Archive for the ‘அருளிச் செயலில் அமுத விருந்து –’ Category

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் –ஒரே பலன்கள் —

April 4, 2020

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே––பெரியாழ்வார் திருமொழி -1-1-10-

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே––நாச்சியார் திரு மொழி–4-11-

தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –பெரிய திருமொழி -9-9-10-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—-பெரிய திருமொழி–1-9-10-

——–

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே –பெரியாழ்வார் திருமொழி –1-4 10-

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே –பெரியாழ்வார் திருமொழி -3 2-10 –

———-

ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே –பெரியாழ்வார் திருமொழி -1-6 10-

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப்பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப்பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே பெரியாழ்வார் திருமொழி –2 8-10 –

————-

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த்தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களை பெற்று மகிழ்வரே பெரியாழ்வார் திருமொழி -1 9-11 – –

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—–நாச்சியார் திரு மொழி–6-11-

————–

புற்று அரவு அல்குல் யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்தவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல் வண்ணன் கழல் இணை காண்பர்களே -3 3-10 –

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-

—————

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 4-10 – –

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடிமுல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 5-11 –

—————–

மாயவன் பின் வழி சென்று வழி இடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றம் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லை தண் புதுவை பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே – 3-8 10-

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 10-

——————

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – 3-9 11- –

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –பெரிய திருமொழி-–10-1-10-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே––ஸ்ரீ திருவாய் மொழி–9-10-9-

———–

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– பெருமாள் திருமொழி–7-11-

காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதன் தன்னை
சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே – 5-1 10-

———–

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே –பெரிய திருமொழி–5 4-11 –

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே-–-நாச்சியார் திரு மொழி–7-10-

————

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—–பெருமாள் திருமொழி–1-11-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே––பெருமாள் திருமொழி–10-11–

———–

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே –பெருமாள் திருமொழி–4-11-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—-பெருமாள் திருமொழி— 8-11-

———-

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே––பெரிய திருமொழி–1-10-10-

நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே ––பெரிய திருமொழி–4-7-10-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—–பெரிய திருமொழி–2-1-10-

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே ––பெரிய திருமொழி–9-10-10-

———

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—–பெரிய திருமொழி–2-7-10-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே —பெரிய திருமொழி–5-7-10-

—————-

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே––பெரிய திருமொழி–3-2-10-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே –பெரிய திருமொழி–8-5-10-

——————-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே ––பெரிய திருமொழி–5-8-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –பெரிய திருமொழி-–7-3-10-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —பெரிய திருமொழி–8-8-10-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே ––பெரிய திருமொழி–9-6-10-

————-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே –பெரிய திருமொழி–8-9-10-

மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –பெரிய திருமொழி-–11-7-10-

————

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-

கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடி யுள் நின்றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே ––பெரிய திருமொழி–9-1-10-

—————-

மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே––பெரிய திருமொழி–3-1-10-

சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –பெரிய திருமொழி-–7-9-10-

————

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –நாச்சியார் திரு மொழி-–9-10-

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே––ஸ்ரீ திருவாய் மொழி–6-5-11-

—————————————————–—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –20- ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்- இத்யாதி —

April 4, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ நாதமுனிகளை தம் திரு உள்ளத்திலே அபிநிவேசித்து அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார்
எனக்கு பரம தனம் -என்கிறார்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

தர்சநீயமான திரு நகரிக்கு நிர்வாஹரான ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய அமிர்தமய திவ்ய ஸூக்தி ரூபமாய் இருந்துள்ள –
ஸ்ரீ திருவாய் மொழியை சார்த்தமாக அப்யசிக்க வல்லார் திறத்திலே -அதி ப்ரவணராய் இருக்குமவர்களுடைய –
கல்யாண குணங்களிலே சக்தராய் -உஜ்ஜீவிக்கும் ஸ்வபாவத்தை உடையரான ஸ்ரீமன் நாதமுனிகளை –
தம்முடைய மனசாலே அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் அடியேனுக்கு மகா நிதியாய் இருப்பார் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இதுகாறும் ஸ்ரீ ஆழ்வார்கள் இடம் எம்பெருமானாருக்கு உள்ள ஈடுபாடு பேசப்பட்டது –
இனி ஸ்ரீ ஆசார்யர்கள் இடம் உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –
யோக முறையில் நேரே சாஷாத்காரம் பண்ணின ஸ்ரீ மாறன் இடம் இருந்து –
செம் தமிழ் ஆரணத்தை -அடைந்து -அதன் இசையை உணர்ந்தவர்களுக்கு இனியவர்களின் குணங்களில்
பலகால் பயின்று உஜ்ஜீவிக்கும் ஸ்ரீ நாத முனியை ஆர்வத்தோடு நெஞ்சால்
அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு கிடைத்த புதையல் -என்கிறார் –

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

ஆரப் பொழில் -சந்தனச் சோலைகள் உடைய
தென் குருகைப் பிரான் -அழகிய திரு நகரிக்குத் தலைவரான நம் ஆழ்வார் உடைய
அமுதம்-மிக்க இனிய
திருவாய்-திரு வாயில் இருந்து வெளி வந்த
ஈரத் தமிழின் -நனைந்து குளிர்ந்து உள்ள திருவாய் மொழி யினுடைய
இசை-இசையை
உணர்ந்தோர்கட்கு -அறிந்தவர்களுக்கு
இனியவர் தம் -பிடித்தவர்கள் உடைய
சீரை -குணங்களை
பயின்று -பழகி
உய்யும் -உஜ்ஜீவிக்கும்
சீலம் கொள் -வைபவம் உடையவரான
நாத முனியை -நாத முனிகளை
நெஞ்சால்-மனத்தால்
வாரி-ஆர்வத்துடன் அள்ளி
பருகும் -அனுபவிக்கும்
இராமானுசன் -எம்பெருமானார்
என் தன் மா நிதி -எனது பெரும் புதையல் ஆவார் –

சந்தனச் சோலைகளை உடைத்தாய் -தர்சநீயமான திருநகரிக்கு நாத பூதரான ஆழ்வார் உடைய பரம போக்யமான திருப் பவளத்தில
பிறந்த ஈரப் பாட்டை உடைத்தான திரு வாய் மொழி இன் இசையை அறிந்தவர்களுக்கு ச்நிக்தராய் இருக்கும் அவர்கள் உடைய
குணங்களிலே செறிந்து – தன் சத்தை பெறா நிற்கும் -ஸ்வபாவத்தை உடையரான ஸ்ரீ நாத முனிகளை பெரு விடாயர் மடுவிலே புகுந்து
வாரிப் பருகுமா போலே தம் திரு உள்ளத்தாலே அபிநிவிஷ்டராய்க் கொண்டு அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு அஷயமான நிதி –
ஆரம்-சந்தனம்–

ஸ்ரீ நம் ஆழ்வார் -இசை உணர்ந்தோர் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -இனியவர் -ஸ்ரீ பராங்குச நம்பி -சீரை பயின்று உய்யும் ஸ்ரீ நாதமுனி
நெஞ்சால் வாரிப் பருகும் ஸ்ரீ ராமானுஜன் -ஐந்து பேர் இங்கும் –இது அன்றோ நமது ஸ்ரீ அமுதனாருக்கு பஞ்சாம்ருதம் –
வியாசம் -வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் -சுகர் -ஐந்து பேர் அங்கும் -அது நிதி இதுவோ மா நிதி அன்றோ –
247 பாசுரம் -தமிழ் கடவுள் அன்றோ ஸ்ரீ அரங்கன் -ஈரத்தமிழ் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -முதல் நாலாயிரம் அத்யாபகர் அன்றோ –
திரு அத்யயன உத்சவம் -ஏற்பாடு –
நெஞ்சால் வாரிப் பருகும் -மானஸ அனுபவம் விஞ்சி -கால தத்வம் உடைந்து பெரு நீராக ஆச்சார்யர் கிருபை –
பகீரதன் கொணர்ந்த -கங்கை போலே -கண்ணி நுண் திருத் தாம்பு தொடக்கம் மேல் கோட்டையில் –
மற்ற தேசங்களில் திருப் பல்லாண்டு போலே -என் தன் மா நிதி -அமுதூறும் என் நாவுக்கே -போலே –
மதிர் மம-நான் கண்ட நல்லது -அர்த்த பரத்வ -தோள் மாறாமல் மா நிதி

ஆரப் பொழில் தென் குருகை –
திருத் தாம்ரபர்ணீ தீர்மாகையாலும் -நீர் வாசியாலும்
நித்ய அபி வர்த்தங்களான சந்தன சோலையாலே சூழப்பட்டு தர்சநீயமான திருக் குருகூருக்கு -ஆரம்-சந்தனம்
பிரான் –
சர்வர்க்கும் சேவ்யமாம் படி உபகாரகர் –
குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –
குருகைப் பிரான் –
திருக் குருகையிலே அவதரித்து -சகல ஜனங்களுக்கும் திருவாய் மொழி முகத்தாலும் –
நாத முனிகளுக்கு சகல அர்த்தங்களையும் -உபதேசித்து சம்ப்ரதாயத்தை நடத்தின படியாலும்-உபகாரகர் -என்றபடி –

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் –
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -என்றபடி சோலைகள் சூழ்ந்த திரு நகரி குளிர்ந்த ஊர் –
அதன் கண் உள்ள ஸ் ஆழ்வாரும் தாபம் தீர்ந்து குளிர்ந்தவர் –
தம்மைப் போலே ஊரும் நாடும் உலகமும் குளிரும்படி செய்யும் பரம உபகாரகர் அவர் –
பிரான்-உபகரிப்பவர்-

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக் குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்––3-2-11-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்––3-3-11-

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன–3-4-11-

வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-

பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் –4-5-11-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்–5-4-11-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்–5-7-11-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்–6-6-11-

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன–6-7-11-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன–6-8-11-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்–7-2-11-

தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

அமுதத் திருவாய் ஈரத் தமிழின்
இப்படிப் பட்ட ஸ்ரீ நம் ஆழ்வாருடைய -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்-மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே
பரம போக்யமாய் கொண்டு –திருப் பவளத்திலே பிறந்ததே –
ஸ்வ நிஷ்டரான-சேதனருடைய சம்சார தாபம் எல்லாம் ஆறும் படியாக ஈரப் பாட்டை உடைத்ததாய் –
த்ரமிட பாஷா ரூபமான திருவாய் மொழி யினுடைய –
இசை -கானம் ராகாதி லக்ஷணங்களோடு கூடி –
உணர்ந்தோர்கட்கு -அப்யசித்து
பின்னையும் ஆவர்த்தி பண்ணி -அதிலே பூர்ண ஜ்ஞானம் உடையவர்களுக்கு –
ஸ்ரீ மன் மதுர கவிகள் -ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-முதலானவர்களுக்கு -என்றபடி –

இனியவர் –
அவர்களுக்கு அத்யந்தம் பிரிய தமராய் -ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு -கண்ணி நுண் சிறுத் தாம்பினை
உபதேசித்து அருளின –ஸ்ரீ பராங்குச நம்பி –

அமுதத் திருவாய் ஈரத் தமிழ்
அமுதம் போல் இனித்து அன்பினால் நனைந்து ஈரமான தமிழ் -திருவாய் மொழி -என்க
வாய் மொழி என்பதை –வாய் தமிழ் -என்கிறார் –
மனத்தால் நினைந்து -பேசாது வாயினால் மட்டும் பேசிய மொழி யாதலின் -வாய் மொழி -எனப்படுகிறது –
வாய் வெருவின மொழி வாய் மொழி -என்க –
இவள் இராப்பகல் வாய் வெருவி-திரு வாய் மொழி -2 4 5- – – என்னும் இடத்தில் ஈட்டில் –
அவதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாத்யாயராக சொல்லுகிற இத்தனை –
என்று வியாக்யானம் செய்யப்பட்டு இருப்பது இங்கு அனுசந்திக்க தக்கது –

ஈரத் தமிழ் –
ப்ரேமார்த்ரா விஹ்வல கிற புருஷா புராணா த்வாம் துஷ்டுவுர் மத்ரிபோ மதுரைர் வசோபி -என்று
ஸ்ரீ மது சூதனனே -பிரேமத்தினால் நனைந்து நிலை குலைந்த வாக்கு படைத்தவர்களான பண்டைய
ஸ்ரீ ஆழ்வார்கள் இனிய மொழிகளாலே உன்னை துதித்தார்கள்-என்று ஸ்ரீ ஆழ்வான் அருளி செய்ததை அடி ஒற்றி –
அமுதத் திருவாய் ஈரத் தமிழ் -என்றார் –
சம்சார தாபத்தை தணித்தலின் ஈரத் தமிழ் ஆகவுமாம்–
புது கணிப்பு இன்றும் குறையாமல் இருக்கிறது-

பாலோடு அமுது அன்ன ஆயிரத்துப் பத்தும் மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே -8-6-11-

நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11-

ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த அழிவு இல்லா ஆயிரத்து–9-7-11-

பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

இனியவர் தம் சீரைப் பயின்று –
அவர்களுடைய கல்யாண குணங்களை சர்வ காலமும் அனுசந்தித்து -அவர் செய்த உபகாரத்தை
விஸ்மரியாதே -க்ர்த்ஞராய்க் கொண்டு –
பயிலுதல் –
அனுசந்திக்கை –
உய்யும் –
அவ்வளவாக இவருக்கு உஜ்ஜீவனம் இல்லை –
அந்த மதுரகவி ஆழ்வார் உடைய சம்ப்ராயச்தரான ஸ்ரீ பராங்குச நம்பி உபதேசித்த அநந்தரம் –
அவர் பக்கலிலே க்ர்த்ஞராய் போந்த பின்பு -காணும் இவர் உஜ்ஜீவித்தது

இசை உணர்ந்தோர் –
பாவின் இன் இசை பாடித் திரிவனே -என்று தம்மைக் கூறிக் கொண்ட ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வர்
இசை உணர்ந்தவர்கள் என்க –

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -நின்று ஆலும் பொழில்–அசேதனமும் திரு வாய் மொழி பாடுகிறது–
சாகா சம்பந்தம் இருப்பதால் பாதித்து சாகா -கிளை / சாம வேதம்
வண்டினம் ஆலும் சோலை மயில் ஆடினதை பாடினது போல்–இவர் மதுர கவி ஆதலால் மதுர வாக்கியம் கொண்டாடுகிறார் ..

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் சங்கப் பலகையில்-
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே .ஏற்றி-
சங்கப் பலகை காட்டி கொடுத்தது–
சேமம் குருகையோ.. பெருமான் உனக்கு..நாமம் பராந்குசமோ நாரணமோ
ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ பெருமாள் ..ஒரு சொல் போருமோ உலகில் கவியே.
கலி 42 நாள் திரு அவதாரம்.
முதல் சங்கம் இடை சங்கம் நூல் இன்றும் இல்லை இலக்கணம் அப்புறம் தான் தொல் காப்பியம் அப்புறம் தான்
ஆதி காவ்யம் இல்லை இருப்பதில் இது பழசு அதனால் தொன்மை
கடைச் சங்கம் கி மு 9000 ஆண்டு முதல் சங்கம்/5450 -1750 வரை இடைச் சங்கம் / ஸ்ரீ ஆழ்வார் காலம் 3102 கி மு
திரு வள்ளுவர் –
குரு முனிவர் முத் தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழி சேய் என்கிறார்..
இரண்டாவது சங்கத்தில் தான் சங்கை பலகை–
கோ செங்கணான் கலி பிறந்து -500-வருஷம் -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் காலத்துடன் ஒத்து போகும்

ஒவையாரும் –
ஐம் பொருளும் நாற் பொருளின் முப் பொருளும் அமைத்து பெய்த செம்பொருள்
வூரும் நாடும் உலகமும் தன்னை போல அவன் பெயரையும் தாள்களும் பிதற்ற அருளினார்

இனியவர் –பருகும் –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வாருக்கு இனியவர் -அவர் பரம்பரையில் வந்தவரும் –
ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்தவருமான ஸ்ரீ பராங்குச நம்பி–
அவர் சீர் –
அருள் மிக்கு உபதேசித்து அருளின வள்ளன்மை ,ஞான பக்திகள் ,இசை உணர்வு -முதலியன
இசை உணர்ந்தோர்க்கு இனியவர் –
சீர் பயின்றதாக கூறுவதால் -இன்னிசை பாடித் திரியும் அவர் பரம்பரையினரான ஸ்ரீ பராங்குச நம்பி இசையோடு
ஸ்ரீ கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்ததாக தெரிகிறது –
கற்றாரை கற்றாரே காமுறுவர் -என்றபடி -இசை வல்லுனரான ஸ்ரீ நாத முனிகள்-அவ்விசையிலும் ஈடுபட்டு
இனியவர் சீரைப் பயிலா நின்றார் என்க –

ஸ்ரீ குருகை வைபவம்- ஸ்ரீ பராங்குச நம்பி அங்கேயே இருந்து -3500 வருஷம் ஒரு பரம்பரை இருந்து வந்து இருக்கிறது-

செய்நன்றி உடன் அதனையே மீண்டும் மீண்டும் பயின்று உய்வு பெறுகிறாராம் ஸ்ரீ மன் நாத முனிகள்-
ஸ்ரீ பராங்குச நம்பி உபதேசத்தாலே அன்றோ
ஸ்ரீ நம் ஆழ்வாரை சாஷாத் கரித்து அவரை ஆஸ்ரயித்து ஸ்ரீ மன் நாதமுனிகள் உஜ்ஜீவித்தது –
இந்நன்றி யறிவு ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு ஸ்வபாவமாய் அமைந்தது என்று –சீலம் கொள் நாதமுனி –என்பதனால் உணர்த்துகின்றார் –

சீலம் கொள் நாத முனியை –
இப்படி உஜ்ஜீவனமே ஸ்வபாவமாக உடையரான ஸ்ரீ மன் நாத முனிகளை-ஸ்ரீ ரங்க நாதருடைய திருநாமத்தை வகித்து –
ஆழ்வார் தமக்கு உபதேசித்த அர்த்தங்களை அடைவே சர்வதா -மனனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ மன் நாதமுனிகளை -என்றபடி –
சத்யா பாமா -என்பதை பாமா -என்று வழங்குவது போலே ரங்கநாத முனி என்பதை ஸ்ரீ மன் நாத முனி –
என்று அருளிச் செய்கிறார் -நாமைகதேசம் –

உபதேச பிரதானர் ஆச்சார்யர் சொட்டை குலம்
ஸ்ரீ ரெங்க நாத முனி-காட்டு மன்னார் கோவில்–அவதார ஸ்தலம் –823 -ஸ்ரீ மன் நாத முனிகள் –-93-திரு நக்ஷத்ரம் இருந்தவர் –
ஸ்ரீ ஆளவந்தார் –30-வயசுக்குள் ஆக்கி ஆழ்வான்-ஸ்ரீ கீதை உபதேசம் –66-திரு நக்ஷத்ரம் இருந்தார் ஸ்ரீ ஆளவந்தார் 976-1042-
ஸ்ரீ குருகை காவல் அப்பன் -200-வருஷங்கள் இருந்து இருக்க வேண்டும் –25-வயசில் ஸ்ரீ பாஷ்யகாரர் -1017-அவதாரம் என்பதால் –
ஸ்ரீ பெருமாள் –12 -திருக் கல்யாணம் –25 -பட்டாபிஷேகம் குறித்தது போலே –
இடைப்பட்ட -3100-காலம் இருண்ட காலம் —1600-வருஷம் ஸ்ரீ முதல் ஆழ்வார் முதல் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வரை
அருளிச் செயல்கள் வந்த தேஜஸ் மறைந்து –இதனாலே ஆச்சார்யர்களை பிறப்பித்து அருளினான் –
450 வருஷம் இடை வெளி ஸ்ரீ மன் நாத முனிகளுக்கும் ஸ்ரீ ராமனுஜருக்கும்
இன்பம் மிகு ஆறாயிரம் தொடங்கி-திரு குருகைப் பிரான் பிள்ளான் மூலம் -ஐந்து -எஞ்சாமை எதற்கும் இல்லை ..
பெருக்கி கொடுத்தவர் சுவாமி ஸ்ரீ ராமானுஜர் .

நெஞ்சால் வாரிப் பருகும் –
சமான காலமானால் -காயிகமாகத் தழுவி -முழுசிப் பரிமாறி அனுபவிப்பார் காணும் –
அத்யந்த கால வ்யவதானமாக இருக்கையாலே அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளை -நெஞ்சாலே அள்ளிக் கொண்டு
பிரி கதிர் படாதபடி விக்ரக குணங்களோடு கூட அனுபவிக்கை –
பருகுகை –
அனுபவிக்கை –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

நெஞ்சால் வாரிப் பருகும் –
சம காலத்தவர் ஆயின் -கண்ணால் அள்ளிப் பருகி இருப்பார் –
ஸ்ரீ எம்பெருமானார் பிற் காலத்தவர் ஆதலின் நெஞ்சால் நினைந்து நினைந்து அவரை அள்ளிப் பருகுகிறார் -என்றபடி –
பருகுதல் கூறவே -ஸ்ரீ மன் நாத முனிகள் நீராய் உருகினமை பெறப்படும் –
இனியவர் தம் சீரைப் பயின்று நீராய் உருகினார் -ஸ்ரீ மன் நாதமுனிகள்-
அத்தகைய நீரைப் பருகி விடாய் தீர்த்து இன்புறுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ மன் நாத முனிகளை ஆர்வத்துடன் நெஞ்சால் நினைந்து இனிது அனுபவிக்கிறார் எம்பெருமானார் -எனபது கருத்து –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

என் தன் மா நிதியே –
லோகத்தார் எல்லாருக்குமாக அவதரித்தார் ஆகிலும் ஸ்ரீ அமுதனாருடைய அத்யாவசாயம் –
தமக்கேயாக அவதரித்தார் என்று காணும் –
என் தன் மாநிதி –
அடியேனுடைய மகா நிதி –
நவநிதியான தனங்களும் பிரளயத்திலும் அழிவு உண்டு -அப்படி அன்றிக்கே அவற்றைக் காட்டில் விலஷணமாய்
அப்ராக்ருதமான நிதி -என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யாதிய சரணவ் சரணம் மதீயம் என்று அருளிச் செய்தார் இறே ஸ்ரீ ஆள வந்தாரும்

வானவர் ஆதி என்கோ! வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ! வானவர் முற்றும் என்கோ!
ஊனம் இல் செல்வம் என்கோ! ஊனம் இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி வண்ணனையே!–3-4-7-

என் தன் மா நிதி –
ஏனைய நிதிகள் போலே அழிவுறாத புதையல் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ ஆழ்வான் உதவிய ஞானக் கண்ணால் அப் புதையலைக் கண்டு எடுத்து ஆண்டு அனுபவிக்கும் தனது பாக்கியம்
தோற்ற –என் தன் மா நிதி -என்கிறார் –
கொள்ள குறை இலன்…குறையாத நிதி..வாரிப் பருகும் மா நிதி–

ஸ்ரீ திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின்–இதுவே -திவ்ய தேச நினைவே -உஜ்ஜீவிக்க வழி .

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் ஒற்றுமை —

April 3, 2020

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது—நான்முகன் திருவந்தாதி-63-

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவோன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-ஆர்த்தி பிரபந்தம்–28

———-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்——இரண்டாம் திருவந்தாதி—11-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் –நான்முகன் திருவந்தாதி –55-

————

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –திரு மாலை–17-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–திருக் குறும் தாண்டகம்–13–

————-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—–பெரிய திருமொழி–2-7-10-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே -5-7-10-

———————-

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-

நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4-

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-5-

கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர் கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-6-

உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-7-

காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன் நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-8-

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-

—————–

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –-மூன்றாம் திருவந்தாதி –38-

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தேவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –-நான்முகன் திருவந்தாதி -20-

————-

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –-பெரிய திருமொழி-5-1-6-

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே–பெரிய திருமொழி-7-5-9-

———-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே––ஸ்ரீ திருவாய் மொழி-6-7-4-

மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?––ஸ்ரீ திருவாய் மொழி–6-7-7-

—————-

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர் பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-9-5-

ஆர்வனோ ஆழி அங்கை எம்பி ரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர் விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறந்துக்கே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-9-8-

————–

கோது இல் வண் புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ்வினையேன் தடம் தோளியே–-பெரிய திருமொழி-4-2-4-

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–-பெரிய திருமொழி-4-2-6-

————–

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –-பெரிய திருமொழி-5-1-7-

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி-8-8-6-

————–

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –-பெரிய திருமொழி–3-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –-பெரிய திருமொழி-5-8-10-

——————–

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2 7-9 – –

அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலர் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே பாது காவல் வைக்கும் கொலோ –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-8 7-

———–

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–-பெரிய திருமொழி-3-9-3-

அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே –பெரிய திருமொழி-4-1-5-

—————

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -மூன்றாம் திருவந்தாதி–19-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவ–-ஸ்ரீ திருவாய் மொழி -9-8-8-

——–

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து——இரண்டாம் திருவந்தாதி—12-

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு–நான்முகன் திருவந்தாதி -56–

————

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து -இரண்டாம் திருவந்தாதி-—50-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –-நான்முகன் திருவந்தாதி -39-

————

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –-ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-74-

அறிந்து அறிந்து, தேறித் தேறி, யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே–-ஸ்ரீ திருவாய் மொழி -4-7-7-

—————

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–24-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை–நான்முகன் திருவந்தாதி -35-

————

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—நாச்சியார் திருமொழி -5-10-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–-பெரிய திருமொழி-6-6-5-

—————-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–-பெரிய திருமொழி-3-1-5-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே —-பெரிய திருமொழி-5-3-9-

————

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –-திருக் குறும் தாண்டகம்-5-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–திருக் குறும் தாண்டகம்-13-

————–

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–-நாச்சியார் திரு மொழி –11-7-

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – திரு விருத்தம்–66 –

————–

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையை பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-9 3- –

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலை யதே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-4 3-1 –

—————–

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே—பெரிய திருமொழி -—1-5-3-

உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே–-பெரிய திருமொழி —3-5-7-

—————-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —முதல் திருவந்தாதி—99-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

—————-

ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -ஸ்ரீ திருவாசிரியம் ––4-

ஊழி தோறு ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே! நீயும் மதுசூதன்
பாழிமையிற் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே?–-ஸ்ரீ திருவாய் மொழி-2-1-5-

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–-ஸ்ரீ திருவாய் மொழி–7-3-11-

———–

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே–-ஸ்ரீ திருவாய் மொழி-3-3-2-

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –பெரிய திருமொழி -4-9-9-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –திருப்பல்லாண்டு–6-

————-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——முதல் திருவந்தாதி–89-

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –நான்முகன் திருவந்தாதி-–51-

————–

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு–நான்முகன் திருவந்தாதி–92-

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்––இரண்டாம் திருவந்தாதி–55-

—————-

ஏழை பேதையர் பாலகன் வந்து என் பெண் மகளை எள்கித்
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழம் மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-7 4-

ஏழை பேதை இராப் பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள்;கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர்! இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–-ஸ்ரீ திருவாய் மொழி-2-4-10-

————–

ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-2-9-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–-பெரிய திருமொழி–3-5-9-

—————

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப் பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே–-ஸ்ரீ திருவாய் மொழி–4-7-8-

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -ஸ்ரீ திருவாய் மொழி––9-4-9-

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே –கண்ணி நுண் சிறுத் தாம்பு–1–

—————

ஆழ்வாருடைய நிரதிசய போக்யதையைச் சொல்லுகிறது -ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர்
பிரதம அவதியான பகவத் விஷயத்திலே இழிவான் என் என்னில்
ஆழ்வாருடைய போக்யாதிசயம் தோற்றுகைக்காகவும் அவருடைய முக மலர்த்தி தோற்றுகைக்காகவும்
அவர் உகக்கும் பகவத் விஷயம் ஆகையாலும் பேசுகிறார் –

சரம அதிகாரி சேகரர் ஆகிறார் இவர் -ஆழ்வார் திருவடிகளே தாரகாதி -யாகக் கொண்டவர்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் -இவர் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -போக்யதா பிரகர்ஷம்
2-அவர் -மலக்கு நாவுடையேற்கு என்றார் -இவர் நாவினால் நவிற்று –
3-அவர் அடிக் கீழ் அமர்ந்து –இவர் மேவினேன் அவன் பொன்னடி
4-கண்ணன் அல்லல் தெய்வம் இல்லை -தேவு மற்று
5-பாடி இளைப்பிலம் என்றார் -பாடித் திரிவேனே -ஆனந்தப் பட்டார் வாசி உண்டே
6-இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றேன் -திரி தந்தாகிலும்
7-உரிய தொண்டர் தொண்டர் —நம்பிக்கு ஆள் உரியனே
8-தாயாய் தந்தையாய் -அன்னையாய் அத்தனாய்
9-ஆள்கின்றான் ஆழியான் -என்னை ஆண்டிடும் தன்மையான் -வெப்பம் இல்லை குளிர்ந்து அன்றோ
10-கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் -தக்க சீர் சடகோபன்
11-யானே என் தனதே என்று இருந்தேன் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
12-எமர் கீழ் மேல் ஏழ் ஏழ் பிறப்பும் நம்முடிய வாழ்வு வாய்கின்றவா -மா சதிர் -இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
13-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -நின்று தன புகழ் ஏத்த அருளினான்
14-ஒட்டுமே இனி என்னை நெகிழ்க -என்றும் என்னை இகல்விலன் காண்மின் -நீங்களே பாருமின் -சங்கையே இல்லை
15-மயர்வற மதிநலம் அருளினான் -ஒண் தமிழ் சடகோபன் அருளையே
16-அருள் உடையவன் -அருள் கண்டீர் இவ் உலகத்தில் மிக்கதே -உயர்ந்த அருள் என்கிறார் இவர்
17-பே ரே ன் என்று -நெஞ்சு நிறைய புகுந்தான் –நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணன் அங்கே திருவாய்மொழி இங்கே
18-வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
19-ஆராத காதல் -ஆட்புக்க காதல் -தாஸ்யம் ஸ்பஷ்டம் இங்கே தான்
20-பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி -அடிமை கொண்டான் -பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல்
21-கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ -தென் குருகூர் நம்பிக்கு அன்பன் -திருஷ்டாந்தம் இல்லை இங்கு -போட்டி இல்லை இங்கு
22-உலகம் படைத்தான் கவி -மதுர கவி -இவர்
23-உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே பிரத்யஷம் -சங்கையே இல்லையே –

பிரத்யுபகாரம் செய்ய இயலாமல் குண அனுசந்தானம் செய்து -முனிவர்கள் யோகிகள் -குண நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
1-போக்யதா பிரகர்ஷம் -முதல் பாட்டில்
2-தேக யாத்ரைக்கு தாரகம் -பாவின் இன்னிசை பாடத் திரிவனே
3-பகவத் விஷயம் உத்தேச்யம் ஆழ்வார் உகந்த விஷயம் -திரி தந்தாகிலும்
4-விஷயீ கரித்து அருளி -அன்னையாய்
5-இதர விஷய பிராவண்யம் விட்டு தம் அளவு வரும் படி சாதுர்யம் -நம்பினேன்
6-ஆழ்வார் தம்மை விஷயீ கார உறுதி -ஆறாம் -இன்று தொட்டும் எழுமையும் -ஒன்பது குளிக்கு நிற்கும் -புகழ் ஏத்த அருளினான்
7-கிருபா பிரகாசம் -சடகோபன் அருளையே
8-ஆழ்வார் கிருபை விஞ்சி -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
9-சகல வேத ரகசியம் -ஸூ பிரதிஷ்டியாக நெஞ்சில் நிறுத்தி -மிக்க -வேதத்தின் உட் பொருள் -நிற்கப்பாடி
10-உபகாரம் பிரத்யுபகார நிரபேஷம் -முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்

—————

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி-–4-7-1-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே––பெரிய திருமொழி-1-10-1–

——————-

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-4-

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-

————–

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே–-பெரிய திருமொழி –6-8-5-

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -பெரிய திருமொழி –6-10-4-

————

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக்காக்காய்
ஆழியான் தன குழல் வாராய் அக்காக்காய் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 2-5 5- –

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்––நாச்சியார் திரு மொழி–12-8-

—————–

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டமே முத்தம் தா –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 3-3 2-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— -பெருமாள் திருமொழி-8-11-

——————-

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —-திரு விருத்தம்–8-

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய் கின்றவே–-ஸ்ரீ திருவாய் மொழி-5-6-3-

————-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –-திரு விருத்தம்-19-

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காத்து பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி–2-3 10- –

————–

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே -நாச்சியார் திரு மொழி-–14-4-

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் -நாச்சியார் திரு மொழி-–12-6-

—————

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——முதல் திருவந்தாதி–66-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி–10-7-2-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே -நாச்சியார் திரு மொழி––9-8-

—————

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே–-ஸ்ரீ திருவாய் மொழி-4-3-7-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-6-7-

—————

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–-ஸ்ரீ திருவாய் மொழி–7-4-11-

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–-பெரிய திருமொழி-11-2-1-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே–பெரிய திருமொழி—11-8-10-

—————————–

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே -பெரிய திருமொழி–7-6-4-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -பெரிய திருமொழி–8-6-9-

————-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன் யேடி வந்து காணாய்
ஓன்று நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள மூளையும் என் வசம் அல்லவே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-4-4 – –

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4 10-9 –

—————–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—-பெருமாள் திருமொழி-8-3–

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —-பெரிய திருமொழி—8-3-8-

————–

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —–அமலனாதி பிரான்–10-

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம்புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே —ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 9-4 – –

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே––ஸ்ரீ திருவாய் மொழி–8-5-6-

—————-

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே––பெரிய திருமொழி-3-9-1-

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–-நாச்சியார் திரு மொழி – -8-6-

————-

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ் வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே–-ஸ்ரீ திருவாய் மொழி-5-2-5-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இளமான் திறத்தே–-ஸ்ரீ திருவாய் மொழி–5-6-4-

————

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்–நான்முகன் திருவந்தாதி -71-

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–-பெரிய திருமொழி-1-10-8-

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–-பெரிய திருமொழி-2-1-8-

———-

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் ————பெரிய திருமொழி—-9-5-9-

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி––பெரிய திருமொழி–10-5-5-

—————

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே–பெரிய திருமொழி-4-8-6-

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3 7-11 –

————–

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்–இரண்டாம் திருவந்தாதி-78-

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே–நான்முகன் திருவந்தாதி -19-

————-

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – –திரு விருத்தம் -74 –

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே–-ஸ்ரீ திருவாய் மொழி-6-9-4-

————-

தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -பெரிய திருமொழி -4-5-4-

தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–-பெரிய திருமொழி -2-10-4-

————–

தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–-பெரிய திருமொழி -3-6-6-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி –8-1-4-

———–

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–பெரிய திருமொழி–4-3-3-

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே–ஸ்ரீ திருவாய் மொழி —1-1-7-

————

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-7-6-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-7-8-

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—-ஸ்ரீ திருவாய் மொழி-10-8-1-

————

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது
நின்னயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே –திரு நெடும் தாண்டகம்-26-

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே –பெரிய திருமொழி–8-3-10-

—————–

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–-பெரிய திருமொழி-7-4-4-

தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப்
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்-20-

————-

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ—-பெருமாள் திருமொழி- 8-10-

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –பெரிய திருமொழி–11-6-10-

—————

தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே –பெரிய திருமொழி–8-2-8-

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –திருக் குறும் தாண்டகம் –11-

————-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே–ஸ்ரீ திருவாய் மொழி-6-3-3-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-3-10-

————–

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-9 11- –

நந்தன் மதலை நிலமங்கை நற் துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –பெரிய திருமொழி–8-4-9-

————

நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே–-பெரிய திருமொழி–3-5-2-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே –திரு விருத்தம்-39-

———————-

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 1-8 3- –

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 3-9 5-

——–

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 4-9 4-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே––நாச்சியார் திரு மொழி ––7-9-

———————–

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
நின் கோயில் சீய்த்துப் பல்படி கால் குடி குடி வழி வந்தாட் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தான் –ஸ்ரீ திருவாய் மொழி –9-2-1-

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே––பெரிய திருமொழி–5-7-1-

——————-

பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே—பெரிய திருமொழி–2-2-4-

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –பெரிய திருமொழி—7-8-7-

—————

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ––பெரிய திருமொழி-9-9-7-

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ––பெரிய திருமொழி–9-9-7-

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2-7 5- – –

—————

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–13-

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்தஎன்
கள்ள மாயவனே! கரு மாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே––ஸ்ரீ திருவாய் மொழி-5-7-9-

———–

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே -பெரிய திருமொழி-–9-10-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -பெரிய திருமொழி–11-2-2-

————-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே -பெரிய திருமொழி–9-10-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -பெரிய திருமொழி–11-2-2-

—————-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று——முதல் திருவந்தாதி––20–

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி -பெரிய திருமொழி-10-5-4-

————-

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –பெரிய திருமொழி–5-6-2-

பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே -பெரிய திருமொழி–7-6-9-

————–

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்——முதல் திருவந்தாதி––10-

மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணன் எழில் கொள்மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-2-18-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4 1-9 –

————-

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–திரு மாலை–9–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே –பெரிய திருமொழி–8-10-3-

————–

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —இரண்டாம் திருவந்தாதி–28-

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –மூன்றாம் திருவந்தாதி-–3–

——————

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—-நாச்சியார் திரு மொழி -4-5-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –பெரிய திருமொழி–5-8-10-

—————–

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –பெரிய திருமொழி–6-2-3-

மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே–-பெரிய திருமொழி-6-3-3-

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணி வண்ணா! மது சூதா! நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே––ஸ்ரீ திருவாய் மொழி– 1-5-5-

————–

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 2-6 –

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –பெருமாள் திருமொழி-–4-6-

மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–-பெரிய திருமொழி-3-9-5-

——–

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் – –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–-3-10-7-

——————

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-1-2-12-

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-4 10-

———–

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே—ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1 3-10 –

வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க
கஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை
கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே -பெரிய திருமொழி–3-10-9-

———–

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி–8-1-9-

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -பெரிய திருமொழி-8-3-7-

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ -பெரிய திருமொழி-8-4-10-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே -பெரிய திருமொழி–7-1-10-

————–

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே –பெரிய திருமொழி–11-5-5-

வண்ணக் கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 2-4 –

————

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே––பெரிய திருமொழி–1-10-9-

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –-பெரிய திருமொழி–8-9-5-

வந்தாய் போலே வந்தும்,என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய்; இதுவே இது வாகில்,
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய்! யான் உனை எங்கு வந்து அணுகிற்பனே?––ஸ்ரீ திருவாய் மொழி–3-2-5-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந் தாமரைக் கட் செங்கனி வாய் நாற் றோளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே—ஸ்ரீ திருவாய் மொழி–6-10-9-

————

வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்க ளிடையே?––ஸ்ரீ திருவாய் மொழி–3-5-4-

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-திருப்பள்ளி எழுச்சி—8 –

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் —1-6-4-

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –பெரிய திருமொழி —5-4-5-

————–

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்றசிந்தை பெறுவார் தாமே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 2-11 – –

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–3-10-4-

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–3-10-10-

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே——பெரிய திருமொழி—–4-4-4-

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—–பெரிய திருமொழி–4-1-8-

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –பெரிய திருமொழி-–5-5-7-

வாராளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே –பெரிய திருமொழி-–8-3-9-

—————

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –பெரிய திருமொழி–7-10-8-

வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்
செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே––பெரிய திருமொழி–4-3-7-

————

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே—–பெரிய திருமொழி–1-4-7-

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே –பெரிய திருமொழி-–11-4-5-

———–

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் ——மூன்றாம் திருவந்தாதி–—-96-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால்கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும்தங்கு––பெரிய திருவந்தாதி —84-

————————–

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர்
இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே––நாச்சியார் திரு மொழி–1-2-

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-நாச்சியார் திரு மொழி–2-5-

————

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 4-1-7- –

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்––நாச்சியார் திரு மொழி-5-2-

—————

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய்–ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 2 3-3 –

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே—பெரிய திருமொழி –8-8-7-

————–

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–-மூன்றாம் திருவந்தாதி–—69-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்—நான்முகன் திருவந்தாதி–40-

அருளிச் செயலில் சாரமான திருவாய் மொழியின் ப்ரமாண்ய அதிசயத்தை பிரகாசிப்பைகாக ,
ஆழ்வார்களுடைய ஐக கண்ட்யைத்தையும் ,அவர்களில் தலைவரான இவர் அருளிச் செய்த இப் பிரபந்ததினுடைய பிராபல்யத்தையும் ,
பிரதி பாதியா நின்று கொண்டு , ஏவம் பூதமான விதுக்குச் சேராத சாஸ்திரங்கள் பரீஷக பரித்யாஜ்யங்களாம் படியை அருளிச் செய்கிறார் ..

குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை
பரமதாதிகளாலே பரிஹரியாமல்
செஞ்சொல் செம்தமிழ் இன் கவி
பரவி அழைக்கும் என்று
அந்யோந்யம் கொண்டாடி
பேசிற்றே பேசும் ஏக கண்டரில்
என்னில் மிகு வென்னும் இவர் உரை
கொள் இன் மொழி கொண்டு
சாஸ்த்ரார்தங்களை நிர்ணயிக்க வேண்டுகையாலே
வலம் கொண்டு இதுக்கு சேராதவை
மநு விபரீதங்கள் போலே-(விலக்கப்படுவனவாம் )
(வலம் -பலம் -பிரபலம் என்றவாறு )

அதாவது –
ருஷிகளில் ,குரு சிஷ்யர்களான வியாச ஜைமிநிகளில் ,
(பூர்வ மீமாம்சை -கர்மகாண்ட விசாரம் -அபூர்வத்தை ஒத்துக் கொண்டு ஜைமினி -12-அத்தியாயங்கள் –
உத்தர மீமாம்சை –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூதரம் -4-அத்தியாயங்கள்
கர்ம விசாரம் பண்ணிய பின்பு – அதனாலே ப்ரஹ்ம விசாரம் –அத அதக– முதல் ஸூத்ரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஜாசா
அதாதோ கர்ம ஜிஜ்ஜாசா-பரமத -ஆதி என்றது -அந்நிய பரத்வங்களாலே-இரண்டாலும் – பரிஹரியாமல்-
கர்மம் செய்வதை சொன்னது இவை இரண்டாலும் )
குருவான வியாசனுடைய கிரந்தமான ,ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தோடு சிஷ்யனான ஜைமினி உடைய
கிரந்தமான கர்ம ஸூத்ரத்தோடு நிரீஸ்வர வாதாதிகளால் ,வந்த விரோதத்தை ,
சம்பத் தேரிதி , ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–1-2-32-
( பிராணா ஹூதி ஹோமங்களை அக்னி ஹோத்ர ஹோமங்களாக செய்வதற்காக உபாசகனுடைய
மார்பு முதலான உறுப்புகளை நெருப்பு களாக கூறியுள்ளது என்று ஜைமினி சொன்னார் )
அன்யார்த்தம் து ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 1-4-18-
( வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச் சொல்லுகிறது என்று ஜைமினி சொல்கிறார்-
ஜீவனைக்காட்டிலும் ப்ரஹ்மம் வேறுபட்டது என்று காட்டவே )
பரம் ஜைமினி முக்யத்வாத்—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 4-3-11-
( பர ப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதி வாஹிகர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று ஜைமினி எண்ணுகிறார்-
ப்ரஹ்ம கமயிதி என்ற இடத்தில் உள்ள ப்ரஹ்ம சப்தம் ப்ரஹ்மத்தின் இடமே முக்கியமாக இருப்பதால் )
ப்ராஹ்மனே ஜைமினி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4 -5-
( ப்ரஹ்ம சம்பந்தியான அபஹத பாப்மத்வம் முதலான குணங்களோடு முக்தன் தோன்றுகிறான் என்று
ஜைமினி சொல்லுகிறார் ) இத்யாதியான ,ப்ரஹ்ம ஸூத்தரங்களாலே
ஜைமினிக்கு ப்ரஹ்ம ஸ்வரூப தத் குண தத் உபாசன தத் பலாதிகளின் உடைய
அங்கீகாரம் உண்டு என்னும் இடமும் தோற்றுகையாலும் ,

மகா பாரதத்திலே ,ஹய சிர உபாக்யானாதிகளிலே பகவத் வியாச உபதேச லப்த
பரமாத்மா தத்வ ஞானம் உடையவனாய் சொல்லுகையாலும் ,
ஸ்ரீ வேத வியாசனும் ஜைமினியும் ஏக கண்டர்கள்..

இனி தேவதா நிராகரணம் பண்ணின இது ,ஈஸ்வர பிரநீதமாக வேதத்தை
சிலர் சொல்லுகையாலே ,அந்த பௌ ருஷேத்வம் அடியாக
விப்ரலம்பாதி தோஷங்களை கல்பித்து வேத அப்ராமண்யம் சொல்லுவது ,
வைதிக கர்மங்களை ,நிந்திப்பதாகிற பாஹ்யரை நிராகரித்து ,
வேத ப்ராமண்ய கர்மா அவச்ய ,கர்தவ்யைகளை சாதிக்கையில் உண்டான இச்சையாலே
ஸ்வ மதம் அன்றிலே இருக்க பரம பதத்தை அவலம்பித்து சொன்னான் என்றாதல் ..
அன்றிக்கே தேவதா நிராகரணத்தில் ,தாத்பர்யம் இல்லை ..

அஸ்ருத வேதாந்தருக்கு கர்மத்தில் ,அச்ரத்தையை நிவாரிக்கைக்காக ,
கர்ம பிரதாண்யம் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே ,
நஹி நிந்த்யா நிந்த்யம் நிந்திதும் ந பிரவர்த்ததே
நிந்திதாத் இதரத் பிரசம்கிதம் –
(நிந்தையானது நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை -நிந்திக்கும் பொருளைக் காட்டிலும்
வேறான ஒரு பொருளைத் துதிப்பதற்காக வந்தது ) –என்கிற ந்யாயத்தாலே ,
தேவதா நிரகரணம் பண்ணின இது ,கர்ம பிரசம்சார்த்தம் ஆகையாலே
அந்ய பரம் என்றாதல் கொள்ள வேணும் என்று
இப்படி பரமத அன்ய பரத்வங்களால் பரிஹரிக்க வேண்டிற்று இறே .
( கர்மங்களை அவசியம் செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு ஆகையால் கடவுள் இல்லை என்று கூறின இது
வேறு ஒன்றிலே நோக்கு என்றாதல் கொள்ள வேண்டும் -என்று இப்படி பிறர் தம் மதம் மேற்கொண்டு கூறினார் –
வேறு ஒன்றினை உட்க்கொண்டு கூறினார் என்று பரிஹாரம் செய்ய வேண்டுமே )

அப்படியே
இங்கும் அந்யோந்ய வசன விரோதம் உண்டாய் ,அதுக்கு பரிகாரம் பண்ண வேண்டாத படி
செஞ்சொல் கவிகாள்–திருவாய் -10-7-1-என்றும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் -பெரிய திருமொழி -2-8-2–என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள்-திருவாய் -7-9-6 -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7–1-7-என்றும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-2–என்றும்
பரஸ்பரம் ஸ்லாகித்து கொண்டு ,

பேசிற்றே பேசல் அல்லால்–திருமாலை -22- -என்ற படியே
ஒருவர் பேசினதே எல்லாரும் பேசும் ஏக கண்டரான
ஆழ்வார்களில் வைத்து கொண்டு

என்னில் மிகு புகழார் யாவர் –பெரிய திருவந்தாதி –4-என்று சேஷிக்கு அதிசயகராகப் பெற்ற
ப்ரீதி பிரகர்ஷத்தாலே என்னில் காட்டில் மிக புகழ் உடையார் ஆர் என்னும்
சர்வாதிகரான இவருடைய -உரை கொள் இன் மொழியாளை-திருவாய் -6-5–3- -என்கிற படியே
ஸ்ரீ ராமாயணாதிகளையும் ஸ்வ வைலஷண்யத்தாலே ஜெயிக்கும் படியான
சக்திகளைக் கொண்டு வேத தத் உப ப்ரும்ஹண ரூப சாஸ்த்ரங்களில் ,சம்சயிதமான
அர்த்தங்களை நிர்ணயிக்க வேண்டும் படியாய் இருக்கும் ஆகையாலே –

வலம் கொண்ட வாயிரம்–திருவாய் -3–8-11-என்கிற படியே பிரதி பாத்ய வஸ்துவை உள்ள படியே
பிரதி பாதிக்க வல்ல சாமர்த்தியத்தை உடைத்தான இப் பிரபந்தத்துக்கு
சேராத சாஸ்திரங்கள் -மன் வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே –
( எந்த ஸ்ம்ருதியானது மனுவினால் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டு இருக்கிறதோ அது புகழப்படுவது இல்லை )
என்று சொல்லப் பட்ட மநு விபரீதமான ஸ்ம்ருதிகள் போலே கழிக்க படும் என்கை-

—————————————————–—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –19-உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்இத்யாதி —

April 2, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஐஸ்வர்யாதி பர தேவதா பர்யந்தமான அபேஷித வஸ்துக்கள் எல்லாம் ஸ்ரீ திருவாய் மொழியே –என்று
ஜகத் பிரசித்தமாக நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

ஐ ஹிக ஆமுஷ்மிக சமஸ்த சம்பத்தும் -சர்வவித பந்துக்களும் -வகுத்த சேஷியான ஸ்ரீயபதியும் –
ஸ்ரீ நம் ஆழ்வார் -தமக்கு பகவத் நிர்துஹேதுக கிருபையாலே பிரகாசியா நின்று உள்ள அர்த்த விசேஷங்களை-
அடைவே அருளிச் செய்த ஸ்ரீ த்ரமிட உபநிஷத்தே என்று சகல ஜனங்களுக்கும் உபதேசிக்கிற
ஸ்ரீ எம்பெருமானார்-எனக்கு நிரதிசய போக்யர் – என்கிறார்-

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ திருவாய் மொழியே சொத்தும் -தந்தையும் -தாயும்-குருவும் -ஸ்ரீயபதியான பர தேவதையுமாக-உலகில் பிரசித்தமாகும் படி
நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு மிகவும் இனியர் -என்கிறார்-

இது காறும்-ஸ்ரீ ஆழ்வார்கள் இடம் ஸ்ரீ எம்பெருமானாருக்கு உள்ள ஈடுபாடு கூறப்பட்டது –
இதனில் ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய ஸ்ரீ திருவாய் மொழியையே உலகினர்க்கு இன்றியமையாத சொத்தும்
மாதா பிதா குரு தெய்வமுமாகக் கொள்ளுமாறு அதன் பெருமையை உணர்த்திப் பரப்பிய பேருபகாரம் பேசப்படுகிறது –
ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ திருவாய் மொழியை தமது அனுபவ முறையில் அருளிச் செய்தார் –
ஸ்ரீ எம்பெருமானார் அதன் மாண்பினை உலகில் உள்ள மாந்தர் அனைவரும் உணர்ந்து
மாந்தி மகிழும்படி செய்து சிரஞ்சீவியாக அதனை வளர்த்து அருளினார் என்பது கருத்து-
ஈன்ற முதல்த் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் -என்றனர் ஆன்றோரும் –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

உறு பெரும் செல்வமும் -சீரிய பெரிய சொத்தும்
தந்தையும் -பிதாவும்
தாயும் -மாதாவும்
உயர்குருவும் -மேன்மை தங்கிய ஆசார்யனும்
வெறி தரு -மனம் கமழுகிற
பூ மகள் -பூவில் பிறந்த பெரிய ப்ராட்டியாருடைய
நாதனும் -கேள்வனாகிய தெய்வமும்
மாறன்-நம் ஆழ்வார் உடைய
விளங்கிய -வெளிப்பட்டு தோன்றிய
சீர் -இயல்பான பர பக்தி முதலிய குணங்களினுடைய
நெறி -அடைவிலே
தரும்-அருளி செய்யும்
செம் தமிழ் ஆரணமே -செவ்விய தமிழ் வேதமாகிய திருவாய் மொழியே என்று
இம் நீள் நிலத்தோர் -இந்த நீண்ட உலகத்தவர்
அறிதர -தெரிந்து கொள்ளும்படியாக
நின்ற -பிரசித்தமாகும்படி எழுந்து அருளி இருந்த
இராமானுசன் -எம்பெருமானார்
எனக்கு ஆர் அமுது -எனக்கு அருமையான அமுதம் போன்று இனியராவார் –

ஸ்வ சம்பந்தத்தை வுடையவர்களுக்கு இன்னார் என்னும் மதிப்பை கொடுக்குமதாய்
ஹித பரமுமாய் -ப்ரியகரமுமாய் -அஞ்ஞாத ஜ்ஞாபகமுமாய் -பிராப்ய ப்ராபகங்களுமாய்- இருக்கையாலே –
சீரியதாய் -நிரவதிகமான சம்பத்தும் -பிதாவும் -மாதாவும் -சதாசார்யனும் –
பரிமளிதமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரனும் –
ஸ்ரீ ஆழ்வார் பகவத் ப்ரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த -பரபக்தி -யாதி – ச்வபாவங்களின் உடைய அடைவிலே –
உபகரித்து அருளின -திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியே
என்று இம் மகா ப்ருதிவியில் உள்ளார் அறியும்படி நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் –
அதவா
விளங்கிய சீர் நெறி தரும் என்றது -சீர்த் தொடை யாயிரம் -திருவாய் மொழி -1 2-11 – –
என்னும்படி தமக்கு பிரகாசித்த பகவத் குணங்களை அடைவே உபகரித்து அருளின -என்னவுமாம் –

மாறனுக்கு விளங்கிய –
மயர்வற மதிநலம் அருளப் பட்டவர் என்றபடி –
வேதார்த்தம் -திருவாய் மொழி -தீர்த்த சரணாகதி -நித்ய சிந்தயந்தி -அன்றோ இவர் –
வெறி தரு பூ -பூ மகள் -நாதன் –
பரிமளம் வடிவு -திருத் துழாய் தரித்த நாதன் என்றுமாம் –
நெறி தரும் –
சாத்விக்க சாத்விக்க –
தரும் செந்தமிழ் ஆரணம் -அறிதர நின்ற –
அனைவரும் அறிந்த பின்பு தரித்த ஸ்ரீ ராமானுஜர்-12–பாசுரங்களால் -12-ஆழ்வார் சம்பந்தம் சொல்லி -இந்த பிரகரணம் முடிகிறது –
உறு துணை -என்றவர் –ப்ரீதி காரித கைங்கர்யம் பெற திருவாய்மொழி நிலை நிற்க ஸ்ரீ எம்பெருமானார் திருவடி சேர்வோம் என்றதாயிற்று என்றுமாம் –
கீழே தண் தமிழ் செய்த நீலன் என்று
பெரிய திருமொழி முதலான திவ்ய பிரபந்தங்கள் சம்பந்தம் சொல்லி
இதில் -செம் தமிழ் ஆரணம் -இவையே ஆரமுது-ஸ்வாமிக்கும் நமக்கும் –
உறு -உயர் -விசேஷணம் அனைவருக்கும் -அவனுக்கு இவற்றையே பூ மகள் -ஸ்தானத்தில் சொல்லி ஸ்ரீ யபதி என்றவாறு

உறு பெரும் செல்வமும்
அவிந்தந தனஞ்சய பிரசமதம் தனம் தந்தனம் -என்கிறபடியே அப்ராப்தமான சம்பத் அன்றிக்கே –
தனஞ்சய விவர்த்தனம் தனமுதூட கோவர்த்தனம் சூசாத நம பாதநம்-சூ மனசா சமாராதனம் -என்றும் –
ஸாஹி ஸ்ரீர்ம்ர்தாசதாம் -என்றும் -முக்த ஐச்வர்யத்துக்கு உடல் ஆகையாலே –ப்ராப்தமாய் –
பெரும் –
ஷீணே புன்யே மர்த்த்ய லோகாம் விசந்தி -என்றும் –
ஒரு நாயகம் ஓட வுலகு உடன் ஆண்டவர்-கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண
இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -என்றும்-சொல்லுகிறபடியே அதி ஸ்வல்பமாய் -அநித்யமாய்-இருக்கை அன்றிக்கே –
கொள்ளக் குறைவற்று இலங்கி – கொழுந்து விட்டோங்கிய -என்கிறபடியே – கொள்ளக் கொள்ள பெருகி வரக் கடவதாய் இருக்கிற –
செல்வமும் –
சம்பத்தும் -அளவியன்ற யந்தாதி யாயிரம் இறே -இது –

உறு பெரும் செல்வமும்
உலகில் வாழ்வதற்கு இன்றியமையாதது செல்வம்-
அது இல்லாத போது தந்தை தாய் குரு தெய்வம் என்று மேல் சொல்லுமவை யனைத்தும் இருந்தாலும் பயன்படாது –
இல்லாதவை போல் ஆகி விடுதலின் செல்வத்தை முந்துற கூறுகிறார் –
இழிகுலப் பிறப்பானும்-அறிவின்மையானும் -இன்னார் என்று ஒரு பொருளாக மதிக்கபடாத வரையும் -மதிக்கப் படுபவராக
செய்ய வல்லது செல்வம் –
உயர் குலத்தாரும் –அறிவுடையாரும் -குலமும் -அறிவும் இல்லாவிடினும் -செல்வம் படைத்தது இருப்பதை ஒன்றினையே கருதி –
அவர் பால் சென்று -அவர் அருள் நாடி நிற்பதை நாம் உலகினில் காண்கிறோம் –
இதனையே வள்ளுவனாரும் –
பொருள் அல்லாதவரை பொருளாகச் செய்யும் பொருள் அல்லது இல்லை பொருள் -என்கிறார் –
திருவாய் மொழியும் தன்னைக் கற்றவரை –
உயர் குலமும் அறிவுடைமையும் இல்லாது இருப்பினும் –
அறியக் கற்று -வல்லார் வைட்ணவர்-என்றபடி –
ஞான ஜென்மத்தை தந்து -வைஷ்ணவராக மதிக்கப்பட செய்து -உயர் குலத்தாரையும் -அறிவுடையாரையும் –
அவர் பால் சென்று அருளை-பாகவத அனுக்ரகத்தை-நாடி நிற்கச் செய்தலின் செல்வமாகப் போற்றப் படுகின்றது -என்க-
ஏனைய செல்வம் போலே அளவுக்கு உட்படாது வாரி வாரி வழங்கத் துய்க்கத் துய்க்கத் குறைவு படாதது
இத் திருவாய்மொழியாம் செல்வம் என்பது தோன்ற –பெரும் செல்வம்-என்கிறார் –
ஏனைய செல்வம் -அறனீனும் இன்பமுமீனும் -இச் செல்வமோ வீட்டு இன்பத்தையும் தருதலின் அதனினும்
மிக்கது என்பது தோன்ற –உறு பெரும் செல்வம் -என்றார்-
அந்தணர் செல்வம் வட மொழி யாரணம் –அந்தணர் மாடு -என்றார் திரு மங்கை மன்னன் –

தந்தையும் தாயும் –
மாதா பித்ர் சஹஸ்ரேப்யோ-வஸ்தலதரம் சாஸ்திரம் -என்று -சகல ஜன உஜ்ஜீவன ப்ரவர்த்தமாய் இறே –
வேதத்வ சாமான்ய விசிஷ்ட வேதம் எல்லாரும் விரும்புவது –
அப்படியே -திராவிட வேத சாகரம் -என்று இத்தை வேதமாக நிதர்சிக்கையாலே –
சகல ஜன உஜ்ஜீவன ஏக ப்ரவர்த்தம் ஆகையாலும் –
பக்தாம்ர்தம் விஸ்வ ஜன அநு மோதனம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் சொல்லுகிறபடியே
பிரியத்தையே நடத்தக் கடவதாகையாலும் -திரு வாய் மொழியிலே –
வீடு முன் முற்றவும் -என்று தொடங்கி -கண்ணன் கழலினை –என்னும் அளவும் ஆதி அந்தத்திலே
ஹிதத்தையே போதிக்கையாலே ஹிதத்தை நடத்தக் கடவதாகையாலும்
தாயும் தந்தையுமாய் இருக்கும் என்றபடி –

செம் தமிழ் ஆரணம் -நீள் நிலத்தோர் அனைவருடையவும் செல்வம் .தந்தையும் ..பூ மகள் நாதனும் —
ஹிததை நாடும் பிதாவும் -பிரியத்தை கோரும் மாதாவும் -அறியாதன அறிவிக்கும் குருவும் –
பேறும் பெருவிப்பதும் ஆகிய தெய்வமும் -திருவாய் மொழியே -என்றபடி –
மாதா பிதா குரு தெய்வம் எனும் முறையை மாற்றி -பிதாவுக்கு முதலிடம் கொடுக்கப் பட்டு உள்ளது –
இதத்தால் ஹிதத்தை உணர்த்துதலே செம் தமிழ் ஆரணத்துக்கு முக்கிய நோக்கம் ஆகும் என்று தோற்றுகிறது –
அசேஷ ஜகத்தித அனுசாசன ச்ருதி நிகரசிர-என்று உலகு அனைத்துக்கும் ஹிதத்தை கற்ப்பிக்கும் வேதாந்தம் –
என்று வேதார்த்த சந்க்ரஹத்தில் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளி உள்ளமையும் காண்க –
ஹிதத்தை கற்ப்பிதலாவது –
உபாயத்தையும் -உபேயத்தையும் -பகுத்து உணர்த்துதல் –
பேற்றுக்கு உரிய நல் வழியே ஹிதம் என்க –
திரு நாரணன் தாள் சிந்தித்தல் உய்ய உபாயம் என்று ஹிதத்தை உணர்த்துதலின் செம் தமிழ் ஆரணம்
தந்தையாய் ஆயிற்று என்று உணர்க –
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் -என்றபடி பக்தாம்ருதமாய் -இனிமை பயப்பது பற்றி
செம் தமிழ் ஆரணம் இனிப்பு தரும் தாய் ஆயிற்று என்க –

தந்தையும் தாயும் –
மாதா பித்ரு சஹஸ்ரேப்யோ வத்சலதரம் ஹி சாஸ்திரம் –
ஆயிரம் தாய் தந்தையிரினும் மிக்க வாத்சல்யம் கொண்டதன்றோ சாஸ்திரம் -என்றபடி –
மக்கள் இடம் உள்ள குறை பாராது தான் கண்ட நல்லதை சொல்லியே
தீர்த்து திருத்தி உய்வித்தலின் செம் தமிழ் ஆரணம் தந்தையும் தாயும் ஆயிற்று -என்க

உயர் குருவும் –
புத்ரான் பந்தூன் சகீன் குருன் -சர்வ தர்மாம்ச சம் த்யஜ்ய – என்று த்யாஜ்ய கோடியிலே பரி கணிக்கப்பட்ட -குரு அன்றிக்கே –
அத்ர பரத்ர சாபி – என்கிறபடியே உபய விபூதியிலும் இச் சேதனனுக்கு உபாதேய தமனாய் –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணின சதாசார்யனும் –
இவ் உபகார ஆதிக்யத்தாலே காணும் இவன் பரித்யாஜ்யனாகாதே ஒழிந்தது –
உயர்த்தியை உடையனானதும் – சேதனருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்த்திப்பவன் ஆகையாலே குரு -என்கிறார் –
அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே -என்னக் கடவது இறே –

உயர் குருவும் –
கீழ்ப் பேரின்பம் தரும் செல்வம் ஆதலின் ஏனைய செல்வத்திலும் வேறு பட்டது என்பது தோன்ற –
உறு பெறும் செல்வம் -என்று விசேடித்தது போலே –
இங்கும் பேரின்பத்துக்கு இடையூறாய் நிற்கும் அவித்யை என்னும் இருளை விலக்குதலின் –
ஏனைய குருக்களினின்றும் வேறு பட்டவர் என்பது தோன்ற உயர் குரு -என்று விசேடிக்கிறார்-
ஏனைய குருக்கள் வீட்டு இன்பம் விழைவோருக்கு விடத் தக்கவர்களாய் அன்றோ இருப்பது –
இங்கு கூறப் படும் குருவோ -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவன் என்று அறிக –
தானே தன்னை யறியகிலாது-யானே என் தனதே – என்கிற அஹங்கார மமகாரங்கள் என்னும் செருக்கு உடையானுக்கு –
உடல் மிசை உயிர் என இறைவன் உன்னை உடலாக கொண்டு உள்ளமையின்
உன் ஆத்ம ஸ்வரூபம் ஆகிய உடலை அந்த உயிர் தனக்கேயாக பயன்படுத்துவதே முறை-
உயிர் தன் விருப்பபடி உடலை பயன்படுத்த -அவ் உயிருக்கு அத்தகைய உடல் தனக்கொரு பயன் கருதாது
பயன்பட்டு மகிழ்ச்சியை ஊட்டுவது போலே நீயும் இறைவன் விருப்பபடி பயன்படுத்தப்பட்டு –
தனக்கு ஒரு பயன் கருதாது -அவ் இறைவனுக்கு மகிச்சியை ஊட்டுதல் வேண்டும் –
இதுவே அடிமை எனப்படுவது -இத்தகைய அடிமையே ஆத்மா ஸ்வரூபத்தின் உண்மை நிலையம் -என்று
முன்னம் முன்னம் மறந்த ஆத்மாவினுடைய-அனந்யார்ஹ சேஷத்வத்தை உணர்த்துதலின்
திருவாய் மொழி -உயர் குருவாய் ஆயிற்று என்க –

இனி தாய் தந்தை யரினும் தெய்வத்தினும் உயர்வுடைமை பற்றி –உயர் குரு -என்றார் என்னலுமாம் –
தாய் தந்தையர் சரீரத்தையே உண்டு பண்ணுகின்றனர் –
குருவோ வித்தையினால் ஆத்ம ஸ்வரூபத்தையே உண்டு பண்ணுகிறான் – என்றபடி –
ஆத்மாவுக்கு ஞானப் பிறப்பை தரும் குரு -சரீரப் பிறப்பை தரும் தாய் தந்தை யரினும் உயர்ந்தவன் ஆகிறான் –
தெய்வம் தான் அருள் புரிவதற்கு குரு அருளை எதிர் பார்ப்பது –
உயிர் இனங்கள் புரியும் வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகளை விளைவித்து கருணை காட்டாது சட்டப் படி நடாத்துவது –
மிக்க மாறுபாடு உடையவர்களை தீ வினை புரிவித்து அவர்களை அதோ கதிக்கு உள்ளாக்குவது –
குருவோ அருள் புரிவதற்கு தெய்வத்தின் அருளை எதிர் பார்ப்பவன் அல்லன் –
வினைகளுக்கு ஏற்ப சட்டப்படி நடாத்தாது நன்மையே பயக்கும் -கருணை காட்டி நடாத்துபவன் –
எவரையும் அதோகதிக்கு உள்ளாக்காது நல் வினையே புரிவித்து மேலே கை தூக்கி விடுபவன் –
இத்தகைய வகைகளில் தெய்வத்தினும் உயர்ந்தவன் குரு என்க –

ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப் பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே––ஸ்ரீ திருவாய் மொழி–2-3-2-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம் முள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே–3-6-9-

வெறி தரு பூ மகள் நாதனும்
வெறி -பரிமளம் -இந்த பதம் புஷ்பத்துக்கு விசேஷணமாய்-பரிமளமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடையளான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு –
பூ மகளார் தனிக் கேள்வன் -என்கிறபடியே வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்றபடி –
அன்றிக்கே –
வெறி தரு பூ மகள் -வெறி –என்கிற பதம் பிராட்டிக்கு விசேஷணமாய் -கந்தத்வாரம் – என்கிறபடியே –
திவ்ய கந்த பிரதமான திரு மேனியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்னவுமாம் –
அன்றிக்கே –
வெறி தரு பூ மகள் நாதனும் –
வெறி –என்கிற பதம் ஸ்ரீ ஈஸ்வரனுக்கு விசேஷணமாய் –
சர்வ கந்த -என்கிறபடியே -திவ்ய பரிமள ஸ்வரூபனான ஸ்ரீ யபதி என்றும் சொல்லவுமாம் –

வெறி தரு பூ மகள் நாதனும்
தெய்வம் என்பது திருமாலே யாதலின் பூ மகள் நாதன் என்கிறார் –
திருமங்கை நின்று அருளும் தெய்வம் -இரண்டாம் திருவந்தாதி -57 – என்றதும் காண்க –
மணம் தரும் பூ –திருமகளையும் தந்தது -மணமே வடிவு கொண்டு வந்தது போலே -மலரிலே தோன்றினவள் பிராட்டி -என்க –
திரு மகள் கேள்வன் -நமக்குப் பிராட்டி புருஷகாரமாய் இருத்தலின் உபாயமாய்ப் பேறு தருவான் ஆகிறான் –
பிராட்டியோடு கூடி இருந்து நாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்பதனால் ப்ராப்யனாகவும்-பெறும் பேறாகவும் -ஆகிறான்
திருவாய் மொழியும் -இவை பத்தும் வீடே – 1-1 11- – என்றபடி வீடு அளிப்பதாலின் உபாயமாகவும் –
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10 6-11 – -என்றபடி வீட்டில் உள்ளாறும்
கேட்டு இன்புறும்படி இருத்தலின் ப்ராப்யமாகவும் ஆதலின் -பூ மகள் நாதன் -ஆயிற்று –

திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூம் குழலாள்
பூவினும் மேவிய தேவி மணாளனை
தூ மலராள் மணவாளா-

இனி உறு பெறும் செல்வம் என்று தொடங்கி யதற்கு ஏற்ப –உயர் குரு -என்றது போலே –
உயர் தந்தை –உயர் தாய் –உயர் நாதன் -என்று ஏனையவற்றையும் உயர்ந்தவைகளாக கருதலுமாம் –
ஏனைய தந்தையும் தாயும் போல் அல்லாமல் –தஞ்சமாகிய தந்தையும் தாயுமாகத் திருவாய் மொழி உள்ளது என்றது ஆயிற்று –
ஏனைய தாய் தந்தையர் இடர் நேர்ந்த போது விட்டுச் செல்வாரும் –
விற்றுப் பிழைப்பாரும் கர்மம் தீர்ந்தவாறே -பந்தம் அற்றாருமாய் இருப்பார்கள் அன்றோ –
திருவாய் மொழி அங்கன் அன்றி -எக்காலத்திலும் ஞானப் பாலூட்டி -ஹிதமான நெறியிலே
செலுத்திப் பாதுகாத்தலின் தஞ்சமாகிய தந்தையும் தாயுமாய் ஆயிற்று -என்க –
மலை மகள் நாதன் போன்ற ஏனைய இளம் தெய்வங்கள் பாணாசுரன் போன்றாரைக் காக்கும் திறன் அற்று நின்றன –
அங்கனம் அல்லால் தப்பாது –காப்பாற்றும் பெறும் தெய்வம் பூ மகள் நாதன் -ஆயிற்று என்க —

இவ் அபிநிவேசம் எல்லாம் இவருக்கு எவ் விஷயத்தை பற்ற -என்றால்
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று –
மாறன் –
ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய -பிதாவான காரியாலே சமர்ப்பிக்கப் பட்ட திரு நாமம் ஆய்த்து -இது –
இப்படிப் பட்ட ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு -விளங்கிய -பிரகாசித்த -ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே
உபய விபூதி வ்ருத்தாந்தகளை எல்லாம் -அடைவே அறியலாம்படி -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற – ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு –
ஏவம் நித்யாத்ம பூகாதாஸ் சடகோப ப்ரனேஷ்யதி – என்கிறபடி நித்ய அபௌருஷேயமாய் இருக்கிற இது –
அவர் தம்மாலே உண்டாக்கப் பட்டது அன்று –தோற்றும் -பிரகாசித்தது -என்றபடி –
ஆகையாலே இறே விளங்கிய –என்று அருளிச் செய்கிறார் .
சீர் நெறி தரும் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ஸ்ரீ யை எல்லாம் -எல்லாரும்-அறியும் படி – சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்குமதாய் –
நெறி -ஒழுக்கம்-அதாகிறது சாத்மிக்க -என்றபடி –
அன்றிக்கே –
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் –
ஸ்ரீ ஆழ்வார் பகவத் பிரசாதத்தாலே தமக்குபிரகாசித்த பர பக்தியாதி ச்வபாவங்களின் உடைய அடைவிலே
உபகரித்து அருளின என்று யோஜிக்க்கவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
சீர் நெறி தரும் –
அகஸ்த்யோ பகவான் சாஷாத் தஸ்ய வியாகரணம் வ்யதாத் சந்தஸ் சாஸ்திர அநு சாரனே வ்ர்த்தானா அபி லஷணம்-
உக்த மந்யைஸ் சதாசார்யை த்ராமிடச்ய மகாமுனே சம்ச்கர்தச்ய யதாசந்தி பாட்யபந்த ச்ய சர்வத –
லஷணா நிதாதே -சாந்தி திராமிட ஸ்யாபி பூதலே -என்கையாலே
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை நிரை பா -என்று சொல்லப் படுகிற பிரபந்த லஷண பேதமாய் இருக்கும் என்னவுமாம் –
சீர் -என்கிற இது –
எழுத்து அசை தொடக்கமானவற்றுக்கு உப லஷணமாக கடவது –
நெறி –
ஒழுக்கம் அதாவத் ஸ்வபாவமாய்-லஷணம் -என்றபடி –
தருகை –
உடைத்தாகை –
செந்தமிழ் ஆரணமே என்று –
ஆதி மத்திய அவசானங்களிலே ஏக ரூபமாய் திராவிட பாஷா ரூபமான உபநிஷத்தே -என்று -அவதாரணத்தாலே –
அனநயோக வியவச்சேதம் பண்ணுகிறது -இது காணும் ஸ்ரீ எம்பெருமானாருடைய பிரதி பத்தி

மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணம் –
சீர்-பரபக்தி -பர ஞான -பரம பக்திகள் -என்னும் நல் இயல்புகள் மறைந்து கிடந்த அவை இறைவன் அருளால்
நம் ஆழ்வாருக்கு வெளிப்பட்டன –
அவை தமக்கு அங்கன் வெளிப்படும் அடைவிலே அவர் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் –
பரபக்தி யாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடல் மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு –
பர ஞானம் ஆவது -அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் நேரிடையான தோற்றம் –
பரம பக்தி யாவது ஷண காலமும் பிரிவை சஹிக்க மாட்டாது அனுபவித்தே யாக வேண்டிய பேரன்பு –
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு சூழ் விசும்பு -திருவாய் மொழி வரையிலும் பர பக்தியும் –
சூழ் விசும்பு அணி முகில் -லில் பர ஞானமும்
முனியே நான் முகனில் பரம பக்தியும் ஸ்ரீ இறைவன் அருளால் விளங்கியதாக பெரியோர் விளம்புகின்ற்றனர் –
இனி சீர்த் தொடை யாயிரம் -என்றபடி
இறைவன் குணங்கள் அவன் அருளால் விளங்க அவ்வடைவில் நம் ஆழ்வார் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் என்னலுமாம் –

எம்பெருமானார்
தமக்கு ஐஸ்வர்யாதி பரதேவதா பர்யந்தமான புருஷார்த்தங்கள் எல்லாம் திரு வாய் மொழியே அன்றி
வேறு ஒன்றை அத்யவசித்து இரார் -என்றபடி –

இந் நீணிலத்தோர் அறிதர நின்ற –
இவ் அர்த்தத்தை விச்தீர்னையான இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –
அன்றிக்கே –
இவ் அர்த்தத்தை மகா பிருத்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –
ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

எனக்கு ஆரமுதே –
அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –

நீள் நிலத்தோர் அறிதர நின்ற –
கற்றவர் மற்றவர் என்கிற வேறுபாடு இன்றி உலகம் எங்கும் உள்ள மக்கள் அனைவரும்
செல்வம் தொடங்கி-தெய்வம் ஈறாக நமக்கு பயன்படுவது திருவாய் மொழியே -என்று உணர்ந்து –
கொள்ளும்படி ஸ்ரீ எம்பெருமானார் செம் தமிழ் ஆரணத்தை பரப்பி பேணினார் -என்றபடி –

எனக்கு ஆரமுது –
செம் தமிழ் ஆரணத்தின் இனிமையை நுகர்ந்து நுகர்ந்து தொண்டர்க்கு அமுதான –
அதனால் உயிர் பெற்ற ஸ்ரீ அமுதனார் –
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே -என்றபடி -அவ்வமுது உணவினை தமக்குத் தந்த ஸ்ரீ எம்பெருமானார்
திறத்து பேரன்பு பெருகி -அவ்வின்பத்திலே திளைத்து – அவரையே அருமையான அமுதாகக் கூறுகிறார் -என்க-
ஆரமுது –
அருமையான அமுது .

எப்பொருளும் தானாய், மரதகக் குன்றம் ஒக்கும்;
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம்; கை கமலம்;
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கும் அப்பொழுது என் ஆரா அமுதமே–-ஸ்ரீ திருவாய் மொழி–2-5-4-

இதுகாறும் ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ ஆழ்வார்கள் இடத்திலும் அவர்களுடைய திவ்ய பிரபந்தங்களிலும் உள்ள ஈடுபாடு கூறப் பட்டது –
ஸ்ரீ நம் ஆழ்வார் இடமும் திரு மங்கை ஆழ்வார் இடம் உள்ள ஈடுபாடு
தொடக்கத்திலேயே முதல் இரண்டு பாசுரங்களினால் பேசப் பட்டு இருந்தாலும் -அவர்களுடைய ப்ராதான்யம் கருதி –
இறுதியில் ஸ்ரீ நாத முனியை பேசத் தொடங்கும் முன் அவர்களைப் பற்றி பேசினார் –
அவர்களிலும் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரைப் பற்றி ஒரு பாசுரமும் -ஸ்ரீ நம் ஆழ்வாரைப் பற்றி இரண்டு பாசுரங்களும் அருளிச் செய்தார் –
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு உள்ள மிக முக்கிய தன்மையை நோக்கி அவரை இறுதியிலே பேசினார் –
அவ்விரு பாசுரங்களில் முறையே –
ஸ்ரீ நம் ஆழ்வாரை அன்றி வேறு ஓன்று அறியாத மதுர கவி ஆழ்வார் உடைய வீறுடைமையும் –
பரபக்தி முதலியவற்றின் அடைவிலே அருளிச் செய்த திருவாய் மொழியினுடைய சீர்மையையும் அருளிச் செய்து முடித்தார் –

ஆயின் ஸ்ரீ ஆழ்வார்களின் அவதார க்ரமத்தை அடி யொற்றி அமுதனார் இங்கு அருளிச் செய்து இலர் –
எந்த முறையை அடி யொற்றி ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்து உள்ளார் எனபது நமக்கு இங்குப் புலப்பட வில்லை-
ஆயினும் ஒருவாறு வரிசைப் படுத்திக் கூறுகிறோம் –
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் முதலில் வரிசையாகப் பேசப் பட்டு உள்ளனர் –
விளக்கு ஏற்றிய இருவரும் முதலிலும் -கண்டு நமக்கு காட்டியவர் பிறகும் பேசப்பட்டு உள்ளனர் –

தாம் இருக்கும் இடத்தில் வந்து இறைவனால் காட்ஷி கொடுக்கப் பட்டவர்கள் பேசப்பட்டனர் முன்னர் –
அர்ச்சை நிலையில் தாம் இருக்கும் இடத்துக்கு வருவிக்கப்பட்டு காட்சி கொடுக்கப் பட்டவரான
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் பேசப்பட்டார் பின்னர் –

அதற்க்கு பிறகு மழிசைக்கு இறைவன் பேசப்படுகிறார் –
பைந்நாகப் பாயை சுருட்டிக் கொண்டு பைம்தமிழ் பாட்டு கேட்க்கைகாக பின் தொடர்ந்து -தான் ஆட் செய்த நிலையை
வெளியிடுவதற்காக மீண்டதும் அப் பைந்நாகப் பாயில் மாறிப் படுத்த நிலையில் -ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாளாய் –
அர்ச்சை நிலையில் காட்சி கொடுக்கப் பட்டவர் ஸ்ரீ பாணற்கு அடுத்து பேசப்படுகிறார் –

மழிசைக்கு இறைவனுக்கு அடுத்து –ஸ்ரீ துளவத் தொண்டர் பேசப்படுகிறார் –
அர்ச்சை நிலையில் ஸ்ரீ அரங்கனால் தன் அழகைக் காட்டி ஆட் கொள்ளப் பட்டவர் -ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
அர்ச்சை எம்பெருமான் சொன்ன வண்ணம் செய்து ஆட் செய்தவன் மூலம் உகப்பித்த மழிசைக்கு இறைவனை
அடுத்து அழகைக் காட்டி ஆதரம் பெருக வைத்து அர்ச்சை எம்பெருமானாம் ஸ்ரீ அரங்கனால் ஆட் கொள்ளப்பட்ட
துளவத் தொண்டரைப் பேசுவது -முறை தானே –
ஆட்செய்தான் அங்கே ஆட்கொண்டான் இங்கே –

பிறகு அவ்வரங்கனை -கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே -என்னும்
வேட்கை மீதூர்ந்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் பேசப்படுகிறார் –
ஸ்ரீ அரங்கனை வேட்கை மீதூர்தலினாலும்-ரசிக மனப்பான்மையினாலும் -நேரே காட்டும் வண்ணம் ஸ்ரீ வால்மீகி
தீட்டிய கவிதை திறத்தினாலும் – ஸ்ரீ ராமாயணத்தில் பதினாலாயிரம் அரக்கரோடு தனித்து இருந்து போராடும்
ஸ்ரீ ராம பிரானாக கண்டு படையுடன் அவனுக்கு உதவி புரிந்து – ஆட்செய்யப் புறப்பட்டவர் –
அவர் ஸ்ரீ அரங்கன் அழகைக் கண்டு ஆதரம் பெருகி ஆட்செய்தவருக்கு பிறகு
வீரம் கேட்டு வீணே பயப்பட்டு விரைந்து படையுடன் ஆட்செய்யப் புறப்பட்டவரை பேசுவது பொருத்தம் அன்றோ –

பின்னர் ஸ்ரீ பெரியாழ்வார் பேசப்படுகிறார் –
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவனாம் -ஸ்ரீ இராமபிரானுடைய ஆற்றலை அறிந்து இருந்தும்
பொங்கும் பரிவாலே அவன் அறிவாற்றல் ஒன்றும் பாராது -அவனைத் தான் காப்பாற்ற போவதாக மயங்கி
படை எடுத்து -புறப்பட்ட ஸ்ரீ குலசேகர பெருமாளுக்கு பின்னர் –
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய அழகு மென்மைகளையே பார்த்து தொல்லை மாலை ஒன்றும் பாராது மயங்கிப்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையரைப் பேசுவது தகும் அன்றோ –

ஸ்ரீ பெரியாழ்வாரை சார்ந்து இருப்பவளான ஸ்ரீ ஆண்டாளை அவரை அடுத்துப் பேசினார் –

பின்னர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் ஸ்ரீ நம் ஆழ்வாரும் பேசப்படும் போது
ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தேவு மற்று அறியாது பேசின ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும் பேசப்பட்டார் –

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –18-எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் இத்யாதி —

April 1, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ நம் ஆழ்வாரைத் திரு உள்ளத்திலே வைக்க அநுரூப வைபவரான ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் குணங்களை சகல
ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு ஆன துணை -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழில் பாட்டுக்களில் பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ ஆழ்வார்களில் வைத்துக் கொண்டு –பிரதாநராய் -சர்வாதிகார்ரராம் படி –
ஸ்ரீ திருவாய்மொழி என்கிற பிரபந்தத்தை அருளிச் செய்கைக்காக அவதரித்து அருளின ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு – அனந்யார்ஹரான
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய கல்யாண குணங்களை சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரித்து அருளின
ஸ்ரீ எம்பெருமானார் -எனக்கு சகாயம் என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தம் திரு உள்ளத்திலே வைத்து கொள்வதற்கு ஏற்புடைய பெருமை வாய்ந்தவரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
உடைய குணங்களை எல்லா ஆன்மாக்களும் உஜ்ஜீவிப்பதற்க்காக உபகரித்து அருளும்
ஸ்ரீ எம்பெருமானாரே எங்களுக்கு நல்ல துணை என்கிறார் –

இதில் நடு நாயகமான -சித்தரை சித்தரை -ஆழ்வார் திருவடி -ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் திருவடி சம்பந்த சீர்மையை அருளுகிறார் –
நம அர்த்தம்-ததீய சேஷத்வம் கூற அவதரித்தார்.
ஸ்ரீ ஆழ்வாரைப் பற்றியும் ஸ்ரீ திரு வாய் மொழியைப் பற்றியும் எங்கும் சென்று பாடித் திரிந்தவர்
ஸ்ரீ மாறன் அடி பணிந்த ஸ்ரீ சுவாமியையும் அடியார்களையும் அருளுகிறார்-என்றுமாம் –

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

எய்தற்கு -அடைவதற்கு
அரிய -எளிதில் இயலாத
மறைகளை -வேதங்களை
ஆயிரம்-ஆயிரம் என்னும் எண்ணிக்கையில் உள்ள
இன்-இனிய
தமிழால்-தமிழ்க் கவிதைகளால்
செய்தற்கு-பாடுவதற்கு
உலகில்-உலகத்தில்
வரும்-அவதாரம் செய்து அருளும்
சடகோபனை– நம் ஆழ்வாரை
சிந்தை உள்ளே -மனத்திற்குள்ளே
பெய்தற்கு-வைத்துக் கொள்வதற்கு
இசையும் -பொருத்தமான
பெரியவர்-பெருமை வாய்ந்த ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் உடைய
சீரை-நற்குணங்களை
உயிர்கள் எல்லாம் – அனைத்து ஜீவாத்மாக்களும்
உய்தற்கு-உஜ்ஜீவிப்பதற்க்காக
உதவும் -உபகரித்து அருளும்
இராமானுசன் -எம்பெருமானார்
எம் உறு துணை -எமக்கு உற்ற துணை வராவார்-

துஷ் ப்ராபங்களான வேதங்களை –
பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும்
அது தான் சாரமாகவும்-ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படியான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து
அவதரித்து அருளினவராய் -பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே –
ஸ்ரீ சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை -தம் திரு உள்ளத்திலே வைக்கைக் குதகுதியாய் இருந்துள்ள –
பிரபாவத்தை உடையரான ஸ்ரீ மதுர கவிகள் உடைய -ஜ்ஞாநாதி குணங்களை சகல ஆத்மாக்கள் உடையவும் உஜ்ஜீவன
அர்த்தமாக உபகரித்து அருளா நிற்கும் -ஸ்ரீ எம்பெருமானார் –எனக்கு சீரிய துணை
அதவா
ஸ்ரீ சடகோபனை சிந்தை உள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் -என்று
ஸ்ரீ ஆழ்வாரை அல்லது அறியோம் என்று இருக்கும் அவர் எல்லோரையும் சொல்லவுமாம்-

சரம பர்வ நிலையில் உள்ளவர் என்பதால் சரம பாசுரம் இந்த பிரகரணத்தில் –
ஸ்ரீ கேசவ பக்தி- ஸ்ரீ பாகவத பக்தி -சிறப்பை அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜர் –

எய்தற்கு அரிய மறைகளை
அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய் -சர்வோப ஜீவியங்கள் ஆகாதே
அதி க்ருத்தாதி காரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே -ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய
ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்தக் கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –

எய்தற்கு அரிய மறைகளை –
எய்தல்-அடைதல்
வேதங்கள் அளவில் அடங்காதவைகள் ஆதலின் முழுதும் அவற்றை பெற்றவர் எவரும் இலர் –
அதனால் எவராலும் எய்தற்கு அரியன வாயின வேதங்கள்-
இனி
அந்தணர் -அரசர்-வணிகர் என்னும் மூ வர்ணத்தவர் தவிர மற்றவர்களுக்கு ஓதும் உரிமை இன்மையால்
அவர்கட்கு –எய்தற்கு அரியன-என்னவுமாம் –
இனி –
கத்யர்த்தா புத்த்யர்த்தா -அடைதல் அறிதற் பொருளது -என்றபடி – அடைதல் அறிதலாய் -பேர் அறிவாளற்கும்
தர்ம சாஸ்திரம் இதிஹாச புராணங்கள்-மீமாம்ஸா நியாயங்கள் என்னும் இவற்றின் உதவி இன்றி எளிதில் பொருள் காண
ஒண்ணாமை பற்றி –எய்தற்கு அரிய மறைகளை –என்றதாகவும் கொள்ளலாம் –
தன் பொருள்களை மறைத்துக் கொண்டு இருக்கும் அருமை தோன்ற -மறை-என்றார் வேதத்தை –

ஆயிரம் இன் தமிழால் –
வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –
ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் –
ஆதி மத்திய அவசானங்களிலே –
ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் –
சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் –
சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் –
தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதாவஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் –
அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்
அநந்த கருட விஷ்வக்சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் –
தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே –
லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் –
தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும் -விசதமாக பிரதிபாதிப்பதாய் –
ஸ்வா ர்த்தத்தை எல்லாம் ஸூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெறிவிக்குமதாய் –
அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி
அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட பாஷையாலே –
ஸ்ரீ திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண –

செய்தற்கு –
அவதரிப்பிப்பதர்க்கு –ஆவிர்பாவத்தை பண்ணுவதற்கு -என்றபடி-

ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு –
மறையினது அருமைக்கு நேர் எதிரான எளிமைத் தன்மையை காட்டுகிறது இச் சொல் தொடர் –
வேதம் அளவற்றது -இன் தமிழ் ஆயிரம் என்னும் அளவு பட்டது –
வேதத்தின் பொருளைத் தன்னுள் கொண்ட பிரணவம் மூன்றே எழுத்துக்களைக் கொண்டது ஆதலின் மிக சிறியது –
இது அங்கனம் அன்றிக்கே -ஆயிரம் கவியாய் -விரிந்து -தெள்ளத் தெளிய வேதப் பொருளை உணர்த்துவது –
வேதத்தின் பொருளைக் காண்பதற்கு இதிஹாச புராணங்கள் -மீமாம்ச நியாயங்களின்
உதவியை நாட வேண்டி இருக்கிற படியால் இடர்ப் பட நேரிடுகிறது –
இது தமிழ் ஆகையாலும் அளவு பட்டமையாலும் இனிது பொருள் படும்படியாய் இருக்கிறது –
தெரிய சொன்ன ஆயிரம் -என்றது காண்க –

ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இவை பத்தும் 4-7-11–
சீர் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இவை பத்தும் -5-1-11-
தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் -6-9-11-
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் -7-5-11-
அறிந்து உரைத்த ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும் -7-8-11-

வேதம் ஓதுவதற்கு மாதர்க்கும் மூ வர்ணத்தார் அல்லாதாருக்கும் உரிமை இல்லாமையின் எய்தற்கு அரியதாய் ஆயிற்று –
இதுவோ இன்னார் இனியார் என்று இராமல் எல்லோருக்கும் உரியதாய் -தமிழாய் இருத்தலின்-எய்தற்கு எளியதாய் இருக்கிறது –
தமிழ் –
தமிழினால் ஆகியபாட்டுக்கு ஆகு பெயர்
இப்பாசுரம் ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரை பற்றியதாலின் அவர் அருளிச் செய்த
அரு மறையின் பொருள் ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான் -என்பதை அடி ஓற்றின படி –

பகவான் பெருமை -உயர்வற உயர் நலம் உடையவன் -தொடங்கி 1000 கல்யாண குணங்களை பட்டியல் போடுகிறார்
உயர்வற உயர் நலம் உடையவன் தொடங்கி –பிறந்தான் உயர்ந்தே .முடித்தார்
திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள் உடன் -ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களை அனுபவித்து
அனுபவ ஜனித ப்ரீதி காரணமாக வாய் வழியே வழிந்த திருவாய் மொழி-

பொறி உணர் அவை இலன்..இலன் இலன் மிகு நிறை இலன்.-என்று பரத்வம் பேசி
மின் நின் நிலையில சரீரம் வீடு முன் முற்றவும்-நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து என்று உபதேசித்து –
பத்துடை அடியவர்க்கு எளியவன் –சௌலப்யம் பேசி
அதில் மேல் மேல் நிலை சௌசீல்யம் –ஆர்ஜவம் -போன்றவை -காட்டி
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்று
ஆழ்வார் உடலை வெண்ணெய் போலே விரும்பி யதை அருளி –
தமக்கு -ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -என்று பிராட்டிமார் – நித்யர்
அனைவருடன் பரிமாறுவதை ஆழ்வார் இடமே காட்டி அருளியதை பாடி –
ஈறில வண் புகழ் என்றும் -பல பல கல்யாண குணங்களை காட்டி அருளினார் ஆழ்வார் –

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-என்று சேஷத்வம் காட்டி
தன் பேறாகக் கலந்து -ஆழ்வார் சம்பந்தி சம்பந்திகள் அளவும் ப்ரீதி மிகுந்து -எதிர் சூழல் புக்கு பெறாப் பேறாக பெற்று
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினே-என்று அவனே உபாயம் என்று அருளி
பூவில் நான் முகனை படைத்தான் -அவனே பராத்பரன் –
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வேன் என்று உபதேசித்து
அர்த்த பஞ்சக ஞானம் ஊட்டி –

சூழ்ந்து அகன்று -பதிகம் மூலம் அர்ச்சிராதி கதியையும் விவரித்து அருளி அவா பெற்று வீடு பெற்ற சட கோபன்
ஸ்பஷ்டமாயும்-வேதம் போல் அங்க்யேயமாய் இன்றி ஆயிரம் இன் தமிழால் பாடி அருளினார் அருளினார்-

அத்யந்த சுலபமாய் தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள்.
பக்தாம்ருதம–நடை விளங்கு திராவிட வேத சாகரம்.இது எல்லாருக்கும் சரண்–அது அசரண்யன் பெருமாளுக்கு மட்டும்
குருகூர் சடகோபன் வார்த்தை பதிகம் தோறும் வைத்து -இங்கு எல்லாரும் கை கூப்புவார்கள்
இப்படி அருளியதனால் தானே -ஸ்ரீ நாத முநிகள் –குருகூர் என்றும் –ஆயிரம் உண்டு என்றும் அறிந்து
பெரிய ஆதாரத்துடன் குருகூர் சென்று –நாதனுக்கு நாலாயிரமும் பெற்றான் வாழியே –என்று சொல்லும்படி –
பெற்று நமக்கு வழங்கினார் அருளிச் செயலை.-
இன்று நமக்கு அதுவும் முடிய வில்லை கண் நுண் சிறு தாம்பு அதற்கே
ஸ்ரீ ராமாயண சுருதி சாகரம்–24000 -ஸ்ரீ ரகு குல திலகன் சரிதம் சொல்லும்
இந்த பக்த அம்ருத சாகரம் ஸ்ரீ கண்ணன் சேஷ்டிதம் சொல்ல வந்தது–வானின் மீது ஏற்றும் இது–

உலகில் வரும் சடகோபனை –
ஏனையோர் தாம் செய்த வினைகளின் பயனை நுகர்வதற்காக பிறக்கும் இடம் இவ் உலகம் –
ஸ்ரீ சடகோபனோ -அத்தகைய இவ் உலகத்திலே உயிர் இனங்கள் மீண்டும் மீண்டும் பிறந்து உழலா வண்ணம்
காக்க வேண்டும் என்னும் நோக்கம் கொண்டு ஈண்டு வாரா
வழிக் கண் தலைப் படுமாறு அருமறை கூறும் மெய்ப் பொருளை ஆயிரம் இன் தமிழால் காட்டுவதற்காகவே
அவதரித்து அருளினார் -என்கிறார் –
ஸ்ரீ சடகோபனுடைய அவதாரம் -ஸ்ரீ திருவாய் மொழி பாடுவதற்காகவே -எனபது கருத்து–

மறைந்த மறைகளை மீட்பதற்காகவே இறைவன் அவதாரம் செய்தான் ஸ்ரீ ஹயக்ரீவனாக –
உபநிடந்தங்களின் கருத்துக்களை எல்லாம் இனிதாகத் திரட்டி ஸ்ரீ கீதை என்னும் அமுதத்தை
ஊட்டுவதற்காகவே அவ இறைவன் அவதரித்தான் ஸ்ரீ கண்ணனாக –
உய்யும் வழி தெளியாது பவக்காட்டிலே வழி திகைத்து அலமந்த மாந்தர்க்கு வழி காட்டுவதற்காகவே
காட்டின் இடையே ஆநிரை காக்கும் ஆயனாக ஆயினான் ஸ்ரீ எம்பெருமான் என்பர் –
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—ஸ்ரீ பெரிய திருவந்தாதி – 56- என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் .

வரவாறு ஓன்று இல்லையால்–இன்ன வழியாக வந்தது என்று தெரியாது
வாழ்வு இனிதால் எல்லே–பலன் போக்யதாய் இரா நின்றது-ஆச்சர்யம்
ஒருவாறு ஒருவன்–எந்த சேதனனும்-எந்த உபாயாந்தரத்திலும்
புகாவாறு–பிரவேசிக்க வேண்டாதபடி
உருமாறும்–தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாங்களை மாற்றிக் கொள்ளுகிற
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏக்கம் சரணம் வ்ரஜ-அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -தானே
தலை மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கும் கண்ணபிரான் –
அன்றிக்கே
உருமாறும்-பரஞ்சோதி உருவை விட்டிட்டு அழுக்கு மானிட உருவை-ஏற்றுக் கொண்ட கோபால கிருஷ்ணன் என்றுமாம்
ஆயவர் தாம்-ஸ்ரீ கிருஷ்ணன் ஆனவனும்
சேயவர் தாம் –ஆசூர பிரக்ருதிகளுக்கு-எட்ட முடியாதவனும்
பாண்டவர்களுக்கு அணியனாயும் துரியோத நாதிகளுக்கு தூரஸ்தநாயும்
ஒரு கால விசேஷத்திலே அனைவருக்கும் சமீபஸ்ததானாக இருப்பவன் -என்பதை
அன்று உலகம் தாயவர்தாம் – என்கிறது அடுத்து
அன்று உலகம் தாயவர் தாம்–முன்பு ஒரு கால்-உலகங்களைத் தாவி அளந்தவனும்
மாயவர் தாம்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனுமான-எம்பெருமான் –
இப்படி சேயனாயும் அணியனாயும் இருப்பது பற்றி மாயவர் தாம் என்கிறது
காட்டும் வழி-காட்டுகிற உபாயம்-

தவறான வழியில் போய் தடுமாறாத படி நல் வழி -ஸ்ரீ கீதையின் மூலம் -காட்டுவதற்காகவே ஆயன்
உருவகமாக மாறினான் எனபது இதன் கருத்து –
இதனை அடி இடறி ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ஸ்ரீ தயா சதகத்தில் –
பூமி பாரத்தை குறைப்பது பேச்சளவிலே தான் –
அறியாமைக்கு உள்ளான அகல் ஞாலத்தவர் அறிய மறைமுடி உயர் மாடத்தில் ஒளிரும் கீதை என்னும்
விளக்கின் ஒளியால் அறியாமை இருளை ஒழிப்பது தான் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு நோக்கம் என்னும்
பொருள் படும் ஸ்லோகம் -89 – அருளி செய்து இருப்பதும் காண்க –

உபநிடதக் கருத்துக்களை ஸ்ரீ கீதையில் ஸ்ரீ கண்ணன் திரட்டிக் கொடுத்தது வட மொழியிலே தான் –
அதுவும் நன்கு விளங்க வல்லதாய் அமைந்திலது -அதனால் உபநிடதங்கள் தெளிவி படாததாய் ஆயிற்று –
வ்யாமிச்ரேனை வவாக்யேன புத்திம் மோஹயசீவமே -என்று –
கலந்து கட்டியான வாக்யத்தாலே என் புத்தியை மோஹிப்பிக்கிறாய் போலும் -என்று நேரே ஸ்ரீ கண்ணன் இடம் அர்ஜுனன் கூறுவது காண்க –
இதனால் அவரவர் தம் தமக்கு தோன்றியவாறு பொருள் கூறித் தம் தம் கூற்றினையே ஏற்றுக் கொண்டு உள்ளது
ஸ்ரீ கீதை என்று அதனைப் போற்றுவார் ஆயினார் –
ஸ்ரீ கீதை அருளிச் செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே -ஸ்ரீ நம் ஆழ்வார்
ஆயிரம் இன் தமிழான திருவாய்மொழி அருளிச் செய்வதற்காகவே அவதரித்தார் –
ஸ்ரீ கண்ணன் வட மொழியிலே ஸ்ரீ கீதை தந்தான் –
ஸ்ரீ நம் ஆழ்வார் இன் தமிழிலே ஸ்ரீ திருவாய்மொழி தந்தார் –
ஸ்ரீ கீதை அர்ஜுனனையும் மயங்கச் செய்தது –
ஸ்ரீ திருவாய்மொழி அனைவர்க்கும் தெரியச் சொன்ன ஆயிரம்

உலகில் –
அசுத்தாஸ் தேசமஸ்தாஸ்து தேவாத்யாம-கர்ம யோநயா ஆவிரிஞ்சாதி மங்களம் – என்றும் –
இருள் தரும் மா ஞாலம் -என்றும் –
கர்ம ஜன்மாத்யவஸ்தாச துக்கமத்யந்த துச்சகம் -ந கிஞ்சித் கணயன் நித்யம் சராமீந்த்ரிய கோசர -என்றும்
சொல்லப்படுகிற-இந்த லீலா விபூதியிலே –

வரும் சடகோபனை
வரும் என்ற வர்த்தமான நிர்தேசத்துக்கு –
அவருடைய திவ்ய-மங்கள விக்ரகம் -சமஸ்த திவ்ய தேசங்களிலும் சமஸ்த பிரபன்ன ஜனங்களுடைய திரு மாளிகைகளிலும் –
நவம் நவமாய்க் கொண்டு ஆராத்யமாகையும் –
அவருடைய திவ்ய சூக்திகள் இந்த லோகத்தில் இவ்வளவும்-இன்னும் உள்ள காலத்திலும்
நடை யாடிப் போருகையும் பொருளாகக் கடவது-

சடகோபனை –
சடராவார் –ஸ்வரூப ஞானம் இல்லாத சம்சாரிகள் -அவர்களைக் குறித்து –
ஒரு நாயகத்திலும் –
நண்ணாதார் முறுவலிலும் –
பருஷம் பண்ணினவனை -பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற சடர்க்கு பிரதிபடர் ஆனாரை -என்னுதல் .-
இப்படிப்-பட்ட ஸ்ரீ நம் ஆழ்வாரை –

வரும் சடகோபனை –
வருதல்-அவதரித்தல்-
வெளிப்பட புலனாகாது மறைத்துத் தீங்கு இழைப்பவர்கள் சடர்கள் –
கூடவிப்ரிய க்ருச்சட -எனபது காண்க –
அஹிம்சாவாதிகளாய் அறநெறி செல்வாரைப் போலே பேச்சிலும் நடையிலும் தங்களை வெளியிலே காட்டிக் கொண்டு தூய அற நெறி
கூறும் மறையினையே பிரமாணமாக மதிக்காத பாஹ்யர்களாகிய பௌத்தரும் சமணரும் சடர்கள் ஆகிறார்கள் –
இங்கனமே வேதத்தை பிரமாணமாக மதிக்கும் வைதிகர்கள் போன்று தங்களை பேச்சிலும் நடையிலும் வெளியிலே
காட்டிக் கொண்டு மறை கூறும் உண்மை பொருளை பொய்ப் பொருளாக ஆக்குதலின் குத்ருஷ்டிகளும் சடர்கள் ஆகிறார்கள் –
அவர்களை சினந்து வெல்பவர் ஆதலின் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ சடகோபன் -என்று பேர் பெற்றார் –

இலிங்கத் திட்ட புராணத்தீரும் -திருவாய் மொழி -4 10-5 – -என்று குத்ருஷ்டிகளையும் –சமணரும் சாக்கியரும் -என்று
பாஹ்யர்களையும் சேர விளித்து -அவர்களை வென்று சர்வ அந்தர் ஆத்மாவாக
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானை -ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் கோயில் கொண்டு உள்ள ஸ்ரீ எம்பெருமானை –
ஒப்புக் கொண்டு போற்றும்படி செய்வது காண்க –
இனி சம்சாரிகளான ஜனங்களுடைய சடத் தன்மையை -ஒளித்து தீங்கு இழைக்கும் மனப் பான்மையை –
ஸ்ரீ திருவாய் மொழி போக்குதலின் -ஸ்ரீ சடகோபன் என்று பேர் பெற்றார் என்று கொள்ளலுமாம் –
உற்றார் உறவினர் என்று பாராது அவர்களையும் ஏமாற்றி பணம் ஈட்டும் நாட்டம் கொண்டவனை
சடமதி -ஏமாற்றும் எண்ணம் கொண்டவன் -என்று குறிப்பிட்டு -அது பக்தர் அல்லாதாருடைய லஷணம்-என்கிறது ஸ்ரீ விஷ்ணு புராணம் –
பரம சூஹ்ருதி பாந்தவே களத்ரே
சூதத நயா பித்ரு மாத்ரு ப்ருத்யவர்க்கே
சடமதி ருபயாதி யோரத்த த்ருஷ்ணாம்
தம தம சேஷ்ட மவேஹி நாச்ய பக்தம்- -3 7-10 ஸ்லோகம் – – -என்று
நெருங்கிய நண்பன் இடத்திலும் -உறவு உடையான் இடத்திலும் மனைவியின் இடத்திலும் மகன் இடத்திலும் மகள் இடத்திலும்
தகப்பன் இடத்திலும் தாயினிடத்திலும் பணி ஆட்கள் இடத்திலும் -ஏமாற்றும் எண்ணம் படைத்தவனாய் –
எவன் பணத்தில் ஆசை கொள்கிறானோ –அந்த கீழ் பட்ட செயலை உடையவனை ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லாதவனாக அறிக –
அத்தகைய சடமதியை –
ஒரு நாயகமாய் – என்னும் திருவாய் மொழியிலே பக்தன் ஆக்கும் ஸ்ரீ நம் ஆழ்வாரை
ஸ்ரீ சடகோபனை எனபது மிகவும் ஏற்கும் அன்றோ –
சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷகம் -சடர்களுடைய புத்தியை -ஏமாற்றும் எண்ணத்தை
கெடுப்பவரான ஸ்ரீ சடகோப முனிவனை வந்திக்கின்றேன் -என்றது காண்க –

சிந்தை உள்ளே
தம்முடைய திரு உள்ளத்திலே –பெய்தற்கு -தமக்கு பர தேவதையாய் ஆராத்யராய் இருக்கும்படி வைக்கைக்கு –

இசையும்-
வுபயுக்தமான பிரபாவத்தை உடைய -மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்றறியேன் -என்றும் –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்றும் -இறே இவர் தாம் அருளிச் செய்த படி –

பெரியவர் –
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடக் கடவது –
அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே -அவர் பாசுரம் கொண்டு இவ் வர்த்தம் அறுதி இடக் கடவோம் -என்று
ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லுகிறபடியே-
யஸ்மாத் ததுபதேஷ்டா ஸௌ தஸ்மாத் குருதரோ குரு – அரச்ச நீயச்ய சவந்த்யஸ்ச -இத்யாதி சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட
சரம பர்வ நிஷ்டராயும் -தத் ப்ரவர்த்தகராயும் -இருக்கை யாகிற மகா பிரபாவத்தை உடையவர் ஆகையாலே-
சர்வாதிகரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் உடைய

சீரை –
மாறன் சடகோபன் வண் குருகூர் எங்கள் வாழ்வாம்-என்று ஏத்தும் மதுரகவியார் யம்மை யாள்வார் அவரே அரண் -என்றும்
பார் உலகில் மற்று உள்ள ஆழ்வார்கள்-வந்து உதித்த நாள்களிலும் -உற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர் -என்றும்
இப்படி ச்லாக்கிக்கப்பட்ட கல்யாண குணங்களை –

சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் –
ஸ்ரீ சடகோபனை சிந்தை யுள்ளே வைப்பது இசைந்து -பொருந்தி இருக்கிறது -ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருக்கு
அதற்க்கு காரணம் -அவர் பெரியவராய் இருத்தல்-
ஸ்ரீ நம் ஆழ்வார் பெரியன் –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் பெரியார் –
பெரியனைப் பெரியராலே தான் தன்னுள்ளே-வைக்க முடியும் –

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு––பெரிய திருவந்தாதி-75

புவியும்-இவ்வுலகமும்
இருவிசும்பும்-விசாலமான மேல் உலகமும்
நின்னகத்த-உன்னிடத்தே உள்ளன
நீ-உபய விபூதியையும் உள்ளே-அடக்கிக் கொண்டு இருக்கிற நீ
என் செவியின் வழி புகுந்து-எனது காதின் வழியே புகுந்து
என்னுள்ளே –என் பக்கல் இரா நின்றாய்
அவிவின்றி-அவிவு இன்றி-ஒரு நாளும் விட்டு நீங்காமல்
ஆன பின்பு
யான் பெரியன்—நானே பெரியவன்
நீ பெரியை என்பதனை யார் அறிவார்-நீ பெரியவன் என்று அறிவார் உண்டோ
ஊன் பருகு நேமியாய்–அசூர ராஷசர்களின் சரீரத்தில் உள்ள-மாம்சங்களை கவர்கின்ற திருவாழி ஆழ்வானை
திருக் கையிலே-ஏந்தி உள்ள பெருமானே
உள்ளு–இத்தை நீயே ஆலோசித்துப் பார் –
யான் பெரியன் -தனி வாக்யமாகவும்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் -என்பதனை தனி வாக்யமாகவும்-கொண்டு உரைக்கப் பட்டது
அங்கனம் அன்றிக்கே இரண்டையும் சேர்த்து-நான் பெரியவனோ நீ பெரியவனோ
இதைப் பிறரால் அறியப் போகாது-நீ தான் ஆராய்ந்து அறிய வேணும் -என்கை-

புவியும் -லீலா விபூதியும் -இருவிசும்பும் -நித்ய விபூதியும் -தன்னகத்தே கொண்டவன் –பெரியோனாகிய மாயன் –
அவன் செவியின் வழியே புகுந்து நம் ஆழ்வார் உள்ளத்திலே நின்றான் -அதனால் பெரியோனையும் உள்ளடக்கிய
பெரியரானார் ஸ்ரீ நம் ஆழ்வார் -அத்தகைய நம் ஆழ்வாரையும் சிந்தை உள்ளே பெய்தற்கு இசைந்து இருக்கிறது
ஸ்ரீ மதுர கவி ஆழ்வாருக்கு உள்ள பெருமை –ஆதலின் அவரைப் பெரியவர் என்றே குறிப்பிடுகிறார் –

இறைவனை தம் உள்ளத்திலே வைத்துக் கொள்ளுதல் முதல் நிலையாகும் –
அது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானது -ஆசார்யனை தம் உள்ளத்தில் வைத்துக் கொள்ளுதல் இறுதி நிலையாகும் –
அது ஏனையோருக்கு அன்றி ஸ்ரீ மதுர கவி ஆழ்வாருக்கே அமைந்தது ஒன்றாகும் –
இது பற்றியே -பத்துப் பேரையும் -பத்து ஆழ்வார்களையும் – சிரித்து இருப்பார் ஒருவர் -என்றார் இவரை ஸ்ரீ வசன பூஷண காரர் –
ஆசார்யனை தம் சிந்தை உள்ளே பெய்தற்கு இசைந்து உள்ளது இவரது இறுதி நிலை வாய்ந்த பெருமை என்பது
தோன்ற –பெரியவர் –என்றார் ஆகவுமாம்-
இறுதி நிலை வாய்ந்த ஸ்ரீ அமுதனார் அதனாலாய பெருமையை குறிப்பிடுவது பொருத்தம் உடையது அன்றோ –
இனி பெரியவர் என்று
பொது சொல்லால் குறிப்பிடிதலின் -தம் நெஞ்சினால் ஸ்ரீ நம் ஆழ்வாரை அன்றி
வேறு ஒன்றும் அறியாத -பெரியவர்கள் எல்லோரையும் சொல்லலுமாம் –
சீர்-
ஞானம் முதலிய குணங்கள்
இனி ஆச்சார்யா நிஷ்டை யாகிய சிறப்பை கூறலுமாம்

உயிர்கள் எல்லாம் –
வர்ணாஸ்ரம குண வ்ருத்தாத் உத்கர்ஷ்ட அபகர்ஷ்ட விபாகம் அற –ருசி உடையரான சகலசம்சாரிகள் உடையவும் –

உய்தற்கு –
உஜ்ஜீவன அர்த்தமாக –
இது ஒழிந்த உபாயங்கள் எல்லாம் உஜ்ஜீவன ஹேதுக்கள் அன்று காணும் -இந்த வமுதனாருடைய திரு உள்ளத்தில் ஓடுகிறது –

உதவும்
உபகரித்து அருளும் -எல்லாருக்கும் மோஷ உபாயமான திரு மந்திர அர்த்தத்தை உபதேசிக்கும் வேளையிலே
அர்த்த விசேஷங்கள் எல்லாம் ததீய பர்யந்தமாக அனுசந்திக்க வேணும் -என்னும் ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய நிஷ்டையே காணும்
ஸ்ரீ எம்பெருமானார் உபதேசிப்பது-

உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும்
எல்லோரையும் உய்விப்பதற்காக ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய குணங்களை அல்லது அவரது ஆசார்ய நிஷ்டையை
தாம்-மாறனடி உய்ந்து காட்டியும் -உபதேசத்தால் கேட்பவர்களும் கைக் கொள்ளலாம் படி வழங்கியும்
உபகரித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க-

உயிர்கள் எல்லாம் -என்கையாலே –
ஆசார்ய நிஷ்டைக்கு அதிகாரி நியமம் இல்லை -என்பது தெரிகிறது –
தேக சம்பந்தமான துறையாயின் அதிகாரி நியமம் இருப்பதற்கு இடம் உண்டு –
இது ஆத்ம சம்பந்தமான துறை யாதலின் அது இருப்பதற்கு இடம் இல்லையே
ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே – குரு பரம்பரா சாரம் -என்று
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் உடைய ஆசார்ய நிஷ்டையே அநாதி யான நல் வழி என்று துணிவதும் –
ஸ்ரீ மணவாள மா முனிகள்-
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -55 – என்று
இவ் ஆசார்ய நிஷ்டையில் நிலைத்து நிற்பதும் -ஸ்ரீ எம்பெருமானார் உய்வதற்கு உதவியதன் பயனே என்று அறிக –

ஸ்ரீ இராமானுசன் எம் உறு துணையே –
இப்படிப் பட்ட ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு த்ர்டமான துணை –
துணை-
சகாய பூதர் –உறு -த்ர்டம் -இத்தால் பரம பதத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்றபடி –
அன்றிக்கே –
பெரியவர் என்ற பதத்துக்கு –
ஸ்ரீ ஆழ்வாருடைய திருவடிகளை தம் திரு உள்ளத்திலே நிறுத்திக் கொண்ட-ஸ்வாமிகள் எல்லாரும் –
என்று பொருள் ஆகவுமாம்-

எம் உறு துணை –
ஸ்ரீ பெரிய ஜீயர் உரையில் -எனக்கு என்று உரை காண்கையாலே-
என் உறு துணையே -என்று-பாடம் இருக்கலாம் என்று தோற்றுகிறது –
உறு துணை-சீரிய துணை –
ஆக்கம்-செல்வம் -உண்டேல் துணையாவார் போல்வர் சுற்றத்தவர் –
ஆக்கத்தில் பங்கு பெரும் நோக்கம் அவர்களது –
ஸ்ரீ எம்பெருமானாரோ -தனக்கு என்று ஒரு பயன் இன்றி உயிர் உய்வதற்கு உதபுவர் ஆதலின் – உறு துணையானார் -என்க –
நாமும் முயன்றால் பிறரும் அதற்கு உதவும் துணை யாவார் –
அங்கன் அன்றி தாமாகவே உற்று துணையாகி நம்மிடையே எம் முயற்சியும் இல்லாத நிலையிலும்
தமது இயல்பான அருளாலே நாம் உய்வதற்கு உதவுதலின் -ஸ்ரீ எம்பெருமானார் உறு துணை யாயினார் என்னலுமாம் –
உறுகின்ற துணை உறு துணை –

எம் உறு துணையே
சகல ஆத்மாக்களும் தம் தம் ஆசார்யர் பற்ற அதன் மூலம் இராமானுசன் அடியார்களாகி -மோஷம் பெறலாம்
மோர் காரி – வூமை அடைந்தது அறிவோமே
ஸ்ரீ ஆழ்வார் எஞ்சான்று கண்டு கொள்வது . என்று .அருள — இவரோ கண்டு கொண்டேன் .அவன் பொன் அடி
காடு மேடு அடங்கலும் மேவிய பொன் அடி- வித்யுத் மக்களின் மேல் இருக்கும் அடி
பொன் பிராப்யம் பிராபகம் இரண்டும் தீட்டு கிடையாது .
த்வத் பாதாரவிந்தம் வைக்க பிரார்த்திப்பார்கள் அவனை –
மேவினேன் அடியை தேவு மற்று அறியேன் இரண்டும் உண்மை
பாவின் இன் இசை பாடி திரிவனே
இடை வெளி இல்லை.
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானுக்கும் இடம் இல்லாத படி…
என் நெஞ்சுள் நிறுத்தினான்-

மிக்க வேதியர் ஆழ்ந்து உள் பொருள் ததீய சேஷத்வம்.
நிற்கப் பாடி நெஞ்சுள் நிறுத்தினான்-நெஞ்சில் இல்லை –நெஞ்சுள் -உள்ளேயே ஸ்தாவர பிரத்திஷ்டை ஆகும் படி
எதுவும் நில்லாத நெஞ்சுள் நிறுத்தினான்.
பாடி நிறுத்தினான்.
ஸ்ரீ ஆழ்வார் பாட பாட கிருபையால் நெஞ்சுள் நிறுத்தினான்
என் -தாழ்ந்த . நெஞ்சுள் உள் பகுதியில் பகவான் ஜகத்தை நிறுத்தினால் போல.

கூப்பிடு கேட்க்கும் இடமும் பாட்டு கேட்க்கும் இடமும் குதித்த இடமும் -எல்லாம் /வகுத்த இடமே என்று இருக்கும் நிலையே வேண்டும்
தேனார் கமல கொழுநன்தானே வைகுந்தம் தரும் —
பெரியவர் -ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் பற்றி உள்ள எல்லோரும் உஜ்ஜீவிப்பது உறுதிதானே

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –17-முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் இத்யாதி —

March 31, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் செய்த உபகாரத்தை கேட்டு தத் சமாஸ்ரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும்-சுக துக்க நிபந்தனமான -கலக்கம் வரில் செய்வது என்ன –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய் -எங்கள் நாதராய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் அவை மேலிட்டாலும் கலங்கார் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ் எல்லாம் ஸ்ரீ ஆழ்வார்களை இட்டே ஸ்ரீ எம்பெருமானாரை கொண்டாடுகிற பிரகரணம் ஆகையாலே
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளின உபகாரங்களைக் கேட்டு -தத்சமாசரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும் சுக துக்க நிபந்தமாக கலக்கம் வரில் -செய்வது என் என்று -ஸ்ரீ திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின
பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த -ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு பிரிய தமரான
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் –
ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இங்கனம் கலியினால் நலி உறாது உலகினைக் காத்து ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றிடினும்
இன்ப துன்பங்களால் நேரிடும் கலக்கம் விளக்க ஒண்ணாதது அன்றோ என்பாரை நோக்கி-
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு இனியரும் எங்களுக்கு நாதருமான ஸ்ரீ எம்பெருமானாரைப்-பற்றினவர்கள்
இன்ப துன்பங்களால் கலங்க மாட்டார்கள் -என்கிறார் —

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –

பத உரை –

கலை-சாஸ்திரங்கள்
பரவும் -துதிக்கும்
தனி ஆனையை -ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனான
கண்ண மங்கை நின்றானை -திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கும் பத்தராவி எம்பெருமானை
தண் தமிழ் செய்த -குளிர்ந்த தமிழ் கவி பாடின
நீலன் தனக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு
உலகில் -உலகத்தில்
இனியானை -அன்பரான
எங்கள் -எங்களுடைய
இராமானுசனை -எம்பெருமானாரை
வந்து -அடைந்து
எய்தினர் -பற்றினவர்கள்
துயரங்கள் -துன்பங்கள்
முந்திலும் -முன் முன்னாக வரினும்
முனியார் -வெறுப்படைய மாட்டார்கள்
இன்பங்கள் -சுகங்கள்
மொய்த்திடினும் -ஓன்று திரண்டு வந்தாலும்
மனம் கனியார் -உள்ளம் நெகிழ மாட்டார்கள் –

சகல சாச்த்ரங்களாலும் ஸ்துதிகப் படுபவனாய் அத்வதீயமான மத்த கஜம் போலே -அத்தால் வந்த செருக்கை உடையனாய் கொண்டு –
ஸ்ரீ திருக் கண்ண மங்கையிலே நின்று அருளினவனை –
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் -ஸ்ரீ பெரிய திருமொழி – 7-10 10- என்னும்படி பிரதிபாத்யார்த்த
கௌரவத்தாலே சாம்சாரிக சகல தாப ஹரமான தமிழை செய்து அருளின
ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு லோகத்திலே ச்நேஹியாய் இருப்பாராய்-
எங்களுக்கு நாதரான – ஸ்ரீ எம்பெருமானாரை வந்து ப்ராபித்தவர்கள் –
துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும் இது வந்ததே என்று வெறார்கள்–
சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும் பக்வபலம் போலே மனசு இளையார்கள் –
ஆன பின்பு நீங்களும் இவற்றால் வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம் என்று கருத்து –
முனிவு -வெறுப்பு / மொய்த்தல்-திரளுதல்

ப்ராசங்கிக்கமாக -அமைந்த பாசுரம் இது –ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளை ஆஸ்ரயித்தால் துன்பம் வாராதோ என்று கேட்டவர்களுக்கு
பதில் அளிக்க இந்த பாசுரம் -சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து அருளும் என்றவாறு –
கலை பரவும் தனியான்–தனியானை–அத்விதீயம் -செருக்கு அவனுக்கு குணம் —ஸ்ரீ கண்ண மங்கையுள் நின்றான் –
நின்றது -இவர் பாசுரம் கேட்ட பின்பு அன்றோ –ஆடினவன் நின்றான் —

ஸ்ரீ பெரும் புறக்கடல் -ஸ்ரீ பிருஹத் பஹு சிந்து -ஸ்ரீ திருப் பாற் கடல் பிராட்டி தோன்றி மாலை சாத்த –
முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனீக்கள் வடிவில் திருக் கல்யாணம் அனுபவிக்க -ஸ்ரீ பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் –
பத்தர் ஆவி ஸ்ரீ பத்தராவி -பெருமாள் -ஸ்ரீ கருடனுக்கு -கட்டம் போட்ட புடவையை சாத்திக் கொள்வார் –
ஸ்ரீ திருப் பாற் கடலை விட்டு வந்ததால் புறக் கடல்
அநவசாதம்-அனுத்ருஷம் -துன்பம் இன்பம் கண்டு கஷ்டம் இன்பம் பெறாமல் ஸூக துக்க சமம் –
திருவடிகளில் ஈடுபட்டு இவை முக்கியம் இல்லை –
கோவையை பத்தராவியை நித்திலத் தொத்தினை -கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –
ஸ்ரீ பராங்குச முகத்தாமரை ஸ்ரீ ராமானுஜர் என்றாலே மலரும் –

கலை பரவும்
சர்வே வேதாயாத் பதமாமனந்தி -வேதாஷராணி யாவந்தி படிதா நித்விஜாதிபி-தாவந்தி ஹரி நாமானி கீர்த்தி தாநி ந சம்சய
வேதே ராமாயனே-புண்யே பாராதே பரதர்ஷப -ஆதவ் மத்யே ததாந்தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்கிறபடியே
சகல சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலும் ஸ்துத்திக்கப் படுபவனாய்-

தனி யானையை
த்யாவாப்ர்தி வீஜ நயன் தேவ ஏக -என்றும் –
சயசாயம் புருஷே யாச்சா சாவித்த்யே ச ஏக -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிறபடியே -அத்விதீயமாய் -மத்த கஜம் போலே -செருக்கை உடையனாய் கொண்டு –

பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–திரு நெடும் தாண்டகம்–10-

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்—திருப்பாவை–15

கண்ண மங்கையுள் நின்றானை –
முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே -என்கிறபடி
தன்னுடைய போக்யதையை-எல்லாரும் அனுபவிக்கும் படி -ஸ்ரீ திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கிற -ஸ்ரீ பத்தராவியை –

கண்ண மங்கை நின்றானை –
ஸ்ரீ திருக் கண்ண மங்கை சோழ நாட்டுத் திவ்ய தேசமாம் -அங்கு எழுந்து அருளி உள்ள ஸ்ரீ எம்பெருமானுக்கு
ஸ்ரீ பத்தராவி -எனபது திரு நாமம்

தண் தமிழ் செய்த
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறபடியே
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளாகிற பிரதிபாத்யர்த்த கௌரவத்தாலே தன்னை அப்யசித்தவர்களுடைய
சகல தாபங்களும் மாறும்படி -ஸ்ரம ஹரமாய் திராவிட பாஷா ரூபமாய் பிரபந்தீ கரித்து அருளின

கலை பரவும் தனி யானையை –
பரவுதல்-துதித்தல்
சாஸ்திரங்கள் பத்தராவி பெருமாள் குணங்களை பரக்க பேசுதலின் துதிப்பன ஆயின –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்று–எல்லா வேதங்களாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன் -என்றபடி
வேதம் அனைத்தும் துதிக்கும் நோக்கம் உடையவைகளாய் இருத்தல் பற்றி செருக்கு தோற்ற ஒப்பற்ற மதம் பிடித்த யானை போலே
தோற்றம் அளிக்கிறான் –
அவ் வெம்பெருமான் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு –
வேதத்தில் சொல்லப்படுதல் என்னும்படி -நெருங்க ஒண்ணாதபடி யானைக்கு பிடித்து இருக்கும் மதம் போன்று உள்ளது –
வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –பெரிய திருமொழி – 7-10 8-
வெஞ்சினக் களிற்றை – -என்று
வெவ்விய சினம் உடைய யானை போலே இருப்பவன் -என்று இவ் எம்பெருமானைத் திரு மங்கை-ஆழ்வாரே வர்ணித்து உள்ளார் –
கிட்ட ஒண்ணாத வனேயாயினும்-யானை போல் கண்டு களிக்கத் தக்கவன் -என்பது அதன் கருத்து –

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–1-7-1-

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்
தெண் புழுதி யாடித் திரிவிக்ரமன்-1-7-9-

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ வேழ போதக மன்னவன் தாலோ-பெருமாள் திருமொழி -7-1-

கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய ஈடு இல்லாத
தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான் –
வேதம் அனைத்தும் சேர்ந்து பரவுவதைத் தண் தமிழ் காவியம் ஒரு பதிகத்திலே பொருள் ஆழத்துடன் ரசமாக
காட்டுவது வியப்பூட்டுவதாக இருந்தது அவ் எம்பெருமானுக்கு .
வேதங்கள் பரவுவது கிடக்கட்டுமே-அதனால் செருக்கு உற்று என் பயன் –
இத் தண் தமிழ் கவியின் உள் ஈடான பொருள் சீர்மையை ஆராய்ந்து இன்புறுவோம் என்று கருதி அத் துறையில் இறங்கினான் –
தானாகப் பார்த்து அறியத் தக்கதாக அத் தண் தமிழ் அமைய வில்லை –
வேத விதேவசாஹம்-வேதப்-பொருளை அறிந்தவனும் நானே -என்று கூறிக் கொண்ட கண்ணனுக்கும்
கற்றே அறிய வேண்டும்படியாக அமைந்து இருந்ததாம்
இக் கவியின் உள்ளீட்டான கனம்-அவன் கருத்தை அறிந்து –

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10–என்கிறார் ஆழ்வார் –
உனக்கு இதிலே ஆதரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய் உனக்கும் அதிகரிக்க வேண்டும் படி யாயிற்று
இதின் உள்ளீட்டின் கனம் இருக்கிறபடி -எனபது பெரியவாச்சான் பிள்ளை-வியாக்யானம் .
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –

தமிழ் –
தமிழ் ஆகிய கவிக்கு ஆகு பெயர்-தண் தமிழ் செய்த -தண் தமிழ் கவி பாடின என்றபடி –
கவி வாணர்கள் யானையை பாடுவார் -அதனைப் பரிசிலாகப் பெருவது கவி வாணர் நோக்கம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் –
தன்னையே தான் தருவது இது – தன்னைத் தந்த கற்பகம் -என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க-

கண மங்கை கற்பகத்தை -என்பது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –

தண் தமிழ்-
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட -தம் கண்டபடியே கற்பவர் மனத்தில் பதியும் படியும் –
உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் – செய்து –
சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –
நீலன்-
திருமங்கை ஆழ்வார் திரு நாமங்களில் இதுவும் ஓன்று
நீலன் தனக்கு உலகில் இனியானை-
இந்த உலகத்தில் எம்பெருமானார் ஒருவரே திரு மங்கை ஆழ்வாருடைய தண் தமிழ் கவியின்
பொருள் உணர்ந்து தாபம் அற்றவராய் விளங்குதலின் –
நீலன் தனக்கு உலகில் இனியானை-என்கிறார் –

நீலன் தனக்கு –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலியன் உரை செய்த வண் ஒண் தமிழ்-என்று
ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இறே –

உலகில் இனியானை –
இவ் விபூதியில் சமஸ்த பாப ஜனங்களும்-அதி பிரியகரரான –
ஸ்ரீ பரகால முகாப்ஜமித்ரம் -என்று ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –

எங்கள் இராமானுசனை –
என்னைப் போலே எல்லாரையும் உத்தர்பிக்கைக்காக வந்து-அவதரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானாரை –

வந்து எய்தினரே
ஸ்ரீ மான் ஆவிரபூத பூமவ்ர ராமானுஜ திவாகர –என்னும்படியான பிரபாவத்தை அறிந்து வைத்து –
சபக்தி பண்ணி ஆஸ்ரயித்த பாக்யவான்கள்-

அக்கரை என்னும் அநர்த்தக்கடல் -சம்சாரம் / இக்கரை ஏறி-என்று பரமபதத்தையும் அருளிச் செய்வார்களே –

வந்து எய்தினர் –
சென்று ஆஸ்ரயித்தவர்கள் என்னாது வந்து ஆஸ்ரயித்தவர்கள் என்கிறார் –
தாம் எப்பொழுதும் பிரியாது ஸ்ரீ எம்பெருமானார் சந்நிதியிலேயே இருப்பவர் ஆதலின் – எய்தினர் –
வினையால் அணையும் பெயர் –
நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான காதல் விஞ்சியவராய் –
காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே இன்பமாகவும் கொண்டு இருத்தலின் –
ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
ஸ்ரீ எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக —

முனியார் துயரங்கள் முந்திலும் –
துக்கங்கள் ஆனவை அஹம் அஹம் என்கையாய் வந்து மொசிந்தாலும்-இவை வந்ததே என்று வியாகுலப் படார்கள்-
முனிவு -வெறுப்பு .

இன்பங்கள் மொய்ந்திடிலும் கனியார் மனம் –
சுகங்களானவை ஏகோத் யோகென வந்து திரண்டாலும் இந்த அதிசயம் நமக்கு வந்ததே என்று பக்வ பலம்-போலே –
மனசிலே ஏகாகாரங்களாய்
மொய்த்தல் -திரளுதல் –
ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் -என்றார் இறே ஸ்ரீ கீதாசார்யரும் .
மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் –
துன்பத்தையும் இன்பத்தையும் துல்யமாக பார்க்கிறவர்கள் ஸ்ரீ எம்பெருமானார் அடியார்கள் -என்றபடி –
துன்பங்களோ இன்பங்களோ -கன்ம பலங்களாக தாமே வந்து தாமே தொலைகின்றன –
கர்மம் தொலைகின்ற்றது என்று அமைதியாய் இருத்தல் வேண்டும் -என் தளரவோ கிளறவோ
வேண்டும் எனபது அவர்கள் உறுதிப்பாடு –
ந ப்ரகுருஷ்யேத் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் -கீதை – 5-20 – என்று விரும்பிய பொருளைப் பெற்று களிப்புறலாகாது –
விரும்பத் தகாத பொருளைப் பெற்று வெறுப்பு உறலும் ஆகாது -எனபது இங்கு நினைவு உரத்தக்கது –
ஆன்ம தத்தவத்தின் உண்மை நிலையை தத்துவ ஞானிகள் இடம் இருந்து தெரிந்து அதனைப் பெற முயல்வானாய் –
உடலையே ஆன்மாவாக கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –ஸ்த்திரமான ஆத்மா தர்சன சுகத்தில் நிலை நிற்றலின் –
அஸ்திரமான பொருள்களைப் பற்றிய களிப்பும் கவர்வும் அற்றவனாய் இருத்தல் வேண்டும் என்கிறது இந்த ஸ்ரீ கீதா ஸ்லோகம் –
ஸ்ரீ எம்பெருமானைப் பற்றினவர்களும் –தத்துவம் அறிந்த பெரியோர் இடம் இருந்து ஆசார்யனுக்கு உரிமை பட்டு இருத்தலே
ஆன்ம தத்துவத்தின் உண்மை நிலை என்பதை தெரிந்து அந்நிலையிலே ஊன்றி நிற்க முயல்வராய் உடலையும் உடல் உறவு
படைத்தவர்களையும் -நான் எனது -என்று கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –
ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின்
அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள் -என்க –

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக, எய்தற்க; யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே–திருவாய்மொழி-2-9-5-

இங்கு –
ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவர்வும் இவற்றால்’
பிறக்குமோ தற்றேளிந்த பின் – ஞான சாரம் -17 – என்று
விண்ணவர் கோன் செல்வம் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –
தற்றேளிந்த பின் -தன் ஸ்வரூபத்தை தெளிவாக அறிந்த பிறகு
பின் இவற்றால் களிப்பும் கவர்வும் பிறக்குமோ என்று கூட்டிப் பொருள் கூறுக –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –16- தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து இத்யாதி —

March 31, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்வ லாப அனுசந்தானத்தாலே ஹ்ருஷ்டரானவர் –
எல்லாரும் தம்மைப் போலே தத் விஷய பிரவணர் ஆகைக்கு உறுப்பாக –
பகவத் வல்லபையான ஸ்ரீ ஆண்டாள் உடைய ப்ரஸாத பாத்ரமான ஸ்ரீ எம்பெருமானார்
லோகத்துக்கு செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ பெரியாழ்வார் சம்பந்தத்தை இட்டு ஸ்ரீ எம்பெருமானாரைக் கொண்டாடி –
இப்பாட்டிலே –அந்த ஆழ்வாருடைய பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாளுடைய ஸ்வபாவிக கிருபையாலே வாழ்ந்து கொண்டு –
பரமோதார ஸ்வபாவராய்-அத்தாலே எல்லார்க்கும் பரம பதத்தை கொடுக்கைக்கு மனனம் பண்ணிக் கொண்டு போருகிற ஸ்ரீ எம்பெருமானார் –
வேத மார்க்கம் எல்லாம் அழிந்து -பூ மண்டலம் எங்கும் ஒக்க -வியாபித்து கலியானது -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –
விண்ணின் தலை நின்றும் – மண்ணின் தலத்து உதித்து -எல்லாரையும் ரஷித்து அருளின நல்லன்பர் என்று சர்வரும் தம்மைப் போலே
தத் விஷய ப்ரவணர் ஆகைக்கு உடலாக அவர் செய்து அருளின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தாழ்வு வர வழி இல்லாத வாழ்வு தமக்கு கிடைத்தது போலே எல்லோருக்கும் கிடைக்க வேணும் என்ற பெரு நோக்குடன் –
அவர்கட்கு ஸ்ரீ எம்பெருமானார் திறத்தும் -அவர் குணங்களை சார்ந்தோர் திறத்தும் -ஈடுபாடு உண்டாவதற்கு உறுப்பாக –
அரங்கற்கு இனிய துணைவியான ஸ்ரீ ஆண்டாள் அருளினால் வாழ்வு பெற்றவரான ஸ்ரீ எம்பெருமானார் மறை நெறியை
நிலை நாட்டி -கலியைக் கெடுத்து -உலகினுக்கு பேருதவி புரிந்ததை அருளி செய்கிறார்

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

பத உரை –
அரங்கர் -திருவரங்கத்து அம்மானுடைய
மௌலி -திரு முடியில்
சூழ்கின்ற -சுற்றிக் கொள்கிற
மாலையை-திரு மாலையை
சூடி-தன் குழலிலே அணிந்து
கொடுத்தவள் -கொடுக்கும்பெருமை வாய்ந்த ஆண்டாள் உடைய
தொல் அருளால்-இயல்பான கிருபையினாலே
வாழ்கின்ற -வாழ்ந்து கொண்டு இருக்கிற
வள்ளல்-பெரும் கொடை யாளியும்
மா முனி -பெருமை வாய்ந்த முனிவர்
என்னும்-என்றும் சொல்லப்படுபவரான
இராமானுசன் -எம்பெருமானார்
தாழ்வு ஓன்று இல்லா -குறை ஒன்றும் இல்லாத
மறை-வேதம்
தாழ்ந்து -இழிவு பட்டு
அதனால்
தலம் முழுதும்– பூமி எங்கும்
கலியே -கலி புருஷனே
ஆள்கின்ற காலத்து -தனிக் கோல் செலுத்துகிற காலத்திலே
வந்து -தாமாகவே வந்து
அளித்தவன் காண்மின் -உலகத்தை காத்து அருளினவர் காணுங்கள்

ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருமுடியை -சூழா நின்று உள்ள திரு மாலையை -தன்னுடைய திருக் குழலிலே சூடி
வாஸிதம் ஆக்கிக் கொடுத்த வைபவத்தை உடையளான ஸ்ரீ ஆண்டாள் உடைய ஸ்வாபாவிகமான கிருபையையே
விளை நீராக வாழா நிற்பவராய் –பரம ஒவ்தாரராய் -முனி ஸ்ரேஷ்டரான -ஸ்ரீ எம்பெருமானார் –
நித்யத்வ -அபௌருஷேயத்வ -யுக்தமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய் -யதாபூதவாதயாய் –
இருக்கையாலே -ஸ்வ பிரமாண்யத்தில் -ஒரு குறை வற்று இருக்கிற வேதமானது -பாஹ்ய குத்ருஷ்டிகளாலே –
அபிபூதமாய் கொண்டு -இழிவு பட்டு -தீப சங்கோசத்தில் திமிரவ்யாப்தி போலே பூமி எங்கும் கலி யுகமானது
தனிக்கோல் செலுத்துகிற காலத்திலே-அபேஷா நிரபேஷமாய் வந்து -அந்த வேதத்தை உத்தரிப்பித்து –
லோகத்தை ரஷித்து அருளினவர் காணும் கோள்–ஆதலால் நீங்களும் என்னைப் போலே அவரை அல்லாது
அறியோம் என்று இருக்கை அன்றோ அடுப்பது என்று கருத்து –

நவ நீதம் ஐயங்கவீனம் புதிதாக வரும் வெண்ணெய் -அக்கார அடிசில் பாலில் காய்ச்சி
நீரிலே இல்லாமல்-சமைத்த அன்னம் -ஸ்ரீ திருமால் இரும் சோலை -விருத்தாந்தம் -ஸ்ரீ கோதாக்ரஜர் -ஸ்ரீ கோயில் அண்ணன் –
ஸ்ரீ திருப்பாவை ஜீயர்-ஆசை உடையார்க்கு என்று அருளிய வள்ளல் தன்மை -நமக்காக சரணாகதி செய்து அருளிய வள்ளல் –
ஸ்ரீ திருப்பாவை ஜீயர் –உபாயம் அறிந்து -ஸ்ரீ கோயில் அண்ணன்–உபேயம் கைங்கர்யம் –
த்வயார்த்தம் திருப்பாவை நாச்சியார் திருமொழி மூலம் அறிந்து பெற்ற இரண்டு திரு நாமங்கள் –

அரங்கர் மௌலி
ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் தானே
ஸ்ரீ வில்லி புத்தூரிலே ஸ்ரீ வட பெரும் கோவில் உடையான் என்னும் திரு நாமத்தை உடையராய் கொண்டு
கண் வளர்ந்து அருளுகையாலே -அவரை -அரங்கர் -என்று அருளிச் செய்கிறார் –
அப்படி பட்ட ஸ்வாமி உடைய-உத்தமாங்கத்துக்கு-

சூழ்கின்ற மாலையை
அலங்கரிக்கத் தக்க புஷ்ப மாலையை -சூடிக் கொடுத்தவள்-முந்துற முன்னம்
குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும்- 4-11-
சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்ப் பத்தும் வல்லார் -9-10-
தாழ் குழலாள் துணிந்த துணிவை -12-10-
தாழ் குழலாள்–என்னும்படியான தன்னுடைய திருக் குழலிலே அலங்கரித்துக் கொண்டு -அது தன்னைக் களைந்து
ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கும்படி கொடுத்தவள் -இப்படி யாகையாலே இவளுக்கு -சூடிக் கொடுத்தவள் -என்று அதுவே நிரூபகமாய் ஆய்த்து –
சூடிக் கொடுத்த சுடர் கொடியே -என்னக் கடவது இறே –

அரங்கர் –
மௌலி சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் –
ஸ்ரீ அமுதனார் ஏனைய இடங்களில் போலே அரங்கன் -என்னாது அரங்கர் -என்று பன்மையில் கூறுகிறார் –
ஸ்ரீ ஆண்டாள் ப்ரணய ரோஷம் தலை எடுத்து அங்கனமே பலகாலும் பன்மையில் சொன்னதை அப்படியே கை யாண்ட படி –
இனி முக்தி அடைந்தவர்கள் தங்கள் இன்பத்துக்கு போக்கு வீடாக ஸ்ரீ எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யப்
பல வடிவங்கள் கொள்வது போலே –
ஸ்ரீ அரங்கனும் ஆண்டாள் மீது உள்ள காதல் மிகுதியால்
ஸ்ரீ ரங்கத்தில் உள்ள வடிவோடு அமையாது அவளது அவதார ஸ்தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரிலும்
ஸ்ரீ வட பெரும் கோயில் உடையான் வடிவம் கொண்டு காத்துக் கிடத்தலின் அரங்கர் -என்று பன்மையில் கூறினார் ஆகவுமாம்-
இதனால் ஸ்ரீ வட பெரும் கோயில் உடையானுக்கு அன்றோ அவள் சூடிக் கொடுத்தது –
அரங்கர்க்கு சூடிக் கொடுத்ததாக கூறுவது எங்கனம் பொருந்தும் என்னும் கேள்விக்கு விடை இறுத்ததும் ஆகிறது –

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் ––இரண்டாம் திருவந்தாதி – 70-
தலையரங்கம்– -என்றபடி திருவரங்கமே தலைமையகமாகவும்
ஏனைய திவ்ய தேசங்கள் கிளை யகங்களாகவும்-அரங்கனே எல்லா இடங்களிலும் எழுந்து அருளி இருந்து
அருள் புரிவதாகவும் கூறப்படும் சம்ப்ரதாயமும் இங்கு உணரத் தக்கது –

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–-நாச்சியார் திரு மொழி-4-1-
பிரணயிநி முகம் காட்டுவது ஓலக்கத்திலே அன்றே –படுக்கையிலே இறே -அதாகிறது –கோயிலாய்த்து –
பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று
ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்

தொண்டர்கள் சூடிக் களைந்தன சூடிடுவர் –
இங்கே அண்டர் கோனான ஸ்ரீ அரங்கன் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்-களைந்தன சூடும் தொண்டன் ஆகிறான் –
அவ்வளவு காதல் ஆண்டாள் மீது மண்டிக் கிடக்கிறது ஸ்ரீ அரங்கனுக்கு
நம்மது போன்று அரங்கனது தொண்டு இயல்பான தொண்டு அன்று –காதல் அடியாக வந்தது அது –
ஆதலின் அது நிறையே -குறை அன்று -என்று உணர்க –
இனி அடியாளாகிய ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுப்பது தகுமோ -எனில் கூறுவாம் –
ஆண்டாள் தான் தன அழகைக் கண்டு களிப்பதற்க்காக சூடிக் கொண்டாள் அல்லள்-
மருங்கே அரங்கன் வந்து நிற்பதை மனக் கண்ணால் கண்டு அலங்கலால் அலங்கரித்து கொண்ட நிலை
அக் குழல் அழகருக்கு இயைந்து இருக்கிறதா என்பதை அவள் பார்த்தாலே அன்றி –
தான் தன அழகை கண்டு களித்து இலள்-அம் மலரின் மணம் நுகர்ந்து மகிழ்ந்து இலள் என்று அறிக –
அவன் உகப்புக்கு உறுப்பாய் இருப்பதையே லஷ்யமாக கொண்டவள் ஸ்ரீ ஆண்டாள் என்க –

ஸ்ரீ சபரி தன் நாவுக்கு இனியனவாய் இருந்த பழம் முதலியவற்றை ஸ்ரீ இராம பிரானுக்கு என்று சேர்த்து வைத்து கொடுத்து
அவனை மிகவும் மகிழ்வித்தது போலே –
ஸ்ரீ ஆண்டாளும் தன் சுரும்பார் குழலுக்கு ஏற்ற பூக்களை சேர்த்து மாலையாக தலை மிசை வைத்து
ஸ்ரீ அரங்கருக்கு கொடுத்து அவனை மிகவும் மகிழ்விக்கின்றனள் -என்க-

இருவரும் ஆச்சார்ய நிஷ்டையை உடையவர்கள் ஆதலின் அவர்கள் கொடுத்தவைகளால் ஸ்ரீ இராம பிரானுக்கும்
ஸ்ரீ அரங்கருக்கும் -அளவு கடந்த ஆனந்தம் உண்டாகிறது –
ஸ்ரீ அகஸ்தியர் முதலிய முனிவர்கள் கொடுத்தவைகளில் அவ்வளவு ஆனந்தம் இல்லை –
ஸ்ரீ பெரியாழ்வார் உகந்து -பூச்சூட்ட வாராய் -என்று அழைத்து சூட்டிய பூக்களிலும் இவ்வளவு ஆனந்தம் இல்லை –
ஆச்சார்ய நிஷ்டை உடையளான ஸ்ரீ சபரி ருசி பார்த்தவை மிகவும் இனித்தன ஸ்ரீ இராமபிரானுக்கு –
அத்தகைய நிஷ்டை உடைய ஸ்ரீ ஆண்டாள் சூடியவை மிகவும் மணத்தன ஸ்ரீ அரங்கற்கு-

சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்ப் பத்தும் வல்லார் -9-10-
சுரும்பார் குழல் கோதை யாதலின் இயல்பாகவே மணம் கமழுகின்றது கூந்தலிலே
உத்தம பெண்களின் கூந்தலிலே இயல்பாக மணம் உண்டு என்பதை-
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி –நறியவுமுளவோ நீ யறியும் பூவே – என்னும் குறும்தொகை செய்யுளாலும் அறியலாம்-
இச் செய்யுளை ஒத்த –
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–திரு விருத்தம் – 55-இங்கு அறியத் தக்கது –

இயல்பாய் அமைந்த கூந்தல் மனத்துக்கு மேலே –
நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே––திருவாய் மொழி – 1-4 9–

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-

நாடாத மலர் – நறிய நன் மலர் நாடி- எனப்படும் ஆத்ம புஷ்பத்தின் உடைய ஆசார்ய பாரதத்ரியம் என்னும்
மணமும் கூடவே ஸ்ரீ ஆண்டாள் சூடிய மாலை-நிகரற்ற நறு மணம் கமழுவது ஆயிற்று
இங்கனம் செழும் குழல் மேல் மாலைத் தொடை ஸ்ரீ தென்னரங்கற்கு ஈயும் மதிப்பு உடையவள் ஆனாள் ஸ்ரீ ஆண்டாள் –
இதனையே -தன்னுடைய திருக் குழலிலே சூடி வாசிதமாக்கி கொடுத்த வைபவத்தை உடையவள் -என்று
இவ்விடத்திலே உரையை அருளி செய்தார் ஸ்ரீ பெரிய ஜீயர்-

ஸ்ரீ வேதாந்த தேசிகனும்
ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேச வச்யாத் காணாம்ருதை
ஸ்துதிசதை ரனவாப்த பூர்வம் தவன் மௌளிகந்த சூபகா
முபஹ்ருத்யமாலாம் லேபே மகத்தர பதானுகுணம் பிரசாதம் -என்று
தாயே உனது தந்தை சிறிது துதித்தாலும் வசப்படும் ஸ்ரீ மதுசூதனாகிற ஸ்ரீ அரங்கன் இடம் இருந்து
செவிக்கு இனிய அமுதாய் அமைந்த நூற்றுக்கணக்கான பாடல்களால் இது வரையிலும் பெற்று இடாத
மிகப் பெரியவர் -ஸ்ரீ பெரியாழ்வார் -என்னும் பதவிக்கு தக்க அனுக்ரகத்தை
நின் கூந்தல் மணத்தால் சீர்மை பெற்ற மாலையை சமர்ப்பிப்பதன் மூலம் பெற்று விட்டார் -என்று ஸ்ரீ கோதா ஸ்துதியில் அருளியதும்
இங்கு அனுசந்திக்க தக்கது –

இங்கு ஸ்ரீ பெரியாழ்வார் ஆனது கூந்தல் மணம் கமழும் ஸ்ரீ ஆண்டாள் மாலையை சமர்ப்பித்ததனால் என்றது –
சமர்ப்பித்ததன் மூலம் ஸ்ரீ அரங்கனுக்கு மாமனார் ஆகி அமரர்கள் வந்திக்கும் பெருமை எய்தியதைக் கருதி -என்க –
இது எக்காலத்தும் மற்றைய ஸ்ரீ ஆழ்வார்களுக்கு இல்லாத தனிப் பெருமை அன்றோ –
சர்வ கந்த -எல்லா வாசனை -ஸ்வரூபனாக சொல்லப்படும் ஸ்ரீ அரங்கன்
இவள் சூடிக் கொடுத்த மாலையின் கனத்தை ஆதரவுடன் ஏற்கிறான் எனின் இந்த ஆண்டாள் உடைய
வீறுடைமையை பற்றி நாம் என் என்பது –
அடியிலே வேத மணம் –
நாபியிலே தாமரை மணம்-
மார்பகத்திலே மலராள் கொங்கையில் பூசின சந்தன மணம் –
இவ்வளவு இருந்தும்
ஸ்ரீ ஆண்டாள் பேர் அவாவுடன் சூடிக் கொடுத்த மாலையை தலையாலே தாங்குகிறான் ஸ்ரீ அரங்கன் –
தலையாய மணத்தை தலையாலே தானே தாங்க வேணும் -இதனை –
தத்தே நதேனசிரசாதவ மௌலி மாலாம் -உன்னுடைய தலயில் சூடிய மாலையை
வணங்கிய தலையாலே தாங்கிக் கொண்டு இருக்கிறான் -என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் வர்ணிக்கிறார் –
தலை வணங்கி ஏற்கும் படியான மதிப்பு ஸ்ரீ அரங்கனுக்கு ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையிலே –
அத்தகைய மதிப்பு தோற்ற அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலை -என்கிறார் –

முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கதறத் துழாய் சேர் கழல் அன்றி -மற்று ஒன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து -ஞான சாரம் – 8- – என்கிறபடி
பயன் கருதாத பரமை காந்திகள் செய்வது அனைத்தையும் உச்சியால் ஏற்கும் அவன்
காதலியான காரிகை சூடிக் கொடுத்ததை தலையாலே தாங்கக் கேட்க வேணுமோ –

சூடிக் கொடுத்த மாலையை திரு முடியிலே ஒரு புறத்திலே மட்டும் தாங்கினால் போதாதாம் -திருப்தி இல்லை
ஆசை தீர முடி எங்கும் படும்படி சூழ்கின்றதாக அந்த மாலையை தாங்க வேண்டுமாம் –
அது தோன்ற-மௌலி சூழ்கின்ற மாலை-என்றார்
சூடிக் கொடுத்தவள்-என்பதையே திரு நாமமாக அமைத்தார் -அவள் பிரபாவம் அனைத்தும் தோற்றுதற்கு-
மேலே இவளது தொல் அருளால் வாழ்கின்றவராக ஸ்ரீ எம்பெருமானாரை சொல்லுவதற்கு ஏற்ப
இவளுடைய அருளின் வீறுடைமை தோற்ற சூடிக் கொடுத்தவள் -என்னும் சொல் அமைந்து உள்ளது –

பிராட்டிமார்களுடைய அருள் இறைவன் மூலமாகத் தான் பலிக்க வேண்டும் –
பயன் தருபவன் இறைவனே –
அவனை தரும்படி செய்யுமவர்கள் பிராட்டிமார்கள் –
தரும்படி செய்திடினும் கட்டுப்பாடு அற்ற இறைவன் விரும்பா விடின் என் ஆகுமோ என்று அஞ்சுவதற்கு இடம் இன்றி
சூழ்கின்ற மாலையால் கட்டுப் பட்டவன் ஆயினான் அவன் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு ஸ்ரீ அரங்கன் இங்கனம் அன்புத் தொண்டனாக இருத்தலின் பயன் தப்பாது என்னும் உறுதிப் பாட்டை
அளிக்கின்றது –சூடிக் கொடுத்தவள்-என்னும் சொல் –

நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–

ஸ்ரஜி -மாலையால்
நிகளிதம்-விலங்கிடப்பட்டவனாய் இருக்கிற
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே –
தான் சாத்திக் கழித்த மாலையாகிற விலங்காலே இவனைப் பேராதபடி -விலங்கிட்டு யாவாள் ஒருத்தி -அவனை பலாத்கரித்து புஜித்தாள்-
ஸ்வ உச்சிஷ்டமாவது –
சூடிக் களைந்தது –
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் –
க்வயோபா புக்தஸ் ரக் கந்த –உச்சிஷ்ட பஷினோ தாஸாஸ் – என்னுமது பிரணயித்வத்தால் மாறாடிக் கிடக்கிறது
இப்படி ஈஸ்வரன் யதேஷ்ட விநியோர்ஹ அர்ஹனாம் படி தன்னை ஒக்கி வைக்கையாலே-
அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமே தோற்றுகிறது –
பார் வண்ண மடமங்கை பத்தர் இறே
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் இறே
வாசம் செய் பூம் குழலிலே வாசிதமாக்கிக் கொடுத்தபடி
ஸ்ரஜி நிகளிதம் -மாலையால் விலங்கு இடப்பட்டவன் –என்கிற ஸ்ரீ பட்டர் ஸ்ரீ சூக்தியை நினைக்க –

குற்றங்கள் புரிந்த வண்ணமாய் இருப்பவர்கள் இடமும் அருள் உடையளான ஸ்ரீ ரங்க நாச்சியார் அவர்களை காக்குமாறு
தெரிவிக்கும் போது பக்கத்தில் ஸ்ரீ ஆண்டாள் இல்லாது இருந்தால் அவன் அதனுக்கு இசையாது முகத்தை மாற வைத்து
இருப்பான் போலும் -என்று கோத ஸ்துதியில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளி செய்கிறார் –
ஸ்ரீ ரங்க நாச்சியாருக்காவன்றி ஸ்ரீ ஆண்டாளுக்காகவே ஸ்ரீ அரங்கன் காப்பாற்றுகிறான் என்றது ஆயிற்று –
சூடிக் கொடுத்தவள் -எனபது
பாடிக் கொடுத்தவள் என்பதற்கும் உப லஷணம்-
இன்னிசையால் பாடிக் கொடுத்தால் நற்பா மாலை பூ மாலை சூடிக் கொடுத்தாள்-என்னும் பிரசித்தி காண்க –
பூ மாலையை மௌலியில் சூடுகின்றான்-
பா மாலையை தலையில் வைத்து கொண்டாடி இன்ப வெள்ளத்தில் ஆழகின்றான் –

தொல் அருளால் –
உததி பரம வ்யேம் நோர்க்கவிஸ் ம்ர்த்யமாதர்ச ரேஷன ஷமமிதிதி யாபூயஸ் ஸ்ரீ ரங்க தாமனி மோதசே –என்றும் –
அனுக்ரஹா மயீம் வந்தே நித்ய அஞ்ஞான நிக்ரஹாம் -என்றும் சொல்லுகிறபடி
அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –

வாழ்கின்ற –
அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -ஸ்ரீ எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –
ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -ஸ்ரீ அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்கச் செய்தே –
பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –

வள்ளல்-
இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை
இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –
கால த்ரயேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ –
சரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத்ச்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை –
ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-

தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்
தொன்மையான அருள்–இயல்பான அருள் என்றபடி
உலகிற்கு தந்தையான ஸ்ரீ அரங்கன் கைப்பிடிததனாலும் –
சாஷாத் ஸ்ரீ பூமிப் பிராட்டி யாதளாலும் உலகிற்கு தாய் ஆகிறாள் ஸ்ரீ ஆண்டாள் –
இனி பிரபன்ன சந்தானத்துக்கு தாயாக ஸ்ரீ ஆண்டாளைக் கொள்வது பற்றியும் சீரிய தாய் ஆகிறாள் ஸ்ரீ ஆண்டாள் –
திரு அருள் இயல்பானது அன்றோ –
பன்னகத்திலே கிடக்கும் பரமனை காதல் ரசம் ததும்பும் தன்னகத்திலே வைத்து பண்படித்திய பெண்மணியான
ஸ்ரீ ஆண்டாளுடைய இயல்பான அருள் ஸ்ரீ எம்பெருமானாருக்கு கிடைத்தது –

அவள் மீது பக்தி அரும்பியது -அவள் பாடல்களில் ஈடுபடல் ஆனார்
ஸ்ரீ கண்ணனாம் ஸ்ரீ அரங்கன் மீது காமம் மீதூர்ந்தது –
அருளியவள் மீதும் –
அருளிச் செயல் மீதும் –
அதில் நுவலப்படும் அரங்கன் மீதும் நிரந்தரமான பக்தி உண்டாயிற்று –
ஸ்ரீ ஆண்டாள் உடைய அருளி செயல்களான திருப்பாவை யினுடையவும்-நாச்சியார் திருமொழி யினுடையவும் –
உண்மை பொருள்கள் அவர் திரு உள்ளத்தில் துளங்கின –
வேதப் பொருள்கள் எல்லாம் அவற்றில் அடங்கி இருப்பதைக் கண்டார்
வேதம் காட்டும் தூய அற நெறி அவைகளிலே துலங்கியது –
நாராயணனே நமக்கேபறை தருவான் – என்னும் தொடக்கத்திலேயே அவருக்குத் துலங்கி விட்டது –
அத் தூய நெறி நாராயணனே –
அந் நெறி நமக்காக ஏற்பட்டது -நான் அந் நெறியிலே நடக்க வேண்டும் –
அந் நெறி பறையிலே-கைங்கர்யம் என்னும் பேற்றிலே – நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்கும் –

அந் நெறியிலே நடப்பதாவது
நாராயணன் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி நிற்கை -இதுவே தூய நெறி –
மற்றவைகள் அஹங்கார கலப்புடையவை யாதலின் தூயன அல்ல -இதனையே திருப் பாவை முழுதும் அறிவுறுத்துகிறது –
இங்கனம் முடிவு கட்டி எத்தனை கற்ப கோடி காலம் ஆனாலும் ப்ரபத்தியை தவிர வேறு வழி இல்லை என்று துணிந்து –
பறை தரும் நாராயணன் என்னும் அற நெறியையே பற்றி நின்றார் –
நாச்சியார் திரு மொழியில் கேசவ நம்பியைக் கால் பிடிப்பது என்னும் பேற்றில் உண்டான ஆசை
சாதனம் ஆகாவிடினும் மேலும் மேலும் வளர்ந்து ஆற்றாமையாக முற்றிப் பேற்றினைக் கண்டாக
வேண்டும் என்னும் நிலையை விளைவிக்கும் என்பதனையும் கண்டு கொண்டார் –

நாராயணனைப் பற்றினோர்க்குப் பேறு தப்பாதலின் -மன ஒர்மைவுடன் அதனைப் பெரும் விதத்தினை
நாள் தோறும் நினைத்து -அதனை சாதனமாக கருதாது –
வாழ் நாள் வீண் ஆகாத படி இன்பம் எய்தி –
எப்பொழுது பகவானைக் கண்ணால் காண்பேன் –
எப்பொழுது திருவடிகளைத் தலையால் தாங்குவேன் –
எப்பொழுது என்னை முகப்பே கூவிப் பணி கொள்ளப் போகிறான் -என்று பேற்றினில் ஆசையை வளர்த்துப்
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத ஆற்றாமை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செயலின் படி
தான் நின்றதோடு தம்மை அண்டினாரையும் அவ்வாறே நிற்கும்படி செய்தார் ஸ்ரீ எம்பெருமானார் –
உபநிஷத்துக்களில் தெளிவற்ற நிலையில் சொல்லப்படும் பொருள்கள் தெள்ளத் தெளிய திருப்பாவை யாகிய கோதோ உபநிஷத்தில்
சொல்லப் பட்டு இருப்பது கண்டு விசேஷித்து அதனில் மிக்க ஈடுபாடு கொண்டார் –
சந்நியாசிகள் உபநிஷத்தை அனுசந்திக்க வேண்டும் என்னும் முறைக்கு ஏற்ப
ஸ்ரீ எம்பெருமானார் அனுசந்திக்கும் உபநிஷத்தாய் அமைந்தது -திருப்பாவை –
அதனால்-திருப்பாவை ஜீயர் -என்ற பிரசித்தி அவருக்கு ஏற்பட்டது-

நாச்சியார்திருமொழியில் – 9-6 – நூறு தடாவில் வெண்ணெய் சமர்ப்பிபதாக ஸ்ரீ ஆண்டாள் பிரார்த்தனை செய்து கொண்டதை
அவள் சந்தானத்தில் பிறந்த நமக்கு நிறைவேற்றுவது பொறுப்பாகும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ அழகருக்கு
சமர்ப்பித்து நிறைவேற்றி நம் ஸ்ரீ கோயில் அண்ணன் -என்று ஸ்ரீ ஆண்டாளாலே விசேஷித்து
அபிமானிக்கப் பெற்றதும் இங்கு அறியத் தக்கது –

இவ்விதம் ஸ்ரீ ஆண்டாள் அருளி செயல்களின் ஆழ் பொருள்களை ஆரணத்தின் பொருள்களாகத் தெரிந்து
அவைகளுக்கு ஏற்ப தாமும் ஒழுகி
தம்மை அண்டின பல்லாயிரக் கணக்கில் உள்ள சீடர்களையும் ஒழுகுமாறு செய்து –
கடல் வண்ணன் பூதங்கள் ஆக்கித் தலம் முழுதும் எங்கும் இடம் கொள்ளும்படி செய்து விட்டார் -ஸ்ரீ எம்பெருமானார் –
செய்யவே கலியின் தனி கோல் ஆட்சி சாய்வுறத் தொடங்கியது –
மறைந்த மறை யாட்சி மீண்டும் தலை தூக்கத் தொடங்கியது –
கிருத யுக தர்மம் கிளர்ந்து எழுந்தது –
மறைக்கு அவப் பொருள் கண்ட குத்ருஷ்டிகளும் அது பிரமாணம் ஆகாது என்று ஒதுக்கிய பாஹ்யர்களும்
ஸ்ரீ பாஷ்யம் முதலிய நூல்களாலும் வாதங்களாலும் வெல்லப்பட்டு இருக்கும் இடம் தெரியாதபடி ஓடி ஒளிந்தனர் –
தன்னைக் கை விட்டு தன் கை ஆட்கள் ஓடி ஒளியவே-கலி தானே கெட்டு ஒழிந்தான் –
அல்லா வழிகள் அனைத்தும் மறைந்தன –
மறையின் பண்டைய தூய நெறி புதுமை பெற்றுத் துலங்குகிறது –
அந் நெறியில் தான் நின்று -இனிக்க வருமவை கவர -சோகம் இகந்து –
இமையவரான நித்ய சூரிகளுக்கு நிகராக வாழ்கின்றார் ஸ்ரீ எம்பெருமானார் –
வள்ளல் ஆதலின் தான் பெற்ற வாழ்வை தாரணிக்கு எல்லாம் வழங்கி வாழ்விக்கிறார் என்னும் கருத்துடன்-
தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்-என்கிறார் –
ஸ்ரீ ஆண்டாள் தொல் அருளே ஸ்ரீ எம்பெருமானார் வாழ்வுக்கு எல்லாம் அடித்தளமாய் அமைந்தமை பற்றித் –
தொல் அருளால் வாழ்கின்ற -என்றார் –

மா முனி –
இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

இராமானுசன் என்னும் மா முனி –
மா முனி என்னும் இராமானுசன் என்று மாற்றுக –
ஸ்ரீ இராமானுசனே இந் நூலில் எங்கும் அடை கொளி யாய் இருத்தலில் இங்கும் அங்கனமே கொண்டு
முநி ஸ்ரேஷ்டரான ஸ்ரீ எம்பெருமானார் -என்று உரை அருளினார் ஸ்ரீ மணவாள மா முனிகள் –

வேதம் அனைத்துக்கும் வித்து ஆண்டாள் சம்பந்தத்தால் எம்பெருமானார் மா முனி ஆனார் இந்த பாசுரத்தில் —
வர வர முனி பின்பு புனர் அவதாரமாக -வர போவதை பொசிந்து காட்ட –

அரங்கர் –வாழ்கின்ற வள்ளல் மா முநி என்னும் இராமானுசன் கலியே ஆள்கின்ற நாள் வந்து
அளித்தவன் காண்மின் -என்று கூட்டிப் பொருள் கொள்க –

தாழ்வு ஒன்றும் இல்லா மறை
வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –
ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம்
அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை

மறை தாழ்ந்து –
இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் –
கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை சங்கோசிப்பித்து அழித்தபடி –
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே –
கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டாரமீச்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பகதாஜன -என்றும் –
அந்தஸ் சக்தாம் -பஹிஸ் சைவம் சபரமேத்யது வைஷ்ணவம் கலவ் கஷ்டா ப்ரவர்த்தந்தே வர்ணாஸ்ரம ஜனாமுனே
கலவ் கார்த்த யுக தர்மம் கர்த்தும் இச்சதி யோ நர ச்வாமித்ரேர் ஹீதிதம் மத்வா தஸ்மை பிரத்விஷதே கலி -என்றும் சொல்லுகிறபடி –
நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து –
ப்ரத்யஷம் அனுமானம் சப்தம் -என்று பிரமாணங்கள் மூன்று
அவற்றுள் சப்த பிரமாணத்தில் அடங்கியது மறை எனப்படும் வேதம் –
அது என்றும் உள்ளது -நித்தியமானது -யாராலும் ஆக்கப்படாதது -அபௌருஷேயமானது –
என்றும் உள்ளமையாவது -சொற்களின் அமைப்பு முறை எல்லா காலத்திலும் ஒரு படிப் பட்டு இருக்கை –
உலகும் உயிரும் இல்லாத பிரளய காலத்திலும் -இறைவனுடைய திரு உள்ளத்திலே இச் சொற்களின் அமைப்பு முறை
அப்படியே சம்ஸ்கார ரூபமாய் இருந்து -சிருஷ்டி காலத்தில் அதனை பிரமனுக்கு அவன் வெளி இட்டான் -என்பர் –

யாராலும் ஆக்கப் படாமை யாவது –
ஒருவன் தன் இஷ்டப் படி சொற்களை கோக்கும் வாக்யமாக அமையாது
தானே பொருள் அமைந்த வாக்யமாய் இருத்தல் –
இங்கனம்-என்றும் உள்ளதும்-ஆக்கப் படாததும் -சப்த ரூபமுமான வேதத்துக்கு பிரமாண்யம் இயல்பாய் அமைந்தது –
பிரமாண்யம் ஆவது -உண்மை அறிவுக்கு சாதனமாய் இருத்தல் –
சப்தம் இயல்பினில் உண்மை அறிவை தரும் பிரமாணம் -அது அங்கனம் சில இடங்களில் உண்மை அறிவினை
தராமல் இருப்பது அதன் குற்றம் அன்று –
அதனை உபயோகிப்பார் இடம் உள்ள அறியாமை -கவனம் இன்மை -ஏமாற்றும் எண்ணம் – முதலிய குற்றமே என்பர் ஆன்றோர் –
நைவ சபதே -ஸ்வதோதோஷ ப்ரமாண்ய பரிபந்தின சந்தி கிந்து ஸ்வ தஸ் தஸ்ய பிரமாணத்வ மிதி ஸ்த்திதி
வக்துராசாய தோஷேன கேஷசித் தத போத்யதே – என்று சப்தத்தில்
பிரமாணத்துக்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனின்
பிரமாணம் ஆகும் தன்மையே அதன் இடத்தில் இயல்பாக அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிரமாண தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில்
உள்ள குற்றத்தாலே சில இடங்களிலே வேறு படுகிறது -என்பது ஆளவந்தார் அருளிய ஆகம ப்ராமாண்யம் –

இயல்பினில் பிரமாணமாய் இருத்தல் என்னும் சிறப்புடன் மற்று ஒரு சிறப்பு அம்சமும் வேதத்துக்கு உண்டு-
ப்ரத்யஷம் அனுமானம் என்னும் மற்றைய பிரமாணங்களை விட தனி சிறப்பு வாய்ந்தது அது –
பிரத்யஷமும் -அதாவது -நேரே காணும் காட்சியும் -சில இடங்களில் பிரமாணம் ஆகாது –
பாதிக்கப் படுவதும் உண்டு -விளக்கின் ஜ்வாலையை நேரில் பார்க்கிறோம் -உண்மையில் அது ஒரே ஜ்வாலை அன்று –
ஒரே மாதிரியான பல ஜ்வாலைகள் -ஒன்றன் பின் ஒன்றாக உண்டாகி தொடர்ந்து அங்கே வருகின்றன –
விளக்கு ஏற்றும் போது ஜ்வாலை உண்டாவது போல தொடர்ந்து உண்டாகின்றன –
இறுதியில் அணையும் ஜ்வாலை போன்று தொடர்ந்து ஜ்வாலைகள் அணைகின்றன –
அதனால் தான் ஜ்வாலைகள் பலவாக நமக்கு தோற்ற வில்லை -இங்கனம் கொள்ளா விடில்
விளக்கு ஏற்றி நெடு நேரம் ஆன பிறகு நாம் பார்க்கும் பொழுது திரியும் எண்ணெயும் குறைந்து இருப்பதற்கு காரணம்கூற முடியாது –
திரியின் ஒரு பகுதி எரிந்ததும் அப்பகுதியை பற்றி இருந்த ஜ்வாலை அணைந்து விடுகிறது –
மற்று ஒரு பகுதியில் அதே ஷணத்தில் வேறு ஒரு ஜ்வாலை உண்டாகிறது –
இங்கனம் ஷன நேரத்தில் ஜ்வாலை அணைவதும் எழுவதுமாய் இருப்பது -விரைவு-பற்றி நம் கண்ணுக்கு புலப்படுவது இல்லை –
ஒரே ஜ்வாலை என்று பிரமிக்கிறோம் -இங்கே தீப ஜ்வாலைகள் வேறு பட்டன –
வெவேறு சாமக்ரிகளினால் -திரிப் பகுதி -எண்ணெய-உண்டாகுதலின் என்னும் அனுமானம் ஒரே ஜ்வாலை
என்னும் பிரத்யஷத்தை பாதிப்பதைப் பார்க்கிறோம் –

இவ்வாறே அனுமான பிரமாணம் பிரத்யஷ பிரமாணத்தால் பாதிக்கப் படுகிறது –
நெருப்பு சுடாது அது ஒரு பொருளாய் இருத்தலின் -என்கிற அனுமானம் தொட்டதும் சுடுகிற பிரத்யஷ அனுபவத்தால்
பாதிக்கப் படுவதைப் பார்க்கிறோம் –

வேதம் என்கிற பிரமாணமோ -மற்றை பிரமாணங்கள் ஆன பிரத்யஷத்தினாலோ அனுமானத்தினாலோ
எந்த விதத்திலும் பாதிக்க படுவது இல்லை –
இதனால் பிரமானங்களுக்குள் சிறந்த பிரமாணம் வேதம் என்றது ஆயிற்று –

இங்கே
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.—1-1-7—சுடர் மிகு சுருதி -என்கிற நம் ஆழ்வார் திவ்ய சூக்தியும்-
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரத்தால் கழிக்க ஒண்ணாத ஒளியை உடைத்தாய் இருக்கை -என்கிற
ஈட்டு ஸ்ரீ சூக்தியையும் அனுசந்திக்க தக்கன –
இத்தகைய வேதம் –
யதா பூதவாதிஹி சாஸ்திரம் -உள்ளது உள்ளபடி சொல்லுவது அன்றோ சாஸ்திரம் – என்றபடி உண்மையையே கூறும் –
போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –திருச் சந்த விருத்தம் – 72–
வேத நூல் ஓதுகின்றது உண்மை – என்பர்-திரு மழிசை பிரானும் –

இவ்வண்ணம் ப்ராமணயத்தில் எல்லா வகையிலும் ஏற்றம் உற்று இருக்கும் மறைக்கு
ஒரு வகையிலும் தாழ்வு இன்மையின் –தாழ்வு ஓன்று இல்லா மறை –என்கிறார் –

தாழ்வு ஓன்று இல்லா மறையும் தாழ்வு பட்டது பிற் காலத்திலேயே -தாழ்வு படுத்தல் ஆவது
இழிவு படுத்தல்-வேதம் நித்யம் அன்று -அபௌ ருஷேயம் அன்று அது பிரமாணமாக மாட்டாது – என்று இழிவு படுத்தினர் சிலர் –
அவர்களுள் பல கருத்து வேறு பாடுகள் இருப்பினும் வேதம் பிரமாணம் அன்று என்பதில் கருத்து வேறுபாடு இன்றி ஓன்று பட்டனர் அவர்கள்-
அங்கனம் அவர்கள் அனைவரும் ஒதுக்கி -வேதத்துக்கு உள் புகாது புறம்பே நின்று விட்டமையின் –
பாஹ்யர் -புற மதத்தவர் -எனப்படுகின்றனர் –

மற்றும் சிலர் அவர்களைப் போலே ஒதுக்காது -வேதத்தை பிரமாணமாக ஒத்துக் கொண்டு -உள் புகுந்தாலும் –
அது உணர்த்தும் உண்மை பொருளை காண்கிலாது -தம் தமக்கு தோற்றின வகையில் அவப் பொருளைக் காண்பவர் ஆயினர் –
இவர்கள் வேதத்தின் உள் புக்கும் பார்வை கோளாறினால் பொருளை உள்ளவாறு காணாமையின் –
குத்ருஷ்டிகள்-பார்வைக் கோளாறு உடையவர்கள்- எனப்படுகின்றனர் –
இவ் விரு திறத்தாராலும் வேதம் மாசு படுத்தப் பட்டு ஒளி மங்கி விட்டது –
ஒளி மங்க மங்க இருள் படர்வது போலே அற நெறியை காட்டும் வேத ஒளி குறைய குறைய கலி
புருஷன் உலகு எங்கும் பரவித் தனிக் கோல் செலுத்த முற்பட்டு விட்டான் –

பாஹ்யரும் குத்ருஷ்டிகளும் கலி புருஷனுடைய கையாட்கள் -மறை ஆட்சியை மாற்றினர்
அது காட்டும் நேரிய அற நெறியை மறைய செய்தனர் -வெவ்வேறு வழி அல்லா வழிகளைக் காட்டினர் –
உலகம் வழி திகைத்து அலமாந்தது -இதுவே தக்க சமயம் என்று கலி புருஷன்
தலம் முழுவதும் தன் ஆட்சியை பரப்பி நிலை நாட்டிக் கொண்டு விட்டான் -இதனைக் காட்டுகிறது –

மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே ஆள்கின்ற நாள்-என்னும் சொற்தொடர் –
மழை பெய்து நெல் விளைந்தது என்னும் இடத்து போலே –
தாழ்ந்து ஆள்கின்ற நாள் என்னும் இடத்துத் தாழ்ந்ததனால் ஆள்கின்ற நாள் -என்று பொருள் படுத்தல் காண்க –

கலியே –
ஏகாரம் பிரிநிலை கண் வந்தது -மறை ஆட்சி முழுதும் மறைந்தது -கலி ஆட்சி காலூன்றி நின்றது –
இருளும் ஒளியும் சேர்ந்து இருக்க இயலாது அன்றோ –

தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –
தீப சங்கோசத்தில் -திமிர வ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல்
செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் –
தேச காலங்கள் சமீசீநங்களானால் திருத்தி ரஷிக்கலாம்–
அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –
காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது

வந்து –
இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே –
ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-

அளித்தவன் காண்மின்
உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து –
ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்று கருத்து –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

வந்து அளித்தவன் –
உய்யும் வழி புலன் ஆகாது அலமரும் உலகு அனைத்தையும் -நலியா நிற்கும் கலி ஆட்சியினின்றும் விடுவித்து காப்பதற்காக –
எவருடைய வேண்டுகோளும் இன்றி -தாமே அவதரித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் என்றது ஆயிற்று –
அளித்தால் ஆவது –
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்–என்று–திருவாய்மொழி -5 2-1 – – கலியை கெடுத்து உய்யும் வழியை
புலப்படுத்தும் மறையை தாழ்வுற்ற நிலையிலிருந்து மேம்பட உயர்த்தி அது காட்டும் வீட்டு நெறிக்கண் செலுத்துதல்-
உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – 95 – என்று மேலே இவரே கூறுவதும் காண்க –
பவ பயா பிதப்த ஜன பாகதேய வைபவ பாவிதாவ தரனேனபகவதா பாஷ்யகாரேண-என்று சம்சார பயத்தாலே தவித்துக் கொண்டு
இருக்கும் மக்களின்-பாக்யத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பகவான் ஸ்ரீ பாஷ்ய காரருடைய அவதாரம் -என்னும்
ஸ்ருதப்ரகாசிகை ஸ்ரீ சூக்தி இங்கு நினைத்தற்கு உரியது –

காண்மின் –
இது அனுபவத்திலே கண்ட உண்மை அன்றோ –
நான் உபதேசித்து தெரிந்து கொள்ள வேண்டும்படி யாவோ இருக்கிறது என்கிறார் –
எனவே நீங்கள் ஒவ் ஒருவரும் -எனக்கு என்ன தாழ்வு இனி -என்னும்படி என்னைப் போலே அடியார் அளவும்
பெருகும் வண்ணம் ஸ்ரீ எம்பெருமானார் இடம் ஈடுபடுவதே அடுப்பது என்னும் கருத்தும் தோற்றுகிறது-இது குறிப்பு எச்சம் –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –15- சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை இத்யாதி —

March 30, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளிலே பிரவண சித்தரான எம்பெருமானார் குணங்களில்
அனந்விதரைச் சேரேன் -எனக்கு என்ன தாழ்வு உண்டு -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ குலசேகரப் பெருமாள் சம்பந்தத்தை இட்டு -தம்மாலே கொண்டாடப் பட்ட
ஸ்ரீ எம்பெருமானார் -தம்மை பரிகிரகித்த வைபவத்தை சொல்லி -இப்பாட்டிலே –
சர்வ பூத ஸூஹ்ர்த்தாய் சர்வ ரஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை -சாஷாத் கரித்து -அவனுடைய ரஷகத்யவாதிகளிலே கண் வையாதே –
பிரேம தசை தலை எடுத்து -அவனுக்கு என் வருகிறதோ என்னும் அதி சங்கையாலே-
திருப் பல்லாண்டாலே மங்களா சாசனம் பண்ணி -அவனுக்கு காப்பிட்ட
ஸ்ரீ பெரியாழ்வார் உடைய திருவடிகளுக்கு ஆஸ்ரயம் ஆக்கின திரு உள்ளத்தை உடையரான
ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை -தங்களுக்கு ஆஸ்ரயமாக பற்றி இராத
மனுஷ்யரை நான் கிட்டேன் -ஆகையாலே எனக்கு இனி என்ன குறை -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளை விட்டு -நீங்காத திரு உள்ளம் படைத்த ஸ்ரீ எம்பெருமானார் குணங்களை-
தங்களுக்கு சார்பாக கொள்ளாதவர்களை சேர மாட்டேன் -இனி எனக்கு என்ன தாழ்வு இருக்கிறது -என்கிறார் –

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –

பத உரை –
சோராத -விட்டு நீங்காத
காதல்-பக்தி வெள்ளத்தின்
பெரும் சுழிப்பால் -பெரிய சுழியினாலே-அதனில் அகப்பட்ட படியினாலே
தொல்லை -பண்டையோனான
மாலை -பெரியோனாகிய எம்பெருமானை
ஒன்றும் -அவன் பெருமையில் எதனையும்
பாராது -கவனியாமல்
அவனை -அப் பண்டைய பெரியோனைக் குறித்து
பல்லாண்டு என்று -பல்லாண்டு பல்லாண்டு என்று காலத்தை பெருக்கி –
காப்பு இடும் -ரஷை-மங்களா சாசனம் செய்யும்
பான்மையன் -ஸ்வபாவம் படைத்த பெரி யாழ்வார் உடைய
தாள்-திருவடிகளை
பேராத -விட்டு நீங்காத
உள்ளத்து -திரு உள்ளம் வாய்ந்தவரான
இராமானுசன் தன் -எம்பெருமானாரை சேர்ந்த
பிறங்கிய -மிகுதியான
சீர்-கல்யாண குணங்களை
சாரா -பற்றி நிற்காத
மனிசரை –அற்ப மானிடரை
சேரேன் -சேர மாட்டேன்
இனி -இந்நிலை எய்தியதற்கு பிறகு
எனக்கு என்ன தாழ்வு -எனக்கு என்ன குறை

அவ்யபிசாரினியான பக்தியினுடைய பிரவாஹத்தில் -பெரிய சுழியில் அகப்படுகையாலே
நித்யனாய் -ஸ்வ இதர சம்ஸ்த வஸ்துக்களுக்கும் ரஷகன் ஆகையாலே -வந்த பெருமை உடையவனை –ஏக தேசமும் நிரூபியாதே –
அநித்யராய் – ரஷ்ய பூதராய்-இருப்பார்க்கு -ஆயுரர்தமாக மங்களா சாசனம் பண்ணுவாரைப் போலே
அவனைக் குறித்து – பல்லாண்டு பல்லாண்டு -என்று காலத்தை பெருக்கி –
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -திருப் பல்லாண்டு – 1-என்று மங்களா சாசனம் பண்ணா நின்றுள்ள
இத்தையே தமக்கு ஸ்வபாவமாய் உடையரான ஸ்ரீ பெரியாழ்வார் உடைய திருவடிகளை விட்டு நீங்காத திரு உள்ளதை உடையரான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய நிரவதிக குணங்களை தங்களுக்கு அபாஸ்ரயமாகப் பற்றி இராத மனுஷ்யரைச் சேரேன் –
இந்நினைவு பிறந்த பின்பு எனக்கு என்ன குறை உண்டு –

பிறங்குதல்-மிகுதி –பிரகாசமுமாம்
சோராத காதல் என்றது அசங்குசிதமான காதல் என்னவுமாம் –
அப்போதைக்கு சோர்தல் -வாடுதல்-அதாவது சங்கோசம் –சோராமை -அசங்குசிதமாய் இருக்கை
இத்தால் பரி பூர்ண பக்தி என்றபடி–

ஸ்ரீ கோதாக்ரஜர்– ஸ்ரீ கோயில் அண்ணன்-ஸ்ரீ ஆண்டாள் -இவர்கள் இடம் தானே ஸ்ரீ பெரியாழ்வார் சொத்து-
திருவந்திக் காப்பு -செய்து அருளி –
தயிர் சாதம் நாவல் பலம் சேர்ந்து அமுது செய்து -திரு முகம் வாட -கண்டு -ஸ்ரீ கருட வாகன பண்டிதர் -ஸ்ரீ தன்வந்திரி- சந்நிதி
கஷாயம் கொடுத்து அருளி -இவர் தான் திவ்ய ஸூரி வைபவம் அருளிச் செய்தவர் -திருவடி -காப்பு ஏற்படுத்தி அருளி-
பய நிவர்த்தகங்களுக்கு பயப்பட்டு அஸ்த்தானே -உறகல் -உறகல் -கொடியார் மாடம் -காட்டிக் கொடுக்கும் –
யசோதை மொசு மொசு வளர்க்க -நான் சமர்ப்பித்ததை கொண்டு அருளால் –கண்டு அருளி –
சோராத காதல் – கண்ணனுக்கே ஆம் அது காதல் என்றுமாம் –
வினைச்சொல் இல்லாத பாசுரம் -இன்றும் பல்லாண்டு சொல்லிக் கொண்டே இருக்கிறார் –
குணங்களை நினைக்க நினைக்க சீரும் பிறங்கி-பயம் நீங்கி- அவனை ஓக்க ஆக்கி அருளுவான் –
விட வேண்டியதை விட்டாலே பிராப்தி கிட்டும் -பகவத் -சேஷத்வம் விட அந்நிய சேஷத்வம் கழிவதே பிரதான்யம் –

சோராத காதல் –
சோராத -வாடாதே -சங்குசிதமாகாதே இருக்கிற பக்தி -பரி பூர்ண பக்தி என்றபடி –
புநர் விஸ்லேஷ பீருத்வா பரமாபக்தி ருச்யதே -என்னும்படியான பக்தி -என்றபடி –
அன்றிக்கே –சோராத காதல் -அவ்யபிசாரினியான பக்தி என்னவுமாம்-

பெரும் சுழிப்பால் –
அவர் பட்ட-சுழி தான் சங்குசிதம் அன்று காணும் –பெரும் சுழி -பரி பூரணையான பக்தி கரை புரண்டவோ பாதி
அதினுடைய மகா பிரவாகத்தின் நடுவே பிறந்தது ஆகையாலே -மகா வேக கர்த்தத்தோடு கூடி –
அதி விஸ்தாரமாய் இருக்கிற சுழியிலே அகப்பட்டு -ஆழம் கால் படுகையாலே –

சோராத காதல் பெரும் சுழிப்பால்
காதல் -பக்தி -அது சோராதது-பகவானை விட்டு விலகாதது –
வேறு தெய்வத்தை பற்றாது -பகவானையே பற்றி ஸ்த்திரமாய் இருப்பது -என்றபடி –
இத்தகையே பக்தியே கீதையில் -மயிசாநத்ய யோகே ந பக்தி ரவ்ய பி சாரிணீ -என்று கூறப் பட்டு உள்ளது –

இனி சோர்வுறாத-அதாவது குறை வுறாத காதல் என்னலுமாம்
காதலின் பெரும் சுழிப்பு என்னவே – பெருக்கு எடுத்தோடும் பெரு வெள்ளமாகக் காதல் உருவகம்-செய்யப் பட்டமை தெரிகிறது –
வெள்ளத்தில் பெரும் சுழிப்பில் அகப்பட்டவர் -ஒன்றும் தோன்றாது தப்ப வழி இன்றி -தத்தளிப்பது போல் –
ஸ்ரீ பெரி யாழ்வாரும் காதல் வெள்ளப் பெரும் சுழியில் அகப்பட்டு ஒன்றும் பாராது தப்ப வழி இன்றி தத்தளிக்கிறார் –
அங்கனம் தத்தளித்தல் ஆவது -திரு மாலின் மீது அளவு கடந்த ப்ரேமம் மீதூர்ந்து –
அதிஸ்நேக பாபசங்கீ-அளவு கடந்த ச்நேஹம் தீங்கு நேருமா என்னும் சங்கையை உண்டு பண்ணும் –-என்றபடி
தமக்கு புலனாய் -இவ் உலகில் தோன்றிக் காட்சி தரும் அவனுடைய திரு மேனி அழகு -மென்மை –
என்னும் இவற்றில் ஈடுபாடாகிய சுழியில் ஆழ்ந்து -யாராலே இவற்றுக்கு என்ன தீங்கு நேரிடுமோ என்று தீங்கை சங்கித்து-
எவராலும் தீங்கு இழைக்க ஒண்ணாத சூரத் தன்மை முதலிய வற்றைப் பாராது –
சங்கையில் இருந்து தப்ப வழி இன்றி அலமருதலே யாம் –
அழகை மட்டும் கண்டு அவனது ரஷிக்கும் ஆற்றலைக் காணாமையின் அச்சத்தில் ஆழ்ந்தவர் எழுந்து இலர் –என்க-

தொல்லை மாலை –
நித்யஸ் சத்யா -என்கிறபடி -நித்ய சத்யனுமாய் –
ஏகோஹைவை நாராயணா ஆஸீத் ந பிரம்மா ந ஈசான ச ஏகாகீ நாமேத -என்றும்-
அசிதவிஷ்டா ந் பிரளயே ஜந்தூ நவலோக்ய ஜாத நிர்வேத – என்றும் -சொல்லுகிறபடியே
சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட்டு உரு மாய்ந்து கிடக்கிற இச் சேதனருக்காக
நிர்வேதப்படும்படியான வ்யாமோஹத்தை வுடைய ஸ்ரீயபதியை

ஒன்றும் பாராது –
மங்களா நாஞ்ச மங்களம் -என்றும் –
ந வாசுதேவாத் பரமஸ்தி மங்களம் -என்றும் –
உயர்வற உயர்நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் –
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -என்றும் –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஜகத் ஸ்ரஷ்டாவாய் -ஸ்ரீ சர்வேஸ்வரனாய் -சர்வ மங்களங்களையும் கொடுக்க கடவனான -அவனை
இப்புடைகளாலே ஏக தேசமும் நிரூபியாதே -தம்முடைய பிரேம பரவசராய்க் கொண்டு –இவை ஒன்றும் விசாரியாதே –
இவற்றில் ஒன்றிலும் கண் வையாதே -என்றபடி –

தொல்லை மாலை ஒன்றும் பாராது –
பண்டைக் காலம் தொடங்கி இன்று காரும் எவராலும் எவ்வித தீங்கும் இழைக்க ஒண்ணாது இருந்தவனுக்கு
இன்று என்ன தீங்கு நேர்ந்து விடப் போகிறது –தொல்லை-அநாதி என்றபடி
இதனால் ஆதியந்தம் அற்ற நித்யதன்மை கருதப்படுகிறது
நித்தியமாய் இருக்கிற பகவத் தத்வத்தை யாராலே அழிக்க முடியும் –

மால்-
பெரியவன் -அனைவரையும் காப்பதால் வந்தது அந்த பெருமை –
அந்த மாலுக்கு தன்னைப் பாத்து காத்துக் கொள்ளும் திறன் இல்லையா –
இவைகளில் ஒன்றையும் பார்க்கவில்லை ஸ்ரீ பெரியாழ்வார்
முகப்பில் தோற்றும் அழகையும் -மென்மையும் பார்த்தாரே அன்றி அழிக்க ஒண்ணாத அழியாப்பொருள் அளித்துப் பெருமை
யுறும் பொருள் அழிவுற்று சிறுமை உறாது என்பதை அவர் பார்த்திலர்-

அவனை பல்லாண்டு என்னும் காப்பிடும் பான்மையன் தாள் –
லோகத்திலே பரிமித கால வர்த்தியான-சாதாரண ஜனங்களுக்கு ஆயுர் அர்த்தமாக -ஆயுராசாச்தே -என்கிறபடியே –
தீர்க்கா யுஷ்மான் பவேத் – என்று மங்களா சாசனம் பண்ணுவாரைப் போலே -அந்த ஸ்ரீயபதியைக் குறித்து –
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு -பல் கோடி நூறாயிரமும் –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு – என்றும் –
நின் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு -சுடர் ஆழியும் பல்லாண்டு -அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –-என்று
அபரிமிதமான காலத்தை உண்டாக்கி -அது தன்னையே பெருக்கி -இப்படிப் பட்ட கால தத்வம் உள்ளது அனையும் செவ்வி மாறாதே –
நித்ய ஸ்ரீ யாக வாழ வேணும் என்று -இப்படி மங்களா சாசனம் பண்ணுகையே
தமக்கு ஸ்வபாவமாக உடையரான ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளை –
பான்மை -ஸ்வபாவம் -தாள்-திருவடிகள் –

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் –
தொல்லை மால் என்பதில் ஒன்றையும் பாராமையாலே –
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் -என்று காலத்தை பெருக்கி
நீடூழி தீர்க்காயுசாய் வாழ வேண்டும் என்று -அளவு பட்ட ஆயுள் உள்ளவர்களையும் -தன்னைக் காக்கும் திறன் அன்றி
காக்கப் படவேண்டியவராய் இருப்பவர்களையும் ஆயுள் விருத்தி யடைய வேண்டும் என்று மங்களா சாசனம்பண்ணுவாரைப் போலே
பல்லாண்டு பாடுகிறார் ஸ்ரீ பெரியாழ்வார் -என்க –

இங்கனம் பல்லாண்டு பாடி -உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று காப்பிடுவது ஸ்ரீ பெரியாழ்வாருடைய இயல்பு –
அது தோன்ற அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் -என்கிறார் –
தான் அழிவற்று -மற்ற அனைவரையும் அளிக்கும் பரம் பொருளை -அங்கனம் பாராமை அறியாமை அன்றோ –
மயர்வற மதி நலம் வாய்ந்த ஸ்ரீ பெரியாழ்வாருக்கு அது குறை யாகாதோ எனின் -ஆகாது என்க –
இவ்வறியாமை கன்மத்தால் வந்ததாயின் குறையாம்-
அன்பின் மிகுதியால் வந்தமையின் குறை ஆகாததோடு பெருமையுமாம் -என்க
இதனை சோராத காதல் பெரும் சுழிப்பால் பாராது -என்பதனால் உய்த்து உணர வைத்தார் ஸ்ரீ அமுதனார் –
காதல் பெரும் சுழிப்பில் அகப்பட்டது -பாராது பல்லாண்டு பாடும் -பெருமையை இவர்க்கு அளிப்பது ஆயிற்று என்க –
ஆதல் பற்றியே இவர்க்கு ஸ்ரீ பெரியாழ்வார் என்னும் பெயர் ஏற்ப்பட்டது என்கின்றனர் ஆன்றோர் –

இங்கு ஸ்ரீ மணவாள மா முனிகள் உபதேச ரத்ன மாலையில் –
மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தான் அன்றிப் பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான்
ஸ்ரீ பெரியாழ்வார் என்னும் பெயர் -என்று அருளிச் செய்த பாசுரத்தை நினைவு கூர்க-

இனி காதல் பெரும் சுழிப்பால் பாரா விடினும் இறைவன் தன் ஆற்றலை தானே காட்டி யாயினும் இவரைப் பெரும் சுழி யினின்றும்
தப்புவிக்கல் ஆகாதோ எனின் –இறைவனுக்கும் அது ஆகாததாய் ஆயிற்று என்க –
கண் உள்ளவர்கர்க்கு அன்றோ காட்ட இயலும் –அன்பினால் குருடரான ஸ்ரீ ஆழ்வாருக்கு –ப்ரேமாந்தருக்கு -எங்கனம் காட்டுவது –
தன் ஆற்றலைப் பார்த்து அன்பினால் ஆன அச்சப் பெரும் சுழி யினின்றும்
வெளியேறட்டும் என்று இறைவன் வலிமை மிக்க தன் தோளைக் காட்டினான் –

அது மேலும் இவரை அப் பெரும் சுழி யில் ஆழ்த்தி சுழல செய்து விட்டது -வலிமை அச்சத்தை கெடுக்க வில்லை –
அதனை மேலும் வலு வுறச் செய்து விட்டது -வலிமையை உள்ளடக்கி அழகே விஞ்சித் தோற்றுகிறது இவருக்கு –
இவ்வலிமை கொண்டு எதிரிகளோடு பொருது என்ன தீங்கை விளைவித்துக் கொள்வானோ
என்று மீண்டும் அச்சமே தலை தூக்கி நிற்கிறது ஆழ்வாருக்கு -இதனை
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்னும் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியில் காண்கிறோம் –
காணவே இறைவனாலும் போக்க ஒண்ணாதபடி அன்பினால் விளைந்த-அச்சம் ஆழ்வாரது இயல்பு எனபது போதரும் –
துச்த்யஜா பிரக்குதிர் நாம -இயல்பு தவிர்க்க ஒண்ணாத தன்றோ-இக்கருத்துப் புலப்பட பான்மையன் -என்றார் அமுதனார் –
பான்மை -இயல்பு

பேராத உள்ளத்து இராமானுசன் தன் –
விட்டு நீங்காத திரு உள்ளத்தை உடையரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய
பேருகை -நீங்குகை –

தாள் பேராத உள்ளத்து இராமானுசன்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளை விட்டு மற்று ஒன்றை நினையாத திரு உள்ளம் படைத்தவர் ஸ்ரீ எம்பெருமானார் என்றபடி –
தாள் என்பது
திரு மேனிக்கு உப லஷணமாய் ஸ்ரீ பெரியாழ்வாரையே எப்பொழுதும் நெஞ்சில்
வைத்துக் கொண்டு இருப்பவர் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ விஷ்ணுவை சித்தத்தில் வைத்துக் கொண்டு இருப்பவர் ஸ்ரீ விஷ்ணு சித்தர் -ஸ்ரீ பெரியாழ்வார் –
அந்த ஸ்ரீ விஷ்ணு சித்தரை தம் திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருப்பவர் ஸ்ரீ எம்பெருமானார் –
அதனால் ஸ்ரீ விஷ்ணு சித்த சித்தர் ஆகிறார் -அவர் –
ஸ்ரீ விஷ்ணு பிரவணர்-ஈடுபட்டவர் ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ விஷ்ணு சித்த பிரவணர் ஸ்ரீ எம்பெருமானார் –
எப்பொழுதும் ஸ்ரீ பெரியாழ்வாரையே நெஞ்சில் வைத்துக் கொண்டமையால் ஸ்ரீ பெரியாழ்வாரைப்
போன்றவர் ஆகி விடுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ விஷ்ணு தன்னை த்யானம் செய்பவரை தன்னைப் போல் ஆக்குவது போல ஸ்ரீ விஷ்ணு சித்தரும்
ஸ்ரீ எம்பெருமானாரை தன்னை போல் ஆக்கி விட்டார் –
மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி பிரதி கூலரை அநு கூலராக்க உபதேசிப்பது போலே –
மங்களா சாசனத்துக்கு ஆள் தேட உபதேசிக்கும்படி ஸ்ரீ எம்பெருமானாரையும் அவர் செய்து அருளினார் –
இங்கனம் ஸ்ரீ பெரியாழ்வாரோடு ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஒப்புமை
ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்திலே தெளிவாக காட்டப் பட்டு உள்ளது -விரிவு அங்கு கண்டு கொள்வது –

பிறங்கிய சீர் –
நித்ய அபிவ்ர்த்தமான கல்யாண குணங்களை
குதர்ஷ்டி குஹநாமுகே நிபதத பரப்ரமணா -கரக்ரஹா விசஷணோ ஜயதி லஷ்மனோயமுனி – என்கிறபடியே –
குதர்ஷ்டிகளால் அழிக்கப்பட்ட பகவத் வைபவத்தை -ஸ்ரீ பாஷ்ய முகேன வெளிப்படுத்தி –
இவ்வளவும் இனி மேல் உள்ள காலம் எல்லாம் -நித்ய அபிவ்ர்த்திதாம்படி பண்ணுகையாலே
இவருடைய கல்யாண குணங்களும் நித்ய அபிவ்ர்த்தமாய் காணும் இறே இருப்பது –
பிறங்குதல் -மிகுதி –

பிறங்கிய சீர் –
பிறங்குதல் -மிகுதல் -விளங்குதலும் ஆம் –சீர்-குணம்

சாரா மனிசரை –
அவற்றை தங்களுக்கு அபாஸ்ரயமாக பற்றி இராத மனுஷ்யரை –
ந்ர்தேக மாத்ய பிரதி லப்ய துர்லபம் -என்கிறபடியே -அதி துர்லபரான மனுஷ்ய தேகத்தை உடையராய் இருந்தும்
புவான் பவாப்த்தி நதரேத் ச ஆத்மாஹா -என்னும்படி நஷ்ட ப்ராயரான மனுஷ்யர் என்றபடி –
யோக்யதை இல்லாதே அகன்று போனார்கள் என்று ஆறி இருக்கப் போமோ
ஸ்ரவண மனனங்களுக்கு சாதனங்களை உடைத்தான மனுஷ்ய தேகத்தை பெற்றும் ஆஸ்ரயியாத-கர்ப்ப நிர்பாக்யரை

சேரேன் –
அப்படிப் பட்டவரை ஒருக்காலும் கிட்டாதே சவாசனமாக விட்டு இருந்தேன்
நாஸ்தி சங்கதி ரச்மாகம் யுஷ்மா கஞ்ச பரஸ்பரம் -என்கிற படியே குட நீர் வழித்துக் கொண்டு இருந்தேன் –

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடிஎன்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–-ஸ்ரீ திருவாய் மொழி3-9-2-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழி தோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான் கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்!
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே–3-9-4-

சாரா மனிசரை சேரேன் –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய மிக்க குணங்களை அனுசந்திப்பதே நமக்கு பற்றுக் கொடு –
அதனைக் கொளற்கு மானிடவர் எல்லோரும் உரியர் –
ஆயினும் அதனைக் கொள்ளாது நிற்கின்றனரே – என்று பேர் இரக்கம் தோற்றுகிறது-மனிசர் -என்னும் சொல்லாலே –
அத்தகையோரை சேர்ந்தேன் என்றிலர் –
அவர்கள் சேர்க்கையினும் -சாரா மனிசரை சேராமையின் முக்கிய தன்மை விளக்குதற்கு
நன்மை வராவிடினும் கேடில்லை–தீமை தொலைவது முக்கியம் அன்றோ –
இனி சீரை சார்ந்தோரை சேர்ந்து இருத்தல் என்னும் உயர் நிலையில் இருப்பவன் -அந்நிலையில் இருந்து தவறி
சாரா மனிசரை சேரேன் -உயர் நிலையினின்றும் விழுந்து -தாழ்வு உறுவது தப்பாது என்னும் அதன் கொடுமை
தோற்றற்கு அங்கனம் கூறினார் ஆகலுமாம் –

எனக்கு என்ன தாழ்வு இனியே
இப்படியான பின்பு ஸ்ரீ எம்பெருமானாருடைய க்ருபைக்கு விஷய பூதனான அடியேனுக்கு என்ன தாழ்வு உண்டு –
என்ன அவத்யம் உண்டு –
ததேவ முஷ்ணா த்யசுபான்ய சேஷத -என்றும் –
சித்தே ததீய சேஷத்வே சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி -என்றும் சொல்லுகிறபடி –
ஒரு குறைகளும் இன்றிக்கே -சர்வமும் கரதலாமலகமாய் இருக்கும் என்றபடி .

எனக்கு என்ன தாழ்வு இனியே
இனி-சேராமை உறுதிப் பட்ட பின்பு
சாரா மனிசரை சேர்ந்தால் அன்றோ தாழ்வு வாரா நிற்கும்
சாரும் மகான்களை சாராதவரை சேராமையாலே எனக்கு தாழ்வு வர வழி இல்லை அன்றோ –
அதுவே நான் பெற்ற பேறு என்கிறார் –

இங்கு ஸ்ரீ வசன பூஷணம் ஸூரணைகளும் மணவாள மா முனிகள் வியாக்யானமும்
பெரியாழ்வார் பாஷ்யகாரர் உபதேசம் பற்றியும் மங்களா சாசனம் ஸ்வரூப அனுகுனம்
என்பதையும் தெளிவாக காட்டும் –

ஸூரணை-250
ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரியாழ்வார்
இவ் ஆழ்வார்கள் தாங்கள் மங்களா சாசனத்தில் வந்தால் தங்களில் ஒப்பார்களோ என்ன -அருளி செய்கிறார் மேல் –
அதாவது
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்களுக்கும் பெரிய ஆழ்வாருக்கும் நெடுவாசி உண்டு என்கை-

ஸூரணை -251
அவர்களுக்கு இது காதா சித்தம் –
இவர்க்கு இது நித்யம் –
அவர்களை பற்ற இவர்க்கு இதில் ஏற்றம் எது என்ன – அருளி செய்கிறார் –
அதாவது –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமை ஒத்து இருக்க செய்தே -வைர உருக்காய்-
ஆண்களையும் பெண்ணுடை உடுத்தும் -பாகவத விக்ரக வைலஷன்யத்தை அநு சந்தித்தால் –
உத்தோரத்தர அனுபவ காமராராக இருக்கும் –
மற்ற ஆழ்வார்களுக்கு பர சம்ருத்தியே பிரயோஜநமான இந்த மங்களா சாசனம் -எப்போதும் ஒக்க இன்றிகே –
எங்கேனும் ஒரு தசையிலே தேடித் பிடிக்க வேண்டும்படியாய் இருக்கும் –
தத் வைலஷன்ய தர்சன அநந்தரம்-தத் அனுபவ பரராகை அன்றிகே –
அஸ்தானே பய சங்கை பண்ணி -திருப் பல்லாண்டு பாடும் -பிரேம ச்வாபரான இவருக்கு இந்த
மங்களா சாசனம் சர்வ கால வர்த்தியாய் செல்லும் என்கை –

ஸூரணை -252
அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –
அதுக்கு ஹேது ஏன் என்ன –
அருளி செய்கிறார் –
அதாவது –
அனுபவபரரான அவர்களை -த்ருஷ்டி சித்த அபகாரம் பண்ணி – ஆழம்கால் படுத்தும்-அவனுடைய சௌந்தர்யம் தானே –
அதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சி -மேன்மேலும் காப்பிடும்படி -மங்களா சாசனபரரான இவர்க்கு தரித்து
நின்று மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடான நிலமாய் இருக்கும் என்கை –

ஸூரணை -253
அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –

இவருக்கு பய ஹேது எங்கனே -என்னும் அபேஷையில் அருளி செய்கிறார் –
அதாவது
பகவத் அனுபவ ஏக பரராய் -தத் அலாபத்தால் ஆற்றாமை கரை புரளும்படி
இருக்கும் மற்றை ஆழ்வார்களுக்கு –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்
அநு சந்திக்கும் படி -பிரதம மத்திய பத சித்தமான பகவத் சேஷத்வமும்-
தத் காஷ்டையான பாகவத சேஷத்வமும் -ஆகிய உபய சேஷத்வத்தையும் –
நமக்கே நலமாதலில் -என்னும் படி ஸ்வ பிரயோஜனத்தில் மூட்டியும் -விளம்ப ரோஷத்தாலே –
போகு நம்பீ
கழகமேறேல் நம்பீ -என்னும்படி ஆக்கியும் –
ஸ்வ பிரவ்ருத்தி ஆகாதோ என்னும் அளவில் –
உங்களோடு எங்களிடை இல்லை -என்று உதறும்படி பண்ணியும் –
வன் சிறைப் புள் -இத்யாதியாலே வெறுத்து வார்த்தை சொல்லுவித்தும் -அழித்து –
பராதிசயகரத்வமே வடிவான ஸ்வரூபத்தை -மங்களா சாசனம் எனபது -ஓன்று அறியாதபடி –
தன் பக்கலிலே மக்நமாக பண்ணுமதான பகவத் ஸௌந்த்ர்யம் -அந்த ஸௌ ந்தர்ய தர்சனத்தில்
அனுபவத்தில் நெஞ்சு செல்லாதே -அதுக்கு என்-வருகிறதோ என்று வயிறு எரிந்து காப்பிடும்வரான இவர்க்கு –
உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு –
மங்கையும் பல்லாண்டு –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்சசன்யமும் பல்லாண்டு -என்று
தத் விஷயத்துக்கும் -ததீய விஷயத்துக்கும் -மங்களா சாசனம் பண்ணுவிக்கை யாலே –
உபய சேஷத்வ விருத்திக்கும் ஹேதுவாய் -ஸ்வரூபத்தை தன் பக்கல் மக்னம் ஆகாதபடி நடத்தும் என்றபடி –

ஆக –அவர்களுக்கு அப்படி ஸ்வரூபத்தை குமிழ் நீர் உண்ணப் பண்ணுகிற அவனுடைய ஸௌ ந்த்ர்யம் –
இவருக்கு இப்படி செய்கையாலே -அவர்களுடைய ஆழம் கால் தானே இவர்க்கு மேடாய் இருக்கையாலே –
அவர்களுக்கு போலே காத சித்தம் ஆகை அன்றிகே –மங்களா சாசனம் இவர்க்கு நித்தியமாய் செல்லும் என்றது ஆயிற்று –

ஸூரணை -256
பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
பிராரப்த பலமும் இதுவே எனபது –
அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு –
இது தானே -யாத்ரையாய் நடக்கும் –மற்றை ஆழ்வாருக்கு மங்களா சாசனம் காதா சித்தமாக செய்தே -இவர்க்கு
நித்யம் ஆகைக்கு -நிதானம் இன்னது என்று தர்சிப்பிக்கிறார் கீழ் –
இதுதான் இவர்க்கு நித்யமாக செல்லும்படி தன்னை வ்யக்தமாக அருளி செய்கிறார் மேல் –
அதாவது –
தன் ஸௌ குமார்யத்தை கண்டு கலங்கி -இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ
என்று மறுகுகிற இவர் பயத்தை பரிகரிகைக்காக -மல்ல வர்க்கத்தை அநாயாசேன அழித்த தோள் வலியைக் காட்ட –
இந்த தோள் வலியை நினைத்து மதியாதே -அசூர ராஷச யுத்தத்தில் புகில் என்னாக கடவது என்று –
அது தனக்கு பயப்பட்டு மங்களா சாசனம் பண்ணுவது -உண்டான அவமங்களங்கள் போக்கைகும் –
இல்லாத மங்களங்கள் உண்டாகைகும் தன் கடாஷமே அமைந்து இருக்கிற இவள் –
அகலகில்லேன் இறையும்-என்று நம்மை பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு
வருவதொரு அவமங்களங்கள் உண்டோ -என் செய்யப் படுகிறீர் என்று – லஷ்மீ சம்பந்தத்தை காட்ட –
இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி -மங்கையும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது –
இந்தபயத்தை பரிகரிக்கைகாக -இச் சேர்த்திகு ஒரு தீங்கு வராதபடி -கல் மதிள் இட்டால் போலே இருக்கிற
இவர்களை பாரீர் என்று -இரண்டு இடத்திலும்
ஏந்தின ஆழ்வார்களைக் காட்ட -அவர்களுக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்று
மங்களா சாசனம் பண்ணுவது –
அநந்ய பிரயோஜன தயா அனுகூலரான பகவத் சரணார்த்திகளை துணையாக கூட்டிக் கொண்ட அளவால் –
பர்யாப்தி பிறவாமையாலே-பிரயோஜனாந்தர பர தயா பிரதிகூலரான கேவலரையும் -ஐஸ் வர்யார்த்திகளையும் திருத்தி –
மங்களா சாசனத்துக்கு ஆளாகும் படி அனுகூளர் ஆக்கிக் கொள்ளுவது –
இலங்கை பாழ் ஆளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -இத்யாதியாலே
கீழ் கழிந்த காலத்தில் அவன் செய்த அபதானங்களுக்கு -பிற் காலத்திலேயே -சம
காலத்தில் போல் வயிறு எரிந்து -மங்களா சாசனம் பண்ணுவது –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று பகவத் பிராப்திக்கு பலமும்
அந்த மங்களா சாசனமே எனபது –
ச்நேஹாதஸ்த்தா நர ஷாவ்யச நிபிரபயம் சாரங்க சக்ராசி முக்க்யை-என்கிறபடியே
அஸ்தானே ரஷாவ்யசநிகள் ஆகையாலே -அநிமிஷராய் இருக்கிற திவ்யாயூத ஆழ்வார்கள்
முதலானவரை பார்த்து -குண வித்தராய் -நஞ்சுண்டாரை போலே உந்தாமை அறியாது இருத்தல் –
அனுபவத்திலே அழுந்து கைங்கர்ய பரராய் இருத்தல் செய்யாதே –உணர்ந்து நோக்கும் கோள் என்று
பலகாலும் சொல்லுவதாய் கொண்டு –
இவ் மங்களா சாசனமே விருத்தியாய் செல்லும் என்கை –

ஸூரணை-255
அல்லாதவர்களைப் போல் கேட்கிற வர்களுடையவும் சொல்லுகிற வர்களுடையவும்
தனிமையை தவிர்க்கை அன்றிகே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடையதனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –
இப்படி மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி -பிரதி கூலரை அனுகூலர்
ஆக்குகைக்கு பண்ணுகிற உபதேசம் திரு பல்லாண்டு ஒன்றிலும் அன்றோ உள்ளது –
மேல் இவர் உபதேசித்த இடங்களில் -அல்லாதார் உபதேசத்தில் காட்டிலும்
வ்யாவிருத்தி என்கிற சங்கையில் அருளி செய்கிறார் –
அதாவது

பரோ உபதேசத்தில் வந்தால் -மற்றுள்ள ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போல் –
உபதேசிக்கிறவர் தம்மிடம் கேட்கிற சம்சாரிகளுடைய அநாதி அஞாநாத்தாலே-நல துணையான
பகவத் விஷயத்தை அகன்று திரிகையால் வந்த தனிமையையும் –
வக்த்தாக்களான தங்களுடைய பகவத் குண அநு சந்தான தசையில் -போதயந்த
பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த தனிமையையும் –
தவிர்க்கை பிரயோஜனமாக உபதேசிக்கை அன்றிக்கே -சௌகுமார்யா அநு சந்தானத்தாலே வயிறு
மறுகின ஆழ்வார் ஆராய்ந்து பார்த்த இடத்தில் -அடைய அந்ய பரராய் தோற்றுகையாலே –
உபய விபூதியிலும் பரிகைக்கு ஆளில்லை -தம் வாசி அறிந்து நோக்க்குகைகும் -ஒரு ஆளும் ஆளுகிறிலர்- என்று
பேசும்படி இருக்கிற நிரதிசய சௌகுமார்ய யுக்தனான சர்வேஸ்வரனுடைய தனிமை தீர
மங்களா சாசனத்துக்கு இவர்கள் ஆளாக வேணும் என்று -இதுவே பிரயோஜனமாக வாயிற்று –
பரம காருணிகரான ஆச்சர்யர்களில் பாஷ்ய காரரும் -மயர்வற மதி நலம் அருள பெற்றவர்களில் –
இவ் ஆழ்வாரும் உபதேசித்து அருளுவர் என்கை-
ஆகையால் –
இவ் ஆழ்வார் பிரதிகூலரை அனுகூலராக உபதேசிக்கும் இடம் எல்லாம் மங்களா சாசன
அர்த்தமாக என்னக் குறை இல்லை -என்று கருத்து –
எம்பெருமானார் என்னாதே பாஷ்ய காரர் என்றது -ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே வேதாந்த
தாத்பர்யம் பண்ணி அருளினவர் என்னும் வைபவம் தோற்றுகைக்காக–

ஸூரணை-256
அல்லாதார்க்கு
சத்தா சம்ருத்திகள்
பகவத் தார்ச அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு
மங்களா சாசனத்தாலே –
மயர்வற மதிநலம் பெற்றவர்கள் எல்லாருக்கும் -சத்தா சம்ருத்திகள் -பகவத் தர்சன அனுபவ
கைங்கர்யங்கள் லாலேயாக அன்றோ தோற்றுகிறது-அவ்வாகாரம் இவர்க்கும் ஒவ்வாதோ –
அப்போதைக்குமங்களா சாசனமே யாத்ரையாக நடக்கும் என்னுமது கூடும்படி என்-என்கிற
சங்கையிலே அருளி செய்கிறார் –

சத்தை யாவது -தாங்கள் உளராகை-இது பகவத் தர்சன அனுபவ கைங்கர்ய பரரான
மற்றை ஆழ்வார்களுக்கு அவனைக் காணாத போது தரிக்க மாட்டாதே –
காண வாராய் -என்று கூப்பிடுகையாலே -தத் தர்சனத்தாலே யாய் இருக்கும் –
அவராவி துவராமுன் –
அவர் வீதி ஒருநாள் –
அருளாழி புள் கடவீர் -என்று எங்கள் சத்தை கிடைக்கைக்கு
ஜால கரந்தரத்திலே ஆகிலும் ஒருக்கால் காணும்படி எங்கள் தெருவே
ஒருநாள் போக அமையும் என்று -சொல்-என்கையாலே தர்சனமே சத்தா ஹேது என்னும் இடம்
சித்தம் இறே–
சம்ருத்தியாவது -உளராய் இருக்கிற மாதரம் அன்றிக்கே -மேலுண்டாய் செல்லும் தழைப்புஅது அவர்களுக்கு
அந்தாமத்து அன்பு –
முடிச்சோதி-
துடக்கமானவற்றில் போலுண்டான அனுபவத்தாலும் –
ஒழிவில் காலத்தில் படியே செய்யும் கைங்கர்யத்தாலுமாய் இருக்கும் –
அன்றிகே –
தர்சன -அனுபவங்கள் இரண்டாலும் சத்தையும் –
கைங்கர்யத்தால் சம்ருத்தியுமாக சொல்லவுமாம்–
அங்கனம் அன்றிக்கே –
அந்த சத்தை பிராவண்யா கார்யமான அனுவம் இல்லாத போது குலையும் -என்று
இவர் தாமே கீழே அருளி செய்கையாலும் -நாளை விநியோகம் கொள்ளுகிறோம் என்னில்
அழுகவும் கூட சத்தை இல்லை என்று -கைங்கர்யம் சத்தா ஹேதுவாக அநு சந்தானத்திலே
சொல்லுகையாலும் –
கண்டு களிப்பன்-என்று தர்சனம் தான் சம்ருத்தி ஹேதுவாக தோற்றுகையாலும்-
சத்திக்கும் சம்ருத்திக்கும் மூன்றுமே காரணமாம் என்னவுமாம் –
மயர்வற மதிநலம் அருள பெற்ற அன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு
இவற்றுக்கு என் வருகிறதோ என்று -வயிறு எரிந்து – மங்களா சாசன அபிநிவிஷ்டரான இவர்க்கு -மங்களா சாசன விச்சேதம் வரில்
தாமுளராக மாட்டாமையாலும் -அப்படி அவிச்சின்னமாக செல்லுகை தானே
தழை புக்கு உடலாய் இருக்கையாலும் –
சத்தையும் சம்ருத்தியும் இரண்டும் மங்களா சாசனத்தாலே யாய் இருக்கும் –
ஆகையால் இவர்க்கு மங்களா சாசனம் நித்யமாக செல்லத் தட்டில்லை -என்று கருத்து –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –14- கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம் இத்யாதி —

March 30, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் உடைய திவ்ய சூக்தியை பாடுமவர்களை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானார் என்னைப் பிரியாமையாலே –
புருஷார்த்த லாபத்துக்கு துச்சக சாதனங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இவ் எம்பெருமானார் தம்முடைய பூர்வ அவதாரத்திலே -தாம் ஈடுபட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் – விஷயத்திலே அதி வ்யாமுக்த்தரான –
ஸ்ரீ குலசேகர பெருமாள் -சூத்ரே மணி கதா இவ -என்னும்படி முகம் அறிந்தவர் -மாணிக்கங்களை கோக்குமா போலே –
சாஸ்திரம் சொல்லைக் களை பறித்து – தம்முடைய திவ்ய சூக்திகளாலே நிர்மித்த திவ்ய பிரபந்தங்களை -அனுசந்திக்கும்
பெரியோர்களுடைய திருவடிகளை ஸ்துதிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை விட மாட்டார் –
ஆன பின்பு புருஷார்த்த லாபத்துக்காக – துஸ் சககங்களான சாதனாந்தரங்களை அனுஷ்டிக்கும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் -என்கிறார் .-

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ குலசேகர பெருமாள் உடைய கவிகளை பாடும் அவர்களை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை கை விட மாட்டார் –
ஆகையாலே இனி பேறு பெற வேண்டி தவம் செய்யும் கொள்கை இல்லாதவன் ஆயினேன் -என்கிறார் –

கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசன் என்னைச் சோர்விலனே -14 –

பத உரை –
கொல்லி காவலன் -ஸ்ரீ குலசேகர பெருமாள்
கலைச் சொல் -சாஸ்திர சொற்களை
பதிக்கும் -பதிய வைத்து இருக்கும்
கவி -கவிகளை
பாடும் -பாடுகிற
பெரியவர் -பெருமை உடையவர் களுடைய
பாதங்களே -திருவடிகளையே
துதிக்கும் -ஸ்தோத்திரம் செய்யும்
பரமன் -தன்னிலும் மேற்பட்டவர் வேறு எவரும் இல்லாத
இராமானுசன் -எம்பெருமானார்
என்னை சோர்விலன் -என்னைக் கை விட்டு விட மாட்டார்
கதிக்கு -ஆகையால்-பேற்றுக்கு
பதறி -ஆத்திரப்பட்டு
வெம் கானமும் -வெம்மை வாய்ந்த காட்டிலும்
கல்லும் -மலைகளிலும்
கடலும் -சமுத்ரத்திலும்
எல்லாம் -எல்லா இடமும்
கொதிக்க -கொதிக்கும் படியாக
தவம் செய்யும் -தவம் புரியும்
கொள்கை ஆற்றேன் -கொள்கை இல்லாதவனாயினேன் –

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் ரத்னங்களைப் பதித்தால் போல் சாஸ்திர சொற்களை பதித்த கவிகளை –
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடா நின்றுள்ள வைபவத்தை உடையவர்களுடைய திருவடிகளையே யேத்துமவராய் –
பாகவத விஷய பிரேமத்துக்கு தமக்கு மேற்பட்டார் இல்லாத படி இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை விட்டு நீங்கு கிறிலர்-
ஆதலால் ப்ராப்ய லாபத்தை பற்ற த்வரித்து-

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——–மூன்றாம் திருவந்தாதி – 76- என்கிறபடியே
அத்யுஷ்ணமான காட்டோடு மலையோடு கடலோடு வாசி யற-எல்லா இடத்திலும் –
சர்வ அவயவங்களும் ஒக்க நின்று -கொதிக்கும் படியாக தபச்சுக்களைப் பண்ணும் ஸ்வபாவம் போகப் பெற்றேன் –
அன்றிக்கே –
வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்க தவம் செய்யும் கொள்கை -என்றதுக்கு
இவனுடைய தப க்ரௌர்யத்தைக் கண்டு -அவை தானும் நின்று பரிதபிக்க -அவ்வவ ஸ்தலங்களிலே
தபசு பண்ணா நிற்கும் ஸ்வபாவம் என்றும் சொல்லுவார்கள் –
கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி –என்றதற்கு –
ஸ்ரீ குலசேகர பெருமாள் அனுபவ பரீவாஹா ரூபமான ச்வோக்திகளை ரத்னங்களைப் பதித்து வைத்தால் போலே நிறைத்து வைத்ததாய்-
சாஸ்திர ரூபமாய் இருந்துள்ள கவிகள் என்னவுமாம் –
கொள்கை -ஸ்வபாவம் / சோர்வு -பிரிவு /சோர்விலன் -என்றது பிரிவு இலன் என்றபடி –
(சோர்வை இல்லமாக கொண்டவன் என்று கொள்ளக் கூடாதே என்று இத்தையும் பரம காருண்யத்தால் காட்டி அருளுகிறார் )

மாஸூசா -போகும் இடம் பெருமையும் பார்த்து பார்த்தும் -நாம் செய்த பாபங்களை பார்த்தும் –
நம் இயலாமை கண்டும் தவிப்போமே -அந்தக துக்கம் போக்க –
நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விட்டேன் -சோர்விலன் –
இவையும் கொதிக்கும் கடும் தவத்தால் -தவம் செய்தவர்களும் கொதிக்க –
பாடும் பெரியவர் -ஸ்ரீ நாத முனிகள் -ஸ்ரீ பிள்ளான் போல்வார் – என்றுமாம் –

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-

ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-

அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-

மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே -2-5-

தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

கசிந்து இழிந்த கண்ண நீர்களால் வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-

மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-

அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே–2-9-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-

தேட்டரும் திறல் –அடியார் ஈட்டங்கள் -அரங்கன் முற்றம் சேறு செய்யும் தொண்டர்களே பாடும் பெரியவர்-
உபாயத்தில் கண் வைக்காமல் -உபேயம் புத்தி பண்ணி கைங்கர்ய நிஷ்டராகவே இருக்க சரம தசையில்
உபதேசித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார்-
அநந்யார்ஹம் திடமாக அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் அன்றோ –நம் ஸ்ரீ குலசேகரப் பெருமாள்

கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி
கொல்லி நகர் என்று சொல்லப் படுகிற-திரு வஞ்சிக் களத்துக்கு ரஷகரான -ஸ்ரீ குலசேகர பெருமாள் -சாஸ்திர சொல்லுக்களினுடைய
தாத்பர்ய விஷய பூதங்களாய் இருக்கிற பகவத் ஸ்வரூப-ரூப குண விபூதிகளையும் -தத்வ ஹித புருஷார்த்தங்களையும்
முத்துக்களையும் ரத்னங்களையும்-முகம் அறிந்து கோக்கும் விரகரைப் போலே -விசதமாக தத் தத் ஸ்தானங்களிலே சேர்த்து

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1 என்று தொடங்கி–

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11– என்னும் அளவாக -திவ்ய பிரபந்த ரூபேண அருளிச் செய்த -போக்யமான கவிகளை –

காவலன்-
ரஷகன் –

கொல்லி காவலன்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -என்று அவரே கூறிக் கொள்வது காண்க –
கூடல் என்னும் பாண்டிய நாட்டு தலை நகர் ஆகிய மதுரையும் –
கோழி என்னும் சோழ நாட்டு தலை நகராகிய உறையூரும் –
வென்றி கைப்பற்றியவையே யாதலின் சொந்தத் தலை நகராகிய கொல்லி நகரை-மட்டுமே கூறினார் அமுதனார்
கொல்லி என்பது -கொல்லி மலை சூழ்ந்த நாடு என்பர் சிலர்
இங்கே கூடல் கோழி என்னும் நகரங்களோடு ஒரு கோவையாக கூறலின்-கொல்லி -என்பது நகரமே என்று உணர்க –
கொல்லிக் கண்ணன் -என்று புலவர் ஒருவர் பேர் பெற்று உள்ளார் –ஆதலின் அது நகரமே -என்க-

கோழியும் கூடலும்– ஒரு வார்த்தை இருந்தாலும் திவ்ய தேசம் தான் –

நம் சம்பிரதாயத்தில் பெருமாள்–ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்
பெரிய பெருமாள்– ஸ்ரீ ரெங்கத்தில் மூலவர்
நம் பெருமாள் -உத்சவர்
இதனால் இவரும் பெருமாள் -பெயரை பெற்றார் .-அதனால் பெருமாள் திரு மொழி .
தினமும் திரு அரங்க யாத்ரை -மெய்ப்பாடு –

சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே-
கலை -சாஸ்திரம்
கலை சொல் பதிக்கும் கவி என்று கூட்டுக
சாஸ்திர சொற்களை அமைத்து திரு மொழி அருளி செய்து உள்ளாராம் ஸ்ரீ குலசேகர பெருமாள் –
ஸ்ரீ திருக் கண்ண புரத்தில் உள்ளவர் பேசும் வார்த்தைகளிலே சாஸ்திரங்கள் இலங்கும் என்கிறார்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ -8 1-1 – -என்பது அவர் திரு மொழி
கட்புலன் ஆகாதவைகளான பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை சாஸ்திரங்கள் நமக்கு தெரிவிப்பது போலே –
அவர்கள் பேசும் வார்த்தைகளும் நமக்கு அவற்றை உணர்த்துவனவாய் இருத்தலின் –கலை இலங்கு மொழி யாளர் –என்றார் ஸ்ரீ ஆழ்வார் –
அங்கனமே ஸ்ரீ குலசேகர பெருமாள்
திவ்ய பிரபந்தத்திலும் சொற்கள் சாஸ்திரம் போலே அவற்றை அறியுமாறு செய்தலின்
கலை சொல் என்று வருணிக்கிறார் ஸ்ரீ அமுதனார் –
இடம் அறிந்து ரத்னங்களை பதிப்பது போலத் தக்கவாறு பெருமாள் திரு மொழியில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன
பதிக்கும் என்பதால்
சொல்லை ரத்னமாகவும் -கவியை ஆரமாகவும் -உருவகம் செய்தமை போதரும் –
ஏக தேச உருவகம் ஹாரத்தில் ரத்னங்கள் போலத் தமிழ் மாலையில் சொற்கள் பதிக்கப் பட்டு உள்ளன –
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-––என்பது பெருமாள் திருமொழி
சொல்லின் இன் தமிழ் மாலை-இதனால் சொற்களின் சேர்க்கை அழகு கருதப் படுகிறது –
பதங்கள் -சொற்களின் இணைப்பை சய்யை-என்பர் வட நூலார் –

இனி கலைச் சொல் என்று கொண்டு கூட்டாது இருந்தபடியே கலை என்பதைக் கவிக்கு அடையாக்கிப் பொருள் கூறலுமாம் –
கலையாகிய கவி என்று இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
சாஸ்த்ரமான பெருமாள் திரு மொழி -என்றபடி – இதனால் கொல்லி காவலன் தனது அனுபவம் உள் அடங்காது -வெளிப்படும்
தன் சொற்களை ரத்னங்களைப் பதித்து வைத்தால் போன்று அழகு பட இணையக் கோத்து வைத்த சாஸ்திர ரூபமான கவி -என்றதாயிற்று –

சூத்திர மணி கணாம் இவ-நூலும் மணியும் போல கீதை /உண்டியும் பாவும் ஒத்து கிடக்கும் அது போல இல்லை–
நூல் ஓன்று மணிகள் நிறைய கண்ணுக்கு தெரியாத நூல் போல இருக்கிறான்..
மணிகளை நூல் தானே தாங்கும்…நாராயணனே -சூத்ரே நமக்கே- பன்மைகள்- மணி கணாம்
ஏகமேவ -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -நாராயணனே
நமக்கே -நாமோ பலர் –
அது போல சாஸ்திர சொல் தெரியும் படி பெருமாள் திரு மொழி-
தத்வ ஹித புருஷார்த்தங்களை -அனுபவம்
சொரூபம் -ரூபம்-குணம்-விபவம்- போன்ற ரத்னங்களை ஸ்ரீ அரங்கன் இடம் ஆரம்பித்து ஸ்ரீ நாரணன் இடம் முடித்தார்
இது தான் நூல்- தெளியாத மறை நூல்கள் தெளிகின்றோம் அருளி செயல்களால்-ஸ்ரீ வேதாந்த தேசிகன்
பல சூத்திர வாக்யங்களுக்கு ஒரு பிர பந்தம்..
இது கொண்டு சூத்திர வாக்யங்களை ஒருங்க விட்டார் ஸ்ரீ பாஷ்யகாரர்

பாடும் பெரியவர் பாதங்களே –
தம் தாமுடைய ப்ரீதிக்கு போக்குவீடாய்-பாடா நின்றுள்ள வைபவத்தை உடையரான –
நம் ஸ்ரீ நாத முனிகள் -ஸ்ரீ ஆள வந்தார் -ஸ்ரீ பெரிய நம்பி –ஸ்ரீ திருமலை நம்பி -ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி –
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் -ஸ்ரீ திருமாலை ஆண்டான் – முதலான ஞானாதிகருடைய திருவடிகளையே-

பாடும் பெரியவர் –
பெருமாள் திருமொழியை அனுசந்திக்கும் போது-கவி இன்பத்துடன் அது தரும் இறை உணர்வின்
இன்பமும் -சேர்ந்து பேரின்பக் கடலில் திளைத்துப் பாடத் தொடங்குகிறார்கள் ரசிகர்கள் –
அவர்களைப் பாடும் பெரியவர் -என்கிறார் ஸ்ரீ அமுதனார் –
இனி -இன்னிசையில் மேவிச் சொல்லிய இன் தமிழ் — 6-10 – என்றபடி இன்னிசை மேவியதாலின் பாடுகின்றனர் என்னலுமாம் –
பாடுவதே பெருமை என்க –

துதிக்கும் பரமன்
குரு பாதம் புஜாம் த்யாயேத்-குரோர் நாம சதா ஜபேத் -குரோர் வ்ர்த்தாஸ் சகதயேத் குரோர் அந்ய நபாலயேத்-அர்ச்சநீயஸ்
சவந்த்யஸ் கீரத்த நீயஸ் ச சர்வதா -என்கிறபடியே சதா ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு -போந்து –
அந்த பாகவத நிஷ்டைக்கு மேற்பட்டார் இல்லை என்னும்படி உத்க்ருஷ்டரான –
யவரேலும் என்னை யாளும் பரமர் -என்றும் –
நம்மை அளிக்கும் பிராக்கள் -என்றும் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவரும் அப்படியே அருளிச் செய்தார் இறே –

பாதங்களே துதிக்கும் பரமன்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அடியிலும் இடையிலும் முடிவிலும் முறையே
பொன்னி வருடும் அடியையும்-1-11
முடி மேல் மாலடியையும் –7 11- –
அரசு அமர்ந்தான் அடியையும் – 10-7 -சொல்லி
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவதையே முதலிலும் இறுதியிலும் பலனாக அமைத்து துதிக்கிறார் –

பொன்னி திரைகையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்-1-1-

நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

அம்மான் தன் அடி இணைக்கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று கொலோ வணுகு நாளே –1-3-

மெய் தழும்ப தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே-2-4-

அங்கை யாழி அரங்கனடியிணை தங்கு சிந்தை தனிப் பெரும் பித்தனாம் கொங்கர் கோன் குலசேகரன் -3-9-

வட வேங்கடத்தான் தன் பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி -4-11-

தரு துயரம் தடையேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1-

எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்-5-5-

வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-

கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகரத் துயின்றவனே -8-10-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்தென் காகுத்தன் தன்னடி மேல் தாலேலோ வென்றுரைத்த தமிழ் மாலை -8-11-

அம்மானை யிராமன் தன்னை ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே-10-6-

தில்லை நகரத் திருச் சித்ரா கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான்
அடி சூடும் அரசை அல்லால் அரசாக வெண்னேன் மற்றரசு தானே -10-7-

அர்ச்சனம் வந்தனம் கீர்த்தனம் பண்ணி- பாகவத நிஷ்ட்டை-அதில் -எவரேலும் அவர் கண்டீர் எங்கள் ஆளும் பரமரே -ஸ்ரீ ஆழ்வார் போலே
மாறன் அடி பணிந்து உய்ந்த சுவாமி-பர கத ச்வீகாரமாக கொண்ட -ஸ்ரீ ஆழ்வானை இட்டு ஸ்ரீ அமுதனாரை கொண்டாரே

அடித் துதியான கலை கவியாம் சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்க்கு தொண்டர் தொண்டரான
ஸ்ரீ எம்பெருமானாரோ அவர்கள் பாதங்களையே துதிக்கிறார் –
அதனால் தொண்டர்கள் திறத்துக் கொண்ட ஈடுபாட்டில் தமக்கு மேற் பட்டார் எவருமே இல்லாத நிலையை எய்தினமையின்
ஸ்ரீ எம்பெருமானாரை பரமன் -என்கிறார் –
பரமன் -தனக்கு மேற் பட்டவர் இல்லாதவன்
என்னைச் சோர்விலன் –
என்னை -தானே அபிமானித்து ஏற்ற என்னை
நானாகப் பற்றினால் அன்றோ விட்டுப் பிரிய இடம் உண்டாகும் என்பது கருத்து –
சோர்வு -பிரிவு

இராமானுசன் என்னை சோர்விலனே –
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார் –
என்னை -பரகத ச்வீகாரமாக அங்கீ கரிக்க பட்ட –
சோர்விலன்-இனி விட மாட்டார் –
சோர்வு -பிரிவு சோர்விலன் -என்றது பிரிகிறிலன்-என்றபடி –
ஆன பின்பு -பிராப்யத்திலே த்வரித்து – ப்ராபகாந்தரங்களிலே கண் வைக்கும் ஸ்வபாவத்தை தவிர்ந்தேன் -என்கிறார் .-
பிராபகாந்தர பரித்யாகத்துக்கும் -அஞ்ஞான அசக்திகள் அன்று –ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –
ப்ராபகாந்தரம் அஞ்ஞருக்கு உபாயம் – ஞானிகளுக்கு அபயம் -என்னக் கடவது இறே-

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை பாராது காப்பிடும் பான்மையினன் தாள் பேராத வுள்ளத்து
ஸ்வாமியை அண்டை கொண்ட பலத்தால் என்னை -என்று சாத்விக அஹங்காரம் தோற்ற அருளிச் செய்கிறார் –

கதிக்கு பதறி –
பரம புருஷார்த்தத்துக்கு த்வரித்து –

வெம் கானமும் கல்லும் கடலும்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——–மூன்றாம் திருவந்தாதி – 76- -என்றும் –

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா
தமதா இமையோர் உலகாள கிற்பீர்—திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—பெரிய திருமொழி-3-2-1- -என்றும் –
காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்துதீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்—திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–பெரிய திருமொழி-3-2-2- -என்றும்
உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் –திரு விருத்தம்-66-என்றும்-
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –அமலனாதி பிரான் -என்றும்-
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய வெக்காவே சேர்ந்தானை
மெய்ம்மலர் தூயக் கை தொழுதால் அக்காவே தீ வினைகள் ஆய்ந்து- என்றும்–மூன்றாம் திருவந்தாதி – 76–சொல்லுகிறபடியே –
அதி க்ரூரமான காடுகளிலே இருந்தும் பர்வதாக்ரங்களிலே வசித்தும்
சீதளமான தீர்த்தங்களிலே அவகாஹித்தும் –
பஞ்சாக்னி மத்யத்தில் நின்றும்
எல்லாம் கொதிக்கத் தவம் செய்யும் -எல்லா அவயவங்களும் ஒக்க பரிதபித்து-க்லேசிக்கும்படியாக தபச்சுக்களை பண்ணும் –

கொள்கை அற்றேன்
ஸ்வபாவம் போகப்-பெற்றேன் –கொள்கை -ஸ்வபாவம் –
அன்றிக்கே –
வெம் கானமும் –கொள்கை அற்றேன் -என்றது –
எதாத்த்ரிஷ்டி மவஷ்டப்ய நஷ்டாத்மா நோல்ப புத்திய ப்ரபவத்வுக்ர கர்மணா
ஷயாய ஜகதோ ஹீத காமமாஸ்ரித்யு துஷ்ப்பூரம் டம்பமா நம தான் வித மோஹாந்தர்
ஹீத்வா சத்க்ரஹான் ப்ரவர்த்தந்தே சூசிவ்ரதா-என்று கீதையிலும் –

பஹூபிகாரணை ர்த்தேவோ விச்வாமித்ரோ மகா முனி -லோபிதக்கோபி தச்சைத
பசாசாபிவர்த்ததே– நஹ்யச்திவ்ரஜி ந கிஞ்சித் தர்ச்யதே சூஷ்ம மப்யதா -நதீயதே
யதித்வச்ய மனசோய தபீப்சிதம் -விநாசயே தத்ரை லோக்ய தபஸா ச சராசரம் –
வ்யாகுலஸ் சதிசஸ் சர்வ நாசா கிஞ்சித் பிரகாசதே –சாகர ஷூபிதாஸ் சர்வே விசீர்யந்தேச சர்வத –
பிரகம்பதேச பிரத்வீ வாயுர்வாதி ப்ர்சாகுலா — பாஸ்கரோ நிஷ்ப்ரபஸ் சைவ மகர்ஷேஸ் தஸ்ய தேஜஸா –என்று ஸ்ரீ ராமாயணத்திலும் –

தஸ்ய தூமஸ் சமுத்பன்ன தூமோக்நிசத போமய-திர்ய கூர்த்தவ மதோலோகோ நதபத் விஷ்வ கீரித –
திவிச்த்தாது -நசக்துவன் –என்று பாகவதத்திலும் -சொல்லுகிறபடியே –
இப்படி ப்ராப்யாந்தரங்களுக்காக தபச்சுக்களை பண்ணி –லோகத்துக்கு எல்லாம் ஷோபத்தை பண்ணும் ஸ்வபாவம்
போகப் பெற்றேன் -என்கிறார் -என்னவுமாம் –

கதிக்கு பதறி கொள்கை ஆற்றேன் –
பேற்றை எவ் வழி யினாலாவது பெற்று விட வேண்டும் -என்று ஆத்திரப்பட்டு –
மிகக் கொடிய தவம் செய்ய எக்ல்காலத்திலும் நான் முயல மாட்டேன் -என்றபடி –
தவம் செய்யுமவர்கள் -கானகத்திலும் -மலைகளிலும் -கடல்களிலும் இருந்து –
வரும் துயரத்தை பொருள் படுத்தாமல் -தவத்தில் நிலை நிற்பர்கள்-

வெம் கானம் -வெம்மையான கானம் -பண்புத் தொகை
கல்-மலை
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–-பெரிய திருவந்தாதி – 68-
கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் -திரு நெடும் தாண்டகம் – 13– என்று
முறையே ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் அருளி உள்ளமை காண்க –

ஸ்ரீ நைமிசாரண்யம் முதலிய கானகங்களிலும்
ஸ்ரீ திருமலை முதலிய பர்வதங்களிலும்
கடலிலும் பலர் தவம் புரிந்து உள்ளமை புராணங்களில் காணலாம் –

ப்ராசீன பர்ஹீஷ் -என்பவருடைய புதல்வர்களாகிய ப்ரசெதசர் -பதின்மர் பதினாயிரம் ஆண்டுகள்
கடலுக்குள் இருந்து தவம் புரிந்து கடவுளைக் கண்டதாக ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்கந்தம் – 4- அத்யாயம் – 30 –கூறுகிறது –

கடல் என்பது உப லஷணமாய் நீர் நிலைகளையும் குறிக்கும் –
ஸௌபரி நீருக்குள் நெடும் காலம் தவம் புரிந்ததாக புராணம் கூறுகிறது –

எல்லாம் கொதிக்க –
தவம் புரிவோர் உடலில் உறுப்புக்கள் அனைத்தும் கொதிக்கும்படியாக -என்றபடி
இனி –வெம் கானமும் கல்லும் கடலும் -இவை அனைத்தும் தவம் தணலின் வெம்மை தாங்காது
கொதிக்கும்படியாக -என்று உரைப்பதும் உண்டு –
ஹிரண்ய கசிபு தவம் செய்யும் போது –
தஸ்ய மூர்த்த்ன ச்சமுபந்த ச்தூமோக்நிச்த போமய திர்யக் ஊர்த்த்வ மதோலோகான்
அதபத் விஷ்வகீரித க ஷூபுர்நத்யுதன்வந்த சத்வீபாத் ரிச்ச்சால பூ நிபேதுஸ் சக்ர ஹாச்தாரா
ஜஜ்வளுச்ச திசோதச -பாகவதம் – 7-9 49-என்று
அந்த ஹிரண்ய கசிபுவினுடைய தலையிலிருந்து தவத்தின் வடிவமான புகையோடு நெருப்பு உண்டாயிற்று –
அது இடையிலும் மேலும் கீழும் உள்ள உலகங்களை நாலு புறங்களிலும் பரவித் தபிக்கும்படி செய்தது –
ஆறுகளும் கடல்களும் கலங்கின -தீவுகள் மலைகளுடன் கூடிய பூமி நடுங்கியது –
கிரகங்களுடன் கூடிய நஷத்ரங்கள் விழுந்தன -திசைகள் பத்தும் தீப் பற்றியவைகளாய் ஜ்வலித்தன – என்றபடி
உலகம் நிலை கொள்ளாது தவித்தமை காண்க –

கொள்கை -ஸ்வபாவம் என்பது ஸ்ரீ ஜீயர் உரை

ஆசார்யர் அபிமானமே உத்தாரகம் -ஆசார்யர் கைங்கர்யமே காலஷேபம் என்று இருக்க வேண்டும்-

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –13-செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் இத்யாதி —

March 29, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளை ஒழிய மற்று ஒன்றில்
ஆதாரம் அற்று இருக்கும் எம்பெருமானார் திருவடிகளே எனக்கு ப்ராப்யம் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே திரு மழிசை ஆழ்வார் உடைய சம்பந்தத்தை இட்டு எம்பெருமானாரைக் கொண்டாடி –இப்பாட்டில் –
தாம் முந்துற முன்னம் தொண்டு பட்ட -பெரிய பெருமாள் திருவடிகளில் அதி ப்ரவணராய் –மற்றுமோர் தெய்வம் உண்டே -என்று
அவரை ஒழிந்த எம்பெருமான்களை விரும்பாத -பாதிவ்ரத்யத்தை உடையரான-ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் உடைய
திருவடிகள் ஒழிய வேர் ஒன்றில் ஆதாரம் அற்று இருக்கிற எம்பெருமானார்-திருவடிகளே எனக்கு பிராப்யம் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளை ஒழிய மற்று ஒன்றில் ஆதரம் அற்று இருக்கும்-
எம்பெருமானார் திருவடிகளே நமக்கு ப்ராப்யம் -என்கிறார் –

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-

பத உரை –
செய்யும் -செய்யப்படும்
பசும் துளவம் -வாய்ந்த திருத் துழாயிலான
தொழில் -வெளிப்பாட்டை -அதாவது -தக்கவாறு அமைப்புடைய
மாலையும் -திரு மாலையும்
செம் தமிழில் -செம்மையான தமிழ் மொழியில்
பெய்யும் -செய்யப்படும்
மறை -வேதமான
தமிழ் மாலையும் -திரு மாலை-திருப் பள்ளி எழுச்சி என்னும் தமிழ் பா மாலையும்
பேராத -நீங்காது -இயல்பாய் அமைந்த
சீர் -நற் குணங்களை உடையனான
அரங்கத்து ஐயன் -திருவரங்கத்தில் கண் வளர்ய்ம் பெரிய பெருமாள் உடைய
கழற்கு -திருவடிகட்கு
அணியும் -அலங்காரம் செய்யும்
பரன் -மிக சிறந்த தொண்டர் அடி பொடி ஆழ்வார் உடைய
தாள் அன்றி -திருவடிகளைத் தவிர
ஆதரியா -ஆதரிக்காத
மெய்யன் -மெய்மையை உடையவரான
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
சரணே -திருவடிகளே
எனக்கு -எனக்கு
வேறு கதி -தனிப்பட்டு பெறத் தக்கதாம் -அதாவது ப்ராப்யமாம் .

கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்
தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9-
மிக்க சீர்த் தொண்டரான -பெரிய திரு மொழி -11 1-9 – தம்மாலே செய்யப்பட்டதாய் –
தம்முடைய கர ஸ்பர்சத்தாலே வந்த புதுக் கணிப்பு எல்லாம் நிறத்திலே காணலாம்படி இருக்கிற திருத் துழாயாலே-
வகுப்புண்டாய்ச் சமைத்த திரு மாலையையும் -ச்வார்த்த ப்ரகாசகமான தமிழிலே உண்டாக்கப் பட்டதொரு வேதம்
என்னலாம்-ஆன தமிழ் தொடையையும் –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே–4-10-2—வீடில் சீர் -திருவாய் மொழி – – என்கிறபடியே
நித்ய சித்தமான கல்யாண குணங்களை உடையராய் கொண்டு

மெய் எல்லாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே – -திருமாலை – 39-
ஐயனே அரங்கனே -என்னும்படியே-
பரம பந்துத்வம் தோற்ற கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் உடைய திருவடிகளுக்கு-சாத்துமவராய் –
சேஷத்வ காஷ்டையில் நிற்கையாலே சேஷத்வத்துக்கும் தமக்கு மேற் பட்டார் இல்லை-என்னும்படி இருக்கிற
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் உடைய திருவடிகளை ஒழிய விரும்பாத-சத்ய சீலரான
எம்பெருமானார் உடைய திருவடிகளே எனக்கு விசேஷித்து ப்ராப்யம் –
பெய்தல்-உண்டாக்குதல் / பெறாமை -நீங்காமை-

வேறு கதி -விசேஷ ஸூ லபமான–பந்தத்துக்கு இல்லாமல் – மோக்ஷம் ஏக கதி –
பேராத சீர் -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று இருக்கும் அரங்கன் —
தொண்டர்களில் பரன் -தொண்டர் தலைவர் -தாஸ்யர்களில் பரன் -பராத் பரன் மேன்மையிலே பரன் -சேஷி சேஷ பரர்கள் இருவரும் –
அரங்கன் என்றால் மயலே பெருகும் படி அருளிச் செய்த ஆழ்வார் இவரே-வனமாலை அம்சம் –
வேறு பட்ட கதி உபாயம் உபேயம் ப்ராப்யம் பிராப்பகம் ஒன்றான விலக்ஷண கதி-

செய்யும் பசும் துளபத் தொழில் மாலையும் –
மிக்க சீர் தொண்டரான தம்மாலே –வைஜயந்தீ வனமாலை என்றும் கலம்பகன் மாலை என்றும்
அனுபோக்தாக்களாலே உல்லேக்கிக்கும் படி சந்தர்ப்பிக்கப் பட்டதாய் -தம்முடைய கர ச்பர்சத்தாலே வந்த புதுக் கணிப்பு எல்லாம்
நிறத்திலே காணலாம் படியான பசுமை உடைத்தான -திருத் துழாயாலே வகுப்புண்டாய் சமைத்த திரு மாலையும் –
கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–திருப்பள்ளி எழுச்சி–10-
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் இவர்
தம்மை தாமே நிரூபித்து கொள்ள வல்லவர் இறே –

செய்யும் மறைத் தமிழ் மாலையும் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இருவகை மாலைகளை அரங்கத்து ஐயனுக்கு சமர்ப்பிக்கின்றார் –
ஒருவகை -திரு துழாய் மாலை
மற்று ஒரு வகை -தமிழ் மாலை
ஆண்டாளும் அரங்கனுக்கு பா மாலையும் பூ மாலையும் சமர்பித்து உள்ளாள்-
ஆயின் அப்பூ மாலை அவளால் தொடுக்கப் பட்டது அன்று -சூடி சமர்பிக்கப் பட்டது தான்
திருத் துழாய் மாலையோ தொண்டர் அடி பொடி ஆழ்வார் தம் கையினாலேயே தொடுத்தது –ஆதலின் –
செய்யும் துளப மாலை -என்றார் –

திருத் துழாய் அடியிலே பிறந்து திருத் துழாய் போலே பிறப்பே தொடங்கி ஞானம் மணம் கமழும் ஆண்டாளை
திருத் துழாயோடு உண்டான தொடர்பாலும் ஒப்புமையாலும் மிக இனியவளாக கருதி
அவள் சூடிய பூ மாலையை அரங்கன் தலையாலே தாங்குவான் ஆயின் –
நேரே திருத் துழாய் மாலையை தொண்டர் அடி பொடி ஆழ்வார் மிக்க ஆதரத்துடன் கையாலே தொடுத்து -சமர்பித்தது அரங்கனுக்கு
எவ்வளவு இனியதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வல்லோம் அல்லோம் –
இத்தகைய துழாய் மாலையை அரங்கன் கழற்கு அணிவிக்கிறார் ஆழ்வார் -அம்மாலை என்ன ஆயிற்று என்பதை நாம் அறிகிலோம் –
திருத் துழாய் சம்பந்தம் பெற்றவள் தந்த மாலை தலை மேல் ஏறியது –
இது சாஷாத் திருத் துழாய் மாலை –
சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-
அதற்க்கு மேல் தன் பால் ஆதரம் பெருகி ஆழ்வார் தம் கைப்பட தொடுத்து சமர்ப்பித்தது
அதற்க்கு மேல் அரங்கனை பிரிந்து வருந்துவோர் -அரும் துயரைப் போக்கி -கண் உறங்கப் பண்ணுவதும் அதுவே –
முதன் முதல் இருந்து மறைந்து போன அவர்களது மாந்தளிர் நிறம் மறுபடியும் பளிச்சிட செய்வதும் அதுவே –

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத் துழாய் மாலையை கீழ் சொன்ன பூ மாலையோடு ஒப்பத் தலை மேல் தாங்கினால் போதுமா –
என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றாது –
ஆழ்வார் தாம் தொண்டர் ஆனமைக்கு ஏற்ப கழலில் அணிவித்ததும்
அவர் பத்தி கண்டு மயங்கிக் கிடக்கிறான் போலும் ஐயன் அரங்கத்திலே –
இனி ஆழ்வார் இடம் உள்ள மதிப்பினால் மாற்றாது அங்கனமே கழலில் அணிந்து இருந்தான் ஆகவுமாம்-
இனி கழலில் அணிந்தது உப லஷணமாய்-
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாளணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவினுளானே–1-9-7–திருவாய் மொழி -1 9-7 – -என்ற பாசுரப்படி
அந்த அந்த-அவயவங்களிலே புனைந்தான் ஆகலுமாம் –

திருமங்கை ஆழ்வார் -பிரிவால் வருந்தும் தலைவி நிலை எய்தி –
தொண்டர் அடி பொடி ஆழ்வார் போல்வார் அருகு இருந்து திருத் துழாய் சமர்ப்பிக்க –
அவ் வாசனையை வண்டு கொண்டு வந்து ஊதினால் கண்கள் உறங்கும் –
முதன் முதல் இருந்த எனது நிறம் மீண்டும் வரும் என்னும் கருத்துப்பட அருளி செய்யும் பாசுரம் இங்கு அனுசந்திக்க தக்கது –
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே
வண்டு கொண்டு வந்தூதுமாகிலே -பெரிய திருமொழி -11 1-9 – –
சூத்திர பலன்களை விரும்பி தொண்டு செய்பவர் -தொண்டர் –
உபயாந்தரங்கள் மூலம் சிறந்த புருஷார்தத்துக்கு அடிமை செய்பவர் -சீர்த் தொண்டர் –
ஒரு பலனும் பேணாதே ஸ்வயம் பிரயோஜனமாக அடிமை செய்பவர் மிக்க சீர்த் தொண்டர் –
இங்கு மிக்க சீர்த் தொண்டர் எனபது -தமக்கு ஒரு பயன் கருதாது -பரிவுடன் அரங்கனை பரிந்து-காப்பவரைக் குறிக்கிறது –
பூம் துளவு அவர் இட்டதாயின் வருந்த வேண்டியது இல்லை –
பிரிந்து வருந்தும் தலைவிக்கு தான் இன்பம் காண வில்லையே என்பதனால் அன்று ஏக்கம் –
தான் பிரிந்த நிலையில் தலைவனை அருகில் இருந்து பாதுகாப்பார் யாரும் இல்லையே என்பதனால் ஆயது அது –
மிக்க சீர் தொண்டர் பக்கத்தில் இருப்பது தெரிந்தால் அவ் ஏக்கம் நீங்குகிறது என்க-
அத்தகைய மிக்க சீர் தொண்டர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரே என்று கொள்ளல் தகும் –
பூத் துளவு இடுபவர் அவர் தானே –

திரு மங்கை ஆழ்வார் அரணாக அரங்கனுக்கு மதிள் கட்டும் போதும் –
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருமாலை கட்டும் இடத்தை இடிக்காது -ஒதுக்கிக் கட்டினார் -என்று கூறப் படுவதும் காண்க –
அவர் கையால் தொடுத்தது என்னும் கருத்துடன் –செய்யும் துளவ மாலை -என்கிறார் அமுதனார் –
வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–திரு மாலை – 45-
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி – என்று திருத் துழாய் தொண்டையே
தமக்கு நிரூபகமாக இவரே சொல்லுகையாலும் –
தொடை யொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தொல் தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -என்று
பெருமாள் திரு அவயவத்துக்கு தக்கவாறு அமைந்த திருத் துழாய் மாலையுடன் கூடையைக் தமக்கு அடையாளமாக
இவரே அருளிச் செய்கையாலும் -துளவ மாலை -என்றார் –

ஏனையோர் மாலை தொடுக்கும் போது அவர் கைப்பட்டுத் திருத் துழாய் வாடும் –
இவ் ஆழ்வார் கைப் படினோ- புதுக் கணிக்கிறது திருத் துழாய் –
அதற்க்கு காரணம் அரங்கனுக்கு அணி செய்ய திருத் துழாய் வடிவத்தில் நித்ய சூரியே வந்து இருப்பதால் -தனக்கு
தொண்டு பட்ட ஆழ்வார் உடைய திருக் கரம் பட்டதும் புத்துணர்ச்சி ஏற்பட்டு புதுக் கணிப்பு உண்டாகிறது –
அது பசுமை நிறத்தாலே வெளிப்படுகிறது -அது தோன்ற -பசும் துளவ மாலை -என்கிறார் –
எம்பெருமானுடைய ஆடை ஆபரணம் ஆயுதம் மாலை இவை எல்லாம் அறிவற்ற பொருள்கள் அல்ல –
நித்ய சூரிகளே இவ்வடிவுகளில் பணி புரிகின்றனர் -எனபது நூல் கொள்கை –
ஆதலின் திருத் துழாய் மிக்க சீர் தொண்டர் திருக் கரம் பட்டதும் -புதுக் கணித்தல் கூடும் –என்க –
இவ்விடத்தில் -திரு மாலை எடுத்தால் திருக் குழலுக்கும் மார்வுக்கும் அளவாய் இருக்கை –
திரு மாலை யாயும் -திருப்-பரிவட்டமாயும் -நிற்கிறார் சேதன வர்க்கம் இறே-என்று திருப்பள்ளி எழுச்சி யில் –
தொடை யொத்த துளவமும் -என்னும் பகுதிக்கு பெரிய வாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானம் அறிய தக்கது –

தொழில் மாலை –
நடுவில் பருத்தும் -வர வர சிறுத்தும் வேலைத் திறன் தோற்ற சமைத்த மாலை -என்றபடி –
அரங்கனுக்கு இவர் துளவ மாலை அணிவித்தாலும் இவர் செய்வது அரங்கன் தொண்டு அன்று -துளவத் தொண்டே –
அதாவது திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டே எனபது அறிய தக்கது –
துளவத் தொண்டரே -இவர் -துளவத் தொண்டாய் -என்று இவர் கூறிக் கொள்வது காண்க –
திருத் துழாய் ஆழ்வாருக்கு புரியும் தொண்டு அவருக்கு ஆள் பட்ட தொண்டர் அனைவருக்கும் புரியும் தொண்டாய் தலைக் கட்டும் –
ஸ்வா பாவிகமான பகவத் சேஷத்வத்தின் சீமையிலே –
சஹஜ கைங்கர்யத்தின் உடைய மேல் எல்லை ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யம் இறே –
தொண்டர் அடிமையில் எல்லை நிலையில்-வந்து அபிமானம் அற்ற நிலையில் -அடிப் பொடியாக தம்மை சொல்லிக் கொள்கிறார் –
இங்கு துளவ மாலை அணியும் பணி கூறவே தன்னடைவே தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் என்பது போதரும் –
திரு மாலை கடைசி பாசுர வியாக்யானம் காண்க –

துழாய் சம்பந்தத்தால் உகந்தான் ஆண்டாள் சூடிய மாலை.-அந்த துளவதுக்கே தொண்டு புரிந்தவர் இவர்
அது போல் இவருக்கும் ஏற்றம்
புது கணிப்பு தளிர்கிறது இவர் கர ஸ்பர்சம் பட்டதால்
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-திரு நெடும் தாண்டகம்–1-
தளிர் புரையும் திருவடி -போலே
நித்ய சூரிகள் தானே இந்த புஷ்பங்கள்-கைங்கர்யம் செய்ய இங்கே வந்தவை இந்த ரூபத்திலே
கர ஸ்பர்சம் பெற்று புது கணிப்பு பெற்றதாம்
தொடை யத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றும் தோள்

செந்தமிழ் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் –
அருமறைகள் போலே த்ரை வர்ணிக அதிகாரமாய் இருக்கை அன்றிக்கே
பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கலாம் படி சர்வாதிகாரமாய் –
அந்யோன்யோ பமதர்த்த வாக்யங்களாலே பிரம்மத்தை விநாசிப்பித்தும்-ஸ்வ அர்த்தத்தை அறிவதற்கும்
துரவஹாகங்களாயும் இருக்கை அன்றிக்கே
சார தம அர்த்த பிரகாசமாய் -த்ரமிட பாஷையாலே நிர்மிக்கப்பட்ட -திரு வேதம் என்று நிரூபிக்கும்படியாய் இருப்பதாய்
திரு மாலை என்னும் பேரை உடைத்தான தமிழ் மாலையும் -பெய்தல்-உண்டாக்குதல்

செந்தமிழ் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் –
துளவ மாலையை பற்றிக் கூறப்பட்டது -இனி தமிழ் மாலையை பற்றிக் கூறப்படுகிறது –
திருத் துழாயால் ஆவது அம்மாலை -இம்மாலை செம் தமிழால் ஆவது –
செம் தமிழ் ஆவது -தெளிவாக தன் பொருளை காட்டும் சொல் –
அத்தகைய சொல்களை கொண்டு செய்யப்பட்டது -தமிழ் மாலை
பெய்தல்-செய்தல்
வேலைப்பாடு அமைந்தது துளவ மாலை -இது மறை தமிழ் மாலையாய் அமைந்தது –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –
மறையின் குருத்தின் பொருளையும் செம் தமிழையும் ஒன்றாக திரித்தி பாடினார் -பொய்கை ஆழ்வார் –
நான் மறை செம் பொருளை செம் தமிழால் அளித்தார் பாண் பெருமாள்-
இவரோ மற்று ஒரு பாஷையாய் இராது தமிழாகவே ஆகி விட்ட வேதம் என்னும்படியான
தமிழ் மாலையை தொடுத்து அளிக்கிறார் –
தம் சொற்களை மலராகவும் -தமது நூலை மாலையாகவும் ஆழ்வார்கள் பல இடங்களில் அருளி செய்து உள்ளனர் –
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் சொன்ன -என்றார் நம் ஆழ்வார்
இதில் சொற்களை நறிய நன் மலர்களாக குறிப்பிட்டு இருப்பது காண்க –
நூலை சங்கத் தமிழ் மாலை -என்றாள் ஆண்டாள் –

பேராத சீர் அரங்கத்து ஐயன் –
பராஸ்ய சக்திர் விவிதை வஸ்ருயதே ஸ்வாபாவி கீஜ்ஞா நபலக்ரியாச -என்றும்
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்றும் –
நித்யஸ் சத்யோ நிஷ் களங்கோ நிரஞ்சனோ நிர்விகல்போ நிராக்யாத அச்சுதோ தேவ ஏகோ நாராயணா -என்றும் –
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10-
ஈறில வண் புகழ் நாரணன் -என்றும் -சொல்லுகிறபடியே
ஹேயப் பிரதிபடங்களாய் நித்யங்களாய் இருக்கிற கல்யாண குணங்களை உடையவனாய் –
மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரண சூக்ர்த் கதி -என்றும் -பிதாசி லோகஸ்ய சராசரஸ்ய -என்றும் –
பிதா ப்ராதா சமாதாச மாதவ -என்றும் -தாயாய் தந்தையாய் -என்றும் -சொல்லுகிறபடி சர்வ வித பந்துவாய்
தோற்றும் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளின பெரிய பெருமாள் –
ஐயனே அரங்கனே என்று இவரும் தம் பிரபந்தத்திலே அருளிச் செய்தார் இறே
அரங்கத்து ஐயன் –
அந்த ஸ்தலத்தை இட்டு அவர் தம்மை நிரூபிக்க வேண்டும்படி காணும் இவர் தமக்கு அதிலே ப்ராவண்ய அதிசயம் இருப்பது –
பேராமை -நீங்காமை -அப்படி பட்டவருடைய

பேராத சீர் அரங்கத்து ஐயன் –
பேராத -நீங்காத
சீர் -கல்யாண குணங்கள்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப் பிரான் -என்றார் நம் ஆழ்வாரும்
நீங்காமல் என்றும் உள்ளவையையாய் இருத்தற்கு ஹேது -இயல்பாய் அமைந்தமை –
ஞான சக்திகள் ஸ்வபாவிகங்கள்-என்றது வேதமும் –
எளிமைப்பட்ட அர்ச்சை நிலையிலும் -பரத்வ நிலை மாறாமல் இருப்பது பற்றி –பேராத சீர் -என்றதுமாம் –
காவேரீ விரஜா ஸேயம்
வைகுண்டம் ரங்க மந்திரம்
ச வாஸூதேவோ பகவான்
ப்ரத்யஷம் பரமம் பதம் -என்று
காவேரியே விரஜை யாறு -ஸ்ரீ ரங்க விமானம் ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ ரங்க நாதன் பர வாசுதேவன் –
ஆக கண் எதிரே தோன்றும் பரம பதம் -எனபது காண்க –
முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான் முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே–திருவாய்மொழி – 7-2 10-
வடிவுடை வானோர் தலைவனே –என்று நம் ஆழ்வார் அரங்கனை நித்ய சூரிகளின் தலைவனாகக் கூறுகிறார் –
தமேவமத்வா பரவாஸூதேவம் ரங்கேசயம் ரரஜவதர்ஹநீயம்-என்று
திரு வரங்கத்தில் பள்ளி கொண்ட பர வாசுதேவனை ராஜ உபசாரத்துக்கு உரியவனாக நினைத்து
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருப் பள்ளி எழுச்சி பாடுகிறார் –

இனி சீர் ரங்கம் என்பதை ஸ்ரீரங்கமாக கொண்டு -அத் திரு வரங்கத்துக்கு -பேராத – என்பதை அடை மொழி யாக்கலுமாம் –
பேராத -நகராத
திரு அயோத்யையில் இருந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஸ்ரீ ரங்க விமானத்தை எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு போகும் பொழுது
இங்கு காவேரிக் கரையிலிருந்து விபீடணற்கு பேராமல் இருந்தது பிரசித்தம் –
இனி சத்ய லோகத்தில் இருந்தும் -அயோத்திக்கும் -அங்கு இருந்து விபீடணன் மூலம் காவிரி ஆற்று இடைக்கும் பேர்ந்து வந்தது போலே –
இங்கு இருந்து வேறு ஓர் இடத்துக்கு எக்காலத்தும் பேராமல் இருத்தல் பற்றி –பேராத சீர்ரங்கம் -என்றார் ஆகவுமாம்-
இங்கு -சத்யால்லோகாத் சகல மகிதாத் சத்தா நதொவாரகூனாம்
சங்கே மாதஸ் சமதிக குணம் சைகதம் சஹ்ய ஜாயா
பூர்வம் பூர்வம் சிரபரிசிதம் பாதுகே யத்த்ய சந்த்யா
நீதோ நாத சததி மிதரன் நீயதே நத்வா நசவ்-பாதுகா சகஸ்ரம் – 53- என்று
தாயே பாதுகையே –
அனைவரும் போற்றும் சத்ய லோகத்தை பார்க்கிலும் –
ரகு மகாராஜன் வம்சத்தவர்க்கு உறைவிடமான அயோத்யைப் பார்க்கிலும் –
காவேரியின் மணல் திடர் மிகவும் சிறப்பு உற்றது என்று நினைக்கிறேன்-ஏன் எனில்
நெடு நாட்கள் பழகின முந்தின இடத்தை விட்ட உன்னால் ஸ்ரீ ரங்க நாதன் இந்த மணல் திடருக்கு எழுந்து அருளப் பண்ணப் பட்டான் –
இவ் ரங்கநாதன் இங்கு இருந்து வேறு ஓர் இடத்துக்கு எழுந்து அருள பண்ணப் பட வில்லை -என்னும்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ஸூக்தி அனுசந்திக்க தக்கது –

அரங்கத்து ஐயன் –
ஐயனே அரங்கனே -திரு மாலை – 33- என்று தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளியதையே முன் பின்னாக மாற்றி
அரங்கத்து ஐயன் – என்று அருளி செய்கிறார் அமுதனார் –
பெரியவாச்சான் பிள்ளை -நிருபாதிக பந்து – இயல்பாய் அமைந்த -பந்து என்று ஐயன் என்பதற்கு வியாக்யானம் அருளினார் –
அதனையே இங்கும் கொள்க –

கழற்கு அணியும் –
திருவடிகளுக்கு அலங்காரமாக சமர்ப்பித்த –

பரன் –
சேஷத்வத்துக்கு தமக்கு மேற்பட்டார் இல்லை என்னும்படி அதனுடைய சரம அவதியிலே -நிற்கையாகிற அதிகாரத்தைப் பெற்று
உத்கர்ஷ்டரான ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி-ஆழ்வார் உடைய –
தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் –
என்று சேஷத்வத்தின் உடைய சரம அவதியை இறே இவர் பிரார்த்தித்தது

பரன் –
எல்லோரிலும் மேம்பட்டவர் -தொண்டர் அடிப் பொடியாய் -உன் அடியார்க்கு ஆள் படுத்தாய் -என்று அந் நிலைமையை வேண்டி
சேஷத்வத்தினுடைய எல்லையிலே நிலை நிற்கையாலே சேதனரில் இவரிலும் மேற்பட்டவர் யாரும் இல்லை என்க-
சேஷித்வத்தின் எல்லை நிலையில் இருந்து தனக்கு மேற்பட்டவர் இல்லாமையாலே
எம்பெருமானை –பரன் -என்பது போலே -சேஷத்வத்தின் எல்லையில் இருந்து தனக்கு
மேம்பட்டவர் இல்லாமையாலே தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -பரன் -என்கிறார் –
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–-ஸ்ரீ திருவாய் மொழி–3-7-1-
வடிவழகிலும் குணங்களிலும் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமிகள் போலவே இங்கும் –

சேஷியினுடைய பரத்வத்துக்கு சங்கு சக்கரங்கள் அடையாளங்கள்-
ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் -என்பது காண்க –
சேஷத்வத்தின் எல்லையில் இருக்கும் இவ் ஆழ்வார் உடைய பரத்வத்துக்கு அடையாளம்
துவளக் கூடை -கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -திரு பள்ளி எழுச்சி -10 -என்பது காண்க –

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்–7-

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–9-

வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே–8-

அருளியவரை சேர்க்க தெளிவாக அருளினார் .-பதிவிரதை பூர்த்தி- அரங்கனுக்கே ஆட்பட்ட ஸ்ரீ ஆழ்வார் –
அர்ச்சா விசேஷத்தில் – மட்டும் பூர்ண ஆசை.
முனியே நான்முகனே – போலே சங்கை இன்றி அருளிய திருமாலை
மறந்தும் புறம் தொழா மாந்தர் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு –

தாள் அன்றி
திருவடிகளை ஒழிய –இவர் கோடியான ஆழ்வார்கள் உடையவும்
ஸ்ரீ பெரிய முதலியார் தொடக்கமான பிரபன்னர் உடையவும்-திருவடிகளை ஒழிய -என்றபடி –

ஆதரியா மெய்யன்–
வேறொரு சாதனாந்தர நிஷ்டரை விரும்பாத சத்ய சீலரான –யதாத்ர்ஷ்டார்த்த வாதித்வம் -சத்ய சீலத்வம் –
சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை – தாம்
அவனுக்கு பர்யங்கமாய் இருக்கிற தசையிலே -கண்டபடியே அவதாரத்திலே ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச் செய்த
சத்ய சீலர் ஆகையாலே –மெய்யன் -என்கிறார் –

பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளைத் தவிர மற்று எதைனையும் விரும்பாதவராம் எம்பெருமானார் –
ஸ்ரீ ஆழ்வார் தொடர்களுடைய அடிப் பொடியை ஆதரித்து அதனையே தனக்கு நிரூபகமாக கொண்டார் -ஸ்ரீ எம்பெருமானார்
அடிப் பொடியின் அடியை அன்றி -ஆதரியாதவர் ஆனார் –
தாயின் கொங்கைகளில் அன்றி வெறும் எங்கும் கண் வையாத குழந்தை போலே -ஸ்ரீ ஆழ்வார்கள் அடிகளில் அன்றி
வேறு எங்கும் கண் வையாதவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்க
இனி பரனாக ஸ்ரீ ஆழ்வாரையே கொண்டமையின் –
அவன் தாள் அன்றி பரன் என்று பேர் கொண்ட ஸ்ரீ எம்பெருமான் தாள்களையும் ஆதரியார் -என்னுமாம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் அனைவரும் ஒரே சமஷ்டியாய் -ஒரே தரத்தினராய் இருத்தலின் – அவர்கள் திருவடிகளையும் –
அவர்கள் தந்த ஞானத்தால் உய்ந்த அவர்களுடைய சீடரான
ஸ்ரீ நாதமுனி முதலிய ஆசார்யர்கள் உடைய திருவடிகளையும் ஸ்ரீ எம்பெருமானார் ஆதரிப்பது இதற்கு முரண் படாது -என்க –

மெய்யன்
உண்மை கூறுபவர் –
காண்பது அனைத்துமுன்மை என்று கண்டவற்றை மாற்றாது உரைப்பவர் –
காண்பது அனைத்தும் சத்தியமே என்று வேதம் அறிந்தவரான இவர் கொள்கை –
எனவே காண்பதை இல்லை என்னும் பொய் உரையை சஹிக்காதவர் -என்க
பரன் தாள் அன்றி ஆதரியாதது போலே மெய்யை அன்றி ஆதரியாதவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- – என்பர் மேலும் –
ஆத்மாவினுடைய தேக பரிமாணத்வ ஷணிக ஜ்ஞானரூபத்வ ஜடத்வாதிகள் என்ன –
ப்ரஹ்மத்தினுடைய மாயா சபளிதத்வ உபாதி மிஸ்ரத்வ விகாரித்வாதிகள் என்ன –
சுத்த அசத்யமாய் இருப்பதொன்றை மேன்மேலும் உபபாதியா நிற்கும் பாஹ்ய குத்ருஷ்டி மதத்தை ஒட்டி இந்த பூமியிலே
யதார்த்தத்தை பரிபாலித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானார் –என்றபடி –

இராமானுசன்
ஸ்ரீ எம்பருமானாருடைய

சரணே கதி வேறு எனக்கே
திருவடிகளே -என்கிற அவதாரணத்தாலே -அநந்ய கதித்வம் சொல்லிற்று
எனக்கே -வேறு
ஒரு க்ரியா விசேஷத்தை-பண்ண மாட்டாத -அகிஞ்சனான அடியேனுக்கு -திருவடிகளே விசேஷித்து -உபாயமும் உபேயமும் -என்றபடி –
உபாய உபேய பாவேன தத்வதஸ் சர்வ தேசிகை-சூநிச்சிதான்க்ரி பத்மாய யதிராஜாய மங்களம் – என்னக் கடவது இறே –

சரணே கதி வேறு எனக்கு –
சரண்-திருவடிகள்
ஏ-பிரி நிலையின் கண் வந்தது
சரண் அல்லாதது எனக்கு கதி அன்று -என்றதாயிற்று –
கதி -பேறு–கம்யதே -பெறப்படுகிறது -இதி -என்கிற காரணத்தால் கதி -பேறு என்க
வேறு கதி -தனி சிறப்புற்ற பேறு
ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடி -பேறு
ஆச்சார்யராம் ஸ்ரீ எம்பெருமானாருடைய திருவடியோ-சிறப்பு வாய்ந்த வேறு பேறு -என்று உணர்க –

திருத் துழாய் ஆழ்வாருக்கு ப்ராப்யம் அரங்கத்து ஐயன் திருவடி –
அணிவிப்பவரான ஸ்ரீ ஆழ்வாருக்கு பிராப்யம் திரு துழாய் ஆழ்வாருக்கு அடிமை புரிவதால் உகக்கும் தொண்டர்கள் அடி
ஸ்ரீ எம்பெருமானாருக்கு ப்ராப்யம் பரரான ஸ்ரீ ஆழ்வாருடைய திருவடி
ஸ்ரீ அமுதனார்க்கு ப்ராப்யம் ஆசார்யரான ஸ்ரீ எம்பெருமானார் திருவடி-என்றது ஆயிற்று-

ஸ்ரீ ராமானுஜர் -ஸ்ரீ அமுதனார் -ஸ்ரீ ஆழ்வார் மூவரும் பதி விரதை.. முறையே –
ஸ்ரீ ஆழ்வாரையும் -ஸ்ரீ சுவாமியையும் -ஸ்ரீ அரங்கனையும் -மட்டுமே என்று இருந்தவர்கள்-

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .