Archive for the ‘அருளிச் செயலில் அமுத விருந்து –’ Category

ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதார பரமான அருளிச் செயல்கள்—

July 15, 2020

I .ஸ்ரீ பெரியாழ்வார் (முதலாயிரம் )

1.எந்தை தந்தை தந்தை ( திருப்பல்லாண்டு -6)
2.பிறங்கிய பேய்ச்சி 1—-3—-5
3.கோளரியின் 1—-6—-2
3.அன்னமும் 1—-6—-11
4. அளந்திட்ட தூணை 1—-7—-9
5.குடங்கள் எடுத்து 2—-7—-7
6.முன் நரசிங்கமதாகி 3—-6—-5
7.கதிராயிரம் 4—-1—-1
8.பூதமைந்தொடு 4—-4—-6
9.கொம்பினார் பொழில் 4—-4—-9
10.வல்லெயிற்று 4—-8—-8

11.உரம் பற்றி இரணியனை 4—-9—-8
12.தேவுடைய மீனமாய் 4—-9—-9
13.நம்பனே 5—-1—-9
14.மங்கிய வல்வினை 5—-2—-4

II ஸ்ரீ ஆண்டாள் —திருப்பாவை

15.முப்பத்து மூவர்- 20
16.மாரி மலை முழைஞ்சில் 23
17.கூடாரை வெல்லும் 27

நாச்சியார் திருமொழி

18. நாளை வதுவை மணம் 1—-6—-2
19.வரிசிலை 1—-6—-9
20. வான் கொண்டு 1—-8—-5

III திருமழிசை ஆழ்வார் –திருச்சந்தவிருத்தம்

21.வால் நிறத்தோர் சீயமாய் 23
22.கங்கை நீர் பயந்த 24
23.வரத்தினில் 25
24. கரண்ட மாடு 62
25.விள்விலாத 102

IV திருப்பாணாழ்வார்

26.பரியனாகி வந்த 8

V திருமங்கை ஆழ்வார்–பெரிய திருமொழி

27.மருங்கொள் ஆளரி 1—-2—-4
28.மான் முனிந்து 1—-4—-8
29.ஏனோர் அஞ்ச 1—-5—-7
30 முதல் 39அங்கண்ஞாலம் முதலாக –10 1—-7—-1 to
1—7—10
40. எண் திசைகளும் 1—-8—-6
41.தெரியேன் பாலகனாய் 1—-9—-7
42.தூணாய் அதனூடு 1—-10—-5
43.பள்ளியில் ஓதி வந்த 2—-3—-8
44.காண்டாவனம் 2—-4—-2
45.தாங்காத தொராளரி 2—-4—-4
46.புகராருருவாகி 2—-4—-7
47.உடம்புருவில் 2—-5—-3
48.பேணாத வலி அரக்கர் 2—-5—-7
49.பெண்ணாகி இன்னமுதம் 2—-5—-8
50.பட நாகத்தணை 2—-5—-10

51. அன்னமும் மீனும் 2—-7—-10
52. திரிபுரம் 2—-8—-1
53. மாறுகொண்டு 3—-1—-4
54.பொங்கி அமரில் 3—-3—-8
55.பஞ்சிய மெல்லடி 3—-4—-4
56.சலங்கொண்ட 3—-9—-1
57. திண்ணியதோர் 3—-9—-2
58. ஓடாத வாளரியின் 3—-10—-4
59.உருவாகி 4—-1—-7
60.உளைய ஒண் திறல் 4—-2—-7

61. கெண்டையும் குறளும் 4—5—-6
62.முடியுடை அமரர்க்கு 4—10—8
63.வெய்யனாய் 5—-3—-3
64.ஏன மீனாமையோடு 5—-4—-8
65.வளர்ந்தவனை 5—-6—-4
66.எங்கனே உய்வர் 5—-7—-5
67.வக்கரன் வாய் 5—-9—-5
68. முனையார் சீயமாகி 6—-5—-2
69.பைங்கண் ஆளரி 6—-6—-4
70. அன்றுலகம்
6—-6—-5

71. ஓடா அரியாய்
6—-8—-4
72.அத்தா ! அரியே ! 7—-1—-8
73. ஓடா ஆளரியின் 7—-2—-2
74.ஆங்கு வெந்நகரத்து 7—-3—-5
75.அடியேன்
7—-3—-9
76.வந்திக்கும் 7—-4—-5
77.சிங்கமதாய்
7—-6—-1
78.விண்டான் 7—-7—-5
79.சினமேவும் 7—-8—-5
80. பன்றியாய் 7—-8—-10

81. மடலெடுத்த 8—-3—-6
82. நீர் மலிகின்றது 8—-4—-4
83. ஆமையாகி அரியாகி 8—-6—-5
84. உளைந்த அரியும் 8—-8—-4
85. மீனோடு ஆமை 8—-8—-10
86. மிக்கானை
8—-9—-4
87. மாணாகி வையம் 8—-10—-8
88. பரிய இரணியது 9—-4—-4
89.சிங்கமதாய் அவுணன் 9—-9—-4
90. துளக்கமில் சுடரை 10—-1—-4

91. உளைந்திட்டெழுந்த 10—-6—-3
92. தளர்ந்திட்டு 10—-6—-4
93. பொருந்தலன் 10—-9—-8
94. அங்கோர் ஆளரியாய் 11—-1—-5
95. தளையவிழ் கோதை 11—-4—-4
96.கூடா இரணியனை 11—-7—-4

திருக்குறுந்தாண்டகம்
97. காற்றினைப் புலனைத் தீயை 2

சிறிய திருமடல்
98. —- போரார் நெடுவேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
சீரார் திருமார்பின் மேல் கட்டி செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆராவெழுந்தான் அரியுருவாய்———

பெரிய திருமடல்
99.—–ஆயிரக்கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும்
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவனை
பின்னோர் அரியுருவமாகி எரி விழித்து
கொல் நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே —வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி —அவனுடைய
பொன் அகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த
மின் இலங்கும் ஆழிப்படைத் தடக்கை வீரனை ———–

———தன்னைப் பிறர் அறியாத்தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அருமறையை ———-

——கொல் நவிலும் ஆழிப்படையானை ,கோட்டியூர்
அன்ன உருவில் அரியை , திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை ,இந்தளூர் அந்தணனை
மன்னும் மதிட்கச்சி வேளுக்கைஆளரியை ——–

VI .பொய்கை ஆழ்வார் இயற்பா–முதல் திருவந்தாதி

100. அடியும்பட கடப்ப 17
101.தழும்பிருந்த 23
102 புரியொரு 31
103. முரணவலி 36
104. எளிதில் இரண்டையும் 51
105. ஏற்றான் 74
106. வரத்தால் வலி நினைந்து 90
107. வயிறழல 93

VII .பூதத்தாழ்வார் –இரண்டாம் திருவந்தாதி

108.கொண்டதுலகம் 18
109. மாலையரியுருவன் 47
110. வரங்கருதி 84
111.உற்று வணங்கி 94
112.என் நெஞ்சமேயான் 95

VIII .பேயாழ்வார் —மூன்றாம் திருவந்தாதி

113.இவையவன் கோவில் 31
114. கோவலனாய் 42
115. அங்கற்கிடரின்றி 65
116. புகுந்திலங்கும் 95

IX . திருமழிசை ஆழ்வார் –நான்முகன் திருவந்தாதி

117. தொகுத்தவரத்தனாய் 5
118. மாறாய தானவனை 18
119. இவையா ! பிலவாய் 21
120. அழகியான் தானே 22

ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்

121.மட நெஞ்சமென்னும் 46

பெரிய திருவந்தாதி

122. நின்றுமிருந்தும் 35
123. வழித்தங்கு வல்வினையை 57

திருவாய்மொழி

124. ஆடியாடி அகம் கரைந்து 2—-4—-1
125.உன்னைச் சிந்தை செய்து 2—-6—-6
126.எங்குமுளன் கண்ணன் 2—-8—-9
127. தோற்றக் கேடவையில் 3—-6—-6
128. கிளரொளியால் 4—-8—-7
129. ஆனானாளுடையான் 5—-1—-10
130. சூழ் கண்டாய் 5—-8—-6

131. அரியேறே 5—-8—-7
132. என் செய்கின்றாய் 7—-2—-2
133. வட்கிலன் 7—-2—-3
134.சிந்திக்கும் 7—-2—-5
135. போழ்து மெலிந்த 7—-4—-6
136.செல்லவுணர்ந்தவர் 7—-5—-8
137. புக்க அரியுருவாய் 7—-6—-11
138. ஆம்வண்ணம் 7—-8—-11
139. கூடுங்கொல் ? 7—-10—-3
140. எடுத்த பேராளன் 8—-1—-3

141. மாலரி கேசவன் 8—-2—-7
142. அற்புதன் 8—-6—-10
143. அறிந்தன 9—-3—-3
144. ஆகம்சேர் 9—-3—-7
145. உறுவது 9—-4—-4
146.அரியாய 9—-4—-5
147. உகந்தே உன்னை 9—4—-7
148. மல்லிகை 9—-9—-1
149. அன்பனாகும் 9—10—-6
150. என் நெஞ்சத்துள்ளிருந்து 10—-6—-4

151. பிரியாது ஆட்செய 10—-6—-10

திருவரங்கத்தமுதனார் அருளிய இராமானுச நூற்றந்தாதி

152. மடங்கல் 103
——————————————————————-

ஸ்வாமி தேசிகன் தான் அருளிய ப்ரபந்தத்தில் (தேசிக ப்ரபந்தம் )
திருவஹீந்த்ரபுரம் அடியவர்க்கு மெய்யன் விஷயமாக
மும்மணிக்கோவையில் 4வது பாசுரத்தில்( மழையில் எழுந்த
மொக்குள் போல் வையம் என்கிற பாசுரம் )
மீனோடாமை கேழல் கோளரியாய் —–என்று துதிக்கிறார்.

பின்னும், நவமணிமாலை 2ம் பாசுரத்தில் ( மகரம் வளரு மளவில்
பௌவ மடைய வுற்ற லைத்தனை என்கிற பாசுரம் )
வலிகொள் அவுணன் உடல் பிளந்து மதலை மெய்க்குதித்தனை —
என்று போற்றுகிறார்

இவ்விதமாக, ஆழ்வார்கள், ஆசார்யன் அனுபவித்துத் துதித்ததை
அறிந்து, உணர்ந்து ,அனுபவித்தோம்

அடியேனின் மந்த மத்தியில் தோன்றியதையும் இங்கு
எழுதியுள்ளேன் —பிழை பொறுத்து, குணம் கொள்வீராக !

ஸ்ரீ ந்ருஸிம்ஹம்
—————————–

1. அருமைப் புதல்வனை அழிக்க நினைத்து
அவனது சொல்லால் ஆத்திரம் அடைந்து
அன்று ஒருநாள் மாலைத் துணைத் தட்ட,
அடுத்த கணமே கம்பம் பிளந்தது !

2. அண்டம் அதிர்ந்தது; அமரர்கள் அஞ்சினர் ;
எண்திசை அழிந்தது;பிரளயம் நேர்ந்தது;
நான்முகன் நலிந்தான்; அவன் மகன் மெலிந்தான்
அறுமுகன் பயந்தான்;அனைத்தும் வீழ்ந்தது.

3.சிங்கத்தின் பிடரிகள் சிதறிப் பறந்தன ;
சீறியது கண்ணும்; பற்களும் நெறிந்தன ;
அட்டகாசத்தின் ஆரம்ப நிலைதான்,
கிட்ட நெருங்கத் தேவரும் பயந்தனர் !

4. கரங்கள் பிறந்தன ;வளர்ந்தன எங்கும்,
விரல்களின் நகங்கள் ,வீறிட்டுப் பாய்ந்தன !
இரணியன் மார்பைக் கீறிக் கிழித்தன !
தரணியெங்கும் குருதியின் ஓட்டம் !

5. நரசிங்கம்! நாரணன் கருணை அவதாரம் !
பிரகலாதனுக்காகப் பிறந்த அவதாரம் !
பிரதோஷ வேளையிலே பூசிக்க அவதாரம் !
சரபத்தை முடித்திட்ட சீரிய அவதாரம் !

6. நரசிங்கா ! ஆளரியே ! நாயேன் அடிபணிந்தேன்
கருணைக் கண்கொண்டு காத்திடுவாய் அடியேனை
உருவாய், உருவுக்கும் உருவாய் வந்தவனே !
பிரகலாத வத்ஸலனே ! பஜிக்கின்றேன் உன் நாமம் !

7. உன் நாமம் தனைக் கேட்க உன்மத்தமாகிடுவர் !
உன் நாமம் தியானிக்க உச்சநிலை பெற்றிடுவர் !
உன் நாமம் உச்சரிக்க உயர்நிலை அடைந்திடுவர் !
உன் நாமம் உயர்வாகும், உத்தமுமே அதுவாகும் !

8. சிங்கப் பெருமானே ! சீறினும் நீ அருள்வாயே !
எங்கும் உள்ளவனே ! இதயத்தில் இருப்பவனே !
பொங்கும் பக்தியினால், போற்றுகிறேன் பொற்பாதம் ,
ஏங்கும் அடியேன் நான்; இனிப் பிறவி யான்வேண்டேன் .

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ -நம்முடை நம்பெருமாள் -திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானத்திலும் -பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானத்திலும் -உள்ள அமுத மொழிகள் —

July 4, 2020

ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோக த்ருஷ்டியாலும் -வேத த்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே
திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹஸ்யத்தை உபதேசித்து அருளுகிறார் –

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

————

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு
ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –
ஆழ் பொருள்-மங்கிப் போகிற பொருள்-நசிக்கிற பொருளை -என்றுமாம் –
இப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்-
சம்சாரத்தின் உடைய தண்மையையும் நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்-நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

———–

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-

ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –
இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-
ப்ரஹ்மாதிகளுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்
எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்-அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

————-

ஞாலத் தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும்-ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே
அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை முட்டக் காண வல்லார் இல்லை –
நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-
அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது

—————

எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

தனக்கு பிரகாரமான சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி
இருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத் திரளச் சொன்னேன்
சர்வ சப்த வாச்யன் ஆனவனை எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை தொகுத்து சொன்னேன் –
அவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம்-

————-

யுள் வாங்கி நீயே–5-
சம்ஹரிக்கிறாய் நீயே –ஜகத் அடைய சம்ஹரித்த நீயே-
தன்னுடைச் சோதி ஏற எழுந்து அருளுகிற படி யாகவுமாம்

——-

வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று –6-

நிரதிசய போக்யனான ஆச்சர்ய பூதனாய் வ்யாமுக்தனாய் ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரனை –
ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று – அவர்கள் ஏத்தாமையாலே தண்ணியரே
ஹீநர் என்றும் அஹீநர் என்றும் நான் பிரதிபாதிக்க வேணுமோ என்கிறார்-

————-

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே நீ என்னை அன்றி இலை -7-

இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று
நடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று பேர்த்திடுகிறார்-
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –

———-

இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை–8-

கூரிய அம்பை யுடையவன் துணை யல்லது நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –
வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே- எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
அசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இருப்பர்கள் –
இவர்கள் சக்கரவர்த்தி திருமகன் உடைய அம்பின் கூர்மையை-தஞ்சமாக நினைத்து இருப்பர்கள் –

—————-

கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

அண்டம் விம்ம வளர்ந்தவனுடைய திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரன் திருவடிகளை-அக்காலத்திலே
நீல கண்டனுடைய சிரஸ் ஸிலே படும்படியாகக் கழுவினான் –
சாஹசிகரான பிரஜைகள்-வழியே வழியே வர வேணும் என்று தீர்த்தத்தை மேலே தெளிப்பாரைப் போலே –

—————–

ஆங்கு ஆரவாரமது கேட்டு- அழல் உமிழும் பூங்கார் அரவு–10-
திசை வாழி எழ -என்னும்படி திரு உலகு அளந்து அருளின போது உண்டான-வார்த்தை கேட்டு –
தன் பரிவாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகள் மேலே விஷ அக்னியை உமிழா நிற்பானாய்-பரிவின் கார்யம் ஆகையாலே
அடிக் கழஞ்சு பெறும் படியாய் இருக்கிற அழகிய சீற்றத்தை யுடைய திரு வநந்த ஆழ்வான்-

—————

மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

மடுவிலே பெரிய முதலையினுடைய வாயிலே அகப்பட்ட யானையை விடுவிக்கைக்காக திருவாழியை விடுக்கைக்கும்
இரண்டு இரண்டு சரீரத்தையும் விட்டு இரண்டும் முக்தமாம் படியும் நினைத்தாய் –
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய் ஸூகிகளாம்படி -என்றுமாம்-
விடும்படிக்கு ஈடாக சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு நினைத்தாய் –
பூர்வ ஆகாரங்களை விட்டு-முதலை -கந்தர்வனாய்-ஆனை திருவடிகளைப் பெறும்படிக்கு ஈடாகவும்-நினைத்தாய்-

—————–

வீடாக்கும் மெய்ப்பொருள் தான் – வேத முதல் பொருள் தான் -விண்ணவர்க்கும் நற்பொருள் தான் -நாராயணன்-13-

மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும் –வேதை க சமதி கம்யனுமாய் –அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-
பிராப்யனுமாய் இருக்கிறானும் – சர்வேஸ்வரன்-
மோஷத்தை உண்டாக்கும் அவயவஹீத சாதனம் –மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் –சர்வேஸ்வரன் –

————–

திருமால் -தன் பேரான பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

திருமால் தன் பேரான பேசப் பெறாத என்று விசேஷிக்கையாலே இவ்வர்த்தத்துக்கு இசையாத ஏகா யனனை நினைத்து
அருளுகிறார் என்று -பட்டர் –பிணச் சமயர் என்கிறது –
தேவதாந்திர பரரையும்-உபாயாந்தர பரரையும் -அபூர்வம் பல ப்ரதம் என்கிற குத்ருஷ்டிகள் ஆகவுமாம் –
அவற்றைக் கேட்டு-காலாழும் நெஞ்சழியும் என்று பகவத் விஷயத்தினுள் புக்கவர்கள்
ஆழங்கால் படுமாப் போலே -ஈடுபடுவர் -என்றுமாம்-
இப்படி சர்வ ரக்ஷகனானவனுடைய திரு நாமங்களைப் பேசப் பெறாதே -ஜீவியா நிற்கச் செய்தே -ம்ருதப் ப்ராயராய் இருக்கும்
பாஹ்ய குத்ருஷ்டிகள் வேறே ஓர் அர்த்தம் உண்டு என்று சூழக் கேட்டு-அனர்த்தப் படுவார் சிலர் உண்டு என்றும்-
பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

———

மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்
நீர்- விஷ ஜலம் -நீல கண்டன் -என்றபடி –

————–

பல மன்னர் போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு
நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை
ந்யாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப்பாட்டால் சொல்லுகிறது-

—————

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –
பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-
பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார் –தவம் -ஸூ க்ருதம்-

———————-

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-
அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –
இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்–அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-
நித்ய சூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்
அன்றிக்கே-அக்நி கொடுக்கும் ஹவிசை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –
அரி பொங்கிக் காட்டும் அழகு – நித்ய சூரிகள் பரிய இருக்குமவன்-ஆஸ்ரித அர்த்தமாக நரசிம்ஹமாய்ச்
சீறிக் காட்டின அழகு–இவை இவை என்றது நரசிம்ஹம் வளர்ந்து தோற்றின அழகுகள் பாரீர் -என்றவாறு
சாஷாத் காரமான ஸ்வ அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லுகிறார் –
நரசிம்ஹத்தின் யுடைய அருமை சொல்லிற்றாகவுமாம் –

———–

அழகியான் தானே அரி உருவன் தானேபழகியான் தாளே பணிமின்–22-

ஆபத் சகனானவனே அழகியான் –த்யஜிக்கிற சரீரத்திலும்-வர்த்திக்கிற சரீரத்திலும்-புதுயிகோளாய் இருந்துள்ள நீங்கள் –
உங்கள் கையில் உங்களைக் காட்டிக் கொடாதே-கால த்ரயத்திலும் சரீரங்களில் பிரவேசிகைக்கு நிதானத்தையும்-
அதுக்கு பரிகாரத்தையும் அறியுமவனை ஆஸ்ரயிக்க பாருங்கோள்-
பிரகிருதி வாசி அறிந்து பழையனாய் பரிகரிக்கும் வைத்தியனைவ்யாதிக்ரஸ்தர் பற்றுமா போலே

—————

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –
பிரதிபந்தகங்களைத் தானே போக்கி -ருசியைப் பிறப்பித்து -பக்தியை விளைப்பானான -எம்பெருமானுமாய்ப்
பழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது –
விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி
வைத்த படியாலே யாத்ருச்சிகமாக ஸூ க்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –
ஈர நெல் வித்தி என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ
அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே
முன்னின்று பிறப்பியா நிற்கும் -இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-
இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –
ருசி பிறந்த பின்பு பிராப்தி அளவும் நாம் தரிக்கைக்கு-அவன் திருமேனிக்கு போலி உண்டு -என்கை-

—————-

எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டுகொள் கிற்குமாறு –26-
கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனே உன் அழகிலே பிணிப்பு யுண்டேன்-
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –

————–

மால் தான் புகுந்த மட நெஞ்சம் –27-
மால் தான்-ஈஸ்வரன் வ்யாமுக்தனாய்-அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு
கடல் வண்ணா –நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது =பேறாகக் கொள்வேனோ –
ஒரு லாபமோ -என்கிறார்-

—————-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28–

இது என்று ப்ரத்யஷ சாமா நாகாரமான ஸ்ரீ இராமாயண பிரசித்தியைச் சொல்லுகிறது –
இது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-

————–

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

கோயிலிலே வந்து ஸூ லபனானவன் என்னை அடிமை கொண்டான் –இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் . திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –
அரங்கு – சம்சாரம் ஆகிற நாடக சாலை –பிறவி மா மாயக் கூத்து -என்று-சம்சாரம் ஆகிய
நாடக சாலையில் என்னை ப்ரவேசியாமல்-காப்பார்
என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-
என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –

————-

வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும் கரு மாயம் பேசில் கதை –31-

ஒருத்தன் தலை அறுத்துப் பாதகியாக-ஒருத்தன் சோச்யனாக- இருவருடைய வியசனத்தையும் போக்குவதும் செய்து –
ருத்ராதிகளுக்கும் ரஷகனானவனை ஆஸ்ரயியாத பேய்காள்
உங்களுக்கு சம்சாரத்தில் பிறக்கும் ஆச்சர்யமான துரிதங்கள் பேசி முடிக்க ஒண்ணாது –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவனை-ஏத்தாத அறிவு கேடர்காள் – இவ்வறிவு கேடு கிடக்கப் பிறவிக்கு அடியான
கர்ப்ப ஸ்தானத்தில் உள்ள ஆச்சர்யம் சொல்லப் புகில்-மகா பாரதம்-

————–

குறிப்பு எனக்கு க் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

என் நெஞ்சில் ஓடுகிறது எனக்கு இனிதாகத் திருக் கோட்டியூரிலே வந்து எழுந்து அருளி இருக்கிற நாயனாரையும்-
திருவேங்கடமுடையானையும் ஏத்துகை-
ஒருக்கால் விட்டுப் பிடித்தாலோ என்ன -வெவ்விய பாபங்களும் அதின் பலமான நோவுகளும் நலியாத படி
சம்சாரத்தைக் கடத்தக் கடவதான அவன் திருவடிகளை விடுவேனோ –
சரீரம் அடியாக வந்த வியாதியும்-வ்யாதிக்கு ஹேதுமான கர்மமும் கிட்டாமல் மாற்றுமவன் திருவடிகளை மறப்பேனோ –

—————

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம் பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை அளந்த ஆயாசமோ -என்கிறார் –
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும்
திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ -உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்-

——————–

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

திருக் குடந்தை -திரு வெக்கா-திரு வெவ்வுள் -கோயில் -திருப்பேர் -அன்பில் -திருப்பாற் கடல் –
முதலான இடங்களிலே திரு அரவணை மேல் கண் வளர்ந்து அருளுகிறான் –
ஆதி நெடுமால் –சர்வ காரணமாய் ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சன்-
அணைப்பார் கருத்தனாவான் – ஆஸ்ரிதர் கருத்திலே ஒழுகைக்காக –
அவர்கள் ஹிருதயத்தில் புகுகைக்கு -என்றுமாம் – இளைப்பாகில் ஓர் இடத்திலே கிடக்க அமையும்
பல இடங்களிலே திரு அநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிறது –
அவ்வவ தேசங்களிலே ஆஸ்ரயிப்பார் யுடைய நெஞ்சிலே புகுகைக்கு அவசரம் பார்த்து -என்கிறார் –
தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில் புகுருகைகாக இப்படி அவசர ப்ரதீஷனாக வேண்டுவான்-
என் என்னில் -தான் ஆகையாலே-

—————–

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கின்றேன்-நின்று நினைக்கின்றேன் –-40-

விசேஷித்து ஓன்று செய்தது இல்லை -அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி இத்தைச் சொல்ல –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு நின்று ஒழிந்தேன்
இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –எது சொல்லிற்று எது பற்றிற்று என்று-விசாரியா நின்றேன்-

——————-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

சென்று காணல் உறுகின்றேன் -என்று அந்வயம் – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –
சம்பத்தாவது திரு அருவிகளோடே கலந்து முத்துக்கள் சிதருகையும்-திருவேங்கடமுடையானுக்கு
திருப் பல்லாண்டு பாடுவாரும் வேத பாராயணம் பண்ணுவாரும்- ஆடுவாரும் –

—————-

ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து ஆச்சர்ய பூதனை-அனந்தரம்
திருக் கபிஸ்தலத்திலே கண் வளர்ந்து அருளுகிற கிருஷ்ணன் –
உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த
சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்
அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு
தத் விஷய ஜ்ஞானம் அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-

—————-

என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

உன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார்
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று –
சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

——————

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

சேதனரோடு கூடி இருந்த புண்ய பாப ரூப கர்மங்கள் ஆவான் –பெரிய குருந்தத்தைச் சாய்த்தவனே .
பெரும் குருந்தம் சாய்த்தவன் என்கிறது சொன்ன பொருளுக்கு சாதனமாக திருஷ்டாந்த உக்தி –
வேறு பட்டிருக்கிற தேவதைகள் -அசுரர்கள் -தாரகை தான் -நஷத்ரங்கள் தான் என் ஹ்ருதயம் தான் –
இது எல்லாம் அவன் இட்ட வழக்கு -ததீனம் இல்லாதது ஒன்றும் இல்லை –ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –
நெஞ்சுக்கு எம்பெருமானோடு யுண்டான ப்ராவண்யத்தைக் கண்டு -என் நெஞ்சமானவர் -என்கிறார் –

——————

கிளரொளி என் கேசவனே கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –
அனர்த்தப் படாமே நிர்வஹிக்கிற உனக்கு நான் அடிமை –
இவருடைய ஸ்நேஹத்தை கண்டு இவரிலும் காட்டில் ஸ்நேஹித்து இவருக்கு நிரதிசய போக்யனாய்
இவருக்கு தன்னுடைய அனுபவ ஸூகத்தையும் கொடுத்து
இன்னமும் எல்லா ஸூ கத்தையும் கொடுக்க வேணும் என்று பிச்சேறின ஸ்ரீ யபதி படியை அனுசந்தித்து
நீ அங்கனே அபி நிவேசித்தாய் ஆகிலும் எனக்கு அவை எல்லாம் வேண்டா
என்னுடைய ஸ்வரூப அநு குணமாக நான் அடிமை செய்ய வமையும் -என்கிறார் –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று-
அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று
முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-

———————-

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–62-

அபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே-இன்ன வஸ்து என்ன வேண்டா –
ஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்-அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய் -வேறு ஒன்றால் அறியாதது –-ஒரு சேதனர் ஆகில் அறியலாம்

———-

பொன் மகரக் காதானை ஆதிப் பெருமானை நாதானை நல்லானை நாரணனை
நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –64-

ஆஸ்ரயிப்பார்க்கு மேன்மேலே அபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் அழகை யுடையவனுமாய் –
சர்வ காரணணுமாய்-எனக்கு நாதனுமாய் -ச்நேஹியுமாய் -ஆஸ்ரித வத்சலனுமாய் -நம்முடைய சம்சாரத்தைப்
போக்கித் தரும் நாமங்களை யுடையனானவனைச் சொல்லுமதுவே உறுவது –
சொன்ன குணங்கள் திரு நாமத்தினுடைய அர்த்தம் என்கிறார் –சொல்லானை -சப்த மாதரம் –
கை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி ஸ்ப்ருஹணீ யனானவனை –
அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே நமக்கு உத்பாதகனானவன் – ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே
நாராயண சப்த வாச்யனாய் நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ்வாத்மாவுக்கு உறுவது –

——————

மாதாய மாலவனை மாதவனை –யாதானும் வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

தாயைப் போலே பரிவான ஸ்ரீ யபதியை பக்த்யா விவசனாய்ப் பேச ஷமன் அன்றிக்கே-
சொல் மாலையாலே ஏதேனும் வல்ல பரிசு சிந்தித்து இருக்கிற எனக்கு-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே
இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –இதுவே வாய்ப்பு என்று நெஞ்சிலே அத்யவசித்தேன் என்கிறார் -என்றுமாம் –
சொன்மாலை –தம்முடைய திருவந்தாதி–ஸ்ம்ருதி மாதரம் உடையாருக்கும் பரமபதம் சித்தியாதோ என்கை –
ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்

———-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான்
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –
கூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி
சாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்
வத்தி -இருக்கிறபடி –
நமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி
புறம் தொழா மாந்தர் -என்று –மது ஸூ தான பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி
பிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே மறக்க்கவுமாம் –
பர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது-

————————

ஆயன் துவரைக்கோன் – மாயன் அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று–அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி–அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள்
பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே-அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி
தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய்
ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்–மெய்யான ஞானம் இல்லை –
இடையனாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய் ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
தேர் தட்டிலே நின்று-உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன் நீ சோகிக்க வேண்டா – என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று நினைக்கும்படி சத்ருக்களாய் தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்-

—————

நல்லறம் ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

நிவ்ருத்தி தர்மமும் -ருகாதி பேதமான நாலுவகைப்பட்ட வேதத்தில் சொல்லுகிற மகத்தான பிரவ்ருத்தி தர்மமும்
நாரணனே யாவது –அதில் சொல்லுகிற உபாய பாவம் உள்ளதும் ஆஸ்ரயிப்பாருக்கு எளியனான நாராயணனுக்கே என்று கருத்து –
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளாலும் இப்பொருளை அன்று என்ன முடியாது
வேதங்களோடு வேத வேத்யனோடு வைதிக புருஷர்களோடு அல்லாத ஆழ்வார்களோடு
வாசி அற எல்லாருக்கும் இவ்வர்த்தத்தில் ஐக கண்ட்யம் சொன்னபடி –
யமைவேஷ வ்ருணுதே தேந லப்ய-கட -1-2-23-என்றும்
நயாச இதி ப்ரஹ்ம–நயாச ஏவாத்ய ரேசயத் -தைத் -2-62-77-என்கிறது முதலானவை அன்றோ வேத புருஷன் வார்த்தை –
லோகா நாம் த்வம் பரமோ தர்ம -யுத்த -120-15-என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -ஆரண்ய -37-13- என்றும்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -பார வன -71-123-என்றும்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -உத்தர -82-9- என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை -18-66- என்றும்
மாம் ப்ரபத் யஸ்வ-என்றும்
அறம் தானாய்த் திரிவாய் – பெரிய திருமொழி -6-3-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11-என்றும்
களை கண் நீயே -திருவாய் -5-8-8-என்றும் -இவை இறே அவர்கள் வார்த்தை –

பலாபிசந்தி ரஹீதமான கர்மங்கள் இதிஹாச புராணங்களில் சொல்லுகிற திருநாம சங்கீர்தனங்கள்
பூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம் இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –
அவை பல பிரதங்கள் ஆம்போது பகவத் பிரசாதம் வேணும் –பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹகரிக்க வேண்டா
என்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்
அல்லாதவை போல் அன்றிக்கே உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-

—————

அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி–73-

பண்டு ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தபடி தான் எழுந்து அருளி இருக்கும் திரு நாடு
அவன் பழையதாக வைத்த பிரதிஷ்டை இருக்கும் இடம் –அதாவது உத்தம -சரம -ஸ்லோகம் –
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது-

————

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

குல சத்ருவாய் இருக்கிற பெரிய திருவடிக்கு ஆற்றாதே –
குளிர்ந்து இருந்துள்ள திருப்படுக்கையிலே எழுந்து அருளி இருக்கிற எம்பெருமான் தன்னையே இத்தசைக்கு
அபாஸ்ரயம் என்று நினைத்து அடைந்து-அவனை அபாஸ்ரயமாகப் பெற்ற ப்ரீதியாலே ஒளியை யுடைத்தான
ஸூமுகனான பாம்பை அங்கீ கரித்து-திரு மார்விற்கு ஆபரணமாக கொடுப்பதும் செய்து
ஸ்லாக்கியமான திரு நிறத்தை யுடையனாய் ஆச்சர்ய பூதனான அவனை அல்லது வேறு ஒருத்தரை என் நாவானது ஏத்தாது
சரணாகதர் ஒரு தலையானால்-பிராட்டி திருவடி திரு அநந்த ஆழ்வான் -ஆன அசாதாராண-பரிகரத்தை விட்டும்-ரஷிப்பான் ஒருவன்
அத்தாலே நிறம் பெற்று க்ருதக்ருத்யனாய்-ஆச்சர்ய யுக்தனான ஈஸ்வரனை ஒழிய-வேறு ஒன்றை ஏத்தாது என் நா-

————–

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பாட்டும் –கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல்பொருளும்-அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள்
கேட்ட மனுவும் –ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் –ஓதி வருகிற நாலு வேதங்களும்
மாயன் –ஆச்சர்ய பூதனானவனுடைய
தத மாயையில் பட்ட தற்பு-தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு –தத்த்வார்த்தம் –
பாட்டு -அருளிச் செயல்
முறை -ஸ்ரீ மத் ராமாயணம்
படுகதை -மகா பாரதாதி புராணங்கள்
பல் பொருள்கள் -இவற்றால் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்கள்
தற்பு-சத்தை -உண்மையை உடைத்தது என்றபடி-

——————–

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

தபஸ்வியான ருத்ரனுக்கு-மஹிஷியான உமா தேவி முறை மாறாடி யுணர்த்த – எம்பெருமான் திரு நாமங்களைக் கேட்டிருந்து –
அவற்றுக்கு உள்ளீடான குணங்களை அனுசந்தித்து அத்தாலே புஷ்கலான படியால்-முடிந்து வாடின பூ மாலை போலே பரவசனாய்த் துவண்டபடி
ப்ராசங்கிகமாக பகவத் குணங்களைக் கேட்டு-சிஷ்யாசார்ய க்ரமம் மாறாடி
அவள் வாயாலே தான் கேட்டு ஆதிராஜ்ய சூசகமான முடியையும் உடைய-சர்வேஸ்வரன் திரு நாமங்களையே கேட்டு
நெஞ்சாலே அனுசந்தித்துக் கொண்டு இருந்து பாரவச்யதையைச் சொன்ன படி-
தபஸ்வியான நாரதர் -வால்மீகி கேட்டபின்பு பாரவஸ்யரானது போலவே –

————–

ஏய்ந்த தம் மெய் குந்தமாக –79-

ச்தூலோஹம் க்ருசோஹம் என்று-தானாக சொல்லலாம்படியான சரீரத்தை குந்தமாக -நோயாக-
குந்தம் -வடுக பாஷையாலே வியாதி-

———–

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

ஈண்டென ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய திரு நாமங்களை
லோகங்கள் ஆனவை பரந்து பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –

—————-

விதையாக நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்–81-

வித்தாக நல்ல தமிழை வித்தி என்னுடைய ஹ்ருதயத்தை-நினைத்தது தலைக் கட்ட வல்ல ஞான சக்தியாதிகள்
குறைவற்ற நீ விளையப் பண்ணினாய் அப்யசித்த சொல்லாய்க் கொண்டு வந்து -நான் அறிந்த தமிழ் பாஷைக்கு
வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து-நல்ல தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து
நல்ல தமிழ் வித்தை யுண்டாக்கி என் ஹிருதயத்தை அழகிய கவி பாடுகைக்குப் பாங்காம் படி பண்ணினாய் –

————

சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் பின்னால் தான் செய்யும் பிதிர்–83-

பிரபன்னராய்க் கொண்டு தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு-ருணம் ப்ரவ்ருத்தம் இவமே -பார உத்தியோக -58-21-என்னும்படி
எல்லாமானாலும் பின்னையும் ஒன்றும் செய்யப் பெறாதானாய் தரிக்க பெறாதவனாய்
பிரதிகூல நிரசன ஸ்வ பாவமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
சரீர அவசநத்திலே வாசா மகோசரமான போகத்தை புஜிக்கக் கொடுக்கும்
ஆஸ்ரித விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்யாதது என்று விவேகிக்க மாட்டாத படி-
பிச்சுத்தான் ஒரு வடிவு கொண்டால் போலே நெஞ்சாறல் பட்டு இருக்கும் படி சொல்லுகிறது
யா கதிர் யஜ்ஞ சீலா நாம் -ஆரண்ய -68-30-என்றபடி கார்யார்த்தமாக தம்மை அழிய மாறின பெரிய யுடையாருக்குச்
செய்வது அறியாமல் அர்வாசீ ந போகத்தோடே பரம பத போகத்தோடே சர்வத்தையும் கொடுத்தார் இறே பெருமாள் –

——————

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பிதிரும் மனம் இலேன் – இரண்டு பட்ட மனசை யுடையேன் அல்லேன் –
பிரயோஜனாந்தரம் கொண்டு விடும் மனசை யுடையேன் அல்லேன் -என்றபடி –
பிஜ்ஞகன் இத்யாதி-ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்-அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –
சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிறவன் எனக்கு ஒப்போ-
ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணனை-
என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –
கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது –
ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று

—————–

உத்தமன் என்றும் உளன் கண்டாய் –உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –86-

இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்-
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –

————-

ஓடி அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்–88-

ஆஸ்ரிதர் ஆனவர்களை-ஆள் இட்டு அந்தி தொழாதே தானே ஓடி-அவர்கள் தர்சனத்தால் வந்த
அறிவு கேடு முதலான-துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திருநாமத்தை பிரியமுடன் சொல்லி-தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார் –
இவ்வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை -எம்பெருமானே நிர்வாஹகன் என்று இருக்குமவர்கள் வாழ்வார்-

————

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு
ஆஸ்ரயித்து வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு
ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் –

———-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்
பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-
தத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் தத் கைங்கர்யத்தைப் பெறுவார்கள்
ததீய சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் ததீய கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்கள் -என்றபடி
யதோபாசனம் பலம் -என்கை-எல்லாருக்கும் ஒக்கும் இறே-
விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க
வேண்டி இருக்கப் பெற்றவர்கள்-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்
எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ச்நேஹித்து-
அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் –

————

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-
என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று வ்யாமுக்தனானவனை-
என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் என்கிறார்-
ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

———————–

அடியேற்கு வேம்பும் கறியாகும் என்று-94-

நீ ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்
கறியாகக் கொள்ளுவோம் என்று அபிமானிக்க-வேம்பு கறியாகுமா போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –
கிமத்ர சித்ரந்தர் மஜ்ஞ-இதிவத்
சரணாகதி தர்மம் அறிந்தவர்கள் தோஷவானையும்-கைக் கொள்ளுவார்கள் -என்றபடி-

———–

எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

அடிமை என்றால் மருந்து போலே இராதே அதிலே பொருந்தினேன் –
அடிமைக்கு விரோதியாய் சாம்சாரிகமான அஹங்கார மமகாரங்கள் ஆகிற துக்கரூப பர்வதத்தில் நின்றும் இழிந்தேன் –
ப்ரஹ்மாதிகளுக்கும் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்படி ஞான பக்திகளால் பரிபூர்ணன் ஆனேன்
அதுக்கு மேலே புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும் புண்யார்ஜனம் பண்ணும் விபூதியையும் உபேஷித்து
விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி
இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-

————

சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் -என்கிறார் –
சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே முடிக்கிறார்-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்
என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்
இப்போது அறிந்தேன் -சர்வ காரணமும் நீயே
பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்
சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்- அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

இத்தால் –
1-ப்ராப்யமான கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு விரோதியான அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படி பரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை நடுங்கித்
தம் கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும் அருளிச் செய்தார் ஆய்த்து-

மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே
சர்வ ஸ்மாத் பரன் என்று பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து-
அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானத்தில் இருந்து சில அமுத துளிகள் –

June 30, 2020

அவதாரிகை —

ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் –சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -சர்வ ரஷகனாய் இருக்கிற –
சர்வேஸ்வரனை ரஷ்யமாக நினைத்து திருவவதார விசேஷங்களுக்கு மங்களா சாசனம் பண்ணினார்
திருப்பல்லாண்டிலே-

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–பல்லாண்டு பாடுதும் -என்றும்
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -என்றும்
ஸ்ரீ நரசிம்ஹ ப்ராதுர்பாவத்துக்கும் ஸ்ரீ ராமாவதாரத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி இருக்கச் செய்தேயும்

மாயப் பொரு படை வாணனை -என்றும்
ஐந்தலைய -இத்யாதிகளால் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு பிரசுரமாக மங்களா சாசனம் பண்ணுகையாலும்

இவ்வதாரத்துக்கு ஹேதுவாக படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டு அருளின ஸ்ரீ பெரிய பெருமாள்
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் எழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்-என்றும்
வையம் யுண்டு ஆலிலை மேவு மாயன் மணி நீண் முடிப் பைகொள் நாகத் தணையான்-பெரிய திருமொழி -5-4-2-என்றும்
ஸ்ரீ கோயிலில் நின்றும் திரு மாளிகைகளில் புகுந்து ஸ்ரீ வடபெரும் கோயிலுடையானாக கண் வளர்ந்து அருளுகையாலும்

பயின்றது அரங்கம் திருக்கோட்டி -என்று ஸ்ரீ கோயிலில் நின்றும் தங்கு வேட்டையாக எழுந்து அருளி ஸ்ரீ திருக் கோட்டியூரிலே
உரக மெல்லணையனாய்க் -பெரியாழ்வார் -4-4-4- கண் வளர்ந்து அருளுகையாலும்
அணி கோட்டியூர் அபிமானத் துங்கன் செல்வனைப் போலே இத்யாதி படியே
இவ் வாழ்வாருக்கு மங்களா சாசனத்துக்கு சஹகாரியான ஸ்ரீ செல்வ நம்பியுடன் ஸ்ரீ திருக் கோட்டியூர் ப்ரஸ்துதம் ஆகையாலும்

ஸ்ரீ திருக் கோட்டியூரானே-பெரிய திருமொழி -9-10-1-என்றும்
கன்று கொன்று விளங்கனி எரிந்து -பெரிய திருமொழி -9-10-7-என்றும்
அவனே இவன் என்று ஆழ்வார்கள் ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமாக ஸ்ரீ திருக் கோட்டியூரை அருளிச் செய்கையாலும்
செந்நாள் தோற்றி சிலை குனித்த திரு மதுரையில் காட்டிலும் ஸ்ரீ திருக் கோட்டியூர் உத்தேச்யம் ஆகையாலும்

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரச் செய்தேயும்
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் மடிய வஞ்சனையில் வளர்ந்த மணி வண்ணன் -பெரியாழ்வார் -4-3-2-என்று
ஈஸ்வரத்வம் நடையாடுகையாலும்

மற்ற அவதாரங்களுக்கு காலமும் நன்றாய் தாமும் ராஜ குலத்தில் அவதரிக்கையாலும்
பந்துக்களும் ராஜாக்களுமாய் பலவான்களுமாய் ஆகையாலும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு காலமும் த்வாபர அந்தமாய்
பந்துக்களும் சாதுக்களான ஆயராய்
முளைப்பது எல்லாம் தீப்பூண்டு களாகையாலே
மங்களா சாசனம் வேண்டுவது ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கே ஆகையாலும்
அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சாவதாரமாக நின்றவிடத்தில் அர்ச்சாவதாரம் அர்ச்சக பராதீன
சமஸ்த வ்யாபாரமாய்ப் போருகையாலே
மங்களா சாசனம் மிகவும் வேண்டுவது அர்ச்சாவதாரம் ஆகையாலும்
சென்னியோங்கு அளவும் இவர்க்கு அர்ச்சாவதார பர்யந்தமாக மங்களா சாசனம் நடக்கும் இறே-

——————————————————————

முதல் பாட்டு -அவதாரிகை –
ஸ்ரீ கிருஷ்ணாவதார கந்தமான ஸ்ரீ திருக் கோட்டியூரிலே அர்ச்சாவதார பர்யந்தமாக
மங்களா சாசனம் பண்ணுகிறார் -வண்ண மாடத்தால் –

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே –1-1-1-

கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாணகுண பூரணன் -என்கிறார்
பிறந்தினில்
இன் -இல்-பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போல் பொல்லாங்கு இல்லாதபடியாலே
திரு வாய்ப்பாடியிலே பிறப்பை இனிய இல்லிலே பிறந்தான் என்கிறார்
திருக் கோட்டியூரிலே வ்யாவ்ருத்தி சொல்ல மாட்டாரே

————–

இரண்டாம்பாட்டு -அவதாரிகை –
இவ்வளவிலே யன்றி தம் திரு உள்ளத்துக்குப் பொருந்த
திருவாய்ப்பாடியில் உள்ளார் ப்ரியம் கண்டபடியாலே ஸ்லாகிக்கிறார்-

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே–1-1-2-

ஆயிற்று ஆய்ப்பாடியே
இப்படி திருவாய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியில் உள்ளாரில்
ஒருத்தரும் விக்ருதர் ஆகாமல் இருந்தார் இல்லை –

———–

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளும் என்பார்களே–1-1-3-

உகவாதார் காணாத படி மறைக்கையாலும்
ஸ்ரீ ராமாவதாரம் போலே வளர்ந்த பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகை யன்றி
அப்போதே பேணிப் போருகையாலும்-பேணிச் சீருடைப் பிள்ளை
திருவோணம் ஸ்ரீ வைஷ்ணவ நஷத்ரம் ஆகையால் திருவோணத்தான் உலகு என்று
உபய விபூதியையும் ஆளும் -என்கிறார்கள்

————-

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே–1-1-10-

இத்திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
செந்நெலாலே நிறைந்த வயலாலே சூழப் பட்ட திருக் கோஷ்டியூரிலே நித்ய வாசம் பண்ணுகிற
திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி என்று தொடங்கி
மன்னு நாரணன் நம்பி -என்று நியமிக்கையாலே
சாதாரண அசாதாரண வ்யாவ்ருத்தமான வாக்ய த்வய குண பூர்த்தியை
மன்னு நாரணன் நம்பி -என்று அருளிச் செய்கிறார்-

—————-

பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே –1-2-1-

பிடித்துச் சுவைத்து உண்ணும் –
திருக் கையாலே திருவடிகளைப் பிடித்து –
தேனே மலரும் திருப்பாதம் -திருவாய்மொழி -1-5-5-என்று
தன் திருவடிகளிலே விழுந்தவர்கள் சொல்லக் கேட்கையாலே
இது பரீஷிக்க வேணும் -என்று திருப்பவளத்திலே வைத்தான்

பாதக் கமலங்கள் காணீரே –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய -திருவாய் மொழி -4-6-8-வேண்டுகையாலே
இவர் காட்டக் காணும் வேணும் இறே
வேதப் பயன் கொள்ள வல்லார் -பெரியாழ்வார் -2-8-10-இவர் இறே
திருவடித் தாமரைகளை வந்து காணுங்கோள்-என்கிறார்
அறிவுடையார் காட்டக் காணும் வேணும் இறே-

பவள வாயீர் வந்து காணீரே –
என்று பின்பும் அருளிச் செய்கையால் ப்ரபத்தியின் மேல் ஏறின பக்தியையும் பவ்யதையும்
யுடையவர்கள் நின்ற நின்ற நிலைக்குள்ளே யுள்ளே புகுந்து தர்சிக்க யோக்யர் -என்கிறார் –

ஒண் நுதலீர் வந்து காணீரே –1-2-2-
ஒண் நுதல் -என்கையாலே பிரபத்தி பிரகாசகமான தாந்தியை யுடையவள் என்றபடி-

காரிகையீர் வந்து காணீரே –1-2-3-
காரிகையீர் -என்கையாலே பக்தி பாரவச்யம் யுடையாரை அனுபவிக்க அழைக்கிறார் –

குவிமுலையீர் வந்து காணீரே –1-2-5-
குவி முலையீர் -என்று பக்தி வர்த்தகர் ஆகிறவர்களை அழைக்கிறார் –

ஒளி இழையீர் வந்து காணீரே –1-2-8-
ஒளி இழை-என்றது ஆத்ம பூஷணம்

ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-
ஒளி வளை–என்று பிரகாசகமான அனன்யார்ஹ சிஹ்னம் –

சேயிழையீர் வந்து காணீரே –1-2-10-
சேயிழை -என்று பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்-

சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-
சுரி குழல் -தாந்த ரூப பிரபத்தி –

கனம் குழையீர் வந்து காணீரே –1-2-12-
கனம் குழை -என்றது -காதுப் பணியாய்-ஸ்ரோத்தாக்களைச் சொல்லுகிறது –

காரிகையீர் வந்து காணீரே –1-2-13-
காரிகையீர் -என்று -பக்தி பாரவச்யம் யுடையாரை அழைக்கிறார்-

சேயிழையீர் வந்து காணீரே –1-2-14-
சேயிழை -பக்தி பிரகாசகமான ஆத்ம பூஷணம்-

மொய்குழலீர் வந்து காணீரே –1-2-15-
மொய் குழலீர் -கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியாய் பிரார்த்தனா ரூபையான பிரபத்திகள் –

கன வளையீர் வந்து காணீரே -1-2-16–
கன வளை -ஸ்ப்ருஹா வஹமுமாய் -மமதா விசிஷ்டமுமான அனன்யார்ஹ சிஹ்னம் –

பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-
பூண் முலை -என்றது பக்தி பிரகாசகமான ஆத்மபூஷணம் –
அதாவது பராவர குருக்கள் பிரகாசிப்பித்தது இறே-

நேரிழையீர் வந்து காணீரே–1-2-19-
நேரிழை-என்கையாலே -சம்ச்லேஷத்திலும் கழற்ற வேண்டாத ஆபரணங்கள்
அதாவது–அத்யந்த ஸூஷ்ம ரூப ஜ்ஞானமான ஆத்மபூஷணம் –

குவி முலையீர் வந்து காணீரே —1-2-20-
குவி முலை
பூர்வதத்
காணீர் காணீர் -இருபது பிரகாரமும்
முடிச் சோதி -திருவாய் -3-1- பிரகாரம் போலே இருக்கச் செய்தேயும்
பாதாதி கேசமாக அனுசந்தித்து
ப்ராப்ய அனுரூபம் ஸ்வரூபமாகவும்
ஸ்வரூப அனுரூபம் பிராப்யமாகவும்
அனுசந்தித்து இறே
இவை யுடையவர்களை அழைத்து இரு கால் காணீர் காணீர் -என்றது
அவனுடைய உபேய பாவமும்
உபாய பாவமும்
அறியுமவர்களை என்னவுமாம் –
இப்படிக் காட்டக் கண்டால் இறே மங்களா சாசன பரிபாகம் ஆவது -பரிகாரமாவது-

தென் புதுவைப் பட்டன்விருப்பால் உரைத்த விருபதொடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவார் தாமே–1-2-21-
உரைப்பார்-இவருடைய அபிமானத்தாலே சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே
என்கிற தேசத்திலே போய் அவர்களோடு மங்களா சாசனம் பண்ணப் பெறுவார்-

————

பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ –1-3-1-
வையம் அளந்தானே -இரப்பு பெற்றவாறே -பூரித்து -திரி விக்ரமன் ஆனானிறே-
அளந்த போதை ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி ஸ்மரணத்தாலே இறே ப்ரஹ்மா வரவிட்டதும் –

தேவகி சிங்கமே தாலேலோ –1-3-4-
தேவகி புத்திரன் என்கிற பிரசத்தியாலே -சொல்லுகிறார்
இது தான் ஸ்ருதி சோதிதமுமாயும் இறே இருப்பது –
ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிற இது இறே ஏற்றம் –

தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ –1-3-7-
குடந்தைக் கிடந்தானே
உபய விபூதியையும் நிர்வஹிப்பது திருதிய விபூதியிலே கண் வளர்ந்து போலே காணும் –

அழலே தாலேலோ அரங்கத்து அனையானே தாலேலோ –1-3-9-
அவதார கந்தமான -உரக மெல்லணை யானான அரங்கத் தரவணை யான் -இறே
தேனார் திருவரங்கம் தென்கோட்டி -மூன்றாம் திருவந்தாதி -62-என்னக் கடவது இறே –

புதுவை பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே –1-3-10-
இடர் இல்லை -என்னாதே-இல்லை இடர் -என்கிறார்
த்ருஷ்டா சீதா -என்னுமா போலே
இடராவது -இவர் அபிமானத்திலே ஒதுங்காமை இறே
தானே போகையாலே இல்லை என்கிறார் —

————–

தன் முகத்து-1-4- -பிரவேசம் –
விண் தனில் மன்னிய மா மதீ-என்று -மங்களா சாசன பரராய்
சூழ்ந்து இருந்து ஏத்துகிறவர்களையும் அழைக்கிறார் –

மா மதீ -என்றால் மதியை யுடையவர்களை காட்டுமோ என்னில்
விஜ்ஞானம் யஞ்ஜம் தநுதே-
தத் குணசாரத்வாத் தத் வ்யபதேச – என்கிற ந்யாயத்தாலே காட்டும் இறே –
மங்களா சாசன பரராய் இருக்கும் திருவடியும் பெருமாள் திரு உள்ளம் கன்றாமைக்காக
இவ்வஸ்துவை யுண்டாக்கிப் பரிய வேணும் என்று திரு உள்ளத்திலே ஓடுகிறது அன்றோ கார்யம்
கடுக அழைத்து அருளீர் என்றான் இறே
மங்களா சாசனம் தான் அவன் யாதொன்றில் உற்ற காலத்து-அங்கு ரசிக்கவும் வேணுமே
அது கார்யம் அன்றாகில் விலக்கவும் வேணும்
கார்யம் அன்று என்ன ஒண்ணாதே-இது அவதாரத்தில் மெய்ப்பாடு ஆகையாலே

மன்னிய மா மதியைப் பிடித்துத் தா -என்று அவன் சொல்லி ஆசரிக்கையாலே
ஆச்சார்ய முகத்தாலே ஆர்க்கும் ஜ்ஞானம் யுண்டாக வேணும் -என்று காட்டுகிறது என்னவுமாம்
ஆச்சார்யன் தானும் மன்னிய மா மதி யுடையவர்களையும் அழைத்துக் காட்டும் இறே –

என் மகன் கோவிந்தன் கூத்தினை யிள மா மதீ
நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ –1-4-1-

கதிர் ஜ்ஞான மூர்த்தியினாய் -திருவாய் -6-2-8-
உனக்கு ஓன்று உணர்த்துவான் நான் -திருவாய் -6-2-5-
என்னுமா போலே நித்ய விபூதியிலும் திருதிய விபூதியிலும்-உண்டான ஜ்ஞான விசேஷங்கள்
தமக்கு விதேயம் ஆகையாலே அவற்றை அழைத்து இவனுக்கு உணர்த்துகிறார் –

மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-2-
மா மதீ-முற்பட இள மதி என்று இப்போது மா மதீ என்கையாலே காலக்ருத பரிணாமம் தோற்றுகிறது-

விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா –1-4-6-
மா மதீ -என்றது பக்தியை-ஜ்ஞான சப்த வாச்யையுமாய் இறே பக்தி தான் இருப்பது
பிள்ளை உறங்கா வல்லி தாசரை மகா மதிகள் என்று இறே எம்பார் போல்வார் அருளிச் செய்வது
விரைந்தோடு வாருங்கோள்-மா மதீ -என்றது ஜாதி ஏக வசனம்-

மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-7-
இவனுடைய வ்யாமோஹத்தை பாராதே நீ
ஆஜ்ஞா பரிபாலனம் பண்ணுகிற கர்த்ருத்வத்தாலே தாழ்ந்து வருகிறோம் -எண்ணாதே
அவன் வ்யாமோஹத்துக்கு ஈடாக -நம்மை அழைக்கப் பெற்றோம் என்று மகிழ்ந்து கடுக ஓடி வா –

நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் –1-4-8-
நெடுமால் -உன்னளவே இல்லை காண்-அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தால் வந்த வ்யாமோஹம்
அந்த வ்யாமோஹத்துக்கு ஈடாக கடுக வா –

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய-1-4-9-
தாழியில் வெண்ணெய் -என்றது தேக குணத்தால் வந்த தன்னேற்றம்
சிறு மா மனிசர் –திருவாய் -8-10-3-என்னுமா போலே-அன்ன பானாதிகளாலே தரிக்கிற தேஹத்தால் வந்த சிறுமை
பெருமையாம்படி ஆத்ம குணத்தால் ஸூ ரிகளோடு ஒக்க வந்த மகத்வம்
விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -73-என்கிற மகத்வத்தையும் உடையவர்கள் இறே –
வெண்ணெய் -என்கிறது -வெண்ணெய் இருந்த பாத்ரம் இறே தாழி யாகிறது —
சம்சாரிகள் உடைய ஆத்மகுணம் தேக குணத்தை பின் செல்லும் முமுஷூக்களுடைய தேக குணம் ஆத்ம குணத்தை பின் செல்லும் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களும் முமுஷூக்களாய் இருந்தார்களே யாகிலும்
இவர்களுடைய ஆத்ம குணம் தேக குணத்தை பின் செல்லும்
தாழியில் வெண்ணெய் -என்றது ஆத்மகுணம் தேக குணத்தை பின் செல்லுகிற ஆழ்வார்களை —
இவர்கள் விரும்புகை இறே சாஷாத் வ்யாமோஹம் ஆவது-

வாழ வுறுதியேல் மா மதீ மகிழ்ந்தோடி வா –1-4-9-
வாழுகையாவது-நீ இப்போ நிற்கிற நிலை தன்னிலே -கரிஷ்யே வசனம் தவ –கீதை -18-73- என்கை இறே –
த்யஜ த்யஜ்ய -என்ற உன் முற்பட்ட நிலையை குலைத்து-அவன் மீண்டும் அதிலே நிறுத்தினால் அது பழைய நிலையாமோ
தவ -வசனம் -என்றபோதே மற்று ஒன்றிலே நிறுத்திலும் நிற்க வேணும் இறே பழைய நிலையில் -மாஸூச என்ன ஒண்ணாதே
வாழ வுறுதியேல்- வாச வர்த்தியாய் வாழ வேணும் என்று இருந்தாய் ஆகில்
மா மதி இத்யாதி –அறிவுடையார்க்கு எல்லாம் வேணும் காண் இந்த பாரதந்த்ர்யத்தாலே வந்த மகிழ்ச்சி –

——————

மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கரசே கண்ணபுரத்தமுதே
அமுதே என்னவலம் களைவாய் –1-5-8-
ஜ்ஞான சங்கோசம் பிறவாமல் ரஷகத்வத்தை மாறாடி நடத்துகையாலே அமுதே -என்னவலம் களைவாய் -என்கிறார்
இவருக்கு அவலம் யுண்டாவது அவன் நியாமகன் ஆகாது ஒழியில் இறே
இவர் அவனை நியமித்து இவை முதலான திவ்ய தேசங்களிலே நித்ய சந்நிதி பண்ண வேணும் -என்று
நிறுத்தினார் போலே காணும்-

———-

மாணிக்கக் கிண்கிணி பிரவேசம் –1-6-
சப்பாணி -என்கிற வ்யாஜத்தாலே ஆகிஞ்சன்யத்தை வெளியிட்டு லோகத்தை ரஷிக்கிறார் –

பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி –1-6-1-
சப்பாணி -என்று அஞ்சலியை பிரகாசிப்பிக்கிறது
இரு கால் -சப்பாணி -என்கையாலே
உபாய பாவத்திலும்
உபேய பாவத்திலும்
ஆகிஞ்சன்யம் வேணும் என்று அவனைக் கொண்டு பிரகாசிப்பிக்கிறார் –
காணி -என்கையாலே பலரும் என்னது என்று தோன்ற அபிமானித்து பிறருக்கும் வழங்கிக் கொண்டு போரிலும்
இந்த விபூதி -அவனுடைய காணி -என்கிறது – அது தன்னை இறே இவன் இரந்து கொண்டதும் –

ஆழி அம்கையனே கொட்டாய் சப்பாணி –1-6-3-
இவன் சப்பாணி கொட்டும் போது-இவன் திரு உள்ளத்தில் கருத்தை அறிந்து
திருக்கையில் ஆழ்வார்களுக்கும் நீங்க நின்று=இவர் தம்மைப் போலே உகப்பார்கள் இறே
அருகாழி யாகவுமாம் –

அளந்திட்ட தூணை யவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளந்திட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி –1-6-9-

சிங்க யுருவாய் –
ஊர்த்த்வ நரசிம்ஹமாய் வளர்ந்திட்டு –
ஸ்ரீ கஜேந்த்திரன் -நாராயணா வாராய் என்றான் இறே
வ்யாப்தியிலும் விசேஷ்ய பர்யந்தமான அஸ்தித்வம் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
அது பாராமல் -மணி வண்ணா நாகணையாய் -சிறிய திரு மடல் -50-என்றவோபாதி இறே
இவர் நாராயணா என்றதும்
இங்கே அங்கன் அன்றிக்கே
அஸ்தித்வ நாஸ்தித்வ விகல்பம் தோன்றுகையாலே எங்கும் உளன் –திருவாய் மொழி -2-8-6-என்று
வ்யாப்தியைக் கணிசித்து அதுக்கு ஒரு ஹேது வேண்டுகையாலே கண்ணன் என்ற
பாகவதனைக் காய்ந்த பொறாமையாலே இறே
முன்பு தன்னளவிலே நாஸ்திக்யத்தால் அவன் பண்ணின பிரதிகூல்யம் எல்லாம் பொறுத்துப் போந்தவன் இப்போது
அவன் புடைத்த அவ்விடம் தன்னிலே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிற்றும்-
இத்தால் அங்கு -என்கையாலே -தேசாந்திர வ்யாவ்ருத்தியும்
அப்பொழுது -என்கையாலே காலாந்தர வ்யாவ்ருத்தியும்
அவன் வீய -என்கையாலே தேகாந்தர வ்யாவ்ருத்தியும்
தோற்றினாப் போலே
அவன் தட்ட ஆங்கே -என்ற போதே அவை எல்லாம் தோற்றிற்று இறே –
திவ்ய ஆயதங்களையும் நிறுத்தித் தோன்றின பிரகாசத்தாலே இறே வாள் உகிர் -என்கிறது –

————

தொடர் சங்கிலி பிரவேசம் –1-7-
தளர் நடை -என்கிற வ்யாஜத்தாலே
அனுகூல ப்ரீதியும் பிரதிகூல நிரசனமும் -இவ்விரண்டும் அதிகார அனுகுணமாக நடக்கவே சித்திக்கும்
என்னும் இடத்தை அவனைக் கொண்டே வெளியிடுகிறார்
அவனுடைய ஆசாரம் -பக்தி மூலமாகவும் பீதி மூலமாகவும் அவகாஹாந ஹேதுவாய் இருக்கும் இறே-
பிரமாண அனுகுணமாக ஏதேனுமோர் அதிகரிக்கும் –

சீரால் விரித்தன வுரைக்க வல்லார் மாயன் மணி வண்ணன் தாள் பணியும்
மக்களைப் பெறுவர்களே –1-7-11-

சீரால் விரித்தன –
சீரால் விரிக்கை யாவது -குணாஸ்ரய தர்சனமும் -குண பிரகாச ஹேதுவும்-குண பிரகாச பிரயோஜனமும் -இறே
உரைக்க வல்லார் –
இவர் விரித்த பிரகாரம் அறியாது இருந்தார்களே யாகிலும்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி
இவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே அனுசந்திக்குமவர்களும்-

பணியும் -என்ற வர்த்தமானம் -உத்தமனில் வர்த்தமானம் ஆதல் –
உத்தர வாக்யத்தில் பிரார்த்தனை யாதலால் இறே-

மக்களைப் பெறுவர்களே-
புத்ரர்களைப் பெறுவர்கள்-
அவர்கள் ஆகிறார் -சிஷ்யவத் புத்ரர்கள் ஆதல் –
தாசவத் புத்ரர்கள் ஆதல் –
சிஷ்ய தாசர்கள் ஆதல் –
இது தான் சப்த உச்சாரண மாத்ரத்தால் கூடுமோ என்னில் –
இவர் அபிமானத்திலே ஒதுங்கி –
இவர் அருளிச் செய்ததை ஓதி –
ஒதுவித்துப் போருமவர்களுக்கும் -கூடும்
எங்கனே என்னில்
இவர்களாலே திருந்தின சிஷ்யர்கள் யுடைய நினைவாலே –
ஸூ கதாதம் –
இவனைப் பெற்ற வயிறு யுடையாள் -பெரியாழ்வார் -2-2-6-
நந்தன் பெற்றனன் -பெருமாள் திருமொழி -7-3-
கூரத்தாழ்வார் நங்கையார் திருவடி சார்ந்த வாறே பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு
கூடுகிற அளவில் தம்முடைய புத்ரரான ஆழ்வான் யுடைய
ஸ்ரீவைஷ்ணவத்தைக் கண்டு
இதனுடைய எடுப்பு இருந்தமை கண்டோமுக்கு
ஆழ்வானுக்கு அந்ய சேஷத்வம் வர ஒண்ணாது என்று ஆவர்த்திக்கை தவிர்ந்தார் இறே-

———-

பொன்னியல்-1-8- பிரவேசம் –

கீழே இவருடைய அபிமானத்திலே ஒதுங்கி-அதிகாரியானவன் நல்வழி நடக்கவே
அனுகூல ப்ரீதியும் பிரதிகூல நிரசனமும் சித்திக்கும் -என்கிறார் –
பிரதிகூல நிரசனம் தான் -தேஜோவதமும் -பிராண வதமுமாயும் இறே இருப்பது
சாஷாத் பிரதிகூலமாவது -தேக இந்த்ரியங்களும் தானும் இறே –
தேக இந்த்ரியங்களை தேஜோ வதம் பண்ணுகையாவது-அதிகார அனுகுணமாக நியமித்து -சிறைப்படுத்தி நியாம்யம் ஆக்குகை –
நிரசிக்கையாவது -எம்பாரை போலே இறே -தானே தனக்கும் சத்ருவை இருக்கும் இறே –
கர்மத்தால் அன்றிக்கே-காலத்தால் அன்றிக்கே-தேசத்தால் அன்றிக்கே-இந்த்ரியங்களால் அன்றிக்கே
நானே செய்தேன் -என்றான் இறே –
இனி மேல் அச்சோ -என்கிற வ்யாஜத்தாலே–அயோக வ்யச்சேதமும்-அப்ரதிஷேதம் -முதலான
ஆத்ம குணங்கள் யுண்டாகில் இறே–அவனைக் கூடலவாது -என்னும் அர்த்தத்தை வெளியிடுகிறார் –

————–

பொத்த உரலைக் கவிழ்த்து-அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய-1-9-7-

இத்தால் ஸூஷியுடையருமாய் -இதர அபிமானம் அற்றவர்களுக்கு
அபேஷா நிரபேஷமாக திருவடிகள் சேரும் என்று காட்டுகிறது
பொத்த யுரலால் -இதர அபிமானம் சிறிது கிடந்தாலும்
ஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போகய பூதராவார் என்கிறது-

தித்தித்த பாலும் –
காய்ச்சி உறி ஏற்றி உறைதல் வாய்ப்பாலும் அவனுக்கு போக்யமாய் இருக்கும் இறே-
இத்தால் -ஒருவனை நாம் திருத்தி ஆந்தராளிகன் ஆக்கினோம் என்னும் அபிமானம் கிடந்தாலும்
ஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போக்யர் ஆவார்கள் இறே
நாழிவளோ-திரு விருத்தம் -71-என்றும்
செய்த சூழ்ச்சியை யாருக்கு உரைக்கேன் -பெரிய திருமொழி -3-7-4-என்றும்
இவ் வபிமானம் இறே அவனுக்கு அங்கீகார ஹேது
ஸ்வ அபிமானம் அற்ற அளவன்றிக்கே -வைகுண்ட பிரிய தர்சிகளாய் இருப்பாரை -வெண்ணெய்-என்கிறது –
எல்லா உலகுமோர் துற்றாற்றா-திருவாய் -2-8-8-என்கிற திரு வயிறு நிறைவதும்
திரு உள்ளம் பிரசன்னம் ஆவதும் இவ்வதிகாரம் கண்டால் இறே –
சதுர்த்தியில் ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தமான பார தந்த்ர்யம் தோன்றா நிற்கச் செய்தேயும்
அந்ய சேஷ பூதரை இறே சேஷம் என்கிறது –
சேஷ பூதனை -முமுஷூ வானவனை இறே வெண்ணெய் என்னாலாவது –
தித்தித்தபால் -என்கிறது
ஸ்வ அபிமானமும் இதர அபிமானமும் அற்ற பிரபன்னரை இறே –
பொத்த உரல் என்றது -பிரபன்னன் தன்னை -அசித் என்று இறே இருப்பது –

குழலால் இசைபாடி வாய்த்த மறையோர் வணங்க -இமையவர் ஏத்த வந்து–1-9-8- –
குழலால் இசை பாடி -என்றத்தாலே
ஆச்சார்ய வசன பாரதந்த்ர்யமே வாய்த்த மறையாக -மங்களா சாசன பர்யந்தமாக கைங்கர்யம் செய்யுமவர்கள் –

விட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே –1-9-10-

விட்டு சித்தன் பரோபகாரமாக வுபகரித்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
வாய்த்த மக்களையும்
நன் மக்களையும் பெற்று
அவர்கள் மங்களா சாசனம் பண்ணக் கண்டு மகிழ்வர் -என்கிறார்

விஷ்ணு சித்தன் என்றது -அரவத்தமளிப்படியே
வல்லவர் -என்றது -சாபிப்ப்ராயமாக -என்றபடி
வாய்த்த மக்கள் -என்றது -புத்ரர்களை
நன் மக்கள் என்றது -சிஷ்யர்களை –
பிரத்யயத்திலே சிஷ்யர்களுக்கு ப்ராப்தி யுண்டானவோபாதி-பிரக்ருதியிலே புத்ரர்களுக்கும் பிராப்தி யுண்டு இறே
புத்ரான் -சந்த்யஞ்ய -என்றது காரண கார்ய பாவ சம்பந்தத்தாலே இறே-அது தான் அறிந்த மாத்ரம் இறே
இங்கு கார்ய காரண பாவ சம்பந்தம் ஆகையாலே இறே உபாதேயமாம் இறே
தாத்வர்த்தத்தால் வந்த ரஷ்யத்வம் சதுர்த்தி தோற்றினால் இறே தோற்றுவது –

———-

அரவணை–2-2- பிரவேசம் –

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்-என்று அல்வழக்கு ஒன்றும் இல்லாதே அறுதியிட்டது தேசமாக்கி
தத்தேசிகனை அவதார கந்தமாக வஸ்து நிர்த்தேசம் செய்து
நாவகார்யம் சொல் இல்லாதவர்களை தேசிகராக்கி
கார்ய பூதனானவன் அவதரித்த ஊரில் கொண்டாட்டம் ஒக்க நின்று கண்டால் போலே
மிகவும் உகந்து மங்களா சாசனம் செய்து
அவதரித்தவனுடைய திவ்ய அவயவங்களை பாதாதி கேசாந்தமாக நிரவத்யமான வளவன்றிக்கே
இதுவே பரம புருஷார்த்தம் என்று வஸ்து நிர்த்தேசம் செய்து
தாமும் மிகவும் உகந்து தம் போல்வார்க்கும் காணீர் –காணீர் -என்று -காட்டி அருளி
இவனுக்கு ஆஞ்ஞா ரூபமாகவும் அனுஜ்ஞ்ஞா ரூபமாகவும்
ப்ராப்தி நிபந்தனமான அபிமான ரூபமாகவும்
உபய விபூதியில் உள்ளாரும் உபகரித்த பிரகாரங்களை அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற அவர்கள் வரவிட்ட வற்றையும்
அவர்கள் கொடுவந்த வற்றையும் மேன்மையும் நீர்மையுமான மெய்ப்பாடு தோன்ற அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து-

அவன் அங்கீ கரித்த பின்பு
தொட்டிலேற்றித்
தாலாட்டி
ஜ்ஞானத்துக்கு ஆஸ்ரயத்தில் காட்டிலும் ஜஞேய ப்ராதான்யத்தைக் கற்ப்பித்து
அவற்றுக்கு ஜஞேய சீமை இவ்விஷயமாக்கி விஷயீ கரித்த ஜ்ஞானத்தை –
விஜ்ஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற ந்யாயத்தாலே ஜ்ஞாதாக்கள் ஆக்கி
இள மா மதீ -1-5-1-என்றும் –
விண்டனில் மன்னிய மா மதீ -1-5-6-என்றும்
உபய விபூதியில் உள்ளாரையும் உப லஷண நியாயத்தாலே இவன்
புழுதி அளைவது தொடக்கமான வ்யாபாரங்களைக் கண்டு
தாமும் மிகவும் உகந்து தம் போல்வாரையும் அழைத்துக் காட்டி
நோக்கின கண் கொண்டு போக வல்லீர்கள் ஆகில் போங்கோள்-என்று
முன்பு பச்சை வரவிட்டுத் தாங்கள் வாராதவர்களையும் வந்து கண்டு போங்கோள் -என்று
உய்ய உலகு படைத்து -என்று ஜகத் காரண பிரகாசகமான பரமபதம் முதலாக கீழே அருளிச் செய்த திவ்ய தேசங்களையும்
இதில் அருளிச் செய்த திருக் குறுங்குடி முதலான திவ்ய தேசங்களிலும் சந்நிஹிதனாய் நின்றவனும்
நாநாவான அவதாரங்களும் அபதாநங்களுமாக பிரகாசித்தவனும்
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -கீதை -15-15-என்கிறபடியே
சகல வேத சாஸ்திர இதிஹாச புராணாதிகளாலும் அறியப்படுமவன் நான் -என்றவனை -கீழே
நாராயணா அழேல் அழேல் -என்றவர் ஆகையால் –
நான் மறையின் பொருளே -1-6-3-
ஏலு மறைப் பொருளே -1-6-9-
எங்கள் குடிக்கு அரசே -1-6-10-என்று வாசகத்துக்கு வாச்யமும் -வாச்யத்துக்கு வாசகமுமாக அறுதியிட்டு அவனை
செய்யவள் நின்னகலம் சேமம் எனக்கருதி –ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை -1-6-1- என்கையாலே
லோகத்தில் உள்ளாருக்கு பீதி பக்தி பிராப்தி மூலமான ஆசாரங்கள் பிரமாண அனுகுனமாகத் தோன்றும்படி யாகவும்
சொல் வழுவாத ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தோன்றும்படியாகவும்
செங்கீரை என்கிற வ்யாஜ்யம் முதலாக
சப்பாணி
தளர்நடை
அச்சோ அச்சோ
புறம் புல்கல்
அப்பூச்சி என்கிற வியாபார விசேஷங்களைப் பிரார்த்தித்து
அவன் இவை செய்யச் செய்ய அவற்றுக்குத் திருவடிகள் நோம் -என்றும்
தளர் நடையில் விழுந்து எழுந்து இருக்கையாலே திரு மேனி நோம் -என்றும்
அச்சோ புறம் புல்குகளாலே தம்முடைய திரு மேனியை வன்மை என்று நினைத்து
அத்தாலும் திரு மார்பு நோம் என்று அஞ்சி
நாம் பிரார்த்தித்து என்ன கார்யம் செய்தோம் -என்று அனுதபிக்கிற அளவில்
தன் நிவ்ருத்த அர்த்தமாக தன் திருத் தோள்களையும் ஆழ்வார்களையும் காட்ட
அவையும் பயா அபாய ஹேது வாகையாலே அவற்றை அமைத்து திரு மேனியில் வாட்டத்தை நினைத்து
படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் இத்தனை என்று உறங்குகிறவனை எழுப்பி
அநச்னன்-என்கிற பிரதிஜ்ஞ்ஞையைக் குலைத்து
அஸ்நாமி -என்கிறபடியே அமுது செய்ய வேணும் -என்கிறார் –

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்-2-2-2-
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான்
வைத்த நெய்யால் -சாஷாத் முத்தரையும்
காய்ந்த பாலால் -சொல்லுவதே ஓத்தின் சுருக்கு -என்றும்
நாம நிஷ்டோசம் யஹம் ஹரே -என்றும் இருக்கிறவர்களையும்
வடிதயிரால் -சதுர்த்தி உகாரங்களிலே தெளிந்து -தந் நிஷ்டராய் –
மகாரத்திலே ப்ர்க்ருத்யாத்ம விவேக யோக்யரானவர்களையும் –
நறு வெண்ணெயால் -செவ்வி குன்றாமல் இவ்வடைவிலே ப்ரக்ருத்யாத்ம விவேகம் பிறந்து
அஹங்கார மமகார நிவ்ருத்தமான ஆத்ம குணங்களால் பூரணராய் மோஷ சாபேஷராய்-இருக்கிறவர்களையும் சொல்லுகிறது –

யமர்ந்து என் முலை யுணாயே —2-2-5-
உன் இஷ்டத்திலே போக்குவரத்து சீகர கதி யானாலும்
அழைக்க வரும் போது மந்த கதியாக வேணும் காண் –
இனி இவர்க்கு முலைப்பால் ஆவது
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமாய் –
மங்களா சாசன பர்யந்தமான பக்தி ரூபா பன்ன ஜ்ஞான ப்ரவாஹம் இறே
பக்தி உழவன் ஆனவனுக்கு தாரகாதிகள் எல்லாம் இது தானே இ றே-

இருடீ கேசா முலை யுணாயே-2-2-6-
இந்த்ரியங்கள் வ்யக்தி அந்தரங்களிலே செல்லாதபடி சௌந்தர்யாதிகளாலே அபஹரிக்க வல்லவனே –
இடையாலே
ஒன்றையும் பொறாத வைராக்யமும் –
இடை நோக்குவது
முலைகள் விம்மி பெருத்தல் ஆகையாலே மிக்க பக்தியையும்
விரி குழல் -என்கையாலே –
நாநா வானப் பிரபத்திகளை ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் -ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்
மேல் நுழைந்த வண்டு -என்கையாலே இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்
இன்னிசை -என்கையாலே
ஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்
இவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது
திரு மாளிகையிலே ஆகையாலே இத்தை உகந்து அருளி
இனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-

சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே —2-2-11-
பாட வல்லார் தாமே சென்ற சிந்தை பெறுவார்
சீர் –
ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
செங்கண் –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த ஐஸ்வர்யம் -ஆதல்
பெருமை யாதல்
வ்யாமோஹம் ஆதல் –

ஜல சம்ருதி மாறாத செங்கழு நீரைச் சொல்லுகையாலே
மங்களாசாசன குணத்திலே ஒருப்பட்ட ஸூமநாக்களையும்-
நிகழ் நாறும் -என்கையாலே -அவர்களுடைய பிரசித்தியையும் சொல்லுகிறது –

——

போய்ப்பாடுடைய-2-3- பிரவேசம் –

கீழே -தாயார் வாய்ச் சொல் கருமம் கண்டாய் -என்றும்
தீமை செய்து அங்கம் எல்லாம் புழுதியாக யளைய வேண்டா -என்றும்
பலவிடங்களிலும் சொல்லிற்று கேட்கிறார் இல்லை -என்று இருக்கையாலும் –
ஆஸ்ரித பரதந்த்ரனான அவதாரத்திலே மெய்ப்பாடு தோன்றும் போதும்
ஆஸ்ரித வசனம் கேட்க வேணும் என்னும் தாத்பர்யம் தோன்ற வேணும் என்று
ஸ்ரவண இந்த்ரியத்திலே சம்ஸ்கார ஸூஷி யுண்டாக அவன் ஆசரித்து காட்டுகையாலே
இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான நிரபேஷ பிரகாசகம் ஒருபடிப் பட்டு இருக்கும் –
அவன் இப்படி ஆசரித்தான் என்றால் -இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான சாபேஷராய் இருக்கும்
தேக இந்த்ரியங்கள் ஜன்ம சித்தமாக யுண்டாய் இருக்கச் செய்தேயும்
த்ருஷ்டாத்ருஷ்ட ரூபமான பதார்த்தங்களை ஜன்ம சித்தமான அந்த இந்த்ரியங்களாலே குறிக் கொண்டு கிரஹிக்கும் போதும்
பிரமாணிகரான பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்
பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களுக்கு சேர்ந்த வர்த்தமான ஆச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்
இவ் வனுஷ்டானம் தான் இல்லை யாகிலும் திராவிட வேதத்துக்கு கருத்து அறியும் மூதுவர் நிர்ணயித்த வாச்ய வாசக சம்ப்ரதாயத்தாலே
வ்யாபகத்வாரா வாசக வாச்யங்களை பிரதம மத்யம நிகமன பர்யந்தமாக
அர்த்த தர்சனம் பண்ணுவிக்க வல்லவர்களுடைய அனுதாப வசனங்களாலும்
அனுதாப ஹேது வானால் இறே செவி வழியே கலை இலங்குவது
ஸ்ரோதாச -அனுதாப ஹேதுவான அர்த்த் க்ரஹண சப்த மாத்ரங்களை வருந்தியும் குறிக் கொண்டு க்ரஹிக்கைகாக இறே
அந்த ஸ்ரவண இந்த்ரியத்துக்கு சம்ஸ்கார ஸூஷி யுண்டாக்கிற்று என்று –
அத்தை நினைத்து
அந்த ஸூஷியை பலகாலும் தொட்டுப் பார்க்க வேணும் இறே
உன் செவியில் புண்ணைக் குறிக் கொண்டு இரு-என்று இ றே லோக உக்தியும் –

வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் –2-3-5-
விஷ்ணு சப்தம் சாதாரண வ்யாவ்ருத்தமான படி தோன்ற நீ இங்கே வாராய் என்று பிடித்து திரி இடுகிறாள்
கேசவனை -விட்டுவே -என்கிறாள்
கரும் குழலாலே -பிரசச்த கேசன் -என்றது பின்நாட்டின படி-

————————————————————————————–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் அனுபவிக்கும் ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகன் –

June 27, 2020

ஸ்ரீ சீதா ராம ஜெயம்

திருப்பல்லாண்டு
1- இராக்கதர் வாழ் இலங்கை பாழ் ஆளாகப் படை பொருதான் -3 –

பெரியாழ்வார் திருமொழி-
2- பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை -இரந்திட்ட கைமேல் எறி திரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலை கலங்க சரம் தொட்ட கையான் — 1-6 7- –

3- குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீணீ ரிலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கையான் – – 1-6 8- –

4- கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன் கானடை அங்கண்ணன் — –2-1-8-

5- வல்லாளிலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளன் – – 2-1 10- –

6- சிலை ஓன்று இறுத்தான் -2 -3 -7 –

7- நின்ற மராமரம் சாய்த்தான் –2 -4 -2 –

8- பொற்றிகழ் சித்ரகூடப் பொருப்பினில் உற்ற வடிவிலொரு கண்ணும் கொண்ட
வக்கற்றைக் குழலன் —2 -6 -7 –

9- மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழ
தன்னிகர் ஒன்றில்லா சிலைகால் வளைத்திட்ட மின்னுமுடியன் –2 -6 -8 –

10- தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னலன்காரன் — 2- 6- 9- –

11 – கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டான் — – -2 -7 -5-

12- என் வில்வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி முன் வில் வலித்து
முது பெண் உயிர் உண்டான் – 3- 9- 2-

13 – மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றமிலாத சீதை மணாளன் – -3 -9 -4

14- முடி ஒன்றி மூ வுலகங்களுமாண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தான் —3- 9- 6- –

15- தார்கிளந்தம் பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொற் கொண்டு போகி
நுடங்கிடை சூர்பணகாவை செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தான் — -3- 9- 8-

16- காரார் கடலை அடைதிட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன்முடி ஒன்பதோடு
ஒன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராமுதன் – – 3–9 -10 – –

17-செறிந்த மணிமுடிச் சனகன் சிலை இறுத்து சீதையை கொணர்ந்தது
அறிந்து அரசுகளை கட்ட அரும் தவத்தோன் இடை விளங்க
செறிந்த சிலைகொடு தவத்தை சிதைத்தான் -3 -10 -1 – –

18 – எல்லியம்போது இனிதிருத்தல் இருந்ததோர் இடவகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கார்க்க விருந்தான் – – -3- 10- 2-

19- கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய்
மன்னவனும் மறாது ஒழிய குலக்குமரா காடுறையப் போ என்று
விடைகொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அன்கேகினான் -3- 10- 3- –

20 – கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த
தோழமை கொண்டான் – – -3 -10 -4 –

21- கானமருங் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழில் சாரல் சித்ரகூடத்து இருக்க
பரத நம்பி பணிய நின்றான் — -10 -5 –

22- சித்ரகூடத்து இருப்ப சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய
அனைத்து உலகும் திரிந்தோடி வித்தகனே யிராமா ஒ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்தான் –3–10 -6 –

23- பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட -சிலை பிடித்து
எம்பிரான் ஏக பின்னே யங்கு இலக்குமணன் பிரிய நின்றான் – – —3 -10 -7 –

24- அடையாளம் மொழிந்த அத்தகு சீர் அயோத்தியர் கோன் — -3- 10- 8- –

25- திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே
வில்லிறுத்தான் — 3- 1- 9-

26- கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் எதிரில்
பெருமை இராமன் — 4- 1- 1-

27 – நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை யிராமன் காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக்
கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன்
தன் வேள்வியில் காண நின்றன் -4 -1 -2

28- சிலையால் மராமரம் எய்த தேவன் –தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று
தடவரை கொண்டடைப்ப அலையார் கடற்கரை வீற்று இருந்தான் –4 -1 -3 –

29- அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை குலம் பாழ்
படுத்து குல விளக்காய் நின்ற கோன் — -4 -2 -1

30- வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத
மூக்கும் போக்குவித்தான் -4 -2 -2 –

31- கனங்குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம்
கழுவேற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் – -4 -3 -7 –

32- எரி சிதறும் சரத்தால் இலங்கையனைத் தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து
வாய்க்கோட்டம் தவிர்ந்துகந்த அரையன் – – 4- 3- 8-

33 – தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் சாரதி – – 4- 7- 1-

34- கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தான் – -4 -8 -4 –

35 – பெரும் வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை
உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தான் — 4- 8- 5-

36 – கீழுலகில் அசுரர்களைக் கிழங்கு இருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய
கருவழித்த அழிப்பன் — 4- 8- 6-

37- கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களை பிணம் படுத்த பெருமான் -4 -8 -7

38- பருவரங்களவை பற்றி படையாலித்து எழுந்தானை
செருவரங்க பொறாது அழித்த திருவாளன் —4 -8 -10

39 – மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ
செரு உடைய திசைக்கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் -4 -9 1-

40- மன்னுடைய விபீடணற்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி
மலர் கண் வைத்தான் –4-9 -2-

——————————–

ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் அனுபவித்து அருளிச் செய்யும் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி —

June 26, 2020

மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப் பன்னு பாடல்–1-1-10-

தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்று–1-2-21-

மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்–1-3-10-

ஒளி புத்தூர் வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை–1-4-10-

புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ் இன்னிசை மாலைகள் இப் பத்தும்–1-5-11-

பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்து–1-6-10-

வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன–1-7-11-

மச்சணி மாட புதுவை கோன் பட்டன் சொல்–1-8-11-

விட்டு சித்தன் மகிழ்ந்து ஈத்த தமிழ் ஈரைந்து–1-9-11-

—————

விட்டு சித்தன் விரித்த சொல் ஆர்ந்த அப்பூச்சி பாடல் இவை பத்து–2-1-10-

குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர் பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல்–2-2-11-

பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண்டு-2-3-13-

பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்–2-4-10-

விண் தோய் மதிள் வில்லி புத்தூர் கோன் பட்டன் சொல்-2-5-10-

வில்லிபுத்தூர் பட்டன் ஒக்க உரைத்த தமிழ் பத்து–2-6-10-

பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே – 2-7 10-

வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை–2-8-10-

பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்–2-9-11-

புதுவைக் கோன் பட்டன் சொல்–2-10-10-

———–

பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்ஏரார் இன்னிசை மாலை–3-1-11-

பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல் இன் தமிழ் மாலைகள்–3-2-10-

செற்றம் இலாதவர் வாழ் தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்–3-3-10-

வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை–3-4-10-

திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ் பட்டார் பிரான் சொன்ன மாலை-3-5-11-

புதுவைக் கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் -3-6-11-

கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை–3-7-11-

தண் புதுவை பட்டன் சொன்ன தூய தமிழ் பத்து–3-8-10-

செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல் ஐந்தினோடு ஐந்து–3-9-11-

பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல்–3-10-10-

—————

செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை–4-1-10-

கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல் –4-2-11-

வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -4 3-11 –

கோதில் பட்டர் பிரான் குளிர் புதுவை மன் விட்டு சித்தன் சொல்–4-4-11-

பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர் கோன் சித்த நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை–4-5-10-

சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த ஓரணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று–4-6-10–

வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன் விட்டு சித்தன் விருப்புற்று தங்கியவன் பால் செய் தமிழ் மாலை–4-7-11-

திருவாளன் திருப்பதி மேல் திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன–4-8-10-

தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரந்தத் திருப்பதியின் மேல்மெய்நாவன் மெய்யடியான் விட்டு சித்தன் விரித்த தமிழ் –4-9-11-

அரங்கத்து அரவணைப் பள்ளியானை வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை–4-10-10-

————-

வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதன் தன்னை சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ்–5-1-10-

பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5 2-10 –

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன் ஒன்றினோடு ஒன்பது–5-3-10-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 4-11 –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியில் ஸ்ரீ அமுதனார் திவ்ய தேச மங்களா சாசனம் /ஸ்ரீ விபவ அவதார அனுபவம் /ஸ்ரீ யபதித்தவம் –/ ஸ்ரீ ஸ்வாமி குண அனுபவம் -/ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபாடு /ஸ்ரீ ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள் – —

June 5, 2020

இந்த பிரபந்தத்தில் 9 திவ்ய தேசங்கள் —ஆழ்வார் அவதார ஸ்தலங்கள் -3–மங்களா சாசனம் செய்கிறார் ஸ்ரீ அமுதனார்-

ஆழ்வார் அவதார ஸ்தலங்கள்
திரு மழிசை-மழிசைக்கு இறைவன் 1
திரு கொல்லி நகர் 1
திரு குறையலூர் 1

திவ்ய தேசங்கள்
1-திரு குருகூர் மூன்று பாசுரங்கள்
2-திரு அரங்கம் 14 பாசுரங்கள்
3-திரு வேங்கடம் -2 பாசுரங்கள்
4-திருக் கச்சி- 1 –
5-திரு கோவலூருக்கு -1-
6-திரு மால் இரும் சோலை -1-
7-திரு கண்ண மங்கை நின்றான்–1-
8-திரு பாற்கடல் 2-
9-திரு பரம பதம் -2-

—————-

இராமானுச நூற்றந்தாதியில்-12- திவ்ய தேச மங்களா சாசனம் –

1-திருவரங்கம் –14-பாசுரங்களில் / கள்ளார்-2-/தாழ்வு -16-/ நயவேன் -35-/ஆயிழை -42-/
இறைஞ்சப்படும் -47-/ஆனது -49-/பார்த்தான் -52-/கண்டவர் -55-/மற்றொரு -57-/சிந்தையினோடு -69-/
செய்த்தலை -75-/சோர்வின்றி -81-/மருள் சுரந்து -91-/அங்கயல் -108-

2-திருவேங்கடம் -2-பாசுரங்கள் /நின்ற வண் -76-/இருப்பிடம் -106-

3-திருக்கச்சி -1-பாசுரம் –ஆண்டுகள் -31-

4—திருக் கோவலூர் -1-/ மன்னிய -10-

5—திருக் குறையலூர் -1-/ கலி மிக்க -88-

6—திரு மழிசை -1-/ இடம் கொண்ட -12-

7–கொல்லி நகர் -1-/ கதிக்கு -14-

8—திருமால் இரும் சோலை -1-/ இருப்பிடம் -106-

9—திருக்கண்ண மங்கை -1-/ முனியார் –17-

10—திருக் குருகூர் –3-பாசுரங்கள் /ஆரப் பொழில் -20-/காட்டும் /நாட்டிய -54-

11—திருப்பாற் கடல் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ செழும் திரை -105-

12—திரு பரம பதம் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ இருப்பிடம் -106-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-60-திவ்ய தேச சாமான்ய பாசுரம்
தானுகந்த ஊர் –திரு நெடும் தாண் -6-போலே –

————–

ஸ்ரீ விபவ அவதார அனுபவம்–14-பாசுரங்கள்-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -7-பாசுரங்கள்
ஸ்ரீ ராமாவதாரம் -1- பாசுரம்
ஸ்ரீ பரசுராமவதாரம் -1-பாசுரம்
ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் -1-பாசுரம்
ஸ்ரீ திருப் பாற் கடல் -திரு அவதார கந்தம் -2-பாசுரங்கள்
அனைத்து அவதாரங்களும் சேர -2-பாசுரங்கள் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -7-பாசுரங்கள்-

1-கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

2-நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

3-அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

4-அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

5-சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

6-ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68-

7-கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

———

ஸ்ரீ ராமாவதாரம்-1-பாசுரம்

1-படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

————

ஸ்ரீ பரசுராமவதாரம் -1-பாசுரம்

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

——————

ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரம் -1-பாசுரம்

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய் வினை நோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103-

————–

ஸ்ரீ திருப் பாற் கடல் -திரு அவதார கந்தம் -2-பாசுரங்கள்-

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

——————

அனைத்து அவதாரங்களும் சேர -2-பாசுரங்கள் –

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74- –

—————-

ஸ்ரீ யபதித்தவம்

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் ஸ்ரீ வல்லபன் ..
முதலில் பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -ஆரம்பித்தார் ..கடைசியிலும் சொல்லுவார்.-
ஒவ் ஒரு திருவாய் மொழியிலும் .7 வது பாசுரமாக கொண்டு போனால்
திரு வாய் மொழி-முழுவதிலும் புதுசாக சாராம்சம் கிடைக்கும்-

பூ மன்னு-1- அலர்மகள் கேள்வன் -33-/வானம் கொடுப்பது மாதவன் -66-/ பங்கய மா மலர்ப் பாவை -108-/
திருமகள் சம்பந்தம் விடாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –

1-பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -1-
2-கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் -10-
3-அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் -16-
4-வெறி தரு பூ மகள் நாதனும் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே-19-
5-நாங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் -28-
6-அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் -33-
7-மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லா உலகோர்கள்-41-
8-மா மலராள் நாயகன் எல்லா யுயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் தூயவன் -42-
9-மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் -60-
10-ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு வானம் கொடுப்பது மாதவன் -66-
11-மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் -78-
12-அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப்பாவையைப் போற்றுதும் -108-

———-

சொல்லுவோம் அவன் நாமங்கள் -குணங்களை சொல்வதே திரு நாமம் -அருளிச் செய்த குணங்கள் –

1-மிக்க சீலம் /
2-பொருவரும் சீர் /
3-மன்னிய சீர் /
4-பெரும் கீர்த்தி
5-பிறங்கிய சீர் /
6-வள்ளல் தனம் /
7-நயப் புகழ் /
8-தன் ஈறில் பெரும் புகழ்
9-வாமனன் சீலன் இராமானுசன் /
10-தூயவன் தீதில் இராமானுசன் /
11-திசை அனைத்தும் ஏறும் குணனை
12-தொல் சீர் எதித்தலை நாதன் /
13-அற்புதன் -என்னை ஆள வந்த கற்பகம் /மண்ணுலகில் ஈட்டிய சீலத்து
14-பார்த்து அருளும் கொண்டல் /
15-உத்தமன்
16-புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி
17-சுடர் மிக்கு எழுந்த தொல் புகழ்
18-உன் பெரும் கருணை
19-வண்மை இராமானுசர்
20-மிக்க வண்மை
21-வண்மை –மா தகவு /மதி புரையும் தண்மை/
22-கொண்டல் அனைய வண்மை
23-மொய்த்து அலைக்கும் நின் புகழே
24-சீர் ஒன்றிய கருணை
25-தெரிவுற்ற கீர்த்தி
26-கார் கொண்ட வண்மை
27-சீர் வெள்ள வாரி
28-உணர்வின் மிக்கோர் தெரியும் வண் கீர்த்தி
29-போற்ற யரும் சீலம்
30-ஈண்டிய சீர்
32-அனைத்தும் தரும் அவன் சீர்
33-கடல் புடை சூழ் வையம் இதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே
34-மெய்யில் பிறங்கிய சீர்
35-இன்புற்ற சீலம்
36-பொங்கிய கீர்த்தி

———————-

ஸ்ரீ இராமானுசன் குண அனுபவம் –

மிக்க சீலம் அல்லால் உள்ளது என் நெஞ்சு -2-

பொரு வரும் சீர் ஆரியன் செம்மை -3-

அவன் மன்னிய சீர் தனக்கு உற்ற அன்பன் -4-

பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் –7-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-

மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

காரேய் கருணை இராமானுசா–வந்து நீ என்னை யுய்த்த பின் உன் சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 –

என் செய்வினையாம் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை–26-

உன் வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்–27-

பின்னை தன் காதலன் பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ்–28-

தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்–29-

அன்பன் அனகன்–30-

அன்பாளன்–31–

ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அரும் தவன்–32-

நயப் புகழே -34 –

நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால் –38-

தன்னீறில பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

வாமனன் சீலன்–40-

தூயவன் தீதில் இராமானுசன்–42-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன்–44-

அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற் கூறும் பரம் அன்று–45-

மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும் ஏறும் குணனை –46-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை–48-

தேர் விடும் கோனை முழுது உணர்ந்த அடியர்க்கு அமுதம் –51-

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த கற்பகம் கற்றவர் காமுறு சீலன் –53–

மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன்–54-

தொகை யிறந்த பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை–55–

புனிதன் புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமானுசனை–56-

உத்தமனை நற்றவர் போற்றும் இராமானுசனை–57-

எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58–

குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61-

மிக்க பண்டிதனே – 63- –

யுன் பெரும் கருணை–70-

வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

நிறை புகழோருடனே வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72-

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும் தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை–73-

கொண்டலனைய வண்மை ஏரார் குணத் தெம்மி ராமானுசன்–74-

நின் புகழே மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

யுன் சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81–

என்ன புண்ணியனோ ! தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

கார் கொண்ட வண்மை –83-

அவன் சீர் வெள்ள வாரியை–84-

தன் குணம் கட்கு உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் –87-

போற்றரும் சீலத்து இராமானுச–89-

தான் ஈண்டிய சீர் அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –

நூற் புலவர்க் கெண்ணரும் கீர்த்தி இராமானுச !–92-

இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

தன் தகவால் தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

பொற் கற்பகம் எம்மிராமானுச முனி–99-

உனதடிப் போதில் ஒண் சீராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி–100-

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102-

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

இன்புற்ற சீலத்து இராமானுச –107-

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

————————

ஸ்ரீ இராமானுசன் திரு உள்ள மகிமை –

பொய்கைப் பிரான் –அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் -8-

பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் இராமானுசன் -9-

மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் -12-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-

சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்–20-

தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்–29-

பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் –35-

ஒண் பொருள் கொண்டு அவர் பின் படரும் குணன்–36-

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலில்–37-

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன்
கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை யிராமானுசன்–103-

———————–

ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபாடு-

இதத்தாய் ராமானுஜன் –
மறை யதனின் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே –
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே –
மா முனிகளாக புனர் அவதாரத்தில் செய்து அருளினாரே

சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற –
ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமானுஜ முனி தன்
வாய்ந்த மலர்ப்பாதம் அன்றோ அனந்தாழ்வான் வணங்குகிறார்

இராமானுச முனியே –மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கும் மனம்
நீ எனக்குத் தா -எம்பார் பிரார்திக்கிறார்-

இராமானுச நூற்றந்தாதியில் -25-பாசுரங்களில் ஆழ்வார் திருவடிகளில்– அருளிச் செயலில்
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தோறும் புக்கும் இராமானுசன் –

புகழ் மலிந்த பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன்–1-

சடகோபனைச் சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் –18-

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர் அறிதர நின்ற இராமானுசன்–19-

திருவாய் ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும்
சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் –20-

தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ்-29-

மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும் ஏறும் குணனை –46-

தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

திரு வாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள் புணர்ந்த பொன் மார்பன்
பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்–64-

—–

குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத வன்பன் –2-

நீலன் தனக்கு உலகில் இனியானை–17-

கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் –88-

—-

பொய்கைப் பிரான் –அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் -8-

பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து உறைய வைத்து ஆளும் இராமானுசன் -9-

மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் -12-

சீரரங்கத் தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன்–13-

கொல்லி காவகன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்–14-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்–15-

சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் –16-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன்–44-

—————

ஸ்ரீ ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள் –

தொல் உலகில் மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

நான்கினும் கண்ணனுக்கே யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 –

மா மலராள் நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 –

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத் தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்–47-

கருதரிய பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும் நற் பொருள் தன்னை
இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

தன்னை வணங்க வைத்த கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனை–68-

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும் தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை–73-

இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமானுசன் –79-

தான் ஈண்டிய சீர் அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –31-ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம்-இத்யாதி —

April 11, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

அநாதி காலம் அசங்க்யாதமான யோநிகள் தோறும் தட்டித் திரிந்த நாம் இன்று
நிர்ஹேதுகமாக ஸ்ரீ எம்பெருமானரை சேரப் பெற்றோமே என்று -ப்ரீதி பிரகர்ஷத்தாலே –
திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

லோகத்தில் ஒருவனுக்கு ஒரு நிதி லபித்தால் தன்னுடைய அந்தரனுக்கு சொல்லுமா போலே –
இவரும் தம்முடைய பந்த மோஷங்களுக்கு எல்லாம் பொதுவான மனசை சம்போதித்து
கலா முகூர்த்தாதி-ரூபமாய்க் கொண்டு வர்த்திக்கும் காலம் எல்லாம் தேவாதி தேகங்கள் தோறும் சஞ்சரித்து இவ்வளவும் போந்தோம் –
இப்போது ஒரு சாதனம் இன்றிக்கே -சுந்தர பாஹுவாய் -தமக்கு உபாகரகரான ஸ்ரீ பேர் அருளாளன் திருவடிகளின் கீழே-
அங்குத்தைக்கு -ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள பிரேமத்தை உடையரான ஸ்ரீ எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு
நிற்கப் பெற்றோம் கண்டாயே -என்று சொல்லி ஹ்ருஷ்டர் ஆகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

நெடும் காலம் பல பல பிறப்புகளில் புக்கு பெரும்பாடு பட்ட நாம்-இன்று
நினைப்பின்றியே ஸ்ரீ எம்பெருமானாரைச் சேரப் பெற்றோம் என்று
பெறும் களிப்புடன் தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

இந்த பிரபந்தத்தில் 9 திவ்ய தேசங்கள் —ஆழ்வார் அவதார ஸ்தலங்கள் -3–மங்களா சாசனம் செய்கிறார் ஸ்ரீ அமுதனார்
திரு மழிசை-மழிசைக்கு இறைவன் 1
திரு கொல்லி நகர் 1
திரு குறையலூர் 1
1-திரு குருகூர் மூன்று பாசுரங்கள்
2-திரு அரங்கம் 14 பாசுரங்கள்
3-திரு வேங்கடம் -2 பாசுரங்கள்
4-திரு கச்சி- 1 –
5-திரு கோவலூருக்கு -1-
6-திரு மால் இரும் சோலை -1-
7-திரு கண்ண மங்கை நின்றான்–1-
8-திரு பாற்கடல் 2-
9-திரு பரம பதம் -2-

இதில் அன்பாளன் பூண்ட அன்பு.திவ்ய ஆபரணங்கள் போல ஸ்வாமி அன்பு பூண்டான் தேவ பிரான்
மீனுக்கு உடம்பு எல்லாம் தண்ணீர் போல ஸ்வாமிக்கு அன்பு-

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

பத உரை
மனமே -நெஞ்சமே
நாளாய் -தினமாய்
திங்களாய்-மாதமாய்
ஆண்டுகளாய்-வருஷங்களாய்
நிகழ் காலம் எல்லாம் -நடந்து கொண்டு இருக்கிற காலம் எல்லாம்
ஈண்டு-திரண்டு
பல் யோநிகள் தோறும் -பலவகைப்பட்ட பிறவிகள் தோறும்
உழல்வோம் -கஷ்டப்பட்டு கொண்டு திரிந்த நாம்
இன்று-இப்பொழுது
ஓர் எண் இன்றியே -ஒரு நினைப்பு இல்லாமலே
காண் தகு-காண்பதற்கு தக்கவைகளாக உள்ள
தோள்-திருத் தோள்களை உடைய
அண்ணல் -ஸ்வாமியாய்
தென் -அழகிய
அத்தியூரர் -திரு வத்தியூரில் எழுந்து அருளி உள்ள ஸ்ரீ பேர் அருளாள பெருமான் உடைய
கழல் இணைக் கீழ்-ஒன்றுக்கு ஓன்று ஒத்த திருவடிகளின் கீழ்
பூண்ட-நன்கு செலுத்தின
அன்பாளன் -பக்தியை உடையவரான
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
பொருந்தினம் -சேர்ந்து நிலை நிற்கப் பெற்றோம்

வியாக்யானம் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கையாலே இரண்டு தசையிலும் கூடி நிற்கிற நெஞ்சே –
தினமாய்-மாசமாய் -சம்வத்சரங்களாய் -கொண்டு வர்த்தியா நின்றுள்ள -காலம் எல்லாம் –
தேவாதி பேதத்தாலும் -அதில் அவாந்தர பேதத்தாலும் -பரிகணிக்க ஒண்ணாதபடி -திரண்டு பல வகைப்பட்ட -யோநிகள் தோறும் –
ஒரு கால் நுழைந்த இடத்தே -ஒன்பதின் கால் நுழைந்து தட்டித் திரிந்த நாம்-
இன்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே -காணத் தகுதியாய் இருந்துள்ள-திருத் தோள்களை உடையராகையாலே –
ரூப குணத்தாலும் உத்தேச்யராய் -நமக்கு வகுத்த சேஷிகளாய் – தர்சநீயமான ஸ்ரீ திரு வத்தியூரிலே -நித்ய வாசம் பண்ணுகையாலே –
அவ்வூரைத் தமக்கு நிரூபகமாக-உடைய ஸ்ரீ பேர் அருளாள பெருமாள் உடைய -பரஸ்பர சத்ருசமான -திருவடிகளின் கீழே –
பிணிப்புண்ட-சிநேகத்தை உடையரான –ஸ்ரீ எம்பெருமானாரை சேர்ந்து கொண்டு நிற்கப் பெற்றோம் –
நிகழ்தல்-வர்த்தித்தல் / ஈண்டுதல்-திரளுதல் /யோனி-ஜாதி–

வரத வலித்ரயம் -தாமோதரன் / கனக வளை முத்திரை / ஸ்ரீ நிதிம்-சம்ப்ரதாயம் நிலை நிறுத்திய ஸ்ரீ தேவ பெருமாள் அன்றோ –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு நிதி -ஸ்ரீ ராமானுஜர் -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -நின்று வேலை செய்ய
ஸ்ரீ அரங்கன் படுத்துக் கொண்டே அனுபவிக்கும் -ராஜதானி -பூண்ட -ஆபரணம் -சென்னிக்கு அணியாக –
குடை -பிரசித்தம் -கொடைத்தன்மை என்றுமாம் -அஹம் ஏவ பர தத்வம் சொல்லி நிமிர்ந்த தோள்கள் –
தோற்று தாளில் -தாளும் தோளும் சமனிலாத பல பரப்பி -தாளில் விழுந்தால் தோள் அணைப்பு கிட்டும் –
வையம் கொண்டாடும் வைகாசி கருட சேவை –

ஆண்டுகள் நாள் திங்களாய் -நிகழ் காலம் எல்லாம் –
கலா முகூர்த்தம் க்ர்ஷ்டாச்சா ஹோராத்ரச்சா சர்வச -அர்த்தமாசாமா சாரிதவத்சம் வத்சரஸ் சகல்பதம் -என்றும் –
நிமேஷோ மாநுஷோயோசவ் மாத்ரா மாத்ர ப்ரமாணாத –தைரஷ்டாதசபி காஷ்டாத்ரி சத்காஷ்டா கலாச்ம்ரத்தா –
நாடிகாது பிரமானே னகலா தசசபஞ்சச -நாடிகாப்யா மதத்வ்யாப்யோ முஹூர்த்தொர்விஜச த்தம –
அஹோராத்ரா முஹூர்த்தாஸ்து த்ரிம்சன்மாசாஸ் துதைச்ததா -மாசைர்த்வாதச பிர்வர்ஷா-மகோராத்ரம் துதத்வி -என்றும்
சொல்லப்படுகிற – சர்வ காலமும் -ஆண்டுகள்-வத்சரங்கள் -நாள்-தினம் -திங்கள்-மாசம் –நிகழ்தல் -வர்த்தித்தல்

ஈண்டு பல் யோனிகள் தோறு உழல்வோம் –
தேவ மனுஷ்யாதி ஜாதிகள் -ஒவ் ஒன்றிலே தானே அநேகம் அநேகமாக-அவாந்தர ஜாதிகள் உண்டு –
அவை எல்லாவற்றிலும் ஒருக்கால் புகுந்ததிலே ஒன்பதின் கால் புகுந்து –
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே
அநாதிகாலம் பிடித்து -சஞ்சரித்து போந்தோம் –
ஈண்டுதல் -திரளுதல் /யோநி -ஜாதி -உழலுகை -தட்டித் திரிகை –

ஆண்டுகள்–உழல்வோம் –
தமது பண்டைய நிலையையும் எதிர்பாராது வாய்ந்த இன்றைய சீரிய நிலையையும் பார்த்து வியந்து-
தன் நெஞ்சினைப் பார்த்து பேசுகிறார் –
இரண்டு நிலைகளையும் தம்மோடு ஒக்க இருந்து நேரே கண்டதாதலின் நெஞ்சினைப் பார்த்து பேசுகிறார் –
காலம் எல்லாம் நாம் பிறந்த பிறவிகளுக்கு எல்லை இல்லை –
தேவர் மனிதர் விலங்கு தாவரம் -என்று பெறும் பிரிவுகளும்
அவற்றின் உட் பிரிவுகளுமாக என்ன ஒண்ணாத திரண்டு பல வகைப் பட்டு உள்ளன அப்பிறவிகள் –
ஒரே வகையான பிறவியே பலகால் எடுத்து தட்டித் தடுமாற வேண்டியது ஆயிற்று –
சில பிறவிகள் ஆண்டுக் கணக்கில் இருந்தன –
மற்றும் சில மாதக் கணக்கில் இருந்து மாய்ந்தன
வேறு சில நாள் கணக்கில் நசித்தன –
இப்படிப் பட்ட நம் பல் வகைப் பிறப்புகளிலும் இப் பிறப்பிலே ஸ்ரீ எம்பெருமானாரை பொருந்தும் பேற்றினை நம் பெற்றோம் -என்றபடி –
ஆய்-என்பதை ஆண்டுகள் -நாள் -என்பவற்றோடும் கூடிப் பொருள் முறைக்கு ஏற்ப
நாளாய் -திங்களாய் -ஆண்டுகளாய் –என்று அன்வயித்து பொருள் கொள்க –
பிறக்கும் போதே நசிக்கும் பிறப்புகளை சொல்லாது ஒழிந்தது உழலுகை நிகழும் காலமாய்-அமையாமை பற்றி -என்க –
உழல்வோம் -தன்மை பன்மை வினையால் அணையும் பெயர்

மனமே –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் -அறிவுக்கு பிரசவ த்வாரமான நீ அறிந்தாய் என்று –
அந்தரங்கமான மனசை சம்போதித்து அருளிச் செய்கிறார் –
ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே பிராமய மானேஸ்-ச்வகர்மபி ஜீவேது காகுலே -என்கிறபடி
இவ்வளவும் சஞ்சரித்துப் போந்தோம் –

இன்று-
இப்போது-

ஓர் எண் இன்றியே –
நான் ஒன்றை எண்ணிக் கொண்டு இராதே இருக்க –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-ஒரு சைதன்ய கார்யத்தையும் பண்ணாதே இருக்க

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-

காண் தகு தோள் அண்ணல் –
ஆயதாஸ்ஸ ஸூவ்ர்த்ததாச சபாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா என்கிறபடியே
இருந்துள்ள-திருத் தோள்களை உடையவராய் –
விந்த்யாடவியில் நின்றும் ஸ்ரீ காஞ்சி புரத்துக்கு துணையாக வந்து –
அஹம் ஏவ பரதத்வம் -என்று ஸ்ரீ திரு கச்சி நம்பி மூலமாக உபதேசித்த உபாகாரகனாய் –

தென் அத்தியூர் –
தர்சநீயமான – நகரேஷு காஞ்சி -என்னப்பட்ட ஸ்ரீ காஞ்சி புரத்திலே –
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரிஜாதம் -என்று தாமே அருளிச் செய்யும்படி
ஸ்ரீ ஹஸ்த கிரியில் எழுந்து அருளி வகுத்த சேஷியான ஸ்ரீ பேர் அருளப் பெருமாள் உடைய –

காண் தகு தோள் —பூண்ட அன்பாளன்
எதிர்பாராது இன்று வாய்த்த ஸ்ரீ எம்பெருமானாரைப் பொருந்தின சீர்மை விளக்கப் படுகிறது –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய அணி பூணாத தோள் அழகிலே ஈடுபட்ட சிறிய திருவடி போலே-
புறப்பாடாகி திரு மாலை களைந்ததும் -ஸ்ரீ பேர் அருளாளர் வெறும் தோள் அழகிலே ஈடுபட்டு ரசித்தார் ஸ்ரீ எம்பெருமானார் –
அவருக்கு காணத் தக்கவனவாய் இருந்தன அத் தோள்கள்-
அவ் அழகிய தோள்கள் அவரை அண்ணலாக காட்டிக் கொடுத்தன –
விந்திய மலைக் காட்டிலே -வேடன் வடிவிலே -தன் தோள் வலிமை காட்டி -அச்சம் ஒட்டி உற்சாகம் ஊட்டி –
தம்மை ஸ்ரீ அத்தியூரிலே -தன்னோடு கூட்டிக் கொண்டமை பற்றி ஸ்ரீ தேவப் பெருமாள்-அழகிய தோளிலே
ஸ்ரீ எம்பெருமானார் ஈடுபட்டமையைக் கூறுவதாகவும் கொள்ளலாம் –
இனி தரும் என்று
அண்டினவர் அனைவர் கோருமவை யனைத்தும் சேரும் வண்ணம் வழங்கும்-வரம் தரும் மணி வண்ணனான
ஸ்ரீ அத்தி யூரர் அலம் புரிந்த நெடும் தடக் கையின் அழகில் ஸ்ரீ எம்பெருமானார்-ஈடுபாட்டைக் கருதலுமாம்
தடக்கை -என்பதற்கு –
லோகம் அடங்க ஒதுங்கினாலும் விஞ்சி இருக்கும்படியான தோள் -என்பது-ஸ்ரீ பெரிய வச்சான் பிள்ளை வியாக்யானம் .

தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-

காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11-

தண் சேறை அம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உருகிக் கையாரத் தொழுவாரைக் கருதும் காலே –பெரிய திருமொழி -7-4-8-

தென் அத்தியூரர் –
ஸ்ரீ தேவப் பெருமாள் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ திருமலை -ஸ்ரீ அத்திகிரி -எனப்படும் –
அத்தி-யானை
திக் கஜங்கள் வழிபட்ட இடம் ஆதலின் –அத்தி கிரி -என்று பேர் பெற்றது –
திங் நாகைரர்ச்சி தஸ் தத்ர புரா விஷ்ணு ச்ச்நாதன-ததோ ஹஸ்திகிரீர் நாமக்க்யாதி ராஸீன் மகாகிரே -என்று-
அவ்விடத்தில் முற்காலத்தில் சனாதன புருஷனான ஸ்ரீ மஹா விஷ்ணு திக் கஜங்களால்-பூஜிக்கப் பட்டான் –
அதனால் பெருமை வாய்ந்த அம்மலைக்கு ஸ்ரீ அத்திகிரி -என்னும் பிரசித்தி ஏற்பட்டது – என்னும் புராண பிரமாணம் காண்க –
அத்தி கிரி உள்ள ஊர் ஆதலால் அது அத்தியூர் எனப்படுகிறது –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் -என்றார் ஸ்ரீ பூதத் ஆழ்வார் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் -என்னும்-பண்டைய வழக்கிலே
ஸ்ரீ பெருமாள் கோயில் எனப்படுவதும் இவ்வத்தி யூரே -பாரதம் பாடிய பெறும் தேவனார் –
தேனோங்கு நீழற் றிருவேம்கடம் என்றும்
வானோங்கு சோலை மலை என்றும் -தானோங்கு
தென்னரங்க மென்றும் திரு வத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர் -என்று கூறப் பட்டு உள்ளமை காண்க –
திருமலை என்பது திருவேம்கடம் ஆகிய திருமலையையும்
திரு மால் இரும் சோலை மலையாகிய தெற்குத் திரு மலையையும் குறிக்கும் ஆதலின்
அவ்விரு திருமலைகளையும் – பெரும் தேவனார் தம் பாடலில் குறிப்பிட்டு உள்ளார் –

வரம் தரு மா மணி வண்ணன் -அருளாளப் பெருமாள்-இடம் மணி மாடங்கள் சூழ்ந்து
அழகாய கச்சி -பெரிய திரு மொழி -2 9-3 – –என்று ஸ்ரீ திரு மங்கை மன்னன் அருளிச் செய்தபடி –
ஸ்ரீ காஞ்சி என்று ஊரை குறிப்பிடாது ஸ்ரீ அத்தியூர் என்று-குறிப்பிட்டு இருப்பது -கவனித்தற்கு உரியது –
பிரமதேவன் பூஜித்த இடம் ஆதலின் ஸ்ரீ காஞ்சி -என்று பேர் ஏற்பட்டது –
அப் பேரை விட விலங்கு இனங்களாகிய யானைகள் பூசித்த இடம் ஆதலின் ஸ்ரீ தேவப் பிரான் உடைய-எளிமையை விளக்குவதாக
அமைந்த ஸ்ரீ அத்தியூர் என்னும் பேரே சிறந்தது என்னும் கருத்துடன் அப்பேரினையே-கையாண்டார் -என்க
மேலும் ஸ்ரீ ஊரகம் ஸ்ரீ பாடகம் முதலிய பல ஸ்ரீ திருப்பதிகளைத் தன்னகத்தே கொண்ட நகருக்கு ஸ்ரீ காஞ்சி -என்பது
பொதுப் பெயராக-வழங்கப்படுகிறது –அத்தியூர் -என்பதோ -தேவப்பெருமாள் நித்ய வாசம் செய்யும் பகுதிக்கே சிறப்பு பெயராய்
அமைந்து உள்ளது -ஆதல் பற்றியும் அப்பெயரினையே கையாண்டார் -என்க
ஸ்ரீ அத்தியூரிலே நித்ய வாசம் பண்ணுதல் பற்றி அதனையே நிரூபகம் ஆக்கி ஸ்ரீ தேவப் பெருமானை ஸ்ரீ அத்தி ஊரர் -என்கிறார் –

அடியாரை அரங்கன் இடம் சேர வைத்த மகிழ்ச்சியால் பூரித்த தோள்கள்-
ஸ்வாமி காண் தகு தோள் அண்ணலை சேவித்தவனுக்கு தென் அத்தியூர் கழல் அடி இணை கீழ் பூண்டும் அன்பாளனாக ஆக்குவார்
திரி தந்தாகிலும் -தேவ பிரானை காண்பன் -.மேவினேன் அவன் பொன்னடி/ மீண்டு ஸ்வாமி அடிகளை பொருந்தினமே-

கழல் இணைக் கீழ் –
பாவனத்வ-போக்யத்வங்களுக்கு பரஸ்பர சதர்சமான திருவடிகளின் கீழே

பூண்ட அன்பாளன் –
சிரோ பூஷணமான ஸ்ரீ திரு அபிஷேகத்தை அலங்கரிக்கும் அவர்களைப் போலே தம்மாலே அலங்கரிக்கப்பட்ட
பக்தி பிரகர்ஷத்தை உடையரான –

கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
தோள் கண்டமை கூறப்பட்டது கீழே –தாள் கண்டமை கூறுகிறார் இங்கே –
கழல்கள் ஒன்றுக்கு ஓன்று இணையாகப் பொறுந்தி உள்ளன-அவற்றின் கீழ் அன்பு பூண்டார் ஸ்ரீ எம்பெருமானார்
அவன் தாள் இணைக் கீழ் புகும் காதலன் -திரு வாய் மொழி – 3-9 8– -என்றபடி
கழல் இணையின் கீழே பூண்ட அன்பை ஆளுகின்றார்-வாழ்ச்சி தாள் இணையக் கீழ் அன்றோ

பூண்ட அன்பு –
பூட்கை யாவது -வலிமை –வலிமை வாய்ந்த அன்பாவது விலகாது அடிக்கீழ் நிலை பெற்று இருத்தல்-
பிணிப்புண்ட சிநேகம் -என்று உரைப்பர் பெரிய ஸ்ரீ ஜீயர் –
தன்னைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்படி வலிமை பெற்று அவ்வளவு அமைந்து இருக்கிறது அன்பு ஸ்ரீ எம்பெருமானார் இடத்திலே –
திருவாளன் என்பது போலே அன்பாளன் என்கிறார் –
ஸ்ரீ திருவரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் போதும் ஸ்ரீ தேவப் பெருமாளையே
திரு வாராதனப் பெருமாளாகக் கொண்டு தென்னத்தி யூரர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளராய் அன்றோ ஸ்ரீ எம்பெருமானார் இருந்தார் –

இனி –
காண் தகு தோள் அண்ணல் என்பதை
ஸ்ரீ எம்பெருமானாருக்கு அடை ஆக்கலுமாம்-
இதனால் திரு மேனி குணமும்
அன்பாளன் என்பதனால்
ஆத்ம குணமும் அனுசந்திக்கப் படுகின்றன –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

பொருந்தினமே –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே என்றும் –
ஸ்ரீ ராமானுஜ பதாச்சாயா -என்றும் சொல்லுகிறபடியே
பொருந்தி விட்டோம் கண்டாயே -என்று-தாம் பெற்ற வாழ்வுக்கு ஹர்ஷித்துக் கொண்டு நின்றார் ஆய்த்து –

இராமானுசனைப் பொருந்தினமே
பொருந்திவிட்டோம்-இனிப் பிரிந்திடற்கு வழி இல்லை
மேவினேன் அவன் பொன்னடி -கண்ணி நுண் சிறு தாம்பு – 2- என்றபடி
இம்மையிலும் மறுமையிலும் பிரிவிலாது பொறுந்தி விட்டோம் என்றது ஆயிற்று –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –30- இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் இத்யாதி —

April 10, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி இவர் பிரார்த்தித்த இத்தைக் கேட்டவர்கள்-இவ்வளவேயோ -அபேஷை உமக்கு –
இனி பரம பத ப்ராப்தி-முதலானவையும் அபேஷிதங்கள் அன்றோ -என்ன –
ஸ்ரீ எம்பெருமானார் என்னை அடிமை கொண்டு அருளப் பெற்ற பின்பு-
சுகவாஹமான மோஷம் வந்து சித்திக்கில் என் –துக்க அவஹமான நரகங்கள் வந்து சூழில் என் –என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குண வைபவத்தை உள்ளபடி அறியும் பெரியோர்கள் உடைய-
திரள்களைக் கொண்டு -ஆனந்தத்தை பெறுவிக்குமதான -பாக்யம் உண்டாவது எப்போதோ -என்று இவர் அபிநிவேசிக்க –
இத்தைக் கண்டவர்கள் உம்முடைய அபேஷை இவ்வளவேயோ பின்னையும் உண்டோ என்ன –
அநாதியான சம்சார சாகரத்திலே-பிரமித்து திரிகிற -ஜந்துக்களுக்கு எல்லாம் ஸ்வாமியாய் –
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையனான ஸ்ரீ சர்வேஸ்வரன் என்று ஸ்ரீ பாஷ்ய முகேன அருளிச் செய்து –
பிரயோஜனாந்தர கந்த ரஹீதமான -ப்ரீதியோடு உபகரித்து அருளும் ஸ்ரீ எம்பெருமானார்
அடியேனை அடிமை கொண்டு அருளினார் –
இனி ஆனந்த அவஹமான பதம் வந்து ப்ராபித்தால் என்ன – அசங்க்யாதங்களான-துக்கங்கள் வந்து பிராபித்தால் என்ன –
இவற்றை ஒன்றாக நினைக்கிறேனோ என்று தம்முடைய அத்யாவசாய தார்ட்யத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இங்கனம் ஈட்டங்கள் கண்டு நாட்டங்கள் இன்பம் எய்திடல் வேண்டும் என்று இவர் ப்ரார்த்தித்ததைக்-கேட்டவர்கள்-
உமக்கு இவ்வளவு தானா தேட்டம் -வீட்டை அடைதல்-முதலிய பேறுகளில் நாட்டம் இல்லையா -என்று வினவ –
ஸ்ரீ எம்பெருமானார் என்னை ஆட் கொண்டு அருளப் பெற்ற பிறகு
இன்பம் அளிக்கும் வீடு வந்தால் என் -துன்பத்தினை விளைக்கும் நரகம் பல சூழில் என் -இவற்றில்
ஒன்றினையும் மதிக்க வில்லை -நான் என்கிறார் –

கிருபை தம் பேர் விழுந்தது ஸ்ரீ அமுதனாருக்கு என்று கொண்டு அடுத்த பாசுரம் அருளுகிறார்..
29 பாசுரத்துக்கும் 30 பாசுரத்துக்கும் இடையில் பாசுரம் இல்லை என்பதாலே கண்டு கொள்ளலாம்.
வண் துவாராபதி மன்னனை ஏத்துமின்–தொழுது ஆடி தூ மணி வண்ணன் -சொல்லாமலே எப்படி எழுந்தாள் ..
திரு நாமம் சொல்லுங்கள் என்று சொன்ன உடனே -எழுந்தாள்-செவி பட்டதே .

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

பத உரை
தொல் உலகில் -பண்டைய உலகத்தில்
மன்-நித்தியராய்
பல்-எண்ணற்றவராய்
உயிர்கட்கு -ஆத்மாக்களுக்கு
இறையவன்-சேஷியானவன்
மாயன் என -ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரன் என்று
மொழிந்த -நூல் அருளி செய்த
அன்பன் -அன்புடையவரும்
அனகன் -குற்றம் அற்றவருமான
இராமானுசன்-எம்பெருமானார்
என்னை ஆண்டனன் -என்னை அடிமையாக கொண்டு அருளினார்
இனி
இன்பம் தரு -இன்பத்தைக் கொடுக்கின்ற
பெரு வீடு -பெருமை வாய்ந்த மோஷம்
வந்து எய்தில் என் -வந்து கிட்டியதால் என்ன பயன்
எண்ணிறந்த -எண்ணிக்கை இல்லாத
துன்பம் தரு -துன்பத்தை விளைக்கும்
நிரயங்கள் பல -நரகங்கள் பலவும்
சூழில் என் -என்னை வந்து சூழ்ந்து கொண்டதனால் என்ன கெடு

பிரவாஹா ரூபேண பழையதாய் போருகிற ஜகத்தில் நித்தியராய் –
அசங்க்யாதரான ஆத்மாக்களுக்கு சேஷியானவன் – ஸ்வரூப ரூப குணங்களால் ஆசார்ய பூதனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-என்று –
ஸ்ரீ பாஷ்யாதி முகேன அருளி செய்த ஸ்நேஹத்தை உடையராய் -இப்படி ஸ்நேக ரூபமாக-உபதேசிக்கும் அது ஒழிய –
க்யாதி லாபாதிகளில் விருப்பத்துக்கு அடியான பாப சம்பந்தம் இன்றிக்கே-இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் –
என்னை அடிமை கொண்டு அருளினார் -ஆன பின்பு –
ஆனந்தாவஹமாய்-ஆத்ம அனுபவம் மாதரம் அன்றிக்கே -பரம புருஷார்த்த லஷணமான மோஷமானது – வந்து சித்திக்கில் என் –
அசங்க்யேய துக்காவஹமான நரகங்கள் பலவும் வந்து -தப்ப ஒண்ணாதபடி -வளைத்துக் கொள்ளில் என் –
இவற்றை ஒன்றாக நினைத்து இரேன் -என்று கருத்து –

நரகமே ஸ்வர்க்கமாகுமே -/எம்மா வீடு இத்யாதி -/பிராணவாகார விமானம் -ஸ்ரீ பாஷ்யாதி -சேஷி சேஷ பாவ சம்பந்தம் உணர்த்தி
மன் பல் உயிர் கட்கு இறையவன்-தத்வ த்ரயங்களும் -சொன்னபடி இத்தால் –

தொல் உலகில் மன் பல் உயிர்கட்கு –
ஏவம் சம்சர்த்தி சக்ரச்தே ப்ராம்யமானே ஸ்வ கர்மபி -என்கிறபடியே –
அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தம் உடைய -சம்சாரத்தில் நித்தியராய் -அசங்க்யாதராய் கொண்டு
வர்த்திக்கிற-ஆத்மாக்களுக்கு –

இறையவன்
யஸ் சர்வேஷூ பூதேஷு திஷ்டன் சர்வேஷாம் பூதானாமந்திர -ய சர்வ பூதாநா விந்தந்தி –
யஸ்ய சர்வே பூதாஸ் சரீரம் யஸ் சர்வேஷாம் பூதான மந்த ரோய மயதி-நத ஆத்மா அந்தர்யாம்யமர்த்த -என்றும்
சர்வேச்மைதேவாபலி மாவஹந்தி -என்றும் –
பீஷாச்மாத்வாத பவதே -பீஷோ தேதி சூர்யா பீஷாஸ் மாதகநிஸ் சேர்ந்தச்ச-மிர்த்யுத்தாவதி பஞ்சமா இதி -என்றும் –
அந்தர்பஹிஸ்ஸ சதத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித -என்றும் –
இத்யாதிகளில் சொல்லப்படுகிற வகுத்த சேஷியானவன் –

மாயன் என –
த்ர்விக்கிரம நரசிம்ஹாதி ரூபேண ஆவிர்பாவ ஜடாயு மோஷ பிரதான சேது பந்தன
அயோத்யாவாசி த்ர்குணா குல்மலாதி முக்தி ப்ராபண கோவர்த்தன உத்தரணாதி
ஆச்சர்ய-சேஷ்டிதங்களை உடையனான சர்வேஸ்வரன் என்று

மொழிந்த அன்பன்
ஸ்ரீ பாஷ்யாதி முகேன –லோகத்தார்க்கு எல்லாருக்கும் அருளிச் செய்தும் -உபதேசித்தும் -போந்த பரம ப்ரீதியை உடையவன் –

அநகன்
இந்த உக்தி உபதேசங்களாலே சில க்யாதி லாப பூஜைகளை அபேஷித்து இருந்தால் அது அரசமாய்த் தலைக் கட்டும் –
அப்படி அன்றிக்கே -பரிதி பிரேரராய் கொண்டு அவற்றை பண்ணி அருளினார் ஆகையாலே –அநகன் -என்று அருளிச் செய்கிறார் –

தொல் உலகில் மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த –
இதனால் ஸ்ரீ பாஷ்யத்தின் சாரத்தை சுருங்க சொல்லுகிறார் ஸ்ரீ அமுதனார்
தொல் உலகு –
என்பதனால் உலகு அநாதி என்று உணர்த்தப்படுகிறது –
ஆற்று ஒழுக்கு போலே தொடர்ந்து வருவது என்றபடி –
பிரகிருதி தத்துவத்தின் மாறுபாடாக ஆவதும் -அழிவதுமாய் -தொடர்ந்து படைக்கப்பட்டு பிரவாஹம் போலே வருகின்ற இவ் உலகிலே -என்றபடி –
இதனால் மாறுபடும் இயல்பினதாய் -இறைவனுக்கு உரிய அசித் தத்துவம் கூறப்பட்டது –
மன் பல் உயிர் –
என்பதனால் சித் தத்துவம் கூறப்படுகிறது
சித் தத்துவம் மாறு படாத ஸ்வரூபமாய் இருத்தலின் -நித்தியமாய் -அறிவுடையதாய்-அணு பரிமாணமாய் – இருப்பது –
மன் -என்பதனால்-
உயிரினுடைய ஸ்வரூபம் நித்யம் -என்று கூறப்படுகிறது –
பல் உயிர்கள் என்பதனால்-
சித் எனப்படும் ஜீவாத்மாக்கள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டு –பலவாய் இருத்தல்-புலப்படுத்தப் படுகிறது –
உயிர்கள் என்னும் பன்மையினாலே –
அவை ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டமை-புலப்படுமாயினும் -பல -என்று மிகை பட கூறியது –
ஆன்ம தத்துவம் உண்மையில் ஒன்றே -தேகங்கள் வேறு பட்டு-இருப்பது பற்றி அவற்றில் உள்ள ஆன்ம தத்துவம்
வேறு பட்டதாக காணப்படுகிறது -என்கிற -ஏகாத்ம வாதிகளின்-கொள்கையை உதறித் தள்ளுகிறது –
நித்யர்களுள் நித்யனாயும்-சேதனர்களுள் சேதனாயும்-பலர் உடைய விருப்பத்தை ஒருவனாய் இருந்து-நிறை வேற்றுகிறான் -என்று
வேதத்தில் நித்யரகவும் பலராகவும் ஜீவாத்மாக்கள் ஓதப்பட்டு உள்ளதை-அடி ஒற்றி -மன் பல் உயிர் கள்-என்றார் –
இந்த சுருதி ஆன்மாக்கள் உடைய நித்யத்வம் பஹூத்வம் காம விதானம் ஆக இம் மூன்றும்
வேறு ஒன்றினால் அறியப்படாமையால் -நித்தியர்களான பல சேதனருக்கு
காம விதானத்தை சேர விதிப்பதாக ஸ்ருத பிரகாசிகாகாரர் வியாக்யானம் செய்து இருப்பது-இங்கு அறிய தக்கது –
ஜீவர்கள் உடைய பேதம் உலகில் காணப் படுதலின் -அறியப் பட்டதே ஆயினும் –
பரிசுத்தமான அதாவது பிராகிருத தேக சம்பந்தம் அற்ற ஜீவாத்மாக்களின் பேதம் அறியப் படாமையின் –
அதனையும் சேர விதிப்பதே -இந்த ஸ்ருதியின் நோக்கம் என்று உணர்க –
இறைவன் -சேஷி –
அதாவது யாவற்றையும் தான் விருப்பபடி பயன் படுத்த கொள்ளும் உரிமை வாய்ந்தவன் –
இதனால் ஈஸ்வர தத்வம் பேசப்பட்டது-

ஆக தத்வ த்ரயமும் பேசப்பட்டது –இவைகளில் அசித்தும் சித்தும் உரிமைப்பட்டன -மாயன்-உரியவன் –
மாயன்-
ஆச்சர்ய படத் தக்க குணம் செய்கை இவைகளை உடையவன் –
தான் எத்தகைய மாறு பாடும் இன்றி -பிரியாது -தன்னோடு இணைந்த – பிரகிருதியை -உலகமாக மாறு படுத்தி –
பிரமன் முதல் மன் பல் உயிர் கட்கும் உடையவனாய் தான் எதனிலும் ஒட்டு அற்றவனாய் இருப்பது இறைவன் பால் உள்ள ஆச்சர்யம்-என்க
உயிர் அனைத்துக்கும் சர்வேஸ்வரன் சேஷி என்பதையே ஸ்ரீ பாஷ்யம் சாரமாக உணர்த்துகிறது-என்பர் ஸ்ரீ பாஷ்யம் வல்லோர் –

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவாபரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே -என்று
எவ்விடத்தில் ஸ்ரீ பர ப்ரஹ்மம் தெளிவாய் சேஷி-சேஷனை உடையவன்-உரியவன்-ஆக காணப்படுகிறதோ –
அந்த இரண்டாவது ஸ்ரீ ரங்க விமானம் போன்ற பிரணவ ஆகாரமான ஸ்ரீ பாஷ்யத்தை வந்தனை செய்கிறேன் –
என்னும் ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி இங்கே அனுசந்திக்க தக்கது –
ஸ்ரீ ரங்க விமானம் பிரணவ விமானம் –ஸ்ரீ பாஷ்யமும் பிரணவ வடிவமே –
பிரணவம் அ உ ம என்னும் மூன்று எழுத்துகளால் ஆகியது –
அ காரத்தால் சொல்லப்படும் சர்வேஸ்வரனுக்கே
ம காரத்தால் கூறப்ப்படும் ஜீவாத்மா சேஷப்பட்டது –
உயிர் இனங்களுக்கு சேஷி சர்வேஸ்வரன் எனபது பிரணவத்தின் பொருள் –
ஸ்ரீ பாஷ்யமும் -அ உ ம என்னும் எழுத்துக்களை முறையே
முதலிலும் -இடையிலும் -கடையிலும் -கொண்டு அமைக்கப் பட்டது –
அகில புவன -என்று முதலில் அ காரத்தில் தொடங்கியும் –
இடையில் மூன்றாம் அத்யாயத்தில் -மூன்றாம் பாதத்தில் -உக்தம் -என்னும் சொல்லில் உ காரத்தை அமைத்தும்
கடையில் சமஞ்ஜசம் என்று ம காரத்தில் முடித்தும் -ஸ்ரீ பாஷ்ய காரர் தம் நூல் பிரணவ அர்த்தத்தை உட் கொண்டது
என்பதை ஸூ சகமாக காட்டி இருப்பது இங்கு அறிய தக்கது –

அன்பன்
அன்பால் -தாய்-சீதை- மகனுக்கும் தம்பி தனயன் மகன் -பிரகலாதன் -இவர் ஆழ்வார் அடி பணிந்தார் -ஸ்வாமி
ஆகியவருக்குமே இந்த குணம் –.

அனகன் –
இங்கனம் ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து
மாயன் மன் பல் உயிர் கட்கு இறைவன் என்று பிரணவ அர்த்தத்தை உபதேசித்தது
அன்பின் செயலே அன்றி கியாதி லாப பூஜைகளைக் கோரிச் செய்த செயல் அன்று -என்கிறார்
பயன் கருதி உபதேசிப்பது பாபம் ஆதலின் அப் பாபம் அற்றவன் என்கிறார் –
அனகன் -அகம்-பாபம் அனகன் -பாபம் அற்றவன் -வட சொல்

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெ ருமானார் –

என்னை-
அதிகாரமில்லாத என்னை –
இவ்வளவும் பிரதி கூலித்து போந்த என்னை –

ஆண்டனனே –
பரகத ச்வீகாரமாக என்னை ஆளா நின்றார் –
ஆத்மாந்த தாச்யத்திலே அந்வயிப்பித்து உஜ்ஜீவிக்கும்படி-என்னை அடிமை கொண்டு அருளினார் –

என்னை -ஆண்டனனே
பரகத ஸ்வீகரமாய் -உய்வித்தார்..இது கிட்டிய பின்-

என்னை ஆண்டனனே
ஸ்ரீ எம்பெருமானார் என்னை அடிமை கொண்டதற்கு பிறகு வந்து எய்தும் பெரு வீட்டையும்
சூழும் பல நிரயங்களையும் பொருள் படுத்த மாட்டேன் என்று தம் மன உறுதியை வெளி இட்டபடி –
ஸ்ரீ நம் ஆழ்வார் எல்லாப் பொருள்களும் இறைவன் இட்ட வழக்கு என்கிற ஞானம் பிறந்த பிறகு-
பெருவீடு பெற்றில் என் -நரகம் எய்தில் என் -என்று தம் மன உறுதியை வெளி இட்டாலும் –
நரகம் ஆகிய-சம்சாரம் இந்த ஞானத்துக்கு விரோதி ஆகையாலே இங்கு இருக்க அஞ்சுகின்றேன் –
பரம பதத்துக்கு கொண்டு போக-வேணும் என்று இறைவனை இரக்கிறார் –

யானும் நீ தானே ஆவதோ மெய்யே-அரு நரகு-அவையும் நீ -ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை-நரகமே எய்தில் என் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும்-அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம் மன்னி வீற்று இருந்தாய்-அருளு நின் தாள்களை எனக்கே -8 1-9 – – எனபது அவர் அருளிய பாசுரம் –
அவருடைய உறுதிப் பாட்டினும் ஸ்ரீ அமுதனாருடைய உறுதிப்பாடு அதிசயிக்கத் தக்கதாக உள்ளது –
இவர் பேரனான ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஸ்ரீ திருவரங்கக் கலம்பகத்திலே –
நான் அந்த வைகுந்த நாடு எய்தி வாழில் என் ஞாலத்து அன்றி
ஈனந்த வாத நிரயத்து வீழில் என் யான் அடைந்தேன்
கோனந்தன் மைந்தனை நான்முகன் தந்தையைக் கோயிலச்சு
தானந்தனை எனக்காரா வமுதை அரங்கனையே -என்று பாடிய பாடலை இதனோடு ஒப்பிடுக –

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10—தாம் மநோ ரதித்த- நினைத்த படியே
திருவடிகளைத் தந்து அருளின மகா உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக இந்த ஆத்ம வஸ்துவை உனக்கு தந்தேன் என்கிறார் –
இப்போது திருவடிகளைக் கொடுக்கையாவது–
சம்சாரத்தோடு பொருந்தாத படியையும்
தன்னை ஒழிய செல்லாத படியையும்
தமக்குப் பிறப்பித்த நிலையைப் பிரகாசிப்பிக்கை—இது அன்றோ ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ அமுதனாருக்கு தந்து அருளினார் –

இப்படிப் பட்ட புருஷார்த்த காஷ்டை யைப் பெற்ற பின்
இன்பம் தரு பெரு வீடு எய்தில் என் –
அமர்தச்யை ஷசேது -என்றும்
ரசோவைச -ரசஹ்யேவாயோ லப்த்த்வா நந்தீபவதி -என்றும் –
நிரஸ்தாதிசயாஹ்லாத சூககர்வைக் லஷணா-என்றும்
நலம் அந்தம் இல்லாதோர் நாடு -என்றும் –
அந்தமில் பேரின்பம் -என்றும்
சொல்லுகிறபடியே ஆனந்த அவஹமாய் -ஆத்ம அனுபவம் போலே பரிமிதமாய் இருக்கை அன்றிக்கே –
பரம புருஷார்த்த லஷணம்-மோஷமானது – இங்கே மேல் விழுந்தால் என் -அத்தை சுகமாக கணிசித்து இருக்கிறேனோ-

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்திலேன் –
வீடு –
என்னும் வினையடி -முதல் நீண்டு -வீடு என்னும் பெயர் சொல்லாயிற்று —விடுதலை -அதாவது மோஷம் -என்றபடி –
மோஷமாவது இயல்பான அறிவினை மயக்கும் தன இரு வினைகளின்றும் -அறவே விடுபடுதல் -என்க-
பெரு வீடு
கைவல்யம்-அதாவது ஜீவான்ம தத்துவம் -தன்னந்தனியே -தன்னைத் தானே அனுபவித்து கொண்டு இருக்கும்
நிலையம் -மோஷம் ஆதலின் -அதனை விலக்குதற்காக –பெரு வீடு -என்கிறார் –
ஆத்மானு பூதிரிதி யாகில முக்தி ருக்தா -என்று ஆத்ம அனுபவ ரூபமான கைவல்யத்தை -ஸ்ரீ ஆழ்வான்-முக்தி என்பதை -காண்க .
அணு வடிவனான ஆத்மாவை அனுபவிப்பதால் உண்டான இன்பம் அளவு பட்டதாதலின் அது சிறு வீடாயிற்று –
அளவற்ற தன்மை வாய்ந்த பரம புருஷனை அனுபவிப்பதால் உண்டான ஆனந்தம் அளவிறந்ததாதலின் இது பெரு வீடாகிறது –
ஆத்ம அனுபவம் போலே அளவு படாமையாலே -பரம புருஷார்த்த ரூபமாய் இருக்கும் மோஷம் –
என்று அருளிய ஸ்ரீ எம்பெருமானார் -ஸ்ரீ ஸூக்தியை அடி ஒற்றி -பெரு வீடு -என்கிறார் –
இனி –பெரு வீடு -என்பது
பேர் இன்ப மயம் அன்றோ -முக்திர் மோஷோ மஹா நந்த -என்று-வீடும் -மோஷமும் -பேர் இன்பமும்
ஒரு பொருளானவாகப் படிக்க படுகின்றன -அன்றோ –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு-என்று திருவாய் மொழியும் உள்ளதே –
ஆக பெரு வீடு என்பதே அமையுமாய் இருக்க –
இன்பம் தரு –
என்று அடை மொழி இடுதல் மிகை யாகாதோ -எனின் –ஆகாது –
வீடு -எனபது தன் சொல் ஆற்றலால் கன்மன்களால் ஆய எல்லா துன்பங்களின் நின்றும் விடுதலையே குறிக்கும் –
அதனையே ஆதரம் தோற்ற – இன்பம் தருவது -என்று வேறு ஒரு வகையானும் கூறுதல் மிகை யாகாது –
ஏகமேக ஸ்வ ரூபேண பரேனச நிரூபிதம்-இஷ்ட ப்ராப்திர நிஷ்டச்ய நிவ்ருத்திச் சேதி கீர்த்யதே -என்று
ஒன்றே இயல்பான நிலையினாலும் -மற்று ஒன்றினை முன் இடுவதினாலும் நிரூபிக்கப் பட்டு-
இஷ்டமானது அடைதலாகவும் -அநிஷ்டமானது ஒழிதலாகவும் சொல்லப்படுகிறது -என்னும்
ரகஸ்யத்ர்ய சாரம் -மூல மந்திர அதிகாரம் -ஸ்ரீ தேசிகன் -ஸ்ரீ ஸூக்தி -இங்கு அறியத் தக்கது –
இங்கு மோஷம் ஒன்றே இன்பம் தருவது என்று இயல்பான நிலையினால் இஷ்டத்தை அடைதலாகவும்-
துன்பங்கள் ஒழிதல் என்று மற்று ஒன்றினை முன்னிடுவதினால் -அநிஷ்டம் ஒழிதலாகவும் –கூறப்படுகின்றது என்று உணர்க –

இனி -பாவாந்தரமபாவ -ஒரு பொருளின் இல்லாமை மற்று ஒரு பொருளின் வடிவமாய் இருக்கும் -என்னும்
சித்தாந்தமான கொள்கையின் படி துன்பங்களின் இல்லாமை இன்ப வடிவமாயே இருக்கும் அன்றோ -அதனை
வேறு ஒரு வகையால் பிரித்து கூறுவதனால் பயன் என் -எனின் -கூறுதும் –
இவ் உலகில் பிரதி கூலமான -அநிஷ்டமான -ஒரு பொருள் ஒழிதலால் ஆகிய இல்லாமை –
மற்று ஒரு-பிரதி கூலமான பொருள் வடிவமாகவும் -அன்றி -அனுகூலமும் -பிரதி கூலமும் அல்லாத ஒரு பொருளாகவும் இருத்தல் கூடும்
மோஷத்திலோ -அங்கன் அல்லாது -இஷ்டம் அல்லாதவை அனைத்தும் முழுதும் ஒழிந்து
விடுகையாலே மேல் முழுக்க இஷ்டமாகவே இருக்கும் –
ஆகையால்-முன்னைய துன்பங்களின் உடைய இஷ்டம் அல்லாமையும் –
பின்னைய வைகுண்ட ப்ராப்த்தி முதலியவை களின் இஷ்டமான தன்மையும் வெளிப்பட தோன்றும்படி -செய்வதற்காகப் பிரித்து
வேறு ஒரு வகையால் கூறுகிறார் -என்க –
இனி –
ஏனைய ஸ்வர்க்கம் போன்ற பயன்கள் போல் அல்லாது -இப் பெரு வீடு -இன்பமே தருவது –
துன்ப கலப்பு சிறிதும் அற்றது என்னும் கருத்துடன் –இன்பம் தரு பெரு வீடு -என்றார் ஆகவுமாம்-
இனி –
அத்வைதிகளின் உடைய மோஷத்தை -விலக்குவதற்காக -இன்பம் தரு-என்று பெரு வீட்டினை –
விசேடித்தத்தாகவுமாம் -அவர்கள் உடைய மதத்தில் இன்பமே பெரு வீடு -இன்பம் தருவது அன்று –
ஸ்ரீ அமுதனார் -இன்பம் தருவதாதலின் விரும்பப்படும் புருஷார்த்தமாக பெரு வீட்டினை காட்டுதலின்
அத்வைதிகளின் உடைய மோஷம் விலக்கு உண்டது -என்க –

முக்தியில் -நான்-என்ற தோற்றமும் இல்லை -அநுபூதி-மாத்ரமே எஞ்சி உள்ளது -என்னும் அத்வைத மத கொள்கையின் படி பார்க்கில் –
சம்சாரத்தில் உள்ள தாப த்ரயம் -மீளாதவாறு -அடியோடு -தீர்ந்து – சாந்தியை நான் பெற்றவனாக வேணும் -என்கிற
வேட்கை-மோஷத்தில் விருப்பம் -எவனுக்கும் ஏற்பட வழி இல்லை –
தனி அனுபூதியே உள்ளது -நான் என்பதே இல்லை -என்பதை அறிந்த பின் நான் சாந்தி பெற்றவனாக வேணும் என்று முயல மாட்டான் அன்றோ –
ஆக முக்தி பெறும் சாதனத்தை கைக் கொள்வார் எவருமே -இருக்க மாட்டார்கள் ஆதலின்
அதனைக் கூறும் வேதாந்த சாஸ்திரம் அனைத்தும் -பிரமாணமாக ஏற்க முடியாததாகி விடும் -என்று
ஸ்ரீ பாஷ்யத்தில் -அத்வைத மோஷம் -புருஷார்த்தம் ஆகாது -எனபது விளக்கப் பட்டு உள்ளமை ஈண்டு உணரத் தக்கது –
ததச்ச அதிகாரி விரஹா தேவ சர்வம் மோஷ சாஸ்திரம் அப்ரமாணம் ஸ்யாத்-எனபது ஸ்ரீ பாஷ்ய சூக்தி –
இதனால் அல்லல்கள் அனைத்தும் தொலைந்து கல்லினைப் போலே சுக துக்கங்கள் இல்லாது இருத்தல் மோஷம்
என்பார் கூற்றும் விலக்கு உண்டதாயிற்று –

எண்ணிறந்த துன்பம்
சங்க்யைக்கு நிலம் இல்லாத துன்பம் –
யாம்ச கிங்கர பாசாதி க்ரஹனம் தண்ட தாடனம்- யமச்ய தர்சனஞ் சோகர முக்ரமார்க்க விலோகனம் –
கரம்பவாலு காவாஹ் நியந்திர சஸ்த்ராதி பீஷணை –பிரத்யேக நரகேயஸ் சயாதநாத் விஜாதுச்சகா –
க்ரகசை பாட்யமா நா நா மூஷா யஞ்சாபி தஹ்யதாம்-குடாரைக்ர்த்தயமா நா நா பூமவ்சாபி நிகன்யதாம்-
சூலை ராரோப்ய மாணா நா வயாக்ரா வக்த்ரை -பிரவேச்யதாம் க்ர்த்தைரைஸ் சம்பஷ்ய மாணாநா –
த்வீபிபிஸ் சோப புஜ்யதாம் -க்வாத்யதாம் தைலமத்யேச க்லத்யதாம் ஷார க்ர்த்தமே –
உச்சானி பாத்யம நா நாம் ஷிப்யதாம் ஷேபயந்தரகை-நரகேயாநிது க்காநிபா பஹேதூத் ப்பவாவாநிச
ப்ராப்யந்தே நாரேகர்விப்ரதேஷாம் சங்க்யா நா வித்யதே -என்னும் படியான துக்கங்களை –

தரும்-நிரயம் பல சூழில் என் –
கொடுக்கும் நரகங்கள் ஒன்றும் சேஷியாதபடி -வந்து வளைத்து கொண்டாலும் என் –
இப்படிப்-பட்ட நரகங்களை ஒரு துக்கமாக நினைத்து இருக்கிறேனோ என்று தம்முடைய
த்ரட அத்யாவசாயத்தை-அருளிச் செய்தார் ஆய்த்து –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ஸ்ரீ ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலின –என்று
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்தார் இறே –

எண் நிறந்த —சூழில் என் –
எண்ணிறந்த -எண்ணிக்கையை கடந்த துன்பம் என்பதனோடு இதனை இயைக்க –
நரகேயானி துக்கா நிபாபஹேதூத் பவாநிச ப்ராப்யந்தே நாரகைர் விபர தேஷாம் சங்கா நவித்யதே – என்று
பாபம் செய்வதினால் உண்டான துக்கங்கள் நரகத்தில் எவைகள் உண்டோ-
உள்ளவர்களினால் அனுபவிக்கவும் -படுகின்றனவோ -அவைகட்கு எண்ணிக்கை இல்லை – என்னும் பிரமாணத்தை
அடி ஒற்றி -எண்ணிறந்த துன்பம்-என்கிறார் –
இனி
நெஞ்சினால் எண்ணிப் பார்க்கவும் முடியாத என்னலுமாம்-
நிரயம் -என்றாலே துன்பம் -தருதல் தானே தோற்றும் ஆயினும் –
துன்பம் தரு –
என்று விசேடித்து -இன்பத்தின் கலப்பு சிறிதும் அற்று -பேர் இன்பத்துக்கு எதிர் தட்டை துன்ப மயமானது என்னும் கருத்தினால் என்க –
துன்பமே தரும் நிரயம்-என்றது ஆயிற்று –
சூழின் -என்றமையால்-தப்ப ஒண்ணாது வளைத்துக் கொண்டு உள்ளமை -தோற்றுகிறது –

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –29-கூட்டும் விதி என்று கூடும் கொலோ -இத்யாதி —

April 10, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் திவ்ய குணங்களை உள்ளபடி அறிந்து இருக்கும் அவர்கள் திரள்களை
என் கண்கள் களிக்கும்படி கூட்டக் கடவ -ஸூஹ்ருதம் இன்று கூடுமோ-என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே –
தம்முடைய வாக்கானது -ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களுக்கு-அனந்யார்ஹமாய் விட்டது என்று
அந்த சம்ருத்தியை சொல்லி -அவ்வளவிலே சுவறிப் போகாதே – மேல் மேல் பெருகி வருகிற அபிநிவேச அதிசயத்தாலே –
இப்பாட்டில் –
தர்சநீயமான -ஸ்ரீ திரு குருகைக்கு நிர்வாஹராய் –ஸ்ரீ திரு வாய் மொழி முகத்தாலே -தத்வ ஹித புருஷார்த்தங்களை –
சர்வருக்கும் உபகரித்து அருளின ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தி மயமான வேதமாகிற செந்தமிழ் தன்னை –
தம்முடைய பக்தி யாகிற கோயிலிலே-பிரதிஷ்டிப்பித்து கொண்டு இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை
உள்ளபடி-தெளிந்து இருக்கும் ஞாநாதிகர்கள் உடைய திரள்களை என் கண்கள் கொண்டு ஆனந்தித்து களிக்கும்படி-
சேரக் கடவதான பாக்யம் எப்போது லபிக்கும் என்று –ததீய பர்யந்தமான ப்ரீதியை பிரார்த்தித்து அருளுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

என் வாய் கொஞ்சிப் பரவும் ஸ்ரீ எம்பெருமானார் குணங்களை உள்ளபடி உணர்ந்து உள்ளவர்களின்-திரளை
என் கண்கள் கண்டு களிக்கும்படி செய்ய வல்ல பாக்கியம் என்று வாய்க்குமோ -என்கிறார் –

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –

பத உரை –
தென் குருகை பிரான்-அழகிய திரு நகரிக்கு தலைவரான நம் ஆழ்வார் உடைய
பாட்டு என்னும் -பாட்டு என்று பேர் பெற்ற-
வேதப் பசும் தமிழ் தன்னை -வேத வடிவமாம் செம் தமிழான திரு வாய் மொழியை
தன் பத்தி என்னும் -தம்முடைய பக்தி எனப்படும்
வீட்டின் கண் -இல்லத்திலே
வைத்த இராமானுசன் -வைத்து அருளிய எம்பெருமானார்
புகழ்-குணங்களை
மெய் உணர்ந்தோர் -உள்ளபடி அறிந்து இருக்கும் அவர்கள் உடைய
ஈட்டங்கள் தன்னை -குழாங்களை
என் நாட்டங்கள்-என்னுடைய கண்கள்
கண்டு -பார்த்து
இன்பம் எய்திட -ஆனந்தம் அடையும் படி
கூட்டும் -இப் பேற்றினை கை கூடும்படி செய்யும்
விதி-பாக்கியம்
என்று கூடும் கொல்-என்று கிட்டுமோ –

தர்சநீயமான ஸ்ரீ திரு நகரிக்கு நாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய பாட்டு என்று கொண்டு -பிரசித்தமாய் –
வேத ரூபமாய் -செம் தமிழால்-இருக்கிற ஸ்ரீ திருவாய் மொழியைத் தம்முடைய பக்தி யாகிற-வாசஸ் ஸ்தானத்திலே வைத்த
ஸ்ரீ எம்பெருமானார் உடைய -கல்யாண குணங்களை யாதாவாக-அறிந்து இருக்கும் அவர்களுடைய சமூஹங்கள் தன்னை
என்னுடைய த்ருஷ்டிகள் ஆனவை-கண்டு சுகத்தை ப்ராபிக்கும்படியாக -என்று கூடியும் –
இப் பேற்றை நமக்கு சேர்விப்பதான அவருடைய கிருபை இன்று கூடவற்றோ-
விதி-ஸூஹ்ருதம்
இவர் தமக்கு பேற்றுக்கு அடியான -ஸூஹ்ருதமாக நினைத்து இருப்பது அத்தலையில் கிருபையை இறே-
ஸ்ரீ இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை தத் காலத்திலே காணா நிற்கச் செய்தே –
இங்கன் சொல்லுவான் என் என்னில் –
காண்கிறது அன்று இவர்க்கு இப்போது அபேஷை –
கண்டால் கண்கள் அவிக்ருதமாய் இருக்கை அன்றிக்கே –இன்பம் எய்துகை –
அதுக்கடியான ப்ரேமம் ஸ்ரீ எம்பெருமானார் அருளாலே விளைய வேணும் இறே –
அத்தாலே சொல்லுகிறார் –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட் படுத்து -107 – என்று இறே மேலும்-இவர் பிரார்த்தனை-
ஈட்டம்-திரள்
நாட்டம்-திருஷ்டி

மனம் வாக்கு ஈடுபட்டமை முன்பு சொல்லி இதில் காயம் -கண்ணாலே மெய் உணர்ந்தோர் ஈட்டங்களை காண -ஈடுபடுகிறார் –

தென் குருகை பிரான் –
தென் -தர்சநீயுமான என்னுதல் -தெற்கு திக்கிலே இருக்கிறது என்னுதல் –
தென்-தர்சநீயமான-அழகு-தர்சனத்துக்கு தர்சநீயமான
ஆழ்வாரை காட்டி கொடுத்த மகாத்மயம் .தென் திசை நோக்கி கை கூப்புகிறோம்.-திரு வாய் மொழி தோறும்
குருகை -பரம பதத்தை சேர்க்கும் ஊர் என்னுதல் – பரம பதத்தோடு சமமான வைபவத்தை உடைய ஊர் என்னுதல் –
பிரான் -இப்படிப் பட்ட திரு நகரியிலே அவதரித்து லோகத்தார் எல்லாரும் உஜ்ஜீவிக்கும்படி –
தத்வ ஹித-புருஷார்த்த தத் யாதாத்ம்யங்களை-திவ்ய பிரபந்த முகேன – உபகரித்த நம் ஆழ்வார் உடைய –
அன்றிக்கே –
அவ்வூரிலே அவதரிக்கையாலே எல்லாருக்கும் அவர் உத்தேச்யமாய் இருக்கிற-வழியாலே அவ்வூருக்கு உபகாரகர் -என்னவுமாம்

பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை –
அவா வற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன -என்றும் –
தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற-முதல் தாய் சடகோபன் -என்றும் சொல்லுகிறபடியே
தென் குருகைப் பிரான் அருளிச் செய்த-பாட்டு என்று பிரசித்தமாய் -சாம வேத ரூபமாய் –
செந்தமிழாய் இருக்கிற திரு வாய் மொழியை –

பத்தர் பரவும் ஆயிரம் -1-5-11-
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம்-3-9-11-
பொய்யில் பாடல் ஆயிரம்–4-3-11-
தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன் ஒலி புகழ் ஆயிரம்–5-2-11-
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த நாமங்களாயிரம்–5-9-11-
குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை ஆயிரம்–6-3-11-
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல் தெளிவுற்ற ஆயிரம்–7-5-11-
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீர்த்தங்கள்–7-10-11-

தென் குருகை –பசும் தமிழ் தன்னை-
பாட்டாய பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து -திருவாய் மொழி – 10-6 2- – -என்றும்
குருகூர் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் -திருவாய் மொழி – -10 6-11 – – -என்றும்-
ஸ்ரீ குருகைப் பிரான் பாட்டு பிரசித்தம் –

தன் பத்தி என்னும் –
அத்தை விஸ்மரித்தால் -ஒரு ஷணம் ஒரு கல்பம் போலே இருக்கும்படி-பண்ணக் கடவதான -பரம பக்தி யாகிற அதுவும் –
தன் பக்தி –
எல்லாருடைய பக்தி போல் அன்றிக்கே –பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை உள்ளபடி அறிந்த
எம்பெருமானாருடைய ப்ரேமம் அவருடைய ஞான-வைசத்யத்துக்கு தகுதியாய் இருக்கும் இறே -இப்படிப் பட்ட பக்தி யாகிற

வீட்டின் கண் வைத்த –
கண் -சப்தமி -வீடு -ஆவாசஸ்தானம் -அநர்கமான ரத்னத்தை செப்பிலே வைத்து கொண்டு இருப்பாரைப் போலே
தம்முடைய பக்தி யாகிற மகா ஸௌதத்திலே வைத்துக் கொண்டு இருக்கிற

வீட்டின் கண்…ரத்னத்தை செப்பிலே வைப்பது போல
பக்தி தான் பொன் -திரு வாய் மொழி ரத்னம்–செப்பு பெட்டகத்தில் வைத்தால் போல..

தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த
திருவாய் மொழி விஷயமாக எம்பெருமானாருக்கு ஏற்பட்ட பக்தி -திரு வாய் மொழிக்கு குடி இருக்கும் இல்லமாக அமைந்தது –
திருவாய் மொழி அன்றி -இருப்புக் கொள்ளாத நிலையே-எம்பெருமானார் உடைய பக்தி -என்க –
அதனை இல்லமாக கொண்டது திருவாய் மொழி என்பது எப்பொழுதும்-பேர் அன்புடன் அனுசந்திகப் படுவது என்னும் கருத்து கொண்டது
இவ் இல்லத்துக்கு தனி சிறப்புண்டு –
அது தோன்ற-தன் பத்தி என்னும் வீடு -என்றார் –
பிறர் கன்னம் இட ஒண்ணாமை இவ்வீட்டுக்கு தனி சிறப்பு
பிறர்-
பிரமாணமான வேதத்தை தூஷிப்பவர்களும் பிரமேயான இறைவனைத் தூஷிப்பவர்களும் –
அவர்கள் கள்ளம் இடாமை யாவது
அவர்கள் காதில் விழாமை வீட்டில் பிறர் -திருடர்-கன்னமிட்டால்-உட் புக்குக் கெடுத்து விடுவர் அன்றோ –
எம்பெருமானார் பக்தி உடன் தாம் பேணி பிறர் கன்னம் இடாதாவாறு தம் சீடர்களுக்கு அதன் பொருளை உபதேசித்து
பிள்ளான் வாயிலாக உரை வரைந்தும் பிறர் கைபட்டுக் கெடாதவாறு-திருவாய் மொழியை தம் சம்ப்ரதாயத்துக்கு-
உரிய தாக்கியதை அமுதனார் இங்கனம் வருணிக்கிறார் -என்க –

திண்ணன் வீடு 2-2-1-
கனிவார் வீட்டு இன்பமே-2-3-5-
சீர்மை கொள் வீடு -2-8-10-
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -2-9-1-
சிறப்பில் வீடு -2-9-5-
கெடலில் வீடு -2-9-11-
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -3-3-7-
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகமே 3-10-11-
பசை அற்றால் அன்றே அப்போதே வீடு அதுவே வீடாமே -8-8-6-
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

இராமானுசன் புகழ் –
திருவாய் மொழியை-சதா காலஷேபம் பண்ணியும் –
அந்தரங்கருக்கு -சார்த்தமாக அத்தை உபதேசித்தும் –
அந்தப் பாசுரங்களைக் கொண்டு சாரீர சூத்ரங்களுக்கு வியாக்யானம் பண்ணியும் –
பிள்ளானை இட்டு அதுக்கு வியாக்யானம் பண்ணுவித்தும் –
இப்படிப் பட்ட வைபவத்தை உடையரான எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை

மெய் உணர்ந்தோர்
மெய்யாக தெளிந்து-கொண்டு இருக்கிற பெரியார்கள் உடைய –

ஈட்டங்கள் தன்னை –
சம்சேவிதஸ் சம்யமிசப்த சத்யாபீடைஸ் சதுஸ் சப்ததிபிஸ் சமேதை -அந்யை ரந்தை ரபி
விஷ்ணு பக்தைராச்தேதி ரங்கம் யதிசார்வ பவ்ம -என்கிறபடியே –
சப்த சதி சங்கயாதரான யதிகளும் -ஆழ்வான் முதலிய முதலிகளும் – ஏகாங்கிகளும் – அசங்கயாதரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் –
ஸ்ரீ ஆண்டாள் முதலான-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்த்ரீகளுமாய்க் கொண்டு திரளாய் இருந்துள்ள ததீயருடைய திரள்களை
ஈட்டம்-திரள்-

புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை –
புகழ் திருவாய்மொழியை வீட்டுன் கண் வைத்தமையால் வந்தது –
ஸ்ரீ கண்ணனைப் பெற்று எடுத்தாள் ஸ்ரீ தேவகி-
ஆயின் வளர்த்து விளையாட்டு ஒன்றும் கண்டிடப் பெற்று இலள்
அந்த ஸ்ரீ கண்ணனை வளர்த்தாள் ஸ்ரீ அசோதை
அத்தெய்வ நங்கை எல்லாம் பெற்றாள்
அது போல ஸ்ரீ திருவாய் மொழியை ஈன்று எடுத்த முதல் தாய் ஸ்ரீ சடகோபன்
அத்தாய் அதன் வளர்ச்சியை கண்டிலள்
அதனை வளர்த்த தாய் ஸ்ரீ இராமானுசன்
அதன் விளையாட்டு எல்லாம் கண்டிடப் பெற்ற பெருமையால் வந்தது அவரது புகழ்-
ஸ்ரீ கண்ணன் குழந்தையாய் இருந்தும் அதி மானுஷமாக விளையாடினது போல ஸ்ரீ திருவாய் மொழியும்
எளிய செம் தமிழாய் அமைந்தும் வட மொழியில் அமைந்து தெளிவு படாத மறைகளை தெளிவு படுத்தியும் –
ஸ்ரீ வேத வியாசர் இயற்றிய ப்ரஹ்ம ஸூத்தரதிற்கு உண்மைப் பொருளை உணர்த்தியும் –
கட்புலனாகாத ஸ்ரீ இறைவனை காணுமாறு முன்னே கொணர்ந்து நிறுத்தியும் –
அதி வேதமான -வேதத்தை விஞ்சின -விளையாட்டுக்கள் புரிவதை எல்லாம் கண்டிடப் பெற்றமையால்
அசோதை போல் ஸ்ரீ எம்பெருமானார் புகழ் படைத்தவர் -என்க –
ஈன்ற முதல் தாய் ஸ்ரீ சடகோபன்
அவரை அடுத்து வளர்த்த இதத்தாய் ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ இராமன்-ஈன்ற ஸ்ரீ சடகோபன்
ஸ்ரீ அனுசன்-அவரை அனுசரித்து வந்த இதத்தாய் ஸ்ரீ இராமானுசன் -என்று -அறிந்து இருப்பவர்கள் புகழை
மெய்யாக உணர்ந்தவர்கள் என்க –
ஈட்டங்கள் தன்னை –
ஏழு நூறு சந்நியாசிகளும் எழுபத்து நான்கு சிம்ஹாச நாதிபதிகளும் அளவு இறந்த ஸ்ரீ வைஷ்ணவர்களும்-
ஸ்ரீ திருவரங்கத்தில் ஸ்ரீ எம்பெருமானாரை சார்ந்து உள்ளமையின் ஈட்டங்கள் என்கிறார் –
தன்னை-ஒருமை பன்மை மயக்கம் –

என் நாட்டங்கள்-
சமாஸ்ரயண பர்யந்தம் ஈஷணத் த்ரயத்தையே பற்றி சுகிக்க நினைத்து இருக்கிற-என்னுடைய த்ருஷ்டிகள் –
நாட்டம் -த்ருஷ்டி –

கண்டு –
கண்ணாரக் கண்டு சேவித்து

இன்பம் எய்திடவே –
பண்ணின பின்பு பூர்வ காலத்திலே தேக சம்பந்திகளாய் கொண்டு வருகிற சுக துக்கங்களை காற்க்கடை கொண்டு
இந்த ஜ்ஞாநாதிகர்-உடைய திரள்களைக் கொண்டு ஆனந்தத்தைப் பெறும் படி –

என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே –
நாட்டங்கள் என்று வேண்டாது கூறினார் –
இவ் ஈட்டங்களை காணாத நாட்டங்கள் பயன் அற்றன என்று தோற்றற்கு –
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவதே -ஸ்ரீ பெருமாள் திருமொழி –2-1 –என்றார் ஸ்ரீ குலசேகரப் பெருமாள்-
எம்பெருமானார் காலத்திலே அவர் பக்கலிலே அமுதனார் இருப்பவர் ஆதலின் காண்கையில் அன்று இவர்க்கு தேட்டம்-
கண்டதும் களிப்பினால் கண்கள் மலர்ந்து இன்புறுதல் இவருக்கு தேட்டம் -இன்புறுதலுக்கு அடியான அன்புடைமை
ஸ்ரீ எம்பெருமானார் அருளாலே தமக்கு வாய்க்க வேணும் -என்கிறார் –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே -என்று
மேலும் இவர் பிரார்த்திப்பது காண்க –

கூட்டும் விதி என்று கூடும் கொலோ
சேர்க்கும்-பாக்யம் எப்போது லபிக்க வல்லதோ –
விதி -ஸூஹ்ருதம் -இது தமக்கு பேற்றுக்கு அடியான ஸூஹ்ருதமாக நினைத்து இருப்பது
அத்தலையில் க்ருபை இறே –

கூட்டும் விதி –
என்றேனும் பேற்றினைச் சேர்விப்பதான விதி –
இவர் தமக்கு பேற்றுக்கு அடியான பாக்யமாக நினைத்து இருப்பது -ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையையே –
ஆகையால்-விதி -இங்கே ஸ்ரீ எம்பெருமானார் கிருபையையே -என்க –
தம்மாலும் ஸ்ரீ எம்பெருமானாராலுமே விலக்க இயலாமையின் கிருபையை விதி என்றார் –
கூட்டும் விதி -என்பதனால்-அதன் விளைவு தவிர்க்க ஒண்ணாதது என்பது புலனாகிறது
ஸ்ரீ நம் ஆழ்வாரும் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய் மொழி -5 1-1 – -என்று தவிர்க்க-இயலாமையை –
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே -என்று விளக்கி காட்டி-இருப்பது இங்கு உணரத் தக்கது –
என்று கூடும் கொலோ –
விதியின் விளைவில் ஐயம் இல்லை -பொறுத்து இருக்க முடியாமல் கூடுவது என்றோ-என்று-பதறுகிறார் –
பதினான்கு ஆண்டும் நிரம்பியதும் வருகிறோம் -என்று ஸ்ரீ பரதனுக்கு ஸ்ரீ இராமபிரான் கெடு-குறிப்பிட்டது போலே –
காலக் கெடு தெரிந்தால் ஆறி இருக்கலாம் -என்று கருதுகிறார் –

விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே -2-7-6-
சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே -4-5-7-
ஞான விதி பிழையாமே –மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே 5-2-9-

இராமானுசன் புகழ் –
மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை தத் காலத்திலே காணா நிற்கச் செய்தே இங்கனே சொல்லுவான் என் என்னில் –
காண்கிறதல் அன்று இப்போதைக்கு இவருடைய அபேஷை –
கண்டால் கண்கள் விக்ருதமாகை அன்றிக்கே -இன்பம் எய்துகை –
ப்ரேமம் –அதுக்கு அடியான ப்ரேமம் -எம்பெருமானார் அருளாலே விளைய வேணும் இறே -அத்தாலே சொல்லுகிறார் –
அன்றிக்கே
மெய் உணர்வாவது -அசங்குசித ஜ்ஞானம் –
அது ஒரு தேச விசேஷத்தாலே சேர்ந்த பின்பு வரக் கடவதாகையாலே -அப்படிப்பட்ட
ஞானாவை சத்யத்தை-உடையரானவர்களுடைய திரளை
இங்கே கண்டு பரி பூர்ண அனுபவம் பண்ணும்படியாக இப்பேற்றை-
நமக்கு சேர்விப்பதான அவருடைய க்ருபை எக்காலத்துக்கு கூட வல்லதோ என்னவுமாம் –
அத் திரள்கள் இவருக்கு சதா சேவ்யங்கள் ஆக இருந்தாலும் நித்ய அபூர்வங்களாயே இருக்கும் காணும் –
உன் தொண்டர்களுக்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி யங்கு ஆள் படுத்தே -என்று இறே-
மேலும் இவருடைய பிரார்த்தனை –

இங்கு -மெய் உணர்ந்தோர் -ஈட்டம் கண்டு
தேச விசேஷத்தில் கிடைக்க வேண்டியதை இவர்கள் இங்கே கண்டு அனுபவிக்க-
அப்படி பட்ட சேர்க்கை -ஆனந்தம் –நித்ய அபூர்வம்
அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதமாய் இருக்கும் படி கிருபை வேண்டுகிறார்–

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –28-நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் இத்யாதி —

April 9, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

மன பூர்வோ வாகுத்தர -என்னும் மனஸ்ஸூக்கு அநந்தரமான வாக்குக்கு
அவர் விஷயத்தில் உண்டான-ப்ராவண்யத்தை கண்டு ப்ரீதர் ஆகிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே மனச்சினுடைய சம்ருத்தியைச் சொல்லி -இதிலே –
வாக்கு உள்ள சம்ருத்தியைச் சொல்ல ஒருப்பட்டு -துர் புத்தியான கம்சனை சம்ஹரித்து -அதி கோமளமான
ஸ்ரீ பாதங்களை உடைய-ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நேகியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸ்ரீ பாதங்களை ஆஸ்ரயியாத
ஆத்மா அபஹாரிகளுக்கு அகோசரரான ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை ஒழிய வேறொரு விஷயத்தை
என் வாக்கானது ஸ்துத்திக்க மாட்டாது –ஆகையாலே இப்போது எனக்கு ஒரு அலாப்யலாபம் சேர்ந்தது என்று வித்தார் ஆகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

என் மேன்மைக்கு ஒரு குறையும் ஏற்படாது -நீர் உம் வாயாலே -கண்டு உயர்ந்தேன் -என்றீரே –
காண்டலுமே -வினையாயின எல்லாம் விண்டே ஒழிந்தன -ஏன் -உமது நெஞ்சம் தனியாய்-தளர வேண்டும் -என்று
ஸ்ரீ எம்பெருமானார் தேற்ற -தேறின ஸ்ரீ அமுதனார் –மனத்தைப் பின் பற்றி –வாக்கு அவர் திறத்து ஈடுபடுவதை கண்டு
உவந்து அருளி செய்கிறார் –

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

பத உரை-
நெஞ்சில்-இதயத்தில்
கறை கொண்ட -சீற்றத்தை உடையனான
கஞ்சனை-கம்சனை
காய்ந்த -சீறின
நிமலன்-குற்றம் அற்றவனும்
நங்கள்-நம்முடைய
பஞ்சித் திருவடி -பஞ்சு போலே மெல்லிய திருவடிகளை உடைய
பின்னை தன் -நப்பின்னையினுடைய
காதலன் -அன்பனுடைய
பாதம்-திருவடிகளை –நண்ணா -ஆஸ்ரயிக்காத
வஞ்சர்க்கு -வஞ்சகர்களுக்கு
அரிய -நெருங்க இயலாத
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
புகழ் அன்றி -குணங்களை ஒழிய
என் வாய் – என்னுடைய வாக்கு
கொஞ்சி -மழலையில் குழறி
பரவ கில்லாது -ஸ்தோத்ரம் செய்ய இயலாததாய் உள்ளது
இன்று -இந்நாள்
என்ன வாழ்வு -எப்படி பட்ட வாழ்வு
கூடியது -கிட்டியது –

தீய புந்திக் கஞ்சனுன் மேல் சினமுடையன்-ஸ்ரீ பெரிய திருமொழி – -2 2-5 – -என்கிறபடியே –
ஹ்ருதயத்தில் சீற்றத்தை உடையனான கம்சனைச் சீறின ஹேய பிரத்யநீகனாய் ஆஸ்ரித ஜன அபிமானியாய்
பஞ்சிய மெல்லடிப் பின்னை -ஸ்ரீ பெரிய திரு மொழி – 3-6 4- – என்கிறபடியே பஞ்சு போலே மிருதுவான
திருவடிகளை உடையளான ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு ஸ்நிக்க்தனானவன் உடைய திருவடிகளை-ஆஸ்ரியாத
ஆத்ம அபஹாரிகளுக்கு துர்லபரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய-குணங்களை ஒழிய
என்னுடைய வாக்கானது முக்த்த ஜல்பிதமாகக் கொண்டு அடைவு கெட ஏத்தாது –
இன்று எனக்கு கூடினதொரு வாழ்வு இருந்த படி –

நிமலன் –
தேவாநாம் தாநவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -ஜிதந்தே ஸ்தோத்ரம் -2 – என்கிற-பொதுவான சம்பந்தமும் கிடக்கச் செய்தே –
ஆஸ்ரித விரோதி என்னும் ஆகாரத்தாலே அவனை நிரசிக்கையாலே-வந்த நைர்மல்யத்தைச் சொல்லுகிறது –

கறை –
கறுப்பாய் சீற்றத்தை சொல்லுகிறது
அன்றிக்கே
கறை என்று தோஷமாய் மனசிலே தோஷத்தை உடையனான என்னவுமாம் –

பஞ்சி-
பஞ்சு

கொஞ்சுதல்-
அபூர்ண உக்தியைச் சொல்லுதல் –
மனம் மொழி மெய் மூன்றுமே சேர்ந்து ஈடுபட வேண்டுமே
உளம் தொட்டு -தீங்கு நினைந்த காஞ்சனை காய்ந்த -செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-
அடியார்க்கு ஆட் படுத்திய நிமலன் -என்றுமாம் –
கிளி போலெ கொஞ்சி பரவும் பாசுரம்
வஞ்சர் -ஆத்ம அபஹாரி – ஜனகன் கும்பனானான் என்கிறார் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்
குற்றமே இல்லை என்பவள் அன்றோ ஸ்ரீ நப்பின்னை
தென்னரங்கன் தென்னத்தியூர் இருப்பிடம் வேங்கடம் சொல்லுவார் மேலே –
அவையும் ஸ்ரீ ராமானுஜர் பெருமை சொல்லவே

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை
கம்சன் அசரீரி வாணி சொன்ன வார்த்தையை கேட்ட அன்று தொடங்கி மனசிலே -குரோதத்தை வைத்துக் கொண்டு இருந்தான் –
அந்த குரோதம் தமோ கார்யம்-என்கையாலே -அத்தை கறுப்பாக அருளிச் செய்கிறார் –
தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் -என்கிறபடியே
ஹிருதயத்தில் சீற்றத்தை உடையனான கம்சனை -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்-இவ் விருத்தாந்தம் பரக்க-சொல்லப்பட்டது இறே

காய்ந்த
உத்ப்லுத் யாருஹ்யதமம் மஞ்சம் கம்சம் சம்பாதயாமாச தச்யோ பரிபபாதாச
க்ருஷ்னே நத்யாஜிதப்ராணா நுக்ரசே நாத்மஜோநர்ப -என்கிறபடியே சம்கரித்த

நிமலன் –
கல்மஷ ரஹீதன் –முன்னே ஒரு மலம் இருந்து அத்தைப் போக்கி கொண்ட படி அன்று –
நைசர்க்கிகமான நைர்மல்யத்தை உடையவன் –
ஹேயப் பிரதி படன்-என்றபடி –
அன்றிக்கே
கம்சனை கொல்லுமளவும் -மாதா பிதாக்களை சிறையிலே இருக்கக் கேட்டு-பொறுத்து இருந்த தொரு மலம் உண்டு –
அவனைக் கொன்று-மாதா பிதாக்களை சிறையில் நின்று விடுவித்த பின்பு-நிர்மலன் ஆனான் என்னவுமாம் –
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோர் தோன்றல் -என்னக் கடவது இறே –
அங்கனும் அன்றிக்கே
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே தம்மை ஸ்ரீ எம்பெருமானார்
திருவடிகளிலே அனந்யாஹராம் படி பண்ணினான் ஆகையால் –நிமலன் -என்கிறார் ஆகவுமாம்-

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்–
கம்சன் அசுரப் பிறப்பாளன் ஆதலின் ஸ்ரீ கண்ணன் திறத்து என்றும் கறை கொண்டவனாய் இருந்தான் –
கறை-சீற்றம்
கறை-கறுப்பாய் சீற்றத்தைக் குறிக்கிறது
அறையோ வென நின்றதிரும் கரும் கடல் -திரு விருத்தம் -62 – என்னும் இடத்தில் இவ்வாறே வியாக்யானம் செய்து
ஆசார்யர்கள் – சிவப்பும் கறுப்பும் வெகுளிப் பொருள்-என்று மேற்கோள் காட்டுவர் –
நெஞ்சிலே படிந்து விட்டது கம்சனுக்கு -பக்தி உண்டாக வேண்டிய இதயத்தினைப் பற்றிக் கொண்டது கறை –
அது சொல் அளவிலே அமைந்து இருப்பின் கண்ணன் காய்ந்து-இருக்க மாட்டான் –
தீய புத்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் -பெரி யாழ்வார் திரு மொழி – 2-2 5- –என்றபடி
புத்தி கெட்டு விட்டது கம்சனுக்கு -கருத்து அளவும் உட் புகுந்து ஆராய்ந்து -சிறிது அளவேனும் நன்மை -அதாவது –
அனுகூலனாகும் -வாய்ப்புத் துலங்காத போது -தான் -வேறு வழி இன்றி –
ஸ்ரீ கண்ணன் காய்ந்து கை விடுவது –
தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –ஸ்ரீ திருப்பாவை -25-
அவன் கைக் கொள்ளுவதற்கு புறமே அமையும் –
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் -ஸ்ரீ திருவாய் மொழி – 5 1-1 – என்று
ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்தது காண்க –

சொல் அளவில் கறை கண்டு கை விடாதே -நெஞ்சில் பொல்லாங்கு சோதித்து
அறிந்த பின்னரே -காய்ந்து கை விடுகிறான் ஸ்ரீ கண்ணன்-
கைக் கொள்ளும் இடத்து -கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று-என்று அறிந்தால் அல்லது கை விடான்-
தீங்கு நினைந்த -கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்-நெருப்பு அன்ன
நின்ற நெடுமாலே – என்றாள் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ திருப்பாவையிலே –
உன்னைச் சிந்தனையால் இகழ்ந்த இரணியனது அகல் மார்பம் கீண்ட என்
முன்னைக் கோளரியே -திரு வாய் மொழி – 2-6 6- –என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் –

இனி கறை -தோஷம் ஆகவுமாம்-
தோஷம் இன்னது என்று குறிப்பிட்டு சொல்ல இயலாமையாலே-பொதுப்பட தோஷம் என்கிறார் –
ஸ்ரீ ஆண்டாளும் என்ன தீங்கு என்னாமல்-தீங்கு நினைந்த -என்று-அருளி செய்தது காண்க –
கஞ்சன்-
கம்சன் என்பதன் சிதைவு –
நாய்க்குடலுக்கு நறு நெய் தாங்காதது போலே தன் அகத்தே வந்து அவதரித்த ஸ்ரீ கண்ணனை-அனுபவிக்க கொடுத்து
வைக்காமையாலே -அன்றே ஸ்ரீ கண்ணன் ஆய்க்குலம் புக வேண்டியதாயிற்று –
பணம் இருந்தும் அனுபவிக்காத கஞ்சனாயினான் என்பதும் கஞ்சன் என்னும் சொல்லாலே தோற்றும் அழகு காண்க –

காய்ந்த நிமலன் –
காய்தல்-சீறுதல்
காரணம் இன்றி சீற்றம் கொண்டான் கஞ்சன் -அது அசஹ்யா அபசாரம் -எனப்படும் –
கரணம் இன்றி பகவத் பாகவத விஷயம் என்றாலே பொறுக்க ஒண்ணாத இயல்பே அசஹ்யா அபசாரம் -என்க-
ஒழித்து வளரத் தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்தமையாலும் -சாது சனத்தை நலிகையாலும் –
கம்சன் அசஹ்யா அபசாரம் புரிந்தவன் ஆகிறான் –
தேவர்கட்கும் அசுரர்கட்கும் தெய்வம் பொதுவாய் இருந்தாலும் கம்சனைக் காய்ந்தது —
ஆஸ்ரிதர்கள் அல்லல் தவிர்க்க அசஹ்ய அபசாரம் பற்றி அளித்த தண்டனையே ஆதலின் –
தெய்வத்துக்கு அது குறையாகாது -என்பார் –நிமலன் –என்றார்
மலம்-தோஷம் அது அற்றவன் நிமலன்-வட சொல்-

கஞ்சன் கொண்ட கறை -பூதனை முதலியவர்களை ஏவுதல் முதலிய தீங்குகளை விளைத்தது
நிமலன் காய்ந்தது -கம்சனை வதம் செய்தல் -என்னும் நல் செயலை விளைத்தது –
கஞ்சன் கறை காரணம் அற்றது -ஆதலின் அது தோஷம் ஆயிற்று
நிமலன் காய்தல் ஆஸ்ரிதர்கள் நலி உற்றமை யடியாக வந்தது –
ஆதலின் அது தோஷம் ஆகாது -குணம் ஆயிற்று -என்க-
அவுணன் பொங்கவாகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் –ஸ்ரீ பெரிய திருமொழி 1-7-1–

அமரேஷு மமாவஜ்ஞா ஜாயதேதைத்ய புங்க்வா
ஹாஸ்யம் மே ஜெயதே வீரா தேஷூயத் நப ரேஷ்வபி
ததாபி கலு துஷ்டா நாம் தேஷாமப்ய திகம்மயா
அபகாராய தைத் யே ந்தரா யாத நீயம் துராத்மா நாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்லோகம் –
அசுரத் தலைவர்களே -தேவர்கள் விஷயத்தில் எனக்கு அலஷ்யம் ஏற்படுகிறது – அவர்கள் என்ன முயற்சி-செய்திடினும்
எனக்கு சிரிப்பு வருகிறது -ஆயினும் கெட்ட மனம் படைத்த அக்கொடிய அமரர்க்கு-அதிகமான அபகாரங்களை செய்ய
நாம் முயல வேண்டும் -ஆஸ்ரிதர்கள் இடம் கம்சன் அபசாரப் படுவது முதலியவற்றை நாம் காணலாம்-

இனி வாளியினால் மாள முனிந்து -எனபது போல் அல்லாமல்-கஞ்சனைக் காய்ந்த -என்றமையின்
சீறின-மாத்திரத்தில் ஆயுதம் இன்றி தானே எதிரியை அழித்தமை தோற்றுகிறது –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் போலே ஆளிட்டு -ஸ்ரீ அனுமனைக் கொண்டு –தென்னிலங்கையை தீக்கு இரையாக ஊட்டுதல் –
வாளியினால் மாளச் செய்தல் இல்லாமல் -தானே நெருப்பாக கஞ்சன் வயிற்றில் பற்றி நின்றும் –குஞ்சி பிடித்து இழுத்து –
மஞ்சத்தில் இருந்து -அக்கஞ்சனை கீழே தள்ளி -அவன் மேலே தானே விழுந்தும்-வதம் செய்தமையால் –
ஸ்ரீ கண்ணன் தூயன் ஆனான் –என்னும் கருத்துடன் –காய்ந்த நிமலன்-என்றதாகவும் கொள்ளலாம் –
இவ்விடத்தில் -பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் –பெரிய திருமொழி -3 4-4- –
என்னும் ஸ்ரீ திரு மங்கை மன்னன் ஸ்ரீ ஸூக்தியையும் –
ஆளிட்டு செய்தல்–ஆயுதத்தால் அழிய செய்தல்-செய்கை அன்றிக்கே -ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற
வேலாலே அழிய செய்து -அத்தாலே வந்த சுத்தியை -உடையவன்-என்று அதன் வியாக்யானமும் அனுசந்திக்க தக்கன –

நங்கள் பஞ்சித் திருவடி பின்னை தன் காதலன் –
நங்கள் பஞ்சித் திருவடி –
பஞ்சிய மெல்லடி பின்னை –என்கிறபடியே -பஞ்சு போலே சுகுமாரமான திருவடிகளை உடையாளான –
அன்றிக்கே
அத்யந்த-புஷ்பகாச சுகுமாரி ஆகையாலே -கடினமான பூமியிலே -திருவடிகளை வைத்தால் வாடும் என்று நினைத்து –
பஞ்சு மேல் அடியை இட்டு திரியும்படியான திருவடிகளை உடையாள் -என்னவுமாம் –

பின்னை தன் –
இப்படிப்-பட்ட சௌகுமார்யத்தை உடையளான ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு
பின்னை தன் காதலன் –
என் போல்வார் எல்லார்-உடையவும் ஈஸ்வர நிக்ரஹ ஹேதுவான அபராதங்களை -அவனாலே பொறுப்பித்து நம்மை ஆஸ்ரயிப்பைக்காக
அவனோடு அநேக அவதாரங்களை பண்ணினாள் ஆகையாலே -நமக்கேயாய் இருக்கிறாள் என்று நினைத்து –நங்கள்-என்கிறார் –
ஆக ஆஸ்ரிதர் ரஷண அர்த்தமாக அவதரித்து -அதி சௌகுமார் யத்தை வுடையளான
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி தனக்கு ஸ்நிக்தனான-என்றபடி –

ஸ்ரீ ஜனக ராஜன் -தன் பூமியில் உள்ள இடையர்க்கு எல்லாம் தலைவனாய் -கும்பன் என்னும் பேரை உடையவன்
ஆனவன் -இடையர் கோஷ்டியிலே ஏழு வ்ருஷபங்கள் -அசூரா வேகத்தாலே மகா பல வீர்யவத்துக்களாய் கொண்டு –
இருந்த ராஜ்யங்களை எல்லாம் பாதிக்கத் தொடங்கினவாறே -அவன் கும்பனை அழைத்து பயப்படுத்த –
அவனும் நப்பின்னை பிராட்டி என்று எனக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு -இந்த வ்ருஷபங்களை சம்ஹரித்தவனுக்கு
இந்தப் பெண் பிள்ளையை கொடுக்க கடவன் என்று பிரதிக்ஜை பண்ணினேன் -என்ன –
ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் கும்பன் மாதூலன் ஆகையாலே இந்த வ்ருத்தாந்தைக் கேட்டு சடக்கென –
அங்கே சென்று ஸ்ரீ நப்பின்னை பிராட்டியைப் பார்த்து –
அவள் திறத்திலே அதி வ்யாமுக்தனாய் கொண்டு -அவளோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தங்களான
சப்த வ்ருஷபங்களையும் -ஒருக்காலே ஊட்டியாக தழுவி -சம்ஹரித்தான் என்று புராணங்களிலே பிரதிபாதிகமான
இந்த அபதாநத்தைக் கொண்டு -காதலன் -என்று அருளிச் செய்கிறார் –
தள வெழ் முறுவல் பின்னைக்காய்-வல்லானாயர் தலைவனாய் – இள வேறு ஏழும் தழுவிய எந்தாய் – என்று
ஸ்ரீ நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –இப்படிப் பட்ட ஸ்ரீ கிருஷ்ணனுடைய-

நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் –
பஞ்சிய மெல்லடிப் பின்னை -பெரிய திரு மொழி – 3-4 4- -என்றும்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம்-பெரிய திரு மொழி – 3-7 7- – என்றும்
ஸ்ரீ திரு மங்கை மன்னன் அருளிய திரு மொழியை அடி ஒற்றிய படி –
தன் வடிவு அழகாலே கண்ணனை துவக்கி -நம் குற்றம் அவன் கண்ணில் படாதவாறு செய்து –
குற்றவாளராகிய நாம் சற்றும் கூசாது -ஸ்ரீ கண்ணனைப் பற்றும் படி செய்து தன் அபிமானத்தை நம் மீது-காட்டலின் –
நங்கள் பின்னை-என்கிறார்-

என் திரு மகள் சேர் மார்பன் போல ஸ்ரீ தாயார் திருவடியில் ஒதுங்குவார்கள்
ஆஸ்ரித ஜன அபிமானி இவள் தான்-
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

இறைவனுக்குத் தேவிமார் மூவர்-
திருமகள்-பூமி-பின்னை-என்பவர் அம் மூவர் –
இவர்கள் இறைவனோடு உயிர் இனங்களை இணைப்பவர்கள் –
குற்றம் புரியாதவர் எவரும் இலர் -என்று இறைவனது சீற்றத்தை ஆற்றி இணைத்து வைப்பவள் திரு மகள் –
சீற விடாது பொறுமைக்கு உள்ளாக்குபவள் பூமி தேவி –
காண்பதும் பொறுப்பதும் எதற்காக -குற்றத்தை காண ஒட்டுவானேன் என்று தன்
அனுபவத்தில் மூழ்கி மயங்கும்படி பண்ணி அவன் கண்ணில் குற்றம் படாதபடி செய்து இணைப்பவள் ஸ்ரீ பின்னை –
இதனை வேதாந்த தேசிகன் -தயா சதகத்தில் –
நிசாமயதுமாம் நீளா யத்போக பட லைர்த்ருவம் பாவிதம் ஸ்ரீ நிவாசச்ய பக்த தோஷஷ் வதர்சனம்-என்று
எவளுடைய போக படலங்களாலே -போகத்தால் உண்டான கண் ரோகத்தினாலே –
போக படலங்க உடைய சமூஹங்களாலே -ஸ்ரீ நிவாசனுக்கும் பக்தர்கள் உடைய தோஷங்களில்- பார்வை இல்லாமை -ஏற்பட்டதோ
அத்தகைய ஸ்ரீ நீளா தேவி -ஸ்ரீ நப்பின்னை-என்னைக் கடாஷித்து அருள்க –என்று அழகு பட வருணித்து உள்ளார் –
இங்கனம் மூவருள் ஸ்ரீ பின்னை முன்னைய இடத்தை பற்றி நிற்பவள் ஆதலின் -அவள் காதலன் பாதம் நண்ணுவது மிகவும் எளிது –
ஆயினும் இழக்கின்றனரே என்னும் இரக்கம் தோற்ற-
பின்னை தன் காதலன் பாதம் நண்ணா -என்கிறார் –

பஞ்சித் திருவடி –
பஞ்சு போன்ற மெல்லிய திருவடி-செம் பஞ்சியை உடைய திருவடி ஆகவுமாம்-
நிமலன் -என்பதால்-ஹேய பிரத்யநீகத்வமும் -குற்றம் ஒழிக்கும் பெற்றிமையும் –
காதலன்-என்பதால்-நல் குணம் உடைமையும் பேசப்படுகின்றன –
பகை களைதலும் -நலம் பேணுதலும் முறையாக பேசப்படுகின்றன
சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு இங்குப் பிறந்ததும்
விண்ணோர்கள் தூபம் தரா நிற்க ஓர் மாயையினால் அடலாயர் தம்கொம்பினைக் காதலித்து
வல்லானாயர் தலைவனாய் வந்ததும் -முறையே இதுகாறும் பேசப்பட்டன –

பாதம் நண்ணா வஞ்சர்க்கு –
திருவடிகளை ஆஸ்ரயியாத வஞ்சகருக்கு –
யோந்யதா சந்தமாத்மான மன்யதா ப்ரதிபத்யதே -கிம்தே ந ந கிர்தம் பாபாம் சோரேணா த்மாபஹாரிணா -என்கிறபடியே
த்வம் மே என்றால் அஹம் மே -என்னும்படியான ஆத்மா அபஹாரிகளுக்கு –
நமாம் துஷ்க்ர்தி நோ மூடா –ப்ரபத்யந்தே நராதம -மயாயாப ஹ்ர்தஜ்ஞானா ஆசூரிம் யோநி மாஸ்ரிதா -என்றான் இறே ஸ்ரீ கீதாசார்யானும் –
அப்படிப் பட்ட வஞ்சகருக்கு –

அரிய இராமானுசன் –
ஆஸ்ரயிக்கைக்கு கடிநராய்-சூதுர்லபரான ஸ்ரீ எம்பெருமானாருடைய-புகழ் அன்றி –
கீழ்ப் பாட்டிலே -வஞ்சகமான என் மனசிலே -என்னுடைய தோஷத்தை பாராதே அதுவே போக்யமாக அங்கீகரித்து புகுந்து நிற்க –
அத்தாலே -பிரகாசிதங்களான வாத்சல்ய சௌசீல்யாதி-கல்யாண குணங்களை ஒழிய-

பாதம் நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன் –
கல் நெஞ்சினராய் -ஸ்ரீ கண்ணனுக்கே உரிய தம்மை தமக்கே உரியராக மாறுபடக் கொண்டு-
அக்கண்ணனையும் நண்ணாத வஞ்சர்கட்கு -கிட்டுதற்கும் அரியர் ஸ்ரீ எம்பெருமானார் -என்கிறார் –
பிறர் பொருளை தம்மதாக கொள்வது வஞ்சம்-என்க –
பின்னை தன் பஞ்சுத் திருவடியால் தனக்கு காதலை விளைவித்தது போலே -அவளது தாய் உள்ளத்தை களிப்பிக்க –
கருதிய ஸ்ரீ கண்ணனும் -மக்களுக்கு தன் மீது பக்தி உண்டாக்கி இன்புருவதற்காக தன் அழகிய திருவடிகளை –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மீன்-என்று காட்டிக் கொடுத்த விடத்தும் –
பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே -திரு வாய் மொழி 10-4 3- – -என்றபடி..
திருவடிகளைக் கண்டு தலை மேல் புனைதற்கு காமுறாது ஸ்ரீ கண்ணன் திறத்து பர தந்திரனான -உரியனான –
தன்னை -ஆத்ம ஸ்வரூபத்தை -ஸ்வ தந்திரனாக -தனக்கே உரியனாக -கொள்வது வஞ்சம் ஆயிற்று –
இதுவே ஆத்ம அபஹாரம் எனப்படும்
தன்னை உணர்ந்து ஆட் செய்தற்கு இசைபவரே ஸ்ரீ எம்பெருமானாரைக் கிட்டுதற்கு அருகதை உடையவர் –எனபது கருத்து –

என் வாய் –
இத்தனை நாளும் பிரதி கூலனாய் போந்த என்னுடைய வாக்கானது –

கொஞ்சிப் பரவ கில்லாது –
அந்ய விஷய ஸ்தோத்ரத்துக்கு சங்கோ சித்து -அத்தை ஸ்தோத்ரம் பண்ண மாட்டாது –
முக்த்த ஜல்ப்பமாய் கொண்டு அறிவு கெட மாட்டாது -கொஞ்சுதல்-அபூர்ண உக்தியாய் சொல்லுதல் –

என்ன வாழ்வு இன்று கூடியதே –
இப்போது இந்த சம்ருத்தி நமக்கு சேர்ந்தது கண்டீரே -இது பெறாப் பேறு-என்று வித்தர் ஆகிறார் –

இராமானுசன் புகழ் அன்று
என்கையாலே –பகவத் குணங்களையும் ஸ்தோத்ரம் பண்ண மாட்டாது என்று
தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் -என்றது ஆய்த்து –

புகழ் அன்றி பரவ கில்லாது –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி –ஸ்ரீ பொய்கையார் ஸ்ரீ ஸூக்தி
ஸ்ரீ அமுதனாரோ குழந்தை மழலை மொழியிலே அடைவின்றிக் குழறுவது போலே அன்பு ததும்ப
ஸ்ரீ எம்பெருமானார் புகழையே-என் வாய் புகழ்ந்து யேத்துமே -அன்றி -மற்று ஒன்றான –
ஸ்ரீ பின்னை தன் காதலன் புகழையும்-பரவ கொள்ளாது -என்கிறார் –
இதனால் தனது சரம பர்வ நிஷ்டை வெளி இட்டபடி –

கில்லாது -முயலிலும் இயலாமை தோற்றுகிறது –

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ–3-9-5-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான் கிலேன்;
மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே–3-9-7-

வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப் போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன்,
மாய மனிசரை என் சொல வல்லேன் என் வாய் கொண்டே?–3-9-8-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-
அவன் பேர் ஒதுவதே நாவினால் உள்ளு –இரண்டாம் திருவந்தாதி -44-
எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் –மூன்றாம் திருவந்தாதி -17-
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நாத்தன்னால் உள்ள நலம் –மூன்றாம் திருவந்தாதி -73-
நாரணனை நம் ஏழு பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –நான்முகன் -64-
நாக்கொண்டு மானிடம் பாடேன்–நான்முகன் -75-
உரைப்பு எல்லாம் நின்னன்றி மற்றிலேன் கண்டாய் –பெரிய திருவந்தாதி -77-

என்ன வாழ்வு இன்று கூடியதே –
பாதம் நண்ணா வஞ்சரில் சேர்ந்த நான் -ஸ்ரீ எம்பெருமானார் அளவும் வந்து –
அவர் பாதம் அன்றிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணாது –
அவர் புகழ் அன்றி அவன் புகழ் பரவ கில்லாத நிலை எய்தப் பெற்றேன்-
என்னே எனக்கு இன்று கிடைத்த வாழ்வு -என்று வியக்கிறார் –
பிரதம பர்வமும் அறியாத நான்-எதிர்பாராது சரம பர்வத்தின் எல்லை நிலம் எய்தப் பெற்றது-வியக்க தக்கது என்பது கருத்து –

இளைய புன் கவிதை போல- எம்பிராற்கு இனியவாறே-ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –
ஸ்ரீ எம்பெருமானார்க்கு இனியவாறே -என்கிறார் அமுதனார்
ஸ்ரீ பின்னை தன் காதலன் புகழையே பாடாது. எனக்கு கிடைத்ததே என்ன வாழ்வு பெறா பேறு–

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .