகாசமாகத் துலங்கும் பெருமாளே,
தாமரை இதழ்களோ கண்கள் என்று வியக்க வைக்கும் மென்மையான பார்வை கொண்டவரே,
கஸ்தூரி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த மிகுந்த நறுமணமிக்க சந்தனம் பூசப்பட்ட
சுகந்த சரீரத்தைக் கொண்டவரே,
நல்ல வாசனையுள்ள மலர் மாலைகளைத் தரித்து அம்மலர்களுக்கே பெருமை தேடித் தரும் பிரபுவே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———–

ஏதத் திவ்ய பதம்மமாஸ்திபுவி தத் ஸம்பச்யதே த்யாதராத்
பக்த்தேப்யஸ் ஸ்வ கரேண தர்சயதி யத் த்ருஷ்ட்யாதி ஸௌக்யம் கத:
ஏதத் பக்திமதாமியானபி பவாம்போதிர்ன தீதிஸ்ப்ருசன்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

பூமி மீது பதிந்திருக்கும் தங்களது திருவடிகளைப் பார்க்குமாறு, தங்களது திருக்கரத்தால் சுட்டிக் காட்டும் பெருமாளே,
அந்தத் திருவடிகளை சரணடை யும் பக்தர்களுக்கு பரம சௌக்கியத்தையும், பேரானந்தத்தையும் அருளும் பெருமாளே,
அந்த பாத சரண நிழலையே அடைக்கலமாகக் கொண்ட பக்தர்களுக்கு அவர்களுடைய சம்சார சாகர மானது,
முழங்காலளவில் ஓடும் ஒரு நதி போல தான் என்பதையும் இந்த சமிக்ஞை மூலம் விளக்கும் பரம்பொருளே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————-

ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா
ஸௌவர்ணாலய மண்டிதோ விதி முகைர் பர்ஹிர்முகை: ஸேவித:
ய: சத்ரூன் ஹனயன்னி ஜானவதி சஸ்ரீபூவராஹாத்மக:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

ஸ்வாமி புஷ்கரிணி என்னும் குளக்கரையில் நிரந்தரமாக வாசம் செய்யும் பெருமாளே,
பிரம்மா முதலான தேவர்களால் சேவிக்கப்படும், தங்க மயமான அலங்காரம் கொண்ட கோயிலைக் கொண்டவரே,
சத்ருக்களை அடியோடு நாசம் செய்து, தன்னைச் சார்ந்தவர்களை எந்தத் துன்பமும் அணுகாதபடி காக்கும் பரந்தாமா,
யக்ஞவராஹ மூர்த்தியாக விளங்கும் பெருமாளே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————–

யோ ப்ரஹ்மாதி ஸுரான் முனீச்ச மனுஜான் ப்ரஹ்மோதஸவாயாகதான்
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட மனாபபூவ பஹுசஸ்தைரர்சிதஸ் ஸம்ஸ்துத:
தேப்யோ ய: ப்ரதத த்வரான் பஹுவிதான் லக்ஷ்மீ நிவாஸோ விபு:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

பிரம்மோற்சவத்திற்காக வந்திருக்கும் பிரம்மன் முதலான தேவர்களையும், மஹரிஷிகளையும்,
மனிதர்களையும் கண்டு மிகப் பேரானந்தம் கொள்ளும் பெருமாளே,
அவர்களது அர்ச்சனை யாலும், துதியாலும் மிகுந்த சந்தோஷம் அடையும் பெருமாளே,
அவர்கள் அனைவருக்கும் அவர்கள் வேண்டும் வரங்களை எல்லாம் அருளி
அவர்களை மகிழ்விக்கும் பெருமாளே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————

யோ தேவோ புவிவர்த்ததே கலியுகே வைகுண்டலோகஸ்திதோ
பக்தானாம் பரிபாலனாய ஸததம் காருண்யவாராம் நிதி:
ஸ்ரீசேஷாக்யமஹீத்ரமஸ்தகமணிர் பக்தைக சிந்தாமணி:
ஸ்ரீமத்வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

இந்தக் கலியுகத்தில் பக்தர்களைக் காப்பதற்காக வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்திருக்கும் பெருமாளே,
பக்தர்கள் அனைவருக்கும் கருணைக் கடலாகத் திகழ்பவரே,
ஸ்ரீசேஷம் என்னும் மலையின் சிகரத்தில் மணி போலப் பிரகாசிக்கும் பேரொளியே,
பக்தர்களுக்கு சிந்தாமணி போல் விளங்கும் ஒளி வழிகாட்டியே, வேங்கடாசலபதியான ஹரியே,
எனக்கு மங்களம் அருள்வீராக.

——–

சேஷாத்ரி ப்ரபு மங்களாஷ்டகமிதம் துஷ்டேன யஸ்யேசிது:
ப்ரீத்யர்த்தம் ரசிதும் சமேச சரண த்வந்த்வைகநிஷ்டாவதா
வைவாஹ்யாதி ஸுபக்ரியாஸுபடிதம் யை: ஸாதுதேஷாமபி
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

இது சேஷாத்ரிநாதனுடைய மங்களாஷ்டகம்.
பகவான் ஸ்ரீநிவாஸனுடைய சரண கமலங்களை சரணடைந்து அவற்றின் மீதே மிகுந்த பற்றும்,
சந்தோஷமும் கொண்ட ஸ்ரீவாதிராஜயதியால், ஸ்ரீநிவாஸனை குதூகலப்படுத்த இயற்றப்பட்டது.

திருமணம் முதலான மங்கள விசேஷ நிகழ்ச்சிகளில் இந்த மங்களாஷ்டகம் படிக்கப்பட்டால்,
அதைப் படிப்பவருக்கும், கேட்பவர் அனைவருக்கும் வேங்கடாசலபதியான ஹரி,
எல்லா மங்களங் களையும் குறைவின்றி அருள்வார்.

———-

ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம்

ஹநுமான் அஞ்ஜநாஸூநு: வாயுபுத்ரோ மஹாப3ல: |
ராமேஷ்ட: பா2ல்கு3ந-ஸக2: பிங்கா3க்ஷோsமிதவிக்ரம: ||
உத3தி4க்ரமண: சைவ ஸீதாசோக விநாஶசன: |
லக்ஷ்மண: ப்ராணததா தஶக்3ரீவஸ்ய த3ர்பஹா ||

ஏவம் த்வாஶ நாமாநி ராமதூதஸ்ய: படேத் |
ஸ்வாபகாலே ப்ரபோ3தே4ச நிர்ப4யோ விஜயீ பவேத்

1-ஹநுமான்
2-அஞ்ஜநா ஸூநு:
3-வாயு புத்ரோ
4-மஹாப3ல: |
5-ராமேஷ்ட:
6-பா2ல்கு3ந-ஸக2:
7-பிங்கா3க்ஷோs
8-மிதவிக்ரம: ||
9-உத3தி4க்ரமண: சைவ
10-ஸீதாசோக விநாஶசன: |
11-லக்ஷ்மண: ப்ராணததா
12-தஶக்3ரீவஸ்ய த3ர்பஹா ||

—–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராமபிரான் அருளிச்செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் /ஸ்ரீ தாடீபஞ்சகம் /ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்–

November 13, 2021

ஸ்ரீ ராமபிரான் அருளிச்செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ் க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வ ரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே–1-

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி–2-

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி–3-

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் கணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி–4-

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுர ப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி–5-

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம்

– (ஸ்ரீ ஹரிவம்ச புராணம் – சேஷ தர்மம் -47- அத்யாயம்)

—————

ஸ்ரீ தாடீ பஞ்சகம்

இந்த அத்புதமான ஸ்தோத்ரம்
ஸ்ரீகூரத் தாழ்வான் அருளிச் செய்தது என்றும்,
ஸ்ரீ முதலி யாண்டான் அருளிச் செய்தது என்றும் பெரியோர்கள் ஒருவாறு பணிப்பர்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
ஸ்ரீ ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர்

யார் அருளிச் செய்த ஸ்தோத்ரமானாலும், எம்பெருமானாரது விஜயங்களை எடுத்துரைப்பதாய்,
செவிக்கினிய செஞ்சொற்களாக அருளிச் செய்யப் பட்ட இந்த ஸ்தோத்ரம் நமக்கு நித்யாநுசந்தேயமாக
இருக்க வேணும் என்னும் காரணத்தினால் ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ முதலியாண்டான்
இருவருடைய தனியன்களையும் அவற்றின் பொருளோடு விண்ணப்பிக்கப்படுகின்றன.

ஸ்ரீ கூரத் தாழ்வான் தனியன்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ர தாம்

யவருடைய திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் எல்லாம் வேதமாகிற பெண்ணின் கழுத்துக்கு மங்கள ஸூத்ரமாக
(மாங்கல்யமாக) விளங்க, அந்த ஸ்ரீவத்ஸ சிஹ்நர் என்னும் திருநாமம் உடையவரான
ஸ்ரீகூரத் தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ முதலி யாண்டான் தனியன்கள்

1–பாதுகே யதிராஜஸ்ய கத யந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்

யாரொருவர், எம்பெருமானாருடைய திருவடி நிலைகளாக (பாதுகைகளாக) அறியப் படுகிறாரோ,
அந்த தாசரதி என்னும் திரு நாமம் உடையவரான ஸ்ரீ முதலி யாண்டானுடைய
திருவடி யிணைகளை அடியேனுடைய தலையால் தாங்குகிறேன்.

2-யஸ் சக்ரே பக்த நகரே தாடீ பஞ்சகம் உத்தமம்
ராமாநுஜார்ய சஸ் சாத்ரம் வந்தே தாசாரதிம் குரும்

யாரொருவர் பக்த நகரமான தொண்டனூரில் (ராமாநுஜருடைய விஜயத்தைப் போற்றும்படி)
ஸ்ரீதாடீ பஞ்சகம் என்னும் உத்தமமான ஸ்தோத்ரத்தை அருளிச் செய்தாரோ,
அந்த ராமாநுஜருடைய ப்ரிய சிஷ்யரும், தாசரதி என்னும் திருநாமம் உடையவருமான
ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்.

————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்த த்வாந்த நிராச வாசரபதிர் ஜைநே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரை வித்ய ஸூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி––முதல் ஸ்லோகம்–

நாஸ்திகர்கள் பாஷண்டர்கள் எனப்ப டுபவர்.
காட்டுத் தீ வளர்த்தால் எவ் விதம் மரங்கள் அழியுமோ அது போன்று,
எம்பெருமானார் பாஷண்டர்களை அழித்தார்.

சார்வாகர், பௌத்தர் முதலிய மலைகளை மிகவும் எளிதாக எம்பெருமானார் சாய்த்தார்.

பௌத்தம் என்ற இருளுக்குச் சூரியன் போன்று எம்பெருமானார் அவதரித்தார்.

ஜைனர்கள் என்ற யானைகளைச் சிங்கம் போன்று விரட்டினார்.

மாயாவாதிகள் என்ற நாகங்களைத் தனது நிழல் மூலமே அழிக்கின்ற கருடன் போன்று விளங்கினார்.

ஸ்ரீரங்கநாதனின் திருக் கோயிலைத் திருத்தி, பெருமையுடன் நின்றார்.

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹாந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாசநி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய ஸூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்

தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –

ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

————

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜஸ்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-இரண்டாம் ஸ்லோகம்–

பாஷண்டம் (நாஸ்திர்கள்), ஷண்டம் (பௌத்தம் முதலானோர்) ஆகிய மலைகளை
இந்திரனின் வஜ்ராயுதம் தண்டிப்பது போன்று எம்பெருமானாரின் த்ரி தண்டம் தண்டிக்கிறது.

மறைமுகமான பௌத்தர்கள் என்ற பெரிய கடலைக் கலக்கும் மத்து போன்று எம்பெருமானாரின் த்ரி தண்டம் உள்ளது.

“இருள் தருமா ஞாலம்” என்பதற்கு ஏற்ப வேதாந்தத்தின் ஆழ் பொருள்கள்,
இந்த உலகில் ஏகதண்டிகளின் (அத்வைதிகள்) பிடியில் சிக்கி நின்றது.
அந்த இருளை நீக்கும் தீபமான த்ரி தண்டியாக எம்பெருமானார் நின்றார்.

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜஸ்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –

சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

————

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத் வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரி புவன விஜயஸ் சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதி கதக சிரோ வஜ்ர தண்டம் த்ரி தண்டம் –மூன்றாம் ஸ்லோகம்–

எம்பெருமானாரின் த்ரிதண்டம் இந்த உலகில் உள்ள சிஷ்யர்களுக்கும் ஞானத்தை அளிப்பதற்காக உள்ளது.
இந்த உலகில் பல விதமான வாதங்கள் தோன்றின்.
அவற்றை சீர் செய்து, சரியான வாதத்தை நிலைநாட்டிய த்ரிதண்டம் இதுவாகும்.

வேதாந்தத்தில் உள்ள ஸத் வித்யை, வைஸ்வாநார வித்யை போன்ற பல வித்யைகளை விளக்கிட்டு
நமக்குக் காண்பிப்பதற்காக உள்ளது இந்த த்ரிதண்டமாகும்.

“கலியும் கெடும் கண்டு கொண்மின்,” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தது போன்று,
கலியின் கொடுமைகள் அனைத்தையும் அழிக்கும் கால தண்டம் போன்றது.

வேதங்களுக்குத் தவறான பொருள் கூறும் மதங்களால் தளர்ந்து போன வேத புருஷனுக்குக் கை கொடுக்கும் தண்டம் போன்றது.
மூன்று உலகங்களையும் வெற்றி கொண்டதற்கு ஈடாக உள்ள வெண் கொற்றக் குடையின் மணிக் காப்பு போன்றது.
எதிர்வாதம் செய்பவர்களின் தலைகளைத் துண்டாக்கும் வஜ்ர தண்டம் போன்றது – எம்பெருமானாரின் த்ரிதண்டமாகும்.

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம் –
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம் போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத் வித்யா தீப தண்டம் –
சத் வித்யா முதலான -அஷி வித்யா -வைச்வாநர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத் வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத் வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலளவாய திசைஎ எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரி புவன விஜயஸ் சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது

7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம் –
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி

ஆக இப் புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரி தண்டத்தின் பெருமை கூறிற்று-

————

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரி யுக பத யுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத் வித்யா தீப ஸூத்ரம் சகல கலி கதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–நான்காம் ச்லோகம்–

வேதம் என்ற பெண்ணின் கழுத்தில் ஸ்ரீமந்நாராயணனே நாயகன் என்று அறிவிக்கும்
தாலி போன்று எம்பெருமானாரின் யஜ்ஞோபவீதம் உள்ளது.

த்ரியுகம் என்பது எம்பெருமானாரின் ஒரு திருநாமம் ஆகும்.

அப்படிப்பட்ட அவரது திருவடிகளை அடைவதற்குப் பற்றிக் கொண்டு ஏறும் கயிறு போன்று, இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

மிகவும் உயர்ந்த வித்யைகள் மேலும் ப்ரகாசமாக எரியும் திரிநூலாக இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

கலியில் கொடுமைகளை அழிப்பதற்கு வந்த எமனின் பாசக் கயிறு போன்று இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

எம்பெருமானாரின் திருவடிகளை அடைந்தவர்களது உள்ளம் ஒரு தாமரை என்று வைத்துக் கொண்டால்,
இவரது யஜ்ஞோபவீதம் அந்தத் தாமரையின் தண்டு போன்று உள்ளது.

மற்ற மதத்தவர்கள், தங்கள் மதப்படி தங்களது யஜ்ஞோபவீதத்தை துறந்தால் மட்டுமே மோஷம் அடைவர்.

ஆனால் அவர்கள் எம்பெருமானாரின் யஜ்ஞோபவீத அழகைப் பார்த்தவுடனேயே மோக்ஷம் அடையலாம்.

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூத்ரம் போன்றதும் –
ஜகத் அநீஸ்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுக பத யுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூத்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இறே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இறே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத் வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலி கதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம் போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ஸ்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

————-

பாஷண்ட ஸாகர மஹா படபா முகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—-ஐந்தாம் ஸ்லோகம்–

படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும்.
அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும்.
ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும்.

பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார்.

ஸ்ரீமந் நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார்.

இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்

2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————

ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம் –
இப்பிரபந்தம் -ஸ்ரீ நடாதூர் அம்மாள் சிஷ்யர் ஸ்ரீ கடிகா சஹஸ்ர ஆச்சார்யாரோ –
ஸ்ரீ ஸ்ருதி ப்ரகாசிகா ஆச்சார்யரான ஸ்ரீ ஸூதர்சன பட்டரோ –
ஸ்ரீ எறும்பி அப்பாவோ –
ஸ்ரீ கோயில் அண்ணண் திருப்பேரானாரோ -என்பர் –

யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீமன் க்ருபயா பரயா தவ
மம விஜ் ஞாபநம் இதம் விலோக்ய வரதம் குரும்–ஸ்லோகம் -1-

அடியேன் குருவான வரத குரு ஆச்சார்யரை திரு உள்ளத்தில் கொண்டு
உபய விபூதியையும் நித்தியமாக யுடைய காரேய் கருணை இராமானுசா-
அடியேனுடைய விண்ணப்பங்களைக் கேட்டு அருள்வாய்

யதிகளின் தலைவரே! கைங்கர்ய ஸ்ரீயை உடையவரே!
பரமமான க்ருபையோடே (அடியேனுடைய) ஆசார்யரான நடாதூர் அம்மாளைப் பார்த்து,
அடியேனுடையதான இந்த விண்ணப்பத்தை தேவரீர் திருச் செவி சாற்றியருள வேணும்.

மேலே இரண்டாம் ஸ்லோகம் தொடங்கி ஆறாம் ஸ்லோகம் வரை உள்ள ஐந்து விண்ணப்பங்களை
பரம கிருபா மாத்திரை ப்ரசன்னாச்சார்யரான கிருபையினாலே
அடியேனுடைய சிறுமையைப் பாராமல்
ஞான பக்தி வைராக்யங்கள் நிறையப்பெற்ற வரத குருவின் பெருமை ஒன்றையுமே கடாக்ஷித்து
மேலே உள்ள ஐந்து பெருப் பெருத்த விண்ணப்பங்களுக்கு அங்கமாக
இந்த ஒரு விண்ணப்பம் கேட்டு அருள வேணும் என்கிறார்

இந்த ஐந்து விண்ணப்பங்களாலே இதுக்கு பிரார்த்தனா பஞ்சகம் என்ற பெயராயிற்று

———-

இதில் பகவத் விஷய பற்று வைக்க இடையூறாக உள்ள
பாஹ்ய விஷய ஸங்கத்தைப் போக்கி அருள வேணும் என்கிறார் –

அநாதி பாப ரசிதாம் அந்தக் கரண நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிவர்த்தய வாசநாம் –ஸ்லோகம் -2-

வாசனா ருசிகளை போக்கி அருள பிரார்த்தனை இதில் –
எண்ணற்ற காலங்கள் பாவங்களையே செய்து, அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது.
யதிராஜரே! இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்தபடி உள்ளேன்.
இவ்விதம் இருக்கின்ற உலக விஷயங்களில் இருந்து எனது புலன்களை மீட்க வேண்டும்.

வாஸனா ஸப்தம் ருசிகளுக்கும் உப லக்ஷணம்
புத்தி பூர்வகமான ப்ரவ்ருத்திற்கு காரணமான இச்சை ருசி என்றும்
அபுத்தி பூர்வகமாக ப்ரவ்ருத்திற்கு காரணமான இச்சையே வாஸனை யாகும்
காமம் ஒழிந்தால் க்ரோதாதிகளும் ஒழியுமே

————–

உலகோரைப் பார்த்தார்
விஷயாந்தரங்களிலே பற்று மிக்கு புத்ராதிகளைப் பிரார்த்தித்து வருகிறார்களே
உபய விபூதி நாதர் ஸகல அபீஷ்ட பிரதர் அன்றோ
அவர்கள் வேண்டிக்கொண்டால் ஹித பரரான தேவரீரே அவற்றைத் தராமல் ஒழிந்து
அதுக்கும் மேலே அவற்றிலே வைராக்யத்தையும் தந்து அருள வேணும் என்கிறார்

அபி ப்ரார்த்த யமா நாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவாத்ர ஹித காரின் யதீந்த்ர ந –ஸ்லோகம் -3-

விஷயாந்தர வைராக்யம் பிறப்பித்து அருள பிரார்த்தனை இதில் –
யதிராஜரே! நான் உம்மிடம் புத்திரன், வீடு, செல்வம் முதலானவற்றைக் கேட்கக் கூடும்.
ஆனால் அவற்றை விலக்கி, நீவீர் எனக்கு வைராக்யத்தை அளிக்க வேண்டும் –
காரணம் எனது நன்மையை மட்டுமே அல்லவா நீவிர் எண்ணியபடி உள்ளீர்.

புத்ர ஷேத்ராதி- ஆதி ஸப்தத்தாலே
ஐஹிக போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் எல்லாவற்றையும் சொன்னபடி
ஹித காரின் -ஹித ஏக காரின் -ஆச்சார்ய சம்பந்தம் மோக்ஷத்திற்கே ஹேதுவாய் இருக்குமே –

—————–

பகவத் பாகவத அபசாராதிகள் பிரகிருதி ஸம்பந்தத்தினால் ஸ்வ ப்ரயத்னத்தினால்
தவிர்க்க முடியாது என்று உணர்ந்து
அவை நேராதபடி தம்மை நடத்தி அருள வேணும் என்று பிரார்திக்கிறார் இதில் –

யதா அபராதா நஸ்யுர்மே பஃதேஷூ பகவத்யபி
ததா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய –ஸ்லோகம் -4-

பாகவத அபசாராதிகள் நேராதபடி அருள பிரார்த்தனை இதில் –

யதிராஜரே! முக்தி அடையும் வரையில், இந்த உடலுடன் இங்கு வாழும் நான்,
ஒரு போதும் பகவானையோ அவனது அடியார்களையோ அவமானப்படுத்தி விடக் கூடாது.

பாகவத அபசாரத்தை விட பகவத் அபசாரம் நேர்வது மிக குறைவு
பகவத் அபி -அபி சப்தத்தால்-ஆஸ்திகர்களுக்கு அச்சம் இருப்பதால் இது நேராது ஆகிலும் என்றவாறு
நிஷித்தங்கள் நான்கினுள் இவை இரண்டையும் சொன்னது
அஸஹ்ய அபசாரம் அக்ருத்ய கரணம் -போன்றவற்றுக்கும் இவை உபலக்ஷணம் –

——————-

மநோ வாக் காயங்கள்
ஸத் புருஷ ஸஹ வாஸத்தாலும்
ஸத் கிரந்த அனுசந்தான ஸம்பாஷணத்தாலும் ஆளும்படி
செய்து அருள வேணும் என்று பிரார்திக்கிறார் இதில் –

ஆமோஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலேஷே போ அஸ்து நஸ் சத்பி ஸஹ வாஸம் உபேயுஷாம் –ஸ்லோகம் -5-

கீழே யாவத் தேஹம் -இங்கு ஆ மோக்ஷம் –
ரஜஸ் தமஸ் குணங்கள் உள்ள ப்ரக்ருதி -கழிந்து பரம பதம் செல்லும் வரை
கால ஷேபம் திருமால் அடியாரோடே ஸஹ வாஸம் –
பூர்வாச்சார்ய பிரபந்த கால ஷேபம்-வேண்டி பிரார்த்தனை இதில் –
லக்ஷ்மண முனியே! இந்த உடல் பிரியும் காலம் வரை நான் உமது ப்ரபந்தங்களையே ஆராய்ந்தபடி,
அவற்றையே கால க்ஷேபம் செய்தபடி எனது பொழுதைக் கழிக்க வேண்டும்.

த்வத் பிரபந்த
தேவரீர் அருளிச் செய்த நவ ரத்னங்களிலும்
தேவரீரைப் பற்றிய இராமானுஜ நூற்றந்தாதி யதிராஜ சப்ததி யதிராஜ விம்சதி ஆர்த்தி பிரபந்தம் போல்வனவும்
இவற்றின் அனுசந்தானமும் ஸத் ஸஹவாசமுமே மோக்ஷத்துக்கு அனுகூலமாகும் என்பதைக்
காட்ட- ஆ மோக்ஷம் பத பிரயோகம் இதில் —

————–

எம்பெருமானாருடைய பிரபத்திக்கு விஷயமான அருளிச் செயல்கள்
தமது நாவுக்கு இனியவாகும் படி அருள் செய்ய பிரார்த்தனை இதில் –

பராங்குச முனீந்திராதி பரமாசார்ய ஸூக்தயா
ஸ்வதந்தாம் மம ஜிஹ்வாயை ஸ்வத ஏவ யதீஸ்வர –ஸ்லோகம் -6-

ஆழ்வார்களையே பரமாச்சார்ய சப்தத்தால் -அருளி- செவிக்கு இனிய செஞ்சொல் –
அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருக்க பிரார்த்தனை இதில் –

சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத யுள்ளம் பெற இராமானுச முனி தன் வாய்ந்த
மலர்ப்பாதம் வணங்குகிறேன் -ஸ்ரீ அனந்தாழ்வான்

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா -ஸ்ரீ எம்பார்

இவை இன்றும் இனித்தாலும் அகலகில்லேன் இறையும் என்ற பிராட்டி பிரார்த்தனை போல் இவரும்
தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணும் செவிக்கு இனிய செஞ்சொற்கள் ஆகையால் இந்தப்பிரார்தனை –

————-

இத் யேதத் சாதரம் வித்வான் ப்ரார்த்தநா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–ஸ்லோகம் -7

ஸ்வாமி திருவடிகளில் பேரின்பத்தை இந்த ஸ்லோகங்கள் சொல்ல பெறுவார் என்று
பலன் அருளிச் செய்து நிகமிக்கிறார்

சாதரம் படன்-என்று
பொருள் உணர்ந்தோ உணராமலோ சொன்னாலும் பலன் கிட்டுவது நிச்சயம் என்றவாறு –

யதிராஜரின் திருவடிகளின் மீது வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை
யார் ஒருவர் பக்தியுடன் படிக்கிறார்களோ,
அவர்கள் எம்பெருமானாரின் திருவடிகளின் மீது மேலும் பக்தி பெறுவர்.

பகவத் பக்தி
பாகவத பக்தி
ஆச்சார்ய பக்தி
ஒன்றுக்கு ஓன்று ஸ்ரேஷ்டம்
ஆச்சார்யர் திறத்திலே பரமபக்தியை விட வேறே ஒன்றே ஸ்ரேஷ்டம் இல்லையே
ஆகவே இத்தை அனுசந்தானத்தால் உண்டாகும் யதிராஜ பாத பங்கஜ பரம பக்தி
கைகூடும் என்று நிகமித்து அருள்கிறார் –

————–

காஷாய ஸோபி கமநீய ஸிகா நிவேசம்
தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருஸோர் மமாக்ரே –ஸ்லோகம் -8-

ஸ்வாமி திவ்ய மங்கள விக்ரஹம் திவ்ய சோபை எப்பொழுதும்
நம் கண்களுக்கு விளங்க பிரார்த்தனை –

துவராடையால் விளங்குவதும்
அழகிய குடுமியின் அமைப்பை யுடையதும்
முக்கோலால் ஒளி பெற்ற திருக்கையை யுடையதும்
வெளுத்த பூணூலை யுடையதும்
ஒளி விடுகிற திருமண காப்பை யுடையதும்
உதியா நின்ற ஆதித்யனோடே ஒத்து உள்ளதான
தேவரீருடைய திருமேனியானது
காண விரும்பிய அடியேனுடைய இரண்டு கண்களுக்கு எதிரிலே இருக்கும்படி அருள்வாய் என்றபடி –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எம்பெருமானாருடைய இயற்கையான திருமேனி அழகை
பெருமாள் கோயிலிலே திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாருக்கு
சிவந்து நெடுகி வலியராய்
ஆயத்தாச்ச ஸூ வ்ருத்தாச்ச–பாஹவா -என்கிறபடியே
ஆஜானு பாஹுவாய் நடுவே வருகிறவர் –
என்ற வர்ணனை இங்கே நினைக்கத் தகும் –

——–

உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –

சரம ஸ்லோக தத்வார்த்தம் ஜ்ஞாத்வா ஆர்யாஜ்ஞாம் விலங்க்யச
தததே தம் சவகீயேப்யோ யதிராஜாய மங்களம் –

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார் வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்று அளித்தான்
யுல்லார விந்தத் திருத்தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –

எம்பெருமானார் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராம அஷ்டோத்ரம் —

September 7, 2021

ஶ்ரீ ராமாஷ்டோத்தர ஶத நாமாவல்தி3

ஓஂ ஶ்ரீராமாய நம:
ஓஂ ராம ப4த்3ராய நம:
ஓஂ ராம சந்த்3ராய நம:
ஓஂ ஶாஶ்வதாய நம:
ஓஂ ராஜீவலோசனாய நம:

ஓஂ ஶ்ரீமதே நம:
ஓஂ ராஜேந்த்3ராய நம:
ஓஂ ரகு4புங்க3வாய நம:
ஓஂ ஜானகீவல்லபா4ய நம:
ஓஂ ஜைத்ராய நம: ॥ 1௦ ॥

ஓஂ ஜிதாமித்ராய நம:
ஓஂ ஜனார்த3னாய நம:
ஓஂ விஶ்வாமித்ர ப்ரியாய நம:
ஓம் தா3ன்தாய நம:
ஓஂ ஶரண த்ராண தத் பராய நம:

ஓஂ வாலி ப்ரமத2னாய நம:
ஓஂ வாங்மினே நம:
ஓஂ ஸத்ய வாசே நம:
ஓஂ ஸத்ய விக்ரமாய நம:
ஓஂ ஸத்ய வ்ரதாய நம: ॥ 2௦ ॥

ஓஂ வ்ரதத4ராய நம:
ஓஂ ஸதா3 ஹனுமதா3ஶ்ரிதாய நம:
ஓஂ கோஸலேயாய நம:
ஓம் க2ர த்4வம்ஸினே நம:
ஓஂ விராத4வத4 பண்டி3தாய நம:

ஓஂ விபீ4ஷண பரித்ராத்ரே நம:
ஓஂ ஹர கோத3ண்ட3 க2ண்ட3னாய நம:
ஓஂ ஸப்த ஸால ப்ரபே4த்த்ரே நம:
ஓம் த3ஶக்3ரீவ ஶிரோ ஹராய நம:
ஓஂ ஜாமத3க்3ன்ய மஹா த3ர்பத3ல்த3னாய நம: ॥ 3௦ ॥

ஓஂ தாடகாந்தகாய நம:
ஓஂ வேதா3ந்த ஸாராய நம:
ஓஂ வேதா3த்மனே நம:
ஓம் ப4வரோக3ஸ்ய பே4ஷஜாய நம:
ஓம் தூ3ஷணத்ரிஶிரோ ஹந்த்ரே நம:

ஓஂ த்ரி மூர்தயே நம:
ஓஂ த்ரி கு3ணாத்மகாய நம:
ஓஂ த்ரி விக்ரமாய நம:
ஓஂ த்ரி லோகாத்மனே நம:
ஓஂ புண்ய சாரித்ர கீர்தனாய நம: ॥ 4௦ ॥

ஓஂ த்ரி லோக ரக்ஷகாய நம:
ஓம் த4ந்வினே நம:
ஓம் த3ண்ட3காரண்ய கர்தனாய நம:
ஓஂ அஹல்யா ஶாப ஶமனாய நம:
ஓஂ பித்ரு ப4க்தாய நம:

ஓஂ வர ப்ரதா3ய நம:
ஓஂ ஜித க்ரோதா4ய நம:
ஓஂ ஜிதா மித்ராய நம:
ஓஂ ஜக3த்3 கு3ரவே நம:
ஓஂ ருஷவானர ஸங்கா4தினே நம: ॥ 5௦॥

ஓஂ சித்ரகூ டஸமாஶ்ரயாய நம:
ஓஂ ஜயந்தத்ராண வரதா3ய நம:
ஓஂ ஸுமித்ரா புத்ர ஸேவிதாய நம:
ஓஂ ஸர்வ தே3வாதி3 தே3வாய நம:
ஓஂ ம்ருத வானர ஜீவனாய நம:

ஓஂ மாயா மாரீச ஹந்த்ரே நம:
ஓஂ மஹா தே3வாய நம:
ஓஂ மஹா பு4ஜாய நம:
ஓஂ ஸர்வ தே3வஸ்துதாய நம:
ஓஂ ஸௌம்யாய நம: ॥ 6௦ ॥

ஓம் ப்3ரஹ்மண்யாய நம:
ஓஂ முனி ஸம்ஸ்துதாய நம:
ஓஂ மஹா யோகி3னே நம:
ஓஂ மஹோ தா3ராய நம:
ஓஂ ஸுக்3ரீவேப்ஸித ராஜ்யதா3ய நம:

ஓஂ ஸர்வ புண்யாதி4க ப2லாய நம:
ஓஂ ஸ்ம்ருத ஸர்வாக4னாஶனாய நம:
ஓஂ ஆதி3 புருஷாய நம:
ஓஂ பரம புருஷாய நம:
ஓஂ மஹா புருஷாய நம: ॥ 7௦ ॥

ஓஂ புண்யோ த3யாய நம:
ஓம் த3யா ஸாராய நம:
ஓஂ புராணாய நம:
ஓஂ புருஷோத்தமாய நம:
ஓஂ ஸ்மித வக்த்ராய நம:

ஓஂ மித பா4ஷிணே நம:
ஓஂ பூர்வ பா4ஷிணே நம:
ஓஂ ராக4வாய நம:
ஓஂ அனந்த கு3ண க3ம்பீ4ராய நம:
ஓம் தீ4ரோதா3த்த கு3ணோத்தமாய நம: ॥ 8௦ ॥

ஓஂ மாயா மானுஷ சாரித்ராய நம:
ஓஂ மஹா தே3வாதி3 பூஜிதாய நம:
ஓஂ ஸேதுக்ருதே நம:
ஓஂ ஜித வாராஶயே நம:
ஓஂ ஸர்வ தீர்த2 மயாய நம:

ஓஂ ஹரயே நம:
ஓஂ ஶ்யாமாங்கா3ய நம:
ஓஂ ஸுந்த3ராய நம:
ஓஂ ஶூராய நம:
ஓஂ பீத வாஸஸே நம: ॥ 9௦ ॥

ஓம் த4னுர்த4ராய நம:
ஓஂ ஸர்வயஜ்ஞாதி4பாய நம:
ஓஂ யஜ்வனே நம:
ஓஂ ஜரா மரண வர்ஜிதாய நம:
ஓஂ ஶிவ லிங்க3 ப்ரதிஷ்டா2த்ரே நம:

ஓஂ ஸர்வாவகு3ண வர்ஜிதாய நம:
ஓஂ பரமாத்மனே நம:
ஓஂ பரஸ்மை ப்3ரஹ்மணே நம:
ஓஂ ஸச்சிதா3ந்ந்த3 விக்3ரஹாய நம:
ஓஂ பரஸ்மை ஜ்யோதிஷே நம: ॥ 1௦௦ ॥

ஓஂ பரஸ்மை தா4ம்னே நம:
ஓஂ பராகாஶாய நம:
ஓஂ பராத் பராய நம:
ஓஂ பரேஶாய நம:
ஓஂ பாரகா3ய நம:

ஓஂ பாராய நம:
ஓஂ ஸர்வ தே3வாத்மகாய நம:
ஓஂ பராய நம: ॥ 1௦8 ॥

இதி ஶ்ரீ ராமாஷ்டோத்தர ஶத நாமா வளீதீ3ஸ் ஸமாப்தா ॥

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மஹா லஷ்மி அஷ்டோத்திரம் —

September 7, 2021

ஓம் ப்ரக்ருத்யை நம
ஓம் விக்ருத்யை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம
ஓம் ஸ்ரத்தாயை நம

ஓம் விபூத்யை நம
ஓம் ஸுரப்யை நம
ஓம் பரமாத்மிகாயை நம
ஓம் வாசே நம
ஓம் பத்மாலயாயை நம

ஓம் பத்மாயை நம
ஓம் ஸுசயே நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் ஸுதாயை நம

ஓம் தன்யாயை நம
ஓம் ஹிரண் மய்யை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் நித்ய புஷ்டாயை நம
ஓம் விபாவர்யை நம

ஓம் அதித்யை நம
ஓம் தித்யை நம
ஓம் தீப்தாயை நம
ஓம் வஸுதாயை நம
ஓம் வஸுதாரிண்யை நம

ஓம் கமலாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமாயை நம
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம
ஓம் அனுக்ரஹ பதாயை நம

ஓம் புத்யை நம
ஓம் அநகாயை நம
ஓம் ஹரி வல்லபாயை நம
ஓம் அசோகாயை நம
ஓம் அம்ருதாயை நம

ஓம் தீப்தாயை நம
ஓம் லோக சோக விநாசிந்யை நம
ஓம் தர்ம நிலயாவை நம
ஓம் கருணாயை நம
ஓம் லோகமாத்ரே நம

ஸ்ரீ மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள் எவை?

ஓம் பத்ம ப்ரியாயை நம
ஓம் பத்ம ஹஸ்தாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் பத்ம ஸுந்தர்யை நம
ஓம் பக்மோத்பவாயை நம

ஓம் பக்த முக்யை நம
ஓம் பத்ம நாப ப்ரியாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் பத்ம மாலா தராயை நம
ஓம் தேவ்யை நம

ஓம் பத்மிந்யை நம
ஓம் பத்மகந்திந்யை நம
ஓம் புண்யகந்தாயை நம
ஓம் ஸுப்ரஸந்நாயை நம
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம

ஓம் ப்ரபாயை நம
ஓம் சந்த்ர வதநாயை நம
ஓம் சந்த்ராயை நம
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம
ஓம் சதுர்ப் புஜாயை நம

ஓம் சந்த்ர ரூபாயை நம
ஓம் இந்திராயை நம
ஓம் இந்து சீதலாயை நம
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம
ஓம் புஷ்ட்யை நம

ஓம் சிவாயை நம
ஓம் சிவகர்யை நம
ஓம் ஸத்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் விச்ய ஜநந்யை நம

ஓம் புஷ்ட்யை நம
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் ஸுக்லமாம்யாம்பரரயை நம

ஓம் ஸ்ரியை நம
ஓம் பாஸ்கர்யை நம
ஓம் பில்வ நிலாயாயை நம
ஓம் வராய ரோஹாயை நம
ஓம் யச்சஸ் விந்யை நம

ஓம் வாஸுந்தராயை நம
ஓம் உதா ராங்காயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் தந தாந்யகர்யை நம

ஓம் ஸித்தயே நம
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம
ஓம் ஸுப ப்ரதாயை நம
ஓம் ந்ருப வேஸ்மகதாநந்தாயை நம
ஓம் வரலக்ஷம்யை நம

ஓம் வஸுப்ரதாயை நம
ஓம் ஸுபாயை நம
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம
ஓம் ஸமுத்ர தநயாயை நம
ஓம் ஜயாயை நம

ஓம் மங்கள தேவதாயை நம
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம

ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம
ஓம் நவ துர்காயை நம
ஓம் மஹாகாள்யை நம

ஓம் ப்ரம்ம விஷ்ணு ஸிவாத்மி நம
ஓம் த்ரிகால ஜ்நாந ஸம்காயை பந்நாயை நம
ஓம் புவனேஸ்வர்யை நம.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்–

June 11, 2021

ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்

வாஸுதேவம் ஹ்ரிஷிகேசம் வாமனம் ஜலஸாயினம் !
ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம் !!

வாராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருசிம்ஹம் நரகாந்தகம் !
அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தமஜமவ்யயம் !!

நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்த்திபாஜனம் !
கோவர்த்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம் !!

வேத்தாரம் யஞ்யபுருஷம் யஞேசம் யஞ்யவாஹகம் !
சக்ரபாணிம் கதாபாணிம் சங்கபாணிம் நரோத்தமம் !!

வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம் !
த்ரிவிக்ரமம் த்ரிகாலஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஷ்வரம் !!

ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம் !
ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஷம் மங்களம் மங்களாயுதம் !!

தாமோதரம் தமோபேதம் கேசவம் கேசிஸூதனம் !
வரேண்யம் வரதம் விஷ்ணும் ஆனந்தம் வஸுதேவஜம் !!

ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம் !
ஸகலம் நிஷ்கலம் சுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம் !!

ஹிரண்யதனு ஸங்காஸம் சூர்யாயுத ஸமப் பிரபம் !
மேகஷ்யாமம் சதுர்பாஹும் குசலம் கமலேக்ஷணம் !!

ஜ்யோதிரூபமரூபம் ச ஸ்வரூபம் ரூபஸம்ஸ்திதம் !
ஸர்வஞம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம் !!

ஞானம் கூடஸ்தமசலம் ஞானதம் பரமம் ப்ரபும் !
யோகீசம் யோகநிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம் !!

ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும் !
இதி நாம சதம் திவ்யம் வைஷ்ணவம் கலு பாபஹம் !!

வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வ பாப ப்ரணாஸனம் !
ய: படேத் ப்ராத ருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர: !!

ஸர்வபாப விசுத்தாத்மா விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத் !
சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான சதானி ச !!

கவாம் லக்ஷ ஸஹஸ்ராணி முக்திபாகீ பவேன்னர: !
அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ: !!

இதி ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கோவிந்தன் என்ற திரு நாமத்தின் பெருமை–ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளிச் செய்த ஸ்ரீ கோவிந்த அஷ்டகம் —

April 26, 2021

ஓம் நமோ பகவதே மஹாஸுதர்ஷன:
வாஸுதேவாய, தந்வந்தராய,  அம்ருதகலஸ ஹஸ்தாய, சகல பய வினாஷாய,
சர்வ ரோக நிவாரணாய, த்ரிலோக பதயே, த்ரிலோக நிதயே, 
ஓம் ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப, 
ஸ்ரீ தந்வந்தரி ஸ்வரூப,
ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயண நமஹ.

———

கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

கோவிந்தன் என்ற திரு நாமத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.

மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் என்று சொல்லபடுகின்ற
ஐந்து திருநாமங்கள் புகழ்பெற்றவை. ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் ஐந்தில்
நடுநாயகமாக விளங்கும் கோவிந்த நாமமே இந்த வலைப்பதிவின் தலைப்பு.
திருமலை ஏறும் போது பக்தர்கள் பொதுவாக உச்சரிக்கும் திருநாமம் கோவிந்தா, கோவிந்தா.
திருப்பாவை என்ற திவ்யப்ரபந்ததில் ஆண்டாள் பெருமானின் பல திரு நாமங்களை சொல்லி இருக்கிறார்.
இருபத்தி ஏழு, இருபத்திஎட்டு மற்றும் இருபத்திஒன்பது பாடல்களில் ஆண்டாள், கோவிந்த என்ற திருநாமத்தினை மூன்று முறை, கூறுகிறார்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறவைகள் பின் சென்று …… குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சிற்றம் சிறு காலை….. அன்று காண் கோவிந்தா

பாஞ்சாலி உதவி என்று கண்ணனிடம் சரணாகதி அடையும் போது உபயோகித்த திருநாமம் கோவிந்தா.
“திரௌபதிக்கு, ஆபத்திலே புடவை சுரந்தது கோவிந்த நாமமிறே”..

ஆசமனம் என்ற ஒரு அரைநிமிட வைதிக சடங்கு எல்லா இந்துமத வைதிக கருமங்களிலும் பலமுறை திருப்பித் திருப்பிச் செய்யப்படும் ஒன்று.
அதில் கோவிந்தா என்பது, விஷ்ணுவின் பன்னிரண்டு நாமங்களில் ஒரு முறையும்,
அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று முதலில் ஒரு முறையும் சொல்லவேண்டி வரும்.
இதில் விசேஷம் என்னவென்றால், பன்னிருநாமங்களிலும் ‘கோவிந்தா‘ ஒரு முறை வருவதால்,
இங்கு எல்லா நாமங்களிலும் கோவிந்தநாமம் ஒன்று மட்டுமே இரண்டு முறை வரும் நாமம் ஆகின்றது.

ஆன்மிக சொற்பொழிவுகளிலும் தெய்வபஜனை போதும் ஸர்வத்ர கோவிந்தநாமசங்கீர்த்தனம் கோவிந்தா, கோவிந்தா‘
என்று சொல்வது மிக பிரசித்திபெற்ற ஒன்றே.
ஆதி சங்கரர் என்ற மதாச்சாரியாரின் புகழ் பெற்ற ஓர் எளிய வேதாந்த ஸ்தோத்திரம் பஜ கோவிந்தம் என்பது.
இதில் ஆண்டவன் பெயராக ‘கோவிந்த’நாமம் எடுத்தாளப்பட்டது.
சங்கரரின் குருவின் பெயர் கோவிந்தர் என்று இருந்ததாலும், கோவிந்த நாமத்தின் பெருமை தான் அப்படி எடுக்க செய்தது என்று சொல்வதுண்டு.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 189 (கோவிந்தோ கோவிதாம் பதி) மற்றும் 543 (மகா வராஹா, கோவிந்தக) நாமங்களாக வருகின்றன.
கோவிந்த நாமத்தின் பல மகத்துவங்களில் முக்கியமான ஒன்று என்ன வென்றால் கோவிந்தா என்ற நாமம்
திருமாலின் தசாவதாரங்களையும் குறிக்க வல்லது.

கோவிந்தாவில் வரும், கோ என்ற சப்தத்திற்கு வடமொழியில் பற்பல பொருள்கள் உண்டு.
வாக்கு
உயிர்கள் (கோ), காப்பாற்றுபவன் (விந்தன்)
பசு மாடு, கன்றுகுட்டிகள்
பூமி
மோட்ஷம் அளிப்பவர்
நீர்
அஸ்திரம் அல்லது ஆயுதம்
பர்வதம் அல்லது மலை
துதிக்கும் அல்லது துதிக்கப்படுவர்
புலன்கள். புலன்களை அடக்கி ஆள்பவன்
வேதமோதுவதால் அடையக்கூடியவர்
கூப்பிடுதூரத்தில் இருப்பவர்.

மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள்.
மச்ச அவதாரத்தில் நீரில் இருந்து வேதங்களை காப்பாற்றியதால் கோவிந்தா என்று அந்த அவதாரத்தை குறிப்பிடலாம்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம்.
கூர்ம அவதாரத்தில் மந்திர மலையை தாங்கியபடி பாற்கடலில் பள்ளி கொண்டதால் கோவிந்தா என்று கூறலாம்.

திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.
நீரில் இருந்து பூமியை காப்பாற்றியதால் அந்த அவதாரத்தையும் கோவிந்தா என்றே அழைக்கலாம்.

பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். பிரஹலாதனுக்கு மோட்ஷம் அளித்தார்.
அதே போல் சகல தேவதைகளும் நரசிம்ஹருக்கு கோபம் தணிய ஸ்தோத்திரம் செய்தார்கள் அல்லது துதித்தார்கள்.
ஆகவே அந்த அவதாரமும் கோவிந்தா எனக் கொள்ளலாம்.

பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம்.
தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.
பூமியை அளந்ததால் கோவிந்தா என்பர்.

தந்தை வாக்கை சிரமேல் கொண்டு செயல் பட்ட பரசுராம அவதாரத்தையும் கோவிந்தா என்றே கூறலாம்.

ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும்,
விச்வாமிதிரரிடம் இருந்து ஐநூறுக்கும் மேலான ஆயுதங்களைப் பெற்றதாலும்,
அகத்திய முனிவரிடம் இருந்து பற்பல அஸ்திரங்களை பெற்றதால் ஸ்ரீ ராமனையும் கோவிந்தா என்றே கொள்ளலாம்.

கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள்.
பலராமரின் ஆயுதம் கலப்பை – அதனை கொண்டு பூமியை தோண்டுவதால் பலராமரும் கோவிந்தரே.

வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம்.
மாடு கன்றுகளுடன் கூடிய ஸ்ரீ கிருஷ்ணரை கோவிந்தா என்றே கூப்பிடுவோம்.
கோவர்த்தன மலையை தாங்கி பசுக்களையும் மக்களையும் காப்பாற்றியதால் கோவிந்தன் ஆகிறார்.

கலி யுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு
செல்ல வருவார் என்பது சனாதன தர்மத்தின் நம்பிக்கை.
முக்திக்கு அழைத்து செல்வதாலும், பூமியில் தர்மத்தை நிலை நிறுத்துவதாலும் கல்கி அவதாரமும் கோவிந்தனே.

கோவிந்தா என்றால் போனால் திரும்ப வராது என்னும் அர்த்தத்தையும் கொண்டது. அதாவது பூவுலகில் மனிதப் பிறவியாய்
அவதரித்து அவதிப்படுபவன் இத் திருநாமத்தை விடாது பற்றிக்கொண்டால் மீண்டும்
இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டான் என்பதையே குறிக்கும். கோவிந்த நாமம் சொல்ல சொல்ல போன உயிர்
மீண்டும் திரும்பாது என்பதே இதன் பொருள். அதாவது மறுபிறவி யில்லாத நிலை என்று சொல்லலாம்.

பக்தர்கள் அபயம் வேண்டி மனம் முழுக்க வேங்கடவனை நினைத்து கோவிந்தா என்று முழங்கினால்
செய்யும் பணிகளை விடுத்து தேடிவருவான் கோவிந்தப் பெருமாள்.
மகாபாரதத்தில் திரெளபதியின் சேலையை துரியோத னன் துகிலுரிந்த போது அதைப் பார்த்து
பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், விதுரர், பாண்டவர்கள் தலைகுனிந்தார்கள். ஒன்றும் செய்ய இயலாமல் அமைதியாக இருந்தார்கள்.
செய்வதறியாமல் திகைத்தார்கள். ஆனால் திரெளபதி கோவிந்தனை மட்டுமே நம்பினாள். கோவிந்தனின் திருநாமத்தை உச்சரித்தாள்.
இருகைகளையும் மேலே எழுப்பி கோவிந்தா கோவிந்தா என்னை காப்பாற்று என்றாள்.
கோவிந்தனின் திருநாமத்தால் அவளது ஆடையின் அளவும் நீண்டுக் கொண்டே சென்றது.
அவ்வளவு சக்தியைக் கொண்டது கோவிந்தனின் திருநாமம்.

—————–

ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளிச் செய்த ஸ்ரீ கோவிந்த அஷ்டகம் –

ஸத்யம்ʼ ஜ்ஞானமனந்தம்ʼ நித்யமனாகாஶம்ʼ பரமாகாஶம்ʼ
கோ³ஷ்ட²ப்ராங்க³ண-ரிங்க²ணலோல-மநாயாஸம்ʼ பரமாயாஸம் |
மாயாகல்பித-நாநாகாரமநாகாரம்ʼ பு⁴வனாகாரம்ʼ
க்ஷ்மாமாநாத²மநாத²ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–1-

சத்தியம் ஞானம் அனந்தம் நித்தியம்–இடைவெளியற்றது (அனாகாசம்)-இதயக் குகைவெளியிலுள்ளது (பரமாகாசம்)எனும் பொருள்
மாட்டுத் தொழுவத்தில் ஓடிவிளையாடிக் கொண்டிருக்கிறான்.
அனாயாசமானவன்–மாயையை அடக்கி அதனுள் இருப்போன் (பர-மாயாசம்).
தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும்–உருவமின்றியும்-உலகே உருவாகவும் திகழ்வோன்.

ஸ்ரீ-பூ-தேவியரின் நாதனும்–தனக்கு மேல் ஒரு தலைவன் அற்றவனும் (அ-நாதன்)
பரமானந்த வடிவும் ஆகிய அந்த கோவிந்தனை வணங்குவீர்.

———–

ம்ருʼத்ஸ்நாமத்ஸீஹேதி யஶோதா³-தாட³ந-ஶைஶவ ஸந்த்ராஸம்ʼ
வ்யாதி³த-வக்த்ராலோகித-லோகாலோக-சதுர்த³ஶ-லோகாலிம் |
லோகத்ரயபுர-மூலஸ்தம்ப⁴ம்ʼ லோகாலோகமநாலோகம்ʼ
லோகேஶம்ʼ பரமேஶம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||–2-

இங்கு மண்ணைத் தின்கிறாயே என யசோதை அடிக்க வருகையில் குழந்தைப்பருவத்தின் பீதியை அடைந்தவன்.
திறந்த வாயில் லோகாலோக பர்வதங்களுடன் கூடிய பதினான்கு லோகங்களைக் காட்டியவன்.
மூவுலகிற்கும் ஆதாரத் தூணானவன். உலங்களுக்கு ஒளியூட்டுபவன் (லோகாலோகம்)
தனக்கு வேறு ஒளி வேண்டாதவன் (அனாலோகம்)
லோகேஸ்வரனும் பரமேஸ்வரனும் பரமானந்த வடிவும் ஆகிய கோவிந்தனை வணங்குவீர்.

புராணங்களின்படி, பதினான்கு உலகங்களில் ஒவ்வொரு உலகத்திற்கும் கிழக்கிலும் மேற்கிலும் உதய, அஸ்தமன பர்வதங்கள் உண்டு.
அவற்றின் ஒருபுறம் ஒளியும் மறுபுறம் இருளும் உள்ளதால், அவை லோகாலோக பர்வதங்கள் என அழைக்கப் படுகின்றன.
பாடலின் இரண்டாம் அடியில் பர்வதங்களைக் குறிக்கும் லோகாலோகம் என்ற சொல்,
அடுத்த அடியிலேயே பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணனைச் சுட்டுமாறு வருகிறது – உலகங்கள் அனைத்திற்கும் ஒளியூட்டி
தன்னொளியால் தானே பிரகாசிப்பவன் (லோகான் ஆலோகயதி ஸ்வாத்மபா4ஸா ப்ரகாஶயதி இதி லோகாலோக:).
உலக இயக்கமனைத்திற்கும் ஆதாரமாக இருந்தும் அதில் பற்றுக் கொள்ளாது சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் என்பது வேதாந்த உட்பொருள்.

மூவுலகிற்கும் நிலைப்பொருளாக (அதிஷ்டானம்) விளங்கும் பிரம்மத்தின் சைதன்ய பிரகாசத்தினாலேயே அதனிடம்
கற்பிக்கப் பட்டவையான மூன்று உலகங்களும் ஒளிபெறுகின்றன.
கற்பிக்கப் பட்ட பொருள்களுக்கு தனியாக சொந்த இருப்பும் ஒளியும் கிடையாது.

அங்கு சூரியன் ஒளிர்வதில்லை–நிலவு நட்சத்திரங்கள் இல்லை –இந்த மின்னலும் ஓளிர்வதில்லை
எனில் நெருப்பிற்கு ஏது இடம் அவன் ஒளிர்கையில் அனைத்தும் பின்னொளிர்கின்றன
அவனது ஒளியினாலேயே இவையனைத்தும் ஒளிர்கின்றன–– கட உபநிஷதம் 2.5.9

——–

த்ரைவிஷ்டப-ரிபு-வீரக்⁴நம்ʼ க்ஷிதி-பா⁴ரக்⁴நம்ʼ ப⁴வ-ரோக³க்⁴நம்ʼ
கைவல்யம்ʼ நவநீதாஹாரமநாஹாரம்ʼ பு⁴வனாஹாரம் |
வைமல்ய-ஸ்பு²ட-சேதோவ்ருʼத்தி-விஶேஷாபா⁴ஸ-மநாபா⁴ஸம்ʼ
ஶைவம்ʼ கேவல-ஶாந்தம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||-3-

அமரர்பகையாம் அரக்கவீரரை அழிப்பவன் –புவியின் பாரத்தை அழிப்பவன்–பிறவிப்பிணியை அழிப்பவன்
தானொருவனேயானவன் (கைவல்யம்) –வெண்ணெய் உண்பவன் (நவநீதாஹாரம்)
உணவற்றவன் (அனாஹாரம்)-உலகனைத்தும் உண்பவன் (புவனாஹாரம்)
மாசற்றுத் தெளிந்து சிறந்த –மனவெளியில் தோன்றுபவன்–தோற்றமற்றவன்
மங்கள வடிவினன் (சைவம்) –தனித்து மாறுபாடற்றிருப்பவன் (கேவல சாந்தம்)
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை வணங்குவீர்.

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் – பிறவிப்பிணிக்குக் காரணமான அக்ஞானத்தை குருவாக விளங்கி ஆத்மஞானம் எனும் மருந்தால் அழிப்பவன்.

அக்ஞானத்தினால் தோன்றும் பொய்ப்பொருள்கள் அனைத்திலிருந்தும் தனித்து நிற்கும் மெய்ப்பொருள் – கைவல்யம்.

பசி, தாகம் முதலியவை பிறவியில் கட்டுண்ட ஜீவன் உடலுடன் கொள்ளும் அபிமானத்தால் ஏற்படுபவை.
தளையற்ற பிரம்ம சொரூபத்திற்கு இவையேதும் இல்லை என்பதால் உணவற்றவன்.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் விளையாட்டாக வெண்ணெய் உண்டவன். ஒடுக்கத்தின் போது (பிரளயம்) உலகனைத்தும்
அதன் நிலைப்பொருளாகிய (அதிஷ்டானம்) பிரம்மத்தில் சென்று ஒடுங்குவது உலகனைத்தையும் உண்பதாகக் கூறப்பட்டது.

மனவெளியில் தோன்றும் எண்ண அலைகள் சித்த வ்ருத்தி அல்லது சேதோ வ்ருத்தி எனப்படும்.
இவற்றை முழுவதுவாக அடக்குவதும் தடுப்பதுமே யோகம் (யோக3ஶ்சித்தவ்ருத்தி நிரோத4:) என்பது பதஞ்சலியின் முதல் சூத்திரம்.
இப்படி அனைத்து எண்ண அலைகளும் அடங்கிவிட்ட மனத்தில் பின்பு ஏதுமற்ற வெறுமையும் சூனியமும் தான் இருக்கும்
என்பதே பதஞ்சலி யோகம் மற்றும் பௌத்தம், ஜைனம் முதலான அவைதிக தரிசனங்களின் கோட்பாடு.
அது எந்தவிதமான சூனியம் என்பதில் தான் அவைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு-
வேதாந்த மரபில் உணர்வற்ற அத்தகைய யோக நிலை ‘ஜட சமாதி’ என்று அழைக்கப் படுகிறது.
வேதாந்தத்தின் படி, பிரம்ம ஞானத்தேடலுடைய யோகியின் மனம் மற்ற எண்ண அலைகளனைத்தும் அடங்கிய பிறகு
சூனியத்தில் அல்லாமல் பூரணத்தில் நிலைக்கிறது – தனது நித்திய ஸ்வரூபவமான பிரம்மத்துவம் அன்றி வேறேதும் இல்லை
என்ற என்ற எண்ணம் உறுதிப்படும் நிலை. ‘பிரம்மாகார அகண்ட வ்ருத்தி’ என்று தத்துவ மொழியில் அது குறிப்பிடப் படுகிறது.
அத்தோற்றமே இங்கு ஸ்ரீகிருஷ்ணனுடையதாகக் குறிப்பிடப் பட்டது.

‘சாந்தம் சிவம் அத்வைதம்’ என்பது பிரம்மத்திற்குரிய அடைமொழியாக மாண்டூக்ய உபநிஷதத்தில் கூறப்பட்டது.
அதனையே ‘சைவம் கேவல சாந்தம்’ என்று இந்த சுலோகத்தின் கடைசி அடி குறிப்பிடுகிறது.

——

கோ³பாலம்ʼ பூ⁴லீலா-விக்³ரஹ-கோ³பாலம்ʼ குல-கோ³பாலம்ʼ
கோ³பீகே²லந-கோ³வர்த⁴நத்⁴ருʼதி-லீலாலாலித-கோ³பாலம் |
கோ³பி⁴ர்நிக³தி³த கோ³விந்த³-ஸ்பு²ட-நாமாநம்ʼ ப³ஹுநாமாநம்ʼ
கோ³-தீ⁴-கோ³சர-தூ³ரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–4-

கோபாலன்–விளையாட்டாய்ப் புவியில் கோபால உருவெடுத்தவன் –கோபால குலத்தவன்
கோபியருடன் விளையாடி கோவர்த்தனம் தூக்கி–கோபர்களை லீலைகளால் சீராட்டியவன்
பசுக்கள் கூவியழைக்கும் –கோவிந்தா என்ற சிறப்பான பெயருடையவன்–மிகப்பல பெயர்களுடையவன்
புலன்களும் புத்தியும் செல்லமுடியாத தூரத்திலிருப்பவன் அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

கோ3 என்ற சொல்லுக்கு பசு, பூமி, சப்தம் (வேதம்), புலன், என்று பல பொருள் உண்டு.

கோபாலன் – பசுக்களை, பூமியை, வேதங்களை, பசுக்களைப் போன்ற உயிர்களைக் காப்பவன்.

கோவிந்தன் – வேதவாக்குகளால் அறியப்படுவன். வேதவாக்குகளை அருளியவன். வராகாவதாரத்தில் பூமியையும்,
கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களையும் காத்தவன். இவ்வாறு ‘கோவிந்த’ பதம் நிர்குண பிரம்மம் (அருவமான பரம்பொருள்),
ஸகுண பிரம்மம் (உருவமான பரம்பொருள்) இரண்டையும் குறிப்பதனால், இவ்விரண்டு பரம்பொருள் தத்துவங்களையும்
மாறிமாறி சுட்டும் வகையில் கோவிந்தாஷ்டகம் அமைந்துள்ளது.

கடைசி அடியில், கோ3-தீ4-கோ3சர-தூ3ரம் என்பதில் முதல் கோ3 புலன்களையும், அடுத்து வரும் கோ3சர என்பது செல்லுதலையும் குறிக்கிறது.

——-

கோ³பீ-மண்ட³ல-கோ³ஷ்டீ²-பே⁴த³ம்ʼ பே⁴தா³வஸ்த²மபே⁴தா³ப⁴ம்ʼ
ஶஶ்வத்³கோ³கு²ர-நிர்தூ⁴தோத்³க³த-தூ⁴லீ-தூ⁴ஸர-ஸௌபா⁴க்³யம் |
ஶ்ரத்³தா⁴-ப⁴க்தி-க்³ருʼஹீதாநந்த³மசிந்த்யம்ʼ சிந்தித-ஸத்³பா⁴வம்ʼ
சிந்தாமணி-மஹிமாநம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–5-

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன். –வெவ்வேறு உணர்வு நிலைகளை உடையவன்
வேற்றுமையற்றவன். –பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன்.
சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன். –அறியவொண்ணாதவன்.
சத்தியப்பொருளென அறியப்படுபவன். -சிந்தாமணியின் மகிமையுடையவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

தனது மாயையினால் வெவ்வேறு உணர்வு நிலைகளை (அவஸ்தைகள்) உடையவன். விழிப்பு, உறக்கம்,
கனவு (ஜாக்ரத் ஸுஷுப்தி ஸ்வப்னம்) ஆகிய மூன்று மாறுபட்ட நிலைகளிலும் தான் என்ற ஆத்ம ஸ்வரூபம் மாறாதிருப்பவன்.

பிரம்மத்தின் இயல்பே ஆனந்தம் என்பதால், அவன்மீது கொண்ட சிரத்தையாலும் பக்தியாலும் பக்தர்கள் ஆனந்தமடைகின்றனர்.

சிந்தாமணி வேண்டியதை எல்லாம் தருவது. அது போன்றே ஈசுவரனும்.

மற்ற பொருள்களைப் போலல்லாமல் நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டதால், வேறு எந்த வகையிலும் அறியவொண்ணாதவன்.
ஆனால் உபநிஷத வாக்கியங்களாலும் வேதாந்த விசாரத்தாலும் அபரோக்ஷமாக (indirectly perceptible) அறிதற்குரிய ஞானமாயிருப்பவன்.

பிரம்மம் அறியவொண்ணாதது என்றவுடன், ஓ சரி, அதைத்தான் அறியவே முடியாதே வேறு வேலையைப் பார்க்கப் போகலாம் என்று அர்த்தமல்ல.
மாறாக, அந்த அறிதலுக்கான இச்சையே மானுட வாழ்க்கையின் மிக உன்னதமான இலட்சியம் என்கிறது வேதாந்தம்.
ஏனென்றால், சம்சாரம் என்னும் பிறவிச்சுழலிலிருந்து விடுபடுதல் (மோட்சம்) என்பது உண்மையில் தனது நிஜ ஸ்வரூபத்தைப் பற்றிய
முழுமையான அறிதலே (ஞானம்). “பிரம்மத்தை ஆய்ந்து அறிக” (அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா) என்று தான் பிரம்ம சூத்திரம் தொடங்குகிறது.
அறிதலே விடுதலை, அறிதல் அன்றி வேறேதும் விடுதலையன்று. வேதாந்த விசாரமே அந்த அறிதலுக்கான வழிமுறை.

“அன்பே, அந்த ஆத்மாவை (அறிவினால்) காணவேண்டும், கேட்கவேண்டும், சிந்திக்கவேண்டும், தன்னில் நிலைக்க வேண்டும்”
(ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்யோ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:)– மைத்ரேயியிடம் யாக்ஞவல்கியர், பிரகதாரண்யக உபநிஷதம்.

வலிமையற்றோன் அடைவதில்லை–ஆத்மாவை ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும் அடைவதில்லை.
சரியான உபாயங்களால் முயலும் அறிவுடையோனது ஆத்மா பிரம்மத்தின் இருப்பிடத்தில் சென்றடைகிறது.

சொல்விளக்கங்களால் அடைவதல்ல-அந்த ஆத்மா மேதமையால் அல்ல -கேள்வியின் மிகுதியாலும் அல்ல.-அதற்காக ஏங்குபவன்
அதனையடைகிறான். -அவனுக்கே தன்னியல்பை வெளிப்படுத்துகிறது ஆத்மா.– முண்டக உபநிஷதம்

—————-

ஸ்னான-வ்யாகுல-யோஷித்³-வஸ்த்ரமுபாதா³யாக³முபாரூட⁴ம்ʼ
வ்யாதி³த்ஸந்தீரத² தி³க்³வஸ்த்ரா தா³துமுபாகர்ஷந்தம்ʼ தா: |
நிர்தூ⁴தத்³வயஶோகவிமோஹம்ʼ பு³த்³த⁴ம்ʼ பு³த்³தே⁴ரந்தஸ்த²ம்ʼ
ஸத்தாமாத்ரஶரீரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–6-

குளியலில் ஆழ்ந்த யுவதிகளின்-ஆடைகளைக் கவர்ந்து மரத்திலேறிக் கொண்டு பின்பு திக்கே ஆடையாக நின்று
தரமாட்டாயா என்று வேண்டும் அவர்களை அருகில் அழைப்பவன்.
வேற்றுமையும் சோகமும் மோகமும் அற்றவன். [வேற்றுமையும் சோகமும் மோகமும் அழிப்பவன்]
அறிபவன் (புத்தன்) அறிவின் அகத்துள் இருப்பவன்-உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன்.
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை வணங்குவீர்.

ஸ்ரீகிருஷ்ணன் கோபியரின் ஆடைகவர்ந்த லீலையை முதலிலும், அதன் தத்வார்த்தமான உட்பொருளை அதன் பின்பும் குறிப்பிடுகிறார்.

இங்கு வேற்றுமை என்பது ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கும் பேதபுத்தியைக் குறிக்கிறது.
இந்தப் பேத புத்தியினால் தான் சோகமும் மோகமும் தோன்றுகின்றன.
நிலையற்ற பொருள்களில் (அனாத்ம வஸ்து) நான், என்னுடையது என்று கொள்ளும் தோற்றப்பிழை மோகம்.
அதன் காரணமாக, அப்பொருள்களின் அழிவையும் இழப்பையும் தனது அழிவாகவும் இழப்பாகவும் கருதி அடையும் துன்பம் சோகம்.
‘நிர்தூ4த-த்3வய-ஶோக-விமோஹம்‘ என்ற சொல்லாட்சி, இந்தப் பிழைகள் அற்றவன், இவற்றை அழிப்பவன் என்று
இரண்டு அர்த்தங்களும் தருவதாக அமைந்துள்ளது.

உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன் (ஸத்தா மாத்ர ஶரீரம்) என்பதில் வரும் ‘ஸத்தா’ என்பது வேதாந்தத்தில்
முக்கியமானதொரு தத்துவச் சொல். மாறாமல் என்றும் இருப்பதான தன்மையே ஸத்தா எனப்படும்.
ஸத் எதுவோ அது ஸத்யம். உள்ளது எதுவோ அது உண்மை. இதுவே நேர்ப்பொருள்.
உண்மை என்றால் பொய் பேசாமலிருப்பது (வாய்மை) என்பது அச்சொல்லின் வழிப்பொருள் மட்டுமே.
பிரம்மம் இந்த ஸத் சொரூபத்தைத் தவிர வேறு எந்த சரீரத்தையும் (உருவையும்) உடையது அல்ல.
உலகமும் உயிர்களும் மற்றப் பொருள்கள் அனைத்தும் இந்த ‘பிரம்ம ஸத்தா’ என்ற மெய்ப்பொருளை ஆதாரமாகக் கொண்டு
பல சரீரங்களில் (உருவங்களில்) அறியப்படுகின்றன.

அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான்.
பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது? அது சாத்தியமன்று.
பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும்
ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம். அறிவோனை அறிவது எங்ஙனம்?
(விக்ஞாதாரமரே கேன விஜானீயாத்) என்ற உபநிஷத் வாக்கியத்தின் பொருளே இங்கு சுட்டப் படுகிறது.
பிரகதாரண்யக உபநிஷதத்தின் புகழ்பெற்ற உரையாடலின் இறுதியில் இந்த வாக்கியம் வருகிறது.

“யாக்ஞல்கியர்: நீரில் போட்ட உப்புக் கட்டி, அதைத் திரும்ப எடுக்க முடியாதபடி அந்த நீரிலேயே கரைந்து விடுகிறது.
எப்பகுதியை சுவைத்தாலும் அது உப்பாகவே இருக்கும். அது போல, மைத்ரேயி, அந்தப் பேருயிர் முடிவற்றது,
அளவிட முடியாதது, தூய அறிவே உருக் கொண்டது. இப்பொருள்களினின்று ஆத்மா (தனிப்பட்டு) தோன்றுகிறது,
அவற்றிலேயே (தனிப்பட்ட தன்மை) அழிகிறது. (ஒருமையை) அடைந்தபின், அதற்கு அடையாளமில்லை, பெயரில்லை

மைத்ரேயி: என் தலைவனே, (ஒருமையை) அடைந்தபின் அடையாளமுமில்லை, பெயருமில்லை என்று கூறி
இங்கு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

யாக்ஞவல்கியர்: நான் சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. இது நிறைந்த அறிவு, மைத்ரேயி. இருமை என்பது இருக்கையில்,
வேறொன்றைப் பார்க்கிறான், வேறொன்றை முகர்கிறான், வேறொன்றைக் கேட்கிறான், வேறொன்றை வணங்குகிறான்,
வேறொன்றை உணர்கிறான், வேறொன்றை அறிகிறான். ஆனால், அனைத்தும் ஆத்மாவே என்கையில் எவ்வாறு வேறொன்றை நுகர்வான்,
எவ்வாறு வேறொன்றைக் காண்பான், எவ்வாறு வேறொன்றைக் கேட்பான், எவ்வாறு வேறொன்றை வணங்குவான்,
எவ்வாறு வேறொன்றை உணர்வான், எவ்வாறு வேறொன்றை அறிவான்? இவை அனைத்தையும் அறிவது எவனாலோ,
அவனை அறிவது எங்ஙனம்? அன்பே, அறிவோனை அறிவது எங்ஙனம்?”

—————-

காந்தம்ʼ காரணகாரணமாதி³மநாதி³ம்ʼ காலக⁴நாபா⁴ஸம்ʼ
காலிந்தீ³-க³த-காலிய-ஶிரஸி ஸுந்ருʼத்யந்தம்ʼ முஹுரத்யந்தம் |
காலம்ʼ காலகலாதீதம்ʼ கலிதாஶேஷம்ʼ கலிதோ³ஷக்⁴நம்ʼ
காலத்ரயக³திஹேதும்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||

காந்தன் –காரணங்களுக்கெல்லாம் காரணமானவன்-முதலானவன் முதலற்றவன்
கருமேகச்சுடர் –காளிந்திப் பொய்கையில் காளியன் சிரத்தில்-மீளமீள அழகுநடனம் புரிபவன்
காலமானவன்-காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன் –அனைத்தையும் தோற்றுவிப்பவன்
கலியின் தீங்குகளை அழிப்பவன் –காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

காந்தன்: அனைத்தையும் ஈர்க்கும் அழகுடையவன். Magnetic.

காரண காரிய வாதத்தின் படி, அனைத்துப் பொருள்களுக்கும் ஆதிகாரணமாக, சத்வம்-ரஜஸ்-தமஸ் ஆகிய முக்குணங்களின்
சேர்க்கையான மூல ப்ரகிருதி (ஆதி இயற்கை) உள்ளது என்று சாங்கிய தரிசனம் கூறுகிறது.
இந்த மூலப்ரகிருதி என்ற கருத்தாக்கத்தை ஒரு இறுதி உண்மை (ultimate reality) என்று கொண்டால்,
பின்பு உபநிஷதங்கள் கூறும் சத்-சித்-ஆனந்த வடிவமான ஆத்மா / பிரம்மம் என்பது மற்றொரு இறுதி உண்மை என்று ஆகிறது.
இங்ஙனம் இரண்டு இறுதி உண்மைகள் உள்ளதாகக் கருதுவது, இரண்டற்ற ஒருமை (ஏகம் அத்விதீயம்) என்ற
உபநிஷதக் கருத்துக்கு முரணானதாக அமையும். எனவே, இந்த மூலப்ரகிருதி என்பது முதற்காரணமல்ல,
மாறாக பிரம்மத்தில் கற்பிக்கப்பட்டு அது உலகமாகவும் (ஜகத்), அனைத்துப் பொருள்களாகவும் தோன்றுகிறது என்கிறது வேதாந்த தரிசனம்.

அரையிருட்டில் கயிற்றைப் பாம்பு என்று கருதி மயக்கம் ஏற்படுகிறது. இதன் பொருள் கயிறு, பாம்பு என
இரண்டு உண்மைப் பொருட்கள் உள்ளன என்பதல்ல. உண்மையான நிலைப்பொருளான (அதிஷ்டானம்) கயிற்றில், பாம்பு கற்பிக்கப் படுவது போல,
பிரம்மத்தில் மூல ப்ரகிருதி கற்பிக்கப் பட்டது. அதுபற்றியே பரம்பொருளை காரணங்களுக்கெல்லாம் காரணம் (காரணகாரணம்) என்று கூறுகிறார்.
பிரம்மமே முதற்காரணம் என்பது ஆதி, அனாதி (முதலானவன், முதலற்றவன்) என்ற இரண்டு பதங்களால் மீண்டும் விளக்கப் பட்டது.

குயவன் களிமண்ணைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றுவதால் சட்டி, பானை, குடம் என்று பல்வேறு விதமான உருவங்களும் பெயர்களும்
கொண்ட அழியும் பொருட்கள் இடையறாது தோன்றுகின்றன.
அதே போல, காலச்சக்கரத்தின் சுழற்சியில் பல்வேறு பெயர்களும் உருவங்களும் (நாமரூபம்) கொண்ட சிருஷ்டியின் இயக்கம்
இடையறாது நடக்கிறது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தில், குயவன், களிமண், சக்கரம் இவையனைத்தும் வேறுவேறாக அல்லாமல்
பிரம்மம் என்ற ஒற்றைப் பொருளே இவையனைத்துமாகப் பரிணமிக்கிறது என்கிறது வேதாந்தம். காலம் (காலமானவன்),
காலகலாதீதம் (காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன்), கலிதாஶேஷம் (அனைத்தையும் தோற்றுவிப்பவன்),
கால-த்ரய-க3தி-ஹேதும் (காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்) ஆகிய பதங்களால் இத்தத்துவம் குறிக்கப்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணன் காத்தல், படைத்தல், அழித்தல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம்) ஆகிய முத்தொழில் புரியும் ஈசுவர சொரூபம் என்பதும் விளக்கப் பட்டது.
நவீன இயற்பியல் பரிச்சயமுள்ளவர்கள் singularity என்ற கருத்தாக்கத்துடன் ஒப்பிட்டு தோராயமாக இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்
(வேதாந்தம் கூறும் பிரம்ம தத்துவத்தின் தளம் நவீன இயற்பியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, ஆழமானது. இந்த ஒப்பீடு ஒரு சாதாரண புரிதலுக்கு மட்டுமே).

கலியின் தீங்குகளை அழிப்பவன் (கலிதோ3ஷக்4னம்). இயற்கையின் நியதிக்கேற்ப நிகழும் உலக வியவகாரங்களின்
நெறிகள் பிறழ்ந்து, நிலைகுலையும் காலகட்டம் கலியுகம் என்று உருவகிக்கப் படுகிறது.
அதர்மத்தின் ஆட்சி ஓங்கி தர்மத்தின் ஆற்றல் குறையும்போது, தீமைகளை அழிக்க அவதரிப்பவன்.

——–

ப்³ருʼந்தா³வனபு⁴வி-ப்³ருʼந்தா³ரகக³ண-ப்³ருʼந்தா³ராதி⁴த-வந்த்³யாங்க்⁴ரிம்ʼ
குந்தா³பா⁴மல-மந்த³ஸ்மேர-ஸுதா⁴னந்த³ம்ʼ ஸுமஹானந்த³ம் |
வந்த்³யாஶேஷ-மஹாமுநி-மாநஸ-வந்த்³யாநந்த³-பத³த்³வந்த்³வம்ʼ
நந்த்³யாஶேஷ-கு³ணாப்³தி⁴ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–8-

பிருந்தாவன நிலத்தில் தேவர்களின் கூட்டங்களும் –பிருந்தா முதலான கோபியரும் வணங்கும் பாதங்களையுடையவன்.
குந்தமலர் போன்ற மாசற்ற புன்னகையின் அமுதத்தால் மகிழ்விப்பவன். –சிறந்த ஆனந்தமானவன்.
வணங்கத் தகுந்த மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடிகளையுடையவன்.
போற்றத்தகுந்த எண்ணற்ற நற்குணங்களின் கடலென விளங்குபவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

இந்தப் பாடலில் ஸ்ரீகிருஷ்ணனின் சகுண ரூபம் போற்றப் படுகிறது.

பிருந்தா என்பது கண்ணன் மீது அன்பு கொண்ட கோபிகையின் பெயர். துளசியையும் குறிக்கும்.

மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடி – புறத்தில் வெளிப்படையாக செய்யும் பூஜையைக் காட்டிலும்
(பாஹ்ய பூஜை) மனத்தினால் செய்யப் படும் பூஜை (மானஸ பூஜை) சிறந்தது என்பது கருத்து.

—–

கோவிந்தனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து கோவிந்தா அச்யுதா மாதவா விஷ்ணோ கோகுலநாயகா கிருஷ்ணா எனக் கூறி
இந்த கோவிந்தாஷ்டகத்தைக் கற்பவர் கோவிந்தனின் பாதகமலத் தியானம் எனும் அமுதநீரால் பாவமனைத்தும் நீங்கி
தன் அகத்துள் இருக்கும் பரமானந்த அமுதமான அந்த கோவிந்தனை அடைவர்.

எட்டு சுலோகங்களுக்குப் பின் பலசுருதியாக இப்பாடல் அமைந்துள்ளது. தோத்திரங்களின் வழக்கமான
பலசுருதிகளைப் போல லௌகீக பலன்களைக் கூறாமல், ஞானமே பலனாகக் கூறப்பட்டது.

தன் அகத்துள் உறையும் பரம்பொருளே கோவிந்தன் என்பதால், கோவிந்தனின் திருவடி தியானம் என்பது
ஆத்மஞானத்தினின்றும் வேறானதல்ல. அழிவற்ற ஆனந்தத்தை உண்டாக்குவதால், அதுவே அமுதநீர்.

அனைத்துப் பாவங்களும் காம குரோதங்களால் உண்டாகின்றன. அந்தக் காமகுரோதங்கள் அவித்யையாகிய அக்ஞானத்தில் பிறப்பவை.
எனவே, பாவத்திற்கு மூலகாரணமாகிய அவித்யையை அழிக்கும் ஞானத்தினால், பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.

ஏற்கனவே தன்னிடம் இல்லாத ஒரு பொருளை அடைவது (ஸாத்ய வஸ்து) என்றால் சரி. ஆனால் தன் அகத்துள் நீங்காமல் நிற்கும்
பொருளை (ஸித்த வஸ்து) அடைவது என்றால்? பிரம்மாகிய அந்தப்பொருளும் ஆத்மாவாகிய தானும் வேறல்ல
என்ற *அறிதலை* (ஞானம்) அடைவது என்பதே இதன் பொருள். கீழ்க்கண்ட கீதை மொழிகள் இங்கு சிந்திக்கத் தக்கன.

இங்கு கூறப்பட்ட பகவானின் நாமங்களுக்கு நேரடியான பொருளுடன் கூட தத்துவார்த்தமான வேதாந்தப் பொருளும் உண்டு
என்பதால் பொருளுணர்ந்து அந்த நாமங்களைக் கூறுவதே வேதாந்த விசாரமாகவும் ஆகிறது.

அச்யுத – விலகாதவன்.-பக்தர்களின் இதயத்திலிருந்து விலகாதவன்.
பிரகிருதி குணங்களுக்கு வசமாகாமல் தன் நிலையிலிருந்து விலகாமல் (மாறாமல்) நிற்கும் பொருள்.
‘அச்’ என்பது இலக்கணத்தில் உயிரெழுத்துக்களையும், அதன் வழிப்பொருளாக உயிர்களையும் (ஜீவன்களை) குறிக்கும்.
அசி+யுத = ஜீவன்களிடம் பேதமற்றுப் பிணைந்திருக்கும் அத்வைதப் பொருள்.

மாதவ – மா என்பது திருமகளைக் குறிக்கும். திருமகள் கேள்வன்.
இனிமை தரும் வசந்தத்தின் (மாதவ) நாயகன்.
‘மா’ எனப்படும் மாயைக்குத் தலைவனாக, அதற்கு வசப்படாமலிருந்து அதனை இயக்குபவன்.
மா: அழகு. அழகுகளின் தலைவன்.

விஷ்ணு – வியாபித்திருப்பவன். நிறைந்த பூரண சொரூபன்.
எங்கும் எல்லோராலும் துதிக்கப் படுபவன்.
பிறவித்துயர் என்னும் விஷத்தை அகற்றுபவன்.

கோகுலநாயக – கோகுலம் எனும் ஆயர்பாடியின் தலைவன்
பசுக்கூட்டங்களின் (ஜீவர்களின்) தலைவன்
அக்கூட்டங்களுக்கு உரியதை அடையும்படி செய்பவன்.
அறிஞர் கூட்டங்களின் தலைவன்.

கிருஷ்ண – (பக்தர்களை) வசீகரித்து இழுப்பவன்.
பாவிகளை இழுத்து அழிப்பவன்.
காலச்சக்கரத்தை இழுத்து சுழலச் செய்பவன்.
(துஷ்ட மாடுகளையும் துஷ்ட ஜீவர்களையும்) இழுத்து நேர்வழியில் திருப்பி விடுபவன்.
அழகிய கருநிறமுடையவன்.

கோவிந்த என்ற பதம் முன்பே விளக்கப் பட்டது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் திருக்கச்சி நம்பி-ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்-

February 22, 2021

ஸ்ரீ ந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி
இந்தப் ப்ரபந்தத்திற்குத் தமிழில் ஒரு எளிய பொழிப்புரை அருளியுள்ளார்.

தனியன்கள்:-

ஸ்ரீமத் காஞ்சீ முனிம் வந்தே கமலாபதி நந்தனம் |
வரதாங்க்ரி ஸதா ஸங்க ரஸாயன பராயணம் ||

ஸ்ரீ கமலாபதி என்பவரின் புதல்வரும் ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளில் இடைவிடாத பற்று என்னும்
ரசாயநத்தையே கதியாகக் கொண்டவருமான ஸ்ரீமத் திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.

தேவராஜ தயா பாத்ரம் ஸ்ரீ காஞ்சீ பூர்ணமுத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவப் பெருமாள் க்ருபைக்குப் பாத்ரமானவரும் ஸ்ரீ ராமாநுஜ முநி என்னும் எம்பெருமானாருடைய
மதிப்பைப் பெற்றவருமான நல்லவர்கள் ஆச்ரயிக்கத் தகுந்த ஸ்ரீ திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.

சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீ கமலாயர்
தம்பதிகளுக்கு நான்காவதாக பிறந்தவர் ஸ்ரீ கஜேந்திர தாசர்

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் அருளிச் செய்த ஒரே கிரந்தம் ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்;

8 ஸ்லோகங்களைக் கொண்டது.தம் ஆசார்யரும், ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜரின் பரமாசார்யருமான ஸ்ரீஆளவந்தார்
அருளிய “ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்” என்னும் கிரந்தத்தின் ஸாரத்தைக் கொண்டு
நித்யாநுஸந்தேமாயும்,ஸுலபமாயும்,ஸுக்ரமாயும்,சர்வ வர்ணார்ஹமாயும் ஆன ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் என்னும்
ஸ்தோத்ர மாலையை அருளிச்செய்தார்.

ஸ்லோகம்-1:
“நமஸ்தே! ஹஸ்திசைலேச!
ஸ்ரீமந் அம்புஜலோசன;
சரணம் த்வாம் ப்ரபன்னோஸ்மி
ப்ரணதார்த்திஹரா அச்யுத!!”

ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு நாதனே! ஸ்ரீபதியே! தாமரைக் கண்ணனே! உனக்கு வணக்கம்.
தன்னை வணங்கினவர்களின் துக்கத்தைப் போக்குபவனே! நழுவ விடாதவனே! உன்னைச் சரணமாக அடைந்திருக்கிறேன்.

ஸ்ரீபெருந்தேவித் தாயாருக்கு, வல்லபன் ஆனவனே,ஸ்ரீ அத்திகிரி என்னும் குன்றின் அதிபதியே!
அரவிந்தநிவாஸிநியான ஸ்ரீ பெருந்தேவித் தாயாரையும், அவருடைய ஆசனமான தாமரையையும்
பார்த்துப் பார்த்து,அவர் உருவத்தைத் தம் கண்மலர்களில் கொண்டவனே!
உன் திருவடிகளில் சரணமடைந்தோர் அனைவருடைய வருத்தங்களையும் நாசம் செய்பவனே!
உன்னை அண்டியவர்களை விடாதவனே! அச்சுதனாய், ப்ராப்யனாய்,
என் எதிரே அர்ச்சாவதரமாய், ஸுலபனாய் நிற்கிற உன்னையே-
சரணமாக-உபாயமாகப் பற்றுகிறேன்.நின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்.

இந்த முதல் ஸலோகத்தில் அர்த்த பஞ்சகமும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
i)ஹஸ்திசைலேச–சர்வேஸ்வரத்வத்தைக் கொண்ட சர்வ காரணத்வம்-ப்ராப்யம்.
ii)ஸ்ரீமந் அம்புஜலோசன- ப்ராப்ய அநுரூபமான ஸ்வரூபம்-அபாத்யத்வம்.
iii)சரணம்- ஸ்வரூப அநுரூபமான உபாயத்வம்.
iv)அச்சுதா-உபாய பலமான ப்ராப்ய ப்ராப்தி
v)ப்ரணதார்த்தி ஹர-விரோதி ஸ்வருப நிரஸநம்.

1)ஸ்ரீமந்-பரத்வம்
2)ஸ்ரீ ஹஸ்திசைலேச–அர்ச்சாவதாரம் .
3 )ஸ்ரீ அம்புஜலோசன- தாமரைக்கண்ணன்-ராமம் கமலலோசனன் -விபவ அவதாரம்
4)ஸ்ரீ அச்சுதா-அந்தர்யாமித்வம்
5)ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹர-கூப்பீடு கேட்க்கும் வ்யூஹம்

———-

ஸ்லோகம் 2-8:
கீழே பர ஸ்வரூபத்தை பஞ்ச பிரகாரமாக அனுபவித்து
இந்த 7 ஸ்லோகங்களால் ப்ராப்ய, உபாய விரோதி நிராகரணத்தைப் பிரார்த்தித்து,
ஸ்வ ஸ்வரூபத்தைக் காட்டுகிறார்.

ஸ்லோகம் 2:
“சமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண கருணோல்பன;
விலசந்து கடாக்ஷாஸ் தே, மய் யஸ்மின் ஜகதாம்பதே!!”

எல்லா ப்ராணிகளையும் காப்பதில் திறமை உள்ளவனே! நிறைந்த கருணை உள்ளவனே!
உலகத்திற்கு ஸ்வாமியே! உனது பார்வை இந்த என்னிடம் மலரட்டும்.

உலகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியானவனே!எல்லா ஜீவராசிகளுக்கும் ரக்ஷ்ணம்/ஸமுஜ்ஜீவனம் அளிக்கும்
அளவற்ற சக்தியும்,கருணையும் உடையவனே!
பலத்தை-வரத்தைக் கொடுக்கத் தன்னையும்,பெருக்கி விஞ்சி கடாக்ஷங்களாய் நிற்பவனே!
உன்னுடைய கடாக்ஷமான பார்வை,நின் எதிரே சேவித்து நிற்கும் அடியேன் மீது முழுதும்
நன்றாக இருக்க வேண்டுகிறேன்.

இங்கு ஸமஸ்த ப்ராணி என்றது
அனைத்து ஜீவன்களுக்கும்-தேவதைகள்,மனிதர்கள்,பசுக்கள்,பட்சிகள்,செடி/கொடி மரங்கள்-என்று அனைத்தும்;
“லோகாஸ்ஸமஸ்தா:ஸுகிநோ பவந்து”என்கிறபடியே,

வரதரின் வரமும்,கடாஷமும் நம்பிகளிடம் வந்தால்,அதனால் உலகம் எல்லாம் வாழும்.
அப்படியே வரதர் அருளிய அந்த ‘ஆறு வார்த்தைகளை’ நம்பிகள் எம்பெருமானாருக்கு அளிக்க,
அவர் உலகோர் எல்லோருக்கும் அளித்து தர்சன ஸித்தியாலே வாழும்படி செய்தார்.

நம்பிகளின் ஆல வட்டக் கைங்கர்யமும்,
உடையவரின் தீர்த்தக் கைங்கர்யமும்,(சாலைக் கிணற்றிலிருந்து)
ஊருக்காகவும்,உலகத்துக்காகவும் பலன் தரவே யாகும்.

————

ஸ்லோகம் 3:
“நிந்தித ஆசார கரணம் நிர்வ்ருத்தம் க்ருத்யகர்மண:
பாபீயாம்ஸம் அமர்யாதம் பாஹி மாம் வரத ப்ரபோ!”

நல்லவர்களால் வெறுக்கப்பட்ட செயல் புரிபவனும், செய்ய வேண்டியதைச் செய்யாதவனும்,
பாபிஷ்டனும், மரியாதை இல்லாதவனுமான என்னை ஹே வரதராஜ! ரக்ஷிப்பாயாக.

நல்ல வரங்களைக் கொடுக்க வேண்டுமென்று, இங்கே எழுந்தருளியுள்ள ஸ்வாமி யானவனே!
நல்லவர்கள் விலக்கச் சொல்லும்,ஆசார நடைமுறைகளையே செய்யுமவனான,
செய்ய வேண்டும் என்பவற்றை செய்யாதவனான,
அவர்களை-அவைகளைப் பார்க்காமல் பின் காடடிப் போகிறவனான என்னை,
பாபங்களையே எல்லா வடிவிலும் நெஞ்சிலும்/வாயிலும் கொண்ட என்னை,
(லோகத்திலும் சாஸ்த்ரத்திலும் சொல்லுகிற) எந்தவொரு நியமத்துக்கும் கட்டுப்படாத என்னை
(‘என்னை’ என்று அஹங்காரத்தோடு சொல்லுமவனை)
இனி தேவரீர் ஸ்வாமிகளே காப்பாற்ற வேண்டும்.

———–

ஸ்லோகம் 4-8: இந்த 5 ஸ்லோகங்களால் ஆகிஞ்சந்யாதிகளை,முன்னிட்டு,
அபராத ஸஹஸ்ர பாஜநத்தை விளக்கி,சரணாகதத்தையும் விரிவாக்கிக் கொண்டு சொல்கிறார்.
இந்த ஸ்லோக வரிசையை குளகம் என்று கூறுவார்கள்.

ஸ்லோகம் 4:
“ஸம்ஸார மருகாந்தாரே துர் வியாதி ஆக்ரபீஷணே;
விஷய க்ஷத்ரகுல்மாட்யே த்ருஷ்ணாபாதபசாலினி !! ”

ஸம்ஸாரம் என்னும், நிதமும் நாம் வாழும் வாழ்க்கை, கொடிய பாலை வனங்களில் அங்கங்கே இடைப்படும்
காட்டினைப் போன்றது. தினமும் நமக்கு ஏற்படும் வித விதமான மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட
நோய்களின் தீவிரம் காட்டுப் புலிகளினுடைய தாக்குதலுக்கு ஒப்பானது.

காட்டிலே மேலாக புற்களால் நிரப்பப்பட்ட புதர்களான ஆழப் பள்ளங்கள் அவற்றின் மேல் நடப்பவரை
உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் வண்ணம், நம்முடைய பல வித ஆசைகளும் அங்கங்களின் உணர்வுகளும்
கொடிய புதர்களாக நாம் வெளியே வர முடியாத வண்ணம் உள்ளே இழுத்துக் கொள்ளும் தன்மை யானவை. .

‘ஸம்ஸார மருகாந்தாரே’ என்னும் பதத்திற்கு ஸம்ஸார பாலை வனம் என்று பொருள்.
‘த்ருஷாபாதபசாலினி’ என்பது மரம் செடி கொடிகளைக் (பனை/ஈச்ச மரம்,முட்புதர்கள்) குறிப்பது.

நம்பிகள் இந்த வேறுபட்ட இரண்டு பதங்களைப் பிரயோகிக்கக் காரணம்,
பாலை வனத்து வெறுமையும் காட்டுப் பகுதியின் அந்தகாரமும், அடர்த்தியும் ஒன்று சேர்ந்தால்
எவ்வளவு கொடுமையாக இருக்குமோ,
அத்தகையது இந்த இருள் தரு மா ஞாலம் என்பதைக் குறிப்பிடத்தான்.

————

ஸ்லோகம் 5:
“புத்ர தார க்ருஹ க்ஷேத்ர, ம்ருகத் த்ருணாம்பு புஷ்கலே!
க்ருத்ய ஆக்ருத்ய விவேகாந்தம் பரிப்ராந்தம் இதஸ் தத:”

இப் பிறப்பில் நமக்கு ஏற்படும் புத்ர-புத்ரிகள் இல்லாள்(ன்), வீடு, நிலம் முதலிய சொந்த பந்தங்கள்,
காடுகளில் காணப்படும் கானல் நீரைப் போன்று தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கிடக்கும்.
இந்த சொந்தங்களின் நலத்திற்கான ஒரே நோக்கில் எதைச் செய்தல்,எதை விலக்குதல் என்ற
ஞான விவேகங்கள் அற்று, இங்கும் அங்கும் சுழன்று கொண்டே இருப்போம்.

அருளிச் செயல் சொன்ன வண்ணம் ‘தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்களென்றும்’ என்னும்
வகையில் வாழ்ந்து என்ன பயன்?
பந்துக்களைக் கண்டால் பாம்பைக் கண்டாற் போலவும்,
பாகவதர்களைக் கண்டால் பந்துக்கள் போலவும் இருக்க வேண்டும் என்பது பூர்வர்கள் உபதேசம்.

நம் ஆத்மாவின் உற்ற நிரந்தர உறவினன், எம்பெருமான் ஒருவனே என்று உணர்ந்திடும் சமயத்தில் தான்,
நாம் துக்கங்களிலிருந்து கரையேற முடியும், என்று நம்பிகள் விளிக்கிறார்.

————

ஸ்லோகம் 6:
“அஜஸ்ரம் ஜாத த்ருஷ்ணார்த்தம் அவஸந்நாங்கமக்ஷமம்;
க்ஷீண சக்த்தி,பலாரோக்யம் கேவலம் க்லேச சம்ச்ரயம்!”

எப்போதும் இடைவிடாத படி விஷ்யாந்தரங்களை விரும்பி அநுபவித்துக் கொண்டும்,
அவற்றை விட முடியாமல் வருந்திக் கொண்டும்,வேறு நல்ல காரியம் எதுவும் செய்யாமலும்,
வெறும் அங்கங்களை உடையவனாயும்,
ஆத்மஞானம்-பகவத் த்யானம் பெறாதவனாயும், குறைந்த சக்தி-பலம் உடையவனாய்,
ஆரோக்கியம் இருந்தும் எதற்கும் உதவாமல்,அடியேன், கேவலம் கஷ்டங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.

————-

ஸ்லோகம் 7:
“சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:
தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”

இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை,
தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான
உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.

———–

ஸ்லோகம் 8:
“த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை:
காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”

காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம்,
குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில்
பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.

இப்படி’நமஸ்தே’ என்று முதலில்,
ஜீவாத்ம ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யத்தையே,அநந்ய ப்ரயோஜன மாகக் காட்டி,
அந்த கைங்கர்ய சாம்ராஜ்யத்திலே பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவிலே பிரார்த்திக்கிறார்;
மண்ணுலகிலும்,விண்ணுலகிலும் எங்கும் ஜீவாத்மாவுக்குக் கைங்கர்யமே தஞ்சமான புருஷார்த்தம் என்று
பரம காருணிகரான திருக்கச்சி நம்பி,நமக்கெல்லாம் தெரிவித்து
“ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்” என்னும் இந்தத் திவ்ய ப்ரபந்தத்தைக் தலைக் கட்டுகிறார்

தம் ஆசார்யர் ஸ்ரீ ஆளவந்தாருக்கு உத்தம சிஷ்யராய் இருந்து,
(ஸ்ரீ எம்பெருமானாருக்கு) அவரின் பிரதிநிதியாய் இருந்து,
ஸ்ரீ தேவப் பெருமாளுக்கு அந்தரங்கக் கைங்கர்யங்களைச் செய்து கொண்டு,
ஆழ்வார்கள் போலவே பகவானுடன் வார்த்தையாடிக் கொண்டிருந்து,
பரி பூர்ணராய் தம் ஸ்வரூபத்தையும், ஆர்த்தியையும்,உள்ளே அடக்கி வைக்க முடியாதே,
இந்த ஸ்தோத்ரத்தில் வெளிப்படுத்தினார்.

4-8 – இந்த ஐந்து ச்லோகங்களால் தமது நிலையை ஓர் உருவகத்தின் மூலம் விளக்கி,
தமது ரக்ஷணத்தை தேவப்பெருமாளிடத்தில் இரக்கிறார்.

ஸம்ஸாரம் என்பது ஒரு பாலைவனம், அந்த வனத்தில் புலிகள் போன்ற பயங்கரமான வியாதிகள்.
பாலைவனத்தில் முட்புதர்கள் போல் அற்ப சுகங்கள் நிறைந்திருக்கின்றன.
ஆசை என்னும் மரங்கள், மக்கள், மனைவி வீடு நிலம் இவைகள் கானல் நீர் போல் நிறைந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட வனத்தில் செய்யவேண்டியவை, செய்யத்தகாதவை என்னும் பகுத்தறிவில்லாத குருடனாகவும்
இங்காங்கும் அலைந்து இடைவிடாது பேராசை உடையவனும், மெலிந்து வாடிய அவயவங்களுடன் கூடினவனும்,
திறமையற்றவனும், தேஹ திடம், மநோ திடம், தேஹ ஆரோக்யம் இவைகளும், இவைகளால் குறைந்தவனும்
க்லேசத்துக்கே இருப்பிடம் ஆனவனும் இப்படி சொல்லத் தகாத பல வகை துக்கங்களால் தாபத்தை அடைந்தவனுமான
என்னை ஸ்ரீ தேவராஜனே! கருணைக்கடலே! தேவர்களுக்கும் தேவனே! உலகத்துக்கு ஸ்வாமியே!
உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலைகளைப் போடுவதால் உண்டான திவலைகளால்
கருணை என்னும் காற்றுடன் குளிர்ந்து கடாக்ஷிப்பாயாக.
குளிர்ந்த கருணை என்னும் காற்று கொண்டு வந்து உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலை ஏறிப்பதால்
ஏற்பட்ட துளிகளால் நனைப்பாயாக –
குளிரக் கடாக்ஷிக்க வேணும் என்பது பொருள்.

இந்த ஸ்ரீ தேவராஜாஷ்டகம் தன் 16 பகுதிகளில், ஒரு புருஷ ஸுக்தத்துக்கு சமமாய்
ஸம்ப்ரோஷணாதிகளில் சுத்தி மந்திரமாய் ஸம்பரதாயத்திலே விளங்குவதால்,
ஸகல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் உபாதேயம்!!

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் சமேத ஸ்ரீ பேர் அருளாளர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –